பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 42 பண்பாட்டுக் கட்டுரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 42 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 120 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 80/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு .v நூல் 1. புறநானூறும் மொழியும் 1 2. வனப்புச் சொல்வளம் 27 3. அவியுணவும் செவியுணவும் 32 4. அறுதொழிலோர் யார்? 35 5. 501-ம் குறள் விளக்கம் 41 6. அரசுறுப்பு... 47 7. பாவினம் 50 8.mf¤âa® ஆரியரா? தமிழரா? . 59 9. தமிழ் மன்னர் பெயர் 65 10. வேளாளர் பெயர்கள் 72 11. பாணர் 78 12. குலப்பட்ட வரலாறு 89 13. கல்வி (Culture) .96 14. நாகரிகம் 100 15. வெடிமருந்து 106 16. பண்டைத்தமிழர்காலக்கணக்குமுறை... 111 பாவாணர்பொன்மொழிகŸ... 117 பண்பாட்டுக் கட்டுரைகள் 1 புறநானூறும் மொழியும் 1. முன்னுரை தமிழையும் அதன் இலக்கியத்தையும் செவ்வையாயறியவேண்டின், தமிழின் வரலாற்றறிவு இன்றியமையாது வேண்டப்படும். இம் முறை Vனைbமாழிகட்கும்Vற்கும்.giHa ஆங்கில இலக்கண நூல்களிலெல்லாம் முன்னுரையாக ஆங்கிலச் சரித்திரம் கூறப்படுதலை நோக்குக. தமிழும் தமிழரும் தோன்றியது மாந்தன் முதன்முதல் தோன்றிய குமரிநாடே என்பதும், குமரிநாட்டார் வடக்கே செல்லச் செல்லத் தமிழ் முதலாவது திரவிடமாயும் பின்பு ஆரியமாயுந் திரிந்த தென்பதும், ஆரியர் தமிழகத் திற்கு வருமுன்பே தமிழர் பிற துறைகளிற் போன்று மொழியிலும் தலைசிறந்திருந்தன ரென்பதும், பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித் தமிழ் நடையினவே யென்பதுவும், பிறவும், மொழி நூலார் கண்ட உண்மைகளாம். தமிழ்நூல்களை யாராயாமலே குமரிநாட்டை ஊகித்தறிந்த மேலைக் கலைவல்லார் அதனை லெமுரியா (Lemuria) என்றும், காண்டு வானா (Gondwana) என்றும் அழைத்தனர். அவர்கள் தமிழ் நூல்களை மட்டும் அறிந்திருப்பின், இதுபோது, குமரிநாட்டைப்பற்றி ஐயத்திற்கோ மறுப்பிற்கோ எள்ளளவும் இடமிருந்திருக்காது. 2. தமிழின் காலப் பகுதி தமிழின் காலம் கீழ்க்காணுமாறு முப்பெரும் பகுதியினதாகும் (1) முதற்காலம் கி.மு. சுமார் 10,000 - 3,000. (2) இடைக்காலம் அல்லது கழகக்காலம் - கி.மு. சுமார் 3,000 - கி.பி. 200. (3) தற்காலம் - கி.பி. 200 முதல். இவற்றுள் ஒவ்வொன்றும் பல சிறு பகுதிகளாகப் பாகுபட்டுள்ளது. கழகக் காலம் (1) தலைக் கழகக்காலம், (2) இடைக் கழகக்காலம், (3) கடைக் கழகக்காலம் என முப்பகுதிப்படும். இவற்றுக்கு இடையிடை இடையீடு மிருந்தது. இறையனா ரகப்பொருளுரைப்படி, முக்கழகமும் நிலைத்திருந்த காலம் முறையே நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டும் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டும் ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற்றி யாண்டுமாக மொத்தம் ஒன்பதினாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறி யாண்டாகும். குமரிநாட்டின் தொன்முது பழைமையை நோக்குவார்க்குக் கழகக்கால நெடுமையைப் பற்றிய ஐயுறவும் மயக்கமும் அறவே அறுமென்பது திண்ணம். புறநானூற்றில் ஒரு சில (2, 358, 362, 366) செய்யுள்களைத் தவிர, பிறவற்றையெல்லாம் பாடினாரும் அவராற் பாடப்பட்டாரும் கடைக்கழகக் காலத்தினராதலின், புறநானூற்றின் காலம் கடைக்கழகக் காலமாகும் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு). 3. நூல்வகை தலைக் கழகத்தாரும் இடைக் கழகத்தாரும் இயற்றின நூற்றுக் கணக்கான பல துறைத் தனித்தமிழ் நூல்களெல்லாம் இறந்துபட்டன. இதுபோது கழக நூல்களென்று குறிக்கப்படுபவை கடைக்கழக நூல்களே. அவற்றுள்ளும், இலக்கண நூல்கள் கதை நூல்கள் கலை நூல்கள் முதலியன சேர்க்கப்படவில்லை. பதினெண் மேற்கணக்கென்றும் பதினெண் கீழ்க்கணக் கென்றும் இருபாற்பட்டுக் கடைக்கழக நூல்களென்று வழங்கும் முப்பத் தாறும், பெரும்பாலும், காதல் வாழ்க்கை, மறம், போர், அரச வாழ்த்து, நல் லொழுக்கம், வரலாற்றுத் துணுக்கு ஆகிய ஆறுபொருள் பற்றியவே. மேற் கணக்கில், எட்டு நூல்களே தொகை நூல்களெனப் பிரித்துக் கூறப்படினும், உண்மையில் எல்லாம் தொகை நூலே. எட்டுத்தொகை போன்றே பத்துப் பாட்டும் பல புலவராற் பாடப்பட்டதாகும். பத்துப்பாட்டிலுள்ள பாட்டுக ளெல்லாம் மிக நீண்டிருத்தலாலேயே வேறாகத் தொகுக்கப்பட்டன. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே என்று தொல்காப்பியங் கூறு வதால், நூற்றுக்கணக்கான அடிகள் கொண்டு மிக நீண்டிருந்த தனிச் செய்யுளை (பெரும்பாலும் அகவலை)ப் பாட்டென்று சிறப்பாக முன்னோர் வழங்கியதாகத் தெரிகின்றது. பதினெண் கீழ்க்கணக்கி னுள்ளும், நாலடியார் தொகைநூலாம்; ஏனையவை தனி நூல்கள். கடைக் கழகத்தார் பாடிய பாட்டுகளிலும் நூல்களிலும் பலவற்றைத் தொகுத்தபோது, பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பதினெட்டுக் கொப்பாகக் கீழ்க்கணக்கையும் பதினெட் டாகத் தொகுத்திருக்கின்றனர். இத் தொகை இருபுறவொப்புப் (Symmetry) பற்றியது. அஃதெங்ஙன மிருப்பினும், புறநானூறு ஒரு தொகைநூல் அல்லது தனிப்பாடற்றிரட்டே. புறப்பொருளைப் பற்றிய நானூறு செய்யுள்களைக் கொண்டது புறநானூறு. இன்னா நாற்பது இனியவை நாற்பது முதலிய நாற்பது பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, நாலடி நானூறு, பழமொழி நானூறு முதலிய நானூறு பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நாலாயிரக்கோவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் (தெய்வப்பனுவல்) முதலிய நாலாயிரம் பாக்களைக் கொண்ட பனுவல்களையும் நோக்குமிடத்து, நாலென்னும் எண் ஏதோ வொரு காரணம்பற்றி நூற்செய்யுட் டொகைக்குச் சிறந்ததாகக் கொள்ளப் பட்டதென்பது தெரிகின்றது. அது நால்வகைப் பாவோ நால்வகைக் குலமோ பற்றியிருக்கலாம். 4. நடை பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித்தமிழ் என்னும் பொதுக் கொள்கைக்கேற்ப, புறநானூறும் தனித் தமிழே. ஆங்காங்கு இரண்டொரு வடசொற்கள் அருகி வந்திருப்பதினால், புறநானூற்றின் தனித்தமிழ்த் தன்மை குன்றிவிடாது. இந் நூலில் வந்திருக்கும் வடசொற்களெல்லாம் இருபது அல்லது இருபைத்தைந்தே. இவற்றுள்ளும் ஒருசில தென் சொல்லோ வடசொல்லோ என ஐயுறற்குரியன. இரண்டொரு வடசொற்கள் இங்குமங்குமாக அருகி வந்திருப்பது கொண்டு, புறநானூறு முழுமையுங் கலப்புத் தமிழென்பாராயின், பிறமொழிச் சொல் கலவாத மொழியே உலகத்திலில்லை யென்றும், ஆரியத்திலும் சுட்டும் வினாவும் மூவிடப் பெயரும் போன்ற அடிப்படைச் சொற்க ளெல்லாம் வேர்நிலையில் தமிழா யிருத்தலின், தமிழ் தனித்து வழங்கினும் ஆரியம் தனித்து வழங்கல் கூடாமை யென்றும் கூறி விடுக்க. புறநானூற்றுச் செய்யுள்களிற் சில சிதைந்துங் குறைந்து மிருப்பதால், இந் நூற் செய்யுள்களின் அடிச்சிறுமை பெருமையும் சொற்றொகையும் அறிவதற்கில்லை. ஆயினும், இதுபோதுள்ளபடி அடியுஞ் சொல்லும் எண்ணிப் பார்ப்பின், ஒரு செய்யுளின் சராசரி அடித்தொகை பதினெட் டென்பதும், ஓர் அடியின் சராசரிச் சொற்றொகை ஆறென்பதும் தெரிய வரும். ஆகவே, ஒரு செய்யுளின் சராசரிச் சொற்றொகை ஏறத்தாழ நூறென்பது பெறப்படும். 5. புறநானூற்றால் விளக்கப்படும் சொல்லியல் (Etymological) நெறிமுறைகளும் உண்மைகளும் 1. சுட்டடிச் சொற்கள் முதற்காலத்தில் உயிர் முதல. எ-டு : ஏம்-ஏமம்-சேமம் = காவல், பாதுகாவல் (1, 3). சேமவச்சு (102). சேமம்-க்ஷேம (வ.). ஒ.நோ : ஏண்-சேண். (2) சுட்டுவினாச் சொற்கள் முதற்காலத்தில் நெடின் முதல. எ-டு : ஆங்கு = அசை (2), அப்படி (24) : அதுபோல (35, 106). ஈங்கனம் = இவ்வாறு (208), ஈது (208). ஊங்கு = முன் (79, 88, 141). ஏனோர் = யாவர் (342), யாங்கனம் = எவ்வாறு (8,49). யாங்கு = எப்படி (191, 245) (3) சுட்டெழுத்துகள் முதற்காலத்தில் பெயர்ச் சொல்லாயுமிருந்தன. எ-டு. : அத்தக = அதற்குத்தக (10). (4) ஒலிக்குறிப்பல்லாச் சொற்களெல்லாம் முதற்காலத்தில் ஓரசைய. எ-டு : ஆர் = உண் (24), ஆரக்கால் (283), ஆத்தி (338), ஆல் = ஆடு (116). உண் (160), உள் = ஊக்கம் (396), ஊம் = ஊமை (28) ஊர் (83). (5) முதற்காலத்தில் ஒரு வடிவே பல சொல்வகைக்குப் பொதுவாயிருந்தது. எ-டு : செய் = செய்கை (199), பரி = செலவு (14, 146), அறிவாரா = அறியவாரா (92), நகுதக்கனர் = சிரிக்கத்தக்கார் (72), இனைகூஉ = வருந்திக் கூப்பிடும் கூப்பீடு (44), இனையும் கூவு என்க. வணங்கிறை = வளைந்த முன்கை (32). (6) எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல்.). எ-டு : சுள்-சுடு-சுடர், கள்-கண், எய்யில்-எயில், கண்-கண்ணி, ஒல்-ஒன்-ஒன்னார், மறு-மறை. குள்-குட-குடை, வள்-வரி-வரிசை, அண்-அடு-அடர்-அடவி, இரு-எரு-எருமை, அ-அன்-அனை, மாறு-மாறே, இரு-இனு-எனு-ஏனை-யானை, புல்-புள்-புணர், வே-வேகு-வேகம், வேகு-வெகுள்-வெகுளி, இறு-இறை-இறைஞ்சு, நல்-நல்கு, ஒள்-ஒளி-ஒளிர்-ஒளிறு, மரு-மார்-மார்பு, கள்-களி-களிறு, இரு-இரா-இரவு, கொள்-கொடு-கொடி, கொள்-கொண்பு-கொம்பு, குடி-குடும்பு-குடும்பி-குடுமி, புல்-பொள்-போழ்-போழ்து-பொழுது-பொழுதம், புல்-பொல்-பொரு-பொருந்-பொருந்து. பொரு-பொருள், வை-வசை, கள்-கரு-கரும்-கரும்பு, கில்-கிள்-கேள்-கேண்-கேணி, கேள்-கேழல், பண்-பாண்-பாணன், கிள்-கேள், இ-இன்-இனி, புரி-புரிசை, வள்-வாள்-வாளை, தீ-தீமை, புல்-புன்மை, வள்-வட்கு-வட்கார். அசைநிலைகள் : அத்தை = அதை, இத்தை = இதை, மாதோ = பெண்ணே, மன்னோ = அரசே, மதி = அறிவாகும், அளவா கும், போதும், ஓர் = உணர், ஓரும் - உணரும், ஆயும். குரைத்து = பெருமையுடையது. அம்ம = அம்மையே. தில் = உள்ளம் (?) கொல் = ஓ (?) ஓ-வோ-கோ-கோல்-கொல். (7) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்.) இ-ள் : சொற்களின் வேர்ப்பொருள் பார்த்த அல்லது கேட்ட மட்டில் தோன்றா எ-து. இந் நூற்பாவிற்குப் பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாளர், Tolkappiyar says that the origin of words beyond ascertainment” என்று விளக்கங் கூறியிருப்பது மிகமிக இரங்கத்தக்கது. (8) குமரிநாட்டுச் சொற்கள் பல இறந்துபட்டன. அதனால் வேர் மறைந்த சொற்கள் வேர்ப்பொருள் தாங்கி நில்லா. (9) ஒரு பொருட்குப் பலகாரணம்பற்றிப் பல சொல் தோன்றும். எ-டு : கடல் = வளைந்தது, பெரியது; முந்நீர் = மூன்று நீரை யுடையது; யானை = கரியது. கைம்மான் = கையை யுடைய விலங்கு. வேழம் = கரும்பையும் மூங்கிலையும் தின்பது. (கழை = மூங்கில் (158), கழைக்கரும்பு (137), கழைதின் யானையார் - ஒரு புலவர் (204)). (10) ஒரே காரணம்பற்றிப் பல பொருட்கு அல்லது கருத்துக்குப் பல்வேறு சொல் தோன்றும். எ-டு. : இறு - இறங்குதல் = வளைதல் (98), இறைஞ்சுக = வணங்குக (6). அம்-அம்பு = வாணம் (வளைவது), ஆம்பி = காளான். குள்-குடை = வளைந்த கவிகை, கொடுமை = வளைவு (39). திரி - திரியாச் சுற்றம் (2), திருகி = குறுகி (27), திருகி-திகிரி (32), புரி-புரி = முறுக்கு (135), புரிசை = மதில் (17), வள்-வளை, வணர்-வளைவு (455), வணங்கு = வளைந்த (32), முள்-முடம் (307). (11) ஒரு கருத்தினின்று வேறு கருத்துத் தோன்றும். எ-டு : கமழ - பரக்க (50), வீசிய - சிதறிய (23), குறும்பு = சிற்றரண், குறும்பரசர், குறும்பரசர் செய்யும் தீமை. செம்மை = சிவப்பு, நேர்மை. (12) பருப்பொருட் கருத்தினின்று நுண்பொருட் கருத்தும், நுண்பொருட் கருத்தினின்று பருப்பொருட் கருத்துந் தோன்றும். எ-டு : அதன் தலை = அதற்கு மேலே (19), கவலை = கவர்த்த வழி (3), மனக்கவலை. முள் - முய்-முயல்-மயல்-மால்-மாலை, துல்-துலாம்=ஒப்பு, தராசு (39). (13) ஒருபொருட் சொற்களினின்று ஒத்த கருத்துத் தோன்றலாம். எ-டு : பொரு = பொருந்து, போர் செய்; சமம் - ஒப்பு, போர் (14) உறு = பொருந்து, உறுவர் = எதிர்ந்தவர் (11), உறழ்தல் = மாறுபடுதல் (22), உடல் = உடனிருப்பது. உடலுதல் = பகைத்தல் (25), உடலுநர் = மாறுபடுவோர், அகல் = விரி, நீங்கு; படர் = விரி, செல். அசை = இயங்கு. வருந்து ; சலி = அசை, வருந்து, களை. (14) பொருள் வேறுபடச் சொல் வேறுபடும். எ-டு : மண்-மணல். தலையன் - தலைவன், வழிபடு-வழிப்படு. படிய - படிக்க. தேய்ந்தான் - தேய்த்தான். ஈ-வீ-வீழ்-விழை-விழா-விழவு. வீழ் - விழு - விழும்- விழுப்பம். விழுமிய = சிறந்த. வீழ் - விழு. வீழ் - வீழ்து - விழுது. விழு - விழல். வீ = விழுந்த மலர். கான வூகின் கழன்றுகு முதுவீ (307). வீ கமழ் வீழும்பூ நாறுகின்ற (36, உரை) ÉG-ÉF-ÉFâ-É¡Uâ (t.), ஒ. நோ, தொழு-தொகு. வீதல் = விழுதல், முடிதல், இறத்தல். விகு + தம் = விகுதம் - விகிதம் = விழுக்காடு. விகுதம் = வீதம். வீழ் - வீள் - விள் - விரும் - விரும்பு. விரும் - விருந்து = விரும்பியிடும் உணவு, விரும்பி யூட்டப்படும் புத்தாள், புதுமை, விள் - வெள் - வெம்மை - வெய்யோன். வேள் - வேண் - வேண்டு - வேண்டும் - வேண்டாம் - வேண்டா. வேள் - வேட்டம் - வேட்டை - வேட்டுவன் - வேடுவன் - வேடன் - வேடு, வேள் - வேட்கை, வேள் - வேள்வி, வேளாண்மை, வேளாளன், வேளான், வேள், வேளம், வெள்-பெள்-பெண்-பேண்-பேடு, பேடன், பேடி பெள்-பெட்டை-பெடை-பேடை. பெண்-பெண்டு-பெண்டாட்டி. விள்-பிள்-பிண்-பிணா-பிணவு-பிணவல்.பிணா-பிணை. (15) பல்வேறு சொல்திரிந்து ஒருவடிவு கொள்ளலாம். வாள் = ஒளி (196). வாள் = வாட்படை (4), வில்-விள்-வாள் = ஒளி. வாள் = வெண்மை (6) தூய்மை (1). பால் = வெள்ளமுதம். பல் = வெண்முறுவல். வள் - வாள் = வளைந்த கத்தி. (16) பொருட்குத் தக ஒலி திரியலாம். கறித்தல் = மெல்லக் கடித்தல். கடித்தல் = வலுவாய்க் கடித்தல் மடப்பிணை... வேளை வெண்பூக் கறிக்கும் (23). (17) தமிழ் எழுத்துகளுள் ற ன பிந்தியவை. ஒளிர் - ஒளிறு. முரி - முறி. வாழும் - வாழுமர்-வாழுநர்-வாழ்நர் (9). பொருநன் (58) பொருந (2,17). அடுநை (36). ற ன அரிவரி மெய்வரிசையில் வல்லினத்தோடு சேர்க்கப் படாமல் இறுதியில் வைக்கப்பட்டிருத்தலை நோக்குக. (18) தொழிற்பெயர் பகுதியாதலுமுண்டு. எ-டு : நச்சு + ஐ - நசை, நசை வேட்கை = நச்சிய விருப்பம் (3). (19) கடைக் கழகக் காலத்திலேயே நுண்பொருட் சொற்களைப் பருப்பொருளில் வழங்கத் தொடங்கிவிட்டனர். எ-டு : சிறு துனி (366). பெரும வுரைத்திசின் (167). (20) சில சொற்களும் சொல் வடிவங்களும் செய்யுளில் அல்லது சில பனுவல்களில் இடம் பெறா. எ-டு : வண்டி, தூங்கு - சொல் செய்தால், ஆனால் - சொல் வடிவம். (21) ஒருபொருட் பல சொற்கள் நுண்பொருள் வேறுபாட்டின. எ-டு : கண்ணி = கண் கண்ணாய்ப் பூவைத் தொடுத்துத் தலையிற் சூடும் தொடை (I). தார் = மார்பிலணியும் கட்டி மாலை (I) கோதை = பூமாலைப் பொதுப் பெயர் (48). தொடலை = தழைமாலை (271). ஆரம் = முத்துமாலை (19). மாலை - மாலைப் பொதுப்பெயர் (95). (22) ஒரு பொருட்குத் தகுந்த சொல்லை வழங்க வேண்டும். எ-டு : ஞாயிறு ... குடகடற் குளிக்கும் (2). அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் (2). (23) தமிழ் பெருஞ் சொல்வளத்தது. கல், அறை, குன்று, குன்றம், பொறை, மலை - மலைப் பெயர்கள். சாரல், கவான், சிமை, குவடு - கோடு, அடுக்கம் - மலைப்பகுதிப் பெயர்கள். (24) சொற்பொருள் வழக்கும் பற்றியது. எ-டு : நாற்றம் = நறுமணம் (70). சில்வளை விறலி (103), சின்னீர் (154). (25) வழக்கற்ற சொல்லே அருஞ்சொல்லாகும். எ-டு : யாழ் (த), - வீணை. திங்கள் (க) = மாதம், நகு, நவ்வு (தெ.) = சிரி. (26) இனப்பொருள்கள் பொதுப்பெயருங் கொள்ளும். எ-டு : தாழை - தெங்கு (17). (27) அயற்சொல் வழங்குதல் கூடாது : வழங்க நேரின் தமிழுக்கேற்பத் திரித்தல் வேண்டும். எ-டு : விஜய (வ.) - விசய (த.). (28) சொற்களின் முந்து வடிவம் பார்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும். எ-டு : பஞிலம் - பைஞ்ஞிலம் - பைந்நிலம் = படைத்தொகுதி (62). ஒ.நோ. பைந்நிணம் = பைஞ்ஞினம் (177). விழவு - விழா - விழை = விரும்பு. 6. புறநானூற்றால் விளக்கப்படும் மொழிநூல் (Philological) நெறிமுறைகளும் உண்மைகளும் (1) தமிழ் தோன்றியது குமரிநாடே. முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (9). (2) தமிழ் வடமொழிக்கு முந்தியது. மன்பதை - மக்கட் கூட்டம் (210) மன் - man (Lit.) the thinking animal. A.S. mann-root man to think, cognate with Ger. and Goth, man, Ice. madhr. (for mannar) Ch.E.D. - மநு(வ.). காண் - A.S. cunnan, to know, E. cunning, knowing, con, to study, carefully, A.S. cnawan, Ice. kna-E. know L. gnosco. Skt. jna. காட்சி ஞானம். விழி - L video (visum), to see, E vide, Skt. - வித், வேதம் : வைத்யம். (3) தமிழுக்கு வடமொழித் துணை வேண்டுவதின்று. வடமொழி தமிழ் வடமொழி தமிழ் எ-டு: சாபம் வில் ஊசி (உதீசி) வடக்கு நேமி திகிரி பாசி (பிராசி) கிழக்கு வேதம் மறை சாதம் சோறு எவ்வகையினும் திராவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப்பெற்ற தமிழ், வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன், தனித்து வழங்குதல் மட்டுமன்று, அதன் உதவியின்றித் தழைத்தோங்குதலும் இயலும் (திராவிட ஒப்பியல் இலக்கணம் : முன்னுரை. ப. 50). (4) வடமொழியில் ஒரு பகுதி தமிழே. உலகம், கலை, காலம், சாயை, மாயை, மீனம், வளையம், படிமை முதலிய எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் சென்று வழங்குகின்றன. (5) வடமொழியும் தென்மொழியுமாகிய இருமொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழிலேயே வேர் காண முடியும். v-L : cy (=tis) - cyF - cyf« - nyhf (t.), fš - fiy - fyh (t.), rhŒ - rhia - rhah (t.), khŒ - khia - khah (t.), Ä‹ - Û‹ - Ûd (t.), go - goik - ¥uâkh (t.), tŸ - tis- tisa« - tya« (tya) (t.), வகி - வகிர் - பகிர் - பகர். வ - ப, போலி. ஒ.நோ : வள் - வண்டி - பண்டி. வகி - வகு - வகுந்து = வழி. வகிர் - வகிடு. வகு - பகு. வகு - வகை வகு - வகம். வகு - வகுப்பு. வகு - வகுதி. பகு - பகல் - பகலோன். பகல் - பகர். பகல் - பால். பகு - பகுதி - பாதி. பகு - பகை - பகைவன். பகு - பகவு. பகு - பகம். பகு - பங்கு - பங்கம் - bhanga (வ). gF - g¡f« - gB (t.), பகு - பகுப்பு. பகு - பா - பாத்தி. பா - பாத்து - பாது - பாதிடு - பாதீடு. பகுதி - ப்ரகிருதி (வ), பங்கு - பங்காளி. பங்கு - பங்கிடு - பங்கீடு. gF - ghf« - bhaga (t.), பங்கு - பங்கி. பங்கு - பங்கறை. பகு - பக்கு - பக்கறை. பக்கு + இசை = பக்கிசை. பகு - பாங்கு - பாங்கன். பாகு - பாகன் - பாகா (மராட்டி), பாகு - பாகி, பாங்கு - பாங்கர். பாகு - பாகை. பக்கம் - பாக்கம். (6) வடநாடுகளில் இன்றும் தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. எ-டு : தமிழ் மராட்டி தமிழ் இந்தி தமிழ் இந்தி தாய் ஆயி ஆம் ஹாம் மேல் மே மாமன் மாம மாமன் மாமா மாறே மாரே அலை ஹலாவ் இத்தனை இத்னா முட்டி முட்டி குண்டு குண்ட உம்பர் உப்பர் வெண்டை பிண்டீ வில்லங்கம் விலக கிழான் கிஸான் உழுந்து உடத் பேட்டை பேட் பூ பூல் நரம்பு நரம் சிவண் சிவண் முத்து மோத்தி சவை சபா (7) ஒத்த காரணத்தால் பல மொழியில் சொற்கள் தோன்றலாம். எ-டு : பரி - குதிரை (வேகமாய் ஓடுவது), E. courser, a runner L. curro, to run. பழம் - பழன் - பயன். E. fruit = effect, result. குமரிப்படை, கன்னிப்போர். E. maiden = new, first, virgin, undefiled, fresh, unpolluted. தொள் - தோணி (=தோண்டப்பட்டது). E. dug out a boat made by hollowing out the trunk of a tree. செய் - செய்யுள். E. poem. Lit. anything made L. poema. Gk. poiema - poieo, to do or make. ஒலித்தல் = தழைத்தல் (50). E. tonic, “a medicine which gives tone or vigour to the system.” (8) தமிழிலுள்ள சிறப்புப் பொருட் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருளில் வழங்கும். எ-டு : ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய (தொல். 927) அவற்றுள், ஈஎன் கிளவி இழிந்தோன் கூற்றே (தொல். 928) தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே (தொல். 929) கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே (தொல். 930) ஈ-இச்சு (தெ.). தா - L. do, to give; donum, a gift, தான(வ.). (9) தமிழ் இயற்கை மொழி. ஆரியமொழிகளும் தமிழல்லாத திராவிட மொழிகளும் தமிழுக்கு மிகமிகப் பிற்பட்டவையாயிருந்தும், பெரிதும் வடிவு திரிந்தும் வேர்ப் பொருளிழந்தும் பன்னிலையடைந்தும் முன்னிலைக்குப் பின்னிலை வேறுபட்டுமுள்ளன. தமிழோ தலைக்கழகக் காலத்திலிருந்து இதுவரை பெரும்பாலுந் திரியாமல், கி.மு. 2000 போல் இயற்றப்பட்ட தொல் காப்பியத்திலும் கி.பி. 2ஆம் நூற்றாண்டினதான புறநானூற்றிலும் இற்றைத் தூய இலக்கிய நடையிலும் சொல்லமைதியும் சொற்றொடரமைப்பும் பெரும்பாலும் ஒத்ததாய், சிறிது கற்றார்க்கும் ஓரளவு விளங்குவதாய் வேர்ப்பொருள் தாங்கிக் கொண்டுள்ளது. (10) கடைக்கழகத் தமிழ் தனித்தமிழே. புறநானூற்றிற் சில செய்யுள்களில் இரண்டொரு வடசொற்களே காணப்படுகின்றன. பல செய்யுள்களில் வடசொல்லேயில்லை. எ-டு : யாது மூரே, (192) ஆகையால், நூலின் மொத்தச் சொற்களில் நூற்றுக்கொன்றுகூட வடசொல்லில்லையென்பது தெளிவு. (11) கடைக் கழகக் காலத்திலேயே வடசொற் களைகள் முளைத்துத் தமிழ்ச்சொற் பயிர்களைக் கெடுக்கத் தொடங்கிவிட்டன. அஞ்சனம் (மை), ஆயுள் (வாழ்நாள்), ஆவுதி (அவி), இந்திரர் (வேந்தர்), இமயம் (பனிமலை), உதீசி - ஊசி (வடக்கு), எந்திரம் (பொறி, மணை, சூழ்ச்சியம்), கலவம் (பீலி, தோகை) கவுரி (மாயோள், மலைமகள்), சாபம் (வில்), தருமம் (அறம்), தூமம் (நறும்புகை, வால் வெள்ளி, விண்வீழ்கொள்ளி), நிச்சம் (நாளும், என்றும்), நிரயம் (அளறு), நேமி (ஆழி, திகிரி), பங்குனி (உத்தரம்), பஞ்சவர் (ஐவர், பாண்டவர்), பிராசி - பாசி (கிழக்கு), யூபம் (கந்து, வேள்வித்தூண்), விசயம் (கொற்றம், வெற்றி) வேதம் (மறை). இவையே புறநானூற்றில் வந்துள்ள தெளிவான வடசொற்கள். இவை தமிழுக்கு இன்றியமையாதனவோ சிறப்புச் செய்வனவோ அல்ல. இவை, ஆரியர் வடமொழி தேவமொழி யென்றும் சமயமொழி என்றும் ஏமாற்றிய பின், சமையம் வாய்க்கும் போதெல்லாம், தமிழர்க்குத் தெரியாதவாறு, தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்தும்பொருட்டு ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகுத்தியவை. இவற்றால் தமிழுக்குப் பலவகையிலும் தீமையேயன்றி நன்மையில்லை. அத் தீமைகளாவன : (1) தென்சொல் மறைவு தமிழ்ச்சொற்கட்குப் பதிலாக வடசொற்களை வழங்கவே, முன்னவை முதலாவது வழக்கிறந்தன; பின்னர், பண்டைக் காலத்தில் விரிவான அகராதிகள் தொகுக்கப்படாமையாலும், தொல்காப்பியம் ஒழிந்த தொன்னூல்களெல்லாம் இறந்துபட்டமையாலும், தமிழகத்தின் பெரும் பகுதியான குமரிநாட்டைக் கடல் கொண்டமையாலும், நாளடைவில் மீட்பற மறைந்தொழிந்தன. (2) தென்சொல் வழக்கழிவு வடசொல் வழக்காலும், அதனால் தமிழர் தமிழுணர்ச்சி யற்றமை யாலும், அடர் (கம்பியாகச் செய்), அடுக்கம் (பக்கமலை), அணங்கு (தெய்வப் பெண், மோகினி), அணல் (தாடி), அல்குபதம் (இட்டு வைத்துண்ணும் உணவு), அழுவம் (மேற்பரப்பு), அளிது (பாவம்), அறத்துறையம்பி, ஆண்டகை (பஹதூர்), இயம் (வாத்தியம்), இயவர் (வாத்தியக்காரர்), இளையன் (ஜவான்), உரறு (கர்ச்சி), ஓவம் (சித்திரம்), உவகைக்கலுழ்ச்சி (ஆனந்தக் கண்ணீர்), எருவை (தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து), ஐயவி (வெண்சிறு கடுகு), ஐம்படை (பஞ்சாயுதம்), கண்ணுறை (மேலீடு), கண்ணோட்டம் (தாட்சிணியம்), கதழ்வு (விரைவு), கணியன் (ஜோதிடன்), கழுவாய் (பிராயச்சித்தம்), கிழார் (பெரும்பண்ணையார்), குணில் (குறுந்தடி, லத்தி), குருசில் (பிரபு), கோய் (கள்முகக்கும் கலம்), சுவல் (தோள்), சூள் (ஆணை), செம்மல் (நேர்மையானவன்), செவ்வி (தக்க சமையம்), தோன்றல் (அரச மகன்), நவில் (பன்முறை சொல்லிப் பழகு), நுவல் (நுட்பமாய்ச் சொல்), நெடுமொழி (தற்புகழ்ச்சி மறைவுரை), பஞிலம் (Regiment), படைவீடு (Cantonment), பறந்தலை (போர்க்களம்), பூட்கை (tenent, morale), பொருநன் (சிப்பாய்), மன்பதை (Humanity), மதவலி (Sando), பனுவல் (பிரபந்தம்), மறுகு (வீதி), மழவர் (வீரர்), மள்ளர் (வீரர்), மாதிரம் (திசை), யாணர் (புதுவருவாய்), வஞ்சினம் (சபதம்), வயவர் (வீரர்), வல்வில் (வில்வலன்), வம்பலன் (நிலையில்லாதவன், இடமாறி), வேள் (சமீன்தார்), வேளாண்மை (உபசாரம்), முதலிய எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்தன. (3) தென்சொற் பொருளிழப்பு தமிழ்ச்சொற்குப் பதிலாக வடசொற்களை வழங்கியதால் சில தமிழ்ச் சொற்கள் பொருளிழந்து முள்ளன. எ-டு : உயிர்மெய். பொருள்களெல்லாம் உயிர், மெய், உயிர்மெய்யென மூன்றா யடங்கும். இவற்றையொத்த எழுத்துகளும், உயிர், மெய், உயிர்மெய் எனப் (உவமையாகுபெயர்) பெற்றன. பிராணி என்னும் வடசொல் வழங்கவே உயிர்மெய் என்னுஞ் சொல் தன் பொருளை யிழந்தது. பிராணனை யுடையது பிராணி. உயிரையுடைய மெய் உயிர்மெய். (4) ஐயறவு வடசொற் கலப்பால், ஏனாதி, கவசம், சகடு, தானை, தேயம், பாரம், புதல்வர், வதுவை, வாத்தியம் (வாழ்த்தியம்) முதலிய பல சொற்கள் வடசொல்லோ தென்சொல்லோ என மொழியாராய்ச்சியாளரும் மயங்கற் கிடனாயுள்ளன. வடசொற் கலந்திராவிடின், தமிழிலுள்ள சொல்லெல்லாம் தமிழ்ச்சொல்லேயென்று கொள்ளப்படுமன்றோ! (5) வடசொற் போன்மை வடசொற் கலப்பினால், பல தூய தென்சொற்கள், ஆரிய மொழிகளில் சென்று வழங்குவது காரணமாக, அல்லது ஆரியச் சொல்லோடொலி யொத்தமை காரணமாக, ஆரிய அல்லது வடசொற்களாக ஆராய்ச்சி யில்லார்க்குத் தோன்றுகின்றன. இம் மயக்கத்தைத் தீர்க்குமுகமாக, முதலாவது, மேலையாரியத்தில் வழங்கும் புறநானூற்றுத் தமிழ்ச்சொற்களை யெடுத்துக் காட்டுகின்றேன். 7. மேலையாரியத் தமிழ்ச்சொற்கள் அமர் - L. amo, to love. E. amateur, amiable, amicable; அளம் - E. alum, a mineral salt, L. alumen. இட்டு - E. and Fr. et. ette, a dim. suffix ; உரறு - E. roar, A.S. rurian, Ger. rohren; உருள் - E. roll, role, L. rota, a wheel; உள்ளு - E. will, A.S. willa, Goth. vilja, Ger. wille, L. vola, to will Gk. boule, will (உள்ளம்) ; எல் - Gk. helios, the sun ; எல்லா - E. all, A.S. eal, Cer, all,Gael. uile, W. oll ; கடை - E. gate, A.S. geat, a way, a gate ; கரப்பு - Gk. kryptos, concealed, கரை - E. cry, L. queri, to wail ; கல்லென (கவி) - E call; A.S. ceallian, Ice. kalla ; கவைஇ - கவ - E, have, L. capio to contain; கறங்கு - E. ring A.S. hringan, Ice, hringia; காண் - E. con, A.S. cunnan, to know ; கால் - L. column, கிழி - E. cleave, A.S. cleofan, Gk. kliben; கிளர் - L. hiloris, cheerful; கிளை (கேள்) - E. kin, A.S. cyn, Ice, kyn ; குப்பை - E. heap, A.S. heap. Ice. hopr. Ger. haufe; குரல் (தொண்டை) E. craw, crop, the throat of a bird, Dut. crep; Dan. kroe., Ger. kragen, Scot, craiy, the neck; குரல் (கதிர்) - E. crop. A.S. crop ; குரவை - E. chorus, L. chorus; Gk. choros, orig. a dance in a ring ; குரூஉ (கனம், திரட்சி) - E. grave, L. gravis, heavy, allied to E. great, A.S. and Dut. groot, Ger. gross ; குலவு E. curve, L. curvus, crooked; குழவி - E - cle, - cule, L. culus, It. celli, cello. dim sfx. கூ - E. coo ; குழு - E. clew, clue; குழுமு L.glomus, E. glomerate, குறுக்கு - E.cross, Fr. crois - L. curx. கொடுக்கு - E. crook, W. crwg, a hook, Ice. krokr, Dut - kroke, a fold as wrinkle; கொல் - E. kill, quell, A.S. qwellan, to kill; சமம் - E. same, A.S. and Goth samana, L.similis, Cor. homos, Skt, samas; சிதை - coede, to kill ; சுறவு - E. shark ; சுருங்கு - E. shrink, சேர் - L. sero, to join ; சூள் - E. swear, A.S. swerian, Dut. zweren, Ger. schworen; தா - L. do ; தீர்மானம் - L. terminus, a boundary ; திண் - E. dense. L. densus, thick ; துமி. Gk. temno, to cut; துர - E. drive; A.S. drifan, Ger. treiben ; தூம்பு - E. tube, Fr. and L. tubus. நரம்பு - E. nerve, Fr. and L. nervus, Gk. neuron; நாகு - E.nag, a small house. நாவாய் - L. navis, Gk. naus, Skt. naa, a ship. A.S. naca, Ger. naehen, a boat. பரிசு - E. prize, Fr. prise; பரிதி - பரி - Gk. peri, round, பல் - Gk. polus; பன், Gk. pan, all ; பலகை - E.plank, L. planca; புள் : E. fowl, A.S. fugel. Gk. vogel, Ice. fugl; புர - A.S. beorgen, Ger. bergen, to protect; புரி - E. spire, L. spira, Gk. speria, anything wound. புரிசை L. murus; புரை - E. pore, L. porus, Gk. poros; புரையோர் - E. peer, an equal, a nobleman, L. par, equal. பார் - E. peer, to appear; பேய்- E. fay, Fr. fee; பொத்து - E.patch, M.E. botch; பொறு - E. bear. A.S. beran, Goth. bairen, L. fero. Gk. phero, Skt. bhri; போர் - E.war, A.S. werre, O.F. werre, Fr. grerre, O. Ger. werra, quarrel; போழ் - பொள். E.bore., A.S. borian, Ger. boheren, L. foro, to bore. மட்டு - மது; E.mead,A.S. medo. Ger. meth, W. medd, Gk. methu, Skt. madhu; மண் - E. mud,Low Ger. mudde, Dut. modder ; மருள் E. morvel, L. miror, to wonder; மலை - L. milito, to fight, E. military; மார்பு > மருமம் - L. mamma, the breast; மன் - E. many. A.S. manig ; மிகு - E. much, A.S. mic, Ice. mjok, Goth. mikils. மிசை - E. mess. O. Fr. mes; முதிர் - E. mature, L. maturus, ripe; முழு - E. full, A.S. full, Goth. fulls, Ice. fullr, Ger. voll, L. plenus, Gk. pleos. மெல் - E. mellow, soft, L. mollis, Dut. mollig, A.S. mearu, Gk. molakos; வரிசை - L. versus, a line in writing. E. verse, a line of poetry. வலம் - E. valour Low. L. valour; வலி - L. valeo, to be strong. வழி - L. via, a way ; விடு L. mitto, to send; வீங்கு - E. wax ; A.S. weaxen, Ice. vaxa, Ger. wachesen, Goth. wahsjan, Skt, vakhs, Zend, ukhs; வீழ் - E. fall, A.S. fellan, Ger. fallen; வெரு - E. fear, A.S. foer; வேறு E. vary, L. various, various. இனி, பிறகு (back), புகை (smoke), பையுள் (pain); பொறி (Gk. pur. fire), வட்டி (vat) வேலி (pale) முதலிய ஐயுறவான சொற் போலிகளும், வாடு (fade), வேண்டு (want) முதலிய போலி யொப்புமைச் சொற்களும் எத்துணையோ உளவென்றறிக. ஆங்கிலம் பண்டைக்காலத்தே தமிழொடு கலந்திருக்குமாயின், மேற் காட்டிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தினின்று தமிழுக்கு வந்தவையாகக் கருதப்படுமன்றோ? அத்தோடு, boy, nation முதலிய சொற்கள்கூட, பையன் நாடு முதலிய சொற்களாகத் திரிந்ததாகக் கொள்ளப்படுமன்றோ! இங்ஙனமே வடசொற் போல் தோன்றும் தென்சொற்களுமென்க. 8. வடசொற் போலிகள் அந்தணன் : அம் + தண் + அன் = அந்தணன். அழகிய குளிர்ந்த அருளையுடையவன் என்பது பொருள். ஆகவே, துறவி அல்லது முனிவன் பெயராம். அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்.) என்றார் திருவள்ளுவர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பது பழந்தமிழ்ப் பகுப்பு. இனி, வேதங்களின் அந்தத்தை அணவுவோன் என்று பொருள் கூறினும், அந்தணன் என்பது தமிழ்ச்சொல்லே. அணவு = பொருந்து. அண்-அண-அணவு. அந்தம் கீழ்க் காண்க. அந்தி : அல் - அந்து - அந்தம் - அந்தரம் = முடிவு. அல் - அல்கு = முடி, அழி. அல் - அறு. அந்து - அந்தி = பகற் காலத்தின் முடிவு. நெடிற் சுரங்களை அந்தரக்கோல் என்பது இசைத்தமிழ் வழக்கு. அமரன் : அ + மரன் = அமரன். மடி - மரி - மரன். அல் - அ, எதிர்மறை முன்னொட்டு முடி - மடி. இனி, அமரினால் தேவருலகை யடைந்தவன் எனினும் பொருந்தும். அமயம்: சமை + அம் = சமையம் = ஒன்றற்குச் சமைந்த வேளை, வேளை. சமையம் - சமயம் = ஆன்மா வீட்டையடைதற்குச் சமையும் நெறி. சமை - அமை. அமை + அம் = அமையம் - அமயம். சமைதல் = பக்குவமாதல். சமைத்தல் = சோற்றைப் பக்குவமாக்கல். அமை - அமைவு, அமைப்பு, அமைதி. அமிழ்து : அவி - அவிழ் - அவிழ்து - அவிழ்தம் = சோறு. சோற்றுப் பால், பால், மருந்து. (அன்னப்பால், இருமருந்து என்னும் வழக்கு களை நோக்குக) அவிழ்து - அமிழ்து - அமுது. அவிழ்தம் - அமிழ்தம் - அமுதம். அமுது = சோறு, அமுதம் = சோறு, பால், நீர். அவலம் : அ + வலம் = அவலம். அ, எதிர்மறை முன்னொட்டு. வல் - வலம் = வலிமை. அவலம் = துன்புறுதற் கேதுவான வலிமையற்ற நிலை, துன்பம். அரசு : அர் - அரி - அரம் - அரசு. அரம் - அரன் = அழிப்பவன், தேவன், சிவன். அரமகளிர் = தேவ மகளிர், அரசு + அன் = அரசன் = தேவனைப் போன்றவன், தலைவன். அரசன் - அரைசன் - அரையன் - அரையம். அரசு - அரைசு. அரையன் - ராயன். E.roy, அரசு E. arch; அரசன் - Gk. archon. அரசு = அரசு போன்ற மரம்; பூவரசு = பூவையுடைய அரசு, ஆற்றரசு = ஆற்றங்கரையரசு. அவி : அவி = அவிக்கப்பட்ட வுணவு, உணவு. அவை : அவி - அவிர் = விளங்கு. அவி - அவை = கற்றடங்கியோர் அல்லது அறிவால் விளங்குவோர் குழு. ஒ.