பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 47 பாவாணர் உரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 47 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+ 112 = 120 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 75/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளசிறப்பு v நூல் 1 மொழித்துறையில் தமிழின் நிலை 1 2 `இயல்புடைய மூவர்' 6 3 தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம் 11 4 தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை 24 5 பாவாணர் சொற்பொழிவு 39 6 தமிழின் தொன்மை 49 7 தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு 52 8 வ.சு. பவளவிழா உரை 77 9 தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா 79 10 கலைஞர் நூல் வெளியீட்டு விழா 82 11 பாவாணர் இறுதிப் பேருரை 85 பாவாணர் பொன்மொழிகள் 108 பாவாணர் உரைகள் 1 மொழித்துறையில் தமிழின் நிலை அறிஞர்காள்! அறிஞையர்காள்! உடன்பிறப்பாளர்காள்! உடன்பிறப் பாட்டியர்காள்! உங்கள் அனைவர்க்கும் என் அன்பான வணக்கம். `மொழித்துறையில் தமிழின் நிலை' என்பது எனக்குத் தரப்பட்ட தலைப்பாகும். இத்தலைப்பு, மொழிநூல், கல்வி, அரசியல், மதவியல், வழக்கியல் முதலிய பல துறைகளையுந் தழுவியதாதலின், அவையனைத் தையும்பற்றி இன்று யான் பேச விரும்புகின்றேன். ஆயின், வசதிபற்றியும் விளக்கம் பற்றியும், அவற்றையெல்லாம் (1) தமிழின் உண்மை நிலை, (2) இன்று அது இருக்கும் நிலை, (3) இனி நாம் செய்யவேண்டுவன, என முத்திறப்படுத்தி இம்முறையிலேயே பேசுகின்றேன். (1) தமிழின் உண்மை நிலை தமிழ்மொழி, தொன்மையும் முன்மையும், எண்மையும் (எளிமையும்) ஒண்மையும், தனிமையும், இனிமையும், தாய்மையும், தூய்மையும், செம்மையும், மும்மையும், கலைமையும், தலைமையும், இளமையும், வளமையும், முதுமையும் புதுமையும், ஒருங்கே கொண்ட ஓர் உயர்தனிச் செம்மொழியாகும். ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்''. என்னும் பழவெண்பா தமிழின் தொன்மையையும், ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ'' என்னும் பரஞ்சோதி முனிவர் பாடல் தமிழின் செம்மையையும், நன்கனம் உணர்த்தும். மேற்காட்டிய வெண்பாவில் `ஓங்கல்' என்பது, பொதிய மலையைக் குறித்ததென்று கொள்வதினும், தலைக் கழகப் பஃறுளியாறெழுந்த குமரி மலையைக் குறிப்பதென்று கொள்வதே சாலப் பொருத்தமாம். பரஞ்சோதி முனிவர் பாடலில், `சில இலக்கண வரம்பிலா மொழி' என்றது வடமொழியுள்ளிட்ட பிற மொழிகளை. தமிழ் உலகிலுள்ள பத்து மொழிக் குடும்பங்களுள் ஒன்றான திரவிடத்திற்குத் தாயாயிருப்பதுடன், இந்தோ-ஐரோப்பியம் என்னும் ஆரியத்திற்கு மூலமாகவுமிருப்பது, மிகமிக வியக்கத்தக்கதும் மயக்கத்தக்கதுமான ஓர் உண்மை. தமிழின் திரவிடத் தாய்மையை, அதனின்றும் மிக மிகத் திரிந்தும் பிரிந்தும் போன தெலுங்கொன்றின் வாயிலாய்க் காட்டுவல். தமிழ் தெலுங்கு தமிழ் தெலுங்கு யான்-நான் நேனு இலது லேது யாம் மேமு அகடு கடுப்பு நீன்-நீ நீவு தம்பி(ன்) தம்முடு நீர் மீரு சுருட்டு சுட்டு அவன் வாடு வெண்ணெய் வென்ன அதை தானி எழுபது டெப்பதி `ஆகு' என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி தமிழ் தெலுங்கு பகுதி-ஆ, ஆகு அவு ஏவல் ஒருமை-ஆ, ஆகு கா, கம்மு ஏவல் பன்மை-ஆகுங்கள் கண்டி தன்மையொருமை இ. கா. முற்று - ஆயினேன் அயினானு, அயித்தினி தன்மையொருமை நி. கா. முற்று - ஆகின்றேன் அவுத்தானு தன்மையொருமை எ. கா. முற்று - ஆவேன் அவுதுனு இ. கா. பெயரெச்சம் - ஆன அயின, ஐன நி. கா. '' ஆகின்ற (அவுத்துன்ன) எ. கா. '' ஆகும் அய்யே இ. கா. வினையெச்சம் - ஆய் கா, அவ நி. கா. '' - ஆயின் அயித்தே (ஆயிற்றேல்) எதிர்கால வினைமுற்று - ஆகும், ஆம் அவுனு உடன்பாட்டிடைச்சொல் - ஆம் அவுனு ஒன்றன்பால் எதிர் மறைவினை முற்று - ஆகாது காது தொழிற் பெயர் - ஆதல், ஆகுதல் அவுட்ட, காவடமு (முதலியன) (முதலியன) இங்குக் காட்டப்பெற்ற சொற்பட்டிகளிலுள்ள தமிழ்ச் சொற்களின் திருந்திய நிலையும், தெலுங்குச் சொற்களின் திரிந்த நிலையும், முன்ன வற்றின் மூலத் தன்மையைத் தெற்றெனக் காட்டுதல் காண்க. இனி, அம்மை, அப்பன், அவ்வை, மகன் முதலிய முறைப் பெயர்களும், மூவிடப் படிற்பெயர்களும்; அமர் ஆகு, இரு, ஈன், உருள், ஊக்கு, எய், ஏங்கு, கொல், சேர், தா, நெருங்கு, போடு, மடி, விழி, முதலிய வினைச்சொற்களும்; இவைபோல்வனபிறவும்; ஆகிய நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் திரிந்தும் திரியாதும், ஆரிய மொழிகளில் வழங்கிவருவதொன்றே, அம்மொழிகள் தமிழ்ச் சொற்களை முதலாகக் கொண்டு பின்னர்ப் பெருவளர்ச்சியடைந்தவை என்பதைக் காட்டுவதற்குப் போதிய சான்றாம். (2) தமிழின் இற்றை நிலை உலகில் முதன் முதற் பட்டாங்கு நூன்முறையிற் பண்படுத்தப்பட்ட தும், நல்லிசைப் புலவராற் பல்வேறு துறையில் இலக்கியஞ் செய்யப்பெற்றுப் பல கலையும் நிரம்பியதும், முத் தமிழ் என வழங்கியதும் ஆன சித்தர் மொழியாம் செந்தமிழ்; இன்று கலையிழந்தும் நூலிழந்தும், சொல்லிழந்தும் இருப்பதுடன், இறவாது எஞ்சியிருக்கின்றனவும் ஏனை மொழிகளினின்று கொண்ட இரவல் என இழித்தும் பழித்தும் கூறப்படுவது, ``ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை'' என்னும் வாய்மொழிக்கிலக்காகிய இடைக்காலத் தமிழன் மடமையின் விளைவே. மொழித்துறையில் ஆரியத்தினும் சீரியதென அரியணையில் வீற்றிருந்த தமிழ், பின்பு வடமொழிக்குச் சமம் எனக் கொள்ளப்பட்டு, அதன்பின் அதுவுமின்றி வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாததெனத் தள்ளப்பட்டதினால்; முறையே, அது வடமொழியால் வளம்பெற்றதென்றும், வடமொழித் துணையின்றித் தனித்தியங்காததென்றும், வடமொழிக் கிளையென்றும், பிற திரவிட மொழிகட்குச் சமமென்றும், அவற்றினின்று தோன்றியதென்றும், கருத்துகள் எழுந்து; இன்று, மக்கட்குப் பெயரிடுதற்கும், உயர்ந்தோரொடு பேசுதற்கும், அச்சுப் பிழை திருத்தற்கும், அலுவலகங் களில் வினவி விடை பெறுதற்கும், ஏற்காத தாழ்த்தப்பட்ட மொழியாகத் தமிழ் வழங்கி வருகின்றது. இதனால், அது புலவர் வாயிலும், கலப்பு மொழியாகவும் கலவை மொழியாகவும், கொடுமொழியாகவும், கொச்சை மொழியாகவும் இருந்துவருகின்றது. இதுபற்றி, அது இறந்த மொழியென்றும், இற்றைக் கேலா மொழியென்றும், எதிரிகள் கொக்கரித்துக் கூவுகின்றனர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி தமிழைச் செவ்வையாய்க் காட்டுதற்குத் தகாத மொழியெனக்கொண்டது; கலைக் களஞ்சியம் அது மொழிபெயர்ப்பிற்கு முற்றாததெனக் கொண்டது. புதிய கல்லூரிக் கல்வித் திட்டம் அதை விருப்பப் பாடமாகக்கொண்டது. சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் குறைபாடுகளை அச்சிட்டு ஆட்சிக் குழுவிற்கு (Syndicate) அனுப்பி அரையாண்டிற்கு மேலாகியும், இன்னும் மறுமொழியில்லை. (3) இனிச் செய்யவேண்டுவன ஒரு நாட்டு மக்கட்கு உரிமையாவணம் போன்றது, அந் நாட்டு வரலாறு. தமிழ் மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றின் வரலாறு மறைக்கப் பட்டிருப்பதால், அவற்றின் உண்மையான வரலாற்றை முதற்கண் வரைந்து வெளியிடல் வேண்டும். அதன் பின், மொழிப்புரட்சி போன்ற ஒரு தமிழியக்கம் தோன்றல் வேண்டும். அதன் பயனாய், அயன்மொழிச் சொல்லாயிருக்கும் ஆட்பெயர் ஊர்ப்பெயர் அறிவிப்புச்சொல் முதலிய அனைத்தும், இயன்றவரை தனித்தமிழாக்கப் பெறல்வேண்டும். தமிழ் மீண்டும் தன் பழைய பெருமையை அடையவேண்டுமாயின், அது ஆட்சி மொழியும் கல்வி மொழியும் ஆவதினும், கோயில் வழிபாட்டு மொழி யாவதே முதன்மையாக வேண்டப்படுவதாம். வடமொழி தேவமொழியன்று. அதைத் தேவமொழி யென்று கொள்வது, பிராமணரையும் அவர் முன்னோரையும் தேவரென்றோ நிலத் தேவரென்றோ கொள்வதோடொக்கும். உலகில் தேவமொழியென ஒன்றில்லை. ஒன்றிருப்பின் அது தமிழே. சிவநெறியும் மால்நெறியும் தமிழர் மதங்களே. மந்திர வலிமையும் மன்றாட்டு வலிமையும் உள்ளத்தின் உரத்தைப் பொறுத்தனவே யன்றி ஒலியைப் பொறுத்தனவல்ல. வடமொழி வழிபாடே வலியுற்றதெனின், அதில் நடைபெறாத பிறநாட்டு வழிபா டெல்லாம் பயனற்றனவாதல் வேண்டும். அங்ஙனமாகாமை அறிக. பிராமணர் அன்றும் இன்றும் சிறுபான்மையராதலால் அவர்களால் தனிப்பட ஒரு கேடுமில்லை. தமிழ் கெட்டதற்கும் தமிழர் தாழ்ந்ததற்கும் தமிழனே காரணம். ஆதலால் பிராமணரை வெறுத்துப் பயனில்லை. தமிழைப் போற்றிக் காத்த நக்கீரரும், பரிதிமாற்கலைஞரும், சாமிநாதை யரும் பிராமணரே. ``ஆரிய நன்று தமிழ்தீதெனவுரைத்த'' கொண்டானும் சேனாவரையனும் அவர்போல்வார் இன்றுள்ள பிறரும் தமிழரே. தன்மானமும் பகுத்தறிவும் நெஞ்சுரமும் உள்ளவனே நிறைமகன். இல்லாதவன் முழுமகன். தமிழ் நலமும் தமிழர் நலமுங் கருதாது, தன்னலமே கருதிக் கோடரிக்காம்புகளும் இருதலைமணியன்களும் சுவர்ப் பூனைகளு மாயிருந்து பாழ்செய்யும் முத்திற உட்பகைகளை, விலக்கல் வேண்டும். ``எங்கெழிலென் ஞாயிறெமக்கு'' என்றிருக்கும் உணர்ச்சியற்ற மரக் கட்டைகளைத் திருத்தல் வேண்டும். கல்வியறிவில்லாத கண்ணிலி கட்குக் கற்பித்தல் வேண்டும். பெரும் பதவிகளிலிருந்து பெருஞ் சம்பளம்பெறும் பேராசிரிய ரெல்லாம் பேரறிஞரல்லர். உண்மையுரைக்கும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத இயல்பு அஞ்சாமை. அஃதுள்ளாரைத் திராவிடர் கழகத்தாரென்றும், மொழி (தமிழ்) வெறியரென்றும் நெறிதிறம்பிய ஆராய்ச்சி யாளரென்றும், பிராமணப் பகைவரென்றும் வடமொழி வெறுப்பாளரென்றும், கூறுவது பேணத்தக்கதன்று. தமிழன் பரந்த நோக்குள்ளவன். தமிழைப் பேணுவார் அனைவருந் தமிழரே. தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க. தமிழ்த் தொண்டர்படை திரள்க. கரந்தைப் புலவர் கல்லூரி 1955-56ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரைச் சுருக்கம். தமிழ்ப்பொழில் 2 `இயல்புடைய மூவர்' கழகக் காலப் பண்டைக் தமிழிலக்கண விலக்கியங்கள், பெரும் பாலும், தூய தமிழ்நெறிபற்றியவாதலால், அவற்றிற்குத் தமிழ்மரபு தழுவிப் பொருளுரைக்கவேண்டுவதல்லது, ஆரியக் கொள்கையடிப்படையில் விளக்கங் கூறுவது (வெளிப்படையான ஆரியச் செய்தியல்லாவிடத்து ஒரு சிறிதும் பொருந்தாது. அதிலும், ஆரியக்கோட்பாட்டை மறுத்துத் தமிழ வறத்தை நாட்டும் திருக்குறளைப்பற்றியோ, சொல்லவே வேண்டுவதில்லை. திருக்குறட்கு உரைவரைந்த பண்டையாசிரியர் பதின்மருள். பொதுவாக நோக்கின், பரிமேலழகர் சிறந்தவரே. ஆயின், உயிர்நாடியான தமிழ்க் கருத்துகளை வலிந்தும் நலிந்தும் புகுத்தி வள்ளுவர் நோக்கத்திற்கு மாறாகத் திருக்குறட்பயனையே கெடுத்துவிட்டதனால், ``திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர் தம் கருத்தமைதி தானே கருதி-விரித்துரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனும் மன்னும் உயர்நாமன் வந்து'' ``... ... ... ... ... ... ... ... நூலிற் பரித்த வுரையெல்லாம் பரிமே லழகன் தெரித்த வுரையாமோ தெளி'' என்னும் பரிமேலழகருரைச் சிறப்புப்பாயிரம் உயர்வு நவிற்சி வகையிலும் பொருந்தாது. ``இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'' (குறள். 41) என்னும் குறளில். ``இயல்புடைய மூவர்'' என்னும் தொடருக்குப் பரிமேலழகர், ``அறவியல்பினையுடைய ஏனை மூவர்க்கும்'' என்று தொடருரையும், ``ஏனை மூவராவார், ஆசாரியனிடத்தினின்றோதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரியவொழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கட்டீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யு மொழுக்கத்தானும் முற்றத் துறந்த யோக வொழுக்கத்தானு மென இவர்'' என்று சிறப்புரையும் கூறியுள்ளார். இவற்றின் பொருந்தாமைக்குப் பல காரணங்கள் உள. முதலாவது, பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் நால்வகைப் பிராமணிய வாழ்க்கைநிலையைத் தமிழர் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதலால், வள்ளுவரும் அதை ஒப்புக்கொண்டிலர், தமிழர் வகுத்த வாழ்க்கைநிலையெல்லாம், இல்லறம் துறவறம் என இரண்டே. இல்லறத்தை மேற்கொள்வானின் மாணவநிலை இல்லறத்தின் பாற்படுவதே. துறவறத்தை விரும்பவானின் மாணவநிலையும், உண்மையின்மை (கூடாவொழுக்கம்), உறுதியின்மை (தொடராமை), ஆகிய காரணங்களால் துறவறத்தின் பாற்பட்டுவிடாது. மனைவியொடு கூடிவாழும் வாழ்க்கை ஒருபோதும் துறவாகாது. இன்ப நுகர்ச்சியாற்றலழிந்தபின், இன்பத்தை வெறுத்ததாக நடிப்பது, பார்வை யிழந்த பின் படக்காட்சி பாராமையொத்ததே. ஆதலால், உண்மையான அறநிலை தமிழர் கண்டவையே. இரண்டாவது, ``இயல்பு'' என்பது அதிகாரத்தான் இல்வாழும் இயல்பைக் குறிக்குமேயன்றிப் பொதுவாக அறத்தை உணர்த்தாது. இங்குள்ள அதிகாரம் ``இல்வாழ்க்கை'' என்பது, பொதுவான அறம் ``அறன் வலியுறுத்தல்'' என்னும் அதிகாரத்திற்குரியதாம். மூன்றாவது, ``துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை'' (குறள் .42) என்னும் அடுத்த குறளில், துறவியரைக் குறிக்கின்றார் வள்ளுவர். முந்தின குறளில், ``இயல்புடைய மூவர்'' என்று குறிக்கப்பட்ட வருள் துறவியரையும் பரிமேலழகர் அடக்கிவிட்டதனால், இங்கு, ``களைகணானவராற் றுறக்கப் பட்டார்'' என்று ``துறந்தார்'' என்னும் சொற்குப் பொருந்தாப் பொருள் கூற வேண்டியதாயிற்று. துவ்வாதவருள் களைகணானவரால் துறக்கப் பட்டாரும் அடங்குவர். துறந்தார் என்னும் வினையாலணையும்பெயர் செய்வினை வாய்ப்பாட்டிலிருப்பதால், அதற்குத் துறவியர் (உலகப்பற்றைத் துறந்தவர்) என்று நேர்பொருள் கொள்வதே நேரிதாம். நான்காவது, முற்றத்துறந்த யோக வொழுக்கத்தானை இல்வாழ்க்கை யதிகாரத்தின் முதற்குறளிலேயே குறிக்கத் தேவையில்லை. வள்ளுவர் இல்லறத்தாரை முதற்குறளிற் குறித்துவிட்டுத் துறவறத்தாரை இரண்டாங் குறளிற் குறித்தார் எனவே பொருத்தமாம். இல்லறத்தாருள்ளேயே ஒருவகுப்பார் ஏனை மூவகுப்பார்க்குத் துணை என்பதை எடுத்துக் காட்டுவதே ஆசிரியர் நோக்கமாம். துறவியர் ஒருதொழிலுஞ்செய் யாமையின், அவர்க்கு இல்வாழ்வான் துணை என்பது வியக்கத்தக்க செய்தியன்று. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாற் குடிகளுள், வேளாளரையே இல்லறத்தாருட் சிறந்தவராக எடுத்துக்கொண்டார் திருவள்ளுவர். அந்தணர், முனிவரான துறவறத்தாரும் புலவரான இல்லறத்தாரும் ஆக இருசாரார், ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு உழவு, வணிகம், அரசு, கல்வி என்னும் நான்கும் இன்றியமையாதன. இவற்றை நடத்துவோரே, முறையே, வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்போர். வேளாளர்க்கில்லாத அறிவு, அதிகாரம், செல்வம் ஆகிய சிறப்புப்பற்றி, ஏனை மூவகுப்பாரும் நூல்களில் முற்கூறப்பெற்றனர். நகரமக்களான பதினெண் தொழிலாளரும் திணைநிலை மாந்தரான குறவரிடையர் செம்படவரும் உழவர்க்குப் பக்கத்துணைவராயிருந்தமைபற்றி, கைத்தொழி லெல்லாம் உழவில் அடக்கப்பெற்றன. ``அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்'' என்னும் இயல்வரையறைப்படி, அந்தணர் என்பது நீத்தாரையே குறிக்கு மெனினும், கல்வியொப்புமைபற்றி ஆசிரியர் உவச்சர் ஆகிய இல்லறத் தாரும் நாற்பாற் பாகுபாட்டில் அந்தணரொடு சேர்க்கப்பெறுவர். இக்குலங்க ளெல்லாம் தொழில்பற்றியனவே யன்றி இக்காலத்திற்போற் பிறப்புப் பற்றியவல்ல. மக்கள் உயிர்வாழ்க்கை, அரசியல் வெற்றி, இரப்போர் பிழைப்பு, துறவியல் நிலை ஆகியவற்றிற்கு உழவர் இன்றியமையாதவர் என்பதை, ``உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து.'' (குறள். 1032) ``பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.'' (குறள். 1034) ``இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.'' (குறள். 1035) ``உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை.'' (குறள். 1036) என்னுங் குறள்களாற் பெறவைத்தார் திருவள்ளுவர். உழவர் எனினும் வேளாளர் எனினும் ஒன்றே. வேளாண்மைக்குச் சிறந்தமையின் உழவர் வேளாளர் எனப்பெற்றார். வேளாண்மையாவது விருந்தோம்புதலும் வேண்டியன கொடுத்துதவதலும். ``தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்(கு) ஐம்புலத்தா றோம்பல் தலை.'' என்னும் இல்வாழ்க்கையியல்பு வேளாளர்க்கே சிறப்பாம். களத்திற்கண்ட கண்டுமுதலில் ஆறிலொருபங்கை அரசனுக்குக் கடமையாக இறுத்து, எஞ்சியதைத் தென்புலத்தார் தெய்வம் முதலியவர்க்குச் செலவிடுவது. வேளாளனுக்கே இயலும். ஏனையரெல்லாம் பெரும்பாலும் குறிப்பிட்ட பணத்தையே வரியாகச் செலுத்துபவரும் வருவாய்ளவு கண்டுபிடிக்கப் படாத நிலைமையருமாயிருந்தனர். இல்வாழ்க்கைக்குச் சொல்லப்பட்ட அறங்களுள் ஒன்றான விருந் தோம்பலைப்பற்றிய அதிகாரத்தில், ``வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.'' (குறள். 85) என்று வேளாளனைமட்டும் ஏன் விதந்து குறிக்கவேண்டும்? பிற தொழில் களைக் குறியாவிடினும், திருவள்ளுவர் செய்து வந்ததாகச் சொல்லப்பெறும் நெசவுத் தொழிலைப்பற்றியாவது, பஞ்சும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி எஞ்சல் மிசைவான் கதிர். என்றோ, நூலும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மேலை மிசைவான் தறி. என்றோ, கூறியிருக்கலாமே! ``வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்'' என்னும் நல்லாதனார் கூற்றும், ``செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-முட்டிபுகும் பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும் காப்பரே வேளாளர் காண்'' என்னும் கம்பர் பாட்டும், விருந்தோம்பும் அறம் வேளாளன் சிறப்பியல்பு என்றன்றோ காட்டும்! இனி, பாயிரத்தைச்சேர்ந்த வான்சிறப்பதிகாரத்திலும், ``ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்.'' (குறள். 14) என்று வேளாளரையே சிறப்பித் தோதினர் வள்ளுவர். ஆதலால், ``இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்'' ஆன வேளாளரே, இல்வாழ்க்கையருட் சிறந்தவராகத் திருவள்ளுவராற் கொள்ளப்பெற்றனர் என்பது தெளிவாம். குடி (வீடு, குடியிருத்தல், குடியானவன் (உழவன்) குடிகள் என்னும் தொடர்புடைய சொற்களும், வேளாளனின் சிறப்பை ஓரளவு உணர்த்தும். ஆகவே, ``இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'' (குறள். 41) இல்லறத்தோடு கூடி வாழ்வதற்குச் சிறந்தவன் என்று சொல்லப்பெறும் வேளாளன், தன்னைப்போன்றே இல்வாழும் இயல்புடைய பார்ப்பான், அரசன், வணிகன் என்னும் ஏனை மூவர்க்கும், அவர்செல்லும் நல்லற நெறிக் கண் நிலைபெற்ற துணையாம். என்று பொருள் கூறுவதே பொருத்தமாம். ``உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.'' (குறள். 1033) என்னும் குறளும் ஈண்டு நினைக்கத் தகும். பார்ப்பான் நூல்களை அல்லது கோயில் வினைகளைப் பார்ப்பவன். ஆகவே, ஆசிரியனும் பூசாரியுமான இல்லறத்தார் பார்ப்பார் என்பதாயிற்று. அந்தணன், பார்ப்பான் என்னும் இரண்டும் தூய தமிழ்ச்சொற்கள். இவை, பிராமணர்வருமுன், துறவியரும் இல்வாழ்வினருமான தூய தமிழரையே குறித்தன; பின்னர்ப் பிராமணர்க்கே வரையறுக்கப்பட்டுவிட்டன. இன்றும், உவச்சர், நம்பி, பண்டாரம், புலவர், போற்றி என ஆங்காங்கிருக்கும் பூசாரி யரும், ஆசிரியருமான தமிழரெல்லாம் பார்ப்பாரே. பட்டினத் தடிகளும் தாயுமானவரும் போலத் துறவுபூண்ட தமிழரெல்லாம் அந்தணரே. பார்ப்பான் அல்லது பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபென்றும், அந்தணன் என்பதற்கு ஒத்த பொருட்சொல்லான ஐயன் என்பது ஆரியன் என்பதன் திரிபென்றும் கூறுவதெல்லாம் தமிழரின் பேதைமையை அடிப்படையாகக் கொண்ட ஆரியக் குறும்பேயன்றி வேறன்று. - (1956-ஆம் ஆண்டு, மே, 2ஆம் நாள் தென்காசித் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமைப் பேருரைச் சுருக்கம்.) தென்மொழி 3 தமிழ் மொழியில் கலைச் சொல்லாக்கம் பேராசிரியர்களே! பெருமக்களே! அருமைத் தமிழாசிரியர்களே! இம் மாநாடு இரண்டு நோக்குள்ளது. ஒன்று தமிழ் முன்னேற்றம்; இன்னொன்று தமிழ்ப்புலவர் முன்னேற்றத்தைக்கருதியது. நான் ஏற்றுக் கொண்டது ஒன்று தான்; வடமொழி தென்மொழிப் போராட்டம். இது குறைந்த பக்கம் கடந்த 2,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதிலே நக்கீரர், பரதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவர்களை வழித் துணைவர் களாகக் கருதிக் கொள்ளுகின்றேன். போராட்டமானது வெற்றியாகத்தான் முடியுமென்கிற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனென்றால் இதனாலே மிகுந்த இடர்ப்பாடு விளையும், எனக்குமட்டுமல்ல; பிற தமிழாசிரியருக்குங்கூட எத்தனையோ பள்ளிகளிலே தமிழாசிரியர் ஏதேனும் சிறிது தமிழ்ப்பற்று காட்டுகிறார் என்றால், மாணவரிடத்திலே சிறிது தமிழ்ப்பற்று காட்டுகிறார் என்றால், மாணவரிடத்திலே சிறிது தமிழ்ப்பற்று ஊட்டுகிறார் என்றால், உடனே அங்கே இருக்கிற தலைமையாசிரியர்கள் அவர்களுக்கு ஏதேனும் ஊறு செய்யத் தொடங்கி விடுகின்றார்கள் என்று கேள்விப் பட்டிருக்கின் றேன். ஒன்று ஊரைவிட்டு மாற்றிவிடுவது அல்லது வேலையை விட்டு நீக்கி விடுவது. தமிழ்த் திருநாளென்றோ, திருவள்ளுவர் திருநாளென்றோ ஏதேனும் ஏற்பாடு செய்தால் எவ்வளவு முட்டுக்கட்டை இட வேண்டுமோ, அவ்வளவு முட்டுக்கட்டை இடுவது, இடங் கூடக் கொடுப்பது இல்லை என்று கேள்விப்படுகிறேன். ஒரு வீட்டிலே நடத்த வேண்டுமென்று இடம் கேட்டால் கூட அந்த வீட்டுக்காரரிடம் போய் `இடங் கொடுக்காதீர்கள்,' என்று சொல்வதாகக் கேள்விப்படுகின்றேன். அதோடுகூட மேலே இருக்கிற அதிகாரிகளுக்கும் கூடத் தமிழ்ச் சார்பு-தமிழ்ப் பற்று இருப்பதாகத் தெரியவில்லை. அதனாலேதான் என்னைப் பற்றியும் சிலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். தமிழைத் தூய்மையாகக் காக்க வேண்டுமென்பது தான் என் குறிக்கோள். அதுவும் அது வளம் பட்டது, தூய்மையானது என்பதனாலேதான். தமிழை நோக்கும்போது முதலாவது அதன் உண்மை நிலையைக் காணல் வேண்டும். தமிழிலே கலைச் சொல்லாக்கம் என்று சொன்னால் அந்தக் கலைச் சொல்லை ஆக்குவதற்குக் காரணமாக அடிப்படையான சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். பிற மொழியெல்லாம் இந்த முறையில் இல்லையே. இந்தி முதலான பிறமொழிகளிலெல்லாம் எத்தனையோ பிறமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்கின்றார்களே. தமிழில் ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது; ஆங்கிலச் சொற்களை அப்படியே வைத்துக் கொள்ளலாமே; ஏன் அவைகளை மொழி பெயர்க்க வேண்டும்; என்று கூட சிலரிடத்திலே கருத்தெழுகின்றது. அதற்காகத் தான் அடிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். முதலாவது தமிழர்கள் தெற்கே இருந்து வடக்கே போனார்கள் என்று தெரிந்து கொள்ளல் வேண்டும். பலருக்கு இஃது இன்னும் தெரிய வில்லை, பல தமிழாசிரியர்களுக்கும் தெரியவில்லை, சில பேராசிரியர் களுக்கும் கூடத் தெரியவில்லை. தமிழ் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரியாது. ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே நமக்குத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். பி. டி. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு ஆகியவற்றை எல்லாம் நீங்கள் நன்றாக எடுத்துப் பாருங்கள். அதற்கு மேலே, நான் மொழி நூல், மொழியாராய்ச்சியை வரலாற்று அடிப்படை வைத்தே ஆராய்ந்திருக்கிறேன். வேறு சில கலைகளின் துணை இன்றியமையாததா யிருந்ததால். அவற்றையும் நான் கற்றிருக்கிறேன்: தமிழர் தெற்கே இருந்து வடக்கே போனவர்கள். அதாவது தெற்கே குமரிநாடு என்று ஒரு பெரிய நிலம் இருந்து மூழ்கி விட்டது. இங்கே இருந்துதான் வடக்கே போனார்கள். கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிகள் 13 என்று கணக்கிட்டிருப்பதை, 19 என்று கணக்கிடப்பட் டிருக்கின்றன. இவை யெல்லாம் இந்தியா என்ற நாவலந் தீவுக்குள்ளேதான் வழங்குகின்றன. இவற்றுள்ளே சிறந்த பெருமொழிகளெல்லாம், இலக்கிய மொழிகளெல்லாம் இந்தத் தென்னாட்டிலேதான் வழங்குகின்றன. வடக்கே போனால் திராவிடமானது திரிந்தும், சிறுத்தும், சிதைந்தும் போகின்றது. இன்னும் போனால் வட நாவலத்தில், பலுசித்தானத்திலே ஒன்றும், வங்காளத்தில் ஒன்றுமாக, வட இந்தியாவிலே சிதறிக் கிடக்கின்றன. தெற்கே வரவர திராவிடமானது திருந்திக் கொண்டு வருகிறது. நாற்பெரும் திராவிட மொழிகள் எல்லாம் தென்னாட்டில் தான் இருக்கின்றன. அந்த நான்கு மொழிகளுள்ளும் சிறந்த தமிழ் தெற்கேதான் இருக்கிறது. அதனாலே பாண்டியனுக்கும் தென்னவன் என்று பெயர். தென்னாடு என்பதும் சிறப்பாக பாண்டிய நாட்டைத்தான் குறிக்கும். இந்தத் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலும் தெற்கே போகப் போகத்தான் தமிழ் திருந்திக் கொண்டே போகிறது. திருநெல்வேலியில் ஒரு வழக்குச் சொல் ஒரு வகையாகச் சொல்லிக் கொள்வார்கள். அது என்ன? மிகவும் திருத்தமாகப் பேசுவ தென்றால் : ``திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்பார்கள். ஆகவே இந்தத் தெற்கு என்பதற்குத் `திருத்தம்' என்று ஒரு பொருள் இருப்பதைப் பார்க்கிறோம். இப்போது வட ஆர்க்காட்டுத் தமிழைப் பார்ப்போமே, `இழுத்து இழுத்து உதைத்தான்' என்பதை `இசுத்து இசுத்து ஒச்சான்' என்பான். திருநெல்வேலியிலே அப்படி வழங்காது. திருநெல்வேலியிலே அப்படிச் சொன்னால் விளங்கவும் விளங்காது தூய தமிழிலே பேசுகிறார்கள். திருநெல் வேலியிலே கூடிய வரையிலே நன்றாகப் பேசுகிறார்கள். நான் திருநெல் வேலி நாட்டுப் புறத்து மொழியை ஆராய்ந்ததனால்தான் இந்தச் சிறந்த உண்மைகளைக் காணமுடிந்தது. நாட்டுப் புறத்திலேதான் நல்ல தமிழ் வழங்குகிறது. நாட்டுப் புறத்திலேயும் தென்னாட்டிலே திருநெல்வேலியிலே தான் நல்ல தமிழ் வழங்குகிறது. இங்கு வழங்காதச் சில சொற்கள்கூட அங்கே சிறப்பாக வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சொல்லுகிற தாயிருந்தால் `துப்புரவு' என்ற சொல்லைக் கொள்ளலாம். இங்கே `சுத்தம்' என்ற வடசொல்லைத்தான் வழங்குகிறார்கள். அங்கே எல்லாம் துப்புரவாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுவுமில்லாமல் வேறு எத்தனை யோ சொற்களெல்லாம் இங்கே வழங்காத சொற்களாக இருக்கின்றன. அதாவது அரிசி போன்ற உணவுப் பொருள்கள் நீண்டநாள் இருந்து கெட்டு விட்டால் காந்தி விட்டது என்று சொல்வார்கள். திருநெல்வேலியிலே வழங்கும் அந்தச் சொற்கள் எல்லாம் இந்தப் பக்கம் வழங்குவதில்லை. அதோடுகூட இங்கு விளையாத சில பொருள்களுக்கும் பெயர்கள் வழங்கு கின்றன. காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சில பொருள்களை நான் இங்குக் காணவே இல்லை. மற்ற வரகு, சாமை முதலியவை இருக்கின்றன. இந்த இரண்டும் இல்லை. இனி விளை பொருள்கூடச் சில வடிவு வேறு பட்டவை; கருவி வேறுபட்டவை. வடிவு வேறுபட்டாலும், கருவி வேறு பட்டாலும் பெயர் வேறு பட்டிருக்கின்றன. இப்போது இங்கே மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இருக்கிறது. அங்கே சுளகு இருக்கிறது. சுளகு இங்கே வழங்காது. திடீரென்று திருநெல்வேலி முழுகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு அழிந்துவிட்டால் துப்புர வென்ற சொல்லும் இந்தக் காடைக்கண்ணி, குதிரைவாலி என்ற சொற்களும் அடியோடு முழுகிவிடும். இப்படியே குமரி நாட்டின் தெற்கே குறைந்தது ஈராயிரம் கல் தொலைவிலுள்ள ஒரு பெரிய நிலப்பரப்பு அமிழ்ந்துபோய் விட்டதனாலே உலக வழக்குச் சொற்களில் ஆயிரக்கணக்கான சொற்கள் மறைந்தே போய்விட்டன. அதற்குமேலே என்னவென்றால் இலக்கிய வழக்கிலும் அவை முழுவதும் அழிந்துவிட்டன என்று நான் சொல்லுகிறேன். ஏனென்றால் ஆரியம் தென்னாட்டுக்கு வரும் முன்னே ஆரியச் சார்பான பிராமணர்தாம் தென்னாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு முன்னாலே - ஆரியம் அல்லது சமசுகிருதம் வருமுன்னாலே இருந்தத் தமிழ் நூல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. அதை நீங்கள் அறியவேண்டும். இக்கால் தலைக்கழக நூல் ஒன்றும் இல்லை; இரண்டாம் கழகத்தினதும் ஒன்றுமில்லை; மூன்றாம் கழகத்தின் நூல்கள் உள்ளன. இம் மூன்று கழகங்களினுடைய நூல்கள் காலத்தினால் மட்டுமன்றித் தன்மையாலும் பண்பாலும் கூடத் தலை, இடை, கடைப்பட்டவை. ஏனென்றால் அந்தத் தலைக் கழகக் காலத்திலே முத்தமிழா யிருந்தது என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு இலக்கண நூலும் மாபிண்டம் என்று சொல்கின்ற முத்தமிழ் நூலாக இருந்தது. ஒவ்வொரு புலவனும் முத்தமிழ்ப் புலவனாக இருந்தான். வரவரத்தான் இடைக்காலத்திலே, கடைசிக் கழகக் காலத்திலே, முத்தமிழ் வேறு பிரிந்தது. பிறகு பொரு ளிலக்கணம், பிற்காலத்தில் நன்னூலார் காலத்தில் விலக்கப் பட்டது. பிறகு மாணவருக்கு இலக்கணமே வேண்டாவென்ற முறையிலே வந்து விட்டது. இன்னும் சற்று முன்பு மொழியிலே செய்யுள் கற்பிக்கும் பொழுது அதனுடன் சேர்த்தே இலக்கணம் கற்பிக்கலாம் என்று வந்தது. கடைசியிலே இப்பொழுது இலக்கணமே வேண்டா; இலக்கியமே போதும்; அதிலே வாங்கிய மதிப்பெண்ணினாலே ஒருவன் தேறி விடலாம் என்ற கொள்கை இருந்து வருகிறது. இப்படிக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய், கட்டெறும்பு தேய்ந்து சிற்றெறும்பாய், அதுவும் தேய்ந்து ஒன்று மில்லாமற் போனது' என்கிற பழமொழிப்படி இப்பொழுது வந்திருக்கிறது. இந்த நிலையிலே தொல்காப்பியம் ஒரு பழமையான நூல்தான். இருந்தாலும் அஃது ஆரியம் வந்த பிறகு ஏற்பட்ட நூல். அதிலே வடசொல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியரைப்பற்றிய குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ் நூல் அனைத்தும் அழிந்தன; அழிக்கப்பட்டு விட்டன. அதை அறிய வேண்டும் ஏனென்றால் சமசுகிருதத்திலிருந்து ஓர் உயர்வு வேண்டும் என்ற ஒரு முயற்சி நடந்தது. அந்த முயற்சி பல்யாக சாலை முதுகுடுமி என்ற ஒரு மன்னன் வேள்வியிலே ஈடுபட்ட பின் வெற்றி பெற்றது. நம் நாட்டில் அந்தக் காலத்திலே உயர்தரமான மதங்களெல்லாம் இருந்தன. அந்தக் காலத்திலே மதத்தினில் மூவகை நிலை இருந்தது. அவையாவன. சிறு தெய்வங்களை வணங்கும் கடைப்பட்ட நிலை; பெரும் தெய்வங்களை வணங்குதல் (சைவம், வைணவம்) என்ற இடைப்பட்ட நிலை; உயர்ந்த சித்தர் மதமாகிய ஊர் பேர் குணங்களற்ற குறியற்ற உயர்ந்த கடவுள் நிலை. கடவுள் என்ற பெயர் ஆதியந்தம் கடந்த முழு முதற் பரம்பொருளைத் தான் குறிக்கும். பிற்காலத்திலே வந்த மகேசன் என்ற முறையிலே அந்தச் சொல் இழிவு பெற்றுச் சிறு தெய்வங்களுக்கும் கடவுள் என்ற பெயர் ஏற்பட்டுக் கடைசியில் ஆட்களுக்குக் கூட கடவுள் என்ற பெயர் வைத்து விட்டனர். ஆகையினால் அந்தக் காலத்திலே உயர்ந்த நிலையில் தமிழர்கள் இருந்தார்கள். இப்போது இவற்றைப் பார்க்கும் பொழுது எந்த நிலையில் எப்படி நோக்க வேண்டும்? விசயநகரமும் சென்னையும் போலத்தான் நினைக்க வேண்டும். சமசுகிருத இலக்கியத் தையும் தமிழ் இலக்கியத்தையும் உற்று நோக்கும் பொழுது சென்னை நகரம் செம்படவன் குப்பமாக இருக்கும்போது விசய நகரம் இருந்தது. விசய நகரம் எவ்வளவு பெரிய நகரம் என்பது ``இராபர்ட்சிவில்'' எழுதிய `பர்காட்டன்எம்பயர்' (Forgotton Empire) என்ற புத்தகத்தைப் படித்தால்தான் தெரியும். அந்த நகரம் இப்பொழுது தரைமட்டமாய்ப் பாழாய்க் கிடக்கிறது. இருந்தாலும், ஆங்காங்கு கிடக்கின்ற சில கற்களில், மண்டபங்கள் கல் துண்டுகளில், செய்யப்பட்டிருக்கின்ற சில ஓவிய வேலைப்பாட்டினாலே, நாம் உணர்ந்து கொள்ளலாம், எவ்வளவு சிறந்ததாக அந்த காலத்தில் இருந்ததென்று. அது போலத்தான் இப்பொழுதும் தமிழிலே சில சொற்கள் சிதறிக் கிடக்கின்றன. ஏரணம் என்பது (Logic) `லாசிக்' அஃது இரு தனிச் செய்யுள்களில்தான் இருக்கின்றது. `ஏரணம் உருவமோடும் இசையோடும் கிருதஞ்சாலை' என்கின்ற தனிச் செய்யுளிலும் `ஆரணங்கான் என்பர் அந்தணர்' என்ற தனிச்செய்யுளிலுள்ள இரண்டு தனிச் செய்யுட்களிலே நின்று, பழங்காலத்தில் ஏரணம் என்ற `லாசிக்' இருந்தது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இப்படியே மற்ற நூல்களிலும் மற்றச் சொற்களைக் குறிப்பதற்கும் சொற்கள் ஆங்காங்கே இருக்கின்றன. இதை அறியும்பொழுது பழைய நிலையை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். இந்தத் தமிழ் அழிந்து சிதைந்து கிடக்கிற, இந்தக் காலத்தில் கூட இருக்கிற சொற்களைக் கொண்டு எத்தனையோ வேறு சொற்களை நாம் ஆக்கிக் கொள்ள முடியும். அந்தத் தகுதி தமிழுக்கு இன்னும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் சிலர், உள்ளனர். சிலர் என்றால் புறம்பானவர்களைப் பற்றி யான் சொல்லவில்லை. அஃது அவர்களுக்கு இயல்பானது. சிலர் என்றால் காட்டிக் கொடுப்பதினாலேயே முன்னேறலாம் என்று கருது பவர்கள்; அதிலும் சில இளைஞர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மடமை என்ற சொல்லுக்கு இளமை என்பதே முதற் பொருள். அஞ்சல் மட அனமே என்பதில் மடம் என்பதற்கு இளமை என்று பொருள். மடமை என்பதற்கு அறிவின்மை என்பது தான்; ஏனென்றால் இளமையில் அதுதான் இருக்கும். சில இளைஞர்கள்கூட பேசத்தெரியா தவர்கள்கூட-கேள்வி கேட்கத் தெரியாதவர்கள்கூட-நம்மிடத்தில் ஏதோ பேசத் துணிகிறார்கள். நான் முப்பது ஆண்டு ஆராய்ச்சி செய்தவன். வரலாற்றோடு ஒட்டி ஆராய்ந்து இருக்கிறேன். தென்னாட்டைப் பற்றிய வரலாற்று நூல் அத்தனையும் படித்திருக்கிறேன். இதற்கு மேல் மாந்தர் நூல் என்னும் ஆந்திரோபாலசி (Anthropology) என்ற மிகச்சிறந்த நூலினையும் படித்திருக்கிறேன். இதற்கு மேல் வேறு சில நூல்களையும், ஏரணம் போன்ற நூல்களையும் படித்திருக்கிறேன். தமிழிலே சொல் உண்டா, இல்லையா, என்பதற்கு முதலில் எதை அறிய வேண்டும்? சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியிலுள்ள சொற்களை எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதில் இல்லாத சொற்களும் பல இருக்கின்றன. உலக வழக்கில், அதற்கப்புறம் சொல் உண்டா, இல்லையா என்பதைப் பிறகு அறிய வேண்டும். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலிதான் நமக்கு முதல் படியாக இருந்து உதவ வேண்டும். இப்படிப்பட்ட அகரமுதலி, யாரால் தொகுக்கப்பட்டது, எப்படிப் பட்டது என்பது தெரியுமா? தமிழ் நலம் கருதாதவரால் தொகுக்கப்பட்டது அந்த அகரமுதலி. பணம், தமிழ்ப்பணம்; மொழி தமிழருடையது; நாடு தமிழருடையது. யானை கட்டித் தீனி போட்டது போல 29 ஆண்டுகள் அது நடந்தது. கடைசியில் பல தமிழ்ச் சொற்கள் அதில் இல்லவே இல்லை. இப்பொழுது `நீல்' என்பது நிறவடிவம்; நீன் என்பதுதான் முந்தின வடிவம். திருநெல்வேலியிலே முழங்குகிறது. ஆனால் இச்சொல் அதிலே இல்லை. வெளிப்படையாகவும், பச்சையாகவும் நான் சொல்ல விரும்புகிறேன். இல்லாவிட்டால், உங்களுக்குச் சரியாக விளங்காது. அதிலே தலைமையாக இருந்த ஆசிரியர் மு. இராகவய்யங்கார். அவர் தமிழ் அன்பர் என்று நான் கொள்ளவில்லை. ஆனால் அவர் என் பழைய நண்பர் தான். அவர் தொல்காப்பியத்திலே ஐயர் என்றசொல்லுக்கு-ஐயர் யாத்தனர் கரணம் என்பதற்கு-ஆரிய மேலோர் என்று எழுதினாரே அது ஒன்றே போது மானது. நான் `யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கொள்கை யுடையவன். ஆனால், கேளிர் என்றால் எனக்குக் கேளிராக இருக்க வேண்டுமே தவிர வாளிராக இருக்கக் கூடாது; வாட்களாக இருக்கக் கூடாது. நாம் அவர்களைக் கேளிராகக் கருவது போல அவர்கள் நமக்குக் கேளிர்களாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்கனாக இருந்தாலும் சரி; ஆத்திரேலியனாக இருந்தாலும் சரி; இங்கே வந்து தமிழைக் கற்று உண்மையிலேயே தமிழனாக இருந்தால் நாம் அவனைத் தமிழனாகத்தான் போற்ற வேண்டும். பரிதிமாற் கலைஞர் பிராமணராக இருந்தாலும் அவர் தூய தமிழர். மறைமலையடிகளுக்கும் அவர்க்கும் நான் கடுகளவும் வேற்றுமை காட்டுவதேயில்லை. ஆனால் போலித் தமிழராக இருந்தால் அவர்களைத் தமிழர்களுக்குப் புறம்பாகத்தான் வைத்திருக்கிறேன். நமக்கு குலம் வேண்டுவது; கருத்தன்று. இந்தக் காலத்திலே குலத்தை ஒட்டிப் பிரிக்க முடியாது. ஏனென்றால் நம் நாட்டிலும் குலம் கலந்துதான் கிடக்கிறது. ஆனால் மனப்பான்மை பற்றித்தான் நாம் ஒருவரை வேறுபடுத்த வேண்டும், அவர் தமிழரா அல்லரா என்பதை. உண்மைத் தமிழன் என்று சொன்னால் யாராயிருக்க வேண்டும். நான் தமிழன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. ஒருவன் தமிழிலே பேசுவது மட்டும் போதாது. அவன் முன்னோர் மொழியை இழந்திருப்பான். அவன் முன்னோர் மொழி பேச்சு வழக்கற்றிருக்கும். தமிழ் நாட்டிலிருந்தால் தமிழைத் தவிர வேறு மொழி பேச முடியாது; இல்லாமற் போனால் பிழைப்பு நடக்காது. ஆகையினால் பிழைப்புக்காகப் பேசுகிறான். எனவே தமிழ் என்று சொன்னால் தமிழுக்கு ஊறு செய்யாமல் ஆக்கவேலை செய்ய வேண்டும். தமிழ் வழிபாடாற்ற வேண்டும். தமிழிலே சடங்குகள் செய்ய வேண்டும். அப்படித் தானும் செய்வதில்லை; பிறரையும் செய்ய விடுவ தில்லை. ஆகவே இந்த வகையிலெல்லாம் நாம் நம்முடைய உரிமைகளை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். இடைக்காலத்திலே, நாம் மிகத் தாழ்த்தப்பட்டு விட்டோம். அதாவது என்னவென்றால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று சொன்னேனே அந்தக் குடுமி காலத்திலே தவறான கருத்து தமிழ் நாட்டிலே புகுத்தப்பட்டு விட்டன. அவை என்னவென்றால் சமற்கிருதம் தேவமொழி என்றும், அதுதான் இறைவனுக்கு ஏற்றதென்றும், விருப்பமானது என்றும், அதிலேதான் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் சொல்லித் தமிழ் வழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டது. அதுதான் அடிப்படைத் தமிழ் தாழ்த்தப்பட்டதற்கு அடையாளம். அந்தத் தமிழினுடைய தாழ்வு கடைசியில் தமிழரை தாழ்த்தி விட்டது. `பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தைப் பிடித்தது' என்பது போல-அஃது அதனோடு தொடர்புடைய தனாலேயே அவனையும் தாக்கிவிட்டது. சென்னையிலே ஒரு முறை நானும் சுப்பையா அவர்களும் இருந்தபோது திருநெல்வேலியிலிருந்து `நான் சைவ வேளாளன்' என்று தம்மைப் பெருமையாகச் சொல்லித் கொள்பவர் ஒருவர் வந்தார். சாப்பிட்டுவிட்டு வந்ததும் `என்னய்யா. நன்றாக சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன், `சாதம் நன்றாக இருந்தது என்றார். `சோறு என்று சொல்லுங்களேன்' என்றேன். சோறு என்று சொல்வதற்கு நான் என்ன, பள்ளு பறையா' என்றார். அப்போது நான் சொன்னேன். `பள்ளு பறையன் சோறு உண்பதா; அப்படியானால் நீர் வேறு உண்ணும்' என்றேன். ஆகவே இப்படித் தமிழன் தன்னை தாழ்த்தி வைத்திருக்கிறான். இது ஒன்றே போதும் தமிழ் தாழ்த்தப்பட்டது, தமிழர் தாழ்த்தப்பட்டனர் என்பதற்கு, ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சில வகுப்பாரைக் குறிக்கிறார்கள். அவர்களல்லர் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். தமிழன் தாழ்த்தப்பட்டான்; தமிழரனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள். அவன் எங்கே? அவன் தொட்டதைத்தான் உண்பாரில்லையே. திருநெல்வேலியிலே சைவ வேளாளன் சொல்லிக் கொள்கிறான், நான் தமிழருள்ளேயே மிகத் தலைமையானவன் என்று; சரிதான் அவன் துப்புரவாகத் தானிருக்கிறான்; நன்றாகத் தானிருக்கிறான். நீ தொட்டதை உண்பார் இல்லையே, உன்னுடைய மொழியும் அப்படித் தானேயிருக்கிறது. நீ அதனாலே தான் தாழ்த்தப்பட்ட வனாகிறாய்? நாகரிக மற்ற ஆப்பிரிக்கன் கூடத் தாய்மொழியில் பேசுவதா யிருந்தால் அது உயர்வு என்றுதானே அறிஞர்களெல்லாம் கருதுகின்றார்கள். ``எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே'' என்று மனோன்மணியம் சுந்தரனார் சொல்கிறார். அப்படிப்பட்ட தமிழ், மேனாடு களுக்கெல்லாம் தலைமை யானது. அப்படிப்பட்ட மொழியை நீ தாழ்வாகக் கருதிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. இந்த அகரமுதலியில் என்ன செய்திருக்கிறார்களென்றால் தமிழை எவ்வளவு தாழ்த்த வேண்டுமோ அவ்வளவு தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அதில் தமிழ்ச் சொற்கள் பல இல்லவே இல்லை. தென் சொற்களை வடசொற்களாகக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு மேலே சொற்களுக்குத் தவறான பொருள்களை உரைத்திருக்கிறார்கள். சாமை என்ற பொருள் ஒன்று இங்கு விளைகிறது. அது வடநாட்டில் விளைவதேயில்லை. தொன்று தொட்டு தென்னாட்டிலே விளைந்து வருகிறது. வேத ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து புகுந்த உடனேயே தொடர்பு வைத்துக்கொண்டார்கள். எதற்கென்றால் சமற்கிருதத்துக்கோ, பிராமணர்களுக்கோ ஓர் உயர்வு வேண்டுமென்றால் இந்தியா முழுதும்தான் அவர்கள் உயர்வைப் புகுத்த வேண்டும். ஓர் இடத்திலேயே உயர்வைப் புகுத்தி, இன்னொரு இடத்திலே உயர்வைப் புகுத்தாமல் இருக்க முடியாது. அதற்காக வேத காலத்தில் அவர்களுக்குத் தொடர்பிருந்தது இங்கே. வேதத்திலேயே தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. வேதத்திற்கு முன்பே தமிழ்ச் சொற்கள் உண்டு. அதற்குக் கரணியம் என்னவென்றால் தமிழர்தாம் தெற்கேயிருந்து வடக்கே சென்று திராவிடராகத் திரிந்தார்கள். பிராகி என்ற மொழி வடக்கே போகப் போகச் சிறுபான்மை மொழியாகியது. அதிலும் பெரும்பாலோர் மலைவாழ்நர்களாக இருப்பதால், பல மேனாட்டறிஞர்கள் பின்வருமாறு தவறாகக் கருதுகின் றார்கள். இவர்கள் மலைவாழ்நர்களாக இருப்பதனாலும், இவர்களது மொழியானது திருந்தாமல் இலக்கிய இல்லாததாக இருப்பதனாலும் இதுதான் முந்திய நிலைமையைக் குறிக்கிறது என்கிறார்கள். இல்லவே இல்லை; இது தவறு. அவர்கள் கீழே வாழ்ந்தவர்கள் தாம் அந்தக் காலத்திலேயே போரும் கொள்ளையும் ஏற்பட்டு அடிக்கடி காப்பிற்கு இடமில்லாமல் இருந்ததினாலே அவர்கள் மேலே போய் வாழ்ந்தார்கள். எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன். -----யிலே, `பார்க்கு' என்பது வாய் என்று பொருள்படுகிறது. வாய் என்பது `பார்க்' என்று குறுகுகிறது. வாய் என்றால் வழி என்ற பொருளுடையது. வருவாய் என்று சொல்கிறோம். வருவாய் என்றாலும் வரும்வழி என்றாலும் ஒன்று. உணவு புகுகிற வழி வாய்வழி. இந்த `கள்' என்பது கள்ளுதல், கள்ளுதல் என்றால் கலத்தல், கள்ள, கடப்ப என்பன தொல்காப்பியத்தில் உவம உருபுகள். கள்ளுதல் என்றால் பொருந்துதல் அல்லது கலத்தல். அது தான் கள் என்று பெயர். `அம்' விகுதி சேர்ந்தது. களம் என்றால் கூட்டம்; போர்க்களம் என்று சொல்வதில்லையா. அக்காலத்தில் பல பொருள்கள் ஒன்றாகக் கலப்பதற்குக் `கள்' என்ற பன்மை விகுதியைச் சேர்த்தார்கள். இந்த `பார்க்' என்பது எப்படியிருக்கிறது பாருங்கள். எவ்வளவு கெட்டுப் போயிருக்கிறது. இப்படியே சொற்களைச் சொல்லிக் கொண்டே போனால் நேரமாகும். ஓரரிசிப் பதமாக எடுத்துச் சொல்கிறேன். ஆகவே இப்படியாக மொழிதிரிந்து கிடக்கிறது. மேனாட்டவர் வரலாற்றை ஒட்டி மொழியை ஆராயாமல் திடுமென்று மலைவாழ்நர் களெல்லாம் பழங்குடி மக்கள் என்று தவறான கருத்தைக் சொல்கின்றனர். அப்படியானால் நாளைக்கு நாம் கொடைக்கானல் போனாலும் கூட நாமும் பழங்குடி வாசிகள் என்று சொல்லிக் கொள்ளுவது நேரத்தான் செய்யும். ஆகவே இந்த அகர முதலியில் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் இப்படி `சாமை' என்பதைச் `சியாமா' என்று திருத்தி அதற்குக் `கருப்பாதை' என்று பொருள் காட்டியிருக்கிறார்கள். சாமை உமியும் கருப்பன்று; அரிசியும் கருப்பன்று, இது பொருந்துமா? என்று கேட்கிறேன். சில தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதம் என்றவுடனே சிலர் தலைமையாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சமற்கிருதம் எது தெரியுமா? வேத ஆரியம் (Vedic Language) என்று ஒரு மொழி இருந்தது. அதற்கு வைதிக ஆக்கம் அல்லது வேத மொழி என்று பெயர். அந்த வேத ஆரியம் வழக்கற்றுப் போனது. ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். இந்தப் பெரிய திராவிட மக்களோடு கலந்த பின் கடலிலே காயம் கரைத்தது போல ஆகிவிட்டது. அதனால் அவர்கள் வழக்கற்றுப் போன மொழியை இலக்கியம் அமைவதற்கு ஏற்ற சொற்கள் இல்லாமையினாலே அக்காலத்து வழக்கம் வட்டார மொழிகளிலிருந்து (Regional Languages) ஏராளமான சொற்களைக் கலந்து கொண்டார்கள். அப்போது தலைமையாயிருந்தது தமிழ்தான். அந்தக் காலத்து வட்டார மொழிகளுக்குத்தான் (Regional Languages) `பிராக்ருதம்' என்று பெயர், `பிரா' என்றால் முன்னாலே `கிருதம்' என்றால் செய்யப்பட்டது. சமற்கிருதம் என்பது வழக்கற்றுப் போன வேதமொழியோடு அக்காலத்தில் வழக்கிலிருந்த வட்டார மொழிகளெல்லாம் சேர்த்து ஆக்கிக் கொண்ட அந்தச் சொல் இலக்கிய மொழியில்தான் அந்தச் சமற்கிருதம் வந்தது. அதன் பொருள் நன்றாகச் செய்யப்பட்டது என்பது. வேத ஆரியம் வேறு. சமற்கிருதம் வேறு. பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வேத ஆரியமும், வேத சமற்கிருதமும் ஒன்றுதான் என்று. இதுதான் `என் பாட்டன் திருமணத்திற்கு நான் பாட்டுக் கட்டினேன்' என்பது போலுள்ளது. ஆகவே இப்படித் தவறான சில முடிவுகள் இருக்கின்றன. சமற்கிருதச் சொற்களை ஆய்ந்து பார்த்தீர்களானால் பகுதிச் சொற்கள் எல்லாம் தமிழாக இருக்கும். வடிவு மாறியிருப்பதால் அவற்றை எல்லாம் விளக்க எனக்கு நேரமில்லை. ஆகவே `சியாமா' என்ற அந்தச் சொல்லை அப்படித் திருத்தி விட்டிருக்கிறார்கள். `வரால்' என்றால் `குரவை' என்று எழுதி வைத்திருக்கிறார்கள் ஏன் தெரியுமா? அங்கே இருந்தவர்களெல்லாம் ஊன் உணவு உண்ணாதவர்கள். கறிக்கடையைக் கனவிலும் காணாதவர்கள். ஆகவே, அவர்களுக்குப் புலாலுணவு பற்றிய சொற்களே தெரியாது. மேனாட்டிலே அகரமுதலி தொகுப்பதாயிருந்தால் இந்த இடர்ப்பாடே இல்லை. ஏனென்றால் பெரும் பாலோர் ஊன் உணவினர். மரக்கறி உணவினர் என்ற வேறுபாட்டிற்கு இடமில்லை. இங்கே அது இருக்கிறது. அதனாலே `வராலை' குரவை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ``தானே தரக்கொளின் அன்றித் தன்பால் மேவிக்கொளக் கொடா விடத்தது மடற்பனை'' என்று நன்னூலில் இருக்கிறதே அது பெண் பனையாக இருக்குமோ, ஆண் பனையாக இருக்குமோ சொல்லுங்கள் பார்க்கலாம்? ஆண் பனை என்று நன்னூலின் நூற்பாவையே மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்கள். அதுதான் அதில் வேடிக்கையானது. 1924ஆம் ஆண்டு ஆம்பூரிலே நான் ஆசிரியனாக இருந்தேன். அப்போது நாட்டியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சீனிவாசமூர்த்தி என்ற ஒருவர் என் அறையிலே உடனுறைந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வேடிக்கையாக ICS. தமிழ் எப்படிப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார். I.C.S தமிழ் எப்படியிருக்கும் தெரியுமா? அங்கு என்ன செய்வார்கள் தெரியுமா? 'Give the Tamil meanings of the following words,' என்று ஒரு கேள்வி இருக்கும். அதிலே அவன் `யானை' என்று கேட்டிருப்பான். அதற்கு இவன் 'pig' என்று எழுதி வைப்பான். அப்போது திருத்தாளர் என்ன செய்வாரென்றால், பக்கத்திலிருக்கும் உதவித் துணையாளரைப் பார்த்துப் `படி' என்று சொல்வார். அவன் 'Pig' என்று படிப்பான். 'Alright, something like that, give five marks' என்று சொல்லுவார். அதற்கு அப்புறம் என்ன செய்வாராம்? வினாத்தாளில் இன்னொரு இடத்திலே `பசு' என்று எழுதியிருப்பதற்கு இவன் 'Cow' என்று கூட எழுதத் தெரியாமல், `எருது' என்று ஆங்கிலத்திலே எழுதி வைத்திருப்பான். 'Alright just a masculine of that; Give another five mark' என்று சொல்வார். இப்போது இது எப்படி இருக்கிறது. வரால் எவ்வளவு பெரிது? குரவை எவ்வளவு சிறியது? 'Something like that'. அவ்வளவுதான். வராலைப் போன்றது தானே குரவை. அப்படியே பெண்பனையை ஆண் பனை என்று எழுதியிருக்கிறார்கள்; Just a masculine of it. இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடிருக்கிறது. இப்படிப்பட்டவர்களெல்லாம் இந்த அகரமுதலியைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மத்தியானம் என்ற சொல் எந்தச் சொல்தெரியுமா? `மத்திய அயம்' என்ற வடசொல். அதற்கு வழங்கிய தமிழ்ச் சொற்கள் எவை எவை தெரியுமா? உருமம், உச்சிவேளை, நண்பகல்; மூன்று சொற்கள் ஆகின்றன. திருநெல்வேலியிலே `உருமம்' என்பார்கள். அது வேனிற் காலத்திலே சொல்ல வேண்டும். அதுவும் வெப்ப நேரத்திலே சொல்ல வேண்டும். ஏனென்றால், `உருமம்' என்பது சூடு, வெப்பத்தைக் குறிக்கும். இந்த உருமத்திலே நீ வந்திருக்கிறாயே என்று கேட்பார்கள். நண்பகல் என்பது இலக்கிய வழக்கு. இவையெல்லாம் விட்டு விட்டு `மத்தியானம்' அதற்கப்புறம் அதனுடைய சிதைவு மதியம். இது எதற்குச் சமமாக அமைந்து விடுகிறது? பூரண சந்திரனுக்குத் தமிழ்ப் பெயர் `மதியம்' மதி என்றால் சந்திரன். `மதியம்' என்றால் (Full Moon) பூரண சந்திரன். நாலடி யாரிலே வருகிறது. `அங்கண் மதியம்' அம என்பது பெருமைப் பெயர் பின்னொட்டு (Auxilary suffix) நிலை என்றால் (Stand) நிலையம் என்றால் (Station) இப்படியே, பெருமைப் பொருள் பின்னொட்டைக் குறிக்க வரும் போது அந்த `அம்' வருகிறது. `கம்பு' என்றால் சிறியது. `கம்பம்' என்றால் பெரியது. `தம்பம்' என்று அதை மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடி போட்டு வைக்கிறார்கள். இப்போது மகிழ்ச்சிக்குரியது என்னவென்றால், இப்போதிருக்கின்ற இளம்சிறார்கள் உள்ளத்திலே தமிழ் உணர்ச்சியினை எப்படியோ இறைவன் திரும்பப் படைத்திருக்கிறான். இனிமேல் அடுத்த தலைமுறையிலேதான் அது வரும். பழைய தலைமுறையிலே பார்ப்பராயிருந்தால் இந்த மூன்று அகக்கருணக் கூறுகளும் இல்லவே இல்லை. கல்வியும் அப்படித்தான் காண்கிறது. `நான் தாழ்ந்தவன், நான் தாழ்ந்தவன்' என்று இப்படி நினைக்கவே வேண்டா. `நான் உயர்ந்தவன், நானும் ஒரு மகன்தான்; நானும் பிறரைப்போல துப்புரவாக இருக்க முடியும்; எனக்கும் இறைவன் அறிவைக் கொடுத் திருக்கிறான்' என்ற எண்ணம் வேண்டும். உருசியாவிலே போய்ப்பாருங்கள், எவ்வளவு தாழ்ந்து கிடந்தவர்கள், காட்டு விலங்காண்டியாக இருந்தவர்கள், ஏழைக் குடியானவர்கள், கடைசியில் அமெரிக்கர்களை விடச்சிறந்து உயர்ந்திருக்கிறார்கள். ஆகையினாலே இன்ன குலம் என்றில்லை; இன்ன குடும்பம் என்றில்லை; மதி நுட்பமுள்ள யாரும் கற்கலாம். இதெல்லாம் இடைக் காலத்திலே வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டவை. பலகணி, சாளரம், காலதர் என்ற மூன்று சொற்கள் இருந்தது அந்தக் காலத்திலே. இப்போது சன்னல் என்ற போர்த்துக்கீசியச் சொல் வழங்குகிறது. அதனால் நாம் இந்தச் சன்னலைப் போக்கி விடவேண்டும். சன்னல் நமதன்று. இந்த ஒன்றுக்கு இடங்கொடுத்தால் இன்னொன்றுக்கும் இடங் கொடுக்க வேண்டியதுதான். அயற்சொல் என்றால் என்றால் அயற்சொல் தான். எந்தச் சொல் யார் வழங்கினாலும் சரி. எல்லாம் தொலைய வேண்டியதுதான். சேத்திரம் என்றால் சேத்திரக் கணிதம் வந்து விடுமே. ஆகையினாலே, அயற்சொற்களெல்லாம் எதற்கு? தென் சொற்கள், தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது. தமிழ்ப்பற்றில்லாதவன் என்ன வேண்டு மானாலும் சொல்வான். ஒருவனுக்குத் தாயின் மேலே பற்றிருக்கிறது, அவன் என்ன செய்வான்! தாய் நோய்வாய்ப் பட்டிருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து `நான் உங்களை நலப்படுத்தத்தான் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டுதானிருப்பான். பற்றில்லாதவன் `சவத்தைத் தூக்கியெறியுங்கள்; ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்' என்பான். அதுபோல பலர் சொல்லிக் கொண்டே யிருக்கிறார்கள். ஆகையினாலே சொற்களை நாம் தமிழ்ப்படுத்த வேண்டும். இப்போது தமிழ்ப் படுத்துவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. தமிழிலே சொற்கள் நிறைய இருக்கின்றன. வடமொழியிலே சில சொற்கள் இருக்கின்றன. மலையாளத்திலிருக்கிறவை எல்லாம் தமிழ்ச் சொற்கள்தாம். சமற்கிருத மல்லாத மலையாளச் சொற்களெல்லாம் பழைய சேர நாட்டுத் தமிழ்ச் சொற்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இன்னும் அதற்குமேலே வட நாட்டிலும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கும் நீர் என்ற சொல் வங்காளத்தில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. வடநாடு முழுவதும் திராவிடர்கள் இருந்த நாடு ஒரு காலத்திலே. இப்போதுதான் அவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள் வடநாட்டிலே. உங்கு இங்கு என்ற சொல் தில்லியிலே வடமேற்குப் பகுதியில் `சாக்' என்ற ஒரு மொழியிலே வழங்குகிறது. மற்ற இடங்களிலே இதர், உதர் என்கிறார்கள். இந்த இடத்திலே இங்கு, உங்கு என்கிறார்கள். ஆகவே இந்தச் சொற்க ளெல்லாம், பழைய காலத்திலே அவர்கள் திராவிடராக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மொழிநூல் சான்று. ``திராவிடரின் ஒரு சாரர்தாம் வடமேற்கில் போய் ஆரியராக மாறிவிட்டனர். அந்த ஆரியருள் ஒரு சரார்தாம் திரும்ப வேத ஆரியராக வருகிறார்கள்'' இது இராமச்சந்திர தீட்சிதருடைய நூலிலே தெளிவாக இருக்கின்றது. அதற்கு முன்னாலே பி. டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய வரலாற்று நூல்களை யெல்லாம் நன்றாகப் பாருங்கள். நானும் முப்பதாண்டுகளாகச் செய்து வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகளையெல்லாம் ஓர் ஆங்கில நூலாக ஏற்கெனவே சேலத்தில் எழுதி முடித்தேன். தமிழில் சொற்களை ஆக்குவதற்குப் பல வகையான வழிகளெல்லாம் இருக்கின்றன. உலக வழக்கிலே கூட எத்தனையோ சொற்கள் இருக்கின்றன. நான் இதைக்கூட தொகுக்கும்படி சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு எழுதிக் கேட்டேன். அகரமுதலியில் உள்ள குறைபாடுகளைக்கூட அச்சிட்டு வழங்கினேன். அதற்கு விடை இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை. சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், என்னவோ, தனக்குத் தெரியாவிட்டால், பிறருக்கும் தெரியாது என்று. எல்லாவற்றிற்கும் சொற்கள் இருக்கின்றன. உனக்குத் தெரியாவிட்டால் பிறருக்குத் தெரியாது என்று நினைத்துக் கொள்ளாதே; உன்னாலே புதுச்சொல் புனைய முடியாவிட்டால் பிறருக்குச் சொல்ல முடியாது என்று நினைத்து விடாதே. முதலாவதாகத் தமிழ் ஆக்க மொழி என்று சொல்லிக் கொண்டு பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியில் டர். லககிடி என்ற தமிழ் அல்லாத சொற்களையும் சேர்த்து விட்டிருக்கிறார்கள். 1933-இல் `டர்', வந்து விட்டது. `டர்' என்றால் அச்சம். இந்தியிலே, வரப் போகிறது பிற்காலத்திலே என்பதை நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடு என்ற இடத்திலே, புனல் (Funnel) என்பதை `வைத்தூற்றி என்று வழங்குகிறார்கள். வைத்து ஊற்றுவதினாலே இதற்கு ``வைத்தூற்றி'' என்று பெயர். இங்கே யெல்லாம், புனல் என்றல்லவா நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாஞ்சில் நாடு திருநெல்வேலியை ஒட்டியது. திருநெல்வேலி செந்தமிழ்ப் பாண்டிய நாடு என்று சொன்னேனே, அதற்குச் சான்றாக இன்னும் பல சொற்கள் வழங்குகின்றன. அங்கும் புகைவண்டி வந்தது; train வந்தது, train என்றோ, இரயில் என்றோ ஒன்றும் சொல்லவில்லை. புகைவண்டி என்று கூறினார்கள். அதற்கப்புறம் Cycle வந்தது. மிதி வண்டி என்று கூறினார்கள். ஆனந்தவிகடன் போன்ற செய்தித்தாள்கள் தாம் துவிச்சக்கரம் என்று எழுதுகின்றன. ஏனென்றால் Cycle என்பதை மொழி பெயர்க்கிறார்களாம். By என்றால் இரண்டு, Cycle என்றால் சக்கரம். இரண்டு சக்கரங்கள் உடைய வண்டியை துவிச்சக்கர வண்டி என்று மொழி பெயர்க்கிறார்கள். மிதிவண்டி என்று கூறுவதால் என்ன கெட்டுப் போய்விடும். ஆகவே தமிழிலேயே பல கலைச் சொற்களை உண்டாக்க முடியும். அவ்வாறு இருக்க `பிற மொழிகளின் உதவியின்றேல் கலைச்சொல் ஆக்க முடியாது' என்று கூறுவார் கூற்று, பொருளற்றது, பொருத்தமற்றது என்று கூறி நேரமின்மையால் இத்துடன் என்னுரையை முடிக்கிறேன். - ``தமிழம்'' 1.3.1974 4 தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு மாநாட்டுத் தலைமையுரை ``ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'' ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா யெண்ணவும் படுமோ?” ``இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.'' அன்பர்களே! குறித்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்குவது என்பது தமிழர் களிடத்தில் காணுதற்கரிய பழக்கமாகும். ஆனால் ஆங்கிலேயரிடத்தில் காலந்தவறாமை என்னும் இந்தப் பண்பை இயல்பாகவே காணலாம் எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், எவ்வளவு முயன்றும்கூட இன்று, நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டம் தொடங்க முடியவில்லை. இதனால், எங்கே என் பேச்சைக் காலம்கடந்து தொடங்க வேண்டியநிலை ஏற்படுமோ என்று அஞ்சினேன். ஆனால், இம்மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்துதற்கு அழைக்கப் பட்டிருந்த தவத்திரு. குன்றக்குடி அடிகளார் வராததால், என்னுடைய பேச்சைக் குறித்த காலத்திற்கு முன்பே நிகழ்த்த நேர்ந்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நிகழ்ச்சி நிரலின்படி, என்னுடைய பேச்சு 11 மணிக்குத் தொடங்கப் பட்டிருக்கவேண்டும். இப்போது 40 நிமையங்களுக்கு முன்னமே தொடங்கு கிறேன். இதுவும் ஒருவகையில் நல்லதே. தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில் சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி. மு. 1200 என்று சொல்லலாம். பார்ப்பனர் என்று சொல்லும் பொழுது எனக்கு இன்னொருசெய்தி நினைவுக்கு வருகிறது. அஃதாவது, ஆரியர் இந்நாட்டிற்கு வருமுன், பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்னும் சொல் தமிழரையே குறித்தது; பிற்காலத்தில்தான் அச்சொல் ஆரியருக்கு உரியதாயிற்று. அவர்கள் வருவதற்குமுன் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதுவார், நம்பியார், பண்டாரம், புலவர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தாங்கிய தமிழர்களே வழிபாடு நிகழ்த்தி வந்தனர். அவர்கள் அனைவரும் பார்ப்பார் எனும் பொதுப் பெயரால் குறிக்கப்பட்டனர். இவ்வாறே அந்தணர் என்னும் சொல்லும், சமயத்தொடர்பு உடைய தமிழ்ச்சொல் ஆகும். பார்ப்பார் என்பது இல்லறத்தாரைக் குறிக்கும். அந்தணர் என்பது துறவறம் மேற்கொண்ட முனிவர்களுக்கு உரியதாகும். ஆகவே தமிழ்நாட்டிலுள்ள ஆரியர்களைப் பார்ப்பார் என்று சொல்லுதல் பொருந்தாது. அவர்களைப் பிராமணர் என்று குறிப்பிடுவதே தகுதியுடையது; வேண்டுமானால் ஆரியப் பார்ப்பனர் என்று சொல்லலாம். அவ்வாறு அடைமொழி யில்லாமல் `பார்ப்பார்' என்று சொன்னால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிடுவர். அதனால் என்ன தவறென்று நீங்கள் நினைக்கலாம். தவறொன்றுமில்லை. ஆனால் பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் - மேலானவன் - நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக்கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்! ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்தநாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த ஆரியர்களும் - இக்கால பிராமணர்களும் `பூதேவர்' என்றும் `பூசுரர்' என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடி மக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் ``கரை'' என்று பெயர்; ஆனால் பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் `இல்லம்' என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு, நன்மை என்று பொருள் தருகின்ற `மங்கலம்' என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர். வீடுகட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனைநூலிலும் கூட, பிராமணர்களுக்கு உளுக்காத - உறுதியான மரங் களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மரவகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான - வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக - உயர்ந்தவராகக் கருதப்பெற்ற முனிவர்களைக் குறிக்கும் `அந்தணர்' என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள். இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த ஐயம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் - அஃதாவது கடைக் கழகக்காலம் வரையில்கூட - ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கி யிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். காலப் போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான், ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்; எனவே ஆரியத்தினின்று விடுதலை பெற வேண்டும் என்றால் மதம் ஒழியவேண்டும் என்ற கொள்கையை நான் ஒருபோதும் ஒப்ப மாட்டேன். ஏனென்றால், சிவநெறி, திருமால்நெறி என்ற இரண்டும் தமிழர் மதங்கள். இதைத் `தமிழர் மதம்' என்னும் எனது நூலில் விளக்குவேன். சிலர் நினைக்கலாம், நான் நூல்கள் எழுதி விற்பனைசெய்து அதன்வழி வரும் பணத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறேன் என்று. ஆனால் உண்மை அதுவன்று. நான் ஒரு பெரிய போராட்டத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றேன். இந்தப் போராட்டத்திற்கு இரண்டு குண்டுகள் அணியமாகி விட்டன. இன்னும் மூன்று குண்டுகள் எஞ்சி யுள்ளன. அவை வெளிவந்ததும் பெரும்பாலும் 1970-ல் ஒரு போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்திற்கு மாணவர்களும் இளைஞர்களும் அணியம் ஆகல் வேண்டும். இதுநிற்க. ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள். `Vulnerable Poison' என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத் திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர். ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகை வராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந் தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. ``யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற பரந்த மனப் பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும் கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன! இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று ஐயுறு கிறார்கள். உண்மையைச் சொல்வதானால் பல நூற்றாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத் தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்பு களையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர். இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வரு கின்றனர். இங்கு வந்திருக்கும் சித்த மருத்துவர் தகடூர், செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும். சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்தவகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர்கள் தங்களை மற்றக் குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்; தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகை யிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால் அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி `வானமிழ்தம்' என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது! இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தா ரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. `எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி' - இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லை யென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் - பல்கலைக் கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், உயர்முறை மன்ற நடுவராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், அவ்வளவு ஏன் - இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது! இதற்கெல்லாம் காரணம் நமது பகுத்தறிவின்மையே. இவ்வாறு நாம் ஆரியருக்கு அடிமைப் பட்டிருப்பதால்தான், ஆங்கிலேயர்கள் நம்மை, உயர்ந்ததொரு நாகரிகத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் - ஆரியர் வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - அஃதாவது கடைக் கழகக் காலத்துக்கு முன்பே - ஆரியர்கள் தமிழர்களைத் தாழ்த்தி வந்த துடன், தாங்கள் குலவொழுத்திற் குன்றியவர்களாகவும் இருந்ததனால் தான் திருவள்ளுவர், ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' (குறள். 972) எனவும் ``மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'' (குறள். 134) எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழர்களாகிய நாம் கூறும் அறம்வேறு; ஆரியர்கள் சொல்லும் தருமம்வேறு. நாம் அறம் என்று குறிப்பிடுவது நல்ல நெறி முறைகளை. ஆனால் அவர்கள் தருமம் என்று கூறுவது குல வொழுக் கத்தை - அஃதாவது வருணாசிரம தர்மத்தை (Established conduct). எனவே அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்குத் `தருமம்' என்னும் வடசொல் நேரான மொழி பெயர்ப்பாகாது. இது நிற்க, உலகில் உள்ள 3000 மொழிகளில் தமிழ் மிகவும் முந்தியது என்பதுமட்டும் அன்று, தலைமையானதும் ஆகும். இந்தக் கருத்து எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புலனாயிற்று. வடமொழி - தமிழ் வரலாற்று ஆராய்ச்சிகளின் வாயிலாக, வரவர இக்கருத்துத் தெளிவுபெற்று வருகின்ற தேயன்றி, மயக்கத்திற்கு இடமுடையதாகவில்லை. வடமொழியின் தலைமைப் பிடியிலிருந்து தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். இதற்காகத்தான் கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். ஆனாலும், இவ்வகையில் நான் எதிர்பார்த்த பலன் விளையவில்லை ஆனால் அஃது என் குற்றம் அன்று நோய்க்கு ஏற்ற மருந்தை நான் ஆயத்தம் செய்துவிட்டேன். அதை மற்றவர்கள் உண்டு நோய் தீரப்பெறவில்லை யென்றால் என் குற்றமா அது? தமிழ் திரவிட மொழிகளுக்குத் தாய்மட்டும் அன்று; ஆரியத்திற்கு மூலமும் அதுவே. இந்தக் கருத்தை நான் நெடுநாளாகவே வற்புறுத்தி வந்திருக்கிறேன். ஆனால் அண்மையில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு இந்தக் கொள்கையை விளக்கும் வகையில் அமைந்ததாகத் தோன்றவில்லை. அந்தக் குறைபாட்டை நீக்கவே இம்மாநாடு கூட்டப் பட்டுள்ளது. இன்று நடைபெறுவது தமிழ் வரலாற்று மாநாடு. தமிழ் அமைப்பு மாநாடு நாளை நடைபெற இருக்கின்றது. இன்றைய கூட்டத்தில் தொல்காப்பியர் காலமும், திருவள்ளுவர் காலமும், தமிழன் பிறந்தகமும் முடிவு செய்யப்பட இருக்கின்றன. தமிழ் வரலாறு என்று சொல்லும் பொழுது தமிழின் பழமை நம் கண்முன் நிற்கின்றது. தமிழ் மிகப் பழமையான மொழி. அதன் பழமையை நிலைநாட்டுவதற்குக் குமரிநாட்டு மொழி தமிழ் என்று சொல்வதே போதும். உலகத்து நாடுகளில் மிகப் பழமையானது குமரிநாடு. மேனாட்டு உயிர்நூல் (Biology) அறிஞர்கள் இதை ஒத்துக்கொள்கிறார்கள். குமரிநாட்டுப் பறவைகள், மரங்கள் போன்றவற்றின் தொன்மை இக்கொள்கைக்குத் துணை செய்கிறது. இந்தக் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிந்தபோது, இங்கு வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே சென்றனர். இவ்வாறு விந்திய மலைக்கே வடக்கேசென்ற தமிழரே திராவிடர் ஆயினர்; அவர்கள் வடமேற்கே சென்றபோது ஆரியர் ஆயினர். இதனால் தமிழ் திரவிடமாகி, ஆரியமாக வடிவெடுத்தது. குமரிக்கண்டத்தில் கடலால் கொள்ளப்பட்ட தலைக்கழகமும் இடைக் கழகமும் இருந்தன. இவற்றுள் இடைக்கழகம் அழிந்த பிறகுதான் ஆரியர் இந்தநாட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்தபோதே, தமிழன் எளிதில் ஏமாறுபவன் என்பதை கண்டுகொண்டார்கள். அதனால் தாங்கள் மட்டுமன்றித் தங்கள் மரபினரும் வளமாக வாழ்வதற்கு நிலையான ஒருதிட்டம் வகுத்தார்கள். முன்பே நான் சொன்னபடி, தமிழ் வழிபாட்டுக்கு உதவாத மொழி யென்று விலக்கியதோடு மட்டும் அல்லாமல், முதலிரண்டு கழகத்திலும் இயற்றப்பட்ட தமிழ் நூல்களை அடியோடு அழித்து விட்டார்கள். ஏனென்றால், நிலப்பரப்பு கடலில் மூழ்கும்போது உயிர்வகைகள் அனைத்தும் அழிந்து போகலாம்; ஆனால் நூல்கள் அத்தனையும் அழிந்தபோயின என்பது முறையாகாது, கடல்கோளுக்குத் தப்பிவந்த புலவர்கள் நூல்களை யெல்லாம் எறிந்து விட்டு வந்துவிட்டார்கள் என்று சொல்லுதல் இயலாது. ஆகவே அவை அழிக்கப்பட்டேயிருத்தல் வேண்டும். அவை நிலைத்திருந்தால் தமிழின் பெருமையை - தமிழனின் மேன்மையை வருங்கால மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற தீய எண்ணத்தால் ஆரியர்களே அவற்றை அழித்துவிட்டனர். இந்த அழிவிலிருந்து எஞ்சி நின்றநூல் தொல்காப்பியம் ஒன்றுமே. இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் பொருள் பற்றிய பகுதியில் செய்யுள் இயற்றும் முறையும் அணிவகைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே தொல்காப்பியம் ஐந்திலக்கணம் கூறும் நூல். இந்த ஐவகை இலக்கணத்தையும் பண்டைத் தமிழர்கள் `இயல்' என்று வழங்கினர். இயற்றமிழுடன் பண்ணும் தாளமும் சேர்ந்ததை இசைத்தமிழ் என்றனர். இசைத்தமிழுடன் நடிப்பும் கூடியதை நாடகத்தமிழ் என்று கூறினர். இவ்வாறு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் தலைக்கழகக் காலத்தில் புலவர்களால் போற்றி வளர்க்கப் பட்டன. ஆனால், காலப்போக்கில் இவ்வளர்ச்சி வரவரக் குறைந்து கொண்டே வந்துள்ளது என்று கருத இடமுண்டு. எப்படியென்றால், இடைக்கழகக் காலத்தில் நாடகத் தமிழ்பற்றிய ஆர்வம் குறையப்பெற்று இயலும் இசையுமே பேணிக் காக்கப்பட்டன என்று அறிகிறோம். மற்றும், கடைக் கழகக் காலத்திலோ, இசையின் இன்றியமையாமை மறக்கப் பெற்றதால், இயற்றமிழில் மட்டுமே நாட்டம் செலுத்தப்பட்டதை நன்கு உணர்கிறோம். அதுமட்டும் அன்று, புலவர்களின் எண்ணிக்கையும் வரவரக் குறைந்து வந்துள்ளது. முதற்சங்கம் - அஃதாவது தலைக்கழகம் இருந்தது பஃறுளியாற்றின் கரையில் அமைந்த தென்மதுரையில் எனலாம். பஃறுளி என்பது குமரிமலையின் அடிவாரத்தையொட்டிப் பாய்ந்த ஓர் ஆறாகும். இந்த மதுரைச்சங்கத்தில் சிறந்த புலவர்கள் 549 பேர். இவர்கள் மிகுந்த திறமையும் தகுதியும் பெற்றவர்கள். இக்காலத்துப் புலவர்களைப் போலச் செய்யுள் எழுதுபவர்கள் அல்லர், இவர்கள்! செய்யுளால் பாடுபவர்கள்; செய்யுளால் பேசுபவர்கள்! இவர்களைத் தவிர, திறமை குன்றிய - தமிழ்ப்புலமை முற்றப்பெறாத புலவர்களும் இக்கழகத்தில் இருந்திருக் கின்றனர். இடைக்கழகக் காலத்தில் இத்தகைய பெரும் புலவர்களின் எண்ணிக்கை 59 ஆகக் குறைந்துவிட்டது. கடைக்கழகக் காலத்திலோ இன்னும் குறைந்து 49 ஆகிவிட்டது! ஏனிந்த நிலை என்று எண்ணிப் பார்த்தால், தமிழகத்தின் பரப்பு வரவரச் சுருங்கி வந்ததே தகுந்த காரணம் என்பது புலப்படும். கடலில் மூழ்கிப்போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே இருந்த இந்நிலப்பரப்பின் பெரும் பகுதி, தலைக்கழகத்தின் இறுதியில் கடலில் மூழ்கி மறைந்தது. இதுதான் தமிழகத்தில் நடந்த பெரிய கடல்கோள்! இந்தக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியனே கபாடபுரத்தில் - இதன் பழைய தமிழ்ப்பெயர் அலைவாய் என்பது - இடைச்சங்கத்தை நிறுவினான். மீண்டும் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் இடைச்சங்கம் இருந்த நிலப்பரப்பும் அழிந்தது. ஆனால் இந்த அழிவு முன்போன்று அவ்வளவு பெரிதன்று. இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே இருந்த குமரியாறுவரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று. அதனால்தான் அந்த ஆற்றின் பெயர், எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராக வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தின் பரப்பளவு குறைந்ததால்தான் புலவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன். குமரிமுதல் பனிமலைவரை, இந்தியா முழுவதும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட, ஏதேனும் ஒரு துறை பற்றிய கழகம் அமைப்பதனால், அதில் எத்தனை உறுப்பினர் இருப்பர்? தமிழகத்தில் உள்ளவர்களை மட்டும் கொண்ட கழகத்தில் எத்தனைப்பேர் இருப்பர்? தமிழகம் என்று சொல்லும்பொழுது எனக்கு வேறொரு செய்தி நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு என்னும் மூன்றையும் கொண்டதே தமிழகம் எனப்பட்டது. ஆகவே, இன்றுள்ள தமிழ்நாடு தமிழகம் ஆகாது. இதனுடன் புதுவையும் சேர்ந்தாலே தமிழகம் ஆகும். ஆதலின், புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைப் பதற்கும் தமிழர்கள் கிளர்ச்சி செய்தல் வேண்டும். இடைக்கழகம் அழிந்த காலத்தில்தான் ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்கள் இந்தியாவிற்கு வந்த காலம் கி. மு. 2000 முதல் கி. மு. 1200 வரை என்று சொல்லலாம். அவர்கள் தெற்கு நோக்கி - அஃதாவது தமிழகத்திற்கு வந்தது. கி. மு. 1200 ஆகும். அந்தக்காலம் முதலே அவர்கள் தமிழ் மக்களை எப்படியெல்லாம் வென்று அடிமைப்படுத்தலாம் என் றெண்ணிச் செயலாற்றி வந்துள்ளனர். தமிழரைத் தங்கள் வயப்படுத்த வேண்டுமென்றால், தமிழறிவு இன்றியமையாதது என்று எண்ணித் தமிழை விரும்பிப் பயின்றனர். அவர்கள் வந்த காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் பொன்னாடாகத் திகழ்ந்தது. எனவே இந்த நாட்டுவளம் அவர்களை இங்கேயே நிலைத்திருக்கச் செய்துவிட்டது. அவர்கள் வந்தபிறகுதான் கடைக்கழகம் அமைக்கப்பட்டது. இக்கழகத்தின் காலம் கி. மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரை ஆகும் எனச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னால் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த திரு. இராமச்சந்திர தீட்சதர் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவகையில் இது பொருந்துவதாகவே தோன்றுகின்றது. இந்தக் கடைக்கழகத்திற்கு முன், பாண்டியன் மதுரையில் தலைநகர் அமைப் பதற்கு முந்தியே இயற்றப்பட்டதுதான் தொல்காப்பியம். இதை இயற்றிய தொல்காப்பியரும் ஓர் ஆரியரே. இந்தக் கருத்தை முதன்முதல் நான்தான் வெளியிட்டேன். எனது ``ஒப்பியன் மொழிநூல்'', -முதல் மடலம் முதற் புத்தகத்தில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனால் தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரின் வருத்தத்திற்கும் ஆளானேன். இவர்களில் திரு. சோமசுந்தர பாரதியாரும், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் என் கருத்தை மறுத்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் என்னை மறுத்தவர்கள் `வடமொழி வேறு; தமிழ் வேறு; தமிழின் தொன்மை கி. மு. 2000க்கு `அணியமே' என்ற கொள்கை உடைவர்கள். அவர்கள் என் முடிபை ஒத்துக்கொள்ளாமற் போனதில் வியப்பில்லை. அவர்கள் அவ்வாறு மறுத்ததற்குக் காரணம் உண்டு. தமிழில் இன்றுள்ள மிகத் தொன்மையான முழு இலக்கணநூல் தொல்காப்பியம் ஒன்றே. இதையும் ஓர் ஆரியர் இயற்றினார் என்று சொல்லிவிட்டால் தமிழின் பெருமை குலைந்துவிடுமே என அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் என்னைப் பொறுத்த அளவில், உண்மையை ஆராய்ந்து காணும் எனது நோக்கத்திற்கு இத்தகைய எதுவும் தடையாக நிற்கவில்லை. உண்மையில் கிறித்தவன் ஒருவன் குமரிநாட்டின் பழமையை ஒத்துக் கொள்ளமாட்டான். அப்படி ஒத்துக்கொண்டால் அவனைக் கிறித்தவன் என்று மற்ற கிறித்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றாலும் எனது பரந்த மனப்பான்மைக்கு முன்னால், இப்படிப்பட்ட சமய உணர்ச்சி குறுக்கிடவில்லை. தொல்காப்பியர் ஆரியர் என்று கூறியதுபற்றி சோமசுந்தர பாரதியார் உட்பட வருத்தப்பட்டதைக் குறித்து நான் பொருட்படுத்தவில்லை யென்றாலும், தமிழ்க்கடலாகிய மறைமலையடிகளார் அது குறித்து வருந்தியது உண்மை யிலேயே எனக்கு வருத்தம் விளைத்தது. சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நான் ஓராண்டு தலைமைத் தமிழாசிரியனாகப் பணியாற்றிய பொழுது, எனது முயற்சியால் தொடங்கப் பட்ட தனித்தமிழ் இயக்கக் கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்குமாறு மறைமலையடிகளாரை அழைத்தேன். ஆனால் அடிகளார் வர மறுத்து விட்டார்கள். இதற்கு அவர்கள் காட்டிய கரணியங்களில் ஒன்று, நான் தொல்காப்பியரை ஆரியர் என்று காட்டியதாகும். இதையறிந்த நான், பின்னர் ஒருமுறை அவரை நேரிற்கண்டு, குமரிநாட்டின் பழமையையும், ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலத்தையும், அவர்கள் தமிழ் கற்ற நோக்கத்தையும், தொல் காப்பியத்திற் காணப்படும் ஆரியத் தொடர்பான கருத்துகளையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னபிறகு ஒருவாறு என் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், தொல்காப்பியர் ஆரியர் என்று கொள்வதால், தமிழின் பெருமை எந்த வகையிலும் குறைந்துவிடாது என்பதற்காகத்தான். தமிழ் மிகவும் பழமையான மொழி. பழமையென்றால், இன்று உலகத்தில் வழங்குகின்ற எல்லா மொழிகளையும் விடத் தொன்மை யானது என்று சொல்லத்தக்க வகையில் மிக மிகப் பழமையான மொழி. ஆரியத்துக்கு மூலமொழி தமிழ்தான்; இப்படி நான் சொல்வது வியப்பாக இருக்கலாம்; ஆனால் உண்மை. தமிழுக்கும் மற்ற திரவிடமொழிகளுக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு போன்றதாயின், தமிழுக்கும் ஆரியத்துக்கும் உள்ள தொடர்பு பாட்டனுக்கும் பேரனுக்கும் உள்ள உறவுமுறையை யொத்ததாகும். இந்த உண்மை பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குப் புலப்பட்டது. அதுமுதல் மேனாட்டறிஞர் பலர் எழுதிய வரலாற்று நூல்களை ஊன்றிக் கற்கலானேன். பலநாட்டு மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களைப் பயின்றேன். டார்வின் என்ற அறிவியல் வல்லுநரின் கூர்தல் கொள்கையை (Evolution theory) விளக்கும் நூல்களைப் படித்தேன். இதன்பின், எல்லாவகையாலும் என் கருத்து உறுதிப்படுவதை உணர்ந்தேன். இந்த ஆராய்ச்சியால் முதல் மாந்தனின் பிறந்தகம் குமரிநாடே என்பது தெளிவாயிற்று. இந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் ஏனைய மக்க ளுக்குப் பல்லாவிரம் ஆண்டுகள் முற்பட்டவர் என்பதும் விளங்குவ தாயிற்று. ஆனால், முதலிரண்டு கழக நூல்கள் அழிக்கப்பட்டதால், இத்தகைய பழம்பெருநாட்டில் இயற்றப்பட்ட நூல் எதுவும் இப்போது கிடைக்கவில்லை. இன்றுள்ள தமிழ் நூல்களுள் பழமையான தொல்காப்பியம். இடைக் கழகத்திற்குப் பிந்தியது; ஆனால் கடைக்கழகத்திற்கு முந்தியது. தொல் காப்பியர் காலத்தில் கடைக்கழகம் அமையவில்லை. கடல் கோளுக்குத் தப்பிய பாண்டியன் அதுகாலை மணலூரில் தங்கியிருந்தான். அப்போது தான் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனன் தெற்குநோக்கி வந்தான். அவன் வந்த சமயத்தில் பாண்டியன் சிக்காதாபுரியில் தங்கியிருந்ததாக வடமொழிப் பாரதம் குறிப்பிடுகின்றது. சிக்காதா என்னும் சொல்லுக்கு மணல் என்பது பொருள். எனவே பாண்டியன் மணலூரில் தங்கியிருந்தான் என்பதே பொருந்தும். ஆனால் என்ன காரணத்தினாலோ திருவிளையாடற் புராணம் மணவூர் என்று இதைக்குறிப்பிடுகின்றது. கழகம் இல்லாததால்தான் நிலந்திரு திருவிற் பாண்டியன் அவையத்துத் தொல்காப்பியம் அரங் கேற்றப்பட்டது. தொல்காப்பியப் பாயிரத்தில் ``ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கப்படுகிறார். இத்தொடரில் ``ஐந்திரம்'' என்று சொல்லப்பட்ட நூல் வடமொழி இலக்கணமே. ஆனால் அது தமிழ் இலக்கணத்தைத் தழுவியது. அதனால் தான் அதை ஆரியர்கள் தமது திறமையால் ஒழித்துவிட்டார்கள். ஐந்திரம் பாணினியத்துக்கு முற்பட்டது. பாணினி தமது புலமையால் அதனை வழக்கிழக்குமாறு செய்துவிட்டார். மேலும், ``நான் மறைமுற்றிய அதங் கோட்டாசான்'' எனும் தொடரில், ``நான்மறை'' என்றது அந்தக் காலத்தில் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையே குறிக்கும். இவ்வாறன்றி அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமே இங்குக் குறிப்பிட்ட நான்மறையாகும் என்பது புலவர்களுடைய கற்பனையே. இது பொருந்தப் பொய்த்தலாகும். அக்காலத்தில் ஆரியர்கள் வடமொழியிற் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்ததோடு, தமிழிலும் முதிர்ந்த புலமை பெற்றிருந்தனர். இதனால்தான் தொல்காப்பியம் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. இந்த அதங்கோடு தற்காலத்து மலையாள நாட்டிலுள்ள திருவாங்கூர் என்னும் ஊரேயாகும். அதங்கோடு என்னும் பெயருக்கு முன் ``திரு'' சேர்ந்து திருவதங்கோடு ஆகி, பின்னர் அது திருவிதாங்கோடு என மாறி, நாளடைவில் திருவிதாங்கூர் எனத் திரிந்து, இறுதியாக ஆங்கிலர் ஆட்சியில் திருவாங்கூர் ஆயிற்று. ஆரியர் இங்கு வந்து, பல தலைமுறைகள் ஆன பின்பே, தொல் காப்பியம் இயற்றப்பட்டது. அதனால்தான் அவர்கள் தமிழிற் சிறந்த புலமை பெற்று விளங்கினர். இதில் வியப்பு ஏதும் இல்லை. இத்தாலி நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த வீரமாமுனிவர் ஒரே தலைமுறையில் தமிழைத் திறம்படக் கற்று, முதலில் உரைநடை நூல்கள் இயற்றத் தொடங்கிப் பின்னர் கம்பர், புகழேந்தி போலத் தேம்பாவணியென்னும் பாவியத்தை இயற்றி, இறுதியாக ``ஐந்திலக்கணத் தொன்னூல்'' என்னும் இலக்கண நூலையும் யாத்தார் என்றால், ஆரியர்கள் பல தலைமுறைகளில் தமிழை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தனர் என்பதில் சிறிதும் ஐயங்கொள்ள இடமேயில்லை. நிற்க, தொல்காப்பியம் என்பது முழுமுதல் இலக்கண நூல் அன்று. அதற்கு முந்திய இலக்கண நூல்களிற் சொல்லப்பட்ட கருத்துகளையும், உலக வழக்கிலிருந்து மொழி மரபுகளையும் சேர்த்துச் செய்யப்பட்ட தொகுப்புநூலே தொல்காப்பியம். ``செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோனே'' என வரும் தொல்காப்பியப் பாயிரத்தால் இதை உணரலாம். தமிழ் படித்தவர் அனைவரும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை அறிவர். இந்த நன்னூலின் பொருளைத் தொகுத்துப் புலவர் குழந்தை என்பவர் `நன்னூற் சுருக்கம்' என்றொரு நூல் இயற்றியுள்ளார். இதுபோன்றதுதுன் தொல் காப்பியம். இந்த நூலில் ஆசிரியரின் சொந்தச்சரக்கு, ஆரியத் தொடர் புடைய கருத்துகளைச் சேர்த்ததுதான். இதைத் தொல்காப்பியர் இயற்றிய காலம் கி. மு. 700. ``வடவேங்கடம் தென்குமரி'' யாயிடை செந்தமிழ் வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் செய்யுளுக்கு உரிய சொற்கள் எவையென்று கூறவந்த தொல்காப்பியர், ``இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்(று) அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே'' என்கிறார். அஃதாவது இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்னும் மூவகைத் தமிழ்ச் சொற்களுடன் வடசொற்களையும் சேர்த்துக் கூறுகின்றார். இதிலிருந்தே தொல்காப்பியர் ஆரியர் என்பதும், அவர் வடவரது மொழியையும், பழக்க வழக்கஙகளையும் தமிழிற் புகுத்துவதற்காகவே தொல்காப்பியம் இயற்றினார் என்பதும் நன்கு விளங்கும். தொல்காப்பியர் ஆரியர் என்பதற்கு மற்றும் பல சான்றுகள் உண்டு. தொல்காப்பியத்துள் ஒன்பது என்னும் சொல்பற்றிய குறிப்பு அவற்றுள் ஒன்று. தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களின் பிறப்புக் குறித்து அவர்வகுத்த இலக்கணவிதியை எடுத்துக்கொண்டால் இந்த உண்மை புலப்படும். ஒன்பது+பத்து=தொண்ணூறு, ஒன்பது+நூறு=தொள்ளாயிரம் என்று புணர்த்துக் காட்டுகிறார். அவர் காலத்தில் தொண்டு என்னும் சொல்லே ஒன்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டு வரையுள்ள எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈறு பெற்றிருந்தது போலவே, தொண்டு எனக் குற்றியலுகர இறுதி கொண்ட சொல்லே அக்காலத்து வழங்கப்பட்டது. எப்படி இதை அறிகிறோம்? ``தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று'' எனத் தொல்காப்பியத்திலேயே (செய்யுளியலில்) வருகிறது. அதுவுமல்லாமல், ``தொண்டுபடு திவவிண் முண்டக நல்யாழ்'' என இசை நூல்களிலும் இச்சொல் பயின்று வருகிறது. தொண்டு என்பது தொளை என்பதன் அடியாகப் பிறந்தது. (இவ் விரண்டிற்கும் வேர்ச்சொல் தொள் என்பது) உடம்பில் உள்ள (9) தொளைகளை வைத்துத் தொண்டு என்னும் சொல் உருவாக்கப்பட்டது. மேனாட்டு மொழிநூல் அறிஞரான கால்டுவெல்லும் இவ்வாறே `கை' என்னும் உறுப்புப் பெயரிலிருந்து பிறந்ததே ஐந்து என்னும் சொல் எனத் தம் ஒப்பிலக்கண நூலிற் காட்டியுள்ளார். கை ஐ ஐந்து என இவ்வாறு திரிபு முறையும் கூறுகிறார். இன்று ``ஒருகை போடு இரண்டு கை போடு'' என்று உலகவழக்கில், படியாத மக்கள்கூட வழங்குகின்றார்களே! இதுபோலத்தான் தொண்டு என்று சொல்லும் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது. கடைக்கழகக் காலத்திற்குப் பின்னர்தான் வழக்கற்றுப் போயிற்று. ஒன்பது+பத்து=தொண்ணூறு எனப் புணர்ச்சி முறை கூறும் தொல்காப்பியர், நிலைமொழியில் உள்ள ஓகர உயிருடன் தகரமெய் சேர்ந்ததாகவும், பின்னர் `பது' கெட்டதாகவும் அதன்பின் னகர வொற்று ணகர வொற்றாய் மாறியதாகவும், வருமொழியில் `பத்து' என்பது நூறென மாறியதாகவும், நிலைமொழியில் ணகரம் இரட்டிக்க. அவ்விரட்டித்த ணகரம் வருமொழியில் உள்ள `நூ' வுடன் சேர்ந்து `ணூ' எனத் திரிபு பெற்றதாகவும் விதி வகுக்கிறார். இவ்வாறே ஒன்பது+நூறு: தொள்ளாயிரம் என்று சொற்புணர்ச்சிசெய்து, நிலைமொழி ஓகரத்தில் தகரமெய் சேர்ந்ததாகவும், வருமொழியில் `நூறு' ஆயிரம் ஆனதாகவும், பின்னர் நிலைமொழி னகரமெய் ளகரமெய்யாய்த் திரிந்ததாகவும். அந்த ளகரமெய் இரட்டித்த பிறகு, இரட்டித்த ளகர மெய்யுடன் வருமொழி முதல்நின்ற `ஆ' சேர்ந்து `ளா' ஆயினதாகவும் விதி கூறுகின்றார். இவையெல்லாம் கண்கட்டு வேலைகள் போலல்லவா இருக்கின்றன! ஏதோ மணல் கடலையாவதும், தோல் நரியாவதும் போல மாயமாக இருக்கின்றனவே! இதற்குப் பொருத்தமான மற்றோர் எடுத்துக்காட்டு கூறலாம் என்றால், கேரளம் என்னும் சொல் `நாரிகேள' என்னும் சொல்லிலிருந்து வந்தது என வடமொழியாளர் கூறுவதை சொல்லலாம். `நாரிகேள' என்னும் சொல் தென்னைமரத்தைக்குறிப்பது மலையாளத்தில். தென்னைமரங்கள் மிகுதியாக இருப்பதால் கேரளம் என்று பெயர் வந்ததாம்! எப்படி யிருக்கிறது ஆராய்ச்சி! இதுதான் போகட்டுமென்றால், மற்றுமொரு சொல் ஆராய்ச்சி நமக்கு நகைப்பை விளைவிக்கிறது. அதுதான் `நரயவஹ' (மனிதனைப் போன்றவன்) என்னும் சொல்லிலிருந்து `வானரம்' என்பது பிறந்ததென்னும் வடமொழியாளர் கூற்று, `நரயவஹ' என்பது யவநரஹ' என மாறிப் பிறகு வானரம் எனத் திரிந்தாம்! ஏனிப்படிச் சுற்றி வளைத்து மூக்கைத்தொட முயல்கிறார்கள்? வால்+நரம்=வானரம் (வாலுள்ள மனிதன்) என எளிதாகச் சொல்லிவிட்டுப் போகலாமே! இஃதிப்படியிருக்க, தொல்காப்பியத்தில் வரும் ஒன்பது+பத்து; தொண்ணூறு, ஒன்பது+நூறு: தொள்ளாயிரம் என்பன குறித்த நூற்பாக்கள் பிற்காலத்தன என்றும், இடைச்செருகலாய் வந்தவை எனவும் இக்காலத்துப் புலவர்கள் சிலர் கூறுகின்றனர். அப்படியானால், பிற்காலத்தில் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தியார் ஏன் இந்த விதிகளையே திரும்பக் கூறுகின்றார். மாற்றிச் சொல்லியிருக்கலாமே! அவரும் ஒரு பிராமணர். அதனால் தொல்காப்பியர் கருத்தையே பின்பற்றி நூற்பா இயற்றிவிட்டார். தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்துப் பார்த்தால், பாயிரம் முதல் இறுதிவரை தொல்காப்பியர் ஆரியமரபுதழுவியவர் தமிழில்உரிச்சொல் என்பது செய்யுளுக்கே உரிய, எளிதிற் பொருள் விளங்காத சொல்லைக் குறிக்கும். ஆனால், தொல்காப்பியர் எளிய சொற்களைக்கூட, உரிச்சொற்கள் என்கிறார். ``தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்'' என்று சொல்கிறார். தீர்தல் என்பது என்ன, அவ்வளவு கடினமான சொல்லா? தீர்ந்தது என்றால், விட்டுச்சென்றது முடிந்தது என்பது எல்லாருக்கும் தெரியுமே! “அட, அது தீர்ந்துபோயிற்று அப்பா!” என்று, படியாதவன்கூடச் சொல்கிறானே! இதுபோலவே ``பழுது பயம் இன்றே'' என்று ஒரு மற்றொரு நூற்பாவில் கூறுகிறார். பழுதுபட்டதென்றால், பயனற்றுப் போனது என்பதுதானே பொருள். எல்லாரும் விளங்கிக்கொள்ளக் கூடிய சொல்தானே இது! இது மிகக்கடினமான சொல்போலவும், செய்யுளில் மட்டுமே பயின்று வரக்கூடியது போலவும், உரிச்சொல் வரிசையில் இதைச் சேர்த்துவிட்டாரே! மற்றும் மரபியலில், ``நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய'' என்று சொல்கிறார். இங்கு அந்தணர் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆரியப் பார்ப்பனரே. அவர்காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் வேரூன்றி விட்டனர். அதுமட்டும் அன்று; `அந்தணர்' என்ற சொல்லும் அவர்களுக்கே உரியதாக நிலைபெற்றுவிட்டது. எனவே, தொல்காப்பிய மரபியல் சொன்மரபுமட்டும் கூற எழுந்ததன்று; தொழில் மரபும் உடன்கூறவே தோன்றியதாகும் என்று நாம் உய்த்துணரலாம். இந்த நுட்பத்தை அறியாத தமிழ்ப் புலவர்கள் சிலர், ``தொல்காப்பியர் மரபியலில் தொழிலைப் பற்றிச் சொல்லியிருப்பாரா? சொல்லமாட்டார்; ஆகவே இத்தகைய நூற்பாக்கள் இடைச் செருகலாகப் பிற்காலத்தாரால் சேர்க்கப்பட்டவை'' என்று கூறுகிறார்கள். இது தவறு. தொல்காப்பியர் காலத்தில் நான்கு குலப்(வருணப்) பாகுபாடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையே இந்நூற்பா புலப்படுத்துகிறது. இது பற்றித் ``தொல்காப்பிய விளக்கம்'' என்னும் எனது நூலில் தெளிவு படுத்துவேன். தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதை நாம் அறிவோம். ஒரு மொழியில் எது முதலில் தோன்றும், இலக்கணமா? இலக்கியமா? இலக்கியந்தான் முதலில் தோன்றும். பல இலக்கியங்கள் தோன்றிய பிறகே இலக்கணநூல் உண்டாகும். இலக்கியங்களில் எத்தகையவை முதலில் உண்டாகியிருத்தல் கூடும்? அகம், புறம் என்னும் இருவகைப் பொருள் பற்றியனவே முதலில் தோன்றியிருக்கும். எனவேதான் பொருளிலக்கணம் எழுத்து, சொல்லிலக்கணங்களைவிடக் காலத்தால் முற்பட்டது என்று நான் கருதுகிறேன். தமிழுக்கே தனிச் சிறப்பு தருவது இந்தப் பொருளிலக்கணந் தான். அப்படியிருந்தும், தமிழ் கற்ற பிராமணர்கள் “அஃது ஒன்றுமில்லை ஐயா, வெறும் ஞடிநவiஉள - பாட்டியல்; அவ்வளவுதான்!” என்கிறார்கள். காமில் சோலவில் என்ற செக்கோசுலோவாக்கியக் கோமாளி ஒருவர் பிராமணத் தமிழறிஞர்கள் எழுதிய நூல்களைப் படித்துவிட்டு, இப்படிப்போல எதையாவது உளறிக்கொண்டிருக்கிறார்கள்! தமிழின் சிறப்பை அறிய அவர் படித்த நூல்கள், நற்றிணை என்னும் கழக இலக்கியமும், சுப்பிரமணியன் என்பவர் எழுதிய `நாலுவேலி நிலம்' என்னும் நாடகமும் ஆகிய இவ்விரண்டுமே! - தென்மொழி 5 பாவாணர் சொற்பொழிவு தமிழன்பர்களே! இக்கூட்டத்திற்குப் பேராசிரியர் நிலவழகனார் சொக்கப்பனார் இருவரும் வரவியலாதென்று முன்னரே மடல் எழுதிவிட்டனர். அப்பெயர்களில் சொக்கப்பனார் என்பதைச் `சொக்கப்பா' என்று சொல்லக் கூடாது. தமிழ்மொழியில் ஆகார ஈற்றுப் பெயர்கள் இருக்கக்கூடாது. கன்னட மொழியில் தான் அவ்வழக்குண்டு. அதனால்தான் `தங்கப்பா' என்பதையும் `தங்கப்பனார்' என்று அழைத்தேன். `அண்ணாத்துரை' என்னும் பெயரும் பிழையானது. முறைப்படி அது `துரை அண்ணன்' என்றிருக்க வேண்டும். மேனாட்டாருள் கால்டுவெல், தமிழின் சுட்டுச் சொற்கள் சிறப்பையும் ஓரியன்மையையும் குறித்துள்ளார். ஆனால் எண் வேற்றுமையில் சமற்கிருதத்தைப் பின்பற்றியுள்ளார். இன்று மேனாட்டார் உண்மையை உணர்ந்து வருகின்றனர். பேராசிரியர்கள் பரோவும் எமனோவும் மேனாட்டாருள் தமிழின் தொன்மையை உணர்ந்தவர்கள். மேனாட்டாருக்கு மெய்க்கருத்தை விளங்கச் செய்வதற்காக `A Guide to western Tamilologists' என்னும் ஆங்கில நூல் எழுதப் போகின்றேன். பாரிசில் நடக்கவிருக்கும் மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு முன்னர் அது வெளிநாட்டு அறிஞர்களின் கைகளில் இருக்கும். மாந்தன் தோன்றிய இடம் மெசபத்தோமியாவா அல்லது குமரிக் கண்டமா என்ற ஐயம் உலக அறிஞர்களிடையே நிலவுகிறது. மெசபத் தோமியாவில்தான் தோன்றினான் என்று மதச்சார்பில் ஊன்றியவர்கள் நம்புகின்றார்கள். மதச்சார்பிருந்தால் ஆராய்ச்சியானது ஒருதலையாகிப் போகும். எனவே மதச்சார்பின்றி நடுநிலையோடு ஆராய வேண்டும். மதுரை, திருநெல்வேலி, கரந்தை, கோவைத் தமிழ்ச் `சங்கங்கள்' பல்குழுக்களாக இயங்கிக் கேடு செய்கின்றன. பழங்காலத்தில் பாண்டியன் தலைமை ஏற்றுத் தமிழ்க்கழகங்களை நடத்தி வந்தான். இன்று அச்சிட முடிந்தவர்கள் அச்சிடுகின்றார்கள்; கழகம் தொடங்கி விடுகின்றார்கள். சங்கம் - வடசொல்; கழகம் என்பதே தமிழ்ச் சொல். 1933-ல் தமிழர் மாநாட்டு அழைப்பையும் அதற்கு மறைமலை யடிகளின் விடையையும் `சூன்' மாதச் `செந்தமிழ்ச்செல்வி'யில் வெளி யிட்டிருக்கின்றார்கள்; படித்துப் பாருங்கள். `திங்கள்' `மாதம்' - இரு சொற்களும் தமிழ்ச் சொற்களே! ஆரிய, பின்னிய மொழிகளிலுள்ள KOT - கோடி என்பதும் தமிழ்ச் சொல்லே! யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் இப்போதிருந்தால் பெருந்துணை யாவார். மதி (நிலவு) - என்ற சொல் வடமொழியில் இல்லை. மதி - மாதம் ஒருசொல் ஒரு பொருளே குறிக்க வேண்டும். பொருள் வேறுபாட்டை ஈறுகாட்டவேண்டும். எ-கா : மண் - மணல் கம்பு - கம்பி `சந்திரன்' என்ற சொல்லுக்கும் வேர் தமிழே! சில சொற்கள் சொல்லளவில் தமிழாயிருக்கும். சிலசொற்கள் வேரளவில் தமிழாயிருக்கும். மாஸ - (வடிவம வ.