பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 33 இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப்பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 33 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1968 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 112 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 80/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிடமொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர் பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை ``வடக்கத்தியானையும் வயிற்றுவலியையும் நம்பக் கூடாது என்பது பழங்காலப் பழமொழிகளுள் ஒன்று. இது எக்காலத்து எவ்விடத்து எதுபற்றி எவ்வாறு எவர் வாயிலாய்த் தோன்றிற் றென்பது தெரிந்திலது. இதை ஒருமருங்கு ஒத்ததே, ``Cold weather and knaves come out of the north.” என்னும் ஆங்கிலப் பழமொழியும். வடக்கத்தியான் என்றது யாரை என்பது தெரிய வில்லை. ஆங்கிலர் நீங்கியபின். இந்தியரெல்லாரும் கண்ணிய மான விடுதலை யின்பவாழ்வு வாழ எண்ணியிருந்த காலத்து, இந்தி வெறியர் ஏனைமொழியாரை முன்னினும் பன்மடங்கு இழிவான அடிமைத்தனத்துள் அமிழ்த்தவும் தமிழை நாளடைவில் மெல்ல மெல்ல அழிக்கவும் திட்டமிட்டு விட்டனர். இது முதலாவது தாக்கியதும் முதன்மையாகத் தாக்குவதும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசும் தமிழரையே. கடந்த முப்பான் ஆண்டுகளாகத் தமிழர் எத்தனையோ வகையில் எதிர்த்துப் போராடியும். மறைமலையடிகள் உள்ளிட்ட மாபெரும் புலவர் ஏரணமுறையில் எடுத்துரைத்தும். பாலறா வாய்ப் பசுங்குழவிகளை யேந்திய தாய்மார் பலர் சிறை சென்றும், தமிழை உயிர்போற் கருதிய இளைஞரும் நடுமையரும் தமிழ் கெடுமென் றஞ்சி அளவிறந்து உளம்நொந்து உலகை வெறுத்துத் தீக்குளித்தும், முதுகந்தண்டொடிய மாணவர் தடியடியுண்டும், இந்திவெறியர் இம்மியும் அசையாது கடுமுரண்டுடன் அஃறிணையும் நாணுமாறு அடர்த்து நிற்கின்றனர். இதற்குத் தூண்டுகோலானவர் தமிழைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுப் பேராயக்கட்சித் தலைவரே. அண்மையிற் பொங்கியெழுந்த மாணவர் கிளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றுள்ளது. ஆயினும் அகப்பகையும் புறப்பகையுங் கூடி அதன் பயனைக் கெடுக்க முயல்கின்றன. அதனால். தமிழரை எளிதாய் விலைக்கு வாங்கிவிடலாமென்றும், அது தவறின் படைகொண்டு அடக்கி விடலாமென்றும், இந்தி வெறியர் கனாக் காண்கின்றனர். இந் நிலையில், தமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம் பாக்கம் பட்டிதொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக்கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொதுமக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு (Democracy) முறைப்பட்ட மக்களாட்சி (Republic) நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர்நிற்காது. இத்தகைய தொண்டாற்றும் தனியார்க்கும் படைஞர்க்கும் பயன்படுமாறு, புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழுவின் விருப்பத்திற் கிணங்கி இச் சுவடியை எழுதலானேன். இதன் வெளியீட்டிற்கு அக் குழுவின் சார்பாக ஆயிரத்தைந்நூறு உருபா தண்டி யளித்த ஏழு மன்றங்கட்கும் உண்மைத் தமிழர் அனைவரும் என்றுங் கடப்பாடுடையர். எழுத்தறிந்த தமிழருள் எளியாரும் வாங்குமாறு இது அளவான விலைக்கு விற்கப் பெறுகின்றது. இயன்றார் அனைவரும் இதை வாங்கிப் படித்து, இயலா ஏனையர்க்கும் எடுத்துச் சொல்வாராக. இந் நூலின் கட்டடமும் உய்ப்பும்பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப. க. ஆட்சித் தலைவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகள் பாராட்டத் தக்கன. இமிழ்கட லுலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவுஞ் சான்ற தமிழினை யிழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை யொத்த வாழ்வே குலவிய மாநி லத்தே. ஒருமுறையே நான்திருத்தி யுய்த்தவஞ்சல் முன்னே இருமுறையும் பின்னே யிறுதி - ஒருமுறையும் ஆராய்ந்து பார்த்திதை யச்சிட்ட செந்தமிழன் நாரா யணஞ்செட்டி நம்பு. காட்டுப்பாடி விரிவு, ஞா.தேவநேயன் கஎ கும்பம், 1999 (29-2-'68) உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு v சான்றிதழ் vii முகவுரை ix நூலடக்கம் I. முற்படை 1 II. இந்திவரலாறு...4 III. இந்தியால் விளையுங் கேடு 16 1. இந்தியால் தமிழ் கெடும் வகை .16 2. இந்தியால் தமிழன் கெடும் வகை .32 IV. இந்திப் போராட்டம் 36 1. முதற் போராட்டம் 36 2. இரண்டாம் போராட்டம் .39 3. மூன்றாம் போராட்டம் 41 V. பல்வேறு செய்திகள் 43 VI. முடிபு... 76 பின்னிணைப்பு 1. இந்தியால்முருகன்ஆரியத்தெய்வமாகுங்கேடு..79 2. இந்திய வொற்றுமையைக் குலைப்பவர் யார்? 83 இªâahš தமிழ் எவ்வாறு கெடும்? I. முற்படை ஒரு காலத்தில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஆத்திரேலி யாவும் ஒரே பெருநிலமாய் இணைந்திருந்தன. அன்று, ஐரோப் பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலுள்ள நண்ணிலக் கடலின் தொடர்ச்சி ஆசியாவை ஊடறுத்துச் சென்று, அமைதி வாரியிற் (Pacific ocean) கலந்தது. இன்று ஞால (பூமி) முகடாயிருக்கும் பனிமலைத் தொடர் (இமயம் ) அன்று கடலுள் ஆழ மூழ்கியிருந்தது. குமரிமுனைக்குத் தெற்கில் இன்று இந்திய வாரி இருக்க மிடத்தில், இந்தியாவோடிணைந்து ஒரு நிலப்பரப்பு ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு தொடர்ந்திருந்தது. அதுவே தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டி நாடுமாகிய குமரிக்கண்டம். அதன் தென்கோடியடுத்து, குமரியென்னும் பெருமலைத் தொடரும் அத் தொடரினின்று பாய்ந்தோடிய பஃறுளி யென்னும் பேராறும் இருந்தன. அவ் வாற்றங் கரைமேலிருந்த மதுரை மாநகர்தான், பாண்டியரின் முதல் தலைநகரும் தலைக்கழக இருக்கையுமாகும். அம் மதுரை கண்ணபிரான் பிறந்து வளர்ந்த வடமதுரை நோக்கித் தென்மதுரை எனப்பட்டது. தென்மதுரையினின்று ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு வடக்கிலிருந்த திருப்பதி யென்னும் வேங்கடமலைவரை, தமிழ் பெரும்பாலும் திரியாது வழங்கிற்று. அதற்கப்பால் வடுகு என்னும் தெலுங்காகத் திரியத் தொடங்கிற்று. அதனால், வேங்கடத்திற்கு வடக்கிலுள்ள நாட்டை அல்லது நாடுகளை `மொழிபெயர் தேயம்' என்றனர். ``பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த uhÆD«” (அகம் . 211 : 7-8) ``குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த uhÆD«” (குறுந். 11 : 5-7) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே வடதமிழ் வடுகாகத் திரியத் தொடங்கிவிட்டதென்பது, அதன் பெயராலேயே விளங்கும். வடம் = வடக்கு. வடம் - வடகு - வடுகு = வடதிசை மொழி. ஆந்திரன் என்னுஞ் சொல்லிற்கு வயவன் (வீரன்) என்று பொருளுரைப்பர். அஃதுண்மையாயின் அதுவும் தமிழ்ச் சொல்லின் திரிபே. ஆண்திறம் - ஆண்திறன் - ஆண்டிறன் - ஆந்திரன். ஒ. நோ: நான்முகம் - நான்முகன் = நான்முகத்தான். ஆண்டிறன் - அண்டிறன் - அண்டிரன் - அந்திரன். ஆந்திரன் மொழி ஆந்திரம். இடைக்காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டிரம், கூர்ச்சரம் (குசராத்தி) ஆகிய ஐந்தும், ஆரியராலேயே பஞ்ச திராவிடம் எனப்பட்டன. ஆகவே, விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம் ஒருகாலத்தில் திரவிடமாகக் கொள்ளப் பெற்றமை தெளிவாம் 7-8ஆம் நூற்றாண்டிலிருந்த குமாரிலபட்டர் தமிழும் திரவிடமுஞ் சேர்ந்த தென்மொழியை ஆந்திர - திராவிட பாசை எனக் குறித்தார். இதனால், கன்னடம் தெலுங்குள் அடக்கப் பட்டமை புலனாம். வேதக்காலத்தை யடுத்துச் சமற்கிருதம் உருவாக்கப் பெற்ற போது, இந்திய வட்டார மொழிகளெல்லாம், வடஇந்தியாவில் (மேற்கிலிருந்து கிழக்காய்ப்) பைசாசி, சூரசேனி, மாகதி என்றும், நடுவிந்தியாவில் மராட்டிரி என்றும், தென்னிந்தியாவில் திராவிடி என்றும், ஐந்து பிராகிருத மொழிகள் கணக்கிடப்பெற்றன. திராவிடி என்றது தமிழை. இதனால். திரவிடமொழிகளெல்லாம் அக்காலத் தில் தமிழுக்குள் அடக்கப் பெற்றமை அறியப்படும். பிராகிருதம் என்பவை சமற்கிருதத்திற்கு முன்னிருந்தவை அல்லது இயல்பாக முந்தித் தோன்றியவை. பிரா = முன். கிருத = செய்யப்பெற்றது. சமற்கிருதம் என்பது, வழக்கற்றுப்போன வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஐம்பிராகிருதங்களும் கலந்தது. சம் (ஸம்) = உடன், ஒருங்கு, ஒன்றாக. கிருத (க்ருத) = செய்யப் பெற்றது. ஸம்க்ரு என்னும் அடை பெற்ற அல்லது கூட்டு முதனிலை ஸகரமெய் இடையிடப் பெற்று ஸம்க்ரு என்றாயிற்று. க்ரு = செய், ஸம்க்ரு = ஒருங்குசேர், ஒன்றாகச் செய், இசை (to put together, join together, compose) - இ.வே. இதனால், பிராகிருதம், சமற்கிருதம் என்பன உறவியற் சொற்கள் (Relative Terms)v‹gJ«. பிராகிருத மொழிகள் சமற்கிருதத்திற்கு முந்தியவை என்பதும் பெறப்படும். ஆயினும், மேலையர் இன்றும் வடவரைக் குருட்டுத்தனமாய் நம்பி, மகன் தந்தையையும் பேரன் தந்தை வாயிலாய்ப் பாட்டனையும் பெற்றனர் என்னும் முறையில், சமற்கிருதத்தினின்று பிராகிருதமும் பிரா கிருதத்தினின்று திரவிடமும் (தென்மொழியும்) வந்தன வென்று கொண்டிருக்கின்றனர். இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியும் இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரின் தமிழ்ப்பற்றின்மையும் காட்டிக்கொடுப்பும் பெரிதுங் கரணியமாம். நடு இந்திய மொழிகளாகிய மராட்டியும் குசராத்தியும் பஞ்ச திரவிடக் கூறுகளாகக் கொள்ளப்பட்டிருந்தமையாலும், வடஇந்திய மொழியாகிய இந்தியின் அடிப்படை இன்றுந் தமிழா யிருப்பதனாலும், மேலையாரிய மொழிகளிலும் தமிழ் சிறிதும் பெரிதும் கலந்திருப்பதனாலும், வடஇந்தியப் பிராகிருதங்களும் மூவகைத் திரவிடங்களுள்1 ஒன்றான வடதிரவிடத்தின் திரிபு வளர்ச்சியா யிருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. சமற்கிருதத்தில் ஐம்பிராகிருதமுங் கலந்திருப்பினும், நேர்வழியாகவும் அல்வழியாகவும் ஐந்தில் இரு பகுதி யென்னுமளவு மிகுதியாகக் கலந்திருப்பது தமிழே என்பதை அறிதல் லேண்டும். II. இந்தி வரலாறு 1. தோற்றமும் வளர்ச்சியும் கண்ணன் பிறந்து வளர்ந்த வடமதுரையைத் தலைநகராகக் கொண்ட நாடு பாரதக் காலத்திற் சூரசேனம் எனப் பெயர் பெற்றிருந்தது. கண்ணன் பாட்டனான சூரசேனன் அந் நாட்டை யாண்டிருந்ததனால் அப் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. சூரசேன நாட்டிலும் அதைச் சூழ்ந்தும் வழங்கிய மொழி பிற்காலத்திற் சூரசேனி எனப் பெற்றது. அதன் வழிவந்த இற்றை மொழியே மேலையிந்தி. ஆரியர் இந்தியாவிற் புகுந்து முதன்முதற் சிந்தாற்று வெளியில் தங்கினதினால், அந் நிலப்பகுதியும் சிந்து (Sindhu) எனப் பெயர் பெற்றது. பாரசீகர் அதை ஹிந்து (Hind) என வழங்கினர். பிற்காலத்திற் கிரேக்கர் அதை இந்தோ (Indos) எனத் திரித்தனர். இலத்தீனில் அது ஆற்றைக் குறித்து இந்து (Indus) என்றும், நாட்டைக் குறித்து இந்தியா என்றும் திரிந்தது. வேதப் பிராமணர் இந் நாவலந்தேயம் முழுவதும் பரவியபின், இந்து (ஹிந்து) என்பது இத் தேயத்திற்கு மறுபெயராகி நாளடைவிற் பெரும்பான்மை வழக்காயிற்று. வடஇந்தியாவை முதலாவது கைப்பற்றியாண்ட முகமதிய அரசர் அதை ஹிந்து (Hind) என வழங்கியதால், அந் நாட்டுப் பெரும்பான்மை மொழி ஹிந்தி யெனப்பட்டது. அரபியரும் பாரசீகரும் துருக்கியரும் ஆபுக்கானியருமான முகமதியர் 8ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின்மேற் படை யெடுக்கத் தொடங்கிவிட்டாரேனும், 12ஆம் நூற்றாண்டுவரை சிந்து, பஞ்சாபு முதலிய வடமேற்கிந்தியப் பகுதிகளையே அவர் கைப்பற்றியாண்டனர். 1192ஆம் ஆண்டு முகமது கோரி பிருதுவிராசனைக் கொன்று தில்லியைத் தன் தலைநகராக்கியதிலிருந்தே, முகமதிய அரசரின் இந்தி நாடாட்சி தொடங்குகின்றது. 1310-ல் அலாவுடின் அரசனின் படைத்தலைவனான மாலிக்கபூர் இராமேசுவரம்வரை படையெடுத்து வந்து, மதுரையிலும் திருச் சிராப்பள்ளியிலும் முகமதியச் சிற்றரையங்களை நிறுவிச் சென்றான். அவை அரை நூற்றாண்டு தொடர்ந்தன. முகமது துகளாக்குக் காலத்தில் (1325-51) முகமதிய ஆட்சி தக்கணம் (Deccan) வரை பரவியது. 1347-ல் சபர்கான் தக்கணத்திற் பாமனி அரையத்தை நிறுவினான். அது 15ஆம் நூற்றாண்டிறுதியில் ஐஞ்சிற்றரையங்களாகப் பிரிந்து போயிற்று. வலிமை மிக்க முகலாயப் பேரரசருள் ஒருவரான ஔரங்கசீபு காலத்தில் (1658-1707), முகமதிய ஆட்சி தமிழ்நாடுள்ளிட்ட கருநாடகம் என்னும் தென்னிந்தியாவிலும் பரவிவிட்டது. தில்லி முகமதிய அரசு தலைநகரானபின், முகமதியப் படை மறவர்தம் பாளையத்தில் (Encampment) இந்தி மக்களொடு பழகியதின் விளைவாக, இந்தியொடு பாரசீக அரபிச் சொற்கள் கலந்த உருது என்னும் கலவை மொழி தோன்றிற்று. உருது என்பது பாளையம் (camp) என்று பொருள்படும் பாரசீகச் சொல். உருது மொழிக்கு ரெக்தா (Rekhta) என்றும் பெயருண்டு. அது கலவைபற்றி ஏற்பட்ட பெயர் என்பர். இந்தியும் உருதுவும் பொதுமக்கள் வழக்கான கீழ்ப்படையில் ஒன்றேனும், புலமக்கள் அல்லது இலக்கிய வழக்கான மேற்படையில் வேறுபட்டனவாம். இந்தியின் உயர்நடையிற் சமற்கிருதச் சொற்களும், உருதுவின் உயர்நடையிற் பாரசீக அரபிச் சொற்களும், மிகுதியாகக் கலக்கும். அதோடு, இந்தி தேவநாகரி யெழுத்திலும் உருது பாரசீக அரபியெழுத்திலும் எழுதப்படும். இவ் வெழுத்து வேறுபாடு, செவிப்புலனாயிருக்கும் உலக வழக்கொற்றுமையையும் கட்புலனுக்கு முற்றும் மறைத்து விடும். ஆயினும், இலக்கணம் இரண்டிற்கும் ஏறத்தாழ ஒன்றே. உருது வடிவம் முதலில் தக்கணத்தில் தோன்றிய தென்றும், அதன் பின்பே தில்லி சென்றதென்றும், கூறுவர். உருது முகமதியரால் இந்துக்க ளிருப்பிடமாகிய இந்துத் தானத்திற் பேசப்படுவது என்னும் பொருளில் இந்துத்தானி (ஹிந்துதானி) எனவும்பட்டது. சமற்கிருதச் சொற்களும் பாரசீக அரபிச் சொற்களும் மிகுதியாய்க் கலவாமல் இந்திக்கும் உருதுவிற்கும் இடைப்பட்டது இந்துத்தானி என்பர் சிலர். இந்துத்தானம் என்றது இந்தி பேசப்படும் வடஇந்தியாவை. உருது தக்கணத்திலும் கருநாடகத்திலும் நெடுநாள் வழங்கிய பின், சற்றுச் சிதைந்தும் திரவிட வழக்குக் கலந்தும் வடஇந்திய உருதுவினின்றும் திரிந்துள்ளது. இதனால், தென்னாட்டுருதுவைத் தக்கணி (Dakhani) என்பர். வடநாட்டுப் பிராகிருதங்களை, பொதுவாக, (1) முதனிலைப் பிராகிருதம் (சூரசேனி, மாகதி முதலியன), (2) வழிநிலைப் பிராகிருதம் அல்லது இலக்கியப் பிராகிருதம் (எ-டு.பாளி). (3) சிதைநிலைப் பிராகிருதம் (அபப்பிரஞ்சம் என்னும் கொச்சை வழக்கு), (4) இற்றை மொழிகள் (இந்தி, வங்கம் முதலியன) என நால் நிலைப்படுத்துவர். சிலர் சிதைநிலைப் பிராகிருதத்தையும் இற்றை மொழிகளையும் சார்புநிலைப் பிராகிருதம் என ஒன்றாக்குவர். முகமதிய அரசர்க்கு முற்பட்ட வடநாட்டு இந்து அரசரும் பாவலரும் புலவரும் சமற்கிருதத்தையே வளர்த்து வந்ததால், பிராகிருத மொழிகள் பெரும்பாலும் பண்படுத்தப்பெறாது மேன்மேலும் சிதைந்துகொண்டே வந்தன. பாளிமொழி பண்படுத்தப்பட்டதற்குக் கரணியம் அது புத்தமத மொழியாகப் போற்றப்பட்டமையே. உருதுமொழி இந்தியடிப்படையில் தோன்றியதாயினும், உருதுப் புலவர் அல்லது எழுத்தாளர் ஆளும் இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தமையால், அதைப் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பண்படுத்திவந்ததாகவும்,சிறிதுசிறிதாக மேன்மேலும் பாரசீக அரபிச் சொற்களைச் சேர்த்து வந்ததாகவும், தெரிகின்றது. அதனால், `லல்லுஜி லால்' என்பவர் உருது மொழியிலுள்ள பாரசீக அரபிச் சொற்களை நீக்கிச் சமற்கிருதச் சொற்களைப் பெய்து இற்றை இந்தியிலக்கிய நடையை உருவாக்கி, அதில் தமது பிரேம்சாகர் என்னும் நூலை இயற்றினார் என்று சொல்லப்படுகின்றது. சிலர் அவர் ஒரு புதுமொழியைப் படைத்தாரென்று கூறுகின்றனர். வேறு சிலர் அக் கூற்றை மறுக்கின்றனர் கிரையர்சன் இந்தியிலக்கிய வுரைநடைத் தோற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு வரைகின்றார்: ``உருது இலக்கியம் அதன் தொடக்க நூற்றாண்டுகளிற் செய்யுள் வடிவாகவே யிருந்தது. உரைநடை யுருது ஆங்கிலர் இந்தியாவிற்கு வந்தபின்பே வில்லியம் கோட்டைக் கல்லூரிப் பாடப் பொத்தகங்கட்காக உருவாக்கப்பெற்றது. அதே சமையத்தில் அக் கல்லூரியாசிரியரால் இந்துத்தானியின் இந்திவடிவம் புதிதாய் அமைக்கப்பெற்றது. அது இந்துக்கட்குப் பயன்படும் இந்துத் தானியா யிருக்கவேண்டுமென்று, உருதுவிலுள்ள பாரசீக அரபிச் சொற்களைக் களைந்து அவற்றினிடத்தில் நாட்டுமொழியாகிய சமற்கிருதத்தினின்று கடன்கொண்ட அல்லது திரித்த சொற்களைப் பெய்து ஆக்கப்பெற்றது. அதில் முதலில் வரைந்த பொத்தகம் மக்களால் விரும்பப் பெற்றமையாலும், பழுத்த இந்துக்கள் தம் மதவுணர்ச்சி புண்படாவாறு பொதுவாய் வழங்கத்தக்க மொழி யில்லை யென்னுங் குறையைத் தீர்த்ததினாலும், அது விரிவாகக் கையாளப் பெற்று உருதுவைக் கையாளாத வட இந்தியரின் உரைநடை மொழியாக இன்று ஒப்புக்கொள்ளப் பெற்றுள்ளது. - (Imperial Gazetteer of India, Vol.I.p. 366.) (இந்தியப் பேரரையத் திணைக்களஞ்சியம், முதன்மடலம் ப: .366) 2. இந்திக் கிளைகளும் பிரிவுகளும் இந்தி என்பது ஓரொழுங்குபட்ட தனிமொழியன்று. பஞ்சாபிற்கும் சிந்துவிற்கும் கிழக்கும், வங்கத்திற்கும் ஒரிசாவிற்கும் மேற்கும், நேபாளத்திற்குத் தெற்கும், குசராத்திற்கும் மராட்டிரத் திற்கும் வடக்கும், பேசப்படும் பல உட்பிரிவுகளைக்கொண்ட பல்கிளை மொழியே இந்தி. இதன் பெருநிலப்பரப்பே அதன் பல்கிளைத் தன்மையை தெளிவாகக் காட்டும். நெல்லைத் தமிழும் மேலை வடார்க்காட்டுத் தமிழும்போல் வேறுபட்ட நடை வழக்குகளும் (patois) தமிழினின்று 12ஆம் நூற்றாண்டிற்குமேற் பிரிந்துபோன மலையாளம்போல் வேறுபட்ட கிளைமொழிகளும் செறிந்த மொழி இந்தியென அறிதல் வேண்டும். இடவேறுபாட்டாலும் மக்கள் கூட்டுறவின்மையாலும் எழுத்தும் இலக்கியமும் வழங்காமை அல்லது இன்மையாலும் மொழிகள் திரிவது இயல்பு. கடைக்கழகக் காலத்தில் வேங்கடத் திற்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்டுத் தமிழே வழங்கிய நிலத்தின் மேலைப்பகுதியில், இன்று கன்னடம், துளு, குடகு, துடவம், கோத்தம் முதலிய பல கிளைமொழிகள் வழங்குகின்றன. இங்ஙனமே எழுத்தும் இலக்கியமும் இல்லாது பரந்த நிலத்தில் வழங்கிய இந்தியும் பலவாறாகத் திரிந்தும் பிரிந்தும் உளது. தில்லியைச் சூழ்ந்த பகுதியில் செவ்விய முறையில் வழங்கும் கடிபோலி என்னும் இந்தி நடைவழக்கு, சென்ற நூற்றாண் டிறுதியில்தான் சீர்திருத்தஞ் செய்யப்பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. இந்திக்குத் தனியெழுத்து இன்மையாலேயே அது தேவநாகரி யென்னும் சமற்கிருதவெழுத்தில் எழுதப்பெறுகின்றது. இந்திமொழிக் கிளைகளும் பிரிவுகளும் பின்வருமாறு மூவேறுவகையில் வகுக்கப்படும்: 1. (I) மேல்நாட்டு இந்தி(பச்சானி) - பாங்காரு, பிரச பாசை (ப்ரஜ்பாஷா), கன்னோசி(கனோஜ்), பந்தேலி, உருது. (II) கீழ்நாட்டு இந்தி - அவதி, பகேலி, சத்தீசகடி (சத்தீகடி) (III) பீகாரி - மைதிலி, போசபுரி (போஜ்புரி), மககி. 2. (I) மேலையிந்தி - கடிபோலி, பிரசபாசை, பந்தேலி, கன்னோசி, பாங்காரு. (II) கீழையிந்தி அல்லது கோசலி - அவதி, பகேலி, சத்தீசகடி. (III) பீகாரி - போசபுரி, மைதிலி,மககி(மகஹி). (IV) இராசத்தானி - மால்வி, மார்வாடி, மேவதி, சைபுரி (ஜைபுரி). 3. சென்னைப் பல்கலைக்கழக இந்தித் துறைத்தலைவர், பர். (Dr.)சங்கரராச நாயுடு தம் `இந்தி நடைமொழிகள் - ஓர் உடனுறவு படுத்தம்' (Hindi Dialects - A Correlation) என்னும் ஆங்கிலச் சுவடியில், மேற்குறித்த நாற்கிளையொடு, பகாடி - கர்வாலி, காமயூனி, நேபாலி என்பதையும் ஐந்தாவதாகக் குறிப்பர். மேன்மேலும் பெருகி வந்திருக்கும் இம் மூவகைப் பாகுபாட் டினின்று, இந்தி ஒரு தனிமொழியெனக் கூறத்தக்க தகுதியற்ற தென்றும், இந்திவெறியர் இந்தி பேசுவார் தொகையைப் பெருக்கற்கு இனமொழிகளையும் இந்தியோ டிணைத்துக் கூறுகின்றனரென்றும், இதனாலேயே அவர் தித்திருக்குத் தெளிவாகின்ற தென்றும், அறியலாம். மேலையிந்தி சூரசேனியினின்றும், கீழையிந்தி அருத்த (அர்த்த) மாகதியினின்றும், பீகாரி மாகதியினின்றும், இராசத்தானி நகர அவப்பிரஞ்சத்தினின்றும், திரிந்துள்ளன என்று மொழிநூலறிஞ ரால் ஒப்புக்கொள்ளப் பெற்றுள்ளது. மகதநாட்டுப் பிராகிருதமாகிய மாகதியினின்று திரிந்துள்ள பீகாரியை, அதே பிராகிருதத்தின் திரிபாகிய வங்கத்திற்கும் இனமாகக் கூறலாமே! இராசத்தானி இடவண்மையாலும் மொழியமைப்பாலும் குசராத்திக்கன்றோ இனமாகும்? கிரையர் சனும் இவ் விரண்டையும் இணைத்தன்றோ கூறுகின்றார்? பகாடியும் இராசத்தானியொடு தொடர்புடையதே. இந்தி நடைமொழிகள் (Dialects) இவைதாமென்று எல்லார்க் கும் ஒப்ப முடிந்தவாறு இன்னும் திட்டமாகவில்லை. மேலை யறிஞரும் கீழையறிஞரும் இதுபற்றிப் பல்வேறுவகையில் முரண் படுகின்றனர். அம் முரண்பாடுகளுள் பதினெட்டைப் பர். சங்கரராச நாயுடு தம் `இந்தி நடைமொழிகள் - ஓர் உடனுறவுபடுத்தம்` என்னும் சுவடியில் தொகுத்துக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தி நடைமொழிகளைப் பாகுபடுத்திக் கூறுவதும், இந்தி பேசுவார் தொகையைக் குறிப்பதும், அதை இந்தியைப் பொதுமொழியாக்குதற்குச் சான்றாகக் காட்டுவதும் மிகமிகத் தவறாம். 3. இந்தியிலக்கியம் இந்தியென்று சொல்லத்தக்க திருந்தாமொழிநிலை இன்ன காலத்தில் தோன்றியதென்பது இன்று திட்டவட்டமாய்த் தெரியாவிடினும், அது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன் தொடங்கியதென்று கூறின் தவறாகாது. அதன் இலக்கியத் தோற்றம் இற்றைக்கு 500 ஆண்டுகட்கு முற்பட்டதே. தவத்திரு மறைமலையடிகள் கூறியவாறு, 15ஆம் நூற்றாண்டி லிருந்த இராமாநந்தர் என்னுந் துறவியார் இராமகாதை பற்றிப் பாடிய பாடல்களே இந்தியிலக்கியத் தொடக்கமாகும். அதனால் அப் பாடற்றொகுதி இந்தியில் முதற்பனுவல் (ஆதிகிரந்தம்) என வழங்கி வருகின்றது. அதன்பின் அதே நூற்றாண்டில் அவர் மாணவருள் ஒருவரான கபீர்தாசர், முகமதியப் பெற்றோர்க்குப் பிறந்தவராகவோ முகமதிய ரொருவரால் வளர்க்கப் பெற்றவ ராகவோ இருந்து கடவுளுணர்ச்சி பெற்றதினால், அல்லாவும் அரியும் (திருமாலும்) ஒன்றென்றும், உருவவணக்கமும் வீண் சமயச் சடங்குகளும் கூடாவென்றும், கற்பித்துப் பல பாடல்கள் அவதி யிந்தியிற் பாடினார்; பிராமணீயத்தை வன்மையாய்க் கண்டித்து விப்பிரமதீசி என்னும் செய்யுள் நூலும் இயற்றினார். அவருக்குப்பின், அவர் மாணவரான குருநானக்கு என்பவர் பஞ்சாபிற் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து, பஞ்சாபியும் இந்தியுங் கலந்த கலவைமொழியில் தம் பாடல்களைப் பாடினார். அவை இந்திமட்டுங் கற்றவர்க்கு எளிதில் விளங்கா. 15ஆம் நூற்றாண்டிலேயே, தர்பங்கா மாநிலத்தில் வாழ்ந்த வித்தியாபதி தாகூர் என்னும் திருமாலடியார் கண்ணன் வாழ்க்கையை மைதிலி யிந்தியில் வண்ணித்துப் பாடினார். இந்திப் பாவல ரெல்லாருள்ளும் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் 17ஆம் நூற்றாண்டிலிருந்த துளசிதாசர் என்பவரே. அவர் பாடிய இராமாயணம் `இராமசரித மானசம்` என்பதாகும். உருது இந்திய முகமதியர் மொழியாயிருப்பினும், முகமதிய அரசரெல்லாரும் பாரசீக மொழியில் ஆட்சியை நடத்தினதினால், உருது இலக்கியமும் 18ஆம் நூற்றாண்டிலேயே தோன்றியதாகத் தெரிகின்றது. இனி, `இந்தியத் திணைக் களஞ்சியம்` (முதன்மடலம்) என்னும் நூலில், இந்தியிலக்கியத் தோற்ற வளர்ச்சியைப்பற்றி பர். சட்டர்சி வரைந்திருப்பதாவது : ``இவ் இந்தி-உருது- இந்துத்தானி, தில்லி, மீரத்து, சகாரன்புரி ஆகிய நகரங்களைச் சூழ்ந்த வட்டாரமாகிய மேலை யுத்தரப்பைதிரத்தில் (பிரதேசத்தில்) வழங்கும் உலக வழக்கு நடைமொழிகளோ டொத்த இலக்கணமே யுடையது. ஆயின், `இந்தியிலக்கியம்' என்னும் சொல்லை ஆளும்போது, கி.பி.1000 போல் தொடங்கி வளர்ந்து பஞ்சாபிலிருந்து பீகார்வரை எல்லா இந்திய மொழிகளிலும் நடைமொழிகளிலுமுள்ள இலக்கியமனைத்தையுங் குறிக்கின்றோம். இங்ஙனம் `இந்தியிலக்கியம்', எடுத்துக்காட்டாக, சந்தபரதாயீ என்பவர் அவப்பிரஞ்சமும் பழைய பிரசபாசையும் பழைய இராசத் தானியும் பழைய பஞ்சாபி வடிவுகளுங் கலந்து ஒரு செயற்கைக் கலவை மொழியில் எழுதிய பிருதுவிராச ராசௌ (ப்ருத்வீராஜ் ராஸௌ) என்னும் பனுவலையும் உள்ளடக்குகின்றது. அதை யொக்க `இந்தியிலக்கிய'க் கூறாகக் கொள்ளப்பெறும் சூரதாசர் பனுவல்கள், மதுராவையும் குவாலியரையுஞ் சூழ்ந்த வட்டகையில் வழங்கும் தூய பிரசபாசையில் இயற்றப் பெற்றன வாகும். முந்திய `இந்தி'ப் பாவலருள் முதன்மை யானவராகக் கருதப்பெறும் துளசி தாசரின் பாடல்கள், அவதிக் கொந்திலும் அதற்குத் தெற்கிலுள்ள பாங்கரிலும் வழங்கும் பழைய அவதி (அல்லது பழைய கோசலி) யிந்திலேயே பெரும்பாலும் பாடப் பெற்றுள. இந்தியில் எழுதப் பெற்ற தலைசிறந்த நூல்களிற் சிலவாகத் தடையின்றியமையும் கபீரின் பனுவல்கள், பிரசபாசை, கோசலி (அல்லது அவதி), பழைய தில்லிப்பேச்சு ஆகியவற்றின் இலக்கணக் கலப்பைக் காட்டுகின்ற கலவைமொழியில் இயற்றப் பெற்றுள. மீராபாயும் வேறுபல இராசத் தானப் பாவலரும் இயற்றியவை, இராசத்தானியொடு பிரசபாசையும் பிற மேலையிந்தி நடை மொழிகளுங் கலந்த கலவையிலுள்ளன. இக்காலத்தில், போச புரியும் மைதிலியும் கர்வாலியும் குமாயூனியுங் கூட இந்தியாகக் கருதப்படு கின்றன. ïJ, bkhÊü‹KiwÆY« ïy¡»a tuyh‰W KiwÆY« neh¡»‹, ïªâÆ‹ ïašig¥ g‰¿¡ FH¥gkhd fU¤ij í©Lg©Q»‹wJ.`` என்பது (ப. 392) இதனின்று, இந்தியின் ஒழுங்கின்மையையும் குழறுபடைத் தன்மையையும் பல்வேறு மொழிக்கலவை நிலைமையையும்,. தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம். 4. இந்திப் புன்மை இந்தியின் நடைமொழிகளுள் எதையெடுப்பினும் ஆயிர மாண்டிற் குட்பட்டதே. அதன் இலக்கியம் ஐந்நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று. இந்திக்குச் சொல்வளமில்லை. அதனால் அது பல்லாயிரக் கணக்கான சொற்களைச் சமற்கிருதத்தினின்றே கடன் கொள்ள வேண்டியுள்ளது. இந்திச் சொற்களெல்லாம் மிகச் சிதைந்து கொச்சை வடிவிலேயே உள்ளன. எ-டு வடமொழி இந்தி தமிழ் இந்தி ஆதித்தவாரம் ஈத்வார் இப்போது அப் (ஆதித்யவார) -இப்ப(கொச்சை) கிருகம் (க்ருஹ) கர் நேரம் தேர் வார்த்தை(வார்த்தா) பாத் நோக்கு தேக் விருச்சிகம்(வ்ருச்சிக) பிச்சூ துவை தோ இந்தியிலக்கணம் மிகக் குறைபாடும் குழறுபடையும் உள்ளது. பொதுவாக, நேரசையீற்றிலும் குறிலிணையில் முடியும் மூவெழுத்துச் சொல்லீற்றிலுமுள்ள மெய்கள், அகரங் கலந்த உயிர்மெய்யாக எழுதப்பட்டே மெய்யாக ஒலிக்கப்படுகின்றன. எ-டு: கமரா = கம்ரா, பாத = பாத். கலம = கலம், பாதசீத - பாத்சீத். பாலக = பாலக். பெயர்கள் பெரும்பாலும் ஈறுபற்றியே பாலுணர்த்தும். எ-டு: பல் (பழம்), பாணீ(நீர்) - ஆண்பால் புதக் (பொத்தகம்), பூஞ்ச் (வால்) - பெண்பால். இப் பால்நெறியீடுகள் (விதிகள்) ஒழுங்கும் திட்டமும் உள்ளவையல்ல, இறந்தகால வினைமுற்று பாலெண்களில் `னே' யசை கூடியே வரும் எழுவாயை ஒவ்வாது செயப்படுபொருளையே ஒத்திருக்கும். செயப்படுபொருள் தொக்குநிற்பினும் `கோ'வுருபு கொண்டிருப்பினும், இ.கா.