நோ : E. galaxy = the Milky-Way, any splendid assemblage. அவை + அம் = அவையம். ஆயுதம் : ஆய் = களை, ஒடி, வெட்டு, ஆய் + தம் = ஆய்தம் - ஆயுதம் = வெட்டும் கருவி, கருவி, படை. இலக்கம் (குறி) : எல் - இலகு - இலக்கு. இலக்கம் = விளக்கம், விளங்கும் இடம், இடம், குறி, விளக்கத்திற் கெடுத்துக் காட்டு. எல்லே யிலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கு + இயம் = இலக்கியம் = எடுத்துக் காட்டு, குறி. cf. E. illustrate-L. illustratum, to light up. நூற் றொகுதியைக் குறிக்கும் இலக்கியம் என்னுஞ் சொல் வேறு. அஃது இலக்கு (= எழுது) என்பதனடியாய்ப் பிறந்தது. உரகம் : உர = பொருந்து, தழுவு, உரம் = மார்பு. ஒ.நோ ; மரு - மருமம் - மார் - மார்பு, மருவு = கல, தழுவு. உரம் - உரகம் = மார்பினால் ஊர்வது, பாம்பு. உரு : உரு = (வி), தோன்று. (பெ.) தோற்றம், வடிவம், வடிவத்தையுடைய ஒரு பொருள், உடம்பு, ஒரு வடிவத்திற்குள் எழுதப்படும் மந்திரம். மந்திரம் போன்ற பாட்டு. உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவம். உருப்படி = ஒரு தனிப்பொருள். உருப்படு, உருக்குலை முதலிய நூற்றுக் கணக்கான கூட்டுச் சொற்கள் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்குதலையும், உருபு என்பது ஓர் இலக்கணக் குறியீடாய் இருத்தலையும் நோக்குக. உலகம் : சுள் - சுல் - சுலம் - சுலவு - உலவு = வளை, சுற்று. சுலம் - உலம் - உலகு - உலகம் = வட்டமா யிருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம், 51) = சுழல்வோர். உலா = நகரை வலமாகச் சுற்றி வருதல், ஒ.நோ. : கொள் - கோள் = Planet. கொள் = வளை. சுற்று, கொட்பு = சுற்றுகை. கொள் - கொடு - கோடு - கோணு. ஏமம் : ஏ-ஏம்-ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏ = உயர்ச்சி, ``ஏ பெற்றாகும்'', என்பது தொல்காப்பியம். விலங்குகளாலும் பகைவராலும் வெள்ளத் தாலும் துன்பம் நேரும்போது, உயர்ந்த இடம் பாதுகாப்பிற்கேது வானது. பாதுகாப்பால் இன்பமுண்டாகும். ஏமம் - சேமம், ஒ.நோ : ஏண் - சேண். சேமவச்சு (102). ஏனாதி : ஏனை (யானை) + அரி = ஏனாரி - ஏனாதி = யானையைக் கொன்றவன். ஒ.நோ : கோடு + அரி = கோடரி. பருக்கை - பதுக்கை. கடும்பு : குடம் - குடி - குடும்பு - கடும்பு. குடும்பு - குடும்பம். குடி = உட னுள்ளது, உடம்பு போன்ற வீடு, வீட்டு வாழ்க்கை, வீட்டிலுள்ள மனைவி, மனைவி மக்களாகிய குடும்பம், குடும்ப மரபு, குலம், ஒரு குலம் வாழிடம், ஊர். கடும்பு = குடும்பம், சுற்றம். கணன் : கல - கள - களம் - கணம் - கணன் = கூட்டம். கந்தன் : கல் - கந்து - கந்தம் - கந்தன் = ஆன்மாக்கட்குக் கற்றூண் போற் பற்றுக்கோடானவன், முருகன். கந்தழி = பற்றுக்கோடற்ற கடவுள். கந்தபுராணத்திற் கூறப்பட்டுள்ளபடி, கந்தன் இமயமலைச் சரவணப் பொய்கையிற் பிறந்தவனல்லன். இமயமலை தோன்றியதற்கு முன்பே குமரிநாட்டில் குறிஞ்சித் தெய்வமாக வணங்கப்பட்டவன். முதற்காலத்தில் முருகனுஞ் சிவனும் ஒருவனே. திணைமயக்க மேற்பட்டபின், முருகன் முழுமுதற் கடவுளாகவும் வணங்கப்பட்டான். கம்மியன் : கடு-கரு. கடு-கடி-கரி. கடுத்தல் = மிகுதல். கருத்தல் = தோன்றுதல். கரித்தல் = மிகுதல். மிகுதற் கருத்தினின்றும் தோன்றற் கருத்தினின்றும் செய்தற் கருத்துத் தோன்றியதாகத் தெரிகின்றது. ஒ.நோ. : E. make, from L. magnus, great. அலம் + கரி = அலங்கரி = அழகு செய். கரு கரி என்னுஞ் சொற்கள் செய்தற் பொருளில் வழங்கிய நூல்கள் இறந்துபட்டன. பண்டைக்காலத்தில் விரிவான அகராதிகள் எழுதப்படாமையால், குமரிநாட்டுச் சொற்களில் பலவற்றைக் காட்டுவதற்கு ஒரு வழியுமில்லை. கரி + அணம் = கரணம் = செய்கை, செய்யும் சடங்கு, மணச்சடங்கு, செய்யுங்கருவி. ஒ.நோ : வரி + அணம் = வரணம். கரு + வி = கருவி. கரு + மம் = கருமம். ஒ.நோ : பரு + மம் = பருமம். கரணம் - காரணம். கரி + இயம் = கரியம் - காரியம். ஒ.நோ : கண்டம் - காண்டம். கரு - க்ரு (வ.). ஒ.நோ : துர - த்ரு (வ.). கருமம் = செய்கை, தொழில், வினைப் பயன், செயப்படுபொருள். கருமம் என்பது முதலாவது உழவுத் தொழிலையும், பின்பு கைத்தொழிலையுங் குறித்தது. கருமம் - கம்மம் - கம். கம்மவார் - தெலுங்குழவர். கமக்காரன் - உழவன். கம்மி = தொழிலாளி. கம்மாளன் = ஐவகைக் கொல்லருள் ஒருவன். கம்மியம் = கைத்தொழில், கம்மாளத் தொழில், கம்மியநூல் = சிற்பநூல். கம்மியன் = தொழிலாளி, கம்மாளன், நெய்பவன். கருமகன் - கருமான் - கருமன் = கொல்லன். கருமகன் என்னும் பெயரில் கரு என்பது தொழிலையாவது இரும்பையாவது குறிக்கும். மாரியல்லது காரியமில்லை யாதலால், கருத்த மேகம் கருவி எனப்பட்டது என்று கொள்வதும் ஒன்று. கரகம் : குடம் - குடகம் - குரகம் - கரகம் = வளைந்த அல்லது குவிந்த நீர்க் கலம், ஒ.நோ : முயங்கு - மயங்கு, முயல் - மயல், குடம் - கடம், குடும்பு - கடும்பு, முடி - மடி. கரு : கரு - கருப்பு - கருப்பம் - garbha. மேகம் சூல் கொண்டபோது கருத்திருத்தலால், சூல் கருவெனப்பட்டது. கவசம் : கவி-கவசம். கவரி : இஃதொரு விலங்குப் பெயராதலானும், வேறு பெயர் தமிழி லிதற்கின்மையானும், இது தமிழ்ச் சொல்லென்றே தெரிகின்றது. கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம். களம் : மேற்கூறப்பட்டது, காதல் : கா + தல் = காதல். கா என்னும் சொல் விருப்பு என்னும் பொருளில் குமரி நாட்டில் வழங்கியதாகத் தெரிகின்றது. கவர் - கா. கவர்வு விருப்பாகும் (தொல். சொல். உரி. 64) காமர் : கா + மம் = காமம் - காம். காமம் - காமர். காம் + மரு = காமரு - காமர் என்றுமாம். காயம் : கள்-களம்-கயம் = கருப்பு. கயம் - காயம் = கரிய வான். கரிய இருளை இருட்டுக்கயம் அல்லது இருட்டுக் கசம் என்பது உலகவழக்கு. தொல்காப்பியத்தில், காயம் என்னும் வடிவே ஆகாயத்தைக் குறிக்க வந்துள்ளது. கருப்பென்னும் பொருளிலேயே கயம் என்னும் சொல் இருள், குளம், யானை என்பனவற்றைக் குறிக்கும். காலம் : கால் = சிந்து, நீள் (வி.) ; நேரம் (பெ..). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள (தொல்.சொல்.800) என்பதனோடு ஒப்பு நோக்குக. நீண்டு செல்லும் பொருள்களெல்லாம் தமிழிற் காலெனப்படும். கால் + அம் = காலம் - காலன். கால் + ஐ = காலை. செய்தக்கால் - கால வினையெச்ச விகுதி. காளாம்பி : காளம் + ஆம்பி = காளாம்பி. கள் - களம் - காளம் = கருப்பு. கள் - களவு = கருப்பு, மறைவு. களம் - களங்கு - களங்கம் = கருப்பு, கறை, குற்றம், கள் - கள்ளம் = கருப்பு, கரவு, திருட்டு. கள்ளம் - கள்ளன். காளம் - காளி = கருப்பி, மாயோள். கள் - கரு - கார். குடி : மேற் கூறப்பட்டது. குடம் : சுள் - குள் - குள - குழ - குட - குடம் = வளைந்த அல்லது குவிந்த கலம். குடம் - குடவன் - குசவன் - குயவன். குடம் - குசம் - குயம் = வளைவு. குடம் - கடம் (வ.). குணக்கு : குடம் -குணம் - குணக்கு = வளைவு. கதிரவன் முதலிய வளையுங் கிழக்கு. இனி, கொள் - கொண்டல்- குணக்கு - குணம் எனினுமாம். குமரி : கும் - கொம் - கொம்மை = திரட்சி. கும் - குமம் - குமர் - குமரி (இ, பெண்பால் விகுதி) = திரண்டவள், இளம்பெண், கன்னி, கன்னியாகக் கருதப்படும் காளி. cf. E. virgin, from Gk. orgao, to swell. குமர் + அன் = குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன். குமரி வணக்கம் ஆரியர் வருமுன்பே தமிழ் நாட்டில் இருந்தது. குரூஉ : குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 301) என்பது தொல்காப்பியம். குருதி, குருதிக் காந்தள் (செங்காந்தள்), குருதிவாரம் (செவ்வாய்க்கிழமை) முதலிய சொல்லையும் வழக்கையும் நோக்குமிடத்து, குரு என்பது செந்நிறம் என அறியப்படும். சிவபெருமான் நிறம் செம்மையென்றும் அவன் ஆசிரியர் வடிவில் ஆன்மாக்களை ஆட்கொள்வானென்றும் நூல்கள் கூறுவதாலும், ஆசிரியனுக்குக் குரு குரவன் என்னும் பெயர்களுண்மையாலும், குரு என்னும் நிறங்குறித்த சொல்லே குரவன் என்று திரிந்து ஆசிரியன், பெரியோன் என்று பொருள் பட்டதெனத் தோன்றுகிறது. குரு என்னும் சொல்லும் ஆசிரியனைக் குறித்தலால், அது பண்புப் பெயராகும்போது பெருமை என்று பொருள்படும். பெருமை என்பது பருப்பொருளும் நுண்பொருளுமாகிய வடிவுநிலை யிரண்டற்கும் பொதுவாதலின், கனம் என்னுஞ் சொல் மதிப்பையும் நிறையையுங் குறித்தாற்போலக் குரு என்னுஞ் சொல்லும் பெருமையையும் நிறையையுங் குறிக்குமென்க. குரு - Skt. guru. L. gravis E. grave, weighty, குரூஉ அளபெடை. கூடகாரம் : கூடு - கூடம். ஆர் = ஆரம் - வட்டம். கூடவாரம் - கூடகாரம், கூடாரம். ஒ.நோ : கொட்டாரம். கோன் : கோ = பசு. கோ + அன் = கோவன் - கோன் - கோனான். கோவன் = இடையன், ஆக்களை இடையன் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன், உயிர்களாகிய ஆக்களைக் காக்கும் கடவுள் (சிவன்), இவை ஆரியக் கருத்துகளல்ல. இவற்றைத் தமிழரிடத்தினின்றே ஆரியர் கண்டறிந்தனர். பண்டைத் தமிழர் செல்வத்தை மாடென் றமையாலும், இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் முறைப்பெயர் என்னும் நால்வகையில் மக்கள் பெயரையே மாடுகட் கிட்டு வழங்கியதாலும், அவர்கள் மாடுகளை மக்களைப் போற் பேணியமை விளங்கும். கோன்-கோ = அரசன். கோடி : கோடு - கோடி = கடைசி, கடைசி யெண். சடை : சடசடவென்றிருப்பது சடை. சடசடவென்பது ஒரு விறப்புக் குறிப்பு. சடையன் சடைமுனி என்பன தொன்று தொட்டு வழங்கும் தமிழ்ப் பெயர்கள். சமர் : சமம் - சமர் - சமரம், சமர் - அமர். சமம் = ஒப்பு. கலப்பு, போர், ஒ.நோ : பொரு-போர். சாடி : சால்-சாடி. சுரம் : சுள்-சுர்-சுரம் = சூடு, காய்ச்சல், பாலைநிலம். சூர் : சுர் - சுரம். சூரம் - சூரன் - சூர், சுர் - சூர் = நெருப்பா லுண்டாகும் அச்சம். ஞமன் : சமன் - (யமன்) - நமன் - ஞமன் = நடுநிலையுள்ள கூற்றுவன். யமன் - எமன். ஞாயிறு : நய-நாயன் - நாயிறு - ஞாயிறு = கோள்களுக்குத் தலைவன். நாயன் = விரும்பப்படத்தக்க தலைவன். ஒ.நோ : நம்பு - நம்பன். “e«ò மேவு நசையா F«nk,” என்பது தொல்காப்பியம். தவம் : தபு + அம் = தபம் - தவம் = கெடுத்தல், நீக்குதல், பற்றறுத்தல். நீத்தார், துறவு என்னுஞ் சொற்களின் பொருளை நோக்குக. தவிர், தவத்தல் (நீங்குதல்) என்பன தவம் என்பதோடு தொடர்புடைய சொற்கள். தாயம் : தா-தாய்-தாயம் = தாயினிடத்தினின்று பெறும் உரிமை, உரிமை. திசை : திக்கு - திகை - திசை = திகைப்பிற்கிடமான எல்லை. திக்குத் திக்கென் றிருக்கிறது, திக்குமுக்காடல் முதலிய வழக்குகளை நோக்குக. திசைத்தல் = திகைத்தல். திசைச்சொல் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. திரு : திருவென்னுஞ் சொல் தென்சொல்லே. திருமகள், திருமனை, திருமால் திருவில் திருவரங்கம் முதலிய பழைமையான சொற்களை நோக்குக. திரு - ஸ்ரீ = சீ. தீ : தேய் - தே - தீ = உரசுதலாலுண்டாகும் நெருப்பு. துலாம் : துல் - துன் = பொருந்து, பொருத்தித் தை. துல் - துலை = பொருத்தம், ஒப்பு, இரு புறமும் ஒத்த தராசு. துல் - துலா - துலாம் - துலான் = தராசு, ஓர் எடை, துலா + கோல் = துலாக்கோல். துலா = துலாக்கோல். போன்ற ஏற்றம். கைத்துலா, ஆளேறுந் துலா என்பன தொன்று தொட்ட வழக்கு. துன் - துறு = பொருந்து, நெருங்கு. தூண் : துண் - தூண் = துணிக்கப்பட்ட கல். தூண் + அம் = தூணம் - ஸ்தூண (வ.). தூது : ஊ - தூ - தூது. தெய்வம் : தேய் - தேய்வு - தெய்வு - தெய்வம், தேய்வு - தேவு - தேவன். தேவு - தே, தெய்வம் = தீ வடிவான கடவுள். நகர் : நகர்தல் = மெல்ல இடம்பெயர்தல், விரிவடைதல். நகர் = குடி பெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர். நாகம் : நகர் - நாகம் - நாகர். ஒ.நோ : snake, L.S. snican, to creep. நாவாய் : நால்வாய் - நாவாய் = யானை போல் அசையும் கப்பல். நாவாய் - களிறுகள் போற்றூங்குங் கடற்சேர்ப்ப என்பது பழமொழி. வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை என்பது பட்டினப்பாலை. நுகம் : உகத்தல் = பொருந்துதல், ஏற்றல், உகம் - (யுகம்) - நுகம் = காளைகளை வண்டியிற் பொருத்தும் அல்லது பூட்டுங்கோல். உக - உவ. உவ + மை = உவமை. உ + தி = உத்தி - பொருத்தம். உ - ஒ - ஓ. ஓ + இயம் = ஓவியம். நேயம் : நெய் - நேயம். படிவம்: பள் - படு - படி - படிவு - படிவம், படிவு - வடிவு, படிவம் - வடிவம், படிதல் = விழுதல், பதிதல். படி- படிவு = ஒன்றின்மேலொன்று பதிதல், படிவம் = பதிந்த உருவம், உருவம். பதம் : பதி + அம் = பதம் - பாதம் = நிலத்திற் பதியும் உறுப்பு, காலடி. பதி : படி - பதி = பதிவாயிருக்கும் நகர். gâ - tâ - tá (t.), வதிதல் = தங்குதல். பாணி : பண் - பாணி = ஒரு வினையைப் பண்ணுங் கை. கையாற் போடும் தாளம், தாளத்தையுடைய பாட்டு. பாட்டின் ஓசை. ஒ.நோ : செய் - (சை) - கை. பிண்டம் : பிடி - பிண்டி - பிண்டம் = பிடித்த அல்லது திரட்டின உணவு, திரட்சி, உறுப்புகள் சேர்ந்த உடம்பு, முழுப்பகுதி. பிண்டி - E. bind, A.S. bindan Ger, binden, Skt. bandh. பூதம் : பொந்து - பொது - பூதம் = பெரியது, பெரும் பேய். பொந்தன் = தடியன், பொந்தன் - மொந்தன் = தடி வாழைக்காய். மண்டிலம் : மண் + தலம் = மண்டலம் - மண்டிலம் = ஞாலம்போல் வட்டமாயிருப்பது, வட்டம். தலை - தலம் = இடம். மண்டலம் = 40 அல்லது 48 நாள் கொண்ட ஒரு காலவட்டம். ஒரு நாட்டு வட்டம் = இனி, மண்டு - மண்டல் - மண்டலம் - மண்டிலம் என்றுமாம். மண்டு - வளை. மண்டிலம் என்பது யாப்பிலக்கணத்தில் ஒரு குறியீடு. மணி : மண் - மண்ணி - மணி = கழுவப்பட்டது போல் ஒளியுள்ள முத்து. மண்ணுதல் = கழுவுதல், அலங்கரித்தல். மண்ணுறு மணியின் மாசற மண்ணி (புறம். 147) என்பதை நோக்குக. மதி : மத - மதர் - மதி = மயக்கஞ் செய்வதாய்க் கருதப்பட்ட நிலா. ஒ.நோ : E. lunacy, from L. luna, moon. மதி + அம் =மதியம் = முழுநிலா. மது : மதர் - மது = மயக்கந் தருவது. மருந்து : மரு - மருந்து = நோயை நீக்கும் வாசனைத் தழை. மருந்துச் சரக்கு. மாடம் : மே - மேடு - (மேடி) - மாடி - மாடம் = உயர்ந்த கட்டடம், மேனிலை. மாத்திரை : மதி - மா. மா + திரை = மாத்திரை = அளவு. மா + திரம் = மாத்திரம் = மட்டு, அளவு. மா + அனம் = மானம் = மதிப்பு, அளவு, படி, மா என்பது ஓர் அளவு. மாயம் : மாய் + அம் = மாயம். மாய் + ஐ = மாயை = விரைந்து மாய்ந்து மயக்குவது, மயக்கம். மாலை : முள் - முள - முய - முயல் - மயல் - மால் - மாலை = பூக்கள் மயங்கிய தொடை, பகலும் இரவுங் கலக்கும் வேளை, ஒ.நோ : முயங்கு - மயங்கு. மீன் : மின் - மீன் - மீனம். முகம் : ஊ - மூ - முகம் = முன்னாலிருப்பது, தலையின் முன்பக்கம், முன்பக்கம். துறைமுகம், போர்முகம், நுதிமுகம் என்பன ஒவ்வொரு முன்னிடத்தைக் குறிக்கும். முகப்பு = முன்புறம். முகம் - முகன் - முகனை - மோனை. முகம் - முகமன். முகம் - முகர் - முகரை. புகர் முகம், செம்முகம், களிற்றுமுகம் முதலிய புறநானூற்றுத் தொடர்களில் முகமே குறிக்கப்பட்டது. கருமுகமந்தி ஆறுமுகம், திருமுகப் பொலிவு, முகங்கோணுதல், முகஞ் சுளித்தல் முதலிய பல தொடர்களிலும் அஃதே. நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம் என்றார் திருவள்ளுவர். நூன்முகம், முகவுரை முதலியவை நூலின் முற்பகுதியாகும். முகம் என்னுஞ் சொல் தமிழில் ஒருபோதும் வடமொழியிற்போல் வாயைக் குறிக்காது. முகம் = முன்னிடம், இடம். முகத்தல் = தன்னிடத்துக் கொள்ளுதல், உள்ளிட்டளத்தல். K¤j« : K£L - K¤J - K¤j« - K¡j (t.), ஆமணக்கு குருக்கு முதலியவற்றின் விதைகள் முட்டி வெடிப்பதால் முதலாவது முத்தெனப் பட்டன. அவ் விதைகள்போற் சிப்பிக்குள்ளிருக்கும் மணியும் முத்தெனப்பட்டது. பண்டைக் காலத்தில் முத்திற்குச் சிறந்தது செந்தமிழ்ப் பாண்டிநாடே. முரசு : முரண் - முரடு - முரசு - முரஜ (வ.) = உருட்டுக்கட்டையிற் கடைந்து செய்த மத்தளம். முரடு - முருடு. வட்டம் : வள் + தம் = வட்டம். இனி, வட்டு + அம் = வட்டம் என்றுமாம். வள் என்னும் வழிவேர் தமிழிற் பல்வேறு வடிவங்கொண்டு நூற்றுக் கணக்கான சொற்களைப் பிறப்பிக்கும். வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் என்று திரியவில்லை. வட்டம் என்னும் சொல்லே வ்ருத்த என்று திரிந்தது. வளை, வள்ளம், வட்டு, வட்டி, வண்டு, வணர், வணங்கு, வளர், வளார், வள்ளி, வரி, வரை, பரி முதலிய பல சொற் கட்கும் வள் என்பதே வேர். இச் சொற்கட் கெல்லாம் இனமானவை வடமொழியிலில்லை. வட்ட - வ்ருத்த (வ.) L. verto, to turn. வண்ணம் : வரி + அணம் = வரணம் - வண்ணம். வரி = வரைவு, நிறம், எழுத்து, பாட்டு, வரணனை. வரணம் = வரைவு, எழுத்து, பாட்டு, நிறம், குலம். வண்ணம் = நிறம், வகை, பாட்டு, சந்தம். வணிகன் : வாணி - வாணிகம் -வாணிகன் - வணிகன் = விலை கூறிப் பொருள் விற்பவன், வாணி = சொல், வாணிகன் - வாணியன். இனி, வள் - வணிகம் - வாணிகம் என்றுமாம். வளைவு பொருள் வளர்ச்சியைக் குறிக்கும். தனித்தமிழ்ப் பகுப்பான நால்வகை மக்கட் பிரிவில், விற்பனையாளர் வணிகர் அல்லது வாணிகர் என்னுஞ் சொல்லாலேயே தொன்று தொட்டுக் குறிக்கப்படுகின்றனர். வதி : மேற் கூறப்பட்டது. வள்ளி : வள் - வள்ளி - வல்லி = வளைந்த கொடி. ஒ.நோ : கொடு - கொடி. வேகம் : வேகு + அம் = வேகம் = கொதிப்பு, கடுமை, கடுஞ்செலவு. சுறுசுறுப்பு, சூட்டிக்கை என்பனவும் நெருப்புக் குறித்த சொல்லினின்றும் பிறந்தவையே. தீப்பற்றிய பொருள்கள் விரைவாய் வெந்து விடுவதால் விரைவு வேகம் எனப்பட்டது. அன்னம் (பறவை), சகடம், தாமரை, தாரம் (பண்டம்) முதலிய சில சொற்கட்கு இதுபோது வேர்ப்பொருள் தெரியாவிடினும், இவை தென்சொற்களே என்பது தேற்றம். இச் சொற்கள் தோன்றிப் பல்லாயிர மாண்டுகளானமையாலும், இவற்றின் வேர்ப்பொருளைக் காட்டக்கூடிய பிற சொற்கள் இறந்தொழிந்தமையாலும், பண்டைக்காலத்துச் சொல்லியலகராதி யொன்றும் நமக்கின்மையாலும், இவற்றின் வேர்ப்பொருளை அறிய இடமில்லை. (6) சொல் வடிவு மாற்றம். எ-டு : உயர்த்தி - உசத்தி - ஒசத்தி - ஒஸ்தி, வேட்டி - வேஷ்டி. (7) தூய்மையிழப்பு. எ-டு : வேண்டாத பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்க வழங்க, அதன் தூய்மை கெடுவது ஒருதலை. (8) மொழி வழக்கழிவு. எ-டு : தமிழ்ச்சொற்களெல்லாம் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்ந்து கொண்டே செல்லின், இறுதியில் தமிழென ஒரு மொழியே யிராதுபோம் என்பது உறுதி. பின்பு, இதுவரை அதைப் புகழ்ந்து வந்ததிற்கு மாறாக, ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதைந்தாயுன் சீரழிவுத் திறம் நினைந்து செயலற்று வருந்துதுமே. என்று இரங்கவே நேரும். களிப்பு, மகிழ்ச்சி, உவகை என மூன்று தமிழ்ச்சொற்களிருப்பவும், அவற்றுள் ஒன்றேனும் வழங்காமல், ஆனந்தம், சந்தோஷம் என்ற வடசொற்களே வழங்கி வருவதை ஒரு காட்டாகக் கண்டு தெளிக. 9. அருவடிவச் சொற்கள் அணிந்தன்று : அணிந்து + அன்று = அணிந்தன்று = அணிந்தது. அன் + அது = அன்னது = அத்தகையது, அது. அன் + து (அது) = அன்று = அது. அறிதீ : அறியும் - அறியுந் + ஈ = அறியுநீ - அறியுதீ - அறிதீ - அறிதி- 1. முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று 2. முன்னிலை யொருமை எதிர்கால வினைமுற்று 3. ஏவல் ஒருமை வினைமுற்று. இனி, அறியும் + நீ = அறியுநீ - அறியுதீ என்றுமாம். ந - த, போலி. ஒ.நோ ; நுனி - நுதி - துதி. தி முன்னிலை யொருமை விகுதியாகக் கருதப்பட்ட பின் ஒத்தி போன்ற வினைகள் தோன்றின. ஒரு காலத்தில் செய்யும் என்னும் முற்று, தன்மை முன்னிலையிலும் வழங்கிற்று. அடுநை : அடும் - அடுந் + ஐ = அடுநை. ஈ-ஏ-ஐ, முன்னிலை யொருமை விகுதி. அறஞ்செய் தீமோ : அறஞ்செய்து + ஈயும் + ஓ = அறஞ்செய் தீயுமோ - அறஞ்செய்தீமோ. ஈயும் = அருளும், இடும் (துணைவினை); ஓ, ஆர்வக் குறிப்பிடைச் சொல். அறிந்தீயார் : அறிந்து + ஈயார் = அறிந்தீயார் = அறிந்திடார் (அறியார்) : ஈ = இடு (துணைவினை). அறியுமோன் : அறியும் + அவன் = அறியுமவன் - அறியுமான் - அறியுமோன். ஆஓ வாகுஞ் செய்யு ளுள்ளே. அறுமார் : அறுவார் - அறுமார் = அறுதற்கு. உண்ணுவார் - உண்ணுமார் - உண்மார் = உண்ண. கொள்வார் - கொள்மார் - கொண்மார் = கொள்ள. பண்டைக்காலத்தில் ஒவ்வோர் எதிர்காலவினை முற்றும் செய்வான் என்னும் வினையெச்சமாக வழங்கி வந்தது. பிற்காலத்தில், ஆண்பாற் படர்க்கை யொழிந்த மற்றெல்லாம் வழக்கு வீழ, அவ் வாண்பாற் படர்க்கையே எல்லாவற்றுக்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. இதுவே வான், பான் ஈற்று வினையெச்சம். அன்று : (அன்றி) ; அல்லாது - அல்லது - அன்று (அல்+து), இல்லாது - இல்லது - இன்று. சொல்லாது போனான், நன்று சொன்னாய் என்னும் வழக்குகளை நோக்குக. ஆகியர் : ஆகு+ஈயர் = ஆகீயர் - ஆகியர் = ஆகுக. ஈயல் - ஈயர் - இயர். ஈயல் = ஈக, இடுக (துணைவினை). ஒ. நோ : செயல் = செய்க. இருடீர வெண்ணிச் செயல். ஆகிலியர் : ஆகு + இல் + இயர் = ஆகிலியர். ஆகின்று : ஆகு + இன் + து (அது) = ஆகின்று = ஆகினது. ஆகுப : (ஆவன, 7). ஆப (ஆவர், 218). ஆவ, ஆகுவ என்பன பண்டைக் காலத்தில் இருதிணைப் பொதுவாயிருந்தன. பின்பு. வ-ப எனத் திரிந்த பின், ப உயர்திணைக்கும் வ அஃறிணைக்கும் வரையறுக்கப் பட்டன. இரீஇ : இரி = இருந்து, இரீ = இரித்தி : இரீஇ (இருத்தி) அளபெடை. உடீஇ, கொளீஇ என்பனவும் இங்ஙனமே. ஈற்றுயிர் நீளுதலும் பிறவினை யாகும் வகை போலும்! ஒ.நோ : உறு - உறூ = உறுத்து. உறூஉ, அளபெடை. இனி, இரி - இரீஇ என அளபெடையே பிறவினையாகும் வகை என்றுமாம். இறீயர் : (இறுக) : ஈயல் - ஈயர். இறு + ஈயர் = இறீயர். செலீயர் நிலீயர் என்பனவும் இங்ஙனமே. ஈங்கனம் : ஈங்கு + இனம் = ஈங்கனம் - இங்கனம் - இங்ஙனம் - இங்ஙன். இங்ஙனம் - இன்னணம். ஆங்கனம் யாங்கனம் என்பனவும் இங்ஙனமே. ஈன்மர் : ஈனுவார் - ஈனுவர் - ஈனுமர் - ஈன்மர். உண்கு : செய்வு - செய்கு = செய்வேன் (ஒருமை), செய்கு + ம் = செய்கும் = செய்வேம் (பன்மை). உண்கு = உண்பேன். உண்கும் = உண்பேம். என்கு + ஓ = என்கோ = என்பேனா? (வினா). உணா : உண்+ஆ = உணா. ஆவும் ஒரு தொழிற்பெயர் விகுதியாகும். இறா, நிலா, பிணா முதலியவை முதற்காலத் தொழிலாகு பெயர்கள். ஆல் விகுதியே ஆ வாகக் குறைந்த தெனினுமாம். உண்மென : உண்ணும் + என = உண்ணு மென - உண்மென. உணர்த்திய : உணர்த்து + ஈய = உணர்த்தீய - உணர்த்திய = உணர்த்த. உந்து : (பெயரெச்ச விகுதி) : உம் உந்தாகும் இடனுமா ருண்டே (தொல். 777) உய்ந்திசினோர் : (உய்ந்தோர்) உய்ந்து + ஈயினோர் = உய்ந்தீயினோர் - உய்ந்தீசினோர் - உய்ந்திசினோர், ஈ, துணை வினை, ஒ.நோ : ஆயினோர், போயினோர். உயரி : உயரி = உயர்த்தி. உயரிய : உயரிய = உயர்த்திய. உரைத்திசின் (உரைப்பாய்) : உரைத்து + ஈயேன் - உரைத்தீயேன் - உரைத்தீயின் - உரைத்தீசின் - உரைத்திசின். ஈயேன் - ஏன்ஆர்வப் பொருள் படுவதொரு விகுதி. ஒ.நோ : வாவேன் = வரமாட்டாயா, சொல்லுங்களேன் = சொல்லமாட்டீர்களா. உறாற்க : உறு + அல் + க = உறற்க - உறாற்க. க விகுதி படிக்க, விடுக்க என்னும் வியங்கோள்களினின்று தோன்றியது. ஏத்துகம் : ஏத்துவம் - ஏத்துகம். வ-க, போலி. ஏனோர் : ஏ-ஏன்-ஏனோர் = யார்? ஏ-யா. கண்டிகும் : கண்டு + ? ஒ.வே: கண்டு + யாம் = கண்டியாம் - கண்டியம் - கண்டிகம் - கண்டிகும். கண்டிசின் : (கண்டேன்) : கண்டு+ ஈயேன் = கண்டீயேன் - கண்டீயின் - கண்டீசின் - கண்டிசின். ஈயேன் = ஈந்தேன், இட்டேன் (துணைவினை). ஒ.நோ : போயேன் = போனேன். கழிப்பி (கழித்து) : கழிப்பு என்னும் தொழிற்பெயரே மீண்டும் பகுதியா யிற்றுப் போலும். ஒ.நோ : நகு - நகை - நகைத்து. இனி கழி+பு = கழிப்பு, பிறவினை என்றுமாம். களைமே (களைவாய்) : களையும் + ஏ = களையுமே - களைமே. களையும் பால்வழுவமைதி. செய்யுமே - செய்ம்மே. ஏ ஆர்வப் பொருள் விகுதி. ஏன் விகுதி ஏ எனக் குறைந்ததெனினுமாம். மொழிமோ என்பதில் ஓ இப்பொருள்பட வந்தது. காண்குவந்திசின் : காண்கு = காண்பேன் (முற்றெச்சம்). காணூஉ (கண்டு) : காணூ - காணூஉ அளபெடை. செய்யூ வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். குரீஇ : குரி (குருவி) என்பது பண்டை வடிவம் போலும். குரீஇ, அளபெடை. கேளலம் : கேள் + அல் + அம் = கேளலம். சாயின்று : சாய் + இன் + து (அது) = சாயின்று. சாயினது - சாயின்று. ஆயினது போயினது என்பவற்றோடு ஒப்பு நோக்குக. இன்னது - இனது - இன்று. தொலைச்சி : (தொலைத்து) தொலைச்சு - தொலைச்சி. தொலை + சு = தொலைச்சு, பிறவினை. நிலியரோ : நில் + இயர் + ஓ = நிலியரோ = நிற்க. ஈயல் - ஈயர் - இயர். ஓ, அசைநிலை : ஆர்வப்பொருட்டுமாம். பழுனி : பழுத்து - பழுன்னு - பழுன்னி - பழுனி. மரீஇ : மரி = மருவி, மரீஇ, அளபெடை. வைகுதும் : வைகு+உது+ம் = வைகுதும் = வைகுவோம். உது, தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி; ம் (உம்) தன்மைப் பன்மை விகுதி. - ``புறநானூற்றுச் சொற்பொழிவுகள்'' நூல் 1944 2 *td¥ò¢ சொல்வளம் தொல்காப்பியர் காலத்தில், செய்யுள் எழுவதற்குரிய நிலைக்களங்கள், பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழு வகையாய் வகுக்கப்பெற்றிருந்தன. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (தொல். 1336) என்பது தொல்காப்பிய நூற்பா. அவ் வெழுவகை நிலைக்களத்துள், பாட்டு என்பது அம்மை(1491), அழகு(1492), தொன்மை(1493), தோல்(1494), விருந்து(1495), இயைபு (1496), புலன்(1497), இழைபு(1498) என எண்வகை வனப்பாக வகுக்கப் பெற் றிருந்தது. வனப்பு என்னும் தூய தீந்தமிழ்ச் சொல் இருக்கவும், அதற்குப் பகரமாகக் காவியம் என்னும் வடசொல்லைக் காப்பியம் என்று திரித்து, நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் (மணிமே. 19 : 80) என்று, முதன்முதலாக ஆண்டவன், கடவுட் கொள்கையற்ற வடநாட்டு மதமாகிய புத்தத்தைத் தழுவித் தமிழுணர்ச்சி கெட்ட சீத்தலையன் போன்ற சீத்தலைச் சாத்தன். தொல்காப்பியத்தில் இலக்கணம் கூறப்பெற்ற எண்வகை வனப்பிற் கும் இலக்கியமாயிருந்த பனுவல்களெல்லாம், அறவே இறந்துபட்டன. ஆதலால், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட பத்து வனப்புகளும், ஐம்பெருங் காப்பியமென்றும் ஐஞ்சிறு காப்பியமென்றும், அக் காலத்திறுதியில் இரு கூறாக வகுக்கப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் பெருவனப்பு; நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், பெருங்கதை, நாககுமார காவியம் என்னும் ஐந்தும் சிறுவனப்பு ஆகும். பெருவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட இரண்டும், சிறுவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட ஒன்றும் இன்றில்லை. வனப்பைப் பிற்காலத்திலக்கணியர், தொடர்நிலைச் செய்யுள் தனிநிலைச் செய்யுள் என்று இருவகையாகவும் குறிப்பாராயினர். ஒப்புயர்வற்ற ஒருவனைத் தலைவனாகக் கொண்ட நீண்ட கதை தழுவி, காண்டம் படலம் முதலிய பெரும் பகுப்புகளைக் கொண்டு, பல்வேறு வகைப்பட்ட காலம், இடம், நிகழ்ச்சி, மக்கள் வாழ்க்கைமுறை, தொழில், பழக்கவழக்கம், அரசியல், ஊணுடையுறையுள், நிலைத்திணையும் இயங்குதிணையுமாகிய மற்ற வுயிரினங்கள் முதலிய பொருள்களைப் பற்றிய வண்ணனைகளை யுடையதாய், விரிவாய் வரும் வனப்பிலன்றி, வேறெவ்வகைப் பனுவலிலும், சொல்வளத்தைப் பேரளவாகக் காண முடியாது. அவ் வனப்புச் சொல்வளமும், வனப்பாசிரியனின் புலமைத் திறத்தைப் பெரிதும் பொறுத்ததாகும். ஐம்பெரு வனப்புகளுள் சிலப்பதிகாரமும் சிந்தாமணியும், ஐஞ்சிறு வனப்புகளுள் பெருங்கதையுமே சொல்வளமுடையன. இம் மூன்றும் முறையே தலையிடை கடையாம். சிலப்பதிகாரச் சிறப்புச் சொற்கள் அகவை = வயது (வ.). அதள்புனையரணம் = தோற்கைத்தளம் (glove). அரிமுகவம்பி = மடங்கல்(சிங்க) முகமுள்ள படகு. அலவை = வியபிசாரம். இலவந்திகை = நீர் நிறைத்து வெளியேற்றும் பொறியமைந்த குளம், அதையடுத்த சோலை. ïW«óJ = mâra« (t.), புதுமை (wonder). உள்வரிக்கோலம் = மாறுகோலம் (disguise). ஏதம் = அபாயம்(வ.) (danger). ஓசுநர் = கலவினைஞர் (sailors). கண்ணெழுத்து = மூட்டைகளின் மேல் எழுதிய முகவரி (superscription). கலங்கரை விளக்கம் = Light House காசறை = கஸ்தூரி(வ.) மான். காழியர் = பிட்டு வாணிகர். காலதர் = சாளர வகை. குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாய் நின்று ஆடிவரும் கூத்து. கூவியர் = அப்ப வாணிகர். சுருங்கை = கரந்த படை, கீழ்நிலவழி (Subterranean passage). திரையல் = வெற்றிலைச் சுருள். நீரணி மாடம் = பள்ளியோடம். பதியெழுவு = நகரவாணர் btËna‰w«(Evacuation). கரிமுகவம்பி = யானை முகமுள்ள படகு வகை. பாடுகிடத்தல் = சத்தியாக்கிரகம்(வ.) பண்ணுதல். வம்பமாக்கள் = புதிதாய் வந்தோர், அயல்நாட்டார். வையம் = குதிரை பூட்டிய தேர்போன்ற t©o(Coach). இனி, நால்வகைப் பெரும் பண்ணும், நால்வகைப் பண்பகுப்பும், நால்வகைப் பண்குலமும், நால்வகைப் பாலையும், நால்வகை நரம்பும், எண்வகை எழாலும், எண்வகை இசைக்கரணமும், நால்வகை முழவும், இருவகைத் தாளத் தொகுதியும், நாற்பாணி யுறுப்பும், பத்து வகை இசைப் பாவும், மூவகை வரிப்பாட்டும், மூவகைச் சார்த்துவரியும், பிறவுமாகிய இசைத்தமிழ்ப் பகுதிகளும்; பல்வகைப்பட்ட இருவேறு கூத்தும், பதினோராடலும், எண்வகை வரிக்கூத்தும், இருவகைக் குரவையும், முப்பத் திருவகை நளிவினையும் (mãeaK«), மூவகை யெழினியும், பிறவுமாகிய நாடகத் தமிழ்ப் பகுதிகளும் சிலப்பதிகாரத்திற்கே சிறப்பாம். மாதவி காலத்து மகளிர் அணிகள் 1. விரலணி = கான்மோதிரம் 15. பவழ வளை 2. பரியகம் = காற்சவடி 16. வாளைப்பகுவாய் மோதிரம் 3. நூபுரம் = சிலம்பு 17. மணி மோதிரம் 4. பாடகம் = ஒருவகைக் காலணி 18. மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி 5. சதங்கை 19. சங்கிலி = வீரச்சங்கிலி 6. அரியகம் = பாதசாலம் 20. நுண்ஞாண் 7. குறங்கு செறி = கவான்செறி 21. ஆரம் 8. விரிசிகை = முப்பத்திருவட மேகலை 22. கயிற்கடையொழுகிய கோவை = பின்றாலி 9. கண்டிகை = மாணிக்க வளை 23. இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை 10. தோள்வளை 24. தெய்வவுத்தி = சீதேவி 11. சூடகம் 25. வலம்புரி 12. கைவளை = பொன்வளை 26. தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை 13. பரியகம் = பாசித் தாமணி, கைச்சரி 27. புல்லகம் = தென்பல்லியும் வடபல்லியும். 