பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 46 தமிழ்வளம் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 46 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 160 = 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 105/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு v சான்றிதழ் vii நூல் 1 வேர்ச்சொற் சுவடி 1 2 போலிகை யுருப்படிகள் 26 3 அகரமுதலிப் பணி நிலை 57 4 தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி 60 5 உலகத் தமிழ்க் கழகக் கொள்கை 62 6 பதவி விடுகையும் புத்தமர்த்தமும் 66 7 உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு 69 8 உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க! 71 9 உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள 72 10 பாவாணரின் மூன்று அறிக்கைகள்! 74 11 தமிழா விழித்தெழு! 79 12 தமிழ் ஆரியப் போராட்டம் 81 13 கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து 83 14 தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை 86 15 பல்குழுவும் உட்பகையும் கொல் குறும்பும் 89 16 உண்மைத் தமிழர் அனைவர்க்கும் 93 உறைத்த எச்சரிக்கை 17 அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு 96 18 தி.மு.க அரசிற்குப் பாராட்டு 99 19 மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார் 101 தமிழ் வாழ்த்தை இனிப் பாடவேண்டிய முறை 101 20 தனித்தமிழ் இதழாசிரியர் தவறு 103 21 வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள் 105 22 மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு 107 23 ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா? 110 24 தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்கள் 116 25 திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் 119 26 மதிப்புரை மாலை 122 27 கேள்விச் செல்வம் 141 28 ஈ.வ. இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள் 158 29 பிறந்த நாட் செய்தி 160 தமிழ் வளம் 1 வேர்ச்சொற் சுவடி 1. அர் அர் = ஒலிக் குறிப்பு. (a) அரவம் = ஒலி. அரா, அரவு, அரவம் = இரைவது, ஒலியறிவது, பாம்பு (b) அரி = அர் என்னும் ஒலி தோன்றச் சிறிது சிறிதாய்க் கடி அல்லது தின். அராவு = தேய். அரம் = அராவுவது. அரம்பம் = அராவுவது, அறுப்பது. அரி = அறு. கோடு (கிளை) + அரி = கோடரி - கோடாரி -கோடாலி. அரிவாள் = அரிகின்ற வாள். அரிவாள்மணை. அரி = அழி. அரி = அழிப்பது, பகைவன், சிங்கம். கோள் + அரி = கோளரி. அரங்கு = அறுத்த அறை, இசை நாடக மேடை. அரங்கம் = ஆற்றிடை அறுக்கப்பட்ட நிலம். திருவரங்கம் - ஸ்ரீரங்கம். அரக்கு = தேய், அழி. அரக்கன் = இராட்சதன். அரன் = அழிப்பவன், தேவன், சிவன். அரசு = பகைவரை அழிப்பவன், வேந்தன். அரசு + அன் = அரசன். அரசு = தலைமையான அல்லது தெய்வம் தங்கும் மரம். அரசன் - அரைசன் - அரையன் - ராயன் - Roy 2. அறு அர் - அறு. அறு = வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு. அறுவாள் = அறுக்கின்ற வாள். அறவு = நீக்கம், வரையறு - வரையறவு. அறுதி = முடிவு. அறை = அடி, அறுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட இடம். உறுப்பறை = உறுப்பறுக்கப்பட்டது. வரையறு - வரையறை. அறுகு = அறுத்தறுத் தோடிப் படரும் புல். அறுவை = அறுக்கும் துணி. அறுப்பு = பயிரை அல்லது தாலியை அறுத்தல். அறுவடை = அறுப்பு. அற்றம் = பிறர் இல்லாத சமையம். 3. அர் அர் - அரு = அழி, குறை, நெருங்கு. அருகு = குறைவாகு, நெருங்கு, பக்கம். அருகண்மை - அருகாமை. அருகன் = நெருங்கினவன், உரிமையுடையவன் அருகதை = உரிமை. அருமை = குறைவு, கூடாமை, சிறப்பு, விருப்பம். அருமைவந்த - அருமந்த. அருந்தல் = குறைவு, விலை யுயர்வு. அரிது = கூடாதது, வருத்தமானது. 4. அள் அர் - அள் - அண் - அடு. (a) அள் = நெருங்கு, நெருங்கச் சேர்த்தெடு. அண், அண்ணு = நெருங்கு. அண்மு = நெருங்கு. அண்மை, அணுமை, அணிமை = சமீபம். அணுகு = நெருங்கு. அண்டை = பக்கம். 7ஆம் வேற்றுமை உருபு அடு = நெருங்கு, அடர் = நெருங்கு. அடவி = நெருங்கின காடு, அடுக்கு = நெருங்கவை. அடுத்த = நெருங்கின, பக்கமான. இன்னொரு. (b) அடை = அடுத்தது, அப்பம். அடை - ஆடை. பாலடை = பாலாடை, சங்கு. அடுக்கும் = நெருங்கும், தகும். 'உனக்கிது அடுக்குமா?.' அடங்° =நெருங்கு,உள்ளமை. அடக்கு (பிற வினை). அடக்கம் = ஒடுக்கம், உள்ளீடு, புதைப்பு. அடை = நெருங்கு, சேர், பெறு. (ட = ய) அயல் - அசல் = பக்கம், அன்னியம் 5. அர் அர் = சிவப்பு அ - இ. ர் - ல் Üரத்தம்= ªசந்நீர்,Üலத்தகம்= ªசம்பஞ்சுக்°ழம்பு. அரக்கு = சிவந்த மெழுகு. அருணன் = சிவப்பு. அருணம் = காலைச் சூரியன். அரிணம் = சிவப்பு, மான். இரத்தம் = செந்நீர். இரத்தி, இலந்தை = சிவந்த பழத்தையுடைய முட்செடி. இராகி = கேழ்வரகு. 6. இ இ - கீழுறற் குறிப்பு. இறங்கு = கீழே வா. இரு = கீழ் உட்கார், தங்கு, வாசஞ்செய். குடியிரு = வாசஞ்செய். இருப்பு = தங்கல், ரொக்கம். இருக்கை = ஆசனம். இழி = இறங்கு, கீழாகு. இளி = இழிவு. 7. கில் இ - கில். (a) கில் - கல் = தோண்டு, தோண்டுங் கருவி. கில் - கிள் - கீள் - கீழ். (b) கிள், கிள்ளு = நகத்தைக் கீழே பதி, கிள்ளுக்கீரை. கிள்ளை, கிள்ளி - கிளி = கனிகளைக் கிள்ளுவது. (c) கிழி = கீறு, துணியைக் கிழி. கிழி = முடிச்சு, துணி, படம். கீள் = கிழி. 'கீளார் கோவணம்'. (d) கீழ். கீழ்க்கு - கிழக்கு = கீழிடம், ஒரு திசை. (e) கீறு = கோடு கிழி. கீற்று = கீறி அறுத்த துண்டு, துண்டு. கிறுக்கு = கோடு கீறு, பைத்தியம். கீறல் = கோடிழைத்தல், எழுத்தறியாமை உணர்த்துஞ் சொல். கீச்சு = கீறு. 8. இ இ = பின்னிடற் குறிப்பு. (a) இடறு = பின்விழத் தடுக்கு. இடை = பின்னிடு, தோற்றோடு. இடக்கை = தோற்ற கை. இடம் = தோல்வி, இடர் = துன்பம். ஒ.நா : வலக்கை = வெற்றி பெற்ற அல்லது வலிய கை. இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை. (b) இட = இழுத்துப் பறி. இணுகு, இணுங்கு = இழுத்துப் பறி. இழு = பின்னுக்குக் கொண்டு வா. இறை = தண்ணீரை இழு, பின்னுக்குத் தெறி, தெறி. 9. இழு இ - இள் - இழு = பின்னுக்குக் கொண்டுவா. இழு - இழுகு = பின்னோக்கித் தடவு. (a) இழுப்பு = இழுத்தல். இழுவை = இழுத்துக் கடத்தல். இழுது = இழுகும் மை. இழுது - எழுது = இழுத்து வரை. இலக்கு, இலக்கி = எழுது. இலக்கு = எழுத்து. இலக்கு + இயம் = இலக்கியம் = நூற்றொகுதி. இலக்கு + அணம் = இலக்கணம் = மொழியொழுங்கு. ஒ.நா : E. literature from letter; grammer from Gk. grammos, letter இலக்கம் = எழுத்து, எண்குறி, எண். (b) இழு - ஈர் = இழு, இழுத்தறு. இழு - இசு - இசி. இழுப்பு = இசிவு = ஜன்னி. இழுக்கு = இழுகுவது, வழுக்கல், வழு. இளை = மூச்சிழு. 10. இள் இ - இள். (a) இளை = மூச்சிழு, மெலி. இளைப்பு = மூச்சிழுப்பு, மெலிவு, தளர்ச்சி. இளைப்பு + ஆறு = இளைப்பாறு. ஈளை = கோழை, இளைப்பு. இழை = இழுத்துச் செதுக்கு, நூலிழு. இழைப்பு + உளி = இழைப்புளி. இழை = இழைத்துச் செய்த நகை, இழுத்த நூல். இழைப்பு = காச நோய். இளைத்தவன் = மெலிந்தவன், சிறியவன். 'ஊருக் கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' (b) இளம், இளமை = சிறு பருவம். இளவல் = தம்பி. இளைஞன் = வாலிபன், வீரன். இளையவன் = ஆண்டிற் சிறியவன். (c) இளப்பம் = தாழ்வு, இளக்காரம் = மென்மைபற்றி மேற்செல்லல். இளகு = மெல்லிதாகு, இளக்கம் = மென்மை. இணங்கு = மென்மையாகு, உடன்படு. இலகு = எளிது, கனமின்மை. இலேசு = எளிது, கனமின்மை. இகழ் = எளிமையா யெண்ணு. 11. எள் இள் - எள். எண்மை, எளிமை = வறிய நிலை. எளிது = இலேசானது. எள் = சிறிய கூலம்(தானியம்). எள்ளு = இகழ். எள்கு - எஃகு = இளகிய இரும்பு. ஒ.நா : உருகியது உருக்கு. எய் = இளை, சோம்பு எ = ஏ ஏளனம் = இகழ்ச்சி. ஏழை = எளியவன், அறிவிலி. ஏசு = இகழ். 12. பின் இ - பின் (a) பின், பின்னே, பின்னை, பின்னர், பின்பு, பின் + கு = பிற்கு. பிற்காலே = பின்னுக்கு. பின்று = பின். பிந்து = பிற்படு. (b) பின் - பிற, பிறம், பிறம்பு, பிறகு, பிறக்கு, பிறக்கிடு. பிறகு, பிறக்கு = பின்பு, முதுகு. பிறக்கிடு = பின்னுக்கிடு. பிறம்பத்தங்கால் = பின்னங்கால் (c) பிற = மற்ற. பிறன் = மற்றவன், அயலான், பிறத்தியான் = அயலான். 13. புற பிற - புற - புறம் - புறன். புறம் = பின், முதுகு, வெளி, வெளிப்பக்கம், மேற்பக்கம், பக்கம். புறம் = வெளிநிலம், முல்லை நிலம், நிலம். அறப்புறம் = அறநிலம். புறம்போக்கு = எல்லாரும் செல்லும் வெளிநிலம். புறம் = புறா = புறவு = புறவம். புறா = முல்லை நிலத்திலுள்ள பறவை. புறப்படு = வீட்டைவிட்டு வெளிப்படு, பயணந் தொடங்கு. புறப்பாடு = வெளிக்கிளம்பிய கொப்புளம், புறப்படுதல். புறம்பு = வெளி, அயல். புறணி = மேற்பட்டை, புறங்கூற்று. புறங்கூறு = பின்னாற்சொல், பின்னாற் பழி புறங்காடு = ஊர்க்கு வெளியுள்ள சுடுகாடு புறங்காட்டு, புறங்கொடு = முதுகு காட்டு, தோற்றோடு. புறம் = புறப்பொருள், புறம். புறன் = புறங்கூற்று. 14. இடு. இள் - இடு. இடுகு = சிறுத்துப்போ. இடுக்கு = நெருக்கு, நெருக்கமான இடம் இடுக்கி = நெருக்கிப் பிடிக்கும் குறடு. இடுக்கம் = நெருக்கம். இடுப்பு, இடை = சிறுத்த அரை. இட்டிது = சிறியது. இட்டிகை = இடுக்கமான வழி. இண்டு = சிறிய துவாரம். இடுகு - இறுகு. இறுக்கம் = நெருக்கம், திணிவு, உறுதி. 15. ஆள் (a) ஆள் = ஆட்சி செய், பயன்படுத்து, வழங்கு. ஆள் + சி = ஆட்சி. ஆள் = பிறவற்றை யாளும் மனிதப் பிறவி. (b) ஆள் - ஆண் = ஆட்சியிற் சிறந்தவன். ஆண்மை = ஆண்டன்மை, வீரம். ஆண் - ஆடு - ஆடூஉ, ஆடவன். ஆள் - ஆணை, ஆண் - ஆணவம் = ஆண்டன்மை, வீரம்,அகங்காரம். 16. இற இற = வளை இறவு, இறப்பு, இறவாணம், இறை = வளைந்த தாழ்வாரம். இறா, இறால், இறாட்டு = பெருங்கூனி. ஒ.நா: கூன் - கூனி. இறால் = வட்டமான தேன் கூடு. இறாட்டி = வட்டமான எரு. இறை = வளைந்த முன்கை. இறைஞ்சு = வளை, வணங்கு. 17. இறு இற - இறு. பயிர், மனித வுடம்பு, சூரியன் என்பவை வளைந்தபின் இறத்தலை அல்லது மறைதலை நோக்குக. இற = சா. இறு = முடி. இறுதி = முடிவு. ஈறு = விகுதி. இறு = பயணத்தை முடி, தங்கு. இறை, இறைவன் = எங்கும் தங்கியிருப்பவன், கடவுள், அரசன். இறு = கடனைத் தீர், செலுத்து. இறை = வரி. இறு = ஒருவன் சொன்னபின் பதில் கூறு. இறை = விடை. 18. இர். இர் - கருமைக் குறிப்பு. இரா, இராத்திரி, இரவு = கரிய இருட்டு வேளை. இறடி = கருந்தினை. இருமை = கருமை. இரும்பு = கரிய உலோகம். இருந்தை = கரி. இருள் = ஒளியின்மை. இ - அ. அறல் = கருமணல். இ - எ. எருமை = கரிய மாட்டு வகை. எருது = கருங்காளை, காளை. எ - ஏ. ஏனம் = பன்றி (ஏனை) - யானை = கரிய விலங்கு. ஏனல் = கருந்தினை, ஏனம் = கரும்பாத்திரம். 19. ஊ. ஊ = முற்செலற் குறிப்பு. ஊங்கு = முன்பு. ஊக்கு = முற்செலுத்து, உற்சாகப்படுத்து. 20. முள். ஊ - உ - முள் முள் = முன்சென்று பதி, நகத்தைப் பதி, பதியும் கூரான உறுப்பு. முளவு = முள்ளம் பன்றி. முட்டு = முற்சென்று தாக்கு. முட்டை = முட்டி வருவது. முட்டு, முட்டுப்பாடு = முட்டித் திண்டாடல் முடை = முட்டுப்பாடு. முண்டு = முட்டிக் கிளம்பு முட்டி = கை கால் எலும்புப் பொருத்து. முழம் = கை கால் எலும்புப் பொருத்து. முன்கை யளவு. உ - ஊ. மூட்டு = பொருத்து. உ - ஒ. மொழி = கை கால் பொருத்து, கரும்புக் கணு. மொட்டு = முட்டிவரும் அரும்பு. 21. முன். முள் - முன். (a) முன் = முன் பக்கம், முன்பு, முன்னர், முன்னம், முன்னே, முன்னை. முன்னு = எதிர்காலக் காரியத்தை நினை, நினை. முன்னம் - முனம் - மனம். முன்னம் = முன்நினைவு, நினைவு, குறிப்பு, மனம் = நினைவுப்பொறி. முன்னு - உன்னு = நினை. முன்னிடு = ஒரு கருமத்தை முன்வை. -'ஒரு காரியத்தை முன்னிட்டு' என்பது வழக்கு. முனி = முன்பக்கம், முனி - நுனி. முனை = போரில் முன்னணி, நுனி. முனை - நுனை = கொனை. முன்று = முன்பு. (b) முந்து = முற்படு. முந்தல் - முதல் = முன்னிடம், முன்தொகை. முதல் + இ = முதலி. முதலி + ஆர் = முதலியார். முதல் + ஆளி = முதலாளி. (c) முந்து - முது. முதுமை = பழமை, மூப்பு. முதுக்கு + உறை = முதுக்குறை. முதுமை = பழைமை, பிற்காலம், முதுகு = பின்புறம். மூத்தோர் = ஆண்டில் மிகுந்தோர், பெரியோர். முது - முதிர் = மூ, விளை, முற்று. முதியோர் = கிழவர், மூத்தோர். முதுமகன் = கிழவன். முதுகண் = அறிவு முதிர்ந்தோர் அறிவுரை. மூதில் = பழங்குடி. மூதூர் = பழவூர். மூரி = கிழ எருது. முது - மூ. மூ + பு = மூப்பு. மூப்பன் = மூத்தவன், ஒரு பதவி, ஒரு குலம். 22. முகு முகம் = தலையின் முன்பக்கம், முன்பக்கம். முகர் = முகம், முக வுருவமுள்ள முத்திரை. முகரா = ஒரு நாணயம் முகரை = முகம். திருமுகம் = முத்திரையுள்ள கடிதம். முகத்திரை = முத்திரை. முகத்திரம் = மோதிரம். முகம் - முகன் - முகனை - மோனை = சீரின் முன்னெழுத்து. முகப்பு = முன்பக்கம். துறைமுகம் = நிலத்தின் முன்பக்கமான நெய்தல் நகர். முகம் - நுகம். முகம் = முன்புறம், பக்கம். (b) முகிழ் = முன்தோன்றும் அரும்பு, குவி, தோன்று. முகை = அரும்பு. உ - ஒ. மொக்குள் = அரும்பு. 23. முகு முகம் = முன்னால் நீண்டிருக்கும் மூக்கு. முகடு = மூக்குப் போன்ற கூரை. முகட்டுப் பூச்சி - மூட்டைப் பூச்சி - மூட்டை. முகடி = முகட்டுத்தரத்தில் இருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி. முகடி = முகரி. முகடு = மலை முதுகு. முக்கு = தெரு மூலை, மூக்குப் போன்ற சந்து. முக்கை = ஆறு திரும்பும் மூலை. மூக்கு = முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு, மூக்குப்போல் நீண்டு கூரியது. 24. முகு. முகர் = மூக்கால் மணத்தை அறி. முகர் - நுகர் = மணத்தையறி, இன்புறு. முக = மணத்தையறி, விரும்பு. முக - மோ = விரும்பு, காதல்கொள். மோ + கம் = மோகம். மோகம் - மோகி. மோகினி = காதலூட்டிக் கொல்லும் பெண்பேய். 25. முகு. முகம் = முதல் முகமை - முகாமை = தலைமை முக்கியம் = தலைமையானது, சிறந்தது. முகம்-மகம், மகமை=தலைமை, ஊர்த்தலைவனுக்குக் கொடுக்கும் வரி. மகன் = படைப்பில் பெரியவன், மனிதன். மக - மா = பெரிய, மக - மகி. மகமை - மகிமை = பெருமை. 26. நுள். முள் - நுள். நுழைவு = நுணுக்கம். நுழை = இடுக்கமான வாயிலிற் புகு. நுண்மை = மிகச் சிறுமை. நுண் + பு = நுட்பு. நுட்பு + அம = நுட்பம். நுணங்கு = நுட்பமாகு. நுணி = கூரிதாகு. "நுழைவும் நொசிவும் நுணங்கும் நுண்மை" (தொல். உரி. 78) நுணுகு = சிறிதாகு. நுணுக்கம் = நுட்பம். நொய் = நுட்பமானது, நொய்ந்து கெடு. குறுநொய் = உடைந்த அரிசி; நொய்ம்மை = நுட்பம். நொசி = நுட்பமாகு. நொசநொச = நொய்ந்துபோதற் குறிப்பு. 27. உள். உள் = உட்பக்கம். (a) உள், உள்ளம், உளம் = மனம். உள், உள்ளு = நினை. உளப்பாடு = உட்படுத்தல். உள்ளீடு = பொருளடக்கம். உட்படு = அடங்கு, இணங்கு. உட்கோள் = கருத்து. உள்ளான் உள்ளல் } = நீர்க்குள் மூழ்கும் பறவை. உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம். ஈர + உள்ளி = ஈருள்ளி. உளவு = உள்ளிருந்தாராய்தல், துப்பு. (b) உண் = உட் செலுத்து, சாப்பிடு. உட்கொள் = சாப்பிடு. உறிஞ்சு = உள்ளிழு. (c) உள்கு - உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கு, அச்சம். உட்கு + ஆர் = உட்கார். அச்சத்தாற் குந்து, குந்து, இரு. உட்கி - உக்கி = அச்சத்தாற் குந்திச் செய்யும் கரணம். (d) உண்மை = உள்ளிருத்தல், இருத்தல், மெய். உள் + து = உண்டு. உள் + அது = உள்ளது. உண்டு + ஆகு = உண்டாகு. (e) உ - ஒ; ஒல்கு = ஒடுங்கு, தளர். ஒற்கு + அம் = ஒற்கம் = தளர்ச்சி. ஒல்லி = ஒடுங்கிய, மெல்லிய ஒடுங்கு = நெருக்கமாகு, ஒல்லியாகு. 28. உர் உர் = பொருந்து. உரசு = தேய், பொருந்து. உராய் = தேய், பொருந்து, உரிஞ், உரிஞ்சு = உரசு. உரை = தேய், உரசு. உரம் = புல்லும் மார்பு, வலிமை, உறுதி, எரு. உரகம் = மார்பால் ஊரும் பாம்பு. உரவு = வலிமை. 29. உறு. உர் - உறு = பொருந்து. உறுத்து = அழுத்து, வலி. உறு = வலிய உறுப்பு = பொருந்தும் பாகம் உறவு = பொருந்தல், கலந்து வாழ்தல். உறவு + ஆடு = உறவாடு. உற்றார் = பொருந்தினவர், இனத்தார் உறழ் = பொருந்து, மாறுபடு. உறழ்ச்சி = ஒப்பு, மாறுபாடு, விகற்பம். உறை = பொருந்து, மேற்படு, தங்கு, தாக்கு, தங்கும் கூடு. உறையுள் = இருப்பிடம். 30. ஏ. ஏ = உயர்வுக் குறிப்பு. ஏண் = உயரம், பெருமை, 'ஏ பெற்றாகும்' (தொல். உரி. 8). ஏண் = உயரம், ஏணி = உயரப் போக்குவது. ஏணை = ஏந்துவது, தொட்டில் ஏண் - சேண் = உயரம். சேணுலகம் = இந்திரனுலகு. சேணோன் = இந்திரன். ஏத்து = உயர்த்திப் பேசு, புகழ். ஏந்து = கையுயர்த்தித் தாங்கு. ஏங்கு = அடிவயிற்றினின்று காற்றையெழுப்பி மூச்சுவிடு, பெருங்கவலை கொள். ஏக்கம் = பெருங்கவலை, பேராத்திரம். ஏய் = ஏறு, பொருந்து, ஒத்திரு, ஏமாற்று. ஏர் = எழுச்சி, அழகு,பயிரை எழச்செய்தல், உழவு, உழுகருவி. ஏல் = மேலாகக் கொள், ஏற்றுக்கொள். ஏழ் = எழு, ஒலி, ஓரெண். ஏறு = ஏறுவது, சில விலங்கின்ஆண். ஏறு - ஏற்றை ஏற்றம் = நீரை ஏற்றுவது, ஏற்றிக் குத்துவது. 31. ஏ ஏ = மேற்செலற் குறிப்பு. (a) ஏ = ஏவு, அம்பு. ஏவு = எய், முற்செல், முற்செலுத்து, செய்வி, கட்டளையிடு. ஏகு = மேற்செல், செல். (b) ஏ - எ . எய் = மேற்செலுத்து, அம்புவிடு. எண், எண்ணு = மேற்காரியத்தை நினை, மேன்மேல் நினை, நினை. எண்ணம் = நினைவு, ஆராய்ச்சி. எண் = மேன்மே லளத்தல், இலக்கம், மதிப்பு. 32. இய் ஏய் - இய். இயை = பொருந்து, இயை - இசை - இணை. இணை - பிணை = இசை, இசைந்து பொறுப்பேற்றல். 33. இய ஏ - இய = நட. இயல் = நட. கூடு. நடப்பு, தன்மை, இலக்கணம், நூற்பகுதி. இயவு = நடப்பு, வழி. இயல் - ஏல், ஏல் + படு = ஏற்படு. ஏற்பாடு = நடப்பு, ஒழுங்கு. இயவுள் = உயர்ந்தவன், தலைவன். இயங்கு = அசை, செல். இயக்கம் = அசைவு, நடப்பு, கிளர்ச்சி. இயங்கி = மோட்டார் வண்டி. 34. ஏ ஏ - எ = மேலெழற் குறிப்பு. ஏழ் - எழு - எழும்பு. எக்கு = வயிற்றுப் பக்கத்தை மேலுயர்த்து. எக்கர் = நீரலை கரைமேல் தள்ளும் மணல். எடு = வளர், மேல் தூக்கு, நீக்கு. எடுப்பு = உயர்வு. எடுத்தல் = எடுத்து நிறுத்தல், எடை = நிறை, கனம், ஓர் அளவு. எம்பு = எழும்பு. எவ்வு = எழும்பிக்குதி, குதி. 35. எழு ஏழ் - எழு. எழு = எழுந்த தூண், தூண் போன்ற குறுக்குச் சட்டம். எழுவு = ஓசையெழுப்பு. எழால் = எழுச்சி, ஒரு பறவை. எழில் = எழுச்சி, அழகு. எழிலி = மேலெழும் மேகம். எழினி = மேலெழும் திரை. 36. எல் ஏழ் - எல். (a) எல் = எழும் சூரியன், ஒளி, எல்லோன் = சூரியன். எல் + து = என்று = சூரியன். என்று + ஊழ் = என்றூழ் = சூரியன். (b) எ - இ. இலகு = விளங்கு. இலக்கம் = ஒளி. இலகு - இலங்கு = ஒளியிடு, விளங்கு. 37. ஏ. ஏ = வினாவெழுத்து. ஒரு பொருளை எது வென்று வினவும்போது, பல பொருள் களில் ஒன்றை மேலெடுப்பது போன்ற உணர்ச்சியிருத்தலால் உயர்ச்சி யைக் குறிக்கும் ஏகாரம் வினாப் பொருளைத் தந்தது. ஏது? ஏவன்?. 38. யா. ஏ - யா. = வினாவெழுத்து. யா = யாவை, யாவன்? யாங்கு? யாண்டு. யார் - ஆர்? ஒ. நோ : ஏனை - யானை. ஏழ் - யாழ். 39. எ. ஏ - எ = வினாவெழுத்து. எது? எங்கு? என்று?. 40. மே. ஏ - மே = மேல். (a) மேல் = மேற்பக்கம், உயர்வு, உடம்பு, ஒருதிசை, 7ஆம் வேற்றுமை உருபு. மேல் + கு = மேற்கு - மேக்கு = மேடான திசை. மேலும் = மேற்கொண்டும், ஓர் இடைச்சொல். மேலுக்கு = மேற்பார்வைக்கு, வெளிக்கு. மேனி = மேற்புறம், உடம்பு. மேடு = உயரமான இடம். மேடு - மோடு. மேடை = மேடான இடம். (b) மிகு = மேலாகு, மிஞ்சு. மிசை = மேல். மிஞ்சு = மிகுதியாகு, அளவு கட. மிஞ்சு - விஞ்சு = மிகு. மிச்சம் = மீதி. (c) மீ = மேல், மீதியாகு. மீமிசை = மிக மேல், ஓர் இலக்கணம். மீதி = மிகுதி. மீத்தம் = மீத்து வைத்த பொருள். மீதம் = மீதி. மீது = மேல், 7ஆம் வேற்றுமை உருபு. (d) மீறு = வரம்பு கட. மீறு - வீறு = பெருமை, பெருமை கொள். வீற்று + இரு = வீற்றிரு = பெருமையுடனிரு. (e) மெத்து = மேற்கொள், தோற்கடி. மெத்தை = மேல்வீடு. மெச்சு = உயர்த்திப் பேசு. 41. ஐ. ஐ = வியப்பு, பெருமை. ஐ வியப்பாகும்' (தொல். உரி. 89) ஐயன் = பெரியோன், தலைவன், தந்தை, அரசன், கடவுள், ஆசிரியன், முனிவன், சிவன். ஐயனார் = சாத்தனார். தம் + ஐயன் = தமையன் = அண்ணன். ஐயை = அம்மை, பார்வதி. ஐயா = ஐயன் என்பதன் விளி. ஐயோ = (ஐயன் என்பதன் விளி) இரக்கக்குறிப்பு. 42. ஓ. ஓ = ஒலிக்குறிப்பு. (a) ஓசை - ஓதை. ஓது = ஒலி செய், படி. ஓல் = ஒலி, தாலாட்டு. ஓலம் = ஒலி, முறையீடு. (b) ஒல் = ஒலிக்குறிப்பு. ஒல் - கொல் = ஒலிக்குறிப்பு. ஒல் - ஒலி. ஒல்லென = விரைவாக. 43. ஓ. ஓ = உயரக் குறிப்பு. (a) ஓங்கு = உயர். ஓங்கல் = யானை. (உயரமான விலங்கு). ஓக்கம் = உயர்வு. ஓச்சு = உயர்த்து. (b) ஓ - ஓம் - ஓம்பு = உயரமாக்கு, வளர், பாதுகா. ஓம்படை = பாதுகாப்பு. ஓ - ஒ ஒய்யாரம் = உயரம், உயர்வு. ஒயில் = உயர்வு, உயரக் குதித்தடிக்கும் கும்மி. 44. உ. ஓ - உ = உயரக்குறிப்பு. உக = உயர் உச்சம் = உயர்நிலை. உச்சி = உயர்ந்த வுறுப்பு, மயிர் வகிர்வு. உச்சிப் பொழுது = சூரியன் உயர்ந்த வேளை. உத்தரம் = உயர்நிலை, உயர்ந்த வடதிசை, மேல்மரம். உதி = மேலெழு. உம்பர் = மேல், மேலிடம், தேவர். உம்பல் = யானை. உயர், உயரம், உயர்வு, உவா = யானை. உன்னதம் = உயரம், வானகம். உன்னு = குதித்தெழு, மூச்சுப்பிடித்தெழு. 45. ஓ. ஓ = பொருந்து. (a) ஓ + இயம் = ஓவியம் = ஒப்பனை, சித்திரம். ஓ - ஒ. ஒ = பொருந்து. ஒட்டு = பொருந்து, ஒரு துணைவினை. செய்ய + ஒட்டார் = செய்ய வொட்டார் = செய்யவிடார். ஒட்டுமா = பொருத்து மாமரம். ஒட்டு = பிசின், சூள். ஒட்டு = ஒரு பொருளோடு பொருந்தி நில். ஒண்ணு = பொருந்து, ஒரு துணைவினை. செய்ய + ஒண்ணாத = செய்ய வொண்ணாத - செய்யொணாத. ஒத்து = மேல் வைத்தெடு, தட்டு. ஒத்தடம் = ஒரு மருத்துவ முறை. ஒத்தி = ஒத்து, ஊதும் சூழல், அடைமானம், ஒத்துப்பார்க்கும் பயிற்சி. ஒப்பு = ஒத்துக்கொள், சமம். ஒப்பனை = ஒப்பு, அலங்காரம். ஒப்புவி - ஒப்பி ஒம்பு = மனம் ஒத்துக்கொள். ஒல் = பொருந்து, ஒன்று = பொருந்து, முதலெண். ஒன்றி = தனி. ஒவ்வு = பொருந்து, ஒப்பாக்கு. ஒற்று = பொருந்து, பொருந்தி ஆராய், ஒற்றர் = ஒற்றுபவர். 46 உ. ஒ - உ = பொருந்து. உத்தி = பொருத்தம், பொருத்தமாகச் செய்யும் திறமை. உத்தி கட்டல் = இவ்விருவராய்ப் பொருந்திவரல். உகம் - நுகம் நுகக்கோல் = மாடுகளைப் பூட்டுங் கோல். 47. உ. உ = பின்பக்கம். உப்பக்கம் = பின்பக்கம். உத்தரம், உத்தாரம், உத்தரவு = மறுமொழி. உத்தரகாண்டம் = பிற்காண்டம். உம்மை = பிற்காலம், எதிர்காலம். 48. கள் கள் = கருப்பு. (a) கள்ளம் = கருப்பு, மறைவு. கள்ளன், கள்வன் = மறைவாய்க் கொள்பவன். களவு = மறைவு, திருடு. களா, களவு = ஒரு கருப்புப் பழம், பழுக்கும் மரம். களி = கருப்பு மண், களி போன்ற உணவு. கள் = புலனை மறைக்கும் மது. களி = கட்குடியன், மகிழ். கள்ளன் - கண்ணன் = கருப்பன். (b) காளம் = கருப்பு. காளி = கருப்பான பேய்த் தலைவி. அம் + காளம் (காளி) + அம்மை = அங்காளம்மை. காளான் = கருங்காளான். காளை = கரிய எருது, எருது. (c) கள் - கர = மறை. கரவு = கபடம், களவு. 49. கண். கள் - கண். = கருப்பான விழி. (a) கண் = விழி, கண் போன்றது, 7ஆம் வேற்றுமை உருபு கண்ணு = மனதால் பார், கருது. கண்ணியம் = மதிப்பு. கண்வாய் = சிறு வாய்க்கால். கண்ணாளன், கண்ணவன், கணவன் = மனைவிக்குக் கண் போன்றவன். கண்ணி = கண் கண்ணாய்க் கட்டிய மாலை. கணு = கண் போன்ற வரையிடம். (b) கணி = அளவிடு. கணியன் = கணிப்பவன், சோதிடன். கணிதம் = கணக்கு. கணக்கு + அன் = கணக்கன், கணக்கப் பிள்ளை. கணக்கு = வரவு செலவுக் குறிப்பு. கணி - குணி = அளவிடு. (c) கண் - காண் = பார். காட்சி = அறிவு. காணி = மேற்பார், மேற்பார்க்கும் நிலம், பிரிவு. காணம் = மேற்பார்வை, மேற்பார்வை நிலம், பிரிவு. கண்காணம் = மேற்பார்வை. கண்காணி = மேற்பார்ப்பவன். கண்காணியார் = அத்தியட்சர். மா + காணி = மாகாணி, மா + காணம் = மாகாணம். 50. கரு. கள் - கரு = கருப்பாகு. (a) கருப்பு = கருமை, பஞ்சம், பேய். கருகு = கருப்பாகு, தீந்துபோ. கருக்கு = கஷாயம், பனைமட்டையின் கரிய ஓரம், கூர். கருகல் = பொருள் விளங்காமை. கரும்பு = கரிய தண்டுள்ள தட்டை. கருநாடகம் - கருநடம் - கன்னடம் = ஒரு நாடு, ஒரு மொழி. (b) கரம்பு = கருமண். கரம்பை = காய்ந்த களிமண், ஒரு பயறு. (c) கரி = அடுப்புக் கரி, யானை. கரிசல் = கரிய நிலம், கரிச்சான் = கரிக்குருவி. காரி = கரியது. கரியன் = திருமால், கண்ணன். (d) கரு - கறு. கறு = கருப்பாகு, முகங்கரு, கோபி. கறுவு = கோபம், வர்மம், கறம் = வர்மம். 51. கல. கல = கூடு. (a) கலப்பு = சேர்ப்பு, கலப்படம் = இழிகலவை. கலவை = கலப்பு, கலம்பகம் = பலவுறுப்புகள் கலந்த பனுவல். கலம்பகம் - கலம்பம் = கலவை. கலவி = புணர்ச்சி. (b) கலகம் = சண்டை. கலாபம் = கலகம், சண்டை. கலாம் = சண்டை. (c) கலங்கு = பல பொருள் கூடு, மயங்கு. கலக்கம் = மயக்கம். 52. குள். குள்ளம், குள்ளல், குள்ளை = குறுமை. (a) குஞ்சு, குஞ்சி = பறவைப் பிள்ளை. குச்சு, குச்சி = சிறு கம்பு. குட்டி = சிறியது, பிள்ளை. குருளை = குட்டி. குட்டை, குண்டு = சிறு குளம்; குழி = சிறு வளை. குட்டை - கட்டை = குறுகியது. குக்கல் = குள்ளநாய். குன்று = குறை, சிறுமலை. குன்றி = சிறு முத்து. குன்று + அம் = குன்றம். (b) குறு - குறள் = குறு மானுடம், குறு வெண்பா. குறளி = குறும் பேய். குறுகு = சிறு, குட்டையாகு. குறுக்கு = குறுகிய வழி, ஊடு, நடுமுதுகு. குறை = தன்மை குறைந்தது. குற்றம் = குணக் குறைவு. குற்றி - குச்சி = துரும்பு. குறு + இல் = குற்றில் - குச்சில் குறும்பு = குறுமலை, குறுமலையரசன், அவன்செய்யும் சேட்டை, சேட்டை. குறுமகன் - குறுமான் = சிறுவன். கூழல் = குறுகியது. கூழி = குறும்பசு. கூழை = குறுகிய முடி. 53. கும் கும் = குவி, திரள். கும் + அல் = கும்மல். கும்மி = கை குவித்தாடும் ஆட்டம் கும் + அர் = குமர். குமர் + இ = குமரி. குமர் + அன் = குமரன். குமரன் - குமாரன். குமிழ், குமிழி = குவித்த நுரை, குவிந்த கட்டி. குமிழ் - சிமிழ் - திமில். குமி + அல் = குமியல், குமி - குவி. குவி - குவியல், குவால், குவவு. குவை = குவியல், திரட்சி. குவை - குகை. குப்பு - குப்பல் = குவியல். குப்புறு = குவி, தலைகீழாகு. குப்பி = குவிந்த மூடி. குப்பை = குவியல், தூசிக்குவியல். குப்பம் = குப்பைக்காட்டு ஊர். குப்பன் = பட்டிக் காட்டான். கும்பு = குவி, கூடு, குவிய வேகு. கும்பல் = கூட்டம். கும்பி = குவிந்த வயிறு. கும்பிடு = கைகுவி. கும்பம் = குவிந்த குடம். கும்பா = குவிந்த பாத்திரம். கூம்பு = குவி, பாய்மரம். கூப்பு = கை குவி. கொம்மை = திரட்சி. 54. கொள். கொள் = வாங்கு, பெறு, பிடி, மிகுதியாயெடு. கொள்வனை = பெண் கொள்ளல். கொள்ளை = சூறை, விலை. கொண்டி = கொள்ளை, மாட்டும் கொடுக்கு. கொள்ளி = நெருப்புப் பிடித்த கட்டை, நெருப்பு. கொளு = பொருட் குறிப்பு. கொளுவு = பொருத்து, மாட்டு. கொளுத்து = பற்றவை, பொருத்து, புகட்டு கொளை = பண்ணமைத்தல் கொள் - கோள் = கொள்ளுதல், கொல்லுதல், பிடித்தல், பெறுதல், கருத்து, கொள்கை, தீது சொல்லல். கோளாறு = கொள்ளும் வழி, செப்பஞ் செய்யும்நிலை, பழுது. கோளி = கொல்லும் பேயுள்ள மரம், கொள்வோன். 55. சிவ சிவல் = செந்நிலம். சிவலை = செங்காளை. (a) சிவம் = சிவப்பு, தீக்கடவுள், சிவன். சிவப்பு = சிவப்புக்கல், கோபம். சிவம் - சிவன், சிவை = உமை சிவ - துவ - துவர் = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை. துவரை = சிவந்த பயறு. (b) சிவ - செம். செம்மை = செந்நிறம், ஒழுங்கு, நேர்மை. செக்கர் = செவ்வானம். செம்மான் = சக்கிலியன். செம்பு = சிவந்த உலோகம், அதனாற் செய்யப்பட்ட நீர்ப்பாத்திரம். செம்மல் = நேர்மையுள்ளவன், தலைவன். செப்பம் = சீரான நிலை. செவ்வை = செப்பம், சீர், செவ்வி = தகுந்த சமையம். செவ்வன் = செவ்வை. (c) சிவ - சே. சேந்தன் = சிவந்தவன், முருகன். சேய் = சிவந்தவன், குழந்தை, முருகன் சேயோன் = முருகன். 56. சுள் சுர் - சுள் = சுடற் குறிப்பு. சுள்ளை = செங்கல் சுடுமிடம். சுள்ளை - சூளை. சுள்ளி = காய்ந்த குச்சு. சுண்டு = வெந்து சுருங்கு, சுருங்கியது, சிறிய மாகாணிப் படி சுண்டுவிரல் = சிறிய விரல், சுண்டெலி = சிறிய எலி. சுண்டை = சிறிய காய். 57. சுர். சுர் = நெருப்புக் குறிப்பு. சுரீர், சுறீர் = நெருப்புக் குறிப்புகள். சுருசுருப்பு, சுறுசுறுப்பு = நெருப்புப்போல் வேகமாயிருத்தல். சுருக்கு, சுறுக்கு = திடுமெனச் சுடற் குறிப்பு. சுருத்து, சுறுத்து = உணர்ச்சி. சுரம் = காய்ச்சல், காய்ந்த பாலை நிலம். சுரன் = சூரியன், தேவன். சூரன் = சூரியன் சுரை = சுட்டு இடும் துளை, சிறுகுழல். சுரம் = துளையிற் பிறக்கும் ஒலி. சூர் = அச்சம். சூரன் = வீரன். 58. சுரி சுர் - சுரி = எரி, நீறாக்கு, சூட்டால் சுருங்கு அல்லது வளை சுரி + அணம் = சுரணம் - சுண்ணம் = நீறு. சுண்ணம் - சுண்ணாம்பு. சுரணம் - சூரணம். சுரி = சுருங்கு, வளை. சூறை = வளைந்து வீசும் காற்று, (சூறாவளி) கொள்ளை. 59. சுல் சுர் - சுல் = சூட்டால் வளை சுலவு - சுலாவு = வளை சுலவு - குலவு. சுலாவு - குலாவு. சுன்னம் = வட்டம். குலாலம் = வளைவு; குலாலன் = வளைத்து வனையும் குயவன், கொள்பு - கொட்பு = சுற்று. 60. சுரு. சுர் = சுரு. சுருங்கு = சூட்டால் ஒடுங்கு. சுருங்கை = இடுக்கமான கீழ் நில வழி. சுரங்கம் = சுருங்கை போன்ற குழி. சுருக்கு = குறுக்கும் முடிச்சு. 61. சுளி. சுள் - சுளி = சூட்டால் முகம் வளை. சுழி = வட்டமான மயிரொழுங்கு அல்லது நீரோட்டம் சுழி = மயிர்ச் சுழியுள்ளவன் செய்யும் குறும்பு. சுட்டி = சுழியன், குறும்பு. சுழல் = சுற்று. சுழல் - உழல் = வருந்து. 62. சுருள் சுரி - சுருள் = வளை சுருள் = ஓலைச் சுருள். சுருட்டை = வளைந்த முடி. சுருணை = சுருள். சுருள் - உருள். உருளி = சக்கரம். உருளை = ரோதை, உருண்ட கிழங்கு உருடை = ரோதை. உருண்டை - உண்டை. 63. சுடு. சுள் - சுடு. சுடலை = சுடுகாடு. சூடு = கடல். சூட்டிக்கை = சுறுசுறுப்பு சுடலையாடி = சிவன். 64. தெள் தெள் - தெள்ளு = மாவைத் தெளிவாக்கு, தூய்மையாக்கு. தெளி = தெளிவாகு, ஐயந்தீர், உருத்தேறு. தெளிவு = பதநீர். தெரி = தெளிவாக அறி, தெரிந்துகொள். தேர் = தெளிவுபெறு, திறம்பெறு, ஆராய். தேறு = தெளி, உருப்படு, தேர்வில் வெற்றிபெறு. தேறல் = தெளிவு, தேன். தேற்றம் = தெளிவு, உறுதி. தேற்றாங் கொட்டை = நீரைத் தெளிவாக்கும் ஒரு கொட்டை. தேன் = தெளிந்தது. தேன் - தீ - தீவு, தித்தி, தெவிட்டு 65. தேய். (a) தேய் - தேயு = தேய்ந்துண்டாகும் நெருப்பு. தேய்வு - தேவு, தேவன், தேவதை = நெருப்புத் தன்மையுள்ள தெய்வம், கடவுள். தேய் - தெய்வு - தெய்வம். தேவு - தே. (b) தேய் - தீ = நெருப்பு. தீ - தீமை, தீங்கு. தீம்பு = தீயின் தன்மை, பொல்லாங்கு. தீவம் - தீபம் = விளக்கு. தீ - தீய் = சுண்டு, காய், வாடு. 66. பகு பகு = வகு. (a) பகு + அல் = பகல் = நடு, நடுப்பகல், பகல்வேளை, பிரிவு. பகலோன் = சூரியன். பகல் - பால் = பிரிவு. பகு + ஐ = பகை = பிளவு, பிரிவினை. பகு + அம் = பக்கம் - பக்கல். பக்கம் = பகுதி, திதி. பகு + தி = பகுதி - பாதி. பகு + பு = பகுப்பு. பக்கு - பங்கு. பாகு - பாகம். பாக்கம் = பக்கம், ஊர்ப்பகுதி. பாகு - பாங்கு - பாங்கர். பாங்கு = பக்கம், தன்மை. பாங்கு + அன் = பாங்கன். (b) பகு - பா. பாத்தி = பகுக்கப்பட்ட செய்ப் பாகம். பாதீடு = பகுத்தல். (c) பகு - வகு. வகு + ஐ = வகை. வகு + பு = வகுப்பு. (d) பகிர் - வகிர். 67. பெள் பெள் = விரும்பு, காதலி. பெட்பு = விருப்பம். பெள் - பெண் = விரும்பப்படும் பால். பெள் + தை = பெட்டை - பெடை - பேடை - பேடு பேடு + அன் = பேடன் = ஆண்டன்மையுள்ள பெண். பேடு + இ = பேடி = பெண்டன்மையுள்ள ஆண். பெண் - பிணா - பிணவு - பிணவல். பிணா - பிணை. பெண் - பேண் = விரும்பு, விரும்பிப் பாதுகா. 68. பொள் பொள் = துளையிடு. பொண்டான் = எலி பொத்துக் கிளம்பும் வளை. (a) பொளி = வெட்டு, வரப்பு. பொள் - பொல். பொல் + அம் = பொல்லம் = ஒட்டை. பொள்ளாப் பிள்ளையார் = பொல்லாப் பிள்ளையார். பொக்கு = துளையுள்ளது, உள்ளீடற்ற தானியம், பொய் பொக்குவாய் = பல்லற்ற வாய் பொக்கு + அணம் = பொக்கணம் = பை. பொய் = உள்ளீடற்றது, மெய்யல்லாதது. பொ = துளையிடு. பொத்தல் = துளை. பொள் - போழ் = பிள, வெட்டு. பொழில் = வெட்டப்படுவது, சோலை. (b) போழ் = வெட்டு, துண்டு. போழ்து = இருளைப் பிளக்கும் சூரியன். போழ்து - பொழுது - போது = வேளை. 69. போ (a) போ = செல். போது = போ. போகு = போ. போக்கு = செல்லல், ஆதரவு. போக்கு - போங்கு = போகும் முறை, மாதிரி. (b) போதும் = செல்லும், வேண்டிய அளவாகும். போதிய, போந்த = அளவான, போதுமான. போகு = நீள். போது = விரிந்த அரும்பு. போந்தை = விரிந்த பனை ஓலை. போந்தை - பொத்தகம் - புத்தகம். 70. வள் வள் = வளை. வள்ளம் = வட்டக் கலம். வளாகம் = சூழ்ந்த இடம், வளார் = வளைந்த பிரம்பு. வளை = வளையல், வளைந்த சங்கு, வளைந்த உத்தரம், வட்டத் துவாரம். வளை + அல் = வளையல், வளை + வி = வளைவி. வளை + அம் = வளையம். வட்டம் = வளையம், வட்டக்காசு, வட்டி, பகுதி. வட்டி = வட்டக்காசு, கடனுக்குச் செலுத்தும் காசு, வளைந்த பெட்டி. வட்டில் = வட்டக் கலம். வட்டு = வட்டமான சில். வட்டகை, வட்டாரம் = இடப்பகுதி. வணங்கு = உடம்பு வளை. வழங்கு = வளைந்து கொடு வணர் = வளைந்த யாழுறுப்பு. வணங்கு - வாங்கு - வங்கு. வங்கி = வளைந்தது. வண்டி = வட்டச் சக்கரம், சக்கரத்தையுடைய சகடம். வண்டு = வளையல், வட்டமான வண்டு. வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில். பாண்டி = வட்டாடல். பாண்டில் = வட்டக் கிண்ணம், உருட்சியான எருது. பாண்டியன் = வீரன். வளி = வளைந்து வீசும் காற்று. வாளி = வளையம், வளைந்த பிடி, வளைந்துவிழும் அம்பு வாணம் = வளையும் வெடிவகை. வாணம் - பாணம் = அம்பு. 71. வெள் வெள் = வெள்ளையாகு. வெளி = வெள்ளையான இடம். வெட்ட = வெள்ளையான. வெள்ளாளன் = வெண்களமன். வெள்ளாட்டி = வெள்ளாளப்பெண், வேலைக்காரி. வெள்ளரி = வெண்கோடுள்ள காய். வெள்ளை = வெள்ளைத் துணி, சுண்ணாம்பு, கள்ளமற்றவன். வெள்ளந்தி = கள்ளமின்மை. வெள்ளம் = வெள்ளையான புது நீர். வெள்ளி = வெள்ளையான உலோகம், நட்சத்திரம். வெள்ளிலை - வெற்றிலை. வெள்ளில் - விள - விளா - விளவு = வெள்ளோடுள்ள பழமரம். வெளில் - வெளிறு = வெள்ளைமரம். வெளு = வெள்ளையாக்கு, துவை, அடி. வெள்கு - வெட்கு = நாணத்தால் முகம் வெளு. விளங்கு = ஒளிவிடு, புலனாகு. விளக்கு = விளங்கச் செய்வது. 72. வேகு. வே = வேகு, எரி. வேகம் = விரைவு, கடுமை. வெந்தை = வெந்த கீரை. வேம்பு = சூடான பழம் பழுப்பது. அல்லது வேனிலில் தழைப்பது. வேனல் = வெப்பம், வேனில் = கோடை. வெக்கை = வேனல், வெப்பு = சூடு, வெப்பு - வெப்பம். வெம்பு = வெயிலிற் காய். வெம்பல் = காய்ந்தபழம். வேது = சூடு, ஒத்தடம், வெதுவெதுப்பு = சூடு. வெதும்பு = சுடு, வேதனை = நோவு. வெம்மை = சூடு, கடுமை, விருப்பம். வெய்யில் - வெயில் = வெப்பமான ஔ 73. வேள் வேள் = விரும்பு. வேள் - வேண்டு = விரும்பு, கெஞ்சிக் கேள். வேள் - வேண் + அவா = வேணவா. வேட்கை = விருப்பம், தாகம், விடாய் = விருப்பம், தாகம். வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம். வேளாண்மை = விரும்பிச் செய்யும் உபசாரம். வேளாளன் = உழவன், வேளிர் = ஒரு குலத் தலைவன், குறுநில மன்னன். வேளாண் = உழவர் குடி. வேளான் = ஒரு பட்டம் வேளாட்டி = வேளாளப் பெண். வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம். வேண்மகன் - வேண்மான் = குறுநில மன்னன். வேட்டம், வேட்டை = விரும்பி விலங்கைப் பிடித்தல். வேட்டுவன், வேடுவன், வேடன் = வேட்டையாடுபவன். 2 போலிகை யுருப்படிகள் 1. அ (எழுத்தும் சொல்லும் சொல்லுறுப்பும் குறியும்) 1. எழுத்து அ1 a. பெ. n. தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து; first letter of the Tamil alphabet. வகை. உயிர்க்குறில் : short vowel. சொல்வகை : அங்காத்தலால் ஒரு மாத்திரை யளவொலிக்கும் அஃறிணைச் செவிப்புலப் பொருளாகிய தற்சுட்டொலிப் பெயர். வேற்றுமைப்பாடு. 2ஆம் வகை, 3ஆம் பிரிவு. எ-டு : அவ்வை, அவ்வால், அவ்விற்கு, அவ்வின், அவ்வது, அவ்வில். 2. சொல் அ2 a. பெ; n. 1 அழகு; beauty. "அவ்வாய் வளர்பிறை சூடி" (பெரும் பாண். 412), 2. சிவன், Siva. "ஆரு மறியா ரகார மவனென்று" (திருமந். 1751). 3. திருமால் Vishnu "அவ் வென் சொற்பொருளாவான்" (பாகவ. சிசுபா. 20). 4. நான் முகன், Brahma. (தக்க யாகப். 65, உரை), 5. சுக்கு; dried ginger (பரி. அக.) 6. திப்பிலி; long pepper. (பரி. அக.) அ3 a. பெ. எ; adj. புறச்சுட்டு: demon. prefix: அ = அந்த. 1. சேய்மைச் சுட்டு; pref. to nouns, expressing remoteness. எ-டு: அப் பையன். 2. முற்பெயர்ச் சுட்டு; pref. to nouns, referring to their antecedents. எ-டு : பண்டைத் தமிழ கத்தை ஆண்டவர் சேர சோழ பாண்டியர். அம் மூவேந் தரும் இன்றில்லை. 3. உலகறி சுட்டு; pref. expressing world-wide eminence. 'அத்தம் பெருமான்' (சீவக. 221) 3. சொல்லுறுப்பு (இ; ind) அ4 a, அகச்சுட்டு: demon. base : முதனிலை - 1. சேய்மைச் சுட்டு; base of the dem. pron. expressing the remote person or thing எ-டு : அவன், அங்கு, அன்று. 2. முற்பெயர்ச் சுட்டு; base of the dem. pron. referring to its antecedent. எ-டு : ஓரூரில் ஓரரசன் இருந்தான். அவனுக்கு இரு மக்கள். 3. உலகறி சுட்டு: base of the dem. pron. expressing world-wide eminence. எ-டு: "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" (பழமொழி). 4. பொது நிலைச்சுட்டு: base of the dem. pron. expressing generality or indefiniteness. எ-டு "அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்" (பழமொழி). அ5 a. இன்மை யன்மை மறுதலைப் பொருளில் வரும் முன் னொட்டு pref. implying negation, privation or contrariety. எ-டு : இன்மை - அவலம் = வலம் இல்லாதது (துன்பம்), துயரம். அன்மை - அகாலம் = காலம் அல்லாதது. மறுதலை - அசுரன் = சுரனுக்கு மாறானவன். அ6 a. ஒரு சொற்சாரியை; a euphonic augment. எ-டு : வண்ணாரப்பேட்டை. அ7 a. மெய்யெழுத்துச் சாரியை; an enunciative augment. எ-டு: "மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்" (தொல். 46) "வல்லெழுத் தென்ப கசட தபற" (தொல். 19) அ8 a. ஓர் அசைச்சொல்; an expletive generally in poetry. எ-டு : "தன்வழிய காளை" (சீவக.494). அ9 a ரகரத்தில் தொடங்கும் சில சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டு; euphonic prothesis of some sanskrit words beginning with ர. எ-டு: ரத்ந - அரதனம். அ10 இரக்கம், வியப்பு, துயரம் முதலியன உணர்த்தும் ஒரு குறிப்புச் சொல்லுறுப்பு: a part of an interjection expressing pity, wonder, grief etc. "உண்ணா ணொளிநிறா னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அ ஆ இழந்தானென் றெண்ணப் படும்" (நாலடி. 9) என்னுஞ் செய்யுளில் 'அ ஆ' இரக்கப் பொருளில் வந்தது. அ11 a. ஒரு பலவின்பாற் பெயரீறு; a neut. pl. noun suf. எ-டு: சில பல. அ12 a. ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மை யுருபு genitive neut. pl. ending எ-டு: என கைகள். அ13 a. ஒரு பலவின்பால் வினைமுற்றீறு; a neut. pl. verbal ending. எ-டு: வந்தன. வந்த. பெரியன. பெரிய. அ14 a. ஒரு வியங்கோள் வினை யீறு; an opt. verbal ending. எ-டு: வரப்புயர. வியங்கோள் வினையெல்லாம் முற்றே. அ15 a. இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்ச வீறு a rel. participial ending. எ-டு: வந்த, வருகின்ற. அ16 a. ஒரு (குறிப்புப்) பெயரெச்ச வீறு; an adj. ending. எ-டு, நல்ல, சிறிய. அ17 a. ஒரு நிகழ்கால (எதிர்காலப் பொருட்டு) வினையெச்ச வீறு; an infinitive suf. எ-டு: உண்ண. அ18 a. ஒரு சொல்லாக்க ஈறு; formative particle. எ-டு: குல்-கல்-கல, பிள்-பிள. அ19 a. சில பெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம்; shortening of 'an' ending certain nouns எ-டு: இரா-இர, களா-கள, நிலா-நில, புறா-புற. அ20 a. குறிலில் இறும் வண்ணப்பாட்டுச் சீர்களின் அல்லது அசை களின் வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு; ending of rhythmatic patterns of metrical feet and syllebles ending in a short vowel. எ-டு: தன, தனன, தான, தத்த, தந்த, தய்ய, தனத்த, தனந்த. அ21 a. நெடுங்கணக்குப் பெயருறுப்பு: part of a name of the alphabet. 'அஆ' = நெடுங்கணக்கு. எ-டு: உனக்கு 'அஆ' தெரியுமா? இதை 'அ'ன 'ஆ'வன்னா என்றது பண்டை வழக்கு. அ22 a. உகரமுதல் திரிபு சொல்லாக்கத்தில் உகரமுதல் அகர முதலாகத் திரிவதுண்டு. எ-டு: உகை (செலுத்து) - அகை, குட்டை - கட்டை, குடும்பு - கடும்பு, குடை(தல்) - கடை(தல்), சுரி (வளையல்) - சரி, துளிர் - தளிர், துணை- தனை (எத்துணை-எத்தனை, வருந்துணையும் - வருந்தனையும்), நுரை (வெண்மை) - நரை, புரி - பரி(வளை), புரம் (உயர்ந்த இடம் அல்லது கட்டிடம், எ-டு: பரவெளி, கோபுரம்) - பரம் - வரம் -வரன் (மேலான வீட்டுநிலம்), முடங்கு - மடங்கு, முடி - மடி (இற) முயங்கு - மயங்கு. இத் திரிபினால், சில சொற்களின் மூலத்தையும் சில சொற்களைப் புனையும் வகையையும் அறியலாம். 