பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 30 மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை ஙனிபுஅது ஆஓஏணுடஏழூர ஞழ. சூதுகூசூநுஹப்ழுழகூழஷ்ர் துமிய்முண் ஆறுக்குட்டுஐளு ஆதங்ஐஈ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 30 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1978 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 224 = 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிடமொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர் பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை மண்ணுலக வாழ்விற் பெரும்பாலார்க்குத் துன்பமே மிகுவதனால், அவ்வுலகம் மண்போல் இழிந்ததென்றும், விண்ணுலகம் ஒருவராலுங் கண்டறியப்படாவிடினும், அது மக்களினும் உயர்ந்த தேவர் வாழிடமாதலால் எல்லார்க்கும் இன்பந்தரும் வகையிற் பொன்போற் சிறந்ததென்றும், பொதுவாகச் சொல்லவுங் கருதவும் படுகின்றன. மண்ணுலகத்திலும், தக்க அரசிடமிருந்து செங்கோலாட்சி செய்யின் விண்ணுலக இன்பம் நுகர்தல் கூடும். இன்பம் என்பது, அவரவர் தேவைப் பேற்றையும் பொந்திகையையும் (திருப்தியையும்) பொறுத்ததேயன்றி, செல்வச் சிறப்பையும் பல்வகை யுயர்திற நுகர்ச்சியையும் பொறுத்ததன்று. மேலும், விண்ணுலக வின்பம் வீட்டின்பம் போல் அளவிறந்ததும். மேலும், விண்ணுலக வின்பம் வீட்டின்பம் போல் அளவிறந்ததும் நிலையானதும் அன்றாதலின், அது மனநிறைவான மண்ணுலகச் செங்கோலாட்சி வாழ்வினுஞ் சிறந்ததாகாது. உலகில் முததன்முதல் தோன்றிய ஆட்சிவகையான கோவரசு (Monarchy) செங்கோலாட்சியா யிருந்த காலத்திலும் இடத்திலும், மக்கட்டொகை வரம்பிற்குட்பட் டிருந்ததுவரை, விண்ணின்பம் விளைப்பதா யிருந்தது. இந் நூற்றாண்டிலோ, மக்கட்டொகை இரு மடங்கும் மும்மடங்கும் நான்மடங்குமாகப் பெருகி, விளைவு குன்றி உணவுத்தட்டு ஏற்பட்டு மக்கள்பட்ட இடர்ப்பாட்டை, ஆங்காங்கும் இடையிடையும் தோன்றிய கொடுங்கோலாட்சி மிகுத்து விட்டதனால், குடியரசு (Democracy), மக்களாட்சி (Rupublic), கூட்டுடைமை (Socialism) ஆகிய பொதுமக்க ளரசுகள் ஏற்பட்டுவிட்டன. கூட்டுடைமையைப் பொதுவுடைமை (Communism) என்று பலர் தவறாகக் கூறுவர். பணநடமாட்டமின்றி, எல்லாருந் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்தவுரிமையொடு பயன்படுத்தி, ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யாகும். பொதுவுடைமை யென்று தவறாகச் சொல்லப்படும் கூட்டுடைமை நடைமுறையில் முதன்முதலாக 1917-ல் இரசியாவில் தோன்றியதனால், அதுவே அக் கொள்கைத் தொடக்கமென்று எல்லாருங் கருதிக்கொண்டுள்ளனர். எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும், வகுப்புவேற்றுமையைத் தோற்றுவிக்காததும், உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும், இறை வழிபாட்டை மறுக்காததும், தனியுடைமையை விலக்காததும், பகுத்தறிவிற்கு முற்றும் ஒத்ததும், உயரியதுமான கூட்டுடைமை யாட்சி அல்லது வாழ்க்கை, கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதுவே இப் பொத்தகத்தில் விரிவாக கூறப் பட்டுள்ளது. படித்தறிக. vot என்னும் ஆங்கிலச்சொல் vow (L.voveo) என்னும் வினையினின்று தோன்றியுள்ளதால், நேரி என்று இப் பொத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காட்டுப்பாடி விரிவு, 31.8.1973 ஞா.தேவநேயன் உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளச்சுரப்பு vi சான்றிதழ் viii முகவுரை .x முன்னுரை 1. பண்டைத் தமிழக அரசு வரலாறு .1 2. பண்டைத் தமிழக ஆட்சிமுறை .8 3. அரசின் பயன் .15 4. அரசியல் வளர்ச்சி வரலாறு .17 5. உலகநாட்டுவகைகளும்அரசுவகைகளும்... 27 6. கூட்டுடைமைத்தோற்றம்... 29 7. கூட்டுடைமை வகைகள்...31 8. பொதுவுடைமை என்னும்பெயர்பொருந்தாமை...31 9.கூட்டுடைமையேகுடியரசின்முதிர்நிலை... 31 10. குடியரசியல்பு ... 32 நூலடக்கம் I வள்ளுவர் கூட்டுடைமை 1. வள்ளுவர் கூட்டுடைமை யியல்பு .33 2. வறுமையடையும் வகைகள் .35 3. மக்கட் பண்பாடு 36 4. வள்ளுவர்கூட்டுடைமையின்தனிச்சிறப்பு... 38 5. கூட்டுடைமையின்நன்மைகள்... 42 6. கூட்டுடைமைப் பண்பாடு .46 7. மக்கட் பெருக்கம் .49 8. மக்கட் பெருக்கத் தீமைகள் .51 9. மக்கட் பெருக்க மட்டுப்படுத்தம் 56 II தமிழ்நாட்டு அரசின் கடமை 1. உழவுத்தொழிலை ஊக்கல் .63 2. கைத்தொழிலைப் பெருக்கல் .68 3. வாணிகத்தை வளர்த்தல் .76 4. கல்வியைப் பரப்பலும் உயர்த்தலும் 78 5. வேலையளிப்பு 84 6. சம்பளத் திட்டம் 100 7. குலவேற்றுமை யொழிப்பு 101 8. மதுவிலக்கு 123 9. சூதாட்டொழிப்பு .125 10. மதவியற் சீர்திருத்தம் .125 11. மூடநம்பிக்கையும் பழக்கவழக்கமும் .128 12. எச்சப் பிறவிகட்கு வேலையளித்தல் 130 13. தொழுநோயர் குடியிருப்பு 130 14. முதியோர் இல்லம் .130 15. தீயோரை நல்வழிப்படுத்தல் .130 16. வீடமைப்பு .131 17. நகரமைப்பு 131 18. தலைநகர் விரிபு 132 19. காடு வளர்ப்பு 134 20. தேர்தல் முறை 135 III தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை 1. தமிழ் தனிமொழி யெனல் 137 2. தமிழ்நாட்டின் தனித்தன்மை .142 3. இந்தியெதிர்ப்புப் போராட்டம் 145 4. ஆங்கிலம் அயன்மொழி யன்மை 148 5. இந்திய ஆங்கிலத்திற்குச் சமமன்மை .150 6. இந்திய இலக்கியச்செம்மொழியன்மை... 151 7. மும்மொழித் திட்டம்... 156 8. இருமொழித்திட்டம்... 158 9. ஆங்கிலத்தின் இன்றியமையாமை... 158 10. நடுவணரசின் சொற்செயல் முரண்... 162 11. திட்டவட்டமானநிலைத்தமுடிபு... 163 12. கட்சித் தலைவர் கல்வித்துறையில்தலையிடாமை... 164 13. தமிழர் யார்? 167 IV நடுவணரசின் கடமை 1. உலகக் கட்சிகள் .168 2. பிறவிக்குலப் பிரிவின் கேடு 169 3. கல்வியும் ஆட்சிமொழியும் 170 4. சம்பளத் திட்டம் . 175 5. ஆசிரியப் பதவிவேறுபாடும்பெயர்வேறுபாடும்... 176 6. வரவுசெலவுத் திட்டம்... 176 7. ஆற்றுநீர்ப் பாசனம்நடுவணாட்சிக்குட்படல்... 177 8. தேர்தல்முறை... 178 9. வெளிநாட்டுறவு ... 182 10. தென்னிந்தியத் தலைநகரம் 185 11. வீடமைப்புத் துறை .186 12. குலவகுப்பற்ற குமுகாய வமைப்பு 186 V. உலகக் கூட்டரசு 1. தனிநாட்டுக் கூட்டுறவியற்கை யமைப்பு... 188 2. உலகப் பொதுக்கூட்டுறவியற்கையமைப்பு...192 3. போரின் கொடுமை .193 4. பன்னாட்டுக் கழகம் 194 5. ஒன்றிய நாட்டினங்களின் அமைப்பு .194 6. உலகப் பொது ஆட்சியின் தேவை .196 7. உலக ஒற்றுமைக்கு வழிகள் 201 8. உலகக் கூட்டாட்சியின் நன்மைகள் .204 VI முடிவுரை 1. இந்தியாவின் முப்பெருங் கேடுகளை நீக்கல்... 205 2. தமிழாங்கில நெருக்கம் ... 207 3. உலகக்கூட்டரR... 213 4. தமிழின் தனியியல்பு ... 213 மண்ணில்விண்அல்லதுவள்ளுவர்கூட்டுடைமை முன்னுரை 1. பண்டைத் தமிழக அரசு வரலாறு பண்டைத் தமிழகம் என்பது, குமரிமுனைக்குத் தெற்கில் 2000 கல் தொலைவுவரை பரவியிருந்து, இந்துமாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டம் என்னுந் தென்கண்டமாகும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 19-22) அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானெனமலிந்தஏழ்தெங்கநாடும்,ஏழ்மதுரைநாடும்,ஏழ்முன்பாலைநாடும்,ஏழ்பின்பாலைநாடும்,ஏழ்குன்றநாடும்,ஏழ்குணகாரைநாடும்,ஏழ்குறும்பனைநாடுமென்னும்ïந்தeற்பத்தொன்பதுeடும்,Fமரிbகால்லKதலியgன்மலைeடும்fடும்eதியும்gதியும்jடநீர்க்Fமரிtடபெருங்nகாட்டின்காறும்,fடல்bகாண்டொழிதலாற்Fமரியாகியbபளவமென்றாbரன்றுணர்க(சிலப்.8: 1-2,mடியார்.ciu). இக் கடல் கொண்ட நிலம்முழுதும் பழம் பாண்டிநாடு என்பதை அறிதல் வேண்டும். இக் கூற்று மொழிநூற் சான்றால் முழு வலியுறுகின்றது. ஆதலால், கடல்கோட்கு எஞ்சியுள்ள இற்றைத் தமிழ்நாட்டிற் கிறித்துவிற்குப் பிற்பட்ட கோவிற் கல்வெட்டுகளில் தொல் பொருட்டுறைச் சான்று காண முயல்வது, வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையாகவே முடியும். தமிழ்நாட்டு வரலாற்றிற்குத் தொல்பொருளாராய்ச்சித் துறை இம்மியும் பயன்படா தென்பதை அறிதல் வேண்டும். குமரிமலைத்தொடர் தென்னாப்பிரிக்காவையடுத்த மட காசுக்கர்த் தீவைச் சார்ந்ததாகத் தெரிவதனாலும், தமிழ் உலக முதன்மொழியாகத் தோன்றுவதனாலும், ரிச்சார்டு லீக்கி (Richard Leakey) என்னும் பிரித்தானிய மாந்தனூலாராய்ச்சியாளர் தென்னாப்பிரிக்கக் கீழ்கரை நாடுகளையே மாந்தன் பிறந்தக மாகக் கூறுவதனாலும், குமரிமலைநாடே தமிழன் பிறந்தகமும், தென் குரங்கன் (Australopithecus), கற்கருவி மாந்தன் (Homo habilis), நிமிர்மாந்தன் (Homo erectus), மதிமாந்தன் (Homo sapiens) என்னும் நால் நிலையனாகச் சொல்லப்படும் மாந்தன் தோன்றிய இடமுமாகுமென்று கொள்ளப் பெரிதும் இடமுண்டாகின்றது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று வந்து வைகை மதுரைச் சுற்றுச் சார்பிலுள்ள குன்றுகளில் வதிந்த சமணத் துறவியர், அங்குள்ள பாறைகளில் தமக்குத் தெரிந்த பிராமி யெழுத்தில் தமக்குத் தோன்றியதை அல்லது தாம் அறிந்ததைப் பொறித்து வைத்ததினின்று, அன்று வழங்கிய தமிழெழுத்தைப் பற்றி ஒரு முடிபிற்கும் வந்துவிட முடியாது. பனைமரம் தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் தொன்றுதொட்டு இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் வளர்ந்து வருவது. கடிதங்கள், திருமுகங்கள், நாளோலைகள், வரவுசெலவுக் கணக்குகள், முறிகள், தீட்டுகள், ஒப்பந்தங்கள், ஆவணங்கள், வணிகப்பட்டியல்கள், கைச்சாத்துகள், சுவடிகள், பொத்தகங்கள் ஆகியவையெல்லாம் பனையேட்டில் எழுதப் பட்டு வந்தன. வளை கோடுமிக்க வட்டெழுத்துத்தான், பனை யேட்டில் எழுத்தாணி கொண்டு ஏந்தாகவும் (வசதியாகவும்) இடக்கருவிச் சேதமின்றியும் எழுத வொண்ணும். நேர்கோடு மிக்க வெட்டெழுத்தே, கல்லுஞ் செம்பும் போன்ற கடினப் பொருள்மேல் உளியாற் பொறித்தற்கு ஏற்கும். வடமொழி முதலில் எழுதப்பட்ட கிரந்தவெழுத்து, தமிழெழுத்தின் திரிபே. கிரந்தவெழுத்தின் திரிபு வளர்ச்சியே தேவநாகரி. அது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அரும்பி, 8ஆம் நூற்றாண்டிற் போதாகி, 11ஆம் நூற்றாண்டில் மலர்ந்ததாக, மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத ஆங்கில அகரமுதலி முன்னுரையிற் குறிக்கின்றார் (ப.28, அடிக்குறிப்பு). தேவநாகரி என்னும் பெயரே, தேவன், நகரம் என்னும் இரு தென்சொற் கூட்டின் திரிபென்பதை அறிதல் வேண்டும். ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்ததிலிருந்து, தமிழ் ஒரு வகையிலும் வளர்ச்சி பெறாது, எல்லா வகையிலும் படிப்படி யாய்த் தளர்ச்சியுற்றே வந்திருக்கின்றது. கடைக்கழகக் காலத்தி லேயே மூவேந்தரும் ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்ந்து விட்டதனால், கிறித்துவிற்குப் பின் ஆங்கிலர் வரும்வரை தமிழாட்சி தமிழர் கையில் இருந்த தில்லை. ஆரியர் வருகைக்கு முந்தின, தமிழுக்கு உயிர்நாடியான மூல முதுநூல்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. அகத்தியம், தமிழ்ப் பரதம் முதலிய, ஆரியர் வருகைக்குப் பிற்பட்ட நூல்களும் இன்றில்லை. கல் வெட்டுகள், கொச்சைச் சொற்களும் வேண்டா வட சொற்களும் விரவியும், வரிவடிவு பிழைத்தும், வடவெழுத்துப் புகுத்தியும், இலக்கணமின்றியும், இடையிடைத் தமிழ்ப் புலவர்க்கும் பொருள் தெரியாவாறு மணிப்பவள நடையிலும் பொறிக்கப் பட்டு வந்தன. பிராமணர் நிலத்தேவரென்றும், அவரது இலக்கியமொழி தேவ மொழியென்றும், நம்பப்பட்டுவிட்டதனால் தமிழரசர் காலத்திலேயே தமிழ்ப்புலவர் தமிழ்க்கேட்டைத் தட்டிக்கேட்க இடமில்லாது போயிற்று. இவ் விழிநிலைமை தமிழரசொழிந்து அயலரசுகள் தோன்றியபின் முற்றி முதிர்ந்து, ஆங்கிலராட்சி யிலேயே நீங்கத் தொடங்கிற்று. ஆதலால், பிற்காலக் கல்வெட்டு களைக்கொண்டு தமிழின் தொன்மையை அறிவது, ஆழியை நாழி கொண்டு அளப்பது போன்றதே. 1. குடும்பத்தலைவன் மக்கட்டொகுதிக்கு அடிப்படை யலகாயிருப்பதும், உலகில் முதன்முதல் தோன்றிய கூட்டொழுங்கும் குடும்பமே. கட்டுப் பாடின்றி ஒருவனுக்கு ஒரு மனைவியோ பல மனைவி யரோ இருந்த முதற் காலத்தில், பிள்ளை பிறக்கும்வரை கணவனாகவும், அதன்பின் கணவனுந் தந்தையுமாகவும் இருந்த குடும்பத் தலைவனே தன் குடும்பத்தை ஆண்டுவந்தான். புதல்வரும் புதல்வியரும் பிறந்து பெரியோராகி மணந்து பல்குடும்பமான பின், கூட்டுக் குடும்பத் தலைவனான பாட்டன் அல்லது பூட்டன் (பாட்டனின் தந்தை) அல்லது சேயான் (பூட்டனின் தந்தை) ஆண்டு வந்தான். இக்காலத்தும் ஒருசிலர் இருநூறாண்டும் மேலும் வாழ்வதால், இருவளமும் மிக்க தொடக்கக் காலத்தில் மாந்தர் சிலர் நாலைந்து தலைமுறை நீடித்திருந்தனர் என்பதில், எள்ளளவும் ஐயுறவிற் கிடமில்லை. 2. குடித்தலைவன் கூட்டுக்குடும்பங்கள் குலைந்து தனித்தனிக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டபின், குடிமுதியனே குடித்தலை வனாக ஆண்டுவந்தான். குடியென்னுஞ் சொல் முதற்காலத்தில் வீட்டையே குறித்தது. குடியிருத்தல் = வீட்டில் வதிதல். குடிக்கூலி = வீட்டு வாடகை. மனைவி பெரும்பாலும் வீட்டிலிருந்து சமையல் செய்து பிள்ளைகளைப் பேணுவதால், குடியென்னுஞ் சொல் இடவாகு பெயராய் மனைவியையுங் குறித்தது. அவனுக்கு இருகுடி, மூத்த குடி(யாள்), இளைய குடி(யாள்), என்னும் வழக்கைக் காண்க. ஒ.நோ: மனை = வீடு, மனைவி; இல் = வீடு, மனைவி. பல வீடுகள் சேர்ந்து ஓர் ஊராவதால், குடி என்னுஞ் சொல் சினையாகுபெயராக ஊரையுங் குறித்தது, சில வீடுகள் சேர்ந்த சிற்றூர் சிறுகுடி யெனப்பட்டது. ``சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே'' (சிலப். 24:9 கண்ணகிவழி.) செங்காட்டங்குடி, காரைக்குடி, மன்னார்குடி, தூத்துக்குடி என்பன, அடைசொல் கொண்ட ஊர்ப்பெயர்கள். சிறுகுடி மக்கட்டொகையாற் பெருத்தபின், ஒரு அல்லது பல குடும்பம் பிரிந்துபோய் வேறு புதுக்குடியை அல்லது குடிகளைத் தோற்றுவித்தன. முன்பு சிறுகுடியாயிருந்தது பின்பு பெருங்குடியாகி இறுதியில் முதுகுடியுமாயிற்று. முதற்கண் ஒரு வீடாகத் தோன்றியதே, பின்னர்ப் பல வீடுகளாகப் பல்கி ஓர் ஊராகு மென்பதை, நெல்லை மாவட்டச் சங்கரநயினார் கோவிலின் தென்கிழக்கில் இருகல் தொலைவில், இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒரே வீடாகத் தோன்றி ஒற்றையூர் எனப்பட்டது, இன்று பல வீடாகப் பெருகியிருப்பதால் அறியலாம். குடியென்னுஞ் சொல், நாளடைவில், முறையே வீட்டு வாழ்வையும், வீட்டு வாழ்நனையும், அவன் குடும்பத்தையும், அதன் பெருக்கமான கூட்டுக்குடும்பத்தையும், அதன் விரிவான இனத்தையும், அதன் மரபுத் தொடர்ச்சியான வகுப்பையும் அல்லது குலத்தையும், ஊர்மக்களையும், நாட்டு மக்களையும் குறிக்கலாயிற்று. குடி = 1. வீட்டுவாழ்வு. எ-டு: குடிகொள்ளுதல். 2. நிலை யான வீட்டு வாழ்வு. குடியானவன் = நிலையான வீட்டுவாழ்வு கொண்ட உழவன். 3. வீட்டு வாழ்நன், நாட்டு வாழ்நன். குடி (ஒருமை). குடிகள் (பன்மை). 4. குடும்பம். குடித்தனம் = குடும்ப வாழ்க்கை, குடும்பத்தை நடாத்துதல். 5. ஊர்மக்கள். குடிமகன் = ஊர்த் தொண்டனான அடுத்தோன் (முடிதிருத்தாளன்). 6. கூட்டுக் குடும்பம், இனம். ``ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்'' (புறம். 183). 7. குலம். நாட்டினம். குடிசெயல்வகை (குறள். அதி. 103). 8. நாட்டு மக்கள். மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (குறள். 542). 9. மரபுவழி. பாண்டியர் குடி. குடி - குடும்பு - குடும்பம். ஒ.நோ: குழி - குழும்பு. குடும்பு என்னுஞ் சொல் உத்தரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ப்பிரிவைக் (ward) குறித்தது. குடும்பம் - குடும்பன். பள்ளர் என்னும் மள்ளர்குல ஊர்த்தலைவன் குடும்பன் எனப்படுவான். ஐந்திணைக் குடியிருப்புத் தலைவர் முதற்காலத்தில் மக்கள் மரமடர்ந்த மலைநாட்டிலேயே பெரும்பாலும் இயற்கை விளைவையும் சிறுபான்மை செயற்கை விளைவையும் உண்டு வாழ்ந்து வந்தனர். இயற்கை விளைவில், வேட்டையூனும் ஆடுமாடெருமை யென்னும் முந்நிரைப் பாலும் அடங்கும். வானாவாரிப் பயிருக்கேற்ற நிலமும், முந்நிரைக்கு வேண்டிய புல்வெளியும் போதாமையால், மலைவாணருள் ஒரு சாரார் மலை நாட்டையடுத்த திறந்தவெளிக் காட்டுநிலத்திற்கு வந்து வாழ்ந்தனர். நெல்லும் வாழையும் போன்ற சிறந்த பயிர்கட்கேற்ற நிலவளமும் நீர்வளமும் முல்லையென்னுங் காட்டுநிலத்தி லின்மையால், அங்கிருந்து ஒரு சாரார் அடுத்திருந்த இருவள மருதநிலத்திற்குத் தாவினர். உணவிற் கின்றியமையாத உப்பு விளைக்கவும், கடல்மீன் பிடிக்கவும், அணிகலத்திற்கு வேண்டிய முத்துப் பவளமெடுக்கவும், மருதநிலத்தினின்று ஒரு சாரார் கடற்கரைக்குச் சென்று வதிந்தனர். இந் நால்நிலமும் நிலையான இயற்கை நிலம். இவை அவற்றிற் சிறப்பாகப் பூக்கும் பூப்பற்றி, முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெயர்பெற்றன. மக்கள் மலையினின்று கடல்நோக்கி ஆற்றையொட்டி நேராக வருங்கால், இந் நால்நிலமும் முறையே அமைந்திருப்பது, தமிழ்நாட்டிற்கே சிறந்த அமைப்பாகும். ஆண்டுதோறும் கடுங்கோடைக் காலத்தில், முல்லை குறிஞ்சி நிலங்கள் நீர்வற்றி வறண்டு பாலுள்ள மரஞ்செடி கொடிகள் தழைக்கும் பாலை யென்னும் நிலையில்லாத நிலமாக மாறும். நிலையானவும் நிலையில்லாதனவுமாகிய இவ் வைவகை நிலமும், இலக்கணத்தில் ஐந்திணை யெனப்படும். முதற்காலத்தில், குறிஞ்சிநிலத்தாரான குறவர் வேட்டை யாடலும், முல்லைநிலத்தாரான ஆயர் அல்லது இடையர் ஆடுமாடு மேய்த்தலும், மருதநிலத்தாரான உழவர் பயிர் விளைத்தலும், நெய்தல் நிலத்தாரான பரவர் கடல்படு செல்வந் தேடலும், பாலைநிலத்தாரான எயினர் கொள்ளையடித்தலும் ஆகிய ஒவ்வொரு தொழிலையே சிறப்பாகச் செய்யும் ஒவ்வொரு வகுப்பாராகவே யிருந்தனர். நெசவு, கட்டடம், தச்சு, சலவை, முடிதிருத்தம், தோல் வினை முதலிய துணைவினைகளை, ஒவ்வொரு வகுப்பாரும் தாமே எளியமுறையிற் செய்துகொண்டனர். இங்ஙனம் எவ்வகை வகுப்பு வேறுபாடுமின்றி ஒவ்வொருவரும் எல்லா வினை களையுஞ் செய்து கொள்ளக்கூடிய நிலைமையை, இன்றும் நீலமலைக் கோத்தரிடைக் காணலாம். குடியிருப்புகள் குறிஞ்சிநிலத்திற் குறிச்சி, சிறுகுடி யென்றும், முல்லைநிலத்திற் பாடி, சேரி யென்றும், மருத நிலத்தில் ஊர் என்றும், நெய்தல் நிலத்தில் துறை, குப்பம் என்றும், பாலைநிலத்தில் குடிக்காடு, நத்தம் என்றும் பெயர் பெற்றிருந்தன. இவ் வழக்கு முதன்முதல் கடல்கொண்ட பாண்டிநாட்டில் எழுந்தது. அங்கிருந்தவூர்கள் ஆயிரக் கணக்கினவாக இருந் திருத்தல் வேண்டும். பழம்பாண்டிநாடு முற்றும் முழுகிய பின்பும், திணைநிலை மாறித் திணைமயக்கம் ஏற்பட்ட பின்பும் ஐந்திணைக் குடியிருப்பும் மரபு நோக்காது மக்கள் விருப்பப்படி ஊரென்று பெயர்பெற்றபின்பும், ஊரீற்றுப் பெயர்கொண்ட வூர்கள் இற்றைப் பாண்டிநாட்டினுஞ் சோழநாட்டில் மிகுதியா யிருத்தல், திரவிடரின் முன்னோர் வட மேலை வெளிநாடு களினின்று இந்தியாவிற்கு வந்ததற்குச் சான்றென்று, பேரா. தி. (T.) பால கிருட்டிணன் நாயர் சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியிதழில் (Journal of the Madras University), திரவிடத் தோற்றப் புதிர் (Problem of Dravidian Origins) என்னுங் கட்டுரைத் தொடரிற் கூறியிருப்பது, தமிழ் வரலாற்றையும் குமரிநில வூர்ப்பெயர் மரபையும் அவர் அறியாமையையே காட்டும். குடியிருப்புத்தலைவர், குறிஞ்சிநிலத்தில் மலையின் பெயராற் சிலம்பன், பொருப்பன், வெற்பன் என்றும்; முல்லை நிலத்தில் அண்ணல், தோன்றல் என்றும்; பாலைநிலத்தில் விடலை, காளை, மீளி என்றும்; மருதநிலத்தில் ஊரன், கிழவன், மகிழ்நன் என்றும்; நெய்தல் நிலத்தில் துறைவன், கொண்கன், சேர்ப்பன் என்றும் பெயர் பெற்றனர். பழையவும் புதியவுமான சிறுகுடியிருப்புகள், அண்மை யிலுள்ள பெருங்குடியிருப்புத் தலைவன் ஆட்சிக்குட்பட்டன. முதற்கால நண்ணிலக் கடற்கரை மாந்தரும் பழந் திரவிடருள் ஒரு சாராரும், நீள்மண்டையராகவும் (dolicho cephalic) ஒத்த தற்கால நாகரிகத்தினராகவும் இருந்தாரென்பது, நாகரிகத் தொடக்க நிலையிலிருந்த ஒருசார் மாந்தர் குமரிநாட்டினின்று மேலை யாசியாவிற்கும் வடஆப்பிரிக்காவிற் கும் சென்றனர் என்பதையே உணர்த்தும். மேலும், ஒரே காலத்தில் தொடக்க நாகரிகரும் நடுத்திற நாகரிகரும் முதிர்ந்த நாகரிகரும் இருந்ததாகத் தெரிவதால், பழந்தமிழரையெல்லாம் வெளிநாட்டுத் தொடக்க நாகரிக ரொடு ஒப்பித்தல் தவறாகும். இலேகோவாரி (Lahovari) பல மேலையாசிய மொழிச் சொற்கட்கும் தமிழ்ச்சொற்கட்கும் உள்ள ஒருமருங்கு ஒலியொப்புமையைக் கண்டாரேயன்றி, அச் சொற்களின் வேரையும் வரலாற்றையும், அறிந்தாரல்லர். மேலையாசி யாவிலும் ஐரோப்பாவிலும் வழங்கும் பல இடப்பெயர்கள் தமிழ்ச்சொற் களின் திரிபாயிருப்பது, தமிழர் இங்கிருந்து அங்குச் சென்றார் என்பதையே மெய்ப்பிக்கும். ஐவகையரசர் மருதநில மக்கள் நிலையாகக் குடியிருந்ததனால், வரவர ஊர் மக்கட்டொகை பெருகிற்று. பல சிற்றூர்கள் பேரூர் களாயின. பேரூர்கள் மூதூர்களாயின. குறிஞ்சி முல்லை நெய்தல் நில மக்கள் தத்தம் நில விளைபொருள்களை மருத நிலத்தூர்கட்குக் கொண்டுவந்து, நெல்லிற்கு மாறினர். உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் தொழில் வகுப்பார் தோன்றினர். இதனால் மக்கட் பெருக்கமும் திணைமயக்கமும் காவல் தேவையும் ஏற்பட்டன. எல்லா வகுப்பாரின் பொருள் களைப் பாதுகாக்கவும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டவும், அரசு தோன்றிற்று. இங்ஙனம் மருதநில நகர்களில் நாகரிகந் தோன்றி வளர்ந்தது. மருதநிலக் கிழவன் ஊராளி என்னும் முதலரசனானான். அதிகார ஆசைபற்றியும் ஈரூர்க் குடிகளின் சச்சரவுபற்றியும் அடிக்கடி போர் எழுந்தது. அதனால் நிலையான படையமைக்க வேண்டியதாயிற்று. செம்மையாக ஆட்சி செய்யவும் வெற்றி யாகப் போர்முடிக்கவும் சூழ்ச்சித்துணையும் வேண்டியிருந்த தனால், அறிவாற்றல் மிக்க அமைச்சனும் அமர்த்தப்பட்டான். போரில் தோற்ற அரசு வென்ற அரசிற்குப் பெரும்பாலும் கீழ்ப் படுத்தப்பட்டதனால், முதற்கண் ஒரே பேரூர்த் தலை வனான கிழவன் நிலையிருந்த ஊராளி அரசு, படிப்படியாக, பல பேரூர்த் தலைவனான வேள் நிலையும், பல வேளிர் தலை வனான மன்னன் நிலையும், பல மன்னர் தலைவனான கோ நிலையும் பல கோக்கள் தலைவனான வேந்தன் நிலையும் அடைந்தது. மன்னரைப் பெருவேளிர் என்பதுமுண்டு. கிழவனாட்சி பெரும்பாலும் ஒரே திணைநிலத்தையும், வேள் மன்னர் கோவாட்சி இரு அல்லது முத்திணை நிலங்களையும் தழுவின; வேந்தனாட்சி ஐந்திணை நிலங் களையுந் தன்னுளடக்கிற்று. 2. பண்டைத் தமிழக ஆட்சிமுறை (தோரா. கி.மு. 10,000 - 1,500) ஒரு காலத்தில் தெற்கிற் குமரிமலையிலிருந்து வடக்கிற் பனிமலைவரை பரவியிருந்த கண்டமே, பழந் தமிழகம். இற்றைக் குமரி முனைக்குத் தெற்கில் ஆப்பிரிக்க ஆத்திரேலியத் தென்முனை மட்டம்வரை நீண்டிருந்த நிலப்பரப்பு முழுதும், தமிழன்றி வேறொரு மொழியும் வழங்காத முதற்காலப் பாண்டிநாடு. நெல்லை மதுரை முகவை மாவட்டப் பரப்பான பிற்காலப் பாண்டிநாடு, கடல்கோளுக்குத் தப்பிய பாண்டிய வேந்தன் தன் குடிகட்காகச் சோழநாட்டினின்றும் சேரநாட் டினின்றும் கவர்ந்துகொண்ட நிலப்பகுதியே. குமரிமுனையினின்று வடக்கு நோக்கிப் பனிமலை வரை ஒரு கோடிழுத்தால், கிழக்கிலுள்ளதெல்லாம் முதற்காலச் சோழ நாடென்றும் மேற்கிலுள்ளதெல்லாம் முதற்காலச் சேர நாடென்றும் அறிதல் வேண்டும். மூவேந்தராட்சியும், பெரும்பாலும் செங்கோலும் ஒரோவொரு கால் அருகிக் கொடுங்கோலுமாக இருந்ததாகத் தெரிகின்ற கோவரசாகும் (Monarchy). அது உலக முதலாட்சி யாதலால், அதினுஞ் சிறந்ததாக அத்துணைப் பழங்காலத்தில் இருந்திருக்க முடியாது. மூவரசியங்களுள் ஒவ்வொன்றும் பல மண்டலங் களாகவும், மண்டலங்கள் பல கோட்டங்களாகவும், கோட் டங்கள் பல கூற்றங்களாகவும், கூற்றங்கள் பல வளநாடு களாகவும், வளநாடுகள் பல நாடுகளாகவும் பகுக்கப்பட் டிருந்தன. ஒவ்வொரு நாடும் தனியூர் என்னும் பேரூர்களையும் பற்று அல்லது குறைப்பற்று என்னுஞ் சிற்றூர்களையும் கொண்டிருந்தது. மண்டலங்களைப் பெரும்பாலும் அரசக் குடும்பத்தினரே துணையரையர் போல ஆண்டுவந்தனர். பழம் பாண்டிநாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருக்கலாம். ஐந்துணை யரையரால் பாண்டியன் அஞ்சவன் எனப்பட்டிருக்கலாம். அது பிற்காலத்திற் பஞ்சவன் என்று மெய்ம்முதல் பெற்றிருக்கலாம். (ஒ.நோ: அப்பளம்-பப்பளம் - பப்படம்). மண்டல ஆள்நர் மண்டலவர் - மண்டலகர் எனப்படுவர். மற்றப் பிரிவுகளை மாவரையன், விழுப்பரையன், வேளான், நாடாள்வான் முதலிய சிறப்புப் பெயர் பெற்ற பல்திறத்த அதிகாரிகள் ஆண்டு வந்ததாகத் தெரிகின்றது. அரசனின் ஆட்சித் துணைவர் 1.ஐம்பெருங்குழுவார்: அமைச்சர், பெரும்படைத்தலைவர், தூதர், ஒற்றர், பூசாரியர். 2.எண்பேராயத்தார்: கருமத்தலைவர், கணக்கர், கருவூலத் தார், படைத்தலைவர், குதிரைமறவர், யானைமறவர், நகரமாந்தர், வாயிற்காவலர். நகரமாந்தர் என்றது நகரங்களில் வதிந்த காசு வணிகரை. 3. உறுதிச் சுற்றத்தார் என்னும் நல்வாழ்வுத் துணைவர்: நட்பாளர், அந்தணாளர் (முனிவர்), மடைத்தொழிலாளர் (சமையற்காரர்), மருத்துவர், குறிகாரர் (கணியர், புள்ளுரைப்போர், விரிச்சிகர் முதலியோர்) 4. உயிர்காப்புத் துணைவர்: மெய்காவலர், வேளைக் காரர் என்னும் உற்றிடத்துதவிகள். 5. உடன்கூட்டத்தார் அல்லது உழையர்: தலைமை யமைச்சர், கருமத்தலைவர், குற்றேவலர் முதலியோர் அரசன் கட்டளையை நிறைவேற்றுவார். அரசன் கட்டளையை அருகிருந்து கேட்பவன் திருவாய்க்கேள்வி. திருவாய்க் கேள்வி சொன்ன அரசன் கட்டளையை ஓலையிற் குறித்துக்கொள்பவன் திருமந்திரவோலை. திருமந்திர வோலையர்க்குள் தலைமையானவன் திருமந்திரவோலை நாயகம். அரசன் கட்டளைகளை உடனுடன் அவரவர்க்கு அனுப்பி வைப்பவன் விடையி லதிகாரி. இவ் வினையில் ஈடுபட்ட கணக்கர் விடையிலார். அரசிறைப் பணியாளர் உழவர் இறுத்த (செலுத்திய) ஆறிலொரு பங்காகிய நெல்லும், பிற தொழிலாளர் செலுத்திய வரிக்காசும் ஆகிய அரசிறையைத் தண்டுபவர் தண்டுவார். அரசனுக்கு இறுப்பது அரசிறை. அது குடிகளைப் புரப்பதற்கு (காப்பதற்கு) வாங்கப் பட்ட வரியாதலின் புரவுவரி யெனப்பட்டது. புரவுவரிச் செய் தியைக் கவனிக்கும் ஆட்சித்துறை (Department) புரவுவரித் திணைக்களம். அதன் தலைவன் புரவுவரித் திணைக்கள நாயகம். வரித்துறை அலுவலர் வரியிலார். வரிகளைப் பல்வேறு செலவிற்கும் பங்கிடுவார் வரிக்கூறு செய்வார். பொன்வெள்ளிக் காசுகளின் தூய்மையை நோட்டஞ் செய்பவன் (சோதிப்பவன்) வண்ணக்கன். அரண்மனை யூழியர் அரசன் கட்டளைகளையும் அறிவிப்புகளையும், அரசுவா என்னும் பட்டத்து யானைமேலேறி முரசறைந்து தலைநகரில் விளம்பரஞ் செய்பவன் வள்ளுவன். வெற்றியொடு போர் முடிந்த பின்பும் சினந்தணியா திருக்கும் அரசனுக்கு மனவமைதியுண்டாதற் பொருட்டு, மலையாளக் கதகளி முறையில், நகைச்சுவைக் கூத்து ஆடிக்காட்டும் வேத்தியற் கூத்தன் சாக்கையன். சமம் - சமன் - சமனி. சமனித்தல் = அமைதிப்படுத்துதல், தணித்தல். சமனி - சமனிக்கை - சாக்கை. வள்ளுவனும் சாக்கையனும் உள்படு கருமத் தலைவர் எனப்படுவர். உள்படுதல் அரசனுக்குத் தனியாக உட்படுதல். அதாவது, என்றும் வேத்தியல் வினையே செய்தல். அரசனது பள்ளியறை யொழுங்கையும் பாதுகாப்பையுங் கவனிப்பவன் மாளிகைநாயகம் (Chamberlain). அரசனுக்கு அவ் வப்போது இனிய பாட்டு வடிவில் நாழிகை யறிவிப்பவன் நாழிகைக் கணக்கன். வைகறையில், அரசனை முன்னோருடன் சேர்த்துப் புகழ்ந்து பள்ளியெழுச்சி பாடுபவர் சூதர், அகவர் என்னும் இரு வகுப்பார். முன்னவர் நின்றேத்துவார், பின்னவர் இருந்தேத் துவார். மற்ற வேளைகளிற் புகழ்ந்து பாடுவார் மங்கலப் பாடகர். அரசனின் செங்கோல் முறைமை அரசன் தன் குடிகளைத் தன் மக்களைப்போல் அன்பாக அரவணைத்துக் காத்துவந்தான். காவலன், புரவலன் என்னும் பெயர்கள் இதையுணர்த்தும். அதிகாரிகளாற் கேடுசெய்யப் பட்டு வழக்கிழந்த ஏழையெளியவர் அரசனிடம் நேரில் முறையிடுவதற்கு, அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. சிக்கலான வழக்கில் துப்புக் காணவும், குடிகளின் நலத்தை நேரடியாய் அறியவும், அரசன் இராவேளையில் மாறுகோலம் பூண்டு நகரநோட்டம் செய்வதுண்டு. ஒருவழியிலும் உண்மை புலனாகாத வழக்கைத் தீர்க்கும் ஆற்றலை, இறைவனிடம் இரந்துவேண்டிப் பெறுவது முண்டு. குற்றத்திற் கேற்பத் தண்டஞ் செய்வதில் பகை, நட்பு, அயல், உறவு, தான் என்னும் ஐந்திறத்தும் ஒத்து, தன் மகனைக் கொன்றும், தன் கை குறைத்தும், தன்னுயிர் போக்கியும் நடுநிலையை முற்றப் பேணினர் முன்னை வேந்தர். நாடு செழிக்கவும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகுப்பாரும் தழைக்கவும், இயன்றன வெல்லாஞ் செய்யப்பட்டன. உலகில் வேறெங்குமில்லாத மொழிவளர்ச்சியும் இலக்கண விலக்கியப் பெருக்கமும் ஏற்பட்டன. பேரூர்தொறும் குடவோலை முறையில் அவை தேர்ந் தமைக்கப்பட்டு, குடியரசிற்கு அடிப்படையான உள்ளாட்சிக்கும் அடி கோலப்பட்டது. ஊர்வாரியம், கோவில் வாரியம், கழனி வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், கலிங்கு வாரியம், பொன் வாரியம், தடிவழி (Trunk road) வாரியம், ஆட்டை வாரியம், பஞ்சவார வாரியம், என்னும் வாரியப் பாகுபாடே அதைத் தெளிவாய்க் காட்டும். அரசன் பகல்தொறும், முதற் பத்து நாழிகை கொடை வழங்குதற்கும், இரண்டாம் பத்து நாழிகை முறை செய்தற்கும், மூன்றாம் பத்து நாழிகை தன் அரண்மனை வாழ்க்கைக்கும் செல விட்டு, இடையிடை நாடு சுற்றியும் தன் காவல் தொழிலைச் செவ்வனே செய்துவந்தான். இக்காலத்தில், நாட்டுறுப்பு (Constituents of State) ஆள்நிலம் (Territory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sovereignty), ஒற்றுமை (Unity) என ஐந்தென்பர் அரசியல் நூலார். பண்டைத் தமிழகத்தில் ஆள்நிலம், குடிகள், அரசு, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என நாட்டுறுப்பு எட்டாகக் கொள்ளப்பட்டது. ஆள்நிலத்தைக் குடியிலும் அரசைப் பொருளிலும் அடக்கி வல்லரசுறுப்பு ஆறென்றார் திருவள்ளுவர். போர்க்காலத்திலும் புதுவிறல்தாயம் என்னும் புதுநாடு பேற்றுக்காலத்திலும், படையின் முதன்மையும் இன்றியமை யாமையும் விளங்கித் தோன்றும். பழம் பாண்டிவேந்தர் கரிபரி தேர்கால் என்னும் நால்வகை நிலப்படையொடு கலப்படையும் வைத்திருந்தனர். அதனால், குமரிமலை மூழ்கியபின் வடதிசைக் கங்கையும் பனிமலையுங் கொள்ளவும், சாவகம் என்னும் சாலித்தீவின் கடற்கரையிற் பாதம் பொறிக்கவும் இயன்றது. தமிழன் உலகமுதற் R‰W¡flnyhoah(Circumnavigator) யிருந்தமையை, இன்றும் வடவை (Aurora Borealis), ehthŒ(L. navis-E. navy), படகு (L. barga - E. barge, L. barca - E. bark) முதலிய சொற்கள் உணர்த்தும். காலாட்படை நாட்டுப்படை யென்றும் காட்டுப்படை யென்றும் இருவகைப்பட்டிருந்தது. காட்டுப்படை பாலைநில மறவரைக் கொண்டது. பாலை குறிஞ்சியின் மருங்கும் மாற்றமு மாதலாலும், தமிழர் உலகமுதல் நாகரிக மாந்தரினத்தா ராதலாலும் மறவர்குடி முதுகுடி யெனப்பட்டது. முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் (தொல். புறத். 24) குடிநிலை மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனுங் கொண்டுபிற ரறியுங் குடிமர புரைத்தன்று. பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. (பு. வெ. 2:35) முதற்கால மாந்தன் முற்றும் இயற்கை விளைவையே சார்ந்து குகைகளில் வதிந்துவந்ததனால், அவன் குறிஞ்சி நிலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். மாந்தனின் நால்வகைப் படிமுறை நாகரிக வளர்ச்சிக்கேற்ற நானில அமைப்பு தமிழகத்திலேயே தலை சிறந்திருப்பதனால், குறிஞ்சிநிலச் சார்புகொண்ட தமிழ மறக்குடியை, “f‰nwh‹¿.........மூத்jFo” யென்று உயர்வுநவிற்சியாகப் புறப் பொருள் வெண்பாமாலை கூறியிருப்பது, உலகவரலா றறியாத முற்காலத்திற்கு ஏற்கா விடினும் இக்காலத்திற்கு முற்றும் ஏற்பதேயாம். இற்றைத் தமிழ்நாட்டின் மேற்கில் மலையும் கிழக்கிற் கடலும் இருப்பது போன்றே, பண்டைத் தமிழகத்திலுமிருந்தது. அதனால் குடதிசை மேற்கு என்றும், குணதிசை கிழக்கு என்றும் பெயர் பெற்றன. மேல் + கு = மேற்கு. கீழ் + கு = கீழ்க்கு - கிழக்கு. நாலாம் வேற்றுமைப் பெயர்கள் ஆட்சியில் முதல் வேற்றுமைப் பெயர்களாயின. முதலிரு கழகக் காலத்தும் மூவேந்தர் முத்தமிழ்நாடு மிருந்தனவேனும், தெற்கில் முழுகிப்போன நாடு முழுதும் தென்னவன் நாடேயாதலால், இங்குப் பண்டைத் தமிழகமென்று கூறியது பாண்டியன் நாடேயாகும். மாந்தன் எத்துணை மாண்புடைச் சான்றோனாயினும் மாசுமறுவற்ற கடவுளல்ல னாதலின், நெட்டிடையிட்டு அருகி ஒரோவொரு பாண்டியன் கொடுங்கோலனாயிருந்திருத்தலுங் கூடும், ஆயின், அதை மனத்திற் கொள்ளாவாறு, பாண்டியருள் மாபெரும்பாலார் செங்கோல் வேந்தராய்ச் சிறந்தோங்கின ரென்பது, எவரும் மறுக்கவொண்ணா வுண்மையாகும். இதற்கு, ``தென்னவன் நாட்டுச் சிறப்புங் கொள்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் தீத்திறம் புரிந்தோன் செப்ப.'' (சிலப். 10 : 54-7) ``கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேதம் இல்லெனக் குரவரும் நேர்ந்த கொள்கையின் '' (சிலப். 13 : 5-14) ``பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே.'' (சிலப். 20 : 72-6) ``மறைநா வோசை யல்லது யாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்னவ ரல்லது குடிபழி தூற்றுங் கோலனும் அல்லன் இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு ............................................................. இழுக்கந் தாரா திதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் ............................................................... இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சிநடுக் குற்று வச்சிரத் தடக்கை யமரர் கோமான் உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க் கிழுக்க மின்மை.'' (சிலப்.23 : 31-54) ``எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது''(சிலப். 15 : 95-9) என்று இளங்கோவடிகள் பிறர்கூற்றாகக் கூறியவை சான்றாம். அரசன் தன் அமைச்சரொடு கலந்து சூழ்ந்து ஒரு பெரு வினையை மேற்கொள்வதே வழக்கமாயினும், தான் நல்ல தென்று கண்டதை அல்லது கொண்டதை நிறைவேற்றும் முழு அதிகாரமும் அவன் கையிலிருந்தது. பொதுவாக, அமைச்சரின் துணையை நாடுவது, அரசனின் மதிவலிமையையும் மேற் கொண்ட வினை வலிமையையும் பொறுத்தேயிருந்தது. கருணாகரத் தொண்டைமான் போலும் படைத்தலைவ னில்லா விடத்து, அரசனே போர்க்களத்திற்குச் சென்று பொருததனால், அவன் நாற்படை நாயகமாகவும் நிலப்படை, கலப்படை ஆகிய ஈரிடப் படை மேலோனாகவு மிருந்தான். அரசப்பதவியுரிமை மரபுவழியாக மூத்த மகனுக்கு இருந்து வந்தது. 3. அரசின் பயன் 1. பாதுகாப்பு நாடு எத்துணை வளங்கொழிப்பினும் மக்கள் எத்துணைப் பொருளீட்டினும், அரசன் பாதுகாப்பில்லாவிடின் அனைத்தும் கள்வர்க்கும் கொள்ளைக்காரருக்குமே உரிமையாம். விளைத்தது வீடு வந்து சேராது; ஆக்கினதை அருந்த முடியாது; கைக்கெட் டினது வாய்க்கெட்டாது; வாய்க்கெட்டினது வயிற்றிற்கெட் டாது; கட்டின வீட்டிற் குடியிருக்கவும் காதன் மனைவியொடு கூடிவாழவும் இயலாது. கவர்வோரை யெதிர்ப்பின் உடைமை யும் போம்; உயிரும் போம். அரசுள்ள காலத்தில் நல்லவராயிருப் பவரும் அரசில்லாக் காலத்தில் தீயவராவர். ஆதலால், அரசின் முதற் பெரும்பயன் பாதுகாப்பே. அதனாலேயே, அரசனுக்குக் காவலன் என்றும், புரவலன் என்றும் பெயர். அரசனே கண்கண்ட தெய்வம். வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (குறள். 542) ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. (குறள். 740) முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப் படும். (குறள். 388) நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், யானுயிர் என்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. (புறம். 186) 2. ஒழுக்க வுயர்வு தாமாக உயர்ந்த ஒழுக்கம் பூண்போர் ஒருசிலரான சான்றோரே. ஏனையோரெல்லாம் அரசனின் தண்டனைக் கஞ்சியே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவராவர். அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள். 1065) 3. அமைதி நிலைப்பு குற்றஞ் செய்யுங் குடிகளைத் தண்டிப்பதனாலும், வல்லரசனுக்கு அடங்கியும் மெல்லரசனை அடக்கியும் அல்லது நட்பாகக் கொண்டும் ஆள்வதனாலும், நாட்டில் அமைதி யுண்டாகும். 4. தொழிலொழுங்கு பொருள் வருவாய்க்கேற்ற வழிகளை வகுத்தலும், அவ் வழிகளிற் பொருள் தேடுதலும் தேடின பொருள்களைக் காத்தலும் காத்த பொருள்களைப் பங்கீடு செய்தலும் அரசன் செயல்களாகும். ``இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.'' குறள். 