14. வால்வளை = சங்கவளை, வெள்ளிவளை மகளிர் நீராடுதற்குரிய பத்துத் துவர், ஐந்துவிரை, முப்பத்திருவகை ஓமாலிகை முதலியனவும் சிலப்பதிகாரக் கடலாடு காதையிற் குறிக்கப் பெற்றுள. அவற்றின் விரிவை அடியார்க்குநல்லார் உரையிற் காண்க. ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரை மதிற்பொறிகள் 1. வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய (எந்திர) வில். 2. கருவிரலூகம்=கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந் தாரைக் கடிக்கும் பொறி. 3. கல்லுமிழ் கவண். 4. பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவ தாய நெய். 5. பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா. 6. காய்பொன்னுலை = உருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலை. 7. கல்லிடு கூடை = இடங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங் கூடை. 8. தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி. 9. தொடக்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி. 10. ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி. 11. கவை = கிடங்கிலேறின் மறியத்தள்ளும் இருப்புக்கவை. 12. கைபெயரூசி = மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி. 13. சென்றெறி சிரல் = மாற்றார் மேற்சென்று கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி. 14. பன்றி = மதிற்றலையி லேறினா ருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி. 15. பிற = நூற்றுவரைக்கொல்லி(சதக்கினி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப் பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியன. சிந்தாமணிச் சிறப்புச் சொற்கள் அணிகம் = C®â(Conveyance, Vehicle) ஆம்புடை = வினைசெய் வழி (Means, Expedient) உவளகம் = அந்தப்புரம்(வ.) (Zenana). உவனித்தல் = அம்பெய்யத் தொடங்குதல். உழைக் கண்ணாளர் = அருகிலிருக்கும் கண்போன்ற அன்பர். ஓசனித்தல் = பறவை சிறகடித்தல். கல்லூரி = கல்வி கற்கும் இடம் (College). பிழியல் = பிழிந்தெடுத்த கள் அல்லது இன்சாறு. வடகம் = மேலாடை. வளமனை = பொருள் நிறைந்த சிறப்பில்லம். இனி, யாழ் என்னும் வீணைக் கருவிக்குரிய குற்றங்களையும், பாம்பு நஞ்சின் எழு வேகங்களையும், குழந்தை வளர்ப்பு முறையையும், அறு வகைப் பெரும்பொழுதிற்கேற்ற ஊணுடைகளையும், விரித்துக் கூறுவதும் சிந்தாமணிக்குச் சிறப்பென்க. ஆயின், இவை பொருள்வளத்தின் பாற்படும். பெருங்கதைச் சிறப்புச் சொற்கள் கச்சம் = ஒரு பேரெண். கடிகையாரம் = கடிகாரம். இது தூய தென்சொல்லே. கடிகாயந்திரம் என்னும் வடசொல்லின் திரிபன்று. கடிகை = வட்டமானது, ஆரம் = ஓர் ஈறு. கார்முகம் = வானவில். குப்பாயம் = மேற்சட்டை (Coat). ஓதி = புறக்கண்ணாற் காணவியலாத நெடுந்தொலைவுச் செய்திகளையும் அகக்கண்ணாற் கண்டறியும் ஆற்றல். திருவில் = வானவில். தேசியச்சேரி = அயல்நாட்டவர் சேர்ந்துவாழும் குடியிருப்பு. நானம் = தேய்த்துக் குளிக்கும் விரைநெய் (வாசனை யெண்ணெய்) . படமாடம் = கூடாரம் (Tent). பாம்புரி = ஆளோடி. பிடிகை = ஒற்றையிருக்கை யூர்தி. மணிமேகலைச் சிறப்புச் சொற்கள் ஆண்டலைப்புள் = ஆண்டலை வடிவான, இறந்துபட்ட ஒரு பறவையினம். ஆலமர் செல்வன் = தட்சிணாமூர்த்தி(வ.). பொதியறை = காற்றுவர வழியில்லாத நிலவறை. வட்டிகை = vGJnfhš(Painter’s brush). வட்டுடை = அரைக்காற் r£il(Drawers). இங்ஙனமே ஏனை வனப்புகளிலும் ஒருசில சொற்கள் சிறப்பாக வுளவென அறிக. - ``செந்தமிழ்ச் செல்வி'' மார்ச்சு 1965 3 அவியுணவும் செவியுணவும் மாந்தன் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத காற்று, நீர், உணவு என்னும் மூன்றனுள், முதலது உடல் நலத்திற்கேற்ற இடத்திலெல்லாம் இருக்குமிடத்திலேயே முயற்சியின்றி இலவசமாகப் பெறக்கூடியது; இடையது பஞ்சமில்லாத காலமெல்லாம் சிறு முயற்சியாற் பெறக்கூடியது; இறுதியதே விளைவுக்காலமெல்லாம் முயற்சியினாலோ, விலைகொடுத்தோ பெறக் கூடியதாகும். நாகரிக வாழ்க்கைக்கு வேறு பல பொருள்களும் வேண்டுமாயினும், உயிர்வாழ்க்கைக்கு வேண்டியதே இன்றியமையாததாதலின், மாந்தன் கவலைப்பட்டுத் தேட வேண்டிய முதன்மையான பொருள் உணவொன்றே. உணவினாலேயே உயிர் உடம்பில் நிற்பதுடன், உடம்பும் உரிய வளர்ச்சியடைகின்றது. உணவின் மாற்றமே உடம்பு. உடம்பின் நன்னிலையே உயிர் நிலை, நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண்(டு) உடம்பு முயிரும் படைத்திசி னோரே. (புறம். 18) உணவு பெறுதற்குரிய பல்வேறு தொழில்களைப் பயில்வதற்கும், அவற்றைச் செய்தற்கும், உரிய பருவத்தில் மணம் புரிவதற்கும், பின்னர் மக்களைப் பெற்று வளர்த்தற்கும், நீண்ட காலம் உடம்பின் நன்னிலை வேண்டியிருத்தலின், உலக வாழ்க்கையை விரும்புவோரெல்லாம் உடம்பைப் பேணுவது இன்றியமையாத தாகின்றது. இனி, பண்பட்ட மக்கள் இம்மை வாழ்க்கைக்கு மட்டுமன்றி மறுமை வாழ்க்கைக்கும் அறிவுபெற வேண்டியிருத்தலின், அதன்பொருட்டும் உடம்பின் நீள் நன்னிலை இன்றியமைததாகும். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724) உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்(று) உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725) என்பவை திருமூலர் திருமந்திரங்கள். எனவே, மாந்தன் இருமை வாழ்விற்கும் இன்றியமையாதது உடம்பு என்பது பெறப்பட்டது. இத்தகைய உடம்பை உருவாக்குவதும் இறுதிவரை நிலைப்படுத்துவதும் உணவே. உணவை விளைப்பது உழவுத்தொழில். அத் தொழிலை மக்கள் அனைவரும் மேற்கொள்ளினும், இரு நிலைமையால் உணவுத் தட்டு ஏற்படும். அவற்றுள் ஒன்று மழையின்மை; இன்னொன்று மக்கட் பெருக்கம். மழையின்மை நீடிக்காது; உலகம் ஒருங்கே அழியும் ஊழியிறுதி வரை, பார் முழுதும் பரவவுஞ் செய்யாது. ஆதலால், பஞ்சகாலத்தில் வளநாட்டினின்று வறட்சி நாட்டிற்கு வேண்டிய உணவை வருவித்துக் கொள்ளலாம். ஆயின், மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் உணவுத்தட்டு நிலைத்ததும் நீக்க முடியாததுமாகும். மழை ஏராளமாகப் பெய்யினும் உணவுப்பொருள் விளைவது நிலமேயாதலாலும், மக்கட் பெருக்கத்திற் கேற்ப நிலமும் விரிவுறாமையாலும், நிலவரம்பீடும் பகிர்ந்துண்டலும், குடும்ப மட்டுப்பாடும் அரசியலேற்பாடாக அமைகின்றன. இவ்வகை அரசியலே கூட்டுடைமை (Socialism) என்பது. கூட்டுடைமை என்னும் ஆட்சிமுறை இக்காலத்ததே யானாலும், அதன் உயிர்நாடிக் கூறான பகிர்ந்துண்டலை, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தெய்வப் புலமைத் திருவள்ளுவர், பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்ட லரிது, (227) பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை, (322) தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (1107) என்னும் குறள்மணிகளால் நெறியிட்டுக் கூறியுள்ளார். அவர் காலத்தில் மக்கட் பெருக்கமுமில்லை; நிலக்குறைவுமில்லை. அவையிருந்திருப்பின். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (1040) என்று கூறியிரார். ஆகவே, அவர் இக்காலத்தில் இருந்தாராயின், நில வரம்பீட்டிற்கும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கும் நெறி வகுத்தேயிருப்பார். அவர் இன்று இல்லாவிடினும், அவர் போங்கிலேயே, இந்தியத் தலைமை மந்திரினியாரான திருமாட்டியார் இந்திராகாந்தி யம்மையார், இருபான் குறிப்புப் பொருளாட்சித் திட்டத்தை வகுத்திருப்பது, இந்தியர்மீது இறைவன் கொண்ட பேரருளென்றே கருதுதல் வேண்டும். மக்கள் ஆறறிவு படைத்த உயர்திணை என்னும் உயர்ந்த உயிரினத்தைச் சேர்ந்தவராதலால். புறவுடம்பிற்குரிய அவியுணவை மட்டுமன்றி அகவுடம்பிற்குரிய அறிவுணவையும் அரும்பாடுபட்டேனும் தேடி நுகர்தல் வேண்டும். அவியுணவென்றது அவித்த அல்லது சமைத்த உணவை. நாகரிக மக்களுணவு அவிக்கப்பட்டதே என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அறிவுணவு செவிவாயிலாகக் கேட்டு உட்கொள்ளப் படுதலால் செவியுணவெனப்பட்டது, செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து (நன். 40) என்று நன்னூற் பாயிரங் கூறுதல் காண்க. அவியுணவை மட்டும் ஒருவன் விரும்புவானாயின், அவன் உயர் திணையைச் சேர்ந்தவனாகான். உடம்பால் உயர்திணையாயினும் உளத்தால் அஃறிணையாகவே கருதப்படுவான். அவனால் மக்களினத்திற்கே இழிவு உண்டாகும். அதனால், செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (412) என்று செவியுணவின் பெரும் சிறப்பை எடுத்துக்கூறி, செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். (420) என்று செவியுணவு கொள்ளாதவனை இறப்ப இழித்தும் பழித்தும் கூறினார் திருவள்ளுவர். ஆதலால், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய ஒப்புயர்வற்ற தமிழை, தாய் மொழியாகக் கொண்டிருந்தும், அதனைச் சற்றும் பேணாது, தமிழ் வந்து வயிற்றை நிறைக்குமா என்று புறக்கணித்துக் கூறுவது, தன்னைத் தமிழ னென்று சொல்லிக் கொள்பவனுக்குச் சற்றும் தகாது. செவியுணவுண்டு கொண்டே அவியுணவும் பெற இயலும்போது, ஒருவன் ஏன் தமிழைத் தள்ள வேண்டும்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழ்நாட்டில் தமிழரிடைத் தமிழிற் பேசித்தானே வாழவொண்ணும்! அது கருதியேனும் கூட்டுடைமைக் கொள்கையன் தமிழைப் போற்றுக. தான் போற்றாவிடினும் போற்றுவாரை இயன்றவரை போற்றுக. - ``தென்மொழி'' கும்பம் 1976 4 அறுதொழிலோர் யார்? ``ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.'' (குறள். 560) இக் குறளுரைக்கு அடிமணையாயிருப்பது அறுதொழிலோர் என்னுஞ் சொல். அச் சொற்குப் பரிமேலழகர் அந்தணர் என்னுஞ் சொல்லாற் பிராமணர் என்னும் பொருள் குறித்து, ``அறுதொழிலாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலென இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம். ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று'' என்று அதற்கேற்ப விளக்கவுரையுங் கூறினார். இவ் வுரை தவறானதென்பதற்குக் கரணியங்களாவன: 1. நாற்பாலார்க்கும் அறுதொழிலுண்மை அந்தணர், அரசர், வணிகர், வேளாள ரென்னும் நால்வகுப்பார்க்கும் அறுதொழில் கூறப்படுவதால், அவருள் ஒரு வகுப்பாரை மட்டும் அறுதொழிலோர் என்று சுட்டுவது பொருந்தாது. ``ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்றிரு மூவகை ஆதிக் காலத் தந்தண ரறுதொழில்'' ``அரச ரறுதொழில் ஓதல் வேட்டல் புரைதீரப் பெரும்பார் புரத்தல் ஈதல் கரையறு படைக்கலங் கற்றல் விசயம்'' ``வணிக ரறுதொழில் ஓதல் வேட்டல் ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம்'' ``வேளாள ரறுதொழில் உழவுபசுக் காவல் தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை ஒள்ளிய இருபிறப் பாளர்க் கேவல்செயல்'' ``குயிலுவம் வாத்தியங் கொட்டுத லாகும்'' ``பருத்திநூல் பட்டுநூல் அமைத்தாடை யாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில்.'' என்று திவாகரமும், ``ஓதலே யோதுவித்த லுடன்வேட்டல் வேட்பித்திடல் ஈதலே யேற்றலாறும் ஏற்குமந் தணர்தொழிற்பேர் ஓதலே வேட்டலீதல் உலகோம்பல் படைப யிற்றல் மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே'' ``படைகுடி கூழமைச்சுப் பற்றிய நட்பினோடு நெடுமதி லரசியற்கு நிகழ்த்தியவாறு பேதம்! இடையற வோதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தி னுடனிரை காத்த லேரை யுழவாறும் வசியர்க் காமே'' ``வசியர்தந் தொழில்க ளாறுள் வகுத்தமுத் தொழில்க ளான பசுவோம்பல் பொருளை யீட்டல் பயிரிடல் புராண மாதி வசைதவி ரனுகூ லம்மாம் வகைத்தொழில் சூத்திரர்க்காம்'' என்று சூடாமணி நிகண்டும், நால்வகுப்பார்க்கும் அவ்வாறு தொழில் கூறுதல் காண்க. 2. பரிமேழலகர் அரசர்க்கும் அறுதொழில் கூறல் ``அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு'' (384) என்னுங் குறட்கு, ``தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன் னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து, வீரத்தின் வழுவாத தாழ்வின்மை யினை யுடையான் அரசன்'' என்று தொடருரை வரைந்து, அதன் விளக்கத்தில், ``அவ்வறமாவது ஓதல், வேட்டல், ஈதலென்னும் பொதுத் தொழிலினும், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுத லென்னுஞ் சிறப்புத் தொழிலினும், வழுவாது நிற்றல்'' என்று பரிமேலழகரே அரசர்க்கும் அறுதொழில் கூறியிருத்தலால், அறுதொழிலோர் என்னும் பொதுப் பெயர்க்குப் பிராமணர் என்னும் பொருளும், நூலோதுதல் அரசர்க்கும் உரியதாதலால் நூல் மறத்தல் என்பதற்கு வேதமோதாமை என்னும் பொருளும், பொருந்தாமை யுணர்க. 3. தொல்காப்பியர் அரசரொழிந்த மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறல் ``அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்'' (தொல். பொருள் புறத் 20) என்று, தொல்காப்பியர் அந்தணர் (பிராமணர்), வணிகர், வேளாளர் என்னும் மூவகுப்பார்க்கு அறுதொழில் கூறியிருப்பதால், அவர் கருத்துப்படியும் அறுதொழிலோர் என்பது அவருள் ஒரு வகுப்பாரை மட்டுஞ் சிறப்பாகச் சுட்டலாகாமை அறிக. ஆரிய முறைப்படி நூலோதலுரிமை வணிகர்க்கு முண்மையை நோக்குக. 4. அரசர்க்கு அறுதொழிலுண்மை ``கோக்களைக் காத்தலும் மாப்பொரு ளீட்டலும் ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தந் தொழிலே'' என்று வணிகர்க்கு முத்தொழில் கூறும் பிங்கலமும், ``ஓதல் பொருதல் உலகு புரத்தல் ஈதல் வேட்டல் படைபயிற லறுதொழில்'' என்று அரசர்க்கு அறுதொழில் கூறுகின்றது. வேட்டல் என்பது, ஏமாற்று வகையில் மூவேந்தரிடைப் பிற்காலத்துப் புகுத்தப்பட்ட ஆரிய வழக்கமாதலால், அதற்குப் பகரமாகத் தமிழரசர்க் குரிய தொழிலாகக் கொள்ளப்படுவது வேட்டையாடலே. ``அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று'' (குறள். 259) என்று திருவள்ளுவருங் கூறியிருத்தல் காண்க. இனி, இறை (வரி) கோடல் என்பது அரசர்க்கு இன்றியமையாத தாதலின், அதையுஞ் சேர்ப்பின் எழுதொழிலுமாகும். முறை செய்தல் அல்லது தண்டஞ்செய்தல் உலகு புரத்தலுள் அடங்கும்; ஆயின், பொருதல் அடங்காது. பழவிறல் தாயத்தைக் காத்துக் கொள்வதற்கு மட்டுமன்றிப் புதுவிறல் தாயத்தை உண்டாக்கிக் கோடற்கும், போர் இன்றியமையாத தென்பது பண்டைக் கொள்கை. 5. பிராமணர்க்கு அறுதொழிலின்மை தொல்காப்பியமும்எல்லாநிகண்டுகளும்பிராமணர்க்குஅறுதொழில்கூறியிருப்பினும்,`அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்'என்னுந்தொல்காப்பியத்தொடருக்கு,``ஆறுகூற்றினுட்பட்டபார்ப்பியற்கூறு.........miவ`ஓjல்ஓதுவித்jல்வேட்டல்வேட்பி¤தல்கொடு¤தல்கேhடல் எனஆறா«''vன்றுநச்சினார்க்கிÅயர்உரைத்திருப்பிDம்,உண்kயிற்பிராமzர்க்குரிaவைஈதலொÊந்தஐந்தொழிny. இதை, ஓதல் முதலிய ஏனை ஐந்தொழிற்கும் சிறப்புச் செய்யுள்களை எடுத்துக் காட்டிய நச்சினார்க்கினியர், ஈதலுக்கும் ஈதற்சிறப்பிற்கும் மட்டும். ``இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள'' (குறள். 223) ``ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்'' (குறள். 228) என்று பொதுச் செய்யுள்களையே எடுத்துக்காட்டியிருப்பதினின்றும், விருந்தோம்பலும் வேளாண்மையுமில்லாப் ãuமணர்இštழ்க்கையினி‹றும்,``Kட்டிபுகும்பா®ப்பார்''என்Dம்கம்gர்பா£டினின்றும்,அறிªJbfhŸf. ``ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி'' (பதிற்றுப்.24) என்பது, ஆரிய அடிமையான பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமன் என்னும் பிராமணப் புலவன் பாடியதாத லால், அளவைச் சான்றாகாது. வேதமோதுவித்தலையே ஈதலென்று கூறின் அது ஓதுவித்தலென்னும் ஒன்றேயன்றி வேறாகாதெனக் கூறிவிடுக்க. ஆகவே, பிராமணர்க்குரிய தொழில் ஐந்தே யென்பது தெரிதருதேற்ற மாம். அரசர்க்கு ஐந்தும் பிராமணர்க்கு ஆறுமாகத் தொல்காப்பியங் கூறுவது, உலகியற்கு மாறான இன்மை நவிற்சியே என அறிக. 6. அந்தணர் வேறு, பிராமணர் வேறு அந்தணர் என்பவர், இருதிணை யுயிர்களிடத்தும் அருள்கூர்ந்து, துறவு மேற்கொண்டு ஐம்புலனடக்கி, இனமொழி குலமத இட வேறுபாடின்றி உலகப் பொதுவாய் உள்ளந் தூயராய உயர்நிலை இறைவனடியார். ``அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்'' (குறள். 30) என்றார் திருவள்ளுவர். அந்தணரின் பிறவியல்புகளைத் திருக்குறட் பாயிர, நீத்தார் பெருமை யதிகாரத்திற் கண்டு கொள்க. பிராமணரோ, மாணவ (பிரமசரிய) நிலைக்குப் பின் இல்வாழ்க்கை (கிருகத்தம்), காடுறைவு (வானப்பிரத்தம்) என்னும் இருநிலைகளிலும் இயன்றவரை இன்பந்துய்த்து, ஐம்பொறியுந் தாமே அடங்கியபின் துறவுக் கோலம் (சந்நியாசம்) பூண்டு, குலவெறியும் மொழிவெறியும் நீங்காது. ஆணவமும் தந்நலமும் மிக்க ஆரிய இனத்தார். இதனால், திருவள்ளுவர் குறித்த அந்தணர் வேறு; பரிமேலழகர் குறித்த பிராமணர் வேறு; என அறிந்து கொள்க. 7. நிகண்டுகள் ஆரியமுறை தழுவியன தமிழ் நிகண்டுகளெல்லாம் தமிழகத்தில் ஆரியம் வேரூன்றியபின் தோன்றியவையாதலால், பிறவியொடு தொடர்புற்ற குலவொழுக்கம்பற்றி அவை கூறுபவை யெல்லாம் ஆரியச் சார்பானவேயாகும். உரிச்சொல் என்னும் பெயர் மாறி நிகண்டு என்று பெயர் பெற்றதே இதற்குப் போதிய சான்றாம். இயற்றமிழ்ப் பொருளிலக்கணம், கல்வி காவல் வணிகம் உழவு என்னும் நாற்பெருந் தொழில்பற்றி அகப்பொருட் டலைவரை நால் வகுப்பாராக வகுத்ததே, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பாகுபாடாம். இல்லறத்தாரான தமிழ்ப் பார்ப்பாரும், அக்காலத்தில் அருளாளராய் அந்தணர் என்னும் பெயருக்குத் தகுதியுடையாரா யிருந்தனர். கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர், தம் காலத்திலேயே ஆரியம் வேரூன்றியதைக் கண்டதனால், துறவியர்போல் வீடுவாசலின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த பிராமணரையும் அந்தணராகக் கொண்டு, ``நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய'' (தொல். பொருள் மர. 71) என்று கூறினாராயினும், வணிகர்க்கு வாணிகமும் வேளாளர்க்கு உழவுமே தனிச்சிறப்புத் தொழில் என்னும் உண்மையை, ``வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை'' ( 79) ``வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி'' ( 82) என்னும் நூற்பாக்களாற் குறித்தார். இங்ஙனமிருந்தும், நிகண்டுகள், அந்தணர் அரசர் முதலிய நால் வகுப்பான தமிழ்ப் பாகுபாட்டை, ஆரியர் (பிராமணர்), பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத் தந்நலத்திற்கேற்ப முறையே படிமுறைத் தாழ்வுற்ற நிலையான நாற்பெரும் பிறவிக் குலப் பாகுபாடாகத் திரித்து, பிராமணர்க்கு ஆரிய மறையான வேதமோதுதலும் வேள்வி செய்வித்தலும், சத்திரி யர்க்குப் போர் புரிதலும் வேள்வி செய்தலும், வைசியர்க்கு வாணிகமும் உழவும் செய்தலும், சூத்திரர்க்குக் கைத்தொழிலும் மேல் மூவகுப்பார்க்கும் ஏவல் செய்தலும், தனிச்சிறப்புத் தொழிலென வகுத்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றியே, ஆரியரல்லாதவரும் வேதமும் வேள்வியும் வேண்டாதவருமான தமிழ் நால்வகுப்பார்க்கும் அவ்வாறு தொழில் வகுத்துக் கூறியுள்ளமை, தமிழ் மரபிற்கும் தமிழர் உயர்வுக்கும் எள்ளளவும் ஏற்காத இழிநிலையும் கடைப்பட்ட அடிமைத்தனமுமே காட்டும். 8. ஆரியத்தை எதிர்ப்பதே திருக்குறள் நோக்கம் திருவள்ளுவர் அறம்பொருளின்பம் என்னும் முப்பால்பற்றி இயற்றியருளிய அறநூல் வையகம் முழுவதற்கும் பயன்படும் வாயுறை வாழ்த்தே யாயினும், தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று விடுவிப் பதே அதன் அடிப்படை நோக்கமென்பது, ``அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்'', (30) ``அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்'', (46) ``ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்'', (133) ``மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்'', (144) ``அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று'', (259) ``ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை'', (656) ``பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'', (972) ``சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால் உழந்து முழவே தலை'', (1031) ``உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து'', (1033) ``இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்'' (1035) என்னுங் குறள்களாலும், இவை போன்ற பிறவற்றாலும் அறியப்படும். இங்ஙனம் ஆரியத்தைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவுங் கண்டிப்பவரும், ``தந்தை மகற்காற்று முதவி யவையத்து முந்தி யிருப்பச் செயல்'' (67) என்று கல்வியை எல்லா மக்கட்கும் பொதுவாகக் கூறியவரும், ``விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்'' (410) என்று வேதத்தைக் குறியாது வேறு விழுமிய நூல்களையே குறித்தவருமான திருவள்ளுவர், பிராமணரை ஒருபோதும் போற்றாரெனத் தெற்றெனத் தெரிந்துகொள்க. இங்ஙனம் அவர் தமிழர்க்கு விழிப்புணர்த்தி ஈராயிரம் ஆண்டிற்கு மேலாகியும், இன்றும் அவர் கருத்தறியாது, பரிமேலழகர் உரையை மறுக்கப் பாரில் எவருள்ளார் என்று தருக்கும் தமிழ்ப்புலவரும் உளர். அவர் ``பேதைக் குரைத்தாலுந் தோன்றா துணர்வு'' என்னும் பழமொழிக் கூற்றை (93) விளக்கப் பிறந்தவரே யாவர். இனி, அறுதொழிலோர் யாரெனின், ``உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை கற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கருமபூமி'' என்னும் திவாகர நூற்பாவிற் குறித்த அறுதொழிலைக் கற்றவரே யென்க. என் திருக்குறள் தமிழ் மரபுரையையும் பார்க்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' ஆகத்து 1970 5 501ஆம் குறள் விளக்கம் ``அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்'' (குறள். 501) இதன் புணர்ச்சி பிரிப்பு அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும். இதன் உரைகள் மணக்குடவர்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து பின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான் என்றவாறு. முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டும் என்றார்; பின்பு தேறப்படும் என்றார். பரிப்பெருமாள்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து, பின்பு தேறப்படும் என்றவாறு. மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியாதல், பொருளை வேண்டியாதல், இன்பத்தை வேண்டியாதல், அச்சம் உளதாம் என்றாதல் அரசன் மாட்டுத் தீமையை நினையாமையை ஆராய்ந்து, பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது. பரிதியார்: தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான் என்றவாறு. காலிங்கர்: மறைமுதலாகிய நூல் யாவற்றிலும் சொன்ன அறம் பொருள் இன்பம் வீடு என வகுத்த நால்வகையாகலின், அவற்றுள் அறமானது, பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இருமை இன்பம் எய்துவிப்பது என்றும்; அவற்றுள் பொருளானது, பலவகைத் தொழிலினும் பொருள் வருமேனும் தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என்றும்; மற்று இனி இன்பமாவது, கற்பின் திருந்திய பொற்புடையாட்டி இல்லறத்துணையும் இயல்புடை மக்களும் இருதலையானும் இயைந்த இன்பம் என்றும்; மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது, பேதைமையுற்ற பிறப்பு இறப்பு என்னும் வஞ்சப் பெருவலைப் பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இஃது என்றும் - இங்ஙனம் இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அடுக்கும் அரசர்க்கு என்றவாறு. உயிரெச்சம் என்பது முத்தி என்றது. பரிமேலழகர்: அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும் உபதை நான்கின் திறத்தான், மன இயல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும் என்றவாறு. அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால் இவ் வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத்தலை வனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரால் `இவ்வரசன் இவறன்மாலைய னாகலின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்றுதொட்டு உரிமையொடு பயின்றாள் ஒரு தவமுதுமகளை விட்டு, அவளால் `உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கை கூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, `இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்; என்று தான் காவல் செய்து, ஒருவனால் `இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கினிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், இந் நான்கினும் திரிபிலனாயவழி எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற்பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது பிறரெல்லாம் இதனை `உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார். இனி இதற்குத் தமிழ்மரபுரை வருமாறு: அரசனால் ஆட்சித் துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்க் கேட்டிற்கு அஞ்சும் அச்சமும் பற்றிய நால்வகைத் தேர்திறத்தால், மனப்பான்மை ஆராய்ந்து தெளியப் படுவான். அரசனுக்கு ஆட்சித் துணைவனாக அமரும் அமைச்சன், குடிக ளிடத்து அன்பாகவும் அரசனிடத்து நம்பகமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருப்பதால், அறவோனாகவும் பொருளாசையில்லாதவனாகவும் கற்பொழுக்கமுடையவனாகவும் சாவிற்கஞ்சாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. அன்றிக் கன்னெஞ்சனாயிருப்பின், குடிகட்கு நன்மை செய்ய முடியாது; பொருள் வெறியனாயிருப்பின், பொதுப் பொருளையும் அரசன் பொருளையும் கையாட நேரும்; பெண்ணின்பப் பித்தனாயிருப்பின், குடிகளின் பெண்டிரைக் கற்பழிக்கவும் அரசனின் உரிமை மகளிரொடு தொடுப்புக் கொள்ளவுங் கூடும்; சாவிற்கஞ்சியா யிருப்பின், அரசனைக் கைவிடவுங் காட்டிக் கொடுக்கவும் மனந்திரியும். உரிமை மகளிர் என்பார் தேவியரும் தோழியரும் என இரு சாரார். தேவியர் பெரும்பாலும் அரண்மனையை விட்டு நீங்கார். அவருட் பட்டத்துத் தேவியென்னும் கோப்பெருந்தேவி மட்டும், ஓலக்க விருக்கை யிலும் உலாவருகையிலும் இயற்கை வளங் காணலிலும் உடனிருப்பதுண்டு. வானிலை நன்றாயிருக்கும் நாள்தோறும் சாயுங்காலம் பூஞ்சோலையிலும் பொறிப்படைக் குளத்திலும் அரசனுடன் விளையாடும் இளமங்கையரே தோழிமார் எனப்படுவார். அவர் உயர்நிலைப் பணிப் பெண்களாவார்; பொறிப்படைக் குளம் இலவந்திகை யெனப்படும். ``தேரிற் றுகளைத் திருந்திழையார் பூங்குழலின் வேரிப் புனனனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப் புக்கிருந்தா லன்ன பொழில்'' (நள. 22) ``நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம் ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநற் பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து'' (நள. 25) என்னும் பாட்டுகளை நோக்குக. இனி, அரசனது காமநுகர்ச்சிக் கென்றே, அவன் பெற்றோரால் இளமையிலேயே ஒதுக்கப்பெற்ற மகளிரும் பண்டிருந்தனர். இதை, ``குரவர்கள் இவனறியாமையே இவனுரிமை இதுவெனவும், இவன் யானையுங் குதிரையும் இவையெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்து வைத்துத் தாம் வழங்கித் துய்ப்ப வென்பது. அவ்வகையே குரவர்களான் இவனுரிமையென்றே வளர்க்கப்பட்டாராகலான் தலைமகளை எய்துவதன் முன் உளரென்பது'' என்னும் இறையனாரகப் பொருளுரையால் (40ஆம் நூற்பாவுரை) அறிந்துகொள்க. அமைச்சனின் நால்வகைத் தகுதிகளும் பின்வருமாறு ஆய்ந்து தெளியப்படும். 1. அறத்தேர்வு ``ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே'' (புறம். 164) என்றோ, ``ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம்'' (தனிப்பாடல்) என்றோ, `களைகணற்ற ஓர் இளஞ்சூலி, அயலூரினின்று இங்கு வந்து இவ்வூர்க் கோடியிற் கருவுயிர்க்க ஈன் வலி கொண்டு தன்னந் தனியாய் நிற்கின்றாள்' என்றோ, `வெள்ளத்தால் வீடிழந்த ஓர் ஏழைக் குடும்பம் தெருவில் திண்டாடி நிற்கின்றது' என்றோ, பிறவாறோ, ஒருவனைக் கொண்டு சொல்வித்துத் தேரப்படு வானின் மனநிலையை அறிதல். 2. பொருள் தேர்வு அமைச்சப் பதவிக்குத் தேரப்படுவானை, ஒரு திருநாளில் ஏழை மாந்தர்க்கெல்லாம் உணவளிக்குமாறோ, படைத் துறைக்கு வேண்டிய யானை குதிரைகளை வாங்கிவருமாறோ, பெருந்தொகைப் பணத்தை ஒப்படைத்து, அல்லது ஒரு பெருவருவாய்க் கோவிலை மேற்பார்க்கும் முதுகேள்வியாக அமர்த்தி, அல்லது பெரும்பொருள் செலவாகும் ஒரு வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்தி, பின்னர்க் கணக்குக் கேட்டுப் பொருட்டுறை வாய்மையறிதல். 3. இன்பத் தேர்வு அரசனின் தேவியரல்லாத உரிமை மகளிருள் ஒருத்தியோ, மாதவி போலும் ஆடல் பாடல்வல்ல அழகியான ஒரு கணிகையோ, காதல் திருமுகம் வரைவதுபோற் பொய்யான ஓர் ஓலைவிடுத்து, ஆய்விற்குரிய வனை நள்ளிரவில் ஓர் இடத்திற்குத் தன்னந்தனியாக வருவித்து, அல்லது ஓர் அழகிய பணிப்பெண்ணை ஏதேனுமொரு வகையில் அவனொடு தனியாகப் பழகுவித்து, அவனது ஒழுக்கத்தை யறிதல். 4. உயிரச்சத் தேர்வு பகைவேந்தன் பெரும்படையொடு போருக்கு வந்து நகர்ப்புறத்துத் தங்கியிருப்பதால், உடனே அவன் ஆட்சியை ஒப்புக்கொள்ள வேண்டும், அல்லது ஊரைவிட்டு ஓடிப்போதல் வேண்டும் என்றோ, பகைவேந்தன் பாளையத்திற்குட் சென்று வேய்வு பார்த்து வரவேண்டுமென்றோ, அரண்மனை வினைஞரைக் கொண்டு சொல்வித்து, ஆயப்படுவானுக்குச் சாவிற்கச்சம் உண்மையின்மையை அறிதல். அமைச்சன் தூதுரைத்தற்கும் உரியனாதலாலும், ``இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது'' (குறள். 690) என்று திருவள்ளுவர் கூறியிருத்தலாலும், உயிரச்சத் தேர்வும் அமைச்சனை யமர்த்துதற்கு வேண்டுவதேயாம். அமைச்சன் அரசனுங் குடிகளுமாகிய இருசாரார் நலத்தையும் பேணவேண்டி யிருப்பதால், பரிமேலழகர் அரசன் நலத்தையே நோக்கிக் கூறும் நால்வகைத் தேர்திறங்களும், குறைவுள்ளனவும் இயற்கைக்கு மாறானவுமாம். அறத்தேர்வு, அரசனை மட்டும் நோக்கியதாயின், மூத்தோனாகிய செங்குட்டுவனிருக்கவும் இளையோனாகிய இளங்கோவின் முகத்தில் ஆளும் பொறியுள்ளதாக உடற்குறி நூலான் கூறியதைச் சொல்லிக் கருத்தறிதலும்; அரசனையுங் குடிகளையும் நோக்கியதாயின், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆராயாது கோவலனைக் கொல்வித்ததைக் கூறிக் கருத்தறிதலும்; ஆகும். பரிமேலழகர்க்கு முந்திய மணக்குடவரும் பரிப்பெருமாளும் `உயிரச்சம்' என்ற பாடமே கொண்டிருப்பதால், ``பிறரெல்லாம் இதனை `உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்'' என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. பரிதியாரும் காலிங்கருமே `உயிரெச்சம்' என்று பாடமோதி, அதற்கு வீடு (மோட்சம்) என்று பொருள் கொண்டனர். பிறப்பிறப்பின்றி நிலையாக உயிர் எஞ்சி நிற்பது உயிரெச்சம் என்று, பொருட்கரணியங் கொண்டதாகத் தெரிகின்றது. ``செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து'', (குறள். 