பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 27 பழந்தமிழாட்சி ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப்பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க்களஞ்சியம் - 27 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1952 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12 + 140 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிடமொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை பண்டைத் தமிழ் அரசியலைப்பற்றிப் பல அறிஞர் பற்பல புத்தகங்கள் தமிழில் எழுதியிருப்பினும், அவை யாவும் அதனைப் பற்றி மாணவரும் பிறரும் போதிய அளவு தெரிந்து கொள்வதற்கு வேண்டுமளவு விரிவாயிராமையின், இந்நூலை இலக்கியம் கல்வெட்டுச் செய்தி உலகவழக்கு ஆகிய முந்நிலைக் களத்தினின்றும் தொகுத்து எழுதலானேன். சேரசோழ பாண்டியத் தமிழரசு, வரலாற்றுக் காலத்துக்கு முன்புதொட்டு 17ஆம் நூற்றாண்டுகாறும் நிலைத்திருந்தமையின் இந்நூலும் அக்கால முழுமையுந் தழுவும். இந்நூற்குரிய சான்று களிற் பல, பிற்காலத்தவராயினும், மூவேந்தர் ஆட்சியும், தொன்று தொட்டு இறுதிவரை பெரும்பாலும் இடையறாதும் ஒரே நெறிப்பட்டும் இருந்ததாகத் தெரிகின்றமையின், அச்சான்றுகள் முற்காலத்திற்கும் செல்லுமென்பது ஊகித்தறியப்படும். வடமொழியாளர் தென்னாடு வந்தபின், தமிழ்மக்கள் கருத்தும் மொழியும் ஓரளவு வேறுபட்டுவிட்டதனால் அவ்வேறுபாட்டை யுணர்த்தற்கு ``மக்கள் நிலைமை'' ``மொழி நிலைமை'' என ஈரதிகாரங்கள் பின்னிணைப்பில் வைக்கப் பெற்றுள. ஏதேனும் ஒரு காலத்தின் சிறப்பியல்பு விதந்து குறிக்கப் பெறுதல் நன்றென்று தோன்றியவிடத்து, அது குறிக்கப் பெற்றுளது. அங்ஙனமே ஒரு நாட்டியல்பும். படிப்போர்க்குத் தெளிவாயிருத்தற் பொருட்டு, பண்டைத் தமிழரசியற் செய்திகள் பல்வேறு தலைப்பாகப் பகுக்கப்பட்டிருத் தலின், இரண்டோரிடத்துக் கூறியது கூறல் போல் தோன்றும் செய்திகள், வழிமொழிதலேயன்றிக் கூறியது கூறலாகா என்பதை, அறிஞர் அறிந்துகொள்வர் என நம்புகின்றேன். ஐயுறவான இடங்களில் மட்டும் இலக்கியச் சான்றுகள் காட்டப் பட்டுள; ஏனையிடங்களில் அவை விரிவஞ்சி விடப்பட்டுள. இந்நூலைப் படிப்போர்க்குப் பழந் தமிழரசியலைப் பற்றித் தெளிவான அறிவு பிறக்குமென்று கருதுகின்றேன். என்றுந் திருத்தம் இயம்பும் அறிஞரின் நன்றி யறிவேன் நனி. சேலம் ஞா.தேவநேயன் 18.12.1951 உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v சான்றிதழ் .vii முகவுரை .ix நூல்லடக்கம் 1. அரசியலுறுப்புகள் 1 2. ஆள்நிலப் பிரிவுகள் .9 3. அரசர் பாகுபாடு .14 4. அரசன் தகுதிகள் .17 5. அரசுச் சின்னங்கள் .18 6. அரசியல் வினைஞர் .25 7. அதிகாரிகளின் அர்த்தம் .32 8. படையும் பாதுகாப்பும் .40 9. ஆட்சிமுறை .53 10. பொருளாதாரம் .63 11. அளவைகள் 72 12. பண்டமாற்றுங் காசும் .76 13. மறமும் போரும் .82 14. அறமுங் கொடையும் .88 15. குற்றமுந் தண்டனையும் .94 16. உழவுங் கைத்தொழிலும் .98 17. வணிகமும் போக்குவரத்தும் 102 18. கலையுங் கல்வியும் 106 19. சமயமும் கொள்கையும் .110 20. திருப்பணிகள் .112 21. அரசர் விழாக்கள் .117 22. சில அரசியற் கருத்துகள் .119 23. நம்பற்கரிய செய்திகள் .121 24. அன்றாட நிகழ்ச்சி .122 25. இல்லற வாழ்க்கை .124 26. அரசர் முடிவு .128 பின்னிணைப்பு 1. மக்கள் நிலைமை .130 2. மொழி நிலைமை .132 3. சீமையரசாட்சி வகைகள் .135 4. வேத்தியல் எழுத்தும்நூல்களும்... 137 பழந்தமிழாட்சி 1 அரசிய லுறுப்புகள் ஒரு நாடு அல்லது சீமை (State) (1) ஆள்நிலம் (Territory) (2) குடிகள் (Population) (3) அரசியல் (Government) (4) கோன்மை (Sovereignty) என நாலுறுப்புகளையுடையது. இந் நான்கும் உள்ள நாட்டை நிறைநாடு vன்றும்,ïவற்றுள்xன்றும்gலவுங்Fறைந்ததைக்Fறைeடுvன்றும்mழைக்கலாம்.(1) ஆள்நிலம் : சேர சோழ பாண்டியர் என்னும் முத்தமிழ ரசரும், தனித்தனி ஆண்ட சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்னும் முந்நாடும் சேர்ந்த தமிழகம் முதலாவது (தலைச்சங்க காலத்தில்) வடபெண்ணை யாற்றிற்கும், 1தெற்கில் அமிழ்ந்துபோன பஃறுளியாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது; பின்பு (இடைச் சங்க காலத்திலும் கடைச்சங்க காலத்திலும்), வேங்கட (திருப்பதி) மலைக்கும் கடல்கொண்ட குமரி(கன்னி)யாற்றிற்கும் இடைப் பட்டதாயிருந்தது. அதன்பின், குமரியாறுங் கடல் கொள்ளப்பட்டுக் குமரிமுனை (Cape -comorin) தெற்கெல்லையாயிற்று. தமிழகத்தில் சேரநாடு மேற்கிலிருந்தமையால் குடபுலம் என்றும், சோழநாடு கிழக்கிலிருந்தமையால் குணபுலம் என்றும், பாண்டியநாடு தெற்கிலிருந்தமையால் தென்புலம் என்றும் கூறப்பட்டன. இம் முந்நாடும் தமிழ் நாடேயாயினும், பாண்டிய நாடே சிறந்த தமிழ் வழக்குப் பற்றியும் தமிழ்ச் சங்க விருக்கை பற்றியும், தமிழ் நாடெனச் சிறப்பித்துக் கூறப்பெற்றது. 1 கிருஷ்ணா கோதாவரி மாவட்டங்களைக்கொண்ட கீழைச் சாளுக்கிய நாடு வேங்கை நாடு என்றும், அதற்கு மேற்கே பம்பாய் மாகாணத் தென்பகுதியிலிருந்த மேலைச் சாளுக்கியநாடு வேள்புலம் என்றும், பெயர் பெற்றிருந்ததினால், தலைச்சங்கக் காலத் தமிழக வடவெல்லை கிருட்டிணையாறு என்று கொள்ள இடமுண்டு. சோழநாடு பாண்டியநாடு என்னும் பெயர்கள், முறையே சோணாடு பாண்டிநாடு என மருவும். சேரநாடு நெடுமலைத் தொட ருடைமையாலும், குறிஞ்சிநில மிகுதியாலும் மலைநாடெனப் பட்டது. தலைச்சங்க காலத்தில் இப்போதுள்ள திருவாங்கூர் கொச்சி குடகு மைசூர் என்னும் சீமைகளும், மலபார் தென்கன்னடம் கோயம்புத்தூர் சேலம் என்னும் மாவட்டங்களும், சேரவேந்தன் ஆள்நிலமாயிருந்தன; திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் தென்னார்க்காடு வடார்க்காடு செங்கற்பட்டு சித்தூர் நெல்லூர் கடப்பை அனந்த புரம் என்னும் மாவட்டங்கள், சோழவேந்தன் ஆள்நிலமாயிருந்தன; புதுக்கோட்டை மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி என்னும் மாவட்டங்களும், திருவாங்கூர்ச் சீமையின் தென்பகுதியிலிருந்த வேணாடும், தெற்கே இந்துமாவாரியில் (Indian Ocean) அமிழ்ந்து போன பெருநிலப் பகுதியும் பாண்டிய வேந்தன் ஆள்நிலமாயிருந் தன. இப்போதுள்ள சீமை யெல்லைகளும் மாவட்டப் பிரிவினை யும் பெரும்பாலும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்டவையாதலின், மேற் கூறிய முத்தமிழ் நாட்டெல்லைகள் மதிப்பாகக் கூறப்பட்டவை என அறிக. ஒருவாறு சுருங்கச்சொன்னால் பொதியமலையிலிருந்து வடபெண்ணையாறு நோக்கி வடகிழக்காக இருபது பாகை (degree) சாய்த்து இழுக்கப்படும் கோட்டால் பிரிக்கப்படும் இரு நிலப்பகுதிகளுள், மேலைப்பகுதி முற்றும் சேர நாடாகும்; கீழைப்பகுதியில்,புதுக் கோட்டைக்கு வடக்கிலுள்ளது சோழநாடும், அதற்குத் தெற்கிலுள்ளது பாண்டிநாடும் ஆகும். தெற்கில் அமிழ்ந்துபோன குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக் கும் இடைப்பட்ட தொலைவு எழுநூறு காதம் என்று, சிலப்பதி கார விரிவுரையாசிரியராகிய அடியார்க்குநல்லார் கூறியிருப்பதால் பாண்டி நாட்டின் பழம்பரப்பை ஒருவாறு உணரலாம்: காதம் என்பது பத்துக்கல் கொண்டதென்றும்; மூன்று கல் கொண்ட தென்றும் இருவேறாகக் கூறப்படும். அவற்றுள் குறைந்த அளவைக் கொள்ளின், தெற்கே அமிழ்ந்துபோன பாண்டிநாட்டு நிலம் 2100 கல் தொலைவிற்குக் குறையாததாகும். அந்நிலையில், பஃறுளியாறு சாவகத்தீவிற்கு நேர்மேற்கா யமையும். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வட வெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்குமிடையே, எழுநூற்றுக் காவதவாறும்; இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும், நதியும், பதியும். தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால், என்னும் அடியார்க்குநல்லார் கூற்றால்; 2 அமிழ்ந்துபோன பாண்டி நாட்டுப்பகுதி ஐம்பத்தொன் றிற்குக் குறையாத நாடுகளைக் கொண்டிருந்ததென்பதும், அவற்றுள் தென்கோடியிலிருந்த தென்பாலிமுகம் பஃறுளியாற் றிற்குத் தெற்கிலிருந்த தென்பதும் அறியப்படும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. 3 என்று இளங்கோவடிகள் கூறியிருப்பதால், பஃறுளியாறு கங்கை போலும் பேரியாறு என்றும், குமரிக்கோடு பனிமலைக் கடுத்த பெருமலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், குமரியாற் றிற்குத் தெற்குப்பட்ட பாண்டிநாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கியபின் தமிழகப் பேரியாறாயிருந்தது குமரியாறே. தெனாஅ துருகெழு குமரி (புறம்.6) என்று காரிகிழாரும், குமரியம் பெருந்துறை (புறம்.67) என்று பிசிராந்தையாரும் பாடியிருத்தல் காண்க. கடைச்சங்க காலத் திற்குப்பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியுங் குமரியும் மூழ்கிய பின்னரே, தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்திற சிறந்து, சோழநாடு புனல் நாடு எனப்பட்டது. கடைச்சங்க காலத்திலேயே, சேரநாடும் சோழநாடும் இவ்விரு பாகங்களாகப் பிரிந்திருந்தன. சேரநாட்டில், குட(மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்கிலுள்ளது கடன்மலைநாடு என்றும், கிழக்கிலுள்ளது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றிருந்தன. கடன்மலைநாட்டின் வடபாகம், குட்டம் குடம் துளுவம் கொங் கணம் என்னும் பல பகுதிகளைக் கொண்டிருந்தது. கொங்குநாடு, குடகொங்கு (மேல் மண்டலம்), குணகொங்கு (கீழ்மண்டலம்) என இருபாகமாகப் பிரிந்து, அவற்றுள் குடகொங்கு, மீண்டும் குடகு கருநாடு கங்கநாடு கட்டியநாடு முதலிய பல நாடுகளாகப் பிரிந்துபோயிற்று. அவற்றுள் குடகை யாண்ட கோசர் கொங்கிளங் கோசர் எனப்பட்டனர். கங்கநாட்டையாண்ட கங்கர் தம்மைக் கொங்குநாட்டரசர் (கொங்கு தேச ராஜாக்கள்)என்று கூறிக் கொண்டனர். அக்காலத்துக் கட்டியநாடு தமிழக வடவெல்லையா யிருந்ததென்பது, குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (11) என்னுங் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாகும். குண கொங்கின் தென்பாகம் பூழிநாடு எனப் பிரிந்திருந்தது. அது பொதினி என்னும் பழனிமலையையும் உட்கொண்டிருந்தது. பழனிமலை சேரநாட் டைச் சேர்ந்தது என்பது, சேரர் கொங்குவை காவூர் நன்னாடு என்னும் அருணகிரிநாதர் கூற்றாலும்,வடக்குத்திசை பழனி என்னும் கம்பர் கூற்றாலும் அறியலாகும். குடகொங்கு பல நாடு களாய்ப் பிரிந்து போனபின், கொங்குநாடு எனச் சிறப்பாக அழைக்கப்பெற்றது, கருவூரைத் தலைநகராகக் கொண்டிருந்த குணகொங்கே. அதனினின்றும் பூழிநாடு பிரிந்தபின், கொங்கு நாடென எஞ்சியிருந்தது கோவை சேல மாவட்டங்கள் கூடிய பகுதியேயாகும். இங்ஙனம் கடன்மலை நாடும் கொங்குநாடும் பலபல பகுதிகளாகப் பிரிந்து போயினும், அவை யாவும் செங்குட் டுவன் போன்ற சேரன் ஆட்சியில் அவனுக்கடங்கியே இருந்தன. அவற்றுள் குடநாடும் குட்டநாடும் கொங்குநாடும் பூழிநாடும் நீண்ட காலமாகச் சேரநாட்டுப் பகுதிகளாகவேயிருந்து, சேரர் குடும்பத்தினரால் ஆளப்பட்டு வந்தன. சோழநாட்டின் வடபாகம் தொண்டைநாடு (வடசோழம்) என்றும், தென்பாகம் புனல்நாடு (தென் சோழம்) என்றும் பெயர் பெற்றிருந்தன. கடைச்சங்க காலத் திறுதியிலேயே, சேரநாட்டின் வடபாகத்தி லுள்ள துளுவம் கொங்கணம் குடகு கருநாடகம் முதலிய நாடுகள், மொழிபெயர் தேயமாகத் திரியத்தொடங்கிவிட்டன. முத்தமிழ் நாடுகளுள் அடங்கிய உள்நாடுகளை வெவ்வேறு சிற்றரசரும் துணையரையரும் (Viceroys) ஆண்டு வந்தனர். தலைமை யரசர் வலிகுன்றியபோது, அதிகாரவாசைமிக்க சிற்றரசரும் துணை யரையரும் தனியரசராகிவிடுவது வழக்கம். இவ்வகையில், சேரநாட் டினின்று கொங்குநாடும், சோழநாட்டினின்று தொண்டை நாடும் பிரிந்துபோயின. பிற்காலத்துப் பேரரசர் தம் பெருவலியால் அவற்றை மீள அடிப்படுத்தினும், அவை வெல்லப்பட்ட புறநாடுகள் போற் கருதப்பட்டனவேயொழிய, பண்டுபோல் சேர சோழ நாட்டுப் பகுதியான உள்நாடாகக் கருதப்பெறவில்லை. ஆயினும் தமிழ கத்தை வண்புகழ் மூவர் தண்பொழில் என்று கூறும் இலக்கிய மரபு நெடுகலும் இருந்து வந்தது. பாண்டிநாட்டின் பெரும்பகுதியைச் சிறிதும் பெரிதுமாய்ப் பன்முறையிற் கடல்கொண்டுவிட்டதனாலும், சேர சோழ நாடு களின் எல்லைப்புறத்துச் சிற்றரசர் அடிக்கடி தனியரசராகிக் கொண்டும் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டும் இருந்ததினா லும், தமிழகத்தின் வடகோடியும் வடமேற்குப் பகுதியும் மொழி பெயர் தேயமாகத் திரிந்து வந்ததினாலும், கடைச்சங்க காலத்திற்குப் பின் முத்தமிழ் நாடுகளும் மிக ஒடுங்கிவிட்டன. சேரநாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த கருநாடும் கங்கமும் கட்டியமும், 9ஆம் நூற்றாண்டிலேயே முழுக் கன்னட நாடாகி, 11ஆம் நூற்றாண்டில் ஹொய்சள ஆட்சிக்குட்பட்டு விட்டன. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சள மன்னன், கேரள (சேரல) அரசனை வென்று நீலமலையைக் (Nilgiris) கைப்பற்றிக்கொண்டதாக அவன் கல் வெட்டுக் கூறுவதால், சேரநாட்டின் வடவெல்லை 12 ஆம் நூற்றாண் டில் மிகத் தெற்கே தள்ளி விட்டதென அறியலாம். கொங்குநாடு. மூவேந்தரும் முட்டிப் பொருங் களமாயிருந்து, ஒரு நிலையிலில்லாமல், அடிக்கடி அம் மூவருள்ளும் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்குக் கடந்து கொண்டும் எல்லைமாறிக் கொண்டும் இருந்ததினால், ஒரு தனி நாட்டிற்குரிய தன்மையை முற்றும் இழந்து விட்டது. அதனால், 3-ஆம் குலோத்துங்கச் சோழன் (1178-1218) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்: வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி. கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம் ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருப தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு. வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு. இவ்வெல்லைகளும் நீடித்து நிற்கவில்லை, முத்தமிழரசரும் பிறரும் ஒருவரையொருவர் பொருது வென்றுகொண்டும் தத்தம் நாட்டை விரிவாக்கிக்கொண்டுமிருந்ததினால், அவர் நாடுகளும் அதற் கேற்பச் சுருங்கியும் விரிந்தும் வந்துகொண்டிருந்தன. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், கங்க கட்டிய நாடுகளின் வடபாகத்தில், தடிகைபாடி நுளம்பபாடி எனச் சில சிறுநாடுகள் புதிதாகக் தோன்றின. (2) குடிகள்: சேர சோழ பாண்டியம் என முப்பாற்பட்ட தமிழகத்துப் பழங்குடி மக்கள் யாவரும், திரவிடப் பேரினத்தைச் சேர்ந்த தமிழர் என்னும் இனத்தாராவர். அவர் நகர வாழ்நரும் நாட்டு வாழ்நரும் காட்டு வாழ்நரும் மலை வாழ்நருமாய், நால் வகைப்பட்டிருந்தனர். அவருள் ஒருசார் மலைவாழ்நரும், ஒருசார் காட்டுவாழ்நரும் நாகரிகமின்றிக் காட்டு விலங்காண்டிகளாய் 4 வாழ்ந்து வந்தனர். சித்தர் முனிவர் முதலிய சிறந்த துறவு வகுப்பார் நாட்டிடைப் பிறந்து வளர்ந்தவரேயாயினும், தம் துறவு நிலைபற்றி மலையில் உறைந்து வந்தனர். முழு அநாகரிகரும் மலையுறை துறவியரும் அரசனாட்சிக் குட்பட்டிலர். வட மொழியாளர் எனப்பட்ட பார்ப்பார் (பிராமணர்) தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்நாடு புகுந்து நகரிலும் 4 காட்டு விலங்காண்டி - காட்டு மிருகாண்டி (காட்டுமிராண்டி.) நாட்டிலும் கோயில் வினைஞராகவும் அரசியல் வினைஞராகவும் புலவராகவும் பெருமக்கள் தூதராகவும் அமர்ந்திருந்தனர். மருதம் என்னும் அகநாட்டிலும் நெய்தல் என்னுங் கரை நாட் டிலுமுள்ள கோநகரங்களில், வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே, யவனர் (கிரேக்கர், ரோமர்) சோனகர்(அரபியர், துருக்கர், மிலேச்சர்) முதலிய மேனாட்டாரும்; அவந்தியர், மகதர், குச்சரர், மராட்டர் முதலிய வடநாட்டாரும்; ஈழவர், நாகர் முதலிய கீழ் நாட்டாரும்; கம்மியம் வணிகம் அரசவூழியம் முதலிய பற்பல வினைமேற் கொண்டு, அவரவர்க்குரிய சேரியில் பதிவாயிருந்து வந்தனர். (3)அரசியல் : அரசியல் என்பது, (1) சட்டம் அமைப்போர் (Legislature) (2) கருமம் ஆற்றுவோர் (Executive) (3) நடுத்தீர்ப்போர் (Judiciary) என்னும் முத்துறை அதிகார வகுப்புகளை உறுப்பாகக் கொண்டது. பண்டைத் தமிழகத்தில், இம் முத்துறை அதிகாரங்களும் பிரிக்கப் படவில்லை. அதனால், சட்டம் அமைத்தற்கென்று இக் காலத்திற் போல் ஒரு தனி அவை இருந்ததில்லை. அரசனும் அவனுடைய துணையதிகாரிகளுமே, இம் மூவகை வினைகளையும் புரிந்து வந்தனர். சிற்றரசனாயினும் பேரரசனாயினும் சட்டம் அமைக்கும் அதிகாரம் அரசனிடத்திலேயே இருந்தது. அரசனுக்கும் குடிகளுக் கும் தீங்கு விளைக்காத பழைமையான மரபு வழக்கங்களெல்லாம் அப்படியே தழுவப்பெற்றன. அவ்வப்போது தேவைப்பட்ட திருத் தங்களும் புது விதிகளுமே அரசனால் ஆக்கப்பட்டன. (4) கோன்மை: கோன்மையானது, ஒரு நாடு பிற நாட்டைச் சாராது, தனக்குரிய சட்டங்களைத் தானே அமைத்துக்கொள்ளும் உரிமை. இவ் வுரிமை மூவேந்தருக்கும் தனித்தனி யிருந்ததால், அம் மூவர் நாடு முழு நிறைவுற்றவை யாகும். கோன்மை என்பது ஒரு நாட்டிற்குரிய தனியுறுப்பாகப் பண்டைக்காலத்தில் உணரப்படாமையால், திருவள்ளுவர் ஏனை மூன்றுறுப்புகளையும் ஆறாக வகுத்து, படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு குறள் (381) என்று கூறினார். அவர் கூறும் ஆறனுள், குடி என்பது குடிகள்; கூழ் (பொருள்) அரண் என்னும் இரண்டும் ஆள்நிலத்தின் பகுதிகள்; அரசன் படை அமைச்சு நட்பு என்னும் நான்கும் அரசியலின் பகுதிகள். சில தமிழ் நூலாசிரியர், மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்'' என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளை யொட்டிப் பெயர், மலை, நாடு, ஆறு, நகர், முரசு, தமிழ், கொடி, குதிரை, மாலை என்னும் பத்தும் அரசவுறுப்புகள் எனக் கூறுவர். பாட்டியல் இலக்கணியர், இவற்றுள் பெயர் தமிழ் என்னும் இரண்டை நீக்கி அவற்றுக்குப் பதிலாக. யானை ஆணை என்னும் இரண்டைச் சேர்ப்பர்; இவ் விரு சாராரும் கூறுபவற்றுள் பெரும்பாலன அரசச் சின்னங்களும் ஆள்நிலப் பகுதிகளுமாதலின், அவை இற்றை அரசியல் நூற்படி அரசவுறுப்புகளாகா என அறிக. 2 ஆள்நிலப் பிரிவுகள் முத்தமிழ் நாடுகளும், ஆள்வினைப் பொருட்டு, சிறியதும் பெரியதுமான பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மூவேந்தர் முழுநாடுகளும் தனித்தனி பெருநாடு எனப்பட் டன: சோழப் பெருநாடு பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல ஊர்களாக வும் பிரிக்கப்பட்டிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஊர் என்னும் அடிப்படை ஆள்நிலவுறுப் பாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூராகவுள்ள பேரூர்க்குத் தனியூர் என்றும், கூட்டூரின் பகுதியாகவுள்ள சிற்றூர்க்குப் பற்று அல்லது குறைப்பற்று என்றும் பெயர். பல பற்றுகள் சேர்ந்த கூட்டூர் அதிலுள்ள முதன்மையான சிற்றூராற் பெயர் பெற்றது. தனியூரான பேரூராயினும் குறைப்பற்றான சிற்றூராயினும், பார்ப்பனத் தலைமையுள்ள ஊர்களெல்லாம் சதுர்வேதிமங்கலம் என்னும் பொதுப்பெயரைக் கொண்டிருந்தன. அப் பெயர் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலம் என ஊர்ப்பெயரீறாக வழங்கிற்று. முதலாம் இராசராசன் காலத்தில், (கி.பி. 985-1014) சோழப் பெருநாடு, 9 வளநாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பகுக்கப்பட்டி ருந்தது. அவ் வொன்பது வளநாடுகளும் அவ்வரசனின் விருதுப் பெயர்களையே சிறப்புப் பெயர்களாகப் பெற்றிருந்தன. அவையாவன: 1. இராசேந்திர சிங்கவள நாடு 2. இராசாச்ரய சிங்கவள நாடு 3. நித்த விநோத சிங்கவள நாடு 4. க்ஷத்திரிய சிகாமணி சிங்கவள நாடு 5. உய்யக்கொண்டான் வளநாடு 6. அருண்மொழித்தேவ வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. இராசராச வளநாடு 9. பாண்டிய குலாசனி வளநாடு பொதுவாக ஒரு வளநாடு ஈராற்றிற் கிடைப்பட்ட தென்பர். உய்யக்கொண்டான் வளநாடு அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் இடைப்பட்டிருந்தது. பாண்டிப் பெருநாடு பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல கூற்றங்களாகவும், ஒவ்வொரு கூற்றமும் பல கூறுகளாகவும் அல்லது ஊர்களாகவும் பகுக்கப்பட்டிருந்தன. ஊர் என்பதற்குப் பதிலாகப் பிற்காலத்தில் கிராமம் என்னும் வடசொல் வழங்கிற்று. பாண்டிநாடு முழுவதும் ஐந்து வட்டகையாக வகுக்கப் பெற்று, அவற்றை ஐந்து சிற்றரசப் பாண்டியர் ஆண்டு வந்தனர் என்றும் அதனால் பாண்டியன் பஞ்சவன் எனப்பட்டான் என்றும், அறிஞர் கூறுவர். 1 ஒரு பெருநாடானது, வளநாடு அல்லது நாடு என்னும் பிரிவிற்கு மேற்பட்ட மாகாணப் பிரிவையுடையதாயின், அப்பெரும்பிரிவு மண்டலம் என அழைக்கப்பெறும். கொங்கு மண்டலம் தொண்டை மண்டலம் என்பன ஒரு காலத்தில் முறையே சேரப்பெருநாட்டையும் சோழப் பெருநாட்டையும் சேர்ந்த மாகாணங்களாயிருந்து பின்பு தனி நாடுகளாய்ப் பிரிந்துபோயின. தொண்டைநாடு (தனி நாடாய்ப் பிரிந்து போனபின்) பல கோட்டங்களாகவும். ஒவ்வொரு கோட்டமும் பல கூற்றங் களாகவும் பகுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 24 கோட்டங்களும் 96 கூற்றங்களுமிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஒரு கூற்றமாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூர்க் கூற்றம் தற்கூற்றம் எனப்பட்டது. சேரப் பெருநாடு பாண்டிப் பெருநாடு போன்று பகுக்கப் பட்டிருந்ததுபோலும். ஒரு தமிழ்ப் பேரரசன், பிற அரசரை வென்றபின் அவரைச் சிற்றரசராகப் பாவித்து, அவர் நாடுகள் தன் நாட்டிற்கு அண்ணிய வாயின், அவற்றைத் தன் பேரரசிற் குட்பட்ட மண்டலங்களாக வகுத்து, அவற் றிற்குத் தன் விருதுப்பெயர்களை இடுவது வழக்கம். அன்று அவன் சொந்தப் பெருநாடும் ஒரு மண்டலமாக அமையும். 1. விசுவநாத நாயக்கர் பாண்டிநாட்டைக் கைப்பற்றியபோது, அவர் பஞ்சபாண்டியர் என்னும் ஐந்து சிற்றரசரோடு போர் செய்ய வேண்டியிருந்தது. முதலாம் இராசராசச் சோழனின் பேரரசில் அடங்கிய மண்டலங் களும், அவற்றின் சிறப்புப் பெயருமாவன: நாட்டுப்பெயர் மண்டலப்பெயர் (1) சோணாடு - சோழமண்டலம் (2) பாண்டிநாடு - இராசராசப் பாண்டிமண்டலம் (3) சேரநாடு - மலை மண்டலம் (4) கொங்குநாடு - அதிராசராசமண்டலம் (5) தொண்டைநாடு - சயங்கொண்ட சோழமண்டலம் (6) கங்கபாடி - முடிகொண்ட சோழமண்டலம் (7) நுளம்பபாடி - நிகரிலிச் சோழமண்டலம் (8) வேங்கைநாடு - வேங்கை மண்டலம் (9) இலங்கை - மும்முடிச் சோழமண்டலம் இவற்றுள், சோணாடு தன்னளவில் ஒரு பெருநாடாகவும், பேரரசு கள் ஒரு மண்டலமாகவும் இருந்ததென அறிக. ஒர் அரசன் அல்லது பேரரசன், தன் ஆட்சியில், தன் ஆள்நிலப் பிரிவுகட்கு அல்லது பேரரசைச் சேர்ந்த மண்டலங்கட்குத் தன் முன் னோர் இட்ட பெயரையும் வகுத்த அளவையும் மாற்றிக் கொள்வ துண்டு. முதலாம் குலோத்துங்கச் சோழன், அதிராசராச மண்டலத் திற்குச் சோழகேரள மண்டலம் என்றும், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டிற்குக் குலோத்துங்கச் சோழவளநாடு என்றும் பெயர் மாற்றினான். அதோடு, இராசேந்திர சிங்கவள நாட்டை இரு பிரிவாக்கி, மேலைப் பிரிவிற்கு உலகுய்ய வந்த வளநாடு என்றும், கீழைப் பிரிவிற்கு விருதராச பயங்கர வளநாடு என்றும் பெயரிட்டான். மூவேந்தர் ஆள்நிலத்துள்ளும் அடங்கிய சிற்றரச நாடுகள், அவற்றின் அளவிற்கும் பெருமைக்கும் தக்கவாறு, ஏதேனுமொரு மேல்வகைப் பிரிவாக வகுக்கப்பெற்றிருந்தன. அரசனின் தலைநகர் அரசிருக்கை, கோநகர், படைவீடு என்னும் பெயர்களுள் ஒன்றால் அழைக்கப்பெற்றது. இவற்றுள், அரசிருக்கை என்பது அரசன் நிலையாக வாழும் நகரையே குறிக்கும். கோநகர் என்பது அரச குடும்பத்தினர் இருந்து ஆளும் நகரையும், படைவீடு என்பது படை நிறுத்தப்பெற்று அரசன் நாடு காவற் சுற்றுப்போக்கில் தங்கக்கூடிய நகரையும் குறிப்பதுமுண்டு. தலைநகர்கள், அவற்றின் பெருமைபற்றிப் பேரூர் அல்லது மாநகர் என்றும், ஆரவாரம்பற்றிக் கல்லென் பேரூர் என்றும், பழைமையான வெற்றியுடைமைபற்றிப் பழவிறன் மூதூர் என்றும், காவல்மிகுதிபற்றிக் கடிநகர் என்றும் புலவராற் சிறப்பித்துக் கூறப்பெறும். முத்தமிழ் அரசருள், ஒவ்வொருவர்க்கும் அகநாட்டுத் தலைநகர் ஒன்றும் கரைநாட்டுத் தலைநகர் ஒன்றுமாக இவ்விரு தலைநகர் இருந்தன. இவற்றுள், முன்னது ஆட்சி வசதியும், பின்னது வணிக வசதியும்பற்றியவை. கரைநாட்டுத் தலைநகரெல்லாம் பட்டினம் என்னும் பொதுப்பெயருடையன. தலைநகரும் பிறநகருமான பேரூர்களெல்லாம் பல சேரி களாகப் பாகுபட்டிருந்தன. ஒவ்வொரு குலத்தாரும் அல்லது வகுப் பாரும் சேர்ந்து வாழும் தெரு அல்லது தெருத்தொகுதி சேரி எனப் பட்டது. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும் (983) என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. தெருப்பேச்சைத் தொல்காப்பியர் சேரிமொழி என்பர். உறையூரில் ஏணிச்சேரி என்பது ஒரு பகுதி. சேரிகள் பார்ப்பனச்சேரி, கம்மாளச்சேரி, தளிச் சேரி, பரத்ததையர் சேரி, பறைச்சேரி என அவ்வவ் வகுப்பாற் பெயர் பெற்றிருந்தன. தளிச்சேரி என்பது கோயிற்பணிப் பெண்டுகள் வாழுமிடம். ஒரு நகரின் மூலப் பழைமையான சேரிக்கு அடிச்சேரி என்றும், கோட்டை வாயிலுக்கு எதிராக இருக்கும் சேரிக்குத் தலைவாய்ச்சேரி என்றும் பெயர். பார்ப்பனச்சேரிக்குப் பிற்காலத்தில் அக்கிரகாரம் எனத் தனிப்பெயர் வழங்கிற்று. சேரி, பாடி எனவும்படும். ஒரு பேரூரில் உள்ள சேரிகள், அரச அரசியரின் பெயர்களைச் சிறப்புப் பெயராகப் பெற்றிருப்பதுமுண்டு. தஞ்சை மாவட்டத் தைச் சேர்ந்த திருக்களித் திட்டையில்,அருண்மொழித் தேவச்சேரி, சனநாதச்சேரி, நித்தவிநோதச்சேரி, இராசராசச்சேரி, நிகரிலிச் சோழச்சேரி, அழகிய சோழச்சேரி, சிங்களாந்தகச்சேரி, குந்தவ்வைச் சேரி, சோழகுலசுந்தரிச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி எனப் பதினொரு சேரிகள் இருந்தன. கடல்கோளாலும் பகைவராலும் தலைநகர்க்கு அழிவு நேர்ந்த விடத்தும், பழந்தலைநகர் வசதியற்ற விடத்தும், பிறிதொரு நகரைத் தலைநகராக்கிக்கொள்வதும் புதிய தலைநகரை அமைத்துக் கொள்வதும் தமிழரசர் வழக்கம். இவ்வகையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தலைநகர் அமைவதுண்டு. பாண்டியர்க்குத் தென்மதுரை மணலூர் மதுரை என்பன அகநாட்டுத் தலைந கராகவும், கவாடம் (அலைவாய்), கொற்கை, காயல் என்பன கரை நாட்டுத் தலைநகராகவும்; சோழர்க்கு உறையூர் கருவூர் அழுந்தூர் குடவாயில் திருவாரூர் தஞ்சை ஆயிரத்தளி (நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம்), கங்கைகொண்ட சோழபுரம் என்பன அகநாட்டுத் தலைநகராகவும், புகார் (காவிரிப்பூம்பட்டினம்), நாகபட்டினம் என்பன கரைநாட்டுத் தலை நகராகவும்; சேரர்க்குக் கருவூர் என்பது அகநாட்டுத் தலைநகராகவும், வஞ்சி கொடுங் கோளூர் காந்தளூர்ச்சாலை என்பன கரைநாட்டுத் தலைநகராகவும் இருந்திருக்கின்றன. 3 அரசர் பாகுபாடு சிற்றரசர் தலைமையரசர் பேரரசர் எனத் தமிழரசர் முத்திறப் பட்டிருந்தனர். இம் முத்திறத்தாரும் முறையே, குறுநிலவரசரும் பெருநிலவரசரும் பலநிலவரசரும் ஆவர். சிற்றரசர்க்கு மன்னன் என்னும் பெயரும், தலைமையரசர்க்கு வேந்தன் கோ (கோன்) என்னும் பெயரும், மரபாக வுரிய. இதை, கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் என்னும் தனிப்பாடற் செய்யுளடியாலும், வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தே வேம்பே ஆரென வரூஉம் (1006) என்னும் தொல்காப்பிய அடிகளாலும், அறியலாம். பேரரசரைப் பெருங்கோ அல்லது மாவேந்தன் என்னும் பெயரால் அழைக்க லாம். கோ என்னும் பெயர் வேந்தருக்கு மட்டுமன்றி, அவருக்கடங்கி அவர் நாட்டுள் ஒவ்வொரு பகுதியை ஆளும் அவர் தாயத்தார்க்கும், சிற்றரசருள் பெரியவர்க்கும் வழங்கும். சேரன் செங்குட்டுவனின் தாயத்தாரான இரும்பொறை மரபினருள் ஒருவனான சேரமான் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும், சிற்றரசருள் ஒருவனான விச்சிக்கோவும், கோவென்று பெயர் கொண்டிருந்தமை காண்க. வேந்தன் என்னும் பெயரோ, என்றும் தலைமையரசனையே குறிக்கும். தமிழகச் சிற்றரசர், எயினர் வேட்டுவர் முதலிய பாலைநிலக் குடிகளின் தலைவராகிய குறும்பரசரும், சிறுமலைக் கிழவரும், உழுவித்துண்ணும் வேளாண் குடியினரான வேளிரும்; படைத்தலை வரும், அரச குடும்பத்தினரும், அரசியற் பேரதிகாரிகளுமாகப் பல வகையர்; தொல்வரவினர் புதியர் என இருபாலார்; ஊர்க்கிழவர் முதல் மண்டலத் தலைவர்வரை பல திறத்தார். கொங்கர், கோசர், கங்கர், கட்டியர், பங்களர், துவரைவேளிர், அதிகர், ஆவியர் என்னும் பலகுடிச் சிற்றரசர் சேரனுக் கடங்கிய வராகவும்; பொத்தப்பிராயர், காடவராயர், பல்லவர் (பல்லவ தரையர்), தொண்டையர், சம்புவராயர், இலாடராயர், மலைய மானர் (சேதிராயர்), வாணகோவரையர், முனையரையர் (முனைய தரையர்), ஓய்மானர், முத்தரையர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பலகுடிச் சிற்றரசர் சோழனுக் கடங்கியவ ராகவும்; ஆயர் (ஆய்குடியர்), களப்பாளர் (களப்பிரர்) முதலிய சிலகுடிச் சிற்றரசர் பாண்டியனுக் கடங்கியவராகவும்; பல தலை முறையினராயிருந்து வந்தனர். கொங்குமண்டலம் சோழப் பேரரசிற் குட்பட்ட பிற்காலத்தில், கொங்கர் கங்கர் நுளம்பர் முதலியோர் சோழருக்கடங்கியவராயினர். இனி, சிற்றரசர்க்கடங்கிய கீழ்ச் சிற்றரசருமுண்டு. வேங்கட மலையைச் சார்ந்த ஒரு சிறு நாட்டுத் தலைவனான கரும்பனூர் கிழானும், வேங்கடமலைத் தலைவனான புல்லியும், பல்குன்றக் கோட்டத் தலைவனான நன்னனும், தொண்டைமானுக்கடங்கிய கீழ்ச் சிற்றரசர், அடங்கா மன்னரை யடக்கு மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம்.199) என்று விச்சிக்கோ கபிலராற் பாடப்பெற்றிருப்பதால் அவன்கீழ்ப் பல மன்னரிருந்தமை அறியப்படும். இனி, கடைச்சங்க காலத்தில் அகுதை, எயினன், எருமையூரன், ஏறைக்கோன், ஏனாதி திருக்கிள்ளி, ஓரி, கடியநெடுவேட்டுவன், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், தழும்பன், தாமான் தோன்றிக்கோன், திதியன், நள்ளி, நாலைகிழவன் நாகன், நாஞ்சில் வள்ளுவன், கந்தன், பழையன், பாரி, பிட்டங் கொற்றன், மல்லிகிழான் காரியாதி, மூவன், வல்லார்கிழான் பண்ணன், வெளிமான், வேங்கைமார்பன் என அரசகுடி கூறப்படாத பற்பல சிற்றரசரும் கீழ்ச் சிற்றரசரும் தமிழ்நாடு முழுமையு மிருந்தனர். தமிழரசருள், சேர சோழ பாண்டியராகிய முக்குடியரசரும், வேந்தர் என்று கூறப்படும் தலைமையரசராவர். முதற்காலத்தில் அவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. இதனாலேயே, அவர் வேந்தர் எனப்பட்டார். வேந்தன் என்னும் பெயர் வேய்ந்தோன் 2 என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல். முடியணியும் 2. கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றை வேந்தன் என மருவியிருத்தல் காண்க. முத்தமிழரசரையும் முடியுடை மூவேந்தர் என்று கூறுவது மரபு. ஒரே காலத்தில், ஓர் அரச குடியினர் பலர், மாற்றாந்தாய் மக்களும் மற்றத் தாயத்தாருமாகச் சமவுரிமையாளராக விருந்து, ஒரு பெருநாட்டின் வெவ்வேறு பகுதியைத் தனித்தனி ஆண்டுவரின், அவரனைவர்க்கும் முடியணியும் உரிமையும் கோவென்னும் பெயரும் உண்டு. பிற்காலத் தில், ஒரு பெருநாட்டினின்று தனியரசாய்ப் பிரிந்துபோன சிற்றரச ரும் இவ்வுரிமைகளைத் தாமே அடைந்துவிட்டனர். மூவேந்தருள் ஒருவன் இன்னொருவனை வென்று அடிப் படுத்தினவனாயின் அவனைப் பேரரசன் என்றும், அவனது அரசைப் பேரரசு என்றும் அழைக்கலாம். தமிழ் வேந்தருள்ளேயே ஒருவரிரு வரை வென்று இருமுடிப் பேரரசும் மும்முடிப் பேரரசும், அவருடன் ஈழவரசன் வேங்கை (கீழைச்சளுக்கி)யரசன் போன்றாரை வென்று பன்முடிப் பேரரசும் நிறுவிய சேர சோழ பாண்டியப் பேரரசர் பலராவர்.வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன் என்பவர் பன்முடிப் பேரரசர்க்குச் சிறந்த எடுத்துக் காட்டாவர். மூவேந்தரும் தலைமையரசரென்றும், பிறரெல்லாம் சிற்றரச ரென்றும், மரபும் பெரும்பான்மையும்பற்றிப் பொதுவாகக் கூறப்படினும்; காலச் சக்கரத்தின் சுழற்சியால், இடையிடை, சிற்றரசக் குடியினர் பேரரசரும் பேரரசக் குடியினர் சிற்றரசரும் ஆயினர் என்றறிதல் வேண்டும். வேந்தர் குடியைச் சேர்ந்த சோழர், இடைக்காலத்தில், தாயப்போரால் புகார்ச் சோழரும் உறையூர்ச் சோழருமாகப் பிரிந்து கோக்கள் நிலையடைந்து, பின்பு அதுவு மின்றிப் பல்லவருக் கடங்கிய மன்னராகத் தாழ்ந்தனர். மன்னர் நிலையிலிருந்த பல்லவரோ, இதற்கு நேர் மாறாக, பேரரச நிலைக்கு யர்ந்தனர். இந் நிலைமை பின்பு மாறி, சோழர் மீண்டும் வேந்தரும் மாவேந்தரு மாயினர். இங்ஙனம் அரசக் குலங்களிடை மாறிமாறி நேர்ந்த ஏற்றிறக்கம் பலப்பல. 4 அரசன் தகுதிகள் ஓர் அரசனுக்குப் பின் அரியணை யேறற் குரியவன், அவ் வரசனுடைய கோப்பெருந்தேவியின் மூத்த மகனாவன். மூத்தமகன் இறந்துவிடின் இளையமகனும், ஆண்மக்களே இல்லாதபோது மகள் வழிப் பேரன்மாருள் மூப்புடையவனும், பேரன்மாரும் இல்லாதபோது கோப்பெருந் தேவிக்கடுத்த தேவியின் புதல்வருள் மூப்புடையவனும், அவரும் இல்லாத போது பிற நெருங்கிய உறவினருள் தகுதிமிக்கவனும், அரியணை யேறுவர். அரசனாதற்குரியவன், இளமையிலேயே பல கலைகளையுங் கற்று, பல்வகைப் படைப்பயிற்சியும் பெற்று, வேட்டையாடுவதிலும் தேர்ச்சியுற்று, அறிவு ஆற்றல் அன்பு அறம் மறம் முதலிய குணங் களை ஒருங்கேயுடையவனாய், பல அருஞ்செயலும் அறச்செயலும் ஆற்றிக் குடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தவனாய், இருத்தல் வேண்டும். மக்கள் யாக்கை - சிறப்பாக அரசர் யாக்கை - நிலையற்ற தாதலின், ஆளும் அரசன், தனக்குப் பின்னால் அரசியற் குழப்பமும் இடர்ப்பாடும் நேராதவாறு, தன் காலத்திலேயே மூப்புத் தகுதியுள்ள தன் மகனுக்கு அல்லது பேரனுக்கு, மண்டை கவித்து இளவரசு பட்டங்கட்டி, ஆட்சித் துறையிலும் போர்வினையிலும் பிறவற்றி லும் பயிற்சியளிப்பது வழக்கம். அரசன் யாருக்கு இளவரசு பட்டம் கட்டினும், ஆட்சித் திறனும் அரசியற் பொறுப்புச் சுற்றத்தின் உடன்பாடும் குடிகளின் இணக்கமும் இருந்தாலொழிய, ஆட்சியைக் கடைபோகக் கொண்டு செலுத்த முடியாது. பழவிறல் தாயம் புதுவிறல் தாயம் என்னும் இருவகைத் தாயங்களுள், மூவேந்தர் தாயம் பழவிறல் தாயமாகவும், குறுநில மன்னர் தாயம் இருவகையாகவும் இருந்துவந்தன. 5 அரசச் சின்னங்கள் அரசர்க்கு அவர் தகுதிக்கேற்பப் பல அடையாளங்கள் உள. அவை அரசச் சின்னங்கள் எனப்பெறும். அவை குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை, கொடி, முத்திரை. முரசு, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை எனப் பதினைந்து வகைய. இவற்றுள் முடியொன்றும் மூவேந்தர்க்குச் சிறப்பு என்றும், பிறவெல்லாம் முத்திறவரசர்க்கும் பொதுவென்றும் கூறுவது மரபு. (1) குலம்: மூவேந்தரும், கதிரவன் திங்கள் நெருப்பு ஆகிய முச்சுடரைத் தங்குல முதலாகக் கூறி வந்தனர். பாண்டியர் திங்கட்குலம்; சோழர் கதிரவக்குலம்; சேரர் நெருப்புக்குலம். 