பாவாணர் 15 ஒப்பியன் மொழிநூல் - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 15 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1940 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 240 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். முகவுரை bkhÊü‰ gƉá, m¡ fiyÆ‹ M§»y¥ bgaU¡nf‰g (L., Gr. philos, loving, logos, discourse) சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த இன்பப் போக்காக இருந்துளது; இன்னுமிருக்கும். பள்ளியிறுதி (School Final), இடைநடுவு (Intermediate), கலையிளைஞர் (B.A.) முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டு வரும் உரையாசிரியர் சிலர் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற் களாகக் காட்டவே இவ் வுரை யெழுந்தனவோ என்று தனித் தமிழர் ஐயுறுமாறு, கலை-கலா: ஆவீறு ஐயான வடசொல்; கற்பு-கற்ப என்னும் வடசொல் சேறு-ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோக மென்னும் வடசொல்லின் திரிபு; முனிவன்-மோனம் என்னும் வடசொல்லடியாய்ப் பிறந்தது; முகம்-வடசொல்; காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு-திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தம் உரைகளிற் காட்டிவருவது பத்தாண்டுகட்குமுன் என் கவனத்தை யிழுத்தது. உடனே அச் சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும், வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவை யாவும் தென்சொல்லென்றே பட்டன. அவற்றை முதலாவது வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுச் சொற்களாகவும், போலிப் பொதுச் சொற்களாவுங் கொண்டு, இவ் வுண்மையை வேறொரு மொழியினின்றும் ஒருபோகு முறையான் உணர்த்துமாறு, ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள பொதுச் சொற்களை ஆராயத் தொடங்கி னேன். சேம்பர்ஸ் (Chambers), ஸ்கீற்று (Skeat) என்பவர்களின் ஆங்கிலச் சொல்லிய லகராதி (Etymological Dictionary)fis¥ பார்த்தபோது, ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்கள் அகப்பட்ட துடன், அவற்றின் வாயிலாகவோ, அவற்றின் மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன் (Latin) கிரேக்கு (Grees)¢ சொற்களும் அகப்பட்டன. பின்பு இலத்தீன் கிரேக்கு அகராதிகளைத் துருவினேன். வேறு சில சொற்களும் எனக்குத் துணையாயின. அவற்றுள் navis (நாவாய்), amor (அமர்-அன்புகூர்) முதலிய இலத்தீன் சொற்களும், telos (தொலை-தூரம்), palios (பழைய) முதலிய கிரேக்குச் சொற்களும் எனக்குப் பெரிதும் வியப்பை யூட்டின. இவற்றுடன், தமிழ் இந்திய-ஐரோப்பிய மூலமொழிக்கு மிக நெருங்கியதென்று, கால்டுவெல் (Caldwell) கூறியிருப்பதையும், அவரும் குண்டர்ட்டும் (Gundert) வடமொழி யிலுள்ள திராவிடச் சொற்களிற் சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதையும், பண்டைத் தமிழகம் தென்பெருங் கடலில் அமிழ்ந்துபோன குமரிநாடென்றும், அந் நாட்டிலேயே தமிழர் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்தனரென்றும், தமிழ்த் தொன்னூல்கள் கூறுவதையும், மாந்தன் முதன்முதல் தோன்றினது இலமுரியா (Lemuria-FkÇehL) என்று வியன்புலவர் எக்கேல் (Haeckel) கூறியிருப்பதையும், தமிழ் உலகமொழிகள் எல்லாவற்றிலும் எளிய வொலிகளைக்கொண்டு இயற்கைத் தன்மையுள்ளதாய், அதன் சில பல சொற்கள் பல மொழிகளிலும் கலந்து கிடப்பதையும், சேர நோக்கினபோது, தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய தனிப் பண்புகள் புலனாயின. பின்பு மொழிநூற்றுறையில் ஆழ இறங்கினேன். நான் மொழிநூற்பயிற்சி தொடங்கியதிலிருந்தே, அவ்வப் போது என் ஆராய்ச்சி முடிபுகளைச் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில் என்னும் இரு திங்கள் இதழ்களிலும், கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்திருக்கிறேன். அவை சிலரை மகிழ்வித்தன; சிலர்க்குச் சினமூட்டின. ஒரு நாட்டில் ஒரு புதுக் கலை தோன்றும்போது, பலர் அதில் அவநம்பிக்கை கொள்வதும், அக் கலையைக் கூறுவாரை வெறுப்பதும் இயல்பே. மொழிநூற் கலை மேனாட்டில் தோன்றி இரு நூற்றாண்டுகளாயினும், இன்னும் அது குழவிப் பருவத்திலேயே இருப்பதையும், இந்தியர்க்குப் பெரும்பாலும் தெரியா திருப்பதையும் நோக்குமிடத்து, எனது மொழிநூன் முடிபை வெறுப்பாரை நோக்கி வருந்துவதற்கு எள்ளளவும் இடமில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உலக முழுமைக்கும் மொழிநூற் கதிரவனாய் விளங்கிய மாக்கசு முல்லரைக் கூடப் பலர், விதப்பாய் அமெரிக்கர், குறைகூறியும் கண்டனஞ்செய்தும் வந்தனர். அதற்கு அவர் அணுவளவும் அசையவில்லை; ஒரு கலையின் தொடக்கத்தில், அதைப்பற்றி எழும் நூல்களிற் பல பிழைகள் நேர்வது இயல்பு. அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக் கலைவளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங் கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரை களிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே. உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சி யாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம். மொழிநூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம். அவற்றுக்கொரு தொடர்புண்டென்று, அஃதாவது, அம் மூன்றும் ஒரு மூலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம் மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக் கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன். இந் நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப் பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும். தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்ப தனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந் நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக்கின்றது. ஆகையால், அறிஞர் அதனை அருள்கூர்ந்து பொறுத்தருள்வாராக. யான் ஏதும் பிழை செய்திருப்பின், அதையும் எடுத்துக்கூறி என்னைத் திருத்துவதும் அவர் கடன். மொழிநூற் பயிற்சிக்கு வேண்டிய பொருள், இடம், காலம், துணை முதலிய ஏந்துகள் (வசதிகள்) எனக்கு மிகமிகக் குறைந்துள்ளன. ஆயினும், இந் நூல் இவ்வளவு உருப்பெற்றது இறைவன் திருவருளே. என் கட்டுரைகளைக் குறைகூறி, என் முடிபுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த, பல நண்பர்கட்கும் யான் மிகவுங் கடப்பாடுடையேன். குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள். 504) புத்தூர், திருச்சிராப்பள்ளி, 29-1-1940 ஞா. தேவநேயன் குறி விளக்கம் + இது புணர்குறி = இது சமக்குறி - இது வலப்புறத்திலுள்ளது மொழிபெயர்ப்பு, பொருள், திரிபு என்னும் மூன்றனுள் ஒன்று என்பதைக் குறிக்கும் < இது வலப்புறத்திலுள்ளது மூலம் என்பதைக் குறிக்கும் x இது எதிர்மறைக் குறி இது மேற்கோட் குறியல்லாவிடத்து மேற்படிக்குறி ( ) இது சில இடங்களில் வழிமுறைத் திரிவைக் குறிக்கும். வடமொழியிலுள்ள ‘ri’ என்னும் உயிரெழுத்து, இப் புத்தகத்தில் ‘ru’ என்றெழுதப்பட்டிருக்கிறது. இப் புத்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லியலகராதிகள் கீற்றும் (Skeat) சேம்பராரும் (Chambers) எழுதியவை. ஆங்காங்குத் தொல்காப்பிய நூற்பாவிற்குக் குறிக்கப்பட்டுள்ள எண், சை. சி. நூ. ப. க. அச்சிட்ட தொல்காப்பிய மூலத்தின்படியது. குறுக்க விளக்கம் அகத். - அகத்திணையியல் இறை, இறையனார் - இறையனார் அகப்பொருள் உரை இ. - இந்தி இடை - இடைச்சொல் இ.