வி. முற்று படர்க்கையொருமை யாண்பால் வடிவே கொள்ளும். எ-டு: மைனே ஏக் கோடா தேக்தா = நான் ஒரு குதிரையைப் பார்த்தேன், மைனே த கோடே தேக்கே = நான் பத்துக் குதிரைகளைப் பார்த்தேன். ஹம்னே தேக்கா = நாங்கள் பார்த்தோம். உனே மேரி பஹின்கோ தேக்கா = அவன் (அவள், அது) என் உடன்பிறந்தாளைப் பார்த்தான் (பார்த்தாள், பார்த்தது). சொற்றொடரமைப்பு, தமிழிற்போல் அத்துணைச் சிறந்த தன்று. சில சொற்றொடர்கள் படர்க்கை யொருமைப்பால் மூன்றற்கும் பொதுவாகும். எ-டு : வஹ் ஹை =அவன் இருக்கிறான், அவள் இருக்கிறாள், அது இருக்கிறது. நன்னூல் போன்ற இலக்கணங்கூட இந்தியிலில்லை. தொல்காப்பியம் போன்றது வடமொழியிலு மில்லை. திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்கோவையார், நாலடியார், மெய்கண்டான் நூல் (சிவஞான போதம்), திருமந்திரம், கம்பராமாயணம், பட்டினத்தார் பனுவற்றிரட்டு, தனிப்பாடற்றிரட்டு முதலியன போன்ற அரும்பெரு நூல்கள் இந்தியிற் காண்பதினும், ஆமைமயிர்க் கம்பலமும் குதிரைக்கொம்புக் கட்டிலும் பெறுவது எளிதாயிருக்கும். 5. இந்தி தமிழ்நாட்டிற் புகுந்தவகை முப்பத்தைந்து ஆண்டுகட்குமுன்பே, பிராமணரையும் வடவரையுமே பெருந்தலைவராகக் கொண்ட பேராயக்கட்சி மாநாடொன்றில், இந்தி இந்தியப் பொதுமொழியாக வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததேனும், மூவாயிரம் ஆண்டாக ஆரிய அடிமைத்தனத்துள் மூழ்கிக்கிடந்த தமிழகம் அன்று விழிப்படையவில்லை. சற்றே விழிப்படைந்த நயன்மைக் (Justice)f£á¤ தலைவரும், ஆங்கிலர் இந்தியாவை விட்டு அகலார் என்று தவறாகக் கருதியதால், பேராயக்கட்சிச் சூழ்வுகளைக் காட்டுமடத்தில் ஓட்டாண்டிகள் கூடிப் பேசுவதாகவே கருதி யிகழ்ந்துவிட்டனர். நாட்டு வரலா றறியாதவரும் நூற்றுக்குத் தொண்ணூற்றுவர் எழுதப்படிக்கத் தெரியாதவரும் வறுமைமிக்க வரும் ஆரியரைத் தெய்வம்போற் கருதியிருப்பவருமான பொது மக்களோடு, பேராயக்கட்சித் தலைவரும் முனிவர்கோலம் பூண்டு ஏழையெளியவரிடம் இரக்கங்காட்டிய காந்தியடிகளும் நேரடித் தொடர்புகொண்டு, ஆங்கிலராட்சி நீங்கினால் வையகம் வானக மாக மாறிவிடுமென்று அவர் நம்புமாறு கூறியதால் நாட்டுமொழிப் புலமையில்லாதவரும் பொதுமக்களோடு நேரடித் தொடர்பு கொள்ளாதவரும் ஆங்கிலராட்சி நீக்கத்தைப்பற்றி ஒன்றும் சொல்லாதவருமான நயன்மைக்கட்சித் தலைவர், 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிற் படுதோல்வி யடைந்துவிட்டனர். மாபெரு வெற்றிகண்ட பேராயம் தமிழரையுந் திரவிடரையுந் துணைக்கொண்டே, தமிழ்நாட்யும் திரவிடநாடுகளையும் ஆரிய வண்ணமாக்கவும் நயன்மைக்கட்சி கால்நூற்றாண்டாகச் செய்து வந்த குமுகாய(சமுதாய)ச் சீர்திருத்தத்தைக் குலைக்கவும், திட்ட மிட்டுவிட்டது. அத் திட்டத்தின் ஒரு கூறாகவே, இந்திய அரசியலமைப்பு உருவாகுமுன்பே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது இங்ஙனம் புகுத்திய நோக்கம், ஆரியத்தை மிக வன்மையாய் எதிர்ப்பதும், தமிழ் நாகரிகத்தைப் பெரும்பாலும் தூய்மையாகத் தாங்கி நிற்பதும், வடமொழித் துணையின்றி வழங்கவும் தழைத் தோங்கவும் வல்ல மொழியைக் கொண்டிருப்பதுமான, தமிழ் நாட்டில் இந்தியைப் புகுத்திவிட்டால் ஏனை இந்தி பேசா நாடு களில் அதை எளிதாய்ப் புகுத்திவிடலாம் என்பதே. இன்று தம் தவற்றையுணர்ந்து தமிழரினும் வன்மையாக இந்தியை எதிர்க்கும் தனிப்பெருந் தலைவரான திரு. இராச கோபாலாச்சாரியாரே அன்று இந்தியைப் புகுத்தினாரேனும் முழுப் பழியையும் அவர்மேற் சுமத்திவிட முடியாது. ஏனெனின், அவர் இருநூறு பள்ளிகளிலேயே புகுத்தியிருக்க, தமிழரெனப் பெறும் திரு. அவிநாசிலிங்கஞ் செட்டியாரும் திரு.சி. சுப்பிரமணிய னாருமோ, அவையுட்பட முறையே, அறுநூறு பள்ளிகளிலும் எல்லாப் பள்ளிகளிலும் புகுத்திவிட்டனர். பின்னர். நாளடைவிற் கல்லூரிகளிலும் இந்தி புகுத்தப்பட்டது. 6. இந்தி பொதுமொழியென்றான வகை நயன்மைக் கட்சி 1937-ல் படுதோல்வியடைந்தவுடன், அக் கட்சித் தலைவரெல்லாரும் இருக்குமிடந் தெரியாதோடிப் பதுங்கி விட்டனர். இந்தியெதிர்ப்புப் படையின் மாபெரு மறத் தலைவரா யிருந்த திரு. பன்னீர்ச் செல்வத்தையும் முந்நீர் கொள்ளை கொண்டது. அற்றை மாணவர் இற்றை மாணவர்போல் விழிப் படையவில்லை. புலவர் பெரும்பாலும் வறியராதலின், அலுவலிழப்பச்சத்தால் எதிர்ப்பை விட்டுவிட்டனர். வையாபுரிகள் பணியும் வலுத்தது. கட்சி வெறியாற் பேராயத்தாரும். விண்ணுலகமிழ்தம் உண்ணக் கிடைக்குமென்னும் நம்பிக்கையாற் பொதுமக்களும், பேராயத் திட்டங்களையெல்லாம் இம்மியும் எதிர்ப்பின்றி யேற்றனர். இயல்பாகத் தமிழ்ப்பற்றின்மையாலும் சமற்கிருதம் ஓங்கும் என்னும் நம்பிக்கையாலும் பிராமணரும் இந்தியைப் பேரூக்கத்தோடு வரவேற்றனர். இந்தி தென்னிந்தியப் பள்ளிகள் பலவற்றிற் புகுத்தப் பட்டிருந்தது. தென்னிந்திய இந்தி பரப்பன் மன்றத் தமிழ்க் கேட்டுத் தொண்டும் வரவர வளர்ந்து வந்தது. ஆங்கிலர் அடியோடு இந்தியாவைவிட் டகன்றது, ஆரிய எதிர்ப்பாளர்க்கெல்லாம் அளவிறந்த மருட்கையை உண்டுபண்ணி விட்டது. அதனால் முற்றுஞ் செயலற்றுப்போயினர். இந் நிலையில், இந்தியப் பொதுமொழி எதுவென்று தீர்மானிக்கக் கூட்டிய (மறைமலையடிகளும் பன்னீர்ச்செல்வமும் போன்றார் இல்லாத) பதினெண்மர் கூட்டத்தில் 3ஆம் முறையும் இந்திச் சார்பாக ஒன்பதின்மரும் ஆங்கிலச் சார்பாக ஒன்பதின் மருமாகச் சரிசமமாயிருக்கவும், தலைமை தாங்கிய இந்தி வெறி யரான இராசேந்திரப் பிரசாது நடுநிலை தாங்காது தம் இடுகைக் குடவோலையை இந்திச் சார்பாக இட்டு, எத்துணையோ கலகத் திற்கும் கொலைக்கும் பொருட் சேதத்திற்கும் இந்திய வொற்றுமைக் குலைவிற்கும் கரணியமாகி மறுமையிலும் மாபெரும் பழியேற்றார். 7. இந்திபற்றிய ஏமாற்று இந்தி சின்மொழியாகவும் புன்மொழியாகவும் பன்மொழி யாகவும் கொன்மொழியாகவும் இருப்பினும், இந்தி வெறியரும் அவரின் அடியாரும் அதைப் பெருமொழியாகவும் உயர்மொழி யாகவும் ஒரு மொழியாகவும் பயன்மொழியாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். (சின்மொழி = சிறுமொழி. கொன்மொழி = பயனற்ற மொழி). சென்ற குடிமதிப்பின்படி, இந்தியர் (இந்திய மக்கள்) தொகை 439,234,771. அதாவது ஏறத்தாழ 44கோடி. இந்தியர் (இந்தி மக்கள்) தொகை 123,025,489. அதாவது ஏறத்தாழ 12¼ கோடி. ஆகவே இந்தி பேசுவார் நூற்றுமேனி 28.4 பேர்தாம். மீதி 71.6 பேரும் வேறுபல மொழி பேசுவாராவர். இக் கணக்கும் இந்தி வெறியரின் பெருமுயற்சி யால் ஏற்பட்ட உயர்வுநவிற்சியே. உண்மையாய்க் கணக்கிட்டால் இந்தியார் தொகை இதினுங் குறைவாகவே யிருக்கும். இந்தி யினமொழி பேசுவாரையும் இந்தியாரென்று குறிக்கும்படி இந்தி வெறியர் தூண்டினதாகத் தெரிகின்றது. இந்தி 80 நடைமொழிகளையுங் கிளைப் பிரிவுகளையுங் கொண்டது. அவற்றுட் பல, ஒன்று இன்னொன்றைப் பேசுவார்க்கு விளங்காதவளவு ஒன்றினின்றொன்று வேறுபட்டுள. 1955ஆம்ஆண்டு சூன் மாதம் ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன் கொடுக்கப்பட்ட சான்றியத்தின்படி கீழை யுத்தரப் பைதிர (பிரதேச) மக்கட்கு மேலையுத்தரப் பைதிர இந்தி விளங்கவில்லை. இந்தி யிந்தியாவும் தமிழிந்தியாவும் என இந்தியாவை இரண்டாகத் துண்டிக்கும் இந்தி, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்பது, நெருப்புக் குளிர்விக்கும் என்பது போன்றதே. ஆங்கிலம் அயன்மொழியெனின், இந்தியும் ஏனைமொழி பேசுவார்க்கு, சிறப்பாகத் திரவிடர்க்கு, அவருள்ளும் சிறப்பாகத் தமிழர்க்கு, அயன்மொழியே. இந்தி இந்திய மொழியெனின், ஆங்கிலமும் இன்று ஆங்கில இந்தியரின் மொழியாயிருத்தலின் இந்திய மொழியே. ஆங்கிலம் பொதுமக்கள் மொழியாக முடியாதெனின், இந்தியும் தமிழகத்திலும் திரவிட நாடுகளிலும் வங்காளத்திலும் பொதுமக்கள் மொழியாக முடியாததே. இந்தி இன்னும் சில்லாண்டில் ஆங்கிலம்போல் வளர்ச்சி யடைந்துவிடுமென்பது, பிறவிக் குருடனைப் பிடித்து அரசவிழி விழிக்கச் சொல்வதொத்ததே. ``உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? இந்தி வெறியரைக் கொண்ட நடுவணரசு இந்திக்கு எத்துணை ஏற்றங் கொடுப்பினும் அது என்றேனும் ஆங்கிலமாகுமா? வடமொழியி னின்று வழக்கில்லாச் சொற்களையும் ஏனை மொழிகளினின்று இனிய சொற்களையும் கங்குகரையின்றிக் கடன்கொண்டாலும், இந்தி ஒருபோதும் ஆங்கிலத்திற் கிணையாகாது. பூனை உடல் முழுதும் சூடிட்டுக் கொண்டாலும் புலியாகிவிடாது. ஆதலால், இந்தியைப்பற்றி உயர்த்திச் சொல்வதெல்லாம் முற்றும் உண்மைக்கு மாறானதே என அறிக. III இந்தியால் விளையுங் கேடு (i) இந்தியால் தமிழ் கெடும்வகை 1. கவனக்குறைவும் புலமைக் குறைவும் மதிநுட்பமும் நினைவாற்றலும் வாயமைப்பும் செவித் திறனும் சிறப்பாகப் பெற்றவர் ஐம்பதுவரை பன்மொழிகள் பேசலாம். எத்துணை மொழிகள் கற்கினும் அத்துணை நன்றே. ஆயின், சராசரித் திறமையுள்ள ஒருவர் இருமொழிகளில்தான் தேர்ச்சி பெற முடியும். சிற்றறிவாற் சிறுமையே உண்டாகும். ``ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும். ஒரு பாட்டிற்கும் உருத் தெரியாது என்றிருக்கக் கூடாது. இக்காலக் கல்வியிற் சிறந்த பகுதி அறிவியல். அது மேலும் மேலும் விரிந்தும் கிளைத்தும் நுணுகியும் சென்றுகொண்டே யிருக்கின்றது. பண்டைக் காலத்திலேயே, ``கற்க கசடறக் f‰git” (குறள். 390) என்றும், ``கல்வி கரையில கற்பவர் நாட்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் bwǪJ.” (நாலடி.135) என்றும், கூறினர் அறிஞர். இக்காலத்திலோ, கல்விப் பரப்பையும் காலக் குறுமையையும் சொல்ல வேண்டுவதில்லை. வெறுமொழிகள் வெற்றுக்கலங்களே. அறிவியன் மொழிகளே உயிருணவு நிறை கலங்கள். ஆதலால், ஒவ்வொருவனும் தன் தாய்மொழியொடு ஓர் அறிவியன் மொழியையுங் கற்பது இன்றியமையாததாகின்றது. ஆங்கிலமும் செருமனியமும் இரசியமும் போன்றவை அறிவியன் மொழிகள். ஆதலால் அம் மொழிபேசுவார்க்குவேறொருமொழிக்கல்விஇன்றியமையாததன்று..MÆ‹, இற்றை நிலைப்படி, உயிருணவு குறைகலமாயுள்ள தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கட்கு ஆங்கிலம் போன்றது இன்றியமையாததாகும். இவ் விரண்டையுஞ் செவ்வையாய்க் கற்பதற்கே போதிய காலமில்லை. இனி, பயனற்ற இந்தியையுங் கற்கநேரின், தமிழ்க் கல்விக்குரிய காலமும் முயற்சியுங் கவனமுங் குறையுமாதலால், தமிழறிவுங் குன்றுமென்பதற்கு ஐயமில்லை. 2. கலப்படமிகையும் சொன்மறைவும் ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில், பெரும்பாலும் ஒரு பொருட்கு ஒரு சொல்லே வழங்கும். அச் சொற்குப் பகரமாக (பதிலாக) வேற்றுமொழிச் சொல் வழங்கின், ehட்டுமொழிச்rல்வHக்கற்றுப்gகும்.வH¡f‰w சொல் இலக்கியத்தில் இடம் பெறின், பொருட்காட்சிச்சாலைப் பொருள்போலும் போற்றிக் காப்பு நூல்நிலையப் பொத்தகம்போலும் இறவாது காக்கப்பெறும்; அன்றேல், இறந்துபட்டு மூலமாயை நிலை யடையும். இனி இலக்கியமும் அழியின், பொருட்காட்சிச்சாலையும் போற்றிக்காப்பு நூல்நிலையமும் அழிந்து போவது போன்றதே. எ-டு: வடசொல் வழக்கற்ற உருதுச் வழக்கற்ற தென்சொல் சொல் தென்சொல் அமாவாசை காருவா கச்சேரி மன்றம், அரங்கு அன்னம் எகினம்,ஓதிமம் கைதி சிறையாளி காவியம் வனப்பு மாலுமி நீகான், தருமம் அறம் நீகாமன்-மீகாமன் பிராயச்சித்தம் கழுவாய் லாகா திணைக்களம் மயானம் சுடலை சவால் அறைகூவல் ஒரு வட்டாரத்தில் வழக்கற்றுப்போன சொல், இன்னொரு வட்டாரத்தில் அல்லது குடியேற்ற நாட்டில் அல்லது கிளைமொழி நாட்டில் வழங்கினும் வழங்கலாம் எ-டு: வழக்கற்ற இடம் வழங்கும் இடம் துப்புரவு(த.) -சுத்தம்(வ.) துப்புரவு (சோழ கொங்கு நாடுகள்) (பாண்oநாடு) முதுசொம்(த)-பிதிரார்ஜிதம்(வ.) முதுசொம் (தமிழகம்) (யாழ்ப்பாணம்) M,.M‹ (j.)- பசு(வ.)ஆவு (தமிழகம்) (தெலுங்க eடு)g©il¡ காலத்தில் தமிழர் தனித்தமிழுணர்ச்சி மிக்கிருந்த தினால், வெளிநாடுகளிலிருந்து வந்த பொருள்கட் கெல்லாம் உடனுடன் தனித்தமிழ்ச் சொற்களை ஆக்கிக்கொண்டனர். உருளை(க் கிழங்கு), ஒட்டகம், கரும்பு, குதிரை, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய், வான்கோழி என்பன அங்ஙனம் ஆக்கப்பெற்றவையே. புகைவண்டி, மிதிவண்டி. வைத்தூற்றி (funnel) என்பன பாண்டிநாட்டில் சென்ற நூற்றாண்டில் தோன்றியவை. பிற்காலத்தில் ஆரியத்தால் தமிழுணர்ச்சி கெடுக்கப்பட்டபின், தமிழ்ச்சொல் லிருக்கவும், புதுமொழிகள் வரவர அவற்றிலுள்ள சொற்களையும் வேண்டாது tழங்கத்jலைப்பட்டுவிட்டனர்.v-L: தமிழ் tடசொல்cருது M§கிலம்RU¡fhŒ Óக்கிரம் #ல்தி - நோய் வியாதி - சீக்கு ஆரியர், தமிழைக் குலைக்கவேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்டே, ஒவ்வொன்றாய்ப் பல சமற்கிருதச் சொற்களை வேண்டாது தமிழிற் புகுத்தியிருக்கின்றனர். எ-டு: பழந்தமிழ்ச்சொற்கள் தேவையில்லாச் சமற் கிருதச்சொற்கள் உவகை, களிப்பு, ஆனந்தம், குதூகலம், கெந்தளிப்பு, மகிழ்ச்சி சந்தோஷம் உண்மை, மெய், சத்தியம், நிஜம், வாதவம் வாய்மை இங்ஙனம் பல வேற்றுச் சொற்களை விரவிவிட்டதனால். உலக வழக்குச் சொற்றொடர்களுட் பலகால் தமிழொடும் சில அதுவுமின்றியும் வழங்குகின்றன. எ-டு: இந்த வருஷம் ஜாதி லீவ் = இந்த ஆண்டு மிகுந்த விடுமுறை.) இச் சொற்றொடரில் ஒரு சொல் தமிழ்; ஒருசொல் சமற்கிருதம்; ஒருசொல் உருது; ஒருசொல் ஆங்கிலம். கிதிப் பாக்கி வசூலுக்குத் தண்டோராப் போடுகிறார்கள் (= பகுதி நிலுவைத் தண்டலுக்குப் பறைசாற்றுகிறார்கள்.) இதில் ஒருசொல் தமிழ்; ஏனை நான்கும் உருது. ஈசுவரன் கிருபையால் சகல பந்துக்களும் சௌக்கியம். (இறைவன் அருளால் எல்லா உறவினரும் நலம்.) இதில் ஐஞ்சொல்லும் சமற்கிருதம். அவற்றின் ஈறுகளே தமிழ். ஆங்கிலச் சொன்மிக்க சொற்றொடர்க்கு எடுத்துக்காட்டு வேண்டுவதில்லை. ஆங்கிலங் கற்ற இற்றை மாணவரும் பெரி யோரும் ஒரு புதிய ஆங்கில இந்திய இனமாகவே மாறிவிட்டனர். இந் நிலையில், இந்திச் சொற்களும் கலந்துவிடின், முதலில் உலக வழக்குத் தமிழும் பின்பு இலக்கிய வழக்குத் தமிழும், என்னாகும் என்பதைத் தமிழறிஞரும் அன்பரும் உய்த்துணர்ந்து கொள்க. `நோய், போய் `வியாதிவந்தது; `வியாதி போய்ச் `சீக்கு வந்தது. இனி `சீக்குப் போய் `பீமாரி வரும். இங்ஙனமே ஏனை யிந்திச் சொற்பிணியும் வரும். அதன்பின், (alright, as a matter of fact, of course, certainly not) என்னும் ஆங்கிலத் தொடர்களும் இவை போன்ற பிறவும் உரையாட்டுகளில் இடையிடுவது போன்றே, கம் ஸே கம் (ஏறத்தாழ), ஹோ ஸக்கே தோ (முடியுமாயின்), கபீ நஹீன் (ஒரு போதும் இல்லை), தர் அஸல் (உண்மையில்) என்பன போன்ற இந்தித்தொடர்களும் தாராளமாகவும் ஏராளமாகவும் தமிழர் உரையாட்டுகளில் இடையிடும். பரவாயில்லை என்பது பர்வா நஹீன் என்றே வழங்கும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி யென்னும் தென்னிந்தியக் கலவைமொழி யகரமுதலி உண்மையில் தமிழகர முதலியாகவே மாறிவிடும். இந் நிலைமையை எதிர் பார்த்துத்தான், சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னைப் பேராய அரசும் என் `சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு என்னும் கண்டனச் சுவடியைக் கண்ட பின்பும், அதைத் திருத்தாது விட்டன போலும். 3. சொற்சிதைவு இந்தி ஏற்கெனவே திரிந்திருந்த பிராகிருதத்தின் மும்மடிச் சிதைவாதலால், அதன் பெரும்பாற் சொற்கள் மோழையுங் கூழையுமாயுள்ளன. பிராகிருத அல்லது சமற்கிருதச் சொற்கள் பெரும்பாலும் ஈறுமட்டுங் குன்றியிருப்பின், இந்திச் சொற்கள் ஈற்றொடு ஈற்றயலுங் குன்றிநிற்கும்; முன்னவை சிதைந்திருப்பின் பின்னவை மேலுஞ் சிதைந்திருக்கும். திரிபுநிலையைப் பொறுத்த மட்டில் பிராகிருதமும் சமற்கிருதமும் ஒன்றே. எ-டு: தமிழ் சமற்கிருதம் இந்தி அங்கணம் அங்ஙண அங்கண் அரங்கம் ரங்க ரங்க் உலகு, உலகம் லோக லோக் சாயுங்காலம் ஸாயம் ஸாம் சிவன் சிவ சிவ் சூலம் சூல சூல் தளம் தல தல் நடம் - நட்டம் ந்ருத்த நாச் நாடகம் ehlf(t@) ehl¡(t@) பூதம் பூத (bh) பூத் (bh) மங்கலம் மங்கல மங்கல் மண்டபம் மண்டப மண்டப் மண்டலம் மண்டல மண்டல் மாதம் மாஸ மா முகம் Kf(kh) K¡(kh) வலம் gy(b) gš(b) வாலுகம் வாலுக பாலூக் விதை பீஜ பீஜ் நான் திருச்சிராப்பள்ளிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாயிருந்தபோது, ஒருநாள் 6ஆம் படிவ வகுப்பில், இந்திச்சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் கூழைத் தன்மையையும் பின்வருஞ் சொற்களை எடுத்துக்காட்டி விளக்கினேன். தமிழ் இந்தி தமிழ் இந்தி És¡» Koªjîl‹ ghl« el¤j¤ bjhl§», ``ï‹D« v¤jid gh£L el¤jnt©L«? என்று மாணவரை வினவி னேன். ஒருவன் ``அஞ்ச் பாட் என்றான். உடனே எனக்கு, இந்தி தமிழ்நாட்டிற்கும் பொதுமொழியாக வந்தால் நாளடைவில் தமிழ் இந்நிலைதான் அடையும் என்னும் உணர்வு பிறந்தது. நான் சொன்ன இந்திச் சொற்களின் கூழை வடிவம் அம் மாணவன் உள்ளத்தில் ஆழப் பதிந்ததால், அவ் வச்சிலேயே அவனையறியாது எழுந்த சொற்கள் ``அஞ்ச் பாட் என்பன. அவன் குறும்புத்தனமாகக் கூறியனவல்ல. அவன் குறும்பனுமல்லன். இன்று ஐந்தாம்படைபோல் தமிழ்நாட்டில் வந்துலவும் க்ராம் சேவக், சேவாதல், பாரத்சேவக் சங்க், மண்டல் காங்க்ர போன்ற இந்தி முன்னோடிச் சொற்களையும் எண்ணிப்பார்த்தேன். இந்தியைப் படிப்படியாகப் பொதுமக்கள் பேச்சாக்க வேண்டு மென்பது இந்தி வெறியர் காணும் இன்பக் கனவாதலால். தமிழர் ஏமாறுண்டு இந்தியர்க்கு அடிமையராயின், எதிர்காலத்தில் தமிழ்ச் சொற்கள் அடையும் வடிவுகள், பின்வருமாறு என் அகக்கண் ணிற்குக் காட்சியளித்தன. எ-டு: இற்றை வடிவம் எதிர்கால வடிவம் தமிழ்நாடு தம்ல்நாட் தமிழகம் தம்லக் மதுரை மத்ரா திருநெல்வேலி திந்நேல்வேல் (எகரம்இந்தியில்இல்லை) தொல்காப்பியம் தோல்காப் (ஒகரமும் இந்தியில் இல்லை) திருக்குறள் திக்குல் பத்துப்பாட்டு பத்பாட் சிலப்பதிகாரம் சில்பத்கார் திருவள்ளுவர் திர்வல்வர், திர்வல், திவ்வல் சீத்தலைச் சாத்தனார் சீத்தல்சாத் இளங்கோவடிகள் இல்ங்கோவட் கம்பர் கம்ப் வையாபுரிகள் இந் நிலைமையைப் பெரிதும் வரவேற்பர். இந்திக் கலப்பால் தமிழ் இன்னோசையும் சொல்வளமும் சொற்சுருக்கமும் பெற்றதென்றும், சொற்சுருக்கம் (`சுருங்கச் சொல்லல்) பத்து வகை அழகுள் ஒன்றென்றும், அதனால் ஒலிப்பு முயற்சி குன்றி உடல்நலம் பெருகுமென்றும், வானொலிப் பேச்சுகளில் விளம்பத் தொடங்கிவிடுவர். இலக்கண நூலார் ஒப்புக்கொள்ளும் முறையில், ஒரு மொழிக் குள் ஒரு சொல் இன்னொரு சொல்வடிவை யொத்தமைவது, x¤jikî(analogy) எனப்படும். இது கொள்ளத்தக்கதாம். எ-டு: இயலமைவுச்சொல் ஒத்தமைவுச்சொல் இயற்கை செயற்கை(செயல்+கை) பேரடி சீறடி சிற்றடி எனப் புணரவேண்டியது சீறடி என அமைந்தது. இதை வழுவமைதியாகக் கொள்ளலாம். வழாநிலை ஒத்தமைதியுமுண்டு. எ-டு: தெருள், மருள். ஒருமொழிக்குள்ளேனும் புறம்பாகவேனும், இலக்கண வழுவாக ஒருசொல் இன்னொரு சொல்லின் வடிவொத்தமையின் தீட்டு (contamination) எனப்படும். இது தள்ளத்தக்கதாம். எ-டு: இயலமைவுச்சொல் தீட்டமைவுச்சொல் முகனை(அகமொழி) எகனை(எதுகை) கிதி(புறமொழி) ஒதி(உசத்தி) உயர்-உயர்த்தி-உசர்த்தி-உசத்தி-ஒதி. இத் தீட்டு இந்திவெறியரின் ஊக்குவிப்பும் வையாபுரிகளின் பாராட்டும் பெற்று நாடுமுழுதும் பரவின், தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு வடிவு திரியும். எ-டு: (சேய்மை யெதிர்காலத் திரிபு.) ஆட்பெயர்: இற்றை வடிவம் பிற்றை வடிவம் ஆறுமுகம் ஆற்முக்,ஆர்முக் பொன்னரங்கம் போன்ரங்க் ஊர்ப்பெயர்: சோழபுரம் சோலாப்பூர், சோல்பூர் புளியம்பட்டி புல்யம்பட் (நெடுஞ்சேய்மை யெதிர்காலத் திரிபு) வினைமுற்று: வந்தா - ன் - ள்- ர், வந்த - து - ன வந்த் (இறந்த காலம்) வருகிறா - ன் - ள் - ர், வருகிறது, வர்க் (நிகழ்காலம்) வருகின்றன வருவா -ன் -ள்- ர், வாவ், வம்,வர்ம் வரும் (எதிர்காலம்) இங்ஙனம் எல்லாத் தமிழ்ச்சொற்களும் நாளடைவிற் குட்டம் பட்டு உருக்குலைந்து போவதுடன், அளவிறந்த அயற்சொற்களால் வழக்கும் வீழ்த்தப்பட்டு. தமில் (தமிழ்) என்ற பெயரும் மறைந்து தக்ஷிணபாஷா(தக்ஷிண்பாஷ்) என்றொரு புதுப்பெயரும் கொடுக்கப் படும் என அறிக. செந்தமிழ்ப் புலவரிருந்து போற்றாமையால், பழஞ்சேர நாட்டுத் தமிழின் திரிபாகிய மலையாளத்தில், முக்கால ஐம்பால் வினைமுற்றுகளும் வன்னு, வருன்னு, வரும் எனப் பாலீறற்ற வடிவங்களாகவே வழங்கி வருதலையும் நோக்குக. 4. ஒலிமாற்றம் வடசொற் கலப்பினால் பல தென்சொற்களின் படுப்பொலி யெழுத்துகள் எடுப்பொலி யெழுத்துகளாக மாறியுள்ளன. எ-டு: செவ்வந்தி = செவ்வந்தி வேளையிற் பூக்கும் மஞ்சட் பூவும் வெண்பூவுமான பூவகைகள். செவ்வந்தி - சேவந்தி (க.) - சேமந்தி (தெ) - சாமந்தி - ஜாமந்தி. ஒரு புலவர் சாமந்தி என்னுங் கொச்சை வடிவையே, தெரியாமலோ வேடிக்கைக்காகவோ, சரியான வடிவாகக்கொண்டு செத்த குரங்கு என்று பொருட்படுத்தி அப் பூவை யணிந்த ஒரு பெண்ணைப்பற்றிப் பின்வருமாறு ஒரு பாட்டும் பாடிவிட்டார். ``கைத்தலந் தன்னினிற் செம்பொன் வளையல் கலகலெனச் சத்தமொ லித்திட நூபுரப் பாதச் சதங்கைகொஞ்சத் தத்திமி யென்றே நடஞ்செய்சம் பீசர்தஞ் சன்னிதிப்பெண் செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே'' இதனினுங் கேடான செய்தி, செவ்வந்தி யென்பதன் திரிபான சேவதீ என்னும் வடசொல்லே தென்சொற்கு மூலமெனச் சென்னைப் ப. க. க. தமிழகர முதலியிற் காட்டப்பட்டிருப்பதாகும். மறைமலையடிகள் காலத்திலிருந்து தமிழ் மறுமலர்ச்சி பரவிவரினும் புலவரல்லா மக்கள் இன்னும் குமரிநாட்டு நிலைக்கு வராதிருப்பதால், இந்தி பொதுமொழியாக்கப்படின் எத்துணையோ தென்சொற்கள் ஜாமந்தி நிலையடையும் என அறிந்துகொள்க. 5. அயற்சொற் சேர்ப்பு தமிழின் சொல்வளத்தையும் தூய்மையையும்பற்றிப் பொறாமைகொண்ட பிராமணத் தமிழ்ப் பண்டிதர், அயலார் பார்வையில் தமிழைப் பன்மொழிக் கலவையாகவும் புன்சிறு கிளைமொழியாகவுங் காட்டல்வேண்டி, ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், எட்டுணையும் வேண்டாத ஆயிரக்கணக்கான அயன்மொழிச் சொற்களைத் தமிழில் வந்து வழங்குவனபோற் சேர்த்துள்ளனர். எ-டு: அரபிச்சொற்கள் தன்னெழுத்துச் வேற்றெழுத்துச் தன்னெழுத்துச் வேற்றெழுத்துச் சொல் சொல் சொல் சொல் இசுமு இஜ்ஜத்து இத்திபாரா இதவா இத்தத்து இஜாபா இந்துவி இதிக்பார் இத்தா இஜார்நாமா இப்பா இதிமிரார் இத்திகாத்து இஜாஸத்து இபாதத்து இதியார் இத்திகாபு இஷாரா இபாரத்து இதிலாக்கு இத்திபார் இஷுக்கு இபுதார் இஸா இத்திராசு இஷுராக்கு இபுனு இஸூராபு இத்திலா இகால் இந்தி சொல்லளவிற் சமற்கிருதத்தொடும் மொழியளவில் உருதுவொடும் தொடர்புடைமையால், சமற்கிருதம் பாரசீகம் அரபி, துருக்கி ஆகிய ஆரிய சேமிய சித்திய மொழிகளினின்று பல சொற்களைக் கடன்கொள்ளலாம். அவை தமிழிலும் புகுத்தப் பெறலாம். அச்சா, சபாசு, பலே, பேஷ் முதலிய பல சொற்கள் ஏற்கெனவே சென்னைப் ப.க.க. தமிழகரமுதலியிற் சேர்க்கப்பட்டுள. இவை ஒருகால் கொச்சை வழக்கிற் புகுந்துள்ளன என்று கொள்ளினும், டர்(அச்சம்), லக்கிடி (விறகு) முதலிய இந்திச் சொற்கள் அவ் வகர முதலியிற் சேர்க்கப்பட என்ன முறையுண்டு? தமிழருள் யாரேனும் இச் சொற்களை ஆள்கின்றனரா? இவற்றைச் சேர்க்கும்போது, அகர முதலித் தொகுப்புக் குழுவினர் மறைமலையடிகள் போன்றார் கருத்தைக் கேட்டதுமில்லை; இவற்றைச் சேர்க்கலாமா என்று ஒரு சிறிதும் எண்ணிப் பார்த்ததுமில்லை. அதிகாரம் தம் கையிலிருந்த தினால், தமிழைக் கெடுப்பதற்கு இயன்றதெல்லாம் செய்ய வேண்டு மென்பதையே குறிக்கோளாகக் கொண்டதாகத் தெரிகின்றது. இனி, செய்தித்தாள்களிலும் கட்டுரைகளிலும் பாடப் பொத்தகங் களிலும் செய்யுள்களிலும் இசைப்பாட்டுகளிலும் ஏராளமாகவும் தாராளமாகவும் இந்திச் சொற்களைப் புகுத்தி, அவற்றையே ஆட்சிச் சான்றாகவுங் காட்டுவர். வையாபுரிகளும் மதிப்புரை வழங்குவர். இங்ஙனம் மறைமலையடிகளின் மாபெருந் தனித்தமிழ்த் தொண்டும், அவர்களைப் பின்பற்றித் தமிழைத் தூய்தாக்கும் அருமுயற்சியும் அடியொடு பாழாக்கப்பெறும். வேண்டாத அயற்சொற்களை நூற்றுக்கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் சென்னைப் ப. க. க. த. அகரமுதலியிற் சேர்த்த தினாலேயே. இத்தாலியாவிலிருந்து வந்த பாசானி என்னும் பாரசீக மொழிப் பண்டாரகர், இவ் வாண்டு நிகழ்ந்த 2ஆம் உலகத் தமிழ்ப் பழிப்பு மாநாட்டில், தமிழ் பாரசீக மொழியினின்று இருநூறு சொற்களைக் கடன்கொண்டுள்ளது என்று அச்சிட்ட கட்டுரை படித்துச் சென்றதும் என்க. 6. இந்திமூலப் புணர்ப்பு இந்தி தமிழ்நாட்டில் வழக்கூன்றியபின், தென்சொல்லினின்று திரிந்த வடசொற்கள் எங்ஙனம் அத் தென்சொற்கு மூலமெனத் தலை கீழாகக் காட்டப்படுகின்றனவோ, அங்ஙனமே தென்சொல்லினின்று திரிந்த இந்திச் சொற்களும் தென்சொற்கு மூலமாகக் காட்டப்படும். எ - டு : இந்திச்சொல் தென்சொல் இந்திச்சொல் தென்சொல் அரே அடே தண்டா தண் இத்னா இத்தனை பூல் பூ உப்பர் உம்பர் மார் மாறு(அடி) ஓண்ட் உதடு வங்க் வங்கு(வளை) காட் கட்டில் ஸரக் சருக்கு, சறுக்கு சபா சவை ஹோ ஆகு ஜோட் சோடி.சுவடி (அழகுபடுத்து) என் `தமிழ் வரலாறு` என்னும் நூலிற் காட்டப்பட்டுள்ள ஏனை யிந்திச் சொற்களும் இங்ஙனமே தென்சொற்கு மூலமாகக் காட்டப்படும். தமிழிலிருந்து வடதிரவிடஞ் சென்று, அதினின்று பிராகிருத வழியாகவும் வடமொழி வழியாகவும் இந்தியில் வந்து வழங்குஞ் சொற்கள் பலவுள. அவற்றுட் சில அவற்றிற்கு மூலமான தென் சொற்கட்கே மூலமென்று, திரு. வையாபுரிப்பிள்ளையைத் துணைக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணப் பண்டிதர் குறித்திருக்கின்றனர். எ-டு: சோடி (இரட்டை) < ஜோடி (இந்தி) சோடி (அழகுபடுத்து) < ஜோட்ந (இந்தி) உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், விளையாட்டிற் குச் சேரும் இணை. உ - ஒ - ஒப்பு. உ - உவ் - உவ - (சுவ) - (சுவள்) - சுவண் - சிவண். சிவணுதல் - 1. ஒத்தல். ``நெடுவரை யெவையு மொருவழித் திரண்டன சிவண''. (கம்பரா. நிந்தனை.1) 2. பொருந்துதல். ``மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (தொல். 46) சுவண் - சுவண்டு = பொருத்தம். ``சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே'' (தேவா. 677:4) சுவண்டு - சுவடு = 1. ஒன்று பொருந்திப் பதியுங் குறி. 2. பதியும் அடித்தடம். ``பூவா ரடிச்சுவடென் தலைமேற் பொறித்தலுமே'' (திருவாச. 11:7) 3. பொருத்திக் கட்டுங் கயிறு. ம. சுவடு. சுவடு - சுவடி = 1. இணை, இரட்டை. இருவரும் சுவடியாய்ப் போகிறார்கள் என்பது உலக வழக்கு. 2. ஓலைக்கற்றை, பொத்தகம். சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சுவடித்தல் = பொருத்தி அழகுபடுத்துதல். கோயிலிற் சப்பரம் சுவடிக்கிறார்கள் என்பது பாண்டிநாட்டு வழக்கு. RtL - nrhL f., து. ஜோடு, தெ. த்ஜோடு. இ. ஜோடி. சோடு = 1. ஒப்பு. ``அவளுக்கவள் சோடு 2. அடித்தடம் 3. இணை, இரட்டை சோடு கட்டுதல். சோடு பார்த்தல், சோடு பெயர்தல் என்னும் வழக்குகளை நோக்குக. 4. இணைந்த ஆண்பெண்ணுள் ஒன்று 5. மிதியடி. ம. சோடு. இ. ஜூத்தா சோட்டாலடிப்பேன் என்று சண்டையிற் கூறுவதைக் காண்க. சோடு - சோடி = இணை. இணையுள் ஒன்று. சோடி சேர்த்தல், சோடி பார்த்தல் என்பன உலக வழக்கு. சுவடி - சோடி. சோடித்தல் = அழகுபடுத்துதல். சோடி - இ. ஜோட் சோடி + அனை = சோடனை = சோடிப்பு. இங்ஙனமே உருதுச் சொற்கள் சிலவற்றையும் தமிழ்ச்சொற்கு மூலமாகக் காட்டியுள்ளனர். எ-டு: வங்கா < பாங்கா (உ.) வள் - வண் - வணம் - வணங்கு - வாங்கு - வாங்கா = வளைந்த ஊதுகருவி. வாங்கு - வங்கு - வங்கா = வளைந்த ஊதுகருவி. வாங்குதல் = வளைதல். வங்குதல் = வளைதல். வங்கு - வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி. வாங்கா - உ. பாங்கா. இங்ஙனம் இந்தியிலும் உருதுவிலுமுள்ள ஏனைத் தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு இந்திச் சொற்களாகத் தலைமாற்றிக் காட்டுவர். மூவிடப் பெயர்கள் இந்தி > தமிழ் தன்மை யொருமை: மைன் நான், யான் " ப்பன்மை: ஹம் நாம், யாம் முன்னிலையொருமை: தூ நூன் - நீன் - நீ " ப்பன்மை: தும் நும் படர்க்கையொருமை: வஹ் அவன், அவள் " ப்பன்மை: வே அவர்,அவை வேற்றுமையுருபுகள் இந்தி > தமிழ் 4 -I M« nt.