1 (2) பெயர்: அரசர் பெயர்கள், குடிப்பெயர், இயற்பெயர், பட்டப்பெயர், விருதுப்பெயர், சிறப்புப் பெயர், உயர்வுப் பெயர், வரிசைப்பெயர், திணைநிலைப் பெயர், இயனிலைப் பெயர் என ஒன்பான் வகைப்படும். மூவேந்தர் குடிப்பெயர்கள் பலப்பல. அவற்றுள் முதன்மை யானவை, சேரன் (சேரல், சேரலன்) சோழன் பாண்டியன் என்பன. பிற குடிப்பெயர்கள்: சேரனுக்கு மலையன் (மலைநாடன் பொறையன்), வானவன் (வானவரம்பன்), வில்லன், கோதை, உதியன், குடவன், குட்டுவன், கொங்கன், பூழியன் என்பவும்; சோழனுக்குச் சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன், புனனாடன் என்பவும், பாண்டியனுக்குச் செழியன், மாறன், வழுதி, மீனவன், வேம்பன், 1 கடலுள் மூழ்கிய குமரிநாடாகிய பாண்டிநாட்டில் கதிரவன் கழிபெருங் கடுமையாய்க் காய்ந்து மக்கள் திங்களையே விரும்பும்படி செய்ததினால், பாண்டியர் தம்மைத் திங்கள் வழியினராகவும்; குணபுலமாகிய சோழநாடு கதிரவன் எழுந்திசையிலிருந்ததால், சோழர் தம்மைக் கதிரவன் வழியினராகவும் மலைநாடாகிய சேரநாட்டில் மூங்கிலும் பிறவும் ஒன்றோ டொன்றுரசி அடிக்கடி பெரு நெருப்புப் பற்றியதால், சேரர் தம்மை நெருப்பு வழியினராகவும் கூறிக் கொண்டதாகத் தெரிகின்றது. குமரிநாட்டு வெப்பத்தினாலேயே, வேனில் இன்னிழல் தரும் வேம்பின் பூமாலையை, அடையாள மாலையாகவும், நீர்வாழ் மீன்வடிவை முத்திரையாகவும், பாண்டியன் கொண்டான் போலும்! பஞ்சவன், கைதவன், கௌரியன், தமிழ்நாடன் என்பவும் ஆகும். பாண்டியனுக்குச் செழியன் என்னும் பெயர், பஃறுளியாற்றுச் செழிப்பால் ஏற்பட்டது போலும்! இயற்பெயராவது பெற்றோரிட்ட பிள்ளைப் பெயர். முதலாம் இராசராசச் சோழனின் பிள்ளைப் பெயர் அருண் மொழித் தேவன் என்பது. பட்டப்பெயர் என்பது, அரசன் முடி சூடும்போது புனைந்து கொள்ளும் பெயர். பிற்காலச் சோழவேந்தர் ஒருவர் விட்டொருவர் தாங்கிய பரகேசரி, இராச கேசரி என்னும் பெயர்களும், பிற்காலப் பாண்டிய வேந்தர் ஒருவர்விட்டொருவர் தாங்கிய மாறவர்மன், சடாவர்மன் என்னும் பெயர்களும், முதற் குலோத்துங்கன் வேங்கை நாட்டில் எய்திய விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயரும், பட்டப் பெயராம். விருதுப் பெயராவது, அரசன் தன் பகைவரை வென்றபோது அதற் கறிகுறியாகச் சூடிக்கொள்ளும் கொற்றப்பெயர். முடிவழங்கு சோழன் சோழ கேரளன் முடித்தலை கொண்ட பெருமான் கோனேரின்மை கொண்டான் உலகுய்யவந்த நாயனார் முதலியன 3ஆம் குலோத்துங்கச் சோழனின் கொற்றப் பெயராகும். சிறப்புப் பெயராவது, நல்ல வகையிலோ தீய வகையிலோ ஏதேனுமொரு சிறப்புப்பற்றி, மக்கள் அரசர்க்கு இட்டு வழங்கும் பெயர். முதற்குலோத்துங்கனுக்கு வழங்கிய சுங்கந்தவிர்த்த சோழன் என்பது இசைச் சிறப்புப் பெயரும், 2ஆம் குலோத்துங்கச் சோழனுக்கு வைணவர் வழங்கிய கிருமிகண்ட சோழன் என்பது வசைச் சிறப்புப் பெயரும் ஆகும். உயர்வுப் பெயராவது மக்கள் அரசரைக் கண்ணியமாகக் குறிக்கும் பெயர். இறைவன், அடிகள், தேவர், நாயனார், உடையார், பெருமாள், உலகுடைய பெருமாள் என்பன அரசனுக்கும்; பிராட்டியார், நாய்ச்சியார், ஆழ்வார் என்பன அரசிக்கும்; மக்கள் நாயனார் பிள்ளையார் என்பன இளவரசனுக்கும்; பெரியதேவர் என்பது இறந்துபோன அரசனுக்கும்; வழங்கிய உயர்வுப் பெயர்களாம். வரிசைப் பெயராவது அரசனின் தரத்தைக் குறிக்கும் பெயர். வேள், மன்னன், கோவன் (கோன், கோ), வேந்தன் என்பன வரிசைப் பெயராம். திணநிலைப் பெயராவது, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணைபற்றிய பெயர். வெற்பன், கானகநாடன், ஊரன், துறைவன், விடலை முலியன திணைநிலைப் பெயராம். இவை பெரும்பாலும் குறுநில மனனர்க்கு வழங்கும். இயனிலைப் பெயராவது ஏதேனும் ஓர் இயல்பற்றி வழங்கும் பெயர். செம்மல், வள்ளல் முதலியன இயனிலைப் பெயராம். தமிழகம் முழுவதையும் அடிப்படுத்திய பிற்காலச் சோழப் பேரரசர் மும்மடிச் சோழன், மும்முடிச் சோழன், திரிபுவன தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலிய கொற்றப் பெயர்களைக் கொண்டிருந்தனர். தமிழகத்தோடு பிற நாடுகளையும் வென்ற சோழ பாண்டியப் பேரரசர், எல்லாந்தலையான பெருமாள், சகல புவனச் சக்கரவர்த்தி, இராசராசன், இராசாக்கள் தம்பிரான் முதலிய கொற்றப் பெயர் களையும்; எம் மண்டலமுங் கொண்ட ருளின என்பது போன்ற கொற்ற அடைமொழிகளையும் கொண்டிருந்தனர். அரசர் போன்றே அரசியரும் பெயரால் பெருமை குறிக்கப் பெற்றனர். அரசனுடைய பட்டத்துத் தேவிக்குக் கோப்பெருந்தேவி அல்லது பெருங்கோப்பெண்டு என்பது வரிசைப் பெயராக வழங்கிற்று. ஒரே பெருநாட்டரசன் தேவிக்கு உலக முழுதுடை யாள், அவனி முழுதுடையாள், உலக மகாதேவி முதலிய பெயர்களும்; முப்பெரு நாட்டுப் பேரரசன் தேவிக்கு மூவுலகுடை யாள், திரிபுவன மகாதேவி முதலிய பெயர்களும்; பல்பெரு நாட்டுப் பேரரசன் தேவிக்கு ஏழுலகுடையாள் என்னும் பெயரும் கொற்றப் பெயராக வழங்கிவந்தன. (3) முடி: முடி என்பது மகுடம். தமிழகம் முழுவதும் நிலையாக மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டிருந்த பழங்கால மெல்லாம், அம் மூவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. பிற்காலத்தில் மூவேந்தருக் கடங்காத உள்நாட்டுச் சிற்றரசரும் முடியணிந்து கொண்டனர். முடி சூடியர் அல்லாத அரசர் பட்டங்கட்டியர் ஆவர். ஓர் அரசன் பிற அரசரை வென்றபின், அவர் முடிபோற் செய்த பொன்னுருக்களை மாலையாகக் கோத்து அணிந்துகொள்வதுண்டு. செங்குட்டுவனும் அவன் முன்னோரும், சோழ பாண்டியரையும் ஐம்பெரு வேளிரையும், வென்றமைக் கறிகுறியாக, ஏழுமுடி மாலையொன் றணிந்திருந்தனர். ஆளும். அரசனைப்போல் இளவரசனும் முடியணிந்திருந் தான். ஆயின் அரசன்முடி நீண்டு குவிந்தும், இளவரசன் முடி குட்டையாகவும் இருந்தது. அதனால், பின்னது மண்டை எனப்பட்டது. (4) கோல்: கோல் என்பது, அரசன் அதிகார முறையில் வீற்றிருக்கும்போதும் செல்லும்போதும் கையிற் பிடித்திருக்கும் தண்டு. அது மணியிழைத்து ஓவிய வேலைப்பாடமைந்த பொற்ற கட்டால் பொதியப் பெற்றிருப்பது. கோல் ஆட்சிக் கறிகுறியாத லால், அரசனுடைய ஆட்சி நேர்மையானதாயிருக்கவேண்டு மென்பதைக் குறித்தற்கு, அது நேரானதாகச் செய்யப்பட்டிருக்கும். அதனால் அதற்குச் செங்கோல் என்று பெயர். செம்மை - நேர்மை. கொடுமையான ஆட்சி கொடுங் கோல் என்னும் பெயராற் குறிக்கப் படும். கொடுமை-வளைவு. ஆட்சியின் நேர்மையாவது அறநெறி வழி நேரே செல்லுதல்; அதன் கொடுமை யாவது அறநெறியினின்று திறம்பி வளைதல். (5) மாலை: மாலை என்பது அடையாள மாலை. பாண்டி யனுக்கு வேப்பமாலையும், சோழனுக்கு ஆத்திமாலையும், சேர னுக்குப் பனம்பூமாலையும் அடையாள மாலையாம். குறுநில மன்னர்க்கும் ஒவ்வோர் அடையாள மாலை யிருந்தது. ஆய்அண்டிரனுக்குச் சுரபுன்னை மாலையும், ஏறைக்கோனுக்குக் காந்தள் மாலையும் அடையாள மாலையாக இருந்தன. (6) கட்டில்: கட்டில் என்பது இருக்கை. அரசனது கட்டில் அரசுகட்டில் என்றும் அரசிருக்கை என்றும் அழைக்கப்பெறும். அதன் கால்கள் அரி (சிங்க) வடிவாய் அமைந்திருந்ததினால், அதற்கு அரியணை (சிங்காசனம்) என்றும் பெயர். தலைநகரிலும் பிற பாடிவீடுகளிலும் அரசனுக்கு அரியணையுண்டு. தலைநகரில், அரசன் அரசுவீற்றிருக்கும் ஓலக்க மண்பத்திலும் (Durbar Hall), அமைச்சரொடு சூழும் சூழ்வினை மண்டபத்திலும், அறங்கூறும் மன்றத்திலும், ஒவ்வோர் அரியணையிருக்கும். அரியணைகட்குச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவது மரபு. சடாவர்மன் குலசேகரபாண்டியனுக்கு, மதுரையில் மழவராயன் கலிங்கராயன் முனையதரையன் என மூவரியணைகளும்; விக்கிரமபாண்டியனுக்கு, மதுரையில் முனையதரையன் என்னும் அரியணையும், இராசேந்திரத்தில் மலையதரையன் என்னும் அரியணையும் இருந்தன. (7) குடை: குடை என்பது, அரசன் குடிகளைத் துன்பமாகிய வெயிலினின்று காத்து, அவர்கட்கு இன்பமும் பாதுகாப்புமாகிய நிழலைத் தருகின்றான் என்னுங் குறிப்புப்படப் பிடிக்கப்படும், பெரிய வெண்பட்டுக்குடை. அது பகலாயினும் இரவாயினும், அரசன் அதிகார முறையில் இருக்குமிடம் உடனிருந்து செல்லு மிடம் உடன் செல்லும். அது நிறத்தாலும் வடிவாலும் தண்மைக் குறிப்பாலும் மதியை ஒத்திருத்தலால், மதிக்குடை அல்லது மதிவட்டக்குடை என்றும்; கொற்றத்தைக் குறித்தலால், கொற்றக் குடை அல்லது வெண்கொற்றக் குடை என்றும் பெயர் பெறும். கோல் என்னும் பெயர் போன்றே, குடை என்னும் பெயரும் ஆகுபெயராய் ஆட்சியைக் குறிக்கும். அதனால், ஓர் அரசன் ஒரு பெருநாட்டைத் தனிநாயகமாய் ஆள்வதை, உலக மெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள்தல் என்பர். (8) கொடி: கொடி என்பது, அரசனது அடையாள வடிவம் எழுதிய துணி அல்லது பட்டுக்கொடி. அது அதன் அடையாள வடிவாற் பெயர் பெறும். சேரனுக்கு விற்கொடி; சோழனுக்குப் புலிக்கொடி; பாண்டியனுக்கு மீன்கொடி (மீனக்கொடி). (9) முத்திரை: முத்திரை யென்பது, அரசனுடைய திருமுகத்தில் மையாலும் அரக்காலும் மண் என்னும் சாந்தாலும் பொறிக்கப்படும் அடையாள வடிவம், மூவேந்தர்க்கும் அவரவர் கொடியிலெழுதப்பட்ட வடிவமே முத்திரையாகவு மிருந்தது. ஓர் அரசன், தன்னால் வெல்லப்பட்ட அரசரின் முத்திரை களையும், தன் முத்திரையுடன் சேர்த்துப் பொறிப்பது வழக்கம். செங்குட்டுவன் மும்முத்திரைகளையும், அதிகமான் எழு முத்திரை களையும், உடையவராயிருந்தனர். (10) முரசு: முரசாவது, ஏதேனுமொன்றை அறிவித்தற்கு, அல்லது யாரேனும் ஒரு சாராரை அழைத்தற்கு அடிக்கப்படும் பேரிகை என்னும் பெரும் பறை. அது கொடை (தியாக) முரசு, முறை (நியாய) முரசு, போர்(வீர) முரசு என மூவகைப்பட்டதாகக் கூறப்படும். அவற்றுள் சிறந்தது போர்முரசு. அதற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது முரசுகட்டில் எனப்படும். போர் முரசு, படை திரட்டுவதற்கு நகரத்திலும், பொருநரை ஊக்குவதற்குப் போர்க்களத்திலும், வெற்றி குறித்தற்கு ஈரிடத்திலும் இடியோசைபட முழக்கப்பெறும். அது புலியை வென்ற கொல்லேற்றின் சீவாத தோலால் போர்க்கப்பெறுவது மரபு. புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடையுரிவை போர்த்த துனைகுரல் முரசம் (2899) என்று சிந்தாமணியும், கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் (732-3) என்று மதுரைக்காஞ்சியும் கூறுதல் காண்க. போர்முரசு தெய்வத்தன்மை யுள்ளதாகவும் வெற்றியைத் தருவதாகவுங் கருதப்பட்டதினால், அதற்கு மாலையும் பீலியுமணி வதும், பலியிடுவதும், அதை நீராட்டுவதும் வழக்கம். (11) கடிமரம்: கடிமரமாவது, ஒவ்வோர் அரசக்குடியின ராலும், அவரவர் குடியொடு தொடர்புள்ளதாகவும் தெய்வத் தன்மையுள்ள தாகவும் கருதப்பட்டு, தொன்றுதொட்டுப் பேணப் பட்டுவரும் ஏதேனுமொரு வகையான காவல்மரம். அது தலைமை யரசர்க்கும் சிற்றரசர்க்கும் பொதுவாகும். பாண்டிநாட்டிலிருந்த பழையன் என்னும் குறுநிலமன்னன், ஒரு வேம்பைக் காவல்மரமாக வளர்த்து வந்தான். செங்குட்டுவனின் பகைவருள் ஒருவன் கடப்பமரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தான். கடிமரம், சில அரசரால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும், சிலரால் ஊர்தொறும் தனிமரமாகவும் சிலரால் சோலைதொறும் தனிமரமாகவும் வளர்க்கப்பட்டதாகத் தெரிகின்றது. (12) குதிரை: அரசன் ஊருங் குதிரை பட்டத்துக் குதிரை என்று அழைக்கப்பெறும். நல்ல மணமும், வாழைப்பூ மடல்போற் காதும், கால் மார்பு கழுத்து முகம் முதுகு ஆகிய ஐந்துறுப்புகளில் வெள்ளையும், 82 விரல் (அங்குலம்) உயரமும் உள்ள சேங்குதிரை அரசிவுளியாதற்குத் தக்கது (பிங்கலம்). குதிரைகளை, அவற்றின் உடற்கூறும் நடையும் குரலும் இயல்பும் நிறமும் திறமும்பற்றி, பற்பல வகையாகப் பரிநூல் வகுத்துக் கூறும். அவற்றுள் பாடலம் சேரனதும், கோரம் சோழனதும், கனவட்டம் பாண்டியனதும், கந்துகம் குறுநில மன்னரதும் ஆகும். அரசர் குதிரைகட்கு இயற்பெயர் போன்ற சிறப்புப் பெயரும் இடப்பெறும். சிலர் தம் பெயரையே இடுவதும் உண்டு. ஓரியின் குதிரை ஓரி என்றும், காரியின் குதிரை காரி என்றும் பெயர் பெற்றிருந்தன. (13) யானை: அரசன் ஊரும் யானை, அரசுவா என்றும், பட்டத்தியானை என்றும் அழைக்கப்பெறும், கால் போன்றே வாலும் துதியும் நிலத்தைத் தொடுவதும், பால் போலும் வெள்ளை நகமுடையதும், காலாலும் வாலாலும் துதியாலும் கொம்பாலும் உடம்பாலுங் கொல்ல வல்லதும் எழுமுழ வுயரமும் ஒன்பது முழ நீளமும் பதின்மூன்று முழச் சுற்றளவு முள்ளதும், சிறிய கண்ணும் சிவந்த புள்ளிகளுமுடையதும், உடலின் பின்புறத்திலும் முன்புறம் ஏற்றமாயிருப்பதுமான களிற்றியானை அரசுவாவாதற்குத் தக்கதாம் (பிங்கலம்). அரசுவாவிற்கும், இடுகுறி போன்ற இயற்பெயரும் காரணக் குறியான சிறப்புப்பெயரும் இடப்பெறும். (14) தேர்: அரசன் ஊருந்தேர், மற்றத் தேர்களினும் உயர்ந்தும், ஓவிய வேலைப்பாடமைந்தும், விலையுயர்ந்த அணிகலங்களும் சிறந்த குதிரைகளும் பூட்டப்பெற்றும் இருக்கும். பொதுவாக அரசன் ஊரும் ஊர்திகள் மூன்றும், அரச மாண்பிற் கேற்ப, ஒப்புயர்வற்ற ஆடையணியலங்கரிப் புடையன வாயிருக்கும். சங்ககாலத்தில், வேட்டைக்குத் தேரிலும் குதிரை மேலும் செல்வதும், போரும் நகர்வலமும் நாடுகாவலும் ஆகிய பிறவற் றுக்குத் தேரிலும் தேர் செல்லாவிடத்து யானை மேலும் செல்வதும், அரசர்க்கு வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் தேர் பயன்படுத்தப் பெறாமையால், வேட்டை தவிரப் பிறவற்றிற்கெல்லாம் யானை மீதே அரசர் சென்றனர். (15) மனை: அரசன் வாழும் மனை அரண்மனை எனப்படும். மதிலும் கோபுரமுஞ் சுருங்கையுமாகிய அரணுடைமைபற்றி, அது அரண்மனை யெனப்பட்டது. அதற்குக் கோயில் பள்ளி நகர் மாளிகை எனப் பிற பெயர்களு முண்டு. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரு முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய (1571) என்னுஞ் சூத்திரத்தில், தொல்காப்பியர் படையையும் அரசச் சின்னங்களுடன் சேர்த்துக் கூறினர். அது `படையும் பாதுகாப்பும்' என்னும் அதிகாரத்திற் கூறப்பெறும். அரசச் சின்னங்கள்: முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம் , தீபம், இடபம், ஆசனம் என 21 வகைப்படுவதாகச் சூடாமணி நிகண்டு கூறும். இவற்றுட் பல மங்கலப் பொருள்களும் அரணும் உவமையுமாதலின், அவை இங்குக் கூறப்பெறவில்லை. 6 அரசியல் வினைஞர் முத்தமிழ் நாட்டிலும், அரசியல் வினைஞர், பெருநாட்டுத் தலைநகர் சிறுநாட்டுத் தலைநகர்கள் ஊர்கள் ஆகிய மூவகை யிடங்களிற் சிதறியிருந்தனர். (1) பெருநாட்டுத் தலைநகரிலிருந்த வினைஞர், அரசனுடைய ஆட்சிக்கு அடிப்படைத் துணையாயிருந்த அதிகாரச் சுற்றம் ஐம்பெருங் குழு என்பது. அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐந்து குழுவாரின் பெருந்தொகுதியே ஐம்பெருங் குழுவாகும். தலைமையமைச்சனுக்கு உத்தர மந்திரி அல்லது மகாமந்திரி என்று பெயர். தூதர், (தூதுவர்) அரசன் விடுத்த செய்திகளைப் பிற அரசரி டத்துக் கொண்டு செல்பரும், அரசனுடைய ஆணைகளை நாட்டதிகாரி களிடத்தும் ஊரதிகாரிகளிடத்துங் கொண்டு செல்பவரும் என இரு பாலர். அரசதூதர் சட்டையுந் தலைப் பாகை யுமணிந்திருப்பர். அதனால் அவர்க்குக் கஞ்சுகமாக்கள் என்றும், சட்டையிட்ட பிரதானிகள் என்றும் பெயர். தலைமைத் தூதன் கஞ்சுக முதல்வன் எனப்படுவான். சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர் (26: 137-8) என்று சிலப்பதிகாரங் கூறுவதால், தூதர் பெருந்த தொகை யினராயிருந்தனர் என்பதறியப்படும். ஐம்பெருங் குழுவிற்கு அடுத்தபடியாய், அதனினுஞ் சற்று விரிவாக இருந்த அதிகாரச்சுற்றம் எண்பேராயம் என்பது. கரணத் தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (அரசாணையை நிறைவேற்றும் அதிகாரிகள்,) கனகச் சுற்றம் (பண்டாரம் என்னும் பொக்கிசசாலை யதிகாரிகள்), கடை காப்பாளர் (அரண்மனை வாயிற் காவலர்), நகரமாந்தர் (நகரப்பெருமக்கள் அல்லது வணிகப்பெருமக்கள்), படைத்தலைவர், யானைமறவர், இவுளிமறவர் (குதிரைச் சேவகர்) என்னும் எட்டுக் கூட்டத்தாரின் பெருந்தொகுதி எண்பேராயமாகும். அரசனுடைய நன்மையையும் உடல் நலத்தையும் உண்மை யாகக் கவனித்துப் பேணுதற்கு, உறுதிச்சுற்றம் என்றொரு குழு இருந்தது. குறிக்கப்பட்ட படைத்தலைவர், நிமித்திகர், மருத்துவர், நட்பாளர், அந்தணர் ஆகிய ஐந்திறத்தார் சேர்ந்த குழு, உறுதிச் சுற்றமாகும். அரசனில்லாத அல்லது அவன் கடுநோய்ப்பட்ட சமையத்தில் அரசியலைக் கவனித்தற்கு, அரசியற் பொறுப்புச் சுற்றம் ஒன்று இருந்தது. அது ஆசான் (புரோகிதன்), பெருங்கணி (கணியர் தலை வன்), அறக்களத்தந்தணர் (நியாய சபையார்), காவிதி (வரியதிகாரி கள்), மந்திரக் கணக்கர் (அரசவாணையெழுதுவோர்) ஆகிய ஐந்திறத்தாரைக் கொண்டது. கோவலனைக் கொல்வித்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் இறப்பிற்கும், அவன் மகன் வெற்றி வேற்செழியனின் முடிசூட்டிற்கும். இடைப்பட்ட காலத்தில், பாண்டிப் பெருநாட்டரசியலைக் கவனித்தது அரசியற் பொறுப்புச் சுற்றமே. தலைநகரிலுள்ள அத்தாணி மண்டபத்தில், அரசன் முன் னிலையில், சூழ்வினையமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும், ஆசானும் பல்வகைப் புலவரும், பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான கூட்டத்திற்கு அரசவை என்று பெயர். அது இருக்கு மிடம் அவைக்களம் எனப்படும். அரசவையில் அரசனுக்கடுத்தபடி யாக முதலைமச்சனே தலைமையாயிருப்பான். அரசவை, அதிலுள்ளாரின் தன்மையும் அறிவும்பற்றி, நல்லவை தீயவை நிறையவை குறையவை என நால்வகையாக வகுத்துக் கூறப்படும். அறிவு ஒழுக்கம் முதலியவற்றிற் சிறந்து, நடுநிலைமையாகப் பேசுவோர் கூடிய அவை நல்லவை; அதற்கு எதிரானது தீயவை; எல்லாப் பொருள்களையும் அறிந்து எதிர்காலச் செய்திகளை முன்னதாக அறிவிக்கும் பேரறிஞர்கூடிய அவை நிறையவை; அதற்கு எதிரானது குறையவை. அரசன் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளை நேரிற் கேட்பவனுக்குத் திருவாய்க் கேள்வி என்றும், அத்திருவாய்க் கேள்வி அறிவிக்க அறிந்து அரசவாணையை எழுவோர்க்குத் திருமந்திர வோலை என்றும் அவ் வெழுத்தாளர் தலைவனுக்குத் திருமந்திர வோலை நாயகம் என்றும் பெயர். அரசவாணைகளைக் கேட் டெழுதும் அதிகாரச் சுற்றத்திற்கு வாயிற் கேட்போர் (Secretarial staff) என்றும், அரசவாணைக்கு வாய்க்கேள்விர் என்றும் இதை நிறைவேற்றுவோர்க்கு வாய்க்கேள்வியர் என்றும் பெயருண்டு. நாள்தோறும் நிகழும் அரசியல் நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிப் புத்தகத்தில் எழுதி வைப்பவன் பட்டோலைப் பெருமான், எனப்படுவான். ஊர்ச்சபைகளினின்றும் நாட்டதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலை களைப் படித்தறிந்து, அவற்றிற்குத் தக்க விடைகளை யெழுதித் தூதர் வாயிலாய் விடுப்போர்க்கு விடையில் என்றும், அவர் தலைவனுக்கு விடையதிகாரி என்றும் பெயர். ஊர்களிலும் தலைநகரிலும் தண்டப்பட்டு வந்த வரித் தொகைகளைக் கணக்கிற் பதிந்து கொள்வோர், வாயிலார் எனப் படுவர். பதிந்துகொள்ளப்பட்ட வரித்தொகையை, இன்னின்ன செலவிற்கு இவ்வளவிவ்வள வென்று கூறுசெய்வோர்க்கு வரிக்கூறு செய்வார் என்று பெயர். ஒவ்வோர் ஊரினின்றும் அரசனுக்கு வரவேண்டிய காணிக்கடன் என்னும் நிலவரிக்குக் கணக்கு வைப் போர் வரிப்பொத்தகம் என்றும் அவர் தலைவன் வரிப் பொத்தகக் கணக்கு என்றும், பெயர் பெறுவர். நிலவரி நீங்கிய இறையிலி நிலங்களினின்றும் ஊர்களினின்றும் வரவேண்டிய பிறவரிகட்குக் கணக்கு வைப்போர், புரவுவரி எனப்படுவர். அவர் தொகுதி புரவுவரித் திணைக்களம் எனப்படும். அத் திணைக்களத் தலைமைக் கணக்கனுக்குப் புரவுவரிச் சீகரணம் என்றும், அதன் தலைவ னுக்குப் புரவுவரித் திணைக்கள நாயகம் என்றும், பெயர். இவரல் லாது, வரியிலீடு என்றும், புரவுவரித் திணைக்கள முகவெட்டி என்றும் இரு வரியதிகாரிகள் இருந்தனர். சேரநாட்டு அரசிறையதிகாரி பாட்டமாளன் என்றும், அரசியற் கணக்கதிகாரி மேலெழுத்துக் கணக்கு என்றும், பெயர் பெற்றிருந்த தாகத் தெரிகின்றது. அத்தாணி மண்டபத்திலும் அரண்மனையிலும், அவ்வப் போது நாழிகையறிந்து அரசனுக் கறிவிப்பவர், நாழிகைக் கணக்கர் எனப் படுவர். மணநாள் திருநாள் பொருநாள் ஆகிய மூவகைப் பெரு நாளிலும், யானைமேலேறி முரசறைந்து அரசவாணையை நகரத் தார்க் கறிவிப்பவன் வள்ளுவன் என்றும், அரசர்க்குரிய வேத்தியற் கூத்தையாடுபவன் சாக்கையன் என்றும் கூறப்படுவர். திவாகரம் இவ்விருவரையும் உள்படு கருமத்தலைவர் என்று இணைத்துக் கூறும். சாக்கையனுக்குக் கூத்துள்படுவோன் என்றும் பெயருண்டு. அரண்மனைக் காரியங்களை மேற்பார்ப்பவனுக்கு மாளிகை நாயகம் (Seneschal or Chamberlain) என்றும், அரண்மனைக் கணக் கெழுதுபவனுக்குத் திருமுகக்கணக்கு என்றும் பெயர். அரண்மனை வேலையாள்கள் அகப்பரிவாரம் என்றும், அரசனோடு நெருங்கிப் பணிசெய்வார் அணுக்கச்சேவகம் என்றும், அரசனுக்குப் பக்கத்தில் நின்று ஏவல் கேட்போர் உழைச்சுற்றாளர் என்றும், அழைக்கப் பெறுவர். அரசனுக்குக் கவரி ஆலவட்டம் முதலியன வீசுவாரும், குடை கொடி முதலியன பிடிப்பாரும், அடையாளக்காரர் எனப்படுவர். அரசனுக்கு ஊக்கமும் மறமுங் கிளருமாறு, அவனுடைய முன்னோரின் அருந்திறற் செயல்களை எடுத்துக்கூறி, அவன் குடியைப் புகழ்வதற்கு, ஓவர் அல்லது ஏத்தாளர் என்று சொல்லப் படும் பாடகர் பலரிருந்தனர். அவர் சூதர் மாகதர் வேதாளிகர் (வைதாளிகர்) எனப் பலவகையர். சூதர் நின்றேத்துவார் என்றும், மாகதர் இருந்தேத்துவார் என்றும் சொல்லப்படுவர். வைகறையில் அரசன் பள்ளியறைக்குப் புறம்பே நின்று, அவன் குடியைப் புகழ்ந்து பாடி, அவனை இனிதாகத் துயிலுணர்த்துபவர் சூதர் ஆவர். இங்ஙனம் பாசறையில் அரசனைத் துயிலுணர்த்துபவரை, அகவர் என்று மதுரைக்காஞ்சி கூறும். அரசனுடைய ஆணைகளை அவ்வப்போது காளமூதிப் படை கட்குத் தெரிவிப்பவன் படையுள் படுவோன் அல்லது சின்னமூதி எனப்படுவான். அவனுக்குப் படைக்கிழவன், சிறுக்கன், படைச்சிறுக்கன், படைச்சிறுபிள்ளை என்றும் பெயருண்டு. அரசன் அரண்மனைக்கு வெளியே நகரிலும் நாட்டிலும் செல்லும்போதெல்லாம், அவனுடைய பரிவாரத்திற்கு முன்சென்று, அவன் வருகையைக் கூறி மக்களை வழியினின்றும் விலக்குபவனுக் குக் கட்டியங்காரன் (Herald) என்று பெயர். அரசன் தலைநகரிலிருக்கும்போதும் நாடுகாவன் மேற் செல்லுமிடத்தும், அவனொடு கூடவேயிருக்கும் அரசியல் வினை வட்டத்தார்க்கு, உடன்கூட்டம் என்றும் உழையர் என்றும் பெயர். அவருள் அதிகாரிகளாயிருப்பார் உடன் கூட்டத்ததிகாரிகள் எனப்படுவர். வினையாற்றும் வேளையில் அரசனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரம், ஏவற்பரிவாரம் காவற் பரிவாரம் வினைப்பரிவாரம் என முத்திறப்பட்டிருக்கும். அரசியல், அல்லது அரண்மனைத் தொடர்பான, உணவு உடை உறையுள் உண்கலம் அணிகலம் ஊர்திகள் தட்டுமுட்டுகள் முதலிய பல்வகைப் பொருள்களையும், பணியாள்களைக்கொண்டு ஆக்குவித்து அரசாணையை நிறைவேற்றும் தலைவர், பொதுவாகக் கருமிகள் அல்லது கன்மிகள் என அழைக்கப்பெறுவர். இவர் ஆக்க வினைத் துறையர். இவரை ஏவி நடத்துவோர் கருமவிதிகள் ஆவர். இவரல்லாத பிறரெல்லாம் ஆள்வினைத் துறையர். (2)மூவகைச் சிறுநாட்டுத் தலைநகர்களிலுமிருந்த வினைஞர்: மண்டலம் வளநாடு நாடு என்னும் (அல்லது இவற்றிற்கொத்த ) ஆள்நிலப்பிரிவுகளுள், ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தலைவன் அல்லது அதிகாரி இருந்தான். மண்டல அதிகாரிக்கு மண்டலிகன் அல்லது மண்டல முதலி என்று பெயர். நாட்டதிகாரிக்கு நாடாள் வான் என்றும், நாட்டு நாயகம் என்றும், நாடுடையான் என்றும், நாட்டுவியவன் என்றும் பெயர். வளநாட்டதிகாரிளும் நாட்டதி காரிகள் போன்றே அழைக்கப்பட்டனர் போலும். நாட்டைக் கூறுபட அளப்பதற்கு நாடளப்போர் என்றும், நாட்டை யளந்ததைக் கண்காணித்து உண்மை காண்பதற்கு நாடுகண்காட்சி என்றும், கூறுபட அளந்த நாட்டிற்கு வரி விதித்தற்கு நாடுகூறு என்றும், நாட்டைக் காவல் செய்தற்கு நாடுகாவல் என்றும் பல அரசியல் அலுவலாளர் இருந்தனர். (3) ஊர்களிலிருந்த வினைஞர்: ஒவ்வோர் (ஆள்நில) ஊரையும் ஆள்வதற்கு, அரசனாணைப்படி ஊர்மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு சபை இருந்தது. அச் சபையார்க்கு ஆளுங் கணம் என்றும், கணப்பெருமக்கள் என்றும், வாரியப்பெரு மக்கள் என்றும், கணவாரியப் பெருமக்கள் என்றும் பெயர். ஊர்ச்சபையானது; ஊராட்சிபற்றிய பல்வேறு காரியங் களைக் கவனித்தற்கு, பல்வேறு வாரியமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வாரியம் என்பது மேற்பார்வை அல்லது மேலாண்மை. ஊரைப் பற்றிய பொதுக்காரியங்களையும், அறமுறை குற்றத்தீர்ப்பு முதலிய வற்றையும், கவனிப்பது ஆட்டைவாரியம் (சம்வத்சரவாரியம்); தோட்டம் தோப்பு புன்செய் முதலியவற்றைக் கவனிப்பது தோட்ட வாரியம்; நன்செய்களைக் கவனிப்பது கழனிவாரியம்; ஏரி குளம் ஆறு முதலிய நீர்நிலைகளைக் கவனிப்பது ஏரி வாரியம்; ஏரி குளங்களிலுள்ள கலிங்குகளையும் மதகுகளையுங் கவனிப்பது கலிங்குவாரியம்; ஊரில் வழங்கும் நாணயங்களை நோட்டஞ் செய்து நற்காசுகளையே செலாவணியாக்குவது பொன்வாரியம்; ஊர்ச்சபைக் கணக்குகளைக் கவனிப்பது கணக்கு வாரியம்; பஞ்சகாலத்திற் பயன்படும்படி வளமைக்காலத்தில் உணவுப் பொருள்களைத் தொகுத்துவைப்பது பஞ்சவார வாரியம் (பஞ்ச வாரியம்); ஊரிலும் அக்கம்பக்கத்திலுமுள்ள பெருவழிகளைக் கவனிப்பது தடிவழிவாரியம்; ஊரிலுள்ள குடும்புகளைக் கவனிப் பது குடும்புவாரியம். இவற்றுள் சில வாரியங்கள் பலவூர்களி லில்லை. எல்லா ஊர்களிலுமிருந்தவை, ஆட்டைவாரியம், தோட்ட வாரியம் ஏரி வாரியம், பொன்வாரியம், பஞ்சவார வாரியம் என்னும் ஐந்தே. ஆட்டை வாரியத்திற்கு ஊர்வாரியம் தருமவாரியம் என்றும் பெய ருண்டு. கழனி மிகுதியாயில்லா விடத்துத் தோட்டவாரியமே கழனிகளையும், ஏரி குளங்கள் பலவாயில்லாவிடத்து ஏரிவாரியமே கலிங்குகளையும் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு வாரியமும், தனித்தனி சபை அல்லது சிறுகுறி என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து மகாசபை அல்லது பெருங்குறி என்றும் கூறப்பெறும். ஊர்ச்சபைக் கணக்கெழுதுபவன் கரணத்தான் (மத்தியஸ்தன்) எனப்படுவான்; கணக்கு மிகுதியாயில்லாத சிற்றூர்களில் கணக்கு வாரியம் இருந்திராது. ஊரைக் காவல்செய்பவர்க்குப் பாடிகாவல் என்று பெயர். தலைமைக் காவலனைப் பெரும்பாடிகாவல் அல்லது தலையாரி என்றும், அவனுக்குக் கீழ்ப்பட்டவரைச் சிறுபாடிகாவல் என்றும் கூறுவது வழக்கம். கொடிக்கால்கள் தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனித்தற்கு, வேலிநாயகம் என்றோர் அலுவலாளன் இருந்தான். ஊர்ச்சபை வேலைக்காரனுக்கு வெட்டி (வெட்டியாள் வெட்டியான்) என்று பெயர். ஊராளி என்று இலக்கியத்திலும், ஊராளன், ஊருடை யான், ஊர்மேல் நின்ற திருவடிகள் என்று கல்வெட்டிலும் வந்திருப்பதால், ஓரிரு பெருநாடுகளில் ஒவ்வோர் ஆள்நில ஊருக்கும் ஓர் அரசியலதிகாரியுமிருந்ததாகத் தெரிகின்றது. தனியூர்களில் ஒருவகையான நகரங்களில், நகரமக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நகரத்தார் என்னுஞ் சபையார் இருந்தனர். (4) பெருநாடெங்குமிருந்த வினைஞர்: தலைநகரிலும், பேரூர்களிலும், வழக்காளிகளின் வழக்கைக் கேட்டு முறை செய்ய அறங்கூறவையமும்; எல்லா ஆள்நில ஊர்களிலும், ஆவணங் களைக் காப்பிடுவதற்கு ஆவணக்களரியும் இருந்தன, அறங்கூற வையத்திற்கு, அறக்களம், மன்றம், தருமாசனம், நியாயசபை என்றும்; அதன் உறுப்பினர்க்கு, அறக்களத்தார், மன்றத்தார், தருமா சனத்தார், நியாயத்தார் என்றும் பெயருண்டு. ஆங்காங்குள்ள ஊட்டுப்புரை மடம் மருத்துவச் சாலை முதலிய அறநிலையங்களை மேற்பார்த்தற்கு, தனித்தனிக் குழுவார் அமர்த்தப்பெற்றிருந்தனர். அவருக்கு அறப்புறங்காவலர் என்றும், புண்ணியக்கணப்பெருமக்கள் என்றும் பெயர். பொற்காசுகளையும் காசாக வழங்கின பொற்கட்டிகளையும் நிறுத்தும் உரைத்தும் நோட்டஞ்செய்யவும், சரியானவற்றின்மேல் முத்திரையிடவும், வண்ணக்கர் என்னும் அலுவலாளர் எல்லாப் பேரூர்களிலுமிருந் தனர். அரசிறையும் பிறவரிகளும் தண்டுவதற்கு ஊர்தொறும் தண்டுவான் (தண்டலாளன்) என்னும் அரசியல் வினைஞன் இருந்தான். வரி செலுத்தாத குடிகளைத் துன்புறுத்தித் தண்டுபவனுக் குப் பேறாளன் என்று பெயர். (5) வேறு சில வினைஞர்: வினையறியப்படாத சில அரசியற் பதவியாளரும் அலுவலாளரும் அதிகாரிகளும், கல்வெட்டிற் குறிக்கப்பட்டுளர். அவர், அரைசுமக்கள், முதலிகள், பழநியாயம், தெரிப்பு, முகவெட்டி, பெரும்பணைக்காரன், 1 நடுவிருக்கை, சிறுதனம், பெருந்தனம், சிறுதரம், பெருந்தரம், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் 2 முதலியோராவர். பெருங்கோயிலுள்ள இடமெல்லாம், அதை மேற்பார்த்தற்கு ஒரு தனிக்குழு இருந்தது. அதைப்பற்றிக் கோயிற்பணிகள் என்னும் அதிகாரத்திற் கூறப்படும். 7 அதிகாரிகளின் அமர்த்தம் ஊர்களிலிருந்த ஆளுங்கணத்தார் ஆங்காங்குள்ள மக்களால் அரசாணை விதிப்படி தேர்ந்தெடுக்கப்பெற்றனர். பிற அரசியல் வினைஞரெல்லாம், பெரும்பாலும் அரசனாலும் அவ்வம் மேலதிகாரி களாலும் அமர்த்தப்பட்டனர். ஓர் இளவரசன் அல்லது வேற்றரசன் அரியணையேறு முன்னரே, அவன் முன்னோரால் அல்லது அவனுக்கு முந்தினோ ரால் அமர்த்தப் பெற்று ஏற்கெனவே தத்தம் வினையைச் செவ்வை யாய்ச் செய்து வரும் அரசியல் வினைஞரை, குற்றஞ்செய்தாலொ ழியப் புதிய அரசன் நீக்குவதில்லை. ஒரு வினைஞன், பொறுக்கலா காக் குற்றஞ் செய்தவிடத்தும், தீராத நோய்ப்பட்டவிடத்தும், வினையாற்ற இயலா மூப்பெய்தியவிடத்தும், இறந்தவிடத்தும் அவனுக்குப் பதிலாக ஒருவன் ஆளும் அரசனால் அல்லது மேலதிகாரியால் அமர்த்தப் பெறுவான். தகுதி வாய்ந்திருப்பின் இயன்றவிடத்தெல்லாம், தந்தை-மகன் ஆகிய வழிமுறைப்படியே வேலைகள் வழங்கப்பட்டு வந்தன. சிறந்த தகுதி வாய்ந்திருப்பின், கீழ்ப் பதவியாளர் மேற்பதவிக் குயர்த்தப் படுவர். ஒவ்வொரு வினைஞனும் தகுதிபற்றியே அமர்த்தப்பட்டா னெனினும், தலைமையமைச்சன் தகுதியையே அரசன் முக்கியமாய்க் கவனித்தான். அறநிலை திரியா அன்பின் அவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக (புறம். 71) நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் (கலித்.8) என்னும் பகுதிகள், முதலமைச்சன் அரசியலில் எவ்வளவு தனிப் பொறுப்பும் அதிகாரமும் வாயந்தவன் என்பதை உணர்த்தும். உயர்குடிப் பிறப்பும், ஒழுக்கமும், மதிநுட்பமும், இலக்கண விலக்கியப் பயிற்சியுடன் அரசியல் நூலில் சிறந்த புலமையும், சூழ்ச்சித் திறனும், நெஞ்சுரனும், அரசியல் வினைத்திட்பமும், அரசனது குறிப்பறிந் தொழுகு மாற்றலும், அரசன் சிறப்பாக நுகரும் பொருளை விரும்பா வியல்பும், அரசனிடத்துங் குடிகளிடத்தும் அன்பும், எவ்வகையினும் அறைபோகா உள்ளமும், அறவுணர்ச்சி யும் சொல்வன்மையும், தோற்றப்பொலிவும், மகப்பேற்றுடன் சுற்றமும் உடையவனே, முதலமைச்சனாக அமர்த்தப்பெறுவன். முதலமைச்சனுக்கு அடுத்தபடியாய் அரசியற் பொறுப்பு வாய்ந்தவன் தலைமைப் படைத்தலைவன். இவ்விருவரும் ஒரு நாட்டிற்கு இரு பெருந் தூண்களாவர். ஏற்கெனவே துணையமைச் சனாயும் துணைப்படைத் தலைவனாயும் ஊழியம் செய்து உண்மை காணப்பட்டவரே, பின்னர் முறையே தலைமையமைச்சனாகவும் தலைமைப் படைத்தலைவனாகவும் அமர்த்தப்பெறுவர். தலைமை யமைச்சனாகவோ தலைமைப் படைதலைவனாக வோ ஒருவனையமர்த்துமுன், அவனிடத்து அரசன்மாட்டன்பும் அரசவின்பம் விரும்பாவியல்பும் அறைபோகா நெஞ்சும் உளவா வென்றறிதற்கு, அவனை அறம் பொருள் இன்பம் உயிரச்சம் என்னும் நால்வகை நோட்டஞ் செய்து, அவற்றில் அவன் தேறப்படின் அமர்த்துவதும் தவறின் நீக்குவதும் அரசர் வழக்கம். அறநோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட அறவோர் சென்று, இவ்வரசன் அறவோனன்மையின் இவனை நீக்கிவிட்டு அறவோனான ஒருவனை அரசனாக்கத் தீர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது? என்று தாமே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். பொருள் நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட படைத்தலைவர் சென்று, இவ் வரசன் இவறி (உலோபி) யாதலின், இவனை நீக்கிவிட்டுக் கொடையாளியான ஒருவனை அரசனாக்கத் திர்மானித்துள்ளோம். உன் கருத்து யாது? என்று தாமே வினவுவது போல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். இன்ப நோட்டமாவது, அரசனுடைய தேவிமாருடன் நெருங்கிப் பயின்ற ஒரு தவமுதியாளை அரசன் விடுக்க அவள் சென்று, இன்ன தேவி உன்னைக் காதலிக்கின்றாள். உன் கருத்து யாது? என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல் வித்தல். உயிரச்ச நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட வேறு சிலருடன் ஒரு பொய்க் காரணத்தையிட்டு அவன் சிறை செய்யப் பட்டபின், உடனிருப்போருள் ஒருவன், முன்னேற்பாட்டின்படி, இவ்வரசன் நம்மைக் கொல்லத் துணிந்தான். நாம் முற்பட இவனைக் கொன்றுவிட்டு நமக்கினிய ஒருவனை அரசனாக்கு வோம். உன் கருத்து யாது? என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல். இவ்வகை நோட்டத்தையே, அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் (501) என்னுங் குறளால் தெரிவித்தார் திருவள்ளுவர். சில பதவிகட்குச் சில குடியினர் சிறப்பாகத் தெரிந்து கொள்ளப்பட்டனர். அமைச்சர் பதவிக்கு வேளாளர் அல்லது வேளிரே தகுந்த வராகக் கருதப்பட்டார். 