கா. - இறந்தகாலம் இரு. - இருபிறப்பி (Hybrid) உ.வ. - உலக வழக்கு உவ. - உவமவியல் உரி. - உரியியல் எ.கா. - எதிர்காலம் எச்ச. - எச்சவியல் எ-டு. - எடுத்துக்காட்டு எ. எழுத்து - எழுத்ததிகாரம் ஐங். - ஐங்குறுநூறு ஒ.நோ. - ஒப்புநோக்க கலித். - கலித்தொகை கள. - களவியல் கற். - கற்பியல் கா. - காட்டு கி.பி. - கிறித்துவுக்குப் பின் கி.மு. - கிறித்துவுக்கு முன் குறள் - திருக்குறள் குறுந் - குறுந்தொகை குற், குற்றி. - குற்றியலுகரப் புணரியல் செ. - செய்யுளியல் சிலப். - சிலப்பதிகாரம் சீவக. - சீவக சிந்தாமணி உரை j.-jÄœ திருவாய். திருவாய்மொழி தெ. - தெலுங்கு தொல். - தொல்காப்பியம் நற் - நற்றிணை நன் - நன்னூல் நி.கா. - நிகழ் காலம் நூ. - நூற்பா நூ.வ. - நூல் வழக்கு ப. - பவானந்தம் பிள்ளை பதிப்பு ப. - பக்கம் பக். - பக்கங்கள் பு. - புணரியல் புள்ளி. - புள்ளி மயங்கியல் புறத். - புறத்திணையியல் புறம். - புறநானூறு பெ. - பெயர்ச்சொல் பெ.எ. - பெயரெச்சம் பொருள். - பொருளதிகாரம் பேரா. - பேராசிரியம் ம. மலையாளம் மணிமே. - மணிமேகலை மதுரைக். - மதுரைக்காஞ்சி மனு. - மனுமிருதி மொ. மொழி. - மொழிமரபு வ. - வடசொல் வி. - வினைச்சொல் வி.எ. - வினையெச்சம் வி.மு. - வினைமுற்று வே.உ. - வேற்றுமை உருபு adj. - adjective Ar. - Arabic A.S. - Anglo-Saxon cog. - cognate conj. - conjun ction Celt. - Celtic Dan. - Danish Dut. - Dutch E. - English Finn. - Finnish Fr. - French Gael. - Gaelic Ger.-German Goth-Gothic Gk. - Greek Hind. - Hindustani Ice. - Icelandic It. - Italian lit., Lit. - literally L. - Latin L.S.I. - Linguistic Survey of India L.S.L. - Lectures on the Science of Language M.E.- Middle English n. - noun orig. - originally O.Fr. - Old French p. - page pp. - pages Skt. - Sanskrit v.-verb v.t. - verb transitive Vol. – volume உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii முகவுரை .vi குறுக்க விளக்கம் .x முன்னுரை ஆரிய திராவிடப் பகுப்பு .1 இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது .1 பார்ப்பனர்ஆரியர்என்பதற்குச்சான்றுகள்... 3 வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு... 8 பார்ப்பனர்தமிழரோடுமணவுறவுகொள்ளாமை... 14 ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு .15 ஆரியர் தொல்லகம் .20 ஆரியர் வருகை .21 தமிழ்நாட்டிற்பார்ப்பனரின்ஐவகைநிலை... 27 கடைக்கழகக் காலப் பார்ப்பனர்நிy... 31 பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள் ... 32 தமிழகத்தில் இருசார் பார்ப்பனர் .41 பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள் .44 இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே .48 பார்ப்பனர் மதிநுட்ப முடையவர் எனல் 50 ஆரியத்தால் தமிழ் கெட்டமை .52 ஆரியத்தால் தமிழர் கெட்டமை .61 ஆரியதமிழப்போர்தொன்றுதொட்டதாதல்... 61 பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித்தமிழ்மொழிக்கதிகாரிகளாகாமை... 67 பார்ப்பனரின்றகuவொலிப்பு¤தவW... 76 நூல் I. மொழிநூல் மொழி .78 மொழிவகை .78 மொழிப் பகுப்பு முறை .82 மொழி மரபு வரிசை I .85 மொழி மரபு வரிசை II .86 மொழி மரபு வரிசை III .87 மொழிநூல் நெறிமுறைகள் 88 II. gண்டைத் தமிழகம் 1. குமரிநாடு .116 குமரிநாட்டுக் கடல்கோள்கள் .125 குமரிநாடு - புறச்சான்றுகள் .131 2. திராவிடம் தெற்கிற் சிறத்தல் .136 தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்... 136 தமிழின் தொன்மை:தமிழரசரின்பழைமை... 136 தொல்காப்பியர் .141 தொல்காப்பிய வழுக்கள் .142 அகத்தியர் காலம் .170 தொல்காப்பியர் காலத் தமிழ்நூல்களும் கலைகளும்... 174 இலக்கணம் 174 செய்யுள் இலக்கணம் .179 இலக்கியம் .191 இசைத்தமிழ் .192 நாடகத்தமிழ் .200 தொல்காப்பியத்தினின்று அறியும் பாக்களும் நூல்களும்... 203 அறுவகைப் பாக்கள் 203 இருபான் வண்ணங்கள் 203 பொருளீடுகளும் நூல்வகைகளும் 203 காமப் பொருளீடுகள் .203 வரணனைப் பொருளீடுகள் .203 போர்ப் பொருளீடுகள் .203 கருதற் பொருளீடுகள் 203 பாடாண் பொருளீடுகள் .204 செய்யுளின் எழுநிலம் 204 நூல்வகை 204 எண்வனப்பு .204 மறைநூல் .204 தவநூல் .213 பட்டாங்குநூல் .213 உளநூல் .217 கணிதநூல் 218 வானநூல் .222 சொல்லியல் நூல்...226 தருக்க நூல் .226 அகத்தியத் தருக்க நூற்பாக்கள் .227 தொழிற்கலைகள் .228 சிற்பம் .228 உழவு .229 கைத்தொழில் .231 நெசவு .232 வாணிகம் 235 ஒப்பியன் மொழிநூல் -1 முன்னுரை ஆரிய திராவிடப் பகுப்பு இந்திய சரித்திரத் தந்தையும் இந்தியாவின் முந்திய சரித்திரம் (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்சன்ற்று சிமித் (Vincent Smith) vன்பவர்,mந்üன்Kகவுரையில்ãன்வருமாறுTறியிருக்கிறார்:“tlbkhÊ¥ புத்தகங்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவுக்கு மிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆரியமல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப்பதற்குக் காலம் வந்துவிட்டது. இப் புத்தகம் இந்தியாவின் அரசியற் சரித்திரத்தைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாதவனாயிருக்கின்றேன். ஆயினும், அகால முடிவடைந்த ஒரு பெயர் பெற்ற இந்தியக் கல்விமான்1 கவனித்தறிந்தவை சில, கருத்தா யெண்ணுதற் குரியன வாதலின் அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை. அவையாவன: ïந்தியாrரியானபடிbதற்கிலுள்ளது“tl ïந்தியாவில்rமஸ்கிருதத்தையும்mதன்rரித்திரத்தைíம்goத்து,இªதுநhகரிகத்தின்அoப்படைக்கூ‰றைக்கhணமுaல்வதானது,அ¡கhரியத்தைமிfக்fடானதும்மிfச்சி¡கலானதுமானஇlத்தில்jடங்குவதாகும்.விªâa மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீபகற்பமே இன்றும் சரியான இந்தியா வாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலார் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும், 1. P. சுந்தரம் ãள்ளை,M.A. மொழிகளையும், சமுதாய Vற்பாடுகளையுமேïன்றும்bதளிவாகக்bகாண்டிருந்துtருகிறார்கள்.ï§nfTl, சரித்திராசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்றும்அயல்நாட்டுஊடையைஎளிதாய்ப்ãரித்தெடுக்கïயலாதவாறு,Mரியம்Äfந‹றாய்tரூன்றியுளது.ஆdhš, vங்கேனும்Xரிடத்தில்mதைbவற்றிபெறப்ãரித்தெடுக்கKடியுமானால்mதுbதற்கில்தான்.v›tsî தெற்கே போகிறோமோ அவ்வளவு பிரித்தெடுக்க வசதி அதிகரிக்கும். அங்ஙனமாயின், கலைமுறைப்பட்ட இந்திய சரித் திராசிரியன் தனது படிப்பை, இதுவரை மிக நீடச் சிறந்ததென்று பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியி னின்றும் தொடங்காமல் கிருஷ்ண காவேரி வைகையாற்றுச் சமவெளி களினின்றும் தொடங்கவேண்டும். இங்ஙனம் இருபத்தைந்தாண்டுகட்கு முன்பே இருபெருஞ் சரித்திரப் புலவர் எழுதியிருப்பவும், இந்திய rரித்திராசிரியர்கள்ïதைச்rற்றும்fவனியாது,ïன்றும்tடநாட்டையும்Mரியத்தையுமே jலைமையாகவும்mடிப்படைaகவுங்கொண்டு,ïந்தியrரித்திரத்தைnநர்மாறாகvழுதிtருவதுbபரிதும்ïரங்கத்தக்கbதான்றாம்.ïªâahÉš, வட பாகத்தில் ஆரிய திராவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்றே. இந்தியாவில் ஆரியர் என்பது கீழ்நாட்டாரியரென்று மொழிநூலார் கூறும் சமஸ்கிருத ஆரியரை. தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பன ரென்னும் xருFலத்தாரே.