385) 5. செல்வ வளர்ச்சி நெடுஞ்சாலைகளமைத்து நிலவாணிகமும், துறைமுகங்கள் கட்டி நீர்வாணிகமும் வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்குவது, அரசால் அல்லது அரசனால் ஆவதே. 6. மக்கள் முன்னேற்றம் இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வியைப் புகுத்தியும், பாவலரையும் பேரறிஞரையும் புதுப்புனைவாளரையும் பொதுநலத் தொண்டரையும் பட்டம் பதவி பரிசுகளால் ஊக்கியும், பொதுமக்கள் வாழ்க்கைநிலையை யுயர்த்தியும், பசி பிணி வறுமையைப் போக்கியும், மக்களை முன்னேற்றுவது அரசன் கடமையாகும். 7. உற்றிடத்துதவி நொடித்த குடும்பங்களைத் தூக்கியெடுப்பதும், தொழில் முடக்கம், பஞ்சம், கொள்ளைநோய், வெள்ளச்சேதம், நில நடுக்கம், எரிமலை முதலிய துன்பக்காலங்களில் தொல்லை நீக்கு வதும், அரசன் செய்யும் உற்றிடத்துதவியாகும். 8. அயல்நாட்டுறவு வெளிநாட்டு வணிகத்திற்கும் மேற்கல்விக்கும் கடுநோய் மருத்துவத்திற்கும் இயற்கைச் சேதக்காலத்தில் உதவி பெறு தற்கும், அயல்நாடுகளின் உறவு இன்றியமையாததாகும். அதற்குத் தூது போக்கி ஏற்பாடு செய்பவன் அரசனே. அரச னில்லாவூர் அச்சில்லாத் தேர். ``அரசனில்லாத நாடு அகமுடையான் இல்லாத வீடு. ``அரசன்வழிப் பட்டது அகலிடம் (அவனி). 4. அரசியல் வளர்ச்சி வரலாறு 1. கிரேக்க அரசு (கி.மு. 5ஆம் நூற்.) நகரநாடு (City - State), தேய நாடு (Country - State), கூட்டு நாடு (Federal State) என நாடு மூவகைப்படும். கிரேக்க நாட்டில் முதற்கண் நகரநாடுகளாகவே (City - States) அரசகங்கள் தோன்றின. ஒரு நகரநாடு பல சிற்றூர்க் கூட்டாகவோ, சில சிற்றூர்கள் சூழ்ந்த ஒரு பேரூராகவோ இருந்தது. பார்த்தா (Sparta) என்னும் நகரநாடு ஐஞ்சிற்றூர்க் கூட்டாக அமைந்தது. நகரநாட்டின் அரசு முதற்கண் கோவரசாக (Monarchy) இருந்தது. அது நாளடைவில் தன்விருப்பாட்சியாகவும் தன்மூப்பாட்சியாகவும் மாறினதனால்,பெருமக்களாட்சியான சீரியோராட்சி (Aristocracy) எழுந்தது. சீரியோராட்சியும் முன்பு சில்லோராட்சியாகவும் (Oligarchy) பின்பு கொடுங்கோலாட்சி யாகவும் (Tyranny) சீர்கெட்டு விட்டதனால், மக்களாட்சியும் (Republic) குடியரசும் (Democracy) தோன்றின. ஏதென்சு (Athens) நகரநாட்டு அரசியலமைப்பு i) பேரவை The Assembly (Ecclesia) ஒரு குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்ட எல்லாக் குடிவாணரும் (citizens) அதன் உறுப்பினர் (பெரும்பாலும் இருபது). பொதுவாக, ஓர் ஆண்டிற்கு நாற்பது முறை அது கூடிற்று. தேவையானபோது சிறப்புக் கூட்டங்களும் நடை பெற்றன. ஏறத்தாழ எல்லாவுறுப்பினரும் கூட்டத்திற்கு வரும் பொருட்டு, கூட்டநேரங்களில் கடைகளெல்லாம் சாத்தப் பட்டிருக்க வேண்டுமென்று கட்டளையிருந்தது. கூட்டத்தில் எந்த வுறுப்பினரும் பேசலாம். நாட்டைப்பற்றிய முதன்மை யான செய்திகளெல்லாம் கூட்டத்திற் பேசி முடிபு செய்யப் பட்டன. அம் முடிபிற்குமேல் தீர்ப்பு இல்லை. ii) ஐந்நூற்றுவர் மன்றம் - The Council of the Five Hundred (Boule) ஏதென்சு மக்கள் பத்துக் குக்குலங்களாக (tribes) அமைந் திருந்தனர். ஒவ்வொரு குக்குலத்தினின்றும் முப்பது அகவைக்கு மேற்பட்ட ஐம்பதின்மர் சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக்கப்பட் டனர். பேரவைக் கூட்டத்திற்கு வேண்டிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதும், பேரவைத் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், மன்றத்தின் கடமை. மன்றம் நாள்தோறுங் கூடிற்று. ஆண்டு முழுவதையும் பத்துக் காலப்பிரிவாகப் பகுத்து, ஒவ்வொரு காலப் பிரிவிலும் ஒவ்வொரு குக்குலம் முறைப்படி பணி யாற்றி வந்தது. பணியாற்றுங் குக்குலத்தினின்று, ஒரு நாளைக்கொருவர் தலைவராகச் சீட்டுப் போட்டுத் தெரிந் தெடுக்கப்பட்டார். கப்பல் கட்டுவதை மேற்பார்த்தல், பொதுப் பணி செய்தல், செலவுகளைத் திட்டஞ்செய்தல், குதிரைப் படையைக் காத்தல், வறியார்க்குதவி, அயல்நாட்டுறவு முதலிய அன்றாட ஆள்வினைகளை மன்றங் கவனித்துவந்தது. அதுவே ஏதென்சின் நிலையான அரசு. அதற்கு நல்ல சம்பளங் கொடுக்கப்பட்டது. பேரவைக் கூட்டத்திற்குத் தலைவராக மன்றவுறுப்பினர் ஒருவரே சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக்கப்பட்டார். iii) அரத்தன் குன்றம் (The Areopagus) குற்றவழக்குத் தீர்த்து மதவியல் வினைகளை மேற்பார்க்கும் வாழ்நாள் உறுப்பினர் குழு. iv) அலுவலர் (The Officers) தீர்ப்பாளர், பணத்துறை யலுவலர், அரசியற் கணக் காய்வார், சாலை மேற்பார்ப்பார், நிறைமுகவையதிகாரிகள், சிறைக்கோட்டக் காவலர் முதலிய பல்வகை யலுவலருள் நூற்றிற்குத் தொண்னூற்றைவர் சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக் கப்பட்டனர். அவர் பணிக்காலம் ஓராண்டு. தெரிந்தெடுக் கப்பட்ட பின்பும் பணிமுடிந்த பின்புமாக, ஒவ்வொருவரும் இருமுறை ஆய்நோட்டஞ் செய்யப்பட்டனர். தவறு செய்தவர் தண்டிக்கப்பட்டனர். v) மக்கள் அறமன்றம் - The Popular Jury Court (Heliaea) ஆண்டுதொறும் தொடக்கத்தில், ஒரு பிரிவிற்கு ஐந்நூற்றுவராகப் பத்துப் பிரிவாகப் பிரிக்கப்படும் ஐயாயிரவர், முப்பது அகவைக்கு மேற்பட்டவர், அறமன்ற வுறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வழக்கையுங் கேட்டுத் தீர்ப்பவர் யார் என்பதும் சீட்டுப் போட்டே தீர்மானிக்கப் பட்டது. சிறு வழக்குகளெல்லாம் நடுவரால் தீர்க்கப்பட்டன வென்பதும், அறமன்றத்தார்க்குச் சம்பளம் கட்டாயமன்று என்பதும், அவர் தொகை ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் என்பதும் மக்களறமன்றம் பெரும்பாலும் பெயரளவாகவே அல்லது பெருமதிப்பின்றியே இருந்திருக்கலாம் என்று கருத இடந்தருகின்றன. படைத்தலைமை போன்ற பதவிகள் எல்லாம் அமர்த்த மாகவேயிருந்திருத்தல் வேண்டும். கி.மு. 5ஆம் நூற்றாண்டில், கிரேக்க நகரநாடொன்றில் முழுக்குடியரசு தோன்றியமைக்கு, நிலப்பரப்பின் குறுக்கமும் மக்கட் டொகையின் சுருக்கமுமே கரணியமாயிருத்தல் வேண்டும். ஒரு நாட்டுக் குடிகளின் தொகை, பத்தாயிரத்திற்குக் குறையாதும் ஓரிலக்கத்திற்குக் கூடாது மிருத்தல் வேண்டும் என்று அரிசுற்றாட்டில் (Aristotle) கூறியிருப்பது, இதற்குச் சான்றாகும். ஒரு கிரேக்க நகரநாடு பரப்பளவில் தமிழகத்தி லிருந்த ஒரு வேளகத்திற்கே ஒப்பாகும். 2. உரோமவரசு (The Government of Rome) தேய நாடாகவன்றி நகரநாடாகத் தோன்றிய உரோமக் கோவரசு, உரோமநகர் கட்டப்பட்டதிலிருந்து (கி.மு.753) கி.மு. 510 வரை நீடித்திருந்தது. அதன்பின் அது மக்களாட்சியாக (Republic) மாறிற்று. முதற்கண் மேன்மக்கள் (Patricians) என்றும், தாழ்மக்கள் (Plebeians) என்றும், இருவேறு வகுப்பாரிருந்தனர். தாழ்மக்களுக்கு அரசியல் (Political), பொருளாட்சியியல் (Economics), குமுகாய வியல் (Social) என்னும் முத்துறையிலும் உரிமையில்லாதிருந்தது. அதனால் அவர் இடைவிடாது எதிர்த்துப் போராடி நாளடை வில் அவற்றைப் பெற்றுவிட்டனர். மக்களாட்சியமைப்பு (கி.மு. 3ஆம் நூற்.) 1. கரும நிறைவேற் றலுவலர் i) இரு பகராளர் (Two Consuls), ஆண்டுதோறும் நூற்றகப் பேரவையால் (Comitia Centuriata) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மகத்தீர்ப்பர் (Chief Magistrates), பிறநாட்டுறவு வினைகளில் நாட்டைப் படிநிகர்த்தல் (representation), அதிகாரத்திற் கடங்காதவரைத் தண்டித்தல், மூப்பரவையைக் (Senate) கூட்டித் தலைமை தாங்கல், அரசறிக்கைகளை விளம்பரஞ்செய்தல் ஆகிய பணிகளால் குடியியல் ஆள்வினைத் (Civil Administration) தலைவராக இருந்தனர். ii) ஆறு முனைவர் (Six Proctors) ஆண்டுதோறும் நூற்றகப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவர் தலைநகர்த் தீர்ப்பாளர் (Judges), நால்வர் சிசிலி (Sicily), rhoÅah(Sardinia) போன்ற மண்டலத் தலைவர். iii) இரு கடிவர் (Two Censors) நூற்றகப் பேரவையால் ஒன்றரை யாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பணத்துறைப் பொறுப்பு, குடிமதிப்பை எடுத்துவைப்பு, மூப்பரவைப் பட்டியலைத் தொகுத்து வைப்பு அவர் பணிகள். iv) நாற் பொதுப்பணியர் (Four Aediles) ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவர் வையப் பொதுப்பணியர் (Curule Aediles) எனப்பட்டனர். அவர் ஓராண்டு மேன்மக்களினின் றும் ஓராண்டு தாழ்மக்களினின்றுமாக மாறிமாறிக் குக்குலப் பேரவையால் (Comitia Tributa) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏனை யிருவர் தாழ்மக்கள் அவையால் (Concilium Plebis) தாழ்மக்களி னின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகராட்சியில் வெளிநாட்டுற வதிகாரிகட்கு உதவி, அரசு கணக்கேடுகள், பொதுக் கட்டடங் கள், குடிநீர் ஏற்பாடு ஆகியவற்றின் பொறுப்பு, அங்காடிகளை ஒழுங்குபடுத்தல், காவல்வினை என்பவை அவர் கடமை. v) எண் கேள்வியர் (Eight Quaestors) குக்குலப் பேரவையால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படைகட்குச் சம்பளங் கொடுப்பதும் வரித்தண்டலும் அவர் பணிகள். vi) பத்துப் பொதுவர் (Ten Tribunes) ஆண்டுதோறும் தாழ் மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்ப்பாளராலும் மேலதிகாரிகளாலும் தாழ்மக்களுக்குச் செய்யப்படும் முறை கேடுகளினின்றும் கொடுமைகளினின்றும் அவர்களைக் காப்பதே அவர் கடமை. அதற்கென்று நாலதிகாரங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன: அ) வெட்டதிகாரம் (Power of Veto - intercessio) ஆ) வலிமையதிகாரம் (Power of force - coercitio) இ) தகைப்பதிகாரம் (Power of arrest - prehensio) ஈ) தாழ்மக்களவையின் தீர்மானப்படி சட்டங்களியற்ற அடி கோலும் அதிகாரம். 2. நாற்பேரவைகள் i) கோட்டப் பேரவை (Comitia Curiata): இது கோட்ட வாரியாக neÇ(vote)aˤjJ. மகத்தீர்ப்பர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தற்கு இதன் இசைவு வேண்டி யிருந்தது. ii) நூற்றகப் பேரவை (Comitia Centuriata): இது நூற்றகம் (Century) என்னும் படைப்பிரிவுவாரியாக நேரியளித்தது. பல்துறையலுவலரைத் தேர்ந்தெடுத்தல், போர் தொடுத்தல், சாவுத்தண்டனை வழக்கைக் கேட்டல் ஆகிய பணிகள் இதற் கிருந்தன. iii) குக்குலப் பேரவை (Comitia Tributa): இது 35 குக்குல (tribe) வாரியாக நேரியளித்தது. கேள்வியரையும் பொதுப்பணியரையுந் தேர்ந்தெடுத்தல், நூற்றகப் பேரவையொடு கூடிச் சட்டமியற்றல் இதன் வினைகள். வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற வழக்குகளை வையப் பொதுப்பணியர் இதன் முன்னிலையிற் கேட்டனர். iv) தாழ்மக்களவை (Concilium Plebis): இது தாழ்மக்களே கொண்டது. இதுவுங் குக்குல வாரியாக நேரியளித்தது. பொது வரையும் பொதுப்பணியரையுந் தேர்ந்தெடுத்தல், சட்டம் பிறப்பித்தல், பொதுவர் அல்லது தாழ்வகுப்புப் பணியர் இட்ட தண்டத்தை யெதிர்த்த வழக்கைக் கேட்டல் ஆகிய பணிகளை இது செய்தது. 3. மூப்பரவை (Senate) இது எல்லா வகையிலுந் தலைசிறந்த 300 மக்களை உறுப்பினராகக் கொண்டது; ஐயாண்டிற் கொருமுறை கடிவரால் மாற்றியமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மகத்தீர்ப்ப ரெல்லாம் இதன் உறுப்பினராயினர். கொள்கையளவில் இது சூழகர்க்கு அறிவுரைக் குழு; கூட்டப் பட்டால்தான் இது கூடும். மகத்தீர்ப்பரை இது அடக்கியாள முடியாது. ஆயினும் நடை முறையில் மாபெரு வலிமை யுள்ளது; பொதுமக்கள் கருத்திற்கு விடப்பட்ட செய்திகளை யெல்லாம் முன்னாய்வு செய்தது; மகத்தீர்ப்பர் பணியாற்ற வழிகாட்டிற்று; ஒரு மகத்தீர்ப்பரைப் பணியினின்று நிறுத்திவைக்கவும், தனிப்பட்ட வரைச் சட்டப் பிணிப்பினின்று தவிர்க்கவும், போரியற் சட்டம் (martial law) பிறப்பிக்கவும் உரிமை கோரிற்று; சட்டஞ் செய் வதிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக்காட்டித் திருத்தியது; பேரவைகளும் மகத்தீர்ப்பரும் தாம் தமித்துச் செய்ய அதிகாரம் பெற்ற வினைகளிலும் இதன் கருத்திற் கிணங்க நேர்ந்தது. இங்ஙனம், பொதுமக்களால் நேரடியாக ஆளப்படாதத னால் குடியரசல்லாமலும், அரசனை நீக்கியதனால் மக்களாட்சி யாகவும் இருந்த உரோமவரசு, தன் வலிமையால் நாளடைவில் முக்கண்ட நாடுகளைக் கொண்ட பேரரசாக வளர்ந்து, இறுதியிற் பேரகன் பரப்பினாலும் முற்றதிகாரியாக மாறிய ஒற்றை மாந்தனின் தன் மூப்பாட்சியாலும், குலைந்து சிதைந்து போயிற்று; இன்று தனித் தேயநாடாக இருந்து வருகின்றது. 3. ஆங்கில நாட்டரசு அரசனின் வலிமையைப் படிப்படியாக அடக்கி, பெரும்பான்மைப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன், தன்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவருடன் கூடி, பழமை போற்றியர் (Conservatives), தாராளிகர் (Liberals), உழைப்பாளியர் (Labourers) என்னும் முக்கட்சிப் பொதுமக்களின் படிநிகராளியர் (representatives) அவையும், (House of Commons), அரசனால் அமர்த்தப்பெற்ற பெருமக்கள் அவையும் (House of Lords) சேர்ந்த நாடாளு மன்றத்தின் (Parliament) பெரும்பான்மை யிசைவுபெற்று, நேர்மையாக ஆண்டுவரும் ஆட்சி, பிரித் தானியா என்னும் ஆங்கில நாட்டிற்குச் சிறப்பாகவுரியதாகும். இது அரசுவகையில் நாடாளுமன்றக் கோவரசு (Parliamentary Monarchy) எனப்படும். பெயரளவிற் கோவரசாயினும், நடை முறையிற் குடியரசே. உலக முழுவதிலும் குடியுரிமையுணர்ச்சி விஞ்சிய நாடு ஆங்கில நாடே. உரிமையுணர்ச்சி போன்றே அரசப்பற்றும் அந் நாட்டிற்குச் சிறப்பாகும். பொதுமக்கள் அவை (House of Commons) உறுப்பினர், சராசரி 57,000 பேருக்கு ஒருவராக 18 அகவைக்குக் குறையாத குடிவாணரின் கமுக்கக் குடவோலையால் (secret ballot) 5 ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர் 21 அகவைக்குக் குறையாதவராயிருத்தல் வேண்டும். ஒருவருக்கு ஒரே நேரி (vote). குடியுரிமையைப் பேணிக் காக்கும் நாடாளு மன்றம், இங்கிலாந்தில் 1265இலேயே எளிய முறையில் தோன்றி, 1295இல் பெருவளர்ச்சியடைந்து பாளையத்தார் (barons), Fut®(clergy), பொதுமக்கள் என்னும் மூவகுப்பையும் (Three Estates) இணைத்து, இற்றை நாடாளுமன்றத்திற்கு முற்போலிகை யாயிற்று; அதிலிருந்து உரிமையிலும் அதிகாரத்திலும் மேன்மேல் வளர்ந்து வந்திருக்கின்றது. அது பிற்காலத்துத் தோன்றிய குடியரசுகட்கெல்லாம் வழிகாட்டிற்று என்பது மிகையாகாது. 4. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு (Government of the USA) அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு கூட்டுநாட்டு மக்களாட்சி அல்லது மக்களாட்சிக் கூட்டரசு (Federal Republic). இது 1789-இல் 13 நாடுகள் கொண்டதாகத் தொடங்கி, இன்று 50 நாடுகள் கொண்டதாகப் பெருகியுள்ளது. இதன் தலைவர் (President) உறுப்புநாடுகளால் நாலாண் டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவருக்கு உதவியாயிருப்பவர் துணைத் தலைவர். கருமநிறைவேற்றல் (Executive), சட்டமியற்றல் (Legislative), தீர்ப்புச்செய்தல் (Judicial) என்னும் முத்துறையிலும் தலைவர்க்குப் பேரதிகாரமுண்டு. சட்டசவைபோல் அவர்க்குத் துணையா யிருப்பது பேராயம் (Congress). அது மூப்பரவை (Senate) என்னும் மேலவையையும், படிநிகராளியரவை (House of Representatives) என்னுங் கீழவையையுங் கொண்டது. மூப்பரவைக்கு ஒவ்வொரு நாட்டினின்றும் இருவர் ஆறாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஈராண்டிற் கொருமுறை மூன்றிலொரு பங்கு மூப்பரவையுறுப்பினர் ஓய்வுபெறுவர். ஓய்வுபெற்றவர் மீண்டுந் தேர்ந்தெடுக்கப்படலாம். முப்பதக வைக்குக் குறையாதிருத்தலும், அமெரிக்கநாட்டில் ஒன்ப தாண்டுக் குடியிருப்பும் மூப்பரவை யுறுப்பினர் தகுதியாகும். தேர்ந்தெடுக்கப்பட்டபின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டில் வதியக்கூடாது. உறுப்பாண்மைக் காலத்தில் அமெரிக்க நாட்டில் வேறோர் அலுவலையும் மேற்கொள்ளக் கூடாது. படிநிகராளிய ரவைக்கு, முப்பதாயிரவர்க்கு ஒருவராக, நாடுகளின் மக்கட்டொகைக்கு ஏற்றவாறு ஒருவரும் பலருமாக 436 பேர் ஈராண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அமெரிக்க நாட்டில் 7 ஆண்டுக் குடியிருப்பும், 25 அகவைக்குக் குறையா திருப்பதும் உறுப்பினர் தகுதியாகும். குல மத நிற பால் வேறுபாடின்றி அமெரிக்க வாணரெல் லாம் நேரி (vote) யிடலாம். உறுப்பினர் தகுதியே நேரியர் (voters) தகுதியும். அமெரிக்க அரசியற் கட்சிகள் குடியரசாளர் (Democrats), மக்களாட்சியர் (Rupublicans) என இரண்டே. முன்னது நடுவ ணாட்சி (Central Government) வலிமையையும், பின்னது நாடுகளின் (States) உரிமையையும் பேணிக்காப்பன. பிற்கால மக்களாட்சி நாடுகட்கெல்லாம் வழிகாட்டி யாயிருப்பது, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசே. அதன் அமைப்பு, நிலைப்பிற்கும் செம்மைக்கும் பெயர் பெற்றது. இதுவரை 22 திருத்தங்களே நிகழ்ந்துள்ளன. 6. பிரெஞ்சு அரசு தனியாட்சிக் கோவரசா (Absolute Monarchy) யிருந்த பிரெஞ்சு அரசு, 1789ஆம் ஆண்டுப் புரட்சியினால் ஒழிந்து, தனி நாட்டு மக்களாட்சி (Unitary Republic) தோன்றிற்று. அதிலிருந்து இரு பேரரசுகள் இடையிட்ட 5 மக்களாட்சிகள் தோன்றி யுள்ளன. இன்று நடப்பது மிகச் சீர்ப்பட்ட 5ஆம் மக்களாட்சி. அதன் தலைவர், மூப்பரவை (Senate) என்னும் மேலவை யாலும், படிநிகரியர் அரங்கு (Chamber of Deputies) என்னும் கீழவையாலும், பெரும்பான்மை நேரிகளால் 7 ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஈரவையுஞ் சேர்ந்தது தேசியப் பேரவை (National Assembly). பழமை போற்றல் (Conservatism), தாராளிகம் (Liberalism) அடிப்படை மாற்றம் (Radicalism), கூட்டுடைமை (Socialism) என்னும் நாற்கொள்கை யடிப்படையில் இருபதிற்கு மேற்பட்ட குழுக்களிருப்பதால், அமைச்சரும் பல்குழுவின ராகின்றனர். அதனால் நிலையின்மையும் ஒற்றுமையின்மையும் பிரெஞ்சு அரசை அடிக்கடி ஆட்டியலைக்கின்றன. 6. சுவிட்சர்லாந்து அரசு சுவிட்சர்லாந்து, நாற்பதிலக்கம் மக்களைக் கொண்டு, 22 காண்டங்களாகப் (Cantons) பகுக்கப்பட்டுள்ள ஒரு கூட்டரசு (Federal Government). அது 1648-ல் உடன்கூட்டரசாகத் (Confederation) தோன்றி, 1848-ல் கூட்டரசாக மாறிற்று. நாடுகள் மன்றம் (Council of States) என்னும் மேலவையையும், தேசியமன்றம் (National Council) என்னும் கீழவையையுங் கொண்ட அதன் கூட்டரசு பேரவை (Federal Assembly), எழுவரைக் கொண்ட கூட்டரசுமன்றம் (Federal Council) என்னும் தலைமை யாட்சிக் குழுவை நாலாண்டிற்கும் அதன் தலைவரையும் துணைத் தலைவரையும் ஓராண்டிற்கும் தேர்ந்தெடுக்கின்றது. சுவிட்சர்லாந்து சிறுநாடாயினும், அதன் அரசு மாபெருங் குடியரசுகட்கும் வழிகாட்டியாக, இரு சிறந்த கூறுகளைக் கொண்டுள்ளது. அவை கருத்தெடுப்பு (Referendum), தொடங்கி வைப்பு (Initiative) என்பன. கூட்டரசு ஒரு சட்டத்திருத்தஞ் செய்ய வேண்டின், பொதுமக்கள் கருத்தைக் கேட்டுப் பெரும் பான்மைப்படி முடிபு செய்வது கருத்தெடுப்பு; பொதுமக்கள் ஐம்பதினாயிரவர்க்குக் குறையாதவர் ஒரு சீர்திருத்தச் சட்டஞ் செய்ய வேண்டின், அதைத் தாமாகக் கூட்டரசிற்குத் தெரி விப்பது தொடங்கி வைப்பு. 7. இரசிய அரசு இரசியவரசு 1917 வரை கொடுங்கோற் கோவரசாகவும் முற்றதிகார ஆட்சியாகவுமிருந்து, பின்னர், சென்ற நூற்றாண் டில் காரல் மார்க்கசு (Karl Marx) முதலுந் தொழிலும்பற்றி முற்ற ஆராய்ச்சி செய்து இயற்றிவைத்த முதல் (Capital) என்னும் வெளியீட்டின் விளைவாக, புரட்சி வண்ணமான கூட்டுடைமை யாட்சியாக மாறிற்று. முதலாம் உலகப்போரில் இரசியா தோல்வியடைந்ததும் இதற்குத் துணையாயிற்று. இற்றை இரசிய நாடு, பாராளுமன்றக் கூட்டுடைமை மக்களாட்சி ஒன்றியம் (Union of Soviet Socialist Republics) எனப்படும். இது 15 கூட்டுடைமை மக்களாட்சி நாடுகளை உறுப்புகளாகக் கொண்ட கூட்டுநாடு. ஒன்றியத்தின் அதிகாரத்திற்குட்பட்ட மிக முதன்மையான பொருட்டுறைகள்: போர், நட்பமைதி (Peace), வெளிநாட்டுறவு, புது மக்களாட்சி நாடுகளை உறுப்பாகச் சேர்த்தல், தற்காப்பு, நாட்டு முற்றுரிமை, வெளிநாட்டு வாணிகம், ஒன்றியத்தின் தேசியப் பொரு ளாட்சித் திட்டங்களை ஏற்படுத்துகை, வைப்பக (Banks) ஆட்சி, உழவு, தொழில் நிறுவனங்கள், அனைத் தொன்றிய முதன்மையான வணிக முயற்சிகள், வழிக்கடத்தப் போக்குவரத்து அமைப்பு, ஆள்வினை, பணவொழுங்கையும் கடன்கொடுப்பு முறைகளையும் ஆற்றுப்படுத்தல், நாட்டு வைப்புறுதி (Insurance) யேற்பாடு, ஒன்றியக் குடிமைபற்றிய சட்டங்கள் என்பன. இவையன்றி, நிலநீர்ப் பயன்படுத்தம், பொதுமக்கள் உடல்நலம், தொழிலாளிகள் பற்றிய சட்டம் ஆகியவை குறித்தும் அடிப்படை நெறிமுறைகளை உருவாக்க லாம். எஞ்சிய பொருட்டுறைகளெல்லாம் உறுப்பு நாடுகட் குரியன. இரசியக் கூட்டுநாட்டின் சட்டசவையாகிய உம்பர்ச் சூழ்வுரை மன்றம் (Supreme Soviet), ஒன்றியச் சூழ்வுரை மன்றம் (Soviet of the Union) என்னும் மேலவையும், நாட்டினக் கூறுகளின் சூழ்வுரை மன்றம் (Soviet of the Nationalities) என்னுங் கீழவையுங் கொண்டது. மேலவை, மூவிலக்கவருக்கு (3,00.000 பேருக்கு) ஒருவராக நாலாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 738 உறுப் பினரைக் கொண்டது; கீழவை பல்வேறு அமைப்பகங்களின் சார்பாக அதே காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 640 உறுப்பி னரைக் கொண்டது. உறுப்பினர் 23 அகவை நிரம்பியவராயிருத் தல் வேண்டும். பித்தருங் குற்றவாளியருமல்லாது, குல மத நிற பால் பதவி திறமை வேறுபாடின்றி, 18 அகவைக்குக் குறையாத எல்லாரும் நேரியர். நேரி ஒருவருக்கொன்று. குடவோலை கமுக்கம். சமவலிமையுள்ள ஈரவையுஞ் சேர்ந்து, அமைச்சர் மன்றையும் (Council of Ministers), நிலைக்குழுவையும் (Presidium), உம்பர் அறமன்றத்தையும் (Supreme Court) தேர்ந்தெடுக்கும். அமைச்சர் மன்றே நாட்டிலுயர்ந்த நிறைவேற்றக் குழு. தனியுடைமை நாடுகளிற்போல் இரசியக் கூட்டுடைமை நாட்டில் தனிப்பதவித் தலைவரின்மையால், ஒரு பொதுத் தேர்தலிலிருந்து மறு பொதுத்தேர்தல் வரை நிலைக்குழு நிலைத்திருந்து, ஆண்டிற்கு இருமுறைக்குக் குறையாது ஒன்றியச் சூழ்வுரை மன்றத்தைக் கூட்டுதல், ஈரவையும் பிணங்கும்போது அவற்றைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தல், தேவையானபோது கருத்தெடுப்பிற்கு ஒழுங்குபண்ணுதல், மந்திரிமாரை அமர்த்தல் அல்லது நீக்குதல், உம்பர்ச் சூழ்வுரை மன்றத்தின் இரு கூட்டங்கட்கிடையில் போர் தொடுத்தல், படைதிரட்டல், படைத்தலைவரை அமர்த்துதல் அல்லது தள்ளுதல், தூதரை அமர்த்துதல் அல்லது விலக்குதல், பிற நாட் டொடு செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல், குற்றங் களை மன்னித்தல், பட்டம் வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்யும். இரசிய அரசின் சிறப்புக் கூறுகள் ஒரேகட்சியுண்மை, தனித்தலைவரின்மை, முரண்பட்ட கொள்கையர்க்கும் முதலாளிகட்கும் இடமின்மை, பெரும் பொருளீட்ட வாய்ப்பின்மை, மதவியல் வளர்ச்சியின்மை முதலியன தனியுடைமை நாடுகளிலில்லாத ஒருமருங்கு தீய கூறுகள். கூட்டுடைமை, வேலையில்லாத் திண்டாட்டமின்மை, குமுகாயச் சமன்மை, குற்றவினைக் குறைவு, வீண்செலவு செய்யாமை, களவு கொள்ளையச்சமின்மை, முதலியன தனியுடைமை நாடுகளிலில்லாத நற்கூறுகள். கூட்டுடைமையரசைக் குடியரசன்றென்று பழிப்பர். எல்லார்க்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திய பின்பே, ஏனை நாடுகள் அதைக் குறைகூறவொண்ணும். 5. உலக நாட்டு வகைகளும் அரசு வகைகளும் நாட்டு வகைகள் ஊர்நாடு, நகரநாடு, தேயநாடு, கூட்டரசுநாடு (Federal State), உடன் கூட்டுநாடு (Confederation of States). ஊர்நாடு அநாகரிகக் காலத்தது அல்லது அநாகரிக மாந்தரது. அரசு வகைகளும் ஆட்சி வகைகளும் 1. குடித்தலைமை வகை தாயாட்சி (Matriarchy), தந்தையாட்சி (Patriarchy). 2. ஆள்வார் வகை தெய்வாட்சி (Theocracy), கோவரசு (Monarchy), குருக்களாட்சி (Hierocracy), சீரியோராட்சி (Aristocracy), செல்வராட்சி (Plutocracy), குடியரசு (Democracy), முதியோராட்சி (Gerantocracy), உழைப்பாளராட்சி (Ergatocracy), படையாட்சி (Stratocracy), மன்பதை யாட்சி (Mobocracy, Ochlocracy). தெய்வாட்சி யென்பது தேவனால் ஏவப்பெற்ற முன்விளம் பியர் (Prophets) ஆட்சி. 3. பண்பியல் வகை செங்கோலாட்சி (Benign Government), கொடுங்கோலாட்சி (Despotic Government), தன்னியலாட்சி (Autocracy), தன்மூப்பாட்சி (Dictatorship), முற்றதிகாரவாட்சி (Absolute Government). 4. ஆள்வார் தொகைவகை ஒருவராட்சி (Monocracy), சிலராட்சி (Oligarchy), பலராட்சி (Polyarchy), அனைவராட்சி (Pantisocracy). 5. கோவரசு வகை தனிக்கோவரசு, அமைச்சுக் கோவரசு (Limited Monarchy), நாடாளு (பாராளு) மன்றக் கோவரசு (Parliamentary Monarchy). 6. பால்வகை ஆடவராட்சி (Androcracy), பெண்டிராட்சி (Gynaecocracy, Gynocracy). 7. உரிமை வகை தன்னரசு (Home Rule), வேற்றரசு (Xenocracy). 8. ஆட்சிமுறை வகை குடியரசு (Democracy), மக்களாட்சி (Rupublic). 9. ஆட்சியமைப்பு வகை ஒன்றியலாட்சி (Unitary Government), கூட்டாட்சி (Federal Government) 10. அரசு நிலைமை வகை பேரரசு (Imperialism), சிற்றரசு (Feudalism). 11. உடைமை வகை தனியுடைமை யாட்சி (Capitalism). கூட்டுடைமை யாட்சி (Socialism), கட்டுடைமை யாட்சி (Fascism), நாட்டினவுடைமை (Nazism). 12. அதிகாரி வகை அதிகாரியராட்சி (Bureaucracy), உடைமையோராட்சி (Timocracy). 13. அதிகாரப் பகுப்புவகை ஒற்றையாட்சி (Government by Single Authority), இரட்டையாட்சி (Diarchy) 14. கட்சிவகை xUf£á ah£á (One-party System of Govt.), ïU f£áah£á (Two-party System of Govt.), பல்கட்சியாட்சி (Multi-party System of Govt.). 6. கூட்டுடைமைத் தோற்றம் 1765-ல் நீராவிச் சூழ்ச்சியப்பொறி புதுப்புனையப்பட்டதன் விளைவாக, சென்ற நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் இரும்பு நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலைகளும் நூற்பு நெசவாலைகளும் ஆங்காங்கு ஏற்பட்டன. தொழிற்சாலை முதலாளிகள் ஆயிரக் கணக்கான தொழிலாளிகளை மிகக் குறைந்த கூலிக்கு அமர்த்திக்கொண்டு மிகைவேலை வாங்கி ஏராளமாகப் பொருளீட்டி வந்தனர். வறுமையினாலும் ஒற்றுமையின்மையினாலும் பெரும்பாடுபட்ட தொழிலாளி களை முதலாளிகள் கொடுமையினின்று மீட்க, காரல் மார்க்கசு (Karl Marx) என்னும் மீட்பர் 1818ஆம் ஆண்டில் செருமனியில் தோன்றினார். ஒரு தொழிற்சாலை நடத்தப் பணமுதல், தொழில்முதல் என இருமுதல்கள் வேண்டும். கருவி (முதற் கருவியும் பொறியும்), இடம் (தொழிற்சாலை), கூலி ஆகிய மூன்றும் பணமுதலால் அமையும். தொழில்முதல் என்பது தொழிலாளர் கைவினை. பஞ்சாலைக்குப் பருத்தியும், நூற்பாலைக்குப் பஞ்சும், நெச வாலைக்கு நூலும் போல்வது முதற்கருவி. பொறி துணைக்கருவி. சுரங்கவினைக்கு முதற்கருவி இல்லை. நிலத்தினின்று எடுக்கப் படும் பொருளே செய்பொருளாகும். பணமுதல் போன்றே தொழில்முதலும் தொழிலுக்கு இன்றியமையாதது. முன்னது ஒருவனிடம் மட்டும் உள்ளது; பின்னது பலரிடம் சிதறிக்கிடக்கின்றது. பணமுதலீடு இருவர் மூவர் சேர்ந்தும் செய்யலாம். ஆயின், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேண்டிய தொழிற்சாலையில், தொழிலாளர் இருவர் மூவர் மட்டும் சேர்ந்து தொழில் முதலீடு செய்ய முடியாது. ஆதலால், ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர் அனைவரும் ஒரு கூட்டாகச் சேர்ந்து தம் உரிமையைப் பெறல் வேண்டும். இருவகை முதலும் இன்றியமையாமையிற் சமமாக விருப்பதால் தொழிற்சாலையால் வரும் ஊதியத்திற் பாதி தொழிலாளரைச் சேர்தல் வேண்டும். அதை அவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யாது ஊதியம் முழுவதையும் பணமுதலாளி எடுத்துக் கொள்வது, தொழி லாளியின் உரிமையைப் பறித்தல் அல்லது பொருளைக் கொள்ளையடித்தலாகும். காரல் மார்க்கசு இங்ஙனம் வரலாற்றடிப்படையிலும் கணித முறைப்படியும் நேர்மையான அறிவியல் ஆராய்ச்சி செய்து முதல் (Capital) என்னும் தலைப்புள்ள நூலின் முதன்மடலத்தை 1867-இல் வெளியிட்டார்; தம் கொள்கையைப் பரப்பிப் பன்னாட்டுத் தொழிலாளர் கழகம் (The International Workingmen’s Association) என்னும் அமைப்பகத்தையும் நிறுவினார். 1883-இல் அவர் இறந்தபின் அவர் கூட்டாளியரான பிரடிரிக்கு எஞ்சுல்சு (Friedrich Engels) அவர் நூலின் 2ஆம் 3ஆம் மடலங்களை 1885-இற்கும் 1895-இற்கும் இடையில் வெளியிட்டார். இரசிய அரசர் (Tsar) கொடுங்கோலாட்சி செய்து வந்ததனாலும், முதலாம் உலகப் போரில் தோல்வியுற்று 1917-இல் அரியணை விட்டிறங்கியதனாலும், பெரும்பாலும் ஏழை மக்களாயிருந்த இரசியக் குடிகள், காரல் மார்க்கசு 1848-ல் வெளியிட்ட கொள்கையறிக்கையைப் (Manifesto) பயன்படுத்திக் கூட்டுடைமையரசை நிறுவினர். கொள்கையறிக்கையின் முதன்மையான நெறிமுறைகள் வருமாறு: 1) பொருளாக்க வகை வாழ்க்கையின் பல்வேறு நிலைமை களையும் தீர்மானிக்கிறது. 2) தனியுடைமையால் வகுப்புப் போராட்டம் ஏற்படுகிறது. 3) தொழிலாளரால் உண்டாக்கப்படும் மிகைவருமானம் தொழிலாளரைச் சேர்தல் வேண்டும். 4) குமுகாயப் புரட்சி இன்றிமையாதது. 5) தொழிலாளர் ஆட்சியை மேற்கொள்ளவேண்டும். 6) நாளடைவில் முதலாளி வகுப்பு நீங்கிவிடும். 7) ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்குத் தக்கவாறு உழைத்துத் தேவைக்குத் தக்கவாறு பெறுதல் என்னும் புதிய நிலைமை ஏற்படும். 7. கூட்டுடைமை வகைகள் 1. உடன்புரட்சிக் கூட்டுடைமை. இது முனைந்த போராடியர் கொள்கை. 2. படிமுறைப் புரட்சிக் கூட்டுடைமை. இது மட்டான போரா டியர் கொள்கை. 3. வள்ளுவர் கூட்டுடைமை. இது பல்லார்க்கும் எக் காலத்திற் கும் ஏற்றதாகும். இதன் விளக்கத்தை நூலுட் காண்க. 8. பொதுவுடைமை (Communism) என்னும் பெயர் பொருந்தாமை இது மனைவி தவிர மற்றெல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டு, எல்லாரும் தத்தமக்கியன்றவாறு பணிசெய்து ஏற்றவாறு உண்டுடுத்து, விரும்பியவாறு பொருள்களைப் பயன்படுத்தி, சிறிதுந் தமக்குப் பணநடமாட்டமின்றி ஒருங்கே கூடி வாழும் குடும்ப அல்லது கூட்டுக்குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யென்று பெயர் பெறத்தக்கது. 9. கூட்டுடைமையே குடியரசின் முதிர்நிலை கூட்டுடைமை யாட்சி இந் நூற்றாண்டிற் புதியதாய்த் தோன்றியதனாலும், இரசிய சீனக் கூட்டுடைமை யாட்சிகளிற் சில குறைபாடுகளிருப்பதனாலும், தனியுடைமை யாட்சிகள் பெரும்பான்மையாயிருப்பதனாலும், கூட்டுடைமை யாட்சி குடியரசன்றென்றும், அதிற் செல்வர் மட்டுமன்றிப் பிறரும் உரிமையிழப்பரென்றும், தவறான கருத்து, பொதுவாக மக்களிடை யிருந்துவருகின்றது. நோயும் போரும் நீங்கி மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியுள்ள இக்காலத்தில், வேலையில்லாத் திண்டாட்டமும் உடலுள்ளவரை கடல்கொள்ளாக் கவலையும் தீரும் ஒரே வழி கூட்டுடைமை யாட்சியே. ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இரசிய சீனக் கூட்டு டைமைகள் முதன் முதலாகத் தோன்றியதனால், அவையே அளவைநிலையென்றும், சீர்திருத்தத்திற்குச் சிறிதும் இடந்தரா வென்றும், கருதுவது தவறாகும். இனி, ஆட்சிமுறையில் இரசியாவைப் பின்பற்றினால் இரசியாவிற்கும், சீனத்தைப் பின்பற்றினாற் சீனத்திற்கும் அடிமையாக வேண்டுமென்று கருதுவதும் கழிபெரு மடமை யாகும். இந்தியா அமெரிக்காவின் மக்களாட்சியை மேற்கொண் டதனால் அமெரிக்காவிற்கு அடிமைப்பட்டு விட்டதோ? இங்கிலாந்து போன்று ஈரானும் கோவரசு நாடாதலால், முன்னதற்குப் பின்னது அடிமைப்பட்டு விடுமோ? விடாதே! ஆதலால் ஆட்சியொப்புமை நட்புறவிற்கேயன்றி அடிமைத் தனத்திற்கு ஏதுவாகாதென்று அறிக. 10. குடியரசியல்பு கோவரசு, குடியாட்சி, மக்களாட்சி என்னும் மூவகை யாட்சியும் குடியரசாக இருத்தல் கூடும். ஆயின், பொதுமக்கள் நூற்று மேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அவரால் சட்டசவைக்குத் தெரிந்தெடுக்கப்படுபவர் gŸËÆWâ(S.S.L.C.) யளவேனும் படித்திருத்தல் வேண்டும். அமைச்சராயிருப்போர் பட்டந்தாங்கியராகவும் தத்தம் வாரியத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், குடியர சென்பது ஏட்டுச் சுரைக்காயாகவேயிருக்கும். நேரியருக்கு 18 அல்லது 21 அகவை நிரம்பினால் மட்டும் போதாது. சட்டசவைக்குத் தகுந்தவரைத் தெரிந்தெடுக்கும் ஆய்வும் அறிவும் இல்லாத கல்லா மக்களின் நேரியுரிமை, குருடன்கைத் தீப்பந்தமும், குழந்தைகைப் படைக்கலமும் போல் உடையார்க்கும் பிறர்க்கும் தீங்கே விளைவிக்கும். தகுதியில்லாத செல்வரே, ஆயிரக்கணக்கான குடவோலைகளை அல்லது நேரிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு சட்டசவையுறுப்பின ராக முடியும். அறிவும் ஆற்றலுமில்லாத தற்குறிகளும் சிற்றறிவினரும் சட்டசவையராகி, பேரறிஞரையும் பெரியோரையும் ஆளுஞ் சட்டஞ் செய்வது, பிறவிக்குருடரும் புரைபடர்ந்த கண்ணரும் கூர்ங் கண்ணருக்கு வழிகாட்டுவதையே ஒக்கும். ஆனைக்கும் அடிசறுக்கு மாதலாலும், தன் குற்றந் தனக்குத் தோன்றாதாதலாலும், முற்றுமுணர்ந்தவர் மக்களினத்திலில்லை யாதலாலும், கட்டுப்பாடில்லாவிடின் காவலனுங் காவானாத லாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சி யரசே குடியரசிற்கேற்றதாம். 1 வள்ளுவர் கூட்டுடைமை 1. வள்ளுவர் கூட்டுடைமை யியல்பு பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (குறள். 44) பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன், கன்னெஞ்சன், தன்னலக்காரன், மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்ணும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந் தியங்கும். பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. (குறள். 227) எப்போதுந் தன் பொருளைப் பலரொடும் பகிர்ந் துண்டலை இயல்பாகக் கொண்டவனைப் பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது. இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். (பழ.) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை. (குறள். 322) ஒருவன் தன் பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகையுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இருவகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம். பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவு மிருக்கலாம். துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில ஈரறத் தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகு ளாமை, இன்னா செய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரி விக்கும். ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல்பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு: களவு செய்யாமை இல்லறம்; களவு செய்யக் கருதாமை துறவறம். தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (குறள். 1107) என் அழகிய காதலியின் தழுவின்பம், ஒருவர் தம் சொந்த வீட்டிற் குடியிருந்து தாம் தேடிய பொருளைப் பலரொடும் பகிர்ந்துண்ணும் இன்பத்தை ஒத்ததாகும். இந் நாற் குறளாலும் திருவள்ளுவர், உடையவர் தம் பொருளை இல்லாரொடு பகிர்ந்துண்ணும் கூட்டுடைமையைத் தெரிவித்தார். அவர் காலத்தில் மக்கட்டொகை மிகமிகக் குறைவு. நிலப்பரப்பில் முக்காற் பங்கு மரமடர்ந்த காடு; காற்பங்கு மக்கள் வாழும் நாடு. முத்தமிழ் நாட்டிலும் மக்கள் முக்கோடிக்குமேல் இருந்திருக்க முடியாது. நெட்டிடையிட்டு அரிதாக நேரும் பஞ்சந்தவிர, ஆண்டுதொறும் கோடைமழையும் காலமழையும் அடைமழையும் தப்பாது பெய்யும். நிலவளமும் நீர்வளமும் மிக்கிருந்தன. ஆகவே, உணவுத் தட்டும் வேலை யில்லாத் திண்டாட்டமும் நிலக்குறைவும் ஒரு சிறிதுமில்லை. ஆதலால், வறுமையால் வருந்தும் சோம்பேறியை நோக்கி, இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (குறள். 1040) என்று கண்டித்தார் திருவள்ளுவர். இனி, உழவதிகாரத்தையடுத்து நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் நாலதிகாரங்களை வரிசையாக வைத்திருப் பதால் உழவை மேற்கொள்ளாவிடின் வறுமையும், வறுமையால் இரப்பும், இரப்பால் அஞ்சத்தக்க துன்பமும், அத் துன்ப மிகுதியால் கயமையும் (போக்கிரித்தனமும்) ஏற்படுமென்று குறிப்பாற் பெறவைத்தாரேனும், இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (குறள். 1041) இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். (குறள். 1042) தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை (குறள். 1043) என வறுமையைக் கடுமையாகக் கண்டித்தும், இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று (குறள். 