112) ``தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும்'', (குறள். 114) ``மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை'' (குறள். 456) முதலிய குறள்கள் `உயிரெச்சம்' என்னும் பாடத்திற்கு ஓரளவு துணை செய்யு மேனும், `உயிரச்சம்' என்னும் பாடமே பல்லாற்றானுஞ் சிறந்ததும் உத்திக்கு ஒத்ததும் தமிழிற்கு ஏற்றதுமாகும். ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல்'' கொள்ளுமுன்பே பாண்டியர்குடி நிலைபெற்றிருந்ததனாலும், 955ஆம் குறளிற் `பழங்குடி' என்பதற்குத் ``தொன்றுதொட்டு வருகின்ற குடி'' என்று பொருள்கூறி, ``தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்,'' என்று பரி மேலழகரே எடுத்துக்காட்டியிருத்தலாலும், கி.மு. 4ஆம் நூற்றாண்டின ரான சாணக்கியர், பண்டைத் தமிழ்நூல்களினின்றே அமைச்சரைத் தேரும் நால்வகைத் தேர்வுகளையறிந்து, அவற்றிற்கு `உபதா' என்று பெயரிட் டிருத்தல் வேண்டும். `உபதா' என்னுஞ் சொற்கு மேலிடுதல், சுமத்துதல், கள்ளம், திருக்கு, நடிப்பு, ஆய்வு என்றே பொருள். நாற்பொருளையும் முப்பாலிற் கூறும் அறநூல்களேயன்றி, அரசியலைத் தனிப்படக் கூறும் பொருள் நூல்களும் பண்டைத் தமிழிலக்கியத்திலிருந்தமை, ``ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள'' என்னும் தனிப்பாடலால் அறியப்படும். பொருள்நூலையே அர்த்தசாத்திரம் என மொழிபெயர்த்துக் கொண்டனர் வடமொழியாளர். வேதகாலத்திலேயே வடநாட்டாரியர் தென்னாட்டுத் தமிழரொடு தொடர்பு கொண்டிருந்தமையை, P.T. சீநிவாசையங்கார் எழுதிய `தமிழர் வரலாறு' (History of the Tamils) என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக. (பக். 17-35). இதுகாறுங் கூறியவற்றால், இக் குறள் முற்றுந் தமிழ்க் கருத்தே கொண்டுள்ளதென்றும், ``இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம்......... தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.'' என்று பரிமேலழகர் கூறியுள்ளது துணிச்சலான ஆரியக் குறும்புத்தனம் என்றும் அறிந்துகொள்க. இவ் வுரைவிளக்கம் என் தி.த.ம. உரையில் விடப்பட்டுப் போயிற்று. - ``செந்தமிழ்ச் செல்வி'' மே 1970 6 அரசுறுப்பு பல்வகைக் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்து அரசியல் நூலார், அரசியலமைப்பில் நாட்டை (State) உடம்பாகக் கொண்டு ஆள்நிலம் (Territory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sovereignty), ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தை அதன் உறுப்பாக்குவர். செங்கோல் அல்லது கொடுங்கோல் கொண்ட கோவரசே (Monarchy) வழங்கிவந்த முற்காலத்தில், பேரறிஞரான திருவள்ளுவர் அரசிய லமைப்பில் அரசனையே உடம்பாகக்கொண்டு, படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு'' (குறள். 381) என்று, படை குடி பொருள் அமைச்சு நட்பு அரண் ஆறையும் அவனுக்கு உறுப்பாகக் கூறினர். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே அவர் கூறிய அரசின் இயல்வரையறை, இன்னும் பொருத்தமாயும் பொருள் பொதிந்ததாயு மிருப்பது, அவரின் பல்துறைக் கல்வியையும் பரந்த நோக்கையும் ஆழ்ந்த எண்ணத்தையும் கூர்த்த மதியையும், காட்டப் போதிய சான்றாகின்றது. அரசுறுப்பு ஆறென்று குறளிற் கூறினும், உண்மையில் ஏழென்பதே ஆசிரியர் உள்ளக் கருத்து. நாடில்லாது குடியிருக்க முடியாததாகலின், நாட்டைக் குடியுள் அடக்கியே அரசுறுப்பு ஆறென்றார். நாடு என்பது ஒரு தனியுறுப்பாகவே, நாடு என்னுந் தலைப்புக்கொண்ட 74ஆம் அதிகாரத்தில் அவர் கூறியிருத்தல் காண்க. குடியின்றி நாடிருக்கலாம். ஆயின் நாடின்றிக் குடி இருக்க முடியாது. இவ் வெளிய வுண்மையைத் திருவள்ளுவர் அறியாதிருந்திருப்பின், திருக்குறளையே இயற்றியிருக்க முடியாது. மேலும், நாடு என்றே ஒரு தனியதிகாரம் பின்னர் வகுத்திருப்பதால், முன்னுக்குப் பின் முரணாகவும் முடியும். ஓரதிகாரம் முழுவதையும் தலைப்புடன் கவனியாது போவதும், இயலுஞ் செயலன்று. திருவள்ளுவமாலையிற் போக்கியார் பாடல், ``அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துருவல் லரணிரண்டொன் றென்கூ - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை'' என்றே, பொதுவாக வெளியிடப்பெற்று வந்திருக்கின்றது. ஆறும் உடையான் அரசருள் ஏறு என்று திருவள்ளுவர் எண்வரம்பிட்டுக் கூறி யிருப்பதனாலும், அரண் நாட்டின் கூறாதலாலும், நாடு முழுதும் அரணமையவுங் கூடுமாதலாலும், நாட்டை அரணுள் அடக்கிப் போக்கியார் அங்ஙனம் பாடினரென்று, பெரும்பாலர் கருதலாம். ஆயின், சேலங்கல்லூரி மேனாள் தமிழ் விரிவுரையாளர் திரு. நடேச அந்தணனார் இயற்றிய திருக்குறள் திறவு - பொருட்பால் இறைமாட்சி என்னும் அரிய ஆராய்ச்சி நூலில், போக்கியார் பாடலாக, அரசிய லையைந் தமைச்சிய லீரைந் துரைநா டரண்பொரு ளொவ்வொன் - றுரைசால் படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று குடியெழுபான் றொக்கபொருட் கூறு என்னும் அருமையான பாவேறுபாடே காட்டப்பட்டுள்ளது. இதுவே சரியான பாடமாக இருத்தல் வேண்டும். திருக்குறட் பதிப்புகளெல்லாவற்றிலுமுள்ள பாடத்தில், இருவியல் என்னும் தனிச்சீர் இலக்கணப்படி ஈரியல் என்றிருத்தல் வேண்டும். அதைச் செய்யுள் திரிபென்று கொள்ளினும், அக் கொள்கை அத்துணைச் சிறந்ததாகத் தோன்றவில்லை. ஆதலால், திரு. நடேச அந்தணனார் கொண்ட பாடத்தையே இனிப் பதிப்பிப்போரெல்லாம் மேற்கொள்வாராக. திருவள்ளுவர் கூறிய அரசுறுப்புகளுள், கூழ் (பொருள்), நட்பு என்னும் இரண்டும் மிக முதன்மையாகக் கவனிக்கத்தக்கவை, இந்தியா உலகப் பெருநாடுகளுள் ஒன்றாயிருப்பினும், தனக்குப் போதிய உணவுப் பொருளின்மையால், அமெரிக்காவிற்கும் ஏனை நாடுகட்கும் சென்று கையேந்த வேண்டியுள்ளது. சில பெருநாடுகட்குப் போதிய உணவுப் பொருளிருப்பினும், கைத்தொழிற் கருவிப் பொருட்குப் பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையுள்ளது. இனி, அமெரிக்காவும் இரசியாவும் எத்துணை வல்லரசுகளா யிருப்பினும், ஒன்றிய நாட்டினங்கள் (United Nations) என்னும் அமைப்பு ஏற்பட்டபின்னும், அதற்குள்ளேயே; வட அத்திலாந்திய உடன்படிக்கை யமைப்பு (N.A.T.O.) என்றும், தென்கிழக்கு ஆசிய உடன்படிக்கை யமைப்பு (S.E.A.T.O.) என்றும், நடுவ உடன்படிக்கையமைப்பு (C.T.O.) என்றும், இன்னும் பிறவாலும், எத்துணையோ கூட்டு நட்புகளைத் தோற்றுவித்துக் கொண்டுள்ளன. இனி, ஆப்பிரிக்க நாடுகளும் அரபிய நாடுகளும் பிறவும் தம்முட் செய்துகொண்டிருக்கும் நட்புடன்படிக்கைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம், ஒற்றுமைக்காக ஏற்பட்ட உலகமைப்பு ஒன்றா நாட்டினங்கள் (Disunited Nations) என்று சொல்லு மாறே, உலக நாடுகளின் போக்கு இருந்துவருகின்றது. திங்களையடைந்து தன் அறிவியல் (Scientific), கம்மியல் (Technological) வளர்ச்சியின் தலைத்திறத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவும், எவ்வெந் நாட்டொடு எவ்வெவ்வகையில் நட்புப் பூணலாமென்று சூழ்வதிலும், சூழ்ச்சிமுடிபை நிறைவேற்றுவதிலுமே, கண்ணுங் கருத்துமாயிருந்து வருகின்றது. இவ் விருபதாம் நூற்றாண்டிலும், ஒரு மாபெரு வல்லரசு, ``வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்'' (குறள்.471) என்பதற்கேற்ப, தன் வாழ்விற்குத் துணைவலியை இன்றியமையாததாகக் கருதின், ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்காலத்தில், நட்பு எத்துணைச் சிறந்த அரசுறுப்பா யிருந்திருத்தல் வேண்டுமென்பதை எண்ணிக் காண்க. இனி, ஒரு நாட்டின் நிலைமை, சூழ்நிலைக்கேற்ப அடிக்கடி மாறிக் கொண்டு வருவதால், கோன்மை என்பது நிலைத்தவுறுப்பன்று. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு'' (குறள்.735) என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒற்றுமை என்பதும் அவர்க்குத் தெரியாததன்று. இன்று மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியிருப்பதாலும், தமிழம் என்பது மொழி இலக்கியம், பண்பாடு முதலியவற்றில் தனிப் பட்டதாதலாலும், எதிர்காலத் தமிழக அரசு புத்தம் புதிய முறையில் அமைதல் வேண்டும். அதுவும், திருவள்ளுவ நெறிப்பட்டதே யென்பது, மண்ணில் விண் என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். - ``தமிழம்'' 1.11.1972 7 பாவினம் வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள இயைபுபற்றிய திரிபுணர்ச்சி களுள், பிற்காலத் தமிழ்நூல்களிற் பெருவழக்கான பாவினங்கள் வடமொழி யாப்புவழிப்பட்டன வென்பது மொன்றாம். அஃது எத்துணை உண்மை யென ஈண்டாராய்வாம்: துறை தாழிசை விருத்தமென்னும் மூவகைப் பாவினங்களுள் விருத்த மொன்றே வடமொழிப் பெயரால் வழங்குவதாகும். அஃதூஉம் பெயரான் மட்டும் வடமொழியே யன்றி யாப்பானன்று. மூவகைப் பாவினங்களுள் துறை தாழிசை யென்னு மிரண்டுந் தமிழாயிருக்க, ஏனையொன்று மட்டும் வடமொழியாயிருத்தல் எங்ஙனம்? ஏனை மொழிகட்கெல்லாமில்லாத பரந்த யாப்பிலக்கணம் தமிழிலிருக்கவும், வடமொழியாப்பை வேண்டிற்றென்றல் விந்தையிலும் விந்தையே. ``வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்'' என்றார் சிவஞான முனிவரரும். ஆங்கில யாப்புப் பலவகைப் பாக் கூறுமேனும் தமிழ்போல அத்துணைப் பரந்துபட்டதன்று. ஒரு மொழியானது காலஞ் செல்லச் செல்ல, அவ்வக் காலத்து மக்கள் இயல்பிற்கும் அறிவிற்கு மேற்றவாறு இலக்கியத்தினும் இலக்கணத்தினும் திரிதல் இயல்பே. அங்ஙனம் தமிழ் யாப்பும் சங்க காலத்திற் பாவாயிருந்து பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்தது. எல்லாப் பாவினங்களும் கலிப்பாவினின்றே தோன்றியவாகும். வெண்பா, ஆசிரியப்பா என்னு மிரண்டும் பெரும்பாலும் வரம்பிறவாதன. வஞ்சிப்பாவும் மருட்பாவும் கலப்புப் பாக்களேனும், அவையும் அவற்றுக் கோதியவாறு ஒருவகை வரம்புபட்டனவே. ஆனால், கலிப்பாவோ ஒரு கட்டின்றி எல்லாவடியானும் எல்லா வோசையானும் பற்பல வுறுப்புப் பெற்று வரம்பிகந்து வருவதாகும். அதனுள்ளும் கொச்சகக்கலியோ ஏனைக் கலிகட்குரிய சீரும் எல்லையும் இகந்து, ``தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது'' ஆயும், ``தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று'' (தொல். சொல். 148) வதாயும் பற்பலவாற்றான் மிக்குங் குறைந்துந் திரிந்தும் வருவதாகும். கொச்சகக்கலியுள் ஒருவகையே பரிபாடலென்க. இற்றைத் தமிழ்நூல்கட்கெல்லாம் முன்னூலாகிய தொல்காப்பியத்தில் பாவினம் கூறப்படாவிடினும், அவற்றின் தோற்றத்திற்குக் காரணமான இயல்களை ஆங்காங்குக் காணலாம். துறை: துறையென்பது தொல்காப்பியத்துள், ``வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே'' என ஒருவகைப் பாடாண் செய்யுட்குப் பெயராக வந்துள்ளது. அது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும். அது கடவுள் வாழ்த்துப்பற்றி வரும் ஒருவகைக் கலிப்பா. வண்ண மென்பதே கலிப்பாவையுங் கடவுள் வாழ்த்தையு முணர்த்தும். ``மூவா முதலா'' என்னும் சீவகசிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை, முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதி யென்றனர் நச்சினார்க்கினியர். பாடாண்டிணை தெய்வம் பராவல், மக்களேத்தல் என்னும் இருபாற் பட்டு வரும். தெய்வம் பராவல் பெரும்பாலும் கலிப்பாவாலேயே வரும். தெய்வத்தின் பல குணங்களையும் திருவிளையாடல்களையும் வடிவுகளை யும் வண்ணித்துப் புகழ்தற்குக் கலியுறுப்புகள் போலப் பிற பாக்கள் சிறவாமை காண்க. ஒத்தாழிசைக்கலி இருவகையென்று கூறி அவற்றுள் ஒன்று, ``தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே'' (தொல். சொல். 133) என்றார் தொல்காப்பியர். சிந்தாமணியினுஞ் சிலப்பதிகாரத்தும் தெய்வம் பராவுஞ் செய்யுள்க ளெல்லாம் ஒருபோகும் கொச்சகமுமாகக் கலிப்பாக்களாகவே வந்தன. இவ் வழக்குப் பற்றியே தெய்வம் பராவும் கொச்சகங்கள் தேவபாணி, பெருந் தேவபாணி யெனப்படுவன. கலம்பகத்திற் கடவுள் வாழ்த்துக் கொச்சக ஒருபோகாற் கூறப் படுவதுங் காண்க. அராகம், அம்போதரங்கம் முதலிய கலியுறுப்புகள் கடவுள் வாழ்த்திற்கே சிறப்பாயுரியன. இனி, துறையென்பது புறத்திணையியலில் திணைப் பிரிவாகவுங் கூறப்பட்டுள்ளது. அதனுரையில், ``மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்க மாதலிற் றுறையென்றார், எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல் போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறை யுட்பகுதிகளெல்லாம் விரித்துக் கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறை யென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்து விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பல பொருட்பகுதியும் உடையவென்று உணர்த்துவதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும், ஒரு செய்யுட் பல பொருள் விராஅய் வரினும் ஒரு துறை யாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட்பகுதியும் ஒரு துறையாதலும் ஒரு செய்யுளுட் பல துறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப் படுதலுங் கொள்க'' ``அவ்வம் மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயலான் மரபொடு முடியின் அத்திறம் தானே துறையெனப் படுமே'' (தொல். செய். 200) என்பது செய்யுளியல். இதனால் துறையென்பது பொதுவாய்த் திணைப் பிரிவும் சிறப்பாய் அகத்திணைப்பிரிவு மென்பது பெற்றோம். அகத்திணைக்குச் சிறந்த கோவை நூல்களுள் அகப்பொருட் டுறைகளெல்லாம் கலிப்பாவாலேயே கூறப்படுவன. இதனாற் கலித்துறை யெனப் பெயர் பெற்றது. கலியென்பது செய்யுளையும் துறை யென்பது அகப்பொருட் பிரிவையு முணர்த்தும். கலிப்பாவாற் கூறப்படும் அகப் பொருட்டுறை யென்பது விரிந்த பொருள். கலிப்பாவால் அகப்பொருள் கூறப்படுதலை, ``யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது'' என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று'' என்று நச்சினார்க்கினியர் கூறுவதானும், கலித்தொகையானும், கலியின் திரிபாகிய பரிபாடல், ``கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும்'' எனப்படுதலானும், தலைவனுந் தலைவியும் உறழ்ந்து கூறும் உறழ்கலியானும் அறிந்து கொள்க. ஆகவே, துறையென்பதற்குரிய செந்துறைப் பாடாண் பகுதி, அகப்பொருட்டுறை என்னும் இருபொருளினும் பெரும்பான்மை வழங்குஞ் செய்யுள் கலியே யென்றும், அகப்பொருளில் வரும் கோவைச் செய்யுள் அளவொத்த நெடிலடி நான்கென்றும் அறிந்துகொள்க. நச்சினார்க்கினியர் செந்துறைப் பாடாண் பகுதியாகக் கூறிய சிந்தா மணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நெடிலடி நான்காகவே நிகழ்வது காண்க. தாழிசை ``இனித் தாழிசை யென்பது கலிப்பாவுறுப்பென்பது வெள்ளிடை. அது தாழம்பட்ட ஓசையாய் வருதலாற் றாழிசையெனப்பட்டது. அது தரவகப்பட்ட மரபினதாய் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவரும். கொச்சகக் கலியாயின் தனித்தும், பலவாயும், பிறவுறுப்பின்றியும் வரும். மூன்று தாழிசை ஒத்துவரின் ஒத்தாழிசைக் கலியாம். ஒத்தாழிசையை ஒ+தாழிசை யென்று பிரித்து ஒத்தாழிசை யெனக் கூறாது, ஒத்து + ஆழிசை என்று பிரித்து ஒத்து ஆழ்ந்த ஓசையென்றார் நச்சினார்க்கினியர். ஒரு தொடர்புபட்ட பொருளைக் கூறுமிடத்து, ஒத்த நியாயங் களையும் நிகழ்ச்சிகளையுங் கூறுதற்குத் தாழிசை போலச் சிறந்த உறுப்புப் பிறிதிலது. விருத்தம் இனி விருத்த மென்பது யாதோவெனின் அது ஒருவகை யாப்பாம். அது தமிழில் மண்டில மெனப்படும். ``ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப'' என்னுஞ் சூத்திரவுரையில், ``நாற்சீரடி முரற்கைபடத் துள்ளி வருதலே யன்றித் தாழம்பட்ட வோசை பெற்றும் வருமென்றார். இனி நாற்சீரடியாய் வருமாசிரியமும் வெண்பாவும் ஈற்றயலடியும் ஈற்றடியும் முச்சீராய் வருமென முன் விதித்தவை ஒருகால் நாற்சீராயும் வருமென்றற்கு மண்டில யாப்பென்றார். அது மண்டில வாசிரியப்பாவும் மண்டில வெண்பாவுமாம். ``வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியா ங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே'' (குறுந். 18) எனவும், ``அறையருவி யாடாள் தினைப்புனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்று'' எனவும் மண்டலித்து வந்தன'' என்றார் நச்சினார்க்கினியர். மண்டலித்தல் வட்டமாதல். அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லிற் பிறந்த வினை. மண்டலம் மண்டிலமென மருவியும் வரும். மண்டலிப்பாம்பு, சுரமண்டலம், திங்கண்மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச்சாரி) முதலியன வட்டமென்னும் வடிவுப் பொருளில் வந்தன. மண்டலம், வட்டமென்னும் சொற்கள் circle என்னும் ஆங்கிலச் சொற்போல இடப்பகுதிகளையுங் குறிக்கும். ஜயங்கொண்ட சோழமண்டலம் இந்த வட்டத்திற்குள் அவற்கெதிரில்லை வட்டமென்பது வட்டகை வட்டார மென்றும் திரியும். மருத்துவ முறையில் நாற்பத்தெண்ணாட் பகுதி ஒரு மண்டல மெனப்படும். காலமு மிடத்தோ டொக்கும். இனி மண்டலம், வட்டமென்னும் சொற்கள் முழுமைப் பொருளினும் வழங்கும். திங்கள் வட்டமாயிருக்குங்கால் பதினாறு கலைகளும் நிரம்பி யிருத்தல் காண்க. ஆங்கிலத்தும் round என்னும் சொல் whole, complete எனப் பொருள்படும். உலக வழக்கில் முழுமைப் பொருளில் ‘tŸËJ’ என்றோர் சொல் வழங்கிவருகின்றது. அது வட்டம் என்னும் சொல்போல வள் என்னும் பகுதியினின்று பிறந்ததாகும். வள்ளிதாய்ச் செலவாயிற்று என்றால் முழுதும் செலவாயிற்றென்பது பொருள். வள்ளிசாய் என்பது கொச்சைப் போலி. மண்டலம் என்னுந் தொகைச்சொல், மண் + தலம் என விரியும். பண்டைத் தமிழர் கடற்செலவில் தேர்ந்திருந்தாராதலின், உலகெங்கும் கலத்திற் சென்று நிலம் வட்டமாயிருத்தலை நன்கறிந்திருந்தனர். பண்டையுலகத்தை ஏழ் தீவாகப் பகுத்துக் கூறினதும் இதை வற்புறுத்தும். தீவு - கண்டம். வடவைக் கனலை (Aurora Borealis) அறிந்திருந்ததும் மற்றோராதாரம். இலத்தீன் (Latin), ஆங்கிலம் முதலிய மொழிகளிற் கடற்றுறை பற்றிய சொற்கள் பல செந்தமிழாயிருப்பதும் இதற்குச் சிறந்ததோர் சான்றாம். நாவாய் - L. navis, E. navy = கடற்படை. கலம் - E. galleon வாரணம் - L. marina. Skt. வருணா கரை - E. shore. sh = க படகு - E. bark. r = d. c.f. Coorg = குடகு கட்டுமரம் - catamaran சோழி - shell நங்கூரம் - anchor கப்பல் - ship இது நிற்க. இனி நாற்சீரால் நிரம்பிவரும் அளவடியை மண்டில யாப்பென்றார். நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (தொல். பொருள். 344) என்பது சூத்திரம். இதனால் இயற்சீரால் துள்ளலிசைபற்றி அளவடி நான்காய்த் தனித்து வருங் கொச்சகக் கலியுறுப்புக் கலிமண்டிலமாயிற்று. மண்டிலம் பிற்காலத்தில் விருத்தமென்னும் வடமொழிப் பரியாயப் பெயரால் வழங்கலாயிற்று. ஆகவே துறை, தாழிசை, விருத்த மென்னும் மூவகைப் பாவினமும் கலிப்பாவானமை பெறப்பட்டது. இவற்றைப் பிற்காலத்தார் பொதுவாகக் கொண்டு, வரம்பு கடந்து வரூஉம் கொச்சகக் கலிகளையெல்லாம் ஒருபுடை யொப்புமைபற்றி ஒவ்வோர் பாவிற்கும் மும்மூன் றினமாகப் பகுத்துரைத்தார். கலிப்பாப் பலவகை யடிகளானும் உறுப்புக் குறைந்தும் மிக்கும் வருமென்பது முன்னரே கூறப்பட்டது. அதினுங் கொச்சகக் கலியோ கலிப்பாவிற் கின்றியமையாத துள்ளலிசையுங் கெட்டு வருவதாகும். கலித்தல் துள்ளல். இரண்டடி அளவொத்துச் செந்துறைப் பாடாண் பாட்டாய் வருவதை அடித்தொகைபற்றிக் குறட்கினமாக்கி வெண்செந்துறை யென்றனர். எ-டு : ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. 3 அடிமுதல் 7 அடிவரை முன்நீண்டு பின்குறுகிவரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஈறு குறைதல்பற்றி வெண்பாவிற் கினமாக்கி வெண்டுறை என்றனர். 4 அடியாய் எருத்தடி நைந்தும், குட்டம் பட்டும், இடை மடக்கியும் ஆசிரிய வியலான் வரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஆசிரியத் துறை யென்றனர். இடைமடக்கல் அம்மானைக் கியல்பென்க. கோவையில் வரும் கலித்துறைச் செய்யுளை எழுத்தெண்ணிக் கட்டளைக் கலித்துறை யென்றனர். குறளடி நான்காய் வரும் செந்துறைப் பாடாண்பாட்டை அடிவகை பற்றி வஞ்சித்துறை யென்றனர். கலிப்பாவில் அம்போதரங்க வுறுப்புச் சிந்தடி குறளடிகளும் பெற்றுவரும். இனித் தாழிசைக்குச் சிறப்பிலக்கணம், தாழம்பட்ட ஓசையாய் அளவொத்து மூன்று அடுக்கி வருதல். இரண்டடியாய் இறுதியடி குறைந்து வருவதைக் குறட்டாழிசை யென்றும், மூன்றடியாய் ஈற்றடி சிந்தடியாய் வருவதை வெண்டாழிசை யென்றும், மூன்று நேரடியாய் அளவொத்து மண்டில வாசிரியம்போல் வருவதை ஆசிரியத்தாழிசை யென்றும், குறளடி நான்காய் வருவதை வஞ்சித்தாழிசை யென்றுங் கூறினர். இவையெல்லாம் ஒருபொருண்மேல் மூன்றடுக்கியும் தனித்தும் வருவனவாம். இனி, விருத்தத்திற்குச் சிறப்பிலக்கணம் அளவொத்த நாலடியாய் மண்டலித்து வருதல்; அதாவது நிரம்பி வருதல். 3 அடியாயும் 4 அடியாயும் மண்டலித்து வெண்பாவியலிற் றனிச் சொற்பெற்று வருவதை வெளிவிருத்த மென்றும், கலிவிருத்தமும், கலித்துறையும் அளவடியாயும் நெடிலடியாயும் வருதலின் அவற்றுக்கு மேல் கழிநெடிலடியாய் ஆசிரியத் தளைதட்டு வருவதை ஆசிரிய விருத்த மென்றும், வஞ்சிப்பாவிற்கு நிரம்பின அடி சிந்தடி யாதலின் சிந்தடியாய் வருவதை வஞ்சிவிருத்த மென்றுங் கூறினர். கலிப்பாவில் அராக வுறுப்புக் கழிநெடிலடியானும் வரப்பெறும். அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே எழுசீ ரடியே முடுகியல் நடக்கும் என்பவை சூத்திரம். ஆசிரிய விருத்தம் பிற்காலத்தில் பிறதளையும் தட்டு வந்தது. விருத்தங்கட் கெல்லாம் நாலடி யளவொத்திருத்தல் பொது விலக்கண மாம். அடிகள் பலவகைப்படுமேனும் நாற்சீரடி அளவாயினாற்போல, பாக்கள் பற்பல அடித்தொகை பெறுமேனும் நாலடிச் செய்யுள் அளவாயிற்று. மோனை எதுகை முதலிய தொடைகட்கும் இசைநிறைவிற்கும் அடியுள் நாற்சீரடி சிறத்தல் போலச் செய்யுளில் நாலடிச் செய்யுள் சிறப்பதாகும். இதனானே வெண்பா பலவடியாய் வருமேனும் நாலடி வெண்பா பெருவழக்காயிற்று. பிற்காலத்துச் செய்யுள்களெல்லாம் பெரும்பாலும் நாலடியாலேயே நடப்பவையாயின. நாற்சீரால் அடிநிரம்பி மண்டில மாயினாற்போல, நாலடியாலும் செய்யுள் நிரம்பி ஒருவகை மண்டில மாயிற்றென்க. விருத்தங்களில், 26 வரை எழுத்துப்பெற்று வருபவற்றை விருத்த மென்றும், அதற்குமேல் தாண்டி வருபவற்றைத் தாண்டக மென்றும், இவை சந்தமாக வரின் சந்தவிருத்தம், சந்தத் தாண்டக மென்றுங் கூறினர். இங்ஙன மெல்லாம் ஒரு பாவிற்குரிய பலவுறுப்புகளைப் பிற பாக்கட் கினமாக்கியதால், ஓரினம் பிறவினமாயும், ஒரு செய்யுள் பல பாவிற்கின மாயும் வருதற்கேற்று, இன்ன செய்யுளென்றொன்றைத் துணியாது மயங்குதற் கிடனாயிற்று. மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே (சீவக. 1) என்னும் சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளுரையில், நச்சினார்க் கினியர், இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமு மாதலானும்... அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந் நூலிற் கூறிய விலக்கணமே இதற் கிலக்கண மென்றுணர்க. இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம். இனி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனமென்ப. அந் நூல்கள் இனமென்று காட்டிய வுதாரணங்கடாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது, ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும், தாழிசையை விருத்தமாகவும், ஓதுதற்கு அவை யேற் றமையானும், மூவா முதலா என்னுங் கவி முதலியன தாழம்பட்ட ஓசையான் விருத்தமாகவும், சீர் வரையறையானும் மிகத் துள்ளிய வோசையானும் துறையாயுங் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யென்னல்வேண்டும். அது கூறவே துறையும் விருத்தமுமெனப் பகுத் தோதிய இலக்கணம் நிரம்பாதா மாகலானும் இனமென்றல் பொருத்தமின்று. இச் செய்யுள்களின் ஓசை வேற்றுமையும் மிக்குங் குறைந்தும் வருவனவும் கலிக்கே யேற்றலிற் கொச்சகமென் றடங்கின எனக் கூறியுள்ளார். இங்ஙனமே கலிவிருத்தம் துள்ளலிசையாற் கலியினமாயும், சீர்வகையானும் அடிவகையானும், நிலைமண்டில வாசிரியமாயும், நாலசைச் சீர்கொள்ளின், குறளடி வஞ்சிப்பாவாயும் கூறுதற் கேற்றுவருதலும், கட்டளைக்கலிப்பாத் துள்ளலிசையாற் கலிப்பாவாயும் சீர்வகையானும் அடிவகையானும் ஆசிரிய விருத்தமாயுங் கூறுதற் கேற்றுவருதலும் கண்டுகொள்க. இதுகாறுங் கூறியவற்றால், பாவின மூன்றுந் தமிழ் யாப்பேயென்றும், அவை கொச்சகக்கலியின் திரிபென்றும், பின்னூலார் அவற்றைப் பன்னிரு பாவினமாகப் பகுத்துக் காட்டினரென்றும், சாலை, பண்ணை முதலிய தமிழ்ச் சொற்கள் மறைந்து ரோடு (இங்கிலீஷ்), ஜமீன்தார் (இந்துஸ்தானி) முதலிய அயற்சொற்கள் வழங்கினாற்போல, மண்டிலமென்னும் தென்சொல் மறைந்து விருத்தமென்னும் வடசொல் வழங்கிற்றென்றும், இலக்கணம் நிரம்பிய பாவியற்றும் அருமை நோக்கிச் சங்ககாலத்திற்குப் பின்னோர் எளிய யாப்பான இனங்களை யியற்றினரென்றும், அவற்றுட் சிறப்புப்பற்றி மண்டிலயாப்புப் பெருவழக்காயிற்றென்றும் தெள்ளிதின் அறிந்துகொள்க. வடமொழி விருத்தம் குறளடியானும் வருமேனும், விருத்தமல்லது வேறியாப்பு ஆண்டின்மையானும், அவை பெரும்பாலும் தமிழோ டொப்புமை யுடைமையானும், பிற்றைத் தமிழ் யாப்பில் விருத்தமே பெருவழக் கானமையானும், தமிழியற்கெல்லாம் தகாது வடநூல்வழி கற்பிக்குமாறு அத்துணை இயைபு அவ் விருமொழிக்கும் ஆனபின்னர் மண்டில மென்னும் பெயர் மறைந்து விருத்தமென்னும் பெயர் வேரூன்றிய தென்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' மடங்கல் 1933 8 அகத்தியர் ஆரியரா? தமிழரா? மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் இந்துமகா சமுத்திரத்தில் ஒரு காலத் தமிழ்ந்துபோன நிலப்பரப்பே (Lemuria) என்பது, Hackel, Slater, Thurston முதலிய மேனாட்டுப் பண்டிதர்களின் உய்த்துணர்வு. திருநெல் வேலிக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு (குமரிநாடு) முற்காலத்தி லிருந்ததென்பது தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு, கலித்தொகை, திருவாசகம், சிவதருமோத்தரம், கந்தபுராணம் முதலிய நூல்களால் அறியக் கிடக்கின்றது. அந் நிலப்பரப்பில் பேசப்பட்ட மொழியே உலக முதன்மொழி யென்றும், அதினின்றும் கிளைத்தவையே ஏனைய மொழிகளெல்லா மென்றும் Hackel பண்டிதர் மானிக்கிறார். உலகத்தில் மகன் தோன்றினது குரங்கினின்றென்பது Darwin, Hackel முதலியோர் கருத்து. அஃறிணை உயிர்களில் மனிதனுக்கு அடுத்தது குரங்கென்பது யாவர்க்கும் தெரிந்த செய்தி. குரங்குகளிற் சில சிறப்பறிவுள்ள இனங்கள் ஆதியில் தென்னாட்டில் இருந்ததாக இராமா யணத்தாற் றெரிய வருகின்றது. இதுபற்றியே Darwin முதலியோர் கருத்தும் எழுந்ததாகும். தமிழிலும் குரங்கு வானரமென்று சொல்லப்படும். வால்+நரம்= வானரம், வாலையுடைய மனிதனென்பது பொருள். ஆனால் குரங்கி னின்றும் உண்டானானென்பது தவறான கொள்கையே. குமரிநாடு தமிழ்நாடாதலாலும், அதில் பேசப்பட்டது தமிழாதலாலும் தமிழரே முதன் மக்கள் வகுப்பினரென்றும், தமிழே முதன்மொழி யென்றும் பெறப்படும். உலகத்தில் மக்களுண்டான காலமாவது தமிழுண்டான காலமாவது இதுவென வரையறுத்துக் கூற ஏலாதவாறு அத்துணைத் தொன்மைத்தாயிருக்கின்றது. ஒரு மதிப்பாய்ச் சொல்லுவதானால் கி.மு. 10,000 என்று சொல்லலாம். மக்கள் பல்கினவுடன் பலமுறை கூட்டங் கூட்டமாக வடமேற்கே சென்று மேலாசியாவிற் குடியேறினதாகத் தெரிகின்றது. பைபிள் என்னும் கிறிஸ்தவ மறையில் ஆதியாகமத்தில்(கி.மு. 5000) மேலாசியாவில் கிளர்ந்த ஒரு பெரு வெள்ள வரலாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின், பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தன. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் சிநேயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். (ஆதி. 11 : 1, 2) என்றிருக்கின்றது. இதிற் குறிக்கப்பட்டது தமிழர் வடமேற்கே சென்ற பல செலவுகளில் ஒன்றாதல் வேண்டும். காலஞ் செல்லச் செல்லப் பலவகைத் திரிபுகளினால் தமிழினின்றும் பலவகை மொழிகள் கிளைத்தன. இந்து தேசத்தில் தெற்கினின்றும் வடக்கே போகப்போகக் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயு மிருக்கும். பின்பு மேற்கே செல்லச் செல்லத் தனிமொழிகளாய் மாறிவிடும். ஆயினும் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் மாறாமலே யிருக்கும். தமிழர் வடமேற்கே போய்க் குடியேறினர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும். இதை யறியாதார் வடநாட்டு மொழிகளிற் பல தமிழ்ச்சொற்களுண்மை பற்றித் தமிழர் வடக்கேயிருந்து வந்தவரெனத் தடுமாறி யுரைப்பர். எல்லா மொழிகளும் இயற்கை, இயற்கையி லியற்கை, செயற்கை, செயற்கையிற் செயற்கை என நாற்பாற்படும். அவற்றுள் தமிழ் ஒன்றுமே இயற்கையி லியற்கை. தெலுங்கு கன்னடம் முதலியவை இயற்கை. எபிரேயம், இலத்தீன் முதலியவை செயற்கை. சமற்கிருதம் ஒன்றும் செயற்கையிற் செயற்கை. மேனாட்டு அரசுகள் எல்லாவற்றுக்கும் முந்தியது ôj«(the Jewish). அதற்குப் பிந்தியது பாபிலோனியம். பாபிலோனில் நாகரிகத்தைப் பரவச் செய்தவர் சுமேரியர் என்னும் தமிழ் வகுப்பாரென்று பிரித்தானியப் பொருட்காட்சிச் சாலையிலிருந்த ஹால் (Hall) என்பவர் கண்டுபிடித்திருக் கின்றார். சுமேரியர் நாகரிகத் தமிழரும் அவர்க்கு முன்சென்ற ஏனையோர் அநாகரிகத் தமிழருமாவர். பாபிலோனியத்திற்குப் பிந்தியது கிரேக்க ஆரியவரசு. வடமொழியாரியர் இந்து தேசத்தில்(கி.மு. 3000) குடியேறினபோது வடுகு மட்டும் வடநாடுகளில் வழங்கிற்று. வடுப்பட்ட தமிழ் வடுகு. தெலுங்கு என்ற பெயர் மிகப் பிந்தினது. வடுகு முதலாவது கொடுந்தமிழாயிருந்து பின்பு(கி.மு. 3000) கிளைமொழியாய்ப் பிரிந்துவிட்டது. ஆரியர் இந்தியாவுக்கு வரும்போது அநாகரிகரா யிருந்தனர். "ஆரியர் மிலேச்சர் என்பது திவாகரம். சமற்கிருதம் செருமானிய மொழியைச் சார்ந்ததென்று முன் கட்டுரையில் மொழிந்தாம். மேனாட்டு மொழிகட்கெல்லாம் உயிர்மெய் எழுத்துமுறை முதலியன இல்லாததுபோல வடமொழிக்கும் இல்லா திருந்தன. பின்பு தமிழைப் பின்பற்றியே அவை வடமொழிக்கு வகுக்கப் பட்டன. இதை வடமொழியும் தென்மொழியும் என்னுமோர் கட்டுரையில் விரிவாய் விளக்குவாம். ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின், வடநாட்டில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொற்கள் வடமொழியில் மிகுதியாய்க் கலந்தன. ஆரியர் ஆரிய வர்க்கத்திலிருந்துகொண்டு பல தேவதோத்திரத் திரட்டாகிய வேதங்களை யியற்றினார்கள். பிற நூல்களெல்லாம் பெரும்பாலும் தமிழ்ச் சார்பிற் பிறந்தவை. ஆரிய வரவுக்கு முன்னரே தமிழர் முத்தமிழிலும் பல கலை களிலும் கைத்தொழில்களிலும் தலைசிறந்திருந்தனர். சிற்பம், கம்மியம், ஓவியம், கண்ணுள் வினை (Painting) முதலிய நுண்டொழில்களைக் கற்க யவன (கிரேக்க)ரும் சோனக (துலுக்க)ரும் வந்திருந்தனர். பின்பு தமிழ் தலை தாழ்ந்தது. காரணம் யாதோ அறிகிலம். பாண்டியர் தமிழ்ப் புலவரை ஆதரித்திலர் போலும். தமிழ்நூல்கள் பயிலப்படாது ஏட்டுச் சுவடிகளாய் மட்டுமிருந்தன. அக்காலை வந்தார் அகத்தியர்(கி.