- கோ கு 7 - I ஆம் வே. - பா பால் வினையீறுகள் இந்தி > தமிழ் இ. கா. முற்றும் எச்சமும் -ஆ ஆ (எச்சம்) வியங்கோள் - இயே இய கரணிய விடைச்சொல் இந்தி தமிழ் கே. மாறே மாறே, மாறு இரு மொழியிலும் ஒருபோகான (parallel) பழமொழிக ளுள்ளும் இந்திப் பழமொழியே தமிழ்ப் பழமொழிக்கு மூலமாகக் காட்டப்படும் இனி, இந்தி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்ற தென்று பின்வருமாறு கோணையாராய்ச்சியும் நிகழலாம். குமரி மாநிலம் இருந்த காலத்தில். முதலில் நாவலத்தேயம் முழுவதையும் ஆண்டு வந்தவர் பாண்டியக் குடியினரே. இது, ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 1 1: 19 -22) என்பதனாற் பெறப்படும். பிற்காலத்தில். ஒரு பாண்டியனின் ஈரிளவலர் சோழ சேரரெனத் தோன்றி வடநாவலத்திற் கோக்கள் என்னும் துணையரையராய் ஆண்டு, பின்பு அவரோ அவர் வழியினரோ தனிவேந்தராகப் பிரிந்துபோனதாகத் தெரிகின்றது. குமரி மாநிலமிருந்த காலத்தில், தில்லைக்கு வடக்கில் ஈராயிரங் கல் தொலைவு நிலம் இன்றிருப்பது போன்றே தெற்கிலு மிருந்திருக் கின்றது. இங்ஙனம் தில்லை முதற்காலச் சிவவுலகின் நடுவிடத்தி லிருந்ததினால் அதை நெஞ்சத் தாவாகக் கொண்டு, இறைவனின் முத்தொழில் அல்லது ஐந்தொழில் நிகழ்வை நெஞ்சத் துடிப்புப் போன்ற நடமாக உருவகித்து, நடவரசன் என்னும் பெயரால் இறைவனுருவை நடஞ்செய் வடிவில், பாண்டியனோ மூவேந்தருமோ அங்குச் சிற்றம்பலத்தில் நிறுவியிருக்கின்றனர். இச் சிறப்பால் சிற்றம்பலம் கோயில் என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறும். தில்லைநகர் தில்லைச்செடிகள் நிரம்பியிருந்ததால் அப் பெயர் பெற்றது. தில்லைவனம் என்பதே பண்டை வழக்கு. சிதம்பரம் என்பது சிற்றம்பலம் என்பதன் சிதைவு. அது பேரம்பலம் என்பத னோடு ஒப்புநோக்கிய உறவியற் சொல். இவ் வீரம்பலங்களும் இன்றும் அங்குண்டு. ஆடல், கூத்து, தாண்டவம், நடம் என்னும் நான்கும் தூய தென்சொற்களே. இவற்றுள் இறுதியிரண்டும் வடமொழியிலும் வழங்கும். இனி, ஓர் இந்தி மொழியார் அல்லது வையாபுரியார், நெஞ்சத்தாவு என்னுங் கருத்தைத் துணைக்கொண்டு, நெஞ்சாங் குலையைக் குறிக்கும் தில் என்னும் இந்திச் சொல்லினின்று தில்லை என்னும் பெயர் தோன்றிற்று என்று வரைந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டமும் பெறலாம். இனி, தில் என்னும் விழைவுப்பொருளிடைச் சொல்லும் தில் என்னும் இந்திச் சொல்லினின்றே தோன்றிற்றென்றும் கூறலாம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தம் தாய்மொழியில் இயற்றாது வேறொரு மொழியில் இயற்றினாரென்று ஓர் ïLüš(thesis) விடுத்து, அப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படும்போது, இது அத்துணை வியப்பானதன்று. இனி, கண்ணன் பிறந்த வடமதுரையை நோக்கித்தான் வைகைமதுரையும், பீகாரிலுள்ள பாடலிபுத்திரத்தை நோக்கித்தான் திருப்பாதிரிப்புலியூரும் பெயர் பெற்றன என்று வரலாறும் வரையப்படும். 7. மதிப்புக்குறைவும் பற்றுக்குறைவும் பேச்சுக்குறைவும் இவ் வுலகிற் சான்றோர் ஆயிரத்தில் ஒருவரே உளர். கற்றோருள்ளும் கயவருண்டு. அதனாலேயே, கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் என்று, தாயுமானவர் கல்லாதார் பண்பாட்டை இருமுறை யடுக்கிக் கூறினார். ஒரு மொழிக்கு அரசியல் அரவணைப்போ பிழைக்கும் வழிவாயிற்றன்மையோ இல்லையெனின், அதைப் பெரும்பாலார் மதியார்; அதனால் அதை விரும்பிக் கல்லார் அல்லது பேசார். தமிழ் தமிழ்நாட்டு ஆட்சிமொழியாயிருப்பினும், இந்தி நடுவணாட்சி மொழியாகவும், இந்தியப் பொதுமொழியாகவும் ஏற்றம் பெறின், அதற்கே மதிப்பும் உயர்வும் உண்டாகும். அரசன் முத்தினால் அரம்பை''. மேலும், தமிழ்நாட்டு அலுவற்பேற்றிற்கும் இந்திக் கல்வி இன்றியமையாததென்று நாளடைவிற் சட்டம் வரும். சமற்கிருதம் தமிழை அடிப்படையாகக் கொண்ட கலவை யிலக்கிய நடைமொழியாயினும், அது தேவமொழியென்று அரசராற் போற்றப்பெற்றதினால், பெரும்புலவர் புலத்தியரும் அம் மொழிச்சொல்லைத் தம் பாவிலும் பனுவலிலும் வீணாக ஆண்டனர். கடைக்கழகக் காலத்துக் கூடலூர்கிழார் என்னும் பெரும்புலவர், கிழக்குச் செல்லாது வடக்கு முன்னாது என்று அழகாகவும் தெளிவாகவும் பாடவேண்டியவிடத்து, ``பாசிச் செல்லா தூசி முன்னாது'' (புறம். 229) என்று பாடியுள்ளார். ப்ரதீசி - பாசி = கிழக்கு. உதீசி - ஊசி = வடக்கு. ``அன்னையுந் தந்தையும் முன்னறி தெய்வம்'' என்னாது `அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' (கொன்றை வேந்தன் 1) என்றும், ``உடன்பிறந்தே கொல்லும் பிணிகள்'' என்னாது `` உடன்பிறந்தே கொல்லும் வியாதி'' (மூதுரை, 20) என்றும் பாடியுள்ளார் பிற்காலத்து ஔவையார். ஆங்கிலராட்சிக் காலத்தில், கிறித்தவர் தம் தாய்மொழியைப் பேசாது ஆங்கிலத்தைப் பேசி வந்தது போன்றே, இந்தியாட்சிக் காலத்திலும் தமிழ்ப்பற்றில்லாதவ ரெல்லாரும் இந்தியையே பேசிவருவர். 8. எழுத்துமொழி வரலாற்றழிவு இந்தியாட்சி வரின், தேயவொற்றுமையின் பேராலும் செலவு முயற்சி காலக் குறைப்பின் பேராலும், தமிழ் எழுத்துப் போக்கு வரத்தும் இலக்கியமும் தேவநாகரியிலேயே எழுதப்பெறும். தமிழ்நாட்டில் தேவநாகரி புகுத்தப்பட்டுவிடின், அரையாரியமாய் மாறியுள்ள திரவிடநாடுகளில் அதைப் புகுத்துவது மிக எளிதா யிருக்கும். அதனால் தமிழ்நாட்டிற் புகுத்துவதில் மிகக் கவனஞ் செலுத்துவர். முதன்முதல் இந்தி தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டதையும் நோக்குக. இந்தியை இந்துதேயத்தின் ஒரே தாய்மொழியாக்குவதே இந்தி வெறியர் திட்டமாதலால், நாளடைவில் தமிழ்மொழியும் அழிந்து போம். ஆங்கிலர் அரும்பாடுபட் டாராய்ந்து தொகுத்து அச்சிட்ட இந்திய வரலாற்று நூல்களையும் திணைக்களஞ்சியங்களையும் (Gazetteers), அவர் நீங்கியபின் பேராய ஆட்சியார் தம் விருப்பம் போல் திரித்தும் மாற்றியும் வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் உயர்வும் பேராயக் கட்சியின் `விடுதலைப் போராட்டமும்தான் இந்தியரசு வெளியிடும் வரலாற்று நூலின் சிறந்த கூறாகவிருக்கும். இதையெழுத ஆரியரும் ஆரிய அடிவருடியரும் இந்தி வெறியருமே அமர்த்தப் பெறுவர். இந்தியத் திணைக்களஞ்சியத்தின் (Gazetteer of India) மொழிப் பகுதியில் வங்கப் பிராமணரான பர். சட்டர்சியும் கொங்குணிப் பிராமணரான பர். சு.கு. கத்திரேயும் தமிழைத் தாழ்த்தியும் தமிழிலக்கியத்தைப் பிற்படுத்தியும் எழுதியிருப்பதை யும்; திரு. g¤jt¢rydh® j« M£áÆš jÄœeh£L tuyh‰iw eh‰ghfkhf¥ gF¤J, mt‰WŸ ehyhtjhd nguha¡ f£áÆ‹ `ÉLjiy'¥ nghuh£l¤ijna Kªâtiua ÉUªjijí«; tat® rh© kh®rš (sir John Marshall) eLÃiyahŒ MŒªJ btËÆ£l áªJbtˤ âuhÉl ehfÇf¤ij K.N. சாத்திரி என்பார் ஆரிய நாகரிகமாகக் காட்டி வருவதையும் (New Light on the Indus Civilization -2 Vols); எண்ணிக் காண்க. உண்மை விளம்பியரும் தமிழ்ப்பற்றாளருமான ஆராய்ச்சி யாளர் எத்துணைச் சான்று காட்டினும், அவர் கூற்றும் எழுத்தும் தி.மு.க. ஆட்சியிலேயே கொள்ளப்படாதபோது, இந்தி ஆட்சியில் எங்ஙனம் ஏற்கப் பெறும்? கொடுங்கொள்கைத் (Hetrodox) தமிழராலும் தமிழ்ப்பகைவராலும் கோலாலம்பூரிலும் சென்னை யிலும் நடத்தப்பட்ட கடந்த உலகத் தமிழ் மாநாடுகள் இரண்டும், மறைமலையடிகள் மறைக்கப்பட்டும் அவர் வழியினர் விலக்கப் பட்டும் தமிழ்ப் பழிப்பு மாநாடாகவே முடிந்தமை காண்க. II. இந்தியால் தமிழன் கெடும்வகை (i) தமிழ் மாணவர்க்கு வீண் கடுஞ்சுமை இக்காலத்திற்கு இன்றியமையாத ஆங்கில மொழியையும் அதிலுள்ள அறிவியல்களையுமே கற்கப் போதிய காலமில்லாத போது பயனற்ற ஒழுங்கில்லாத ஒரு புதுமொழியைக் கற்பது தமிழ் மாணவர்க்கு வீண் கடுஞ்சுமையே. பிறவற்றைக் கெடுக்கும் நச்சுப்பொருள்கள் (1) விரைந்து கொல்லி, (2) மெல்லக்கொல்லி என இருவகைப்படும். ஒரு நஞ்சு விரைந்து கொல்வதைக் கண்கூடாகக் காணலாம்; மெல்லக் கொல்வதை நாளடைவில்தான் அறியமுடியும். ``msɉF ÄŠádhš mKjK« eŠrhF«'' v‹D« gHbkhÊ¥go, rU¡fiuia ÄFâahf c©lhš ò‰WnehŒ tU« v‹W xU kU¤Jt® brhšy, xU FW«g‹ j‹ thŒ Ãiwa¢ rU¡fiuia ï£L¡bfh©L ``v§nf ò‰WnehŒ tªJ É£lJ?`` என்று வினவினான். 劉dnk, Kj‹Kjš ïªâ òF¤j¥g£l br‹id¥ gŸËfSŸ x‹wh»a ïªJ kjÉaš ca®Ãiy¥gŸË mâfhÇfŸ, m¥ gŸË khzt® áyiu kJiu¤ jÄœ¢r§f khzt® nj®btG⤠njwit¤J, ïªâahš jÄœ bfL« v‹w ïªâ v⮥ghsiu neh¡» ``v§nf ïªâahš jÄœ bf£LÉ£lJ?'' என்று வினவினர். சருக்கரையை மிகுதியாக ஒருவேளை உண்டதினால் மட்டும் புற்றுநோய் வந்துவிடாது. நீண்டநாள் அங்ஙனம் உண்டுவரின் இறுதியில் அந் நோய் வரும். அங்ஙனமே இந்தியால் தமிழ் கெடுவதும் நெடுங்கால விளைவேயன்றி உடனடியான விளைவன்று. ஆதலால், உணவுத்துறையில் தேர்ந்த மருத்துவர் சொல்லை நம்புவது போன்றே, மொழிக்கல்வித்துறையிலும் சிறந்த மொழிநூலறிஞர் சொல்லை நம்பவேண்டும். இதற்காகவே காட்சி, கருத்து, ஒப்பு என்னும் மூன்றொடு உரையையும் சேர்த்து உண்மையை யறியும் அளவைகள் நான்கென வகுத்தனர் ஏரணநூலார். ``மூத்தோர் சொல்லும் வார்த்தை யமுதம்'' என்றதும் இதுபற்றியே. சிற்றறிஞர் என்றும் தங்கால நன்மையை நோக்குவர்; பேரறிஞரே தங்கால நன்மையையும் வருங்கால நன்மையையும் ஒருங்கே நோக்குவர். மொழிகளின் இயல்பை அறியாத சிலர், ஒவ்வொரு மொழியும் ஒரு விளக்குப்போல்வ தென்றும், ஒரு விளக்கால் இன்னொரு விளக்குக் கெடாததுபோல ஒரு மொழியாலும் இன்னொரு மொழி கெடாதென்றும், தமிழ் மிகப் பெரிய மொழியாதலால் எந்த மொழியும் அதை அழித்துவிட முடியாதென்றும், எத்தனையோ வேற்றரசு வந்த பின்பும் அழியாது இவ்வளவு காலம் இருந்த மொழி இனிமேலா அழியப்போகிறது என்றும், பலவாறு தம் வாய்க்கு வந்தவாறு பிதற்றி ஆராய்ச்சி யில்லாரையும் மாணவரையும் மயக்குவதுண்டு. மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித் தொகுதியே யன்றி, அவரினும் வேறான ஓர் உயிரி அல்லது உருவம் அன்று. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; அன்றேல் மாளும். ஆகவே, ஒரு மொழிவழக்கிற்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதைப் பேசும் மக்கள் வாய் அல்லது நாவே. இதனாலேயே, மொழிவாயிலாய்க் கற்கப்பெறும் கலைகட்குத் தெய்வமும் நாமகள் அல்லது சொன்மகள் எனப் பெயர் பெற்றதும் என்க. மொழிகட்கு மக்களினும் புறம்பான தனி உருவம் இருப்பின், புலி பூனையைப் பார்த்தமட்டில் வென்றுவிடுவதுபோல், தமிழும் இந்தியை எளிதாய் வென்றுவிடும். ஆயின், தமிழ் - இந்திப் போராட்டம் என்பது தமிழர்க்கும் இந்தியார்க்கும் நிகழும் போராட்டமே. இந்தியார் கையில் ஆட்சியதிகாரமும் படையு மிருக்கின்றன. தமிழர்க்கு அவையில்லை. இந் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டே இந்தியார் தமிழரை மருட்டவும் வெருட்டவும் செய்கின்றனர். தமிழர் தமக்குத் தேவையில்லாததும் தமிழை நாளடைவில் வழக்கு வீழ்த்தற்கே புகுத்தப்படுவதுமான இந்தியை ஏற்றுக்கொள்ளின், ஏற்கெனவே வடமொழியால் நலிந்திருக்கும் தமிழ், மேலும் நலிந்தும் மெலிந்தும் திரிந்தும் சுரிந்தும் நாளடைவில் தென்னிந்தியாக மாறிவிடுவது திண்ணம். ஆரியர் இரண்டொருவராய் அல்லது விரல்விட்டெண்ணத் தக்கவராயிருந்தும், தம்மைத் தேவரென்று கூறி யேமாற்றித் தமிழரை அடக்கினர். இந்தியார்க்கு இடந்தரின், படைவலிமைகொண்டு தமிழரை அடக்குவர். 2. தமிழர் குடிமைத் தாழ்வு இந்தி இந்திய அரசியன் மொழியாயின், ஏனை மொழிய ரெல்லாரும் கதிரவனுந் திங்களுமுள்ள அல்லது இற்றை உலகம் நிலைக்குங் காலமெல்லாம் இரண்டாந்தரக் குடிவாணராகவே யிருப்பர். ஆளும் இனத்தானுக்கும் ஆளப்படும் இனத்தானுக்கும் இடையே ஏற்றத்தாழ்வான உளநிலை இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டுத் தலைமைப் பதவிகளை யெல்லாம் இந்தியாரே தாங்குவர். 3. தமிழர் பண்பாட்டுக் கேடு அலுவற்பேறும் பதவியுயர்த்தமும் பிற ஏந்துகளும் (வசதிகளும்) நோக்கி, ஆயிரத்திற்கு 999.9 பேர் இந்தியரசிற்கு அடிமையராவது தேற்றம். இதற்குத் தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரே தலைசிறந்த எடுத்துக்காட்டாம். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராயிருந்து இந்தியை வன்மையாய் எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழர் வேலூர் மகந்து உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரிய ரானவுடன் பெருமகிழ்வுடன் அதை ஏற்றுக் கொண்டது, இங்குக் கவனிக்கத் தக்கது. இனி, தமிழ முகமதியர் சிலர் உருது கற்று அதைத் தாய்மொழி போல் வழங்கி உருது முசிலீம் குடும்பத்தோடு மணஉறவு பூண்டு தம் குடியை உயர்த்திக்கொண்டதுபோலும், தாழ்த்தப்பட்டோர் சிலர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகத் தழுவிச் சட்டைக்காரரானது போலும், பல தமிழக்குடியார் இந்தியைத் தாய்மொழியாக ஏற்றுச் சில தலைமுறைக்குப் பின்பேனும் இந்திக்காரராக மாறினும் மாறலாம். இத்தகைய சூழ்நிலையில், ``பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே', ``பசிவந்தால் பத்தும் பறந்துபோம்'', ``உண்பாடின்றேல் பண்பாடில்லை'' என்பனவே உண்மை மொழிகளாகும். எல்லாத் தொழிலும் ஒருசாண் வயிற்றிற்கே. ஆரியர் உயர்ந்தோர் என்னும் தவறான கருத்தினால், தூய தமிழ இனத்தார் தம்மை விசுவப்பிராமண ரென்றும், வன்னியகுலச் சத்திரிய ரென்றும் தனவைசிய ரென்றும் சற்சூத்திர ரென்றும் கூறிக்கொள்வதையும் நோக்குக. 4. தமிழ்ச் சான்றோர்க்கு வாழ்வின்மை ``அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை''. ஆகையால். பண்பாடே உருவான தமிழ்ச் சான்றோர்க்குத் தாங்கலிராமையால் வாழ்நாள் குன்றி மாய்வர். அதோடு, இந்திக்கு மாறானவ ரெல்லாரும் தேய இரண்டக ரென்றும் தீர்க்கப்பட்டுக் கடுந்தண்டனைக் குள்ளாவர். மறைந்துபோன தவத்திரு மறைமலையடிகளிடம் ஓர் அரசியல் தூதர் சென்று, ``நீங்கள் கட்டாய இந்தியை ஏற்றுக் கொண்டால் ஆயிரம் உருபாச் சம்பளமுள்ள பேராசிரியப் பதவி கிடைக்கும் என்றார். அதற்கு அடிகள் ``பத்தாயிரம் உருபாச் சம்பள மாயினும் கட்டாய இந்தியை ஏலேன்'' என்று கடுத்து விடை யிறுத்துவிட்டார்கள். தவத்திரு மறைமலையடிகளைப் பொதுமக்களும் போற்ற வில்லை; பொருள்மக்களும் போற்றவில்லை; அரசியலும் போற்ற வில்லை; (ஆரியப்) பல்கலைக்கழகங்களும் போற்றவில்லை. அதனால் நூறாண்டு வாழ வேண்டிய அடிகள் 75ஆம் அகவையில் மறைந்தார்கள். 5. தமிழின மறைவு தமிழின்றேல் தமிழனில்லை. ஆதலால் தமிழ் அழியின் தமிழ் என்னும் இனமும் நாளடைவில் மறைந்துபோம். இந்திய ரெல்லாரும் இந்தியாராகவே யிருப்பர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளிற் பெரும்பான்மையிடங்கள் இந்தி மாணவர்க்கே அளிக்கப்பெறும். அதனால் அலுவல்களிற் பெரும் பான்மையும் அவர்க்கே போம். IV. இந்திப் போராட்டம் 1. முதற் போராட்டம் பேராயக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் 1937ஆம் ஆண்டு ஆச்சாரியாராற் சென்னை மண்டலத்தில் இந்தி புகுத்தப் பட்டது. jŤjÄiH¥ òJ¥ã¤j jÄœ¤jiytuhd jt¤âU kiwkiyaofŸ ``ïªâ bghJbkhÊah?'' என்னும் இந்தி யெதிர்ப்பு நூலை வெளியிட்டார்கள். `சுயமரியாதை' என்னும் தன்மானக் கட்சித் தலைவரான பெரியார் இந்தியை வன்மையாய் எதிர்த்தார். இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள், ஊர்வலங்கள் ,மாநாடுகள், மறியல்கள், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் திருமுகங்கள், இதழிகைக் கட்டுரைகள், சுவடிகள், பாடல்கள், பல்லிலக்கக் கையெழுத்துப் பட்டியல் விடுப்புகள், குறிப்புப் படங்கள், சின்னக்குறி யணிவுகள், இந்திப்பலகைக் கரிநெய்ப் பூச்சுகள், இந்தியரக்கி யெரிப்புகள்ஆகிய பல்வேறு செயல்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து தமிழ்நாடெங்கணும் நடைபெற்றன. திருச்சிராப்பள்ளியினின்று சென்னைவரை இருநூறு இந்தி யெதிர்ப்புத் தொண்டர்படைக் கால்நடைச் செலவும் நிகழ்ந்தது. அதன் தொடர்பாகச் சென்னைக் கடற்கரையிற் கூட்டிய மாபெருங் கூட்டத்தில், தவத்திரு மறைமலையடிகள் நள்ளிரவுவரை இந்தித் திணிப்பை வன்மையாய்க் கண்டித்துப் பேசினர். இந்தியெதிர்ப்பாற் பெரியாரும் புலவர் உட்பட ஆயிரக்கணக் கான தொண்டரும் சிறைசென்றனர். அற்றைத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியரான நாவலர் சோம சுந்தர பாரதியார், கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர் தன்னலப் பிண்டங்களும் தமிழ்ப்பகைவருமான இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் போலாது, இந்தியெதிர்ப்புப் போர்க்களத்தி லிறங்கி அரிமாக்கள்போல் உறழினர் (கர்ச்சித்தனர்). ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த அடிகள் முதலிய துறவியரும் இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் ஆழ்ந்து ஈடுபட்டனர். ஆயினும், பேராயக் கட்சி பெரும்பான்மையா யிருந்த தினாலும், போராட்டத் தொடர்ச்சிக்கு வேண்டும் பொரு ளின்மையாலும். வெளிப்படையான இந்தியெதிர்ப்பு நாளடைவில் நின்றுவிட்டது. தூய தமிழர் உள்ளத்தில்மட்டும் உணர்ச்சி கொதித்துக் கொண்டிருந்தது. மறைமலையடிகளைப் பின்பற்றாமை தமிழ்நாடு மறைமலையடிகளைப் பின்பற்றித் தனித்தமிழைப் போற்றாமையும், இந்தியெதிர்ப்புப் போராட்டத் தோல்விக்கு ஒரு கரணியமாம். தன்மானக் கட்சித் தலைவர் மட்டுமன்றித் தமிழ்ப் பேராசிரியரும் வடசொற்பெயரையே தாங்கிநின்றனர்; தமிழ்ப் பகைவரால் தொகுக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியும் 1936ஆம் ஆண்டு வெளிவந்துவிட்டது. அதில் ஆயிரக் கணக்கான தென்சொற்கள் இடம்பெறவில்லை; அடிப்படையும் முதன்மையுமான தென்சொற்களெல்லாம் வட சொற் றிரிபாகக் காட்டப்பட்டுள: ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொற்கள் இடம்பெற்றுள. அவற்றுள் இந்திச் சொற்களும் உள்ளன. அவற்றுள் இரண்டு டர் (அச்சம்), லக்கடி (விறகு) என்பன. அவ் வகரமுதலி முழுவதையும் பார்த்த அயலார், தமிழ் வடமொழியின் கிளை என்ற முடிபிற்குத்தான் வரமுடியும். ஏற்கெனவே, சமற்கிருதம் இந்திய மொழிகட்கெல்லாம் தாயென்று தவறாக எண்ணிக்கொண்டிருந்த வடவர், இந்திச் சொற்களையும் சென்னைத் தமிழகரமுதலியிற் கண்டபின், இந்தியெதிர்ப்பு பிராமணர்க்கு மாறான நயன்மைக் கட்சித் தூண்டுதலின் விளைவே யென்று கருதிவிட்டனர். அதனால், இந்திவெறியரின் இறுமாப்பு இறுகி முறுகிவிட்டது. 1949-ல், இந்தியே இந்தியப் பொதுமொழி யென்று நெறியிட்ட இந்திய அரசியலமைப்பு வெளிவரலாயிற்று. gšyh©o‰F¥ã‹, ïªâa¥ bghJbkhÊ M§»y khfnt ÆU¡fnt©L bk‹W âU.(C).ïuhrnfhghy¢rhÇah® கிளர்ச்சி செய்தார். அதன் பயனாக நேரு உறுதிமொழி பிறந்தது. அது அவர்க்குப்பின் வந்த தலைமை மந்திரியான இலால்பகதூர் சாத்திரியாராலும் வலியுறுத்தப் பெற்றது. ஆயின், நேரு காலத்தி லேயே அது சட்டமாக்கப் பெறாமையாலும், அது தம் சொந்தக் கருத்தென்று கூறி அவரே பின்வாங்கிவிட்டமையாலும், அவர் காலத்திலேயே அதன் வலிமை சற்றுக் குன்றிவிட்டது. நேரு உறுதிமொழி தமிழ்நாட்டிற்குப் பயன்படாமை நேரு உறுதிமொழி கேரளம், மைசூர் (கருநாடகம்), ஆந்திரம் என்னும் திரவிட நாடுகட்குப் பயன்படுமேயன்றித் தமிழ்நாட்டிற்குப் பயன்படாது. கால்டுவெலார் அயல்நாட்டினராதலாலும், முதன்முதலாகத் தமிழையும் அதன் இனமொழிகளையும் ஆய்ந்தமையாலும், தொல்காப்பியத்தையுங் கடைக்கழக நூல்களையுங் காணாமை யாலும், தமிழொடு திரவிட மொழிகளையுஞ் சேர்த்து ஓரினமாகக் குறித்துவிட்டார். மறைமலையடிகளாற் குமரித் தமிழ் புதுப்பிக்கப் பெற்றபின், தமிழ் வேறு, திரவிடம் வேறு என்பது தெள்ளிதாயிற்று. தொல்காப்பியத்தொடு ஒரு திரவிட இலக்கண நூலை, அல்லது எட்டுத்தொகையுள் ஒன்றொடு ஒரு திரவிடப் பனுவலை ஒப்பு நோக்கிக் காண்க. பால் பிரைக்கலப்பால் தயிராகத் திரிவதுபோல், திராவிட மொழிகளும் வடசொற் கலப்பாலும் வல்லொலியாலும் அரை யாரிய வண்ணமாக மாறிவிட்டன. தயிர் மீண்டும் பாலாகாதது போல், திரவிடம் மீண்டும் தமிழாகா. வடசொல் சேரச் சேரத் திரவிடம் உயர்வாம்; அது தீரத்தீரத் தமிழ் உயர்வாம். வடசொற் சேர்க்கையாலேயே திரவிடமொழிகள் மொழிநிலை பெற்றுள்ளன. வடசொல் நீங்கிவிடின் அவை கொடுந்தமிழ் நிலைப்படும். தெலுங்கின் வடசொற் கலப்பினாலேயே அரசவயவர் அண்ணாமலைச் செட்டியார் தியாகராசக் கீர்த்தனைகளைத் தமிழ்நாட்டு இசையரங்கினின்று விலக்கச் சொன்னார். ஆகாசவாணி என்பதை வானொலி என்று மாற்றத் தமிழ்நாட்டிற் கிளர்ச்சி நிகழ்ந்ததேயன்றித் திரவிடநாடுகளிலன்று. வடசொற் கலவாது தமிழிற் கட்டுரையும் நூலும் வரையவியலும்; அது திரவிட மொழி களில் இயலாது. வடமொழி யெதிர்ப்புத் தமிழ்நாட்டி லுண்டு; திரவிட நாடுகளில் இல்லை. இந்தியெதிர்ப்பும் தமிழ் நாட்டிற்போல் அங்கு வலிமையாய் நிகழ்வதில்லை. ஏனெனின், இந்தியாட்சியைத் தள்ளிவைக்க வேண்டுமென்பதே திரவிடர் வேண்டுகை. நேரு உறுதிமொழி, இந்திபேசா நாடுகள் இந்தியாட்சியை விரும்பும்வரை ஆங்கிலம் தொடரலாமென்றும், அதற்குள் இந்தியை மேன்மேலுங் கற்றுத் தேர்ச்சி பெறவேண்டுமென்றும், கூறுகின்றதே யொழிய, இந்தியை நீக்கவேண்டுமென்றும், ஆங்கிலத்தை நிலைப் படுத்த வேண்டுமென்றும் கூறவில்லை. நேரு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க. கூறுவது போன்றே தமிழ் நாட்டுப் பேராயமுங் கூறுகின்றது. இரண்டிற்கும் வேறுபாடு மிகச் சிறிதே. இந்தி வெறியர் இந்தியை உடனே அரசியல் மொழியாக்க வேண்டும் என்கின்றனர்; தமிழ்நாட்டுப் பேராயம் சற்றுப் பிந்தியாக்க வேண்டுமென்கின்றது; தி. மு. க. மிகப் பிந்தியாக்க வேண்டுமென்றது. இது, ஒருவனுக்குச் சாவு, இன்றே வரட்டும் என்று ஒருசாராரும், நாளை வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை நின்று வரட்டும் என்று ஒரு சாராரும் கூறுவதொத்ததே. தமிழ்நாட்டிற்கு இந்தி கூடாது என்பதே தமிழறிஞர் கொள்கை. இந்தி பிந்திவரினும் இன்றே வரினும் தமிழ்நாட்டிற்கு ஒன்றே. ஆரியங் கலந்த திரவிடமொழிகள் தென்மொழியின் செத்த கூறுகள். தமிழ் ஒன்றே உயிருள்ளது. ஆதலால், இந்தி வந்தால் திரவிடத்திற்குக் கேடில்லை; தமிழுக்கோ இறப்புண்டாம். இதை யறியாத திரவிடர் இந்தியை எதிர்க்கும் தமிழரைக் கண்டிப்பது அறியாமையொடுகூடிய அடிமைத் தனமே. (ii) இரண்டாம் போராட்டம் 1965ஆம் ஆண்டு சுறவம் 13ஆம் பக்கல்(26,சனவரி) மக்க ளாட்சி நாளன்று இந்தி இந்திய அரசியன் மொழியாக வேண்டு மென்று முந்தியே திட்டமாகிவிட்டதால், மாணவர் அதற்கு முந்தின நாளே கிளர்ச்சி தொடங்கினர். அவர் இந்தி யெதிர்ப்பு அமைதியாக வும் சட்டத்திற் குட்பட்டும் தொடங்கினும், பேராய வெறியரின் வன்செயலும், பதின்மர் தீக்குளிப்பிற்கும் இரங்காத திரு. பத்தவச்சல னாரின் கன்னெஞ்சமும் அவர்க்குச் சினமூட்டின. அதனால் அவரிளமை யுணர்ச்சி பொங்கியெழுந்து அவரையும் வன்செயலில் ஈடுபடுத்திற்று. அதைக் குறும்பரும் குமுகாயப் பகைவரும் பயன்படுத்தி நாட்டுடைமைக்குப் பெருஞ்சேதத்தை விளைத்து விட்டனர். உடனே திரு. பத்தவச்சலனார் தம் அதிகாரத்தாற் கலகத்தைப் படைகொண்டடக்கி நடுவணரசின் பாராட்டையும் இந்தியாரின் எடுத்தேத்தையும் பெற்றார். அடுத்த பைதிரங்களி லிருந்து வந்த ஆயிரக்கணக்கான ஊர்காவலரைத் துணைக்கொண்டு தமிழ்நாட்டு ஊர்காவலரும் தம் புறக்கரண ஆற்றல் முழுமையையுங் காட்டி விட்டனர். கலகத்தொடு வெளிப்படை யிந்தியெதிர்ப்பும் அடங்கிற்று. ஆனைமுகவரைப் பிடித்த கலி அரசமரத்தையும் பிடித்தது போல், மாணவரொடு கல்லூரியுள் நின்ற விரிவுரையாளர் முதல்வர் முதலியோரும் நையப் புடையுண்டனர். ஆசிரியர் தம் தகுதி நோக்கி அதை முற்றும் மறந்துவிட்டாரேனும்,மாணவர் அதை மறவா திருந்து 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பழிக்குப் பழிவாங்கிப் பேராயத்தை வீழ்த்தியதுடன், காட்சிக் கரியராயிருந்த திரு. பத்தவச்சலனாரையும் காட்சிக் கெளியராக்கி விட்டனர். தி. மு. க ஆட்சியேற்றது. திரு. அண்ணாதுரையார் முதலமைச் சரானார். பெரும்பான் மக்கள் மகிழ்ந்தனர். ஆயின், பேராயத் தார்க்குக் காழ்ப்பேறி மெல்ல மெல்ல வெளிப்பட்டது. தமிழ்நா டுள்ளிட்ட எட்டுப் பைதிரங்களிற் பேராயம் தோல்வியடைந்ததினாலும், அவற்றுள் அனைத்திந்தியப் பேராயத் தலைவரும் நடுவண் மந்திரிமாரும் நாட்டு முதலமைச்சரும் அவர் துணைவருள் ஒருவர் தவிர எல்லாரும் மண்கௌவிய சென்னைப் படுதோல்வியால் இந்தியெதிர்ப்புக் கட்சி ஆட்சிக்கு வந்ததினாலும், இந்தி வெறியரும், நடுவணரசினரும் தமிழ்நாட்டு இந்தியாசிரியரும் இந்தி யென்னாமோவெனத் திகிலடைந்திருந்தனர். திரு. அண்ணா துரையார் இந்தியை நீக்க அந் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனாலும், பேராயம் ஆட்சியிழந்த சில பைதிரங் களிற் கூட்டுக் கட்சியாட்சி தோல்வியுற்றதினாலும், நடுவணரசியலார் சில மாதங்கட்குப்பின் அச்சந் தெளிந்து இந்தியைப் புகுத்த மீண்டும் திடங்கொண்டு விட்டனர். நடுவணரசு இந்தி புகுத்தத் துணிவூட்டிய நிலைமைகளாவன: (1) ஆங்கிலர் இந்திய ஆட்சியை ஆரியச்சார்பான பேராயத்திடம் ஒப்படைத்தமை. (2) தென்னாட்டு நயன்மைக் கட்சிப் படுதோல்வி. (3) தமிழ்நாட்டுப் பேராயத் தமிழ்த் தலைவரின் அடிமைத் தனம். (4) தமிழ்ப் பொதுமக்களுள் நூற்றுக்குத் தொண்ணூற் றுவர் தற்குறிகளாயிருந்தமை. (5) முதல் இந்தியெதிர்ப்பு நின்றுவிட்டமை. (6) இந்திய அரசியலமைப்புக் காலத்தில் இந்தியை எதிர்க்காமை. (7) எல்லாப் பள்ளிகளிலும் இந்தி புகுத்தப்பட்டமை. (8) திரு. சி. சுப்பிரமணியனார் கல்வியமைச்சராயிருந்த காலத்தில், அவரது மும்மொழித் திட்டத்திற்குத் திரு. அண்ணாதுரையார் உடம்பட்டமை. (9) பேராய ஆட்சி இருபதாண்டு தொடர்ந்தமை. (10) பேராயம் என்றும் தோற்காதென்னும் இறுமாப்பு. (11) தென்னிந்திய இந்தி பரப்பற் கழகப் பணி மேன்மேலும் பெருகிவந்தமை. (12) இந்திய இந்தித் திரைப்படங்களுட் பெரும்பாலன தமிழ்நாட்டில் உருவாதல். (13) சென்னைப் பல்கலைகழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தாமை. (14) 1967-ல் திரு. அண்ணாதுரையார் ஆட்சியேற்றவுடன் இந்தியை நீக்காமையும் மும்மொழித் திட்டத்தை யேற்கப் பிற பைதிரங்களையும் தூண்டியமையும். (15) 1958-ல் திரு. அண்ணாதுரையார் தம் பாராளுமன்ற முதற்பேச்சிலேயே இந்தியெதிர்ப்புக் கொள்கையைத் தளரவிட்டமை. (16) திரு. அண்ணாதுரையார் நேரு உறுதிமொழியை நிறைவேற்றினாற் போதும் என்றமை. (17) 1967-ல் இறுதியில் இந்திய ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் இந்தியார்க்குச் சார்பாக மாற்றப்பட்டபோது அதை வன்மையாக எதிர்க்காமை. (18) கோலாலம்பூரிற் போன்றே சென்னையிலும் வையா புரிகள் கூட்டம் உலகத் தமிழ் மாநாட்டுக் கருத் தரங்கை நடத்தித் தமிழைப் பழிக்கவிட்டமை. (19) தமிழைத் திரவிடத்தின்று பிரித்தறியாமை. (20) இயன்றவரை தமிழ்த் தூய்மை பேணாமை. (21) தி.மு.