1051) என்று ஒருசார் வறியரை ஒருசார் நன்மக்களிடம் இரக்க ஏவியும் இருப்பதால், தனிப்பட்டவன் தவற்றாலன்றி வேறு வழிகளாலும் வறுமை நேருமென்றும், அத்தகைய வறுமையை நன்மக்களும் அரசனுமே நீக்கவேண்டுமென்றும் அறிந்து, அவ் வறத்தைச் செய்யுமாறு ஆங்காங்குத் தனிக் குறள்களால் ஏவியதுமட்டுமன்றி, ஒப்புரவறிதல், ஈகை என்னும் ஈரதிகாரங் களையும் அமைத்தார் திருவள்ளுவர் என்று தெரிகின்றது. 2. வறுமையடையும் வகைகள் இயற்கை: களைகண் (ஆதரவு) இன்மை, உறுப்பின்மை, தீராநோய், சேதநேர்ச்சி (வெள்ளம், கடல்கோள், தீப்பிடிப்பு, நிலநடுக்கம்). செயற்கை: சோம்பல், கல்லாமை அல்லது தொழில் பயிலாமை, குடி, விலைமகள்கூட்டு, சூது, களவு, கொள்ளை, போர், கடன்படல், கடன் கொடுத்தல், வீண் செலவு, பன்மக்கட் பேறு, பகைவர் செயல், வழக்கீடு, அரசு கவர்வு, வணிக இழப்பு, போட்டி, கூலி அல்லது சம்பளக் குறைவு, செய்பொருள் விலையாகாமை, நேர்மைக் கொள்கை, தாய்மொழி தாழ்த்தப் படுகை, வைப்பக (Bank) நொடிப்பு, தொழில் தாழ்வு, தீண்டாமை, ஒழுக்கமின்மை, வேலையின்மை, அழிபொருளாக மாற்றிய உடைமையைப் பேணாமை. இவற்றுட் சில இடைக்காலத்தன; சில இக்காலத்தன. அழி பொருளாக மாற்றிய உடைமையைப் பேணாமை என்பது, முழுச் சொம்மையும் (சொத்தையும்) தாட்காசாக (Currency notes) மாற்றிக் கறையான் (செதில்) அரிக்கவிடுதல் போல்வது. இன்மை, எளிமை என வறுமை இருதிறப்படும். முன்னது ஒன்று மின்மை; பின்னது சிறுவீட்டிற் குடியிருந்து குறைவாக உண்டுடுத்து வருந்தி வாழ்தல். இன்மை உழைக்க வியலாமையால் ஏற்படுவது. அது உறுப்புக் குறைவு, நோய், முதுமை, களைகணில்லாச் சிறுபருவம், துறவு ஆகிய ஐந்நிலைமைகளில் நேரக்கூடும். அந்நிலைமையர் களைகணில்லாக்கால் உயிர்வாழ வேண்டின், இரப்பெடுத்தல் இன்றியமையாத தாகும். இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பல தொழிலாளர், சிறப்பாக நெசவாளர், செல்வரையும் பெருஞ் சம்பளக் காரரையும் இரக்க நேர்கின்றது, இரப்பு உயர்திணை மகனின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தலால், இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள். 1062) என்று, உலகத்தைப் படைத்த இறைவன் மேலும் தம் சினத்தைக் காட்டினார் திருவள்ளுவர். இரத்தலைத் தவிர்க்கவேண்டுமென்றே, இக்கால நன் மக்களும் அரசும் களைகண் இல்லம் (Orphanages), தொழுநோயர் விடுதி (Leper Home), முதியோர் மனை (House for the Old) முதலியன ஆங்காங்குக் கட்டியும் அமைத்தும் உள்ளனர். ஆயினும், அளவிற்கு மிஞ்சி இருமடங்கும் மும்மடங்கும் மக்கட்டொகை பெருத்தும் ஆயிரக்கணக்கானவரும் இலக்கக் கணக்கானவரும் வேலையின்றியும் இருக்கும் இக்காலத்தில், வள்ளுவர் வகுத்த பாத்துண்டலே எல்லா மக்களும் பண்பாட் டுடன் வாழ்தற்கு இன்றியமையாத தாகின்றது. 3. மக்கட்பண்பாடு ஆறறிவு படைத்த மாந்தன் உயிரினங்க ளெல்லாவற்றுள் ளும் தான் உயர்திணை அல்லது உயர்குலம் என்று அறிவதால், பாத்துண்ணும் இயல்புடைய காக்கை போலும் சில அஃறிணை யினங்களினும் பண்பாட்டில் தாழாவாறு, பாத்தூணறத்தைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளான். 1. மன்பதை முழுதும் ஓரினம் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்றார் பூங்குன்றனார் (புறம். 192). ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றார் திருமூலர் (திருமந். 2104). ஆதலால், ஒவ்வொருவனும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதல் வேண்டும். 2. அடிப்படைத்தேவை அனைவர்க்கும் பொது தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம். 189) உடுப்பவை யிரண்டே என்றது கீழாடை மேலாடைகளை. உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் 3. செல்வத்தின் பயன் அஃதில்லார்க் கீதல் 4. இறக்கும்போது செல்வம் உடன்வாராது பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை (திருவேகம்ப. 7) காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே (திருத்தில்லை.10) அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே. (திருத்தில்லை. 13) 5. அகக்கரண புறக்கரண ஆற்றல்கள் இயற்கையில் வேறு பட்டுள்ளமையால், ஒருவரைப் புகழ்தலும் இகழ்தலும் கூடாது நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம். 192) முறை யென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கையென்று கொள்க. உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம் இல்லா மையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அஃது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல்வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவு வதைப் பாராட்டல் வேண்டும். 6. மக்கட்பிறப்பு பண்பாட்டையே பெரிதுந்தழுவியது புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. (குறள். 79) உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. (குறள். 993) அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். (குறள். 997) ஆதலால், பாத்துண்டலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடைமை யாட்சியே, இந்தியா போன்ற மக்கட்பெருக்க வறுமை நாட்டிற்கு ஏற்றதாம். 4. வள்ளுவர் கூட்டுடைமையின் தனிச்சிறப்பு 1. எல்லார்க்கும் ஏற்றது காரல் மார்க்கசு தம் கூட்டுடைமைக் கொள்கையைத் தொழிலாளர்க்கென்றே வகுத்தார். இரசிய சீனநாடுகளின் கூட்டுடைமை யாட்சியிற் கைத்தொழிலருங் கல்வித்தொழிலரு மான எல்லா வகுப்பினரும் வாழினும், தொழிலாளர் கையிலேயே அதிகாரம் அமைந்துள்ளது. அவ்விரு நாடு களையும் தழுவியுள்ள இந்தியக் கூட்டுடைமைக் கட்சிகளும், தொழிலாளர் ஒன்றியங்களாகவே இயங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தாக்குண்டவர் தொழிலாளர் மட்டுமல்லர்; பல்லாயிரக்கணக் கான பொறிவினைஞரும் மருத்துவரும் ஆசிரியரும் பிறரும் ஆவர். ஆதலால், கூட்டுடைமையாட்சி கற்றோரும் மற்றோரு மான அனைவர்க்கும் பொதுவானதே. 2. ஈகையாளர்க்கும் புதுப்புனைவாளர்க்கும் தமிழ்ப் புரவலர்க்கும் கல்விவள்ளலர்க்கும் செல்வ வரம்பிடாதது சிலர்க்குப் புதுப்புனைவாற்றலோ புதுச் செய்முறை கண்டு பிடிப்பாற்றலோ இருக்கலாம். அவர் விருப்பப்படி விட்டுவிடின், அவ் வாற்றலை மேன்மேலும் வளர்த்துப் பெரும் பொருளீட்ட வழியுண் டாகும். பெரும்பயன் விளையும். அதனால் அவருக்கும் ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம் என்பதை உணர்த்தல் வேண்டும். மேனாடுகளில், சிறப்பாக வடஅமெரிக்காவில், பல்வேறு சூழ்ச்சியப் பொறிகளைப் புதுப்புனைந்தவர்க்கு அரசு உரிமை யளித்து ஊக்கியதனால், அவரும் செல்வத்திற் சிறந்தோங்கினர்; அவர் நாடுகளும் செழித்துப் பொருள்வளங் கொழித்தன; கொழிக்கின்றன. இங்கே இந்தியாவில் அதற்கு நேர்மாறாக நேர்ந்துள்ளது, கோவைக் கோ. துரைசாமி நாயக்கரை (G.D. Naidu) நடுவணரசும் ஊக்கவில்லை; நாட்டரசும் ஊக்கவில்லை. அவரை ஊக்கி யிருந்தால், உலக முழுவதற்கும் பயன்படும் ஓர் எடிசனாகியிருப் பார். நடுவணரசு, அவரை ஊக்குவதற்கு மாறாக, அன்முறை யான அளவிறந்த வருமானவரி சுமத்தி அவர் உள்ளந் தளரவும் நெஞ்சம் புண்படவும் செய்தது. அதனால் அவர் தம்மனநோ வின் கடுமையை, தம் புதுப் புனைவுகளையுங் கண்டுபிடிப்பு களையும் வெளிப்படையாகச் சுட்டெரித்துக் காட்டினார். இக்காலத்திற் பொன்னும் எண்ணெயும் போன்ற கனியப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம், புதுப்புனைவுகளாலும் கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்கமுடியும். ஆதலால், அவ்வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல் வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால், புதுப்புனைவாளரை யெல்லாம் குலமத கட்சி வேறுபாடின்றி நாட்டுவளம் பெருக் கியவராகவும் உலகப் பொதுநலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும். இனி, தன்னலமின்றி மன்னலமே பேணித் தம் பொருளை யெல்லாம் வரையாதீயும் வள்ளல்கட்கும் செல்வவரம்பிருத்தல் கூடாது. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு. (குறள். 215) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். (குறள். 216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். (குறள். 217) வள்ளன்மார் நாட்டு வறுமையைப் போக்குவதால், அரசின் கடமையை ஆற்றுபவரும் அதன் சுமையைக் குறைப்ப வரும் ஆவர். ஈகையாளர்க்கு ஈதலே இன்பம். ஈயாமை அவர்க்கு இறப்பினுங் கொடிய துன்பம். ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். குறள். 228) சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. (குறள். 230) முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே. (புறம். 110) ஈகை யரிய யிழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுகழ் ஒரீஇய முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே. (புறம். 127) ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. (குறள். 220) இந் நூற்றாண்டிலும், தம் செல்வம் முழுவதையும் இரப்போர்க்கீந்த செண்டத்தூர் வள்ளல் ஐயாத்துரை முதலியாரும், கல்விக்கீந்த காரைக்குடி வள்ளல் அழகப்பச் செட்டியாரும் இருந்தனர். 3. மதத்தில் தலையிடாதது மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யென்றும், கூட்டுடைமைக் கொள்கைக்கு முரணானதென்றும், தவறான கருத்து இருந்துவருகின்றது. அதற்கு மாறாக, மதமே மக்கள் பண்பாட்டிற்கு அடிப்படையான தென்பதையும், கூட்டுடை மைக்கு ஏதுவான தென்பதையும் பலர் அறிந்திலர். அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள். 1075) ஒரு நாட்டில் அல்லது ஊரில் கொலை களவு கொள்ளை கற்பழிப்பு முதலியன பெரும்பாலும் இல்லாதிருத்தற்கு, அரசன் அல்லது அரசு தண்டிக்கும் என்னும் அச்சமேயன்றி வேறொன் றும் கரணியமன்று. அங்ஙனமே, பலர் தீயொழுக்கத்தை விட்டு நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருத்தற்கும், மறுமையில் இறைவன் எரிநரகிலிட்டுத் தண்டிப்பான் என்னும் அச்சமே கரணியமாகும். பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால், மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையே யாகும். இறைவன் எல்லா வுயிர்கட்கும் தந்தை யென்பதும், அறவாழி யந்தணன் என்பதும் மதத்தின் அடிப்படைக் கொள்கை. அறிவும் அன்பும் நிரம்பாத உலகத் தந்தைக்கும் தன் மக்கள் எல்லாரும் வயிறாரவுண்டு வாழவேண்டுமென்பதே பெரு விருப்பம். அங்ஙனமாயின், முற்றறிவனும் அன்பே வடிவானவனுமான பரமதந்தைக்கு மக்களெல்லாரும் கவலை யின்றி உண்டுடுத்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்ட கூட்டுடைமை யாட்சியே, மகிழ்ச்சிதரும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. கூட்டுடைமை யாட்சியில், கல்வித்தொழிலரும் கைத் தொழிலரும் சமமாகக் கூடிவாழும் உடன்பிறப்புணர்ச்சிக்கு, மதக் கொள்கையே பெரிதும் துணைசெய்யும். கிறித்தவர் நம்பும் எதிர்கால ஆயிரவாண்டுலக வரசாட் சிக்குக் கூட்டுடைமைக் கொள்கையே தோதாகும். மதம் என்பது, இம்மை மறுமை கடவுள் என்னும் மூன்றையும் பற்றி, ஒருவன் மதித்துக்கொள்ளுங் கருத்தே யன்றி வேறன்று. அதற்கென்று தனியாகப் பொருட்செலவுங் காலச் செலவும், வினை முயற்சியும், இடவொதுக்கீடும் அரசு மேற் கொள்ளவேண்டுவதில்லை. ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர் உண்ணுமுன்னும், ஓரிடத்திற்குப் புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்குமுன்னும், ஒரு நன்மை கிட்டியபோதும், தீங்கு நேர்ந்தபோதும், உறங்கப் புகுமுன்னும், இறைவனை நன்றியறிவொடு அல்லது முறையீட்டுணர்ச்சியொடு கை தொழுது ஒரு நிமையம் எண்ணினாலும், இறை வழிபாடு செய்ததாகும். இங்ஙனம் மனநிலையிலேயே இருக்கக்கூடிய மதத்தை எவரும் அழிக்க முடியாது. இனி, கூட்டுவழிபாடும், ஓய்வு நாளில் அல்லது நேரத்தில், பொதுவிடத்தில் அல்லது ஒருவர் இல்லத்தில், பலர்கூடிச் செய்யலாம். இங்ஙனம் எளிய முறையில், அரசிற்கு எவ்வகை இடர்ப்பாடும் விளைக்காது இயங்கக்கூடியது மதம். படிமைமேற் படிக்கணக்காய்ப் பாலைக் கொட்டுவதும், பெருங் கலத்திற் கலக்கணக்காய் நெய்யை வார்த்து விளக் கெரிப்பதும் போன்ற வினைகளே பொருளழிப்பும் வீண் செயலுமாகும். கடவுளைக் கட்புலனாகக் காணமுடியாமை பற்றியே, கடவுளுண்மையை மறுத்துவிடமுடியாது. உயிரில்லாத, அதனால் அறிவுமில்லாத, நாள்களும் கோள்களும் தத்தம் நிலையில் நின்றும் நெறியிற் சென்றும் ஒழுங்காகத் தத்தம் தொழிலைச் செய்துவருகின்றன. இத்தகைய நிகழ்ச்சி அவற்றை இயக்குவான் ஒருவனின்றி நிகழ இயலாது. மாந்தனறிவு அளவிலும் ஆற்றலிலும் மிக மட்டுற்றிருப்பதால், எல்லா இயற்கை நிலைமைகளையும் உணர்ந்துகொள்ள வியலாது. கடவுளுண்மையை எல்லாரும் நம்புமாறு நாட்டிற்குப் போதிய சான்றுகள் இல்லையெனின், அதை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லையென்பதை உணர்தல் வேண்டும். இனி, எங்ஙன மிருப்பினும் மதமே கூடாதெனின், கடவுள் இல்லை யென்பதும் உலகியம் (லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மதமாதலின், மதத்தைப்பற்றி ஒருவரை யொருவர் தாக்காதிருத்தலே மதியுடைச் செய்தியாம். திருவள்ளுவர் தம் நூலைக் கடவுள் வாழ்த்தொடு தொடங்குதலின், வள்ளுவர் கூட்டுடைமை மதத்தை விலக்குவ தன்று என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இரசிய சீன நாடுகளிலும், கிறித்தவர் சிறுபான்மை யரேனும், இடர்ப்பாடின்றியிருந்து வருவதும் கவனிக்கத்தக்க தாகும். ஆகவே, வள்ளுவர் கூட்டுடைமையே தலைசிறந்ததும் எல்லார்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதுமாகும். 5. கூட்டுடைமையின் நன்மைகள் 1. அனைவர்க்கும் வேலைப்பேறு நாட்டிலுள்ள எல்லார்க்கும் வாழ்க்கைவழி வகுப்பதே உண்மையான பொறுப்பாட்சி (Responsible Government). அரசர் அல்லது தலைவர், அல்லது தலைமையமைச்சர், நாட்டுமக்கள் நல்வாழ்விற்கு நேரடியாய்ப் பொறுப்பேற்காது சட்டசவைக்கு மட்டும் கணக்குக் காட்டுவது பொறுப்பாட்சியாகாது. சட்ட சவையிற் பெரும்பான்மைக் கட்சி விருப்பந்தான் நிறைவேறும். அது குடிவாணர் அனைவரையுந்தழுவாது. 2. வறுமைத் துன்ப வொழிப்பு இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. (குறள். 1048) நேற்று என்னை உயிரொடு கொன்றது போலும் வாட்டி வருத்திய வறுமைத் தீ, இன்றும் வந்து வருத்துமோ? வருத்தினால் என் செய்வேன்! எங்ஙனந் தப்புவேன்? நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது. (குறள். 1049) ஒருவன் மந்திரமருந்துகளால் நெருப்பிற் கிடந்தும் நன்றாக உறங்கலாம்; ஆயின், இவ்வறுமைத் தீயில் எவ்வகையிலுங் கண்ணடைக்க வழியில்லையே! இவை வறுமையால் வருந்தியவன் கூற்று. ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்(கு) இரவின் இளிவந்த தில். (குறள். 1066) இந்த ஆவு நீரின்றிச் சாகக் கிடக்கிறது; இதற்கு நீர் தந்து உயிர் காக்க என்று, ஒருவன் இன்னொருவனை இரப்பினும், இரந்தவன் நாவிற்கு அவ் விரப்பைப் போல இழிவு தருவது வேறொன்றுமில்லை. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். (குறள். 1069) பொருளில்லாதவர் உள்ளவரிடம் சென்று இரந்து ஒடுங்கி நிற்கும் வறுமைக் கொடுமையை, ஒருவர் நினைத்தாலுமே உள்ளம் நீராய்க் கரைந்துருகும்; இனி, அங்ஙனம் இரந்தவர்க்கு இல்லையென்று மறுப்பாரின் கன்னெஞ்சையும் கடுந்துணிச் சலையும் நினைத்தாலே, அவ் வுருகும் உள்ளமும் ஒன்றுமில்லா தழிந்துபோம். செத்தால் தெரியும் சுடுகாடு என்பது பழமொழி. பட்டவனுக்குத்தான் தெரியும் வறுமைத்துன்பம். அடிக்கடி வறுமையால் நேரும் தற்கொலைகளும் குடும்பக் கொலைகளும் கூட்டுடைமையில் நிகழா. 3. இரப்போர் குடிவாணர்க்குத் தொல்லை தராமை பெருஞ்செல்வர் மாளிகைகளிலெல்லாம் வாயிற்காவலர் நின்று, இரப்போர் உட்செல்லாவாறு தடுத்துவிடுவர். இடை நிலையர்தாம் இரப்போர் தொல்லைக்கு ஆளாவர். அத்தொல்லை கூட்டுடைமை நாட்டில் இராது. உறுப்பிலிகட்கு ஏற்ற வேலை தரப்படும். தொழு நோயர்க்கும் தொற்று நோயர்க்கும் தனி விடுதிகளிருக்கும். 4. வாழ்க்கைக் கவலையின்மை கவலை கறியைத் தின்னும். கவலையினாலேயே குலை வெடித்துச் சாவார் பலர். முதுமைக் காலத்திற்கு முற்காப்புச் செய்ய வேண்டுமென்றே, இளமைக் காலத்திலும் நடுமைக் காலத்திலும் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ்வாரும் உளர். எய்ப்பில் வைப்பு (Provident Fund) இல்லாதவர்க்கும் முதுமைச் சம்பளங் கிடைக்குமாதலால், கூட்டுடைமை நாட்டிற் கவலைக்கே இடமில்லை. ஆதலால், பல தலைமுறை யெச்சத் திற்குப் பயன்படுமாறு பாடுபட்டுப் பணந் தேடிவைக்க வேண்டுவதில்லை. நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் என்னும் நசரேயனார் கூற்று, கூட்டுடைமையால்தான் விளக்கம் பெறும். உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். (நல்வழி. 28) 5. ஆசையடக்கம் ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி ஆளினுங் கடன்மீதிலே ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடுநாள் இருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவரெல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர வுண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதுநான் நானெனக் குளறியே ஒன்றைவிட் டொன்றுபற்றிப் பாசக்க டற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையையருள்வாய் பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. (தாயு. பரிபூர. 10) என்ற பாட்டைக் கவனிக்க. 6. ஆள்நர் அமைச்சர் அதிகாரிகள் முதலியோர் ஊழலுக்கிடமின்மை 7. கல்லாமை யில்லாமை இதனால் உண்மையான குடியரசு ஏற்படும். அறிவும் வளர்ந் தோங்கும். 8. குலப்பிரிவினை நீக்கம் பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினைக்குக் கூட்டுடைமை நாட்டில் இடமில்லை. இதனால் மக்கட் சமநிலை மேம்பட்டுத் தோன்றும். காதல் மணம் தப்பாது நிறைவேறும். குலவெறி, இனவெறி, மதவெறி, மொழிவெறி, நாட்டுவெறி, கட்சிவெறி முதலிய எல்லா வெறிகளும் பறந் தோடும். உறவுச் சலுகையும் (Nepotism), கடுங்கண்ணோட் டமும் (Favouritism) இன்றித் தகுதிபற்றி வேலையளிக்கப்படும். மாணவர் கல்லூரிகளில் இடம்பெறுவதொடு விரும்பிய பாடவகுப்பிலும் சேர்வர். குற்றவாளிகளெல்லாரும் நடுநிலையாகத் தண்டிக்கப் படுவர். சிறப்பாற்றலரெல்லாம் வேற்றுமை யின்றிச் சிறப்பிக்கப் பெறுவர். நாடு மொழி இனம்பற்றிய உண்மை வரலாறு எழுதப் படும். 9. நாட்டமைதி ஒரே கட்சி யுண்மையால் ஒற்றுமை ஓங்கும். கலகமும் உள் நாட்டுப் போரும் கிளரா. கடையடைப்பு, வேலைநிறுத்தம், இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்மேற் கல்லெறிந்து வண்டிக் கும் வழிப் போக்கர்க்கும் சேதம் விளைத்தல், வேலைக்குச் செல்வாரைத் தடுத்தல், பொதுக்கூட்டங்களைக் கலைத்தல், கட்டடங்களையிடித்தல், தட்டுமுட்டுகளையுடைத்தல், நிலை வண்டிகளை யெரித்தல், காவலரை யெதிர்த்தல், காவலர் தடியடியும் குண்டுவீச்சும் முதலியன கனவிலும் நிகழா. 10. அரசுச்செலவுக் குறைவு ஆரவாரமும் அட்டோலக்கமும் இன்மையாலும், அடிக்கடி பொதுத் தேர்தலும் துணைத் தேர்தலும் நிகழாமை யாலும், அரசுச்செலவு மிகக் குறையும். 11. ஒழுக்கவுயர்வு பணம்பற்றியே பெரும்பாலுங் கொலை களவு முதலிய குற்றங்கள் நேர்வதால், கூட்டுடைமை நாடுகளிற் குற்றநேர்ச்சி மிகக் குறைவாகவே யிருக்கும். கொலை, களவு, சூது, பொய், அலவை (வியபிசாரம்) என்பன ஐம்பெருங் குற்றங்கள். பதுக்கம், தேக்கிவைப்பு (hoarding), மிகை யூதியப்பேறு (profiteering), கள்ள வாணிகம் (black marketing), கள்ளக்கடத்தம் (smuggling), கள்ளக் காசடிப்பு, கள்ள மதுவிறக்கம் (illicit distillation) முதலிய வணிகக் குற்றங்களைக் கூட்டுடைமை யாட்சியிற் காணமுடியாது. ஆட்கடத்தமும் ஊர்தி மடக்கமும் (hijacking) அவ் வாட்சியில் நிகழா. 12. உயிர்ப்பாதுகாப்பு 13. பொருட்சேதமின்மை 14. குடும்பவுணர்ச்சி 15. வாழ்நாள் நீடிப்பு 16. உலக வொற்றுமைக்கும் உலகப் பொதுவாட்சிக்கும் வழி கோலல் 6. கூட்டுடைமைப் பண்பாடு தனியுடைமை நாடுகள் பெரும்பான்மையாகவுஞ் செல்வஞ் சிறந்தும் இருப்பதால், கூட்டுடைமை பொதுவாக, உரிமை யில்லாத தென்றும் நெறிதிறம்பியதென்றும், நீடித்து நில்லா தென்றும், கருதப்படுகின்றது. ஆயின், ஆய்ந்து நோக்கின், ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லாப் பிள்ளைகளையும் உணவளித்துக் காப்பது தந்தை கடமையாயிருப்பது போன்று, ஒரு நாட்டிற் பிறந்த எல்லா மக்களையும் உணவளித்துக் காப்பது அரசின் கடமை என்பதை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடைமை யாட்சி, உன்னைப் போலப் பிறனை நேசி என்னும் உயரிய இறைவன் கட்டளையை நிறைவேற்றுவதால், பண்பாட்டில் தலைசிறந்ததாகின்றது. செல்வஞ் சிறந்த நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட் டம் ஓரளவு தோன்றியிருப்பதனாலும், போருங் கொள்ளை நோயும் தடுக்கப்பட்ட இக்காலத்தில் மக்கட் டொகை வேகமாகப் பெருகுவதனாலும், நாளடைவிற் கூட்டுடைமையே உலகமெங்கும் பரவும் என்று எண்ணுவதற்கு இடமுள்ளது. பிறனை நேசிப்பதுடன் கடவுளையுந் தொழுதுவிடின், கூட்டுடைமை யாட்சியே குடியரசின் கொடுமுடியாகிவிடும். கூட்டுடைமையென்பது, கல்வி நிரம்பாத தொழிலாளரை மட்டுங் கொண்டியங்கும் கட்சி யியக்கமாயிராது, கடைநிலை யூழியன் முதல் குடியரசுத்தலைவன்வரை எல்லா அலுவலரை யும், கைவினை பொறிவினை ஆகிய இருவகை வினையுஞ் செய்யும் எல்லா வகுப்பாரையுங் கொண்டு, அறிவியல் (Science), கம்மியம் (Technology) என்னும் இருதிறப்பட்ட எல்லா அறிவுத் துறைகளையும் வளர்த்து, நாடு முழுவதையும் ஆளும் ஆட்சியமைப்பா யிருப்பதால், அதைத் தழுவுவார் அனைவரும் நினைவு, சொல், செயல் என்னும்முக்கரணவொழுக்கத் திலும் மிகப் பண்பட்டவராயிருத்தல் வேண்டும். மக்கள் கூடிவாழவும் அறிவைப் பெருக்கவும் இன்றி யமையாத கருவியாயிருப்பது மொழி. நாகரிக மக்கள் பேசும் ஒவ்வொரு மொழியும், இலக்கண வரம்புள்ளதாயும் இலக்கியங் கொண்டதாயும் இருக்கின்றது. உயிரினங்களெல்லாம், பகுத்தறிவுண்மை யின்மை பற்றி உயர்திணை அஃறிணை என இருவகைப்படும். உயர்திணையைச் சேர்ந்த மாந்தனுக்கு, அகவுடம்பு புறவுடம்பு என இருவகை யுடம்பு உள்ளன. மதி (புத்தி), உள்ளம் (சித்தம்), மனம், நானுணர்வு (அகங்காரம்) என்னும் அகக்கரணங்களோடு கூடிய உயிர் அகவுடம்பு; உயிரைக் கொண்டிருக்கும் (கை கால் முதலிய உறுப்புகளையுடைய) ஊனுருவம் புறவுடம்பு. புறவுடம்பு உணவினாலும் அகவுடம்பு அறிவினாலும் வளர்ச்சியடையும். புறவுடம்பைப் போன்றே அகவுடம்பையும் வளர்ப்பது மாந்த னுக்கு இன்றியமையாதது. அறிவு, பொதுவாக, கல்வியினால் அடையப்படுவது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (குறள். 391) கற்கவேண்டிய நூல்களைப் பிழையில்லாது இளமையிற் கற்க; கற்ற பின், அக் கல்விக்குத் தக்கவாறு நன்றாய் ஒழுகுக. இளமையிற் கல்வி கற்காதவன் தன் இடைமையிலும் முதுமையிலும் அறிஞர் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவடையலாம். கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. (குறள். 414) ஒருவன் பிள்ளைப்பருவத்திற் பள்ளியிற் கற்றிராவிடினும், பிற்காலத்தில் அறிஞர் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவடைக. அவ்வறிவு மனந்தளருந் துன்பக்காலத்தில் ஊன்று கோல் போல உதவும். செவியாற் கேட்டறியும் அறிவு செவியுணவு என்றும், சமைக்கப்பட்ட பொதுவகையான உணவு அவியுணவு (அவிக்கப் பட்டவுணவு) என்றும் சொல்லப்படும். அவியுணவினுஞ் செவியுணவு சிறந்தது. ஆதலால், முன்னது தப்ப நேரினும், அதைப் பொருட்படுத்தாது பின்னதைக் கேட்க வேண்டு மென்பது திருவள்ளுவர் கருத்து. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (குறள். 402) அறிஞர் சொற்பொழிவைக் கேட்டு அறிவுபெற வாய்ப் பில்லாத போது, வயிற்றுப்பாட்டையுங் கவனிக்கலாம். ஒருவன் அறிவடைவதோடு தன் மொழியைத் திருத்த மாகவும் பேசுதல் வேண்டும். இரசிய மொழியைத் திருத்தமாய்ப் பேசுவதே இரசியர் விருப்பம். அங்ஙனமே, சீனமொழியைத் திருத்தமாய்ப் பேசுவதும் சீனர் விருப்பம். உலகமொழிகளுள் தலைமையானது தமிழ். அது உலக முதற்றாய், உயர்தனிச் செம்மொழி; திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயிருப்பது; பிறமொழிச் சொற் கலவாத தூய்மையை உயிர்நாடியாகக் கொண்டது. ஆதலால் அதைத் தூய்மையாகப் பேசுதல் வேண்டும். மொழியின் பயன் கருத்தறிவித்தல்தானே! அதை எப்படிப் பேசினா லென்ன என்று வினவுவது, உண்ணுதலின் பயன், பசியைப் போக்குதல்தானே! எப்படியுண்டாலென்ன? (சமைக்கவும்) பல் துலக்கவும், குளிக்கவும், துப்புரவான இடத்தில் அமரவும், இலையில் அகப்பையால் வெவ்வேறாகப் படைக் கவும், ஒவ்வொன்றாக உண்ணவும் வேண்டுமோ? சமைத்த கலத்திற்குள் கையை விட்டே எடுத்துண்ணலாமே! என்று வினவுவது போலிருக்கின்றது. பல வினைகள் இருதிணைக்கும் பொது; ஆயின், செய்யும் முறை வெவ்வேறு. உயர்திணை மாந்தன் எவ் வினையையும் நாகரிகமாகவும் பண்பாட்டுடனுஞ் செய்தல் வேண்டும். இனி, வயிறு கொதிக்கும்போது தமிழ் எதற்கு? தமிழ் வந்து வயிற்றை நிரப்புமா? என்று வினவும் மாந்தன் வடிவுகளும் உள. அத்தகைய மாக்களை நோக்கித்தான், செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (குறள். 420) என்று வெகுண்டு வினவுகின்றார் திருவள்ளுவர். செவிவாயிலாகச் சிறந்த சொற்பொழிவுகளின் சொற்சுவை பொருட்சுவைகளை நுகரும் உணர்ச்சியின்றி, விலங்குகள்போல் வாயினாலுண்ணும் உணவின் அறுசுவை மட்டும் நுகரும் உணர்ச்சி உடைய மாந்தற் போலிகள், இருந்தாலென்ன? இறந்தாலென்ன? ஒன்றும் வேறுபாடில்லை. செவியுணவைப் போற்றாதவன் மாந்தனல்லன் எனின், அவன் ஒருகாலும் தமிழனாகான்; மக்கட்டொகை மிக்க காலத்தில் தமிழகத்தில் வாழவும் தகான். தமிழ்நாடு கூட்டுடைமை நாடாயின், தமிழைப் போற்று வது தமிழனின் தலையாய கடன். அதற்கேற்றவாறு, கூட்டு டைமைக் கட்சித் தலைவர் தமிழ்ப் புலவரல்லராயினும் தமிழ்ப் பற்றாளராகவாவது இருத்தல் வேண்டும். 7. மக்கட்பெருக்கம் கூட்டுடைமைக்குப் பெருந்தடையாயிருப்பது மட்டிற்கு மிஞ்சிய மக்கட்பெருக்கம். நம் கண்ணெதிரிலேயே, தனிப்பட்ட ஓர் ஆடவனும் ஒரு பெண்டுங் கூடிச் சிறுகுடும்பந் தோன்றுவதையும், சிறுகுடும்பம் பெருங் குடும்பமாகவும் பெருங்குடும்பம் கூட்டுக்குடும்பமாகவும் கூட்டுக் குடும்பம் ஒரு குலக் கிளையாகவும் பெருகுவதையும், நம் காலத்திலேயே, ஒருசில வீடுகள் சேர்ந்து சிற்றூர் தோன்று வதையும், சிற்றூர் பேரூராகவும், பேரூர் நகராகவும், நகர் மாநகர் அல்லது நகரமாகவும், நகரம் மாநகரமாகவும் விரிவடை வதையும் காண்கிறோம். ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த ஆபிரகாமின் வழிமரபினர், இன்று கோடிக்கணக்கான அரபிய ராயும், இலக்கக்கணக்கான யூதராயும் மேலைநாடுகளிற் பரவி யுள்ளனர். ஓர் ஊர் மக்கட்டொகையும், நாட்டு மக்கட்டொகையும் உலக மக்கட்டொகையும், வரலாற்று முறைப்படி நோக்கின், வரவர மிகுந்தும் பின்னிற்குச் செல்லச் செல்லக் குறைந்தும் தோன்றுகின்றன. இதினின்று, மன்பதை முழுதும் ஒரேயிணைப் பெற்றோரினின்று தோன்றியிருக்க வேண்டுமென்று தெரி கின்றது. இற்றை அறிவியலும் கம்மியமும் மருத்துவமும் தோன்றாத பண்டைக் காலத்தில், போரும் கொள்ளைநோயும் தீக்கோளும் வெள்ளமும் கடல்கோளும் எரிமலையும் நிலநடுக்கமும், அடிக்கடி கணக்கற்ற மக்களை மாய்த்து வந்தன. கி.மு. ஆயிரம் ஆண்டுகட்குமுன் நிகழ்ந்த பதினெண்ணாட் பாரதப்போரில், பாரின் சுமை தீர்ந்த தென்னும்படி, பல்லிலக்கம் பேர் மடிந்திருத்தல் வேண்டும். நீபா ரதவமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா (பாரத. கிருட்டி. 34) 1565-ல் விசயநகரப் பேரரசிற்கும் ஐ முகமதிய வரசு கட்கும் நடந்த தலைக்கோட்டைப் போரில், ஓரிலக்கத்திற்கு மேற்பட்ட வர் கொலையுண்டனர். முதலாம் உலகப்போரில் (1914-8) ஏறத்தாழ 85.5 இலக்கம் பேரும் (85,38,315), இரண்டாம் உலகப்போரில் (1939-45) ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்டவரும் மாண்டனர். இலண்டன் மாநகரத்தில் 1348-49இல் ஒரு கொள்ளை நோயும் (The Black Death), 1665இல் ஒரு பெருவாரியும் (Great Plague), 1666இல் ஒரு பேரெரியும் (Great Fire) முறையே, 1/3 பங்கும், 1/10 பங்கும், 1/2 பங்கும் மக்களுயிரைக் கொள்ளை கொண்டன. திருப்பொத்தகத்திற் (Bible) சொல்லப்பட்டுள்ள நோவா காலத்து வெள்ளத்திலும், கி.மு. 1500இற்குமுன் தென்குமரிக் கண்டத்திலும் கீழ்த்திசை நாடுகளிலும் நிகழ்ந்த கடல்கோள் களிலும், எத்தனை கோடியர் மூழ்கினரோ, அறியோம். கி.பி.79-ல் நிகழ்ந்த btRåaR(Vesuvius) எரிமலைக் கொதிப் பால், gh«ngŒ(Pompeii) என்னும் இத்தாலிய நகரம் 12 அடி ஆழத்திற் புதையுண்டது. 1975-ல் சீனத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் முப்பானிலக்கவர் மறைந்தனர் போலும்! இனி, கிறித்துவிற்கு முற்பட்ட நாடுகள் சிலவற்றின் அரசர்க்கு, நாட்டில் அல்லது ஓர் இனத்திற் பிறக்கும் ஒரு தலைமுறைக் குழவிகளையெல்லாம் கொல்விக்கும் அதிகாரமும் இருந்தது. சென்ற நூற்றாண்டுவரை, ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலி யாவிலும் கீழைநாடுகளிலும் நரவூனுண்ணலும் (cannibalism), தலை nt£ilahlY«(head-hunting), ஒவ்வொரு சாவிற்கும் இன்னொருவரைக் கொல்லும் ngŒkªâÇfK«(witchery) இருந்துவந்தன. இங்ஙனம் எத்தனையோ கேடுகள் அடுத்தடுத்து உலகெங் கணும் நிகழ்ந்து வந்தனவேனும், மக்கட்டொகை மேன்மேலும் பெருகிக் கொண்டே வந்திருக்கின்றது. இக்காலத்தில் பெரும்பாலும் போர் நிறுத்தப்பட்டும், நோய் தடுக்கப்பட்டும், பிள்ளைப்பேறுதோறும் பெண்டிர்க் கிருந்த உயிரச்சம் நீக்கப்பட்டும், இயற்கைச் சேதங்கள் இயன்றவரை குறைக்கப்பட்டும், துவக்கப்பள்ளியாசிரியர் தொழிலாளர் முதலிய தாழ்வருமானத்தாரின் வாழ்க்கைநிலை உயர்த்தப்பட்டும் இருத்தலால், ஆமை வேகத்தில் இயங்கி வந்த மக்கட்பெருக்கம் இன்று முயல் வேகத்தில் தாவியோடுகின்றது. சென்ற (19ஆம்) நூற்றாண்டின் நடுவில் நூறு கோடியாக மதிக்கப்பட்ட உலக மக்கட்டொகை, இன்று முந்நூற்றெழுபது கோடிக்கு (37,100 இலக்கம்) மேற்பட்டுள்ளது; இந் நூற்றாண் டிறுதியில் அறுநூறு அல்லது எழுநூறு கோடியாகிவிடும் என்றும் முன்னறிவிக்கப்படுகின்றது. 1971-ல் எடுக்கப்பட்ட இந்தியக் குடிமதிப்பின்படி (census) இந்திய மக்கட்டொகை ஏறத்தாழ 55 கோடி (54,79,49,809). இன்று 60 கோடிக்கு மேற்பட்டுவிட்டது; இந் நூற்றாண் டிறுதியில் 100 கோடி என்னும் அஞ்சத்தக்க தொகைக்கு ஏறிவிடும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டு விளைவையே சார்ந்து செழிப்பாக வாழ்வதாயின், இந்திய நிலம் 30 கோடியையும் ஞாலம் முழுதும் 300 கோடியையுந்தான் தாங்கும். இன்றே வேலையில்லாத் திண்டாட்டமும் வீடில்லாத் திண்டாட்டமும் உணவில்லாத் திண்டாட்டமும் ஒழுங்கில்லாத் திண்டாட்டமும் மக்களையும் அரசுகளையும் வாட்டி வருத்தும்போது, இந் நூற்றாண்டிறுதியில் உலக மக்கட்டொகை இருமடங்கின் மேலும் இந்திய மக்கட்டொகை மும்மடங்கின் மேலும் கூடிவிடின், நிலைமை எங்ஙனமிருக்கும் என்பதை நினைக்கவும் நெஞ்சம் நடுங்குகின்றது. 8. மக்கட் பெருக்கத் தீமைகள் உணவுத்தட்டு இந்திய மக்கட்கு உள்நாட்டு விளைவு போதாமையால் வெளிநாடுகளினின்று பல்வேறு கூலங்கள் இறக்குமதியா கின்றன. இதனால் தேயத்திற்குக் கடன் மிகுகின்றது. கூல விலையும் ஏறியுள்ளது. ஒன்பான் தவசங்களும் ஒன்பான் பயறுகளுமாகிய பதினெண் கூலங்களுள், பல இன்று பயிரிடப்படுவதில்லை. அறுபான் சம்பாக்களுட் பல வழக்கற்றுப்போயின. சிறுமணிச் சம்பா, பெருமணிச் சம்பா, சீரகச் சம்பா ஆகிய சிறந்த வகை களைக் காண்பதும் அரிதாகிவிட்டது. செந்தினை, கருந்தினை ஆகிய தினை வகைகளும் வழக்கற்றுவிட்டன. பாண்டிநாட்டில் மட்டும் விளைவிக்கப்படும் காடைக் கண்ணியும் குதிரை வாலியும் இன்று அருகிவருகின்றன. கற்பயறும் கரம்பைப் பயறும் இங்ஙனமே. நெல்லை மிகுதியாக விளைவிக்க வேண்டுமென்று, புன்செயெல்லாம் நன்செயாக்கப்பட்டு வருகின்றது. புன்செய்ப் பயிரிடக் குறுங்காடுகளும் பெருங்காடுகளும் பலவிடங்களில் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால், விறகுத்தட்டும் வேட்டைக் குறைவும் ஏற்பட்டுவிட்டன. ஆடுமாடுகட்கு மேய்ச்சல் நிலமுங் குன்றிவிட்டது. மரவிறகிற்குப் பகரமாக (பதிலாக), பலர் மண்ணெண் ணெயையும் ஆவியையும் (gas) பயன்படுத்துகின்றனர். அவையும் சில சமையங்களிற் கிடைப்பதில்லை. உடும்பு, முயல், மான், காட்டுப்பன்றி, காடை, கதுவாலி, புறா, காட்டுக்கோழி முதலிய உயிரிகள் இந் நூற்றாண்டுத் தொடக்கம்வரை வேண்டும்போதெல்லாம் வேட்டையாடப் பட்டு வந்தன; அரூர், பெண்ணாகரம் போன்ற மலையண் மையூர்க் கிழமைச் சந்தைக்கும் விற்பனைக்கு வந்தன. இன்று அஃதொழிந்தது. விறகிற்காகவும் தச்சுவினைக்காகவும் குளம்பி (coffee) கொழுந்துத் (tea) தோட்டங்கட்காகவும் குடியிருப்பிற்காகவும் குடமலைத்தொடரிலும் பிறமலைத்தொடரிலுமுள்ள மரங் களையும் ஏராளமாக வெட்டிவிட்டதனால், மக்கள் வாழ்க் கைக்கு இன்றியமையாத மழையுங் குன்றிவிட்டது. ஒரு வெப்ப நாட்டில் ஆண்டுதோறும் ஒழுங்காக மழை பெய்தற்கு முக்காற்பங்கு மரமடர்ந்த காடிருப்பது தலை; 2/3 பங்கு இருப்பது இடை; 1/2 பங்கு இருப்பது கடை. இன்றோ 1/3 பங்குமில்லை. முன்காலத்தில் முக்காற்பங்கு காடிருந்ததனால், வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போற் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தன ளடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனநடை மாதரும் ஐயனுந் தொழுது பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும் அரிமுக வம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தினர்.'' (சிலப்.13 : 170-80) இன்று கோடைமழை, மாரிமழை, அடைமழை ஆகிய முக்கால மழையுந் திறம்பியதொடு, துளிப்பனியும் வறட்பனியாக வறந்துவிட்டது. இதனாற் பாசனநீர்க் குறைவு மட்டுமன்றிக் குடிநீர்த் தட்டும் ஏற்பட்டுவிட்டது. நெல்விளைவு மிகக் குன்றிவிட்டதனால், பண்பாடு கெடு மளவு திருமண விருந்துக் கட்டுப்பாடும் புகுத்தப்பட்டுவிட்டது. ஓர் உழைப்பாளி அல்லது அலுவலர் உடம்பை நலத் தோடும் வலத்தோடுங் காக்கவேண்டின், நாள்தோறும் இரு சிற்றுண்டியும் இரு பேருண்டியும் உண்ணுதல் வேண்டும். இற்றை யிந்தியருள், இங்ஙனம் நால்வேளை யுண்பவர் நூற்றுமேனி இருபதின்மராகவேயிருப்பர்; மூவேளையுண்பவர் ஐம்பதின்மராகவும், இருவேளையுண்பவர் இருபதின்மராகவும், இரு வேளையும் ஒரு வேளையுமாக உண்பவர் பதின்மராகவும் இருக்கலாம். மூவேளையும் குறைந்த வேளையும் உண்பவருட் பாதிப்பேர் வலுவுணவினராகவும், பாதிப்பேர் எளியவுண வினராகவும் இருக்கலாம். ஊனுணவுக் குறைவினால், எதிர்காலத்தில் ஒரு சாரார் மரக்கறியுணவினராக மாறினும் மாறலாம் (அது நன்றே); உண்ணா வூனை யுண்ண நேரினும் நேரலாம். உடைக்குறைவு சில ஆடைகளின் நீளமும் அகலமும் குறுகியும், திண்மை குறைந்தும் உள்ளன. கம்பளியாடை போதிய அளவிலும் குறைந்த சம்பளக்காரர் வாங்கக்கூடிய விலையிலுமில்லை. சில மெல்லாடைகளும் முன்போற் கிடைப்பதில்லை. அணிகல விலையுயர்வு வெள்ளியும் பொன்னும் மணிக்கல்லும் முப்பது மடங்கு விலை யேறிவிட்டன. செல்வரல்லாதார் போலியணிகளையே அணிய முடிகின்றது. விரும்பிய வேலைப்பாடும் வடிவுமுள்ள நகைகள் புதிதாய்க் கிடைப்பதுமில்லை. வெள்ளிநகை யென்பது வெண்ணிற அணியென்றும், பொன்னகை யென்பது பொன் னிற அணியென்றும் தான் இனிப் பொருள்படும். உறையுள் நகரங்களிலெல்லாம் குடியிருக்க வாடகைவீடு எளிதாய்க் கிடைப்பதில்லை; கிடைப்பின் வாடகை மிகவுயர்வு. மனை நிலமோ பதின்மடங்கு விலையேறியிருப்பதுடன், ஆண்டு தொறும் மேன்மேலும் ஏறிக்கொண்டே செல்கின்றது. அவ் விலைக்குங் கிடைப்பதில்லை. எளியார் வீடுகளுங் குடிசைகளும் முதலாழ்வார் மூவர் ஒதுங்கிய இடைகழியின் நிலைமை யடைந்துவிட்டன. அரசியற் கட்டடங்களில் தாழ்வாரங்களும் இடை கழிகளும் அலுவலகங்களாகிவிட்டன. மருத்துவ சாலைகளில் தாழ்வாரமெல்லாம் இடை யீடில்லாப் பாய்ப்படுக்கைகள் நிரம்பிவிட்டன. புதிய நகரமைப்புகளாலும் குடியேற்றங்களாலும், பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டுப் பண்படுத்தப்பட்ட பழனங் கள் (பழமையான வயல்கள்) பாழாய்ப் போயின. இங்ஙனம், மக்கள் தொகை மிகமிகப் பெருகவேண்டிய விளைநிலம் வரவரச் சிறுகி வருகின்றது.