பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16 ஒப்பியன் மொழிநூல் - 2 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 16 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1940 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14 + 178 = 192 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 120/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். குறி விளக்கம் + இது புணர்குறி = இது சமக்குறி - இது வலப்புறத்திலுள்ளது மொழிபெயர்ப்பு, பொருள், திரிபு என்னும் மூன்றனுள் ஒன்று என்பதைக் குறிக்கும் < இது வலப்புறத்திலுள்ளது மூலம் என்பதைக் குறிக்கும் x இது எதிர்மறைக் குறி இது மேற்கோட் குறியல்லாவிடத்து மேற்படிக்குறி ( ) இது சில இடங்களில் வழிமுறைத் திரிவைக் குறிக்கும். வடமொழியிலுள்ள ‘ri’ என்னும் உயிரெழுத்து, இப் புத்தகத்தில் ‘ru’ என்றெழுதப்பட்டிருக்கிறது. இப் புத்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லியலகராதிகள் கீற்றும் (Skeat) சேம்பராரும் (Chambers) எழுதியவை. ஆங்காங்குத் தொல்காப்பிய நூற்பாவிற்குக் குறிக்கப்பட்டுள்ள எண், சை. சி. நூ. ப. க. அச்சிட்ட தொல்காப்பிய மூலத்தின்படியது. குறுக்க விளக்கம் அகத். - அகத்திணையியல் இறை, இறையனார் - இறையனார் அகப்பொருள் உரை இ. - இந்தி இடை - இடைச்சொல் இ.கா. - இறந்தகாலம் இரு. - இருபிறப்பி (Hybrid) உ.வ. - உலக வழக்கு உவ. - உவமவியல் உரி. - உரியியல் எ.கா. - எதிர்காலம் எச்ச. - எச்சவியல் எ-டு. - எடுத்துக்காட்டு எ. எழுத்து - எழுத்ததிகாரம் ஐங். - ஐங்குறுநூறு ஒ.நோ. - ஒப்புநோக்க கலித். - கலித்தொகை கள. - களவியல் கற். - கற்பியல் கா. - காட்டு கி.பி. - கிறித்துவுக்குப் பின் கி.மு. - கிறித்துவுக்கு முன் குறள் - திருக்குறள் குறுந் - குறுந்தொகை குற், குற்றி. - குற்றியலுகரப் புணரியல் செ. - செய்யுளியல் சிலப். - சிலப்பதிகாரம் சீவக. - சீவக சிந்தாமணி உரை j.-jÄœ திருவாய். திருவாய்மொழி தெ. - தெலுங்கு தொல். - தொல்காப்பியம் நற் - நற்றிணை நன் - நன்னூல் நி.கா. - நிகழ் காலம் நூ. - நூற்பா நூ.வ. - நூல் வழக்கு ப. - பவானந்தம் பிள்ளை பதிப்பு ப. - பக்கம் பக். - பக்கங்கள் பு. - புணரியல் புள்ளி. - புள்ளி மயங்கியல் புறத். - புறத்திணையியல் புறம். - புறநானூறு பெ. - பெயர்ச்சொல் பெ.எ. - பெயரெச்சம் பொருள். - பொருளதிகாரம் பேரா. - பேராசிரியம் ம. மலையாளம் மணிமே. - மணிமேகலை மதுரைக். - மதுரைக்காஞ்சி மனு. - மனுமிருதி மொ. மொழி. - மொழிமரபு வ. - வடசொல் வி. - வினைச்சொல் வி.எ. - வினையெச்சம் வி.மு. - வினைமுற்று வே.உ. - வேற்றுமை உருபு adj. - adjective Ar. - Arabic A.S. - Anglo-Saxon cog. - cognate conj. - conjun ction Celt. - Celtic Dan. - Danish Dut. - Dutch E. - English Finn. - Finnish Fr. - French Gael. - Gaelic Ger.-German Goth-Gothic Gk. - Greek Hind. - Hindustani Ice. - Icelandic It. - Italian lit., Lit. - literally L. - Latin L.S.I. - Linguistic Survey of India L.S.L. - Lectures on the Science of Language M.E.- Middle English n. - noun orig. - originally O.Fr. - Old French p. - page pp. - pages Skt. - Sanskrit v.-verb v.t. - verb transitive Vol. – volume உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை ... iii குறிவிளக்கம் ... vi அழிந்துபோன தமிழ் நூல்கள் அகத்தியர் .3 அகத்தியர் கதைகள் 3 அகத்தியம் வழி நூலாதல் .5 அகத்தியத்திற்கு ஆரிய விலக்கணத் தொடர்பின்மை 8 தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் .9 கடைக்கழக இலக்கியம்ஓர்இலக்கியமாகாமை... 12 அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்ந்தமை ... 13 அகத்தியருக்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை 15 அகத்தியர் தமிழ் நூற்பயிற்சியைப் புதுப்பித்தமை 16 வடதிசை உயர்ந்ததும் தென்திசை தாழ்ந்ததும் ... 18 தமிழின் திருப்பம் .18 தமிழ்ச்சொல் வளம் .18 தமிழின் வளம் .18 தமிழ்த் தாய்மை .22 தமிழ்த் தூய்மை .22 தமிழின் முன்மை .22 தமிழில் திராவிட மொழிகளின் திசை வழக்குத்தன்மை .22 செந்தமிழ்நாடு .23 கொடுந்தமிழ்நாடு .24 திராவிடம் என்னும் சொன் மூலம் .28 திரவிடம் வடக்கு நோக்கித் திரிதல் .29 தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள் .29 இலக்கண அமைதி .33 3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புகள் .34 நிலத்தின் தொன்மை .34 நிலத்து மொழியின் தொன்மை .35 நிலத்து மக்கள் வாழ்க்கைமுறை .35 நாட்டு வாழ்க்கைநிலை .35 நகர வாழ்க்கைநிலை .38 அரசியல் .39 தொழிற் பெருக்கமும் குலப்பிரிவும் .40 வழிபாடும் மதமும் .42 ஐந்திணைத் தெய்வம் .43 முல்லைத் தெய்வம் மாயோன் 43 குறிஞ்சித் தெய்வம் சேயோன் .43 மருதத் தெய்வம் வேந்தன் .44 நெய்தல் நிலத்தெய்வம் வாரணன் .47 பாலைநிலத்தெய்வம் கொற்றவை 48 சைவம் பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள் .61 ஆனைந்து .61 திருநீறு .61 உருத்திராக்கம் .61 மதம் பற்றிய சில பொதுச்சொற்கள் .64 மதந்தழுவிய சில கருத்துகள் .64 வீடு 64 ஏழுலகம் 64 எழுபிறப்பு .65 அறுமுறை வாழ்த்து .67 அறிவ (சித்த) மதம் .69 வடமொழிப் பழமை நூற்பொருள்கள் பல தென்னாட்டுச் செய்திகளேயாதல் 69 எண்டிசைத் தலைவர் .71 முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள் .74 ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை 76 தமிழர் நீக்கிரோவர்க்கும்ஆரியர்க்கும்இடைப்பட்டோராதல்... 76 4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டில் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை 78 5. பண்டைத் தமிழ் நூல்களிற் பிற நாட்டுப் பொருள்கள் கூறப்படாமை .82 III. தமிழ்மொழித் தோற்றம் கத்தொலிகள் .83 ஒப்பொலிகள் 83 ஒலிக்குறிப்புகள் .83 உணர்ச்சி வெளிப்பாட்டொலிகள் 83 வாய்ச் சைகையொலி .85 சொற்கள் தோன்றிய பிற வகைகள் .92 தமிழ்மொழி வளர்ச்சி .95 தமிழ் இலக்கியத் தோற்றம் .99 தமிழிலக்கணத் தோற்றம் .100 எழுத்து 100 சொற்கள் 101 உரிச்சொல் 102 பிறவுரை மறுப்பு 103 பிறர் மறுப்புக்கு மறுப்பு 104 கிளவி 107 பெயர்ச்சொல் .107 பொருட்பெயர் - மூவிடப்பெயர் 107 இடைமைப் பெயர் .108 படர்க்கைப் பெயர் .108 வினாப்பெயர் .109 சுட்டுப் பெயர்கள் 112 காலப்பெயர் 113 இடப்பெயர் .114 சினைப்பெயர் .115 பண்புப்பெயர் 115 பண்புப் பெயரீறு .116 திசைப்பெயர் .116 எண்ணுப்பெயர் .117 குறுமைப்பெயர் .122 பருமைப்பெயர் 122 தொழிற்பெயர் .123 ஆகுபெயர் 126 பெயரிலக்கணம் 126 வினைச்சொல் .133 பண்டையிறந்தகால எதிர்கால வினைமுற்றுவடிவங்கள்... 134எச்சவினை... 137 பெயரெச்சம் 137 வினையெச்சம் 137 அடுக்கீற்று வினைமுற்றுக்கள் 138 தன்மைவினை 139 முன்னிலை வினை .141 வியங்கோள் வினை .142 எதிர்மறை வினை .143 ஏவல் .143 தொழிற்பெயர் .145 வினையாலணையும் பெயர் 145 குறிப்புவினை 145 முற்று 145 செயப்பாட்டு வினை 148 பிறவினை .148 குறைவினை .149 வழுவமைதிவினை 149 ஒட்டு வினை .149 துணைவினை 149 இரட்டைக் கிளவி வினை .150 பெயரடி வினை 150 இடைச்சொல் 150 அசைநிலைச் சொற்கள் 152 உரிச்சொல் 154 பல்கலைக்கழக அகராதியின்பல்வகைக்குறைகள்... 154 தமிழேதிராவிடத்தாய்... 157 VI. உலக முதன்மொழிக் கொள்கை .158 மாந்தன் தோன்றியது குமரி நாடாயிருக்கலாம் என்பது 158 தமிழ் உலக முதற் பெருமொழியாயிருக்கலாமென்பது... 160 தமிழொடு பிறமொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள் 63 tlbkhÊ cலகKதன்மொழியாகKடியாமை.164 முடிவு .169 புறவுரை .170 பின்னிணைப்பு-1 .172 பின்னிணைப்பு-2 175 பின்னிணைப்பு-3 176 ஒப்பியன் மொழிநூல் - 2 2 பண்டைத் தமிழகம் அழிந்துபோன தமிழ்நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைந்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொன்னூல்களிற் கூறப்படுகின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. அகத்தியருக்கு முந்திய தமிழ்நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது. தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தனவும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையகவ லுமென இத் தொடக்கத்தனவும் கடைக்கழகத்தாராற் பாடப்பட்ட பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும் இப் போதில்லை. தலைக்கழகக்காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக் கழகத் திலக்கணமாகிய மாபுராணமும் இசைநூலும் பூத புராணமும் இப்போதில்லை. இனி, அடிநூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கைபாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள்நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கைபாடினியம், சிறுகுரீஇயுரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக் கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனா பதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை, பாரதம்(பெருந்தேவனார் இயற்றியது), புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதரகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக்கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை. பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி, ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடகநூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம், பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம், திரு வல்லையந்தாதி முதலியவை, இதுவரை யறியப்படாத நூல்களாகச் சாஸனத் தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன. கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல்களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளி வரவில்லை. இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணா யிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந்தன வென்றொரு வழிமுறை வழக்குள்ளது. பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை, ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் செய்யுளாலறியலாம். மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்துபோனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர்நிலைக்கல்வி யிழந் தமையும், இருபெருங் காரணங்களாகும். தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவுமான எத்துணையோ நூல்கள் இறந்துபட்டன. அகத்தியர் அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர். அகத்தியர் காலம் அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழக் கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர். அகத்தியர் கதைகள் (1) விந்தத்தின் செருக்கடக்கினது ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்தியமலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்தபின், அதனொடு ஒப்புநோக்க விந்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெயரொடு bதாடுத்துக்Tறக்fரணம்,mவர்bதன்னாடுtந்தபின்Fமரிநாட்டைக்flல்fண்டமையே.அf°âa® என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கி னவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது. (2) கடலைக் குடித்தது முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது. (3) குடத்திற் பிறந்தது மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலை யெனப் பட்டது. தென்மதுரையைக் கடல் கொண்டபின், அகத்தியரிருந்தது பொதியமலை. அது குடமலையின் xருgகுதி.FlâirÆš அல்லது Fடமலையிலிருந்தமைபற்றிmகத்தியர்Fடமுனிவர்vன்றுTறப்பட்டிருக்கலாம்.giHika® தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதை கட்டி, அதன் kறுபெயர்களானFம்பம்fலசம்Kதலியbசாற்fளாலும்mவர்க்குப்bபயரமைத்திருக்கலாம்.M®¡fh£L¥ புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று மொழி பெயர்த்திருப்பதாகப் gண்டிதமணிfதிரேசச்bசட்டியார்Tறுவர்.(4) அங்குட்ட அளவாயுள்ளது அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறுமுனிவரென்றும் குட்டமுனிவரென்றுங் கூறப்பட்டார். குட்டை - குட்டம். ஒ.நோ பட்டை - பட்டம், தட்டை - தட்டம். செய்யுளடிகள் குறளுஞ் சிந்துமாய்க் குறுகி வருவது குட்டம் படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழுநோயும் குரங்குக்குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க. குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ.நோ. nfh£l« nfhZl« (t.), முட்டி - முஷ்டி (வ.). சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச் சேர்தல் இயல்பு. கா: அங்கயற்கண்ணி, அங்காளம்மை. இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம். அங்குட்டன் என்று ஏற்கெனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையாயிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது. அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். கா : குட்டன் = ஆட்டுக்குட்டி. குட்டான் = சிறுபெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் = அங்குட்டன். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும். அகத்தியர் பெயரான அங்குட்டன் என்பதையும், பெரு விரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்ந்திருக்கலாம். (5) மாநிலத்தைச் சமனாக்கியது பனிமலை ஒருகாலத்தில் நீர்க்கீழிருந்து பின்பு வெளித் தோன்றியது. அகத்தியர் தெற்கே வந்தபின், குமரிநாட்டைக் கடல்கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென்நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ் விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தினரென்றும், வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினெண் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர். (6) தமிழை உண்டாக்கினது தÄœ மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும். இதுபோது அறியப்படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக்கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர். அகத்தியம் வழிநூலாதல் அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டுவந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது. அகத்தியம் வழிநூல் என்பதற்குக் காரணங்கள் (1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை. (2) என்ப, என்மனார் புலவர், என மொழிப, என்றிசினோரே என்று தொல்காப்பியர் முன்னூலாசிரியரைப் பல்லோராகக் குறித்தல். (3) களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர் என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோதுதல். சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றியதென்று கூறுவர். அது தவறாகும். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் (புறத். 19) என்று ஆனந்தப் பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர். அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இயற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை, மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி என்று தொல்காப்பியப் பாயிரத்திற் கூறியதா லறியலாம். “ஏழியன் முறையது என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப்பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இJ தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். பாணினி கி.மு. 5ஆம் நூற்றாண்டினரா யிருக்க, அவரியற் றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்? ஐந்திரம் என்பது இந்திரன் என்றோர் (ஆரியப்) புலவர் இயற்றிய இலக்கணமாகும். அகத்தியர்க்கு முன்னமே ஒருசில ஆரியர் தென்னாட்டிற்கு வந்திருந்தமை, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொல்காப்பியர் கூறுவதாலும், கந்தபுராணத்தாலும், திருமாலின் முதலைந்து தோற்றரவுச் செய்திகளாலு மறியப்படும். ஐந்திரம் என்பது வடமொழி யிலக்கணமா தென்மொழி யிலக்கணமா என்று திட்டமாய்க் கூற இயலவில்லை. ஆயினும், இந்திரன் - ஐந்திரம் என்னும் திரிபாகுபெயர் (தத்திதாந்த) முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக முந்துநூல் கண்டு எனச் சில நூல்களைப் பனம்பாரனார் குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே யெனக் கொள்ள இடமுண்டு. ஆதலால், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவீர் (சிலப்.11 : 98 - 9) கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய் (சிலப். 15 : 4 - 5) என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையிற் கூறினது மென்க. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று தொல்காப் பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப்படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாதலின், ஐந்திரம் அதன் சிறப்புப்பற்றியும் நூலாசிரியன் பெயரொப்புமைபற்றியும் அத் தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறையனார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெய ரொப்புமைபற்றியும், கோயிற் பீடத்தடியிற் கிடந்தமைபற்றியும், சிவபெருமா னியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக் குப் பண்டைத் தமிழ்ப்பெயர் வேந்தன் என்பது. இந்திர தெய்வத்திற்குப் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதிகாரத்தானும் மணிமேகலையானு முணர்க. தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவை யல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றி யிருக்க முடியும். இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை. அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே, ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளன் என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nominative of Address) என்றே கூறுவர். ஐந்திர இலக்கணத்தில், விளிவேற்றுமை முன்னூல்களிற் போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமை யாகக் கூறப்பட்டது. இதையே, இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்று கூறினர் அகத்தியர். வேற்றுமைகள் தோன்றின வகையும் முறையும் பின்னர்க் கூறப்படும். (4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல் ஒரு மொழியில், முதன்முத லிலக்கணம் தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக்கணமும், அதன் மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப்பட்டிருத்தலின், அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம். அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை அகத்தியம் வடமொழி யிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதாதலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழி யிலக்கணத் திலில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கணமும் இசை நாடகவிலக்கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற் குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்த மையானும். அகத்தியத்திற்கும் வடமொழி யிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க. ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும். தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம் (The Augustan Age of Tamil Literature) தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள்: (1) தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல் தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக்கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக்கழகக் காலத்தில் இசை நாடக üல்களிருந்தும்òலவராற்bபரும்பாலும்,gயிலப்படவில்லை.ïJnghnjh, இசை நாடக நூல்கள் இல்லாமையுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்படவில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக்கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர். (2) முக்கழகங்களும் முறையே ஒடுங்கல் முக்கழகங்களும் காலத்தினாலன்றித் தன்மையினாலும் தலையிடை கடையாயினமை, கீழ்க்காணும் குறிப்பால் விளங்கும். தலை இடை கடை உறுப்பினர் தொகை 549 59 49 பாடினார் தொகை 4449 3700 449 கழகமிருந்த ஆண்டுத்தொகை 4440 3790 1850 இரீயினார் தொகை 89 59 49 அரங்கேறிய அரசர் தொகை 7 5 3 (3) கலைகள் வரவர மறைதல் தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைந்துபோயின. இன்றும் நூல்வழக்கி லில்லாவிடினும் செயல்வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக் கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, யாளம், கூடு, நாணுதல், மதலை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம், கோபுரம், கொடுங்கை, சுருள்யாளி, தூண், பட்டம், அளவு, உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணிவெட்டிக்கால், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன.1 பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லா யிருப்பினும், jமிழினின்றும்bமாழிபெயர்க்கப்gட்டவையே.ï‹W« தமிழ்நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படா மையுங் காண்க. (4) இலக்கணம் வரவரப் பிறழ்தல் தொல்காப்பியர் காலத்திலேலே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழூஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன. அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே, ஏனை எண்ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க. (5) சொற்கள் வரவரப் பொருளிழத்தல் தலைக்கழகத்திற்குப் பின், ஒருபொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்கி வந்திருக் கின்றனர். ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன. (6) தமிழ் வரவரத் தூய்மைகெடல் தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வடசொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகினமையை, முறையே, கடைக்கழக நூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம் முதலியவற்றை நோக்கிக் காண்க. 1 Dravidian Architecture,pp. 10-23 பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனையெதுகையொன்றே நோக்கி, வடசொற்களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கிவிட்டனர். (7) நூற்செய்யுள் வரவர இழிதல் முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்க ளியற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங் களையே தெரிந்துகொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற் கெளிதாயிருத்தலின். (8) பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல் கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்த தென்று, செந்தொடையாயினும் பொருள் சிறப்பச் செய்யுள் செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணி களையும், பலவகை ஓவிய(சித்திர)ச் செய்யுள்களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொருளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளியற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம். (9) நூற்பொருள் வரவர இழிதல் முற்காலப் புலவர் மேனாட்டார்போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர்; பிற்காலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ்நூல் வகைகளையே இயற்றுவா ராயினர். ஒருவர் கோவை பாடிவிட்டால், தலைசிறந்த புலவராக மதிக்கப்படுவர். யாவையும் பாடிக் கோவையைப் பாடு என்பது பழமொழி. பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே. இதனால் பிற்காலத்தாரது கலையுணர்ச்சியின்மை வெளியாகும். செய்யுள்கட்கும் நூலளவுக்கும் குலமுறை வகுத்ததும், பிற்காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும். கடைக்கழகக் காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது செய்யுள்கொண்ட நூலொன்றை யியற்றினர். பிற்காலத்துப் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், நானாற்பது என்றொரு நூல்வகையை வகுத்துக்கொண்டது நகைப்பிற் கிடமானதே. கலையுணர்ச்சி யிழந்தமையாலும், வடமொழியினின் றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணைநூல் என்னும் ஈர் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங்(காவியம்)களில், நாட்டுப் படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதி நுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றையெல்லாம் புனைவாராயினர் பிற்காலப் புலவர். (10) ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல் கடைக்கழகத்திற்கு முன்காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப் பெயர்களா யிருந் தமையும், பின்காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வடமொழிப் பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என்னும் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப் பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டன்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கினமையுங் காண்க. (11) வரவர வடநூல் தமிழ்நூலுக் களவையாதல் (12) தமிழர் பலதுறைகளிலும் வரவரக் கெட்டுவருதல் கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை பலர் கடைக்கழக இலக்கியமே தமிழிலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதுவே இலக்கியமாயின், தமிழ் புன்மொழிகளில் ஒன்றாகவே வைத்தெண்ணப்படும். பதினெண் மேற்கணக்கான பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பவற்றுள், பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை என்ற நான்கே நூல் என்னும் பெயர்க்குச் சிறிது உரிமையுடையவை. இவையும் புகழும் அகப்பொருளும் பற்றியவையே ஏனைய நான்கும் தனிப்பாடற் றிரட்டுகள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தனிநூல்க ளாயினும், நன்னெறி அகப்பொருள் என்னும் இரு பொருள் பற்றியனவே. கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாற னுள்ளும் ஒன்றாவது கலைபற்றியதன்று, பாவியமுமன்று. அவற்றுள் ஆசாரக்கோவையோ வடநூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுப்பதாயும், எளிய பொருள்களைக் கூறுவதாயுமுள்ளது. கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாறும், அக் கழகக் காலத்திலேயே தோன்றியவையல்ல. அவற்றுட் சில அதன் பின்னரே இயற்றவும் தொகுக்கவும்பட்டன. தொகை நூல்களெல் லாம் ஒருவரே ஒரே காலத்தில் தொகுத்தவையுமல்ல. மேலும், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய பல கீழ்க்கணக்கு நூல்கள், கடைக்கழகப் புலவரா லியற்றப்படா மையும், மேற்கணக்கு பதினெட்டிற்கொப்பக் கீழ்க்கணக்கு பதினெட்டு வகுக்கப்பட்டமையும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன நந்நானூறு பாடல்களாய்த் தொகுக்கப்பட்டமையும் நோக்கி உணர்ந்துகொள்க. பதினெண் கீழ்க்கணக்குள் பதினெட்டாவது நூல், கைந்நிலையென்றும் இன்னிலையென்றும் இருவேறு கொள்கை நிலவுவதையும் நோக்குக. சிறந்த நூல்களெல்லாம் அகத்தியர்க்கு முன்னமே தமிழில் இயற்றப்பட்டிருந்தன. பிற்காலத்தார் அவற்றை ஆராய்ந்தே வந்தனர் என்பதை, தலைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரையென்ப. இடைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார்.... சங்க மிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை யென்ப என்று முக்கழக வரலாற்றிற் கூறியதினின்றும் அறிந்துகொள்க. அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை அகத்தியர்க்கு முன் இந்திரன் என்ற ஓர் ஆரியர், தமிழிலக் கணம் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவ் விந்திரனுக்கு முன் ஆரியர் இலக்கணம் பெரும்பாலும் செய்திருக்க முடியாது. தலைச்சங்கமிருந்தார்.... நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின் மரென்ப என்று, தலைக்கழகமிருந்த காலம் 89 அரச தலைமுறை யினதாகச் சொல்லப்படுதலால், அகத்தியர் அவ்வளவு கால மிருந்திருக்க முடியாதென்பது முழுத்தேற்றம். ஆகவே, தலைக் கழகத்தின் இறுதிக் காலத்தில், அல்லது அதன் பின்தான், அகத்தியர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கமுடியும். அவர் தென்மதுரை சென்ற சில ஆண்டுகளுக்குள், குமரிநாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டது. பின்பு அவர் ஓய்வுபெற்றுப் பொதியமலையில் தவமிருந்து தம் இறுதிக்காலத்தைக் கழித்தார். பாண்டியன் கபாடபுரத்தைக் கட்டி அங்கு இடைக் கழகத்தை நிறுவினான். அதில் தொல்காப்பியர் தலைமை தாங்கினார். அகத்தியர் அக்காலத்தில் இருந்தனரேனும், அக் கழகத்தில் உறுப்பினரா யிருந்ததாகத் தெரியவில்லை. இடைக்கழகத்திலும் அவர் உறுப்பினராயிருந்ததாக முக்கழக வரலாறு கூறுவது, அவர் அக்காலத்திலிருந்தமை பற்றியேயன்றி வேறன்று. தலைக்கழகத்தை அவர் அமைத்தார் என்ற வரலாறு பொருந்தாதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒவ்வொரு கழகமும் பல தலைமுறையாக நடைபெற்றதென்றும், அவற்றுள் இறுதித் தலைமுறையிலிருந்த புலவர் தொகையே வரலாற்றிற் கூறப்படுகின்றதென்றும் அறிந்து கொள்க. அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலிருந்து கடைக்கழகக் காலத்தில் கபில பரண நக்கீரரும், அண்மைக் காலத்தில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களும், ராவ்சாஹிப் மு. இராகவை யங்கார் அவர்களும், ரா. இராகவையங்கார் அவர்களுமாகப் பெரும்பாலும் பார்ப்பனரே தமிழ்நூலுக் கதிகாரிகளா யிருந்து வருவது எவர்க்கும் தெரிந்ததே. குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ் என்பதை அவர் அறிவாராக. தொண்டு, நும் என்னுஞ் சொற்களின் இயல்பு அகத்தியர் காலத்தவரான தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தினின்று பழங்காலம் நோக்கிச் செல்லச்செல்லத் தமிழில் வடசொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத்திலும் தொல் காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வடசொற்களாயிருத்த தலானும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணையும் வடசொற் கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழ ராலேயே வழங்கப்பட்டதென்றும் அறிந்துகொள்க. பேரகத்தியம் என்று இதுபோது வழங்கும் நூல் பிற் காலத்தில் வடமொழிப்பற்றுள்ள ஒருவராற் செய்யப்பட்டது. அது பேரில்மட்டும் அகத்தியம் என்க. அகத்தியர் சிற்றகத்தியம் பேரகத்தியம் என இருவேறு நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. அகத்தியம் வழக்கற்றபின், அதன் நூற்பாத் திரட்டுகளில், சிறியதும் பெரியதுமான இரண்டே முறையே அப் பெயர்பெற்று வழங்கியிருத்தல் வேண்டும். வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழிநூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்த வில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப் பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியிருப்பதால், அது தமிழி னின்றும் மொழிபெயர்த்த வடநூல்களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங்கினதையே உணர்த்துவதாகும். இது வேண்டாத வட சொற்கள் தொல்காப்பி யத்தில் வழங்குவதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க. அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை அகத்தியர் காலத்திற்குமுன், தமிழ்நூல்கள் சிறிதுபோது கற்கப்படாதிருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும். (1) அகத்தியர் முருகனை நோக்கித் தவங்கிடக்க, அத் தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகளைக் காட்டிற்று என்ற கதை. (2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு. (3) தொல்காப்பியப் பாயிரத்தில் முந்துநூல் கண்டு என்று கூறியிருத்தல். அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழத்திற்குப்பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடிமாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க. தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல்களைக் கண்டமைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், முந்துநூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் கழக நூல்கள் அறியப்படாதிருந்ததும், அவருக்குத் தெரியாத முதுநூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம். தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்துநூல் கண்டமைபற்றியே, தம் நூலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிடவில்லை யென்க. தொல்காப்பியம் அகத்தியத்திற்குப் பிந்தினதாதலின், அதினும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதையறியாதார் பிற்காலத்தில், தொல்காப்பியர் அகத்தியத்தைச் சாவித்ததாக ஒரு கதை கட்டினர். தொல்காப்பியர் அகத்தியரைத் தம் ஆசிரியராகவேனும் ஓரிடத்தும் குறிக்காமையால், அவ் விருவர்க்குமிருந்த தொடர்பு, வேதநாயகம் பிள்ளைக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மிருந்தது போன்றதோ என்று ஐயுறக் கிடக்கின்றது. அகத்தியர் தமிழ்நூற் பயிற்சியைப் புதுப்பித்தமை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், எங்ஙனம் மடங்களினும் தமிழ்ப்புலவர் வீடுகளினும் பயிலப்படாது குவிந்து கிடந்த பல தமிழ் நூல்களைத் திரட்டி அச்சிட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்களோ, அங்ஙனமே அகத்தியரும் சிறிதுபோழ்து பயிலப்படாது கிடந்த தமிழ்நூல்களைத் திரட் டியாராய்ந்து, தமிழ்நூற் கல்வியைப் புதுப்பித்தாரென்க. இதனால், தலைக்கழகம் முடிந்தபின்னரே அகத்தியர் தென்னாட்டுக்கு வந்தாரென்பதும், அக் கழகம் நின்றுபோன மைக்குச் சில ஆரியரே காரணமா யிருந்திருக்கலாமென்பதும், இங்ஙனம் தமிழைத் தளர்த்தோரும் தமிழை வளர்த்தோருமாக இருசாரார் தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் என்பதும் நுணித்தறியப் படும். மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C. 427) என்றும், அவர் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச்சொல்லும் எச்சமுங் கண்டுபிடித்தாரென்றும், மேனாட் டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத்தக்கதும், டையோனி சியஸ் திராக்ஸ் (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமே யென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார். வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியி லிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி யிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன்முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும். இங்ஙனம், உலகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ், இதுபோது ஒரு புன்மொழியினும் இழிவா யெண்ணப்படுவதற்குக் காரணம், இற்றைத் தமிழரின் அறியாமையும் மடிமையுமேயன்றி வேறன்று. ஆரியர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்துவைத்தது, அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டேயன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற் பொருட் டன்று. தமிழிலுள்ள கலைநூல்களை மொழிபெயர்த்தும், அவற்றை விரிவாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக்கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நேரே யறிவிக்கவே யில்லை. மேனாட்டாரே முதன்முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க்கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதேயென்று, ஆரியர் தம் முன்னோர் கி.