க. அரசு இந்தி நீக்கத் தீர்மானம் தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பின்பும் அதில் முழுவுறுதியாய் நிலைத்து நில்லாமை. (22) இந்தியார்க்குச் சார்பாக அமைந்திருக்கும் அரசிய லமைப்புத் திருத்தப் பெறாமை. (23) இந்திச்சார்பான நடுவணரசிடம் இந்தியப்படை யிருத்தல். (24) தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் இன்றும் இந்திச் சார்பாயிருத்தல். (25) தமிழ்நாடும் வங்கமும் தவிர எல்லாப் பைதிரங்களும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டமை. (iii) மூன்றாம் போராட்டம் 1967 இறுதியில், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருள் இந்தியாரின் பெரும்பான்மையை நேர்மையில்லாவகையிற் பயன் படுத்தி இந்தியார்க்குச் சார்பாக மாற்றப்பட்ட நேரு உறுதி மொழியும், அதனுடன் இணைக்கப்பட்ட மொழிக்கொள் கைத் தீர்மானமும், நிறைவேற்றப்பட்டதின் விளைவாக மூன்றாம் இந்தி யெதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டு மாணவரிடை எரிமலைக் கொதிப்புப்போற் பொங்கிக் கிளர்ந்து நாடுமுழுதும் பரவியது. முப்போராட்டங்களுள், முதலது பெரியோராலும் பொது மக்களாலும், இடையது மாணவராலும் பொதுமக்களாலும், இறுதியது முற்றும் மாணவராலும் நடத்தப் பெற்றனவாகும். இம் மூன்றும் வலிமையில் முறையே ஒன்றினொன்று வளர்ந்து வந்தன வாகும். இரண்டாம் போராட்டச் சிறப்பு நிகழ்ச்சி நடுவிளம் பருவக் கட்டுடம்பினர் பதின்மரின் தீக்குளிப்பெனின், மூன்றாம் போராட்டச் சிறப்புநிகழ்ச்சி மூவரசினர் கல்லூரியில் தற்சார்பு தமிழகக் கொடி யேற்றியதாகும். புலிவேட்டைக்குச் சென்ற புது வேட்டுவன் புலித்தடங் கண்டு அஞ்சி ஓடி வந்துவிட்ட கதைபோல், இந்தியெதிர்க்கத் தில்லி சென்ற சென்னை இந்தியெதிர்ப்பு மாணவரும் தேசியப் பேராய மாணவர் போன்றே நேரு உறுதிமொழியை நிறைவேற்றினாற் போதுமென்று கூறிக் கோட்டைவிட்டுத் திரும்பிவிட்டாரேனும், இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிரும் மாபெரும் படையொடு தன்னை இளைஞனென இகழ்ந்து எளிதாய் வெல்ல வந்தபோது, எட்டுணையும் அஞ்சாது எதிர்சென்று அட்டுவென்ற பைந்தமிழ் மறவரேறு பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மதுரை கோவை மாணவரும், அவரைப் பின்பற்றின நெல்லை சேல நீலமலை மாணவரும், சென்னைப் புதுக்கல்லூரி மாணவரும், இந்தி ஒழிந்தாலெழியப் போரை விடோம் எனக் கிளர்ந்தெழுந் தாரவாரித்தனர். தக்க சமையத்தில் முதலமைச்சர் திரு. அண்ணாதுரையார் சென்னைச் சட்டப்பேரவையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதனால், மாணவர் இந்தியெதிர்ப்பு உடனே அடங்கிற்று. அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் மழை நின்றபின் தொடர்ந்த தூவானமே. வடநாட்டு ஊர்காவற்படையும் பொருநர் படையும் வருவிக்கப்படாமலும் ஒருவரும் சுட்டுக் கொல்லப் படாமலும், மூன்றாம் இந்தியெதிர்ப்புப் போராட்டம் அடக்கப் பட்டது, தி. மு. க. அரசிற்குப் பாராட்டிற்குரிய வெற்றியே. V. பல்வேறு செய்திகள் காமராசர் வீண் முயற்சி இந்தியெதிர்ப்பு முற்கூறியவாறு, விரைந்து புகுத்துவதை எதிர்ப்பதும் வரையறவாய் எதிர்ப்பதும் என இருவகை. இவ் விரண்டுள் முன்னது திரவிடரது; பின்னது தமிழரது. காமராசர் தமிழராயினும். இந்தியைப் புகுத்தும் பேராயக் கட்சியைக் சேர்ந்த வராதலின், திரவிடர் கொள்கையினரே. இந்தியை வரையறவாய் எதிர்ப்பவரும், ஆங்கிலப் பற்றினால் எதிர்ப்பவரும் தமிழ்ப் பற்றினால் எதிர்ப்பவரும் என இரு சாரார். தமிழ்ப்பற்றா லெதிர்ப்பவர் தூய தமிழர்; ஆங்கிலப் பற்றா லெதிர்ப்பவர் தமிழ்நாட்டிலும் திரவிடநாடுகளிலும் உள்ள ஆங்கில அறிஞர். இந்தியை எதிர்க்கும் வங்கநாடு வடநாடுகளுள் தனிப்பட்டது. அந் நாட்டாருட் பெரும்பாலார் தாய்மொழிப் பற்றும் சிறுபாலார் ஆங்கிலப் பற்றுங் கொண்டு இந்தியை யெதிர்ப்பதாகக் தெரி கின்றது. வங்கமொழி தமிழ்போல் ஆரியச் சார்பற்றதும் ஆரியத்திற்கு மூலமான உயர்தனிச் செம்மொழியன்றாதலின், தாய்மொழிப்பற்றுக் கரணியமாக இந்தியை எதிர்ப்பாருள்ளும், வங்கர்க்கும் தமிழர்க்கும் முனைப்பளவிற் பெரிதும் வேற்றுமையுண்டு. காமராசர் பதினாறாட்டைப் பருவத்திலேயே பேராயத் தொண்டர் படையிற் சேர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. அவர் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குமேற் கல்லாமையால், அவர்க்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையோ பற்றோ இருக்கமுடியாது. திரு. வி. க. போன்றோரின் நெருங்கிய தொடர்பும் அவர்க் கிருந்த தாகத் தெரியவில்லை. தமிழ் வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் அவர் அறியாமையால், ஆங்கிலராட்சி அடிமையாட்சி யென்றும், அதனால் தீமையேயன்றி நன்மை யில்லையென்றும், ஆங்கிலர் நீங்கியவுடன் தமிழ்நாடு விடுதலை பெற்றுவிட்ட தென்றும் தமிழ் நாட்டிற்குத் தாம் செயற்கரிய தொண்டு செய்துவிட்டதாகவும், தவறாகக் கருதிக்கொண்டிருக்கின்றார். அவர் செய்த சிறப்புத் தொண்டெல்லாம் திரு. இராசகோபாலாச் சாரியார் புகுத்தவிருந்த பிறவிக்குலத் தொழின்முறைத் துவக்கக் கல்வியைத் தடுத்ததே. அதற்கும் கரணியம் நயன்மை(நீதி)க் கட்சித் தலைவர் கால் நூற்றாண்டாகச் செய்துவந்த குடிசெயல்தொண்டே. அந் நயன்மைக் கட்சித் தொண்டிற்கும் கரணியமாயிருந்தவை ஆங்கிலராட்சியும். ஆங்கிலக் கல்வியுமே. ஒரு நாடு முன்னேறுவதற்கு, அந் நாட்டு வரலாறும் மொழி வளர்ச்சியும் மக்களொற்றுமையும் இன்றியமையாதனவாம். தமிழ் நாட்டில் இம் மூன்றிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது ஆரியமே. தமிழ்நாட்டுப் பேராயம் ஆரியத் தலைமையில் தோன்றியமையாலும், இன்றும் தமிழர்க்கும் தமிழுக்கும் மாறான மொழித் திட்டமே கொண்டிருப்பதாலும், அக் கட்சியைச் சேர்ந்தவர் தமிழராயினும் உட்பகையாகவே கருதப்படுவர். ``பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பும் இல்லது நாடு'' (குறள். 735) ``நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்'' (குறள். 881) ``அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு(து) உட்பகை யுற்ற குடி'' (குறள். 88) ``உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று'' (குறள். 890) திரு. காமராசர் பேராயத்தாலேயே முன்னேற்றமும் தலைமையும் அடைந்தவர். அக் கட்சியை விட்டு நீங்க அவர்க்கு விருப்ப மில்லை. அக் கட்சியி லிருப்பதற்கு இந்தியை ஏற்பது இன்றியமை யாதது. இளமையிலிருந்து ஆரியச் சூழலிற் பயின்றமையால் அவர்க்குத் தமிழ்ப் பற்றில்லாது போயிற்று; மேற்கல்வி யின்மையால் மொழிகளின் ஏற்றத்தாழ்வும் அவர்க்குத் தெரியவில்லை; அரசியலில் தலையிடாது எஞ்சிய காலத்தை அமைதியாய்க் கழிக்கவும் அவர் விரும்பவில்லை. ஆகவே, இந்திய ஒற்றுமையின் பேரால் தமிழ்நாட் டில் இந்தியைப் புகுத்தத் திட்டமிட்டிருக்கின்றார். இந்திய வொற்றுமை நல்லதுதான். ஆயின், அவ் வொற்றுமைக்கு இந்தியாரு மன்றோ இசையவேண்டும். "இந்தியா துண்டுபடினும் படுக. எங்கள் தாய்மொழியை ஏனை யிந்தியரெல்லாம் கற்றே யாகவேண்டும். ஆங்கிலம் இந்திய ஆட்சிய மொழியும் இணைப்பு மொழியுமாய்த் தொடரவிடோம்'' என்று அவர் ஒருதலையொட்டாரம் (Hobson`s Choice)brŒÆ‹, இந்தியால் தமிழ்கெடுமென்றஞ்சும் தமிழர் எங்ஙனம் இணங்கி வரமுடியும்? இந்தியால் தமிழ் கெடாது என்று திரு. காமராசர் சொல்வ துண்டு. அங்ஙனம் சொல்ல அவர்க்கு என்ன தகுதியுள்ளது? ஓர் உணவுப்பொருள் உடல்நலக்கேடான தென்று ஒரு நாட்டுத் தலைமை மருத்துவர் கூறின், அதற்கு மாறாக அப் பொருளை விற்கும் கடை காரன் அல்லது அவனுடைய வேலைக்காரன் சொல்லுவது செல்லுமோ? ïªâahš jÄœ bfLbk‹w¿ªnj `ïªâ bghJ bkhÊah?` என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை; பற்றும் புலமையும் அற்ற மற்றவருக்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை? இனி, இந்தியால் தமிழ் கெடாது என்பதற்கு, ``ஆங்கிலம் வந்ததே! அதனால் தமிழ் கெட்டதா? அதுபோல் இந்தி வந்தாலும் தமிழ் கெடாது'' என்று திரு. காமராசர் எடுத்துக்காட்டுகின்றார். ஆங்கிலம் நமக்கு இன்றியமையாத அறிவியன் மொழியாய் வந்தது. ஆதலால் நாம் அதை விரும்பிக் கற்றோம், கற்கிறோம், கற்போம். இந்தி நமக்குத் தேவையானதன்று. அதைக் கற்கச் செலவிடும் காலமும் முயற்சியும் பணமும் வீணே. மேலும், ஆங்கிலம் தமிழைக் கெடுக்கவேண்டும் என்றோ, தமிழனை அடிமைப்படுத்த வேண்டு மென்றோ வரவில்லை. தமிழைக் கருத்தால் வளம்படுத்தவும் தமிழனை அறிவால் மேம்படுத்தவுமே அது வந்தது. இந்தியோ நாளடைவில் தமிழை வழக்கு வீழ்த்தித் தமிழப் பொதுமக்களின் பேச்சுமொழியாக வேண்டுமென்றும், தமிழர் என்றும் இந்தியார்க்கு ஆட்பட்டிருக்க வேண்டுமென்றும், தீய நோக்கத்துடனேயே புகுத்தப்படுகின்றது. ஆங்கிலம், ஒருகாலும் இந்திபோற் பொது மக்கள் பேச்சாக முடியாது என்று இந்தியாளர் கூறுவதினின்றே அவர் அடிப்படை நோக்கத்தைப் பகுத்தறிவாளர் அறிந்து கொள்ளவேண்டும். இது உய்த்துணருங் கூர்மதியை வேண்டாத வெளிப்படைக் கூற்றே. ஆங்கிலர் தமிழை விரும்பிக் கற்று அதன் சிறப்பை அவரே நமக்கு எடுத்துக்காட்டினர். தமிழைத் தூய்மையாய்ப் பேசவேண்டு மென்பதே அவர் கருத்து. தமிழர்தாம் ஆங்கிலச் சொற்களை வேண்டாது (அனாவசியமாய்) தமிழிற் கலந்து பேசிவருகின்றனர். அதோடு சென்னையை `மெட்றா` என்று ஆங்கிலப் பெயராலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி முதலிய நகரப் பெயர்களை ஆங்கில வொலிப்பாலும், குறிப்பது உயர்வென்று கொண்டு மொழித்துறையில் மிக இழிந்தநிலை யடைந்துள்ளனர். ஆங்கிலர் தமிழைக் கெடுக்காதபோதே, தமிழர் தாமாக ஆங்கிலச்சொற் கலந்து பேசுவாராயின், இந்தியார் தமிழை ஒழிக்க வேண்டுமென்றே இந்தியைப் புகுத்தும்போது, தாய்மொழிப்பற்றற்ற (மாபெரும்பான்மையரான) போலித்தமிழர் எத்துணை இந்திச் சொற்களை இந்தியார் மனமகிழக் கலந்து பேசுவர்! ``இந்தியார் ஆங்கிலம் கற்பதுபோல் தமிழரும் இந்தி கற்க வேண்டும். தமிழர் இந்தியை வெறுப்பின் இந்தியர் ஆங்கிலத்தை வெறுப்பர். அதனால் ஓற்றுமை கெடும்; இந்தியா சின்னபின்ன மாய்ச் சிதைந்துபோம். ஆதலால் தமிழர் இந்தியைக் கற்கவேண்டும்'' என்பது, எத்துணைப் பகுத்தறிவிற் கொவ்வாக் கூற்றாம். இக்கால நாகரிக வாழ்விற்கு இன்றியமையாத ஆங்கிலத்தைக் கல்லாது இந்தியார் தாமே தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள விரும்பின். அதைத் தடுக்கத் தமிழர் ஏன் இந்திக் கல்வித் தண்டனை யடையவேண்டும்? செல்லப்பிள்ளை முரண்டு கொண்டு சோறுண்ணாவிடின், பித்துக்கொண்ட பெற்றோர் அதைச் சோறுண்ண வைக்கும்படி அது கேட்டதை யெல்லாம் கொடுப்பர்; சொன்ன படியெல்லாம் செய்வர். ஆயின், பிறர் அங்ஙனம் செய்வரோ? தமிழ்நாடு பிரியினும் பிரிக, நாங்கள் ஆங்கிலங் கல்லோமென்று இந்தியாரே ஒற்றுமையைக் குலைத்துப் பிரிவினைக்குத் தூண்டும் போது, தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் ஏன் இந்தியாவையே படைத்துக் காத்து வந்தவர்போல் தம் தலையில் இடித்துக் கொள்ள வேண்டும்? இதனால், தமிழ்நாட்டை இந்தியார்க்குக் காட்டிக் கொடுத்தே அவர் தம்மை உயர்த்திக் கொண்டமையும், அவ் வுயர்பதவியிலேயே இறுதிவரை நிலைத் திருக்க அவர் விரும்புவதும், தெள்ளத் தெளிவாய்த் தெரிகின்றன வன்றோ? இந்திய ஒற்றுமைக்கும் இந்தியை ஏன் தமிழர் கற்கவேண்டும்? போக்குவரத்து, தற்காப்பு, காசடிப்பு, வெளிநாட்டுறவு ஆகிய நான்கும் நடுவணாட்சிக் குட்பட்டிருப்பதே ஒற்றுமையைக் காத்துக் கொள்ளுமே! ஒற்றுமை குலையாதபோதும் தமிழர் இந்தியைக் கற்றுத்தான் ஆகவேண்டுமெனின் அது அவரை அடிமைப்படுத்த வேண்டும் என்பதையன்றோ காட்டுகின்றது! மேலும், ஆங்கிலங் கல்லாது தாழ்வடைந்து இடர்ப்பட்ட பின், பசித்த பிள்ளை சோறுண்பதுபோல் இந்தியார் தாமே ஆங்கிலங் கற்கத் தொடங்குவர். தமிழ்நாட்டு அல்லது தென் னாட்டுப் பேராயத்தலைவர் தம் சார்பாயிருக்கின்றன ரென்று கண்டுகொண்டே, இந்தியார் ஒரே பிடியா யிருக்கின்றனரேயன்றி வேறன்று. தமிழரும் திரவிடருமோ அல்லது தமிழர் மட்டுமோ கருத்து வேறுபாடின்றி எல்லாரும் ஒற்றுமையாயிருப்பின், இந்தியார் இங்ஙனம் முரண்டுசெய்யார். இனி, பாராளுமன்ற மொழிக்கொள்கைத் தீர்மானத்தினால் இந்தியார்மேலும் ஏனையர்மேலும் விழுந்துள்ள கல்விச்சுமையைச் சமப்படுத்த வேண்டுமென்னும் கூற்று, பகுத்தறிவில்லார்க்கும் பரமார்த்த குரு மாணவர்க்குமே ஏற்கும். இந்தியார் இந்தியை ஒரே இந்திய ஆட்சிமொழியும் இணைப்பு மொழியு மாக்கவேண்டு மென்பதை எவ்வகையிலும் மாற்றொணாக் கொள்கையாகக் கொண்டிருக்கும்போது, வடக்கும் தெற்கும்போல் நேர்மாறாக வேறுபட்டிருக்கும் இருசாராரையும் எங்ஙனம் ஒப்புரவாக்க இயலும்? நிலவரைப்பு ஒன்றாயிருந்தால்மட்டும் போதுமோ? தவளை தண்ணீர்க்கும் எலி திட்டைக்கும் இழுக்கும்போது, இரண்டையும் இணைக்கும் கயிற்றால் என்ன பயன்? வண்டியிற் பூட்டிய இரு காளைகளுள் ஒன்று வடக்கும் ஒன்று தெற்குமாக இழுக்கும்போது, இரண்டையும் இணைக்கும் நுகக்கோலால் என்ன பயன்? இந்தி இந்தியார்க்குத் தாய்மொழி; அதை எளிதாய்க் கற்றுத் தேர்ச்சி பெறுவார். ஆங்கிலம் மேற்கல்விக்கும் மொழிபெயர்ப் பிற்கும் வெளிநாட்டுச் செலவிற்கும் பெரும்பதவிப் பேற்றிற்கும் அவர்க்கு இன்றியமையாதது. ஆகவே, ஆங்கிலம் ஒன்றே அவர் கற்க வேண்டிய அயன்மொழி. அதைக் கற்றாற் பெரும்பயன்; கல்லாக்காற் பேரிடர்ப்பாடு, தமிழர்க்கோ இந்தி தேவையில்லா அயன்மொழி; ஆங்கிலம் இன்றியமையாத அயன்மொழி. ஆகவே ஈரயன் மொழி யொடு தமிழுஞ் சேர்ந்து மும்மொழியாகும். மேலும் இந்தி அடிமைப் படுத்துவது; ஆங்கிலம் பெருமைப்படுத்துவது. இங்ஙனம் இரு மொழியும் மும்மொழியுமாயும், இன்றியமையா மொழியும் தேவை யில்லா மொழியுமாயும், பெருமைப்படுத்தும் மொழியும் அடிமைப் படுத்தும் மொழியுமாயும்,ஓரயன்மொழியும் ஈரயன் மொழியுமாயும், இருசாரார் மொழிக் கல்வியும் வேறுபடும் நிலையில் ஏற்றத் தாழ்வான சுமையை எங்ஙனம் சமப்படுத்த வியலும்? இந்தியார்க்கு ஆங்கிலந் தேவையில்லை யென்பதும் அவர் அதைக் கல்லார் என்பதும், தென்னாட்டாரைத் தெம்மாடிக ளென்று கொண்டு கூறும் தித்திரிப்பும் தித்திருக்குமேயன்றி வேறன்று. மும்மொழித் திட்டத்தின் முழுப்புரட்டு இந்திச் சார்பான நடுவணரசியலார் மும்மொழித் திட்டத்தை வகுத்ததே இந்திபேசா நாடுகளில், இந்தியை மெல்ல மெல்லத் திணிப்பதற்குத்தான். தன்மானமற்ற தென்னாட்டுத் தன்னலப் பேராயத் தலைவர், அத் திட்டத்தை ஆரிய அடிமைத்தனத்திற்குப் பேர்போன திரவிட - தமிழ் மக்களிடை எள்ளளவும் எதிர்ப்பின்றிப் புகுத்திவிட்டனர். இம் மும்மொழித் திட்டம் இந்தியா முழுதும் ஒரு திறப்பட்ட தன்று. தென்னாட்டார்க்குத் தாய்மொழியும் ஆங்கில மும் இந்தியும்; இந்தி நாட்டார்க்கோ தாய்மொழியும் ஆங்கிலமும் ஏதேனுமொரு தென்னிந்திய மொழியும். ஆகவே, இந்தியார் தமிழையோ திரவிட மொழிகளுள் ஏதேனும் ஒன்றையோ மூன்றாம் மொழியாகத் தெரிந்துகொள்ளலாம். இதிலேயே வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டுவிட்டன. திரவிட மொழிகள் சொல் வளத்திலும் இலக்கிய விலக்கணத்திலும் தமிழுக்குச் சமமானவை யல்ல. தமிழைக் கற்பவருக்கு முயற்சி மிகுதியாக வேண்டியிருக்கும். அதற்குத் தமிழ்ப் பற்று வேண்டும். அதை இந்தியாரிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும் தென்னிந்திய மொழிகள் அவர்க்குப் பயன்படு பவையல்ல. இதனாலேயே அவர் மூன்றாம் மொழி கற்கவில்லை. அதனால் இந்தி நாட்டாரும் மும்மொழித் திட்டத்தைக் கைவிட்டனர். இன்று தென்னாட்டில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், ஏற்பட்ட இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சியின் விளைவாக, நடுவணரசியலர் மீண்டும் மும்மொழித் திட்டப் பல்லவியைப் பாடிவருகின்றனர். இந்தியை விரைந்து ஒரே இந்திய அரசியன் மொழியாக்காவிடின் பேராயத்தை விட்டு விலகிவிடுவோம் என்று இந்திவெறியர் கட்டுப்பாடாகக் கூறுவதால், பேராயக் கட்சியாராகிய நடுவ ணாட்சித் தலைவர் தம் பதவி போய்விடுமேயென்றஞ்சி, தந்நலம் பற்றி, இந்தி பேசா நாடுகளிலும் இந்தியைத் திணிக்கத் தீர்மானித்து மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ள வற்புறுத்துகின்றனர். இந்தி நாடுகளில் மாணவர், பொதுமக்கள், அரசினர் ஆகிய முத்திறத்தாரும் ஒற்றுமைப்பட்ட ஒரு கொள்கையர். அங்கு மும் மொழித் திட்டம் என்பது பெயரளவிலேயே இருக்கும். அடிமைத் தனத்தில் ஊறிப்போன தென்னாட்டார்தாம் மும்மொழித் திட்டத்தை உண்மையாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்தி இந்திய ஆட்சிமொழியாகவும் இணைப்பு மொழியாகவும் நிலைத்தபின், இந்தி நாடுகளில் மும்மொழித் திட்டம் பெயரளவிலுமிராது. தமிழர்க்கு இந்தி தேவையில்லை. இந்திக் கல்வியை வற்புறுத்த வற்புறுத்தத் தமிழர்க்கு அதன்மேல் வெறுப்புத்தான் மிகும். ஆங்கிலமோ தமிழ்நாட்டில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். ஆதலால், தாய்மொழியும் ஆங்கிலமும் கொண்ட இரு மொழித் திட்டமே எல்லா நாடும் மேற்கொள்ளத் தக்கதாம். கேரளம், மைசூர், ஆந்திரம் ஆகிய திரவிட நாட்டார் இந்தியை விரும்பின் மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ளட்டும். ஆயின், இந்தியார்க்கு முகவராகவோ கையாளராகவோவிருந்து தமிழ்நாட்டிலும் அதைப் புகுத்த முயல்வதை அடியோடு விட்டு விடுக. ஆரியத்தொடு கூடித் தயிர்போல் மாறியுள்ள திரவிட நிலையும், ஆரியக் கலப்பு வேண்டாது பால்போல் தூயதாகவுள்ள தமிழ் நிலையும், வேறுபட்டனவாம். இந்தியாரின் ஒட்டாரம் இதுவரை நிகழ்ந்து வந்த செய்திகளை நோக்கின், ஆரிய வெறியும் இந்தி வெறியும் ஒருங்கே கொண்ட வடநாட்டுப் பேராயத் தலைவர், தமிழ்நாடும் திரவிட நாடுகளுமாகிய தென்னாட்டுப் பேராயத் தலைவரின் ஆரியச் சார்பையும் அடிமைத்தனத்தையும் நன்கறிந்து, இந்தியை எங்ஙனமும் ஒரே இந்திய ஆட்சிமொழி யாகவும் இணைப்பு மொழியாகவும் திணித்துவிட வேண்டுமென்று திட்டமிட்டு, அடிநாளினின்றே கட்டுப்பாடாகவும் சன்னஞ்சன்ன மாகவும் இதற்கு வேண்டிய முயற்சிகளை யெல்லாம் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் இந்தி புகுத்தப்பட்டதிலிருந்து, தமிழர் என் னென்ன வகையில் தம் எதிர்ப்பைக் காட்டிவரினும், இந்தி வெறியர் அதை எள்ளளவும் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலமே இந்தியப் பொதுமொழியும் ஆட்சிமொழியுமா யிருக்க வேண்டுமென்று, பேரறிஞரும் பெருந்தகையரும் ஏரணமுறையில் எத்தனை ஏதுக் களை எடுத்துக் கூறினும், சிறிதும் செவிசாய்ப்பதும் கருதிப் பார்ப்பதுமில்லை. தமிழ்நாட்டார் இந்தியை ஏற்காவிடின் படையனுப்பி யடக்க வேண்டுமென்று, முதலில் ஒரு பொறுப்பற்ற இந்திக் கிறுக்கர் பிதற்றி யிருக்கின்றார். அண்மையில், பொறுப்பு வாய்ந்த துணைத்தலைமை மந்திரிப் பதவியிலிருக்கும் ஒருவர் திரு. காமராசருடன் இந்திபற்றி உரையாடும்போது, உறழ்ந்து சீறி, தமிழ்நாடு இந்தியை ஏற்காவிடின், படையனுப்பி மூவாண்டிற்கு மேலவர் ஆட்சியைப்புகுத்திவிடுவோம் என்று உறுமி யிருக்கின்றார். திரு. காமராசர் தமிழர் தன்மானத்தைக் காத்திருந்தால் அன்றே தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தொடங்கி யிருப்பார். நாடு முழுதும் அவரைப் பின்பற்றியிருக்கும். உலகம் போற்ற இறுதிவரை எதிர்ப்பில்லாத் தலைவராகத் தமிழ்நாட்டை ஆளும் நிலைமையை அடைந் திருப்பார். முதற்றரக் கொடுங்கோல் முட்டாள் முரடனென்று கருதப்படும் முகமது துகளாக்கும் சொல்லக் கூசியிருக்கும் சொற்களை, அறிவாராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிறுதியில், வடநாட்டில் ஒருவர் தமிழரை அடிமை யரெனத் தாழ்வாகக் கருதிச் சொல்லத் துணியின், வடிம்பலம்பநின்ற பாண்டியனும், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியனும், கனகவிசயர் தலையிற் கண்ணகி சிலைக் கல்லை யேற்றிக் கொணர்ந்த சேரன் செங்குட்டுவனும் ஆண்ட இத் தமிழகத்தில், மூத்தோரும் முதியோரும் நரம்பறுந்து நடுங்கிச் சாகினும் கட்டிளங்காளை யரான மாணவத் தமிழ்மறவர் மடங்கியொடுங்கி யடங்கிப் போவரோ? இந்தியை இந்தியப் பொதுமொழியாக்குவதற்கு நீண்டகால மாகத் தேசிய ஒற்றுமையை நோக்கமாகக் காட்டி வந்தவர், இன்று அக் கரணியம் ஒப்புக்கொள்ளப்படாமை கண்டு, வடவர் ஆங்கிலங் கற்பதால் தென்னவர் இந்தி கற்க வேண்டும் என்று புதிதாக உத்திக்குச் சிறிதும் பொருந்தாவகையில் தருக்கி வருகின் றனர். இது, இந்தியா அமெரிக்க ஒன்றிய நாடுகளை (U.S.A.) நோக்கி, நான் உங்கள் புகைவண்டிச் சூழ்ச்சியங்களை (Engines) விலைக்கு வாங்குவதால், நீங்கள் என் கட்டைவண்டிகளை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று சொல்வது போன்றன்றோ இருக்கின்றது  ஏதேனும் ஒரு சாக்குப் போக்கைச் சொல்லி இந்தியைத் திணிக்கப் பார்ப்பது, `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,' என்ற கதையை யன்றோ ஒத்திருக்கின்றது ! இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானம் சென்னைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்பும், இந்தி நாட்டார் நிலையாகவும் உண்மையாகவும் மும்மொழித் திட்டத்தை மேற்கொள்ளாரென்று திட்டமாகத் தெரிந்திருந்தும், ஓரியன்மைக் (uniformity) கரணியங் காட்டிச் சென்னைத் தீர்மானத்தை மாற்றச் சொல்கின்றனர். மொழியிலக்கியப் பண்பாட்டு நிலையில், தூய்மையும் கலப்பும்பற்றித் தமிழ் வேறு, திரவிடம் வேறு என்று ஆனபின், திரவிட நாடுகள் ஏற்கும் மும்மொழித் திட்டத்தைத் தமிழ்நாடு. எங்ஙனம் ஏற்கமுடியும்? அங்ஙனம் ஏற்பின், ஆகாசவாணியை வானொலியென்றும், இசையரங்கில் தமிழ்ப்பாட்டையே சிறப் பாகப் பாட வேண்டுமென்றும், `ஸத்யமேவ ஜயதே' என்பதை ``வாய்மையே வெல்லும்'' என்றும், தேசிய மாணவர்படை யேவற் சொற்களைத் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சிறப்பாகச் சொல்ல வேண்டும்? தி. மு. க. கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுதற்குப் படியரிசித் திட்டம் ஓரளவு ஏதிடா யிருந்திருக்குமேனும், இன்றும் இனியும் ஆட்சியில் நிலைத்திருக்கவும் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறவும் தமிழே துணையாயிருக்கும் என்பதை, எவரும் மறுக்க முடியாது. ஆகவே, இந்திவெறியர்க்கும் நடுவணரசிற்கும் இணங்கிக் கொள்கையை விட்டுக்கொடுத்துத் தமிழைக் காட்டிக் கொடுப்பின், தமிழைக் காப்பவர் பக்கமே ஆட்சியும் சாரும் என்பதை அறிதல் வேண்டும். தமிழிநாட்டு மொழிச்சிக்கலைத் தீர்க்கத் தக்கார் யார்? இந்தியால் தமிழ் கெடுவதும் எதிர்காலக் குடிவாணராகிய இற்றை மாணவரே இந்திக் கல்வியால் தாக்குண்பதும் தெளிவாகத் தெரிவதனால், தமிழ்ப் புலவரும் தமிழ்நாட்டு மாணவருமே தமிழ் நாட்டு மொழிச்சிக்கலைத் தீர்க்குந் தகுதியுடையார். இந்தியால் தமிழ் கெடுமென்றும் ஆங்கிலமே இந்தியப் பொதுமொழியாகத் தக்கதென்றும், தமிழ்ப் புலவர் தலைவரான தவத்திரு மறைமலையடிகள் முன்பே கூறிவிட்டார்கள். ஆதலால் அதுபற்றி மீண்டும் சூழ்வு வேண்டியதில்லை. தமிழ்நாட்டு மாணவரும், சிறப்பாக நெல்லை மதுரை சேலங் கோவை நீலமலையார், இந்திக் கல்வியால் வீண் கடுஞ்சுமையும் மீளா அடிமைத்தனமும் அறிவிழப்பும் அலுவல் வாய்ப்புக் குறைவும் பொதுமக்கள் வரிப்பணப் பாழ்படுத்தமும் நேருமென வறிந்து, இந்தி வேண்டாவெனவும் ஆங்கிலமே பொதுமொழி யென்றும் அறுதியாகத் தீர்மானித்துவிட்டனர். மாணவராயினும் பெரியோராயினும், தமிழைத் தூய்மை யாகப் பேண விரும்பும் செந்தமிழரும், கலவைத் தமிழையே வழங்க விரும்பும் கொடுந்தமிழரும், இந்தியை யேற்றுத் தமிழைக் கெடுக்க உடன்படும் போலித்தமிழரும் எனத் தமிழர் மூவகையர். இவருள், மொழிச்சிக்கலைத் தீர்த்தற்குச் செந்தமிழரே முற்றுந் தகுதியுடையர்; தமிழுக்கும் திரவிடத்திற்கும் வேறுபாடு தெரியாத கொடுந்தமிழர் சற்றே தகுதியுடையர்; போலித் தமிழரோ முற்றுந் தகுதியற்றவர். இந்தியை யெதிர்த்துத் தமிழைக் காப்பது தமிழ்ப் புலவர் கல்லூரி மாணவர்க்கே தலையாய கடனாயினும், கடந்த முப்போராட்டங் களிலும் ஒரு புலவர் கல்லூரியேனும் ஈடுபடாதது, புலவர் கல்லூரி யாசிரியரின் பண்பாட்டுக் குறைவையே பொது வாகக் காட்டு கின்றது. கட்சித் தலைவர்க்கு மொழிச்சிக்கல் தீர்ப்புத் தகுதியின்மைச் சான்றுகள்: (1) கட்சித் தலைவர் தம் கட்சியை வளர்ப்பதிலும் ஆட்சி யைக் கைப்பற்றுவதிலும் பதவியைக் காத்துக்கொள்வ திலுமே கண்ணாயிருத்தல். (2) கட்சித்தலைவர் பெரும்பாலும் இந்தியாராக விருத்தல். (3) அனைந்திந்தியக் கட்சிக்காரருக்குத் தமிழ்ப்பற்றிருக்க இடமின்மை. (4) பொதுவுடைமைக் கட்சியார் ஆங்கிலத்தைப் பொது வுடைமைக் கொள்கைக்கு மாறான ஆங்கில அமெரிக் கர் மொழியென வெறுத்தல். (5) கட்சித் தலைவர்க்குப் பொதுவாக ஆசிரியப் பயிற்சி யின்மை. (6) சில கட்சித் தலைவர்க்கு மேற்கல்வி யின்மை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்ப் புலவரும் மாணவருமே மொழிச்சிக்கலைத் தீர்க்கும் தகுதியுடையார் என்பது முன்னரே கூறப்பட்டது. தமிழ்நாடு நீங்கிய இந்தியாவிற்கே ஒரு வட்டநிலைமேடை மாநாடு இன்றியமையாததாகும். அதற்கும், மேனாள் இந்தியத் தலைமைத் தீர்ப்பாளர் சுப்பாராவ், பர். A. இலக்கு மணசாமி முதலியார், பர். மணவாள இராமானுசம், வயவர் A. இராமசாமி முதலியார் போன்ற கட்சிச் சார்பற்ற பேரறிஞரே தகுதியுடையவராவர். கட்சித் தலைவருள் திரு. C இராசகோபா லாச்சாரியார் ஒருவரே இதற்கு விலக்கானவர். கட்சி சார்பற்ற வருள்ளும் இந்தியார் நடுநிலைமை திறம்பியவராதலின், அவர் தகுதியுடையராகார். இந்தியப் பொதுமொழியாதற்கு இந்திக்குத் தகுதியின்மை (1) இந்தியா பல்வேறு மொழியாரும் பல்வேறு இனத்தாரும் பல்வேறு மதத்தாரும், பல்வேறு நிறத்தாரும் வாழும் பல்வேறு நாடுகளைக் கொண்ட உட்கண்டம். சிறியவும் பெரியவுமான 600 நாடுகளைக் கொண்ட இந்தியாவை முதன்முதலாக ஓராட்சிக்குட்படுத்தி, இந்தியர்க்கு உயர்நிலைக் கல்வி கற்பித்து அவரை ஆட்சித்துறையிற் பயிற்றி, அவரிடம் இந்தியாவை ஒப்படைத்துச் சென்றவர் ஆங்கிலேயர். ஆதலால் நாங்கள் ஆங்கிலராட்சியினின்று இந்தியாவை மீட்டோ மென்றும், அதனால் நாங்கள் புகுத்தும் இந்தியைப் பொதுமொழியாக இந்தியா முழுதும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், பேராயக் கட்சியார் கூறுவது ஒருசிறிதும் பொருந்தாது. (2) ஆங்கிலேயர் வடஇந்தியரும் தென்னிந்தியருமான எல்லா இந்தியத் தலைவரிடத்தும் இந்தியாவை ஒப்படைத்தா ரேயன்றி, இந்தியாரிடம் மட்டும் ஒப்படைக்கவில்லை. (3) ஆங்கிலேயர் இந்தியாவை இந்தியரிடம் ஒப்படைத்த போது, இந்திதான் பொதுமொழியாக வேண்டுமென் னும் யாப்புறவு இருந்ததில்லை. (4) இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அவையிலும், இந்தியை இந்தியப் பொதுமொழியெனத் திட்டஞ் செய்த குழுவிலும், மறைமலையடிகளும், பன்னீர்ச் செல்வமும் போன்ற தமிழறிஞரும் தமிழ்நாட்டுத் தலை வரும் இருந்ததில்லை. (5) தமிழ்நாட்டுப் பேராயத் தலைவருள் தமிழறிஞரோ தமிழன்பரோ ஒருவருமில்லை. ஆதலால், அவர் தமிழ் நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகார். ஆகவே, இந்திக்கு அவர் தந்த இசைவுஞ் செல்லாது. (6) இந்தியப் பொதுமொழியைத் தீர்மானிக்கக் கூட்டிய குழுவிலும், தொண்மர் (ஒன்பதின்மர்) ஆங்கிலச் சார்பாக வும் தொண்மர் இந்திச் சார்பாகவும் இருந்திருக்கின்றனர். குழுவிற்குத் தலைமை தாங்கிய இந்தி வெறியாரே (இராசேந்திரப் பிரசாத்) நடுநிலை திறம்பித் தம் இடுகைக் குடவோலையை இந்திக்குச் சார்பாக இட்டு, இந்தியைப் பொதுமொழி யென ஆக்கியிருக்கின்றார். (7) முழுகிப்போன குமரிக்கண்ட மொழியாகிய பழந்தமிழே, திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகிய உலக முதல் உயர்தனிச் செம்மொழி யாகும். அதன் எச்சமாகிய தமிழ் தனக்குரிய தலைமையையும் பெருமையையும் இழக்குமாறு, இந்தி இந்தியப் பொதுமொழியாதல் தகாது. (8) இந்தி இலக்கணவொழுங்கற்ற புன்சிறு புதுமொழி. அதைக் கட்டாய மொழியாகக் கற்பதே தமிழனுக்கு இழிவாகும். (9) இந்தி இக்காலத்திற்கேற்ற இலக்கியமற்ற மொழி. அதை இந்தி பேசாமக்கள் கற்கச் செலவிடும் காலமும் முயற்சியும் பணமும் வீணே. (10) இந்தி இந்தியருக்குள் பிளவையன்றி ஒற்றுமையை உண்டுபண்ணாது. (11) அண்மையில் வழங்கும் மலையாள கன்னட தெலுங்கு மொழிகளைவிட அதிகமாக, 1500 கல் தொலைவிற் பேசப்படும் இந்தி தமிழர்க்குப் பயன்பட்டுவிடாது. (12) ஆங்கிலம் போன்றே இந்தியும் தமிழர்க்கு அயன்மொழி யாகும். (13) இந்தி ஆங்கிலக் கல்வியை ஒழிக்கவும், தமிழரை அடிமையராக்கி அடிமைப்படுத்தவும், தமிழை நாளடை வில் வழக்கு வீழ்த்திக் கொல்லவுமே, கட்டாயக் கல்வி யாக வருகின்றது. (14) இந்தி இந்தியாவிற் பெரும்பான்மை மொழியன்று. இந்தி மக்கள்தொகையைப் பெருக்குவதற்குப் பல்வேறு இன மொழிகளை ஒன்றாகக் காட்டித் தென்னாட்டாரை ஏமாற்றி வருகின்றனர். (15) இந்தி சொல்வள மொழியன்று. ஆயிரக்கணக்கான வட சொற்களைக் கடன்கொண்டு, இந்திப் பண்டிதர்க்கும் விளங்கா அளவு