இதனால் உணவுத்தட்டு மேலும் அதிகரிக் கின்றது. தொழிலாளரும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வதியும் இடங்களிலெல்லாம், தெருக்களிலும் சாலைகளிலும் இரு மருங்கும் செய்யப்படும் துப்புரவுக்கேட்டை, நினைப்பினும் சொல்லொணாத அருவருப்புணர்ச்சியுண்டாம். நகரம் நரகமா கின்றது. மாநகரமோ மாநரகமே. சாலைநடுவிற் சென்றால் வண்டிகட் கச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறிய நரகத்திற் கச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங்காற்றெல்லாம் வீச்சமன்றோ? அமைதிக்குச் சிறந்ததாகச் சொல்லப்படும் நாட்டுப்புறச்சூழலும் இக்கால் இத்தகையதே! என்றோ ஒருகால் வரும் பெரு வெள்ளம் எல்லா வற்றையும் அடித்துக்கொண்டு போய்க் கடலிற் சேர்ப்பினும், மீண்டும் பழைய நிலைமையே நேர்வதால், உலகிலுள்ளவரை அல்லது மக்கட்டொகை சரிபாதியாகக் குறையும் வரை, உலாச் செல்ல இடமில்லை. கல்வி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எல்லா மாணவர்க்கும் இடமில்லை. கல்லூரிகளில் இடங்கிடைப்பினும் விரும்பிய பாட வகுப்பிற் கிடைப்பதில்லை. கலைக்கல்லூரி மாணவரிடம் நன்கொடையும் அலுவற்கல்லூரி மாணவரிடம் பெருங்கை யூட்டும் வாங்குவது வழக்கமாய்ப் போயிற்று. பல கல்வி நிலையங்களில் நூலகமும் ஆய்வுக்களமும் (laboratory) பெயரளவிலேயேயுள்ளன. மாணவர் மிகுதியினால், கட்டொழுங்கு (discipline) கெடு வதுடன் கல்வித்திறமுங் குறைகின்றது. நாளடைவில், தேர்வே வேண்டாமென்றும் அல்லது தேர்வெழுதினவர்க் கெல்லாம் தகுதித்தாள் கொடுக்க வேண்டுமென்றும், மாணவர் கிளர்ச்சி செய்யினுஞ் செய்வர். கைத்தொழில் மூலக்கருவிப் பொருள்கள் கிடையாமையால், பல செய் பொருள்கள் அவற்றிற்குரிய அல்லது சிறந்த கருவிகளாற் செய்யப்படுவதில்லை. வெண்கலத்தினாற் செய்ய வேண்டியவை பித்தளையினாலும், பித்தளையினாற் செய்யவேண்டியவை துத்தநாகத்தினாலும், செம்பினாற் செய்யவேண்டியவை இரும்பினாலும், இரும்பினாற் செய்யவேண்டியவை மரத்தி னாலும், மரத்தினாற் செய்ய வேண்டியவை சுதை மாவினாலும் (cement), மாழையினாலும் (metal) மரத்தினாலும் செய்ய வேண்டி யவை வார்ப்பனாலும் (plastic) செய்யப்பட்டு வருகின்றன. நான்மடங்கு விலையேறியுள்ள fhouR(godrej) நிலைப் பேழை (almirah) அரைமடங்கு திண்ணங் குறைந்துள்ளது. திண்ணிய அட்டைப் பெட்டிகளுள் இடப்பட்டு வந்த பல செய்பொருள்கள், இன்று சன்னத்தாளிற் சுற்றிவருகின்றன. பொத்தகங்கள், செய்தித்தாள்கள், ehnsLfŸ(calendars) முதலியவற்றிற்குப் போதிய அல்லது நல்ல தாள் கிடைப்பதில்லை. மலையிலுள்ள மரங்கள் பல வெட்டப்பட்டுவிட்டதனால், இனி நாட்டுமரமுங் கிடையாமல், நாற்காலி, மொட்டான் (stool), நிலைமேடை (மேசை), அறுகாலி (bench) முதலிய இருக்கை களெல்லாம் கல்லாலேயே செய்யவேண்டிய கற்காலம் மீளினும் மீளும். கைத்தொழிற்சாலைகளும் பொறித் தொழிற்சாலைகளும் மிகுந்து மக்கள் குடியிருப்பிற்கு நெருங்கிவிட்டதனால், நச்சுப் புகையும் நச்சுக் கழிநீரும் பரவி, மக்கள் நலத்திற்கும் உணவுப் பயிர் விளைவிற்கும் கேடு நேர்ந்துள்ளது. போக்குவரத்து மக்கட்டொகை மிகுந்துவிட்டதனால், திருவிழா நாள் களிலும் திருமண மாதங்களிலும் பேரியங்கிகளிலும் தொடர் வண்டிகளிலும் வழிப்போக்கர்க்குப் போதிய இடம் கிடைப் பதில்லை. வேலையின்மை மக்கட்பெருக்கத் தீங்குகளெல்லாவற்றிலும் மிகக் கொடியது பலர்க்கு வேலையின்மை. அதனால், தன்மானமுள்ள வரெல்லாம் தனித்தனியாகவுங் குடும்பங் குடும்பமாகவுந் தற்கொலை செய்து கொள்கின்றனர். தன்மானமில்லாதவர் இரப்பெடுத்து இடர்ப்படுகின்றனர். தீயொழுக்கத்திற்குத் துணிந்தவர் ஏமாற்று, களவு, கொள்ளை, வழிப்பறி, கொலை, ஆட்கடத்தம் முதலிய தீவினைகளை மேற்கொள்கின்றனர். பலர் கூடின் காவலரையும் எதிர்த்துத் தாக்குகின்றனர். நூற்றுக் கணக்கினர் சேரின், வன்செயலாற் புரட்சி யுண்டுபண்ணிக் கூட்டுடைமை யாட்சியைத் தோற்றுவிக்க முயல்கின்றனர். இதற்கு மாறானவர், சிறப்பாகப் பெருஞ்செல்வர், அவர் கடுஞ்சினத்திற்கு ஆளாகின்றனர். வெளிநாட்டுமக்கள் வெளியேற்றம் இந்தியர், சிறப்பாகத் தமிழர், பண்டைநாளில் தொழில் வளர்ச்சியடையாத இலங்கை, கடாரம் (பர்மா) முதலிய கீழைநாடுகட்குச் சென்று, அரும்பாடுபட்டுக் குளம்பி, கொழுந்துத் தோட்ட வேலையும் பயிர்த்தொழிலுஞ் செய்து நாட்டை வளம்படுத்திப் பழங்குடி மக்களை முன்னேற்றியபின், மக்கட்பெருக்கம் பற்றி, அந் நாட்டு மக்கள் தம்மை முன்னேற்றிய வரை நன்றிகெட்டதனமாகத் துரத்தி விட்டனர். 9. மக்கட்பெருக்க மட்டுப்படுத்தம் இன்று பார் முழுதும் பரவியிருக்கும் மாபெருங் கேடு மக்கட் பெருக்கமே. விரைந்து கொல்லுங் கொடிய நோயுண்டும் அதைச் சரியாகக் கவனியாதிருக்கும் நோயாளிபோல், ஒன்றிய நாட்டினங்களோ (UN), சீனம் இந்தியா போன்ற மக்கட்பெருக்கம் மிக்க அதன் உறுப்பு நாடுகளோ, இதைப் போதிய அளவு கவனியாதிருப்பது அஞ்சத்தக்கதாகும். மக்களினம் வாழும் ஒரே மாநிலமாகிய ஞாலத்தின் (பூமியின்) பரப்பளவு வருமாறு : நிலப்பரப்பு 57,510,000 சதுரக்கல் நீர்ப்பரப்பு 139,440,00 சதுரக்கல் மொத்தப்பரப்பு 196,950,00 சதுரக்கல் இந்திய நிலப்பரப்பு 3,268,090 சதுரக்கல் தமிழ்நாட்டு நிலப்பரப்பு 130,069 சதுரக்கல் இப் பரப்பளவுகள் நிலநடுக்கம், கடல்கோள், எரிமலை, பெருநிலப் பெயர்வு (continental drift) முதலியவற்றாற் சேணெடுங் காலம் இடையிட்டிடையிட்டு மாறிவரினும், ஞாலத்தின் கன அளவு கதிரவக் குடும்பம் (solar system) அழியும்வரை ஒருபோதும் மாறாதென்று உறுதியாய்ச் சொல்லலாம். ஆகவே, மக்கள் பெருகப் பெருக மாநிலம் விரிவடை வதில்லை. அதற்கு மாறாக, வாழ்நிலமும் விளைநிலமும் குறுகிக் கொண்டே வருகின்றன. ஞாலத்தைச் சேர்ந்த கதிரவக் குடும்பத் தில், மக்கள் குடியேறத்தக்க வேறுலகமுமில்லை. திங்களிற் குடியேறலா மென்றிருந்த குறுங்கனவு மின்னல்போல் மறைந்து விட்டது. திங்கள் மாந்தனுக்கு இறைவன் அமைத்த இராவிளக்கே யென்பது இன்று தெளிவாயிற்று. எல்லா வுயிரினங்களும் வடிவளவை முறைப்பட்ட (geometrical) வேகத்திற் பெருகிவருகின்றன. ஏதேனுமொரு வகையில் தடுக்கப் படாவிடின், ஓரினமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பார் முழுதும் பரவி இடத்தையெல்லாம் அடைத்துவிடுமென்று, 18ஆம் நூற்றாண்டில் லின்னேயசு (Linnaeus) என்னும் சுவீடன் நாட்டு இயற்கை யாராய்ச்சியாளர் உலகிற்கு எச்சரித்தார். உண்டாக்க (production) வேகத்தினும் மக்கட்பெருக்க வேகம் விரைந்ததென்னும் அஞ்சத்தக்க வுண்மையை, 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளிலிருந்த மால்தூசு (Malthus) என்னும் ஆங்கிலேயப் பொருளாட்சிப் புலமையாளர் பலவாறு விளக்கிக்காட்டினார். எல்லா வுயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் (Struggle for Existence) பற்றி, சென்ற நூற்றாண்டிலிருந்த தார்வின் (Darwin) என்னும் ஆங்கிலேயத் âÇth¡f¡(Evolution) கொள்கையாசிரியர், உயிரினங்களின் njh‰w«'(Origin of Species) `மாந்தன் வரவு' (Descent of Man) என்னும் இருபெரு நூல்களில் விரிவாக விளக்கினார். இந்திய மக்கட்பெருக்கத்தால் ஏற்படவிருக்கும் பெருங் கேட்டையும் அதைத் தடுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் பற்றி, அடிக்கடி வற்புறுத்திக் கூறிவந்த ஒரே பழைய நடுவண் மந்திரியார் பர். எசு.சந்திரசேகர் இன்று அமெரிக்காவிலுள்ளார். ஞாலம் முழுதும் 300 கோடி மக்களையும், இந்தியா 30 கோடி மக்களையும்தான் தாங்கும். இந் நூற்றாண்டிறுதியில், உலக மக்கட்டொகை 600 கோடியும் இந்திய மக்கட்டொகை 100 கோடியும் தாண்டிவிடுமென்று சொல்லப்படுகின்றது. இதை உடனடியாய்த் தடுக்காவிடின், இன்னும் ஒரு நூற்றாண்டிற்குள் இந்திய மக்கட்டொகையே 600 கோடி ஆயினும் ஆகும். மேலும் ஒரு நூற்றாண்டாயின், ஞாலத்தில் மக்கட்கு நிற்கவும் இடமில்லாது போம். பலர், மக்கட்டொகை எத்துணை மிகினும் இன்றுள்ள நிலைமையே என்றும் நிலவுமென்றும், உண்டாக்கத்தை மட்டும் பெருக்குதல் வேண்டுமென்றும், பற்றாக்குறைக்குப் பல நாடு களினின்று கடன் கொள்ளலாமென்றும், எளிதாகக் கூறுவர். அவர் அறியார். இன்றுள்ள நிலைமை நீடிக்காது. திடுமென்று அழிவு தோன்றும். அன்று நிலவளங் குன்றும். வேண்டிய அளவு விளைவிக்க இயலாது. வளம்படுத்த வுரமுங் கிடையாதுபோம். விளைவிப்பவர் விளைந்ததைத் தமக்கே வேண்டுமென்று வைத்துக் கொள்வர். விற்பனைக்கு ஒன்றும் வெளிவராது. பிற நாடுகளும் தம் விளைப்புத் தமக்கே போதுமென்று பிறநாடு கட்குக் கடன் கொடா. அத் துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனுங் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல், வெள்ளம் வந்தபின் அணை கட்டுவதும், குதிரை களவு போனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளியிறந்த பின் மருத்துவஞ் செய்வதும் ஆகும். ஆதலால், பின்வருமாறு பல கடுமையான தடுப்பு வழிகளைக் கண்டிப்பாகக் கையாண்டு, இற்றை மக்கட் பெருக்க வேகத்தைப் பெரிதுங் குறைப்பதுமன்றி, இற்றை மக்கட் டொகையையே படிப்படியாக மெள்ள மெள்ள அரையளவாக ஒடுக்குதலும் வேண்டும். அவ் வழிகளாவன: 1. மணவாமை போற்றல் அரசு f‹Å¤JwÉauhfî«(confirmed bachelors) தனி thœ¡ifauhfî«(celibates) வாழப் பூட்கை கொண்டவரைப் பாராட்டுதல் வேண்டும். சிவ மாலிய சமண புத்தத் துறவியரும் உரோமைச் சபைக் கிறித்தவக் குருமாரும், இவ்வகையில் நாட்டிற்கும் உலகிற்கும் பெருந்தொண்டு செய்பவராவர். 2. மணவகவை யுயர்த்தம் முதற்கண் ஆடவர்க்கு 25-ம் பெண்டிர்க்கு 20-ம், பின்னர் முன்னவர்க்கு 30-ம், பின்னவர்க்கு 25-ம் ஆக மண அகவையை உயர்த்துதல் வேண்டும். 3. மணவாண்டு குறிப்பு எவ்வாண்டிலும் எம்மாதத்திலும் எந்நாளிலும் மணஞ் செய்யாவாறு, முதற்கண் ஐயாண்டிற்கும் பின்னர்ப் பத்தாண் டிற்கும் ஒரு முறையே மக்கள் மணஞ்செய்யுமாறு, அரசு மணவாண்டு குறித்தல் வேண்டும். நன்மாதமும் நன்னாளும் பார்ப்பார்க்கும் ஓராண்டு போதும். இது திருமண ஒத்திவைப்பு. 4. பிள்ளைப்பே றில்லாதவரைப் பாராட்டல் பிள்ளைப்பேறு பண்டை நல்வினைப் பயன் அல்லது திருவருட் பயனென்றும், பிள்ளைப்பேறின்மை பண்டைத் தீவினைப் பயன் அல்லது இறைவன் சாவிப்பு (சாபம்) என்றும், பிள்ளைப்பேறே செல்வத்துட் செல்வமென்றும், அஃதில்லா தார் ஓர் எரிநரகை யடைவரென்றும், பல தவறான நம்பிக்கைகள் இன்னும் ஒருசார் மக்களிடை யிருந்துவருகின்றன. இவற்றுள் ஒன்றைக் கரணியமாகக் கொண்டும், தம் பெண்ணின்ப நுகர்ச்சியை மிகுத்தற்பொருட்டும், தம் முதல் மனைவியின் இசைவைப் பெற்றோ பெறாதோ சிலர் மறுமணஞ் செய்துள் ளனர். பிள்ளைப்பேறில்லாதவர் அஃதுள்ளவர் முன் உள்ளத்தி லேனும் நாணி வருந்தாவாறு, அரசும் பொதுமக்களும் புலவரும் இனி அத்தகையோரையே பாராட்டி வாழ்த்துதல் வேண்டும். 5. இருபிள்ளை வரம்பும் கட்டாய kylh¡fK«(Sterilization) பிள்ளை பெறுபவர் இருபிள்ளைக்குமேற் பெறுதல் கூடாது. இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகட்குப் பங்கீட் டுரிமையும் தகாது. மிகைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துண்டலே பெற்றோரியல்பாகு மாதலால், இருபிள்ளை யென்னும் வரம்பீடு மட்டும் போதாது. இரண்டாம் பிள்ளைக்குப் பின் தாய்க்குக் கட்டாய மலடாக்கமுஞ் செய்தல் வேண்டும். அல்லாக்கால் வரம்பு மீறுபவரை அடிக்கடி கவனிக்கத் தனி அலுவலர் வேண்டியிருக்கும். அது அரசிற்கு வீண் செலவாகும். மலடாக்கம் குடிசை வாணர்முதல் கோடிச் செல்வர்வரை குல மத கட்சி தொழில் நிலைமை வேறுபாடின்றி, எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். ஓர் எளிய ஏவலன் மனைவியும் இந்தியக் குடியரசுத் தலைவர் மனைவியாரும் இவ்வகையில் ஒன்றே. இந் நடுநிலை தவறின், அரசு அரசாகாது. கூட்டுடை மையரசே யரசென்று கொள்ளற்கிடமாகும். இந்தியா பல்வேறு நாடும் இனமும் குலமும் மத மொழி கட்சி தொழில் நிலைமைபற்றிய வகுப்புகளும் கொண்ட உட்கண்ட மாதலால், மலடாக்கத்தை விருப்பத்திற்கு விடின், சில குலம் அல்லது வகுப்பு வரவரச் சிறுகவும், சில குலம் அல்லது வகுப்பு வரவரப் பெருகவும் நேரும். இது நடுநிலைக்கு இழுக்காம்; நாட்டு வளர்ச்சிக்கும் இந்திய ஒன்றிய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாம். ஆதலால், அணுவளவும் அஞ்சாதும் ஒரு வகுப்பார்க்குங் கடுகளவுங் கண்ணோட்டங் காட்டாதும், அரசு தன் கடமையை நிறைவேற்றல் வேண்டும். அஞ்சுவது கோழைத் தனத்தையும் ஆளுந் தகுதியின்மையையும் ஓரவஞ்சகத்தையுமே காட்டும். மதச் சார்பாக எவர் தடை நிகழ்த்தினும் அரசு ஒப்புக் கொள்ளுதல் கூடாது. எல்லா வுயிரினங்களும் இறைவன் படைப்பே. ஆயினும், மாந்தன் தனக்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு வேண்டாதவற்றை விலக்கிவிடுகின்றான். வேண்டியவற்றையும் தன் தேவைப்படி வெவ்வேறளவில் வைத்திருக்கின்றான். தலைமுடி பெண்டிர்க்குப் போல் ஆடவர்க் கும் நீண்டு வளர்வது இயற்கையே, இறைவனேற்பாடே. ஆயினும், ஆடவன் தன் தலைமுடியை விரும்பியவாறெல்லாம் மட்டுப்படுத்திக்கொள்கின்றான். இனி, தாடியும் மீசையும் ஒக்க வளரினும், முன்னதை நீக்கிவிட்டுப் பின்னதைப் பேணுகின் றான். இச் செயல்கள் இறைவன் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பாகா. இங்ஙனமே, மண்ணுலகில் இறைவனைப் படிநிகர்க்கும் அரசும், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மக்கட்டொகையை மட்டுப் படுத்துவதும் உண்மையான மதத்திற்கு மாறாகாது. இனி, இருபிள்ளை யென்னும் வரம்பீட்டிற் பால்பற்றிய கருத்து கலத்தல் கூடாது. இருபிள்ளையும் ஆண்பாலாகவு மிருக்கலாம்; பெண்பாலாகவு மிருக்கலாம்; இருபாலுங் கலந்து மிருக்கலாம். இரண்டும் ஒரே பாலாயிருப்பின், ஏனைப் பாலும் ஒன்று வேண்டு மென்பது பொருந்தாது. அதற்கு இசையின், சிலர்க்கு முப்பிள்ளையாகி நடுநிலை திறம்பும். மேலும், மூன்றாம் பிள்ளையும் முந்தின பாலாகவேயிருக்கலாம். நம் நாட்டில் இன்றும் "சாண்பிள்ளையானாலும் ஆண் பிள்ளை மாண் பிள்ளை'' என்னும் பழமொழிக் கருத்திருப்பதால், முப்பிள்ளை யும் பெண்ணாய்ப் பிறந்த குடும்பம் செல்வஞ் சிறந்திருந்தா லன்றித் தொல்லைப்படத்தான் செய்யும். கோவரசு போய்க் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்தில், பட்டங் கட்டிப் பாராளப் பிள்ளையில்லையென்று வருந்த வேண்டுவதில்லை. மேலும், பெண் பிள்ளைக்கும் பட்டங் கட்டலாம். பிள்ளை களின் பாலமைப்பு இறைவன் அல்லது இயற்கையேற் பாடேயன்றி மாந்தன் படைப்பன்று. ஆதலால், எப்பாற் பிள்ளை பிறப்பினும் பொந்திகை (திருப்தி) யடைதல் வேண்டும். பிள்ளை பெறுவது பெண்ணே யாதலால், மலடாக்கம் பெண்டிர்க்குச் செய்தாலும் போதும். கட்டாய மலடாக்கச் சட்டம் ஆட்சிக்கு வருமுன்னரே இரு பிள்ளையும் பல பிள்ளையும் பெற்றிருக்கும் தாய்மார்க் கெல்லாம் உடனே மலடாக்கஞ் செய்துவிடல் வேண்டும். இருபிள்ளை பெற்றிருக்கும் இளங்கைம்பெண்டிர்க்கும் மலடாக்கஞ் செய்துவிடல் வேண்டும். 6. குடும்பக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் (Dept.) தோற்றுவித்தல் நடுவணரசிலும் நாட்டரசுகளிலும் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத் திணைக்களம் தோற்றுவித்து ஒரு மந்திரியார் அல்லது அமைச்சர் பொறுப்பில் விடல் வேண்டும். 7. கல்லுரிக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘k¡fËaš'(Demography) சேர்த்தல் 8. செய்தியறிவிப்பு வாயில்களில் குடும்பக் கட்டுப்பாட்டை விளக்கல் செய்தித்தாள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி (television), சொற்பொழிவு, துண்டு வெளியீடு முதலிய அறிவிப்பு வாயில்களால் மக்கட்பெருக்கத் தீங்கையும் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தின் நன்மையையும் பொதுமக்கட்கு விளக்கிக் கூறல் வேண்டும். சுவர்களிலும், பலகைகளிலும் சில சொலவங் களை (slogans) மட்டும் எழுதிவைத்தாற் போதாது. நம் நாட்டில் நூற்றுமேனி எழுபதின்மர் இன்றும் தற்குறிகளாய் (கீறற் புள்ளிகளாய்) இருப்பதால், அவர்க்கு அச் சொலவங்கள் பயன்படா. 9. மக்கட் குறைப்புத் திட்ட ஈகியர்க்கு(தியாகிகட்கு)ச் சலுகை காட்டல் மணவாமை, பிள்ளை பெறாது மலடாக்கஞ் செய்து கொள்கை முதலிய ஈகம் (தியாகம்) செய்யும் ஈகியர்க்கு, அவரவர் விட்டுக் கொடுப்பின் அளவிற்குத் தக்கவாறு வேலையளிப்பு, வீடமைப்பு, கடனீக்கம், வரிக்குறைப்பு, பணவுதவி, இலவச மருத்துவம் முதலிய பல்வேறு வகையில் அரசு சலுகை காட்டுவது, அவர்க்குச் செய்யுங் கைம்மாறும் பிறர் அவரைப் பின்பற்றச் செய்யுந் தூண்டுகோலுமாகும். 10. மக்கட் பெருக்கத் தீமையும் குடும்பக் கட்டுப்பாட்டு நன்மையும் பற்றிச் சிறந்த òâd«(novel) எழுதுவார்க்குப் பரிசளிப்பு 11. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றியாக நிறைவேற்றும் ஊராட்சி மன்றத் தலைவரை ஊக்குவிப்பு 12. இளைஞர்க்கும் மணவாத மாணவர்க்கும் காதல் திரைப்படங்களை விலக்கிக் கல்வித் திரைப்படங்களைக் காட்டல் இத் தடுப்புவழிகளுட் சில மிகக் கடுமையாகத் தோன்ற லாம். ஆயின், அவை கொடியநோய் மருந்து போன்றவை. நோயின் கடுமைக்குத் தக்கவாறு மருந்தின் கடுமையுமிருக்கும். மருந்தின் கடுமை நோக்கி அதை விலக்குபவன் நோயை வளர்த்து மாய்பவனே யாவன். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகள் கட்டத்தை விளைப்பினும், பின்னர்க் காலமெல் லாம் மக்கள் இன்புற்று வாழ வழிகோலுவது தேற்றம். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் அடுத்த தலைமுறையில், மக்கள் மாற்றொணாத் துன்புற நேரும். களவுங் கொள்ளையுங் கொலை யும் கட்டிற் கடங்கா; பகையும் பசியும் பிணியும் மட்டிற்கு மிஞ்சும்; காவலருங் கள்வராவர்; அரசும் ஆற்றலறும்; நாடுங் காடாகும். அத்தகைய நிலைமை நேராவாறு, எதிர்கால மக்கள்மீது இரக்கங் கொண்டேனும் இக்கால மக்கள் பண்பாடு மேற்கொள்ள வேண்டும். 2 தமிழ்நாட்டு அரசின் கடமை 1. உழவுத்தொழிலை ஊக்கல் திங்களை யடைந்து திரும்பிவரினும், நிலத்திலும் நீரிலும் வானிலும் ஒருநிகராய்ச் செல்லும் விரைவூர்தியைப் புனை யினும், உயிர்வாழ்விற் கின்றியமையாத உணவை விளைக்கும் உழவனைப் போன்ற பொதுநலத் தொண்டன் ஒருவனுமில்லை. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம்.'' (புறம். 18) சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.'' (குறள். 1031) உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து.'' (குறள். 1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.'' (குறள். 1033) இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப் போர்.'' (சிலப். 10 : 149-50) காப்பாரே வேளாளர் காண்.'' (தனிப்பாடல்) ``வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்.'' (திரிகடுகம் 12) உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.'' (நல்வழி. 12) வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே, இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால்வகுப்பு வரிசை. நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி யேற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருளிலக்கண நூலார் கிளவித்தலைவரைத் தொழி லடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது, அறிவாற்றல், அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றிற்குஞ் சிறப்புக் கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர். வேளாளர் என்பார், உழுதுண்பார் உழுவித்துண்பார் என இருவகையர். முதற்காலத்தில் உழவர் என ஒரே வகுப்பாரா யிருந்த மருதநில மக்களே, பிற்காலத்திற் செல்வமுண்மையும் இன்மையும்பற்றி இங்ஙனம் இருவகையராகப் பிரிந்தனர். உழுவித்துண்பார் நிழல் வாழ்வாலும் சிறந்த வுணவாலும் பொன்னிறமடைந்து வெள்ளாளர் என்றும், உழுதுண்பார் வெயிலுழைப்பாலும் எளிய வுணவாலும் கருநிறம் மிக்குக் காராளர் என்றும் பெயர் பெற்றனர். இவரை முறையே, வெண்களம ரென்றும் கருங்களம ரென்றுங் கூறுவது இலக்கிய வழக்கு. தமிழ்நாடு நண்ணிலக்கோட்டை யடுத்திருப்பதால், பொதுவாக, வடஇந்தியரினுந் தென்னிந்தியர் சற்றுக் கருத் திருப்பர். வடக்கே செல்லச் செல்லப் பொன்னிறத்தர் மிகுந்தும், தெற்கே வரவர அவர் குறைந்தும், இருப்பது கண்கூடு. தென் னாட்டுக் காராளர் கருநிறஞ் சிறந்தவர். தொழில்பற்றியும் தொண்டுபற்றியும் உழவனே உயர்ந்தவ னேனும், நிற (வரண) அடிப்படையிலும் பிறப்படிப்படையிலும் மக்கட்கு உயர்வு தாழ்வு வகுத்த ஆரியப் பூசாரியர்க்குத் தமிழ் மூவேந்தரும் அடிமைப்பட்டுப் போனதினால், வெள்ளாளன் சூத்திரன் என்றும், காராளன் பஞ்சமன் அல்லது தீண்டாதவன்' என்றும் இகழப்பட்டனர். இனி, நிலத்தை உழும்போது பூச்சி புழுக்கள் கொல்லப்படு வதனால், உயர்ந்தோர் உழவுத்தொழிலைத் தாழ்ந்ததென்று தள்ளி விட்டனர் என்று மனுதரும சாத்திரம் கூறுவதோ, எள்ளி நகையாடத் தக்கதாகும். இன்று நன்செய் புன்செய்களிற் பூச்சி மருந்தடிப்பவ ரெல்லாம் அதன்படி கொலையாளிய ராவர். வேறு எத்தொழில் நின்றுபோயினும் மக்கட்குக் கேடில்லை. உழவுத்தொழில் நின்றுவிடினோ, ஒருசிலரே இயற்கை யுணவுண்டு எஞ்சியிருப்பர். உலகப்பற்றை முற்றுந் துறக்குந் துறவறமும் நிகழாது. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை.'' (குறள். 1036) துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.'' (குறள். 42) துறவொழுக்கத்தில் உயர்நிலை யடைந்த தாயுமானவரும், கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு சித்துநான் கண்மூடி மௌனியாகித் தனியே யிருப்பதற் கெண்ணினேன்'' (சச்சிதானந்த. 5) என்று பாடியிருப்பது கவனிக்கத் தக்கது. உழவுத் தொழில் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளைத்தலால், அதற்கு உச்ச முதன்மை கொடுத்து, ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் உதவுதல் வேண்டும். நிலவரம்பீட்டினால் எஞ்சிய நிலத்தைச் சிறந்த வுழவர்க்குப் பகிர்ந்து கொடுத்தல், குடியிருக்கும் வீட்டைச் சொந்தமாக்கல், குறைந்த வட்டிக்குக் கடன்கொடுத்து மெல்ல மெல்லப் பெறல், நிலத்தரத்திற்குத் தக்கவாறு வரியிடுதல், விளையாக் காலத்து வரிநீக்கல், நல்விதையும் உரமுங் கருவியும் அடக்கவிலைக்கு விற்றல், நீர்ப்பாசன ஏந்து (வசதி) செய்தல், அதிகாரிகளால் தொல்லை நேராவாறு காத்தல், சிறந்த விளைப் பிற்குப் பரிசளித்தல், பயிர்பச்சைகளை யழிக்குங் காட்டு விலங்கைக் கொல்லுதல், பூச்சி மருந்தடித்தல், விளைத்த கூலங் கட்குத் தகுந்த விலையமைத்தல், உழவர் குடும்ப நுகர்ச்சிக்கு வேண்டிய அளவை வாங்காது விட்டுவிடல், விளையுள்களை விற்பனை நிலையங்கட்கு உய்க்குமாறு போக்குவரத்து வழி களையமைத்தல் முதலியன உழவர்க்கு அரசு செய்யவேண்டிய வுதவிகளாகும். உழவரைப் போன்றே உழவுத்தொழிற் கூலியாள்களையும், குடியிருக்கும் வீட்டைச் சொந்தமாக்கல், தகுந்த கூலியேற் படுத்தல், பண்ணையாளரால் தீங்கு நேராவாறு காத்தல், கூலியாளரிடைப் போட்டியைத் தடுத்தல் முதலிய வுதவிகள் செய்து பாதுகாத்தல் வேண்டும். எளிய வுழவர்க்கும் பயிர்த்தொழிற் கூலியாளர்க்கும் அரிசிச் சோற்றினும் சிறுகூலவுணவே வலுவு தருமாதலால், புன்செய்களை நன்செயாக மாற்றுவது தவறாகும். மேலும், செல்வர்க்கும் வறியர்க்கும் பொதுவுணவான பயற்றுவகைகளும் புன்செய்களில்தான் விளைக்க முடியும். புன்செய்ப் பயிருக்கு நிலமில்லையெனின், மக்கட்டொகையைத் தான் குறைத்தல் வேண்டும். பூச்சி மருந்துகளை உழவர்க்கு விற்கும்போது, அவற்றைக் கையாளும் முறையையும் திட்டமாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும். அல்லாக்கால், மருந்தடித்த கையைச் சவர்க்காரம் (soap) அல்லது சீயக்காய் தேய்த்துக் கழுவாமல் உணவுண்டு சாகவும், நச்சு மருந்துண்ட வயல்மீன்களைச் சமைத்துண்டு மருந்தில்லாக் கொடிய நோய் கொள்ளவும் நேரும். தமிழ்நாடு மிகப்பழைய நாடாதலாலும், பல்வேறு வெளிநாட்டு மக்கள் இங்குக் குடியேறியிருப்பதனாலும், மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சி, நன்செய்களும் புன்செய்களும் மனைநில அளவாகக் குறுகியுள்ளன. இவற்றை இனிப் புதல்வருக்குப் பாகம் பிரிப்பின், பாத்தியளவாக ஒடுங்கும். அதன்மேல் அவற்றைத் துண்டுபடுத்த முடியாது. ஆதலால், ஒரு செறுவிற்குக் (acre) குறைந்த செய்களை யெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கூட்டுப் பண்ணைகளாகப் பயிரிடுவதே தக்கதாம். நிலமில்லாதவர்க்கெல்லாம் நிலங் கொடுத்தல் என்பது தவறான திட்டம். இஃது அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் போன்ற குடியேற்ற நாடுகளில்தான் ஓரளவு இயலும். இனிமேற் பிறக்கும் பிள்ளைகட்கு எங்ஙனம் பெற்றோர் தம் சிறு நிலங்களைப் பாகம் பிரித்துக் கொடுக்க முடியாதோ, அங்ஙனமே அரசும் இனிமேல் தோன்றும் உழவர்க்கும் புதிதாக நிலம் ஒதுக்க இயலாது. மேலும், ஆடுமாடு மேய்ச்சலுக்குப் போதிய இடமும் வேண்டும். இதனாலும், மக்கட்டொகை குறைய வேண்டு மென்பது தெளிவாகும். பல்வேறு பண்ணைகள் உணவென்பது, சற்று விரிந்த பொருளில், நீரும் உண்டியும் என இருவகைப்படும். இவற்றுள், முன்னது இயற்கையும் பின்னது பெரும்பாலும் செயற்கையும் ஆகும். உண்டியும், சோறும் குழம்பும் கறியும் என மூவகைப்படும். இனி, கறியும், மரக்கறி புலாற்கறி என இருவகைப்படும். சோற்றுள் கூழுங் கஞ்சியும் களியும் அப்பமும் (ரொட்டியும்) அடங்கும். சோற் றினுங் கறி வலுவுள்ளது. அது குழம்பொடு கூடியுங் கூடாதும் இருக்கும். புலாற்கறி ஒழுங்காகப் பெறுதற்கு, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, பன்றிப்பண்ணை, கோழிப்பண்ணை, வேட்டைக் காடு ஆகியவை தேவை. இவற்றிற்கு ஏராளமாக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். ஆதலால், வெற்றுநிலத்தை யெல்லாம் நிலமில்லாதவர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தல் தகாது. தகுமெனின், அடுத்த தலைமுறையில் புதிதாகத் தோன்றும் மக்களுக்கும், அவர்கட்குப் பின் தலைமுறை தோறும் தோன்றிக் கொண்டேயிருக்கும் மக்களுக்கும் நிலந் தருவார் யார்? எங்கிருந்து தருவார்? கோழியுள் வாத்து வான்கோழி முதலியனவும் அடங்கும். நாட்டுப்புறத்திலும் நகருள்ளும் நரகலைத் தின்று வாழும் பன்றிகளை வளர்ப்பவரை அரசு தண்டித்தலும், அவ் வளர்ப்பை உடனடியாக நிறுத்துதலும், வேண்டும். வெண்ணிறமான மேனாட்டுப் பன்றியினத்தைக் கிழங்கும் கொட்டையும் இட்டு வளர்க்கும் பண்ணைகளை அரசு ஊக்குவதுடன், தானும் அத் தொழிலை மேற்கொள்ளலாம். காட்டுப் பன்றியாயின் நாட்டுப் பன்றியும் நன்றாம். கோழியும் நரகலைத் தின்பதால், துப்புரவாக வளர்க்கும் கோழிப்பண்ணைகளை அரசும் பொதுமக்களும் ஊக்குதல் வேண்டும். இனி, வீட்டு விலங்கு பறவை யிறைச்சியினும் காட்டு விலங்கு பறவையிறைச்சியே சுவை மிக்கிருப்பதால், வேட்டைக் கறி எளிதாய்க் கிடைக்குமாறு வேட்டைக்காடுகளை அமைத்தல் அல்லது புதுப்பித்தல் வேண்டும். இறைச்சியாக வுதவும் சில உயிரிகள் (பிராணிகள்) காட்டிலேயே வாழும் இயல்புடையன. "முழுவுடும்பு, முக்காற் காடை, அரைக்கோழி, காலாடு'' என்பது ஒப்புநோக்கிய சுவைத் திறம் பற்றிய பழமொழி. உடும்புங் காடையும் காடு வாழுயிரிகள். "நாய்கொண்டாற் பார்ப்பாருந் தின்பர் உடும்பு'' (பழ. 87). தமிழ மருத்துவத்தில், சில இறைச்சி வகைகளும் கொடிய நோய்கட்குக் கைகண்ட மருந்தாகக் குறிக்கப்பட்டுள்ளன. எ-டு: எலும்புருக்கும் இருமலுக்குப் பச்சைப்புறா. மூலநோய்க்குப் பன்றி வார். அம்மைநோய்க்கும் பன்றி யிறைச்சி தடுப்பு மருந்தாம். இங்ஙனம் வேட்டைக்கறி இருவகையிற் பயன்படுவதால், வேட்டைக்காடுகளைப் போற்றிக் காத்தல் வேண்டும். இனி, உலக முழுதும் தொன்றுதொட்டுக் குடிப்பாகவும் குழம்பாகவும் பயன்பட்டு வருவதும், குழவிப்பருவம் முதற் கிழப்பருவம்வரை வாழ்நாள் முழுதும் ஊட்டந் தருவதும், ஆனைந்து என்னும் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் ஆகிய ஐவகையில் ஆரமுதாவதுமான ஆவின்பால், எல்லா வகுப்பார்க் கும் வேண்டியிருப்பதனாலும், குழவிக்குத் தாய்ப்பால் போல் நோயாளிக்கு முற்றுணவாக உதவுவதனாலும், நாடு முழுதும் ஆன்பண்ணைகள் நிறுவுதல் வேண்டும். இலக்கக்கணக்கான தொன் (tonnes) பாற்பொடியும் பல்லாயிரக்கணக்கான தொன் வெண்ணெயெண்ணெயும் (butter oil) வெளிநாடுகளினின்று இங்கு இறக்குமதியாகின்றன. அவை நின்று விடின், இங்குள்ள பாற்பண்ணைகளின் தரவு (supply) குன்றும். ஆதலால், ஆன்பண்ணைகள் நிறுவல் இன்றி யமையாதது. இனி, ஆன்பண்ணைகளாற் காளைகளும் பெருகுமாத லால், அரசு காளைப்பண்ணைகளும் நிறுவி, ஏழையுழவர்க்குக் காளைகளை இலவசமாகவோ எளிய விலைக்கோ கொடுக் கலாம். 2. கைத்தொழிலைப் பெருக்குதல் நெசவு தமிழ்நாட்டுப் பெருவாரித் தொழில்களுள் நெசவு ஒன்றாதலால், நூல் ஒழுங்காக நேர்மையான விலைக்குக் கிடைக்கச் செய்தல், நெசவுக் கூலியை வாழ்க்கைக்குப் போதிய அளவாக்குதல், கைத்தறியை மின்தறி யாக்குதல், உடையினம் ஒன்றிரண்டைத் தறிநெசவிற்கே உரிமை யாக்குதல், அரசியல் அலுவலரையெல்லாம் ஒரு குறித்த அளவு தறிநெசவாடையை வாங்குமாறு செய்தல், அரசியல் அலுவலகங்கட்கும் கொண் டாட்டங்கட்கும் தறிநெசவுத் துணியையே வாங்குதல், விலை யாகாது குவிந்து கிடக்கும் தறியாடைகளையெல்லாம் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல், திட்பமும் நுட்பமும் ஓவியமும் சிறந்த நெசவுவினைஞர்க்குப் பரிசளித்தல், தறிநெசவுத் தொழில் இடையீடின்றி நடைபெறுவித்தல் முதலிய செயல்களால் அரசு அதனை ஊக்குதல் வேண்டும். பண்டைத் தமிழ் நெசவாளர்போல், அரவுரி யன்ன அறுவை (பொருநர். 82-3), காம்பு சொலித் தன்ன அறுவை (சிறுபாண்.236), ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம் (பெரும் பாண். 469), ``இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்(மலைபடு. 561), பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் (புறம். 393), இன்றும் நெய்து, தறியாளர் ஆலைகளொடு போட்டியிடலாம். கதர் என்னும் கைந்நூலாடை, ஆங்கிலேயர் காலத் தேசியப் போராட்டத்தில் ஆலைநெசவிற்கும் ஆங்கிலராட்சிக் கும் எதிர்ப்பாகக் காந்தியடிகள் கையாண்ட அரசியல் வலக் காரக் கருவியாதலால், இக்காலத்திற்கு ஏற்காது. காலத்தின் அருமையை உணரச் செய்யாததும், உலகத்தோடொட்ட வொழுகலை மேற்கொள்ளாததும், அகக்கரண வளர்ச்சியைத் தடுப்பதும், பயன்பாட்டிற் குறைபாடுள்ளதுமான அவ் வாடை நெசவை அரசு ஊக்குதல் கூடாது. காந்தியடிகளைப் பின்பற்றிக் கைந்நூலாடையே யணிந்த மேனாட் சென்னை மண்டல முதலமைச்சர் பிரகாசனாரும், தம் நூலகப் பொத்தகங்கட்குப் போர்த்தப் பங்கீட்டுக்காலத்தில் 300 இணைமுழம் (yards) ஆலைத்துணியை வாங்கினாரெனின், அவ் வீராடைக்கும் இடைப்பட்ட உரன்வேறுபாட்டையறிய வேறொரு சான்றும் வேண்டுவதில்லை. கொற்றொழில் தச்சன் (மரக்கொல்லன்), கம்மி (கற்கொல்லன்), கருமான் (இருப்புக்கொல்லன்), தட்டான் (பொற்கொல்லன்), கன்னான் (செப்புக்கொல்லன்) ஆகிய ஐங்கொல்லரும் அல்லது ஐங்கம் மாளரும், ஓவியமும் பொறிவினையுங் கலந்த தொழிலாள ராவர். ஏமப்பூட்டு, துமுக்கி (gun), குண்டுக்குழாய் (cannon), சுழலி (revolver) முதலிய கருவிகளும் படைக்கலங்களும் செய்யக்கூடிய கொல்லர் இன்றும் நம்மிடையுள்ளனர். அவரைப் பொறி வினையிற் பயிற்றினால், நாளடைவில் மேலையர் போலப் புதுநாகரிகக் கருவிகளையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றலராவர். பொற்பணியில் தலைசிறந்தவர் பண்டைத் தமிழப் பொற் கொல்லர். மத்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம்பு யாப்புற வில்லை யென (சிலப். 16 : 117-22) நுண்வினை சிறந்திருந்தது கண்ணகி சிலம்பு. வாழ்நாள் நீடிக்குமாறு மக்கட்கு இன்பந்தருவனவற்றுள் அழகும் ஒன்றாகும். மக்களழகை இயற்கையாக மிகுப்பது பொன்னிறமும் வெண்ணிறமும்; செயற்கையாக மிகுப்பன ஆடையணிகள். ஆடவர்க்கு ஆண்மையும் பெண்டிர்க்கு அழகும் பெரும்பாலும் சிறப்பியல்புகள். பெண்டிர் மெல்லியலா ராதலால் (weaker sex), ஆடவரை மயக்கவும் வயக்கவும் வல்ல அழகை அவர்க்கு அரணாக இறைவன் அமைத்திருக்கின்றான். அதனால், பெண்டிர்க்கு ešyh®(fair sex) என்றும் மாதர் என்றும் பெயர். (மா = அழகு. மாது = அழகுடையவள்.) அழகுடைமையே பெண் என்ற பெயர்க்கும் கரணியமாகும். (பெட்டல் = விரும்புதல். பெள் - பெண் = விரும்பப்படுபவள்.) குளிர்நாட்டார் வெள்ளையர்; வெப்பநாட்டார் கருப்பர்; இடை நிகர் நாட்டார் செம்மையர் அல்லது பொன்மையர். வெண்மையும் பொன்மையும் செம்மையும் அழகையும், கருமை அழகின்மையையும், மிகுத்துக் காட்டும். எல்லாப் பெண்டிரும் அழகியரல்லர். பெண்டிரை நல்லார் அல்லது மாதர் என்றது பெரும்பான்மை பற்றியே. இயற்கையழகும் நன்னிறமும் இல்லாப் பெண்டிர்க் கெல்லாம், ஆடையணிச் செயற்கையழகு இன்றிய மையாததெனினும் பொருந்தும். தென்னிந்தியப் பெண்டிருள், மழைவளம் மிக்க மலையாள நாட்டு மகளிர் தவிர ஏனைய ரெல்லாம் பொதுவாக நிறங்குன்றியவரே. அவருள்ளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெரும்பாலும் சிறிதும் பெரிதும் கரியராவர். அழகில்லாப் பெண்டிர்க்கு அழகூட்டுவதற்கு, அழகிற்கு இருப்பிடமான முகத்தை யணிசெய்வதும், இரவும் பகலும் என்றும் அழியாது உடம்பின் மேலிருப்பதுமான அணியே, ஆடையினுஞ் சிறந்ததாகும். ஆதலால், தங்கக் கட்டுப்பாட்டினால் நடுவணரசு தொகுத்துள்ள குன்றுபோன்ற பொற்குவையினின்று, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வோர் ஏழைப்பெண்ணிற்கும், காதணியும் கழுத்தணியுமாக மும்மூன்று சேரை (pound) நல்கின், மிக நன்றாம். வெண்ணிற மான மேலைநாட்டுப் பெண்டிர்க்கு, அணி தேவையில்லை; ஆடையே போதும். ஆயின், கருநிறமான இந்தியப் பெண்டிர்க்கு அணி மிகமிகத் தேவை. இதன் உண்மையைக் காட்சியளவே காட்டும். ஆதலால், இதை மறுப்பவர் எப்பாலரேனும் பிறரால் ஏவுண்டவரே யாவர். பண்டை நல்லிசைப் புலவரெல்லாம் பெண்டிரைப் பெரும்பாலும் அணியிழை, ஆயிழை, சேயிழை, திருத்திழை யென அணிப்பெயராலேயே குறித்திருப்பதையும், தெய்வப் புலமைத் திருவள்ளுவரும் கனங்குழை மாதர், ஒண்டொடி, மாணிழை, இலங்கிழை என்னுஞ் சொற்களை ஆண்டிருப் பதையும் நோக்குக. ஏழைப் பெண்டிர்க்குப் பொன்னளிப்பதைச் சிலர் நெறிதிறம்பியதாகக் கருதலாம். நிலம் மிக்கவரிடமிருந்து பெற்ற மிகை நிலத்தை நிலமில்லாதவர்க்குப் பகிர்ந்து கொடுப்பது போன்றதே பொலம்(பொன்) மிக்கவரிடமிருந்து பெற்ற மிகைப் பொலத்தைப் பொலமில்லாத பெண்டிர்க்குப் பகிர்ந்து கொடுப்பதும். இனி, தங்கக் கட்டுப்பாட்டினால் பொற்கொல்லர் பலர் தம் தொழிலை யிழந்திருப்பதாகத் தெரிகின்றது. மக்கட்டொகை பெருகப் பெருகத் தொழிலும் பல்க வேண்டும். இதற்கு மாறாக இருந்த தொழிலும் நீங்கிவிடுவது, பொருளாட்சி நெறி முறைக்கும் கூட்டுடைமைக் கொள்கைக்கும் முற்றும் முர ணாகும். ஆதலால், பொற்கொல்லர் தாம் இழந்த தொழிலை மீளப்பெறுமளவு தங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்தல் வேண்டும். வீடு, நிலம், பணம், நகை, தட்டுமுட்டு, ஊர்தி முதலிய னவாகச் செல்வம் பலவகைப்படும். இக்காலத்தில் ஒரு சிறு குடும்பம் வதியக்கூடிய நாலறையும் அடுக்களையும் சலக்கப் புரையும் (latrine) கொண்டே வீடே, அரையிலக்கம் உருபா பெறுகின்றது. அதற்குமேல் நிலம் பணம் முதலியனவு மிருப்பின், நாலைந்திலக்கத்திற்கு மேலும் ஆகிவிடும். மேனாட்டினின்று பொற்காசு வரத்தில்லாத இக்காலத்திற் பொற்கொல்லர் முதலீடெல்லாம் நகையே. ஆதலால் ஒரு பொற்கொல்லன் குடும்பம் பிழைக்குமளவு வருவாய் வரத்தக்க தொழில் ஒழுங் காய் நடக்குமாறு, அவன் நகை முதலீட்டு வரம்பை உயர்த்துதல் வேண்டும். தோட்டி வேலை தோட்டிகட்குத் தெருக்கூட்டுதல், குப்பை வாரிக் கொண்டு போய்க் கொட்டுதல், விளக்கேற்றுதல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல் ஆகிய துப்புரவான பணிகளே யிருத்தல் வேண்டும். வீடு தொறும் சலக்கப்புரையில் நரகலை வாருவதும், அதைப் பலர்முன் முறத்திற் சுமந்து கொண்டுபோய்ப் பறைகளிற் கொட்டுவதும், அப் பறைகளைச் சரக்கியங்கிகளில் (lorries) ஏற்றிக்கொண்டு போய்க் குழாய் நீரடிப்பதுமான அருவருப்பான வேலைகளை அடியோடு நீக்குதல் வேண்டும். இன்றேல், FKfha¤(social) துறையில் அவர் ஒருகாலும் முன்னேற முடியாது. அவரைப் பொறுத்த வரையில் தீண்டாமையுந் தொடரும். மாந்தன் நரகலை மாந்தனே வாரிச் சுமக்கச் செய்வது, நாகரிக மாந்தனுக்கும் நாகரிக அரசிற்கும் கடுகளவுந் தகாது. ஒவ்வொரு வீட்டிலும் அடிப்புச் (flush-out) சலக்கப்புரையே யன்றி, எடுப்புச் சலக்கப்புரை யிருத்தல் கூடாது. குடிசைத் தொழில்கள் தொழிற்சாலைகளில் அமர்த்தம் பெறாத தொழிலாளி களெல்லாம், தத்தம் குடிசையிலேயே தமக்குத் தெரிந்தனவும் மக்கட்குப் பயன்படுவனவும் உடனுடன் பணம் பெறுவனவு மான தொழில்களைச் செய்யுமாறு, அரசு அவர்கள் குடிசை களை அவர்கட்குச் சொந்தமாக்கி, அவரவர் தொழிலுக் கேற்ற முதலீடுஞ் செய்தல் வேண்டும். தொழிற்சாலையிடம் தொழிற்சாலைகள், மக்கள் குடியிருப்பிற்கும் கல்விநிலை யங்கட்கும் விளைநிலங்கட்கும் குறைந்தது ஒருகல் தொலைவிற் கப்பால் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், அவற்றினின்று