மு. 2500 ஆண்டுகட்குமுன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ் விருபதாம் நூற்றாண்டிற்குரிய விழுமிய கருத்துகளை யெல்லாம் பொருத்தியுரைக்கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சியில்லார்க்குப் புலனாகாதுபோயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க. வடதிசை உயர்ந்தும் தென்திசை தாழ்ந்ததும் அகத்தியர் தெற்கே வந்தபின், நிலம் வடதிசையில் உயர்ந்ததும் தென்திசையில் தாழ்ந்ததும் முன்னர்க் கூறப்பட்டது. இங்ஙனமே, கல்வி, கைத்தொழில், வாணிகம், செல்வம், அலுவல், அதிகாரம் முதலிய பிறவற்றிலும் அவ்விரு திசைகளும் (ஆரியமும் திராவிடமும்) முறையே உயர்ந்தும் தாழ்ந்தும் போயினவென் றறிந்துகொள்க. மேற்கு கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் போன்றே, உத்தரம் (வடக்கு) தக்கணம் (தெற்கு) என்னும் திசைப் பெயர்களும் ஏற்ற விறக்கங்களை யுணர்த்துவது பின்னர்க் கூறப்படும். கன்னடத்தில் இலக்கியம் தோன்றியது கி.பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி.பி. 13ஆம் நூற்றாண்டென்றும் சொல்லப்படுகின்றது. தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதவாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலின், திராவிட மொழிகளில் தமிழே மொழியாயினும் நூலாயினும் - மிகத் தொன்மை வாய்ந்ததென்பதைச் சொல்ல வேண்டுவதேயில்லை. தமிழின் திருத்தம் திராவிட மொழிகட்குள் தமிழ் மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும். தமிழ்ச்சொல் வளம் (1) தமிழின் வளம் தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணர்ந்திலர். உண்மையுடைமை யென்னுங் குணம், நினைவு சொல் செயல் என்ற முக்கரணங்களையுந் தழுவியது என்பதை உணர்த்தற்கு, உண்மை (உள்+மை), வாய்மை (வாய்+மை), மெய்ம்மை (மெய்+மை) என மூன்றுசொற்கள் தமிழிலுள்ளன. மனத்தின் வெவ்வேறு வினையையுங் குறித்தற்கு வெவ் வேறு சொல் உளது. கா : உள்(ளு), to will (உள்ளம் - will); உணர், to feel, to comprehend (உணர்வு - sentiment, உணர்ச்சி - feeling); நினை, to think, to remember (நினைவு - thought, நினைப்பு - memory); நினைவுகூர், to remember, to commemorate; K‹(D), to propose, to think, to intend (முன்னம் - intention, indication); முன்னிடு, to propose, to set before; முன்னிட்டு, having proposed, having set before, for the purpose of. ஒரு காரியத்தை முன்னிட்டு என்னும் வழக்கை நோக்குக. முன்னீடு = proposal; உன்(னு), to imagine (உன்னம் - imagination); உன்னி, to guess (உன்னிப்பு - guessing); எண்(ணு), to deliberate, to consider (எண்ணம் - consideration); கருது, to conceive, to think (கருத்து - concept, idea); அறி, to know (அறிவு - knowledge); கொள், to opine (கோள் - opinion, கொள்கை - doctrine); மதி, to estimate, to regard (மதிப்பு - estimation, approximation, respect, மதி - sense); தீர்மானி, to determine, to resolve; ea, to appreciate (நயப்பு - appreciation); தெருள், to perceive clearly; மருள், to be deluded; ஆய், to test, to examine, (ஆய்வு - test); ஆராய், to make a critical study, to investigate (ஆராய்ச்சி - research, critical study); சூழ், to counsel, to deliberate, சூழவை - council. உளத்தொழில்பற்றி இன்னும் பல சொற்களுள. இவற்றொடு துணைவினை சேர்த்துக்கொள்ளின், இக்காலத்திய மனத்தொழில் நுட்பவேறுபாடுபற்றிய கருத்துகளை யெல்லாம் குறிக்கச் சொற்களை யமைத்துக்கொள்ளலாம். மனைவிக்குக் கணவனோடுள்ள புலவியின் மூன்று நிலைகளையுங் குறித்தற்கு, முறையே ஊடல், புலவி, துனி என மூன்று சொற்கள் உள்ளன. ஒரு வினைக்குத் தகுந்த சமையம், நல்ல கருத்தில் செவ்வி என்றும் தீய கருத்தில் அற்றம் என்றும் கூறப்படுகின்றது. தமிழின் சொல்வளத்தை நன்றாயுணர்தற்கு நிலைத்திணைச் சொற்களை நோக்கவேண்டும். முதலாவது உள்ளீடுள்ள நிலைத்திணை யுயிரிகளை மரமென்றும், அஃதில்லாதவற்றைப் புல்லென்றும் இருவகையாக வகுத்தனர் முன்னோர். புறக்கா ழனவே புல்லென மொழிப (மரபு. 81) அகக்கா ழனவே மரமென மொழிப (மரபு. 21) என்பன தொல்காப்பியம். நிலைத்திணை யுறுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நுட்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயருளது. இலையென்னும் ஒரேயுறுப்பிற்கு நால்வேறு சொற்களுள. மா வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தாள் என்றும், கரும்பு, பெருஞ்சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும். பூ முதலாவது தோன்றும்போது அரும்பு என்றும், பேரரும்பானபோது போது என்றும், மலர்ந்தபின் மலர் என்றும், விழுந்தபின் வீ என்றும், வாடியபின் செம்மல் என்றும் கூறப்படும். பூ என்பது பொதுப்பெயர். அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களுள. பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுடன், செடிப்பூ என்ப தொன்றும் சேர்த்துக்கொள்ளலாம். காயின் வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு, திருகுபிஞ்சு, இளம்பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்காய், கன்னற்காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன. மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன. பருவத்திற் காய்ப்பது பருவக்காய் என்றும், பருவமல்லாத காலத்திற் காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப்படுகின்றன. முதிர்ந்தபின் கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன. செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள், வெவ்வேறு காரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகை யாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தைவகை சொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப்படுகின்றது. சொத்தையான மிளகுப் பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப்படுதல் காண்க. பழத்தின் தோல்வகைகட்கு, அதனதன் வன்மை மென்மைக் குத் தக்கபடி தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்களுள. விதைவகைக்கு வித்து, விதை, மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்களுள. இங்ஙனம், ஒவ்வோர் உறுப்பிற்கும் பற்பல சொற்களுள்ளன. அவற்றையெல்லாம் எனது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் கண்டுகொள்க. நெல்வகை மட்டும் நூற்றுக்கணக்கா யுள்ளன. அவற்றுள் சம்பா என்னும் ஒருவகையே 70 திறமாயுள்ளது. ஆங்கிலம் இக்காலத்தில் பல்வேறு மொழிகளினின்றும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், எக்கருத்தை யும் தெரிவிக்கவல்ல மொழியாகப் புகழப்படுகின்றது. ஆனால், இவ் விருபதாம் நூற்றாண்டிலும், ஆங்கிலத்திலும் அதுபோன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலிருந்தது மிகமிக வியக்கத்தக்கதே. தமிழில் ஒருபொருட் சொற்கள் பலபொருள்கட்குள்ளன. பிற திராவிட மொழிகள், பல பொருள்கட்குத் தமிழ்ச்சொற்களையே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டிருக்கின்றன. கா : இல் - இல்லு (தெலுங்கு). மனை - மன (கன்னடம்). (2) தமிழ்த்தாய்மை திராவிடச் சொற்கட்கு மூலம் பெரும்பாலும் தமிழிலேயே உள்ளது. கா : வென்ன (தெ.) < வெண்ணெய் = வெள் + நெய். லேது (தெ.) < இலது. செய் (கை) என்பது போன்ற இரண்டொரு சொற்கள், மூலவடிவில் தெலுங்கிலிருப்பது, பொதுவிதிக்குத் தவிர்ச்சியே யன்றி மாறாகாதென்க. (3) தமிழ்த்தூய்மை தமிழைப் போலப் பிற திராவிட மொழிகளைப் பிற மொழிக் கலப்பின்றி யெழுத முடியாது. தெலுங்கில் உடலுக்கு வழங்கும் ஒள்ளு, தேகம் என்னும் இருசொற்களில், ஒள்ளு என்பது உடல் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவு; தேகம் என்பது வடசொல். (4) தமிழின் முன்மை பிற திராவிட மொழிச்சொற்கள் மூலத்திற்குத் தமிழைச் சார்ந்திருப்பதுபோல, தமிழ்ச்சொற்கள் மறித்தும் தம் மூலத்திற்குப் பிறமொழியைச் சார்ந்திருப்பவையல்ல. (5) தமிழல் திராவிட மொழிகளின் திசைவழக்குத்தன்மை தமிழல்லாத திராவிட மொழிகளெல்லாம், ஆரியர் இந்தியாவிற்கு வருமுன், தமிழின் கிளைவழக்குகளாகவே யிருந்தன. தமிழிலுள்ள சொற்கள், இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று நால்வகையாகத் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதல் மூன்றும் தன்சொல்; இறுதி யொன்றும் அயற்சொல். முதல் மூன்றனுள், முன்னிரண்டும் செந்தமிழ்ச்சொல்; பின்னொன்றும் கொடுந்தமிழ்ச்சொல். செந்தமிழ்நாடு செந்தமிழ் நிலத்தை வைகையாற்றின் வடக்கும் மருதயாற் றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம் என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தனர் . செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயா யிருத்தலின், இவ் வுரை பொருந்தாது. செந்தமிழ் நாடாவது: வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு : வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித் தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளையொழித்து, வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென் றுரைப்ப என்றுரைத்தார் தெய்வச் சிலையார். இவ் வுரையே சிறந்ததாகும். செந்தமிழ் நிலம், சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ் சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப என்பது பிற்காலத்திற் கேற்றதாகும். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 4) என்பதால், செந்தமிழ்நாட் டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ்நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும். கொடுந்தமிழ்நாடு கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டையும், தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண் என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ் வுரை பொருந்தாது. இந் நாடுகளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டிற்குப் பதிலாக, பொங்கர்நாடு ஒளிநாடு என்பவற்றைக் குறிப்பர் இளம்பூரணர், சேனாவரையர் முதலியோர். பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம்பூரணர். தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். நாயை ஞமலி என்ப பூழிநாட்டார் என்று திசைச்சொற்குக் காட்டுக் கூறினர் இளம்பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இருநாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன. நச்சினார்க்கினியர் பின்வருமாறு திசைச்சொற்குக் காட்டுக் கூறினர்: தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழிநாட்டார் நாயை ஞமலி என்றும், சிறுகுளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்யைச் செறு என்றும், சிறுகுளத்தைக் கேணி என்றும்; அருவா வடதலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப. இனிச் சிங்களம் அந்தோவென்பது; கருநடங் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க. இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே யிருந்தன வென்றும், பின்பு கிளை வழக்குகளாகி, இறுதியில் வடசொற் கலப்பால் வேறு மொழிகளாய்ப் பிரிந்துவிட்டன வென்றும் அறியப்படும். தெய்வச்சிலையாரும் இக் கருத்தை யொட்டியே, செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தங் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு. பன்னிரு நிலமாவன : வையையாற்றின்... நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, அருவாநாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக் காட்டுமாறு : கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துட னுறைபுகூறுந் தமிழ்திரி நிலங்களும், முடி யுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிருவருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என்றமையானும், தமிழ்கூறும் நல்லுலகத்து...... பொருளும் நாடி என நிறுத்துப் பின்னுஞ் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன : குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு. குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற் கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலுங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க என்று கூறியிருத்தல் காண்க.2 தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழி களாய்ப் பிரிந்துபோனபின்பு, அவற்றின் முன்னை நிலையை யுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன்மொழி நாடு களையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ்நாடாகக் கூறினர் பவணந்தியார், செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என்று. தமிழொழிந்த பதினெண் நிலங்களை, சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கங் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே என்னுஞ் செய்யுளானறிக. தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரிந்து போனபின்பே, பொங்கர்நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந்தமிழ் 2 தொல். எச்ச. நூ. 1, 4 உரை. நாட்டுப் பகுதிகள் கொடுந்தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தவை பல பின்பு பிறமொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர்பின்மையும் என்பதும் அறியப்படும். செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில்மட்டும் திசைச்சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது, செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் (கிளவி. 13) அஃதன் றென்ப வெண்பா யாப்பே (செய். 78) என்பவற்றால் அறியப்படும். செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லுதலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே. செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக. (செப்பல் வெண்பா வோசை.) ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளை யிழந்து தெலுங்கில் வழங்குகின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க. தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வட சொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன்மொழிச் சொற்களையெல்லாம், ஆங்கிலச் சொல், இந்துஸ் தானிச் சொல் என அவ்வம் மொழிப்பெயராலேயே கூறல் வேண்டும். திராவிடமொழிச் சொற்கள் மட்டும் திசைச்சொல்லா கவே கூறப்படும். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற் களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ் வருகிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிறசொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாறு விடை தந்ததன்று. (8) திராவிடம் என்னுஞ் சொன்மூலம் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர் களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம். தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) - த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.3 எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை. கால்டுவெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர். அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார். திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கியதாகும். தெலுங்கு தமிழினின்றும் பிரிந்துபோன பின்பு, முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு, ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின், கன்னடம், மலையாளம் முதலிய 3 Linguistic Survey of India, Vol. IV, p. 298 மொழிகள் பிரிந்து திராவிடம் பல்கியபின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள், முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லாவற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழிகட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருந்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச்சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க.4 1. திராவிடம் வடக்குநோக்கித் திரிதல் (i) தமிழ்நாட்டில், பாண்டிநாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது. பாண்டியனுக்குத் தமிழ்நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பாண்டிநாடு தமிழ்நாடெனச் சிறப்பிக்கப்பட்டதாகும். சோழநாட்டைத் தமிழ்நாடென்றும், தொண்டைநாட்டைச் சான்றோருடைத்து என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழரசர்க் குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டவன் பாண்டியன். அதனாலேயே, இன்று தென்பாகத்தில் வடபாகத் திலிருப்பதுபோன்ற தமிழுணர்ச்சி யில்லை. ஆயினும், நாட்டுப் புறத்திலுள்ள குடியானவர்களிடைப் பண்டைத் தமிழ்ச்சொற் களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண் டிருக்கின்றன. 2. தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள் (1) தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங்களும் பாண்டிநாட்டி லிருந்தமை. (2) வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழ மொழிகளும் வழங்கல். (3) வடசொற்கள் தற்பவமாக வழங்கல். கா : சாக்ஷி - சாக்கி. 4 Caldwell’s Comparative Grammar, pp. 1, 4, 9, 80, 370 சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு, பண்ணையார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன. (4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல். கா : இராமம் - (நாமம்). (5) அயல்நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப்பெயர் வழங்கல். கா : bicycle - மிதிவண்டி. (6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல். கா : காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி. (7) ஓவியவுணர்ச்சி சிறந்திருத்தல். (8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட்டுகள் சிறப்பாய் வழங்கல். (ii) திருச்சிராப்பள்ளி யெல்லையிற் சொற்கள் குறைதல். கா : பரசு (sweep) என்ற சொல் வழங்காமை. (iii) வடார்க்காட்டு அல்லது சென்னைத்தமிழ் கொச்சை மிகல். பரசு (பீராய்) மூஞ்செலி (மூஞ்சூறு). (iv) சென்னைக்கு வடக்கில் மொழிபெயர்தல். வடவேங்கடம் என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப் பட்டுள்ளது. ஆயினும், தமிழ்கூறும் நல்லுலகத்து என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும். வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது. தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது. தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற்போல் வல்லோசை பெறுகின்றன; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாகவும் மாறுகின்றன; வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்குகின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களா யிருந்தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது. தெலுங்கு வடிவாகப் பல தென்சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன. கா : தமிழ் தெலுங்கு ஆரியம் விளி பிலு(ச்)சு L. pello E. appeal, repeal etc. அள் (காது) அடுகு L. audio E. audience, audible etc. வரை விராசு E. write, A.S. writan சால் சாலு L. satis, E. satisfy. வண்டி, பண்டி பண்டி E. bandy வெள்ளு Ger. wenden, A.S. wendan, E. wend, to go. கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங்குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்ற தென்க. Write என்னும் சொல்லில் (வ்) பண்டு ஒலித்தது. (v) தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல் பண்டைக் காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்ச த்ராவிடீ என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதே யென்பது, இம்மடலத்தின் 2ஆம் பாகத்தில் விளக்கப்படும். (vi) வட இந்தியாவில் திராவிட மறைவு கோண்டி (Gondi), பத்ரீ (Bhatri), மால்ற்றோ (Malto), போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்துபோவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906ஆம் ஆண்டே தமது இந்திய மொழிக் கணக்கீடு என்னும் நூலிற் குறித்துள்ளார்.5 5 L.S.I. Vol. IV, pp.446, 472-4 (vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம் ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்தபின் ஆரியத்தொடு கலந்துபோனமை யால், ஆரியத்திற்கு மாறான பல திராவிட அமைதிகள் இன்றும் வடநாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன: (1) பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல். (2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல். (3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாதது மான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள். (4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல். (5) வினையெச்சத்தாற் காலம் அமைதல். (6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல். (7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு K‹Å‰wš.6 இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன. சொற்கள் தமிழ் இந்தி பொருள் ஆம் ஹாம் yes இத்தனை இத்னா இவ்வளவு உத்தனை உத்னா உவ்வளவு உம்பர் உப்பர் மேலே உழுந்து உடத் (ஒரு பயறு) ஓரம் ஓர் பக்கம் கடு கடா கடினமான கிழான் கிஸான் உழவன் சவை சபா அவை செவ்வை சாப்வ் துப்புரவு தடி சடீ கம்பு 6 Caldwell’s Comparative Grammar : Introduction, p. 59 தண் தண்டா குளிர்ந்த தண்டம் தண்ட தண்டனை தாடி டாடி தாடிமயிர் நேரம் தேர் வேளை படு பட் விழு படு படா பெரிய புகல் போல் சொல் பூ பூல் மலர் மாமா மாமா மாமன் மாமி மாமீ அத்தை முத்து மோத்தீ pearl மேல் மே (7ஆம் வே. உருபு) முட்டி முட்டி மொழிப் பொருத்து மூக்கு நாக்கு நாசி மோட்டு மோட்டா பருமனான வெண்டை பிண்டீ வெண்டைக்காய் இலக்கண அமைதி (1) 4ஆம் வேற்றுமையுருபு தமிழில் கு என்றும் இந்தியில் கோ என்று மிருக்கின்றது. (2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன. கா : என்மேல், முஜ்மே (3) தமிழில் இய என்பதும், இந்தியில் (முன்னிலையில்) இயே என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன. (4) மாறே7 (மாறு + ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொரு ளிடைச்சொல்லா யுள்ளது. இந்தியில் கே என்னும் உருபோடு சேர்ந்தே வரும். (5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறத்த கால வினையெச்சப் பொருள்படும். கா: ஸுன் ஜாவ் = கேட்டுவிட்டுப்போ. 7 புறம். 4, 20, 22, 92-3, 271, 380; நற். 231 இங்ஙனம் தமிழிலுமுண்டு. ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப் பொருள்படாமல் நிகழ்கால வினையெச்சப் பொருள்படும். கா : கேள்வா = கேட்கவா; கேள்போ = கேட்கப்போ. (6) இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுகளும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன. கா : ஆயா = வந்தான், வந்து. போலா = சொன்னான், சொல்லி. இவை செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினைமுற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது. வழக்கு : பல்லைப் பிடுங்கிவிடு என்னும் வழக்கு செருக் கடக்கு என்னும் பொருளில், தாந்த் கட்டேகர்தோ என்றும், உயிரைக் கையிலேந்திக்கொண்டு ஓடு என்பது ஜான்லேக்கர் பாக் என்றும் இந்தியில் வழங்குதல் காண்க. (viii) இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிஸ்தான மலைநாட்டில் பிராஹுயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல். (ix) பெலுச்சிஸ்தானத்திற்கப்பால் திராவிடமொழி வழங்காமையும், திராவிடச் சொற்களே வழங்குதலும். ஒரு மொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், ஆப்பிரிக்கா சீனம் முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிடமொழி தென்னாட்டிற் செவ்வையாயும் வடக்கே செல்லச்செல்லத் திரிந்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும். 3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புகள் (1) நிலத்தின் தொன்மை ஞாலத்தில் குமரிநாடு மிகத் தொன்மையானது. இந்தியா வின் முதற் பெயர் நாவலந்தீவு என்பது. இது நாவலந் தண் பொழில் என்றும் வழங்கும். தமிழ்நாடு முழுவதும் ஒரே பொழில் (சோலை) போலிருந்தமையின், பொழில் என்பது நாடு அல்லது உலகம் என்று பொருள்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் மக்கட் பெருக்கற்ற ஒரு தொன்முதுநிலை யுணரப்படும். சரித்திர காலத்திற்கு முற்பட்ட தாழிகளும் அடக்கக் கற்களும் ஏனங்களும், தென்னாட்டிற் பலவிடங்களிற் காணப் படுகின்றன. மிகப் பழைமையான மண்டையோடுகளுள் ஒன்று, ஜாவாவினின்று வந்துள்ளது. அத் தீவு தன்னருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒருகாலத்தில் ஆசிய நிலத்தோ டிணைக்கப் பட்டிருந்தது. அது காட்டுமாந்தன் (orang-utan) என்னும் குரங்கு வதியும் இடங்கட்கு அணித்தானது. மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் உயிர் வதிந்த இடமாகத் தெரிதலால், அது நமக்கு மிக முக்கியமானது8 என்று ஆல்ப்வ்ரெட் கிளாட் (Alfred Clodd) கூறுவதால், அதனோடு ஒரு காலத்தில் இணைக்கப்பட்டிருந்த குமரிநாட்டின் தொன்மையும் ஒருவாறு விளங்கும். யானைக்கையும் மடங்கலுடம்பும் உள்ள யாளி என்னும் விலங்கும், அதுபோன்ற பிறவும் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்ததும் அதன் தொன்மையைப் புலப்படுத்தும். (2) நிலத்துமொழியின் தொன்மை இது பின்னர்க் கூறப்படும் (3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை நாட்டுவாழ்க்கைநிலை: இக்காலத்திற்போலச் சரித்திர நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுள்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டுமென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது 8 Childhood of the World புலனெறி வழக்கம் எனப்படும். அதாவது, உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னாததுங் கலந்து உள்ளதாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும். குறிஞ்சிநாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவதன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்ஙனமே பிறவும். பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்). இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள்; ஏனைய பூப்பெயர்கள். பாலை என்பது பிறநாட்டிலுள்ளதுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் றானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப். 11 : 12-16) என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்குரியதாக அகப்பொருட் செய்யுள்களிற் கூறப்படும். மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்துபோனது, குறிஞ்சி யினின்று போவதும், அயல்நாட்டினின்று வந்து குடிபுகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள், முன்னது மக்கட்பெருக்கால் படிப்படியாய் நிகழ்வது; பின்னது தெரிந்துகோடலால் ஒரே சமையத்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்க. குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும். தமிழ்நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றியபின்பாதலின், குறிஞ்சியில்மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்துபோயிற்று. அதனாற் குறிக்கப்படவில்லை. ஆயினும் அதைக் கருத்தளவையான் அறிந்துகொள்ளலாம். மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த்தானிருந்திருக்க வேண்டும். அவரையே ஆதம் ஏவையென்று கிறித்துமதமும் இஸ்லாம் மதமுங் கூறுகின்றன. இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச் சென்றனர். முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டையாடியும் உண்டுவந்த மக்கள், இயற்கையாய் விளையும் மரவுணவு போதாமையாலும், வேண்டியபோதெல்லாம் ஊனுணவு கிடையாமையாலும், செய்கையாய்ப் பயிர்பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத்தொடங்கினர். இதற்கு மரமடர்ந்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர். மாந்தன் முதன்முதலாய் வளர்த்த விலங்கு ஆவே. ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா-மான்-மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா(ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப்பெயராயிற்று. ஆ என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று. மரவுணவும் ஊனுணவும் மக்கட்கு வேண்டியவாயுள்ள மையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றினவென் னலாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர்களையும் விளைத்துக் கொண்டனர் முல்லைநிலத்தார். மாடு பறையரால்மட்டும் தின்னப்படுகின்றது. மேனாடு களில் அதை எல்லாரும் உண்கின்றனர். முல்லைநிலத்திற் போதுமான நீர்வளமும் நிலவளமுமில் லாமையால், மக்கள் அடுத்தாற்போல், மீனைப் பெரிதும் விரும்பினவர் நெய்தல்நிலத்திற்கும் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருதநிலத்திற்குமாகப் பிரிந்துபோயினர். பாலைநிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமை யால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும் நேர்ந்தது. ஐந்து நிலத்திலும் மாந்தர் பரவியபின், குறிஞ்சிநிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலைநிலத்தார் போர்த் தொழில் செய்து மறம் (வீரம்) சிறந்திருந்தமையின் மறவர் என்றும், முல்லைநிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையிலிருந் தமையால் இடையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருதநிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல்நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார். படகு படவு. க-வ, போலி. படவர்-பரவர்-பரதவர். ட - ர, போலி. படவர் செந்நிறமாயிருப்பதால் செம்படவர் எனப்பட்டார். பரதவர் விரித்தல் திரிபு. நகரவாழ்க்கை நிலை மாந்தர் மருதநிலத்திற்கு வந்தபின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்; அதனால் குடியானவர் எனப்பட்டனர். நிலையாய்க் குடியிருந்ததினால், மருதநிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகரு மாயின. மருதநிலத்தூர்கள் பிற நிலத்தூர்களினும் பலவகையிற் சிறந்திருந்தமையால், ஊர் என்றே யழைக்கப்பட்டன. ஊர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான ஊரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது. நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்றும் பிறந்ததே. அது முன்னர்க் கூறப்பட்டது. அரசியல் மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப் பிருப்பதும், நிலையில்லாத இடத்தில் அவையில்லாதிருப்பதும் இயல்பு. மருதநிலத்தில் மாந்தர் நிலையாயிருந்தமையின், ஆட்பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின. குடிகளை ஒரு மந்தைபோன்றும் அரசனை அதன் மேய்ப் பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட் டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமைபற்றிச் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம். கோ = பசு. கோ + அன் = கோவன் - கோன் - கோ(ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெருவழக்காக வழங்குகின்றது. Swed. - Dan. ko, Du. koe, Skt. go, Ger. kuh, Ice. kyr, Irish - Gael. bo, L. bos, Gk. bous. கோ என்னுஞ் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச்சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ, பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப் பொருளில் வழக்கற்றதென்க. கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ.நோ: யாவர் - யார். கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடையனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும். கோவனிரை மீட்டனன் (சீவக. 455) என்பதில் இடையனையும், கோவனும் மக்களும் (சீவக. 1843) என்பதில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது. கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயர்கள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும் சொல், செங்கோன் கடுங்கோன் என்னும் பெயர்களில் அரசனைக் குறித்தது. அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈறு கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெருங்) கடுங்கோ, இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக்கும் இடையனுக்குமன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக. கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து, ஆமா கோனவ் வணையவும் பெறுமே (நன். 248) என்று பவணந்தியார் கூறியது தவறாகும். கோ என்னும் பெயர் பெற்றத்திற்கு வழக்கற்றுப் போனமையின், கோன் என்பதின் ஈறுகெட்ட வடிவம், அரசனைக் குறிக்கும்போது மயக்கத்திற் கிடமில்லை. தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்ஙனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. இன்னும் இதன் மயக்குத் தெளிய, இப் புத்தகத்தின் இறுதியிற் காண்க. அரசியல்பற்றிச் சில தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழிகளில் வழங்குகின்றன. அவை அரசு, பாழி முதலியன. அரசு என்னுஞ் சொல்லின் வரலாறு பின்னர்க் கூறப்படும். பாழி = நகர். Gk. polis, a city. இச் சொல்லிலிருந்தே, police (the system of regulations of a city), policy (manner of governing a city or nation), political (pertaining to policy), politics (science of government), polity (civil constitution) முதலிய சொற்கள் பிறக்கும். தொழிற்பெருக்கமும் குலப் பிரிவும் மருதநிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ் வகுப்பினின்றும் பிரிந்து போனவர், வாணிகர் அரசர் அந்தணர் எனப்பட்டார். உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத் தில் ஏற்றத்தலைமை முறையில் தலைமாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார். கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிப் பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர். உழவர் பிறரைநோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமையின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறிய ராயினார் உழுதுண்பாரும் செல்வராயினார் உழுவித்துண்பாரு மாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமர் அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படுபவர். களத்தில் வேலை செய்பவர் களமர். கருங்களமரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்கவழக்கம் முதலியனபற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். இங்ஙனமே பிறகுலத்தாரும். இவற்றின் விரிவை எனது தென்னாட்டுக் குலமரபு என்னும் நூலிற் கண்டுகொள்க. நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணைமயக்கம் ஏற்பட்டது. முல்லைநிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்தி லிருந்த கள்ளர் மறவரும், நெய்தல்நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சிநிலத்திலிருந்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய்வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைஞராயினர். பண்டைத் தமிழ்நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணமென்பது தென்னாட்டுக் குலமரபில் விளக்கப் படும். கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர். பல்லவர் என்பார், கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையும், சோழநாட்டை அல்லது தொண்டை மண்டலத்தை யாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே. அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை. தமிழ்நாட்டு மொழிகளும் மதங்களுமே அவர்க்கிருந்தனவும். செல்வமும் மறமும் படைத்த எவனும், ஒரு படையைத் திரட்டிக்கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு. பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று. பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழநாட்டின் வடபாகத்திற்குத் தொண்டைமண்டலம் என்றும், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்றும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ் வாற்றுப்படைத் தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி. 1ஆம் நூற்றாண்டாகும். ஆகையால், புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித்தமிழ்ச் சொல்லாதலுங் காண்க. வழிபாடும் மதமும் வழிபாடாவது ஒரு சிறுதெய்வத்தையேனும் முழுமுதற் கடவுளையேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு கருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி. மதி + அம் = மதம். மதித்தல் - கருதுதல். கடவுளைப்பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு. சமை + அம் = (சமையம்) - சமயம். சமைதல் - பக்குவமாதல். பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறாதலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே. மதம் ஆன்மாக்களை வீடுபேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்குவமான வேளை, வேளை. சமயம் பக்குவமாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் நெறிமுறையாகும். கா : பழைமை (தொன்மை) - பழமை (புராணம்); முதலியார் - முதலியோர். நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்கு களை நோக்குக. வழிபாடு - Cults ஐந்திணைத் தெய்வம் மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (அகத். 5) என்பது தொல்காப்பியம். முல்லைத்தெய்வம் மாயோன் மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரியோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை. முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியை யும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள். குறிஞ்சித்தெய்வம் சேயோன் சேயோன் = சிவந்தவன். சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒருபொருட் சொற்கள். குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்டதினாலும், தீ அஞ்சத்தக்கதான தினாலும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப் பாடாகக் கொண்டு, அதற்குச் சேயோன் என்று பெயரிட்டார்கள். சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தி யாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர். கோழியை வீட்டில் வளர்த்தது பிற்கால வழக்கம். சூரபன்மன் மயிலுங் கோழியுமாகிக் கந்தனுக்கு முறையே ஊர்தியுங் கொடியுமானான் என்றது பிற்காலக் கதை. சேவல் போர் செய்வதிற் சிறந்த பறவையாதலால், அத் தொழிலிற் சிறந்த சேயோனுக்குக் கொடியுருவமாய்க் கொள்ளப்பட்டதென்க. சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது. தெய்வத்திற்கு அல்லது பேய்க்கு மணம் விருப்பமென்றும், மலரணிந்துகொண்டாவது மலருள்ள இடத்திலாவது பருவப்பெண்கள் தனிச்செல்லக் கூடாதென்றும், ஒரு கொள்கை தமிழர்க்குள் இன்றும் இருந்துவருகின்றது. தெய்வம் இயல்பாக அழகுள்ளதென்று எல்லா மதத்தா ராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இதனால் அழகன் என்று திருமாலுக்கும் சொக்கன் என்று சிவனுக்கும் பிற்காலத்திற் பெயர்கள் தோன்றின. அழகு எப்போதும் இளமையொடு கூடியது. கோவையில் நிலைகண்டுரைத்தல் என்னுந் துறையை நோக்குக. கந்தன் என்னும் பெயர், கந்தில் (தூணில்) தெய்வவுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குக. கந்தனையே ஸ்கந்தன் என்றனர் வடநூலார். ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும். மருதத்தெய்வம் வேந்தன் வேந்தன் = அரசன். நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்தபின் மேலுலகத் திற்குச் செல்லுமென்றும், உலகில் (மருதநிலத்தில்) அரசனாயிருந் தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்றும், மருதநில மாந்தர் கருதி, முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிடமிருந்தே வருவதாகக் கருதி, மழைவளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள். நல்வினையாவன வேளாண்மையும் போர்த்தொழிலும். போர்த்தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மையாகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது, அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப்பற்றியே, செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (குறள். 86) என்றார் திருவள்ளுவர். 26ஆம் புறப்பாட்டும் இக் கருத்துப்பற்றியதே. நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க (புறத். 93) என்பதனால், போரிலிறந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள் கை யறியப்படும். உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த்தொழிற்குரிய மறவரும், இன்றும் தங்களை இந்திரகுலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும் கூறிக்கொள்கின்றனர். அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு. அவன் இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான். இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள். 545) முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயர் (குறள். 559) என்றார் திருவள்ளுவர். வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன்முதல் தோன்றியதும் மருதநிலமே. பாலைநிலத்து மறவர் படைஞராகுமுன், மருதநிலத்து உழவரே போர்த்தொழில் செய்து வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை. இதை, வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (மரபு. 77) என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு உழவர் மறவர் என்னு மிரு பொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு வகுப்பார் படையாட்சியென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும் கீழ்நாட்டிலுமிருந்த பண்டை அமரநாயக (Feudalism)KiwahY« அறியலாம். பண்டைக் காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங்கினர் என்பது, இரணியன், நேபுகாத்தேச்சார் முதலியோர் சரித்திரத் தாலும், அரசனும் தெய்வமு மிருக்குமிடம் கோயில் என்று கூறப்படுவதினாலும், அரசனுக்கும் அரசிக்கும் தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திருவாய்க் கேள்வி திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியப்படும். வேந்தன் என்னும் பெயரையே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந்திரன், மிருகேந்திரன், கவீந்திரன் முதலிய பெயர்களை நோக்குக. நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக ஆரியப்பழமைநூல் கூறும். குதிரைவேள்வி செய்பவன் அரசனே. கடைக்கழகக் காலம்வரை வேந்தன் வழிபாடு தமிழ்நாட்டிற் சிறந்திருந்ததென்பது, சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் பிறநூல் குறிப்புகளாலும் அறியப்படும். (ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத் தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையானதினாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம் திருமாலியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற்குரிய பெருமதங்களாய் வளர்ந்துவிட்டமை யாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது. இதுபோது ஒரோவோரிடத்துள்ள மழைத் தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட்டின் அடையாளமாயுள்ளது. மருதநிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன் சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளையாடற் புராணமும் குமரிமலையை மகேந்திரமென்று வடநூல்களும் ஐந்திரத்தை விண்ணவர் கோமான் விழுநூல் என்று சிலப்பதி காரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால் புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும். வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெயருண்டு. சேண் உயரம். சேணுலகத்தரசன் சேணோன். வானுலகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல் காத்தல். நெய்தல்நிலத் தெய்வம் வாரணன் வாரணம் = கடல். வாரணன் - கடலோன். கடல்மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரண னுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது. கடைக்கழகத்திற்குப் பின்புகூடத் தமிழர் வாரித்துறையில், தேர்ந்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந்தமையும், “fhªjq®¢9 சாலை கலமறுத் தருளி... முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும்... 10 முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் என்று முதலாம் இராஜராஜசோழன் (985) மெய்க்கீர்த்தியும், அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம்ம னாகிய கடாரத் தரசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து.... தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் 11 தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் 12 மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி என்று இராஜேந்திர சோழன் (1012) மெய்க்கீர்த்தியும் கூறுவ தாலும், 13ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத் தொடு வைத்திருந்த போர்நட்புத் தொடர்பினாலும் அறியப்படும். 9 காந்தளூர் - மேல்கரையில் ஓர் ஊர் 10 ஈழம் - இலங்கை 11 நக்கவாரம் - Nicobar 12 கடாரம் - பர்மா ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று வடமொழியில் திரிக்கப்பட்டதென்க. பாலைநிலத் தெய்வம் கொற்றவை பாலைநிலம் முதுவேனிற்காலத்தால் தோன்றுவது. கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை - கொற்றவை. கொற்றம் = வெற்றி. அவ்வை அம்மை என்பதன் போலி, பிற்காலத்தில் பாட்டியைக் குறித்தது. பாலைநில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை. கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி, குமரி, பகவதி முதலிய பிற பெயர்களுமுண்டு. அம்மை = தாய், பெண்தெய்வம். முதுவேனிற்காலத்தில் வெப்பத்தினால் தோன்றும் வைசூரிநோய், அம்மையால் தோன்றுவதாகக் கருதப்பட்டு அம்மை எனப்பட்டது. அக்காலத்தில் தழைக்கும் வேப்பிலையும் அம்மைக்குகந்ததாகக் கொள்ளப்பட்டது. அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம்மன், அம்பா (வ.) என்பவை. மாயோள் = கரியள். மாமை - கருமை. கள் - காளம் - காளி. கள் - கருப்பு, கள்ளம், களங்கம், காளான் (black mushroom) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை. காளி வணக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறந் திருந்தது. வங்காளத்தில் உள்ள காளிக்கோட்டம் என்னும் இடப்பெயர் இன்று காளிக்கட்டம் - Calcutta - கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது. கோட்டம் = அரண், கோயில். கோடு + அம் = கோட்டம். கோடுதல் - வளைதல். கோடிய (வளைந்த) மதிலாற் சூழப்பெற்றது கோட்டம் (தொழிலாகுபெயர்). கோடு +ஐ = கோட்டை. தமிழர் அல்லது திராவிடர் பண்டு வடஇந்தியா வரை பரவியிருந்தனர் என்பதற்குக் காளிக்கோட்டமும் ஒரு சான்றாம். காளி கூளி (பேய்)களின் தலைவி. பேயைக் கருப்பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு. அம் + காளம் (அல்லது காளி) + அம்மை = அங்காளம்மை. மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப்பட்டதால் மாரியெனப்பட்டாள். மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக் கருத்துப்பற்றியே. பீழை - பீடை + அரி = பீடாரி (மரூஉப் புணர்ச்சி). ஒ.நோ: பனை + அட்டு = பனாட்டு. அரித்தல் அழித்தல். துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாகவுங் கருதப்பட்டாள். பீடாரி - பிடாரி. பிடாரி = அம் = பிடாரம். கன்னி என்றும் இளையோளா யிருப்பவள். குமரி என்னும் பெயரும் இப் பொருட்டே. கும் + அம் = குமம் - குமர் = திரட்சி, இளமை, கன்னிமை. ம் - ர், போலி. ஒ. நோ: சமம் - சமர். குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தருமசாமி. 47) கும் - குமி - குவி. குவிவு - குவவு = திரட்சி. குமர் + அன் = குமரன். குமர் + இ = குமரி. குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன். குமரி - திரண்டவள், இளையள், கன்னி, காளி. ஒ.நோ: இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி. E. vergin, from Gk. orago, to swell. கும்மை - கொம்மை = திரட்சி. ஒ.நோ: குட்டு - கொட்டு. குமரன் - குமாரன்(வ.). குமரி - குமாரி (வ.) - குமாரத்தி. பகவதி (பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும். வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ (கலித். 15) என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை அறியப்படும். `சுடரோடிரத்தல் என்னும் கோவைத் துறையும் இதை யுணர்த்தும். இனி, ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகளுமுள. அவையாவன : (1) தீவணக்கம் மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக் கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே, முதன்மாந்தர் கண்டுபிடித்திருக்க வேண்டும். பொருள்கள் தேய்வதால் உண்டாகும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய் - தேயு (வ.). தேய் - தே - தீ. ஒ.நோ: தேன் - தே(த்தட்டு) - தீ(ம் பால்). தே + உ = தேய்வு - தேவு. தேய்வு - தெய்வு. தெய்வு + அம் = தெய்வம். தேவு + அன் = தேவன். மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெயராயின. தீவணக்கமும் பேய்வணக்கமும் சேர்ந்தே, சேயோன் வணக்கம் முதன்முதல் தோன்றிற்று. தெய்வம், தேவு, தேவன். Skt. deva; L. deus, Gk. theos, god; Ice tivi; W. duw; Gael., - Ir. dia; A.S. tiw; E. deity. திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன்முதற் காட்டியது வடமொழியாரியர். வடமொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென் பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்று வோரெல்லாம், ஒப்பியன் மொழிநூலியல்பைச் செவ்வையா யுணரார். வடமொழி வழக்கற்ற மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருந்தப்புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம். எப்பொருளையும் மூலப்பொருளாகக் கூறலாம். தீயானது பொருள்களை அழித்துவிடுவதால் அஞ்சத்தக்கது; சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் நன்மைப் பேறுமே, முதன்முதல் தெய்வ வழிபாடு தோன்றியதற்குக் காரணம். தீவணக்கம் பண்டு எல்லாநாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்துவருகின்றது. (2) நாகவணக்கம் இந்தியாவிலுள்ள 280 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (king cobra), நல்ல பாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக் கொடியது. நச்சுப்பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென்கண்டத்திலுள்ள செம்பூதப்பாம்பு (giant brown snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும். அரச நாகம் அசாம், பர்மா, தென்சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது. பாம்புகளுள் மிகப்பெரியவை தென்அமெரிக்காவிலுள்ள அனக்கொண்டாவும் (anaconda) இந்தியாவிலும் மலேயாவிலு முள்ள பாந்தளுமே (python). இவை 30 அடிக்கு மேற்பட்டவை; மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை. கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில்தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும். திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடி யிறக்கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று. இன்றும் தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்துவருகின்றது. நகர்வது நாகம். நகர் - நாகர் - நாகம். E. snake; A.S. snaca from snican, to creep; Ice. snakr, snokr; Dan. snog; Swed. snok; Skt. naga. நகத்தில் (மலையில்) உள்ளது நாகம் என்று வடநூலார் கூறுவது சரியன்று. நாகம் - snake (முதல்விரி - prosthesis). கீழுலகத்தில் பாந்தள் மிகுதியாயிருப்பதால், கீழ் என்பதை அடியென்று நினைத்துக்கொண்டு, ஞாலத்திற்கடியில் ஆதிசேடன் (= முதற்பாம்பு) இருந்து தாங்குவதாகக் கூறினர் பழமையர். கீழ்நாட்டில் நாகவணக்கம் மிகுதியாயிருந்தமையால், பிற்காலத்தில் அதைச் சைவத்திலும் திருமாலியத்திலும் உட்படுத்த வேண்டி, நாகம் சிவபெருமானுக்கு அணியாகவும் திருமாலுக்குப் பாயலாகவுங் கூறப்பட்டது. சிவபெருமான் நாகத்தைத் தலையி லணிந்திருப்பதாகக் கூறுவது, நாகவணக்கத்தின் பண்டைப் பெருமையைக் காட்டும். பண்டை எகிபதியரின் நாகவணக்கமும், கௌ-என்-அத்தென் (Khou-en-Aten) என்னும் எகிப்திய வரசன் நாகவுருவைத் தன் முடியிலமைத்ததும்13, இங்கு ஒப்புநோக்கத்தக்கன. தாருகா வனத்து முனிவர் சிலபெருமான்மேற் பாம்பை யேவியதாகக் கூறுவது பழமைக்கட்டு. (3) பேய்வணக்கம் - (Demonolatry) பே என்பது அச்சத்தினால் உளறும் ஒலி. பேம் = அச்சம். பேநாம் உரும்என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (உரி. 69) என்பது தொல்காப்பியம். பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. ஒ.நோ: E. babble. பே-பேய். ஒ.நோ. E. fay; Fr. fee. பே-பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும். கா: பேயப்பேய (விழிக்கிறான்), பேந்தப்பேந்த (விழிக்கிறான்). பேந்து : ஒ.நோ: Ger. feind; Dut. vijand; A.S. feond; E. fiend. 13 The Funeral Tent of an Egyptian Queen. p, 96 சேம்பர் அகராதியில் A.S. feond, pr. p. of feon, to hate என்று கூறப்பட்டுள்ளது; feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளா யிருக்கலாம். பேய் = அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது. பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அவற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது. பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம். மந்திரம், மாந்திரிகம், மாந்திரிகன் என்பன முறையே மந்திரமொழிக்கும் வினைக்கும் வினைஞனுக் கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது. பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழிபடுதல் ஐந்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகள் அவளை வாலை (= இளையள், கன்னி) என்பர். கட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புகளாகும். பேய்களில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க. பூதவணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந் ததினாலேயே, சிவபெருமான் பூதகணங்களுக்குத் தலைவர் எனப்பட்டார். பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொதுபொது (இரட்டைக் கிளவி), பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து - பொந்தன் - மொந்தன். ஒ.நோ. c - C., பொது - (புது) - பூது. இரும்பூது - இறும்பூது. பூது + அம் = பூதம். பேய் களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப் பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன. இந்தியா, எகிபது, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன. பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு இன்றுவரை யுள்ளது. (4) நடுகல் தெய்வம் காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தரு மரபிற் பெரும்படை வாழ்த்தல் (புறத். 5) என்பது தொல்காப்பியம். மதுரைவீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே. (5) கற்புத் தெய்வம் கண்ணகி வரலாறு காண்க. (6) தென்புலத்தார் வணக்கம் - (Ancestor Worship) பண்டைத் தமிழர், இறந்துபோன தம் முன்னோரைத் தென் புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும்போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவுகூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீனநாட்டில் மிகுதியாக வுள்ளது. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை (குறள். 43) என்றார் திருவள்ளுவர். (7) நிலா வணக்கம் நிலாவும் ஒரு காலத்தில் வணங்கப்பட்டதைப் பிறைதொழு கென்றல் என்னுங் கோவைத்துறையா லறியலாம். நால்வேள்வி வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல். விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி. இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன் (குறள். 87) என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வியென்றமை காண்க. வேந்தன், வாரணன் முதலியோர்க்குச் செய்யும் தேவ வேள்வியும், பேய்கட்குச் செய்யும் பூதவேள்வியும், முன்னோர்க் குச் செய்யும் தென்புலத்தார் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் மாந்தர் வேள்வியுமெனத் தமிழர் செய்துவந்த வேள்வி நான்கு. இவற்றொடு மறையோதுதலைப் பிரமயாகம் என்று சேர்த்து, பஞ்சமகா யக்ஞம் என்றனர் ஆரியர். இதன் பொருந்தாமையை அறிஞர் அறிக. ராஜசூயம், அசுவமேதம் முதலிய ஆரிய வேள்வி கள் தமிழர்க்குரியவையல்ல. தமிழரசர் அவற்றை வேட்டது பிற்காலமாகும். மதம் - (Religion) முதலாவது, முற்கூறிய சிறுதெய்வ வணக்கங்களே தமிழர்க் கிருந்தன. பின்பு அவற்றிலிருந்து பெருந்தெய்வ வணக்கமாகிய மதம் தோற்றுவிக்கப்பட்டது. குறிஞ்சித் தெய்வ வணக்கத்தினின்று சைவமும், முல்லைத் தெய்வ வணக்கத்தினின்று திருமாலியமும் தோன்றின. பாலைத் தெய்வமாகிய காளி, சிவபெருமானுக்குத் தேவியாகக் கொள்ளப் பட்டாள். மருதத்தெய்வமும் நெய்தல் தெய்வமும் கடைக்கழகக் காலம் வரை வணங்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டன. சேயோன் என்னும் பெயரின் மறுவடிவமே சிவம் என்பது. சிவ - சே (மரூஉ). சிவ + அம் = சிவம். சிவம் + (அன்) = சிவன். சே + ய் = சேய். சே + ஓன் = சேயோன். சேந்தோன் சேந்தன். சிவன், சேயோன். சேந்தன் என்னும் மூன்றும், சிவந்தவன் என்று பொருள்பட்டு முருகனையே அல்லது ஒரு தெய்வத்தையே முதலாவது குறித்தன. சேய், சேயோன், குமரன் என்னும் பெயர்கட்கு, மகன் என்று தவறாகப் பொருள்கொண்டு, சிவம் என்பது சேயோனின் தந்தையென, ஒரே தெய்வத்தை யிரண்டாகக் கூறிவிட்டனர் ஆரியர். இங்ஙனம் செய்தது, ஆரியத்தெய்வமாகிய ருத்திரனைச் சிவத்தோடிணைத்தற்கும் உதவிற்று. முருகனும் சிவமும் ஒன்றேயென்பதை, சேயோன் சிவன் என்னும் இரு பெயர்களும் ஒரே பொருளுடைமையாலும், குறிஞ்சிக்குரிய மலை, காளை, துடி, மழு, புலித்தோல், கரித்தோல் முதலியவை சிவனுக்குக் கூறப்படுவதாலும், குமரன் என்பதின் பெண்பாற் பெயரான குமரி என்பது சிவன் தேவியாகிய காளியைக் குறித்தலாலும் அறியப்படும். திசைகளைத் தெய்வத்திற்கு முகங்களாகவும் கைகளாகவுங் கூறுவது வழக்கம். திசைகள் முதலாவது நான்கென்றும் பின்பு உயர்திசையைக் கூட்டி ஐந்தென்றும், பின்பு அடித்திசையுங் கூட்டி ஆறென்றும், பின்பு நான்கு பெருந்திசையும் நான்கு கோணத்திசையுமாக எட்டென்றும், பின்பு இவற்றொடு உயர்திசையும் அடித்திசையுங் கூட்டிப் பத்தென்றுங் கூறப்பட்டன. ஐந்து திசைகளும் எட்டுத்திசைகளும், முறையே சிவபெருமா னுக்கு ஐம்முகங்களாவும் எட்டுக் கைகளாகவும், ஆறு திசைகளா னவை, முருகனுக்கு ஆறு முகங்களாகவுங் கூறப்பட்டன. ஆறு முகங்கட்கும் முகத்திற் கிரண்டாகப் பன்னிருகைகள் கூறப்பட்டன. சிவபெருமானுக்கும் ஆறுமுகம் என்று ஒரு காலத்தில் கொள்ளப் பட்டிருந்தமை, அவர் தமது ஆறுமுகங்களினின்றும் ஆறுபொறி யைத் தோற்றுவித்து முருகனைப் படைத்ததாகக் கூறும் கந்த புராணக் கதையா லறியலாம். ஆறுமுகத்தை ஷண்முகம் என்று மொழிபெயர்த்தும், சுப்பிரமண்யன், கார்த்திகேயன், குகன் எனப் புது வடமொழிப் பெயர்களையிட்டும், பனிமலையில் சரவணப் பொய்கையிற் பிறந்ததாகக் கதை கட்டியும், முருகனை ஆரியத் தெய்வமாகக் கூறினர் வடநூலார். முழுமுதற் கடவுளுக்குப் பேரண்டத்தையே வடிவமாகக் கூறுவது வழக்கமாதலால், மாலையில் தோன்றும் செவ்வானம் சிவபெருமானுக்குச் சடையாகவும், செவ்வானத்திற்கு மேலாகத் தோன்றும் பிறையையும் பனிமலையுச்சியில் பிறக்கும் கங்கையை யும் அவர் தலையிலணிந்திருப்பதாகவும் உருவகித்துக் கூறினர் முன்னோர். திங்கள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரை மணந்ததாகக் கூறுவது, இராவான் சுடர்கட்குத் தலைமையானது நிலா என்பதே. உடுபதி என்னும் பெயரை நோக்குக. தீ முதன்முதல் வணங்கப்பட்ட தெய்வமாதலாலும், இறைவன் பெரும்பாலும் தீயாக அல்லது ஒளியாக வெளிப்படுவ தாலும், ஐம்பூதங்களுள் தீயே அறிவு, தூய்மை, நன்மை, அழிப்பு முதலிய பலவகையில் இறைவனைக் குறித்தற்குச் சிறத்தலாலும், அதன் நிறம்பற்றிய சிவம் என்னும் பெயரே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராகக் கொள்ளப்பட்டது. சிவம் என்னும் சொல் ருக்வேதத்திற் சேர்க்கப்பட்டது பிற்காலமாகும். அச் சொற்கு மங்கலம் அல்லது நன்மை என்று பொருள் கூறினும், அதுவும் திருமகள் நிறம் சிவப்பு என்னும் கொள்கை பற்றியதே. சிவபெருமானுக்குச் செம்மணியாகிய மாணிக்கத்தை உவமை கூறுவதாலும், முதன்முதல் சைவத்துறவிகளே நெருப் பின் நிறமான காவியுடையை அணிந்ததினாலும், சிவம் என்னும் சொல்லுக்குச் சிவப்பு என்னும் பொருளே தெளிவா யிருத்தலாலும், சிவம் என்பது தமிழ்த்தெய்வமே யாதலாலும், மங்கலம் அல்லது நன்மை செய்பவன் என்று பொருள் கூறிச் சிவம் என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் கூறுவது பொருந்தாது. செம்மை என்னும் நிறம் பற்றிய சொல்லுக்கு, நேர்மை, நேர்மையான ஒழுக்கம் என்று பொருள் வந்தது, துறவிகள் காவியுடை யணிந்ததினாலேயே. செம்மையாயிருத்தல் என்பது, முதலாவது செங்கோலமாயிருத்தல் என்று பொருள்பட்டுப் பின்பு, செவ்வையா யொழுகல் என்று பொருள்பட்டது. சிவம் தமிழத் தெய்வமேயென்பது, ஆரியர் வருமுன்னமே, மொகஞ்ச தாரோவில் சைவம் வழங்கியதினாலும், மந்திர மாமலை மகேந்திர வெற்பன் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் பாண்டி நாடே பழம்பதி யாகவும் தென்னா டுடைய சிவனே போற்றி என்று மாணிக்கவாசகர் கூறுவதாலும் அறியப்படும். முதலாவது ஒரு தெய்வமாயிருந்த சிவத்திலிருந்து, முருகன், பிள்ளையார், சாத்தனார், பைரவன், வீரபத்திரன் எனப் பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன பழமையரால். பிள்ளையார் என்று முதலாவது முருகனுக்குப் பெயரிடப் பட்டது. பின்பு ஆனைமுகத்தர் மூத்த பிள்ளையார் எனப்பட்டார். இப்போது, மூத்த பிள்ளையாரே பிள்ளையார் எனப்படுகிறார். ஓங்கார வரிவடிவம் யானை வடிவுபோ லிருத்தலாலும், கயமுகன் என்னும் அசுரனைக் கயமுகத்தொடு சென்ற சிவ ஆற்றல் கொன்ற தென்னுங் கதையாலும், பிள்ளையார் என்ற தெய்வம் தோற்றுவிக்கப்பட்டது. கணபதி (பூதகணங்களுக்குத் தலைவர்) என்னும் பெயர் சிவனுக்கும் ஏற்றலாலும், சிவனுக்கும் பிள்ளையாருக்கும் முக்கண் கூறப்படுவதாலும், அவ் விருவரும் ஒருவரே யென்பதுணரப்படும். இங்ஙனமே பிறதெய்வங்களும் ஒவ்வோர் காரணம் பற்றித் தோற்றுவிக்கப்பட்டன வாகும். பிள்ளையார் வணக்கம் கடைக்கழகக்காலத்திற்கு முந்தியிருந்ததாகத் தெரியவில்லை. முருகனுக்குப் பிள்ளையார் உதவினதாகக் கந்தபுராணங் கூறுவது களிறுதரு புணர்ச்சியே யன்றி வேறன்று. சிவபெருமானுக்குப் பகவன், ஐயன் என்று பெயர்களுண் டானமையின், காளிக்குப் பகவதி, ஐயை என்று பெயர்களுண் டாயின. பகவன் என்னும் பெயருக்கு அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்னும் அறுகுணங்களை யுடையவன் என்று பொருள் கூறப்படுகிறது. சிலர் பகம் என்பது குறி (இலிங்கம்)யென்றும், பகவடிவிற் குறிக்கப்படும் கடவுள் பகவன் என்றுங் கூறுகின்றனர். இருபாற் கூட்டத்தால் உயிர்கள் தோன்றுவதாலும், கடவுளிடத்தில் தாய் கூறும் தந்தை கூறும் உள்ளன என்னுங் கருத்தில், சிவபிரானை அம்மையப்பன், மாதொருபாகன், மங்கைபங்கன் முதலிய பெயர்களால் அழைப்பதாலும், வழிபடப்படும் சிவவுரு இலிங்கப்பெயருள்ள தாயும் இலிங்க வடிவமாயு மிருத்தலாலும், எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒரு மூல ஆற்றலைக் குறிவடிவால் முன்னோர் குறிப்பித்தார் என்று கொள்ளல் பொருத்தமானதே. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள். 355) காளி துடுக்கு நிலையளாதலின், அமைந்த நிலைக்குரிய தேவிவடிவம் சிவன் என்பதின் பெண்பாலான சிவை என்னும் பெயராற் குறிக்கப்பட்டது. சிவையைப் பார்வதி யென்பர் வடநூலார். சிவை பர்வதவரசன் மகளாகிப் பார்வதியென்று பெயர் பெற்றதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால், குறிஞ்சித் தேவி என்று பொருள்படும் மலைமகள் என்னும் பெயரையே, மலைக்கு மகள் எனப் பிறழவுணர்ந்து அக் கதை கட்டப்பட்டதோ என ஐயுறக் கிடக்கின்றது. கலைமகள், மலர்மகள், நிலமகள் முதலிய பெயர்களில் மகள் என்பது முறைகுறிக்காது பெண்பாலையே குறித்தல் காண்க. பர்வதவரசன் என்னும் தொடரும் மலைகட்கு அரசுபோற் சிறந்த பனிமலையையே குறித்தலையும், சிவன் பண்டு குறிஞ்சித் தெய்வமா யிருந்ததையும், மகேந்திரம் முழுகிய பின் பனிமலை சிவனுக்குச் சிறந்த இடமாகக் கொள்ளப்பட்ட மையையும் நோக்குக. ஆகவே, மலையரசன் பெற்ற மகள் என்பது பனிமலை அடைந்த அல்லது தங்கிய பெண்டெய்வம் என்றே பொருள்படுவது காண்க. சிவனியமும் (சைவமும்) மாலியமும் (வைணவமும்) வெவ்வேறு சமயங்களா யிருக்க அவற்றை ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைபற்றி ஒன்றாயிணைத்ததால், சில புதுக் கருத்துகளைக் கொள்ள வேண்டியதாயிற்று. அவையாவன : அரன் = தேவன். இப் பெயரின் வரலாறு பின்னர்க் கூறப்படும். (1) சிவபெருமானுக்கு அழிப்பும் திருமாலுக்குக் காப்பும் தொழிலாக வகுத்தல். தீப்போல்பவன் சிவன் என்றும் மேகம் போல்பவன் திருமால் என்றுங் கொண்டமையால், முறையே அவற்றின் தொழிலான அழிப்பும் காப்பும் அவ் விருவர்க்கும் கூறப்பட்டன. தீ ஆண்டன்மையும் நீர் பெண்டன்மையுங் குறித்தற்கேற்றல் காண்க. (2) அரியரன் (ஹரிஹரன் அல்லது சங்கர நாராயணன்) என்ற வடிவம் அமைத்தல். (3) திருமாலை மலைமகளுக்கு அண்ணன் என்றல். இவ் விருவர் நிறமும் கருமை யென்பதையும் நோக்குக. கருமை, நீலம், பசுமை என்னும் மூன்றும் ஒன்றாகவே கொள்ளப் படும். (4) பிரமன் திருமாலின் மகன் எனல். இம் முறை காட்டற்கே, பிரமனுக்குத் திருமாலின் திருவுந்தித் தொடர்பு கூறப்பட்டது. திருமாலியராய்த் தெரிகின்ற தொல்காப்பியர் காலத்தி லிருந்து திருமால் தனித் தெய்வமாகப் பிரித்துக் கூறப்பட்டு, அதிலிருந்து திருமாலியமே சிறந்து வருகின்றது என்பதற்குச் சான்றுகள் : (1) தொல்காப்பியம் i. மாயோன் மேய என்ற நூற்பாவில் மாயோனை முற்கூறுதல். ii. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொல். 1006) என்று மன்னர்க்குத் திருமாலை உவமை கூறல். (2) திருக்குறள் i. தாமரைக் கண்ணான் என்றும், அடியளந்தான் தாஅய தெல்லா மொருங்கு என்றும், திருமாலை விதப்பாய்ச் சுட்டல். ii. தேவிற் றிருமால் என்று கவிசாகரப் பெருந்தேவ னார் கூறல் (திருவள்ளுவ வெண்பாமாலை). (3) சிலப்பதிகாரம் திருமாலைப்பற்றிய பகுதிகளை மிகச் சிறப்பாய்க் கூறல். (4) தமிழ் நெடுங்கணக்கு அரி ஓம் நம என்று தொடங்கிய தால் அரிவரியெனப்படுதல். (5) இதுபோது சில சைவரும் இரமம் நாமம் அணிதல். சிவன் திருமால் என்னும் தமிழ்த் தெய்வங்களோடு, முறையே ருத்திரன் விஷ்ணு என்னும் ஆரியத்தெய்வங்களை இணைத்துவிட்டனர் ஆரியர். ஆரியர்க்கு ருத்திரன் புயற்காற்றுத் தெய்வமும் விஷ்ணு சூரியத் தெய்வமுமாகும். காளிக்குச் சிறந்த இருப்பிடம் சுடலையாதலானும், பேய்கட்குத் துணங்கைக் கூத்து உரியதாதலானும், காளியின் கணவனான சிவபெருமான் சுடலையாடி யெனப்பட்டார். சிவபெருமானுடைய முத்தொழிலையே திருக்கூத்தாக உருவகித்தனர் உயர்ந்தோர். 14irt«g‰¿a சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள் ஆனைந்து (பஞ்ச கவ்யம்) ஆனைந்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் செந்தமிழ்ச் செல்வியிற் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. ஆனைந்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழிபெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கூறிவிட்டனர் ஆரியர். திருநீறு சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை வி என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர். உருத்திராக்கம் உருத்திர + அக்கம் = உருத்திராக்கம். உருத்திரன் என்று சிவபெருமானுக் கொரு பெயர் தமிழிலேயே யிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல். உரும் = நெருப்பு, சினம், இடி. உருமி = புழுங்கு. உருமம் = உச்சி வேளை. உருப்ப = அழல (புறம். 25). உரு என்ற சொல் முதலாவது 14 சிவநெறியைச் சைவம் என்றது திரிபாகுபெயர் (தத்திதாந்தம்). இவ் வியல்பு தமிழுக்குஞ் சிறுபான்மை யுண்டென்பதைப் பைத்தியம் என்னுஞ் சொல்லா னுணர்க. பித்து (gall - bladder) - பித்தம் (bile) - பைத்தியம் (insanity). நெருப்பையும் பின்பு சினத்தையுங் குறித்தது. ஒ.நோ: அழல் - அழலுதல் = சினத்தல். கனல் - கனலுதல் = சினத்தல். சினம் நெருப்பின் தன்மையுடையது. சினம்... சுடும் (குறள். 306). நெருப்பின் தன்மை ஒளியாதலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்றுதலாலும், உரு என்னும் சொல் வடிவங் குறித்தது. சுவையொளி என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க. உரு + உ = உருவு. உருவு + அம் = உருவம். உருவு - உருபு (வேற்றுமை வடிவம்). உரு, உருப்படி என்னுஞ் சொற்கள், எத்துணையோ பொருள்களில் உலக வழக்கில் வழங்குகின்றன. உரு என்னுஞ் சொல்லின் வரலாறு மிக முக்கியமானது. இது இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாகக் கூறப்படும். உருவம் என்னுந் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும். இது வடநூலார் கூற்றையொட்டிப் பல்கலைக்கழக அகரமுதலியிற் றலைமாறிக் கூறப்பட்டுள்ளது. சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலும் உடையவராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் = உருத்திரம் (ருத்ரம்-வ.) = சினம். திரம் ஒரு தொழிற்பெயர் ஈறு. உருத்திரத்தையுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க. அக்கம் = கூலம் (தானியம்), மணி. அக்கம் - அக்கு. அஃகஞ் சுருக்கேல் என்றார் ஔவையார். கூலம் மணி யென்றும் பொருள்படுவதை, நென்மணியென்னும் வழக்காலறிக. கொக்கிற கக்கம் (திருப்பு. 416) உருத்திரன்பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்கசந்தி)யும், மரூஉ முறையில் தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க. உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை, பூதநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும். உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையர். இங்ஙனம் கூறுவதற்குக் காரணம், ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றனவென்றும், பண்டை யெகிபதில் வழங்கிய ஒரு பழைமைக் கொள்கையை, மேலையாசியாவி லிருந்தபோது ஆரியர் கேட்டறிந்ததே யென்று தோன்றுகின்றது. பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வடநூற் பொருளையொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது. ஓ(ம்), குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச்சொற்க ளாகவே தோன்றுகின்றன. ஓங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம் தோற்றம் சிவப்பு என்று பொருள்படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலியவற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக. ஓ - ஓங்காரம். ஒ.நோ: ரீ - ரீங்காரம். ஓ = அ + உ என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி, குரு என்பதில், கு = குற்சிதம், ரு = ருத்திரன் என்று கூறுவது, News என்பது North East West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப் பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே. ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக் கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்று கொள்ளினும், பாதுகாப்புப் பொருளதென்று கொள்ளினும், தமிழ்ச்சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை. ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஒ.நோ: ஏ - எ - எடு. எடுத்தல் = வளர்த்தல். Rear, v.t. (orig.) to raise, to bring up to maturity. [A.S. roeran, to raise.] ஓ - ஓம் - ஓம்பு. ஒ.நோ: ஏ - ஏம் - ஏம்பு. ஆ - அ - அம் - அம்பு - அம்பர். கும் - கும்பு. திரும்-திரும்பு. ஓம் = காப்பு. ஓம் + படு = ஓம்படு. ஓம்படு + ஐ = ஓம்படை = பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல். ஓம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயு முள்ளது. ஓம்படுதல் தன்வினை. ஓம்படுத்தல் பிறவினை. வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக. மதம்பற்றிய சில பொதுச்சொற்கள் மாயை மாய் + ஐ = மாயை. ஒ.நோ: சாய் + ஐ = சாயை = நிழல். மாய் + அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. மாயமாய்க் காணோம், மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச் சொற்களை மாயா சாயா என்று ஆகார வீறாக்கின வளவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற் கிடமானதே. மதந்தழுவிய சில கருத்துகள் வீடு ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப்போல, வெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற்குரியதுமானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர். விடு - வீ = (பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை, துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம். ஏழுலகம் பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களா யிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி, எழுகோள்களினின்றும் ஏழுலக வுணர்ச்சி யுண்டான தாகவுங் கொள்ளலாம். ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க. எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ.நோ: Indian Ocean, Atlantic Ocean (from Mount Atlas, in the northwest of Africa). எழுகடல்களை நன்னீர், உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக் கூறினர் ஆரியப் பழைமையர். எழுபிறப்பு ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயி ரீறாக ஆறும், தேவர் பிறப் பொன்றுமாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என வேறொரு வகையா யெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும். பிராமணப் பிறப்பு ஒரு விரிவளர்ச்சி (Evolution)badî« கூறினர் ஆரியப் பார்ப்பனர். பிறப்பா லுயர்வுதாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை; தமிழர் கொள்கையன்று. பிரமாவே மக்களை நாற் குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்ஙனம் படைக்கவில்லை? இந்தியாவில்மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்தவரும் இஸ்லாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக்கொள்கை ஆரியராற் புகுத்தப்பட்ட தந்நலக் கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்ற வேறொன்றுமில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப்பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல்நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்த தென்க. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) என்றார் திருவள்ளுவர். மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க. முப்படிவம் (திரிமூர்த்தம்) மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம்பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன்பின் படைப்புணர்ச்சியும் தோன்று வதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத்தொழிலும் கூறப்பட்டன. பின்பு படைப் புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப் பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி. இதே, தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா மந்த மாதி யென்மனார் புலவர் என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது. பிராமணர் தென்னாட்டிற்கு வந்தபின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குலமுதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில்வழிபா டேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது. பிராமணரின் குலமுதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரமதாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குகளாலும், வீரமகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச்சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாவைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும். திருமால் முகில்வடிவின ராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வரவரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப்பட்டார் போலும். ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலைமகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப்பெயராற் கூறினரே யன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின். பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், உலகக் கருமான் (விசுவகர்மா) எனப்பட்டான். உலக விடைகழி என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே. உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architect. ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும். உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது. பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர்மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும். அறுமுறை வாழ்த்து பாடாண்பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து என மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல்; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்; வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல். அமரர்கண் முடியும் அறுவகை யானும் (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம் என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக் கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத் தக்கது அறமேயாகும். கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத். 27) என்பது தொல்காப்பிய நூற்பா. இதில் கொடிநிலை கந்தழி வள்ளி என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராகவையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன என்பது. முதலன மூன்றும் என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், வடுநீங்கு சிறப்பின் என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்ந்துவருமென்றும் பொருள்படுவதாலும், முதலன மூன்றும் என்ற சுட்டு, அமரர்கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன்றையும் தழுவ முடியாமையானும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் அமரர்கண் முடியும் அறுவகையில் மூன்றாயமைதலானும், இதற்குச் சிறந்த பழந்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டாயிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லையென்க. கடவுள் வாழ்த்து என்னும் பெயரும், அதன்பின் கொடி நிலை கந்தழி வள்ளி என்ற முறையும், திருக்குறட் பாயிரத்தில் அமைந்திருப்பதை நோக்குக. இது மதிநுட்பத்தா லறியும் பொதுச்செய்தி யாதலின், பார்ப்பார் தமிழ் மொழிக்கதிகாரியாகார் என்று யான் முற்கூறியதற்கு முரணாகாதென்க. தமிழுக்கு இதுபோது தொண்டுசெய்து வருவாருள், தலைமையானவருள் ஒருவர் மு. இராகவையங்கார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூல்களுள், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்பவை மிக மிகப் போற்றற்குரியன. நூல்களை உள்ளபடி அச்சிடுவதினும் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது சிறந்தது. ஐயங்கார் அவர்கள் நூல்களில் உள்ள சில தமிழொடு முரண் கருத்துகட்கு, முன்னோரான பார்ப்பாரும் தமிழருமே காரணராவர். அறிவ (சித்த) மதம் அறிவன் தேயம் என்று தொல்காப்பியத்திற் கூறியிருப் பதால், உருவ tz¡f¤ij(Idolatry) யொழித்த உயர்ந்த அறிவமதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமை யுணரப்படும். பிற்காலத்தி லிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. கடவுள் என்ற பெயர் எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க. வடமொழிப் பழைமை நூற்பொருள்கள் பல தென்னாட்டுச் செய்திகளேயாதல் சதாபத பிராமணம், பாரதம், பாகவதம், அக்கினி புராணம், மச்ச புராணம் என்பவை தென்னாட்டுக் கடல்கோட் செய்தியைக் கூறுகின்றன. திருமாலின் ஆமைத் திருவிறக்கம் பாண்டிநாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஓட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும் என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.15 இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே. தென்கடலில் நிலநடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது. இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே. தெய்வமாக்கிக் கூறியவர், சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வ வால்மீகியைவிடக் கம்பரே இராமனை மிகுதியுமாக வணங்குவது பண்டை வழக்கம். திருமலை நாய்க்கர் இறந்தபின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர்.16 திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலையுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, பூவை நிலை என்பதாலறியலாம். முச்சக்கரமும் என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர் 15 Foreign Notices of South India, p. 42 16 History of the Nayaks of Madura, p. 146 நாடும் வெற்றியும் அடைவதை நில மகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், திருவுடையரசரைக் காணின் திருமாலைக் கண்டேனென்னும் என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக. இராமன் தவஞ் செய்துகொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயென்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.17 கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றைய வெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே. பஞ்சந்திரக் கதைகளிற் பல தென்னாட்டில் வழங்கியவை. ஹாலாஸ்ய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலியவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்தி களைக் கூறுபவை. அடிமுடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது. முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையிலிருந்த முக்கோட்டைகள் நிலநடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்துபோயின. ஓரழிவு பௌத்த மதம் இலங்கையிற் புகுந்தபின் நிகழ்ந்தது. அதுவரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவுகொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவபெருமா னால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதை கட்டப்பட்டது. (கதிரைமலைப்பள்ளைக் காண்க.) ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது.18 பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாக விருந்தன. அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர். கங்கைநாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வந்தனர். 17 இக்காலத்தில் வரணாசிரமத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மாவென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க. 18 Illustrated Weekly of India Oct. 33, 1938, p. 22 இராவணன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்தி லுள்ளதே. பதினெண்கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கே யுரியவர். சோழமரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தி யில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வடநாட்டுச் சூரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது. எண்டிசைத் தலைவர் கிழக்கில் வேந்தன் (இந்திரன்) இந்திரன் என்று பழைமைநூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவதி என்னும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டிநாட்டின்மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ்க்கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர்பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந்திருப்பதையும், தேவருலகிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக. எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒரு காலத்தில் ஒரு தலைமுறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டுகொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெய ரிருந்திருக்கலாம். தென்கிழக்கில் தீ (அக்கினி) ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பல விடத்தில் எரிமலைகள் எரிந்துகொண்டிருப்பதைத் திணைநூலிற் காண்க. தெற்கில் கூற்றுவன் (யமன்) இவனைப்பற்றி முன்னர்க் கூறப்பட்டது. மறத்திற் சிறந்த எருமைக்கடா19 மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது. 19 All About Animals, pp. 54, 55 தென்மேற்கில் அரக்கன் (நிருதி) தென்னாப்பிரிக்க மக்களையும் பண்டு தமிழகமும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக. மேற்கில் வாரணன் (வருணன்) வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலி லிருந்த நிலம் அமிழ்ந்துபோனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான். வடமேற்கில் காற்று (வாயு) இது ஒருகால் சகாராப் பாலைநிலக் காற்றா யிருக்கலாம். வடக்கில் குபேரன் இவன் இராவணன் காலத்தவன். இவ் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ் விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தியையும்(புஷ்பக விமானம்) கவர்ந்துகொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் முத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனா யிருந்தான். வடகிழக்கில் ஈசானன் ஈசானன் ஒரு சிவவடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையிலிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே. இதுகாறும் கூறியவற்றால், இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே யென்பதும், ஆரியர் நாகரிகத்தில் திராவிடராக, திராவிடர் மொழியில் ஆரியரானார் என்று கில்பெர்ட் சிலேற்றர் (Gilbert Slater) கூறுவது சரியே என்பதும் அறிந்துகொள்க. நாகர் நாகர் என்பார் முதன்முதல் நாகவணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ்நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை. கீழ்நில மருங்கி னாகநா டாளு மிருவர் மன்னவர் (9 : 54- 55) என்பது மணிமேகலை. நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடைய வராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தலையி லணிந்தவராயு மிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையி லணிந்ததாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்கு வதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது. சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே யிருத்தல் காண்க. அனுமான் கடல் தாண்டும்போது நாகரைக் கண்டானென் றும், மைந்நாகமலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதன னால் கங்கையி லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென்று நாககன்னியை மணந்தானென்றும் கூறியிருத்தல் காண்க. நாகர் அல்லது கீழ்த்திதிசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், நரவூனுண்ணிகளாயு மிருந்தனர். சாதுவ னென்போன் தகவில னாகி... நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன்... நக்க சாரணர் நயமிலர் தோன்றி... ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் (16 : 4-59) என்னும் மணிமேகலையடிகளைக் காண்க. நக்கம் - (அம்மணம்) சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின்பங்கட்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது. eLkhfhz¤â(Central Provices)YŸs முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்துபோனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர் என்க. முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள் (1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் அகப்படு வதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.20 (2) முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon - Khmer) மொழிகளும் ஓரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன. 21 மான்குமேர், முண்டா, திராவிடம் என்னும் முக்குடும்ப மொழிகளும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன. i. சொன்முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை. ii. சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள். iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து கிழமைப் பொருள் தரல். iv. பல சொற்கள் முண்டா மான்குமேர் தமிழ் - தம் தமர் (துளை) மூ முஹ் மூக்கு புரு ப்ரி பொறை (மலை) பிர் ப்ரி மரம் ஜம் சௌ சப்பு (உண்) 20 L.S.I. Intro. p. 1 21 L.S.I., pp. 10, 15 மரன் - முரண் (பெரிய) ஹா - ஆம் நி நெ இன் (இந்த) நொ நொ அன் (அந்த) தமிழில், சொற்களின் ஈற்றில் மெய்கள் அரையொலிப்பா யொலித்தல் கொச்சை வழக்கு. இன் என்னுஞ் சொல், இலக்கணப் போலியாய் எழுத்து முறைமாறி நி என்றாகும். அகர இகரங்கள் முறையே ஒகர எகரங்கட் கினம். குரங்கு, கொண்டை, பரவு (படவு), இரும் (கருப்பு), பெட்டி, மூக்க (முகம்), ஏகு, பொஹொ (புகை) முதலிய பல தமிழ்ச் சொற்கள் மலேயத் தீவுக்கூட்டத்தில் வழங்குகின்றன. கீழ்வருபவை முண்டா மொழியினத்தின் சிறப்பியல்பு களாகப் பண்டிதர் கிரையர்சன் குறிப்பிடுகின்றார் : (1) ஒரே சொல் பல சொல்வகை (Parts of Speech)ahf வழங்கல். (2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல். (3) 6ஆம் வேற்றுமை பெயரெச்சமா யிருத்தல். (4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்களிருத்தல். (5) இருந்து என்று பொருள்படும் (5ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப்பொருளை யுணர்த்தல். (6) தொடர்பு பதிற்பெயர்களும் (Relative Pronouns) தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை. இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க. மான்குமேர் மொழியினம் ஓரசை (Monosyllabic)Ãiy யதாகவும், முண்டா மொழியினம் gšyir(Polysyllabic)Ãiy யதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மை யுணரப்படும். ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள x¥òik22 (1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை. (2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச் சொற்கள் ஆக்கப்படல். (3) ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் வேறுபடுத்தப்படாமை. முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது. கா : மண்வெட்டி, விறகுவெட்டி; சலிப்பான் (சல்லடை). (4) அர் பன்மையீறா யிருத்தல். தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு ஓரினத்தாரா யிருந்ததாகத் தெரிகின்றது. இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழநாட்டர சர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் செந்தமிழ்ச் RtoifÆš(Magazine) எழுதி யிருப்பது பொருத்தமானதே. ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாந்தனூலார் கூறுகின்றனர். தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும் இடைப்பட்டோராதல் இதற்குச் சான்றுகள் (1) கடாரத்தில் முதன் முதல் இராக்கதர் (Monsters) வாழ்ந்தனர் என்னும் ஒரு வழக்குண்மையாலும்,23 நக்கவாரத்தில் நரவூனுண்ணிகளிருந்தமை மணிமேகலையிற் கூறப்படுவதாலும், இலங்கைக்குத் தெற்கே அசுரர் என்னும் ஓர் இராக்கத வகுப்பாரிருந்தமை கந்தபுராணத்தா லறியப்படுவதாலும், தென் மேற்குத் திசைத்தலைவனாக நிருதியென்றோர் அரக்கன் குறிக்கப்படுவதாலும், இன்றும் தென்மேற்கிலுள்ள ஆப்பிரிக்கர் அரக்கவினமா யிருப்பதாலும், பண்டு தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மாந்தனின் 2ஆவது நிலையினரான நீக்கிரோவர் வாழ்ந்தனர் என்பது அறியப்படும். இராக்கதர் 22 L.S.I. p. 14 23 L.S.I., p. 14 இரவில் செல்லுபவர். இதையே நிசாசரர் என்று மொழி பெயர்த்துக்கொண்டனர் ஆரியர். அரக்கர் அழிப்பவர். (2) உடலமைப்புப்பற்றிய மாந்தன் நிலைகளுள், முதலாவது விலங்குபோல்வது; இரண்டாவது பண்டைநீக்கிரோவரது; மூன்றாவது திராவிடரது; நாலாவது ஆரியரது. தமிழர் உடலமைப்பில் ஒரு வலத்த கருநீசிய (Melanesian) அல்லது இந்தோ-ஆப்பிரிக்கக் கூறுள்ளதாகப் பண்டிதர் லோகன் (Dr. Logan) TW»‹wh®.24 மாந்தன் நிலைகள், தொழிற்படி முறையே உண்ணும் மாந்தன் (Man the Eater), உழைக்கும் மாந்தன் (Man the Worker), எண்ணும் மாந்தன் (Man the Thinker), புதுப்புனை மாந்தன் (Man the Inventor) என நான்கு. அவற்றுள் இடை மூன்றும் திராவிடர் அடைந்தவை; இறுதியது ஆரியரது. மாந்தனை நிறம்பற்றிக் காலமுறைப்படி முறையே கருமாந்தன், செங்கருமாந்தன், செம்மாந்தன், பொன்மாந்தன், வெண்மாந்தன் என ஐவகையாக வகுக்கலாம். அவற்றுள் முதல் மூன்று நிறங்கள் திராவிடருடையன. மாந்தன் மூக்கு முதலிலிருந்து வரவர ஒடுங்கி வந்திருக் கின்றது. நீக்கிரோவர் மூக்கு அகன்றும் திராவிடரது நடு நிகர்த்தாயும், ஆரியரது ஒடுங்கியு மிருக்கும். சரியான திராவிடனுடைய மூக்கின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விழுக்காட்டளவு (proportion), நீக்கிரோவின் மூக்கிற்குள்ளது போன்றேயிருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே திராவிட வரணமில்லை. திராவிடரின் முகம் (தலை) வழக்கமாக வாலவடிவாயுளது. ஆனால், பிற இயல்புகளிலெல்லாம் அது ஆரியத்திற்கு நேர்மாறா யுள்ளது என்று கிரையர்சன் வரைகின்றார். தமிழருள் அல்லது திராவிடருள் தாழ்த்தப்பட்டடோரான ஒரு பகுதியாரை, ஆதிதிராவிடர் என்று பிரிப்பது தவறாகும். 24 Caldwell’s Comparative Grammar, pp. 560, 561 வெயிலில் உழைப்பதாலும், நாகரிக வாழ்க்கையும் சிறந்த வுணவும் இல்லாமையாலுமே, அவர் அங்ஙன மிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோருள் இரண்டு மூன்று தலைமுறையாய் நாகரிகமானவர் மேலோரைப் போலிருத்தலையும், பிறந்தவுடன் ஒரு பறைக் குழந்தையைப் பார்ப்பனக்குடியிலும், ஒரு பார்ப்பனக் குழந்தையைப் பறைக்குடியிலும் விட்டு வளர்க்க உருவம் மாறுபடுவதையும் நோக்குக. 4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேரநாடாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன்கீழ், அது தலைசிறந்த தமிழ்நாடா யிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமய மாய்க் கிடக்கின்றது. இதுபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும் போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற் போகாது. கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ்நாடாகவே யிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது. அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே யிருந்திருக்க வேண்டும். 12 நூற்றாண்டிற்குப் பின்தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற்பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது; பிற்பருவத்தில்தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரிய வெழுத்தை யமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரியமய மாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந்நூறாட்டைப் பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் நாட்டைப் பரசுராம க்ஷேத்ரம் என்றும், மிகப் பழைமையான தென்றும், தமிழ்நாடன்றென்றும் சொல்லிக்கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை. மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க. அவை இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்படும். மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது. மலை + ஆளி = மலையாளி. ஆளி = ஆள். ஒ.நோ: கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி. மலையாளி = மலைநாட்டான். மலையாளியின் மொழி மலையாளம். மலையாளி + அம் = மலையாளம். ஒ.நோ: வங்காளி - வங்காளம். மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங் கின மேலை விடையூழியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப் பெயரால் அழைத்தனர், அன்றவ் விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின். மலைவாரம் - மலவாரம் - மலவார் - மலபார். வாரம் = சாய்வு அல்லது சரிவு, ஒ.நோ: அடிவாரம், தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க. நக்கவாரம் - Nicobar. மலைவாரம் - Malabar. இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்குவழியா யென்பதற்குச் சான்றுகள் : (1) பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு. சேரநாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப் பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குடமலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர்வாணிகத்திற்கும் சோழ பாண்டியரி னின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரையமைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற்காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக்கொள்ள முடியாமையால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப் பட்டதாகவுந் தெரிகின்றது. வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று. மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல்பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும். சேரர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பா யிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கியிருக்கவேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேரமரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண்படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கி வருகின்றதென்க. ஆயினும், வான், பான் ஈற்று வினையெச் சங்கள் இன்றும் வழங்குவதால், சேரநாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம். கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள், குமரிநாட்டி லேயே அல்லது சேர ஆட்சியேற்பட்டபின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்கவேண்டும். (2) குமரிநாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை. (3) திரிந, மகிழ்நன், பழுநி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல். இவை குமரிநாட்டிலேயே தோன்றின குமரி மலைநாட்டு வழக்காகும். (4) உரி (அரைப்படி), துவர்த்து (தோர்த்து) முதலிய திருநெல்வேலிச் சொற்கள் மலையாளநாடு நெடுக வழங்கல். (5) பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல். (6) மலையாளநாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல். இதுவே பண்டைத் தமிழ்முறை. தமிழ்நாட்டில் இது மாற்றப் பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ்நாட்டையே முதன்முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம். தமிழ்நாடு ஆரிய மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமே யாகுமென்பது ஆரியர் கருத்து. (7) பண்டைத்தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல். (8) தம்பிராட்டி, சிறுக்கன் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல். (9) மருமக்கட்டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.25 ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு வடகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்குவதாயிருந்தால், இவ் விரு நிலப்பகுதிகளும் ஒருகாலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டு மென்பதைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரிநாட்டிலும் பெண்வழிச் செல்வமரபு வழங்கியிருக்கவேண்டும். தாய் + அம் = தாயம். தாயினின்றும் பெறும் உரிமை தாயம். பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுதுபோக்குகள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரே படியா யிருக்கின்றன . கீழ்நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டடங்களின் அமைப்பும் வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாளநாட்டில் உள்ளவை போன்றே யிருக்கின்றன. கடாரம் ஜப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நில நடுக்கம் வெள்ளம் முதலியனபற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்ந்துகொண்டே யிருக்கின்றன. குமரி நாட்டிலும் இவ் வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களா யிருந்தமையும், பெயர்வுப் பொருளுடையனவா யிருத்தலையும் நோக்குக. பண்டு தென்பெருங் கடலில், குறைந்தது ஒரு பிறை வட்டமான எரிமலைத் தொட ரிருந்திருத்தல்வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக் 25 Peeps at Many Lands - The South Seas, pp. 64 - 6 கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக் கொதிப்பும் வெள்ளமும்பற்றியே, ஊழியிறுதியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலைவாண ராகிய சிவனை வணங்கு வோரும், நீரால் அழிவு நேருமென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும். 5. பண்டைத்தமிழ் நூல்களிற் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்குச் சான்றாகத்தக்க, ஒருவகை அயல்நாட்டுப் பொருளும் கூறப்படவில்லை. வெம்மை யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப் பொருளிருப் பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர்நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே, ‘a warm welcome,’ ‘to pour cold water’, பாட்டுக் குளிர்ச்சியா யிருந்தது சூடான சொல் முதலிய வழக்குகள் முறையே நற்பொருளும் தீப்பொருளும்பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், கொன்வரல் வாடை, பலநாளைப் பாவத்தை (வெயிலை)த் தாங்குகிறோம். ஒரு நாளைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடியவில்லையே என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் ‘a warm reception’ என்பது தீப்பொருளில் வழங்குவதையும் நோக்குக. வெம்மை வேண்டல் (உரி.38) என்பது தொல்காப்பியம். 3 தமிழ்மொழித் தோற்றம் (1) கத்தொலிகள் - (Cries) காட்டு : ஓ, கோ, கூ. இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் விளிப்பொலிகள். ஓ - ஓசை, ஓதை; ஓல் - ஓலம், ஓதை - ஓது. ஓல் - ஒல் - ஒலி. கூ - கூவு. கூ (க்குரல்). கூப்பு (தொழிற்பெயர்) + இடு = கூப்பிடு. (2) ஒப்பொலிகள் (Imitatives) காட்டு : கூ - (கூயில்) - குயில். ஓ.நோ: (கூக்கூ) - குக்கூ (cuckoo), கக்கூ என்பது பிற்காலத் துச்சரிப்பு. மா - மாடு; காகா - காக்கா - காக்கை - காகம்; குர் - குரங்கு. ஒலிக்குறிப்புகள் (Onomatopoeia) காட்டு : பட்(டு) - படு(விழு). தூ - துப்பு. உரறு (roar), அரற்று (rattle), பிளிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே. உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள் (Interjections) ஒளி - பளபள, தகதக, பலார், பளிச்சு (flash). நிறம் - பச்சு, வெள், கரு. ஊறு - பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து. நாற்றம் - கம், கமகம. விரைவு - சடு (சட்), E. sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு. அச்சம் - துண், திடுக்கு, பே. இரக்கம் - ஆ, ஆஆ - ஆவா - ஆகா. அருவருப்பு - சீ, சே, சை. வியப்பு - ஓ, ஆ, ஏ, ஐ, ஆஆ - (ஆவா) ஆகா. தெளிவு - ஓ, ஓஓ - ஓவோ - ஓகோ. சுருக்கம் - சிவ், சிவுக்கு. விரிவு - பா, பளா. பருமை - பொந்து, பொது, பொதுக்கு. செறிவு - கொசகொச, மொசுமொசு. கனம் - திண். கேடு - நொசநொச. பொலிவு - சம், (ஜம்). மூட்சி - குப். ஏவல் - உசு (உஸ்). விளி - தோ, சூ, பே. அமைத்தல் - உசு (உஷ்), E. hush. நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புகளும் ஒலிக் குறிப்பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஈ, ஊ என்பவை சுட்டடிகள். குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசுபிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும்போது தோன்றும் ஒலி. திடும் என்பது ஒ ரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும்போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும். பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றி னின்றும். குறிப்புச்சொற்கள் இணைக்குறிலா யிருப்பின், இரட்டைக் கிளவியா யிருப்பது பெரும்பான்மை. ஆனால், சில அடுக்குத் தொடர்களும் இரட்டைக்கிளவிபோல் தோன்றுவதுண்டு; அவற்றைப் பிரித்தறிய வேண்டும். கா : இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் குறுகுறு மினுமினு (மின்னு மின்னு) மடமட சுடுசுடு இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும்; தனித்து வந்து பொருள் தராது; அடுக்குச்சொல் தனித்துவந்து பொருள் தரும். செக்கச்செவேர், சின்னஞ்சிறு என்பவற்றை இரட்டுக் கிளவி யெனலாம். (3) வாய்ச் சைகையொலி (Oral Gesture) முதலாவது அழைப்புவிடுப்புகளும் அண்மை சேய்மைப் பொருள்களும் கத்தொலியோடு கூடிய கைச்சைகையினாலேயே குறிக்கப்பட்டன. பின்பு வாய்ச்சைகையோடுகூடிய ஒலிகளாற் கூறப்பட்டன. அழைப்பு : வா. (பா என்றும் உலக வழக்கில் வழங்கும்.) வா என்னும் ஒலியை ஒலிக்கும்போது, கீழுதடு மேல் வாய்ப் பல்லைத் தொட்டிறங்குவது, ஒருவன் சேய்மையிலுள்ள வனைத் தன்னிடம் வரச்சொல்லுவதைக் குறிக்கும். இதைக் கைச்சைகையில் கையானது மேலுயர்ந்து கீழிறங்கும் செய்கை யுடன் ஒப்புநோக்குக. விடுப்பு : போ. போ என்னும் ஒலியை ஒலிக்கும்போது, பகரமாகிய வெடிப் பொலியும் (Explodent) ஓகாரமாகிய கீழ்மேலங்காப்பொலியும், முறையே போக்கையும் சேய்மையையும் குறிப்பன வாகும். சுட்டு வாயை விரிவா யங்காத்தலால் சேய்மையையும், பக்கவாரி யாய் நீட்டிக் கீழ்மேல் ஒடுக்கி யங்காத்தலால் அண்மையையும், இடை நிகர்த்தாய்க் குவித்தங்காத்தலால் இடைமையையும், பக்கவாரியா யொடுக்கிக் கீழ்மேல் நீட்டி யங்காத்தலால் உயரத்தையும் முதற்றமிழர் குறித்தொலித்ததால், முறையே, ஆ ஈ ஊ ஓ என்னும் ஒலிகள் பிறந்திருக்கின்றன. இவற்றை ஒலித்துக் காண்க. ஓ உயரத்தை யுணர்த்துவதை, ஓங்கு, ஓச்சு முதலிய சொற்களாலறிக. ஓ......x. கா : ஒய்யாரம். ஓ - ஊ, ஒ - உ. ஒகரத்தை உகரமாகவும்உகரத்jஒகரமாகவு«ஒலிப்பJஉலfவழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றிய வொலி ஓகாரமே. ஊங்கு, உம், உம்மை, உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகார வுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க. மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உணர்த்தல் போல, ஊகார வுகரச் சுட்டடிப்பெயர்களும் அவ் விரு காலத்தையும் உணர்த்தும். கா : காணாவூங்கே - இறந்தகாலம் உம்மை எரிவாய் நிரயத்தும் - எதிர்காலம் எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப்போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது. ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும்; ஊங்கு, உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழி யையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கதையும் முதுகையும் உணர்த்துமென்க. இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உகரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது, பின்னது ஓகாரத்தின் திரிபு. உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது முன்னும் இகரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன்பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற கருத்துகளையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும். கா : ஊங்கு = முன்பு. 241ஆம் பக்கத்தில் உயரக் கருத்தை அடிப்படையாக்கொண்டு எதிர்காலத்தை யுணர்த்துவதாகக் கூறிய உகரம், முன்மைக் கருத்தை அடிப்படியாகக் கொண்டு அக்காலத்தை உணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு - ஊக்கு. cif - L.,-Gk. ago, to drive. Act, agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின்றும் பிறந்தவை. உந்து=முற்செலுத்து. துர - E. drive, A.S. drifan, Ger. treiben, to push. முன் - முந்து. மூ - மூக்கு - முகம் - முகப்பு. முகம் - நுகம். மூக்கு - முகடு. மூக்கு - முகை - முகிழ். மூக்கு - முக்கு. முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக் குறித்தது. வடமொழியில் அதை வாய்ப்பெயராகக் கொண்டது பிற்காலம். மூக்கு - E. mucus. மூக்கு - E. beak, Fr. bec, Celt. beic. மூக்கு - E-Celt. peak. முக்கு - E. nook, Scot. neuk, Gael. - Ir. niuc. pike (E. and Celt.); pic (Gael.); pig (W.) - a point; spica (L.); spike (E.); spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு என்பதன் வேறுபாடுகளே. முன் - முனி - நுனி - நுணி - நுண். முனி - முனை - நுனை. நுண் - L. min. இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும். முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு - E. cone, a solid pointed figure. cone, L. conus, Gk. konos. hone (E.), han (A.S.), hein (Ice.), cana (Sans.) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே. முட்டு - E. butt,  buttress. meet, moot என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே. A.S. metan, to meet; mot, an assembly, முட்டு - முட்டி - கைகால் பொருத்துகள். ஈங்கு - இங்கு, ஈ - இ. இறங்கு, இழி, இளி, ஈனம். இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும்போது அண்மை இறக்கமாகும். ஈர், இழு - இசு - இசி, இழு - இழுகு - இழுது - எழுது. இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரைதலையுங் குறிக்கும். இட, இணுங்கு என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின்வாங்கி ஓடுதலையும் குறிக்கும். பின் - பிந்து. பின் - பின்று - E. hind, adj; behind, adv.; hinder,; v.t. hinderance, n.; A.S. hinder, adj, hindrian, Ger. hindern. v.t. பின் - பிற - பிறகு - பிறக்கு - E. back, A.S. boec, Sw. bak, Dan. bag. திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். திரைத்தல் = இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டுதலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார். திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க. திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும். Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற் போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும். L. traho, Dut. trekken, E. draw. A.S. dragan, Ger. tragen, Ice. drug, draft, drafts, drag, draggle, dragnet; drain, drainage, drainer; draught, draught house, draughts, draught-board, draughtsman; drawback drawsbridge, drawee, drawing, drawing-room, drawl, draw-well; withdraw, dray; dredge, dredger; dregs, dreggy; trace, tracery; track, trackroad; tract, tractability, tractile, tractarian, traction, tractor, tractive, abstract, attract, extract; trail; train, trainer, training, trainband, train-bearer; trait; trawl; treachery; treat, treatise, treatment, treaty; tret; trick; trigger; troll; த்ராவக (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல். வினா (1) ஈற்றுவினா - ஓ ஓகாரம் உயரச்சுட்டென்று முன்னர்க் கூறப்பட்டது. வினாப்பொருளில் உயரச்சுட்டுகளே பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக் காட்டிக் கேட்டல் போன்ற வுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதி னோக்கி யுணர்க. சொற்கள் தோன்றுமுன், எது வேண்டு மென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது. ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுவினாவாகவே யிருக்கும். (2) இருதலைவினா - ஏ சேய்மை யண்மை யிடைமைச் சுட்டுகளினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப்பெயர்களும், அண்மைச் சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள்ளிருந்தெழுப்பப் படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ் வொலி ஏகாரமே. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (eructation) என்றும், துன்பத்தில் விடும் (அடிவயிற்றினின்றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப்படுதல் காண்க. ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கி யெழுப் பப்படுவதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உணர்த்து வதாகும். ஏ - எ. கா : எ - எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு. ஏ - ஏ, ஏகு, ஏத்து, ஏந்து, ஏண், ஏர், ஏறு. தென்னு, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடிவாய்ப் பிறந்தவை. எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடி யாய்ப் பிறந்தவை. ஏபெற் றாகும் (உரி. 8) என்றார் தொல்காப்பியர். ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேண், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும். சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லுதலாகக் கூறப்படும். ஒ.நோ: go on, go on reading. மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ (அம்பு), ஏவு, ஏகு என்னும் சொற்கள் தழுவியன. செய்துகொண்டேயிரு என்பதில் ஏகாரம் தொடர்ச்சியையும், ஒன்றேகால் என்பதிற் கூடுதலையுங் குறிக்கும். Educate, elate, erect, eructate, heave, heaven முதலிய சொற்களெல்லாம், எகர ஏகார அடியாய்ப் பிறந்து, எழல் அல்லது எடுப்புப்பொருளை உணர்த்துபவையே. ஒ.நோ: சுவரெடு - to erect a wall. எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ் சொல், எடுப்பாக (உயரமாக) வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங் கருத்துகளை முறையே தழுவும். ஒ.நோ: L. educo, E. educate, to bring up; to draw out the mental powers of, as a child, L. educo, E. educe, to draw out. L. educo, duco (Aphesis), to lead. L. e, ex; Gk. ec, ex; E. ex, out, out of. பண்டைத்தமிழில் வினைச்சொற்கள் எடுக்க, நடக்க என்று நிகழ்கால வினையெச்ச வடிவிலே கூறப்பட்டிருக்கின்றன. அவையும் கல்லார்வாயில் எடுக்கோ, நடக்கோ என்று ஓகார வீறாகவே வழங்கினதாகத் தெரிகின்றது. இதை இன்றும் மலையாளத்திற் காணலாம். எடுக்கோ, educo (L.) என்னும் சொற்கள் ஒத்திருத்தலைக் காண்க. எடு என்னும் சொல் தமிழில் வெளியே எடு என்னும் பொருளில் வழங்குவதை, வாயாலெடு, காலில் முள்ளெடு என்னும் வழக்குகளாலுணர்க. v-e; எக்கு - ec, ex. எகரவொலியே பண்டு e என்னும் ஆங்கில வெழுத்திற்கு மிருந்தது. ஏ என்னும் ஒலி, ஒருவனுக்குள்ளிருந்து வருவதால், அவன் தன்னைக் குறிக்கும் தன்மைப் பெயரடியாயிற்று. ஏன் - யான் - நான். ஏகாரம் எழலைக் குறித்தலால் ஓகாரம்போல வினாப் பொருட்கும் ஏற்றது. கா: ஏது, ஏவன் (முதல்); அவனே, வந்தானே (ஈறு) ஏ - எ. கா: எது, எவன், என். ஏ - யா. கா: யாது, யாவன், யார். ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப் பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை. ஒ.நோ: ஏன் - யான், (ஏனை) - யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ் - யாழ். ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற்கினமான பண்பாதலையும், ஆன் ஓன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும், ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க. ஆ வினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ. தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஓ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களுள் பெரும்பாலனவற்றிற்கு வேர் என்பது, இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விளக்கப்படும். சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துகளாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக் கின்றன. கா : வடமொழியில், பிறழ்ந்தவை பிறழாதவை அத்ய = இன்றைக்கு இ(த்)தி = இப்படி அத்ர = இங்கே இத்தம் = இவ்வாறு, E. item. இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப்படியே யிருத்தல் காண்க. (4) சொற்கள் தோன்றிய பிறவகைகள் சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு. ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை. எழுத்துத்திரிபு : புழலை - புடலை, பெள் - பெண். திரிசொல் : கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை. மரூஉ : பெயர் - பேர், கிழவர் - கிழார். முதன்மெய்நீக்கம் : சமர் - அமர், தழல் - அழல். முதன்மெய்ப்பேறு : ஏண் - சேண். சிதைவு : எம்மாய் - யாய், நும்மாய் - ஞாய், தம்மாய் - தாய். போலி : நாலம் - ஞாலம், நெயவு - நெசவு, குதில் - குதிர். இலக்கணப்போலி - சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று). முக்குறை முதற்குறை : தாமரை - மரை, ஆட்டுக்குட்டி - குட்டி. இடைக்குறை : வட்டை - வடை, உருண்டை - உண்டை. கடைக்குறை : தம்பின் - தம்பி, கோன் - கோ. அறுதிரிபு (உலக வழக்கு) வலித்தல் : கொம்பு - கொப்பு, ஒளிர் - ஒளிறு, பதர் - பதடி. மெலித்தல் : போக்கு - போங்கு. நீட்டல் : நடத்து - நடாத்து, கழை - கழாய். குறுக்கல் : ஆங்கு - அங்கு. விரித்தல் : - முதல்விரி : காயம் - ஆகாயம். இடைவிரி : காதம் - காவதம் கடைவிரி : திரும் - திரும்பு தொகுத்தல் : செய்யுமவன் - செய்வோன். குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை). எதுகை : (இயற்கை) x செயற்கை (செயல் + கை). காரணச்சொல் : உள்ளி, நாளி - நாழி (நாளம் = மூங்கில்). தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை. பண்புப்பெயர் : வெளுமை - வெண்மை. வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான். ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி). திரிபாகுபெயர் : பித்தம் - பைத்தியம். குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி - தொட்டில். பருமைப்பெயர் : குன்று - குன்றம், நெருஞ்சில் - ஆனை நெருஞ்சில். உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன். இல்லோன் பெயர் : அறிவிலி. தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி. அறுதொகை வேற்றுமை : ஊற்றுக்கண், பிழைபொறுத்தான். வினை : நிறைகுடம், சுடுசோறு. பண்பு : வெந்நீர், செம்மறி. உவமை : கண்ணாடியிலை உம்மை : பயிர்பச்சை, தாய்பிள்ளை. அன்மொழி : நால்வாய். இடைச்சொற்றொடர் : இன்னொன்று. புணர்மொழித்திரிபு : புகவிடு - புகட்டு, வரவிடு - வரட்டு, போகவிடு - போகடு - போடு. L. pono; Gael. put. W. pwitio; A.S. potian; E. put, pose. மரூஉப்புணர்ச்சி : தெங்கு + காய் = தேங்காய். துணைவினைப்பேறு - எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு. முன்னொட்டுச்சேர்பு : முற்படு, உட்கொள். பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம். அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற்றான். சினைமுதல் : வாற்குருவி, கொண்டைக்கடலை. அடைசினைமுதல் (வண்ணச்சினைச்சொல்) : செங்கால் நாரை. ஒட்டுப்பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயி லெறிந் த தொடித்தோட் செம்பியன். ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துகள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும். கா : வள் + இ = வள்ளி - வளி. + ஐ = வள்ளை - வளை + அம் = வளையம் - வலயம் (வ.) + அல் = வளையல் + வி = வளைவி + அகம் = வளாகம் + அம் = வள்ளம் - வளம் - வளமை - வளப்பம். வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும். + அர் = வளர் + அல் = வள்ளல் + ஆர் = வளார் வள் + தி = வட்டி, + இல் = வட்டில் + அணை = வட்டணை = வண்டி வண்டி - பண்டி - பாண்டி + இல் = பாண்டில் + அன் = பாண்டியன் + து = வட்டு + அகம் = வட்டகம் - (வட்டுகம்) = வண்டு - வட்டுவம் + தம் = வட்டம் (வ்ருத்த, வ.) + அகை = வட்டகை + ஆரம் = வட்டாரம் + தை = வட்டை - வடை வட்டம் என்பதை நிலைமொழியாகக்கொண்டு வட்டக்கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வருமொழியாகக் கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர்மொழிகளும் தோன்றும். வள் - வாளம் - வாளி. வாளம் - வாணம் - பாண (வ.) வாளம் = வளைந்தது, வளைந்த மதில். ஒ.நோ: சக்கரவாளம். L. vallum, a rampart; Ger. wall; A.S. weall; E. wall. வாளம் - பாளம் (மதில்போன்ற கனத்த தகடு). வாளம் - வாள் (வளைந்த கத்தி). அரிவாளையும் வெட்டறுவாளையும் காண்க. வள் - வணர் - வணங்கு. tŸ - uri (Skt.), verto (L.). வள் - வரி - வரை. வரி + சை = வரிசை. வரி + அம் = வரம். வரி + அணம் = வரணம் - வண்ணம் வரணம் - வரணி - வண்ணி. வண்ணம் + ஆன் = வண்ணான். இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிற சொற்களையும், எனது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியிற்றான் காணமுடியும். தமிழ்மொழி வளர்ச்சி தமிழ்மக்கள் குறிஞ்சியி லிருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்திணைகளுக்குச் சென்றபோது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றிய பின்னரே பல சொற்கள் தோன்றின. பல தொழிலும் பல கலையும் பல நூலும் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின. ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன. ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துகள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன. மருதநிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப்படுத்திய போது, ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின; பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றியபோது, சொல்வளம் விரிந்தது. விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குகளும் கருத்துகளும் தோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன : முதல் அறுகுபோல் வேரூன்றி அரசுபோலோங்கி அத்திபோல் துளிர்த்து ஆல்போற் படர்ந்து ..... என்று ஒருவரை வாழ்த்துவது வழக்கம். அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு. கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடிவழி, கொடி கோத்திரம். புல் = சிறுமை. கா. புன்மை, புல்லியர், புன்செய், புன்செயல், புன்னகை. பனை = பெருமை, ஓரளவு. மரம் - மரபு, அடியுங் கவையுங் கிளையும் உடைய மரம்போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குலவழி மரபெனப்பட்டது. மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக்கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல். வாழை - வாழ். வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடினபின் பிள்ளைகள் தலையெடுப்பதுபோலத் தாய்வாழை முதிர்ந்தபின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்ஙனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக. வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் என்றார் இராமலிங்க அடிகள். வாழை முதிர்ந்தபின் சாயும். சாய் - சா = இற. ஒ.நோ: Ice. deyja; Dan. do; Scot. dee. E. die. சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே, ஒடி - ஒசி, vide - vise என்று திரிகின்றன. சா + வி = சாவி (சப், வ.). சாவி + அம் = சாவம் (சாப, வ.) - சாபம். சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு. வாழ்வி x சாவி. வாழ்த்து - வழுத்து. வாழ்த்தல் சொல்லளவே. சினை வேர் : வேரூன்று, வேர்கொள், வேரறு. Kis : fh‹Kis; Kis = njh‹W (É.), இளமை, துவக்கம் (பெ.). j©L : j©L = jo, gil (bg.); தண்டல் = வரி திரட்டல். தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண். தண்டி = பெரு, ஒறு (வி.). jo = f«ò, âu£á, C‹ (bg.); பெரு, வெட்டு (வி.). தடியாலடித்ததே முதல் தண்டனை. கவை : கவை = பிரி (வி.). கவடு = காலிடை. கவை - கவான் - கமா (உருது). »is : »is = ãÇ (É.), ïd«, ãÇî (bg.), கிளைவழி. கொம்பு : கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் கொம்பு - கொழுகொம்பு, விலங்குக்கொம்பு, எழுத்துக்கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு (கிளை பயிர் வளைவதால் தோன்றியவை). கோடு : கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு. இலை : மூவிலைச்சூலம், இலைத்தொழில். இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம். இலக்கித்தல் எழுதல். இலக்கு - இலக்கியம், இலக்கணம். பூ : பூத்தல் - தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல். அரும்பு : அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு. மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப் பட்ட பழி. கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை) கூம்பு - கூப்பு. மலர் : முகமலர்ச்சி. மலர்த்தல் - மல்லாத்தல். அலர் = பழி. காய் : கை காய்த்தல், காய் விழுதல் (abortion). மாங்காய் = குலைக்காய் (heart). பழம் : பழுத்தல் = முதிர்தல். கா : பழுத்த கிழம். சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும். = நிறைதல். கா : நைவளம் பழுநிய, பழுத்த சைவன். = தண்டனை நேர்தல். கா : 10 உருபா பழுத்து விட்டது. பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி. இலைப்பழுப்பு. பழுப்பு - பசுப்பு (தெ.). பசப்பு - பசலை. பழம் - பழமை - பழைமை - பழகு - பழங்கு - வழங்கு. பழவினை, பழையன், பழங்கண். பழம் - பயம், பழன் - பயன். ஒ.நோ: fruit = effect. பழம் - பல (வ.) fruit; gÈ (t.), to frutify. g©L = gH« (bj.), பழைமை. கனி : கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல். கன்னி (பழுத்தது) - கனி. கன்னி = பருவமான பெண். ஒ.நோ: matured girl. கன்னி - கன்னிகை. கன்யா (வ.). குலை : ஈரற்குலை. விதை : வித்து = முதற்காரணம், இம்மி, எள், தினை = சிற்றளவு. எள்(ளு) = இகழ் (வி.). எண்மை - எளிமை. எள்கு (எஃகு) - இளகு - இளமை - இளை. இளகு - இலகு - இலேசு. இளை - எய். குன்றி ஓரளவு. காணம் (கொள்) = ஓரளவு பொன், பொற்காசு, பொக்கு = பொய். பொக்கணம் = பை. தழை : தழைத்தல். குழை : நகை. தோடு : கம்மல், திரட்சி, ஓலை = எழுத்து, திருமுகம், ஆவணம், திருமண முன்னறிவிப்பு (இக்காலத்தது). கொழுந்து : குலக்கொழுந்து, கங்கைக்கொழுந்து. குருத்து : காதின் குருத்து. தமிழிலக்கியத் தோற்றம் ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திருமன் றாட்டுகள், மறைநூல் என்ற வகையாகவே யிருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும். தமிழில் மறைநூலிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பிய நூற்பாவுரையில், `தானே என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரமென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க. தமிழிலக்கணத் தோற்றம் எழுத்து எழுத்துகளில் முதலாவது நெடிலும் பின்பு குறிலும் தோன்றின. முற்றமிழர் குழந்தையர் போன்றனர். குழந்தைகள் வாயில் நெடிலே முன்பிறக்கும். குறிலினும் நெடிலே ஒலித்தற் கெளிது. நெடிலுங் குறிலும் ஒலியில் வெவ்வேறல்ல; அளவிலேயே வெவ்வேறாகும். நெடில் குறுகிக் குறிலாயிற்றென்க. சுட்டும் வினாவும் முதலாவது நெடிலாகவே யிருந்தன. இதை, நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (மொழி. 10) குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே (மொழி. 11) ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா (நூல். 32) நீட வருதல் செய்யுளுள் உரித்தே (உயிர். 6) என்று தொல்காப்பியர் கூறுவதாலும், பிற திராவிடமொழிகளில் நெடில்கள் இன்றும் உலகவழக்கில் வழங்குவதாலும் அறியப்படும். ஐ, ஔ இரண்டே தமிழில் புணரொலிகள் (Diphthongs). தமிழில் அரிவரி தோன்றினபோது, ஏகார ஓகாரங்கட்குக் குறிகளமைந்திருக்கவில்லை. பிற்காலத்தில்தான் அவை தோன்றின. அப்போது அவற்றின்மேலும் அவையேறின மெய்யெழுத்து களின் மேலும் புள்ளியிட்டனர். பிற்காலத்தில் புள்ளிக்குப் பதிலாக, உயிரெழுத்துகளில் கீழிழுப்புக் கீழ்ச்சுழிகளும், உயிர்மெய்யெழுத்துக் கொம்புகளில் மேற்சுழிகளும் இடப்பட்டன. ஆய்தம் இத்தாலிய ஹகரம்போன்ற மெல்லிய ககரம். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரி. 34) என்பது தொல்காப்பியம். ஆய்தல் = நுணுக்கமான ஒலி. மெய்யெழுத்துகளில், ழ ள ற ன என்ற நான்கும் முதன்முதல் அரிவரி தோன்றிய காலத்திற்குப் பிற்பட்டவை. அதனாலேயே அவை ஈற்றில் வைக்கப்பட்டன. ல - ள - ழ. ஒலித்தற் கெளிமைகருதி ழகரம் ளகரத்திற்கு முன் வைக்கப்பட்டது. ர - ற. றகரத்திற்கு இனமாக னகரம் தோற்றுவிக்கப் பட்ட.து. னகரம் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று. வெரிந், மகிழ்நன், கொழுநன் முதலிய சொற்களை நோக்குக. எழுத்து, படவெழுத்து (Hieroglyphic or Ideographic), அசையெழுத்து (Syllabic), ஒலியெழுத்து (Phonetic) என மூவகைப் படும். உலகில் முதன்முதல் தோன்றினது படவெழுத்தே. தமிழிலும் அதேயென்பது, உருவே யுணர்வே யொலியே தன்மையென இருவகை யெழுத்து மீரிரண் டாகும் என்று யாப்பருங்கல விருந்தியிலும், இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம் (19:53) என்று பரிபாடலிலும். கடவு ளெழுதிய பாவை (20:111) என்று மணிமேகலையிலும் கூறியிருப்பதாலும், படமெழுதுதல் என்னும் வழக்கு இன்று முண்மையாலும் அறியப்படும். திருவாளர் தி.நா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள பண்டைத் தமிழ் எழுத்துகள் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால், ஒருவகைத் தமிழெழுத்துகள் அடைந்து வந்துள்ள மாறுதல்களை நன்றாயறியலாம். தமிழில் இருவகை யெழுத்துகள் இருந்தன. சொற்கள் முதன் முதல் தோன்றினவை தனிச்சொற்களே, குழந்தைகள் சோறு வேண்டும்போது சோறென்று மட்டும் கூறுதல் காண்க. சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான்காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள், முதல் மூன்றே உண்மையில் சொல்வகையாகும், இறுதியது செய்யுள் வழக்குப் பற்றியதே. உரிச்சொல் (Poetic Idiom) உரிச்சொல் செய்யுள் வழக்குப்பற்றியதே யென்பதற்குக் காரணங்களும் சான்றுகளும் : (1) சொற்கள் மூவகைக்கு மேற்படாமை. பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் அவ் விரண்டையும் சார்ந்து வரும் இடைச்சொல்லுமென மூவகையே சொற்கள். எச்சவினை காலங்காட்டின் தெரிநிலையும், காட்டாவிடின் குறிப்புமாகும். ஆங்கிலத்திலுள்ள எண்வகைச் சொற்களையும், I. Nouns - பெயர்ச்சொல் II. Verbs - வினைச்சொல் III. Particles - இடைச்சொல் என மூன்றாகவே அடக்குவர் கென்னெடி (Kennedy) என்பார்.1 அரபியிலும் அதைப் பின்பற்றும் உருதுவிலும், பெயர் வினை இடை என மூன்று சொல்வகையே கூறப்படுகின்றன. (2) உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை.... பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (உரி. 1) என்று தொல்காப்பியர் உரிச்சொல்லிலக்கணங் கூறல். (3) தொல்காப்பியர் ஏனை மூன்று சொற்கட்கும் இலக் கணங் கூறியதுபோல, உரிச்சொற்கோர் இலக்கணம் கூறாமையுங் அகராதி முறையில் பொருளே கூறிச் செல்லுதலும், 1 The Revised Latin Primer, pp. 12, 13 (4) செய்யுள் வடிவிலுள்ள அகராதிகளான நிகண்டுகள் உரிச்சொல் லென்று பெயர்பெறல். இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே (நன். 460) என்றார் பவணந்தியார். உரிச்சொல் நிகண்டு என்று ஒரு நிகண்டுமுளது. செய்யுளிற் சிறப்பாக வரும் சொற்களெல்லாம், மாணாக்கர் இளமையிற் பாடஞ் செய்தற்பொருட்டுத் தொகுக்கப்பட்டன. அத் தொகையே நிகண் டென்பது. இப்போதுள்ள அகராதிக்கு முந்தின நிலை நிகண்டும், அதற்கு முந்தின நிலை உரிச்சொல்லு மாகும். (5) உரிச்சொல் செய்யுட் சொல்லே யென்று பண்டைக் காலத்தில் கூறப்பட்டமை. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர் என்று சேனாவரையர் கூறுதல் காண்க. பிறவுரை மறுப்பு (1) உரை : இசை குறிப்பு பண்பு என்பவற்றிற் குரியவை உரிச்சொல் என்பது. மறுப்பு : இது நாற்சொற்கும் பொதுவிலக்கணம் என்பது. (2) உ : பெயர்க்கும் வினைக்கும் உரியது உரிச்சொல் என்பது. ம : இஃது இடைச்சொற்கும் ஏற்குமென்பது. (3) உ : பலபொருட் கொருசொல்லும் ஒருபொருட்குப் பல சொல்லுமாக உரியது உரிச்சொல் என்பது. ம : இதுவும் நாற்சொற் பொதுவிலக்கணம் என்பது. (4) உ : வினைவேரே உரிச்சொல் என்பது. ம : வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியாகவும் வினையியலிற் கூறப்பட்டுள்ளது. வினைவேரை வேறாகக் கூறின், இடைவேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற் களும் செல்லல் அலமரல் முதலிய வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச்சொற்களுமாக, உரிச்சொல் மூவகைப்படுதலானும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இரு வேறு வடிவிற் கூறப்படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வகையென்றும், வினைவே ரென்றும் கூறுதல் தவறே என்பது. (5) உ : உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி (குற்றி. 77) உரிச்சொல் என்பது. ம : இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ள விண்ண விணைத்தது, வெள்ள விளர்த்தது முதலிய காட்டுகளில், நிலைமொழிகள் இடைச்சொல்லாயும் வருமொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ்வுரை போலியுரை யென்பது. பிறர் மறுப்புக்கு மறுப்பு உரிச்சொல் செய்யுட்சொல்லேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந்திருக்கின்றேன். அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறியிருக் கின்றனர். அம் மறுப்பும் அதன் மறுப்புமாவன: (1) ம : வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (உரி. 2) என்று தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச்சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன் றென்பது. ம. ம : ஒரு குழுவார் பிறர்க்குத் தெரியாது மறைபொருளவாகத் தமக்குள் வழங்கும் குறிகளே குழூஉக்குறி யாயினும். அவற்றுள் பொருள் வெளிப்பட்டவும் பண்டைநிலை நோக்கிக் குழூஉக்குறி யெனப்படும். ஆசிரியன் குழூஉக் குறிகட்குப் பொருள் கூறும்போது, வெளிப்படை யானவற்றிற்குப் பொருள் கூறான். இது போன்றதே மேற் கூறிய நூற்பாக் கூற்றுமென்பது. மேலும், செய்யுட்கே யுரியதும் செய்யுட்கும் உரைநடைக்கும் பொதுவானதுமெனச் செய்யுட்சொல் இருவகை. அவற்றுள், செய்யுட்கே யுரிய சொல்லே உரிச்சொல் லெனப்படுவது என்பதைக் குறித்தற்கே, வெளிப்படு சொல்லைச் சொல்லென்றும் வெளிப்படாச் சொல்லை உரிச்சொல்லென்றும் தொல்காப்பியர் குறித்ததூஉமென்க. மேலும், உரிச்சொற்பெயர் ஒரு சொல்லை மட்டுமன்று, அது செய்யுளில் சிறப்பாக ஒரு பொருளில் வழங்கற்பாட்டையும் பொறுத்தது. செல்லல் என்பது போதலைக் குறிப்பின் தொழிற்பெயர்; பிறரிடம் போயிரக்கும் வறுமையாகிய இன்னாமையைக் குறிப்பின் உரிச்சொல். வாள் என்பது கருவியைக் குறிப்பின் பெயர்ச்சொல்; அதன் ஒளியைக் குறிப்பின் உரிச்சொல். இங்ஙனமே பிறவும். கதழ் துனை போன்ற சொற்கள், உலக வழக்கில் வழங்கா மையால், எல்லாப் பொருளிலும் உரிச்சொல்லாகும். இங்ஙனம், சொல்லே உரிச்சொல்லாவதும், ஒவ்வொரு பொருளில்மட்டும் உரிச்சொல்லாவதுமென, உரிச்சொல் இருவகை. பழுது முழுது முதலிய சொற்கள், இக்காலத்தில் வெளிப் படையாயினும், தொல்காப்பியர் காலத்தில், அல்லது அவர்க்கு முன்னொரு காலத்தில், வெளிப்படையல்லா திருந்திருக்க வேண்டும். மறை வெளிப்படையாவதும் வெளிப்படை மறையாவதும் சொற்கட்கியல்பே (2) ம: தட, கய முதலிய சொற்கள் அகரவீறாயிருப்பதால் அஃது ஒரு தனிச் சொல்வகையைக் குறிக்கும் என்பது. ம. ம: தொல்காப்பியர் ஓர் இலக்கணியேயன்றி மொழிநூற் புலவரல்லர். ஆகையால் சில சொற்களை ஈறு நீக்கிப் புணர் நிலை வடிவிற் குறிப்பர். மத என்று ஓர் உரிச்சொல்லைக் குறித்துள்ளார். அது மதம் மதன் என்று வழங்குதல் காண்க. இங்ஙனமே பிறவும் என்பது. சொற்கள் சொல்லியல் முறையில், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என, நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுள், இயற்சொல் (Primitive word) என்பது இயல்பான சொல்; திரிசொல் (Derivative word) என்பது அவ் வியற் சொல்லினின்றும் திரிந்த அல்லது திரிக்கப்பட்ட சொல். இவற் றிற்கு இவையே பொருள் என்பதை, இப் பொருட் பொருத்தத் தினின்றும், கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை என்பவற்றை உறுப்புத் திரிந்தவையென்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதி னின்றும் உணர்ந்துகொள்க. இயற்சொல் லெனினும் வேர்ச்சொல் லெனினும் ஒக்கும். இது முதல்வேர், வழிவேர், சார்புவேர் என மூவகைப்படும். பளீர், பளிச்சு முதலிய சொற்களில் வேராயிருப்பது பள் என்பது. இது முதல்வேர். பள் என்பதன் திரிபு பால் என்பது. இது வழிவேர். பால் என்பது வால், வெள் என்று திரியும். இவை சார்பு வேர். சில சொற்களில் ஒவ்வோர் எழுத்தே பொருள் நிறைந்திருக் கும். அவ் வெழுத்தை விதையெழுத்தென்னலாம். பள் என்னும் சொல்லில் ள விதையெழுத்தாகும். ந(ன)ம ல ள என்ற எழுத்துகள் ஒளிபற்றிய சொற்களில் வருதல் பெரும்பான்மை. திரிசொல்லும் முதல், வழி, சார்பு என மூன்றாம். கா : வேர் முதல்திரிவு வழித்திரிவு சார்புத்திரிவு ஏ ஏண் சேண் சேணோன் அர் அரி அரம் அரவு, அராவு திசைச்சொல் என்பது, செந்தமிழ் நாட்டில் வழங்கும் பொருளினின்றும் வேறான பொருளில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொல்லாகும். கா : வளர (மலையாளம்) = மிக. வடசொல் வடமொழிச் சொல். கிளவி கிளவியென்பது பெயர் முதலிய நால்வகைச் சொல்லுக்கும் பொதுப்பெயர். கிளத்தல் சொல்லுதல். இலக்கணநூல் தோன்றுமுன்னமே, திணை பால் எண் இடம் வேற்றுமையும், வினாவும் செப்பும் பிறவும்பற்றிய மரபு களும், தமிழில் அமைந்திருந்தன. அவற்றின் பாகுபாடுகளும் குறியீடுகளுமே இலக்கணிகளா லுண்டானவை. இதைக் குறித்தற்கே கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்கள், தொல்காப் பியத்திற் பெயரியலுக்குமுன் கூறப்பட்டுள்ளன. பெயர்ச்சொல் பெய் + அல் = பெயல் - பெயர். பெய்தல் இடுதல். பாட்டன் பெயரும் பெயரன்(பேரன்) பெயரும் மாறி மாறி வந்தது பிற்காலமாதலின், பெயர்தற்பொருள் பிற்பட்டதாகும். பொருட்பெயர் - மூவிடப்பெயர் தன்மை : ஏ தன்மைச்சுட்டு. ஏ + ன் = ஏன் (ஒருமை). ஏ + ம் = ஏம் (பன்மை). ஏன் - யான் - நான். ஏம் - யாம் - நாம். யாம் + கள் = யாங்கள். நாம் + கள் = நாங்கள். யாம் தனித்தன்மைக்கும் நாம் உளப்பாட்டுத்தன்மைக்கும் வரையறுக்கப்பட்டன. முன்னிலை : ஈ அண்மைச்சுட்டு. ஈ + ன் = ஈன் - (யீன்) - நீன். ஈ + ம் = ஈம் - (யீம்) - நீம். நீன் - நூன், நீம் - நூம். நீம் + கள் = நீங்கள். நீன் - நீ. நீமர்- நீமிர் - நீவிர் - நீயிர் - நீர். நீன், நீம், நீமர் என்பவை இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்குகின்றன. செந்தமிழ் தோன்றிய காலத்தில், நீ நீயிர் நீவிர் என்பன சிறந்தனவாகக் கொள்ளப்பட்டதினால், ஏனைய நூல்வழக்கற்றன. முன்னிலைப் பெயர்கள் வினைமுற் றீறுகளாகும் போது பின்வரும் வடிவங்களையடையும். ஈ (முன்னிலையொருமைப்பெயர்) - ஏ - ஐ-ஆய். நீ - தீ - தி. கா : வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய் (இ. கா.). ஒ.நோ: சீ - சே - சை. கழை - கழாய். ஐ = அய் - ஆய். (செய்தீ) - செய்தி (ஏவலும் நிகழ்கால ஒருமையும்). வா, தா என்பவற்றின் கால்மேல், வேறுவகையாய் வந்த புள்ளியை எழுத்துப்புள்ளியென் றெண்ணி, முதலாவது வர் தர் என்றும், பின்பு வரு தரு என்றும், ஏட்டைப் பார்த்துப் பெயர்த் தெழுதினவர் தவறு செய்ததாகத் தெரிகின்றது. இறந்த காலத்தில் இவ் வினைகள் வந்தான் தந்தான் எனக் குறுகிமட்டும் நிற்றல் காண்க. ந - த, போலி. ஒ.நோ: நுனி - நுதி. ஆன்மா - ஆத்மா (வ.) இடைமைப் பெயர் ஊ இடைமைச்சுட்டு. ஊ + ன் = ஊன் (வழக்கற்றது). ஊ + ம் = ஊம் (வழக்கற்றது). படர்க்கைப் பெயர் ஆ படர்க்கைச்சுட்டு. ஆ + ன் = ஆன் - தான். ஆ + ம் = ஆம் - தாம். தாம் + கள் - தாங்கள். மூவிடப்பெயர்களும் வேற்றுமைப்படும்போது பின் வருமாறு திரியும். யான் - என், யாம் - எம், யாங்கள் - எங்கள், நான் - (நன்), நாம் - நம், நாங்கள் - நங்கள், நீன் - நின், (நூன்) - நுன் - உன், நீம் - (நிம்), (நூம்) - நும் - உம், நீங்கள் - (நிங்கள்), (நூங்கள்) - நுங்கள் - உங்கள், தான் - தன், தாம் - தம், தாங்கள் - தங்கள். பிறைக்கோட்டு ளுள்ளவை இதுபோது தமிழில் இருவகை வழக்கிலும் வழக்கற்றவை. இவற்றுக்குப் பதிலாக இவற்றை யொத்த பிறசொற்களே வழங்குகின்றன. நன் என்பதற்கு என் என்பதும் நங்கள் என்பதற்கு எங்கள் என்பதும் வழங்குதல் காண்க. வினாப்பெயர் ஏ உயரச்சுட்டு. ஏ + ன் - ஏன். ஏ + ம் = ஏம் (தமிழில் வழக்கற்றது). குறிப்பு (1) முதலாவது, ஏ ஈ ஊ ஆ என்ற நெடில்களே, மூவிடப் பெயராகவும், வினாப்பெயராகவும் திணையும் பாலும் காட்டாது இடமும் எண்ணும் மட்டும் காட்டி வழங்கிவந்தன. வடஇந்தியாவில் வழங்கும் இந்தியில் இன்றும் ஏ ஓ என்னும் தனிநெடில்கள் சுட்டுப்பெயராய் வழங்குகின்றன. அவை முறையே ஈ ஊ என்பவற்றின் திரிபாகும். இடையிந்தியாவில் வழங்கும் தெலுங்கில், ஆ ஈ ஏ என்னும் நெடில்கள் புறச்சுட்டுகளாய் மட்டும் உலகவழக்கில் வழங்குகின் றன; பெயர்களாய் வழங்கவில்லை. தென்னிந்தியாவில் வழங்கும் தமிழில், அவை புறச்சுட்டா கவும் வழங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாய் அந்த இந்த எந்த என்ற சொற்களே வழங்குகின்றன. புறச்சுட்டாகவும் புறவினா வாகவும் அவற்றின் குறில்களே வழங்குகின்றன. இதற்குக் காரணம் வடஇந்திய மொழிநிலை பண்படுத்தப் படாது பண்டை நிலையிலேயே யிருப்பதும், தென்னிந்திய மொழி பண்படுத்தப்பட்டு மிகுதியும் மாறியிருப்பதுமே. புதுப்புனைவு செய்யும் ஒரு நாட்டில் கருவிகள் மாறிக் கொண்டே வரும். அது செய்யாத நாட்டில் அவை என்றும் சற்றுப் பண்டை நிலையிலேயே யிருக்கும். இந்தியாவிலுள்ள புதுப் புனைவுக் கருவிகளெல்லாம் மேனாட்டினின்றும் வந்தவை. மேனாட்டில் நாள்தோறும் புதுப்புனைவுக்கலை வளர்ந்து கொண்டேயிருப்பதால், கருவிகள் திருந்திக்கொண்டே வருகின்றன. ஆனால், இந்தியாவில், சென்ற நூற்றாண்டுகளிற் கண்டுபிடிக்கப்பட்டு, மேனாட்டில் வழக்கற்றவை யெல்லாம் காணப்படலாம். இங்ஙனமே தென்னாட்டிலும் வடநாட்டிலும் வழங்கும் சொற்களுமென்க. (2) முதலில் நெடிலாயிருந்த சுட்டுவினா வெழுத்துகள் பின்பு குறிலாயின. (3) குறிலும் நெடிலுமான சுட்டுவினா வெழுத்துகள் பல ஈறுகளைக் கொண்டிருந்தன. கா : ஆம், ஆண், அம், அன், அல், அவ், அண் முதலியன. இவற்றுள் ஆம் அம் என்பவை முந்தினவாகத் தெரிகின்றன. ஆகு - ஆங்கு. ஆண் - ஆண்டு. அம் - அந்து - அந்த - அந்தா. அது - அதா - அதோ - அதோள் - அதோளி. அம் - அன் - அன்ன - அன்னா. அன்ன - அனை - அனைத்து, அம் - அங்கு. அம் - அம்பு - அம்பர். அல் - அள் - அண். அம் - அவ், அல் - அன் என்றுங் கூறலாம். அல் + து = அன்று. ஒ.நோ: எல் + து = என்று (சூரியன்). அல் இல் எல் என்னும் வடிவமும் சுட்டுவினாச் சொற்கட் குண்டென்பதை, அன்று இன்று என்று என்னும் தமிழ்ச்சொற் களாலும், அல ஏலா என்னும் தெலுங்குச்சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கன்னடச்சொற்களாலும் உணர்ந்து கொள்க. அல் என்னும் வடிவமே இல் எனத் திரிந்து, சேய்மைச் சுட்டாக இலத்தீனில் வழங்குகின்றது. கா : ille - அவன் illi, illae - அவர் illa - அவள் illa - அவை illud - அது (4) அன் என்பதை ஒருமைக்கும் அம் என்பதைப் பன்மைக் கும் முதலாவது வழங்கினதாகத் தெரிகிறது. நோக்குக: ஏன், ஏம்; நீன் நீம்; தான், தாம். ஈறுகளின் முதலிலுள்ள அகரம் புணர்ச்சியிற் கெடுதல் இயல்பே. கா : சிவம் - அன் = சிவன்; மண + அம் = மணம். (5) சுட்டடியான உயிர்நெடில்கள் யகரமெய் சேர்ந்து வழங்கியிருக்கின்றன. பின்பு அவ் யகரம் நகரமாக மாறியிருக் கின்றது. கா : ஏன் - யான் - நான். ஈ: - (யீன்) - நீன். ஆன் - (யான்) (நான்) - தான். இ ஈ எ ஏ இன்றும் சொன்முதலில் வரின், யகரம் சேர்ந்தே பேச்சுவழக்கில் வழங்குகின்றன. கா: யிடம், யீரம், யெழுத்து, யேடு. யான் நான் என்னும் வடிவங்கள் தன்மையில் வருதலின் அவை மயக்கமின்மைப்பொருட்டுப் படர்க்கையில் விலக்கப் பட்டன. நகரத்திற்குத் தகரம் போலியாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஆகாரத்தோடும் யகரம் சேர்ந்து வருமென்பதை, yon (ஆண்), yonder (ஆண்டு + அர்) என்னுஞ் சொற்களானுணர்க. (6) தான் தாம் என்னும் பெயர்கள் முதலாவது படர்க்கைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு அவன் அவர் முதலிய சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், படர்க்கைத் தற்சுட்டுப் பதிற்பெயர் (Reflexive Pronouns)fshf வழங்கி வருகின்றன. தாங்கள் என்பது, இன்று உயர்வு குறித்து முன்னிலை யொருமைக்கும் வழங்குகின்றது. இஃதோர் இடவழுவமைதி. (7) மூவிடப் பெயர்களிலும் வினாப்பெயர்களிலும், எண்மட்டுங் குறித்தவை முந்தியன, பால் குறித்தவை பிந்தியன. (8) பால் குறித்த சுட்டுப் பெயர்களையும் வினாப் பெயர்களையும் வேண்டியபோது, அவன் அவள் முதலியவாக, (பிற்காலத்து) இயல்பாகத் தோன்றிப் பால் காட்டாது வழங்கின சுட்டுவினாப் பெயர்களையே, முறையே ஆண்பால் முதலிய ஐம்பாற் சுட்டுவினாப் பெயர்களாகத் தமிழ்மக்கள் கொண்டதாகத் தெரிகின்றது. அவற்றுள் வினாப் பெயரடிகள் நெடிலாகவும் வழங்கும். அவ் - அவ - அவை. அவ - அ. அவன் அவள் முதலிய சொற்கள் இயல்பாய்த் தோன்றியவை யென்பதும், அவை முதலாவது பால் காட்டவில்லையென்பதும், எவன் என்னும் பெயர் அஃறிணை யிருபால் வினாக்குறிப்பு வினைமுற்றாயும் ஆண்பால் வினாப்பெயராயு மிருத்தலானும், அவண என்பதன் திரிபான அவண் என்பதும் அதோள் உவள் என்பனவும் இடத்தைக் குறித்தலானும், அது என்னும் பெயர் சில வழக்குகளில் இருதிணைக்கும் பொதுவாயிருத்தலானும், அன் அர் என்னும் ஈறுகள் பால் காட்டியும் காட்டாமலும் அஃறிணைக்கும் வழங்குவதாலும் பிறவற்றாலும் அறியப்படும். அது என்னும் பெயர் உயர்திணைக்கும் வழங்குமாறு : யார் அது? கொற்றனது மகன். சுட்டுப் பெயர்கள் அவன் - ஆண்பால் அவள் - பெண்பால் அவர் - பலர்பால் சேய்மைச் சுட்டுப் பெயர்கள் அது - ஒன்றன்பால் அவை - பலவின்பால் இங்ஙனமே அண்மை யிடைமைச் சுட்டுப்பெயர்களும். இடைமைச் சுட்டு, தமிழில் உலகவழக்கற்றது; இந்தியில் சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. இந்திநிலை முந்தியது, அதன் பெயர் பிந்தியது. வினாப்பெயர்கள் ஏவன் - எவன் ஏது - எது ஏவள் - எவள் ஏவை - எவை ஏவர் - எவர் ஏ - யா. யா + அன் = யாவன். இங்ஙனமே ஏனையீறுகளையும் ஒட்டிக்கொள்க. யா என்னும் வினாவடி, அஃறிணைப் பன்மை வினாப் பெயராகச் செய்யுளில் வழங்கும். காலப் பெயர் காலம் என்னும் பெயர் செந்தமிழ்ச்சொல்லே யென்பது, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள காலம் என்னும் சொல் எம்மொழிக்குரியது என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க. பொழுது : பொழுது = சூரியன், வேளை (சிறுபொழுது), பருவகாலம் (பெரும்பொழுது.) பொள் - (போள்) - போழ். போழ்து - (பொழுது) - போது. ஒ.நோ: வீழ்து - விழுது. போழ்தல் = பிளத்தல், வெட்டுதல், நீக்குதல். சூரியன் இருளைப் போழ்வது. வாள்போழ் விசும்பில் (திருமுருகு. 8) என்றார் நக்கீரர். பொழுது என்னும் சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு அதன் தோற்ற மறைவுகளால் நிகழும் காலத்தைக் குறித்தது. பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது என்னும் வழக்குகளில், இன்றும் அச் சொல் சூரியனைக் குறித்தல் காண்க. சமையம் : சமை + அம் = சமையம். சமைதல் பக்குவமாதல். ஒரு பொருள் பக்குவமான வேளை சமையம் எனப்பட்டது. இன்று அச் சொல் தகுந்த வேளைக்குப் பெயராய் வழங்குகின்றது. பருவம் : ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு பருத்திருக்கும் நிலை பருவம். பரு + வு = பருவு. பருவு + அம் = பருவம். நேரம் : நேர் + அம் = நேரம். நேர்தல் நிகழ்தல். ஒரு வினை நேரும் காலம் நேரம். வேளை : வேல் - வேலி - வேலை - வேளை. கருவேல முள்ளால் அடைப்பது வேலி. வேலி ஓர் இடத்தின் எல்லை. வேலை = ஒரு கால வெல்லை. வேலை யென்பதின் திரிபு வேளையென்பது. வேலை செய்யுள் வழக்கு. மாதம் : மதி + அம் = மாதம். மாதம் என்னுங் கால அளவு மதியினா லுண்டானது. ஆண்டு : என்று (சூரியன்) - (ஏன்று) - (ஏண்டு) - யாண்டு... ஆண்டு. ஆண்டென்னுங் கால அளவு சூரியனா லுண்டானது. இங்ஙனமே பிற காலப் பெயர்களும் ஒவ்வொரு காரணம்பற்றிய வையாகும். இடப்பெயர் இடு + அம் = இடம். பொருள்களை இடுவதற்கிடமானது இடம். ஒ.நோ: E. position, from L. pono, to place. தலம் என்னும் பெயர் ஸ்தலம் என்பதின் திரிபாகக் கருதப் படுகிறது. ஸ்தலம் என்பதற்கு ஸ்தா (நில்) என்பது வேர். இது ஆரிய மொழிகள் எல்லாவற்றிலு மிருக்கின்றது. state, station, stand, steady, establish முதலிய சொற்கட்கெல்லாம் sta என்பதே வேர். ஆனால், இதனால்மட்டும் அதை ஆரியத்திற்கேயுரிய சொல் லாய்க் கொள்ள முடியாது. தா (கொடு) என்னுஞ் சொல்லை நினைத்துக்கொள்க. காலுக்குத் தாள் என்று ஒரு தனித்தமிழ்ச்சொல் உளது. அதற்குத் தா என்பதுதான் வேரா யிருக்கவேண்டும். தாவு என்னுஞ் சொல், இடப்பொருளில் தென்னாட்டில், சிறப்பாய்க் கல்லா மக்களிடை வழங்குகின்றது. தாள் என்னுஞ் சொற் போன்றே, தா என்னுஞ் சொல்லும் முயற்சியென்னும் பொருளில் நூல்வழக்கில் வழங்குகின்றது. தாவே வலியும் வருத்தமும் ஆகும் (உரி. 48) என்றார் தொல்காப்பியர், வலி = வன்மை. வருத்தம் = முயற்சி. தாளம், தாளி (கள்ளி), தாண்டு, தாவு, தாழ், தங்கு, தக்கு, தாங்கு, தளம், தளர் முதலிய பல சொற்கள் தா என்னும் வேரினின்று பிறந்தவையே. ஆகையால், குமரிநாட்டில், தா என்னும் வேர்ச் சொல் நில் என்னும் பொருளில் தமிழில் வழங்கியிருக்கவேண்டும். தளம் - தலம். ஆராயப்படாமையாலும் வேர் வழக்கற்றதினாலுமே இச் சொல் வடசொல்லாகத் தோன்றுகின்றது. தலம் - ஸ்தலம் (முன்மெய்ச்சேர்பு.) உலகம் : உல - உலகு - உலகம். உலத்தல் அழிதல். உலப்பது உலகம். இங்ஙனமே பிற இடப்பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியவையே யாகும். உலகம் - லோக (வ.). சினைப்பெயர் சில் - சில்லை - (சின்னை) - சினை = துண்டு, பிரிவு, உறுப்பு. சில சினைப்பெயர்கள் இடப்பொருளை முதலாவது பெற்றுப் பின்பு பல சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன. கா : கண் - நகக்கண், சல்லடைக்கண், ஊற்றுக்கண்(இடம்) அலக்கண், இடுக்கண், பழங்கண் (துன்பம்) உறுகண், தறுகண் (பண்பு) பண்புப் பெயர் (Abstract Noun) பண்புப்பெயரீறு மை = மேகம், நீர், நீரைப்போன்ற நல்ல தன்மை, தன்மை. ஒ.நோ: நீர் = தன்மை. நீர் என்பது புனற்பொருளொடு மயங்காமைப் பொருட்டு, நீர்மை என மையீறு பெறும். படி + மை = படிமை = போன்மை = போன்ற தன்மை. தீமை = தீயின் தன்மை. நன்மை = நல்ல தன்மை. புல் + மை = புல்லின்தன்மை. பெருமை = பெரிய தன்மை. தான் - தன். தன்மை = தன்குணம், குணம். இனிமை = இனிக்குந்தன்மை. அம் = நீர். நல் + அம் = நலம் = நல்ல தன்மை. வள் + அம் = வளம் = வளத்தன்மை. சின + அம் = சினம் = சினக்குந்தன்மை. அப்பு = நீர். அப்பு - பு. இனி + அப்பு = இனிப்பு. இன் + பு = இன்பு. இன்னுதல் = இனித்தல். இன்பு + அம் = இன்பம். அப்பு என்பதில் அகரம் கெட்டது. ஒ.நோ: மற + அத்தி = மறத்தி. திசைப்பெயர் திகை - திசை. திகைத்தல் மயங்கல். திகைப்பதற்கிடமானது திகை. திசைத்தல் திகைத்தல். திக்குவதற்கிடமானது திக்கு. திக்குதல் தடுமாறல். திக்குமுக்காடுதல் என்னும் வழக்கை நோக்குக. வடநூலார் திஸ் (காட்டு) என்னும் மூலத்தைக் காட்டியது பிற்காலம். திசைச்சொல் என்பது ஓர் இலக்கணக் குறியீடாயிருத்தலை நோக்குக. திசை திக்கு என்னும் இருசொல்லும் வடசொல்லாயின், தமிழுக்குத் திசைபற்றிய சொல்லே யில்லையென்றாகும். இது கூடாமையே. எல்லையென்னுஞ்சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு முறையே வேளை, குறித்த வேளை, குறித்த இடம், வரம்பு என்னும் பொருள்களைத் தழுவியது. ஆகையால் இச் சொல் திசைப்பெயருக் கேற்காமை யறிக. வடக்கு : வடம் + கு = வடக்கு. வடம் = பெருங்கயிறு. வடம் போன்ற விழுதுகளை விடுவது வட (ஆல) மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது Ficus bengalensis என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது. நாவலந் (இந்து) தேயத்தின் வடபாகத்தில் வடமரம் மிகுதியாய் வளர்தலின், அத் திசை வடம் எனப்பட்டது. தெற்கு : தென் + கு = தெற்கு. நாவலந்தேயத்தின் தென்பாகத்தில் தென்னைமரம் இன்றும் சிறப்பாய் வளர்கின்றது. தென்னாட்டையும் கருநீசியத் தீவுகளை யும் நோக்குக. தென்னைமரம் மிகுதியாய் வளரும் திசை தென்திசை யெனப்பட்டது. கிழக்கு மேற்கு என்பவை, மொழிநூற் பெரும்புலவர் கால்டுவெல் ஐயர் நுணித்தாய்ந்து கண்டபடி, முறையே கீழ் மேல் என்னும் சொற்களடியாய்ப் பிறந்தவை. வடம் தென் கீழ் மேல் என்று முதலில் வழங்கிய பெயர்கள், இன்று நான்காம் வேற்றுமை வடிவில் வழங்குகின்றன. இனி, அக்கு என்பது ஒரு பின்னொட்டு எனினும் ஒக்கும். உத்தரம் : உ + தரம் = உத்தரம் = உயர்நிலை. உகரம் உயர்ச்சி குறித்தல் முன்னர்க் கூறப்பட்டது. தக்கணம் : தக்கு + அணம் = தக்கணம். தக்கு = தாழ்வு. தக்குத்தொண்டை, தக்கில் பாடுதல் என்னும் வழக்குகளை நோக்குக. அணம் ஒரு பின்னொட்டு. பனிமலை எழுந்தபின், வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. அதனால் அவை முறையே உத்தரம் தக்கணம் எனப் பட்டன. இவற்றை மேற்கு கிழக்கு என்னும் பெயர்களுடன் ஒப்பு நோக்குக. உத்தரம் தக்கணம் என்னும் தென்சொற்களே, உத்தர தக்ஷிண என்று வடமொழியில் வழங்குகின்றன என்பது தோற்றம். குடம் : குடம் = வளைவு. குடம் குடக்கு. அக்கு ஓர் ஈறு. சூரியன் மேற்கேபோய் வளைவதனால், அத் திசை குடம் எனப்பட்டது. குடமலை, குடநாடு, குடவர், குடக்கோ என்பவை செந்தமிழ் வழக்குகளாதல் காண்க. குணம் : குடம் - குணம். ட - ண, போலி. ஒ.நோ: படம் - பணம், கோடு - கோணு. குடக்கு - குணக்கு. குணம் = வளைவு. குணக்கெடுத்தல் என்னும் வழக்கை நோக்குக. சூரியன் கீழ்த்திசையிலும் வளைதல் காண்க. ஒரே வடிவம் இரு திசைக்கும் வழங்கின் மயங்கற்கிடமாதலின், குடம் என்பது மேற்றிசைக்கும் குணம் என்பது கீழ்த்திசைக்கும் வரையறுக்கப்பட்டன. எண்ணுப்பெயர் எ உயரச்சுட்டு. எ - எண். எண்ணுதலால் தொகை மேன் மேலுயர்தல் காண்க. ஒன்று : ஒல் - ஒ. ஒல்லுதல் பொருந்தல். ஒத்தல் பொருந்தல். ஒல் + து = ஒன்று = பொருந்தினது, ஒன்றானது. இரண்டு : (இரள்) + து = இரண்டு. இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம். (1) ஈர்தல் அறுத்தல். இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு. ஈருள் = ஈர்தல், ஈருள் - (இருள்) - (இரள்). (2) இருமை = கருமை, இருள். இரா, இருள், இருட்டு, இரும்பு, இருந்தை, இறடி முதலிய சொற்களிலெல்லாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர் - எர் - என் - ஏன். கா : எருமை, ஏனம். இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமை யெனப்பட்டது. இங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும். ஒன்பதுவரை ஏனை யெண்களும் இம் முறை பற்றியவையே. மூன்று : மூ = மூக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க. மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது. நான்கு : நாலம் - நாலு - நாலுகு - நால்கு - நான்கு. நாலம் - ஞாலம் (பூமி). ந - ஞ, போலி. உலகத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப்பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். மைவரை யுலகம், தமிழுலகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையா யிருத்தலின், நாலம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக. ஐந்து : கை - ஐ. ஐ + து = ஐது - ஐந்து. ஒரு கையின் விரல்கள் ஐந்து. பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது. ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.2 2. ஆ - முற்செலற் கருத்து. ஆதலை முன்வரிசை (க.). ஆதிகேசவலு முற்படு (தெ.) ஆகே முன்னால்(இ.) - இரா.மதிவாணன் ஆறு = வழி, ஒழுக்கநெறி, சமயம். மார்க்கம் என்னும் வடசொல் இப் பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் (நாஸ்திக) மதமுஞ் சேர்ந்துஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுமதங்கள் எண்ணப்பட்டிருக் கலாம். அறுசமயம் என்னும் தொகை வழக்கு மிகத் தொன்மை வாய்ந்தது. ஏழு : ஏழ் - ஏழு - எழு. பண்ணைக்குறித்த யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. யாழ் என்னும் நரம்புக்கருவி தோன்றுமுன்னமே, குறிஞ்சியாழ் பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னுஞ்சொல் வழங்கினதினால், யாழ் யாளியின் தலைவடிவைக் கடையிற் கொண்டதென்ற காரணம்பற்றி, அதை யாளி என்னுஞ் சொல்லின் திரிபாகக் கூற முடியாது. யாழின் கடையிலிருப்பது சரியான யாளிவடிவமுமன்று. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை யெழுப் புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ். ஏழ் = இசை. இசைச்சுரங்கள் ஏழு. `ஏழிசைச் சூழல், `ஏழிசை வல்லபி என்னும் வழக்குகளை நோக்குக. ஏழ் என்னும் இசையின் பெயர், அதன் சுரத்தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப் பட்டது. எட்டு : எண் + து = எட்டு. எண் = எள். இப் பெயர் ஆகுபெயராய் உணவைக் குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும்; எள்ளைக் குறிப்பின், அதன் காயிலுள்ள பக்கங்களின் தொகைபற்றியதா யிருக்கலாம். நெல், புல் (கம்பு), சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்ற எட்டே முதலாவது எண்கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின்வகையா யடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையா யிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டிருக்கலாம். தொண்டு : தொள் + து = தொண்டு. தொள் = தொளை. உடம்பின் தொளைகள் ஒன்பதா யிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப் பட்டது. தொண்டு - தொண்டி = தொளை. ஒ.நோ: தொண்டை (throat) = தொளையுள்ளது. பஃது : பல் + து = பஃது. ஒ.நோ: அல் + து = அஃது. பல் = பல. முதன்முதலாய்த் தமிழர்க்கு எண்ணத்தெரிந்தது பத்துவரைக்குந்தான். கைவிரல் வைத்தெண்ணியதே இதற்குக் காரணம். இருகைவிரல் பத்து. பத்து கடைசியெண்ணா யிருந்தமையின், அதைப் பலவென்னுஞ் சொல்லாலேயே குறித் திருக்கலாம். இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு. 12ஆம் அல்லது 13ஆம் மாதத்தில், குழந்தைக்குப் பத்துப் பல்லே யிருப்பதாக பெர்ச் (Birch) கூறுகிறார்.3 பல் - பன் - பான். கா : பன்னிரண்டு, இருபான். முதன் முதலாய்ப் பத்துமட்டுமே எண்ணப்பட்டதினால்தான், அதற்கு மேற்பட்ட எண்களெல்லாம் பத்துப்பத்தாக எண்ணப்பட்டு, பத்தாம் பெருக்க இடங்கட்கெல்லாம் கோடிவரை தனிப் பெயர்கள் இடப்பட்டுள்ளன. முதலாவது, நூறு பத்துப்பத்தெனப்பட்டது. பதிற்றுப்பத்து என்னும் பெயர் இன்றும் நூல்வழக்கில் உள்ளமை காண்க. நூற்றுக்கு மேலெண்ணும்போது, பத்துப்பதினொன்று என்று கூறின் அது 110 என்ற எண்ணையுங் குறிக்கும். ஆகையால் நூறு என்றொரு பெயர் வேண்டியதாயிற்று. இங்ஙனமே, ஆயிரத்தைப் பத்துநூறென்று கூறினும் நூறுபத்தென்று கூறினும் இடர்ப் பாடுண்டானமையின், அதற்கும் வேறு பெயர் வேண்டிய தாயிற்று. இங்ஙனமே பிறவும். நாகர் கால் விரலையுஞ் சேர்த்து எண்ணினமையின், இருபதிருபதாய் எண்ணினதாகத் தெரிகின்றது. லகரம் தகரத்தொடு புணரின் ஆய்தமாகத் திரிவது, 3 Management to Children in India, p. 79 தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே (புள்ளி. 74) என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது. அஃது பஃது என்று தகரம் றகரமாகத் திரியாத வடிவம் முந்தியாகவும், அஃறிணை பஃறெடை என்று தகரம் றகரமாகத் திரிந்த வடிவம் பிந்தியதாகவும் தெரிகின்றது. நூறு : நூறு = பொடி. பொடி எண்ண முடியாதபடி மிக்கிருத்தலின், அஃது ஒரு பேரெண்ணுக்குப் பெயராயிற்று. ஆயிரம் : அயிர் - அயிரம் - ஆயிரம். அயிர் = நுண்மணல். நூறு என்பதற்குக் கூறியதே ஆயிரம் என்பதற்கும். இலக்கம் : இலக்கம் = எழுத்து, எண்குறி, எண். இலக்கம் என்பது பேரெண் என்னும் கருத்தில் நூறாயிரத் தைக் குறிக்கும், எடை தூக்கு நிறை என்னும் எடுத்தலள வைப் பொதுப் பெயர்களே ஒவ்வோர் அளவைக் குறித்தல்போல. கோடி : கோடி = கடைசி. கடைகோடி, தெருக்கோடி என்னும் வழக்குகளைக் காண்க. கடையெண் என்னுங் கருத்தில், கோடியென்னும் பெயர் நூறிலக்கத்தைக் குறிக்கும். இலக்கம் கோடி என்னும் எண்ணுப்பெயர்கள் மிகப் பிந்தியவை. தமிழர் கணிதத்தில் சிறந்தவரா யிருந்ததினாலும், மேனாடுகளில் இலக்கத்திற்கு வழங்கு பெயரின் வடிவம் (lakh) தமிழ்ப்பெயர் வடிவத்தை ஒத்திருப்பதாலும், இலக்கத் தீவுகள் (Laccadive Is.) என்னும் பெயர் ஆங்கிலத்திலும் திரியாது வழங்குவ தாலும், இலக்கம் கோடி என்னும் பெயர்கட்குத் தமிழிற் பொருத்த மான பொருளுண்மையாலும், `மதியாதார் தலைவாசல்.... மிதியாமை கோடி பெறும், `கோடியுந் தேடிக் கொடிமரமும் நட்டி, `காணியாசை கோடி கேடு என்று பழைமையான வழக்கு களுண்மையாலும், இலக்கம் கோடி என்னுஞ் சொற்களை வட சொற்கள் என்பதினும் தென்சொற்கள் என்பதே பொருத்த முடைத்தென்க. குறுமைப்பெயர் (Diminutives) (1) தனிப்பெயர் குள் - குள்ளன், குழவு, குழவி, குண்டு, குட்டி, குட்டன், குட்டான், குட்டம், குட்டை, குணில், குந்தாணி, குருளை, குருவி, குறள், குறளி, குறில், குற்றி - குச்சி - குச்சு, குஞ்சி - (குஞ்சு), குக்கல், குன்று, குன்றி, குன்னி, கூழி, கூழை, சில் - சில்லான், சிறுக்கன், சிடுக்கான், சிடுக்கான் - சிச்சான், சிண்டு, சிட்டி, சிட்டு, சீட்டு, சின்னம், சின்னான், சீனி, சுள் - சுள்ளி, சுருவம், சுருவை, சுருங்கை, சுண்டு, சுக்கு, சுக்கல், சுப்பி. இங்ஙனமே பிறவும். (2) முன்னொட்டுச் சேர்பு கண்விறகு, சுண்டெலி, சீனிமிளகாய், ஊசிமிளகாய், குறுமகன் (குறுமான்), குறுநொய், குக்கிராமம் (இருபிறப்பி), குற்றில் - குச்சில், பூஞ்சிட்டு, சில்லுக்கருப்புக்கட்டி, பிட்டுக் கருப்புக்கட்டி, கூழைவால், நரிக்கெளிறு, அரிசிப்பல், அரிநெல்லி, மணிக்குடல், கட்டைமண், குட்டிச்சுவர், பூச்சிமுள், அரைத்தவளை, சிற்றாமணக்கு, கதலிவாழை, இட்டிகை முதலியன. (3) பின்னொட்டுச் சேர்பு தூண்டில், முற்றில்-முச்சில், கெண்டைக்கசளி, அயிரைப் பொடி முதலியன. (4) வலித்தல் திரிபு : (நந்து) - நத்தை. (5) சொன்முறைமாற்று : (கால்வாய்) - வாய்க்கால். பருமைப்பெயர் (Augmentatives) (1) தனிச்சொல் கடல், கடகம், கடப்பான், கடா, சேடன், சேடா, சாலி, தாழி, நெடில், படாகை - பதாகை, பூதம், மிடா, முரடு, முருடு முதலியன. (2) முன்னொட்டுச் சேர்பு ஆனைக்குவளை, பாம்புமுள், பேரீந்து, பொத்த மிளகாய், மொந்தன் வாழை, மோட்டெருமை, கட்டெறும்பு, கடப்பாரை, அல்லது கட்டிப்பாரை, மாட்டுப்பல், கடகால், பரவைச்சட்டி, பெருநாரை முதலியன. (3) பின்னொட்டுச் சேர்பு குன்றம், பொட்டல் முதலியன. தொழிற்பெயர் (Gerundial and Abstract Nouns) தொழிற்பெயரும் பண்புப்பெயரும் மிக நெருங்கியவை. இதனால் ஆங்கிலத்தில் அவை ஓரினமாகக் கூறப்படுகின்றன. கோபித்தல் என்னும் வடிவம் தொழிலையும் கோபம் என்னும் வடிவங் குணத்தையும் குறித்தலையும், மை து அம் முதலிய ஈறுகள் இவ் விருவகைப் பெயர்க்கும் பொதுவாயிருத்தலையும் நோக்குக. தன்மை, அறிவு, ஆற்றலென முத்திறப்பட்ட குணத்தின் வெளிப் பாடு அல்லது நுகர்ச்சியே தொழிலென்க. பண்பு, இயல்பு என்னும் பெயர்களும் முதலாவது தொழிற்பெயராக விருந்தவையே. பண் + பு = பண்பு (செயல்). இயல் + பு = இயல்பு (நடக்கை). தொழிற்பெயர் வடிவங்கள் பின்வரும் முறையில் தோன்றியவை : (1) முதனிலைத் தொழிற்பெயர் கா : அடி, வெட்டு. (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர் கா : ஊண், பாடு, (கோட்படு) - கோட்பாடு. (3) ஈற்று வலியிரட்டித்த தொழிற்பெயர் கா : எழுத்து, பாட்டு, மாற்று. (4) இடைமெலிவலித்த தொழிற்பெயர் கா : விளக்கு, பொருத்து. இந் நான்கு முறையும் அசையழுத்தம் பற்றியவை. ஈற்று வலியிரட்டித்தலே, பிற்காலத்தில் மெலிதோன்றிய வடிவத்திற்கும் கொள்ளப்பட்டதாகவும் கொள்ளலாம். கா : இலகு - இலக்கு. இலகு - இலங்கு. இலங்கு - இலக்கு. (5) ஈறுபெற்ற தொழிற்பெயர் ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே. அவை பின் வருமாறு அறுவகைப்படும்: (i) கைப்பெயர் கை = செய்கை. கா : நடக்கை. பாணி = கை. கா : சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு). (ii) இடப்பெயர் இடம் - அடம் - அணம் - அனம் - அனை - ஆனை. கா : கட்டிடம், கட்டடம், கட்டணம், விளம்பனம், வஞ்சனை, வாரானை. இடம் - இதம் - தம் - சம். கா : தப்பிதம், கணிதம், கணிசம். அடம் - அரம் - அரவு. கா : விளம்பரம், தேற்றரவு. இல் = வீடு, இடம். கா : எழில். இல் - அல் - ஆல். கா : எழில், எழல், எழால். தலை = (ஒரு சினைப்பெயர்), இடம். கா : விடுதலை. தலை - தல் - சல் - சில். கா : விடுதலை, கடைதல், கடைசல், (அடுசில்) - அடிசில். (iii) சுட்டிடப் பெயர் (அது) - அத்து - து - சு. கா : பாய்ந்து - பாய்ச்சு, காண் + து = காட்டு. உருள் + து = உருட்டு. ஈன் + து = ஈற்று. (அது) - அதி - தி - சி. கா : மறதி, காட்சி. அக்கு = அவ்விடம், இடம். கா : கணக்கு. அகம் = அவ்விடம், இடம். கா : வஞ்சகம், நம்பகம். (அவ்) - அவு - வு. கா : செலவு, தேய்வு. (அவ்) - (அவி) - வி - இ. கேள்வி, வெகுளி. (அவ்) - (அவை) - வை : பார்வை. (அவ்) - (அவ) - (அ) - ஐ. கா : கொடை, விலை. (அ) - ஆ. கா : உணா, பிணா, இரா, நிலா. இகம், இதி என்பவை இகரச் சுட்டடிப் பெயரான தொழிற்பெயரீறுகள். (கா: தேவிகம், காவிதி) வுகரவீறே உகரமாக இலக்கண நூல்களிற் கூறப்படுகின்றது. உள் = பின்னிடம், உள்ளிடம், இடம். உவள் - உள். கா : விக்குள், செய்யுள், கடவுள். (iv) நீர்ப்பெயர் : அம் = நீர். அப்பு (நீர்) - ப்பு - பு. கா : கோட்டம். படிப்பு. மை = நீர். மை - மம் - மன். கா : பருமை, பருமம், பருமன். (v) மிகுதிப்பெயர் காடு = மிகுதி. ஒ.நோ: வெள்ளக்காடு. திரம் = திறம். கா : வேக்காடு, உருத்திரம். (vi) அளவுப் பெயர் : மானம் = அளவு. கா : படிமானம். (vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம். கா : கண்ணியம். (viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா : வந்தமை, வந்தது (வந்த + அது). (ix) கலவைமுறை கா : கொடுப்பு + அனை = கொடுப்பனை. கொள்வு + அனை = கொள்வனை. தீன்+இ = தீனி. கொள் + தல் = கோடல். திருத்து + அம் = திருத்தம். அத்து + ஐ = அத்தை - தை - சை. கா : சிவத்தை, புரிசை. ஒரு பகுதி பல ஈறும் பெறும்; ஈறுதோறும் பொருள் வேறுபடும். கா : கற்றல், கல்வி, கலை, கற்பு. (x) இருமடித் தொழிற்பெயர் கா : நகு + ஐ = நகை. நகை + பு = நகைப்பு. கள் + அவு = களவு. களவுசெய் + தல் = களவு செய்தல். ஆகுபெயர் (Metonymy and Synecdoche) பெயர்கள் தோற்றமுறைபற்றி இயற்பெயர் ஆகுபெயர் என இருவகைப்படும். அவற்றுள் ஆகுபெயர் பல்திறத்தது. கா : முதலாகு பெயர் - கவரி (மயிர்) சினையாகு பெயர் - தலை (மறுதலை), கை (இடக்கை) இடவாகு பெயர் - குறிஞ்சி (யாழ்) இடவனாகு பெயர் - கழல், விளக்கு காலவாகு பெயர் - அஞ்சுமணி, செவ்வந்தி (ஜாமந்தி) 4 காலவனாகு பெயர் - கார், கோடை பண்பாகு பெயர் - வெள்ளை, குட்டை பண்பியாகு பெயர் - சாம்பல் (வாழை), பனை (அளவு) அளவையாகு பெயர் - காணம், அரை தொழிலாகு பெயர் - வற்றல், செய்யுள் செய்வோனாகு பெயர் - திருவள்ளுவர், கோலியன் கருவியாகு பெயர் - செம்பு, கண்ணாடி, பொழுது காரணவாகு பெயர் - அம்மை (தவறாயெண்ணியது) காரியவாகு பெயர் - வளை, வெண்கலம் உவமையாகு பெயர் - காளை, பாவை சின்னவாகு பெயர் - கோல், குடை சொல்லாகு பெயர் - உரை, (பொருள்) 5 பொருளாகு பெயர் - பள்ளு, இலக்கணம் பெயராகு பெயர் - பேர் (ஆள்) அடையடுத்த ஆகு பெயர் - வெற்றிலை, நால்வாய் பன்மடியாகு பெயர் - மடங்கல், கார் திரிபாகு பெயர் - பைத்தியம். பெயரிலக்கணம் திணை பால் எண் இடம் வேற்றுமை என்னும் ஐந்தனுள் முதலாவது தோன்றியது இடமே. அதன்பின், முறையே எண் பால் திணை என்பவை தோன்றின. வேற்றுமை எண்ணுக்குப் பின் தோன்றியிருக்கலாம். திணையென்னும் பெயர் தின் என்னும் மூலத்தினின்றும் தோன்றியது. திர + ள் = திரள் = திரட்சி. திர + அம் = திரம் - திறம் - திறன் - திறல் = தடிப்பு, உறுதி, வலிமை, கூறுபாடு. திரள் + ஐ = 4 காலவன் = காலத்தில் தோன்றுவது 5. பொருள் - நூற்பொருள் திரளை - திரணை - திரட்சி, திண்ணை. திரளை = திரட்சி, உருண்டை. திண்ணை - திட்டை. திண்டு. திட்டு. திண்ணம் - திட்டம் = உறுதி, தேற்றம். திரம் - திறம் - திடம், உறுதி. திண்ணம் = தடிப்பு, திரட்சி, உறுதி, தேற்றம். திண்ணை - திணை = திரட்சி, குழு, வகுப்பு, ஒ.நோ: குழு = திரட்சி, கூட்டம், வகுப்பு. பால் பகு + அல் = பகல் - பால் = பிரிவு. ஆண்பால் பெண்பாற் பெயர்கள் பின்வருமாறு மூவகையா யமையும். (1) வேற்றுப்பெயர். கா : ஆடவன், பெண்டு. (2) ஈற்றுப்பேறு. கா : மகன், மகள். ஆண்பாலீறுகள் அவன், அன், ஆன், ஓன், ன், மகன் - மான் - மன், வன், ஆளன், காரன் முதலியன. கா : வில்லவன், இடையன், தட்டான், மறையோன், கோன், திருமகன்-திருமான் (ஸ்ரீமான்), களமன், மணாளன், வேலைக்காரன். பெண்பாலீறுகள் அவள், அள், ஆள், ஓள், ஐ, மகள் - மாள், மி, வி, மாட்டி, ஆட்டி, அத்தை, அத்தி, அச்சி, காரி முதலியன. இவற்றுள் ஈற்றயல் மூன்றும் முறைப்பெயர்கள். கா : வல்லவள், நல்லள், கண்ணாள், மாயோள், பண்டிதை, வேண்மகள்-வேண்மாள், சிறுமி, புலவி, பெருமாட்டி, தம்பிராட்டி, பரத்தை, வண்ணாத்தி, மருத்துவச்சி, வேலைக்காரி. மேற்காட்டிய ஆண்பாலீறுகட்கெல்லாம் னகரவொற்றும், பெண்பாலீறுகட்கெல்லாம் ளகரவொற்றும் இகரமுமே மூலமாகும். மாந்தருள், ஆண்மை திரிந்த பெண்பாற் பெயர் பேடி என்பது; பெண்மை திரிந்த ஆண்பாற் பெயர் பேடன் என்பது. இவ் விருபாற்கும் பொதுப்பெயர் பேடு என்பது; இவ் விருபாலும் அல்லாததின் பெயர் அலி என்பது. (அலி மாந்தரும் உலகில் உளர்.) அன் இ முதலிய ஈறுகள் இருதிணைக்கும் பொதுவாம். கா : கடுவன், கொள்ளி, கண்ணி. அஃறிணையிலும் ஆண்பால் பெண்பாலுண்டு. (1) வேற்றுப்பெயர் : களிறு - பிடி. (2) முன்னொட்டுச் சேர்பு : ஆண்பனை - பெண்பனை, சேங்கன்று - கிடாரிக்கன்று. (3) பின்னொட்டுச் சேர்பு : மயிற்சேவல் - மயிற்கோழி, மயிற்பேடை. அஃறிணை யாண்பெண் பாற்பகுப்பு, திணைப்பாகுபாடு பற்றி இலக்கணத்திற் கொள்ளப்படவில்லை. (4) முன்னொட்டுச் சேர்பு : கா : ஆண்பிள்ளை, பெண்பிள்ளை. எண் பன்மையீறு. சீன மொழியில், பன்மையுணர்தற்குத் தொகுதிப்பெயர் பெயர்களின் ஈற்றிற் சேர்க்கப்படுகிறது.6 கா : gin = man. kiai = whole or totality. gin - kiai = men. i = stranger. pei = class. i - pei = strangers. ngo = I. che = assembly. ngo - che = we. தமிழிலும் கள் ஈறு இங்ஙனம் தோன்றியதே. கல - கள - களம். கள + அம் = களம் = கூட்டம். கூட்டத்தின் பெயரே கூடும் இடத்தையுங் குறிக்கும். மன்று, மந்தை, அம்பலம் என்னும் பெயர்கள் கூட்டத்தையும் கூடுமிட த்தையுங் குறித்தல் காண்க. அவையஞ்சாமை என்னும் அதிகாரத்தில், உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் (குறள். 736) என்று திருவள்ளுவர் அவையைக் களனென்றார். நன்னூலாரும் காலங் களனே என்றார். 6 L.S.L. Vol. I, p. 48 கள - கள். மரங்கள - மரங்கள். கள் ஈறு இருதிணைக்கும் பொது. கா : மக்கள், மாக்கள், மரங்கள். அர், அ, வை என்பவை இயல்பானவாகவே தெரிகின்றன. குருவார் - குருமார். வ - ம, போலி. வேற்றுமை வேறு + மை = வேற்றுமை. பெயரின் இயல்பான எழுவாய்ப் பொருள், செய்பொருள் கருவிப்பொருள் முதலியவாக வேறு படுவது வேற்றுமை. எட்டுவேற்றுமைகளுள், 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம், 7ஆம் வேற்றுமைகளே முந்தித் தோன்றியவை. இவற்றுள்ளும், 2ஆம், 4ஆம், 7ஆம் வேற்றுமைகளே மிக முந்தியவை என்று கொள்ள இடமுண்டு. முதல் வேற்றுமையிலிருந்து 8ஆம் வேற்றுமை தோன்றினது. 8ஆம் வேற்றுமையே இறுதியில் தோன்றினது. தொல்காப்பியர் காலத்தில், விளியைச் சேர்க்காமல் வேற்றுமை யேழென்றும், அதனைச் சேர்த்து வேற்றுமை யெட்டென்றும் இருகொள்கைகள் நிலவின. தொல்காப்பியர், வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல். சொல்.62) விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே (தொல். சொல்.63) என்று கூறியபின்பு, வேற்றுமை யெட்டென்னுங் கொள்கை நிலைத்துவிட்டது. எட்டு வேற்றுமைகளும் இப்போதமைந்துள்ள முறைக்குக் காரணத்தை, பின்வரும் வினாக்களாலும் கூற்றாலு மறியலாம். அழகன் (யார்? அல்லது) என்ன செய்தான்? எதைச் செய்தான்? எதனாற் செய்தான்? எதற்குச் செய்தான்? எதனின்று செய்தான்? அது இப்போது யாரது? யாரிடத்திலிருக்கிறது? 2ஆம் வேற்றுமையுருபு ஐ. எட்டாம் வேற்றுமை இறுதியில் தோன்றினதினால், இறுதியில் வைக்கப்பட்டது. அது முன்னிலை எழுவாயே. இது ஆய் என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம். சோறாய்ச் சாப்பிட்டான், பெட்டியாய்ச் செய்தான் என்னும் வழக்குகள் இன்றுமுள்ளன. ஆய் என்பது ஐ என்று தெலுங்கிலும் திரிகின்றது. கா : சாரமாயின (த.) - சாரமைன (தெ.). 3ஆம் வேற்றுமையுருபு ஆல், ஆன், ஓடு, ஒடு, உடன். ஆல் - ஆன். ஒ.நோ: மேல - மேன. இல் (7ஆம் வே. உ.) - ஆல். ஒ.நோ: எழில் - எழால். மையில் எழுதினான் என்னும் வழக்கை நோக்குக. செருப்பாலடி யென்பதைச் செருப்பிலடி யென்பர் வடார்க்காட்டு வட்டகையார். 3ஆம் வேற்றுமைக்குரிய கருவிப்பொருளும் 7ஆம் வேற்றுமைக்குரிய இடப்பொருளும் உணர்த்தக்கூடிய இல் என்னும் உருபு. அப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கற் (motion from) கருத்தைச் சிறப்பாகப் பெற்று 5ஆம் வேற்றுமையாயிற்று. குடம் - உடம் - உடன் - உடல். குடம்பு - உடம்பு. குடங்கு - உடங்கு. குடக்கு - உடக்கு. குடம், குடம்பு முதலியவை கூட்டின் பெயர்கள். உடல் கூடுபோற் கருதப்பட்டது. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு (குறள். 338) என்றார் திருவள்ளுவர். கூடுவிட்டிங் காவிதான் போனபின்பு என்றார் ஔவையார். `கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது அறிவராற்றல் குறித்த வழக்கு. ஒருவனுடன் இன்னொருவன் செல்லுதல், ஒருவன் தன் உடம்போது செல்வது போன்றிருக்கிறது. உடன் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கூட என்னுஞ் சொல்லும் வழங்குகின்றது. கூடு (பெ.) - கூடு (வி.) - கூட (நிகழ் கால வினையெச்சம்) ஓடு என்பது சில காய்கனிகளின் கூடு. ஓடு - ஒடு. தோடு என்பதும் இங்ஙனமே. தோட என்பது தெலுங்கில் 3ஆம் வேற்றுமை உடனிகழ்ச்சியுருபு. ஒ.நோ: கூடு - கூட. ஆல், ஓடு என்னும் ஈருருபுகளும், தனித்தனி கருவி உடனிகழ்ச்சி யென்னும் இருபொருளிலும் வழங்கும். கா : ஊரானொருகோயில் = ஊருடன் அல்லது ஊர் தொறும் ஒரு கோயில். கொடியொடு துவக்குண்டான் = கொடியால் துவக்குண் டான். கருவி உயர்திணை அஃறிணையென இருவகை. அவற்றுள் உயர்திணைக் கருவியே, எழுவாய் (கர்த்தா) என்று பிரித்துக் கூறப்படுவது. இவற்றையெல்லாம் நோக்காது, 3ஆம் வேற்றுமை வேறுபட்ட பொருள்களை யுடையதென்றும், வடமொழியைப் பின்பற்றியே தமிழில் எட்டு வேற்றுமை யமைக்கப்பட்டன வென்றும் கூறினர் கால்டுவெல் ஐயர். கொண்டு என்பது உடனிகழ்ச்சிப்பொருட் சொல்லுருபு. கொண்டு = பிடித்து. உளிகொண்டு = உளியைக் கையிற் கொண்டு. 4 ஆம் வேற்றுமையுரு கு. இஃது ஒக்க என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம். மழவன் நம்பியொக்கக் கொடுத்தான், திருவாணன் (ஸ்ரீநிவாசன்) ஊரொக்கப் போனான், என்பவை பொருத்தமா யிருத்தல் காண்க. ஒக்க- (ஒக்கு) - உக்கு (அக்கு) - கு. கா : அழகன் + உக்கு = அழகனுக்கு. என் + அக்கு = எனக்கு. அவன் + கு = அவற்கு. பொருட்டு (பொருள் + து) நிமித்தம் என்பவை 6ஆம் வேற்றுமை யுருபோடும், ஆக என்பது குவ்வுருபோடும் கூடி 4ஆம் வேற்றுமைச் சொல்லுருபாக வரும். 5ஆம் வேற்றுமையுருபு இல், இன். இல் (7ஆம் வே.உ.) - இன், இருந்து, நின்று என்னும் எச்சங்கள், இல் இன் என்பவற்றோடு சேர்ந்துவரும். இவற்றுள் முன்னது இருந்த நிலையையும் பின்னது நின்ற நிலையையுங் குறிக்கும். 6ஆம் வேற்றுமையுருபு எண் காட்டுவனவுங் காட்டா தனவுமாக இருவகை. அது ஆது அ என்பவை எண் காட்டுவன. அது - ஆது. இவை அஃறிணை வினைமுற்றீறுகளே. எழுவாய்த் தொடர் வினைமுற்றுத் தொடராக மாற்றிக் கூறப்பட்டதால் இவ் வுருபு களுண்டாயின. கா : புத்தகம் அம்பலவாணனது - அம்பலவாணனது புத்தகம் - ஒருமை. புத்தகம் எனாது - எனாது புத்தகம் - ஒருமை. புத்தகங்கள் கண்ணன - கண்ணன புத்தகங்கள் (பன்மை). இன் அன் என்பவை எண் காட்டாதன. இல் (7ஆம் வே. உ.) - இன் - அன். கா : அதன், வேரின். உடைய என்பது உடைமை என்னும் பண்புப் பெயரடி யாய்ப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். அது, இன், அன் என்னும் உருபுகள் கலந்தும்வரும். அது என்பது அத்து என இரட்டியும், து எனக் குறைந்தும் வரும். கா : அத்து + இன் = அத்தின். இன் + அது = இனது. இன் + து = இற்று. இன் + து + இன் = இற்றின். அன் + அது = அனது. அன் + து = அற்று. அன் + து + இன் = அற்றின். இங்ஙனமே பிறவும். 7ஆம் வேற்றுமையுருபுகள் இல் முதலியன. அவை பின்வருமாறு நால்வகைப்படும் : (1) இடப்பெயர் கா : இல் (வீடு). (2) அருகிடப்பெயர் கா : முன், பின், இடம், வலம். (3) சினைப்பெயர் கா : கண், கால், கை, வாய், தலை. (4) புணருருபு கா : இடம் + அத்து = இடத்து. இடம் + அத்து + இல் = இடத்தில். 8ஆம் வேற்றுமையுருபு பெயரின் விளித்தற்கேற்ற திரிபே. அது பெரும்பாலும் ஈற்று நீட்டம். அது சேய்மையும் உயரமுங் குறிக்கும். ஆ ஏ ஓ என்னும் நெடில்கள் சேர்வதாலும், ஈற்றில் அல்லது ஈற்றயலிலுள்ள குறில்கள் நீளுவதாலும் உண்டாகும். கா : மகனே, தேவீ, அண்ணா. விளிவேற்றுமை இரக்கக் குறிப்பும் வியப்புக் குறிப்பும் பற்றிய சில சொற்களைப் பிறப்பித்திருக்கின்றது. கா : ஐயோ, ஐயவோ, ஐயகோ, அன்னோ - இரக்கக் குறிப்பு. அம்ம, அம்மா, அப்பா - வியப்புக்குறிப்பு. வினைச்சொல் ஒப்பியல் தரங்கள் (Degrees of comparison) ஒப்புத்தரம் (positive), உறழ்தரம் (comparative), உயர்தரம் (superlative) என மூவகைப்படும். அவற்றுள் ஒப்புத்தரம் 2ஆம் வேற்றுமையுரு புடன் விட (நீக்க), பார்க்க (காண), பார்க்கிலும் (பார்த்தாலும்), காட்டின் (காட்டினால்), காட்டிலும் (காட்டினாலும்) முதலிய சொற்கள் சேர்வதாலுணர்த்தப்படும். பிற வெளிப்படை. வினை என்னுஞ் சொல் விளை என்பதன் திரிபாகத் தெரிகின்றது. முதற் பெருந்தொழில் உழவு. வினைஞர் = மருத நிலத்தார், உழவர். விளைஞர் - வினைஞர். வினைக்களம் = போர்க்களம். போர்க்களம் என்னும் பெயர் ஏர்க்களம், பொருகளம் என்னும் இரண்டிற்கும் பொது. விளை - வினை. ஒ.நோ: வளை - வனை. வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். எச்சம், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும். இவை பெயராகிய எச்சத்தையுடையது வினையாகிய எச்சத்தையுடையது என்னும் பொருளன. முதன்முதல் வினைச்சொற்கள் இறந்தகாலமும் எதிர்காலமு மாகிய இரண்டுகாலமே காட்டின. இறந்தகால வினைமுற்றுகள் இப்போதுள்ள எச்சவடிவாகவே யிருந்தன. செய்யும் என்னும் முற்றே இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் மலையாளத்திற்போல் எதிர்கால வினைமுற்றாக வழங்கிற்று. நிகழ்காலவுணர்ச்சி தமிழர்க்குத் தோன்றியபோது, கில் என்னும் ஆற்றற்பொருள் வினையின் இறந்தகால முற்றுவடிவமே நிகழ்கால வினைமுற்றாகக் கொள்ளப்பட்டது. அதன் மூன்று நிலைகளாவன : (1) கின்றான் = ஆற்றினான். ஒ.நோ: நின்றான், சென்றான். (2) செய்யகின்றான் = செய்ய ஆற்றினான், அவனுக்குச் செய்ய முடிந்தது. ஒ.நோ: செய்ய நாட்டினான் (வழக்கற்றது), செய்ய மாட்டுவான் (எ. கா.). (3) செய்யகின்றான் - செய்கின்றான் - செய்கிறான் (இடைக்குறை) = he does. இங்ஙனம், கின்றான் என்னும் இறந்தகால முற்று, தனிவினை துணைவினை நிகழ்காலவினைமுற்று என மூன்று நிலைகளை அடைந்துள்ளது. மூன்றாம் நிலையின் பின், கின்று கிறு என்பவை நிகழ்கால இடைநிலைகளாகப் பிரித்துக் கூறப் பட்டன. ஆநின்று என்றோர் இடைநிலையில்லை. செய்து நின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் தொடர்மொழியையே, ஒரு சொல்லாகக்கொண்டு, ஆநின்று என்பதோர் இடைநிலையெனக் கூறினர் பவணந்தியார். பண்டை யிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள் இ.கா. எ. கா. அவன் செய்து அவன் செய்யும் அவள் செய்து அவள் செய்யும் அவர் செய்து அவர் செய்யும் அது செய்து அது செய்யும் அவை செய்து அவை செய்யும் நான் செய்து நான் செய்யும் நாம் செய்து நாம் செய்யும் நீ செய்து நீ செய்யும் நீர் செய்து நீர் செய்யும் உம் என்பது எதிர்கால முணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல். ஒ.நோ: உம்மை எரிவாய் நிரயம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று தன்மை முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாலிலும் வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்குகின்றது. இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படு பவை, செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையவெல்லாம் தொழிற்பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே வீழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்புநோக்குக. செய்து + என = செய்தென = செய்தானென்னும்படி. உறூறு, மரூஉ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம். சென்று, கண்டு, ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று, வண்டு, வெகுளி, பாய் என்னும் தொழிற்பெயர்களுடன் ஒப்புநோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந்தவை தொழிலாகு பெயர்கள். இ-ய். கா : போகி - போய், தாவி - தாய். பிற்காலத்தில் ஐம்பாற் சுட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன. கா : செய்து + ஆன் = செய்தான் =செய்கையையுடை யவன். சினந்தான் = சினந்த செயலோன். இறந்தகால வினைகள் பாலீறு பெற்றுச் சிறிதுகாலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுகளும் பாலீறு பெற்றன. கா : செய்யுமான் - செய்ம்மான் - செய்வான். செய்யுமாள் - செய்ம்மாள் - செய்வாள். செய்யுமார் - செய்ம்மார் - செய்வார். செய்யுமது - செய்ம்மது - செய்வது. செய்யும - செய்ம்ம - செய்வ. செய்யுமன - செய்ம்மன - செய்வன. உண்ணுமான் - உண்மான் - உண்பான். நடக்குமான் - நடப்பான். இனி, செய்வு நடப்பு என வுவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறுபெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு + ஆன் = செய்வான், நடப்பு + ஆன் = நடப்பான். ஆ ஓ வாகும் பெயருமா ருளவே (தொல். 679) என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையாலணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும். வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயரு மாக இருவகை வடிவிலிருக்கும். கா : இ. கா. நி. கா. எ. கா. (1) செய்தான் செய்கின்றான் செய்வான் (2) செய்த(அ)வன் செய்கின்ற(அ)வன் செய்யுமவன் - செய்யுபவன் செய்பவன். நடந்த(அ)வன் நடக்கின்ற(அ)வன் நடக்குமவன் - நடக்குபவன் - நடப்பவன். அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுகள் பாலீறு பெற்றுவிட்டன. அஃறிணைப் படர்க்கை யிருபாற்குமட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது; ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும் செய்யும, செய்ம்ம என்பவை செய்யுப செய்ப என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப் பட்டன. ம - ப, போலி. இனி, செய்பு + அ = செய்ப என்றுமாம். வினைமுற்றுகள் எச்சப்பொருளில் வழங்குவதுண்டு. கா : செய்வான் வந்தான் படிப்பான் வந்தான் செய்ம்மார் வந்தார். இவை முற்றெச்ச மெனப்படும். இவையே பிற்காலத்தில் வான் பான் மார் ஈற்று வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியோடு முடியும் என்ப (தொல். 691) என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. வான் பான் ஈற்று முற்றெச்சங்கள் பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்கப்பட்டன. செய்பாக்கு என்பதை, செய்பு + ஆக்கு (செயலை ஆக்க) என்று பிரிக்கலாம். ஆக்க - ஆக்கு (திரிபு). எச்சவினை பெயரெச்சம் பெயரெச்சமெல்லாம் அன் சாரியை பெறாத அகரவீற்றுப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுகளே. கா : வினைமுற்று பெயரெச்சம் அவை செய்த செய்த பையன் அவை செய்கின்ற செய்கின்ற பையன் அவை செய்யும் செய்யும் பையன் அவை உள்ள உள்ள பையன் அவை நல்ல நல்ல பையன் படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று பிற பாலிடங்கட்கும் வழங்கக்கூடியதை, அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக்குறிப்பு வினைமுற்று, இப்போது இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்குதல் நோக்கி யுணர்க. வினைமுற்றே பெயரெச்சமாவதை 6ஆம் வேற்றுமையாலு முணர்க. கிழமை வேற்றுமை பெயரெச்ச வடிவினதென்று மாக்கசு முல்லரும் கூறுகிறார். வினையெச்சம் இறந்தகால வினையெச்சங்கள் முன்னர்க் கூறப்பட்டன. தழீஇ என்பதன் பண்டை வடிவம் தழி என்றிருந்ததாகத் தெரிகின்றது. தழி என்பது நீண்டு தழீ என்றாகி யிருக்கலாம். ழீ என்பது சொல்லீறாகாதென்று கொண்டு, பிற்காலத்தார் இகரஞ் சேர்த்திருக்கலாம். குரீ - குரீஇ (குருவி) = குறியது. தழுவு குருவு (குறுகு) என்னும் பிற்றை வடிவங்கள், தழுவி குருவி என வினையெச்சம் (அல்லது தொழிற்பெயர்) அல்லது தொழிலிபெயர் ஆகும். இ என்னும் ஈறு இம் முப்பொருளிலும் வரும். குழு மரு உறு என்பவை குழூ மரூ உறூ என்று தொழிற் பெயராயின. குழூஉ மரூஉ உறூஉ என்பன பிற்கால வடிவங்கள். ஆடூஉ மகடூஉ என்னும் வடிவங்கள் இன்னிசைபற்றி முன்னவற்றைப் பின்பற்றியவை. ஆண் - ஆடு - ஆடூஉ. மகள் - மகடு - மகடூஉ. ஆடு + அவன் = ஆடவன். நிகழ்கால வினையெச்சம் என்று செய்துகொண்டு (doing) என்னும் வாய்பாட்டைக் கூறினால் கூறலாம். செய்ய என்பது உண்மையில் நிகழ்கால வினையெச்சமன்று, அது எதிர்கால வினையெச்சமாகவே கூறற்குரியது. செய்யியர் செய்யிய செய்ய என்பவை வியங்கோள் வினையைக் கூறுமிடத்துக் கூறப்படும். செய்யின் = செய் (தொழிற்பெயர்) + இன் (5ஆம் வே. உ. ஏதுப்பொருள்). செய்தால் = செய்து (தொழிற்பெயர்) + ஆல் (3ஆம் வே. உ.) செயற்கு = செயல் + கு (4ஆம் வே. உ.). செய்ம்மன = செய்யும் (எ. கா. வி. மு.) + என = செய்யுமென- செய்ம்மென - செய்ம்மன = செய்யும் என்னும்படி. பின், முன், கால், கடை, வழி, இடத்து, போது முதலிய வினையெச்சவீறுகள் காலப்பெயர்களும் இடப்பெயர்களுமாகும். இவை பெயரெச்சத்தோடு சேர்ந்து அதற்கு வினையெச்சத் தன்மையுண்டாக்கும் சொல்லீறுகளாகும். அடுக்கீற்று வினைமுற்றுகள் சில வினைமுற்றுகளில் ஈறுகள் அடுக்கிவரும். கா : செய்தான் - செய்தன் + அன் = செய்தனன், + அள் = செய்தனள், + அர் = செய்தனர், + அ = செய்தன. என்னுமான் - என்மான் - என்மன் + ஆர் = என்மனார் (எ. கா. வி. மு.). ஒ.நோ: மகனார், சாத்தனார். செய்தனன் என்பதில், ஈற்றயல் அன் ஆண்பாலீறே. அது குறுகிய வடிவாயிருத்தலின் மேலோர் அன் சேர்க்கப்பட்டது. ஆன் ஈறாயின் தனித்தே நிற்கும். ஒரேயீறும் அடுக்கிவரும் என்பதை, மரத்தது என்னும் சொல்லாலறியலாம். மரம் + அத்து (அது) + அது = மரத்தது. ஈற்றயல் அன் பொருள் மறைந்தபின் பிறபாலிடங்கட்கும் சென்றது. செய்தன் என்பது திணை பால் தோன்றாத பண்டைக்காலத்த தெனினுமாம். தன்மை வினை இறந்த காலம் ஒருமை - கண்டு, வந்து, சென்று. இவை முற்கூறப்பட்ட செய்து என்னும் வாய்பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்றுகள். பன்மை - கண்டும், வந்தும், சென்றும். இவை, யாம் நீம் தாம் என்பவற்றைப்போல் பன்மையுணர்த்தும் மகர மெய்யீற்றவை. எதிர்காலம் ஒருமை - செய்கு, போது. இது இயல்பான வினைவடிவம். முதன்முதல் எல்லாச் சொற்களும் உயிரிலேயே இற்றன. இப்போது மெய்யீற்றனவா யிருப் பவையெல்லாம் முதலாவது உயிரீற்றனவாகவே யிருந்தன. எல்லாச் சொற்களின் ஈற்றிலும் உகரம் அல்லது இகரம் ஒலிப்பெளிமைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றுள் உகரத்தை Enunciative ‘u’ என்பர் கால்டுவெல் ஐயர். இவ் வுகரம் குற்றியலுகரம். இது சில வினையீற்றில் வகரமெய் சேர்ந்து வு என வழங்கும். வு கு ஆகும். இஃது ஓரியன்மை (uniformity) நோக்கிப் பிறசொற்களின் ஈற்றிலும் கொள்ளப்பட்டது. வ-க, போலி. கா : கண்ணு, நில்லு; கையி, பாயி; ஏவு, மருவு; ஆகு, போகு. நட, கொடு என்பவற்றின் நிகழ்கால வினையெச்சங்கள் நடவ கொட என்றிராமல், நடக்க கொடுக்க என்றிருப்பதையும், சில விடங்களில் கொடுப்பான் என்பது கொடுக்குவான் என்று வழங்குவதையும் நோக்குக. அடைத்து தொலைத்து என்பவை கழக நூல்களில் அடைச்சி தொலைச்சி என வழங்குகின்றன. இவற்றின் பகுதிகள் அடைச்சு தொலைச்சு என்பனவாகும். போது என்பது போகு என்பதன் திரிபு. தமிழ் பண்படுத்தப்பட்டபோது, சொற்களின் வேரைச் சேராத எழுத்துகளெல்லாம் விலக்கப்பட்டன. அங்ஙனம் விலக்கியபோது, வல்லின மெய்யின் பின்வருபவைமட்டும் விலக்கப்படவில்லை ஒலித்தற் கருமையாகாமைப் பொருட்டு. இயல்பான வினைவடிவமே முதலாவது தன்மையொரு மைக்கு எதிர்காலத்தில் வழங்கியிருக்கின்றது. மடுக்கோ கடலில் விடுதிமி லன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லைமுன்றிற் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் பலர்நுஞ் RÇFH‰nf”*7 என்னுஞ் செய்யுளிலுள்ள செய்கு என்னும் வாய்பாட்டு வினைகளையும், செய்கேன் என்னும் எதிர்கால வினைமுற்று வடிவத்தையும் நோக்குக. செய்கு என்பது, வினைகள் பாலீறு பெறாததும் நிகழ் காலவினை தோன்றாததுமான பண்டைக் காலத்தில் தோன்றியது. பன்மை - செய்கும், போதும். செல்லுது என்பது, பகுதிநீண்டு, செல் + து = சேறு என்று ஒருமையிலும், சேறும் என்று பன்மையிலும் ஆகும். இங்ஙனமே கொள்ளுது என்பதும் ஒருமையில் கோடு (கொள் + து) என்றும், பன்மையில் கோடும் என்றும் ஆகும். துவ்வீறு போது என்னும் வினையினின்றும் தோன்றியது. இவற்றையறியாமல், கு டு து று என்பவும், கும் டும் தும் றும் என்பவும் தன்மைவினைமுற்றீறுகள் எனக் கூறினர் இலக்கணிகள். இங்ஙனமே, படர்க்கை யொன்றன் பாற் குறிப்புவினைமுற் றீறுகளையும் து று டு என்றனர். இம்மூன்றுள், (அது என்பதன் முதற்குறையான) து ஒன்றே உண்மையான ஈறாகும். 7 திருக்கோவை, 63 கா : உடையது - உடைத்து. கண் + அது = கண்ணது; கண் + து = கட்டு. தாள் + அது = தாளது; தாள் + து = தாட்டு. அன் + அது = அன்னது; அன் + து = அற்று. பால் + அது = பாலது; பால் + து = பாற்று. பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும். ஒருமை : ஏன் - என். (நான்) - (ஆன்) - அன் - அல். பன்மை : ஏம் - எம். (நாம்) - ஆம் - அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம் - ஓம். முன்னிலை வினை முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இரு வகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன. ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும். அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்: (1) பகுதி : கா : செய், போது. (2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ) - (செய்தீ)- செய்தி. (3) வேண்டுகோ ளெதிர்மறைமுற்று. கா : செய்யாய் (செய்). (4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய். (5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய. (6) தொழிற்பெயர். கா : செயல். (7) துணைவினைபெற்றது. கா : செய்ய + விடு = செய்யட்டு. பன்மையேவல் பின்வருமாறு அறுவகைப்படும். (1) முன்னிலைப்பெயரீறு பெற்றது (நீர்) - (தீர்) - திர். கா : செய்திர். நூம் - நும் - உம். கா : செய்யும். உம் + கள் = உங்கள் கா : செய்யுங்கள். உம் + (ஈம்) - (இம்) - இன். கா : செய்யுமின், செய்மின். (2) வேண்டுகோளெதிர்மறைமுற்று. கா : செய்யீர். (3) எதிர்கால வினைமுற்று கா : செய்வீர். (4) நிகழ்கால வினையெச்சம் கா : செய்ய. (5) தொழிற்பெயர் கா : செயல். (6) துணைவினை பெற்றது கா : செய்யட்டும் (செய்யவிடும்). செயல்வினைப் பன்மையீறுகள் ஈர் இர் ஆகும். நீர் - ஈர் - இர். கா : செய்நீர், செய்தனிர்; செய்கின்றீர், செய்கிறீர்; செய்வீர், செய்விர். கள் ஈறு முன்னிலை படர்க்கைப் பன்மையில் ஈற்றுமே லீறாய் வரும். ஒருமையீறு, பன்மையீறு, பன்மையீற்று மேலீறு என்னும் மூன்றும் முறையே, இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் என்னும் மூவர்க்கும் உலக வழக்கிற் கொள்ளப் பட்டன. இவ் வியல்பு மலேய மொழிகளிலும் உள்ளது. படர்க்கைவினை முற்கூறப்பட்டது. வியங்கோள் வினை வியம் = ஏவல். வியங்கொள் - வியங்கோள் (முன்னிலை திரிந்த தொழிற்பெயர்). உயரச்சுட்டு செல்லுதற் பொருளில் வரும் என்று முன்னமே கூறப்பட்டது. ஒய் = செலுத்து. ஒய் + அம் = ஒயம். ஒய்-உய் + அம் = உயம். உய் = செலுத்து. ஒ.நோ: ஓ - ஓடு. ஏ - ஏவு = ஏகு. ஏவு பிறவினைப் பொருளிலும் ஏகு தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ் இருபொருளும் உள. உயம் - வியம். ஏவல்குறித்த வியம் என்னும் சொல், மதிப்பான ஏவலுக்குப் பெயராபிற்று. தேர்வியங்கொண்ட பத்து8 என்னுஞ் சொற்றொடரில், வியங்கொள் என்னுஞ் சொல் செலுத்தற்பொருளில் வந்திருத்தல் காண்க. ஏவலும் வியங்கோளும் சொன்முறையில் ஒன்றே. தொழிற் பெயரே ஏவலாகவும் வியங்கோளாகவும் பயன்படுத்தப்பட்டது. செயல் “vdš”9 என்று திருவள்ளுவரும் நிலையில் “bfhsny”10 என்று தொல்காப்பியரும் கூறுதல் காண்க. நில் (தொழிற்பெயர்) + ஈயல் = நிலீயல் = நின்றருள். ஈயல் ஈதல். நிலீயல் - 8 ஐங்குறுநூறு, ப. 139 9 குறள். 39, 196 10 தொல். 15,405 நிலீயர் - நிலீய - நிலிய. ஈயல் + ஈயர் - ஈய - இய - அ - க. ஈயர் - இயர். செய்யிய - செய்ய. செய்கு + அ = செய்க. போகு + அ = போக. நட + அ = நடக்க. போக நடக்க முதலிய சொற்களின் ஈற்றில் அகரம் ககர மெய்யோடு சேர்ந்து நிற்பதால், `க ஒரு வியங்கோளீறாகக் கூறப்பட்டது. வியங்கோள் பாலீறும் எண்ணீறும் பெறாமையால் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். செய்ய என்னும் வினையே, ஏவல், வியங்கோள், நிகழ்கால வினையெச்சம், தொழிற்பெயர் என்னும் நால்வகையில் வழங்கும். இவ் வியல்பு ஆங்கிலம் இந்தி முதலிய பிறமொழிகளிலும் உள்ளது. செய்யியர் - செய்யிய - செய்ய (செய) என்பவை தொல்காப்பி யத்தில் எதிர்கால வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. இவற்றுள், செய்ய என்னும் வடிவமே நிகழ்கால வினையெச்சமாகவும் கூறப்படும். எதிர்கால வினையும் நிகழ்கால வினையென வழங்கினதை, மலை நிற்கும், ஞாயி றியங்கும் என, எதிர்கால வினைமுற்றுகளையே முக்காலத்திற்கும் பொதுவான பொருளைக் குறிக்கும் நிகழ்கால வினைகளாக, உரையாசிரியர்கள் வழிவழிக் கூறினதினாலும், இன்றும் நீர் குளிரும் தீச்சுடும் என எதிர்கால வினைமுற்றுகளே அப்பொருட்கேற்பதினாலும், அறிந்து கொள்ளலாம். நிகழ்கால வினையெச்சம் முதலாவது தொழிற் பெயராயிருந்தது. செய்யல் - செய்ய. ஆங்கிலத்திலும் இங்ஙனமே.11 எதிர்மறை வினை ஏவல் ஒருமை - செய் + அல் = செய்யல் - செய்யேல். அல் என்பது எதிர்மறைக் குறிப்புவினை. செய்யாய் + த் = (செய்யாய்தீ) - (செய்யாதீ) - செய்யாதி. (செய்யாதீ) - செய்யாதே - செய்யாதை. பன்மை - செய்யல் + மின் = செய்யன்மின். செய்யாதீ+ ஈர் = செய்யாதீர். + கள். + இர் = செய்யாதிர். + கள். brŒahnj + c« = brŒahnjí«.+ கள். 11. Historical Outlines of English Accidence, p.258 வியங்கோள் : செய் + அல் + க = செய்யற்க. செயல்வினை : இஃது இருவகை. (1) துணைவினை பெற்றது கா : செய்தானல்லன் செய்தானில்லை படர்க்கை செய்ததிலன் ஆண்பால் செய்ததில்லை இறந்த கால செய்திலன் வினைமுற்று செய்யவில்லை (முக்காலத்திற்கும் பொது) இங்ஙனமே பிற பாலிடங்கட்கும் ஒட்டுக. இல்லை யென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது. (2) இடைதொக்கது. கா : செய்யேன், செய்யாய், செய்யான். இது எதிர்கால வினை ; வழக்கத்தைக் குறிக்கும்போது முக் காலத்தையும் தழுவும்; இதில் இறுதியிலுள்ள உயிர் குறிலாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடைநிலையின்மை எதிர்மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்12 வினையெச்சம் செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை -செய்யாமே. செய்யாமை - செய்யாமல். துவ்வீற்றுப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினையெச்ச மாகக் கூடியதை, பெரிது உவந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களா லுணர்க. முற்றெச்சம் = வினையாலணையும் பெயர் + ஆய், ஆன. செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல் + து), இல்லது (இல் + அது) இன்று (இல் + து) எனக் குறுகும். 12 C.C.G. p. 361 அன்று போனான் = அல்லாது போனான். இன்று போனான் = இல்லாது போனான். இதையறியாது, அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே* (நன். 173) என்றார் பவணந்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும். பெயரெச்சம் செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று). படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகு மென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க. செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும். தொழிற்பெயர் செய்யாத (பெயரெச்சம்) + மை (தொழிற்பெயரீறு) = செய்யாதமை. செய்யா (ஈறுகெட்டது) + மை = செய்யாமை. செய்யாத + அது = செய்யாதது. வினையாலணையும் பெயர் செய்யாத + அவன் = செய்யாதவன் - செய்யாதான். குறிப்புவினை முற்று குறிப்பு வினைமுற்று மூவகையது : (1) பாலீறில்லாத பெயர். கா : அது மரம்; அவன் யார்? (2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல. (3) குறைவினை (Defective Verb). கா : உண்டு, இல்லை. உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே; இப்போது பாற்பொருளிழந்து வழங்குகின்றன. உள் + அது = உள்ளது. உள் + து = உண்டு. இல் + அது = இல்லது. இல் + து = இன்று. உள் + அ = உள்ள - உள. இல் + அ = இல்ல - இல - இலை. இல்ல - இல்லை. ஒ.நோ: அம்ம - அம்மை. செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண்படுத்திய வடிவுமாகும். பெயரெச்சம் பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும். (1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு. (2) பலவின்பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய. இய என்னும் ஈற்றில், இகரம் இறந்தகால வினையெச்சவீறும் அகரம் பலவின்பால் வினைமுற் றீறுமாகும். கா : இ. கா. வி. எ. ப. பா. வி. மு. பெயரெச்சம் ஓடி ஓடிய ஓடிய இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்த தென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றான தென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க. கா : செய்து + அ = செய்த (வி.மு.) - செய்த (பெ. எ.). ஓடிய - ஓடின, போகிய - போகின - போயின, போகி - போய் + அ = போய - போன, உறங்கிய - உறங்கின, ஆய - ஆன. ய-ன, போலி. ஒ.நோ: யான் - நான், யமன் (வ.) - நமன். செய்தன (செய்தன் + அ) என்னும் வடிவம், ஆண்பால் வினைமுற்றின்மேல் பலவின்பாலீறு சேர்ந்த அடுக்கீற்று வினையாகும். ஆகவே, உண்மையில் இடைநிலையென்றும் சாரியை யென்றும் பகுபதத்தில் ஓருறுப்புமில்லையென்க. (3) ஈறுகெட்டபெயர். கா : வட்ட, மர. (4) ஈற்றுவலி யிரட்டித்த சொல். கா : சிற்று, நாட்டு. (5) முதல் வேற்றுமைப் பெயர். கா : குட்டி, மூங்கில், பொலம். (6) 6ஆம் வேற்றுமைப் பெயர். கா : மரத்து, பதின், பதிற்று. கிழக்கத்திய, பிறம்பத்திய என்பவை 6ஆம் வேற்றுமையடி யாய்ப் பிறந்த பலவின்பால் குறிப்பு வினைமுற்று. (7) ஐயீற்றுப்பெயர். கா : பண்டை, அன்றை, கீழை. ஆய - ஐ - ஐ. பண்டாய - பண்டைய - பண்டை. பண்டாய நான்மறை என்னும் திருவாசகத்தொடரை நோக்குக. (8) பெயரெச்சவீற்றுப்பெயர். கா : வட்டமான, அறிவுள்ள. (9) பலவின்பாலீறு பெற்ற பெயர் : கா : பார்ப்பார, வண்ணார. குறிப்பு : பெருநாரை மூங்கிற்குழாய் என்னுந் தொடர்கள் இயல்பாய்த் தோன்றியவை; இடையில் ஒன்றும் தொக்கவையல்ல. அவற்றைப் பெருமையாகிய நாரை, மூங்கிலாகிய குழாய் என்று விரித்துக் கூறியது பிற்காலத்தது. தயிர் குடம் என்னும் இருபொருட் சேர்க்கையைக் கண்டதும், தயிர்க்குடம் என்பரேயன்றித் தயிரை யுடைய குடம் என்னார். தயிர் அடையானதினால் முற்கூறப்பட்டது. குடம் அடையாயின் குடத்தயிர் என்று முற்கூறப்படும். அடை வேறுபடுப்பது. வேற்றுமையே யில்லாத ஒரு காலமுமிருந்தது. அக்கால வழக்கையே பிற்காலத்தில் வேற்றுமைத்தொகை யென்றனர். இங்ஙனமே பிற தொகைகளும். இன்றும், பேச்சு வழக்கிலும் குழந்தை பேச்சிலும், ஏன் புத்தகம் நானு கை என்று வழங்குதல் காண்க. வினையெச்சம் (1) தொழிற்பெயர். கா : இன்றி (இல் + தி), இல்லாமை. (2) முதல்வேற்றுமைப்பெயர். கா : வெளி, புறம். (3) திரிவேற்றுமைப்பெயர். கா : பிறகால், வெளியில். (4) வினையெச்சவீற்றுப்பெயர். கா : நன்றாய், நன்றாக. (5) முற்றெச்சம். கா : வேலினன் (வந்தான்). செயப்பாட்டு வினை (1) நிகழ்காலவினையெச்சம் + படு (to suffer). கா : செய்யப் படு. செயப்படுவது செயப்பாடு. செயப்பாட்டைக் கூறும் வினை செயப்பாட்டுவினை. (2) முதனிலைத்தொழிற்பெயர் + உண் (to experience, lit. to eat). கா : கொல்லுண். (3) ஈறுபெற்ற தொழிற்பெயர் + உண். கா : கொலையுண். (4) ஈறுபெற்ற தொழிற்பெயர் + ஆ (to become), போ முதலியன. கா : கொலையானான், விலைபோகும். தமிழ்ச் செயப்பாட்டு வினைமுறை ஆங்கில முறையினின் றும் வேறுபட்டிருப்பதுகொண்டு, தமிழில் உண்மையான செயப்பாட்டு வினையில்லையென் றயிர்த்தார் கால்டுவெல் ஐயர். ஆங்கிலச் செயப்பாட்டு வினைப்பெயரே தமிழ்ச்சொல்தான். E. passive, adj. Fr., - L. passivus, from patior, to suffer (root pat13 connected with Gk. pascho), pat = படு, passion = பாடு. t - s, போலி (Permutation). பிறவினை (Causal Verb) பிறவினை என்பது இருமடி அல்லது பன்மடி ஏவல். செய்யென் வினைவழி விப்பி தனிவரின் செய்வியென் னேவ லிணையினீ ரேவல் (138) என்று நன்னூலாருங் கூறுதல் காண்க. தொழிற்பெயர் ஏவல்வினையாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. துணைவினை பெற்றவையொழிந்த, ஏனைய பிற வினை வடிவுகளெல்லாம் தொழிற்பெயர்களே. 13 Cassell’s Latin Dictionary, p. 396 கா : வாழ் + து = வாழ்த்து. து - சு. பாய் + சு = பாய்ச்சு. துவ்வீறே புணர்ச்சியில் டு று வாகும். கா : காண் + து + காட்டு, உருள் + து = உருட்டு, தின் + து = தீற்று, நால் + து = நாற்று. செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை. குறைவினை (Defective Verb) எல்லாத் திணைபா லிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும். கா : வேண்டும், கூடும், போதும். வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும் = யான் அதை விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும். நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன். உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய். செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றாகிய வேண்டும் என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற் முன்பே தொடங்கினதாகும். வழுவமைதி வினை (Anamolous Verb) கா : அல்லேன் - வழாநிலை. (நான்) அல்ல - வழுவமைதி. ஒட்டுவினை மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஒட்டு வினை. கா : (ஆகும்) ஆம் - செய்யலாம், செய்தானாம். ஆக்கும் - (ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும். துணைவினை (Auxiliary Verb) கா : (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா. துணைவினைகள் பலவகைப் பெயர்களோடும் வினை முற்று எச்சங்களோடும் சேர்ந்துவரும். அவற்றுள் சினைப் பெயரோடு சேர்ந்து வருபவை மிகப்பல. கா : கைபார், கைக்கொள், கையாடு, கையாள், கைதேர், கைவா, கையறு, கைப்பற்று முதலியன. துணைவினைகளுள் முடி, கூடு, மாட்டு முதலியவை, உடன்பாட்டில் ஆற்றல் (potential) பொருளும் எதிர்மறையில் விலக்கு (prohibition) மறுப்பு (Denial)¥ பொருள்களும் உணர்த்தும்; விடு இடு என்பவை துணிவு விரைவு வியப்பு முடிவு முதலிய பொருள்களுணர்த்தும்; இடு அருள் முதலியவை வேண்டுகோள் வாஞ்சை அருளல் ஆகிய பொருள்களுணர்த்தும்; கொள் என்பது j‰bghU£L(Reflexive)¥ பொருளும் மாற்றிக்கோடல் (Reciprocal) பொருளுமுணர்த்தும்; ஆர் (ஆர), தீர் (தீர) முதலியவை முன் னொட்டாய்ச் சேரின் மிகுதி (Intensive)¥ பொருளுணர்த்தும். இரட்டைக்கிளவி வினை (Frequentative Verb) கா : துறுதுறு, குளுகுளு, சலசல. பெயரடிவினை (Denominative Verb) கா : எள் - எள்ளு, புரம் - புர. புரத்தல் காத்தல். புரம் = கோட்டை, நகர். ஆகுபொருள்வினை ஒரு வினை தன்பொருளொடு தொடர்புள்ள இன்னொரு பொருளில் வழங்கின், அதை ஆகுபொருள் வினையெனலாம். கா : (காசு) செல்லும், (இவ்வளவு) போதும், (உள்ளம்) குளிரும். இடைச்சொல் இடை ஒன்றன் இடம். இடு(கு)தல் சிறுத்தல். உடம்பில் இடுகிய பாகம் இடை. இடைபோல ஒன்றன்பாகமான இடம் இடை. ஒ.நோ: கண், கால், தலை, வாய். இடம் என்பது உண்மையான இடத்தையும் இடை என்பது 7ஆம் வேற்றுமை இடத்தையுங் குறிக்கும். பெரும்பாலும் பெயரிடத்தும் வினையிடத்தும் வருஞ் சொல் இடைச்சொல். இடைச்சொற்கள், பொருள் இடம் பயம்பாடு குன்றிய பொருண்மை என்பனபற்றி, நால்வகையாக வகுக்கப்படும். (1) பொருள்கள் குறிப்பு, வினா, ஐயம், உயர்வு, இழிவு, எச்சம், விளி, வியப்பு, காலம், இடம், பிரிநிலை, தேற்றம், முற்று, எண், பயனின்மை, பிறிது முதலியன. (2) இடம் பற்றியவை முன்னொட்டும் பின்னொட்டும். (3) பயம்பாடு பற்றியவை வேற்றுமையுருபு, உவமவுருபு, பெயரீறு, வினையீறு, சாரியை, இணக்கச்சொல், இணைப்புச் சொல், வரிசைக்குறி என்பன. இடைச்சொல் பெரும்பாலும் பயம்பாட்டைப் பொறுத்தது. fh : ngh‹wh‹(É.), nghy(ï.); என்றான்(வி), என்று (இ.). (4) குன்றியபொருள சிவசிவா (சூசுவா), பார்த்தாயா, பார் முதலியன. இணக்கச்சொல் ஆம், சரி, நல்லது, ஆகட்டும் முதலியன. இணைப்புச்சொல் நால்வகைய. அவையாவன : i. கூட்டிணைப்புச்சொல் (Cumulative Conjuction) கா : ஏ, உம், என, அதோடு, அன்றியும், மேலும், இனி. ii. விலக்கிணைப்புச்சொல் (Alternative Conjuction) கா : ஆயின், ஆனால், ஆனாலும், என்றாலும், இருந் தாலும். iii. மாறிணைப்புச்சொல் (Adversative Conjuction) கா : ஆவது, ஆதல், ஆயினும், அல்லது, எனினும் - ஏனும். iv. முடிபிணைப்புச்சொல் (Illative Conjuction) கா : அதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே, வரிசைக்குறிகள் ஆம், ஆவது என்பன. சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணையொலி கள், சாரியை இடைநிலையென்று உண்மையில் சொல்லுறுப் பில்லை. கைலையங்கிரி = கைலை என் கிரி. கூட்டாஞ்சோறு = கூட்டு ஆம் சோறு. புளியம்பழம் = புளியின்பழம், ஆலங்காடு = ஆலம் + காடு. வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முதுபழந்தமிழில் இல்லை. அறிஞன் என்பதில் ஞகரம் போலியே. அறிநன் - அறிஞன். அறிகின்றான் - அறியுன்னான் - அறியுன்னன் - அறியுநன் - அறிநன். னகரந் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று. அசைநிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர். அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர். அசைநிலைச் சொற்கள் மா : புற்கை யுண்கமா கொற்கை யோனே மாகொற்கையோனே என்று பிரிந்திசையும். மியா : கேளுமையா - கேளுமியா - கேள்மியா - கேண்மியா. இக : கண்பனி யான்றிக. ஆன்றுஇக = நிறைந்து விழ. ஏ : செல்லுமையே - செலுமியே - சென்மியே - சென்மே. ஐயே - (இயே)-ஏ-ஏன். கா : வாருமே, வாருமேன். மோ : மொழியுமையோ - மொழியுமியோ - மொழிமியோ- மொழிமோ. மதி : மதி = அளவு, போதும். செல்மதி = போ, அது போதும். அத்தை : அதை - அத்தை. ஒ.நோ: எத்தால் வாழலாம். இத்தை : இதை - இத்தை. வாழிய : வியங்கோள்வினை. மாள : தவிர்ந்தீக மாள. மாள = முடிய, முற்றிலும். ஈ : சென்று + ஈ = சென்றீ = சென்றாய். யாழ : யாழநின் = யாழ்போலும் இனிய நினது (கலித்.18). யா யா பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்றுமெய் விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப்பெயரே ஒரு காலத்தில் உயர்திணைக்கும் வழங்கிற்று. கா : இவள் காண்டிகா காண்டி = பார். கா = காத்துக் கொள். பிற : ஆயனையல்ல பிற = ஆயனையல்லாத மற்றவை. பிறக்கு : பிறக்கதனுட் செல்லான். பிறக்கு = பிறகு. அரோ : அரன் என்பதன் விளி. அரோ = சிவனே. போ : இது வெளிப்படை. மறுப்புப் பொருளில் உலக வழக்கிலும் வழங்கும். மாதோ : மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே. இகும் : கண்டிகும். இகும் = இடும். இடுதல் = கொடுத்தல். சின் : உரைத்து + ஈ = உரைத்தீ. உரைத்தீயினோர் - உரைத் தீசினோர் - உரைத்திசினோர். ஈ துணைவினை. ஈதல் = கொடுத்தல். என்றீயேன் (என்றிட்டேன்) - என்றியேன் - என்றிசேன் - என்றிசின். குரை : குரு + அ = குர - குரை = பெருமை. ஒ.நோ: குரு + அவு = குரவு. குரவு + அன் = குரவன் = பெரியோன். பல்குரைத் துன்பம், பெறலருங் குரைத்தே. ஓரும் : ஓர் = உணர், ஒன்று. அஞ்சுவதோரும் அவா = அஞ்சுவதொன்றும் அவாவே; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அல்லவோ. போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப்படை. சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந்துள்ளன. கா : ஊரிலே - ஏ; மரத்தினின்றும் - உம். உரிச்சொல் உரிச்சொல் முன்னர்க் கூறப்பட்டது. உடம் - (உட) - (உடி) - உரி. உரிமை = உடமை. உடனுள்ளது உடமை. உடல் - உடன். ஒ.நோ: தொலி - தோல் - தோறு-தோடு. தொலி - தொறு = கூட. தொறு + உம் = தொறும். தோட = கூட. உரி = தோல். உடு, உடீஇ என்பவற்றை நோக்குக. பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள் ஒரு வழங்கு மொழியின் சொற்கள் இயல்பாக நூல் வழக்கில் ஒரு தொகுதியும் உலக வழக்கில் ஒரு தொகுதியுமாக இரு கூற்றாகவே யிருக்கும். வடமொழி போன்ற வழக்கற்ற மொழியாயின், எல்லாச் சொற்களையும் நூல்வழக்கினின்றே அறிய முடியும். தமிழ் போன்ற வழங்கு மொழியாயின், எல்லாச் சொற்களையும் தொகுக்க வேண்டுவார் இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தாக வேண்டும். தமிழ்நாட்டில், இதுபோது தமிழில் தலைமை தாங்குபவர் பெரும்பாலும் பார்ப்பனர். அவர் நாட்டுப்புறத்தாரோடும் தாழ்த்தப்பட்டாரோடும் அளவளாவு நிலையினரல்லர். தமிழ் வழக்கு இதுபோது பார்ப்பனத்தொடர்பு மிக மிக வடசொல் மிகுந்தும், அது குறையக்குறைய வடசொற் குறைந்தும் உள்ளது. பல்கலைக்கழக அகராதி முடியும்வரை, சொல்லாராய்ச்சி யுள்ளவர் ஒருவராவது அதன் தொகுப்புக்குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், அத் தொகுப்புக்குழுவினர் பெரும்பாலும் மர ஊணினர். அதனால் ஊனுணவுபற்றிய பல சொற்கள் அவ் வகராதியிற் காணப்படவில்லை. அவர் உலக வழக்கையாராயாதது மட்டுமன்று, நூல் வழக்கை யும் சரியாய் ஆராய்ந்திலர். முதலாவது பல அகராதிகளினின்றே சொற்களைத் தொகுத்ததாகத் தெரிகின்றது. ஏனென்றால், கருமுக மந்தி, செம்பின் ஏற்றை, கருங்களமர், வாய்ச்சியாடல் முதலிய பல சொற்கள் அகராதியிற் காணப்படவில்லை. அகராதித்தொகுப்பு 27 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின் றது; 4,10,000 உருபாக்களும் செலவாகியிருக்கின்றன. ஆகையால், காலம் போதாதென்றொரு காரணங்கூறி, அகராதியின் குறையை மறைக்க முடியாது. ஆராய்ச்சியாளனாயின், இதுவரை சென்றுள்ள செலவில் 1/8 பங்கிற்கு, இதினும் சிறந்த அகராதி ஒருவனே தொகுத்திருக்கக்கூடும் என்று கூறுவது மிகையாகாது. இப்போது அனுபந்தம் முதற்பாகம் என்றொரு பகுதி வெளிவந்துளது. அதிலும் சில சொற்களைக் காணோம். பல்கலைக்கழக அகராதியின் குறைகள் பின்வருமாறு பல திறப்படும். (1) எல்லாச்சொற்களு மில்லாமை. (2) உள்ள சொற்கட்கு எல்லாப்பொருளும் கூறப்படாமை. (3) காட்டக்கூடிய சொற்கட்கெல்லாம் வேர்காட்டப் படாமை. (4) காட்டிய வேர்ச்சொல் தவறாயிருத்தல். (5) பல தென்சொற்களை வடசொற்களாகவும் பிறசொற்க ளாகவும் காட்டியிருத்தல். தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல்கொண்டதினாலும், பல தமிழ்க் கலைகளும் நூல்களும் அழிந்துபோனதினாலும், பண்டைத் தமிழின் பல சொற்கள் மறைந்துபோனமையால், இதுபோது எல்லாத் தமிழ்ச்சொற்கட்கும் வேர்காட்ட முடியாத துண்மையே. ஆயினும், சொல்லியல் நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பின், பல சொற்கட்கு வேர் காட்டல் கூடும். இப்போதே இஃதாயின், தொல்காப்பியர் காலத்தில் எத்துணை எளிதாயிருந் திருக்கும்? ஆயினும், வேர் காண்டல் எல்லார்க்கும் எளிதன்று. இதனாலேயே, மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (உரி. 98) என்றார் தொல்காப்பியர். விழிப்ப என்பது விழித்தமட்டில் அல்லது பார்த்தமட்டில் என்று பொருள்படும். விழிப்பத் தோன்றா என்பதற்கு “beyond ascertainment” என்று, பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரிய ராகிய உயர்திரு வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியிருப்பது தவறாகும். பல்கலைக்கழக அகராதியில், தென்சொற்கள் வடசொற் களாய்க் காட்டப்பட்டிருப்பதற்கு, இரு காட்டுத் தருகின்றேன். (i) மயில் < மயூர (வ.) மை = கருப்பு. மயில் = கரியது, பச்சையானது. கருமை நீலம் பச்சையென்பன இருவகை வழக்கிலும் ஒன்றாகக் கூறப்படு வதுண்டு. பச்சை மயில் நீலக்கலாபம் என்னும் வழக்குகளை நோக்குக. காளி, நீலி என்பன கொற்றவையின் பெயர்கள். திருமாலின் நிறம் கருமை நீலம் பசுமை என முத்திறத்திற் கூறப்படும். நீலச்சேலையைக் கருப்புச்சேலை யென்பது உலக வழக்கு. சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் தென்னாட்டிற்குச் சிறப்பாயுரிய குறிஞ்சிப் பறவையாகும். மயில் என்னும் தமிழ்ச்சொல்லே மயூர என்று வடசொல்லில் வழங்குகின்றதென்க. (ii) வடவை < வடவா (வ.) வடதுருவத்தில் சில சமையங்களில் தோன்றும் ஒளி வடவை யெனப்பட்டது. வடக்கிலிருந்து வரும் காற்றும் வடவை வடந்தை எனப்படும். வடவை ஒளி அல்லது தீ. ஆங்கிலத்தில் Aurora Borealis என்றழைக்கப்படும். Arora Borealis, the northern aurora or light; L. aurora, light; borealis, northern - boreas, the north wind. கிரேக்கர் வடகோடியில் வாழ்ந்த ஒரு வகுப்பாரை Hyper- boreans என்றழைத்தனரென்றும். அப் பெயர் மலைக்கப்பாலர் என்று பொருள்படுமென்றும், Boreas என்பது வடகாற்றின் பெயரென்றும், அது முதலாவது மலைக்காற்று என்றே பொருள் பட்டதென்றும், Boros என்பதின் பொருள் மலையென்றும், மாக்கசு முல்லர் எழுதிய மொழிநூற் கட்டுரைகள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில், 8ஆம் 9ஆம் பக்க அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் boros அல்லது boreas என்பது பொறை என்னும் தமிழ்ச்சொல்லே யென்றும். Hyperborean என்பது உப்பர்ப் பொறையன் என்றமையும் தமிழ்த்தொடர் என்றும் தெரிகின்றது. வடவை வடமுகத்தில் தோன்றுவதால் வடவைமுகம் என்றுங் கூறப்படும். ஒ.நோ: துறைமுகம். ஆல்ப்வ்ரெட் ரசல் உவாலேஸ் என்பவர், மலேயத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த K¡f(Muka)¤ தீவில், தாம் வடவைத் தீயைக் கண்டதாகக் கூறுவதால்,14 தமிழர் வடவைத் தீயைக் கண்டிருந்தார் என்பதில் எட்டுணையும் ஐயத்திற்கிடமின்று. வடவை என்னும் தமிழ்ச்சொல்லைப் படபா என்றும், வடவைமுகம் என்பதைப் படபா முகம் என்றும் வடமொழியில் திரித்துக் கொண்டு, பெட்டைக் குதிரையின் வடிவானது என்று அதற்குப் பழைமையர் கூறிய பொருளை இவ் விருபதாம் நூற்றாண்டிலும் கூறினால், மேனாட்டுக்கலை இந் நாவலந் தேயத்திற்கு வந்து என்னதான் பயன்? ஒரு மொழியின் பெருமையை உணர்த்தும் நூல்களில் அகராதியும் ஒன்றாகும். தமிழகராதி இங்ஙனமிருப்பின், அம் மொழியின் பெருமை எங்ஙனம் புலனாகும்? அகராதிக்கு வராது எத்துணையோ சொற்கள் நாட்டுப்புறங்களில் வழங்கு கின்றன. தமிழே திராவிடத்தாய் தமிழே திராவிடத்தாய் என்று, இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில், வெள்ளிடைமலையாய் விளக்கப்படும். தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் (‘Italian of the East’) என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டுமன்று, இவ் வுலகிற்கே இலத்தீன் (Latin of the Universe) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழி கட்கெல்லாம் பொதுச்செல்வம்; ஆயினும், ஆரியத்தால் மயங்கிய பிற திராவிட மொழிகள் தமிழ்த் தொடர்பை முற்றிலும் விட்டு விட்டன. ஆனால், தென்சொல் கலவாமல் ஏனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலாயினும் ஒரு விரிவான சொற்றொடரும் அமைக்கமுடியாது. 14 The Malay Archipelago, p. 402 4 உலக முதன்மொழிக் கொள்கை 1. மாந்தன் தோன்றியது குமரிநாடாயிருக்கலாம் என்பது இதற்குச் சான்றுகளும் காரணங்களும்: (1) குமரி நாட்டின் பழைமை. (2) ஹெக்கேல் ஸ்கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல். (3) குமரிநாட்டு மொழியின் தொன்மையும் முன்மையும். (4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல். (5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்.1 (6) தொன்மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென் ஞாலத்திலிருத்தல். (7) குமரிநாடிருந்த இடம் ஞாலத்தின் நடுமையமா யிருத்தல். (8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல். (9) தென்ஞாலத்தின் வளமை. உலகத்திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும் பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன. (10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென்ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக் கூடியதா யிருத்தல். 1 பழைய ஏற்பாடு முதற்புத்தகம், 11 : 1 குறிப்பு : கிறித்தவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)¡F வடக்கே 30ஆம் 40ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயோ உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென்பாகத்திலேயே நிலம் மிக்கிருந்த தென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறியவேண்டும். ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது. யூதர் முதல்மக்கள்வகுப்பா ரல்லர் என்பதற்குக் காரணங்கள்: (i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப்பட்டுள்ளமை. இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளனவாகச் சொல்லப்படுகிறது. தமிழ்மொழி தோன்றிய காலம் எவ்வகையினும் கி.மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது. (ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறியிருத்தல். (iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல். (iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல். தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள்ளையரான ஆரியர். ஆரியரைத் தேவரென்று சொல்லத்தக்கவர் தென்னாட்டி லிருந்து சென்ற கருப்பராயிருந்திருத்தல் வேண்டும். (v) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதியாகமத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும். (vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச்சொற்கள் சிதைந்து கிடத்தல். கா : ஆப் (அப்பன்), ஆம் (அம்மை), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே. மே (மேல்) + கம் (நீர்) = மேகம். ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது. ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருக்கலாம். இந் நூலின் 4ஆம் மடலத்தில், எபிரேயம் எங்ஙனம் தமிழினின்றும் திரிந்ததென்பது விளக்கப்படும். (vii) ஆதியாகமத்திற் படைப்பைப்பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழுநாளளவைக் கூறியிருத்தல். பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந் துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்தபின், அவற்றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற்காலத்தது. மோசே உலக சரித்திர மறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்களின் அறிவுநிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசுபெருமான் தாமே திருவாய் மலர்ந்தருளினதே, கிறித்தவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர். அதற்கு வாய்ச்சொல்லும் ஏழுநாளும் வேண்டியதில்லை. 2. தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது இதற்குச் சான்றுகளும் காரணங்களும் : (1) தமிழ் நாட்டின் பழைமை. (2) தமிழின் பழைமை. (3) தமிழின் எளிய வொலிகள். (4) தமிழில் இடுகுறிச்சொல்லும் R£lirí«(Definite Article) இல்லாமை. (5) தமிழில் ஒட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல். (6) அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப்பெயர்கள் பல வடிவில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல். (7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக மொழிகள் எல்லாவற்றிலு மிருத்தல். (8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒருசிறிது தமிழிற் காணப்படல். வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது + இல்), சிறியிலை (சிறு + இலை) முதலிய தொடர்மொழிகளில் உளது. சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு. கா : பொன் (அழகிது) - பெயர்ச்சொல். (அது) பொன் வினைச்சொல். பொன் (வளையல்) - பெயரெச்சம். பொன் (விளைந்த களத்தூர்) - வினையெச்சம். பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம். (9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயு முள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல். fh : juju - tear, jfjf - jà (t.), உசு - hush, சளப்பு - saliva, கெக்கக் கெக்க - L. cachinno, v. E. cachinnation. (10) அயன்மொழிச் சொற்கள் பலவற்றிற்கு வேர் தமிழி லிருத்தல். முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச்சொற்களின் அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர்களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப் பாயிருத்தல். பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழுகோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாதவளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித்திருத்தலே, அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ் வளவுகள் முதன்முதற் குமரிநாட்டிலேயே தோன்றியவை. ஆங்கிலத்தில் உள்ள வாரநாட் பெயர்களில், Sunday, Monday, Tuesday, Saturday என்னும் நான்கும் தமிழ்ப்பெயர்களின் மொழிபெயர்ப்பா யிருக்கின்றன. Tues என்பது Zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படு கிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர் களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன. Zues கிரேக்கப் பெருந்தெய்வம். கிரேக்கர் தமிழ்நாட்டில் மிகப்பழங் காலத்திலேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமாயிருந் ததும், தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கன. இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஓரைப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே யிருக்கின்றன. I. Aries (ram), ii. Taurus (bull), iii. Gemini (twins), iv. Cancer (crab), v. Leo (lion), vi. Virgo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix. Sagittarius (archer or bow), x. Capricorn (the goat - horned = shark), xi. Aquarius (water-bearer = pitcher) xii. Pisces (fish). (12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை. (13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச் சொற்களாயிருத்தல். (14) சொற்றொடரில் தமிழ்ச்சொன்முறை இயல்பாயிருத்தல். பன்னிரண்டு என்னும் சொன்முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் த்வாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும். (15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல். தமிழொடு பிற மொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள் (1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை. தமிழ் குறிப்பொலி நிலையி லிருந்தபோதும், அசை நிலையி லிருந்தபோதும், புணர்நிலையி லிருந்தபோதும், பகுசொன்னிலையி லிருந்தபோதும், தொகுநிலையி லிருந்தபோதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டி னின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரிந்துபோ யிருக்கின்றனர். (2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை. (3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்துவிட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை. (4) தட்பவெப்பநிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை. கா : தோகை - Pers. tawus, Gk. taos, L. pavo, A.S. pawe, E. pea- peacock. சே - சேவு - (சேக்கு) - A.S. coc, E. cock. ஒ.நோ: நா-நாவு - நாக்கு. (5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ சிதைவு முதலிய முறைகளில் திரிந்தமை. (6) மூலமொழியி லில்லாத வொலிகள் தோன்றினமை. (7) மூலமொழி யிலக்கணத்தினின்றும் வேறுபட்ட இலக் கணம் எழுதப்பெற்றமை. (8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல். பலநீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாக மாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றிவிடுகின்றனர். இவ் வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம். வடமொழி உலக முதன்மொழியாக முடியாமை மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன்மொழி யாயிருக்கலாமென்று கருதுகின்றனர். உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே. குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசைநிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீனம் வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை. பால்டிக் கடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்குவதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறி யிருப்பதும் இக் கொள்கைக்குச் சான்றுகளாம். ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவகைய: (1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன்சென்றவை. கா : தமிழ் வடஇந்தியம் மேலையாரியம் கீழையாரியம் நான் மைன் me -- நாம் ஹம் wir, we vayam நூன் தூ du, tu tvam நூம் தும் ye, you yuyam இருத்தி -- eart, es asi (2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை. கா : தமிழ் மேலையாரியம் கீழையாரியம் ஆன்மா animos atma நாவாய் navis nau வேட்டி vestis vasthra இஞ்சிவேர் zingiber, zingiberi sringa-vera இரும்(பு) iren, eisen ayas (3) ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் அல்லது கீழையாரிய வாயிலாகச் சென்றவை. கா : தமிழ் மேலையாரியம் கீழையாரியம் கப்பி ape kapi குருமம் thermos, formus,warm gharma அகம்(மனம்) ego, Ich, Ic, I aham தா(நில்) sta, esta sta படி-பதி-வதி wes, wis, was vas குறிப்பு : (1) அரக்கு, அரக்கம், அரத்தம், அலத்தம், அலத்தகம், இரத்தி, இலந்தை முதலிய தென்சொற்களை நோக்கின், அர் அல்லது இர் என்னும் ஒரு வேர்ச்சொல் சிவப்புப் பொருளை யுணர்த்துவது தெளிவாகும். அருக்கன், அருணம், அருணன் முதலிய (வட) சொற்களும் இவ் வேரினின்றே பிறந்தனவாகும். இங்ஙனம் பல வட தென் சொற்கள் ஒரே மூலத்தன. (2) கப்பு = மரக்கிளை. கப்பில் வாழ்வது கப்பி. கோடு வாழ் குரங்கு (மரபியல், 13) என்றார் தொல்காப்பியரும். (3) குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம், ஒளி, ஒளிவடிவான ஆசிரியன். குரு = சிவப்பு. குருதி, குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக. குருவுங் கெழுவும் நிறனா கும்மே (உரி. 5) என்றார் தொல்காப்பியர். குருத்தல் தோன்றுதல். குருப்பது குருத்து. குரு - உரு. குருமம் - உருமம். (4) அகம் = அவ்விடம், அவ்வுலகம், வீடு, உள், உள்ளம், (நான்). ஒ.நோ: இகம் = இவ்விடம், இவ்வுலகம், இகபரம் என்னும் வழக்கை நோக்குக. வீடு = துறக்கம், இல்லம். இல் = வீடு, உள். உள் = உட்புறம், மனம். உள் + அம் = உள்ளம் - உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே, நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர். ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆத்மநிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் x புறம். மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மையொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mec முதலிய வேற்றுமை பெற்ற பெயர்கள் me என்பதினின்று தோன்றுமேயொழிய அகம் என்பதினின்று தோன்றா.2 go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று, அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய went என்பது வழங்குவது போன்றது அகம் என்பது. (5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இஸ்கூல் (School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் என்பதைக் காட்டும். தாவு = இடம். தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கு நோக்குக. புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல் லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்குமிருந்த தொடர்பைக் காட்டும். புரிதல் = வளைதல். L. spira, Gk. speira, E. spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை. ஒ.நோ: thread, from thrawan (திரி), to twist. புரிதல் = மனத்திற் பதிதல், விளங்குதல். L. prehendo = புரிகொள். E.  prehend - apprehend, comprehend etc. புரி - புரீ (வ.) = வளைந்த மதில், கோட்டை, மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ.நோ: கோடு + ஐ = கோட்டை. கோடு + அம் = கோட்டம் - koshta (Skt.) = மதில் சூழ்ந்த கோயில். வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்பதி னின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என்று 2 Historical Outlines of English Accidence, p. 177 பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே. கொடு + அம் = கொட்டம். கொடு + இல் = கொட்டில். புரி + சை = புரிசை. புரி + அம் = புரம் - E. borough, burgh, புரி -bury. கோபுரம் = அரசன்மனை, அரசநகர். முதலாவது அரசன் வெள்ளத்தினின்றும் பகைவரினின்றும் தற்காக்க எழுநிலை மாடத்தில் அல்லது உயர்ந்த கட்டடத்தில் வதிந்தான். பின்பு அது மிகவுயரமாய் வடிவுமாறிக் கோவிலுறுப்பாயிற்று. ஒ.நோ: கோயில் = அரசன் மனை, தெய்வ இருப்பிடம். புரம் - புர. புரத்தல் காத்தல். புரவலன் புரப்பதில் வல்லவன், புரந்தருபவன் புரந்தரன். ஒ.நோ: A.S. beorgan, Ger. bergen, to protect, from burg. மேலையாசியப் பாங்கரில், துரேனியமும் ஆரியமும் சேர்ந்து சேமியம் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. பால்டிக் பாங்கரினின்று, முதலாரியர் காக்கசஸ் மலையின் தென்பாகத்தில் வந்து குடியேறி யிருக்கின்றனர். பின்பு அங்கிருந்து மேற்கொரு பிரிவாரும் கிழக்கொரு பிரிவாரும் பிரிந்து போயிருக் கின்றனர். கிழக்கே வந்தவரே இந்திய ஆரியர். இந்தியாவிற்கு வந்த ஆரியருள் ஒரு பிரிவார் திரும்பவும் மேலையாசியாவிற்குச் சென்றிருக்கின்றனர்.3 அவரே பெர்சிய அல்லது ஸெந்து (Zend) ஆரியர். இந்திய ஆரியரது மொழி இந்தியாவிற்கு வருமுன் இப்போதுள்ள நிலையிலில்லை. இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம் என்ற மூன்று மொழிகட்கும் நெருங்கிய நிலையிலேயே யிருந்தது; அப்போது ஆரியம் என்னும் பொதுப் பெயரேயன்றி ஒரு விதப்புப் பெயரும் அதற்கில்லை. இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின்னரே, அவரது மொழிக்குச் சமஸ்கிருதம் என்னும் ஆரியப்பெயரும், வடமொழி என்னும் தென்மொழிப்பெயரும் தோன்றின. வடமொழிக்கு வேதகால வடிவும் பிற்கால வடிவுமென இரு நிலைகளுண்டு. வேத காலத்திலேயே, வடஇந்தியத் திராவிட மொழிச் சொற்கள் பல வடமொழியிற் கலந்துவிட்டன. வட 3 L.S.L. Vol. I, pp. 287, 288 இந்திய மொழிகளெல்லாம், உண்மையில் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பிறந்த இருபிறப்பி மொழிகளேயன்றி, தனி ஆரியக் கிளைகளல்ல. மேனாட்டாரிய மொழிகட்கில்லாது, சமஸ்கிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவாயுள்ளவை யெல்லாம், தமிழினின்றும் வடமொழி பெற்றவையே. கா : உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலிகள், எழுத்துமுறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலைநூல்கள் முதலியன. வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென்சொற்களென்பது, மூன்றாம் மடலத்திற் காட்டப்படும். வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும்பாலன, ஆரியர் வருமுன்னமே வடஇந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கியவை யென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும். உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரிபிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே நன்றாகச் செய்யப்பட்டது என்னும் பொருள்கொண்ட சமஸ்கிருத் என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம்மொழிக் கிட்டுக் கொண்டனர். வடமொழி யை ஆரியத்திற்குக்கூட மூலமொழியாகக் கொள்ளவில்லை மேனாட்டார்.4 வடமொழி முதிர்ச்சியைக் காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின்றேன். மெய்யெழுத்துகளின் தொகை தென்கண்ட (ஆத்திரேலிய) மொழிகளில் 8; பலநீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத்தீனிலும் கிரேக்கிலும் 17; ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; fh¥ãÇ(Kaffir)Æš 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக்கியத்தில் 32; வடமொழியில் 39; அரபி, பெர்சியம், சமஸ்கிருதம் என்னும் மூன்றன் கலவையான 4 Principles of Comparative Philology, p. vii இந்துஸ்தானியில் 48. இத் தொகைகள் மாக்கசு முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறாதிருத்தல் காண்க. இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொழி யாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கு மென்க. திராவிடம் சிறிய குடும்பமேயாயினும், பல காரணம்பற்றித் தனித்துக் கூறப்படற் கேற்றதாகும். முடிவு தமிழே உலக முதல் இலக்கியமொழி. இதன்பெருமை சென்ற 2000 ஆண்டுகளாக மறைபட்டுக்கிடந்து, இன்று மொழிநூற் கலையால் வெள்ளிடைமலையாய் விளங்குகின்றது. பண்டைத் தமிழர்க்கும், இற்றைத் தமிழர்க்கும் எல்லாத் துறைகளிலும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வேறுபாடாகும். தமிழை முன்னோர் செந்தமிழாகவும் தனித்தமிழாகவுமே வளர்த்தனர். அங்ஙனமே இனிமேலும் வளர்க்க வேண்டும். வளர்ப்பு முறை தமிழுக்கும் பிறமொழிகட்கும் வேறுபட்டதாகும். பிறமொழிகளில் கொடுவழக்குகளெல்லாம் செவ்வழக்காகும்; தமிழிலோ கொடுவழக்குகள் கொள்ளப்படாது. என்றும் செந்தமிழே கொள்ளப்படும். கா : ஆங்கிலத்தில் r, l சில சொற்களில் ஒலிக்கப்படா விட்டாலும் குற்றமில்லை; தமிழிலோ அவர்கள் என்பதை அவக என்றொலித்தால் குற்றமாம். இந்தியில் சொல்லீற்று னகர மெய் அரைமெய்யா யொலிப்பது குற்றமன்று; தமிழில் அங்ஙனம் ஒலிப்பது குற்றம். தெலுங்கில் பப்பு என்பது குற்றமன்று; தமிழிலோ குற்றம். இங்ஙனமே பிறவும் பற்பல வழக்குகள் தமிழ்நாட்டில் வழங்கினாலும், செந்தமிழையே அளவையாகக் கொண்டதினாலேயே தமிழ் இதுநாள் வரைக்கும் பெரும்பாலும் திரியாது வந்திருக்கின்றது. தமிழ் கடன்சொற்களால் தளர்ந்ததன்றி வளர்ந்ததன்று. கடன்கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை; ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன்சொற்களால் பிறமொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி. முதலாவது, பிணிக்கு நோய் என்று தமிழ்ச்சொல்மட்டும் தமிழ்நாட்டில் வழங்கியது; பின்பு ஆரியம் வந்தபின் வியாதி என்னும் சொல் வழங்கிற்று; அதன் பின் ஆங்கிலம் வந்தபின் சீக்கு என்னும் சொல் வழங்குகிறது. இதுவே தமிழுக்குப் பிறமொழியா லுண்டாகும் வளர்ச்சி; இனி இந்தி வரின் பீமாரி என்னும் சொல்லும் வழங்கும்போலும்! தென்மொழியை வடமொழியோடு கலவாமல் தனியே வளர்க்க வேண்டும். `தமிழ்வெறி என்று தமிழ்ப் பகைவர் கூறுவ தற்கு இது ஆரியநாடன்று. இந்தியா முழுதும் ஒருகால் பரவியிருந்த தமிழ் இன்று தென்கோடியில் ஒடுங்கிக் கிடக்கின்றது. தன் னாடான இங்கும் தமிழுக் கிடமில்லையென்றால் வேறெங்கது செல்லும்? தமிழ்நாடொழிந்த இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக்கும்போது, இத் தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக்கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சி யில்லாதிருப்பதும், அவரது அடிமைநிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப் பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்கவேண்டும். தமிழ்நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், திருப் பனந்தாள் மடத்தைப் பின்பற்றித் தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும். புறவுரை இப் பொத்தகத்திற் கூற விரும்பிய சில செய்திகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிற மடலங்களுள் ளும் பகுதி களுள்ளும் கண்டுகொள்க. இங்குக் கூறிய சில சொன்மூலங்கள் மாறலாம். ஆனால் மொழிகளைப்பற்றிய பெரு முடிபுகள் மாறா. செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய ஊகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றினவென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்று - மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். - பாரதியார் பின்னிணைப்பு I மா என்னும் வேர்ச்சொல் மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல். மத - மதவு = மயக்கம், பேதைமை. மதவே மடனும் வலியு மாகும் என்றார் தொல்காப்பியர். மத - மதம் - மதர் = மயக்கம். மதம் - மத்தம் = மயக்கம், பைத்தியம். நிலவினால் மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப் பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம் - மதன் = வலி. ஒ.நோ: சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity), from luna, the moon. மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றுங் கூறப்பட்டன. மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற்பொருள் பெற்றது. L metior, Goth, mitan. Ger. messen, A.S. metan, E. mete, Skt. மிதி. மதி - (மது) - மத்து - மட்டு. மதி என்னுஞ் சொல்லே மா என்று மருவியிருக்கலாம்; ஒ.நோ: பகு - பா, மிகு - மீ. எங்ஙனமாயினும், மா என்னும் வேர்ச் சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை. மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு. மா + அனம் = மானம் = அளவு. வருமானம் = வரும்படி. மானம் என்னும் சொல் அளவு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும். மானம் = 1 படி (வடார்க்காட்டு வழக்கு) = அளவு, ஒப்பு, கா: சமானம் (இரு.) = அளவு, மதிப்பு, மானம் - honour (L.) = மதிப்புப்பற்றியளிக்கும் பரிசு. கா : சன்மானம் (இரு.) = தன்மதிப்பு. உயிர்நீப்பர் மானம் வரின் (குறள். 969.) = பெருமை. = அகங்காரம். களிமடி மானி (நன். 39) = அளவு, வரையறை, விலக்கு. மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை (மொழி. 14) என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும். டாக்டர் பி.எ. சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதினும் குற்றமாகும். கடிநிலை யின்றே (புள்ளி. 94), வரைநிலை யின்றே (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, மான மில்லை என்பதனுடன் ஒப்பு நோக்குக. = அளவு கருவி. = அளவு, ஒரு தொழிற்பெயரீறு. கா : சேர்மானம். மானம் (மதிப்பு) x அவமானம். அவி + அம் = அவம் = அழிவு. மானம் என்பது, அளவு அளவை என்னும் பொருளில் வடமொழி யில் மாணம் என்று திரியும். கா : பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும். மானித்தல் = அளத்தல் வெப்பத்தை அளப்பது வெப்பமானி. = மதித்தல். கா : அபிமானி (இரு பிறப்பி). மதித்தளிக்கும் நிலம் மானியம் - மானிபம். = அளவையாலறிதல். கா : அனுமானி. உவமானம் (ஒத்த அளவு) - உபமான (வ.) உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ.நோ: like = to be pleased with, to resemble. விழைய நாட என்பவை உவம வுருபுகள். உவமை - உவமம் - உவமன். உவமை - உபமா (வ). மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவமவுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும். Moon, lit. the ‘measurer of time’ found in all the Teut. languages, also in O.Slav, menso, mensis, Gk. mene, all from root ma, to measure என்றார் சேம்பராரும். Moon - month. Moon day - Monday. Moon என்பது மிகப் பழைமையான சொல்லென்பர் மாக்கசு முல்லர். மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு. Gk. metron, L. mensura, Fr. mesure, E. measure. Fr. - L. metrum, E. metre, poetical measure; E. meter, a measurer. Geometry, Fr. - L. - Gk. - geometria - geometreo, to measure land - ge, the earth, metreo, to measure. கூ - ge. கூவளையம் - குவலையம் = நிலவட்டம். Mother என்னும் முறைப்பெயரும் மா என்பதன் அடிப் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது. Mother, M.E. moder - A.S. moder, cog. with Dut. moder, Ice. modhir, Ger. mutter, Ir. and Gael. mathair, Russ. mate, L. mater, Gk. meter, Skt. mata matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார். மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர். mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா + து = மாது. மாது + அர் = மாதர் = பெண், காதல். அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள் உயர்திணை யில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்கவேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர். மாதர் காதல் என்றார் தொல்காப்பியர். எழுமாதர் = the seven divine mothers, Matron, Fr. - L. matrona, a married lady, - mater, mother. Matter, matrix, matriculate, matrimony முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப் படுகின்றன. மாத்திரை - மாத்திரி - மாதிரி. F. madulus, Fr. modele, E. model. மாதிரி - மாதிரிகை. (மாத்ரகா, வ.) பின்னிணைப்பு II அர் என்னும் வேர்ச்சொல் அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல். அர - அரா - அரவு - அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல் 2 நுண்ணிதாயொலித்தல். கா: அரிக்குரற்பேடை. அரித்தல் 3 அறுத்தல். கா : அரிவாள்மணை (அரி) - (அரம்) - அரங்கு. அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு - அரங்கம். அரங்கு - அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரித்தல்4 வெட்டுதல். கா : கோடரி (கோடு + அரி) = மரக்கிளையை வெட்டுங்கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. அரித்தல்5 அராவுதல். அரி + அம் = அரம் - அரவு - அராவு. அரித்தல்6 அராவுதல் போல உடம்பி லுண்டாகும் நமச்சல். அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல்7 அரிப்பெடுக்கும்போது சொறிதல் போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அரிசிப்பல். சிறிய நெல்லி அரிநெல்லி. அரி = நுண்மை, அழகு. அரித்தல்8 அழித்தல். அரி = பகைவன், சிங்கம், அரசன், தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம். அரி = அழிப்பவன், அழிப்பது. கா : முராரி, ஜ்வரஹரி (வ.) அரி - ஹரி (வ.). அரி - அம் = அரம் = அழிவு, துன்பம்; E - Ger.harm. அரம் - அரந்தை. அரி + அன் = அரன் = அழிப்பவன், தேவன், சிவன். இனி அரம் = சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன்முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரணம். அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் = தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. சூரர மகளிரோ டுற்ற சூளே என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது. (அரம்) - (அரம்பு) - அரம்பை = தேவமகள் ரம்பா (வ.). அரன் - ஹரன் (வ.). அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா - அரோவரா - அரோகரா. அரம். மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religiosa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளை யுடை யதாய்ப் பூவோடு கூடியது பூவரசு. பின்னிணைப்பு III ஆரியத்திலுள்ள தமிழ்ச்சொற்களிற் சில சொற்கள் கவ - L. capio, Ger. haben, A.S. habban, Dan. have, E. have, to hold or possess. கவர் - L. cupio, O.Fr. coveiter, E covet, to desire. சேர் - L. sero, to join, சேர்மானம் - L. sermonis, E. sermon, lit. an essay. உக - Goth. hauhs, Ger. hoch, Ice. har, A.S. heah, E. high. உலகு - L. vulgus, the people, E. vulgar, used by the common people. உறு - L. verus, true. ஒ.நோ: உறுதி - உண்மை. Ger. wahr, A.S. voer, E. very, adv. in a great degree, adj. true. ஒழுங்கு - L. longus, E. long. இலக்கு - L. locus. சோம்பு - L. somnus, sleep. கரவு - Gk. cryptos. சமட்டு - E. smite, to strike, A.S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி - சம்மட்டி. E. hammer, A.S. hamor, Ger. hammer, Ice. hamarr, a tool for beating. E. smith, one who smites. கூடு - E. gather, A.S. gederian, gaed, a company; to gather - together = கூட. காண் - A.S. cnawan; Ice. kna, Russ. znate, L. nosco, gnosco, Gk. gignosko, Skt. jna. (All from a base GNA, a secondary form of GAN or KAN, to know. x.neh: fh£á = m¿î; vid (Skt.), to know; vide (L.), (to see.) முன்னொட்டுகள் அல் (not) - அன் - Gk. an, A.S.un. அல் - அ (Skt.). ஒ.நோ: நல்-ந, குள் - கு. கா: நக்கீரர், குக்கிராமம். இல் (not) - இன் - L. in. இல் (உள்) - இன் - L. - A.S. in, L. em, en, Gk. en, E. in. உம் - A.S. up. உம்பர் - Skt. upari, L. super, Gk. hyper, Goth. ufar, E. over. ம - ப - வ, போலி. கும் = குவி, கூடு, கும்ம (நி. கா. வி. எ.) - L. com, cum, Gk. syn, Skt. sam, E. com, con, together. பின்னொட்டுகள் FWik¥bga® : ï£o - L.-E. ette. கா : cigar - ette. ïš - L.-E. el, le. கா : citad-el. FHî - L.-E. cule, icle. கா : animal-cule, parti-cle. தமிழ்ச்சொற்களாலான புணர்சொற்கள் ஆரிய மொழிக ளில், விதப்பாய் மேலையாரிய மொழிகளில், மிகப் பலவுள. கா : compose, from கும் and nghL; concert, from கும் and சேர்; transparent, from துருவ and பார். Transparent - L. trans, through, and pareo, to appear. துரு - துருவு - துருவ - t. A.S. thurh, Ger. durch, W. trw, Skt. taras, L. trans, E. through - root tar. இத்தகைய ஆரியத் தமிழ்த் தனிச்சொற்களும் கூட்டுச் சொற்களும் நூற்றுக்கணக்கின 3ஆம் மடலத்திற் காட்டப்படும். - முற்றிற்று -