நாத்திருகியும் பல்லுடைப்பானும் அலகு பெயர்ப்பானுமாகிய ஏராளமான கூட்டுச் சொற் களைப் புனைந்திருக்கின்றனர். இதனாலேயே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட தலைமை மந்திரியார் இந்திராகாந்தியாரும், இக்கால இந்தி எங்கட்கும் புது மொழிதான் என்று கூறுகின்றார். (16) இக்காலத்துச் சராசரி மாந்தன் திறமை தாய்மொழியும் ஆங்கிலமும் ஆகிய இருமொழியே கற்றுத் தேர்ச்சி பெற உதவும். தேவையற்ற இந்தியைக் கற்பின், இன்றியமையாத அறிவியற் கல்விக்குப் போதிய காலம் இல்லாமற் போம். (17) ஆங்கில அறிவைக் கொண்டே வடநாடும் சென்று வரலாம்; உலக முழுதுஞ் சுற்றலாம். (18) இந்தி பொதுமொழியாகிவிடின், இந்தியா வடக்கில் அகன்றும் தெற்கில் சிறுத்துமிருப்பதால், பிறகாலத்திற் பெரும்பான்மைப் பதவிகள் இந்தியார்க்கே சென்று விடும். தமிழன் தன்னாட்டிலும் வெளிநாட்டிலும் பிழைக்க வழியின்றித் தவிப்பான். இந்திக் கல்வியால் அலுவற்பேற்று வாய்ப்புமிகும் என்பது காட்டிக்கொடுப் பவரின் கட்டுச் செய்தியே. (19) இந்தி பன்மடித் திரிபான கொச்சை மொழியாகும். (20) இந்தி வெறியர் பண்பட்ட மக்களல்லர். இற்றை நிலையிலேயே படையனுப்பி யடக்குவோமென்று அச்சுறுத்துபவர் இந்தி ஆட்சிமொழியானபின் என்ன தான் செய்யத் துணியார்? படைவிடுத் தடக்குவோமென் பது, இந்தியை யெதிர்ப்பவரைச் சுட்டுக் கொல்வோ மென்பதேயன்றி வேறன்று. ஆகவே, வெள்ளையர் பாதக் கூட்டின் கீழ்நசுங்குண்டு சாகும் ரொடேசிய ஆப்பிரிக்கர் நிலைமையினுங் கேடானது வருமுன், jÄHh ÉʤbjG உன் தன்மான வாழ்வையும் தமிழ்ப் பண் பாட்டையுங் காத்துக்கொள். இந்தியெதிர்ப்பால் தென்னாடு முழுதுங் கொந்தளிப்பு ஏற்பட்டபின்பும், இருப்புப்பாதைச் சூழ்ச்சியகர்க்கு (Engineers) `கலைத் தலைவன்' (M. A.) அளவைப்பட்ட இந்தித் தேர்வுத் தேறுகையைத் தகுதியாக நெறியிட்ட இறுமாப்பையும் திமிரையும் எண்ணிப்பார். தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் 1947-ல் ஆங்கிலராட்சி இந்தியாவினின்று நீங்கியதினால் இந்திநாடே முழுவிடுதலை பெற்றது. தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே தேவமொழி யென்றிருந்த வடமொழியுடன் இந்தியும் வந்து சேர்ந்தது. இலக்கிய நடைமொழியான சமற்கிருதத்திற்கும் இந்திக்கும் அளவிறந்த சலுகைகள் காட்டப்பட்டு வருகின்றன. அவ் விரு மொழிகளையும் பரப்பற்கும் வளர்த்தற்கும், தமிழருட்பட்ட பொது மக்கள் வரிப்பணத்தினின்று கோடிக்கணக்கான உருபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதொறும் ஆகத்துத் தற்சார்பு (Independence) நாளில் தலைமைச் சமற்கிருதப் பண்டிதர்க்குச் சிறப்புச் செய்யப்படுகின்றது. வருவாயற்ற சமற்கிருதப் பெரும் பண்டித ரெல்லார்க்கும், வாழ்க்கைக்குப் போதிய உதவிச் சம்பளம் அளித்து வருகின்றனர். அத்தகைய சிறப்பொன்றும் பண்பட்ட பண்டை யிலக்கியப் பழங்குடி மொழியாகிய தமிழுக்குப் செய்யப் பெறு வதில்லை. ஆங்கிலர் நீக்கத்தால் தமிழ்நாடு விடுதலை பெற்றுவிட்ட தென்று கூறுவார் தமிழியல்பை அறிந்த ஒண்மைத் தமிழரல்லர். அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தன்னலத்தாலும் அங்ஙனங் கூறுமாறு அயலாராற் கற்பிக்கப்பட்டவரே. சிவநெறியும் திருமால் நெறியும் தூய தமிழர் சமயங்களாத லால், கோயில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடத்தப் பெறும்வரை, தமிழன் விடுதலை பெற்றவனாகான். தமிழ் தன் நாட்டிலேயே சமற்கிருதத்திற்கு அடிமைப்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. மாணவர் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டமே. இந்தி நீக்கத்தால் தமிழ்நாடு அரை விடுதலை பெற்றது. இனி, வடமொழி வழிபாடும் நீங்கினால்தான் அது முழுவிடுதலை யடையும். இந்தி தமிழ்நாட்டுக்குள் புகுந்ததற் கும், ஏற்கெனவே இங்கு ஆரியம் வேரூன்றி யிருந்தமையே கரணியம். ஆரிய அடிமைத்தனத்தை நீக்குவதற்குக் கடவுள் மறுப்பான மதவொழிப்பே வழியெனக் கண்டார் ஈ. வெ. ரா. பெரியார்; கடவுள் வழிபாட்டுத் தனித்தமிழே வழியெனக் கண்டார் மறைமலையடிகள். கடவுள் நம்பிக்கையர் பெரும்பான்மையரா யிருப்பதனாலும், தமிழர் கண்ட மதத்தை ஆரியமென விலக்கிவிடுவதனால் ஆரியர்க்கே உயர்வு ஏற்படுவதனாலும், பகுத்தறிவிற் கொவ்வாத வீண் சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் பழக்கவழக்கங் களையும் சிறுதெய்வ வணக்கங்களையும் மட்டும் விலக்கி, தனித்தமிழில் கடவுள் வழிபாடு நடத்துவதே, தெய்வ நம்பிக்கைத் தமிழர்க்குத் தக்கதாம். ஆரியம் முந்தி யருந்தமிழைத் தாழ்த்தியதால் நேரெதிர் இந்திவந்து நின்றதுகாண் - ஓரடியாய் ஆரியம் இந்தி யகல வழிபாடு சீரிய செந்தமிழிற் செய். இந்தியைப் புகுத்த இந்தியார் கூறும் ஏதுக்களின் போலித்தன்மை இந்தி வெறியாளர் இந்தியைப் பொதுமொழியாக்கற்குக் கூறும் ஏதுக்கள் அத்தனையும் பொருளற்ற போலிகளே. அவர் கூற்றும் அவற்றிற்கு மாற்றும் வருமாறு: (1) இந்தியா தொன்றுதொட்டு ஒரு நாடென்பது. இந்தியா இன்றும் பன்னாடே. கூட்டாட்சியால்மட்டும் அது ஓர் ஒன்றியம் (Union) ஆகும். (2) ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தினான் என்பது. அறுநூறு நாடுகொண்ட இந்தியாவை ஓராட்சிப்படுத்தி அறிவியற் கல்வியால் இந்தியரை உயர்த்தி விடுதலையுந் தந்தவன் ஆங்கிலேயனே. ஆதலால் அவன் மீட்பனே யன்றி அடிமைப்படுத்தியல்லன். ``குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்'' (குறள். 504) (3) பேராயமே விடுதலை வாங்கித் தந்தது என்பது. ஆங்கிலராட்சி இந்திய முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததாகவே யிருந்தது. இந்தியத் தன்னாட்சி எல்லாக் கட்சிக்கும் பொதுவே. பேராயம் ஆங்கிலரைச் சற்று முந்தி வெளியேற்றிவிட்டதால் பல்வேறு தீமைகளே விளைந் துள்ளன. (4) அரசியலமைப்பில் இந்தி பொதுமொழியாகக் குறிக்கப் பட்டுள்ளது என்பது. அரசியலமைப்பில் தக்கோர் பலர் கலந்துகொள்ள வில்லை. அதனாற் பல தவறுகள் நேர்ந்துள்ளன. மாந் தனுக்குச் சட்டமே யன்றிச் சட்டத்திற்கு மாந்தனல்லன். ஆதலால் தவறுகளைத் திருத்துவதே அறிவுடை மாந்தனுக்கு அழகாம். (5) இந்தி பெரும்பான்மை மொழியென்பது. இந்தி பெரும்பான்மை மொழியன்று. 44 கோடி இந்தியருள் 12 கோடி இந்தியார் பெருபான்மையரல்லர். (6) இந்தி இந்திய மொழி என்பது. ஆங்கிலமும் ஆங்கில இந்தியர் தாய்மொழியாயிருப்ப தால் இன்று இந்திய மொழியே. (7) ஆங்கிலம் மக்கள் மொழியாக முடியாது என்பது. இந்தியும் இந்தி பேசா மக்கட்கு, சிறப்பாகத் தமிழர்க்கு, அயன்மொழியாதலால் மக்கள் மொழியாக முடியாது. (8) இந்தியாவிற்கு ஒரு பொது மொழி தேவை என்பது. ஆங்கிலம் ஏற்கெனவே இருநுற்றாண்டுகளாக இந்தியப் பொது மொழியாய் இருந்துவருவதால், இன்னொரு பொது மொழி தேவை யில்லை. (9) இந்தி வளர்ச்சிபெறின் ஆங்கிலத்திற்கு ஈடாகும் என்பது. ஆங்கிலம்போல் இந்தியும் இந்தியப் பொதுமொழியும் ஆட்சிமொழியும் கல்விமொழியும் ஆகக் கூடும் என்பது பூனை புலியாக மாறும் என்பது போன்றதே. (10) அரசியற் கட்சித் தலைவர் எல்லாருங் கூடி இந்திய மொழிச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பது. அந்தந்த நாட்டு மாணவரும் வட்டார மொழிப் புலவருமே மொழிச்சிக்கலைத் தீர்க்கத் தக்கவர். கட்சித்தலைவர் தத்தம் கட்சி வளர்ச்சியையும் தம் பதவியையுமே காப்பதிற் கண்ணாயிருப்பர்; நாட்டுப் பொதுநலத்தை முதன்மையாக நோக்கார். அவருட் பலர் இந்தியாராதலின் இந்திச் சார்பாகவே யிருப்பர். (11) இந்தியா முழுதும் ஓரியல் மொழித் திட்டம் இருக்க வேண்டும் என்பது. நாடுதொறும் மக்களினமும் மொழியும் பண்பாடும் மனப்பான்மையும் வேறுபட்டிருப்பதால், ஒரேவகை யான மொழித்திட்டம் இந்தியாவெங்கும் இருப்பது இயல்வதன்று. (12) எந்த மொழிச்சிக்கல் தீர்வும் இந்தியை நீக்கக் கூடாதென்பது. இது ஒரு முன்முடிபைக் கொள்வதால், இந் நெறிமுறைப் பட்ட தீர்வு உண்மையும் நடுவுநிலையுமான தீர்வாகாது. இந்தி வெறியரும் அவருக்குத் தம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தந்நலக்காரருமே இந் நிலைப்பாட்டை அல்லது யாப்புறவை (நிபந்தனையை) ஏற்றுக்கொள்வர். (13) இந்தியால் ஒற்றுமை உண்டாகும் என்பது. இந்தியாற் பிரிவினையும் பகையுமே உண்டாகும் என்பதை இற்றை நிகழ்ச்சிகளே தெளிவாகக் காட்டுதல் காண்க. இந்தி பெரும்பான்மை மொழியா? இந்திபேசுவார் தொகை இந்திப் பிரிவு தொகை 1. மேலையிந்தி 45 பன்னிலக்கம் (Millions) 2. கீழை 23 ,, ,, 3. பீகாரி 39 ,, ,, 4. இராசத்தானி 14 ,, ,, மொத்தம் 121 ,, ,, (12)கோடியே பத்திலக்கம்) இற்றை யிந்திய மக்கள்தொகை 44 கோடியாதலால், 12 கோடி மக்களே பேசும் இந்தி பெரும்பான்மை மொழியாகாது. இப் பன்னிருகோடி மக்கள் பேசும் 15 இனமொழிகளும், பெரும்பாலும் ஓரினமொழியார்க்கு இன்னோ ரினமொழி விளங்காதவளவு வேறுபட்டுள்ளனவாகவே சொல்லப்படுகின்றது. சிலர் மேற்காட்டிய நாற்பிரிவோடு, பகாடி என்பதையும் ஐந்தாவதாகச் சேர்ப்பர். அது முந்நடைமொழிகளைக் கொண்டது. இதை நோக்குமிடத்து, இந்தி வெறியர் இந்தியைப் பெரும் பான் மொழியாகக் காட்டுவதற்கே பல்வேறு இன மொழிகளை ஒன்றாகச் சேர்த்திருப்பது புலனாகும் இன்று இந்திய ஆட்சிமொழியாக ஆளப்பெறுவது மேலை யிந்தியைச் சேர்ந்த கடிபோலி என்னும் நடைமொழி யென்றும், அது 1853-ல் தில்லி, மீரட்டு, ஆகரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கத் தொடங்கிய வட்டாரமொழி யென்றும், 1891ஆம் ஆண்டு இந்திய மொழியளவையில் அது குறிக்கப்பெறவில்லை யென்றும், (1961ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி அதைப் பேசுவோர் தொகை 8,849,192 என்றும், அது இந்திய மக்கட்டொகை நூற்றுமேனி 2.1 என்றும் கூறுவர். இந்தி எங்ஙனம் தமிழும் திரவிட மொழிகளும்போல், ஒரு வகுப்பார் பேச்சு இன்னொரு வகுப்பார்க்கு விளங்காத அளவு வேறுபட்ட பல்வேறு இனமொழிகளையும் நடைமொழிகளையும் கொண்டது என்பதை, 23-1-`68-ல் வெளிவந்த `இந்து'ச் செய்தித்தாளில், `பதிப்பாசிரியர்க்குக் கடிதங்கள்' என்னும் பகுதியில், `பீகாரிலும் உத்தரப் பைதிரத்திலும் (பிரதேசத்திலும்) இந்தித் திணிப்பு என்னும் தலைப்பின் கீழுள்ள, சிரதாநந்து பந்தே என்னும் பீகார் நாட்டுப் பெருமகனின் கடிதத்தினின்று அறிந்து கொள்ளலாம். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு: ``ஐய, ``போசபுரி மொழி கீழை உத்தரப் பைதிரத்திலும் மேலைப் பீகாரிலும் மத்தியப் பைதிரத்தின் சில பகுதிகளிலும் உள்ள 6½ கோடிக்கு மேற்பட்ட மக்களின் தாய்மொழியாகும். ஆனால், போசபுரி மக்களாகிய நாங்கள் எழுத்தறியாமலும் ஏழை நிலைமையிலும் எங்கள் குரல் வலிமையற்றும் இருப்பதால், இந்தி எங்கள் தாய்மொழியாக இந்திவெறியரால் எங்கள்மேற் சுமத் தப்பட்டுள்ளது. நாங்கள் எவ்வளவோ முயன்றும், போசபுரி எந்தப் பள்ளியிலேனும் எந்நிலையிலேனும் கற்பிக்கப்படுவதில்லை. இந்தி வெறியரைத் தலைமையாகக் கொண்ட நாட்டரசுகளால் இந்தி முன்னேற்றத்திற்காக எங்கள் தாய்மொழி நசுக்கப்படுகின்றது. ``செய்தித்தாள்களெல்லாம் இந்திப் பற்றாளர் கட்டிற்குள் ளிருப்பதால், எங்கள் கருத்துகளை வெளியிடுவதில்லை. ``இந்திப் போராடிகளின் நடபடிக்கையை நோக்கினால், இவ் இந்து தேசம் அவர்கட்கே சொந்தமென்றும், பிறமொழி பேசுவாரின் நலத்தைக் கவனிக்க வேண்டுவதில்லை யென்றும் அவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது. செய்தித்தாள்கள் இந்தியைப் போற்று வாரின் ஆட்சியிலிருப்பதால் உத்தரப் பைதிரம், பீகார், மத்தியப் பைதிரம் முழுதும் இந்தி நாடுகளென்று நம் தாய்நிலத்தின் தென் பாகத்திலுள்ளவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையன்று. இந்தி மண்டலம் என்று சொல்லப்படும் நிலப்பகுதி யில் இந்தியல்லா மொழிகள் எவ்வளவு கேடாக மறைக்கப்படுகின் றன என்பது நம் தென்னாட்டு உடன்பிறப்பு மக்கட்குத் தெரியாது. ``போசபுரிமொழியாளராகிய நாங்கள், கீழ்க்காணும் எங்கள் கோரிக்கைகட்குச் சார்பாகத் தங்கள் குரலை யெழுப்புமாறு, நயன்மை நேயரும் நாட்டுப் பற்றாளருமான இந்தியரை வேண்டிக் கொள்கிள்றோம். (1) போசபுரி ஓர் இலக்கிய மொழியென்று, உத்தரப் பைதிரமும் பீகாரும் மத்தியப் பைதிரமும் ஆகிய நாட்டரசுகளால் ஒப்புக்கொள்ளப் பெறவேண்டும். (2) போசபுரி துவக்கக் கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக மட்டம்வரை கற்பிக்கப்பெற வேண்டும். இதற்குப் போசபுரி பேசப்பெறும் பகுதிகளிலுள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பெற வேண்டும். (3) இம்மொழி ஏனை யிந்திய மொழிகட்குப் பின் தங்கி யிருப்பதால், இதை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு போசபுரிப் பல்கலைக்கழகம் நிறுவப் பெறல் வேண்டும். (4) எண்ணஞ் செய்யப்பட்டிருக்கும் பீகாரின் மொழிக் குடி மதிப்பு, இந்திவெறியாளர் அமைப்பகமான அரசியன் மொழிக் கழகத்தால் நடத்தப்படக் கூடாது. இந்தி மொழியாளர்க்கு இக் குடிமதிப்போடு தொடர்பிருக்கக் கூடாது. பீகாரின் மொழிக் குடிமதிப்பு, சிறப்பாக மேலைவங்காளியரும் தென்னிந்தியருமான இந்திபேசா மொழிநூலறிஞரால் நடத்தப்பெற வேண்டும். (5) போசபுரி பேசும் மக்கள்தொகை 6½ கோடிக்கு மேற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்பில் அதற்குரிய இடம் அளிக்கப் பெறல் வேண்டும் சிரதா நந்து பந்தே, செயலாளர், போசபுரி மலர்ச்சி மன்றம் (விகாச சமிதி), போக்காரோ (பீகார்). c©ik 劉dÄUªJ«, ïªâbt¿a® bj‹Åªâaiu Vkh‰¿ v¡fˤJ Mty§ bfh£LtJ«, mtiu¤ jiynkš jh§»Ã‹W jÄœeh£L¥ nguha¤ jiyt® jh©lt khLtJ«, v¤Jiz ïÊjfî« gÊbraYkhF«. இந்தியின் நடைமொழிகள் பின்வருமாறு 81 எனச் சொல்லப்படும். 1951ஆம் ஆண்டுக் குடிமதிப்பின் (Census) படி, நடுவண் பைதிரத்தில் (மத்தியப் பிரதேசத்தில்) பேசப்படும் இந்தியின மொழிகளும் கிளைமொழிகளும் நடைமொழிகளும் நடை வழக்குகளும் வருமாறு: தென்னாட்டாரை ஏமாற்றுவதற்கு இவையெல்லாம் ஒரே மொழியாகக் காட்டப்படுகின்றன. தென்னாட்டுத் தலைவரும் இதைக் கவனியாதும் கருதாதும் தத்தம் நாட்டை இந்தியார்க்குக் காட்டிக் கொடுப்பதிலேயே முனைந்து நிற்கின்றனர். இந் நடைமொழிகளின் தொகைப்பெருமையையும் இவை வழங்கும் நிலப்பரப்பின் விரிவையும் (கிழமேலாய்ப் பீகாரிலிருந்து இராசத்தான்வரையும் தென்வடவாய் மத்தியப் பைதிரத்திலிருந்து உத்தரப் பைதிரம்வரையும்) நோக்குவார்க்கு, இந்தி என்பது பல உடன்பிறப்பு மொழிகளையும் பற்பல நடைமொழிகளையும் கொண்ட மாபெருங் கலவை என்பது தெரியவரும். பதினொரு வகையாகவும் பதினைந்து வகையாகவும் சொல்லப்பெறும் இவ் இந்தி பேசுவார் தொகை 1850-ல் 4 இலக்கமாயிருந்து, 118 ஆண்டிற்குள் 14 கோடியாகப் பெருகியுள்ளது. இப் பெருக்கம் பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்டதாகவே குடிமதிப்புக் கணக்குகள் காட்டுகின்றன; அறிக்கைகளுங் கூறுகின்றன. கட்சித் தலைவர் கல்வித்துறையில் தலையிடுகை ஆங்கிலராட்சி நீங்கியபின் இந்தியஆட்சியில் ஏற்பட்டுள்ள பெருங்கேடு, கட்சிக்கொள்கை கல்விக்களத்துள் வலிந்து புகுவதே. ஒவ்வொரு துறையும் அததற்குரிய அதிகாரியின் ஆட்சியில் இருத்தல் வேண்டும். மற்றத் துறைகள் அவற்றில் தேர்ச்சி பெற்றவர் ஆட்சியில் இருத்தல் போன்றே, கல்வித் துறையும் கல்லூரி முதல்வர், கல்வித் துறை இயக்குநர், பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர், மொழிநூற் புலவர் முதலிய கல்வித் திறவோர் ஆட்சியிலேயே இருத்தல் வேண்டும். ஆயின், இதற்கொரு விலக்குண்டு. சில சமையங்களில் ஆளுங்கட்சியினர் தம் கட்சிச் சார்பானவரையே இயக்குநராகவும் துணைக் கண்காண கராகவும் அமர்த்துவதுண்டு. அங்ஙனம் அமர்த்தப்பட்டோர் நடுநிலை திறம்பிய தந்நலக் காரராதலின் கல்வித்திறவோ ராகார். தேர்ச்சியும் பட்டறிவும் நடுநிலைமையும் வாய்ந்த இந்தியக் கல்வித்திறவோர் இந்தியக் கல்விக்குத் தாய்மொழியும் ஆங்கிலமுஞ் சேர்ந்த இருமொழித் திட்டமே ஏற்றதென்று ஒருமனமாய் முடிபு செய்துள்ளனர். ஆயின், பேராயக்கட்சிப் பணிக்குழுவினரோ, தந்நலமும் தம் கட்சி நலமுமேபற்றி, மும்மொழிக் கல்வித் திட்டத்தையே இந்தியா முழுமைக்கும் வகுத்துள்ளனர். அவர் கல்வித்திறவோ ரன்மையாலும் பயனில்மொழியொன்றைச் சேர்த்திருப்பதாலும், அத் திட்டம் கடைப்பிடிக்கத் தக்கதன்று. இந்தியாவிற் கல்வித் துறையே திறந்த மடமாகவும், ஆசிரியரே ஊருக்கிளைத்த பிள்ளையார்கோயி லாண்டியராகவும் உள்ளனர். வடஇந்தியர்க்கு எங்ஙனம் தென்னிந்திய மொழி பயன் படாதோ, அங்ஙனமே தென்னிந்தியர்க்கும் இந்திமொழி பயன்படாது. தென்னிந்தியாவில் இந்தியைப் புகுத்தல் வேண்டி, வட இந்திய மாணவரை ஒரு தென்னிந்திய மொழி கற்கச் சொல் கின்றனர். இதற்கு முப்பெருந் தடைகள் ஏற்பட்டுள்ளன. (1) இந்திநாட்டு மாணவர்க்கு, சிறப்பாக உத்தரப் பைதிரத்தி லுள்ளவர்க்கு, தென்னிந்திய மொழி கற்க விருப்பமில்லை. (2) உத்தரப் பைதிரத்தில் மட்டும் பள்ளியிறுதி மாணவர் இருபதிலக்கவர் உள்ளனர். நூற்றிற்கொருவராயினும், இருபதிலக் கம் மாணவர்க்கும் தென்னிந்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர் இருபதினாயிரவர் வேண்டும். (3) உத்தரப் பைதிரத்தில் மொழியாசிரியர் மாதச் சம்பளம் 150 உருபா. இச் சம்பளத்திற்கு இந்தி வாயிலாய்த் தென் னிந்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர் வருவது அருமை. இம் முத்தடைகளையுங் கடப்பினும், இந்திநாட்டு மாணவர் ஒரு தென்னிந்திய மொழியிற் செயலாற்றறிவு பெற முடியுமா என்பது அறிஞர் பலர்க்கும் ஐயுறவாயிருக்கின்றது. இந் நிலைமையில் இந்தியைத் தென்னாட்டில் திணிப்பதில் மட்டும் இந்திநாட்டார் கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். c¤ju¥ igâu¤â‰F ïUbkhÊ¡ fšÉ nghJbk‹W«., மும்மொழிக் கல்வி அந் நாட்டு மாணவர்க்குக் கடுஞ்சுமை என்றும், தென் னாட்டார் இந்தி கற்பின் இந்திநாட்டாரும் ஆங்கிலங் கற்ப ரென்றும், இந்தியை ஆட்சிமொழி அல்லது இணைப்புமொழி யாக்கிவிடின் தென்னாட்டார் இந்தியைத் தப்பாது கற்பரென்றும், இந்திநாட்டில் மும்மொழித் திட்டம் புகுத்தப்படினும் அது நடைமுறையில் இருமொழித் திட்டமாகவே யிருக்குமென்றும், தென்னிந்திய மொழிக் கல்விக்குச் செலவிடும் பணம் வீண் தண்டமென்றும், இந்திநாட்டுப் பல்வேறு கட்சியினருங் கூறி வருகின்றனர். இதனால், உத்தரப் பைதிரத்தார் இருமொழித் திட்டத்தையே ஏற்கின்றனர் என்பது தெளிவு. ஆயினும், நடுவணரசியலார் தம் பதவியைக் காத்துக்கொள்வதற்கு இந்திநாட்டார் துணை இன்றி யமையாததென்று கண்டு, அவர் பேராயத்தினின்று விலகா திருக்கு மாறு அவர் விருப்பம்போல் நடக்கத் தீர்மானித்துள்ளனர். இதினின்று, அவர் தென்னாட்டாரை எத்துணைத் தெம்மாடிக ளென்று கருதியுள்ளனரென்பது தெரிகின்றது. இதற்குக் காமராசர் களும் நிசலிங்கப்பாக்களும் பிரமானந்த ரெட்டிகளுமே கரணிய மாவர். ஆயினும், சேரன் செங்குட்டுவன் போன்ற செந்தமிழ் நாட்டு மாணவ மழவர், கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றலராய் இந்தி யெதிர்ப்புப் போர்க்கு அணிவகுத்து நிற்பதை, கனகவிசயர் வழியினரான இந்தி வெறியர் கண்டு திருந்துவாராக. பேராயச் செருக்கழிவு ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தினான் என்றும், அவனை நாங்கள் விரட்டிவிட்டோமென்றும், அதனால் நாங்களே என்றும் இந்தியாவை ஆளத் தகுதியுடையோம் என்றும், நாங்களே விடுதலை வாங்கித் தந்ததினால் எங்கள் விருப்பப்படியே எல்லாரும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்கவேண்டுமென்றும், இதுவரை பேராயத்தார் தருக்கிவந்த செருக்கு வரலாற்றுண்மையால் அடியோடொழிந்தது. ஆங்கிலேயனே இற்றை யிந்தியாவை அமைத்தவன் என்பதும், அவன் இந்தியாவிற்கு மீட்பனாகவன்றி அடிமைப்படுத்தியாக வரவில்லையென்றும், இந்தியத் தேசியப் பேராயத்தை (Indian National Congress) அவனே தோற்றுவித்து இந்தியரைத் தன்னாட்சிக்குப் பயிற்றித் தானே விடுதலையுந் தந்தானென்பதும், இந்திய வரலாறும் இங்கிலாந்து வரலாறும் எவரும் மறுக்கொணாவாறு பறை யறைந்து சாற்றும் பேருண்மைகளாம். தமிழனின் பரந்த நோக்கு எல்லாரும் ஓரினம் என்பதும் எல்லாரும் வாழவேண்டும் என்பதுமே, தமிழன் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்துவரும் நெறி முறைகளாகும். இப் பரந்த நோக்கிற்கும் பண்பாட்டியல்பிற்கும் ஏற்பவே, தமிழ் இந்தியப் பொதுமொழியாக வேண்டுமென்று கூறாது, இந்தியரெல்லார்க்கும் பொதுவாக ஆங்கிலமே ஆட்சி மொழியாக வேண்டுமென்று இம்மியும் நடுநிலை தவறாது கூறுகின்றான். இந் நடுநிலையையும் பெருந்தன்மையையும் மொழிவெறியென்று தன்னலக்காரர் கண்டிப்பது, அவரது காட்டிக் கொடுக்கும் தன்மையை எத்துணைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது! தம் நோக்கம் நிறைவேறாவிடின் அதற்குத் தடையா யிருப்பவரைப் பழிப்பது தன்னலக்காரர் இயல்பே. விட்டுக்கொடுப்பு தென்னாட்டுப் பேராயத் தலைவர், சிறப்பாகத் தமிழ்நாட்டுத் தலைவர், மொழித்துறையில் தென்னாட்டார் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், வடநாட்டார் ஆங்கிலங் கற்றால் தென் னாட்டார் இந்தி கற்கவேண்டும்மென்றும், இந்தியைத் தென் னாட்டார்மீது சுமத்துவது போன்றதே வடநாட்டு இந்தியார்மீது ஆங்கிலஞ் சுமத்துவது என்றும், ஒருசிறிதும் உத்திக் கொவ்வாத வாறு பேசி வருகின்றனர். இக்காலத்தில் தென்னாட்டார்க்குப் போன்றே வடநாட்டார்க் கும் ஆங்கிலம் இன்றியமையாததாகும். இதை வடநாட்டார் அறியாமல் இல்லை. ஆயினும், தென்னாட்டாரைத் தெம்மாடிக ளென்று கருதிக்கொண்டு தாம் ஆங்கிலங் கற்க விரும்பாததுபோல் நடிக்கின்றனர். இந்தியைத் தென்னாட்டார் வாயில் திணிக்கும்வரை இந் நடிப்பு இருந்துகொண்டே யிருக்கும். ஆங்கிலராட்சி தொடங் கியதிலிருந்தே வடநாட்டாரும் தென்னாட்டாரும் ஆங்கிலங் கற்று வந்திருக்கின்றனர். ஆதலால் இது வடவர்க்குப் புதிதன்று. வடநாட்டில் மாணவர், பொதுமக்கள், அரசியலார் ஆகிய முத்திறத்தாரும் மொழித்துறையில் ஒரே கருத்தினர். தென்னாட்டுத் தலைவர்தாம் மாணவரையும் பொதுமக்களையுங் காட்டிக் கொடுத்து எங்ஙனமும் தம் பதவியைக் காத்துக்கொள்ள விரும்பு கின்றனர். இந்தியார் நாள்தோறும் கரும்பு தின்னமட்டுமன்றிச் சோறு அல்லது உணவுண்ணவுங் கைக்கூலி கேட்கின்றனர். இதற்குத் தென்னாட்டார் அடிமை மனப்பான்மையே கரணியம். அமைச் சருட்பட ஆங்கிலங் கற்ற இந்தியார் பலர், இந்தி யறியாரொடும் இந்தியிலேயே பேச விரும்புவதைக் கண்டாகிலும், தென்னாட்டுத் தலைவர் பேதைமை தெளியவேண்டும். தமிழர் ஏற்கெனவே அளவிற்கு மிஞ்சி விட்டுக்கொடுத் துள்ளனர். சமற்கிருதம் இலக்கிய மொழியாதலால், இந்திய வழக்கு மொழிகளுள் எல்லாவகையிலும் தலைசிறந்தது தமிழே. ஆயினும் தமிழே இந்திய ஒருதனி ஆட்சிமொழியாக வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்க முழு உரிமையிருந்தும், அதைக் கேளாது விட்டுக்கொடுத்துள்ளனர். எதிலும் விட்டுக் கொடுக்க ஓர் அளவுண்டு. ஒருவர் வரையாதீயும் வள்ளலாயினும் தம் உறுப்பிலும் உடமையிலும் ஓரளவுதான் விட்டுக் கொடுக்கலாம். ஆயின் உயிரை (அதாவது உடல் முழுவதையும்) விட்டுக்கொடுத்தல் அரிது. இங்ஙனஞ் செய்பவர் உலக முழுவதிலும் ஒருசிலரே. ஒரு நாட்டு மக்களெல்லாம் தம் மானத்தையும் காலத்தையும் முயற்சி வலிமையையுங் ஓய்வையும் வீணாக விட்டுக்கொடுப்பதெனின், அது உலக வாழ்க்கைக்கு ஒவ்வாததாம். வடவர் ஒன்றையும் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழரை மட்டும் விட்டுக்கொடுக்கச் சொல்வது அடிமைத்தனமும் காட்டிக் கொடுப்புமேயாகும். பிறர்க்கே அறிவுரை கூறும் பேராயம் ``அக்காளைப் பழித்துத் தங்கை அலவை போனாள்'', ``தன் குற்றந் தனக்குத் தோன்றாது'' என்பன பழமொழிகள். இந்தியப் பேராயக் கட்சியைச் சேர்ந்த நடுவணாட்சியார், தென்வியத்துநாமில் அமெரிக்க ஒன்றிய நாடுகள் துணை புரிந்து வரும் போர்ச் செயலையும், மேலையாசியாவில் இசரவேலர் அரபியரை எதிர்த்துப் புரிந்துவரும் தற்காப்புப் போர் வினைகளையும், தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்க ஒன்றியமும் உரொடீசியா வும் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கட்குச் செய்துவரும் அளவிறந்த கொடுமைகளையும், சமையம் வாய்க்கும் போதெல்லாம் கண்டனஞ் செய்து வருவது தக்கதே. ஆயின், இந்தியாவிற்குள்ளேயே, உடன்பிறந்தாரொப்பவரும் தென்னாட்டுப் பழங்குடி மக்களும் இந்தியாரினும் நாகரிகப் பண்பாட்டிற் சிறந்தவரும் உலகமுதல் உயர்தனிச் செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவரும் ஆகிய தமிழரை, அடிமையர்போற் கருதி, இந்தியை ஏற்காவிடின் படைவிடுத்தடக்கு வோமென்று பட்டிமருட்டும் பெட்டை மருட்டும் மருட்டுவது எத்துணை இழிசெயலாகும்! இந்தியப்படை தம் கையிலுள்ளதென்று இந்தியார் செருக்கித் தருக்கின், இதே மனப்பான்மைகொண்ட தென்னாப்பிரிக்க வெள்ளையரின் நடவடிக்கையில் எங்ஙனங் குற்றங்காண முடியும்? அறிவாற்றலில் தாழ்ந்த இந்தியர்க்கே இத்துணைச் செருக்கிருப்பின், அவற்றில் மிகவுயர்ந்த வெள்ளையர்க்கு எத்துணையிருக்கும்! பிறர்க்கு அறங்கூறுவது எவருக்கும் எளிது; ஆயின் அவ்வழி தாமே ஒழுகுவது அரிது. செயலொடு பொருந்தாச் சொல் பொருளற்றது. ஆதலால், இனிமேலாயினும் இந்தியார் தம் மடமையையும் கடமையையும் உணர்ந்து, தமிழரொடு உறவு கொள்ளும் வகையில் தக்கவாறு திருந்துவாராக. இந்திப்படத் தடுப்பு 1937-ல் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் இந்தியெதிர்ப்பு இருந்துகொண்டுதான் வருகின்றது. ஆயின், மும்முறைதான் அது எரிமலைக் கொதிப்புப்போற் கிளர்ந் தெழுந்தது. அவற்றுள் 3ஆம் முறையான இவ் வாட்டை நிகழ்ச்சியே முழுவெற்றியையும் முடிந்தமுடிபான நிலைமையையும் விளைத்தது. திரைப்படம் பொதுமக்கட்குரிய இன்புறுத்த வகைகளுள் தலைசிறந்ததுதான். ஆயின், இந்தித் திரைப்பட அமைப்பகங்கள், தென்னிந்திய இந்தி பரப்பற் கழகம் (தக்ஷண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா) போல், தமிழர்க்கு வேண்டாததும் தமிழுக்குக் கேடு பயப்பது மான இந்தியைப் பரப்பி வருவதாலும் இதைத் துணை யாகக் கொண்டு இந்திவெறியர் இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப் பதனாலும், எத்துணைப் பேரறிஞர் எத்துணை ஏரண முறையில் எதிர்த்துக் கூறினும் இந்திவெறியர் இம்மியும் செவிசாய்க்காமை யானும், இந்தியை இந்திய அரசியல் மொழியாக்குவதற்குத் துணையாக விருக்கும் எல்லா வழிகளிலும்இந்தியை அறவே தடுப்பதென, எதிர்காலக் குடிவாணரும் இந்தியால் மீளா அடிமைப் பட்டுக் கெடவிருப்பவருமான இற்றை மாணவர் முடிபுகொண் டனர். உண்மையான தமிழ்ப் பெரும்புலவர் கருத்தும் இதுவே. இதுவரையில்லாத இந்திப்படத் தடுப்பு இன்று ஏற்பட்டதற்கு இந்தித் திணிப்பே கரணியம். இதை உணராது, திரைப்படம் மொழி நிலவரம்பு கடந்த தென்றும், இந்திப்படம் நின்றுவிடின் ஆயிரக்கணக்கானவர் வேலையிழந்து அரசிற்கும் வருவாய் குன்றுமென்றும், மாணவரை அடக்கியொடுக்க வேண்டுமென்றும், பலரும் பலவாறு நாள் தொறும் செய்தித்தாள்களில் எழுதி வருகின்றனர். அவர் யாரென்று ஆய்ந்து பார்ப்பின், இந்திச் சார்பானவராகவோ தமிழ்ப் பண்பாட்டை வேண்டாதவராகவோதான் இருப்பர். தமிழர் அல்லது தமிழ்நாட்டு மாணவர் இந்தியைத்தான் வெறுக்கின்றனரேயன்றித் திரைப்படத்தையன்று. அவ் விந்தியும் தன் எல்லைக்குள் தன்மட்டில் இருந்தால், அதை வெறார். ``நண்டு கொழுத்தால் வளைக்குள் இராது'' என்பதுபோல், தன் எல்லை கடந்து பிற இந்திய மொழிகளை யெல்லாம் தன்னடிப்படுத்தக் கருதுவதனாலேயே அதை எதிர்க்கின்றனர். அதுவும் தம் நாட்டிற்குள்ளேயேயன்றி இந்திநாட்டில் அல்லது இந்திச் சார்பான நாட்டிலன்று என்பதை அறிதல் வேண்டும். இதனால், இந்தியாரின் இந்தித் திணிப்பு, தாக்கல் வினையென்பதும் தமிழரின் இந்தி யெதிர்ப்பு தற்காப்பு வினையே என்பதும் தெளிவாம். திரைப்படத்திற்கும் இந்திக்கும் இரண்டறக் கலந்த பிணைப் பில்லை. திரைப்படம் எம்மொழியிலும் இருக்கலாம். தமிழர் வேறெம்மொழிப் படத்தையும் தடுக்கவில்லை. இந்திப்படம் இந்தியா முழுதும் செல்லுமெனின், ஆங்கிலப் படம் உலகமுழுதும் செல்லும். ஆதலால், திரைப்பட முதலாளியர் தமிழிலும் திரவிட மொழி களிலும் படம்பிடிக்க விரும்பாவிடினும், சிறந்த நடிகரைக்கொண்டு ஆங்கிலப் படம் பிடித்து உலகமுழுதும் பரப்பிப் பெரும்புகழ் பெறுவதுடன் பெரும்பொருளும் ஈட்டலாமே! மதுரைத் தியாகராசர் கல்லூரி நிறுவனர் கல்வித் தந்தையார் திருமான் கருமுத்துத் தியகராசச் செட்டியார் ``நான் உடம்போடுள்ளவரை என் கல்லூரிக்குள் இந்தி புகக் கூடாது'' என்று சூளுறவு கொண்டிருப்பது எத்துணைப் பாராட்டிற் குரிய தமிழ்ப் பண்பாடாகும்! அவரைப் போன்றே தூய தமிழரான திருமான் மெய்யப்பச் செட்டியாரும் ஏன் அவரைப் பின்பற்றக் கூடாது? பொருளீட்ட எத்தனையோ வழிகளுள. தமிழும் தமிழ்ப் பண்பாடும் கெடாவாறு பொருளீட்டுவதே தமிழ்ச் செல்வர்க்குத் தக்கதாம். ஒரு நாட்டிற் பெரிய மாறுதல் நிகழும்போது ஒருசார் தொழிலார் வேலையிழக்கத்தான் நேரும். அவர் ஒத்த பிற தொழிலையோ வேற்றுத் தொழிலையோதான் மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் மின்வண்டி நீக்கப்பட்டபின், அவ் வண்டியோட்டுநரெல்லாரும் இயங்கியோட்டுநராகிவிட்டனர். இந்தி நீக்கப்பட்டபின் இந்தியாசிரியரெல்லாரும் பிற பாட ஆசிரியராகத்தான் வேண்டும். அதுபோல், இந்திப்படத் தொழி லாளரும் பிறமொழிப்படத் தொழிலாளராகப் பயின்று கொள்ளல் வேண்டும். அதை விரும்பாதவர், வெளிநாடுகளினின்று தாய்நாடு திருப்பப்பட்ட இந்தியர் போன்றே வேறேதேனும் விரும்பிய தொழிலை மேற்கொள்ளவேண்டும். அது அறமாகா தெனின், தங்கக் கட்டுப்பாட்டினால் வேலையிழந்தவர்க்கு மட்டும் என்ன அறஞ் செய்யப்பட்டுள்ளது? இனி இந்தியாவில் உருவாக்கப் பெறும் இந்திப் படங்களுட் பெரும்பாலன தமிழ்நாட்டி லேயே பிடிக்கப் படுவதனால், இந்திப் படம் விலக்கப்பெறின் தமிழ்நாடு ஒரு பெருவருவாயை இழக்குமென்று கூறுவது, இந்தியெதிர்ப்பாளரான தமிழர்க்கே சார்பான ஏதுப்போலியாகும். இந்தியாவின் தென்கோடியிலுள்ளதும், இந்திநாட்டிற்குப் பிற நாடுகளினும் சேய்மைப்பட்டதும், இந்திக்குப் பிறமொழிகளினும் அயலான மொழி பேசப் பெறுவதும், இந்தியெதிர்ப்பில் தலையாயது மான தமிழ்நாட்டில், இந்திப் படங்களுட் பெரும்பாலன உருவா கின்றனவெனின், அது இந்தியால் தமிழர்க்கு அண்மையில் நேரவிருக்கும் பெருந்தீங்கையே எடுத்துக்காட்டி எச்சரிக்கின்றது. இந்திச் சார்பான ஐந்தாம் படையினர் தமிழ்நாட்டிற் பெருகியத னாலேயே, இந்தி வெறியர் படைவிடுத்துத் தமிழ்நாட்டை அடக்கக் கருதுகின்றனர் போலும்! பத்தாண்டுகட்குமுன் இந் நிலை யிருந்ததில்லை. ``இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து.'' (குறள். 