4. குறி அ23 a.1. எட்டு என்னும் எண்ணின் குறியாக 'அ' சுழியின்றி எழுதப்படுவது; symbol of the number eight, written without the loop. 2. ஐம்புள்ளுள் (பஞ்சபட்சியுள்) ஒன்றாய் வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து; letter representing the vulture one of the five astrologically important birds. அ24 a. மொழி முதல் எழுத்துகளுள் ஒன்று. எ-டு: அவன் வரலாறு 1. எழுத்து : ஆ-அ. அகரம் ஆகாரத்தின் குறுக்கம். உயி ரொலிகளெல்லாம் பெரும்பாலும் இயற்கையாக நெடிலாகவே தோன்றிப் பின்பு குறுகின. இதன் விளக்கத்தை நெடுங் கணக்கு என்னும் உருப் படியிற் காண்க. 2. சொல் : அம் = அழகு. அம்-அ2. அ2 = எழுத்துகட்கு முதலாகிய அகரம் போல் உலகங்கட்கு முதலாகிய இறைவன். "அகர முதல வெழுத்தெல்லா மாதி ðèõù¢ ºîø¢«ø »ô°." (குறள். 1) இறைவனைக் குறிஞ்சி நிலத்துச் சேயோன் வழிபாட்டினர் சிவன் என்றும் முல்லை நிலத்து மாயோன் வழிபாட்டினர் திருமால் என்றும், குறித்தனர். கி.மு. 1500-ஆம் ஆண்டுபோல் நாவலந் தேயத்திற்குட் புகுந்த சிறு தெய்வ வேள்விமத ஆரியர், சிவநெறியும் திருமால் நெறியும் ஆகிய இரு தூய தமிழ் மதங்களையும் ஆரியப்படுத்தற்கு முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கையைப் புகுத்தி, நான்முகன் (பிரமன்) என்னும் படைப்புத் தெய்வத்தைப் புதுவதாகப் படைத்து, அத் தெய்வத்தையும் அகரத்தாற் குறித்தனர். சுக்கு, திப்பிலி என்னும் மருத்துவச் சரக்குகள், ஏதேனுமொரு கரணியம் பற்றி அகரம் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம், அதைப் பிற்காலத்தார் 'அ' (அ2) என்று குறித்திருக்கலாம். (புறச்சுட்டு ஆ = அந்த. "ஆயீரியல" என்று (தொல். 17) செய்யுள் வழக்கிலும், ஆயாள் (மலையாளம்), ஆவூரு (தெலுங்கு) என்று உலக வழக்கிலும், ஆகாரம் சொல்லாகவே வழங்கிவருதல் காண்க. ஆ - அ3. 3. சொல்லுறுப்பு ஆ(அகச்சுட்டு)-அ4 . ஆ-ஆகு-ஆங்கு-அங்கு, ஆது-அது. அல் - அ5. ஓ.நா. நல் - ந. அ6 (சொற்சாரியை) பெயரெச்ச வீறா யிருக்கலாம். அ7 (எழுத்துச் சாரியை) நெடுங்கணக்கின் முதன்மையும் பலுக் கெளிமையும் பற்றியது. அ8 (அசைச்சொல்) குறிப்புச் பெயரெச்ச வீறாயிருக்கலாம். அசைச் சொற்களெல்லாம் பொருள் குன்றிய அல்லது இழந்த சொற்களே. அ9 (அயற்சொல் முன்னொட்டு) பலுக்கெளிமையும் ஆட்சியும் பற்றியது. பலுக்கு=உச்சரிப்பு அ10 (இரக்கக் குறிப்பு) இயற்கை பற்றியது. ஆ - அ. ஒ.நா : E. ha. hah. அ11 (பலவின்பாற் பெயரீறு) சுட்டாட்சி பற்றியது. அ12 (ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மையுருபு) பலவின் பாற் குறிப்பு வினைமுற்றீறு. கைகள் என- என கைகள் (சொன் முறை மாற்று). அ13 (பலவின்பால் வினைமுற்றீறு) சுட்டாட்சி பற்றியது. அ14 (வியங்கோள் வினைமுற்றீறு) அல்லீற்றுத் தொழிற்பெயரின் ஈறுகேடு. செய்யல் - செய்ய செயல் - செய. "ªñò¢ò¤ù¢ Þòø¢¬è ¹÷¢÷¤ªò£´ 郎ôòô¢." (தொல். நூன்.15) "Üð¢ªð£¼÷¢ Ãø¤ù¢ ²ì¢®è¢ Ãøô¢." (தொன். சொல். கிளவி. 36) "ñè¢èì¢ ðî® ªòùô¢." (குறள். 196), இவற்றில் தொழிற்பெயரே வியங்கோளாய் நிற்றல் காண்க. அ15 (இறந்தகால நிகழ்காலத் தெரிநிலைப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. செய் = செய்கை. செய் + அது = செய்யது - செய்து = செய்கையு டைய - வன் - வள் - வர் - து - வை. செய்கையுடையவன் - செய்தவன் = செய்தான். வினையுடைமை வினை முடிந்தமையையுணர்த்தும். உண்டு என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று, இன்று இருதிணை ஈரெண் மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்குவது போன்றே, அது என்னும் சுட்டுச் சொல்லை ஈறாகக் கொண்ட செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினைச் சொல்லும், முதற்காலத்தில் வழங்கிற்று. உள் + அது = உள்ளது. உள் + து (அது) = உண்டு. செய்து + அ = செய்த = செய்த - வன் - வள் - வர் - அது - வை ஆன அந்த. செய்து என்னும் வாய்பாட்டு வினைச்சொல் முதற்காலத்தில் முற்று வினையாகவும், பின்னர் முற்று வினையும் எச்சமுமாகவும் வழங்கி, அதன்பின் ஐம்பாலீறு பெற்ற காலந் தொடங்கி எச்சமாகவே வழங்கி வருகின்றது. செய்து என்னும் இறந்தகால வினைச்சொல் போன்றே, செய்கின்று என்னும் நிகழ்கால வினைச்சொல்லும் அகரவீறு பெற்றுப் பெயரெச்சமாகும். செய்கின்று + அ = செய்கின்ற - செய்கிற. செய்கின்று என்னும் வாய்பாட்டு வினைச் சொல் எச்சப் பொருளில் வழக்கற்றது. வினைச்சொல் வகைகளும் அவற்றின் இடைநிலைகளும், ஈறுகளும், அவற்றிற்குரிய இடங்களில் விரிவாக விளக்கப்பெறும். அ16 (குறிப்புப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. அ17 (நிகழ்கால வினையெச்சவீறு) அல்லீற்றுத் தொழிற் பெய ரின் ஈறுகேட்டால் நேர்ந்தது. செய்யல் (வேண்டும்) - செய்ய (வேண்டும்). "«õø¢Á¬ñ ñ¼é¢è¤ù¢ «ð£ø¢øô¢ «õí¢´ñ¢." (தொல். எழுத். தொகை. 14) அ18 பொருள் வேறுபாடு பற்றியது. அ19 பலுக்கெளிமை நோக்கியது. அ20 அகரத்தின் முதன்மையும் மாத்திரையும் பற்றியது. அ21 முதற்குறிப்பு. 4. குறி அ23 (எட்டென்னும் எண்குறியும் வல்லூற்றின் குறியும்) எண்வகைப்பட்ட பொருளின் அல்லது பொருட்டொகுதியின் பெயர் முதலெழுத்தாகவும், வல்லூற்றின் பெயர் ஒன்றன் முதலெழுத் தாகவும் இருக்கலாம். இருபெயரும் இறந்துபட்டன போலும். சிறப்புக் குறிப்பு எழுத்துக்களை யெல்லாம் உயிரும் மெய்யும் எனக் கூறுபடுத்தி யும், உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பிறப்பும் ஒலியும் பற்றி முறைப்படுத்தியும், உயிருக்கும் மெய்க்கும் போன்றே உயிர்மெய் கட்கும் வேறு வரிவடிவமைத்தும், வண்ணமாலை (alphabet) முதன் முதலாக அமைக்கப் பெற்றது தமிழிலேயே. உயிரும் மெய்யும் மட்டுங் கொண்டது குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யுங் கொண் டது நெடுங்கணக்கு என்றும், பெயர்பெறும். இருவகைக் கணக்கிலும் அகரமே தமிழின் முதலெழுத்தாம். வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த பின்னும், நீண்டகாலம் எழுத்தின்றித் தம் முதனூலாகிய வேதத்தை வாய்மொழியாகவே வழங்கி வந்ததனால், அஃது 'எழுதாக் கிளவி' எனப்பட்டது. தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே, முதலிற் கிரந்த வெழுத்தையும் பின்பு தேவநாகரி யையும் 'அவர்' அமைத்துக் கொண்டனர். இற்றைத் தமிழெழுத்திற்கும் அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்திற்கும் யாதொரு தொடர்பு மில்லை. இதன் விளக்கத்தை 'நெடுங்கணக்கு' என்னும் உருப்படியிற் கண்டுகொள்க. கி.மு. 2ஆம் நூற்றாண்டினரான திருவள்ளுவர் 'அகரமுதல தமிழ் எழுத்தெல்லாம்' என்னாது "அகர முதல எழுத்தெல்லாம்" என்று பொதுப் படக் கூறி யிருப்பதால், தென்னாட்டுத் தமிழெழுத்தோடு அதன் வழிப் பட்ட கிரந்த வெழுத்தையும், வடநாட்டுப் பிராமி யெழுத்தையும் அவர் அறிந்திருத்தல் வேண்டும். 'குவா குவா'வென்று அழுவதாகச் சொல்லப்படும் குழவி வாயின் முதலொலியை 'அஆ, அஆ' என்று அழும் ஒலியாகவும் கொள்ளலா மெனினும், அது முழைத்தல் மொழியைச் (inarticulate speech) சேர்ந்த வொலியாகலான் இழைத்தல் மொழியைச் (articulate speech) சேர்ந்த அஆ வொலியாகாது. அத னாலேயே அகர முதல மொழியெல்லாம் என்னாது "அகர முதல எழுத்தெல்லாம்" எனக் கூறினார் திருவள்ளுவர். பினீசியம், எபிரேயம், அரபி, கிரேக்கம், இலத்தீனம், ஆங்கிலம் முதலிய மேலை மொழிகளின் குறுங்கணக்கிலும் அகரமே முதலெழுத்தாம். ஆங்கில அகரம் தமிழகரத்தை யொத்து நேராகவும் ஒலிக்கும்; அதை யொவ்வாது கோணையாகவும் ஒலிக்கும். அக் கோணையொலி, வடார்க் காட்டு ஆம்பூர் மக்கள் காய் என்னும் சொல்லிலுள்ள ஆகாரத்தையொ லிப்பது போன்றது. அவ்வொலி செந்தமிழிற் கொள்ளப்படாது. எழுத்திற் குரிய நானிலைகளுள் இறுதிநிலை யடைந்த எல்லா மொழியெழுத்துக் களும், அகரத்தையே முதலாக வுடையன. சென்னைப் ப. க. க. த. அகரமுதலிச் சீர்திருத்தம் செ.ப.க.க.த. அகரமுதலி, (1) வடசொல் முன்வைத் தெழுதப்படும் அகர முன்னொட்டிற்கு ரங்கம் - அரங்கம் என்று எடுத்துக் காட்டியும். (2) இன்மை அன்மை மறுதலைப் பொருளில் வரும் அகரத்தை 'ந' என்னும் வடமொழி அவ்வியயத்தின் திரிபென்று கூறி, அதற்கு முறையே அரூபம், அப்பிராமணன், அதர்மம் என்று எடுத்துக் காட்டியும் உள்ளது. அரங்கம் என்னும் சொல் அறுக்கப்பட்டது என்னும் வேர்ப் பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆற்றிடைக் குறையைக் குறிக் கும் தூய தென்சொல் என்றும், ஸ்ரீரங்கம் என வழங்கும் திருநகரின் பழம்பெயர் திரு வரங்கம் என்னும் தென்சொல் வடிவே யென்றும், அரங்கம் என்னும் தென் சொல்லே வடமொழியில் ரங்க எனத் திரிந்த தென்றும், அரங்கம் என்னும் உருப்படியில் வெள்ளிடை மலையென விளக்கப்பெறும். அல் என்னும் தென்சொல்லே, அன் எனத்திரிந்து வடமொழியில் 'ந' என இலக்கணப் போலியாக மாறியுள்ளதை, அல் என்னும் உருப் படியிற் கண்டு தெளிக. இனி, அகரச் சாரியைக்கு எடுத்துக்காட்டிய 'தமிழப் பிள்ளை' என்னும் கூட்டுச் சொல்லையும் தமிழ் + பிள்ளை எனப் பகுக்காது தமிழன் + பிள்ளை யெனப் பகுத்து, நிலைமொழியீறு கெட்டு வருமொழி முதல் வலிமிக்க புணர்ச்சியாகக் கொள்வதே தக்கதாம் எனவும் அறிக. இத்தகைய மறுப்பெல்லாம், இனிவரும் உருப்படிகளில் திருத்தம் என்னும் தலைப்பின் கீழேயே குறிக்கப்படும். மெய்யெழுத்துச் சாரியை. ஒரு சொல்லாக்க ஈறு, சிலபெயர்களின் ஆகார வீற்றுக் குறுக்கம், வண்ணக் குழிப்பு வாய்பாட்டீறு, நெடுங் கணக்குப் பெயருறுப்பு என்னும் ஐம்பொருளும் சென்னை யகர முதலியிற் குறிக்கப் பெறவில்லை. 2. அவரை அவரை avarai. வழங்கும் இடம் - தமிழகம். சொல் வகை : அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். இயல் விளக்கம் - பெரும்பான்மை பச்சை நிறமும் சிறுபான்மை வெண்ணிறமும் செந்நிறமுள்ளதும், பெரும்பாலும் தட்டை வடிவானதும், இரு விரலம் (inches) முதல் அறுவிரலம் வரை நீண்டு பல வகைப்பட்டி ருப்பதும், வீட்டுப் புறங்களில் விளைவிக்கப்படுவதும், நளி (கார்த்திகை) சிலை (மார்கழி) சுறவ (தை) மாதங்களில் ஊர் கொடியாகவும் (creeper) சிறப்பாக இவர் கொடியாகவும் (climber) படர்கொடியிற் காய்ப்பதும் கறி வகையாகச் சமைக்கப் படுவதும் உடல் நலத்திற்கேற்றதும், சுவையுள் ளதுமான காய் வகை a kind of bean including many varieties. மறுபெயர்களும் வழங்கும் இடமும்: ºî¤¬ó (ð.கு.ê¤.), ê¤è¢è® (ð¤é¢.), இவ்விரு பெயரும் இலக்கிய வழக்கு. முதிரை என்பது துவரையையுங் குறிக்கும். "கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் - தங்களுக்கும் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழுறையா ªõí¢ºî¤¬óð¢ ð¤ë¢ê£ñ¢ õ¤î¤." (ð.கு.ê¤. 697) இதன் பொருள் - விதை முதிராத வெள்ளையவரைப் பிஞ்சு, இரா வுணவிற்கும் மருந்துண்பவர்க்கும் ஊதை (வாதம்) முதலிய முந்நாடிக் குற்றம், புண், காய்ச்சல் விழிக்குள் முதிர்ந்த கோழைப் பில்லம் ஆகிய நோயுடையார்க்கும் நல்லதாம். வேற்றுமைப்பாடு. முதல்வகை. எ-டு : அவரையை, அவரையால், அவரைக்கு, அவரையின், அவரையது, அவரையில். பழமொழி : 'Üõ¬ó «ð£ì¢ì£ô¢ ¶õ¬ó º¬÷袰ñ£?' 'ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்.' சொல்லமைவு 'அம்' வேர் அல்லது அடி முதனிலை. 'அவல்', அமல் என்பதன் திரிபாகி மேன் முதனிலையாக நிற்கும் தொழிலாகுபெயர். 'ஐ' பண்பி யீறு. லகரம் ரகரமானது போலித் திரிபு. சொல் வரலாறு : அம்முதல் = அமுங்குதல், அமுக்குதல். அம் - அம்மி = அமுக்கி யரைக்குங் கல். அம் - (அமு) - (அமுகு) - அமுங்கு - அமுக்கு - அமுக்கம் அமுக்கு - அமுக்கல் - அமுக்கலான் = கொப்புளங்களை அமுங்கச் செய்யும் தழை. அம் - அமிழ் - ஆழ் - அழுந்து - அழுத்து - அழுத்தம். அமுக்குவதனாலும் அழுத்துவதனாலும் ஓரிடம் பள்ளமாகும்; ஒரு பொருள் தட்டையாகும். அம் - அமல் - அவல் = 1. பள்ளம். "Üõô¤ö¤ò¤Âñ¢ ñ¤¬ê «òø¤Âñ¢." (புறம். 102 : 3). 2. விளைநிலம். 3. குளம். 4. தட்டையாக இடித்த நெல்லரிசி அல்லது கம்பரிசி. பள்ளக் கருத்தினின்று குள்ளக் கருத்துந் தோன்றும். ஒ.நா : பள் - பள்ளம். பள் - பள்ளை = 1. குள்ளம். 2. பள்ளையாடு. பள்ளையன் = குறுகித் தடித்தவன். பள்ளையாடு = குள்ளமான ஆடு. குள்ளக் கருத்தினின்று சப்பைக் கருத்துத் தோன்றும். ñ - õ., போலி ஒ.நா : செம்மை - செவ்வை. சும - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை. அவல் - (அவலை) - அவரை = சப்பையான அல்லது தட்டை யான காய்வகை. ஒ.நா : அயில் - அயிலை - அயிரை. ல - ர, போலி. அவரை வகைகளிற் சில உருண்டு திரண்டிருப்பினும், பெரும் பான்மை நோக்கி அவை விலக்காகக் கொள்ளப்பட்டன. மேலும், பிஞ்சு நிலையிலேயே சமைக்குமாறு மருத்துவ நூல்கள் கூறுவதால், எல்லா வகைகளும் பிஞ்சு நிலையில் சப்பையாகவே யிருத்தலை நோக்குக. ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்பு பற்றியே பெயர் பெறுவது மரபு. வாழை, கத்தரி, முருங்கை, வெண்டை, பூசணி, சுரை, பீர்க்கு, புடலை, பாகல் முதலிய பிற காய்வகைகள் எல்லாவற்றோடும் ஒப்புநோக்கி, அவரை யொன்றே தட்டையா யிருத்தலைக் கண்டறிக. பள்ளம் என்பது ஒன்றன் மேல்மட்டத்தின் தாழ்வு; குட்டை என்பது ஒன்றன் உயரத்தின் தாழ்வு; சப்பை என்பது ஒன்றன் திண் ணத்தின் அல்லது புடைப்பின் தாழ்வு. இம் முக் கருத்தும் ஓரினப்பட்டன. ஆழமில்லாத கிண்ணம் தட்டம் எனப் பெயர் பெற்றிருத்தல் காண்க. பொருள்வகை : (1) ஆட்டுக் கொம்பவரை = ஆட்டுக் கொம்புபோல் வடி வுள்ள அவரை; kind of bean that resembles goat's horn in shape (2) ஆரால் மீனவரை = ஆரால் மீன் போன்ற வடிவுள்ள அவரை; kind of bean that resembles sand - eel in shape. (3) ஆனைக் காதவரை = ஆனைக் காது போல் வடிவுள்ள அவரை; kind of bean that resembles elephant's ear in shape. (4) கணுவவரை = கொடியின் கணுக்களிற் காய்க்கும் அவரை; kind of bean that brings forth fruits at joints also. (5) கொழுப்பவரை = குட்டையாகக் கொழுத்த சதையுள்ள அவரை; kind of bean that is short and fleshy. (6) கோழியவரை (கோழிக்கா லவரை) = கோழி விரல் போன்ற வடிவுள்ள அவரை; canavalia gladiata (7) சிவப்பவரை - செவ்வவரை = செந்நிற அவரை; a red variety of bean, lablab cultratus. (8) சிற்றவரை - மணியவரை = a small variety of bean. (9) தீவாந்தர வவரை = கீழைத் தீவினின்று வந்த அவரை; a bean from the eastern islands (w). (10) நகரவரை - dolichos rugosus (W) (11) பாலவரை - வெள்ளவரை; a white variety of bean, "அவரைக் கொழுங்கொடி விளர்க்காய் «è£ì¢ðî ñ£è." (புறம். 120: 10-11) (12) பேரவரை - a large variety of bean. (13) முறுக்கவரை = திருகல் முறுகலாகவுள்ள அவரை; psopha carpus tetragonolobus. இனப்பொருள்கள் (1) கப்பல் அவரை = french beans (2) காட்டவரை = கொழுப்பவரை போன்றதாயுள்ள மொச்சை (சேலம் வழக்கு); wild bean, lablab vulgaris. வீட்டுப் புறத்தில் விளைவிக்கப்படும் அவரையை நோக்கி மொச்சை காட் டவரை எனப்பட்டது. இதனால், அவரைக்கு வீட்டவரை என ஓர் அடைமொழிப் பெயர் பெறப்படும். வீட்டவரைக்கும் காட்டவரைக்கும் வேறுபாடு. வீட்டவரை காட்டவரை (1) வீட்டுப் புறத்தில் காட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது விளைக்கப்படுவது. (2) கொடியாகப் படர்வது குத்துச் செடியாக வளர்வது. (3) இளங்காய் கறியாகச் முற்றிய காய் அவித்துச் சமைக்கப்படுவது தின்னப்படுவது. (4) தோல் மெல்லியது தோல் வல்லியது. (3) அயல்நாட்டு (சீமை) அவரை = மருதங்காய் போன்ற வடிவுள்ளதும் நீண்டதுமான வெளிநாட்டுக் காய்வகை; a kind of foreign vegetable. அயல் நாட்டை அல்லது மேல் நாட்டைப் பொது மக்கள் 'சீமை' என்னும் வடசொல்லாற் குறிப்பர். இங்கு வடசொல் என்றது வடநாட்டுச் சொல்லை. (4) சீனியவரை - கொத்தவரை - குத்தவரை = கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்வகை; a species of pulse whose fruits are in bunches. (5) சுடலையவரை = சுடுகாட்டுப் பக்கத்தில் இயற்கையாக விளைவதும், சீனியவரை போன்றதும், உண்ணப் படாததுமான காய் வகை; a species of inedible bean growing wildly near burial or burning grounds. இது பேயவரை யெனவும் படும். (6) பாடவரை - வாளவரை - தம்பட்டவரை - சாட்டவரை = வாள்போல் நீண்டு பட்டையாக விருக்கும் காய்வகை; sword-bean, canavalia ensiformis. இனச்சொல்: அவரை தெ(லுங்கு) - சிக்குடு, க(ன்னடம்) - அவர, அவரி, ஆவரே, அமரே; ம(லையாளம்) - அவர, அமர; கோ(த்தம்) - அவர் துட(வம்) - எவிர் (f); து(ளுவம்) - அவரெ, அபரெ, lablab vulgaris அவடெ. அபடெ. ஆவடெ (a kind of bean) அவரைக் காய் என்பது மலையாளத்தில் அவரக்க எனத் திரிந்துள்ளது. அமரக்க என்பது அவரக்க என்பதன் திரிவு. துளுச் சொற்களுள் ரகரமுள்ளவை ஒருவகையையும் டகரமுள் ளவை மற்றொரு வகையையும் குறிப்பனவாகப் பரோ எமனோ திரவிட அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் துளு அகரமுதலியில் அங்ஙனங் குறிக்கப்படவில்லை. இணைமொழி: அவரை துவரை. சிறப்புக் குறிப்பு "அவரை கொய்யுந ரார மாந்தும்" (புறம். 215: 5). "சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு" (புறம். 335:5) என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, மொச்சையும் அவரை யெனப் பட்டதென்றோ, கருத இடந்தரும். கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்தி ருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை. சீர்திருத்தம்: சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி, கோழியவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது. ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெற வில்லை. மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர். 3. இஞ்சி சொல் : இஞ்சி வழக்கிடம் : இஞ்சி1 - இலக்கியம் இஞ்சி2 - தமிழகம் சொல்வகை : பெயர்ச்சொல் இஞ்சி1 = கட்டிட வடிவான இடப்பெயர் இஞ்சி2 = அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். வேற்றுமைப்பாட்டு வகை. முதல்வகை (சாரியை யில்லது), எ-டு: இஞ்சியை, இஞ்சியால், இஞ்சிக்கு, இஞ்சியின், இஞ்சியது, இஞ்சியில். இயல் விளக்கம் இஞ்சி1 - செம்புருக்கிச் சாந்தாக வார்த்து இறுகக் கட்டிய திண் ணிய கோட்டை மதில் வகை. இஞ்சி2 - பித்தத்தைப் போக்குவதும், மருந்துகளிலும் கறிவகை களிலும் பெரும்பாலும் கூட்டுச் சரக்காகச் சேர்க்கப்படுவதும், கார்ப்புச் சுவையுள்ளதுமான, கிழங்குள்ள பூண்டுவகை. பொருளும் ஆட்சி மேற்கோளும் இஞ்சி1, பெ. திண்ணிய கோட்டை மதில் வகை "கொடுங்க ணிஞ்சி" (பதிற்றுப். 16:1). "உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கு நூல்" (743) என்னுந் திருக்குறளிற் குறித்துள்ள திண்மை என்னும் வகைப்படி. "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" யே (புறம். 201) இஞ்சி என்னும் மதில் வகையாகும். இஞ்சி2, பெ. 1. இஞ்சிப் பூண்டு; ginger-plant. "மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து" (சிலப் 10:74). 2. இஞ்சிக் கிழங்கு; ginger-root. ஆட்சி மேற்கோள் : இஞ்சி1 - "செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி" (கம்பரா. யுத்த. 160) செ.சொ.பி. அகரமுதலியில் இன்னும் எண் மேற்கோள் காட்டப் பெறும் விரிவஞ்சி அவை இங்கு விடப்பட்டுள. இஞ்சி வகை: இஞ்சி மாங்காய் அல்லது மாங்காயிஞ்சி. ஊறுகாயாகப் பயன்படுவது; அயபேடி - பைபேநச. கூட்டுச் சொல்: இஞ்சிக் கிழங்கு பெ. ginger-root. இஞ்சித்தேறு, பெ. இஞ்சித் துண்டு; small piece of green ginger. இஞ்சிப்பாகு, பெ. இஞ்சி இளகிய (லேகிய) வகை; a kind of ginger electuary. இஞ்சிப் பாவை, பெ. இஞ்சிக் கிழங்கு (மலைபடு. 125, உரை). ginger, as bearing the shape of a doll. இஞ்சி யூறுகாய் = காயச் சரக்குச் சேர்த்து எண்ணெயில் ஊற வைத்த இஞ்சி, ginger-pickle இஞ்சி வேர், பெ. இஞ்சிக் கிழங்கு ginger - root. இஞ்சிச் 'சுரசம்' என்பதை இஞ்சிக்கருக்கு என்றும், இஞ்சி 'முரப்பா' என்பதை இஞ்சி வடிப்பு என்றும், சொல்லலாம். மரபு வழக்கு : இஞ்சி தின்ற குரங்குபோற் பஞ்சரித்தல்(தொந்தரவு செய்தல்). தொடர்மொழி : இஞ்சி தின்ற குரங்கு. உவமைப் பழமொழி : இஞ்சி தின்ற குரங்கு போல. சொல்லமைவு : இஞ்சி (இரண்டிற்கும் பொது. 'இள்' வேர்; 'இஞ்சு' முதனிலை; 'இ' வினைமுதலீறு. சொல் வரலாறு: இஞ்சி1 : உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல். உல் - உர் - உறு. உறுதல் = பொருந்துதல். செறிதல், வலியுறுதல். உறு - உறுதி = திண்ணம், வலிமை. உர் -உரம் = வலிமை உறு - உற. உறத்தல் = செறிதல், இறுகுதல். "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" (தொல்-சொல்.348). உறந்த விஞ்சி = இறுகிய மதில். àô¢ - à÷¢ - Ü÷¢ = ªêø¤¾ (î¤õ£.), வன்மை (சூடா.) அள்ளல் = நெருக்கம். அள்ளாகுதல் = செறிதல். அள்ளிருள் = செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல் (சீவக. 614). உள் - இள் - (இய்) - (இய்ஞ்சு) - இஞ்சு. ஒ. நோ: குள் - (குய்) - (குய்ஞ்சு) - குஞ்சு. புள் - பிள் - பிய் - (பிய்ஞ்சு) - பிஞ்சு. கொள் - கொய். தொள் - தொய். பொள் - பொய். இஞ்சுதல் = செறிதல், இறுகுதல், திணிதல். இஞ்சு - இஞ்சி = திணிந்த மதில் வகை. பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட் டமைத்ததாகவும், பகைவரால் எளிதாகக் தாக்க முடியாவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில், ஏனைவகை மதில் களினும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி யெனப்பட்டது. இஞ்சி2 : 'ஈ' அண்மையைச் சுட்டுமாறு உதட்டைப் பின்னுக்கு இழுத் தொலிக்கும் உயிரொலி. ஈ - ஈல் - ஈர் - ஈர்த்தல் = இழுத்தல். ஈர்தல் = இழுத் தறுத்தல், பல்லாற் கடித்திழுத்து உரித்தல், இழுத்தல், அறுத்தல். ஈல் - இல் - இள் - இழு. ஒ.நா: கொள் கொம்பு - கொழுகொம்பு, கொள்நன் - கொழுநன். இழுத்தல் = பின்னிழுத்தல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல். இள் - (இய்) - (இய்ஞ்சு) - இஞ்சு. இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல், நிலத்தில் நீர் சுவறுதல். இஞ்சு - இஞ்சி = நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை, அஃதுள்ள பூண்டு. இஞ்சி காய்ந்து நீர் வற்றினாற் சுக்கு. இஞ்சி x சுக்கு. சுக்கு = நீர் சுண்டி வறண்டிருப்பது. சுள்ளுதல் (சுள்ளெனல்) = காய்தல், நீர் வற்றுதல். சுள் - சுள்கு - சுட்கு - சுக்கு. ஒ. நோ: வெள் - வெள்கு - வெட்கு. கொள் - கொள்கு - கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை. இனச்சொல்: (1) திரவிடம் : மலையாளம் - இஞ்சி, குடகம் - இஞ்சி. கோத்தம் - இஞ்ச், பிராகிருதம் (பாலி) - சிங்கி, சிங்கிவேர. (2) ஆரியம் : (சமற்கிருதம்) - ச்ருங்கவேர, பர்சி (பர்ஜி) - சிங்கிவேர. ME. gingivere, OFr gengibre, LL gingiber. L. zingiber, Gk. zingiberis, Skt. srngavera. E. ginger, (3) பிறமொழிக் குடும்பம் - மலாய் : இஞ்சிவேர். சிறப்புக் குறிப்பு : இஞ்சி தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைக்கப்பெற்றுவருவது, "செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக் காயங் கொண்டன" (மலைபடு. 125-6) "இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கை" (பதிற்றுப். 42: 10-11) "மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பாற்பகை யுறுக்கும்" (சிலப். 10 : 74 - 5) என்னும் பண்டையிலக்கியப் பகுதிகளால் அறியப்படும். தமிழகத்தி லிருந்து பண்டை நாளிலும் மேனாடுகட்கு ஏற்றுமதியான சரக்குகளில் இஞ்சியும் ஒன்றாகும். அது வேராயிருப்பதால் இஞ்சி வேரென்றும், கிழங்காயிருப்பதால் இஞ்சிக் கிழங்கென்றும், பாவை போன்றிருப்பதால் இஞ்சிப்பாவை என்றும் சொல்லப்படும். இஞ்சிவேர் என்னும் சொல்லே மேனாடுகளிற் பல்வேறு வடிவில் வழக்குப் பெற்றது. திருத்தம் சமற்கிருத ஆரியர் இஞ்சி யென்னும் தென்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்ட வேண்டி, ச்ருங்கவேர எனத்திரித்து மான்கொம்பு போன்றது எனப் பொருட் கரணியங் காட்டுவாராயினர். இது செயற்கை யானதும் பொருத்தமற்றதும் ஆகும் என்பதை, வரலாறு மட்டுமின்றிச் சொல்வடிவும் தெளியக்காட்டும். வடமொழியில் ச்ருங்க என்பது கொம்பு என்றுமட்டும் பொருள்படும். வேர என்பது உடம்பைக் குறிக்கும். இவ் விரண்டும் எங்ஙனம் இணைந்து இஞ்சியைக் குறிக்கும்? இற்றை யறிவியல்களைத் தெளிய வறிந்த மேனாட்டறிஞரும், சமற்கிருத - ஆங்கில அகரமுதலியிலும், இருபதாம் நூற்றாண்டு அகரமுதலியிலும், ஆக்கசுப்போர்டுச் சிற்றகரமுதலியிலும், திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலியிலும் சமற் கிருத ஆரியர் கூற்றையே தழுவியிருப்பது மிகமிக வியப்பிற்கிடமானதே. அவ் வகர முதலிகளுள்ளும், இருபதாம் நூற்றாண் டகரமுதலி இஞ்சி வேர் என்பதை மலையா (மலாய்)ச் சொல்லாகக் குறித்திருப்பது இன் னும் வியப்பானதே. இதற்குத் தமிழர் வெளிநாட்டினின்று வந்தேறிகள் என்று தவறாகக் கருதியிருப்பதே அடிப்படையாகும். வடநாட்டுத் திரவிடமொழியாகிய பர்சியில் சிங்கிவேர என்று வழங்குவதால் மட்டும், அது வடசொல்லாகிவிடாது. அம் மொழி அதைப் பிற்காலத்து வழக்கேற்றியிருக்கலாம். 4. பதி (1) சொல் :-பதி. (2) சொல்வகை :- (part of speech of word-class) - வினை. செயப்படுபொருள் குன்றாவினையும் (எ. வ.) செயப்படு பொருள் குன்றியவினையும் (எ. .). (3) புடைபெயர்ச்சி (conjugation) : 8ஆவது வகை. பதிகிறேன் (நி. கா.) பதிந்தேன் (இ. è£.), பதிவேன், (எ. கா.). (4) பொருளும் ஆட்சிமேற்கோளும் : (meanings and illustrative quotations.) செயற்பெயர் வடிவு : (gerunidial form) பதி - தல் = (செ. குன்றா வி.) 1. பதிவேட்டில் எழுதுதல், to register, enter in writing 2. பெயர்ப் பட்டியிற் சேர்த்தல், to take on the roll. (செ. குன்றிய வி.) 1. ஆழ்தல், to sink in, as the foot or a wheel in mud; to enter, penetrate, as into a soft body. வண்டிச் சக்கரம் சேற்றிற் பதிகிறது. (உலக வழக்கு). 2. தாழ்ந்திருத்தல், to be low-lying. as land; to be depressed, sunk, hollow, worn away. நிலம் பதிந்தி ருக்கிறது. (உ.வ.) 3. தங்குதல், to settle, abide; to perch, roost, as a bird, "பதிசென்று பதிந்தனன்"(தணிகைப்பு. பிரமன்.2). 4. நிலையாதல், to be permanent, as a post. எனக்கு அரண்மனையிற் பதிந்த வேலையில்லை. (நாஞ். உ. வ.) 5. ஊன்றுதல், to be absorbed, engrossed, involved, as the mind in any object. மனம் பாடத்திற் பதிகிறதா? (உ. வ.) 6. முத்திரை, எழுத்தச்சு முதலியன அழுந்துதல், to be imprinted, impressed, marked, stamped, engraven, indented. 7. அதிகாரம் பெறுதல், to be invested with power, authority. (W.). 8. இறங்குதல், to decline after meridinal transists; to be near setting, as a heavenly body; to descend, alight, as a bird. 9. விலை தணிதல், to be low, as price. விலையைப் பதியக் கேட்டான். (உ.வ.) 10. அமைதியாதல், to be mild, gentle or tractalle; to become submissive, modest or humble. பையன் பள்ளிக்கூடத்திற் பதிந்திருக்கிறான். (உ. வ.) 11. அஞ்சி யிணங்குதல் அல்லது பின்வாங்குதல், to quail, flinch. பெயரெச்சம் : (adjectival participle) இ. கா. பெ. பதிந்த நிலம், low land. செயற்பெயரும் தொழிற்பெயரும் : (gerund and verbal noun.) பதிதல், பதிகை, பதிவது, the act of registering, sinking etc. பதிவு, registration, sinking etc. தொழிற்பெயரும், தொழிலாகுபெயரும் : (verbal noun and metonymical verbal noun.) பதி = 1. பதிகை, penetration, transfixion, thrust. "நுண்ணிலைவேல் பதிகொண்டு," (சீவக. 1186). 2. பதியம், cluster of saplings planted temporarily. 3. நாற்று, sapling for transplantation. 4. பதிவிளக்கு, lamp fixed on a pot while exorcizing devils (W.). 5. à¬øõ¤ìñ¢, adobe, residence (î¤õ£.), "பதியிற் கலங்கிய மீன்" (குறள். 1116), 6. வீடு, home, house (திவா.) 7. கோயில், temple (சங். அக.) 8. குறி சொல்லும் இடம். an oracular shrine, "பதியிருந்த பதி யெல்லாம் பதிவாகச் சென்றேன்" (நாஞ். மருமக். மா.) 9. ஊர், town, city, village. "பதியெழு வறியாப் பழங்குடி" (சிலப். 1:15) 10. ஞாலம் (பூமி), the earth. (தைலவ. தைவ.) 11. குதிரை, horse. (அக. நி.) பதிவு = 1. அழுந்துகை, impression, indentation. 2. பள்ளம், lowness of a surface; depression. நிலம் பதிவாயிருக்கிறது. (உ. வ) 3. பதியம். cluster of saplings planted temporarily. 4. விண்மீன்களின் சாய்வு declination of a heavenly body. (W). 5. எழுவதற்கு முன்னுள்ள திங்கள் (சந்திரன்) நிலை, situation of the moon before rise. (W.) 6. பதுக்கம், stooping, crouching, lurking as a thief of a beast ready to spring on its prey; ambush. 7. மனம் ஊன்றுகை. engrossment, absorpion in an object or pursuit. 8. கணக்குப் பதிகை, registering, entering, as in account. 9. பதிவு செய்யப்பட்டது. that which is registered. 10. பதியப்பட்டது. registry, entry. 11. தீர்மானிக்கப்பட்ட செலவு, allotment, as in a budget. "இந்தக் கோவிலில் சங்கு ஊதுவதற்குப் பதிவு ஏற்பட வில்லை" (நாஞ். உ. வ.) 12. நிலைப்பு (நிலைவரம்), permanence. "இந்தவூரில் அவன் பதிவாயிருக்கிறான்" (உ. வ.) 13. வழக்கம், custom, habit. 14. அமைதி, submission, obedience, humility. "பதிவாய் நடந்துகொள்" (உ.வ.) 15. விலைத்தணிவு. lowness of price (W.). பதியம் = 1. நாற்று முடியை இரண்டொரு நாட்குச் சேற்றில் பதித்து வைக்கை, temporary planting of a cluster or saplings in mud. 2. ஊன்றி நடுஞ் செடி கொடி கிளை முதலியன, slip, shoot, graft. 3. இலைப்பாசி, a species of duckweed. "செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள்" (இரகு. நாட்டுப்.7). பதியம் - பதிகம் = "பதிகம் பரிக்குங் குழல்" (மறைசை. 17.) திரிசொற்கள் : (derivatives) பதிவுகாரன் = பெ. வாடிக்கைக்காரன், customer. பதி - பதம். பெ. 1. ஆழ வேரூன்றும் அறுகம்புல், bermuda grass (திவா.) 2. பதிவாக (பதுங்கி) இருந்து காக்குங் காவல், watch. (யாழ். அக.) 3. பதிவாக நகரில் திரிந்து ஆயும் மாறுகோலம், disguise (யாழ்.அக.) 4. மீன் வரும்வரை பதிவாக நிற்கும் கொக்கு, crane (யாழ். அக.) 5, சூடு தணிந்த நிலை, coolness. 6. ஈரம், dampness, moisture. (திவா.) "மாவெலாம் பதம் புலர்ந்த" (கம்பரா. உயுத். மூலபல. 79). 7. தண்ணீர் water (திவா.) 8. குளிர்ச்சியான கள், toddy, "மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி" (பொருந. 111). 9.(ñ¶õ¤ù¢) இனிமை; sweetness, gentleness. "வெங்குரு வரசர் பதம்பெற வெழுதி" (திருவாலவா 38:40) 10. இன்பம். joy, delight (சூடா.) 11. õù¢¬ñ, Å´ ºîô¤òù îí¤ï¢¶ àí¢ðîø¢°ñ¢ ¸è£¢îø¢°ñ¢ ãø¢ø 郎ô (ð袰õñ¢, õ.); proper consistency, required degree of hardness or softness, proper quality or fitness "சில்பத வுணவின்" (பெரும்பாண். 64). 12. (வெந்து உண்பதற்கேற்ற) சோறு (திவா.) 13. அவிழ், a grain of boiled rice (சூடா.) 14. உணவு cooked food (திவா.) "பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி" (சிலப். 28:189) 15. பொருள், thing, substance, wealth. ஒ. நோ: கூழ் = உணவு, பொருள், (யாழ். அக.) 16. (பதமான) மென்மை, softness. 17. இளம்புல், tender grass (பிங்) 18. ஏற்ற சமையம். fit occasion, opportunity, "எண்பதத்தா லெய்தல்" (குறள். 991). 19. பொழுது, time (பிங்.) 20. நாழிகை, Indian hour of 24 minutes (திவா) 21. தகுதி, suitability. 22. அழகு, beauty (W) 23. (தகுந்த) அளவை, measure (சங். அக.) 24. (தகுந்த) முயற்சி, effort (யாழ். அக.) 25. (கத்தியின் தகுந்த நிலையான) கூர்மை, sharpness, as of the edge of a knife; கத்தி பதமாயிருக்கிறது. (உ.வ.) 26. (தகுந்த நிலையைக் காட்டும்) அடையாளம், sign, symptom, indication (சங்.அக.). பதஞ்செய்தல் = (செ. குன்றாவி.) 1. பயன்படும்படி செய்தல், to make a thing fit for use. 2. பதப்படுத்துதல், to temper. 3. மெது வாக்குதல், to soften, "குளிர்ந்து நின்றுபதஞ் செயுநீர்" (சி. சி. 2 : 66). பதந்தவறுதல் = (செ. குன்றிய வி.) 1. நிலையினின்று நழுவுதல், to slip down, as form one's position, 2. இரவில் வெள்ளி விழுதல், to fall, as a meteor by night (W.). பதநிறம் = பெ. ஊன்சிலை (மாமிசச்சிலை), a kind of black stone (யாழ். அக.) பதநீர் (பாண்டி நாட்டு வழக்கு), பெ. ªî÷¤¾ («ê£ö ªè£é¢° ï£ì¢´ õ.), ðùë¢ê£Á (ªêù¢¬ù õ.), அக்கார நீர் (நாஞ்சில் நாட்டு வ.) = புளிப்பேறாத படி சுண்ணாம்பு பூசப்பட்ட முட்டியிலிறக்கிய இனிப்புக் கள்; sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation. பதப்படுதல் = (செ. குன்றிய வி.) 1 பருவமடைதல் (பக்குவப் படுதல்), to be seasoned. 2. பழுத்தல், to ripen, 3. ஈரமாதால், to dampen, to moisten. பதப்படுத்துதல் = (செ. குன்றா வி.) 1. பயன்படும்படி செய்தல்; to make a thing fit for use. 2. ஈரமாக்குதல், to dampen, to moisten. 3. இணக்குதல், to reconcile. பதப்பாடு = பெ. 1. பருவமாகை (பக்குவமாகை) being seasoned tempered, fitted, adapted or trained (W.) 2. பழுக்கை, ripening (W). 3. மதிலுறுப்பு, component parts of a fortification including ornamental figures (பிங்.) பதம் - பதன் = பெ. being fit for use. பதனழிதல், (செ. குன்றிய வி.) பருவநிலை கடத்தல்; to become overripe, as fruits. பதனழிவு = பெ. பதக்கேடு; over - ripeness; overboiled, decayed or rotten condition; debility (W.) பதனிடுதல் = (செ. குன்றா வி.) தோல் முதலியவற்றைச் சீர்ப்படுத்துதல்; to tan; to temper, season, mollify (W.) பதன் - பதனம். பதனம்1 = பெ. 1. இறக்கம், descending, falling down (யாழ். அக) 2. தாழ்மை, humility (சங். அக.) 3. அமைதி, mildness, gentleness. பதனமானவன் (உ.வ) 4. கோள்களின் குறுக்கு வரை; latitude of planets 5. பிறப் போரைக்கு (சென்ம ராசிக்கு, வ.) Ýø£ñ¢ âì¢ì£ñ¢ ðù¢ù¤óí¢ì£ñ¢ Þìé¢è÷¢ (êé¢.Üè.); sixth, eighth and twelfth houses from the ascendant. பதனம்2 = பெ. 1. காப்புக் கவனம்(பத்திரம்வ.)care, caution, attention circumspection; "பட்டணம் பதனம்" (இராமநா. உயுத்.23) 2. பாதுகாப்பு. safety. security, protection; "பதன கவசத்துடன்" (ஞானவா. சுக்கி, 19). பதனம் - பதணம் = பெ. 1. மதிலுண்மேடை, mound or raised terrace of a fort,rampart(தி.õ£:) "நெடுமதி னிரைப் ðதணத்து"(பதிற்றுப்.22:25). 2. மதில், walls of a fort, fortification(W.).ðîñ¢2 = பெ. 1. நிலத்திற் பதியும் உறுப்பாகிய பாதம், foot "எறிபதத்தா னிடங்காட்ட" (புறநா. 4). 2. செய்யுளடி. line of a stanza. 3. நாலிலொன்று, quarter (பிங்.). 4. (பாதம் படுவதால் ஏற்படும்) வழி, way, road, path (திவா.) 5. (பதிந்து தங்கும்) இடம். place, site, location. "பதங்க ளேழும்" (தக்கயாகப். 147). 6. பதிந்து தங்கும் வீடு போன்ற கட்டங்கள்; (astrol.) compartments drawn on a chart for determining the site for building a house (W.). 7. பதிவாயிருந்து செய் யும் அலுவற் பதவி அல்லது வாழும் பதவி post, position, station, rank. "பிரிவில் தொல்பதந் துறந்து" (கம்பரா.அயோத். திருவடிசூட்டு. 101). 8. பேரின்பப் பதவி; state of future bliss. "சிவபத மளித்த செல் வமே" (திருவாச. 37:3). 9. தரம், status, capacity. "பெண்டிருந் தம்பதம் கொடுக்கும்" (புறநா. 151) 10. வரிசை. (தரங்காட்டும்) வரிசை, row, order, series (பிங்.) 11. பொன்னின் தரமான ஒளி, brilliance, brightness "பொற்பதப் பொது" (கோயிற்பு. காப்பு). பதம் - பதவு - பதவம் = பெ. ஆழ்ந்து வேரூன்றும் அறுகு bermuda grass. "பெரும்பதவப் புல்மாந்தி"(கலித் 109). பதம்-பதவு-பதவி. பதவி1 = பெ. 1. நிலை, station, situation, position, rank 2. வழி, way, path, road. (திவ். இயற். 2:89, அரும்.) 3. விண்ணுலகம், words of the gods, lower states of bliss "பதவியை யெவர்க்கும் நல்கும் பண்ணவன்" (கம்பரா. கிட்கிந்தா வாலிவ. 136). 4. வீட்டுலகம், final states of bliss (பிங்.). பதவி2 = பெ. பணிந்த நீர்மையுள்ளவன், person of real humility; "பதவியாய்ப் பாணியானீ ரேற்று" (திவ். இயற். 2:89) பதவு - பதவிது - பதவிசு = பெ. அமைதி, mildness, humbleness. ஒ. நோ: நறுவிது-நறுவிசு. பதவியது = பெ. 1. மெல்லியது, that which is soft or smooth (W.). 2. அமைதியானது, that which is mild of gentle (W.). பதவியன் = பெ. அமைதியானவன், man of mild, amiable disposition (W.). பதவு = பெ. 1. அறுகு, bermuda grass "பதவு மேய லருந்து மதவுநடை நல்லான்" (அகநா. 14) 2. புல், grass. "பதவு காலங்களின் மேய்த்தும்" (பெரியபு. சண்டே. 26). 3. புற்கட்டு, bundle of grass (யாழ்ப்) 4. புன்மை (புல்லின் நிலைமை), insignificancy, smallness, triviality, "பதவிய மனிதரேனும்" (கம்பரா. சுந்தர. நிந்தனை. 71) 5. அமைதி, mildness, gentleness (யாழ்ப்) பதவி - பதவை = பெ. õö¤ (î¤õ£.); (way, path) "கணைநுழைந்த வப்பதவை" (இரகு. திக்குவி. 205.) பதம் - பாதம் = பெ. 1. நிலத்திற் பதியும் காலின் அடிப்பகுதி; foot, as of a person or animal. "பாதக் காப்பினள் பைந்தொடி" (சிலப். 14:23) 2. விளக்குத் தண்டின் அகன்று வட்டமான அடிப்பகுதி, broad base of lamp - stand. 3. அடிச் சுவடு, foot - print. 4. காலடியளவு, foot - measure. 5. பெரியோர் முன்னிலை; presence of a great person. "சதா சிவ தேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பஞ் செய்து" (S.I,I.i, 70). ஆரிய இலக்கியத் தொடர்பால், பாதம் என்னுஞ் சொற்குக் கால் என்றும் அடி என்றும் தவறான பொருள்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு வருமாறு:- பாதம் = பெ. 1. வினைப்பொறிகள் (கருமேந்திரியம்) ஐந்தனுள் ஒன்றாகிய கால். 2. பீடம் முதலியவற்றின் தாங்குகால்; leg, support, as of an article of furniture. (W.) 3. செய்யுளடி, (Pros.) unit of metrical measure; line of stanza. "வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி" (கம்பரா. பால. நாட்டுப். 1.) 4. மலை, மரம் முதலியவற்றின் அடியிடம்; base, as of a mountain, a tree (W.) 5. காற்பங்கு, quarter (சூடா) "முன்னைப் பீடத்தின் பாதங் குறைந்து" (மேருமந். 1172). 6. வட்டத்தின் காற்பங்கு; quadrant of a circle. 7. வெள்ளிக்கால் (நட்சத்திர பாதம்); a fourth part of a duration of a naksatra. 8. தொண்டு, வழி பாடு, ஓகம், ஓதி என்னும் நான்கு சிவசமய நெறி (சரியாபாதம், கிரியா பாதம், யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவ சமய மார்க்கம்) - செ. ப. க. க. த. அ. (Madras university Tamil lexicon.) பாதக் காப்பு = பெ. 1. செருப்பு, slippers, sandals, clogs(w). 2. திருவடிப் பாதுகாவல்; protection at the feet of a great person. "பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்" (சிலப். 14:23). பாதக் குறடு = பெ. குமிழ்கொண்ட கட்டை மிதியடி; knobbed wooden sandals. பாத கடகம் (பாதக் கடகம்) = பெ. பாடகம், anklet (சூடா.). பாத காணிக்கை (பாதக் காணிக்கை) = பெ. 1. குருக் கொடை; present to a spritual teacher laid at his feet. 2. சிலவூர்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் குறுநில மன்னருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி; a money payment made in certain villages by ryots of drylands to ther landlords. பாதச் சாயை = பெ. அடிநிழல்; human shadow. பாத சக்கரம் (பாதச்சக்கரம்) = பெ. பாதத்தில் வரும் ஒருவகைப் புண்; a kind of festering sore in the foot. பாத சாலகம் (பாதச்சாலகம்) = பெ. காலணி வகை; a foot ornament. "பரந்த மேகலையுங் கோத்த பாதசாலகமும்" (கம்பரா, அயோத். கோலங். 12). பாதசாலகம் - பாதசாலம் (பாதச்சாலம்) = பெ. காலணி வகை "பாத சாலத்த மென்கால்" (இரகு. நாட்டுப். 48). பாத தாமரை (பாதத் தாமரை) = பெ. திருவடித் தாமரை; lotus - like feet. பாத தூளி (பாதத்தூளி) = பெ. பெரியோர் அடிப்பொடி; dust of the feet of great persons "ஏத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால்" (திவ். பெரியாழ். 4:4.6). பாத பூசை (பாதப்பூசை) = பெ. குரு முதலியோரின் திருவடி களைக் கழுவி மலரிட்டு வழிபடுகை; worshipping the feet of a religious preceptor or revered person by washing and adorning them with flowers. பாத மயக்கு = பெ. 1. அடி மயக்கு; அடி முறை மாற்றக்கூடிய செய்யுள்; stanza whose lines are capable of transposition. 