1அறமும் மதமும்பற்றிய வினைகட்கெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரே அமர்த்தப் பட்டனர் என்பது, அறக்களத் தந்தணர் தருமாசனபட்டர் எனவருந் தொடர்களால் அறியலாகும். தூதிற்குப் புலவரும் பார்ப்பனரும் ஆளப்பெற்றனர். ஊர்ச்சபைத் தேர்தல்: ஒவ்வோர் ஆள்நிலவூரிலும் ஆண்டு தோறும் ஆளுங்கணத் தேர்தல் நடைபெற்றது. ஓர் ஆளுங்கணத்தின் ஊழிய ஆண்டு முடிவுறுஞ் சமையத்தில், அதனைக் கண் காணிக்கும் நாட்டதிகாரிக்காவது ஊரதிகாரிக்காவது, அரசனால் மதிக்கப்பட்ட ஒரு பெருமகனுக்காவது, ஊர்ச்சபைத் தேர்தலை நடத்தி வைக்கும்படி, அரசனிடத்திருந்து தேர்தல் விதிகளடங்கிய ஆணை வரும். ஆணைபெற்ற அதிகாரி உடனே அதை ஊர்ச்சபையார்க்குக் காட்டுவன். அவர் அதைத் தலைமேற் கொண்டு கண்ணிலொற்றி அதன்படி செய்யத் தொடங்குவர். ஒவ்வோர் ஊரும் தேர்தல் வினைப்பொருட்டுப் பல குடும்பு களாகப் (Wards) பகுக்கப்பட்டிருக்கும். செங்கற்பட்டு மாவட்டத் தைச் சேர்ந்த உத்தரமேருர்(உத்தரமேலூர்) முப்பது குடும்புகளையும், தஞ்சை மாவட்டத்தில் இன்று செந்தலை என வழங்கும் சந்திர லேகைச் சதுர்வேதிமங்கலம் அறுபது குடும்புகளையும், கொண்டி ருந்தன. தேர்தலதிகாரி, குறித்தநாளில், சிறுவருட்பட ஊரிலுள்ள மக்களையெல்லாம், சபைமண்டபத்தில் அல்லது கோயில் மண்ட பத்திற் கூட்டுவன். புதிய ஆளுங்கணத்தில் உறுப்பினராயிருந்து வாரியஞ் செய்தற்கு ஒவ்வொரு குடும்பாரும், ஊரின் அளவிற்கும் நிலைமைக்கும் தக்கபடி, ஒருவரையோ பலரையோ, ஒரு தடவைக் கொருவராக, குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டி யிருக்கும். தேர்தல் தொடங்குமுன், அரசாணைத் திருமுகத்திலுள்ள தேர்தல் விதிகள் அனைவர்க்கும் படித்துக்காட்டப்பெறும் என்று தெரிகின்றது. அவ்விதிகள், தேர்தல் நடைபெற வேண்டிய முறையும், வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதும், புதிய ஆளுங் கணத்தின் வாரியப் பகுப்பும், ஊர்ச்சபை வினைஞர் கடமையும், அவர் கடமை தவறியவழி அடையவேண்டிய தண்டமும், பற்றியவாகும். தேர்தலை விதிப்படி நடத்தவேண்டிய பொறுப்புப் பெரும் பாலும் அதிகாரிகளுடையதாதலின், ஊர்ப் பொதுமக்கள் முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியிருந்தவை, வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதே. கீழ்க்கண்ட தகுதிகளையெல்லாம் ஒருங்கேயுடையார் தக்காராவர்: (1) காணிக்கடன் செலுத்தும் நிலம் கால்வேலிக்குக் குறையாமல் உடைமை. (2) சொந்த மனையிற் கட்டிய வீட்டிற் குடியிருத்தல். (3) சிறந்த கல்வி யுடைமை. (4) காரியம் நிறைவேற்றும் ஆற்றலுடைமை. (5) அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு செம்மையான வாழ்க்கை நடாத்துதல். (6) முப்பத்தைந்தாண்டிற்குக் குறையாதும் எழுபத்தைந்தாண்டிற் குக் கூடாதுமிருத்தல். (7) முந்திய மூவாண்டிற்குட்பட்டு எந்த வாரியத்திலும் இருந் திராமை. கீழ்க்கண்டவர் தகாதாராவர்: (1) எந்த வாரியத்திலேனுமிருந்து கணக்குக் காட்டாதார். (2) ஐம்பெருங் குற்றம் செய்தோர். (3) ஊர்க் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டோர். (4) பிறர் பொருளைக் கவர்ந்தோர். (5) கள்ளக் கையெழுத்து இட்டோர். (6) குற்றங் காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டோர். (7) கையூட்டுக்(லஞ்சம்) கொண்டோர். (8) ஊர்க் கண்டகர். (9) முறைகெட்ட மணம் புரிந்தோர். (10) துணிச்சலுள்ளோர். (11) உண்ணத்தகாததை உண்டோர். (12) இப் பதினொரு சாராரின் நெருங்கிய உறவினர். (13) கீழ்மக்களோடு கூடி யுறைந்து கழுவாய் (பிராயச்சித்தம் செய்யாதோர். விதிகள் படிக்கப்பட்டு முடிந்தவுடன் தேர்தல் தொடங்கும். குடவோலையாளர் (வாக்காளர்) தகுதியாளர் பெயர்களை எழுதித்தரும் குடவோலைகளைக் குடும்பு வாரியாகக் கட்டி உள்ளிடுவதற்கு ஒரு குடமும், அதிலிருந்து ஒவ்வொரு கட்டாய் எடுத்துக் குலைத்து உள்ளிட்டுக் குலுக்குவதற்கு ஒரு குடமுமாக, இரு வெறுங்குடம் கூட்ட நடுவில் வைக்கப்பட்டிருக்கும். கூட்டத்தி லுள்ள நம்பிமாருள் முதியார் ஒருவர் எழுந்து நின்று, குடவோலைக் கட்டுகளையெல்லாம் இட்டுவைக்கும் குடத்தையெடுத்து, அதில் ஒன்றுமில்லை யென்று எல்லார்க்குந் தெரியம்படி காட்டுவர். பின்னர் ஒவ்வொரு குடும்பாரும், தத்தம் குடும்பில் தாந்தாம் விரும்பிய பெயரை வரைந்து கொடுத்த ஒலைச்சீட்டுகளையெல் லாம், குடும்புவாரியாகச் சேர்த்துக்கட்டி, ஒவ்வொரு கட்டிலும், அவ்வக் குடும்பின் பெயர் பொறித்த வாயோலை பூட்டி, வெறுமை காட்டப்பட்ட குடத்திற்குள் இடுவர். பின்னர், அம் முதியார் நன்மை தீமையறியாத ஒரு சின்னஞ்சிறு பிள்ளையைக் கொண்டு அக் குடத்திலிருந்து ஒரு கட்டை யெடுத்துக் குலைத்து, முன்போன்றே வெறுமை காட்டப்பட்ட இன்னொரு குடத்திற்குள் இட்டு நன்றாய்க் குலுக்கியபின், மீண்டும் அப் பிள்ளையைக் கொண்டே அதிலிருந்து ஒரு குடவோலைச் சீட்டை யெடுத்துக் கரணத்தான் கையிற் கொடுப்பர். அவன் அதைத் தன் வலக்கை விரலைந்தையும் விரித்து வாங்கி, அதில் வரையப்பட்டுள்ள பெயரை அனைவர்க்குங் கேட்கும்படி உரக்கப்படிப்பான். அங்ஙனமே அங்குள்ள நம்பிமார் அனைவரும் அதை வாங்கிப் படிப்பர். அதன் பின் அப் பெயர் கரணத்தானால் ஓர் ஓலையில் குறிக்கப்பெறும். இங்ஙனமே ஏனைக் கட்டுகளினின்றும் ஒவ்வொரு குடவோலை எடுக்கப்பட்டு, அதில் வரைந்துள்ள பெயர் உடனுடன் குறிக்கப்பெறும். எல்லாப் பெயருங் குறிக்கப்பெற்றபின், வாரியப் பகுப்பு நடைபெறும். ஓர் ஊரில் முப்பது குடும்புகளிருப்பின், மேற்கூறியவாறு முப்பது உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், ஆண்டி லும் அறிவிலும் முதிர்ந்தோரும், ஏற்கெனவே ஏரிவாரிய மும் தோட்டவாரியமும் செய்து பயிற்சியுடையவரும், காரிய வாற்றலும் நடுவுநிலையுமுடையவருமான, பன்னிருவர் முதலாவது ஆட்டை வாரியம் என்னும் ஊர்வாரியமாகத் தெரிந்தெடுக்கப் பெறுவர். எஞ்சியவருள், பன்னிருவர் தோட்டவாரிய மாகவும், அறுவர் ஏரி வாரியமாகவும், தகுதிப்படி அமர்த்தப்பெறுவர். பின்பு, மீண்டும் முப்பது உறுப்பினர் முன்போன்றே குடவோலை வாயிலாய்த் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவருள், அறுவர் பொன்வாரிய மாகவும், அறுவர் பஞ்சவார வாரியமாகவும் அமர்த்தப்பெறுவர். வேறுசில வாரியங்களும் அவ் வூரிலிருப்பின் ஒவ்வொன்றிற்கும் அவ்வறுவராக எஞ்சியவரும் அமர்த்தப்பெறுவர். தேர்தல் முடிந்தபின், அது ஏதேனுமொரு வகையில் புதுமுறையாக நடந்திருப்பின், அதன் நடைமுறை கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் அல்லது ஊர் மண்டபத்திற் பதிக்கப்பெறும். புதிதாய் அமர்த்தப்பெற்ற வாரியத்தார் ஓர் ஆண்டு முழுதுந் தத்தங் கடமையைச் செவ்வனே நிறைவேற்றல் வேண்டும். கடமை தவறியவரும் குற்றஞ் செய்தவரும், உடனே நீக்கப்பட்டுக் குற்றப் புத்தகத்திற் பதிவுசெய்யப்படுவர். ஊர்ச் சபைக் கணக்கு எழுதற்கு, உண்மையும் சுறுசுறுப்பும் கணிதத் திறமையுமுள்ள ஒருவன் அச் சபையால் அமர்த்தப்படுவான். அவன் தன் கணக்குகளைச் செவ்வையாய் வைத்திருந்து, எந்தச் சமயத்தில் வாரியர் கேட்டாலுங் காட்டல் வேண்டும். அங்ஙனங் காட்டத்தவறினும், சரியாய்க் கணக்கெழுதாவிடினும், வேறு குற்றஞ் செய்யினும் ஓராண்டிறுதியில் நீக்கப்படுவான். எவ்வகைக் குற்றமும் அற்றவனாயின், அடுத்த ஆண்டும் அவன் வேலை தொடரும். கரணத்தானுக்குச் சம்பளம், ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும், அதனொடு ஓராண்டிற்கு ஏழு கழஞ்சு பொன்னும் இரு கூறையுமாகும். அவனுக்குக் கொடுக்கப்படும் நெல் கணக்கமேரை எனப்படும். ஆண்டிறுதியில், அவன் ஆட்டைக் கணக்கை அதிகாரி கட்குக் காட்டும்போது, தன்னிடத்தில் பொய்மையில்லையென்பதை மெய்ப்பித்தற்கு, பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் ஏந்த வேண்டும். அதனால் ஊறு நேராவிடின் காற்பங்கு பொன் மிகுதியாகக் கொடுக்கப்படும்; நேர்ந்துவிடின், பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் பிற தண்டனையும் விதிக்கப்பெறும். ஊர்ச்சபைத் தேர்தல் போன்றே, நகரத்தார் என்னும் நகர சபைத் தேர்தலும், நகரமாந்தர் என்னும் தலைநகர்ப் பெருமக்கள் தேர்தலும், நடந்திருக்கலாம். தேர்தல் விதிகள், தேவையான போதெல்லாம், அவ்வக் காலத்து அரசனால் திருத்தி யமைக்கப்பெறும். அக்காலத்துத் தேர்தல் இக்காலத்துத் தேர்தல் போலாது, குடவோலை முறையும் திருவுளச் சீட்டு முறையுங் கலந்ததாகும். ஆயின், இக்காலத்து விருப்பாளர் (அபேட்சகர்) செய்யும் வலக்காரங்களையும் கையா ளும் தீயவழிகளையும், அக்காலத்துத் தகுதியாளர் பெரும்பாலும் கையாண்டிருக்க முடியாது. அதோடு குடவோலைகளையெண் ணும் தொல்லையும் அக்காலத்தில்லை. குடவோலையாளரின் தகுதி கல்வெட்டுகளிற் குறிக்கப்பட் டிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், வளர்ச்சி யுற்றாருள் எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லாம் குடவோலை யாண்மை பெற்றார் என ஊகிக்க இடமுண்டு. சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தல்: பார்ப்பனர் தலைமை யாயிருந்த சதுர்வேதி மங்கலச்சபைத் தேர்தலில் வாரியத் தகுதி பற்றிய விதிகளுள் இரண்டொன்று வேறுபட்டிருந்தன. அவை யாவன : (1) எழுபது பிராயத்தின்கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்திரப் பிராம்மணம் வல்லார் ஓதுவித்து அறிவானைக் குடவோலை இடுவதாகவும். (2) அரைக்கானிலமே உடையானாயினும், ஒரு வேதம் வல்லா னாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் அவனையும், குடவோலை எழுதிப்புக இடுவதாகவும்.1 பார்ப்பனரல்லாதாருள் ஒருவரும் வேதம் வல்லாராய் அக் காலத் திருந்திருக்க முடியாதாதலானும், இங்குக் காட்டிய இரு விதி களும் பார்ப்பனத் தலைமையிலிருந்த உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தல் விதிகளாதலானும், இவை சதுர்வேதி மங் கலங்கட்கேயன்றிப் பிறவூர்கட்குரியவல்ல என்பது வெள்ளிடை மலையாம். இனி, பாண்டிநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மானூர்ச்சபைத் தேர்தலைப்பற்றிக் கிடைத்துள்ள கல்வெட்டு செய்தியோ, முற்றிலும் வேறுபட்டிருப்பதுடன் வியப்பை விளைப்ப தாகவும் இருக்கின்றது. மானூர்ச்சபை விதிகளாவன (1) ஊர்க்கரையாளர் மக்களில் மந்திரப் பிரமாணமும் தருமமும் கற்ற ஒருவனே, ஊர் மன்றில் தன் தந்தையின் கரைக்குரிய உறுப்பினனாக இருக்கலாம்; அதே தகுதியுள்ளவனே, விற்கப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப்பட்ட அல்லது பெண்ணுடைமையாகப் பெறப்பட்ட கரைக்குரிய ஆளாக மன்றில் இருக்கலாம். (2) இங்ஙனம் மூவகையில் அடையப் பெற்ற கரை, ஒருவனை முழுவுறுப்பாண்மைக் (Full membership) கன்றி, கால் அரை முக்கால் உறுப்பாண்மைக்கு உரியவனாக்காது. (3) கரையை விலைக்கு வாங்குவோர், ஒரு வேத முழுவதையும் அதன் பரிச்சிட்டங்களோடு நன்றாக ஓதியிருப்பானையே, தம் கரைக்குரிய உறுப்பினனாகத் தேர வேண்டும். (4) முழு வுறுப்பாண்மையில்லாதார், ஊர்க்காரியங்களை நிறைவேற்ற எந்த வாரியத்திலும் இருக்க முடியாது. (5) இத் தகுதி யெல்லாமுடையோர், ஊர்மன்ற நடவடிக்கை களில், ஒவ்வொரு K‹Ü£ilí«(Proposal) கட்டுப்பாடாக எதிர்க்கவுந் தடுக்கவுங் கூடாது. (6) இங்ஙனம் தடங்கல் செய்தோர், தாமும் தம் சார்பாளருமாக, தம்மாற் செய்யப்பட்ட ஒவ்வொரு தடங்கற்கும் ஐங்காசு தண்டமிறுத்து விதிகட்குங் கட்டுப்பாடுவாராக.2 இவ் விதிகளால், மானூர் அந்தணப் பெருமக்கள், ஊர் மக்களின் குடவோலைத் தேர்தலாற் பெறக்கூடிய ஊர் மன்ற உறுப்பாண்மையை, நிலையான சொந்தவுடைமையாக்கிக் கொண் டிருந்தனரென்பதும், அவ் வுறுப்பாண்மை பிறவுடைமைகள்போல் விற்கப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும் பெண்டனமாக அளிக்கப் பட்டும் வந்தன என்பதும், அறியப்படும். 8 படையும் பாதுகாப்பும் 1. படை ஒரு நாட்டு அரசியற்குப் படையே அடிப்படை. படை யிருப்பின், நாடில்லாதவனும் நாட்டைப் பெறலாம். படையில்லா விடின், நாடுடையவனும் அதை இழப்பான். ஆதலின், படையானது அரசனுக்கு இன்றியமையாத வுறுப்பாகும். இதனாலேயே, அரசர்க் குரியவற்றைக் கூறும் தொல்காப்பியச் சூத்திரத்திலும் (1571), அரசுறுப்புகளைக் கூறும் குறளிலும் (381), சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்திபற்றிப் படை முற்கூறப்பெற்றது. இளங்கோவடிகள் சேனையை அரசன் திருமேனி என்றனர் (சிலப். 25:191). அரசர் தொழிலாகிய காவல் போர் என்னுமிரண்டும் படை இன்றியமையாமையின், உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை (குறள். 761) என்றார் திருவள்ளுவர். படை வகைகள்: படையானது, பொரும் இடம்பற்றி, (1) Ãy¥gil(Military) (2) கடற்படை (Navy) என இருவகைப்படும். இவற்றுள் நிலப்படை, ஊர்திபற்றி, (1) கரிப்படை (2) பரிப்படை (3) தேர்ப்படை (4) காற்படை அல்லது காலாட்படை, என நால்வகைப்படும். இவற்றுள், காலாட்படை மீண்டும் கருவி பற்றி, (1) விற்படை (2) வாட்படை (3) வேற்படை என மூவகைப்படும். எப்படையராயினும் போர் மறவர்க்குப் பொருநர் என்றும் படையாள்கள் என்றும் படைஞர் என்றும் பெயர். மூவேந்தரிடத்தும் தொன்றுதொட்டுக் கலப்படை (கடற்படை) யிருந்து வந்தது. வானியைந்த இருமுந்நீர்ப் பேஎநிலைஇய இரும்பவ்வத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசுமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தென்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லின் ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரை 75-88) என்று, வராற்றுக் காலத்திற்கு முற்பட்ட வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கலப்படை கொண்டு சாலி என்னும் சாவகத் தீவை (Java) வென்ற செய்தியை, அவன் வழியினனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேலேற்றி மதுரைக் காஞ்சி கூறுவதையும், சினமிகு தானை வானவன் குடகடற் பொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப் பிறர்கலஞ் செல்கலா தனையேம் (புறம் 126) என்று, கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்த சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் செய்த கடற்போரைப்பற்றிப் புறச்செய்யுள் கூறுவதையும், கி. பி. 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே முதலாம் இராசராசச் சோழன் ஈழத்தையும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிர த்தையும் (Maldive islands) கலப்படை கொண்டு வென்று சேரநாட்டுக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளியதையும், அவன் மகன் இராசேந்திரன் நக்கவாரம் (Nicobar), kiyah(Malaya), சுமதுரா (Sumatra) முதலியவற்றை வென்றதையும் நோக்குக. முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம். யானை மறவர்க்கு, ஆனையாள்கள் ஆனைப்பாகர் குஞ்சரமல் லர் அத்திமல்லர் என்னும் பெயர்கள் வழங்கின. அரசன் அடிக்கடி யானைப்படையை அணிவகுப்பித்துக் கண்டு களிப்பன். யானைப் படை அக்காலத்துச் சிறந்த படையாகக் கருதப்பட்டது. யானையுடைய படைகாண்டல் மிகவினிதே என்றார் பூதஞ்சேந்தனாரும். குதிரை தமிழகத்திற்கு அல்லது இந்து தேயத்திற்கு உரிய விலங்கன்றாதலின், அஃது அதன் இயற்கை வாழகமான அரபி நாட்டினின்று ஏராளமாக மாபெருஞ் செலவில் வருவிக்கப்பட்டது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் குதிரை களைப் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என எட்டுவகையாக வகுத்துக் கூறும். அவற்றின் இயல்பை ஆண்டுக் காண்க. (நரிபரியாக்கிய படலம் 87-94) குதிரைமறவர், இவுளிமறவர் என்றும் குதிரைச் சேவகர் என்றுங் கூறப்படுவர். படைக்கு என்றும் சேங்குதிரைகளும் களிற்றியானைகளுமே பயன்படுத்தப் பெறும். வினையிற் சிறந்த குதிரைகட்கும் யானை கட்கும் சிறப்புப் பெயரிடப்படுவதுண்டு. தேர்ப்படை சங்ககாலத்திற்குப் பின் பயன்படுத்தப் பெற வில்லை. இனி, படையை, மேற்கூறிய முறையிலன்றி, ஊழியக் கால அளவு பற்றி, மூலப்படை கூலிப்படை யென்றும்; தொகுக்கும் இடம்பற்றி, நாட்டுப்படை காட்டுப்படை என்றும்; சேர்ந்துள்ள பக்கம்பற்றி, துணைப்படை பகைப்படை என்றும்; எதிர்நிலை வகையில் இவ் விரண்டாக வகுப்பதுமுண்டு. மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட் படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும்,எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம். உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப (புறம்.63) என்று கோவூர்கிழாரும், உறினுயி ரஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். (குறள்) என்று வள்ளுவனாரும், கூறியிருத்தலால்; நீண்ட நாளாகப் போர் பெறாத தொல்படை தன் மறமிகையால் தானே போருக்கு முனை வதும், அரசன் தடுப்பினும் மீறுவதும் உண்டென்பதறியப்படும். கூலிப்படையாவது, போர்க்காலத்தில் புதுவதாகக் கூலிக் கமர்த்தப்படுவது, நாட்டுப்படை மருதநில மக்கள் சேர்ந்தது. காட்டுப்படை பாலைநில வாசிகளும் குறிஞ்சிநில மாந்தரும் சேர்ந்தது. அரசபக்தியாலும் நாட்டுப் பற்றாலும், கூலிக்கன்றித் தொண்டு காரணமாகத் தாமாக வந்துதவும் ஊர்மக்கள்படை குடிப்படைஎனப்படும். போர்க்காலத்துப் பெரும்படை அமைதிக் காலத்து வேண்டா வாதலின், போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரி லும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல் லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும். அங்ஙனம் நிறுத்தப் பெற்றவை நிலைப்படை எனப் பெயர்பெறும். முதற் குலோத்துங்கன் கோட்டாற்றில் ஒரு நிலைப்படையை நிறுத்தியிருந் தான். கலைக்கப்பட்ட படையினர் தம் மரபுத் தொழிலைச் செய்து வருவர். நிலைப்படை நிறுத்தப்பட்ட நகர் படைவீடு என்றும், அது நிறுத்தப்பட்ட நிலப்பகுதி படைப்பற்று என்றும், அது குடியிருக் கும் வீட்டுத் தொகுதி படைநிலை என்றும் பெயர்பெறும். நிலைப் படையினர் மனைவி மக்களுடன் கூடிவாழ்வர். படைப்பயிற்சி: அரசரும் படைமறவரும் மற்போர் படைக்கலப் போர் ஆகிய இருவகைப் போரும் பயின்று வந்தனர். மற்போர் பயில்வதற்கு ஆங்காங்குப் போரவை அல்லது முரண்களரி எனப்படும் பயிற்சிக் கூடங்களிருந்தன. கோப்பெருநற் கிள்ளி என்னுஞ் சோழன் ஒரு போரவை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெருநற்கிள்ளி எனப்பட்டான். ............ வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை அழுந்தப் பற்றி அகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்றும் அதனினு மிலனே (புறம்.77) இன்கடுங் கள்ளிய ஆமூ ராங்கண் மைந்துபட மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே ............................................. பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை யொசிய எற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே (புறம். 77) என்னும் செய்யுள்கள், முறையே, தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பல மல்லரையும், போரவைக் கோப்பெரு நற் கிள்ளி ஆமூர் மல்லனையும், மற்போரிற் கொன்றதைத் தெரி விக்கும். முருக்கமரத்தின் பருத்த அடியை நட்டு அதன்மேற் படைக் கலங்களை யெறிந்து, பொருநர் எறிபடைப்போர் பயின்றனர் என்பது, இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின செறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம் (புறம். 69) என்பதால் அறியலாகும். அரண்மனையை யடுத்த செண்டுவெளி அல்லது வையாளி வீதி எனப்படும் வெளிநிலத்தில், வாசி வாரியர் என்போர் குதிரைகட்கு இருசாரிகளும் ஐங்கதிகளும் பதினெண் மண்டிலங்களும் பயிற்றினர். அவருள் தலைமையானவன் அரசாரியன் எனப்பட் டான். காழோர் வாதுவர் என்போர் யானைகளைப் போர்த்துறையிற் பயிற்றினர். படைப்பிரிவுகள்: படைகள், கருவிவகையாலும், ஊர்தி வகையாலும், குல நில மொழி வகையாலும், ஊழிய வகையாலும், முதுமை வகையாலும், வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றிருந்தன. அப் பெயர்கள், பெரும்பாலும், அரசனுடைய கொற்றப் பெயர்களை முன்னுறுப்பாகக் கொண்டிருக்கும். சில பிரிவுகள் சிறுதனம் பெருந்தனம் என்றும், இடங்கை வலங்கை 1 என்றும் இவ்விரு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தன. வில்லிகள் வாள்பெற்ற கைக்கோளர், `பராந்தகக்கொங் கவாளர், பண்டிதச் சோழத்தெரிந்த வில்லிகள், `உத்தமச் சோழத் தெரிந்த அந்தளகத்தார், `சிறு தனத்து வடுகக்காவலர், `வலங்கைப் பழம்படை களிலார், `பலவகைப் பழம்படைகளிலார், `சிங்களாந் தகத்தெரிந்த குதிரைச் சேவகர், `மும்முடிச் சோழத் தெரிந்த ஆனைப்பாகர், `பெருந்தனத்து ஆனையாள்கள் என்பன சில படைப்பிரிவுகளின் பெயராகும். படைத்தலைவர்: படைத்தலைவர்க்குப், படைமுதலி, தண்ட நாயகன், சேனைமுதலி, சேனாபதி, சாமந்தன் என்னும் பெயர்களும், பெரும்படைத் தலைவனுக்குப் பெரும் படைமுதலி, சேனாவரை யன், சேனாதிராயன், மகாதண்ட நாயகன், மகாசாமந்தன் என்னும் பெயர்களும் வழங்கின. நாயகன் என்னும் பெயர் சேரநாட்டில் நாயன் என வழங்கிற்று. முதலியார் நாயர் என்னும் பெயர்கள், முதலி நாயன் என வழங்கிற்று. முதலியார் நாயர் என்னும் பெயர்கள், முதலி நாயன் என்பவற்றின் உயர்வுப்பன்மை வடிவாகும். பொதுவாக, படைத்தலைமைக்கு அவ்வப் படைமறவருள் திறமை மிக்கவரும், பெரும் படைத்தலைமைக்கு அரசக் குடும்பத்தி னரும் குறுநிலமன்னரும் உழுவித்துண்ணும் வேளாண் குடித்தலை வரான வேளிருமே, அமர்த்தப்பெற்றனர். படைகளை மேற்பார்த்தற்குப் படைகாண்பார் என்று சில அதிகாரிகள் இருந்தனர். படைக்கலங்கள்: அமைதிக்காலத்தில், மெய்காவற் படை பரிவாரப்படை நிலைப்படை ஆகிய படைகள் கையாளும் படைக் கலங்களைத் தவிர, மற்றப் போர்க்கருவிகளெல்லாம் படைக்கலக் கொட்டில் என்னும் ஆயுத சாலையில் வைத்துப் போற்றப்பெறும். அரசனுடைய படைக்கலங்களை வைத்ததற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது படைக்கலக் கட்டில் எனப்பெறும். ஆயுதங்கட்கெல்லாம் நெய்பூசிப் பீலியணிந்து மாலை சூட்டுவது வழக்கம். 2. பாதுகாப்பு தற்காப்பு: அரசனுக்குக் கட்டடவகையாலும் காவலாள் வகையாலும், சிறந்த தற்காப்பு வசதிகள் ஏற்பட்டிருந்தன. கள்வரும் பகைவரும் ஏறற்கரிய மதிலும், பகைவரைத் தொலைவிலேயே காண்டற்கும், உள் மனைக்கலகத்திலும் போரி லும் ஏறிப்பொருதற்கும், உய்தற்குமுரிய கோபுரமும்; பகைவன் தலைநகரை முற்றுகையிடும்போது, நொச்சிப்போர் இயலாதாயின் கரந்து வெளிப்படற்குரிய சுருங்கையும்; கட்டடவகையான தற்காப்பாகும். மெய்காவலரும் வேளைக்காரருமெனக் காவலாளர் இருபாலார். மெய்காவலர், அணுக்கர் எனவும், வாசல் மெய்காப்போர் எனவும், பரிவார மெய்காப்போர் எனவும் மூவகையர். அவர், முறையே, அரசனுக்கு நெருங்கி நிற்பவரும், அரசன் அரண்மனைக்கு வாயில்களில் நிற்பவரும், அரசன் அரண்மனைக்கு வெளியே செல்லுங்கால் சூழ்ந்து செல்பவரும், ஆவர். பாண்டியனுடைய மெய்காவற் படையில் ரோம கிரேக்கப் பொருநரும் இருந்தனர். வாசல் மெய்காப்போரினின்றும் வேறாக, வாசல் காப்போர் என்றும் சிலர் இருந்தனர். வாயில்கள் அணுக்கவாயில் இடைவாயில் தலைவாயில், புறவாயில் எனப் பலவாதலின், வாசல்காப்போரும், `அணுக்கவாசல் காப்போர், `கேரளாந்தகவாசல் காப்போர் எனப் பல திறத்தார். நடைப் பெருவாயில் எனப்படும் அரண்மனைத் தலை வாயிலில் எப்போதும் ஒரு படைத்தலைவன் நிற்பான். பரிவார மெய்காப்போரினின்றும், வேறாகப் பரிவாரத்தார் என்று சில படைப் பிரிவுகளிருந்தன. `கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார்' நிகரிலிச் சோழத் தெரிந்த உடனிலைக் குதிரைச் சேவகர் என்னும் படைப் பிரிவுப் பெயர்கள், பரிவாரத்தாருள் காலாள்மறவரும் குதிரை மறவருமாக இருபிரிவினர் இருந்தமை யைத் தெரிவிக்கும். மூலப் படையை சேர்ந்த பரிவாரத்தார் மூலப்பரிவாரம் என்னும் பெயராற் பிரித்துக் கூறப்பெற்றனர். மூலப்பரிவார விட்டேறு என்னும் பெயர், மூலப்பரிவாரத்துள் கருவிபற்றிய பல பிரிவுகளிருந்தமையைக் காட்டும். அரசன்பால் அளவிறந்த அன்பும் பத்தியும் உடைய சிற்றர சரும் படைத்தலைவரும், அவனுக்கு இடுக்கண் நேர்ந்தவிடத்து உடுக்கை இழந்தவன் கைபோல் உதவுவேண்டுமென்னும் பூட்கை மேற் கொண்டு, அவ்வாறு சூளுறவுஞ் செய்து கொள்வர். உற்றிடத் துதவுவ தோடு உடனிறப்பதும் அவர் வழக்கம், வேளையில் வந்து உதவுவதால் அவர்க்கு வேளைக்காரர் என்று பெயர். அவரைப் போன்றே சூளுற்ற படைகள் வேளைக்காரப் படைகள் எனப்படும். வேளைக்காரர்க்குள்ளும் வேளைக்காரப் படைகட்குள்ளும், வலங்கை இடங்கைப் பிரிவுகளும் சிறுதனப் பெருந்தனப் பிரிவுகளும் இருந்தன. பாண்டியனுடைய வேளைக்காரர்க்குத் தென்னவன் ஆபத்துதவிகள் என்று பெயர். அரசன் சிறந்த படைக்கலப் பயிற்சி பெற்றும் இடை வாளேந்தியு மிருப்பனாதலின், அவன் மெய்வலியுங் கைவாளுங்கூட ஓரளவு தற்காப்பாயிருந்திருத்தல் வேண்டும். அரசமகளிர் உறையும் உவளகத்தில், சோனக (மிலேச்ச)ப் பேடியர் வாளேந்தி நின்று காவல் புரிந்து வந்தனர். அதிகார வேணவா தந்தையையும் உடன்பிறப்பையும்கூடக் கொல்லுமாதலின், ஐயுறவிற்கிடமான புதல்வரையும் உடன்பிறந் தாரை யும், பருவம் வந்தவுடன் தலைநகர்க்குப் புறம்பே வெவ்வேறு பதவிகளில் அமர்த்தி வைப்பதும் அரசர் வழக்கம். தலைநகர்க் காப்பு: தலைநகரானது, மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் என்னும் ஐவகை யரண்களுள் பலவற்றைக் கொண்டிருந்தது. (1) மதிலரண்: மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்படும். புரிசை என்பது அவற்றின் பொதுப் பெயர். புரிந்திருப்பது புரிசை. புரிதல் வளைதல் அல்லது சூழ்தல். மதில் நகரைச் சூழ்ந்திருப்பதால் புரிசை எனப்பட்டது. நால்வகை மதிலரண்களுள், உயரமொன்றேயுடையது மதில்; உயரத்தொடு அகலமுமுடையது எயில்; அவற்றொடு திண்மையு முடையது இஞ்சி; அம் மூன்றொடு அருமையுமுடையது சோ. ஆகவே, சோவரணே தலைசிறந்ததாம். உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கு நூல் (குறள். 743). என்றார் திருவள்ளுவரும் நொச்சிப்போரில் வில்லியர் மேல்நின்று மறைந்து அம் பெய்தற்குரிய புழைகளை யுடையது எயில். அம்பெய்யும் புழை ஏப்புழையென்றும் ஏவறையென்றும் கூறப்படும். எய்யும் இல்லை யுடையது எயில் எனப்பட்டது. செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சியென்பர். இஞ்சுதல் இறுகுதல். இஞ்சியது இஞ்சி. செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர் (கும்பகருணன் வதைப்படலம். 159) என்று கம்பரும், செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201) என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவாரச முத்திரம் என்னும் துவரை நகரிலும்2 இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப்பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது. மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால், ஏவறைகளும் பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணா யிருந்திருத்தல் வேண்டும். சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த (சிலப்.) என்று ஆய்ச்சியர் குரவையும், சுழலழலுள் வைகின்று சோ (பு.வெ.228) என்று புறப்பொருள் வெண்பாமாலையும், கூறுவதால், இராவணன் நகரிலும் வாணாசுரன் நகரிலும் சோவரண் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரை மதிலரண் பல பொறிகளைக் கொண்டிருந் ததாக இளங்கோவடிகள் கூறுவதால், அதனை ஒருவகைச் சோவரண் என்னலாம். மதுரைப் புறமதிலிலிருந்த பொறிகளுங் கருவிகளும் உறுப்புக் களுமாவன: (1) வளைவிற்பொறி-வளைந்து தானே எய்யும் எந்திர வில். (2) கருவிரலூகம்-கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி. (3) கல்லுமிழ் கவண்-கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி). (4) பரிவுறு வெந்நெய் - காய்ந்நிறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய். (5) பாகடு குழிசி - செம்புருக்கும் மிடா. (6) காய்பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை, (7) கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை. (8) தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டியிழுக்குந் தூண்டில் வடிவான பொறி. (9) தொடக்கு - கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலி. (10) ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறிவரிசை. (11) கவை-அகழியினின்றேறின் அதற்குள் விழத் தள்ளும் இருப்புக்கவை. (12) கழு - கழுக்கோல். (13) புதை - அம்புக்கட்டு. (14) புழை - ஏவறைகள். (15) ஐயவித்துலாம் - அம்புத்திரள் தொங்கவிட்ட விட்டம். (16) கைபெயரூசி - மதிற்றலையைப் பற்றுவாரின் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறிகள். (17) சென்றெறி சிரல் - பகைவர்மேற் சென்று அவர் கண்ணைக் கொத்தும் சிச்சிலிக்குருவி வடிவான பொறி. (18) பன்றி - மதிற்றலையிலேறினா ருடலைக் கொம்பாற் கிழிக்கும் இருப்புப்பன்றி. (19) பணை -அடிக்கும் மூங்கில்தடி வடிவமான பொறி. (20) எழுவுஞ்சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தில் கீழே விடும் மரங்கள். (21) கணையம் - கோட்டை மதிற் கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் உத்தரம். (22) கோல் - விட்டேறு. (23) குந்தம் - சிறு சவளம். (24) வேல். (25) ஞாயில் - குருவித் தலை என்னும் மதிலுறுப்புகள். (26) நூற்றுவரைக் கொல்லி. (27) தள்ளிவெட்டி. (28) களிற்றுப்பொறி. (29) விழுங்கும் பாம்பு. (30) கழுகுபொறி. (31) புலிப்பொறி. (32) குடப்பாம்பு. (33) சகடப்பொறி. (34) தகர்ப்பொறி. (35) அரி நூற்பொறி. முதலியன. இவற்றுள், இறுதியிற் குறிக்கப்பட்ட பத்தும், இளங்கோவடி களால் பிற என்னும் சொல்லால் தழுவப்பெற்று உரையாசிரி யரான அடியார்க்கு நல்லாரால் பெயர் குறிக்கப்பெற்றவை. தலைநகர்களில், மதில் ஒன்றன்றி ஒன்றனையொன்று சூழ்ந்து பலவாயிருப்பது முண்டு. அக மதில்களை விடப் புறமதில்கள் படிமுறையில் அரண் சிறந்திருக்கும், கோடுறழ்ந் தெடுத்த என்னும் பதிற்றுப்பத்துச் செய்யுளில் அகமதில் மதில் என்றும், புறமதில் இஞ்சியென்றும் கூறப்பட்டிருத்தல் காண்க. புறமதிலில்தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். மதிலை யொட்டி உட்புறத்திலுள்ள மேடைக்கு அகப்பா என்று பெயர். பகைவர் வரவைத் தொலைவிலேயே காணும்படி, புறமதிலின் மேல் பல திசையிலும் அட்டாலை என்னும் காவற் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து காவல் செய்வார்க்கு அட்டாலைச் சேவகர் என்று பெயர். ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும், மதில நாயன் என்னும் காவல் தலைவனும் இருப்பர். மதிலுள்ள நகர்கள் பெரும்பாலும், கோட்டை, புரி, புரிசை, எயில், கடகம் என்னும் சொற்களுள் ஒன்றைப் பெயராகவோ பெயரீறாகவோ கொண்டிருந்தன. (2) நிலவரண்: நிலவரண் என்பது, பகைவர் அகழி கடந்த வுடன் புறமதிலைப் பற்றாமைப்பொருட்டு அதன் புறத்து விடப்பட் டுள்ள வெள்ளிடை நிலமும்; பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது. அகத்தார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை விளைத்துக் கோடற் பொருட்டுப் புறமதிலின் உட்புறமாக விடப் படும் தண்ணடை நிலமும் என இருவகை. மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண் (42) என்னுங் குறளில், மண் என்றது நிலவரணை. பரிமேலழகர் அதற்கு வெள்ளிடை நிலமென்று சொல்லுரை கூறி, மதிற்புறத்து மருநிலம் பகைவர் பற்றாமைப் பொருட்டு என்று விளக்கவுரை கூறியிருப் பதையும்; நாடுகண்டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையாற்கண்டார்க்குநாடுகண்டாற் போன்ற...ïilkâš,” என்று அந் நூலின் பழைய வுரையாசிரியர் விளக்க முரைத்திருப்பதையும் காண்க. (3) நீரரண்: நீரரண் என்பது, புறமதிற் புறத்து ஆறுங் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும், அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர்நிலையாகவும் இருக்கும்அரண். (4) காட்டரண்: காட்டரண் என்பது, படைமறவர் பகைவர்க்குத் தெரியாமல் மறைந்திருக்கக் கூடியதும், தொகுதியாகப் புக முடியாததுமான மரமடர் சோலை, இது பொதுவாக மலையடுத்திருப்பது. (5) மலையரண்: மலையரண் என்பது, மக்கள் தொகுதியாக ஏறமுடியாததும், மேலிருந்து பெருங்கற்களைக் கீழே எளிதாக உருட்டக் கூடியதும், உச்சியில் போதிய உணவும் உறையுளும் உடையதுமான, பறம்புபோலும் தனிக் குன்று. இது குறுநில மன்னர்க்கு அவருள்ளும் குறும்பரசர்க்கு - இன்றியமையாதது. சங்ககாலத்துக் குறுநில மன்னர், பெரும்பாலும், ஒவ்வொரு மலைக் கிழவராயிருந்தனர். தலைநகர்களில், இராக்காலத்தில். ஊர்காவலர் யாமந்தோறும் பறையறைந்து விளக்குடன் சென்று, கள்வர் களவு செய்யாதபடி காவல்செய்து வந்தனர். பெருநாட்டுக்காப்பு: நிலைப்படைகள், தலைநகரிலும் பிற கோநகர்களிலும் கலகம் நேரும் இடங்களிலும், பகையச்சமுள்ள எல்லைப்புறங்களிலும் நிறுத்தப் பெற்றிருக்கு மென்பது முன்னரே கூறப்பட்டது. நாட்டின் பலவிடங்களிலும், பகைவர் வரவைப் பார்த்தறியக் கூடிய உயர்ந்த பார்வலிருக்கைகள் இருந்தன. அரசனுடைய நூற்றுக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக் கான) ஒற்றர், பிறவரசர் தலைநகர்களில் இரவும் பகலும் கரந்த கோலத்துடன் திரிந்து, அங்கு நடப்பவற்றை உடனுடன் அரசனுக்கு மறைவாகத் தெரிவித்து வந்தனர். சேரன் செங்குட்டுவன், தன் வடநாட்டுச் செலவை முன்னதாக வடநாட்டரசர்க்குத் தூதர் வாயிலாய்த் தெரிவிக்கக் கருதியபோது அழும்பில்வேள் என்னும் அமைச்சன், இந் நாவலந்தீவில் நமக்குப் பகைவராயுள்ள அரச ருடைய ஒற்றரெல்லாம், இவ் வஞ்சிமா நகரில் நீங்காதுறைவர். அவ் வொற்றரே நம் செலவை அவ் வரசரிடம் தெரிவித்து விடுவராதலின், அவர்க்குத் தூதர் வாயிலாய்த் திருமுகம் விடுக்க வேண்டா. இந் நகரிற் பறையறைந்து விளம்பரஞ் செய்தலே போதுமானது, என்று கூறியது கவனிக்கத்தக்கது. அரசனுடைய வேலைக்காரரும் படைத்தலைவரான சிற்றர சரும் பெருநாடு முழுதுமிருந்தமையின், பகைவர் வரவையறிந்த வுடன் படைதிரண்டு எவ்விடத்திலும் போர் செய்து நாட்டைக் காத்துக் கொள்ளற்கு வசதியாயிருந்தது. 