வெளிவரும் தீநீராலும் நச்சுப் புகையாலும் நாற்றக்காற்றாலும் மக்கள் நலங்கெடும்; மரஞ் செடி கொடிகள் படும்; பயிர் பச்சைகள் விளையா; ஆறு, ஏரி, கிணறு முதலிய நன்னீர் நிலைகளெல்லாம் உவர்நீராக மாறிவிடும். தோற்பதனீட்டுச் சாலைகள் ஊரருகிலிருப்பவற்றையும் அளவிற்கு மிஞ்சின வற்றையும் உடனே அகற்றிவிடல் வேண்டும். ஆலைக் கழிவு நீரைத் தூய்மைப் படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் ஒன்றியம் (Labour Union) ஒரு தொழிலுக்கு ஒரே தொழிலாளர் ஒன்றியம் இருத்தல் வேண்டும். அதுவுங் கட்சிச் சார்பற்றதாயிருத்தல் வேண்டும். தொழிலாளர் தொழிற்சாலை யுரிமையாளரையும் மேலாண்மையையும் நன்கு மதித்து, அவர்க்கு அடங்கி நடத்தல் வேண்டும். நன்றியறிவு காட்டுதலும் நன்று. வாழ்க்கைக்குப் போதுமான மாதச் சம்பளமும் முறைப் படி யுரிய மாதப் படிகளும் (allowances), ஆண்டிறுதி நன்னரும் (Bonus), தொழிலாளர் கேட்கலாம். ஆயின், நிறுவனத்திற்கு இழப்புண்டாக்கி அதைச் சாத்திவிடும் அளவிற்குக் கேட்டல் கூடாது. சிறு தொழிற் சாலைகளைச் செல்வவளம் மிக்க பெருந் தொழிற் சாலைகளுடன் ஒப்பு நோக்குதலுந்தகாது. கூட்டு டைமை நாடாயின், தொழிற்சாலைகளெல்லாம் அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும். அப்போது ஓரியலான சம்பளத் திட்டம் கையாளப்படும். தனியுடைமை நாடுகளில், நிறுவனத் தின் செல்வநிலைக்குத் தக்கபடி, தொழிலாளரும் ஒத்துப் போதல் வேண்டும். தக்க கரணியம் இருந்தாலன்றி வேலைநிறுத்தம் செய்தல் கூடாது. மேலாண்மையொடு ஏதேனும் பிணக்கு நேரின், முதற் கண் தொழிற்றுறை அலுவலரிடத்தும், பின்னர்த் தொழிற் றுறையமைச்சரிடத்தும் முறையிடல் வேண்டும். அவ்விருவ ராலும் தீராவிடின், பின்னர்ப் பொதுமக்களிடம் முறையிடுதல் போல் முந்நாட்குமுன் தெரிவித்து, அமைதியாகவும் வன்செய லின்றியும் தனிப்பட்டவருடைமைக்கும் அரசுடைமைக்குஞ் சேதம் விளைக்காதும் ஊர்வலமுங் கூட்டமும் நடத்திவரல் வேண்டும். சிலநாட்குள் ஏதேனும் ஓர் ஒழுங்கு ஆகத்தான் செய்யும். சாலைப்போக்குவரத்திற்கும் இருப்புப் பாதைக்கும் உரிய தொழிலாளர் ஒன்றியங்களாயின், கல்விச்சாலைகள் பணி செய் யும் நாட்களில், சிறப்பாகத் தேர்வுநாட்களில், வேலை நிறுத்தம் செய்தல் கூடாது. வேலைநிறுத்தக் கிளர்ச்சி வெற்றி பெறப் பொதுமக்கள் துணையுங் கண்ணோட்டமும் இன்றியமையாத தாதலின், போக்கு வரத்தைத் தடுத்தும் இயங்கும் ஊர்திகள்மேற் கல்லெறிந்தும் அவர் வெறுப்பையும் பகைமையையும் தேடிக் கொள்ளல் கூடாது. அரசுடைமைக்குச் சேதம் விளைப்பின், அதற்கு அரசு பொது மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் ஈடு செய்து கொள் ளும். அது கிளர்ச்சியாளரையும் ஓரளவு தாக்கும். ஆதலால், அரசிற்கு வீணாகத் தொல்லையையும் எரிச்சலையும், பொது மக்கட்கு வெறுப்பையும் இழப்பையும், வன்செயலால் உண்டு பண்ணுவது, அறியாமையையும் அநாகரிகத்தையுமே காட்டும். பொறிவினை நீராவி வலிமையும் மின்னாற்றலுங் கண்டுபிடிக்கப் பட்டபின், மேனாடுகளிலெல்லாம் கைத்தொழில்கள் பொறித் தொழில்களாக மாறிவிட்டன. சப்பான், சீனம் முதலிய கீழ்நாடு களும் அவற்றைப் பின்பற்றிவிட்டன. இந்தியாவும் அத்தொழின் முறையை மேற்கொண்டால்தான் முன்னேறவும் இனிதுவாழ வும் முடியும். ஆயின், மக்கட்பெருக்கமும் வறுமையும் இதற்குப் பெருந்தடையாயுள்ளன. ஆதலால், சிற்றூர் வதிவையும் எளிய வாழ்க்கையையும் கைவினையையுமே காந்தியடிகள் போற்றி யுரைத்தார். இதன் தவற்றையுணர்ந்த சவகர்லால் நேரு, மாந்தனின் மகமையும் வெற்றியுமாயிருக்கின்ற அச் செய்தியே, பழிக்கவும் தளர்ச்சியூட்டவும் படுகின்றது. மனத்தை வருத்தி அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் இயற்கைச் சுற்றுச்சார்பு விரும்பத்தக்கதாகக் கருதப்படுகின்றது. இந்நாளை நாகரிகம் தீங்கு நிறைந்தது. ஆயின், அதே சமையத்தில், அது நன்மை நிறைந்ததாகவும் அத் தீங்குகளையெல்லாம் நீக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவும் உள்ளது. அதை வேரறுப்பது, அவ்வாற்றலை அதினின்று அகற்றுவதும் மந்தமும் உயிரற்றதும் இரங்கத் தக்கதுமான ஒரு நிலைமைக்குத் திரும்புவதும் ஆகும் என்று கடிந்தெழுதினார். அதையே அவர் மகளாரான இந்திராகாந்தி யம்மையாரும் இன்று கடைப்பிடிக்கின்றார். பொறிவினைத் தொழில் இறைவனருளால் மாந்தனுக்கு ஏற்பட்ட அறிவுவளர்ச்சியின் பயனே. இதைப் புறக்கணிப்பது, மாந்தனை அஃறிணைப்படுத்துவதும் இறைவனை நேரல்லா வழியிற் பழிப்பதுமாகும். விரைவு, அழகு, உறுதி, நுட்பம், ஏமம் (பாதுகாப்பு), செயலெளிமை, அறிவுவளர்ச்சி, முன்னேற்றம், பணியாளர் சின்மை முதலிய பொறிவினைப் பயன்களைக் கைவினையிற் காணமுடியாது. கைக்கடிகாரம், ஒளிப்படம் (photograph), திரைப்படம், ஒலிப்பதிவான், தொலைவரியடிப்பான், தொலைபேசி முதலிய பல்வேறு செய்பொருள்களும் கருவிகளும் பொறிகளும், இயங்கி (motorcar), வானூர்தி முதலிய பல்வகை யூர்திகளும், கைவினையிற் செய்ய முடியாது. பல்வேறு வடிவிலும் அளவிலும் அழகும் தெளிவுமுள்ள முத்துப்போன்ற எழுத்துகளை ஒழுங்கான வரிசைகளாக அடுக்கிய பதினாறு பக்கப் படிவங்களை, ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்காக அடிக்கும் அச்சுப்பொறிகளில்லாவிடின், ஆயிரக்கணக்கான ஓவிய எழுத்தாளர் கூடி ஆண்டுக்கணக்காக எழுதினும், அச்சுப் பொத்தகம் போன்றதொன்று ஆக்க வொண்ணுமோ? பொறிவினையைத் தூற்றிக் கைவினையைப் போற்றுபவர், ஏன் இயங்கிகளிலும் தொடர்வண்டிகளிலும் வானூர்திகளிலும் வழிச்செல்ல வேண்டும்? திருநெல்வேலியிலிருந்து தில்லிக்கு மாட்டுவண்டியிலுங் குதிரைவண்டியிலுஞ் சென்றால், ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் பிழைப்பார்களே! பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் பரிசலிலும் படகிலுஞ் சென்றால், பல்லாயிரக் கணக்கான பரவருங் கரையாரும் பிழைக்கலாமே! எல்லா வகையிலும் பொறிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைப் பழிப்பவர், ஏமாற்றுக்காரருள் முதல் வகுப்பினரே யாவர். பொறிவினைக்கு மக்கட் பெருக்கந் தடையெனின், மக்கட் குறைப்பேயன்றிப் பொறிவினைக் குறைப்பு மருந்தாகாது. உலகிற் பொறிவினையில்லாவிடின், இந்தியாவிற் சுரங்கவெள்ளம் போன்ற ஓர் இயற்கை யிடுக்கண் நேரின், அமெரிக்காவினின்றும் இரசியாவினின்றும் ஒரே நாளில் உதவிப்பொறிகள் வர வியலுமோ? 1853வரை சப்பான் (Japan) மேனாடுகளொடு முற்றுந் தொடர்பற்றிருந்தது. அவ்வாண்டு பெரி (Perri) என்னும் கலத் துறை அதிகாரி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் (U.S.A.) அரசால் ஒரு சிறு கலப்படையுடன் சப்பானுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு ஒன்றிய நாடுகள் சப்பானொடு ஓர் உடன் படிக்கை செய்துகொண்டன. அதனால் இரு நாடுகட்கும் உறவு ஏற்பட்டது. சப்பானியர் அவ்வுறவைப் பயன்படுத்திக் கொண்டு பொறிவினைப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தனர். அதன் விளைவாக, சப்பானும் இன்று ஒரு வல்லரசாக விளங்குகின்றது. உலகில் விரைவுமிக்க மின்தொடர் வண்டியும் அங்கு இயங்குகின்றது. சப்பானியர் போன்று, இந்தியரும் பொறியாக்கப் பயிற்சி பெறின், இந்தியா விரைந்து ஒரு வல்லரசாகி விடும். கோவைப் புதுப்புனைவாளர் (inventor) கோ. துரைச்சாமி நாயக்கரை (G.D. நாயுடு) நடுவணரசும் ஊக்கவில்லை: தமிழ் நாடும் போற்றவில்லை, தம் வயிற்றெரிச்சலால் தம் புதுப் புனைவுப் பொறிகளைச் சென்னையிற் கொண்டுவந்து சுட்டெ ரித்தார். அரசு ஊக்கியிருப்பின், அவரும் உலகுபோற்றும் ஓர் எடிசனாகியிருப்பார். அதனால், தமிழ்நாடும் நடுவணரசும் மட்டுமன்றி உலகும் பெரும்பயன் பெற்றிருக்கும். அதிகாரிகளின் குலவெறியும் கட்சி வெறியும் தன்னலமும் செருக்கும் அழுக் காறும் அவரைக் கெடுத்தன. சுரண்டையைச் சேர்ந்த ஏகாம்பரம் என்னுந் தமிழர், எண்கதிர் ஒருங்கேயியங்கக்கூடிய அம்பர்ச்சருக்கா என்னும் (தம் பெயர் கொண்ட) இராட்டையைப் புதுப்புனைந்தார். இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், துமுக்கி (gun) செய்யக் கூடிய ஒரு கொல்லர் ஆம்பூர் வட்டச் சாணாங் குப்பத்திலும், இந் நூற்றாண்டு நடுவில் அலிகார் பூட்டினுங் காடிரசு (godrej) பூட்டினுஞ் சிறந்தது செய்யக் கூடிய ஒரு கொல்லர் மன்னார் குடியிலும் இருந்தனர். இங்ஙனம் ஆற்றல்பெற்று ஆங்காங்கிருப்பவரையெல் லாம், அரசு தேடிக் கண்டுபிடித்து மேனாடுகளிற் பொறியாக்கப் பயிற்சிக் கனுப்புவது சாலச் சிறந்ததாகும். பொறிவினையால் மக்கட்கு மட்டுமன்றி மாடு, கழுதை, குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம், யானை முதலிய விலங்கு கட்கும் நன்மையுண்டாகின்றது. இயற்கையாகக் காட்டில் முழுவுரிமையுடன் மகிழ்ந்துலவித் திரியும் விலங்குகளைப் பிடித்துச் சிறைப்படுத்தி, இரவும் பகலும் வேலைவாங்கி, விடுமுறையும் விடுதலையுமின்றி, வாழ்நாள் முழுதும் வருத்து வதால் அவற்றிற்கு ஏற்படக்கூடிய மன நிலையை, நாள்தோறும் கடுமையாயுழைத்து இட்டவுணவையுண்ணும் வாழ்நாட் கடுஞ்சிறையாளிதான் உணர முடியும். அவற்றிற்கு வாயுமில்லை; ஒன்றுகூட வழியுமில்லை. யானை தவிர ஏனையவற்றிற்குக் கொடுமையை எதிர்க்கும் வலியுமில்லை. இந்தியா மதங்கட்கும் அருளறத்திற்கும் உலகப் புகழ் பெற்றது. பல விலங்குகள் அல்லது அவற்றின் வடிவங்கள் தெய்வமாக இந்தியரால் வணங்கவும்படுகின்றன. ஆவின் நல் வாழ் வொன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டமு முள்ளது. ஆயினும், சில விலங்குகள் படும்பாடும் கெடுங்கேடும் நீங்க வழியில்லை. மேனாட்டார், அருள்பூண்டு செய்யாவிடினும், பொறி வினையால் இழுவை விலங்குகட்கும் சுமை விலங்குகட்கும் செய்துள்ள நிலையான விடுதலை, அளவிடுந் தரத்ததன்று. இந்தியாவில் அவற்றின் இனம் இருக்கும் நிலைமையை யுணர்த்த, அவற்றின் கழுத்துப் புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். 3. வாணிகத்தை வளர்த்தல் பொருள் விலையேற்றம், பெரும்பாலும் மொத்தவிலைஞர் பதுக்கத்தாலும் கொள்ளையடிப்பாலும் கள்ள விற்பனையா லுமே நேர்கின்றது. பொதுவாக போர், விளையாமை, மழை பெய்யாமை, வெளிநாட்டினின்று வரத்துக் குறைவு, போட்டி யின்மை முதலிய சமையங்களை இதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய சமையங்களில் அரசு விழிப்பா யிருந்து அவர்மேல் ஒரு கண்வைத்துத் தவறுகண்டு தண்டிப்ப துடன், கூட்டுறவு விற்பனை நிலையங்களையும் நேர்மைவிலைக் கடைகளையும் நாடுமுழுதும் நிறுவுதல் வேண்டும். அரசு வரவுசெலவுத் திட்டம் வகுக்கும்போது சில பொருளினங்கள் மீது வரி மிகுத்தலும், பொருளின் விலை யேற்றத்திற்குக் கரணியமாகும். வெள்ளிரும்புத் (Stainless steel) தகட்டின்மீது நடுவணரசு வரி மிகுத்திருப்பது நன்றன்று. ஒரு பொருளை விற்பவன் அதன் கொள்விலைமேல் ஊதியம் (gain) வைத்தே விற்பான். ஆதலால், ஒரு பொருளின் விலைகுறைப்பு முயற்சியை, அது விளையும் அல்லது செய்யப் படும் இடத்திலேயே தொடங்குதல் வேண்டும். ஆகவே, விளைப் பான், விற்பான், அரசு ஆகிய மூவரும் சேர்ந்தே, பொருள் விலையிறக்கப் புதிரை விடுத்தல் வேண்டும். உரம், கருவி, வரி, பணியாட்கூலி என்னும் நால்வகைச் செலவோடு தன் குடும்ப வாழ்க்கைச் செலவையுஞ் சேர்த்தே, உழவன் தன் விளைப்பிற்கு விலை குறிப்பான். அது அளவிற்கு மிகாவாறு அரசு கவனித்தல் வேண்டும். விளைப்பானுக்கும் விற்பானுக்கும் இடையில் மொத்த விலைஞன் அல்லது அரசு தவிர வேறோர் இடைஞனும் இருத்தல் கூடாது. அரத்தி (apple) போன்று வரவர விளைவு மிகுந்துவரும் ஒருசில பண்டங்கள் தவிர, ஏனைப் பொருள்களெல்லாம் பெரும்பாலும் ஒரே விழுக்காட்டளவிலேயே விலையேறி வருகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்க நிலைமையை அலகாகக் கொள்ளின் இருபது மடங்கும், நடுவண் நிலைமையை அலகாகக் கொள்ளின் பதின் மடங்கும், இன்று பொருள்விலை யேறியுள்ளது. பொருள் விலையேற்றம் என்பது உண்மையிற் பணமதிப் பிறக்கமேயன்றி வேறன்று. இன்று பத்து மடங்கு விலையேறி யுள்ள தெனின், பத்து மடங்கு சம்பளமும் உயர்ந்துள்ளது. இவ் வுயர்த்தத்தை வணிகரும் தொழிலாளரும் கூலிக்காரரும் உடனே பெற்று விடுகின்றனர்; அரசியல் அலுவலரும் ஆசிரியன்மாரும் பல்லாண்டு இடர்ப்பட்டபின் கிளர்ச்சி செய்து பிந்திப் பெறுகின்றனர். இதுவே வேற்றுமை. செலவிற்குச் சம்பளம் பற்றாதபோது, நேர்மையில்லாதவர் கையூட்டு வாங்க நேர் கின்றது. ஆதலால், விலையேற்றத்தை ஒரேயடியாய்த் தவிர்த்து விடுவதே தக்கதாம். அல்லாக்கால், பொருள்விலை யேறிக் கொண்டே போகவும், அடிக்கடி சம்பளத்திட்டக் குழுக்கள் (Pay Commissions) அமைக்கப் படவுமே நேரும். இனி, பழக்கடைகளில், பச்சைமுந்திரி (திராட்சை), உருளையன் (சப்போட்டா), மேலை (சீமை) யிலந்தை முதலி யவை வாங்குவார்க்குப் பயன்படாவாறு காய்ப்பதத்திலும், சில காய்களும் கனிகளும் அழுகிய நிலையிலும் விற்கப்படுதலையும் தக்க அதிகாரிகளைக் கொண்டு ஆய்ந்து அரசு தடுத்தல் வேண்டும். ஒரு நாடு செல்வஞ் சிறப்பது வாணிகத்தினாலேயே யாத லால், நானில இயற்கை வளத்தையும் பல்தொழிற் செயற்கை வளத்தையுந் தொகுத்து, நிலவாணிகத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைகளமைத்தும், நீர் வாணிகத்திற்குத் துறைமுகங்களும் கலங்களும் கட்டியும், ஏற்றுமதியைப் பெருக்கி யும் இறக்குமதியைச் சுருக்கியும், தலைசிறந்த வணிகர்க்கு எட்டிப் பட்டங் கட்டியும், இருவகை வாணிகத்தையும் அரசு போற்றி வரல் வேண்டும். 4. கல்வியைப் பரப்பலும் உயர்த்தலும் துவக்கக் கல்வி ஓர் உண்மைக் குடியரசு நாட்டில் அல்லது கூட்டுடைமை நாட்டில் நூற்றுமேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்தவராயிருக்க வேண்டு மாதலின், ஐந்தகவைக்கு மேற்பட்ட எல்லாப் பிள்ளைகட்கும் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியளித்தல் வேண்டும். காரைக் கட்டடங்களில் இடமில்லாவிடின், அவற்றைக் கட்டும்வரை கூரைக் கூடங்களிற் பள்ளிகளை நடத்துதல் வேண்டும். இது மேற்கல்வி நிலையங்கட்கும் ஒக்கும். ஏழைப் பிள்ளைகட் கெல்லாம் பள்ளிகளில் நண்பகலுணவும் அளித்தல் வேண்டும். பொத்தகம் வாங்க இயலாதவர்க் கெல்லாம் பொத்தகமும் அளித்தல் வேண்டும். சேர்ப்புப் படிவங்களிலும் பதிவேடுகளிலும் பெற்றோரின் தொழில் தவிர, பிறப்புப்பற்றிய குலப்பெயர்க் குறிப்பு இருத்தல் கூடாது. எல்லாரும் ஓரினம் என்னும் சமவுணர்ச்சியே பள்ளிச் சூழலில் நிலவவேண்டும். இங்கு மாணவ மாணவியர்க்குச் சொன்னதே ஆசிரியர்க்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழியும் கற்பிக்கப்பட லாம். ஆயின், துவக்கக்கல்வி முழுவதும் தமிழ் வாயிலாகவே நிகழ்தல் வேண்டும். நாலாண்டு முடிவில் எல்லாப் பிள்ளைகளுந் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருப்பர். ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுத் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழியே கற்பிக்கப்படலும் கல்விவாயிலா யிருத்தலும் வேண்டும். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும், அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும். தெலுங்கு நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் தெலுங்கையும், மராத்தி நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் மராத்தியையும், இந்தி நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் இந்தியையுந்தான் கற்றல் வேண்டும். இங்ஙனமே ஏனைமொழி யார் மக்களும். அல்லாக்கால், மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாகும். பிறமொழி நாட்டில் வாழும் ஒரு வகுப்பார் அல்லது கூட்டத்தார், தம் மக்கட்குத் தம் தாய்மொழியே கற்பிக்க விரும்பின், அவரைத் தம் தாய்மொழி நாட்டிற்கே அனுப்பி விடுதல் வேண்டும். சிறுபான்மையர் உரிமையைப் பேணல் என்பது, அனைத் திந்தியப் போங்கான ஆங்கிலோ இந்திய மக்கட்கு ஆங்கிலக் கல்வி கற்பித்தல் போன்றதேயன்றி, நாட்டுவாரியான சிறு பான்மை மக்கட்கெல்லாம் அவரவர் தாய்மொழியைக் கற்பித் தலன்று. நாடுதோறும் சிறுபான்மையர்க் கெல்லாம் அவரவர் தாய்மொழியையே கற்பித்தல் வேண்டுமெனின், நீலமலை யிலுள்ள படகர், கோத்தர், துடவர், இருளர் முதலியோர்க்கும், ஆனைமலையிலுள்ள காடர், மலசர், மலையரையர், முதுவர் முதலியோர்க்கும், பிற மலைகளிலுள்ள பிறர்க்கும், அவரவர் தாய்மொழியாகிய கொடுமொழியிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். அது கூடாமையின், இந்திய வொன்றிய வுறுப்பாகிய பதினான்மொழி நாடுகளிலும் உள்ள பிறமொழிச் சிறுபான்மையர்க்கும், அவரவர் மொழியிற் கற்பித்தல் கூடாதென்க. துவக்கக் கல்வி முடிந்தபின், பாதிப்பேர் தொழிற்பயிற்சி பெறலாம்; மீதிப்பேர் நடுத்திறப் பள்ளிகளிற் சேரலாம். நடுத்திறப் பள்ளிக் கல்வியிலிருந்து பல்வகைப்பட்ட கல்லூரிக் கல்வி வரையும், இருமொழிவாயிற் கல்வி இருக்கலாம். மேற்கல்வி கல்லாதவர், வெளிநாடு செல்லாதவர், ஆங்கிலங் கற்கும் ஆற்றல் இல்லாதவர் ஆகிய மூவகையாரும் தமிழ்வாயிற் கல்வியையும், ஏனையோரெல்லாம் ஆங்கிலவாயிற் கல்வியையும் மேற் கொள்ளலாம். இங்குத் தமிழ்வாயில் என்றது தமிழ்நாட்டை நோக்கி. ஏனை நாடுகளில் அவ்வந் நாட்டுத் தாய்மொழியே இரு கல்விவாயில்களுள் ஒன்றாகும். உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும், மாணவ மாணவியர் தெரிப்புப் பாடங்களைத் தத்தம் திறமைக்கும் மனப்பான்மைக்கும் எதிர்காலத்திற் செய்ய விரும்பும் தொழி லுக்கும் ஏற்றவாறே தெரிந்து கொள்ளல் வேண்டும். வேறு பாடவகுப்பில் அவர் சேரவும், தலைமையாசிரியரும் முதல்வரும் அவரைச் சேர்க்கவும் கூடாது. எல்லா மாணவர்க்கும் பொதுக் கலைக் கல்லூரிகளில் இடந்தர வேண்டும். தகுதியுள்ளவரையே கையூட்டும் நன்கொடையும் பெறாது சேர்த்தல் வேண்டும். பள்ளியிறுதித் தேர்வில் தவறியவர்க்கும் குறைந்த மதிப் பெண் வாங்கியவர்க்கும் வெவ்வேறு கைத்தொழிற் பயிற்சியளித் தல் வேண்டும். நாட்டிற் பிறந்த எல்லாரும் வாழவேண்டுமாத லால், தாமாக ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்ளாத வர்க்கெல்லாம், அரசே அவரவர் திறமைக்குத் தக்கவாறு பயிற்சியளித்துப் பணியிலும் அமர்த்த வேண்டும். கல்லூரிகளில் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழி யிலும் மாணவர் மன்றம் இருக்கலாம். ஆயின், கட்சிச்சார்பை அறவே விலக்கல் வேண்டும். அவ்வம் மொழியறிவாற்றலில் தலைசிறந்த மாணவரே மன்றத் தலைவராதல் வேண்டும் இன்று ப.மு.வ. (P.U.C.) வரை எல்லா மாணவர்க்கும் இலவசக் கல்வியுள்ளது. ஏழை மாணவர்க்கெல்லாம் மேற் கல்வியும் இலவசமா யிருக்கலாம். கூட்டுடைமை நாடாயின், எல்லாக் கல்வியும் எல்லா மாணவர்க்கும் இலவசமாயிருக்கும். ஒரு பாடவகுப்பிற் பலர்க்கு இடமில்லாவிடின், புதுப் பிரிவுகளைத் தோற்றுவித்தல் வேண்டும். அங்ஙனமே, ஏற்கென வேயுள்ள கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்க்கு இடமில்லாவிடின் புதுக் கல்லூரிகளைத் தோற்றுவித்தல் வேண்டும். பள்ளிகளும் கல்லூரிகளும் கல்வி யாண்டுத் தொடக்கத் தில் திறக்குமுன்னரே, பாடப்பொத்தகங்க ளெல்லாவற்றையும், எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை, கருத்துப்பிழை, இலக்கணப்பிழை ஆகிய ஐவகைப் பிழையுமின்றி அச்சிட்டு, அணியமாய் வைத்திருத்தல் வேண்டும். அவற்றை ஏழை மாண வர்க்கெல்லாம் இலவசமாகக் கொடுத்து ஏனை மாணவர்க்கு அடக்க விலைக்கு விற்கவேண்டும். ஆசிரியரும் மாணவரும் தம் பெயருக்குப் பின் குலப்பட்டங்களைச் சேர்த்தல் கூடாது. அப் பட்டங்கள் மக்களி னத்தைப் பல்வேறு உயிரினங்களாகக் காட்டி, அவர்க்குட் பிரிவினையும் பகைமையும் உண்டுபண்ணுவதனாலும், ஆசிரியன் தன்னை மாணவனினும், மாணவன் தன்னை ஆசிரியனினும் பிறப்பில் உயர்ந்தவனாகவோ தாழ்ந்த வனாகவோ கருத இடந்தருவதனாலும், பிற நாடுகளிற்போல் தொழில்பற்றி யமையாது பிறப்புப்பற்றி யமைவதனாலும், அவற்றை வழங்குவது கல்விக்கு முற்றும் முரணாகும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், போதிய அளவு மாணவர் இருக்கைகள், திறமையுள்ள ஆசிரியர், ஆய்வுக்களம் (laboratory), நூலகம் (library), கல்வித்திரையரங்கு, கூட்டுறவுப் பொத்தகசாலை, குடிநீரறை, உண்ணகம், ஆடிடம் (playground), சலக்கப்புரை (latrine), மாணவர் விடுதி முதலிய ஏந்துகள் (வசதிகள்) இருத்தல் வேண்டும். ஆண்டுதோறும் மருத்துவ நோட்டம் (Medical examination), கல்வியதிகாரியின் உண்ணோட் டம் (Inspection), புறப்போக்கு (Excursion) ஆகியவை ஆண்டி டையே நிகழ்தல் வேண்டும். காலாண்டுத் தேர்வும் அரையாண்டுத் தேர்வும் ஆண்டுத் தேர்வும் நிகழ்ந்தபின், முறையே, ஒரு கிழமையும் இரு கிழமையும் ஒரு மாதமும் விடுமுறையும் இருத்தல்வேண்டும். கல்லூரி யாயின், வேனில் விடுமுறை இருமாதமும் மேலும் இருக்கலாம். முத்தேர்வுகட்கும் இடையே, நறுக்காய்வு (slip-test) அல்லது திடுந்தேர்கை (surprise test) மாதந்தொறும் இருப்பது நன்று. மாணவர்க்குக் கட்டொழுங்கு (discipline) இன்றியமையா தது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். பெற்றோர்க் கடங்காத பிள்ளைகளும் செல்லமாய் வளரும் பிள்ளைகளும் கல்வி நிலையங்களில்தான் திருந்தவேண்டும். அங்குந் திருந்தா தவர் அரசு தண்டிப்பினுந் திருந்துவது அரிது. பொதுவாகக் கிறித்தவக் கல்வி நிலையங்களில் அவற் றுள்ளும் சிறப்பாக உரோமை வியனுலகச் (Catholic) சவைக் குருமார் நடத்துபவற்றில்தான் கட்டொழுங்கு சிறந்திருக்கும். அதற்கடுத்து, மாநகர் அரசு கல்வி நிலையங்களில் அதைக் காண லாம். குலச் சார்பாகவும் மதச் சார்பாகவும் கட்சிச் சார்பாகவும் இடச் சார்பாகவும் கருத்துச் சார்பாகவும் மாணவர் கூடிக் கொண்டு, வேலைநிறுத்தஞ் செய்வதும், உண்ணாநோன் பிருப்பதும், மறியல் செய்வதும், ஆசிரியரை முற்றுகையிடு வதும், அவரைப் பழிப்பதும், தாக்குவதும், கல்விநிலைய உடைமைகட்குச் சேதம் விளைப்பதும், மாணவர் மாண்பிற்குத் தகாத கல்லா மக்கள் கயமையாகும். உண்மையான குறையிருப்பின், அதை நீக்குமாறு கல்வி நிலையத் தலைவரிடம் அல்லது மேலாண்மையிடம் (Management) வேண்டுதல் செய்யவேண்டும். அதனால் தீராவிடின், கல்வியதி காரியிடமும், அதன்பின் அமைச்சரிடமும், அதற்கும் பின் பொதுமக்களிடமும், வன்செயலின்றி முறையிடல் வேண்டும். எந்நிலைமை நேரினும், நாள்தொறும் குறித்த நேரத்தில் வகுப்பறையிலிருத்தலும், ஆசிரியர்க்கு அடங்கி நடத்தலும், கற் பிப்பைக் கருத்தாய்க் கவனித்தலும், பயிற்சிகளை ஒழுங்காய்ச் செய்துவரலும், தேர்வெழுதித் தேறும்வரை கல்வியிலேயே முழுக் கவனத்தையுஞ் செலுத்துதலும், நன்னடத்தைச் சான்று பெறுதலும் மாணவர் கடமையாகும். தமிழ மாணவர், கட்டாய இந்தி யெதிர்ப்பு ஒன்றிலன்றி வேறெந்தக் கிளர்ச்சியிலும் ஈடுபடுதலும் ஊர்வலம் வருதலுங் கூடாது. ஆண்டிறுதியில், கட்டுரைப் போட்டி, சொற்பொழிவுப் போட்டி, இசைப் போட்டி, நடிப்புப் போட்டி, விளையாட்டுப் போட்டி முதலிய பல்வேறு போட்டிகள் நடத்தி, அவற்றில் வெற்றிபெற்ற மாணவர்க்குப் பரிசளிக்கும் ஆண்டுவிழாவும், கல்விநிலையந்தோறும் நடைபெறுதல் வேண்டும். சில கல்விநிலையங்களில் மாணவ மாணவியர்க்குக் கூட்டியம் (Band) பயிற்றி வருகின்றனர். அது மிகப் பாராட்டத் தக்கதாகும். இனி பள்ளிகளில் குருளையர் (Cubs), வேயர் (Scouts), வழிகாட்டியர் (Guides) இயக்கமும்; கல்லூரிகளில் திரிநர் (Rovers) இயக்கமும், மாணவ மாணவியர்க்கும் பொதுமக்கட்கும் பயன்படுவனவே. ஒரு மாணவன் தன் சிறந்த மதிநுட்பத்தாலும் அறிவாற்ற லாலும் இரு மேல்வகுப்பிற்குத் தகுதியுள்ளவனா யிருப்பின், அவன் காலத்தை வீணாக்காதபடி அவனுக்கு இரட்டையுயர்த் தம் (double promotion) அளிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் ஒரு மாணவன் உறுமதி (genius) என்று காணப்படின், அரசு அவனைக் குலமத கட்சிச்சார்பு நோக்காது ஊக்குதலும், அவன் அயல்நாட்டிற்குச் செல்லா வாறு அவனுக்கு உயர்ந்த சம்பளம் அல்லது மானியம் அளித்தலும் வேண்டும். தேர்விற் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே, எல்லா மாணவரையும் வகுப்புயர்த்த வேண்டும் என்னும் நெறிமுறை தவறாகும். ஒரு மாணவன் ஆண்டு முழுதும் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் முதல்வனாயிருந்து, தேர்வு சமையத்தில் நோய்வாய்ப்பட்டுத் தேர்வெழுத முடியாது போகலாம். அவன் நலம் பெற்றபின், அவனுக்குத் தனித்தேர்வு வைத்தும் வைக்காதும் வகுப்புயர்த்தம் செய்யலாம். அரசியல் தேர்வாயின், தனித்தேர்வு வைத்தல் இயலாது. அத்தகைய நிலையில், தலைமையாசிரியர் அல்லது முதல்வர் உட்பட ஆசிரியர் அனைவரும் ஒருமனமாகச் செய்யும் வன்மையான பரிந்துரையடிப்படையில், அரசு தகுதித்தாள் வழங்கவுஞ் செய்யலாம். ஒருசில மதிநுட்ப மாணவர், சோம்பலாலோ கவலை யின்மையாலோ தேர்வுக்காலத்தில் ஊன்றிப் படியாது, தேறலளவே மதிப்பெண் பெறுவதும்; சில மாணவர் மாட்டு ழைப்பினாலும் நெட்டுருவினாலும் முதல் மதிப்பெண் பெற்றுப் பரிசு பெறுவது முண்டு. இது முயலாமைப் பந்தயம் போன்றது. ஆயினும், பரிசு நோக்கி மாணவர் பெருமுயற்சி மேற்கொள் வதும், முதல் மதிப்பெண் பெற்றவர்க்கு அரசல்லாத தனிப்பட்ட நிறுவனங்கள் பரிசளித்துப் பிறரையும் பெறுமாறு தூண்டு வதும், மிகப் பாராட்டத் தக்கனவாகும். எனினும், பரிசுபெற்ற மாணவரே தலைசிறந்த மதியர் அல்லது ஆற்றலரென்றும், பிறரெல்லாம் அவரினுந் தாழ்ந்த வரென்றும், கருதுதல் தவறாகும். குடும்பத்தொல்லையாலும் இடமாற்றத்தாலும் இயற்கைத் துன்பத்தாலும் வேறுசில தடைகளாலும், ஒருசிலர்க்குத் தேர்விற்குப் படிக்கப் போதிய நாளும் நேரமும் இல்லாமலும் போகலாம். ஆதலால், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவரையெல்லாம் அரசு போற்றுதல் வேண்டும். பிள்ளைப் பருவத்திலும் பையற் பருவத்திலும் கல்விகற்கும் வாய்ப்பில்லாதவர்க் கெல்லாம், பிற்காலத்தில் அகவை வரம்பிடாது கல்வி கற்பித்தல் வேண்டும். துவக்கக்கல்வியுமின்றித் தொழில் மேற்கொண்டவர்க்கும், மேற்கல்வியின்றி வேலை பெற்றவர்க்கும், மாலைப்பள்ளியும் கல்லூரியும் வைத்து வேண்டிய கல்வி கற்பித்துத் தகுதித்தாளும் பட்டமும் அளித்தல் வேண்டும். இயன்ற அளவு பல்கலைக்கழகங்களில் அஞ்சல்வாயிற் கல்விக்கும் (Correspondence Course) ஏற்பாடு செய்தல் வேண்டும். ஆங்கிலப் பட்டத் தேர்வெழுத ஆசிரியர்க்களிக்கும் சிறப்புச் சலுகையைப் பிறர்க்கும் அளிக்கலாம். சிறப்புத் தகுதியுள்ளவர்க் கெல்லாம் ஒரு தேர்வின் முதனிலையையும் இறுதிநிலையையும், ஆண்டிடையீடின்றி அடுத்தடுத்தோ ஒரே சமையத்திலோ வெழுத இசைவு தரலாம். எல்லா வகையிலும் இயன்றவரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, கல்வியைப் பரப்புவதையே முதன்மையாகக் கருதல் வேண்டும். 5. வேலையளிப்பு கலைக்கல்லூரி, தொழிற்கல்லூரி, பயிற்சிக்கல்லூரி ஆகிய மூவகைக் கல்லூரிகளிலும் பயின்று பட்டம்பெற்ற இளைஞர் வேலை வேண்டும்போது, குலமத கட்சிச் சார்பின்றித் தகுதிபற்றியே வேலையளித்தல் வேண்டும். எல்லா வேலைகட்கு முரிய தகுதி வகைகள்: 1. உடம்பியல் (Physical), 2. மனவியல் (Mental), 3. மதியியல் (Intellectual), 4. ஒழுக்கவியல் (Moral), 5.ஆவியியல் (Spiritual) 6.fšÉÆaš(Academical), 7. பயிற்சி Æaš(Practical), 8. பரிந்துரையியல் (Recommendatory) என மொத்தம் எட்டாம். இவையெல்லாம் எல்லா வேலைக்கும் உரியனவல்ல. ஆவியியல் என்பது மதவியற் பணிக்கேயுரியது. பரிந்துரை யென்பது ஏனை வகைகள்போல் வலிமையுள்ளதன்று; இன்றி யமையாதது மன்று. மறைமலையடிகள், மேனாட் குடியரசுத் தலைவர் g®. இராதாகிருட்டிணனார் போன்றார் பரிந்துரை யாயின், மறுக்கொணா மாவலிமையுள்ளதாம். இவ் வெண்வகையுட் சிலபலவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு வேலைக்குமுள்ள தகுதிகள் பலவாகும். தேர்வு தேறியமட்டில் ஒருவர் ஒரு வேலைக்குத் தகுதி யுள்ளவராகார். ஒவ்வொரு பணிக்கும் அதற்குரிய கல்வியும் பயிற்சியும் மனப்பான்மையும் பண்பாடும் திறமையும் வேண்டும். குறளர் சிந்தர் முடவர் மொண்டியர் முதலிய உடற்குறையர் எங்ஙனம் காவல் துறைக்கும் படைத்துறைக்கும் தகுதியற்றவரோ, அங்ஙனமே பண்பாட்டுக் குறையரும் வினைத்திறமைக் குறையரும் எல்லாப் பணிக்கும் தகுதியற்றவராவர். சில பணிகட்கு மனமொழிமெய் யென்னும் முக்கரணத் தகுதியும் வேண்டும்; சில பணிகட்கு ஓரிரு கரணத் தகுதியிருப் பினும் போதும். ஒரு பாடத்துறைக்குத் தகுதிவாய்ந்த மாணவரை மற்றொரு பாடத்துறையிற் பயிற்றுவது போன்று, ஒரு பணித்துறைக்குப் பயின்றவரை அல்லது தகுதியுள்ளவரை மற்றொரு பணித் துறைக்கு அமர்த்துவது, விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு அறாஅ அருநகை யினிதுபெற் றிகுமே (புறம். 378 : 14-22) என்னுஞ் செய்யுட் பகுதியையே நினைவுறுத்துகின்றது. நடுவணரசு தலைமை மந்திரியாரும் (Prime Minister) நாட்டரசு முதலமைச்சரும் (Chief Minister), சில சமையங்களில், அமைச்சரின் தகுதி நோக்காது விருப்பம்பற்றியே வாரியங் களைப் பகிர்ந்தொதுக்குவதும், இத்தகையதே. எல்லாப் பணித்துறைகளுள்ளும் திறந்த மடம் போன்றது தமிழ்த்துறையே. ஏனைத் துறைகளில் இடமில்லாதவரெல்லாம் தமிழ்த்துறையில் இடம் பெறலாம். வழக்கறிஞர், பொதுவாகத் தம் வழக்காளிகட்கு வெற்றி விளைக்கும் பொருட்டுத் தாம் கொண்டதே கோலமென வலிக்கும் மனப்பான்மையர். தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய நிலைமைகளிற் போன்றே, அடிமுதல் முடி வரை தருக்கத்திற் கிடமாயிருப்பதிலும் தனிச்சிறப்புடையது தமிழ். காலஞ்சென்ற எ. வையாபுரிப்பிள்ளை, தாம் பதிப்பித்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் விழித்தல் என்னுஞ் சொல்லிற்குத் தெளிவாதல் என்பது ஒரு பொரு ளென்று கண்டும், விழிப்பத் தோன்றா என்னுந் தொல்காப் பியச் சொற்றொடர்க்கு, எல்லாச் சொல்லும் பொருள் குறித்த னவே (தொல்.பெய.1) என்று தொல்காப்பியரே கூறியதையும் நோக்காது,தோன்றா என்றே பொருள் கொண்டார். அதன் மேலும், வரி என்னும் தூய தென் சொல்லிற்கு மூலம் `பலி என்று வழுப்படக் குறித்ததுமன்றி, அதை அவ் வகரமுதலியின் தனிச் சிறப்புகளுள் ஒன்றாகவுங் காட்டினார். தாம் எழுதிய சில கட்டு ரைகளாலுங் கட்டுரைத் திரட்டுகளாலும் அவர் தமிழுக்குச் செய்த கேடு அளவிடுந் திறத்ததன்று. அவர் வழியினரும், தமிழெல்லைக்குட் புகுந்து, குசராத்தியாரும் தமிழ்நாட்டு மேனாள் ஆள்நருமான கே. கே. சா தமிழ் சமற்கிருதத்திற்கு மூலமென்று தேற்றமுறக் கூறிய பின்பும், சிறிதும் நாணமின்றித் தமிழ்க் கேட்டுப் பணியில் தலைவிரித் தாடுகின்றனர். ஒருதுறைக் கல்வி கற்றவர் வேறொரு துறைக்குந் தகுதி யுள்ளவராயிருப்பதுமுண்டு. காலம்சென்ற வழக்கறிஞர் கா. சுப்பிரமணியப் பிள்ளையும் ச. சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பேராசிரியரானதும், மெய்ப்பொருளியற் பண்டாரகர் இராதாகிருட்டிணனார் குடியரசுத் தலைவரானதும், இதற்கு எடுத்துக்காட்டாம். ஆயின், இது அருகி நிகழ்வதும் பொது வியல்பிற்கு விலக்கானதுமாகும். இவ்விலக்கு நிலைமையை, இருதுறைப் பணித்திறமை இயல்பாக அமைந்த தென்றோ, பெற்றோர் விருப்பப்படி ஒரு துறைக்குப் பயின்றபின் மற்றொரு துறைக்குத் தம் விருப்பப்படி பயின்றதென்றோ கொள்ளலாம். பல்பணித் தகுதி ஆசிரியப் பணிக்கு, கற்பிக்கும் பாடத்துறையிற் புலமை, கற்பிப்புப் பயிற்சி, சாந்துணையுங் கற்றல், நல்லொழுக்கம், பொருள் விளக்குந் திறன், நாவன்மை, மாணவர்மாட்டன்பு, நடுநிலைமை, பொறுமை, இன்முகம், இன்னுரை, உரத்த குரல் என்பன இன்றியமையாதன. தமிழாசிரியப் பணிக்கு, மேற்கூறியவற்றொடு தமிழ்ப் பற்றும் இன்னிசையாய்ப் பாடுந்திறனும் வேண்டும். தமிழ்ப் பற்றுண்மை யின்மையைப் பின்வரும் கொள்கை வேறுபாட் டால் அறிந்து கொள்ளலாம். தமிழ்ப்பற்றாளர் கொள்கை தமிழ்ப்பகைவர் கொள்கை 1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு. தமிழர் வெளிநாட்டினின்று தமிழர் தென்னாட்டுப் பழங்குடி வந்தவர் மக்கள். 2. மாந்தன் பிறந்தகமும் குமரிநாடே. 3. தமிழ் திரவிடத்திற்குத் தாயும் தமிழ் திரவிடத்தை யொத்தது; ஆரியத்திற்கு மூலமுமாகும். ஆரியத்தாற் பெரிதும் வளம் படுத்தப்பட்டது. 4. இந்திய நாகரிகம் தமிழரது. இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம். 5. தமிழ் இயன்மொழி, தனி தமிழ் திரிமொழி, கலவை மொழி மொழி. 6. கடன் கொள்வதால் தமிழ் கடன் கொள்வதால் தமிழ் தளரும் வளரும். 7. இறையனாரகப் பொருளுரை பண்டைத் தமிழகத்தில் ஒரு யினின்று பெரிதும் வேறுபட்ட கழகமும் இருந்ததில்லை. முக்கழகங்கள் பண்டைத் தமிழகத் திருந்தன. 8. தமிழே வழிபாட்டு மொழி வடமொழியே வழிபாட்டு யாகவும் சடங்கு மொழியாகவும் மொழியாகவும் சடங்கு இருத்தல் வேண்டும். மொழியாகவும் தொடர்தல் வேண்டும். 9. தமிழ்நாட்டிற்கு இருமொழித் தமிழ்நாட்டிற்கும் மும்மொழித் திட்டமே ஏற்றது. திட்டம் ஏற்கும். 10. இந்தியப் பொதுமொழியா இந்தியப் பொதுமொழியா யிருக்கத்தக்கது ஆங்கிலமே. யிருக்கத்தக்கது இந்தியே. தமிழாசிரியர், வரலாற்றாசிரியர், தொல்பொரு ளாராய்ச்சியாளர், மொழியாராய்ச்சியாளர், மதவாராய்ச்சியாளர் முதலிய பதவிகட்கு, அரசு தமிழ்ப்பகைவரை அமர்த்துதலும், அவர் எழுதிய நூல்களைப் பாடமாக வைத்தலும் கூடாது. கொச்சை நடையைக் கையாண்டு தமிழைக் கெடுக்கும் நாட்சரி (Daily), கிழமையன் (Weekly), மாதிகை (Magazine), காலாண்டிதழ் (Quarterly), ஆண்டுமலர் (Annual) முதலிய வெளி யீடுகளை அரசு கண்டித்தலுந் தண்டித்தலும் வேண்டும். பேராசிரியப் பதவிக்கு, அவ்வப் பாடத் துறையிற் கல்வியும் ஆராய்ச்சியும் பட்டறிவும் மிக்க துணைப் பேராசிரியரை அமர்த்தலாம். பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு, ஊழிய மூப்பும் ஆள்வினைத் திறமும் தமிழ்ப்பற்றுமுள்ள உதவி ஆசிரியரையும்; கல்லூரி முதல்வர் பதவிக்கு, அம் மூன்றுமுள்ள பேராசிரி யரையும் அமர்த்தலாம். மாவட்டக் கல்வியதிகாரி பதவிக்குத் தமிழ்ப்புலவர் தேர்வு முதனிலை தேறிய, ஊழிய மூப்புள்ள தலைமையாசி ரியரையும்; கல்வித்துறையியக்குநர் பதவிக்கு, தமிழ்ப் புலவர் பட்டம் பெற்ற, ஊழிய மூப்புள்ள மாவட்டக் கல்வியதிகாரி யையும் அமர்த்துதல் வேண்டும். பல்கலைக் கழகத் துணைவேய்ந்தர் பதவிக்கு, தமிழ்ப் பற்றும் தமிழ்ப் புலமையுமுள்ள கல்வித்துறை யியக்குநரை யேனும், பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவரையேனும், மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரையேனும் அமர்த்தலாம். மருத்துவப் பணிக்கு, அவ்வம் மருத்துவக் கல்லூரிப் பயிற்சி, நோய் நாடும் நுழைநோக்கு, மருந்து கூட்டும் அறிவு, நோயாளிமீதிரக்கம், பேராசையின்மை, மருத்துவப் பயிற்சி, இளமை தீர்ந்திருத்தல், விடாமுயற்சி, உளநூலறிவு ஆகியவை இன்றியமையாதன. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள். 