879) என்னும் தமிழகத் தலைமையறிஞர் எச்சரிக்கையைப் புறக்கணித்த தனாலேயே, தமிழ்நாட்டில் இந்தி யெதிர்ப்பில்லை யென்றும், தி.மு.க. தலைவர் மக்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் இந்தியை விரும்பிப் பயில்கின்றனரென்றும், இந்திப்புலவர் தேர்வு எழுதுவார் தொகை ஆண்டிற்காண்டு உயர்ந்து வருகின்றதென்றும், இந்திவெறியர் பல்லாண்டிற்கு முன்பே பாராளுமன்றிற் கூறி மகிழ்வாராயினர். மதுவிலக்கு உண்மையில் இன்றுள்ள முறையில் நல்லதன்றே னும், மதுவூணால் வரும் வருவாய் மாண்புடைய தன்றென்று விலக்கப்பட்டுள்ளது. மதுவூணினும் கேடுவிளைக்கும் இந்தி பரப்பலைத் தடுப்பதனால் நேரும் வருவாய்க் குறைவு, தமிழ் நாட்டிற்கு இழப்பென்று எவ்வகையிலும் கருதப்படா தென்பது ஒருதலை. இனி, தமிழ்ப் படங்களினும் இந்திப் படங்களே இன்ப மூட்டுவனவெனின், தமிழ்ப்படங்களின் குற்றங்குறைகளை நீக்கித் திருத்த வேண்டுமென்பதல்லது, தமிழ்ப் படங்களைப் புறக்கணித்து இந்திப் படங்களையே போற்றவேண்டுமென்பது எங்ஙனம் பெற படும்? khztiu ml¡» bahL¡f nt©Lbk‹gt®.,khzt® பாகுபாட்டையும் இக்கால உலகியலையும் அறியாதவரேயாவர். குழந்தை வகுப்பு முதல் பட்டப்பின்னையாராய்ச்சி வகுப்புவரை மாணவர் பல்வேறு திறப்பட்டுள்ளனர். அறிவியற்கல்லூரி தொழிற் கல்லூரி ஆராய்ச்சிக் கல்லூரி இறுதியாட்டை மாணவர் பலர், அமைச்சர் சிலரினும் அறிவாற்றல் பட்டறிவு மிக்கவரே. பல்கலைக் கழக மாணவர் கிளர்ச்சி பார் முழுதும் பரவியுள்ளது. இந்திய நாடாளுமன்றங்களிலும் நடுவணாட்சி மன்றமாகிய பாராளு மன்றத்திலும் அடிக்கடி நிகழும் வாய்வரிசையும் கைகலப்பும், மாணவர் ஒழுங்கின்மையை முற்றும் மறைக்குமளவு மதுக்கடைச் சண்டைகளிலும் கேடாகவுள்ளன. இத்தகைய சூழ்நிலையிலும் சுற்றுச் சார்பிலும், அறிவுப் பேற்றிற்குத் துணைசெய்யாது அடிமைத்தனத்திற்கே உள்ளாக்கும் இந்திக் கல்வியையும் அதன் பரவலையும் தடுக்கும் உரிமையுணர்ச்சிமிக்க மாணவரை அடக்குவது, எங்ஙனம் முறையாகும்?. இந்தியா முழுமைக்கும் ஆங்கிலமே ஆட்சிமொழியும் பொது மொழியும் இணைப்பு மொழியும் என்று அரசியலமைப்புத் திருத்தப் பெற்றுவிடின், மாணவர் இந்தி யெதிர்ப்பில் ஈடுபடார். எத்தனை இந்திப்படங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பெறினும் காட்டப் பெறினும், எள்ளளவும் தடையிராது. இதற்கேற்ற முயற்சியையே இனி இந்திப்படச் சார்பாளர் மேற்கொள்வாராக. தமிழ்நாட்டு மாணவர் பிறமொழியை எதிர்ப்பவருமல்லர்; வடநாட்டின் பகைவருமல்லர். அடிமைப்படுத்தும் மொழியாய் வருவதினாலேயே இந்தியை அவர் எதிர்க்கின்றனர். சிவசேனையின் சீர்கெட்ட செயல் இந்திப் படங்களைத் தமிழ்நாட்டரங்கிற் காட்டவிடாமை யால், தமிழ்ப் படங்களையும் தமிழ்நாட்டில் உருவான இந்திப் படங்களையும் எங்கள் நாட்டிற் காட்டவிடோம் என்று, மராட்டிய நாட்டுச் சிவசேனை கூறுகின்றது. இதன் புரைமையைப் பின்வரும் ஏதுக்களால் அறியலாம். (1) மராட்டிய நாடு இந்தி நாடன்று. (2) தமிழ்நாட்டு மாணவர் இந்திப் படத்தையேயன்றி மராட்டியப் படத்தைத் தடுக்கவில்லை. (3) நமிழ்நாட்டு இந்தியெதிர்ப்பு மொழிபற்றியதேயன்றி நாடு பற்றியதன்று. (4) மராட்டியர் இந்திச் சார்பா யிருப்பின், தமிழ்நாட்டில் உருவான இந்திப் படங்களையும் ஏன்தடுக்க வேண்டும்? தமிழர் மராட்டிய மக்களையும் அவர் மொழியையும் வெறுக்காது நட்புநிலையி லிருக்கும்போது, மராட்டியச் சிவசேனை தமிழ்ப் படங்களைத் தடுப்பதும் தமிழ்நாட்டை வெறுப்பதும் தமிழர் பகையை வீணாக வலியத் தேடிக் கொள்வதேயாகும். சிவசேனை எங்ஙனம் மராட்டிய நாட்டைச் சீர்திருத்த முயல் கின்றதோ, அங்ஙனமே தமிழ்நாட்டு மாணவரும் தம் நாட்டைச் சீர்திருத்த முயல்கின்றனர். அம் முயற்சியின் ஒரு கூறே இந்தியெதிர்ப்பு. மராட்டிய நாட்டில் தமிழர் இருப்பது போன்றே தமிழ் நாட்டிலும் மராட்டியர் இருப்பதால், இருவகுப்பாரும் ஒற்றுமைப் பட்டு நட்புநிலையி லிருப்பதே இரு சாரார்க்கும் நன்மை பயக்கும். இதனைத் தமிழ்நாட்டு மராட்டியப் பெரியோர் சிவசேனைக்கு எடுத்துரைப்பாராக. தமிழ்நாடு ஒருபோதும் இந்தியை இந்தியத் தனியாட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாது. இதற்குத் தமிழின் சிறப்புத் தன்மையே கரணியம். இதைச் சிவசேனை உணர்தல் வேண்டும். திரு. இலக்குமிநாராயணார் `மெயில்' பதிப்பாசிரியர்க்கு விடுத்த திருமுகம் இந்திப் படங்கள் ``ஐய, ``சென்னை இந்திப்படப் பிடிப்பாளரும் அவர் கூட்டாளியரும், சென்னை நாட்டு இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சியும் இந்திப் படக்காட்சி நிறுத்தமும்பற்றி அண்மையில் வெளியிட்ட முறையீடு, மாணவரின் இந்திப் படக்காட்சி யெதிர்ப்புக் கிளர்ச்சியைப் பிறழ வுணர்ந்ததால் எழுந்ததாகும். நாடு முழுதும் தன் இந்தியெதிர்ப்பைச் சாற்றியிருக்கும் போதும், இந்தியிலெழுதப்பட்ட பெயர்ப் பலகைகள் நீக்கப்படும் போதும், இந்திப் படங்களை இந் நாட்டிற் காட்டுவது பொருளற்றதாகும். ``மேலும், திரு எசு.எம். சோசியும் திரு. சவானும், பிறரும் போன்ற தலைவர், இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சி இந் நாட்டு மக்களுள் ஒரு சிறு பகுதியினரால்தான் நடத்தப்பட்டு வருகின்றதென்றும். இந்திப் படங்கள் இங்கு மக்களாற் பெரிதும் விரும்பப்படுகின்றன, வென்றும் கூறி, அதனால் இந் நாட்டுப் பெரும்பான் மக்கள் இந்திக்கு மாறாக இல்லையென்று கருதுமாறு செய்து வருகின்றனர். ``சிவசேனைக் கிளர்ச்சி தென்னாட்டு இந்திப்படவெதிர்ப்புக் கிளர்ச்சிக்கு விடையன்று. தென்னாட்டில் இவ் வேளையில் இந்தியில் வெளிவரும் எதுவும் அம் மொழியின் திணிப்பாகக் கருதப்படுகின்றது. அதனால் அத்தகைய தாக்குதலை இயன்ற வழியெல்லாம் தடுக்க வேண்டியதாகின்றது. அதுவே இங்குச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், சிவசேனையோ, தமிழ்ப் படங்கட்கும் மாறாகவன்றித் தென்னிந்தியரால் உருவாக்கப்பெறும் இந்திப் படங்கட்கு மாறாகவே கிளர்ச்சி செய்து வருகின்றது. ஆகவே, அதன் தாக்குதல் தமிழ் மேலதன்று, தேசத்தின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் மேலதே.'' சென்னை, மார்ச்சு 2. சி. (C) இலக்குமிநாராயண் ஊர்காவலர்க்கு ஒர் உணர்த்துரை அடிமைத்தனக்காலம் என்று சொல்லப்படும் ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரில் ஊர்காவல் உதவிக் கருமத்தலைவராய் (Asst. Commissioner of Police) இருந்த திரு. பவானந்தம் பிள்ளை சிறந்த தமிழறிஞரும் தொல்காப்பியவுரை, யாப்பருங்கல விரிவுரை (விருத்தி) முதலிய உயரிய இலக்கண நூல் வெளியீட்டாளரு மாயிருந்தார்; கோவை மாவட்டத்தில் ஊர்காவல் வட்டார உண்ணோட்டகராய் (Circle Inspector of Police) இருந்த திரு. துடிசைகிழார் அ. சிதம்பரனார் சிறந்த தமிழ்ப் புலவரும் பல்துறை ஆராய்ச்சி யாளருமாக இருந்தார்; தஞ்சை மாவட்டத்தில் ஊர்காவல் கீழ் உண்ணோட்டகராய் (Sub-Inspector of Police) இருந்த திரு. சோமசுந்தரம் பிள்ளை தலைசிறந்த நுண்மாண் நுழைபுலத் தமிழிலக்கணப் புலவராயிருந்தார். இம் மூவரும் தலைசிறந்த தமிழன்பரும் தமிழ்த் தொண்டருமா யிருந்தது மிகமிகப் பாராட்டத்தக்கதாம். விடுதலைக் காலமென்று பெருமையாக விளம்பப் பெறுவ தும், ஆட்சிமொழியுங் கல்விமொழியும் தமிழாக மாறியுள்ளதும், மாணவர் இந்தியை நீக்கித் தமிழைக் காப்பதுமான, இக்காலத்தில், எனக்குத் தெரிந்தவரை, ஊர்காவல் துறையில் ஒருவரேனும் தமிழ்ப் புலமை யில்லாதிருப்பது, எத்துணை வருந்தத்தக்கது! சட்டத்தையும் ஒழுங்கையும் போற்றிக் காப்பதுடன் தமிழறிவும் ஓரளவு பெற்றிருப்பது, தமிழ்நாட்டு ஊர்காவல் தலைவர்க்குத் தக்கதாம். அல்லாக்கால், சில சிக்கலான நிலைமை களில், சட்டமீறற் குற்றிறத்திற்கும் தமிழ்க்காப்புத் தொண்டிற்கும் வேறுபாடறியாது இடர்ப்படவோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ நேரலாம். தேசிய மாணவர்க்குத் தெரிப்புரை ஒவ்வொரு நாட்டிலும் மொழியே மக்கள் முன்னேறும் வழியாம். கூட்டுறவிற்கு வேண்டும் கருத்தறிவிப்பும் நல்வாழ்விற்கு வேண்டும் அறிவுப்பேறும் மொழிவாயிலாகவே இயலும். இக்கால உயர்கல்வி மேலையர் கண்ட அறிவியல்களா யிருப்பதாலும், உலக மக்களின் கூட்டுறவு வரவர நெருங்கி வருவதாலும், தமிழ்போன்ற பண்டையிலக்கிய முதுமொழியார்க்கும் ஆங்கிலம் போன்ற அறிவியன் மொழிக்கல்வி இன்றியமையாததாகின்றது. தமிழர்க்கே இங்ஙனமெனின், பண்டை யிலக்கியமுமற்ற புன்சிறு புதுமொழி யாகிய இந்தி பேசுவார்க்கு மேலைமொழிக் கல்வியின் இன்றியமை யாமையை எடுத்துரைக்க வேண்டுவதில்லை. ஒரு நாட்டிற் பல அரசியற் கட்சிகளிருப்பினும், அவற்றிற்கு ஆட்சிவகை அல்லது முறைபற்றிக் கருத்து வேறுபாடிருக்க லாமேயன்றி, தாய்மொழி வளர்ச்சிபற்றியும் கல்வித் துறையிலும் அவ் வேறுபாடிருத்தல் கூடாது. இங்கிலாந்தில், பழமை போற்றியர், தாராளிகர், உழைப்பாளியர் என மூவரசியற்கட்சி யிருப்பினும், ஆங்கில மொழிபற்றியோ இலக்கியம்பற்றியோ எள்ளளவும் கருத்துவேறுபாடு கொள்ளாமையை எண்ணிக் காண்க. இந்தியாவில், தாய்மொழியிலோ மேலை மொழியிலோ இரண்டிலுமோ மேற்கல்வி யில்லாத பலர் கட்சித் தலைவராகத் தலையெடுத்துள்ளனர். இதற்கு நூற்றிற்கெண்பதின்மர் தற்குறிகளா யிருப்பதும் குலப்பிரிவினையுமே கரணியம். எழுதப் படிக்கத் தெரிந்ததனால் மட்டும் ஒருவர் கற்றோர் அல்லது அறிஞர் ஆகிவிடார். ``ஆற்றவுங் கற்றார் அறிவுடையார்'' என்றார் முன்றுறையரை யனார் (பழமொழி.). ஆற்ற = மிக. தமிழில் மேற்கல்வியொடு பற்றுமில்லாத தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர், முற்றும் தந்நலம்பற்றியே, இந்திப் புறக்கணிப் பால் இந்திய வொற்றுமை கெடுமென்றும் வேலைவாய்ப்புக் குன்றுமென்றுங் கூறி, இளமாணவரைக் கெடுத்து வருகின்றனர். அவரும் தாய்மொழிப் பற்றில்லாப் பெற்றோரைப் பின்பற்றியோ, கொண்டதுவிடாத கட்சிவெறியாலோ, தமிழ்ப் பற்றின்மையாலோ, வரலாறறியாமையாலோ, பதவியாசையாலோ, வேலைகிடைக்கு மென்னும் நம்பிக்கையாலோ, ஆரியச் சார்பாலோ அதை நம்பிக் கெடுகின்றனர். தமிழ்நாட்டு இந்தி விலக்கால் இந்திய வொற்றுமை கெடப் போவதில்லை. ஆங்கிலம் ஆட்சிமொழியாயின், ஆங்கிலங் கற்றார்க்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகமெங்கும் வேலை கிடைக்கும். தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் இந்தியை ஏற்காவிடின் தம் பதவியை இழப்பர். இனி, எதிர்க்கட்சியிற் சேர்வதும் அவர்க்கு இழிவாகத் தோன்றும். இதனாலேயே பட்டறிவில்லா இளமாண வரைத் தேசிய மாணவர் எனப் பிரித்து, அடுத்த பொதுத் தேர்தலில் தம் வெற்றிக்குழைக்குமாறு, நாடு முழுதுந் தழுவிய ஒரு கழகத்தை யமைத்து மாவட்டந்தொறும் கிளைநிறுவி வருகின்றனர். பகுத்தறிவுள்ள தமிழ் மாணவர், தமிழ் எல்லாத் தமிழர்க்கும் பொதுவென்றும், ஆங்கில அறிவின்றி எதிர்காலத்திற் சிறப்பாக வாழ்தல் இயலாதென்றும், அறிதல் வேண்டும். ``.........................gRÉ‹thš - பற்றி நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி நதிகடத்த லுண்டோ நவில்'' (நீதிவெண்பா,11) தமிழ்ப்பற்றில்லாத மாணவரும்,எதிர்கால¤த«வாழ்வையு«தந்நாட்Lமுன்னேற்றத்தையு«நோக்கியேனு«இந்தியை¤தவிர்த்Jஆங்கிலத்jமேற்கொள்ளšவேண்டும். தமிழ் திராவிடர் முன்னேற்றக் கழக மொழியென்றும், அக் கழக மொழிக் கொள்கைக்கு முற்றும் முரணானதையே பேராயத்தார் கடைப்பிடித்தல் nவண்டுமென்றும்,ïருநச்சுக்fருத்துகள்,nபதையருள்ளத்திலும்nபராயக்கட்சிbவறியருள்ளத்திலும்gதிக்கப்பட்டுள்ளன.M§»y ஆட்சியாற் சென்னைநாடு என்று பெயர் பெற்றிருந்த தமிழ்நாட்டை மீண்டும் தமிழ்நாடென வழங்கச் செய்ததன்றி, வேறொன்றும் தி.மு.க. அரசு தமிழுக்குச் செய்துவிட வில்லை. ஆயினும், அதைக்கூடப் பேராயம் செய்ய விரும்பவில்லை யென்பது கவனிக்கதக்கது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டப்படி செல்ல வைத்ததும் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத்தை நிறைவேற்றியதும் தி. மு. க. ஆட்சியில் ஏற்பட்ட சிறந்த நன்மைகளே. தி. மு. க. ஆட்சியிற் பொதுவாகத் தமிழர்க்கோ சிறப்பாக மாணவர்க்கோ ஏதேனும் தீங்கு நேர்ந்திருப்பின், மாணவரெல்லாரும் ஒன்றுசேர்ந்து ஒரு கட்சியையமைத்து அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதல்லது, நாட்டிற்கும் தமக்கும் கேட்டையும் தீரா அடிமைத்தனத்தையும் வருவித்துக் கொள்வது கல்லூரி மாணவர்க்கு அழகாகுமா? தம் பருவத்திற்கும் கல்வி நிலைக்கும் தக்கவாறு பகுத்தறிவைப் பயன்படுத்தி உயர்திணைக் கேற்ப ஒழுகுதல் வேண்டும். ஆதலால், பாட்டிமார் சொல்லும் பகுத்தறிவிற்கொவ்வாத கதைகளைக் கேட்டின்புறும் சிறுவர் சிறுமிகளைப்போல், பேராயத் தலைவர் கூறும் இக்காலத்திற் கேற்காத தற்கொலைக் கொள்கை களை மாணவர் செவிக்கொள்ளாது, வள்ளுவரும் மறைமலை யடிகளும் காட்டியவழிச் சென்று உயர்வாராக. ஒருவன் இன்றைக்குச் சாகினும் நாளைச் சாகினும் ஏறத்தாழ ஒன்றே. அதுபோல் இந்தி முந்திவரினும் பிந்திவரினும் ஒன்றே. மேன்மேலுங் கல்வி கரையின்றியும் கற்பவர் நாட்குன்றியும் வருவதால், பயனற்ற மொழிக்கல்வியை அறவே விட்டுவிட்டுப் பயன்மிக்க அறிவியற் கல்விக்கே, பொன்னினும் மணியினும் பன்மடங்கு சிறந்த தம் தேடருஞ் சில் காலத்தைச் செலவிடுவாராக. மேற்கல்வியும் வெளிநாட்டுச் செலவும் அயல்நாட்டு அலுவற்பேறும் ஆங்கிலத்தாலன்றி இந்தியால் இயலாதென்பதையும் உணர்வாராக. தமிழ்நாடு தனிப்பட்டது உலக மொழிகள் மூவாயிரத்துள் (2796), தொன்மை, முன்மை; எண்மை(ஒலியெளிமை), ஒண்மை; இளமை, வளமை; தாய்மை, தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு சிறப்புகளை ஒருங்கே யுடையது தமிழ் ஒன்றே. ஆதலால், இந்தியாவில் மட்டுமன்றி உலக முழுமையிலும் தமிழ்நாடு தனிப்பட்டதாகும். ஆயிரக்கணக்கான முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் ஆரியரால் அழிக்கப்பட்டுவிட்டமையாலும், இந்தியா அளவு தெற்கிற் பரவியிருந்த தமிழன் பிறந்தகமாகிய பழம்பாண்டி நாடு கடலுள் முழுகிப் போனமையாலும், கடந்த மூவாயிரமாண்டு தமிழர் ஆரிய அடிமைத்தனத்துள் இருந்து வருவதனாலும், பழந்தமிழின் திரவிடத் தாய்மையும் உலக முதல் உயர்தனிச் செம்மொழிமையும் தமிழர் கண்ணிற்கும் தெரியாது மறைந்துள்ளன. மொழிகளின் உயர்வு தாழ்வு அவற்றின் இலக்கண விலக்கிய சொல்வளத் தன்மைகளைப் பொறுத்ததேயன்றி, அவற்றைப் பேசுவோர் தொகையைப் பொறுத்ததன்று. குறைந்த பக்கம், பன்மொழிக் கலவையும் அரைச் செயற்கை யாக அமைந்த இலக்கிய நடைமொழியும் தவறாக ஆரியத்திற்கு மூலமெனக் கருதப்படுவதும் ஆகிய, சமற்கிருதத்திற்கு அளிக்கப் படும் உயர்வேனும், அதற்கு அடிமூலமாகிய தமிழுக்கு அளிக்கப் பெறல் வேண்டும். தமிழ்நாட்டுப் பேராயக் கட்சித் தலைவர், தமிழின் சிறப்பை அறியாமையாலும் தமிழ்ப் பற்றின்மையாலும் கூறும் கூற்றுகள் கொள்ளத்தக்கனவல்ல. இந்தியால் தமிழ்நாட்டிற்கு நேரக்கூடிய தீங்குகள் மாணவர் கடுஞ்சுமை, மீளா அடிமைத்தனம், சேய்மைத் தமிழழிவு என மூன்றாம். இவற்றுள் இறுதியது ஈடிலாப் பேரிழப்பாதலால், இந்தியை எவ்வகையிலும் அறவே விலக்கல் இன்றியமையாததாம். தமிழ்நாடு தனிப்பட்டதாதலின், அதைப் பிற நாடுகளோ டொப்பக்கொண்டு ஓரியல் மொழித்திட்டம் புகுத்தாது தனிச்சிறப்பாக வேறியல் மொழித்திட்டமே வகுத்தல் வேண்டும். இந்தியப் பொதுமொழிபற்றி மறைமலையடிகள் கருத்து ஆங்கிலமே பொதுமொழியாதற் குரித்து ``இங்ஙனம் இவ் விந்திய தேயத்தில் மட்டுமேயன்றி இவ்வுலகம் எங்கணும், அழுந்திப் பயிலவும் பேசவும் வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழி யொன்றே, உலக முழுமைக்கும் பொதுமொழியாகப் பரவி வருதலால், அது தன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழியாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலுமே அவர்கட்கு எல்லா வகையான நலங்களையுந் தருவனவாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக் கூட்டுதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத் தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற் குதவி செய்யும் பல்லாயிரக் கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழியிலன்றி வேறெதி லேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத்தொழில் களைப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங் களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும், அவற்றால் தாஞ் செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலை செய்து ஊதியம் பெறுதற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணை செய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவி கொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்துவைத்தும், அதனைப் பொதுமொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழியாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மையில் உதவி செய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்காள்! ``இனி அரசியற்றுறையில் நம் இந்து மக்களை முன்னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கேட்க இவர்கட்குக் கண்திறப்பித்த தும், இவ் விந்திய நாடெங்கணும் பெரும் பொருட்செலவாற் பலகோடி மக்களாற் பயிலப்பட்டு இயற்கைப் பொதுமொழியாய்ப் பரவிவருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடுநிலை குன்றா உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக் கணக்கான நூல்கள் புதிய புதியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ்செல்வம் வளரப்பெறுவதுமான ஆங்கிலமொழியை, எல்லா மொழிகளிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்து வைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கில மொழியை, நம்மனோர்க்குப் பொதுமொழி யாக்காமல், இந் நலங்களில் ஒரு கடுகளவுதானும் இல்லா இந்திமொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே. Mjyhš, eªjÄœ eh£lt® M§»y¤ijíª jÄiHínk e‹F gÆ‹W ey« gÆ‹W ey«bgWthuhf!' - இந்தி பொதுமொழியா? பக். 24, 25. VI. முடிபு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய அடிமைத்தனம் இருந்துவருவதனாலும், கி. பி. 15 ஆம் நூற்றாண்டிற்குமேல் தமிழ் வேந்தராட்சி நீங்கி வெவ்வேறு வேற்றரசு ஏற்பட்டமையாலும், இலக்கியத் துறையிற் கோடன்மாரும் வையாபுரிகளும் தோன்றிய மையாலும், தமிழருட் பெரும்பாலார் பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம், போர்மறம், ஒற்றுமை, தமிழ்ப்பற்று ஆகிய பண்புகளை அல்லது பண்பாட்டுக் குணங்களை அறவே யிழந்துவிட்டனர். அதனால், ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து வந்த முகமதியர் வழியினர் ஆங்கிலராட்சி நீங்கியபின் தனிநாடுபெற்றும். தமிழ் தோன்றிய காலத்திலிருந்து தென்னாட்டி லிருந்துவரும் தமிழர் நாம் பிறந்த நாட்டையும் பெறமுடியாது போயிற்று தமிழகத்திற் சேர சோழ பாண்டிய மூவேந்தராட்சி நீங்கியதற் கும் அவர்க்குள் ஒற்றுமையின்மையே கரணியம். மூவேந்தரும் ஒற்றுமையா யிருந்தவரை அசோகப் பேரரசனும் தமிழகத்துட் கால்வைக்க முடியவில்லை. இந்தியாவில் தனிநாடு பெறக்கூடிய தகுதியும் உரிமையும் தமிழருக்கே சிறப்பாக உள்ளனவேனும்,``யாதும் ஊரே; யாவருங் கேளிர்'' என்றும், ``ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்'' என்றும் உயரிய கொள்கையையுடைய உரவோர் வழிவந்தவ ராதலின், மொழிநில மத இனம்பற்றிய பல்வேறு நாடாட்சி தந்நலமும் பகையுமே வளர்த்தலால், நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்னும் குறுகிய நோக்கின்றி, மன்பதை முழுதும் அன்பும் அமைதியுங்கொண்டு, இன்புற்று வாழ, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் பொது நாயகத்தை நிறுவும் பரந்த நோக் குடைமையால், இந்தி இந்தியப் பொதுமொழியாவதை அடியோடு தமிழர் வெறுக்கின்றனர். இந்தியா பன்மொழி யின மதங்கொண்ட பன்னாட்டு உட்கண்ட மாதலால், ஒற்றுமையே (Unity) யன்றி ஒருமை (Oneness), ஒருமைப்பாடு (Integration), ஓரியன்மை (Uniformity)v‹gt‰iw¥ பெறமுடியாது. தமிழர் இந்திய ஒற்றுமையை விரும்புகின்றனர். அதற்குப் போக்குவரத்து, தற்காப்பு, காசடிப்பு, வெளிநாட்டுறவு ஆகிய நாற்றுறை நடுவணரசிடம் இருந்தாற் போதும். கல்வி நாட்டரசிற் குரிய பொருட்டுறையாதலால், அதிற் கூட்டரசு தலையிடக் கூடாது. இந்திய ஒற்றுமை இந்தியைச் சார்ந்ததன்று. ஓரியன்மை யென்பதைத் தலைக்கீடாகக்கொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப்பின், தமிழ்நாட்டுப் பிரிவினைக்கு இந்தி வெறியரே அடிகோல்பவராவர். மொழித்துறையில் ஓரியன்மை காண முயல்வது பல்வேறு நிறமாயுள்ள இந்தியர் உடம்பில் ஒரே சாயத்தைப் பூசுவதொத்ததே. இற்றை மாணவரே எதிர்காலக் குடிவாணரும் அமைச்சரு மாதலால், மாவட்டவாரியாகப் பிரிந்து நில்லாது நாடு முழுதும் ஒரே அமைப்பாகக் கூடி, நிலையாக நின்று செயற்பட வேண்டும். மாணவர் தலைவரா யிருக்கும் கல்லூரி யிறுதியாண்டு மாணவர் ஆண்டுதோறும் வேனில் விடுமுறையிற் கூடி, ஒரு போலியமைச் சரங்கு (Shadow Cabinet) போல், தத்தம் கல்வித் துறையொடு தொடர்புள்ள நாட்டுச் செய்திகளையும் ஆட்சி முறையையும்பற்றிப் பேசலாம். நாடாட்சி நன்முறையில் நடப்பின் ஒத்துழைக்கலாம்; தீயமுறையில் நடப்பின் திருத்தலாம். அஃதியலாக்கால் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வழிவகுக்கலாம். மாணவர் எத்தகை யெதிர்ப்பையும் கிளர்ச்சியையும் சட்ட முறைப்படியே அமைதியாகவும் வன்செயலின்றியும் நிகழ்த்துதல் வேண்டும். போக்குவரத்துத் தடையும் பொருட்சேதமும் விளைப்பின், பொதுமக்கள் வெறுப்பைத் தேடிக்கொள்வதொடு புகைவண்டிக் கட்டண வுயர்விற்கும் புதுவரிகட்குமே வழிவகுப்பவ ராவர். இனி, அரசியல் தண்டனைக்கும் ஆளாவர். ஆளுங்கட்சியாயினும் ஆளாக்கட்சியாயினும் அரசியற் கட்சித் தலைவர் மாணவரைக் கட்சிச் சார்பாக்குவது நன்றன்று. அது, அவரது அகக்கரண வளர்ச்சியைப் பெரிதும் தடுக்கின்றது. கல்லூரி விட்டு நீங்கி ஏதேனும் ஒரு வேலை மேற்கொண்டு வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பே, அவரவர் கருத்துப்படி ஏதேனுமொரு கட்சியைத் தழுவ இடந்தர வேண்டும். இன்று தேசிய மாணவர் என்றும், திராவிட முன்னேற்றக் கழக மாணவர் என்றும், மாணவ நிலையிலேயே இருவேறு கட்சி ஏற்பட்டுள்ளன. இந் நிலைமையில், நகராட்சியிலும் ஊராட்சியிலும் கட்சிச் சார்பு காட்டல் கூடாதென்று, ஒவ்வொரு கட்சித் தலைவரும் கூறுவதில் என்ன பொருளிருக்கின்றது? உள்ளாட்சித் துறையிலும் வேட்பாளர் வெளிப்படையாகக் கட்சிச் சார்பாகவே போட்டியிடும் போது, அவ் வாட்சிமன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர் எங்ஙனம் நடுநிலையாயிருக்க முடியும்? இங்ஙனம் இளமை முதல் முதுமை வரை கட்சிமனப்பான்மை தொடரவிடின், இங்கிலாந்திற்போல் தகுதிபற்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பண்பாடு எந்த வூழியில் அமையும்? ஆளுங்கட்சியிற் சேர்ந்தால் எளிதாய் அலுவல் கிடைக்கும் என்னும் நம்பிக்கையே, ஒரு மாணவரின் நடுவுநிலையை நீக்கி விடுகின்றது. ஆளுங்கட்சி அவருக்குத் தரும் வேலையும் ஒரு கையூட்டுப் போலாகின்றது. இதனால் நடுநிலை மாணவர் இடர்ப் பட நேர்கின்றது. ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் பண்பாடேயன்றி உண்பாடன்று. சென்னைச் சட்டப் பேரவை யிருமொழித் திட்டத் தீர் மானத்தை நடுவணரசு இன்னும் ஒப்புக்கொள்ளாமையால், பகுத்தறிவும் தன்மானமும் தமிழ்நாட்டு முன்னேற்றத்தில் நன்னோக்கமும் கொண்ட மாணவர், சிறப்பாகச் சூழ்ச்சியவினைக் கல்லூரி மாணவர், வருகின்ற வேனில் விடுமுறையில், அவரவர் வட்டகை யூர்தொறுஞ் சென்று, இந்தியால் விளையுந் தீங்கைப் பொதுமக்கட்கு எடுத்துச் சொல்வாராக. ``குடிசெயல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்'' (குறள். 1023) தாய்மொழியாகிய தமிழும் உலகப் பொது அறிவியல் மொழி யாகிய ஆங்கிலமுஞ் சேர்ந்த இருமொழித் திட்டமே தமிழ் நாட்டிற்கு இனி யெக்காலுந் தக்கதாம். இங்ஙனமே பிற பைதிரங்கட்கும் தாய் மொழியும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே ஏற்றதாம். இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம் ஒன்றே ஆட்சியும் கல்வியும் இணைப்பும்பற்றிய பொதுமொழியா யிருப்பது தலைசிறந்த திட்டமாகும். பின்னிணைப்பு 1. இந்தியால் முருகன் ஆரியத் தெய்வமாகுங் கேடு தமிழ், இடையிட்டிடையிட்டுப் பகுதி பகுதியாய் இந்திய வாரியில் மூழ்கிப் போன குமரிக்கண்டத்தின் தென்கோடியில், இற்றைக்கு 50,000 ஆண்டுகட்கு முன்பே தானாகத் தோன்றிவளர்ந்த உலக முதல் உயர்தனிச் செம்மொழி யென்பதும், தமிழ்நாடே உலகில் முதன்முதல் தோன்றிய பல்துறை நாகரிகப் பண்பாட்டு நாடென்ப தும், எவரும் உண்மையில் மறுக்கொணாத செய்திகளாம். பாண்டியர் முத்தமிழையும் வளர்த்த பண்டை முத்தமிழ்க் கழகங்களுள், முதலது கி.