9 ஆட்சிமுறை mரசவொளி: பண்டைத் தமிழாட்சியில், அரசனே நாட்டிற்குத் தனி நாயகமாயிருந்தான். பரும்பாலும், அவன் இட்டது சட்டமும் வைத்தது வரிசையு மாயிருந்தது. முழு நிறைவான தலைமையும் உடன் bகால்லும்mதிகாரமும்mவனுக்»ருந்ததால்,mவன்Fடிகள்ahவராலும்க©கண்டjய்வமாகவேகUதப்பட்டான்.âUth¡»‰F vâ®th¡F©nlh?, அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்னும் பழமொழி கள் அரசனுக்கிருந்த அதிகார வலியையுணர்த்தும். அரசனுக் கின்றியமையாதவரும் அவனுக் கடுத்தபடியாய் அதிகார முடையவருமான அமைச்சர் படைத்தலைவரும், அவனை மிக அணுகாது தீக்காய்வார்போல் xதுங்கிbயாழுகினர்.mt‹ முன்னிலையில், பிறரொடு பேசாமையும் நகாமையும் சாடை காட்டாமையும், அவனைச் சுட்டாமையும், அவன் பிறரொடு மெல்லப் பேசுவதை உற்றுக் கேளாமையும், அவனொடு பயில்வார் போற்றிக் காக்கவேண்டிய ஒழுக்க நெறிகளாகும். அரசனிடத்தில் ஒன்றைக் கூறுவோர் அவனை வாழ்த்தியே கூறுவதும், அவனைக் காணும்போதும் அவனைவிட்டுப் பிரியும் போதும் பெருமக்கள் தலை வணங்கியும் பொதுமக்கள் நிலத்தில் விழுந்தும் கும்பிடுவதும் வழக்கம். அரசவுடைமைகள் தெய்வவுடைமைகள் போல் திருவென் னும் அடைமொழி பெற்ற பெயராலும், அரசவினைகள் தெய்வ வினைகள் போல் அருள் என்னும் துணைவினை கொண்ட வினைச் சொல்லாலும் குறிக்கப்பட்டன. அரசன் அமைச்சரொடும் படைத்தலைவரொடும் சூழ்ந்து வினைசெய்வது வழக்கமாயிருந்ததேனும், அவன் விரும்பியதை நிறைவேற்றற்கு எதுவுந் தடையாயிருந்ததில்லை. தலைமை அமைச்சனுக்கும் படைத்தலைவனுக்குங் கூட, அரசனால் வினவப் பட்ட காரியத்தைப்பற்றி அவர் தம் கருத்தைத் தெரிக்கும் உரிமையே யன்றி, அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்திலது. மேலும் அமைச்சர் படைத்தலைவரொடு சூழ்ந்தே எதுவுஞ் செய்யவேண்டும் என்னும் யாப்புறவும் அரசனுக்கிருந்ததில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்வித்ததும், புதையலுரிமை எடுத்தவர்க்கே vன்றுgறைrற்றுவித்ததும்ïதற்குச்rன்றுகளாம்.mur‹ செயல்: அரசன் தன் துணையதிகாரிகளும் புலவருங் கூடிய அவையுடன் அரியணையில் வீற்றிருத்தல், அரசு வீற்றிருக்கை என்றும் மகிழிருக்கை என்றும் ஓலக்க மிருக்கை என்றும் கொலு விருக்கை என்றும் கூறப்படும். அது பெரும்பாலும் காலையில் தொடங்குமாதலால், அதை நாளவை நாண்மகிழிருக்கை நாளோ லக்கம் எனக் கூறுவதுண்டு. அரசன் அரசு வீற்றிருக்கும் மண்டபம், வேத்தியன் மண்டபம், ஓலக்கமண்டபம், கொலுமண்டபம், அத்தாணி மண்டபம், சபாமண்டபம் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். அம் மண்டபத்திற்குச் சிறப்புப் பெயரிடுவதுமுண்டு. சடாவர்மன் குலசேகர பாண்டியனின் ஓலக்கமண்டபம் புகழாபரணம் எனப் பெயர் பெற்றிருந்தது. அரசன் ஒவ்வொரு காரியத்தையும் அதற்குரிய சிறப்புக் குழுவுடன் அல்லது அதிகாரியுடன் கலந்து எண்ணுவானாயினும், அனைத்துக் காரியங்களையும் தலைமையமைச்சனோடு கூடிச் சூழ்ந்தபின்னரே ஒரு முடிவிற்கு வருவன். அரசிருக்கையிலும் சூழ்வினையிலும் அரசியும் உடனிருப்பது வழக்கம். அரசன் எக்காரியத்தைச் செய்தாலும், கணியன் குறித்த நன்னாளி லும் மங்கல வேளையிலுமே செய்வன். ஊர்ச்சபையார், நாட்டதிகாரிகள், கோயிற் கண்காணிப்பாளர், பொதுமக்கள் முதலியவருள், தனிப்பட்டவரோ ஒரு குழுவாரோ ஒரு காரியத்திற்கு அரசனுடைய ஒப்பத்தையேனும் தீர்ப்பையேனும் பெறவேண்டி அவனிடம் வரின், அவர் தாமே நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது அரசனுக்கு அதைத் தெரிவிப்பர். அரசனுக்கு மிக வேண்டியவரா யிருந்தாலொழிய நேரில் தெரிவிக்க முடியாது. அரசன் அக் காரியத்தை அதற்குரியவருட னெல்லாம் சூழ்ந்து, தன் கட்டளையை நேரிலாவது உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவர் வாயிலாகவாவது பிறப்பிப்பன். அரசனுடைய ஆணைகளை ஓலையிலெழுதும்போதும் பின்னர் அவற்றுள் முக்கியமானவற்றைக் கல்லில் வெட்டும் போதும், அவை பிறந்த இடத்தையும் அமயத்தையும் பின்வருமாறு குறிப்பது வழக்கம்: கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலுள்ளால், திருமஞ்சன சாலையிலெழுந்தருளி யிருந்து உதகம் பண்ணியருளா நிற்க, ஸ்ரீராஜராஜ தேவர் தஞ்சாவூர்ப் பெரிய செண்டுவாயிற் சித்திர கூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி. காஞ்சீபுரத்துக் கோயிலுள்ளால் அட்டத்து வெள்மேலை மண்டபம் ராஜேந்திர சோழனின் சொட்டையில் எழுந்தருளி யிருந்து. புரசை நாட்டுச் சிவபுரத்துப் பகலிருக்கையில் திருவமுது செய்தருளா விருந்து. (சோழவமிச சரித்திரச் சுருக்கம். ப.49) வேற்றரசரும் மாற்றரசரும் விடுத்த தூதர், வாயிற் காவலன் வாயிலாய் அரசனுக்குத் தம் வரவைத் தெரிவித்து. உத்தரவு பெற்றபின் ஓலக்க மண்டபம் புகுந்து, தம் அரசர் திருமுகத்தை நீட்டி, அதுபற்றிய வினாக்கட்கெல்லாம் அஞ்சாது விடை கூறுவர்.அரசன் தன் அவை யுடன் நன்றாக ஆய்ந்து அதற்குத் தக்க விடை விடுப்பன். அவ்வவ் வரசர் தரத்திற்கும் நட்பளவிற்கும் தக்கபடி, அவர் விடுத்த தூதரைச் சிலபல நாள்கள் அரசன் காக்கவைப்பதுமுண்டு. தலைநகரிலிருந்து அறங்கூறவையத்தில், பொதுவகையான வழக்குகளையெல்லாம் அவையத்தாரே தீர்ப்பர். எங்குல வணிக ரேறே யெம்மனோர் வழக்கை யிந்தப் புங்கவ ரிடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி யார்த்தார் நரைமுது புலியன் னான்சொற் கேட்டலும் நடுங்கிச் சான்றோர். இருவர்சொல் வழக்குமேற்கொண் டனுவதித் திரண்டு நோக்கி அனையது கேட்ட வான்றோ ரனைவரும் நோக்கி யந்தத் தனபதி வணிகர் தாமே யிவரெனச் சாற்ற லோடும் மனவலித் தாயத் தார்தம் வழக்கிழுக் கடைந்த தீது நனைவழி வேம்பன் தேரிற் றண்டிக்கு நம்மை யென்னா (மாமனாக வந்து வழக்குரைத்த படலம். 28,30,31) என்று பரஞ்சோதிமுனிவர், தனபதிச் செட்டியார் வழக்கை மதுரை யறங்கூறவையத்தாரே தீர்த்ததாகக் கூறியிருத்தல் காண்க. சிறப்பான தும் அரசனொடு தொடர்புற்றதுமான வழக்காயின், அரசனே மன்றத்திருந்து தீர்ப்பான். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், மலையமான் திருமுடிக்காரி மக்களைப்பற்றிய செய்தியை உறந்தை மன்றத்திலிருந்து ஆய்ந்தமை காண்க. ஈரூரார்க்கும். இருகுலத்தார்க்கும், இருமதத்தார்க்கும், இரு கோயிலார்க்கும், ஈரதிகாரிகட்கும், இரு சிற்றரசர்க்கும் இடைப்பட்ட வழக்காயின், அவ் வழக்காளிகள் தலைநகர்க்கு வந்தவிடத்து அரசனே தீர்த்து வைப்பதும், அவர் வராது அரசனுக் கறிவித்த (அல்லது அவனிடம் முறையிட்ட) விடத்து அதைத் தீர்க்கும்படி அவன் ஓர் அதிகாரியை அனுப்புவதும் வழக்கம். வன்கொலையும் முறைகேடான கொலைத் தண்டமும் நிகழ்ந்தவிடத்துக் கொலையுண்டாரின் ஆருயிர்க் கேளிர் அரசனிடம் முறையிடுதற் பொருட்டுச் சோழர் அரண்மனைப் புறவாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. பாண்டிநாட் டில் அஃதில்லையாயினும், பாண்டியர் காட்சிக் கெளியராயிருந்து அத்தகைய முறையீடுகளைக் கேட்டு முறைவழங்கி வந்தனர் என்பது, கண்ணகி முறையீட்டா லறியப்படும். இனி, கடினமான வழக்கின் உண்மை காண்டற்கு இறைவன் திருமுன் பாடுகிடப்பதும், மாறுகோலம் பூண்டு சென்று பொதுமக்கள் கூற்றைக் கவனிப்பதும் பாண்டியர் வழக்கம். அரசன் தன் நாட்டு நிலைமையைப்பற்றி அமைச்சர் வாயிலா கவும், பிறர் நாட்டு நிலைமையைப்பற்றித் தூதர் வாயிலாகவும், இரண்டையும் பற்றி ஒற்றர் வாயிலாகவும், அடிக்கடி அறிந்து வருவன். ஒற்றருள் ஒருவன் கூற்றை அவனறியாது இன்னொருவன் கூற்றொடு ஒப்புநோக்கி, மூவர் கூற்றும் ஒத்தவிடத்தே அதை அரசன் நம்புவான். தன்நாட்டு நிலைமையையும் தன் நகர நிலைமையையும் தானே அறிவான்வேண்டி, இடையிடை நாடுகாவற் சுற்றுப் போக்குச் செல்வதும் மாறுகோலம் பூண்டு நகரநோட்டஞ் செய்வதும் அரசன் வழக்கம். விக்கிரமச் சோழன் 1122-ல் குடந்தைக்கருகிலுள்ள பழையாறையி லும், 1123-ல் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குனிவள நல்லூரில் ஒரு குளக்கரை மண்டபத்திலும், 1124-ல் தென்னார்க் காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம் என்னும் காட்டுமன்னார் கோயிலில் உள்ள அரண்மனையிலும், 1130-ல் தில்லைக் கருகில் ஓர் அரண்மனையிலும் இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுவதால், அவன் அடிக்கடி நாடுகாவற் சுற்றுப்போக்குச் சென்றமை அறியப்படும். மதுரையில் பொற்கைப் பாண்டியன் மாறுகோலம் பூண்டு நகர நோட்டம் செய்து, கீரந்தை ஊரிலில்லாத போது அவன் வீட்டிற்குக் காவலாயிருந்து வந்தது நூற்புகழ் பெற்ற செய்தியாகும். அரசன் தன் நாடுகாவற் சுற்றுப்போக்கில், ஆங்காங்குள்ள அதிகாரிகள் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகின் றார்களாவெனக் கவனிப்பதும், ஊர்ச்சபையாரும் அறங்கூறவையத் தாரும், தீர்க்கமுடியாத வழக்குகளைத் தீர்த்துவைப்பதும் குற்றஞ்செய்தவரைத் தண்டிப்பதும் தக்கார்க்குத் தானஞ்செய்வதும், குடிகள் முறையீடு களைக் கேட்டு அவர்கள் குறைகளை நீக்குவதும், சீர்திருத்தமும் மக்கள்நலமும்பற்றிய ஆணைகளைப் பிறப்பிப்பதும் வழக்கம். இயற்கையாகவும் செயற்கையாகவும் நாட்டிற்குப் பெருந் துன்பம் நேர்ந்த காலங்களில் அரசன் அத் துன்பங்களை இயன்ற வரை நீக்குவதும், அத் துன்ப நீக்கத்திற்காகத் தொண்டு செய்தவர்க்கு மானியம் அளிப்பதும் உண்டு. வெள்ளக்காலத்தில் கரைகட்டி உடைப்படைப் பதும், அழிந்த நிலத்தை மீள அளந்து அவ்வாண்டு இறைநீக்கிக் கொடுப்பதும், பஞ்சகாலத்தில் வரி நீக்கிப் பழநெல் விற்பதும், புயற்காலத்தில் இடிந்த கோயில்களைப் பின்னர்க் கட்டு வதும், கலகங்களைப் படைகொண்டு அடக்குவதும், கொள்ளை நோய்க் காலத்தில் (தெய்வகோபந் தணித்தற் பொருட்டுப்) பலியிட்டு விழவெடுப்பதும், காட்டு விலங்குகள் நாட்டில் வந்து சேதஞ்செய் யின் அவற்றை வேட்டையாடிக் கொல்வதும், கடல்கோள் நேர்ந்த விடத்துப் பிறநாட்டுப் பகுதிகளை வென்று அவற்றில் தன் குடிகளைக் குடியேற்றுவதும் துன்ப நீக்கச் செயல்களாம். சிற்றரசர் செயல்: சிற்றரச நாடுகட்கெல்லாம் தன்னாட்சி (Self-Government)mË¡f¥g£oUªjJ. திறையளத்தல் அல்லது படை யுதவிப் போராற்றல் சிற்றரசர் செயலாம். அரசன் வலிகுன்றியபோது, அன்பற்றவரும் அதிகார விருப்பி னருமான சிற்றரசர், அரசனுக்கடங்காது தனியரசாகிவிடுவதும், அவனுடைய பகையரசரொடு தொடர்பு கொள்வதும், உண்டு. அத்தகைய சமையங்களில் அன்பும் உண்மையும் அடக்கமுமுள்ள சிற்றரசர் ஒன்றுசேர்ந்து, அடங்காச் சிற்றரசர்க்கு மாறாகத் தமக்குள் ஒப்பந்தஞ் செய்துகொள்வது முண்டு. அது நிலைமைத்தீட்டு எனப்படும். 3ஆம் குலோத்துங்கச் சோழனின் 27ஆம் ஆண்டில், கீழ்க் குறித்த சிற்றரசர் பதின்மரும், அரசன் சார்பாகவும் அவனுக்கடங் காத சிற்றரசர்க்கு மாறாகவும் தம்முள் ஒப்பந்தஞ் செய்து கொண்டனர். (1) பாண்டிநாடு கொண்டானான சம்புவராயன். (2) செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலிச் சோழ சம்புவராயன். (3) கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன். (4) கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன். (5) குந்தன் நம்பூரலான இராஜராஜ நீலகங்கரையன். (6) அம்மையப்பன் மருதனான இராஜராஜ மூவேந்தரையன். (7) பாவந்தீர்த்தானான இராஜேந்திர சோழச் சம்புவராயன். (8) நரசிங்க வன்மனான கரிகால்சோழ ஆடையூர் நாடாழ்வான். (9) சோமன் திருவண்ணாமலை யுடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன். (10) சோமன் வரந்தருவானான சோளேந்திர சிங்கப் பிருதிகங்கன்.1 நாட்டதிகாரிகள் செயல்: நாட்டதிகாரிகள் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து, அதிலுள்ள ஊர்ச்சபையார் கோயிற் கண்காணிப்பாளர் அறநிலையப் பாதுகாப்பாளர் முதலியோர் தத்தங் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனராவெனக் கவனிப்பதும் ஊர்க்கணக்கு கோயிற்கணக்கு அறநிலையக்கணக்கு முதலியவற்றைத் தணிக்கை யிடுவதும், குற்றங் கண்டவிடத்துத் தண்டிப்பதும், ஆங்காங்குள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், அரசாணை களை நிறைவேற்றுவதும், ஊர்ச்சபைத் தேர்தலை நடத்திவைப்பதும் செய்வர். சிற்றூர்கள் நாட்டதிகாரிகளின் கண்காணிப்பிலும், பேரூரான நகர்கள் அரசனது நேரடியான கண்காணிப்பிலும் இருந்ததாகத் தெரிகின்றது. ஊர்ச்சபையார், தம் குற்றத்தை மறைத்தற் பொருட்டும் தம்மேற் குற்றத்தை ஏற்றாமைப் பொருட்டும் தம்மைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிகட்கும் தம்மை வினவவரும் வேறதிகாரிகட்கும் கை யூட்டும் கொடுப்பதுண் டென்பது, சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஓர் ஊர்ச்சபையார். வாரப்பற்றிலிருந்தும், கடமைப்பற்றி லிருந்தும், வரும் வாரத்தையும் கடமையையும், சுந்தர பாண்டி யனுடைய அதிகாரிகளின் நட்பைப்பெறச் செலவிட்டதிலிருந்து அறியக் கிடக்கின்றது.2 ஊர்ச்சபையார் செயல்: ஊர்ச்சபையாருள், ஒவ்வொரு வாரியத்தாரும் தத்தம் கடமையை ஆற்றிவந்தனர். அவருள் ஊர் வாரியத்தினர்க்கு, உரிமை (Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இருவகை வழக்கையுந் தீர்க்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், முழு அதிகார மிருந்தது. அவரால் தீர்க்கமுடியாத வழக்கும், அவர் தீர்த்த வழக்கின் மேன்முறையீடும் (Appeal) அரசனிடம் கொண்டு போகப் பட்டன. ஒரே வாரியத்திற்குரிய செய்தியை அவ்வவ் வாரியத்தாரும், பல வாரியங்கட்குரிய செய்தியை எல்லா வாரியத்தாரும் கூடிச் சூழ்ந்து முடிவுசெய்தனர். ஊர்ச்சபைக் கூட்டங்கள் காளமூதியும் பறைசாற்றி யும் கூட்டப்பட்டன. கூட்டங் கூடுவதற்கு ஊர்மண்டபம் அல்லது மாளிகை இருந்தது. அஃதில்லாத விடத்துக் கோயில் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அவ்வப்போது வரும் அரசாணைகளைத் தலைமேற் கொண்டு அவற்றை நிறைவேற்றி வைப்பதும், அவற்றுள் முக்கியமானவற்றையும் ஊராட்சியில் தாம் செய்துள்ள புதுமை யான ஏற்பாடுகளையும், கல்லில் வெட்டுவித்துச் சபை மண்டபத்தி லாவது கோயில் மண்டபத்திலாவது பதிப்பிப்பதும், ஊர்ச்சபையார் கடமையாகும். ஊர்க் குடியிருப்பையும், வெள்ளாண்மையையும் இரவிற் காவல் செய்வது பாடிகாவலன் வேலை. ஊரவையாரின் ஊராட்சி, ஊராண்மை யென்றும் ஊரமையென்றும் கூறப்படும். சிற்றூர்த் தலைவன் செயல்: ஆள்நிலப் பிரிவான ஒரு கூட்டூரின் பகுதியாய், ஒரே குலத்தார் அல்லது ஒரு குலத்தார் பெரும்பான்மையாராக இருக்கும் சிற்றூரில் அவ்வக் குலத்திற்கும் இடத்திற்குமேற்ப, அம்பலகாரன், ஊராளி, கவுண்டன், கிழவன், குடும்பன், சேர்வை (சேர்வைகாரன்) தலைமகன், தலைவன், நாடன், (நாடான், நாடாள்வி), நாட்டான், நாட்டம்பலம், நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், பட்டங்கட்டி, பட்டத்துப்பிள்ளை, பண்ணாடி, பெரியதனக்காரன், மணியக்காரன், மன்றாடி (மண்ணாடி, மந்திரி) மூப்பன் முதலிய பெயர்களுள் ஒன்றைப் பூண்டு, ஊராரால் தேர்ந்தெடுக்கப்படாமல் தந்தையினின்று மகனுக்கு வரும் வழிமுறை யுரிமைப்படி ஊர்த்தலைவனா யிருப்பவன், தன் ஊர் வழக்குகளில் கொலை யொழிந்த பிறவற்றையெல்லாம் தானே தீர்த்து வந்ததாகத் தெரிகின்றது.3 சிற்றூரிலிருந்து அரசனுக்கு வரவேண்டிய வரிகளெல்லாம் ஒழுங்காய் வந்து, ஊர்த்தலைவனோடு, முற்றும் ஒத்துப்போய்க் காரியங்கள் அமைதியாய் நடந்து வந்ததினால், அரசனும் நாட்டதி காரியும் கூட்டூர்ச்சபையாரும் சிற்றூர் வழக்குத் தீர்ப்பில் பெரும் பாலும் தலையிடவில்லை. கூட்டூரைச் சேர்ந்த எல்லாவூர்கட்கும் பொதுவான செய்திகளையும் சிற்றூர்ச் செய்திகளில் ஊர்த்தலைவன் அதிகாரத்திற்கு மேற்பட்டவற்றையுமே, ஊர்ச்சபையார் கவனித்து வந்ததாகத் தெரிகின்றது. உத்தமச்சோழன் காலத்தில், தொண்டை நாட்டைச் சேர்ந்த சிற்றியாற்றூரில் பிரமதேயமாகக் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றிய அரச ஆணையோலையில், அடிகள் நக்கன் என்னும் பவ்வத்திரி கிழவன் (பவ்வத்திரியூர் தலைவன்) உடன்கூட்டத்த திகாரிகளுடன் சேர்ந்து கையெழுத்திட்டதாலும், ஊர்த்தலைவனு டைய ஊழியத்திற்காக அம்பலமானியம் என்னும் இறையிலி நிலம் விடப்பட்டிருந்த தினாலும் சிற்றூர்த் தலைவன் பதவி அரசனால் ஒப்புக்கொள்ளப் பட்டிருந்ததை அறியலாம். சிற்றூர்த் தலைவனுக்கு ஊராட்சியில் உதவுவதற்கு, சிலவூர்களில், துணைத்தலைவனொருவனும் கரும மாற்றுவோ னொருவனும், சேவகனொருவனுமாக மூவர் இருந்தனர். ஒவ்வோர் ஊர்க்கும், நீர்ப்பாய்ச்சி யொருவனும் குடிகாவல் என்னும் ஊர்காவலன் ஒருவனும் இருந்தனர். ஊர்வழக்குக்களைத் தீர்ப்பதற்கும் ஊரில் சட்டதிட்டங் களை ஏற்படுத்தற்கும் ஊர்த்தலைவன் கூட்டும் கூட்டம், ஊர் மண்டபத்தி லாவது, ஒரு மரத்தடியிலாவது வெள்ளிடையிலாவது நடைபெறும். ஆவணக்களரியார்செயல்: ஆள்நில ஊர்தொறும் ஆவணக்களரி யிருந்தது. ஒரு நிலத்தை விற்பவனும் கொள்பவனும், அல்லது அடைமானம் வைப்பவனும், வாங்குபவனும், அல்லது குத்தகைக்கு விடுபவனும் எடுப்பவனும், தம்முள் இசைந்து எழுதிய ஆவணத்தை ஆவணக்களரிக் கெடுத்துக் கொண்டுபோய், களரியார் முன் தாம் இருவரும் இசைந்துகொண்டதாக உறுதிமொழி கூறியபின் ஆவணம் களரியாரால் காப்பிடப்பெறும், காப்பிடுதல் என்பது அரச முத்திரையிட்டுப் பதிவு செய்தல். ஆவணத்திற்கு ஏடு, ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை. தீட்டு, நறுக்கு, பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும், அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கின. ஆயினும், அவற்றை யெல்லாம் தழுவுவதும், அதிகார எழுத்துச் சான்றைச் சிறப்பாகக் குறிப்பதும், ஆவணம் என்னும் சொல்லே. பத்திரம் பிராமணம் என்னும் வடசொல் வழக்கு பிற்காலத்ததாகும். ஓலை சீட்டு நறுக்கு முறி என்னும் சொற்கள் பனையோலையில் எழுதப்பட்ட வற்றையும் பட்டிகை பட்டம் என்பன செப்பேட்டில் எழுதப்பட்டவற்றையும், பிற இரண்டையும் குறிக்கும். நிலவிற்பனை யாவணத்திற்கு விலையாவணம், விலை யோலை, விலைத்தீட்டு என்னும் பெயர்களும், ஆள்விற்பனை யாவணத்திற்கு ஆள்விலைத்தீட்டு, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமையோலை என்னும் பெயர்களும் வழங்கின. அடை மான ஆவணம், ஒற்றிக்கலம் ஒற்றிக்கரணம் ஒற்றிநறுக்கு அடை யோலை என்றும்; அடைமானம் வாங்குபவன் எழுதிக்கொடுத்த ஓலை, எதிரடையோலை யென்றும் பெயர் பெற்றிருந்தன. நுகர்ச்சியொடு கூடிய ஒற்றிக்கு இறங்கொற்றி அல்லது அடைப்பு (Usu-Fructuary mortgage) என்றும், நிலையான ஒற்றிக்கு உறாவொற்றி (Irredeemable mortgage) என்றும், பெயர். தீட்டுக்காரனால் (Notary) எழுதப்படாத அல்லது பதிவு செய்யப்படாத ஒற்றிக்கலம் கையொற்றி எனப்பட்டது. குத்தகைத் தவணை முடிந்தவுடன் அதன் தீர்வுபற்றி எழுதப்படுவதற்கு அறுதிமுறி (Cancelled lease-deed) என்றும், ஒரு பொருளின் உரிமை குறிப்பிட்ட ஒருவர்க்கன்றிப் பிறருக் கில்லை யென்று குறிக்கும் எழுத்தீட்டிற்கு விடுதீட்டு அல்லது தீர்வுமுறி (Release-deed) என்றும் பெயர். ஒருவர் ஒன்றற் குடம்பட்டு எழுதித் தரும் சீட்டு, இசைவுத் தீட்டு இசையோலை ஒப்புமுறி என்னுஞ் சொற்களுள், ஒன்றாற் குறிக்கப்பெற்றது. ஒருவர் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக எழுதித்தரும் சீட்டிற்குப் பற்றுமுறி (Receipt) என்று பெயர். நிலவாரச் rhFgoahtz«(Deed of lease for -cultivation) காணிப் பிடிபாடு எனப்பட்டது. விலையாவணம் ஒழிந்த பிறவற்றுள் பெரும்பாலன, இன்றியமை யாது ஆவணக்களரியிற் பதிவுசெய்யப்பட வேண்டுந் திறத்தனவல்ல. பொதுவகையான ஆவணங்கள் ஓலையிலும். சிறப்பானவை செப்பேட்டிலும், எழுதப்பெறும், ஊராருக்குத் தெரியவேண்டிய ஆவணமாயின், கல்லில் வெட்டப்பெறும். அறங்கூறவையத்தார் செயல்: நகரங்களிலிருந்த அறமன்றத் தார், வழக்காளி (Plaintiff) எதிர் வழக்காளி (Defendant) ஆகிய இருவரின் சொல்லையும் பலமுறை கேட்டுக் கரியும் (witness) சான்றும் (evidence) இருப்பின் அவற்றைக் கொண்டும், அவையில்லாவிடின் நூலுத்தி பட்டறிவு (சுருதி யுக்தியனுபவம்) கொண்டும், நடுநிலைமையாய்த் தீர்த்து முறைசெய்து வந்தனர். இருவர்தம் சொல்லையும் எழுதரங் கேட்டே என்று அதிவீரராம பாண்டியனும், இருவர்சொல் வழக்கு நோக்கி யனுவதித் திரண்டு நோக்கி என்று பரஞ்சோதி முனிவரும், கூறியிருப்பதால், வழக்கை நன்றாய், அறிந்துகொள்ளற்கும், வழக்காளரின், மெய்ம்மை காண்டற்கும், மன்றத்தார் வழக்கைப் பலமுறை சொல்வித்தமை அறியப்படும். கரியுஞ் சான்றுமில்லாத வழக்குகளில், பழுக்கக்காய்ச்சிய இரும்பைப் பிடித்தல், பாம்புக் குடத்திற் கையிடுதல் முதலிய தெய்வச்சான்று வாயிலாகத் தம் மெய்ம்மையை நாட்டும்படி வழக்காளரை மன்றத்தார் கேட்பது முண்டு. அத்தகைய சான்று பல வழக்குகளில் உண்மைக்கு மாறாயிருந்த தென்பது, பாழ்ந்தனிசு வேண்டிப் பாம்புக்குடம் பெற்றான் என்னும் பழமொழியாலும், கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார் மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய் கடம்பெற்றான் பெற்றான் குடம் (பழ. 211) என்னும் பழமொழிச் செய்யுளாலும் அறியப்படும். இம் முறை பிற்காலத்துக் கைவிடப்பட்டது. வழக்குகள், உரிமை வழக்கு (Civil case) குற்ற வழக்கு (criminal -case) என இக்காலத்திற் பிரிக்கப்பட்டிருப்பது போல் அக்காலத்திற் பிரிக்கப்படவில்லை. இருவகை வழக்குகளும் எல்லா அறமன்றங்க ளிலும் தீர்க்கப்பட்டன. படைத்தலைவன் செயல்: ஆங்காங்கு அவ்வப்போது நடக்குங் கலகங்களையும் கொள்ளைகளையும், தானாகவும் தன் துணைவரைக் கொண்டும் அடக்கிவைப்பதும், படைத் தலைவன் செயலாகும். 10 பொருளாதாரம் நாட்டை யாள்வதற்கும் போர் செய்தற்கும் குடிகட்கு நன்மை செய்தற்கும் அரசனுக்குப் பொருள் வேண்டும். அப் பொருள் இடை விடாது வேண்டியிருத்தலின், அது வரும் வழிகளும் நிலையானவை யாயிருத்தல் வேண்டும். அரசியல் வருவாய்கள்: மூவேந்தர்க்கு மிகுந்த பொருள் வருவாய்கள், வரி, இயற்கைச் செல்வம், திறை, புதையல், பிறங்கடை (வாரிசு) இல்லாச் சொத்து, கையுறை, நன்கொடை என எழுதிறத்தன. இயற்கைச் செல்வம் யானையும் முத்தும் பொன்னும் மணியும் போல்வன. கையுறை குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியைப்பற்றிக் கூறினபோது கொடுத்த மலைப்பொருள்கள் போல்வன (சிலப். 25:37-54). தெய்வத்திருமுன் கையுறையோடு செல்வது போன்று அரசத் திருமுன்னும் செல்வது மரபு. நன்கொடை கரிகால்வளவனுக்கு, அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயில் (சிலப். 5:103-4) போல்வது. பிற வெளிப்படை. சேரனுக்கு யானையும் பொன்னும் மணியும், சோழனுக்குப் பொன்னும் வயிரமும், பாண்டியனுக்கு யானையும் முத்தும் சிறந்த இயற்கைச் செல்வங்களாயிருந்தன. வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக் கட்சி காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழு நெடுவரைப் படப்பை ................................................... கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய நீடுநிலை யரையத்து............... (புறம். 202) என்று கபிலர் பாடியிருப்பதால், கொங்குநாடு பொன்னுக்கும் மணிக்கும் சிறந்திருந்தமை அறியப்படும். கொங்குநாட்டிற் பிறந்து நெடுந் தொலைவு அதன்வழியே செல்லும் காவிரியாறு பொன்னி யெனப்பட்டதும், தமிழ்நாட்டுப் பொன் கொங்குப்பொன் எனச் சுட்டப்பெற்றதும் கவனிக்கத்தக்கன. கொங்குநாடு முற்காலத்திற் சேரனுக்கும் பிற் காலத்திற் சோழனுக்கும் உரியதாயிருந்தது. சோழநாட்டின் வடவெல்லைப் புறத்திலுள்ள கிருட்டிணை யாற்றங்கரையிலும் அதன் கிளையான துங்கபத்திரைக் கரையிலும் வயிரச் சுரங்கங்கள் இருந்தன. உலக ஒளிமலையான கோகினூர் வயிரம் கிருட்டிணை யாற்றங்கரையில் எடுக்கப்பெற்றதே. பாண்டிநாட்டில் வச்சிரநாடு எனப் பெயர்பெற்ற ஒரு கடற்கரை நாடு இருந்தாகக் களவியற்காரிகை என்னும் நூல் கூறுகின்றது. இறைவகை: அரசியல் வருவாய்களுள் நிலையானதும் முதன்மையானதும் குடிகள் செலுத்தும் வரியே. அது, நிலவரி, நீர்வரி, மனைவரி, தொழில்வரி, ஆள்வரி (Poll tax), விலங்குவரி, பொருள்வரி, உய்ப்புவரி, மணவரி, தண்டவரி, கோயில்வரி, கொடைவரி, ஊழியப்பேற்றுவரி, படைவரி, காட்சிவரி, கருவூலவரி, காசடிப்புவரி எனப் பலதிறத்தது. நீர்வரி, விளைநிலங்கட்கு நீர்நிலைகளினின்று நீரைப் பாய்ச்சிக் கொள்வதற்குச் செலுத்தும் வரி, அது ஏரிகுளப் பாய்ச்சலுக்குரியதாயின் நிலைநீர்ப்பாட்டம் என்றும், ஆற்றுப் பாய்ச்சற்குரியதாயின் ஒழுகு நீர்ப்பாட்டம் என்றும் பெயர் பெறும். இனி, நன்னீர் புன்னீர் எனவும் வேறுபாடுண்டு. தொழில்வரி, உழவொழிந்த பிற தொழில்கட்கு வாங்கப்படுவது, விலங்குவரி, ஆடு பெற்றம் (பசு) எருது எருமை முதலிய விலங்குகட்கு வாங்கப்படுவது. உய்ப்பு வரி, நிலத்திலும் நீரிலும் பொருள்களை உய்த்தற்குச் செலுத்துவது . அது ஆயம் உல்கு சுங்கம் என்னும் பெயர்களாற் குறிக்கப்பெறும். மணவரி, திருமணத்திற்கு விதிக்கப்படுவது. அது அரைக்கால் பணமாகும். தண்டவரி, குற்றவாளிகட்குத் தண்டமாக விதிக்கப்படுவது. கொடைவரி, அரசன் அந்தணர்க்குச் செய்யும் பெருங்கொடைகட்குத் தண்டப்படுவது. ஊழியப்பேற்றுவரி, ஊரவையார் பாடிகாவலன் முதலியவரின் சம்பளத்திற்காகத் தண்டப்படுவது. பாடிகாவலன் சம்பளத்தை அவனே தண்டிக் கொள்ள உத்தரவிருந்தது. அவன் சம்பளம், நன்செய் விளைவில் மாவிற்கு ஒரு கலமும், புன்செய் விளைவில் மாவிற்கு ஒரு பணமும், கமுகிற்கு மரம் ஒன்றுக்கு வீசம்பணமும், கரும்பு மருக்கொழுந்து இஞ்சி எள் வாழை ஆகிய வெள்ளாண்மையில் மாவிற்கு ஐந்து பணமும், வீட்டிற்கு ஆண்டுக்கு இரண்டு பணமும் ஆகும். வரியானது அவ்வத் தொழிற்கேற்ப ஆயம், இறை, கடன், கடமை, கறை, காணிக்கை, தீர்வை, பகுதி, பாட்டம், பூட்சி, பேறு, மகமை மகன்மை எனப் பல்வேறு பெயர்பெற்றது. அவற்றுக்கெல் லாம் வரி என்பது பொதுப்பெயராகும். ஊர்த்தலைவன் அல்லது ஊரவையார் விதிக்கும் வரி ஊரிடுவரிப்பாடு எனப்பட்டது. வாங்கப்பட்ட வரிகள்: அக்காலத்துக் குடிகளிடத்திற் பல வகையிலும் வாங்கப்பட்ட வரிகளாவன: அங்காடிப் பாட்டம் (அங்காடிக்கூலி ), அச்சுவரி, அட்டுக்கிறை, அடிகாசு, அடிமைக் காசு, அணியிடுவான்வரி, அதிகரணத்தண்டம், அதிகாரப்பேறு (அதிகாரப் பொன்), அரிகொழி, அரிநட்டி, அரிவாட்பதக்கு, அருந்தோடு, அரைக்கால்வாசி, அழகெருது, அழகெருது காட்சிக் காசு (காட்சியெருதுகாசு), அழுகற்சரக்கு, அள்ளுக் காசு , அளியிடு வான்வரி, அனுப்பு, ஆசுகவிகள் காசு (ஆசீவக் காசு), ஆசவக்கடமை ஆட்டைச்சம்மாதம் (ஆட்டைக் காணிக்கை), ஆண்டெழுத்துத் தேவை, ஆத்திறைப் பாட்டம், ஆதிரைப் பிள்ளையார் நோன்பு, ஆள்நெல், ஆற்றுக்குலை. ஆற்றுப்பாட்டம், இடைப்பாட்டம், (இடைப்பூட்சி, இடைவரி), இராசாசுரங் காணிக்கை, இருபதக் கட்டி, இலாஞ்சினைப் பேறு, இறைகாவல், இறைச்சோறு, இனவரி (இனக்காசு), ஈழப்புன்செய் (ஈழம்பூட்சி), ஈழற்கடிவரி, உகப்பார் பொன் (உகவைப் பொன்), உப்பாயம் (உப்புக்காசு, உப்புகோச் செய்கை), உபயம் (உபய மார்க்கம்), உரல்வரி, உல்லியக்கூலி, உலாவு காட்சி, உவச்சவரி, உழுதான்குடி, உள்வரி, உறுபாதை, உறுவுகோல், நிலன்காசு, ஊசிவாசி, ஊத்தைப் பாட்டம், ஊர்க்கணக்கர் சீவிதம் (ஊர்க்கலனை. ஊர்க்கழஞ்சி) ஊர்ச்சரிகை, ஊராட்சி, ஊரிடுவரிப் பாடு ஊரெட்டு, எட்கடமை (எக்கடமை), எடுத்துக்கொட்டி, எடைவரி, எருமைப்பொன், எழுவை, ஏணிக்காணம், ஏர்க்காடி, (ஏர்ப்பொன், ஏர்க்காணிக்கை), ஏரியாயம், ஏல்வை, ஒட்டிதற் கடமை, ஓட்டச்சு, ஓடக்கூலி, கடையடைக்காய், கடையிறை, கண்காணி, கண்காணி கணக்கர் முதல், கண்கூலி, கண்ணாலக் காணம் (கலியாணக்காணம்). கண்ணிட்டுக்காணம் (கண்ணேட்டுக் காணம்), கணக்கப்பேறு (கணக்கிலக்கை), கதிர்க் காணம், கருவூல வரி, காட்டாள் காசு, காணவட்டம், காணி வெட்டி, காரியவா ராய்ச்சி, காலத்தேவை, காவல் பரப்பு (காவற் பேறு), கீழ்வாரப் பச்சை, குசக்காணம், குடநாழி குடிமை (குடிக்காசு, குடிக்காணம், குடியிறை), குதிரை வரி, குதிரை விலாடம், குமாரக்கச்சாணம், குலை வெட்டி, கூலம், கூற்று நெல், கெடுபாதை, கேள்விமகமை, கைக் கணக்குமுதல், கையேற்பு, கொடிக்கடமை, கொட்டைக்கூலி, கோள்நிறை கூலி, சண்டாளப் பேறு, சந்திவிக்கிரகப்பேறு, சாட்டுவரி, சிறுபாடி காவல், சூலவரி (சூலவரிப் பொன்), செக்கிறை, செக்கு மன்றாடி, செங்கொடிக்காணம், சென்னீர்வெட்டி, சென்னீரமஞ்சி, சேவகக்காசு, சோறுமாடு, தசவந்தம் தட்டடுவு, தட்டாரப் பாட்டம் (தட்டுக்காயம், தட்டொலி) தடிப்பதக்கு, தண்டல்மேனி (தண்டலிற் கடமை, தண்டவிலக்கை, தண்டற் கடமை), தண்டநாயகர் மகமை, தண்டாளர் முதல், தரகு (தரகு பாட்டம்), தலையாரிக்கம், தலைவிலை, தறியிறை (தறிப்புடைவை), தனப்பணம், தாட்பிடியரிசி (தாப்படியரிசி), தானமானியம், திருமுன் காட்சி, திருமுகக் காணம், திங்கள் மேராமு, திங்கட் சோறு, திங்கள் நெய், திங்கள் மோகம், திரைக்காசு, துலாக் கூலி, துலாபாரவரி, தேவ குடிமை, தோணிக்கடமை, தோரணக் காணிக்கை, தோலொட்டு, நத்தவரி, நல்லா (நற்பசு), நல்லாடு, நல்லெருது, நல்லெருமை, நற்கிடா, நாட்டுக் காணிக்கை (நாட்டு வரி, நாட்டு வினியோகம்), நாட்டு பாதி, நாடு காவல், நாடு தல வாரிக்கை, நிலக்காணிக்கை, நீர்க்கூலி, நீர்நிலக் காசு, நெட்டாள், நெய்விலை, பச்சைப் பணம், பஞ்சுப்பீலி, பட்டடைவரி, பட்டிக்காடி, பட்டிக்கால், பட்டிகைக் காணம், பட்டித் தண்டம் (பட்டிப் பொன்), பட்டோலைக் காசு, படாங்கழி, படைப்பணம் (படையிலார் முறைமை), பண்குறுணி, பண்டவெட்டி, பண்ணிக்கூலி, பணவாசி, பணிக்கொத்து, பது வாரம், பறைத்தறி, பறையிறை, பன்மை, பாசிப்பாட்டம், பாடி காவல், புத்தகம், புதாநாழி, புட்டக விலை, புரவுநெல், புலவரி, புழுகு கடமை, புறக்கடமை (புறக்கலனை), புறம்பு, புறவெட்டி, (பேர்க் கடமை பேர்வரி), பொற்பூ, பொன்வரி, மடக்குவரி, மண்மதில், மதில் தேவை, மந்தைப் பணம்,மரமச்சாதி விலை, மனைப்பணம், மாட்டுக் கறை, மாடைக்கூலி, (மாடைக் காசு), மாதப்படி (மாதாரிக்கம்). மாப் பட்டடை, மாப் பணம், மாப் பதக்கு, மாமகம், மாவிறை, முத்தாவணம், முதற்றிரமம், முப்பறமுந்நாழி, முழவரிசை, முன்னிடும் பணம், மேராழி, வகைப்பேறு, வட்டி நாழி, வண்ணாரப் பாட்டம் (வண்ணாரப் பாறை), வலங்கையிடங்கை மகன்மை, வழி நடைக்கிடும் பணம், வாசல் பணம் (வாசல் பேறு), வாடாக் கடமை, வாய்க்கால் பாட்டம், வாரக்காணம், விடைப்பேர், வினியோகம், வீட்டுத்தேவை, வீரசேசை, வீரசேலை, வெட்டி (வெட்டிக்காசு, வெட்டிப் பாட்டம், வெட்டி வரி, வெட்டி வேதினை), வெள்ளாண் வெட்டி, வெள்ளை வாரி,வேண்டுகோள் வரி, வேய்நெல், வேலிக்காசு, மடக்குவரி. இங்குக் கூறப்பட்ட வரிகளெல்லாம், எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லாரிடத்தும் வாங்கப்பட்டவையல்ல. வேறு வரி குறிப்பன போல் தோன்றும் பல பெயர்கள் ஒரே வரி குறிப்பன வாகும். இக்காலத்துத் தொழில்வரி யெனப்படும் ஒன்றே, அக்காலத் துத் தொழில் தொறும் கருவிதொறும் வெவ்வேறு பெயர்பெற்று நூற்றுக்கணக்கான வரிபோல் தோன்றிற்று. ஆயினும், சங்ககாலத்து வரிகளினும், பிற்காலத்து வரிகள், மிகப் பலவென்றும், இக்காலத் திலில்லாத ஆள்வரி மணவரி துலாபாரவரி முதலிய சில விதப்பு வரிகள் அக்காலத் திருந்தன வென்றும் அறிதல்வேண்டும். ஆள்வரி சோழநாட்டில் முன்னியூர் தவிரப் பிறவூர்களில் கூனர் குறளரிடத் தும் வாங்கப்பட்டதாகத் தெரி கின்றது. வரிப் பாகுபாடு: வரிகளெல்லாம், கீழிறைப்பாட்டம் (சிறுவரி) மேலிறைப்பாட்டம் (பெருவரி) என இரு பாலாய்ப் பகுக்கப்பட்டிருந்தன. ஊர்க்கழஞ்சு குமரக்கக்சாணம் வண்ணாரப் பாறை தட்டாரப் பாட்டம் முதலியன கீழிறைப் பாட்டமும், வேலிக்காசு திங்கள் மேராமு முத்தாவணம் தறிப்புடவை முதலியன மேலிறைப் பாட்டமும் ஆகும். 