948) இளங்கணியன் முதுமருத்துவன், ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். என்பன கவனிக்கத்தக்கன. வழக்கறிஞர் பணிக்கு, சட்டக்கல்லூரிக் கல்வி, பன்னாட் டுச் சட்ட அறிவு, ஏரணக் (Logic) கல்வி, வரலாற்றறிவு, நடு நிலைமை, பொய்யாமை, நாவன்மை, தருக்கத்திறன், நினை வாற்றல், முறை காத்தல், பகைவரை ஒப்புரவாக்கல் என்பன இன்றியமையாதன. பொறிவினைப் பணிக்கு, அவ்வப் பொறிவினைக் கல்லூரிப் பயிற்சி, கணிதப் புலமை, சூழ்ச்சிவன்மை, வரைவுத் திறன், திட்டம் வகுப்பாற்றல், விரைமதி, ஊக்கமுடைமை, புதுப்புனைவுத் திறமை என்பன இன்றியமையாதன. கணக்கத்துறைப் பணிக்கு, கணிதப்புலமை, வணிகத் துறைக் கல்வியும், பயிற்சியும் தட்டச்சுச் சுருக்கெழுத்துத் தேர்ச்சி, கவின் கையெழுத்து, வாய்மை, சுறுசுறுப்பு, பொறுப்புடைமை ஆகியவை இன்றியமையாதன. காவல்துறைப் பணிக்கு வளர்த்தியுங் கட்டுடம்பும், அஞ்சாமை, நேர்மை, நடுநிலை, அமைதிவிருப்பு, ஒழுங்கு டைமை, சுறுசுறுப்பு, கடுந்துயிலின்மை, காவல்துறைப் பயிற்சி, கடமையுணர்ச்சி, துப்பறியுந்திறன் முதலியன இன்றியமை யாதன. படைத்துறைப்பணிக்கு வளர்த்தியுங் கட்டுடம்பும், தறுகண்மை, படைக்கலப் பயிற்சி, போர்த்துறைக் கல்வி, போர்ப் பண்பாடு, நம்பகம், நாட்டுப் பற்று, கடமையுணர்ச்சி, சமையகதி, துன்பம் பொறுத்தல், கடுந்துயிலின்மை, கட்டொழுங்கு, ஈகத் (தியாகத்) தன்மை என்பன இன்றியமையாதன. எதிர்காலத்தில் உலகப் பொது ஆட்சி ஏற்பட்டுப் போர் முற்றும் ஒழிந்தபின், படைத்துறையார் பகைவரைக் கொல்கை மறமின்றிப் பண்பாட்டுக் கொள்கை மறமே கடைப்பிடிப்பர். மேலாளர் (Manager) பணிக்கு, கணக்கத்துறைப் பணியா ளருள் மூப்பு, தோற்றப் பொலிவு, குழும்பின (Company) அல்லது நிறுவனத்தின் (Establishment) வரலாற்றறிவு, பொறுப்புடைமை, பணியாளரை அடக்கியாளுந்திறமை, நடுநிலை, வாய்மை என்பன இன்றியமையாதன. ஆள்வினைத் தலைவர் (Administrator) பணிக்கு, இந்திய ஆள்வினை ஊழியத் (I.A.S.) தேர்வு தேறல், தோற்றப் பொலிவு, பல்துறைப் பொது அறிவு, அஞ்சாமை, பணியாளரை அடக்கி யாளுந் திறமை, நடுநிலை, நேர்மை, ஊக்கமுடைமை, பொறுப்பு டைமை முதலியன இன்றியமையாதன. மாவட்டத் தண்டலாள ரும் (District Collectors) அவர்போன்ற பிறரும் ஆள்வினைத் தலைவராவர். ஆராய்ச்சியாளர் பணிக்குப் பரந்த கல்வி, நுண்மாண் நுழைபுலம், அஞ்சாமை, நடுநிலை, தன்னலமின்மை, மெய் யறியவா என்னும் ஆறும் இன்றியமையாதன. நடுத்தீர்ப்பர் (Judge) பணிக்கு சட்டப்புலமை, பன்னாட்டு வழக்குத் தீர்ப்பறிவு, நுண்மாண் நுழைநோக்கு, பட்டறிவு, நடு நிலை, அஞ்சாமை, முறைகாத்தலை உயிர்நாடியாகக் கொள்ளு தல், மாலைக்காலத்தில் மாறுதோற்றத்தில் மக்கள் பேச்சினின்று மறையறிதல், தேவபத்தி முதலியன இன்றி யமையாதன. அரசியல் திணைக்களத்தலைவர் (Head of a Department of Govt.) பதவிக்கு ஆள்வினைத் தலைவர் தகுதியொடு அவ்வத் திணைக்களத்திற்குரிய சிறப்பறிவு, சூழ்வினைத்திறன் முதலியன இன்றியமையாதன. ஒரு திணைக்களத்திற்குரிய சிறப்புத் தகுதி யுடையவரை வேறொரு திணைக்களத் தலைவராக்குவதும், சிறப்புத் தகுதியில்லாதவரையே பல திணைக்களத் தலைவராக அமர்த்திக் கொண்டு அடிக்கடி அவரைத் திணைக்களம் மாற்றுவதும், ஆட்சி யதிகாரிகளின் ஆற்றலின்மையையும் கழிகண்ணோட்டத்தையும் நடுநிலையின்மையையுமே காட்டும். அமர்த்ததிகாரிகள் (Appointing Authorities) பதவிக்குத் திணைக்களத் தலைவர் தகுதியொடு அடக்கமுடைமை, மனச் சான்று போற்றல், பழியஞ்சல் முதலிய பண்புகள் இன்றி யமையாதன. உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். (பழ. 255) அரசர், குடியரசுத் தலைவர், தலைமை மந்திரியார், மந்திரியார், ஆள்நர், முதலமைச்சர், அமைச்சர், பல்கலைக்கழகத் தலைவர், திணைக்களத் தலைவர், ஆள்வினைத் தலைவர், தனிப்பட்ட நிறுவனத் தலைவர் முதலியோர் அமர்த்ததிகாரிகளாயிருக்க லாம். ஆராய்ச்சித் துறைப் பன்மையும் இயல்பும் அறிவியலும் (Science) கலையும் (Art) ஆன எல்லா அறிவுத் துறையும் தொழிற்றுறையும் ஆராய்ச்சிக்குரியனவே. பெரும் பாலும், ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும் ஒவ்வொரு துறைக் குரியவரே. பொறிவினைத் துறையில் (Engineering) பூதநூலும் (Physics) ïjÅaK«(Chemistry) கணிதமும் (Mathematics) கலப்பதால், இயங்குபொறிப் புதுப்புனைவாள ரெல்லாம் (Inventors) இம் முந் நூலறிவும் உடையவராயிருத்தல் வேண்டும். இங்ஙனம் கலவைத் துறையல்லாத தனித்துறைகளி லெல்லாம், ஒரு நூலறி விருப்பினும் போதும். ஆயினும், வரலாற்றறிவு எல்லா நூலிலும் இரண்டறக் கலந்ததென்பதை அறிதல் வேண்டும். ஐசக்கு நியூட்டன் (Isaac Newton) வானநூலாராய்ச்சி யாளர்; சேம்சு வாட்டு (James Watt) பொறிவினையாராய்ச்சி யாளர்; தார்வின் (Darwin) உயிர்நூலாராய்ச்சியாளர்; கால்டுவெல் (Caldwell) மொழியாராய்ச்சியாளர்; தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இசை யாராய்ச்சியாளர். இயங்குபொறிப் புதுப்புனைவாளருள், சேம்சு வாட்டு நில நீரியங்கியும், இரைட்டு (Wright) உடன்பிறந்தார் வானியங்கியும், எடிசன் திரைப்பட வியங்கியும், மார்க்கோனி ஒலியியங்கியும், பிறர் பிறவும் ஆராய்ந்து புனைந்தனர். பொருளாட்சி (Economics) என்னும் ஒரே துறையில், மால்தூசு பொருளாக்க மக்கட்பெருக்க வேக வேறுபாட்டை யும், காரல் மார்க்கசு பொருள்முதல் தொழில்முதல்களின் தொடர்பையும், பர். சந்திரசேகரர் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் ஆராய்ந்தனர். மொழியென்னும் வியன்பெருந்துறையில், ஆயிரக்கணக் கான மொழிகள் உள்ளன. தமிழ் என்னும் ஒரு மொழியுள், இலக்கியம் இலக்கணம் என இரு பகுப்புகளுள்ளன. இலக்கியத் துள், செய்யுள் உரைநடை என இரு பாகுபாடுண்டு. செய்யுளுள், கழகச் செய்யுள் பிற்காலச் செய்யுள் என்றும், பாச்செய்யுள் பாவினச்செய்யுள் என்றும், பெருவனப்பு (பெருங்காவியம்) சிறுவனப்பு (சிறுகாவியம்) என்றும், இயல் இசை நாடகம் என்றும், பிறவாலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரே பனுவல்பற்றி யும் பாடிய புலவர், பாடிய காலம், பனுவற் பொருள், பனுவற் சொற்கள், பனுவற் சிறப்பு முதலிய பல ஆராய்ச்சித் தலைப்புகள் உள்ளன. ஒரு பனுவற் சொற்களுள்ளும் ஒரே சிறப்புச்சொற் பற்றிய ஆராய்ச்சியும் உண்டு. இங்ஙனம், ஆராய்ச்சித் துறைகள், அறிவியற் கலவை முதல் தனிச்சொல் வரை ஆழ்கடல்போற் பரந்தும் ஊற்றுக் குழி போற் சிறுத்தும் ஆயிரக்கணக்காகவுள்ளன. அவற்றுள் எது பற்றி ஆராய்ந்து இடுநூல் (Thesis) விடுப்பினும், ஒரே மதிப்புள்ள பண்டாரகர் பட்டம் (Ph.D.) கிடைத்துவிடுகின்றது. அரசினர் இதை அறிவதில்லை. பட்டம் பெற்றவரும் இவ்வறியாமையை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரையெல்லாம் அனைத்து மறிந்தவர் என்று கருதி, சில செய்யுள்களையே அல்லது பனுவல்களையே ஆய்ந்த ஒரு புலவரிடம், உலக முதன்மொழியும் ஆழ்ந்த மொழிநூலாராய்ச் சியாலன்றி வேறெவ்வகையாலும் அறிய வியலாததுமான தமிழின் வரலாற்றை எழுதுமாறு அரசு ஒப்படைப்பின், அவர் தம் தகுதி யின்மையை வெளிப்படுத்தாது, தம் பெயரையும் செல்வத்தையும் மிகுக்க இதுவே சிறந்த வழியென்று உடனே ஒப்புக்கொள்கின்றனர். இது அரசின் ஏற்பாடாதலால், இதைக் கண்டிக்க எவருக்கும் நாவெழுவதில்லை; கையும் வருவதில்லை. வாய்மைத் தமிழராயின், உண்மையைச் சொல்வர், எழுதுவர். வையாபுரிகளாயின், மந்திர வலிமை பெற்றவர்போல், தென் மாவாரியில் மூழ்கிய குமரிநிலத் தமிழரை நண்ணிலக் கடற்கரை யினின்று வருவிப்பதோடு, அவரை மொழியில்லாத காட்டு விலங்காண்டிகளாகவுங் காட்டுவர். ஒருவர் தம் ஆராய்ச்சிப் பட்டத்திற்கு எப்பொருள்பற்றி இடுநூல் விடுத்தாரோ, அப் பொருள்பற்றியே அவருக்கு அறிவும் அதிகாரமும் உண்டென்றறிதல் வேண்டும். அறிஞர் இயற்றிய அருநூல்களை மட்டுமன்றி, நாடு முழுதும் வழங்கும் நனந்தமிழையும் ஆராயாது, ஒரு சிற்றூர்க் கொச்சைப் பேச்சையே ஆய்ந்து ஒருவர் பட்டம் பெற்றதாகவும், மற்றொ ருவர் முன்பொருவர் விடுத்த இடுநூலையே மாற்றி யெழுதிக் கீழைக் கல்வித் தலைவர் (M.O.L.) ஆனதாகவும் சொல்லப்படு கின்றது. இனி, பெருங்கல்லூரித் தமிழாசிரியரெல்லாம் பெரும் புலவரென்றும், அவர் தமிழ்த்துறைகள் அனைத்தையுங் கரை கண்டவரென்றும், இரு தவறான கருத்துகள் இருந்து வருவதால், அவரும் அதைப் பயன்படுத்திக்கொண்டு சில முதன்மையான குழுக்களின் உறுப்பினராகி, பேரறிஞர் அரும்பாடுபட்டு ஆராய்ந் தெழுதிய தமிழ் வரலாற்று நூல்களைப் பாடப் பொத்தகமாக வராதவாறு தடைசெய்வதாகவுந் தெரிகின்றது. தமிழ்ப் புலவருள் வையாபுரிகள் என்றும் வாய்மைத் தமிழரென் றும் இரு சாரார் உண்டென்பதை அரசு அறிதல் வேண்டும். எத்துறை யாராய்ச்சிக்கும் அளவிறந்த ஆற்றல் பிறப்பி லேயே அமையவேண்டியிருப்பதால், ஆராய்ச்சியாள ரெல்லாம் இறைவனால் அமர்த்தப்பட்டவரே யாவர். ஆகவே, தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் பணியை ஒரு குழுவார் கூடிச் செய்யமுடியாது. அறிவியலாரும் பொறிவினைஞரும் ஆயிரக்கணக்கானவர் இன்று இந்தியாவிலுள்ளனர். ஆயினும், அவ் வனைவருங் கூடினும் கோவைக் கோ.து. நாயுடுக்கு ஈடாகார். இங்ஙனமே மொழியாராய்ச்சி சொல்லாராய்ச்சித் துறைகளிலும், இற்றைத் தமிழ்ப் பேராசிரியருட் பெரும்பாலார் அழுக்காற்றுருவங் களாயிருந்து, தமிழ்ச் சொல்லாராய்ச்சிக்கும் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கும் ஒரு குழுவையே அமர்த்த வேண்டுமென்று கட்டுப்பாடாகச் சொல்லி வருகின்றனர். அதனால், அரசும் பல்கலைக் கழகங்களும் அதற்குரியவரை அமர்த்தத் தயங்குகின்றன. தன்னலப் பொறாமைக்காரர் தாமும் ஒரு நற்பணி செய்வதில்லை; பிறரையுஞ் செய்யவிடுவதில்லை. ஆங்கில மொழியில் ஐந்து சொற்பிறப்பியல் அகர முதலிகள் (Etymological Dictionaries) உள்ளன. அவை, கீற்று (Skeat), சேம்பர்சு (Chambers), கிளேன் (Klein), வீக்கிலி (Weekly), ஆனியன்சு (Onions) என்னும் தனிப்பட்டவர் தொகுத்தவையே. அவற்றைக் கண்டேனும் அழுக்காற்றுப் புலவர் அறிவடைக. 1956இல், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுத்தற்கென்றே, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அமர்த்தப்பட்டேனெனினும், பர். சேதுப்பிள்ளையும் பர். மீனாட்சிசுந்தரனாரும் என்னைத் தடுத்துவிட்டதனால் அப் பணி கெட்டது. அவரும் அப் பணியைச் செய்தாரில்லை; தமிழ் வளர்ச்சிக் கென்றே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தமிழைக் கைவிட்டது. தமிழ்ப்பற்றும் நெறிப்பட்ட ஆராய்ச்சியும் இல்லாதவர் தமிழ்த் துறைத் தலைவராக இருப்பதால் நேர்ந்த கேடு இது. தமிழ் குமரிநாட்டில் தோன்றியதென்றும், குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகுமென் றும், நான் அரைநூற்றாண்டு நடுநிலையாய் ஆய்ந்து கண்ட வுண்மையை நாட்டின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நடுவணரசினின்று நல்கை (Grant) வராதென்று, இணைவேய்ந் தர்க்கும் துணைவேய்ந்தர்க்கும் அச்சம் ஊட்டப்பட்டதாகத் தெரிகின்றது. தமிழ்ப்புலவரனைவரும் தமிழின் தலைமைபற்றிய வுண்மையை ஒப்புக்கொள்ளின் நடுவணரசு எங்ஙனந் தடுக்க முடியும்? வாய்மையே வெல்லும் (ஸத்ய மேவ ஜயதே) என்பதை வழிகாட்டும் நெறிமுறையாக வைத்துக் கொண்ட அரசு, பொய்மையே வெல்லும் என்பதை எங்ஙனம் நடைமுறையிற் கடைப்பிடிக்க முடியும்? வெளி நாட்டினின்று வந்த ஒரு சிறுவகுப்பார், தமிழ்நாட்டிலிருந்து கொண்டு சமற்கிருதம் தேவமொழி என்று துணிந்து பொய் சொல்லும் போது, தமிழர் தம் நாட்டிற் கோடிக்கணக்கினரா யிருந்துகொண்டே, தம் மொழியைப்பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சிச் சாகவேண்டும்? தமிழன் பிராமணனுக்குப் பிறப்பில் தாழ்ந்தவ னென்றும், தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்றும், என்றும் நம்பிக்கொண்டிருப்பின், என்றுதான் தமிழன் விடுதலை பெறவும் முன்னேறவும் முடியும்? சமற்கிருதம் தேவமொழி யென்பது, பிராமணன் நிலத் தேவன் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு மூடக்கொள்கையும் உண்மையெனின், ஒரு தமிழ்ப்புலவர் மாநாட்டில் தலைசிறந்த தமிழறிஞரை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில், நாட்டப்பட வேண்டும். அல்லாக்கால், உலகுள்ளவரையும் தமிழாரியப் போராட்டமும் தமிழன்-பிராமணன் என்னும் வேறுபாடும் இருந்துகொண்டேயிருக்கும். நாட்டில் உண்மையான அமைதியிராது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டமட்டில் ஒருவன் தமிழனாகான். தமிழ்ப்பற்றுள்ளவனே உண்மைத்தமிழனா வான். பிராமணர், தம் முன்னோர் மொழி வழக்கற்றுப் போன தனால், தாம் குடியேறிய அவ்வந் நாட்டு மொழியையே தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். இந்தி, வங்காளம், ஒரியா, குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளெல்லாம் பிராமணர் தாய்மொழிகளாகும். தமிழர்க்கோ தமிழ் ஒன்றே தாய்மொழி. பிராமணர் தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது, இன்றியமையாமையும் போக்கற்ற நிலைமை யும் பற்றியதேயன்றி விருப்பம் பற்றியதன்று. தமிழிற் பிறந்து தமி ழில் வளர்ந்து தமிழாலேயே வாழ்ந்துவரினும், பிராமணர்க்கு என்றும் அவர் முன்னோர் இலக்கிய மொழியாகிய சமற்கிருதத் திலன்றித் தமிழிற் பற்றில்லை. தமிழ்த் தெய்வம் என்று சிலராற் போற்றப்படும் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதையர்க்கும், வாய்மொழி தமிழேனும் வழுத்து மொழி சமற்கிருதமே. பரிதிமாற் கலைஞன் போன்ற ஒருசிலரே இதற்கு விலக்காவர். தமிழ் மீண்டும் அரியணையேறித் தமிழ்நாட்டு முப்பல் கலைக் கழகங்களிலும் தலைமை பெற்றாலன்றி, தமிழன் வாழ வழியேயில்லை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது ஒரு பணிக்குப் பலர் பயிற்சி பெற்றிருப்பினும் அல்லது தேர்வு தேறியிருப்பினும். ஒவ்வொருவரும் ஓர் உட்பிரிவிற் சிறந்தவராயிருப்பர். தமிழ்ப்புலவருள், ஒருவர் நாவலராகவும், ஒருவர் பாவலராகவும், ஒருவர் உரைவலராகவும். ஒருவர் நூல்வலராகவும், ஒருவர் ஆய்வலராகவும், ஒருவர் நினைவல ராகவும், ஒருவர் புனைவலராகவும் இருக்கலாம். ஒருவர் இலக் கியத்தையும், ஒருவர் இலக்கணத்தையும், ஒருவர் ஒருவகைப் பனுவற் றொகுதியையும், ஒருவர் ஒரு விழுப்பெரு நூலையும், ஒருவர் கல்வெட்டுத் தொகுதியையும் சிறப்பக் கற்றிருக்கலாம். இவ் வேறுபாட்டை அரசு ஆய்ந்தறிதல் வேண்டும். வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. (தனிப்பாடல்) வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான்விருத்தமெனும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொணாதே. (தனிப்பாடல்) இவ் வுண்மையை அரசு உணர்ந்து ஒவ்வொருவர் தனித் திறமையையும் பாராட்ட வேண்டும்; புலவரும் பிறர்மீது பொறாமை கொள்ளாது செருக்கொழிதல் வேண்டும். நாட்டு மக்கட்கு நாட்டுப் பணியில் முதலிடம் இந்தியா, ஓராட்சிக் குட்பட்டிருப்பினும். ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் போலப் பன்னாடு சேர்ந்த உட்கண்டமாகும். பண்டை இந்தியத் தொன்மங்கள் (புராணங்கள்) 56 நாடுகளை ஒரு தொகுதியாகக் கூறுகின்றன. ஆங்கிலர் ஆட்சிக்காலத்தில் சிறியவும் பெரியவுமாக 545 உள்நாட்டரசுகள் இருந்தன. அவை யாவும் ஆங்கிலர் படை வன்மையாலும் ஆட்சித் திறமையாலும் ஓராட்சிக்குட்கொண்டு வரப்பட்டன. ஆங்கிலர் நீங்கி முப்பதாண்டாயினும், இன்னும் மக்கள் நிலைமை மாறவில்லை. ஏனை நாடுகளிலில்லாத பிறவிக்குல வேற்றுமை இந்தியாவின் பழைய நிலைமையைப் போற்றிக் காத்து வருகின்றது. சிலர் தென்னாட்டுத் திரவிடரெல்லாம் ஓரினம் என்பர். ஐரோப்பாவில், இத்தாலியர் பிரெஞ்சியர் இசுப்பானியர் போர்த்துக்கீசியர் முதலியவர் ஒரே பேரினத்தாரே. ஆயினும், பல்வேறு நாட்டினங்களாக (Nations) மாறியுள்ளனர். இனி, ஆங்கிலேயர், ஆலந்தியர், தேனியர், செருமானியர், நார்வேயர், சுவீதியர் முதலியோரும் ஒரு பேரினத்தாரே. அங்ஙனமே, தமிழர் தெலுங்கர் கன்னடியர் மலையாளியர் என்போரும், ஒரே பேரினத்தாரேனும் பல்வேறு நாட்டினத்தாரே என்பதை, அவர் மொழி தோற்றம் பழக்கவழக்கம் முதலியவற்றின் வேறுபாடுகள் தெளியக் காட்டும். தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்று ஒரு குடும்பத்தைக்கூடப் பொருளாட்சி பற்றி வேறுபடுத்திக் காட்டுகின்றது பழமொழி. அஃதாயின், பல நாட்டினங்கள் எங்ஙனம் ஒன்றாகும்? இனி, வட இந்தியாவோ, ஆப்பிரிக்கா போலத் தென்னாட் டினும் வேறுபட்ட பல்வேறினத்தாரைக் கொண்டதாகும். நாட்டுப் பன்மையால் மட்டுமன்றி, நிலப்பரப்பாலும் இந்தியா ஓர் உட்கண்டம் என்பதை, இந்தியா பரப்பளவில் இரசியா நீங்கிய ஐரோப்பாவிற்குச் சமம் என்று, இராகொசின் (Ragozin) `வேத இந்தியா' (Vedic India) என்னும் நூலிற் கூறியிருப் பதால் அறியலாம். தமக்கென ஒரு நாடின்றி இந்தியா முழுதும் பரவியிருக்கும் ஓர் இனத்தாரும், மக்கட்பெருக்குங் கல்விப் பெருக்குங் கொண்டு பிற நாடுகளிற் பிழைக்க விரும்பும் சிறு நாட்டாரும், அளவிற்கு மிஞ்சி ஆட்சிசெய்ய அவாவும் அதிகார வெறியரும், நடுநிலை திறம்பி, இயற்கைக்கும் வரலாற்றிற்கும் மாறாக, இந்தியா முழுதும் ஒன்றென்றும், எவரும் எங்கும் வாழலாம் என்றும், எந்நாட்டையும் அடக்கியாளலாமென்றும், பிதற்று வது பொருந்தாது. ஆங்கிலர் ஆட்சியில் ஒரே ஆள்நிலமாயிருந்த பேரிந்தியா, ஏன் இந்தியா வென்றும் பாக்கித்தானம் என்றும் வங்காளம் என்றும் மூவேறாகப் பிரிந்துள்ளது என்பதை ஊன்றி நோக்குக. போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு, நடுத்தீர்ப்பு என்னும் நாற்பெருந்துறையில்தான், நடுவணரசிற்கு அதிகார முண்டு. ஏனைத் துறைகளிலெல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப்பெறல் வேண்டும். மராத்தி நாட்டுச் சிவசேனை நீடு வாழ்க! பெண்டிர்க்கு அலுவற்பேறு கல்விப்பேறுபோல் அலுவற்பேறும் பெண்டிர் பிறப் புரிமையென்று கருதலாம். புது நாகரிகத்திற் சிறந்த மேலைநாடு களிற் பெண்டிர்க்குஞ் சமவுரிமையாகக் கல்விப்பணி யளிப்பதை, இந்தியாவும் பின்பற்றலாம். ஆயின், அதே சமையத்தில், இருபாலியற்கை வேறு பாட்டையும் இந்தியப் பண்பாட்டையும் நோக்குதல் வேண்டும். அச்சம் மடம் (அறிமடம்) நாணம் பயிர்ப்பு என்பன பெண்பாற் குணம் என்பது, தமிழர் கொள்கை. பெண்டிர் மெல்லியலார் (Weaker sex) என்பது வியனுலகக் கொள்கை. ஆதலால், மேனாடுகளிலும் பெண்டிர் படைத்துறையிற் சேரார், சேர்க்கப்படார். மக்கட்டொகை மிகையாற் கல்விகற்ற ஆடவர்க்கு வேலை யில்லாதபோது பெண்டிர்க்குச் சமவுரிமையாக வேலை யளிப்பது பொருந்தாது. வேலையென்பது, வீட்டுவேலை வெளிவேலை என இருவகை. சமையல் செய்தல், வீடு துப்புரவாக்கல், வீட்டார்க் கும் விருந்தினர்க்கும் அமுதுபடைத்தல், பிள்ளை பெற்று வளர்த்தல் ஆகிய வீட்டு வேலைகள் பெண்டிர்க்கே யுரியன என்பது வெளிப்படை. வேலைக்காரி வீட்டு வேலையெல்லாவற் றையுஞ் செய்ய வியலாது. அவளுங் கற்றவளாயிருப்பின், அவளுங் கல்விப்பணியை விரும்பலாம். வெளிவேலை யென்பது, பெரும்பாலும் வீட்டிற்கு வெளியும் சிறுபான்மை உள்ளும் ஏதேனுமொரு பணிசெய்து, தன் மனைவியும் மக்களுமான குடும்பத்திற்கு வேண்டிய பொருள்தேடல். இதற்கு ஆடவரே சிறந்தவர் என்பது வெளிப் படை. மனைக்கு விளக்கம் மடவார் (நான்மணி. 101) வினையே ஆடவர்க் குயிரே இனி, பெண்டிர் கல்விகற்றலாற் பயனென்னை யெனின், சிறப்பாக இல்லறம் நடத்துதலும், பிள்ளைகளைச் செவ்வை யாய் வளர்த்து அறிவூட்டலும் என்க. கல்விகற்ற பெண்டிரெல்லாம் கல்விப் பணியே செய்ய வேண்டும் என்னும் யாப்புறவில்லை. கணவன் சம்பளம் குடும்ப வாழ்க்கைக்குப் போதாதெனின், அதைப் போதிய அளவு உயர்த்துவது அரசின் கடமையாதலால், அதற்கே கிளர்ச்சி செய்தல் வேண்டும். களைகண்(ஆதரவு) இல்லாத கன்னிப்பெண்ணும் கைம் பெண்ணும் எங்ஙனம் பிழைப்பதெனின், அத்தகை யோர்க்கே கல்விப்பணி கட்டாயமாகத் தரல் வேண்டும் என அறிக. துவக்கப் பள்ளிகளிலும் பெண் பள்ளிகளிலும் மகளிர் கல்லூரிகளிலும் அவர் ஆசிரியைமாராகப் பணியாற்றலாம். வணிகத்துறைக் கல்வி பயின்றிருப்பின், அரசினர் அலுவலகங்களில் கணக்கப் பணியேற்கலாம். பல்வேறு மகளிர் தொழிற்சாலைகளும் அரசு நிறுவலாம். கல்வி கற்றல் இருபாலார்க்கும் பொதுவுரிமை. ஆயின், பெண்டிர் ஆடவர்க்குச் சரிசமமாக நூற்றுக்கு நூறு கல்விப்பணி பெறல் வேண்டுமென்பது சரியன்று. பெண்பாற்குச் சிறப்பான வும் இருபாற்கும் பொதுவானவுமான பல பதவிகள் பெண்டிர்க் குக் கொடுக்கப்படலாம். விகிற்றோரியா (Victoria) மாவரசியாரும் மங்கம்மையாரும் இந்திராகாந்தியம்மையாரும் போன்று சிறந்த தகுதியுடையவராயின், கல்வி கற்ற பெண்டிர் நாடாளவுஞ் செய்யலாம். பெரும்பட்டக் கல்விபெற்ற பெண்டிர், ஏதேனும் அலுவல் ஏற்காது தம் கல்வியை இல்லறத்திற்கே பயன்படுத்தினும் இழுக்கில்லை. பொதுத்தகுதி தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இரண்டும் பிழையறப் பேச எழுதப்படிக்கத் தெரிதல், உடல்நலம், உண்மை, நடுநிலை, நேர்மை, பிறர்நலம் பேணல், சுறுசுறுப்பு, கடமையுணர்ச்சி, ஒழுக்கம் என்பன எல்லாப் பணிகட்கும் பொதுத்தகுதியாம். முற்கூறியவையெல்லாம் சிறந்த பணியாளர்க்குரிய தகுதி கள். அவையில்லாதவர்க்கெல்லாம், அவரவர் திறமைக்குத் தக்க வாறு இடைத்தரமும் கடைத்தரமுமான பணிகளைத் தரல் வேண்டும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. பொதுவாக, ஒருவர் அறுபதகவை வரை பணியாற்றலாம். ஆற்றல் குறையின் முன்னும், அது நிறையின் பின்னும், ஓய்வு பெறலாம். ஆராய்ச்சி, ஆசிரியப் பணி முதலியவற்றிற்குப் பட்டறிவு மிகமிக ஆற்றல் பெருகுவதனால், அப் பணியாளர்க் குப் பகரமாகப் பணியாற்றப் பிறரில்லாவிடத்து, இயன்றவரை நீட்டிப்புங் கொடுக்கலாம். ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாயிருக்க வேண்டியது, பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சிய இக்காலத்தில், இளமையர்க்கு வேலைதருமாறு முதுமையரை யெல்லாம் 50ஆம் அல்லது 55ஆம் அகவையில் ஓய்வுபெறுவிப்பது இன்றி யமையாத தெனின், இளமையர்க்கு வேலையில்லாக் குறையை நீக்க, உண்மையான மாற்றாயிருப்பது மக்கட்டொகைக் குறைப்பேயன்றி ஓய்வகவையைத் தாழ்த்துவதன்று. ஒருசிலரை முந்தி ஓய்வு பெறுவிப்பதால், எல்லா இளைஞர்க்கும் வேலை யளித்துவிட முடியாது. மேலும், கட்சித் தலைவர், முதலமைச்சர், தலைமை மந்திரியார், குடியரசுத்தலைவர் ஆகியவர்க்கு அகவை வரம்பில்லை. ஆதலால், சிறப்புத் தகுதிபற்றி ஒரு சிலர்க்கு ஊழிய நீட்டிப்புக் கொடுத்தல் குற்றமாகாது. இனி, ஓய்வுபெற்றவர் நிலைமையும் கூட்டுடைமை நாட்டில் வருந்துவதற்கில்லை. அவர் இறக்குமளவும் ஓய்வுச் சம்பளம் இருக்கும். அது எய்ப்பில் வைப்புப்போல் உதவும். கடுமையுங் கண்டிப்புமான கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால், இன்னும் பத்தாண்டிற்குள் மக்கட்டொகை யைப் பாதியாகக் குறைத்துவிடலாம். அதன்பின் அச்சம் இல்லை. எல்லாக் குடும்பமும் இருபிள்ளை வரம்புடன் இன்புறும். பிறப்பும் இறப்பும் ஒத்திருக்கும். உலகுள்ளவரை கேடில்லை. போகா றளவிட்டி தாயினுங் கேடில்லை ஆகா றகலாக் கடை. என்று மக்கள் வாழ்விற் குறள் மாறியமையும். ஒருவர் தம் பேரப்பிள்ளைகளும் கொட்பேரப் பிள்ளை களும் அவர்கள் வழியினரும் இன்பமாக வாழ விரும்பின், இத் திட்டத்தையே ஊக்குதல் வேண்டும். எதிர்கால மக்கள் வாழ்வைப்பற்றிக் கவலையின்மையாலோ, தேர்தலிற் பெருவாரி மக்கள் நேரியைப் பெறல் வேண்டுமென்றே, கட்டாய மலடாக் கத்தைக் கட்சித்தலைவர் கையாளாதிருக்கலாம். ஆயின், இந் நூற்றாண்டிறுதியிலேயே அதன் தீங்கு வெட்டவெளிச்சமாகி விடும். இன்னும் பத்தாண்டிற்குள் உணவுத்தட்டு நீங்கிவிடு மென்றும், எல்லார்க்கும் வேலை கிடைக்குமென்றும் சொல் வது, எண்ணிச் சொல்லுங் கூற்றன்று. இன்னும் பத்தாண்டு செல்லின், இன்னும் பத்து அல்லது பதினைந்து கோடி மக்கட் டொகை கூடும். அதோடு, பத்திலொரு பங்கு விளைநிலமும் நிலவளமுங் குன்றும். அன்று இற்றை நிலையினுங் கேடாயிருக்கும். கட்டாய மலடாக்கம் கடினமானதென்று விலக்குவது, கார மருந்து கடியதென்று கொடிய நோயைப் பெருக்குவது போன்றதே. 6. சம்பளத்திட்டம் 1. வாழ்க்கைத் தேவைகள் இன்றியமையாதவை: மூசுவளி (மூச்சுக் காற்று. உயிர்வளி - oxygen), பாதுகாப்பு, நீர், உண்டி, உடை, உறையுள்(வீடு), உடல்நலம். வேண்டியவை: தட்டுமுட்டு, தொழிற்கருவி, தொழிற் பயிற்சி, நூற்கல்வி, ஒழுக்கம், வேலைப்பேறு, ஐம்புலவின்பம், ஊர்தி, ஓய்வு, போக்குவரத்து, அணிகலம். வேண்டாதன: செல்வப் பெருக்கம், இருப்புப் பணம். ஆண்டி முதல் அரசன்வரை அனைவர்க்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றே. தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே (புறம். 189) ஆதலால், பதவிகட்குச் சம்பளத்திட்ட வகுப்பு கீழிருந்து மேற்செல்ல வேண்டும். மனைவியும் இருபிள்ளைகளுமுள்ள ஓர் ஏவலன் (Peon) குடும்பத்திற்கு, இக்காலத்தில் 300 உருபா இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு காவலன் (Constable) நிலைமையும் ஏவலன் நிலைமையை ஒத்ததே. அதற்கு மேற்பட்ட பதவிகட்கெல்லாம் ஐம்பதும் நூறும் இருநூறும் ஐந்நூறும் ஆயிரமுமாக ஐயாயிரம் வரை கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குமேல் எவர்க்குஞ் சம்பளமிருத்தல் கூடாது. போர்க்காலத்திலும் பஞ்சக் காலத்திலும் படிகள் கூட்டப்படின், அவ்விரு நிலைமையும் நீங்கியபின் அவற்றைக் குறைத்துவிடல் வேண்டும். போரும் பஞ்சமும் நீங்கிய பின்னும் விலைவாசி யிறங்காது நிலைத்துவிடின், அப் படிகளைச் சம்பளத்தொடு சேர்த்துவிடல் வேண்டும். விலைவாசி மேலும் ஏறாதவாறு, உண்டாக்கத் தொழிலரையும் வணிகரையுங் கட்டுப்படுத்துவது அரசின் கடமையாகும். பணியாளர்க்கு வேண்டிய கருவிகளையும் தலைமையதிகாரிகட்கு வேண்டிய ஊர்திகளையும் அரசு அளித்தல் வேண்டும். ஆராய்ச்சியாளர்க்கு, அமைதியான, தூய காற்றோட்ட முள்ள இடங்களில், தக்க கருவிகளொடு கூடிய செந்தண நிலைப்பாட்டு (Airconditioned) அறையுள்ள வளமனைகளைக் கட்டித்தரல் வேண்டும். மேன்மேலுஞ் சம்பளத்திட்டக் குழுக்கள் அமைக்கப்படா வாறு அரசு எல்லா வழிகளையும் கையாள வேண்டும். 7. குலவேற்றுமை யொழிப்பு உலகில் வேறெங்கு மில்லாத ஒரு குமுகாயக் கேடு (Social evil) இங்கு இந்தியாவிலுள்ளது. வேறு எந்நாட்டிலும் எவர் பெயரைக் கேட்பினும், அவர் பெயர் மட்டும் தோன்றும்; இங்கோ ஒரு பெயருடன் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், பிள்ளை, முதலியார், செட்டியார், கவுண்டர், தேவர், நாட்டார், கோனார், மூப்பனார், நாடார், படையாட்சி முதலியவற்றுள் ஒன்றாக ஒரு வாலும் நீளும். இதனால் இந்தியரின் உயர்திணைப் பண்பு குன்றி, இக்கால அறிவியல்களை யெல்லாம் மேனாட் டாரே தோன்றி வளர்க்க வேண்டியதாயிற்று. பிறவிக்குலத் தோற்றம் ஆரியப்பூசாரியர் தென்னாடு வருமுன், இந்தியர்க்குள், இடமும் மொழியும் தொழிலும் மதமும்பற்றி யன்றி வேறெவ் வகையிலும் வகுப்பு வேறுபாடிருந்ததில்லை. அந் நால்வகை வேறுபாடும், விருப்பப்படி மாறக்கூடியனவாகவேயன்றி, வாழ்நாள் முழுதும் அல்லது இம்மையும் மறுமையும் தொடர் வனவாக இருந்தவையல்ல. பொருளிலக்கண நூலார் கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் நாற்பெருந் தொழிலடிப்படையில், அகப்பொருட் கிளவித் தலைவரை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று நால்வகுப்பாராக வகுத்திருந்ததை அடிப்படையாகக் கொண்டு, செம்மை பொன்மை கருமை என்னும் முந்நிறம் பற்றித் தமிழரை அல்லது பழங்குடி மக்களை ஆரியப் பூசாரியர் மூவகுப்பராக வகுத்து, வெண்மை நிறம்பற்றித் தம்மைத் தலைமையாக்கிக் கொண்டனர். நால் வகுப்பிற்கும் நிறம்பற்றி வரணம் என்பதே பெயராயிற்று. ஆரிய மொழியில் அனைத் திந்திய முறையில் நால் வரணமும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் எனப் பெயர்பெற்றன. பழங்குடிப் பேதைமை, மதப்பித்தம், கொடைமடம் என்னும் முக்குறை கொண்ட பேதை மூவேந்தரும், ஆரியப் பூசாரியரின் வெண்நிறத்தையும் அவர் முன்னோர் மொழியின் வெடிப்பொலியையுங் கண்டு மருண்டு, அவர் மருட்டினவாறே அவரை நிலத்தேவரென்றும் அவர் முன்னோர் மொழியைத் தேவமொழி யென்றும் நம்பி, அவருக்கடிமையராயினர். மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி. கோ எப்படி குடிகள் அப்படி. வரண அடிப்படையில் அமைந்த குலவகுப்பு, பிறவிப் பிணிப்புங் கொண்டது. ஆரியக் குலவகுப்பு ஏற்பட்டதிலிருந்து உலக முள்ளவரையும், ஒருவன் எத்தொழிலைச் செய்தாலும் அத் தொழில் பற்றிக் குலங் கொள்ளாது, தன் முன்னோன் ஆயிரந் தலைமுறைக்கு முற்பட்ட வரையினும் அவன் தொழில்பற்றியே தன் குலங்கொள்ளல் வேண்டும். கல்வி ஒரு குலத்தார்க்குரிய தன்று. இறைவன் அதை எல்லா வகுப்பார்க்கும் பொதுவாக்கி யிருக்கின்றான். ஒரு பாவலன் அல்லது நூல்வலன் அல்லது புதுப்புனைவாளன் எத்தொழிலாளர் குடும்பத்திலும் தோன்ற லாம். ஆயின், இந்தியாவில், இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட் டிற்கும் மாறாக, ஆரியப் பூசாரியர் கல்வியைத் தம் குலச்சிறப்புத் தொழிலாகக் கொண்டதனால் அல்லது கூறியதனால், கற்றோர் வகுப்பிற்குரிய பார்ப்பார், அந்தணர் என்னும் பெயர்கள் தமிழ ரிடை வழக்கற்றன. பார்ப்பான் அல்லது பார்ப்பனன் என்னும் பெயர், பிராமணன் என்பதன் திரிபன்று. அனன் என்பது முக்கால வினைமுற்றிலும் வரக் கூடிய சாரியை. எ-டு: செய்தனன் செய்கின்றனன் செய்வனன் பார்த்தனன் பார்க்கின்றனன் பார்ப்பனன் பார்ப்பான் நூல்களைப் பார்ப்பவன், அகக்கண்ணாற் காண்பவன், அறிஞன். Seer என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள். 403) அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (குறள். 30) கல்வி போன்றே துறவுநிலையும் எல்லாக் குலத்தார்க்கும் பொதுவாகும். ஆயின், ஆரியப் பூசாரியர் அதைப் பிராமணர்க்கே யுரியதாக்கி, பிராமணன் வாழ்க்கையை மாணவம் (பிரம சரியம்), இல்வாழ்வு (கிருகப் பிரஸ்தம்), காடுறைவு (வானப் பிரஸ்தம்), துறவு (சந்நியாஸம்) என நால்நிலையாக வகுத்து விட்டனர். இது எவ் வகையிலும் இடர்ப்பாடின்றி இனிதாக வாழும் முறைமையாகும். தமிழத் துறவு மணந்தும் மணவாதும் நிகழும். தமிழ முறைப்படி, பார்ப்பான் என்பது இல்லறத் தானையும், அந்தணன் என்பது துறவறத்தானையும் சிறப்பாகக் குறிக்கும். பிராமண வாழ்க்கையின் நால்நிலைகளுள் இல்வாழ்வு ஒன்றாதலால், பார்ப்பான் என்னும் பெயரும் அந்தணன் என்பதுபோலப் பிராமணர்க்கே யுரியதாயிற்று. பிராமணத்துறவு மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை (குறள். 345) என்று கொள்ளும் உயரிய நிலையதன்று. நூல் செம்பு முக்கோல் மணை தாங்கலும், ஆவும் பொன்னும் பெறலும், பிராமணர் வீட் டிலேயே உண்ணுதலும், முற்றத் துறவுக்கு முற்றும் முரணாம். தமிழர் அந்தணர் வகுப்பினின்று தள்ளப்பட்டதனால், அரசர் வணிகர் வேளாளர் என்னும் மூவகுப்பினராகவே அவர் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்தனர். வேளாளர் நிலைமைபற்றியும் நிறம்பற்றியும் வெள்ளாளர் (வெண்களமர்), காராளர் (கருங்களமர்) என இருவகுப்பாகப் பிரிந்தனர். முன்னவர் உழுவித்துண்பார், பின்னவர் உழுதுண் பார். வெள்ளாளர் தம் இழிவைச் சற்றுப் போக்கக் கருதிச் சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டனர். இது பிராமணன் மதிப்பீட்டை ஒருசிறிதும் மாற்றவில்லை. குலவேற்றுமை வரவரக் கடுமையாகிவிட்டதனால், பிராமணரை நோக்கி, தீண்டுவார், தீண்டாதார், அண்டாதார், காணாதார் எனத் தமிழர் நால்வகைப்பட்டுவிட்டனர். தீண்டுவார் அரசர் போன்றவர்; தீண்டாதார் தீண்டாது அண்டியே நிற்கும் வணிகர்போல்வார்; அண்டாதார் அண்டாது தொலைவில் நிற்கும் மள்ளரும் (பள்ளரும்) பாணரும் போல்வார்; காணாதார் மலையாள நாயாடிகள் போல்வார். அரசர் பிராமணரைத் தீண்டினாரேனும், அச்சத் தோடேயே செய்தாரென்பது, ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் வார்த்திகன் சினத்தைத் தணிக்க அவன் காலில் விழுந்து கும்பிட்டானென்று, இளங்கோவடிகள் கூறியிருப்ப தினின்று உய்த்துணரலாம். மூவேந்தர் மரபும் அற்றபின் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மூவகுப்பாரும் சூத்திரராயினர். ஒருசில வணிகரும் பிறரும் தம்மை ஆரிய இனத்திற் சேர்க்குமாறு பூணூல் அணிந்து கொண்டனரேனும், தமிழரெல்லாம் சூத்திரர் என்னுங் கொள்கை நீங்கியபாடில்லை. அண்டாதார் வகுப்பைச் சேர்ந்த மள்ளர், பறையர், பறம்பர் (தோல்வினைஞர்) முதலியோர் பஞ்சமர் என்னும் அஞ்சாங்குலத்தா ராயினர். அவர் தமிழர்க்குள்ளும் தீண்டா தார், அண்டாதார், காணாதார் என முத்திறப்பட்டனர். பிராமணரல்லாத ஒவ்வொரு குலத்தாரும் தமக்கு மேற்பட்ட குலத்தார்க்கு எத்தனை எட்டுத் (steps) தொலைவில் நிற்கவேண்டு மென்பது, அவ்வம் மேற்குலத்தின் தரத்திற்குத் தக்கவாறு நடை முறையில் வரையறுக்கப்பட்டது. தீண்டாதார் மேல்வகுப்பார் முன் செருப்பணிதல், வல்லவாட்டுப் போடுதல், குடைபிடித்தல் முதலியன விலக்கப்பட்டன. அக்கிராகரம் என்னும் பிராமணர் குடியிருப்பிற்குள் தீண்டாதார் எவ்வகை யிலும் புக முடியாது. நாயக்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும், பிராம ணியம் வலுத்ததனால் குலப்பிரிவினைக் கடுமையும் வலுத்தது. ஆங்கிலராட்சியிலேயே, பொதுக்கல்வி, அரசினர் அலுவலகங்களிலும் தொடர்வண்டிகளிலும் குலவேற்றுமை யின்மை, எல்லாக் குலத்தினரும் அரசியல் அலுவலராதல், துணையரையர் (Viceroy) வரை எல்லா ஆங்கில அதிகாரிகட்கும் தீண்டாதாரே சமையற்காரராகவும் பரிமாறிகளாகவும் அமர்தல் முதலிய சூழ்நிலைகளால், குலப் பிரிவினைக் கொடுமை முனைமுறிந்து மேன்மேலும் மழுங்கலாயிற்று. பிறவிக்குலத் தீமைகள் 1. தமிழரெல்லாரும் ஓரினத்தாரேனும், மணவாமை முதற் காணாமைவரை பற்பல தடைகளாற் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டுப் போனதினால், ஒற்றுமையின்றிச் சில குலங்கள் அடிக்கடி போரிடவும் நிலையாகப் பகைகொள்ளவும் நேர்ந்துள்ளது. இதனால் நாட்டில் அமைதி குன்றியது. 2. தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமை யில்லாது போயிற்று. 3. அமைச்சரும் அமர்த்ததிகாரிகளும் தம் குலவெறியால் நடுநிலை திறம்பி, அரசியற் பதவிகட்குத் தகுதிமிக்கவரைத் தள்ளிவிட்டுத் தகுதியற்ற தம் உறவினரையே அல்லது குலத் தாரையே அமர்த்த நேர்கின்றது. 4. மண்ணுலகில் விண்ணுலக வின்பந் துய்க்கத்தக்க காதல் மணங்கள், தடைப்பட்டுச் சாதல்மணங்களாக முடிகின்றன. 5. வளைந்து வளைந்து ஒரே குலத்திற்குள் மணஞ்செய்து வருவதால், மணமக்கட்குப் பிறக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் மதி விளக்கம் விஞ்சியவரா யிருப்பதில்லை. நீராவி வலிமையும் மின்னாற்றலுங் கண்டு இற்றை அறிவியல்கட்கும் கம்மியத்திற்கும் அடிகோலிய ஆங்கிலர்க்கு, கெலத்தியர் (Celts), சாகசனியர் (Saxons), தேனியர் (Danes), பிரெஞ் சியர், செருமானியர் முதலிய பல இனத்தாரின் அரத்தக்கலப்புத் துணையாயிருந்ததென்று கொள்ள இடமுண்டு. உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியும், உலகம் போற்றும் இயலிசை நாடகமும், கணிதம் கணியம் மருத்துவம் மடைநூல் முதலிய எண்ணரிய நுண்ணூலுந் தோற்றுவித்த குமரிநிலத் தமிழரின் வழிவந்தவர், இன்று அறிவு விளக்கமின்றி அடிமையராயிருப்பதற்கு, ஓரினத்துள்ளும் விரிவாக மணவுறவு கொள்ளாது ஒவ்வொரு சிறு குலத்திற்குள்ளேயே கொண்டுங் கொடுத்தும் வருவதே கரணியமாகும். பிராமணர் ஒரு குலத்துக்குள்ளேயே உறவு கொண்டும் கல்வியறிவு விஞ்சியுள்ளனரே யெனின், அவர் மூவாயிர மாண்டு கல்வியைக் குலத்தொழிலாகக் கொண்டதனால், கல்விக் கின்றி யமையாத நினைவாற்றலையும் உணர்ச்சி வலிமையையும் பெருக்கிக்கொண்டனர் என்க. மேலும், குருக்கள் போன்ற சில தமிழக் கூட்டத்தார் அவ்வப்போது பிராமணருடன் கலந்து போனதாகவுந் தெரிகின்றது. பேச்சிலும் பழக்கவழக்கத்திலும் பிராமணரைப்போல் நடித்துக்கொண்டும், சில தனிப்பட்ட தமிழர் அவரொடு சேர்ந்திருக்கலாம். இத்தகைய மறைமுகக் கலப்பிற்கு எத்துணையோ வழியுண்டு. ஆயின், ஆரிய வுணர்ச்சி யைப் போற்றிக் காக்கவேண்டு மென்பதே பிராமணர் உயிர்நாடிக் கொள்கை. அக்கை மகளை மணக்கக்கூடா தென்பதும், சில குலத்தார்க்குள் புறமணப் (exogamous) பிரிவுகளிருப்பதும், அகமணத்தின் (endogamous) தீங்கை ஏற்கெனவே தமிழர் அறிந்திருந்தமையைக் காட்டும். 6. தமிழ்ப் பகைவனான அயலானுக் கிடங்கொடுத்தல். ஒரு பதவிபற்றி இரு தமிழர் பிணங்கிப் போராடி ஒருவரும் விட்டுக்கொடாது ஒட்டாரஞ் செய்யின், அப் பதவியை அயலா னொருவன் பெற நேர்ந்துவிடுகின்றது. 7. தாய்மொழிப் பற்றின்மையும் தமிழப் பிறப்பிழிபும். 8. பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய அகக்கரணப் பண்பிழப்பு. திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆரிய வொழுக்க முறையின் தீங்கை யுணர்ந்து, பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972) ஒழுக்கம் உடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (குறள். 132) அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்று தமிழரை எச்சரித்தார். ஆயின், ஆங்கிலத்தையும் இக்கால அறிவியலையுங் கற்றபின்பும் தமிழன் தன் அடிமைத் தனத்தையுணராது, என்றும் பிறப்பில் தன்னை இழிந்த வனாகவே கருதிக் கொண்டிருக்கின்றான். இவ் விழிபுணர்ச்சி இன்னும் நூற்றுமேனி நாற்பதின்மரிடம் உள்ளது. இதைக் களையாவிடின் இன்னும் பல தலைமுறைகள் தொடரும். ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட தீங்குக ளெல்லாவற்றுள்ளும், மிகக் கேடானது தமிழினத் தாழ்வு ணர்ச்சியே. பிற நாடுகளிற் பிறப்பாற் சிறப்பின்மையையும், ஆங்கில நாட்டிற் பொதுமக்களும் (Commons) பெருமக்களாக (Lords) வுயர்வதையும், கண்ணாரக் கண்டுங் காதாரக் கேட்டும் திருந்தாதிருப்பவன் தமிழனாகான். கெடுக வுள்ளம் கேடிவன் கொள்கை தமிழன் எனவே தகவெதும் இலனே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி தமிழென விளக்கினுந் தாழ்மொழி யென்பான் பொன்னார் மேனிப் பொலிமுகம் வாய்ந்து நன்னீ ராடி நல்லுடை யணிந்து கல்வி தேர்ந்த கனம்பதம் பெற்று நாக ரிகத்தின் நன்கனம் வாழும் நெல்லைச் சிவவூண் வெள்ளாண் குலவனும் பிறப்பி லிழிந்தோன் பெயரிற் `சூத்திரன்' இறக்குந் துணையும் இழிவின் நீங்கான் இருமுறை குளிக்கினும் இவன்துப் புரவிலன் இவன்கை யுண்ணல் இழிவென் றதன்மேல் கல்வி நிரம்பாக் கரியவ னேனும் இருகை யேந்தி யிரப்பவ னேனும் அருந்தமி ழறியா அயலா னேனும் குலப்பெயர் ஒன்றைக் கூறின் தெய்வமாக் கொள்வான் விழுவான் கும்மிட் டெழுவான் அவனொரு தேவன் அருளிமண் வந்தோன் வழங்கா தெவர்க்கும் விளங்கா தெனினும் அவன்வாய் மொழியே ஆகுக வழிபட அவன்கை பட்டது அழுதே யிங்ஙனம் இனியெந் நாளும் இருக்க எனுமே. குலவொழிப்பு வழிகள் 1. குலப்பட்ட நீக்கம் பெயர்கள். மாணவர் சேர்ப்புப் படிவங்கள், அரசினர் பதிவேடுகள் முதலியவற்றிற் குலப்பட்டங்களை நீக்குதல் வேண்டும். குடியரசு தலைவர் உம்பர் மன்றத் (Supreme Court) தலைமைத் தீர்ப்பாளர் (Chief Justice), தலைமை மந்திரியார், பாராளுமன்றம் என்னும் நடுவணாளுமன்றத் தலைவர் இருவர் ஆகியோர் முதற்கண் தம் குலப்பட்டத்தை நீக்கிப் பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். பின்னர் ஒவ்வோர் உறுப்பு நாட்டிலும் அவரை யொத்த தலைமையதிகாரிகள் அவரைப் பின்பற்றலாம். ஆயினும், தமிழ்நாடு மூத்த நாடாதலாலும், திருவள்ளுவர் தோன்றி வாழ்ந்த நாடாதலாலும், இவ்வகையில் தானே ஏனை நாடுகட்கு வழிகாட்டலாம். 