மொ.) மா - (இந்தி) `திங்கள்' என்னும் சொல் நிலவைக் குறிப்பது. எனவே சொல் வேறுபாட்டிற்காக `மாதம்' என்றசொல்லை வழங்கலாம். சனசங்கக் கட்சியின் விளக்கணி விழா (தீபாவளி) மலரிலே ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள் தீப + ஆவளி = தீபாவளி ஆவளி - வரிசை அண்ணாத்துரை, தண்ணீர் கொண்டுவா என்னும் சொற்கள் எல்லாம் வடசொற்கள் என்று எழுதியுள்ளார்கள். பாணினீய நூற்பாவையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியும் துணைசெய்கிறது. மேலைநாடுகளில் தகுதியுள்ளவர் களுக்கே பல்கலைக்கழக வேலை கிடைக்கும். இங்கு அவர்க்கே கிடைக்காது. நம்முடைய முதல் வேலை அகரமுதலித் திருத்தம்தான். `பாண்ட்ய' என்னும் சொல்லிலிருந்து `பாண்டியன்' வந்ததாக அதில் குறித்துள்ளார்கள். குமரன் - குமரி இளைஞன் - இளைஞி, என்பன தமிழ்வழக்கு. இச்சொற்களை நீட்டிக் காட்டியுள்ளார்கள். செல்வன், செல்வி ஆகிய சொற்கள் மணமக்களைக் குறிக்கவே பயன்படும். `mister' என்பதற்குத் `திருவாளர்' என்றும் `miss' என்பதற்குக் `குமரி' என்றும் தமிழ்ச்சொற்களை ஆளவேண்டும். திருமதி - ஓர் இருபிறப்பி இதில் மதி - வடசொல். பெருமான், திருமான் - இவற்றில் `மான்' என்பது `மகன்' என்ற சொல்லின் திரிபு. அது வடமொழியில் `மத்' என்றாகும். திருமான் - ஸ்ரீமான் - ஸ்ரீமத் - ஸ்ரீமதி `திருமதி' என்ற சொல்லை வெளியிட்டு நெடுஞ்செழியன் கெடுத்து விட்டார். ஆராய்ச்சியில்லாத தலைவர்களைப் பின்பற்றிக் கட்சியாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். குழைந்தது - கூழ் என்பது சரி. இதைக் `கூர' (வ) என்பதிலிருந்து வந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் குறித்துள்ளனர். குழவு - குழந்தை என்பது முறை. இதைக் குடந்தையிலிருந்து குழந்தை வந்ததாக அவ்வகர முதலியில் குறித்துள்ளார்கள். பஞ்சு - பருத்தியிலிருந்து எடுப்பது. Calieo - Calient, கோழிக்கோட்டையிலிருந்து ஏற்றுமதியானது. கோழிக்கோடு என்னும் பெயரையே ஆங்கில வழக்குப்படி கள்ளிக் கோட்டை என்று மாற்றி வைத்துக்கொண்டார்கள். `பஞ்சு' என்னும் சொல் சமற்கிருதத்திலிருந்து வந்ததாக அகரமுதலியில் குறிக்கப்பட்டுள்ளது. `பெட்டி' என்னும் சொல் `பேட்டி'யிலிருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். மூவேந்தரும் அக்காலத்தில் பிராமணன் காலில் விழுந்து வணங்கியிருக்கின்றார்கள். உடலை அயலான் பிணைப்பது வழக்கம். ஆனால் உள்ளத்தையும் ஆரியன் பிணைத்தான். தமிழை மீட்பது போராட்டத்தால்தான் முடியும். எழுதிப் பயனில்லை. திங்களை நாய் குரைத்தாற் போலிருக்கிறது. தமிழன் ஆரியனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்றும் உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்னும் பெயரைப் புதுக்கியதால் இந்தி போய்விட்டதாகாது. கி.மு. 50000 முதலே `தமிழ் நாடு' என்ற பெயர் இருந்து வந்துள்ளது. `தமிழ்நாடு' மக்கள் வாயில் வழங்கிய சொல்லே! நீலகண்ட சாத்திரியாரின் நூல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. எந்தப் பேரியக்கமும் முதலில் சிறுஅளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இயேசுவிற்கும் 12 பின்பற்றிகளே இருந்தனர். இன்று எவ்வளவோ வளர்ந்த மதமாகிவிட்டது. Throu - Thrill துருவு - துல் Trans (Latin) - Through - Transport. தமிழ்ச்சொல் ஆங்கிலத்திற்கு வேர்ச்சொல்லாயிருப்பதைக் காண்க. ஆங்கிலத்தில் உள்ள சுட்டுச்சொற்கள் `This, That' என்பன. தமிழில் சுட்டெழுத்துகள்கூட உள்ளன. ஆயிடை (தொல்காப்பியம்) ஆவிடம் (மலையாளம்) ஏவூர் (தெலுங்கு) வடமொழியிலும் காலம், உலகம் முதலிய தமிழ் அடிப்படைச் சொற்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வடமொழியைத் தேவமொழி என்பது ஏமாற்றுவேலை. மறைப் பதற்குச் சொல்லப்படுவது. பொருந்தப் புளுகு, பொருந்தாப் புளுகு இரண்டுள் இது பின்வகையது. ஆப்பிரிக்காவில் சென்ற நூற்றாண்டில் மாந்தனை அடித்துத் தின்றவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களே வெள்ளையரை வெளியேற்றும் அளவிற்கு முன்னேறினார்கள். கீ. இராமலிங்கனார், சங்கராச்சாரியாரைப் பார்க்கச் சென்றபோது தமிழை `நீசபாசை' என்று அவருடைய அணுக்கத் துணைவர் கூறி யிருக்கிறார். அதற்கு மறுப்புத் தெரிவிக்க அவர்க்குத் துணிவில்லை. தமிழின் ஒருமைபன்மை அமைப்புச் சிறப்பானது. நான் - நாம் நீன் - நீம் (திருநெல்வேலியிலும் நாட்டுப்புறங்களிலும் பயின்று வருவது) தான் - தாம் `நின்' - வேற்றுமையடி. ஆயினும் தூங்கினவன் கன்று சேங்கன்று என்றாகிவிட்டது. உலகத்தார் பிற்போக்காக இருந்தபோது நம்முன்னோர் மதங்களும் பொறிகளும் அமைத்து முன்னேறியிருந்தனர். திரவிடம் பத்தொன்பது மொழிகளைக் கொண்டது. 1856-ல் சோசப்பு என்பார் ஆங்கிலமொழியில் 35000 சொற்கள் இருந்ததாக அறுதியிட்டார். அவற்றுள் ஆங்கிலத்திற்கு மூலமான ஆங்கிலோ சாக்சன் (Anglo - Saxon) சொற்கள் 23000 இருந்தன. பின்னர் மாகசு முல்லர் (max muller) 75000 சொற்கள் இருப்பதாக அறிவித்தார். அச் சொற்களில் 100 க்கு 80 - கிரேக்க, இலத்தீன் சொற்களும் 100 க்கு 10 - ஆங்கிலோ சாக்சன் சொற்களும் 100 க்கு 10 - தமிழும், வேற்று உலக மொழிச் சொற்களும் உள்ளன. ஆங்கிலம் கடன்கொண்டதால்தான் வளர்ந்தது என்று சொல்வது தவறு. அறிவியலினால்தான் அம்மொழி வளர்ந்தது. அது உலகப் பொது மொழியாக மட்டுமில்லாமல் அறிவியல் மொழியாகவுமுள்ளது. நாம் ஆங்கிலத்தை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஆனால், ஆங்கிலத்தால் தமிழ்ப்பற்றுக் குறையவும் கூடாது. எண்ணத்திற்கு (Thinking) மொழி இன்றியமையாதது. ஊமைத்துரை ஓர் எடுத்துக்காட்டாளர். பறவையும் விலங்கும்கூடி எண்ணுகின்றன. கம்பனின் மகனாக இருந்தாலும் மொழிவழங்காவிடத்திலிருந்தால் பேசான். சட்டைக்காரன் வீட்டில் வளர்ந்தால் தமிழப் பிள்ளையும் கலகல வென ஆங்கிலம் பேசும். நமக்கு இருமொழித் திறமும் வேண்டும். ஆங்கிலத்தில் வெறுப்புக் கூடாது. தமிழென்றால் தமிழாகவே இருக்க வேண்டும். அவலை நினைத்து உரலை இடிக்கக் கூடாது. Divorce என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு `விவாகரத்து' என்று பிராமண ஏடுகள் எழுதுகின்றன. `மணமுறிவு' என்று சில ஏடுகள் எழுது கின்றன. இரண்டும் பிழையானவை. `மணமுறிப்பு' என்று எழுதவேண்டும். இன்னும் நடைமுறையில் சில நல்ல சொற்கள் உள்ளன. அவை மணத்தீர்வை, தீர்த்துக் கட்டுதல் என்பன. பக்தவத்சலம் ஏற்படுத்திய சட்டச்சொற்கள் தொகுப்புக் குழுவின் தலைவர் அனந்த நாராயணனுக்கு இச்சொற்கள் வாரா. mt® bjŒt (!)ப் பிறப்பாளர். ஆள் ஒன்றுக்குப், பேர் ஒன்றுக்குப், புள்ளி ஒன்றுக்குத், தலை ஒன்றுக்கு என்னும் வழக்குகள் நாட்டில் இருக்கின்றன. அவரோ `நபர் ஒன்றுக்கு' என்னும் சொல்லை விரும்புவதாகக் கூறியுள்ளார். `motor' என்னும் சொல்லைத் தமிழில் `இயங்கி' என்று வழங்க வேண்டும். இராமலிங்கனார் தன்பெயர் நிலைபெற வேண்டுமென்று `உந்து' என்னும் சொல்லைக் கொண்டு வந்தார். விண்ணப்பம் (வ) - வேண்டுகோள் (தமிழ்) ஆப்பிரிக்காவில் குக்குலத் தலைவர்கள் தம்பெயரால் ஒரு மொழியையே ஏற்படுத்தி விடுகின்றார்கள். 50 சொற்களே இருந்தாலும் அவை முழுதும் இடுகுறிகளாக இருந்தாலும் அவை ஒரு மொழியாகின்றன. கழகத்தின் நடைமுறைகள் இக் கழகத்தின் தலைவர்கள் தொண்டு கருதியே தலைமை ஏற்க வேண்டும். அதிகாரிகள் தலைவணங்க வேண்டுமென்பதற்காக வன்று; பெயருக்காகவுமன்று. திரு. சாத்தையாவும் இன்னும் இருவரும் நன்றாகச் செயற்பட் டுள்ளமைக்காகப் பாராட்டிற்குரியவர்கள். முற்றும் தனித்தமிழிலேயே பேசுவது எல்லோராலும் முடியாது, இயன்றவரை பேசவேண்டும். தனித்தமிழ் இதழான தென்மொழியிலேயே ஓரிரு வடசொற்கள் வெளிவந்தன. புவி, பரிமாணம், வதை போன்றவையே அச்சொற்கள். வதை - `வதி' என்பதிலிருந்து வந்தது; வடசொல். எனவே தனித் தமிழிலேயே முற்றும் பேசவேண்டும் என்று வற்புறுத்த வேண்டா. இயன்ற வரை பேசினால் போதும். உறுப்பினர் சேர்ப்புப் படிவம் பற்றி: கிளைக்கழகப் பெயர் - இருக்கலாம் கிளையில்லாதவிடத்தில் தனிப்பட்டவரும் சேரலாம். வேறு கிளையிலும் சேரலாம். மணந்தவரா, நோக்கம், அலுவல், பேச்சாளரா போன்ற பகுதிகள் தேவையில்லை. ஊமைகூடச் செயலாற்றலாம். உலகத் தமிழ்க் கழகம் என்பதை ஆங்கிலத்தில் மாற்றும்போது கழகம் என்னும் சொல்லை `Organisation' என்று மொழிபெயர்க்கக் கூடாது. ஏனெனில் `Organisation' என்பது பொதுச்சொல். Society - Congress - Association ஆகிய மூன்று சொற்களுக்கும் Organisation என்பது பொதுச்சொல். எனவே கழகம் என்பதற்கு `Congress' என்பதே சிறந்த மொழிபெயர்ப்பாகும். அதற்குப் பொருள் பெருங்கூட்டம் என்றாகும். இனி, எழுத்து வன்மை உண்டா என்னும் கேள்வியும் தேவையன்று. அரசியல் கட்சியில் உள்ளவரா என்றும் கேள்வி அறவே இருத்தல் கூடாது. பேராயக் கட்சியினருக்கு இங்கு இடமேயில்லை. தி.மு.க. வானாலும் தமிழ் முன், கட்சி பின்னாகக் கருதுவார்க்கே இடமுண்டு. இரண்டையும் சமமாகக் கருதினாலும் சேரமுடியாது. இக்கழகத்தில் சேருவார்க்கு மதம்கூடத் தடையாக இருக்கக் கூடாது. மறைமலையடிகள் முழு அளவில் மதத்தில் ஈடுபடவில்லை. தமிழ்ப்பணி என்று வந்தால் மதச்சார்பு கருதாமல் என்னையும் உடன் சேர்த்துக் கொள்வார். கட்சியில் சேர்ந்தவர்கள், தமிழுக்கு மாறானவர்களைக் கட்சியுள் எதிர்க்க முடியாது. மூன்று கையொப்பங்கள் தேவையில்லை; ஒரே கையொப்பம் போதுமானது. எப்போதும் தூயதமிழிலேயே பேசுவேன், எழுதுவேன் என்பதை `இயன்றவரை' என்பதையும் சேர்த்து அமைத்துக் கொள்க. `தனித்தமிழ்க் கொள்கையைப் பரப்ப இயன்றதைச் செய்வேன்' என்பதைப் புதிதாய்ச் சேர்த்துக் கொள்க. நமக்குள் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது. திருமால் சிவநெறிகளை ஒரே `தென்மதம்' என்று சொல்லவேண்டும். நாவின் சுவை வேறுபட்டிருப்பது போல் மனத்தின் சுவையும் வேறுபட்டது; பலகாரம் உண்பதுபோல. பெரியார் ஆராய்ச்சியில்லாததால் மதங்களை முற்றும் மறுத்துப் பேசுகின்றார். மதம் என்பது எய்ப்பில் வைப்புழி போல, அதாவது பிற்காலத்திற்குச் சேர்த்து வைப்பது போன்றது. இதனால் உ.த.க.வினர் மதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டு மென்றில்லை. நம்பிக்கை இல்லாதவரும் இதில் உறுப்பினராயிருக்கலாம். தமிழ்த் தெய்வங்கள் வேதத்தில் இல்லை. இனி, நான் ஒரு போராட்டம் நடத்துவேன். உண்ணா நோன்பும், சிறைபுகுதலும் அப்போராட்டத்தில் இருக்கமாட்டா. அது எழுத்து, சொல் ஆகியவற்றால் நிகழும் போராட்டம். நான் மாணவனாயிருந்த நாட்களில் சேக்சுபியரின் 37 நாடகங்களைப் படித்திருக்கிறேன். அவ்வாறே தொடர்ந்திருந்தால் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேரும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒருநாள், இனிமேல் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கூடாதென்றும், ஆங்கிலப் பேச்சைக் கேட்கவும் கூடாதென்றும் உறுதி செய்து என்தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டேன். ஆங்கிலத்திற்கு உருசியம் இணையாக வந்து கொண்டிருக்கிறது. அவ்விரு மொழிகளும் செல்வாக்குப் பெறுவதற்குக் கரணியம் அவை வழங்கும் நாடுகள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் நாடுகளாக இருப்பதே! பல்கலைக் கழகங்களுக்கிடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலம் நீங்கினால் இந்தி புகுந்து விடும். பின்னர்த் தொடர்பிராது. ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதும் இயலாது. 7000 இந்தியர் இன்று இங்கிலாந்தில் வாழ்கின்றனர். என் மாணவரும் அமெரிக்காவில் உள்ளனர். பழக்கம் வீணைப் பயிற்சிக்குத் தேவையானதுபோல் மொழிக்கும் தேவை. ஏனெனில் மொழியே ஒரு கலையாகும். அதனாற்றான் செந்தமிழும் நாப்பழக்கம் என்று கூறினர். டெமாசுதனிசு என்னும் கிரேக்க நாட்டுப் பெரும் பேச்சாளன் தொடக்கக்காலத்தில் குழறுவாயனாகவிருந்தவனே. தெலுங்கானா நிலைமை நம்முடையதை ஒத்ததன்று. ஆரியம் இருந்தால்தான் தெலுங்கு வாழும்; ஆரியம் ஒழிந்தால்தான் தமிழ் வாழும். அங்கு ஆண், பெண் அனைவரும் போராடுகின்றனர். இங்குத் தமிழர்களே எதிர்ப்பாளர்களாகத் தோன்றுவார்கள். உள்நாட்டுப் போருக்கு (Civil War) நாம் அணியமாக வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் பிரிய வாய்ப்பிருந்தது. அண்ணாத்துரையும் பெரியாரும் அகலக்கால் வைத்தனர். அப்போதே தமிழ்நாட்டுக்காகப் போராடும்படி கண்ணதாசன் நடத்திய `தென்றலில்' எழுதினேன். விடுதலைப் படையை விட்டுவிடுங்கள். குருதிக் கையொப்பமும் செம்மைக் கையொப்பமும் ஒன்றே! திருநெல்வேலியில் `சூழ்ச்சியம்' என்னும் சொல் வழக்கில் உள்ளது. `Engine' என்னும் ஆங்கிலச்சொல்லிற்குச் சூழ்ச்சியம் என்பதே சரியான தமிழ்ச்சொல். `பொறி' என்பது `machine' ஐக் குறிக்கும், தட்டச்சுப் பொறி என்பது போல. எனவே `Engineering College' என்பதைச் `சூழ்ச்சிய வினைக் கல்லூரி' என்றும் `Mechanical' என்பதைப் `பொறி வினை' என்றும் வழங்க வேண்டும். அச்சூழ்ச்சிய வினைக் கல்லூரியில் சமற்கிருத வகுப்புக்களை நடத்த ஏற்பாடு செய்த முத்தையனை (இயக்குநர்) `மாட்லாடு' என்னும் சொற்கு மூலம் கேட்டேன். அவர் அமைதியாயிருந்தார். இழந்த ஆற்றலைப் பெறவேண்டும். மொழியியல் தொடர்பான பயிற்சி நமக்கு மிகவும் தேவை. போராட்ட காலத்தில் பட்டிமன்றங்கள் நடைபெறும். புண்படாத போர் நிகழும். கிளைகள் தொகையைப் பொருளாளர்க்கு அனுப்பிவிடுங்கள். நமக்கு நல்ல பொருளாளர் கிடைத்துள்ளார். சிலை (திசம்பர்)த் திங்கள் 20, 21 ஆகிய இருநாளிலும் கழக முதலாட்டை நிறைவு விழாவும்,திருவள்ளுவர் ஈராயிரமாண்டை நிறைவு விழாவும் நடைபெறும். `திருக்குறள் தமிழ் மரபுரை' அப்போது வெளியிடப் பெறும். கிளைகள் அல்லது மாவட்டம் ஒவ்வொன்றும் 200 உருபா தண்டி விடுக்க வேண்டும். (திரு. சாத்தையா இடையிட்டு முகவையில் விழாவை நடத்தவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறார்.) சாத்தையா கேட்டுக் கொண்டபடி முகவையில் நடைபெறும். திருவள்ளுவர் படம் சப்பரத்தில் வைத்து எடுத்துவரப்பட வேண்டும். இசையரங்கு அமைப்பு மாநாட்டில் நடைபெற்றது சரியில்லை. அது போதாது. நான் சில பாடல்களைக் கட்டி வைத்துள்ளேன். இசை பலவகைப்பட்டது. தியாகராசர் இசை தலைமையானது. கொடிவழியில் அது மூன்றாம் தலைமுறையது. உயர்ந்த மெட்டுக்கள் இசைவடிவில் இருத்தல் கூடாது. இசைப்பா வடிவில் வேண்டும். j©lgh njáf®, ÑHbtËô®............, சோமு மூவரையும் அந்த மாநாட்டில் பாடச் செய்ய வேண்டும். கருநாடக இசை என்பது தமிழிசை தான். ஆரோகணம் அமரோகரணம் என்னும் சொற்களைத் தமிழில் ஆரோசை, அமரோசை (பெரிய புராணம்) என்று வழங்கவேண்டும். அடிப்படைச் சொற்கள் தமிழே. 12000 பண்கள் அக்காலத்தில் இருந்தன 300 பண்களையே இன்று பாட முடியும். இசை வளர்ச்சிக்கு அரசுதான் பணிசெய்ய வேண்டும். காலமெல்லாம் தி.மு.க. இருந்தால் தமிழ் கெடாது; ஆகுல் வளராது. பேராயம் இருந்தால் வாழ்வும் இல்லை. வளமும் இல்லை. பாலூட்டும் போதே பேராயக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் தடுக்கும் உணர்வையும் ஊட்ட வேண்டும். அகரமுதலி திருத்தப்பட்டாலொழிய வளர்ச்சியில்லை. 1982-இல் நிலைமாறலாம். 10000 பேரை உறுப்பினராகச் சேர்த்தால் மதிப்பிருக்கும். பஞ்சாங்கம் - ஐந்திறம். அதில் எழுகோள்களையும் வைத்து ஏழு நாள்களைப் பெயரிட்டார்கள். சனி, புதன் இரு சொற்களும் வடசொற்களாக இருப்பதை வைத்துக் கால்டுவெல் தமிழர்க்கு ஐந்து கோள்களைத்தாம் தெரியும் என்று கூறிவிட்டார். அதுபெருங்கேடாகிவிட்டது. ஆங்கிலக் கலைச் சொற்கள்: Funnel - வைத்தூற்றி (நாஞ்சில் நாட்டு வழக்கு) Nideel - பேய் என்னும் பொருளது. majenta - போர் என்னும் பொருளது Academy - தோட்டம் என்னும் பொருளது பார் - தமிழ் - கம்பி பாரற - தடையற (சீவக சிந்தாமணி) Chemistry -கெமியம் (எகிப்திய பெயர்) வேலூரில் ஓர் அம்மையார் சிறப்பாகப் பாடுகின்றார்கள். முத்தையா செட்டியாரே வியப்படைந்தார். தெம்மாங்கு இசைகூட முறையானதுதான். எனவே இதையும் Scientific Music என்று சொல்லலாம். (பரமக்குடியில் உ.த.க. மாநாடு நடைபெறுவதற்குமுன் திருச்சிராப்பள்ளி அசோகா உண்டிச் சாலையில் உ.த.க. செயற்குழுக் கூட்டத்தில் பாவாணர் ஆற்றிய பொழிவு) (குறிப்பெடுத்து விரித்தவர் - அருள், செல்லத்துரை 6 தமிழின் தொன்மை தமிழின் தொன்மை என்பது எனக்குத் தரப்பட்ட பொருள். அதற்குத் தொன்மை எவ்வளவு காலமோ அவ்வளவு காலம் வேண்டும் அதைப் பற்றிப் பேச. தமிழின் தொன்மை என்று சொல்வதைவிட முன்மை என்று சொல்வது எனக்குச் சற்று உவப்பாகவும் தெரிகிறது. இந்த மாநாட்டு மலரிலே முன்மை என்ற சொல்லைத் தான் நான் ஆண்டிருக்கிறேன். ஏனென்றால், கிறித்துவுக்கு முற்பட்ட நிலைமைகள் எல்லாம் - செய்திகள் எல்லாம் பொதுவாகத் தொன்மையானதெனத்தான் சொல்லப்படுகின்றன. தமிழோ மிகத் தொன்மையானது. உலகத்திலுள்ள 3000 மொழிகளுக்குள்ளே முதன்மையானது. முந்தியதென்று சொல்லப்படக் கூடியது. ஆகையினாலே அதை முன்மை என்று சொல்வது மிகப் பொருத்தம். இந்தத் தொன்மையை நாம் ஏன் சொல்ல வேண்டும்? அப்போதுதான் அந்தச் சிறந்த தன்மைகள் எல்லாம் நமக்கு வெளிப்படும். கால்டுவெல்தான் முதன் முதலாகத் தமிழினுடைய தொன்மைகளை எல்லாம் ஆய்ந்து திராவிட மொழிகளையும் ஆய்ந்து அரிய ஒப்பியல் இலக்கணம் எழுதிய பெருமகனார் ஆவார். எழுதப்பட்ட முதற் சான்று என்னவென்றால் விவிலிய மறையிலே மயிலைக் குறிக்கப்பட்டதில் துகி அல்லது துயில் என்ற சொல் இருப்பதாகக் கூறுகிறார். தோகை என்ற ஒரு பெயர் மயிலுக்குத் தமிழில் இருக்கிறது. பீலியை உடையதினாலே உவமையாகு பெயராக வந்தது. அந்தச் சொல்தான் அதில் ஆளப்பட்டிருக்கிறது. இது எந்தக் காலம் என்றால் சாலமோன் காலம். சாலமோன் காலத்திலே இங்கிருந்து கப்பலிலே ஏற்றப்பட்ட பொருள்களுள் ஒன்று அந்தத் தோகை என்பது. அது கி. மு. 1000 என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முந்திய சான்றாக ஆரிய வேதத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கி. மு. 1500 என்று சொல்லப்படுகிறது. வேதத்திலேயே பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. வேதத்திற்கும் சமற்கிருதத்திற்கும் சிறிது வேறுபாடுண்டு. வேதம் என்கிறது ஆரிய வேதமன்று, அது எழுதப்பட்டிருக்கிற மொழி தூய ஆரிய மொழியன்று என்பதை முதலாவது நீங்கள் அறிய வேண்டும். ஆரியர்கள் இந்தியாவில் கால்வைக்கு முன்னாலே-கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய ஒரு மொழியைப் பேசியிருக்கலாம். அதிலும்கூட தமிழ்ச் சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள்ளே தா என்று ஒரு சொல்லிருக்கிறது. அது ஒரு வினைச் சொல். மயில் என்று ஒரு சொல். உலகம் என்று ஒரு சொல் இருக்கிறது. இவை சாலமோன் காலத்தைவிட மிகப் பழமையானவை என்று நாம் கொள்ளலாம். தா என்றால் தருவது; அவ்வளவுதான் பொருள். அது, ததா என்று இருக்கிறது சமற்கிருதத்திலே. த்தோ என்றிருக்கிறது லத்தீனிலே. அதிலே தான் தோணம், தோணி, தோணர் என்ற சொல் லெல்லாம் பிறக்கும். தானம் என்றாலும் தோணம் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். சமற்கிருதத்தில் தானம் என்றே இருக்கிறது. ஆனால், தா என்ற சொல் இப்படிப் பல மொழிகளிலே இருக்கிறது. இதைத் தமிழ் என்று எப்படிச் சொல்லலாம் என்றால், தமிழிலே அந்தச் சொல்லானது ஒரு சிறப்புப் பொருளை உணர்த்துகிறது. ஆனால் பிற மொழிகளிலே பொதுப் பொருளைத்தான் உணர்த்துகிறது. என்ன சிறப்புப் பொருள் என்றால், தொல்காப்பியத்திலே, அந்த எச்சவியல் என்ற பகுதியிலே, சொல்லப்பட்டிருக்கிறது. ஈ தா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் - இரவின் கிளவி ஆகிடன் உடைய (சொல். 440-7) அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே, தாவென் கிளவி ஒப்போன் கூற்றே, கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. கிளவி ஆக்கம் என்கிற பகுதியிலே இன்னொரு சிறப்பும் குறிக்கப்பட் டிருக்கிறது. அது என்ன வென்றால், தருசொல், வருசொல், `செலவினும் வரவினும் தரவினும் கொடையினும், நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யெனும் அம் மூவிடத்தும் உரிய' என்ப. (28) தா என்ற சொல் எனக்குத் தந்தான் என்று தன்மையிலும் - உனக்குத் தந்தான் என்று முன்னிலையிலும் வரும்-எனக்குத் தந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். படர்க்கையில் சொல்வதென்றால் கொடுத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் வேறுபாடு - சிறப்பு இருக்கிறது அந்த தா என்ற சொல்லைப் பற்றி. ஆனால், சமற்கிருதத்திலோ - லத்தீனிலோ அந்த வேறுபாடில்லை. வெள்ளம் என்ற சொல், புதுப் பெருக்கு நீரைக் குறிக்கிறது அது தமிழ். மலையாளத்தில் எல்லாம் வெள்ளம்தான். எங்கிருந்தாலும் வெள்ளம் தான். சிறு கொட்டாங்கச்சியிலே இருந்தாலும் அது வெள்ளம் தான். நமக்கு அப்படியல்ல, புதுப்பெருக்கு நீர்தான் வெள்ளம். செப்புதல் என்றிருக்கிறது. விடை சொல்வதைத்தான் தமிழிலே செப்புதல் என்கிறோம். தெலுங்கிலே பொதுவாக எதைச் சொன்னாலும் செப்புதல் என்பதையே குறிக்கும். இப்படிச் சிறப்புச் சொல்-சிறப்புப் பொரு ளானது வேறுபடுத்திக் காட்டுகிறது. அது தமிழினுடைய செம்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது. 7 தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு அவைத்தலைவர் அவர்காள்! புதுப்புனைவர் கோ. து. நாய்க்கர் அவர்காள்! பேராசிரியர்காள்! இங்குக் கூட்டப் பெறும் இக்கருத்தரங்கு உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில் கூட்டப் பெறுகின்றது. இதற்குப் பேராசிரியர்கள் பலரையும் அழைத் திருந்தோம். ஆனால் மிகவும் பொறுப்பு வாய்ந்த தமிழின்பால் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் சிலர்தாம் இங்கு வந்திருக்கின்றனர். இக் கருத்தரங்கு தமிழன் பிறந்தகத்தைத் தீர்மானிக்கும் கருத்தரங்கு ஆகும். ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வருதற்கு முன்பே இந்நாவலந்தீவு முழுவதும் பரவியிருந்தவர்கள் பழந்திராவிடர்கள் என்று தான் எல்லா நடுநிலை யாளர்களும் சொல்லி வருகின்றார்கள். அவர்களையும் கூட இக்காலத்தில் சிலர் மறுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். நான் மொழித்துறையில் மட்டும், மறைமலையடிகள் இல்லாத இக் காலத்திலே, இவ்வுலகத் தமிழ்க்கழகத்தை ஆற்றுப்படுத்தி வருகின்றேன். மறைமலையடிகள் இருந்திருந்தால் நான் அவரின் தொண்டராக - அடித்தொண்டராக இருந்திருப்பேன். அவர்கள்தாம் இந்தத் தனித்தமிழ் உணர்ச்சியை நமக்கு ஊட்டியவர். நீண்ட காலமாக நம் தமிழ்மொழியானது மிக மறையுண்டும் புதையுண்டும் கிடந்தது. போன நூற்றாண்டிலே கால்டுவெல் என்கின்ற வெளிநாட்டு ஆராய்ச்சியறிஞர் இத்தென்னாட்டிலே வந்து, ஓர் அரை நூற்றாண்டு திருநெல்வேலியில் தங்கியிருந்து, ஆராய்ந்து திரவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் இலக்கண நூலை இயற்றினார்கள். அவர்கள் காலத்திலே, பெரும் தமிழ்ப் புலவர்களுக்கே, அஃதாவது தமிழ் அதிகாரிகள் என்று சொல்லத் தக்கவர்களுக்கே, பண்டைத் தமிழ் நூற்கள் என்று சொல்லப் பெறுகின்ற கழகநூற்கள் எவை என்று தெரியாவாம். திரிசிரபுரம் என்கின்ற திருச்சிராப்பள்ளியிலிருந்து, பர். உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும் ஆசிரியராக விருந்து கற்பித்த பெரும்புலவர் மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்குக் கழக நூற்கள் என்றால் என்னவென்றே தெரியாதாம். அந்தநிலை இந்தத் தமிழ் நாட்டிலே இருந்தது. அந்தக் காலத்திலே - அஃதாவது காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்திலே - வழி தெரியாத ஒருவர் தன்னந்தனியாகச் சென்று ஆராய்வது போல் கால்டுவெலார் ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டு பிடித்தார். தமிழன் மேனாட்டிலிருந்து வந்தவன் என்ற தவறான ஓர் அடிப்படைக் கொள்கையை அவர் கொண்டு விட்டதினாலே சில உண்மைகளை அவர் அறிய முடியவில்லை. உயர்ந்த நாகரிகம் ஆரியருடையது என்று சொல்லி விட்டார். கொற்கையிலே தான் தமிழ் நாகரிகம் தோன்றியது என்றும் சொல்லிவிட்டார். அவர் காலத்திலே தொல்காப்பியம் போன்ற நூல்கள் இல்லை. அது மறைந்து கிடந்தது. நன்னூலும் திருக்குறளுந்தாம் பயிலப் பெற்று வந்தன. அதனால், அவர் மற்ற பண்டை நூல்களை அறியாததி னாலே தமிழர் மேல் நாட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற தவறான கொள்கையைக் கொண்டு விட்டார். அவ்வாறிருந்தும் தமிழ் மொழியானது ஆரியத்திற்கு முந்தினதே என்று மிகத் தெளிவாகப் பல இடங்களில் சொல்லியுள்ளார். அதற்குச் சிறப்பாக அவர் எந்த அடிப்படையை எடுத்துக் கொண்டார் என்றால், மொழியின் சொல் தொகுதியிலே, மூவிடப் பெயர்கள் இருக்கின்றனவே, அவற்றில் சுட்டுச் சொற்களையே எடுத்துக் கொண்டார். அவற்றை வைத்து, தமிழ்மொழிதான் ஆரியத்திற்கு மூலம் என்று சொல்லுகிறார். பலர் இதை இன்னும் சரியாகப் படிக்கவில்லை என்று நான் கருதுகின்றேன். கால்டுவெல் எழுதிய அந்த ஒப்பியல் இலக்கணத்தைத் திரும்பவும் சரியாகப் படித்துப் பாருங்கள். அதில் அந்தக் கருத்தைப் பலவிடங்களில் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார். ``மாந்தனின் முதல் பெற்றோர் - மொழியினின்று வழி வழி வந்தவர் - கூறியவையாகக் கருதும் ஒரு சொல் தொகுதியானது திரவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது'' என்று அவர் கூறியிருக்கின்றார். அது மிகவும் உண்மை. அவர் எந்த அடிப்படையில் அதை ஆராய்ந்தார் என்றால், இந்தக் கொடிவழி முறையில் ஆராய்ந்துள்ளார். மொழியாராய்ச்சி இருவகைப்பட்டது. ஒன்று கொடிவழி முறை என்பது; இன்னொன்று வடிவியல் முறை; அஃதாவது Morphological முறை. கொடிவழி முறை என்பது Genealogical. இந்தக் கொடிவழி முறையில்தான் உண்மையை அறிய முடியும். மேலையாராய்ச்சியாளர் களெல்லாரும் இந்தக் காலத்திலே ஆரியத்தை அடிப்படையாக வைத்து, அதன் மூலத்தைக் காண முடியாமல் குன்று முட்டிய குருவி போல இடர்ப்பட்டு, ``எல்லாமொழிகளும் இடுகுறித் தொகுதிகளே; அஃதாவது ஒவ்வொரு மொழியும் அடிப்படைச் சொற்கள் உட்பட ஆயிரம் ஆண்டு களுக்கு ஒரு முறை முற்றிலும் மாறிவிடு கின்றது; அதனால் இற்றை நிலையை வைத்து, நாம் பண்டை நிலையை அறிய முடியாது'' என்று ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் ஆங்கில மொழியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய முறையை எடுத்துச் சொல்வ தானால், ஓர் உவமையால் உங்களுக்கு விளக்கலாம். அவர்கள் வரலாற்றுத் துறையையே அடியோடு விட்டு விட்டார்கள். அஃது, இப்பொழுது இங்கே உள்ள ஆரியச் சார்பானவர்களுக்கும், தமிழ்ப் பகைவர்களுக்கும் மிகவும் கொண்டாட்ட மாயிருக்கின்றது. ஏனென்றால், வரலாற்று முறையில் ஆராய்ந்து பார்த்தார் களென்றால் இந்த (தமிழ் முந்தியது; ஆரியம் பிந்தியது என்னும்) உண்மை நாளடைவில் வெளிப்பட்டு விடும்; அப்புறம் அவர்கள் ஏமாற்று எல்லாம் தெரிந்துவிடும். அவற்றை அடியோடு மறைத்துக் கொள்ளுதற்கு இந்த வண்ணனை மொழியாராய்ச்சி (வடிவியல் முறையை அடிப்படையாகக் கொண்டது) அவர்களுக்குத் துணை செய்கின்றது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் யார்? பிள்ளைகள் யார்? அண்ணன் தம்பி யார்? அக்கை தங்கை யார்? என்றெல்லாம் ஆராய்ந்தறியாமல், ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனைப்பேர் நெட்டையர்? எத்தனைப் பேர் குட்டையர்? எத்தனைப் பேர் என்னென்ன நிறத்தி லிருக்கிறார்கள்? என்னென்ன இயல்பு அவர்களுக்கு உண்டு - இவற்றைத் தாம் எடுத்துச் சொல்ல வேண்டும். மற்றபடி ஒன்றுஞ் சொல்லக் கூடாது. இதுதான் வண்ணனை மொழியாராய்ச்சி. தெ. பொ. மீ. என்னும் ஒருவரை உங்களுக்குத் தெரியும். நம் பேரா சிரியர்களுள் ஒருவர். இப்பொழுது இருக்கின்ற ஒரு கேடான நிலைமை என்னவென்றால், மற்ற நாடுகளிலே இல்லாத ஒரு நிலைமை இங்கே தமிழை எவன் ஆராய்கின்றானோ அவனுக்கு ஒருவகை மதிப்பும் இல்லாமற் போக வேண்டும். அவனுடைய வாழ்க்கைக்கும் இடமில்லை, இங்கே! தமிழை எவன் காட்டிக் கொடுக்கின்றானோ அல்லது பகைக் கின்றானோ அல்லது பகைவரோடு சேர்ந்து கொண்டு கருத்தறிவிக் கின்றானோ அவனுக்குத்தான் நிறைய மதிப்பும் வாழ்வும் ஏற்பட வழியிருக்கின்றன, இங்கே! தமிழ்மொழியே உலக முதன்மொழி. அஃதாவது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமானது. திராவிடத்திற்குத்தாய் என்று முதன் முதல் நமக்கு உணர்த்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். சென்ற நூற்றாண்டிலே, இந்தியா முழுமையும் மட்டுமில்லை, உலக முழுமையும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது ஆங்கில மொழி. அந்த மொழி ஒன்றுதான் உயர்வாகக் கருதப் பெற்றது. அதில் பேசியவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்றோ தேவர்கள் என்றோ மதிக்கப் பெற்றார்கள். தமிழ்மொழி தாழ்த்தப் பெற்ற ஒரு மொழியாக விருந்தது. அது நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தக் காலத்தில் மேடை மேல் ஏறியவர்கள் எல்லாரும் `எனக்கு தமிழ்த் தெரியாது' என்று சொல்வதையே பெருமைக்கு ஒரு சான்றாக மதிக்கப் பெற்ற காலம் அது. அந்தக் காலத்திலே, ஆங்கில அறிஞராக ஒருவர் தோன்றினார், தமிழ்த் தொண்டராக! அவர்தாம் பேரா. சுந்தரனார். அவர்தாம் தமிழ்மொழி விழிப்பு உணர்ச்சியை முதன் முதல் தமிழர்களுக்கு ஊட்டியவர். அவர்தாம் தமிழுக்குப் பள்ளியெழுச்சி பாடினார் என்று சொல்லலாம். ``நீராருங் கடலுடுத்த'' என்னும் பாட்டு அது. ``ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்'' என்பது தான் அவர் பாடிய அப்பாட்டில் ஓர் உயிர் நாடித் தொடர். அந்த அடியைத்தான் இப்பொழுது ஒழித்து விட்டார்களே, அக்கருத்து ஒரு சாரார்க்குப் பிடிக்கவில்லை என்று! ஆகையினால் அந்தப் பாட்டைப் பாடாமலே விட்டு விடுவது நல்லது. அதை எழுதிய ஆசிரியரவர்கள் இந்தக் காலத்திலே இருந்திருப்பாரானால் அந்த நிலைக்கு மிக மிக வருந்தி யிருப்பார். ஒரு வேளை அதன் பொருட்டு அவர் உண்ணா நோன்பு கூட இருந்தாலும் இருந்திருப்பார். இப்படி அந்தப் பாட்டின் கருத்து மறைக்கப் பட்டிருக்கின்றது. இக்கால், `அமுதசுரபி' என்னும் ஓர் இதழில் `அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று ஒரு கட்டுரை வந்ததாம். அக்கட்டுரையில் அந்தணர் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துக் கொண்டதே தவறு. அந்தணர் என்னுஞ் சொல் ஆரியர்களைக் குறிக்குஞ்சொல் அன்று. ஆனால் அதை ஆரியர்களைக் குறிப்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டு எழுதியுள்ளார் அதன் ஆசிரியர் கிருஷ்ண ஸ்ரீநிவா என்பவர். கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு மூலம் `க்ருஷ்' என்பது அதற்குக் `கருப்பு' என்பது பொருள். `க்ருஷ்ணபக்ஷம் (கரும்பக்கம்) க்ருஷ்ணஸர்ப்பம் (கரும்பாம்பு) என்று வரும். க்ருஷ்ணன் என்றால் மாயோன். மாயோன் - கரியவன் என்பதையே மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை வடநாட்டுக் கண்ணன் என்பானும் கரியவனாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் தமிழன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. தென்மதுரை முழுகிப்போன பின் தென்னாட்டிலிருந்து போன தமிழ் மக்கள்தான் அங்குப்போய் மதுராபுரி என்று அங்குள்ள ஓர் ஊருக்குப் பெயரை வைத்துக் கொண்டார்கள். எப்படி ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போய், தங்களின் பழைய நாட்டை நினைவு கூர்வதற்காக `இங்கிலாந்து' என்றால் `நியூ இங்கிலாந்து' என்றும் `யார்க்கு' என்றால் `நியூயார்க்கு' என்றும் பெயர்களை வைத்துக் கொண்டார்களோ, அதே போல் தென்னாட்டிலிருந்து போன நம்மவர்களும் வட நாட்டுக்குப் போய் `மதுரை' என்றே பெயர் வைத்தார்கள். இப்பொழுது அது `மத்ரா' என்று வழங்கி