1 சில வரிகள் காசாகவும், சில வரிகள் கூல (தானிய ) மாகவும், சில வரிகள் அவ் விரண்டிலொன்றாகவும் செலுத்தப்பட்டன. காசாகச் செலுத்தப்பட்டவை காசாயம் (காசு கடமை) என்றும் அந்தராயப் பாட்டம் என்றும், கூலமாகச் செலுத்தப்பட்டவை மேலடியென்றும் பெயர்பெற்றன. காசு பணம் பொன் காணம் என இறும் பெயர்களெல்லாம் முன்வகையையும், அரிசி நெல் நாழி குறுணி பதக்கு என இறும் பெயர்களெல்லாம் பின் வகையையும் குறிக்கும். பெரும்பாலும் தொழில்வரிகள் பணமாகவும். நிலவரி இனமாகவும் செலுத்தப்பட்டன. செக்கிறை தறியிறை கடைவரி முதலியன ஆண்டுக்கு ஆறு பணமாகும். சந்தை அங்காடி தெரு திருவிழா முதலியவற்றில் பலவகைப் பொருள்கள் விற்கும் சில்லறைக் கடைகட்கு நாள்வரி வாங்கப் பட்டது. நாடு முழுமைக்கும் பொதுவான செலவிற்குரிய வரிகள் குடிகளெல்லாரிடத்திலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பயன்படும் அல்லது பயன்படுவதாகக் கருதப்படும் செலவிற்குரிய வரிகள் அக் குறிப்பிட்ட இடத்திலும் தண்டப்பட்டன. அரசனால் விதிக்கப்பட்டவும், ஊரவையாரால் விதிக்கப்பட் டவும், அறமன்றத்தாரால் விதிக்கப்பட்டவும் கோயிலதிகாரிகளால் விதிக்கப்பட்டவும், சிற்றூர்த் தலைவனால் விதிக்கப்பட்டவும் ஆக ஐவேறு தொகுதிப்பட்டிருந்தன அக்காலத்து வரிகள். அரசனுக்குச் செலுத்த வேண்டியவை அரசிறையெனப்பட்டன. மேனாட்டுப் பொருளியல் நூற்படி, ne®tÇ(Direct tax) நேரல் tÇ(Indirect tax) ஆகிய இருவகை வரிகளும் அக்காலத்தில் வாங்கப் பட்டன. வரி கொடுப்பவனையே தாக்கும் வரி நேர்வரி என்றும், வரி கொடுப்பவனைத் தாக்காது வேறொருவனைத் தாக்கும் வரி நேரல் வரி என்றும் கூறப்படும். ஆள்வரி மணவரி முதலியன நேர்வரியும் விற்பனை வரி ஓடக்கூலி முதலியன நேரல் வரியும் ஆகும். நிலவரி: வரிகளுட் சிறந்தது நிலவரி. அதனால் அது சிறப்பாக இறை அல்லது அரசிறை எனப்படும். அதற்குச் செய்க்கடன் காணிக் கடன் என்னும் பெயர்கள் வழங்கின. வரிவிதித்தற்கு, விளைநிலம் விளையாநிலம் என இருபாலாக ஊர்நிலங்கள் பகுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள், விளையா நிலம், ஊர்ப்பொதுநிலமும் பட்டப்பாழ் என்னும் தரிசுமாக இருபகுதிப்பட்டது. இவ்விரு பகுதியும் இறையிலி நிலமாயிருந்தன. ஊர்ப்பொது நிலங்கள்; பல்வேறு சேரிகள் உள்ளிட்ட ஊர்க் குடியிருப்பு, ஊர்க்களம், அழிந்துபோனவூராகிய நந்தப்பாழ், கடைத்தெரு, கோயில், குளங்குட்டை, மடம், சத்திரம், நந்தவனம், மந்தை, கன்றுமேய்பாழ், பெருவழி, ஓடை, ஊர்நிலத்தூடறுத்துப் போன வாய்க்கால், பாறை, ஆற்றுப்படுகை, உடைப்பு, இடுகாடு, இடுகாட்டிற்கும் சுடுகாட்டிற்கும் செல்லும் வழி முதலியனவாகும். விளைநிலம் நீர்நிலம், கொல்லை, காடு என மூவகையாக வகுக்கப்பட்டிருந்தது. இவை, முறையே நன்செய்யும் இறைவைப் புன்செய்யும் வானாவாரிக் காடுமாகும். நன்செய்கள் அவற்றின் விளைவிற்குத் தக்கபடி பலதரமாகப் பாகுபாடு செய்யப்பட்டி ருந்தன. நிலவரி, தீர்வை என்றும் வாரம் என்றும் இரு வகையாயி ருந்தது. இவற்றுள் முன்னது ஒரு குறிப்பிட்ட அளவும், பின்னது கண்டுமுதலில் ஒரு பகுதியுமாகும். தீர்வைக்குரிய நிலம் தீர்வைப் பற்று என்றும், வாரத்திற்குரிய நிலம் வாரப்பற்று என்றும், வாரத்தைப் பணமாகச் செலுத்தும் நிலம் கடமைப்பற்று என்றும் கூறப்பட்டன. பெரும்பாலும், அளந்து கண்டுமுதல் காணக்கூடிய கூலவெள்ளாண்மைக்கு வாரமும், அங்ஙனஞ் செய்ய இயலாத பிறவற்றிற்குத் தீர்வையும் விதிக்கப்பட்ட தாகத் தெரிகின்றது. வாரம் பொதுவாய் ஆறிலொரு பங்காயிருந்தது. இது தொன்றுதொட்டு வந்த முறையென்பது, ``தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை'' (குறள். ) என்னுங் குறளால் அறியப்படும். வாரம் ஆறிலொரு பகுதியாயிருந்த தினாலேயே அது பகுதியெனப் பெயர் பெற்றது, வரி வாங்குவதற்குப் பொதுவாக நல்விளைவே கவனிக்கப் பட்டது. அரைவிளைச்சலும் நட்டுப்பாழ் அழுகிச்சேதம் சாவி பூச்சி வெட்டு நோய்அழிவு ஆகிய அறுவகை நட்டிகளும் வரிவிதிக்கப் பெற்றில. அழிவாவது, நன்றாய் விளைந்தும் கள்வராலும் பகை வராலும் விலங்காலும் அழியுண்ட நிலை. நல்விளைவுக் காலத்தில், வரி கண்டிப்பாய் வாங்கப்பட்டது. ஈராண்டாக வரி செலுத்தாதார் நிலமுழுதும் பறிமுதல் செய்யப் பட்டது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓரூரில், பஞ்சக் கொடுமை யால் குடிபோன மக்களின் நிலத்திற்காக, ஊரவையார் ஊர்ப் பொதுநிலத்தைக் கோயிற்கு விற்று வந்த பணத்தைக்கொண்டு, வரி செலுத்தினர் என்னுங் கல்வெட்டுச் செய்தியினின்று, சில அரசர் காலத்தில் பஞ்சத்தினாற் பயிரிடப்படா நிலத்திற்கும் வரி வாங்கப் பட்டமை அறியலாம். பிசிராந்தையார் பாடிய ``காய்நெல் லறுத்து'' என்னும் புறப்பாட்டால் (184) நல்லரசர் காலத்திலும் கடுந்தண்டலாளர் இருந்து, குடிகளை வருத்தியமை அறியப்படும். வரிப்பளுவைக் குடிகள் தாங்கமுடியாதபடி கடுவரி விதிக்கப் படுங் காலத்தில், குடிகள் முறையிடுவதும், அரசன் வரிவீதத்தை மாற்றி யமைப்பதும் உண்டு. வரிப்பளுவினாலோ பஞ்சத்தினாலோ ஓர் ஊர் முழுதும் குடிபோயின், அவ் வூருக்குரிய வரியை அவ் வூரைக் கொண்ட நாடு ஏற்றுக்கொள்ளும். அவ்வூர், அண்மையி லுள்ள தெய்வத்திற்கு நாடு செழிக்கக் காணிக்கை செலுத்துமாறு, ஓரிரு செல்வரிடத்தில் ஒப்படைக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சி, மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், திருச்சிராப்ள்ளி மாவட்டத் தைச் சேர்ந்த மருதூரில் நிகழ்ந்தது.2 அரசன் வலியற்ற காலத்தில், அரசனுக்கடங்காத நாட்டதிகாரி கள், தம் கண்காணிப்பிற்குட்பட்ட நாட்டு வரியைத் தாம் பயன்படுத்திக் கொள்வதுடன் வரையிறந்த கடுவரி விதிப்பதுமுண்டு. அன்று குடிகள் உள்ளதுரியதெல்லாம் விற்றுக்கொடுக்க நேரும். வரிதண்டும் இடத்திற்கு நிலைக்களம் என்று பெயர்.3 தலை நகரல்லாத வூர்களிலும் நகர்களிலும் தண்டலாளரால் தண்டப் பட்ட காசுங் கூலமுமாகிய இருவகைப் பொருள்களும், முதலாவது நாட்டுப் பண்டாரம் என்னும் ஊர்ப் பண்டாரத்திற்சேர்க்கப்படும். நாட்டிலாயினும், தலைநகரிலாயினும், பண்டாரத்தை மேற் பார்ப்பவன் பண்டாரக் கண்காணி எனப்படுவன். பொருள்களை அளப்பதற்கும் நிறுப்பதற்கும், பண்டார நாழி என்றும் பண்டாரக்கல் என்றும் அரசமுத்திரையிட்ட படியும் நிறை கல்லும் அங்கிருக்கும். களஞ்சியம் என்றும் கருவூலம் என்றும் பண்டாரம் இருபகுதியதாகும். முன்னதில் கூலமும் பின்னதில் காசும் சேர்க்கப்படும். களஞ்சியத்திற்குக் கொட்டாரம் (கொட்டகாரம்) என்றும் பெயருண்டு. ஆண்டுதோறும், ஊர்ப்பண்டாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளவற்றில் செலவுபோக எஞ்சிய வெல்லாம், தலைநகரிலுள்ள மூலபண்டாரத்திற்கனுப்பப்பெறும். நாட்டுப்புறத்தூர்களிலும் தலைநகரிலும் தண்டப்படும் வரிகட் கெல்லாம், தலைநகரிலுள்ள வரியதிகாரிகளால் வசதியாகக் கணக்கு வைக்கப்பட்டிருந்தது. நிலங்களின் தரங்கள் குறிக்கப்பட் டிருக்கும் புத்தகம் தரவுசாத்து என்றும், நிலவரிக் கணக்கைக் குறிக்கும் புத்தகம் வரிப் பொத்தகம் என்றும், பிற வரிக்கணக்கைக் குறிக்கும் புத்தகம் புரவுவரி என்றும், எல்லா வரிகளையும் குறிக்கும் புத்தகம் அடங்கல் என்றும், செலுத்தப்பட்ட வரித்தொகைகளைக் குறிக்கும் புத்தகம் வரியிலீடு என்றும் பெயர் பெற்றிருந்தன. வரிப்பொத்தகம் வரியிலீடு என்னும் புக்தகப்பெயர்கள் அவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளையுங் குறிக்கும். அரசியல் வருமானமும் குடிகள் வருமானமும் சேர்ந்த நாட்டு வருமானத்தைப் (National Income) பெருக்குதற்குரிய பொருளாதாரம், அக்காலத்தில் இயற்றல் (Organization), ஈட்டல் (Collection), காத்தல் (Protection,) வகுத்தல் (Distribution) என்னும் நான்கு தலைப்பிற் கவனிக்கப் பெற்றது.4 இவை அரசனுக்கும் குடிகளுக்கும் பொதுவாதலின், இவற்றுள் ஒவ்வொன்றும் அரசனுக்குரியதும் குடும்பத்தலைவனுக் குரியதுமாக இவ் விருபாற் படுமாயினும், அரசியலைப்பற்றிக் கூறிவந்த இந் நூலில், அரசனுக்குரிய பகுதிகளே கூறப்படற் குரியன. இயற்றலாவது, மேன்மேலும், பொருள்கள் வரும் வழிகளை அமைத்தல் (Organization of resources),bghUŸfshtd நெல், மருந்து, பருத்தி, பொன், மணி, கோழி, ஆடு, மாடு, குதிரை, யானை முதலியன. அவை வரும் வழிகளாவன, பகைவரைக் கொள்ளையடித்தலும், பிற நாடுகளைக் கைப்பற்றித் திறைகோடலும், தன் நாட்டையும் குடிகளையும் காத்தலும் முதலாயின. ஈட்டலாவது, அமைக்கப்பட்ட வருவாய்களினின்று வரும் பொருள்களை மூலபண்டாரத்திற் சேர்த்தல். காத்தலாவது, அங்ஙனஞ் சேர்க்கப்பட்ட பொருள்களைப் பகைவர் கள்வர் சுற்றத்தார் அரசியல் வினைஞர் ஆகியவர் கவராமற் காத்தல். வகுத்தலாவது, அங்ஙனங் காக்கப்பட்ட பொருள்களை அறம் பொரு ளின்பங்களின் பொருட்டுச் செலவிடல். கடவுள், அந்தணர், அடியார். வறியார், உறுப்பறையர், வழிப்போக்கர் முதலியோர்க்குச் செலவிடுவது அறப்பொருட்டும்; பல்வகைப் புலவர்க்கும், கலைஞர்க்கும், அரசியல் வினைஞர்க்கும், படைக்கும், அரணுக்கம், அரசவுறவிற்கும், போருக்கும் செலவிடுவது பொருட்பொருட்டும், தேவியர்க்கும் சிறந்த வூணுடைக்கும், அணிகலத்திற்கும், இசைக் கூத்திற்கும், மாளிகை செய்குன்று இலவந்திகைச் சோலை முதலிய வற்றிற்குஞ் செலவிடுவது இன்பப்பொருட்டும் ஆகும். கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன், முதலாம் இராச ராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் முதலிய பேரரசர் பிறநாடுகளை வென்று கொண்ட கொண்டியுந் திறயுங் கொஞ்ச நஞ்சமல்ல. அரண்மனைச் செலவும் அரசியற் செலவும் போர்ச் செலவும் போக, எஞ்சிய பொற்காசுகளும், மணிகளும் கருவூலத்திற் போற்றப்பெறும். மதுரையில் குலசேகர பாண்டியன் கருவூலம் 1200 கோடித் தினாரம் என்னும் பொற்காசுகளையும், சொல்லாற் குறிக் கொணாப் பன்மணிக் குவியல்களையுங் கொண்டிருந்தது. 11 அளவைகள் பழந்தமிழாட்சியிற் பயன்படுத்தப்பட்ட அளவைகள், பெரும் பாலும், இக்காலத்துள்ள தமிழ் அளவைகளே. அவை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும். (1) எண்ணலளவை: எண்ணலளவை, சிற்றிலக்கம் பேரிலக்கம் என இருவகை. அரை கால் அரைக்கால் வீசம் (மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கமும், ஒன்று இரண்டு மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கமும் ஆகும். சிற்றிலக்கத்தில், கீழ்வாயிலக்க மென்றும் மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு. கீழரை 1/640, கீழ்க்கால் 1/1280, கீழரைக்கால் 1/2560, கீழ்வீசம் 1/5120, முதலியன கீழ்வாய்ச் சிற்றிலக்கமும், மேலரை (அரை), மேற்கால் (கால்), மேலரைக்கால் (அரைக்கால்), மேல்வீசம் (வீசம்) முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமுமாகும். கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தொடு ஒப்புநோக்கியே, அரை கால் அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும். மேல்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் மேல் முந்திரி என்னும் முந்திரி (1/320) யும், கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ்முந்திரி (1/102,1/400)யும் ஆகும். (2) எடுத்தலளவை: எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். கீழ்வருவருவது பொன்னளவை: 4 நெல் - 1 குன்றிமணி 2 குன்றிமணி - 1மஞ்சாடி 2 மஞ்சாடி - 1வல்லம் (பணத்தூக்கம்) 10 வல்லம் - 1 கழஞ்சு (1/6 அவுன்சு) கீழ்வருவது பிறபொருளளவை : 4 கஃசு - 1 பலம் (தொடி) 8 பலம் - 1 சேர் 5 சேர் - 1 வீசை 21/2 வீசை - 1 துலாம் (கா, தூக்கு, நிறை) 8 வீசை - 1 மணங்கு 20 மணங்கு - 1 கண்டி (பாரம்) சிலவிடங்களில் 5 வீசை கொண்டது ஒரு துலாமாக விருந்தது. அரசமுத்திரை யிட்ட அளவுக்கல், குடிஞைக்கள், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. நகரங்களில் அது நகரக்கல் எனப்பட்டது. பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல் என்னும் நிறைகல் இருந்தது. மிகப் பேரளவான பொன் துலாம் கணக்காக நிறுக்கப்பெற்றது. (3) முகத்தலளவை: முகந்தளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும் சிறந்ததாகவுமிருத்தல்பற்றி, முகத்தல ளவை நெல்லிலக்கம் எனப்படும். கீழ்வருவது முகத்தலளவை 2 செவிடு - பிடி 4 செவிடு 1 ஆழாக்கு 2 ஆழாக்கு 1 உழக்கு 2 உழக்கு 1 உரி 2 உரி 1 நாழி 8 நாழி 1 குறுணி(மரக்கால்) 2 குறுணி 1 பதக்கு 2 பதக்கு 1 தூணி(காடி) 3 தூணி 1 கலம் 400 குறுணி 1 கரிசை (பறை) அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரையும், கோயிற் பண்டாரத்தில் தெய்வப் பெயரையும் தாங்கியிருந்தன. சோழாந்தகன் நாழி அருண்மொழித் தேவன் மரக்கால் என்பன அரசன் பெயரையும், ஆடவல்லான் மரக்கால், செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால் என்பன தெய்வப் பெயரையும் தாங்கியவையாகும். இனி, ஒவ்வொரு நாட்டிற்கும் சிறப்பான பெரு முகத்தலளவும் உண்டு. பாண்டிநாட்டில் கோட்டை (21 மரக்கால்) என்பதும் வடசோழநாட்டில் புட்டி (40 மரக்கால்) என்பதும் பெருமுகத் தலளவாம். (4) நீட்டலளவை: நீட்டலளவை, வழியளவையும் நிலவள வையும் என இருவகைப்படும். இவற்றுள் நிலவளவை குழிக் கணக்கு எனப்படும். வழியளவை வருமாறு: 8 தோரை (நெல்) - 1 விரல் 12 விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம் 4 முழம் - 1 பாகம் அல்லது தண்டம் 2000 தண்டம் - 1 குரோசம் (2 1/4 மைல்) 2 குரோசம் - 1 யோசனை 71/2 நாழிகைவழி - 1 காதம் (10 மைல்) குழியளவை வருமாறு: 16 சாண் - 1 கோல் 18 கோல் - 1 குழி 100 குழி - 1 மா 240 குழி - 1 பாடகம் 20 மா - 1 வேலி செய் என்று ஒரு நில அளவு சங்ககாலத்திலிருந்தது. நிலவரியைத் துல்லியமாய் விதித்தற் பொருட்டு, சோழப்பெரு நாடு முழுமையும், முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும், முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது. அவ் வளவையை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான். அவன் கையாண்ட அளவுகோல் உலகளந்த கோல் எனப்பட்டது. எல்லை மாறும்போதெல்லாம் வளநாடுகளும் நாடுகளும் அளக்கப்பெறும். அவற்றை யளக்குங் கோல் இறையிறுக்குங் கோல் எனப்பெறும். குடிதாங்கிக் கோல் என்றும் ஓர் அளவுகோல் முன்காலத்திருந்தது. நில அளவையில், முந்திய அதிகாரத்திற் கூறிய ஊர்ப் பொது நிலங்களெல்லாம் விட்டுவிடப்படும். நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன என்பது, 1``ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிக் கீழ் நான்குமாவினால் இறை கட்டின காணிக்கடன் என்பதனால் விளங்கும். இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428, 1/800,000 வேலி. இனி, காலவளவை வருமாறு: 60 நொடி - 1 விநாடி 60 விநாடி - 1 நாழிகை 71/2 நாழிகை - 1 சாமம் 8 சாமம் - 1 நாள் 7 நாள் - 1 வாரம் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம் - 1 ஆண்டு 12 பண்டமாற்றுங் காசும் சங்ககால நாணயத்திட்டம்: உலகமெங்கணும் முதற் காலத்தில், பொருட்பரிமாற்றெல்லாம் பண்டமாற்று (Barter) முறையிலேயே நடந்து வந்தது. அதன்பின் படிப்படியாகக் காசு (நாணயம்) என்னும் பரிமாற்றுக் கருவி ஏற்பட்டது. பிற நாடுகளில், நாணயம் முதலாவது கல்லுங் கவடியும் கொட்டையும் தோல்துணுக்கும் போன்ற உலக மதிப்பற்ற குறிப் பொருளாயிருந்து, பின்பு தாது (உலோக)ப் பொருளாக மாறியது. தமிழகத்தில் ஏராளமாய்ப் பொன் விளைந்ததினாலும், பழங்காலத் திலேயே தமிழர் நாகரிக மடைந்திருந்ததினாலும், தமிழர் தொடக்கத் திலேயே தாதுக்களிற் சிறந்த பொன்னைக் காசாகப் பயன்படுத்தினர். தமிழர் முதன்முதற் பயன்படுத்திய தாது பொன்னாயிருந்த தினாலேயே பொன் என்ற சொல்லிற்கு உலோகம் என்னும் பொருளும், பிற்காலத்திற் கிடைத்த வெள்ளி செம்பிரும்பிற்கு முறையே வெண்பொன் செம்பொன் கரும்பொன் என்ற பெயர்களும் தோன்றின. உலக மதிப்புள்ளதும், உறுதியானதும், எளிதாய் இடம் பெயர்க்கக்கூடியதும், சிறு மதிப்பையும் பெரு மதிப்பையுங் குறிக்கச் சிறிதாகவும் பெரியதாகவும் வெட்டப்படக் கூடியதும், அங்ஙனம் வெட்டப்படினும் தன் அளவிற்குரிய மதிப்பிழக்காததும், உருக்கி வேண்டியாங்கு வடிவுறுத்தக் கூடியதும், பொன்னே யென்று தமிழர் கண்டுகொண்டதினால் அதனையே பரிமாற்றுக் கருவியாகப் பயன்படுத்தி வந்தனர். ஆயினும், முதலடியிலேயே, பொன் இப்போதுள்ள காசாக முத்திரையிட்ட தகட்டு வடிவம் பெறவில்லை. அது சிறிதும் பெரிது மான கட்டியாகவே (Bullion) முதலாவது வழங்கிவந்தது. அக் கட்டிகள், கொட்பயறு (காணம்), குன்றிமணி, மஞ்சாடிவிதை, கழற்சிக்காய் (கழங்கு) முதலிய பல பொருள்களின் நிறைகளுள்ள னவாயிருந்தன. அவற்றைக் கட்டிநாணயம் என்னலாம். பிற தாதுக்கள் கிடைக்கப்பெற்றுப் பொன் அருகிவந்த போது, நாணயப் பொற்கட்டிகள் பல, நாளடைவில், அராவி யெடுக்கப்பட்டு எடை குறைந்தும் செம்பு கலந்து மாற்றுத்தாழ்ந்தும் போயின. அதனால், அரசியலதிகாரிகளும் நகர வணிகர் குழாங்களும், நாணயக் கட்டிகளை யெல்லாம் உரைத்தும் நிறுத்தும் நோட்டஞ் செய்து, அவற்றுள் மாற்றும் நிறையும் சரியாயுள்ளவற் றிற்கு முத்திரையிட வேண்டிய தாயிற்று. அங்ஙனம் முத்திரையிடு வதற்குக் கட்டி வடிவினும் தகட்டு வடிவம் ஏற்றதாதலின், முத்திரை நாணயங்களெல்லாம் நாளடைவில் தகட்டு வடிவு பெற்றுவிட்டன. முத்திரையும் தகட்டு வடிவுமே நாணயத்திற்கு முதன்மையான இயல்களாதலின், முத்திரை பெற்ற நிலையைக் காசு நாணயத் தொடக்கம் எனக் கூறலாம். அன்றே யமைந்த பசும் பொன் அடர் ஆறுகோடி குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்தன் என்பான் (சீவக. 1973) என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியில் வந்துள்ள பொன் அடர் என்பதைத் தகட்டுப்பொன் என்பர் நச்சினார்க்கினியர். அடர் என்பது தகடு. கடைச் சங்க காலத்தில், பண்டமாற்று, கட்டிநாணயம், காசுநாணயம் ஆகிய மூவகை முறைகளும் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. கழஞ்சு மாழை என்பன கட்டிநாணயமாகவும், அஃகம் காணம் காசு பொன் முதலியவை காசு நாணயமாகவும் இருந்தன போலும். தனியுடைமை நாட்டிலெல்லாம், நாட்டுப்புறச் சிற்றூர்ச் சில்லறை விற்பனையில் பண்டமாற்று என்றுங் கையாளப் பெறும். சங்க காலத்தில், வெள்ளி செம்பிரும்பிருந்தும் தமிழகத்து நாணயங்களெல்லாம் தங்கத்தினாலேயே இயன்று, எத்தொகைக் கும் செலாவணி யுள்ளனவா யிருந்ததினால், அக்கால நாணயத் திட்டத்தை (Currency Standard) ஒற்றையுலோகத் திட்டம் (Mono-metallism) என்றும்; தங்க நாணயத் திட்டம் (Gold-Standard) என்றும், நிறை செலாவணிச் சட்ட நாணயத் திட்டம் (Unlimited legal tender) என்றும் கூறலாம். புலவரும் புலத்தியரும் இலக்கக்கணக்கான காணமும், காசும், பாணரும் ஆடியன்மகளிரும் ஆயிரத்தெண் கழஞ்சு கடைச்சங்க காலத்துப் பொன் நாணயங்கள் நிறை செலாவணி யுடையனவா யிருந்தமை அறியப்படும். அரண்மனைக்கு அணிகலம் செய்யும் தட்டாரே பொற்காசு களையும் அடித்துவந்தனர். காசடிக்கும் இடத்திற்கு அஃகசாலை என்றும், அதில் வினைசெய்யும் தட்டார்க்கு அஃகசாலையர் என்றும், அச்சாலையும் அவரும் இருந்த தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்றும் பெயர் வழங்கின. அஃகம் என்பது காசு என்னும் நாணயத்தில் பன்னிரண்டிலொரு பாகம் என்றும், காசு என்பது பதினான்கு குன்றிமணி எடையுள்ள தென்றும் சொல்லப்படும். அஃகமுங் காசும் சிக்கெனத் தேடு என்னும் பழமொழியினால், இவ்விரு காசுகளும் பெரு வழக்காய் வழங்கினமை அறியப்படும். மூவேந்தரும் தத்தம் முத்திரையிட்ட காசுகளையே தத்தம் நாட்டில் அரசியல் நாணயமாக வழங்குவித்தனர். அவற்றின் முத்திரை தவிர வேறொன்றும் பொறிக்கப்படவில்லை. அவை சேரன்காசு சோழன்காசு பாண்டியன்காசு என வழங்கின. அவை அளவில் சிறிது வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது. பாண்டியன் காசுகளுள் சிலவற்றில் ஒரு மீனும், சிலவற்றில் இரு மீனும், சிலவற்றில் மும்மீனும் பொறிக்கப்பட்டிருந்தன. அக்காலத்து நாணயங்கள், பொன்னாலியன்றனவாகவும், உலோக மதிப்பாகிய (Bullion value) அகமதிப்பும் (Intrinsic value) அரசியல் மதிப்பாகிய புறமதிப்பும் (Face value) ஒத்தனவாகவும் இருந்ததினால் தமிழகத்தார் மட்டுமன்றிப் பிற நாட்டாரும் விழுச்செல்வமாக விரும்பி யேற்கும் நிலையிலிருந்தன. சங்கக்காலத்திற்குப் பிற்பட்ட நாணயத்திட்டம் தமிழரசர் காசுகள்: அளவிறந்த பொற்காசுகள் கொடை வகையிற் கொடுக்கப்பட்டுவிட்டதனாலும், அணிகலம் தெய்வச்சிலை அம்பல முகடு தட்டுமுட்டு முதலிய பலவகையில் இட்டுவைக்கப் பட்ட பொன்முதல் முழுகிய முதலாய் (Sunk capital) இருந்ததினாலும், பற்பல இடங்களில் பெருந் தொகையான பொற்காசுகள் மக்கட்குத் தெரியாதபடி மண்ணிற் புதையுண்டு கிடந்ததினாலும், பிற நாட்டரசர் அடிக்கடி கொள்ளை கொண்டும் திறைகொண்டும் சென்றதினாலும், வரவரப் பொன்விளைவு சிறுத்தும் மக்கட் டொகை பெருத்தும் வந்ததினாலும், சங்ககாலத்திற்குப் பின்பு நாணயச் செலாவணிக்குப் போதிய பொன் கிட்டாமையால், கீழ்த்தர நாணயங்கட்கு முதலாவது வெள்ளி பயன்படுத்தப்பட்டது. அன்று இரட்டை ehza¤â£l«(Bimetallism) ஏற்பட்டது. சிறிது காலத்தின்பின் வெள்ளியும் அருகிவரவே, கடைக்கீழ்த்தர நாணயங் கட்குச் செம்பு பயன்படுத்தப்பட்டது. அன்று முக்கை நாணயத் திட்டம் (Trimetallism) ஏற்பட்டது. அதில், தலைத்தர நாணங்கள் பொன்னாகவும், இடைத்தர நாணயங்கள் வெள்ளியாகவும், கடைத்தர நாணயங்கள் செம்பாகவும் இருந்தன. இங்ஙனம் தங்க நாணயம் தலைமை நாணயமும் (Principal coin), வெள்ளி செப்பு நாணயம் சில்லறை நாணயமும் (Subsidiary coin) ஆயின. மூவகை யுலோக நாணயங்களும் முதலாவது ஒரே நிறையுள்ள னவாயிருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். காசு பொன் கழஞ்சு மாடை (மாழை) எனப் பலதரமாய் வழங்கிய பொன் நாணயங்களுள், உயர்ந்தவையெல்லாம் ஒவ்வொன் றாய் நீங்கி, இறுதியில் காசு ஒன்றே எஞ்சியிருந்ததாகத் தெரிகின்றது. பொன் நாணய அளவிலேயே வெள்ளி செப்பு நாணயங்களும் அடிக்கப்பட்டு, அவையும் அவற்றோடொத்த நிறையுள்ள பொன் நாணயம் போன்றே காசு கழஞ்சு மாடை என வழங்கி யிருக்கின்றன.1 மூவகை யுலோகக் காசுகளும் 14 குன்றிமணியிலிருந்து 72 குன்றிமணிவரை பல்வேறு எடையுள்ளனவாக வழங்கியிருப்பதால், ஒவ்வோர் உலோகத்திலும், பெருங்காசும் அதன் பகுதிகளான சிறு காசுகளும் வழங்கியிருந்தமை ஊகிக்கப்படும். இனி, ஒரே தரக் காசு வெவ்வேறரசர் காலத்தில் வெவ்வேறு நிறையுள்ள நிறையுள்ளதா யிருந்திருப்பதால், அவ்வவ்வரசர் காலத்து உலோக இருப்பிற்குத் தக்கபடி, காசுகளின் எடை ஏறியும் இறங்கியும் வந்ததாகத் தெரி கின்றது. போர்க் காலத்தில் அரசனால் அடிக்கப்பட்ட பொற்காசு களிலும், பொதுவாகப் பொற்கொல்லரால் திருட்டுத்தனமாய் அடிக்கப்பட்ட பொற்காசுகளிலும் செம்பு கலந்திருந்ததினால், அவற்றை மக்கள் வாசி பெற்றே வாங்கினர். அவை வாசிபெற்ற காசுகள் எனப்பட்டன. வாசியாவது, கலவைப் பொற்காசிற் கலந்துள்ள செம்பிற்காக வாங்கப்பட்ட வட்டம், தூய பொற்காசு நற்காசு எனப்பட்டது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்த மூர்த்தியாரும் திருவீழி மிழலைத் திருக்கோயிலிற் பெற்ற காசுகளும், முன்னவர் பெற்றது நற்காசும் பின்னவர் பெற்றது கலப்புக் காசுமாயிருந்தன. கலப்புக் காசிற்கு வாசி வாங்கப்பட்டது. அதனால், சம்பந்தர் வாசி தீரவே- காசு நல்கிடீர்- மாசின். மிழவையீர் - ஏச லில்லையே, என்னுந் திருப்பதிகம் பாடி நற்காசு பெற்றார். நற்காசுகளையும் கலப்புக் காசுகளையும் உரைத்துக் காண்பதற்கு ஆங்காங்குக் கட்டளைக்கல் என்னும் உரைகல்லும், தண்டவாணி என்னும் உரையாணியும் இருந்தன. காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றா தென்பதற் கறி குறியாக, அதிகாரிகளால் துளையிடப்பட்ட துளைப்பொன் என்பதும், அக்காலத்து வழங்கிற்று. 2 தூய வெள்ளிக்காசும் துளையிடப்பட்டதாகத் தெரிகின்றது. முதற்காலத்தில் அகமதிப்பும் புறமதிப்பும் ஒத்திருந்த நாண யங்கள் சில பிற்காலத்தில் நிறை குறைந்தும் தாழ்ந்த தாது கலந்தும் குறிநாணயம் (Token coins) ஆயின. சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காசுகளில், அரசர் குல முத்திரை யோடு அவ்வவ் வரசர் சிறப்புப் பெயரும் வழிபடு தெய்வக்குறியும் பிற வடிவங்களும் பொறிக்கப்பட்டன. அவை அவற்றை அடிப்பித்த அரசர் பெயரால் மதுராந்தகன் மாடை வீரபாண்டியன் காசு என வழங்கின. முத்திரை மட்டுமுள்ள பழங்காசுகள் பழம்பாண் டியன் காசு, பழஞ்சோழன் காசு எனப்பட்டன. பேரரசர் காசுகளில் அவரால் வெல்லப்பட்ட அரசர் முத்திரைகளும் உடன்பொறிக்கப் பட்டன. சில காசுகள் இருபுறமும் ஒரே வகையாகவும், சில வேறு வகையாகவும் குறிகள் கொண்டிருந்தன. காசடிப்பதற்குத் தனிவரி வாங்கப்பட்டது. அது அடிகாசு பொன்வரி மாடைக்கூலி முதலிய பெயர்களாற் குறிக்கப்பட்டது. மூவேந்தர் காசுகளும், முதலாவது சதுரமாகவும் நீள் சதுரமாகவு மிருந்து பின்னர் வட்டவடிவு பெற்றன வென்று, நாணயவாராய்ச்சி யாளர் கூறுவர். பிறவரசர் காசுகள்: கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து, வணிகத் தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் பிறவரசர் காசுகளும் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. பலகால ரோமக்காசுகள் - சிறப்பாக 4ஆம் 5ஆம் நூற்றாண் டிற்குரியவை-தமிழ்நாட்டிற் பலவிடங்களிலும், அவற்றுள்ளும் சிறப்பாக மதுரையைச் சுற்றியும், மூவுலோகத்திலும் பெருவாரி யாய்க் கிடைத் திருக்கின்றன. முதற் பாண்டியப் பேரரசுகாலத்தில் (590-925)திருப்புத்தூரிலுள்ள ஒரு பார்ப்பனியார் அவ்வூர்க் கோயிலில் ஒரு விளக்கேற்றுதற்கு 10 தினாரம் 3(ரோமப் பொற்காசு), அளித்தனர். சடாவர்மன் குலசேகர பாண்டியன் (1190-1217), தன் பெயர் தாங்கிய குளம் ஒன்றை ஆழமாக்குதற்கு 100 திரம்மம் 4 (கிரேக்கப் பொற்காசு) கொடுத்தான். இதனால் யவனக் காசுகள் அரசராலும் வழங்கப்பட்டமை அறியலாகும். பல்லவர் மேம்பட்டிருந்த இடைக்காலத்தில், அவருடைய காளை முத்திரையும் விளக்கு சக்கரம் முதலிய பிற குறிகளும் பொறிக்கப்பட்ட காசுகள், சோழநாடு முழுமையும் பரவியிருந்தன. 12ஆம் நூற்றாண்டில் வீரபாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடந்த உள்நாட்டுப் போரில், முன்னவனுக்குத் துணையாயிருந்த முதலாம் பராக்கிரமபாகு என்னும் இலங்கை யரசனுக்குப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட ஆதிக்கத்தினால், அவனது காகப் பணம் என்னும் ஈழக்காசு சிறிதுகாலம் தென்னாட்டில் வழங்கிற்று. அது சதுரமானதும், 72 அல்லது 73 குன்றிமணி எடையுள்ளதும், ஒரு முரட்டு மாந்தன் ஒரு புறத்தில் நிற்பதும் ஒரு புறத்தில் இருப்பதும் போலப் பொறித்ததும், அரசு (போதி) யானை சக்கரம் கும்பம் முதலிய உருவங்களைக் கொண்டதுமான செப்புக் காசாகும். சாளுக்கியர்க்குத் தமிழ்நாட்டின் வடபாகத்தில செல்வாக் கேற்பட்ட பிற்காலத்தில், அவர்களது வராக முத்திரை கொண்டதும் 3 1/2 ரூபா மதிப்புள்ளதுமான வராகன் என்னும் பொற்காசு, தமிழ்நாடு முழுமையும் வழங்கிற்று. 14ஆம் நூற்றாண்டில், டில்லியிருந்து ஆண்ட டோக்ளாக் (1325-50) என்னும் முகமதியப் பேரரசனின் தங்கர் என்னும் செப்புக்காசு, தென்னாடுவரை வழங்கியதாகத் தெரிகின்றது. இங்ஙனம், இறுதிக்காலத்தில், மூவேந்தர் காசுகளிடையே வேறு பல்லரசர் காசுகளும் விரவி வழங்கியிருந்திருக்கின்றன. 13 மறமும் போரும் நாடுகாவல் நன்மை செய்தல் பொருதல் ஆகிய மூவகை அரச வினைகளுள், இறுதியது அரசர்க்குச் சிறந்ததாதலின், அது வினையென்னும் பொதுச்சொல்லால் விதந்து குறிக்கப் பெறுவது மரபு. அரசர் போர் ஆசை, பாதுகாப்பு, பகை, தண்டனை, மறம், அருள் என்னும் அறுவகைக் காரணத்தாற் பிறக்கும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, புகழாசை, விண்ணாசை என ஆசை ஐவகைப்படும். தற்காப்பு, நாட்டுக்காப்பு, மதக்காப்பு எனப் பாதுகாப்பு மூவகைப்படும். பழிதீர்ப்பு, பழம்பகை, பொறாமை எனப் பகை மூவகைப்படும். பிறவரசரின் இகழ்ச்சிபற்றியதும் திறையிறாமை பற்றியதும் படையெடுப்புப் பற்றியதும் எனத் தண்டனை மூவகைப்படும். மறம் ஒன்றே. அது கடுமறம். தன் குடிகள்மீது கொண்டதும் பிறர் குடிகள்மீது கொண்டதும் என அருள் இருவகைப்படும். இவற்றுள் முன்னது, கடல்கோள் நேர்ந்தவிடத்து வாழ் நிலமில்லாக் குடிகட்குப் பிறர் நாட்டுப் பகுதிகளை வென்று தருவது போன்றது; பின்னது, கொடுங்கோல் மன்னர் ஆட்சியினின்று அவர் குடிகளை மீட்பது போன்றது. இனி, ஓர் அரசன் இறந்தபின் நேர் பிறங்கடை யில்லாவிடத்து நிகழும் தாயப்போரும் உண்டு. அது தன்னுரிமை காப்பதாகலின் தற்காப்பின்பாற்படும். அரசர் தம் பகையரசர் திறந்து நடந்துகொள்ளும் முறை இன்சொல், பிரிப்பு, கூட்டு, கொடை, உடன்படிக்கை, சந்து, தண்டனை, அசைவின்மை, ஆகுலம், அரட்டு, வஞ்சனை, ஒளிவு, புகலடைவு, மற்போர், கலைப்போர் எனப் பதினைந்து திறத்தது. பிரிப்பென்பது, பகையரசரின் துணைவரை அவரினின்று, பிரித்துவிடுவது. கூட்டு என்பது, பகையரசரின் துணைவரைத் தம்மொடு கூட்டிக் கொள்வதும், பிறவரசரைத் தம்மொடு கூட்டிக் கொள்வதும் என இருவகையது. சந்து என்பது, இரு பகையரசரை மூன்றாம் அரசன் இசைத்து வைப்பது. தண்டனை என்பது, போர். அசைவின்மை யென்பது, பகையைப் பொருட்படுத்தாது வாளா விருத்தல். ஆகுலம் என்பது, ஆரவாரம். அது தொண்டைமான் ஔவையார்க்குத் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டியதும், போர்க்களத்தில் பகைவர் அஞ்சுமாறு படைகளை அணிவகுத்து நிறுத்தியதும் போன்றது. அரட்டு என்பது, நெடுமொழி அல்லது வஞ்சினம். வஞ்சனையென்பது, மறைந்திருந்து தாக்குவதும், மூவேந் தரும் பாரியையும் முத்திநாதன் மெய்ப்பொருள் நாயனாரையும் வஞ்சித்துக் கொன்றதும் போன்றது. ஒளிவு என்பது, மலையிற்போய் ஒளிந்துகொள்வது. புகலடைவு என்பது, வேற்றரசனிடம் சென்று அடைக்கலம் புகுவது. மற்போர் என்பது, படைவலியால் வெல்ல வியலாத போது மாற்றரசனை மற்போரால் வெல்வது. கலைப்போர் என்பது, இராவணன் தென்னாட்டிற் புகாதவாறு அகத்தியர் பாண்டியன் சார்பாக அவனை இசையாற் பிணித்தது போல்வது. பழங்காலத்தில், ஓர் அரசன் தன் பகைவனைப் போரில் வெல்ல முடியாவிடின், அவனை வேறொரு கலையில் வெல்வதும் சிறுபான்மை நிகழ்ந்து வந்தது. பிற வெளிப்படை. பண்டைக்காலத்தில் போர்வினை, வெட்சி கரந்தை வஞ்சி தும்பை உழிஞை நொச்சி காஞ்சி என எழுவகைப் பட்டிருந்தது. அவ் வெழுவகையும் முறையே, வெட்சி கரந்தை முதலிய எழுவகைப் பூக்கள் அல்லது பூமாலைகள் சூடிப் பொரப்பட்டமையால், அப் பெயர் பெற்றன. வெட்சி என்பது பகைவர் அல்லது வேற்றரசர் நாட் டிலுள்ள ஆநிரைகளைக் கவர்வது. இது ஒரு நாட்டு மறவர் தாமே கவர்வதும், தம் அரசனால் ஏவப்பட்டுக் கவர்வதும், என இருவகை. இவற்றுள், முன்னது தன்னுறு தொழில் என்றும், பின்னது மன்னுறு தொழில் என்றும் கூறப்படும். கரந்தையென்பது கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டல். வஞ்சியென்பது, வேற்று நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லல். தும்பை யென்பது, ஒரு வெளி நிலத்திற் பொருதல். உழிஞை யென்பது, ஓர் அரசன் வேற்றரசன் நகரை முற்றுகையிடல். நொச்சியென்பது, முற்றுகை யிடப்பட்டவன் தன் நகரைக் காத்தல். காஞ்சியென்பது, நிலையாமை விளங்கித் தோன்றும்படி எண்ணிறந்தவர் விரைந்து படுமாறு இருபடைகளும் ஊன்றிப் பொருதல். போர் செய்தற்கு, அரசன் நாட் பார்த்தலும் அவனுடைய மறவர் குறிபார்த்தலும் மரபு. அரசன் பெருங் கணியை வினவி நல்ல நாட்குறித்து, அதில் படையொடு போருக்குப் புறப்பட வசதியில்லா விடின், அன்று தன் குடையையும் வாளையும் கோட்டை வாயிலுக்கு வெளியே போக்கி வைப்பது வழக்கம். இது குடைநாட்கோள் என்றும், வாள்நாட்கோள் என்றும் கூறப்படும். சிறுபான்மை முரசையும் இங்ஙனம் போக்கி வைப்பதுண்டு. பொதுவாக, போருக்குப் பரணிநாள் சிறந்ததாகக் கொள்ளப்படும். மறவர் குறிபார்த்தல் வாய்ப்புள், உன்னம், புள், விரிச்சி என நால்வகைப்படும். வாய்ப்புள் என்பது, தற்செயலாகப் பிறர் வாயினின்று கேட்கப்பெறும் மங்கலச் சொல் அல்லது நற்சொல். உன்னம் என்பது, ஒரு குறிப்பிட்ட உன்னமரம் தழைத்துவரின் தம் அரசனுக்கு வெற்றி யென்றும், அது பட்டுப்போயின் அவனுக்குத் தோல்வி யென்றும் படை மறவர் குறித்துக்கொள்ளுதல். புள் என்பது, ஆந்தை கூகை முதலிய பறவைகள் ஒலிக்குந் தரமும் காகம் வல்லூறு முதலிய பறவைகள் பறக்குந் திசையும்பற்றிக் குறித்துக்கொள்ளும் நிமித்தம். விரிச்சி யென்பது, போர்மறவர் போய்த் தங்கி யிருக்குமிடத்தில் நள்ளிரவில் ஓர்த்துக்கேட்கும் வானச்சொல். அரசர் தம் மகப்பேற்றுக் காலத்தில் பொதுவாய்ப் போருக்குச் செல்வதில்லை. போருக்குச் செல்வதற்கு இரண்டொரு நாட்கு முன்பு, வள்ளுவன் யானைமீதேறி முரசறைந்து அதைப்பற்றித் தலை நகரத்தார்க்கு அறிவிப்பான். போருக்குப் புறப்படுமுன் அரசன் படைமறவரை ஊக்குவித்தற் பொருட்டு அவர்க்கு ஒரு சிறந்த விருந் தளிப்பது வழக்கம். அது பெருஞ்சோற்றுநிலை எனப்படும். அதன் பின் போர் மறவர்க்கு அடையாளப்பூவும் போர்ப்பூவூம் படைக் கலங்களும் அரசனால் வழங்கப்பெறும். படைத் தலைவர்க்கும், சிறந்த மறவர்க்கும் இயற்கைப் பூவிற்குப் பதிலாகப் பொற்பூ அளிக்கப்பெறுவதுமுண்டு. அரசன் தானும் போருக்குச் செல்வதுமுண்டு; செல்லாமையு முண்டு; செல்வதே பெரும்பான்மை, அரசன் தனக்கு வெற்றியென்று முழுவுறுதியாயிருப்பின், பகைவர் நாட்டைக் கைப்பற்றுமுன்னரே, அதைத் தன் இரவலர்க்கும் படைத் தலைவர்க்கும் பங்கிட்டுக் கொடுத்துவிடுவதும் ஒரோவிடத் துண்டு. அது கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் எனப்படும். (தொல். 