2. தகுதிபற்றிக் கல்வியும் வேலையும் மாணவர் சேர்ப்பிலும் வேலையமர்த்தத்திலும், தாழ்த்தப் பட்டவர்க்கு இன்னும் பத்தாண்டு கூட்டக்கூடிய சிறப்புச் சலுகை தவிர ஏனை நிலைமைகளிலெல்லாம், தகுதி (merit) யொன்றையே கவனித்தல் வேண்டும். 3. கலப்பு மணத்தை ஊக்குவிப்பு வேலையளிப்பு, சம்பளவுயர்வு, எளிய வட்டி மெள்ள மீட்புக் கடன் கொடுப்பு, இலவச மருத்துவம், பிறக்கும் பிள்ளை கட்கு இலவசக் கல்வியும் வேலையளிப்பும் முதலிய சிறப்புச் சலுகைகள் கலப்புமண மக்கட்குக் கொடுக்கத்தகும். மணமக்கள் குலங்களின் ஏற்றத் தாழ்விற்குத் தக்கவாறு, சலுகைகளின் அளவு அமைதல் வேண்டும். மணமக்கள் எளியவராயின் திருமணச் செலவிற் பாதியும், வெறுங் கையராயின் முழுமையும், அரசு ஏற்றுக்கொள்ளலாம். பத்திற்கு மேற்பட்ட தொகுதித் திருமணங்களாயின், ஆள்நரே அல்லது அமைச்சரே தலைமைதாங்கி அரசினர் கூட்டியத்தையும் (Band) உதவி நடத்திவைக்கலாம். மிக நெருங்கிய குலத்தா ரெல்லாம் முதற்கண் ஒன்று சேர்தல் வேண்டும். முக்குலத்தார் இவ்வகையில் முன்னேறிச் செல்வது போற்றத்தக்கது. 4. தொழிலடிப்படையிற் குடிமதிப்பு (Census) 5. விடுதிகளும் உண்டிச்சாலைகளும் தங்கல் மனைகளும் மண மண்டபங்களும் குலஅடிப்படையிலிராமை 6. குல வேறுபாட்டிற்குக் கரணியமான வீண்சடங்கு விலக்கம் 7. இயன்றவரை புலாலுணவு நீக்கம் ஊனுணவும் ஊனுணவு வகைகளும் இந்தியருள், சிறப்பாகத் தமிழருள், பேரளவு பிரிவினை யுண்டுபண்ணு கின்றன. 8. அரசினர் பொது விருந்துகளி லெல்லாம் சமையலையும் பரி மாறலையும் ஒரே குலத்தாரிடம் ஒப்படையாமை துப்புரவு, ஒழுக்கம், நாகரிகம், கல்வி என்னும் நான்கே குலவுயர்விற்கு அடிப்படையாயிருத்தல் வேண்டும். சிவவூண் வெள்ளாளர் போன்றவ ரெல்லாம் துப்புரவாளரே. அவர் சமைத்ததை அனைவரும் உண்ணலாம். அதை எவரேனும் உண்ண மறுப்பின், அரசு பொருட்படுத்தல் கூடாது. பிராமணர் இடைச்சியரிடம் தயிரும் நெய்யும், ஏனோ ரிடம் அப்பமும் (ரொட்டியும்) அவல் கடலையும் இன்குடிப்பும் வாங்கியுண்டுகொண்டு, வெள்ளாளர் சமைத்ததையுண்ணோ மென்று கூறுவது, உண்மைக்கு முரணானதும் உத்திக்குப் பொருந்தாததும் ஆகும். 9. வரண வேறுபாட்டை வரணிப்பதும் வற்புறுத்துவதுமான இலக்கிய வொழிப்பு மனுதரும சாத்திரம், சில புராணங்கள், பகவற்கீதையிற் சில பகுதிகள், சில நாடகங்கள், தமிழ்ப் பாட்டியல்கள் ஆகிய வற்றைப் புலவர் தேர்வுப் பாடமாக வைக்காததோடு, அவற்றை நூலகங்களினின்று அகற்றுதலும் வேண்டும். 10. பத்தாண்டிற்குப்பின் தாழ்த்தப்பட்டவர் சலுகை நீக்கம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உண்மையாக வுயர்த்து வதற்குத் தகுந்த வழிகளைக் கையாளாது, அரசியற் கட்சிகள் அவர் செய்தியைக் கட்சி வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்குமே பயன்படுத்திக்கொண்டு, பெயரளவிலும் கடமைக்காகவும் ஒருசில சலுகைகளை மட்டும் காட்டிச்செல்லின், உலகுள்ள அளவும் அவர் நிலைமை திருந்தாமலே யிருக்கும். ஆதலால், பொருளாட்சித் துறையில் மேல்வகுப்பாரோடு அவர் சமநிலை யடைதற்கேற்ற பத்தாண்டுத் திட்டத்தை வகுத்து, அது முழுவெற்றி பெறுமாறு கண்டிப்பாகக் கடைப் பிடித்து, அதன்பின் அதை அடியோடு நிறுத்திவிடுவதே எல்லார்க்கும் தக்கதாம். தீண்டாமை யொழிப்பு தீண்டாமை யொழிப்பும் குலவொழிப்புள் அடங்கு மேனும், அதன் கடுமையும் விரிவும்பற்றி இங்குப் பிரித்துக் கூறப்பட்டது . இது சக்கரத்துட் சக்கரம் போன்றதாதலின், இதைப் பிரித்துக் கூறினாலன்றி முற்ற விளக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர் என்பார் பள்ளர், பறையர், பாணர், பறம்பர் (தோல்வினைஞர்) என்பாரும், அவருக்குத் தொண்டு செய்யும் வண்ணார், மஞ்சிகர் அல்லது குடிமக்கள் (முடி வினைஞர்) என்பாரும், ஆகப் பல குலத்தார். பண்டைமுறைப்படி, பறையர் என்பார் பறைப்பாணர்; பாணர் என்பார் யாழ்ப்பாணர். குழற்பாணர், இசைப்பாணர் (பாடகர்) என்பவர் ஏனையிருவகைப் பாணர். மண்டைப் பாணர் என்பவர் உண்கலமேந்தியிரந்து வாழ்ந்த இரப்போர் வகையர்; இசைபாடியும் அகப்பைக் கின்னரி போன்ற எளிய நரப்புக் கருவி யியக்கியும் இரந்தவர் பாணரெனப்பட்டனர். மொண்டை - மண்டை. மொண்டை - மொந்தை. பண் - பாண் - பாணர். பாண் = பாட்டு, இசை. சக்கிலியர் என்னும் தெலுங்க வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்தபின் பறம்பர் என்னும் தமிழவகுப்பார் மறைந்தனர். பறைப்பாணர் மணப்பறையரும் பிணப்பறையரும் என இருவகையர். மேளகாரர் என்னும் இசைவேளாளர் குலந் தோன்றிய பின், பண்டைத் தமிழவகுப்பாரான மணப்பறையர் மறைந்தனர். முதற்காலத்தில் பறை யென்பது, மங்கலம் அமங்கலம் என்னும் இரண்டிற்கும் உரிய தோற்கருவிப் பொதுப்பெயர் என்பது, தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (அகத். 18) என்னுந் தொல்காப்பிய அடியால் அறியப்படும். கழகக் காலத்தில் ஊனுணவு இழிந்ததாகக் கருதப்பட வில்லை யென்பதை, கீழ்வரும் செய்யுட் பகுதிகள் தெரிவிக்கும். புலவு நாற்றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும் மெல்லிய பெரும தாமே........... செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.'' (புறம். 14) இது கபிலர் பாடியது. என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே (புறம். 235) இது ஔவையார் பாடியது. தடி = தசை, சதை. மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும் அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னா............ (புறம். 113) இதுவுங் கபிலர் பாடியது. மைவிடை = காராட்டுக்கடா (வெள்ளாட்டுக்கடா). இனி, எயினரும் பாணரும் மாட்டிறைச்சி யுண்டதும், இழித்தும் பழித்துங் கூறப்படவில்லை யென்பது, எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு தேமா மேனிச் சில்வளை யாயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்'' (சிறுபாண். 175-7) என்பதால் அறியப்படும். ஆமான் = காட்டுமாடு. சமணம் தமிழ்நாட்டிற் புகுந்த பின்னரே இல்லறத் தமிழரும் புலான்மறுத்தலை மேற்கொண்டனர். அதற்குமுன் துறவியரே அவ்வறத்தைக் கடைப்பிடித்தனர். அருளறத்தின் மேம்பாட்டினால் விரைந்து பரவிவந்த சமணத்தைத் தடுத்தற்கு, சிவநெறியாரும் அவ்வறத்தை இறுகக் கடைப்பிடிக்க வேண்டிய தாயிற்று. அதனால் சைவம் என்னும் சிவநெறிப் பெயரே மரக்கறி யுணவையுங் குறிக்கத் தலைப்பட்டுவிட்டது. ஊனுணவினர் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர். அத் தாழ்வு மாட்டிறைச்சி யுண்பாரை மிகக் கடுமையாய்த் தாக்கிற்று. பாணர் மாட்டிறைச்சி யுண்டவர். அவர் தொல்வரவுக் குலத்தொழிலோ, ஆண்டிமுதல் அரசன்வரை அனைவர்க்கும் அளவிறந்த இன்ப மூட்டுவதும், பெருமதிப்பிற் குரியதும், இடையறாத நல்வருவாய்க் கிடமானதும், பெண்டிரை மயக்கு வதும், உவளகம் சென்று கோப்பெருந்தேவியின் ஊடலையுந் தணிப்பதுமான இன்னிசைக்கலை. முத்தமிழில் இரண்டாகிய இசையையும் நாடகத்தையும் தொன்று தொட்டு வளர்த்து வந்தவர் அவரே. இசையும் கூத்தும், உண்மையில் வேதமோதுதல் அல்லாத எல்லாத் தொழில்களும், மனுதரும சாத்திரம் முதலிய ஆரியக் குலவொழுக்க நூல்களாற் பிராமணர்க்கு விலக்கப் பட்டிருந்தன வேனும், இசைத்தொழிலின் பெருமையையும் கவர்ச்சியையும் கண்ட தமிழ் நாட்டுப் பிராமணர், கி.மு. சில நூற்றாண்டுகட்கு முன்பே இசை யிலக்கணத்தை வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர். கி.பி. 2ஆம் நூற்றாண்டில், பிராமணர் பலர் வேதமோதுதலை விட்டுவிட்டு இசைத் தொழிலை மேற் கொண்டு மதுரைக்கு வடக்கில் ஒரு குடியேற்ற நகரை அமைத் திருந்தனர் என்பது, வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து (13 : 38-9) என்னும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும். பாணரை இசைத் தொழிலினின்று விலக்க வழி பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் பகைவர்க்கு, சமணத்தால் விளைந்த ஊனுண விழிவு நல்ல துணையாக வாய்த்தது. மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையிற் பாணனொடு வெகுளுதல் என்னுந்துறை பற்றிய, மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய் மெய்கொண்ட வன்பின ரென்பதென் விள்ளா வருள்பெரியர் வைகொண்ட வூசிகொற் சேரியின் விற்றெம்மில் வண்ணவண்ணப் பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை யாத்தின்னி போந்ததுவே. (386) என்னும் செய்யுளில் வந்துள்ள புலையாத்தின்னி என்னும் வசைச் சொல், சமணவரவிற்கு முந்திய காலத்தில் நிகழ்ந்திருக்க முடியாது. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (கற்பியல். 52) என்பது தொல்காப்பியம். இங்ஙனம் முதன்முதல் தாழ்த்தப்பட்ட தமிழ வகுப்பினர் பாணர். அதற்கடுத்துத் தாழ்த்தப்பட்டவர் பள்ளர் என்னும் மள்ளர். பள்ளர் என்பது உலக வழக்கு. மள்ளர் என்பது செய்யுள் வழக்கு. இருசொற்கும் பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே. மறவரை (வீரரை)க் குறிக்கும் மள்ளர் என்னுஞ் சொல் வேறு. உழுதுண்ணுங் காராளர் வகுப்பைச் சேர்ந்த மள்ளர் பண்டைக் காலத்தில் இழிவாய்க் கருதப்படவில்லை யென்பது கீழ்வருஞ் செய்திகளால் விளங்கும். நுங்கோ யாரென வினவின் எங்கோக் களமர்க் கரித்த விளையல் வெங்கள் யாமைப் புழுக்கிற் காமம்வீட வாரா ஆரற் கொழுஞ்சூ டங்கவுள் அடாஅ வைகுதொழில் மடியும் மடியா விழவின் யாணர் நன்னாட் டுள்ளும் பாணர் பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன். (புறம். 212) பெருவிறல் யாணர்த் தாகி யரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந. (புறம். 42) மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச்சூட்டோடு நெடுவாளைப் பல்லுவியற் பழஞ்சோற்றுப் புகவருந்திப் புதற்றளவின் பூச்சூடி .........mÇayhUªJ.” (புறம். 395) இத்தகைய காட்சிகளைக் கருத்திற்கொண்டே, கம்பரும், துள்ளிமீன் துடிப்ப வாமை தலைபுடை சுரிப்பத் தூம்பின் உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபக டுரப்பு வாரும். (கம்பரா. நாட்டுப். 18) என்று பாடியிருத்தல் வேண்டும். பண்டையுழவர் இயக்கிய கிணைப் பறையே இன்று பள்ளர் கூட்டியத்தில் உறுமி என்று வழங்கி வருகின்றது. ஒருசார் பள்ளரிடை வழங்கும் அஞ்ஞை என்னும் தாய்முறைப் பெயரும். பண்டை நாளில் இன்றுபோல் இழிவழக்காகக் கருதப்படவில்லை. மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன் அஞ்ஞைநீ யேங்கியழலென்று....''. (சிலப். 9 : 24-25) அன்னை-அஞ்ஞை பள்ளருக் கடுத்தாற்போல் ஒருமருங்கு தாழ்த்தப்பட் டிருந்தவர் நாடார் என்னும் சான்றார் குலத்தார். ஆயின் அவர் தீண்டாதாரல்லர். கோயிலுக்குள் மட்டும் புகவுபெறாம லிருந்தார். கள்ளிறக்குவார் சிவன் கோயில்களுட் புகக்கூடா தென்று ஆகமசாத்திரம் கூறுவதாகச் சொல்லப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரெல்லாம் சட்டையணியக் கூடா தென்று ஒரு கட்டுப்பாடிருந்தது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக் கத்தில், திருவனந்தபுரத்து நாடார்குலக் கிறித்தவப் பெண்டிர் சட்டையணிந்தனர். அதனால் தம்மை மேல் வகுப்பாரென்று சொல்லிக்கொள்ளும் தமிழரே அதை யெதிர்த்துக் கலகஞ் செய்தனர். பின் அது ஒருவாறு அடங்கிற்று. முப்பதாண்டு கழித்து மீண்டும் அச் சச்சரவு கிளர்ந்தது. அப்போது சென்னை ஆள்நராக இருந்த வயவர் சார்லசு திரவெல்யன் (Sir Charles Trevelyan) நாடார்குலப் பெண்டிரும் அவர் போன்றாரும் பிறரும் சட்டையணியலாம் என்று உத்தரவிட்டார். அதையொட்டித் திருவாங்கூர் அரசரும் ஓர் அறிக்கை வெளியிட்டார். 1874-ல், மதுரைக் கயற்கண்ணியம்மை யென்னும் மீனாட்சி யம்மன் கோயிலுள், நாடார் குலத்தார் புக முயன்று தடுக்கப்பட் டனர். அதன்பின், தம்மைச் சேர சோழ பாண்டியரின் வழிவந் தவரென்று கூறித் தமக்குச் சத்திரியர் என்று பெயர் சூட்டிக் கொண்டு. சட்டமுறைப்பட்ட எல்லா எழுத்தீடுகளிலும் பதிவேடுகளிலும் தம்மைச் சத்திரியர் என்றே குறித்தனர். அவர் நிறுவிய கல்வியகங்களும் தங்கல் மனைகளும் சத்திரியர் என்னும் பெயர் தாங்கின. தம் குலத்தை யுயர்த்துவதற்கான வழி வகைகளை ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் மேற் கொண்டனர். குடிசெய்வ லென்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (குறள். 1023) என்றார் திருவள்ளுவர். நாடார் குலத்திற்கோ குடிசெய்வார் பலர் தோன்றினர். தென்திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள நாடார்மார் கிறித்தவக் கல்வியினாலும், வடதிருநெல்வேலி வட்டாரத்திலுள்ள நாடார்மார் வணிகத்தினாலும் விரைந்து முன்னேறினர். அவருட் பாளையங்கோட்டைக் கிறித்தவரும் விருதுநகர் சாத்தூர் சிவகாசி வணிகரும், வெள்ளாளரளவு துப்புரவும் செட்டிமாரளவு வினைத் திறமும் பெற்றனர் எனின் மிகையாகாது. 1899-இல் நாடார்குலத் தென்மதத்தார் (இந்துக்கள்) சிவகாசி விசுவநாதீசுவரர் கோயில் என்னும் சிவன் கோயிற்குட் புகமுயன்றனர். அங்கும் தடுக்கப்பட்டனர். ஆயினும், நாடார் மார் முனைந்திருந்ததனால், கோயில் சாத்தப்பட்டது. அது கண்டு, மேல் வகுப்பார் என்பவரெல்லாம் பகை கொண்டார். நாடார்மார் துணிந்து உள்ளூர் மறவரைத் தாக்கினர். அதன் விளைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் கொண்ட மறவர் கூட்டம், சிவகாசிக்குட் புகுந்து நாடார் மாரை யெதிர்த்துக் கலகஞ் செய்து கொள்ளையடித்தது. 23 கொலைகளும் 102 தீவட்டிக் கொள்ளைகளும் பல தீக்கோள் களும் நிகழ்ந்தன. திருச்சிராப்பள்ளியினின்று படை வந்து கலகத்தையடக்கிற்று. மறவருள் 1958 பேர் தகைக்கப்பட்டனர். 552 பேர் சிறைத் தண்டனையும் எழுவர் கொலைத் தண்டனையும் பெற்றனர். சிவகாசியில் 500 பேர் கொண்ட ஏமக் காவற்படை (Reserve Police Force) நிறுவப் பட்டது. கலகக் காலத்தில், சிவகாசி நாடார்மார் சிலர் முகமதிய ரானதாகவும், கழுகுமலை நாடார்மார் பலர் உரோமைச் சபைக் கிறித்தவரானதாகவும் சொல்லப்படுகின்றது. பொதுக்கோவில்களுட் புக இடமில்லாமையால், நாடார் குலத்தார் பிராமணரையே குருக்களாகக் கொண்டு தமக்கெனத் தனிக்கோவில்களைக் கட்டிக்கொண்டனர். காந்தியடிகள், ஈ. வெ. ரா. பெரியார், சி. இராசகோபாலாச் சாரியார், வயவர் சி. பி. இராமசாமி ஐயர் ஆகியோர் தொண்டின் விளைவாக, தென்மதக் கோவில்களெல்லாம் தாழ்த்தப்பட்டோர்க்குத் திறக்கப்பட்டபின், நாடார்மார் மனக்குறைவும் நீங்கிற்று. ஒரு தூய தமிழக்குலத்தாரின் முன்னேற்றத்திற்கு, தமிழரே வலுத்த முட்டுக்கட்டையாயிருந்ததும், தமிழின் வளர்ச்சிக்கு இன்றும் தமிழரே தடையாயிருப்பதும், மிகமிக வருந்தத் தக்கதும் தென்னாப்பிரிக்க நிலையினுங்கேடு கெட்டதுமாகும். இறைவனருளால் ஆங்கிலராட்சி இங்கு ஏற்பட்டதனால், இத்துணை முன்னேற்றம் நிகழ முடிந்தது. இன்றேல், இதற்குள் எத்தனையோ குலத்தார் தாழ்த்தப் பட்டிருப்பர். தாழ்த்தப்பட்டவரென்று பொதுவாக ஒருசில குலத் தாரைக் குறிப்பினும், தமிழருள் ஒரு குலத்தாரேனும் பிராம ணருக்குச் சமமாகக் கருதப்படாமையால் தமிழர் அனைவரும் தாழ்த்தப்பட்டவரே. இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவ ரேயாவர். தமிழர் அனைவருள்ளும் ஊனுண்ணாதவர் உயர்ந்தவ ரென்றும் ஊனுண்பாருள் ஆடு கோழி மீன் முட்டை மட்டும் உண்பவர் உயர்ந்தவரென்றும், பன்றியும் நண்டும் உண்பவர் அவரினுந் தாழ்ந்தவரென்றும், மாடு தின்பவர் எல்லாரினுங் கடைப்பட்டவ ரென்றும் எண்ணக் கிடக்கின்றது. ஐரோப்பியர், அமெரிக்கர், அரபியர், யூதர் ஆகிய அனை வரும் மாட்டிறைச்சி யுண்பவரே. வேதக்காலத்து ஆரியப் பூசாரியரும் அதையுண்டவரே. பாணரைச் சிறக்க உண்பித்தும் அவர்க்குப் பரிசளித்தும் பொற்பூச் சூட்டியும், மூவேந்தரும் போற்றிக் காத்தனர் என்று புறநானூறு பறைசாற்றுகின்றது. இங்ஙனமிருந்தும் அவர் பிற்காலத்துத் தீண்டாதாரான மைக்கும், நந்தனார் போன்றார், சுட்டெரிக்கப் பட்டமைக்கும், ஒரு கூட்டத்தாரின் கட்டுப்பாடான திட்டமே கரணியமா யிருந்திருத்தல் வேண்டும். அத் திட்டத்தைத் தீட்டிய அயலார் ஓரளவு திருந்திவரினும், அவரால் ஏவப் பட்ட தமிழப் பேதையர் அதை நிறைவேற்றுவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருப்பது, மிகமிகக் கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டவரை இன்று கடுமையாகத் தாக்கிக் கொண்டிருப்பது தீண்டாமை யொன்றே. அதனாலேயே அவர் பொருளாட்சி நிலைமையும் முன்னேற்றமும் நிலையாகத் தடைப்பட்டுள்ளன. ஒருசிலர் கல்வி கற்றுப் பதவி பெற்றதனால் மட்டும் அவர் நிலைமை திருந்திவிடாது. நூற்றுக்கணக்கான தலைமுறை நல்லுணவும் நல்லாடையும் நாகரிக வளர்ப்பும் இன்றி, கோடைவெயிலிற் காய்ந்தும் குளிர் பனியில் விறைத்தும், மாடுபோல் உழைத்து மனக்கவலை யால் இளைத்து, துப்புரவில்லாது தோற்றமுங் கெட்டு, தன்மான மும் தன்முயற்சியும் என்னவென்றறியாது வறுமையால் வருந்தி, மேல்வகுப்பாரால் நாயும் பன்றியும் போல் இழிவாகவும் பூச்சியும் புழுவும்போல் எளிமையாக வும் எண்ணப்பட்டிருக்கும் இந் நிலையில், தாழ்த்தப்பட்ட இனம் தகுந்த வழியைக் கடைப் பிடித்தாலன்றி ஆயிரவாண்டுத் திட்டத்தாலும் அணுவளவும் நலம் பெறாது. முதன் முதலாகச் செய்யவேண்டியது தோற்ற மாற்ற மும் இழிவுணர்ச்சி நீக்கமுமே. மேல்வகுப்பாருள் எத்துணை யோ படிமுறை ஏற்றத் தாழ்விருப்பினும், தாழ்த்தப்பட்டவர் பார்வையும் அவர் குடியிருக்குஞ் சேரியும் காண்பார்க்குக் கண்டமட்டில் ஒரு தனி வேற்றுமைக் காட்சி தோன்றி ஓர் அருவருப்புணர்ச்சியை உண்டு பண்ணுகின்றது. இந் நிலைமை கல்லாதவர்க்குரியதே. கற்றவர் சின்னஞ் சிறுபான்மை யாராதலால், பென்னம் பெரும்பான்மை அதனால் திருந்தி விடாது. நீண்ட நாளாகவுள்ள அநாகரிக வுடம்பும் உடனே திருந்தி விடாது; நெடுகலுமிருந்த தாழ்வுணர்ச்சியும் திடுமென நீங்கிவிடாது. மேல்வகுப்பானொருவன் கீழ் வகுப்பானொருவனைத் தனக்குச் சமமாக இருக்கையில மர்த்தினும், ஓர் அலுவலகத் தலைவன் முன் ஏவலன் போல அஞ்சிக்கூசுவான் ஆதலால், மனமாற்றம் வேண்டும். இதற்கு ஏற்றது கல்வி யொன்றே. தாழ்த்தப்பட்டவரை உண்மையாக முன்னேற்ற வேண்டுமெனின், செலவைப் பொருட்படுத்தாது ஐந்து அகவை முடிந்த தாழ்த்தப்பட்ட இனப் பிள்ளைகட் கெல்லாம் கட்டாய இலவசக் கல்வியளித்தல் வேண்டும். இலவசக் கல்வியில் இலவசவுடை யும் சேரும். அதற்குச் செல்வர் உதவுதல் வேண்டும். பிள்ளைப் பருவத்திலேயே எல்லாப் பிள்ளைகளும் கூடிப்பழகின், குலவேற்றுமையுணர்ச்சி தோன்றாது. பிள்ளைப்பருவ நட்பும் இறுதிவரை தொடரும். நாள்தொறுங் குளித்து நல்லுடையணிந்து எண்ணெய் தேய்த்துத் தலை சீவித் துப்புரவான இடத்திலேயே உட்காரும் நாகரிகப் பழக்கம், மெல்ல மெல்ல நல்ல தோற்றத்தை யுண்டுபண்ணும். ஒரு தோட்டியின் பிள்ளையைப் பிறந்தவுடன் ஒரு வெள்ளாளன் அல்லது பிராமணன் வீட்டில் வளரவிடின், அப் பிள்ளை வளர்ந்த பின் நல்ல தோற்றங் கொண்டிருக்கும். இதற்கு மாறாக வெள்ளாள அல்லது பிராமணக் குழந்தையை ஒரு தோட்டி வீட்டில் விடின், தோட்டிக் கோலமே கொண்டு வளரும். ஆதலால் தொடர்ந்து பத்தாண்டுக் கல்வியளிப்பின், ஒரே தலைமுறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் எல்லோரை யும் நாகரிகராக மாற்றிவிடலாம். நாடார், படையாட்சியர் (பள்ளியர்), இடையர், மறவர், உடையார் முதலிய தீண்டும் வகுப்பார் பலரும், வெயிலிற் காயினும் வயல்வேலை செய்யினும், துப்புரவாயிருப்பதால் தோற்றங் கெடாதுள்ளனர். அங்ஙனமே, தீண்டாதாரும் துப்புரவாயிருப்பின் தோற்றங் கெடாதிருப்பர். கல்வியினால் அறிவும், துப்புரவும் தன்மானமும் துணிவும் பெற்றபின், ஒருவனுக்குத் தாழ்வுணர்ச்சியிராது. எட்டிநில் என்று எவனும் சொல்லவும் மாட்டான் . எந்தத் தெருவிலுங் குடியிருக்கலாம்; எவரொடும் பழகலாம்; எக் கடைத் தெருவிலும் எப் பொருளும் விற்கலாம். பொருள் சேரும். பொருளாட்சி நிலை திருந்தும். ஊர்க் கிணற்றில் எல்லாப் பெண்டிரும் தண்ணீர் எடுக்கலாம். ஊர்க் குளங்களில் எல்லாருங் குளிக்கலாம். தீண்டும் ஒருவன் ஓர் ஊரில் தன்னந்தனியனாயிருந் தாலும், அவனுக்குப் பாதுகாப்புண்டு; ஆயின் தீண்டாதவர் நூற்றுக் கணக்கினரேனும் அச்சத்திலேயே வாழ வேண்டி யிருக்கும். ஆதலால், தீண்டாமை விலக்கே தாழ்த்தப்பட்ட வர்க்கு அரசு செய்யும் உண்மையான நன்மையாகும். தாழ்த்தப்பட்டவரைத் தாழ்த்தப்பட்டவ ரென்று சொல் வதே மானக்கேடாம். அதினும் பிறர் சொல்லாது தாழ்த்தப் பட்டவரே சொல்லிக்கொள்வது தம்மைத் தாமே தாழ்த்து வதாகும். ஆதலால், தாழ்த்தப்பட்ட (அரிசன) மாணவர் விடுதியென்று தனியாக இருப்பதை உடனே நீக்கிவிட்டு மேல் வகுப்பு மாணவர் விடுதியொடு சேர்த்துவிடல் வேண்டும். தாழ்த்தப்பட்டவர்க்குக் கட்டிக் கொடுக்கும் குடியிருப்பு களும், ஊரினின்று நீங்கியிராது ஏனை வகுப்பார் குடியிருப்பு களோடு சேர்ந்தேயிருத்தல் வேண்டும். அரிசனம் என்று பெயர் மாற்றியவுடன், தீண்டான் தீண்டுவானாகிவிடான். ஒரு குழந்தை தன் தாயிடம் தேங்காய் கேட்டு அழுதது. அவள் அது கக்கா என்று சொன்னாள். உடனே அது கக்கா கேட்டு அழுதது. ஆகவே, பெயர் மாற்றத்தாற் பொருள் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பதை அறிதல் வேண்டும். மேலும், அரிசனம் (ஹரிஜன்) என்றால் திருமால் மக்கள் அல்லது திருமாலடியார் என்றே பொருள்படும். ஆதலால், தாழ்த்தப்பட்டவர்க்கும் சிவவணக்கத்தார்க்கும் ஏற்காது. தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவரென்று காலமெல் லாஞ் சொல்லிக்கொண்டிருத்தல் கூடாது. அதுவே ஒரு குலப் பிரிவினையாகும். பத்தாண்டு முடிந்தபின், தாழ்த்தப் பட்டோர் ஏனையர்போல் தாழ்த்தப்படாதவராய்த் தம் முயற்சியாலேயே வாழ்தல் வேண்டும். ஒரு பிள்ளைக்குக் காலமெல்லாம் பெற்றோர் உண வூட்டிக் கொண்டிரார். பொருள் தேடும் பருவம் வந்தபின், மகன் பிரிந்துபோய்த் தானே பொருள் தேடி வாழ்தல் வேண்டும். மகளும் அத்தகையோன் ஒருவனொடு கூடிவாழ்தல் வேண்டும். அங்ஙனமே ஒரு குறித்த கால எல்லைவரைதான் அரசும் உதவமுடியும். அதன்பின் தாழ்த்தப்பட்டவர் தாமே தம்மைக் கவனித்துக்கொள்ளல் வேண்டும். அரசு செய்ய வேண்டியதெல்லாம் மானத்தொடு தன் முயற்சியால் வாழ்வதற்குத் தடையாயுள்ள இழிவை வேர றுப்பதே. யாதொரு கட்டுப்பாடுங் கரணியமுமின்றிக் கொத்தடி மையுங் குலவடிமையுமாய், எந்த மேல்வகுப்புச் சிறுவனுஞ் சிறுமியுங்கூட அதிகாரத்தொடு நில் என்றால் நிற்கவும், சொல் என்றாற் சொல்லவும், வா என்றால் வரவும், போ என்றாற் போகவும், செய் என்றாற் செய்யவும், வை என்றால் வைக்கவும், முள்வழியுஞ் சுள் (சுடு) வழியுஞ் செருப்பின்றி நடக்கவும், கோடை வெயிற்குங் கொடுமழைக்குங் குடை பிடியா திருக்கவும், விழா நாளும் வெயில்நாளுஞ் சட்டை யின்றித் திரியவும், காட்டுக் கிணற்றில் நீரெடுத்துக் கானாற்றிற் குளிக்கவும், காலமெல்லாம் பாடுபட்டுங் கைப் பொருளின்றியிருக்கவும், பண்ணையாரைக் காணுங்காற் பதைபதைத்துக் கைகட்டி வாய்புதைத்து உளமொடுங்கி உடல் நடுங்கித் திணறவும், கூலியையுயர்த்தச் சொல்லின் சுட்டெரிக்கப்படவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன் முறையாய் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உள்ள நிலையில் இந்தியாவை ஓர் உரிமை நாடென்று எவருங் கூறவொண்ணுமோ? nguha«(Congress) ஆட்சியேற்று இன்று கால் நூற்றாண்டிற்கு மேலாகியும் தாழ்த்தப்பட்டவர் நிலைமை திருந்தவில்லை. உயர் வகுப்பாரும் இடைவகுப்பாரும் போலத் தாழ்வகுப்பாரும் பல குலத்தார் என்பதை அரசு இன்னும் அறியவில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தார்க்கு இன்னொரு தாழ்த்தப்பட்ட குலத்தார்மேல் தம் குலத்தார் மேலுள்ள அளவு பற்றிருத்தல் இயலாது. ஆதலால் பள்ளர், பறையர், பறம்பர் (சக்கிலியர்) ஆகிய முக்குலத்தார்க்கும் வெவ்வேறு அமைச்சர் இருத்தல் வேண்டும். மேல் (தலை), நடு (இடை), கீழ் (கடை)என்னும் முத்திற வகுப்பாருள், மேல்வகுப்பாரும் நடுவகுப்பாரும் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பிற குலத்தாருடன் உண்பர். ஆயின் பள்ளர் பறையரின் வீட்டிலும், பறையர் பறம்பரின் வீட்டிலும் உண்பதில்லை. இதற்குத் தொழில் வேற்றுமையும் ஊண் வேற் றுமையும் மொழி வேற்றுமையும் கரணியமாகும். சில இடங் களில் இரு குலத்தாரிடைத் தொல்வரவான பகைமையுமுண்டு. இனித் தோட்டி வேலை செய்யும் பறம்பரின் தீண்டா மையைப் போக்க நகரங்களில் நரகலெடுக்கும் வேலையை அறவே நீக்கல் வேண்டும். எடுப்புச் சலக்கப்புரைகளை யெல்லாம் அடிப்புச் சலக்கப்புரைகளாக மாற்றுதலும் வேண்டும். பழைய துப்புரவுநிலை நிலவ வேண்டுமெனின் மக்கட்டொகைக் குறைப்பும் இன்றியமையாததாகும். இன்னோரன்ன சீர்திருத்தங்களைச் செய்து தாழ்த்தப் பட்டோரை உயர்த்தாவிடின் அமெரிக்காவிலும் தென்னாப் பிரிக்காவிலும் கருப்பருக்குச் செய்யப்படுங் கொடுமையைக் கண்டிக்க இந்திய அரசிற்கும் அரசியற் கட்சிகட்கும் எள்ளளவுந் தகுதியில்லை. இனி மதமாற்றத்தினால் தாழ்த்தப்பட்டோரின் தாழ்வு நீங்கும் என்று கருதுவதும் தவறாகும். மலையாள நாட்டில் நாயாடிகள் சிலர் முகமதியரான பின்பும் `தொப்பியிட்ட நாயாடிகள்' என்னும் பெயரே பெற்றனர். ஆதலால், பழைய கருப்பன் கருப்பனே. நடுவணரசின் வலிமையாலும் கட்டாயக் கல்வித்திட்டத்தாலும் நாடு முழுதுமுள்ள குமுகாயம் (சமுதாயம்) சீர்திருந்தினாலன்றி, வேறெவ் வகையாலும் தாழ்த்தப்பட்டோர் நிலைமை திருந்த வழி யில்லை. சிலர் மதமாறி நெருப்பவிந்தது மன்றி வாய்த்தவிடும் போனது போலத் தாழ்வு நீங்காததுடன் தமக்கிருந்த சிறப்புச் சலுகையையும் இழந்துள்ளனர். ஆதலால் மறுமை நன்மை நோக்கியன்றி மதமாறுதல் தகாது. நடுவணரசு தீண்டாதாரின் தீழ்ப்புத் தீர்தலின் சடுத்தத்தை (urgency) யுணர்ந்து, பத்தாண்டு இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தை உடனே புகுத்தல் வேண்டும். தேர்தல் வெற்றி நோக்கிப் பண்ணையார் வகுப்பின் உதவி வேண்டி இதைக் கடத்திவைப்பின், இது கூட்டுடைமை யாட்சியாலன்றித் தனியுடைமை யாட்சியால் இயலாதென்ற முடிபிற்கே வருதல் வேண்டும். நால் வரணக் குழப்பம் ஆரியர் கி.மு. 2000 போல் இந்தியாவிற்குட் புகுந்த போது பெருங்கூட்டமாயிருந்தனரென்றும் தொழில் பற்றிப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வகுப்பாராயமைந்து மிக ஒழுங்குபட்டிருந்தனரென்றும் அப் பாகுபாட்டையே இந்தியப் பழங்குடி மக்களிடையும் புகுத்தினர் என்றும், மேலையர் தவறான கருத்தைக் கொண்டி ருக்கின்றனர். ஆரியருட் பூசாரியர் தவிர ஏனைய ரெல்லாம் பழங்குடி மக்களொடு இரண்டறக் கலந்து போயினர் என்பதையும், அப் பூசாரியரே தமிழிலக்கண நூல்கள் கூறிய அந்தணர் முதலிய நால்வகுப்பைத் தமக்கேற்ற வாறு திரித்து நால்வகைப் பெருங்குலங்களை அமைத்து விட்டனர் என்பதையும் அவர் அறியார். ஆரிய நால்வரணம் நிற அடிப்படையில் அமைந்தது. நாலாம் வரணத்தானான சூத்திரன் நிறம் கருப்பு. அவன் தொழில் கைத் தொழிலுங் கூலி வேலையும். தமிழவேளாளர் நிறமோ பொன்மை. அவர் தொழிலோ உழவு. ஆதலால் சூத்திரரென்று அவர் தம்மைக் கருத வேண்டியதில்லை. தமிழ நால்வகுப்பு இலக்கண நூலிற் குரியதேயன்றி நடைமுறைக் குரியதன்று. கைத்தொழிலாளரும் கூலி வேலைக் காரரும் உழவர்க்குப் பக்கத் துணைவரென்றே கொள்ளப்பட்ட தனால் அவர்கள் தொழில்களெல்லாம் உழவில் அடக்கப்பட்டு விட்டன.ஆகவே அவர்கட்குத் தலைமையில்லாது போயிற்று. ஆரியப் பூசாரியர் தமிழ வேளாளரை இழிவுபடுத்தற் பொருட்டே தொழிலாளரையும் கூலிக்காரரையும் நாலாம் வகுப்பினராக்கி நாலாம் வகுப்பினர்க்குரிய உழவுத்தொழிலை மூன்றாம் வகுப்பினரான வணிகர் தொழிலொடு சேர்த்து விட்டனர். இது இயற்கைக்கு மாறானதாகும். இனி ஆனைந்து பிராமணர்க்கு மிகத் தேவையானத னால், ஆயர் தொழிலான ஆவோம்பலையும் வணிகர்க்குரிய தாக்கினர். நாலாம் வகுப்பு எண் வரிசை யொன்றே தமிழ வேளாளரை ஆரிய வகுப்புச் சூத்திரரோடு இணைக்க இடந் தந்தது. தமிழ வணிகர்க்கு வணிகஞ் செய்தல் ஒன்றே யன்றி வேறு தொழிலில்லை. தமிழ வேளாளர்க்கும் உழவுத்தொழில் ஒன்றே யன்றி வேறு தொழிலில்லை. ``வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.'' (தொல். மர. 79) ``வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல(து) இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி'' (தொல். மர. 82) இவை ஆரிய வரணத் தொழில் வகுப்பொடு முரண்படுதல் காண்க. இனி, அரசன் என்பவன் அவ்வந் நிலத்து மக்கள் தலை வனேயன்றி அவரினின்றும் வேறுபட்ட தனி வகுப்பின னல்லன். ஆரியர் சத்திரியரோ ஒரு தனி வகுப்பார். தமிழ அந்தணர்க்கு உடம்பும் மிகை யென்றார் திருவள்ளுவர். ஆரியத் துறவியர்க்கோ பூணூலும் நீர்ச்செம்பும் முக்கவர்க் கோலும் இருப்பு மணையும் என்றும் உட னிருத்தல் வேண்டும். ``நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய.'' (தொல். மர. 71) இனி அவாவறுத்தலை இன்றியமையாத தலையாய துறவறமாகக் கூறினார் திருவள்ளுவர். ஆரியத் துறவியோ ஆவும் பொன்னும் அளவிறந்து பெறுதற்குரியவனாகின்றான். ``ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே'' (இனியவை. 23) இனி, தமிழ்நாட்டு நால் வரணத்தாருள் ஏனை மூவரும் தூய தமிழராயிருக்க அந்தணன் மட்டும் பிராமணனா யிருப்பது வியக்கத்தக்கதே. பண்டைப் பேதை மூவேந்தரே இதற்குத் துணையாயிருந்தவர். இங்ஙனம் அரசரே துணையாயிருந் திருப்பின் எந்நாட்டிலும் இத்தகைய நிலைமையைத் தோற்று வித்திருக்கலாம். உலகில் முதன்முதல் தோன்றிய நாகரிக இனத்தான் தமிழன். அவன் மொழி தமிழ். தமிழ் திரிந்து திரவிடமும், திரவிடம் திரிந்து ஆரியமும் ஆனது போன்றே தமிழன் திரிந்து திரவிடனும், திரவிடன் திரிந்து ஆரியனும் ஆகி யிருக்கின்றான். ஆதலால் பாட்டன் இனத்தானான தமிழ னுக்குப் பேரன் இனத்தான் ஆனவன் ஆரியன். இத் தொடர்பே யன்றித் தமிழனுக்கு ஆரியனொடு நேரடியான தொடர்பு ஒன்றுமில்லை. ஆதலால் ஆரிய வரணப் பகுப்புத் தமிழனைத் தழுவாது. தமிழ் எங்ஙனம் தனிப்பட்டதோ அங்ஙனமே தமிழனும் தனிப்பட்டவனாவான்; அதோடு தமிழால் தலைமையான வனும் ஆவான். ஆதலால் இடைக்காலத்தில் ஏற்பட்ட இழிவுணர்ச்சியை உதறித் தள்ளிவிட்டு ஏக்கழுத்தங் கொண்டு ஏறுபோற் பீடுநடையிடுக. தமிழன் எவனுக்கும் பிறப்பால் தாழ்ந்தவனல்லன். 8. மதுவிலக்கு மதுவிலக்கு நல்லதே. ஆயின் அதற்கும் சில விலக்குண்டு. உழைப்பாளி, பிள்ளை பெற்ற பெண்டு, நோயாளி, அயல் நாட்டார் ஆகியோர்க்கு மது மிகத் தேவையானதே. சென்னைத் துறைமுகத்தினின்று பெரும் பொறையாக இரும்பேற்றப்பட்ட ஒரு வண்டியை, குளித்ததுபோல் அல்லது மழையில் நனைந்ததுபோல் உடம்பு தோன்றுமாறு வேர்வை யொழுக ஈருழைப்பாளிகள் மயிலைக்கு இழுத்துச் சென்றபின் அவருடம்பு வலி, பிள்ளை பெற்ற பெண்டின் உடம்புவலியை ஒத்திருக்கின்றது. இதை யறிந்தே இரு வலியையும் `லேபர்' (labour) என்னும் ஒரு சொல்லாற் குறிக்கின்றனர் ஆங்கிலர். இவ்விரு வலியும் முந்திரிச் சாராயத் தினாலன்றிக் குளம்பி நீராலும் (coffee) கொழுந்து நீராலும் (tea) தீரா. முந்திரிச் rhuha«-brandy. நோயாளியையும் அயல்நாட்டாரையும் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. அயல்நாட்டாரால் அரசிற்கு நல்ல வருவாயு முண்டு. கிறித்தவ ஊழியருள் தலைசிறந்தவரான திருப்பவுல் (St.Paul) தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் திருமுகத்தில் (5:23) நீ அடிக்கடி நோய்ப்படுவதால் தண்ணீரை மட்டுங் குடியாதே. உன் செரிமானத்திற்கு உதவுமாறு சிறிது முந்திரிச் சாற்றையும் (wine) சேர்த்துக்கொள் என்று அறிவுரை கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. 1854-க்கும் 1862-க்கும் இடையில் மலேயத் தீவுக் கணத்தைத் துருவி உயிரினங்களை ஆய்ந்த உவாலேசு (Alfred Russel Wallace), ஒருமுறை அவர் சென்ற படகு கடற் கொந்தளிப் பில் அகப்பட்டுக் கொண்டபோது, அவர் கொடுத்த மது வருந்திப் படகோட்டியர் ஊக்கமாய்த் தண்டு வலித்ததனால் ஏமமாய்க் கரைசேர்ந்தனரென்று கூறியிருக்கின்றார். மதுவை அளவாக வுண்டாற் கேடு செய்யாதென்று தெரிகின்றது. கோடைக்காலத்திற் கிடைக்குங் குளிர்ந்த பனங் கள்ளும், மாரிக்காலத்திற் கிடைக்கும் வெப்பமான தென்னங் கள்ளும் எளிய உழைப்பாளிக்கு இறைவன் அளித்த குடிப்பா என்று ஆராய்தல் வேண்டும். மதுவைக் கல்லா மாந்தர் மட்டுமன்றிப் பல்கலைக் கழகத் துணை வேய்ந்தரும் உயரறமன்றத் தீர்ப்பாளருமாகிய கற்றோரும் அருந்துகின்றனர். அம்பகம் (permit) பெறாமை யாலோ வேண்டாமையாலோ ஒருவர் மதுவருந்தலை விட்டு விட்டாரென்று கருத முடியாது. மறைவாக அருந்தப் பல வழிகளுண்டு. மதுவை விலக்கின் எல்லா நாடுகளிலும் என்றைக்கும் விலக்குதல் வேண்டும். ஒரு நாட்டில் மட்டும் விலக்குவதும் விலக்கின நாட்டிலும் ஆட்சி மாறியபின் மீண்டும் புகுத்து வதும் கூடா. மதுவிலக்கை நிறைவேற்றும் காவல் துறையினர் உண்மையும் ஊக்கமும் இறுதிவரை கடைப்பிடிக்கும் உறுதியும் உள்ள வரா? இடையில் ஊக்கந் தளர்பவரா? அல்லது கடமைக்குப் பணியாற்றுபவரா? கள்விலைஞரொடு கள்ளக் கூட்டாயிருப் பவரா? மதுவிலக்கு மீறிகள் தொகை வரவரக் குறைகின்றதா? கூடுகின்றதா? அல்லது அப்படியே யிருக்கின்றதா? நச்சு மதுவுண்டு சாதல் தொடர்கின்றதா? நின்றுவிட்டதா? என்று இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து தொழிலாளர் வகுப்பின் கருத்தெடுத்து, பெரும் பாலார் மதுவை, விரும்பின் எல்லா நாட்டு மதுக்களையும் வருவித்து ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து மனமயக்கமும் நரம்புத் தளர்ச்சியுமின்றி உழைப்பு வலியைத் தீர்ப்பதும் உடம்பிற்கு நல்வலுவைத் தருவதும் நறுமணமும் இன்சுவையும் உள்ளது மான மதுவை அரசே ஆங்காங்குத் தொழிற்சாலைகளில் உருவாக்கி அளவாக நேர்மையான விலைக்கு விற்பின் தொழிலாளர்க்குப் பெருநன்மையாம்; அரசிற்குந் தொல்லை யில்லை. ``முட்டிக்கள் ளென்ப முதுபனை தெங்கீந் தங்கள்ளே புட்டிக்கள் ளென்ப பிராந்தி விசுக்கி பீர்சின்னாம் சட்டிக்கள் ளென்ப காப்பி கொக்கோ தேயிலையாம் பெட்டிக்கள் ளென்ப பீடி சிகரெட் பெருஞ்சுருட்டே'' - பண்டித மாசிலாமணி நாடார் 9. சூதாட்டொழிப்பு கிண்டிக் குதிரைப் பந்தயமும் அரசுப் பரிசுச் சீட்டும் சூதாட்டே. அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா; வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினையாகா. குதிரைப் பந்தயத்தில் ஒட்டமொட்டிக் கெட்ட குடும்பங்கள் எத்தனையோ பல. பரிசுச்சீட்டின் தீமைகள் 1. உழைப்பின்றி ஒருவன் திடுமெனச் செல்வனாதல் (உழைப்பை ஊக்காமை). 2. மக்கட்குப் பேராசை யுண்டாதல். 3. செல்வரும் பிறநாட்டாரும் பரிசுபெறல். 4. பரிசு பெற்றவன்மீது அக்கம்பக்கத்தார்க்கு அழுக்கா றுண்டாதல். 5. பெரும்பா லேழைமக்கள் வாழ்நாள் முழுதும் பரிசு பெறாமை. 6. ஒருசிலர் சம்பளம் முழுவதையும் இழந்துவிட்டு வருந்து தல். 7. ஒருவன் பிறருழைப்பின் பயனை அவர் விருப்பத்திற்கு மாறாக நுகர்தல். 8. சீட்டுத் தொலைந்தாற் பரிசுபெற வழியின்மை. 9. வீணாக ஏக்கங் கொள்வாரின் வினை கெடுதல். 10. ஒழுக்கங் கெட்டவரையும் ஊக்குதல். பரிசுச் சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய் யப்பட்டதெனின், கொள்ளையடித்த பொருளைக் கொண் டும் அது செய்யலாம் என்க. 10. மதவியற் சீர்திருத்தம் 1. இறைவன் மக்கட்குத் தந்தை போலிருத்தலால், ஒவ்வொருவனும் தானே தன் தாய்மொழியிலேயே வழுத்தி வழிபடல் வேண்டும். கூட்டுவழிபாடாயின் வழிபாட்டு மொழி எல்லார்க்குந் தெரிந்ததாயிருத்தல் வேண்டும். வழங்காததும் விளங்காததுமான அயன்மொழியில் வேறொரு வனைக் கொண்டு வழிபடின் வழிபடுவானுக்குப் பயன் படாததோடு இறைவன் விருப்பிற்கு மாறாகும். அயன்மொழி வழிபாடு நீண்ட காலமாக நடைபெற்று வரின், அது நீண்ட கால வழுவேயன்றி நேரான முறையாகாது. மேலும், சிவ மதமும் திருமால் மதமும் தமிழ் மதங் களாதலின் தமிழல்லாத மொழியில் வழிபாடு நடத்த இம்மியுந் தகுதியில்லை. 2. தெய்வப் படிமைக்குப் படைக்கும் பொருள்களை மக்கட்குப் பயன்படும் வகையிற் படைத்தல் வேண்டும். தேங்காய், பழம், திருச்சோறு, பூமாலை முதலியவை அடியார்க்கும் இரப்போர்க்கும் பயன்படும். ஆயின், குடங் குடமாய்ப் பாலைக் கொட்டுவதும் கலங்கலமாய் நெய் வார்த்து மலைவிளக் கெரிப்பதும், மன்னிக்கத்தகாத பொருளாட்சிக் குற்றமாகும். இவை இறைவனுக்கு முற்றும் ஏற்காதவை. 