ãwUŸ, பிற்காலத்து வந்த மேனாட்டாரும், அவரது கலப்புற்ற ïந்தியரானrட்டைக்காரரும்,cருதுவைத்jய்மொழியாகக்கொண்டKகமதியரும்jவிர,kற்றவரெல்லாம்jனித்தமிழரே.jÄœeh£o‹ வடபாகத்தில் லப்பையென்றும், கீழ் பாகத்தில் மரைக்காயர் என்றும், தென்பாகத்தில் ராவுத்தர் என்றும், மலையாளத்தில் மாப்பிள்ளை என்றும், நால்வகையாகச் சொல்லப்படும் முகமதியரெல்லாம், தோற்றத்தால் வேறுபட்டுக் காணினும், பிறப்பால் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவரைப்போலத் தமிழர் அல்லது திராவிடரேயாவர். தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்டுள்ள நாயுடு, ரெட்டி, கோமுட்டி, சக்கிலியர் முதலிய வகுப்பார், இக்கால மொழி முறைப்படி தமிழராகக் கருதப்படாவிடினும், தமிழருக்கு நெருங்கின இனத்தாராவர். இவர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நாயக்க மன்னருடன் ஆந்திர நாட்டினின்றும் தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். மலையாளம், கன்னடம், துளு முதலிய பிற திராவிட மொழிகளைப் பேசும் அப் பார்ப்பனரும் தமிழருக்குத் தெலுங்கரைப் போல் இனத்தாராவர். ஆரியரும் திராவிடரும் வடநாட்டிற் பிரிக்க முடியாதவாறு கலந்துபோனாலும். அங்கும் பிராமணர் மட்டும் தொன்று தொட்டுத் தங்கள் குலத்தைக் கூடியவரை தூய்மையாய்க் காத்துவந்ததாகவே தெரிகின்றது. பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் (1) உருவம் - நிறம்: பார்ப்பனர் வடக்கேயுள்ளகுளிர்நாட்டினின்றும்வந்தவராதலின்,தமிழ்நாட்டிற்குவந்தபுதிதில்மேனாட்டாரைப்போல்வெண்ணிறமாயிருந்தனர்;பின்புவெயிலிற்காயக்காயச்சிறிதுசிறிதாய் Ãறமாறிtருகின்றனர்.fU¤j¥ ghர்ப்பானையும்சிtத்தப்பiறயனையும்ந«பக்கூடாது எ‹பதுபHமொழி.பh®¥gdU¡FÇa நிறம் வெள்ளையென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து. குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்)குடுமிவைத்திருந்தனரேனும்,பார்ப்பனரைப்போலமிகச்áறியcச்சிக்குடுமிiவத்திருந்ததாகத்bதரியவில்லை.bg©o® ïன்றுபோலத்jலைமயிர்Kழுவதையும்tளரவிட்டனர்.Mlt® சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சி யென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்திலுள்ளதைக் குறிக்கும். அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202) என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட்டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறியிருப்பது, அது தமிழச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதாயிருந்தமைபற்றியே. மீசை: மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர். (2) உடை: பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டு கின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்கமல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர். நூல்: பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, நூலெனிலோ கோல்சாயும் என்னுஞ் செய்யுளும், ஊர்கெட நூலைவிடு என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும். ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயைபு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப்படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலாமென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி-செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட்டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர். ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறுபட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணியாளரைப் (Archbishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலாளரை வைசிய ரென்றும், உழவரையும், கூலிக்காரரையும் சூத்திரரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தாரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராமணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப்படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரையும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம். ஆரிய திராவிட வரண வேறுபாட்டைப் பின்னர்க் காண்க. கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றின வேறன்று. தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர். தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருதுகின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது. நூல் என்பது புத்தகத்திற்கு இழைக்கும் பொதுப் பெயராதலின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும். இடம் நோக்கி யறிந்துகொள்க. (3) நடை: தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12-ஆம் சூத்திரவுரையில், தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம். (4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனா லேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம்மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ள னர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்றவரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொதுவியல்பாகும். வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப் பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று. பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர். மணிமேகலையில், வடமொழியாளர் (5:40) என்று பார்ப்பனர்க்கும், வடமொழி யாட்டி (13:78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத்தல் காண்க. வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திரா விடரினின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு வடமொழி யென்றுபெயர். வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க் கெல்லாம் பொதுவாக வடவர் ஆரியர் என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன. ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று. ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ்நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா. வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சி யில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறு பட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும். வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு 1. எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வட மொழியில் 42; தென்மொழியில் 30. 2. வடமொழியொலிகள் வலியன; தென்மொழியொலிகள் மெலியன. 3. மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு. 4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை. 5. வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும். 6. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்து களெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும். 7. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை. 8. முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை. 9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை. 10. பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன. 11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை. 