1013.) போருக்குப் புறப்படும் அன்று போர்முரசுகள் முழுக்கப் பெறும். போர்மறவர், குளித்து வட்டுடையணிந்து படைக்கலந் தாங்கிப் பூச்சூடி அணிவகுத்து, கொற்றவைக்கு நரபலியிட்டு, நெடு மொழியும் வஞ்சினமுங் கூறி யாரவாரித்து, நகருக்கு வலமாகப் புறப் பட்டுச் செல்வர். பொன்னுலகப் பேற்றை விரும்பும் சில மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுக் கொள்வதுண்டென்பது, சிந்தாமணி யால் தெரிய வருகின்றது (778). போர்ப்படைகள் பகை நாட்டூடு செல்லும்போது கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். பண்டைக்காலப் போர்க்கருவிகள், எய்படை, எறிபடை, குத்துப் படை, வெட்டுப்படை, அடிபடை, தடுபடை என அறு வகைய. வில்லம்பு எய்படை, விட்டேறு எறிபடை; வேல் ஈட்டி குந்தம் முதலி யன குத்துப்படை; வாள் வெட்டுப் படை; மழு தண்டு முதலியன அடிபடை, கவசம் கேடகம் முதலியன தடுபடை. இனி, எரிமருந்து கல்வெட்டிற் குறிக்கப்பட்டிருப்பதால், இப்போது வேடிக்கைக்காக விடப்படும் வாணம்1, பழங்க காலத்தில் உழிஞைப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. படைகள் போருக்குச் செல்லும்போது, பொதுவாக, முதலாவது காலாட்படையும், இரண்டாவது குதிரைப் படையும், மூன்றாவது தேர்ப் படையும், நான்காவது யானைப்படையும் செல்லும். ஒவ்வொரு படையிலும் சேனைக் கணிமகன் என்னும் கணியன் இருப்பான். சேனை முழுவதிற்கும் பொதுவான் கணியன் சேனைப் பெருங்கணி எனப்படு வான். தன் நாட்டில் நடக்கும் போராயினும், அயல்நாட்டில் நடக்கும் போராயினும், அரசன் செல்லும் போதெல்லாம் அவனுடன் புலவர் பாணர் கூத்தர் முதலியோரும் செல்வது வழக்கம். சேரன் செங்குட்டு வனுடன் வடநாடு சென்ற நாடக மகளிர் நூற்றிருவரும், குயிலுவர் (வாத்தியக் காரர்) இருநூற்றெண்மரும், நகைவேழம்பர் நூற்றுவரும் ஆவர். தலைநகருக்குத் தொலைவான இடத்தில் நடக்கும் போருக் கெல்லாம் பாசறை அமைத்து முள்வேலி கோலப் பெறும். அது வேனிற் காலத்தில் அமைக்கப்பெறின் வேனிற் பாசறையென்றும், குளிர் காலத்தில் அமைக்கப்பெறின் கூதற் பாசறை யென்றும் பெயர் பெறும். மற்றக் காலங்களில் நீண்டநாட்போர்கள் பொதுவாக நிகழ்த்தப் பெறுவதில்லை. வேனிற்போர் கார்தொடங்குமுன் அல்லது தொடங்கியவுடன் முடிக்கப்படும். எந்தப் போருக்கும் இத்துணைக் காலம் என்னும் யாப்புறவில்லை. போருக்குச் செல்லுங் காலம் படைகளின் நிலையையும் போர்க்களத்தின் தொலைவையும் பொறுத்தது. ஒருநாட் போருமுண்டு; பல்லாண்டுப் போருமுண்டு. சேரன் செங்குட்டுவன் ஈராண்டெட்டு மாதமும், முதற் குலோத் துங்கன் ஈராண்டும் வடநாட்டுப் போரிற் செலவிட்டனர். பாசறை பாடிவீடு எனவும்படும். போர் தொடங்குமுன், போர்க்களத்தையடுத்த வூர்களிலுள்ள ஆநிரைகள், பார்ப்பனர், பெண்டிர், மகப்பெறாதோர், பிணியாளர், சிறுவர், முதியோர் முதலியோர் அவ்விடத்தினின்றகன்று பாது காவ லான இடத்தை அடையும்படி எச்சரிக்கப் பெறுவர். போர்க்களத் திற்குப் பறந்தலை என்று பெயர். போர் தொடங்கும்போது, யானைப்படை மிகுந்த அரசர் தம் யானைகளை விட்டுப் பகைப் படைகளையுழக்கச் செய்வர். அவ்வச் சமயத்திற்கேற்ப, சதுரம், நீள்சதுரம், வில், வளையம், வட்டம், அரை வட்டம், சக்கரம், சிறை, விரிபறவை முதலிய வெவ்வேறு வடிவில் சேனைகள் அமைக்கப்படும். போர் நெடுகலும் முரசுகள் முழங்கும். பகையரசன் தலையையேனும் பகைப் படைத்தலைவன் தலையை யேனும் கொண்டுவந்து காட்டிய பொருநனுக்கு, அரசன் பெருங் கொடை யளிப்பன். அது தலைமாராயம் எனப்படும். பொதுவாய், கரி பரி தேர் கால் என்னும் நால்வகைப் படை களுள் ஒவ்வொன்றும் தன்தன் இனத்துடனேயே பொரும். அங்ஙனமே படைமறவர் படைத்தவர் அரசர் ஆகிய முத்தரத்தாரும் தத்தம் தரத்தினருடனேயே பொருவர். படைஞர் முன்பும் படைத்தலைவர் பின்பும் அரசர் இறுதியும் பொருவது இயல்பு. சிறுபான்மை படை மயக்கம் ஏற்பட்டு இம் முறை மாறியும் நிகழும். பலநாட் போராயின், பகல்தொறும் பொருது இராத் தொறும் பாசறையில் தங்குவர். போரிடையே, தோற்கும் நிலையிலிருக்கும் அரசன் போர்க் களத்தினின்றும் பாசறையினின்றும் தூதுவிடுப்பதும், மாற்றரசன் அதை மதித்து உடன்படிக்கைக் கிணங்குவதும், மதியாது தூதனைச் சிறையிடுவதும் பெண்கோலம் பூணுவித்து அனுப்புவதும் உண்டு. ஆடையிழந்தவன், குடுமி குலைந்தவன், ஆயுதமிழந்தவன், பாசறை புகுந்தவன், தோற்றோடுபவன் முதலியோரோடு பொருதலும்; புண்பட்டு விழுந்தவனைக் கொல்லுதலும்; படைமடமாகக் கருதப் பட்டன. போர் முடிவு அரசனுட்பட அனைவரும் பொருது மடிதல், ஈரரசரும் உடன்படிக்கை செய்தல், சிறைபிடிக்கப்பட்ட அரசன் திறை கொடுத்தல், தோற்ற அரசன் ஓடிப் போதல் ஆகிய நால்வகை நிலை களுள் ஒன்றாயிருக்கும். வென்ற அரசன், வெல்லப்பட்ட அரசனை நட்பரசனாக்கி மணவுறவு பூணல், சிற்றரசனாக்கித் திறையிடுவித்தல். பெருந் தண்டம் இறுவித்தல், காட்டிற்குத் துரத்திப் பதிலாளியமர்த்தல், மானக்கேடு செய்தும் செய்யாதும் சிறையிடல், கொல்லுதல் ஆகிய அறுவகைச் செயல்களுள் ஒன்றைச் செய்வன். பிற்கூறப்பட்ட முந்நிலைகளிலும், தோற்ற அரசனின் தேவிமார் வென்ற அரசனின் தலைநகரிலுள்ள வேளம் என்னும் சிறைக்கோட்டத்தில் சிறையிடப் படுவதுண்டு. கரிகால் வளவனும் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் போல் சிறையினின்று தப்பித் தம் உரிமையையும் நாட்டையும் மீளப் பெற்றாருமுளர். போர் முடிந்தபின், அரசன் தன் மறவருள் காயப்பட்டவரைத் தேற்றலும் போற்றலும், பொருதுபட்டவரின் மக்கட்கு நன்கொடை யளித்தலும் வழக்கம். வெற்றியரசன் தோற்ற அரசனொடு நட்புறவு பூணாவிடத்து, அவன் தலைநகரைக் கொள்ளையடித்தல், அதனை எரியூட்டுதல், அங்குள்ள வயலழித்தல் முதலிய அழிப்புத் தொழிலும்; கட்டடமும் மதிலுமிடித்துக் கவடி வித்துதல், கடிமரந் தடிதல், காவற் பொய்கையை யானைகளை விட்டுக் கலக்கல், நாடு நகர் முதலியவற்றின் பெயரை மாற்றல் 2 முதலிய அவமானத் தொழிலும் செய்து பெருமைகொள்வது பெரும்பான்மை. கொள்ளையடிக் கப்பட்ட பொருள்களுள், கருவூலமும் விருதுகளும் யானை குதிரையும் அரசனைச் சேரும்; மற்றவை மறவரைச் சேரும். வென்ற இடத்தில், கல்வெட்டல், வெற்றித்தூண் நாட்டல், பெருமலையிருப்பின் அதில் தன் இலச்சினையைப் பொறித்தல், தன் ஆணை அடிப்படும்வரை தங்கியிருத்தல் முதலிய செயல்களையும் வெற்றியரசன் மேற்கொள்வதுண்டு. வெற்றிவிழா, இயலும்போ தெல்லாம், வென்ற அரசன் தலைநகர் வெல்லப்பட்ட அரசன் தலைநகர் ஆகிய ஈரிடத்தும் கொண்டாடப்பெறும். இவற்றுள் முன்னையிடத்தில் அது தப்பாது நிகழும். போரில் நேர்ந்த குற்றங்கட்குக் கழுவாயாக, கோயிற்கும் மறையோர்க்கும் சிறந்த கொடைகள் நிகழ்த்தப்பெறும். போரிற்பட்ட படைத்தலைவர்க்கும் சிறந்த மறவர்க்கும், அவருடைய ஊரும் பேரும் போரும் சீரும் பொறிக்கப்பட்ட கல் நடப்பெறும். அது நடுகல் என்றும் பட்டவன் குறி என்றும் அழைக்கப் பெறும். நடுகல்லை நீர்ப்படைசெய்து அதற்கு மாலை சூட்டிப் படைப்பதும், கோயிலெடுத்து விழவயர்வதும் உண்டு. 14 அறமுங் கொடையும் அறம்: அறநெறியிற் பொருளீட்டி அப் பொருளால் அறநெறியில் இன்பந் துய்க்கவேண்டும் என்பதை உணர்த்தற்கே, அறநூலார் இம்மைப் பொருள் மூன்றையும் அறம் பொருள் இன்பம் என்னும் இம் முறைப் படுத்திக் கூறினர். ஒவ்வொருவனும் அறநெறியில் தன்தன் தொழிலைச் செய்வதே, அவனவன் பொருளீட்டி இன்பந்துய்க்கும் வழியாகும். அரசன் தொழிலாவது நாடுகாவல். போர்வினையும் நாடுகாவலுட் பட்டதே. அதனால் அக்காலத்து அரசர் பெரும்பாலும் தம் வினைகளி லெல்லாம் அறத்தைக் கடைப்பிடித்தனர். குறளரும் சிந்தரும், அரண்மனையில் மகளிர் உறையும் உவளக மெய்காவலராக அமர்த்தப்பெற்றனர். தேவாரம் பாடும் குருடர் பதினறுவர், திருவாமத்தூர்க் கோயிலில் தேவாரப்பாட கராக அமர்த்தப் பெற்றிருந்தனர். இங்ஙனம் சில எச்சப் பிறவியர்க்கு வாழ்க்கை வசதி செய்யப்பட்டிருந்தது. சிறுவர், மெலியார், தூயர் முதலியோரைக் கொல்லாமையும்; பொருநிலையற்றவன், தோற்றோடுபவன் முதலியோரொடு பொரா மையும்; அடைக்கலம் புகுந்தவனைக் கைவிடாமையும் போரறங் களாகப் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டன. பண்டைத் தமிழரசர், தம் நாட்டை அல்லது குடிகளை ஆளும் தொழிலை ஆட்சி என்னுஞ் சொல்லாற் குறியாது, காவல் புரவு ஓம்பல் முதலிய சொற்களாலேயே குறிக்க விரும்பினர். அவர் காவல் பூண்ட இடம், குடைநிழல் என்றும் அடிநிழல் என்றும் குறிக்கப்பட்டது. நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கொன்றதால் தன் கோல் கோடிற்றென்று கண்ட நொடியே உயிர் துறப்பானாயின், அவன் அறவுணர்ச்சி எத்துணை அளவிறந்ததாய் இருந்திருத்தல் வேண்டும்! கொடை: அக்காலத் தரசர், அறம்நோக்கியும் கலை வளர்ச்சி பற்றியும் ஊழியப் பாராட்டாகவும், வினையூக்கற் பொருட்டும், பல்வேறு கொடை நிகழ்த்தி வந்தனர். அவை உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை, விலங்குக் கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக் கொடை என ஒன்பான் வகைப்படும். பார்ப்பனர்க்கு நாள்தோறும் உணவளிக்கும்படி, ஆங்காங்குக் கோயில்களிலும் மடங்களிலும் ஊட்டுப்புரைகளிலும் நிதியும் மானியமும் விட்டிருந்தது, உண்டிக் கொடையாகும். பெருஞ் சோற்றுதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப் படைகளிரண்டிற்கும் பதினெட்டு நாளும் பெருஞ்சோறு வழங்கியதும், உண்டிக்கொடை யின் பாற்படும். புலவர்க்களித்த பல்லாயிரக்கணக்கான பொற்காசும், பாணர்க்களித்த பொற்றாமரைப்பூவும், பாடினியர்க்கும் விறலியர்க் கும் அளித்த பொன்னரிமாலையும், ஆடல் பாடல் அரங்கேறிய பாணர்க்கும் கணிகையர்க்கும் அளித்த ஆயிரத் தெண்கழஞ்சு பொன்னும், 1 வெற்றி விழாத் தொடர்பாக மறையோர்க்களித்த துலாபாரம் 2 என்னும் ஆள்நிறைப் பொன்னும் இரணியகருப்பம் என்னும் பொற்குடமும் பொற் கொடையாகும். புலவர் பாணர் கூத்தர் முதலியோர்க்களித்த குதிரை யானை தேர் என்பவை ஊர்திக்கொடையாகும். மறையோர்க் கவ்வப்போ தளித்த ஆவாயிரம் (கோசகஸ்ரம்) விலங்குக்கொடையாகும். அவைக்களத் தலைமைப் புலவர்க்களித்த குடை கொடி சிவிகை முதலிய விருதுகளும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க் களித்த தலைக்கோலும், வணிகத் தலைவர்க் களித்த எட்டிப் பூவும், படைத்தலைவர்க் களித்த ஏனாதி மோதிரமும், அமைச்சர்க் களித்த காவிதிப்பூவும் சின்னக்கொடையாகும். உழுவித்துண்ணும் வேளாளர்க் களித்த வேள் அரசு என்னும் பட்டங்களும், வணிகர் தலைவர்க் களித்த எட்டிப் பட்டமும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க் களித்த தலைக்கோற்பட்டமும், அமைச்சர்க்களித்த காவிதிப் பட்டமும், படைத்தலைவர்க் களித்த ஏனாதிப்பட்டமும், பலவகை அரசியலதிகாரிகட் களித்த அரையன் (ராயன்) மாவரையன் (மாராயன்) பேரரையன் விழுப்பேரரையன் மூவேந்த வேளான் முதலிய பட்டங்களும். சிற்றரசர்க் களித்த பிள்ளை மக்கள் நாயனார் என்னும் பட்டங்களும் பெயர்க் கொடையாகும். இனி, அரசர் தம் குடிப்பெயர்களை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும், தம் சிறப்புப் பெயர்களைச் சிற்றரசர்க்கும் பட்டப்பெயராகவும் பெயரடையாகவும் இடுவது முண்டு. சேரன் செங்குட்டுவனின் படைத்தலைவன் வில்லவன் கோதை என்றும், அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சரான மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்றும், மூன்றாங் குலோத்துங்கச் சோழனின் சிற்றரசருள் ஒருவன் குலோத்துங்கச் சோழப் பிருதிகங்கன் என்றும் பெயர் பெற்றிருந்தமை காண்க. அரசியல் வினைஞர், பொருநர் (போர் மறவர்), பொது நல வூழியர், புலவர், கலைஞர், வணிகர், மறையோர், அறச்சாலை, மடம், கோயில் முதலியோர்க்கு அளித்த நிலம் நிலக்கொடையாகும். அது முற்றூட்டு, இறையிலி, இறைநிலம், நிலவிறை ஆகிய நால்வகை நிலைமையிலும்; நிலம் ஊர் நாடு என்னும் மூவகையளவிலும் கொடுக்கப்பட்டது. ஒருவகை வரியு மில்லாதது முற்றூட்டு. அது உறாவரை, காசு கொள்ளா விறையிலி எனவும்படும். அரசிறை மட்டும் நீங்கியது இறையிலி. இறையிறுக்கும் நிலம் இறைநிலம். நிலத்தில் வரும் இறையைமட்டும் நுகர்வது நிலவிறை. அரசியல் வினைஞர்க்கு, அக்காலத்தில் சம்பளம் உம்பளம் என்னும் இருவகையில் வேலைப்பயன் அளிக்கப்பட்டது. நெல்லாக வேனும் காசாகவேனும் கொடுப்பது சம்பளம்; நிலமாகக் கொடுப்பது உம்பளம். உம்பளம் மானியம் எனப்படும். அது நிலையானது; பெரும்பாலும் இறையிலியா யிருப்பது. மானியவகை: அரசியல் வினைஞருள், ஊர்த்தலைவனுக்குக் கொடுப்பது அம்பலமானியம்; ஊர்க்கணக்கனுக்குக் கொடுப்பது கணக்கக்காணி; வெட்டியானுக்குக் கொடுப்பது வெட்டிப்பேறு. அரசியல் வினைஞருள் ஒருசாராரான பொருநருள், படைத்தலை வனுக்குக் கொடுப்பது அமரநாயகம்; போரிற் பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுப்பது இரத்தக்காணி (இரத்தக் காணிக்கை, இரத்த மானியம், உதிரப்பட்டி). பொதுநலவூழியருள், குடிமக்கட்குக் கொடுப்பது குடிமக்கள் மானியம்; பறையடிப்பவனுக்குக் கொடுப்பது பறைத்துடைவை; உவச்சனுக்குக் கொடுப்பது உவச்சக்காணி; மருத்துவனுக்குக் கொடுப்பது மருத்துவப் பேறு; நச்சு மருத்துவனுக்குக் கொடுப்பது விடகர (விஷஹர) போகம்; ஏரியுடைப்பை அடைத்தவனுக்குக் கொடுப்பது ஏரிப்பட்டி, இவையெல்லாவற்றிற்கும் பொதுப்பெயர் ஊழியமானியம் என்பது. இவற்றுட் பல, ஊரவையாராற் கொடுக் கப்பட்டவையேனும், அரசவொப்பம் பெற்றவை. வணிகருட் சிறந்த தொண்டு செய்தவனுக்குக் கொடுப்பது எட்டிப்புரவு. புலவர்க்குக் கொடுப்பது புலவர்முற்றூட்டு. கலைஞருள், நட்டுவனுக்குக் கொடுப்பது நட்டுவ நிலைக் காணி; கணியனுக்குக் கொடுப்பது கணிமுற்றூட்டு. மறையோர் என்னும் பிராமணருக்குக் கொடுப்பது பிரமதாயம் (பிரமதேயம்.) அது தொகுதிப்பட்டவருக்குக் கொடுப் பதும் தனிப்பட்டவர்க்குக் கொடுப்பதும் என இருவகை. அகரப் பற்று, அக்கிரசாலைப்புறம், அக்கிரகாரவாடை என்பன தொகுதிப் பட்டவர்க்குரியன. பார்ப்பனர்மட்டும் குடியிருக்கும் இறையிலி நிலம் அகரப்பற்று. பார்ப்பனர் பெரும்பான்மையாகவும் பிறர் சிறுபான்மையாகவும் குடியிருக்கும் இறையிலிநிலம் அக்கிரகார வாடை, பார்ப்பனரை உண்பிக்கும் அக்கிரசாலைக்கு விடப்பட்ட மானியம் அக்கிரசாலைப் புறம். வேதவிருத்தி, பட்டவிருத்தி, அத்தியயனவிருத்தி (அத்திய யனாங்கம்), தயித்திரியக் கிடைப்புறம், பாரதப்புறம் முதலியன தனிப் பட்டவர்க்குரியன. சத்திரம், அடிசிற்சாலை (ஊட்டுப்புரை, சோற்றடைப்பு, அன்னசத்திரம்) முதலியவற்றிற்கு விடும் மானியம் சாலைப்புறம் (சாலாபோகம்). அடிசிற்சாலைக்குமட்டும் விடப்படுவது அடிசிற்புறம் .தண்ணீர்ப்பந்தலுக்கு விடப்படுவது தண்ணீர்ப்பட்டி. மடத்திற்கு விடப்படுவது மடப்புறம். கோயிற்கு விடப்படுவது தேவதானம் அல்லது தேவதானப் பற்று (தேவதாயம், திருநாமத்துக்காணி, திருவிடையாட்டம், திரவிடைப் பற்று.) குடியிருக்கும் மக்களோடு சேர்த்துக் கோயிற் களிக்கப்படும் நிலம் குடி நீங்காத் திருவிடையாட்டம் எனப்படும். பிடாரிகோயிற்கு விடப்படும் மானியம் பிடாரிபட்டி அல்லது பிடாரிவிளாகம் என்றும், சமண பௌத்தப் பள்ளிகட்கு விடப் படுவது பள்ளிச்சந்தம் என்றும் பெயர் பெறும். அறம் நோக்கியும் மதம்பற்றியும் விடப்படும் மானிய மெல்லாம் பொதுவாக அறப்புறம் எனப்பெறும். பார்ப்பனர்க்கும் கோயிற்கும் ஒரு முழுவூரைத் தானஞ் செய்யும் போது, ஒரு பெண்யானையை அவ் வூரைச் சுற்றிப் போகவிட்டு, அது போனவழியே எல்லையமைத்துக் கல்லுங் கள்ளியும் நட்டி, நீரட்டிக் கொடுத்து, பெரும் பணைக்காரன் என்னும் அதிகாரி வாயிலாய், செப் பேட்டில் அரசாணை (ஆணத்தி) பொறிப்பது மரபு. பெண்யானையை விட்டு எல்லையமைத்தல் பிடிசூழ்ந்து படாகை நடத்தல் எனப்படும். தானஞ் செய்யப்படும் ஊரிலுள்ள உழுவித்துண்பார் காராண்மை என்னுஞ் சொல்லா லும், உழுவித்துண்பார் மீயாட்சி என்னுஞ் சொல் லாலும் குறிக்கப்பெறுவர். இனி, ஓர் ஊரை மேற்பார்க்குங் கூட்டமும் மீயாளுங்கணம் எனப்படும். நீரட்டிக் கொடுத்த செப்பேட்டுத் தான மெல்லாம் அட்டிப்பேறு எனப்பட்டன. கோயிற்கு விடப்படும் நிலமெல்லாம் இறையிலியாக இருக்க வேண்டி யிருந்தமையின், அரசன் தானாய்ச் செய்யாத தேவதான மெல்லாம் அவனுடைய இசைவு பெற்றே செய்யப்பட்டன. அங்ஙனஞ் செய்யும்போது, இறைநீங்கலால் அரசிற்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக, தானஞ் செய்பவன் அல்லது செய்பவர் ஒரு குறித்த தொகையைப் பண்டாரத்திற் சேர்க்கும்படி ஊரவையாரிடம் கொடுத்துவிடுவது வழக்கம். ஒரு நிலம் அல்லது ஊர் இறையிலியாக்கப்படும் போது, அதன் இறைநீக்கம் இறங்கல் என்றும், அதை இறையிலிப் பதிவுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதுதல் நீங்கல் அல்லது நாட்டு நீங்கல் என்றும் குறிக்கப் பெறும். வரிக்கணக்கையும் நிலங்களின் நிலைமை யையும் எந்தச் சமயத்திலும் தெரிந்து கொள்ளற் பொருட்டு, பல்வேறு கணக்குகள் வைக்கப்பட்டிருந்தமையின், சில சமயங் களில் ஓர் இறையிலி ஆணைக்கு ஐம்பதின்மருக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைந்நாட்டிட வேண்டியிருந்தது. இறுதியில் அரசன் இடும் முடிவான ஆணை கடையீடு எனப்பட்டது. நாட்டுக் குழப்பத்தினால் இழக்கப்பட்ட மானிய வுரிமையை, குழப்பம் நீங்கியபின் சான்றுகாட்டி மீண்டும் பெற்றுக்கொள்ள அக்காலத்து இயல்கை (சாத்தியம்) இருந்தது. களப்பாளர் ஆட்சியில் இழக்கப்பட்ட வேள்விக்குடிப் பிரமதேய வுரிமை, இரு நூற்றாண்டிற்குப் பின் மீள நாட்டப்பெற்ற பாண்டிய வாட்சியின் ஏழாம் தலைமுறையில் புதுப்பிக்கப்பெற்றது. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், பரணர்க்குத் தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது மகற்கொடையாகும். மகற் கொடையாவது மகனை மாணவனாகக் கொடுத்தல். தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, அரிசில்கிழார்க்குத் தன் அரியணையைக் கொடுத்தது ஆட்சிக்கொடையாகும். ஆயின், அவர் அதை ஏற்க மறுத்து அவனிடம் அமைச்சுப் பூண்டார். கொடைமடம்: பண்டையரசருட் பலர்க்குக் கொடை ஒரு சிறந்த குணமாயிருந்தபோதே, ஒருவகையிற் குற்றமாகவும் இருந்தது. அது கொடைமடம் எனப்பட்டது. பேகன் ஓர் அருவினை யுயர்விலைக் கலிங்கத்தை ஒரு மயில்மேற் போர்த்தான். பாரி தன் இழையணி நெடுந்தேரை ஒரு முல்லைக்கொடி படர நிறுத்தியதொடு, தனக்கிருந்த முந்நூறூர் களையும் பரிசிலர்க்கீந்து விட்டான். இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன், தன்மேற் பத்துப்பாட்டுப் பாடிய குமட்டூர்க் கண்ண னார்க்கு, ஐந்நூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமுங் கொடுத்தான். களங்காய்க் கண்ணி நார்முடிச் சரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு, பத்துப்பாட்டிற்கு நாற்பதிலக்கம் பொன்னும் தான் ஆண்டதிற் பாகமுங் கொடுத்தான். இங்ஙனம், அஃறிணை யுயிரிகட்குத் தகாத பொருள்களையும், அரசு கெடும்படி பரிசிலர்க்கு நாடு முழுவதை யும், பல புலவர் பசியால் வாட ஓரிரு புலவர்க்கு மாபெருஞ் செல்வத் தையும் அளித்தது கொடைமடமாம். 15 குற்றமுந் தண்டனையும் குற்ற வகை: குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசியலுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும் என மூவகைப்படும். குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும். இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறை போதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற் கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளையடித்தல், கலகஞ் செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறுபொருளாகும். ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண்டாரத்திற் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப் பணிசெய்யாமை யாகும். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும். மூவகைக் குற்றங்களுள்ளும், கடுமையானவை மேற்படு குற்றம் எனப்பட்டன. தண்டனை வகை: தண்டனையானது, தண்டம், மானக்கேடு, வேதனைப்பாடு, சிறைப்பு, வேலைநீக்கம், கொலை என அறுவகைப் பட்டிருந்தது. அவற்றுள், தண்டம் என்பது தொகையிறுப்பு, தண்டத் தீர்வை, கோயில் விளக்கெரிப்பு என மூவகை. தொகையிருப்பாவது ஒரு குறித்த தொகையை மொத்தமாய்ச் செலுத்தல். இனி, மன்று பாடு தண்டா குற்றம் என மூவகைத் தண்டமுங் கூறப்படும். அவை இன்னவென்று திட்டமாய்த் தெரியவில்லை.1 மானக்கேடு என்பது, முகத்திற் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதைமே லேற்றி ஆன்மயந் தோய்த்த அலகாலடித்து ஊர்வலம் வருவித்திலும், குலத்தினின்று விலக்கலும் ஆகும். வேதனைப்பாடு என்பது, தூணிற் கட்டிவைத்து 50 அடி முதல் 100 அடிவரை அடித்தல், கல்லேற்றல், வெயிலில் நிற்பித்தல், கிட்டி பூட்டல், நடைவிளக்கெரித்தல் எனப் பலவகைப்படும். கிட்டி என்பது கெண்டைக்காலை நெருக்கும் ஒருவகைக் கருவி. நடை விளக்கெரித்தல் என்பது, தலையில் அகல்விளக்கேற்றி ஊர்வலம் வருவித்தல். சிறைப்பு என்பது, தலையிட்டுச் சிறைக் கோட்டத்தில் வைத்தல், கொலை என்பது, வெட்டல், கழுவேற்றல், விலங்காற் கொல்வித்தல், சித்திரவதை செய்தல் என நால்வகை. யானையை விட்டு மிதிப்பித்தலும் புலிக்கருத்துதலும் போல்வன விலங்காற் கொல்வித்தல். எருமைக் காலிற் கட்டியோட்டுதலும் வண்டிச் சக்கரத்திற் கட்டியோட்டுதலும் போல்வன சித்திரவதையாகும். குற்றத் தண்டனை: மூவகைக் குற்றவாளியர்க்கும் குட வோலையிடப்பெறாமை பொதுத் தண்டனையாகும். கட்குடிக்கு இது தவிர வேறு தண்டனையில்லை. அறநூலுக்கு மாறான குற்றங்களுள், பொய்க்குத் தண்டமும்; களவிற்குப் பொருள் மீட்பொடு மானக்கேடும், பொருள்மீட்கப் பெறா விடத்துத் தண்டமும், தண்டம் இறுக்கப்படாவிடத்துச் சிறையும்; காமத்திற்கு மானக்கேடும் கொலைக்குக் கொலையும்; தண்டனை யாகும். கொலை செய்தவன் ஓடிப்போனவிடத்து, அவன் சொத்து முழுதும் பறிமுதலாகிக் கோயிற்குச் சேர்க்கப்பட்டது. ஓடிப்போன கொலைஞனைக் கொல்வதற்குப் பொதுமக்கட்கும் உரிமையிருந் தது. கொலைஞன் கொலையுண்டபின், அவனது பறிமுதலான சொத்தைப் பிறங்கடையான் வேண்டிப் பெற்றுக்கொள்ள முடியும். தற்செயலாய் நேர்ந்த கொலைக்குக் கோயில் விளக்கெரிப்பே தண்டனையாக விதிக்கப்பட்டது. கொலையானது விரும்பிச் செய்யப்பட்டவிடத்தும், கொலைஞன் மகன் கொலையுண்டவனின் நெருங்கியவுறவினரொடு ஒப்பந்தஞ் செய்து கொள்ளின், தண்டனை நீங்க இடமிருந்தது. நரபலி, மற்போர், கொடும்பாவி கட்டியிழுத்தல் ஆகிய மூவிடத்தும் நிகழுங் கொலைக்குத் தண்டனையேயில்லை. தற்கொலையைத் தடுப்பதற்குச் சட்டமுறையான தடையும் அக்காலத் தில்லை. அரசியற்கு மாறான குற்றங்களுள், இறையிறுக்காமைக்குச் சொத்துப் பறிமுதலும், உறுபொருள் கவர்தலுக்குச் சிறையும்,1 பிறவற்றிற்குக் கொலையும் 2 பொதுவாக விதிக்கப்படும் தண்டனை யாகும். இறையிறாதார்க்கு ஈராண்டுத் தவணையும், அதன்மேற் குறிப்பிட்ட காலத்திற்குப் பிணைப்பேறும் தரப்பட்டன. அதன் பின்னும் இறாதான் சொத்து பறிமுதலாகிக் கோயிற்கு விற்கப்பட்டு, அரசிறைத் தொகைபோக எஞ்சியதெல்லாம் கோயிலொடு சேர்க்கப்பட்டது. கொள்ளையடித்தவர் கலகஞ் செய்தவர் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தெய்வத்திற்கு மாறான குற்றங்கட்குத் தண்டமும், குற்றவாளி கோயில் வினைஞனாயின் சிறுபான்மை வேலை நீக்கமும் தண்டனையாயிருந்தன. கோயில் வினைஞருள், கீழோர் குற்றத்தை மேலோரும்; மேலோர் குற்றத்தை ஊரவையார், நாட்டதிகாரி, அரச னால் விதந்து விடுக்கப்பட்ட அதிகாரி, அரசன் ஆகியவருள் ஒருவர் அல்லது பலரும் கேட்டுத் தீர்ப்பது வழக்கம். ஒப்பிப் பணி செய்யாதவர்க்குக் கடுந்தண்டவரியும் கோயிற்பொருள் கவர்ந்த பூசகன் அறைகாரன் (உக்கிராணத்தான்) முதலியோர்க்குத் தண்டமும் விதிக்கப்பட்டன. அணிகலமும் தட்டுமுட்டுங் களவாடியவரால் இறுக்கப்பட்ட தண்டத் தொகையைக் கொண்டு, அப் பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டன. தண்டமிறுக்க இயலாத பூசகர் தம் கோயின் முறைநாள்களில் சில பல விட்டுக் கொடுத்தனர். பெரும்பாலும் குற்றங்கண்டே தண்டனை விதிக்கப்பட்டது. ஐயுறவானவிடத்தில் மக்களை வதைத்துக் கேட்பதும் உண்டென் பது, பழியஞ்சிய திருவிளையாடலால் அறியக் கிடக்கின்றது. அக்காலத்தில் நடுவுநிலையாக முறை வழங்கப்பட்டதென்பது, மனுமுறைச் சோழன் பொற்கைப் பாண்டியன் நெடுமுடிக்கிள்ளி முதலியோர் செய்தியால் அறியலாம். ஆயினும், சிலவிடத்து ஆராயா மல் தண்டனை விதிக்கப் பட்டதென்பது, வார்த்திகன், கோவலன், பட்டினத்தார் முதலியோர் வரலாற்றால் அறியப்படும், பட்டினத் தார் தம் நிறைமொழி வன்மையாலேயே தன்டனையினின்று தப்பினர். வலி குன்றிய அரசர் காலத்தில் அரசர்க்கடங்காது வாழ்ந்த மக்களும் உளர். அவர் கூடிவாழ்ந்த ஊர் அடங்காப்பற்று எனப்பட்டது. 16 உலவுங் கைத்தொழிலும் உழவன் உயர்வு: உணவின்றி உயிர்வாழ்க்கை யின்மையின், அவ் வுணவை விளைக்கும் உழவர் மன்னுயிர்த் தேருக்கு அச்சாணி யாகவும், மன்பதை மரத்திற்கு ஆணிவேராகவும் கருதப்பட்டனர். ``உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து'' (குறள். ) என்றார் திருவள்ளுவர். சிறப்பாக இரப்பார்க்கொன் றீபவரும் விருந்தினரைப் பேணு பவரும் உழவரேயாவர். ``இரவா ரிரப்பார்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்'' என்று வள்ளுவரும் ``இரப்போர் சுற்றம்'' என்று இளங்கோவடி களும், ``வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்'' (திரிகடு.12) என்று நல்லாதனாரும், ``எந்நாளும் - காப்பாரே வேளாளர் காண்'' என்று கம்பரும் கூறியிருத்தல் காண்க. விருந்தோம்பலும் இரப்போர்க் கீதலுமாகிய வேளாண்மை செய்வதினாலேயே உழவர் வேளாளர் எனப்பட்டனர். வேளாண்மை யாவது பிறரை விரும்பிப் பேணுதலை யாளுந் தன்மை. வேள் - விருப்பம். உழவர் அமைதிக் காலத்தில் உழவுத்தொழிலைச் செய்துவந்த தோடு, போர்க்காலத்தில் போர்ப்பணியும் புரிந்து வந்தனர். ``வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே'' (1582) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங் குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட் டனர்.1 மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்துவந்தவரும் வேளாளரே. வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான், கைக்கோளன், பூக்காரன், கிணையன் (கிணைப்பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாரும்; உழவனுக்குப் பக்கத்துணையா யிருந்தது தத்தம் தொழிலைச்செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர். இங்ஙனம் பல்வகுப்பாரையும் உணவளித்துக் காத்ததினா லேயே, வேளாண்வினையைத் திருக்கைவழக்கம் எனச் சிறப்பித்துக் கூறினார் கம்பர். தெய்வத்திற்குப் படைத்த திருச்சோற்றைப் பலர்க்கும் வழங்குவது திருக்கை வழக்கம் எனப்படும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை (குறள் 43) என்று இல்வாழ்க்கை யதிகாரத்தும், இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (81) வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (85) என்று விரும்தோம்பலதிகாரத்தும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் (1033) என்று உழவதிகாரத்தும், வள்ளுவர் கூறியிருப்பதால், உழவனே தலைமைக் குடிவாணன் (chief citizen) என்று அவர் கொண்டமை புலனாகும். மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊணுடைக் கருவிப் பொருள்களும், அரசியற் கின்றியமையாத இறையும், போருக்கு நேர் வகையும் நேரல்வகையுமான பணியும் உழவரால் அமைவதை நோக்கும்போது, பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் (1034) என்று வள்ளுவரும், பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை யூன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே ................................................ பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே (புறம். 35) என்று வெள்ளைக்குடிநாகனாரும், புரப்போர் கொற்றமும் - உழவிடை விளைப்போர் (சிலப். 10 : 149-50) என்று இளங்கோவடிகளும், கூறியிருப்பது ஒரு சிறிதும் மிகை யாகாது. இருவகை வேளாளர்: வேளாளர், உழுதுண்பாரும் உழுவித் துண்பாரும் என இருவகையர். உழுதுண்பாருக்குக் கருங்களமர் காராளர் என்னும் பெயர்களும், உழுவித்துண்பாருக்கு வெண் களமர் வெள்ளாளர் என்னும் பெயர்களும் உரியன. உழவர், களமர், கடையர், வேளாளர் என்பன இருசாராருக்கும் பொதுவாகும். ஆயினும், ஈற்றுப் பெயர் தவிர ஏனையவெல்லாம் உழுதுண்பார்க்கே சிறப்பாக வழங்கின. அவருக்கு மள்ளர் என்னும் பெயருண்டு. அவர் தந்நிலத்தில் உழுவாரும் பிறர் நிலத்தில் உழுவாரும் என இரு நிலைமையர். உழவித்துண்பார் பலர் வேள் எனவும் அரசு எனவும் பட்டமெய்தி, அமைச்சரும் படைத்தலைவரும் மண்டலத் தலை வரும் சிற்றரசருமாகி, மூவேந்தர்க்கும் மகட்கொடை நேரும் தகுதி யராயிருந்தனர். கடை யெழு வள்ளல்களுட் பெரும்பாலார் வேளிரே. நிலவகை: நிலங்கள் இன்றிருப்பது போன்றே, நன்செய் புன்செய் வானாவரி (வானாங்காணி) என மூவகைப்பட்டிருந்தன. உழுது பயிரிடப்படுவது உழவுக்காடு என்றும், கொத்திப் பயிரிடப் படுவது கொத்துக் காடு என்றும் பெயர் பெற்றிருந்தன. செயற்கை நீர்வளம்: உழவுத்தொழிற்கு இயற்கை நீர்வளம் போதாவிடத்து, அரசரால் செயற்கை நீர்வளம் அமைக்கப்பட்டது. வெள்ளச் சேதம் நேராவாறும், பாய்ச்சலுக்கு வேண்டிய நீர் ஓடு மாறும், ஆற்றிற்குக் கரை கட்டலும்; நீரைத் தேக்க வேண்டுமிடத்தில் ஆற்றிற்குக் குறுக்கே அணை கட்டலும்; பேராற்றினின்று கண்ணா றும், கண்ணாற்றினின்று கால்வாயும், கால்வாயினின்று வாய்க் காலும் வெட்டலும்; இவை இயலாவிடத்து, ஏரி குளம் தொடுதலும் அக்காலத்தரசர் மேற்கொண்ட செயல்களாம். கண்ணாறுங் கால் வாயும் பெரும்பாலும் சோழநாட்டிலும், ஏரி குளம் பெரும்பாலும் பாண்டி நாட்டிலும் வெட்டப் பட்டன. கரிகால் வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். முடிகொண்டான் ஆறும் அவனால் வெட்டப்பட்டது போலும்! காவிரிக் கல்லணை கி.பி. 1068ல் வீரராசேந்திரனால் வெட்டப் பட்டதாகத் தெரிகின்றது. சோழநாட்டில் இன்னின்ன கண்ணாறு இன்னின்ன வள நாட்டிற்கும், இன்னனின்ன கால்வாய் இன்னின்ன வூருக்கும், இன்னின்ன வாய்க்கால் இன்னின்ன பாடக வரிசைக்கும், பாயவேண்டுமென்னும் ஏற்பாடிருந்தது. அதனால் வேலியாயிரம் விளையவும், ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கவும், இருபூவும் முப்பூவும் எடுக்கப்படவும் இயல்வதாயிற்று. பூவென்பது வெள்ளாண்மை. அரசரின் ஊக்குவிப்பு: நிலம் சரியாய் விளையாதவிடத்தும் கடுந் தண்டலாளரைப்பற்றி முறையிட்டவிடத்தும், அரசர் வரிநீக்கஞ் செய்தனர். அயல்நாடுகளிலுள்ள அரிய விளைபொருள் களைக் கொண்டுவந்தும் தமிழ்நாட்டிற் பயிரிடச் செய்தனர். .........mªju¤ தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே (புறம். 392) என்று அதியமான் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடி யிருப்பதால், அவன் முன்னோருள் ஒருவன் சீனத் திலிருந்தோ சாவகத்திலிருந்தோ, கரும்பைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததாகத் தெரிகின்றது.2 மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் என்னும் இந்திரனுக்குப் புகார்ச் சோழர் விழாக் கொண்டாடியதும், அவன் உழவுத் தொழிற்கு வேண்டும் மழைவளந் தருவன் என்னும் குறிக்கோள் பற்றியதே போலும்! 17 வணிகமும் போக்குவரத்தும் உழவினால் விளைக்கப்படும் பொருள்களையும் கைத்தொழி லாற் செய்யப்படும் பொருள்களையும் உள்நாட்டிற் பகிரவும், உள் நாட்டுப் பொருள்களை வெளிநாட்டிலும் வெளிநாட்டுப் பொருள்களை உள் நாட்டிலும் பரப்பவும், பெரும் பொருளீட்டி நாட்டுச் செல்வத்தைப் பெருக்கவும், வணிகம் இன்றியமையாத தென்று கண்ட பண்டையரசர், அதனை ஒல்லும் வாயெல்லாம் ஊக்கிவந்தனர். நகரந்தொறும் வணிகர் குழுமம் (Merchant Guild) இருந்தது. நாட்டுப்புற நகராட்சி பெரும்பாலும் நகர வணிகர் கையில் இருந்தது. நகரங்களையெல்லாம் அரசன் நேரடியாக மேற்பார்த்து வந்தனன். தலைமை வணிகனுக்கு எட்டிப் பட்டமும் எட்டிப்புரவும் அளிக்கப் பட்டமை முன்னரே கூறப்பட்டது. வணிகர் குழுமங்கட்கு வலஞ்சை மணிக்கிராமம் அஞ்சுவண்ணம் முதலிய பட்டங்களும் அளிக்கப்பட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பே, நிலவாணிகம் நீர்வாணிகம் ஆகிய இருவகை வாணிகமும் தமிழகத்தில் தழைத்தோங்கி யிருந்தன. நிலங்கடந்து செய்யும் நிலவாணிகம் காலிற்பிரிவு என்றும், நீர்கடந்து செய்யும் நீர் வாணிகம் கலத்திற் பிரிவு என்றும் கூறப்பட்டன. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை (980) என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நீர்வாணிகம் சிறந்திருந்தமை அறியப்படும். நிலப்போக்குவரத்து: தடிவழி யென்றும் பெருவழி யென்றும் கூறப்படும் சாலைகள் நாடெங்கும் இருந்தன. அவை 64 சாண் அகலமும் இருமருங்கும் மரங்களும் உள்ளனவாயிருந்தன. கோட் டாற்றுச் சாலை, மதுரைப் பெருவழி அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி கொங்குவழி தடிகைவழி, வடுகவழி முதலிய பெயர்களால், தமிழ்நாட்டுப் பெருநகர்கள் மட்டுமன்றித் தென்னாட்டுச் சீமைகளும் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தமை புலனாம். தொண்டைநாட்டின் மேற்கெல்லை ஒரு பெரு வழியாயிருந்த தென்பது, மேற்குப் பெருவழியாம் என்னும் கம்பர் கூற்றால் அறியப்படும். ஆங்காங்குள்ள ஊரவையார் அவரவர் ஊரருகே யுள்ள தடிவழிப் பகுதிகளைக் கவனித்து வந்தனர். வேட்டைக்குச்சென்றஅரசன்நெடுமான் றேரொடுபாகனைநிலவுமணற்கான்யாற்றுநிற்கப்பணித்து........ïU«bghÊšபுகும்”எdநக்கீர®கூறியிருப்பதால்,இயன்wவிடமெல்லா«சங்கக்கால¤தரச®தேரேறி¢சென்றனரென்றும்,அதற்குரிaவழிவசதிகŸஅமைக்க¥பட்டிருத்தšவேண்டுமென்று«ஊகிக்கலாம். சாலைகள் பிரியுமிடங்களில் அல்லது சேருமிடங்களில், அவ்வச் சாலை செல்லும் ஊர்ப் பெயர் பொறித்த வழிகாட்டி மரங்கள் நாட்டப் பட்டிருந்தன. மாடு, குதிரை, கோவேறுகழுதை ஆகிய மூவகைப் பொதி மாக்களையுடைய வணிகச்சாத்துகள், அடிக்கடி சாலைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. கோவலனும் கண்ணகியும் கௌந்தியடிகளும் அருவிலைச் சிலம்புடன் புகாரிலிருந்து முப்பது காதத் தொலைவிலுள்ள மதுரைக்கும், தேவந்தியும்கண்ணகியி‹செவிலியு«அடித்தோழியு«புகாரிலிருந்JமதுuவழியாŒவஞ்சிக்கும்,மணிமேகலபுகாரிலிருªதுவஞ்சிக்Fம்பின்dர்வஞ்சியிலிருªதுகாஞ்சிக்கு«,மாடyன்புகாரினி‹றுகுமரிக்Fம்பின்ன®க்கங்கைக்கு«,பராசuன்சோணாட்டினி‹றுrரநாட்டிற்Fம்பி‹புபெUம்பொருளுlன்பாண்டிநா£டுவழியாfத்தன்னூருக்கு«,யாதேhர்இடர்ப்பhடுமின்¿ச்சென்றதாš,அக்காலத்âல்வழிப்போக்கர்¡குவேண்Lம்வழிவசதிíம்பாதுகாப்òம்நிர«பவிருந்தiமயறியப்படு«. தமிழரசர் அடிக்கடி வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென்றதும்; அவருள் சேரன் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவில், 100 தேர்களும் 500 யானைகளும் 10,000 குதிரைகளும், 20,000 பண்ட மேற்றிய வண்டிகளும், 1,000 சட்டையிட்ட அதிகாரிகளும், மாபெருந் தொகையினரான காலாட் படைஞரும், 102 நாடக மகளிரும், 208 குயிலுவரும், 100 நகை வேழம்பரும் உடன் சென்ற தும்; அக்காலத்திருந்த போக்குவரத்து வசதியை ஒருவாறுணர்த்தும். அனுப்பு என்றொரு வரி முற்காலத்து வாங்கப்பட்டதினால், ஒருகால் அஞ்சல் ஏற்பாடு அக்காலத் திருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. நீர்ப் போக்குவரத்து: பஃறுளியாறு முழுகு முன்னரே, கிழக்கில்சாவகம் மலையா காழகம் (பர்மா) சீனம் முதலிய தேசங்களுடனும், மேற்கில் அரபியா பாபிலோனியா கல்தேயா முதலிய தேசங்களுடனும், தமிழகம் வணிகஞ் செய்து வந்தது. சீனக்கண்ணாடி சீனக்காரம் சீனக்கிண்ணம் சீனச்சூடன் சீனப்பட்டு முதலியபண்டங்கள்சீனத்தினின்றும்இலவங்கப்பட்டை,கிராம்பூ,சாதிக்காய்,சாதிப்பத்திரிமுதலியசரக்குகள்நாகநாடுகள்என்னும்கீழிந்தியத் Ôவுக்Tட்டத்தினின்றும்,1jமிழரசரின்eல்வகைப்gடைகளுள்xன்றானFதிரைப்படைக்குnவண்டுங்Fதிரைகள்mரபியாவினின்றும்,áத்திரப்பேழைgவைவிளக்குkதுKதலியbபாருள்கள்aவனeடுகளினின்றும்jமிழகத்திற்குக்fலங்களில்tந்திறங்கின.nj¡F, தோகை(மயில்),அரிசி,அகில்,சந்தனம்,இஞ்சி,கொட்டை(பஞ்சுச்சுருள்),வெற்றிலை,அடைக்காய்(பாக்கு)முதலியgலbபாருள்கட்குத்jமிழ்ப்bபயர்களேnமலைbமாழிfளில்tழங்குவது,gழந்தமிழ்eட்டுVற்றுமதிச்áறப்பைக்fட்டும்.fšnjah ehட்டைச்rர்ந்தஊ®எ‹னும்இlத்தில்அfழ்ந்jடுக்கப்பட்டஒUதÄழ்நாட்டுத்jக்கவு¤தரம்,கி.K.3000 ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. கி.