2. வேறு புலவர் பாடிய மூவடிகளோடு தான் ஓரடி பாடி முடிக்கும் மிறைப்பா வகை; a kind of artificial stanza of four lines the first three of which are taken from works of other poets while the last is composed by the author. (யாப். வி. 96. பக் 504.). பாத முத்திரை = பெ ஆசிரியன் திருவடிச் சுவடு; imprint of a guru's feet (W.). பாத மூலம் = பெ. 1. குதிகால் heel, (யாழ் அக.) 2. வீடு பேற் றிற்குக் கரணியமானதும் (காரணமானதும்) அடைக்கலமாகக் கருதப்படு வதுமான திருவடி; feet of a deity or saint considered as the source of bliss and a refuge. "நினையுமின் பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம்" (சீவக. 511). பாத வெடிப்பு = பெ. பித்த வெடிப்பு; fissure-foot பாதம் - பாதை = பெ. 1. ஒற்றையடி வழி; foot-path. beaten track. 2. வழி, way, path, road (பி.ங்.). 3. முறை way, method, mode, manner. பதி - வதி, செ. குன்றிய வி. õî¤è¤«øù¢ (ï¤ è£.), வதிந்தேன் (இ. è£.), வதிவேன் (எ. கா.) வதி - தல் = (செ. குன்றிய வி.) 1. தங்குதல், குடியிருத்தல், to slay, to dwell, abide; to sojourn. "வதிமண் வம்பலர் வாயவிழ்ந் தன்னார்" (பரிபா. 10:20). 2. துயிலுதல், to sleep "ஆற்றா ணினையுநள் வதிந்தக் கால்" (கலித். 126). வதி = பெ. 1. விலங்கு பறவை முதலியன தங்குமிடம்; lair, nest. "மாவதி சேர" (கலித். 119). 2. கால் பதியுஞ் சேறு, mire. "செங்கயல் வதிக்குதி கொளும் புனலது" (தேவா. 413:7), (பிங்). கூட்டுச் சொல்: (Compound words) பதிபடை = பெ. மறைந்து நிற்குஞ் சேனை. army lying in ambush (W.). பதிபடை - பதிப்படை. "பெரிய திருவடியைப் பதிப்படையாக வைத்து வந்து" (திவ். திருநெடுந். 23, வியா. பக். 213). பதி மினுக்கி = பெ. (இடத்தைத் துலக்கும்) துடைப்பம்; broom, as cleaning a place. (தைலவ. தைல.) பதியஞ் சருக்கரை = பெ. ஒட்டும் பதத்திலுள்ள சருக்கரை; molasses in a viscous condition (நாஞ்.). பதியரி = பெ. நாற்று. saplings for transplanting (அக. நி.). பதியெழு - தல் = (செ. குன்றிய வி.) வலசை போதல்; to flee from home or town from fear of the kind or a hostile army. பதியெழவு, பதியெழுவு = பெ. வலசைபோகை; flight from home or town from fear of the kind or a hostile army. "பதியெழ வறியாப் பழங்குடி" (மலைபடு. 479). "பதியெழு வறியாப் பழங்குடி" (சிலப். 1:15). பதிவாளர், பெ. 1. ஆவணம், ஒப்பந்தம், சட்டதிட்டம் முதலியவற்றைப் பதிவு செய்யும் அரசியல் அலுவலர். Registrar of title-deeds, contracts, rules and regulations of corporations etc. (இக்கால வழக்கு). 2. பல்கலைக்கழக அலுவலகத் தலைவர்; Registrar of a University (இ. வ). பதிவிடம் = பெ. ஒளித்திருக்குமிடம்; hiding place, ambush. பதிவிளக்கு = பெ. பேயோட்டுதற்காகச் குடத்தின் மேற் பதியவைத்த விளக்கு; lamp fixed on a pot while exorcizing devils (W.). பதிவுச் சாப்பாடு = பெ. உண்டிச்சாலையில் மாதக் கணக்காக ஏற்பாடு செய்து உண்ணும் உணவு; regular boarding at a hotel or mess on monthly account. பதிவேடு = பெ. கணக்குப் பதியும் பொத்தகம்; register, account-book, ledger. மரபு வழக்கு: (Idioms) பதிபோடு1 - தல் = (செ. குன்றா வி.) 1. நாற்று நடுதல், to transplant. 2. பதியம் போடுதல்; to plant, as slips; to insert, as grafts. பதிபோடு2-தல் = (செ. குன்றிய வி.) பதுங்குதல், to crouch. புலி பதி போடுகிறது. (உ. வ.). பதிவிரு-த்தல் = (செ. குன்றிய வி.) ஒளித்திருத்தல்; to lie in a wait, as a thief or an ememy; to lurk, as a beast ready to spring. பதிவுவை-த்தல் = (செ. குன்றா வி.) 1. கணக்கிற் பதிதல்; to enter in a an account. 2. வாடிக்கை வைத்தல்; to become in customer of a shop. பதிவை-த்தல் = (செ. குன்றா வி.) பதிபோடு2 என்பதைப் பார்க்க. பிற வினை (Casual verb) - 15ஆம் புடைபெயர்ச்சி. ðî¤è¢è¤«øù¢ (ï¤.è£.), ðî¤î¢«îù¢ (Þ.è£.), பதிப்பேன் (எ.கா.). பதி-த்தல் = (செ. குன்றா வி.) 1. அழுத்துதல், to imprint, impress, stamp, engrave, as in mind; to plunge. "பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி" (திருவாச. 11:12). 2. மணி முதலியன இழைத்தல்; to infix, insert, ingraft, inlay, as gems; to enchase. 3. கற் பாவுதல்; to pave, as floor with bricks or stones. 4. தாழ்த்துதல், to lower height, price, etc; to set lower, insert deeper. 5. பதியம் போடுதல்; to plant a custer of saplings temporarily in mud; to plant a shoot, runner or creeper. 6. அச் சிடுதல், to print, reprint, edit. 7. எழுதுதல் to inter in a register. 8. அதி காரங் கொடுத்தல்; to invest with power, authority or prerogative (W.) தொழிற் பெயர்: (verbal noun) பதித்தல், பதிக்கை, பதிப்பு. தொழிலாகு பெயர்: (metorymical verbal noun) பதிப்பு = பெ. edition கூட்டுச் சொல் (compound words) பதி சித்திரம் = பெ. கோபுரப் படிமை; images adorning a temple tower. (கோயிலொ. 122.). பதிப்பகம் = பெ. 1. அச்சகம், printing press. 2. வெளியீட்டகம், publishing. பதிப்பாசிரியர் = பெ. editor. பதிப்பாளர் = பதிப்பாசிரியர். மரபுவழக்கு: (Idiom) பதித்தெழுது-தல் = செ. குன்றா வி. 1. அழுத்தி யெழுதுதல்: to write forming a deep impression. 2. மேலே இடம் விட்டுக் கீழே யெழுதுதல்; to write in the lower half of a page leaving space at the top. மூலமும் திரிவும் (origin and derivation) பள் - படு - படி - பதி. பள் - பள்ளம். படுதல் = தாழ விழுதல், விழுதல், தொடுதல், பதிதல். படுத்தல் = பள்ளமாதல், தாழ்தல், விழுதல், படுக்கையாய்க் கிடத்தல், பதிதல், பதிவு செய்தல். படிதல் = தாழ்த்தல், கீழ்ப்படுதல், பணிதல், பதிதல். பதிதல் = ஆழ இறங்குதல், பொறித்தல், பதிவு செய்தல். இனச் சொல் : (cognates and allied words) 1. திரவிடம்: மலையாளம் - பதி, பதிவு. பதிக்க, to impress. பதியுக, to be impressed, be pressed down. பதி, being fixed in, pressed down. பதிவு, settlement, custom. பதம், softness, elasticity, yielding temper. பதம, பதும. pliancy. பதர்ம்ம, rottenness of rice through damp, softness of mind. பதுக்க, to be soft, tender, pliable. பதுப்பு, softness. பதுப்பிக்க, to soften பதம், the right degree of ripeness, temperature, etc. தெலுங்கு - பதனு, பதுனு, moisture, dampness, wetness; ripeness maturity temper. கன்னடம் - பத, proper or good state or condition, proper degree or temperature, the seasoning of any food, the right degree of a ripeness, keenness of edge or sharpness ஹத, proper condition துளுவம் - பதனுனி, பதணுனி, to become soft. குடகம் - பத soft. கோத்தம் - பத்ம், temper of iron மாலத்தம் - பெத்கெ, to be soft. பதோ, sharp. குவீ - பெதெ. soft and damp. பிராகுவீ - புதேன், cold, cool, புதீ, coldness, frost. 2. ஆரியம் : பதனம் - வ. (Skt.) பதன. பதவி - வ. (Skt) பதவீ. பதம் - பாதம் - வ. (Skt.) பத, பாத. Gk. pod. L. ped, pedis, OE, OS fot, OHG. fuoz, ON. fotr, Goth. fotus, E.foot. பாதை -OE. poeth. OLG. pad, OHG. pfad, E. path. சமற்கிருதத்திற் பாதை என்னும் சொல் இல்லாதது கவனிக்கத் தக்கது. பத என்னும் சொல்லே அதிற் பாதையைக் குறிக்கும். ped என்னும் இலத்தீன் சொல்லினின்றே, pedal, pedate, pedestal, peduncle என்னும் சொற்கள் திரிந்துள்ளன. வதி - வசி - வ. (Skt) வஸ். இவ் வடசொல்லே ஆங்கிலத்தில் was என்னும் இறந்த காலத் துணைவினைச் சொல்லாகத் திரிந்து வழங்குகின்றது. "was.-The OE. weson, to be, is eognate with Goth, wisan; ON. vera. to be, adibe; Skt. vas. to dwell." (P.266) "were=OE. woeron, where is for original S."(P 267) என்று இரிச்சார்டு மாரிசு (Richard Morris) தம் 'ஆங்கிலச் சொற்றிரிபு வரலாற்றுச் சட்டகம்' (Historiacal Outlines of English Accidence) என்னும் நூலில் வரைந்திருத்தல் காண்க. இவ் விறந்த காலச் துணைவினைச் சொல் மட்டுமன்றி, is, are என்னும் நிகழ்காலத் துணைவினைச் சொற்க ளும் 'இரு' என்னும் தமிழ்ச்சொல் திரிபே என்பது, என் 'A Guide to Western Tamilologists' என்னும் ஆங்கில நூலில் விரிவாகவும் தெளிவாக வும் விளக்கப்பெறும். தமிழ்த் தகரம் வடமொழியில் ஸகரமாகத் திரிவதை மாஸ என்னும் சொல்லாலும் உணர்க. மதி - மாதம் - மாஸ(வ.) - மாஸ்(இ.). சிறப்புக் குறிப்பு: பத, பாத என்னும் சொற்கள் வடமொழியில் வழங்குவ தால், தமிழ்ப் புலவர் பலர் அவற்றை வடசொல்லென்றே மயங்கி அடி என்னும் சொல்லைப் பாதம் என்னும் பொருளில் ஆண்டுவருகின்றனர். அடி வேறு; பாதம் வேறு. அடி என்பது ஒரு பொருளின் அடிப்பகுதி யையும் ஓர் உயிரியின் காலையும் பாதத்தையும் குறிக்கும் பொதுச் சொல். எ-டு: அடித்தட்டு, மயிலடி, திருவடி, அடிப் பகுதி யென்பது கீழ் இடத்தையும் கீழ்ப் பொருளையுங் குறிக்கும். எ-டு: பந்தலடி, தேரடி, சிறிய திருவடி பெரிய திருவடி. மரவடி என்பது கால்போன்ற அடிமரம். பாதம் என்பதோ நிலத்திற் பதியும் பரந்த அடியுறுப்பையே அல்லது பகுதியையே குறிக்கும் சிறப்புச் சொல். எ-டு: பாதத் தாமரை, பாதம் வைத்த விளக்கு. ஆகவே, பதிதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட பதம், பாதம் என்னும் இரு சொற்களும் தூய தென் சொல்லே யென்றும், அவையே முறையே பத, பாத என வடமொழியில் திரியும் என்றும் அறிக. இனி, பாதம் படுவதால் ஏற்படும் வழியைக் குறிக்கும் பாதை யென்னும் சொல், ஆங்கிலத்தில் (path என) இருப்பதையும் வடமொழியில் இன்மையையும், நோக்குக. வஸ் (வசி), என்னும் சமற்கிருத வினைச் சொற்கும். அதன் திரிவான 'was' என்னும் ஆங்கில இறந்த கால வினைச்சொற்கும், வதி என்னும் தமிழ்ச்சொல் மூலமாயிருப்பதினின்று, தமிழின் தொன்மையையும் முன் மையையும் அறிக. திருத்தம்: பதம், பாதம், பதவி, பதனம் என்னும் தென்சொற்களின் திரிவான பத, பாத, பதவீ, பதன என்னும் வட சொற்களை, அவற்றின் மூலமான தென்சொற்கட்கே மூலமெனச் சென்னை யகரமுதலியிற் குறித்திருப்பது, மூல வழு என அறிக. 5. பொறு (1) சொல் : பொறு (2) சொல்வகை : (part of speech or word-class) - வினை - செயப்படு பொருள் குன்றா வினையும் (transitive verb) செயப்படுபொருள் குன்றிய வினையும் (intransitive verb). (3) புடைபெயர்ச்சி : (congugation) - 15ஆவது வகை. ªð£Áè¢ è¤«øù¢ (ï¤.è£.), ªð£Áîù¢ (Þ.è£.), பொறுப்பேன் (எ.கா.) (4) பொருளும் ஆட்சி மேற்கோளும் : (meanings and illustrative quotations) செயற்பெயர் வடிவு : (Gerundial form) பொறு-த்தல், (ªê.குù¢ø£ வி.) 1. சுமத்தல், to bear, sustain. "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை" (குறள். 37). "இசையிலா யாக்கை பொறுத்த நிலம்" (குறள். 239). 2. தாங்குதல். to prop, to support, "ஆலத்து... நெடுஞ் சினை வீழ்பொறுத்தாங்கு" (புறநா. 58). 3. அணிதல், to put on. "அம்மணி பொறுத்திரென் றறைந்தான்" (உபதேசகா. உருத்திராக். 44). 4. உடன் கொண் டிருத்தல், to continue, to possess, as one's own body. "பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன்" (திருவாச. 23:6). 5. துன்பம் பொறுத்தல். to endure, suffer. 6. குற்றம் பொறுத்தல், to bear with to put up with. 7. இளக்காரங் கொடுத்தல், to indulge to allow. 8. மன்னித்தல், to excuse, forgive, pardon. "தம்மை யிகழ்வார்ப் பொறுத்தல் தலை" (குறள். 151). 9. பிற கருத்து வேறுபாட்டை அல்லது மத வேறுபாட்டைப் பொறுத்துக் கொள்ளுதல், to tolerate. 10. பொறுப்பு (உத்தரவாதம்) ஏற்றல், to take responsibility to be accountable for. 11. காலந் தாழ்த்தல், to delay, to postpone. 12. உவமையாகப் பெறுதல், to be similar. "உலகம் பொறுக்காத தோளாய்" (சீவக. 402). 13. அழுத்துதல், to press heavily, as a load. (ªê.குù¢ø¤ò வி.) 1. பொறுமையாயிருத்தல், to be patient, exercise forbearance. 2.வினையிடை நின்று கொள்ளுதல். to stop, wait halt in doing anything. 3.விலை கொள்ளுதல், to cost, as an article; to be spent or expended on. 4. தோணி தட்டிப்போதல், to run aground, as a vessel, to strand. 5. மாட்டிக் கொள்ளுதல், to become fixed, jammed, wedged in (W.) 6. கடமையாகக் சுமருதல், to devolve upon, as a duty resposibility expenses. 7. இணங்கி யிருத்தல், to consent yield, comply with 8. மிகுந்திருத்தல், to be excessive. 9. கனத்தல், to be heavy, weight. ஏவலொருமை (imperative singular) சற்றே பொறு, wait a little. பெயரெச்சம் : (adjectival participle) (இ.கா.பெ.) இது அவனைப் பொறுத்த கருமம் (காரியம்), this is devolved on him. பொறுத்த குடும்பம், a large burdonsome family. பொறுத்த சுமை, load that presses heavily. வினையெச்சம் : (Adverbial Participle) இ.கா.வி. (past participle). Þ¼ï£÷¢ ªð£Áõ£., come after two days. நி.கா.வி. (infinitive mood). அடிபொறுத்தாலும் வசவு பொறுக்க முடியாது. பொறுக்க உண்டுவிட்டாள். He has taken excessively. பொறுக்க மிதித்தல், tread hard, with pressure. செயற்பெயரும் தொழிற்பெயரும் (gernud and verbal noun) "சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் ªð£¤«ò£ óð¢ð¤¬ö ªð£Áî¢î½ õ£¤«î." (வெற்றி வேற்கை. 32) "சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே" (வெற்றிவேற்கை. 31) குற்றம் பொறுக்கை பெரியோர் இயல்பு. தொழிற் பண்புப்பெயர் : (abstract noun). பொறுப்பு, responsibility (உத்தரவாதம், வ.). பொறுப்பாளி. a responsible person பொறுப்புக்காரன் (யாழ. அக.) பொறுப்புள்ள பதவி. a responsible post. பொறுப்புள்ளவன். one in a responsible post or place of trust, a responsible man. பொறுப்பற்றவன், an irresponsible man. பொறுப்பற்ற தனம், irresponsibility, indifference to a trust. பொறுமை, patience. பொறாமை. எ.ம. (neg) intolerance,,nvy, jelousy பொறுமைசாலி. patient person. பொறுமைக்காரன், patient man (W.). பொறுதி. forbearance, forgiveness. தொழிலாகு பெயரும் அதன் திரிபுகளும் : (Metorymical verbal noun and its derivatives) பொறை = பெ. 1. சுமை(பாரம்). (திவா.) "குழையு பிழையும் பொறையா" (கலித். 90); burden. load.. 2. கனம், "பொறை தந்தன காசொளிர் பூண்" (கம்பரா. உயுத். அதிகா. 40); weight, heaviness. 3. சூல் (கருப்பம்) pregnancy (சூடா.). 4. சிறு குன்று, "அறையும் பொறையும் மணந்த தலைய" (புறநா. 118); hillock. 5. மலை. "நெடும் பொறை மிசைய குறுங்காற் கொன்றை" (ஐங்குறு. 430); mountain. 6.ஞாலம் (பூமி. வ.) பிங்.). "பொறைதரத் திரண்ட தாரு" (இரகு. தசரதன் காப. 50), earth. 7. துன்பந்தாங்குந் தன்மை. "வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை" (குறள். 153), forbearance. 9. அடக்கம். "பொறையு நாணு நீங்கினார்" (கம்பரா. உயுத் மிட்சி. 38); modesty meekneas. 10. வலிமை. "போதகாதிபன் முதலைவாயிடைப் பொறை தளர்ந்து" (பாரத. ஆதி. வேத்திரகீய. 1); strength, fortitude. பொறை - பொற்றை = பெ. 1. கற்பாறை (திவ். திருச்சந். 52. வ்யா) rock. 2. சிறுமலை (பிங்.). "பொற்றைமால் வரைகளோவென் புயநெடும் பொருப்பு மம்மா" (கம்பரா. இலங்கை காண். 22); hillock, mound 3. மலை. (பிங்.) "பொற்றையுற் றெடுத்தான்" (தேவா. 1218.10); mountain. தூண்கள் மண்டபத்தைத் தாங்குவதுபோல் மலைகள் வான முகட்டைத் தாங்குகின்றன என்னும் பண்டைக் கருத்துப்பற்றி மலை பொறையெனப்பட்டது. "Atlas.... (Atlas-antos (1) Greek god of the older family. who held up pillars of universe; (2) the mountain in Libya regarded as supporting the heavens)" "Atlantic... 1. Pertaining to mount Atlas in Libya; hence applied to sea near western shore of Africa, & later to whole ocean between Europe and Africa on east & America on west... (f. L. f. Gk. Atlantikos. f. Atlas)" என்று எருதந்துறைச் சிற்றகரமுதலி (the concise oxford dictionary) குறித்திருத்தல் காண்க. பொறையன் = பெ. 1. சுமப்பவன். "புன்னிலைப் பவத்துக் கெல்லாந் தானொரு பொறையனாகி" (உபதேசகா. சிவபுண். 344); bearer, sustainer. 2. மலையரசனான சேரன். "யானைக் கடுமான் பொறைய" (புறநா. 53); Cera king, as lord of the mountainous region in the Tamil country. 3. பொறுமைக்கும் பொறைக்குஞ் சிறந்த தருமபுத்திரன்; Dharmaputra, the eldest of the the Pandavas, as embodiment of patience. குறும்பொறை = பெ. ê¤Áñ¬ô (ð¤é¢.), "வரையக நண்ணிக் குறும் பொறை நாடி" (பதிற்றுப். 74 : 7) குறும்பொறை நாடன் = முல்லைநிலத் தலைவன் (இறை. 1 : 18) chief of the sylvan or pastral tract. இரும்பொறை = பெ. சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று (பதிற்றுப். 89 : 9). எ-டு : சேரமான் கணைக்காலிரும்பொறை; a title of the Cera kings பொறையாளன்=பெ. 1. பொறுமைசாலி 2. தருமபுத்திரன் (பிங்.). பொறையாட்டி = 1. பொறுமையுள்ளவன். "சுருங்கும் மருங்குற் பெரும் பொறை யாட்டியை" (திருக்கோவை. 353); patient woman. 2. காவு (பலி) கொடுக்கும் பூசாரிப் பெண். "கானப்பலி நேர்க்கடவுட் பொறையாட்டி வந்தாள்". (பெரியபு. கண்ணப். 65); priestess who offers animals to god in sacrifice. பொறையிலான் = பெ. 1. பொறுமையில்லாதன், impatient person.. 2. வேடன், savage hunter. பொறைநிலை = பெ. மனத்தை ஒரு வழிப்படுத்துதல் (தாரணை. õ.); concentrated attention in yogic meditation. வினையாலணையும் பெயர்: (participial noun or appelativetive verb). "பொறுத்தார் புவியாள்வர்" "பொறுத்தார் நாடாள்வர், பொங்கினார் காடாள்வர்" (பழமொழிகள்). பசி பொறுக்காதவன் (எ.ம), one who can not bear hunger. கூட்டுச்சொல் : (compound words) எ-டு : இரும்பொறை, குறும்பொறை, நெடும்பொறை, பொறையிலான். இணைமொழி : (words in pairs) எ-டு : அறையும் பொறையும், பெ. தொடர் மொழி : (phrase) எ-டு : பொறுப்பற்றதனம், பெ. மரபு வழக்கு : (idioms) பொறுத்திரு-த்தல் (ªê.குù¢ø¤ò வினை.) To wait patiently. பொறுத்துக்'கொள்-ளுதல். (ªê.குù¢ø£ வி.) To bear with. பொறுத்துப் போ-தல்: (ªê.குù¢ø¤ வி.) 1.தாணிகட்டுதல் to ran aground. 2. மாட்டிக் கொள்ளுதல். to be stuck or jammed in. ªê.குù¢ø¤ò வி. தொடர்ந்து பொறுத்தல், to continue. to tolerate. பொறுப்புக் கட்டு-தல் : (ªê.குù¢ø£õ¤.) 1. பொறுப்பேற்றுதல் (உத்தர வாதப் படுத்துதல்), to put responsibility on 2. ஈடுகாட்டுதல், to tender as security 3. முற்றுவித்தல் to accomplish (W.) பொறையிருந்தாற்று-தல் = (ªê.குù¢ø£ வி.) துன்பம் பொறுத்தலைக் கடைப்பிடித்தல், to bear with patience "பொறையிருந் தாற்றியென் னுயிரும்போற்றினேன்" (கம்பரா. சுந்தர. உருக்காட்டு. 11). பொறையுயிர்-த்தல் (ªê.குù¢ø£ வி.) 1. மரக்கலம் சரக்கிறக்குதல், to be unloaded, as a vessel. 2. இளைப்பாறுமாறு சுமையிறக்குதல், to disburden and rest "துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி" (பொருந. 239) 3. மகப் பெறுதல். "பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டில்" (நன். 269, உரை); to be delivered of a child. பிறவினை (causal verb) 1. பொறுக்கவைக்கிறேன், பொறுக்கவைத்தேன், பொறுக்கவைப்பேன். பொறுக்கவை-த்தல் = (ªê.குù¢ø£ வி.) 1. சாரவைத்தல் to plan lean against. 2. மிகுசுமையேற்றுதல்,to overload 3. பொறுப்பேற்றுதல், to impose a duty or expense upon 4. பொறுத்துக்கொள்ளச் செய்தல், to run aground, as a vessel. 2. பொறுப்பிக்கிறேன், பொறுப்பித்தேன், பொறுப்பிப்பேன் பொறுப்பி-த்தல் = (ªê.குù¢ø£ வி.) 1. சுமத்துதல், to cause to rest on. 2. முட்டுக்கொடுத்தல், to prop; to sustain (W.) 3. பொறுக்குமாறு செய்தல். "திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே" (அஷ்டாதச முமுட்சுப்) to cause to bear 4. பொறுப்புக் கட்டுதல், to put resposibility on. (5) மூலமும் திரிபும் (original an derivation) புல் - பொல், பொரு - பொறு புல்லுதல் = பொருந்துதல். பொல்லுதல் = பொருந்துதல். பொருதல் = பொருந்துதல். பொறுத்தல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல், சுமத்தல். ஒ.நா : முட்டுதல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல். முட்டுக் கொடுத்தல் என்பது தாங்குதல் அல்லது தாங்கவைத்தல் என்று பொருள்படுதல் காண்க. (6) இனச்சொற்கள் (cognates and allied words) திரவிடம்: மலையாளம்-பொறு(க்க), கன்னடம்-பொறு. குடகம்-பொரி, கோத்தவம்-பொர், துடவம்-பிர், துளுவம்-புதெ = (சுமை.) load, burden. கோண்டி-புகுத்தானா = கனத்தல் to high heavily. OE., OS., OHG ber (an), E. bear, ON ber(a), Goth bair (an) L. fer (re)/ Gk. pher (ein). Skt bhar. LL port (are), to carry port என்பதினின்று திரிந்தவையே porter, portage, portable, portative முதலிய தனிச் சொற்களும், import, export, comfort, deport, purport, rapport, report, support முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களும் fortfire, fortfolio, fortmanteau கூட்டுச்சொற்களும். bar அல்லது bhar என்னும் ஆரிய வேர்ச்சொல் பற்றி For instance. the root bar or bhar particularly if we minde the words derived from Latin ferre and adopted English such as, for instance, fertile, far (barley), farina, barley-flower, reference, deference, conference, difference, inference, preference, transference and all the rust, would more than a hundred English words. We should not want therefore more than a hundred such roots to account for 10,000 words in English.'' (p.26) "Thus birth was originally bhar, to bear plus a domonstrative element in English th which localises of bearing here and there." "The sanskrit bi-bhar-mi shows us the same root reduplicated, so as to express continous action and followed by as a personal demonstrative bearing comes to mean, I bear. The English bear-able is a compound of bear with the Roman suffix able, the Latin abilis, which expresses fitness." (P.27) என்று மாக்கசு முல்லர் தன் மொழிநூல் பற்றிய முச் சொற்பொழி வுகள் (Three Leatures on the Science of Language) என்னும் பொத்த கத்தில் வரைந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஒருசில மேலை மொழி நூலாராய்ச்சியாளர் 'பிரதர்' (brother) என்னும் ஆங்கில முறைப்பெயரையும் bar (bear) என்னும் மூலத்தி னின்று திரித்து, குடும்பத்தைத் தாங்குபவர் என்று பொருட் கரணியங் கூறுகின்றனர். அஃதுண்மையாயின், பொறுத்தார் என்னும் தமிழ்ச் சொற்கு அஃது இனமா யிருக்கும். இனி, கி.பி. 10ஆம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணியின் "கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும்" (சீவக. 62) என்று உய்த்தல் அல்லது ஏற்றிச்செல்லுதல் என்னும் பொருளில் ஆளப் பெற்றிருக்கும் கரைதல் என்னும் தூய தமிழ்ச்சொல், கேரி (carry) என்னும் ஆங்கிலச் சொல்லை ஒலியிலும் பொருளிலும் குறித்தி ருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கதே. கரை என்பது பழங்கன்னடத்திலும் கர என்னும் வடிவிலுள்ளது. ஆங்கில அகரமுதலிகள் carry என்னும் சொல்லை வண்டியைக் குறிக்கும் 'கார்' (car) என்பதனொடு தொடர்பு படுத்துகின்றனர். ஆங்கிலர் வருகைக்கு ஆறு நூற்றாண்டிற்கு முற்பட்ட கரை என்னுஞ்சொல் ஆங்கிலத்தி னின்று வந்திருக்க முடியாது. ME. & ONF carre f. L. carrus. cum four wheeled vehicle, f. ceet karram OS, Olr, O Welsh karr, E. car. இங்ஙனம் நூற்றுக்கணக்கான அடிப்படை ஆரியச்சொற்கள் தமிழ்ச் சொற்களோடு ஒத்திருப்பதுடன் தமிழிலேயே வேர்களைக் கொண்டிருப்பதால் அவ் வொப்புமை தற்செயலாக நேர்த்திருக்க முடியாது. சிறப்புக் குறிப்பு : ஆரியத்தில் வழங்கும் தமிழ்ச்சொற்களுள் பொறு என்பதும் ஒன்று. மேலையாரியத்திலும் கீழையாரியத்திலும் வழங்கும் வடிவுகளை நோக்கின், தியூத்தானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலச்சொல் தமிழ்ச் சொற்கு மிக நெருக்கமாகவும், இலத்தீனச் சொல்லும் கிரேக்கச் சொல்லும் சற்றுத் திரிந்தும் சமற்கிருதச் சொல் மிகத் திரிந்தும் இருப்பதைக் காணலாம். ஒகரம் எகரமாகத் திரிவது இயல்பே. எ-டு : சொருகு - செருகு. இம் முறைப்படி பொறு என்பது ஆங்கிலத்திலும் இலத்தீனிலும் கிரேக்கத்திலும் ber, fer, pher எனத் திரிந்துள்ளது. சமற் கிருதத்தில் bhar என்று ஒகரம் அகரமாகத் திரிந்துள்ளதும் இயல்பே யாயினும் அஃது எடுப்பொலியும் மூச்சொலியும் கூடி மிகத் திரிந்துள் ளமை காண்க. அத் திரிபே கலவைத் தமிழில் பரி என வழங்குகின்றது. Port என்னும் இலத்தீனச் சொல் பொறுத்தல் என்னும் தொழிற் பெயரினின்று திரிந்திருக்கலாம். திருத்தம்: சென்னை யகரமுதலியில் bhar என்னும் சமற்கிருதச் சொல்லொடு ஒப்புநோக்குமாறு ஏவி, அத்திரிபையே மூலம்போற் குறிப்பாகக் குறித்தி ருப்பது தவறாகும். ஆரியர் தமிழரின் ஏமாறிய தன்மையைப் பயன் படுத்தி, வடமொழியை மூலமாகவும் தென்மொழியை அதன் திரிபாகவும் கொண்டுள்ள கொள்கையின் விளைவு இது. ஆயிரக்கணக்கான வடசொற்கள் தென்சொற்களின் பகுதியென் பதையும் வடமொழியில் ஐந்திலிரு பங்கு தமிழ் என்பதையும் செ.சொ.பி. அகரமுதலி தெள்ளத் தெளிவாகக் காட்டும். கவனிப்பு. செ.சொ.பி.அ. போலிகை யுருப்படிகள் அவ் வகரமுதலித் திட்ட வுறுப்பினர் அவ் வகரமுதலி யமைப்பை ஓரளவு அறிந்து கொள்ளு மாறே 'தென்மொழி'யிற் காட்டப்படுகின்றன. உண்மையான அகரமுதலி எல்லாவகையிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் வரும் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, புலவர். அடல் எழிலனார் விடுத்த எச்ச ரிக்கை மடலை உண்மையில் உட்கொள்ளாவிடினும், நடைமுறையில் உட்கொண்டதாகவே முடியும் என்பதை இறுதியில் அனைவரும் அறிவர். இஃது, அவர் குறித்த "அரைவேக்காட் டாராய்ச்சியாளரும்" "பச்சை வெட்டாராய்ச்சியாளரும்" மேலதிகாரிகளையும் நாட்டுமக்களை யும் ஆரியரைப் போன்றே ஏமாற்றிவரும் பயனில் முயற்சியை, உடனே விட்டொழியுமாறு யான் விடுக்கும் எச்சரிக்கைக் குறிப்பாகும். 3 அகரமுதலிப் பணி நிலை அகரமுதலி யென்பது ஆண்டுமலரும் வாழ்க்கை வரலாறும் போன்ற தன்று. ஒரு குடிசையை ஒரு நாளிற் கட்டி முடிக்கலாம். ஒரு கோபுரம் கட்டப் பல்லாண்டு செல்லும். சில பணிகளைக் கால வரம்பிட்டு அதற்குள் செய்து முடிக்கலாம். சில பணிகளை அங்ஙனஞ் செய்ய இயலாது. அரும்பெரும் பணிகளெல்லாம் பணி வரம்பையே யன்றிக் கால வரம்பைக் கருதுதல் தவறாகும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்-ஆங்கில-தமிழ் அகரமுதலி (Lexicon), 1913-ஆம் ஆண்டு ஐயாட்டைத் திட்டமாகத் தொடங்கி (பிற் சேர்ப்பு உட்பட) 26 ஆண்டுக்காலம் தொடர்ந்து 1939-இல் ஏறத்தாழ (4 1/2) இலக்க உருபாச் செலவில் முடிவுற்றது. தொடக்கந் தொட்டு அறுவர் பணியாற்றி வந்தனர், 13 மடலங்கொண்ட எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலி (The Oxford English Dictionary) முற்றுப்பெற 70 ஆண்டுகள் ஆயிற்று. ஒரு வர் பின் னொருவராகத் தொடர்ந்த நாற் பதிப்பாசிரியர் தலைமுறைக் காலத்தில், நானூற்றுவர் நிலையான உதவியாளராகப் பணியாற்றினர். மூவிலக்கத்து ஐயாயிரம் பவுண் செலவாகியுள்ளது. இன்று பூனாவில் அச்சாகி வரும் சமற்கிருத-ஆங்கிலப் பேரகர முதலிப்பணி 1948-இல் தொடங்கிற்று. சென்ற ஆண்டு அதன் முதன் மடலம் வெளிவந்துள்ளது. அவ் வகரமுதலி வெளியீட்டிற்கு இந்திய அரசு ஒரு கோடி யொதுக்கியுள்ளது. அதன்மேலும், மராட்டிய அரசு, பூனாப் பல்கலைக் கழகம், இந்தியப் பல்கலைக் கழக நல்கைக் குழு (U.G.C.), ஒன்றிய நாட்டினங்கள் கல்வி யறிவியல் பண்பாட்டமைப்பகம் (UNESCO), பாரிசிலுள்ள ஒரு சமற்கிருதக் கழகம் (CIPSH) ஆகியவை தனித்தனி பெருந்தொகை யுதவி வருகின்றன. அவற்றுள், ஒ நா. (UN) உதவி இறுதிவரை ஆண்டுதொறும் தொடர்வது. மொத்தச் செலவு இரு கோடிக்கு மேலாகலாம். தலைமையரும் இடைமையரும் உதவியாளரும் துணையுதவி யாளருமாக, பதிப்பாசிரியன்மார் இருபத்திருவர் நிலையாகப் பணியாற்றி வருகின்றனர். 1990-இல் முடியுமென்று சொல்லப்படுகிறது. மேலுந் தொடரலாம். கேரள நாட்டில், அரசும் பல்கலைக் கழகமும் இணைந்து வெளி யிட்டுவரும் எழுமடல மலையாள-மலையாள-ஆங்கில அகரமுதலிப் பணி 1953-இல் தொடங்கிற்று. பன்னிரண்டு சொற்றொகுப்பு வேலை முடித்துக்கொண்டு, முப்பத்தறுவரைக் கொண்ட பணிக்குழு, ஐயாண்டிற்கொரு மடலமாக வெளியிட்டு வருகின்றது. இதுவரை மும்மடலம் வெளிவந்துள்ளன. இன்னும் நான்கு வெளிவரல் வேண்டும். அதற்கு இன்னும் இருப தாண்டு செல்லும். ஆண்டுதொறும் பல்கலைக் கழக நல்கைக்குழு பணமுதவி வருகின்றது, ஐயாயிரம் படிகள் அச்சிடப்படுகின்றன. மொத்தச் செலவு ஒருகோடியிருக்கலாம்; மேற்படினும் படலாம். ஏனை மொழி யகரமுதலிகளெல்லாம், எத்துணை விரிவான வேனும், சொற்பொரு ளகரமுதலிகளே. அவற்றுள் ஒரு சில, சொற் பிறப்பிய லகர முதலி யென்று பெயர் பெற்றிருப்பினும், உண்மையிற் சொற்பிறப்பியல் அகரமுதலிகளல்ல; ஒப்பியல் (comparative) அகர முதலிகளே. ஏனெனின், இயன்மொழியாகிய தமிழிற்போல் திரிமொழி களாகிய ஏனையவற்றிற் சொற்களின் வேரையும் முழு வரலாற்றையும் அறியமுடியாது. ஆதலால், உண்மையான சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) தமிழில்தான் இருக்கமுடியும். இன்று தொகுக்கப்பட்டுவரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி, சொற்பொருள், சொற்பிறப்பியல் என்னும் ஈரியல்புகளையும் ஒருங்கே கொண்டது. இதன் பணி கீழ்வருமாறு எண்கூற்றது. 1. இதுவரை வெளிவந்த தமிழகர முதலிகளிளெல்லாம் இல்லாத எல்லாச் சொற்களையும் இயன்றவரை எடுத்துப் பொருள் கூறுவது. 2. ஏனை யகரமுதலிகளிலுள்ள தவறான சொல் வடிவுகளைத் திருத்துவது. (எ-டு): அரிவாள்மனைப் பூண்டு (வழு)-அரிவாள்முனைப் பூண்டு (திருத்தம்). 3. ஏனை யகரமுதலிகளில் விடப்பட்டுள்ள பொருள்களையெல் லாம் இயன்றவரை எடுத்துக்கூறுவது. 4. ஏனை யகரமுதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான பொருள்களை யெல்லாம் திருத்துவது. (எ-டு): அளைமறிபாப்பு (ப்பொருள்கோள்) = பாட்டின் ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று சென்று பொருள் கொள்ளப்படு முறை (வழு). ஒரு பாட்டின் ஈற்றடி முதலடியாயும், ஈற்றயலடி இரண்டாமடி யாயும், ஈற்றயன்முன்னடி மூன்றாமடியாயும், இங்ஙனமே ஏனையடிகளும், தலைகீழாக மாறி நின்று பொருள்படுவது. (திருத்தம்) 5. எல்லாப் பொருள்களையும் ஏரண முறைப்படி (Logical order) வரிசைப்படுத்திக் கூறுவது. 6. எல்லாச் சொற்கட்கும் இயன்றவரை திரவிட ஆரிய இனச் சொற்கள் (Cognates) காட்டுவது, 7. எல்லாச் சொற்கட்கும் இயன்றவரை வேருடன் கூடிய வரலாறு வரைவது. 8. ஏனை யகரமுதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான மூலம் திருத்துவது. சொற்பொருளும் மூலத்திருத்தமும் தெளிவாக விளக்கப்படுமிட மெல்லாம், இவ் வகரமுதலி அரைக் கலைக்களஞ்சிய முறையில் விரிவாக விருக்குமாதலாலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள் (Principles of Tamil Etymology), தமிழகரமுதலி வரலாறு (History of Tamil Lexicography) என்னும் இரண்டொடு கூடி 13 மடலங்கள் வெளி வருமாதலாலும், எத்துணை விரைவாக வேலை நடப்பினும், முழு வகர முதலியும் முடிய, அல்லது வெளிவர இன்னும் பத்தாண்டு செல்லும். ஆயின், இதன் முதன் மடலம் முதற் பகுதி இவ்வாண்டிற்குள் வெளிவரும். அதுவே, தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியென் பதைப் பகைவரும் ஒப்புக்கொள்ளுமாறு, ஐயந் திரிபற நாட்டிவிடும். தொடக்க முதலீடாக ஈரிலக்கமே யொதுக்கப்பட்டுள்ள இவ் வகர முதலித் திட்டத்தின்கீழ் இருவரையே துணைக்கொண்டு, என் சொந்தப் பொத்தகங் களையே, பெரும்பாலும் பயன்படுத்தி, இயன்றவரை ஒழுங்காகச் செய்துவரும் இப்பணி, இனி நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து, நெருக்கடி நிலையில் இழக்கப்பட்ட அனைத்துரிமையும் மீண்டுள்ள இம் மக்கள் (Janata) கட்சி ஆட்சியில், குறித்த கால வெல்லையில் முற்றுப்பெறும் என நம்புகின்றேன். 4 தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி எந்த மொழியிலேனும், கல்வி வேறு ஆராய்ச்சி வேறு என்பதை முதற்கண் அறிதல் வேண்டும். கல்வி எத்தனை துறைப்பட்டதோ அத்தனை துறைப்பட்டது ஆராய்ச்சியும். பலர் கற்றுத் தேர்வெழுதியோ ஆராய்ந்து இடுநூல் (thesis) விடுத்தோ ஒரே வகையான அல்லது பெயருள்ள பட்டம் பெறினும், அவர் அறிவு அல்லது புலமை ஒன்றாக அல்லது பொதுவாக இராது; அவர் கற்ற அல்லது ஆராய்ந்த துறைக்குத் தக்கவாறு வேறுபட்டுச் சிறப்பாகவே யிருக்கும். ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில், பல ஆசிரியர் இளங்கலைப் (B.A.) பட்டமோ முதுகலைப் (M.A.) பட்டமோ பெற்றவராயிருக்கலாம். ஆயின், அவரெல்லாரும் ஒரே பாடங் கற்பிக்குந் திறமையுள்ளவராய் ஒருதிறப்பட்டிராது. பல்வேறு பாடங் கற்பிக்குந் திறமையராய்ப் பல்திறப் பட்டிருப்பர். வரலாற்றுப் பட்டந் தாங்கியார் கணிதமும், கணிதப் பட்டந் தாங்கியார் அறிவியலும், கற்பிக்க முடியாது. அங்ஙனமே, பண்டாரகர்ப் (Dr) பட்டந்தாங்கியாரும் தத்தம் ஆராய்ச்சித் துறையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராயிருப்பர். ஒரு தலைமையாசிரியர் அல்லது முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் ஒரு துறையிற் பட்டம் பெற்ற ஆசிரியரை மற்றொரு துறைக்கு அமர்த்துவது, "எமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் இரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெறல் இராமனுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு அறாஅ வருநகை யினிது பெற்றிகுமே" (புறம் 378) என்றாற் போன்ற நிலைமையை உண்டுபண்ணுவதே. எந்தத் துறையிலேனும், ஆராய்ச்சி யென்பது கல்வியின் பிற் பட்டதே, கல்வியில்லாதவர் ஆராய்தல் ஒண்ணாது. ஓர் இயங்கியை (automobile) ஓட்டத் தெரிவது போன்றது கல்வி; அதனைப் பழுது பார்க்கத் தெரிவது போன்றது ஆராய்ச்சி. ஓட்டத்தெரியாதவர் பழுது பார்ப்புத் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு மொழியில் அகரமுதலி தொகுப்பதற்கு, இலக்கியப் புலமை யும் இலக்கண நுண்மதியும் உலக வழக்கறிவும், சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சி யும் பரந்த கல்வியும் பல்கலைப் பயிற்சியும் வேண்டும். தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமு மாதலாலும், ஆரிய ரால் மறையுண்டும் குறையுண்டும் இருப்பதனாலும், குமரி நாட்டில் தோன்றிய உலக முதற்றாய் உயர்தனிச் செம் மொழி யாதலாலும், தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர்க்கு, மேற்கூறிய தகுதி களுடன், திரவிட ஆரிய மொழியறிவும், உண்மையை அஞ்சாதுரைக்கும் நெஞ் சுரமும் வரலாற்றறிவும், மாந்தனூல் (Anthropology) அறிவும், இன்றியமை யாதனவாகும். இத் தகுதிகளெல்லாம் ஒருங்குடையவராயின், இங்கிலாந்தில் சாமுவேல் சாண்சனும் (Samuel Johnson), அமெரிக்காவில் நோவா வெபுசித்தரும் (Noah Webster) தனிப்பட ஆங்கில அகரமுதலி தொகுத் தது போல், தமிழ்நாட்டிலும் தமிழர் ஒருவரே தொகுக்கலாம். அங்ஙன மன்றி, தகுதியில்லாத பலரைக் கொண்ட ஒரு குழு அமர்த்தவேண்டு மென்பது போலித்தனமான குறும்புக் கூற்றேயாகும். குழு எதற்கு? செக்குத் தள்ளவா அல்லது தேரிழுக்கவா? வேட்டையாடவா அல்லது விளையாட்டுப் போரில் வடம் பிடிக்கவா? பணந் தண்டவா அல்லது பாதையைச் செப்பனிடவா? அகரமுதலித் தொகுப்பிற்கும் குழுவமைப் பிற்கும் என்ன தொடர்புண்டு? சாமுவேல் சாண்சனும் வெபுசித்தரும் போன்றார் இல்லாத காலத்திலும், எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலி (The Oxford English Dictionary) ஒருவர்பின் ஒருவராக மர்ரே (Murray), பிராதிலி (Bradley), கீரேகி (Craigie), ஆனியன்சு (Onions) என்னும் நால்வரின் தனிப்பட்ட தலைமையிலன்றோ தொகுக்கப்பட்டு வந்தது? அத்தகைய தகுதியுள் ளவர் யார்? கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரெல்லாம் தமிழ் அகரமுதலித் தொகுப்பாளரெனின், கல்லூரி ஆங்கிலப் பேராசிரியரெல்லாம் ஆங்கில அகரமுதலித் தொகுப்பாளர் ஆவரா? அங்ஙனமே பிறமொழிப் பேராசிரி யரெல்லாம் அவரவர் மொழி அகரமுதலித் தொகுப்பாளர் ஆவரா? சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்துதற்கு அமர்த்தப்பட்ட குழுவிலுள்ள தமிழ்ப் புலவரை நோக்கின், நரிபரியாக்கிய சிவபெருமானும் தன் திருவிளையாடல் பெருமையிழந்ததுபற்றி வருந்தத் தான் செய்வர். ஆதலால், அக்குழுவை உடனே கலைத்துவிடுவதே அதிகாரிகட்கு அறிவுடைமை யாகும். 5 உலகத் தமிழ்க் கழகக் கொள்கை உலகத் தமிழ்க் கழகம் தோன்றி ஒன்றரை யாண்டிற்கு மேலாகியும், இன்னும் அதன் கொள்கையைப் பலர் செவ்வையாக அறியாதிருப்பதால், அவர்க்கு அதை அறிவித்தற்பொருட்டு இக் கட்டுரையை எழுதலானேன். பல்லாயிரம் ஆண்டுகளாகப் புறப்பகைவரான ஆரியராலும் அகப்பகைவ ரான போலித் தமிழராலும், மறையுண்டும் குறையுண்டும் போற்றுவாருந் தேற்றுவாருமின்றிப் புன்சிறு கலவை மொழிபோற் புறக் கணிக்கப்பட்டுக் கிடந்த முதுகுமரி முத்தமிழை, நிறைபுலமுடியாம் மறை மலையடிகளைப் பின்பற்றி, உலகமுதல் உயர்தனிச் செம்மொழியென மீண்டும் உலகெலாம் உலவிவரச் செய்து பண்டையரியணை யேற்றுவதே, உலகத் தமிழ்க் கழகத்தின் ஒருபெரு நோக்கமாம். பண்பாடு சிறிதுமின்றிப் பட்டம் பதவியே பற்றிக் கட்சித் தலைவர் காலில் விழுவதும், இறைவன் பொருள்சேர் புகழை இற்றை யமைச்சர்க்கு ஏற்றிக் கூறுவதும், தந்நலமொன்றே கருதித் தாய்மொழியைப் புறக்கணிப் பதும், தனித்தமிழ்ப் பற்றற்றவரைத் தலைமையாகப் போற்றுவதும், எத்துணை கற்பினும் தெள்ளியராகாது என்றும் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொள்வதும், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரின் தகுதியை நோக் காமையும், மாபெரும் தமிழ்மலையாம் மறைமலை யடிகளை மறைக்க முயல்வதும், அறிஞர் ஆய்ந்து கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளாது தான் பிடித்த முயற்கு மூன்றே காலென வலிப்பதும், பொன்னைப் பித்தளையென்றும் பித்தளையைப் பொன்னென்றும் திரிபுணர்ச்சியைப் பரப்புவதும், இந்தியால் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடென வறிந்தும் அதை விலக்காது "எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருப்பதும், உலகத் தமிழ்க் கழகக் கொள்கை யல்ல. "காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது போல, கட்சிப்பற்றாளர்க்குக் கட்சிக்காரர் செய்வதெல்லாம் புன்செயலும் வன்செயலுமா யிருப்பினும், கண்ணியமும் கட்டாண்மையுமாகவே தோன்றும். யானையைத் தடவிக்கண்ட நாற்குருடர் தாங்கண்டவாறே பிறருங் காண்ப ரென்று கருதிக் கொண்டதுபோல, ஒரு பொருளைப் பற்றித் தாங்கொண்ட கருத்தே பிறருங் கொள்வரென்று கருதிக்கொள் வது கட்சிக்காரர் இயல்பு. தந்நலமன்றி ஒரு கொள்கையுமற்ற போலித் தமிழர் உயரிய கொள்கையுடைய உலகத் தமிழ்க் கழகத்தைக் கொள்கை யில்லாததென்று கூறுவது, கடுகளவும் மொழியறிவும் தாய்மொழிப் பற்றுமில்லாப் பேராயத்தார் மறைமலையடிகளையும் அவர்கள் வழிச் செல்வோரையும் அறிவிலிகள் என்று பழிப்ப தொத்ததே. தமிழ்நாடு இன்னும் விடுதலை யடையவில்லை. ஆங்கிலேயன் தமிழனுக்கு மீட்பனாக வந்தானே யொழிய அடிமைப்படுத்தியாக வரவில்லை, மாபெரு நன்மை செய்தவனை மாபெருந் தீங்கு செய்த வனாகக் கருதுவது, "பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் Çî¤òñ¢ «ð£è õ¤ìô¢." என்னுந் திருக்குறட்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டே யாகும். அது போன்று இற்றையாட்சியைத் தமிழாட்சியாகக் கருதுவதும் பேதைமை யின்பாற்பட்டதே. ஆரிய ஆட்சிபோய்த் திரவிட ஆட்சி வந்துள்ளது. ஆரிய ஆட்சிக்குப்பின் உடனடியாகத் தமிழாட்சி வரமுடியாது. விரை நடை, அடியெடுத்து வைப்பிற்கும் ஓட்டத்திற்கும் இடைப்படுவது இன்றி யமையாதது. அதுபோன்றே, திரவிட ஆட்சியும் ஆரிய ஆட்சிக்கும் தமிழாட்சிக்கும் இடைப்பட்டுத் தீரவேண்டும். இனிமேல்தான் தமிழாட்சி வரவியலும். தமிழாட்சியின் அறிகுறிகளாவன:- 1. தமிழைப் பண்படாத பன்மொழிக் கலவையென்றும் வட மொழிக் கிளையென்றும் காட்டித் தமிழனை நாகரிமற்றவனென் றும் காட்டு விலங்காண்டியென்றும் இழித்தும் பழித்துங் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலி, திருத்தப்பெற்றுச் சிந்துவெளி நாகரிகப் பழம்பொருள்களை ஆராயும் பின்னிய அறிஞரைச் செவ்வையாக ஆற்றுப் படுத்தல். 2. அமைச்சர் மட்டுமன்றித் தமிழரெல்லாரும் தமிழ்ப்பெயரே தாங்கல். 3. தமிழ்வாயிற் கல்வி கலவை மொழியில் நடைபெறாது தனித்தமிழில் நடைபெறுதல். 4. முழுநிறைவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கப் பெறல் 5. மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழறிஞர் தக்கவாறு போற்றப் பெறல். 6. தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்ட பத்தின் முன்பும், மறைமலையடிகள் வெண்கலப் படிமை யேனும் சலவைக்கற் படிமையேனும் நிறுவப்பெறல். 7. இதுவரை அச்சிற்கு வராத உலகவழக்குத் தமிழ்ச் சொற்க ளெல்லாம் தொகுக்கப்பெறல். 8. குமரிநாட்டினின்று தொடங்கும் உண்மையான தமிழ்நாட்டு வரலாறு விரிவாக வரைந்து வெளியிடப்பெறல். 9. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை தமிழரெல்லாராலும் அறியப்பெறல். 10. தமிழ்நாட்டுக் கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல். 11. தமிழ் உலகவழக்குப் படிப்படியாகத் திருந்திவரல். 12. அரசியல் அலுவலகப் பெயர்ப் பலகைகளிலும் விளம்பரப் பலகை களிலும் தமிழச்சொற்றொடர்கள் புணர்ச்சியுடன் எழுதப்பெறல். 13. தமிழ்நாட்டு ஊர்களும் தமிழிலுள்ள பெயர்ப்பலகைகளும் தூய தமிழ்ச்சொற்களையே தாங்கல். 14. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களி லெல்லாம் தமிழுக்குப் பேராசிரியப் பதவி யேற்படல். 15. கானா, பிரனீசு மலைநாடு முதலிய நாடுகட்கு ஆராய்ச்சி யாளரையனுப்பி, அங்கத்து மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற் களைத் தொகுப்பித்தல். 16. இந்திய ஆட்சியின் இந்தித் தொடர்பு அடியோடு நீக்கப் பெறல். இவையெல்லாம் நிகழுங் காலமே தமிழாட்சிக் காலமாகும். ஒரு சில தமிழர்க்கு உயர்பதவி கிட்டியவுடன் தமிழாட்சி வந்ததாகக் கருதுவது அறியாமையின்பாற் பட்டதே. தமிழாய்ந்த தமிழனே தமிழ்நாட்டு முதலமைச்சனாதல் வேண்டு மென்று புரட்சிப் பாவேந்தர் கொண்ட வேணவா இன்னும் நிறைவேற வில்லை. மறைமலையடிகள் வழிச்சென்று மாபெரும் பாடுபட்டு தமிழின் தூய்மையைக் காக்கும் ஒரேயொரு தொண்டனுக்கும். ஓர் ஆராய்ச்சிப் பதவி யளித்துதவ மனமின்றி, அகவை மிகையென்று தட்டிக்கழித்த ஒரு முதலமைச்சர் எங்ஙனம் தமிழாய்ந்த தமிழனா யிருக்கமுடியும்? சிறந்த ஆராய்சியாளனுக்கு மூப்பும் ஒரு தகுதி என்பதை, அவர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் நடித்தது மிக மிக இரங்கத்தக்கதே. இனி, தண்டவாளத்தின்மேல் தலைவைப்பது மட்டும் தமிழ்ப் பற் றையோ தலைமைத் தகுதியையோ காட்டிவிடாது. வண்டிவராத வேளை யும், நூற்றுக் கணக்கான நண்பர் அண்டிச் சூழ்ந்து நிற்கும் போதும், ஓட்டுநர் வண்டியை மேற்செலுத்தாரென்று திட்டமாய்த் தெரிந்த பின்பும், எவரும் தண்டவாளத்தின் மேல் தலையும் வைக்கலாம்; ஒரு தூக்கமுந் தூங்கலாம். மேலும், எடிசன், சர்ச்சில், மறைமலையடிகள், திங்கட்செலவி னர் போன்ற புதுப்புனைவாளரும் ஆள்வினைத் தலை வரும் பேரறிஞ ரும் அருஞ்செயன் மறவரும், தண்டவாளத்தின்மேல் தலை வைப்பது மில்லை; என்றேனும் வைக்கக் கருதுவதுமில்லை. ஆதலால், சிறுவருஞ் செய்யக்கூடிய அச் சிறுசெயல் பெரியோரின் பெருமைக்குச் சான்றாகாது. அறிவு, ஆராய்ச்சி, சொல்வன்மை, அன்பு, தொண்டு, நடுநிலை, குடிசெயல், தாளாண்மை, ஆள்வினைத்திறம், தறுகண்மை, ஈகைத்தன்மை, தன்மானம், பரந்த நோக்கு, பெருந்தன்மை முதலிய பண்பாட்டுக் குணங்களையே ஒருவர் பெருமைக்கும் தலை மைக்கும் சான்றாக எடுத்துக்காட்டல் வேண்டும். ஒரு நாடு முன்னேறுவதற்கு மொழியே வழியாம். தமிழ் தாழ்த்தப் பட்டதே தமிழன் தாழ்ந்ததற்குக் கரணியம். தமிழன் உயர்வடைய வேண்டு மாயின், தமிழ் மீண்டும் குமரிநாட்டிற்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே; திரைப்பட மொழியன்று. தமிழைப் போற்றா தவன் தமிழனல்லன். தமிழை அழிக்க விரும்புபவர் பேராயத்தார்போல் தாமே அழிந்து போவர். ஆதலால், தமிழ் மீண்டும் அரியணையேறு வதுபற்றி ஐயுறவேண்டா. தி.க.விலிருந்து தி.மு.க. தோன்றியது போன்றே தி.மு.க.விலிருந்து நாளடைவில் த.த.க. (தனித்தமிழ்க் கழகம்) தோன்றும். அன்றே தமிழாட்சி தொடங்கி உலகுள்ளவும் நிலைத்து நிற்கும். உலகத் தமிழ்க் கழகம் கையாளும் குறிக்கோட் பண்புகள் எண்மை எளிமை (simplicity), உண்மை (sincerity) தன்னலமின்மை (selflessness) தொண்டு (service), ஈகம் (sacrifice) என்னும் ஐந்தாகும். 6 பதவி விடுகையும் புத்தமர்த்தமும் பாவலர் பெருஞ்சித்தரனார் 'தென்மொழி' ஆசிரியராயிருப்பதோடு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டப் பணியையும் மேற் கொண்டுள்ளதால், மேற்கொண்டு ஒரு பணியுஞ் செய்ய நேரமின்றி, உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை விட்டுவிட்டார். அவர் பதவி விடுகையோலை ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. அவர் ஈராண்டாகச் செய்துவந்த தொண்டிற்கு, உ.த.க. சார்பில் நன்றி கூறுகின்றேன். நிலையான பொதுச் செயலாளர் அமர்த்தப்பெறும்வரை, ஏற்கெ னவே துணைச் செயலாளராக இருந்து வரும் புலவர் இறைக்குருவனார் தலைமைச் செயலாளராகவும் செயலாற்றி வருவார். முகவை மாவட்ட அமைப்பாளராகப் பணியேற்ற திரு அறவாழி யார், அடுத்துத் திடுமென ஆசிரியப் பயிற்சிக்குச் செல்வதாகக் கூறித் தம் பதவியினின்று விலகிக் கொண்டார். அவர் விலகோலையும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. இவ்வாண்டிறுதியில் (ஆட்டை விழாவிற்கு முன்பு) நிலையான பொதுச் செயலாளராக அமர்த்தப் பெறவிருந்த திரு தமிழ்க்குடிமகனார், இன்று நெல்லை மாவட்டச் செங்கோட்டைச் சட்டநாதக் கரையாளர் யாதவர் கல்லுரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதனால், உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை இனி ஏற்க முடியா தென்றெழுதி விட்டார். தனித் தமிழ்ப் பற்றுள்ள ஒருவர் பெரும்பதவி பெறுவது, உ.த.க. வளர்ச்சிக்கும் தமிழ் விடுதலைக்கும் இன்றியமையாத தாகையால், அவர் அப்பதவியில் நிலைப்பதொடு மேன்மேல் விரைந்துயரவும் இறைவனை வழுத்துகின்றேன். மதுரை மாவட்ட உ.த.க. அமைப்பாளராக, மதுரை இறையியற் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு.வீ.ப.க. Üöèù££¢ (²ï¢îóñ¢), è.º., அமர்த்தப் பெற்றுள்ளார். அமைப்பாளிரில்லாத மாநிலங்கட்கும் மாவட்டங்கட்கும் தகுதியுள்ள வர் முன்வரின் அல்லது தக்காரொருவராற் பரிந்துரைக்கப் பெறின், உடனே அமர்த்தப் பெறுவர், புலவராக அல்லது பட்டந்தாங்கியராக விருப்பதும் அரசியற் கட்சியெதிலும் சேர்ந்திராமையும், சேர்ந்திருப்பின் தமிழ் முன் னும் கட்சி பின்னுமாகக் கொண் டிருத்தலும், உ.த.க. சட்ட திட்டங்கட்கு முற்றுங் கட்டுபடுதலும், ஆட்டை விழாவிற்று இருநூறு உருபாவிற்குக் குறையாது தண்டிக் கொடுக்கும் ஆற்றலுண்மையும், மாவட்ட அமைப் பாளர் பதவிக்கு இன்றியமையாத தகுதிகளாம். பொருள்: உ.த.க. நோக்கம், கழக நடப்பு புத்தமர்த்தமும் - உறுப்பினர் கட்டணம் - முதன்மொழி அறிக்கை - ஆகியவை தொடர்பான தலைவர் அறிக்கை. முன்பார்வை: பொதுச் செயலாளர் பதவி விலகல் மடல் முதன் மொழி, உறுப்பினர் கட்டணத் தொடர்பான அமைப்பாளரின் மடல்கள். உ.த.க. நோக்கம்: தமிழை வடமொழிப் பிணிப்பினின்று விடுவித்துத் தூய்மையாகப் போற்றி வளர்ப்பதே உ.த.க.வின் ஒரு பெரு நோக்கம். தமிழ் என்பது மொழி. இலக்கியம் பண்பாடு ஆகிய மூன்றையும் தழுவும், வாழ்க்கை முறைக்குத் திருவள்ளுவரும், மொழி நடைக்கு மறைமலையடிகளும் சிறந்த வழிகாட்டிகளாவர். தமிழ் பண்பாட்டிற்கு மாறான கருத்துகள் உ.த.கழகத்தாற் கொள்ளப் பெறா. ஆதலால் தமிழ்ப் பற்றினும், கட்சிப்பற்றோ, மதப் பற்றோ விஞ்சியவர் உ.த.க. உறுப்பினராக இருத்தல் இயலாது. உ.த.கழக நடப்பு: எல்லா ஏந்துகளும் வாய்ப்பின், ஆண்டுதோறும் இறுதிக்காரி, ஞாயிறு ஏதேனுமொரு நகரில் ஆட்டைவிழாவும், இடைக்காலத்தில் தேவை மேற்படின் ஆட்சிக் குழுக்கூட்டம் ஒன்றும், பலவும் நடைபெறும். தனித் தமிழ் வளர்ச்சியையும், மறைமலையடிகள் வழிப்பட்ட தமிழ்ப்புலவர் ஒருவரையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும். உ.த.க; வணிகமும், கூட்டுறவும், அரசியலும், மொழியியலும், மதவியலும், குலவி யலும், இனவியலும், தொழிலியலும் பற்றிய பிற கழகங்கள்போற் பெரும் பான்மை யுறுப்பினர் ஆட்சிக்குட்படாது, முற்றுந் தலைவர் அதிகாரத் திற்கே உட்பட்டிருக்கும். ஆதலால், துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், நெறியீட்டுக் குழுவினர் ஆகிய பதவியினரை அமர்த்தும் அதிகாரம் முற்றும் தலைவர்க்கே உண்டு. மாவட்டக் கிளைகளை அமைத்து நெறிப்படி நடத்தி வருவதும் அவ்வப்போது கூட்டப் பெறும் ஆட்சிக் குழுக் கூட்டங்கட்குத் தப்பாது வருவதும், ஆட்டை விழா மாநாட்டிற்குப் பணந்தண்டி யனுப்புவதுமே மாவட்ட அமைப்பாளர் அதிகாரச்செயலும் கடமையுமாகும். உறுப்பினர் கட்டணம்: முன்பு ஆண்டிற்கு ஒரு உருபாவாக விருந்த உறுப்பினர் கட்டணம் பின்பு ஈரு உருபாவாக உயர்த்தப்பட்டதனால், பெரும்பாலும் ஏழை மக் களை உறுப்பினராக கொண்ட சில பல கிளைகள் குலைந்து போய் விட் டதாக ஓரிரு மாவட்ட அமைப்பாளர் எழுதியிருப்பதை ஓரளவு ஒத்துக் கொண்டு பின்வருமாறு கட்டண நெறியீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. செல்வநிலையேறியும் பரந்த நோக்கமும், விருப்பமும் உள்ளவர் ஈரு உருபாயும், அஃதியலாதவர் ஒரு உருபாவும் கொடுக்கக் கடவர். இதன் விளைவாக, கலைந்த கிளைகளின் புதுப்பிப்பும் புதுக் கிளைகளின் தோற்றமும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. முதன்மொழி வெளியீடு: உ.த.க. உறுப்பினர்க்கு அவ்வப்போது உரிய செய்திகளை அறிவித்தற்கே 'முதன் மொழி' யிதற் தோற்றுவிக்கப்பட்டது. எனவே அதில் வெளியிடப் பெறுகின்ற செய்திகளையே உ.த.க.வின் அதிகார முழுமையான செய்திகளாகக் கருதிக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். 7 உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு பாவலர் பெருஞ்சித்திரனார் உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகி விட்டதனாலும், உ.த.க.வின் நோக்கம் நிறைவேறாவிடின் அது கலைக்கப் பட்டுவிடும் என்று ஒரு கூற்றை மதுரை மாநாட்டில் அவர் விட்டெறிந்த தனாலும், அதையடுத்துச் செ.சொ.பி. அகரமுதலித் தொகுப்புத் திட்டத்தை அவர் உருவாக்கி யுள்ளமையாலும், நிலையான பொதுச் செயலாளர் ஒருவர் அவருக்குப்பின் இன்னும் அமர்த்தப்படா மையாலும், திருத்தப்பெற்ற சேர்ப்புப் படிவத்தை அச்சிடப் பொருளா ளரிடம் போதிய பணமின்மையாலும், பல்குழுவும் பாழ்செய்யும் உட் பகையும் தன்னலக் குறும்பும் ஆங்காங்கு கலாம் விளைத்து வருவத னாலும், உ.த.க. உண்டா இல்லையா என்னும் ஐயம் பல இளந்த உள்ளங்களில் எழுந் துள்ளது. உ.த.க. என்பது உலகந் தழுவிய கழகமாதலால், தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் மட்டும் இதுவரையிருந்ததுபோல் இராது, இனிமேல் தான் வெளி நாடுகளிலும் பரவி உண்மையான உலகத் தமிழ்க் கழகமாக இயங்கவிருக்கின்றது என்பதை, உண்மைத் தமிழன்பர் அனைவரும் அறிந்து மகிழ்வாராக. உண்மையான தமிழ்ப் பற்றின்றி கட்சிப் பற்றும் ஆட்பற்றும் தன்னலப் பற்றுங்கொண்டவர் உறுப்பினரும் மாவட்ட அமைப்பாளரு மாக அமைந்தத னாலேயே, உ.த.க. இன்று கட்டுக் குலைந்துள்ளது. தமிழின் பெயராற் கட்சியை வளர்க்க வேண்டுமென்பதே பலர் விருப்பம். தமக்கு வேண்டியவர் பொறுப்பான பதவியில் இல்லாவிடின், தாம் விலகிக் கொள்ள வேண்டுமென்பது ஒரு சாரார் கருத்து. உ.த.க. கிளை யொன்றமைத்து அதன் வாயிலாகத் தமக்குப் பொருளீட்டிக் கொள்வதே சிலர் குறிக்கோள். 'பாவாணர் மன்றம்' என ஒன்று கன்னட நாட்டில் தோன்றி என் நூல் வெளியீட்டிற் கென்று ஈராயிரம் உருபா தொகுத்த பின் அதன் தலைவரும் செயலாளரும் பொருளாளரும் கூடித் தமக் குள் அத்தொகையைப் பிரித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. சில கிளைகள் உ.த.க. தலைமை யகத்திற்கென்று ஏதேனு மொருவகை யிற் பொருள் தொகுத்துத் தமக்கே வைத்துக்கொள்கின்றன. சில அமைப் பாளருக்கு ஆண்டிற்கு ஐம்பது உருபாவிற்கு மேல் தண்டும் ஆற்றலே இல்லை. சிலர்க்குக் கிளையமைக்குந் திறனுமில்லை. சிலர்க்குக் குடும்பம் பெருத்துப் பொருளாசை மேலிட்டபின் தமிழ்ப் பற்றுத் தானே நீங்கி விடுகின்றது. சிலர்க்குத் தாம் பதவியில் இல்லாவிடின், தம் கிளைகள் மட்டுமன்றிப் பிறகிளைகளும் முறிந்து விடவேண்டுமென்பது பேரவா. சிலர் ஆட்டைவிழா மாநாடுகளைத் தகுந்த முறையில் நடத்த வழிவகை தெரியாது, தலைமையகத்திற்குப் பணம் மீத்துத் தராதிருப்ப தோடு அதனைக் கடனுக்குள்ளும் முழுக்கி விடுகின்றனர். ஒரு சிலரோ தம் அறிவையும் ஆற்றலையும் அளந்து பாராது, பாசறையும் படையணி யும் அமைப்பதிலேயே கண்ணுங் கருத்துமா யிருக்கின்றனர். இத்தகைய குற்றங் குறைகளெல்லாம் நீக்கிச் சட்டர்சிகளையும் தெ.பொ.மீ.க்களையும் அவர்க்குக் கட்டியங் கூறித் திரியும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்களையும் பட்டிமன்றத்தில் வீழ்த்தி, குமரி நாட்டுத் தமிழே திரவிடத்தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை உலகமேடையில் நாட்டப்பட்டபின், உ.த.க. உயர்ந்தோங்கிக் கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் நிலைத்து நிற்கும் என்பதை முற்கரணியாக (தீர்க்க தரிசியாக) உறுப்பினர்க்கு அறிவிக்கின்றேன். உண்மையான தமிழ்ப்பற்றுள்ள மாவட்ட அமைப்பாளரும் (அவரில்லா விடத்து) ஊக்கம் மிகுந்த உறுப்பினரும் அச்சுப்படிவம் வரும்வரை வெண்டாளிற் கையெழுத்திற் சேர்ப்புப் படிவங்களை எழுதி நிரப்புவித்து, ஆயிரக்கணக்கான புத்துறுப்பினரைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஆட்டைக்கட்டணம் தொடக்கத்திற்போல் ஒரு ருபாதான் (உருபா 1-00) சேர்ப்புப்படிவங்கள் தலைமைச் செயலாளருக்கும், உறுப்பாண் மைக் கட்டணத்திற்பாதி பொருளாளருக்கும் விடுக்கப்படல் வேண்டும். வருகின்ற நளி 11ஆம் பக்கல் (27.11.1971) காரி முற்பகல், திருச்சி அசோகாவுண்டிச் சாலையில், ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெறும். அன்று ஆட்டை விழா நடப்பு முறையும் பிறவும் முடிவு செய்யப்பெறும். அமைப்பாளரும் உறுப்பினரும் பணத்தொடு வருக. - உ.த.க. தலைவன் 8 உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க! ஒரு நாடு முன்னேறும் வழி அதன் மொழியே. பிராமணர் தென்னாடு வந்தநாள் தொடங்கி, திட்டமிட்டுக் கட்டுப்பாடாகத் தமிழைக் குலைத்து வந்திருக்கின்றனர். தமிழ் தாழ்ந்து விட்டதனால் தமிழனுந் தாழ்ந்து கெட்டான். தமிழும் தமிழனும் தலையெடுக்காவாறு பிராமணர் இறுதியாகச் செய்த பெருமுயற்சி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் தொகுப்பாகும். அதில், தமிழ், வடமொழியென்னும் சமற் கிருதக்கிளையென்றும், பன்மொழிக் கலவை யென்றும் காட்டப்பட்டுள் ளது. அதையே மேனாட்டார் நம்பித் தமிழையும், தமிழரையும் தாழ் வாகக் கருதுகின்றனர். அவ்வகரமுதலி திருத்தப் பெறும்வரை, தமிழன் முன்னேற வழியில்லை. அதைத் திருத்தற்கும் தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்டற்குமே அரை நூற்றாண்டாக அல்லும் பகலும் ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றாய்ந்தேன். பேராயக் கட்சியாட்சியில் என் தொண்டிற்கு எள்ளளவும் இடமில்லாது போயிற்று. இன்று தி.மு.க. ஆட்சியிலேனும், தமிழுக்கு நற்காலம் பிறக்காதா என ஆவலாக எதிர் நோக்குங்கால், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த ஒரு பேராசிரியரைத் தலைவராகவும், சென்னையிலுள்ள நாற்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரையும், ஓர் ஓய்வு பெற்ற உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியரான பெரும் புலவரையும், உறுப்பினராகவும் கொண்ட ஒரு தகுதியற்ற குழு, என்னையன்றி வேறெவருஞ் செய்யமுடியாத சென்னைத் தமிழகர முதலித் திருத்தத்திற் கமர்த்தப்பட்டு ஓராண்டாக ஏதோ செய்து வருவது, எள்ளி நகையாடத் தக்கதும், பொதுப் பணத்தைப் பாழாக்கும் வீண் செயலுமாகும். தமிழன்பர் செய்த தவப்பயனாகத் 'தென்மொழி'யாசிரியர் பெருஞ்சித்திரனார், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியுருவாக்க வும் வெளியிடவும் திட்டம் வகுத்து விட்டதனாலும், அவ் வகரமுதலி, பொருளகர முதலியும் சொற் பிறப்பியல் அகரமுதலியும் சென்னையகர முதலித் திருத்த அகரமுதலியுமாக மும்மடி யகரமுதலியாக வெளிவர விருப்பதனாலும், மேற்குறித்த சென்னைக் குழுவை உடனே கலைத்து விடுமாறு உ.த.க.கிளைகள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசிற்கும், சென்னைப் பல்கலைக்கழகத் துணைத் தலைவர்க்கும் வேண்டுகோள் விடுப்பதுடன், எனக்கும் ஒவ்வொருபடி அனுப்பி வைக்க. 9 உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள் தமிழ் உலக முழுதுந் தழுவிய ஒரு தனி முழுமுதற் செம்மொழி யாதலின், அதன் ஆரிய மாசுகளைந்து சீரிய நிலைமை காக்க மாபெருந் தமிழ் மலையாம் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நல்லிசைப் புலவரும் ஆன்றவிந்தடங்கிய சான்றோரும் பண்பட்ட தமிழ் மக்களுமே கடைப்பிடித்தற்குரிய விழுமிய கொள்கைத்தாம். ஆதலால், கொண்டதுவிடாத குறடும் பேதையும் போன்ற கட்சி வெறிய ரும் காக்கரும் போக்கரும் அதிற் சேரத்தக்கா ரல்லர். கொடுந் தமிழுங் கொச்சைத் தமிழுமாய்த் திரிந்து ஆரியமுங் கலந்து, தென்மொழித் தன்மை பெரிதும் மாறிய திரவிடம் வேறு; எண்ணிற்கெட்டாத் தொன்மையில் தன்னந்தனியாகத் தோன்றிய தூய்மையுங் கன்னித் தன்மையும் பேணித் தென்னவர் வளர்த்த தீந்தமிழ் வேறு. அதனால் தமிழுக்கும் திரவிடத்திற்கும் வேறுபாடறியாத ஒரு குழு அல்லது கூட்டம் தமிழைக் காக்கவோ, வளர்க்கவோ முடியாது. இதை நடைமுறையிற் கண்ட பின்னரே உ.த.க. தோற்றுவிக்கப்பெற்றது. இலக்கணமும் மொழிநூலும் சிறப்பக் கற்றாய்ந்த அறிவுடையாரே, மறைமலையடிகளின் பெருமையை அறியவல்லார். "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்" (பழமொழி: 7) மறைமலையடிகளே தமிழ்; தமிழே மறைமலையடிகள் என்று புனையினும் பொருந்தும். ஆதலால், அவர் படிமையை நிறுவுவது தமிழை நிறுவுவது போன்றதே. உலக மென்பது உயர்ந்தோர் மேற்றே. உலகத்தில் வாழும் மாந்த (human) வடிவுகளெல்லாம் உலகமெனப்படா. கொச்சை மாந்தரும் உலகமாயின், கொச்சைத் தமிழை விலக்க ஏது விராது. குருடர்க்கு யானை துடைப்பக்கட்டை யளவிலும் தூணளவிலும் தோன்றியது போல, குன்றிய அறிவுடையர்க்குக் குன்றின் அளவினரும் குன்றிமணியளவிலேயே தோன்றுவர். îñè¢°î¢ îñ¤ö¢ð¢ ðø¢ø¤ù¢¬ñ¬òî¢ îñ¢ ªê£ô¢ô£½ñ¢ ªêòô£½ñ¢ ªî÷¤õ£èè¢ è£ì¢®è¢ªè£÷¢ðõ£¢, îñè¢°ï¢ îñ¤ö¢ð¢ðø¢Áí¢ªìù¢Á ÃÁ õ¶, "á¬ñò£è ï®î¢¶ Þóð¢ªð´î¢¶ õ£ö¢ï¢î å¼õ£¢, ð¤ø£¢ îù¢¬ù ä»ø¢ø«ð£¶, "ï£ù¢ ð¤øð¢ð¤ô¤¼ï¢¶ á¬ñ" âù¢Á ªê£ù¢ù¬î«ò å袰ñ¢." அகப்பகையும் புறப்பகையுங் கலந்த எந்த இயக்கமும் உருப்படாது. ஆதலால், தனித்தமிழ்ப் பற்றும் கட்சிச் சார்பின்மையும் ஒருங்கே யுள்ளவரையே உ.த.க. உறுப்பினராகச் சேர்க்க. அல்லாரைச் சேர்க்கற்க. ஏற்கெனவே சேர்த்திருப்பின் உடனே நீக்கி விடுக. களை களை முளையிற் களையாவிடின் பயிர் விளைந்து பயன்தரா. ஒருசில பயிரேயாயினும், மேலும் மேலும் வித்து விளைந்து நாளடைவில் உலகப் பரவப் பல்கிவிடும். உலக முழுதும் பரவியுள்ள கிறித்தவம், முதற்கண் கிறித்துவின் பன்னிரு பின்செல்லியராற் பரப்பப்பட்டதே. இன்னும் ஐந்தாண்டிற்குள் உ.த.க. இயக்கம் வெற்றிபெறுவதும், தனித் தமிழ் அரியணை யேறுவதும், தெரிதரு தோற்றமாம். சேர்ப்புப் படிவத்தில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ள கட்சிக் குறிப்பை அடித்துவிடுக. "வாய்மையே வெல்லும்" -உ.த.க. தலைவர். 10 பாவாணரின் மூன்று அறிக்கைகள்! தமிழ்நாட்டைத் தனிநாடாக்க இந்தியாரின் தூண்டுதல் (தில்லி 'மெயில்' தாள் சிறப்பறிக்கையாளரிடமிருந்து வந்த செய்தி (சனு.1 - மொழிபெயர்ப்பு.) 1. தலைமை மந்திரியார் மொழிச் செய்திபற்றி மீண்டும் திரு. அண்ணா துரையொடு கலந்து பேசலாம். திருவாட்டியார் இந்திராகாந்தியார் இங்கு இன்று காலை நடந்த அறிக்கையாளர் கூட்டத்தில், மும்மொழித் திட்டம்பற்றிச் சென்னை- நடுவண் இடைப்பட்ட அறாவழக்கின் தீர்ப்பு தமிழ்நாட்டைப் பொறுத்த அளவே எங்களையும் பொறுத்துள்ளது என்று சொன்னார். அவர் யாரையும் நெருக்கிடைப்படுத்த விரும்பவில்லை. ஆயின், இந்தியா முழுமைக்கும் ஒரு தேசிய இணைப்பு மொழி இருக்கவேண்டு மென்று அவர் உணர்கிறார். அவர் சென்னைக்குச் சென்றபொழுது அங்குள்ள படித்த மக்களொடு அவர் ஆங்கிலத்திற் பேசமுடிந்தது. ஆனால், பொதுமக்களோடு பேசும்பொழுது ஒரு மொழிபெயர்ப்பாளர் வேண்டியிருந்தது. அது ஒரு வருந்தத்தக்க நிலைமை. மற்றச் செய்திகளிற் போன்றே தீர்க்கமுடியாத எந்தச் சிக்கலும் அல்லது புதிரும் இல்லையென்பது அவர் நம்பிக்கை. மும்மொழித் திட்டத்திற்கு என்ன நேர்ந்தது என்று வினவப் பட்டபோது, சிரிப்பிற்கிடையே, "அது இருக்கத்தான் செய்கிறது" என்றார். "மொழிச்சிக்கல் ஒரு திருக்கான செய்தி" என்றார் அவர். சென்னை முதலமைச்சர் திரு. அண்ணாதுரையொடு இதுபற்றிச் சில சமையங்களில் அவர் பேசி இருக்கின்றார். மீண்டும் அவர் தில்லிக்கு வரும்போது அவரொடு பேசலாமென் றிருக்கிறார். இவ்வறிக்கையில், திருவாட்டியார் இந்திரா காந்தியார் சென்னைப் பொது மக்களின் மொழிநிலைபற்றி வருந்தியதாகக் கூறும் கூற்று. தமி ழுக்குக் கூற்றாக (கூற்றுவனாக) இந்தியைப் புகுத்தத் திட்டமிட்டிருப் பதைத் தெளிவாகக் காட்டுதல் காண்க. 2. அண்மையில் நிகழ்ந்த சென்னை இந்தி பரப்பற் கழகப் பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் ஓர் உறுதி மொழியைப் படிக்குமாறு எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. படித்தி ருக்கின்றனர். அவ் வுறுதிமொழியின் ஒரு பகுதி வருமாறு :- "இத் தேச ஒற்றுமைக்கு ஒரு தேசியமொழி வேண்டியுள்ளது. இதற்கு எல்லா மொழிகளுள்ளும் மிகப் பொருத்தமானது இந்தியே. Þ¬î ï£ù¢ åð¢¹è¢ªè£÷¢è¤«øù¢..." தன்னைக் கொல்ல வந்தவனையும் பாதுகாக்கும் வேளாண்மை மடம் இவ்வுலகத்தில் தமிழனிடம்தான் உண்டு. வேறெந்த நாட்டிலும் இத்தகைய கேடு செய்யும் அமைப்பகத்தை அல்லது நிலையத்தை ஒரு நிமையமும் வைத்திரார். வருமுன் காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின் காப்போன் என்னும் மூவகைக் காப்போருள் கடைப் பட்டவனா கவும் தமிழன் இல்லையெனின், அவன் மக்கள் தொகை மிகையும் உணவுத் தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் உயிர் வாழ்ந்து என்ன பயன்? சென்னை இந்தி பரப்பற் கழகம் உடனே தன் கடையைக் கட்டுமாறு தமிழக அரசு கட்டளையிட வேண்டும். சென்னை இந்தியெதிர்ப்பு மாணவர் இக் கழகத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பதோடு, அக்கம் பக்கத்தி லுள்ள தமிழர்க்கும் இது செய்யுங் கேட்டை எடுத்துச் சொல்ல வேண்டும். அக் கழகத்தில் இந்திப்பட்டம் பெற்றவர்க்குத் தமிழ்நாட்டு அரசி யல் அலுவலகங்களில் எப்பணியும் தருதல் கூடாது. அக் கழக வினைஞரொடு தமிழர் எவ்வகை உறவும் கொள்ளுதல் கூடாது. நயன்மைக் கட்சியின் நாவலிடு (வினைக்கழைப்பு) இருக்குமிடந் தெரியாமலிருக்கும் நயன்மைக் கட்சி (party) திடு மென்று நிகழும் சிலை (மார்கழி) மாதம் 14ஆம் பக்கல் (31-12-68) சென்னைச் சிறுவர் அரங்கிற் கூடி தன் பொன் விழாவைக் கொண்டாடி யுள்ளது. அதோடு, தன்னை வலுப்படுத்து மாறும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைச் செய்தித்தாள் வாயிலாகத்தான் அறிகின்றோம். இற்றைத் தமிழன் எந்த அளவிற்குப் பேதை என்பதை, நயன்மைக் கட்சி யாட்சியும் அதன் கான்முளையாகச் சொல்லப்பெறும் தி. மு. க. ஆட்சியும் நன்றாய்த் தெரிவிக்கும். நயன்மைக்கட்சி 17 ஆண்டாகச் சென்னைக் கூட்டுநாடு முழுவதும் கோநேரின்மை கொண்ட குடியாட்சி செலுத்தினும், இறுதியில் மீண்டும் எழுந்திருக்க வியலாவாறு படுகிடையாய் வீழ்ந்தது. அதற்குக் கரணகம் (காரணம்) இரண்டு, ஒன்று அதன் தலைவர் விடுதலையுணர்ச்சி சற்று மின்றி ஆங்கில ராட்சியை முற்றுந் தழுவியது: இன்னொன்று அவர் நாட்டுமொழியை நாடாதது. அரசியற் கட்சிக்கு விடுதலையுணர்ச்சியே உயிர்நாடி யென்பதையும், மக்கள் முன்னேற்றத்திற்குத் தாய்மொழி வளர்ச்சி இன்றியமையாத தென்பதையும் அவர் அறியாது போயினர். அதனால் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் அவருக் கில்லாது போயின, நாட்டுமொழியை இகழ்ந்ததனால் புலவரையும் புறக்கணித்தனர். "இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு" (374) என்பதற்கேற்பப் புலவர் பொருட் செல்வமில்லா வறியராதலால், நெடுகலும் செல்வரும் சிற்றரசருமாகவேயிருந்த நயன்மைக்கட்சித் தலை வர், மறைமலை யடிகளைக்கூடப் பொருட்படுத்திப் போற்றவில்லை. அற்றைச் சென்னைச் கூட்டுநாடு தென்னிந்தியத் திரவிடநாடு மூன்றனுள்ளும் ஒவ்வொரு பகுதியைத் தன்னுட் கொண்டதேனும் நயன்மைக் கட்சியைத் தெலுங்கராகிய வயவர் (P) தியாகராயச்செட்டியாரும் மலை யாளியராகிய (T) மாதவ நாயரும் ஆகிய திரவிடரும் தோற்று வித்தாரேனும், அவர் ஆரியத்தை யெதிர்த்து மேற்கொள்ளும் துணிவும் ஆற்றலும் ஊட்டியவை, தமிழும் தமிழ் நாடுமே யென்பதை எவரும் மறுக்கவொண்ணாது. ஆயினும், இன்றும் தமிழ்நாட்டிற் கன்னட வழித் தமிழரான பெரியார் ஒருவரே ஆரியத்தை அரிமாவுரத்தொடு எதிர்ப்பவர் என்பதையும் எவரும் மறைக்கவோ குறைக்கவோ முடியாது. ஒரு நாட்டு மக்கள் நல்லறிவு பெறுதற்கும் ஓர் அரசியற்கட்சி நிலைத்து நிற்பதற்கும் விரிவான நாட்சரி ஒன்றும் பலவும் இன்றியமையாதவை என்பதை, இன்னும் தமிழ்நாட்டுத் தலைவர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் உணரவில்லை. நயன்மைக்கட்சி உச்சநிலையில் இருந்த காலத்தும், 'இந்து' (The Hindu) என்னும் பிராமணர்அல்லது எதிர்க்கட்சிச் செய்தித்தாளே, பேரகலத் தில் 12 அல்லது 16 பக்கங் கொண்டு பல்துறைச் செய்திகளையும் வெளியிட்டு, நாடு முழுதும் பெருவாரியாகப் பரவி வழங்கிற்று. 'நயன்மை' (Justice) என்று கட்சிப் பெயரே தாங்கிய நயன்மைக் கட்சித் தாளோ. சிற்றகலத்தில் 6 அல் லது 8 பக்கமே கொண்டு பெரும்பாலும் கட்சிச் செய்திகளையே வெளியிட்டத னால், 'இந்து' போலப் பரவி நிலையாது கட்சியொடு மடிந்தது. இன்றும் 'இந்து', 'இந்தியன் எக்கசுப்பிரசு' 'மெயில்' போன்ற ஆங்கிலத் தாளோ, 'தின மணி', 'சுதேசமித்திரன்' போன்ற தமிழ்த்தாளோ, தமிழனுக்கு ஒன்றுமில்லை. தமிழருட் கோடிச் செல்வர் பலருளர். ஆட்சியதிகாரமும் தமிழன் கையில் உள்ளது. செய்தித்தாளால் இழப்பும் நேராது. கருத்துப் பரவுவதுடன் பலர் பிழைக்கவுஞ் செய்வர். ஆயினும், ஒருவர் மூளையி லேனும் தாளுணர்ச்சி தோன்றவில்லை. நயன்மைக் கட்சி ஆரியத்திற்கு மாறானதாகவிருந்தும், அக் கட்சித் தலைவரான செல்வர் சிலர் தம் அறுபான் விழாவில் வெள்ளிக் குடமும் பொற்குடமும் பிராமணர்க்குத் தானஞ்செய்து அவர் காலில் விழுந்து கும்பிடு வதும், பிராமணரைக் கொண்டு வேதமோதுவித்துச் சமற்கிருதத்திற் சடங்கு நிகழ்த்துவதும், அறுபான் பிராமணர்க்கு இல்லங்கட்டிக் கொடுப்பதும், மற்ற பிராமணரையே கணக்கராகவும், சமையற் காரராகவும் அமர்த்திக் கொள்வதும், எத்துணைப் பேதைமையும் மானக் கேடுமான செயல். நயன்மைக்கட்சி ஆண்ட நாட்டுப்பரப்பில், முழுமையாகவும் பெரும் பகுதியாகவும் தமிழ்நாடு சேர்ந்திருந்தும், ஒருபோதும் தமிழன் முதலமைச்ச னானதுமில்லை தலைமைத் தீர்ப்பாளனானதுமில்லை. இன்றுவரை எத்தனை யரோ பிராமணரும் தெலுங்கரும் தலைமைத் தீர்ப்பாளராகியுள்ளனர். ஆயின், இன்னும் தமிழர் ஒருவர்கூட அப் பதவியைத் தாங்கவில்லை. சென்ற ஆண்டு நிகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர் பதவியமர்த்தத்திற்குப் பரிந்துரைத்த பட்டிகை வுறுப்பினர் மூவரும், தமிழ்ப் பற்றற்ற தெலுங்கரே. பிராமணர் தமிழிசையையும் தமிழ் நடத்தையுமே கருநாடக சங்கீத மென்றும் பரதநாட்டியமென்றும் பெயரிட்டுக்கொண்டு, அவற்றை ஆரிய முறையில் வளர்க்கப் பல்வேறு கழகங்களையும் மன்றங்களையும் அமைத்துள் ளனர். தமிழர் இசைநுட்பத்தை அறிந்து தியாகராசர் கீர்த்தனைகள்போல உயர்மெட்டுக்களில் தமிழ்ப் பாட்டுக்களை இயற்றுவிக்காதும், குலவேற்றுமை யின்றித் தமிழிசை வாணரை ஊக்குவிக்காதும், தமிழிசைச் சங்கத்தில் பயனற்ற பண்ணாராய்ச்சி செய்து கொண்டும், ஆரியரைத் தலைமைதாங்க அழைத்துக்கொண்டும், நாடகத் தமிழை அறவே கைவிட்டும், தமிழ்க் கலை நாகரிக வளர்ச்சிபற்றிச் சிறிதுங் கவலையின்றி யிருந்துவருகின்றனர். சிவநெறியும் திருமால்நெறியும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், இன்றும் கோவில் வழிபாடு பிராமணராலும் சமற்கிருதத்திலுமே நடத்தப்பட்டு வருகின்றது. நயன்மைக்கட்சித் தலைவர் ஆட்சியிலுள்ள கோவில்களிலும் இதுவே நிலைமை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தமிழ் சமற்கிருதக் கிளை மொழி என்னும் முடிவுதோன்றப் பிராமணரால் தொகுக்கப்பட்டி ருப்பதை அறிந்தும், தி.மு.க. ஆட்சி அதைத் திருத்துவதற்குத் தினையளவும் முயற்சி செய்யவில்லை. இந் நிலைமையில் தமிழர் எங்ஙனம் முன்னேற முடியும்? இந்தியை எங்ஙன் ஒழிக்க வியலும்? திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நிறைவு விழா திருவள்ளுவர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை செல்லுதற்கிட முண்டேனும், கி. மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதன்று என்பது முடிந்த முடிபாம். அம் முடிபுப்படி, சென்ற நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் ஈராயிர வாட்டை விழாவைக் கொண்டாடியிருத்தல் வேண்டும். ஆயின், அன்று தமிழகம் விழிப்புறாமையால் அது தவறிவிட்டது. எனினும், செய்ய வேண்டு வதைச் செய்யாமையினும் பிந்திச்செய்வது மேலாதலால், இந் நூற்றாண்டி லேனும் நாம் கொண்டாட நேர்ந்ததுபற்றி மகிழ்வுற வேண்டும். திருவள்ளுவர் காலம் கி. மு. 2ஆம் நூற்றாண்டென்று முடிவு செய்யப் பெற்றிருப்பினும், மறைமலையடிகளின் மாபெரு மாண்பு நோக்கியும் அவர் கள் வகுத்த தொடராண்டு வழக்கூன்றியமை பற்றியும், அதை மாற்றாதி ருப்பதே தக்கதாம். திருவள்ளுவர் விழாவைப் பழைய முறைப்படி மேழ (சித்திரை) மாதத்திற் சிலரும், புதிய முறைப்படி சுறவ (தை) மாதத்தில் சிலரும், திருவள்ளுவர் மறைந்தநாட் கொள்கைப்படி கும்ப (மாசி) மாதத்தில் சிலரும், கொண்டாடலாம். உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் தம் ஏந்தும் (வசதியும்) விருப்பமும்பற்றி எம் மாதத்திலும் கொண்டாடுக. ஆயின், உ.த.க சார்பான பொதுவிழா, அச்சிலிருக்கும் திருக்குறள் தமிழ் மரபுரைஅச்சானவுடன் அதன் வெளியீட்டுவிழாவெடும் கழக ஆட்டை விழாவொடும் சேர்ந்தே. மதுரையிலேனும் திருப்பாதிரிப்புலியூரிலேனும் நடைபெறும். அதன் விளத்தமான அறிவிப்பு விடைமாதத் 'தென்மொழி'யில் வெளிவரும். திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாவைக் கொண்டாடுவோர் விளம்பர நோக்கும் வணிகநோக்குமின்றி உண்மையான முறையிற் கொண்டாடுவதே, திருவள்ளுவர் பெருமைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற் கும் ஏற்ற தாகும். ஒரு நாளைக்கு ஒரு குறள் மேனியோ குறள் முழுதுமோ குருட்டுத்தனமாகப் பொறிவினை முறையில் உருப்போடுவதும், ஓரறிவுயிரு மற்ற சுவர்களில் எழுதி வைப்பதும், திருவள்ளுவர் கருத்திற் கேற்றவையல்ல. அதனால், அங்ஙனஞ் செய்பவர்க்கும் வீண்முயற்சியன்றி மறுமைக்கேற்ப ஒரு பயனும் விளையாது, ஏமாற்று வினைப்பயன் இம்மையிலும் நீடிக்காது. குல மத கட்சி வேறுபாடின்றித் தமிழர் அனைவரும் ஓரினமாக ஒன்றுபடுவதும், தமிழ்ப்பெயரே தாங்குவதும், தமிழிற் பேசும்போது தூய நடையிலேயே பேசுவதும். தம்மாலியன்றவரை பிறருக்கு நன்மை செய்வதும், உள்ளும் புறம்பு மொத்த வாய்மையைப் படிப்படியாகவேனுங் கடைப்பிடிப்ப துமே, திருவள்ளுவர் உள்ளத்திற்கேற்ற செயல்களாம். திருவள்ளுவர் கள் ளுண்டலைக் கண்டிப்பது போன்றே சூதாட்டையுங் கண்டிப்பதால், தனிப்பட்ட வராயினும் அரசினராயினும் சூதாட்டவகையிற் பொரு ளீட்டாமையும் திருவள்ளுவர் திருவுள்ளத்திற் கேற்றதாம். குறள் நெறியைக் கைக் கொள்ளாதவர் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடுவது, ஏசுபெருமானைக் குறுக்கையில் (சிலுவையில்) அறைந்தவர் முழங்காற் படியிட்டு அவரை வாழ்த்தி வணங்கிய தொத்ததே. 11 தமிழா விழித்தெழு! பிராமணர் தமிழரையும், திரவிடரையும் போல இந்தியப் பழங்குடி மக்களல்லர். அவர் கிரேக்க நாட்டையடுத்த மேலை ஆசியாவினின்று பாரசீக வழியாக இந்தியாவிற்குள் புகுந்தவர். அவர் முதன் முதலாகக் குடியேறிய சிந்து வெளி நாடும் அவர்க்குத் தொன்றுதொட்டு உரியதன்று; அது முகஞ்சொதரோ-அரப்பா நாகரிகத்தை வளர்த்த முதுபழம் திரவிட மக்களது. ஆரியர் சிறுபான்மையராய் இருந்தமையான், இந்தியாவிற் குடியே றிய உடனேயே மாபெரும்பான்மையரான பழம் திரவிட மக்களுடன் கலந்து நாளடைவில் தம் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். அதனால் அவர் எந்த மாநிலத் தில் குடியேறி வாழ்கின்றனரோ அந்த மாநில மொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும், தம் தாய்மொழியிற் சற்றும் பற்றின்றி தம் முன்னோர் மொழியின் கலவைத் திரிபாகிய வேதமொழியையும், அதற்குப் பிற்பட்ட அரைச் சேர்க்கை யான இலக்கிய நடை வழக்காகிய சமற்கிருதத்தையுமே இன்றும் கண் ணும் கருத்துமாகப் பேணிவருகின்றனர். தம் தாய்மொழிகளான திரவிட மொழிகளை, இழிந்தோர் மொழியெனப் பழிக்கவுஞ் செய்கின்றனர். தமிழ்த் தெய்வமென்று சிலரால் போற்றப்பெறும் காலஞ்சென்ற தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், பண்டாரகர். உ. வே. சாமி நாதர் அவர்களும் தம் வாழ்நாள் முழுதும் தமிழைக் கற்று மாபெரும் புலவராகித் தமிழ்ப் பேராசிரிய ராய்ப் பணியாற்றி, பல அரும்பெருந் தொன்னூல்களை வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றியும், தமிழ்ப் பற்றுக் கொள்ளாதது மிக மிக வருந்தத் தக்கதாம். தவத்திரு. அழகரடிகளின் மாமனாரும் சென்னைவாணருமாகிய காலஞ்சென்ற திருவாளர் தணிகை மணியார் (எம். ஏ.) ஒருமுறை பர். சாமிநாதர் அவர்களிடம் சென்று, "ஐயா! நேற்றுத் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக நன்றாயிருந்தது". என்று சொல்ல, அப் பண்டாரகர் உடனே சீறி விழுந்து, "என்ன ஐயா, நீங்கள் கூடச் சுயமரியாதைக்கார ராகிவிட்டீர்கள்! உபந்நியாசம் என்றல் லவா சொல்ல வேண்டும்! சொற்பொழிவு என்கிறீர்களே! Þ𢠹¶ê¢ ªê£ô¢¬ô â颫è èø¢Á袪è£í¢¯£¢è÷¢?" எனக் கழறின ராம். மற்றொரு முறை பண்டாரகரின் பழைய மாணவரும், குடந்தைப் பொன் வணிகரு மான திரு. ப. தி. சொ. °ñ£ó ê£ñ¤ Üõ£¢è÷¢ ªêù¢¬ù õ ðí¢ ì£óè¬óè¢ èí¢´ "äò£ ïôñ£ò¤¼è¢è¤ø¦£¢è÷£?" என்று அன்புடனும், ஆர்வத்துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, "என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவு துவேஷம்? க்ஷேமம் என்று சொல்லக்கூடாதா? ãù¢ ïôªñù¢Á õöè¢ èø¢ø ªê£ô¢¬ôð¢ ðòù¢ð´î¢¶è¤ø¦£¢è÷¢?" என்று சீறி விழுந்தாராம். சென்ற ஆண்டு திரு. காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியாரவர் கள் "குறளை சென்றோதோம்" என்னும் ஆண்டாள் கூற்றிற்கு "குறளைச் சென்றோதோம்" என்று திரித்து ஓரிடத்திற் பொருள் கூறியதுபற்றி ஆட்சி மொழிக் காவலர் திரு. கி. இராமலிங்கனார் (எம்.ஏ.) வினவச் சென்றிருந்தபோது, ஆச்சாரியாரவர்கள் (தமிழறிந்திருந்தும்) வடமொழி யில் விடை இறுக்க அதை அவர்களது அணுக்கத் துணைவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினராம். அதன்பின், ஆட்சி மொழிக் காவலர், "ஐயா! அடிகளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமே! Üé¢éùñ¤¼ï¢¶ñ¢ ãù¢ õìªñ£ö¤ò¤ô¢ õ¤¬ì ÞÁè¢è «õí¢´ñ¢?" என வினவ, அணுக்கத் துணைவர், "ஆச்சாரியார் சுவாமிகள் பூஜை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை," என மறுமொழி தந்தனராம்! தமிழ் மக்காள்! தமிழ் மாணவர்காள்! தமிழ்ப் புலவர்காள்! பார்த்தீர் களா தவத்திரு. சங்கராச்சாரியாரவர்கள் கடுங்கூற்றை! தமிழ் இழிந்தோர் மொழியாம்! ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் மிக்க இவ்விரு பதாவது நூற்றாண்டிலும் தமிழுக்கு இத்துணை இழிப்பும் பழிப்பும் ஏற்படுமாயின், வடமொழி தேவ மொழியென்றும், பிராமணர் நிலத் தேவர் (பூசுரர்) என்றும் முற்றும் நம்பப்பட்ட பண்டைக்காலத்தில் இவை எத்துணை மிக்கு இருந்திருத்தல் வேண்டும் என்பதை உய்த் துணர்ந்து கொள்க. உண்மையில் தேவமொழி தமிழே! இழிமொழி வடமொழியே! இதை என் 'The Primary Classical Language of the World' என்னும் ஆங்கில நூலிலும் , 'வடமொழி வரலாறு' என்னும் தமிழ் நூலிலும் கண்டு கொள்க. 12 தமிழ் ஆரியப் போராட்டம் மூவாயிரம் ஆண்டுகட்குமுன் ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத்தேவரென்றும் தம்மொழியைத் தேவமொழியென்றும் சொல்லியே மாற்றித் தமிழைக் கெடுத்துத் தமிழரையும் இழிதிற அடிமைப்படுத் தியபின், முதன் முதலாகத் திருவள்ளுவர் ஆரியத்தைக் கண்டித்துக் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தமிழ் ஆரியப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில், "ஆரியம் நன்று தமிழ் தீது;" எனவுரைத்த குயக்கோடனை நக்கீரர் சாகவும் எழவும் பாடியதினின்று, தமிழ் - ஆரிய மொழித் துறைப் போராட்டம் தொடங்கிற்று. நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாயிருந்துவந்த மொழிப் போரனலை, 1891ஆண்டிற் சுந்தரம் பிள்ளையும், 1899ஆம் ஆண்டிற் பரிதிமாற்கலைஞனாரும், கிண்டிக் கிளரச் செய்தனர். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தால் கொழுந்துவிட்டுப் பெரும் பிழம்பாக எரிய வைத்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள். அரசியல் துறையில் திரவிட-ஆரியப் போராட்டத்தைத் திறம்பட நடத்தி நயன்மைக் கட்சியை நிறுவி வெற்றி கண்டவர், வயவர் (Sir) தியாகராச செட்டியாரும் (T.M.) மாதவன் நாயரும் ஆவர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு மேல்வகுப்பு மாணவர் கல்வி நிலையங்களில் இடங்கிடைத்ததற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் பிற்பட்ட வகுப்பார்க்கும் கல்வி நிலையங்களிலும் அரசினர் அலுவல் துறைகளிலும் ஆட்சி மன்றங்களிலும் குறிப்பிட்ட தொகை யான இடங்கள் ஒதுக்கப் பட்டிருப்பதற்கும், படிப்புதவி யளிக்கப்பட்டு வருவதற்கும், சென்னை மாநகராட்சித் தலைவர் பதவி வகுப்பு வாரியாகச் சுழன்று வருவதற்கும், இற்றைத் தமிழ்நாடு பிராமணரில்லாத அமைச்சுக் குழுவால் ஆளப் படுவதற்கும், கேரளம் கன்னடம் ஆந்திரம் ஆகிய திரவிட நாடுகளில் திரவிடரே முதலமைச்சராதற்கும், அடிப்படைக் கருவியாயிருந்தது, 1920 முதல் 1937 வரை 17 ஆண்டு இரட்டையாட்சியைத் திறம்பட நடத்தி அரும்பெரும் தொண்டாற்றிய நயன்மைக் கட்சியே (Justice Party). பேராய ஆட்சியிலும், தாழ்த்தப்பட்டவரும் பிற்பட்டவரு மான தமிழரும் திரவிடரும், பெரும்பதவிகளும் பல்வேறு சலுகைகளும் பெற்றது நயன்மைக்கட்சித் தொண்டின் விளைவே. 1925 முதல், குமுகாயத்துறையில், முன்பு தன்மான (சுயமரியாதை) இயக்கமும் பின்பு பகுத்தறிவியக்கமுங் கண்டு ஒப்புயர்வற்ற தொண்டாற்றி வருபவர் ஈ. வெ. ரா. பெரியார். இன்று நயன்மைக் கட்சியுடம்பும் பகுத்தறிவுக் கட்சியுயிரும் ஓரளவு தனித்தமிழ்க்கட்சியுள்ளமுங் கொண்டு தமிழர் அல்லது தமிழ் நாட்டார் முன்னேற்ற வினையை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல் லாம் செய்து வருவது தி. மு. க. அரசே. ஆயினும், "பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் கொல் குறும்பும்" அதன் தனித்தமிழ்த் தொண்டைத் தடுத்துவிடுகின்றன. அதனாலேயே, 1969இல் உ. த. க. தோற்றுவிக்கப்பட்டது. எந்த வயலிலும் களைகள் முளைப்பது போன்று, எந்த இயக்கத்தி லும் சில தன்னலப் புல்லர் தோன்றிக் கெடுக்கத்தான் செய்கின்றனர். தனித்தமிழாலும் உண்மை வரலாற்றாலும், தமிழை வடமொழிப் பிணிப்பி னின்று மீட்பதே தமிழன் முன்னேறும் ஒரே வழியென்று கண்டு உ. த. க. மறைமலையடிகளின் தனித் தமிழியக்கத்தை மேற்கொண்டுள் ளது. (உண்மை வரலாற்றில் மூடநம்பிக்கை யொழிப்பும் அடங்கும்) தமிழுக்கும் ஆரியம் என்னும் சமற்கிருதத்திற்கும் இடைப்பட்ட உறவு தன்உரிமையிழந்த வழக்காடிக்கும் பிறன் உரிமையைக் கவர்ந்த எதிர் வழக்காடிக்கும் இடைப்பட்டதாதலால், ஒரு வழக்காட்டோ போராட்டமோ இன்றித் தமிழை வடமொழியினின்று மீட்க முடியாது. தமிழ் விடுத லையே தமிழன் விடுதலை. மூவாயிரம் ஆண்டாகத் தொடர்ந்து வந்து தமிழன் மூளையிலும் குருதியிலும் எலும்பிலும் நரம்பிலும் ஊறிப்போன ஆரிய அடிமைத்தனத்தை ஓரிரு நாளில் அல்லது ஒரு சிலர் கூடி ஒழிப்பதென்பது பித்தன் பிதற்றலே யாகும். போர்க் களத்திற்குப் படைக்கலம் போற் போராட்டத்திற்கும் சில கருவி நூல்கள் வேண்டும். பல வெளிவந்துள்ளன; இன்னும் மூன்று வெளி வரல் வேண்டும். அவை 'தமிழர் வரலாறு', 'தமிழர் மதம்', 'A Guide to Western Tamilologists' என்பன. அவற்றுள் முன்னி ரண்டு இவ்வாண்டும், இறுதியது அடுத்த ஆண்டும் வெளிவரும், அதன் பின், தமிழ்-ஆரியப் போராட்டம் தொடங்கி முழுவெற்றி காணும்வரை தொடரும், அதற்குள், ஆரியத்தை யெதிர்க்கும் அறிவும் ஆற்றலும் அறவேயில்லாத சில தான்றோன்றிச் சிறுப்பெரியார்கள், பரபரப்பும் பதற்றமுங் கொண்டு கருத்தொத்த பதின்மரைக் கூட்டிப் பாசறையும் படையணியும் அமைத்திருப்பதாகத் தெரிகின்றது. இம்முயற்சிக்கு முழுத் தகுதியுள்ள பெரியாரே காலமும் கருவியும் துணையும் பார்த்துக் காத்தி ருக்கும் போது, இச்சிறுப் பெரியார் செய்த செயல் எள்ளி நகையாடத் தக்கதே. உ. த. க. அமைப்பாளர், இத்தகைய சிற்றியக்கங்களில் ஈடுபட்டுத் தம் பதவியையும் உறுப்பாண்மையையும் தாமே இழவாதிருப்பாராக. ஓரியக்கத்திற்குள் அதற்கு மாறான மற்றோரியக்கம் இருத்தல் இயலாது. "மரத்தின் கீழாகா மரம்". 