12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை. 13. குறிப்புவினை வடமொழியில் இல்லை. 14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும். 15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும். 16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியா யிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும். 17. வினைத்தொகை வடமொழியில் இல்லை. 18. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக் கணம் வடமொழியில் இல்லை. 19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வடமொழியில் இல்லை. 20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை. இனி, வடமொழி மேனாட்டாரிய மொழிகளைச் சேர்ந்ததென்பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க: 1. தன்மை முன்னிலைப் பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. Eng. நான் aham ego ego ieh I(ie O.E.) நாம் vayam emeis nos wir we நீ tvam tu, su tu du thou நீர் yuyam suge vos euch, ihr you 2. சில முறைப்பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. தந்தை pitru pater pater vater father (fader o.e) தாய் matru meter muter matter mother மகன் sunu huios sohn son மகள் duhitru thugatar tochter daughter உடன்பிறந்தான் bhraru frater frater bruder brother உடன்பிறந்தாள் svasru sosor schwester sister (orig. sostor) 3. சில உறுப்புப் பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. தலை kapala kafale caput haupt head (heafod, O.E.) மூக்கு nasa nasus nose உள்ளம், குலைக்காய் hrudaya kardia crodis herza heart பல் dant ontos dens zahn tooth கால்முட்டி janu gonu genu knie knee 4. எண்ணுப் பெயர்கள் தமிழ் Skt. G. L. Ger. E. ஒன்று eka eis, en unus eins one இரண்டு dvi duo duo zwei two மூன்று thri treis tres drei three நான்கு chathur tettares quatuor vier four ஐந்து panchan pente quinque fnnu five ஆறு shash eks sex sechs six ஏழு sapthan epta septem steben seven எட்டு ashtan okto octo acht eight ஒன்பது navan ennea novem neun nine பத்து dasan deka decem zehn ten இருபது visathi eikati viminti zwanzig twenty நூறு satha ekaton centum hundert hundred 5. சில பொதுச்சொற்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. வாசல் dhvara thura fores tor door நடு madhya messos medius mitte middle (methyos) வெப்பம் gharma thermos formus warm warm உண் ad edein edere essen eat அறி vid eidon video wissen wit மரம் daru drus zehren tree நீர் uda udor unda wasser water வேர் (வேர்வை) svid idros sudare swizzan sweat அறி jna gnomi gnosco kennen know சொல் vartha eiro verbam worte word (to speak) பிற jan genea genea generate பெயர் naman onoma nomen name name உண்மை yata eteos etymon etymo-logy 6. இரு என்னும் வினைச்சொல் தமிழ் Skt. Gk. L. Ger. A.S. இருக்கிறேன் asmi esmi sum bin eom இருக்கிறோம் ’smas esmes sumus sind sind இருக்கிறாய் asi eis es bist eart இருக்கிறீர்(கள்) satha este estis seid sind இருக்கிறான் asti esti est ist is இருக்கிறார்(கள்) santi eisi sunt sind sind மேனாட்டாரிய மொழிகட்கும் வடமொழிக்கும் சொற்களில் ஒப்புமை யிருப்பதுபோலவே, இலக்கண நெறிமுறைகளிலும் ஒப்புமை யிருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்குக் கூறின் விரியும். பார்ப்பனர் தென்னாட்டிற்கு வந்த புதிதில், தமிழைச் சரியாய்ப் பேசமுடியவில்லை. இப்போதுள்ள மேனாட்டாரின் தமிழ்ப் பேச்சுப் போன்றே, அக்காலப் பார்ப்பனர் பேச்சும் நகைப்பை விளைவித்தது. அதனால், தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் (1-ஆம் சூ.) உரையில், ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்குக் காட்டாக எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். கபிலர், நச்சினார்க்கினியர் முதலிய தமிழறிஞர் பலர் ஆரியப் பார்ப்பனரேனும், அவர் ஒரு சிறு தொகையினரே யாவர். பெரும்பாற்பட்ட பார்ப்பனர் புதிதாய் வந்தவராயும் தமிழைச் சரியாகக் கல்லாதவராயும் இருந்தமையின், தமிழைச் செவ்வையாய்ப் பேசமுடியவில்லை. மேனாட்டாருள் பெஸ்கி, கால்டுவெல், போப், உவின்ஸ்லோ முதலிய பல சிறந்த தமிழறிஞரிருந்ததையும், பிறருக்கு அவரைப்போல் தமிழைச் செவ்வையாய்ப் பேச முடியாமையையும் மேற்கூறியதுடன் ஒப்பிட்டுக் காண்க. தமிழர்க்கும், வடமொழி அதன் செயற்கையொலி மிகுதிபற்றி நன்றாய்க் கற்க வராமையின், பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் தேவா. (844 : 5) என்று கூறியதும் இக் கருத்துப்பற்றியே. குலவழக்கு: பார்ப்பனர் இப்போது நன்றாய்த் தமிழறிந்தவ ராகக் கருதப்படினும், வடமொழிப்பற்றுக் காரணமாக, இயன்றவரை வடசொற்களைக் கலந்து மணிப்பவள நடையிற் பேசுவதே வழக்கம். சாப்பாடு, காரணமாக, அடைமானம், தண்ணீர், திருவிழா, குடியிருப்பு, கலியாணம் முதலிய சொற்களுக்குப் பதிலாக, முறையே போஜனம், வியாஜமாக, போக்கியம், தீர்த்தம், உத்சவம், வாசம், விவாகம் முதலிய சொற்களையே வழங்குவர். இவர்களிடத்தினின்றே தமிழரும் பல வடசொற்களைக் கற்றுத் தம் பேச்சில் வேண்டாது வழங்குகின்றனர். ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுவது உயர்வென்று தவறாய் இப்போது எண்ணப்படுவது போலவே, வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் முற்காலத்தில் உயர்வா யெண்ணப்பட்டது. இதற்குக் காரணம் பார்ப்பனத் தலைமையே. அம்மாமி, அம்மாஞ்சி (அம்மான்சேய்), அத்திம்பேர் (அத்தியன்பர்) முதலிய முறைப்பெயர் வடிவங்களும், சாஸனம் (பட்டயம்) தீர்த்தம் முதலிய பொருட்பெயர்களும், அவா போய்ட்டா, நேக்கு, போட்டுண்டு, சொல்றேள் (அவர்கள் போய்விட்டார்கள், எனக்கு, போட்டுக்கொண்டு, சொல்கிறீர்கள்) என்பன போன்ற கொச்சை வழக்கும், ஆடவர் பெண்டிருள் மூத்தாரையும் அடீ என்று விளிப்பதும், பார்ப்பனத் தமிழ்ப் பேச்சிற்கு ஒரு தனித்தன்மை யூட்டுவனவாகும். பார்ப்பனர் சில தனிச்சொற்களால் தங்களையும் தங்கள் பொருள்களையும் பிரித்துக்காட்டுவதுமுண்டு. c-«.: மங்கலம், சதுர்வேதி மங்கலம் - ஊர் அக்கிராகாரம் - குடியிருப்பு பிரமஸ்ரீ - அடைமொழி பிரமதாயம் - மானியம் பிரமராயன் - அரசப்பட்டம் குமாரன் - மகன் பட்டவிருத்தி - வேதங்கற்ற பிரா மணனுக்கு விட்ட இறையிலி நிலம் பார்ப்பனர் தமிழ்ப்பற்றின்மை, தனித்தமிழை விரும்பாததி னாலும், யூனிவர்சிட்டி, ஸ்கூல் பைனல் என்று ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காது வழங்குவதினாலும் அறியப்படும். (5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வசதியில்லாதபொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். அங்ஙனமிருப்பவரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாளராயுமே யிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தை யிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடுகூடப் பார்ப்பனருக்குத் தனியாக வுளது. (6) ஒழுக்கம்: பார்ப்பனர் தமிழ முறைப்படி, விருந் தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல்லாமை, துறவு முதலிய அறங்களின் மையில் துறவறத்தாருமல்லர். இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்.81) ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும் விருந்து செய்வது விருந்தோம்பலாகாது. வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே. எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டு மென்ற ஏற்பாடு இன்றும் இருந்துவருகின்றது. இது மிகவுந் திருந்திய திருப்பனந்தாள் மடத்திலும் இருந்துவருவது தமிழர்க்கு மிகவும் நாணுத்தருவதாகும். பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ்நாட்டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந்ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில தமிழரைப் பார்ப்பனராக்கினரென்று சொல்லப்படுகின்றது. அஃது உண்மையாயிருப்பினும் சிறுபான்மைக் கலப்பையே குறிக்கும். சில இந்தியர் மேனாட்டு மாதரை மணந்திருக்கின்றனர். இதனால் மேனாட்டாரும் கீழ்நாட்டாரும் கலந்துவிட்டனர் எனக் கூற முடியாது, மலையாள நாட்டில் பார்ப்பனர் திராவிடரான நாயமாதருடன் சம்பந்தம் என்னும் தொடர்பு வைத்துக் கொள் கின்றனர். ஆயினும், அம் மாதரையோ, அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளையோ, அக்கிராகரத்திற் சேர்த்துக்கொள்வதில்லை. அவரும் தம் இனத்தார் அல்லது குலத்தாருடனேயே இருந்து வருகின்றனர். திருவள்ளுவரின் தந்தையாகச் சொல்லப்படும் பகவன் என்னும் பார்ப்பான், ஆதி என்னும் பறைச்சியோடு கூடி இல்லறம் நடத்தினதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. அதிலும், பகவன் ஆதியைக் கைவிட்டோடியதும், பின்பு பலநாட் கழித்து, ஆதி பகவனைக் கண்டு, அவன் என்செயினும் விடாது தொடர்ந்து, தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதும், அதன்பின், அவன் தப்ப வழியின்றித் தனக்கவளிடம் பிறக்கும் பிள்ளைகளை உடனுடன் நீக்கிவிடவேண்டுமென்னும் நிபந்தனையின்மேல், அதற்கு வெறுப்புடன் இசைந்ததும் அறியப்படும். பார்ப்பனர் இதுவரை தங்களை எல்லா வகையிலும் பிரித்தே வந்திருக்கின்றனர். இன்றும் அங்ஙனமே. ஆயினும், தற்கால அரசியல் முறைபற்றி, ஆரியர் - திராவிடர் என்பது மித்தையென்றும் இருவரும் ஒருவர் என்றும் கூறிக் கொள்கின்றனர். இது சொல்லளவேயன்றிச் செயலளவிலன்று. ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு இக்கால மொழியியலும் அரசியலும்பற்றித் தமிழும் அதனினின்று திரிந்த திரவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திரவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட -திராவிடம். (1) வரணம்: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப்பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகுபாடும் ஒன்றே யென்று மேனோக்காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன. ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியருமான பல்வகைத் துறவிகள். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்.30) என்று திருவள்ளுவர் நீத்தார் பெருமையிற் கூறியிருத்தல் காண்க. ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும் ; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர் ; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை. ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர் ; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர். ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிறருக்குத் தொண்டுசெய்பவரும், பூணூல், வேதக்கல்வி முதலியவற்றிற்கு உரிமையில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லா வுரிமையு முடையவருமான மேன் மக்கள். ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இருபிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே தோன்றியதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழவேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும். தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயைபில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர். (2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்): ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகஸ்தம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது. (3) நூல்: ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜுர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்), ஆறுசாஸ்திரம் (மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுஸ்மிருதி, யக்ஜ்ஞவல்கிய ஸ்மிருதி முதலிய பதினெண் ஸ்மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட்டாக மங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு) வித்தை (நால்வேதமும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால் உபாங்கமும், ஆயுள்வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும். தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப்பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக்கழக (சங்க) நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும். தொடர்நிலைச் செய்யுள்கள் (காவியங்கள்) தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர்நிலை எனவும் வகுக்கப் பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல்(பிரபந்தம்)களாக விரிக்கப் படும். கடைக்கழகக் காலத்தையடுத் தியற்றப்பட்ட பத்துக் தொடர்நிலைச் செய்யுள்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர். இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரளவில் வடமொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும். (4) நயன நீதி : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக் கொரு வகையாக நீதி கூறும். உ-ம்: பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க. (மனு. 8 : 276) பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாயமாய்)த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசியனைத் திட்டினால் 25 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 12 பணத்தையும் தண்டமாக விதிக்க. (மனு. 8 : 268). இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க. (மனு. 8 : 271) பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு. 