3. எங்கும் இருப்பதனால் (தங்குவதனால்) இறைவன் என்றும், மனமொழிமெய் என்னும் முக்கரணங்களையும் கடந்த தனால் கடவுள் என்றும், முதன் முதலாகக் கண்டு பெயரிட்டவன் தமிழனே. இறைவனுக்கு உருவமில்லை. அவனை உள்ளத் தில் எண்ணி வழிபடும் ஆற்றலற்றவர், உயிரினங்களுள் உயர்ந்த மாந்தன் வடிவிலாவது உருவமைத்து வழிபடுதல் வேண்டும். ஆனையும் பூனையுங் கழுதையுங் குதிரையும் போன்ற அஃறிணை வடிவில் அவனை வழி படுவது, அவனுக்கு எத்துணை இழிப்பும் பழிப்பும் ஆகும் என்பதை எண்ணிக் காண்க. ஒருவனது ஒளிப்படத்தில் (photograph) ஒரு சிறு மாற்றம் நேரினும், அவனுக்கு எத்துணை எரிச்சலுண்டாகின்றது. எங்கும் நிறைந்தவனும் எல்லாம் வல்லவனும் அறிவின் ஊற்றும் அன்பின் வடிவுமானவனும் ஆகிய இறைவன் உருவம், அஃறிணையிலும் இழிந்த இனமாகக் காட்டப் படுதல் எங்ஙனம் பொருந்தும்? 4. அறிவியல் கற்றபின்பும், அமெரிக்கர் திங்களை யடைந்த பின்பும், அவனன்றி அணுவும் அசையாது என்று சொல்லிக் கொண்டும், திருநள்ளாற்றில் காரிக்கோளை (சனிக்கிரகத்தை) வணங்குபவரின் மடமையை அரசு அறிஞரைக் கொண்டு அகற்றுதல் வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை வணங்குபவரே பல் தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் ஐம்பூதங்களையும் எழுகோளையும் வணங்குவது, இறைவனை இறப்ப இழிவு படுத்துவதாகும். இக் குற்றத்திற்குப் புலவரும் புலமைபெற்ற துறவியரும் ஆளாவது மிகமிக வருந்தத் தக்கதே. 5. ஆரியப் பூசாரியர், தமிழ்நாட்டு ஊர்களின் தூய தமிழ்ப் பெயர்களைத் திரித்து, பொதுமக்களின் பகுத்தறிவை மழுக்கக் கூடிய கட்டுக்கதைகளைப் புனைந்திருப்பது, தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவிப்பதால், அதனையும், அறிஞரைக் கொண்டு திருத்துதல் வேண்டும். மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது. வேதங்கள் பண்டை நாளில் எழுதப்படவில்லை. எழுதப் பட்ட பொத்தகங்களும் அஃறிணையாதலால், ஓதுவாரன்றித் தாமாக வழிபடா. சிவன் வேதத் தெய்வமு மல்லன். வேதங்கள் தமிழர்க்குப் பயன்படா. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே பாண்டி நாடே பழம்பதி யாகவும் என்று மாணிக்கவாசகரே பாடுதல் காண்க. திருவாவினன்குடியின் பொதினி யென்னும் மறுபெயர் பழனி யென்று திரிந்துள்ளது. அதைப் பழம் + நீ என்று பிரித்து ஒரு கதை கட்டப்பட்டுள்ளது. 6. வடமொழி யென்னும் சமற்கிருதம் தேவமொழி யென்னுந் தவறான நம்பிக்கையினால், பல ஊர்ப்பெயர் தெய்வப்பெயர் ஆட்பெயர் மாற்றப்படவும், பல தமிழ்ச் சொற்கள் வழக்கறுமாறும் இறந்துபடுமாறும் வடசொற்கள் வேண்டாது புகுத்தப்படவும் நேர்ந்துள்ளது. இத் தவற்று நம்பிக்கையை, கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. (திருவிளை. திருநாட். 57) தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை யுண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். (திருவிளை. திருநாட். 58) என்று 16ஆம் நூற்றாண்டிலேயே பரஞ்சோதி முனிவர் மறைமுகமாகக் கண்டித்திருத்தல் காண்க. இனி, கோவிற் பூசாரியரும் கருமத் தலைவரும் தொன் மிகரும் (புராணிகரும்) தத்தம் கோவிற்கே வருமானம் மிக வேண்டுமென்று போட்டியிட்டு, கமலையில் (திருவாரூரில்) பிறக்க வீடுபேறென்றும், காசியில் இறக்க வீடுபேறென்றும், காஞ்சியில் இருக்க வீடுபேறென்றும், தில்லையைக் காண வீடுபேறென்றும், அருணையை (திருவண்ணாமலையை) நினைக்க வீடுபேறென்றும், காளத்தியில் வழிபட வீடு பேறென்றும், பிறவிடத்திற் பிறவாறு வீடுபேறென்றும், வணிக முறையிற் கூறுவது இறைவன் நிலைமைக்கு ஏற்காது. 11. மூடநம்பிக்கையும் பழக்கவழக்கமும் மணமக்கட்குக் கணியப் பொருத்தம் பார்ப்பது சரியன்று. அவ்வினையினால், பொருத்தமுள்ளது பொருத்த மில்லாத தாகவும், பொருத்தமில்லாதது பொருத்தமுள்ள தாகவும் தோன்றலாம். சென்னைச் சிறுவழக்கு மன்றத் தீர்ப்பாளராக இருந்த பம்மல் சம்பந்த முதலியாரின் அன்னையாரை, அவர் தந்தையாரான பம்மல் விசயரங்க முதலியார்க்கு மணம் பேசியபோது, சென்னையிலிருந்த முப் பெருங் கணியரும், அம் மணத்திற்குப் பொருத்தமில்லை யென்றும், மணம் நிகழின் மணமகள் மகவு பெறாது விரைந்து அமங்கலையாவாள் என்றும் கூறிவிட்டனர். ஆயின், மண மகனார்க்கு மனப்பொருத்தம் மட்டிற்கு மிஞ்சியிருந்தது. அதனால் மணம் நிகழ்ந்தது. மணமகளார் நீடுவாழ்ந்து நாற்புதல்வரும் நாற்புதல்வியருமாக எண்மக்களைப் பெற்று, அறுபதாங் கலியாணத்தின் பின்பும் பல்லாண்டு மங்கலியராயிருந்து வாழ்வு முடிந்தார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யான் கண்ட புலவர்கள் என்னும் வரலாற்றுக் கட்டுரைப் பொத்தகத்தைப் பார்க்க. கணியார்க்குத் தம் வாழ்வுக் காலத்தையே கணிக்க வியலாதே! பிறர் வாழ்வை எங்ஙனங் கணிக்க வியலும்? கணியர்க்குப் பிழைப்பு நடப்பது தவிரக் கணியத்தால் யாதொரு பயனுமில்லை. இனி நாளும் வேளையும் பார்ப்பதும் நன்றன்று. ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில், ஓர் அலுவலகத் தலைவரா யிருந்த துரை, தம்மிடம் வேலைக்கு வேண்டுகோள் விடுத்த ஓர் இளைஞனை, ஒரு திங்கட் கிழமை காலை 8 மணிக்குத் தம்மை வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். அவன் இராகு காலங் கழித்து 9 மணிக்கு மேற்சென்று, சினத்தொடு துரத்தப் பட்டான். திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியாரின் வேண்டு கோட்கிணங்கிச் சமணரையடக்க மதுரைக்குப் புறப்பட்ட போது, இன்று செவ்வாய்க் கிழமையாதலாற் செல்ல வேண்டாவென்று திருநாவுக்கரசர் தடுத்தார். ஆயின், சம்பந்தர், வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியா ழம்வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே என்று பாடிச்சென்று முழுவெற்றி கண்டார். இனி, வீட்டுவாசலைக் குட்டையாக வைத்து முட்டிக் கொண்டு வாசல் தட்டிவிட்டதென்றும், வீட்டில் வளர்க்கப் படும் பூனை வெளியே வரின் பூனை குறுக்கிட்டதென்றும், வினைத் தடையென்று மனந்தளர்வதும், மூவர் போன கருமம் மூதேவியடையும் என்பதும், மூடநம்பிக்கையே. இனி, இளையவனுக்கு முந்தித் திருமணம் நடத்த நேரின் மூத்தவன் வாழைவெட்டிக் கலியாணம் செய்துகொள்வதும், பகலில் நிகழும் சடங்கிற்கும் விளக்கேற்றிக் கொள்வதும், இரப்போர்க்கு இடும்போதும் குலத்தாரையும் மதத் தாரையுமே பார்த்திடுவதும், உண்டு மிஞ்சியதையும் பிற குலத்தார்க்குக் கொடுக்கக் கூடாதென்று புதைத்து வைப் பதும், இடுகாட்டிற் புதைத்தபின் பால் வார்ப்பதும், சுடலை யில் எரித்தபின் எலும்பை ஆற்றிலிடுவதும், பொருள் தெரியாதனவும் பயனற்றனவுமான வீண்சடங்குகளை வழிவழி குருட்டுத்தனமாகக் கைக்கொள்வதும், மூடப் பழக்கவழக்கங்களாம். 12. எச்சப்பிறவிகட்கு வேலையளித்தல் குருடர் நொண்டியர் முடவர் சப்பாணியர் முதலிய எச்சப் பிறவியர்க்கு வேலையளிப்பின், இல்வாழ்வார்க்குத் தொல்லை தரும் இரப்போர் கூட்டம் குறையும். குருடர்க்கு நெசவு, முடைவு, பின்னல், இசைக்கருவி யியக்குதல், தொழிற்சாலைகளில் ஆணிவில்லை முதலிய வற்றை யெண்ணல், சொற்பொழிவாற்றுதல் முதலிய வேலைகட்குப் பயிற்சியளிக்கலாம். நொண்டியரும் முடவரும் இயங்கிச் செய்யாத எல்லா வேலையுஞ் செய்யலாம். தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் வரவுப் பதிவேடுகளை வைத்திருப்பதற்குச் சப்பாணிகளே போதும். போர்டு (Ford) இயங்கித் தொழிற்சாலையை நிறுவிய அமெரிக்க முதலாளியாரான என்ரி போர்டு (Henry Ford) என்பவர், தாம் எழுதிய என் போர்டு இயங்கி (My Ford Car) என்னும் பொத்தகத்தில், நூற்றுக்கணக்கான குருடருக்கும் முடவருக்கும் வேலையளித் திருப்பதாகக் கூறியிருக்கின்றார். 13. தொழுநோயர் குடியிருப்பு குட்டநோயாளரை யெல்லாம் ஊருக்கு மிகத் தொலை விற் குடியேற்றி, மருத்துவஞ்செய்து, அவருக்குப் பயன் படுமாறு உழவும் நெசவும் பயிற்றுதல் வேண்டும். 14. முதியோர் இல்லம் தாங்குவாரில்லாத முதியோரெல்லாம் தங்குவதற்கு, நாற்புறமும் தனியறை வரிசைகளும் நடுவில் திறந்தவெளியுங் கொண்ட சதுர வடிவான சத்திரங்களைக் கட்டி, செல்வருதவி கொண்டு அறநிலையங்களாகப் பேணிவரல் வேண்டும். இத்தகைய ஏற்பாடுகளால் இரப்போரே இல்லாதவாறு செய்து விடலாம். இதற்கு நகராட்சிகள் ஒரு வரியும் வாங்கலாம். 15. தீயோரை நல்வழிப்படுத்தல் பொதுவாக, வேலையின்மையாலும் விளைவின்மை யாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்குங் கொள்ளைக்குங் கரணியமாயிருத்தலால், கள்வருக்கு ஒற்றர் வேலையும் கொள்ளைக்காரருக்குப் படைத்துறை வேலையும் கொடுப் பின், ஓரளவு நிலைமை திருந்தலாம். இனி, கள்ளக் காசுத்தாளடிப்பாரையும் கள்ளத் தனமாகத் துமுக்கி (gun), சுழலி (revolver) முதலியன செய்வாரையும், பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின், சிறந்த பொறிவினை ஞராகவோ புதுப் புனைவாளராகவோ தலையெடுக்கலாம். 16. வீடமைப்பு மண்சுவருங் கூரையுங் கொண்ட குடிசைகளும் வீடுகளும், ஆண்டுதோறும் அடைமழையிற் சேதமாவதும், புயன்மழை தோறும் இடிந்துவிழுவதும், அடிக்கடி தீக்கோட் பட்டு எரிந்து போவது மாயிருத்தலால்,ஒரேயடியாகக் கற்சுவரும் மச்சுமாகக் கட்டிவிடின், ஆண்டுதோறும் நேரும் அழிவும் நீங்கும், செலவும் இராது. கட்டுதற் செலவிற்கு அரசு கடன் கொடுத்துதவலாம். செங்கற் சுடுவதற்குப் பலவிடத்தும் மண்ணெடுத்து விளை நிலங் குன்றியிருப்பதால், இனிமேற் கட்டட வேலைக்கெல்லாம், மரஞ் செடி கொடிகள் இல்லாதனவும் விளைநிலமல்லாதனவு மான பாறைகளிலும் பொற்றைகளி லுமிருந்து கல்வெட்டி யெடுத்தே பயன்படுத்தல் வேண்டும். நாடுமுழுதும் பாறையும் பொற்றையும் மிகுந்திருப்பதால், கல்லிற்குப் பஞ்சமில்லை. கற்கட்டடம் உறுதியாயிருக்கும். பொற்றைகள் நிலமட்டமாகி விடின் வீடமைப்பிற்கும் சாலையமைப்பிற்கும் இடமுங் கிடைக்கும். உழவர் வீடுகளும் ஆயர் வீடுகளும் தொழிற் சாலைகளும் தவிர ஏனையோர் வீடுகளெல்லாம் மேனோக்கி யன்றிப் பக்கவாட்டில் விரிவடைதல் கூடாது. அமெரிக்கா விற் போல் 50 அல்லது 60 நிலைக் கட்டடங்கள் எழாவிடினும், 5 அல்லது 6 நிலைக்கட்டடங்கள் ஆயிரக்கணக்காக எழலாம். மண்டபங் களும் கோவில்களும் கல்லாலேயே அமைதல் வேண்டும். 17. நகரமைப்பு நகரமைப்பு, முற்கூறியவாறு பாலைநிலத்திலும் பாறை நிலத்திலும் அமைதல் வேண்டும். மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சி இரு மடங்கும் மும்மடங்கும் பெருகி, விளைநிலம் இருமடங்கும் மும்மடங்கும் குறுகி வரும்போது, நகரமைப் போர் பழமையான பழனங்களைப் பாழாக்கி வருவது மிகமிக வருந்தத் தக்க செய்தியாகும். வேலூர்க் காட்டுப்பாடி விரிவும் திருச்சிராப் பள்ளித் தில்லைநகரமைப்பும் பழனப் பாழுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். இனிமேலாயினும் இப் பொருளாட்சிக் கேட்டைப் பெருக்காவாறு, அரசு மிக விழிப்பாயிருத்தல் வேண்டும். புதிய நகரமைப்புகளிலும் குடியேற்றங்களிலும், மறுகு களும் (வீதிகளும்) தெருக்களும் சந்துகளும் நேராகவும் பொருத்த விழுக்காட்டின்படி (proportionately) அகன்றும் இருத்தல் வேண்டும். குடிநீர், தெருவிளக்கு, மின்னிணைப்பு, நகரியங்கி (town bus), கல்விநிலையம், காவல்நிலையம், அஞ்சல்நிலையம், மருத்துவச் சாலை, நகரமண்டபம், மண மண்டபம், கடைத்தெரு முதலிய ஏந்துகளும் (வசதிகளும்) நடுவில் ஒரு சதுக்கம் அல்லது வட்டத் திடலும் எல்லா நகரமைப்புகளும் கொண்டிருத்தல் வேண்டும். 18. தலைநகர் விரிவு (Metropolitan Development) சென்னையில் ஏற்கெனவே புறநகர்கள் (Suburbs) அளவிற்கு மிஞ்சி அமைந்துள்ளன. 1971 குடிமதிப்பின்படி சென்னை மக்கள் தொகை 24,69,449. இன்று 25 இலக்கமும் மேலும் இருக்கலாம். புதிய புறநகரமைப்பால் மிகுந்த விளைநிலம் பாழாக்கப் பட்டுள்ளது. இனி, சார்நகர்களும் (Satellite towns) அமையின், இன்னும் மிகுதியாக விளைநிலம் குறையும். ஆதலால், வீண் பெருமை பாராட்டாது இத் திட்டத்தை விட்டுவிடுவதே நல்லது. வீடுகளும் கட்டடங்களும் நிலத்தின்மேற் கட்டுவதை இனி நிறுத்திவிடல் வேண்டும். பழைய கூரைவீடுகளையும், ஓட்டுவீடுகளையும், இடித்து விட்டு எழுநிலை மாடிகள் கட்டவேண்டும். வணிகத்திற்கும் அலுவலகத்திற்கும் சிகாகோ விற் (Chicago) போல் எழுபதும் எண்பதும் நிலைகள் கொண்ட வானளாவிகள் (Sky-scrapers) எழுப்புதல் வேண்டும். வான வெளியையன்றி நிலப்பரப்பை இனிமேற் கட்டடத் திற்குப் பயன்படுத்தல் கூடாது. தொழிற் சாலைகளும் மருத்துவச்சாலைகளும் ஆட்டுப் பண்ணை களும் கோழிப் பண்ணைகளும் போன்றவைதாம் நில மட்டத்தில் இருத்தல் வேண்டும். இதுவரை நிலநடுக்க மில்லாவிடினும் தாம்பரம் பாங்கரில் நிலவதிர்ச்சி தோன்றியிருப்பதால், கீழ்நிலப் பாதைகளும் அளவாகவே அமைதல் வேண்டும். கடல் கொந்தளித்து அலை கரைமீறினும் இடுக்கண் நேரும். மாநகரிடையிடையே மூச்சுப்பை (lungs) போன்றுள்ள இடைவெளிகளை என்றும் போற்றிக் காத்தல் வேண்டும். ஆடகவெளியில் (Gymkhana ground) படைத்துறை யலுவலகம் அமைவதும் தவறே. பழைய பச்சையப்பன் கல்லூரிக் கட்டடத்தின்முன் இருந்த ஆடிட வெளியில், செவிலிகள் விடுதியைக் கட்டக் கூடாதென்று, அக் கல்லூரிப் பள்ளித் தலைமையாசிரியர் தடுத்தும், அரசு பொருட்படுத்தவில்லை. மாநகர் விரிய விரிய மக்களியக்கமும் வணிகப் போக்குவரத் தும் அஞ்சத்தக்க அளவில் மிகுந்து வருகின்றன. இந் நிலையில், ஒவ்வொரு முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் அரசியற் கட்சித் தலைவர் படிமைகளைப் போட்டியிட்டு நிறுவிவருவது மிகக் கேடான செய்தியாகும். ஒருவர் படிமையை ஓரிடத்தில் அமைத்தாலும் போதும். ஒரே நகரில் அல்லது ஒரே சாலையிற் பல இடத்தில் நிறுவுவது நன்றன்று. நாளடைவில் அவை பல்கிப் போக்குவரத்திற்கு முட்டுக் கட்டைகளாகிப் பெருஞ்சேதத்தை யுண்டுபண்ணும். பின்னர் நீலன் படிமைக்கு நிகழ்ந்தது நேரும். சாலைகளும் வழிகளும் அல்லாத கட்டடப் பரம்பு (compound) மூலைகட்குள் படிமை களை நிறுவுவதே நல்லது. ஒவ்வொரு முதலமைச்சர்க்கும் படிமை நிறுவுவதும், ஒருவர் வாழ்நாட் காலத்திலேயே படிமை நிறுவுவதும் தவறாகும். செங்கோன் மைக்குச் சிறந்த அரசர், ஆபிரகாம் லிங்கன் போன்ற அவ்வந் நாட்டுக் குடியரசுத்தலைவர், இராசாராம் மோகன்ராய் போன்ற நாட்டுத் தொண்டர். டி. மாதவன் நாயர் போன்ற கட்சித் தலைவர், சர்ச்சில் போன்ற அவ்வந் நாட்டுத் தலைமை மந்திரியார், எடிசன் போன்ற புதுப்புனைவாளர், கால்டுவெல் போன்ற மொழி நூலாராய்ச்சியாளர், பி.தி. சீநிவாச ஐயங்கார் போன்ற வரலாற்றாசிரியர், மறைமலையடிகள் போன்ற தமிழ்ப்புலவர் முதலியோர்க்கே படிமைகள் நிறுவுதல் வேண்டும். உருவந் தெரியாத திருவள்ளுவர் போன்ற உலகப் பொதுப் பேரறிஞர்க்கு, ஒவ்வொரு நாட்டிலும் படிமை நிறுவாது நினைவுச் சின்னமே நிறுவுதல் வேண்டும்; அல்லது மாபெரு மணி மண்டபமே எழுப்புதல் வேண்டும். இனிமேல் எவ்வகையிலும் சென்னை மக்கட்டொகை மிகாதவாறு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இறுகக் கடைப் பிடித்தல் வேண்டும். 19. காடுவளர்ப்பு காடுவளர்ப்பென்பது, ஆண்டுதோறும் நடுவண் அரசு கொண்டாடி வரும் மரநட்டு விழாவன்று. இதனால் அருகி லுள்ள மக்கட்கு நிழலேயன்றி வேறொரு பயனும் விளையாது. வானளாவ ஓங்கி வளரும் மரங்கள் நெருங்கிச் செடிகொடி களொடு பின்னிப் பிணைந்து மக்களும் பெரு விலங்குகளும் ஊடுருவிச் செல்ல முடியாவாறு இடைவெளி யொடுங்கியி ருண்டு, ஒரே நிலைத்திணைத் தொகுதியாக இருப்பதே, மழைவளந் தரும் காடாம். குடமலைத் தொடர்களில் குளம்பித் தோட்டங்களும் கொழுந்துத் தோட்டங்களும் மேலைக் காய்கறித் தோட்டங் களும், ஏராளமான காட்டைக் கெடுத்துள்ளன. இனிமேலுங் கெடாதவாறு காடுகளைப் போற்றிக் காத்தல் வேண்டும். இன்றியமையாது குடியிருக்க வேண்டிய மக்களைத் தவிர ஏனையோரையெல்லாம், மலைநகர்களினின்று இறக்கிவிடல் வேண்டும். கீழ்வெளி நிலவூர்கள் போல மேன்மலைகளிலும் குடியிருப்புகள் இருத்தல் கூடாது. பட்டுப்போன கிளைகளையும் மரங்களையு மன்றிப் பச்சை மரங்களை வெட்டி விறகெரிக்கவிடல் கூடாது. விறகு வணிகர், மரக்கரிக்காக ஆண்டுதொறும் மிகுதியாக வேனிற் காலங்களில் மலங்காடுகளை எரித்துவிடுகின்றனர். இதை அடவித்துறையார் (Forest Dept.) அறவே தடுத்தல் வேண்டும். மரங்கள் வெட்டப் பட்ட அல்லது எரிக்கப்பட்ட இடங்களி லெல்லாம் மீண்டும் மரங்களும் காடுகளும் வளரவிடுதல் வேண்டும். சவுக்கு என்னும் காற்றாடி மரங்களை மட்டும் வரிசை வரிசையாகக் கீழ்வெளி நிலங்களிற்போல் நட்டு விட்டாற் போதாது. பழைய இயற்கைக் காடுகளையுஞ் சோலைகளையும் வளரவிடுதல் வேண்டும். சில வணிகருஞ் செல்வரும் ஏர்க்காடு, கோடைக்கானல் முதலிய மலைநகர்களில் மரங்களோடு கூடிய வீடுகளையும் வளமனைகளையும் விலைக்கு வாங்கி, மரங்களை வெட்டி விற்றுவிடுகின்றனர். அரசு அதைத் தடுத்தல் வேண்டும்; அல்லது தானே அவ் விடங்களை விலைக்கு வாங்கிவிடல் வேண்டும். மழை குடிநீருங் குளிநீருந் தருவதுடன் மின்னாக்கத் திற்குந் துணையாயிருப்பதனால், மழையைப் பெருக்கும் மலங்காடுகள் அழியாது காத்தல் வேண்டும். தச்சுமரத்திற்கும் விறகிற்கும் மலைமரங்களை வெட்டு வது இன்றியமையாததெனின், மக்கட்டொகையைக் கடுத்தும் கடுமையாகவும் குறைப்பதே தக்க மருந்தாம். 20. தேர்தல்முறை முற்கூறியவாறு, குறைந்த பக்கம் நூற்றிற் கெழுபத்தைவர் தாய்மொழியில் எழுதப்படிக்கத் தெரியாத நாட்டிற் குடியரசு நிகழ முடியாது. நேரியிடுபவர், 20 அகவைக்குக் குறையாதவராகவும், தம் பகுத்தறிவினால் சட்டசவை யுறுப்பினராகத் தகுந்தவரைத் தாமே தீர்மானிக்கும் திறமையராகவும், இருத்தல் வேண்டும். சட்டசவை வேட்பாளர், 25 அகவைக்குக் குறையாதவராகவும், பள்ளியிறுதிக் கல்வியேனும் கற்றவராகவும், நாட்டிற்கு நன்மை தருந் திட்டங்களை அறியக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். அமைச்சர் ஒவ்வொருவரும் 30 அகவைக்குக் குறையாத வராகவும், அவரவர் வாரியத்திற்குரிய அறிவும் ஆராய்ச்சியும் ஆற்றலும் வாய்ந்தவராகவும், பட்டக்கல்வி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். கல்வியமைச்சர் பள்ளியிலுங் கல்லூரியிலும் ஆசிரியப் பணி யாற்றியவராகவும், நாட்டுமக்கள் வரலாற்றையும் மொழி வரலாற்றையும் இலக்கிய வரலாற்றையும் மதவரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் அறிந்தவராகவும்; பணத்துறை யமைச்சர் கணிதம், வணிகக்கல்வி, வைப்பகக் கல்வி (Banking), பொருளாட்சிக் கல்வி ஆகிய நான்குங் கற்றவராகவும், நேர்மையுள்ள வராகவும்; மருத்துவ அமைச்சர், மருத்துவப் பட்டம் பெற்ற வராகவும் மருத்துவப் பயிற்சியுள்ளவராகவும்; இங்ஙனமே பிற அமைச்சரும் தத்தம் துறைப் பட்டமும் பயிற்சியும் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். முதலமைச்சர் 40 அகவைக்குக் குறையாதவராகவும், பட்டம் பெற்றவராகவும், தமிழ்ப்புலமை யில்லாவிடினும் பற்றுள்ளவராகவும், எல்லாத் துறையும்பற்றிய பொது அறிவுள் ளவராகவும், நடுவுநிலை, நேர்மை, சூழ்ச்சிவன்மை, துணிவாற்றல், மனத்திடம், ஊக்கம், ஈகத்தன்மை முதலிய பண்புடையவராயும், இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து) அதனை அவன்கண் விடல் (குறள். 517) என்னும் நெறிமுறையைக் கடைப்பிடிப்பவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், ஆட்டச்சீட்டை அடிக்கடி குலுக்கு வது போலும், சீதை நகைகளைக் கண்டெடுத்ததாகச் சொல்லப் படும் குரங்குகள் அவற்றை இடமாற்றியணிந்தது போலும், அமைச்சர் வாரியங்களை அடிக்கடி மாற்றவும், வாரியங் களைத் தகாதவரிடம் ஒப்படைக்கவும் நேரும். ஒரு கட்சிச்சார்பில் நின்று தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், கட்சிமாறின் தம் தகுதியை இழந்துவிடுவதால், மீண்டும் தேர்தலில் நின்று வெற்றிபெறும்வரை அரசினால் விலக்கிவைக்கப்படல் வேண்டும். மும்முறைக்குமேற் கட்சிமாறுபவரை நிலையாகச் சட்ட சவை யினின்று விலக்குதல் வேண்டும். 3 தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை 1. தமிழ் தனிமொழி யெனல் ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்பது தண்டியலங்கார வுரை மேற்கோளாக வந்துள்ள ஒரு பழந் தனிப்பாட்டு. இதன் கருத்துரை: பாரில் இரு சுடர்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று புறவிருள் நீக்கும் கதிரவன்; இன்னொன்று அகவிருள் நீக்கும் தமிழ். இதனால் தமிழின் தொன்மையும் முன்மையும் தாய்மை யும் தலைமையும் பெறப்படும். தமிழ்மொழி தோன்றியது தோரா. கி.மு. 50,000 ஆண்டு கட்கு முன்; தமிழிலக்கியம் தோன்றியது தோரா. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன். இரண்டும் தோன்றியது தென்மாவாரியில் முழுகிப்போன குமரிநாட்டில் (Lemuria). தமிழ் திரிந்து திரவிடமாயிற்று; திரவிடம் திரிந்து ஆரிய மாயிற்று. ஆரியத்தின் முந்துநிலை செருமானியம்; முதிர்நிலை சமற்கிருதம். ஆகவே, இந்தைரோப்பிய (Indo-European) மொழிக் குடும்பத்தின் அடிமுனை தமிழ்; முடிமுனை சமற்கிருதம். வேத ஆரியரின் முன்னோர் இந்தியாவிற்குட் புகுந்தது தோரா. கி.மு. 1500. அவர் சிறுபான்மையரா யிருந்ததனால், அவர் மொழி பிராகிருதம் என்னும் வடஇந்திய முந்து மொழிகளோடு கலந்து போயிற்று. அக் கலப்பு மொழியே வேத ஆரியம். பின்னர் வேத ஆரியம் தமிழொடு கலந்து சமற்கிருதம் என்னும் கூட்டு மொழியாகிய இலக்கிய மொழி தோன்றிற்று. சிலர் ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலத்தைக் கி.மு. 7,000 வரை பிற்பட வுயர்த்துவர். அதனால், தமிழின் தொன்மை யும் அதற்குத் தகத் தானேயுயரும். பேரன் பிறந்த ஆண்டு பிற்பட வுயர்த்தப்படின், பாட்டன் பிறப்பாண்டு தானேயு யர்தல் காண்க. விவேகானந்தரும் அரவிந்தகோசரும் தமிழ மதங்களை ஆரியமென்று காட்ட விரும்பியதால், ஆரியரை வெளிநாட்டி னின்று வராத இந்திய ரென்றே கூறியுள்ளனர். ஆயின், அவர் வரலாறறிந்தவரன்மையின், அவர் கூற்றுக் கொள்ளத்தக்க தன்று. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகையெழுத்து களொடு கூடியதும், முச்சுட்டொலிகளை முதலாகக் கொண்ட துமான நெடுங்கணக்கு, உலகில் முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்று. நீண்ட காலமாக எழுதாக் கிளவியா யிருந்த வேதத்திற்குச் சமற்கிருதந் தோன்றியபின், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற் றியே வண்ணமாலை ஏற்பட்டது. அது முதற்கண் கிரந்தமா யிருந்து, பின்னர்த் தேவநாகரியாக மாறிற்று. கால்டுவெலார் காலத்தில் தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் சிலப்பதிகாரமும் தமிழர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தத னாலும், இன்றுள்ள குமுகாய (சமுதாய) விழிப்புமின்றி அற்றைத் தமிழர் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப் பட்டிருந்த தனாலும், தமிழரின் குமரிநாட்டுத் தோற்றக் கொள்கை அன்று தோன்றாதிருந்ததனாலும், திரவிடர் வடமேலை வெளிநாட்டி னின்று வந்தவர் என்னுங் கொள்கை வலுத்திருந்ததனாலும், தமிழ் நெடுங்கணக்கு வடமொழி வண்ண மாலையைப் பின்பற்றியதென்றும், தமிழ் நாகரிகந் தோன்றியது கொற்கைக் கொந்தென்றும், கால்டுவெலார் தவறாகக் கூற நேர்ந்து விட்டது. ஆயினும், தவறு தவறே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.'' (குறள். 423) பேரா.பி.தி. சீநிவாச ஐயங்காரையும் பேரா. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதரையும் பின்பற்றாது, தம் ஆரிய வெறியால் தம் பெயரைக் கெடுத்துக்கொண்ட கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், ஆரியதிரவிடப் பண்பாட்டுத் தொடர்பு (Cultural Contacts between Aryans and Dravidians) என்னும் தம் சிறுநூலில், கால்டுவெலாரின் வழூஉக் கூற்றை வலிய சான்றாகக் காட்டி யுள்ளார். எண்வேற்றுமை யமைப்பிலும் தமிழ் சமற்கிருதத்தைப் பின் பற்றியதென்று, கால்டுவெலார் தவறாகக் கூறிவிட்டார். இலத்தீனில் ஆறு வேற்றுமையும், கிரேக்கத்தில் 5 வேற்றுமை யும், செருமானியத்தில் 4 வேற்றுமையுமே இருக்கும்போது, சில நூற்றாண்டுகளாக எழுத்தில்லாதிருந்து தமிழைப் பின் பற்றி வண்ணமாலை யமைத்துக் கொண்ட கீழையாரியத்தில் மட்டும் திடுமென்று எங்ஙனம் எண் வேற்றுமை தோன்ற வியலும்? மேலும், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்படுத்தப் பட்டிருந்ததும் பல்துறைப்பட்ட விரிவானசெய்யு ளிலக்கியத்தைக் கொண்டிருந்ததும், எழுத்து, சொல், யாப்பு, அணி யென்னும் நால்வகை யிலக்கணத்தொடு வேறெம் மொழியிலும் இன்றுமில்லாத பொருளிலக்கணத்தை யுடையதுமான, தமிழ் எங்ஙனம் தன் இயல்பிற்கு முற்றும் ஏற்ற சொல்லிலக்கணக் கூறொன்றை, இன்னொரு புது அயற் கலவை மொழியினின்று கடன் கொண்டிருத்தல் கூடும்? இவை யெல்லாம் தமிழ் வரலாற்றை அறியாமையால் நேர்ந்த விளைவேயன்றி வேறன்று. இனி, தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியதென்றும், ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச் சொற்கட்கெல்லாம் தமிழ் முச்சுட் டொலிகளே மூலமென்றும், சமற்கிருதம் திரவிட மொழிக ளினின்று ஏராளமான சொற்களைக் கடன்கொண்டுள்ள தென்றும், கால்டுவெலாரே தம் நடுநிலை யாராய்ச்சியால் உண்மைகண்டு கூறியிருப்பது, மேற்கூறியவற்றொடு முரணு தலுங் காண்க. சமற்கிருதச் சொற்களை நடுநிலையாய் ஆய்ந்து பார்ப் பின், அவற்றுள் ஐந்திலொரு பங்கு மேலையாரியமும், ஐந்தி லொரு பங்கு வடஇந்திய முந்துமொழியாகிய முது திரவிட மும், ஐந்திலிரு பங்கு தமிழும், ஐந்திலொரு பங்கு புத்தாக்க மும் ஆகும் என்பது, தெளிவாய்த் தெரியும். இலக்கியத்திலும், சமற்கிருத இசை நாடக நூல்கட்கு முதனூல்கள் தமிழ் நூல்களே. ஆரியப் பூசாரியர் தம் வெண்ணிறத்தால் தம்மை நிலத்தேவ ரென்றும், தம் இலக்கிய மொழியின் வெடிப் பொலியால் அதைத் தேவமொழியென்றும், தமிழப் பழங்குடிப் பேதை மூவேந்தரையும் ஏமாற்றி, அதற்குச் சான்றாக, கடன் கொண்ட தமிழ்ச்சொற்களையெல்லாம் குறிக்கோட் சொல்லியலால் ஆரியச் சொற்களென்று காட்டியிருக்கின்றனர். ஒருவர் தம் விருப்பப்படி ஒரு சொல்லின் வேர்ப் பொருளைத் திரித்துக் கூறுதல் குறிக்கோட் சொல்லியல். எ-டு: (1) முகம். தமிழ் விளக்கம்: முகுத்தல் = தோன்றுதல், முற்படுதல், முன்னிருத்தல். முகு - முகிழ் = அரும்பு. முகிழ்த்தல் = அரும்புதல், தோன்றுதல். முகு - முகை = அரும்பு. முகு - முக்கு - மொக்கு = அரும்பு, மொட்டு. மொக்கு - மொக்குள் = மொட்டு. முகு - முகம் = தலையின் முன்பக்கம், முன்னுறுப்பு, முன்னிடம். கழிமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம், முகதலை, முகமண்டபம், முகவுரை, முகப்பு என்னுஞ் சொற்களில் முகம் என்பது முன்னிடத்தையே குறித்தல் காண்க. முகஞ்செய்தல் = தோன்றுதல். இயற்கையான இயக்கமெல்லாம் முன்னோக்கியே நிகழ்வதால், முதலில் தோன்றுவதெல்லாம் முன்புறமே. முகம் - முகன் - முகனை - மோனை சொல்லின் முன்னெழுத்து ஒத்துவருதல். முகனை = முன்புறம். முகம் - வ. Kf(mukha). வடமொழி விளக்கம்: முக = மு + க (kha).K’ பொருளற்ற முன்னொட்டு (prefix). ‘f’(kha) என்பது கன் என்னுஞ் சொல்லின் கடைக்குறை. கன்னுதல் = தோண்டுதல். முக (mukha) = தோண்டப் பட்ட கிடங்கு, கிடங்கு போன்ற வாய், வாயையுடைய முகம். 2. உலகம் த.வி. உல-உலவு (உலாவு). உலவுதல் = சுற்றுதல், வளைதல், உருளுதல். உலவு - உலகு = வட்டமாய்ச் சுற்றி வருவது அல்லது உருண்டையாயிருப்பது. உலகு - உலகம் = பெரியவுலகு, உலகு. உலகம் - வ.லோக- (இந்தி)லோக். வ.வி. லோக் = பார். லோக் - லோக = பார்க்கப்படுவது. 3. சுவணம் த.வி. `உ' உயரத்தைக் குறிக்குஞ் சுட்டெழுத்து. எ-டு: உகப்பு (உயர்வு), உச்சி, உத்தரம், உம்பர் (மேல்), உயர், உறி. உ - உவண் = மேலிடம். உவண் - உவணம் = உயர்ச்சி, உயரப் பறக்கும் பருந்து, கலுழன்(கருடன்), கழுகு. ``cauîau¥ gwªjhY« C®¡FUÉ gUªjhFkh?" (பழமொழி). உவண் - உவணை = தேவருலகம். உவணம் - சுவணம் = கலுழன், கழுகு. ஒ.நோ: உலவு - சுலவு, உருள் - சுருள், உழல் - சுழல், உதை - சுதை (உதைக்குங் கறவை). சுவணம் - வ. ஸுபர்ண. வ.வி. ஸு = நல்ல, அழகிய. பர்ண = இலை, இலைபோன்ற சிறகு. ஸுபர்ண = அழகிய சிறகுடைய பறவை, கலுழன், கழுகு. 4. முத்தம் த.வி. முள்- முட்டு - முட்டை = உருண்டை. முட்டு - முத்து = உருண்டையான சிறு விதை (குருக்கு முத்து), உருண்டு திரண்ட சிறு கொட்டை (வேப்ப முத்து, ஆமணக்கு முத்து, புளிய முத்து), கிளிஞ்சிலுள் உள்ள ஒளிக்கல், அம்மைக் கொப்புளம். முத்து - முத்தம் = பருமுத்து, முத்து. ஒ.நோ: மத்து-மத்தம் (கடைகருவி). முத்தம் - வ. முக்த. `த்த' என்னும் தகரவிரட்டை வடமொழியில் `க்த' என்று திரியும். ஒ.நோ: அரத்தம் - ரக்த. வ.வி. முச் = கட்டவிழ்,பிரித்துவிடு, விடுவி, விடுதலை செய். முச் - முக்த = விடுதலை செய்யப்பட்டது, சிப்பி யினின்று விடுவிக்கப்பட்ட முத்து. 5. விடை த.வி. விடைத்தல் = இளம்பருவ வலிமையினால் அல்லது செருக்கினால் விம்மி விறைத்தல். விடை = இளம்பருவ வுயிரி, இளங்கோழி(கோழிவிடை),இளஞ்சேவல்(சேவல் விடை), இளமையான ஆண் காட்டுப்பூனை(வெருக்குவிடை), இளங் காளை. விடை - விடலை = இளங்காளை, இளைஞன், மறவன், பாலைநிலத் தலைவன். விடை - வ. வ்ருஷ. சொற்களின் முதலெழுத்திற்குப்பின் ரகரத்தைச் சேர்ப்பது வடமொழியாளர் வழக்கம். எ-டு: படி-ப்ரதி, பதிகம் - ப்ரதீக, பவளம் - ப்ரவாளம், தமிழம் - த்ர மிட, மெது - ம்ருது, மதங்கம்-ம்ருதங்கம். வடமொழி ஷகரம் தமிழில் டகரமாவது போன்று, தமிழ் டகரம் வட மொழியில் ஷகரமாகும். வ.வி. வ்ருஷ் = மழை பெய். வ்ருஷ = மழைபொழிதல், மழைபோற் போரில் அம்புசொரிதல், அம்பு சொரியும் மறவன், மறவன் போன்ற ஆண், மாட்டின் ஆணான காளை. வ்ருஷ-வ்ருஷப = காளை. தமிழில் விடையென்பது, இளமை மறத்தை அல்லது வலிமையை மட்டும் உணர்த்தும். விடைக்கோழி யென்பது பெட்டைக்கோழியையுங் குறிக்கும். வ்ருஷப என்னும் வடசொல் வடிவம் கலவைத் தமிழில் விடபம்-இடபம் என்று திரியும். ஆராய்ச்சியில்லாதவர் விடை யென்னும் மூலச்சொல்லை விடபம் என்பதன் திரிபென மயங் குவர். மேற்கூறியவாறு, பெரும்பால் தமிழ்ச்சொற்கட்கு, இயன்ற வரை பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த் தலாகவும் வடமொழியாளர் பொருட்கரணியங் காட்டியுள்ளனர். இயலாவிடத்து இடுகுறியென முத்திரை யிட்டுள்ளனர். தமிழில் இடுகுறியேயில்லை. எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்பது தொல்காப்பியம் (பெயரியல் 1). தமிழ் கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைக்கப்பட்டும், வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டும் உள்ளது. தவத்திருக் குன்றக்குடி அடிகள், அருட்டிரு அழகரடிகள், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, பேரா. மு.ரா. பெருமாள் முதலியார் முதலிய தமிழறிஞரைக் கொண்ட ஒரு குழுவமைத்து, ஆராய்ந்து உண்மை கண்டு, தமிழ்நாட்டு முப்பல் கலைக்கழகங்களிலும் தமிழே தலைமையாகவும் (Main), சமற் கிருதம் கீழ்த்துணையாகவும் (Subsidiary) வழங்குமாறு செய்வது, தமிழ்நாட்டு அரசின் முதற் கடமையாகும். திருக்கோவில் களிலும் தமிழே வழிபாட்டு மொழியாதல் வேண்டும். 2. தமிழ்நாட்டின் தனித்தன்மை தமிழ்நாடு, வரலாற்றாலும் மக்களாலும் உணர்ச்சி யாலும் கொள்கையாலும் மொழியாலும் இலக்கியத்தாலும் பிற நாடுகளினும் வேறுபட்டதாகும். ஏனை யிந்திய நாடுகளெல்லாம் சமற்கிருதத்தைத் தலை மேற்கொள்ளும்; இன்றியமையாததாகக் கருதும்; இந்தியை அனைத்திந்திய ஆட்சிமொழியாகவோ கட்டாயப் பாடமாக வோ ஏற்கும்; வடசொற் கலப்பால் தம் மொழிவளம் பெற்றதாக மகிழும், பறைசாற்றும். ஆயின், தமிழ்நாடோ, இவற்றிலெல்லாம் முரண்பட்டுத் தனித்து நிற்கும். தென்மொழியினத்திற்குரிய சிறப்பிலக்கியமும் வரலாற் றுச் சான்றும் தமிழிலேயே இருப்பதால், திரவிட மொழிகளி னின்றும் தமிழ் வேறு பிரிந்து நிற்கும். ஆதலால், ஆட்சித் துறையில் காசுமீர நாட்டிற்குத் தனிச் சலுகை காட்டி யிருப்பது போன்று, மொழித் துறையில் தமிழ்நாட்டிற்குத் தனித்திட்டம் வகுத்தல் வேண்டும். திரவிடமொழிகளில் வடசொல் சேரச் சேரச் சிறப்பாம். தமிழில் அது தீரத் தீரச் சிறப்பாகும். ஆகாசவாணி, வனமகோற் சவம் என்னும் பெயர்களைத் திரவிடமொழிகள் அங்ஙனமே வழங்கும். தமிழ் அவற்றை வானொலி, மர நட்டுவிழா என்று மொழிபெயர்த்து வழங்கும். திரவிட மொழிகள் போன்றே தமிழையுங் கருதிக் கொண்டு, வடசொல் துணையின்றித் தமிழ் தனித்து வழங்கா தென்பர், தமிழ்ப் பற்றும் ஆராய்ச்சியுமில்லார். தமிழ் வடசொல் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்றித் தழைத் தோங்கவுஞ் செய்யும் என்று கால்டுவெலார் கூறியிருப்பதைக் காண்க. இனி, ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச்சொற்களும் நூற்றுக்கணக்கான அடிப்படைத் திரிசொற்களும் நூற்றுக் கணக்கான வேர்ச்சொற்களும் தமிழாகவே யிருப்பதால், உண்மையில் வடமொழியே தமிழ்த்துணையின்றித் தனித்து வழங்க இயலா தென்பதை அறிதல் வேண்டும். ஆகவே, குமரி நாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமு மாகும். இங்ஙனம், உலகில் ஒப்புயர்வற்ற தலைமைபெற்ற தமிழ் வழங்கும் நாட்டிற்கு, மொழித்துறையில் தனித் திட்டம் வகுப்ப தென்பது, தமிழ்ப்பகை வரும் மறுக்கொணாத் தகுதியுரிமையாம். இந்தி புகுத்தப்பட்ட வகை இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலத்தில், காந்தியடிகள், ஆங்கிலத்திற்குப் பகரமாக இந்துத்தானியை இந்தியப் பொதுமொழியாக்கின், இந்து-முசிலீம் ஒற்றுமையும் இந்திய வொற்றுமையும் ஒருங்கே யுண்டாகுமென்று கருதினார். அதுவே இந்தியை இந்தியப் பொதுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தீர்மானித்தற்கு அடிகோலிற்று. காந்தியடிகள் ஆங்கிலரை விரைந்து இந்தியாவினின்று அகற்றுதற்கேயன்றி, இந்தியாவிற்கு நன்மை பயக்கும் பொது மொழியைத் தீர்மானித்தற்கு ஆற்றல் வாய்ந்தவரல்லர். அவருக்குக் குசராத்தி ஆங்கிலம் ஆகிய இருமொழியே தெரியும். 1774-ல் வங்கநாட்டு இராதா நகரத்திற் பிறந்து, 1833-இல் ஆங்கிலநாட்டுப் பிரித்தல் (Bristol) நகரத்தில் இறந்த இராசாராம் மோகன்ராய் வங்கம், சமற்கிருதம், பாரசீகம், அரபி, ஆங்கிலம், கிரேக்கம், எபிரேயம் ஆகிய எழு மொழிகளில் வல்லுநராயும் நாட்டுப்பற்றும் நடுநிலையும் பகுத்தறிவும் பரந்தநோக்கும் விஞ்சிய ஆண்டகையும் பெருந்தகையுமாயும் இருந்து, இந்தியர் ஆங்கில அறிவின் வாயிலாகவே விடுதலையும் முன்னேற்றமும் பெற முடியு மென்று கண்டு, ஆங்கிலக் கல்வியை இந்தியாவிற் பரப்பு வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தார். மொழித்துறையில் அவர் கொள்கையே இந்தியர் பின்பற்றத் தக்கது. 1885-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியத் தேசியப் பேராயம் 1921லேயே ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தாலும், 1947-ல் திடுமென்று ஆங்கில அரசு இந்திய விடுதலையளித்தது, பண்டித நேருவிற்கு ஓரளவு வியப்பையும் மருட்சியையும் விளைத்தது. உள்நாட்டு அரசரெல்லாம் அஞ்சியொடுங்கினர்; சென்னை மண்டல நயன்மைக் கட்சித் (Justice Party) தலைவரெல்லாம் ஓடியொளிந்தனர். பேராயத்திற்கு இம்மியும் எதிர்ப்பில்லை. விடுதலையடைந்தவுடன் பேராயம் கலைக்கப்பட வேண்டு மென்றும், அனைத்திந்தியப் புதுப் பொதுக்கட்சி யொன்று தோன்றியாள வேண்டுமென்றும், காந்தியடிகள் கூறியது கைவிடப்பட்டது. பேராயம் ஆட்சியேற்று அரசியலமைப் பவையையும் (Constituent Assembly) அமைத்தது. ஆட்சி மொழித் தீர்மானக்குழு வுறுப்பினர் அனைவரும் பேராயத் தாரே. அவருட் பலர் இந்தியர். ஆயினும், ஆங்கிலச் சார்பினரும் இந்திச் சார்பினரும் சரிசமமாயிருந்தனர். நேரியெடுப்பு மும்முறை நிகழ்ந்தது. மும்முறையும் சரிசமமே நின்றது. குழுத்தலைவராயிருந்த இராசேந்திரப் பிரசாது நடுநிலை தவறித் தம் இடுநேரியைச் சேர்த்து இந்திக்கு வெற்றி யுண்டாக்கினார். இத்தகைய மொழித்தீர்மானக் குழுவில், மறைமலை யடிகளும் சோமசுந்தர பாரதியாரும் போன்ற தமிழறிஞரைச் சேர்த்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வரையே உறுப்பாக அமைத்திருத்தலும் வேண்டும். குழுத் தலைவர் நடுநிலை பேணியிருத்தலும் வேண்டும். இம் மூன்று நெறிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டன. தேய முழுதும் மயங்கியிருந்த காலத்தில், அற்றம் பார்த்துக் கவரும் கள்வன் போல, இந்தியார் இந்திக்கு ஆக்கந் தேடிக்கொண்டனர். 3. இந்தியெதிர்ப்புப் போராட்டம் 1937ஆம் ஆண்டு, சென்னை மண்டல முதலமைச்சரான ச.இராசகோபாலாச்சாரியாரால் தமிழ்நாட்டு 200 உயர் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது. âUtŸStU¡F¥ã‹ njh‹¿a jÄœ fhtyUŸ jiyikahdtU«,