மு. 10,000 ஆண்டுகட்குமுன் தோன்றிய தாகும். அன்று ஆரியம் என்னும் பேரும் எவர் உள்ளத்திலுங் கருக்கொண்டதில்லை. தமிழர் முறையே நாகரிகமடைந்த குறிஞ்சிநிலை, முல்லை நிலை, மருதநிலை என்னும் முத்திணை நிலைகளுள் முதலதான குறிஞ்சிநிலையி லிருந்தபோதே, அவர் தொழுத முதல் திணைநிலைத் தெய்வம் முருகனே. முருகன் என்னும் பெயரின் முதற்பொருள் இளைஞன் என்பதே. அதன் வழிப்பொருள்கள் அழகன், மறவன் என்பனவாகும். அழகும் மறமும் இளமையிலேயே மிகுந்திருக்கும். முள் - முளை. முளைதல் (முளைத்தல்) = தோன்றுதல், முளைவிடுதல். முளை = 1. விதைமுளை. ``வித்திய வெண்முளை'' (ஐங். 29) 2. இளமை. ``முளையமை திங்கள்'' (கம்பரா. கும்ப. 16) 3 மரக்கன்று. ``அதன்றாள் வழியே முளையோங்குபு'' (சீவக. 223) முளையான் = குழந்தை, சிறுவன். முள் - முரு - முருகு = 1. இளமை (திவா.) 2. அழகு (பிங்.) 3. முருகன். ``முருகொடு வளைஇ'' (மதுரைக்.611). 4. தெய்வம். ``முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல'' (புறம். 259) 5. வேலன் வெறியாட்டு. ``முருக யர்ந்து வந்த முதுவாய் வேலன்'' (குறுந். 362) 6. வேள்வி ``படையோர்க்கு முருகயர'' (சூளா. நாட்.7) 7. திருவிழா. ``முருகயர் பாணியும்'' (சூளா. நாட்.7) முருகு - முருகன் = 1. இளைஞன் (திவா.) 2. சேயோன். 3. வெறியாட்டுவேலன் (பிங்.) ம. முருகன், க. முருக. முருகன் முதற்காலப் பொதுத் தெய்வமா யிருந்ததினாலேயே, முருகு என்னும் சொற்குத் தெய்வம், வேள்வி(படைப்பு), திருவிழா என்னும் பொருள்கள் தோன்றின. உரு (தோன்று), குரு (தோன்று), நுரு (பிஞ்சு), புரு (குழந்தை) என்பவற்றொடு முரு என்பதையும்; குருகு (குருத்து, குட்டி) என்பதனொடு முருகு என்பதையும் ஒப்புநோக்குக, முள் - முட்டு = சிறுபிஞ்சு. முட்டுக்குரும்பை = முற்றா இளநீர். முட்டு - மொட்டு = அரும்பு. மொட்டு - மொட்டை = இளமை. மொட்டைப் பையன் = இளவட்டம் (இளமட்டம்). முள் - மள் - மள்ளன் = இளைஞன், மறவன். மள் - மழ = இளமை, குழந்தை. மழ - மழவு = இளமை, ``மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். 795) மழவு - மழவன் = இளைஞன், மறவன். மழ - மழல் - மழலை = இளமை, மென்மை குழந்தைமொழி. மழலை - மதலை = குழந்தை, மகன், குழந்தை மென்மொழி. ஒ.நோ. குழ - (குழலை) - குதலை. மழல் - மழறு. மழறுதல் = மென்மையாதல். மழ - மட. மடமை = இளமை, ``அஞ்சல் மடவனமே'' (நள. 27) வேட்டையாடுவதையே பெருந்தொழிலாகக் கொண்டு விலங்கிடை வாழ்ந்த முதற்காலக் குறிஞ்சிநிலத் தமிழ்மக்கள், வேல் கொண்டு வேங்கையொடும் யானையொடும் பொரும் தறுகண் மறவராயிருந்ததினால், தங்கள் தெய்வத்தையும் தலைசிறந்த மறவனாகக் கொண்டு அதற்குத் தக்க இளைஞன் என்னும் கருத்தில் முருகன் அல்லது குமரன் எனப் பெயரிட் டழைத்தனர்; மலை களிலுள்ள மரங்கள் உராய்ந்து தோன்றும் செந்நெருப்பை அவன் தோற்றமாகக் கருதி அவனைச் சேயோன் (சேந்தன்) என்றனர்; தம் படைக்கலமாகிய வேலையே அவனுக்கும் படைக்கலமாக்கி அவனை வேலன் என்றனர்; மலங்காட்டுக் கடப்பமலர் மாலையை அவனுக்கு அணியாக்கிக் கடம்பன் என்றனர்; குறிஞ்சிக்கேயுரிய அழகிய பறவையாகிய மயிலை அவனுக்கு ஊர்தியாக்கினர்; அந் நிலத்திற்கே யுரிய மறமிக்க போர்ச்சேவலின் வடிவை அவன் கொடியுருவமாக்கினர்; தாம் உண்ணும் தினைமாக் கொழுக் கட்டையையும் கொழுத்த வெள்ளாட்டுக் கடாக்கறியையும் தாம் பருகும் தேனையும் கள்ளையும் அவனுக்கு உணவாகப் படைத்தனர்; குறிஞ்சிநிலத் தலைவிக்கு அல்லது பெண்மணிக்கு இடும் வள்ளி (கொடி, கொடிச்சி) என்னும் பெயரை அவன் தேவி பெயராக்கினர். அம்பலக் கற்றூணில் உருவம் பொறிக்கப்பட்டமையால் அல்லது உறைவதாகக் கருதப்பட்டமையால், முருகன் கந்தன் எனப்பட்டான். கந்து = தூண். கந்து - கந்தன். ஆறுமுகம் என்பது பிற்காலத்தில் முருகன் என்னும் ஒரு பாண்டியனின் ஆறுபடை வீடுகள் பற்றியெழுந்த பெயராகத் தோன்றுகின்றது. முகம் = இடம். யானையூர்தியும் அவ் வேந்தனதே. இவை யாவும் ஆரியர் வருமுன் தமிழகத்தில் நிகழ்ந்த செய்தி களாகும். ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்களும் ஆரிய ஏமாற்றை வெளிப்படுத்தும் சான்றாகாவாறு ஆரியரால் அழிக்கப் பட்டு விட்டமையால். அவற்றிலிருந்து மேற்கோள் காட்ட முடியவில்லை. ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலமே கி.மு. 2000-1500தான். இறைவன் பெயரால் என்ன சொன்னாலும் நம்புமாறும் எதைக் கேட்டாலுந் தருமாறும் மதத்துறையில் மடம்பட்ட இந்தியப் பழங்குடி மக்களை யெல்லாம் ஏமாற்றால் அடக்கியொடுக்கி, தாமே என்றுந் தலைமையா யிருந்து இன்பமாய் வாழ எண்ணிய தன்னல ஆரியப் பூசாரியர், தமிழ் நாகரிகம் தலைசிறந்துள்ள தென்னாட் டொடு (கி.மு.1200போல்) தொடர்பு கொண்டபின்; தமிழத் தெய்வங்களையும் மதங்களையும் ஆரியப்படுத்தும் முயற்சியில், முருகனைப் பனிமலையடிவாரச் சரவணப் பொய்கையிற் பிறந் தானென்று பகுத்தறிவிற்கொவ்வாத அநாகரிகக் கதையொன்று கட்டி, அவனுக்குச் சரவணபவ (நாணற்காட்டிற் பிறந்தான்) என்றும் சுப்பிரமண்ய(ன்) (பிராமணர்க்கு நல்லவன்)என்றும் பெயரிட்டு; குமரன், கந்தன் என்னும் பெயர்களைக் குமார, கந்த என்று திரித்தும் ஆறுமுகம் என்பதை ஷண்முக என்று ஒரு பகுதி மொழிபெயர்த்தும், இருகை முருகனைப் பன்னிரு கையனாக்கியும், காளைப்பருவத்தானைப் பையற் பருவத்தானாகக் காட்டியும், தெய்வயானை என்னும் வேறொரு தேவியையுஞ் சேர்த்தும், பிறவாறும் உண்மைகளை மாற்றித் தமிழர் முற்றும் நம்புமாறு செய்துவிட்டனர் ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சி முறையும் தமிழகத்திற் புகுத்தப் பெற்று இருநூற்றாண்டாகியும் இன்னும் பட்டக்கல்வி கற்ற தமிழர்க்குங் கண்திறவாமையால், 1964ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 22 ஆம் பக்கல் சென்னையரசு பொருட்காட்சிச்சாலை மண்டபத்தில் தென்னிந்தியப் பழம்பொருட் கலைக்கழகச் சார்பிற் பேரா. கே. ஏ. நீலகண்ட சாத்திரியார் படித்த கட்டுரையில், செந்து (Zend) மொழியில் முருக் (Muruk) என்றும் பழம்பாரசீகத்தில் முர்க் (murgh) என்றும் சேவலைக் குறிக்குஞ் சொல்லிருத்தலால், அச் சொல்லினின்றே சேவற்கொடியோனாகிய தெய்வத்தைக் குறிக்கும் முருகன் என்னும் தமிழ்ப் பெயரும் திரிந்துள்ளதென்று கூறியுள்ளார். இதை மறுத்துத் தமிழறிஞர் சிலர் `குறள் நெறியிற் கட்டுரை வரைந்தாரேனும், நாடு முழுதுங் கிளர்ச்சி யெழவில்லை. முப்பெருஞ் சிவமடங்களும் மூகங்களா யிருந்துவிட்டன. சட்டப் புலமைபெற்ற தமிழ வழக்கறிஞரும் சற்றும் வாய்திறந்திலர். இந்நிலையில், தமிழண்ணல் இராம. bgÇa fU¥g‹, v«.V., `குறள்நெறி' யிதழ் நான்கில் வரைந்த தொடர்கட்டுரை மிகப் பாராட்டத்தக்கதும் தமிழன் தன்மானத்தைப் பெரிதுங் காப்பதுமாகும். ஆரிய மதமெல்லாம் பல்வேறு சிறுதெய்வ வேள்வி வழிபாடே யென்பதையும், வேதத் தெய்வங்களுள் முருகன், சிவன், காளி, திருமால் என்னும் நால்வரும் இல்லை யென்பதையும், நன்றாயறிதல் வேண்டும். இனி, இந்தியில் சேவற்கோழிப் பெயர் முர்கா என்றும் பெட்டைக்கோழிப் பெயர் முர்கீ என்றும் இருத்தலால், இந்தி இந்தியப் பொதுமொழியாயின், பேரா. கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் தோற்றுவாய் செய்துவைத்த ஆராய்ச்சிக் கட்டுரை, ஓர் ஆராய்ச்சி நூலாக விரிந்து, ஒரு வையாபுரியார் அல்லது ஆரியர் பண்டாரகர் பட்டம் பெற உதவும் என்பது திண்ணம். அதன்பின் அம் முடிவை மாற்றுவது அரிது. முருகன் என்னும் பெயரும் முர்க என்னும் வடிவடையும். முருகன் தமிழ்த் தெய்வமே என்பது என் தமிழர் மதம் என்னும் நூலில் ஐயந்திரிபற விளக்கப் பெறும். 2. இந்திய வொற்றுமையைக் குலைப்பவர் யார்? ``நமக்குச் சென்னையில் அடிமையர் உளர்'' (We have comrades in Bombay, administrators in Delhi, enemies in Bengal and slaves in Madras) என்று இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆங்கிலப் படைத் தலைவரா யிருந்த கிச்சினர் பெருமகன் கூறியதற்கேற்ப, தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரும் திரவிடநாடுகளின் பேராயத் தலைவரும் தம் அடிமைத் தனத்தினாலும் பதவிப் பேற்றுத் தன்னலத்தினாலும் இந்தியாரை ஆங்கிலர்போல் ஆளுங்குலமாகக் கருதிக்கொண்டு அவரொடு கருத்தொத்து, தமிழரையும் திரவிடரையும் அவர்க் கடிமைப்படுத்து மாறு, இந்தி கற்காவிடின் இந்திய வொற்றுமை குலைந்து போம் என்றும், அரும்பாடுபட்டடைந்த விடுதலையை இழந்துவிடுவோம் என்றும், பாட்டிமார் குழந்தைகட்குப் பூச்சாண்டி காட்டுவதுபோற் கூறிவருகின்றனர். இந்திக்கும் இந்திய வொற்றுமைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. விடுதலை யடைந்தது ஆங்கில வாயிலாகவே யன்றி இந்தி வாயிலாக வன்று. இனி, இந்தி கற்காவிடின் தமிழ்நாட்டு மாணவர்க்கு வேலைவாய்ப்புக் குன்றுமென்பதும்,இந்தியைப் புகுத்தாவிடின் தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர்க்குப் பதவி வாய்ப்புக் குன்றும் என்பதுபற்றியே. ஆங்கிலம் அறிவியன் மொழியாகவும் உலகப் பொதுமொழி யாகவும், இருநூற்றாண்டுகளாக இந்தியப் பொதுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் உயர்கல்வி மொழியாகவும் இருந்து வருவதால், அதனை அங்ஙனந் தொடரவிடுவதே, பல்வேறு இந்திய நாடுகட்குள் பொறாமைக்கும் பிளவிற்கும் எள்ளளவும் இடமின்றி, நடுநிலைமையைப் பேணியும் திறமையை வளர்த்தும், நிலையான ஒற்றுமைக்கும் அரணான வாழ்விற்கும் பல்துறை முன்னேற்றத் திற்கும் உண்மையாக வழிகோலுவதாகும். இற்றை யாங்கிலமொழி நூற்றிற்கெண்பது கிரேக்க இலத்தீன மாகவும், நூற்றிற்குப் பத்து அவையல்லாத பிறமொழிகளாகவும், எஞ்சிய பத்தே ஆங்கில சாகசனியமாகவும் இருப்பதால், அது உலகப் பொதுவானதேயன்றி ஆங்கிலர்க்கே சொந்தமானதன்று. இற்றை யிந்தியருள் ஒரு வகுப்பாரான ஆங்கில-இந்தியரின் தாய்மொழி ஆங்கிலமாகவே யிருப்பதால், அது இந்தியாவிற்கு அயன்மொழியு மன்று இற்றை யிந்திய நடுவணாட்சி பேராயக்கட்சியினதாத லாலும். அக் கட்சித் தலைவருட் பெரும்பாலார் இந்தியாரும் இந்திச்சார் பினருமாதலாலும், அக் கட்சியாட்சித் தொடர்ச்சிக்கு இந்திவெறியர் துணை இன்றியமையாதலாலும், நடுவணரசினர் தந்நலமுங் கட்சி நலமுமே கருதி இந்திய முன்னேற்றத்தைப் புறக்கணித்து, இந்தியப் படையையும் பெரும்பாற் பொதுமக்களின் கல்லாமையையும் தகாதவகையிற் பயன்படுத்தி, இந்தியைச் செயற்கை முறையில் வளர்ப்பதிலும் பரப்புவதிலுமே கண்ணாயிருந்து, துணிச்சலுடன் பொதுமக்கள் பணத்தைக் கோடிக்கணக்காக அதற்குச் செலவிட்டு வருகின்றனர். இந்திய நாட்டு மொழிகளாக எண்ணப்பெற்ற பதினைந்தை யுஞ் சமமாகக் கருதாது, அவற்றுள் வடநாட்டு வழக்கு மொழியாகிய இந்திக்கும் ஒரு நாட்டிலும் வழங்காத இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்திற்கும் ஒருசிறிதும் தகாத தனிச்சலுகை காட்டி, வலிமைக்கு வழக்கில்லையென்னும் முறையில் ஏராளமாகப் பொது மக்கள் பணத்தைச் செலவிட்டுவரும் முறைகேட்டை, இதுவரை தமிழ்மக்கள் பொறுத்து வந்ததே அவர்கள் பெருந் தன்மைக்கும் ஒற்றுமை விருப்பிற்கும் தலையாய சான்றாம். மொழிகளின் உயர்வு தாழ்வை அவற்றின் தகுதிபற்றியல்லது அவற்றைப் பேசுவார் தொகைகொண்டு கணித்தல் கூடாது. பேசுவார் தொகைபற்றிப் பெருமைபெறின், சீனமொழியே உலகில் தலை சிறந்ததாகும். அதனால் அதை எல்லா நாட்டாரும் கட்டாயமாகக் கற்க வேண்டிவரும். தமிழுக்கும் இந்திக்குமுள்ள வேற்றுமை புலிக்கும் பூனைக்குமுள்ள அளவாகும். மொழியளவில் ஒரு தமிழனை ஒன்பதிந்தியார்க்குச் சமமாகக் கொள்ளினும், 27 கோடியராகும் தமிழர் 12 கோடியரான இந்தியாரினும் ஒன்றேகால் மடங்கு மேம்பட்டவராவர். இனி, ஒரு குடும்பத்து உடன்பிறந்தாரொப்ப 14 வழக்கு மொழிகளையுஞ் சமமாகக் கொள்ளினும் இந்தி மேம்பாட்டிற்கிட மில்லை. ஒருவர்மீது இன்னொருவர் ஏதேனுங் குற்றஞ்சாட்டின், அக் குற்றம் உண்மையிற் குற்றந்தானா என்று முதலிற் கண்டறிதல் வேண்டும். அதற்கு அதற்குரிய துறையறிவும் வேண்டும். களாப் பழமும் பலாப்பழமுங் கண்டறியாதவன் பழம் என்னும் பெயரளவில் இரண்டையும் சமமாகக் கருதலாம். அங்ஙனமே இந்தியையும் ஆங்கிலத்தையும் ஆய்ந்தறியாதவன் இரண்டையும் மொழி என்னும் பெயரளவில் ஒருநிகராகவே கொள்ளலாம். ஒருவர் ஒரு கட்சிக்குத் தலைவர் என்ற நிலைமையினாலேயே அவர் கூற்றை எல்லாருங் கொள்ளத்தக்க நிலைமை ஏற்பட்டு விடாது. அவர் ஒன்றைப் பலமுறை சொல்வதினாலேயே அது உண்மையும் ஆகிவிடாது. ஒரு போலிக்கூற்று மறுக்கப்படவுஞ் செய்யலாம்; மறுக்கப்படாதுமிருக்கலாம். மறுக்கப்படாமை யிலேயே ஒரு போலிக்கூற்று பொருண்மைக் கூற்றாகிவிடாது. மறுப்பென்பது மறுப்பார் விருப்பத்தையும் மறுக்கும் அமைய வாய்ப்பையும் பொறுத்தது. நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளாக விருக்கும் நாட்டில் எவரும் கட்சித் தலைவராகலாம், பேச்சாற்றல் வாய்ந்தவராயின். உலகில் தன்னலமே மிக்கிருப்பதால், ஒருவரது விருப்பம் நிறைவேறாவிடின் அதற்குத் தடையாயுள்ளவரைக் கடிந்து கொள்ளத் தான் செய்வர். ஒரு பொருளை விற்பவர் அதைப் பலர் வாங்காவிடின் அவரை வெறுப்பது இயல்பே. அங்ஙனமே ஒரு கட்சித் தலைவரும் தம் கருத்தைப் பிறர் ஏற்காமையால் தம் தலைமையை இழக்க நேரின், ஏற்காதவர்மேற் குறைகூறுவதும் இயல்பே. உலகில் முதன்முதல் நாகரிகப் பண்பாட்டைக் கண்டவரும் அதை உலகெங்கும் பரப்பினவரும் தமிழரே. ஆதலாற் பண்பாட்டுக் குணங்களுள் ஒன்றாகிய ஒற்றுமையை அவர் வேண்டாதவரல்லர். ஒற்றுமை நன்றே. ஆயின், ஒற்றுமை கையாளப்பெறும் மக்கட்பரப்பளவு அது வேண்டப்பெறும் வினையை அல்லது செய்தியைப் பொறுத்தது. ஒரு சிறு குடும்பத்தில் எல்லாரும் எல்லாவற்றிலும் ஒற்றுமையாயிருக்கலாம். ஆயின், ஒரு பரந்த உட்கண்டத்தில், போக்குவரத்தும் தற்காப்பும் போன்ற பெருஞ் செய்திகளில்தான் ஒற்றுமை யிருக்க முடியும். அதற்கு மேற்படின் ``பேராசை பேரிழப்பு'' என்றாகிவிடும். இந்தியப் பொதுவான காசுகளிலும் காசுத் தாள்களிலும் ஏமவைப்பக ஆள்நரின் (Reserve Bank Governor) கையெழுத்தும் வாய்நேர்வும் (Promise) ஆங்கிலத்தில்தான் இருத்தல் வேண்டும். இந்தியிலுமிருப்பின் தமிழிலும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால் மீண்டும் இந்தியெதிர்ப்புத் தமிழ்நாட்டிற் பொங்கியெழும். தன்மானத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஒவ்வாத அடிமைச் செயலும் பயனில் முயற்சியுமான செய்திகளில், சிற்றளவான பண்பட்ட மக்கட் பரப்பிலும் ஒற்றுமையமையாது. ஒரு கூட்டு வாழ்க்கையில் ஒரு சாராரின் மீச்செலவை (வரம்பு கடந்த நடத்தையை) மற்றொரு சாரார் ஒரு குறிப்பிட்ட கால எல்லைவரை பொறுத்திருந்தாராயின், அப் பொறையை அவர் நெடுகலுங் கையாள வேண்டுமென்னும் யாப்புறவில்லை. தமிழர் ஒருபோதும் இந்தியை இந்தியப் பொதுமொழியாக ஏற்றுக்கொள்ள வில்லை. இந்திச் சார்பினர் மட்டும் வகுத்த மொழித்திட்டம் தமிழரைக் கட்டுப்படுத்தாது. தமிழ்நாட்டு மாணவருள் மாபெரும்பாலார் தேசியப் படை மாணிப் (NCC) பயிற்சியில் இந்தியேவற் சொற்களை வேண்டா மையால், அப் பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டது. ஆயின் அச்சொற்கள் பத்துப் பதினைந்துதான் என்றும், ஏனையவெல்லாம் ஆங்கிலமா யிருப்பதால் அவ் விந்திச் சொற்களை முன்போல் வழங்கலாமென் றும், அவற்றிற் பயிற்சிபெற்ற ஆசிரியர் அவற்றிற்கீடாக ஆங்கிலச் சொற்களை இனி ஆள்வது அரிதென்றும், ஆகவே மறுசூழ்வு செய்து பழையபடி படைமாணிப் பயிற்சியை நடத்துவதே தக்க தென்றும், நடுவணரசினர் தமிழ்நாட்டரசைக் கேட்டிருக்கின்றனர். இதிற் பலவகை இடர்ப்பாடுகள் நேர்கின்றன. (1) தேசியப் படைமாணிப் பயிற்சி சிலர்க்கு வேலைவாய்ப் பளிப்பதால் அதனைப் பெறுவது நன்றே. மக்கள் பெருகப்பெருக வேலை வாய்ப்பும் பெருகல் வேண்டும். (2) இந்தியாவின் மற்றப் பகுதிகளிலெல்லாம் மாணவர்க்கு அவ் வாய்ப்பு இருக்கும்போது, அதைத் தமிழ்நாட்டு மாணவர்க்கு மட்டும் மறுப்பது நன்றன்று. ஆயின்,அது தமிழ மாணவரின் தன்மானத்திற்கு இழுக்காயிருத்தல் கூடாது. (3) அயன்மொழியாரும் தாய்மொழிப் பற்றில்லாத வருமான தமிழ்நாட்டு மாணவர் சிலர் அப் பயிற்சியை இந்திச் சொற்களொடும் விரும்பலாம். ஆயின், நாட்டு மொழியும் பண்பாடும் கெடாதவாறு அயலாரும் பற்றில்லாரும் பெரும்பாலாருடன் ஒத்தேபோதல் வேண்டும். (4) பத்துப் பதினைந்தே இந்திச் சொற்களிருப்பதால், அவற்றை இந்தியா முழுதும் எளிதாய் நீக்கிவிடலாம். அவற்றிற் பயிற்சி பெற்ற ஆசிரியர் அவற்றிற்கீடாக ஆங்கிலச் சொற்களை ஆள்வது அரிதென்பது பொருந்தாது. எங்ஙனமும் இந்தியைத் திணித்துவிட வேண்டுமென்னும் ஒட்டாரத்தையே இக் கூற்றுக் காட்டுகின்றது. (5) பத்துப் பதினைந்து இந்திச் சொற்களைத் தொடர விட்டால், நாளடைவில் எல்லாச் சொற்களும் இந்திச் சொற்களாக மாறிவிடலாம். (6) இந்திச் சொற்களை ஆள்வதால், உறைத்த தமிழ்ப் பற்றுள்ள மாணவர் அப் பயிற்சியிற் சேரத் தடையாக லாம். (7) தி.மு.க. அரசு கல்வித்துறையில் நடுவணரசிற்கு மாறாக இந்தி நீங்கிய இருமொழித் திட்டத்தை மேற்கொண் டிருப்பதால், தேசியப் படைமாணியர் பயிற்சியில் ஒருகால் விட்டுக்கொடுப்பினுங் கொடுக்கலாம். இதனால் தி.மு.க. வின் இந்தி விலக்குக் கொள்கை தளர்ந்ததாகக் கருதப்படும். இனி, இந்திச் சொல்விலக்கில் தி.மு.க.அரசு விடாப்பிடியா யிருப்பின், நடுவணரசு ஏதேனும் இடர்ப்பாடும் உண்டாக்கலாம். அதனால் தமிழ்நாட்டுப் பிரிவினை யுணர்ச்சிதான் வலுக்கும். இப் படைமாணிப் பயிற்சி ஆங்கிலத்திலேயே தொடங் கினமையாலும், இன்றும் பெரும்பால் ஏவற்சொற்கள் ஆங்கில மாகவே யிருப்பதனாலும், இந்திய வொற்றுமைக்கு ஆங்கிலமே ஏற்றதாதலாலும், இந்தி வெறுப்புத் தமிழ்நாட்டில் வரவர வளர்ந்து வருவதனாலும், தமிழ்நாடு பலவகையில் தனிப்பட்டதாதலாலும், படைப்பயிற்சிச் சொற்களெல்லாவற்றையும் இந்தியாவெங்கும் ஆங்கிலத்தில் ஆள்வதே அறிவுடைமையாகும். ஆங்கிலம் இந்தியப் பொதுவாயில்லாவிடின், தமிழ்நாடுமட்டும் என்றும் இந்தித் தொடர்பு அற்றதாகவே யிருக்கும். தென்னாட்டிற் கல்வி வளர வளர ஆங்கில விருப்பும் இந்தி வெறுப்பும் வளர்ந்துகொண்டே வரும். ஆதலால், ஆங்கிலத்தை ஒரே இந்திய ஆட்சிமொழியாக்காவிடின், அண்மையிலோ சேய்மை யிலோ எதிர்காலத்தில் இந்தியா இருதுண்டாவது ஒருதலை. இதற்கு இந்தி வெறியரும் பேராயத் தலைவருமே பொறுப்பாளியராவர். இவ்விரு சாராரும் தாங்களே இந்திய ஒற்றுமையைக் குலைத்துக் கொண்டு தங்கள் கொள்கையை ஏற்காத பிறர்மேல் அக் குற்றத்தை ஏற்றிக்கூறுவது, தங்கள் குற்றத்தை இருமடியாகப் பெருக்குவதே யாகும். தாக்குவான் தாக்குண்டவனின் தற்காப்பைத் தாக்காகக் காட்டுவது கடைப்பட்ட கயமைத்தனமாகும். தமிழன் உயிர்நாடி தமிழ் தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர், ``நாங்கள் நூற்றுக் கணக்கான பள்ளிகளை நிறுவினோம்; பல கல்லூரிகளைத் தோற்றுவித்தோம்; பள்ளியிறுதிவரை படிப்பை இலவசமாக்கி னோம்; பல்கலைக்கழக முன்னை வகுப்பையும் (P. U. C. ) இலவச மாக்க இருந்தோம்; பள்ளிகளில் ஏழை மாணவர்க்குப் பேருதவியான நண்பகல் உணவுத் திட்டத்தைப் புகுத்தினோம்; பல அணைகள் கட்டினோம்; பல இடங்களில் நீர்ப்பாசன ஏந்துகள் (வசதிகள்) ஏற்படுத்தினோம்; பல தொழிற்சாலைகள் அமைத்தோம்; நிலவரிக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றினோம்; பயிர்த்தொழிற்கு மின்னாற்றலை நிரம்ப வழங்கினோம்; எங்கள் ஆட்சிக்காலமெல் லாம் உணவுப் பெருக்கமும் தொழில் வளர்ச்சியும் பொருள் நிலைக்கள (ஆதார) முன்னேற்றமும் தொடர்ந்து வந்தன. என்று குன்றேறி நின்று பறைசாற்றலாம். ஆயின், இந்திக் கல்வியால் தமிழ வாழ்விற்கு நஞ்சூட்டப்பட்டதை அவர் கொஞ்சமும் உணர் வதில்லை. இந்தியாலேயே சென்ற பொதுத் தேர்தலில் தலைகீழாய் விழுந்தும் இன்னும் அதையே போற்று வதனால், அடுத்த தேர்தலில் தமக்கு வரக்கூடிய வெற்றியையும் தாமே உதைத்துத் தள்ளுகின்றனர். இந்தியா இந்தியார்க்குச் சொந்தமன்று இந்தியா இந்தியரெல்லார்க்கும் பொதுவாம். ஆதலால், இந்தியார்மட்டும் அதை ஆளப்பார்ப்பது சீனப் படையெடுப்பினுங் கொடிதாம். ஆகவே, அரத்தஞ் சிந்தியும் அதை எதிர்த்தாகல் வேண்டும். இருபதாண்டிற்கு முற்பட்டதும், ஆரியச் சார்பினரே வகுத்ததும், எல்லாச் செய்திகளையுந் தீர எண்ணாததும், இந்திய வொற்றுமையைக் குலைக்கும் மொழித்துறை முடிபைக் கொண் டதுமான அரசிய லமைப்பையே இந்திவெறியார் தமக்குக் கேடகமாகக்கொள்ளின், அதைத் திருத்தியமைப்பதே உயர்திணை மக்கள் செயலாம். ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியன்றாயின், அதன் இடத்திற்கு வரத்தக்கது தமிழேயன்றி இந்தியன்று. உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி eh£L¥g‰W«(Patriotism), நாட்டினப்பற்றும் (Nationalism) தன்னலத்திற்கும் பிரிவினைக்கும் போருக்குமே வழிகோலுவதாலும், `ஒன்றிய நாட்டினங்கள்` (UN) என்னும் உலகப் பொதுமன்றம் நிறைவின்றியும் வலிகுன்றியு மிருப்பதனாலும், அதிற் சேர்ந்துள்ள நாடுகளும் அதற்குக் கட்டுப்படாமல் விருப்பம்போற் போர் நிகழ்த்திக்கொண்டும் வெவ்வேறு ஒப்பந்தக் கூட்டுகளை அமைத்துக் கொண்டும் இருப்பதனாலும், உலகம் முழுதும் வரவர நெருங்கியும் ஒடுங்கியும் வருவதனாலும், ஒரு சிறு நாட்டின் நிலைமையும் உலக முழுவதையும் தாக்குவதனாலும், ஆட்சிமுறை பற்றி ஒரு பெரு நாட்டை விலக்கிவைப்பதால் உலகிற்கு நிலையான அமைதிக் குலைவே ஏற்படுவதனாலும், விளைபொருள்களையும் அகக்கரண வாற்றல்களையும் இறைவன் வெவ்வேறு நாடுகட்குப் பகுத்தளித் திருப்பதனாலும், மக்களின் உயர்திணைப் பண்பைப் போற்றிக் காத்து அதனாற் பெறத்தக்க பேறுகளை யெல்லாம் பெறுதற் பொருட்டு, தமிழர் தம் முன்னோரின் பண்பாட்டுக் கொள்கைக் கேற்ப உலகப் பொதுவரசை (World Government) நிறுவ வழி வகுப்பதே தக்கதாம். அதன் வாயிலாகவே நிலையான ஒற்றுமையும் அன்பும் அமைதியும் இன்பமும் வளர்ந்தோங்கி மண்ணுலகமும் விண்ணுலகமாம் அதற்குத் துணையாவது ஆங்கிலமே. முதுமொழி யொருதனி முத்தமிழ் முகிழ்த்தன புதுமொழி பலவுளும் பொலியும் ஆங்கிலம் பொதுமொழி யுலகெலாம் புகலும் .அறிவியல் செதுமொழி யிந்தியாற் செறிவதடிமையே. ******* தமிழ் கடன்கொண்டு தழைக்குமா? சொற்கடன், பொருட்கடன் எனக் கடன் இரு வகைத்து. இவற்றுள் முன்னது திருப்பித்தரும் இயல்பில்லது. கடன்காரன், கடனாளி ஆகிய இருசாராரிடத்தும் ஒரே சமையத்து இருக்கக் கூடியது; திருப்பும்வரை கடனாளி யிடத்தேயே யிருப்பது. பொருட்கடன் படுதல் ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குத் தீமையும் விளைக்கும். கடன்கொண்டு ஓர் இன்றி யமையாத கருமத்தைச் செய்யவேண்டியவராயும்.குறித்த காலத்துத் திருப்பித்தரும் ஆற்றல் உடையவராயும். இருப்பார்க்கு அது நன்மையும், தேவையில்லார்க்கும் திருப்பித்தரும் ஆற்ற லில்லார்க்கும் அது தீமையும் விளைக்கும். ஒரு வணிகன் தன் வணிக முதலீட்டிற்கும், ஒரு தொழிலாளி தன் தொழிற்கருவி வாங்குவதற்கும், ஒரு மனைக்கிழவன் தன் மனையறத்தை நடத்துதற்கும் கடன் வாங்கலாம். திருப்பித்தரும் நிலையில் அது கொள்ளத்தக்கதே. அரசரும் அரசியலாரும் அமைதிக் காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றச் செல்வரிடமும் பிற நாட்டிடமம் போர்க்காலத்தில் போரை நடாத்த ஏழைகள் உட்பட எல்லாரிடமும், கடன் கொள்கின்றனர். இது மதிப்பும் தகுதியும் வாய்ந்ததே. ``கடன் கொண்டும் செய்வன செய்'' என்னும் பழமொழி இத்தகைய கடன்பற்றியதே. ஆயின் தேவையில்லாதார் கடன் கொள்ளின் கடனாளி என்னும் பழிப்பும் வீண் வட்டிச் செலவும் உள்பொருட் கேடுமே நேரும். இனி, திருப்பித்தரும் ஆற்றலில்லார் கடன்படினோ அவர் பாட்டைச் சொல்லவே வேண்டுவதில்லை. `கடன் பட்டையோ கடை கெட்டையே' `கடனில்லாச் சோறு கால்வயிறு போதும்' என்னும் பழமொழிகளும். ``விடங்கொண்ட மீனைப் போலும் வெந்தழல் மெழுகு போலும் படங்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை போலும் திடங்கொண்ட இராம பாணம் செருக்களத் துற்ற போது கடன்பட்டார் நெஞ்சம் போலுங் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்னும் கம்பர் செய்யுளும் இதை வலியுறுத்தப் போதியன வாகும். ஆகவே, கடன்கோடல் ஒரு நிலையில் நன்மையும் ஒரு நிலையில் தீமையும் விளைக்கும் என்பது தெளிவாம். பொருட்கடன் கோடல் போன்றே சொற்கடன் கோடலும் தேவையும் தேவையின்மையும் ஆகிய இருவகை நிலைமைகளில் நேர்வதாகும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளமின்மையால், அவற்றிற்குப் பிற மொழிகளினின்று கடன்கோடல் இன்றியமை யாததாயிற்று. தமிழ் பெருவளமொழியாதலின் அதற்குச் சொற்கடன் தேவையில்லை. தமிழில் இதுவரை புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற்சொற்களெல்லாம், அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமா யிருந்தவையே. இற்றைத் தமிழிற் கலந்துள்ள பிறமொழிச் சொற்களெல்லாம் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. செந்தமிழ் காக்கும் நக்கீரர் மரபு அற்று ஆரியம் போற்றும் கொண்டான் மரபு ஓங்கி, சேர சோழ பாண்டியர் ஆட்சியை வேறுபல நாட்டார் கவர்ந்து, மொழியுணர்ச்சியும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டவையாம். இது, ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்தற்கு, ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டி மேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே. சொல்லும், பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை, ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல், முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்களை ஆக்குதல் வேண்டும். இங்ஙனஞ் செய்யாது பிறமொழிச் சொற்களையே வேண்டாது கடன் கொள்பவர், தாமும் தேடாது,முன்னோர் தேட்டையும் கடனால் இழக்கும் முழுச் சோம்பேறியையே ஒப்பர். தமிழ் இதுவரை கொண்ட அயற்சொற்களால் தளர்ந்ததா வளர்ந்ததா என்பதைச் சில சொற்கள் வாயிலாய் ஆய்வோம். ஆதன், உறவி, புலம்பன் என மூன்று அருமையான தென் சொற்கள் இருப்பவும், அவை வழக்கற்று அவற்றிற்குப் பகரமாக ஆன்மா (ஆத்துமா) என்னும் வடசொல்லே வழங்கி வருகின்றது. பலகணி, சாளரம், காலதர், காற்றுவாரி என்னும் நாற்பழந் தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவை வழக்கொழிந்து அவற்றிற்குப் பகரமாக ` ஜன்னல் ` என்னும் போர்த்துக்கீசியச் சொல்லே வழங்கி வருகின்றது. அடுக்களை, அட்டில், ஆக்குப்புரை (கொட்டகை), சமையலறை, மடைப்பள்ளி (அரண்மனை, கோயில் மடங்களி லுள்ளது) முதலிய பல முதுதமிழ்ச் சொற்கள் இருப்பினும், அவற்றுள் முதலிரண்டும் வழக்கு வீழ்ந்து ஏனையவும் வீழுமாறு, `குசினி' என்னும் ஆங்கிலச் சொல்லும் வழங்கி வருகின்றது. வடமொழி தேவமொழி யென்றும் தமிழ் தாழ்ந்த மொழி யென்றும் தவறாகக் கருதி, வேண்டாதும் வரைதுறையின்றியும் வழங்கிய வடசொற்களால் வழக்கு வீழ்த்தப்பட்ட தென்சொற்கள் எண்ணிறந்தன. எ-டு: தென்சொல் வடசொல் அந்தளகம் கவசம் அரசுகட்டில், அரியணை சிங்காசனம் அலுவல் உத்தியோகம் அளியன் மைத்துனன் (மச்சினன் மச்சான், மச்சாண்டன் மச்சாள்வி) அறிவன் (கிழமை) புதன் ஆசிரியன் உபாத்தியாயன் ஆண்டை எஜமான் ஆமணத்தி கோரோசனை இசை, இன்னிசை சங்கீதம் இதள் பாதரசம் இயம் வாத்தியம் இரப்பு,ஐயம் பிச்சை இருதலை பரபரம் உயிர்மெய் பிராணி உரையாடு சம்பாஷி ஊதியம் லாபம் எடுத்துக்காட்டு உதாரணம் ஏதம் அபாயம் ஐயம், ஐயுறவு சந்தேகம் ஓர்புடையான். ஓரகத்தான் சகலன், சட்டகன் கதிரவன் சூரியன் தென்சொல் வடசொல் கரி சாக்ஷி கரிசு பாவம் பா, செய்யுள் கவி காசறை கதூரி காரி(கிழமை) சனி காருவா அமாவாசை கையூட்டு லஞ்சம் சிற்றூர், பட்டி கிராமம் சூள் ஆணை தகுதி யோக்கியம் தக்கோன் யோக்கியன் தலைக்கீடு வியாஜம் தன்னரசு