13 கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து வருகின்ற மேழ மாதம் 1ஆம் பக்கல் (14-4-1966) முதல் 2ஆம் பக்கல் (15-4-1966) வரை, பொதியத்தின் பெயராற் பெயர் பெற்றதும், குமரி நாட்டுப் பாண்டியர் சாலியொடு (சாவகத் தீவோடு) கைப்பற்றி ஆட்சி செலுத்தியதும், இன்றும் தமிழர் பலர் தம் தமிழ்ப் பண்பாடு கெடாது தழைத்து வாழ்வதுமான மலையா நாட்டுத் தலைநகரான கோலா லம்பூரில் 'உலகத் தமிழ்ப் பேரவை'ச் சார்பில் பெரும் பொருட் செலவில் நடைபெறவிருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு, இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் படிநிகராளியராக (Representatives)ச் செல்லவி ருக்கும் ஐம்பதின்மருள்ளிட்டு உலகத்தின் பல்வேறு பாகங்களினின்றும் செல்லும் விடைமுகவர் (Delegate) இரு நூற்றுவருள், தமிழின் இயல்பை யும் வரலாற்றையும் வளத்தையும் சிறப்பையும் நன்கறிந்தவரும் மொழி யாராய்ச்சியில் முற்றத் துறைபோயவருமான தவத்திரு மறைமலையடிகள் வழியினர் ஒருவரேனும் அமையாதிருப்பது, தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழறிஞர்க்கும் இழிவு தரத்தக்க நிகழ்ச்சியாகவே தோன்றுகின்றது. இம் மாநாட்டுத் திருக்கூத்தை ஆட்டிவைப்பவர். இன்று மலையாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராய் அமர்ந்திருக்கும் திரு. தனிநாயகம் என்பார். இவர் அண்ணாமலை நகரில் பேரா. தெ. பொ. மீ. அவர்களின் அறுபான் விழாப் பாராட்டாளருள் ஒருவராக வந்து, தம் பணியைச் செவ்வனே ஆற்றியவர். இதினின்று, இருவழித் தமிழறிஞருள் இவர் எவ்வழியினர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கிறித்தவ சமயக் குரவர் பணிக் கென்று சிறப்புடன் பயிற்சியும் பட்டமும் பெற்ற இவர். அப்பணியில் ஈடுபடாது எவரும் புகத்தக்க திறந்த மட மாகிய தமிழ்த்துறையிற் புகுந்து தனிநாயகம் பெற விரும்பியது ஒரு தனிச்சிறப்பே. அமெரிக்க நாடு சென்று தம் ஆங்கிலப் பேச்சுவன்மையால் அந்நாட்டு மக்களை இணக்கி, தமிழ் வளர்ச்சிக்கென்று பெருந்தொகை தொகுத்து வந்ததாகவும், அதைக் கொண்டு முதற்கண் தூத்துக்குடியில் தமித்து நடத்தி வந்த தமிழ்ப் பண்பாடு என்று பொருள்படும் தலைப்புக் கொண்ட ஆங்கில இதழிகை (Tamil Culture) வெற்றி பெறாமையால், சென்னை சென்று சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல பெரும் கல்லூரிகளிலும் தலைமைத் தமிழ்ப் பதவி தாங்கும் பேராசிரியன்மாரைக் கொண்ட ஒரு குழுவை அவ் விதழிகை யாசிரியர் குழுவாக அமைத்து, அதில் தம்மைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் குறித்துக்கொண்ட தாகவும், கேள்வி. அவ்விதழில் வரும் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளெல்லாம் பிறரால் எழுதப் பெற்றவையே. அவ் வாங்கில இதழிகை சென்னையில் நிறுவப்பெற்றதே அவர் சிறப்புத் தொடக்கமாயிற்று. அதன்பின், இலங்கைப் பல்கலைக்கழகத்தி லமர்ந்து அதினின்று மலையாப் பல்கலைக்கழகத்திற்குத் தாண்டி யுள்ளார். இதுவரை நூல் வாயிலாகவோ சொற்பொழிவு வாயிலாகவோ தமிழுக்குச் சிறந்த தொண்டு எதும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. அவர் கட்டுரைகளெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். தமிழிலிருப்பவை யெல்லாம், தமிழ்நூல்கள் எந்தெந்த நாட்டு நூல்நிலை யத்திலிருக்கின்றன வென்றும், தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த நாட்டு விழாவிற் பாடப்படுகின்றன வென்றும் தெரிவிப்பவையே. இதற்கு ஒரு பேராசிரியர் தேவையில்லை. நாடு சுற்றிவந்த எவரும் இத்தகைய செய்தி களைச் சொல்லலாம். இன்று கூட்டப்படும் தமிழாராய்ச்சி மாநாட்டின் சிறப்புகள் இரண்டு. அவற்றுள் ஒன்று மாநாட்டுச் சொற்பொழிவுகளும் கட்டுரை களும் ஆங்கிலத்தில் ஆற்றப்படுதலும் படிக்கப்படுதலும். இன்னொன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று வயவர் சி. பி. இராமசாமி அவர்களும் பேரா. தெ. பொ. ñ¦.யுñ¢, வங்க நாட்டினின்று பர். சட்டர்சி யும், மாநாட்டிற்குச் செல்லுதல். பர். சட்டர்சியின் தமிழறிவுத்திறம் எத்தகையதென்பது, என் அண்ணாமலை நகர் வாழ்க்கை என்னும் (பாவாணர்) கட்டுரைத் தொடரைப் படித்தவர் நன்கறிவர். அதனை இங்கு மீண்டும் கூறுதல் கூறியது கூறும் குற்றமாகும். மாநாட்டிற்குச் செலவிடப்படவிருக்கும் பணம் இலக்கக்கணக்கான வெண்பொற்காசென்று தெரியவருகின்றது. இதனாற் பெறப்படும் பயன் மலை கல்லி எலி பிடித்ததாகுமோ என அஞ்சவேண்டியிருக்கின்றது. தமிழுக்கு ஆக்கம் செய்யும் பணித்துறைகள் எத்தனையோ பலவுள்ளன. தமிழகத்து நாட்டுப்புறத்திலும் பழஞ்சேர நாடான மலை யாள நாட்டிலும் பழங்குட நாட்டிலும், வழக்கிறந்துவருகின்ற பழந் தமிழ்ச் சொற்களையெல்லாம் தொகுப்பதற்கு ஒரு பல்கலைக்கழகமும் இதுவரை ஒரு முயற்சியும் செய்த தில்லை. வா, போ, தூக்கு என்பன போன்ற எளிய தமிழ்ச்சொற்கள் மேலையாப்பிரிக்க கானா நாட்டு மொழியின் அடிப்படைச் சொற்களாக வழங்குகின்றனவென்று ஐந்தாண் டிற்கு முன்னரே அந்நாட்டு அரசியல் தலைவர் கூறியுள்ளார். இதனை ஆராய்தற்குத் தக்க மொழியாராய்ச்சியாளர் ஒருவரை அனுப்பிவைக்க, தமிழ் நாட்டு அரசினர்க்குக் கருத்தே எழவில்லை. தமிழ்நாட்டுப் பண்டை வரலாறு தமிழ்ப் பகைவர் சிலரால் தலைகீழாக எழுதப்பட்டு வருகின்றது. இதைத் தடுத்து உண்மையான வரலாற்றை வரைவிக்க ஓர் அமைப்பகமும் இல்லை. தமிழன் பிறந்தகம் குமரிநாடாதலால், இந்துமாவாரியில் ஆழ்ந்த கடலாராய்ச்சி செய்வது இன்றியமையாததா கின்றது. தமிழுக்கு ஒரு வேர்ச்சொல் அகரமுதலியோ, சொற் பிறப்பியல் அகரமுதலியோ, இன்னும் ஏற்படவில்லை. அவற்றைத் தொகுக்கும் ஆற்றலுள்ளவர்க்கோ இருந்த சிறு சம்பளப் பதவியும் இழப்பாகின்றது. ஒருதுறையில் அறிஞர் யாரென்று அறிஞர்க்கே அறிய முடியும். "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே ð£ñ¢ðø¤»ñ¢ ð£ñ¢ð¤ù¢ è£ô¢." (7) என்பது பழமொழி. மாநாட்டிற்குச் சிறப்பாக யார் யாரை அழைக்க வேண்டு மென்பதை அறியா தவர் சிறந்த அறிஞராக இருக்க முடியாது. மலையா நாட்டுத் தலைமையமைச்சர் உயர்திரு. துங்கு அபுதுல் இரகிமான் பொன்னான பண்பு வாய்ந்த பெருமான், உலகெங்கும் இனவெறிப் பேயும் மொழிவெறிப் பேயும் தலைவிரித்தாடும் இக்காலத்தும், தமிழையும் தமிழரையும் அரவணைத்துப் போற்றும் அன்னாரை யாம் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்துகின்றோம். இறைவன் அவர்க்கும் அவர் குடும்பத்திற்கும் நீடிய வாழ்வும் கூடிய நலமும் அருள்வாராக. மாநாட்டின் விளைவை ஆய்ந்தோய்ந்து பார்க்கின், அது திரு. தனி நாயகத்தின் விளம்பரமாகவே முடியும் எனத் தோன்றுகின்றது. ஆதலால் மலையாத் தமிழ் மக்கள் இதுபற்றி மிக விழிப்பாயிருக்க வேண்டுகின்றோம். அமைதிப் பெருங்கடலில் வாரியிறைக்கப்பட விருக்கும் இலக்கக்கணக்கான வெள்ளிகள் பொதுமக்கள் உழைப்பின் வேர்வைத் துளிகள் என்பதையுணர்ந்து, தலைமையமைச்சர் அவர் களிடம் தமிழை வளர்க்கும் தக்க முறையைத் தெரிவித்து, வீண் முயற் சியை மாண் முயற்சியாக மாற்றுவாராக. இக்காலத்தில் தமிழ்த்துறையிற் பலர் பதவியினாலேயே பெரியவரா யிருக்கின்றனர். படிப்பினால் அல்லர். மலையா போன்ற அயல்நாட்டுத் தலைவர்க்கு அது தெரியாது. ஏராளமாய்ப் பணம் செலவிட்டால் எந் நாட்டிலும் உலகத் தமிழ் மாநாடு கூட்டலாம். அதனால், அதைக் கூட்டுபவர் பெயர் பெறலாம். ஆனால், தமிழுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. கூட்டமும் கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெறுவதனா லேயே தமிழ் சிறப்படைந்துவிட்டதெனக் கருதுதல் தவறாகும். இக் காலத்தில் உண்மைத் தமிழறிஞர்க்குத் தமிழ்நாட்டிலும் இடமில்லை. தமிழைக் காட்டிக் கொடுப்பவரே தலைமைப் பதவி தாங்கித் தழைத்து வாழ்கின்றனர். 14 தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை ஒரு நாட்டுப் பொதுக்கல்வி, அந்நாட்டு மக்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப, ஒருமொழி வாயிலாகவோ இருமொழி வாயிலாகவோ மும்மொழி வாயிலாகவோ அமையும். பண்டைக் காலத்திற் பலநாட்டுக் கல்வி ஒருமொழி வாயிலாகவே யிருந்தது. ஆங்கிலர் வரும்வரை தமிழ் நாட்டிலிருந்தது ஒருமொழி வாயிற் பொதுக் கல்வியே. ஆங்கிலராட்சி யில், தமிழ்நாட்டில் தமிழொடு ஆங்கிலமும் கல்வி வாயிலானது. அஃது ஆளுமினத்தாரின் தாய்மொழி யாயிருந்தததினால் மட்டுமன்று, இன்றும் தமிழிலில்லாததும் மக்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததுமான பல்துறை அறிவியல் இலக்கியத்தைக் கொண்டிருப்பதனாலுமே, நம் அகக் கண்ணைத் தெளிவாக்கிப் பல்வேறு அறிவியற் பாதைகளைக் காட்டி அவற்றில் முன்னேறிச் செல்லவைத்தது ஆங்கில மொழியேயாத லால், அதன்மேற் குறை கூறுவதும் அயன் மொழியெனப் புறக்கணிப் பதும், அறியாமையும் நன்றி கெட்ட செயலுமாகும். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள். 110) இன்றும் அறிவிற் செல்வதற்கு வழிகாட்டியாயிருப்பது ஆங்கி லமே. அதனால் அதனைப் புறக்கணிப்பது தற்கொலைக் கொப்பாகும். ஆகவே, தமிழ், ஆங்கிலம் என்னும் இரண்டும் நம் நாட்டுக் கல்வி வாயிலாயிருத்தல் வேண்டும். ஆயின், இந்தி தமிழர்க்கு எள்ளளவும் வேண்டுவதன்று. அதனால் தீமையேயன்றி நன்மையில்லை, அத் தீமைகளாவன:- (1) தமிழ் மாணவர் தாங்கொணாத வீண் கடுஞ்சுமை. (2) தமிழர் இந்தியார்க்கு (இந்தி மொழியாளர்க்கு) என்றும் அடிமைப் பட்டிருக்கும் நிலை. (3) தமிழ் நாளடைவில் ஆரியம் போல் அழிந்தொழிதல். ஆங்கிலம் நமக்கு இறைவனால் அளிக்கப்பெற்ற ஈவேயன்றி, ஆங்கிலராற் சுமத்தப்பட்ட சுமையன்று. இந்தி இந்தியரை ஒற்றுமைப் படுத்தும்; ஆங்கிலம் அவரை இருவேறாக்கும் என்பது, நஞ்சுண்டவன் வாழ்வான், அமுதுண்டவன் மாள்வான்! என்பது போன்றதே. ஆங்கிலம் உலகமொழியாகி விட்டதனால், வடநாட்டுத் தொடர்பிற்கும் அஃ தொன்றே போதும். இந்தியாளர் உண்மையாக ஆங்கிலத்தைப் புறக்கணிக்கவில்லை. அவரும் அதன் இன்றியமையாமையை உணர்ந்துதான் இருக்கின்றனர். தமிழர் அல்லது தென்னாட்டார் திறந்த வாயரென்றும், அதற்கு உடனி ருந்துதவும் கோடரிக் காம்புத் தலைவர் பலர் உளரென்றும், கண்டு கொண்டே இந்தித் திணிப்பை விடாப்பிடியாய்க் கொண்டுள்ளனர். ஆங்கிலத்தை அவர் உள்ளத்தில் வெறுக்கா மையால், அவர் சொல்வது உள்ளொன்று புறம்பொன்றே. இதை அறிந்திருந்தும் தமிழ்நாட்டுத் தலைவர் தம் பதவி நிலைப்பிற்காகவே இந்தியை வரவேற்கின்றனர். இந்தி வெள்ளத்தை இன்று வன்மையாகத் தடுத்துக் கொண்டி ருப்பது ஆங்கில வல்லணையே. அதனை உடனே தகர்க்க இந்தியாரும் அஞ்சுகின்றனர். ஆங்கிலக் கதிரவன் அகலின் இந்தியா இருண்டுவிடும் என்பதை அவர் அறிவர். ஆயின், குறுகிய நோக்குள்ள சில தமிழ்ப் பேராசிரியரோ, ஆழ்ந்த எண்ணமும் கூரிய மதியுமில்லாது. ஆங்கில அணையுடைத்துத் தம் தவறான தமிழ்ப் பற்றினால் இந்தியை உடனே வரவழைக்க முற்படுகின்றனர். இவர் தாம் செய்வது இன்ன தென்றறியாது தம் நாட்டார் அல்லது இனத்தார் தலையில் மண்ணையும் நெருப்புத் தழலையும் வாரிப் போடுபவரே. ஆங்கிலம் அறிவு மொழியும் உலக மொழியுமாயிருப்பதுடன். தமிழுக்கு நட்பு மொழியாகவும் உள்ளது. இக் காலத்தும் இனிமேலும் தமிழ்நாட்டில் இரு மொழிக் கல்வியேயன்றி ஒருமொழிக் கல்வி இருக்க முடியாது. இருமொழித் திட்டத்தில் தமிழுக் கடுத்த இரண்டாம் மொழி ஆங்கிலமே. ஆதலால், அடியினின்று முடிவுவரை பொதுக் கல்வி இருமொழியிலும் கற்பித்தல் வேண்டும். பிழைப்பிற்காகவே ஏதேனும் ஓர் அளவாகக் கல்வி கற்றுத் தமிழ்நாட்டிலேயே வேலையை மேற்கொள் பவருக்குத் தமிழ் வாயிற் கல்வி போதும். மேற்கல்விக்கும் அலுவற்கும் வெளிநாடு செல்ல விரும்புவார்க்கு ஆங்கில வாயிற் கல்வி இன்றியமை யாதது. ஆங்கிலவாயிற் கல்வி கற்பதனால் தமிழ் மாணவர் தம் தாய் மொழியை மறந்துவிட முடியாது. அலுவல் தொடர்பல்லாத செய்தி கள்பற்றி வீட்டிலும் வெளியிலும் அவர் பெரும்பாலும் தமிழிலேயே பேசவேண்டியிருக்கும். அன்னார்க்குத் தமிழ்ப் பற்று மட்டும் இருந்தாற் போதும். இத்தகைய கல்வித் திட்டத்தால் தமிழும் வளம்பெறும்; தமிழ் மாணவரும் தம் தனி வேற்று முயற்சியால் ஆங்கில அறிவும் பேச்சாற்ற லும் அடைந்து கொள்வது நன்றே. தமிழ் வாயிற் கல்விக்கு, முதற்கண் ஆங்கில அறிவியற் குறியீடு களைத் தனித் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்வது இன்றியமையாத தாகும். இப்பணிக்கு ஆங்கிலமும் தமிழும் ஒருங்கே அறிந்த உண்மைத் தமிழன்பரை அமர்த்துவதே தக்கதாம். தமிழ்ப் பகைவரையும் போலித் தமிழரையும் தமிழ்ப் பற்றற்ற தெலுங்கரையும் தமிழறியாத பெருமாளரை யும் கொள்கையற்றவரையும், தன்னலக்காரரையும் உரமிலிகளையும் அமர்த்தி, பெரும்பாலும் வடசொற்களாக மொழிபெயர்த்தும், சிறு பான்மை மொழிபெயர்க்காது ஆங்கிலச் சொற்களை அங்ஙனமே வைத்துக்கொண்டும் கலவை நடையில் கற்பித்துத் தமிழிற் கற்பிப்பதாக நடித்து வருவது, மக்களை ஏமாற்றுவதேயன்றி வேறன்று. இதைத் தவறான தாய்மொழிப் பற்றுக் கொண்டு தமிழை வளர்ப்பதுபோல் தளர்த்துவரும் தமிழ்ப் பேராசிரியர் கவனிப்பதே யில்லை. மேலும், மாணவரைத் தமிழிற் கற்குமாறு வற்புறுத்தி வரும் தமிழ்ப் பேராசியார் சிலர், தம் ஆங்கிலப் பட்டத்தைத் தமிழிற் குறிக்கும்பொழுது தமிழில் மொழிபெயர்க்க விரும்பாமை வேடிக்கையான செயலாகவே விளங்கு கின்றது. தமிழ் என்றும் இருக்கவேண்டு மெனில் ஆங்கிலத்துணை அதற்கு இன்றியமையாதது. ஆங்கிலத் துணை நீங்கின், உடனே இந்தி வெள்ளம் வந்து தமிழ்மேற் சாடி அதனை நாளடைவில் அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு மொழி உலகில் வழங்குவது அதைப் பேசுவாரின் தொகையைப் பொறுத்ததே. பேசுவார் தொகை குறையின் வழக்கழியும்; அதுவே மொழியழிவாம். இதுகாறும் கூறியவற்றால், இத் தமிழ்நாட்டிற்கு ஏற்பது தமிழும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே யென்றும், ஆங்கிலம் நீங்கின் இந்தி வந்து தமிழை ஒழித்துவிடு மென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. 15 பல்குழுவும் உட்பகையும் கொல் குறும்பும் "பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் ªè£ô¢ °Áñ¢¹ ñ¤ô¢ô¶ ." (குறள். 735) ஒரு நல்ல நாட்டிற்கு இருக்கவேண்டிய நிலைமைகளையும் இல்லா திருக்க வேண்டிய நிலைமைகளையும், நாடு என்னும் அதிகாரத்தில் எடுத்துக் கூறியுள்ளார் எல்லா நாட்டு மக்களும் இன்புற்று வாழ்தற்கு வழிவகுத்த திருவள்ளுவர். இல்லாதிருக்க வேண்டிய நிலைமைகளுள் மூன்று, பல்குழு, உட்பகை, கொல் குறும்பு என்பன. இவ் விலக்கு ஆட்சித்துறைக்குப் போன்றே மொழித்துறைக்கும் ஏற்கும். பல்குழு : ஒரு நாட்டுமக்கள் முன்னேறுவதற்கு வழி மொழியே. அது காலத் திற்கும் இடத்திற்கும் ஏற்ப ஒன்றும் பலவுமாயிருக்கலாம். கூட்டு நாடல்லாத தனி நாடுகளிலும் கூட்டுநாடுகளின் கூற்றுநாடுகளிலும், பொது மக்களும் புலமக்களும் ஒருங்கே முன்னேறுவதற்கு ஒரேவழி தாய்மொழி யென்னும் நாட்டு மொழியே. தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதை நாட்டின் பெயரே காட்டும். ஆகவே, தமிழுயரத் தமிழன் உயர்வான் என்பதும், தமிழ் தாழத் தமிழன் தாழ்வான் என்பதும் சொல்லாமலே பெறப்படும். சிலர் தமிழன் உயர்ந்தால்தான் தமிழ் உயரும் என்று தலைகீழாக மாற்றிக்கூறுவர்.அக் கூற்றை, வையாபுரிகளைக் காட்டுங் கண்ணாடியாகக் கொள்க. ஏனெனின், தமிழை உயர்த்தாது அதை என்றும் ஆரியர்க்குக் காட்டிக்கொடுத்து, தந்நலத தால் தம்மை உயர்த்திக் கொள் வதே வையாபுரிகள் இயல்பு. தமிழ் என்னும் சொல்லினின்று தமிழன் என்னும் பெயர் தோன்றியிருப்பதே, தமிழாலேயே தமிழன் என்னும் இனம் தோன்றிற்று என்பதைக் காட்டும். தமிழ் வரலாற்றை அடிநாளிலிருந்து நோக்கின், ஆரியச் சூழ்ச்சியால் பல்வேறுவகையில் தமிழ் கெடக்கெடத் தமிழனும் உடன் கெட்டு வந்திருப பதைக் காணலாம். இந் நூற்றாண்டில் மாபெரும் புலவரான மறைமலையடிகளின் அரும்பெரு முயற்சியால் தமிழ் வடசொற் களையப்பெற்று மீண்டுந் தனிமொழி யாக்கப்பட்டபின், தமிழன் சற்று உயர்ந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதினின்று தமிழ் வாழ்வே தமிழன் வாழ்வு என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க. தமிழை வளர்த்தற்குத் தமிழகம் முழுதுந் தழுவிய பாண்டியன் தமிழ்க் கழகம் ஒன்றே பண்டைக் காலத்தில் இருந்து வந்தது. இக் காலத்திலோ, மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்றும், திருநெல்வேலித் தமிழ்ச்சங்கம் என்றும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் என்றும், சென்னைத் தமிழ்ச்சங்கம் என்றும், பிறவாறும், ஆரிய அடிப் படையிலும் குல வடிப்படையிலும் இட வடிப்படையிலும் மத வடிப் படையிலும் பல கழகங்கள் தோன்றி மொழியடிப்படையில் தமிழ் முன் னேற்ற மடையாவாறு தாமே முட்டுக் கட்டையிட்டுக் கொண்டுள்ளன. இனி, இக் குறைகளை நீக்கி நிறைவுபெறத் தோன்றிய தமிழகப் புலவர் குழுவும், முதலிரு தமிழ்க்கழகம் போல் பற்றும் மூப்பும் புலமை யும் ஒருங்கேயுடைய புலவரை யெல்லாம் கொள்ளாது, கடைக் கழகத் தின் இறுதிக்காலப் புலவரின் தொகையையே அடிப்படையாகக் கொண்டு, ஏழேழ் வகைப்பட்ட இளைஞரும் முதியருமான பலதிறத் தமிழறிஞரையே கொண்டுள்ளது. பண்டைக் கடைத் தமிழ்க் கழகமும் நிறைபுலமையடிப்படையிலன்றி, இயற்றமிழ்ப் புலவர் எழுவர், இசைத்தமிழ்ப் புலவர் எழுவர் முத் தமிழ்ப் புலவர் எழுவர், இருமொழிப் புலவர் எழுவர் என்றோ அந்தணப் புலவர் எழுவர், அரசப்புலவர் எழுவர், வணிகப் புலவர் எழுவர், வேளாளப் புலவர் எழுவர், வேட்டுவப் புலவர் எழுவர், இடைப்புலவர் எழுவர், நுளைப்புலவர் எழுவர், என்றோ; சிவனியப் புலவர் எழுவர், திருமாலியப் புலவர் எழுவர், சமணப் புலவர் எழுவர், புத்தப் புலவர் எழுவர், அளவை மதப்புலவர் எழுவர், உலகமதப் புலவர் எழுவர், மதமிலாப் புலவர் எழுவர், என்றோ; பாண்டிநாட்டுப் புலவர் எழுவர், சோழநாட்டுப் புலவர் எழுவர், சேரநாட்டுப் புலவர் எழுவர், கொங்குநாட்டுப் புலவர் எழுவர், தொண்டைநாட்டுப் புலவர் எழுவர், கருநட நாட்டுப்புலவர் எழுவர், வடுகநாட்டுப் புலவர் எழுவர், என்றோ; புலவர் நாற்பத்தொன்பதின்மரைக் கொண்டிருந்ததில்லை. மேலும், கடைக்கழகம் ஒன்றே இறுதியில் நாற்பத்தொன்பான் புலவரைக் கொண்டிருந்தது. தலைக்கழகப் புலவர் தொகை 549; இடைக்கழகப் புலவர் தொகை 59. முக் கழகத்திலும் உறுப்பினர் தொகை ஒருபோதும் வரையறுக்கப் படவில்லை. அவ்வப்போது புதுப் புலவர் வரினும் தகுதிபற்றிச் சேர்க்கப் பட்டனர். இதையே, கழகப் பலகை தகுந்த புலவரடுப்பின் தானே ஒரு முழம் நீண்டு இடங்கொடுக்கும் என்பது தெரிவிக்கும். பற்றும் மூப்பும் புலமையும் ஒருங்கேயுடைய தமிழ்ப் புலவரெல்லாம் தமிழகப் புலவர் குழுவில் இடம்பெற வில்லை. அதன் உறுப்பினரெல் லாரும் இம்முத் தகுதியும் உடையவருமல்லர். ஒரு சிலர் தமிழுக்கு மாறாகப் பேசியும் எழுதியும் வருவதும் வெளிப்படை. தனித் தமிழ்ப் பெயர் தாங்கவோ தூய தமிழிற் பேசவோ பலர்க்கு ஆற்றலுமில்லை; விருப்பமுமில்லை. இதுவரை நடைபெற்ற எத்தனையோ கூட்டங்களுள் ஒன்றிலேனும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலிச் சீர்திருத்தம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றப்படவுமில்லை. சூழ்வுக் கூட்டங்களில் இயன்றவரையிலேனும் தனித்தமிழ்நடை கையாளப் பெறுவதுமில்லை; அக் குறிக்கோளுமில்லை. இனி, சென்னையையும் புதுவையையும் தலைநகராகக் கொண்ட இற்றைத் தமிழ்நாடுகள் இரண்டிற்கும் பொதுவாக, ஒரே, உண்மையான, நிலையான, அஞ்சாத, தன்னலமற்ற, பல்துறையுந் தழுவிய, முழுப் பொறுப்பேற்ற தமிழ் நிறுவனம் இருத்தல் வேண்டும். அதுவே, உலகத் தமிழ்க் கழகம். இனிமேல் இந்தியெதிர்ப்புப் பற்றியோ, தமிழ்வளர்ச்சி பற்றியோ, வேறு எவ்வமைப்பும் ஏற்படவோ முயற்சியி லீடுபடவோ வேண்டியதில்லை. அத்தகைய நோக்கமுள்ளவ ரெல்லாரும் இதிற் சேர்ந்துகொள்ளலாம். உட்பகை : எல்லாத் துறையிலும் இன்று தமிழுக்கு மாறாக நின்று அதைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுக்கும் உட்பகையார், பேராயக் கட்சியாரும் வையா புரிகளும் என இரு சாரார். பேராயக் கட்சி தமிழ்நாட்டில் தமிழுக்கு மாறாகவே தோன்றிற்று. அதைத் தோற்றுவித்தவர் சமற்கிருத வெறியரான ஆரியரே. தமிழையும் அதன் இலக்கியத்தையும் தமிழ் நாகரிகப் பண்பாட்டையும் தமிழர் வரலாற்றையும் அறியாதவரும், தமிழ்ப்பற்றும். தமிழ் இனப்பற்றும் இல்லாதவரும், ஆகிய தந்நலத் தமிழரையும் தமிழ் இளைஞரையும், பேராயக் கட்சியின் ஆரியத் தன்மையை மறைக்கவே அதன் (ஆரியத்) தலைவர் துணைவராகவும் தொண்டராகவும் சேர்த்துக்கொண்டனர். ஆங் கிலேயரால் தமிழர்க்குச் சில சிறு தீங்குகள் நேர்ந்தனவேனும், அவரால் விளைந்த பல்வேறு நன்மைகள் அவற்றை எளிதாய் மறைக்கவும் மறப்பிக்கவும் வல்ல மாபெரு மாண்புடையனவாகும். இதையறியாதார் வரலாற்றறிவில்லாதாரே. அனைத்திந்தியப் பேராயக் கட்சியைத் தோற்றுவித்தவர் இயூம் (Hume) என்னும் ஆங்கிலரே. இந்தியரைப் படிப்படியாகத் தம்மாட் சிக்குத் தகுதிப்படுத்தி வந்த ஆங்கிலர், தாமாகவே இந்திய ஆட்சியை இந்தியரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லவிருந்தனர். அவரை விரைந்து விரட்டியதே பேராயத்தார் செய்த செயல். அதனால் விளைந்த விளைவே சீனத் தாக்குதலும் பாக்கித்தான் போரும் மொழிச் சிக்கலும். ஆங்கிலர் நீங்கினபின், காந்தியடிகள் பேராயத்தைக் கலைக்கச் சொல்லி யும் தந்நலத் தலைவர் கலைத்திலர். தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியைத் தோற்றுவித்த ஆரியத் தலை வருள் மாபெரும்பாலார் மறைந்துவிட்டனர். இரண்டொருவர் இன்றுமி ருப்பினும் அக் கட்சியைவிட்டு விலகியுள்ளனர். ஆகவே தலைமைப் பதவிக்கு முழு வாய்ப்புபெற்ற தந்நலத் தமிழரே இன்றும் அக்கட்சியில் ஒட்டிக்கொண்டு தமிழைக் காட்டிக் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில், ஆங்கிலர் காலத்திலும் அதன் பின்பும் நீண்ட காலமாகத் திரவிடர் கழகத்திலும் திரவிட முன்னேற்றக் கழகத்திலும் துணைத்தலைவராக விருந்து, தமிழுக்கு உண்மையான தொண்டு செய்து வந்த தூயதமிழரான பாவலர் கண்ணதாசனாரும் திரு. சம்பத்தும், திடுமென்று ஏற்பட்ட கட்சிப் பிணக்கினால் வேறொரு தமிழ்க் கட்சியேற் படுத்துவதாக விலகிக்கொண்டு, பேராயக்கட்சியிற் சேர்ந்து, குளித்தபின் சாய்கடையில் விழுவதுபோலும், உடன்பிறந்தார் மீதுள்ள பகையாற் பெற்ற தாயைக் கொல்வதுபோலும், தமிழுக்குக் கேடானவற்றைச் செய்துவருவது மிகமிக வருந்தத்தக்கதாகும். தி.மு.க.வ வெறுப்பது குற்றமன்று; அதற்கு மாறாக வேலை செய்வதும் குற்றமன்று. தமிழை வெறுப்பதும் அதற்கு (தமிழுக்கு) மாறாக இந்தியை ஏற்பதுமே குற்றமாம். ஆதலால், இருவரும்விரைந்து பேராயக் கட்சியினின்று வெளியேறித் தமிழ்க்கட்சி தோற்று வித்து வெற்றிபெறுக. இடையிட்டுத் தம் குருதியிற் படித்த கறையைப் போக்கி, இறுதிக் காலத்திலேனும் தனித்தமிழ்த் தொண்டாற்றித் தம் தூய தமிழப் பிறப்பை நிலை நிறுத்துக. பேராயக்கட்சி யாட்சியில் தமிழைக் காட்டிக்கொடுத்துத் தழைத் தோங்கிய வையாபுரியார், இன்றும் தம் பதவி நீங்காதிருப்பதும் தன்மை மாறாதிருப்பதும், இற்றையாட்சியால் ஏற்பட்டதே. எதிர் காலத்தில் தமிழாட்சி ஏற்படும்போது, அவர் தமிழைக் காட்டிக்கொடுத்து ஈட்டிய தும் ஈட்டுகின்றதும் ஈட்டுவதுமான பொருளெல்லாம் பறிமுதல் செய்யப் படும் என்பதை அறிவாராக. கொல் குறும்பு : இன்று தமிழுக்குக் கொல்குறும்பாகவிருந்து ஊறுசெய்வார், தமிழை வெறுக்கும் பிராமணரும், இந்தியை இந்தியப் பொதுமொழியாக்க முனையும் மொழி வெறியரும், தென்னிந்திய இந்தி பரப்பற் கழகத் தாருமாவர். கடந்த மூவாயிரமாண்டாக ஆரியச் சூழ்ச்சி வெற்றிபெற்று வந்தி ருப்பினும், இனிமேல் அது செல்லாதவாறு தமிழர் கண் திறக்கப்பட்டி ருப்பதை யுணர்ந்து, தமிழ்நாட்டுப் பிராமணர் ஊரொடு நாட்டொடு ஒத்துவாழ்ந்து, "பிராமணனுக்குப் பின்மதி (புத்தி)" என்னும் பழமொ ழியை மெய்ப்பியாதிருப்பா ராக. தமிழே தம் தாய்மொழியென வுணர்ந்து அதற்குத் தக அதனைப் போற்றிக் காப்பாராக. தமிழைச் சமற்கிருதக் கிளைமொழியாகக் காட்டும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியைத் திருத்தி வெளியிடின், இந்தி வெறியர் செருக்கெல்லாம் சூறாவளிப் பூளைபோல் மாய்ந்துவிடும். ஆயினும், இதை எத்துணையோமுறை எடுத்துச் சொல்லியும் நடுவணரசு தமிழின் பெருமையை யும் தலைமையையும் அறியும்வரை, தமிழ் நாட்டுத் தேசியப் படைமாணிப் பயிற்சியில் இந்தி யேவற் சொற்களை எவ்வகைய லேனும் வற்புறுத்தத்தான் செய்யுமென்பதை, இற்றைத் தி.மு.க. அரசு அறிதல் வேண்டும். மண்டெரி வாய் மடுப்பினும் கண்டு யிலும் மாசுணம்போற் கவலைகொள்ளாதிருக்கின்றது இற்றைத் தமிழ் நாட்டரசு. தமிழாட்சி வரும்வரை இத் திரவிட ஆட்சி இங்ஙன்தான் இருக்கும்போலும்! சென்னையிலுள்ள தென்னிந்திய இந்தி பரப்பற் கழகப் பூனை சென்ற இந்தியெதிர்ப்பிற் சூடு கண்டும், இன்னும் தன் நிலைமையை உணராதிருக்கின்றது. தென்னிந்திய மொழிகளில் தேர்வுகளை வடநாட்டி லும் தென்னாட்டிலும் நடத்திவிட்டால், தமிழர் இந்தியெதிர்ப்பு அடி யோடு நின்றுவிடும் என்று அது கனாக் காண்கின்றது. "ஆடு நனைகிற தென்று ஓநாய் அழுததாம்". தமிழர் தமிழை ஊக்கவில்லையென்று தமிழை ஒழிக்கக் கருதும் இந்தி பரப்பற் கழகம் மிகவும் கவல்கின்றது. இத்தகைய குருட்டுச் சூழ்ச்சிகளை அறவே விட்டுவிட்டுத் தமிழாட்சி வந்து கோடையிடிபோற் குமுறி யிடிக்குமுன், தன் கடையைக் கட்டிச் சுருட்டிக்கொண்டு வடநாடு சென்று அங்குத் தமிழைப் பரப்பத் திட்ட மிடுவதாக. அது தமிழ்நாட்டில் இருக்கும்வரை தமிழுக்குப் புற்றுநோய் பரப்பியாகக் கருதப்படுமென்பதையும், அறிவதாக. 16 உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உறைத்த எச்சரிக்கை பயிர் தழைத்துவரும்போதே பக்கத்துக் களைகளும் வளர்ந் தோங்கி வந்து நெருக்கிக் கெடுப்பதுபோன்று, மூவாயிரம் ஆண்டாக ஆரியச் சூழ்ச்சியால் மறைந்தும் குறைந்தும் நலிந்தும் நறுங்கியும் அளவிலா அல்லற்பட்டு வந்த தமிழ், மறைமலையடிகள் காலத்தினின்று மறுமலர்ச்சி யடைந்துவரும் இந்நாளில், தக்க அறிவும் ஆராய்ச்சியு மின்றிப் பட்டம் பதவிகளையே துணைக்கொண்டும், குன்றன்ன பொரு ளீட்டுவதையே குறிக்கொண்டும், பகைவர் பாங்காகிக் குமரிநாட்டுத் தீந்தமிழைக் குலைத்துவரும் வையாபுரிகள் கை ஓங்கிவருவது, மிகமிக அஞ்சத்தக்க தீக்குறியாம். தமிழ்ப்பெயர் தாங்காமை, தமிழ்த்தூய்மை போற்றாமை, முக்கழக வுண்மையை ஒப்புக்கொள்ளாமை, இந்தியெதிர்ப்பில் ஈடுபடாமை, சமற் கிருத வழிபாட்டைத் தடுக்காமை இவ்வைந்தும் தலையாய வையா புரிகளின் பண்புகளாம். "உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம் உடன்பிறந்தே கொல்லும் "பிணிகள்" - உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரு முண்டு" பொருளீட்டுவது வேறு; புலந்தொகுப்பது வேறு. இவ்விரண்டும் தம்முள் முரண்பட்டவை. அதனாலேயே, "இருவே றுலகத் தியற்கை திருவேறு ªî÷¢÷¤ò ó£î½ñ¢ «õÁ." (குறள். 374) என்றார் திருவள்ளுவர். "நாவின் கிழத்தி யுறைதலிற் சேராளே Ìõ¤ù¢ è¤öî¢î¤ ¹ô." என்றார் நாலடியார். பொருளீட்டுவது ஒருவரின் தனியுரிமையே. ஆயின், தமிழைக் கெடுத்துப் பொருளீட்டுவது ஒருவர்க்கும் உரிமை யன்று. தன்னலத்தார் எத்தகைக் கட்புல வுண்மையையும் மறுக்க அஞ்சார் என்பதை, "...............................................................நர்நின்று. காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை ê£ô¢¹¬ìî¢ ªîù¢ð£¼ ºí¢´." என்னும் குமரகுருபர அடிகள் கூற்றுக்காட்டும், பொதுமறை கண்ட பொய்யா மொழியாரோ, உலகறிந்த உண்மையை மறுப்பாரை, "உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் îô¬èò£ ¬õè¢èð¢ ð´ñ¢." (குறள். 850) என்று வன்மையாகக் கடிந்தார். பண்டைப் பாண்டிநாட்டு முக்கழக வுண்மையை, மறைமலை யடிகள், ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசர், சோமசுந்தர பாரதியார் முதலி யோர் மட்டுமன்றி; உ. வே. சாமிநாதர், இரா. இராகவனார் (ஐயங்கார்), மு. இராக வனார் (ஐயங்கார்), முதலியோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சென்ற சிலை மாதம் 17ஆம் பக்கல் தஞ்சையில் நடைபெற்ற தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாட்டில், இற்றைத் தமிழ்ப்புலவருள் நடுநாயகமாக விளங்கும் மாணிக்கம் போன்ற நடுநிலைச் சான்றோர் பர். வ. சுப. மாணிக்கனாரும், குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தையும் முக்கழக வுண்மையையும் ஒப்புக்கொண்டு விட்டார். இங்ஙன மிருப்பவும், 'தில்லிச் சாகித்திய அக்காதெமி' என்னும் இலக்கிய மன்றத்தால் ஏவுண்டு பர். மு. வ. வால் வரைவுண்டு அண்மை யில் வெளிவந்த 'தமிழ் இலக்கிய வரலாறு', தமிழின் தோற்றத்தையும் எதிர்கால நிலையையும் காட்டாத முண்ட வரலாறாயிருப்பதுடன்; குமரி நாட்டுத் தமிழ்த் தோற்றத்தை மறைத்தும், முக்கழக வுண்மையை மறுத்தும், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரை அட்டாத்தியாயீ (பாணினீயம்) நிறைந்த தொல்காப்பியராக கி. மு. மூன்றாம் நூற்றாண்டின ரென்று யாதொரு சான்றுமின்றிக் குறித்தும், வடவெழுத்தைத் தமிழெழுத் தென்றும் தமிழெழுத்தை வடவெழுத் தென்றும் மயங்கியும், அயன் மொழிச் சொற்களைத் தமிழெழுத்தொடு புணர்க்காது அயன்மொழி யெழுத்தொடு புணர்த்தும், தமிழிலக்கணங் கல்லாதவரையும் தமிழ்ப் புலமை யில்லாதவரையும் தமிழதிகாரிகளாகக் காட்டியும், மொழி முதலாகா எழுத்துகளை மொழிமுதலாக்கியும், ஐயர் என்னும் சொல் வடிவை 'அய்யர்' என்று திரித்தும், மடக்கு, புதினம் என்னும் தென் சொற்கட்குத் தலைமாறாக யகமம், நாவல் என்னும் வேற்றுச் சொற்களை ஆண்டும், தமிழிலக்கியம் செய்யுள் முதலியவற்றின் தோற்றத்தைப் பற்றித் தவறான கருத்துகளைப் புகுத்தியும், தமிழர்க்குச் சமற்கிருதக் கல்வியும் வேண்டுமென்று சொல்லாமற் சொல்லியும், தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப்பண்புகள் அயலார்க்கு மட்டுமன்றிப் புலவரல்லாத தமிழர்க்குத் தெரியாவாறும், இந்தித் திணிப் பிற்கும் திருக்கோவிற் சமற்கிருத வழிபாட்டு நிலைப்பிற்கும் வடவர் விருப்பிற்கும் தமிழ்ப் பகைவர் களிப்பிற்கும் ஏற்றவாறும், "வேலிக்கு ஓணான் சான்று, ஓணானுக்கு வேலி சான்று" என்பதை யொப்ப, பர். தெ. பொ. மீ. யின் முன்னுரையே கொண்டு ஏனையிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட விருப்பதால் தமிழ் கெடாவாறும் பொதுமக்கள் பணம் வீணாகாவாறும் இதை உடனே தடைசெய்ய வேண்டு மென்றும்; மொழியாராய்ச்சி, நடுநிலை, அஞ் சாமை, தன்னலமின்மை முதலிய பண்புகள் கொண்ட தமிழ்ப் புலவர் ஒருவர் எழுதும் உண்மையான தமிழிலக்கிய வரலாற்றையே, உலகெங் கும் பரப்ப வேண்டுமென்றும்; உ. த. க. கிளைகளும் மறைமலையடிகள் மன்றங்களும் திரு.வி.க. மன்றங்களும் தமிழ்க் கழகங்களும் தனிப்பட்ட தமிழ்ப் பற்றாளரும், தமிழக அரசு முதல்வர்க்கும் சாகித்திய அக்கா தெமிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றி யனுப்புவதுடன், எனக்குந் தெரிவிப்பின் நன்றாம். தமிழ் - ஆரியப் போராட்ட அரங்கு தமிழக மேடையினின்று உலக மேடைக்கு மாறவிருக்கின்றது. இந்நிலையில் தமிழுக்கு மாறான எல்லா நூல்களும் தக்கவாறு கண்ணோட்டமின்றிக் கண்டனஞ் செய்யப் படுமென்பதை, வையாபுரிகளும் அவர் வழியினரும் அறிவாராக. 17 அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு கி. மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியத்தில், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து" என்று வேங்கடமலைக்கு அல்லது வேங்கடக் கோட்டத்தின் வடவெல் லைக்குத் தெற்கிலுள்ள நிலமெல்லாம் தமிழ்நாடெனக் குறிக்கப்பட்டது. அதற்குட்பட்டதே வெங்காலூர் (Bangalore). "கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்" "கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற" என்னும் சிலப்பதிகார அடிகளால் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கருநாடு (கருநாடகம்), குடகு என்பன மொழிப்பெயராகவன்றி நாட்டுப் பெயரா கவே வழங்கியமை அறியப்படும். கி. பி. 7ஆம் நூற்றாண்டினரான குமரிலபட்டர் தமிழையும் திராவிட மொழிகளையும் 'ஆந்திர திரவிட பாஷா' என்று தொகுத்துச் சுட்டியதால், அவர் காலத்திலும் கருநாடகமொழி தனிமொழியாகப் பிரியாது தெலுங்கில் அடக்கப்பட்டிருந்தமை தெளிவாம். எல்லா வகையிலும் தமிழிலக்கியத்திற்கு மிகமிகத் தாழ்ந்த கன்னட இலக்கியமும் கி.பி.8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே. தொல்காப்பியக் கிளவியாக்க 51ஆம் நூற்பாவுரையில், இளம் பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர் முதலிய உரையா சிரியர் காட்டியிருக்கும் "வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் °Áè£ óø¤¾¬ì ò££¢." என்னும் பழைய மேற்கோட் செய்யுளும், "கொடுங் கருநாடரும்" என் னும் இளங்கோவடிகள் குறிப்பும், "இதெல்லாம் பழைய கருநாடகம்" என்னும் வழக்கும், பண்டைக் கருநாடக மாந்தரின் நிலைமையை உணர்த்தும். மேனாடுகளுள் இங்கிலாந்து ஏனையவற்றினும் நாகரிகப் பண்பாட்டில் ஏற்றமாயிருந்தது போன்றே, தமிழகமும், கீழ்நாடுகளுள் தலைசிறந்தமை "தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பனம்பாரனார் கூற்றால் விளங்கும். தமிழ் நாகரி கத்தின் தனிநாயகத் தன்மையே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பொன்னெறி மொழியைத் தோற்றுவித்தது. இந் நெறிமொழிப் படியே, தமிழர் வெங்காலூரில் அண்மைக் காலம்வரை அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். ஆயின், இன்றோ வரலாற்றறிவும் பண்பாட்டியல்பும் இல்லாத சில கன்னடக் கயவரால் அந்நிலைமை கெட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப்பிரிவு ஏற்பட்டதிலிருந்து கடந்த 13 ஆண்டுக்காலமாக, கோவை மாவட்டக் கோபி வட்டத் தாள வாடிக் கூற்றம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்துவருகின்றது. அதன் குடிவாணர்க்கு வேண்டிய தேவைப் பொருள்களும் வாழ்க்கை யேந்துகளும் தரப்பட்டும் ஏற்பாடாகியும் வருகின்றன. இந்நிலையில், வெங்காலூர்ச் சட்டப்பேரவையைச் சேர்ந்தவாத்தல் நாகராசு என்னும் தான்றோன்றிச் சிறு தலைவர், பெயர் பெறுதற்கும் மறுதேர்தலில் வெற்றியுறுதற்கும் திட்டமிட்டுக் குறும்புத்தனமாக ஊர்க் காவலர் தடையுத்தரவை மீறித் தாளவாடி புகுந்து. அதைக் கன்னட நாட்டொடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்யுமாறு அங்குள்ள கன்னடியரைத் தூண்டி சட்டப்படி தகைக்கப்பட்டுச் சிறையிலிடப் பட்டார். உடனே அவரைச் சேர்ந்த எதிர்க் கட்சியார் மைசூர் நாட்டுச் சட்டப் பேரவையில் துரும்பைத் தூணாக்கிப் பேரார வாரஞ் செய்தனர். இதைத் தூண்டுதலாகவுந் துணையாகவுங் கொண்டு, வாத்தல் நாகராசு என்பவரைத் தலைவராகக் கொண்ட கிளர்ச்சிக்காரர் ஆயிரவர், வெங்கா லூர்ப் பெருந்தெருக்களூடும் ஆவண (கடைத்தெரு) மறுகு (வீதி) வழி யாகவும், தங்கள் தலைவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கத்திக்கொண்டு சென்று. கன்னடப் பொதுமக்கள் அங்குள்ள களங்கமற்ற தமிழரைத் தாக்குமாறு ஏவாமல் ஏவினர். அதன் விளைவாக, மறுநாளே மதுரையி னின்று சுற்றுலாச் சென்ற தமிழ்உழவர் கூட்டம் வெங்காலூரில் கன்னடியரால் வன்மையாகத் தாக்கப்பட்டு, ஊர்க்காவலர் துணையால் உயிர்தப்பி உடனே கன்னட நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதன்பின் தொடர்ந்து பல நாள் அங்குள்ள தமிழர் கன்னடக் கயவரின் கொள்ளைக்கும் தீவைப்பிற்கும் குத்திற்கும் வெட்டிற்கும் ஆளாயினர். திரு. வாத்தல் நாகராசு தகைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவரை விடுதலை செய்யுமாறு மைசூர் முதலமைச்சர் திரு. வீரேந்திரப் பட்டீல், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. கருணாநிதியார்க்குத் தொலை வரியடித் தார். திரு. கருணாநிதியாரும் வாழ்நாள் தண்டனைக்கேதுவான குற்ற வழக்கை நீக்கித் திரு. வாத்தல் நாகராசை மணமகனை அனுப்பி வைப்பதுபோல் மதிப்பாக இன்னியங்கியிற் கொண்டுபோய் அவரில்லஞ் சேர்க்குமாறு, கோவைத் தண்டலாளர்க்கு உடனே உத்திரவிட்டுவிட்டார். அதன் நிறைவேற்றம் திரு. வாத்தல் நாகராசையும் அவரால் ஏவப்பட்ட கன்னடக் குண்டரையும் திருத்துவதற்கு மாறாக, அவர் முன்னிலும் பன்மடங்கு தமிழரை இழிக்கவும் பழிக்கவும் அழிக்கவும் ஒழிக்கவுமே தூண்டிவிட்டது. 'பெப்பிரவரி' 4ஆம் நாள் கன்னடநாட்டு முதலமைச்சர், அங் குள்ள தமிழர்க்குக் கன்னடர்க்குப்போன்றே முழுப்பாதுகாப்பும் அளிக் கப்படுமென்றும், முன்போல் தீங்கு இனி ஒருபோதும் நேராதென்றும் உறுதியளித்தார். ஆயின், அது சொல்லளவிலன்றிச் செயலளவிலில்லை. முன்பு வெளிப்படையாக நிகழ்ந்த அட்டூழியங்களெல்லாம், இன்றும் துணையற்ற நிலையிலும் இராக் காலத்தும் மறைமுகமாக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தொலைபேசி நிலைய ஊழியர் இரவில் வேலைக்குச் சென்றாலும், வேலைமுடிந்து வீடு திரும்பினாலும் தனித்த நிலையிற் கத்திக்குத்து; இராக்காலத்தில் வீட்டிற்குள் படுத்திருந்தால் வெளியே தீவைப்பு. வெளியே படுத் திருந்தால் கத்திக்குத்து, தனிப்பட்ட கடைகளில் இரவும் பகலும் கொள்ளை யடிப்பு. திரு. பழனி என்பவர் முதலமைச்சர் காப்புறுதி கூறிப் பன்னாட்குப் பின்னரே மண்டையில் வெட்டப்பட்டார். அடியுண்ட பேர், பற்பலர். அவருள் தன்மானமுள்ளவர் தாம் பட்டதை வெளிப் படுத்தவில்லை. கன்னடநாட்டு முதலமைச்சர் வருகின்ற பொதுத்தேர்தல் விளைவு நோக்கிக் கயவரையுங் குண்டரையும் கட்டுப்படுத்த வியலாத நிலைமையி லிருப்பதாகத் தோன்றுகின்றது. கன்னடக் கிளர்ச்சியாளர் என்றும், கன்னட சேனை என்றும், கன்னட நாட்டு எல்லைப்புறக் கிளர்ச்சிக் கூட்டம் என்றும், பல்வேறு கன்னட இனமொழி நாட்டுவெறியாளர் அமைப்புக்கள் இருக்கின்றன. அதனால், இதுவரை கன்னடர் எவருக்கும் எட்டுணைச் சேதமும் விளைந்ததில்லை. ஆயின், தமிழரோ பல்வகையில் அல்லற்பட்டதுடன், இரவும் பகலும் அமைதியின்றி அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவருள் பெரும்பாலார் தி. மு. க. கட்சியினராயிருந்தும், அதுநோக்கி யேனும் இற்றைத் தமிழ்நாட்டரசு அவர்க்குப் பாதுகாப்பளிக்க முன்வர வில்லை. மதுரையிலுள்ள தமிழர் படையும் அவர் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டது. அண்மையில் வெங்காலூர்த் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பிற்குச் சென்ற ஒரு பெருந்தமிழ்ப் பேராசிரியரும் இச் செய்திபற்றி ஒன்றும் சொல்லவில்லை. திரு. வாத்தல் நாகராசு தமிழர் சேனையைக் கலைக்குமாறு எச்சரிக்கின்றார். கன்னட சேனை தமிழரை அடங்கி நடக்குமாறு அச்சுறுத்துகின்றது. ஈழத் திலும் கடாரத்திலும் மலையாவிலும் தமிழன் வெளியேற்றப்பட்ட தற்குமேல் வெங்காலூரினின் றும் வெளியேற வேண்டுமா? மானங்கெட்ட மழுங்கல் தமிழா! இனியா கிலும் விழித்தெழுந்து இனத்தைக் கா. "வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை தாழ்க்கு மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று" - பழமொழி 151 18 தி.மு.க அரசிற்குப் பாராட்டு கடந்த மூன்றரையாண்டுக் காலத்திற்குள் தி.மு.க அரசு தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் செய்துள்ள ஆக்கப் பணிகள் மூன்று. அவை, இந்திய அமைப்புத் திட்டத்தில் தமிழ்நாட்டின் பெயர் சென்னை நாடு என்று இருந்ததைத் தமிழ்நாடு எனத் திருத்தியது, தமிழ்க் கரணத்தைச் சட்டமுறைப்படிச் செல்லுபடியாக்கியது, கோவில் வழிபாட்டிற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டாக விலக்கப்பட்டு இருந்த தமிழை மீண்டும் புகுத்தியது, என்பன. அம் மூன்றும் முறையே ஒன்றினொன்று சிறந்தவை. தமிழர் முன்னேறும் வழி தமிழேயாதலால் ஆங்கிலத்திற்கும் ஆரியத் திற்கும் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழை அவற்றினின்று விடுவித்து அரசியல் மொழியும் மதவியல் மொழியுமாக்கியது, தமிழ் நாட்டிற்கு உயிர்நாடித் திட்டமாகும். சிவநெறியும், திருமால் நெறியும் தமிழர் கண்ட சமயங்களே யாதலால் தமிழ் நாட்டில் தமிழர் கட்டிய கோவில்களில் தமிழர் தொன்று தொட்டு வந்த தமிழ் முறையைத் தள்ளிவிட்டு அறியாத அயன் மொழியில் வழி பட, அறியாமையும் அடிமைத்தனமுமன்றி வேறோரு கரணியமுமில்லை. பிராமணர், காலத்திற்கேற்பத் தம் கருத்தை மாற்றிக் கொள்ளவும், ஆண்டி முதல் அரசன் வரைப்பட்ட எப்பதவிக்கும் தம்மை ஏற்றவ ராக்கிக் கொள்ளவும் இயல்பாகவே திறம் படைத்தவர். இன்று பிராமணி யத்தை நடத்தி வருபவர் அடிமைத்தனமும் தன்னலமும் மிக்க போலித் தமிழரே. வடமொழியை அறவே விலக்க தமிழைப் பண்டுபோற் கோவில் வழிபாட்டு மொழியாக்க வேண்டுமென்பது உலகத் தமிழ்க் கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள். அதை எளிதாக நிறைவேற்ற வழிவகுத்த தி.மு.க அரசே தமிழ் நாட்டை வழி வழி ஆள்க. அதை ஆற்றலுடன் நடத்திவரும் அருட் செல்வனார் நீடு வாழ்க! இனி, இம்மட்டில் நின்றுவிடாது, தமிழின் உண்மையான இயல்பை யும் வரலாற்றையும் அறிந்து, தமிழ்நாட்டிற்குத் தமிழிலும் வெளியுலகத் திற்கு ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தல் வேண்டும். தமிழ் கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி முழுவளர்ச்சியடைந்து உலகெங்கும் திரிந்தும், சிதைந்தும் பரவியுள்ளது. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும். தமிழர் தென் னாட்டுப் பழங்குடி மக்களேயன்றி, ஆரியர்போல் வெளிநாட்டிலிருந்து வந்தவரல்லர். தமிழைச் செவ்வையாகக் காத்தற்கும் வளர்த்தற்கும், தமிழ்ப் புலவரும் தமிழுக்குச் சார்பாகவும் மாறாகவும் இருப்பவரைப் பிரித்தறிதல் வேண்டும். தமிழ் நலத்தையே பேணி அதன் தூய்மையைப் போற்றிக் காக்கும் பண்பட்ட தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் கூட்டத்தார்; தந்நலத்தையே பேணித் தமிழைக் காட்டிக் கொடுக்கும், பண்பற்ற தமிழ்ப் புலவர் வையாபுரி கூட்டத்தார். வையாபுரி கூட்டத் தாரைத் துணைக்கொண்டு தமிழை வளர்ப்பது திருடனைத் துணைக்கொண்டு பணப்பெட்டியைக் காப்பது போலும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தமிழ் சமற்கிருதக் கிளையும் பன்மொழிக் கலவையுமாகும் என்று அயலார் கருதுமாறு வையாபுரிப் பிள்ளையைத் துணைக்கொண்டு தமிழ்ப்பகைவரான பிரா மணப் புலவர் தொகுத்தது. ஆதலால் முதற்கண் திருத்த வேண்டும். அதை மொழிநூலறிவும் தமிழ்மொழி யாராய்ச்சியும் சொற்றொகுப்புப் பயிற்சியும் ஒருங்கே யுடையவரே செய்யவியலும். பண்டாரகர் (Dr.) பட்டம் பெற்றவரெல்லாரும் தமிழதிகாரிகளல்லர். ஆதலால், சென்னை அகரமுதலியைத் திருத்தவோ, வேர்ச்சொல் அல்லது சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கவோ ஒரு குழு அமர்த்துவதென்பது, குருடரைக் கொண்டு ஓர் ஓவியத்தைத் திருத்தவோ வரையவோ ஏற்பாடு செய்வதே யொக்கும். பண்டாரகர் பட்டம் பெற்றவர் தாம் ஆய்ந்த பொருளிலன்றி, எல்லாத் துறையிலும் வல்லுந ராகார். அவர் நடிப்பையும் ஏமாற்றையும் அறியவல்ல முதலமைச்சரே பாரதிதாசன் குறித்த தமிழாய்ந்த தமிழ் மகன் ஆவர். முதன்மொழி, அலவன் 1971 19 மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார் தமிழ் வாழ்த்தை இனிப் பாடவேண்டிய முறை நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும் தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும் அத்தகும் பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும் உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! குறிப்பு:- (1) இருள் கவிந்த தமிழ் வானின் விடிவெள்ளி போன்றும், ஆரிய அடிமைத்தனத்தில் அயர்ந்துறங்கும் தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடும் அகவன் போன்றும், தனித்தமிழ் வேந்தர் மறைமலையடிகட்கு முன்சென்று கட்டியங்காரன் போன்றும் தோன்றியவர் சுந்தரனார். அவரையறியாது ஒரு சில வடசொற்கள் அவர் பாடலிற் புகுந்துவிட்டன. அது அவர் விரும்பிச் செய்ததன்று. இக்காலத்தில் அவர் இருந்தி ருப்பின், மேற்காட்டியவாறே பாடியிருப்பார் அல்லது திருத்தி யிருப்பார். (2) அவர் பாடலில் "ஆரியம் போல்... சிதையாவுன்" என்பதே உயிர் நாடியான அடி. அதை நீக்கின், அது அவர் பாடலா காது. அதோடு அவருக்கும் தமிழுக்கும் பேரிழுக்கான பெருங்குற்றமாகும். (3) ஆரியன் நிலத்தேவன்; சமற்கிருதம் தேவமொழி என்னும் ஏமாற்றினாலேயே வடசொல் தமிழிற் புகுத்தப்பட்டது. தமி ழுக்கு வடசொல் தேவையில்லை, 229ஆம் புறநானூற்றுப் பாட்டில், வடக்கு கிழக்கு என்னும் தென்சொற்கட்குத் தலைமாறாக ஊசி (உதீசீ) பாசி (ப்ராசீ) என்னும் வட சொற்கள் வேண்டாது வந்து தமிழின் தூய்மை குலைத் தலைக் காண்க. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" ஔவையார் பாட்டில் 'அன்னையும் தந்தையும்' என்றிருப்தே தக்கதாம். கஉடன் பிறந்தே கொல்லும் வியாதிக என்பது 'உடன் பிறந்தே கொல்லும் பிணிகள்' என்றே இருத்தல் வேண்டும். (4) ஆரியக்குடும்ப மொழிகளிலுள்ள கூட்டுச் சொற்களெல்லாம், அ (ஆ), இ (ஈ), உ (ஊ) என்னும் தமிழ்ச் சுட்டெழுத்துக்களி னின்று தோன்றியவையே. தமிழை வடமொழித் துணை யின்றிப் பேசவும் எழுதவும் இயலும். ஆயின், தமிழ்த் துணையின்றி வடமொழியைப் பேசவோ எழுதவோ இயலாது. (5) வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழ், ஐந்திலொரு பகுதி மேலையாரியம், ஐந்திலொரு பகுதி வடதிரவிடமான பிராகிருதம், ஐந்திலொரு பகுதி புதிதாகப் புனையப்பட்டது. (6) மொழியாராய்ச்சியும், தமிழ் வரலாற்றறிவும் இல்லாத சிலர், தம் பட்டம் பதவியைத் துணைக்கொண்டு, இளைஞரையும், பொது மக்களையும் மயக்கலாம். ஆயின் ஏமாற்று நிலைக்காது. (7) தமிழ் 'செஞ்ஞாயிறு' போன்று இயல்பாகவே 'செந்தமிழ்' ஆகத் திகழ்கின்றது. (8) The Lemurian Language and its Ramifications என்னும் நூல் அடுத்து வரும். அதைக் கண்டு தெளிக. 20 தனித்தமிழ் இதழாசிரியர் தவறு 'தனித்தமிழிதழ்'கள் தமிழ்நாட்டில் மேன்மேலுந் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவை தனித்தமிழுணர்ச்சி பரவிவருவதை அறி விக்கும் வகையில் வரவேற்கத்தக்கன வேனும், அவற்றுட் பெரும் பாலான மொழிச்சார்பை முதன்மையாகக் கொள்ளாது, கட்சிச்சார்பும் மதச்சார்பும் தனிப்பெயர் விளம்பரமுமே குறிக்கோளாகக் கொண்டி ருப்பது மிக வருந்தத்தக்கதாம். மேலும் சில இதழ்கள் பெயரளவிலேயே தனித்தமிழாயுள்ளன. சிலவற்றில் இலக்கணப் பிழைகளும் மலிந்து கிடக்கின்றன. இனி, சில இதழ்கள் சொல்லாராய்ச்சியில் இறங்கிவிடுகின்றன. தமிழ்ப் புலமை பெற்றுப் பன்மொழி பயின்று, பல்லாண்டு மொழியா ராய்ச்சி செய்தவரே, தமிழ்ச் சொல்லாராச்சி செய்தல் கூடும். சிலர் ஆராய்ச்சியுரிமை பேச்சுரிமை போன்று அனைவர்க்கும் பொதுவெனக் கருதுகின்றனர். அங்ஙனங் கருது வதற்கு, அரசியல் தண்டனையோ தலைமைப்புலவர் அதிகாரமோ இன்மையே கரணியமாகும். "குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனில்லை குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை விளையாட்டாய்ச் (சொல்லாய்வு விரைந்து செய்து) தெட்டுதற்கோ அறிவில்லா (இளைஞருண்டு தென்னிதழா சிரியரெனத்) திரிய லாமே" இதுவரை தனித்தமிழ் இதழ்களில் வெளிவந்த வழுஉச் சொல் லாராய்ச்சிகளுள், தென் சொல்லாராய்ச்சி யொன்றும் வடசொல்லாராய்ச்சி யொன்றும், இங்கு எடுத்துக்காட்டுகின்றேன். 1. தென் சொல்லாராய்ச்சி : மாற்றுப் பெண் - மாட்டுப் பெண், நாற்றுப் பெண் - நாட்டுப் பெண் என்பன தவறு. மணவாளன் - மணாளன், மணவாட்டி - மணாட்டி, மணவாட்டு - மணாட்டு, மணாட்டுப் பெண் - மாட்டுப் பெண். மணாட்டுப் பெண் - ணாட்டுப் பெண் - நாட்டுப் பெண். மாட்டுப் பெண், நாட்டுப் பெண் என்பன கொச்சைத் திரிபுகள்; ஆதலாற் கொள்ளத்தக்கனவல்ல. 2. வட சொல்லாராய்ச்சி : பல்திசைக்கை - பத்திரிகை, என்பது தவறு. பத்ர(வ)=சிறகு, தூவு, இலை, பொன்னத் தகடு, திருமுகம், ஆவணம் பொத்தக ஏடு. பத்ர(வ)-பத்ரிகா(வ) = இலை, திருமுகம், விளம்பரத் துண்டு, அழைப்பிதழ், ஆவணம், செய்தித்தாள். இதழ், ஏடு, ஓலை, தாள், மடல் முதலிய தென் சொற்கள், முதற்கண் இலையையும், பூவிதழையுங் குறித்தவை, பின்னர் எழுதிய அல்லது அச்சிட்ட தாள்களையும் உணர்த்துதலை ஒப்புநோக்கிக் காண்க. வட சொல்லைத் தென் சொல்லென்று கூறுவதனால் தமிழ னுக்கு அறியாமைப் பட்டம் வருவதோடு, வடமொழி கடன் கொண்ட தென் சொல்லும் வட சொல்லாகி, தமிழுக்குத் தீங்கே நேரு என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க. இனி, அளவிற்கு மிஞ்சிய இதழ்கள் வெளிவந்து, தனித்தமிழ் வளர்ச்சி தடையுண்ணுமளவு ஒன்றோடொன்று போட்டியிடுவதினும், தலைசிறந்த ஒன்றிரண்டே வெளிவந்து விரைந்து தனித்தமிழைப் பரப்புவது உகந்த தாதலின் தனித்தமிழ் இதழாசிரியர் அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமை யாக ஒரு முடிவு செய்துகொள்வது நன்றெனக் கருதுகிறேன். 21 வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள் மக்களின் மண்ணுலக வாழ்நாட் பேரெல்லை வரவரக் குறைந்து, இன்று நூறாண்டாகக் கொள்ளப்படுகின்றது. "மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லை" என்பது கபிலரகவல். ஒருவர் தாம் நினைத்தவுடன் எதிர்வந்து நிற்கும் உறவினரையோ நண்பரையோ பார்த்து, உங்கட்கு அகவை நூறு (நூறாண்டு) என்பது உலக வழக்கு. 'மக்கள் நூறாண்டு வாழ்க்கை' என்று ஒரு நூலும் மறைமலையடிகள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்னும் உண்மையினாலும், பிள்ளை பிறந்து ஓராண்டிருப்பதும் உறுதியன்மையாலும், கருவிலேயே இறந்து சாப்பிள்ளையும் வெளிப்படுவதனாலும், கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு, முக்கால் நூற்றாண்டு, நூற்றாண்டு முதலிய பல்லாண்டு வாழ்வுகள் மட்டுமன்றி, பிறந்த நாளும் ஆண்டு நிறைவு நாட்களும் பெரும்பாலும் செல்வப் பெற்றோரால் அல்லது உற்றோராற் கொண்டாடப் படுகின்றன. குழவியோ பிள்ளையோ இளந்தையரோ வளர்ச்சி முற்றிய ஆளோ சேதமின்றிக் காக்கப்பட்டு வந்தமைபற்றி, இறைவனுக்கு நன்றி யொடு காணிக்கை செலுத்துவதும், இயன்றளவு பணஞ் செலவிட்டு உற்றார் உறவினருடன் உண்டாடி மகிழ்வதும், இக் கொண்டாட்டங்களின் நோக்கமாகும். அரசன் அல்லது அரசி பிறந்தநாள் ஆட்டை விழா, நாண் மங்கலம் என்றும், வெள்ளணி விழா என்றும் சொல்லப்பெறும். மேனாடுகளில் தோன்றிய கால் நூற்றாண்டு விழா வெள்ளிவிழா (Silver Jubilee) என்றும், அரை நூற்றாண்டு விழா பொன் விழா (Golden Jubilee) என்றும், முக்கால் நூற்றாண்டு விழா ஔளி விழா (Platinum Jublee) என்றும் பெயர் பெற்றுள்ளன. ஔளி விழாவை முத்து விழா என்றும் வழங்கலாம். அரை நூற்றாண்டிற்கும், முக்கால் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட அறுபான் ஆண்டு விழா வயிர விழா (Diamond Jublee) எனப்படும். விகுத்தோரியா (Victoria) அரசியார் ஆட்சியின் அறுபான் ஆட்டை விழா 1897-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. வயிர விழாவை மணிவிழா என்றுங் கூறலாம். அறுபது நாழிகை ஒரு நாளென்றும், அறுபது நாள் ஒரு பெரும்பொழுது என்றும் காலக் கணிப்புண்மையும் 'அறுபதிற்குமேற் கிறுகிறுப்பு' என்னும் கீழ்நாட்டுக் கொள்கையும், வலுவிறக்கத் (Climacteric) தொடக்கம் அறுபதா மாண்டென்னும், மேனாட்டுக் கொள்கையும் கி.மு. 57-ல் தொடங்கிய விக்கிரம சகாத்தம் என்னும் அறுபானாண்டு மானத்திற்கும், அறுபானாட்டை விழாவிற்கும் கரணியமா யிருந்திருக்கலாம். முக்கால் நூற்றாண்டிற்கும் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட எண் பான் ஆட்டை விழாவைக் கதிரிய விழா (Radium Jubilee) என்னலாம். நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழாவை அருட்கதிர் விழா எனல் தகும். இரசிய தேசச் சாக்சியா நாட்டு சிராலி மிசிலிமோவ் (Shirali Mislimov) என்பவர் 168 ஆண்டுகளும் அவருடைய துணைவியார் பக்கு தாழி (Baku Tadzhi) என்பார் 107 ஆண்டுகளும் வாழ்ந்தனர். 22 மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு 'மறைமலையடிகள் நூல்நிலையம்' என்பது தனியுரிமை நூல் நிலையம் என்றும் பொதுப்பயன் நூல்நிலையம் என்றும், இருநிலை கொண்டது. அடிகள் உடம்போடிருந்த காலத்தில், 'மறைமலையடிகள் நூல்நிலையம்' என்பது, பல்லவபுரத்தில் அடிகள் மாளிகையில் அடி கட்கே முழுவுரிமையான தாயிருந்தது. தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் ஏறத்தாழ நாலாயிரம் அரும்பொத்தகங்கள் கோணிநிறக் கரட்டுத்தாளால் அட்டையிடப்பட்டு, விளைந்த நெல்வயல் போலப் பதினெண் நிலைப்பேழைகளிலும் ஒரே தோற்றமாகக் காட்சி யளித்தன. பொத்தகங்களைப் பயன்படுத்துவதிலும் போற்றிக்காப்பதிலும், அடிகள் போற் சிறந்தார் உலகில் ஒரு சிலரே. ஆயினும் அடிகளின் முழு நம்பிக்கைக்குரிய இரண்டொருவர்க்கேனும் பொத்தகங்களை இரவல் கொடுத்துவந்தது வியக்கத்தக்கதே. "என் நூலகத்தை ஓரிலக்கத்திற்கும் என் இல்லத்தை ஓரிலக்கத்திற் கும் விற்றுவிட்டு இறுதிக் காலத்தில் நாட்டுப்புறத்தில் வதிந்து அமைதி யாகக் காலங்கழிக்க விரும்புகின்றேன். திருப்பதிப் பல்கலைக்கழகத்தை என் நூலகம் வாங்குமாறு கேட்டதற்கு, அரையிலக்கந்தான் தரமுடியும் என்று சொல்லி விட்டனர்" என்று அடிகள் ஒருமுறை என்னிடம் சொன்ன துண்டு. அடிகள் நூல்நிலையம் திருப்பதி சென்றிருப்பின், திருப்பதித் திருவேங்கடமுடையார் திருக்கோவிலுக்குச் செல்பவர்க்குக் கூடப் பயன பட்டிருப்பது அரிதே. இனி அடிகள் தங்கள் நூலகம் பொது மக்கட்குப் பயன்படுமாறு வேண்முறி (Will) எழுதிவையா திருந்தி ருப்பின் அடிகள் பொத்தகங்களெல்லாம் பழம் பொத்தகக் கடைக்காரர் வயப்பட்டுப் பல்வேறிடஞ் சென்று படிப்பவர் பார்வைக்கும் இடமின்றி மறைந்துபோயிருக்கும். மறைமலையடிகள் மறைநிலை யடைந்தபின் அவர்கள் நூலகத்தை மக்கள் நிறத்தாலும் சென்னைத் தொடக்க நிலையாலும் கருநகராயிருந்த பகுதியில் ஒரு சிவத்திருக்கோவில் முன்னிலையில், இராமலிங்க அடிகள் தனிச் சொற்பொழி வாற்றிய திருமனையில் சேர்ப் பித்து மேற்கொண்டு ஐயாயிரத்தைந்நூறு அருநூல்களைச் சேர்த்துத் தமிழகத்திற்கு மட்டுமன்றி உலக முழுவதற்கும் பயன்படுமாறும், அடிகள் பெயர் உலகுள்ள அளவும் நிலவுமாறும் மறைமலை யடிகள் நூல்நிலையத்தைத் தாமரைச் செல்வர் திரு. õ.சுð¢¬ðò£ð¢ பிள்ளை அவர்கள் பல்வேறு வகையில் அரும்பெரும் பாடுபட்டு 24-8-1958 அன்று நிறுவியது எண்ணிப்பார்க்கின் இறைவன் ஏற்பாடே என்பது போதரும். "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு" (குறள் 215) என்பதற்கேற்ப, உலகின் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளரும் வந்து பெரும் பயன்பெறுவதும், "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடை யான்கட் படின்" (குறள் 216) என்பதற்கேற்ப, சென்னை வாணர்க்குச் சிறப்பாகப் பயன்படுவதும், "மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின்" (குறள் 217) என்பதற்கேற்ப ஏனை நூல்நிலையங்கட்குச் சென்று ஏமாறிவந்தவர்க்குத் தப்பாது வேட்கை நிறைவேற்றுவதும் மறைமலையடிகள் நூல்நிலை யத்தின் தனிச் சிறப்பாகும். இங்ஙனம், மறைமலையடிகள் பெயரை மட்டும் தாங்கி ஏனையர் பொத்தகங்களுங்கொண்டு எல்லார்க்கும் பொதுவாகப் பயன்படுவது மறைமலையடிகள் நூல்நிலையம் என்பதன் இரண்டாம் நிலையாகும். இனி, மறைமலையடிகள் இயற்றிய நூல்களையெல்லாம் கொண்டு விளங்குவதும் வழங்குவதும் மறைமலையடிகள் நூல் நிலையம் என்பதற்கு வேறொரு காரணமுமாகும். மறைமலைநகர் என்பது போல் அடிகள் பெயரை ஒரு நிறுவனத் திற்கு இடுவதற்கு, நினைவுகூர்தல் ஒன்றே போதுமாயினும் அடிகளின் சொந்த நூலகத்தைக் கருவாகக் கொண்டதும் அடிகள் இயற்றிய நூல்களை விரிவுறுப்பாகக் கொண்டதும் கூடுதற் காரணங்களாகும். மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியதற்குத் தமிழ் வளர்ச்சியும் பரவலுமே சிறப்புக் காரணமாதலின், தாமரைத் திரு. வ. சு. பிள்ளையவர்கள், அதற்குரிய முயற்சியை ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் செய்து, மேன்மேலும் பொத்தகத்தொகையைப் பெருக்கி வருவது கவனிக்கத்தக்கது. அவர், பலர் கருதுகின்றவாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்ச் சார்பான பொத்தக அல்லது நூல் வெளியீட்டாளர் மட்டுமல்லர். இதுவரை அச்சேறாத ஏட்டுச் சுவடி கையெழுத்துச் சுவடித் தொகுப்பாளரும், புதுநூல் இயற்று விப்பாளரும், புலவர் வெளிநாட்டுத் தமிழ்த்தொண்டர் முதலியோர் வரலாற்றுத் தொகுப்பாளரும், அவர் கையெழுத்துப்படித் தொகுப்பாளரும், அவர் உருவப்படத் தொகுப்பாளரும், பெரும் புலவர் கடிதப்போக்குவரத்துத் தொகுப்பாளரும், மாநாடுகளின் நடவடிக்கைத் தொகுப்பாளரும் நின்றுபோன பழைய செய்தித்தாள் கிழமையன், மாதிகை, காலாண்டிதழ், ஆண்டுமலர் முதலிய தொகுப்பாளரும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள், நாலடியார் முதலிய நூற்றொகுப்பாளரும் ஆவர். இன்று மறைமலையடிகள் நூல்நிலையப் பொத்தகத் தொகை முப்பத்தையாயிரம். இது பிற பெரு நூல்நிலையங்களொடு ஒப்புநோக்கின் சிறிதேயாயினும் அவற்றில் இல்லாத அரு நூல்களையும் தொன் நூல் களையும் கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். நான் பன்முறை இதை என் பட்டறிவிற் கண்டிருக்கிறேன். அதோடு தமிழ்மொழி யிலக்கிய நாகரிகப் பண்பாட்டு வரலாற்று அரும்பொருட் களஞ்சியமாகவும் காட்சி யகமாகவும் இஃது ஒளிவிட்டுத் திகழ்கின்றது. மறைமலையடிகள் எனக்களித்த நற்சான்றைத் தவறவிட்டபின் அதன் படியொன்றை எனக்குத் தந்ததும், திருக்குறள் பழமொழி மொழிபெயர்ப்பையும் அவற்றின் பல்வேறு பதிப்பையும் நூல்நிலையத் தில் வைத்திருப்பதும் தாமரைத் திரு. வ. சு. பிள்ளையின் திறமையை யும் மறைமலையடிகள் நூல்நிலையத்தின் பெருமையையும் சிறப்பக் காட்டும். இதன் அருமையுணர்ந்து அரசு போற்றுவது மிகவும் தக்கதாகும். 23 ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா? ஒற்றுமை ஒரு குடும்பத்திற்கு வேண்டுவதுபோன்றே, ஒரு நாட் டிற்கும் உலகத்திற்கும் வேண்டும். ஒற்றுமையில்லாக்கால், உயர்திணை யென்று உயர்த்திக் கூறப்படும் மாந்தருக்கும் மற்ற உயிரினங்கட்கும் வேறுபாடில்லை அவ் வொற்றுமை யுண்டாக்குவதற்கு ஒரு பொதுமொழி இன்றியமையாதது. அது ஆங்கிலமே. ஓர் உலகப் பொதுமொழிக்கு இருக்கவேண்டிய இயல்புகளெல்லாம் ஆங்கிலத்திற்கு ஒருங்கே அமைந் துள்ளன. அம்மொழி தன்னேர்ச்சியாக இந்திய ஆட்சி மொழியாகவும் உயர்தரக் கல்வி மொழியாகவும் ஏற்கனவே அமைந்துள்ளமை, தமிழர் பெரும்பேறே. அதை ஆராய்ந்துபாராது விரைந்து அதை அகற்றப்பார்ப் பது, தலையால் வந்த பெருநிதியைக் காலால் தள்ளுவது போன்றதே. ஆங்கிலத்தின் அரிய இயல்புகளைப் பலர் அறியாதிருப்பதால், அவர்க்கு அவற்றை அறிவிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். உலக மொழி பன்னாட்டுக் கழகமோ, ஐக்கிய நாட்டமைப்போ, உலக நாடுகளோ ஒன்று கூடிப் பேசி முடிவு செய்யாமலே, ஆங்கிலம் தானாக, இயற்கையாக, எதிர்ப்பின்றி மெல்லமெல்லத் தன் தகுதியினால் உலக மொழியாகி விட்டது. உலகில் மூன்றி லொரு பங்கு ஆங்கிலத்தைத் தாய் மொழியாக்க கொண்டுள்ளது. ஐக்கிய நாட்டமைப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மும் மொழிகளுள் ஆங்கிலம் ஒன்று. உலகிற் பெருவாரியான நூல்களும் செய்தித் தாட்களும் வெளிவருவது ஆங்கிலத்திலேயே. பல நாடுகள் ஆங்கில மொழியைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளன. ஏனை நாடுகளிலும் அது விருப்பப் பாடமாக இருந்துவருகின்றது. ஒருவர் உலக முழுதும் சுற்றிவரத் துணைசெய்வது ஆங்கில மொழி ஒன்றே. ஒன்றிய (ஐக்கிய) நாட்டமைப்பு நடவடிக்கைகள் மும்மொழியில் நடைபெற்றாலும், ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் அறிவியல் இலக்கியம் எழுதப்பட்டிருப்பினும், உலக மொழியாக ஒன்றுதான் இருக்க முடியும். அது ஆங்கிலமே; இனிமேல் அதை வேறொரு மொழி மேற் கொள்ளவும் முடியாது. அறிவியன் மொழி இற்றை யுலக நாகரிகத்திற்கு அடிப்படையான புதுப்புனைவு நீராவிப்பொறி. அதைக் கண்டுபிடித்தவர் சேம்சுவாட்டு என்னும் ஆங்கிலேயர்; அதன்வழியாய்ப் புகைவண்டி புணர்த்தியவரும் சியார்சு தீபன்சன் என்னும் ஓர் ஆங்கிலேயரே. மின் விளக்கு, ஒலிப்பெட்டி, திரைப்படம், வானூர்தி முதலிய பற்பல அறிவியற் புதுப்புனைவுகளை அமைத்த அமெரிக்கரும், ஆங்கில மொழியினரும் ஆங்கிலர் வழியினருமே. ஆதலால், இற்றை அறிவியல் இலக்கியத்திற் பெரும்பகுதி ஆங்கிலத்திலேயே எழுதப்பெற்றுள்ளது. செருமானியம், பிரெஞ்சியம், இரசியம் ஆகிய பிற மொழிகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட்டிருப்பினும், அவை அத்துணைப் பெரு வாரி யானவையல்ல. மேலும், ஏற்கனவே அறியப்பட்டுள்ள தலைசிறந்த மேலை மொழியை விலக்கிவிட்டு, ஏன் ஒரு புதிய ஐரோப்பிய மொழியை நாட வேண்டும்? இது, கையிலிருந்த வெண்ணெயைக் கொடுத்துவிட்டு நெய்க்கலைந்த கதையாகத்தானே முடியும்! ஆங்கிலத்தின் மேம்பாடு தெரிந்திருந்தும், அதை அகற்றிவிட்டுச் செருமானியம் போன்ற ஓர் ஐரோப்பிய மொழி யிலக்கியத்தைக் கற்கலா மென்று கூறும் இந்தியர், தமக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள அளவிறந்த, அடாத வெறுப்பையே காட்டுகின்றனர். அத்தகையோர் பித்தரின்பாற்பட்டவ ராதலால், பிறரால் பின்பற்றப்பெறத் தக்கவரல்லர் என விடுக்க. சொல்வள மொழி உலகமொழிகள் எல்லாவற்றுளும் சொல்வளமிக்கது ஆங்கிலமே. பல நூற்றாண்டுகளாக ஆங்கில மக்கள் கலை நாகரிகப் பண்பாட்டில் தலைசிறந்து வந்திருப்பதனாலும், அதற்கேற்பப் பல கருத்துக்களையும் உணர்த்தப் பல்வேறு மொழிகளினின்று இலக்கக்கணக்கான சொற்களைத் திரித்துக் கொண்டத னாலும், ஆங்கிலமொழி வியக்கத்தக்க சொல்வளம் பெற்றுவிட்டது. பண்டைமொழிகளுள் மிகப் பண்பட்டதும் சொல்வளமிக்கதும் தமிழே யாயினும், அதிலும் பழமொழிகளைப் பாகுபடுத்தவில்லை. ஆங்கிலத்திலோ, aphorism, axion, maxim, apothegm, adage, proverb, byword, saw, என எழு வகையாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர். pride, vanity, conceit, arrogance, assurance, presumption. haughtiness, insolence என்பன பருப்பொருளில் ஒருபொருட் சொற்களாயினும், நுண் பொருளில் வேறுபட்டன. sensuous, sensual, sensitive, sensible, sentient, sentimental, என்னும் சொற்களும், bravery, courage, gallantry, prowess, heroism என்னும் சொற்களும் இவை போன்ற எண்ணிறந்த சொற் குழுக்களும், ஆங்கிலத்தில் மிக நுண்ணிய பொருள் வேறுபாடுடையவை. நாகரிக வுலகிலுள்ள எல்லாக் கலைகட்கும் நூல்கட்கும் உரிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. ஞாலத்தில் மேலையர்க்குத் தெரிந்த எல்லாப் பொருள்களும் ஆங்கிலத்திற் பெயர் பெற்றுள்ளன. இந்தியில் ஆங்கிலக் குறியீடுகளை மொழிபெயர்த்தற் கேற்ற சொற்களில்லை, ஆங்கிலச் சொற்களைத்தான் அதிலும் ஆளவேண்டும். அதைவிட ஆங்கிலத்தையே வைத்துக் கொள்வது நல்லது. பண்பட்ட மக்கள் மொழி சட்ட முறையில் முதன் முதல் மக்கள் உரிமை பெற்றது ஆங்கில நாடே. உலக நாடாட்சிக் குழுக்கட்கெல்லாம் தாயாகவும் வழிகாட்டியாக வும் உள்ளது ஆங்கிலப் பாராளுமன்றம். முதன்முதல் அடிமைத்தனத்தை அகற்றியதும், பெண்கள் நலத்தையும் பிள்ளைகள் நலத்தையும் பேணி யதும், ஏழைகளின் நிலைமையை உயர்த்தியதும், உழைப்பாளிகளின் பாட்டைக் குறைத்ததும், அகவை (வயது) வந்த இருபாலார்க்கும் குட வோலை யுரிமையளித்ததும், குடியேற்ற நாடுகட்கு விடுதலை தந்ததும், இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைப் புகுத்தியதும் அநாகரிக மக்களை நாகரிகப்படுத்தியதும், ஆங்கில நாடே. பல நூற்றாண்டுகளாக நாகரிகப் பண்பாட்டிற் சிறந்துவரும் ஆங்கில மக்களின் பண்பட்ட மொழி. இந்தியா போன்ற பிற்பட்ட நாடுகளாற் புறக் கணிக்கப்படத் தக்கதன்று. ஒற்றுமை மொழி சிறியவும் பெரியவுமாக எண்ணூறு நாடுகளாகப் பிரிந்து கிடந்த இந்து தேயம், ஆங்கில ஆட்சியிலேயே ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரப் பட்டது. நைசாம், மைசூர், திருவாங்கூர் போன்ற உள்நாட்டுச் சீமைக ளெல்லாம் படை குறைக்கப் பட்டு ஆங்கிலப் பாதுகாப்பிற்குட்பட்டதினா லேயே, காங்கிரசு என்னும் பேராயக் கட்சியியக்கம் அவற்றிற்குள்ளும் புகுந்து பரவவும், ஆங்கிலேயர் நீங்கின பின் அவ் வுள்நாட்டரசுகள் ஒழியவும் இந்தியா (பாக்கித்தான் நீங்கலாக) ஒரு கட்சி யாட்சிப்படவும், நேர்ந்ததென்றறிதல் வேண்டும். இன்றும் இந்தியாவை ஒன்றாய் இணைத்துக்கொண்டிருப்பது ஆங்கிலமே. இதை அறியாத இந்தி வெறியர் ஆங்கிலத்தை அகற்றின், நாளடைவில் மொழிவாரி மாகாணங்க ளெல்லாம் தனி நாடுகளாகப் பிரிந்து போகும் நிலைமையே ஏற்படும். இந்திய மொழி இந்தி வெறியரும் வேறு சில வடவரும் ஆங்கிலத்தை அயன் மொழி என்கின்றனர். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஆங்கில விந்தியர், இந்தியக் குடிகளும் ஒன்றரைக் கோடியருமாக விருப்பதை அவர் எண்ணிப் பாராதிருப்பது எத்துணைக் குறுகிய நோக்கமும் நடுநிலை திறம்பிய செயலுமாகும்! இது அடிப்படைக் குடியுரிமை மறுப்பேயன்றி வேறன்று. பொது மொழி ஆங்கிலம் இன்று ஆங்கிலேயரால் பேசப்பட்டு வந்தாலும், அதன் மூலமான ஆங்கில சாகசனியம் (Anglo-saxon) ஒரு காலத்தில் ஆங்கிலே யர்க்கே சிறப்பான மொழியாய் இருந்திருந்தாலும், இற்றை நிலையில், சொல்லமைப்பில், உலகப் பொது மொழியாயுள்ளது. ஆங்கில சாகச னியச் சொற்கள் மொத்தம் இருபத்து நாலாயிரமே. இற்றை யாங்கிலச் சொற்களோ ஏறத்தாழ ஐந்திலக்க மாகும். இவற்றுள், நூற்று மேனி 80 விழுக்காடு இலத்தீனும் கிரேக்கமும், 10 விழுக்காடு ஆங்கில சாக்சனியம்; எஞ்சிய 10 விழுக்காடு ஏனை மொழிகள். இதை எப் பொருட்டுறைபற்றியும் எடுத்துக் காட்டலாம். இங்குப் பாராளுமன்ற சட்டசபைத் தேர்தலை எடுத்துக்கொள்வோம். Latin - இலத்தீன் Party, Act Majority, Statute Minority, Member Representative Portolio Election Minister Contest Prime Vote Motion Candidate Point File Order Nomination Pass Constituency Discussion Deposit Deliberation Presiding Resolution Officer Session Announcement Summon Validity Prorogue Declare Dissolve Legislation President Assembly Council Secretariat Low Latin - தாழ்(ந்த) இலத்தீன் Scrutiny Cabinet Country Adjournment Greak - கிரேக்கம் Canvas Chair(man) Clerk Governor French - பிரெஞ்சியம் Parliament Italian - இத்தாலியம் Ballot Old norse - பழ நார்சியம் Lower Law East Norse - கீழைநார்சியம் Booth Teutonic - தியூத்தானியம் House (Chair)man Speaker Meeting (With)draw English - ஆங்கிலம் Poll Upper இலத்தீன், தாழிலத்தீன் ஆகிய இரண்டும் ஏறத்தாழ ஒன்றே. இங்கு ஆங்கில மல்லாத அயற்சொற்களாகக் காட்டப்பட்டவை யெல்லாம், அவ்வவ் வயன்மொழி வடிவிலேயே உள்ளவையல்ல; ஆங்கில வியல்பிற்கும் தேவைக்கும் ஏற்பத் திரிக்கப்பெற்றவையாகும். எ-டு : Pars அல்லது Partis என்பது இலத்தீன் சொல், அதனின்று Part, Party என்னும் ஆங்கிலச் சொற்கள் திரிக்கப்பட்டுள்ளன. இங்ங னமே பிறவும். மேற்காட்டிய சொற்பட்டியினின்று, இற்றை யாங்கிலம் ஆங்கி லேயர்க்குச் சிறப்பாக வுரியதன்றென்பதும், இலத்தீன் சொற்கள் மிகுந்த கலவை மொழி யென்பதும், அதை வெறுப்பது இலத்தீன் கிரேக்கம் முதலிய பிற மொழிகளை வெறுப்பதேயாகுமென்பதும், அறியப்படும். ஆட்சி மொழி ஆங்கிலம் ஏற்கனவே ஒன்றரை நூற்றாண்டாக இந்திய ஆட்சி மொழியாக இருந்துவருகின்றது. அதன் தொடர்ச்சியை இந்தியைப் புதுவதாகப் புகுத்தற்கொப்பாகக் கருதுவது, பேதைமையேயாம். இந்தி புது மொழியா யிருப்பதொடு ஆட்சிக்குத் தகாத புன்மொழியாகவு மிருப்பது கருதற்குரியது. விடுதலை மொழி வடவர் பலரும் தென்னவர் சிலரும் ஆங்கிலத்தை அடிமைப் படுத்திய மொழியாகக் கருதுகின்றனர். ஆங்கிலேயர் தமிழ்நாட்டிற்கு மீட்பராக வந்தனர் என்னும் உண்மையைப் பலர் ஒப்புக்கொள்ளாது போயினும், ஆங்கிலர் ஆட்சியினின்று இந்தியா விடுதலை பெறுதற்கும் அவர் மொழியாகிய ஆங்கிலமே துணையாயிருந்ததென்பதை, எவரும் மறுக்கமுடியாது. ஆங்கிலேயர் கள்ளங்கர வின்றி இந்தியரெல்லார்க்கும் ஆங்கிலக் கல்வி கற்பித்து அறிவு புகட்டினர். அதனால், நாட்டு வரலாற் றையும் ஆட்சி முறைகளையும் குடியுரிமையையும் அறிந்த இந்தியப் பெருமக்கள், தேசிய இயக்கத்தைத் தொடங்கிப் பொது மக்களைத் துணைக்கொண்டு போராடி ஆங்கில ஆட்சியினின்று விடுதலை வேண்டி னர். ஆங்கிலேயரும் படிப்படியாக உரிமையளித்து வந்து இறுதியில் முழு விடுதலையும் முழு மனத்தொடு தாமாக அளித்துவிட்டனர். அதனால், விடுதலை பெற்ற இந்தியாவும் பிரித்தானியச் செல்வாக்குள்ள பொது நல்வாழ்வு நாடுகளுள் ஒன்றாக இருந்துவருகின்றது. ஆங்கிலக் கல்வியில்லாவிடின், காந்தியும் நேருவும் போன்ற தலைவரும் தோன்றியிரார்; இந்தியாவும் விடுதலை பெற்றிருக்காது. ஆகவே, இந்தியர்க்குக் கண் திறந்ததும், விடுதலை பெற வழிகாட்டியதும், ஆங்கிலரொடு போராடி வெற்றி பெற ஆற்றலுள்ள கருவியாயிருந்ததும், ஆங்கிலமே. ஆதலால், ஆங்கிலத்தை அடிமைப்படுத்திய மொழியெனக் கருதுவது அறியாமையேயாம். பயன்பாட்டு மொழி ஒருவர் உலகமெங்கும் சுற்றுதற்கும், அலுவல் பெறுதற்கும், அறிவடைதற்கும் மட்டுமன்றி, பிறரொடு உரையாடுதற்கும் ஆங்கிலம் உதவு கின்றது. கல்வி நிலையங்களிற் கல்லாதவர்கூடக் கேள்வி யறிவைத் துணைக் கொண்டு அயல் நாட்டாரொடு ஆங்கிலத்தில் உரையாடிப் பயன் பெறுகின்றனர். மேற்காட்டிய காரணங்களால் ஆங்கிலம் வெளிநாட்டில் மட்டு மன்றி இந் நாட்டிலும் இன்றும் மதிப்பு மொழியாக இருந்து வருகின்றது. ஒருவர் ஓர் இந்திய மொழியில் எத்துணைச் சிறந்த புலவராயிருப்பினும், ஆங்கில மறியாதவராயின் பெரும்பாலும் போற்றப்பெறுவதில்லை. அவர் ஆராய்ச்சியறி வெல்லாம் ஊமையன் கண்ட கனவே. தமிழாசிரியரொடு கல்வி நிலையத் தலைவர்கள் கை குலுக்காமையும் அரசியலலுவலகங் களில் தமிழில் வினவுவார் விடை பெறாமையும், தமிழுக்கு அல்லது நாட்டு மொழிக்குள்ள அவமதிப்பையும், ஆங்கிலத்திற்குள்ள மதிப்பை யுமே காட்டும். தமிழையே கற்பிப்பவராயினும் ஆங்கிலப் பட்டம் பெறாதார் கல்லூரிகளில் அமர்த்தப் பெறுவதில்லை. நாட்டுப் பற்றும் நாட்டு மொழிப்பற்றும் மிக்கவராகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கூட, ஆங்கிலமறியாதவரை உள்ளத்தில் அவமதிப்பதைக் குறிப்பால் உணரலாம். வடநாட்டில் இந்தி வெறியிருப்பதால், தென்னாட்டிற்போல் நாட்டு மொழியவமதிப்பில்லை. ஆயின் அளவிறந்த, அடாத ஆங்கில வெறுப்பை அந் நாட்டார் கொண்டுள்ளது அருவருக்கத்தக்க செயலாகும். ஆங்கி லத்தின் மீது ஒருவர் எத்துணை வெறுப்புக் கொண்டிருப்பினும், அத னாற் பெறும் பயனைப் பெறாது விடுவது, குளத்தோடு கோபித்துக் கொண்டு குளியாமற்போன செயலேயாகும். ஆதலால் அறிவியன் மொழிக்கும் அன்மொழிக்கும் வேறுபாடறிந்து, ஆங்கிலத்தைக் கடைப் பிடிக்க. காலஞ் செல்லச் செல்ல ஆங்கிலப் பரப்பு விரியுமேயன்றிச் சுருங்காது. ஆகவே, ஆங்கிலத்தை அகற்றக் கருதுவார், அதை அகற்றுவாரே (அகலிக்கச் செய்வாரே)யன்றி அகற்றார் (நீக்கார்). 24 தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்கள் ஆங்கிலம் தமிழ் இந்தி (ஆங்கில (உரோம) எழுத்தில்) 1. Attention கவனம் Savdhan 2. stand-at-ease ஏந்தாய்நிற்க Vishram 3. About turn - சுற்றித் திரும்ப Pichhe mur 4. Right (or left) turn வலம் (அல்லது) Dahine(Yabaen mur) இடம் திரும்ப 5. Squad will move to சதளம் வலம் (அல்லது Squad dahine (Ya baen) the right (or left) இடம்) இயங்க chal 6. Squad will advance சதளம் முன்செல்க Squad age barhega (to retire) (அல்லது பின்வாங்க) (Ya pichhe lautege) 7. Dress up நேராக (அல்லது Sajje செம்மையாக) 8. Right - dress வலம்-நேராக Dahine Saj 9. Left-dress இடம் நேராக Bean Saj 10. Centre-dress நடுவம்-நேராக Madya Saj 11. Front rank steady முன்னணி அசையல் Agli line-hilo mat 12. Centre rank steady நடுவணி அசையல் Madya line-hilo mat 13. Rear rank steady பின்னணி அசையல் Pichhli line-hilo mat 14. Form up in three மூவணியமைந்து Tin line banae-tez ranks-quick march மூடுகிச்செல்க chal 15. Number எண்ண Ginti-kar 16. As you were முன்போல Jaise the 17. Open order march திறந்த வொழுங்கிற் செல்க Koule line chal 18. Close order march செறிந்த வொழுங்கிற் செல்க Nikat line chal 19. Break off கலைக Swasthan 20. Dismiss விலக Visarjau 21. Fall-in வரிசை படுக Line ban 22. Fall-out வரிசை விடுக Line tor 23. Form three ranks மூவணியமைக Tin line ban 24. Form up in three ranks மூவணியமைந்து Tin line banae- quick march முடுகிச்செல்க tezchal 25. Right-marker வலம்-நோக்கி Dahine darshsk 26. Slow march மெள்ளச்செல்க Dhire chal 27. Double march ஓடிச்செல்க Daur ke-chal 28. Quick march முடுகிச்செல்க Tez chal 29. Halt நிற்க Tham 30. Step out நீளெட்டு (வைக்க) Lamba qadam 31. Step short குற்றெட்டு (வைக்க) Chaota qadam 32. Wheel right/left வலம்/இடம் வளைக Dahine/baen ghoom 33. Marktime அடியிரட்ட Qudam tal 34. Salute கையெடுக்க Siloot 35. General salute பொதுக் கையெடுப்பு General siloot 36. National salute தேசியக் கையெடுப்பு Rashtriya siloot 37. Salute to the front-saluteமுன்கையெடுப்பு-கையெடுக்க Samne siloot-siloot 38. Salute to the right-salute வலம்கையெடுப்பு-கையெடுக்க Dahine siloot siloot 39. Salute to the left-salute இடம்கையெடுப்பு Baen siloot-siloot 40. Saluting by numbers எண்முறைக் கையெடுப்பு Ginti se siloot 41. Eyes right (or left) வலம்பார்க்க Dahine siloot siloot 42. Eyes right (or left) முன்பார்க்க Samne dekh 43. Slope-arms படைக்கலம்சாய்க்க Kandhe shast(r) 44. Order-arms படைக்கலம்நிறுத்த Bazu shast(r) 45. For inspection உண்ணோட்டத்திற்காக Nirikashan ke lie 46. Examine arms படைக்கலம் தேர்க Janch shast(r) 47. Trail arms படைக்கலம் துலவ Tol shast(r) 48. On-guard காவல்மேல் Ton shast(r) 49 Squad will fix bayonets- சதளம் ஈட்டிசெருக- Squad sangin lagao fix bayonets ஈட்டிசெருக sangin 50. squad will unfix-bayonets-சதளம் ஈட்டி உருவ- Squadsangin uthare(g) unfix bayonets ஈட்டி உருவ uthar sangin விளக்கம்: 2. ஏந்து - வசதி. 5. சிறு கூட்டத்தைக் குறிக்கும் Squad என்னும் ஆங்கிலச் சொல் சதுரத்தைக் குறிக்கும் Squadra என்னும் இத்தாலியச் சொல்லின் திரிபாகும். சதளம் என்னும் தமிழ்ச்சொல்லும் அங்ஙனமே. சட்டம்-சடம்-சடல்-சடலம்-சதுரம் (சதுரம்); சதளம்-கூட்டம். சதளக்காரன்-பெருங்குடும்பக்காரன். 7. Dress என்னும் ஆங்கிலச்சொல் dresser என்னும் பழம் பிரெஞ்சுச் சொல் வாயிலாக directus என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்ததாகும். Direct, to put Straight. 10. நடு-நடுவு-நடுவம். இம்மூன்றையும் பெயராகவும் குறிப்புப் பெயரெச்சமாகவும் பயன்படுத்தலாம். நடுவம் என்பது பெயரெச்ச வடிவில் நடுவ என்று ஈறு கெடும். 11. அசையல் என்பது எதிர்மறை வியங்கோள்; ஈரெண் பொது. 21. வரிசையாக, வரிசையமைக என்றும் சொல்லலாம். 30, 31 நீளெட்டு, குற்றெட்டு என்றாலும் போதும். வைக்க என்றும் இடுக என்றும் சொல்லலாம். எட்டு நீள்க, எட்டுக் குறுக என்றும் சொல்லலாம். 33. அடியிரட்டுதல்-இட்ட அடியின்மேல் அடியிடுதல்: To step without advancing, to mark time. "அடியிரட்டித் திட்டாடுமாட்டு" (புறப்பொருள் வெண்பா மாலை. 2.8). 34. ஒருகை வணக்கத்திற்குக் கையெடுத்தல் என்னும் சொல் மிகப் பொருத்தமானதாம். 45. நோடு-வடி வநளவ-உண்ணோடு-to inspect. 47. துலவுதல்-துலாக்கோல் போல் தொங்கப் பிடித்தல், to let rifles hang balanced in one hand. இது வழக்கற்றுப் போன பழஞ்சொல். துல்-துலா-துலாம். துல்-துலை-ஒப்பு. துலாக்கோல் (தராசு). தோல் என்னும் இந்திச்சொல் துல் என்பதன் திரிபே. 43. படைக்கலம் என்பது arm என்பதுபோல பொதுச்சொல், துப்பாக்கி என்பது துபக் என்னும் துருக்கிச் சொல். துமுக்கி என்பது தமிழ்ச்சொல். 44. காவல்மேல் என்பது வேலைமேல் என்பது போன்றவழக்கு. ஏவல்வினைகள் செய்ய, செய்க என்னும் இருவடிவில் உள்ளன. இவை ஈரெண் பொது. சதளம் என்னும் தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு செய் என்னும் ஒருமை வடிவிலும் ஏவலாம். பயிற்சியாசிரியர் வேண்டிய திருத்தமும் செய்துகொள்ளலாம். 25 திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் தேவஸ்தானம் - தேவகம், திருக்கோவில் உற்சவங்கள் - திருவிழாக்கள், விழாக்கள் நிர்வாக அதிகாரி - செயல் அலுவலர், ஆள்வினைஞர், கருமத் தலைவர் கர்ப்பகிரகம் - கருவறை, உண்ணாழிகை பூர்த்தி - நிறைவு ஆலய நிர்வாகிகள் - கோவில் கருமத் தலைவர்கள் பசலி - பயிராண்டு பஞ்சாங்கம் - ஐந்திறம் பிரதோஷம் - மசண்டை அமாவாசை - காருவா கார்த்திகை - ஆரல், அறுமீன் ஷஷ்டி - அறமி வசந்தோற்சவம் - இளவேனில் விழா மிதுன லக்னம் - ஆடவையோரை சித்திரா பெளர்ணமி - மேழ மதியம், மேழ வெள்ளுவா அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் - கத்தரித் துவக்கம், எரிநாள் தொடக்கம் சீதகும்பம் - குளிர் கும்பம், தண்குடம் நடராஜர் அபிஷேகம் - நடவரசு திருமுழுக்கு ஆடலரசு திருமுழுக்கு சுவாமி தீர்த்தம் - இறை தூநீர் வசந்தோற்சவத்வஜ - இளவேனில் விழாக் ஆரோஹணம் கொடியேற்றம் ஸ்ரீ தேவசேனா அம்மன் - திருத்தெய்வயானை திருமணம் திருக்கல்யாணம் விருச்சிக லக்னம் - நளியோரை ஸ்ரீவள்ளி - திருவள்ளி ரதாரோஹணம் - தேர் ஏற்றம் த்வஜஅவரோஹணம் - கொடி இறக்கம் கும்பாபிஷேகம் - குடமுழுக்கு வருஷாபிஷேகம் - ஆட்டைத் திருமுழுக்கு அன்னாபிஷேகம் - சோற்றுத் திருமுழுக்கு லக்ஷராச்சனை ஆரம்பம் - இலக்க வழிபாட்டுத் தொடக்கம் சனி ப்ரதோஷம் - காரி மசண்டை கன்னிமார் பூஜை - கன்னிமார் பூசை மஹாபிஷேகம் - பெருமுழுக்கு விநாயக சதுர்த்தி - மூத்த பிள்ளையார் நலமி போதாயன மஹாளய அமாவாசை - போதாயன மூதிரைக் காருவா கேதாரகெளரிவிரதம் - மலைமகள் நோன்பு நவராத்திரி ஆரம்பம் - தொள்ளிரவுத் தொடக்கம். சரஸ்வதி பூஜை - கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு ஆயுத பூஜை - கருவிப் பூசை நாக சதுர்த்தசி ஸ்நானம் - நாகநலமிக் குளிப்பு சூரசம்ஹார உற்சவக் காப்புக்கட்டு - சூர்தடி விழா காப்புக்கட்டு ஸ்கந்த ஷஷ்டி - கந்தர் அறமி திருக்கல்யாணம் - திருமணம் திருக்கார்த்திகை } உற்சவக்காப்புக் கட்டு - திருஆரல் விழாக் காப்புக்கட்டு பரணிதீபம் - முக்கூட்டு விளக்கு போதாயன அமாவாசை - போதாயனக் காருவா சுப்ரமண்ய ஷஷ்டி - முருக அறமி சம்பா ஷஷ்டி - சம்பா அறமி தனுர்பூஜை ஆரம்பம் - சிலைப்பூசைத் தொடக்கம் நடராஜர் ஆருத்தரா அபிஷேகம் - அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு போகிப் பண்டிகை - வேந்தன் திருநாள் இரவு தனுர் பூசை பூர்த்தி - இரவு சிலைப் பூசை நிறைவு சங்கராந்தி - பொங்கல் பண்டிகை கிராமசாந்தி - ஊர்ச் சமந்தி த்வஜஆரோஹணம் - கொடி ஏற்றம் மேஷ லக்னம் - மேழ ஓரை முகூர்த்தம் - முழுத்தம் மகாசிவராத்திரி - சிவனார் பேரிரவு உற்சவ த்வஜ ஆரோஹணம் - விழாக்கொடி ஏற்றம் ரிஷப லக்னம் - விடையோரை யுகாதி பண்டிகை - தெலுங்கு ஆண்டுப் பிறப்பு சாதாரண வருஷப் பிறப்பு - நாற்பானாலாம் ஆண்டுப் பிறப்பு ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி - திருமாலியப் பதினொரமை சைத்ரோற்சவம் கிராமசாந்தி - மேழவிழா ஊர்ச்சமந்தி துவஜாரோஹணம் - கொடி ஏற்றம் சர்வ ஏகாதசி - அனைத்துப் பதினொரமை சித்ராபெளர்ணமி - மேழமதியம் சர்வசமயன ஏகாதசி - அனைத்துப்பள்ளிப் பதினொரமை பாஞ்சராத்ர ஸ்ரீ கண்ணபிரான் - பாஞ்சராத்திரக் கண்ணன் பிறப்புத் ஜயந்தி திருநாள் நவராத்திரி பூஜை ஆரம்பம் - தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் விஜயதசமி - வெற்றிப் பதமி உத்தான ஏகாதசி - ஆரல் வெண்பக்கப் பதினொரமை விஷ்ணுதீபம் - திருமால் விளக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு - பரமபத உவணை வாயில் திறப்பு கஜேந்திர மோஷம் - வேழவேந்த வீடு ஜல்லிக்கட்டு - சல்லிக்கட்டு சர்வபீஷ்வ ஏகாதசி - அனைத்து வீடுமப் பதினொரமை பிரம்மோற்சவ கிராமசாந்தி - பெருவிழா ஊர்ச்சமந்தி பாரிவேட்டை - பரிவேட்டை பேஷ்கார், மணியம், காரியஸ்தர் - செயல்பணியர், பெருங்கேள்வி, மணியம் கருமத்தலைவர் மூலஸ்தானம் - கருஇடம், மூலத்தாவு சந்நிதி - திருமுன் பிரகாரம் - திருச்சுற்று யாத்ரிகர் - திருவழிப்போக்கர் உபநயனம் - பூணூல் சடங்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - ஐயமுதத் திருமுழுக்கு தீர்த்த அபிஷேகம் - திருப்புனலாட்டு பால் அபிஷேகம் - பால் முழுக்கு அஷ்டோத்தர அர்ச்சனை - நூற்றெட்டு வழிபாடு சகஸ்ரநாமம் - ஆயிரப் பெயர் கௌபீனம் - நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை தீபாராதனை - விளக்கு வழிபாடு ராஜஅலங்காரம் - அரசக்கோலம், அரசப்புனைவு நைவேத்தியம் - காணிக்கை, படைப்பு சாயரட்சை - மாலைப்பூசை அர்ச்சகர் - வழிபாட்டாசான் தரிசனம் - காண்பு, காட்சி பிரசாதம் - அருட்கொடை, திருச்சோறு 26 மதிப்புரை மாலை கொய்யாக்கனி (பெருஞ்சித்திரனார்) .....Üë¢êø¢ கணக்கரும், என் பழைய மாணவருமான துரை மாணிக்கனார் இயற்றியுள்ள 'கொய்யாக்கனி' என்னும் பனுவலைப் பார்வையிட்டேன். வெண்பாவும், அகவலும், ஆசிரிய மண்டிலமும் (விருத்தமும்) இசைப்பாட்டும், ஆகிய நான்மணிகளை விரவிக் கோத்த கோவைபோலும், இப் பனுவலுள் வருஞ் செய்யுட்களெல்லாம், நவின் றோர்க் கினிமையும், கேட்டோர்க் கின்பமும் பயக்குமளவு சொற்சுவை பொருட்சுவை செறிந்து, ஆற்றொழுக்கான ஒழுகிசை நடையில் இயன்று, எல்லார்க்கும் பொருள் விளங்குமாறு முந்திரிப் பதமான செம்பாகமாய் அமைந்துள்ளன. அழகும் ஒளியும் அமைந்து பட்டை தீர்த்த மணி களூடு அவற்றை இணைத்துச்செல்லும் மாற்றுயர்ந்த பொற்கம்பி போல், இப் பாவினங்களூடு தொடர்ந்து செல்லும் கதையும் சிறந்ததொன்றாய் இரா நின்றது. கதைச் சிறப்பு. உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தல். என்னும் நால்வகைக் கதையுள் எதுவாயினும், மக்கள் வாழ்க்கை பற்றிய தாயின், இன்பந்தருதல், உலகொடு பொருந்தல், விழுமியது பயத்தல் என்னும் மூவியல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும், அல்லாக்கால் கதை சிறவாது. மதத்துறையில் மடம்பட்ட பண்டைக் காலத்தில் உலகியற் கொவ் வாத பல தேவியற் கதைக்கூறுகள் ஒரு பயனோக்கிச் சிறந்தனவாகக் கொள்ளப்பட்டன வேனும், பகுத்தறிவியக்கம் பரவிவரும் இக் காலத் திற்கு அவை எள்ளளவும் ஏற்கா. கொய்யாக்கனி என்னும் இப் பனுவல் தழீஇய கதை, இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலே யாயினும், உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல் போல் உலகியற் பொருத் தம் உடையது; படிப்போர்க்கும், கேட்போர்க்கும் இன்பம் பயப்பது; பல சிறந்த உண்மைகளை எடுத்துக்காட்டி அறவொழுக்கத்தை வற்புறுத்துவது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை; அல்லது அகதிக்கு அறமே துணை; கெடுவான் கேடு நினைப்பான்; இருதலைக் காதலே இன்பந்தரும்; 'மெய் வெல்லும், பொய் தோற்கும்' என்பன இப் பனுவற் கதையால் உணர்த்தப்பெறும் உண்மைகளாகும். ஒரு பனுவலாசிரியனின் மதிநுட்பமும், அறிவுப் பரப்பும், அவன் செய்யுள் திறமையால் மட்டுமன்றிக் கதையமைப்பாலும் வெளிப்படுவன வாம். இப் பனுவலாசிரியர் செய்யுட் செய்வதிற் போன்றே புதுக்கதைப் புனைவிலும் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. குல, மத, கட்சிச் சார்பின்றித் தமிழாக்கம் ஒன்றையே கருதும் சான்றோர், பிற்காலத்துப் பெரும் பாவேந்தராதற் கேற்ற இவ்விளம் பாவலரைப் பெரிதும் ஊக்கக் கடவர். 