மு. 2500). அகத்தியத் தமிழ்க் கிளர்ச்சி (The Augustian Revival of Tamil Literature) அகத்தியர் என்னும் பெயர் அகஸ்தியர் என்னும் வடமொழிப் பெயரின் தற்பவம். விந்தமலையை அடக்கினவர் என்று அதற்குப் பொருள் கூறுவர். தமிழரோ செந்தமிழ்ப் பெயராகக் கொண்டு தமிழுக்கு அகத்திய மானவர் என்று பொருளுரைப்பர். அகத்தியர் தென்னாடடைந்ததைப்பற்றிப் பல வரலாறுகளுள. அவற்றுள் இரண்டு வருமாறு: 1. கைலாயத்தில் சிவபெருமான் திருமணத்திற்காகத் தேவரெல்லாங் கூடியபோது வடதிசை தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது. அன்று பூமியைச் சமப்படுத்துவதற்காகத் தேவர் வேண்டுகோட்படி சிவபெருமான் கட்டளை பெற்றுத் தெற்கே சென்ற அகத்தியர், தென்னாட்டில் தமிழர் வினவும் வினாக்கட்கு விடை யளிக்குமாறு சிவபெருமானிடம் தமிழ் கற்றுப் பொதியமலை சென்று அங்கு வதிந்தனர்.இதனால் அகத்தியர் தமிழரல்ல ரென்பதும், அகத்தியருக்கு முன்பே தமிழிருந்த தென்பதும் பெறப்படும். 2. ஒரு காலத்தில் காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தார் அகத்தியரை அவமதித்தனர். அதனால் அவர் மாறுகொண்டு முருகனிடம் சென்று வரங்கிடந்தனர். முருகன் அவர்க்குக் காட்சியளித்துச் சில ஏட்டுச் சுவடிகளைக் காட்டி, அவற்றால் தமிழை வளர்க்குமாறு பணித்தனர். அகத்தியர் அங்ஙனமே அச் சுவடிகளைக் கொண்டுபோய்ப் பொதியத்தி லிருந்து தமிழை வளர்த்தார். இதனால் அகத்தியர்க்கு முன்பே தமிழ் நூல்கள் ஒரு முறை கல்வி வழக்கற்றிருந்தனவென்றும், அகத்தியர் அவற்றை ஆராய்ந்து தமிழ் வளர்த்தா ரென்றும் அறியப்படும். ஆரியம் அக் காலத்தில் மிகத் திருந்தாமலும் நிரம்பிய நூல்களில்லா மலுமிருந்ததே அகத்தியர் தமிழைக் கற்றதற்குச் சிறந்த காரணமா யிருத்தல் வேண்டும். அதோடு உச்சரிப் பருமையாலும் வடமொழி உலக வழக்கிற்கு ஏற்றதாயில்லை. அகத்தியர் தென்னாடடைந்தபோது குமரிநாட்டைக் கடல் கொள்ளவில்லை. அதன் தெற்கில் பஃறுளியாறும் மேற்கில் குமரிமலையும் வடக்கில் குமரியாறு மிருந்தன. பஃறுளி யாற்றங்கரையில் தென்மதுரை யிருந்தது. அதுவே அற்றைப் பாண்டியன் தலைநகர். அகத்தியர் முதனூல்களைத் தழுவித் தம் பெயரால் அகத்தியமெனப் பெயரிய ஒரு பெருநூலைச் செய்தார். அது முத்தமிழையுங் கூறும் பன்னீராயிரஞ் சூத்திரங் கொண்டது. அதன் பெருமைபற்றி அதைப் பேரகத்தியமென்பது வழக்கம். இதை யறியாதார் சிற்றகத்தியமும் ஒன்றிருந்ததெனச் சாதிப்பர். அங்ஙன மாயின் ஒரு முதுபூரணரும் ஒரு சிற்றாசிரியரும் ஒரு சிறுகதையு மிருந்திருத்தல் வேண்டும். சிறப்பியல்புபற்றி இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை வழக்காற்றிலு முண்டு. (cf. Akbar the Great; Queen Victoria the Good). இப்போது பேரகத்தியத்திரட்டு என வழங்கும் நூலிலுள்ள சூத்திரங்களிற் பல அகத்தியத்தைச் சார்ந்தனவல்ல; பிற்காலத்துச் சேர்க்கப்பட்டவை; ஆதலின் ஆராய்ச்சிக்காகா. அகத்தியர் தமிழை வளர்க்குமாறு ஒரு சங்கம்(கழகம்) நிறுவி அதை ஆதரிக்கும்படி பாண்டியனை வேண்டினார். அவனும் ஆதரித்தனன். அதுவே தலைச்சங்கம். அஃது இருந்தது தென்மதுரை. அதற்கிலக்கணம் அகத்தியம். அதன் இறுதிக் காலத்தில் தொல்காப்பியர், அவிநயர் முதலிய பன்னிருவர் அகத்தியரிடம் தமிழ் பயின்றனர். அவருட் பெரும்பாலார் ஆரியர். தலைச்சங்கத்தில் அகத்தியர் இருந்தது மகேந்திர(குமரி) மலை. அங்கிருந்தே சிவபெருமானிடம் ஆகமங்களைக் கேட்டறிந்ததாகத் தெரி கிறது. பின்பு குமரிநாட்டின் இடைப்பகுதியைக் கடல் கொண்டது. (தென் பாகம் சிறிது காலமிருந்து பின்பு கடலில் அமிழ்ந்தது. அதுவே சூரபதுமன் ஆண்ட இடம். வடபாகம் இராமாயணத்திற்குப் பின்பு அமிழ்ந்ததாகத் தெரிகிறது.) குமரிநாட்டைக் கடல்கொண்ட பின் பாண்டியன் தலைநகர் பொருநை (தாமிரபரணி) முகத்திலிருந்த கபாடபுரத்திற்கு மாற்றப்பட்டது. அகத்தியரும் தமது இருக்கையைப் பொதிய மலைக்கு மாற்றிக்கொண்டார். பொதியம் என்பது பொதியில் என்பதன் மரூஉ. பொது+இல் = பொதியில் = அம்பலம். (இலக்கணப்போலி.) அக்காலத்து ஆசிரியரெல்லாம் முனிவராதலின் மலைகளே இருக்கைகளா யிருந்தன. பொதியிலுக்கு மறுபெயர் மலையம். மலை என்னும் பொதுப்பெயரே அம் சாரியை பெற்றுப் பொதியிலைச் சிறப்பாய்க் குறிக்கும். பொதுப்பெயர் சிறப்புப் பொருளைச் சுட்டுவதை மலரடி என்னும் தொடரிற் காண்க. மலர் என்றது தாமரை மலரை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் அக்காலத்தில் குடமலை யெனப்பட்டன. மகேந்திரமும் பொதியமும் குடமலைப் பகுதிகளாகும். குடதிசையிலிருந்ததுபற்றி அகத்தியர் குடமுனிவர் எனப்பட்டார். அதை யுணராதார் குடத்திற் பிறந்தவரென்று புராணங் கட்டிவிட்டனர். அதன் பின்பு கும்பமுனி, கலசமுனி என அதன் இனமொழிகளாலும் பெயர் வழங்கத் தலைப்பட்டன. கபாடபுரத்தில் இடைச்சங்கம் நிறுவப்பட்டது. தொல்காப்பியர் முதலிய அகத்தியர் மாணவர் பன்னிருவரும் தலைமை பெற்றிருந்தனர். அகத்தியமும் (தலைச்சங்கத்திற்கும் இடைச்சங்கத்திற்கும் இடையில் தொல்காப்பியர் செய்த) தொல்காப்பியமும் இலக்கணமாயின. அகத்தியர் இடைச்சங்கத்தில் நீடித்திருக்கவில்லை. அகத்தியமும் அங்ஙனமே. தலைச்சங்க காலத்தில் மக்கட்கு அறிவும் ஆற்றலும் ஆயுளும் அதிகமா யிருந்ததினால் முத்தமிழும் ஒருங்கு பயிலப்பட்டன. இடைச்சங்க காலத்தில் அவை மிகக் குறுகினதினால் முத்தமிழ் வேறுவேறு பிரிந்தன. இடைச்சங்கம் இராமாயண காலம் (கி.மு. 2000). வடமொழியில் முதற்காவியம் வான்மீகியிராமாயணம். வான்மீகியும் இராமரும் சம காலத்தவர். இராமர் தென்றிசைக்குச் சென்றபோது அகத்தியரிடம் வில்லம்பு பெற்றனர். அகத்தியர் தம் இசையறிவால் இராவணனை வென்று அவனைத் தமிழ்நாட்டிற் காலிடாவண்ணம் செய்திருந்தார். சுக்கிரீவன் சீதையைத் தேடுமாறு அனுமானைத் தென்றிசைக் கனுப்பும்போது, ...... அவ்வாறே ஆந்திரம், புண்டரம், சோளம், பாண்டியம், கேரளம் முதலிய நாடுகளையும் காண்பீர்கள்..... அந்த மலயமலையின் சிகரத்திலே ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியையுடைய முனி சிரேஷ்டரான அகத்தியரைக் காண்பீர்கள்..... அதைவிட்டு அப்பாற் சென்றால் முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய பொன்மயமான பாண்டிய நாட்டின் கதவைக் காண்பீர்கள். (இதுவே கபாடபுரம்.) அதன்பின் தென் சமுத்திரத்தை யடைந்து பின்பு செய்யவேண்டியதை நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின்கண்ணே மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளை யுடையதும், பொன்மயமானதும், நானாவித மரங்களும் கொடிகளும் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டம் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை முழுகிக் கிடக்கின்றது என்று சொன்னதாக வால்மீகியிராமாயணம் (மொழிபெயர்ப்பு) கிஷ்கிந்தா காண்டத்திற் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் ஜமதக்கினியின் புதல்வரென்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். ஜமதக்கினி பரசுராமரின் தந்தை. பரசுராமரும் இராமரும் சமகாலத்தவர். ஆகவே எவ்விதத்திலும் இடைச்சங்க காலமே இராமாயண காலமாதலறிக. அகத்தியர் இராமாயண காலத்துக்கு முன்பே தென்னாடு வந்தவர். இக்காலத்திற் றெரியும் தமிழிலக்கணிகள் எல்லாரிலும் முற்பட்டவராதல்பற்றி அவரைத் தமிழரென்று சொல்லுதல் பொருந்தாது. அகத்தியர் காலத்தி லிருந்து தமிழை வளர்த்தவர் பெரும்பாலும் ஆரியரேயாவர். அவர்க்குத் தமிழே தாய்மொழியாயிற்று. (கடைச்சங்கத்தில் நக்கீரனார் கபிலர் முதலிய அந்தணரே தலைமை பெற்றிருந்தனர். இற்றைப் பார்ப்பனரோ தம் முன்னோர் செய்த நன்றியை யெல்லாம் சிதைத்து வருகின்றனர்.) கடைச்சங்க காலத்திற்குப் பின், பல பாண்டியரிருந்தும் எங்ஙனம் தமிழை வளர்த்தி லரோ, அங்ஙனம் தலைச்சங்கத்துக்கு முன்னும் பல பாண்டியர் தமிழை வளர்த்திலர். அகத்தியர்க்கு நெடுங்காலத்திற்கு முன்னர்தான் தமிழரே தமிழை ஆதரித்திருக்க வேண்டும். - ``செந்தமிழ்ச் செல்வி'' கன்னி 1931 9 தமிழ் மன்னர் பெயர் பண்டைத் தமிழ் மன்னர்க்குப் பல பெயர்கள் வழங்கினும் அவற்றுட் பாண்டியன், சோழன், சேரன் என்பவை மிக முதுமையும், முதன்மையும் பற்றியவாகும். பாண்டியன், சோழன், சேரன் என்பதே கால முறையாயினும், இசைவுபற்றிச் சேரன், சோழன், பாண்டியன் எனத் தலைமாற்றிக் கூறப்படும். தமிழரசர் கொடிவழிகள் ஆரிய வருகைக்கு முன்னமே தமிழ் நாட்டிலிருந்தும், அவற்றின் பெயர்கட்கு வடமொழி மூலங்காட்டினார் கால்டுவெல் கண்காணியார். மேனாட்டறிஞர் எத்துணையோ ஆராய்ச்சி வன்மையும், நடுவுநிலைமையும் உடையரேனும், இந்திய மொழிகளெல்லாம் வடமொழிவழி யென்னுமோர் தவற்றெண்ணம் அவர் மனத்திற் குடிகொண் டமையின், அவராராய்ச்சி சிற்சிலவிடத்துப் பயன்பட்டிலது. சேர சோழ பாண்டியர் தமிழ் மன்னரா யிருப்பவும் அவர்க்குப் பெயர் வடமொழி யினின்று வந்தன வென்பது எங்ஙனம் பொருந்தும்? ஆரிய மரபினரா யிருந்திருப்பினன்றோ அவர்க்கு ஆரியப் பெயர் வழங்கி யிருக்கும்? சேர சோழ பாண்டியப் பெயர்கள் சேர சோழ பாண்டிய ரென்று அசோகக் கல்வெட்டி லிருக்கின்றனவென்பது ஆரிய வழிக்கு ஆதாரமாகுமா? ழகரம் தெலுங்கிலும், வடமொழியிலும் டகரமாய்த் திரியும். எ-டு : தெலுங்கு வடமொழி கோழி - கோடி நாழி - நாடி கிழங்கு - கெட்டா பீழை - பீட நாளம் = மூங்கில். நாளி - மூங்கிலாற் செய்யப்பட்ட படி. இக்காலத்தும் மூங்கிற் படிகளைச் சிற்றூர்களிலும், சிறு கடைகளிலும் காணலாம். நாளி - நாழி. சீகாளி - சீகாழி. சோழன் என்பது சோடன் என்பதன் திரிபென்றும், நாழி என்பது நாடி என்பதன் திரிபென்றும், தமிழர் என்பது திரவிடர் என்பதன் திரிபென்றும், பாண்டியன் என்பது பாண்டுவினின்றும் திரிந்ததென்றும் கூறுவர் கால்டுவெல் கண்காணியார். மெய்யெழுத்துகள் ரகரத்தோடு சேர்ந்து மொழிமுதல் நிற்பது வட மொழியிற் பெரும்பான்மை. அதன்படி த என்பது த்ர என்றாகும். மகரத்திற்கு வகரம் போலியாகும். எ-டு : குமி - குவி. மிஞ்சு - விஞ்சு. ழ வடமொழியில் ட ஆகும். இங்ஙனம் தமிழ் என்னும் சொல் வட மொழியில் த்ரவிட என்றாகும். தமிழகம் என்னும் சொல் கிறித்துவுக்குப் பன்னூறாண்டிற்கு முன்னரே மேலை நாடுகளில் Damurica - Lemurica - Lemuria என்று பலவாறு திரிந்து வழங்கி யிருப்பவும், அதற்குப் பின் இந்தியாவிற்கு வந்த ஆரிய வாய்ச்சொல்லின் திரிபென்பது சற்றும் பொருந்தாது. தமிழ் மன்னர் பெயர் வடமொழிப் பழங் காவியங்களாகிய பாரத இராமாயணங்களிற் கூறப்பட்டுள. உதியன் என்னும் ஓர் சேரநாட் டரசன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியமைபற்றிப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று பழந்தமிழ் நூல்களிற் பாராட்டப்படுகின்றான். வான்மீகி இராமாயணத்திற் றமிழ் மன்னரைப் பற்றிய குறிப்பு, பிற்காலத் திடைச் செருகலென்று சிலர் புறக்கணிக்கலாம். இராமர் தெற்கே வந்து அகத்தியரைக் கண்டதை எவரும் மறுக்கார். அகத்திய ருண்மையானே பாண்டிய னுண்மையும் அறியப்படும். பாரதத்திற்கு முன்னமே பாண்டிய னுண்மை இராமாயணத்தால் விளங்காவிடினும், கிறித்துவுக்கு முன்னைய மேனாட்டுப் பூமி சாத்திரிகள் குறித்துள்ள தமிழகப் படங்களானும், பிரித்தானியப் பொருட்காட்சிச்சாலைத் தலைவர், Dr. ஹால் என்பவர் பாபிலோனியக் குடைபொருள்கள்பற்றிக் கூறியுள்ள ஆராய்ச்சி யுரையானும் விளங்குவ தாகும். பாண்டு, பாண்டியன் என்னும் பெயரொப்புமை பற்றியும், பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை வந்தபோது பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதைபற்றியும், மகாவம்சம் என்னும் இலங்கைச் சரித்திர நூலில் பாண்டியன் என்னும் பெயர் பாண்டி, பாண்டு எனத் திரிந்திருப்பது பற்றியும் ஆரியர் வருகைக்கு முன்னமே வழங்கிய பழந் தமிழ்ப் பெயராகிய பாண்டியன் என்பதை, பாண்டு என்பதினின்றும் திரிந்த பாண்டவன் என்னும் தத்திதாந்தத் திரிபென்று கூறுவது மொட்டைத் தலைக்கும், முழங்காற்கும் முடிபோட்ட தொக்கு மன்றோ? பாண்டியன், சோழன், சேரன் என்னும் பெயர்கள் வடமொழியாயின், வடமொழியில் அவற்றிற்குப் பொருளிருத்தல் வேண்டும். பாண்டியப் பெயர்க்குக் கூறும் வடமொழிப் பொருள் சரித்திர வாயிலாய் மறுக்கப் பட்டது. சோழசேரப் பெயர்கட்குப் பொருந்தப் புளுகும் பொருளும் வடமொழியி லில்லை. இனி, இத் தமிழ் மன்னர் பெயர்கள் தமிழ்ச் சொற்களாயின் அவற்றிற்குப் பொருள் என்னை யெனிற் கூறுதும்: 1. பாண்டியன் - பாண்டியன் = பாண்டி + அன். பாண்டி என்பது வட்டமென்னும் பொருளிலேயே வழங்கப்பட் டுள்ளது. பாண்டி, ஒரு விளையாட்டு. ஓட்டை, வட்டமாக நறுக்கி நிலத்தில் அரங்கு கீறி எறிந்து விளையாடுவது. வட்டமாக நறுக்கப்பட்ட ஓடு வட்டு எனப்படும். வட்டு என்பது கருவியாகுபெயராய் அதைக் கொண்டு ஆடும் விளையாட்டையும் உணர்த்தும். கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் (நற். 3) வட்டு என்பதன் பரியாயப் பெயராகவே பாண்டி யென்பது தென்னாட்டில் வழங்குகின்றது. தொட்டி, புட்டி, விட்டி என்பன தொட்டில், புட்டில், விட்டில் என்று நின்றாற்போல, பாண்டி என்பதும் பாண்டில் என நிற்கும். பாண்டில் = வட்டம். பாண்டில் என்பது வட்டம் என்னும் மூலப் பொருள்பற்றியே பல பொருள்களை யுணர்த்தும். பாண்டில் = 1. அகல், வட்டமாயிருப்பது. 2. காளை, வட்டமாய் அல்லது உருண்டிருப்பது. 3. கைத்தாளம், வட்டமா யிருப்பது. 4. நாடு. ஒரு நாட்டை அல்லது நாட்டுப் பகுதியை வட்டம், வட்டகை, வட்டாரம் என்று சொல்வது வழக்கு. மண்டலம் என்பதும் வட்டத்தின் பரியாயப் பெயரே. இங்கிலீஷிலும் `circle' என்று நாட்டுப் பகுதியைக் கூறுவர். 5. சக்கரம், வட்டமாயிருப்பது. 6. 1பண்டி (வண்டி). பண்டி யென்பது வண்டியென்பதன் திரிபு. ப-வ, போலி. வண்டி-வள் பகுதி, தி விகுதி. வள் + தி = வண்டி, வளைந்திருப்பது. வண்டி யென்பது முதலில் சக்கரத்தையும் பின்பு உறுப்பாகுபெயராய்ச் சகடத்தையும் குறிக்கும். பண்டி என்பதே பாண்டி, பாண்டில் எனத் திரியும். ``பாண்டில் எடுத்தபஃ றாமரை கீழும் பழனங்களே'' எனும் திருக்கோவை யடியில் பாண்டில் என்பது கிண்ணம் என்னும் பொருளில் தாமரைக் குவமையாய் வந்துள்ளது. கிண்ணம் வட்டமா யிருப்பது. வட்டம் என்னும் சொல் உருட்சியையும், திரட்சியையும் குறிக்கும். ஓர் உருண்டையின் பரப்புத் தூரத்தில் வட்டமாகவே தோன்றும். பாண்டியன் குதிரைக்குக் கனவட்டம் என்று பெயர். ஓர் இளைஞனை இளவட்டம் என்பர் தென்னாட்டார். வட்டம் என்பதைப் போலவே அதன் பரியாயப் பெயராகிய பாண்டில் என்பதும் உருட்சியும், திரட்சியுமாகிய பொருள்களை யுணர்த்தும். பாண்டில், உருட்சியான ஒரு காளையை யுணர்த்துவது போல உருட்சியான ஒரு வீரனையும் உணர்த்தும். காளை என்னும் பெயர் உவமையாகுபெயராய் வீரனைக் குறிப்பது செய்யுளிற் பெருவழக்கு. தென் னாட்டார் காளை என்னும் பெயரைத் தம் சிறார்க்கிடுவது இன்றும் வழக்கம். இப்போதுள்ள சிவகிரி ஜமீன்தார் அவர்களின் பெயர் செந்தட்டிக் காளைப் பாண்டியன் என்பது. ஆகவே பாண்டி யென்பதற்கு ``வீரன்* என்பதே பொருளாம். அஃது அன் விகுதி பெற்றுப் பாண்டியன் என நிற்கும். பாண்டியன் வீரத்தைச் சங்க நூல்களானும், ``பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே'' என்னும் புகழேந்தியார் கூற்றானு முணர்க. இனி, பாண்டியனுக்குரிய மறுபெயர்களாவன: செழியன் = செழிய நாட்டை யுடையவன். தென்னவன் = தென்னாட்டரசன். வழுதி = புலவரால் வழுத்தப்படுகின்றவன். மாறன் = பகைவரொடு மாறுகொண்டவன். மீனவன் = மீனக்கொடி யுடையவன். கைதவன் = தன் கையை வெட்டினவன்(பொற்கைப் பாண்டியன். அவனுக்குப் பின்னால் ஏற்பட்ட பெயர்.) பஞ்சவன் = ஐந்து சிற்றரசரை ஆண்டவன். (கல்வெட்டுகளையும், சரித்திரத்தையுங் காண்க.) முல்லை, குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலங்களை யுடையவன் என்று பொருள் கூறல் பொருந்தாது. கௌரியன் = கௌரியின் வழித்தோன்றல். கௌரி தடாதகைப் பிராட்டியாரான பார்வதி. சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில. 2. சோழன் : சோளம் - சோழம் - சோழம் + அன் = சோழன். சோளம் என்பது மக்காச்சோளம்; கள்ளர் வெட்டிச் சோளம் என்றும் கூறப்படும். மக்காச்சோளம் சோழநாட்டிலேயே சிறப்பாய் விளைகின்றது. பாண்டிநாட்டிற் பயிரிடப்படுவதேயில்லை. கொங்குநாட்டிலும், பிற சேர நாட்டுப் பகுதிகளிலும் விளைந்தாலும், சிற்றுண்டியாய்த் தின்னத்தக்க அவ்வளவு சிற்றளவாகவே விளைகின்றது. சோழநாட்டிற் கள்ளருக்குச் சிறந்த வுணவாகின்றது. கள்ளர் அதை மிகுதியாகப் பயிரிடுகின்றனர். அதனாலேயே கள்ளர்வெட்டிச் சோளம் எனப் பெயர் பெற்றது. கள்ளர் என்னும் வகுப்பார் சோழநாட்டிலன்றிப் பிற நாட்டிலில்லை. இதனாலும் சோளம் சோழநாட்டிற்கே சிறப்பென்பது பெறப்படும். தாவரப் பொருள்களால் இடங்கள் பெயர் பெறுவது சாதாரணம். எ-டு : பொழில் = (சோலை) உலகம். உலகமுழுதும் முன்காலத்தில் ஒரே சோலைபோல் தோன்றிற்று. நாவலந் தீவு = நாவன் மரம் மிகுந்த பரதகண்டம். நெல்வேலி, திருநெல்வேலி, நென்மேனி, நெல்லூர் முதலியன நெல் விளையும் இடங்கள். புளியம்பட்டி, புளியங்குடி, அத்திகுளம், வேப்பங்குளம், பனையூர், பனையடிப்பட்டி முதலியன மரங்களாற் பெற்ற பெயர்கள். எருக்கலங்குடி செடியாற் பெற்ற பெயர். இங்ஙனமே பிறவும். சோளம் விளையும் நாடு தானியாகுபெயராகச் சோளம் எனப்பட்டது. சோளம் சோழம் எனத் திரியும். ள-ழ. cf. தோள் + அன் = தோளன் = தோழன். தோள்போல் உதவுபவன் அல்லது தோளிற் கைபோடுபவன். சீகாளி - சீகாழி. யாளி - யாழ். நாளி - நாழி. தேளி - தேழி, தேள்போற் கொட்டுவது. சோழநாட்டை யுடையவன் சோழன். இனி, சோழனுக்குரிய மறுபெயர்களாவன : சென்னி = தலைவன், சென்னி = தலை. கிள்ளி = பகைவர் தலையைக் கிள்ளுபவன். அபயன் = பயத்தை நீக்குபவன், அடைக்கலந் தருபவன். வளவன் = வளநாட்டை யுடையவன். செம்பியன் = சிபியின் வழித்தோன்றல். சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில. 3. சேரன் : சாரல் - சேரல் - சேரன். தமிழ் வேந்தர் மூவருள்ளும் சேரனே மலைநாட்டை யுடையவன். சாரல் என்பது மலையின் அடிவாரத்தையும், மலைநாட்டையுங் குறிக்கும். பின்பு இடவாகுபெயராய் அம் மலைநாட்டை ஆள்பவனைக் குறித்தது. சாரல் என்பது சேரல் என்று திரியும். உக. சார் - சேர். சேரல் என்பது சேரன் என்று திரியும். ல-ன போலி. cf. மறன் - மறல், மறலி - எமன். திறன் - திறல். சேரல் என்பதே சேரன் பழம்பெயராகும். எ-டு : குடக்கோச் சேரல், மாந்தரஞ் சேரல். சேரல் + அன் = சேரலன் - கேரளன். ச-க, போலி. cf. சீர்த்தி - கீர்த்தி, சுலவு - குலவு. ல-ள, போலி cf. இறலி - இறளி, கசலி - கசளி. சேரன், கேரளன் என்பவை பிந்திய வடிவங்களாகும். அவற்றுள்ளும் மிகப் பிந்தியது கேரளன் என்பது. பண்டைத் தமிழ்நூல்களிலெல்லாம் சேரல் என்பதே பெருவழக்காய் வரும். பிற்காலத்துப் புராணங்களிலெல்லாம் கேரளன் என்பது பெருவழக்காய் வரும். சேரன் என்னும் பெயரொடு மான் என்னும் பெயர் சேர்த்துச் சேரமான் என்று வழங்குவதுமுண்டு. மான் என்பது மகன் என்பதன் திரிபு. பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான். இனிச் சேரனுக்குரிய பிற பெயர்களாவன : வில்லவன் - வில்லையுடையவன். கொங்கன் - கொங்குநாட்டை யுடையவன். குடக்கோ - குடநாட்டரசன். குடம் - மேற்கு. குட்டுவன் - குடநாட்டரசன். குடம் - குட்டம். குடகன் - குடநாட்டரசன். கோதை - (வில்லுக்காக) முன்கைத் தோற்கட்டுடையவன். உதியன் - உயர்ந்தவன், உயர்ந்த மலைநாடன். வானவன் - வானத்தை யளாவும் மலைநாடன். வானவரம்பன் - வானத்தை யளாவும் மலைநாடன். மலையமான் - மலைநாட்டரசன். சேய் - மலைத் தெய்வமாகிய முருகன் போன்றவன். சின்னமும், அங்கமும் பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் கூறாது விடப்பட்டன. இதுகாறுங் கூறியவற்றால் தமிழரும், தமிழரசரும் ஆரிய வருகைக்கு முன்பே, தமிழ்நாட்டி லிருந்தவர்களென்றும், அவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடிகளே யென்றும், அவர்கள் பெயர்களெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யென்றும், அவை வடமொழியிற் பலவாறு திரியுமென்றும், தமிழரசருள் பாண்டியன் காலத்தால் முற்பட்டவன் என்றும், சோழன் இடைப்பட்டவன் என்றும், சேரன் கடைப்பட்டவன் என்றும் தெரிந்து கொள்க. பாண்டியன் முற்பட்டவன் என்பது தமிழ்நாடன் என்னும் பெயரினாலும், சங்க வரலாற்றாலும், சரித்திரத்தினாலும், ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி' (சிலப். 11:19-22) என்னும் சிலப்பதிகார வடிகளாலும், முழுகின தமிழகமுண்மையிலும், மேனாட்டுக் குறிப்புகளாலும் அறியப்படும். முழுகின தமிழகம் பாண்டி நாட்டுப் பகுதியாகும். அதுவே மக்கள் முதன்முதற் றோன்றியவிடம். மக்கள் பெருகி வடக்கே வரவே சோழநாடு தோன்றிற்று. தென்றிசை யினின்றே மக்கள் ஆதியில் வடக்கே சென்று உலகமுழுதும் பரவினதாகச் சரித்திரம் கூறும். பல்வகைக் கலைகளும் இதற்குச் சான்று பகரும். சோழநாட்டின்பின் சேரநாடு தோன்றிற்று. சேரநாடு முதலாவது குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாட் டளவாயிருந்து பின்பு மேல் கரையும் சென்று தாவிற்று. தமிழ்மொழி பாண்டிநாட்டின் செந்தமிழாயிருந்ததும், வடக்கே சோழ நாட்டிற் சற்றுத் திரிந்ததும், அதை அடுத்து அதன் மேற்கே மிகத் திரிந்து கொடுந்தமிழானதும், கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் பாண்டியன் தமிழ்நாட்டில் தலைமை வகித்ததும், பின்பு சோழன் தலைமை வகித்ததும், பின்பு சேரன் செங்குட்டுவன் தலைமை வகித்ததும், பாண்டிய சோழ சேர முன்மை இடைமை பின்மைகளை யுணர்த்துவனவாகும். சங்ககாலத்தோடு தனித் தமிழரசு தலைதாழ்த்ததனால் அதற்குப் பிற்பட்ட சிற்றிடைச் சிறுபோதைத் தமிழரசக் கிளர்ச்சிகள் இங்குக் கொள்ளப் பட்டில. மேனாட்டுப் பழஞ் சரித்திர நூல்களில் தமிழரசரைப்பற்றிய குறிப்புகளிலெல்லாம் பாண்டியன் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. சோழநாடு வடக்கே வரவர விரிந்திருத்தலால் மக்கள் மேற்கே சென்று குடியேறினர் என்க. சேரநாட்டுத் தமிழ் தன் பெருந் திரிபினாலேயே வடமொழித் துணைகொண்டு மலையாளம் எனத் தனிமொழியாய்ப் பிரிந்தது. ஆதலால் பாண்டியன் பெயர் மிகப் பழைமையான தென்க - ``செந்தமிழ்ச் செல்வி'' கன்னி 1934 10 வேளாளர் பெயர்கள் எம்மொழியினும் சொற்களின் மூலப்பொருளை யுணர்தற்கு மொழி நூலறிவு இன்றியமையாததாகும். ஒருவர் எத்துணைப் பெரிய புலவரா யிருப்பினும் மொழிநூலறிவின்றி எல்லாச் சொற்கட்கும் உண்மைப் பொருள் கூறவொண்ணாது. தமிழில் வேளாண் குலத்திற்குரிய பெயர்களிற் சிலவற்றிற்குப் போலிப் பொருள்கள் கூறப்பட்டு வருகின்றன. அவற்றை விலக்குவதுடன் பிற பெயர்களையும் விளக்குவதற் கெழுந்ததிக் கட்டுரை. மக்கள் முதன்முதற் குறிஞ்சி நிலத்தினின்றே பிற நிலங்கட்கெல்லாஞ் சென்று பரவினர். அவருள் மருதநிலத்திற்கு வந்தவர் முல்லை வழியாய் வந்தனர். குறிஞ்சி கன்னிலமாதலின் அதையடுத்து மென்னிலமாகிய மருத மிருத்தல் இயலாது; வன்னிலமாகிய முல்லை யிடையிட்டே யிருக்கும். உழவுத்தொழில் குறிஞ்சிநிலத்தில் தினை விளைத்தலாகிய சிற்றளவில் தோன்றி, முல்லைநிலத்தில் புன்செய்க் கூலங்கள் விளைத்தலாக வளர்ந்து, மருதநிலத்தில் நன்செய்ப் பயிர்கள் விளைத்தலாக முதிர்ந்தது. மருதநிலத்தில் வந்து உழவுத்தொழில் ஒன்றையே சிறப்பாகச் செய்தவர்கள் உழவரென்றும், களத்தில் வேலை செய்தமையால் களம ரென்றும், பிற நிலத்தார் போலாது நிலையாய்க் குடியிருந்தமையால் குடியானவரென்றும் கூறப்பட்டனர். பின்பு நிலமிகுந்தவர்கள் பிறரைக் கொண்டு உழுவித்துண்டும், நிலங் குறைந்தவர்களும் அற்றவர்களும் தாமே உழுதுண்டும் வந்தனர். இவர் முறையே இற்றைப் பண்ணையாரும் (மிராஸ்தார்) பண்ணையாள்களும் போல்வர். இவர் பிற்காலத்தில் இருவேறு குலமாய்ப் பிரிந்தனர். இவரையே இருவகை வேளாளரென்று தொல்காப்பிய அகத்திணையியல் 30ஆம் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். இவருள் உழுதுண்பார் வெளியே சென்று வெயிலிற் காய்ந்து வேலை செய்து, கருத்திருந்தமையின் கருங்களம ரெனப்பட்டார். உழுவித்துண்பார் வீட்டில் அல்லது நிழலிலிருந்து வெளுத்திருந்தமையின் வெண்களம ரெனப்பட்டார். மக்கள் பல்வேறு குலங்களாய்ப் பகுக்கப்பட்டமைக்குத் தொழிலும் நிறமும் முக்கியக் காரணங்களாகும். மேலைக் குலநூல் வல்லார் உலக மக்களை ஐவகுப்பாய் வகுத்ததும் நிறம்பற்றியே. கைத்தொழிலிற் பயின்று கருத்த அல்லது உரத்த கைகளைக் கருங்கையென்று சொல்வது பண்டை வழக்கு. கருங்கை வினைஞர், கருங்கைக் கொல்லன் என்னும் நூல் வழக்குகளை நோக்குக. வெண்களமர் என்னுமிடத்து, வெண்மை என்பது மேனாட்டார் நிறம்போல மிகுவெண்மையைக் குறியாது பொன்மையை அல்லது வெளிறின செம்மையையே குறிப்பதாகும். ஆரியப் பிராமணர் வேளாள ரினும் வெளிறியிருப்பினும், அவர் (வடநாட்டினின்று) பிந்தி வந்தமை யாலும், இக்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஐரோப்பியர் போலத் தமிழரோடு கலவா திருந்தமையாலும், உழுவித்துண்ணும் வேளாளரை வெண்களமர் என்ற வழக்கு வீழ்ந்திலது. கருங்களமர், வெண்களமர் என்ற பெயர்கள் போன்றே, காராளர், வெள்ளாளர் என்ற பெயர்களும் நிறம்பற்றி முறையே இருவகை வேளாளர்க் கும் ஏற்பட்டன. இவற்றிற்குக் காரை (மேகத்தை) யாள்பவரென்றும், வெள்ளத்தை யாள்பவரென்றும் முறையே பொருள் கூறுவது பொருந்தாது. இவை பார்த்தமட்டில் அல்லது கேட்டமட்டில் பொருத்தமாய்த் தோன்றலாம். ஆனால், மொழிநூல் முறையில் ஆராய்ந்து பார்ப்பின் அவை போலி யென்பது புலனாம். காராளர் என்ற பெயர்ப்பொருளை அறிதற்கு, அதை அதற்கு எதிரான வெள்ளாளர் என்னும் பெயரோடு ஒப்புநோக்குதல் வேண்டும். மீண்டும், அவ் விரண்டையும் கருங்களமர், வெண்களமர் என்னும் பெயர்களுடன் ஒப்புநோக்குதல் வேண்டும். கருமை + ஆளர் = காராளர். இத் தொடரைக் காரா(கரும்பசு), காரரிசி, காரகில், காராடு முதலிய தொடர்களுடன் வைத்து நோக்குக. வெண்மை + ஆளர் = வெள்ளாளர். இத் தொடரை வெள்ளாடு, வெள்ளெருக்கு, வெள்ளானை, வெள் ளோலை முதலிய தொடர்களுடன் வைத்து நோக்குக. வெள்ளாளரை வெள்ளாம்பிள்ளை யென்பதும், அவர் குடியை வெள்ளாங்குடி யென்பதும் உலக வழக்கு. வெள்ளை என்னும் பெயர் இங்ஙனம் ஈறுகெட்டு ஆம் சாரியை பெற்றுச் சில தொடர்மொழிகளில் நிலைமொழியாவதை ``வெள்ளாங் குருகின் பிள்ளை'' என ஐங்குறு நூற்றிற்(16ஆம் பத்து) கொக்குக் குஞ்சினைக் கூறியதனின்றுங் கண்டு கொள்க. வேளாளர் என்னும் பெயர் வேறு. அது பின்னர்க் கூறப்படும். வெள்ளாண் மரபு, வேளாண் குலம் என்பவற்றில் ஆண் என்பது ஆள், என்பதன் திரிபு. ஆகையால், வெள்ளாம்பிள்ளை, வெள்ளாண் பிள்ளை என்னும் பெயர்கள் வெவ்வேறு இடைமொழியைப் பெற்றனவாகும். மருதநிலத்தில் மக்கள் குடியேறி நிலையாய் வாழ்ந்து, சிற்றூர் பேரூராகி நாகரிக மிக்கபின், உழவர் வகுப்பினின்றே அந்தணரும் அரசரும் வணிகரும் பல்வகைத் தொழிலாளரும் தோன்றினர். முதன்முதல் தமிழ்நாட்டில் அந்தணரென்றது, அறிவுமிக்கு உலகவாழ்வை வெறுத்து வீட்டுநெறியில் நின்ற துறவிகளை. அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்று திருக்குறளில் நீத்தார் பெருமையிற் கூறியது காண்க. அரசர் என்றது, வீரமும் நடுவுநிலையும் அறிவுஞ் சிறந்து அரசராய் நியமிக்கப்பட்டாரையும் அவர் குடும்பத்தினரையும். தமிழ்நாட்டில் அந்தணர், அரசர் என்னும் பகுப்பு, நிலையும் பதவியும் பற்றியதேயன்றி, பிராமணர், க்ஷத்திரியர் என்னும் ஆரியப் பகுப்புப் போலக் குலம் பற்றிய தன்று. ஆரியப் பிராமணர் சிறிது தொழிலொப்புமை பற்றியே பிற்காலத்தில் இனவிலக்கண(உபலக்ஷண)மாய் அந்தண ரெனப்பட்டனர். தமிழ்நாட்டில் (பிராமணரல்லாத) தமிழரெல்லாரும் ஒரு வகுப் பினின்று தோன்றினமை பற்றியே, வெள்ளாண் மரபுக்கு வேதம் என நாலடியார்ச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்று தமிழரெல்லாரையும் வெள்ளாண் மரபில் அடக்கிக் கூறுகின்றது. இனி, தலைமைபற்றி எனினுமாம். அந்தணர் அரசர் முதலாய நால்வகைக் குலங்களுந் தோன்றியபின், அவற்றின் பெயர் வரிசையிற் கடையிற் கூறப்படுவதுபற்றி, உழவர் கடைய ரென்றும் பின்னோரென்றுங் கூறப்பட்டனர். கடையர் என்பது பின்பு உழுதுண்பார்க்கே வழங்கி வந்தது. பலவகைத் தொழிலாளருள், உழவரே தொழிலும் தன்மையும்பற்றிச் சிறந்த பிள்ளைகளாய்(மக்களாய்) இருந்தமையின் பிள்ளைமார் என்றும், சிறந்த வினை செய்தமையின் வினைஞரென்றும், பிறர்க்கு வேளாண்மை (உபசாரம்) செய்தமையின் வேளாளரென்றும் கூறப்பட்டனர். ãŸis v‹gJ k¡fbshUik¥ bghJ¥bgauhjiy, ‘v‹d ãŸis!, மறப்பிள்ளை, ஆண்பிள்ளை என்னும் உலக வழக்குகளால் உணர்க. உழவு சிறந்த வினையாதலின், திருவள்ளுவர் உழவரைக் ``கைசெய்தூண் மாலை யவர்'' (குறள். 1035) என்றார். கை, செய்கை. வேளாளர் என்னும் பெயர் வேள் ஆளர் என்னும் இருசொல்லாய்ப் பிரிந்து, பிறரை விரும்பி உபசரிக்கும் மக்கள் எனப் பொருள்படுவதாகும். வேட்டல் விரும்பல். வேளாளரின் தன்மை வேளாண்மை. ``வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்'' என்றார் நல்லாதனார். ``காப்பாரே வேளாளர் காண்'' என்றார் கம்பர். வேளாண்மை என்னுஞ் சொல் ஆகுபெயராய் வேளாளர் தொழிலாகிய பயிர்த் தொழிலையுங் குறிக்கும். வெள்ளாண்மை, வெள்ளாமை என்பனவும் இங்ஙனமே. வெள்ளாளரின் தொழில் வெள்ளாண்மை. இச் சொல்லின் திரிபு வெள்ளாமை. வெள்ளாளன், வேளாளன் என்னும் பெயர்கட்கு மூலத்தில் யாதோர் இயைபுமின்று. வெள்ளாளன் என்னும் பெயர் வெள்ளாட்டி, வெள்ளாடிச்சி என்றும், வேளாளன் என்னும் பெயர் வேளாட்டி, வேளாட்டிச்சி என்றும் பெண்பால் கொள்ளும். அரசர் மனைகளிலும் பெருமக்கள் வீடுகளிலும், துப்புரவும் ஒழுக்கமும்பற்றிச் சில வேளாள வகுப்புப் பெண்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டமையின், வெள்ளாட்டி, வேளாட்டி என்னும் பெயர்கள் பணிப்பெண் எனவும் பொருள்படத் தலைப்பட்டன. கம்பர் வீட்டு வெள்ளாட்டி என்னுந் தொடரைக் காண்க. பண்டைத் தமிழரசர் போரிற் சிறைபிடித்த பகையரசர் மகளிரை விட்டுவைத்த சிறைக் களத்திற்குப் பணிப் பெண்களிருக்குமிடம் என்னும் பொருளிலேயே வேளம் எனப் பெய ரிட்டனர். உழவுக்கு எருதுகள் வேண்டியிருத்தலின், அதன்பொருட்டுச் சிறுபான்மை ஆநிரைகளைத் தொழுவங்களிற் காத்தமைபற்றி உழவர்க்குத் தொழுவர் என்னும் பெயரும் உண்டாவதாயிற்று. உழவர் உழவுத்தொழிலாலும் அரசர்க்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றுங் கூறப்பட்டார். மள்ளர் வீரர். மல்லர் என்பது மள்ளர் எனத் திரிந்தது. மல் என்பது வலிமை அல்லது போர். மல்லல் வளனே என்றார் தொல் காப்பியர். வளன் என்றது வலிமை மிகுதியை. வேளாளர்க்கு உழவு, போர் என்னும் இருதொழிலு மிருந்தமை, வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல். மரபு. 82) வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே (தொல். மரபு. 83) என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களா னறியப்படும். மள்ளர் என்னும் பெயர், களம்புகு மள்ளர்(கலித். 106), பொரு விறன் மள்ள(முருகாற்றுப்படை) என்னுமிடத்து வீரரையும், மள்ள ருழுபக டுரப்புவார்(கம்பரா. நாட். 18) என்னுமிடத்து உழவரையுங் குறித்தது. உழுவித்துண்ணும் வேளாளருட் சிலர் முற்காலத்தில் மிக உயர்நிலையி லிருந்தனர். அவருள் ஓர் ஊர் முழுதுமுடையவர் கிழார் என்றும், பல வூர்களையுடைய குறுநில மன்னர் வேளிர் என்றும் கூறப்பட்டார். சேவூர்க்கிழார் (சேக்கிழார்), கோவூர்க்கிழார், வேள்பாரி, வேள் ஆய் முதலிய பெயர்களை நோக்குக. கிழார் என்பது கிழவர் என்பதன் மரூஉ. கிழவர் தலைவர். கிழமை உரிமை. கிழவர் என்பது இக்காலத்தில் ஜமீன்தார் என்னும் பெயர்க்குச் சமமாகும். கிழான் என்னும் ஆண்பாற் பெயர் ஓர் ஊர் கிழாரின் குடியினருள் ஒவ்வொருவனுக்கும் வேளாளன் என்னும் பொதுப் பொருளில் வழங்கினதுமுண்டு. அதே பொருளில்தான் அஃது இன்று இந்தியிற் கிசான் என்று வழங்குகின்றது. சில பேரூர்க் கிழார்கள் அமைச்சரும் படைத்தலைவருமாகியும், அரசர்க்கு மகட்கொடை நேர்ந்தும் வேள் என்னும் பட்டம் பெற்றனர். அழுந்தூர் வேளும் நாங்கூர் வேளும் இதற்குதாரணமாவர். உழுவித்துண்ணும் வேளாளர்க்கு வணிகத் தொழிலுஞ் சிறுபான்மை யுண்டு. வணிகஞ்செய்வார் தொழில்பற்றி வணிகர் எனப்படினும் வேளாண் மரபைச் சேர்ந்தவராயின், அம் மரபிற்குரிய சிறப்புப் பெயர்களைப் பெறுதற்குரியர். மதுரையில் உருத்திரசன்மனாரின் தந்தையார் கிழார்ப் பட்டம் பெற்றதும், காவிரிப்பூம்பட்டினத்தில் திருவெண்காடர் பிள்ளைப் பட்டம் பெற்றதும் இவ் வுரிமை பற்றியே. வேள் என்னும் பெயர் விரும்பப்படத் தக்கவன் என்னும் பொருளில் ஒரு தலைவனை அல்லது சிற்றரசனைக் குறிக்கும். நம்பன் என்னும் பெயரும் இதே பொருளில் ஒரு தலைவனைக் குறித்தல் காண்க. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். உரி. 31) என்றார் தொல்காப்பியர். சில கல்வெட்டுகளில் வேளான் என்னும் பெயர் படைத்தலைவர்க்குச் சிறப்புப்பெயராக வந்துள்ளது. அஃது ஆன்விகுதி பெற்ற வேள் என்னும் வேளான் குடிப்பெயரேயாகும். மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப (தொல். அகத். 30) என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரத்தானும் அதற்கு நச்சினார்க்கினிய ருரைத்த வுரையானும், வேளாளர் அமைச்சர், படைத் தலைவர் முதலிய அரசியல் வினைஞராதல் பெறப்படும். முற்காலத்தில் உழுதுண்பார் உழுவித்துண்பார் என்று கூறப்பட்ட இருவகை வேளாளரும் பிற்காலத்தில் பற்பல குலத்தினராகப் பிரிந்து போயினர். இதுபோதுள்ள வெள்ளாளரும் முதலிமாரும் உழுவித்துண்ணும் வேளாண் வகுப்பையும், குடியானவர், அகமுடையார், கவுண்டர், பள்ளியார், படையாட்சியர், பள்ளர் முதலியோர் உழுதுண்ணும் வேளாண் வகுப்பை யுஞ் சேர்ந்தவராவர். இவருள் ஒழுக்கத்திற் கடைப்பட்டவர் பள்ளர். இவரே முற்காலத்தில் மள்ளர் எனப்பட்டவர் என்பர் ஒரு சாரார் . இதை மறுத்துப் பள்ளத்தில் வேலை செய்பவர் பள்ளர் என்பர் மற்றோர் சாரார். மலையாள நாட்டிலுள்ள செறுமர் என்னும் வகுப்பாரும் உழுதுண்ணும் வேளாண் வகுப்பைச் சேர்ந்தவரே. செறுமர் வயலில் வேலை செய்வார்; செறு வயல். சில வேளாண் குடியினர்க்குக் கார்காத்த வேளாளர், கங்கைகுலத்தார், துளுவ வேளாளர் முதலிய பெயர்கள் கதையும் ஐதீகமும்பற்றிப் பிற்காலத் தெழுந்தவை. திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் வேளாளரைச் சூத்திர ரெனத் திரிபுணர்ச்சியாற் கூறியது, ஆரியக் கொள்கைகள் தென்னாட்டில் வேரூன்றிய பிற்காலத்ததாகும். ஆரிய வருணப் பாகுபாடு வேறே, தமிழ் வருணப் பாகுபாடு வேறே. இவற்றைத் தொகையொப்புமைபற்றி ஒன்றெனக் கொள்வது திரிபுணர்ச்சியாகும். இதை அடுத்த கட்டுரையில் வெள்ளிடை விலங்கலாய் விளக்குதும். - ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1937 11 பாணர் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழைமையான தென்பது தொல்காப்பியத்தா லறியப்படும். பாணர் பாணைத் தொழிலாகக் கொண்டவர். பாண் என்பது பாட்டு. பண், பாண், பாடு, பா என்பவை ஓரினச் சொற்கள். சீவகசிந்தாமணியில் பாணியாழ்(1500), பாண்வலை(2040), பாணுவண்டு(2447) என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்தும்(ப.349) பாண்-பாட்டு என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். பாணருளும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம் என்று (தொல். புறம். 36, உரை) நச்சினார்க்கினியர் கூறுவர். இசைக்கருவிகள்: தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என ஐவகையாகக் கூறப்படும். இவற்றுள், மிடறு(தொண்டை) என்பது இயல்பான வாய்ப்பாட்டாதலின் இதனை நீக்கி ஏனைய நான்கையுமே கருவியெனக் கூறுவர் சிலர். இந் நான்கனுள் கஞ்சம் (வெண்கலம்) தாளக்கருவி. இது முதலிற் கருவிபற்றி வெண்கலத்தாற் செய்யப்பட்டதையும், பின்பு இனவிலக்கணத்தாற் பிறவற்றினால் செய்யப்பட்டவற்றையும் குறிக்கும். தாளக் கருவியின்றியும் தாளம் காக்கப் படுமாதலானும், ஒரு தாளக் கருவியும் தனித்து இன்பம் தாராமையானும் அது முக்கியமானதன்று. மேற்கூறிய பிரிவாருள் இசைப்பாணர் வாய்ப் பாடகரும், யாழ்ப்பாணர் நரப்புக்கருவியினரும், மண்டைப்பாணர் தோற்கருவியினருமாவர். துளைக்கருவி இயக்கும் குழற்பாணர் மண்டைப் பாணருள் அடங்குவர். மண்டை-பறை. குழலொடுகூடிப் பறையடிப்பதே பெருவழக்கு. இனி, நச்சினார்க்கினியர் பாணரை மூவகையர் என்னாது பலர் என்றதால், அதனுட் குழற்பாணரை அடக்கினும் அமையும். சிலப்பதி காரத்தில், குழலினும் யாழினுங் குரல்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் (இந்திரவிழா 35-8) என்று இளங்கோவடிகளும், பெரும் பாண்-குழலர் முதலோர்(ப. 139) என அரும்பதவுரை காரரும் கூறியிருப்பதால் குழற்பாணருமிருந்தனரென அறிக. குழலைப் பறையின்றித் தனித்து வாசிப்பதின்மையின், குழற்பாணர் பிரித்துக் கூறப்பட்டிலர். ஆகவே, இசைத்தொழில் முழுமையுங்கொண்டு இக்காலத்து மேளக் காரர்போல இருந்தவர் பாணர் என்பது பெறப்படும். ``பாண்சேரிப் பற்கிளக்கு மாறு'' என்னும் பண்டைப் பழமொழியும் இதனை வற்புறுத்தும். திருவிளை யாடற் புராணத்திற் பாண்டியன் இசைப்புலவராகக் கூறப்படும் பாண பத்திரரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கட்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், பன்னீராழ்வாருள் ஒருவரும் யாழறிஞரு மான திருப்பாணாழ்வாரும் பாணர் குலத்தவரே. பாணருள், ஆடவன் (புருஷன்) பாணன் என்றும், பெண்டு பாடினி, பாணிச்சி, பாட்டி, விறலி என்றுங் கூறப்படுவர். வேளாளர் குலம் வேளாண் என்றும், சமணர் நெறி சமண் என்றும் கூறப்படுதல் போல, பாணர் குலமும் பாண் என்று கூறப்படுவதுண்டு. புறப்பொருள் வெண்பா மாலையில், கிளை பாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும் (சூ. 144) அங்கட் கிணையன் துடியன் விறலிபாண் (சூ. 16) பாண்பாட்டு (சூ. 137) பாண்கட னிறுக்கும் (புறம். 203) என வந்திருத்தல் காண்க. பாணருக்குச் சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இசைகாரர், பண்ணவர், பண்டவர்(பண்டர்), ஓவர், அம்பணவர் முதலிய பிற பெயர்களு முண்டு. இவற்றுள் பண்டர், ஓவர் என்பன பாணருட் கீழ்மக்களைக் குறிக்குமென்று பிங்கல நிகண்டு கூறும். மதங்கன், அம்பணவன் என்னும் ஆண்பாற் பெயர்கட்கு மதங்கி, அம்பணத்தி என்பன முறையே பெண்பாற் பெயர்களாகும். அம்பணம் யாழ். அம்பணவன் யாழ் வாசிப்போன். அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் என்று சிலப்பதி காரத்தும், பெரும்பாணிருக்கையும் என்று மதுரைக்காஞ்சியினும் (942), அருட்பெரும் பாணனாரை என்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தும்(3), சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனப் பத்துப்பாட்டினும் வந்திருப்பது கொண்டு, சிறுபாணர் பெரும்பாணர் எனப் பாணர் இருபெரும் பிரிவினரோ என்று ஐயுறவும் இடமுண்டு. பத்துப்பாட்டு முகவுரையில், மேலைப்பாட்டும் (சிறுபாணாற்றுப் படையும்) இதுவும்(பெரும்பாணாற்றுப்படையும்) பாணராற்றுப்படையா யிருப்பினும், அடிவரையறையிற் சிறிதும் பெரிதுமாயிருத்தல்பற்றி அது சிறுபாணாற்றுப்படை யெனவும் இது பெரும்பாணாற்றுப்படை யெனவும் பெயர் பெற்றன என டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், எழுதி யிருப்பது தெளிவானதேயாயினும், பெரும்பாண், பெரும்பாணர் என்று நூல்களில் வழங்குவதானும், சிறுபாணாற்றுப்படையில், பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரற் சீறியாழ் இடவயின் தழீஇ எனச் சுருக்கமாகவும் சீறியாழ் (சிறு + யாழ்) என்னும் பெயருடனும், பெரும்பாணாற்றுப்படையில் பச்சை, துளை, போர்வை, வாய், கவைக்கடை, திவவு, மருப்பு, நரம்பு முதலிய உறுப்புகளையுடையதாக விரிவாகப் பதினாறடிகளினும் யாழ் கூறப்படுதலானும், சிறுபாண் பெரும்பாண் என்பவை கருவிபற்றிய குலப்பிரிவோ என்னும் ஐயம் முற்றும் அகன்றபா டில்லை. சென்னைப் பல்கலைக்கழக அகராதியினும் பெரும்பாணர் பாணருள் ஒரு பிரிவினர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பாணர் வாய்ப்பாட்டும் கருவியுமாகிய இருவகை இசையினும் வல்லவராயிருந்தனர். சிலப்பதிகாரத்திலுள்ள பாடற் பாணர் (அந்தி. 186), குரல்வாய்ப் பாணர் (200) என்னுந் தொடர்கள் வாய்ப் பாடகரைக் குறிக்கும். கருவிகளில் தோற்கருவிகளெல்லாம் பறை என்னும் பொதுப் பெயராற் குறிக்கப்படும். தொல்காப்பியத்தில், தெய்வம் உணாவே மாமரம் புட் பறை (தொல். ) என்னும் கருப்பொருட் சூத்திரத்துள்ளும், அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள். 1115) என்னும் திருக்குறளினும் பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயராயுள்ளமை காண்க. மணப்பறை, பிணப்பறை, பறைசாற்றினான் முதலிய வழக்குகளில் பறை என்பது பல்வேறு தோற்கருவிகளைக் குறித்தது. பறைகளை அடிப்பவர் பறையர் எனப்பட்டனர். இப் பெயர் இக்காலத்துப் பிணப்பறை யறைபவரை மட்டுங் குறிக்கின்றது. பண்டைக் காலத்தில் மண்டை என்னும் பெயர் பறைக்கு வழங்கிவந்த மறுபெயராகும். பறைகளடிக்கும் பாணர் மண்டைப்பாணர் எனப்பட்டனர். மண்டையோடு போன்று மண், மரம், பித்தளை முதலியவற்றாற் செய்து தோற்கட்டிய பறைகளை மண்டை யென்றது ஒருவகை உவமையாகு பெயர். மண்டை யென்பது இக்காலத்தில் மொந்தையென்று திரிந்து அவ் வடிவாயுள்ள மட்கலயத்தைக் குறிக்கின்றது. தவலை என்பதன் மறுவடிவாகிய தபேலா என்னும் இந்துத்தானிச் சொல் ஒரு நீர்ப்பாத்திரத்தையும் ஒரு பறையையும் குறித்தல் காண்க. கோவில் மேளத்தைக் குறிக்கும் தவல்(தவுல்) என்னும் பெயரும் இதன் திரிபுபோலும். பல்வகைப் பறைகளையும் அடித்துக்கொண்டு ஒரே குலமாயிருந்த மண்டைப்பாணர் பிற்காலத்துத் தொழில், கருவி, ஒழுக்கம் முதலியவற்றின் வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய்ப் பிரிந்து போயினர். துடியன் பாணன் பறையன் கடம்பன்என் றிந்நான் கல்லது குடியுமில்லை (புறம். 335) என, மாங்குடிகிழார் தொழிற் குடிமக்களை நால்வகைப்படுத்துக் கூறியுள்ளனர். துடி உடுக்கு. பாட்டிற்குக் கூத்து துணைத்தொழிலாதலின், பாணர் கூத்தும் ஆடிவந்தனர். வயிரியர், செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற்பெயரும் கூத்துப் பற்றியவே. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்குரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும் நுண்வினைக்கூத்து. சிலப்பதிகாரத்தில்(ப. 169) கண்ணுளாளர்-மதங்கர், ஆவார் பெரும்பாணர் என்று அடியார்க்குநல்லார் கூறியிருப்பதை நோக்குக. விறலி என்பவள் விறல்பட ஆடுபவள். விறலாவது மனத்தின் இயல்பு புறத்தே தோன்றச் செய்யும் திறம். இது வடமொழியிற் சத்துவம் எனப்படும். கணவன் பாணனும் மனைவி விறலியுமாயிருந்து இருவரும் இசைந்து அரசரிடம் சென்று பாடியாடுவது பெருவழக்கு. பாணர்க்குச் சிறுபான்மை தையல் தொழிலுமுண்டு. சிலப்பதி காரத்தில் (இந்திர விழா. 32) துன்னகாரர் என்னும் பெயர்க்குப் பாணர் என்று பொருள் கூறியுள்ளார் அரும்பதவுரைகாரர். துன்னம்-தையல். பாணர்க்குச்சொல்லுவதும்........ij...........” என்றுகாளமேகரு«பாடியுள்ளார். பாணர்க்குரியது பெரும்பாலும் இசைத்தொழிலாதலின், பல்வகைப் பறைகட்கும்(அல்லது மேளங்கட்கும்) தோற்கட்டுதல் அவர் வினையே என்பது சொல்லாமே விளங்கும். இசைத்தொழில் பாணரெல்லார்க்கும் எக்காலத்தும் இசையாமையின், அவருள் ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த நெடுங்கழைத் தூண்டில் eடுங்கeண்கொளீஇக்bfhLthŒ ïரும்பின்koதலைபுyம்பப்ghâÆiu கதுவிய போழ்வாய் tளை(283-7)v‹W bபரும்பாணாற்றுப்படையிலும்,“Û‹Óî« பாண்சேரி ( ) என்று மதுரைக்காஞ்சியிலும் கூறியிருத்தல் காண்க. பாணரென்பார் குலமுறைப்படி (இன்று ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படுவாருள் ஒரு சாராராகிய) பறையரேயாவர். இஃது அவருடைய பறையடிக்குந் தொழிலாலும், தலைவி தான் தன் தலைவன் மேற் சினந்திருக்கும்போது அது தணிக்கவந்த யாழ்ப்பாணனை நோக்கிப் புலை ஆத்தின்னி போந்ததுவே (திருக்கோ. 386) என்று வெகுண் டுரைப்பதில் பாணர் ஆவின் (பசுவின்) இறைச்சியை உண்பதாகக் குறித்திருத்தலாலும், அதற்குப் பாணன் புலந்துரைப்பதில் (387), ``வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாறறு கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே என்று தன்னை மிகவும் தாழ்த்திருப்பதாலும் அறியப்படும். காலஞ்சென்ற எம். சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளனர். பாணர் இங்ஙனம் தாழ்ந்த வகுப்பினராயிருந்தும், முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பவர் அவராதலாலும், இசையில் (சங்கீதத்தில்) தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும், ஆரிய வொழுக்கம் ஆழ வேரூன்றாத பண்டைக்காலத்தில் குலப் பிரிவினைப் பிற்காலத்திற்போல் அவ்வளவு முறுகாமையானும் அவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பும் அரசர் அவைக்களங்களிலும் அரசியர் அந்தப்புரங்களிலும் தடையில்லா நுழைவும் இருந்தன. அறிவாற் சிறப்பே யன்றிப் பிறப்பாற் சிறப்பு அக்காலத்தில் இருந்திலது. அரசரைப் பாணர் ஒக்கல் என்று திருக்கோவை(400) கூறும்; ஒக்கல் இனம். குரல்வாய்ப் பாணரொடு திரிதருமரபின் கோவலன் போல, பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து என்று, பெருஞ்செல்வனும் பெருங்குடி வணிகனுமான கோவலன் பாணரொடு கூடித்திரிந்தமை சிலப்பதிகாரங் கூறும். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாட்டில், பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம் (Durbar) (29, உரை) என்று கூறியுள்ளார். பாணர் அரசரிடம் சென்று பாடி யாழ் வாசித்து அவர்க்கு இன்ப மூட்டுவதும், அவர்மீது அரசியர்க்குள்ள ஊடலை(கோபத்தை)த் தணிப்பதும், அரசருடன் போர்க்களத்திற்குச் சென்று வெற்றி நேர்ந்தவிடத்து வெற்றிக் கூத்தாடுவதும் இறந்துபட்ட அரசர்க்கும் வீரர்க்கும் இரங்கிப் பாடுவதும், அவரை நினைவுகூர்தற்கும் வழிபடுதற்கும் நாட்டிய நடுகற்களை வணங்கிச் செல்வதும் வழக்கம். அரசரும் விடிந்தெழுந்தபின் பாணரை வருவித்து, அவர்க்குச் சிறந்த பரிசிலளிப்பதும், அவரை இனத்தாருடன் உண்பிப்பதும், போர்க்களத்து வருவாய்களைப் போர் செய்து வெற்றிபெற்ற பின்பும், பகைவர் செல்வங்களை (வெற்றியுறுதிபற்றி)ப் போர் செய்யப் போகு முன்பும் அவற்றிற்கு உரிமையாக்குவதும் வழக்கம். வரையா வாயிற் செறாஅ திருந்து பாணர் வருக பாட்டியர் வருக ....................tÆÇa® வருகென இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம் கொடிஞ்சி நெடுந்தேர்களிற்றொடு«வீசி(m. 748-52) என்று மதுரைக்காஞ்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் விடியற்காலத்துப் பாணரை வருவித்துப் பரிசளித்தமை கூறப் பட்டது. பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர் கைவல் Óறியாழ்fடனறிந்âயக்கïuî¥ òw«பெற்றஏம iவகiற ........................................ வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் (புறம். 398) என்று புறப்பாட்டில் சேரமான் வஞ்சன் mரண்மனையில் iவகறை(விடியல்)தோறும்gணர்aழ்வாசித்தல்Tறப்பட்டது.thuz« = கோழி. பாணன் கூத்தன் விறலி....... ..................... தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர் (செய். 182) என்று தொல்காப்பியத்தில் பாணர் அரசியரிடம் அவர்க்கு அவர்தம் கணவர் மீதுள்ள ஊடலை அல்லது புலவியைப் போக்குதல் கூறப்பட்டது. ஊடல் முதிர்ந்தது புலவி. புறப்பொருள் வெண்பாமாலையில், 144ஆம் சூத்திரத்தில், பாணர் போர்க்களத்தில் வீரருடன் தேரின் பின் நின்று ஆடுவதும், 207ஆம் சூத்திரத்தில் அவர் போர்க்களத்திற் பெற்ற பரிசிலைப் புகழ்ந்து கூறுவதும், 137ஆம் சூத்திரத்தில் அவர் போரில் இறந்த வீரர்க்கு இரங்கி விளரிப்பண் பாடுவதும், 252ஆம் சூத்திரத்தில், அவர் இறந்த வீரர்க்கு எடுத்த நடுகல்லைத் தொழுவதும் கூறப்பட்டன. அரசர் பாணர்க்குப் புலவுச்சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூற்றிற் பல பாடல்களுள. இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூவைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம். முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப (சிலப். ப. 121) என்பதால், மாதவி பெற்றதுபோலப் பாணரும் தம் திறமைக்கு 1008 கழஞ்சு பொன் பெறும் வழக்கமிருந்ததாகத் தெரிகின்றது. 11ஆம் புறப்பாட்டில், பாடினிக்குச் சிறந்த பொன்னணிக் கலத்தையும் பாணனுக்கு வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப் பூவையும் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. 126ஆம் புறப்பாட்டில், மலையமான் திருமுடிக்காரி பகைவருடைய யானையினது (நெற்றிப்) பட்டத்திற் பொன்னைக்கொண்டு செய்த வாடாத பொற்றாமரைப் பூவைப் பாணரது தலைபொலியச் சூட்டியதும், 203ஆம் புறப்பாட்டில், சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பாணர்க்குப் பகைவர் அரண்களைப் போர்செய்து அழிக்கு முன்பே கொடுத்ததும் கூறப்பட்டன. பாணர் இங்ஙனம் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனரேனும், பொதுவாக வறுமையால் வருந்தினரென்றும், வள்ளல்களைத் தேடி மலையுங் காடும் அலைந்து திரிந்தனரென்றும் கி.மு. 1000 ஆண்டிற்குக் குறையாத தொல்காப்பியமே கூறுகின்றது. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் (புறத். 36) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பாணர் வறுமையும், அவருள் ஒருவர் தாம் பரிசுபெற்ற வள்ளலிடம் அது பெறாத பிறரை ஏவி ஆற்றுப்படுப்பதும் கூறப்பட்டன. சங்க நூல்களிலும் தனிப்பாடல்களிலும் பாணராற்றுப் படைக்கு உதாரணங்கள் நிரம்பவுள. இங்ஙனம் பண்டைக்காலத்தே பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும், அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளிற் பாண்டொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரியவர்ணாசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதுமே. பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராகவே அரசரிடத்தும் பெருமக்களிடத்தும் அண்டமுடியாதுபோயிற்று. இவ் விழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட அடுத்தமை அவர்கள் சரித்திரங்களிற் காணலாம். பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் ஊக்குவாரின்றிக் கைவிட்டனர். அதனால் இசைத்தமிழ் அழிந்ததுடன் எஞ்சியுள்ள ஒருசில இசைத்தமிழ்ச் சூத்திரங்கட்கும் குறியீடுகட்கும் உண்மைப் பொருள் காண்டல் அரிதாய்விட்டது. இப்போது பாணரெனப் படுவார், மாடு தின்னாமையும் பிணப்பறை யடியாமையும்பற்றிப் பறையரினும் சற்று உயர்வாயிருப்பினும், தம் பண்டைத் தொழிலையும் பெருமையும் இழந்தவராயே உள்ளனர். பண்டைக் காலத்தில் பட்டத்தியானைமேல் ஏறி அரசருடைய விளம்பரங்களைப் பறையறைந்து நகரத்தார்க்கு அறிவித்த வள்ளுவரும் பாணர் அல்லது பறையரே. சாதாரணப் பறையர் பொதுமக்கட்கும், வள்ளுவர் அரசர்க்கும் பறையறைகிறவராயிருந்தனர். இதுவே வள்ளுவரின் ஏற்றத்திற்குக் காரணம். இன்றும் தென்னாட்டிற் சில சிற்றூர்களில் பறையர் கோயில் மேளம் என்னும் மணப்பறை பயில்வதையும் அதை மேல்வகுப்பாரில்லங்களில் இருவகை வினைகட்கும் வாசிப்பதையும் காணலாம். இசைத்தொழில் நடத்த முடியாத பாணரெல்லாம் குடைமுடைதல், மீன்பிடித்தல் முதலிய பிற தொழில்களை மேற்கொண்டுள்ளனர். ஆரியர்(பிராமணர்) முதன் முதலாய் வாய்ப்பாட்டும் நரப்புக் கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் பயில்கின்றனர். ஆயினும் நாகசுரம் என்னும் துளைக்கருவியையும், தவல் போன்ற தோற் கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படு தலான். 11ஆம் நூற்றாண்டு வரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் முதலால் இராசராச சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் நியமிக்கப்பட்டமையால் விளங்கும். ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில் பிராமணர் பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது.......... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி,வேத ஒழுக்கத்தினின்றும் தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில், வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி (புறஞ்சேரி. 38 - 9) என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்தது. இசையை மொழிப் பகுதியாக்கினது தமிழிலன்றி வேறு எம்மொழியினுமில்லை. ஆரிய வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசை யோடு கூடியதேனும், அவ் விசை பிறநாடுகளிற்போல் மந்திரத்திற்குரிய அளவு சாமானியமானதேயன்றித் தமிழிசைபோல விரிவாய் ஆலாபித்துப் பாடப்படுவதன்று.தென்னாட்டுத் தமிழிசையைப் பின்பற்றியே சமற்கிருதத் தில் இசைநூல்கள் பிற்காலத் தெழுதப்பட்டன. கி.பி. 5ஆம் நூற்றாண் டிலேயே முதன்முதலாய் வடமொழியில் இசைநூ லெழுந்ததென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமது கருணாமிர்த சாகரத்திற் கூறியுள்ளார். ஆகவே ஆரிய வேதத்தினின்றும் இந்திய இசை எழுந்ததென்பது அறியாதார் கூற்றே. வேத வொழுக்கத்திற்கு மாறான மேனாட்டு அறுவைமுறை மருத்துவத்தை எங்ஙனம் ஆரியர் பிற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனரோ, அங்ஙனமே தமிழர் இசையையும் முற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனர். வடநூல்களிற் கூறப்படாத பல தோற்கருவிகள் தமிழ்நாட்டி லிருந்தன. பல உயிர்களின் தோலையும் சவ்வையும் ஊறவைத்துக் கிழித்துப் பல்வகைப் பறைகட்குக் கட்டுவது பாணர்க்கே ஏற்கும். இசைவல்ல ஓர் வகுப்பார் இசைக்கருவிகள் செய்பவராயு மிருத்தல் வேண்டும். இசைநூற்கு இன்றியமையாத குறியீடுகளெல்லாம் இன்றும் தமிழிலுள்ளன. இனி இக்காலப் பாணரைப்பற்றி j®°l‹(Thurston) என்பார் தமது ‘bj‹dh£L¡ குலமரபுகள் (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தொகுத்திருப்பதைச் சுருக்கிக் கூறுவாம்: தமிழப் பாணர் மேஸ்திரியெனவும் படுவர். இவர் திருநெல்வேலி, மதுரைக் கோட்டங்களில் தையற்காரராயுள்ளனர். இவர் வேளாளரையும் பார்ப்பாரையும் புரோகிதராகக் கொள்வர். இவர் வீட்டில் அம்பட்டரும் வண்ணாரும் உண்ணார். ஆயினும், கோயில் நுழையும் உரிமை இவர்க்குண்டு. மலையாளப் பாணர் மந்திரவாதிகளும் பேயாடிகளுமா யிருக்கின் றனர். இவர் மந்திர வினைகள் பல்வேறு வகைப்பட்டவை. இவருள் ஆடவர் தாழங்குடை முடைவர்; பெண்டிர் மருத்துவம் பார்ப்பர். சிலவிடத்து மலையன் என்னும் பட்டம் இவர்க்குண்டு. அறுப்புக்காலத்தில் பாணச் சிறுவர் சிறுமியர் வீடுதோறும் சென்று குடையுடன் ஆடி இரப்பர். பயிர்பச்சை மீது அதிகாரமுள்ள பேய்கள் இவர் வயப்பட்டன என்று கருதப்படுகிறது. சில சடங்குகளில் பாணர் துடியியக்குவர். பறைக்குத் தோல் கட்டுவதும் இவர் தொழிலாம். பாணனான குருப்பு என்னும் மேல்வகுப்பம்பட்டன், தீயருக்கும், இறந்தோர் ஆவியை அவர் இறந்த அறையினின்றும் ஒரு சடங்கால் வெளிப்படுத்துவான். இவன் செறுமர்க்கு மேற்பட்ட தீண்டாதான்; தாழங்குடைக்கு மூங்கில் வேலை மட்டும் செய்வான். தாழை வேய்வது இவன் மனைவி. தன் மனைவியில்லாவிட்டால் அயல்வீட்டுப் பெண்டிரிடம் தாழை வேயக் கொடுப்பான். தீயர் பிணஞ் சுடும்போது பாணர் 5 நாள் இரவு பறையறைந்து தீயாவிகளை விரட்டுவர். பாணர்க்கு மக்கள் தாயமே. பெண்டிர் பல சகோதரரை மணப்ப துண்டு. தென் மலபாரில், பாணர்க்குள் திருரெங்கன், கொடகெட்டி (குடைகட்டி), மீன்பிடி, புள்ளுவன் என நாற் பிரிவுண்டு. இவருள் புள்ளுவன் ஏனையரிலும் தாழ்ந்தவன். பாணர் கலப்பு மணமுள்ள பல இல்லங்கள் அல்லது கிரியங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். காளி, பரகுட்டி, கரிங்குட்டி, குளிகன், குட்டிச்சாத்தான் என்பன இவர் தெய்வங்கள். இவர் உச்சவேலி என்னும் வகுப்புப் பேய்களை ஓட்டுவர். ஒரு பாணன் தன் ஆடையில் ஓர் இழையெடுத்துத் தன் மைத்துன னிடம் கொடுத்து உன் பரிசம் முடிந்தது என்று கூறினால் தன் மனைவியை முற்றும் தள்ளியதாகும். மலையாளப் பாணருள், அஞ்ஞூற்றான், முந்நூற்றான் என இரு உட்பிரிவுகளுண்டு. திருவாங்கூர்ப் பாணர்க்குப் பணிக்கப் பட்டமுண்டு. இவர் தமிழப் பாணரினுந் தாழ்ந்தவர். இவர் மேற்குலத்தார்க்கு 36 அடித் தூரம் விலகுவர்; மன்னாரையும் வேடரையும் 8 அடித் தூரத்தும் புலையரை யும் பறையரையும் 32 அடித் தூரத்தும் தம்மினின்றும் விலக்குவர். இவர் மயிர்வினையும் சலவையும் தாமே செய்துகொள்வர்; கம்மாளரிடத் துண்பர்; இளமை மணஞ் செய்வர்; இறந்தோரைப் புதைப்பர். இவர்க்குச் சாவுத்தீட்டு 16 நாள். இயல்பாய் இறந்தவர்க்கு ஆடி மாதத்திலும், கொலையுண்டு அல்லது துன்பநேர்ச்சியில் இறந்தவர்க்கு ஆவணி மாதத்திலும் ஊனுங் கள்ளும் படைப்பர். இது வெள்ளங்குளி யெனப்படும். இறந்தவரை நினைவுகூரப் பந்தல் மடம் முதலியன அமைப்பதுண்டு. ஈழவர் தமது கொண்டாட்டங்களில், பாணர்க்கு ஈராள் உண்டி யளித்துத் தம் முன்னோர்க்கு அவர் முன்னோர் செய்த ஓர் நன்றியை நினைவுகூர்வர். பாலக்காட்டில் பாணர் தலைவனுக்குச் சுப்ரதன் என்று பெயர். அவன் இறந்தால் அரசனுக்கு அறிவிக்கப்படும். அரசன் வாள், கேடகம், ஈட்டி, துப்பாக்கி, வெடிமருந்து, வெள்ளிக் காப்பு, அட்டிகை என்னுமிவற்றை அவன் மகனுக்காவது இழவு கொண்டாடுபவனுக்காவது அனுப்புவன். மகன் அணிகளையும், வேறு சிலர் ஆயுதங்களையும் அணிந்துகொள்வர். பிணத்தை எடுக்கும்போது ஒன்றும், கிடத்தும்போது ஒன்றும், எரித்தபின் ஒன்றுமாக 3 வெடி சுடுவர். மறுநாள் மகன் தன் கையாற் செய்த ஓர் தாழங் குடையை அரசனுக்களிப்பன். அரசன் அவனுக்குச் சுப்ரதன் என்னும் பட்டமளிப்பன். சங்கிலிக்கருப்பன், பேச்சி, ஊதர கருப்பன், காளி, சோதல கருப்பன், சோதல பத்ரகாளி, யட்சி, கந்தர்வன், அனுமான் என்று ஆவிகளைப் பாணர் வயப்படுத்துவர். பாணர் மதம் பேய் வணக்கம், மூக்கன், சாத்தன், கப்பிரி, மலங் கொறத்தி (குறத்தி) என்னுந் தெய்வங்களையும் இவர் வணங்குவர். இத் தெய்வங்களுக்கு மரத்தடியில் கல் நட்டு, முழுக்காட்டி, ஆடு கோழியறுத்துக் காய்கறி சோறு படைப்பர். இறந்தோரையும் வணங்குவர்; அமாவாசை யன்றாவது முழு நிலாவின் பின் 11ஆம் நாளாவது நோன்பிருப்பர். பாணர் எல்லாரும் பார்ப்பார், நாயர், கம்மாளர், ஈழவரிடம் உண்பர். பாணரும் கணியரும் தொட்டுக்கொண்டால் ஒருவரை யொருவர் தீட்டுப்படுத்தியவராவர்; பின்பு குளித்துத் தீட்டைப் போக்குவர். பாணர் ஈழவர் அருகில் குடியிருக்கலாம். ஆனால், நாயர் தரையில் குடியிருக்க முடியாது. கம்மாளர் கிணற்றில் தண்ணீரெடுக்கவும், பார்ப்பனர் கோயிலின் புறமதிலையண்டவும், பாலக்காட்டில் பார்ப்பனர் தெருவழிச் செல்லவும் இவர்க்கு உரிமையில்லை. 1891ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவார் என்று குறிக்கப்பட்டுள்ளது. - ``செந்தமிழ்ச் செல்வி'' மேழம் 1939 12 குலப்பட்ட வரலாறு பட்டம் என்னும் சொல் வரலாறு பட்டுதல் = அடித்தல், தட்டுதல். பட்டடை = சுத்தியலால் அல்லது சமட்டியால் தட்டுவதற்கு அடையான கல் அல்லது இரும்பு. பட்டறை = கொல்லரும், தட்டாரும் தட்டி வேலை செய்யும் அறை. பட்டசாலை = அங்ஙனம் தட்டி வேலை செய்யும் கூடம். பட்டு - பட்டம் = தட்டையாகத் தட்டி அடிக்கப்பட்ட தகடு. பட்டு - பட்டை = தகடு. தட்டையான மரவுரி, அது போன்ற பூச்சு. பட்டம் - வ. பட்ட. பட்டை - பட்டையம் - பட்டயம் = ஆவணம் பொறிக்கும் தகடு. பட்டங் கட்டுதல் என்னும் வழக்கு ஊர்த் தலைவர்க்கு, அவர் பதவி குறித்த பெயர் பொறித்த தகட்டை நெற்றியிற் கட்டுவதே பட்டங் கட்டுதல் எனப்பட்டது. அதனால், ஊர்த் தலைவனைக் குறிக்கும் பெயர்களுள் பட்டக்காரன் என்பதும் ஒன்று. எ-டு: பழைய கோட்டைப் பட்டக்காரர். மக்கள் தலைவர் கிழவன்; வேள், மன்னன், கோ, வேந்தன், மாவேந்தன் எனப் பலதிறத்தார். ஊராளி, நாடன், நாடான், நாட்டாண்மைக்காரன், நாட்டான், நாடாளி, குடும்பன், பண்ணையாடி, மூப்பன், அம்பலகாரன், கவுண்டன், தலைவன், சேர்வை, சேர்வைக்காரன், பட்டக்காரன், பெரிய தனக்காரன், தேவன், மன்றாடி, மந்திரி என்பன ஊர்த் தலைவனை அல்லது நாட்டுத் தலைவனைக் குறிக்கும் பெயர்கள். பலவூர் சேர்ந்தது நாடு. ஒன்றுக்கு மேற்பட்டவை பல. பண்டைக் காலத்தில் முல்லைநிலத் தலைவன் குறும்பொறை நாடன் எனப்பட்டான். வேந்தன், மாவேந்தன் ஆகிய இருவர்க்கே முடிசூடும் உரிமையுண்டு. ஏனைத் தலைவர்க்கெல்லாம் பட்டங் கட்டுவதே பண்டை வழக்கம். பாண்டியன், சோழன், சேரன் என வேந்தர் மூவர், அவர் வலிமை யிழந்த பிற்காலத்தில், முடி சூடும் உரிமை ஐவகை யரசர்க்கும் பொது வாயிற்று. முடிவேய்தலாலேயே வேந்தன் என்னும் பெயர் தோன்றிற்று. மே - மேல். மே - மேய். மேய்தல் = மேலிடுதல். மேலணிதல். மேய் - வேய். வேய்தல் = மேலிடுதல், முடிசூடுதல். வேய்ந்தோன் - வேய்ந்தன் - வேந்தன் - வேந்து. ஒ.நோ : காய் - காய்ந்து - காந்து. கொன்றைவேந்தன் = கொன்றைமாலை சூடிய அல்லது அணிந்த சிவன். ஊரன் ஓரூர்த் தலைவன்; வேள் சிலவூர்த் தலைவன்; மன்னன் அல்லது பெருவேள் பலவூர்த் தலைவன்; கோ (வேந்தன் குடும்பத்தைச் சேர்ந்த) இளவரசன் அல்லது துணையரையன்; வேந்தன் ஒரு தமிழ்நாட்டுத் தலைவன்; மாவேந்தன் முத்தமிழ்நாட்டு அல்லது தமிழகத் தலைவன். நாடுகிழவோன் என்பது, ஊர்த்தலைவனுக்கு மேற்பட்ட குறுநில மன்னரையும் பெருநில அரசரையுங் குறிக்கும். முதற்காலத்தில் ஓரூர்த்தலைவன் பெயர், குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை நிலத்திற்கும் வெவ்வேறாயிருந்தது. அக்காலத்தில் ஊரன் என்பது மருத நிலத்து ஊர்த்தலைவன் பெயர். பட்டங்கட்டுவது நெற்றிக் கழகு செய்வதால், நாளடைவிற் பெயர் பொறிக்காத பட்டம் பெண்டிர் நெற்றியணியாயிற்று. தலைவர்க்குக் கட்டும் பட்டம் சிறப்புப்பெயர் தாங்கி நின்றதனால் பிற்காலத்தில் சிறப்புப் பெயரெல்லாம் பட்டம் எனப்பட்டன. பட்டம் என்னும் சொற்பொருள்கள் பட்டம் = 1. பட்டையான துண்டு. 2. சட்டங்களை இணைக்க உதவும் தகடு. ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி (நெடுநல். 80, உரை). 3. பட்டை வடிவு. 4. ஆட்சித் தலைமைக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472). 5. பெண்டிர் நெற்றியணி. பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்து (திவ். பெரியாழ். 3:7:6), 6. மணிகளில் தீரும் பட்டை. 7. J (mf.Ã.), 8. bgU§bfho (ã§.), 9. காற்றாடி, பிள்ளைகள் பற்பல வுயர்பட்டம் விடல்போல் (திருப்போ. சந். பிள்ளைத். சப்பாணி. 8). 10. உரோமானியக் குருமார் உச்சந்தலையில் வட்டமாக மழித்துக் கொள்ளும் இடம். 11. M£á¥gjÉ (ã§.), 12. ஆட்சி, 13. பதவிப்பெயர்; பட்டமும் பசும்பொற் பூணும் பரந்து (சீவக. 112), 14. சிறப்புப்பெயர் எ-டு: தென்னவன் பிரமராயன், உத்தம சோழப் பல்லவராயன். 15. கல்விப்பெயர், எ-டு : புலவன், முதுகலை, பண்டித மணி, பெரும் பேராசிரியர், 16.குலப்பெயர், எ-டு : பிள்ளை, முதலியார். கழகக் (சங்க) காலத்தில், இக்காலத்திற்போற் பிறவிக் குலப்பட்டப் பெயர் வழங்கவில்லை. கூலவாணிகன், அறுவை வாணிகன், மருத்துவன், வண்ணக்கன், கணியன், கிழார் என்பன போன்ற தொழில் வகுப்புப் பெயர்களே அடைமொழிகளாக வழங்கிவந்தன. எ-டு : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். கிழார் என்பது உழவர் வகுப்புப் பெயராகத் தோன்றுகின்றது. ஆயின், அரிசில்கிழார், ஆலத்தூர்கிழார், ஆவூர்கிழார், இடைக்குன்றூர்கிழார், காரிகிழார், குறுங்கோழியூர்கிழார், குன்றூர்கிழார், கூடலூர்கிழார், கோவூர்கிழார், துறையூர் ஓடைகிழார், நொச்சி நியமங்கிழார், பெருங் குன்றூர்கிழார், மாங்குடிகிழார், வடமோதங்கிழார் எனப் பெரும்பாலும் இயற்பெயரின்றி ஊர்ப்பெய ரடுத்த தொழிற்பெயராகவே வழங்கி வந்திருக்கின்றன. பிற்காலத்துச் சேவூர்க்கிழார் - சேக்கிழார் என்பதும் அங்ஙனமே. ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்னுங் கழகக் காலப் பெயர்களில், மூலம் என்பது நாளைக் குறிப்பதாகக் கருதினார் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர். கிழார் என்பது கிழவர் என்பதன் மரூஉ, கிழவர் என்பது கிழவன் என்பதன் உயர்வுப்பன்மை. கிழவன் = நிலத்திற்குரியவன், உழவன். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும் (குறள். 1039) என்னுங் குறளில், கிழவன் என்பது நிலக்கிழவனான உழவனைக் குறித்தல் காண்க. கிழான் என்னும் மரூஉ இன்று இந்தியில் கிசான் என்று திரிந்து வழங்கி வருகின்றது. கதப்பிள்ளை அல்லது கந்தப்பிள்ளை என்பது, புறநானூற்றுப் பாடலாசிரியருள் ஒருவர் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அது இக்காலத்திற் போற் பிள்ளைப் பட்டத்தோடு கூடிய மாந்தன் பெயரன்று; முருகனைக் குறிக்கும் தெய்வப்பெயர் ஒரு புலவர்க்கு இடப்பட்டதே. `விநாயகர்' என்னும் ஆனைமுகத் தெய்வ வணக்கம், கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பின்னரே தமிழகத்திற் புகுத்தப்பட்டது. அதற்கு முன், முருகனுக்கே சிவன் மகன் என்னும் கருத்தினால் பிள்ளை அல்லது பிள்ளையார் என்னும் பெயர் வழங்கிற்று. பிற்காலத்தில் வடநாட்டினின்று இறக்குமதியான ஆனை முகவன், காலத்தால் இளைய பிள்ளையாயினும் ஆரியச் சார்பினாற் சிறப்புப் பெற்று மூத்த பிள்ளையாக்கப்பட்டான். ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழர் வகுப்புகளெல்லாம் தொழில் வேறுபாட்டால் ஏற்பட்டனவும், விருப்பப்படி மாறக்கூடியனவும், கூட்டுறவிற்கு முட்டுக்கட்டை யாகாதனவுமா யிருந்தன. ஆரியர் வந்தபின், கழகக்காலத்தில், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருந் தமிழ் வகுப்புகள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரியப் பிறவிப் பெருங்குலங்களாக மாற்றப்பட்டன. அதன்பின், அந் நாற்பெருங் குலங்களும் நூற்றுக்கணக்கான சிறு குலங்களாகப் பிரிக்கப்பட்டும் பெருக்கப்பட்டும் போயின. தமிழரின் ஒற்றுமையையும் வலிமையையும் குறைப்பதற்குப் பிறவிக்குலப் பிரிவினையே தலைசிறந்த வழியாதலின் குலவொழுக்கக் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் வரவரக் கண்டிப் பாக்கப்பட்டு வந்தன. பெயர், உடை, உணவு, அணி, குடியிருப்பு, தொழில், பழக்கவழக்கம், சடங்கு, தெய்வம், பேச்சு, இடுகாடு அல்லது சுடுகாடு முதலிய எல்லா வகைகளிலும் குலங்கள் வேறுபடுத்தப்பட்டன. பெயரளவில் வேறுபாட்டைத் தெளிவாக்குவதற்கு, குலங்குறித்த சொற்களும் ஈற்றிற் பட்டப் பெயராகச் சேர்க்கப்பட்டன. அவை பெரும் பாலும் குலத்தலைவன் அல்லது தொழிற்றலைவன் அல்லது ஊர்த்தலைவன் பட்டப் பெயராகவே இருந்துவருகின்றன. தேவன் என்பது குலத்தலைவன் பட்டம்; முதலியார் என்பது தொழிற்றலைவன் பட்டம் ; நாடார் என்பது ஊர்த்தலைவன் பட்டம். நாடன் - நாடான் - நாடார். நாடன் - நாட்டான் - நாட்டார். ரகர மெய்யீற்றுச் சொற்கள் உயர்வுப் பன்மை குறிப்பன. படைமுதலியார் அல்லது சேனைமுதலியார் என்பதன் குறுக்கமே முதலியார் என்பது. அரிய நாயக முதலியார் விசயநகரப் படைத்தலைவருள் ஒருவர். அவர் பதவிப் பெயர்க்குறுக்கம், முதற்கண் அவர் மக்கட்கும், பின்னர் உறவினர்க்கும், அதன்பின் அவர் குலத்தாராகக் கருதப்படும் அனைவர்க்கும் பட்டப்பெயராக வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஏனையவும். இவ் வழக்கம் மேனாடுகளில், அரசர் மக்கட்கும் பெருமக்கள் மக்கட்கும் வழங்கிவரும் மதிப்புறவுப் பட்டம் (Courtesy Title) போன்றதே. ஆயின், அங்குத் தந்தை பட்டத்தினும் தாழ்ந்ததே. அடைமொழியாகவோ கடைமொழியாகவோ மக்கட்கு மட்டும் வழங்கி வரும், இங்கோ, தந்தையின் பட்டமே மக்கட்கு மட்டுமன்றி, உறவினர்க்கும், குலத்தாரென்று கருதப்படும் அனைவருக்கும் இறுதிச் சிறப்புப் பெயராக வழங்கிவருகின்றது. முதலியார் என்பது போன்றவே நாயர், நாயுடு என்பனவும். தண்டநாயன் = (கேரள நாட்டுப்) படைத்தலைவன். நாயன் என்பதன் உயர்வுப் பன்மை நாயர். தண்ட நாயர் - நாயர் (குறுக்கம்) நாயன் - நாயகன் - நாயக்கன் - நாய்க்கன். திருமலை நாயக்கன், போடி நாயக்கன், பெத்த நாயக்கன் என்பன தெலுங்கப் படைத்தலைவர் பெயர். தண்ட நாயக்கன் - நாயக்கன் (குறுக்கம்) நாயக்கர், நாய்க்கர் என்பன உயர்வுப் பன்மை. விசயநகரப் பேரரசின் படைத் தலைவராகவும் படிநிகராளியராகவு மிருந்த சிலர், பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசராயினர். நாயன் - நாயடு - நாயுடு (தெலுங்கு). நாயர், நாய்க்கன், நாயுடு என்னும் பட்டப்பெயர்கள், இடைக்காலப் படைத்தலைவர்க்கு வழங்கினது மட்டுமன்றி, அவர் வழியினர்க்கும் வழிவழி வழங்கி வருதல் காண்க. இங்ஙனமே, எட்டி என்னும் வணிகர் பட்டப்பெயரும், எட்டுதல் = உயர்தல், எட்டு - எட்டம் = உயரம், உயர்வு, எட்டி = உயர்ந்தவன், வணிகருட் சிறந்தோன். எட்டி என்பது, கழகக் காலத்தில் மூவேந்தரும் வணிகர் தலைவனுக்கு அளித்துவந்த சிறப்புப் பெயர். அது இக்காலத்து அரசர், நாண்மங்கல விழாவில், அறிவாற்றல் பொதுநலத்தொண்டு அருமறச் செயல் முதலியவற்றிற்கு அளித்துவரும் சிறப்புப் பெயர்கள் (Birthday Honours) போன்றது. எட்டி - செட்டி. ஒ.நோ : ஏண் - சேண். வடநாட்டுப் பிராகிருத மொழிகளில் எகரக் குறிலின்மையால், அவற்றிற் செட்டி என்பது சேட்டி என நீளும். அது இன்று சேட் எனக் கடை குறைந்து வழங்குகின்றது. செட்டி என்பது சிரேஷ்டி என்னும் வடசொல்லின் திரிபன்று. இப்பர் பரதர் வைசியர் கவிப்பர் எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் ஒப்பில் நாயகர் வினைஞர் வணிகரென் றத்தகு சிலேட்டிகள் செட்டிகள் பெயரே என்பது திவாகர நிகண்டு. நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் தாமும் பிறவும் தனவைசி யர்க்கே என்பது பிங்கல நிகண்டு. நாய்கர் என்பது வணிகரைக் குறிப்பின், நாவிகர் என்பதன் மரூஉ. கடைக்கழகக் காலத்திலேயே, நிலவாணிகத் தலைவனுக்குச் சாத்தன், சாத்தவன், சாத்துவன், சாத்துவான் என்றும்; நீர்வாணிகத் தலைவனுக்கு நாவிகன், நாய்கன் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கின. அதனால், கோவலன் தந்தை மாசாத்துவான் என்றும், கண்ணகி தந்தை மாநாய்கன் என்றும், பெயர் பெற்றிருந்தனர். சார்த்து - சாத்து = காளை கோவேறு கழுதை, குதிரைகளின் மீது பொதியேற்றிச் செல்லும் நிலவணிகக் கூட்டம், நாவு - நாவாய் - கடல்நீரைக் கொழித்துச் செல்லும் கப்பல். நாவு - நாவி - நாவிகன் = கப்பற்காரன், கடல் வாணிகன். ஆதிரை கணவனான சாதுவனும், நீர்வாணிகம் செய்தவனேனும், பெற்றோரா லிடப்பட்ட நிலவாணிகன் பெயரைத் தாங்கினவனா யிருந்திருக்கலாம். சாத்துவன் - சாதுவன். கடைக்கழகக் காலத்தில், தமிழரின் இயற்பெயரோடு குலப்பட்டப் பெயர் இன்றுபோல் இணைந்து வழங்கியதில்லை. ஆரியச் சார்பான பிறவிக் குலப்பிரிவினை அக்காலத்தே நாற்பாலளவில் வேரூன்றியிருந்ததேனும், மூவேந்தராட்சியும் முடிந்த 16ஆம் நூற்றாண்டின் பின்னரே, சிறுகுலப் பட்டப்பெயர்களெல்லாம் சிறந்தெழுந்ததாகத் தோன்றுகின்றது. அப் பட்டப்பெயர்கள் எல்லாப் பிறவிக் குலத்தார்க்கும் நிலைத்து நின்றவையல்ல. அவரவர் அல்லது அவ்வக் குலத்தார் ஆற்றலுக்கும் முன்னேற்றத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, மாறியும் வந்துள்ளன. இதைக் கள்ளன் மறவன் கனத்தா லகம்படியன், மெள்ள மெள்ள வந்துபின் வெள்ளாள னானானே என்னும் பழமொழியும் உணர்த்தும். முதலியார் என்னும் பட்டம், விசயநகரப் பேரரசின் படைத் தலைவரான அரியநாயகம் போன்ற வெள்ளாளரின் வழியினர்க்கு, முதற்கண் சிறப்பாக வழங்கிற்று. அதன்பின், சோழர் காலத்திற் செங்குந்தப் படை தாங்கிப் பொருத நிலைப்படை மறவரின் வழியினரான நெசவுத் தொழிலாளர்க்கு, ஒருபுடை யொப்புமைபற்றி அப் பட்டம் வழங்கிற்று. அதன்பின்னர் அகம்படியருள் ஒரு சாரார் அப் பட்டத்தைத் தாமாகத் தமக்கு இட்டுக்கொண்டனர். இன்றோ, முதலிப் பெண்ணை மணந்தவரும், நெசவுத்தொழில் செய்வாருள் ஒரு சாராரும், தமக்கு முதலியார்ப் பட்டம் சூட்டிக்கொள்கின்றனர். இனி, ஒருசிலர் தம் விருப்பம் ஒன்றே கரணியமாகத் தம் பெயருக்குப்பின் முதலியார்ப் பட்டத்தை இணைத்துக் கொள்கின்றனர். இங்ஙனம், வெள்ளாண் முதலியார், செங்குந்த முதலியார், அகம்படிய முதலியார், முதலிப்பெண் கொண்ட முதலியார், நெசவுத்தொழில் முதலியார், தான்றோன்றி முதலியார் என அறுவகை முதலியார் உளர். இத்தகைய வகையீடு ஏனைச் சில குலங்கட்கும் ஒக்கும். பிள்ளைப் பட்டமோ, இன்று பிராமணர் தவிரப் பிற குலத்தார்க் கெல்லாம் பொதுவாய்விட்டது. ஆயினும், அது அவ்வக் குலத்திற்கேற்ப வெவ்வேறு அளவு மதிப்புள்ளதாயுள்ளது. இனி, வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே (மரபு, 83) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப, சோழர்க்குப் போர்க்காலத்திற் பொருநராக வந்ததனாற் படையாட்சியென்று பட்டந்தாங்கும், ஒரு சார் உழுதூண் வேளாளரான தமிழருள் ஒருசிலர், தெலுங்கர்க்கேயுரிய இரெட்டியார் என்னும் பட்டப் பெயரைத் தமக்கு வழங்கி வருவது, ஒரு வேடிக்கையான செய்தியே. இங்ஙனம், உண்மைக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தாத குலப்பட்டப் பெயர்களை, இந்தியரையெல்லாம் குலப்பிரிவற்ற ஒரே குமுகாயமாக்க வேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்ட பேராயக் கட்சியினரும், அக் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சரும், நடுவண் அரசு மந்திரிமாரும் கூட, தமக்கு வழங்கி வருகின்றனர். இதனால், மூதிந்தியர்க்கு, சிறப்பாகத் தமிழர்க்கு மூவகைக் கேடுகள் நேர்கின்றன. (1) குமுகாயத் தாழ்வு ஆரியச் சார்பான பிறவிக் குலக் குமுகாய ஏணிப்படிகளுள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலத்திற்கு நிலையாக ஒதுக்கப்பட்டிருப்பதால், தமிழர் அல்லது திரவிடர் அல்லது பழங்குடி மக்கள் வாழ்நாள் முழுதும் எத்துணை முன்னேற்ற முயற்சி செய்யினும், அவ் வேணியின் உச்சப்படியை அல்லது தமக்கு மேற்பட்ட படியை அடைய முடியாது. ஒவ்வொரு பட்டமும் ஒவ்வொரு குலத்தின் முத்திரையாயிருப்பதால், அப் பட்டத்தைத் தாங்கிக்கொண்டே மேலெழுவது. ஒருவன் தன் பாதத்திற் பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு உயரக் குதிப்பது போன்றாகும். (2) ஒற்றுமைக் குலைவு ஒரு வகுப்பார் சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. ஒற்றுமை யின்றேல் உரங்குன்றிப் போவதால், இன முன்னேற்றத்திற்கு எட்டுணையும் இடமில்லை. ஆகவே, உலகுள்ள அளவும் அஃறிணை போன்றே நின்ற நிலையில் நிற்றல் வேண்டும். (3) பகுத்தறிவு வளர்ச்சியின்மை ஒருவன் தன் இயற்பெயரோடு ஒரு பிறவிக்குலப் பட்டப் பெயரை இணைத்துக் கூறுவது தான் மேற்கொண்டுள்ள தொழிலுக்குச் சற்றும் பொருந்தாததும், வேறெந் நாட்டிலும் இல்லாததும், பகுத்தறிவிற்கு ஒவ்வாததும், முனனோர் மரபிற்கு முற்றும் முரணானதும், எவ்வகை நற்பயனுமற்றதும், நுண்ணறிவு வளர்ச்சிக்குத் தடையானதுமாய் இருத்தலால், அதை அறவே விட்டுவிடுவதே உயர்திணை யொழுக்கத்திற் கும் தமிழன் தலைமைக்கும் தக்கதாம். மேலும், இற்றைத் தலைமை மந்திரினியாரின் இருபான்வகைப் பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கும், பிறவிக்குலப் பட்டப்பெயர் வழக்கு பெரு முட்டுக்கட்டை யென்பதை, உணர்தல் வேண்டும். - ``தென்மொழி'' மேழம் 1976 13 கல்வி (Culture) மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந்தொகைய ராய்க் குறிஞ்சிநிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட்டொகை மிக மிக, இயற்கை விளைவு போதாதாயிற்று. விதைகள் தாவர வர்க்கத்தினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி ஊகித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடர்ந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர். பன்றியுழுதவிடத்துப் பயிர்விளைப்பதை, அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட் கேழ லுழுத பூழி நன்னாள் வருபத நோக்கிக் குறவ ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை (புறம். 168) என்பதாற் காண்க. ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன் முதற் குறித்தது. கல், பகுதி; வி, விகுதி. கல்லல் தோண்டல். கல்லென்னுஞ் சொல்லே இல்லென்று திரியும். பயிர்த்தொழில் வினைகள் பலவற்றுள்ளும் உழவே முதலதும் முதன்மையது மாதலின், அவ் வுழவென் பெயரே ஒருவகை ஆகுபெயராய்ப் பயிர்த்தொழில் முழுமைக்குமாயிற்று. அன்றியும் வானாவாரிப் பயிர்கட்கு உழவொன்றே யமையும். உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும், ஏருமெருதுங்கொண்டுழ வறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று. அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மை யின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று. கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒரு பொருட் கிளவி. ஆகவே, கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம். உழவிற்குப் பின் கற்கப்பட்டது கைத் தொழில். கைத்தொழிற்குப் பின்னது கலையறிவு அல்லது நூற்கல்வி. ஆகவே, தொழிற்கல்வி, நூற்கல்வி யெனக் கல்வி இருவகைத்தாயிற்று. உழவும் கைத்தொழிலும் தொழிற்கல்வி, கலையறிவு நூற்கல்வி. இவ் விரண்டனுட் டலைமையும் இன்றியமையாமையும்பற்றி நூற்கல்வியே கல்வியென விதந்தோதப்பட்டது. வடநூன்முறையில் வழங்கும் அறுபானாற் றொழில்களும் தொழிற் கல்வியாகும்; ஏனை நான்மறை யறுகலைகள் நூற்கல்வியாகும். இருவகைக் கல்வியிலும் எந்நூலையும் மறை யென்பது பண்டை வழக்கு. இசைநூலை நரம்பின் மறை என்றார் தொல்காப்பியர். மருத்து நூலை ஆயுர்வேதமென்பர் வடமொழியாளர். கண்கருவியாகக் கைகற்கும் தொழிற்கல்வியும் சிறுபான்மை நுண்மாண் நுழைபுலத்தை நூல்வாயிலா யுணர்த்து மென்க. ஒவ்வொரு நூலும் ஒருசார் மறைபொருளை யுடைமையின் மறையெனப்பட்டது. இனி, எல்லா நூல்கட்கும் முடிபு வீடுபேறு கூறும் கடவுண்மறையாதலின், அம் மறையுணர்ச்சிக்கு ஒருசார் கருவியாகும் பிற நூல்களும் அவ் வியைபானே மறையெனப்பட்டன வென்னலு மொன்று. நூற்கல்வியும் உலகநூல், அறிவுநூல் என இருவகைத்தாம். அறிவுநூல் வீட்டுநூலெனவும் படும். கடவுள்வழிபாடும் வீடுபேறும் கூறும் மறையாகமக் கதைகளும், இலக்கண தருக்க தத்துவ நூல்களும் வீட்டு நூல்களாகும். உலக வாழ்க்கைக்குரிய வெல்லாம் உலக நூல்களாகும். ஆன்மவுணர்ச்சி சிறந்தகாலத்து வீட்டுநூலே நூலெனப்பட்டது. தமிழிலக்கண விலக்கியங்களெல்லாம் வீடுபேற்றிற்கே வழிகாட்டுவன. அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே .................................... தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும் பித்தரிற் பேதையா ரில் அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூ லோதுவ தெல்லாங் - கலகல கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணையறிவா ரில் என்றார் பெரியோர். இக்காலத்துக் கற்கப்படும் ஆங்கிலக் கல்வி தமிழ்முறைப்படி உலக நூலின் பாற்படுவதே. எழுத்தறியும்போதே அரி ஓம் நம: என்று தொடங்குவதும், எழுத்துகளே மந்திரவடிவாயிருப்பதும், எழுத்துக்கூட்டி வாசிக்கப் புகு மாத்திரையே ``அறஞ்செய விரும்பு'', ``ஆலயந் தொழுவது சாலவு நன்று'' என்பன போன்ற அறவுரைகளை அறிவிப்பதும், இலக்கண முழுமையும் மெய்யுணர்ச்சி யிலகுவதும், இலக்கியமெல்லாம் வீடுபேற்றை யிலக்காக் கொள்வதும் தமிழுக்கே சிறந்த தகைமைகளாம். ஆகவே, கல்வியென்னுங் குறியீடு தமிழில் முதன்முதல் உழவிற் கியற்பெயரா யிருந்து, பின்னர்க் கைத்தொழிற்கும் நூற்கல்விக்கும் இன விலக்கணமாய் இறுதியில்... நூலுக்கே சிறப்பாக வரையறுக்கப் பட்டதென்க. நிலத்தைக் கல்லுவதினால், ஆழத்தின் மறைந்திருக்கும் கனி (Mine)íª தாவரமுமாகிய இருவகை விளைபொருள்களு மாராயப்படும்; விதைகளினின்றுங் கிளர்ந்தெழும் பயிர்பச்சைகளும் வளர்ச்சியடையும்; காய்கதிர்களும் முற்றி மக்கட்கு நுகர்ச்சியுண்டாகும். அதுபோலக் கல்வியினாலும் ஐம்பூதப் பகுதியான எல்லாப் பொருள்களு மாராயப்படும்; மனத்தின் ஆற்றல்களும் வளர்ச்சியடையும், (cf. educate - to draw out the powers of mind); ஆன்ம நுகர்ச்சியாகிய வீடுபேறும் சித்திக்கும். கல்வியென்னுந் தமிழ்ச்சொற்குச் சமமான ஆங்கிலச்சொல் Culture என்பதாகும். அது கல் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினைப்பெயரே. கல்வி என்பதில் வி விகுதி; Culture என்பதில் தரம் (ture) விகுதி. கல்வி யென்னுஞ் சொற்குறிக்கும் பொருள்களையே culture என்பதுங் குறிக்கின்றது. அவையாவன: 1. Culture-n. Cultivation L. colo - to till. கல் = தோண்டு, உழு, பயிரிடு. இஃதன்றி ஆங்கிலத்தில் உழவு குறிக்கும் ஏனைச் சொற்களில் இன்றியமையாத சிலவும் தமிழேயாத லறியப்படும். தொள் - till; தொள் - தொடு - தோண்டு. தொள்ளல் = தோண்டல் அல்லது உழுதல். ஏர் - n. E. ear, L. aro, Gk. aroo. adj. E. arable. அகரம் - n. E. acre, Gk. agros, L. ager, a field. அகரம் மருதநிலத்தூர் - சூடாமணி நிகண்டு. மருதம் = வயல். காறு (கொழு) - share. Culture என்னுஞ் சொல் கல்வியாலான ஒழுக்கத்தை அல்லது திருத்தத்தை உணர்த்திய பின்னர், உழவு ஆங்கிலத்தில் agriculture என அடைகொடுக்கப்பட்டது. 2. Culture-n. refinement கல்வியா லறிவும் அறிவா லொழுக்கமும் பயனாதலின் கல்வி யென்பது காரணவாகுபெயராய்த் திருத்தத்தையுங் குறிக்குமென்க. கல்வித் தொடர்பான சொற்கள் கழகம் - college, n. (orig.) any collection or community of men with certain privileges or a common pursuit as a college of heralds or the college of cardinals: a seminary of learning; a literary, political , or religious institution. - Chambers Etymological Dictionary N.B. orig. ‘g’ was pronounced as ‘g’ in god and the final ‘e’ was not silent. கல் +அகம் = கல்லகம் - கழகம். கல்லகம் வினைத்தொகை. Pedagogue - n. a teacher. L. - Gk. paidos (igjš), a boy; ago - (cif) to lead. pedantry - n. vain display of learning (same) Cyclopedia - n. the circle of human knowledge. Gk. kyklos(r¡fu«), a circle; paideia (from the root-go) learning. 3. Cult - n. worship L. colo - to worship. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றா டொழாஅ ரெனின். (குறள். 2) இதுகாறுங் கூறியவற்றால் உழவே உலக முதற்கல்வி யென்றும் கல்வி யென்னுஞ் சொல் முதன்முதல் உழவு குறித்த சொல்லேயென்றும், பிற்காலத்து நூற்கல்வியை வரையறுத்தமையின் உழவுப்பொருளில் வழக்கற்றதென்றும், உலகில் முதன்முதல் நாகரிகமெய்தி உழவுங் கல்வியு மறிந்தார் தமிழ்மக்களே யென்றும் அவரானேயே அவ் விருதொழிலும் மேனாடுகளிற் பரவியதென்றும், இவ் விருதொழிலையுங் குறிக்கும் மேனாட்டுச் சொற்களில் இன்றியமையாத வெல்லாம் செந்தமிழ்த் திரிபே யென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' சுறவம் 1933 14 நாகரிகம் நாகரிகம் என்னும் சொல்லுக்குத் திருந்திய வாழ்க்கை என்பது பொருள். அறிவும் அதன் வழிப்பட்ட ஒழுக்கமும் சேர்ந்து திருந்திய வாழ்க்கையாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டு மிருப்பின் அது நாகரிக மாகாது அநாகரிகத்தின் பாற்படுவதேயாகும். அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாய் இயற்கையாகவும் செயற்கையாகவும் இருவகையா யிருப்பது. அவற்றுள் இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் உண்டாவது; செயற்கையாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது. ஒழுக்கமென்பது அகம் புறமென்னும் இருவகைத் தூய்மை. அவற்றுள் அகத்தூய்மையாவது நினைவு சொல் செயலென்னும் முக்கருமங்களும் தூயவாயிருத்தல். புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, வீடு முதலியன தூயவாயிருத்தல். புறத்தூய்மையினும் அகத்தூய்மையே நாகரிகத்திற்குச் சிறந்ததாக எண்ணப்படும். ஞானத்தாலும் ஒழுக்கத்தாலும் இல்லறத்தினும், பன்மாண் சிறந்த துறவறத்தில் புறத்தூய்மை ஒரு பொருளாகக் கொள்ளப்படுவதன்று. இல்லறத்தினும் ஒருவன் எத்துணை எளியனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள்களையும் தூயவாய் வைத்துக்கொள்வதே புறத்தூய்மை யாகும். அழகியனவும் விலை யுயர்ந்தனவுமாகிய உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறையுண்பதும், மேனிலையும் அகலிடமுமுள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலை யுயர்ந்தனவுமான வாகனங்களில் ஊர்வதும், இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவைபோல்வன பிறவும் (அறிஞர்களும் அறிவிலிகளுமான) செல்வர்க்கே யுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி நாகரிக வாழ்க்கை யாகா. இவற்றை நாகரிகமென் றெண்ணுவது மேலைப் புதுநாகரிகம்பற்றிய திரிபுணர்ச்சியாகும். `கந்தை யானாலும் கசக்கிக் f£L''tJ« `கூழா னாலுங் குளித்துக் Fo''¥gJ« ``குடிலா னாலுங் கூட்டிக் FoÆU''¤jYnk தமிழ்நாட்டுத் தலைநாகரிகமாகும். கூட்டலாவது மயலகற்றல். பரிமேலழகர் திருக்குறளுரைப்பாயிரத்தில் ஒழுக்கத்தைப்பற்றி, ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல் என்று கூறியுள்ளார். இது குலந்தோறும் வேறாகி நடுவுநிலை திறம்பிய ஆரியவழி யொழுக்கமாதலின், எல்லார்க்கும் பொதுவானதும் நடுவுநிலை திறம்பாததுமான தமிழொழுக்கத்திற்குச் சிறிதும் வேண்டப்படாது. இதை அவ் வுரையாசிரியரே மீண்டும், அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபா டுடைமையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புக ளொழித்து எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி, இல்லறந் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது என்று நூலாசிரியர் கருத்திற்கேற்பக் குறித்துள்ளார். ஆதலால், ஒழுக்கமென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கருமத் தூய்மையேயன்றிக் குலந்தோறும் வேறுபட்ட வருணாசிரம தருமமன்று. நாகரிகமென்னும் சொல்லைத் திருவள்ளுவர் `கண்ணோட்டம்' என்னும் பொருளில் வழங்கியுள்ளார். பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (குறள். 50) என்னும் குறளுரையில், நாகரிகத்திற்குக் கண்ணோட்டமென்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதே பொருளில் கம்பரும், நாக்கரியும் தயமுகனார் நாகரிக ரல்லாமை என ஆண்டிருக்கின்றனர். கண்ணோட்டம் தூய நினைவுகளில் அல்லது திருந்திய குணங்களில் ஒன்றாதலின் நாகரிக மெனப்பட்ட தென்க. நாகரிகமென்னும் சொல் நகர் அகம் என்னும் சொற்றொடரின் (அல்லது பகுபதத்தின்) திரிபாகும். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகமென்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம். மக்கட் பெருக்கால் சிற்றூர்கள் பேரூர்களாவதும், பேரூர்கள் நகரங்களாவதும் இயல்பு. சிற்றூர் சிறிது சிறிதாய் நகர்ந்து பேரூரானபின் நகரெனப்படும். நகர் என்பது முதனிலைத் தொழிலாகுபெயர்; நகரம் என்பது அம்சாரியை பெற்ற முதனிலைத் தொழிலாகு பெயராகவும், அம் விகுதிபெற்ற தொழிலாகு பெயராகவுங் கருதப்படும். நகர்தலாவது பெயர்தல் அல்லது தள்ளுதல். மக்கள் நெருக்கம்பற்றி ஒரு மனையிலுள்ளார் நகர்ந்து புதுமனை புகுவதும் ஒரு தெருவிலுள்ளார் நகர்ந்து புதுத்தெரு புகுவதும் கண்கூடாகக் காண்கின்றோம். இங்ஙனமே ஓர் ஊரானது சிறிது சிறிதாய் நகர்ந்து நாளடையில் நகராகின்றது. பண்டைத் தமிழின்படி ஊர், நகரம் என்பன ஒருபொருட் சொற்கள். ஊர் என்னும் பெயர்க்கும் இதுவே காரணம். ஊர்தலும் நகர்தலும் (ஏறத்தாழ) விரைவளவில், ஒன்றே. முற்காலத்தில் மருதநிலத்தூர்களே ஊர்களெனப் பட்டன. குறிஞ்சி, முல்லை, பாலை நிலங்களிலுள்ள குறிச்சி, பாடி, பறந்தலைகளைவிட மருதநிலத்தூர்கள் மிகப் பெரியனவா யிருந்தன. வாணிகம்பற்றி நெய்தல்நிலத்துப் பட்டினங்களும், உழவுபற்றி மருத நிலத்தூர்களும் மிகச் சிறந்தனவும் பெரியனவுமான நகரங்களாயின. அவ் விருவகை நகரங்களிலும் வாணிகம்பற்றியும் உழவுபற்றியும் பலவகைக் கைத்தொழில்களும் சிறந்திருந்தன. பட்டினங்களையும் ஊர்களையுமே பண்டை மன்னரும் தத்தம் தலைநகராகக் கொண்டிருந்தார்கள். காவிரிப் பூம்பட்டினமும் கொற்கையும் நெய்தனிலத் தலைநகர்களாகவும், உறையூரும் மதுரையும் மருதநிலத் தலைநகர்களாகவும் இருந்தமை காண்க. உழவு, வாணிகம் என்னும் இரண்டினுள் உழவே தலைமை யானதாயும், உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாததாயும் வாணிகத்திற்குக் காரணமாயு மிருத்தலின், முதலாவது ஏற்பட்ட தொழில் உழவேயென்றும் முதலாவது நகராகியது மருதநிலத்தூரே என்றும் தெரிந்துகொள்க. பலநிலத்து மக்களும் தொழில்பற்றியும், பாதுகாப்புப்பற்றியும், செயப்படுபொருள் (manufacture)fsh லேற்பட்ட வசதிபற்றியும், வாணிகம்பற்றியும் ஊரை யும் பட்டினத்தையும் அடுத்ததினால் அவை விரைந்து நகரும் மாநகரு மாயின. ஊர் என்னும் பெயர் இக்காலத்தில் பலவகை யூர்களுக்கும் பொதுப் பெயராகவும், சிற்றூர் என்னும் பொருளில் சிறப்புப் பெயராகவும் வழங்கு கின்றது; நகரென்னும் பொருளில் வழங்குகின்றிலது. பட்டிகளிலும் சிற்றூர்களிலுமிருந்த மக்களைவிடப் பட்டினங் களிலும் நகர்களிலுமிருந்த மக்களே நாகரிகமாயிருந்தனர். இக்காலத்திலும் பெரும்பான்மை அதுவே. மக்கட்பெருக்கால் நகரங்களில் வழக்குத் தீர்ப்பிற்கும் பொருட்காவலுக்கும் ஊராண்மை நாட்டாண்மை முதலிய அரசியல்களும், அவற்றின் சட்டங்களும், அவற்றை மீறியவழித் தண்டங் களும் ஏற்பட்டன. தண்டனைகட் கஞ்சி மக்கள் திருந்திய ஒழுக்கமுடை யராயினர். பலவகைக் கைத்தொழிலால் பலவகைப் பொருள்களும் செய்யப்பட்டதினால் வசதியாகவும் சிறப்பாகவும் வாழத்தொடங்கினர். சிறந்த பாத்திரங்களிற் சமைத்துண்ணவும், வசதியான வீடுகளில் வசிக்கவும், நெய்தவுடைகளை உடுக்கவும் தலைப்பட்டனர். நடையுடை பாவனைகள் நாளடைவில் திருந்திவரலாயின. இங்ஙனமே நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாய் வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. நகரகம் என்னும் சொல் நகரிகம், நாகரிகம்' என மருவி வரும். சிற்றூர்களிலும் பட்டிகளிலு மிருந்த மக்கள் நாகரிகமின்றி மிலேச்ச ராயும் முரடராயு மிருந்துவந்தனர். இக்காலத்திலும், நாகரிகமில்லாதவனைப் பட்டிக்காட்டான் என்பது வழக்கம். ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் civilisation என்னும் சொல் இதே காரணத்தாற்றான் உண்டாயிருக்கின்றது. Civitas என்பது, ïy¤Ô‹(Latin) மொழியில் நகர் அல்லது பட்டினம் (city) என்று பொருள் படும். அதிலிருந்தே civilise என்னும் வினை யுண்டாகும். மரியாதையை அல்லது திருந்திய ஒழுக்கத்தை உணர்த்தும் civility என்னும் சொல்லும் அதனின்றும் திரிந்ததே. civil: having the refinement of city-bred people. civil war: a war between citizens of the same state. city: a large town. L. civitas (Chamber’s Etymological Dictionary) நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரினின்று வந்ததென்றும், நாகரென்பார் நாகரிகத்திற் சிறந்திருந்தவரென்றும் ஆயிரத் தெண்ணூ றாட்டைமுற் றமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகரென்பார் நாகநாடெனப்பட்ட கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பாரே. நாகவணக்க முடைமைபற்றி நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாகநாடெனப்பட்டது. நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் snake என்பது இதே பொருள் பற்றியது. snake: a creeping animal; snican, to creep - (Chambers’ Etymological Dictionary). நகர் நாகம் என்னும் தமிழ்ச்சொற்களே ‘s’ என்னும் முதல் எழுத்துப் பெற்று ஆங்கிலத்தில் வழங்கு மென்க. அது முதற்குறைக்கு மாறானதோர் முதல் விரிபாகும். அதை ஆங்கிலத்தில் `prosthesis' என்பர். நாகம் என்னும் சொல்லுக்கு மலையிலுள்ள தென்றும் மரத்திலுள்ள தென்றும் வடநூலார் பொருள் கூறுவது சிறிதும் பொருந்தாது. கீழ்த்திசை நாடுகளில் பெரும்பாம்புகளிருந்தனவாக வான்மீகி இராமாயணக் கிட்கிந்தா காண்டத்தா லறியக்கிடக்கின்றது. இற்றைக்கும் கழிபெரு நச்சுப் பாம்புகள் தென்அமெரிக்காக் கண்டத்தி லுள்ளனவாகச் சொல்லப்படும். நாகத்தின் தீமைபற்றி அதைத் தெய்வமாக மக்கள் வணங்கி வந்தனர் என்க. நாகத்தொடு பெயரொப்புமைபற்றி நாகரை நாகத்தலையும் மக (மாநுட)வுடம்பும் பெற்ற ஒருவகை உயர்திணை வகுப்பாராகப் பிறழக் கருதுவர் சிலர். பர்மா, ஜாவா முதலிய தீவுகளும், ஆத்திரேலியா, அமெரிக்கா வென்னும் கண்டங்களும், வங்காளக் குடாக்கடலில் அமிழ்ந்து போன நிலப்பாகங்களும் நாகநாடுகளாகும். மணிமேகலையில், கீழ்நில மருங்கி னாகநா டாளும் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் நாக நாடு நடுக்கின் றாள்பலன் வாகை வேலோன் வளைவணன் (கம்பரா. சுந்தர. 20) எனக் கீழ்த்திசை நாடுகள் பொதுவாகவும் சிறப்பாகவும் நாகநாடெனச் சுட்டப்பட்டன. சாவக நாட்டுள்ள புண்ணியராசன் தலைநகர் நாகபுரமெனக் கூறப்பட்டுள்ளது. கம்பராமாயணச் சுந்தரகாண்டத்தில், கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர் வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகண் மின்ன ஆண்டகை யதனை நோக்கி யரவினுக் கரசர் வாழ்வும் காண்டகு தவத்த னானேன் யானெனக் கருத்துட் கொண்டான் என்னும் செய்யுளில் நாகநாடு குறிக்கப்பட்டுள்ளது. இதில் கீழென்பது கிழக்கு. இதைக் கடலின் அடிப்பாகமெனக் கொண்டு இடர்ப்படுவர் சிலர். அனுமான் கடலைத் தாவின வேகத்தினால் எழுந்த காற்று மோதுதலினாலே, கீழ்த்திசையில் பூமியின் வளைவான பாகத்திலுள்ள கடல்நீர் விலகி, அதனால் முன்னம் மறைக்கப்பட்டு (அதற்கப்பால் கிழக்கே) இருந்த நிலப்பாகம் அல்லது நாகநாடு தோன்றிற்று என்பது இச் செய்யுளின் கருத்தாகும். பூமி உருண்டையா யிருத்தலால் கிழக்கே செல்லச்செல்லப் பூமியின் கீழ்ப்பாகமாகும் அமெரிக்கா பூமிக்கு நேர் கீழாகும்; அதனால் கீழ்ப்பூமி யெனப்படும். அது பூமியின் மேற்பரப்பின் வழியாய்ச் சென்றெய்தப்படு வதல்லது நிலத்தை யகழ்ந்தும் கடலின் மூழ்கியும் நேர் கீழாகச் சென்றெய்தப்படுவதன்று. மேற்கே மலைத்தொட ரிருந்தமையால் தமிழ்மக்கள் மேற்றிசையிற் பெரும்பாலும் சென்றிலர். கிழக்கே மலையின்றி யிருந்ததுடன் நிலத்தொடர்பும் நெடுந்தூர மிருந்ததாகத் தெரிகின்றது. நாகநாட்டை யடுத்த கீழ்கரையூர்கள் நாகூர், நாகப்பட்டினமெனப் பெயர்பெற்றிருக்கின்றன. நாகரில் நாகரிகரும் அநாகரிகருமாக இருவகுப்பார் இருந்திருக் கின்றனர். நாகரிக வகுப்பைச் சேர்ந்த கன்னிகைகளையே அர்ச்சுனனும் சோழனும் மணந்ததாகப் பாரதமும் மணிமேகலையுங் கூறும். மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதையுள், சாதுவ னென்போன் தகவில னாகி ................................................... வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையிற் றானுஞ் செல்வுழி நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ .................................................... நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன் ......................................................... ஓங்குயர் பிறங்க லொருமர நீழல் துஞ்சுதுயில் கொள்ளச் சூர்மலை வாழு நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தன னளியன் ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் ....................................................... கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய விருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்தது போலப் பெண்டுட னிருந்த பெற்றி நோக்கி (ம - 69) என்னும் அடிகளால் நாகரில் ஒரு வகுப்பார் அம்மணரா யிருந்தா ரென்றும் மக்களைக் கொன்று தின்றாரென்றும் அறியக் கிடக்கின்றது. ஆதலால் நாகரிகம் என்னும் சொல் நாகர் என்பதினின்றும் வந்ததன்று என்றும் நாகரென்பார் கீழ்த்திசை நாடுகள் பலவற்றிலுமுள்ள மக்கட்கூட்டத்தாரே என்றும், அவருட் சிலர் நாகரிகராயும் சிலர் அநாகரிகராயு மிருந்தன ரென்றும் அறிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' கடகம் 1932 15 வெடிமருந்து வெடிமருந்தாவது வெடிக்கின்ற மருந்து அல்லது சரக்கு.வேட்டு, வெடி என்பன ஒருபொருட் கிளவி. அவை விள் என்னும் மூலத்தினின்றும் வெடிக்கின்ற ஒலிபற்றிப் பிறந்து திரிந்த பழஞ் செந்தமிழ்ச் சொற்கள். வெடிமருந்துகள் பெரும்பாலுங் கலவைகளா யிருக்கும். அக் கலவைகளில் ஒன்று கருமருந்து (gun powder) என்பது. இதுபோது போர்க்குண்டுகள் எத்துணையோ புதுமாதிரியாய்ச் செயப்படினும் அவை யெல்லாவற்றுக்கும் மூலம் கருமருந்தே யென்பது எவர்க்குந் தெரிந்திருக்கும். கந்தகம் கரி வெடியுப்பு என்ற மூன்றன் கலவையே கருமருந்தாகும். இம் மூன்றும் இந்துமாநாட்டில் தொன்று தொட்டுக் கிடைக்கின்றன. கரிய நிறத்தானும் மருந்துபோலுந் தோற்றத் தானும் மருந்துச் சரக்காகிய கந்தகத்தின் சேர்க்கையானும் கருமருந் தெனப்பட்டது. கருமருந்தின் பிறப்பிடத்தைப்பற்றி Encyclopaedia Britannica என்னும் ஆங்கிலக் fiyafuhâ(Ninth Edition Vol. XI p. 317), பின்வருமாறு கூறுகின்றது: கருமருந்தின் கீழைப்பிறப்பு - எல்லா அதிகாரிகளின் ஆராய்ச்சி யும் கீழ்நாட்டையே கருமருந்து போன்ற ஒரு வெடிகலவையின் பிறப்பிட மாகச் சுட்டுவதாகத் தெரிகின்றது. அது அங்குத் தொன்றுதொட்டு வழங்கி வந்தது. ஆனால், அதைக் குண்டாக உபயோகித்த காலம் மிகப் பிந்திய தென்பதற்கு ஏதும் ஐயமின்று. இந்திய சீனப் பெரு மைதானங்களில் ஏராளமாய் மண்ணோடு மண்ணாய்க் கலந்துள்ள வெடியுப்பின் சிறப் பியல்கள் தற்செயலாய்க் கண்டு பிடிக்கப்பட்டதே வெடிமருத்துவக் கலைக்குத் தொடக்கமா யிருந்திருக்கக்கூடும். அடுப்பெரிக்கும் விறகு கரியினால் கருமருந்திற் சேரும் சரக்குகளில் வேகமிக்க இரண்டும் எளிதாய்க் கலப்பாகும். பின்பு நெருப்பின் தொழிலால் அவை விளக்கமா யேனும் மங்கலாயேனும் விரைந்தெரியும். வெடியுப்புச் சில வேளைகளில் நிலக்கரியில் விழுந்துவிடுவதால் வியக்கத்தக்க விதமாய் அதை மிதமிஞ்சி எரியப் பண்ணுகின்றது. ஆகையால் வெடியுப்பும் கரியும் சேர்ந்த கலவையே யாதானுமொரு வேகத்துடன் வெடிக்கு மென்பதை யாம் எளிதாய் உணரக்கூடும். கந்தகம் பிந்திச் சேர்க்கப்பட்டதே, அது வெடிப் பிற்கு வேண்டுவதன்று. நமது தற்காலத் துப்பாக்கி மருந்து அத்தகைய கலவையின் திருத்தமும் நிறைவுமேயன்றி வேறன்று (மொழி பெயர்ப்பு) கருமருந்தானது தென்னாட்டில் வாணவேடிக்கைக்கும் கிணறு வெட்டுக்குமாக இருவகையிற் பயன்பட்டுவருகிறது. வாணம் சிறியோர்க் குரியவும் பெரியோர்க் குரியவுமாக இருவகைப்படும். அவற்றுட் சிறியோர்க்குரியன வேட்டுகளென்றும் பட்டாசு (பட்டென்று வெடிப்பது) என்றும், டப்பாசு (டப்பென்று வெடிப்பது) என்றும் பலவிடத்துப் பலவித மாய்ப் பொதுப்பெயர் கொள்ளும். இக்காலச் சிறார் வேட்டுகளெல்லாம் தீபாவளி முதலிய திருவிழாக் காலங்களில் ஜப்பான் நாட்டினின்றும் வரவழைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஜப்பான் வெடிகள் வருமுன்னர் நம்நாட்டுச் சிறார் தாமே வெடிகள் செய்து வந்தனர். இக்காலத்தும் சில சிறார் வெடியுப்பும் மனோசிலையும் தனித்தனி அரைத்துச் சீனிக்கற்களுடன் சேர்த்துக் கல்வெடி செய்வதையும் கரித்தூளும் நெல்லுமியுஞ் சேர்த்துப் பொரிவாணஞ் செய்வதையும் கண்கூடாகக் காண்கின்றோம். இங்ஙனஞ் செய்தற்கியலாத இளஞ்சிறாருங்கூடப் பொரிவாணஞ் சுற்றும் பாவனையாய், இருகைகளையும் நீட்டிக் கிறுகிறு வாணம் கின்னறு வாணம் என்று சொல்லிக்கொண்டு சுற்றி விளையாடுவதை இளமைமுதற் கண்டிருக்கின் றாம். சிறியோர் செய்வனவும் விளையாடுவனவுமெல்லாம் பெரும்பாலும் பெரியோர் செய்பவற்றைப் பின்பற்றியேயாம். (சிற்றில், சிறுதேர், மணற்சோறு, மண்ணாங்கட்டிக் கலியாணம் முதலியனவுமதற் குதாரணம்). இனிப் பெரியோர்க்குரியன பொதுவாய் வாணங்களெனப்படும். அவை கம்பவாணம், கட்டுவாணம் (வாணக்கட்டு), ஈச்சவாணம், பொரிவாணம், காவடிவாணம், குதிரைவாணம், சேவல்வாணம், அவுட் (ஆங்கிலப்பெயர்) எனப் பலவகைப்படும். இவற்றை யெல்லாம் தென்னாட் டிற் றிருவிழாக் காலங்களில் சிறக்கக் காணலாம். இவற்றுட் பெரும்பாலன வடபாகங்களி லில்லை. (இக் கட்டுரை முழுதும் வடநாடு தென்னாடெனச் சுட்டுவதெல்லாம் சென்னை மாகாணத்தின் வடபாகத்தையும் தென்பாகத் தையு மென்றே தெரிந்துகொள்க.) வாணமென்னுஞ் சொல் வடமொழியிற் பாணமெனத் திரியும். சில வகரமுதற் றமிழ்ச்சொற்கள் வடமொழியிலும் அதன் தன்மை அமைந்த பிறமொழிகளிலும் பகரமுதற் சொற்களாகத் திரிதலியல்பு. வாத்தைப் பாத்தென்றும், வாடகையைப் பாடகை யென்றும், வண்டியைப் பண்டி யென்றும் கூறுவர் தெலுங்கர். தெலுங்கு ஒரு கொடுந்தமிழ் மொழியேனும் இலக்கண விலக்கியச் சார்பினால் வடமொழித் தன்மை சான்றது. வாணமென்பதற்கு அம்பென்பது பொருள். வாளியென்பது வாளம், வாணம் எனத் திரிந்தது. அதற்கு வளைந்தது, ஒளியுள்ளது, வாலுள்ளது என்பன பொருளாம். இவற்றுள் முன்னதற்கு வள் பகுதி; இடையதற்கு வாள் பகுதி; கடையதற்கு வார் பகுதி. கடகாலின் வளைந்த பிடிக்கு வாளியென்று பெயர். பின்னர் அது சினையாகுபெயராய் அல்லது தானியாகு பெயராய் அக் கடகாற்கே ஆகிவந்தது. வாளொளி யாகும் (தொல். சொல். 367) வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். சொல். 317) என்பன தொல்காப்பியம். வார் - வால் (போலி) இவற்றுட் பின்னிரண்டும் சிறந்தவை. பிறைபோல் வளைந்த முகத்தை யுடைய பிறைமுகம் என்னுமோர் அம்பு முன்காலத்தில் வழங்கினதேனும் அது வாளியென்னும் பெயர்க்குக் காரணமாயிற்றென்றல் அத்துணைப் பொருத்தமுடைத்தன்று. வாணம் முன்காலத்தில் அம்பு போலப் போர் முனையில் வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. அதனையே அக்கினி யாஸ்திரமெனப் புராணங்கள் கூறாநிற்கும். இனி, அதற்கினமான வாயு வாஸ்திரம் வருணாஸ்திரம் முதலியவும் கூறப்படுகின்றன. அவற்றை இனமுறையிற் கூறிய இல்பொருளாகவே கொள்ள வேண்டும். இக்கால முறைப்படி அவற்றை முறையே நச்சுக்காற்று (poisonous gas) என்றும், நச்சுப்புனல் (liquid poison) என்றும் கூற இடமிருப்பினும் பொருந்தாது. கண்ணபிரானொடு சண்டை செய்த வாணாசுரன் என்பவன் பலவகை வாணங்களை விட்டதாகத் தெரிகின்றது. இராமாயணத்திலும் நாகாஸ்திரம், பிரமாஸ்திரம் முதலிய வாணச்சிறப்புகள் கூறப்படுகின்றன. தென்னாட்டுப் பழம் போர்த்துறைகளை விரித்துக் கூறும் தொல் காப்பியத்தில் வாணத்தைப்பற்றி ஒரு குறிப்பு மின்று. உழிஞைப்போரில் நெடுநாள் முற்றியும், அகத்தோன் வருபகை பேணா ஆரெயிலின்கண், ஊர் சுடுவதற்காகப் புறத்தோன் கட்டுவாணங்களை வழங்கி யிருக்கலாமென்று கருத இடமுண்டு. கட்டுவாணங்களை வழங்காவிடினும் எயிலோரம் ஒரு கம்பவாணத்தை நட்டுக் கொளுத்தின், புறத்தோன் கருதியது எங்ஙனம் கைகூடுமென்பது எவர்க்கும் புலனாகும். இது ``முரணிய புறத்தோன் அணங்கிய பக்கத்துள்'' அடங்கும். அஃதேல், தொல்காப்பியத்துள் இஃதேன் கூறப்படவில்லை யெனின், போர்முனையிற் செய்யப்படுவதெல்லாம் ஓர் இலக்கண நூலிற் கூறப்படாவென்றும், உறுமனத்தானும் உடல்வலியானும் செய்யும் மறப்போரைச் சிறப்பித்துக் கூறுவதே தொல்காப்பிய நோக்க மென்றும், பல வினைத்தொகுதிகளான துறைகளையே தொல்காப்பியங் கூறுமென்றும், உழிஞைப்போரில் ஒரோவிடத்துச் சிறுபான்மை நிகழ்வ தொன்றை நியதியாகக் கூற லொவ்வாதென்றும், ஒருகால் நிகழின் அஃது அணங்கிய பக்கத்துள் அடங்குமென்றுங் கூறிவிடுக்க. வாணம் நெருப்பின் தொழிலன்றி வயவர் மறமன்று; அதூஉம் இராப் போர்க்கே சிறப்புடைத்து. கிணறுவெட்டு இனி, கிணறு வெட்டுக்குக் கருமருந்தைப் பயன்படுத்துவதும் தொன்றுதொட்டு வந்த வழக்காகும். சோணாடு காவிரிப்பேரியாற்றுப் பாய்ச்சலானபடியால் பாண்டி நாடுபோல் கிணற்றுநீரை வேளாண்மைக்கு வேண்டுவதன்று. சோணாடு முழுமையும் பொன்னிநாடு, புனனாடெனப் பட்டமையே அதைப் புலப்படுத்தும். குமரிநா டமிழ்ந்தபின் வைகையும் பொருநை (தாமிரபரணி)யுமே பாண்டிநாட்டியாறுக ளாதலானும், அவை காவிரிபோலப் பேரியாறுக ளன்மையானும், நெட்டிடையிட் டிருத்தலானும், பாண்டிநாட்டின் பெரும்பாகப் பயிர்த்தொழில் கிணற்றிறைவையாலேயே நடந்துவருகின்றது. ஆற்றுப் பாய்ச்சலில்லா விடங்களிற் குளங்களிருப் பினும். அவை மழையின்றி நிரம்பாமையானும், நிரம்பினும் விரைந்து வற்றுகின்றமையானும், அவ்வவ்வூர்ப் பாய்ச்சலுக்குப் போதாமையானும், கிணற்றுநீர் இன்றியமையாததா யிருக்கின்றது. சோணாட்டார் காவிரியாற் றையே பெரிதும் நம்பியிருத்தலின், பாண்டி நாட்டார்போல உழவுத் தொழிலை உழந்து செய்ய வேண்டியதில்லை. ஒரோவழி வேண்டிய திருப்பின் உழந்து செய்வதுமில்லை. பயிர்த்தொழிலுக்குப் பாண்டிநாட் டுழவர்க்குள் மட்டும் வழங்கிவரும் பாடுபடுதல் என்னும் குறியீடே இதைப் புலப்படுத்தும். சோணாட்டார் காவிரிப் பாய்ச்சலின்றி நெல் விளைப்பதருமை. பாண்டி நாட்டாரோ குளம் வற்றியக்காலும் கிணற்று நீரால் நன்செய் விளைவும் புன்செய் விளைவும் விளைக்கின்றனர். நன்செய் விளைவிலும் புன்செய் விளைவு தென்னாட்டிற் சிறந்திருப்பதே அங்குள்ள நீர்க்குறைவையும் கிணற்றிறைவையையும் புலப்படுத்தும். இன்றைக்கும் தென்னாட்டுழவர்க்கு அவ்வக்கால உணவாயுள்ள சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய கூலவகைகள் வடநாட்டார்க்கு என்னவென்றே தெரியவில்லை. கிணறுகள் வடபாகங்களில் தென்னாட்டிற் போல ஏராளமாயும் அகன்றும், சமுக்கமாயுமிராமல், சிலவாயும் சிறியவாயும் வட்டமாயு மிருக்கின்றன. கிணறுகள் அகன்ற சதுரங்களாயிருப்பின் ஆழமாய்த் தோண்டவும், பக்கத்திற்கொரு கமலை போடவும் உதவும். தென்னாட்டின் பெரும்பாகம் ஆற்றோரமா யின்மையானும், அடிப்படை கற்பாங்கானமையானும், கிணறு வெட்டுவதற்கு ஆழமாகத் தோண்டவும் கற்பாறைகளைப் பெயர்க்கவும் வேண்டியிருக்கிறது. அது இருப்புப்பாரை கூந்தாலம் முதலிய கருவிகளாற் கூடாமையின் வெடிம ருந்தின் உதவி வேண்டியதாயிருக்கிறது. கற்பாறையில் ஒரு சுரங்கம் தோண்டி அதற்குள் வெடிகுழாய்க்குட் செலுத்துவதுபோல் கருமருந்தையும் கரம்பையையுஞ் செலுத்தி நெருப்பை வைக்கிறார்கள். அது பேரொலியுடன் வெடித்துப் பெருவலியுடன் புடை சூழ்ந்த பாறைகளை யெல்லாம் படைபடையாகப் பெயர்த்துவிடுகின்றது. இதே முறையில்தான் திருவிழாச் சிறப்பிற்குப் போடும் பிடாங்கு வேட்டும் வெடிக்கின்றது. பிடாங்கு ஒலிபற்றிய சொல், பிள் என்னும் மூலத்தினின்றும் பிடுங்கு என்னும் பகுதியினின்றும் பிறந்தது. தென்னாட்டில் எல்லாக் கிணறுகளும் சுரங்க வேட்டாலேயே வெட்டப்படுகின்றன. சில கிணறுகள் மிகப் பழைமை யாயிருப்பதுபற்றி, இவ் வழக்கமும் பண்டுதொட்டே வந்திருத்தல் வேண்டும். கிணறு என்ற பெயர் மிகப் பழைய நூல்களிற் காணப்படா விடினும், அதற்கினமான கேணி என்னும் பெயர் காணப்படுகின்றது. கேணி, கிணறு என்னுமிரண்டும் கீள் என்னும் பகுதியினின்றும் பிறந்து திரிந்தவை. (கல்-கில்-கீள் = தோண்டு) கற்பாங்கான இடத்தில் வெட்டப்பட்டதே பண்டு கேணி யெனப்பட்டது. திருவிளையாடற் புராணத்திற் கேணி யென்னுஞ் சொல் நிகழ்கின்றது(வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்தது). மக்கள் பெருகாத முன் காலத்தில் யாற்றுவளமுள்ள மருதநிலங்களிலேயே உழவர் குடியிருந்தனர். மக்கள் பெருகவே யாறில்லா நிலத்தும் உழவர் உறைய வேண்டியதாயிற்று. அதனாலேயே கிணறுகள் வேண்டியவாயின. இதுகாறுங் கூறியவற்றால், வெடிமருந்து தென்னாட்டிலேயே தோன்றியதென்றும், அது முதலாவது வாணமாகப் போருக்குப் பயன் படுத்தப்பட்டதென்றும், அதன் பின்னரே அது வேடிக்கைக் காயிற்றென்றும், கிணறுண்டான காலந்தொட்டுப் பாறை பெயர்க்கவும் உதவி வருகிற தென்றும் தெரிந்துகொள்க, துப்பாக்கியும் பீரங்கியும் பிற குண்டுகளுமே மேனாட்டாராற் பிற்காலத்துச் செய்யப்பட்டவை. - ``செந்தமிழ்ச் செல்வி'' மீனம் 1932 16 பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை ஆதியில் ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் காலத்தைக் கணக்கிடு வதற்குச் சூரியனையே அடிப்படைக் கருவியாகக் கொண்டிருந்திருக் கின்றனர் என்பது எவர்க்குஞ் சொல்லாமலே விளங்கும். தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் கூற்று மளந்துநுந் நாளுண்ணும் (நாலடி. 7) என நாலடியாருங் கூறுகின்றது. சூரியனின் தோற்ற மறைவுகளினால் முறையே பகலும் இரவும் நிகழ்கின்றன. ஒரு பகலும் ஓர் இரவுஞ் சேர்ந்து ஒரு நாள் என்னும் அளவா யிற்று. மக்கள் நாகரிகமடைந்து, நுட்பமாய்க் காலத்தைக் கணக்கிட நேர்ந்த போது , ஒரு நாளுக்குள், நாழிகை(24 நிமிடம்) மணி, நிமிடம், நொடி(விநாடி) முதலிய நுண்கால அளவுகளும் சூரியனின் எழுச்சி வீழ்ச்சிகளால் காலை மாலை என்னும் வேளைகளும், இராப்பகல்களின் தோற்ற நடுவிறுதிகளால் 4 மணி நேரங்கொண்ட சிறுபொழுது என்னும் அளவும் எழுந்தன. ஒருநாளுக்குமேல், எழுகோள் (கிரகம்)களின் பெயரால் வாரம் என்னும் அளவும், மதியின் வளர்வு தேய்வுகளால் பக்கம் (Fortnight) என்னும் அளவும், ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையுஞ் சேர்ந்து மாதம் என்னும் அளவும், மருத்துவ முறையால் மண்டலம்(40 அல்லது 48 நாள்) என்னும் அளவும், தட்பவெப்பநிலை (சீதோஷ்ணஸ்திதி) மாறுபாட்டால் பெரும் பொழுது (பருவம் = 2 மாதம்) என்னும் அளவும், சூரியனின் வட தென் வழிகளால் அயனம் (6 மாதம்) என்னும் அளவும், ஒரு வட வழியும் ஒரு தென்வழியுஞ் சேர்ந்து ஆண்டு என்னும் அளவும், சில பஞ்சங்களி னால் அறுபதாண்டு கொண்ட ஓர் அளவும், எரிமலையாலும் கடல் கோளாலும் நிகழ்ந்த சில பெருநிலத்தழிவுகளால் ஊழி(யுகம்) என்னும் அளவும், நாலூழி கூட்டிச் சதுரூழி என்னும் அளவும் ஏற்பட்டன. இவற்றுள் ஊழியும் சதுரூழியும் புராணமுறை பற்றியனவேயன்றி, உண்மையான சரித்திரமுறை பற்றியனவல்ல. மேற்கூறிய சிற்றளவுகட்கும் பேரளவுகட்கும் ஆதாரமாயிருப்பது நாள் என்னும் அளவேயாகும். பகல் இரவு என்னும் இருபகுதிகளில், பகலானது வீட்டை விட்டு வெளியேறி வழங்கவும், வேலை செய்து பொருள் தேடவும் இருதிணைப் பொருள்களையுங் காட்சிகளையுங் கண்டு களிக்கவும், அன்பான நண்பருடன் அளவளாவவும், இனத்தாரொடு கூடி உறவாடவும் பெரிதும் உதவுவதாகும். ஆதலால் பகல் இன்பகாலமாக எண்ணப்படுகின்றது. ஆனால், இரவோ மேற்கூறியவற்றிற்கு மிகுதியும் இடமாகாமையானும், தெளிந்த பார்வையின்மையானும் துன்பகாலமாக எண்ணப்படுகின்றது. இதனாலன்றோ, சிறையாளரை இருட்டறையில் அடைப்பதும், நரகத்தை `இருளுலகம்' என்பதும், துன்பத்தை யிருளாகப் பாவித்துக்கொண்டு நரகாசுரன் மாய்வால் துன்பந்தீர்ந்ததைக் குறிக்கத் தீபாவளியிரவன்று தீபமேற்றிக் களிப்பதும், (இத் தீபமேற்றும் வழக்கம் இக்காலை நின்று விட்டது.) இரவில் வேலைசெய்தலின் அருமை நோக்கியே அல்லும் பகலும், இரவும் பகலும், இரவு பகலாய் என்னும் தொடர்களில் இரவு முற்கூறப்பட்டது. இனி, இராக்காலம் பேய்கள் வழங்குங் காலமாகக் கூறப்படுதலால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றபடி அச்சத்திற் கிடமானதுமாகும். அஃதோடு நச்சுயிர் (விஷப்பிராணி)களும் கொடிய விலங்குகளும் வழங்குங் காலமுமாகும். ஆனால் இவையெல்லாம் நம் முன்னோர் கருத்தில் ஓர் துன்பமாகத் தோன்றியில. எவ்வகையொலியும் அடங்கிய உறக்க நிலையே இராக்காலத்தில் ஓர் அழிவுணர்ச்சியைத் தமிழ்மக்கள் உள்ளத்தில் உண்டுபண்ணியிருக்கின்றது. மூச்சு ஒன்று தவிர மற்றப் பேச்சு முதலிய யாவும் ஒடுங்கிய உறக்கநிலை இறப்புநிலைக்கு ஒப்பாயிருப்பதால், அதையே ஓர் அழிவுபோல நம் முன்னோர் கருதி யிருக்கின்றனர். இறந்தவனை அடங்கிவிட்டான் என்றும், ஊரார் உறங்குவதை ஊர் அடங்கிற்று என்றும் கூறுவதை உய்த்துணர்க. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு, (குறள். 339) துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் (குறள். 926) என்றார் திருவள்ளுவரும். பண்டைத் தமிழர் உறக்கநிலையை ஒருவகை அழிவுநிலை யென்றும், அது நிகழ்கின்ற இராக்காலத்தை ஒருவகை அழிவுக் காலமென்றுங் கருதியதை, எல்லாப் பொருள்களும் இறைவனுக்குள் ஒடுங்குவதாகக் கூறப்படுகின்ற ஊழியிறுதிச் சங்கார நிலையை ஓர் இரவிற்கும், அப் பொருள்களின் ஒடுக்கத்தை ஓர் இளைப்பாறலுக்கும் அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதானே விளங்கும். ஆகவே, சிறுமுறையாகவும் பெருமுறையாகவும் பல்வகை யழிவுகளைக் கண்டு, அவற்றை யெல்லை யாகவுடைய பல்திறக் காலப்பகுதிகளையே பற்பல கால அளவுகளாக அவர்கள் கொண்டிருத்தல் வேண்டும். ஆராய்ந்து பார்ப்பின், நாள் முதல் ஊழி வரையுள்ள எல்லாக் கால அளவுகளும் ஒவ்வோர் வகையில் ஒவ்வோரழிவில் முடிவனவே யாகும். இன்பத்தைவிடத் துன்பமே கவனிப்பிற் கிடமாதலால், அது காலத்தை அளப்பதற்கோர் எல்லை யாயிற்று. முதலாவது நாளை யெடுத்துக்கொள்ளின், அஃது உயிர்களின் உணர்ச்சியும் முயற்சியும் அழிந்த இரவில் முடிவதாகும். இரண்டாவது வாரம். ஒரு வாரத்தின் கடை நாள் சனி. சனி என்னுங் கோள் துன்பத்திற் கேதுவானதென்றும், சனிக்கிழமை மங்கலவினை செய்யலாகாதென்றும் நம் நாட்டுச் சோதிடமென்னும் வான்நூலும் ஜோசிய மென்னும் வான்குறி நூலும் கூறாநிற்கும். ஒரு சனியில் முடியும் ஏழு நாளளவு ஒரு வாரமாகும். மூன்றாவது மாதம், மாதந்தோறும் ஓர் அமாவாசை நிகழ்கின்றது. அன்று சந்திரன் மறைந்து உலகெங்கும் இருள் கவிகிறது; கடல் கொந்தளிக் கிறது; நோயாளிகளின் நிலை மிகக் கேடாகிறது. மதி தோன்றாமையாலுள்ள துன்பத்தைப் போக்குவதாக இந்துக்கள் எண்ணெய் முழுக்காடுகின்றனர். சிலர் ஊணுழைப்பும் ஒழிகின்றனர், அல்லது குறை கின்றனர். ஆகவே, அமாவாசை ஒரு துன்ப நாளாக எண்ணப்படுகின்றது. ஓர் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி அடுத்த அமாவாசையில் முடிவது ஒரு மாதமாகும். நாலாவது ஆண்டு. ஓர் ஆண்டில், மார்கழி மாதம் ஓர் துன்பகாலமாக எண்ணப்படுகின்றது. ஆடவர் பஜனை முதலிய பக்தி முயற்சிகளாலும், பெண்டிர் இல்லங்களைத் துப்புரவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதாலும் அம்மாதத்தில் தங்கட்கு நேர்வதாகக் கருதும் துன்பங்களைப் போக்க முயல்கின்றனர். அம் மாதத்தின் கடைநாள் போகிப் பண்டிகை என்னும் பேரால் ஓர் சுத்திகரிப்பு (துப்புரவாக்கல்) நாளாகக் கொண்டாடப் படுகிறது. அன்று சுகாதாரக் கேடான பழம்பொருள்கள் சுட்டெரிக்கப் படுகின்றன. அது துன்பந் தொலைவதற்கோர் அறிகுறியெனவும் கருதப் படுகின்றது. மார்கழிக்கடுத்த தைமாதம் மங்கல மாதமாக மதிக்கப்படுகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். தை முதல் துன்ப மாதமாகிய மார்கழி யீறான காலப்பகுதி ஓர் ஆண்டாகும். ஐந்தாவது அறுபதாண்டுச் சக்கரம். முன் காலத்தில் சில பஞ்சங்கள் அறுபதாண்டுக் கொருமுறையாக அடுத்தடுத்து நிகழ்ந்ததால், அத்தகைய பஞ்சமொன்று அறுபதாண்டுக் கொருமுறை நிகழுமென்றெண்ணி அதற்கு அறுபதாம் ஆண்டுப் பஞ்சமென்று பெயரிட்டனர். இக்காலத்தும் அது(60ஆம் ஆண்டாகிய) தாதுவருடப் பஞ்சமென்றழைக்கப்படுகிறது. அறுபதாண்டென்னும் கால அளவு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வந்ததாகும். அவ் வாண்டுகளின் பெயர்களே சாலிவாகனனால் கி.பி. 78-ல் ஏற்படுத்தப்பட்டவை. இதனால் அதிலிருந்து அவன் பெயரால் ஒரு சகாப்த K«(Era) வழங்கலாயிற்று. சிலர் சாலிவாகனனுக்கு அறுபது மக்களிருந்தனர் என்றும், அவர்கள் பெயரையே ஆண்டுகளுக்கு இட்டனன் என்றும் கூறுவது நம்பத்தக்கதன்று. அறுபதாண்டுகளின் பெயர்கள் யாவும் இடுகுறியான வடசொற்கள். அவை வடமொழியாயிருப்பதுபற்றி அக்கால அளவு ஆரியரதாகாது. பொருள் வேறு, சொல் வேறு. பல நாட்டு நகரங்கட்கும் தமிழ்மக்களுக்கும் இக்காலத்து வடமொழிப் பெயர்கள் வழங்குதல் காண்க. அறுபதாண் டென்னுமளவு ஒருவர் ஆயுட்காலத்திலேயே முடிந்துவிடுவதினாலும், அது திரும்பத் திரும்ப நிகழ்வதால் ஓர் ஆண்டின் பெயர் ஆங்கில ஆண்டின் எண்ணைப் போல ஓர் ஆண்டையே குறியாமல் முன்பின் பல ஆண்டு களைக் குறிப்பதாலும், அதன் பெயரீடு எத்துணையும் சிறந்ததன்று. அதனாலேயே தமிழர் அவ் வாண்டுகட்குப் பெயரிட்டிலர். ஆண்டுகளின் பெயர்களை அறியாமலே ஒருவர் தம் ஆயுளைச் சொல்லக்கூடும். மக்களின் சராசரி ஆயுளெல்லை ஆதியில் பன்னூறாகவும், பின்பு வேத காலத்தில் 100 ஆகவும், சாலோமோன் காலத்தில் 80 ஆகவுமிருந்து இன்று 60 ஆகக் குறைந்துள்ளது. அறுபதாண்டானவுடன் சஷ்டி பூர்த்தி என்னும் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பெருமக்கள் அறுபதாண்டிற்கு மேற்பட்ட காலம் சராசரி ஆயுட்கு மிஞ்சினதாக எண்ணப் படுகின்றது. ஆயினும், 60 ஆண்டிற்கு மேற்பட்டோர் மிகப் பலரிருக் கின்றனர். இக்காலத்திலேயே அறுபதாண்டிற்கு மேற்பட்டோரிருக்கும் போது, முற்காலத்தில் அத்தகையோர் கழிபலரிருந்தார் என்பதற் கெட்டுணையு மையமின்று. ஆதலால், ஆண்டுகளின் பெயர்களில்லாக் காலும் அறுபதாண்டென்னுங் கணக்கு ஒருவர் நினைவி லிருந்திருக்கக் கூடியதே. ஆகவே, ஒரு பஞ்சத்தில் முடியும் அல்லது முடிவதாக எண்ணப்படும் அறுபதாண்டுக் காலமும் ஓர் அளவாயிற்று. ஆறாவது, ஊழி. ஊழிகள் கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கென்றும்,அவை முறையே 17,28,000, 12,96,000, 8,64,000, 4,32,000 ஆண்டுகளென்றும் புராணமுறை தழுவிப் பஞ்சாங்கங்கள் கூறாநிற்கும். இவ் வூழியளவுகளின் கழிபெரு நீட்சியையும் இவை முறையே ஒவ்வொன்றிலும் 4,32,000 ஆண்டு குறைந்து வருவதையும் நோக்குமிடத்து, இவை கற்பனை யென்றும், இதுவரை உண்மைச் சரித்திரத்தில் ஒருமுறை யேனும் கணக்கிடப்பட்டில வென்றும் தெள்ளிதிற் றெரியும். உலகத்தில் எந்த நாட்டிலும் உண்மையான அல்லது நம்பத்தக்க சரித்திரம் கிறித்துவின் காலத்திலிருந்து, அல்லது அதற்குச் சில நூற்றாண்டுகட்கு முன்னிருந்துதான் தொடங்குகிறது. ஆதலால், அதற்கு முற்பட்ட கழிநெடுங்காலக் கணக்கு, சரித்திர முறைபற்றியதன்று. ஊழி யென்னுஞ் சொற்பொருளை யாராயின், அச் சொல் குறிக்கும் கால அளவு ஏற்பட்டமைக்குக் காரணம் புலனாகும். ஊழி என்னும் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து இகர விகுதி கொண்ட தொழிற் பெயராகும். ஊழ் என்னும் பகுதிக்கு முறைமை, விதி என்னும் பெயர்ப் பொருளும், முதிர்வு அழிவு என்னும் வினைப்பொருளு முள்ளன. இவற்றுள், வினைப்பொருளே பெயர்ப்பொருட்கு மூலமாகும். ஊழ் என்னும் வினைப்பகுதி முதிர்வு அல்லது அழிவு என்னும் பொருளில் சங்க நூல்களிற் பலவிடத்து வந்திருப்பதைக் காணலாம். எ-டு : தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே (புறம். 109) உழுதூர் காளை யூழ்கோ டன்ன (புறம். 322) பழமூழ்த்து (புறம். 381) ஊழ்கோடு = செவ்வியழிந்த கோடு (சாமிநாதையர் உரை). கழைவளர் நெல்லி னரியுழை யூழ்த்து (மலைபடு. 180) ஊழுற் றலமரு முந்தூழ் (மலைபடு. 133) ஊழுறுத்து = வீழ்த்தி (பெருங்கதை உரை: ப. 264) காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742) ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து அல் விகுதி பெற்ற ஊழல் என்னும் தொழிற்பெயர் கேடு என்னும் பொருள் தருவதாகும். சூரியனைக் குறிக்கும் என்று என்னும் பெயர் ஊழ் என்னும் சொல்லொடு புணர்ந்தான என்றூழ் என்னுந் தொடர், அழிவுக்குரிய கோடைகாலத்தையும் வெயிலை யும் அவற்றை யுண்டாக்கும் சூரியனையுங் குறிக்கும். மேற்காட்டிய உதாரணங்களினின்று, ஊழ் என்னும் சொல் முதலாவது அழி என்னும் பொருள் தரும் வினைப் பகுதியே யென்பதும், பின்பு முதனிலைத் தொழிற்பெயராயும் இகரவிகுதி பெற்ற தொழிற்பெயராயும் நின்று அதன் பின்பு ஆகுபெயராகி விதி, முறைமை, யுகம் என்னும் பொருள்களைத் தந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன. ஆக்கமுங் கேடுமாகிய இரண்டும் விதியே யேனும், கேடு அல்லது துன்பம் வந்த விடத்தே விதியென்று இறைவனை யெண்ணுவதும், ஆக்கம் அல்லது இன்பமுள்ளவிடத்து இறைவனை மறந்து மகிழ்ந்திருப்பதும் உலகவியல் பாதலால், அழிவு என்று பொருள்படும் ஊழ், ஊழி என்னுஞ் சொற்கள் மேற்கூறிய விதி முதலிய பொருள்களை முறையே கொள்ளலாயின. ஒவ்வோர் ஊழியின் இறுதியிலும் ஒவ்வொரு பேரழிவும் ஒவ்வொரு சதுரூழியின் இறுதியிலும் ஒவ்வொரு மாபேரழிவும் நிகழ்வதாகச் சித்தாந்த நூல்கள் கூறும். இவ் வழிவு எரிமலை யெழுச்சியாகவாவது கடல்கோளாக வாவது இருக்கலாம். இவ் விரண்டிற்குங் காரணம் நிலத்தின் உள்நடு விலிருக்கும் வெங்கொடு நெருப்பேயாகும். சிவனுக்கிருப்பு மலையும் திருமாலுக்கிருப்பு (பாற்) கடலுமாதலால், சைவர்கள் எரிமலை வடிவாகவும் வைணவர்கள் (மாலடியார்கள்) கடல்கோள் வடிவாகவும் ஊழியிறுதி உலக அழிவைக் கூறுவர். உலகம் என்பது உலக முழுவதையுமேனும் அதில் ஒரு பாகத்தையேனுங் குறிக்கும். இந்துமா பெருங்கட லிருக்குமிடத்து முன்னொருகாலிருந்து இதுபோது நீர்க்கீழ் மூழ்கியுள்ள பண்டைத் தமிழ் நாட்டில், மூன்று பேரழிவுகள் நிகழ்ந்ததாகச் சங்கநூல்களா லறியக் கிடக்கின்றது. அம் மூன்றுங் கடல்கோள்களே. அவை முறையே தலைச் சங்கத்திறுதியிலும், இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்திறுதியிலும் நிகழ்ந்தவை. அடுத்தடுத்து நெட்டிடையிட்டு மூன்று கடல்கோள்கள் நிகழவே, இவ்வகை யழிவு ஒவ்வோர் நெடுங்காலத்தின்பின் நிகழுமென்றெண்ணி அதற்கு ஊழியெனப் பெயரிட்டனர். (ஊழி = அழிவு. உலக ஊழியை அல்லது அழிவை எல்லையாகவுடைய காலத்தை ஊழியென்றது ஆகுபெயர்.) மூன்றாம் அழிவிற்குப் பிறகு இதுபோது நடக்குங் காலப் பகுதியை நாலாம் ஊழியென்றனர். தொல்காப்பியரின் காலத்தைக் குறிக்குமிடத்து இவ் வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந் நூல் செய்தலின் என்று (தொல். பொருள். கற்பியல் 4ஆம் சூத்திரவுரை) நச்சினார்க்கினியர் கூறியிருப்பதை உய்த்துணர்க. இதுவே ஊழி, சதுரூழி என்னும் கால அளவுகள் தோன்றிய வரலாறாகும். இவற்றுக்குப் பிற்காலத்தார் வடமொழிப் பெயருங் கற்பனை யளவுங் கூறியதன்றிச் சதுரூழியைத் திரும்பத் திரும்ப நிகழுங் காலச் சக்கரமாகவுங் கூறிவிட்டனர். இப்போது நடக்கும் கலியூழி தோன்றி 5039 ஆண்டுகளாகின்றன என்று கூறப்படுகின்றது. சங்கநூல்கள் கூறும் 3ஆம் அழிவிற்குப்பின் 1800 ஆண்டுகளே கழிந்துள்ளன. 5039 ஆண்டு என்னும் கணக்கு உண்மை யாயின், அஃது 2ஆம் கடல்கோளிலிருந்து தொடங்கியதாகக் கொள்ளல் வேண்டும். முதல் கடல்கோட்கு முன்னும் சில கடல்கோள்கள் நிகழ்ந்திருக் கலாம். இங்ஙனம் சரித்திரத்திற்கெட்டாத பல தொன்முது கடல்கோள்கள் பண்டைத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தமை ஸ்காட் எலியட் என்பவர் எழுதிய மறைந்த by_Çah’(Lost Lemuria) என்னும் நூலா லறியப்படும். ஆதலால், எவ்விதத்தும் ஊழிக்கணக்கு மேற்கூறிய முறையைத் தழுவியதே யென்பதற்கு யாதும் இழுக்கின்று. ஆகவே, நாள் முதல் ஊழியீறான எல்லாக் கால அளவும் ஒவ்வோர் அழிவை எல்லையாக வுடையவென்றும், எல்லாக் கால அளவுகட்கும் ஆதாரமான நாளானது ஓர் அழிவில் முடிவதால், அதற்கு மேற்பட்ட எல்லாப் பேரளவுகளையும் அங்ஙனமே ஒவ்வோர் அழிவில் முடிவனவாக அமைத்துக்கொண்டனர் என்றும் அறிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' மடங்கல் 1939 ***** பாவாணர் பொன்மொழிகள் அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கை யாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. 2ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மைய ரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யாகும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. ஐந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டு பிடிக்கும்வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமே யாகும். தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழிபோ லாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும் புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று. பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே. இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்விவிட்டது. அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தியவன் ஆங்கிலேயனே. ïªâahš jÄœ bfL« v‹w¿ªnj ‘ïªâ bghJbkhÊah? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை. பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை, அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ் நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்த பின் அணைகட்டுவதும், குதிரை களவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும். படிப்பு வேறு, ஆராய்ச்சி வேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும். பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே. சொல்லும் பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவதுபோல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.fl‹nfhlyhš ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால், செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி. 