மு. 1000 ஆண்டு கட்கு முற்பட்ட சாலோமோன் என்னும் யூதவரசன் காலத்தில் தமிழகத்தினின்று யூதேயாவிற்கு ஏற்றுமதியான தோகையின் பெயர் யூத மொழியான எபிரேயத்தில் துகி என வழங்கி வந்தது. கடல்வாணிகத்தைப் பெருக்குதற்பொருட்டு, கி.மு. 55-ல் பாண்டியன் ரோமவரசனுக்கும், கி.பி. 1015-ல் முதலாம் இராசராசனும், கி.பி. 1015-ல் இராசேந்திரனும் கி.பி. 1077- ல் முதற் குலோத்துங்கனும் சீனவரசனுக்கும் தூது விடுத்தனர். முத்தமிழ் நாட்டுக் கடற்கரையிலும், ஒரு காலத்திற்கு ஒன்றும் பலவுமாக, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு துறைமுகங்கள் அமைந்திருந்தன. சோழநாட்டிற்கு மயிலை, மல்லை, புகார், காரைக்கால், நாகை, தொண்டி முதலியனவும்; பாண்டிநாட்டிற்குக் கவாடம், கொற்கை, காயல் முதலியனவும்; சேரநாட்டிற்கு வஞ்சி, முசிறி, தொண்டி, மாந்தை, நறவூர், கொடுங்கோளூர், காந்தளூர், விழிஞம், கோழிக்கோடு2 முதலியனவும் துறைநகர்களாய் இருந்துவந்தன. துறைமுகந்தோறும் கலங்கரை விளக்கம் (Light House) இருந்தது. புகார் கவாடம் வஞ்சி போன்ற தலைமை அல்லது கோநகர்த் துறைமுகங்களில், பல்வேறு நாட்டுக் கலங்கள் பல்வகைப் பண்டங்களை நாள்தோறும் ஏற்றுவதும், இறக்குவதுமா யிருந்தன. ஏற்றுமதியும் இறக்குமதியுமான அளவிடப்படாத பண்டப் பொதிகள். ஆயத்திற்காக நிறுக்கப்பட்டு அவ்வத் தமிழ்நாட்டரச முத்திரை பொறிக்கப்பட்டபின், துறைமுகத்தைவிட்டு நீங்கும்வரை சிறந்த காவல்செய்யப்பட்டிருந்தன. அணியவும் சேயவுமான பல்வேறு நாட்டிலிருந்து வந்த புலம்பெயர் மாக்கள் தங்குவதற்கு, வசதியான சேரிகளும் விடுதிகளும் இருந்தன. தமிழகக் கீழ்கடற் கரையில் நாகநாட்டார் குமரி முதல் வங்கம்வரை பல நகரங்களில் வந்து தங்கியிருந்தமையால், அவை நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரி எனப் பெயர் பெற்றன. மீன் பிடிக்கும் கட்டுமரம் முதல் குதிரைப் படையேற்றத் தக்க நாவாய்வரை பலதரப்பட்ட மரக்கலங்கள் தமிழ்நாட்டு வணிகர்க்குச் சொந்தமாயிருந்தன. ஏலேலசிங்கன், கோவலன் முன்னோர், பட்டினத்தார் என்னும் திருவெண்காடர் முதலியோர் பெருங்கல வணிகராவர். ``ஏலேல சிங்கன் கப்பல் ஏழுகடல் சென்றாலும் மீளும்'' என்பது பழமொழி யாகும். சேரன் செங்குட்டுவன் ``கடற்கடம் பெறிந்த காவலன்'' என்றும், ``கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்'' என்றும் புகழப் பெறுவதால் அக்காலத்தரசர் பகைவராலும் கடற்கொள்ளைக் காரராலும் விளைக்கப் படும் தீங்குகளைப் போக்கிக் கடல் வணிகத்தைக் காத்தமை ஊகிக்கப்படும். பீலிவளை நாகநாட்டி னின்று புகார் வந்து மீளவும், மணிமேகலை ஈழத்திற்கும் சாவகத்திற் கும் சென்று மீளவும், வசதியும் பாதுகாவலுமான மரக்கலப் போக்கு வரத்து அக்காலத்திருந்தது. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடல் முத்துங் குணகடற் றுகிருங் கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெரிய வீண்டி (185-192) என்னும் பட்டினப்பாலைப் பகுதியால், புகாருக்கு வந்து சேர்ந்த இருவகை வணிகப் பொருட்பெருக்கை ஒருவாறுணரலாம். 18 கலையுங் கல்வியும் பண்டைத் தமிழகத்தில் கல்வி இக்காலத்திற்போல் அரசியல் திணைக்களங்களுள் ஒன்றாக இருந்ததில்லை. ஆசிரியரின் முயற்சி யினாலும் பொதுமக்ளின் போற்றரவினாலுமே, பொதுக்கல்வி நாட்டிற் பரப்பப்பெற்று வந்தது. கற்றுவல்ல புலவரையே அரசர் ஓரளவு போற்றி வந்தனர். பொதுக்கல்வி: எழுத்தும் எண்ணும் கற்பித்த துவக்கக் கல்வியாசிரியர்க்கு இளம்பாலாசிரியர் என்றும், சிற்றிலக்கணமும் நிகண்டும் கணக்குங் கற்பித்த நடுத்தரக் கல்வியாசிரியர்க்குக் கணக்காயர் என்றும், ஐந்திலக்கணமும் அவற்றிற்குரிய இலக்கிய முங் கற்பித்த மேற்றரக் கல்வியாசிரியர்க்கு ஆசிரியர் என்றும் பெயர். ஆசிரியர், நூலாசிரியர் நுவலாசிரியர் (போதகாசிரியர்) உரையாசிரியர் என மூவகையர். துவக்கக்கல்வி மாணவர்க்கும் நடுத்தரக் கல்வி மாணவர்க்கும், பள்ளிப்பிள்ளைகள் என்றும், மாணியர் என்றும் மாணவர் (மாணவகர், மாணாக்கர்) என்றும், சட்டர் என்றும் பெயர். அவருள் தலைமை யானவன் சட்டநம்பி அல்லது சட்டநம்பிப் பிள்ளை (சட்டாம்பிள்ளை) எனப்பட்டான். மேற்றரக் கல்வி மாணவர்க்கு மாணவர் என்றும் மழபுலவர் என்றும், கற்றுச்சொல்லியர் என்றும் பெயர். துவக்கக்கல்வி நிலையிலும் நடுத்தரக்கல்வி நிலையிலும் மாணவரின் பெற்றோரும், மேற்றரக் கல்வி நிலையில் மாணவரும், ஆசிரியர்க்குச் சம்பளம் இறுத்து அவரைப் போற்றி வந்தனர். ஏழையாயிருந்து ஆசிரியனுக்குத் தொண்டு செய்யும் மாணவனுக்கு முத்தரக் கல்வியும் இலவசமாய்க் கற்பிக்கப்பட்டது. சிறப்புக் கல்வி: மாணவர் பொதுக்கல்வி கற்றபின், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய சிறப்புக் கலைகளை, அவ்வக் கலை யாசிரியர் வாயிலாய்க் கற்றனர். அக்காலத்து நூல்களெல்லாம் செய்யுள் வடிவிலிருந்தமையின் எவ்வகை நூற்கல்விக்கும் சிறந்த இலக்கணக் கல்வி இன்றியமையாததாயிருந்தது. பொருள் கொடுப்போர்க்கும் பணிவிடை செய்வோர்க்கும் கலைப் பயிற்சி யளிக்கப்பட்டது. மெய்ந்நூற் கல்வி: பொதுக்கல்வி கற்றபின், அல்லது பொதுக்கல்வியுஞ் சிறப்புக்கல்வியுங் கற்றபின், மெய்ப்பொருளறிவு பெற விரும்பினவர், காட்டகத்துள்ள முனிவரிடம் அல்லது யோகியரிடம் சென்று மூவாண்டு மெய்ந்நூற் கல்வி கற்றதாகத் தெரிகின்றது. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது (1134) என்பது தொல்காப்பியம். செய்யுளியற்றும் திறம்: எண்ணும் எழுத்தும் தவிர எவ்வகைக் கல்வியும் செய்யுள் வாயிலாகவே கற்றமையாலும், இளமையி லிருந்து செய்யுள் செய்தும் செய்யுளிற் பேசியும் பயின்றமையாலும், பண்டைப் புலவரெல்லாம் செய்யுளியற்றுந் திறம் சிறக்கப் பெற்றிருந்தனர். அரசர் தமிழை வளர்த்தலும் புலவரைப் போற்றலும்: பாண்டியர் தொன்றுதொட்டுக் கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரை கழகம் (சங்கம்) இருத்தி, நூல்நிலையம் போற்றி, 1 முதுநூலாராய்ச்சியும் புதுநூலாக்கமும் நிகழ்வித்து, முத்தமிழை வளர்த்து வந்தனர். கழகங் குலைந்தபின், முத்தமிழரசரும் தத்தம் அவையில் ஓரிரு சிறந்த புலவரை யமர்த்திப் போற்றி வந்தனர். அவைக்களப் புலவர்க்கும், நூலரங்கேறியவர்க்கும், அரசரைப் புகழ்ந்து பாடியவர்க்கும் முற்றூட்டும் சிறந்த பரிசும் அளிக்கப்பட்டன. ஆடல் பாடல் வல்லாரும் அரங்கேறி ஆயிரத்தெண் கழஞ்சுபொன் பெற்றமை முன்னரே கூறப்பட்டது. அரங்கேற்றம் அரசன் முன்னிலையிலும் அவ்வத் தமிழிற் சிறந்த அதிகாரியின் தலைமையிலும் நடைபெற் றது. அரங்கேறிய நூலாசிரியரை வெண்பட்டணிவித்து யானைமே லேற்றி நகர்வலம் வருவிப்பது வழக்கம். இலக்கியப் புலவரும் சமயநூற் புலவரும் சொற்போர் நிகழ்த்தி உண்மை நாட்டற்குத், தலைநகர்தொறும் பட்டிமண்டபம் என்னும் தருக்கமண்டபம் இருந்தது. புலவரிடைத் தெய்வப்புலமையையும் பிறருள்ளக் கருத்தறியும் ஆற்றலையும் வளர்த்தற்பொருட்டு, அரசர் அவ்வப்போது தம் உள்ளத்திலுள்ள கிளர்ச்சிமிக்க கருத்தைப்பற்றி அவரைப் பாடச்சொல்வதுண்டு. அங்ஙனம் பாடப்படுவது கண்ட சித்தி எனப்பட்டது. அரசருடைய உள்ளக்கருத்தை அறிவிப்பதும் ஐயுறவைத் தெளிவிப்பதுமான பாடற்குப் பொற்கிழியளிக்கப்பட்டது. இத்தகைய சமையங்களில், இங்ஙனம் பாடினார்க்கிது வென்று விளம்பி முன்னரே பொற்கிழியைச் சங்கமண்டபத்தில் தூக்கி விடுவது பாண்டியர் வழக்கம். குறிக்கை (சமசியை) பாடலும், அரிகண்டம் எமகண்டம் போன்ற கடும்பா (ஆசுகவி) பாடலும், அரசர் அவ்வப்போது நல்லிசைப் புலவர்க்கும் கடும் பாவலர்க்கும் நடத்தி வந்த செய்யுட் போட்டி வகைகளாகும். தக்க புலவர் தலைமையமைச்சராகவும் தூதராகவும் அமர்த்தப் பெற்றனர். அவைக்களத் தலைமைப் புலவர்க்கும், அரங்கேறிய குடைகொடி முதலிய கொற்றச் சின்னங்கள் அளிக்கப்பட்டன. புலவரின் பரிந்துரைக்கும் வேண்டுகோட்கும் இணங்குவதும், அவரது அறிவுரையையும் அறவுரையையும் இடித்துரையையும் ஏற்றுக் கொள்வதும், அவரது புலந்துரையையும் பழிப்புரையையும் பொறுத்துக் கொள்வதும், செவ்வியறியாதும் விடைபெறாதும் எச்சமயத்திலும் ஓலக்க மண்டபத்திற்குள் அவரைப் புகவிடுவதும், அவருக்குப் பணிவிடை செய்வதும், அவரை வழிவிடுக்கும்போது ஏழடி பின்போய் மீள்வதும், அக்காலத் தரசர் பலர் செயல்களாகும். பரிசளியாவிடத்தும் தம்மை அவமதித்தபோதும் புலவர் அரசரைச் சாவிப்பதுமுண்டு. கல்வித்தர வுயர்வு: அக்காலப் புலவர் கடுத்துப் பாடும் ஆற்றலுடையராயிருந்து செய்யுளிலேயே தம்முள் உரையாடி வந்தனர். நிகண்டு என்னும் அகராதியுட்பட அனைத்திலக்கியமும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. மதுரைச் சங்கத்திலும் பிற புலவரவையிலும் அரங்கேறிய பின்னரே நூல்கள் நாட்டில் உலவலாயின. கல்வி வளர்ச்சி: தலைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருள் கவியரங்கேறியவர் எழுவரென்றும்; இடைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐம்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் மூவாயிரத்தெழுநூற்றுவர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருட் கவியரங்கேறியவர் ஐவர் என்றும்; கடைச் சங்கத்தில் இருந்த புலவர் நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நானூற்று நாற்பத்தொன்பதின் மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருள் கவியரங்கேறியவர் மூவர் என்றும் முச்சங்க வரலாறு கூறும். இதுபோதுள்ள கடைச்சங்க இலக்கியத்திலிருந்து அறியப் படும் புலவர் ஏறத்தாழ ஏழுநூற்றுவர் ஆவர். அவருள் மகளிர் இருபத் திருவரும் அரசர் பன்னிருவர்க்கு மேற்பட்டவரும் ஆவர். அறுவைவாணிகன், ஓலைக்கடைகாரன், கணியன், கூத்தன், கூலவாணிகன், பாணன், பொருநன், மருத்துவன், வண்ணக்கன் முதலிய பல்வகைத் தொழிலாளரும்; காவற் பெண்டு, அரசி, குறமகள், பேய்மகள் முதலிய பலதர மகளிரும் புலவராயிருந்தனர். கடைச் சங்கத்திற்குப் பிற்காலத்திலும், சேரமான் பெருமாள் நாயனாரும் குலசேகராழ்வாரும் கண்டராதித்தரும் அதிவீரராம பாண்டியனும் போலும் அரசரும், திருவெண்காடர்போலும் வணிகரும், 2ஆம் ஔவையாரும் காரைக்காலம்மையாரும் போலும் மகளிரும் பலர் புலவராயிருந்தனர். வரலாற்றிற் கெட்டாத புலவர், சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் எத்துணையரோ அறியோம். ஆசுகவிகள் காசு என்று பிற்காலத்தில் வாங்கப்பட்ட வரி, அரசவொப்பம் பெற்று அவர் வாழ்க்கைச் செலவிற்கு வாங்கப் பட்டது போலும்! அரசர் இலக்கியத் தொண்டு: அரசர் புலவரை நூலியற்று மாறு ஊக்கியும் தாமும் நூலியற்றியும் வந்ததுடன், பல தனிப் பாடல்களையும் பாவும் பொருளும் அளவும் பற்றித் தொகுத்தும் தொகுப்பித்தும் உள்ளனர், நற்றிணை தொகுப்பித்தோன் பாண் டியன் பன்னாடு தந்த மாறன்வழுதி; குறுந்தொகை தொகுத்தோன் பூரிக்கோ; ஐங்குறுநூறு தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை; அகநாநூறு தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. 19 சமயமும் கொள்கையும் இம்மை மறுமை நலங்கட்கும் வீட்டின்பத்திற்கும் இறை வனருள் இன்றியமையாததென்னுங் கொள்கைபற்றி பண்டைத் தமிழரசர் தமக்கும் தம் குடிகட்கும் நலம் வருவித்தற்பொருட்டுத் தமக்கிசைந்ததொரு சமயத்தைக் கடைப்பிடித்து இறைவனை வழிபட்டு வந்தனர். தமிழரசருங் குடிகளும் முதலாவது ஐந்திணைத் தெய்வங் களை வணங்கி வந்தனர். குறிஞ்சிக்குச் சேயோன் என்னும் முருகனும், முல்லைக்கு மாயோன் என்னுந் திருமாலும், மருதத்திற்கு வேந்தன் என்னும் இந்திரனும், நெய்தற்கு வருணன் (வாரணன்) என்னும் கடலோனும், பாலைக்கு மாயோள் என்னுங் காளி (கொற்றவை)யும், தெய்வமாயிருந்தனர். வருண வணக்கம் நாளடைவில் நின்றுவிட்டது. இந்திர வணக்கம் கடைச்சங்கத் திறுதிவரையிருந்தது. மற்ற முத்தெய்வ வணக்கமும் நெடுகலுந் தொடர்ந்தது. கடைச்சங்க காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரை யிலும் வஞ்சியிலும் பற்பல தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. புகாரிலிருந்த கோயில்கள் கற்பகக் கோயில், வெள்யானைக் கோயில், பலதேவர் கோயில், கதிரவன் கோயில், கயிலைக்கோயில், முருகன் கோயில், வச்சிரப்படைக்கோயில், சாத்தன்கோயில், அருகன் கோயில், நிலாக் கோயில், சிவன்கோயில், திருமால் கோயில் முதயன. முருகன், சிவன், திருமால், பலதேவன் ஆகிய நால்வர்க்கும் எல்லாத் தலைநகர்களிலும் கோயில்கள் இருந்தன. தெய்வங்கள் பெருந்தெய்வம் என்றும் சிறுதெய்வம் என்றும் இருவகைப்படும். சமயத் தெய்வங்கள் பெருந்தெய்வமும் மற்றவை சிறுதெய்வமுமாகும். சைவம் வைணவம் ஆருகதம் பௌத்தம் பிரமம் உலகாயதம் என்னும் ஆறும் கடைச்சங்க காலத்து அறு சமயம் என்னலாம். அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நாலாறு சமயமாகப் பகுத்துக் கூறியது பிற்காலத்ததாகும், சிவவழிபாடும் மால்வழிபாடும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிற்குரியவாதலின் அவ் விரண்டும் பற்றிய சைவமும் வைணவமும் தமிழரசரால் பெரும்பாலும் கடைப் பிடிக்கப்பட்டன. அவ் விரண்டனுள்ளும் சிவநெறியே அரசரிடைச் சிறந்திருந்தது. இறைவன் என்றும் பிறவா யாக்கைப் பெரியோன் என்றும் சிவனுக்கு வழங்கிய பெயர்களே, சிவநெறித் தலைமையை உணர்த்தி விடும். சிறுதெய்வங்கள், காற்றும் நெருப்பும் முதலிய இயற்கைத் தெய்வமும் சூரரமகளும் பூதமும் முதலிய பேய்த்தெய்வமும், கதிரவனுந் திங்களும் முதலிய கோள்தெய்வமும், பட்ட மறவனாகிய நடுகல்தெய்வமும், இறந்த கற்பியாகிய பத்தினித்தெய்வமும், நால்வகை வருணத்திற்குரிய வருணத்தெய்வமும், ஆறும், மலையும் நகரும் முதலிய இடத்திற்குரிய இடத்தெய்வமும், கல்வியும் காதலும் போரும் முதலிய தொழிற்குரிய தொழிற்றெய்வமும், காப்புமட்டும் அளிப்பதாகக் கருதப்படும் காப்புத் தெய்வமும் எனப் பலவகையாம். கடைச்சங்க காலம்வரை, அரசரும் புலவரும் பொதுமக்களு மாகிய முத்திறத்தாரிடையும், சமவியற் கொள்கையும் பிறர் மதப் பொறையும் இருந்துவந்தன. அதன்பின் சமயப் போர் தமிழ்நாட்டில் தலை தூக்கிற்று. முதலாவது, வைதிக சமயம் எனப்படும் சைவ வைணவங் கட்கும் அவைதிக சமயம் எனப்படும் சமண பௌத்தங் கட்கும் இடையே போர் எழுந்தது. பின்னர்ச் சமணபௌத்தங்கள் ஒடுக்கப்பட்டபின், சைவ வைணவங்கட்கிடையே போர் மூண்டது. சங்கக்காலத் தரசரும் முதலாம் இராசராசன் இராசேந்திரன் முதலிய பிற்காலத் தரசரும், தாம் கடைப்பிடித்த சமயக் கோயில் கட்கு மட்டுமன்றிப் பிற மதக்கோயில்கட்கும் மானியம் விட்டனர். ஆயின் 8ஆம் நூற்றாண்டினனும் சமணனுமான மகேந்திரவர்மப் பல்லவன் சைவ சமய குரவருள் ஒருவரான திருநாவுக்கரசரைப் பலவகையில் வதைத்துக் கொல்ல முயன்றான். அதே நூற்றாண்டின னும் சிவனடியாருள் ஒருவனுமான நெடுமாறன் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றினான். 12ஆம் நூற்றாண்டினனும் சைவனு மான 2ஆம் குலோத்துங்கன், கூரத் தாழ்வான் பெரியநம்பி என்னும் இரு வைணவ குரவரை முறையே கண் பறித்துச் சாகடித்தான். அதோடு தில்லை மன்றிலிருந்த திருமாலுரு வத்தையும் பெயர்த்துக் கடலில் எறிந்துவிட்டான். அங்ஙனம் ஒருசில அரசர் நெறி திறம்பி நடந்தனர். திருமங்கையாழ்வார் நாகையிலிருந்த பொற் புத்த வுருவைக் கொள்ளையடித்துத் திருவரங்கக் கோயிலைப் புதுப்பித் தாரென்று, ஒரு பரவை வழக்குச் செய்தி வழங்கி வருகின்றது. 20 திருப்பணிகள் இம்மை மறுமை வீடென்னும் மும்மை யின்பத்திற்கும் இறைவழி பாடும் இன்றியமையாததாகக் கருதப்பட்டமையின் பண்டைத் தமிழகத்தில் இங்கிலாந்திற்போல் மதத்துறையும் ஓர் அரசியல் திணைக் களமாக இருந்துவந்தது. பிற மதக் கோயில்கட்கும் இடையிடை மானியம் விடப்பட்டதேனும், சைவ வைணவக் கோயில்களே பெரும்பாலும் அரசரின் ஆட்சிக்குட் பட்டிருந்தன. பேரரசரெல்லாரும் ஒன்றும் பலவுமாகப் பெருங்கோயில்கள் கட்டி வைத்தனர். கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்த கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான். கி. பி. 10ஆம் 11ஆம் நூற்றாண்டிலிருந்த முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டி விலையேறப்பெற்ற அணிகலங் கள் ஊர்திகள் தட்டு முட்டுகளுடன் 35 ஊர்களைத் தேவதானமாக விட்டான். கோயில் கட்டாத அரசர் இறையிலியும் அணிகலங்களும் பிறவும் அளித்தனர். கோயிற்கு கோட்டம், குடிசை, தேவகுலம், தளி, நகரம், பள்ளி, மந்திரம், மாளிகை, அம்பலம் முதலிய பல பெயர்கள் வழங்கின. கோயில்கள் சிறுகோயில் பெருங்கோயில் என இருதிறத்தன. சிறு கோயில்களை ஊரவையாரும் பெருங்கோயில்களைத் தனிக் குழுவாரும் கவனித்து வந்தனர். பெருங்கோயிலை மேற்பார்ப் பவர்க்குக் கோயில் வாரியத்தார் என்றும் ஸ்ரீகாரியம் பார்ப்பார் என்றும், அவருள் தலைவனுக்கு ஸ்ரீகாரியக் கண்காணி நாயகம் என்றும் பெயர். சிவன் கோயிலை மேற்பார்ப்பவர் மகேசுவரர் என்றும், திருமால் கோயிலை மேற்பார்ப்பவர் மாகவைணவர் அல்லது தானத்தார் என்றும் பொதுவாகக் கூறப் பெறுவர். கோயிற் காரியங்களை நடத்திவைப்பதற்கு ஆனவாள் என்றோர் அரசியல் வினைனும் இருந்தான். கோயிற் பூசாரிக்குத் திருவடி பிடிப்பான் என்றும், போற்றி என்றும், நம்பினான் என்றும், அவன் துணைவனுக்கு எடுத்துக் கைநீட்டி என்றும், பெயருண்டு.1 இவர் அணுக்கத் தொண்டராவர். இவரல்லாது திருக்கைக் கோட்டி யோதுவார், தேவரடியார் (பதியிலார்), சாக்கையன், பண்டாரி, அறைகாரன், தேவகன்மிகள், மெழுக்கடிகள், திருவிளக்கிடுவார், திருமெய்க்காப்பு (திருமெய்காப் போன், திருமேனி காவல்) முதலிய எத்துணையோ வினைஞர் கோயிலைச் சேர்ந்திருந்தனர். பெருநாடு முழுதுமிருந்த திருக்கைக் கோட்டி யோதுவார்க்குத் தேவார நாயகம் என்றொரு தலைவ னிருந்ததாகத் தெரிகின்றது. இறையிலி (தேவதானம்) , நன்கொடை, நேர்த்திக்கடன், காணிக்கை, வரி, தண்டம், பறிமுதல் ஆகிய எழுவகையில் கோயிற்கு வருமானம் வந்துகொண்டிருந்தது. கோயிற் செலவிற்கெல்லாம் பொதுப்பட விடப்பட்டிருந்த இறையிலியுடன், வெவ்வேறு செலவிற்குத் தனித்தனி அவ்வப்போது அரசராலும் பெருமக்களாலும் விடப்பட்டு வந்த இறையிலிகளும் உள. அவை திருவிழாப்புறம், கற்றளிப்புறம், நந்தவனப்புறம், அடுக்களைப்புறம், அவலமுதுப்புறம், அக்காரவடிசி லமுதுப்புறம், மெழுக்கடிப்புறம், திருவனந்தற் கட்டளை முதலியன. கோயிற் பணியாளர்க்குப் பகிரப்படும் திருச்சோற்றிற்காக விடப்படும் கட்டளை அட்டிற்பேறு எனப்பட்டது. ஒருவர் சிறிதுகாலம் நுகர்ந்தபின் கோயிற்கு விடுமாறு அளிக்கப்படும் நிலத்திற்கு இறைக் கட்டளை என்று பெயர். கோயிலில் விளக்கேற்றுவதற்கும் பிற திருப்பணிக்கட்கும் பார்ப்பனரை உண்பிப்பதற்கும், வேறு வேறாக, அரசராலும் பெரு மக்களாலும், பொதுமக்களாலும் கோயிலில் நிதிகளும் தொகை களும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வட்டியைக் கொண்டே அப் பணிகள் செய்யப்பட்டு வந்தமையின், அம் முதல்கள் அழியா திருந்தன. வட்டி பொலிசை எனப்பட்டது. தாம் குறித்த திருப்பணி களும் அறங்களும் நாள்தோறும் அல்லது நிலையாக நடைபெறற் பொருட்டு, அவற்றைப் பொலிசையைக் கொண்டே நடத்தவேண்டு மென்று, கொடையாளரே குறித்துவிடுவது மரபு. பறிமுதலான குற்றவாளிகளின் சொத்துகள் கோயிற்கு விற்கப்பட்டு, அரசிறை நிலுவைபோக எஞ்சியதெல்லாம், கோயிலொடு சே ர்க்கப்பட்டது. கோயில் வருமானத்தில் செலவுபோக எச்சமெல்லாம் அறமுங் கல்வியுமாகிய பொதுநலப் பணிக்குச் செலவிடப்பட்டது. அக்காலத்துக் கோயில்கள் பின்வருமாறு பல துறையில் பொதுநலத் தொண்டாற்றி வந்தன. (1) தொழிற் றுறை: கோயில் நிலங்கள் ஏழை யுழவரிடத்தும், கோயிற் கன்றுகாலிகள் ஏழை யிடையரிடத்தும், வாரச் சாகுபடிக் கும் வளர்ப்பிற்கும் விடப்பட்டன. சுந்தரபாண்டியன் காலத்தில், சூரலூரை யடுத்திருந்த கோயிற் குளமும் வாய்க்காலும் அணையும், பிள்ளையான் என்னும் செம்படவன் பார்வையிலும், அவற்றின் பழுதுபார்ப்பு சூரலூர் வெட்டியானிடத்தும், விடப்பட்டிருந்தன. பிள்ளையானுக்குக் கோயிற்குடிகள் செலுத்தும் வாய்க்கால் பாட்டமும் பாசிப் பாட்டமும், வெட்டியானுக்குச் சம்பளமும் உம்பளமும், கைம் மாறாக அளிக்கப்பட்டன.2 கண்காணிப்பு, வழிபாடு, மடைத் தொழில், துப்புரவாக்கம், அலங்கரிப்பு, கணக்கு, காவல் முதலிய பல்துறைபற்றிய அலுவலாள ரோடு, இசைவாணரும் கூத்தரும் கம்மியரும் பணிமக்களும் குடிமக்களு மாக எத்துணையோ பேர் கோயிலில் நிலையாக அமர்த்தப்பெற்றுத் தக்க சம்பளம் பெற்று வந்தனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், தேவார ஓதுவார் நாற்பத்தெண்மரும் பதியிலார் நானூற்றுவரும், இசைக்கருவி யியக்குவார் பற்பலரும், சாக்கையரும், கணியரும், ஐவகைக் கொல்லரும், குயவரும், தையற்காரரும், வண்ணாரும், முடியலங்கார வினைஞரும் உட்பட ஏறத்தாழ ஆயிரவர் நிலையான வினைஞராக அமர்த்தப் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. பஞ்சகாலத்தும் பிற காலத்தும், உணவிற்கு வழியற்ற ஆடவரும் பெண்டிரும் கோயிற் கடிமை புக்குக் கோயிற்பணியாற் பிழைத்துவந்தனர். அவருக்கு மணக்கவும் குடும்ப வாழ்க்கை நடத்தவும் உரிமையிருந்தது. (2) பணத்துறை: பணம் வேண்டியவர்க்கு, வட்டிக் கீடாகக் கோயிலில் குறிப்பிட்ட விளக்கேற்றுமாறு, கோயிற் பண்டாரத் தினின்று கடன் கொடுக்கப்பட்டது. வரகுணபாண்டியனால், திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீரூராரிடைப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இருகலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்கவேண்டு மென்றும், வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இறுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டன. 3 அறத்திற்கும் கட்டளைக்கும் கோயிற்குக் கொடுக்கப்படும் பணத் தொகைகள், கோயிலதிகாரிகளிடமாவது, ஊரவையாரிட மாவது, நகரத்தாரிடமாவது, தனிப்பட்டவரிடமாவது ஒப்படைக் கப்படுவதுண்டு. (3) கல்வித்துறை: எண்ணாயிரம் என்ற இடத்தில் ஒரு மறை நூல் ( வேத) விடுதிக் கல்லூரியும், திருமுக்கூடல் என்னும் இடத்தில் ஒரு வடமொழி விடுதிக் கல்லூரியும் திருவொற்றியூரில் வியாகரண தான மண்டபம் என்னும் வடமொழிப் பாணினியிலக்கணக் கல்லூரியும், கோயிலோடு சேர்க்கப்பட்டிருந்தன. எண்ணாயிரத்தில் 500 மாணவரும் 10 ஆசிரியரும் இருந்தனர். சில இடங்களில் வானநூலும் தருக்கமும் பிரபாகரம் என்னும் மீமாம்சை நூலும் வடமொழியிற் கற்பிக்கப்பட்டன. மாணவர்க்குக் கல்வியும் ஊணுடையுறையுளும் இலவசமாய் அளிக்கப்பட்டன. அதற்குப் போதிய இறையிலிகள் விடப்பட்டிருந்தன. பல இடங்களில் இதிகாச புராணங்கள் பொதுமக்கட்குத் தமிழில் விரித்துரைக்கப்பட்டன. அதற்கும் இறையிலி விடப்பட்டி ருந்தது. (4) கலைத்துறை: இசை கூத்து ஓவியம் சிற்பம் வண்ணம் முதலிய பல கலைகள், கோயில் வாயிலாய் வளர்க்கப்பெற்றன. (5) வரலாற்றுத் துறை: கல்வெட்டுகள், கோயில்,மண்டபம், பாறை, வெற்றித்தூண், மலைக்குகை, படிமை, நடுகல் முதலிய பலவிடங்களில் வெட்டப்பட்டனவேனும், பெரும்பான்மையாகக் கோயில்களிலேயே அவை இடம்பெற்றன. கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழரசர் வரலாற்றை அறிதற்கு உறுதுணையானவை கல்வெட்டுகளே. அரசருடைய போர்ச் செயல்களையும் வெற்றியையுங் கூறும். மெய்க்கீர்த்திகளும், ஊரவை யாருக்கும் நாட்டதிகாரிகட்கும் பிறர்க்கும் விடுக்கப்பட்ட அரசாணை களும், ஊரவையாரால் அன்றன்று செய்யப்பட்ட புதுத் தீர்மானங்களும், அரசராலும் அதிகாரிகளாலும் பெருமக்களாலும் கொடுக்கப்பட்ட தானப் பட்டயங்களும் கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் எல்லாருங் காணு மிடத்திற் பதிக்கப்பெறுவது, தவிரா வழக்கமாயிருந்தது. ஒரு சிதைந்த கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஊரவையார் நாட்டதிகாரி வாயிலாய் அரசனுக்கறிவித்து அவனது இசைவு பெற்ற பின், கோயிலிலுள்ள கல்வெட்டுகளை ``இச்சிரி விமானமிடித்துக் கட்டுங்கால் கண்ட சிலாலேகைப்படி'' என்று தொடங்கி ஓலைப் படி யெடுத்து, புதுக் கல்வெட்டுப் பொறித்து, கோயில் கட்டி முடிந்தபின், அப் புதுக் கல்வெட்டுகளை அதிகாரிகள் காட்டு மிடத்தில் பதிப்பது வழக்கம். கல்வெட்டுப் படியெடுப்பு கற்படி மாற்று எனப்பட்டது. சிதைந்துபோன கல்வெட்டுகளைப் புதுப் பிக்கும்போதும் இம்முறையே கையாளப் பெறும். (6) அறத்துறை: பார்ப்பனரை யுண்பிக்கும் அக்கிர சாலையும், அடியாரை யுண்பிக்கும் மடமும், இரப்போரை யுண்பிக்கும் அடிசிற் சாலையும் ஆகிய மூன்றனுள் ஒன்றோ பலவோ, பல வூர்களிற் கோயிலோ டிணைக்கப்பட்டிருந்தன. பெரும் பற்றப்புலியூரில் இருந்த அறச்சாலை அறப்பெருஞ் செல்வி என்றும், திருமுக் கூடலில் சாத்திரர் என்னும் பார்ப்பன வடமொழி மாணவர்க்கு மருத்தகமாகவும் மருத்துவக் கல்லூரியாகவு மிருந்த ஆயுர்வேத மருத்துவசாலை (ஆதுலசாலை) `வீரசோழன்' என்றும் பெயர் பெற்றிருந்தன. (7) அரசியற் றுறை: அரசிறை யிறுக்காத நிலங்களும் ஊர்களும் கோயிற்கு விற்கப்பட்டு, அவ் விலைத் தொகையினின்று அவற்றிற்குரிய அரசிறை யிறுக்கப்பட்டது, ஊர் மண்டபமில்லாத வூர்களிலெல்லாம், அரசியற் கூட்டங்கள் கோயில் மண்டபத்திலேயே கூட்டப்பட்டன. சில அரசர் கோயிற்பணியொடு திருநூற்பணியும் செய்து வந்தனர். முதலாம் இராசராசன் திருமுறை கண்டதும், மூன்றாம் குலோத்துங்கன் பெரிய புராணம் இயற்றுவித்ததும் நூற்பணியாம். கோயிற் கணக்குகள் ஆண்டுதோறும் நாட்டதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 21 அரசர் விழாக்கள் அரசர் விழாக்கள் பொதுவும் சிறப்பும் என இருபாற்படும். அவற் றுட் பொதுவாவன : (1) மண்ணுமங்கலம்: அரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப் பெறும் விழா மண்ணுமங்கலம் ஆகும். அஃது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல் - நீராடுதல். தொல்காப்பியர் இதனைச் சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்பர் (1037) உழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோ ரரசனைக் கொன்று அவன் குடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம், `குடுமி கொண்ட மண்ணுமங்கலம்' (தொல்.1014) எனப்படும். அது அகத்தோன் மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை. மாற்றரசன் மதிலையழித்துக் கழுதையேரால் உழுது வெள்ளை வரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின செய்த வெற்றிவேந்தன் அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம், `மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்' (தொல். 1037) எனப்படும். (2) பெருமங்கலம்: ஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும். அது பெருநாள் எனவும் படும். அதில் அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப்பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ்செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம். (3) வெற்றி விழா: அரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரிலாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழாவாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும் செய்வது வழக்கம். (4) மகப்பேற்று விழா: அரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப் பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றினும் பட்டத்திற் குரிய முதன் மகற்பேறும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். (5) அரங்கேற்று விழா: முத்தமிழும் ஓரிரு தமிழும்பற்றி நூலியற்றிய ஆசிரியர்,அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும். (6) நடுகல் விழா: போரில் பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல்விழா வாகும். (7) பத்தினி விழா: சிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்தபின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவாகும். இனி, சிறப்பாவன : பஃறுளி நெடியோன் எடுத்த முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளிவரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும் முதலாம் இராசராசன் பிறந்த நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும் போன்றவை சிறப்பு விழாவாகும். 22 சில அரசியற் கருத்துகள் பழந்தமிழரசரும் புலவரும் பொதுமக்களும், பின் வருமாறு பல அரசியற் கருத்துகளைக் கொண்டிருந்தனர்: (1) அரசன் உலகத்திற்கு உயிர். (2) தெய்வம், தான், தன் வினைஞர், கள்வர், பகைவர், விலங்கு ஆகிய அறுவழியில் வந்த தீங்குகளை அரசன் நீக்கித் தன் குடிகளைக் காத்தல் வேண்டும். (3) அரசன் தொழில்கள், ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டித்தல் என ஐந்து. (4) அரசவெற்றிக்கு அறநெறியாட்சி காரணம். (5) அரசவெற்றிக்கு உழவுத்தொழில் காரணம். (6) செங்கோலரசன் நாட்டில் மழைவளம் பொழியும்; மக்கள் ஒழுக்கந் தப்பார். விலங்கு ஊறு செய்யாது; கல்வியும் அறமுந் ழைக்கும். கொடுங்கோல் நாட்டில் இவை நிகழா. (7) கொடுங்கோல் அரசன் ஆளும் நாட்டினும், கடும்புலி வாழுங் காடு நன்று. (8) கோன்நிலை திரியின் கோள்நிலை திரியும். (9) அரசன் இறப்பைக் கோள்நிலை முன்னறிவிக்கும். (10) மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இல்லை. (11) மக்களை நன்னெறிப்படுத்துவது அரசன் கடமை. (12) மழை பெய்யாமைக்கும் விளைவுக் குறைவிற்கும் இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிக்கும், அரசன் காரணம். (13) அல்லற்பட்டழுத குடிகளின் கண்ணீர் அரசனை அழித்துவிடும். (14) அறம் பிழைத்த அரசனுக்கு அறமே கூற்றமாகும். (15) குடி பழிதூற்றுதல் அரசனுக்கு மிக இழிவு. (16) அரசர் தெய்வங்களை இகழ்ந்தால் அவர் நாட்டிற்கு அழிவு வரும். (17) அரசரால் அவமதிக்கப்பட்ட முனிவரும், புலவரும் சபிக்கின் அரசும் நகரும் அழியும். (18) தெய்வங்கட்குப் படைக்கினும் பலியிடினும் மழைபெய்து நாடு செழிக்கும். (19) அரச வாழ்க்கை துன்பம் நிறைந்தது (செங்குட்டுவன் கருத்து). (20) நாடுகளிற் சிறந்தது தமிழ்நாடு (தமிழரசர் கருத்து). (21) முத்தமிழ் நாடுகளுட் சிறந்தது பாண்டிநாடு (பூதப்பாண் டியன் கருத்து). (22) அரசின்மையும் வேற்றரசும் நாட்டுக் குற்றமாகும். (23) அரசன் எப்படி, குடிகள் அப்படி. (24) அரசன் குற்றம் குடிகளையும் குடிகள் குற்றம் அரசனையும் சாரும். (25) அரசன் பிற நாடுகளை வெல்வது குணமேயன்றிக் குற்றமன்று. (26) ஒருவன் செய்த அல்லது செய்வித்த கொலைக்கு அவனி டத்து மட்டுமன்றி அவன் குலத்தாரிடத்தும் பழி வாங்க லாம். அஃது ஒரு தெய்வத்தின் கோபத்தைத் தணிப்பதாகக் கருதப்படின். (27) கொள்ளைச் சொத்தும் பறிமுதலும் கோயிற்குச் சேர்க்கப் பெறின் தீதில்லை. (28) போரில் செய்த தீவினைகட்குக் கோயிற் றிருப்பணிகள் கழுவாய். (29) சித்தரும், முனிவரும் போன்ற பெரியாரைத் துணைக் கோடல் அரசர்க் கரண்செய்யும்; அவரைப் பிழைத்தல் அவருக்கு அழிவு தரும். 23 நம்பற்கரிய செய்திகள் பழந்தமிழாட்சியில் நிகழ்ந்தனவாகக் கூறப்பட்டுள்ள பல செய்திகள், இக்காலத்தால் நம்பற்கரியன. அவற்றுட் சில வருமாறு: (1) கழுமலத்தில் அவிழ்த்துவிட்ட யானை, கரிகாலனைத் தேடிச் சென்று கருவூரிற் கண்டு தானே தன்மீது ஏற்றிக் கொண்டு வந்தது. (2) ஊர்க்கணக்கன் ஆண்டிறுதியில் காய்ச்சிய, இரும்பேந்திக் கணக்கொப்புவித்தது. (3) கரிகாலன் முகரியென்னும் முக்கண்ணனின் மிகைக் கண்ணைப் படத்திலழிக்க, அந் நொடியே அம் முகரியின் கண் தானே மறைந்தது. (4) பாம்புக்குடமும்,பழுக்கக் காய்ச்சிய இரும்பும், அறமன்றங் களில் தெய்வச்சான்றாக உண்மையுணர்த்தி வந்தது. (5) புகாரிலுள்ள சதுக்கப்பூதம், அறைபோகமைச்சரும் பொய்க் கரியாளரும் உள்ளிட்ட அறுவகைக் குற்றவாளி களைப் புடைத்துண்டது. (6) வார்த்திகனை நெடுஞ்செழியன் அதிகாரிகள் சிறையிலிட்ட வுடன், மதுரைக் காளிகோயில் தானே சாத்திக்கொண்டது. (7) மூன்றாங் குலோத்துங்கள் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை விதிக்க, அத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், அப் பிராமணன் ஆவி இரவும் பகலும் அரசனைத் தொடர்ந்து துன்புறுத்தி, இறுதியில் திருவிடைமருதூரில் நீங்கினது. 