'கொய்யாக்கனி' யென்னும் இப் பனுவல் எல்லாத் தமிழர்க்கும் கொய்யுங் கனியாகுக! 21.9.1955 பழந்தமிழ் இசை (கு. கோதண்டபாணிப் பிள்ளை) எகித்தியம் உட்பட உலகிசை யனைத்திற்கும் தமிழிசையே தாயாயி னும், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாகத் தமிழ், தமராலும் மாற்றாராலும் (பெரும்பான்மை இலக்கியமும் சிறுபான்மை மொழியும்) சிறிது சிறிதாக, மறைப்பும் குறைப்பும் அழிப்பும் பழிப்பும் உற்று, தலைமைத் தமிழ்ப் புலவராலும் தக்கவாறு அறியப்படாது போயினமையின், இன்று, மகள் தாயைப் பெற்றாள் என்னும் முறையில் இயற்றமிழ் வடமொழி வழியதென்றும், இசைத் தமிழ் கருநாடக சங்கீத வழியதென்றும், நாடகத் தமிழ் பரத சாத்திர வழியதென்றும், உண்மைக்கு மாறான கருத்துகள் உலவியும் ஓரளவு நிலவியும் வருகின்றன. கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குமேல் முற்றும் மறையுண்டுபோன இசைத் தமிழிலக்கணத்தை இதுவரை ஆராய்ந்த அறிஞர் : காலஞ் சென்ற, தஞ்சை (இராவ் சாகிபு) ஆபிரகாம் பண்டிதர், மதுரை இசைக் குழல் (நாதசுரம்) பொன்னுச்சாமிப் பிள்ளை, ஈழத்து விபுலானந்த அடிகள் ஆகியமூவரும்; இதுபோது வாழும், கோவை இசையணிகலம் (சங்கீத பூஷணம்) இராமநாதன், சென்னை (ஓய்வு பெற்ற துணைத் தண்டலாளர்) இராவ் சாகிபு கு. கோதண்டபாணிப் பிள்ளை ஆகிய இருவரும் ஆவர். இவருள்; ஆபிரகாம் பண்டிதர், ஆயப்பாலை வட்டப்பாலைத் திரிவு முறைகளைக் கண்டார்; பொன்னுச்சாமிப் பிள்ளையார் தாய்ப் பண்கள் (மேளகர்த்தாக்கள்) முப்பத்திரண்டே என்றும், இசை இடங்கள் (சுரத் தானங்கள்) பன்னிரண்டே, பதினா றல்லவென்றும் கண்டார்; விபுலானந்த அடிகள் விழுமிய ஆராய்ச்சியாளரேனும், அடிப்படை தவறாகக் கொண்டமையின் பலவுண்மைகளைக் காணவியலாது போயினர்; இராமநாதனார் மயங்கா மரபின் இசைமுறை காட்டிக் குரலே சட்சம் என்னும் பழங்கொள்கையை நாட்டி, முல்லைப் பண் மோகனம் என்று கண்டார்; கோதண்டபாணிப் பிள்ளையார், ஐந்திசைமுறை ஏழிசையிற் கிளையாய்ந்து வகுத்ததே என்றும், பேரிசைகளே அமைந்த ஏழிசை முறையும், பேரிசையும் சிற்றிசையும் கலந்த பன்னீரிசை முறை யும் இவற்றின் இடைவெளிகளான இருபத்தீரலகு முறையும் தொன்று தொட்டுவரும் தமிழிசை மரபேயென்றும், தம் 'பழந்தமிழிசை'யில் வலியுறுத்தியுள்ளார். பொறுப்பு வாய்ந்த உயர்பதவித் தமிழாசிரியரெல்லாம் ஊமைய ராயும் செவிடராயும் "எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருக்கும் இக்காலத்தில், ஓய்வு பெற்ற அரசிய லதிகாரியார் ஒருவர், வெம்பாலைத் தண்சோலையும் கடும் பஞ்சத் திடிமழையும்போல எதிர்பாராதவகையில் இசைத்தமிழை இங்ஙனங் காக்கத் துணிந்தது, இறைவன் ஏற்பாடே என்பது என் கருத்து. படிக்கத்தெரிந்த உண்மைத் தமிழன்பரெல்லாம் இவரது 'பழந் தமிழிசை'யைத் தப்பாது வாங்கிப்படித்துப் பயன்பெறுக; இவர் கண்ட உண்மைகளைப் பாரெங்கும் பரப்புக. இன்னும் தொடர்ந்தாய்ந்து இது போன்ற பல அரிய ஆராய்ச்சி நூல்களை ஆக்குமாறு, இறைவன் இவர்க்கு நலத்தொடும் வலத்தொடும் நெடுவாழ்வருள்க! 20.3.1959 கல்லூரித் தமிழிலக்கணத் தெளிவு «êôñ¢ Üñ¢ñ£ð¢«ð좬ìõ£í¼ñ¢ âù¢ ªî£ô¢è£ð¢ð¤ò ñ£í õ¼ñ£ù ¹ôõ£¢ ².கு. அருணாசலனார். è.î., (M.A.) கீ. க.இ. (B.O.L.), கலையிளைஞன் (B.A.), அறிவியல் இளைஞன் (B.Sc.) ஆகிய இரு தேர்வுப் பாடத்திட்டத்தை யொட்டி, கலையிளைஞன் சிறப்புத் தமிழ் மாணவர்க்கும் கலைத்தலைவன் (M.A) தமிழ் மாணவர்க்கும் பயன்படு மாறு, முதன் முதலாய் வரைந்துள்ள 'கல்லூரித் தமிழிலக்கணத் தெளிவு' என்னும் நூலைப் பார்வையிட்டேன். ஓரிரு சிறு குறைகளிருப்பினும் இது பெரிதும் போற்றத்தக்கதாகும். உலகில் முதன்முதலாய் இலக்கண நூல் எழுந்தது தமிழே. இன்றும், எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பாற்பட்ட முழுநிறை விலக்கணம் உள்ளதும் தமிழே. தமிழின் பிறந்தகமான குமரிக்கண்டம் மூழ்கிப் போனமையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழி லக்கியம் முற்றும் இறந்துபட்டமை யாலும், தமிழின் உண்மை வரலாறு மறையுண்டு கிடப்பதாலும், தமிழின் முன்மையையும் தொன்மையையும் நடுநிலை வாய்ந்த மேலையறிஞரும் அறியும் நிலைமையில்லை இனி, இவற்றொடு இற்றைத் தமிழரின் குமுகிய (சமுதாய)த் தாழ்வும், தொல்காப்பிய கடைக்கழக விலக்கியப் பயிற்சியின்மையும், கால்டுவெல் கண்காணியாரை, தமிழ் நெடுங்கணக்கும் வேற்றுமையமைப்பும் சமற் கிருதத்தைப் பின்பற்றியவையென்று தலைகீழாக மாற்றிக்கூறச் செய்துவிட்டன. நெடுங்கணக்கு தமிழொலிகள் இயல்பானவும் மெல்லியனவுமாய் வடமொழி யொலிகளினும் வேறுபட்டவையென்பது, செவிப்புலனுள்ள எவர்க்கும் தெளிவாம். ஆரியர் நாவலந் தேயத்திற் கால்வைத்தபோது, அவர்மொழி இலக்கியமற்றதும் எழுதாக் கிளவியுமாயிருந்தது. அவர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழ் முத்தமிழிலக்கணமும் பல்துறை யிலக்கியமும் கொண்டி ருந்தது. தமிழெழுத் திலக்கணம் பன்னிரண்டனுள், முறை என்பதும் ஒன்று. இது மேலையாரிய மொழி கட்கும் ஏனை மொழிகட்கும் இன்று மில்லை. ட, ண, ள, என்னும் வருடொலிகள் (linguals or cerebrals) சமற்கிருதத்திற்கு முந்திய வேத ஆரியமும் தமிழினின்று கடன் கொண்டனவே. இதுபோதுள்ள பழந்தமிழ் நூலான தொல்காப்பியமும் சமற்கிருத விலக்கணமான பாணினீயத்திற்கு முந்தியதே. பாணினீயத் திற்கு முந்திய ஐந்திரம் என்னும் வடமொழி யிலக்கணமும், தமிழ்நாட் டில் தமிழிலக்கணத்தைப் பின்பற்றி யெழுந்ததே. ஆதலால், வடமொழி நெடுங்கணக்கே தமிழைப் பின்பற்றி யமைந்ததென உண்மையறிக. வேற்றுமையமைப்பு இனி, தமிழ்வேற்றுமை எட்டும் இயற்கையாகவும், ஏரண முறைப் பட்டும், தனித்தனி வேறுபட்ட பொருளுடையனவாகவும், இருக்கின்றன. அஃதோடு, மூவேறு வகையில் பெயர் கொண்டும் உள்ளன. எண் வகையில், முதல் வேற்றுமை, 2ஆம் வேற்றுமை, 3ஆம் வேற்றுமை, 4ஆம் வேற்றுமை, 5ஆம் வேற்றுமை, 6ஆம் வேற்றுமை, 7ஆம் வேற்றுமை, 8ஆம் வேற்றுமை என்றும்; பொருள் வகையில், எழுவாய் வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை, கொடை வேற்றுமை, நீக்க வேற்றுமை, கிழமை வேற்றுமை, இட வேற்றுமை, விளி வேற்றுமை, என்றும்; உருபு வகையில், பெயர் வேற்றுமை, ஐ வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி பெயர் (விளிக்கப்படும் பெயர்) வேற்றுமை என்றும், பெயர் பெற்றிருத்தல் காண்க. வடமொழியிலோ, பிரதமா விபத்தி, துவிதீயா விபத்தி, திருதீயா விபத்தி, சதுர்த்தீ விபத்தி, பஞ்சமீ விபத்தி, சட்டீ விபத்தி, சத்தமீவிபத்தி, சம்போதனப் பிரதமா விபத்தி, என எண்பற்றியே எண்வேற்றுமையும் பெயர் பெற்றுள்ளன. 3ஆம் வேற்றுமைப் பொருள்களான கருவி, வினைமுதல் (கருத்தா) உடனிகழ்ச்சி ஆகிய மூன்றும் முரண்பட்டவை என்று கால்டு வெலார் கருது கின்றார். அம் மூன்றையும் ஆய்ந்து நோக்குவார்க்கு, அவற்றின் ஒற்றுமை தோன்றாமற் போகாது. வினைமுதல் என்பது உயர்திணைக் கருவியாதலால், கருவியுள் அடங்கும். இனி, கருவியுள் உடனிகழ்ச்சியும் உடனிகழ்ச்சியுட் கருவியும் நுண்ணிதாய்க் கலந்து கிடப்பதை, நுண்மாண் நுழைபுலங் கொண்டும் வழக்கு நோக்கியும் உணர்ந்தே, அவ்விரண்டையும் ஒரு வேற்றுமைப்படுத்தினர் தமிழ் முதனூலாசிரியர். ஒரு கருவி கொண்டு ஒரு வினை செய்யும்போது அக் கருவி செய்வானுட னிருப்பதையும், ஒருவன் மற்றொருவனுடன் கூடி ஒரு வினை செய்யும்போது, அம் மற்றொருவன் துணையாய்நின்று கருவிப்படுவதையும், கூர்ந்து நோக்குக. இனி, வழக்கு வருமாறு:- ஆன் (ஆல்) உருபு : மண்ணான் இயன்ற குடம் - கருவி ஊரான் ஒரு கோவில் - உடனிகழ்ச்சி. (ஊரான் = ஊர்தொறும்) ஒடு உருபு : ஊசியொடு குயின்ற தூசு - கருவி நாயொடு நம்பி வந்தான் - உடனிகழ்ச்சி. ஆங்கிலத்திலும் இவ் வழக்கு ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. With (ஒடு) : Write with a pen - கருவி Went with him - உடனிகழ்ச்சி By (ஆல்) : Live by bread - கருவி Stand by him - உடனிகழ்ச்சி இங்ஙனமே, 5ஆம் வேற்றுமைக்குரிய நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கும், நீக்கப் பொருளின் நுட்ப வேறுபாடுகளே. இங்கு ஒப்பு என்றது உறழ் பொருவை (comparative degree). ஒப்புப் பொருவு (positive degree) 2ஆம் வேற்றுமைக்குரியதாம். "ஐந்தா குவதே இன்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி Þîù¤ù¢ Þø¢ø¤¶ âù¢Âñ¢ ܶ«õ." (559) என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. 3ஆம் வேற்றுமைக்குக் கருவிப் பொருளொடு உடனிகழ்ச்சிப் பொருள் வடமொழியிலுமுள்ளது. இதை, "இனிச் சகார்த்தமாய் வந்த திருதியையைச் சகார்த்தத் திருதியை என்றும், சகார்த்தமென்றும்.. .... கூறுவர்" என்னும் பிரயோக விவேக உரையாலும் (பக்கம், 11), "saha governs the instrumental" என்று இராம கிருட்டிண கோபால பந்தர்க்கார் தம் சமற்கிருத முதற் புத்தகம் 24ஆம் பக்கத்தில் எழுதியிருக்கும் அடிக்குறிப்பாலும், அறிக. ஆங்கிலத்தில் எழுவாய், கிழமை (possessive), செய்பொருள் (objective) என மூவேற்றுமையும்; செருமானியத்தில் எழுவாய், செய் பொருள் (accusative) கிழமை (genitive) கொடை என நால்வேற்றுமை யும்; இலத்தீனில் எழுவாய், விளி, செய்பொருள் (accusative) கிழமை (genitive) கொடை என ஐவேற்றுமையும்; கிரேக்கத்தில் எழுவாய், கிழமை (genitive) கொடை, செய்பொருள் (accusative) விளி, நீக்கம் என அறுவேற்றுமையுமே இருப்பதாக; அவ்வம்மொழி இலக்கண நூல்கள் கூறுகின்றன. இங்ஙனமிருப்பவும், அம்மொழிகட்கின மான வேத மொழியும் சமற்கிருதமுமாகிய கீழையாரியத்தில் மட்டும் தமிழ்த் தொடர்பின்றி எட்டு வேற்றுமைகள் எங்ஙனந் தோன்றியிருக்க முடியும்? இனி, தமிழில் எத்தனை உருபோ அத்தனை வேற்றுமை என்றும், தமிழிலக்கணியர் வேற்றுமையமைப்பில் சமற்கிருதத்தைப் பின்பற்றிய தால் பல வேற்றுமைகளை ஒரு வேற்றுமைக்குட் செறித்துள்ளனர் என்றும், கால்டுவெலார் கூறியிருப்பது, இடப் பொருளுருபுகளின் பன்மை பற்றியோ பல்வேறு வேற்றுமை குறித்து வரும் சொல்லுருபு பற்றியோ, அறிகிலம். 3ஆம் வேற்றுமையினின்று உடனிகழ்ச்சியைப் பிரித்துவிடினும், வேற்றுமை மொத்தம் ஒன்பதேயாகும். வேற்றுமையென் பது பொருள்பற்றியதே யன்றி உருபுபற்றியதன்று. தமிழ் தானே தோன்றிய இயல்பு மொழியாதலின், அதில் ஒவ்வொரு வேற்றுமையையும் பெரும் பாலும் பொருள்தரும் பல சொற்கள் உணர்த்துகின்றன. ஆரிய மொழிகளோ திரிபு மொழிகளாதலின், அவற்றுள் ஒவ்வொரு வேற்றுமை யையும் பொருள்மறைந்த ஒரே உருபு உணர்த்துகின்றது. தமிழர் வேற்று நாட்டினின்று வந்தவரென்றும், நாகரிகத்தில் ஆரியரினும் தாழ்ந்தவரென் றும் இரு தவறான கருத்துகள் கால்டுவெலார் உள்ளத்தில் குடிகொண்டி ருந்தமையே, அவர் தமிழைப் பிறழ வுணர்ந்ததற்குக் கரணியமாம். வேற்றுமை வடிவைக் குறிக்கும் உருபு என்னும் சொல்லை நோக்கினும், அது தூய தமிழே. உருத்தல்=தோன்றுதல். உரு=தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு-உருவு-உருபு. ஒ.நா: அளவு-அளபு. உருவு-உருவம்-ரூப (வட சொல்). வேற்றுமை மயக்கம் என்பது, உருபு மயக்கம், பொருள் மயக்கம் என இரு வகைப்படும். இவ் வேறுபாட்டைப் புலவர் அருணாசலனார் எடுத்துக்காட்டி யிருப்பது பாராட்டத்தக்கது. செய்வினை, செயப்பாட்டுவினை தமிழிற் செய்வினை போன்றே செயப்பாட்டுவினையும் உண்டென்பது, வழக்கினாலும், "வினையே செய்வது செயப்படு பொருளே" ................ .................. ..................... ................. ஆயெட்டென்ப தொழின்முத னிலையே" (596) "செயப்படு பொருளைச் செய்தது போலத் ªî£ö¤ø¢ðìè¢ è¤÷î¢î½ñ¢ õöè¢è¤òô¢ ñó«ð." (731) என்னும், தொல்காப்பிய நூற்பாக்களாலும், அவற்றிலுள்ள "செயப்படு பொருள்" என்னும் சொல்லாட்சியாலும், அறியப்படும். ஆயினும், தமிழில் உண்மையானபடி செயப்பாட்டுவினையே இல்லை யென்று கால்டுவெலார் தவறாகக் கொண்டார். இதற்குத் தமிழிற் செயப்பாட்டு வினையின் அருகிய வழக்கும் அதன் பல்வேறு வகையுமே கரணியம் (காரணம்). செயப்பாட்டுவினைப் பொருளைப் பெரும்பாலும் செய்வினை வடிவாற் குறிப்பதே, தொன்றுதொட்டுவரும் தமிழ் வழக்காம். எ-டு : புலி கொன்ற மான் (=புலியாற் கொல்லப்பட்ட மான்). தச்சன் செய்த பெட்டி (=தச்சனாற் செய்யப்பட்ட பெட்டி). ஆங்கிலத்திலும் பல பிற மொழிகளிலும் செயப்பாட்டுவினை வடிவம் பெரும்பாலும் ஒன்றே. தமிழிலோ, அவ் வினை நிகழ்கால வினையெச்சத்தோடு கூடிய துணைவினை, முதனிலைத் தொழிற் பெய ரோடு கூடிய துணைவினை, என்னும் மூவடிவு கொள்ளும். இனி, சில செயல்கள் பற்றி, எழுவாயும் அதன் வினையுமின்றிச் செயப்படு பொருளையே செய்ததுபோலச் செய்வினை கொடுத்துக் கூறுவதும், தமிழ் வழக்காம். இதனையே "செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்றார் தொல்காப்பியர். எ. டு: திண்ணை மெழுகிற்று, கலங் கழுவிற்று. இதனை, இப்போதுதான் வந்திற்று, சற்று முன்புதான் தூங்கி எழுந்திற்று, எனத் தன்மை யொருமை வினையைப் படர்க்கை யொன் றன்பால் வினையாகக் கூறும் தமிழ் வழக்கிற் கொப்பாகக் கொள்ளினும் குற்றமின்று. வந்திற்று, எழுந்திற்று என்பன, கொச்சை நடையில் வந்திச்சு எழுந்திச்சு என வழங்கும். ஆங்கிலத்திற் செயப்பாட்டுவினையின் பெயராயுள்ள passive என்னும் சொல்லின் அடியான pat என்னும் இலத்தீன் வேர்ச் சொல்லே, படு என்னும் தமிழ்ச் சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. உரிச்சொல் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயர்க்கும் வினைக்கும் உறுப்பாக வரும் இடைச்சொல் என இலக்கணவகைச் சொல் உண்மையில் மூன்றே. பெயரையும் வினையையும் தழுவிவரும் சொல்லெல்லாம் பெயரெச்ச மாகவும் வினையெச்ச மாகவும் நின்று, பெயருள்ளும் வினையுள்ளும் அடங்கும். தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகக் காட்டப்பெற்றவை யெல்லாம் பெயர் வினை யிடையுள் அடங்குகின்றன. ஏனை மூன்றிற்குப் போல் உரிச்சொற்குத் தனி இயல் வரையறையில்லை. உரிச்சொற்கு இலக்கணங் கூறப்புகுந்த தொல்காப்பியர், "பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி ............................................................................ âꢪê£ô¢ô£ò¤Âñ¢ ªð£¼÷¢«õÁ è¤÷î¢îô¢." (உரியியல், 1) என்பதையே சிறப்பாகக் கூறி, அதை விளக்கும் முகமாகப் பல செய்யுட் சொற்களைத் தனித்தனி நிறுத்தி, அகரமுதலி (அகராதி) முறையிற் பொருள் கூறிச் செல்கின்றார். இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரினும் வினையினும் மெய் தடுமாறல், ஒரு சொற் பலபொருட்குரிமை தோன்றல், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றல், என்னும் நான்கும் எல்லாச் சொற்கும் பொது விலக்கணமாதல் அறிக. தொல்காப்பியர் உரிச்சொற்குக் கூறும் இலக்கணத்தையும், அதற்கு எடுத்துக்காட்டும் சொற்களையும் ஊன்றி நோக்கும்போது, செய்யுளி லேயே சிறப்பாய் வழங்கும் சொல்லும், செய்யுளிற் சிறப்பான பொரு ளைக் கொள்ளும் சொல்லுமே, உரிச்சொல்லெனத் தெரிய வருகின்றது. எ-டு : எறுழ், துவன்று-சிறப்புச் சொல் செல்லல், வம்பு-சிறப்புப் பொருட் சொல். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா ªõ÷¤ð¢ðì õ£ó£ ࣤꢪê£ô¢ «ñù." (உரியியல், 2) என்பது, வெளிப்பட்ட குழூஉக் குறியும் வெளிப்படாத குழூஉக்குறியும் போன்ற இருவகைச் சொற்களைப் பற்றியதாகும். நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர் உரிச்சொல்லின் உண்மையான இயல்பை உணர்ந்தே, பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்". (442) .........................................ð¤é¢èôñ¢ முதலா நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே". (460) எனக் கூறினார் என்க. இதனால், தொல்காப்பிய உரியியலே இடைக்கால நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதி வாயிலாய் இற்றை அகரமுதலிக்கு மூலம் என அறிக. உரிச்சொற்களை யெல்லாம் தொகுத்துப் பொருள் கூறும் சொற் றொகுதிகள் (நிகண்டுகள்), வடநூலாரின் வேர்ச் சொற்றொகுதியை (தாது ரூபா வளியை) ஒருபுடையொத்திருத்தலால், பெரும்பாலும் வேர்ச் சொல்லாயிருக்கும் வினையடிகளை யெல்லாம் உரிச்சொல்லாக மயங்கி னர் சிவஞான முனிவர். சில உரிச்சொற்கள் குறிப்புப் பெயரெச்சமாகவும் குறிப்பு வினை யெச்சமாகவும் இருத்தல் பற்றி, ஒரு, இரு முதலிய குறிப்புப் பெயரெச்சங் களையும் சிலர் தமிழிலக்கணப் பாடப் பொத்தகங்களில் உரிச்சொல் லெனக் குறிப்பா ராயினர். இவை, பொதுவளவுப் பண்புணர்த்தும் சிறு, பெரு என்பன போல், எண்ணளவுப் பண்புணர்த்தும் குறிப்புப் பெயரெச் சங்களே (adjectives) என அறிக. திசைச்சொல் திசைச்சொல் என்பன, பண்டைச் செந்தமிழ் நாட்டைச் சூழவி ருந்த பல திசைக் கொடுந்தமிழ் நாடுகளினின்றும் தமிழில் வந்து வழங்கிய சிறப்புச் சொற்கள். ஆகவே, செந்தமிழ் நாட்டுச் சொல் திசைச்சொல் எனப்படாது. தமிழின் பிறந்தகம் தென்பெருவாரியில் மூழ்கிப்போன பழம் பாண்டி நாடாதலாலும், தமிழை வளர்த்த முக்கழகமும் பாண்டி நாட்டி லேயே இருந்தமை யாலும், இன்றும் பாண்டி நாட்டிலேயே ஓரளவு சிறந்த தமிழ் பயின்று வருதலாலும், பாண்டிநாட்டைத் தமிழ் நாடென் றும், பாண்டியனைத் தமிழ் நாடனென்றும் உரிச்சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) சிறப்பித்துக் கூறுவதாலும், "சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும் சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும் ñé¢èôð¢ ð£í¢® õ÷ï£ ªìù¢ð." "வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை ïù¢ù£´ ê£ù¢«ø£ ¼¬ì." (ஔவையார்) "நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ் வில்லந் தொறுமூன் றெரியுடைத்து-நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் ï£ì¢´¬ì ïô¢ô îñ¤ö¢." என்னும் பழம் பாட்டுக்களாலும், பாண்டிநாடே செந்தமிழ் நாடென்பது தெளிவாம். தமிழ்நாடு பரப்பிலும் மொழித்திறத்திலும் குன்றிக்கொண்டே வந்ததினால், செந்தமிழ் நாட்டளவு காலந்தோறும் மாறிக்கொண்டேயி ருந்திருக்கின்றது. ஆயினும், பிற்காலத்தார் கூறுகின்றவாறு, வைகையின் வடக்கு செந்தமிழ் நாடாகாது. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு கொடுந்தமிழ் நிலமாவன: "குமரி யாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும்; சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும், வடுகும் தெலிங்கும் கலிங்கமும்" என்றார் தெய்வச் சிலையார். சிங்களமொழி தோன்றுமுன், கொடுந்தமிழ் நிலம் இன்னும் வேறுபட்டிருந்திருத்தல் வேண்டும். நன் னூலார், தொல்காப்பியர் எண்ணிய பன்னிரு நிலத்திற்கு மேலும் ஆறு சேர்த்துப் பதினெண்ணிலம் என்றது பெருந்தவறாம். இதனால், திசைச் சொல்லை அயன்மொழிச் சொல்லெனப் பெரும்புலவரும் மயங்க நேர்ந்தது. திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல்லே. பலதிசையி னின்று வந்து வழங்கியதால், ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது கிளைமொழியின் பெயரால் அதைக் குறியாது, பொதுப்படத் திசைச் சொல் என்றனர் இலக்கணியர். திசைச் சொல், சிறப்புச்சொல்லும் சிறப்புப் பொருளிழந்த சொல்லும் என இரு வகைப்படும். எ-டு : தெலுங்கு : இராயசம் - சிறப்புச் சொல். செப்பு - சிறப்புப் பொருளிழந்த சொல். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனால் அதை வடசொல் எனப் பிரித்துக் கூறினார். இங்ஙனமே, பிற அயன்மொழிச் சொற்களையும் அவ்வம் மொழிப் பெயராற் குறித்தல் வேண்டும். முன்பு கொடுந்தமிழாயிருந்தன இன்று திரவிட மொழிகள் எனத் திரிந்தும் வடமொழியொடு கலந்தும் உள்ளன. இதனாலும், திசைச்சொல் என்பது அயன்மொழிச் சொல் லெனச் சில இலக்கணப் புலவரும் பிறழ்ந்துணர நேர்ந்தது. சில திரவிட மொழிகள் ஆரியமாகவும் மாறியுள்ளன. இதைப் பஞ்ச திரவிடம் என் னும் பண்டை வழக்கும் வடநாட்டு மொழி வரலாறும் உணர்த்தும். யாது, எது. "யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும் Üø¤ò£ð¢ ªð£¼÷¢õò¤ø¢ ªêø¤òî¢ «î£ù¢Áñ¢." "அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி Üø¤ï¢î ªð£¼÷¢õò¤ù¢ äòï¢ î¦£¢îø¢°î¢ ªî£¤ï¢î è¤÷õ¤ ò£î½ º£¤î¢«î." (கிளவியாக்கம், 31, 32) என்றார் தொல்காப்பியர். இவற்றிற்கு: "யாது எவனென்னும் இரண்டு சொல்லும் அறியாப் பொருளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு" "àî£óíñ¢: Þꢪê£ø¢°ð¢ ªð£¼÷¢ ò£¶, Þꢪê£ø¢°ð¢ ªð£¼÷¢ âõù¢ âùõ¼ñ¢." "எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமையின், ஈண்டறியாப் பொருளென்றது பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப் படாத பொருளையாம். "கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினாச்சொல் அறியாப் பொருள் வினாவாதலேயன்றி, அறிந்த பொருட்கண் ஐயநீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலு முரித்து, என்றவாறு. "àî£óíñ¢: Þñ¢ñóé¢èÀì¢ è¼é¢è£ô¤ ò£¶, ïñ¢ªñ¼¶ äï¢îÂì¢ ªèì¢ì ªõ¼î¤ò£¶, âù õ¼ñ¢." என்று உரை கூறினார் சேனாவரையர். பொதுவாக, யா வினாவடி அறியாப் பொருள் வினாவிற்கும், எகர ஏகார வினாவடி அறிந்த பொருள் வினாவிற்கும், சிறப்பாக ஏற்கும். யாது எவன் என்னும் இரண்டும் அறியாப்பொருள் வினா வென்றார் தொல்காப்பியர். சேனாவரையர், இதைச் சிறப்புவகையான் அறியப்படாத பொருள் வினாவென்றும், எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாதென்றும், உலகியற்கு மாறாக உரைத்தார். வரகு என்று ஆங்கிலேயனிடத்தும், புட்டினிக்கு (Sputnik) என்று கல்லாத் தமிழனிடத்தும், உரைப்பின் அவர்க்கு யாது தெரியும்? ஆகவே, முற்றும் அறியப்படாததும் சிறிது அறியப்பட்டதும் என இருவகைப்படும் பொருளிடத்தும் வினா நிகழும் என்றறிக. "õó° ò£¶?" என ஓர் ஆங்கிலேயன் வினவுவது, அறியாப் பொருள் வினா. ܶ å¼ Ãôñ¢ âù¢Á ªî£¤ï¢îð¤ù¢ Üîù¢ Þòô¢¬ðð¢ ðø¢ø¤ "õó° âù¢Âñ¢ Ãôñ¢ ò£¶?" என வினவுவதே, அறிந்த பொருள் வினா. "Þñ¢ ñóé¢èÀì¢ è¼é¢è£ô¤ ò£¶?" என்று வினவுதல் வழுவாம். Þõ¢õ¤ù£, "ñóé¢èÀì¢ è¼é¢è£ô¤ ò£¶?", Üô¢ô¶ "è¼é¢è£ô¤ ñóñ¢ ò£¶?" என இருத்தல் வேண்டும். "இம் மரங்களுள்" என்று சுட்டிக் கூறின், எது என்னும் வினாச்சொல்லே ஏற்றதாம். இங்ஙனமே பிறவும். அது, அஃது. அது, அஃது என்னும் இரு சொல்லும் ஒரே சொல்லின் இருவேறு வடிவாம். இங்ஙனமே, இது, இஃது, உது, உஃது என்பனவும். "முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான" (423) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி, அஃதாடை, இஃதிலை, உஃதீயம் என, உயிர்முதற் சொல்லான வருமொழிமுன் ஆய்தமிடைக்கொண்ட சுட்டுப்பெயரே அல்வழியில் நிலைமொழியாய் நின்று புணரல் வேண்டும். இதற்கு நச்சினார்க்கினியர், "முன்னென்றதனான், வேற்றுமைக் கண்ணும் இவ்விதி கொள்க. அஃதடைவு. அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க. இன்னும் இதனானே ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க" என விலக்குக் கூறினார். இவ் விலக்குப்படியே, "விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்" (162) "அஃதறி கல்லாதவர்" (427) என்னும் குறளடிகள் அமைந்துள்ளன. ஆயின், இவை வேற்றுமைத் தொகையாம். இதனால், அஃது என்னும் ஆய்தம் பெற்ற வடிவம் பெரும் பான்மை எழுவாய் நிலையிலும், சிறுபான்மை பிற வேற்றுமைத்தொகை நிலையிலும், உயிர்முதற் சொல்லொடு நிலைமொழியாய் நின்று புணரும் என்பது பெறப்படும். முற்றுகரம் இயல்பான உயிராதலால், அது என்னுஞ் சொல், "எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்" (140) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப, உயிரொடு புணரின் உடம்படு மெய் பெறும். எ-டு: அது+அன்று=அதுவன்று, அது+ஏ=அதுவே. "அறத்தா றிதுவென வேண்டா" (37) "அன்பீனு மார்வமுடைமை யதுவீனும்" (74) "கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்லது" (570) என்னுங் குறளடிகளும், "அவ்விரு முதலின் தோன்றும் அதுவே" (555) "அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் (560) என்னும் தொல்காப்பிய அடிகளும், இப்புணர்ச்சி யமைந்தனவாகும். இனி, இதற்கு விலக்காக, "அன்று வருகாலை ஆவாகுதலும் *ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் ªêò¢»÷¢ ñ¼é¢è¤ù¢ ࣤîù ªñ£ö¤ð." (258) எனத் தொல்காப்பியரே கூறியுள்ளார். Þîø¢°, Üî£ Üù¢øñ¢ñ, ܬîñø¢øñ¢ñ âù â´î¢¶è¢è£ì¢®, "ªñ£ö¤ï¢î ªð£¼«÷£ªì£ù¢ø Üõ¢õò¤ù¢ º®ò£îî¬ù ºì¢®ù¢ø¤ º®î¢îªôù¢ðîù£ô¢, Üîù¢Á, Þîù¢Á, àîù¢Á âù àèóé¢ ªèì¢´î¢ îèóªõ£ø¢Á ï¤ø¢øô¢ ªè£÷¢è." என்றுரைத்தார் நச்சினார்க்கினியர். இதைக் கூர்ந்து நோக்குங்கால், "உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி" (164) என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்ப, அது என்னுஞ்சொல் அன்று என்னும் வருமொழியொடு குற்றுகரம்போல் உகரங்கெட்டுப் புணர்ந்து அதன்று என நின்றதே, செய்யுளில் அளபெடுத்து அதா அன்று என நீண்டும் பின்பு அதான்று எனக்குறுகியும் வந்ததாகத் தெரிகின்றது. இக்கருத்துக் கொண்டே, "அதுமுன் வருமன் றான்றாம் தூக்கின்" (180) என்று நன்னூலார் நூற்பா யாத்தார் போலும்! "சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி å좮ò ªñò¢ªò£ö¤î¢ ¶èóé¢ ªè´«ñ." (176) என்னும் தொல்காப்பிய நூற்பாவும், முற்றுகர வீற்றுச் சுட்டுச்சொல் உயிருடன் உகரங்கெட்டுப் புணர்தலு முண்டென்பதையே, வேறொரு வகையில் உணர்த்தும். மேற்கூறியவற்றால், என்றும் உயிர்முதற் சொல்முன் அஃது என் னும் ஆய்தம்பெற்ற சுட்டுச் சொல்லே வரவேண்டுமென்பது தவறென் பதும், அது என்னும் முற்றுகர வீற்றுச் சொல்லும் வரலாமென்பதும், அஃது என்பது உயிர் முதற்சொல் முன்னரேயே பெரும்பான்மை எழுவாயாகவும் சிறுபான்மை வேற்றுமைத் தொகையாகவும் வருமென்பதும், அது என்பது பெரும் பான்மை உடம்படுமெய் பெற்றும் சிறுபான்மை உகரங் கெட்டும் உயிரொடு புணரு மென்பதும், அறியப்படும். "அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்கு" (80) "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்" (48) "அறத்தா றிதுவென வேண்டா" (37) "ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்" (1330) என்னும் திருக்குறளடிகள், செய்யுளில் உயிர்முதற் சொன்முன் தளைக் கேற்றவாறு அஃது, அது என்னும் இரண்டனுள் ஒன்று வரும் என்பதை உணர்த்தும். "யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய ஆய்த விறுதியும் அன்னொடு சிவணும் Ýò¢îé¢ ªè´îô¢ Ýõò¤ ù£ù." (200) "யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய ஆய்த விறுதியும் உருபியல் நிலையும்". (422) என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள், அஃது என்பது வேற்றுமை விரியாய் வராதென்பதை நேரல் வழியாய் உணர்த்தும். இங்கு அஃது என்னும் சொற்குக் கூறியது இஃது, உஃது என்பவற் றிற்கும், அது என்னும் சொற்குக் கூறியது இது, உது என்பவற்றிற்கும், ஒக்கும் என அறிக. வேண்டும், வேண்டாம், வேண்டா. தமிழ்மொழி முழுவளர்ச்சி யடையாதிருந்த காலத்தில், செய்து, செய்கின்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைச்சொற்களே பண்டைச் சேர நாடாகிய மலையாளத்திற்போல் முறையே முக்காலமும் பற்றிய முற்றுக்களா யிருந்துவந்தன. அவை பாலீறுபெற்று இற்றை வடிவுற்றபின், இடைக்காலத்தில் செய்கின்றான் என்னும் வாய்பாடு யாது கரணியம் பற்றியோ செய்யுள் வழக்கற்றுப்போய், அதற்கீடாகச் செய்யும் என்னும் வாய்பாடே நிகழ்கால வினையாய் வழங்கி வந்திருக் கின்றது. இலக்கண வுரையாசிரியர் அதன் குறைபாட்டை நீக்கச் செய்யா நின்றான் என்றொரு வாய்பாட்டைப் படைத் திருக்கின்றனர். இதை வீரசோழியமும் அதற்குப் பிற்பட்ட நூல்களுமே ஒப்புக்கொண்டுள்ளன. செய்யும் என்னும் முற்று, இறுதியில் பலர்பாலொழிந்த படர்க்கை நாற்பாற்கே வரையறுக்கப்பட் டிருந்திருக்கின்றது. இதை, "பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் ªêò¢»ñ¢ âù¢Âñ¢ è¤÷õ¤ªò£´ ªè£÷¢÷£." (வினையியல், 30) என்னும் தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கும். இலக்கிய வழக்கில் இம் முற்று இங்ஙனமாயினும், இன்றும் எதிர்கால வினையாக, சேரநாடாகிய மலையாள நாட்டில் இருதிணை ஐம்பால் மூவிடத்தும், சோழபாண்டி நாடாகிய இற்றைத் தமிழ்நாட்டில் படர்க்கை அஃறிணை யிருபாலிலும், வழங்கிவருகின்றது. பிற்காலத் திலக்கணநூல்களும் இதை எதிர்கால வினையாகக் கொண்டிருக்கின்றன. விரும்புதல், மன்றாடிக் கேட்டல், தேவையாகக் கொள்ளுதல் முதலிய பொருள்களைத் தரும் வேண்டு என்னும் வினைச்சொல்லே, செய்யும் என்னும் வாய்பாட்டில் வேண்டும் என நின்று, ஒருவரை ஒன்று தப்பாது செய்யும்படி ஆர்வத்தோடாயினும் அதிகாரத்தோடா யினும் கேட்டலை அல்லது கட்டளை யிடுதலைக் குறிக்கும். å¼õù¢ Þ¬øõ¬ù «ï£è¢è¤, "ï¦ âù袰 ܼ÷ «õí¢´ñ¢." âù¢ð¶ Ý£¢ õî¢«î£ ®óî¢îô¢, Üóêù¢ °®è¬÷ «ï£è¢è¤, "ï¦é¢è÷¢ Þ¬ø ªê½î¢î «õí¢´ñ¢." என்பது அதிகாரத்தோடு கட்டளையிடுதல், இவ் வினை தன்மை யிருபாற்கும் பொதுவாய் வரும். நீ வரவேண்டும் = நீ வர (வருதலை) நான் விரும்புவேன், விரும்புகின்றேன் (யாம் விரும்புவோம், விரும்புகின்றோம்.) எதிர்காலப் பொருளில் நிகழ்கால வினை உலக வழக்கிற் பயின்றுவரும். எ-டு : நாளைச் சொல்கிறேன், அடுத்த கிழமை வருகிறேன். ஒருவர் ஒன்று செய்ய வேண்டும் என்பதில், செய்வான் வினையும் அதை விரும்புவான் வினையுமாக இருவர் வினைகள் கலந்திருக்கின் றன. இதையே, "இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே îù¢ð£ ô£Âñ¢ ð¤øù¢ð£ ô£Âñ¢." (வினை. 46) என்னும் தொல்காப்பிய நூற்பா உணர்த்திற்று. இதற்கு, "இது செயல் வேண்டுமென்பதுபட வருஞ்சொல், தன்பாலானும் பிறன் பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையு டைத்தாம் என்றவாறு. "தானென்றது செயலது வினைமுதலை. "ஓதல் வேண்டும் என்றவழி, வேண்டுமென்பது ஓதற்கு வினை முதலா யினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க. "Þîù£ù¢ å¼ê££¢ õ¤¬ùꢪê£ø¢ ªð£¼÷¢ð´ñ¢ «õÁð£´í£¢î¢ î¤ù££¢: àí£¢î¢î£è¢è£ô¢ ªîø¢ªøù õ¤÷é¢è£¬ñò¤ ªùù¢ð¶." என்று சேனாவரையர் உரைத்திருத்தலை நோக்குக. வேண்டாம் என்பது, வேண்டுவம் என்னும் தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்றின் எதிர்மறையாம். செய்வம் என்னும் வாய்பாட் டின் எதிர்மறை. செய்யாம் என்றாதல் காண்க. காணோம் என்னும் தன்மைப் பன்மை வினை காணேன் என்னும் ஒருமைப்பொருளில் (தவறாக) வழங்குதல் போன்றே, வேண்டாம் என்னும் பன்மைவினையும் வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வழங்கும் என்றறிக. ஏவலொருமை. தமிழில் ஏவலொருமை ஈறு பெற்றும் பெறாதும் வரும். இயல்பான பெயர் வடிவம் ஒருமையாயும், அதன் ஈறு பெற்ற வடிவம் பன்மையாயும் இருத்தல் போல்; இயல்பான வினைவடிவம் ஏவலொருமையாயும், அதன் ஈறுபெற்ற வடிவம் ஏவற் பன்மையாயும், வரும் என்க. இருவகை ஏவலொருமையுள், ஈறு பெறாததே இயல்பானதும் சிறப்புடையதுமாகும். உலகவழக்கில் ஈறு பெறாததே ஒருமையேவலா யிருத்தல் காண்க. ஒவ்வொரு மொழியும் பொதுமக்களமைப்பென்றும், அதன் இலக்கியமே புலமக்க ளமைப்பென்றும், உலக வழக்கு மொழியே இலக்கிய வழக்கு மொழிக்கு முந்தியதும் மூலமுமாகு மென்றும், தெற் றெனத் தெரிந்துகொள்க. ஒருவனை நோக்கி ஒன்றைச் செய்யுமாறு ஏவும்போது, அவன் மறுப்பின், இதை யெனக்குச் செய்யமாட்டாயா என்னும் வினாப்பொரு ளில், இதைச் செய்யமாட்டாய் என்று குரல் மாற்றி இரப்பது வழக்கம். அக் குறிப்பு வினாவின் பொருள் இதைச்செய் என்பதே. இதனையே, "செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் ªêò¢ªòù¢ è¤÷õ¤ Ýè¤ìù¢ à¬ìî." (933) என்று குறித்தார் தொல்காப்பியர். இதன் பொருளையும் இதன் நடையை யும் சற்றும் நோக்காது, ஈறு பெறாது வரும் ஏவலொருமையெல்லாம் ஆயீறு புணர்ந்து கெட்டனவென்று வடமொழி யடிப்படையிற் பிறழ வுணர்ந்து பிழைபடக் கூறலாயினர் உரையாசிரியரெல்லாம். தமிழைத் தமிழடிப்படையிற் கற்றாலன்றி அதன் உண்மைப்பொருளை உணர முடியாதென்பதற்கு, இஃதொரு சிறந்த சான்றாம். இத்தகைய பொருள் களையெல்லாம் இந் நூலாசிரியர் தமிழடிப்படை யில் ஆய்ந்து, பல்லா யிரம் ஆண்டுகட்குப்பின் மீண்டும் தமிழ்மரபிற் கொத்தவாறு எடுத்துக் கூறியது பெரிதும் பாராட்டத்தக்கதாம். எழுத்தியல், பால்பகா அஃறிணைப் பெயர், வினையாலணையும் பெயர், வினையியல், ஆங்கிலமொட்டிய வழுவழக்கு, சில சொற்களின் இலக்கண வகைமை, சொல் சொற்றொடர்ப் பிழை திருத்தம், இலக்கியத் தமிழும் செய்தித் தாள் தமிழும், மெய்ப்பாடுகள், திணைமயக்கம், உள்ளுறையும் இறைச்சியும், பொருளியல், யாப்பியல், அணியியல், பின்னிணைப்பு முதலிய இந் நூற்பகுதிகள், பிறபாடப் பொத்தகங்களில் இல்லாத சிறப்புடையனவாய், ஆசிரியரின் பரந்த கல்வியையும், உலக வழக்காராய்ச்சியையும், நீண்ட உழைப்பையும், உண்மையான அறிவை மாணவர்க்கு எளிதாயூட்ட வேண்டுமென்னும் பேரவாவையும், உணர்த்து கின்றன. மாணவர் இந் நூலாற் பயன்பெறுக. பிற ஆசிரியர் ஊக்குக. உண்மைத் தமிழறிவை யொண்மதி யில்லாரும் எண்மை வழியெய்தற் கேற்றவகை-வண்மையதாய் எந்தொரு குற்றமும் இல்லா எழில்நடைத்தே செந்தமிழ் நூலெனச் செப்பு. 28.6.1964 தமிழன் எங்கே? (தென்புலோலியூர் மு.கணபதிப் பிள்ளை) எகித்தியம், சுமேரியம், பாபிலோனியம், யூதம், கிரேக்கம், உரோ மானியம் முதலிய பண்டை நாகரிகங்கட்கெல்லாம் முந்தியதாயும் அடிப் படையாயும், இன்று அறிவியற் குன்றேறி நிற்கும் மேலைநாடுகளும் இருண்டிருந்த நிலையில் தெருண்டு நின்றதாயும் உள்ள உலக முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கண்டு அவற்றைப் பல திசையும் பரப்பிய ஒப்புயர்வற்ற தமிழன் எங்கே? அந்தோ! வந்தேறிகளால் மயக்குண்டு, மணவுறவும் உணவுறவும் அற்ற பல்வேறு சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதைக்கப்பட்டு, ஒற்றுமை யிழந்து, மேன்மேலும் வெவ்வேறு அயலார்க் கடிமைப்பட்டுத் தம் முன்னோரின் பெருமையை முற்றும் மறந்து, நாடிழந்து நகரிழந்து நூலிழந்து சொல்லிழந்து, மறமான மதிகெட்டுத் தாய்நாட்டில் உரிமை யின்றிப் பெரும்பாலும் தற்குறிகளாய் உடலோடு கூடி நிற்கும் தமிழருக் கும் விடுதலையுண்டோ வென்று கவன்று கலங்கும் நிலையில், அவர்க்கு மயக்கந் தெளிவித்து மதிகூட்டும் மருந்தாக, இலங்கை அரசியல் மொழி பெயர்ப்பாளர், தென்புலோலியூர் மு. èíðî¤ð¢ð¤÷¢¬÷ Üõ£¢è÷¢ â¿î¤ ªõ÷¤ò¤ì¢´÷¢÷ 'îñ¤öù¢ â颫è?' என்னும் தமிழ் வரலாற்றாராய்ச்சி நூல் எழுந்து இன்காற்று வீசுகின்றது. இந் நூலில், தமிழன் பிறந்தகமாகிய 'இலெமூரியா' (Lemuria) என்னும் குமரி நாட்டு வரலாறும், இலங்கை அதன் எஞ்சிய பகுதியென் பதும், யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்த வகையும், அங்கு வழங்கும் சில பழமையான தமிழ் வழக்காறுகளும் பிறவும் சொல்லப்பெற்றுள்ளன. இதன்கண் உள்ள சில அரிய செய்திகளுள் இரண்டு வருமாறு: 1. பனாட்டு "பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயென் உயிரே ஆகாரம் வருதல் ஆவயி னான" (தொல். எழு. 284) 'பனை' என்னும் நிலைமொழியின் முன் 'அட்டு' என்னும் வரு மொழி வரின், முன்னதன் ஐகாரம் கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்தேறிப் 'பனாட்டு' என்று முடியும் என்பது, இந் நூற்பாவின் பொருள். 'பனாட்டு' என்பது, இற்றைத் தமிழ்ப்பெரு நிலத்தில் சொல்லளவி லாயினும் பொருளவிலாயினும் எங்கேனும் வழக்கிலில்லை. அது பனங் கருப்புக்கட்டிக்குப் பண்டைக் காலத்து வழங்கிய சொல்லாயிருக்கலா மென்று சிலர் உன்னிப்பாய்க் கூறினர். Ýò¤ù¢, ܶ Üçîù¢ªøù¢ð¶, 'îñ¤öù¢ â颫è?' என்னும் நூலால் தெரியவருகின்றது. "பனம்பழத்தை எடுத்து உரித்து, புளிங்காடி விட்டுப் பிசைந்து, களியாகப் பாயில் ஊற்றி, வெயிலிற் காயவிட்டு தயாரிக்கப்படுவது; தோற்றத்தில் சொக்கிலேற்றைப் (Chocolate) போன்றதாயிருக்கும்" என்று இந் நூலாசிரியர் கூறுகின்றார். (பக். 49,50) இதனால், மேனாட்டார் போன்றே பல அரிய உண்பொருட் களைப் பண்டைத் தமிழர் உருவாக்கினர் என்பதும், அவற்றுட் பல இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தன என்பதும் பெறப்படுகின்றன. 2. அத்துச் சாரியை "பனியென வருஉங் காலவேற் றுமைக்(கு) Üñ¢ Þù¢Âñ¢ ꣣¤¬ò ò£°ñ¢." (தொல். எழுத். 241) "ñ¬öªòù¢ è¤÷õ¤ õ÷¤ò¤òô¢ 郎ô»ñ¢."(ªî£ô¢. எழுத். 187) "ªõò¤ªôù è¤÷õ¤ ñ¬öò¤òô¢ 郎ô»ñ¢." (தொல். எழுத். 378) இந் நூற்பாக்கள், 'பனி', 'மழை', 'வெயில்' என்னும் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில், 'பனியத்துச் சென்றான்', 'மழையத்துச் சென்றான்', 'வெயிலத்துச் சென்றான்' என அத்துச் சாரியை பெறும் எனக் கூறுகின்றன. இத்தகைய வழக்கு இற்றைத் தமிழநாடாகிய சோழ பாண்டிய நாடுகளி லில்லாவிடினும், பழஞ் சேரநாடாகிய மலையாள நாட்டில் இன்றுமுள்ளது. 'பனியத்துப் போகருதெ', 'மழையத்துப் போகருதெ', 'வெயிலத்துப் போகருதெ' என்பன போன்ற வழக்குகள் அங்கு இன்னும் இயல்பாகவுள்ளன. ('போகருதெ' என்பது 'போகாதே' என்னும் எதிர்மறை யேவலின் மறுவடிவம்.) இதுவரை, இவ் வழக்கு மலையாள நாட்டிற்கே சிறப்பெனக் கருதியிருந்தோம். ஆயின், திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்கள் இது யாழ்ப்பாணத்திலு முள்ளதெனத் தெரிவிக்கின்றார்கள். "பண்டு தொட்டுத் தூய தமிழ் வழங்கும் இலங்கையின் வடபாகத் திலே - சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியிலே இவ் வழக்கு உள்ளது. நோயினாற் பீடிக்கப் பட்டவர்களையோ குழந்தைகளையோ வெயிலிலும் மழையிலும் போகாது தடுப்பவர்கள் இவ் வழக்கினைக் கையாளுதல் உண்டு. வெயிலத்துப் போகக் கூடாது. ñ¬öò𢠫ð£èè¢Ã죶 âùè¢ ÃÁõ¶ ò£ö¢ð¢ð£íî¢ îñ¤ö£¢ 裶袰ñ¢ Üï¢ï¤òñ£èî¢ «î£ù¢øõ¤ô¢¬ô." (பக். 47) என்பது அவர்கள் கூற்று. இனி, ஆசிரியர் 'மூ', 'எழு' என்னும் எண்ணுப் பெயரெச்சங்களை நாட்டுப் பெயராகக் கொள்ளும் புதுக் கருத்து, கருத்து வேறுபாட்டிற் கிடமானது. இந் நூலின் பொதுப் போக்கு. உணர்ச்சியற்றுத் தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பி, 'ஆரிய வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தமிழினில் உணர்த்தவிட் டன்னிய மின்மையின் அரசினை யுறுமே' என அறிவித்து ஆற்றுப்படுத்துவதா யுள்ளது. ஆதலின், தமிழர் யாவரும் இதனை வாங்கிப் படித்துப் பயன் பெறுக. - 1966 தமிழ் நூல் (த. ச. தமிழன்) திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகத்தின் தமிழாசிரியர் புலவர் த. சரவணத் தமிழனார் இயற்றிய பொதுமுறைத் தமிழிலக்கண நூலைப் பார்வையிட்டேன். ஆசிரியர் நூலை எழுத்தியல், சொல்லியல், உறுப்பியல், புணரியல், பொதுவியல், ஒழிபியல், தொடரியல் என ஏழியல்களாகப் பகுத்து, இக் கால மாணவர் தமிழைப் பிழையறப் பேசுதற்கும், எழுதுதற்கும் இன்றிய மையாத இலக்கணங் களையெல்லாம் 433 நூற்பாவாலும் அவற்றின் உரையாலும் விளக்கி யிருக்கின்றார். இலக்கணவிளக்க நூலாசிரியரும் இலக்கணக்கொத்து நூலாசிரிய ரும் போல ஆசிரியரே உரை வரைந்திருப்பதால், மூலத்தின் உண்மைப் பொருளைப் பிறழ உணர்ந்து பல்வேறு உரைகள் தோன்றி மாணவரை மயக்கற்கு இடனின்றாம். சொற்களின் திரிவு முறைகளையும் மரூஉக்களின் மூலத்தையும் காட்டலும், நிறுத்தக்குறியிலக்கணத்தை நூற்பாவிலமைத்தலும், தமிழின் தூய்மையைப் போற்றலும், குலமதகட்சிச் சார்பின்றிப் புலமையைப் பாராட்டலும், இந் நூலின் சிறப்புக் கூறுகளாம். வடமொழியெழுத்துத் திரிபைக் கூறும்பகுதி, தமிழின் தூய்மை யைப் போற்றலொடு முரண்படுதலின், அது கொள்ளத்தக்க தன்று. தமிழெழுத்து வரிவடிவு மாற்றமும் தமிழுக்குத் தேவையில்லை. "கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப è£ùè ï£ìù¢ ²¬ù." என்னும் பழைய நேரிசை வெண்பாவை, பிறரெல்லாம் முதலடி யின்றிச் சிந்தியல் வெண்பாவாகவே காட்டுவர். இந்நூலாசிரியர் அதன் முழுவடிவையும் வரைந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆயின் அதைப் பாடியவரின் கருத்து, கொடுங்கோல் மன்னனின் அல்லது ஆட்சி முறையறியா அரசனின் நாட்டு வாழ்க்கையின் தாறுமாறான நிலைமையை உணர்த்துவதேயன்றி, மொழிமாற்றுப் பொருள்கோட்கு எடுத்துக்காட் டமைப்பதன்று என்பதை அறிதல் வேண்டும். வடசொற்களின் மொழிபெயர்ப்பாகக் கொண்டவற்றுள், ஒன்றி ரண்டை மாற்றிக்கொள்வது நன்றாம். எ-டு : நிருபர்-மடலர். இது அறிக்கையாளர் என்றிருப்பின் மிகப் பொருத்தமாம். ஒரு சில மரூஉக்களின் மூலவடிவும் மாற்றப்படல் வேண்டும். பொதுவாக, சில நற்கூறுகளைப் புதுவதாகவும், துணிச்சலாகவும் கையாண்ட இந் நூலாசிரியரை ஊக்குவது தக்கதாம். அடுத்த பதிப்பு முற்றுந் திருந்திய முறையில் வெளிவருமென்று நம்புகின்றேன். 9.4.1972 27 கேள்விச் செல்வம் கிருட்டிணசாமி, சென்னப்பநாயக்கன் பாளையம். *சொல்லுக்கு 'நடுவில்' 'ர' முதல் 'ரௌ' ஈறாக உள்ள எழுத்துக்கள் வருமா? 