வருகின்றது. அங்கே தான் கண்ணன் இருந்தான். அவன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் தூய தமிழன். அங்குள்ள வழக்கத்தையெல்லாம் பார்த்தீர்களானால், கண்ணன் அக்கால் தென்னாட்டில் உள்ள வழக்கப்படியே நப்பின்னையை ஏறு தழுவி மணந்தான் என்று இருக்கின்றது. இவ் வழக்கம் நம் நாட்டின் முல்லை நிலத்தின் விழாவை யொட்டியது. ஒவ்வோர் ஆயர் குடும்பத்திலும் ஒரு சேங்கன்று பிறந்தவுடன் அதற்கு அக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரை வைத்து அதை வளர்த்து வருவார்கள். அந்தப் பெண்ணுடன் அந்தக் கன்றும் நன்கு வளர்ந்து காளையாகும். அந்தக் காளையை எவன் பிடித்து அடக்குகின்றானோ அவனே அந்தப் பெண்ணை மணப்பதற் குரியவன் என்று தீர்மானிப்பார்கள். இதெல்லாம் அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கம். அந்த முறைப்படி அந்தக் கண்ணனும் மணந்தான். இப்பொழுது, க்ருஷ்ண என்றால் கருப்பன் என்றுதான் பொருள். நீங்கள் அகர முதலியை எடுத்துப் பாருங்கள். அதிலே `கருள்' என்ற தூயதமிழ்ச் சொல் இருக்கும். கருள் - என்றால் கருப்பு. இந்தக் `கருள்' என்னுஞ் சொல்தான் வடமொழியில் `க்ருஷ்' என்று திரியும். `சுள்' என்று ஒரு சொல் உண்டு. `சுள்' என்று வெயிலடிக்கின்றது என்று நாம் சொல்வ தில்லையா? சுள் என்றால் சுடுதல் என்னும் பொருள் குறிக்கும் ஒரு சொல் மூலம், காய்கிறது, சுடுகிறது என்பதையெல்லாம் இந்த `சுள்' என்னும் சொல் உணர்த்தும். காய்ந்துபோன குச்சியைச் `சுள்ளி' என்று சொல்கிறோம். சுள் என்னும் மூலத்திலிருந்துதான் `சுரம்' என்று வெப்பத்தைக் குறிக்கும் சொல் பிறக்கும். அதை வடமொழியில் `சுஷ்' என்று வைத்திருக்கிறார்கள். சுக்கு இருக்கின்றதே காய்ந்து போன இஞ்சி, அது காய்ந்து போனதால்தான் சுள்+கு சுக்கு என்று சொல்கிறோம். இந்தச் சுக்கைச் சமசுக்கிருதத்தில் `சுஷ்க' என்று சொல்கிறார்கள். நம் `சுள்'ளை அவர்கள் `சுஷ்' என்று மாற்றி அதை அவர்களுடைய சொல் என்று வேறு சொல்கின்றார்கள். இன்னும் என்ன சொல்கிறார்கள், `சுஷ்' என்பதைத்தான் நாம் `சுக்கு' என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்கின்றார்கள், ஏன் தெரியுமா? தமிழன் திறந்த வாயன். அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் ஒன்று என்று எண்ணாதீர்கள் இதுபோல் எத்தனையோ எழுதிக்கொண்டு வருகின்றார்கள். அவற்றை யெல்லாம் இங்கு எடுத்துச் சொல்லிவிட முடி யாது. ஆனால் தமிழர்களில் எவரும் இது பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை; யாரும் கேட்பதும் இல்லை. அதனால் ``பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் பொய்போலும்மே மெய்போலும்மே'' என்றாகி வருகின்றது. இதையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால், இப்படி `அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று சொல்கிறவர்தம் பெயரே எப்படி அமைந்திருக்கின்றது என்பதைத் தெரியாமல் இருக்கிறார். தூய சமசுக்கிருதச் சொல் என்று அவர் கருதிக் கொண்டிருக்கும் அவர் பெயரே தூய தமிழ் மூலத்தைக் கொண்டிருக்கின்றது. அதே போல் ஸ்ரீ என்பது `திரு' என்பதன் திரிபு. திரு என்பதற்குத் திரண்டது என்பது பொருள். திரட்சி - திரண்டது. திரண்டது என்பது முதன் முதலில் செல்வத்தைக் குறித்தது. திருவரங்கம் என்று வழங்கியதைத்தான் இப்பொழுது ஸ்ரீரங்கம் என்று மாற்றி வைத்திருக்கின்றார்கள். அடுத்து `நிவா' என்பதையும் பார்த்தீர் களானால், அதில் உள்ள `நி' என்பது ஒரு முன்னொட்டு (அஃதாவது Prefix என்கிற உபசர்க்கம்). `வா' என்பது வ என்பதினின்று வந்தது. tÞ-to dwell. `வ' என்பது `வதி' என்னும் தமிழ் மூலத்தின் திரிபு. வதிதல் என்றால் தங்குதல் அல்லது வாழ்தல். இனி, இந்த `வதி' என்னும் மூலத்தினின்று வேறு பல சொற்களை எடுத்து உருவாக்கிக் கொண்டார்கள். அவற்றிற்கும் மூலம் தமிழிலேயே உண்டு. எனவே இஃது ஒன்றைக் கொண்டே நம் கருத்தை நாட்ட வேண்டும் என்பதில்லை. எத்தனையோ ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. நான் இவற்றைக் கண்டு கொள்ள ஓராண்டு ஈராண்டு அன்று ஐம்பது ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கினேன். இவற்றுக்கு வேண்டிய சான்றுகளையெல்லாம் எல்லா நூல்களையும் படித்துத் தேடி எடுத்தேன். ஓர் உண்மையை நிலைநாட்டுவதற்கு நான்கு வழிகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை நால்வகை அளவைகள் (பிரமாணங்கள்) எனப்படும். அவை காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்பவை. அவற்றைத்தான் அவர்கள் சமசுக்கிருதத்திலே பிரத்தி யட்சம், அநுமானம், உபமானம், ஆகமம் என்று பகுத்து வைத்திருக் கின்றார்கள். இப்பொழுது நமக்குக் காட்சி சான்று இல்லை. சிலர் கேட்கிறார்கள், தமிழ்நாடு குமரிநாடு என்பதற்கும் தமிழன் குமரி நாட்டான் என்பதற்கும் நமக்குக் காட்சி சான்று அஃதாவது பழம் பொருட்கலை Archaeological evidence நமக்கில்லையே என்று. அப்படி ஏன் இல்லை என்றால், நம்முடைய பழைய நிலமெல்லாம் கடலுள் மூழுகிப் போய் விட்டது. காவிரிப் பூம்பட்டினம் எப்படி மூழ்கிப் போய் விட்டதோ அப்படியே தெற்கே விருந்த அந்தக்குமரி நாடு, பழந்தமிழ் நாடெல்லாம் முழுகிப் போய் விட்டது. தெற்கே ஒரு பெரிய நிலம், அஃதாவது பனிமலை என்கின்ற இமயமலை எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் குமரிமலை என்று ஒரு பெரியமலை தென்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் நம் முன்னோர்கள் தோன்றினார்கள். அதனால்தான் அந்தக் காலத்திலேயே பாண்டியன் சிதம்பரம் என்று சொல்லப்பெறும் தில்லையை நடுவிடமாக வைத்துக் கணக்கிட்டான். நெஞ்சாங்குலையின் துடிப்புப் போன்றது இறைவனுடைய ஆற்றல். அந்த இறைவனுடைய தொழிலைத் தான் மூன்றாகவோ ஐந்தாகவோ சொல்லி, அதை நடம் என்று உருவகித்துச் சொல்கிறது. வடக்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். தெற்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். நடு இடம் அந்தத் தில்லை. பாண்டியனே அந்த இடத்தை அப்பொழுதே அமர்த்திவிட்டான். இந்தச் சிவனடியார்களுக்கெல்லாம் சிறந்ததான உருத்திராட்சம் (உருத்திரா - அட்சம் சிவனுடைய கண்மணி.) தொன்று தொட்டு விளைவது நேபாள நாட்டிலேதான். முதலில் மதுரையை நான் சொன்னேன். அதற்கு முன் தமிழர்கள் வங்கத்திலே தங்கி அங்கு ஒரு காளி கோயிலை உண்டாக் கினார்கள். அதனால்தான் அதற்குக் காளிக் கோட்டம் (Calcutta) என்று பெயர். இன்றைக்கும் வடமொழியிலே காளிக்கட் என்றுதான் சொல்வார்கள். ஆங்கிலத்தில்தான் கல்கத்தா என்று சொல்வார்கள். அதனால் வடநாட்டில் உள்ளதெல்லாம் ஆரியருடையது என்று தவறாக நாம் கருதிக்கொள்ளக் கூடாது. வடநாட்டிலே ஒரு காலத்திலே தமிழர்களாகவே இருந்தவர்கள் பின்னர் திரவிடர்களாக மாறினார்கள். நம் மனோன்மணியம் சுந்தரனாருக்குப் பின்னாலே பிராமணத்தொண்டர் ஒருவரே தோன்றினார் இந்தத் தமிழைக் காப்பதற்கு. அவர்தாம் பரிதிமாற்கலைஞர் என்னும் சூரியநாராயண சாத்திரியார். அவர் வரலாற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவருடன் நெருங்கிப் பழகியவர்களைக் கேட்டால்தாம் பல உண்மைகளெல்லாம் விளங்கும். சிறந்த தமிழ்ப்பற்றுள்ள உண்மையான தொண்டர். சிறந்த பண்பாடுள்ளவர். கிறித்துவக் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக விருந்த பொழுது, பிராமண மாணவர்களை வைத்துக் கொண்டு சொல்லியிருக் கின்றார், ``பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டார்'' என்று. எவ்வளவு துணிச்சலும் நெஞ்சுரமும் கள்ளங்கவடற்ற தன்மையுமிருந்தால் அவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் என்று கருதிப்பாருங்கள். அவர் தம் இறுதிக் காலத்தில் இருமல் நோயால் பேரிடரும் பெருந்துன்பமும் பட்டார். அப்பொழுதும் அவர் அன்பளிப்பாகவோ கட்டணமாகவோ காசு பணம் ஒன்றும் வாங்காமல் மாணவர்களுக்கு இலவசமாகத் தமிழைப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அடிக்கடி அவருக்கு இருமல் வருமாம். இவரோ இருமிக்கொண்டே பாடம் சொல்வாராம், ``இருமல் என்னோடு பெருமல் செய்கிறதே'' என்று. நம் நாட்டிலே, பழைய காலத்திலே, இந்தியா முழுவதும் பெருவாரியாகப் பரவியிருந்தது, இக்கால் தென்னாட்டிலே சிறந்த சமயமாக விருக்கின்ற சிவநெறிதான். அந்த சிவ சமயத்திலே, பரிதிமாற் கலைஞர்க்குப் பிறகு தமிழில் சிறந்த புலவராகவும் ஆங்கிலத்திலே சிறந்த அறிஞராகவும் சிறந்த சிவநெறியாளராகவும் பண்பு மிக்கவராகவும் விளங்கிய பேரறிஞர் ஒருவர் தோன்றினார். அவர்தாம் தனித்தமிழ் உண்மையை நமக்கு விளக்கமாக அறிவித்தார். அவரே மறைமலையடிகள். அவர்களுக்குப் பின்னாலே நான் இந்தத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து வருகின்றேன். இந்தப் பணிக்குக் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த ஒருவனாகிய என்னை ஏன் இறைவன் தோற்றினான் என்றால், அந்த உண்மையை நீங்கள் அறிதல் வேண்டும். மேனாட்டாருக்கு நம் குமரிநாட்டு வரலாற்றை அறிவதற்கு ஒரு பெருந்தடையாக விருப்பது இந்த (பைபிளில் சொல்லப்பெற்ற) ஏதேன் தோட்டக் கதை. ஏற்கனவே அந்த மதப்பற்றில்லாதவர்கள் கூட இனப்பற்று ஒன்றின் கரணியமாக நம்மைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். திரவிடரோடு அஃதாவது தமிழரோடு நாம் தொடர்பு கொள்வதாயிருந்தால் அது மிகவும் இழிவு என்று அந்த மேனாட்டார்களில் சிலர் கருதுகிறார்கள். சமசுக்கிருதம் என்றாலோ பிராமணர்கள் என்றாலோ, ``அவர்கள் நம்முடைய இனத்தார்; நமக்கு இனமான ஒரு மொழியைப் பேசுகிறவர்கள்'' என்று அவர்களுடன் தொடர்பு கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அதைக் கூட ஒரு காலத்தில், அஃதாவது மாக்சுமில்லர் காலத்திலே, அவர்கள் அந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஆரியர்கள் மேனாட்டார் களைத் தம் சொந்த இனத்தார் என்று கூறி அவர்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டனர். இப்பொழுது சமசுக்கிருதம்தான் மேலை ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூலம் என்று அவர்கள் நன்றாக உறுதியாக நம்புகிறார்கள். நீங்கள் 1970ஆம் ஆண்டிலே வெளியான `பிரித்தானிய கலைக்களஞ்சியம்' (Encyclopeadia Brittanica) என்கிற நூலை ஒருமுறை பாருங்கள். அதிலே அமெரிக்கப் பதிப்பைப் பார்த்தீர்களானால், இந்த இந்தியா படம் எங்கெங்கு வருகின்றதோ அங்கெல்லாம் கரியைப் பூசி வைத்திருக்கிறார்கள். ``முகத்திலே கரியைப் பூசி விட்டான்'' என்று நாம் கூடச் சொல்லுகின்றோமே அந்தச் சொற்படியும் பொருள்படியும் அது சரியாக விருக்கின்றது. அந்த Demigration என்பது அதிலே மிகப் பொருத்தம். வெபுசுடர் பேரகர முதலி (Webster Dictionary) என்று ஓர் அமெரிக்கப் பதிப்பு உளது. அதிலும் அப்படியே செய்திருக் கின்றனர். இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் இருபத்து நான்கு மடலம். மூவாயிரம் உருபா. அதில் பிற்பகுதியிலே நிலப் படங்களை யெல்லாம் காட்டியிருக் கின்றனர். அவற்றில்தான் இந்தியப் பகுதியை மட்டும், அது பெரிய படமாக விருந்தாலும் சரி, சிறிய படமாக விருந்தாலுஞ் சரி முழுவதும் கரியைப் பூசி வைத்து விட்டார்கள். ஆனால் பாக்கித்தான் பகுதிகளை மட்டும் நன்றாக மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலை எதனாலே என்றால், இந்த எல்லைச் சச்சரவு (சச்சரவு என்பதைத் தகராறு என்று சொல்வோம்; அஃது உருதுச்சொல்; எனவே அதை விட்டுவிட வேண்டும்) ஏற்பட்டதே அப்பொழுது அவர்கள் பாக்கித்தானியர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக, அப்படிச் செய்ததாகத் தெரிகிறது. இது தவிர அதற்கு வேறு ஒரு கரணியம் இருப்பதாக உய்த்துணர முடியவில்லை. இப்படிச் செய்ததனால் இந்தியர் அனைவரை யுமே இழிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது தமிழர்களைப்பற்றி அவர்கள் தாழ்வாக மதிக்கின்றார்கள் என்று சொன்னால் அதில் வியப்பதற்கு இடமில்லை. இவ்வாறுதான் மாந்தத் தோற்றவரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. மாந்தன் தோன்றியது மேனாட்டிலே உள்ள ஏதேன் தோட்டத்திலேதான் என்று கிறித்துவர்களின் திருப்பொத்தகம் என்னும் பைபிளிலே சொல்லப் பெற்றிருக்கின்றது. அதைத்தான் மேனாட்டார்கள் நம்புகிறார்கள். இதற்கு நாம் இப்பொழுது ஒரு புது விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உண்மையானது எத்தனைக் காலமானாலும் அல்லது எத்தனைத் தடைகள் இருந்தாலும் எப்படியாகிலும் வெளிப்படத்தான் செய்யும் Oil and truth get upper most at last - என்பது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். ஆகவே நாம் முனைய வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஓர் உண்மையான ஆராய்ச்சியாளருக்கு ஆறு தகுதிகள் அமைய வேண்டும். கூர்மதி, பரந்தகல்வி இந்த இரண்டும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கின்றன என்று கூட சொல்லிவிடலாம். ஆனால் மற்ற நான்கு தகுதிகளாகிய நடுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்பவை மிக இன்றியமையாதவை. இவையில்லா விட்டால் ஒருவன் ஆராயவும் முடியாது; உண்மையை அறியவும் முடியாது. யாரைக் கண்டாலும் எங்கு அமைச்சருக்கு மாறாகப் போய் விடுமோ எந்த மேலதிகாரிக்காகிலும் வருத்தம் உண்டாகிவிடுமோ அல்லது ஓர் இனத்தாருடைய பகையைத் தேடிக்கொள்ளும்படி நேர்ந்து விடுமோ மேலும் மேலும் நம் பதவி உயர வேண்டும்; பணம் தொகுக்க வேண்டுமே - என்றெல்லாம் கருதினால் ஒருவன் உண்மையான ஆராய்ச்சியாளனாக விருக்க முடியாது. இந்தக் குமரிநாட்டு வரலாற்றை ஒப்புக்கொள்ளுகின்றதென்றால் அஃது ஓர் எளிய செய்தியன்று. ஆனால் அஃது உண்மை. உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்று நால்வகை அளவைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அவற்றுள்ளே இப்பொழுது காட்சியை நாம் காண முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் தெற்கே இருந்த குமரி நாடு இப்பொழுது கடலில் முழுகிக் கிடக்கின்றது. அவ்வாறு முழுகிக் கிடக்கின்ற நாடு முழுவதும் பாண்டியநாடு என்பதை நீங்கள் அறிய வேண்டும். அது தமிழ் நாடு மட்டுமன்று; அது பாண்டியநாடு. இந்தக் குமரி முனையிலிருந்து ஒரு கோடு வடக்கே இழுக்கப்பட்டால் கீழ்ப்பகுதியெல்லாம் சோழ நாடு, மேற்குப்பகுதியெல்லாம் சேரநாடு. தெற்கே முழுகிப்போன நிலம் முழுமையும் பாண்டி நாடு. அந்தப் பாண்டி நாடு முழுகிப்போன பின்னர்தான், அந்தக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியர்கள் இந்தச் சேரநாட்டின் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் ஒரு பகுதியையும் கைப்பற்றித் தங்களுடைய குடிகளுக்குக் கொடுத்தார்கள் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில் வரைந்திருக்கிறார். கருத்து (அளவை) என்பது உய்த்துணர்வது. ஒருவனைப் பார்த்து `உன்னுடைய பாட்டனுடைய பாட்டன் (அவனுக்கு ஓட்டன் அல்லாது சேயான் என்று பெயர். இந்தப் பகுதியில் ஓட்டன் என்று சொல்வார்கள்; திருநெல்வேலிப் பகுதியில் சேயான் என்ற சொல் வழக்கிலிருக்கின்றது. அதைப் படியாதவர்கள் ஜீயான் என்பார்கள். `உங்கள் ஜீயான் காலத்திலே கூட இது இல்லையே' என்பார்கள். அவனையே எடுத்துக் கொள்வோம். அவனுக்கு முந்தினவனைக்கூட வேண்டாம்.) இருந்தானா? என்று கேட்டால், அவன் என்ன சொல்லுவான். `இருந்தான்' என்பான். உடனே, `நீ அவனை கண்டாயா' என்று கேட்டால் என்ன சொல்லுவான். `நான் காணவில்லை' என்பான். `அப்படியானால் அவனை நீ காணாமலேயே அவன் இருந்தான் என்று எப்படிச் சொல்லலாம்' சொல்லலாமா? அப்படிச் சொல்லுகிறார்கள். இப்பொழுது நாம் ஒன்றை முடிவு செய்ய வேண்டுமானால் நமக்குப் பல சான்றுகள் இருக்க வேண்டுமே. அளவை நூலின் முதற்பகுதியிலேயே ஒரு விளக்கம் சொல்வார்கள். `எல்லாமாந்தரும் இறப்பவரே. சாத்தன் ஒரு மாந்தன். எனவே அவனும் இறப்பவனே' என்று சொல்லுவார்கள். இப்படியில்லாமல் `எல்லா மாந்தரும் இறவாதவரே' என்று அடிப்படை யையே தவறாக வைத்துக் கொண்டால் முடிவும் தவறாகத்தான் வரும். ``அப்படியானால் சாத்தன் ஒருமாந்தன்; சாத்தனும் இறவாதவனே'' என்று முடிவு காண வேண்டியிருக்கும். மேனாட்டாருடைய ஆராய்ச்சி அப்படி யிருக்கின்றது. மேலை நாடுகளில் மிகப்பெரிய ஆராய்ச்சி யறிஞர்கள் இருக்கின்றார்கள். பரோ, எமனோ என்னும் இருவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பரோ என்பவர் இலண்டனில் இருக்கின்றார். எமனோ என்பவர் அமெரிக்காவில் இருக்கின்றார். இருவரும் பெரிய அறிஞர்கள். மொழிநூல் அறிஞர்கள்தாம். திரவிட மொழிகளையும் படித்திருக்கிறார்கள். ஆனால் தமிழரைப் போல தமிழை ஆழ ஆராய முடியாது. தமிழ் மிகமிகப் பழமையான மொழி. இப்பொழுது மாந்தனுடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், பகுத்தறிவுள்ள மாந்தன் தோன்றினானே அக்காலம் தமிழன் காலத்திலே தான் தொடங்குகின்றது. அவ்வளவு பழமையான காலம் தமிழர்களுடையது. பலர் இப்பொழுது தமிழில் உள்ள மிகப் பண்டைய நூலாகிய தொல் காப்பியத்தை ஆராய்ந்து அத்துடன் நின்று கொள்கின்றார்கள். தொல் காப்பியத்தின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முந்திப் போக வேண்டும் மாந்தன் தோன்றிய காலத்திற்கு. கி.மு. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போனால்தான் தமிழனுடைய தோற்றத்தை நாம் அறிய முடியும். அந்த அளவுக்குப் பழமையானது தமிழ்மொழி. அவர்களுக்கு (பரோ, எமனோவிற்கு) இந்த உண்மைகள் தெரியாது. அவர்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. கால்டுவெல் சொன்னது உண்மைதான்; ஆனால் பிற்காலத்திலே அவர்கள் ஆரியத்திற்குச் சிறப்புக் கொடுத்ததினாலும் ஆரியத்தை வைத்து அவர்கள் அடிப்படையாகக் காண முடியாமையினாலுந்தான் எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் என்னும் முடிவுக்கு வந்து விட்டார்கள். இப்பொழுது, இந்தக் காட்சியளவைக்கு - பழம்பொருள் கலைக்கு - நமக்கு இடமே இல்லை. இக்கால் சில மண்டையோடுகளைக் கண்டெடுத்துக் கொண்டு சிலர், இதுதான் இக்காலம். அதுதான் அக்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் எந்தக் காலத்திலும், ஒரு நாகரிக காலத்திலும் கூட முத்திறப்பட்ட ஆட்கள் இருந்தே தீருவார்கள். அவர்கள் தலையாயார், இடையாயார், கடையாயார் எனப்படுவர். இப்பொழுதுள்ள காலத்தை நாகரிகமில்லாத காலமென்று சொல்ல முடியுமா? ஆனால் இன்றும் இந்த ஆனைமலைப் பகுதிகளுக்கு நீங்கள் போனீர்களானால் அங்கு இன்னமும் நாகரிகத்தில் மிகக்குறைந்த காடர்கள் போன்ற மக்கள் இருக்கிறார்கள். இன்னும் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் நாகரிகமடையாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு மண்டையோட்டைக் கண்டெடுத்தவுடனே இதுதான் நாகரிக மாந்தனுடையது அல்லது தமிழனுடையது என்கிற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது; வந்துவிட முடியாது. இப்பொழுது இசையை எடுத்துக் கொள்ளுங்கள். தோற் கருவிகளுக்குள்ளே மிகச் சிறந்தது மத்தளம் என்கின்ற மதங்கம். அஃது ஓர் உயர்ந்த இசையரங்கிலே அடிக்கப் பெறுகிறது. ஆனால் இன்னோர் அரங்கிலே ஒருவன் கஞ்சுரா அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது தோற்கருவிகளுக்குள்ளே தாழ்ந்த கருவி. இந்நிலையில் ஓர் அயல் நாட்டார் அந்தக் காஞ்சுரா அடிக்கின்ற அரங்கத்திற்குப் போய்க் கேட்டார் என்றால், அவர் `இந்தக் காலத்திலே இவர்கள் இப்படிப்பட்ட கருவியைத் தான் வைத்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். அப்படித் தான் ஒவ்வொரு நாட்டிலும், துறையிலும் தாழ்ந்த நிலை, உயர்ந்தநிலை, இடைப்பட்டநிலை என்பனவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும். தஞ்சையில் கடந்த சிலை 17 (31. 12. 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில், பெரும் புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில். மொழிநூல் முனைவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் தொடர்ச்சி வருமாறு: நீங்கள் சில வரலாற்று நூல்களைப் பார்ப்பீர்களானால், திரவிடன் என்று ஒரு காட்டு விலங்காண்டி (அஃதாவது மிருகாண்டி - மிராண்டி; மிருகாண்டி என்பது வடசொல்) அல்லது தாழ்ந்த நாகரிகமுள்ள ஒரு சிற்றூர் வாணனைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். திரவிடன் என்று சொன்னால் உமாமகேசுவரனார், பவானந்தனார் போன்றோரைப் படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். நம்முடைய முன்னோரெல்லாம் அவன் காட்டிய தோற்றத்தினராய் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டுங் கூட நாம் எதிர்க்காமலேயே இருக்கிறோம். அதனால்தான் நம் பகைவர்கள் மேலும் மேலும் தமிழையும் தமிழனையும் பழித்துக் கொண்டே இருக்கத் துணிந்திருக்கிறார்கள். வெளிநாட்டாரும் அவர்கள் கூறுவதை நம்புவதற்கு இடமுண்டாகி விடுகிறது. எனவே காட்சிப் பொருளளவைக்கு இடமில்லை. ஆகையினால் ஆங்காங்குக் கிடைக்கின்ற சில மண்டையோடுகளாலேயே நாம் அந்த முடிவுக்கு வந்து விடமுடியாது. இப்பொழுது, ஐரோப்பாவின் வரலாற்றைப் பார்த்தீர்களானால், நண்ணிலக் கடற்கரை (Mediterranean Region) இருக்கின்றதே, அங்கேயுள்ள மக்களில் கிரேக்கர்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பொத்தகத்தில் உள்ள படங்களில் பாருங்கள் அவர்கள் சட்டையே அணிந்ததில்லை; கீழ்வேட்டியும் மேல் வேட்டியும் வெவ்வேறு வகையில் அணிந்திருக்கிறார்கள். இந்த நீள் மண்டையர் தாம் அங்கேயும் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றார்கள். ஏனென்றால், இங்கிருந்து போனவர்கள் அவர்கள். மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மிகப் பழைய நாகரிகமாக ஒரே காலத்தில் இரண்டு நாகரிகங்களைக் காட்டுகின்றார்கள்; எகிப்து ஒன்று; சுமேரிய நாகரிகம் ஒன்று. சுமேரிய நாகரிகத்திற்குப் பிற்பட்டது தான் பாபிலோனிய நாகரிகம். இவற்றுள் இந்தச் சுமேரிய நாக ரிகத்திற்கு எழுத்துச் சான்று மிகுதியாயிருக்கிறதென்று காட்டுகின்றார்கள். அந் நாகரிகத்தை கி.மு. 3500 - இலிருந்து தொடங்குகிறார்கள். அதற்கடுத்தது பாபிலோனிய நாகரிகம். ஆனால் தமிழர் நாகரிகமோ மிக மிக முந்தியது. தலைக் கழகக் காலமெல்லாம் கி. மு. 10,000-க்கு முந்தியது. தமிழ்மொழி தோன்றியதோ அதற்கும் முந்தியது. இப்பொழுது எழுத்தைச் சார்பாகக் கொண்டு தமிழைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் பகைவர்கள். நீங்கள் இன்னொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இலக்கணத் திற்கு முந்தியது இலக்கியம். இலக்கியம் இருகூறானது எழுதப்பெற்ற இலக்கியம்; எழுதப் பெறாத இலக்கியம். இவற்றுள் எழுதப் பெற்ற இலக்கியத்திற்கு முந்தியது எழுதப் பெறாத இலக்கியம். அதற்கு முந்தியது மொழி. மொழி வளர்ச்சியோ ஆறு ஏழு நிலைகளைக் கொண்டது. இந்த மொழி நிலைக்குப் பிற்பட்டதே எழுத்து. அந்த எழுத்து நிலையிலும் நான்கு வகைகள் சொல்லப் பெறுகின்றன. அந்த நான்கு வகைகளுள் சிறந்ததும் இறுதியுமான நிலையைத் தமிழ் தலைக்கழகக் காலத்திலேயே அடைந்து விட்டது. மேலே ஐரோப்பிய மொழிகளை நீங்கள் பார்ப்பீர்களானால் எந்த மொழியிலும் உயிர்மெய் எழுத்து இல்லவே இல்லை. அதில் உயிர்மெய் உயிர்முன்னும் மெய்பின்னும் என்றில்லாதபடி உயிரொடு மெய்யும் மெய்யோடு உயிரும் கலந்தே இருக்கும். எல்லாம் Alphabet என்று சொல்லிக் கொள்வார்கள்; அவ்வளவுதான். அல்ஃபா (Alpha) பீட்டா (Beta) என்று சொல்வார்கள் அல்ஃபா, பீட்டா என்று இரண்டு எழுத்துகள் முன்னாலே தோன்றியதாலே அவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். அஃது எதைப்போல் என்றால், நம்மவர்கள் `அ'னா `ஆ'வன்னா தெரியாதவன்' என்று சொல்வதைப்போல். அ, ஆ என்பதைப் போல் அவர்கள் அல்ஃபா (A) பீட்டா (B) என்பார்கள். ஆனால் தமிழ் எழுத்துகள் எப்படி என்றால் உயிரும் மெய்யும் மட்டுமல்ல; உயிர்மெய்யும் தோன்றியது. அஃது ஏன் அவ்வாறு தோற்றினார்கள் என்றால், நம் பழைய இலக்கணவாசிரியர்கள் எல்லாரும் முற்றும் துறந்த முனிவர்கள்; சிறந்த மெய்யறிவுள்ள, கொண் முடிபுப் பேரறிஞர்கள். அஃதாவது `தத்துவஞானிகள்'. அவர்கள் மூன்று வகையான பொருள்களை இவ்வுலகத்திலே கண்டார்கள். உயிர், உயிரில்லாத பொருள்கள், உயிரும் மெய்யும் கூடிய பொருள்கள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்கள் ஈறாக உள்ள அனைத்தும் நிலைத்திணை முதல் மாந்தன் ஈறாக உள்ள அறுவகைப்பட்ட உயிர்மெய்கள். எனவே தாம் கண்ட எழுத்துகளுக்கும் உவமை முறையிலே உயிர் என்றும், மெய் என்றும், உயிர்மெய் என்றும் பெயர்களிட்டார்கள். தானே ஒலிப்பது உயிர்; உயிரின்றி இயங்காத எழுத்து மெய்; உடம்பு போன்றது; இரண்டும் கலந்தது உயிர்மெய். இந்த வகைகளைக் கூட முறையாக வைத்திருக்கின்றார்கள். முதன் முதல் ஓர் ஆளைப் பார்த்தவுடன் நமக்கு உயிர் தெரிவதில்லை. உடம்பு தான் விளங்கித் தெரியும். க என்று சொன்னால் க்+அ. இந்த உயிர்மெய் உண்மை எல்லா மொழிகளிலும் உண்டு. Cat (கேட்) என்று சி, ஏ, டி என்று பிரித்துச் சொன்னாலும் `கேட்' என்று தானே (முதலில் `க்'கைத்தானே) சொல்லல் வேண்டும். King என்பதை, K, I, N, G என்று பிரித்துச் சொன்னாலும் `கிங்' என்று உயிர்மெய் முன்னால் வரும்படி தானே சொல்ல வேண்டும். க், ஐ, ங், கு-என்றா சொல்லிக் கொண்டிருக்கிறான்? K, I, சேர்ந்தாலே `கி' என்றுதானே உயிர்மெய் வருகின்றது. ஆனால் அதை அவன் கண்டு பிடிக்கவில்லை. அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து ஒன்று போல் ஒலிக்கின்றது என்பதை அவன் பிரித்து உணரவில்லை. அவர்களைப் போலன்றி நம் முன்னோர்கள் சிறந்த மெய்ப் பொருள் அறிஞர்களாயிருந்ததாலே அதற்கு உயிர்மெய் என்று பெயரிட்டார்கள். இந்த உயிர்மெய் அமைப்பினாலே எழுத்துத் தொகை நீண்டு விடுகிறது. ஆகையினால் இதற்கு நெடுங்கணக்கு என்று பெயரிட்டார்கள். அந்த உயிரும் மெய்யும் மட்டும் பிரித்துச் சொல்வதைக் குறுங்கணக்கு என்றார்கள். மேலை மொழிகளில் இந்தப் பாகுபாடு இல்லவே இல்லை; நீங்கள் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த முறை தமிழிலேதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது சொல்லப்படுவது என்ன? முதன் முதலில் இம் முறை சமற்கிருதத்தில்தான் தோன்றியது. சமற்கிருதத்தைப் பின் பற்றித் தமிழில் இதை வகுத்துக் கொண்டார்கள்' - என்று சொல்கிறார்கள். `உரத்தியும், எடுத்தும், கனைத்தும் க (K), க (G), கஹ (Kgh) என்னும் இம்மூவகை ஒலிகளையும் விட்டு விட்டுப் பொது வகையான ஒலிகளைத் தமிழர்கள் எடுத்துக் கொண்டார்கள்' என்று ஒரு தவறான கருத்தைச் சொல்கிறார்கள். கால்டுவெல்லே இந்தக் கருத்தைத் தோற்றுவித்து விட்டார். அஃது எதனாலே என்றால் இந்த வரலாறு தெரியாமையாலே! `தமிழ் குமரி நாட்டில் தோன்றியது; அது மற்ற மொழிகளுக்கெல்லாம் முந்தியது; என்னும் உண்மையை அவர் அறியாததாலேயே! எனவேதான் இந்தக் குமரி நாட்டு உண்மையை அடிப்படையாக நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். இதற்குப் பின்னால் வேறு போராட்டங்கள் வரும். இந்த உண்மையை நாம் நன்றாக, அழுத்தந்திருத்தமாக, உறுதியாக உள்ளத்திலே கொள்ள வேண்டும். முதன் முதலாக இந்த நெடுங்கணக்கு தோன்றியது தமிழில்தான். அதற்குப் பின்பு திரவிட மொழிகளிலும், அதன்பின் வடநாட்டு மொழிகளிலும் தோன்றியது. இந்த முறையைத்தான் சமற்கிருதம் பின்பற்றியிருக்கிறது. எழுத்து, மொழிக்குப் பிற்பட்டது. மிகப் பழைய காலத்திலேயே தமிழில் எழுத்து தோன்றி விட்டது. ஆனால் வடக்கே யிருந்து வந்த சமணர்கள் சிலரும் பௌத்தர்களும் அந்தக் காலத்திலே வடக்கே வழங்கிய பிராமி எழுத்தைத் தென்னாட்டிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார்கள். அவற்றில் கல்வெட்டுகள் மதுரையருகிலும் கிடைக்கின்றன. நம் தமிழ்ப் பகைவர்கள் இதையே சான்றாகக் கொண்டு, இதிலிருந்துதான் நம் தமிழ் எழுத்தே தோன்றியது, அஃதாவது அசோகர் காலத்திய பிராமி எழுத்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் தோன்றியது; இதிலிருந்துதான் தமிழ் நெடுங்கணக்கு வகுக்கப் பெற்றது; தொல்காப்பியம் தோன்றியது அதற்குப் பிற்பட்டுத்தான் என்று, போன உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கிலே, ஐராவதம் மகாதேவன் என்னும் ஒருவர், தில்லியிலே இருப்பவர், எழுதி அச்சிட்டுப் படித்து விட்டுப் போய் விட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. அந்தக் கருத்தரங்கோ ஒரு சந்தைக் கூட்டம் போல் நடந்தது. இந்த உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு உள்ளதே, அதைப் பற்றி ஒன்று உங்கட்குத் தெரிய வேண்டும். இது தனி நாயகம் என்ற வையா புரியின் வேலை; இவ்வளவும். மூன்று மாநாடுகள்! நடந்து விட்டன. பெரிய மாநாடுகள் உலகத் தமிழ் மாநாடுகள் கூட்டத்தினுடைய ஆரவாரத்தையும் மக்கள் தொகையையும் கண்டே பலரும் மயங்கி விடுகிறார்கள். ஆனால் ஒருவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. இப்பொழுது ஒரு செய்தியைச் சொல்கின்றேன். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்: ஒரு பெரிய மாநாடு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; இங்கிலாந்திலே! அஃது உலகத்தமிழ் மாநாடு. அதற்குத் தலைமை தாங்குகிறவர் இங்கிலாந்துப் பேரரசியார். அதற்குக் கொடியேற்றி வைக்கிறவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன். அதைத் தொடங்கி வைக்கிறவர் கோசிசின் அல்லது குரோமிகோ போன்றவர். சீனக் குடியரசுத் தலைவர் சூ. என். இலாய் போன்றவர்கள் அதிலே பேச்சாளர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைப் பார்க்கிறவர்கள் என்னவென்று நினைப்பார்கள். ``அடேயப்பா, உலகம் முழுவதும் தமிழ் மாநாட்டை நடத்தத் தொடங்கி விட்டார்கள்.'' என்று ஆராய்ச்சியாளர்கள் கூடப் பெருமையாகத்தான் பேசுவார்கள். ஆனால் என்ன பயன் என்று நீங்கள் கருதிப் பார்க்க வேண்டாமா? இப்படி இவர்களெல்லாரும் சேர்ந்து ஒரு தமிழ் மாநாட்டை நடத்துவதென்றால் என்ன நடக்கும்? இப்படித்தான் இன்று நடக்கிறது. இந்தத் தனிநாயகம் என்கிறவர் பிறர் முயற்சியாலே ஒரு பெயர் பெறுவதிலே ஒரு தனிநாயகம்! (சிரிப்பு!) அவருடைய வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியாது. அவர் முதலில் Tamil Culture என்ற ஓர் இதழைத் தொடங்கினார். அதில் தம்மைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் குறித்துக் கொண்டார். அதற்கப்புறம் ஈழத்திலே பல்கலைக் கழகத்திலே ஒரு பதவிக்குத் தாண்டினார். அங்கிருந்து மலையாவிலே ஒரு நல்ல வாய்ப்பு வந்து சேர்ந்தது. அங்கே பேராசிரியாக விருக்கிறார். முதல் முதலிலே அங்குத்தான் உலகத்தமிழ் மாநாடு. முதன் முதலில் தமிழ் நாட்டில்தான் நடப்பதா மலையாவில் நடப்பதா? அதோடுகூட, தமிழ் என்ன ஒரு வழக்கற்ற மொழியா? எந்த மொழியில் தமிழ் மாநாடு நடக்க வேண்டும்? ஆங்கில மொழியிலா நடப்பது? இப்படி ஆங்கிலத்துக்கென்று ஒரு மாநாடு நடப்பதானால் வேறு ஒரு மொழியிலா நடத்திக் கொண்டிருப்பார்கள்? மற்ற மொழிகளிலே வேண்டாம்; பிரஞ்சு மொழியில் நடத்துவதென்றாலும் அதற்கு இணங்குவார்களா? தமிழ் ஓர் உயிர் மொழி. அதற்கென்று ஒரு மாநாடு நடப்பதென்றால் தமிழிலன்றோ நடக்க வேண்டும். அதில் பேசுகிறவர்க ளெல்லாரும் தமிழில்தான் பேசுதல் வேண்டும். கட்டுரை படிப்பதென்றாலும் தமிழில்தான் எழுதிப் படித்தல் வேண்டும். பேசவோ எழுதவோ தெரியா விட்டால் பார்வையாளராகத்தான் வந்திருக்க வேண்டுமே தவிர, கருத்துக் கூற முடியாது. (கைதட்டல்). ஆனால் இந்த மாநாடுகள் அப்படியில்லை. எவரும் எந்த மொழியிலும் பேசலாம். அந்தக் கருத்தரங்கிற்கு ஒரு தலைவருமில்லை. ஒரு நடுவரும் இல்லை. இங்குத் தமிழகத்தில் நடந்த உலகத் தமிழ்க் கருத்தரங்கில், காமில் சுவலபெல் என்னும் ஒருவர்; அவர் ஓர் ஆரிய வெறியர். அவர் என்ன படித்து விட்டுப் போனார் தெரியுமா? Introducing Tamil Literature என்னும் ஒரு சிறு சுவடி. ஆங்கிலத்திலே எழுதிப் பரப்பிவிட்டுப் போய் விட்டார். அதில் வரும் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். ``மறைமலையடிகள், சோமசுந்திர பாரதியார், பாரதிதாசன் இந்த மூவரும் தமிழைக் கெடுத்தவர்கள்.'' எப்படியிருக்கிறது பாருங்கள்! (சிரிப்பு) எவ்வளவு சிறந்த, அழகிய உண்மை! அவர் ஆராய்ச்சியினாலே கண்டு பிடித்தது! (பெருஞ்சிரிப்பு) ``இவர்களுடைய கொள்கையினாலே உலக அறிஞர் களுக்குள்ளே பிரிவினையும் பகைமையுந்தாம் உண்டாகும். இவர்கள் நூல்கள் நாளடைவில் தாமாக ஒழிந்து போம்'' - இப்படி எழுதி வைத் திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும்? நீங்களெல்லாம் நன்றாக எண்ணிப்பாருங்கள். மறைமலையடிகள் தமிழுக்காகப் பட்டபாடு எவ்வளவு? அவர் தமிழில் மட்டுமல்லர், சமற்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் வல்லவர். அவருடைய ஆங்கில நடை எவ்வளவு பெரிய பட்டந்தாங்கி ஆங்கிலப் படிப்பாளிகளுக்கும் வரவே வராது. மிக அருமையாக எழுதுவார், ஆங்கிலத்திலே! அழகிய நடை; எழுத்தும் மிக அருமையாக விருக்கும். அவர்கள் இவ்வாறிருந்தும் அவரைப் பழித்துவிட்டுப் போயிருக்கிறார். பாரதிதாசன் ஏதோ தனிப்பட்ட ஒரு கொள்கையுடையவராக இருந்தும், தமிழுக்காக எவ்வளவோ பாடுபட்டார். சோமசுந்திர பாரதியாரைச் சொல்ல வேண்டுவதில்லை. இப்படிப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் பழித்து விட்டுப் போய் விட்டார்கள் அவர் (காமில் சுவலபெல்) தமிழை எப்படி ஆராய்ந்திருக்கிறார். எந்தெந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டார் என்றால், நற்றிணை என்ற தொகை நூலையும், சானகிராமன் என்பவர் எழுதிய நாலுவேலி நிலம் என்ற நாடகத்தையும் வைத்தே தமிழை ஆராய்ந்திருக்கிறார். அந்த நூல் தஞ்சையில் நடந்த ஒரு கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பெற்ற நூல். அதைப் போன்ற கடுங் கொச்சை நடையான ஒரு நூல் இருக்கவே முடியாது! சேரி மக்கள் பேசுவதைவிட மிகக் கடுமையான கொச்சை நடையை உடையது. அதை வைத்துக் கொண்டு தமிழை ஆராய்ந்துள்ளார். (சிரிப்பு) தமிழ் மொழியி னுடைய காலம் (தமிழ் தோன்றியதே) கி.மு. 1500 என்ற முடிவுக்கு வந்திருக் கிறார். இதைப் பார்த்த பின்னும் கேட்ட பின்னும் நம்முடைய பேராசிரியர்கள் எல்லாரும் அக்கருத்தை எதிர்க்காமல்தான் இருக்கிறார்கள். இப்படி, அதாவது இந்தியர்களிலேயே சிலரைக் கண்டாலும் நம் பேராசிரியர்கள் அஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆங்கிலேயர் என்றாலோ மிகவும் அஞ்சுகிறார்கள். இப்பொழுது நம் சென்னை ஆளுநர் கூட என்னென்னவெல்லாமோ தமிழைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் கருத்தைக் கேட்கின்ற நம் புலவர்கள் ஒருவருக்கும் பேசுவதற்கு நா வருவதில்லை. அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு அப்படியே இருந்து விடுகின்றார்கள். ஆகவே இந்தத் துறையில் எவர் உண்மையான அறிஞர் என்று அறிதல் வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் நாம் இதுபோன்ற மாநாடுகளில் இடம் தருதல் வேண்டும். இந்தத் தனி நாயகம் அந்த உலகத் தமிழ்க் கழகத்திற்கு பிலியோசா என்னும் பிரெஞ்சுப் பேராசிரியர் ஒருவரையே தலைவராக வைத்திருக்கின்றார். அவர் சமற்கிருதம் படித்தவர். தமிழறியாத ஒருபெருமாள். அவர் எப்படிப் படித்தார் என்றால், இக்கால் ஆங்கிலம் போல் அக்கால் இந்தியா முழுவதும் சமற்கிருதந்தான் பொது மொழியாக இருந்தது. அதன்வழியாக - அதனின்றுதான் தமிழ் வந்தது என்னும் - படி தமிழைப் படித்தார். இப்பொழுது அதைவிடக் கேடாக இருக்கிறது. வரவரக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவுந் தேய்ந்து சிற்றெறும்பாகி, பிறகு ஒன்றுமில்லாமற் போன வகையில், தேய்ந்து காய்ந்து தேரைக்கால் போல ஓய்ந்து வருகிறது இந்த உலகத் தமிழ் மாநாடு. அதுவும் முன்பு நடந்த பாரீசு உலகத் தமிழ் மாநாட்டில், மொகஞ்சதோரா நாகரிகம் திராவிடருடையதா ஆரியருடையதா என்று ஆராயும் பொறுப்பு யாரிடத்தில் ஒப்படைக்கப் பெற்றது தெரியுமா? நான் சொன்னேனே இந்த ஐராவதம் மகாதேவனிடத்தில். அஃதாவது பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்து தோன்றியதென்று சொன்னாரே அவரிடத்தில். இப்படியெல்லாம் செய்கிற பொழுது, அவர்கள் (காமில் சுவலெபில் போன்றவர்கள்) ஏன் அப்படி எழுதமாட்டார்கள் என்று கேட்கின்றேன். தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் நிமையத்திற்கு ஒரு முறை கொட்டும். இனி, ஒரு முறை மட்டுமன்று; மூன்று முறை, பன்முறையும் கூடக் கொட்டும். அதைப் பிடித்து வைத்துக் கொண்டு கொட்டுகிறதே கொட்டுகிறதே என்று சொன்னால் அந்த முட்டாளுக்கு நாம் என்ன சொல்வது? `நன்றாகக் கொட்டட்டும்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி, தமிழுக்குப் பகைவர்களாகவே, வெளிப் படையாக அப்படி உள்ளவர்களையே கருத்து மாறுபாடுள்ளவர்களையே பார்த்துத் தலைவர்களாக வைத்திருப்பார்களா? நீலகண்ட சாத்திரியாரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இந்தியாவிலேயே சிறந்த வரலாற்றறிஞர். அவருக்கீடாக ஒருவருமே இல்லை. அவர் அவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சிறந்த கருவி நூல்களை யெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். நூல் தொகுப்பில் அவரை டார்வினுக்கு அடுத்தபடியாகச் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு தமிழ்ப் பகைவர். வேண்டுமென்றே தமிழுக்கு மாறாக, உண்மைக்கு மாறாக எழுதி வைத்திருக்கிறார். சமற்கிருதத்தைப் பற்றியோ ஆரியத்தைப் பற்றியோ சொல்லுவதென்றால் துரும்பைத் தூணாக்குகிறார். தமிழைப் பற்றியோ தமிழர்களைப்பற்றியோ சொல்லுவதென்றால், தூணைத் துரும்பாக்குவது மட்டுமில்லை; ஒன்றுமில்லாத படி ஆக்கி விடுகின்றார். அவர் ஏராளமாக நூல்கள் எழுதியுள்ளார். முதலில் அவர், History of South India என்று ஒரு பொத்தகம் எழுதினார். அதிலே அவர், மு. இராகவய்யங்கார் சொன்னதைத் துணைக் கொண்டு, அஃதாவது, `பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா இருக்கிறது; இதில் உள்ள ஐயர் என்ற சொல்லுக்குப் பிற்காலத்து வழக்கைத் துணையாகக்கொண்டு ஆரியர் என்று பொருள் கூறிவிட்டார். அவரும் (அஃதாவது நீலகண்ட சாத்திரியாரும்) அதை ஒப்புக்கொண்டு, `தமிழர்கள் அக்காலத்தில் மணமுறையில்லாமல் விலங்குகள் போல் திரிந்தார்கள்; அவர்களுக்கெல்லாம் மணமுறையை ஏற்படுத்தி வைத்தவர்கள் ஆரியப் பிராமணர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார். பிறகு Historian Culture of the Tamils என்று ஒரு பொத்தகம் எழுதினார். அதிலே, கால்டுவெல், `கொற்கையிலேதான் தமிழ் நாகரிகம் தோன்றியது; அக்காலத்திலே தமிழர்கள் நாகரிகத்தின் தொடக்க நிலையிலே இருந்தார்கள் என்று, எழுதி வைத்ததை அடிப்படையாகக் கொண்டு, இவரும் அப்படியே எழுதி வைத்து விட்டார். அக்காலத்தில் கால்டுவெல்லுக்கு வழிகாட்ட வல்ல தமிழ்ப் புலவர் ஒருவரும் இல்லை. ஆனால் நம் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் 1908-லேயே 'India proper in the South' தென்னாடுதான் உண்மையான இந்தியா-என்றார் 'Indian Antiquary' என்ற ஓர் இதழிலே! அதற்குப் பின்னால் 1912-ல் இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட் சிமித் என்ற ஆங்கிலேயர் (அவர்தாம் இந்திய வரலாற்றை ஓரளவு சிறப்பாக எழுதியவர்) இந்தக் கருத்தைத்தழுவி, `இந்தியாவின் வரலாற்றைத் தென்னாட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்' என்று மிகத் தெளிவாக எழுதியுள்ளார். 'To find the basic element of Hindu Culture, by a study of Sanscrit and the history of Sanscrit in the upper India, is to begin the problem and its the worst and most Cemplicated points' என்று சொல்கிறார். மேலும் அவர் ``இந்நூல் வரலாற்றுக்குச் சிறந்த வழிகாட்டியாக விருக்கிறது. நான் அயல் நாட்டானாக விருக்கிறபடியால், இந்த நூல் கருத்தின்படி என்னால் வரலாற்றை எழுத முடியவில்லை. பின்னால் இந்திய வரலாற்றை விரிவாக எழுதப்போகும் ஒரு வரலாற்றாசிரியர் இந்த நூலைக் கடைப் பிடித்து, அந்நூலாசிரியர் கூறுகிறபடியே இந்திய வரலாற்றை எழுதுவாராக' என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நீலகண்ட சாத்திரியாரோ, வேண்டுமென்றே, ``அவர் இப்படிச் சொல்லியுள்ளார்; இவர் அப்படிச் சொல்லியுள்ளார்'' என்று தம் விருப்பம் போலவே எழுதி வருகிறார். அவர் எழுதியதாகச் சொன்னேனே History of South India- அந்த நூலில், `தமிழர் ஆறு இனம் சேர்ந்த ஒரு கலவை இனம்' என்று சொல்லியிருக்கின்றார். நீக்ரோ இனம், ஆத்திரேலிய இனம், அர்மீனிய இனம், மங்கோலிய இனம், நடுக்கடற் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்களினம் முதலிய ஆறு கலவையினம் என்று சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கின்றபொழுது எப்படியிருக் கின்றது தெரியுமா? இப்படிப்பட்ட நூல்களை இந்தக் காலத்திலே எழுதும்படியும் தமிழர்கள் விட்டுக் கொண்டிருக்கின்றார்களே என்று வருந்த வேண்டியுள்ளது. இந்த நிலைகள் வேண்டுமானால் எல்லாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் படித்தவர்களுக்காகிலும் தெரிய வேண்டுமா, இல்லையா? இப்படிப்பட்ட நூல்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. வாங்கப் பெற்றுப் படிக்கப் பெற்றும் வருகின்றன. ஆனால் இவற்றையும் படித்துக் கொண்டு `எங்கெழிலென் ஞாயிறு எமக்கு' என்று கவலைப் படாமலுந்தாம் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைகள் தங்களையும் கெடுத்துக் கொள்வது மட்டுமன்று. தங்கள் முன்னோரையும் பழிக்கின்றதுமாகும். இப்படியிருந்தால் தமிழர் மாந்தர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன் ஏற்படும்? மாந்தனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டுமில்லை. உள்ளுயிர் இருக்கின்றதே அதுதான் மாந்தன். அந்த அகக் கரண வளர்ச்சியடையா விட்டால் மாந்த நிலையை அடைய முடியாது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதாக வைத்துக் கொண்டால் அஃது அஃறிணை நிலை என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும். அதனால்-தான் நாம் இதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. பகுத்தறிவு, நெஞ்சுரம், தன்மானம் இந்த மூன்றும் இல்லை பலருக்கு அவற்றை ஆரியன் நன்றாகச் சுரண்டி எடுத்து விட்டான்; துளிக் கூட இல்லை. இதைப்பற்றி ஏதாவது நாம் சொன்னால், உண்மையிலேயே சினம் மூளவேண்டியதற்கு மாறாகச் சிரித்து மழுப்புகிறார்கள். இன்னொன்று, An advance history of India என்று ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நீலகண்டசாத்திரியாரும். வி. என் சீனிவாசாச்சாரியார் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல் அது, அஃது ஓரளவு பெரிய நூல். இருபத்தைந்து உருபா விலை. அதிலேயும் தமிழர்களைத் தாழ்த்தியே எழுதி வைத்திருக்கின்றார். அவர்கள் தமிழரைப்பற்றிய வரலாற்றைத் தொடக்குவதெல்லாம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்துதான். மெகசுதனிசு என்ற நாடுகாணி முதன் முதல் பாடலிபுரத்திற்குப் போனானே (பாடலிபுரம் என்பது பாட்னா) அந்தக் காலத்திலிருந்துதான் இந்திய வரலாற்றையே தொடங்குகிறார்கள். இக்கால் புதியதாக ஒரு நூல் வந்திருக்கின்றது. சுப்பிரமணியம் என்னும் பேராசிரியர் ஒருவர் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருப்பவர். அவர் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றவர். (அவரும் இன்னொருவரும் தமிழ்ப் பேராசிரியர்களாகத் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றனராம். அவர்கள் இருவரும் தங்களுக்குள் நான் பெரியவன், நீ சிறியவன் என்று திருமாலும் பிரமாவும் போரிட்டுக் கொண்டது போலப் போரிட்டுக்கொண்டு இருந்தார்களாம். அதன்பின் மு.வ. அங்குப் போய்ச் சேர்ந்த பின் இருவரையும் இரண்டு துறைகளுக்குப் பேராசிரியராக்கி அமைதிப்படுத்தினாராம். நம் பேராசிரியர்கள் இப்படிப் பட்ட வகைகளில்தாம் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்களே தவிர, தம் மொழிக்கோ இனத்துக்கோ ஏற்படுத்துகின்ற இழிவுகளைக் கவனிப்ப தில்லை. பணத்தொகுப்பு, பதவி உயர்த்தம் முதலியவற்றில் இருக்கும் கருத்து இதிலெல்லாம் இருப்பதில்லை (அச்செய்தி இருக்கட்டும்). அந்த சுப்பிரமணியம் என்பவர் எழுதிய நூல் இது. (நூலைக் கையிலெடுத்துக் காட்டி) இதன் விலை முப்பத்தைந்து உருபா. இருப்பது முந்நூற்றைம்பது பக்கந்தான்! விலையோ அளவு கடந்தது. இவரும் இதில் என்ன செய் திருக்கிறார். திராவிடர் ஒரு கலவை இனத்தார்' என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும், ``சிலர் சொல்லுகிறார்கள், திராவிடர்கள் தென்னாட்டில் தோன்றியவர்கள் என்று; ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மேனாட்டிலிருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது'' என்று எழுதுகிறார். இரண்டு பிராமணர்கள், (இஃது ஓர் அரிய வாய்ப்பு. இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு பேறு என்றே நாம் நினைக்க வேண்டும் பெரிய வரலாற்றாசிரியர்கள்; நம் கருத்துக்குச் சார்பாக, நாம் சொல்லி எழுதினது போலவே எழுதி வைத்திருக்கிறார்கள், அந்த இருவர் யார் என்று சொன்னால் பி.டி. சீனிவாச அய்யங்கார் ஒருவர்; இராமச்சந்திர தீட்சிதர் என்பவர் ஒருவர். பி.டி. சீனிவாச அய்யங்கார் பல நூல்கள் எழுதினார் History of the Tamils என்பது ஒரு பெரிய நூல். அதிலே நன்றாக - தெளிவாக விளக்கி யிருக்கிறார். தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். அதோடு நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும் என்று சொல்லியிருக்கின்றார். ஏனென்றால், நாகரிக மாந்தன் வளர்ச்சிக் கேற்ற அந்த நால்வகை நிலங்கள்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை அடுத்தடுத்து இருக்கின்ற நிலம் இந்த உலகத்திலேயே தமிழ் நாடுதான்; வேறு எங்கும் இல்லை. ஒரே பாலை நிலமாக இருக்கும்; இல்லெனில் ஒரே காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருக்கும். இல்லெனில் குறிஞ்சியாக இருக்கும். இங்குப் போல் நான்கு நிலங்களும் அடுத்தடுத்து அமைந்த நிலப்பகுதியே உலகத்தில் இல்லை. முதன் முதல் குறிஞ்சி நிலத்தில்தான் மாந்தன் தோன்றியிருக்க வேண்டும். அங்கிருந்து அவன் முல்லைக்கு வந்திருக்க வேண்டும்; அதற்கடுத்தாற்போல் மருதம் இருக்கிறது அதற்கும் அடுத்தாற்போல் கடல். அது நெய்தல் ஆகி விடுகிறது. இப்பொழுது எண்ணிப் பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையை அடுத்துக் காவிரி, வையை முதலியவற்றையும், குமரிமலையையடுத்துக் குமரியாறு, பஃறுளியாறு முதலியவற்றையும், எடுத்துக் கொண்டால், அவற்றை அடுத்து அந்த நால்வகை நில அமைப்புகளும் உள்ளதை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் விரிவாக எழுதி அந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். அடுத்து, சிலர் சொல்லுகிறார்கள், இந்த மொகஞ்சதோரா நாகரிகத்தை ஒத்திருக்கிறது சுமேரிய நாகரிகம், என்று. அந்தக் கருத்தை மிகவும் நன்றாக விளக்கி இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். இங்கிருந்து போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்பது அவர் கருத்து. பாபிலோனிய நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்பவையெல்லாம் பழைமையானவை என்று சொல்லுகிறார்களே, அங்கு ஊர் என்று ஒரு நகர் இருந்தது. அந்த ஊர் என்னும் பெயருடைய ஊரில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு தேக்கு மரம் நம் சேரநாட்டிலிருந்து கொண்டு போனதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மேலும் பைபிள் என்னும் திருப்பொத்தகத்தில் சொல்லப் பெற்றிருக்கின்றவனும் யூதர்களுக்கு முந்தியவனும் ஆன ஆபிரகாம் என்பவன் பெயரில் உள்ள ஆப் என்னும் சொல்லுக்குத் தந்தை என்று பொருள். அந்த மொழியிலும் ஆப்-அப்பு என்னும் சொற்கள் தந்தையை அஃதாவது அப்பனைக் குறிக்கும். அப்பன் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மை இப்படியெல்லாம் இருக்கிறது. இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால். வரலாற்றுத் துறை, கல்வெட்டுத் துறை, பழம் பொருட்கலைத் துறை இந்த மூன்று துறைகளிலும் துறைத் தலைவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ தன்மானமுள்ள தமிழர்தாம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பொழுதும் தமிழும் வளராது; தமிழனும் முன்னேற மாட்டான். மதுரைப் பல்கலைக் கழகமாயினும் சரி; சென்னைப் பல்கலைக் கழகமாயினும் சரி. இப்படித்தான் இருக்க வேண்டும். இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். இனி இத்தகைய (சுப்பிரமணியம் போன்றவர்கள் எழுதிய நூல் போன்ற) வரலாற்று நூல்களையெல்லாம் வகுப்பில் பாடப் பொத்தகமாகப் படிக்கக் கூடாது. தமிழைப் பற்றியோ தமிழனைப்பற்றியோ வரலாற்றுப் பொத்தகத்தில் தவறாக எழுதியிருந்ததால் உடனே மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும். சரியான வரலாறுகள் எழுதப் பெற்றால்தான் அவற்றை வகுப்பில் படிக்கவோ பாடஞ் சொல்லவோ விடலாம். இந்த நிலை ஏற்படுகின்ற வரையில், ஒருவேளை உண்மையான வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் இன்னும் வெளிவரவில்லை யெனில், மாணவர்கள் பல மெய்யான வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாகிலும் கற்கலாம் கற்பிக்கலாமே! இது நாள் வரையில் நாம் எத்தனையோ முறைகளில் உண்மைகளை எடுத்துச் சொன்னோம் எழுதியும் வருகிறோம். இனிமேல் நாம் ஒன்று சேரவேண்டும். அப்பொழுது உண்மையில் இதற்கென ஒரு போராட்டமே தொடங்க வேண்டியிருக்கும். அதற்கு ஒரு கால்கோளாகவே இக் கருத்தரங்கு கூட்டப் பெற்றது என்று எண்ணிக் கொள்ளுங்கள். இனி அடுத்த ஆண்டிலே ஒரு மாநாடு நடக்கும். அது சமற்கிருத எதிர்ப்பு மாநாடு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆட்சி மொழிகள் மூன்றாகத்தான் இருக்க முடியும். ஆங்கிலம், தமிழ், இந்தி. ஆங்கிலம் எல்லாருக்கும் பொது. தமிழ் தமிழ்நாட்டிற்குரியது. இந்தி இந்தி வழங்குகிற நாடுகளுக்கு, அதை விரும்புகிற நாடுகளுக்கும் பொதுவாக இருக்கட்டும் இந்த மூன்று மொழிகள் தாம் இருக்க வேண்டும். இதுதான் நடுநிலையான முடிபு. ஆங்கிலம் இருந்தே தீர வேண்டும்; இந்தியா முழுவதற்கும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே இந்தி இங்கு இருக்கவே கூடாது. தமிழும் ஆங்கிலமுந்தாம் இருக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையப் பலகை களிலோ, அரசியல் அலுவலகங்களிலுள்ள பெயர்ப் பலகைகளிலோ இந்தி எழுத்து இருக்கவே கூடாது. இருப்பதாக விருந்தால் இந்திய நாடுகளில் (மற்ற மாநிலங்களில்) உள்ள அலுவலகங்களில் உள்ள பலகைகளிலும் தமிழ் எழுத்தும் இருக்க வேண்டும். (நீண்ட கையொலி). அங்குத் தமிழ் இருக்கக் கூடாதென்றால் இங்கும் இந்தி இருக்கக் கூடாது. அந்த நிலைமை வந்தாலொழிய நமக்கு விடிவில்லை. எவ்வளவொ மேலும் மேலும் சொல்லிக் கொண்டே வருகிறோம். மேலும் மேலும் இந்த இந்தியும் நெருங்கிக் கொண்டே வருகிறது. இப்பொழுது யாரும் அதைத் தடுப்பதா யில்லை. அவர்கள் தங்கள் நிலைகளைக் காத்துக் கொள்வதே பெரிதும் இடர்ப்பாடாயிருக்கிறது. எனவே நாம்தாம் எல்லா நிலைகளிலும் விழிப்பா யிருக்க வேண்டும். இனி, அடுத்து நடைபெற விருக்கும் சமற்கிருத மாநாடு பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டியிருக்கின்றது. நமக்கு சமற்கிருதம் தேவையே இல்லை. இந்தச் சமற்கிருதத்தைப் பற்றித் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தமிழ் வடக்கே போய்த் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறினது. அந்த ஆரியத்திலே ஒரு பகுதியினர் - கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிய ஒரு தொகுதி ஆரியர்கள்தாம் - இந்தியாவிற்கு வந்தார்கள்.அவர்கள் இந்தியா விற்கு வந்தவுடன் அவர்கள் பேசிய மொழி வழக்கற்றுப் போய்விட்டது. ஏனென்றால் அவர்கள் ஒரு சிறு கூட்டத்தாராக இருந்ததாலும், அக்கால் வடக்கே இருந்த மக்கள் பேரளவினராக இருந்ததாலும், கடலில் காயம் கலந்தது போல் அம்மொழி ஒன்றுமில்லாமற் போய் விட்டது. அந்த வழக்கற்றுப் போன ஆரிய மொழியுடன், அக்கால் வட இந்தியாவில் வழங்கி வந்த வட திராவிட மொழியான பிராகிருதம் கலந்து தான் வேதமொழி (Vedic Language) ஏற்பட்டது. அந்த மொழியும் பேச்சு மொழியாக இல்லாமல் எழுத்து மொழியாக மட்டுமே இருந்தது. பிராகிருதத்துடன் அந்த ஆரியமொழி கலந்ததால் தான், மேனாட்டு ஆரிய மொழிகளில் உள்ள எகர ஒகரம் இதில் இல்லாமற் போயின. இந்தியிலும் எகர ஒகரம் இல்லை. ஏ, ஓ நெடில்கள் தாம் இருக்கின்றன. அப்படியே வேதமொழியிலும் ஏ, ஓ நெடில்கள்தாம் இருக்கின்றன. மேலும் வேதங்களில் நிரம்பவும் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அதற்குப் பின்னர் ஆரியர்கள் தங்கள் நிலையை மேம்படுத்துவதற்காகவும், வலுப்படுத்துதற்காகவும் ஓர் இலக்கிய மொழி வேண்டுமென்று தென்னாடு வந்து பழந்தமிழர்களுடன் பழகி அவர்கள் மொழியிலுள்ள சொற்களையெல்லாம் தங்கள் மொழியில் கலந்து கொண்டார்கள். அந்த வேதமொழியும் தமிழ் மொழியும் கலந்து செய்த ஓர் இலக்கியமொழி (Literary Language) தான் இந்தச் சமற்கிருதம் என்று சொல்லப் பெறும் மொழி. சம்ற்கிருத்-சம் என்றால் கூட என்று பொருள்; வேறொன்றுமில்லை. கூட- கலந்து செய்தது உன்பது. ப்ராகிருத் என்றால் முந்திச் செய்யப்பட்டது என்று பொருள். இந்த வரலாற்றை இப்பொழுது தலை கீழாக மாற்றிச் சொல்கிறார்கள். இப்பொழுது வட்டம் என்று தமிழில் இருந்தால் அது வட்ட என்று பிராகிருதத்தில் இருக்கும் சமற்கிருத்திலே விருத்த என்று திரியும். அது இன்னும் Verdo என்றிருக்கும் இலத்தீனிலே இப்படிப் பார்த்தால் தமிழின் முன்மை நன்கு தெரியும். சமற்கிருதமானது ஓர் அரைச் செயற்கை இயற்கைமொழி. (Semi artificial Literary dialect) அதை இப்பொழுது, என்றோ பெருமளவில் வழங்கி வந்தமொழி போலவும், உயிர்மொழி போலவும் சொல்லிக் கொள்வார்கள். அதோடு, அந்த வேத மொழியைக் கூட Vdeic Sanscrit என்று சொல்லுகிறார்கள். அது (Pro-chronism) முற்காலப்படுத்தம் என்னும் முற்றத்திற்கு-வழுவுக்கு இடந்தருவது. அந்தக் காலத்தில் அம்மொழி இல்லவே இல்லை. சமற்கிருதம் ஆரிய மொழிகளுக்கெல்லாம் மிக முந்தியது என்று வேறு தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இஃதெல்லாம் `என் பாட்டன் திருமணத்திற்கு நான்தான் பாட்டு கட்டினேன்' என்று சொல்வது போலாகும். (நெடுஞ்சிரிப்பு). ஆகவே, காலமுறைப்படி நாம் ஆராய்ந்து பார்த்தால் சமற்கிருதம் இறந்தது மில்லை; பிறந்தது மில்லை. சிலர் அதை இறந்தமொழி என்று சொல்லுகின்றார்கள். அவர்களோ அஃது இறக்க வில்லை; இன்னும் உயிரோடு இருக்கின்றது என்று சொல்லி வருகிறார்கள் அது பிறந்தாலன்றோ இறப்பதற்கு? மொழிக்கு உயிர் என்று சொன்னால் அது வழங்க வேண்டும். மக்கள் ஒரு கூட்டத்தார் அதைக் கல்லாமலேயே இயல்பாக அதைப் பேசி வர வேண்டும். அப்படி எவன் பேசுகிறான்? சும்மா, ஏதோ காட்டு மாடத்திலே ஓட்டாண்டிகள் கூடினது போல, சமற்கிருதப் பண்டிதர்கள் சிலர் சேர்ந்து அதைப் பேசி வருவதால் அது உயிருள்ள மொழியாகப் போய்விடுமா? அதும் உயிருள்ள மொழியென்றால். எல்லாமொழிகளும், உலகத்தில் வழக்கற்றுப் போன மொழிகளெல்லாம் கூட இப்பொழுது பேசப் படத்தான் செய்கின்றன. இலத்தீன் பேசுகிறார்கள்; கிரீக்கு பேசுகிறார்கள். எசுப்ப ரெண்டோ, நோயல், வலப்புக்கு என்ற செயற்கை மொழிகளையெல்லாம் இப்பொழுது பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் நாள்தொறும் வாய்தொறும் பேசுவதினாலே ஒருமொழி உயிருள்ள மொழி என்று ஆகிவிடாது. சமற்கிருதம் ஒரு பாவை (பொம்மை) போன்றது. கடையிலே இருக்கிறதன்றோ பாவை; அஃது என்றைக்காகிலும் பிறந்ததா? என்றைக்காகிலும் இறந்ததா? அது போன்றது இந்தச் சமற்கிருதம். அதை வைத்துக் கொண்டு இவ்வளவு பெருமை பண்ணுகிறார்கள். எதனா லென்றால் அந்த அளவுக்கு நாம் அடிமையாகப் போனதனால்தான். இந்த முயற்சிகளையெல்லாம் நாம் தடுத்தே ஆக வேண்டும். தமிழைக் கெடுப்பதற்கென்றே இந்தச் சமசுக்கிருதம் தோற்றுவிக்கப்பெற்றது. என்னுடைய தமிழர் மதம் என்னும் நூலிலே கூட அது வழிபாட்டிற்குத் தகாதமொழி என்று நான் சொல்லியிருக்கின்றேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சொல்கிறேன். சமற் கிருத்திற்கும் தமிழுக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாக இருக்கின்றன. அவர்கள் தமிழிலிருந்து அத்தனைச் சொற்களையும் கடன் கொண்டு விட்டு, இப்பொழுது கடன் கொடுத்தவனையே கடனாளி என்கிறார்கள். இதற்கெல்லாம் நம் ஏமாளித்தனந்தான் காரணியம். இப்பொழுது நாம் சில அடிப்படைச் சொற்களை எடுத்துக் கொள்வோம், காலம், உலகம் போல. தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா வருகிறது, கிளவியாக்கத்திலே! காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. என்பது அது. இந்த நூற்பாவின் தொடக்கத்தில் வரும் காலம், உலகம் இரண்டும் தூய தமிழ்ச் சொற்கள். உலகம் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். உலவுதல் என்றால் வளைதல் என்று பொருள். உலாப் போதல் என்று சொல்லப்படுவதில்லையா? அரசன் ஊரை வலமாக வளைந்து வருவதைத்தான் உலாப் போதல் என்பது. உல-என்றால் உருட்சி அல்லது திரட்சி. உலமரல் என்றால் சுழலுதல். உலமரல்தான் அலமரல் என்று திரியும். அலமரல் தெருமலல் ஆயிரண்டும் சுழற்சி, என்பது நூற்பா. உலவு-உலகு; அம் என்பது ஒரு பெருமைப் பொருள் பின்னொட்டு. இது பெரியதைக் காட்டும். குன்று சிறியது. குன்றம் பெரியது. விளக்கு என்றால் சிறியது. விளக்கம் பெரியது. கலங்கரை விளக்கம் என்று சொல்ல வேண்டும். நிலை என்பது Sland. அது Station ஆக இருந்தால் நிலையம் என்று சொல்ல வேண்டும். இப்படி, உலகம் என்ற சொல்லை வடமொழியில் எடுத்துக் கொண்டு அதை லோக என்று சொன்னார்கள். அஃது இந்தியிலே லோக் என்று இருக்கிறது. இந்தியில் எப்பொழும் இப்படித்தான். மிக மிகக் குறுக்கி வைத்துவிடுவான். கிருகம் என்று வடமொழியிலிருந்தால் இந்தியில் கர் என்பான். இப்பொழுது என்று தமிழில் இருப்பதைப் படியாதவர்கள் இப்ப என்பார்கள். அது அப் என்று இந்தியில் வழங்குகிறது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இப்பொழுது நேரமில்லை. இப்படி முந்நூறு சொற்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சொற்களையெல்லாம் ஓர் அரங்கு கூட்டி நன்றாக மூலம் வேரெல்லாம் சொல்லி விளக்க வேண்டும். அதன் பின்னாலே எது முந்தினது தமிழா சமற்கிருதமா என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லை; உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி; அப்புறம், எவராகவிருந்தாலும் சரி. சென்னைப் பல்கலைக் கழகத்திலே சமற்கிருதத் துறைத் தலைவராக இருந்த இராகவனாக இருந்தாலும் சரி; இனி, அவருக்குப் பின்னாலிருந்து குஞ்சனிராசாவாக இருந்தாலும் சரி; மேனாட்டில் இருப்பவர்களான பரோ, எமனோ யாராயிருந்தாலும் சரி; அவர்கள் எல்லாரும் வர வேண்டும். நாமும் இந்தத் தமிழ் பேராசிரியர்கள் அத்தனைப் பெயரையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் சொல் வரலாறு சொல்வேன். அவர்களும் (அந்தச் சமற்கிருதப் பேராசிரியர்களும்) அவர்கள் கருத்துப்படி அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். இருதிறத்தார்க்கும் நடுவராக நம் குடியரசுத் தலைவரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அல்லது இந்திய உயர்நெறி மன்றத் தலைமைத் தீர்ப்பாளர் கூட இதற்கு நடுவராக இருக்கலாம். கடைசியிலே முடிவாக வேண்டும். இஃது என்ன சொல்; தென்சொல்லா வட சொல்லா என்று. அதற்கப்புறம் ஒருவனும் வாய்திறக்கவே கூடாது. (பெரிய அளவில், கை தட்டல்) இப்படி இல்லாவிட்டால் இந்தப் `பெருமாள்' களெல்லாம் இப்படித்தான் எழுதிக் கொண்டே வருவார்கள். தமிழர்க ளெல்லாரும் ஒரு கலவையினம்; இந்தத் தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து தான் வந்தது' என்று இப்படி! எனவே, அப்படியொரு போராட்ட நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறி என் உரையை நான் முடித்துக் கொள்கின்றேன். வணக்கம். -தென்மொழி 8 வ.சு. பவளவிழா உரை எனது பாராட்டு, விழாத் தலைவருக்குத் தேவையே இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய சொற்பொழிவுகளிலும், நூல்களிலும் அவரைப் பாராட்டியே வந்திருக்கின்றேன். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் புத்தகம் வெளியிடும் கழகம் மட்டுமன்று. அது தமிழகத்திலேயே-உலகிலேயே- நூல்கள் வெளியிடும் ஒரு மாபெரும் அமைப்பு நிலையம். சிறு விற்பனை நிலையமாகத் தொடங்கப்பட்ட இது ஒரு பெரிய பல்கலைக் கழகம் போல் விரிவடைந்துள்ளது. இவையெல்லாம் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுடைய மூளையின் வேலை தான். வேறு யாராவது அவ ருடைய இடத்தில் இருந்திருந்தால் கழகம் இவ்வளவு விரிவடைந்திருக்காது. இஃது இறைவனுடைய ஏற்பாடு என்று நான் கருதுகிறேன். திரு. சுப்பையா பிள்ளை அவர்கள் ஒரு புத்தக வணிகர் மட்டுமல்லர். அவர் ஒரு செந்தமிழ்க் காவலர், புலவர், புரவலர், பல்துறை அறிவு பரப்புநர், இந்நாட்டு முன்னேற்றத் தொண்டர்களுள் ஒருவர். இப்படிப் பல்துறையில் அவரைப் பார்க்க வேண்டும். தேர்வு எழுதுகிறவர்கள் தேர்வுக்கு வேண்டிய எல்லாப் புத்தகங் களையும் ஒரே சமயத்தில் கழகத்தில் வாங்கிவிடலாம். புத்தக அமைப்பை எடுத்துக்கொண்டால் அத்துறையில் அவர்கள் வாகை பெற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு செல்வர் சைவசித்தாத்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று பார்ப்பாரானால் அந்தப் புத்தகத் தொகுதிகள் முழுமையும் அப்படியே வாங்கிக்கொள்வார். (அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது இல்லை. வீடும் நிலமும்தான் வாங்குவர்) மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்கள் அக்கால இயற்கைப்படி ``தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற்றிரு நாடும்'' என்று பாடியிருக் கிறார்கள். இப்பொழுது நாம் அதைத் ``தெக்கணமும் அதிற் சிறந்த தென் மொழிநற்றிரு நாடும்'' என்று திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் உணர்ச்சி கெட்டுப்போகும். திரு. சுப்பையா பிள்ளையவர்கள் வணிக நோக்கம் மட்டும் உடையவ ராயிருந்திருந்தால், மனோன்மணீயம் போன்றதொரு நூல் இல்லை என்பதற்காக அதற்கு ஒரு பரிசுத் தொகை ஏற்படுத்தி அத்தகைய நூல்கள் சில எழுதச் செய்து அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் செய்திருப்பாரா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் வெளியிடும் `செந்தமிழ்ச் செல்வி' என்னும் திங்கள் இதழில் நல்ல கருத்து வளமுடைய கட்டுரைகள் வெளிவருகின்றன. அதனை உலகிலேயே சிறந்த திங்களிதழ் என்று சொல்லலாம். மற்றும் மறைமலையடிகளார் பெயரால் நூலகம், பல்லாவரத்தில் ஒரு மன்றம் என்றெல்லாம் அமைத்துச் சிறந்த தமிழ்ப் பணியாற்றி வருகிறார்கள். திரு. சுப்பையா பிள்ளையவர்களை வெறும் சொற்களால் மட்டும் பாராட்டினால் போதாது. எல்லாரும் செந்தமிழ்ச் செல்வியை வாங்கிப் படிக்க வேண்டும். எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் வாங்கும்படி செய்ய வேண்டும். நடுவணரசு அவருக்கு ஏதாவதொரு சிறப்பு, அஃதாவது ஒரு வரிக் குறைப்பு, அல்லது சிறந்த அரசாங்க நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த அழைப்பு, வேறு ஒன்றும் வேண்டா-ஒரு மூன்று இலக்கம் அவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டும். சிலர் கூறுவார்கள்; அந்த ஆட்சி வரவேண்டும்-இந்த ஆட்சி வரவேண்டும் என்று. ஆனால், நம் சுப்பையா பிள்ளையவர்களுக்கு எந்த ஆட்சி இருந்தாலும் கவலையில்லை. அவருக்கு எந்த ஆட்சியிடத்தும் பகை கிடையாது. எந்த ஆட்சி வந்தாலும் அவர்களைத் தம் வயப்படுத்தி விடுவார்கள். துரை ஆட்சி, நீதிக்கட்சி ஆட்சி, காங்கிரசு ஆட்சி எல்லா ஆட்சியிலும் அவர் சிறந்த விழாக்களை அந்தந்த ஆட்சியினர் ஆதரவிலேயே நடத்தி இருக்கிறார். இஃது இறைவன் அவருக்குக் கொடுத்திருக்கும் நல்ல பண்பு. அவருக்கு யாரும் பகை இல்லை. இந்தக் கூட்டத்தில் செல்வர்கள் இருந்தால் இவருடைய தொண்டுக்கு நன்கு உதவுங்கள். எப்படியாவது ஒரு மூன்று இலக்கத்தை அவர் கையில் ஒப்புவித்துவிட வேண்டும். நடுவணரசை வற்புறுத்த வேண்டும். சும்மா வாயினால் பாராட்டினால் மட்டும் போதாது. அவர் பணியை நன்கு பயன் படுத்திக் கொள்ள இறைவனை வேண்டி என் உரையினை முடித்துக் கொள்ளுகிறேன். 9 தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா தமிழவேள் கலைஞர் அவர்களைப் பற்றி பலர் பலபடப் பாராட்டிப் பேசி விட்டார்கள். பலர் இன்னும் அவருடைய ஆற்றலை அறியவில்லை என்றே உணர்கின்றேன். பழைமை நிலைமையை நினைத்துக் கொண்டு அந்தப் பட்டத்தைப் பற்றி தகுமோ தகாதோ என்று ஏதோ பேசுவது போல் தெரிகின்றது. பல்கலைக் கழகங்களிலே எல்லாக் கலைகளும் கற்பிக்கப் படுவது இல்லை. பல கலைகள் கற்பிக்கப்படுகின்றன. அதனாலேதான் அதற்குப் பல்கலைக் கழகம் என்று பெயர். அதிலே கற்பிக்கப்படாத பல கலைகள் இருக்கின்றன. ஆகையால் அந்தக் கலைகளிலே தேர்ச்சி பெற்றவர்கட்கு அவர்களுக்குத் தகுந்த பட்டங்கள் அளிப்பது தகுதிதான். ஆட்சிக் கலையில் சிறந்தவர் நம் தமிழவேள் அவர்கள் வெளிப்படையாக தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்ட கலைகள் மூன்று. 1. திரைப்படக்கலை. 2. செய்யுட்கலை. 3. ஆட்சிக்கலை. இந்தத் திரைப்படக் கலையைப் பற்றித்தான் கலைஞர் என்று பொது மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது. அடுத்து செய்யுட் கலையை அமெரிக்கத் தலைவர் அறிஞர் ஒருவர் பாராட்டி அவருக்குப் பட்டம் அளித்து விட்டுப் போய் விட்டார்கள். ஆட்சிக் கலையைப் பற்றித்தான் சொல்ல விரும்புகின்றேன். இப்பொழுது அவர்கள் அரசப் பதவியிலே இருக்கின்றார்கள். நம் இந்திய அரசு ஒரு கூட்டரசு. பன்மொழி நாட்டுக் கூட்டரசு. அதில் அவர்கள் பெயரளவிலே முதலமைச்சராய் இருந்தாலும் செயல் அளவிலே ஒரு அரசருமாய் இருக்கின்றார்கள். அந்தப் பதவியில் அரசு அமைச்சு என்ற இரண்டும் கலந்திருக்கின்றன. கவர்னர் அவர்கள் ஆளுநர் என்ற பெயரளவிலேதான் அரசர். நடுவன் அரசுக்கும் இந்த நாட்டு அரசுக்கும் ஒரு இணைப்பு அதிகாரியாக இருக்கின்றார்கள். ஏதேனும் இடையிலே சட்டமன்றத்திலே ஒரு குழப்பம் ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் அமைதியை நிலை நிறுத்தும் பொறுப்பு அதிகாரியாக இருக்கின்றார்கள். சட்டமன்றத்தில் அங்கே அரசன் போல் வீற்றிருந்து இந்த நாட்டுக்குரிய சட்டங்களை எல்லாம் நிறை வேற்று கின்றவர் முதலமைச்சர்தான். ஆகையால், அவர்கள் அரச பதவியிலும் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். அது இவர்கள் ஆட்சியிலே செய்து காட்டியது. ஒருவர் புரியியல், தெரியியல் என்ற இரு பகுதிகளை ஆய்ந் தறிவர்; அதாவது தியரிடிகல், பிராக்டிகல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த அறிவியல் ஆராய்ச்சியை எடுத்துக் கொண்டால் சி.வி. இராமன் தெரியியலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தவர். ஆனால் கோவை கோ. துரைசாமி நாயுடு இருக்கின்றாரே, அவர் புரியியலில் சில புது புதுக் கருவிகளைக் கண்டு பிடித்துள்ளார். அந்த முறையிலே தான் கலைஞர் தமிழவேள் அவர்கள் இந்த ஆட்சிக் கலையில் நமக்கு வெளிப்படையாக விளக்கி எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் சென்ற ஆண்டிலே ஒரு தேர்தல் வந்தது. அந்த சமயம் இந்தச் சட்ட மன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலுக்கு நிற்பதா அல்லது முறைப்படி இன்னும் நான்கு ஆண்டு இருப்பதா என்று சிலர் கருதினார்கள். நிலைத்து இருப்பதுதான் நல்லது, திடீரென்று ஏதேனும் நேர்ந்தாலும் நேர்ந்துவிடலாம் என்ன செய்வது என்று. ஆனால் அவர்கள் துணிந்து கலைத்து விட்டார்கள் சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார்கள். அந்த ஆட்சிக்கலைப்படி அவர்கள் கலைத்து விட்டார்கள். அது மட்டுமன்று. போன தேர்தல் எப்படிப்பட்டது என்று சொன்னால் அது என்ன நேருமோ என்று எல்லோரும் மிக மிக அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம். அது அவர் மட்டும் தலைவராக இல்லாமலிருந்தால் கட்சியும் தோற்றுப் போயிருக்கலாம். நம் தமிழர்களுடைய நிலைமையும் இனிமேல் திருந்தாதபடி மிகக் கெட்டுப் போய் இருக்கலாம். ஆனால் அது இறைவனுடைய திருவருள். அவருடைய ஆற்றல் அதில் அவர்கள் முழு வெற்றி பெற்றர்கள். நாம் புதுப் பேராயத்தில் (புது காங்கிரசு) சேர்வதா பழைய பேராயத்தில் சேர்வதா என்று புதிராக இருந்தது. ஒரு பெரிய புதிர். அதில் அவர்கள் புதுப் பேராயத்தில் தான் சேர வேண்டுமென்று துணிந்தார்கள். அது ஒரு நல்ல தீர்மானம். இப்பொழுது நமக்கும் நடை முறையில் தெரி கின்றது. மதுவிலக்குப் பிரச்சினையில்... அடுத்தாற் போல மதுவிலக்குச் செய்தி ஒன்று வந்தது. இதை நாம் நிறுத்துவதா அல்லது ஏற்கனவே இருக்கின்றபடி அந்தப் பேரை காத்துக் கொண்டு நாங்கள் காந்தியடிகளுடைய மாணவர்கள் மதுவிலக்கு நாட்டுக்கு நல்ல தல்ல என்ற நிலையில் இருப்பதா என்று வந்தது. நீக்கிடவில்லை, நிறுத்தியிருக்கிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும். நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இதை நன்றாக எண்ணிப் பார்த்தால் அவர்கள் அந்த ஆட்சிக் கலையில் எவ்வளவு தேர்ச்சிப் பெற்றவர்கள் என்பது தெரிகிறது. அதனாலே தமிழவேள் பட்டம் கொடுக்கப் பட்டது தமிழவேள் என்ற பட்டமானது அவர்களுக்கு இந்த நாட்டு தமிழ்ப் பேராசிரியர்கள் கூட்டிய குழுவிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழவேள் பட்டம் தகுதியானது! இவர்களால் படித்துத் தீர்க்கப்படாத தமிழ் நாட்டுப் பகுதியோ தமிழ் வகுப்போ இருப்பதாகத் தெரிவில்லை. ஆகையினாலே தமிழவேள் என்ற பட்டம் அவர்களுக்கு மிகுந்த தகுதிதான். தமிழவேள் என்றால் தமிழை மட்டுமன்று; தமிழரையும் அவர்கள் விரும்புவது மட்டுமல்ல, அவர்களாலே அவர் விரும்பப்படுகின்றவர் என்பது தான். ஏற்கனவே உமா மகேசுவரம் பிள்ளைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதைவிட இது மிக மிக விரிவான முறையிலே மிகத் தகுந்த முறையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. பண்டைக் காலத்திலேயும் அவர்களும் பல அமைக்கர்களைப் பட்டங்களாலும் புகழ்ந்தார்கள். அதிமர்த்தனபாண்டியன் என்கிற அரசன் திருவிளையாடல் புராணத்திலே மாணிக்க வாசருக்குத் தென்னவன் பிரம்மராயன் என்று பட்டம் கொடுத்தார். இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்தார். அதைப் போன்றுதான் இப்பொழுது இவர்களுக்குப் பட்டம் கொடுக்கப்பட் டிருக்கிறது. ஏற்கனவே எனக்கு முன்னாலே புலவர்கள் பேராசிரியர்கள் சொன்னபடி அவர்கள் என்றும் நீடுழி தமிழவேளாக இருந்து இந்த தமிழ் நாட்டைக் காத்து வருவார்கள். 10 கலைஞர் நூல் வெளியீட்டு விழா நம் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மாண்புமிகு கருணாநிதியார் என்னும் அருட் செல்வனாரின் பொன் விழாவையொட்டி அவர்கள் எழுதியுள்ள ``ரோமாபுரிப் பாண்டியன்'' என்னும் புதினமும், ``மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று'' என்னும் ஒரு கட்டுரைத் திரட்டும் ஆகிய இரு புத்தகங்களின் அரங்கேற்று விழா அல்லது வெளியீட்டு விழா இன்று நிகழ்கின்றது. அந்த இரு நூல்களில் `ரோமாபுரிப் பாண்டியன்' என்னும் புதினத்தை நம் ஓய்வு பெற்ற தலைமை நடுவர் உயர்திரு அனந்த நாராயணன் அவர்கள் வெளியிடுவார்கள். அதைப் பாவரசு கண்ணதாசன் அவர்கள் பெறுவார்கள். அதன் பின்பு அந்தக் கட்டுரைத்திரட்டை மாண்புமிகு புலவர் கா. கோவிந்தனார் வெளியிடுவார். அதைப் பெரும் புலவர் கி. வா. சகந்நாதன் பெறுவார். இப்போது இந்த `ரோமாபுரிப் பாண்டியன்' என்கின்ற புதினத்தைப் பற்றிச் சிறப்பாக ஒன்றும் பேச வேண்டுவதில்லை. ஏனென்றால் பேசுவதற்கு ஒரு பெருஞ் சொற்கொண்டல் இங்கே காத்திருக்கின்றது. அது ஒரு புதினம்; அதாவது நாவல். வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மிகத் திறம்பட எழுதப்பட்ட ஒரு புதினம். ஒரு புது விரிவான கதை. ரோமாபுரித் தொடக்கத்தில் இருந்து அந்தக் கதை எடுத்துக் கூறுகின்றது. அது கி. மு. 753 என்று சொல்லப்படுகின்றது. இதை நினைக்கும் போது ஒரு சிலர் அதாவது ஆராய்ச்சி இல்லாதவர்கள் இவ்வளவு-பழமையானதா என்று கூடச் சற்று வியக்கலாம். ஆனால் தமிழ் அதற்கும் முந்தினது. இந்த ரோமாபுரியோடு தமிழ்நாடு வணிகத் தொடர்புடையது மட்டுமன்று. இன்னும் சொல்லப் போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது. அந்த வணிகத்தி னால் இணைக்கப்பட்ட சில பொருட்களின் பெயர்கள் மட்டுமல்ல. அந்த மொழியிலே பல அடிப்படைச் சொற்களே தமிழாக இருக்கும் அவற்றை எல்லாம் இப்போது சொல்ல நேரமில்லை. வேறு சமயம் வாய்க்கும்போது சொல்வேன், ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். ஒரு புதினம் என்கிற காவியம் எழுதப்படும்போது அந்தக் கதையானது நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லப்படும். இதிலே இவர்கள், உள்ளோன் தலைவனாக, உள்ளதும் இல்லதும் புணர்த்து அழகாக எழுதி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது. கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் இந்தக் காவிரி நாட்டிலேயே தான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார். காவிரிக்கு அவன் கரை கட்டினான். இவரும் காவிரி நீருக்கு ஒரு வரம்பு கட்டுவதற்கு இயன்றவரை முயல்கின்றார். அவன் இளமையிலேயே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார் என்பது எல்லாருக்கும் தெரிந்தசெய்தி. இந்தப் பெயரைப் பார்த்தால் கூட அந்த முதல் எழுத்து கரிகாலன்; கருணாநிதி என்கிற முதல் அசை கூடக் கொஞ்சம் ஒத்து வருகிறது. இனி அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ பூச்சுப்படமோ இருந்திருந்தால் இவர் முகச்சாடை கூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்களுடைய உள்ளம் முழுவதும். இவர்களுடைய அறிவு, நினைவு, மதி மூன்றும், அந்தப் பூம்புகாரைப் புதுப்பிப்பது, காவிரியை வளப்படுத்துவது இவற்றிலேயே முனைந்திருக்கின்றது. இவர்கள் இப்போது அதிகார முறையிலே, ஓர் அரசன் நிலையிலே, ஆளுகின்ற அரசன் நிலையிலே, இருக்கின்றார்கள். அஞ்சாமை ஈகை ----- இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு பண்பு. (குறள். 382) தூங்காமை கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு. (குறள். 383) சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (குறள். 671) தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (குறள். 672) இப்படி, பல திருக்குறளைப் பார்த்தால் அவற்றிற்கெல்லாம் ஒரு சிறந்த இலக்கியமாக இவர்கள் விளங்குகிறார்கள். பண்டை நாளிலே பாண்டியநாட்டிலே மூன்று கழகங்கள் இருந்தன, தமிழை வளர்ப்பதற்கு. இவற்றுள்ளே முதல் கழகத்திலே எழுவர் பாவரங்கேறினர். பா என்றால் செய்யுள். இரண்டாவது கழகத்திலே இடைக் காலத்திலே ஐவர் பாவரங் கேறினார்கள். கடைக் கழகத்திலே மூவர் பாவரங்கேறினார்கள். கடைக் கழகத்திலே மூவர் பாவரங்கேறினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்பு இதே இடத்திலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதிலேதான் இவர்களுக்கு ``தமிழவேள்'' என்ற பட்டமானது இவர்களுக்கு வழங்கப் பட்டது. அதிலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவர் களுடைய பாடல்கள் எல்லாம் சிறந்த ஆராய்ச்சி முறையிலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இப்பொழுது அடுத்தபடியாக உரைநடை. பண்டைக் காலத்திலே நம்முடைய புலவர்கள் வழக்கிலே, எல்லாம் செய்யுள் வழக்காகத்தான் இருந்தது. பொதுமக்கள்தான் நம் போலப் பேச்சுக்கள்-உரை நடை என்கிற-`புரோ' என்று சொல்லப்படுகிற-வகையிலே பேசி வந்தார்கள். பிற மக்கள் அதாவது புலவர்கள் எல்லாம் எழுதுவது மட்டுமல்ல, பேசுவதுகூடச் செய்யுளாகவே இருந்தது, அந்தக் காலத்திலே! இப்பொழுது ஆங்கிலத்திலே `கலோக்கியல்', `லிட்டரரி' என்று பிரிப்பார்கள். நாம் இப்பொழுது உலக வழக்கு, இலக்கிய வழக்கு என்றே சொல்கிறோம். ஆனால் பண்டைக் காலத்திலே எல்லாம் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றுதான் சொன்னார்கள். பண்டை மக்கள் என்று சொல்லும் போது நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தெற்கே முழுகிப் போன குமரி நாட்டிலே இருந்தவர்கள். தமிழர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லர்; சிலர் பலர் கருதுகிறபடி! தென்னாட்டுப் பழங்குடி மக்கள். அந்தத் தமிழும் தென்னாட்டிலே தோன்றி யது. தமிழைச் சிறப்பாக ஒருவர் ஆராய்ந்திருந்தால்-வரலாற்று அடிப் படையிலே ஆராய்ந்திருந்தால்-அதன் உண்மையை அறிவார்கள். தமிழ் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று எவராவது சொல்வதாய் இருந்தால், ஒன்று அவர்கள் தமிழைச் சரியாக அறியவில்லை என்பது; அல்லது அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பது; இந்த இரண்டில் ஒன்று என்ற அந்த முடிவுக்குத்தான் வரமுடியும். தமிழ் தென்னாட்டிலே தோன்றிய மொழி. ஆகையினால் இந்த ரோமாபுரித் தொடர்புக்கு முன்னாலேயே அது இருந்தது. அந்தத் தமிழ் நாட்டு வரலாறு, இந்த ரோமாபுரித் தொடர்பு என்றால், ரோமர்களுடையது இந்த கி. மு. 8ஆம் நூற்றாண்டு. அதற்கு முன்னாலேயே எகிப்து நாட்டோடும் சுமேரிய நாட்டோடும் தொடர்பு இருந்தது. 11 பாவாணர் இறுதிப் பேருரை யாம் இங்குக் கூறும் கருத்துகளை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்று சொல்ல விரும்பும் அண்ணாதுரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் எனக்கு இடம் தந்தாலும் அதிலே எனக்கொரு வரம்பிடப் பட்டிருந்தது. கட்டுரை எழுதுவார் கவனிக்க வேண்டிய நெறிமுறைகளில் ஒன்று. `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றது போலத் தமது உயர்கொள்கையைத் தான் தழுவல் வேண்டும். `கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி' என்று உயர்வு நவிற்சியும் தற்புகழ்ச்சியும் கருதி உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறான, உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாக் கொள்கை களை யெல்லாம் விட்டுவிட வேண்டும் என்றிருந்தது. நான் பேருக்கு மட்டும், - துரையண்ணணாரின் - கட்டளைக் கிணங்கி ஒரு கட்டுரை எழுதி விட்டுவிட்டு நான் மாநாட்டில் கலந்துகொள்ள வில்லை. ஆனால் இந்த மாநாட்டிலே எனக்கு ஒரு தக்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நமது புரட்சி நடிகர், மறைந்த குமரிக் கண்டத்தையே புரட்டி நமக்கு ஒரு படம் வழிக்காட்டுகின்றவர், இராமச்சந்திரன் என்னும் அழகமதியாருடைய ஆட்சியிலே இந்த நிலைமை வாய்த்ததற்காக நான் இறைவனை மிகவும் வழுத்துகின்றேன். இப்பொழுது பேசப்படும் பொருள் மிக விரிவானது. `மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்பதாகும். பழங் காலத்திலெல்லாம் பொதுவாகக் கடவுள் எல்லாவற்றையும் - உலகத்தைப் படைத்தபோது மற்ற உயிரினங்களையும் படைத்தார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டு நடுவிலே சார்லசு தார்வின் தோன்றிய பின்பு ஒரு திரிவாக்கக் கொள்கையினாலே இந்த உயிரினங்களெல்லாம் தோன்றி வளர்ந்து வருகின்றன என்ற கொள்கை பரவி வருகின்றது. நான் அந்த 'Evolution' என்பதைத் `திரிவாக்கம்' என்று சொல்ல விரும்புகின்றேன். ஒன்று திரிந்து இன்னொன்றாவது என்று பொருள். ஆனால் இது பல்துறை அறிவியலாளர் இந்தக் கொள்கையை மிகக் கடைப்பிடித்து வந்தாலும் இது சில அறிஞர்களாலே ஒப்புக்கொள்ளப்பட வில்லை. சென்னைப் பல்கலைக்கழக மாநிலக் கல்லூரியிலே விலங்குநூற் பேராசிரியராய் இருந்து ஓய்வுபெற்ற `ஏனக்கு' (Enoch) என்பவர் `திரிவாக்கம் அல்லது உருவாக்கம்' (Evolution or Creations) என்று ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதன் இறுதியிலே `ரிசென்சேசன்' (Recentation) என்று ஒரு பகுதி இருக்கிறது. அது என்னவென்றால் `கொள்கையை மீட்டுக்கொள்ளுதல், தன் கொள்கையைத் தானே மறுத் தளித்தல்' (குறிப்பு-1 ஐக் காண்க). என்பதாம். `இளமையிலேயே பேரூக்கத்ததினாலே ஒரு கொள்கையைப் பரப்பினேன். மற்றவர்கள் அதைக் குருட்டுத்தனமாகப் பரப்பித் துரும்பைத் தூணாக்கி, ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கி உலகத்திலே எல்லாம் பெரிய மயக்கத்தை உண்டு பண்ணி விட்டார்கள்', என்று மிக வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். அதற்கு மதிப்புரை வழங்கியவர் `நெசுபீல்டு' (J.C. Nesfield) என்று கருதுகின்றேன். அவர் இங்கிலாந்திலேயே ஒரு பெரிய மருத்துவ அதிகாரி. அவர் அதற்கு மதிப்புரை தந்திருக்கிறார். எனக்கும் அந்தக் கொள்கைதான். மாந்தனை அடுத்துச் சில குரங்குகள் இருந்தன. அவ்வளவுதான். ஆந்தரோபாய்டு (Anthropoids) மாந்தர் போலிகள் என்ற திட்டத்தில் சில குரங்குகள் இருந்திருக்கின்றன. அவ்வளவுதான்! பல குரங்குகளைப் பல இடங்களிலே கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்! எங்குத் தாடை எலும்பு ஒன்று கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு எவ்வளவோ பெரிய மலையைக் கட்டி வைத்திருக்கிறார்கள்! இதிலே அந்தக் குரங்கினத்திலிருந்தே மக்கள் முதல் மாந்தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். இப்போது பல வகையான குரங்குவகை சேர்ந்ததினாலே. ஆர்தர்லோதேசார் (Artherlopithesar) ஆர்தரோபிதர்சாந்தர போல் (Arthopithersanthropol) என்கிறவர் தென்பால் குரங்குமாந்தன், அதற்கப்புறம் பிதகேந்தரபசு எரக்டசு (Pithecanthropus Erectus) நிமிர்மாந்தன். அதன் பிறகுதான் மற்ற மாந்தர்களெல்லாம் உகோமா எரக்டசு (Home Erectus, Capiens) உகோமா சேபியன்சு என்றது கடைசியாக அந்த மாந்தன் என அவர்கள் கருதினது. தமிழ் மறுக்கப்பட்டிருப்பதினாலே, மேனாட்டார் தமிழ் அறியாத தினாலே ஐரோப்பியர்கள் தங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அவர்களே தங்களை முதல் மாந்தன் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள், கடைசியிலே உகோமா சேப்பியன் (Homosapien) என்று வருகிறது. மதிமாந்தன் - அந்த மதிமாந்தன்தான் தமிழன். அவன் காலத்திலிருந்துதான் இந்த மாந்தன் வரலாறு தோன்றுகிறது. குரங்கிற்கும் இவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மாந்தன் அங்கே தோன்றினான். முதற்காலத்திலே பேச்சில்லாமல் இருந்தது. அவ்வளவுதான். இப்பொழுது குழந்தை இருக்கிறது, அந்தக் குழந்தையை நீங்கள் மக்கள் உறவில்லாதபடி தனியிடத்தில் பிரித்துவைத்து வாழச்செய்தீர் களானால் ஒரு மொழியும் பேசாது. அதைத் துணிந்து செய்வதாயிருந்தால் செய்து பாருங்கள். (மென்னகையுடன்). ஒரு மொழியும் பேசாது. சில சில அசைகளாகவும் சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் பல ஆயிர இலக்கக் கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியடைந்த மொழிகள் இப்போது ஒரே முறையாக அவன் பேசுகிறான், இப்பொழுதைய சொற்பயிற்சி முறையிலிருந்து. இப்பொழுது ஓர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி இருக்கிறது-அதிலே சில கற்பிக்கும் முறைகள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் ஒருவராலேயே ஒரே காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டவையல்ல. பல காலத்திலே பலர் கண்டுபிடித்த முறைகளையெல்லாம் இப்பொழுது ஒருங்கே ஒருவர் கற்றுக் கொள்கின்றார். அது போலவேதான் இந்த மொழியானதும் கற்றுக்கொள்ளப்படுகிறது. சமற்கிருதத்தைப் பற்றிப் பின்னாலே சொல்லுவேன், அது எப்படிப்பட்ட மொழியென்று. குமரிநாடு மிகப்பழமையானது. இதைப் பற்றி மேனாட்டாரும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். அதிலே கிளேற்றர் என்பவர் (Sclater) ஆங்கிலேயர், அந்த இலெமூரியாக் கண்டத்தை - இலெமூர் என்கிற தென்கண்டத்தை ஆய்ந்து அதற்கு அந்தப் பெயரிட்டார். `இலெமூர்' என்றால் `மரநாய்' என்று பொருள் அவ்வளவுதான். ஒருவகை மரநாய். அந்தக் குரங்கிற்கு முந்தின பிறப்பு அது. அங்கு இலெமூர் என்ற மரநாய் மிகுந்திருந்தினாலே அதற்கு இலெமூரியா என்று பெயர் கொடுத்திருக்கிறார். நாம் இதைக் குமரியா என்று மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்தக் குமரி நாட்டிலே மாந்தன் தோன்றினான். இப்பொழுது முதலாவது தமிழ் முதன்மொழி என்பதற்குப் பல சொற்களே போது மானவையாக இருக்கின்றன. இரண்டே இரண்டை மட்டும் சொல்லி முடித்துவிடுகின்றேன். இப்பொழுது மகன் என்ற சொல்லானது பெரும்பாலும் புதல்வன் அல்லது SON என்ற பொருளிலே வழங்கினாலும் (முன்) - மன் - மான் (Man) - மனிதன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது. அது பழைய காலத்திலே ஆளப்பட்டது. இப்பொழுது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் வந்தார்கள் என்று சொல்வதைப் பழங்காலத்திலே ஒரு மகனும் ஒரு மகளும் வந்தார்கள் என்று சொல்லிவந்தார்கள். அதில் இந்த மகன் என்ற சொல்லானது பிற்காலத்திலே மான் - மன் - என்று திரிந்திருக்கிறது. பெருமகன் என்பது பெருமான் என்று திரியும். பெருமான் என்பது பெருமன் என்று குறுகும். சொல் பெரும், காண் பெரும என்று ஒருவரை விளிக்கும்பொழுது அது பெருமன் என்று இருந்தால்தான் அந்த விளி ஏற்கும். பெருமான் என்று இருந்தால் பெருமானே என்று விளிக்க வேண்டும். அந்த `மன்' என்ற சொல்லிருக்கின்றதே. அது ஆங்கிலத்திலே man என்றிருக்கிறது. ஆங்கிலம் என்று சொல்லும்பொழுது தனியாய் ஆங்கிலம் என்றே நாம் கருதி விடக்கூடாது. ஆங்கிலம் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய மொழி. அது இந்த `தியூத்தானியம்' என்ற பிரிவைச் (Teutonic) சேர்ந்து. உலகத்திலே உள்ள சிறந்த மொழிகள் எல்லாவற்றையும் மாக்கசுமுல்லர் (F. Maxmuller) மூன்று பெரும் பிரிவாக வகுத்திருக்கின்றார். (1) ஆரியக்குடும்பம் (Areyan) (2) சித்தியக் குடும்பம் (Scythian) எனப்படும் துரேனியக்குடும்பம் (Turanian) (3) சேமியக்குடும்பம் (Semitic) என்றும். அதற்குள்ளே - தியூத்தானிக் என்பது ஒன்று, தியூத்தானிக்கைச் சேர்ந்தது இந்த ஆங்கிலமொழி. ஆங்கிலத்துக்கும் நமக்கும் மிகுந்த நெருக்கமுண்டு. அதைச் சொல்வதற்கு நேரமில்லை. அது நால்வடியாகப் பின்னாலே வெளிவரும், உலகமுழுவதும் அறிவதற்கு. (குறிப்பு-2) இந்த மன் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்திலே Man என்று இருக்கிறது. அதைத்தான் சமற்கிருதத்தில் அவர்கள் மனு என்று விரித்தார்கள். இந்த மனுவிலிருந்துதான் மனுஷ என்ற சொல் பிறகு திரிகின்றது. ஆகவே இதற்கெல்லாம் மூலம் இந்த மன் என்ற சொல்தான். அவர்கள் தமிழ் அறியாததினாலே, thinking man - man is thinking animal - அவன் கருதுகின்ற ஆற்றலுடைய ஓர் உயிரினம்-உயிர்ப் பொருள். ஆகையினாலே munan (to think) அதிலிருந்து வந்தது என்று கருத்துச் சொல்வார்கள். ஆனால் அந்த மன் என்கிற சொல் கருதுதலைக் குறிக்கிறது - மனு என்ற சொல்லானது தமிழ் `முன்' என்றதிலிருந்து வந்தது. முன்னுதல் என்றால் கருதுதல் தமிழிலே அப்படியே ஆங்கில பேரகர முதலியிலே முனன் (Munan) என்றே இருக்கிறது. (Munan to think) என்று இதே வடிவத்திலே இருக்கிறது. முன் என்றால் கருது என்று பொருள். அது வேறு சொல். பழைய நிகண்டுகளைப் பார்ப்பீர்களானால் மனத்திற்கு முன்னம் என்றிருக்கும். முன்னம் - முனம் - மனம் (உள்ளம். உகரம் அகரமாகத் திரியும்போது மனம் என்றாகிறது. (குறிப்பு 3) அந்த மனம் என்பதை மன என்பார்கள் சமசுகிருதத்திலே. மகர ஈறு ஸகர ஈறாக மாறும். சமசுகிருதத்திலே. அது இலத்தீனிலே மெனசு (Mens) என்றிருக்கிறது. இப்படி மேலை ஆரிய மொழிகளெல்லாம் திரிந்திருக் கின்றன. இன்னும் ஒரே ஒரு சொல் `ஊர்' எனும் பேரை நான் சொல்கிறேன். இங்கே இந்தியாவிலே உள்ள இந்தூர் முதலான பெயர்கள் மட்டுமல்ல, அங்கே பாபிலோனியா நாட்டிலே ஊர் என்று ஓர் ஊர் இருந்தது. அந்தப் பேருக்கே - அந்த சொல்லிற்கே அக்கேடியன் (Akkadian) மொழியிலே - அந்த சுமேரியன் மொழியிலே City என்றுதான் பொருள். அதே பொருளிலே தான் தெற்கேவழங்கினது, குமரிநாட்டிலே இந்தச் சொல். உர்-உல்-உறு உர்-ஊர் உல் என்பது உறு என்று இப்போது வழங்குகிறது. வல்லினத்திலே உகரம் சேர்ந்த றகரம். பழைய காலத்திலே உற் என்றுதான் இருந்தது. (உர்-உறு, உர்-ஊர்) உர்-உறு என்றால் பொருந்து என்று பொருள் அவ்வளவுதான். அது வல்லினமாகத் திரியும்பொழுது வல்லினமெய்யாகத் தமிழிலே வழங்காமையினாலே உகரம் சேர்ந்து உறு என்று வருகிறது. (குறிப்பு-4) உறுதல் என்றால் பொருந்துதல் அவ்வளவுதான். அதேதான் உர் என்பதற்கும். மொத்த ஐந்திணை நிலங்களிலும் மக்கள் நிலைத்து வாழமாட்டார்கள் பெரும்பாலும். நாடோடிகளாக இருப்பார்கள். இந்த மருதநிலத்திலேதான் மக்கள் நிலைத்து வாழ்வார்கள். அதனாலே முதன் முதலாக நகரிகம் என்ற சொல்லிலிருந்துதான் நாகரிகம் என்று வருகிறது. (நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்) நகரத்திலேதான் மக்கள் திருந்தியிருப்பார்கள். இலத்தீனில்கூட Civilization என்பது Civilor - நகரத்தின் பெயரிலிருந்துதான் வருகிறது. இந்த ஊர் என்கிறதும் அப்படித்தான். முதற்காலத்திலே பார்த்தாலும் மருதநிலத்து ஊரைத்தான் குறித்தது. இப்பொழுது, நாம் யாரைப் பார்த்தாலும் ``எந்த ஊரப்ப? cd¡F?'', ``யாரய்யா? உங்கள் ஊர் என்ன,'' என்று கேட்கிறோம். அந்தக் காலத்திலே எப்படி வழங்கினது என்றால் ``என்னய்யா? எந்த ஊர்? vªj¥gho?'' என்றுதான் கேட்பார்கள். பாடி அல்லது சேரி என்று இருந்தால் முல்லை நிலத்து ஊராக இருக்க வேண்டும். (குறிப்பு 5) வேறு `துறை' அல்லது `பாக்கம்' என்பது நகரம் உண்டான பிற்பாடு ஏற்பட்டது. துறை என்பது காயல் என்பது போல இருந்தால் அது நெய்தல் நிலந்தான் என்பதைக் குறிக்கும். இப்படி இந்த ஊர் என்ற சொல் கிறித்துவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே (B.C 3000) அப்பொழுதுதான் அந்த ஊர் என்ற பெயர் ஏற்பட்டது. (குறிப்பு 6) அந்த ஊரிலேதான் ஆபிரகாம் என்ற ஒரு பெருந்தலைவன் இருந்தான். ஆப்ரகாம் (Abrahaï) என்று இருந்தாலும் சரி. முதல் சொல் ஆப் (Ab). ஆப் என்றால் அப்பன். இன்றைக்கும் அரபியலிலும் அப்பன் என்பது ஆப் என்றுதான் குறிக்கிறது. இந்த அப்பன், அம்மன் அம்மை இந்த இருசொற்களும் உலகத்திலே ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் வழங்குகின்றன. இந்த ஒன்றே போதுமானது தமிழ் உலக முதன்மொழி என்பதற்கு. அப்பன் அந்த ஆப் (Ab) அரபியிலும் ஆப் என்றுதான் இருக்கிறது. அம்மையை ஆம் - உம் என்றும் சொல்வார்கள். இதோடு நான் நிறுத்தி விடுகிறேன். இப்போது தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து இருக்கிறது. தொல்காப்பியம் தான் முதல் இலக்கணம் என்பது போலத் தவறாக - மிக மிகத் தவறாக - சொல்லப்படுகிறது. அப்படி அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நாம் ஒருக்காலும் முன்னேறவே முடியாது என்று நான் நினைக்கின்றேன் - சொல்கின்றேன். தொல்காப்பியம் தான் முதல் இலக்கணம் என்று சொல்கின்றவர்கள் அதை வைத்துக்கொண்டு தமிழனுடைய பெருமையை நிலைநாட்ட முடியுமென்று கருதுகிறவர்கள் யார், எப்படிப்பட்டவர் என்று கேட்டால் - கொடிக்கம்பத்தின் கீழே பிள்ளையாரைக் கண்ட உடனே இதுதான் கோயில் என்று வணங்கிவிட்டுப் போகிறவர்களைப்போடல் இருக்கின்றார்கள். கொடிக்கம்பத்திற்குப் பின்னால் என்ன செய்ய வேண்டும். முதல் மண்டபம் தாண்டி அதற்கப்புறம் இடை மண்டபம் தாண்டி உண்ணாழிக்குப் போக வேண்டும். அந்த உண்ணாழிகையை இப்போது கர்ப்பகிரகம் என்று சொல்கிறார்கள். பழையகாலத் தமிழ்ப்பெயர் உண்ணாழிகை. திரு என்ற சொல் சேர்த்துத் திருவுண்ணாழிகை என்று சொல்லப்படுகிறது. இது கல்வெட்டில் இருக்கிறது. நான்அமைத்துககொண்ட சொல்லன்று திருவுண்ணாழிகை - அந்த கர்ப்பகிரகம் வரையிலே போக வேண்டும். இதற்கு மூன்று அறிவியல்களைப் படித்திருக்கவேண்டும். `உலக வரலாறு *(the world history) அதற்குப்பின் `ஒப்பியன் மொழிநூல் (Comparative Philology) அற்குப்பின்பு குமுகாயப் பண்பாட்டு மாந்தநூல் (Social and Cultural Anthropology) இந்த மூன்று நூல்களும் படித்திருந்தால்தான் உண்மையாகத் தமிழனுடைய பெருமையை அறியமுடியும். தொல்காப்பியத்தையும் உணரமுடியும். முதல் நூற்பாவில் எடுத்த அடியிலே அவர் என்ன சொல்கிறார். `எழுத்தென்ப் படுப... முப்பஃதென்ப `என்று சொல்வார்கள் அறிஞர்கள் - அவ்வளவுதான். நெடுகச் சொல்லிக்கொண்டே போகிறார், என்மனார் புலவர், மொழிப, நெடுக எங்கெங்கே இடமிருக்கிறதோ அங்கங்கே எல்லாம் இந்த சொற்றொடரை ஆண்டு கொண்டே போகின்றார். ஓர் எழுத்திலக்கணத்தை எழுதக் கூடமுடியாது. எழுத்தென்றால் நான்கு நிலைகள் இருக்கின்றன. முதலாவது படவெழுத்து (Picture writing/ Arowgraph/ Pictograph) (குறிப்பு 7) இரண்டாவது கருத்தெழுத்து மூன்றாவது அவையெழுத்து (Syllabary) நான்காவது ஒலியெழுத்து (Phonetic characters) இந்த நான்கு எழுத்தும் தரைக் கழகக் காலத்திலேயே கடந்துவிட்டன. அந்த நிலையில் இத் தமிழ் தோன்றியது. முதலாவது இந்த நெடுங்கணக்கு ஏற்பட்டதே தமிழில்தான். எல்லாப்பொருள்களையும் அறிந்தாய்ந்து பார்த்தார்கள். மூன்றுவகைப்பட்டிருக்கின்றன பொருள்கள். ஒரு தனி உயிர் (Life) அல்லது உயிர் அல்லாத ஒரு பொருள் (Lifeless) அல்லது ஒர் உயிரும் ஓர் உடம்பும் கலந்தது - உயிர் மெய் (Living body) உயிர், மெய், உயிர்மெய். இப்பொழுது உயிர் ஆவி போகிறது என்கிறோம். பேய் பிசாசு என்கின்றனர் ஆவியினர். உடம்பு இறந்த பிற்பாடு அதையெல்லாம் உயிர் போயிற்று - ஆவி போகிறது என்று சொல்கிறோம். இறைவன் ஆவிவடிவாய் இருக்கிறான் என்று நாம் சொல்கிறோம். அதெல்லாம் உயிர் மெய்யென்று பொல்வது நாம் பார்ப்பதெல்லாம். உயிர் இல்லாத பொருள் எது எது இருக்கிறதோ அது எல்லாம் உயிர்மெய் உன்று சொன்னால் மரம் முதல் மாந்தன் வரையிலே உல்லாம் உயிர்மெய்கள். இந்த மூன்று (நிலையையும்) இயல்பையும் கண்டார்கள். (சில எழுத்தானது) உயிர் எழுத்தானது தானே உலிக்கிறது. இயங்குகிறது. மெய்யெழுத்து உயிரின் உதவியின்றி இயங்குவதில்லை. இந்த உயிர்மெய் எழுத்தானது உயிரும் மெய்யும் ஒன்றாகச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து அந்த மூன்றுக்கும் தனிவடிவம் முதன்முதலாக அமைத்தவன் தமிழன் த்ன். அதனால்தான் அதற்கு நெடுங்கணக்கு என்று பெயர், முதலிலே, உயிரும் மெய்யும் சேர்ந்தது குறுங்கணக்கு. உயிர்மெய்யும் சேர்ந்ததால் நெடுங்கணக்கானது. இதற்குப் பின்னாலேதான் அந்த சமற்கிருதமோ மற்றவையோ வருகின்றன. இந்த மாந்தன் - இங்கு - குமரி நாட்டிலே தோன்றினான். காலம் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகிறது. அவ்வளவுதான். அறிவு வளர்ச்சியடைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. வேறு இடம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் மக்கள் பரவல் தொடங்குகிறது. தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of Tamils) இந்த நூலை யாரும் படிக்காதிருந்தால் படித்துவிடுங்கள். இராமச்சந்திர தீட்சிதர் எழுதியது. நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன், இப்போது பாராட்டப்படுகின்ற தமிழ்ப்புலவர்கள், சொல்லப்போனால் அவர்களைவிட மிகுதியாகப் போற்றப்படத் தக்கவர்கள் இரு வரலாற்று ஆசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் (P.T. Srinivasa Ayengar) அதற்கப்புறம் இந்த இருவரும் இல்லாவிட்டால் நாம் பல செய்திகளுக்குச் சான்று காட்டமுடியாது. ஆகமம் எப்போது ஏற்பட்டது? கோயில் வழிபாடு எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது, எதனாலே, ஏன் ஏற்பட்டது? என்று நன்றாக தெளிவாக History of Tamils - தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் குறித்துள்ளார்............. அது ஒன்றே போதும். மற்றதை எல்லாம் போய்க் காட்ட வேண்டிய தில்லை. பிராமணர்களிடத்தில் நம் மதத்தலைவராக - எப்படித் தலைவராக இருந்தாலும் சரிதான். அவர்களிடம் நாம் போய்க் கேட்டோமானால், அவர்களுடைய கருத்துகளைத்தான் தெரிவிப்பார்கள். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது (To set the Fox to keep the Geese) என்பார்கள் ஆகையினாலே நம்முடைய கருத்திற்குமாறானவர் களிடத்திலே நாம் போய் அவர்களுடைய கருத்தைக் கேட்கக் கூடாது. இப்படி ORGIN AND SPREAD OF TAMILS (தமிழரின் தோற்றமும் பரவலும்). இதைக் கால்டுவெல் நன்றாக எழுதியிருக்கிறார். அந்த அசைநிலைக் காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பகுசொல் நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? கொளுவு நிலைக்காலத்திலே பிரிந்து போன வர்கள் யார்? பிறகு அந்த ஒட்டுநிலை (அதாவது இணை நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிரிநிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த இடைநிலைக் காலத்தில் பிரிந்து போனவர்கள் யார்? இவற்றையெல்லாம் அந்த மொழிநூல் வரலாற்றில் இருந்து நாம் அறிகிறோம். ஆங்கிலச் சொற்களை நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன். தவிர, ஆங்கிலச் சொற்களையெல்லாம் இங்குச் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இப்படி பல்வேறு நிலையிலே தமிழ் பிரிந்து போயிருக்கிறது. தமிழுக்கு அந்த Affiliation என்கிற இசைவே அந்தக் குறிப்பே தமிழுக்குப் பொருந்தாது.... பிள்ளையைப் பெற்றோரோடு இணைப்பது போலவும் கல்லூரிப் பல்கலைக் கழத்தோடு இணைப்பது போலவும் கிளைமொழியைத் தாய்மொழியோடு இணைக்கிற இணைப்பைத் தான் Affiliation என்று சொல்ல வேண்டும். பண்டாரகர் கால்டுவெல் (Dr. Caldwell) ஓர் உண்மையை நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப்போய் விட்டார். எல்லாமொழி களிலும் சிறப்பாக ஆரிய மொழிகள் எல்லாவற்றிற்கும் எந்தச் சுட்டுச்சொற் களுக்கும் மூலம் தமிழிலுள்ள ஆ(அ), ஈ(இ), ஊ(உ) தாம். இந்த மூன்று சுட்டெழுத்துக்களிலிருந்துதான் எல்லாச் சுட்டெழுத்துச் சொற்களும் (Demonstrative pronouns) தோன்றின. (குறிப்பு 8) எப்படி அந்ததந்தச் சொல் - அ - விலிருந்து அவன், அங்கே இந்தச் சொற்களெல்லாம் எப்படி அகரத்திலிருந்து உண்டாயினவோ அப்படித்தான் என்பது இகரத்திலிருந்தும் உண்டு என்பது உகரத்திலிருந்தும் வந்தன என்பது கருத்து. இந்தச் சொற்கள்தான். மூன்று சுட்டுச் எழுத்துக்களிலிருந்து தான் ஆரியமொழிகளிலுள்ள அத்தனைச் சுட்டுச் சொற்களும் தோன்றியிருக் கின்றன. மிகத் திட்டவட்டமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை இப்போது நாம் ஆய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. ஆகையினாலே அந்த மேனாட்டு ஆய்வாளர்கள் தமிழ் அறியாததினாலே சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு Divine Theory, Nature Theory, pooh pooh Theory, Ding - Dong theory, Bow - wow theory, Gesture theory, To - he theory, contact theory, contract theory (தெய்வக் கொள்கை, இயற்கைக்கொள்கை, குறிப் பொலிக்கொள்கை, மணியொலிக்கொள்கை, ஒப்பொலிக்கொள்கை, வைகைக்கொள்கை, அயாவுயிர்ப்புக் கொள்கை, தொடர்புக்கொள்கை, ஒப்பந்தக் கொள்கை இப்படியான மொழித் தோற்றக் கொள்கைகள்) இப்படி, அதிலே இன்னொன்று மிகவேடிக்கையானது. செசுபர்சன் (Jesperson) சொன்னது. பாட்டொலிக் கொள்கை (Musical Theory) அதாவது Primitive theory. அதற்கப்புறம் கடைசியாக (குறிப்பு 9) மானெசு உதேசு என்கிற பெரிய மொழிநூல் ஆராய்ச்சியாளர் ஒருவர் - அமெரிக்கர் Animal cried theory உன்று ஒன்றைப் புகுத்தியிருக்கிறார். அதாவது விலங்கினத் தினுடைய ஒலிகளிலிருந்து தான் மாந்தனுடைய மொழியின் தோற்றத்தை நாம் காண முடியும் என்று எழுதியிருக்கிறார். முட்டாள்தனமான கருத்து, இந்தப் பேசுதற்குரிய தன்மையே மாந்தனுக்கு, மாந்தன் நிலையிலேதான் தோன்றுகிறது. பலவகையான ஒலிகள் இருக்கின்றன. மெய்தான். ஆனால் இந்த மொழியானது எந்த விலங்கினத்துக்கும் தோன்றாது. விலங்கு எவ்வளவுகாலம் ஆனாலும் அப்படியேதான் இருக்கும். இந்த Ply genesus monogynous அல்லது Ploy gamy Monogamy ஒரு தாய்ப்பிறப்பு ஒருவைத்தோற்றம் பலவைத்தோற்றம் என்று அவர்கள் சொன்னாலுங்கூட அதுவும் ஒருமுறை நடந்ததாகத் தான் கூறுவார்கள். அதிலே ஓர் ஒழுங்கு இருக்கிறது என்று தெரிகிறது. எல்லாம் சேர்ந்து ஒரு கண்ணறையிலிருந்து (cell) எல்லா உயிரினமும் சேர்ந்து மாந்தன் அல்லாத உயிரினங்களெல்லாம் சேர்த்து ஒரு கண்ணறையிலிருந்து தோன்றின என்று சொன்னால் அந்த செல்லுக்கு எப்படி உயிர் உண்டானது என்று ஒரு கேள்வி எழத்தானே செய்யும்? ஆகையினாலே இறைவனுடைய ஆற்றல் உன்று சொல்வதினாலே - நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதனாலே பெரிய கேடில்லை. இப்பொழுது பாருங்கள் அமெரிக்காவாக இருக்கட்டும் நியூயார்க்காக இருக்கட்டும் இலண்டனாக இருக்கட்டும், உலகில் கல்வி நாகரிகம் பண்பாடு அறிவு ஒழுக்கம் எல்லாவற்றிற்கும் தலைசிறந்த இடங்கள் என்று சொல்லப்படுகின்றன; அங்கு ஒரு கால்மணி நேரத்திற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு - ஒரு கால்மணி நேரம் அதற்குள் அரசாட்சி நீக்கப்படும். அந்தக் கால்மணிநேரங்கூட எவன் என்ன வேண்டுமானாலும் அரசாட்சி செய்து கொள்ளலாம். தண்டனை இல்லை என்று மட்டும் ஆணை போடுவதாயிருந் தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த இருபத்தைந்து கோள்களும் அதற்கு மேலுள்ள பல நாள்களும் கதிரவன் என்ற சுடரும் எப்படி நாள்தோறும் இயங்கிவரு கின்றன, அதை அப்புறம் இயக்குகிறவன் ஒருவன் வேண்டும்? இல்லையா? அதற்கு என்ன உயிரா இருக்கிறது? ஞாலத்திற்கு உயிரில்லை. கதிரவனுக்கு உயிரில்லை. அது ஒரு பொருள் அவ்வளவுதான். எரிகின்ற பொருள். அதுவும் நம்முடைய விளக்கெல்லாம் அந்த எண்ணெய் இருக்கின்ற வரையில்தான் எரியும். அது எவ்வளவோ காலமாக எரிந்துகொண்டு வருகிறது. இன்னும் எரியப்போகிறது. ஆக இதற்கெல்லாம் - இயக்குகின்ற ஒரு தலைவன் இருக்கத்தான் செய்யும். எத்தனைக் கோடி மக்கள் இப்போது இருக்கிறார்கள். இத்தனைப் பேர் இங்கேயே நாம் எளிதாய் அடையாளம் கண்டுகொள் கிறோம். இந்த எழுபது கோடி மக்கள் - இன்னம் போகப் போகப் பெருகிக் கொண்டே போகிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா இல்லையா? இப்படியெல்லாம் இறைவனே ஓர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். ஆகையினாலே சும்மா இரண்டொரு சான்றுகளைச் சொல்கிறேன். ஆகவே அடியோடு இந்த கடவுளே இல்லையென்று சொன்ன தார்வீனே பிற்காலத்தில் தவற்றை உணர்ந்து - இறுதிக் காலத்திவே வருந்தினதாக நான் சொன்ன அந்தப் பொத்தகத்திலே எழுதப் பட்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆகவே மக்கள் பல திசைகளிலே பிரிந்து போனார்கள். இதிலே கொஞ்ச நாகரிக நிலையில் இவர்கள் - பாபிலோனியர்கள் - பிரிந்து போனார்கள். அதனாலேதான் ஊர் என்று அங்குப் போய்க் குடியேறினான். அப்பன் என்று பேர் கொண்ட ஆபிரகாம் அங்குப் போய்ச் சேர்ந்தான். அதற்கப்புறம் சேமிய மொழிகள் தோன்றின. பிறகு ஆரிய மொழிகள் தோன்றின. கிரேக்க இலத்தீன் ஐரோப்பிய நாகரிகம் அத்தனைக்கும் மூலம் பாபிலேனிய நாகரிகந்தான் என்று பாபிலோனிய வரலாற்றில் (Babylonia History) இருக்கிறது. பாபிலோனிய நகர வரலாற்றிலே சொல்லப் பட்டிருக்கிறது. ஆகையினாலே தமிழ் மிக மிக முந்தியது. இருக்கு வேதந்தான் உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட சான்றென்று - மொழிச் சான்றென்று - சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இல்லவே இல்லை! தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டாலே போதும். தொல்காப்பியம் அவர்கள் எழுதினது அல்ல. எப்படிப் சொல்லதிகாரம் இருக்கிறதோ அதற்கு மேலே பொருளதிகாரமும் ஒன்று இருக்கிறது. அந்தப் பொருளதிகாரத்திலே செய்யுளும் அணியும் பிற மொழிகளுக்கும் பிற்காலத்திலே தனித் தனியாகத் தோன்றினவென்று நாம் ஒப்புக் கொண்டாலும் பொருள் என்கிற இலக்கணமானது எல்லா மொழியிலும் இல்லாத ஒன்று. அது ஒன்றே போதும். தமிழரே உயர்ந்த நாகரித்தனர் என்று உயர்த்துவதற்கு. எழுத்தாலே சொல் ஏற்படுகிறது. சொல்லாலே பொருள் ஏற்படுகிறது. அது சொல்லாலே சொற்றொடர் வரை நடையாக வழங்கினாலும் சரி. அணி சேர்ந்தாலும் சேரா விட்டாலும் அதற்குப் பொருள் இருக்கிறதல்லவா? அந்தப் பொருளுக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன் ஒருவன்தான். அதிலே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், `எல்லா அறிவியலும் இல்லை, போரும் காதலும்தான் இருக்கிறது வேறு என்ன இருக்கிறது? என்று. அறியார் அவர்கள். அந்த (போரின்) வாகையிலே எல்லாப் பொருள்களையும் அடக்குகிறார் அவர். தொல்காப்பியத்திலே இவர் சொல்லாதுவிட்ட உண்மையைப் பிற்காலத்திலே வந்த ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பா மாலையில் சொல்லியிருக்கிறார், அந்த வென்றி இந்த வென்றி என்று. தக்க வென்றி கோழிவென்றி யானை வென்றி இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். (குறிப்பு 10) ஆகவே இந்த நால்வகுப்பாரையும் ஒவ்வொரு வகுப்பிலும் தலைவன் ஒரு சிறந்த தொழில் ஆற்ற வேண்டும் என்று ஒருவகையான நல்ல போட்டி இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக அந்த இலக்கணத்தை அமைத்து வைத்திருக்கின்றனர். அதையெல்லாம் ஆய்ந்து பார்ப்பதில்லை. அந்தத் தொல்காப்பியத்திலே சொல்லப்பட்டிருக்கிறது, எத்தனை வகையான இலக்கியம் இருந்தது பழையகாலத்திலே! பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும். என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல். பாட்டு என்று சொல்கிறது என்னவென்றால் இப்பொழுது இருக்கின்ற பத்துப்பாட்டு எட்டுத்தொகை இருக்கின்றனவே அவையும். இந்த தொண்ணூற்று ஆறுவகைப் பனுவல் (பிரபந்தம்) அத்தனையும் பாட்டு. (Genetal Poem) உரை என்று சொல்கிறது எழுதப்படுகிற உரை விளக்கம் (வியாக்கியானம்) (commentary) உரையும் அந்தக் காலத்திலே செய்யுளாக இருந்தது. அது எப்படி இருக்கும்? அல்ல இராணி மாலை, பவளக்கொடி மாலை பார்த்திருக்கிறீர்களா? அந்த நடையில் இருக்கும். யாருக்கும் விளங்கும்? அப்படி இருந்தது அந்தக் காலத்திலே உரை. பாட்டு, உரை, நூல்........ நூல் என்று சொன்னது அந்தக் காலத்திலே அறிவியலைத்தன் (Science ஐத்தான்) இறைநூல், நாடகநூல், மருத்துவநூல், கணிய நூல் என்றால் சோதிடம் - இப்படிப்பட்ட அறிவியலுக்குத்தான் நூல் என்று பெயர் மதிவாணன் நாடகத் தமிழ்நூல் என்று இருக்கிறது. என்றார்நூலுள்ளும், நூலோர் என்று திருவள்ளுவரும் வல இடங்களிலே குறிக்கின்றார். இப்போது நாம் என்ன செய்கிறோம். எல்லாவற்றையும் நூல் என்று வைத்து விட்டோம். நூல்நிலையம் என்ற ஒரு பொத்தக நிலையத்தை. Library என்றாலே - Libran என்றால் பொத்தகம் என்றுதான் பொருள் இலத்தீனிலே. அது - பொத்தகசாலை என்றால் பொத்தகம் வைக்குமிடம் தான். அறிவியல் - Science - என்று தனியாக வைத்திருக்கிறார்கள். இங்கே நாம் நூல்நிலையம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்படி அந்தப் பாட்டு உரை நூலே வாய்மொழி... வாய்மொழி என்றால் மந்திரம். மந்திரம் என்ற சொல்லும் அந்தக்காலத்தில் வழங்கியது. முன்னுந்திறன் அதாவது Power of will மன்னுந்திறத்திலிருந்து வருகின்றது. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவனியச் சார்பாகத் திருமந்திரம் இருக்கிறது. மாலியச் சார்பாகத் திருவாய்மொழி இருக்கிறது. அந்த வாய்மொழி, மந்திரம் இரண்டும் அந்தக் காலத்திலேயே வழங்கிய தூய தமிழ்ச் சொற்கள், இந்த வகையான நூல்களும் இருந்தன. பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே..... பிசி என்கிறது விடுகதை (Riddle) பொய் என்று பொருள். அது தட்டுக்கச்சேரியாக வருவதினாலே பிசி என்று பெயர் வைத்து விட்டார்கள். சேலம் பக்கம் போவீர்களானால் பொய் புடிக்கிறான், பொய் புடிக்கிறான் என்று சொல்வார்கள். திருநெல்வேலி பக்கத்தில் கேட்டால், புளுகுகிறான், (பொய்) புளுகுகிறான் என்று சொல்வார்கள். பிசி என்ற சொல்லானது அந்த இடத்திலே பொய் என்ற கருத்திலே விடுகதையைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம் - அங்கதம் என்று சொல்வது - பிற்காலத்திலே அது ஓர் எதிர்நூல் (Satire) என்பது போல்தான். அந்தக் காலத்தில் அதுதான் இலக்கியத் திறனாய்வு (Literary Criticism) பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல்......... முதுசொல் என்றால் பழமொழி. பழமொழியைக் கூட அந்தக் காலத்திலே செய்யுள் என்று வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அது சொற்சுருக்க மாகவும் நல்ல மோனை மொழியோடு கூடியும் பொருள் பொதிதந்ததாகவும் இருக்கின்றதனாலே பழமொழியையும் அந்த இலக்கிவகையோடு சேர்த்தார்கள். ஒன்றாவது உண்டோ இப்போது நான் சொன்ன எழுவகையிலே? ஆகையினாலே இப்பொழுது இருக்கிற தமிழ் இலக்கியம் முதல் இலக்கியமன்று என்பதை நீங்கள் உணர வேண்டும். தாள்புல் Aftermath என்கிற மறுகாய்ப்பு இது. பழைய இலக்கியம் அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டன. அந்தக் காலத்திலே. இந்தத் தமிழன்தன் பழைய இலக்கியம் இருக்கிறதாயிருந்தால் தமிழனுக்குப் பிற்காலத்தில் கண்திறக்கப் பட்டுவிடும் என்று ஒரு சாரார் அழித்தேவிட்டார்கள். ஒரு சிறுசெய்தி சொல்கிறேன். மலையாளத்தில் இருந்த அரசர்-மலையாள அரசர்-திருவாங்கூர் அரசர் இளமையிலே இங்கிலாந்திற்குச் சென்றார். அவருடைய பத்மநாபசாமி கோவில் பூசகர் என்ன செய்தார்? போகக் கூடாதெனத் தடுத்தார். ஏனென்றால் அங்குப் போனால் கண்திறந்துவிடும். இவருக்கு - அடிமையாகயிருக்கமுடியாது. இவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கமுடியாது. தடுத்தார். அவர் மீறிச் சென்று வந்துவிட்டார். வந்தவுடனே தீயை வைத்துவிட்டார்கள் அவ்வளவுதான். அவர்கள் அக்கினி வணக்கந்தான் தெரியுமே. ஏன் எப்படி தீ வந்தது என்று கேட்டார். அது தெய்வத்திற்குப் பிடிக்கவில்லை. அரசர் அக்கரைக்குப் போய்விட்டதினாலே தெய்வத்திற்குச் சினம் உண்டாகி அதனாலே தீப்பற்றி எரிந்து விட்டது என்றார். அது உனக்கு எப்படித் தெரியும்? தெய்வமே வந்து எனக்குச் சொன்னது? அப்படியானால் நாளைக்கு நான் எந்த வாசல் வழியாக கோவிலுக்குள் போகிறேன். என்று சொல் பார்க்கலாம்? நான் இப்போது சொல்லமாட்டேன். நாளைக்குச் சொல்கிறேன். மறுநாள், சரி அப்படியே இருக்கட்டும் பார்ப்போம் என்று போனார். அவரும் மறுநாள் வழக்கமாகப் புகும் வாசல் வழியாக அல்லாது வேறு ஒரு வாசல் வழியாகப் போனார் அன்றைக்கு. அங்கே போன உடனே கேட்டார் என்ன? நான் எந்த வாசல் வழியாக வருகிறேன் என்று சொல்லவில்லையே? என்று கேட்டார். மேலே நிலைமேலே எடுத்துப்பார், இந்த வாசல் வழியாகத்தான் வருகிறான் என்று எழுதின சீட்டு வாசற்படியிலே செருகப்பட்டிருப்பதைக் காட்டினார். என்ன செய்தி தெரியுமா? நான்று பக்கத்து வாசலிலும் வைத்துவிட்டு அவர் வந்தவுடன் பையன்களைவிட்டு எடுக்கச் சொல்லி விட்டார். அவ்வளவு தான்! (அவையோர் வியப்பும் நகையும் கையொலியும் செய்கின்றனர்) இப்படி நடந்தது அது. இப்படி அவர்கள் துணிந்து செய்வார்கள். பாண்டித்துரைத் தேவர் நடத்தின தமிழ்ச் சங்கம் இருக்கிறதே தமிழகத்திலே நல்ல தமிழ்க் கழகம் (சங்கம்) - இது நல்ல தொண்டு செய்தது. இங்கேதான் நான் 1924இல் பண்டிதத் தேர்வு தேறினேன். இந்தத் தமிழ்ச் சங்கத்தில் அப்பொழுது வித்துவான் தேர்வெல்லாம் ஏற்படவில்லை. எனக்கு முன்னாலே திரு. வேங்கடசாமி நாட்டார் ஒருவர்தான் தேறியிருக் கிறார். அந்தத் தேர்வு மிகக் கடினமான தேர்வு. ஒருவரும் போவதில்ல. பிரவேச பண்டிதம் பால பண்டிதம் எழுதக்கூடப் போவதில்லை. இப்படி இருந்தது. கணக்கான ஏட்டுச் சுவடிகளையெல்லாம் சேர்த்துவைத்தார். ஒரு நாள் திடுமெனத் தீப்பட்டு ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் அரைமணி நேரத்திற்குள் எல்லாம் சாம்பலாயின. எப்படிப் போயிருக்கும்? அதைப் பாதுகாக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் இவைர்களை - தமிழர்களை - தமிழரசர்களை ஏமாற்றி அடிமைப்படுத் தினார்கள். பழைய காலத்திலேயே அடிமைப்படுத்திவிட்டார்கள். சிலப்பதிகாரத்திலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் - அரசர்களுக்குள் மூவேந்தருமே பொதுவாக எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள்-அதிலே பாண்டியன் எவ்வளவு ஆற்றல் சிறந்தவன்! அவன் அந்த வார்த்திகனை - தட்சிணாமூர்த்தியுடைய தந்தை - அவர்கள் சேரநாட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த அணிகலன் களைக் கண்டவுடன் இதோ புதையல் எறு சொல்லிச் சிறையிலிட்டான். அந்த அதிகாரிகள் அவர்கள் சட்டப்படி - வழக்கப்படி தங்களுடைய பணியை - செயலைச் செய்து விட்டார்கள். உடனே அந்த (காளிகோயிற்) கதவும் சாத்தப் பட்டது. அதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு காளிபக்தியும் இருந்தது. அதன்பிறகு செய்தி சொல்லப்பட்டது. அப்புறம் சரி அழைத்து வா என்று சொல்லி - நயச்சொல் சொல்லி (நலக்குறைவால் ஐயா நாக்குழறியபடி பேச்சைத் தொடர்கிறார்கள்) நயம் செய்து கேட்டுக் கொண்டு ஏராளமான நகைகளைத் திருப்பியதும் அல்லாமல் - ஏராளமாக முற்றூட்டாகச் சில நிலங்களையெல்லாம் கொடுத்தார்கள் - அப்படியிருந்தும் அவனுடைய மனை என்ன செய்தாள்?.......... (பாவாணர் ஐயா இழிவும் கழிவிரக்கமும் வாய்ந்து குறிப்பார்ந்த குரலோடு பேச்சைத் தொடர்ந்தார்கள்)......... கீழே விழுந்து வணங்கினான் என்றிருக்கிறது. நிலமகளுடைய சினத்தை-ஊடலைச் சிறிது தணித்தான் என்று மங்கல வழக்கிலே சொல்லப்பட்டு இருக்கிறது. (கார்த்திரக கணவன் வார்த்திகள் முன்னர் இருநில மடந்தைக்கத் திருமார்பு நல்கி. சிலப்பதிகாரம்) (குறிப்பு). (இப்போது அவையினர் கையொலி எழுப்பித் தொல்லை செய்தனர்.) அதை நீங்கள் அறிந்து பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு அரசர்கள் (குறிப்பு 11) அடிமைப் பட்டிருந்தார்கள் என்று. இதற்கெல்லாம் அந்த வெண்ணிறம் ஒன்றும் - அவர்களுடைய மூலமொழியின் வெடிப்பொலிகள் - அந்த மூச்சொலி (Voiced unaspirate pounds) கலக்காத போலி ஒலிகள்தாம். (மீண்டும் அவையிலிருந்து கையொலி எழுந்தது. பேட்டுபோருக்கு இடையூறாக)............ வேறொன்றுமில்லை. இந்த ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன். குமரிநாட்டிலிருந்து பல்வேறு காலத்திலே பல்வேறு மொழி நிலையிலே, பல்வேறு திசையிலே மக்கள் பிரிந்து சென்றார்கள். அதிலே வடக்கே போனவர்கள் - முதலிலேயே ஒரு சாரார் போனார்கள். அந்த ஒரு சாரார்தான் பாசுக் (Bosque) மொழியைப் பேசுகிறவர்கள் `பிரனிசு மவுண்டன் (Pyreness Mountain) மலையிலே. (குறிப்ப 12) அதை நான் முதலமைச்சருக்குச் சொல்லவிரும்புகிறேன். இதைப்பற்றி விரிவாகச் சிறப்பாக எடுத்துரைக்கிறவர் பர். இலாகோவாரி என்கிறவர் (Dr. N. Lahovary). அவர் திராவிடத் தோற்றமும் மேற்கும் (Dravidian origin & the West) என்ற ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதிலே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். அந்த பிரனிசு மவுண்டன் பாசுக்கு மொழி அத்தனையும் அமிழுக்கு நெருக்கமான திராவிட மொழிகள். இசுபெயின் நாட்டு எல்லையில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்படியே ஆரியம் வருமுன்னால் அந்தக் கிழக்கிலே இருந்த மொழிகளும் திராவிடத்துக்கு இனம் என்று காட்டியிருக்கிறார். நான் ஊர் என்று சொன்னேன் ஊரோடு நிறுத்தி விட்டேன். இன்னம் ஒரே சொல்லை மட்டும் கூறி நிறுத்திவிடுகிறேன். புரம் என்று அந்தக் காலத்திலேயே பழைய கோட்டைகளையெல்லாம் கட்டின பிற்பாடு இந்த அரசர்கள் என்ன செய்தார்கள் - கோபுரங்கள் கட்டியிருந்தால் தங்களுக்கு இருந்ததுபோலவே அந்தத் தெய்வத்திற்கும் இருக்க வேண்டும் என்றுதான் தாங்கள் அந்தச் சிற்றின்பத்திற்காக - இன்பத்திற்காக - அந்தத் தெப்பங்கள், நீரோட்டம், தெப்பத்தேர் இழுப்பது - இப்படியெல்லாம் தங்களுக்கு இருப்பதுபோலவே உயர்ந்த காவல் கோபுரம் தங்களுக்கு இருப்பது போலவே அவர்களுக்கும் ஏற்றிவைத்தார்கள். இதிலே இந்தப் புரம் இன்று சொல்கிற ஊரெல்லாம் கோவில் கோபுரங்கள் உள்ள ஊராகத்தான் இருக்கும. (குறிப்பு 13) காஞ்சிபுரம் என்பதுபோல. புரி என்று வருகிற ஊரெல்லாம் கோட்டை இருக்கிற ஊர்களாகத்தான் இருக்கும். தந்தாசுதர் - டன்தாசுதர் என்று அங்கே எப்படி வழங்குகிறார்களோ அது போல் இந்த புரி என்றிது வழங்கினதும். (அவை யினரின் கையொலி சற்றுநேரம் நீடித்தது)......... புரிதல் என்றால் வளைதல். புரிசை-பிரிதல் என்று சொன்னால் மதில்-புரியினாலே சூழப்பட்ட நகர்களெல்லாம் புரி என்றே வரும். இந்தச் சொற்கள்தான் அங்கேயும் வழங்கி வந்தன........ (குறிப்பு 14)........ தச்தன்புரி, எடின்பரோ, சிதர்ன்பரன் இப்படியெல்லாம் அந்த இடங்கள் இன்னும் அங்கே வழங்குகின்றன........ (மீண்டும் அந்த சிலர் கையொலி எழுப்பினர்) இதற்கெல்லாம் மூலம் இங்கே தமிழில்தான் இருக்கிறது. இதோடு நிறுத்திவிடுகிறேன். ஆரிய மொழிகளைப் பேசுகிறவர்களிலே கிரேக்கர் ஒருசாரார். இவர்களெல்லாம் காசுபியன் கடல் பக்கத்திலே - தென் பாகத்திலே - குடியேறினவர்கள் - குடியேறி வழங்கினவர்கள். கிரேக்க மொழிக்கு நெருக்க மானது அது அதாவது வேதமொழிக்கு மூலமான மொழி - இதற்கு நெருக்கமானது. ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலே நாகரிகமான நிலையில் இல்லை. ஆடுமாடு மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக இருந்தவர்கள். கிரேக்கர்களுக்கென்று ஒரு தனிநாடு இருக்கிறது. செருமனிக்கு - பிரான்சுக்கு இருக்கின்றன. அமெரிக்காவுக்கு அவர்கள் குடியேறிச் சென்றாலும் எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிலிருந்து வந்தால் என்றால் செர்மனியிலிருந்து பிரான்சிலிருந்து வந்தேன் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இவர்களுக்கு - வேத ஆரியர்க்கு முன்னாலே எங்கு இருந்து வந்தான் என்று சொன்னால் இவர்களுக்கு நாடும் இல்லை; ஒன்றுமே இல்லை. ஆகவே நாடோடியாக குடும்பம் குடும்பமாக வந்து சேர்ந்தார்கள் (மீண்டும் அவையோரின் கையொலி) இங்கே வந்து சேர்ந்த உடனே அவர்களுடைய தெய்வங்கள் எல்லாம் சிறு தெய்வங்கள் - வேதத்தில் தெய்வத்தை நீங்கள் பார்த்தீர்களானால் அதில் கடவுளே இல்லை. சோமபானத்தை (சோமக்கள்ளை)ப் போய்த் தெய்வமாக வணங்கிப் போற்றி மிகப் பாராட்டி இருக்கு வேதத்திலே நூற்றிருபது மந்திரம், (குறிப்பு 15) சோமபானத்தைப் பற்றி அந்தப் பானகம் பற்றி - எப்படித் தோத்தரிக்க வேண்டும் தெரியுமா? அதையெல்லாம் இங்கே சொல்ல நேரமில்லை. மேக்தனால் (A.A. Macdonell) போல் எத்தனையோ பேர் அதைப்பற்றி யெல்லாம் எழுதிவைத்திருக்கிறார்கள். ஆகவே மிகத் தாழ்ந்த நிலையிலே உள்ளவர்கள். அந்தநிலையிலே கிழக்கே முதலிலே சிந்து ஆற்றுப் பக்கம் இருந்தார்கள். - சிந்துவெளியிலே - அதற்கப்புறம் கிழக்கே தள்ளி நடுவிலே - அந்த பிரமவத்தம் என்கிற பெயர் வைத்துக் கொண்டார்கள். மேலும் கிழக்கே காளிக்கோட்டம் (கல்கத்தா) வரையிலே போய் ஆரியவர்த்தம் என்று வட இந்தியாவிற்கெல்லாம் பெயர்வைத்துக் கொண்டார்கள். இங்கே போனபிறகுதான் அந்தக் காளிவணக்கத்தை மேற்கொண்டார்கள். இது (மீண்டும் அந்த சிலரின் கையொலி) தமிழர்களுக்குரிய பழக்கம். அங்கே இருக்கிற அந்தக்காலத்தில் தெய்வங்களிற் கூட - சொல்லப் போனால் சில இரண்டொரு தெய்வங்களைப் பற்றிக்கூடப் பழைய தொடர்பைக்கூட நாம் காட்டிக்கொள்ளலாம். வருணன் என்று சொல்வார்களே அந்த வருணன் என்ற சொல் தமிழிலே வாரணன் என்று திரியும். (குறிப்பு 16) (வாரணம் - கடல், வராணன் - கடலோன்) அது நெய்தல் நிலத்தெய்வம். வராணன் கடல் - அது மேரினிசம் (Marinism) என்றிருக்கிறது. இலத்தீனிலே மேரினிசம் தர்சி (Marimism Terce) Marine என்றாலும் கடல். இவர்கள் பிற்காலத்திலே போய் இந்தக் கடல் தொடர்பு அற்றுப்போனதினாலே வாரணன் என்பதை வருணன் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இப்பொழுதுங்சுட வருண செபம் என்று மழைத்தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே தொல்காப்பியத்திலே வருணன் மேய பெருமணல் உலகமும் என்றிருக்கிறது. அது வாரணன் மேய ஏர் மணலுலகமும் என்று இருந்திருக்க வேண்டும் முற்காலத்திலே. (குறிப்பி 17, 18) அவர்கள் இங்கு வந்து சேர்ந்தவுடனே அந்தக் காளிவணக்கத்தை முதலில் வைத்துக் கொண்டார்கள்.... (மீண்டும் கையொலி) பிறகு முருகன் வணக்கம் சிறந்தது என்று முருகன் வணக்கத்தையும் வைத்துக் கொண்டார்கள். அதற்கப்புற சிவமத திருமால்மதம் இரண்டும் தமிழர் மதங்களென்று தெரிந்து கொண்டார்கள். ஆகையினாலே தங்களுடைய வேத வணக்கத்தையும் அவர்களிடத்திலே செலுத்தமுடியவில்லை. இந்த இரண்டையும் அவர்கள் தழுவிக் கொண்டார்கள் - இருமதங்களையும். ஆனால் தமிழர்கள் இவர்கள் வயப் படுத்துவதற்கு என்ன செய்தார்கள் என்றார், முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கை என்ற ஒரு புதுக்கொள்கையைத் தோற்றுவித்தார்கள். திரிமூர்த்தி - முத்திருமேனிக் கொள்கை ஒரு பெரிய சூழ்ச்சியான புணர்ப்பு அது. என்ன செய்தார்கள் என்று சொன்னால் திருமால்மதம், சிவமதம் இரண்டும் தனிமதங்கள் என்பதை அறிய வேண்டும். (மீண்டும் கையொலி) எப்படி? கிறித்தவமும் இசலாமும் எப்படி இரண்டு மதங்களும் வெவ்வேறோ அல்லது இசலாமும் யூதர்நெறியும் எப்படி இரண்டும் வெவ்வேறு மதமோ அதுபோல இந்த மாலியம் (வைணவம்) சிவனியம் (சைவம்), இரண்டும் வெவ்வேறு மதங்கள். இப்போது திருநீறு பூசுகிறவனைப் போயி நீ திருமண் சாத்து சாத்து என்றால் சாத்து வானா? திருமண் சாத்துகிறவனைப் போய் நீறு பூசு என்றால் பூசுவானா? அந்தத் திருவானைக் கர்வார்க்கும் திருவரங்கத்தார்க்கும் உள்ள சண்டைகளையெல்லாம் இந்த எண்பனுவல் எழுதினார்களே அட்ட பிரபந்தம் எழுதின பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்) என்னும் அழகிய மணவாளதாசர் அவர்களைப் பற்றிச் பொல்ல கருதினேன். (குறிப்பி 19) இனி, உங்களுக்கு ஏதேனும் ஐயுறவு இருந்தால் நீங்கள் ஒரு பட்டி மன்றமாக நடத்துங்கள் என்றேன், மூவாண்டிற்கு முன்னலே நான்... இந்த சமசுகிருதத்திலே வேர்ச்சொல் வேற்றுமொழி என்று காட்டியிருக்கிறார்கள். இவர் .... (மீண்டும் கையொலி)9 வாணியை (சரசுவதியை) வேற்று மொழி வேர்ச்சொல் என்று காட்டியிருக்கிறார்கள். அவையெல்லாம். தமிழில்தான் இருக்கின்றன. இவற்றை நாம் நீக்குவதற்கு - மீட்பதற்கு, தமிழ்தான் மூலம் என்று காட்டுவதற்கு நீங்கள் ஒரு பட்டிமன்றம் ஏற்படுத்துங்கள். அதி செருமானியர், பிரஞ்சியார், ஆப்பிரிக்கர், அமெரிக்கர், ஆங்கிலேயர் யாராக இருந்தாலும் சரி - எதிர்த்தாலும் சரி - நாங்கள் நாட்டுகிறோம்.... (நெடுநேரம் அவையினர் கைதட்டினர். ஐயா பாவாணர் அவர்கள் தம் உரையினை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் ஆற்றிய கடைசி உரை இதுதான்.) *** மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். பாவாணர் பொன்மொழிகள் அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. 2ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மை யரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. ஐந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டு பிடிக்கும்வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமே யாகும். தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழிபோ லாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று. பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே. இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்விவிட்டது. அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தியவன் ஆங்கிலேயனே. ïªâahš jÄœ bfL« v‹w¿ªnj ‘ïªâ bghJbkhÊah? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை. பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை, அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்த பின் அணைகட்டுவதும், குதிரை களவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும். படிப்பு வேறு, ஆராய்ச்சி வேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும். பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே. சொல்லும் பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.fl‹nfhlyhš ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால், செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி.