பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 37 சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப்பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க்களஞ்சியம் - 37 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1943 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை மொழிநூலின் வரையறை (Definition) மொழிகள் தோன்றிய வகை, அவை வளர்ந்த முறை, அவற்றுள் ஒன்றோடொன்றுக்குள்ள தொடர்பு முதலியவற்றை விளக்கும் நூல் மொழிநூலாம் (Philology). ஒரே மொழியிலுள்ள சொற்களை யெல்லாம் ஆராய்ந்து அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பிறப்பு, பொருளுணர்த்து முறை, திரிபு முதலியவற்றை ஆளும் நெறிமுறைகளை விளக்கும் நூல் சொல்லியல் நூலாம் (Etymology). ஆகவே, சொல்லியல் நூல் மொழிநூலின் உட்கூறாம். இவற்றுள், முன்னது பின்னதனுள் அடங்கும்; பின்னது முன்னதனுள் அடங்காது. மொழிநூல் இன்னும் உருவாகாமை மொழிநூலைப்பற்றி மக்களுக்கு இன்னும் சரியான உணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படவில்லை. கணிதம், வானூல் முதலிய கலைகளைப்போல மொழிநூலும் ஒரு திட்டமான நெறிமுறைப்பட்ட கலையே. சிலர் மொழிநூலைச் சொல்லியல் நூலாகக் கொண்டும், சொற்களின் பிறப்பு வளர்ச்சிகளைப்பற்றிய நெறிமுறைகளை அறியாதும், ஒலி யொப்புமையும் பொருந்தப் புகலல் என்னும் உத்தியும்பற்றிச் சொற்கட்குத் தாறுமாறாய்ப் பொருட்காரணமும் மூலமும் கூறிவருகின்றனர். இதனால், மொழிநூலே ஓர் உன்ன அல்லது கற்பனைக் கலைதான் என்கிற முடிபைப் பலர் கொண்டுவிட்டனர். பலகலைகள் ஆய்வு (Empirical) நிலை கடந்து உருவாகிருந்தது. பனிமலை (இமயம்) தோன்றியதற்கு முன்பே அது தொன்முது நாடாயிருந்தது. தமிழ் வடக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு திராவிடமாகின்றது. திராவிடமும் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு ஆரியமாகின்றது. திராவிடச் சொற்கள் ஐரோப்பா வரை சென்று இலத்தீன் கிரேக்கம் முதலிய முதுபெருமொழிகளிலும் கலந்துள்ளன. இந்தியாவின் பழங்குடிகள் திராவிடரே. இவற்றை நோக்கும்போது, தமிழ்ச் சரித்திரம் இந்திய சரித்திரத்திற்கும் இந்திய ஐரோப்பிய ஒப்பியன்மொழி நூலுக்குமே அடிப்படையாகு மென்பது புலனாம். தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றிய மொழியாதலானும், திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு முதற்றாயாகவும் இருத்தலானும், சொல்லியல் திறவுகோலையும் மொழிநூல் திறவுகோலையும் தன்னகத்தேயே கொண்டுள்ளது. தமிழ் திரவிடத் தாயென்பது இப் பாகத்தின் பிற்பகுதியிலும், தமிழ்ச் சொல்லாக்க முறைகள் `செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகள்' என்னும் நூலிலும் கூறப்படும். தமிழின் தலைமையை அறிதற்குத் தடைகள் உலக மொழிகளுக்குள் தமிழ் தலைமையானதா யிருப்பினும், (1) சரித்திர மறியாமை, (2) சொல்லியலகாரதியின்மை, (3) முதுநூல் களிறந்துபட்டமை, (4) மொழிபற்றிய தவறான அரசியற் கட்சிக் கொள்கை, (5) கலவை மொழிநடை, (6) தமிழன் அடிமை யுணர்ச்சி, (7) தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் ஆட்சி யிடங்களிலு மிருத்தல், (8) ஆராய்ச்சியின்மை, (9) மதப்பற்றினால் பிறமொழி தழுவல், (10) பெரும்பான்மைத் தமிழரின் கல்லாமை முதலிய காரணங்களால் தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருக்கின்றது. இந்திய சரித்திரத்தைத் தெற்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும்; இந்திய நாகரிகம் திரவிடம் என்பதையும்; திரவிட உடலமைப்பைத் திரவிட மன்னர், தமிழ வேளிர், வேளாளர் முதலியார் முதலிய குலத்தினர் என்றிவரிடைத் தான் காணமுடியு மென்பதையும்; திரவிடனைக் காட்டுமிராண்டி யாகச் சரித்திர நூல்களிற் காட்டியிருப்பதும் கூறியிருப்பதும் பெருந் தவறென்பதையும்; ஆரியர் வருமுன்பே, அன்றன்று, பனிமலை தோன்றுமுன்பே, குமரிநாட்டில் சைவமும் (சேயோன் வழிபாடு), மாலியமும் (மாயோன் வழிபாடு) முறையே குறிஞ்சி முல்லைத் தமிழர் மதங்களாயிருந்தன என்பதையும்; உலகியலும் மதவியலும் பற்றிய திருந்திய பழக்கங்கள் இன்றும் தென்னாட்டிலேயே உள்ளன என்பதையும்; எந்நாட்டிலும் மக்களுள் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என இரு சாரார் இருப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தொன்று தொட்டு உள்ளனரென்பதையும்; அவருள் உயர்ந்தோரின் மதங்களையும் பழக்க வழக்கங்களையுமே ஆரியர் மேற்கொண்டு அவற்றைத் தமவாகக் காட்டினர் என்பதையும்; மொழிகளில் தேவமொழியென ஒன்றில்லை யென்பதையும்; அங்ஙன மிருப்பின், அது இயற்கையும் எளிமையும் வெளிப்படையும் நடுநிலை அன்பு பிறப்பொப்பு வேளாண்மை முதலிய கருத்தறிவிப்பும்பற்றித் தமிழேயாம் என்பதையும்; பழந்தமிழர் பிற துறைகளிற் போன்றே மொழி, இலக்கியம், இலக்கணம் என்பவற்றிலும் தலைசிறந் திருந்தனர் என்பதையும்; தாம் கருதிய எல்லாக் கருத்துகளையும் அறிந்த எல்லாப் பொருள்களையும் குறிக்கச் சொல்லமைத் திருந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும். இதனால், வடமொழியை முதன்மொழியாயும், வடநூலை முதனூலாயும் வைத்துத் தமிழாராயப்புகின். உண்மைக்கு நேர்மாறான முடிபுகளே தோன்று மென்பதையும், வீரசோழியம், இலக்கணக்கொத்து, பிரயோகவிவேகம் முதலியன அளவை நூல்களாகா என்பதையும் உணர்தல் வேண்டும். இயல்பான மொழிகளும் சொற்களும் ஒரு நெறிப்பட்டே தோன்றி இயங்குகின்றமையின், முறைப்படி யாராயின் அவற்றின் நெறிமுறைகள் யெல்லாம் கண்டுகொள்ளலாம் என்பது, இச்சுட்டு விளக்கத்தை நடுநிலையாய் நூணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம். எனது மொழியாராய்ச்சி குன்றாவாறு இடையிடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப்பாடுடையேன். இவ் வாராய்ச்சிக்கும் அதன் வெளியீட்டிற்கும் தோன்றாத் துணையாயிருந்துதவியருளும் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை நெஞ்சார நினைத்துத் தலையார வணங்குகின்றேன். ஞா. தேவநேயன் குறிவிளக்கம் - திரிதற்குறி > இடம் வலமாகத் திரிதற்குறி < வலம் இடமாகத் திரிதற்குறி + புணர்ச்சிக் குறி = சமக்குறி அல்லது பொருட்குறி x எதிர்க் குறி அல்லது முரண் குறி குறுக்க விளக்கம் தமிழ் ஆ. பா. ஆண்பால் இ. இந்தி, இந்துத்தானி இ. ப. - இரட்டைப் பன்மை இ. போ. இலக்கணப் போலி எ-டு: எடுத்துக்காட்டு எ. வ. நோ. என்னும் வழக்கை நோக்குக ஒ. நோ: ஒப்பு நோக்க ஒ.வே : ஒருவேளை த. வி. தன்வினை பி. வி. பிறவினை பெ. பெயர் பெ. பா. பெண்பால் பொ. பா. பொதுப்பால் வ. வடசொல் வி. வினைச்சொல் வே.கு. - வேற்றுமைக் குறுக்கம் ஆங்கிலம் Ar. - Arabic A.S. - Anglo-Saxon Bret. - Breton Celt. - Celtic Cf - Compare Ch. E. D. - Chambers's Etymological Dictionary dim. - diminutive Dan. - Danish Dut. - Dutch E. - English Fr. - French Gael. - Gaelic Ger. - German Goth. - Gothic Gk. - Greek H. - Hindi or Hindustani Ice. - Icelandic It. - Irish It. - Italian Lit. - Literally L. - Latin M.E. - Middle English O.G. -Old German pfx. - prefix pl. - plural sfx. - suffix sl. - Singular Skt. - Sanskrit Sc. - Scandinavian Sw. - Swedish W. – Welsh உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு v சான்றிதழ் vii முகவுரை .ix குறுக்க விளக்கம் .xii சுட்டு விளக்கம் நூலடக்கம் I முன்னுரை 1 II சுட்டுத்தோற்றம்...8 III சுட்டு வேர்ச்சொற்கள் 9 1. ஆகாரச் சுட்டு 9 2. ஈகாரச் சுட்டு 12 3. ஊகாரச் சுட்டு 25 4. ஏகாரச் சுட்டு 52 5. ஓகாரச் சுட்டு 59 IV மூவிடப் பெயர் 62 V வினாப் பெயர் 69 முடிவு 70 பின்னிணைப்பு I 71 பின்னிணைப்புII 72 பின்னிணைப்பு III 75 பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் 76 சு£L விளக்கம் I. முன்னுரை 1. மொழி தோன்றிய வகை உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் இயன்மொழிகள் (Primitive Languages), திரிமொழிகள் (Derivative Languages) என இருவகைப்படும். ஒன்றையும் சாராது தானே இயல்பாகத் தோன்றிய மொழி இயன்மொழி; ஒரு மொழியினின்று திரிந்த மொழி திரிமொழி. மொழிகளெல்லாம் ஒரேயளவான சொல்வளமுடையனவல்ல. மக்களின் கருத்து அல்லது அறிவு வெளிப்பாட்டொலியே சொல். உண்பதும் உடுப்பதும் துயில்வதுமே தொழிலாகக் கொண்ட அநாகரிக மலைவாணரின் அல்லது காட்டுவாணரின் கருத்துகள் மிகமிகச் சில. அதனால், அவர்கள் மொழிகளிலுள்ள சொற்களும் மிகமிகச் சில. பல தொழிலுள்ள நாகரிகம் வாய்ந்த மருத வாணரின்அல்லது நாட்டு மக்களின் கருத்துகள் மிகப் பல. அதனால், அவர்களின் மொழிச்சொற்களும் மிகப் பல. எத்தொழிலையும் அநாகரிகன் செய்யுமுறைக்கும் நாகரிகன் செய்யுமுறைக்கும் வேறுபாடுண்டு. இவ் வியல்புபடி, அநாகரிகன் திருத்தமின்றியும் நாகரிகன் திருத்தமாயும் பேசுகிறான். ஆகையால், அநாகரிக நாகரிக மக்களின் மொழிச் சொற்கள் சின்மை பன்மையால் மட்டுமன்றித் திருந்தாமையும் திருத்தமும்பற்றியும் வேறுபடுகின்றன. திருத்தமும் கருத்துத் திருத்தம் சொற்றிருத்தம் என இருபாற்பட்டது. ஆகவே, ஒரு நாட்டாரின் நாகரிகத்தை யறிவதற்கு அவரது மொழிபோற் சிறந்த கருவி அல்லது வாயில் பிறிதொன்றில்லை. ஒரு மொழியார் அநாகரிகராயின்அவர் பிற நாகரிக மக்களொடு கூடும்போது, தம் அநாகரிக நிலைக்கு அல்லது சொல்லளவுக்குத் தக்கவாறு, நாகரிகரின் சொற்களைக் கடன்கொள்ள வேண்டியதிருக்கும். இஃது இயன்மொழி திரிமொழி ஆகிய இருவகை மொழிக்கும் ஏற்கும்; ஏனெனில், சொற்குறைவும் சொன்னிறைவும் அவ் விருவகைக்கு முண்டு. பல மொழிகள் ஒன்றாய்க் கலப்பின் கலவை மொழியாம். அது இருமொழிக் கலவை, பன்மொழிக் கலவை என இருவகைப்படும். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களிருந்த மாத்திரையானே, அதைக் கலவை யென்னமுடியாது. உண்மையில் இன்றியமையாத காற்பங்குச் சொற்களையாவது கடன்கொண்ட மொழியையே கலவைமொழி யென்னலாம். இயன்மொழி வகையில், திருந்தாமொழிக்குத் தென்கண்ட (ஆத்திரேலிய) தென் ஆப்பிரிக்க மொழிகளையும் திருத்திய மொழிக்குத் தமிழையும்; திரிமொழி வகையில், திருந்தாமொழிக்குத் துடாகோட்டா முதலிய மொழிகளையும், திருந்திய மொழிக்குத் தெலுங்கு கருநடம் முதலிய மொழிகளையும்; கலவைமொழி வகையில், திருந்தாமொழிக்குக் கோண்டி பத்ரி முதலிய மொழிகளையும், திருந்திய மொழிக்குத் தெலுங்கு ஆங்கிலம் முதலிய மொழிகளையும்; இருமொழிக் கலவைக்கு மராட்டி தெலுங்கு முதலிய மொழிகளையும், பன்மொழிக் கலவைக்கு ஆங்கிலம் இந்தி முதலிய மொழிகளையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். மொழியின் இயல்பான தோற்றத்தை ஓர் இயன்மொழியால் அறியமுடியுமே யன்றித் திரிமொழியால் அறியமுடியாது. மொழிநூற் பெரும் புலவர் மாக்கசு முல்லர் சீனமொழியினின்றும் தென்கண்டத் தீவுகளின் மொழிகளினின்றுமே மொழியின் இயல்பான தோற்றத்தை யுணர்ந்தார். உலகப் பெருமொழிகளில் வடமொழி திரிபு முதிர்ந்ததாதலின், அதனைக்கொண்டு மொழியின் இயல்பான தோற்றத்தையறிய விரும்புவார், பேரன் பாட்டனைப் பெற்றவன் என்று கொள்ளுபவரேயாவர். தமிழோ இயன்மொழியாயும் மிகத் திருந்தியதாயும் மொழிவளர்ச்சியின் பல நிலைகளைக் காட்டக்கூடியதாயு மிருத்தலின், மொழியின் இயல்பான தோற்றத்தையறிதற்குத் தலைசிறந்த வாயிலாகும். மொழி முதலாவது தனித்தனி ஒலிகளாக அல்லது அசைகளாகவே தோன்றிற்று. ஒரு கருத்து இப்போது பல சொற்களுள்ள வாக்கியமாக அமைந்தாலும், அது முதலாவது வாக்கியமாகத் தோன்றவில்லை. ஏனெனின், வாக்கிய அமைப்புக்கு வேண்டும் சொற்களெல்லாம் அப்போது இல்லை. மனிதனுக்குக் கருத்துப் பெருகப்பெருக ஒலிகளும் அல்லது சொற்களும் பெருகிக்கொண்டே வந்தன. மெள்ள மெள்ளச் சிறிது சிறிதாய்ப் பெருகிக் கொண்டு வந்த அவ் வொலிக்கூட்டமே மொழியாகும். ஒருவனின் உள்ளத்திலெழும் கருத்து வேறு; அதனைப் பிறர்க்குப் புலப்படுத்தும் ஒலி வேறு. ஒரு கருத்தைப் புலப்படுத்த ஒரு வாக்கிய வொலியே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. நன்றாய்ப் பேச்சுக் கற்ற பிள்ளைகூட `அம்மா! எனக்குச் சோறு வேண்டும்' என்னும் நாற்சொற்றொடரை `அம்மா! சோறு' என்று இரு சொல்லில் அடக்கிவிடுகிறது. bgÇnah® ng¢áY«, `Ú m§nf nghdhah?' v‹D« ÉdhɉF¥ `nghnd‹' mšyJ `M«' v‹D« Éilí«, `mt® v‹iw¡F tUth®?' என்னும் வினாவிற்கு `நாளைக்கு' என்னும் விடையும் ஒவ்வொரு சொல்லாயே நின்று ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றன. ஒருசில சொற்களையே கற்ற குழந்தை, `எனக்குப் பால் வேண்டும்' என்னுங் கருத்தைப் பா பாசி பாலு பால் என்னுஞ் சொல் வடிவங்களுள் ஒன்றினாலேயே குறிக்கின்றது. அதற்குமேற் சொல்ல அதனிடம் சொற்களில்லை. இந் நிலையை அயன்மொழியை அரைகுறையாய்க் கற்றவரிடமும் காணலாம். M§»y« e‹wha¿ahj xUt‹ X® M§»y¡ filfhuÅl« br‹whš, `vd¡F xU f¤â nt©L«' v‹gij `knife' v‹W«, `ïj‹ Éiy v‹d?' v‹gij `price?' என்றும் ஒரே சொல்லால் குறிக்கலாமன்றோ? இவன் தன் மொழிக்குப் பெரியவனாயினும் அயன்மொழிக்குக் குழந்தையா யிருக்கின்றான். குழந்தையும் நோயாளியும் பெரும்பாலும் ஒவ்வொரு சொல்லாலேயே தம் கருத்தை யறிவிக்கின்றனர். பெரியோர் தாய்மொழியிற் பேசும் பேச்சில் ஒருசொல்விடைகள் தொகை வாக்கியங்களாகக் கருதப்படலாம். ஆனால், அயன்மொழி நன்றாயறியாதான் அம் மொழியிற் பேசினால், தாய்மொழியில் தோன்றும் சொற்கள் அவ்வயன் மொழியில் தோன்றாமையும், ஒரு குழந்தை பேசின் தாய்மொழியிலும் சொற்கள் தோன்றாமையும் உணர்க. மொழி நிரம்பாத முந்துகால (primitive) மாந்தன், கருத்து வெளியீட்டில் குழந்தை போன்றவன். அவன் ஆ ஈ வா போ கீ மே முதலிய சில தனியசை களாலும் சில சைகைகளாலுமே, தன் கருத்தைப் புலப்படுத்தினான். இவ் வியல்பை இன்றும் சில மலைவாணரிடமும் தென்கண்டத் தீவாரிடமும் காணலாம். இந் நிலையை ஒருவாறு விலங்கு நிலைக்கு ஒப்பிடலாம். ஓர் இயன்மொழி (1) அசைநிலை, (2) சொன்னிலை என இரு நிலைகளையுடையது. அசைநிலையாவது பெயர் வினை இடை என இலக்கணச் சொற்றன்மைப்படாமல் நாற்சொற் பொதுவாய் நின்று, தனித்தனி யசைகள் ஒவ்வொரு பொருளையுணர்த்தும் நிலை; சொன்னிலையாவது இலக்கணச் சொற்றன்மைப்பட்ட நிலை. அதுவும் (1) அசைச்சொல் (கண், ஆ), (2) புணர்ச்சொல் (கண்ணவன்), (3) பகுசொல் (கண்ணன்), (4) தொடர்ச்சொல் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள், தொடர்ச்சொல் (1) தொகா நிலைத்தொடர் (தண்ணீர், செங்கால்நாரை), (2) தொகைநிலைத் தொடர் (யாய், சாத்தந்தை) என இருவகையது. மொழி வளரவளர எழுத்துக்கலையும் வளர்ந்துவரும். உலகில் முதலாவது படவெழுத்தும் (Hieroglyph) பின்பு கருத்தெழுத்தும் (Ideograph) தோன்றின. அதன்பின் அசையெழுத்தும் (Syllabic Character), ஒலியெழுத்தும் (Phonetic Character) முறையே தோன்றின. இவற்றுள் முன்னவை யிரண்டும் கருத்தோடும் பின்னவை யிரண்டும் மொழியோடும் தொடர்புற்றவை. பெருவளர்ச்சி யடைந்த ஒரு நாகரிக மக்கள் மொழியில்தான் பின்னீரெழுத்துகளைக் காணலாம். ஒரு மொழியை அல்லது பேச்சைப் பல வாக்கியங்களாகவும் ஒரு வாக்கியத்தைப் பல சொற்களாகவும், ஒரு சொல்லைப் பல எழுத்துகளாகவும் பகுத்துக்கொள்வது, ஒரு மொழி பெருவளர்ச்சியடைந்தபின் அதன் இலக்கணத்தை யெடுத்துக்கூறும்போது நிகழ்வதாகும். மொழித்தோற்றம் வேறு; இலக்கணத் தோற்றம் வேறு. மொழி அசையொலிகளாய்த் தோன்றினதேயன்றி எழுத்தொலிகளாய்த் தோன்றவில்லை. எழுத்தே இலக்கண வகையில் ஒரு மொழியின் அலகு (unit); வாக்கியம் அலகன்று. ஏனெனின், வாக்கியம் ஒரு குறித்த அளவுள்ளதன்று. மூவகை வாக்கியங்களுள் ஒன்றான கலப்பு (complex) வாக்கியம் வரம்பிறந்தோடுவது. மனுமுறைகண்ட வாசகத்தில் பல பக்கங்கள் வருகின்ற அதிகாரங்கள் சில ஒவ்வொரே வாக்கியமாக அமைந்துள்ளன. இங்ஙனம் ஒரு புத்தகம் முழுமையும் ஒரே வாக்கியமாக்கலாம். புணர் (compound) வாக்கியமும் வரம்பிறந்ததே. இனி, தனி (simple) வாக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அதுவும் பல கருத்துகளைத் தழுவக்கூடியதாகின்றது. `இக் கரந்தை மாணவன் இனிய தமிழ்நடை எளிதாய் எழுதுவான்' என்னும் வாக்கியத்தில் (1) கரந்தை மாணவன், (2) இனிய தமிழ், (3) எளிதாய் எழுதுவான் எனக் குறைந்தது மூன்று கருத்துகளிலிருத்தல் காண்க. பல கருத்துகளைக் கூறும் கலப்பு வாக்கியங்களையும் புணர்வாக்கியங்களையும் பொருள் கெடாமல் தனி வாக்கியங்களாக மாற்றவு முடியுமென்பதை, ஆங்கில விலக்கணங்களில் கண்டு தெளிக. இனி, மூவகை வாக்கியமுங் கலந்த கலவை (mixed) வாக்கியம் என்பதும் ஒன்றுண்டென வறிக. மொழிநூற்படி நோக்கின், ஒவ்வொரு பகாச் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், ஒவ்வொரு பகுசொல்லும் பற்பல கருத்துகளையும் குறிப்பன வாகும். ஆ வா கண் என்னும் பகாச்சொற்கள் ஒவ்வொரு கருத்தையே குறித்தன. ஆக்கம் வருவான் கண்ணன் என்ற பகுசொற்கள் பற்பல கருத்துகளைக் குறித்தன. பின்னவற்றுள், வருவான் என்பது மூன்று கருத்துகளையும் ஏனைய இவ்விரு கருத்துகளையும் குறித்தன. வருதற்றொழிலைக் குறிக்கும் `வா' என்னும் பகுதியும், எதிர்காலத்தை யுணர்த்தும் `வ்' என்னும் இடைநிலையும், ஆண்பாலை யுணர்த்தும் `அன்' என்னும் ஈறும் சேர்ந்தே வருவான் என்னும் சொல் உண்டா யிற்று. ஆகவே, பகுதி விகுதி இடைநிலை என்னும் சொல்லுறுப்புகளுங்கூட ஒவ்வொரு பொருளை யுணர்த்துவன வாயின. இனி, பகாச்சொல்லுங்கூடப் பல பொருள்களை யுணர்த்த இடமுண்டு. கண் (கள் > கண்) என்னும் சொல் கருமையென்னும் குணமும் அதையுடைய கண் என்னும் உறுப்பும் ஆகிய இருபொருள்களை யுணர்த்தல் காண்க. கருமை என்னும் குணத்தைமட்டும் கருதுவது பொருளும், அது கருமையுடையது எனக் கருதுவது கருத்துமாகும். ஆகவே, ஒவ்வொரு பொருளும் கருத்தாகவும் மாறக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். நெய்யே தொன்னைக்காதாரம் என்பதுபோலத் திரிபிற் சிறந்த வடமொழியை இயன்மொழியாகக் கொள்வாரே, இங்ஙனம் வாக்கியத்தை மொழியலகாகக் கொண்டு இடர்ப்படுவர். மேலும், வடமொழியை உலக முதன் மூலமொழியாகக் கொண்டு வலிப்பவர் மொழிநூல் மாணவராதற்குக்கூடத் தகுதியற்றவராவர். ஆ, ஈ, ஊ என்னும் ஒலிகளை மொழி மூலவொலிகளாகக் கூறுவது இன்று மலையேறிவிட்டதெனின், அது `குன்றின்மேலிட்ட விளக்கு'ப்போல விளங்குதற்கு மலையேறிவிட்ட தென்க. 2. தமிழ் தனி யியற்கை மொழியாதல் தமிழ் தொன்றுதொட்டுத் தென்னாட்டில் வழங்கி வருவதாலும், இன்றும் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்கும் ஆற்றலுடைய தாதலாலும், எளிய வொலிகளும் காரணச் சொற்களுமே கொண்டுள்ளமையாலும், ஒரு தனி இயற்கைமொழியாகும். தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்னும் ஓர் உண்மையே, அதன் தொன்மையைப் புலப்படுத்தப் போதிய சான்றாகும். குமரிநாடு (Lemuria) எத்துணைத் தொன்மையானதோ அத்துணைத் தொன்மையானதே தமிழும் என்க. சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் முறையே வடமொழி தென்மொழி என்னும் பெயரமைந்ததே, தமிழ் தென்னாட்டிற்கும் வடமொழி வடநாட்டிற்கும் உரியதென்பதையும் தமிழ் வடமொழிக் கலப்பற்றதென்பதையும் உணர்த்தும். 3. தமிழில் சொல் தோன்றிய வகைகள் தமிழ்ச்சொற்கள் (1) இயற்சொல் (Primitive), (2) திரிசொல் (Derivative) என இருவகைப்படும். இயல்பாய்த் தோன்றியது இயற்சொல்லும் அதனின்று திரிக்கப்பட்டது திரிசொல்லுமாகும். இயற்சொற்கள் தோன்றிய வகைகள் (1) கத்தொலி (கா, கூ), (2) வாய்ச்சைகையொலி (ஆ, கௌ), (3) குறிப்பொலி (படு, சல) என மூன்று. அவற்றுள், கத்தொலி (1) உயர்திணையொலி, (2) அஃறிணையொலி, (3) பொதுவொலி என மூவகைப்படும். வாய்ச்சைகையொலியும் (1) சுட்டொலி, (2) சுட்டாவொலி என இருவகைப்படும். அவற்றுள், சுட்டொலியும் அவற்றின் திரிபுகளுமே இங்குக் கூறப்படுவன. குறிப்பொலி பல திறத்தது; அவற்றுள் முக்கியமானது ஒலிக்குறிப்பு. இயற்சொற்கள் தோன்றிய மூவகைகளுள், வாய்ச்சைகையொலியின் ஒரு பாலான சுட்டொலிகளினின்றே, தமிழில் பெரும்பாற் சொற்கள் தோன்றியுள்ளன. ஆகையால், சுட்டொலிகளே தமிழுக்குப் பேரடிப்படையாம் என்பதைத் தெரிந்துகொள்க. 4. தமிழ்ச்சொற்களின் காரணக்குறித் தன்மை தமிழ் ஓர் இயன்மொழியாதலால், அதிலுள்ள எல்லாச் சொற்களும் காரணக்குறியாம். இடுகுறி யென்பது திரிமொழிகட்குரியது. வடமொழி யிலக்கணத்தைப் பின்பற்றிப் பவணந்தியார் தமிழுக்கும் இடுகுறி கூறியது பெருந்தவறாகும். கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், `எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' (தொல். 640) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சொற்கள் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டமை காரணமாகப் பலவற்றின் வேர்ச்சொல் மறைந்து போனமையாலும், அதனால் அவ் வேரடிச் சொற்களின் வேர்ப்பொருள் மங்கிவிட்டதினாலும், எல்லாச் சொற்களும் வேர்ப்பொருளுடன் குறிக்கப்பட்ட அகராதிகள் பண்டைக் காலத்தில் தோன்றாமையாலும், ``மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' (தொல். 877) என்றார் தொல்காப்பியர். விழிப்பத் தோன்றா என்பது தெளிவாய்த் தோன்றாது என்று பொருள்படுமேயன்றி, தோன்றவே தோன்றாது என்று பொருள்படாது. ``நால்வகைச் சொல்லுக்கும் பொருளை அறிவித்து நிற்கின்றதோர் காரணம் உண்டாந்தன்மை, நுண்ணுணர்வில்லாதோர்க்கு மரபென்று கொள்வதல்லது விளங்கத் தோன்றா என்றவாறு. எனவே, நுண்ணுணர்வுடையோர்க்குக் காரணமுண்டாந்தன்மை விளங்கத் தோன்று மென்பது பொருளாயிற்று என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க. இங்ஙனம் தெள்ளிய நூற்பாவுக்குத் தெள்ளுரை கூறியிருந்தும், வினையின் பொருளை வேறுபடுத்துவதே வினையெச்சத்தின் பயன் என்பதையும் நோக்காது, ஆராய்ச்சிமிக்க இவ் விருபதாம் நூற்றாண்டில், அதுவும் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் (Lexicon), Tolkappiyar only says that the origin of words is beyond ascertainment”v‹W பதிப்பாசிரியர் கூறியிருப்பது மிகமிக இரங்கத்தக்கது. உண்மையில் சொற்பிறப்பியல் (Etymology)vd ஒன்றிருக்குமாயின், அதற்குத் தமிழ்தான் சிறப்பாய் இடந்தரும். 5. தமிழில் நெடில் முன்னர்த் தோன்றியமை தமிழில் நெடில் முன்னும் குறில் பின்னுமாகத் தோன்றியதாகத் தெரிகின்றது. அதற்குச் சான்றுகளாவன: (1) குழந்தை வாய்க்குக் குறிலினும் நெடிலே ஒலித்தற் கெளிதா யிருத்தல். முந்தியல் (primitive) தமிழன் குழந்தை போன்றவன். ஆதலால், நெடில் ஒலிகளே முதலாவது அவன் வாயில் தோன்றியிருக்கலாம். (2) தொல்காப்பியத்தில் குறில்கள் ஓரெழுத்துச் சொற்களாகக் கூறப்படாமை. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (43) குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே (44) ஆஓ ஏஅம் மூன்றும் வினாஅ (32) எனத் தொல்காப்பியத்திற் கூறியிருத்தலின், நெடில்களே ஓரெழுத்துச் சொற்களாய் முதன்முதல் வழங்கினமை புலனாம். இனி,அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு (31), அப்பா லேழும்' (4), “v¢brhš லாயினும்(781), நீட வருதல் செய்யுளில் உரித்தே (208) என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், முதற் புறச்சுட்டும் வினாவும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குறுகிவிட்டன என்பதும், நெடுஞ்சுட்டு உலகவழக்கற்றதினால் செய்யுள் வழக்கில்மட்டும் இடம்பெற்றதென்றும் அறியப்படும். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (814) பேநாம் உரும்என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (849) எனத் தொல்காப்பியத்திலும், வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என அதன் சிறப்புப் பாயிரத்திலும் நெடுஞ்சுட்டு வந்திருத்தல் காண்க. மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரு முண்டு என்றார் ஔவையாரும். (3) தமிழொழிந்த திரவிட மொழிகளில் சுட்டும் வினாவும் இன்றும் நீண்டு வழங்கல். ‘M(Œ) ஆள்', ஈ மூரி என்று மலையாளத்திலும், ஆ பனி, ஏ(வ்) வூர் என்று தெலுங்கிலும், இன்றும் முதற் புறச்சுட்டும் வினாவும் நீண்டு வழங்குகின்றன. இது குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) ஆகும். (4) வடமொழியில் எகர ஒகரமின்மை குமரிநாட்டிலிருந்து பலமுறை மக்கள் உலகத்தின் நாலாபக்கமும், சிறப்பாக வடக்கு நோக்கி, பிரிந்து போனார்கள். தமிழில் ஏகாரமும் ஓகாரமும் குறுகுமுன் பிரிந்து போனவர்கள் சமற்கிருத ஆரியர் என்னும் கூட்டத்தார். அவர்கள் மொழியில் ஏகார ஓகாரங்கள் நெடிலாயே நின்றுவிட்டன. (5) பண்டைத் தமிழில் எகர ஒகரம் புள்ளி பெற்றமை பொதுவாகக் குறில்வரிகள் குறைந்தும் நெடில்வரிகள் மிகுந்தும் இருப்பதே இயல்பு. இவ் வியல்பின்படியே ஏனை யுயிர்வரிகளெல்லா மிருக்கின்றன. ஆனால், எகர ஒகரமட்டும் தத்தம் நெடிலினும் தாமே வரிமிக்கிருந்திருக்கின்றன. இதற்குக் காரணம் ஏகார ஓகாரங்களே தொன்றுதொட்டு அவற்றின் குறில்கள் இடைப்பட்டும் வழங்கினமையாகும். இடைப்பட்ட குறில்களைப் பிரித்துக்காட்டவே. பண்டை ஏகார ஓகார வரிகளின்மேல் புள்ளிகளை யிட்டிருக்கிறார்கள். அப்போது அவ் வரிகளின்கீழ் இப்போதுள்ள இழுப்பும் சுழியும் இல்லை. இற்றை எகர ஒகர வரிகளே அற்றை ஏகார ஓகார வரிகளா யிருந்தன. பிற்காலத்தில் இம் முறை தகாதென்று கண்டு, எகர ஒகரங்கட்குப் புள்ளி நீக்கி அவற்றின் நெடில்கட்குக் கீழிழுத்தும் கீழ்ச்சுழித்தும் வரியமைத்ததாகத் தெரிகின்றது. (6) தொன்முது வேர்ச்சொற்களெல்லாம் நெடிலாயே யிருத்தல். எடுத்துக்காட்டு: வா, போ, ஏழ், வீழ். (7) ஆண்டு ஈண்டு என்னும் சுட்டுச் சொற்கட்குக் குறின்முதல் வடிவமின்மை II. சுட்டுத்தோற்றம் ஐஞ்சுட்டுகள் முந்தியல் தமிழன் முதலாவது கைகாற் சைகையையும் (gesture), கண் சாடையையும் முகக்குறிப்பையும் (grimace) கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டிருந்து, பின்பு, வாய்ச்சைகை காட்டுமுறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான். சேய்மைச்சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்தபோது ஆ என்னும் ஒலியும், அண்மைச்சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்தபோது ஈ என்னும் ஒலியும், முன்மைச்சுட்டாக வாயை முன்னோக்கிக் குவித்தபோது ஊ என்னும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது ஓ என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச்சைகை யொலிகள். ஐஞ்சுட்டுகளையும் ஒலித்தற்கேற்ற வாய்நிலைகள் வெவ்வேறு. ஒன்றற்குரிய வாய்நிலையில் வேறொன்றை ஒலிக்க முடியாது. ஓகாரத்திற்குரிய நிலையில் மட்டும் ஆகாரத்தை ஒருசிறிது ஒலிக்கலாம். ஒலித்துக் காண்க. பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகாரவடிவாய் வெளிப்பட்டதினின்று, ஏ என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றினின்று எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் `eructation' என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும், சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்து தனியுயிர் நெடில்களும் குறுகி முறையே அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து தனியுயிர்க் குறில்கள் தோன்றின. பின்னர், அகரத்தொடு இகர உகரங்கள் புணர்ந்து முறையே ஐ, ஔ என்னும் உயிர்ப் புணரொலிகள் தோன்றின. இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில்களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின. III. சுட்டு வேர்ச்சொற்கள் ஐஞ்சுட்டு வேர்களும் அவற்றினடிப் பிறந்த சொற்களிற் சிலவும் 1. ஆகாரச்சுட்டு (1) சேய்மைச்சுட்டு (Remoteness): ஆ = அந்த (அது, அவை). ஆங்கு - அங்கு Cf. A.S. thar, E. there, Skt. tatra, ஆங்கர் > (ah§f®) > (eh§f®) > ஞாங்கர். ஆண்டு, Cf. E. yon, yond, yonder, A.S. geond, Ger. jener, that, root ya. ஆது - அது, அதா, அதோ, அதோளி. அது - அதன் (தெ.) அம் : அந்து, அந்த, அந்தா, ஒ. நோ. உம் > உந்து. அம்மை = சேய்மையிற் சென்றுவிட்ட முற்பிறப்பு. ஆ - அவ் : (அவள்), அவண். அவண் = அவ்விடம். ஆன் > அவன்; ஆம் > அவம். அவன், அவள், அவர், அவ - அவை. mš : mš + J = m~J - m¤J x.neh.: பல் + து = பஃது. அல் +து = அன்று. ஒ. neh.: நல் + து = நன்று. லகரவீற்றுச் சுட்டு வினாவடிகளும் உண்டு என்பதை அல, ஏலா என்னும் தெலுங்குச் சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கருநடச் சொற்களாலும் உணர்க. Cf. L. ille, he, Ar. al, the. ஆன் - அன் : அன்ன, அன்னா (சுட்டு); அன்ன (such)- சுட்டாச்சுட்டு. அன்ன (உவமவுருபு), அன்னது, அற்று. அனை (சுட்டு). அனை + து = அனைத்து. அனை, அனைய (உவமை.) அகம் = அவ்வுலகம், வீடு (heaven,bliss), வீடுபோன்ற தங்கிடம், இடம், உள்ளிடம், உள்ளம். அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு (குறள். 247) என்னுங் குறளில், அவ்வுலகம் இவ்வுலகம் என்பன முறையே சேய்மையும் அண்மையும்பற்றி வீட்டையும் ஞாலத்தையுங் குறித்தல் காண்க. அப்பால் > Gk. apo; L. ap, ab, abs, a; Skt. apa; Ger. ab; E. ab, abs, a, off, of, away. அப்போது என்னுஞ் சொல்லே அப்ப என்று திரிதலால், அப்பால் என்பது அப்ப என்று திரிவது வியப்பன்று. (2) படர்க்கைப் பெயர்: படர்க்கைச் சுட்டுப்பெயர்கள் சேய்மைப் பொருள்களைக் குறிப்பனவாதலின், சேய்மைச்சுட்டினின்று படர்க்கைப் பெயர்கள் தோன்றின. ஆன் - தான் (ஒருமை) = அவன், அவள், அது. ஆம் - தாம் (பன்மை) = அவர், அவை. Cf.Skt. tat; A.S. thoet; E.that; Ger. das, dasz; Gk. te; (sl.) A.S. thas; E.those (pl.) தான் என்னும் பெயரே தன் என்று குறுகிப் பின்பு ஆரிய மொழிகளில் தகரவீறாய்த் திரிந்ததென்க. ஒ. நோ : திருமான் > ஸ்ரீமத்; நுனி - நுதி - துதி. த - ச போலி, எ-டு: மாதம் - மாசம் ; பித்தன் - பிச்சன். ஆங்கிலத்திலுள்ள than என்னும் ஒப்பீட்டிடைச்சொல், தன்னின் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருக்கலாம். தன்னின் = அதனின். “if¥bghUŸ தன்னின் மெய்ப்பொருள் கல்வி என்பதை நோக்குக. A.S. thanne; Ger. dann; E. than; from stem of the. அக்கரை என்னும் சொல் ஒரு நீர்நிலையின் மறு பக்கத்தை அல்லது எதிர்ப்பக்கத்தைக் காட்டுவதுபோல், அப்பால், அப்புறம் என்னும் சொற்களும் ஒரு பொருளின் மறு அல்லது பின்புறத்தைக் காட்டி அதன்பின் காலப்பின்மை யுணர்த்தும் இடைச்சொற்களாயின. அகல் = சேய்மையிற் செல், நீங்கு, விரி. ஒ.நோ: படர் = செல், விரி. அகல் - ஆல் - ஆலம் (மரம்). (3) மிசைமைக்கருத்து: சேய்மை ஒரு வகையில் மிசைமை போலுதலாலும், மேட்டினடியில் நிற்கும்போது சேய்மை மிசைமையாயிருத்தலாலும், சேய்மைச் சுட்டில் மிசைமைக் கருத்துத் தோன்றிற்று. அண் = மேல் ; அண்ணம் = மேல்வாய். அண் = பொருந்து என்றுமாம். அண்ணல் = மேலானவன், அரசன் ; அண்ணன் = மூத்தோன். அண்ணாவி = ஆசிரியன்; அண்ணி = அண்ணன் மனைவி. அண்ணா = மேல்நோக்கு ; அணர் = மேனோக்கிச் செல். Gk.ana, an, up ; Goth. ana; E. on. (4) செலவுக்கருத்தும் பிறகருத்தும்: அல் - சேய்மைப்படு, அசை, செல், வருந்து, சுருங்கு, தங்கு, நீங்கு, முடிவடை, விரி. ஒ.நோ: ஏ-இய - இயங்கு = அசை, செல். செல்லல் = துன்பம். ஒருவர் செல்லுதலாவது சேய்மைப்படுதல்; செல்வதினால் உடம்பிற்கு அசைவும் அதனால் வருத்தமும் பிறக்கும்; செல்லச் செல்ல உடம்பு சுருங்கித் தோன்றும்; இரவானவுடன் ஓரிடத்தில் தங்கநேரும்; செல்லுதல் ஓரிடத்தினின்று நீங்குதலாகும்; நீக்கமே முடிவு; ஒரு பொருளின் விளிம்பு நீங்குவது விரிதல். அல்லாடு = அலை, வருந்து; அல்லா = வருத்தம்; அல்லல் = வருத்தம், துன்பம்; அலத்தல் = வருந்தல்; அலக்கழி = வருத்து; அலம் = துன்பம்; அலக்கண் = துன்பம்; அலம் வா = அலமா; அலமருதல் = வருந்துதல்; அலவு = வருந்து; அல் - அலு; அலுத்தல் = அசைதல், களைத்தல்; அலு + அல் = அலுவல் = வருந்திச் செய்யும் வேலை, வேலை; அலு - அலுங்கு; அலுங்குதல் = அசைதல்; அலுக்கு = அசைப்பு, இசையசைப்பு (கமகம்). அல் - அல - அலை. அலைதல் = அசைதல், பலவிடஞ் செல்லல், வருந்துதல்; அலை = இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் நீர்த்திரை. அலைக்கழி = வருத்து. அலை - அசை. அல் - ஆல். ஆலுதல் = ஆடுதல். ஆலத்தி - ஆளத்தி = விளக்கை வட்டமிட்டு ஆட்டுதல், இசையை வட்டமிட்டு ஆட்டுதல்போல் வளர்த்தல்; ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = அசைதல், விளையாடுதல், கூத்தாடுதல். ஆடுவது ஆடை. அசைத்தல் = அசைத்து உடுத்துதல். “òȤnjhiy அரைக்கசைத்து என்னுந் தேவாரத் தொடரை நோக்குக. அல் - அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = சுருங்குதல், நுட்பமாதல், கூராதல். எ-டு: அஃகிய இ உ, அஃகி யகன்ற அறிவென்னாம். L. acuo, to sharpen, from root ak, sharp, E. acute, L. acus, a needle, E - L acumen, sharpness, quickness of perception, E. acme, Gk. akme - ake, a point. அல்கு - அல்குல் = சுருங்கிய இடை, இடையின் கீழ்ப்பக்கம். அல்கு - அலகு. கூரிய பல பொருள்கள் அலகுபெயர் பெற்றன. அவை கத்தி, பறவை மூக்கு, இலை, நெற்கதிர், நெல் முதலியன. பறவை மூக்கிற்கொத்த கன்னமும் அலகெனப்பட்டது. அலகு - அலக்கு = இலை. அலக்கு - இலக்கு - இலை; அலம் = கூரிய கலப்பைக்கொழு, கலப்பை. அல்கு - அஃகு - அஃகம் - நெல், கூலம் (தானியம்). அஃகு - அக்கு - அக்கம் = கூலம், விதை, மணி. உருத்திர + அக்கம் = உருத்திராக்கம் = சிவமணி; அல் - அல்கு; அல்குதல் = தங்குதல்; அல்குநர் = தங்குபவர், வசிப்பவர்; அல் - அல்கு = தங்கும் இராக்காலம், இரா; அல் + அவன் = அல்லவன் - அலவன் = இரவில் தோன்றும் நிலா, இரவில் வெளியேறும் நண்டு. இனி குறட்டின் அலகுபோற் கௌவுகின்ற காலையுடையது நண்டு என்றுமாம். அலவு - அலகு. அல் - அறு; அறுதல் = நீங்குதல், ஒடிதல்; அறுதி = முடிவு. அர் என்னும் ஒலிக்குறிப்பினின்று தோன்றிய அறு (cut) என்னுஞ் சொல் வேறு. aquiline L. aquila. அல் - அலர் - மலர். சேய்மைப்படுவதால் விரிதல் உண்டாகும். ஒ.நோ: அகல் = செல், விரி; படர் = செல், விரி. கண்ணைக் குறிக்கும் அக்கம் என்னும் சொல் > அக்ஷம்(வ.). ஒரு பொருள் முழுதும் ஓரிடத்தினின்று செல்லுதல் நீங்குதலாம்; அதன் மையம் நிற்க மற்றப் பகுதிகள் மட்டும் இடம்பெயர்தல் விரிதலாம். மலர் - மல்லா. மல்லாத்தல் = மலர்ந்து மேனோக்கிப் படுத்தல். மல்லா x குப்புறு; குப்புறு = குவி, கீழ்நோக்கிப் படு. அல் - அல-அலசு; அலசுதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல், அலைதல், வருந்தல், நீங்கியிருத்தல்; அலசடி = வருத்தம்; அலசு - அலசல் = இழை நீங்கியிருக்கும் ஆடை; அலவு - அலவல் = அலசல், கற்பின்மை (கட்டின்மை); அல் - அல - அலம் - அலம்பு . அலம்புதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல். அலம்பு - அலப்பு; அலப்புதல் = வாயசைத்தல், பிதற்றல். அலட்டு = அசை, வருத்து, பிதற்று. அலதி, அலக்கு = நீக்கம், வேறு. ஒ.நோ: விள் - வில் - விலு - விறு - வீறு - வேறு = விலகினது, வேறானது. அலதி - அலாதி. அலக்கு - அலாக்கு. இத் தமிழ்ச்சொற்களே இந்தியில் வழங்குகின்றன. ‘eh‹ அலாதி, அவனை அலாக்காய்த் தூக்கிக்கொண்டு போய்விட்டான் என்பன உலக வழக்கு. அலவை - பிதற்றல், வாயாடிப் பெண், கற்பின்மை. 2. ஈகாரச்சுட்டு 1. அண்மைச்சுட்டு (Proximity): ஈ = இந்த (இது, இவை.). ஈங்கு - இங்கு. Cf. Ger.hier, A.S. her, E. here ஈண்டு. ஈது - இது - இதா - இதோ - இதோளி. இதர் (இ.). இது - இதன் (தெ.) Cf. L. id. Goth. ita, A.S. hit, Ice. hit; E.it. Dut. het. இகரவடியாய்ப் பிறந்த அண்மைச்சுட்டு ஆரியமொழிகளில் சேய்மைச் சுட்டாய் வழங்குகின்றதென்க. வடமொழியில். இதஸ் என்பது இருமைச் சுட்டாயுமிருத்தல் காண்க. Cf. A.S. la, E. lo. த - ல போலி. ஒ. நோ: பதார்த்தம் - பலாத்தம். Skt. ittham, thus, E. item. இம் : இந்து, இந்த, இந்தா. இம்மை = இப்பிறப்பு, உலக வாழ்க்கை. Cf. A.S. this, E. this, Ice. thessi, Ger. dieser (sl.) E. these (pl.) ஈ - இவ் : (இவள்), இவண். இவண் = இவ்விடம். ஈன் > இவன். நம் > இவண். இவன், இவள், இவர் இவ - இவை. இல் : இல் + து = இஃது: இல் + து = இன்று. இகம் = இவ்வுலகம். இகபரம் என்னும் வழக்கையும் அகம் என்னும் சொல்லையும் நோக்குக. ஈன் - இன் - இன்ன - இன்னா, இனை (சுட்டு), ஈனோர் = இவ்வுலகத் தார். இன்ன, இனை, இனைய (உவமை). இன்ன (such) - சுட்டாச்சுட்டு. நெருங்கல் கிட்டு - கிட்ட - கிட்டத்தட்ட. கிட்டு = அண்மைப்படு, நெருங்கு. கிட்டி = நெருக்கி. காலவிடைச்சொற்கள்: இன், இன்னும், இனி. இன் = இப்பொழுது. Cf.E.yet, A.S. git, gita. g = y. இன்னும் = இதுவரையும், இதன்மேலும். இனி = இதன்மேல். பிறிதுபொருள்: இன் - ஏன் - ஏனை. எ - டு: இன்னொன்று, ஏனோர். இதர என்னும் வடசொல் இகரச்சுட்டடியாய்ப் பிறந்ததே. A.S. other, E. other. (2) முன்னிலைப் பெயர்: முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களை நோக்க அண்மைப் பொருள்களைக் குறித்தலின், அவை அண்மைச் சுட்டினின்று தோன்றின. இன் - (யீன்) - நீன் (ஒருமை). ஈம்-(யீம்) - நீம் (பன்மை). ஈங்கு முதலாயின தன்மைக் கண்ணும் ஆங்கு முதலாயின படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. (தொல்.சொல். 28, சேனா.) (3) சிறுமைச் சொற்கள்: அண்மை இடுக்கத்தைக் குறித்தலின், இடுக்கமும் சிறுமையும் மென்மையும் பற்றிய சொற்கள் அண்மைச்சுட்டினின்று தோன்றின. இடு - இடுகு, இடுப்பு, இடை (சிறுத்த இடம், சிறு சந்து). இடுக்கு (áW சந்து). இறுகு = சுருங்கிக் கடினமாகு. இடுக்கு = சிற்றிடைப்படுத்து, நெருக்கு. இடுக்கி - இடுக்கம். இட்டு -இட்டிது = சிறியது. Cf. et, ette, ot. dim. suffixes. Ex.turret, cigarette, ballot. இடர், இடுக்கண், இடும்பு - இடும்பை. இவை இடுகிய அல்லது தளர்ந்த நிலைபற்றித் துன்பங் குறிக்குஞ் சொற்கள். இடும்பு = தொந்தரவு, குறும்பு, வம்பு. இண்டு = சிறு சந்து. இண்டு இடுக்கு என்னும் வழக்கை நோக்குக. இள் - இள - இளகு. இள் - எள் - எள்கு - எஃகு. இளகினது எஃகு. ஒ.நோ: உருகினது உருக்கு. Gael, lag, feeble, A.S. las, feeble Goth. lasivs, weak, Ice. las, weakness, E. less, Celt., - W. Lag, loose, Gk. lagaros, slack, L. laxus, loose, E. lag, slack, lax loose. இளகு - இரங்கு. இளைத்தல் இளகல் = மெல்லிதாதல், சிறிதாதல். இளகு - இளக்கம் - இளக்காரம். இளம் + கரி = இளக்கரி. இளக்கரி + அம் = இளக்காரம் (தொ. பெ.). இளகிய நிலை இளக்கம். ஒருவரை எளிதாயெண்ணி வரம்பிறந் தொழுகற்கிடமான நிலை இளக்காரம். இளகு, இழுது = இளக்கமுள்ள நெய். இளகு - (இணகு) - இணங்கு. இணங்கல் = மனமிளகி யிசைதல். இள - இளது - இளசு = சிறியது, பிஞ்சு, இள் - இளை - இனை. இனைதல் = எளிய நிலையடைந்து வருந்துதல். இளமை, இளவல், இளையான், இளைஞன். ïŸ> எள் - ஏள்- ஏளனம். ஏள் - ஏசு. எள் - எளி. ஏள் - ஏழை - ஏதை. ஏள் + இதம் - ஏளிதம். எள் (சிறிய கூலம்). இள - இளை - எய். எள்ளல் = இகழ்தல். ஏட்டை, ஏடாகோடம், ஏடாகி, ஏட்டிக்குப்போட்டி. சிறுமை இகழ் = சிறிதாய் நினை. இம்மி = சிற்றரிசி, ஒரு சிற்றளவு. இல் - இல்லி = சிறு பொத்தல். இல் = சிறியது. இல் - இல்லை. ஒ.நோ: குன்றுதல் = இல்லாமை. எ-டு: செயப்படுபொருள் குன்றியவினை (Intransitive Verb). செயப்படுபொருள் குன்றாவினை (Transitive Verb). Cf. less = (1) in a low degree, (2) absent Ex. (l) less money, (2) senseless. இல் - இலகு - இலசு (லேசு) = சிறியது. கனமில்லாதது, எளியது. Skt. laghu, Gk. elachys, L. levis, Ger. leight, A.S. leoght, E. light, Ice. lettr, Fr. aise, It. agio, E. ease. இல் (குறுமையீறு): எ-டு : புட்டில் (புட்டி + இல்); தொட்டில் (bjh£o + இல்). Cf. ille, el. dim. sfxs. Ex. Fr. bouteille, E. bottle, E. damsel. இல்-அல். Cf. He is not here, he is not Nambi. E.&L. in, im, E., Gk. & Skt. an, a A.S., E.un. அல் + அது - அல்லது = அல்லாதது, அடுத்தது. Gk.allos, L. alias, E. alias. அல் -அன் - ன (ந). அன் என்பது இலக்கணப் போலியாய் வடமொழியில் ந ஆகும். அல் - அ. இலது > லேது. இல் > லே (தெலுங்கு) - இலக்கணப்போலி (Metathesis).ny > னே > னை. நை (இந்தி) = இல்லை. O.G. ni, Goth. ni, A. S. ne, M.E., Ice. nei, Dan. nei, E. nay, no. அல் > அன் > ன . Skt. na. சிட்டு = சிறு குருவி. சிட்டி = சிறு கலம். சீட்டு = சிற்றோலை. E. chit, a baby, a piece of paper, A.S. cith, a young tender shoot. சோட்டா(இ.) = சிறு. சிண்டு - சிறுகுடுமி. சிம்பு = சிறு சிராய். சில் - சில்லி - சல்லி = சிறி யது, சிறு துண்டு, சிறு காசு. சில் = சின். சில் = சிறு. சில் = சில. சிறப்பு சிறு - சிறுகு, சிறுத்தை, சிறுக்கன் (சக்கன், ம.). சிறாய், சித்தி. சின் - சின்ன - சின்னம் - சின்னான். சின் - சின்னி - சீனி. சீனி மிளகாய் = சிறிய மிளகாய். சின்னம் = சிறியது, துண்டு, அடையாளம். சின்னஞ்சிறியது, சின்ன பின்னம் என்னும் வழக்கை நோக்குக. ஒ.நோ: குறி (அடையாளம்) < குறு. L. signum, Fr. signe, E. sign. சின் - சினை = சிறுபகுதி, உறுப்பு, சிற்றுயிரி, கரு, முட்டை. 4. பிளவுக்கருத்து : ஒரு துண்டு ஒரு பொருளினின்று பிளந்துபோன பகுதியாதலின், சிறுமைக் கருத்தில் பிளவுக்கருத்துத் தோன்றிற்று. பில் - பில்லை - வில்லை. பில்லை = சிறு தகடு. பிள் - பிள்ளை = சிறியது அல்லது தாய்வயிற்றினின்று பிரிந்தது. பிள்ளை: Cf.L. felius, a son. பிள் - பீள் - இளங்கரு. பிள் - பிள. பிள - பிழா - பிடா - பிடவு - பிடவம் - பிடகம் = பெட்டி, பெட்டகம். பிழா = பிளந்த அல்லது அகன்ற வாயுள்ள ஓலைக்குட்டான். பிள் - பேள் - பேழ் - பேழை = வாயகன்ற பெட்டி, பெட்டி போன்ற மரக்கலம். பிள் - பிழை. பிழைத்தல் = நெறியினின்று பிரிதல், துன்பத்தினின்று தப்புதல். ஒ. நோ: தப்பு = (1) தவறு, (2) உய்வு. பிள் - பிலம் = பிளந்த நிலம், நிலக்குகை. பிள் - பிள - பிளம்பு - பிழம்பு = பிரிவு, துண்டு, தூண், பகுதி. பிள - பிளவு = விளவு (1) கமர், (2) பிள்ளைமை, இளமை. பிள - பிளவு - பிளவை. பிள் - பிடு - பிடுகு - விடுகு - விடுக்கு - விசுக்கு - விசுக்குணி. விடுகு = துண்டு. Ice. flaga, fragment, W. flaw, a splinter. பிடுகு - விடுகு = பிள்ளை. பிடுகு - பிடுக்கு - பிசுக்கு - பிசுக்கி. பிசுக்கு = துண்டு. Fr. piece; It.pezza; Bret. pez; W. peth; E. piece. பிள் - பிய் - பிஞ்சு; பிய்த்தல் = பிளத்தல், துண்டாக்கல். பிள - பிடு - பிடுங்கு - பிடாங்கு - பீரங்கி. பிடுங்குதல் = பிரிதல், பிரித்தல், பறித்தல், வெடித்தல். பிடுங்கு - பிடுங்கல். பிள் - பிரி: Cf.L. privo, to separate; E. privy, private; Fr., L. pars, a part; Gk. poro, to share; E. part, portion. பிள, பிடுங்கு. Cf. A.S. brecan; Goth . brikan, Ger. brochen, E. breah; Gael. bragh, a burst; L. frango, to break; E. fraction, fracture, fragile, fragment, frail. பிள, Dut. splijton; Ger. spleiszen, E. split. பிள் - பிள - (பிளகு) - பிணங்கு. பிள் - பிது - பிதுங்கு - பிதுக்கு. பிள் - பீள் - பீளை - பூளை. பூளை கண்ணினின்று பிரிந்த மலம். பீள் - பீய் - பீச்சு. பிள் - பிற. பிறத்தல் = தாய்வயிற்றினின்று பிரிதல், தோன்றுதல். பிற- பிறை = புதிதாய்த் தோன்றிய மதி. பிள்ளைமதி என்னும் வழக்கை நோக்குக. சில் - தில் - திற - திறவு. திறத்தல் = பிளத்தல். பிள் - பிடு - பிட்டு. பிண்டு உதிரியானது பிட்டு. பிட்டு = சில். பிண்டு உதிரியான மாவு பிண்டி. அதைத் திரட்டியது பிண்டம். பிண் டத்தைத் திரட்டுவது பிண்டித்தல் அல்லது பிடித்தல். ‘bfhG¡f£il பிடித்தல், பிள்ளையார் பிடித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. ஒ.நோ: தண்டி - தடி; கண்டி - கடி. பிண்டி - பிடி. பிண்டித்தல் = சேரப்பிடித்தல், சேர்த்தல், கட்டுதல். A.S. bind, Ger. bind, E. bind, Skt. bandh. பிடி = கையிற் கொள். பிள் - பிதிர். பில் - பின் - பின்னம் - பின்னி. பின்னம் = சிறியது, துண்டு, சிற்றெண் (fraction); சின்னபின்னம் என்னும் வழக்கை நோக்குக. பின்னி = சிறியது. நன்னி பின்னி என்னும் தஞ்சை வழக்கை neh¡Ff. பிள் - விள் - வில் - விலகு - விலங்கு - விலங்கம் - வில்லங்கம். வில் = நெறியினின்று விலகினது, வளைந்தது (bow); வில் - விலா = வளைந்த மார் எலும்பு. விலாக்குடை என்னும் வழக்கை நோக்குக. குடை = வளைவு. விள் = விலகு, வளை. வள்ளம் = வட்டமான கலம். வன் - வலமாகச் செலுத்துபவன். வலம் x அவலம் = வலியின்மை, துன்பம். அல் > அ (எதிர்மறை முன்னொட்டு). வலி - E. valour, O.Fr., Low., L. valor, L. valeo, to be strong. வலம் > பல (வ.). வலம் - வயம் = ஆற்றல், வெற்றி, மறம். E. valiant, Fr. vaittant, L. valeo, to be strong. E. value, L. valeo, to be strong, to be worth. E. avail from Fr., L. ad + valeo. வள் + இது = வள்ளிது (முழுது). Cf. E. round = whole. வள் - வாள் - வாளை. வாள் = வளைந்த கத்தி. வாளை = வாள் போன்ற மீன். வாள் - வாளம் = வாள் (sword), வட்டம், வளைந்த மலைத்தொடர் (r¡fuths«), சக்கரவாகம். ths«> வாகம் (cakra bird). வாளம் - வாணம் > பாண (வ.) = வளைந்து செல்லும் வாணக் கட்டு. வாள் - வாளி = பிறைத்தலை யம்பு. விலங்கல் = தடுத்தல். விலங்கு சிறையி னின்றனை (புறம். 169), “Éy§f‹w வியன்மார்ப (புறம். 3). விலங்கு = தடுப்பது, குறுக்காக வளர்வது. விலங்கு - விலங்கல் = நாட்டில் குறுக்கிடுவது, மலை. விள் + தம் = விட்டம் - குறுக்குத்தரம். வில் - (விற்பு) - வெற்பு. விள் - விண்டு = குறுக்கிடுவது, மலை. வில் - வில - விலத்து - விளத்து. விளத்தல் = விலக்கல்; வில் = வேறு படுத்து, பண்டமாற்று. வில் - விலை. பிள் - விள் - விறு - வீறு - வீற்று. விறு - வெறு - வேறு. வெறுத்தல் = வேறுபடுத்தல்,பகைத்தல்; வேறு - L. varius, Fr. varier, E. vary. பிள் - விள் - விடி - விடிதல் = இருளைப் பிளப்பதுபோலக் கதிரவன் புறப்படுதல்; விள் - வெடி - வெடிச்சி - வெளிச்சி = காதில் வெடிக்கும் புண்; வெடி - வேட்டு; விள் - விடு - விடை. விளைத்தல் = வேறுபடுத்தல், நீக்கல். விள் - விரி - விரிவு. விள் - விடு - விட - விடை. விடைத்தல் = கட்டுவிடுதல், விரிதல், பருத்தல், பெருமைகொள்ளல்; விடை = பருத்தது, திரண்ட காளை, பருத்தது, இளங்கோழி, ஆட்டுக்கடா; விடல் - விடலை = இளங்காளை, இளைஞன், வீரன், பாலைநிலத் தலைவன். L. vitulas, Gk. italos, a calf. விடை - விடாய். விடாய்த்தல் = பெருமைகெள்ளல்; விடை - விறை; விறைத்தல் = பெருமை கொள்ளல், முறுத்தல், சினத்தல்; விட- விற. விறப்பு = முறுக்கு, பெருமை; விள் - விளம் - விளர். விளம் = பெருஞ்சினம், பெருஞ்சினத்திற் கொட்டும் நஞ்சு. விளர்தல் = சினத்தல். விளம் - E. venom, Skt. விஷ, L. venenum, It. veneno, Fr. venin. விள் - விடு - விடை. விடுத்தல் = வினவியதை வெளிப்படுத்தல்; விடு - விடை - விடையம் = விடுத்த செய்தி, செய்தி. விடு - விடுதி, விடுதலை, வீடு. Cf. message; from L. mitto, to send. விடுத்தல் - ஒரு பொருளை ஓரிடத்தினின்று நீக்கல், விட்டுவிடுதல், அனுப்பல்; விடு,விடுமுறை. விடு-விடை-விடாய் (விடுமுறை). விள்- விண் - விண்டு = விரிந்தது. É©L > ÉZQ (t.);Éaby‹ கிளவி அகலப் பொருட்டே (bjhš. 848); ÉŸ - És« - Ésš - Éaš - Éa‹ > Éahã (t.); விள் - (விளவு)- வினவு - வினாவு. வினாதல் = ஒரு பொருளை வெளிப்படுத்தக் கேட்டல்; விள் - விள - விளா = விரிவு. விளாக்குலை கொள்ளுதல் = விரிதல், பரத்தல். விளாக்கொள்ளுதல் = விரிதல், பரத்தல். விள் - விழி. விழித்தல் = கண்ணை விரித்தல் அல்லது திறத்தல். விள் - விளம்பு -விளம்பரம். விளம்பு - விளப்பு. விளம்பல் = விட்டுச்சொல்லல். விளம்பு - விளம்பி. விள் - விளங்கு - விளக்கு, விளக்குமாறு. விளங்கல் = மறைந்தது வெளிப்படல், திகழ்தல். விள் - விளத்து - விளத்தல் = விளக்குதல். விளங்கு - (விறங்கு) - பிறங்கு - பிறங்கடை (thÇR.) பிறங்கு + அடை = பிறங்கடை= ஒரு குலம் அழியாமல் விளங்குவதற்குக் காரணமாயுள்ளது. விள் - வில். வில் = ஒளி, பொருள்களை விளங்கச்செய்வது. தண்ணாரம் வில்விலங்க(சீவக. 2959.) வில் - (வில) - நில - நிலா - நிலவு. நில - நிழ - நிழல் - நீழல். நிழல் - நிகர் = ஒளி. நிழல் = ஒளி. ஒளியுள்ள சாயை, சாயை. நிலம் (ஒளி)- நிறம் = ஒளி. ஒளியுள்ள வரணம், ஒளியுள்ள மார்பு. விள் = ஒளி, வெள்ளை. விளி - விளம். விளத்தாரு = வெண்கடம்பு. விள - விளம். விள - விளா- விளவு. விளா - விளாத்தி (xU மரம்). ஒ. நோ: வெள்ளில் = விளவு. விளவு - வில்வம் (xUtif விளவு). விள் - விளி. விளித்தல் = மறைந்தவனை வெளிப்படுத்துவதுபோற் கூப்பிடுதல். விள - விளர் - விளரி. விளர்த்தல் = வெளுத்தல். விளி - விளர் - விளரி. விளர்தல் - விளித்தல். விளரி = இறந்தோரை விளித்துப் பாடும் இரங்கற்பண். விளர் = நிணம் (வெள்ளையானது), கொழுமை. விளர் - விழுக்கு = நிணம். வில்லவம் > வில்வ (வ.). விடி வெள் - வெளி. வெள் + தை = வெட்டை (வெளி). வெளி = திறந்த அல்லது வெள்ளையான இடம். வெள் + இடை = வெள்ளிடை. வெள் = வெள்ளை. வெள் - வெள்ளை. வெள் - வெள்ளி - வெளிச்சி (xUÛ‹). வெள் - வெளில் - வெளிறு. வெள் - வெள்ளம். வெள்- வெளு. வெளிறு = வெண்மரம், உள்ளீடின்மை, அறிவின்மை. வெள் + என - வெள்ளென = கிழக்கு வெளுத்தவுடன், முன்னதாக. வெள்ளெனக் காட்டி - வெள்ளென் காட்டி - வெள்ளங்காட்டி = விடியலில். வெள்ளில் = விளவு, வெள்ளையானது. வெள் - வெள்கு - வெட்கு-வெட்கம். வெள்கல் = நாணத்தால் முகம் வெளுத்தல். Cf. to turn pale. வெள் - வெறு - வறு - வறிது. வெண்மை = ஒன்றுமின்மை. வெள் + இலை = வெள்ளிலை - வெற்றிலை. பூகாய் முதலியன வில்லாமல் இலைமட்டு மிருப்பது வெள்ளிலை; விள் - வீள் - வீண். வீண் = வெண்மை, வெறுமை, பயனின்மை. வீள் + பு = வீம்பு. விள் = ஒளி. விள் - வாள் - வால் - பால் - பார். வாள்ஒளி யாகும் (தொல். 851). வால் = வெள்ளை, தூய்மை. எ-டு: வாலறிவன் ஒ.நோ: வெண்பா - தூய பா; பால் = வெள்ளையானது (milk); பார் - வெள்ளையான ஒளியால் ஒரு பொருளைக் fh©.Cf.milk = பால்; Milky way = a whitish zone in the sky. Cf.E. transparent, L. trans, through (JUt); and pareo (gh®), to appear. பால் - பல் = வெள்ளையானது. வால் - வான் - வானம் = வெளி, ஆகாயம், மேகம், மழை. காண், பார் என்னும் சொற்கள் தமிழிலும் தோன்றற் பொருளில் வழங்கும். அது அழகாய்க் காண்கிறது. அது பார்வை யாயிருக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக. Compare, prepare முதலிய ஆங்கிலச் சொற்களின் ஈற்றிலும், பார் என்னும் சொல்லே யிருப்பதாகத் தெரிகிறது. தமிழின் தாய்மையை மேனாட்டார் இன்னும் அறியாதிருப்பதால், அவற்றுக்கு ஆங்கில அகராதிகளில் வேறு வகையாய் வேர் காட்டப்பட்டிருக்கிற தென்க. (5) பின்மைக்கருத்து: ஒருவன் தனக்குமுன்னால் சேய்மையிலுள்ள பொருளை அண்மைக்குக் கொண்டுவரும்போது, அது பின்னுக்கு வருதலாயிருத்தலின், அண்மைச்சுட்டில் பின்மைப் பொருள் தோன்றிற்று. இழுத்தல் ஈர். இழு - இசு. ஈர்தல் = பல்லாற் கடித்திழுத்தல். ஈர்த்தல் = இழுத்தறுத்தல். இழுத்தல் = முன்னுக்கிருந்து பின்னுக்கு ஒரு பொருளைக் கையால் அல்லது கயிற்றால் கொண்டுவருதல். கோட்டையிழுத்தல், மாட்டையிழுத்தல் முதலிய வினைகளை நோக்குக. இழுவல் = இழுத்துக் கடத்துதல். இழு - இசு - இசி - இசிவு. இழுப்பு = இசிவு (ஜன்னி அல்லது வலிப்பு). பின்மை இடை - இடைதல் = பின்வாங்கல், தோற்றுப் பின்னுக்கு வரல். இடை - இடம் = தோல்வி. இடக்கை = தோற்ற கை, வலியற்ற கை. ஒ.நோ: வலக்கை = வென்ற கை, வலியுள்ள கை. வலம் = வெற்றி. Cf. E.Left the weaker as opposed to the stronger right. A.S. lefan, to weaken. right, L. rego, to rule. இரி - இரிதல் = பின்னுக்குத் தோற்றோடுதல், ஓடுதல்; இடை - இடைஞ்சல் = பிற்படுத்துவது, தடை. இடறு = பின்னுக்குச் சறுக்கிவிழு. இடக்கு = குதிரைபோல் பின்னுக்குவரல், சண்டித்தனம், வம்பு; இடக்கு - இடக்கர் = வம்புப்பேச்சு; இட - இடத்தல் = ஓர் இலையை அல்லது பூவை இழுத்தொடித்தல்; இணுகு - இணுங்கு - இணுக்கு. இணுங்குதல் = ஓர் இலையை அல்லது இணுக்கை (twig) இழுத்தொடித்தல், கையால் திருகியிழுத்தல். இணுங்குவது இணுக்கு. இழுத்தல் இரை = இழு, உள்ளிழுக்கும் உணவு. இரைப்பு = இழுப்பு, இரைப்பெலி = கடியால் இழுப்பையுண்டாக்கும் எலி. இஞ்சு = நீர் இழு, இறுகு. இஞ்சி = இறுகிய மதில், நீரிழுத்த இஞ்சி. இஞ்சிவேர் - L. zingiber, Gk. zingiberis, Skt. sringavera, C.Fr. gingibre, M.E. gingivere, E. ginger. இறை = (1) நீரை இழு, (2). நீரை இழுத்துப் பாய்ச்சு, (3) இழுத்துத் தெளி, (4) தெளிப்பதுபோல் தெறி. இறைப்பது இறைவை. இழை = இழுத்த நூல். இழை (வி.) = உளியை இழுத்து மரத்தை அல்லது உலோகத்தைத் தேய், தேய்,தேய்த்துச் செய். இழைக்கும் உளி இழைப்புளி. இழை (பெ.) = இழைத்த நகை. இளை - இளைப்பு = மூச்சு இழுத்தல். இளை - ஈளை = காசநோய். இழு - இழுகு - இழுக்கு - இழுக்கம். இழுதல் = கால் பின்னுக்குத் தவறல், தவறல், மையால் கோடிழுத்தல். இழுக்கு = குற்றம். இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே (குறள். 415) இழுகு - இசகு - பிசகு. இசகல் = நரம்பு இழுத்துக்கொள்ளல். பிசகல் = நரம்பு அல்லது கை கால் முதலிய உறுப்புகள் தவறி யிழுத்துக்கொள்ளல். பிசகு = தவறு. இழு - (இழுது) - எழுது. எழுதுதல் = கோடிழுத்துப் படம் வரைதல், எழுத்தெழுதுதல். படம் எழுது என்னும் வழக்கை நோக்குக. எழுது - எழுத்து. எழுதுதல் = படம் போன்ற அரிவரியெழுதல். இழுகு - இலகு - இலக்கு - இலக்கம். இலக்கு - இலக்கி. ïy¡Fjš, இலக்கித்தல் = எழுதுதல். “ï› வுருவு நெஞ்சென்னுங் கிழியின் மேலிருந் திலக்கித்து (சீவக.180) இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கு + அணம் = இலக்கணம். Cf. E. literature, from letter, E. grammar, from L.,Gk. gramma, a letter. இலக்கணம் என்னும் சொல்லே வடமொழியில் லக்ஷண என்று திரியும். இதற்கு மாறாக, மகன் தந்தையைப் பெற்றான் என்பதுபோல, லக்ஷணம் என்னும் வடசொல்லே தமிழில் இலக்கணம் எனத் திரிந்தது என்று பல்கலைக்கழக அகராதியிற் குறித்திருப்பதும், இவ் வுலகிலேயே இலக்கண வரம்பும் வளர்ச்சியும் மிக்குப் பிறமொழிகட்கெல்லா மில்லாத பொருளிலக்கணம் பெற்றதென்று பாராட்டப்படும் தமிழுக்கு இலக்கணத்தைக் குறிக்க ஒரு சொல்லு மில்லையென்று தமிழ்ப் பகைவரான அயலார் கூறுவதை, ஆராய்ச்சியும் உரிமையுணர்ச்சியு மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்ப் புலவர் நம்பிக்கொண்டு அடங்கியிருப்ப தும் விந்தையிலும் விந்தையே. இலக்கு (எழுது ) என்னும் சொல் வடமொழியிலும் இந்தியிலும் லேக் என்று இலக்கணப் போலியாய்த் திரியும். நெருக்கம் இரை - திரை. திரைத்தல் = இழுத்தல். வேட்டியை முழங்காலுக்குமேல் இழுத்துக்கட்டுவதைத் திரைத்துக்கட்டுதல் என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. திரைதல் = இழுத்தல், சுருங்குதல், திரளுதல், திரிதல், திருகுதல். திரை - திரங்கு = சுருங்கு. திரை - திர - திரள் - திரளை - திண்ணை - திணை. திணை = திரட்சி, குழு, பிரிவு, குலம், ஒழுக்கம். ஒ.நோ: குழு = திரட்சி, கூட்டம். திர - திரம் - திறம் - திடம் = திரட்சி, உறுதி. திர - திரு = திரட்டப்படும் செல்வம். திடம் - திடல் = திரண்ட மேடு. திணை - திண் - திண்டு - திட்டு - திட்டை - திட்டம் = உறுதி, உறுதியான ஏற்பாடு. திண்- திணி - திண்- திணுகு - திணுங்கு. திணி - தின் - தீனி. திண் - L. densus, E. dense. திண் - திள்- தில். திண்டுமுண்டு = தில்லுமுல்லு. திரி = திரிக்கப்பட்டது, பேரிழை, இழை. திரிதல் = அலைதல், அலை போல் இடம்பெயரல். திரித்தல் - அலைபோற் புரளும்படி உருட்டித் திரட்டுதல், மாற்றுதல், ஒரு சொல்லை மாற்றி வேறொரு சொல் பிறப்பித்தல். Cf. E. thread, lit. something twisted. Ice. thrad-r, Ger. draht; A.S. throed; from thrawan, to wind.‘Thra’v‹D« பகுதி திரி என்னும் சொல்லைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருப்பதையும், திரி என்பதன் மறுபெயரான புரி என்னுஞ் சொல் வளைவுப்பொருள்பற்றியதையும் நோக்குக. திரித்த சொல் திரிசொல். திரி - L.derivo; E. derive. திரி - திருகு - திருக்கு. E. trick; O.F. tricer, to beguile. திருக்கு = முறுக்கு, வஞ்சனை, வலக்காரம் (தந்திரம்). திரி - திரம்பு - திறம்பு. இழுத்தற் பொருளுள்ள திரை என்னும் சொல் மேலையாரிய மொழிகளில் பின்வருமாறு திரியும். L. traho, Ger. tragen, Dut. trekken. Ice. drug, A.S. dragan, E. draw. Dragan, traho என்னும் வடிவங்களினின்று draft, drag, draggle, drain, draught, draughts, draw, drawee, drawer, drawl, dray, dredge, dregs, trace, track, tract, trail, train, trait, trawl, treachery, treat, tret, trigger, troll முதலிய ஏராளமான ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். மேசையின் இழுவை drawer எனப்படுவதையும், இழுத்துக் கட்டி வைத்தாற்போன்ற அரைக்காற்சட்டை drawers எனப்படுவதையும், கோடிழுத்து வரைதல் drawing எனப்படுவதையும் நோக்குக. பின்மை திரும் - திரும்பு. திருமல் = முன்சென்றவன் பின்னுக்கு வரல். திரும் L. tornare; Fr. tourner; Ger. turnen; A.S. tyrman, to turn, E. turn. திருமி- திரி L.re (pfx); E. re, back. திருமியும் - திரியும் (கொச்சை வழக்கு). திரும் -திருத்து. திருந்தல் = நெறியைவிட்டு விலகினவன் திரும்ப நெறிக்கு வருதல். ஈ - மீ - மீள் - மீள - மீளவும். மீள் - மீண்டு - மீண்டும். மீள்- மீட்டு - மீட்டும். மீள் - மீட்பு. நீ - நீங்கு. நீத்தல் ஒரு பொருளைப் பின்னுக்கு விட்டுவிட்டுச் செல்லுதல். நீந்து - நீஞ்சு. நீந்தல் = கையால் நீரைப் பின்னுக்குத் தள்ளி நீர்நிலையைக் கடத்தல். இ. பின் - பின் - பின்னம் - பின்னர். பின் - பின்பு. பின் - பின்று - பிந்து. பின்று. E. hind; A.S. hindan. ப - ஹ போலி, பத்து - ஹத்து, பள்ளி - ஹள்ளி என்று கன்னடத்தில் திரிதல் காண்க. பின்மைப் பொருள்தரும் இடைஞ்சல் என்னும் சொல் தடையைக் குறித்தாற்போல், hind என்பதினின்று பிறந்த hinder என்னும் சொல்லும் தடையைக் குறித்தல் காண்க. பின் + கு = பிற்கு. Cf. E. back; A.S. boec; Sw. bak; Dan. bag. பின் + பாடு = பிற்பாடு. பின் - பினம் - பிறம் - பிறவு - பிறகு - பிறக்கு. பிறக்கு = after, back. பிறம் - பிறல். பிற - பிறிது. பிற - பிறழ் - புரள் - புரளி. பிறம் - புறம். பிறவு - புறவு. பிறகு - புறகு. புறம் = பின், முதுகு, பின்னுக்குச் செல்லும் கோள், வெளிப்பக்கம், பக்கம், மருதத்திற் கப்பாற்பட்ட முல்லைநிலம். புறம் + போக்கு - புறம்போக்கு. புறம் - புறா - புறவு - புறவம் = முல்லைநிலப் பறவை. புறம் - புறம்பு. புறம் - புறன் - புறணி. புறம் + படு = புறப்படு. பிறம் - பிறன். பிறத்தியான் - புறத்தியான். பிட்டி - பிட்டம் - புட்டம். பிட்டம் - இடுப்பின்கீழ்ப் பின்பக்கம் E. buttock. பிட்டி - புட்டி = பறவையின் பின்புறம். புட்டி - புட்டில். புட்டி > முட்டி. புட்டி = புட்டிபோன்ற கண்ணாடிக் கலம். Fr. botte. புட்டி + இல் (குறுமையீறு) = புட்டில். Fr. bouteille; E. bottle; முட்டி = புட்டிபோன்ற மட்கலம், சிறு பானை. இனி, முட்டு - முட்டி - புட்டி என்றுமாம். (6) கீழ்மைக்கருத்து: முற்கூறிய அண்மைக் கருத்திலேயே கீழ்மைக் கருத்தும் தோன்றிற்று. ஒரு மேட்டின் அல்லது மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது சேய்மை உயரமாயும் அண்மை கீழ்மையாயு மிருத்தல் காண்க. ஈதல் ஈ = கீழிடு, இடு. ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே. ஈவது ஈகை. ஈகை = கொடை, பொன். Cf. E.yield. A.S. gildon, to pay. Goth. gildan, Ger. gelten, Ice. gjalda. See guild. E. “guild, (orig.) an association in a town where payment was made ...[A.S.gild, money:gildan, to pay. It is the same word as gold and gild”] Ch.E.D. இருத்தல் இரு. இருத்தல் = கீழுட்கார்தல், நிலத்திலிருத்தல், காத்திருத்தல், வசித்தல். இடு-இடுதல் = கீழே போடுதல். கொடுத்தல். இகுதல்= கீழே விழுதல். இறங்குதல் இடுவது இடை அல்லது இடம். ஒ. நோ: வைப்பது வைப்பு. இறங்கு, இழி - இளி. இழிதல் = இறங்குதல், கீழ்நிலையடைதல். இழிசினன் = தாழ்ந்தவன். இளிவு = இழிவு. இருவி = பயிர்த்தாளின் அடிப்பாகம். இழ - இழத்தல் = (முதலாவது) ஒரு பொருளைக் கீழே தவறிப் போட்டுவிடுதல். இல் = இருக்குமிடம். ஈன், ஈனுதல் = வயிற்றினின்று குழவியைக் கீழிடுதல், பிள்ளை பெறுதல் அல்லது குட்டிபோடுதல். E.yean; A.S. eanian, to bring forth. ஈனம் = இழிவு. ஈனன் = இழிந்தோன். நீசம் என்னும் வடசொல் ஈகாரச்சுட்டடியாய்ப் பிறந்ததே. நீச்சே (இ.) = கீழே. A.S. nither, downward, Gk. nieder, low, E. nether. lower. be + neath - beneath. கில் - கிள் - கிள்ளி - கிளி. கிள் - கிள்ளை = காயைக் கிள்ளும் பறவை. கில்லல் = கீழ்நோக்கித் தோண்டுதல். கில் - கல் - கன்(வ.). கன் + அம் = கன்னம். கன்னம் +கோல் = கன்னக்கோல். கன் + இ = கனி (Ru§f«). கிள் = கீழ்நோக்கிக் கொத்து, முள். கிள் - கிழி. கிழித்தல் = கீழ்நோக்கி யறுத்தல், அறுத்தல், பிளத்தல், துண்டாக்கல். Ger. klieben, A.S. clesfan, E. cleave, to split. கிள் - கிளை. கிளைத்தல் = கிள்ளின துண்டுபோற் பிரிதல். கிளை - கேள் - கேண்மை. கேள் - கேளிர். கேள் - கேள்வன். கேள் = கிளைபோற் பிரிந்த இனம். கிளைவழி என்னும் வழக்கை நோக்குக. பிரிவு கிள் - கிளை. கிளைத்தல் = கிண்டல். கிள் - கிளறு - கிளாறு. கிள் - கிண்டு - கிண்டல். கிண்டு - கெண்டு. கிள்- (கிளறு) - கிணறு. கிள் - கீள் - கீழ். கீளுதல் = கிழித்தல், தோண்டுதல். கீழ் + கு = கீழுக்கு - கிழக்கு. கிழக்கு - (1) down. (2) east. “fh‰ கிழக்காந் தலை (குறள். 488). கீள் - கீறு - கிறுக்கு. கிள் - கிட = கீழிரு. கிறுக்கு - E. crack. A.S. cearcian, to crack, Dut.krak, Gael. cnac; கீறு, Cf. E. scratch, Ger. kratzen, Dut. krassen; கீறு - கீறல். கீறு - கீற்று. கீள் - கேணி. கீள் - கேழல். கேழல் = நிலத்தைக் கிளைப்பது, பன்றி, பன்றிபோன்ற யானை. கிடங்கு = கீழ்ப்பள்ளம் (L. cata, down,E cata, cath, cat (prefixes), down), சரக்குவைக்கும் கீழறை, மண்டி. கிழங்கு - கெட்ட (தெ.). கிடங்கு - கிட்டங்கி. கிழங்கு = கீழே முளைப்பது. கீழ் - கிழம், கிழடு; கிழம் = கிழங்குபோல் காலத்தில் ஆழ்ந்து முதிர்ந்தது; கிழம் = முதிர்ந்தது; கிழமை = முதிர்வு, பழமை, உரிமை, கோளுக் குரிமைபூண்ட நாள். கிள் - கீழ் - கெடு. கெடுதல் = கீழ்நிலையடைதல். கெட்டுக் கீழைவழி யாகி என்னும் வழக்கை நோக்குக. முதிர்ந்து பாழ்படுதல் என்னும் பொருளில் கிழ என்னும் சொல் கெடு என்று திரிந்தது எனினும் பொருந்தும். 6. விருப்பக்கருத்து: வீ. வீதல் = கீழ்ப்படல், விழுதல், இறத்தல், முடிதல். வீ = மலரில் விழும் வண்டு, மரத்தினின்று விழுந்த மலர். வீ = வீழ் - விழு; விழு - விகு - விகுதி = முடிவு, ஈறு. விகு - விகுதம் - வீதம். விழு - விழுக்காடு = வீதம். ஒ.நோ: தொழு - தொகு. வீழ் - வீழ்து, விழுது. வீழ் - வீடு - வீட்டு. விழு - விழல் = கிழங்கு விழுந்த கோரை, வீண். விழு - A.S. feallan; Ger. fallen; E. fall. வீழ் - வீண். விழல் - வீழல் வீழ்தல் = ஒரு பொருளின்மேல் விழுந்தாற்போல அதை மிக விரும்புதல்; Cf. E. to fall in love with. “jh«åœth® மென்றோட் டுயிலின் இனிது கொல்(குறள். 1113). விழு - விழும் - விரும் - விரும்பு; விரும் - விருந்து = விரும்பியிடும் உணவு, அதை உண்ணும் புத்தாள், புதுமை. விழு - விழை; விழைதல் = விரும்புதல்; Gk. philos, love. விழை - விழாய் - விடாய்; விடாய். விருப்பம், தாகம், ஆசை, களைப்பு. விழை - விழா - விழவு. விழா = விரும்பிச் செய்யப்படும் சிறப்பு . விழு - விழும் - விழுமம் - விழுப்பம் = சிறப்பு. சிறப்பு என்னும் சொல்லுக் கிருப்பதுபோன்றே விழவு என்னும் சொல்லுக்கும் கொண்டாட்டம், பெருமை என்னும் இருபொருளுமுண்டு. விழை - வெள் - வேள் = விரும்பு. வெள் - வேள் - வேண்டு = விரும்பு. வெள்கு - வெஃகு = விரும்பு. E. want,Ice. vanta,to be wanting. வேள் + து - வேண்டு. வேள் - வேள்வி = ஒரு பொருளை விரும்பியிடும் பலி. வேள் + உம் - வேளும் = வேண்டும் (தன்மை நிகழ்கால அல்லது எதிர்கால வினைமுற்று). வேள் + கை - வேட்கை = விருப்பம், தாகம். வேள் - வேண். வேண் + அவா - வேணவா. வேள் - வேளாளன் - வேளாண்மை. வேள் = விருந்து. வேள்வாய் கவட்டை நெறி (பழ. 360). வேள் + ஆட்டி - வேளாட்டி. வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம். வேள் = விரும்பப்படுகிறவன், தலைவன், குறுநிலமன்னன். வேள் = விருப்பத்தை (காதலை) யுண்டாக்கும் காமன், கன்னிப் பெண்டிர்க்குக் காதலையுண்டாக்குபவனாகக் கருதப்பட்ட முருகன் (வேலன் வெறியாடல் என்னும் அகப்பொருட்டுறையைப் பார்க்க.) வேள் - வேளான் = முருகனை வழிபடும் குயவன். வேள் + தம் - வேட்டம். வேள் + தை - வேட்டை. வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடன். விரும்பிச் செய்யப்படு வது வேட்டம்; L. venor, to hunt. வெள் - வெய். வெள் - வெம். “bt«ik வேண்டல்(தொல். 818). விருப்பத்தைக் குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெப்பத்தைக் குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெவ்வேறாகும். எனது மொழிநூலில் திருத்திக்கொள்க. வெய்ய = விரும்பத்தக்க. வேண்டுவான் = வேண்டுமென்று. M. E. wantowen, from wan, to want, E. wanton, adj. and n. வேள் - வெள் - பெள். பெட்டல் = விரும்பல். பெட்பு = விருப்பம். பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் (தொல். களவு. 11) பெள் + தை - பெட்டை - பெடை - பேடை - பேடு. பேடு - பேடன், பேடி, ஆண்டன்மையுள்ள பெண் பேடன்; பெண்டன்மைள்ள ஆண் பேடி. பெள் + து - பெட்டு. Celt., - Ir. peat; Gael. peata, E. pet, anyone fondled. பெள் - பெண் - பேண். பெண் = விரும்பப்படுபவள். பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல். பெள் - பிண் - பிணை, பிணா, பிணவு. பிணவல், பிடி. பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல். 822) இ - சிந்து. சிந்துதல் - மேலிருந்து கீழ் விழுதல், வீழ்த்தல், ஒருவரைக் கீழே வீழ்த்தல் போல் அழித்தல். E. shed. (7) எழுகைக்கருத்து: இவ - இவர். இவர்தல் = ஏறுதல். இவ - நிவ. நிவத்தல் = உயர்தல். கிள் - கிளம் - கிளம்பு. கிளம்புதல் = ஒரு பொருள் தன்னிடத்தினின்று எழுதல், பெயர்தல். கிளம் - கிளர். கிளர்தல் = மேலெழுதல், மகிழ்தல். கிளர்ச்சி = எழுச்சி, மகிழ்ச்சி. L. hilaris; Gk. hilaros - hilaos, gay, cheerful; E. hilarious, gay, E. exhilarate, to cheer, ex intensive. நிமிர்தல் = எழுந்து நேராயிருத்தல். குறிப்பு: இங்குக் கூறிய இகர முதற் சொற்களை எகர முதற் சொற்களின் திரிபாகக் கொள்ளவும் இடமுண்டு. 3. ஊகாரச்சுட்டு (1) முன்மைச்சுட்டு (Forwardness and Motion) ஊகாரத்தை ஒலிக்கும்போது வாய் முன்னோக்கிக் குவிவதால் ஊகாரச்சுட்டில் முன்மைக் கருத்தும் குறுஞ்சேய்மைக் கருத்தும் தோன்றின. குறுஞ்சேய்மை ஊ = உந்த (உது, உவை). ஊது - உது - உதா - உதோ - உதோளி. முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும் பொதுவாதலால், இந்தியில் உகரச்சுட்டு நெடுஞ்சேய்மையைக் குறிக்கும். எ-டு: உதர் = அங்கே. தமிழில் சேய்மைச்சுட்டுத் தனியாயிருப்பதால், உகரச்சுட்டுச் சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிடத்தையே அல்லது குறுஞ்சேய்மையையே குறிக்கும். உம் - உம்மை = முன்மை, குறுஞ்சேய்மை. ஊ - உவ். உவள் - உவண் - உவ்விடம். ஊன் > உவன். ஊம் - உவம். உவன், உவள், உவர், உவ - உவை. உல் +து - உஃது, உற்று (வழக்கற்றது). (2) முன்னிலைப்பெயர் முன்னிலைப்பெயர் முன்னாலிருப்பவரைக் குறிக்கும் பெயராதலால், முன்மைச்சுட்டிலும் தோன்றிற்று. ஊன் > யூன்) > நூன் (ஒருமை). ஊம் > யூம் > நூம் (பன்மை). முற்செலவுக்கருத்து உகை = முற்செலுத்து L.ago, Gk. ago, to put in motion; Skt. aj, to drive. உந்து = முன்னுக்குத் தள், தள். உந்தி = வயிற்றிலிருந்து காற்றைத் தள்ளுமிடம், கொப்பூழ். உந்தி முதலா முந்துவளி தோன்றி (தொல். 83) உந்தி - உதானன் = உந்தியினின்றெழும் காற்று. உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல் - ஊசல் - ஊயல். L. oscillium, a swing, E. oscillate, to swing. உதை = (முத.) காலால் முன்னுக்குத் தள். உய் = முற்செல், முற்செலுத்து, முற்சென்று தப்பு. உய் - ஒய் = முற்செலுத்து. உமணர் உப்பொ யொழுகை (புறம்.116) உய் - உயிர் = உடம்பைச் செலுத்துவது. இனி, உள் - உய் - உயிர் (உள்ளிருப்பது) என்றுமாம். உய் - உயம் - வியம். Éa« = brY¤jš, njnuh£Ljš (I§.), வினைமேற் செலுத்தல், ஏவல். வியம் + கொள் - வியங்கொள் - வியங்கோள் = மதிப்பான ஏவல். ஊங்கு - ஊக்கு = முற்செலுத்து. ஊக்கல் = உள்ளத்தை அல்லது ஒருவனை ஒரு வினையின்மேற் செலுத்தல். ஊக்கம் = வினைமேற் செல்லும் மனம், தளரா மனம். ஊக்கு - நூக்கு = முன்னுக்குத் தள், தள். ஊர் (வி.) = முற்செல், செலுத்து, ஏறிச்செலுத்து, ஏறிச்செல், மெள்ளச் செல். முதுகிற் பாரமுள்ள விலங்கு மெள்ளச்செல்வது இயல்பு. ஊர்தி = வாகனம், ஊர் (பெ.) = ஊர்தியிற் கொண்டு போகப்படும் கூண்டு அல்லது குடில், குடில் அல்லது வீடு, வீட்டுத்தொகுதி. ஒ.நோ: நகர்தல் = மெள்ளச்செல்லல். நகர் = வீடு அல்லது அரண்மனை, ஊர். இன்னும் நாடோடிகள் (nomads) மாடு குதிரை முதலியவற்றின்மேல் தங்கள் குடிலைக் கொண்டுபோவதையும், சில இடங்களில் ஒரே வீடிருந்து ஒற்றையூர் எனப்படுவதையும் காண்க. ஆரியமொழிகளிலும் முற்செலவும் ஊக்கலும்பற்றிய சொற்கள் சில ஊகாரச்சுட்டடியாய்ப் பிறந்துள்ளன. O.Fr. ussier, Fr. huissier, E. usher, to walk before, L. urgeo, E. urge, to drive, to press ; Skt. urja. u = ஊ, உ. ஊகி = முன்னதாகக் கருது. ஊகி + அம் - ஊகம் > யூக(வ.). உன்னு = முன்னதாகக் கருது, நினை. உன்னம் = நினைப்பு, கருத்து, பாவனை, தியானம், மனம் (திவாகரம்). உன் - உன்னி, to guess. முன்மைக்கருத்து ஊ = முன். ஊங்கு = முன்பு (இடமுன்னும் காலமுன்னும்). முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே (புறம். 88) சுட்டெழுத்துகளோடு பல மெய்கள் முன்னும் பின்னும் சேர்வதால், பல சொற்கள் தோன்றுகின்றன. ஒரு சுட்டெழுத்துடன் பல மெய்கள் சேர்வதற் கிடமிருப்பினும், உதடு குவிவதாலுண்டாகும் உகரத்துடன் உதட்டில் பிறக்கும் மெய்களாகிய மகரபகரங்களே சிறப்பாகச் சேர்தற்குரியன. பகரத்தினும் மகரம் எளிதும் இயல்புமானதாகையால், முன்மைச்சொல், இயன்மொழியான தமிழில் மகரவடியாயும் திரிமொழிகளான ஆரியமொழிகளில் பகரவடியாயும் தோன்றியுள்ளது. L. pre, pro, Gk. pro, Skt. pra, before. ஆயினும், இயக்கத்தை அல்லது இடம்பெயர்வைக் குறிக்கும் சொல்லொன்று ஆரியத்தில் மகரவடியாயுள்ளது. L. moveo, to move, E.move, motion, motor, motive (that which moves to acton.) உயிரிகளின் இயல்பான செலவெல்லாம் முன்னோக்கியதாதலால், முன்மைக்கருத்தில் செலவுக் கருத்துத் தோன்றிற்று. ஊ - உ- மு - முன். முன் = முன்னிடம், முன்புறம், முற்காலம், முன்மை. முன்- முன்னு. முன்னுதல் = முற்பட நினைத்தல், நினைத்தல். முன்னம் = நினைப்பு, உள்ளக்குறிப்பு, குறிப்பு, மனம் (திவாகரம்). முன்னம் - முனம் மனம். A.S. munan, to think, Ger. meinen, to think. மனம் - மனது - மனசு. E. mind, Skt. manas, Ger. menos, L. mens. முன் - முன்னம் - முன்னர். முன் - முன்பு. முன் - முனை - முனைவன். முன் - முந்து. முந்தல் - முதல் = முதன்மை, முதலி, முதலாளி. முதல் - முது = முதுமை, பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). முதுக்கு + உறை - முதுக்குறை. முதுக்குறைதல் = அறிவுமிகுதல், மகளிர் பருவமடைதல். புத்தியறிதல் என்னும் வழக்கை நோக்குக. முது - முதிர். L. maturus, ripe, E. mature. முது - மூ = மூப்பு, மூத்தோன், மூ ப்பன், மூத்தாள். மூதேவி = மூத்த தேவி. முன் - முனை = முன்பக்கம். எ- டு: போர்முனை. முன் = ஒரு கூரான பொருளின் முன்புறம், கூர். முன் - முனி - நுனி - நுதி - துதி. துதிக்கை = கூரியதாய் முடியும் யானைக்கை. நுனித்தல் = கூர்த்தல். முன் - முனை - நுனை. முனை - குனை - கொனை = நுனி. நுனியைக் கொனையென்பது வடார்க்காட்டு வழக்கு. Cf. E. cone, a pointed figure. Fr. cone, L. conus, Gk. konos, a peak, peg a cone. Ch.E.D. ஒ.நோ: கூர் - கூரை (கூராய் முடியும் முகடு). முகம் = முன்பக்கம், தலையின் முன்புறம் (face), முற்பகுதி. குறுக்காக வளரும் விலங்கு பறவை முதலியவற்றிற்கு முகமே முன்னாலிருப்பதையும், நூன்முகம் (preface), போர்முகம், முகவுரை, முகமுடைவரி முதலிய வழக்குகளையும் நோக்குக. முகம் > Skt. mukha. Cf. L. facies, It. faccia, Fr. face, E. face. Face என்னும் ஆங்கிலச்சொல் முகம் என்னும் தமிழ்ச்சொல்லை ஒலியாலும் பொருளாலும் வழக்காலும் ஒத்திருக்கின்றது. ம - வ - f போலி. c = k (Latin). ஆனால், சேம்பரார் அகராதியில் facio (to make) என்ற இலத்தீன் பகுதியினின்று face என்னும் சினைப்பெயர் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தமிழில், முகம் என்பது தோற்றம் என்றும், முகஞ்செய்தல் என்பது தோன்றுதல் என்றும் பொருள்படுதலால், facies என்னும் சினைப்பெயரினின்றே facio (to cause to appear) என்னும் வினை பிறந்ததாகக் கொள்வது சிறந்தது. இனி, அவர் கருத்துப்படியே கொள்ளினும், facio என்னும் சொல் வகு என்னும் தமிழ்ச்சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றதைக் காண்க. வகுத்தல் = படைத்தல், செய்தல். “v‹id வகுத்திலையே விடும்பைக்கிடம் யாது சொல்லே(தேவா. 643: 2). முகத்தலை - முகதலை (முன்றானை). முகவாசல் = முன்வாசல். முகவாய்- மோவாய் = முன்வாய். முகமன் = முகத்திற் கூறும் புகழுரை. முகம் - முகர் - முகரை. மூஞ்சி முகரை, முகரையைப் பார் என்னும் வழக்குகளை நோக்குக. முகர் = முகம் பொறித்த முத்திரை. முகர் - முகரா - மொகரா (பெர்.) = முத்திரையுள்ள காசு. முகம் + திரை - முகத்திரை - முத்திரை = முகவுருவுள்ள சின்னம். முகம் + திரம் - முகத்திரம் - மோதிரம் = முத்திரையுள்ள விரலணி. திருமுகம் = முத்திரையுள்ள கடிதம். முகம் - முகமை - முகாமை = முன்மை, முதன்மை, தலைமை. முகம் = முக்கியம் (தலைமை, சிறப்பு) > Skt. mukhya. முகமை - மகமை = பெருமை. மகமை > மஹிமா (வ.). தமிழில் மையீறு பண்புப்பெயர் விகுதியாயிருத்தலை நோக்குக. முகம் - மகம் = பெருமை. L. magnus, great, மஹத் (வ.) மகம் - மகன்= கடவுட் படைப்பிற் பெரியவன் (மாந்தன்), ஒருவனுக்குப் புதிதாய்ப் பிறக்கும் மாந்தன் (புதல்வன்). மகம் - மகவு. மக - மா = பெரிய. மகன் - மான் - மன். மன் = பெருமை, மிகுதி, பெரும்பான்மை. Cf.``E. many... A.S manig; cog. forms are found in all the Teut.languages; allied to L. magnus.” Ch. E.D. மன் - மாந்தன். மன்பதை = மக்கட்கூட்டம். மன் - Goth. man, A.S. mann, Ger. man, Ice. madhr (for mannr), Skt. manu. மகம் - மகந்து - மாந்து - மாந்தன். மன் = பெரியவன், அரசன். மன் + அன் - மன்னன். ஆள் என்னும் சொல் பொதுமகனையும் அரசனையும் குறித்தலை நோக்குக. ஆள் = person. ஆளுதல் = அரசு செய்தல். ஆளி = ஆள், அரசன். ஆளன் = ஆள், அரசன். ஆள்+ மை - ஆண்மை = ஆள்தன்மை, ஆட்சி. King என்னும் சொல்லுக்கு A.S. cyning = cyn (a tribe) and suffix - ing, meaning ‘belonging to’, ‘son of’, the ‘tribe’, the elected chief of the people என்று Skeat கூறியிருப்பது கருதத்தக்கது. முகம் = முன்னிடம். எ-டு: துறைமுகம். முகம் = பக்கம், நிலை. எ-டு: மறைமுகம், உண்முகம், ஒருமுகம் (ஒற்றுமை), நேர்முகம் (ne®¤j«). முகம் = முன்பக்கம், மேற்பக்கம். முகவரி = மேல் விலாசம். முகப்பு = கட்டடத்தின் முற்பகுதி. Cf. Fr., E. facade. from It. facciate, the front of a building, faccia, the face. முகம் = இடம். Kf - Kf¤jš = j‹Ål¤J¡ bfhŸsš (j.É.), ஒரு கலத்திற் கொள்ளல், அளத்தல் (பி.வி.). முகவை = அளவை, பொலியளப்பு. முகம் = மூக்கு. முகத்தில் மிக முன்னால் நீண்டிருப்பது மூக்காதலால், முகப்பெயர் மூக்கையுங் குறித்தது. முகம் - முக. முகத்தல் = மணத்தல், விரும்புதல். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் (மூதுரை). முக - மோ. மோத்தல் = முகர்தல், விரும்புதல். மோ+கம் - மோகம் = விருப்பம், காதல், பெருங்காதல். மோகன் = காதலையுண்டாக்கும் காமன். மோகம் - மோகி + அனம் - மோகனம் = பெருவிருப்பம், காதல், வசியம், மயக்குகை. மோகனம் செய்யும் பேய் மோகினி. முகம் - முகர். முகர்தல் = மோத்தல். முகடு = முகம் (மூக்கு) போற் கூரிய கூரை, மலையின் மேற்பகுதி. முகடி = முகட்டிலிருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி. முகடி = முகரி. முகட்டை - மூட்டை = முகட்டிலிருந்து விழும் பூச்சி. முகம் - முகிழ் - முகை - மொக்கு = மூக்குப்போற் குவிந்த மொட்டு. மொக்கு - மொக்குள் = மொட்டு, மொட்டுப்போன்ற குமிழி. மொக்குளித்தல் = குமிழி தோன்றுதல். மொக்கை = முகம், குவிவு, திரட்சி, கூட்டம். பறவைகட்கு மூக்குப்போல் முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு வாயாயிருத்தலால், முகம் என்னும் சொல்லுக்கு வாய்ப்பொருளும் சிறுபான்மையுண்டு. இப் பொருள் வடமொழியிற் குறிக்கப்படுவது. ஆயினும், முகம் என்னும் சொல்லுக்குத் தலையின் முன்புறம் என்பதே முதற்பொருளென் றும், ஏனை மூக்கும் வாயும் வழிப்பொருளென்றும், முன்மையை யுணர்த்தும் மூ என்பதே வேரென்றும் அறிதல் வேண்டும். பறவையின் அலகு மூக்குப் போல்வதால் மூக்கெனப்பட்டது. அதன் உண்மையான மூக்கு அலகில் இரு துளையாய்மட்டு மிருக்கும். முகம் - மூகு - மூக்கு. மூக்கு = மூக்குச்சளி (L. mungo, E. mucus), மூக்குப்போன்ற பாகம். மூக்கு - முக்கு = மூக்குப் போன்ற தெரு, மூலை. Ir. niuc, Scot. neuk, E. nook. முக்கு - முக்கை = ஆறு திரும்பும் மூலை. மூக்கு - (1) E. beak, Fr. bec, Celt. beic. (2) E. peak = மூக்குப்போற் கூரிய மலைமுகடு. ஒ.நோ: முகம் - முகடு = குவடு. (3) E. pike = மூக்குப்போற் கூரிய கம்பி. Celt., Gael. pik, W. pig, L.spika, E. spike, spoke, A.S. spaca, Ger. speiche. மூக்கு - மூங்கு - மூங்கா = மூக்கு நீண்டிருக்கும் கீரி. தெ. முங்கி, முங்கிச, E. mungoose. மூங்கு - மூஞ்சு - மூஞ்சி = மூக்கு, முகம். மூஞ்சிச்சுவர் = gable wall. மூஞ்சி - மூஞ்சை = நீண்ட மூக்கு, நீண்ட முகம். மூஞ்சு + எலி - மூஞ்செலி (musk - rat) - மூஞ்சுறு - மூஞ்சூறு. மூஞ்சு (மூக்கு)நீண்ட எலி மூஞ்செலி. மூஞ்செலி என்பதே இன்றும் தென்னாட்டு வழக்கு. மூஞ்சி (மூசி). Ice. nos, A.S. nosu, Ger. nase, L. nasus, Skt. nasi. முற்செலவுக்கருத்தும் துளைத்தற்கருத்தும் உள் = முற்செல், பொருந்து, துளை. ஒரு பொருள் தொடர்ந்து முற்செல்லும்போது, எதிரேயிருக்கிற பொருளொடு முதலாவது பொருந்துதலும், பின்பு அதனூடு துளைத்துச் செல்லுதலும் காண்க. உழு = முன்னோக்கி நிலத்தைக் கீறு. உழு - உழ - உழை - ஊழியம். உழத்தல் = வருந்தி வேலை செய்தல். ஊழியம் = தொழில்,தொண்டு. உறு = முற்சென்று பொருந்து, பொருந்து, திரள், வலிமிகு. பல பொருள்கள் ஒன்றாய்ப் பொருந்துவதால் திரட்சியும் உறுதியும் உண்டாதல் காண்க. உறு - உறவு, உற்றார். உறு - உறழ். உறு = உறை = பொருந்த விழு, வலிதாய்ப் பொருந்து, காரமாகு. உறு = மிக. உறுதி = மிகுதி, திரட்சி, திண்ணம், உரம், உண்மை. L. verus, true, O. Fr. verai, Fr. vrai, Ger. wahr, A.S. voer,E. very, real, in a great degree; verity, truth. உருத்தல் = முற்படுதல், வேகமாய்த் தோன்றுதல், மூண்டெழுதல், சினத்தல், எரிதல். உரு = தோற்றம், வடிவம், படிமை. உரு - உருவு - உருவம் - ரூப (வ.) உருவு- உருபு = வேற்றுமை வடிவம். உரு = தோற்றம், பொருள், நகைப்பொருள், நிறம், எழுத்து, மந்திரவெழுத்து, பாட்டு, சினம், நெருப்பு. உருப்படி = பொருள், தனிப்பொருள், பாட்டு. உரு - உரும் = சினம், நெருப்பு, இடி. உரு + திரம் - உருத்திரம் = சினம். உருத்திரம் + அன் - உருத்திரன் = அழிப்புத் தெய்வம், நெருப்புக்கடவுள், சிவன். உருத்திரன் + அக்கம் - உருத்திராக்கம் (சிவமணி). உருத்திரம் > ருத்ர (t.). Cf. A.S. wradh, E. wroth, Ice. reidh - r, O. Ger. reid, உருத்திரன் > ருத்ர (வ.). உருத்திராக்கம் > ருத்ராக்ஷ (வ.). உரும் - உருமி = வெப்பமாகு, புழுங்கு. உருமி + அம் - உருமம் = வெப்பம், வெப்பமிக்க நண்பகல். உருமம் - உருப்பம் = நெருப்பு, சினம். உரு - குரு. குருத்தல் = தோன்றுதல், சினத்தல், எரிதல். குரு = நெருப்பு, சூட்டாலுண்டாகும் கொப்புளம் (prickly heat, boil).cUk« - குருமம் = சூடு. Hi. garam, Skt. gharma, Gk. therme, heat, O.L. formus, A.S. wearm, Ger. warm, E. warm, hot. குருத்தம் (கோபம்.) > க்ரோத (வ.). குரு = நெருப்பு, நெருப்பின் நிறமான சிவப்பு, ஒளி, அகவொளி தரும் ஆசிரியன். “FUî§ கெழுவு நிறனா கும்மே (தொல். 785). குரு = செந்நிறம். குருதி = சிவப்பு, அரத்தம், செவ்வாய் (Mars). குருதிக் காந்தள் = செங்காந்தள். குரு - குரவன் = ஆசிரியன். பெரியோன், உர் - உரசு, உரை, உராய். உரிஞ்சு = பொருந்து, தேய். Fr. L. frico, to rub, E. friction. உரம் = பொருந்தும் மார்பு, வலிமை, பயிர்க்கு வலிமை செய்யும் எரு. உரம் - உரகம் = மார்பால் நகரும் பாம்பு. உள் - உள்ளு - முற்பட நினை, ஊக்கமாய் நினை, நினை. உள்ளம் - ஊக்கமுள்ள மனம், மனம். “cŸs முடைமை யுடைமை (குறள். 602). உள்ளல் = ஊக்கத்துடன் நினைத்தல், நினைத்தல். உள் = மனம், உட்பக்கம். உள் - உள்ளல் - உள்ளான் = நீருக்குள் முழுகும் பறவை. உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம். உள்கு - நினை. உள்கு - உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கல், அச்சம். உள் - உரு = அச்சம். உள்கு + ஆர் - உள்கார். (உளுக்கார்) - உட்கார் = ஒடுக்கமாய்க் குந்து, குந்து. கட்டடம் உட்கார்ந்துவிட்டது (விழுந்து ஒடுங்கிவிட்டது)என்னும் வழக்கை நோக்குக. (உள்கி) - (உட்கி). உக்கி = உட்கார்ந்து எழும் தண்டனை. (உளங்கு) - உறங்கு = ஒடுங்கித் தூங்கு. உள் = உண் = உள்ளிடு, வாய்க்குள்ளிடு, சாப்பிடு. உண் - ஊட்டு. Cf. A.S. fedan, E. feed. உள் - உணர் = உள்ளத்தாலறி. உட்கொள் = உண், உள்ளத்திற் கொள். உள் - உளவு = உள்ளாராயும் துப்பு. உள் - ஊடு = உட்புறம், நடு, குறுக்கு. ஊடு - ஊடை = ஊடு செலுத்தும் இழை (woof). உள் - உறி - உறிஞ்சு. ஒ.வே: உறிஞ்சி. Gk.syringx, a pipe, E. syringe. உள் - உளி = உட்கொத்தும் கருவி. உள்- உரு - உருவு = ஊடுசெல், கையூடிழு. உடை = உட்பக்கம் திற. உள் - உளு = உள்ளே துளைத்துச் செல்லும் புழு. உளுத்தல் = புழுவால் துளைக்கப்படல். உள் + அது - உள்ளது - உளது = உள்ளிருக்கிறது, இருக்கிறது. உள் + து - உண்டு. உள் + மை - உண்மை = இருப்பது, மெய். உண்டு + ஆகு - உண்டாகு. உளை = துளை, குடை, நோ, வருந்து, வெறு. உளைத்தல் = துளையினின்று ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்புக். 45). உளை - உய - உயா = வருத்தம். உய - உயங்கு = வருந்து. உள் - உர - உரல் = துளையுள்ளது. உர - உரை = ஒலி, சொல்லு. L. oris, the mouth, oro, to speak. E. oral, oration, oracle, etc. துள் - துர = முற்செலுத்து. Ger. treiben, to push, A.S. drifan, E. drive. துரத்து = (1) (முன்னுக்கு) ஓட்டு, (2) நெஞ்சுக்காற்றை வாய்வழி முன்னுக்குச் செலுத்து, to cough. துர - துரை = வேகம், மிகுதி. தும்மு = சளியை மூக்குவழி முன்னுக்குத் தள். துருத்து = முன்னுக்குத் தள். Ice. thrysta, E.thrust, L.trudo. துருத்து - துருத்தி (bellows) - துத்தி - தித்தி. துர = முன்னுக்குத் தள், உட்செலுத்து, துளை. துரப்பு = செலுத்துகை, முடுக்குகை, துளைக்கை, குடைவரைப் பாதை (tunnel). Drive என்னும் ஆங்கிலச் சொல்லும் முற்செலுத்தலையும் துளைத்தலையும் குறித்தல் காண்க. துரப்பணம் = துளையிடுகருவி (auger). துரவு = துளைக்கப்பட்ட கேணி, துருவியாராய்தல் (spying), தூது. துர- தூரி = தள்ளியாடும் ஊஞ்சல். தூண்டு = முன்னாற் செலுத்து, திரியைத் தள், ஏவு,தூண்டிய வேகத் துரகதத் தடந்தேர் (பாரதம்). துர-துரகம் - துரங்கம் = வேகமாய்ச் செலுத்தப்படும் குதிரை. துரந்தரம் = பொதியெருது, பொறுப்பு. துரந்தரன் = செலுத்துவோன், வெற்றியாளன், முயற்சியாளன், பொறுப்பாளி. துரை = தலைவன், அரசன். தூண்டு - தீண்டு = திரியைத் தள். துரை - துனை= விரைவு. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள (bjhš. 799). தூது = (1) முன்னால் விடுக்கும் செய்தி (message). (2) செய்தி கொண்டுபோகிறவன் (messenger). (3) அரசச் செய்தி கொண்டுபோகிறவன் (ambassador). துள் - துன் (துன்னு) = முற்செலுத்து, உழு, தை, தள், பொருந்து. துன்னூசி = உழவூசி (கொழு), கொழுச் சேர்ந்த கலப்பைமூக்கு, ஊசி. துன்னல் = உழுதல், தைத்தல். துன்னப் போத்து = உழவெருமை. துன்னு = ஊசியை முற்செலுத்தித் தை. துன்னம் = தையல். இனி, உழு = உள்ளே கீறு; துன்னு = துளைத்துக் கீறு அல்லது தை என்றுமாம். துள் = சேர், திரள். துள் - தள் - தண்டு - தண்டி - தண்டம் - தண்டனை. தண்டி - தடி - தாட்டி. தடி - தடம் - தடவு. E. doughty. துள் - துல். துல்லல் = பொருந்தல், ஒத்தல். துல்லியம் - துல்லிபம் = ஒப்பு, ஒத்த அளவு, அளவு. துல் + ஆ - துலா - துலை = ஒப்பு, இருபுறமும் ஒத்த அளவிடும் தராசு, தராசு போன்ற ஏற்றம். ஆ ஒரு தொழிற்பெயர் விகுதி. எ - டு: உண் + ஆ = உணா, பிண் + ஆ - பிணா, நில (ஒளிர்) + ஆ - நிலா, இரு (கரு) + ஆ - இரா, ÉG(ÉU«ò)+ ஆ - விழா. துலா + கோல் - துலாக்கோல். துலா - துலாம் -துலான் = பெருந்தராசு, ஒரு நிறை. துலாம், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந் துலா என்னும் பெயர்களும் அவை குறிக்கும் பொருள்களும் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவருபவை. துலைநா வன்ன சமநிலை யுளப்பட (தொல். பொதுப்பாயிரம்.) துல் (நிறு) > தோல் (இ.). துள் - துளை - துணை = ஒப்பு, அளவு. துணை - தனை. அத்துணை - அத்தனை. துல் - துன் = முன்னுக்குத் தள், பொருந்து. துன்னார் = பொருந்தார், பகைவர். துன் - துன்று = பொருந்து, நெருங்கு, நிறை. துல் - துறு = பொருந்து, நெருங்கு, சேர். துறு - துறை. துள் - துண் = பொருந்து, சேர். துணை = சேர்ந்தது, இரண்டு. துண் - துணர் - துணரி = பல பூக்கள் சேர்ந்த கொத்து. துள் - தொள் - தொழு = பொருந்து, கூடு. தொழு > தொகு. தொழுதி = தொகுதி, கூட்டம். தொகு - தொகை. தொகுப்பு - தோப்பு. E.tope. தொழு - தொறு = கூட்டம், பசுக்கூட்டம். தொறு - தோறு = கூட, உடன் (ஓர் இடைச்சொல்). தொறு + உம் - தொறும். துள் = துளைசெய். துள் + ஐ - துளை. A.S. duru, Gk. thura, Skt. dvar, E. door, L. fore. துள் - தூள் = துளைக்கும்போது விழும் பொடி. தூள் - தூளி - தூசி. துள் = தள், துளை, தோண்டு, வெட்டு. துள் - துள்ளி - துளி - துளிர் - தளிர். துளி = துண்டு, திவலை, சிறுபகுதி. துள்-துண்- துணி = வெட்டு, வெட்டப்பட்ட ஆடை. ஒ.நோ: அறு - அறுவை = துணி. E. piece goods. துள் + து - துட்டு. துட்டு = துண்டு, காசு. ஒ.நோ: சல்லி = துண்டு, காசு. துண் - துணி - துணிக்கை. துண் - துணுக்கு. துண்டு - துண்டி - துண்டம் - துண்ட (வ.). துன்- தூண்- ஸ்தூண (வ.). ஒ.நோ: பிள் - பிழம்பு = தூண். துணி - துமி. Gk.temno, to cut. தூள் - தூளனம் (வ.). துள் - துரு - துருவு = துளைத்துச் செல், ஊடுசெல், உட்சென்று ஆராய். துருவ - A.S. thurh, E. through, Ger. durch, W. true, Skt. taras, L. trans, E. thorough, the longer form of through. துருவு - துப்பு = உளவு, துப்புத்துரவு என்பது உலகவழக்கு. துள் - துண்பு - தும்பு. ஒ.நோ: தெள்பு - தெண்பு - தெம்பு. வள்பு - வண்பு - வம்பு. (தெ.) = வளைவு. தும்பு = துளை, துளையுள்ளது, குழாய். தும்பி = குழாய் போன்ற முன்கை (proboscis) யுள்ள வண்டு, யானை, துளையுள்ள சுரை. தும்பு - தூம்பு = உட்டுளைப் பொருள், குழாய், ஒரு துளைவாத்தியம். Fr. L. tubus. E. tube. தூம்பு + அல் - தூம்பல் = துளையுள்ள சுரை. தூம்பு -öu« = ஒரு முகத்த லளவை. தும்புக்கை (தும்பிக்கை) - தூம்பிக்கை = யானைக்கை. துள் - துய் = துளை போன்ற வாயிலிடு, உண், நுகர். துய் - து - தூ= உண். து + பு - துப்பு = உணவு. தூ - ஊ - ஊன் = உண்ணும் இறைச்சி, உடம்பு. துள் - துல் - துன் - துன்பு - துன்பம் = துளைத்தல், வருத்துதல், இடர். துளைத்தல் = வருத்துதல். துள் - தொள் = பொருந்து, துளை,தோண்டு. தொள் + அல் - தொள்ளல் = துளை. தொள் + ஐ - தொள்ளை - தொளை. தொள் + தி - தொண்டி (தொளை). தொள் + தை - தொண்டை = உணவு செல்லும் குழி. தொள் + இ - தொளி (நீருள்ள நிலத்தைத் தோண்டின சேறு). தொள்ளம் = சேறு. தொள்ளல் - தொய்யல் = சேறு, உழவு. தொள் + இல் - (தொளில்) - தொழில் = நிலத்தைத் தோண்டிச் செய்யும் பயிர்வேலை, வேலை. தொள் - தொழு = தொழில் செய், ஊழியஞ் செய், வழிபடு.ஒ.நோ: சேவி = தொழில் செய் (to serve), ஊழியஞ் செய், வழிபடு. தொழு - தொழும்பு = ஊழியம், அடித்தொண்டு. தொழும்பன் (அடித்தொண்டன்), தொம்பன் = கீழ் வினைஞன். தொள் + து - தொண்டு = தொளை, தொழில், அடித்தொழில். தொண்டு + அன் - தொண்டன். தொள் A.S. tilion, to till, E. till. தொண்டு = துளை, உடம்பிலுள்ள துளையின் தொகையாகிய ஒன்பது. தொழு - தொழுக்கு - தொழுக்கன் = அடிமை. தொழு - தொழீஇ = வேலைக்காரி. தொழு - தோழ் - தோழம் - தோழன் = வினைவல பாங்கன், பாங்கன், நண்பன். தொழு - தொறு = அடிமை. இனி, தோள் - தோளன் - தோழன் = தோள் போன்றவன் அல்லது தோள்மேற் கைபோடுபவன் (கார்த்திகேய முதலியார் மொழிநூல்) என்றுமாம். தொளதொளவெனல் = தொளையில் இறுக்கமாயில்லாமை. தொள - தள - தளர். தொளத்தி - தளத்தி. தளர் = இறுக்கங் குன்று, ஊக்கங் குன்று, வலிகுன்று. தொள்ளாடு - தள்ளாடு = வலிதளர். தொள் - தொய் = தளர், தொங்கு. தொள் - தொள்கு - தொக்கு - தொக்கம் = குடலில் ஒன்று தொங்கி (சிக்கி)க் கொள்வது. தொக்கு = தொங்கல், தளர்ச்சி, இளக்காரம். தொக்கு - தொங்கு - (துங்கு) - துஞ்சு. துங்கு - தூங்கு - தூக்கு = (வி.) தொங்க வை, மேலிடு, எடு, நிறு; (பெ.) நிறை, நிறுத்த தாளம், நிறுத்த ஓசை, செய்யுள். தூங்கு = தொங்கு, தொங்கும் தொட்டிலில் அல்லது கட்டிலில் உறங்கு. துஞ்சு = தொங்கு, உறங்கு, சா. தூங்கு - E. hang, A.S. hon, Dut., Ger. hangen, Goth. hahan. தொள் - தொழு = துளையுள்ள கட்டை (strocks),JisíŸs கட்டுத்தறி, கட்டுத்தறிக்கூடம். தொழு - தொழுவு - தொழுவம். தொழு - தோழ் - தோழம். தொழு - தொறு - தொறுவு = தொழுவம். தொறுவன் = இடையன். தொள் - தொள்கு = துளையுள்ள வலை, தோண்டப்பட்ட சேறு, பள்ளம். தொள்கல் = துளைத்தல். தொள் - தொல் - தொன் - தொனி > த்வனி (வ.) = துளையிலிருந் துண்டாகும் ஒலி. தொள்ளை - தொல்லை = துளைத்தல், வருத்தம். தொன்னை = துளைக்கப்பட்டது போன்ற இலைக்கலம். ஒ. நோ: கல் - கலம் = கல்லப்பட்டது. கல்லல் = தோண்டல், துளைத்தல், குடைதல். தொள் - தொல் = தோண்டப்பட்ட அடிநிலை, காலத்தின் அடியான பழமை. ஒ.நோ: கீழ் - கிழமை. தொன்மை = பழமை, பழங்கதைபற்றிய நூல். தொல் - தொன்று = பழமை. தொல் - தோல் = பழமை, பழம்பொருள்பற்றிய நூல். தொல் - தொலை - தொலைவு = காலச்சேய்மை (பழமை) போன்ற இடச்சேய்மை. தொலை = தூரமாகப் போ, காணாமற் போ, தோற்றுத் தூரமாக ஓடு, அழி, தொலை - தோல் = தோல்வியடை. தொள் - தொடு = பொருந்து, கைவை, துளை, தோண்டு. தொடு - தொடுப்பு. தொடு - தொடர். தொடு - தொடங்கு. Cf. Ger. zucken, to move, It. toccare, Fr. toucher, E. touch. தொள் - தோள் = பொருந்து, தொடு, துளை, தோண்டு. தோள் - தோய் = பொருந்து, தொடு, திரள். கேள்வியால் தோட்கப் படாத செவி (குறள். 418). தோள் = தொடும் உறுப்பான கை, கையின் மேற்பகுதியான புயம். தோள் - தோணி = மரத்தில் தோண்டப்பட்ட ஓடம் (dug - out). தோள் - தோண்டு = பொருந்து, தொடு, கில். தோண்டு - நோண்டு = தொடு, கைவை, கில். தோண்டு - தீண்டு - தீட்டு. L. tango, to touch. தோண்டு - தேண்டு - தேடு - நேடு. தொள் - சொள் - சொள்ளை = துளையுள்ளது (கூடு), பதர், குற்றம். சொள் + து - சொண்டு = துளையுள்ளது, பதர். சொள் + தை - சொட்டை - சொத்தை - சூத்தை. சொட்டை = துளையுள்ளது. பதர், குற்றம். சொத்தை = பதர், துளையுள்ள பல். புள் = முன்னாற் செல், தள், பொருந்து, துளை. L. pulso, Fr. pousser, E. push, to thrust. புள் = வானைத் துளைத்துச் செல்லும் பறவை, பறவைபோற் செல்லும் குச்சு. A.S. fugel, Ice. fugl, E. fowl, Ger. vogel, a bird. புள் + ஆம் + குச்சு - புள்ளாங் குச்சு. புள் - புழு = மரத்தைத் துளைப்பது. புள் - புடை(வி.) = முன்னுக்குத் தள், துருத்து, வீங்கு. Cf. Gael. bolg, A.S. belgan, E. bulge, to swell out. புள் - புணர் = பொருந்து. புள் - புண் - பூண் - பூட்டு. புள் - புல் = பொருந்து, தழுவு. புல்லி - புலி = முன்கால்களால் தழுவும் விலங்கு. புல் - புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு, அறிவுநூல். புலம் - புலன் = பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு, அறிவுநூல். புலம் = புலன். புல் - புரை= (வி.) பொருந்து, ஒப்பாகு; (பெ.) ஒப்பு, புரைய = போல (உவமவுருபு). புரையோர் = ஒத்தோர், உவமை கூறத்தக்க பெரியோர். “ca®ªjj‹ மேற்றே உள்ளுங் காலை(தொல். 1222) என்றதனால் உயர்ந்த பொருளே உவமை கொள்ளப்படுவது மரபு எனவறிக. Fr. pair,O.Fr., L. par, paris, equal, E. peer, an equal, a noble man. உருஉட் காகும் புரையுயர் பாகும் (தொல். 784) புள் - புகு = துளைக்குட் செல், உட்செல். புக + விடு - புகட்டு - போட்டு. புகு + அல் - புகல் = புகும் அடைக்கலம், சாக்கு (போக்கு). புகலி = வெள்ளக்காலத்தில் அடைக்கலமாயிருந்த சீகாழி. புகு - புகை. Cf. A.S. smoca, E. smoke,Low Ger., Dut. smook. புள் - புல் = துளை, தோண்டு. புல் = உட்டுளையுள்ள தாவரம். புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல். மரபு. 481) புல் - புலம் = தோண்டப்பட்ட வயல், நிலம், இடம். புள் - புண். புல் - புரை = துளை, பொய், குற்றம். Fr., L.porus, Gk. poros, E. pore, an opening. புள் = துளை, தோண்டு, வெட்டு, கொத்து, குத்து. புள் + இ - புள்ளி = குத்து (a point), சிறு வட்டக்குறி, புள்ளியால் குறிக்கப்படும் ஆள். புள்ளிக்கணக்கு = குறியிட்டுக் கணிக்கும் கணக்கு. புள்ளிக்காரன் = புள்ளி குத்தப்பட்ட குற்றவாளி. Cf.E. bull, a sealed edict of the pope, L. bulla,a knob, anything rounded by art; later, a leaden seal, E. bill, an account of money, a draft of a proposed law. (Lit.). a sealed paper, from Low, L. billa - bulla, a seal. புள் - (புகு) - புகர் - போர் = புள்ளி, குற்றம். புள் - புட்டு - புட்டா = புள்ளி. புள் - புனை = பொருத்து, அலங்கரி. புள் - புழை - புடை- புதை = உட்டுளை, உட்குவிவு. புழை - பூழ் - பூழை. புழை = துளை, வாசல். புழை + கடை = வீட்டின் பின்புறமுள்ள சிறுவாசல். Cf. A.S., L. portus, E. port, a gate, from L. porus, an opening. E. door, on opening. பூழை = E. barrel. புழை - புழல் - புடல். புழல் - புழலை - புடலை. புடை - புடங்கு. புதை - A.S.byrgan, to bury;Ger. bergen, to hide; E. bury. த - ர போலி. எ-டு: விதை - விரை. புதை - புதையல். புதை - புதல் - புதர். Cf. Low., L. boscus, Fr. bois, Ger. busch, M.E. busk, busch; E. bush. புதை - பொதி - பொதுள் - பொதும்பு - பொதும்பர். பொதி - பொத்து = மூடு, பொருத்து. பொத்திப்பிடி, பொல்லம் பொத்து என்னும் வழக்குகளை நோக்குக. பொத்து - M.E. botech, Low Ger. patschen, E. patch. புள் - பொள் = பொருந்து, துளை, குற்றம். A.S. bor, Ger. bohren, E.bore, L.foro, to make a hole, E. bull, a blunder in speech. பொள் - பொளி = துளை, வெட்டு. பொளி - பொழி = பொள்ளப்பட்ட நீர்க்கலம் போலப் பெருமழை பெய், பெருமழை போலச் சொற்பெருக்கு நிகழ்த்து அல்லது மிகுதியாகக் கொடு. பொள் - பொசி = துளைவழி கசி. பொள் - பொண்டான் = எலி பொத்துக் கொண்டுவரும் வளை. பொள் - போழ் - போழ்து - பொழுது - போது. போழ் = (வி.) துளை, வெட்டு, பிள் ; (பெ.) பிளவு, துண்டு, தகடு. பொழுது = இருளைப் பிளக்கும் சூரியன், சூரியனால் அளந்தறியப்படும் காலம், வேளை. bghGJ - ¥buh¤J (bj.), ப்ராத (வ.) = சிறந்த காலை வேளை. ஒ.நோ: காலை = காலம், விடியற்காலம். காலம் = விடியற்காலம் (வடார்க்காட்டு வழக்கு.) பொள் - பொல் - பொல்லம் = துளை. பொல்லல் = துளைத்தல், வருத்துதல். Cf. E. bore, to make a hole, to annoy. பொல்லார் = வருத்துவார், தீயர். பொலம் = வருத்தம், தீமை. பொல்லாங்கு = தீமை. பொல்லாப்பு = வருத்தம், தீங்கு. பொள் = பொருந்து. பொள் + து - பொட்டு = கன்னத்தின் மேற்பொருத்து (temple). பொள் = கொத்து. பொட்டு = கொத்திய இடம் போன்ற புள்ளி, புள்ளி போன்ற திலகம். பொள் = வெட்டு. பொட்டு = பயிரைப் பூச்சி வெட்டினாற்போன்ற சிற்றிடம். பொட்டு + அல் - பொட்டல் = நிலத்திற் பயிரில்லாத அல்லது தலையில் மயிரில்லாத வெற்றிடம். பொள் = துளை. பொட்டு = துளைக்கும்போது விழும் தூள், பொடித்துண்டு, சிற்றளவு, பயற்றங்காய்த் தோட்டுப் பொடி, சிறுபூச்சி. பொள் - பொடி - பொடுகு - பொடுகன். பொள் + தை - பொட்டை = துளை. பொட்டைக்கண் = குருட்டுக்கண். பொட்டு - Cf. Scot. and Dut. spat, M.E. spat, E. spot, a mark, a blot, a small part of a different colour, a small space; s(prosthesis) + pot = spot. பொட்டு = பொருத்து, கட்டு. பொட்டு + அணம் - பொட்டணம். பொள் - பொய் = துளை, உள்ளீடின்மை, உண்மையின்மை (lie), குற்றம். பொய் - பை = துளையுள்ளது. பொள்ளல் = துளை, குற்றம். E. bull, a blunder in speech. பொள் - பொ. பொ + தல் - பொத்தல் = துளைத்தல், துளை. பொ + து - பொத்து = துளை, குற்றம். பொத்து - பொந்து. பொள்கு - பொக்கு = உள்ளீடில்லாத பதர், பொய், பை. E. bag, A.S. boelg, Celt. bag, balg. பொக்கு + அணம் - பொக்கணம் = பை. பொக்கறை - பக்கறை = பை. இனி, பகு + அறை - பக்கறை என்றுமாம். பொக்கு - பொக்கை = பல்லில்லாத வாய். பொ - பொச்சு = பை, வயிறு. E. pouch, Fr.poche, a bag, the bag of an animal. Cf. A.S. boelg, bag, belly; Celt. bag, belly, wallet. பொள் - (பொள்ளி) - E.belly. பொக்கு - E.poke, abag, pock, a bag, pocket, a little bag. பொள் - பொது = துளையிடு. பொதுபொதுவெனல் = உள்ளிறங்கற் குறிப்பு. பொதுக்கெனல் = உள்ளிறங்கற் குறிப்பு. பொல் = பொருந்து. பொற்ப = பொருந்த, போல (உவமவுருபு). பொல் - பொரு - பொரும் - பொருந் - பொருந்து. பொரு = பொருந்து, பொருந்திப் போர்செய், மோது. பொரும்போது இருபடையும் பொருந்துதல் காண்க. ஒ. நோ: சமம் - சமர் = போர். கைகல = சண்டையிடு; கல - கலகம். பொல் - பொன். பொல் + அம் - பொலம். பொல் + பு - பொற்பு. பொற்ற (சிந்தா.) ஒ.நோ: ஒப்பி, ஒப்பனை. பொல்லாத - பொல்லா (காரிகையாசிரியர் கூற்று) = அழகில்லாத. பொரு - பொருவு = ஒப்பு. பொருவ = போல (உவமவுருபு). பொருந்-பொருநை = கல்பொரு திரங்கும் ஆறு. பொருந் - பொருநன் = போர்மறவன். பொருந்து - பொருத்து = பொட்டு (temple). பொரு - போர். Cf. A.S. werre, O.Fr. werre, O.Ger. werra, E. war. பொல் - (பொல்லம்) = பொருத்தம், போர். L. bellum, war, E. ballicose, belligerent. பொரு - பொருள் = பொருந்திய பண்டம், செல்வம். ஒ.நோ: உடன் - உடமை. பொல் - போல் = (வி.) பொருந்து, ஒப்பாகு; (பெ.) உட்டுளை. போல = ஒக்க (உவமவுருபு). போல் - போலி. முட்டற்கருத்தும் பிறகருத்துகளும் முள் = (வி.) முற்சென்று பொருந்து, கூரிய முனையாற் குத்து, விரல் நுனியாற் கிள்ளு, உட்புகு; (பெ.) ஊசி, ஊசிபோன்ற உறுப்பு, உட்குவிவு. முள் - முளம். முளவு = முள், முள்ளம்பன்றி. முளம் - முளர் - முளரி = முள்ளுள்ள தாமரை. முள் - முண்டு - முண்டகம் = நீர்முள்ளி. முள் - முள்ளி. முள் - முளம் - மளம் - மயம். பரி + மளம் - பரிமளம். மளம் = மணம். முள் - முள - முய - முயல் - மயல் = கலப்பு, மயக்கம், கலந்த குப்பை. முய - முயங்கு = கல, தழுவு. முயங்கு - மயங்கு = கலகலங்கு. பல பொருள்கள் ஒன்றாய்ச் சேரும்போது பொருட்கலக்கமும் மனமயக்கமும் உண்டாகும். மயல் - மையல் - மனத்தைக் கலக்கும் பெருங்காதல். மயல் - மால் = மயக்கம், பெருங்காதல், கண்ணை மயக்கம் இருட்டு, கருப்பு, மேகம், கரிய திருமால், இருண்மிகுதி. மால் - மாலை = பூக்கலந்த கோவை, பகலும் இரவுங் கலந்த அல்லது இருண்ட நேரம், ஒரு பொருளுடன் கலந்த குணம். ``மாலை யியல்பே'' (தொல். 796) முள் - முள்கு = பொருந்து, கல. Cf. A.S. mengan; Dut. mengelen, Ger. mangen, E. mingle, to mix. முள் - முரு - மரு - மருவு = பொருந்து. மரு - மருமம் = பொருந்தும் மார்பு. மரு - மார் - மார்பு. E. mammal, L. mammalis - mamma (kUk«), the breast. முள் - முள - மள - மண = பொருந்து, கலியாணம் செய். முள் - நுள் = விரல் நுனியாற் கிள்ளு. முள் - நுள் - நுண் = கூர்மை, நொய்ம்மை, சிறுமை. L. min, small. நுள் + பு - நுட்பு. நுட்பு + அம் - நுட்பம். நுள் - நுசு - நுசுப்பு = சிறுத்த இடை. நுள் - நுகு - நுகும்பு = மடல் விரியாத குருத்து. நுகு - நுகை = தளர், இளகு. நுகு - நெகு - நெகிழ். நுள் - நுளை - நுழை = நுண்மை. நுழை - நுழாய். நுழாய்ப் பாக்கு = இளம்பாக்கு. நுள் - நுள்ளல் = சிறிய கொசுகு. நுள் - நுளம் - நுளம்பு = கொசுகு. நுள்ளான் = நுள்ளினாற்போற் கடிக்கும் சிற்றெறும்பு. நுள் - நுறு - நுறுங்கு = (வி.) நொய்யாகு; (பெ.) நொய். நுறுங்கு - நொறுங்கு - நொறுக்கு. நுறுங்கு - நறுங்கு - நறுக்கு. நுறு - நொறு - நொறுவை - நொறுகை. நொறுவை - நொறுவல் = சிற்றுண்டி, பலகாரந் தின்னல். நுள்- நுரு - நொரு. நொருக்காய் = பருவத்தின்பின் காய்க்கும் சிறுகாய். நுறு - நூறு = (É.) பொடிசெய், அழி; (பெ.) பொடி, பொடிபோல் மிகுந்த தொகை (100). நூறு - நீறு - நீற்று. EŸ - ü = á¿a vŸ (Nlh.), üî = vŸ (ã§.), நூ-நூல் - நோலை = எள்ளுருண்டை. நூ + நெய் - நூநெய் = எண்ணெய் (எள் + நெய்.) நூநெய் - நுநெ (தெ.) நுள் > நுணவை = மாவு, எள்ளுருண்டை. நுள் - நொள் - நொய். நொள் - நொள்கு - ஞொள்கு = சுருங்கு, இளை. நொளுவல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுக்கல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுநொளு - லொளுலொளு = கூழ்போற் குழைந்திருந்தற் குறிப்பு. நொள் -நோள் - நோளை = நொய்யநிலை, நோயுண்ட நிலை. நொள் - நொடி = (வி.) பொடியாகு, நிலைதளர்; (பெ.) பொடி, புழுதி. நொள்ளாப்பு = தளர்ச்சி, வருத்தம். நொய் = நொறுங்கிய கூலம். நொய் - நொய்ம்மை = நுண்மை, சிறுமை, மென்மை. நொய்ய = சிறிய, அற்ப. நொய் - நொசு - நொசி. நொசு - நொச. நொசநொசத்தல் = உணவு நொளநொளத்தல், நொந்துபோதல். நொசி - நொசிவு = நுண்மை, நொய்ம்மை. ஒ.நோ: ஊசு = கூர்மை, நுண்மை, நொய்ம்மை. ஊசுதல் = உணவு நொந்து போதல். ஊசு - ஊசி. நொய் - நோய் - நோ- நோவு - நொவ்வு. நோய் = நொய்யநிலை, தளர்ச்சி, பிணி. நோ = நொய்யதாகு, மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. `நோவு நொடி என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு = மெலிவு. நோ = நொய்யாகு,மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. நேரடி நொடி என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு - மெலிவு, வருத்தம், விரைவு (வேகத்தின் நுண்மை). நோ - நோப்பு - நோப்பாளம் = வருத்தம். நொய் - நை = நொறுங்கு, அழி. நைய நறுங்கத் தட்டு என்னும் வழக்கை நோக்குக. நை - நயி - நசி - நாசம் (வ.). L.neco, to kill, E . internecine. நை - நஞ்சு = அழிக்கும் விடம். நை - நசு - நசுங்கு - நசுக்கு - நசுக்குணி, நை - நய - நயம் = E©ik,Éiy குறைவு, நேர்த்தி, சிறப்பு, நீதி. சிறியது அழகாயிருத்தலையும் சின்னது சிங்காரம் என்னும் வழக்கையும் நோக்குக. Cf. E. fine = thin, nice. நயம் - Cf. nice. நயம்- நயன். நயம் - நய = விரும்பு. அழகிய பொருள் விரும்பப்படத்தக்கது. நய - நாயம் - விருப்பம், தலைமை. நாயம் - நாயன் = விரும்பப்படுகிறவன், தலைவன். ஒ.நோ: வேள் = விரும்பபப்படுகிறவன், தலைவன். நம்பன் = விரும்பப்படுகிறவன், தலைவன். நம்பு மேவு நசையா கும்மே (bjhš. 813). நய - நசு - நச்சு. நசு - நசை. நய - நாயகம் - நாயகன் = விரும்பப்படும் கணவன், தலைவன். நாயம் -நாயிறு - ஞாயிறு = கோள்கட்குள் தலையாய கதிரவன். நாயகன் - நாய்கன் - நாய்க்கன் - நாயக்கன். நாயன் - நாயனார் - நயினார். நாயம் - ந்யாய (t.). = நீதி, முறை. நயம் = நீதி. நுள் - நூள் - நுவள் - நுவண். நுவண் + அம் - நுவணம் = நுட்பம், மாவு, கல்விநூல். நுவணை = நுட்பம், மாவு, கல்விநூல். நூல் - நூல் - நுவல். நூல் = நுண்ணிய பஞ்சிழை, இழைபோல் நீண்டு செல்லும் செய்யுள் அல்லது கல்விநூல். ஒ.நோ: இழை - இழைபு = ஒருவகை நூல். E. yarn, a thread, a sailor’s story (spun out to some length). text = the original words of an author; Lit. “Something woven ” L. textus - texo, to weave. இனி, நுவல் - நூல் என்றுமாம். பல் - பன் = சொல்லு, நூலிழு. சொல்லுக்குப் பல் தேவை. ‘gšnghdhY« brhš nghFkh?' என்பது பழமொழி. பல்லில்லாவிடின் சொல் தெளிவாயிராது. பன் - பன்னல் = கல்வி நூல், பஞ்சுநூல், பஞ்சு, பருத்தி. பன்னல்- L. punnus, cotton. பன்னா - It. pannno, cloth. பன்- பன்னு - பனுவல் = கல்விநூல், பருத்திநூல். கல்லி நூலுக்கும் பருத்திநூலுக்கும் நுண்மையிலும் நெடுமையிலும் ஒப்புமையுள்ளது. ஒரு நீண்ட செய்யுள் அல்லது நூல் ஒரு நீண்ட இழைபோன் றிருக்கின்றது. ஒருவன் வாயினின்று தொடர்ந்து வரும் சொல் ஒரு மொத்தைப் பஞ்சினின்று தொடர்ந்து நூற்கும் நூல்போல், அல்லது, ஒரு சிலந்தியின் அல்லது பட்டுப்பூச்சியின் உடம்பினின்று வரும் நூல்போ லிருக்கின்றது. நூற்றல் = நூலிழைத்தல். நுவல் = நூலுரை, உரை. பா = நெசவின் நெடுக்கிழை (warp), செய்யுள், அல்லது செய்யுள் நூல். பா- பாவு. பாவுதல் = பரவுதல், பரப்புதல், நீட்டல். பல் (தந்தம்), பன் (பருத்தி) என்னும் பொருள்கள் நிறத்தாலும் ஒத்திருக்கின்றன. வாள் - வால் - பால் - பல் = ஒளியுள்ளது, வெள்ளையானது. பல் - பன் (பருத்தி) = வெள்ளையானது என்றுமாம். வாள்ஒளி யாகும். நுள் - நுண் - நுணி. நுண் - நுணகு - நுணங்கு - நுணக்கம். நுண்- நுணா - நுணாவு - நுணாசு = நா நுனியால் தடவு. நுணா - நுணை. முள் - முற்படு, விரை. முள் - முடு - முடுகு - முடுக்கு - மிடுக்கு. முள் - முளை = முற்படும் அல்லது முட்டும் வேர் அல்லது கொழுந்து. Cf. E. shoot, to dart; to thrust forward; to send forth new parts, as a plant. முளை = தோன்று. முள் - மூள் - மூளம் - மூலம் = வேர், கிழங்கு. மூள் - மூடு = வேர், கிழம். மூடு - பூடு - பூண்டு = கிழங்கு போன்றது. பூடு - பூட்டன் = கிழவன், பாட்டனைப் பெற்றவன். முள் = முற்செல், பொருந்து. முள் - முழம் = பொருத்து, பொருத்துள்ள முன்கை அல்லது அடிக்கால், அத்துணை நீட்டலளவு. முழம் - மொழி = கைகாற் பொருத்து, பொருத்துப் போன்ற கணுவுள்ள கரும்புப் பகுதி. முள் - முட்டு = பொருந்து, முன்புறத்தால் தாக்கு, நெருக்கு. A.S. metan, E. meet; A.S. mot, a meeting; E. butt. O. Fr. boter, to push. முட்டு = கைகாற் பொருத்து. முட்டு - முட்டி = கைகாற் பொருத்து, விரற் பொருத்து, விரற் பொருத்தாற் குத்திச் செய்யும் சண்டை. முட்டி - முஷ்டி (வ.). முட்டு = தலையால் தாக்கு, வழியில்லாத ஓர் இடத்தைப் பொருந்து, வழியில்லாமல் திண்டாடு, முட்டினாற்போல் ஒன்றைக் தவறாய்ச் செய்துவிட்டு வருந்து. முட்டு + ஆள் - முட்டாள். முட்டுப்படு - முட்டுப்பாடு. முட்டு - முடை - முடைஞ்சல் = பொருளில்லாத் திண்டாட்டம். முடை = பொருத்து, பின்னு. முட்டு = முட்டுக் கொடுக்கும் சருக்கு, பொருந்திய பொருள். எ-டு: தட்டுமுட்டு, பணிமுட்டு, நட்டுமுட்டு. முட்டு - முட்டை. முட்டு - மொட்டு. Dut. bot, E. bud. முட்டு - முத்து = முகத்தாற் பொருந்து. முட்டு - முத்து = முட்டை அல்லது மொட்டுப்போன்ற விதை அல்லது கல். முட்டு - முட்டம் - மட்டம் = அளவு, தாழ்ந்த அளவு. முட்டு - மட்டு = முட்டும் அளவு, அளவு. முள் - முண்டு = முற்படு, முட்டு, தாக்கு, துளை. முண்டு - மிண்டு. முண்டன் - மிண்டன். முண்டு - முண்டை = முட்டை. முண்டை விளை பழம்(பதிற். 60:6). முண்டு - மண்டு. மண்டுதல் = நெருங்குதல், முட்டுதல், மிகுதல், மூள்தல், மிகுதியாகக் குடித்தல். புகைவந்து மண்டுகிறது என்னும் வழக்கை நோக்குக. ஒ.நோ: செறி = நெருங்கு, மிகு. மண்டி = சரக்கு மிகுதியாயுள்ள இடம். மண்ட = தீ நாவு (தெ.). மண்டெரி தான்வாய் மடுப்பினும். மண்டு + அகம் - மண்டகம் - மண்டபம் = மக்கள் மிகுந்திருக்கும் இடம். ஒ.நோ: வாணிகம் - வாணிபம். முள் - மூள்= பொருந்து, நெருங்கு, மிகு. மூள் + து - மூட்டு = (É.) பொருத்து, மிகு; (பெ.) பொருத்து. மூள் + தை - மூட்டை = பொருத்திய சாக்கு அல்லது பொட்டணம். மூட்டை - மூடை. மூள் - மூழ் - மூடு - மூடி. மூள்- மூய் = மூடு. மூள் = வாய் பொருத்து, மூடு. மூடு - மூடம் - மோடம் = வானம் மூடி யிருக்கும் மந்தாரம், மந்தம். மூடம் - மூடன் = மந்தன், அறிவிலி. மூழ் - மூகு - மூகன் = வாய் மூடினவன், ஊமை. மூகு - மூங்கு - மூங்கை - மூங்கா (இந்.) = ஊமை. L. mutus, Fr. muet, E.mute, dumb. முள் - முண்டு = மொட்டையானது, நுனி தறித்தது, தறித்தது, துண்டு. ஒரு பொருள் இன்னொன்றில் முட்டும்போது நுனியொடிந்து மொட்டையாதல் காண்க. முண்டு - முண்டம் = முன்னும் பின்னும் தறித்த கட்டை, கை கால் தலையற்ற உடம்பு. முண்டு - முண்டி + தம் - முண்டிதம் = தலையை மொட்டையடித்தல். முண்டி + அனம் - முண்டனம். முண்டு - முண்டன் = துண்டானவன், மனைவியிழந்தவன். முண்டை = கைம்பெண். ஒ.நோ: முறியன் = மனைவியிழந்தவன். முள் - மொள் - மொட்டை - மொத்தை - மொத்தம் - மொத்தன் - மொந்தன் - பொந்தன். மொள் - மொட்டு - மொத்து = மொட்டையான அல்லது பருத்த தடி, அதனால் அடி. மொத்து - மத்து. மொத்தை - பொத்தை. மொத்தை- மொக்கை. மொத்து - பொத்து - பூது - பூதம் = பெரியது, பெரும்பேய். இரும்பூது - இறும்பூது = மிகப் பெரியது, வியக்கத்தக்கது. முள் - முழு - மழு - மழுகு- மழுங்கு. முழு = மொட்டை, மொத்தம். முழு - முழுது = மொத்தம், எல்லாம். முட்டு - முட்டை - மட்டை, `மழுமட்டை' என்னும் வழக்கை நோக்குக. மொள் - மொண்டி - நொண்டி = கைகால் மொட்டையானது அல்லது குறைந்தது. நொண்டி - நொண்டு = ஒரு கால் இல்லாதவன் அல்லது இல்லாதவன் போல நட. முள் - முடம் - நுடம் = வளைவு. ஒரு பொருள், விதப்பாய்ப் பயிர் பச்சைகள், இன்னொன்றில் முட்டின பின் வளைதல் காண்க. முடம் - முடங்கு - நுடங்கு. முடம் - முடல் - முடலை. முடம் - முடி- முரி - முறி. முரிதல் = வளைதல். முரி - புரி = வளை. புரிசை = வளைந்த மதில். L. murus, a wall, E. muriform. புரி = வளைந்த மதில், கோட்டை, கோட்டைநகர், நகர், முறுக்கிய இழை அல்லது கயிறு. புரி - புரசை. புரி - புரம். E. bury, borough, burg. புர = நகரத்தைக்கா, கா. A.S. beorgan, Ger. bergen, to protect. from burg. புரவலன் = அரசன். புரந்தர - புரந்தரன் = வேந்தன் (இந்திரன்). E. spire, anything winding, L. spira, Gk. speira, anything wound round. புரி - புரு - புருவம் = வளைந்தது. Cf. E. brow, L. frons, A.S. bru. முரி - முறி - நெறி. முறி - முறு - முற்று = வளை, முதிர். முற்றும் = வளைய, முழுதும். முறு - முறுகு - முறுக்கு. முறு = முறம் = வளைந்தது. முறு - முறை = வளைவு, தடவை. Cf.E.turn. நெறி = வளை, சுருள், வளைந்த வழி. நெறி - நெற்றி = வளைந்தது. Cf.L. frons = the forehead, brow. முடங்கு - மடங்கு. முடி = வளை. முடிவடை, சா. மக்களும் பயிர்பச்சைகளும் வளைவது அவர்களின் முடிவைக் காட்டும். கதிரவன் வளைவும் அதன் ஒரு நாளை முடிவு காட்டுவதாம். ஒ.நோ: சாய் - சா. இற = வளை, சா. முடி - மடி = வளை, சா. மடி - மரி (வ.) ட-ர போலி. A.S., Ger. - L. mor, Goth. maur, Skt.mri, to die. முரி = முறி = வளை, ஒடி. வளைந்த பொருள் பின்னர் ஒடிதல் காண்க. முறி - மறி = வளை, மடக்கு. முள் - முண்டு - முண்டி = வளைவு. முண்டி - மண்டி = வளைவு. மண்டியிடல் = காலை மடக்கியிருத்தல். முண்டு - மண்டு - மண்டல் = வளைவு. மண்டல் - மண்டலி - மண்டலம் - மண்டிலம் = வட்டம், வட்டமான பொருள். முள் - முழை = துளை. முழை - முழைஞ்சு = குகை. முழை - மூழை = அகப்பை. மூழை - மூழி = வெறுந்துளைக் காது. முழை - நுழை = முழைக்குட் புகு, நுண்ணிய இடையிற் புகு. முள் - முடு - மடு = துளைபோன்ற வாயில் வை, உண். மடு - மடை = குளத்தின் வாய், மடுக்கும் சோறு. மடைப்பள்ளி = சோறு சமைக்கும் அறை. மடு - மடம் = அறச்சோறுண்ணும் இடம். மடை (வாய்) - A.S. muth, E. mouth, Ger. mund, Dut. mond. மடை (czî) - E meat, anything eaten, food, A.S. mete, Goth. mats, Dut. met, Dan. mad. முள் - நுள் - நுகு - நுகர் = துளைபோன்ற வாய்க்குள்ளிடு, உண், இன்பம் துய். நுள் - நள் - நடு - நடுவு - நடுவண் - நாப்பண். முள்- மூழ் - மூழ்கு - முழுகு - முங்கு = முழைக்குட் புகு, உட்புகு, நீர்க்குட் புகு, முழுகு: L. mergo, mersum, E. merge, merse, Skt. majj. முழுக்கு - முழுங்கு - விழுங்கு. நுள் - நுள்கு - நுங்கு = விழுங்கு, குடி. நுள் - நூழ் - நூழில் = துளையுள்ள செக்கு. ஒ.நோ: உரல் = துளையுள்ளது. நூழ் - நூழை = துளை, குகை, பலகணி, சுருங்கை. நூழ் - நூள் - நாள் - நாளம் = துளையுள்ள மூங்கில். நாளம் - நாளி - நாழி - நாழிகை. நாளம் - நாடி - நாடா. நாளம் - நாணல். நாள் - நள் - நல் - நல்லி = மூளையெலும்பு. மூழை - மூளை. Cf.A.S. mearch, Ice. mergr, Ger. mark, W. mer, E. marrow. முள் - மொள் = முழையிற் கொள், முக. மொள் + தை - மொண்டை - மொந்தை. மொண்டை - மண்டை = இரப்போர் உண்கலம், அதைப்போன்ற தலையோடு, தலையின் மேற்பகுதி. மொள் - நொள் = விழுங்கு, முக. நொள் = துளைபோன்ற வாய். ஒ.நோ: நோரு (தெ.) = வாய். நொள் - நொடு = சொல்லு, விலைசொல்லி வில். நொடு - நொடி = கதை. நொடு - நொடை = விற்பனை. ஒ.நோ: பகர் = சொல், வில். நொழுந்து = நுழை. தலையை நொழுந்தி (ஈடு. 1 : 3, பிர.). (behG) - (நொழுகு) - நோக்கு = நுழைந்து பார், நுட்பமாய்ப் பார்,அகக்கண்ணால் பார். நோக்கு - தேக் (இ.) = பார். (நொழு) - (நோழ்) - நோடு = பார், கவனி. Cf. Fr., L. notum, to know, E. note. நோடு - நோட்டம். நோடு - நாடு. நாட்டம் = கண், ஆராய்ச்சி, கருத்து, விருப்பம். நாடு - Cf. A.S. nead, E. need, Dut. nood, Ger. noth, Goth. nauths. ஊ = முன்செல், பொருந்து, துளை. ஊ - உவ - உவமை > உபமா (வ.). ஒ.நோ: ஊமன் - உவமன் (ஊமன்). “ciu¤j¡fhš உவமனே யொக்கும் (தேவா . 351 : 1). உவ + மை - உவமை - உவமம் - உவமன். ஒ.நோ: பருமை - பருமம் - பருமன். உவத்தல் = ஒத்தல். இனி, உவ(விரும்பு) - உவமை என்றுமாம். நாட (விரும்ப), விழைய (ÉU«g) என்பவை உவமவுருபுகள். Cf. E. like = விரும்பு, போல. ஊ - உ = பொருந்து. உத்தல் = பொருந்தல். உத்தி = பொருத்தம், பொருந்தும் நூன்முறை, மதிமை. விளையாட்டில் கட்சி பிரிப்பதற்கு இவ்விருவராய்ப் பொருந்துவதை உத்திகட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. c¤â > í¡â (t.), உத்தம் (பொருத்தம்) > யுக்த (வ.). உ - ஒ = பொருந்து. ஒத்தல் = பொருந்தல், இசைதல், போலுதல். ஒக்க + இடு - ஒக்கிடு. ஒக்கல் = பொருத்திய இனம். ஒக்கலி. ஒக்கலிடு = இனைத்தாருடன் உறவாடு, ஆரவாரி. ஒச்சை = உற்றுக்கேட்டல். ஒப்பு = இசை, ஏற்றுக்கொள். ஒப்புவி - ஒப்பி. ஒப்பு - ஒப்பம் = இசைவு கையெழுத்து . ஒப்பு - ஒப்பாரி = உவமை, உவமை கூறி அழுதல். ஒப்பு = உண்மை போலுகை, கடமைக்குச் செய்தல். ஒப்பி - ஒப்பனை = பொருந்தச் செய்யும் அழகு, அலங்கரிப்பு. ஒத்து - ஒத்தி = ஒத்துஊதுங் குழல். ஒத்து - ஒத்தடம் = சூடானதைப் பொருத்தி யெடுத்தல். ஒத்தி = பொருத்தம் பார்க்கும் பயிற்சி, நிலத்தை ஒருவனிடம் பொருத்திவைக்கும் அடைமானம். ஒப்பு + ஊர் - ஒப்பூர். ஒப்புரவு = உயர்ந்தோரோ டொப்பவொழுகல். ஒம்பு = மனத்திற்குப் பொருந்து. ஒவ்வு = பொருந்து. ஒற்று = ஒத்து, பொருந்தியறியும் உளவு. ஒள் - ஒண் = பொருந்து, இயல். ஒண்ணும் = பொருந்தும். சொல்லவொண்ணாத - சொல்லொணாத - சொல்லொணா = சொல்ல முடியாத. ஒண் - ஒண்டு = பொருந்து, ஒட்டு. ஒள் - ஒட்டு - ஒட்டம். ஒட்டு - ஒட்டாரம் = பிடிவாதம். ஒல் = பொருந்து. ஒல் - ஒர் - ஒரு - ஓர். ஒருவு = ஒரு பக்கம் செல், நீங்கு. ஒருங்கு = ஒன்றாய். ஒதுங்கு = ஒரு பக்கம் செல். ஒத்து = ஒரு பக்கம் தள். ஒல் + து - ஒன்று. L. unus, E. one. ஒன்று - ஒன்றி - ஒண்டி (கொ.) ஓர் - ஓரம் = பொருந்திய இடம், நெருங்கிய அண்மை. ஓர் = பொருந்தி ஆராய், உணர், தெளி. ஒல்-ஒன் = பொருந்து. ஒன்னார் = பொருந்தார், பகைவர். உள் = பொருந்து. உள் - அள் = பொருந்து, நெருங்கு. அளி = செறிந்த வண்டு, குழம்பிய சேறு. அள் - அள்ளு = விரலை அல்லது கையைக் கூட்டியெடு, கூட்டிய கைபோல் உட்குவிந்த கலத்தால் எடு. அள் - அள = அள்ளி அல்லது பொருத்தி மதி. அள் - அளி = அள்ளிக்கொடு, கொடு. அளி = கொடை, அருள். அள் - (அய்) - அயல் = அண்டை, பக்கம், புறம். அள் - (அரு) - அருகு. அள் - அண் - அண்ணு = பொருந்து, நெருங்கு. அண் - அணுகு -அணுக்கம். அண் - அணி = நெருங்கு, உடம்பில் ஒட்ட இடு, உடு. அண் - அண - அணவு = பொருந்து. அண் - அணை = பொருந்து, தழுவு, தழுவித் தடு. அணை = நீர்த்தடை. அணை - அணைசு = பொருந்தும் பூண் அல்லது கிண்ணம். அண் - அண்டு = நெருங்கு. அண்டு - அண்டை. அள் -அட்டு = பொருந்து, ஒட்டு. அட்டு - அட்டை = ஒட்டிக்கொண் டிருக்கும் புழு. அண் - அடு. L. ad, Goth. at, E. ad, at Celt. ar. அடு - அடுக்கு. அடு - அடை - அடைவு - அடவு - அடகு. அடு - அடர்- அடவி > Skt. atavi. அள் - நள் = பொருந்து, நெருங்கு. நள் + பு - நட்பு. நள் - நண் + பு - நண்பு. நண் - நண்ணு - நணுகு. நள் - நளி = நெருக்கம், செறிவு. “eËv‹ கிளவி செறிவும் ஆகும் (தொல். 867). நள் - நாள் = செறிந்த உடு, நாண்மீன், உடுவிற்குரிய நாட்காலம். நள் - நளி - நனி = செறிவு, மிகுதி. உள் - ஒள் = துளை. ஒள் - (ஒளுகு) - ஒழுகு = துளையிலிருந்து விழு, நீள், நட. ஒரு பொருள் ஒழுகும்போது நீட்சி யுண்டாகும்; நடத்தல் ஒருவகையில் நீட்சியாகும். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். 801) ஒழுக்கம் = நடக்கை, வரிசை. ஒழுக்கு - ஒழுங்கு = நீட்சி, வரிசை, முறை. ஒழுகு - E. leak (Kj‰Fiw.) ஒள் - ஓட்டை = துளை. Walk என்னும் ஆங்கிலச் சொல் ஒழுகு (நட) என்னும் தமிழ்ச் சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றது. ஆயினும், ஆங்கில அகராதியில் (A.S.) wealcan (to roll, turn) என்னும் பகுதி காட்டப்பட்டிருப்பது பொருத்தமே. ஒழுங்கு - L. longus, Ger. lang, A.S. lang, E. long; found in all the Teut. Languages. ஒள் - ஒண் - ஒடு - ஓடு. ஒடு, ஓடு = பொருந்த, கூட (3ஆம் வே.உ.) உ - உள் = பொருந்து. உள் - உடம் - உடங்கு - உடக்கு. உடம் - உடன் - உடல். உடம் - உடம்பு. உடம் - உடந்தை. உடம்படு - உடம்பாடு. உடன் = பொருந்த, கூட (3ஆம் வே .உ.). உடல், உடம்பு = உடனிருக்கும் கூடு. உடம் - உடமை = உடனிருக்கும் பொருள். உடமை - உடைய (பெ.எ.) = உடனுள்ள, உடமையாகக் கொண்ட. உடைய - உடை Fr.de. உள் - உரி - உரிமை. உரி - உரித்து = உரிமை. Cf. O. Fr. heir, L. heres, E.heir, one who inherits, E. herit, to take as heir, Fr. heriter. உள் - உடு = உடலொடு பொருந்த அணி. உடு - உடை. உள் - ஒள் = பொருந்து , உட்படு, ஒடுங்கு. ஒச்சட்டை - ஒஞ்சட்டை = ஒல்லி. ஒச்சி - ஒஞ்சி - ஒசி = ஒடுங்கு, நாணு. ஒடுங்கு = அடங்கு. ஒல் - ஒல்லி. ஒல் - ஒல்கு - ஒற்கம். ஒ-ஓ = பொருந்து. ஓ + இயம் - ஓவியம் = ஒப்பு, ஒன்றற்கொப்பாக எழுதும் சித்திரம். சுள் என்னும் அடி சுள் = (முற்சென்று) ஊசிபோற் குத்து, குத்துவதுபோற் சுடு, சுடுவதுபோல் உறை, சுடுவதுபோற் கோபி. சுள்சுள்ளென்று குத்துகிறது, சுள்ளென்று வெயிலடிக்கிறது, சுள்ளென்று உறைக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக. நெருப்புச் சுட்டத்தைப் பொத்துப்போயிற்று என்பது வழக்கு. பொத்தல் = துளைத்தல். நெருப்பினாற் கருகும் பொருள் சுருங்குவதாலும் நெருப்புப் பிழம்பான கதிரவன் வட்டமாயிருப்பதாலும், சிறுமைப்பொருளும் வட்டப்பொருளும் சுள் என்னும் அடிக்குண்டு. உறைப்புப்போலப் புளிப்பும் ஒரு கடுத்த சுவையாதலால், புளிப்பையும் சுள்ளென்னும் அடி குறிக்கும். Cf. E. pungent = pricking, being of hot taste. சுள்ளான் = சுள்ளெறும்பு = ஊசியாற் குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு. சுள்ளு(ப்பூச்சி) - தெள்ளு(ப்பூச்சி). சுள் - சுணை = சிறு முள், முட்குத்துவது போன்ற மானவுணர்ச்சி, கூர்மை, தினவு, அறிவு. சுணைத்தல் = தினவெடுத்தல். சுள் - சுள்ளை - சூளை. சுளுந்து = கொள்ளி. சுள்ளாப்பு = கடுவெயில், தீவிரம், உறைப்பு. சுள் = நெருப்பு, கதிரவன். L. sol, A.S. sunne, Ice.sunna, Goth. sunne, E. sun. சுள் - சுர் - சுரம் - சுரன்- சூரன்- சூர்ய (t.). சுரம் = நெருப்பு, காய்ச்சல், காயும் பாலைநிலம், நெருப்பால் அல்லது கடைகோலால் இடும் துளை, துளையிற் பிறக்கும் ஒலி. சுர்- சுரை = துளை, துளையுள்ள குழாய், சுரைக்குடுக்கை, சுரைக்காய், துளையுள்ள பால்மடி, மடியிற் சுருக்கும் பால். சுரை - சுர = துளைவழி பால் ஒழுகு. சுர - சுரபி = பசு. சுரன் = கதிரவன். தேவன், ஒ.நோ: தேய் - தே - தீ. தே - தேவு - தேவன். தேய் - தெய் - தெய்வு - தெய்வம். சூரன் = கதிரவன். சூரன்மா மதலை (பாரதம்). சுள் - சுண்டு. சுண்டுசொல் = சுடுசொல். சுண்டான் = கொள்ளி. சுள் - சுர் - சூர் = நெருப்பு, அச்சம். ஒ.நோ: உரு = நெருப்பு, அச்சம். சூர் - சூரன். சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு, மிளகாய். சுள்ளம் = கோபம். சுளங்கு - சுணங்கு = கோபி, ஊடு, வேலை செய்யப் பின்வாங்கு. சுணங்கு - சுணக்கம். E. slack, A.S. sleak, Sw. slak, Ice. slakr. சுளங்கு - சுளக்கம் - சுள்ளக்கம் = கோபம், வேர்க்குரு. சுணங்கு - உணங்கு = காய். சுணங்கு = கோபம், ஊடலால் வரும் தேமல். சுள்ளல் = மென்மை. சுள்ளலன் = மெலிந்தவன். சுள்ளி = காய்ந்த குச்சு. சுள்ளு = சிறுமை, கருவாடு. சுள்ளாணி = சிறிய ஆணி. சுளு - சுளுவு = சிறுமை, எளிமை. சுளு - சுலு - சுலவு - சுலவம் - சுலபம் - சுலப (வ.). சுணங்கு = மெலிவு. சுண்டு = காய்ந்து சுருங்கு. சுண்டு = சிறியது. சுண்டை = சிறிய காய். சுண்டிகை = சிறு நாக்கு, உண்ணாக்கு. சுண்டிகா (வ.). சுள்ளற்கோல் = வளைதடி. சுளையம் = வளையம். சுளைய மாடு = வளையவளைய (திரும்பத்திரும்ப)ச் சொல். சுளகு = வளைந்தது. சுள் - சுண்டு = வளைத்திழு, வலி. சுளை = வளைந்து அல்லது சுற்றியிருக்கும் பழச்சதை. நெருப்பும் உறைப்பும் மிகுந்த வேகமுள்ளவை யாதலால், இக் கருத்துச் சொற்கள் மதிநுட்பத்தையும் குறிக்கும். சுளுகு = நுட்பவறிவு, திறப்பேச்சு. ஒ. நோ: வேகு - வேகம் = விரைவு, மதிநுட்பம். காரசாரம் = மதிநுட்பம். சுள் - சும்பு = எரி, வாடிச் சுருங்கு. சும்பு - சோம்பு = வாடு, மந்தமாயிரு, தூங்கு. பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை, தெசிகின்ற தீக்குணமோ ரைந்து (சிலப். உரை, ப. 103). சோம்பு - L. somnus, sleep. சோ (இ.) = தூங்கு. கம்பு - கும்பு. கும்புதல் = சோறு கருகுதல். கும்புசட்டி = எரிசட்டி. கும்பு - கும்பி = எரிகின்ற வயிறு, நெருப்பு, நரகம். கும்பீ (வ.). சுள் - சுல் - சுல - சுலவு - சுலாவு = வளை. சுல் - சுற்று = வளை. சுலவு - குலவு E. curve, a bend, L. curvus, crooked. சுலாவு - குலாவு. சுலவு- உலவு- உலா- உலாவு. உலா = வளைந்து செல்லல், நகர்வலம். சுல - உல - உலகு - உலகம் (லோக. வ.) = வளைந்தது (t£lkhdJ) அல்லது உருண்டையானது. உல - உலவை = வளைந்தடிக்கும் காற்று. குலவு = வளை, பொருந்து, கூடு. உல - உலம் = வளைவு, சுற்று. உலம்வருவோர் = சுழல்வோர். சுல் = காய். சுல் - சுல - உல - உலர் - புலர். உலர் - உலறு. சுள் - குள் - குள - குட - குண = வளை. குண - குணம் - குணக்கு = வளைவு. குணம் - குணல் - குணலை. குணக்கு - குணுக்கு = வளைந்த காதணி. குள் - குண்டு - குண்டகம் - குண்டக்கம் = வளைவு. சுல் - குல் - குலம் = வளைந்த கூண்டு, குடிசை, வீடு, கோயில், குடும்பம், சாதி. குல் = பொருந்து, கூடு. குல் - குல் - குலம் = கூட்டம், கூடும் இடம். Cf. E. house = a residence, a family. குலம் - E. clan, Gael; clann, Ir. clann or cland, tribe. குல - குலவை - குரவை = வட்டமாக நின்று ஆடுங் கூத்து. E. chorus,L. chorus, Gk. choros, orig. a dance in a ring. Cf. E. coracle, a small oval row boat, W. corwgt- corwg, anything round. Gael. curach, a wicker - boat. குல் - குன் - குனி = வளை. குன் - குன்னு - குனுகு. குன்- கூன்- கூனி. கூன் - கூனல். கூன் - கூனை. குள - குளம்பு = வட்டமான பாதம். குட - குடை = வளைந்தது. குட - குடம். குடவன் - குசவன்- குயவன். குடம் - கடம் (வ.). குடம் - குடக்கு = கதிரவன் வளையும் திசை. குடம் - குடந்தம் = வளைவு. குடங்கை = வளைந்த கை. குடம் - குடம்பை - குரம்பை = வளைந்த கூண்டு, குடில். குடம் - குடல் - குடலி. குட - குடி - குடில் - குடிலம் = வளைவு. குடி = வளைந்த கூண்டு, குடில், வீடு, குடும்பம், குலம். குடி (Fo«ò) - குடும்பு - குடும்பம். குடும்பு - கடும்பு = சுற்றம். குடி - குடிசை. E. cot, cottage, A.S. cote, a small dwelling. குடி - குடிகை = கோயில் (தேவகுலம்). குள் - கூள் - கூண்டு - கூடு = வளைந்தது. கூடு = வளை, வளைந்து இருமுனையும் பொருந்து, மிகு. கூடு - கூடை = வளைந்தது. கூடு - கூடம் = பெரிய அறை. குள் - கொள் = வளை, கிளையை வளைத்துப் பறிப்பதுபோல் வாங்கு, வாங்கிப் பிடி. கொள் - கொள்கை = மனத்திற் கொள்ளும் கருத்து. கொள் - கோள் = கொள்கை. கொள் - கொள்பு - கொட்பு = வளைதல், சுற்றுதல். கொள்பு - E. globe, Fr., L. globus, a round body, E. glome, L. glomus. கொள்- கோள் = சூரியனைச் சுற்றும் கிரகம். கோள் - கோளம் - கோளா = உருண்டை. கோள் - கோளி - கோலி. கொள் (bfh©ò) - கொம்பு - கம்பு = வளைந்தது. கொள் - கொண்டி = வளைந்த கொக்கி. கொள் - வலிந்து வாங்கு. கொள் - கொள்ளை. கொள் - கொண்டி = கொள்ளை. கொள் - கொல். கொள் - கோள் = பிடித்தல், பிடித்துக்கொல்லுதல். பேய் கோட்பட்டான், புலிகோட்பட்டான் என்னும் வழக்குகளை நோக்குக. கொல் - E. kill, quell, A.S. cwellan, to kill. கொல் - கொல்லன் . மரங்கொல் தச்சன் என்னும் வழக்கை நோக்குக. கொள் - கொடு = காய்ந்த மரமும் விளைந்த பயிரும்போல வளைந்து கொடு. கொடுமை = நெறியினின்று வளைதல், தீமை. கொடுங்கோல், கொடுக்காய்புளி என்பவை வளைதல் குறித்தல் காண்க. கொடு - கொடி = வளைந்தது ஒ. நோ : வள் (வளை) - வள்ளி - வல்லி = கொடி. கொடு - கொடுக்கு - கொடுக்கி - கொக்கி. கொடுக்கு - E.crook, a bend, W. crwg, a hook, Ice. krokr, Dut. croke, a fold or wrinkle. கொக்கி - E.hook, A.S. hoc, Dut. haak, Ger. haken. கொடு - கொடிறு - குறடு. கொடு - கொட்டம். கொட்டம் + ஆரம் - கொட்டாரம். கொடு + இல் - கொட்டில் (வளைந்த இடம்). E. cote, an inclosure for sheep. கொள் - கோள் - கோண்- கோடு. கோண் - கோணம். Gk. gonia, angle, E.gon (sfx). கோடு - கோடி = கடைசி. கதிரவனும் மக்களும் பயிரும் வளைந்து முடிவடைதல் காண்க. கோடு - கோட்டை. கோட்டம் = வளைவு, வளைந்த மதில், மதில் சூழ்ந்த அரண்மனை அல்லது கோயில். Cf. E. court, O.Fr. cort, Low., L. cortis, a court yard, Gk. chortos, an inclosed place. கொள் - கொள்ளி = நெருப்பைக் கொண்டது. கொள் - கொளு - கொளுவு. கொளு - Cf. E. clue. கொள் - கொளை = நரம்பைப் பண் கொள்ளச் செய்தல். கொளு - கொளுத்து = நெருப்பை அல்லது அறிவைக் கொள்ளச்செய். கொள் (கோள்) + தி - கோட்டி = அறிவுகொளுத்தல், சொற்பொழிவு, சொற்பொழியும் பைத்தியம். கோட்டிகொளல் (FwŸ. 401). கொள்க(கொணம்) - குணம் = கொண்ட தன்மை. கொள்- கொள்நன் - கொள்ளுநன் - கொழுநன் - கொழுந்தன். ஒ.நோ : கொள்கொம்பு - கொழுகொம்பு. குள் = வளை, பொருந்து, கல , திரள். குள் - குள - குளகு - குளகம். குள் - குளு - குழு - குழுவு - குழுமு. குள் - குல் - குல - கல. குல் - கோல் = திரட்சி, திரண்ட கம்பு. குழு - குழல் = திரட்சி. குழு - குழவி = திரண்ட அரைகல். குள் - குண்டு - குண்டை. குண்டு - குண்டன். குல் - குலை - திரட்சி, கொத்து. குல் - குர் - குரல் = கூலக்குலை. E. crop, the produce of a field, A.S. crop,the top shoot of a plant. குள் - குழி = வளைந்த துளை அல்லது பள்ளம். Cf. E. hole, A.S. hol, Dut. hol, Dan. hul, Ger. hohl, Gk. koilos, E. hollow, A.S. holh. குள் - குழல் - குடல் = துளையுள்ளது, குள் - குழை - குழாய் = துளையுள்ளது. குள் - குளம் = பள்ளம், நீர்நிலை. ஒ. நோ: கயம் = பள்ளம், நீர்நிலை. குள் - குண்டு = பள்ளம், நீர்நிலை. குண்டு குழியும் என்னும் வழக்கை நோக்குக. குள் - குட்டை - குட்டம் = குளம், சிறுகுளம். ‘Fs§F£il’ எ.வ. நோ. குல் - குர் - குரல் = துளை, தொண்டைக்குழி, தொண்டை, தொண்டையிற் பிறக்கும் ஓசை. E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. hragen, Scot. craig, Skt. kreeva, the neck, E. crop, A.S. crop, Dut. crop. the craw of a bird. குள் = பொருந்து, கூடு. குள் - குள - கள - களம் = கூட்டம், அவை, கூடுமிடம், வயல். களம் - கணம் (வ.). களம் - களமன் = உழவன். களம் - களரி. களம் - களகம் - கழகம். களத்தல் = கூடுதல், மணத்தல். களம் - களவன் - கணவன் - கடுவன். களவன் - கள்வன் = ஆண்நண்டு. இனி, கள்வன் = கள்ளன்போல் இரவில் வெளியேறும் நண்டு எனினுமாம். குள - குழ - குழம்பு - உழம்பு - உழப்பு - உழக்கு. சுள் - சுளி - சுழி = வளை, உருள், முகந்திருகு. சுழி - சுழல் - சுழங்கு = சுற்று, வருந்து. சுழல் - உழல். சுழல் - சுழலை = சுற்று, திருக்கு, வஞ்சகம். சுழல் - சுழலம் = சுற்று, திருக்கு, வஞ்சகம். சுழல் - சுழற்று - சுழட்டு. சுள் - சுளு - சுளுக்கு = நரம்பு வளைவு. சுள் - சுல் - சுன் - சுன்னம் = சுழி, வட்டம். சுன் - சுனை = வளைந்த நீர்க்குழி, மடு. குள் - கள் - கல் - கர் - கரு. கள் - காள் - காழ் - காள் - காளம். கள் - கண் - காண் - காணி. கல் - கால் - காலம். கரு - கார் - கால். சுள் - சுரி = வளை, சுருள், திருகு, முறுக்கு, துளையிடு. சுரி - சுருள். E. curl, orig. crull,Dut.krullen,Dan. krolle, to curl. சுருள் - சுருளை - சுருணை, E. scroll, a roll of paper or parchment, O.Fr. escrol, Fr.ecrou. சுருள் - சுருளி. சுருள் - சுருட்டு - சுருட்டை. E. cheroot, cigar. சுருள் - சுருளி - சுருள் - உருள். E.roll. உருள் - உருளி. உருள்- உருளை - உருடை - ரோதை (bfh.). L. rota, a wheel. உருட்டு - L. roto, E.rotate. சுள்- சுட்டி - சுட்டிகை - சுடிகை = வட்டம், வட்டமான அணி, பொட்டு. சுரு - சுற்று = வளை. சூறை = சுழல்காற்று. சூறை + வளி - சூறாவளி. சூறையாடு = சுழல்காற்றுப்போற் கொள்ளைகொள். சுள் - சுர் - சுரு - சுருக்கு. சுரு - சுறு - சுறுக்கு. சுர் - சுரீர் - சுறீர். சுருசுருப்பு - சுறுசுறுப்பு = நெருப்பைப்போன்ற வேகம். சுர் - சுரா = வேகமான கள். சுள் - சுரு - சுருங்கு = சூட்டினாற் குறுகு. E. shrink, A.S. scrincan, to contract. சுருங்கு - சுருங்கை - சுரங்கம். சுள் - சுர் - சுரி = முட்போற் குத்து, சுடு. சுரி - சுரிகை = உடைவாள். சுரி - சூரி. சுர் - சுறா - சுறவு - சுறவம் = செதிளாற் குத்தும் மீன். சுரி + அணம் - சுரணம் - சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு = சுட்ட பொடி, பொடி. சுரணம் - சூரணம். சுரி + அணை - சுரணை = முட்போற் குத்தும் மானம், அறிவு. சுள் - சுண்டு = சுடு, காய், வற்று, வேகங்கொள். சுண்டி = காய்ந்த சுக்கு, வேகமுள்ள குறும்பன். சுண்டி - சுண்டம் - சுண்டை = வேகமுள்ள கள். சுள் + கு - சுட்கு - சுக்கு = வறண்டு சுருங்கியது, சிறுதுண்டு. சுக்கு - சுக்கல். சுள் + தி - சுட்டி = குறும்பு, குறும்பன். சுட்கு - சுட்கம் (RZf - வ.) = வறண்டது. சுள் - சுடு - சுடல் - சுடலை. சுடு - சுடர். சுடு - சுடிகை = கள். சுடு - சூடு - சூட்டிக்கை = சுறுசுறுப்பு. 4. ஏகாரச் சுட்டு (1) எழுகைக்கருத்தும் உயரக்கருத்தும் ஏ = எழு, உயர், பெரு. L., E, ex.Gk.ec.ex, exo, Fr., Sp. - es, out (pfx). up, out. “Vfš லடுக்கம், ஏபெற் றாகும், ஏக்கழுத்தம் என்னும் வழக்கை நோக்குக. ஏக்காளம் - எக்காளம். ஏ - ஏழ் - ஏழு. ஏழ் - எழு - எழுவு. எழுவுதல் = ஒலியை எழுப்புதல். எழு - எழும்பு. ஏழ் - யாழ் = ஒலியெழுப்பல், இசை, பண், நரப்பிசைக்கருவி. எழு + ஆல் - எழால் = யாழ்வாசிப்பு, ஒரு பறவை. எழு + இல் - எழில் = எழுச்சி, அழகு. எழில் - எழிலி = மேலெழுந்து செல்லும் மேகம். எழிலி - எழினி = மேலெழுந்து செல்லும் திரை. எழு + சி - எழுச்சி = எழுகை, உள்ளக்கிளர்ச்சி. L.elate,lofty; E. elate, to raise; elation, pride. ஏழ் = எழுவும் இசை, ஏழ் என்னும் எண். இசை (சுரம்) ஏழாதலால் ஏழாம் எண் அப் பெயர்பெற்றது. ஏர் = எழுகை, பயிர்த்தொழில், கலப்பை, அழகு. ஏர்தல் = எழுதல். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு.1). பயிர்பச்சைகளை எழுப்பும் உழவுத்தொழிலும் அதற்குரிய கருவியாகிய கலப்பையும் ஏர் எனப்பட்டன. L. aro, Gk. aroo, Ir. araim, A.S. erian, E. ear, to plough. E. arable = that can be ploughed. பயிர்பச்சை அழகானவை. மக்களிலும் பயிர்பச்சையிலும் வளர்ந்த நிலையில்தான் அழகு தோன்றும். ஒ.நோ: அலம் = கலப்பை, அழகு. அலம் + கரி - அலங்கரி. கரிப்பு = மிகுதி. கடு - கடி - கரி. கரி + அம் - காரம் (முதனிலை திரிந்த தொழிற்பெயர்). ஒ. நோ: பரி + அம் - பாரம், படி + அம் - பாடம். அலம் - அலவு - அலகு - அளகு = அழகு. ஏண் = உயரம். ஏண் - ஏணி = மேலேற்றுங் கருவி. ஏண் - ஏணை = குழந்தையை ஏந்தும் தொட்டில். ஏண் - சேண் = உயரம், வானுலகு, தூரம். சேணோன் = மேலுள்ளோன், வேந்தன் (இந்திரன்). ஏ = பெருமை, உயரம். ஏபெற் றாகும் (தொல். 788). ஏவுதல் = எழுதல். ஏ- ஏவு = உயரம். Ger. heben, A.S. hebban, E. heave, Goth. hafjan, to lift. E. heaven, O. lce. hifinn, A.S. heofon, the air, the abode of the Deity. Lit. the ‘heaved’ or ‘lifted up.’ ஏண் - யாண் - யாணம் - யாணர் = எழுச்சி, புதுவருவாய். யாண் - யாணு = எழுச்சி, அழகு. யாணுக் கவினாம் (தொல். 865). ஏண் - சேண் - சேடு - சேடி = மேலிடம், விஞ்சையுலகு. சேடியர் = விஞ்சையர். சேடா - சேடம் - செட்டம் - செச்சம். ஏம் = உயரம், பாதுகாப்பு, இன்பம். ஒருவன் ஒரு விலங்கிற்குத் தப்பவேண்டுமென்றால் மரத்தின்மேலும், பகைக்குத் தப்ப வேண்டுமென்றால் மதில், மலை, மலைக்கோட்டை முதலியவற்றின் மேலும் ஏறிக்கொள்ளுதல் இயல்பு. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள். 758) என்பதையும் நோக்குக. ஏம் - ஏமை - யாமை - ஆமை = பாதுகாப்பான ஓடுள்ளது. ஏம் + ஆர் - ஏமார் - ஏமா (அல்லது) ஏம் + வா - ஏம்வா - ஏமா. ஏமாத்தல் = இன்புறுதல், மகிழ்தல். ஏம் + மாறு - ஏமாறு - ஏமா. ஏம் + அறு - ஏமறு - ஏமா = பாதுகாப்பான, அறிவிழந்து பேதைப்படு. ஏம் - ஏம்பு - ஏம்பல் = மகிழ்ச்சி. ஏம் + அம் - ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏமம் வைக லெய்தின்றா லுலகே (குறுந்.1) ஏமம் > சேமம் > க்ஷேமம் (வ.) ஒ. நோ: ஏண் > சேண். ஏறு = மேலேறு. ஏறு - ஏற்றை = ஏறிப் புணரும் ஆண்விலங்கு. ஏறு = ஏற்று - ஏற்றம் = நீரை மேலேற்றம் துலா. ஏற்றம் = மேன்மேல் எண்ணுதல் , துணிதல். ஏற்றம் நினைவும் துணிவு மாகும் (தொல். 821) ஏ- சே - சேவு. சே = காளை (ஆவின்மே லேறுவது). சேவு - (சேகு)- (சேக்கு). E. jack, the male. ஏர்- (ஏர்து) - எருது - (ஆவின்மே லேறுவது). இனி, ஏர் (கலப்பை) - ஏர்து = எருது என்றுமாம். ஏறு - ஏற்று = உயர்த்து, புகழ். ஏத்து = உயர்த்து, புகழ். ஏந்துகை = உயர்த்தித் தாங்கு. ஏந்து + அல் - ஏந்தல். ஏந்தல் = நாட்டைத் தாங்கும் அரசன். ஏல் = கையேந்து, கையேந்தி வாங்கு, தாங்கு, மேற்படு, முற்படு. ஏல (நி.கா.வி.எ.) = முன்னதாக. A.S.oer, E. ere, before, Goth. air, soon, E. early, from oer. ஏரான் = ஒரு வேளையில் பள்ளிக்கு முதலாவது வந்தவன். ஏற்க + என - ஏற்கென - ஏற்கன. ஏங்கு = மூச்சையெழுப்பு, பெருமூச்சு விடு, ஒன்றை நினைத்து வருந்து, பேரவாக்கொள், கவலைப்படு. E. heave, to lift up, to force from the breast. ஏங்குவது ஏக்கம். Cf.E. anxiety, anguish. ஏங்குதல் = அடிவயிற்றினின்று மேலெழுந்தொலித்தல், ஒலித்தல். ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும். ஏங்கு - இயங்கு - இயக்கு = ஒலி, வாத்தியத்தை ஒலி. ஏ - இய - இயம் = ஒலி, சொல், வாத்தியம். இயவர் = வாத்தியக்காரர். இயம் - இயம்பு = ஒலி, சொல். ஏ - இய - இயை - இசை = ஒலி. ஏம் - ஏம்பு - தேம்பு = ஏங்கு. தேம்பித் தேம்பி யழுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ஏ- சே - சேய். சேய்மை = உயரம் , தூரம். மேனோக்கிய தொலை உயரமும், பக்கம் நோக்கிய தொலை தூரமுமாகும். ஏல் - எல் = மேலெழும் சூரியன், ஒளி, வெள்ளை, தீ, செம்மை. எல் - என்று = சூரியன், தீ. என்று + ஊழ் - என்றூழ். என்று - ஏன்று - ஏண்டு - யாண்டு - ஆண்டு. எல் - எல்கு - இளகு = நெருப்பால் உருகு என்றுமாம். ஒ.நோ: உரு (நெருப்பு) - உருகு. எல்கு - எஃகு = உருக்கு. எல் - எரி - எரு = காய்ந்த சாணம். எரி - எரு - எருப்பு (தெ.) = சிவப்பு. எல் - எர் - எல் > இல். எர் > இர். இலந்தை = செம்பழமுள்ளது. இரத்தி = இலந்தை. இராகி = சிவந்த கேழ்வரகு. இராகி (தெ.) = செம்பு. L. oeris, copper. இல் - அல். அலத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு. இர் - அர். அரத்தம் = சிவப்பு, குருதி. அரத்தப்பூம் பட்டாடை'. அரக்கு = சிவந்தது. அரிணம் - அருணம் = சிவப்பு. அருணன் = காலைச் செங்கதிரவன். அரத்தம் - ரத்தம் - ரக்த (வ.). Ice. raudh, Ger. roth,Celt. ruadh, rhudd, Gk. rythros, L. ruf, A.S. read, E. red, blood like colour. எல் - இல் - இல - இலகு - இலங்கு. இலங்குவது இலக்கம். இலகுதல் = விளங்குதல். எல்லே யிலக்கம் (தொல். 754). இலகு - இலக்கு = விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம். மலையிலக்கு = மலைபோல் விளங்கக்கூடிய பொருள். Cf. E. illustrate, from L. illustris - il, in, luceo, to shine. இலக்கு + அம் - இலக்கம். இலக்கு + இயம் - இலக்கியம் > லக்ஷ்யம் (வ.). - விளக்கத்திற்குரிய பொருள், எடுத்துக்காட்டு, குறி, இடம், நோக்கம். இலக்கு = இடம். L. locus, a place. இதனின்று locus, local, locate முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். ஓர் இடத்தை இலக்கு என்பது தென்னாட்டு வழக்கு. எல் - எலி = முத. வெள்ளெலி. எலி X கருப்பை = காரெலி. எல் - எல்லை, எல்கை. எல்கை = சூரியனால் ஏற்படும் கால அளவு, காலவெல்லை, இடவெல்லை, எல்லை. ஒ.நோ: பொழுது = சூரியன், காலம், காலவெல்லை. எல் - ஏல் - வேல் - வேலை - வேளை. வேல் - வேலி = எல்லைத்தடுப்பு. வேலி - வேல் = வேலி யடைக்கும் முள், வேலமரம். வேலை = நிலவெல்லையான கடல். எல் - Gk. helios, the sun. எஃகு = வயிற்றுப்பாகத்தை மேலெழுப்பு. எஃகு = வில்லாற் பஞ்சையெழுப்பித் தூய்மை செய். எகிர் = எழும்பு. எச்சு - உச்சம். ஹெச்சதாய் - உச்சநிலை. எஞ்சு = மேற்படு, மிகு, மீந்திரு. எஞ்சு + அம் - எச்சம் = மீந்திருப்பது. எஞ்சு + இல் - எச்சில் = மீந்தவுணவு, உமிழ்நீர். எஞ்சுவது எச்சு. எச்சு = மீந்தவுணவு, வாய்நீர்பட்ட வுணவு, வாய்நீர். எச்சம் = பறவை துப்புவதுபோல் இடும் மலம், பெற்றோர் இறந்தபின் மீந்திருக்கும் பிள்ளைகள். எட்டு = உயர நில், தூர நில், கையுயர்த்தித் தொடு. எட்டு = மேன்மேல் வைக்கும் காலடித் தூரம். எடு = மேலெடு, தூக்கு, சுவர் அல்லது கட்டடம் எழுப்பு, வெளிப் படுத்து, நீக்கு. எட்டு - எட்டம் - எட்டுதல். எட்டன் - எட்டி - செட்டி - சேட் - சிரேஷ்டி. எடு + ஐ - எடை. எடுப்பு = உயர்வு, வளர்ப்பு. கிழங்கெடுத்தல் முள்ளெடுத்தல் முதலிய வழக்குகள் வெளிப்படுத்தற் பொருளைக் குறித்தல் காண்க. ஆங்கிலத்தில், elevate, erect, edify, educate, elicit முதலிய சொற்களும் e, ex முதலிய முன்னொட்டுகளும், எகர முதனிலையைக் கொண்டு, மேற்படுத்தல் எடுத்தல் வெளிப்படுத்தல் முதலிய பொருள்களை யுணர்த்தல் காண்க. Cf. E. - Gk. epi, Skt. api, L. ob, on. எண் = மேன்மேல் நினை, மேன்மேல் தொகையிடு. எத்து = மேனோக்கி உதை, எற்று. எத்து - எத்தன் = ஏமாற்றுபவன். எம்பு = எழும்பு. எவ்வு = எழும்பு, குதி, தாண்டு. எறி = மேல்விடு. எற்று - எத்து = நிமிர்த்து. கழுதையுதைப்பு மேனோக்கியதாதலின் எறிதல் என்று சொல்லப்படுவதை நோக்குக. என் = மேன்மேற் சொல், சொல். என்று, என்றா, எனா, என என்னும் வினையெச்ச விடைச்சொற்கள் எண்ணுதற்பொருளில் வருதலை நோக்குக. தென்னு = மேனோக்கிப் பெயர். நெம்பு = தென்னு. பெயர் = கீழிருப்பதை மேற்படுத்து, வெளியாக்கு, இடம் மாறு. பெயர்- பேர். நிலை - நில் - நிலு - நிலுவை. நிலு - நிறு - நிறை. நிலுத்து - நிறுத்து. நிறு - நிறுவு. நிறு + வை - நிறுவை. நிறுத்தல் = நிற்பித்தல், தராசை நிற்பித்து எடை பார்த்தல். நிலை - நினை. நினைத்தல் = மனத்தில் ஒரு பொருளை நிறுத்தல். நெடு - நடு - நட்டு - நாட்டு. நெட்டு - நட்டு. நடுதல் = நெட்டுக்கு வைத்தல், நிற்பித்தல். ஏ-மே- மேல். மேல் + கு - மேற்கு. மே + கு - மேக்கு. மேல் - மேனி. மே - மெய் = உடம்பு, கட்புலனான உடம்புபோல் உண்மையானது. Cf. substance - substantial = true. மே - மேது = மேல் மண்ணிடு. மேல் - மேலு - மேடு - மோடு. மேடு - மேடை - மேசை. ஒ.நோ: பீடம் - table; பீடபூமி = table land. மே - மேய் - வேய். மே + கம் - மேகம் (மேலுள்ள நீர்). மே - மேவு = மேற்படு, பொருந்து, விரும்பு. நம்பு மேவு நசையா கும்மே (தொல். 812). மே - மீ - மிகு. மிகு - மிகை. மிசை (மேல்). மீ - மீது - மீறு - வீறு. மீது - மித = நீர்மேற் கிட. மிதப்பு = செருக்கு. மிலை = தலைமேலணி. மீது - மெத்து = மேற்படு, வெல். மெத்து - மெத்தை = மேல்தளம், மேனிலை, மேலிடும் பஞ்சணை. மெத்து - மெது - மெதுவு = பஞ்சணை போன்ற மென்னிலை. மெது - ம்ருது(வ.) A.S. smoethe, E. smooth, Low Ger. smoedig, Ger. schmeidig. மெது - மெல் = மெதுவு, மெதுவாகு, மெதுவாகும்படி பல்லால் அரை. E. mellow, soft and ripe, A.S. mearu, Dut. mollig, L. mollis, Gk. malakos, soft; E. mollify, to make soft, to calm, L. mollusc, one of those animals which have a soft body, E. melt, A.S.meltan, to soften, to become liquid. E. mill, A.S. miln, Ger. muhle, L. mola, a mill - molo, to grind. Skt. mrid, to bruise. மிகல் - மிக்கிலி (தெ.) Goth. mikilis, Ice. mjok, A.S. micel, O.E. michel, muchel, E. much. மீ - மிஞ்சு - விஞ்சு. மிஞ்சு + அம் - மிச்சம்; மிஞ்சு + இல் - மிச்சில். மிசை = மிஞ்சியதை உண், உண். மிச்சில் மிசைவான் புலம் (FwŸ. 85). Cf.E. mess, to eat, O.Fr. mes, Fr. mets. செலவுக் கருத்து : ஏ = மேற்படு, மேற்செல், அசை, செல், பொருந்து, அடை, அறி. ஏ - இய - இயல். இய - இயங்கு - இயக்கம். இயங்கு = அசை, செல். இயக்கம் = அசைவு, செலவு, கிளர்ச்சி. இய - இயவு = செல்லும் வழி. இய = அசை, செல். இயவு - இயவுள் = வழிச்செலுத்தும் கடவுள். இயல் = (வி.). அசை, நட, நிகழ், செய்யமுடி, செய்யப்படு, தோன்று; (பெ.) நடக்கை, ஒழுக்கம், தன்மை, தன்மையைக் கூறும் நூற்பகுதி, தோற்றம், இயற்கை. இயல் - இயல்வு - இயல்பு = தன்மை, இயற்கை. இயல் + கை - இயற்கை. இயல் - ஏல் - நிகழ், செய்யமுடி. ஏல் + படு - ஏற்படு = நிகழ், தோன்று, அமை. ஏற்படு - ஏற்பாடு. இய + அம் - இயம் = தோற்றம், தோற்றம் குறிக்கும் ஈறு. இயம் - அம் - ம். எ-டு: பண் - பண்ணியம், தாய் - தாயம், ஆசிரியன் - ஆசிரியம் (ஒரு வகைப் பா). முத்துவீரியம் தொல்காப்பியம் முதலிய நூற்பெயர்களும் இயம் ஈறு பெற்றவையே. ஏ = செல். ஏ - யா - ஜா - ga - go. யா + திரை - யாத்திரை. யாத்ரா - ஜாத்ரா (இ.). திரை ஒரு தொழிற்பெயர் விகுதி. Dan., A.S. gaa, gan, E.go, Ger. gehan, Skt. gam. ஏ - ஏகு = செல். ஏ - ஏவு = செலுத்து, தூண்டு. ஏ = செலுத்தும் அம்பு. ஏ - எய் = அம்பைச் செலுத்து. எய்நர் - எயினர் = அம்பெய்யும் வேடர். எயில் = அம்பெய்யும் மதில், மதில். ஏ - ஏய் = பொருந்து, ஒப்பாகு, உண்மை போலச் சொல்லி ஏமாற்று. ஏய = பொருந்த, போல (உவமவுருபு). ஏ - எய் = பொருந்து, அடை, அறி. எய்யா மையே அறியா மையே (bjhš.825) எய் - எய்து = அடை. ஏ - இய - இயை - இசை - இணை = பிணை. இசை = பொருந்து, ஒப்பாகு, இணங்கு, பொருத்து. ச - ன - ண போலி . எ-டு : பூசை - பூனை - போடு. A.S. potian, L. positus - pose - pono, to place. இணை - இணர் = கொத்து. தன்மைப்பெயர்: ஏ = உயர்வு. நான் என்னும் அகங்காரம் மாந்தனுக்கு இயல்பாக வுண்மையால், முந்தியல் தமிழன் தற்பெருமையும் தன்னலமும்பற்றி ஏகாரச் சுட்டால் தன்னைச் குறித்தான். ஏன் - யான் - நான் (ஒருமை). ஏம் - யாம் - நாம் (பன்மை). வினாப்பெயர்: ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, ஒரு கூட்டமான பொருள்களில் ஒன்றை மேலெடுத்துக் காட்டச் சொல்வது போலிருக்கிறது. இதனால், வினாக் கருத்து எழுகைச் சுட்டில் தோன்றிற்று. ஏ = ஏந்த (எது, எவை). ஏ- எ. ஏது - எது - எதா - எதோ - எதோளி. எது - எதன். ஏன் > ஏவன் > எவன். ஏம் > ஏவம் > எவம். ஏன் - என் - என்னே - என்னை. ஏ - எவ். எவள் - எவண். எவன், எவள், எவர், எது, எவை. என் - என்ன = எத்தகைய. என் - எனை = எவ்வளவு. என் - எந்து - எந்த - எந்தா. எம் - எம்மை. எல் + து - எஃது . எல் + து - என்று. எல் - எல்ல = எவை. எல்ல + உம் - எல்லவும் - எல்லாம். ஒ. நோ: யா + உம் - யாவும் = எல்லாம் . எல்லாம் - A.S. eal, Ger.all, Gael, uile, W. oll, E. all. இனி, அல்ல + உம் - அல்லவும் - அல்லாம் - எல்லாம் என்றுமாம். ஒ.நோ: அனை - அனைத்து - அனைத்தும். அல்லாம் என்று நாட்டுப்புற வழக்குமுண்டு. ஏ - யா. யாது (ஒ.) யா, யாவை (ப.). (ஏண்டு) - யாண்டு. (ஏங்கு) - யாங்கு. ஏங்கு - எங்கு. யாவன், யாவள், யாவர், யாவது, யாவை. யார் - ஆர். யா - ஆ - ஓ. ஒ.நோ: வந்தான் - வந்தோன். ஏ - ஆ - ஓ ஈற்று வினா வெழுத்துகள். எ-டு: வந்தானே? வந்தானா? வந்தானோ? ஓகாரம் உயரத்தைக் குறித்தாலும், அதனடியாய் ஒரு வினாச்சொல்லும் பிறவாமையின், அதை யாவின் குறையாகிய ஆகாரத்தின் திரிபென்றே கொள்ள வேண்டும். ஆவோ வாகும் பெயருமா ருளவே (தொல் . 680) ஏகாரவிடைச்சொல் ஏ = உயர், மேற்செல், தொடர். எழுதிக்கோண்டே போ = go on writing. ஒன்றேகால் = one and a quarter. மேல் என்று பொருள்படும் on என்னும் சொல் ஆங்கிலத்தில் தொடர்ச்சி குறித்தலைக் கவனிக்க. “murnd அன்முறையாய் நடந்தால் ஆரிடம் சொல்வது என்னும் வாக்கியத்தில், ஏகாரம் உயர்வுப் பொருள் குறித்தது. 5. ஓகாரச்சுட்டு உயரக் கருத்து: உயரக் கருத்துச் சொற்கள் ஓகார வேரினின்றும் அதன் திரிபான உகர வேரினின்றும் பிறக்கின்றன. ஆங்கிலத்திலும் over, hover, soar முதலிய உயரக் கருத்துச் சொற்கள் ஓகார முதலவாயிருத்தல் காண்க. E. orign, Fr . origine, L. origo, originis - orior, to rise. ஓகை = உயர்ச்சி, மகிழ்ச்சி. ஒ.நோ : ஏம்பல் = எழுச்சி, மகிழ்ச்சி. ஓங்கு - ஓக்கம் = உயர்ச்சி, எழுச்சி, பெருமை. ஓங்கல் = மலை, யானை. ஓச்சு = உயர்த்திப்பிடி. ஓ - ஓம் = உயர்த்து, வளர். பாதுகா. ஓ = உயர், முடி, நீங்கு, ஓ - ஓவு. ஓவற = நீங்காமல். ஓ - ஓய். ஓய்தல் = முடிதல், பருவம் முடிதல், நீங்குதல், வேலை நீங்கி யிளைப்பாறல், வலிநீங்குதல், குன்றுதல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். (தொல். 814) ஓ - ஒ. ஒட்டை - ஒட்டகை - ஒட்டகம் = உயரமான விலங்கு. ஒய்யாரம் = உயரம், பெருமை, செருக்கு. ஒயில் = உயரம், செருக்கு, உயரக் குதித்தாடும் கும்மி. ஒ - உ. உக = உயர். உகள் = உயரக் குதி, துள்ளு. உகப்பே உயர்தல் உவப்பே உவகை (தொல். 789) உச்சி - உச்சம். உச்சி - உச்சிதம் - உசிதம் = உயர்ந்தது, சிறந்தது. உட் (ï.) = எழுந்திரு. உதி = உயர், கீழிருந்து தோன்று, தோன்று. உதி + அயம் - உதயம் > உதய (வ.). என்பது வடமொழியில் உயர்வு, எழுச்சி, ஊக்கம், முயற்சி முதலிய பொருள்களைக் குறிக்கும் முன்னொட்டாகும். எ-டு: உத்தம, உத்பவ, உத்சாக. உத்தரம் = உயரத்திற் குறுக்கேயிடும் பெருமரம், உயர்ந்த வடதிசை, பின்னே கூறும் பதில். உயரக் கருத்தில் பின்மைக் கருத்துத் தோன்றும். மேலே மேலும், மேலும் மேலும், ‘mj‹nkš’, அதன் மேற்பட்டு என்பவை தமிழிலும், ‘on’, ‘upon’, ‘over’ என்பவை ஆங்கிலத்திலும் பின்மைப் பொருள் தருதல் காண்க. ஒரு குறித்த காலத்தின் உச்சிக்கப்பாற்பட்டது பின்மை யென வறிக. உத்தரம் - உத்தரவு = பதில், விடை, ஆணை. உத்தரம் = மேற்பகுதி, பிற்பகுதி. உத்தரகாண்டம் = பிற்காண்டம். உப்பக்கம் = பின்பக்கம், முதுகுபக்கம், முதுகு. முன்மைப் பொருள் தரும் உகரச்சுட்டும் உயரப்பொருளும் பின்மைப் பொருள் தரும் உகரச்சொல்லும் வெவ்வேறாகும். இவற்றுள் பின்னது ஓகாரத்தின் திரிபு என அறிக. உப்பு = (வி.) எழும்பு, பரு, வீங்கு; (பெ.) எழும்பும் உவர்மண், உவர்க்கல். உப்பசம் = வீக்கம். உம் = உயரம், பின்மை. உம்மை = பிற்பிறப்பு, மறுமை. உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொல். உம் - உம்பு - உம்பர் = உயரம், உயர்ந்த தேவருலகு, தேவர். உம்பர் - இ. ஊப்பர். Skt. upari, E. up, upper, Gk. hyper, L. super, Fr. sur. உம்பல் = உயரம், யானை, பின்னோன் (வழித்தோன்றல்). உம்பன் = உயர்ந்தோன். உப்பு + அளம் - உப்பளம் - உம்பளம் - உம்மளன் - உம்மணன் - உமணன். உயர் - உயரம். உவண் = மேலிடம் (சீவக. 2853). உல்லாசம் = உயர்ச்சி, களிப்பு. உவணம் = உயர்ச்சி, உயரப் பறக்கும் கருடன். உவணை = தேவருலகம். உவர் - மேலெழும்பும் உப்பு நிலம், உப்பு. உவர் - உவரி = கடல். உன்னு = உயரக் குதி, எழு. உன்னதம் = உயர்ச்சி, உயர்ந்த இடம். கொதி, குதி, துள்ளு, பொங்கு முதலிய பல சொற்கள் ஒகர அல்லது உகார வடியாய்ப் பிறந்து, மேலெழுதலைக் குறிப்பன. உம்மை யிடைச்சொல்: பொருள்களை மேன்மேல் அடுக்கிக் கூறுதல் உயர்ச்சியை அல்லது பின்மையைக் காட்டுதலின், உகரவடியாய்க் கூட்டிணைப்புச் சொல் பிறந்தது. எ-டு: அழகனும் நம்பியும். உம் உந்தாகும் இடனுமா ருண்டே (தொல். 776). உந்து: Cf. E. and. செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றிலும் எதிர்காலப் பெயரெச்சத்திலும் உம் ஈறு மேல் என்னும் பின்மைப் பொருள்பற்றி எதிர்காலங் காட்டும். செய்ததும் (செய்தவுடன்) என்பதில் உம் ஈறு மேல் உடன் என்று பொருள்படும். செலவுக்கருத்து: ஓடு = உயர்வாய் அல்லது வேகமாய்ப் போ. ஓடு - ஓடம் = நீர்மேலோடும் தோணி. ஓடு - ஓடை = ஓடும் நீர்நிலை. IV. மூவிடப்பெயர் (1) தன்மைப் பெயர் ஏன் - யான் - நான் (ஒருமை) ஏம் - யாம் - நாம் (பன்மை) வேற்றுமைக் குறுக்கம்: ஏன் - என். யான் - என். நான் - நன். ஏம் - எம். யாம் - எம். நாம் - நம். பன்மை வடிவங்களுள் யாம் என்பது தனித்தன்மைப் பன்மைக்கும், நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மைக்கும் கொள்ளப்பட்டன. இவற்றுள், முறையே விலக்கப்பட்டதும் உளப்படுத்தப்பட்டதும் முன்னிலையே. படர்க்கை தன்மையோடு சேரின் தன்மையிலும், முன்னிலையோடு சேரின் முன்னிலையிலும் அடக்கப்படும். இரட்டைப் பன்மை: யாம் + கள் - யாங்கள். நாம் + கள் - நாங்கள். வேற்றுமைக் குறுக்கத்தில், இவை முறையே எங்கள், நங்கள் என்றாகும். நன், நங்கள் என்னும் வடிவங்கள் வழக்கு வீழ்ந்தன. இவற்றுக்குப் பதிலாய், முறையே, என், நம் (ஒற்றைப் பன்மை) என்பவை வழங்குகின்றன. யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைக்குப் பதிலாய், நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை தவறாக வழங்கிவருகின்றது. நாம் என்னும் பெயர் தெலுங்கிலும், நான் நாம் என்பவை ஆரிய மொழிகளிலும் மகர முதலாகத் திரியும். ந - ம போலி, எ- டு: மேமு (தெ.). மாம், மயா (வ.). me,my (E.). மகரம் வகரமுமாகும். ம - வ போலி. எ-டு: we (E.). (2) முன்னிலைப்பெயர் i. அண்மைச்சுட்டடி ஈன் - (யீன்) - நீன் (ஒருமை) ஈம் - (யீம்) - நீம் (பன்மை) நீன் - நீ. நீ + இர் - நீயிர் - நீவிர் - நீர். வேற்றுமைக் குறுக்கம்: நீன் (நீ) - நீன். நீம் (நீர்) - நிம் (tH¡f‰wJ). இரட்டைப் பன்மை: நீம் + கள் - நீங்கள். வே.கு: நீங்கள் - நிங்கள் (வழக்கற்றது). ii. முன்மைச் சுட்டடி ஊன் -(யூன்) - நூன் (ஒருமை) உம் - (யூம்) - நூம் (பன்மை) வேற்றுமைக் குறுக்கம்: நூன் - நுன் - உன். நூம் - நும் - உம். நூன், நூம் என்னும் வடிவங்கள் மறைந்தன. இரட்டைப் பன்மை: நூம் + கள் - நூங்கள் (மறைந்தது). வே. கு: நூங்கள் - நுங்கள். ஆரிய மொழிகளில், யூன் யூம் என்னும் வடிவங்கள் முதல் திரியாதும், நூன் நூம் என்னும் வடிவங்கள் தகர முதலாகத் திரிந்தும் வழங்கும். ந - த போலி. எ - டு: யுஷ்மத், யூயம்(வ.).you (E.); தூ, தும் (இ.) thou (E.). (3) பழஞ்சுட்டுப் பெயர் - படர்க்கைப் பெயர். சேய்மை ஆன் - தான் (ஒருமை) ஆம் - தாம் (பன்மை) m©ik < > <‹ (x.), ஈம் (ப.). இடைமை ஊ > Cன்(ஒ.)- ஊம் (ப.). இவை முன்னிலைப் பெயர்கள் தோன்றியபின் மறைந்தன. வே.கு: தான் - தன். தாம் - தம். இ. ப : தாம் + கள் - தாங்கள். வே.கு: தாங்கள் - தங்கள். சேய்மைச் சுட்டடியாய்ப் பிறந்த தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைப் பெயர்களாயிருந்து, பின்பு, சுட்டுப் பெயர்கள் தோன்றியபின் தற்சுட்டுப் (relexive) பெயர்களாயின. தாங்கள் என்பது இன்று பெருமதிப்புக் குறிக்க முன்னிலையில் வழங்குகின்றது. தான் என்னும் பெயரே ஆரிய மொழிகளில் தத், that என்று திரியும். ன- த போலி. எ-டு: நுனி - நுதி. திருமான் - ஸ்ரீமத். மேலே கூறப்பட்ட மூவிடப் பெயர்களும் திணையும் பாலும் காட்டாமல் ஒருமை பன்மையாகிய எண் மட்டும் காட்டுவன. அவற்றுள் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். மகரவீறு கூடுதலைக் குறிக்கும் உம் என்பதன் குறையென்பர் கால்டுவெல் அறிஞர். எ.டு: நீ + உம் - நீயும் - நீம். இனி, நீன் + உம் - நீனும் - நீம் என்றுமாம். னகர வீற்றின் வரலாறு தெரியவில்லை. ஆதியில் னகரவீறும் மகரவீறு மின்றி ஆ ஈ ஊ ஏ என நெட்டுயிர்களே ஈரெண்ணுக்கும் பொதுவான சுட்டு வினாப் பெயர்களாக வழங்கி வந்திருக்கின்றன. 4. ஐம்பாற் சுட்டுப்பெயர் - படர்க்கைப்பெயர் ஆ - அவ். ஈ - இவ். ஊ - உவ். சேய்மை (1) அவன் அவள் அவர் அது (< ஆது ) அவை. அண்மை (2) இவன் இவள் இவர் இது (> ஈது) இவை. இடைமை (3) உவன் உவள் உவர் உது (< ஊது ) உவை. முதலாவது சுட்டுப்பெயர்களும் வினாப்பெயர்களும் நெடின் முதல்களாகவே வழங்கிவந்தன. பின்பு குறின் முதல்களாகக் குறுகின. குறுகினவை கு, து, ம், ல், வ், ன் என்ற ஆறீறுகளைக் கொண்டிருந்தன. எ-டு : அகு , அது, அம், அல், அவ், அன். இவற்றுள் து, வ் என்ற ஈற்றுச் சொற்களே ஐம்பாற் சுட்டு வினாப் பெயரடிகளாகக் கொள்ளப்பட்டன. ஆ ஈ ஊ ஏ என்ற சுட்டு வினாவேர்களே, முதலாவது பாலெண்ணுப் பொதுப்பெயர்களாக வழங்கிவந்தன. (இவ் வியல்பை இன்றும் இந்தி போன்ற வடநாட்டு மொழியிற் காணலாம்.). பின்பு, ஒருமை விலக்கிப் பன்மைக்கு மட்டும் அவை வரையறுக்கப்பட்டன. இவ் வியல்பை அவை வகரமெய் யீறாகக் குறுகிய விடத்தும் அல்லது வேறெழுத்தாய்த் திரிந்தவிடத்தும் காத்துக்கொண்டன. v-L: ஆ - அவ் = அவை. ஏ - எவ் = எவை. ஆ- அ = அவை (g‹ikpW). வகரமெய் யீற்றுச் சொற்கள் பின்வருமாறு திரிந்தன: ஆ - அவ் - அவ - அவை ஈ - இவ் - இவ - இவை ஊ - உவ் - உவ - உவை ஏ - எவ் - எவ - எவை. இங்ஙனம், து, வை என்ற அஃறிணை யிருபா லீறுகளும் இயல்பாய்த் தோன்றின. ன், ள், ர் என்ற உயர்திணை யீறுகளைப்பற்றிப் பல்வேறு கொள்கைகளுள. கூ (Ku) மொழியில் வழங்கும் ஆனு (ஆடவன்), ஆலு (bg©L) என்னும் பெயர்களே, முறையே, ஆண்பால் பெண்பா லீறுகளாகத் திரிந்தன வென்று கொண்டனர் கால்டுவெல். தமிழிலுள்ள ஆண் ஆள் (பெண்) என்னும் பெயர்களே முறையே, ஆண்பால் பெண்பால் ஈறுகளாகத் திரிந்தன வென்று கொண்டு, `அ - ஆண்' > அவன், `அ - ஆள்' > அவள் என்று காட்டுவர் ஞானபிரகாச அடிகள். இது பொருத்தமானதே. ஆனால், அஃறிணை யீறுகளைப் போன்றே உயர்திணை யீறுகளும் இயல்பாய்த் தோன்றியவாகக் கொள்வதே மிகப் பொருத்தமென்று தோன்றுகின்றது. யாம் நாம் என்னும் தன்மைப் பெயர்கள் தனியும் உளப்பாடுமாகவும், எது யாது என்னும் வினாப்பெயர்கள் அறிபொருளதும் அறியாப் பொருளதுமாகவும் வெவ்வேறு பொருட்குப் பயன்படுத்தப்பட்டாற் போல,ன், ள், ர் என்ற இயல்பான ஈறுகளும் வெவ்வேறு பாற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். னகரவீறு ஒரு காலத்தில் திணைப் பொதுவாயும் பாற்பொது வாயு மிருந்தது. ஆனைக்கொம்பன் (ஒருவகை நெல்), வலவன் = வலப்பக்கத்திலுள்ள மாடு, கத்தரிப்பான் (கத்தரிக்கோல்) , உள்ளான் (ஒரு பறவை), கக்குவான் (ஒரு நோய்), கடுவன் (M©Fu§F), கணவன் (ஆண்குரங்கு) முதலிய பெயர்கள். அன் ஈற்றின் திணைப் பொதுமையையும் எவன் என்னும் பெயர் அதன் திணைபாற் பொதுமையையும் உணர்த்தும். எவன் = எந்த மகன். எவன் = எது, எவை. இனி, மகரம் போலியில் னகரமாவது முண்டு. எ-டு: இடம் - இடன், திறம் - திறன். கான் மான் முதலிய பெயர்கள் னகரவீற்றை நேரடியாகவே பெற்றுள்ளன. மகன் என்னும் பெயர் ஒரு காலத்தில் பெண்பாற் பெயரொடும் சேர்ந்து வழங்கிற்று. எ-டு: பெண்மகன். இன்றும் பெட்டைப் பசன்கள் என்று வழங்குதல் காண்க. பையன் - பயன் - பசன். ளகரவீறு பல சொற்களில் இயல்பாகவும் போலியாகவும் அமைந்துள்ளது. பல சொற்களில் ளகரவீறு ணகரவீறாய்த் திரிவதால் அவண், இவண் முதலிய சொற்கள் முதலாவது ளகரவீறா யிருந்தனவென்று கொள்ள இடமுண்டு. உயர்திணைப் பன்மை குறிக்கும் ரகரவீறு இர் (இரண்டு) என்னும் பெயரின் திரிபாகக்கொள்வர் ஞானப்பிரகாச அடிகள். இது மிகப் பொருத்தமாய்த் தோன்றுகின்றது. ஆயினும், ரகரவீறும் பிறவீறுகளைப்போல இயல்பாய் அல்லது போலியாய்த் தோன்றுவதாயுள்ளது. ஊர், தொடர் முதலியவற்றில் இயல்பாயும் இடக்கர், சுரும்பர் முதலியவற்றில் இணைப்பீறாயும் சாம்பர், பந்தர் முதலியவற்றில் போலியீறாயும் ரகரம் தோன்றியுள்ளது. மகரத்திற்கு ரகரம் போலியாவது பெரு வழக்காதலால், முதலாவது அவம், எவம் என மகரவீறாயிருந்த சுட்டு வினாப் பன்மைப் பெயர்கள் பின்பு ரகரவீறாய்த் திரிந்தன என்று கொள்ள இடமுண்டு. ம- ர போலி, எ-டு: வணம் - வணர், நாகம் - நாகர், காமம் - காமர், யாணம் -யாணர், முன்னம் - முன்னர். ரகரவொற்று ஆங்கிலத்தில் திணைப்பொதுவாயும் பாற்பொதுவாயும் இருப்பதை driver, screw - driver, teacher முதலிய சொற்களாலறியலாம். ஐம்பால் விகுதிகள் சேய்மைச் சுட்டு அவன் - ஆன் - அன் - ன் (ஆண்பால்) அவள் - ஆள் - அள் - ள் (பெண்பால்) அவர் - ஆர் - அர் - ர் (பலர்பால்) ஆது - ஆது - து அது - அசி - தி - இ ஆ - அ அவை - வை அண்மைச்சுட்டு இவன் - ஈன் -இன் -ன் (ஆண்பால்) இவள் - ஈள் - இள் - ள் (பெண்பால்) இவர் - ஈர் - இர் - ர் (பலர்பால்) ஈது - இது - து இது - இதி - தி - இ இவை - வை (பலவின்பால்) இடைமைச் சுட்டு உவன் - ஊன் - உன் - ன் (ஆண்பால்) உவள் - ஊள் - உள் - ள் (பெண்பால்) உவர் - ஊர் - உர் - ர் (பலர்பால்) ஊது - உது -து உது - உதி - தி - இ உவை - வை (பலவின்பால்) ‘J’ விகுதி புணர்ச்சியில் று, டு எனத் திரியும். எ-டு: போ + இன் + து - போயிற்று. பால் + து - பாற்று. கண் + து - கட்டு. பால் விகுதிகள் வினாவைக் குறியாமையானும், வினாப்பெயரினும் சுட்டுப்பெயர் விகுதிகளே யிருத்தலானும், வினாப்பெயரினின்று வேறு பால்விகுதிகள் தோன்றா என அறிக. ஐம்பால் விகுதிகள் சுட்டுப்பெயர்களினின்றே தோன்றியவை யாதலின், அவை மூவகைச் சுட்டுப்பெயரினின்றும் தோன்றியிருத்தல் வேண்டும். மகளிர் பெண்டிர் கேளிர் வேளிர் புத்தேளிர் முதலிய பெயர்களில் இர்ஈறும், வள்ளிது தெள்ளிது முதலிய பெயர்களில் இது ஈறும், வாரிதி என்னும் பெயரில் இதி ஈறும், வெட்டி கொள்ளி முதலிய பெயர்களில் இ ஈறும் இருத்தல் காண்க. மண்வெட்டி, விறகுவெட்டி, கயற்கண்ணி, என இ ஈறு ஒருமைப்பால் மூன்றையுங் குறிப்பது, அது ஒரு காலத்தில் திணைபாற் பொதுவாயிருந் தமையைக் காட்டும். தெலுங்கில் அதி, இதி, ஏதி என்னும் சுட்டுவினாப் பெயர்கள் பெண்பாலையும் ஒன்றன்பாலையும் உணர்த்துவதும், தமிழிலும் பெண்டிரைப் பொதுவாக அஃறிணைபோற் கொண்டு அது வரும், அந்த அம்மா போகும் எனக் கூறுவதும், இங்குக் கருதத் தக்கன. ரகரவீறு படர்க்கைக்கே யுரியதேனும், நீம் என்னும் பன்மைப்பெயர் வழக்கற்ற பிற்காலத்தில், நீ என்னும் ஒருமைப் பெயரோடு சோக்கப்பட்டது. யார் அது? சொன்னது யார்? என்பன போன்ற வழக்குகளில் அது என்னும் அஃறிணைச் சொல் உயர்திணைப்பாற் பொதுவாய் வழங்குவதையும், சாத்தன் சாத்தி முதலிய உயர்திணைப் பெயர்கள் பண்டைக்காலத்தில் எருதிற்கும் ஆவிற்கும் இடப்பட்டமைமையயும், தாய் பிள்ளை முதலியவை விரவுப்பெயர்களாய் இன்றும் வழங்குவதையும் நோக்குக. மூவகைப் படர்க்கை விகுதிகளுள், இடைமைச் சுட்டு விகுதிகள் வழக்கற்றுப் போயின. ஏனை யிருவகையுள் சேய்மைச் சுட்டு விகுதிகளே பெருவழக்காய் வழங்கி வருகின்றன. பெரும்பான்மைபற்றி அன் ஆன் அள் ஆள் அர் ஆர் என்று வினையியலிற் கூறினாரேனும், பால் விகுதிகள் மூவகைச் சுட்டுக்கும் பொதுவாயிருத்தல் பற்றியே, னஃகான் ஒற்று, ரஃகான் ஒற்று எனக் கிளவியாக்கத்திற் பொதுப்படக் கூறினார் தொல்காப்பியர். இனி, தன்மை முன்னிலை விகுதிகளாவன: தன்மை ஏன் - என் - எல் (eh‹) - (ஆன்) - அன் - அல் ஏம் - எம் (eh«) - ஆம் -அம் (c«) - ஒம் - ஓம் செய்கு கண்டு செய்து சேறு என்னும் வாய்பாட்டுப் பண்டை உகரவீற்று வினையெச்ச முற்றுகளுடன் பன்மைக்கு மகரமெய்யை (mšyJ உம்மீற்றை)ச் சேர்த்ததினால், `உம்' ஈறுண்டாயிற்று. இது பின்னர் ஒம் - ஓம் எனத் திரிந்தது. ன் -ல் போலி. ஒ.நோ: திறம் - திறன் - திறல். மறம் - மறன் - மறல் - மறலி. முன்னிலை நீ - தீ - தே - தை நீ - தீ - தி நீ - ஈ - இ நீ - ஈ - ஏ - ஐ - ஆய் நீம் - ஈம் - இம் நீர் - தீர் நீர் - ஈர் - இர் நூம் - ஊம் - உம் த - ந (ன) போலி, எ-டு: நுனி - நுதி. தீ - தி குறுக்கம். எ-டு : ஆப்பீ - ஆப்பி. பிற பன்மையீறுகள் மகர் > மார். மகர் = மக்கள். செய்வார் - செய்ம்மார் (வினைமுற்றும் வினையெச்சமும்). வ - ம போலி, செய்யும் அவர் - செய்யுமவர் - செய்யுமோர் (வினையாலணையும் பெயர்). கள் ஈறு கல என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகத் தெரிகின்றது. கல - கள - களம் = கூட்டம், கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம். களமகர் - களமர். களம் - களரி. களம் > (fsf«) - கழகம். களம் > கணம் (வ.). V. வினாப்பெயர் (1) ஏ, ஏன் (ஒருமை). ஏம் (பன்மை). ஏன் - ஏவன். ஏம் - எவம். ஏன் - என். ஏன் - என். என் + அது - என்னது. என் + து - எற்று. என் + அ = என்ன. ஏன் என்னும் வினாப்பெயர் இன்று காரணம் வினவும் குறிப்பு வினையெச்சமாகவும் வினைமுற்றாகவும் வழங்குகின்றது. (2) ஏவன் ஏவள் ஏவர் ஏது ஏவை. இவ் வடிவங்களால், ஆவன் ஈவன் ஊவன் முதலிய நெடில்முதற் சுட்டுப் பெயர்களும் ஒரு காலத்தில் வழங்கினவோ என ஐயுறக் கிடக்கின்றது. ஏது என்னும் பெயர், ஒரு பொருள் வந்த வழியை வினவும் குறிப்பு வினைமுற்றாகவும் இன்று வழங்கின்றது. (3) யாவன் யாவள் யாவர் யாவது யாவை. ஏ - யா. யா = யாவை. யாவது - யாது. (4) எவன் எவள் எவர் எது எவை. ஏ - எ. எ + அது - எவ்வது = எப்படி. வினாப் பெயர்கள் இன்று ஏ, எவ், யா என மூவகையடிகளைக் கொண்டுள்ளன. இவற்றுள், ஏ, எவ்' அடிகள் தெலுங்கில் வேற்றுமைத் திரிபில், வே என இலக்கணப்போலி (metathesis) யாகி, பின்பு ஆரியமொழிகளில் கெ எனப் போலித் திரிபு கொள்ளும். வ -க போலி, எ-டு : சிவப்பு - சிகப்பு, ஆவா (ஆ +M ) ஆகா. யா அடி ஆரியமொழிகளில் ஜா எனத் திரிந்தும் திரியாதும் தொடர்புகொள் (relative) வினாச்சொற்களைப் பிறப்பிக்கும். வினாச்சொல் எ-டு: தெ. - ஏவி = எவை. வேட்டி = எவற்றின். இ. - கோன் = யார், கியா = என்ன, கிதர் = எங்கே, கித்னே = எத்தனை. வ. - கிம் = யார், குத்ர = எங்கு, கதா = என்று, கதம் = எப்படி. L. quis = யார், quid = என்ன, quaru = எப்படி, qualis = எத்தகைய. தொடர்புகொள் வினாச்சொல் வ. - யத் = யார், எது. யத்ர = எங்கு, யத: = எங்கிருந்து, யதா = எப்படி. ï.- ஜோ = யார், ஜகான் = எங்கு, ஜப் = என்று, ஜித்னா = எவ்வளவு. செருமனியத்தில் வெகரமே வினாவடியாக வுளது. எ-டு: wer = யார், was = என்ன, welch = எது, wenn - என்று. முடிவு குமரிநாடே (Lemuria) மாந்தன் தோன்றிய இடம். தமிழன் தோன்றிய இடமும் அதுவே. குமரிநாட்டு மொழியாகிய தமிழே உலக இலக்கிய மொழிகட் கெல்லாம் மூலத் தாய் (Progenitor). வடமொழிக்கும் தென்மொழிக்கும் நூற்றுக்கணக்கான இன்றியமையாத சொற்கள் பொதுவாயிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் வேரும் (root), அடியும் (stem) தமிழில்தான் உள. வடமொழி இற்றை நிலையும் சமற்கிருதம் என்னும் பெயரும் பெற்றது ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின்னரே (கி.மு. 3000). அதற்கு முன் அது செருமனியம், கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழிகளைப் போன்றேயிருந்தது. வடக்கினின்று தமிழ்நாட்டிற்கு வந்ததினாலேயே அது வடமொழி எனப்பட்டது. தமிழோ, கி.மு 10000 ஆண்டுகட்கு முன்னமே குமரிநாட்டில் தானே தோன்றித் தானே முழுவளர்ச்சி யடைந்த தனிமொழி. தென்மொழியும் வடமொழியும் முறையே உலகப் பொதுமொழி வடிவத்தின் முன்னிலையும் பின்னிலையுமாகும். இவை இரண்டும் ஒன்று கூடியது அளைமறி பாம்பும் அரத்த வோட்டமும் போலக் கொள்க. வடமொழியுட்பட ஆரிய மொழிகட்கும் தமிழே மூலத்தாயென்பது, இம் மொழிநூலின் மூன்றாம் மடலத்தின் வெள்ளிடை மலையாய் விளக்கப்படும். சேய்மையும் அண்மையுமாகிய இருவகைச் சுட்டுச் சொற்களே வடமொழிக்குத் தமிழ்மூல மென்பத்தைக் காட்டிவிடும்; அகரச்சுட்டு (சேய்மை) இகரச்சுட்டு (அண்மை) தத் - அது இதம் = இது அதஸ் = அது, இது இத்தி = இப்படி அத்த = அதனால் இத்தம் = இவ்வண்ணம் தத்ர: = அங்கு இக = இங்கு தத்த: = அங்கிருந்து ஏதத் = இது தத்தா = அவ்வண்ணம் ஏவம் = இப்படி ததா = அன்று (இ - எ - ஏ) அத்ர (இங்கு), அதுனா (இன்று), அத்ய (இன்றைக்கு) முதலிய சொற்கள் இகரமுதல் அகரமுதலாகத் திரிந்துள்ளன. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். பின்னிணைப்பு I கத்தொலிகளும் ஒலியடிச் சொற்களும் - Imitatives உயர்திணை யொலிகள் ஒலியடி வினைகள்: முனங்கு. (A. S. moenan, E. moan.). விக்கு (E. hiccough), KW, KWKW (E., Fr., L. murmur), சிரி, சப்பு - சப்பிடு - சாப்பிடு. சவை - சுவை. E. savour, Fr. saveur, L. sapor - sapio, to taste. தூ - துப்பு, உளறு, குழறு. (ஓதை) - ஓது = படி. ஊம் - ஊங்கொட்டு, மெச்ச(க் கொட்டு). குதப்பு - உதப்பு. ஒலியடிப் பெயர்கள்: ஏப்பம், குலவை, சீழ்க்கை, சீத்தை, லா - ந - நாவு - நாக்கு. லாலாட்டு - ராராட்டு - ரோராட்டு. லாலம் - தாலம் - தாலாட்டு. E. lull, Scand., Sw. lulla, Ger. lallen, Gk. laleo, E. lullaby, to song to lull children. அஃறிணையொலிகள் ஒலியடி வினைகள்: தழங்கு, முழங்கு, உரறு, (E. roar), இடி, உறுமு, இமிழ், குமுறு. குலை - குரை, பிளிறு (E. blare), அதிர், கனை (E. niegh, A.S. hnoegan, Ice. hneggja, Scot. nicher. கரை, (E. crow). ஒலியடிப் பெயர்கள்: ஊளை, (E. howl), காகா - காக்கா - காக்கை - காகம். (கூ)- குயில். ஒ.நோ. E. (T¡T) - (குக்கூ) - (கக்கூ) cuckoo. குர் (குரம்) - குரங்கு. காள் - காழ் - (காழ்தை) - கழுதை. தெ. காடிதெ. கழுதைக் குபதேசங் காதில் ஓதினாலும் காழ் காழ் என்கிற புத்தி போகாது என்னும் பழமொழியை நோக்குக. மா - ஆ, ஆன். மா - மான். மத்து - மத்தளம், சல் - சல்லரி, கறம் - கறங்கு, கிண்கிண் - கிண் கிணி, சல - சலங்கை - சிலங்கை. சலங்கை - சதங்கை. சல் - சாலர். குடகுட - குடாக்கு. சிங் - சிங்கி, டம் - டங்கா, டமாரம். ம்ருதங்கம் - மிருதங்கம். விரவுத்திணையொலிகள் ஒலியடி வினைகள்: கத்து, கூ - கூவு - கூப்பு - கூப்பிடு. (E.coo) அடி, அறை, பறை, சீறு, ஆலி - ஆரி, வீறிடு, இரை, வெட்டு. ஒலியடிப் பெயர்கள்: குறட்டை, ஓ - ஓசை - ஓதை, இசை (E.hiss) ஒல் - ஒலி, கல் - கலி, அர் - அரவம். பின்னிணைப்பு II வாய்ச்சைகை யொலிகளில் சுட்டாவொலிக்கு எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குத் தருவாம். உம் என்னும் சொல் குவிதற் கருத்து : உகரத்தை ஒலிக்கும்போது உதடு குவியும். மகரத்தை யொலிக்கும்போது வாய் மூடும். ஆகவே, உம் என்று ஒலிக்கும்போது வாய் குவிந்து மூடும். இது பேசா நிலையையும் குவிவையுங் குறிக்கும். பேசாதிருப்பவனை உம்மென்றிருக்கிறான் என்பது வழக்கு. உம் - ஊம் (பொ.பா.). வாய் குவிந்த (வாய் மூடின) ஆள், பேசாத ஆள். ஊம் - ஊமன் (ஆ. பா.) ஊம் - ஊமை (பொ. பா.). உம் - உமி - உமிழ் = வாய் குவிந்து துப்பு. உம் - உம்பு - உம். பல் = குமிழ். உம் - உமி = குவிந்த கூலவுறை. உம் - கும் = குவி, கூடு, திரள். கும் + அல் - கும்மல். L. cumulus, a heap. கும்மலிடு. L. cumulatum, E. cumulate. கும்ம = கூட. L. com, cum, sim; Skt. sam, Gk. ham, syn; E. com, con, syn (pfxs.), together (to gether), Gk. hama, together. கும்மி = கைகுவித்துக் கொட்டும் கூத்து. கும்மி - குப்பி - கொப்பி. குமுதம் = பகலிற் குவியும் பூ. கும்மு = ஆடையைக் கைகுவித்துத் துவை. குமை = துவை. குமுக்கு = கை குவித்துக் குத்து, ஆடையைக் கும்மு. குமுங்கு = குத்துண்டு மசி. கும் - குமர் = திரட்சி, இளமை, இளம்பெண், அழியாமை. Fk® + m‹ - Fku‹ - Fkhu‹ (t.); குமர் + இ - குமரி - குமாரி (வ.). ஒ.நோ: விடை = பருத்தது, இளம்புள், இளவிலங்கு; விடை - விடலை = இளங்காளை, இளைஞன், மறவன் (வீரன்). Cf. E. virgin. from Gk. orgao, to swell. குமரன் = இளைஞன், முருகன், மகன். குமரி = இளைஞை, காளி, மகள். கும்மிருட்டு = திண்ட இருள். கும் - குமி - குவி. குவி - குவ - குவவு = திரட்சி. குவ - குவல் - குவால் = குவியல். குவி - குவடு - கோடு = குவிந்த சிகரம், மலை. குவி - குவை - குகை = உட்குவிவு. குவை - L. cavus, E. cave, cage. குவி - குவல் - குவளை = உட்குவிவு, கண்குழி, மணி பதிக்குங் குழி, ஒரு கலம். குவி - கவி - கவிகை. கவிதல் = ஒருகலம், குப்புறுதல், வளைதல், மூடுதல். கவித்தல் = முடியைக் கவித்துச் சூட்டுதல். கவி - கவிழ். குமி - குமிழ் - குமிழி. கும் - கும்பு = குவி, கூடு. கும்பக் குழிய என்னும் வழக்கை நோக்குக. கும்பு + அனை - (கும்பனை). Fr. compagnie, E. company. கும்பு + அல் - கும்பல். கும்பு + அம் - கும்பம் = குவியல், குவிந்த குடம் (Skt. kumbha), குடம் போன்ற ஓரை. (ïuhá) கும்பச் சுரை, கும்பப் பிளவை என்னும் பெயர்களை நோக்குக. கும்பற்காடு = திரண்ட காடு. கும்பு - கும்பா = குவிந்த கலம். கும்பளம் = குவிந்த கலியாணப் பூசணி. கும்பு - கும்பி = குவியல். கும்பு + இடு - கும்பிடு = கைகுவி. கும்பை = சேரி, கும்பகோணம். ஒ.நோ: சேர் - சேரி. கும்பி = மூச்சைக் குவி அல்லது அடக்கு. கும்பு - குப்பு. குப்புறு = குவி, கீழ்நோக்கிப் படு. குப்புறு x மல்லா > மலர். குப்பு - குப்பி = குவிந்த கலம். குப்பு - குப்பை = குவியல். L cuppa, It. cappa, Fr.coupe, A.S. heap, E. heap, Ger. haufe. குப்பம் - குப்பன் - குப்பான் = பட்டிக்காட்டான், மூடன். இனி, குப்பன் = மனங்குவிந்த மூடன் என்றுமாம். குப்பு = குப்பன் = குப்பையிற் புரட்டப்பட்டவன். கும் - குந்து = குவி, குவிந்து உட்கார், பதி. குந்து - குந்தளம் = குவிந்த கொண்டை. குந்து - கூந்து - கூந்தல் = கொண்டை, பெண்முடி, கூந்தல் போன்ற பனையுறுப்பு. குந்து - குந்தலம் - கூந்தாலம் - கூந்தாலி = குவிந்த கணிச்சி. குந்து - குந்தனம் = குவிந்த அல்லது மணி குந்தும் தகடு. குந்து - குந்தி - குதி = குவிந்த காலடி. குந்து - குது - குதை = குதிபோன்ற வில்லடி. கும்பு - கூம்பு - கூப்பு = கைகுவி. கும் - கொம் - கொம்மை = உமி, கைகுவிப்பு, திரட்சி. குப்பு - குப்புளி - கொப்புளி - கொப்புளம் - பொக்குளம் (இ.போ.). கொப்புளித்தல் = வாய் குவித்து நீரை உமிழ்தல், வாய்குவித்தாற் போன்ற புறப்பாடு தோன்றுதல். பொக்குளம் - E. pock, a small elevation of the skin containing matter, as in smallpox, A.S. poc, Ger. pocke, Dut. pok. E. pocks (pl.) - pox. கூம்பு - சூம்பு. சூம்பல் = கை பழம் முதலியவை குவிதல் அல்லது சிறுத்தல். குமட்டுதல் = வாய் குவிந்து வாந்தியெடுக்க வருதல். குமட்டு - உமட்டு - உவட்டு. குமட்டி - கும்மட்டி - கொம்மட்டி = குமட்டும் கசப்புக்காய். கும் - குஞ்சு - குஞ்சம் = குவிந்த தொங்கல். குஞ்சு - கொஞ்சு = வாய்குவிந்து முத்தமிடு, வாய்குவிந்து மழலையாடு. சூம் - சூம்பு - சூப்பு - சுப்பு - சப்பு. சூம்பல் = வாய்குவித்து உறிஞ்சல். சூப்பு - Ger. suppe, Fr. soupe, E. sup. சுப்பு - A.S. supan, Ice. supa, Ger. saufen, to drink. சுப்பெனல் = உள்ளிழுத்தல், குடித்தல். கும் - கும்மை - சும்மை = திரட்சி, நெற்போர், மிகுதி, ஊர், நாடு. சும்மை - சுமை = திரட்சி, பாரம். சுமை - சும - சுமர். சும - க்ஷம் (வ.). சுமை - சுமத்து - சுமத்தி - சுமதி - சுமைதி = மிகுதி. சுமையடை - சுமடை - சுமடு - சும்மாடு. கும்பு - சும்பு - சும்பி = முத்தமிடு, சுப்பு. சும்பு - சும்பன் = மூடன் (அறிவு சுருங்கியவன்). குமிழ் - சிமிழ் - திமிள் - திமில். சிமிழ் = குவிந்த செப்பு. திமில் = விலங்கின் முதுகிற் குவிந்த உறுப்பு, குவிந்த படகு. குறுமைக் கருத்து: ஒரு பொருள் குவியும்போது நீள்வதற்கிட மில்லையாதலால், குவிதற் கருத்தில் குறுமைக் கருத்துத் தோன்றும். கும் - குன் - குல் - குள். குல் - குர். கும் - குன் - குஞ்சு. குஞ்சு - குஞ்சம் - கொஞ்சம் - குச் (இ.). குன் - குன்னி. நன்னி குன்னி என்னும் வழக்கை நோக்குக. குல் - குறு - குறுகு - குறுக்கு. E. cross, O.Fr. crois, Fr. croix, L. crux, crucis, E. crucial. குறு - குறை. குறு - குற்று - குற்றம். குறு - குற்றி - குறி. குற்றி - குச்சி - குச்சு. குறி - குறம் - குறவன். குறம் - குறவை = குறவனைப்போல் பதுங்கும் மீன். குறி சொல்லல் = அடையாளங் கொண்டு உற்றதும் உறுவதும் உரைத்தல். குறு + இல் - குற்றில் - குச்சில் - குச்சு. குறு - குறள் - குறளி. குறு - குறும்பு = சிறுமலை, சிறுமலையரசன், அவன் செய்யும் தீங்கு, சேட்டை. குவ் - குன்று - குன்றம். குன்று - குன்றி. குறுகு - குக்கு - குக்கல். குள் - குள்ளம் - குள்ளல். குள் - குள்ளை - கூழை - கூழல். குள் - குட்டி - குட்டன். குள் - குட்டை - குட்டம் - குட்டன் - குட்டான் - கொட்டான். குட்டம் - குஷ்ட (வ.) = கைகால் அழுகிக் குட்டையாகும் தொழுநோய், செய்யுளில் அடி குட்டையாதல். குட்டன் = குட்டைவிரல். அங்குட்டன் - அங்குஷ்ட (வ.) = பெருவிரல். குட்டை - கட்டை. குட்டான் = சிறுபெட்டி, சிறு வைக்கோற்போர். குல - குரு - குருத்து, குரும்பை, குருளை, குருவி, குருமான். குருளை - E. girl, a famale child, O. Ger. gor, a child. ஒ.நோ: குட்டி = சிறுபெண். குட்டி = ஆட்டுக்குட்டி. E. kid. Scand., Ice. kidh, Ger. kitze, a young goat. குள் - குழ - குழவு - குழவி. குழ - குழம் - குழந்தை. குழ - குழகு - குழகன். குழ - (குழு)கொழுந்து. குழ - குழை - கூழ். குழ - குழு - குழுகுழு. குல் - கு. எ-டு: குக்கிராமம். பின்னிணைப்பு III குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் (Onomatopoetics and Frequentatives) (1) ஒற்றைக்கிளவி. எ-டு: சடார், வெள்ளென, சரட்டென்று, பொதுக்கென்று. (2) இரட்டைக் கிளவி. எ-டு : கலகல. சுருசுரு. மடமட. (3) எதுகைக் கிளவி. எ-டு : சட்டுப்புட்டு (சட்புட்), சடுகுடு, ஆலே பூலே, காமாசோமா. (4) அடுக்குக் கிளவி. எ-டு: பட்டுப்பட்டு (பட்பட்), கதக்குக் கதக்கு, கணீர் கணீர். (5) இரட்டித்த கிளவி. எ-டு : செக்கச்செவேர், கன்னங்கரிய. குறிப்பு: (1) இங்குக் கூறிய கிளவிகளெல்லாம் எனவென் னெச்சமும் என்றென் னெச்சமுமாகும். (2) வெள்ளென, சுருசுரு முதலிய சொற்கள் சுட்டடித் தோன்றி ait: சடார், கலகல முதலியவை ஒலியடித் தோன்றியவை. (3) அடிஅடியென் றடித்து, குறுகுறு நடந்து என்பவை இக்காலத்தில் அடுக்குத்தொடர்களாயிருப்பது போல, மினுமினு, கலகல என்பவும் முதற்காலத்தில் அடுக்குத் தொடர்களா யிருந்தன. (4) வெடி, குத்து முதலிய சொற்கள் சுட்டும் ஒலியுமாகிய ஈரடிப் பிறப்பின. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்'' நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி. இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென்மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணா நிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். ********************