'ர' முதல் 'ரௌ' ஈறாகவுள்ள உயிர் மெய்யெழுத்துக்களுள், ர, ரா, ரி, ரு, ரை, ரோ என்பவை தனிச் சொல்லிடையாக வரும். பாலகிருட்டிணன், மதுரை-1. * தமிழ் மொழியினின்று ஏனைய தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பிரிந்திருப்பின் அவற்றுக்குத் தமிழ் எழுத்தின்றி மற்றோர் எழுத்து முறை வந்தது எப்படி? தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகள் தமிழில் அல்லாத வல்லொலிகளைப் பெற்றதனாலும், ஆரியச் சேர்க்கைகளாலும், ஆரியமுறை யொட்டிய நெடுங்கணக்கைக் கொண்டன. * தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், இன்றைய பொருளியல் நிலையில் செழிப்போடு வாழ முடியுமா? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தழைத்தோங்குவதற்குரிய செழுமைக ளெல்லாம் அதற்கிருக்கின்றன. பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் பிற்காலத்தில் நாயக்க மராட்டிய அரசுகளும், தனித்து வாழ்ந்திருக்க, சோழ பாண்டி நாடுகள் இணைந்த பகுதி இனி ஏன் தனித்து வாழமுடியாது? இக் காலத்தில் இரசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு முதலிய சில நாடுகள் தவிர ஏனையவெல்லாம் பெரும்பாலும் மேனாடுகளின் துணைகொண்டே வாழ்வனவாகும். இந்தியா மேலைத் துணை கொண்டு வாழ்வது போன்றே தமிழ்நாடும் மேலைத் துணை கொண்டு வளம்பெற வாழும். கா. இர. பகலவன், சென்னை. * அகத்தியர் தமிழரா? வடமொழியாளரா? அகத்தியம் தொல் காப்பியத்திற்கு முந்தியதா? முதன் முதலில் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அகத்தியரா? அகத்தியர் ஆரியர். அகத்தியம் தொல்காப்பியத்திற்கு முந்தியது. அகத்தியர் காலம் ஏறத்தாழ கி. மு. 1500. தமிழுக்கு முதலிலக்கணம் வரைந்த தமிழ் முனைவர் காலம் கி. மு. 10,000 ஆண்டுகட்குமுன். ஆரிய வரு கைக்கு முற்பட்ட தனித் தமிழிலக்கணங்களெல்லாம் அழிந்தும் அழிக்கப் பட்டும் போயின. தமிழ் முதனூலின் தொன்மை வரலாற்றிற் கெட்டாதது. * 'துணங்கை' எனும் நாட்டிய வகை தற்காலத்துக் காணப்படும் "Rock'n Roll" வகையைச் சேர்ந்தது என்று சிலர் கூறுவது உண்மையா? இல்லெனின் அஃது எவ்வகையைச் சேர்ந்தது? துணங்கை குரவைக் கூத்து வகையைச் சேர்ந்தது. ஆ. வேலாயுதம், கொழும்பு. * வள்ளுவர் திருநாள் கொண்டாடுவது பற்றி நால்வகைக் கருத்துகள் இங்கு நிலவுகின்றன. (1) தை முதல் நாள் (2) மாசி உத்தரம் (3) பங்குனித் திரு வோணம் (4) வைகாசி அனுடம் - ஆகிய நாட்களில் கொண்டாடலாம் என நான்கு பிரிவினர் கூறுகின்றனர். இவைபற்றித் தங்கள் கருத்துகள் யாவை? வள்ளுவர் திருநாளைப்பற்றி இற்றை நிலையில் திட்டமாய் ஒன்றும் சொல்லவியலாது. தை முதல் நாள் பொங்கல் விழாவாதலால் வேறொரு நாளில் வள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவது நல்லது. அதை அறிஞர்கூடி முடிவு செய்தல் வேண்டும். சரவணக்குமார், சென்னை. * காமம் என்பது தமிழ்ச் சொல்லா? காமத்திற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடென்ன? காமம் இழிந்ததென்றால் வள்ளுவர் "காமத்துப்பால்" என்று அமைத்ததேன்? அதை 'இன்பத்துப்பால்' என்று சிலர் கொள்வது பொருந்துமா? 'காமம்' தமிழ்ச் சொல்லே. காமம் கணவன் மனைவியரிடைப்பட்ட பேரன்பு; காதல் பிறரிடைப்பட்ட பேரன்பு. வள்ளுவர் காலத்தில் காமம் என்னும் சொல் பிற்காலத்திற்போல் இழிவடையவில்லை. 'இன்பம்' பொதுச் சொல்லாதலால், காமம் என்னும் சிறப்புச் சொல்லை ஆள்வதே நன்று. கோ. மலையரசன், மலாயா. * தமிழின் பீடழிக்கும் இந்தியை எதிர்த்தழிக்கும் நோக்கோடு சிலர் ஆங்கிலத்தையும் எதிர்க்க விழைவது அறிவுடைமையா? ஆங்கிலத்தை எதிர்ப்பது அறிவுடைமையாகாது. இராசசுந்தரம், சித்திரச்சாவடி. * 'இனிமை'யி லுறைநல் லெழில்சேர் 'ழ'வுடன் இலங்கும் 'ஃ'-உம் எம்மொழி உடைத்து? இவ்விரண்டையும் தமிழே உடைத்து. ஆங்கிலர் சிலர் pearl போன்ற சொற்களிலுள்ள 'rl' இணையெழுத்தை ழகரமாக ஒலிக்கின்றனர். சமற்கிருத விசர்க்கம் தமிழாய்தத்தை ஒரு புடையொத்தது. முனியப்பன், கர்த்தாரப்பட்டி. * தி. மு. கழகத்தைப் பற்றித் தங்கள் கருத்தென்ன? தி. மு. கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள தலைமையான எதிர்ப்புக் கட்சி. அறிவன், பறம்பை. * சங்கினம் கூடி வாழ்வதால் 'சங்கம்' என்ற சொல் தமிழ்க் கழகத்தைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்துமா? கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல் sangha என்னும் வட சொல்லின் திரிபாகும். நந்தைக் குறிக்கும் சங்கம் என்பதே, வட சொல்லாகக் கூறப்படினும், தூய தென்சொல்லாம். சுரி-சரி-சருக்கு, சருக்குதல் = வளைதல் சருக்கு + அம் = சருக்கம் (வட்டம்). சருக்கு + அரம் = சருக்கரம்-சக்கரம் = வட்டம். வண்டி (Wheel). சருக்கரம்-சருக்கரை = வட்டமான அச்சு வெல்லம். ஓ நோ: வட்டு = வட்டமான பனை வெல்லம். சருக்கரை-சர்க்கரை-சக்கரை. சர்க்கரை யென்பது பிற்காலத்தில் பிற வடிவான வெல்ல அச்சுக்களையும் உதிரி வெல்லத்தையும், மணற் சீனியையும் குறித்தது. சக்கரம்-அக்கரம்-அக்காரம் = சர்க்கரை. சருக்கு-சக்கு-செக்கு = வட்டமாய் ஆடும் எண்ணெய் ஆலை. சக்கு-சங்கு = வலமாகவும் இடமாகவும் வளைந்தது (வலம்புரி, இடம்புரி) ஓ.நா: புரி = சங்கு, வளை = சங்கு. புரிதல் = வளைதல். சங்கு-சங்கம் = பெரிய சங்கு, சங்கு. 'அம்' என்பது ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு. எ-டு: நிலை-நிலையம், மதி-மதியம், விளக்கு விளக்கம். அறிவரசி, இளையான்குடி. * சொல்லின் செல்வர் இரா. பி. சேது (ப்பிள்ளை) தமிழுக்குச் செய்த தொண்டுபற்றி உங்கள் கருத்தென்ன? எனது 'சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு' என்னும் திறனாய்வுச் சுவடியைப் பார்க்க. * தமிழ்நாட்டின் எதிர் காலம் எப்படியிருக்கும்? தமிழ் மக்களின் உணர்ச்சிக்குத் தக்கபடி யிருக்கும். மெய்ம்மொழி, முகவை. * வையாபுரி (ப்பிள்ளை) 'ஆரிய அடிமை' என்பது தவிர அவர் சிறந்த ஆராய்ச்சியாளர் என்றும் அவரும் பலவகையில் தமிழ்ப்பணி புரிந்துள்ளார் என்றும் ஒப்புக்கொள்ளலாமா? ஆரிய வடிமைப்பட்ட தமிழ்ப் பகைவர் எங்ஙனம் தமிழ்ப்பணி புரிந்திருக்க முடியும்? க. நாகராசன், மதுரை. * இவ்வுலகில் எந்த ஒரு மக்கள் தொகுதியிலாவது பிற மொழிக் கலப்பற்ற ஒரு தனி மொழி வழங்கி வருகின்றதா? அம்மொழி வழங்கு வது உண்மையாயின் அதன் காலம், வரலாறு இவற்றைச் சுருக்கமாகக் கூற முடியுமா? அவ்வாறு இல்லையெனின், நாம் தனித் தமிழ் இயக்கம் தொடங்குவது உலக வழக்குக்குப் பொருத்தமாகப் படுகின்றதா? காலப் போக்கில் மொழிக் கலப்பும் இனக் கலப்பும் நாட்டுக் கலப்பும் தோன்றத்தானே செய்யும்? அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறென்ன? என்பவற்றை விரிவாக எழுத வேண்டுகின்றேன். மக்கள் மொழிகள், அவரவர் நாகரிக நிலைக்கேற்றவாறு சிறிதாயும் பெரிதாயும் பண்பட்டும் பண்படாதும் சொல்வளங் கொண்டுங் கொள் ளாது மிருக்கும். பண்பட்ட மொழியாயின் சொல்வளங் கொண்டே யிருக்கும். பண்பாடு இலக்கண வமைதியும் நுண் பொருள் வேறுபாடும் பற்றியதாகும். பண்படாத, ஆத்திரேலிய ஆப்பிரிக்க மொழிகளும், அமெரிக்கப் பழங்குடி மக்கள் மொழிகளும், நக்கவாரம் பாலினீசியம் போன்ற நாகரிகமற்ற தீவு மொழிகளும், சில மலைவாணர் மொழிகளும் ஏறத்தாழ ஐம்பது முதல் மூவாயிரம் வரை சொற்கள் கொண்டவை. அவை தனி மொழிகளாயிருப்பினும் சொல்வள மின்மையாற் சிறப்பற்றவை. இக்கால நாகரிக மக்களின் உலக வழக்குப் பேச்சிற்குக் குறைந்த பக்கம் இருபதி னாயிரம் சொற்கள் வேண்டும். ஆங்கில சாகசனியச் சொற்கள் (Anglo Saxon) ஏறத்தாழ இருபத்துநாலாயிரம். இற்றை யாங்கிலச் சொற்கள் ஏறத்தாழ ஐந்திலக்கம். இவற்றுள், நூற்றிற்குப் பத்தே ஆங்கிலம்; எண்பது கிரேக்க விலத்தீனம் (Greeko Latin); ஏனைப் பத்து ஏனை மொழிகள். சமற்கிருதச் சொற்கள் ஏறத்தாழ ஈரிலக்கம். இவற்றுள், நூற்றிற் கிருபது தென்சொற்கள்; இருபது வட திரவிடம்; முப்பது மேலையாரியம்; இருபது புனை சொற்கள்; பத்து இடுகுறிகள். குமரிக் கண்டத் தமிழ்ச் சொற்கள் ஏறத்தாழ ஓரிலக்கம். குமரி நிலம் முழுகிய பின்பும் பண்டைத் தமிழிலக்கியம் இறந்துபட்ட பின்பும், இன்று எஞ்சி நிற்கும் உலக வழக்குச் சொற்களும் செய்யுள் வழக்குச் சொற்களும் அரையிலக்கம். இவையெல்லாம் தனித் தமிழ். பண்பட்ட மொழிச் சொற்கள் இலக்கக் கணக்காய் எண்ணப்பட்டி ருப்பினும், அவற்றுட் பெரும்பாலன புணர் சொற்களும் தொடர்ச் சொற்களுமான கூட்டுச் சொற்களே. தனிச் சொற்கள் சில பல்லாயிரமே. அவற்றுள்ளும் வேர்ச் சொற்கள் சின்னூறே. மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். தானே தோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்தது திரிமொழி. தமிழ், இந்து மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டத்தில் கி. மு. ஐம்பதினாயி ரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி முழு வளர்ச்சியடைந்திருந்த தனிமொழி. கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய தலைக்கழகத்திலேயே முத்தமிழிலக்கிய விலக்கணங்கள் முற்றியிருந்தன. இலக்கணத்திற்கு முற்பட்டது இலக்கியம். இலக்கியத்திற்கு முற்பட்டது மொழி. இலக்கியமும் எழுதப்பட்ட நிலைக்கு முந்தியது எழுதப் படாநிலை. அசை நிலை, புணர் நிலை, பகு சொன்னிலை, கொளுவு நிலை என நானிலைகள் கொண்டு வளர்ந்தது தமிழ் மொழி. இந் நானிலைக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றி ருத்தல் வேண்டும். மாந்தன் தோற்றம் கி. மு. ஐந்திலக்கம் ஆண்டுகட்கு முற்பட்டது. சாலி (ஜாவா)த் தீவிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்பு அக்காலத்தது. ஆப்பிரிக்காவில் தங்கனிக்கா நாட்டில் அண்மையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்பு, கி.மு. ஆறிலக்கம் ஆண்டுகட்கு முற்பட்டது. இவ் வீரிடங்களும் முழுகிப்போன குமரிக் கண்டத்தைச் சார்ந்தவை. பனிமலை (இமயம்) எழாது கடலுக்குள்ளிருந்த போது, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய முக் கண்டங் களையும் ஒன்றாயிணைத்துக் கொண்டிருந்த தொன்முது பழநிலம் குமரிக் கண்டம். தமிழ் தானே தோன்றிய தென்மொழி, தொன்மொழி, முன்மொழி, மென்மொழி, வளமொழி, தாய்மொழி. உலகப் பெருமொழிகட்குள் தூய்மை பேணக்கூடிய தனிமொழி தமிழ் ஒன்றே. "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்" என்னும் தண்டியலங்கார வுரைப் பழஞ் செய்யுளைக் கண்டு உண்மை தெளிக. காலப்போக்கில் பல வகையிற் கலப்பு ஏற்படினும் அதற்கோர் அளவுண்டு. பகுத்தறிவுள்ள மாந்தர் நல்லதைக் கொள்ளவும் அல்லதைத் தள்ளவும் வேண்டும். மேனாட்டார் பழக்க வழக்கங்களிற் பலவற்றை நாம் மேற்கொள்ளினும், மண வாழ்க்கையும் பெண்டிரொழுக்கமும் பற்றியவற்றை நாம் மேற்கொள்ளவே முடியாது. தன்மானமும் கற்பும் அதற்குப் பெருந் தடையாய் நிற்கும். அது போன்றே மொழித்துறையி லும் தமிழின் மென்மையும் வளமும் செம்மையும் தூய்மையும் மரபும் பிற மொழிக் கலப்பை ஏற்பனவல்ல. எல்லாச் சொற்களையும் தமிழில் மொழி பெயர்க்க முடியும். பொதுச் சொற்களையெல்லாம் மொழிபெயர்த் தும், இயற் பெயர்களை (proper names) யெல்லாம் வரிபெயர்த்தும், தமிழின் தூய்மையைப் பேணிக் கொள்ளல் வேண்டும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் õ¿õô è£ô õ¬èò¤ ù£«ù." (462) என்னும் நன்னூல் நூற்பா, எல்லாத் துறையிலும் எல்லாவற்றையும் குருட்டுத் தனமாய்த் தழுவிக்கொள்ளுமாறு கூறிய நெறிமுறையன்று. தமிழ்ப் பகைவரும் தாய்மொழிப் பற்றில்லாதவரும் தன்னலக்காரரும், உண்மைக்கும் உத்திக்கும் ஒழுங்கிற்கும் மாறாக ஏதேதோ எத்தனையோ சொல்லலாம். "................................. நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார்? தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு" என்பதையறிந்து உண்மையுணர்க. முகவை ஆடல் வல்லான் * தாங்கள் 'Viceroy' என்பதற்குப் 'பதிலரையர்' எனத் தமிழாக்கியுள்ளீர்கள். அதேபோல், 'Doyen of art' எனுஞ் சொற்றொடர்ப் பொருளை உன்னிய ஞான்று, 'doyen என்றால் 'மூத்த' என்னும் பொருளை அப்பாத்துரையார் அகர வரிசை தருகின்றது. எனவே, doyen என்பதை 'மூதரையர்' என்று கொள்ளலாமா? Doyen என்பதை மூதாளர் என்று மொழி பெயர்க்கலாம். * ஏரணத்திற்கு (Logic) ஆங்கிலம்கூட ஏற்றதாயில்லை என்று ணர்ந்து 'log lang' எனும் மொழியை உருவாக்கினர். இதற்கு உலக மொழிகளில் உள்ள நயம், ஏரணத்திறங்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் தமிழ் விடுபட் டுள்ளது. ஒருவேளை, தமிழ்த்திறம் அறிந்தால் இப் புதிய மொழிக் கண்டுபிடிப்பு தேவையில்லை என்று கருதுகிறேன். இது சரியா? தமிழ் இயன் மொழி; தொன் மொழி; குமரிக் கண்டச் சிறப்புச் சொற் களையும் தனித்தமிழிலக்கியப் பெருஞ் செல்வத்தையும் இழந்த மொழி: ஆரியம் திரிமொழி: பின்மொழி; பன்னூற்றாண்டாகப் பல்வேறு அறிவியல் நூல்களை ஆக்கிக்கொண்ட மொழி. இவ் விரண்டிற்கும் மெல்லாடைக்கும் வன்கம்பளிக்கும் போற் பொருத்தமில்லை. மு. ஆனந்தராசன், பெல்காம். * கற்பின் தெய்வம் நம் கண்ணகி நகரறிய நகிலைத் திருகி வட்டித் தெறிந்தமை, அவட்கும் அவளொத்த நாணுடை நங்கையர்க்கும் நற்செயலாகுமோ? 'Þï¢ ï裢 í¢è!' என நவிலத்தகும் நாச்சொல் ஒன்றே கற்பின் நல்லாளாகிய கண்ணகிக்குச் சாலாதோ? கற்புடை மகளிர் பெருஞ் சினத்தில் நகிலைத் திருகி யெறிவ தென்பது சிலப்பதிகாரம் தவிர வேறெத் தமிழ் நூலிலும் சொல்லப் படவில்லை. "நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் ªêé¢è÷ï¢ ¶ö¾«õ£÷¢................." (278) என்னும் புறச் செய்யுள் போன்றவற்றில், போர்க்களத்திற் புறங்கொடுத் தோடியவன் உண்ட நகிலைத் தாய் வாளால் அறுத்தெறியும் செய்தியே சொல்லப்படுகின்றது. மேலும், நகிலைக் கையால் திருகிப் பிடுங்க வியலுமோ வென்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி. கண்ணகி தன் நகிலைக் கையாற் பறித்தெறிவது போற் சைகை மட்டுங் காட்டித் தன் பெருஞ் சினத்தைக் குறிப்பித்திருக்கலாம். ஊரை யெரியுண்ணச் சாவித்தற்குச் சொல்லே போதும். அவள் மெய்யாய்த் தன் நகிலைத் திருகியெறிந்திருப்பின், அதனால் ஏற்பட்டிருக்கும் புண்ணைப் பதினான்கு நாள் எங்ஙனம் தாங்கியிருக்கவும், அதன் நோவொடு சேரநாட்டு நெடுவேள் குன்றம் சென்றேறியிருக்கவும், முடியும்? அவள் கற்பும் சினமும் மருத்துவத்திற்கு இடந் தந்திருக்காதென்பது தேற்றம். இனி, அவள் நெடுவேள் குன்றம் ஏறி விழுந்திறந்தபோது ஒரு முலை சேதப்பட்டுப் போயிற்றென்று கொள்ளலுமொன்று. சு. ஆறுமுகம், அருப்புக்கோட்டை. * "The more popular word in Tamil derived from Acarya is Asiriyer" என்று பர். எஸ். கே. நாயர் என்பவர் 'பேராசிரியர் இரா. பி. சேது' மலரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எம் ஆசிரியர், ஆசிரியர் எனுஞ் சொல்லை ஆசு + இரியர் என்று பிரித்துக் காட்டிக் கற்பித்துள் ளார். எந்த முடிவு ஏற்புடைத்து? ஆசிரியன் என்னும் சொல்லை ஆசு + இரியன் என்று பிரிப்பதே ஏற்புடைத்து. சேதுப் பிள்ளை நினைவு மலர்க் கட்டுரை யாசிரியரெல் லாரும் மொழிநூற் பேரறிஞரல்லர். அறிவன், பறம்புக்குடி. * தமிழிற் புலமைபெற முறையாகப் பயிலவேண்டிய நூற்கள் யாவை? மறைமலையடிகளின் உரைநடை நூல்கள், தனிப்பாடற் றிரட்டு, நாலடியார், திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களை மறைமலையடிகள் வழித் தமிழாசிரி யர்பாற் கற்க. இரா. பாலகிருட்டிணன், மதுரை. * தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவையா? ஆம் எனில் அது எவ்வாறு ஆக்கவேண்டும்? ஈ என்னும் எழுத்தை முன்போல் ' ' என்னுங் குறியாற் குறிக்கலாம், ஔ, கௌ முதலிய ஔகார எழுத்துகளின் 'ள' என்னும் துணைவரியை, ளகர வடிவினின்றும் பிரித்தறிதற் பொருட்டுச் சற்றுச் சிறிதாக்கல் வேண்டும். இவை தவிர வேறு திருத்தம் வேண்டியதில்லை. நை. கு. குப்புசாமி, சேலம். * இன்று சிறந்ததாகக் கருதப்பட்டுவரும் பண்டைக் காலத் தமிழ்ச் சுவடிகளைத் தேடினால் இன்னும் அவற்றில் சிலவேனும் கிடைக்கப் பெறுவோமா? தற்போது (உ.வ.சா.விற்குப் பிறகு) பழைய நூல்களைத் தேடுவதில் ஈடுட்டுள்ள தமிழறிஞர்கள் யாவர்? இன்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள நாட்டிலும் யாழ்ப் பாணத்திலும் தேடினால், ஏதேனும் யாங்கேனும் பழந்தமிழ்ச் சுவடி கிடைக்கலாம். மேனாடுகளிலும் தேடிற் கிடைக்கும். எனக்குத் தெரிந்தவரை, பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள வர் இன்று ஒருவருமில்லை. பெ. கிருட்டிணசாமி, சென்னப்பநாயக்கன்பாளையம். * தென்னாற்காடு, தென்னார்க்காடு இவற்றில் எது சரி? ஏன்? 'தென்னார்க்காடு' என்பதே சரி. இங்ஙனம் 'வடார்க்காடு' அல்லது 'வடவார்க்காடு' என்பதும். ஆர்க்காடு என்னும் ஊராற் பெயர் பெற்றி ருந்த ஒரு பெருமாவட்டம் பின்பு வடக்கும் தெற்குமாக இரு மாவட்டங்க ளாகப் பிரிக்கப் பட்டது. ஆர்க்காடு என்னும் ஊர் வேலூர் வட்டத்தைச் சேர்ந்தது; மிகப் பழமை யானது. "அழிசி யார்க்காடு" என்று குறுந்தொகையிலும் (258), "அரியலங் கழனி யார்க்காடு" என்று நற்றிணையிலும் (190), வந்துள்ளது. ஆர் = ஆத்தி. ஆர்க்காடு= ஆத்திக்காடு. இச் சொல்லைப் புராணிகர் ஆறுகாடு என்று பிறழக் கொண்டு, வடமொழியிலும் சடாரணியம் என்று மொழிபெயர்த்து விட்டனர். ஷட் = ஆறு. ஆரணியம் = காடு. தாயம்மை, சேலம் 9. * கடல்கோளால் அழிந்த இலக்கிய நூல்களுள் "பண்ணத்தி" என்பதுவும் ஒன்று எனப்படுகிறது. அந் நூல் பற்றிய விளக்கங்கள் கிடைக்குமாயின் அருள்கூர்ந்து தெரிவியுங்கள். "பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் ð£ì¢® ù¤òô ðí¢íî¢î¤ ò¤òô¢«ð." (1436) என்பது தொல்காப்பிய நூற்பா. "பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு..... அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கட்கண்டும் முதலாயின........ அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க" என்பது பேராசிரியர் உரை. காலஞ் சென்ற பண்டாரகர் (Dr.) பெரும் பேராசிரியர் (மஹா மஹோபாத்தியாய) உ.வ. சாமிநாதையர் அவர்கள் பண்ணத்தியை நாடோடிப் பாட்டென்றார்கள். அவர்கள் நாடோடிப் பாட்டென்றது நாட்டுப்புறப் பாட்டை. பண்ணத்தியென்பது, இந்துத்தானிப் பாட்டுகளில் வரும் தொகைய ராவாயிருக்கலாம். * "பாவம்" "பாவி" என்பன தமிழ்ச் சொற்கள்தாமா? 'பாவம்' 'பாவி' என்பன வடசொற்கள். அறங்கடை, கரிசு, தீவினை என்பன பாவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். * "குணகுணி சம்பந்தம்" (மறை - திருநாவுக்கரசு எழுதிய மறைமலை அடிகள் வரலாறு 64ஆம் பக்கம்) என்ற விளக்கத்தின்படி நல்லறிஞர் அழகிய தோற்றங்களில் விளங்க வேண்டியிருக்க, சாக்ரடீசு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய சிறந்த அறிஞர் அழகற்ற தோற்றம் பெற்றி ருந்ததேன்? அகத்தழகும் முகத்தழகும் என்றும் ஒத்திருக்கவேண்டும் என்பது இயற்கை நெறியன்று. ஒட்டுமாவையும் கூட்டுமாவென்னும் கொட்டை மாவையும் ஒப்பு நோக்கிக் காண்க. க. பழனியப்பன், பொன்மலை, திருச்சி - 4. * தமிழில் பன்னெடுங்காலமாக விரவி வழங்கிவரும் வடமொழி (ஆரிய எழுத்துகளான ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற) எழுத்துகள் வட மொழியில் வேறு வடிவம் பெற்றிருக்கத் தமிழில், ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ என்ற வடிவம் வந்தது எவ்வாறு? எப்பொழுது? ஏன்? ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பின்னரே தமிழ் நெடுங்கணக்கை யொட்டிக் கிரந்தாட்சரம் என்னும் ஆரிய வெழுத்துகளை அமைத்துக் கொண்டனர். அக் காலம் கி.மு. ஏறத்தாழ 1500. க + ஷ = க்ஷ. * கல்லூரிகளில் அனைத்தும் தமிழ்ப் பயிற்றுமொழி ஏற்படுத்து வதுபற்றித் தங்கள் கருத்தென்ன? அறிவியல் நூல்கள் தமிழில் போதுமான அளவு இல்லாதிருக்க, மாணவர்கள் அவற்றைத் தமிழில் படித்து எங்ஙனம் மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு நிகராக விளங்க முடியும்? இவ் வினாவிற்கு விடை ஏற்கனவே எழுதப்பெற்றுளது. முந்திய வினா விடை மாலைகளைக் காண்க. ந. தட்சு, மணலூர். * முகத்தைக் குறிக்கும்போது "மூஞ்சி" என்றும் சொல்கிறோம். இவை இரண்டும் தமிழ்ச் சொற்கள்தாமா? விளக்க வேண்டுகிறேன். 'முகம்' 'மூஞ்சி' இரண்டும் தமிழ்ச் சொற்களே. முகம் மக்களது; மூஞ்சி (Muzzle) விலங்குகளது. முகம் என்னும் சொல் வரலாற்றைத் தமிழ்ப்பொழிலிற் காண்க. மூசு - மூஞ்சு - மூஞ்சி. மூசுதல் - மூச்சுவிடுதல், மூசு - மூச்சு. * "பிறகு" என்பதற்கு 'மல்லாக்க', என்றும் 'பொறக்கி' என்றும் சொல்லி வருகின்றனர். அவை எந்தச் சொற்களின் திரிவு? மல் - மல்லா - மல்லாக்க. மல்லாத்தல் - மலர்தல். பிறகு - புறகு - புறகே - புறகேக்கு - புறகைக்கு - புறைக்கு. கோவி. க. வேலன், தஞ்சை. * இப்பொழுது புத்தாண்டு என்று சித்திரை முதல்நாளக் கொண்டாடு கிறார்களே, இது உண்மையில் தமிழ்ப் புத்தாண்டா? ஆம் எனின் எதன் அடிப்படையில் இதை வகுத்தனர்? தமிழாண்டு என்று தொடங்குவதென்பது திட்டமாய்த் தெரிய வில்லை. அறுவகைப் பெரும்பொழுதுகளுள் (பருவங்களுள்) இள வேனில் சிறந்ததென்னும் இலக்கிய அடிப்படையில் தமிழாண்டு சித்திரையென்னும் மேழ மாதத்தில் தொடங்கியது போலும்! முகவை. ஆடல்வல்லான். * உலக மொழியாக விளங்க esperanto எனும் மொழி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. உலக மொழிகளின் திறம்யாவும் வடித்தெடுக்கப் பட்ட மொழியிது வென்ப தறிவோம். தமிழின் திறம், வளம் - இம் மொழியாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா? இல்லாவிடில் உலக மொழி யாகத் தமிழை ஆக்கிட இயலும் வழிவகைகளைக் கூறிட வேண்டு கிறேன். அயல் நாட்டாரும் நயந்து ஏற்றிடும் வகையில் தமிழை எளி தாக்கித் தற்போதைய esperantoவின் இடத்தைப்பெற ஆய்வு நடத்த முடியுமா? ஆங்கிலம் உலக மொழியாகப் பரவாத 17ஆம் 18ஆம் 19ஆம் நூற்றாண்டு களில், மேனாட்டு மொழியறிஞர் பெரும்பாலும் ஐரோப்பிய மொழிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு, volapuk, esperanto, ido, esperantido, interlinqua, novial முதலிய செயற்கை மொழிகளை உலக மொழிகளாகப் பயன்படுமாறு படைத்தமைத்தனர். இக்காலத்தோ, ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது. இனி அதன் இடத்தை வேறொரு மொழி பெற முடியாது. "âô¢ô£¼ñ¢ ðô¢ô被èø¤ù£ô¢ âõ£¢ ðô¢ôè¢°î¢ É袰õ¶?" îñ¤ö¢ â÷¤ò ºð¢ð£ù¢ åô¤è¬÷è¢ ªè£í¢ì àôè ºîø¢øù¤ê¢ ªêñ¢ªñ£ö¤ò£îô£½ñ¢, îñ¤ö£¢ Þù¤«ñô¢ Ýé¢è¤ô£¢«ð£ô¢ àô躿õ¶ñ¢ ðóõ¾ñ¢ ðù¢ù£´è¬÷ Ý÷¾ñ¢ Þòô£î£îô£½ñ¢, îñ¤¬ö àôè ªñ£ö¤ò£èè¢ è¼¶õ¶ "õ£ù ñ¦Â袰 õù¢Úí¢® ô¤´õ«î." தமிழ்நாட்டில் தூய்மையாக வழங்குவதும், உலகமெங்கும் கற்கப்படுவதுமே, தமிழ் இனி யடையத்தக்க பேறாம். சு.ஆ. திருவாரூரன், திருப்பாதிரிப்புலியூர். * சிலப்பதிகாரத்தில் 'கொலைக் களக் காதை'யில் 'சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்' என்று கோவலன் கண்ணகியிடம் கூறியதாகக் காணப்படுகின்றது. சிறு முதுக் குறைவி என்பது யாரைக் குறிக்கின்றது? கண்ணகியையா? அல்லது மாதவியையா? கண்ணகியைக் கூறுவதானால் அது ஏன் மாதவியைக் கூறியதாகக் கருதக் கூடாது? "சிறு முதுக்குறைவி" என்பது கண்ணகியையே குறிக்கின்றது. கோவலன் முறைப்படி மணந்த குல மனைவி கண்ணகியே. அவன் அவளை மடந்தைப் பருவத்திலேயே விட்டுவிட்டு மாதவியொடு கூடிப் பதினைந்தாண்டு போற் கழித்தான். கானல் வரிப்பாட்டிறுதியில், மாதவியை "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்று கூறித் துறந் தான். மதுரை வழிப்போக்கில் கௌசிகன் கொணர்ந்து நீட்டிய மாதவி முடங்கலைப் படித்த பின்பும், "தன்றீதிலள்" என்று மட்டும் சொன் னானே யொழிய அவளை மீண்டுங் காதலித்தானல்லன். கூடி வாழாதும் சிலம்பொழிந்த அணிகலன்களை யெல்லாம் கவர்ந்தும், கண்ணகிக்கே கொடுமை செய்தான். அங்ஙனமிருந்தும் அவள் ஆற்றியிருந்ததும், "சிலம்புள கொண்ம்" எனச் சொன்னதும், மதுரைக் கெழுக என்றவுடன் எழுந்ததும், ஆறைங்காதம் அருவழி நடந்ததும், குரவரையும் பிற உறவினரையும் பிரிந்து அயலார் ஊரில் தனித்திருக்க நேர்ந்ததும், கணவன் வழிபாட்டிற் கடுகளவுங் குறையாமையும், கோவலன் கொடுமைகளையெல்லாம் ஓருருவாக்கி அவன்முன் கொணர்ந்து நிறுத்தின. அவன் கரையில்லாக் கழிவிரக்கங் கொண்டு, அவளை ஆற்றித் தேற்றுமாறு. "மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லத ரத்தங் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி ............................................................................ சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண் டெழுகென வெழுந்தா யென்செய் தனையெனப்" புலம்பி உள்ளமழிந்தான். இவ் வமையத்தில் "சிறு முதுக்குறைவி" எவ் வகையிலும் எள்ளளவும் ஏனை யொருத்தியைக் குறியாதென்பது தெளிதரு தேற்றம். ஆ. வேலாயுதம், கொழும்பு - 6. * தங்களால் எழுதப்பட்ட நூல்கள் எவை? அவற்றை எங்குப் பெற்றுக் கொள்ளலாம்? கட்டுரை வரைவியல், உயர்தரக் கட்டுரை யிலக்கணம் (2 பாகம்), சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத்தாய், முதற்றாய்மொழி, பழந் தமிழாட்சி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு, தமிழர் திருமணம் முதலியன. இவை, அப்பர் அச்சகம், 2/140, பிராடுவே சென்னை-1 என்ற முகவரி கொண்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் கிடைக்கும். அங்குப் பெற்றுக்கொள்க. * தமிழரின் பொற்காலம் எது? தனித்தமிழே தழைத்தோங்கியதும், முத்தமிழிலக்கண விலக்கியங் களும் பல்கலை நூல்களும் முற்ற வழங்கியதும், வறுமை யறியப்படாதி ருந்ததும், பிறப்பால், சிறப்பில்லாதிருந்ததும், ஆரியத் தொடர்பு அணு வளவுமில்லாததுமான, (குமரிக் கண்டத் தென் மதுரைத்) தலைக் கழகக் காலமே தமிழரின் பொற்காலம். * தமிழகத்தில் தோன்றிய ஔவையார்கள் எத்தனைப் பேர்? எந்தெந்தக் காலங்களில் வாழ்ந்தனர்? இற்றை யிலக்கியத்தால் தெளிவா யறியப்பட்ட ஔவையார் இருவர். ஒருவர் கடைக் கழகக் காலத்தவர் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு). இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டினர். வான்கோழி இந் நாட்டிற்குப் பதினாறாம் நூற்றாண்டிற் கொண்டுவரப்பட்டதாயின், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய அற நூல்களை இயற்றிய வரை 16ஆம் அல்லது 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 3ஆம் ஔவையா ராகக் கொள்ளவும் இடமுண்டு. * "தொல்காப்பியம்" தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளதா? தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்ட சார்பிற் சார்பு நூல். அதற்குமுன் தனித்தமிழ் முதனூலும் வழிநூலும் நூற்றுக் கணக் கான சார்பு நூல்களும் அழிக்கப்பட்டுப் போயின. தொல்காப்பியத்தி லுள்ள வடசொற்களும் இருபதிற்கு மேம்பட்டவையல்ல. அந் நூலின் விரிவை நோக்கும்போது அவை பொருட்படுத்தத் தக்கனவாகா. இருப் பாணியுள்ள மர நாற்காலியும் மர நாற்காலி யென்றே சொல்லப்படுவது போல், ஒரு சில வட சொற்களுள்ள தொல்காப்பியமும் தனித்தமிழ் நூலென்றே கொள்ளப்படும். மேலும், தொல்காப்பிய வடசொற்கள் தமிழுக்கின்றியமையாதனவு மல்ல. அவை வேண்டாது புகுத்தப்பட்டனவாதலின், அவற்றை விலக்க வுங் கூடும். உலகில், பிற மொழிச் சொல்லின்றி முழுத் தூய்மையாய் எழுதக் கூடிய மொழி தமிழ் ஒன்றே. வட மொழிச் சொற்களுள் ஐந்திலிரு பகுதி தமிழாயிருப்பதை நோக்கும்போது, தொல்காப்பிய வடசொற் றொகையால் அதன் தனித்தமிழ் நடை இழுக்குறுவதன்றென்க. * கம்பராமாயணம் புகழ் பெற்றதுபோல் பாமர மக்களிடம் கழக இலக்கியங்கள் புகழ் பெறாததின் ஏதுவென்ன? கழக விலக்கியம் கம்பராமாயணம் போற் புகழ் பெறாமைக்குக் கரணியங்கள் (காரணங்கள்), 1) ஆரியம் உயர்த்தப்பெற்றதும் தமிழ் தாழ்த்தப்பட்டதும். 2) இராமாயணப் பாட்டுடைத் தலைவன் இறைவன் தோற்றரவு (அவதாரம்) என்னும் நம்பிக்கை. 3) கம்பன் கல்வித் திறம். 4) இராமாயணக் கதையின் விரிவும் பொருட் பன்மையும். 5) இற்றைத் தமிழ்ப் பொதுமக்களின் தாழ்ந்த அறிவு நிலை. * தாய்மொழிக்குத் தீங்கு இழைப்பவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? தாய்மொழிக் கொலைஞர் என்றழைக்க. * "மறை"யின் பொருள் விளக்கமென்ன? கல்லா மக்கட்கு மறைவாயிருக்கும் பொருள்களை விளக்குவது மறை. ச. கி. வேணி இளம்பரிதி. * "இராவண காவியம்" பற்றித் தங்கள் கருத்து யாது? அதனைத் தடை செய்தது சரியா? இராமாயணக் கதையால் தென்னாட்டார்க்கு அல்லது தமிழர்க்கு இழிவு ஏற்பட்டுள்ளதென்று கருதி, அதனை நீக்குவது இராவண காவியம். இராமாயணம் ஒரு வகுப்பாரால் மறை நூலொத்த மத நூலாகக் கொள்ளப்பெறுவதால், அவர் மனத்தைப் புண்படுத்தக் கூடாதென்று அதனைத் தடை செய்துள்ளனர் அரசியலார். சீதை இராமனுக்குத் தங்கையென்றும், இராமன் தன் தங்கையை மணந்தானென்றும், இராமன் இராவணன் மனைவியைக் கவர்ந்தா னென்றும், பல்வேறாக நாற்பது இராமாயணக் கதைகளிருப்பதாகச் சொல்லப்படுவதாலும், இராமயணம் கட்டுக் கதையென்று ஆராய்ச்சி யாளராற் கருதப் பெறுவதாலும், எந்த இராமாயணக் கதை வேறுபாட்டை யும் தடை செய்யக் கூடாதென்பது ஒரு சாரார் கருத்து. அறிவன், பறம்பை. * மொழி வளர்ச்சிக்குரிய தங்களின் வருங்காலத் திட்டமென்ன? தமிழிலுள்ள அயற் சொற்களெல்லாம் களைந் தெறியப்படல் வேண்டும். வழக்கு வீழ்த்தப்பட்ட பழந்தமிழ்ச் சொற்கள் புதுக்கப் பெறவும், இக் காலத்திற்கேற்ற புதுச் சொற்கள் தனித்தமிழிற் புனையப் பெறவும் வேண்டும். ஆட் பெயர், பொருட் பெயர், இடப் பெயர் எல்லாம் தமிழ்ச் சொற்களா யிருத்தல் வேண்டும். அயற் சொற்போன்றே அயலெழுத்தும் வேண்டா. மேலை அறிவியல் நூல்களெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப் பெறல் வேண்டும். தமிழ் நாட்டு ஆட்சியும் தமிழர் சடங்கும் திருமணமும் கோயில் வழிபாடும் தமிழில் நடைபெறல் வேண்டும். உயர் மேற் கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் விரும்புவார்க்கு ஆங்கிலத்திலும், உள்நாட்டிற் பிழைப்பிற்காக மட்டும் கல்வி கற்பார்க்குத் தமிழிலும், ஆக இரு மொழியிலும், முதலிலிருந்து இறுதிவரை கல்வி கற்பிக்கப் பெறல் வேண்டும். இந்தியும் சமற்கிருதம் என்னும் வடமொழியும் தமிழர்க்கு வேண்டா. தமிழ் கெட்டதே சமற்கிருதத்தால்தான். மேலை யாரியத்தைச் சேர்ந்த ஆங்கிலம் கீழையாரியமாகிய சமற்கிருதத்தினும் தமிழுக்கு மிக நெருக்கமாகும். இவ் வுண்மையை ஆராய்ச்சியில்லார் அறியார். இந்திய ஆட்சி ஆங்கிலத்திலேயே நடைபெறல் வேண்டும். வடவர் இதற் கிசையாவிடின், தமிழ்நாடு மொழியியல் தன்னாட்சி (linguistic autonomy) பெறல் வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டொடு நடுவண் ஆட்சிக்கும் (Central Govt.) பிற சீமைகட்கும் (மாகாணங்கட்கும்) ஆங்கிலத்திலேயே தொடர்பிருக்க முடியும். இந்தியைப் பொது மொழியாகத் தமிழறிஞர் ஒப்புக் கொள்ள வில்லையென்றும், அது பொது மொழியாகும் தகுதியுடையதன் றென்றும், அதுவும் ஆங்கிலம்போல் தமிழர்க்கு அயன்மொழியும் ஆரியமொழியு மாகு மென்றும், ஆங்கிலம் அறிவியன் மொழியும் இந்திய மொழியும் உலகப் பொது மொழியுமா யுள்ளதென்றும், மாந்தன் வாழ்நாள் குறுகியுள்ள இக் காலத்திற்கு இரு மொழிக் கொள்கையே ஏற்குமென்றும், அறிந்துகொள்க. செ. பாண்டியன், கோவை - 2. * தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழி யெழுத்துகளான ஜ், ஹ், ஸ், ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துகளான J, F, H, G முதலிய வற்றையும், எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின், அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித்தொகுதியுண்டு. எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக் குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியு மாகும். தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பத் தெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும். ஒவ்வொரு பெரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிக ளெல்லாம் வல்லியல், மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனை மொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலன வற்றை ஏற்குந் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன் மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும். அதன்பின் அது தமிழாகாது. தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (884) என்று வடவெழுத்தை விலக்குவாராயினர். இனி, 12ஆம் நூற்றாண்டில், "இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும் அல்லா அச்சை வருக்க முதலீறு யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்" (146) என்று வடசொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்கு வதற்கு வழி வகுத்த பவணந்தியாரும். "ஏழாமுயி ரிய்யும் இருவும்ஐ வருக்கத்து இடையில் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும் ஆவீ றையும் ஈயீ றிகரமும்" (147) "ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்கு Þò¢»ñ¢ ªñ£ö¤ºî ô£è¤ºù¢ õ¼«ñ." (148) "இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும் ñ¤¬êõ¼ñ¢ óõ¢õö¤ àõ¢¾ñ¢ Ýñ¢ð¤ø." (149) எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டார். 19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், புரவலரும் இன்மையால், தமிழ் உரை நடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடவெழுத்து களும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவற்றையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலை யடிகள் களைந்தெறிந்தார். ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழ வுணர்ந்து, அதனைக்கொண்டு ஆரிய வொலிகளையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணு மென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங் கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன் றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க. ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணிய ககரவொலியே யன்றி வேறன்று. ஆய்தல் - நுண்ணியதாதல். "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" (813) என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும், ஒலி வடிவிற்கும் வரிவடி விற்கும் இயைபின்மையை அறியாதும், ஆய்த வரிவடிவைத் துணை கொண்டு கு, ஷ் போன்ற ஆங்கில வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத் தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்ப்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன் மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லா வற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும், அவற்றை யெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்து வருகின்றது. மொழியென்பது ஒலித் தொகுதியேயன்றி வரித் தொகுதியன்று. வரி மாறலாம், ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறி விடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம். முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழி யாளர் கையாண்டு வந்திருக்கின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட மொழியாகத் திரிந்துள்ளமை காண்க. கொடுந்தமிழ்களை முன்னர் ஆரிய வண்ணமாக்கியது போன்றே, இன்று செந் தமிழையும் ஆக்க முயன்று வருகின்றனர். அதனொடு ஆங்கில எழுத்துகளும் சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம். அரசன், நகைச்சுவை, பொத்தகம் அல்லது சுவடி, பூ, பறவை என்னும் தென் சொற்க ளிருக்க, அவற்றிற்கு மாறாக ஏன் ராஜன், ஹாஸ்ய ரசம், புஸ்தகம், புஷ்பம், பேள என்னும் வட சொற்களையும் வட சொல் வடிவங்களையும் தழுவ வேண்டும்? இயற்கை யொலிகளும் செயற்கை யொலிகளும் மிகுந்து நெடுங் கணக்கு நீண்ட வடமொழியுள்ளும், எ, ஒ என்ற உயிர்க் குறில்களும், ள, ழ, ற, ன என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய தமிழொலிகளும், F, Z என்னும் ஆங்கிலவொலிகளும், சில அரபியொலிகளுமில்லை. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. அவற்றை யெல்லாம் தழுவுவது ஆங்கிலமாகிய உலக மொழி ஒன்றற்கே தகும். எல்லா மொழிகளும் தழுவ வேண்டியதில்லை; தழுவின், எல்லாம் தத்தம் தனித் தன்மையிழந்து ஒன்றாகிவிடும். ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களா லாயது. பொருள்தரும் சொல்லிற்கு உறுப்பாகும் ஒலியே எழுத்தாம். அது தன்னளவிற் பொருள் தராது. அதனாலாகும் சொல்லே பொருள் தருவது. குமரிக் கண்டத் தமிழர், முப்பதொலிகளைக் கொண்டே, அக் காலத்து மாந்தருள்ளத்திலெழுந்த கருத்துகளைக் குறிக்குஞ் சொற்களை யும், பிற்காலத்திலெழுங் கருத்துகளை குறித்தற்கேற்ற சொற்கருவிகளை யும், அமைத்துச் சென்றனர். ஆதலால், ஒலிக் குறைவினால் தமிழிற்கு ஏதும் மொழிக்குறைவில்லை. ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவினால் ஒரு குறைவுமில்லை அழகிய சொல்வள மிக்க தமிழுக்கு ஒலிக் குறைவினால் ஒரு குறைவுமில்லை. ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நின்றே வளர்தல் வேண்டும். ஆதலால், தமிழுக்கு எவ்வகையிலும் எழுத்து மாற்றம் தேவையின்றென அறைக. அது தமிழுக்கு இறுதி விளைக்குமென்றே மறைமலையடிகளும் விடுத்தனர். அதுவே உறுதியென்று கடைப்பிடிக்க. 28 ஈ.வ. இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள் (தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வ.இரா.பெரியார் அவர்கட்கு ஞா.தவநேயன் எழுதுவது: வேண்டுகோள்.) அன்பார்ந்த ஐய, வணக்கம், தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாய (சமுதாய)த் துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்குச் செய்துவந்த அரும் பெருந் தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின், மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உருபா மானியமாக உதவினீர்கள். இந் நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை. ஆதலால், தங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தன்மானப் பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் எனச் சென்னையில் ஒரு கல்வி நிறுவனம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகின்றேன். திட்டம் தமிழையும் அதன் வழிப்பட்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு, குடகு, துளு, கோத்தம், தோடம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ என்னும் பதினெண் திரவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பித்தல். மதம் கற்பிக்கப்படாது. கடவுள் வாழ்த்துப் பாடப்பெறாது. அதற்கீடாகப் பெரியார் வாழ்த்து அல்லது புகழே பாடப்படும். கல்லூரி நடப்பிற்குரிய சட்ட திட்டங்களைத் தாங்களே அமைத்துத் தரலாம். ஆசிரியர் குழு முதல்வர் : பேரா. தி.வ. ªê£è¢èð¢ð£ âñ¢.ã., âô¢.î¤., தமிழ்ப் பேராசிரியர்: ஞா. தேவநேயன். துணைவர் : தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார். பிறமொழி கட்குத் தகுந்த ஆசிரியர் விளம்பரம் செய்து அமர்த்தப் பெறுவர். மாணவர் பள்ளியிறுதி அல்லது அதற்குச் சமமான தேர்வு முதல் வகுப்பில் தேறிய ஐம்பதின்மர் குல மத கட்சி யின நாடு வேறுபாடின்றித் தெரிந்தெடுக்கப் பெறுவர். வெளியூர் மாணவர்க்கும் வெளிநாட்டு மாணவர்க்கும் உண்ணவும் தங்கவும் விடுதி யிருக்கும். கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் பின்னர்த் தெரிவிக்கப் படும். மானியம் சென்னையில் சூழ்நிலத்தொடு கூடிய மாளிகையொன்றும் ஐத்திலக்கம் உருபாவும். கடவை (Course) இலக்கணம், இலக்கியம், மொழிநூல், ஏரணம் (Logic), இசை, நாடகம் என்னும் ஆறும் ஐந்தாண்டு கற்பிக்கப்பெறும். ஆங்கிலம், அறிவியல் இவற்றோடு பெரியாரியல் (Periyarism) என்ற பகுத்தறிவுக் கொள்கையும் கற்பிக்கப்பெறும். பாடத்திட்டம் பின்னர் வகுக்கப்பெறும். பயன் தமிழ் வடமொழியினின்று மீட்கப்பெற்றுத் தூயநடையில் கற்பிக்கவும் உலக முழுவதும் பரப்பவும் பெறும். தமிழரும் திரவிடரும் ஆரிய அடிமைத்தனம் அடியோடு நீக்கி முன்னேற்றப் பாதையில் அடியிட்டு விரைந்து நடப்பர். ஐயாட்டைக் கடவை முடித்துப் பட்டம் பெற்ற மாணவர் உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மொழியாசிரியரும் மொழிநூலாசிரியரும் இசை யாசிரியரும் நாடக வாசிரியருமாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறுவர். அன்பன் ஞா. தேவநேயன் குறிப்பு : திருவள்ளுவராண்டு 2000 ஆடவை 13ஆம் பக்கல் (25.6.1969) அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு. மா. பா. சாரதி அவர்களின் தம்பி மகன் திரு. அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை. - தென்மொழி 29 பிறந்த நாட் செய்தி இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000 (ஐம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித் தமிழகத் திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியி னின்றும் விடுதலை யடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதொறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல்லாரும் அந் நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறி விக்கலாம். தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்கு களையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கை யுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும், அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம். ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம். ------