24 அன்றாட நிகழ்ச்சி அரசர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகள் பொதுவாகப் பின்வருமாறு நிகழ்ந்துவந்தன: வைகறையில், அகவர் (சூதர்) அரசனின் பள்ளி மாடத்திற்கு வெளியே வாயிலருகு நின்று, அவன் முன்னோரின் புகழை இனிதாகப் பாடி அவனைத் துயிலுணர்த்துவர். அசரன் துயிலுணர்ந்து, அன்று செய்யவேண்டியவற்றைச் சிந்தித்துப் புலரும் வேளையிற் பள்ளிவிட்டெழுவன். அவன் எழுந் தமைக்கறிகுறியாகக் காலை முரசம் என்னும் பள்ளியெழுச்சி முரசம் அடிக்கப்பெறும். அரசன் எழுந்தபின், படைக்கலப் பயிற்சியிருப்பின் அதைச் செய்துவிட்டுக் காலைக்கடன்களை முடித்து நீராடி இறைவழிபாடு முற்றிக் காலையுணவுண்டு, ஓலக்க மண்டபத்திற்குச் செல்வன். அங்குக் கொடைமுரசு அடிக்கப்படும். பல்வேறிடத்தினின் றும், வந்திருக்கும், புலவர் பாணர் கூத்தர் முதலிய பரிசிலர், பாடியும் ஆடியும் தத்தம் திறமைகாட்டி, அதற்குத் தக அரசனிடம் பரிசு பெறுவர். கொடை நிகழ்த்தி முடிந்தவுடன், முறைமுரசு அடிக்கப்படும். வழக்காளிகள் தத்தம் வழக்கைச் சொல்வதற்கு முன்னரே வந்திருப்பர். முரசடித்தவுடன் வழக்குக் கேட்கை தொடங்கும். அரசன் ஓலக்கமண்டபத்திலிருந்து கொடை நிகழ்த்தி முடிந்த பின், அவ்வக் கால வினைநிலைமைக் கேற்பச் சூழ்வினை மண்டபத் திற்கேனும் அறமன்றத்திற்கேனும் செல்லினும் செல்லலாம்; அன்றி ஓலக்க மண்டபத்திலேயே இருந்து தன்னாட் டெழுத்துப் போக்கு வரத்தையும் அயல்நாட்டெழுத்துப் போக்குவரத்தையும் கவனிப் பினும் கவனிக்கலாம். இவ் வினைகளெல்லாம் முற்பகல் நிகழ்ச்சிகளாகும். நண்பகலில் அரசன் உணவுண்டபின் இரண்டொரு நாழிகை அல்லது வெயில் தணியும்வரை இளைப்பாறலாம். அதன்பின் மீண்டும் ஓலக்கமண்டபம் சென்று சிறிது நேரம் அரசியற் காரியங்களைக் கவனிக்கலாம். பிற்பகல் நிகழ்ச்சிகள் பொதுவாக, அரசர்க்குக் குடும்பக் காரியக் கவனிப்பாகவும், இன்பப் பொழுதுபோக்காகவுமே யிருக்கும். இராவுணவு உண்டபின், சிறிதுநேரம் உரையாடியிருந்து, ஊரடங்கும் வேளையில் அரசன் பள்ளிகொள்வன். பள்ளிமாடத் திற்குப் பள்ளிமண்டபம், பள்ளியம்பலம் என்றும் பெயருண்டு. கார்காலத்திலும், போர்க்காலத்திலும், விழாநாளிலும் நாடு காவற் சுற்றுப்போக்கு நாள்களிலும், பிற சிறப்பு வினைநிகழ்ச்சி யின்போதும், மேற்கூறிய அன்றாட நிகழ்ச்சி வினைகள் மாறியும் நிகழும். பொதுவாக, அறத்தை உயிர்நாடியாகக் கொண்டிருந்த செங்கோலரசரெல்லாம், எவ்விடத்தும் எந்நேரத்தும், பெருமுறை கேடான காரியங்களைக் கவனித்தற்கு ஆயத்தமாயிருந்ததாகவே தெரிகின்றது. "தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன தருமம் அருத்தம் காமம் என மூன்று; அம் மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கட் பத்து நாழிகையும் அறத்தொடு படச்செல்லும், இடையன பத்து நாழிகையும், அருத்தத்தொடு படச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடு படச் செல்லும்; ஆதலான் தலைமகன் முதற்கண் பத்துநாழிகை தருமத்தொடு படுவான்; தலைமகளும் வேண்டவே தானும் வேண்டிப் போந்து அத்தாணி புகுந்து அறங் கேட்பதும் அறத்தொடு படச் சொல்வதுஞ் செய்யும், நாழிகை அளந்துகொண்டு இடையன பத்து நாழிகையும் இறையும் முறையுங் கேட்டு அருத்தத்தினொடு பட்டனவே செய்து வாழ்வானாம். அவ் வருத்தத்து நீக்கத்துக் கடையன பத்து நாழிகையில் தலைமகளுழைப் போதரும்," என்பது இறையனாரகப் பொருளுரை (ப. 226). அரசர்க்குக் காலைக்கடன் கழித்தலும், உலகத்திலிருந்து நாடு காவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொட லும், நாவலரொடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களிற் களித்தலும், மடவாரொடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப் பராவலு மாகிய காலவரை எட்டு, என்பது தஞ்சைவாணன் கோவையுரை (ப. 248). 25 இல்லற வாழ்க்கை மூவேந்தரும், பெருநில மன்னர் குடியிலும் குறுநில மன்னர் குடியிலும் வேளிர் குடியிலும் பெண் கொண்டனர். அவருக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் தலையான் கோப்பெருந்தேவிக்கு அரசனுக்குள்ள மதிப்பிருந்தது. ஓலக்க மண்டபத்திலும் சூழ்வினைக் கூட்டத்திலும் நகர்வலத்திலும், கோப்பெருந்தேவியும் அரசனொடு கூட அமர்ந்திருப்பது வழக்கம். தேவிமாருள் அரசனால் சிறப்பாக காதலிக்கப்படுபவள் காமக்கிழத்தி எனப்படுவாள். ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப் பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி என, நம்பியகப் பொருள் கூறும். உதயகுமரன் மணிமேகலையை இவ்வகையில் மணக்க விரும்பியிருக் கலாம். சங்ககாலத் தரசர் சிலர் சேரிப் பரத்தையரொடும் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. பரத்தையர் சேரியிலுள்ள மகளிர்க்குச் சேரிப்பரத்தையர் என்றும், அவருள் அரசனால் காதலிக்கப்படுபவட்குக் காதற் பரத்தை யென்றும், அவனால் வரைந்துகொள்ளப்பட்ட பரத்தைக்கு இற்பரத்தை யென்றும் பெயர். அரசன் தொடர்புகொள்ளும் பரத்தையரெல்லாம், ஒருவர்க்கே யுரிமை பூணுங் குலப் பரத்தையாராகவே யிருந்திருத்தல் வேண்டும். அரசனாற் காதலிக்கப்படும் பரத்தையரெல்லாம், அவனு ரிமையென அவன் பெற்றோராலேயே ஒதுக்கப்பட்டு இளமைமுதல் வளர்க்கப்பட்டவர் என்று, இறையனா ரகப்பொருளுரையாசிரியர் கூறுவர் (பக். 226-ப.8.) இனி, அரசன் வேட்டைக்கும் உலாவிற்கும் சென்றவிடத்து யாரேனும் ஓர்அழகிய அரசகன்னியைத் தனியிடத்துக் காணின், அவளைக் களவுமணம் புரிவதுமுண்டு. நெடுமுடிக்கிள்ளி நாக நாட்டரசன் மகளாகிய பீலிவளையைக் கடற்கரையிற் கண்டு களவுமணம் புரிந்ததாக, மணிமேகலை கூறும். இயலுமிடமெல் லாம் களவு கற்பாகத் தொடரும். அரசன் மணத்திற்கு இத்துணை யென ஒரு வரம்பில்லாதிருந்தது. அரண்மனையில் மகளிர் உறைவதற்குத் தனியிடமுண்டு. அஃது உவளகம் எனப்படும். அதில் அரசனையும் இளவரசரையுந் தவிரப் பருவமடைந்த ஆடவர் வேறு யாரும் புகுவதில்லை. குறளருஞ் சிந்தரும் பெண்டிரும் சோனகப் பேடியரும் வாளேந்தி உவளகத்தைக் காக்குமாறு அமர்த்தப்பட்டிருந்தனர். கன்னியர் உறைவதற்குத் தனிமாடம் இருந்தது. அது கன்னிகைமாடம் எனப்பட்டது. அரசன் உவளகஞ் செல்லும் போதெல்லாம் மகளிர் பரிவாரமே உடன் செல்லும். தேவியருக்குத் தனித்தனி மாளிகை யிருந்தது. அரசன் வேறொருத்தியைக் காதலித்தான் என்றோ வேறு காரணம்பற்றியோ, கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது, புலவர் பாணர் முதலியோர் வாயிலாய் அவள் ஊடலைத் தீர்ப்பது அரசன் வழக்கம். அரசனுக்கும் அரசிக்கும், அடிமையரும் தோழியரும் குற்றேவ லரும் பரிவாரத்தாரும், மெய்காவலருமாகப் பற்பல ஊழியர் இருந்தனர். அரசி செல்லுமிடமெல்லாம் பரிவார மகளிர் எண் மங்கல (அட்டமங்கல)ப் பொருள்களை ஏந்திச் செல்லுவது வழக்கம். நகைச்சுவை யுணர்ச்சிமிக்க அரசர், தம் சொந்த இன்பத்திற் கென்று ஒரு நகையாண்டியை அமர்த்திக்கொள்வது முண்டு. அவனுக்குக் கோமாளி அல்லது கோணங்கி என்று பெயர். அரண்மனை வேலைக்கென்று தனியாக, ஐவகைக் கம்மி யரும், மயிர்வினைஞன் வண்ணான் செம்மான் முதலிய குடிமக் களும், பிற தொழிலாளரும் அமர்த்தப்பெற்றிருந்தனர். அவரை அரண்மனைத் தட்டான் அரண்மனை மயிர்வினைஞன் அரண் மனைக் குயவன் என அழைப்பது வழக்கம். அரண்மனைப் பொற் கொல்லன் சட்டையணிந்திருந்தான் என்று சிலப்பதிகாரங் கூறுவ தால், அரசனொடு நெருங்கிப் பழகுபவர்க்கெல்லாம் அச் சிறப்பளிக் கப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது. அரசனுக்கு உட்பகையும் அறைபோகு வினைஞரும்பற்றிய அச்சமிருக்கும்போது, அரண்மனை மருத்துவர் அவன் உணவை அன்னம் சககரவாகம் கருங்குரங்கு முதலிய உயிர்களைக்கொண்டு நோட்டஞ் செய்வர். அரசன் உண்டபின் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பவனுக்கு அடைப்பையான் (அடைப்பைக் காரன்) என்று பெயர். அரண்மனைச் செலவெல்லாம் அரசியற் செலவாகவே கருதப் பட்டது. அரசியற் செலவும் அரண்மனைச் செலவும் போக எஞ்சிய பொதுவகை (சாதாரண)ப் பொருள்களெல்லாம், கொடைக்குப் பயன் படுத்தப்பட்டன. அரசர்க்கே தகும் அருவிலையணிகலன் களும், பெருமணிகளும், பெருந்தொகையான பொற்காசு களும், அரசன் சொந்த உடைமையாகப் போற்றப்பட்டன. குறிப்பிட்ட நிறைக்கு மேற்பட்ட மணிக்கற்களைக் குடிகள் வைத்திருக்கவாவது நாடு கடத்தவாவது கூடாதென்றும், அரசனிடத்தில் ஒப்புவித்து விலைபெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கண்டிப்பான அரசவிதி யிருந்தது. அரசனுக்குச் சொந்தமாக இருந்த நிலத்திற்குக் கண்டுழவு என்று பெயர். அரசியர்க்குச் சிறுபாட்டுச் செலவிற்கென்று நிலங்களும் ஊர்களும் விடப்பட்டு இருந்ததாகவும் தெரிகின்றது. அரசன் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்குப் பல வழிகள் இருந்தன. கண்போலும் நண்பரோடு அளவளாவலும், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விப் புலவரொடு பயிலலும், நகையாண்டி சொற்கேட்டலும், வட்டாட்டு, வல்லாட்டு, புனலாட்டு முதலிய விளையாட்டுகளை யாடலும் இலவந்திகைச் சோலைக்கும் செய்குன்றிற்கும் நெய்தலங்கானலுக்கும் உலாப் போதலும், பாணர் பாடினியர் கணிகையரின் இசை கேட்டலும், விறலியர் கணிகையர் சாக்கையரின் கூத்துக் காண்டலும், வேட்டையாடலும், மலைவளங் காணலும், பிறவும் அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் வழிகளாம். அரசன் உலாப்போகும் போது தோழியரொடு செல்வது வழக்கம்.1 அவருக்கு அரசனொடு மெய்தொட்டுப் பயிலவும் விளையாடவும் உரிமையுண்டு. வையமுஞ் சிவிகையு மணிக்கா லமளியும் உய்யா னத்தி னுறுதுணை மகிழ்ச்சியுஞ் சாமரைக் கவரியுந் தமனிய வடைப்பையுங் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் (14.126-131) என்னும் சிலப்பதிகாரப் பகுதியால் அரசன் பரத்தையரொடு உலாப்போதலும், அவர்க்கு அவன் பற்பல வரிசையளித்தலும், உண்டென்பது பெறப்படும். அரசர், பருவம்வந்த புதல்வரைத் துணையரையராக அல்லது மண்டலத் தலைவராக, வெவ்வேறிடத் தமர்த்தி வைப்பது பெரும் பான்மை. அவர் தம் புதல்வியரை அரச குடியினர்க்கன்றிப் பிறர்க்குக் கொடுப்பதில்லையென்பது, 3ஆம் குலோத்துங்கன் அம்பிகா பதியைக் கொன்றதினால் அறியப்படும். நாடுகாவல், சந்து (பகைதணிவினை), போர், நட்பரசர், விழா முதலிய காரணம்பற்றி, அரசன் தன் தேவியரிடத்தினின்று பிரிந்துபோவன், பிரிவுக் காலத்தில், இன்றியமையும் அணிகழற்ற லும், மெய்யலங்கரியாமையும், அளவாக வுண்டலும், நாளெண் ணிக் கழித்தலும், மகிழாதிருத்தலும். தெய்வத்தை வேண்டலும், மீட்சிக் காலத்தில் வரவுகண்டு மகிழ்தலும் விருந்தயர்தலும் தேவியர் மேற்கொள்ளுஞ் செயல்களாம். அரசன் இறப்பின், தேவியரும் உடன் இறப்பர்; அல்லது உடன் கட்டையேறுவர்; அல்லது கைம்மை பூணுவர். அவர் முன்னிருவகையில் இறப்பதே பெரும்பான்மை. 26 அரசர் முடிவு தமிழரசர் முடிவு தனிப்பட்டதும் குடிப்பட்டதும் என இருவகை. அரசர் தனிமுடிவு: தமிழரசர், போரில் இறத்தலையே, பெரும் பேறாகவும்,விண்ணுலகம் புகும் வழியாகவுங் கொண்டிருந்தனர். அதனால், இயலும்போதெல்லாம் அவரும் சேனையுடன் போருக்குச் செல்லுவது வழக்கம். போரிலன்றி நோயாலும் மூப்பாலும் இறக்கும் அரசர் வாள்போழ்ந்தடக்கப் பெறுவர். அதன் இயல்பை, நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கல் (புறம். 93: 5-11) என்னும் புறப்பாட்டுப் பகுதியால் அறிக. சங்கக் காலத்திற்குப் பிற்காலத்தில், வாள்போழ்ந்தடக்கல் விடப்பட்டது. போரிற் பெற்ற புறப்புண் நாணியும், புதல்வர் தன்னொடு பொரவருகை நாணியும், பிறவகையில் மானக்கேடு நேர்ந்தவிடத்தும், உலகப்பற்றைத் துறந்தவிடத்தும், அரசர் ஊருக்கு வடக்கில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பர். அது வடக்கிருத்தல் எனப்படும். பகைவரால் சிறைப்பட்டிருந்து உண்ணாதிறத்தலும் வடக்கிருத்தலின் பாற்படும். வாழ்நாளிறுதியில், அரசாட்சியை இளவரசனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குச் சென்று தவஞ்செய்தல், ஒரோவோர் அரசன் மேற்கொண்ட செயலாகும். அரசர்க்குப் பிறப்பினும், இறப்பே சிறப்பாதலால், கொற்ற அடைமொழியில்லாத அரசரெல்லாம், அவர் இறந்த இடப்பெய ரால் வேறுபடுத்திக் கூறப்பட்டனர். அரசரிறந்தபின், அவருடம்பைத் தாழியாற் கவித்தலும், தாழியாற் கவித்துப் புதைத்தலும், வெறுமனே புதைத்தலும், முற்கால வழக்கம்; எரித்தல் பிற்கால வழக்கம். அரசருக்கு இறுதிச் சடங்கியற்றல் பள்ளிபடுத்தல் (பள்ளிபடை) என்றும், அவர் நினைவுக்குறியாக எழுப்பப்படுங் கட்டடம் பள்ளிப்படைக் கோயில் என்றும் பெயர்பெறும். அரசக்குடி முடிவு: முத்தமிழரசரும் தமிழாலும் மணவுற வாலும் இணைக்கப்பட்டு ஒற்றுமையாயிருந்த வரை, அசோகப் பேரரசனாலும், அவரை அசைக்க முடியவில்லை. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், தமிழ் பேணாமை ஒற்றுமையின்மை குலப்பிரிவினை முதலிய காரணங்களால், முத்தமிழ் நாடும் மூவேறு பிரிந்து வலிமை குன்றிப்போய்ச் சோழபாண்டிய நாடுகள் முதலாவது 14ஆம் நூற்றாண்டில் தில்லி மகமதியப் படைகட்கும் பின்பு 16ஆம் நூற்றாண்டில் விசயநகர வடுகப் படைகட்கும் எளிதாய் இரையாயின. பாண்டிநாட்டு வலிமை அதன் தாயப் போர்களாலும் தேய்ந்து மாய்ந்தது. இறுதிப்பாண்டியன் கி. பி. 1652 வரை இருந்தான். சேரர் குடியில் இறுதியாக விருந்த அரசர் வலிமை யற்றவரா யிருந்ததினால், சேரநாடானது. வேணாடு (திருவிதங்கோடு)கொச்சி கோழிக்கோடு கோலத்துநாடு முதலிய பல சிறு தனியரசுகளாகப் பிரிந்துபோனதுடன், 17ஆம் நூற்றாண்டில் வடசொற் கலப்பால் மலையாள நாடாகவும் திரிந்துவிட்டது. இங்ஙனம், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்தவை யெனப் பாராட்டப்பெற்ற மூவேந்தர் குடிகளும், 17ஆம் நூற்றாண்டி டையில் முடிவுற்றன. பின்னிணைப்பு 1. மக்கள் நிலைமை தமிழரசர் காலத்தில், தமிழ் மக்கள், திணைநிலை திணை மயக்கநிலை ஆகிய இருநிலைப்பட்டு வாழ்ந்து வந்தனர். குறிஞ்சியில் குறவரும் முல்லையில் இடையரும் மருதத்தில் உழவரும் நெய்தலில் செம்படவரும் பாலையில் கள்ளர் மறவர் முதலியோருமாக ஒவ்வொரு திணைக் குலமும் தனித்தனி வாழ்வது திணைநிலை; சிற்றூரிலும் பேருரிலும் நகரிலும் மாநகரிலும் பல திணைக்குலம் கலந்து வாழ்வது திணை மயக்க நிலை. முதலாவது மருதநிலத்திலும் பின்னர்ப் பிற நிலத்தூர்களிலும் திணைமயக்க நிலையாலும் தொழிற்பிரிவினா லும் பல குலங்கள் ஏற்பட்டிருந்தன. ஆசிரியரும் பூசாரியாரும் துறவியரும் அந்தணர் என்றும் ஆட்சிவினை பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வானிகமும் மேற்கொண்டோர் வணிகர் என்றும், உழுதும் உழுவித்தும் உண்போர் வேளாளர் என்றும், கைத்தொழில் செய்பவர் வினைவலர் என்றும், குற்றேவல் செய்பவர் ஏவலர் என்றும், இரந்துண்போர் இரப்போர் என்றும் மருதநிலை மக்கள் எழுபெரு வகுப்பினராக வகுக்கப்பட்டு நால்வகை நிலத்தும் நாடு முழுதும் பரவினர். முற்கூறியவாறு பெருநகரங்களில் வந்து தங்கிய அயல் நாட்டார், நாடுபற்றிய குலத்தினராய் வாழ்ந்து வந்தனர். மக்களெல்லாரும் பெரும்பாலும் முன்னோர் தொழிலையே செய்து வந்தாலும், அவருக்கு விரும்பிய தொழிலை மேற்கொள்ள உரிமை யிருந்தது. பிறப்புப்பற்றிய குலப்பிரிவும், அப் பிரிவுபற்றிய ஏற்றத் தாழ்வும், தீண்டாமையும் முற்காலத்திலில்லை. தொழில் பற்றிய குலப்பிரிவும், அறிவும் துப்புரவும் ஒழுக்கமும்பற்றிய ஏற்றத்தாழ்வுமே இருந்துவந்தன. கல்வி எல்லாருக்கும் பொது வாயிருந்தது. பாணர் இசை நாடகத் தொழிலையும், வள்ளுவர கணியத் தொழிலையும் மழிவினைஞர் செல்லியத் தொழிலையும் (Surgery), எங்கும் நடத்தி வந்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கவும், குழைகொண்டு கோழி யெறியவும் விளைவுஞ் செல்வமும் விஞ்சியிருந்தன. அறிவும் அருளுஞ்சான்ற அந்தணரும் தம்மையுந் தம் புதல்வரையும் முறைசெய்யும் அரசரும், வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூ உங் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும்1 (பட்டினப்பாலை, 208-211) வணிகரும், விருந்திருக்க வுண்ணாத வேளாளரும் பல்கி யிருந்தனர். பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழவனையே தலைமைக் குடிவாணனாகப் பண்டைத் தமிழ்நாடு போற்றிவந்தது. மக்களிடை ஒற்றுமையும் அரசனுக்கும் குடிகட்கும் இடையே இருதலையன்பும் இருந்துவந்தன. அரசனாணை என்ற தொடர் மொழிக்குக் கூட அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர். பிறப்புப்பற்றிய குலப்பிரிவு தமிழ்நாட்டில் ஏற்பபட்டதி லிருந்து, தமிழ்நாட்டு நிலைமாறிவிட்டது, தமிழருக்குள் குலப்பற்று மிகுந்து இனவுணர்ச்சி (National feeling) குன்றிப்போயிற்று. தீண்டாமையாலும் அதினிலுங் கொடிய காணாமையாலும் தாக்குண்ட ஒருசார்த் தமிழினம் தன் சீரிய நிலைமையையும், மக்களுரிமையையும் இழந்தது. சுருங்கச் சொல்லின், தமிழினம் முழுதும் பல்வேறுவகையில் சின்ன பின்னப்பட்டுத் தாழ்வடைந்து விட்டது. அடிக்கடி நிகழ்ந்த போராலும், இடையும் இறுதியும் ஏற்பட்ட அயலார் ஆட்சியாலும், படையேறு குழப்பத்தாலும். கொள்ளையாலும், வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும், வரிக் கொடுமையாலும், பொதுமக்கள் நிலைமை வரவரச் சீர் கெட்டு வந்தது. வறுமையும் அடிமைத்தனமும் வளர்ந்தோங்கின. தனியடி மையும் கொத்தடிமையும் குலவடிமையுமாகப் பற்பலர் மீளா அடிமைப்பட்டு, அவர் வழியினரும் அந் நிலையராயினர். வெளியார் திரள்திரளாய் வந்து குவிந்ததினாலும், மக்கள் தொகை மிக்கதினா லும், பொருளாதார வீதங் குன்றிற்று. குடிகள் வலசை போனதினால் சில ஊர்கள் குடிப்பாழாயின. அன்பாட்சி நீங்கி அதிகாரவாட்சி ஓங்கியதால், குடிகள் பெரும்பாலும் அஞ்சி வாழ வேண்டியதா யிற்று. மக்களிடையே ஒற்றுமையும் நாட்டுப்பற்றும் அரசப் பற்றும் மறைந்தன. இங்ஙனம், தமிழாட்சி முடிவுற்ற 17ஆம் நூற்றாண்டுத் தமிழகம், பலவகையிலும் அலைப்புண்டு அல்லற்பட்டிருந்தது. 2.மொழி நிலைமை முதற்காலத்தில், தமிழ் எல்லாத் துறைகளிலும் தனியாட்சி செலுத்தி முழுத்தூய்மையாய் வழங்கி வந்தது. ஆயின், இடைக் காலத்தில் வடமொழி தேவபாடை என்று மூவேந்தராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதினால் புரோகிதர் நடத்தும் பூசை கரணங்கட் கெல்லாம் தமிழ் விலக்கப்பட்டது. வடசொல் வழங்குவது உயர்வு என்னுங் கருத்தும் நாளடைவில் எழுந்தது. தமிழரசரும் ஒருசில தமிழ்ப்புலவரும் தமிழைப் புறக்கணிக்கவுந் தலைப்பட்டனர். தொன்றுதொட்டுத் தமிழ்ச்சங்கம் இரீஇத் தமிழை வளர்த்துத் தமிழ்நாடன் என்று சிறப்பிக்கப் பெற்ற பாண்டியன் குடியினரே, கி.பி. 3ஆம் நூற்றாண்டில் சங்கத்தைக் குலைத்துவிட்டனர். அதன் பின், 11ஆம் நூற்றாண்டில் அதைப் புதுப்பிக்குமாறு பொய்யா மொழிப் புலவர் செய்த பெருமுயற்சியும் வீணாய்ப்போயிற்று. வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திலேயே, தமிழில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. ஆயின், அவர் காலத்தில் தற்பவ மாகவும் சிதைவாகவும் ஒரோவொன்றாய் அருகியே வழங்கின. பிற்காலத்திலோ, அவை படிப்படியாய்ப் பெருகி வந்ததுடன், கடைச் சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில், பொதுமக்கட் கென்றேற்பட்ட கல்வெட்டுகளில் தற்சமமாகவும் கிரந்தவெழுத்தி லும் தோன்றி, கல்வெட்டுத் தமிழையே தமிழர்க்கு விளங்காததும் பிழை மலிந்ததுமான மணிப்பவழக் கலவை மொழிவழியாக மாற்றிவிட்டன. அரசர் பெயர்1 தெய்வப் பெயர் இடப்பெயர் முதலிய பல்வகைப் பெயர்களும் நாளடைவில் வடசொற்களாய் மாறின. எடுத்துக்காட்டு: முற்காலச்சொல் பிற்காலச்சொல் பாண்டியவரசர் பெயர்: ஐயந்த வர்மன், ஜடில காய்சினவழுதி, கடுங்கோன், பராந்தகன், ராஜசிம்மன் வெண்டேர்ச் செழியன், ஜடாவர்மன் (பராக்கிரம முடத்திருமாறன். பாண்டியன்) தெய்வப்பெயர்: சொக்கன், சுந்தரன்,பிருகதீஸ்வரன், ` பெருவுடையான்,முருகன் சுப்ரமணியன் திருமால்,திருமகள்,நாமகள். விஷ்ணு,லக்ஷ்மி,சரஸ்வதி. இடப்பெயர்: தகடூர்,முது தர்மபுரி, விருத்தாசலம், குன்றம் மறைக்காடு, வேதாரண்யம், மாயூரம்: . மயிலாடு துறை பல்வகைப்பெயர்: அரசுகட்டில், சிங்காசனம் (சிம்மாசனம்) அரியணை, ஆட்டை வாரியம், சம்வத்ஸ (வாரியம்) நியோகம்,திருவோலை, கள்ளக் கூடலேகை, சிலாசாஸனம். கையெழுத்து, fšbt£L. (தடித்த எழுத்துள்ள வடசொற்கள் அவற்றுக்கு நேரான தென்சொற்களின் மொழிபெயர்ப்பாகும்) இனி, சில தென்சொற்கள் தம் தென்மொழி வடிவிழந்து வடமொழி வடிவில் வழங்கத் தலைப்பட்டன. எடுத்துக்காட்டு: தென்மொழி வடிவம் வடமொழி வடிவம் அரசன் ராஜன் அவை சபை திரு ஸ்ரீ படி பிரதி மக்களைத் தாக்கிய குலப்பிரிவினை நாளடைவில் இலக்கியத்தையும் தாக்கிற்று. வெண்பா அந்தணர்பா என்றும், ஆசிரியப்பா அரசர்பா என்றும், கலிப்பா வணிகர்பா என்றும், வஞ்சிப்பா வேளாளர்பா என்றும், வகுக்கப்பட்டதுடன், கலம்பகச் செய்யுள்கள் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந் தும் அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கும் முப்பதும் பாடப்படும் எனவும் இலக்கணம் விதிக்கப்பட்டது. பாணரைத் தீண்டாமை தாக்கியதால், இசைத்தமிழும் நாடகத் தமிழும் 12ஆம் நூற்றாண்டிற்குமேல் வழக்கொழிந்தன. அவற்றிற்குரிய நூல்களும் இறந்துபட்டன. தமிழ் கற்பார்க்குப் போதிய அரசியல் ஊக்குவிப்பின்மையால், முதலிரு சங்ககாலத்தும் முத்தமிழாயிருந்த இலக்கணநூல், கடைச் சங்க காலத்தில் ஒரு தமிழாயும், 11ஆம் நூற்றாண்டிற்குமேல் அதுவும் நிறைவின்றி எழுத்துச் சொல்லளவாயும் குறுகிவிட்டது. தமிழ் வடமொழி கிளையெனக் கருதப்பட்டு, 11ஆம் நூற்றாண்டில் வடமொழி யிலக்கணந் தழுவி வீரசோழியம் என்னும் தமிழிலக்கண நூலும் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திலிருந்து ஆரியக் கருத்துகளும் தமிழி லக்கியத்திற் புகுத்தப்பட்டதினால், தமிழ் வரலாற்றிலும் தமிழ் நாட்டு வரலாற்றிலும் புராணக் கருத்துகள் புகுந்தன. பிற்காலத்து நூல்களெல்லாம் பெரும்பாலும் கலைத்துறை பற்றாது மதத்துறையே பற்றின. 14ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட வில்லிபாரதத்தில் வட சொற்கள் வரைதுறையின்றி ஆளப்பட்டன. தமிழ்ப்புலவரையுங் கலைஞரையும் போற்றுவாரின்மையால், நூற்றுக்கணக்கான தமிழ்நூல்கள் இறந்துபட்டன. தூயதமிழ் தாழ்த்தப் பட்டோர் மொழி எனத் தாழ்த்தப்பட்டதினால் நூற்றுக் கணக்கான தென்சொற்களும் மறைந்தொழிந்தன. 3.சீமையராட்சி வகைகள் சீமை என்பது, (1) நகரச் சீமை (City State) (2) இனச் சீமை (Nation state) (3) தேயச் சீமை (Country state) (4) கூட்டுச்சீமை (Federal State) என நால்வகையாகக் கூறப்படும். ஒரே பேரூராயிருப்பது, அல்லது ஒரே நகரமும் அதனைச் சார்ந்த சிற்றூர்களும் சேர்ந்தது நகரச்சீமை; ஒரேயின மக்கள் வாழும் நாட்டுச் சீமை இனச்சீமை; பல இனமக்கள் வாழும் நாட்டுச் சீமை தேயச் சீமை; பல நாடுகள் சேர்ந்தது கூட்டுச் சீமை. சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றும் ஓரின மக்களையே கொண்டனவாயும், வெவ்வேறு அரசின்கீழ்ப்பட்டனவாயும் இருந்த தினால், அவற்றை ஆங்கில நிலச்சீமை (Territorial State) என அழைக்கலாம். அகப்பொருட் செய்யுட் கிளவித்தலைவர், வெற்பன் குறும் பொறைநாடன் ஊரன் துறைவன் விடலை எனக் குறுநிலத் தலைவராகவும் தனியூர்த் தலைவராகவுமே குறிக்கப் பெறுவதால், சேர சோழ பாண்டியவரசுகள் தோன்றுமுன் நகரச் சீமைகளே தமிழகத்தி லிருந்தன எனக் கொள்ள இடமுண்டு. அரசு அல்லது அரசியல் என்பது, (1) nfhtuR(Monarchy) (2) குடியரசு (Democracy) (3) ÓÇnahuuR(Aristrocracy) என மூவகைப்படும். கோவரசை முடியரசு என்றுங் கூறலாம். முத்தமிழரசுங் கோவரசாகும். பிற்காலத்தில் பார்ப்பனச் செல்வாக்கு மிக்கிருந்ததி னால், அதை ஒருவகைப் பார்ப்பனச் சீரியோரரசு (Brahmin Aristocracy) என்னலாம். தமிழ்க்கோவரசு பெரும்பாலும் செங்கோலாட்சியாகவும் (Righteous Government) சிறுபான்மை கொடுங்கோலாட்சியாகவும் (Despotic Government) இருந்தது. இரண்டும் முற்றதிகாரக் கோவரசே (Absolute Monarchy). நிலைத்த ஆட்சி (Stable Government) பொறுப்பாட்சி (Responsible Government) என்னுந் தன்மைகள் செங்கோலாட்சிக் கிருந்தன. சிற்றரசர் நாடுகட்கெல்லாம் தன்னாட்சி (Autonomy) வழங்கப்பட்டிருந்தது. இற்றை அரசியல் நூல் (Politics) வகுக்கும் சீமைப் பாகுபாட் டின்படி, தமிழ்ச் சீமைகளின் வகைமையைக் கூறின், நெகிழும் சட்டமுறைமையும் (Flexible Constitution) தேர்தல் பெறாக் கருமச் சுற்றமும் (Non-elective Executive), சட்ட நீதியும் (Rule of Law), கொண்ட தாராளத் (Liberal) தனிச் சீமை (Unitary State) என்னலாம். பிற்காலத்தில் ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட குலவாரி நீதியை, ஆள்வினை நீதி (Administrative Law) என்னலாம் 4. வேத்தியல் எழுத்தும் நூல்களும் எழுதப்பட்ட அரசவாணைக்குத் திருவோலை, திருமுகம் நீட்டு, ஆணத்தி எனப் பல பெயருண்டு. அரசன் கையெழுத்திற்குத் திருவெழுத்து என்றும், அவன் கையெழுத்திடுதற்குத் திருவெழுத்துச் சாத்துதல் என்றும் பெயர். அரசனையும், அரசனுடைய உறுப்புகள் சின்னங்கள் முதலிய வற்றையும், புகழ்ந்து கூறும் எழுத்தீடும் செய்யுளும் நூல்களும் வருமாறு:- (1) நாண்மங்கலம் : அரசனுக்கு இத்துணை யாண்டுகள் சென்றன என்றெழுதுவதும், செங்கோலரசனின் பிறந்த நாளைச் சிறப்பித்துக் கூறுவதும், நாண்மங்கலம் எனப்படும். (2) வளமடல் : பெண்ணின்பமே சிறந்ததெனக் கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க எதுகை வரக் கலிவெண்பாவாற் பாடுவது வளமடல். (3) உலா: அரசன் தேர்மறுகில் வெற்றியுலா வரக்கண்ட எழுபருவ இளமகளிரும், அவனைக் காதலித்ததாகக் கலிவெண் பாவாற் பாடுவது உலாவாகும். (4) மெய்க்கீர்த்தி : அரசனுடைய மெய்க்கீர்த்திச் செயல்களை அகவலாற் பாடுவது மெய்க்கீர்த்தி. (5) மெய்க்கீர்த்தி மாலை: அரசனுடைய மெய்க்கீர்த் தியைப்பற்றிய பல செய்யுள்கள் பாடுவது மெய்க்கீர்த்தி மாலை. (6) தானை மாலை: கொடிப்படையை அகவலாற் பாடுவது தானை மாலை. (7) வரலாற்று வஞ்சி: அரசன் படையெடுத்துச் செல் வதைப் பாடுவது வரலாற்று வஞ்சி. (8) செருக்கள வஞ்சி: செருக்களத்தில் நிகழ்ந்த போரைப் பற்றிப் பாடுவது செருக்களவஞ்சி. இங்ஙனம் பிற புறத்திணைகளைப்பற்றிப் பாடுவனவும் அவ்வ திணையாற் பெயர்பெறும். (9) களவழி வாழ்த்து: அரசன் போர்க்களத்திற் பெற்ற செல்வத்தைச் சிறப்பித்துப் பாடுவது கணவழி வாழ்த்து. (10) பரணி : கடவுள் வாழ்த்து,கடைதிறப்பு, காடு பாடல், கோயில் பாடல், தேவியைப் பாடல், பேய்களைப் பாடல், இந்திரசாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு. அவதாரம், காளிக்குக் கூளி கூறல், களங்காட்டல், கூழடுதல் என்னும் பதின்மூன்றுறுப்பமைய, ஓர் அரசனின் போர்வெற்றியைப் பல்வகை யீரடித் தாழிசையாற் பாடுவது பரணியாகும். (11) பெயரின்னிசை : அரசனின் பெயரைச் சிறப்பித்து, தொண்ணூறு அல்லது எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாப் பாடுவது பெயரின்னிசை. (12) ஊரின்னிசை: அரசனின் தலைகரைச் சிறப்பித்து, மேற்கூறியபடி பாடுவது ஊரின்னிசை. (13) பெயர்நேரிசை: அரசனின் பெயரைச் சிறப்பித்து, மேற்கூறிய அளவு நேரிசை வெண்பாப் பாடுவது பெயர் நேரிசை. (14) ஊர் நேரிசை: அரசனின் தலைநகரைச் சிறப்பித்து மேற்கூறியவாறு பாடுவது ஊர் நேரிசை. (15) தசாங்கப்பத்து: அரசனுடைய மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்துறுப்பு களைப்பற்றிப் பத்து நேரிசை வெண்பாப் பாடுவது தசாங்கப்பத்து, (16) அவற்றை ஆசிரிய விருத்தத்தாற் பாடுவது தசாங்கத் தயல். (17) சின்னப்பூ: மேற்கூறிய பத்தரச வுறுப்புகளைப்பற்றி, நூறேனும் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் முப்ப தேனும் நேரிசை வெண்பாப் பாடுவது சின்னப்பூ. (18) எண்செய்யுள் : அரசனின் பெயர் தலைநகர் முதலியவற்றைப் பற்றி, பத்து முதல் ஆயிரஞ் செய்யுள்வரை, அவ்வத் தொகையாற் பெயர்பெறப் பாடுவது எண் செய்யுள். (19) குடைமங்கலம்: அரசனது குடையைச் சிறப்பித்து வெண்பாவாற் பாடுவது குடைமங்கலம். (20) வாண்மங்கலம்: பகையரசனை வென்ற வேந்தன் தன்வாளைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் செய்யுள் வாண்மங்கலம் எனப்படும். (21) விளக்கு நிலை: அரசனது விளக்கு அவன் செங்கோலோ டோங்கிவருவதைக் கூறுஞ் செய்யுள் விளக்கு நிலையாம். (22) ஆற்றுப்படை : கொடையாளியான ஓர் அரசனிடத்தில் பரிசுபெற்ற ஒரு பரிசிலன், தன் போலும் இன்னொரு பரிசிலனை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக, அகவலாற் பாடுவது ஆற்றுப் படை. இனி,இரவில் நெடுநேரம் விரித்திருக்கும் அரசனைத் துயில் கொள்ளச் சொல்லும் கண்படைநிலையும், வைகறையில் அவனைத் துயிலெழுப்பும் துயிலெடை நிலையும், அறிஞர் அரண்மனை வாயிலில் நின்று தம் வரவை அரசற் கறிவிக்குமாறு கடைகாப்பள ரிடங் கூறும் கடைநிலையும் பரிசிலன் அரசன்முன் நின்று, தான் கருதிய பரிசில் இதுவெனக் கூறும் பரிசிற்றுறையும், அரசன் பரிசில் நீட்டித்தவழிப் பரிசிலன் தன் இடும்பைகூறி வேண்டும் பரிசில் கடாநிலையும், அரசன் பரிசிலன் மகிழப் பரிசளித்து விடைகொடுத் தலைக் கூறும் பரிசில் விடையும், பரிசில் கொடுத்த பின்னும் விடை கொடுக்கத் தாழ்க்கும் அரசனிடத்தினின்று பரிசிலன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் பரிசினிலையும், அரசன் இறந்த பின் பரிசிலர் கையற்றுப் பாடுங் கையறுநிலையும் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்யுள்களும்: இயன்மொழி புறநிலை செவியறிவுறூஉ வாயுறை முதலிய பலவகை அரச வாழ்த்துச் செய்யுள்களும் உளவென அறிக. - முற்றிற்று. - குறுக்க விளக்கம் P.K.- The Pandyan Kingdom H.A.I.S.I. Hindu Administrative Institutions in South India. சோ:-சோழவமிசச் சரித்திரச் சுருக்கம். 2 சிலப்பதிகாரம் (சாமிநாதையர் பதிப்பு). பக்கம் 230 3 சிலப்பதிகாரம்(சாமிநாதையர் பதிப்பு) 1 :19-22. 1. விருக்கை என்பவன், அறங்கூறவையத்தானாய் அல்லது கரணத்தானாய் இருக்கலாம். 2. சிறுதரம் என்பவன் நாட்டதிகாரியாகவும், பெருந்தரம் என்பவன் வளநாட்டதி காரியாகவும், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் என்பான் வளநாட்டதிகாரிகள் தலைவனாகவும் இருந்திருக்கலாம். 1 ``நூ''லெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு என்பது ஔவையார் கூற்று. 1. Pndyan kingdom p.93-4 (bkhÊ பெயர்ப்பு) 1. சோழவமிசச் சரித்திரச் சுருக்கம் ப.53 1. அரசனோடிருக்கும்போதும், செல்லும்போதும், இடக்கையில் இருப்பதற்கும் செல்வதற்கும் இன்னின்ன குலத்தாரென்றும், வலக்கையில் இருப்பதற்கும் செல்வதற்கும், இன்னின்ன குலத்தாரென்றும், குடிகள் இருவேறு பிரிக்கப்பட்டிருந்த தாகவும்; இடக்கைக் குலத்தார் இடங்கை யென்றும் வலக்கைக் குலத்தார் வலங்கை யென்றும், பெயர்பெற்றதாகவும் கூறுவர். 2 செப்புப்புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர்பெற்றது கவனிக்கத் தக்கது. துவர்-சிவப்பு துவரை யென்னும் பயற்றின் பெயரும் இக்காரணம் பற்றியதே. துவர்-துவரை. 1. 1மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (இராமச்சந்திர தீட்சிதர்) பக்.87-8 2. Pandian Kingdom, p.218-9 3. Hindu Administrative Institutions In South India, p.262 * H.A.I.S.I ] 2. P. K. p. 220. 3. லக்களத்தார் என்னும் பெயர் உடன்கூட்டத்தைக் குறிப்பதாக. H. A. I. S. I. கூறும் (p.120). 4. இயற்றலும் மீட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.'' (குறள். 385) 5. Pandyan Kingdom, P.196 1. சோ.பக். 58 1. பணம் என்னும் வெள்ளிக்காசும் துட்டு என்னும் செப்புக்காசும் பிற்காலத்தன போலும். 2. பல கழஞ்சு மதிப்புள்ள `ஊர்க்கற் செம்மைப்பொன்'. `துளை நிறைப்பொன்' என இருவகைப்பொன் வழங்கியதாகத் தேசிகாச்சாரியார் தம் `South Indian Coins' என்னும் நூலிற் கூறுவர். 3. Denarius 4. Drachma அக்னியாதிரம் என்று புராணம் கூறுவது வாணத்தைப் போலும்! 2. 3ஆம் குலோத்துங்கச் சோழன், பாண்டிமண்டலத்திற்குச் சோழ பாண்டிமண்டலம் என்றும், மதுரைக்கு முடித்தலை கொண்ட சோழபுரம் என்றும், பாண்டியனது ஓலக்க மண்டபத்திற்குச் சேரபாண்டியர் தம்பிரான் என்றும் பெயர் மாற்றினான். 1. முட்டில் பாணரும் ஆடியான் மகளிரும் எட்டொடு புணர்ந்தவா யிரம்பொன் பெறுப (சிலப். பக். 121) என்பது அடியார்க்கு நல்லாருரை மேற்கோள் 2. (``சேரன் செங்குட்டுவன் மாடல மறையோனுக்களித்த துலாபாரம் 50 துலாம் (375 பவுண்டு) பொன்னாகும்.) 1. ஒருகால் தொகையுறுப்பு முதலிய மூன்றே மன்றுபாடு முதலிய மூன்றாக விருந்திருக்கலாம். 1. சேந்தனார் பட்டினத்தாரின் செல்வத்தைக் காட்டவில்லை யென்று சோழனால் சிறை செய்யப்பட்டார். 2. அரசவின்பப் பொருளான ஒரு மாங்கனியை யுண்டதற்காக ஒரு பார்ப்பனச் சிறுமி நன்னனாற் கொல்லப்பட்டாள். 1 (இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை என்னுங் குறளில் 41, இயல்புடைய மூவர் என்பது அதிகார வியைபால் அந்தணர் அரசர் வணிகர் என்னும் முக்குலத் தில்லறத்தாரையே குறிக்கும். பிரமசாரியன் வானப் பிரத்தன் சந்நியாசி என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் என்னுங் குறளிலுள்ள `துறந்தார்' என்னுஞ் சொல்லே துறவியரைக் குறிக்கும். 2. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் பின்பு சாவகத்திலும் பயிராயது. சீனரை வானவர் என்றும் சீனத்தை வானவர் நாடு என்றும் அழைத்தனர் முன்னோர். இனி, சாவகம் நாகநாட்டைச் சேரந்ததாதலானும், தேவருலகிற்கு நாகநாடு என்னும் பெயருண்மையானும், சாவகநாட்டு நாகபுரத்தரசர் இந்திரன் என்ற குடிப்பெயர் கொண்டிருந்தமையானும், சாவகத்தை இந்திர நாடு என்று கூறினர் முன்னோர். 1. நீர் நாக னல்கிய கலிங்கம்" என்னும் சிறுபாணாற்றுப்படை யடியால் (96) நாகநாட்டினின்று, ஒருவகை யடையும் இறக்குமதியானதாகத் தெரிகின்றது. நீல நாகன் என்பது நாகருள் ஒரு பிரிவாகும். `நல்கிய என்னும் பாடம் சரியன்று. 2. கோழிக்கோட்டில் ஏற்றுமதியான துணியே பிற்காலத்தில் அத் துறைமுகப் பெயரின் ஆங்கில வடிவமான கலிக்கட் (Calicut) என்பதிலிருந்து திரிக்கப்பட்ட கலிக்கோ (Calico) என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. 1 இடைச்சங்க நூல் நிலையத்தில் மட்டும் எண்ணாயிரத்தெச்சம் நூலிருந்ததாக வழிமுறைச் செய்தி கூறும். 1. உவச்சன் (ஓச்சன்) என்பது காளிகோயிற் பூசாரியின் பெயர். குருக்கள், பண்டாரம், புலவன் என்றும் பூசாரிக்குப் பெயருண்டு. 2. P.K., pp. 222- 3. 3. K., pp. 90 - 91. 1. அரசன் தோழியரொடு செல்லும் இன்பவுலாவும், நகர் வலம் வரும் வெற்றியூலாவும் வேறுபட்டவை. 1. ``அரசர்களும் அவர்களைச் சார்ந்த உறவினரும் அகத்தில் ஒற்றி, காரி கிள்ளி இருக்குவேள் என்பன போன்ற பழந்தமிழ்ப் பெயர் தரித்திருத்தல் வழக்கம். ஆயின், உத்தியோகமுறைமையில் பராந்தகன் இராஜராஜன் இராஜாதித்தன் என்னும் வடமொழிப் பெயர்களைத் தரிப்பார்கள்- சோ.பக். 71.