சுயராஜ்யம் நண்பகல் மத்தியானம் நயன் நியாயம் நன்னெறி, நல்வழி சன்மார்க்கம் நெஞ்சு, நெஞ்சம், நெஞ்சாங்குலை, மாங்காயீரல் இருதயம் பண் ராகம் பண்டுவம் சிகிச்சை பொங்கு அதிர்ஷ்டம் பொந்திகை திருப்தி பொழுதுவணங்கி சூரியகாந்தி மகிழ்ச்சி சந்தோஷம் மதியம் பூரணசந்திரன் மருப்பு தந்தம் மழிப்பு க்ஷவரம் மறை வேதம் மன்றாட்டு ஜெபம் முகமன் முகதுதி முகில் மேகம் முதுசொம் பிதுரார்ஜிதம் முற்றூட்டு சர்வமானியம் முறை நீதி மேலாடை அங்கவதிரம் தென்சொல் வடசொல் மொழி பாஷை வஞ்சினம் சபதம் வனப்பு காவியம் வியப்பு ஆச்சரியம் விலங்கு மிருகம் வெள்ளுவா பூரணை, பௌர்ணமி இங்ஙனம் பொதுச் சொற்கள் மட்டுமன்றி, ஊர்ப்பெயர் தெய்வப் பெயர் முதலிய சிறப்புப் பெயர்களும் பெரும்பாலும் வழக்கிழந்து, அவற்றிடத்து அவற்றின் மொழிபெயர்ப்பான வட சொற்கள் வழங்கிவருகின்றன. ஊர்ப்பெயர் எடுத்துக்காட்டு : தென்சொல் வடசொல் குடமூக்கு (குடந்தை) கும்பகோணம் பழமலை, முதுகுன்றம் விருத்தாசலம் மறைக்காடு வேதாரணியம் வெண்காடு சுவேதாரணியம் தெய்வப்பெயர் தென்சொல் வடசொல் அடியார்க்கருளி பக்தவத்ஸலம்-ன் கயற்கண்ணியழகன் மீனாக்ஷிசுந்தரன் கேடிலி அக்ஷயன், அச்சுதன் சொக்கன் சுந்தரன் திருமகள் லக்ஷ்மி பெருவுடையார் பிருகதீவரர் மலைமகள் பார்வதி பல வடசொற்கள் தென்சொற்களோடு பக்கம் பக்கமாய் வேண்டாது வழங்கிவருகின்றன. எடுத்துக்காட்டு : தென்சொல் வடசொல் அடிப்படை அதிவாரம் அடியான் தாசன் ஆண்டு வருஷம் இன்றியமையாமை அத்தியாவசியம் தென்சொல் வடசொல் உவச்சன் அர்ச்சகன் உழவு விவசாயம் உறுப்பு அங்கம், அவயவம் ஏனம் பாத்திரம் கட்டளை ஆணை கண்கூடு பிரத்தியட்சம் கணியன் ஜோதிடன், ஜோஸியன் கழகம் சங்கம் குடிகள் பிரஜைகள் குளிப்பு நானம் குழந்தை சிசு குறும்பு சேஷ்டை கோவில் ஆலயம் சுவை ருசி சொல் வார்த்தை தடை ஆட்சேபனை துவக்கம், தொடக்கம் ஆரம்பம் நஞ்சு விஷம் நட்பு சிநேகம் நினைவு ஞாபகம் நோய் வியாதி பகைவன் சத்துரு, விரோதி பயிற்சி அப்பியாசம் பூ, மலர் புஷ்பம் பொருள் அர்த்தம் மருத்துவம் வைத்தியம் மறைமுகம் அந்தரங்கம் முயற்சி பிரயாசை,பிரயத்தனம் வழக்கம் சகஜம் வழிபாடு அர்ச்சனை வாழ்த்து ஆசீர்வதி, ஆசீர்வாதம் வெப்பம் உஷ்ணம் வெளிப்படை பகிரங்கம் வெற்றி ஜெயம் வேண்டியது அவசியம் வேண்டாதது அனாவசியம் சில வடமொழியாளர் எளிமையும் பொருத்தமும் உள்ள அழகிய தென்சொற்களிருப்பவும் அவற்றை வெறுத்து விலக்கி, அரியவும் பொதுமக்கட்கு விளங்காதனவுமான வடசொற்களை ஆள்வார். தென்சொல் வடசொல் அடிமுதல்முடிவரை பாதாதிகேசபரியந்தம் அரிது துர்லபம் அறம்பொருளின்பம்வீடு தர்மார்த்தா காமமோக்ஷம் ஆண் பெண் திரீ புருஷர் உற்றார் உறவினர் இஷ்டஜனபந்துமித்திரர் ஐம்புலன் பஞ்சேந்திரியம் கல் நடுதல் பாஷாணதாபனம் குடநீராட்டு, கும்ப நீராட்டு கும்பாபிஷேகம் குடிமதிப்பு ஜனசங்கியை குலங்குடும்பம் ஜாதிஜனம் கூடுவிட்டுக் கூடுபாய்தல் பரகாயப்பிரவேசம் கைதட்டல் கரகோஷம் கொட்டாட்டுப்பாட்டு கீதவாத்தியநிருத்தம் சிலம்புகழிநோன்பு கங்கணவிஸர்ஜனம் சுவையொளியூறோசை நாற்றம் சப்தபரிசகந்தரூபரசம் செழிப்பு சுபீட்சம் தடைவிடை ஆக்ஷேபசமாதானம் தலைமுழுக்கு அப்பியங்கன நானம் திருக்கழுக்குன்றம் பஷிதீர்த்தம் திருமணம் விவாகம், பரிணயம் தூய்நிலைப்படுத்தம் சம்புரோக்ஷணம் தேரோட்டம் ரதோத்சவம் நகைச்சுவை ஹாயரசம் நல்லியல்பு சௌஜன்யம் நனவுகனவுதுயில் சாக்கிரம்சொப்பனம் சுழுத்தி அயர்வொடுக்கம் துரியம் துரியாதீதம் நிலம் நீர்தீவளிவெளி அப்புதேயுவாயுபிருதிவியாகாயம் படைப்புக் காப்பழிப்பு சிருஷ்டி திதிசங்கார மறைப்பருளல் திரோபல அநுக்கிரகம் பணிவிடை சிசுருஷை பிள்ளைப்பேறு பிரசவம் பிறப்பிறப்பு ஜனனமரணம் புதுமனைபுகுதல் கிருஹப்பிரவேசம் மணமக்கள் தம்பதிகள் மரம் விருக்ஷம் முதலீறு ஆதியந்தம் வடக்கிருத்தல் பிராயோபவேசம் வால்வெள்ளி தூமகேது விருப்பு வெறுப்பு ராகத்துவேஷம் வெற்றி தோல்வி ஜயாபஜயம் தமிழ்நாட்டில் வடமொழிக்குப் பெருமதிப்பேற்பட்ட பின், ஒருபொருட் பல சொற்கள் ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகத் தொடங்கின. எ-டு : சத்தியம், நிஜம், வாதவம் சந்தோஷம், ஆனந்தம், குதூகலம், விவசாயம், கிருஷி சங்கம், பரிஷத், சமாஜம், சத ஜலம், தீர்த்தம் தமிழ் அதன் பெருமையை இழந்ததினால் அதன் ஒருபொருட் சொற்கள் பல நாளடைவில் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்த்தப் பட்டன. எ-டு : உச்சிவேளை, நண்பகல், உருமம் ஊடல், புலவு, துனி v¢r«.,fh‹Kis, கால்வழி, கொடிவழி, மரபு பூப்படைதல் , முதுக்குறைதல் மகிழ்ச்சி, களிப்பு, உவகை முகில், எழிலி, மஞ்சு, குயின், களம், கார், மால் மெய்ப்பித்தல், மூதலித்தல் பூப்படைதல் என்பது இன்று புஷ்பவதியாதல் என்று வடசொல் மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது வடசொல் வழக்கினால் தன் பொருளிழந்த தென்சொற்களும் உள. எ-டு : உயிர்மெய் - பிராணி உயிரையுடைய மெய் உயிர்மெய். உயிர்மெய் போன்ற எழுத்தும் உயிர்மெய்யெனப் பெற்றது ஆகுபெயர். இன்று அதன் பொருள் மறைந்தமையால் உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய்யெழுத்து எனத் தவறாக உரைக்கப்படுகின்றது. சில ஒருபொருட் தென்சொற்கள் பொருள் தெளிவின்றி மயங்கிக்கிடக்கின்றன. எடுத்துக்காட்டு : நெடுமொழி - ஒருவன் தன் பகைவர்முன் தன் வலிமையை எடுத்துக்கூறும் மறவுரை (சம்பிரதம்). மேற்கோள் - ஒருவன் ஓர் அறத்தைக் கடைப்பிடிப்பதாகச் செய்துகொள்ளும் உறுதி(பிரதிக்ஞை). சூள் - ஒருவன் ஒருவர்க்கு ஒரு நன்மையைத் தப்பாது செய்வதாகத் தெய்வத்தின் மேல் இடும் ஆணை. ஒட்டு - ஒருவன் ஒரு சொற்போரில் வெற்றி, தோல்விபற்றித் தன் எதிரியின் அக்குத்துகட்கு (நிபந்தனைகட்கு ) உடன்பட்ட நிலை. வஞ்சினம் - ஒருவன் ஒரு போரில் தன் பகைவனுக்குத் தான் குறித்ததொன்றைச் செய்யாவிடின், ஒரு நிலைமைஅடைவதாகக் கூறும் சினமொழி (சபதம்). பூட்கை - வெற்றி அல்லது இறப்புவரை ஊன்றிப் பொரு வதற்கு அடையாளமாக, ஒரு மறவன் ஒன்றை அணிந்து கொள்ளுதல். நேர்ச்சை - ஓர் அடியான். ஒன்றைப் படைப்பதாக அல்லது, ஒன்றைச் செய்வதாக தெய்வத்தை நோக்கிச் செய்யும் தீர்மானம். நோன்பு - ஓர் அடியான், வழிபாட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பசி, தாகம் முதலியவற்றால் நேரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறை (விரதம்). கடைப்பிடி - ஒரு கொள்கையை இறுதிவரை உறுதியாய்க் கொண்டு நடத்தல் (வைராக்கியம்). áy bj‹brh‰fŸ., பெரும்பாலாரால் நீண்ட காலமாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டோர் வழக்கிலேயே முடங்கித் தாழ்த்தப்பட்டுப் போயின. எ-டு : சோறு, மிளகுசாறு, தண்ணீர் இவற்றுக்குப் பகரமாக, சாதம், ரசம், ஜலம் அல்லது தீர்த்தம் என்னும் சொற்களை ஆள்வது உயர்வென்று கருதும் அளவிற்கு, தமிழ் தாழ்த்தப்பட்டதோடு தமிழனும் தாழ்த்தப்பட்டுப் போயினன். 劉d« g‹}‰wh©lhf¤ bjhl®ªJ tªj ïÊthš., தமிழர் பேச்சில் பல சொற்றொடர்கள் ஈறு தவிர முற்றும் சமற்கிருதமாகவும் மாறிவிட்டன. எ-டு : ஈவரன் கிருபையால் கிராமத்தில் சகலரும் சௌக்கியம். இது, இறைவன் அருளால் சிற்றூரில் எல்லோரும் நலம் என்றிருத்தல் வேண்டும். tlbrhš tH¡fhš jÄH®¡F bkhÊíz®¢á K‰W« m‰W¥ nghÆdikÆ‹.,òâJ òâjhŒ tªj cUJ¢ brh‰fS«., ஆங்கிலச் சொற்களும் கங்கு கரையின்றித் தமிழிற் கலக்கத் தலைப் பட்டுவிட்டன. எ-டு: தமிழ்ச்சொல் உருதுச்சொல் தமிழ்ச்சொல் உருதுச்சொல் அணியம் தயார் அருந்தல் கிராக்கி அரங்கு கச்சேரி அறமன்றம் கச்சேரி அறைகூவல் சவால் பறிமுதல் ஜப்தி உசில் மசாலை பிணை ஜாமீன் ஒப்புரவு ராசி பிறங்கடை வாரிசு கணக்கன் குமாதா சாலை ரதா கருவூலம் கஜானா சேதி தகவல் கெடு வாய்தா தகவுரை சிபார்சு தளுக்கு ஷோக்கு தண்டல் வசூல் தா (விலை) பர்வா(யில்லை) தலையூர் கபா திணைக்களம் லாக்கா முற்றாலம் நாதா நல்லது,நன்று அச்சா வழக்கு பிராது விட்டு விடுகை ராஜிநாமா நிலுவை பாக்கி விளையுள் மாசூல் பகுதி கிது விடுமுறை ரஜா பண்டம் சாமான் வேள் ஜமீன்தார் தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல் அல்லங்காடி ஈவினிங் பஜார் அறமன்றம் கோர்ட்டு ஊர்காவல், பாடிகாவல் போலீ எழுதுகோல் பென்சில் ஏவலன் பியூன் கலங்கரை விளக்கம் லைட்ஹவு காசுக்கடை, வட்டிக்கடை பாங்கு, பாங்கி, வங்கி குப்பாயம் கோட்டு கேள்வி ஈரங்கி சாலை ரோடு தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல் சீட்டு டிக்கெட்டு தண்டுவார் கலெக்டர் தாள் பேப்பர் தூவல் பேனா போலிகை மாதிரி (model) மருத்துவசாலை ஆபத்திரி மெய்ப்பை கவுன் வழக்கு கேசு இங்ஙனம் மேலும் மேலும் வேற்றுச் சொற்களை வேண்டாது ஏற்றுக்கொண்டே போவதால்,தமிழ் ஒரு பன்மொழிக் கலவையாக மாறித் தமிழரை ஓர் அநாகரிக இனத்தவராகக் காட்டுகின்றது. மேலும் தமிழ்ச்சொற்பயிர் கெடுமாறு அயற்சொற் களைகள் மலிந்துவிட்டதனால், பல தென்சொற்குப் பிறசொல் வாயிலாகவே பொருள் கூற வேண்டியதாயிற்று. தென்சொல் பிறசொல் கழுவாய் பிராயச்சித்தம் (வடசொல்) கிள்ளாக்கு பாபோர்ட்டு (passport)(M§»y«) மீகாமன் மாலுமி (அரபிச்சொல்) பெரும்பாலும் ஒரு பொருள்பற்றி ஒரு சொல்லே வழங்கற் கிடமிருத்தலால், புதுச்சொற்கள் வரவரப் பழஞ்சொற்கள் மறைந்து கொண்டே போகின்றன. எ-டு : கலவை நடை நம் நாட்டில் நிமிஷத்திற்கு ஒரு நபர் வீதம் க்ஷயரோகத்திற்குப் பலியாகிறார்கள். மார்க்கட்டுக்குப் போய்ச் சாமான்களை வாங்கிக்கொணடு ஜல்தியாய் வா. இந்த வருஷம் அநேகம் பேர் பரீக்ஷையில் பா பண்ணவில்லை. கவர்னர் இங்கு விஜயம் செய்வதால் போலீ பந்தோபது செய்யப்பட்டிருக்கிறது. சொன் மாறிக்கொண்டே போதல் தமிழ் வடசொல் ஆங்கிலம் உளவாடம் அச்சாரம் அட்வான்சு ஊழியம் சேவை சர்வீசு கேள்வி விசாரணை ஈரங்கி நோய் வியாதி சீக்கு தமிழ் உருது ஆங்கிலம் அறமன்றம் கச்சேரி கோர்ட்டு கணக்கன் குமாதா கிளார்க்கு கூடாரம் டேரா டெண்ட்டு விடுமுறை ரஜா லீவு இனி, நேர் தென்சொல் இல்லாத அயற்சொற்களை அங்ஙனமே ஆளுதல் கூடாதோவெனின், அதுவும் கூடாததே. தமிழ் ஒரு பெருந் தாய்மொழியாதலின், அயன்மொழிச் சொற்களின் வேர்ப் பொருளறிந்து அதற்கொப்பப் புதுச் சொற்களை ஆக்கிக் கோடற்கு வேண்டும் .கருத்துச் சொற்களும் அதனிடத்து மிகுதியாய் உள. ஆதலால் அயற்சொற்கட்கு இயன்றவரை புதுச்சொற் புனைந்தே வழங்குதல் வேண்டும். இருட்டடிப்பு, கட்டுரை, கூட்டுறவியக்கம், செயலாளர், தண்டல்நாயகம், தொலைவரி, தொலைபேசி, தொலைக் காட்சி, படிவம், பொதுவுடைமை, முடிதிருத்து நிலையம், வழக்கறிஞர் முதலிய வேர்ப்பொருள்பற்றிய சொற்களும் சொற்பொழிவு, திரைப்படம், நகராண்மை, படம்பற்றி, பற்றாட்டு, பாராளுமன்று, மதிப்பெண் முதலிய பொருட்டன்மைபற்றிய சொற்களும் அண்மைக் காலத்தில் புதிதாகப் புனையப் பெற்றவையே. இனி, புதுச்சொற் புனைந்தும் நேர் தென்சொல் அமைக்க வியலாத ஒருசில அயற்சொற்களை அங்ஙனமே ஆளலாம். ஆயின், அவற்றை அயன்மொழி யொலிப்படி வழங்காது தமிழொலிக் கேற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். அல்லாக்கால் வேற்றொலி விரவித் தமிழ்த் தன்மை கெட்டுவிடும். சிலர் கார், ப, ரோடு முதலிய ஆங்கிலச்சொற்கள் தமிழிற் கலந்துவிட்டதனால் அவற்றை விலக்குதல் கூடாதென்பர். அவர் அறியார். அவை அன்றும் தமிழிற் கலக்கவில்லை. ``உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" யாதலால், உயர்ந்த புலவர் வழக்கு நோக்கியே ஒரு மொழியின் இயல்பை அறிதல் வேண்டும். மொழி திருந்தாதார் வழங்கும் கார், ப முதலிய சொற்களைத் தமிழ்ச்சொல்லாக ஏற்றுக்கொள்ளுவது கீழ்மக்களின் ஐம்பெருங் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக்கொள்வது போன்றதே. மறைமலையடிகள் போலும் புலவரல்லாத பிறர் பேசும் மொழியை அளவையாகக் கொள்ளின் ஆங்கில உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் தமிழ்ச்சொல்லாகிவிடுமே ``எனக்கு health (ஹெல்த்) சரியாய் இல்லாததினால் இன்றைக்கு morning (மார்னிங்), college ( காலேஜ் ) -க்குப் போய் first (ஃபட் ) period (ப்பீரீடு) attend (அட்டண்) பண்ணிவிட்டு proffessor (புரொபசர்) இடம் half a day (ஆஃப் எ டே) leave(ä›) கேட்டுக்கொண்டு hostel (ஹாடல்)க்குப் போய் என் friend (ஃபிரண்டு) - ன் room (ரூம்) -ல் rest (ரெட்) vL¡fyhbk‹¿U¡»nw‹” என்று பேசும் மாணவரைப் போன்று ஆங்கிலம் கற்றாரும் ``ஏன் இவ்வளவு லேட்டு? டயம் என்ன தெரியுமா? டூட்டியைச் சரியாய்ச் செய். இல்லாவிட்டால் சூப்பிரண்டிடம் ரிப்போர்ட்டுப் பண்ணி ÉLnt‹” என்று பேசும் கங்காணியைப் போன்று ஆங்கிலங் கல்லாதாரும், ஆங்கிலச் சொற்களை அளவிறந்து வழங்குவதை யார்தான் அறியாதார்? கற்றோரும் மற்றோரும் மதிப்பு வாய்ந்தோரையெல்லாம் `ஐயா என்று விளிக்காது `Sir' (ஸார்) என்றே விளிப்பதால் `தமிழ் அகரமுதலியில் அவ் வாங்கிலச் சொல்லையே குறிக்கலாமோ? அங்ஙனம் குறிப்பின் பிற சொற்களையும் குறித்தல் வேண்டுமே. அன்று அது ஓர் ஆங்கில அகரமுதலியாகவன்றோ மாறிவிடும்! ஆதலால் தமிழ்ப்பற்றும் அறிவும் அற்ற ஒரு சாரார் வேண்டும் என்று கூறும் வெற்றுச் சொற்களைப் பொருட்படுத்தற்க. இதுகாறும் கூறியவற்றால், பிறரிடங் கடன்கொள்ள வேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு, பிர்லா முதலிய பெருஞ் செல்வர் போல், தமிழும் பிறமொழிகளினின்று சொல்லைக் கடன் கொள்ளா தென்றும்; அயற்சொற்களை எல்லாம் இயன்றவரை மொழிபெயர்த்தல் வேண்டும் என்றும்; மொழிபெயர்க்க முடியாத வற்றிற்குப் புதுச் சொற்களைப் புனைந்து கோடல் வேண்டு மென்றும்; அதுவும் இயலாத ஒருசில இன்றியமையாத சொற் களைத் தமிழ் எழுத்திற்கேற்பத் திரித்து வழங்குதல் வேண்டு மென்றும்; பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழி பெயர்ப்பதே தமிழை வளம்படுத்தத் தலைசிறந்த வழியென்றும்; பிற மொழிச் சொற்களைக் கட்டுமட்டின்றித் தமிழிற் கலப்பது அதன் கேட்டிற்கே வழிகோல்வதாகும் என்றும்; இதுவரை தமிழிற் புகுத்தப்பட்ட எல்லாச் சொற்களும் தமிழதிகாரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டனவல்ல என்றும்; அவற்றை இயன்றவரை விலக்கித் தமிழின் தூய்மையைக் காப்பது தமிழறிஞரின் தலையாய கடனென்றும்; நேர்நின்று காக்கை வெளிதென்பாரும் தாய்க் கொலை சால்புடைத்தென்பாரும் தமிழை யொழிக்கத் தயங்கா ராதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற் றென்றெ கொள்ளுதல் வேண்டுமென்றும்; தெற்றெனத் தெரிந்து கொள்க. திருக்கோவில்களில் தமிழ்ச்சொற்கள் தேவதானம் தேவகம், திருக்கோவில் உற்சவங்கள் திருவிழாக்கள், விழாக்கள் நிர்வாக அதிகாரி செயல்அலுவர், ஆள்வினைஞர், கருமத்தலைவர் கர்ப்பகிரகம் கருவறை, உண்ணாழிகை பூர்த்தி நிறைவு ஆலய நிர்வாகிகள் கோவில் கருமத் தலைவர்கள் பசலி பயிராண்டு பஞ்சாங்கம் ஐந்திறம் பிரதோஷம் மசண்டை அமாவாசை காருவா கார்த்திகை ஆரல், அறுமீன் ஷஷ்டி அறமி வசந்தோற்சவம் இளவேனில் விழாக்கட்டு கட்டுவேலை முகூர்த்தம் வேலை முழுத்தம் மிதுன லக்கனம் ஆடவையோரை சித்திரா பௌர்ணமி மேழ மதியம், மேழ வெள்ளுவா அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம் கத்தரித் துவக்கம், எரிநாள் தொடக்கம் சீதகும்பம் குளிர்கும்பம், தண்குடம் நடராஜர் அபிஷேகம் நடவரசு திருமுழுக்கு, ஆடலரசு திருமுழுக்கு சுவாமி தீர்த்தம் இறை தூநீர் வசந்தோற்சவத்வஜ ஆரோஹணம் இளவேனில் விழாக் கொடியேற்றம் ஸ்ரீ தேவசேனா திருத்தெய்வயானை அம்மன் திருக்கல்யாணம் திருமணம் விருச்சிக லக்னம் நளியோரை ஸ்ரீ வள்ளி திருவள்ளி ரதாரோஹணம் தேர் ஏற்றம் த்வஜ அவரோஹணம் கொடி இறக்கம் கும்பாபிஷேகம் குடமுழுக்கு வருஷாபிஷேகம் ஆட்டைத் திருமுழுக்கு அன்னாபிஷேகம் சோற்றுத் திருமுழுக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம் இலக்க வழிபாட்டுத் தொடக்கம் சனிப்ரதோஷம் காரி மசண்டை கன்னிமார் பூஜை கன்னிமார் பூசை மஹாபிஷேகம் பெருமுழுக்கு விநாயக சதுர்த்தி மூத்த பிள்ளையார் நலமி போதாயன மூதிரைக் மஹாளய அமாவாசை காருவா கேதாரகௌரிவிரதம் மலைமகள் நோன்பு நவராத்திரி ஆரம்பம் தொள்ளிரவுத் தொடக்கம் சரவதி பூஜை கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு ஆயுத பூசை கருவிப்பூசை நாக சதுர்த்தசி னானம் நாகநலமிக் குளிப்பு சூரசம்கார உற்சவக் காப்புக் கட்டு சூர்தடி விழாக் காப்புக்கட்டு கந்த ஷஷ்டி கந்தர் அறமி திருக்கல்யாணம் திருமணம் திருக்கார்த்திகை திருஆரல் விழாக் காப்புக்கட்டு உற்சவக் காப்புக்கட்டு பரணிதீபம் முக்கூட்டு விளக்கு போதயான அமாவாசை போதயானக் காருவா சுப்ரமண்ய ஷஷ்டி முருக அறமி சம்பா ஷஷ்டி சம்பா அறமி தனுர் பூஜை ஆரம்பம் சிலைப்பூசைத் தொடக்கம் நடராஜர் ஆருத்தரா அபிஷேகம் அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு போகிப் பண்டிகை வேந்தன் திருநாள் இரவு தனுர்பூசை பூர்த்தி இரவு சிலைப்பூசை நிறைவு சங்கராந்தி பொங்கல் பண்டிகை கிராம சாந்தி ஊர்ச் சமந்தி த்வஜ ஆரோஹணம் கொடி ஏற்றம் மேஷ லக்னம் மேழ ஓரை முகூர்த்தம் முழுத்தம் மகாசிவராத்திரி சிவனார் பேரிரவு உற்சவ த்வஜ ஆரோஹணம் விழாக் கொடி ஏற்றம் ரிஷப லக்னம் விடையோரை யுகாதி பண்டிகை தெலுங்கு ஆண்டுப் பிறப்பு சாதாரண வருஷப் பிறப்பு நாற்பானாலாம் ஆண்டுப்பிறப்பு ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி திருமாலியப் பதினொரமை சைத்ரோற்சவம் கிராமசாந்தி மேழவிழா ஊர்ச் சமந்தி சர்வ ஏகாதசி அனைத்துப் பதினொரமை சித்ரா பௌர்ணமி மேழமதியம் சர்வசமயன ஏகாதசி அனைத்துப்பள்ளிப் பதினொரமை பாஞ்சராத்ர பாஞ்சராத்திரி ஸ்ரீ கண்ணபிரான் ஸ்ரீஜயந்தி கண்ணன் பிறப்புத்திருநாள் நவராத்திரி பூஜை ஆரம்பம் தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் விஜயதசமி வெற்றிப் பதமி உத்தான ஏகாதசி ஆரல்வெண்பக்கப் பதினொரமை விஷ்ணுதீபம் திருமால் விளக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு பரமபத உவணை வாயில் திறப்பு கஜேந்திர மோக்ஷம் வேழவேந்த வீடு ஜல்லிக்கட்டு சல்லிக்கட்டு சர்வபீஷ்வ ஏகாதசி அனைத்து வீடுமப் பதினொரமை பிரம்மோற்சவ கிராமசாந்தி பெருவிழா ஊர்ச் சமந்தி பாரிவேட்டை பரிமேட்டை பேஷ்கார், மணியம் செயல்பணியார், பெருங்கேள்வி, மணியம் காரியதர் கருமத்தலைவர் மூலதானம் கருஇடம், மூலத்தாவு சந்நிதி திருமுன் பிராகாரம் திருச்சுற்று யாத்திரிகர் திருவழிப்போக்கர் உபநயனம் பூணூல் சடங்கு பஞ்சாமிர்த அபிஷேகம் ஐயமுதத் திருமுழுக்கு தீர்த்த அபிஷேகம் திருப்புனலாட்டு பால் அபிஷேகம் பால் முழுக்கு அஷ்டோத்திர அர்ச்சனை நூற்றெட்டு வழிபாடு சகரநாமம் ஆயிரப்பெயர் கௌபீனம் நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை தீபாராதனை விளக்கு வழிபாடு ராஜஅலங்காரம் அரசக்கோலம், அரசப்புனைவு நைவேத்தியம் காணிக்கை, படைப்பு சாயரட்சை மாலைப்பூசை அர்ச்சகர் வழிபாட்டாசான் தரிசனம் காண்பு, காட்சி பிரசாதம் அருட்கொடை, திருச்சோறு மதிப்படைச் சொற்கள் மக்கள் பெயருக்குமுன் மதிப்புக் குறித்துச் சேர்க்கும் அடைச்சொற்கள் கீழ்க்கண்டவாறு: பெயர் அடைச்சொல் மணமாகாத இளைஞன் பெயருக்கு முன்..... Fku‹(Master) மணமாகாத இளைஞைபெயருக்குமுன்...... குமரி (Miss) இளந்தை (Youth) கடந்த ஆடவன் பெயருக்கு முன் ...... âUths‹(Mr.) இளந்தை கடந்த பெண்டின் பெயருக்கு முன் ...... âUth£o(Mrs.) கண்ணியம் வாய்ந்த ஆடவன் பெயருக்கு முன் ..... bபருமான்f©Âa« tய்ந்தbபண்டின்bபயருக்குKன்..... பெருமாட்டி னகரமெய்யும் ளகரமெய்யும் இகரவுயிரும் ïறுதியிற்bகாண்டxருமைpறுகள்cலகtழக்கில்cயர்வுFறியாமையின்,fல்விbசல்வம்gதவிmறிவுKதலியவற்றால்cயர்வுbபற்றவர்bபயரையும்,mவர்bபயருக்குKன்tரும்mடைச்சொல்லையும்,cயர்வுப்gன்மைtடிவிலேயேFறித்தல்nவண்டும்.xUik உயர்வுப்பன்மை பன்மை அழகன் அழகனார் அழகர், அழகன்மார் தந்தை தந்தையார் தந்தையர் ( தந்தைமார்) அப்பன் அப்பனார் அப்பன்மார் தகப்பன் தகப்பனார் தகப்பன்மார் அம்மை அம்மையார் அம்மையர், அம்மைமார் தாய் தாயார் தாயர், தாய்மார் இளைஞன் இளைஞனார் இளைஞர் குமரன் குமரனார் குமரர், குமரன்மார் இளைஞை இளைஞையார் இளைஞையர் குமரி குமரியார் குமரியர், குமரிமார் ஆடவன் ஆடவனார் ஆடவர், ஆடவன்மார் திருவாளன் திருவாளர், திருவாளர், திருவாளனார் திருவாளன்மார், திருவாட்டி திருவாட்டியார் திருவாட்டிமார் பெண்டு பெண்டார் பெண்டிர்(உயர்வு) பெண்டுகள்(உயர்வின்மை) பெருமான் பெருமானார் பெருமானர், பெருமான்மார் பெருமாட்டி பெருமாட்டியார் பெருமாட்டியர், பெருமாட்டிமார் துறவி துறவியார் துறவியர் அடிகள் அடிகள், அடிகண்மார், அடிகளார் இளந்தையர் என்பது இருபாற் பொதுப் பன்மைப் பெயர் (Young men or Women or both) இளந்தை = இளமை மகர மெய்யீற்று இயற்பெயரை (proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல் வேண்டின், னகர மெய்யீற்றுப் பெயராக மாற்றிக்கொள்ளலாம். எ-டு : பெயர் உயர்வுப் பன்மை பன்மை செல்வம் - செல்வன் செல்வனார் செல்வர், செல்வன்மார் மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக அர் ஈறு பன்மையையும், ஆர் ஈறு உயர்வுப் பன்மையையும் உணர்த் தும் என அறிந்துகொள்க. குமரன் என்னும் தென்சொல் கும் என்னும் அடிப்பிறந்து, கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன் என்னும் பொருளில் இளைஞனையே குறித்தது. இதன் பெண்பால் வடிவான குமரி என்னும் சொல்லும் இதே பொருளில் இளைஞையைக் குறித்தது. கும்முதல் = கூடுதல், திரளுதல். கும் - கும்மல் = குவியல். கும் - குமி - குவி - குவை, குவால், குவிவு, குவவு. குமி - குமியல், - குவியல். கும்மிருட்டு - திணிந்த காரிருள். குவவுத்தோள் = திரண்ட தோள். கும் - கும்பு - கும்பல் = கூட்டம். கும்புதல் = கூடுதல். கும்பு = கூட்டம். கும் - குமர், திரண்ட இளமை, இளமை, கன்னிமை, அழியாத்தன்மை. குமர் - குமரன், குமரி. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வமான காளியும், என்றும் இளமையர் என்னுங் கருத்துப் பற்றியே முறையே, குமரன் குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப் போன பழம்பாண்டி நாட்டுத் தென்கோடி மலையும் வடகோடியாறும் குமரியெனப் பெயர் பெற்றிருந்தன. குமரிமலையின் பெயராலேயே மூழ்கிப் போன தென்கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலையிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும். வடமொழியாளர் தமிழின் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின்வருமாறு குமரன் குமரியென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரிந்தும் மிகுத்தும் உள்ளனர். குமரன் - குமார = குழந்தை, பையன் , இளைஞன் , மகன் ( இருக்குவேதம்) குமரி - குமாரீ - சிறுமி. பத்திலிருந்து பன்னீரகவைப்பட்டவள். இளைஞை, மகள் (அதர்வவேதம்). இவ் விருசொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு, மூலத்தையும் கீழ்வருமாறு திரித்துள்ளனர். கு + மார = எளிதாக இறப்பது. இப் பகுப்பும் சொற்பொருட் கரணியமும் இயற்கைக்கு மாறாகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன் மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக. இன்றும், `இந்தச் சுமையைத் தூக்க முடியாத நீ ஒரு குமரனா? என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதையும், கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக. குமரன் குமரி என்னும் சொற்களை வடசொல்லென்று நீக்கிவிடின், வடமொழியாளர் கூற்றை ஒத்துக்கொண்டதாகவும் குமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க. திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள் தெய்வத் தன்மை என்பதும் ஒன்று . எ-டு : திருக் கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் `திரு' என்பது தெய்வத்தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும். மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப் புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோ டொப்பக்கொண்டு மயங்க நேரும். எ-டு : திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்) திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்) இறையடியார் பெயரே, பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை. துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த் தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத்தினர் பெயருக்கு முன் மறைத்திரு என்பதையும், அடைச்சொல்லாக ,ஆளலாம். எ-டு : தவத்திருக் குன்றக்குடியடிகள் தமிழ்த்திரு மறைமலையடிகள் மறைத்திரு மணியம் அவர்கள் ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிவமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம். திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இருபிறப்பி (hybrid) ஆதலால், அதை அறவே விலக்கல்வேண்டும். திருமகன் - திருமான் - ஸ்ரீமத் (வ.) - ஸ்ரீமதீ (பெண்பால்) திருமதி - ஸ்ரீமதி. திருவாட்டி என்னும் தூய தென்சொல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது, பேதைமை யென்ப தியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் (குறள். 831) என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென்சொல்லாகக் கருதிக்கொண்டனர் போலும்! அறிவுத்திறனைக் குறித்கும் மதி என்னும் தென்சொல் வேறு; பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியீறு வேறு. இனி, மதிப்படைச் சொற்கள். (1) முன்னடைச்சொற்கள், (2) பின்னடைச் சொற்கள் என இரு வகைய. கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப்பின் அவர்கள் என்று குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது உயர்வுப் பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை. எ-டு : திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள். ஆற்றலும் தேர்வுப்பட்டமும் புலமையும் தொழிலும் குறித்துவரும் சொற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை. எ-டு : பண்டிதமணி கதிரேசச் செட்டியார் புலவர் சின்னாண்டார் பேராசிரியர் சொக்கப்பனார் மருத்துவர் கண்ணப்பர் நாவலர் வேங்கடசாமி நாட்டார் புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G. D. நாயுடு) பண்டாரகர் (Dr.) சாலை இளந்திரையனார் பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப்பெறும். எ-டு : புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர். பெரியார் ஈ. வே. இரா. ஈ. வே. இராப் பெரியார் `அவர்கள்` என்னும் பின்னடையை எவர் பெயர்க்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொறுத்தது. அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச்சொற்களைப் பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்: பத்மஸ்ரீ: தாமரைத் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செர் (Sir) : வயவர் தியாகராசச் செட்டியார் அவர்கள் ராசா செர் (Rajah Sir) : அரச வயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள் ராய் பஹதூர் : அரைய ஆண்டகை ராவ் பஹதூர் : அராவ ஆண்டகை பவானந்தம் பிள்ளை அவர்கள் திவான் பஹதூர் : அமைச்ச ஆண்டகை நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் ராவ் சாஹிப் : அராவ அண்ணல் கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள் அரசியல் பதவிகள்பற்றிய முன்னடைகள் The Hon`ble - பெருந்தகை The Rt. Hon` ble - மாபெருந்தகை His Worship - வணங்குதகை His Lordship - குருசில்தகை His Excellency - மேன்மை தங்கிய His Highness - உயர்வு தங்கிய His Majesty - மாட்சிமை தங்கிய மதவியல்பற்றிய முன்னடைகள் Rev. - கனம் Rt. Rev. - மாகனம் His Grace - அருட்டிரு His Holiness - தவத்திரு