8 : 379, 80) இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமையான தாகச் சொல்லப்படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது. அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடையும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதிநூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறை யிலக்கணையாகக் கொண்டாலன்றி, அந் நூலுக்கு எள்ளளவும் பொருந்தா. தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே, வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும். கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம் முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ் வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரை யேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன்பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான். (5) மதம்: தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றேயென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப்பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம். இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீ ராதித்தர் என நால்வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவுஸ், பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரியமான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. (அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு, ருத்திரன், சரஸ்வதி என்னுந் தெய்வங்கள் பின்னர் விளக்கப்படும்.) இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம். (6) கருத்து: பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர்தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ளதென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்து களாகும். தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரே யொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை. உழவை, சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை (குறள். 1031) என்றும், உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு (நல்வழி. 12) என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ, சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டு கின்றனவல்லவா? (மனு. 10 : 84) என்று இழித்துக் கூறுவர். ஆரியர் தொல்லகம் ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவிலன்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமே யிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிரும் வாலமுகமுங்கொண்ட மக்கள் அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள்மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச்சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள், என்று முதலாவது லத்தாம் (Latham) எடுத்து விளக்கி, பின்பு மாந்தனூலும் (Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளால், பொயஸ்கே (Poesche)í« பெங்கா (Penka)î« திறம்படத் தாங்கிய கொள்கையை நான் முற்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்2 என்று சாய்ஸ் (Sayce) கூறுகிறார். மொழியின் கூற்றுகளை நன்றாய் ஆராயும்போது, அவை கதையை மிக வேறுபடக் கூறுகின்றன. ஆதி ஆரியன் உண்மையாகவே முரட்டுத் தன்மையுள்ள துப்புரவற்ற மிலேச்சனாய், கடுங்குளிரினின்றும் தன்னைக் காத்துக்கொள்ளக் காட்டு விலங்குகளின் தோலை யுடுத்திக்கொண்டும், உலோகத்தைப் பயன்படுத்தத் தெரியாமலும் இருந்தான் என்று, ஆட்டோ சிரேதர் (Otto Schrader) கூறுகின்றார்.3 ஆரியர் வருகை ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்பது பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும், பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவின பின், இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை ஹிந்து என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை இந்தி என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் இந்தியா என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்தார்கள். மாந்தன் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகர் என நான்கு நிலைகளைக் கொண்டது. தோலை உடுப்பதும், 2 Principles of Comparative Philology, Preface to the Third Edition, p.p. xviii - xix. 3“Äny¢r® ஆரியர் என்ற திவாகரச் சூத்திரமும் இங்குக் கவனிக்கத்தக்கது. பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி கிழங்ககழ்ந்த விடத்தில் தினைபோன்ற கூலம் விதைத்து மழைநீரால் (வானாவாரியாக) விளையச் செய்வதும்4 குறிஞ்சி நாகரிகமாகும். ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்ப் பயிர்களை விளைப்பதும், ஆட்டு மயிராடை உடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும். நெல், கரும்பு முதலிய நன்செய்ப் பயிர்களை விளைப்பதும், நிலையாக ஓரிடத்திற் குடியிருப்பதும், பஞ்சாடை யுடுப்பதும், தங்கள் பொருட்காப்பிற்குக் காவற் காரனை ஏற்படுத்துவதும் மருத நாகரிகமாகும். வாணிபமும், அரசியலும், கல்வியும் தோன்றி, முன்பு உழவரென்னும் ஒரே வகுப்பாராயிருந்தவர் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், பின்னர்க் கொல், நெசவு முதலிய மேல் தொழில்கட்கும், சலவை, மயிர்வினை முதலிய கீழ்த் தொழில்கட்கும் மக்கள் பிரிந்து போவதும், மாளிகைகள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சி உண்டாவதும் இசையும் நாடகமும் சிறப்பதும், வழிபாடுகளா யிருந்தவை மதங்களாக வளர்வதும் நகர நாகரிகமாகும். நகரத்தில்தான் நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்பதினின்றும் பிறந்ததே. (நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்). ஆங்கிலத்திலும் இங்ஙனமே (civilise, from civitas (L) = city). ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டும், ஆவை (பசுவை)த் தங்களுக்குச் சிறந்த சார்பாகக் கொண்டும், இந்திரன், வருணன் முதலிய சிறு தெய்வங்களுக்குப் பல விலங்குகளைப் பலியிட்டுக்கொண்டும், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும், உழவுத்தொழிலைச் சிறுபான்மையே செய்துகொண்டும், மாடு பன்றி முதலியவற்றின் இறைச்சியை உண்டுகொண்டும் இருந்ததை, ஆரிய வேதங்களினின்றும் தரும நூல்களினின்றும் அறிகின்றோம். கோத்ர (வமிசம்) என்னும் சொல் மாட்டுக் கொட்டில் என்றும், துஹித்தி (மகள்) என்னும் சொல் பால் கறப்பவள் என்றும், பொருள்படுவது, ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது முல்லை நாகரிகத்தினரே என்பதைக் காட்டும். 4 புறம். 168 தோல்மேலாடையும், நாரினாலும் ஆட்டு மயிராலும் ஆன அரையாடையும், புல்லினாற் பின்னிய அரைஞாணும், வில்வம் முள்முருங்கை முதலிய முல்லை மரங்களில் வெட்டிய ஊன்று கோலும் ஆரிய முதல் மூவரணத்தாருக்கு மனு விதித்திருப்பதும் மேற்கூறியதை வற்புறுத்தும். ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்பே, வடஇந்தியர் நல்ல நாகரிகத்தை யடைந்திருந்தார்கள். சர் ஜாண் மார்ஷல் மொகஞ்ஜோ-தாரோவைப்பற்றிப் பின்வருமாறு வரைகிறார்: 5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன், இந்தியாவில், மற்ற நாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும் இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசொப்பொத்தாமிய எகிபதிய நாகரிகத்திற்கு மிக நெருங்கியதும், சிலவிடங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரிகத்தை நுகர்ந்துகொண்டிருந்தன வென்று, ஒருவராயினும் ஒருசிறிதும் இதுவரை நினைத்ததேயில்லை. எனினும், இதையே ஹரப்பா, மொகஞ்சோ-தாரோ என்னுமிடத்துக் கண்டுபிடிப்புகள் ஐயமறத் தெரிவித்திருக் கின்றன. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கும் 4000 ஆண்டுகட்கும் முற்பட்ட சிந்து மக்கள், ஆரியவுறவின் அடையாளமே யில்லாததும், நன்றாய்ப் பண்படுத்தப்பட்டதுமான ஒரு நாகரிகத்தை யடைந்திருந்ததை அவை காட்டுகின்றன. இங்ஙனமே, அங்குள்ள தொழிற்கலையும் மதமும் சிந்துப் பள்ளத்தாக்கிற்கே யுரியவும் தனிப்பட்ட தன்மையுடையனவு மாகும். அங்குள்ள சிறிய மண்ணுருப்படிகளான ஆடுகட்கும் நாய்கட்கும் பிற விலங்குகட்கும், முத்திரைகளிலுள்ள ஓவிய வெட்டுகட்கும், அக்காலத்து மற்ற நாடுகளில் நமக்குத் தெரிந்ததொன்றும் மாதிரியில் ஒத்ததாயில்லை. அம் முத்திரைகளிற் சிறந்தவை, கவனிக்கத் தக்கபடி, திமிலும் குறுங்கொம்புங் கொண்ட காளைகளாகும். அவை வேலைப்பாட்டின் விரிவினாலும், இதுவரை வெட்டோவியக் கலையில் பெரும் பாலும் மேற்கொள்ளப்படாத உண்மையுருவப் படிவ உணர்ச்சியினாலும், பிறவற்றினின்றும் விதப்பிக்கப் பெற்றவை. அதுவுமன்றி, ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்டுப் பத்தாம் பதினொராம் தட்டுகளிற் பொறிக்கப்பட்டுள்ள இரு தலைமையான சிறு சிலைகளின் இனிய குழைவுப்படி நிலைக்கு, கிரேக்க நாட்டு இலக்கியகாலம்வரை ஒன்றும் இணையாக முடியாது. சிந்து மக்களின் மதத்திலும், பிறநாட்டு மதங்களிலும் பல செய்திகள் ஒத்துத்தானிருக்கின்றன. ஆனால், மொத்தத்தில் பார்க்கும்போது, சிந்து நாட்டுமதம் இன்றும் வழங்கிவரும் இந்து மதத்தினின்றும், குறைந்தபக்கம், இன்றும் பெரும்பான் மக்கள் வழிபடும் இரு மாபெருந் தெய்வங்களாகிய சிவ சிலைகளின் வணக்கமும், ஆன்மியமும் (Animism) கலந்த அம் மதக் கூற்றினின்றும் பிரித்தற் கரிதாமாறு அத்துணை இந்தியத்தன்மை வாய்ந்துள்ளது. கூலங்களை அரைப்பதற்குச் சப்பைக்கல்லும், சேணக் கல்லும்தான் மக்கட்கிருந்தன; வட்டத் திரிகல் இல்லை. இங்ஙனம் சுருங்கக்கூறிய அளவில், சிந்து நாகரிகம் தன் பொதுக்கூறுகளில் மேலையாசியாவிற்கும், எகிபதிற்கும் உரிய சுண்ணக் கற்கால நாகரிகங்களை ஒத்திருக்கின்றது; பிற செய்தி களில், மெசொப்பொத்தாமியாவிற்குச் சுமேரிய நாகரிகமும், நீலாற்றுப் பள்ளத்தாக்கிற்கு எகிபதிய நாகரிகமும் போல, சிந்து, பஞ்சாப் நாடுகட்கே யுரியதாய்த் தனிப்பட்ட முறையாயுளது. இதை விளக்க இரண்டொரு முக்கியச் செய்திகள் கூறுவோம். நெசவுக்குப் பருத்திப் பஞ்சைப் பயன்படுத்துவது அக்காலத்தில் முற்றிலும் இந்தியாவிற்கே உரியதாயிருந்தது. இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகட்குப் பிறகுதான் மேலை யுலகத்தில் அவ் வழக்கம் பரவினது. இஃதன்றி, சரித்திரத்திற்கு முற்பட்ட எகிபதிலாவது, மேலையாசியாவில் உள்ள மெசொப்பொத்தா மியாவிலாவது, பிறவிடத்திலாவது, நமக்குத் தெரிந்தவற்றுள் ஒன்றும், மொகஞ்ஜோ-தாரோ வாழ்நரின் நன்றாய்க் கட்டப்பெற்ற குளிப்பகங்கட்கும் இடஞ்சான்ற வீடுகட்கும் ஒப்பிடுவதற்கில்லை. பொது விதிக்கு விலக்காக, `ஊர் என்னுமிடத்தில், திருவாளர் உல்லி (Wolley) நடுத்தர அளவான ஒரு சுடுசெங்கற் கட்டட வீட்டுத் தொகுதியை அகழ்ந்திருப்பது உண்மையே! ஆனால் அவ் வீடுகள் மொகஞ்ஜோ-தாரோவின் கடைசியான மேன்மட்டங்களிலுள்ள செறிவற்றவுமான கட்டடங்களை வியக்கத்தக்க வகையில் ஒத்திருப்பதால், அவற்றைப் பின்பற்றியே கட்டப்பட்டன என்பது ஐயமறத் துணியப்படும். இஃது எங்ஙனமிருப்பினும், மொகஞ்ஜோ-தாரோவிலுள்ள பெருங் குளிப்பகத்தையும், தனித்தனி கிணறும் குளிப்பறையும் விரிவுபட்ட சலதாரையொழுங்குங் கொண்ட, அறை வகுத்த பயம்பாடு மிக்க வீடுகளையும், அந் நகரப் பொதுமக்கள் அக்கால நாகரிக வுலகத்தின் மற்றப் பகுதிகளிலுள்ளார் எதிர்பாராத அளவு, வசதியும் இன்பமும் நுகர்ந்தார்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வது தக்கதே. இப் புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் முந்திய நாகரிகங்களை மட்டுமல்ல, பண்டைக் கீழகம் முழுவதையுமே பற்றிய தற்காலக் கருத்துகளை மாற்றுவனவாயிருக்கின்றன. (உலக சரித்திரத்தில்) இந்தியாவின் பழங்கற்கால மனிதன் நடித்த பகுதியின் முக்கியம், நெடுங்காலமாக ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. பழங்கற்காலத்திற் குரிய கரட்டுமலை முகடுகளை யும், புதுக் கற்காலத்திற்குரிய கரட்டுமலை முகடுகளையும் வடிவச்சு நூற்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய நிலத்திலேயே, பின்னவை முன்னவற்றினின்றும் முதலாவது திரிந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது. தற்சமயம், நம் ஆராய்ச்சிகள் நம்மைக் கிறிஸ்துவுக்கு 4000 ஆண்டுகட்கு முன்மட்டுமே கொண்டுபோய், இச் சிறந்த நாகரிகத்தை மறைக்கின்ற திரையின் ஒரு மூலையை மட்டும் தூக்கியிருக்கின்றன. மொகஞ்ஜோ-தாரோவில்கூட, இதுவரை மண்வெட்டிகொண்டு வெட்டினதற்குங் கீழாக, ஒன்றன்கீ ழொன்றாய், இன்னும் பல முந்திய நகரங்கள், புதைந்து கிடக்கின்றன. மொகஞ்ஜோ-தாரோ, ஹரப்பா என்னும் ஈரிடத்தும், தெளிவாகவும், பிழைபாட்டிற்கிடமின்றியும் தோன்றுகின்ற ஒரு செய்தியென்னவென்றால், இவ் வீரிடங்களிலும் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகமானது, இந்திய நிலத்தில் பல்லாயிர வாட்டை மாந்தனுழைப்பைக் கீழ்ப்படையாகக் கொண்டு, ஊழிமுதியதாய் நிலைத்துப்போன ஒன்றேயன்றிப் புத்தம்புதிதான ஒன்றன்று என்பதே.5 5 Mohenjo-Daro, Vol. I, Preface, pp.v-vii ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, வடஇந்தியாவில் இருந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்களே. அவர்களுள், நாட்டு வாழ்நர் நாகரிகராயும் காட்டு வாழ்நர் அநாகரிகராயு மிருந்தனர். ஆரியர் தங்கள் பகைவரிடமிருந்து 99 கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்களென்று, ஆரிய மறையிலேயே கூறியிருப்பதால், அரசியல் நாகரிகம்பெற்ற பல சிறுநாடுகள், ஆரியர் வருமுன்பே வடநாட்டிலிருந் தமையறியப்படும். வட இந்தியாவினும், தென் இந்தியா உழவு, கைத்தொழில் வாணிகம், அரசு, கல்வி முதலிய பல துறைகளிலும் மேம் பட்டிருந்தது; பொன், முத்து, வயிரம் முதலிய பல வளங்களிலும் சிறந்திருந்தது. இதைச் சேர சோழ பாண்டிய அரசுகளினாலும், தமிழ்நாட்டிற்கும் அசீரியாவிற்கும் நடந்த நீர்வாணிகத்தாலும், தமிழிலிருந்த கலைநூற் பெருக்கினாலும், பிறவற்றினாலும் அறியலாம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்றார், தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம் பாரனாரும். ஆரியர் தமிழ்நாட்டிற்கு ஒரேமுறையில் பெருங்கூட்டமாய் வரவில்லை. சிறுசிறு கூட்டமாய்ப் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்துவந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு ஆரியர் தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்தபின், தமிழரசரே பலமுறை பார்ப்பனரைக் கூட்டங்கூட்டமாய் வடநாட்டினின்றும் வருவித்துத் தமிழ்நாட்டிற் குடியேற்றியிருக் கின்றனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் பார்ப்பனப் புலவர் பாடிப்பெற்ற பரிசில், உம்பர்க்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் என்று, பதிற்றுப்பத்தில் (2ஆம் பத்து) கூறப்பட்டுள்ளது. 1,700 ஆண்டுகட்கு முன் தொண்டைமண்டலத்தை யாண்ட பப்ப மகாராசன், வடநாட்டிலிருந்து, ஆத்திரேய ஹாரித பரத்துவாஜ கௌசிக காசிப வத்ஸ கோத்திரங்களைச் சேர்ந்த, பல பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்துத் தொண்டைநாட்டிற் குடியேற்றி அவற்றிற்கு நிலங்களை யளித்தான். பப்பன் காலத்துக்கு முன், பிராமணர்கள் தமிழ்நாட்டில் அதிகமாகப் பரவியிருந்ததாக அடையாளம் ஒன்றும் காணோம். கொஞ்சமாய்த்தான் இருந்திருக்க வேண்டும் என்று6பி.தி. ஸ்ரீநிவாஸய்யங்கார் கூறுகிறார். சுந்தரபாண்டியரென்னும் அரசர், பல ஊர்களில் இருந்த நூற்றெட்டுத் தலவகார சாமவேதிகளாகிய வைணவப் பார்ப்பனரைத் தென்திருப்பேரையில் இருத்தி, அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கினதாகச் சொல்லப்படுகின்றது. தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை (1) பாங்கன் (Companion) காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (கற்பு. 36) பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி.. களவிற் கிளவிக் குரியர் என்ப. (செய். 181) பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா.. தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர் (செய். 182) இத் தொல்காப்பிய நூற்பா(சூத்திரம்)க்களால், முதன் முதலாகத் தமிழ்நாட்டிற் பார்ப்பனர் ஏற்ற அலுவல், பாங்கன் தொழிலே என்று தெள்ளத்தெளியக் கிடக்கின்றது, பாங்கனாவான் அரசர்க்கும், சிற்றரசர்க்கும் பாங்கிலிருந்து ஏவல் செய்து, மனைவியும் பரத்தையுமான இருவகை மகளிரொடுங் கூட்டுபவன். பார்ப்பனர் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று புறத்திணையியல் (19) நூற்பாவில் கூறியுள்ள படி ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்கள் செய்துவந்தாரேனும், அவை 6 பல்லவர் சரித்திரம், முதற்பாகம், ப. 3. எல்லார்க்கும் எக்காலத்தும் ஏற்காமையின், பலர் அரசருக்குப் பாங்கராயமர நேர்ந்தது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில், இப் பொழுதையினும் வெண்ணிறமாயிருந்ததினால் அரசர்க்கு அவர்மீது விருப்ப முண்டாயிற்று. களவிற் கூற்றிற்குரியாரைப்பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ் விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன்முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது. இனி, பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பா னென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பா னென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் வேளாப் பார்ப்பான் (அகம். 24) என்று கூறப்படுவன் . பார்ப்பனர் ஆரிய வேதத்தைத் தமிழர்க்கு மறைத்து வைத்ததினாலும், அவ் வேதத்தை ஓதி, ஓதுவிப்பார்க்குப் போதிய ஊதியம் தரத்தக்க அளவு பெருந்தொகையினராய் அக்காலத்துப் பார்ப்பனர் இன்மையாலும், ஆரிய வேள்வி தமிழர் மதத்திற்கு மாறானதினாலும், முதன் முதலாய் வந்த பார்ப்பனர் பாங்கத் தொழிலே மேற்கொண்டனர் என்பது தெளிவு. இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைக் காலத்தினரான தொல்காப்பியர் காலத்திலன்றிக் கடைக்கழகக் காலத்திலும் பார்ப்பனர் பாங்கத்தொழில் செய்தமை, கீழ் வருங் குறுந்தொகைச் செய்யுளால் அறியப்படும். குறிஞ்சி, 156 (பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே யெழுதாக் கற்பி னின்செய லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ மயலோ விதுவே (குறுந். 150) (இது, கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.) பிராமணனுக்கு வில்வம், பலாசம் (முருக்கு) இவ்விரண்டும், க்ஷத்திரியனுக்கு ஆல், கருங்காலி இவ் விரண்டும், வைசியனுக்கு இரளி, அத்தி இவ் விரண்டும் தண்டமாக (ஊன்றுகோலாக) விதிக்கப்பட்டிருக்கின்றன என்று மனுதருமசாத்திரத்திற் (2:45) கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. (2) ஆசிரியன் அகத்தியர், தொல்காப்பியர் முதலிய பார்ப்பனர் தமிழைக் கற்றபின் தமிழாசிரியராயினர். இதை, போப் (G.U. Pope) பெர்சிவல் (Percival) முதலிய மேனாட்டாரின் தமிழாசிரியத் தொழிலுடன் ஒப்பிடுக. (3) பூசாரியன் (புரோகிதன்) பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம், பழக்கவழக்கம் முதலியவற்றை யறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள்7 (புராணங்கள்) வட மொழியில் வரைந்துகொண்டு மதத்திற்கதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர். இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ் நாட்டிற் பெருந்தலைமையும் நல்வாழ்வும் தந்ததாகும். (4) அமைச்சன் தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஒரோவோர் இடத்து, அருகிய வழக்காய் அமைச்சுப்பூண்டமை, மனுநீதிச்சோழன் கதையாலும் மாணிக்கவாசகர் சரித்திரத்தாலும் அறியப்படும். ஆனாலும், அது கல்வித்தகுதிபற்றி நேர்ந்ததேயன்றி, இராமச்சந்திர தீட்சிதர் தம் 7 ‘gHik’ என்னுஞ் சொல் பழங்கதை என்னும் பொருளில், இன்றும் தென்னாட்டில் வழங்கிவருகின்றது. பழைய நிலையைக் குறிக்கப் ‘giHik’ என்னும் வடிவமும், தொன்மை, முதுமை என்னும் பிற சொற்களும் உள. இந்திய ஆள்வினை அமைப்புகள் (Hindu Administrative Institutions) என்னும் நூலிற் கூறியுள்ளபடி பார்ப்பனரே அமைச்சராக வேண்டும் என்னும் ஆரிய நெறி மொழி (விதி) பற்றி நேர்ந்ததன்று. மிகப் பிந்திய விசயநகர ஆட்சியிற்கூட, அரியநாத முதலியார் போன்ற தமிழரே அமைச்சராயிருந்தனர். அமைச்சருக்குப் போர்த் தொழிலும் தெரிந்திருக்கவேண்டும் என்றும், ஆரியர் நடுவுநிலை திறம்பியவர் என்றும், தமிழரசர் கருதியிருந்ததால் பார்ப்பனரை அமைச்சராக அமர்த்தவில்லை. செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்து என்றும், குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப்பண்ணி என்றும் பதிற்றுப்பத்தில் வந்திருத்தலும், மனுநீதிச்சோழன் தன் அமைச்சர் கூறிய மனுநீதியை ஒப்புக் கொள்ளாததும் நோக்கியுணர்க. (5) ஆள்வோன் இதுகாலை பார்ப்பனர் ஆள்வோர் நிலையும் அடைந்திருக் கின்றனர். இவ் வைவகை நிலையும் வரவர ஒவ்வொன்றாய்க் கூடினவையே யன்றி ஒரே நிலையின் திரிபல்ல. இங்ஙனம் பார்ப்பனர் ஐவகைநிலை யடைந்தாலும், இவை அவருள் தலைமையானவரும் சிலரும் அடைந்தவையேயன்றி, எல்லாரும் அடைந்தவையல்ல. இங்ஙனம் அடையாதவரெல்லாம் தொன்றுதொட்டு 18ஆம் நூற்றாண்டுவரை இரந்துண்டே காலங்கழித்திருக்கின்றனர். இதை, முட்டிபுகும் பார்ப்பார் என்ற கம்பர் கூற்றும், பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்... இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கிற் பரந்துபடு மனைதொறுந் திரிவோன் (மணிமே. 5: 33-46) என்னும் அடிகளும், கூரத்தாழ்வான், இராமப் பிரமம் (தியாகராஜ ஐயரின் தந்தை) முதலியவர் உஞ்சவிருத்தி என்னும் அரிசியிரப் பெடுத்தமையும், சில குறிப்புகளும் தெரிவிக்கும். பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டுவழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் வேதியரை வினவல் என்னுந் துறையும் ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர்வழியே போனான் பார்ப்பான், பார்ப்பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை என்னும் பழமொழிகளும் உணர்த்தும். கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும். சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது.... (சிலப். 1 : 51-3) என்று கூறுதல் காண்க. கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமைபூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமா யிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டுவந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின் (புறம். 9: 1-5) என்னும் அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்க வரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17ஆம் நூற்றாண்டில், வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சி தரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார். ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முள (புறம். 34: 1-4) எனவரும் அடிகளும் மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத்தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி அமைதியா யிருக்கும் எல்லா உயிர்ப்பொருள்களையும் தமிழர் ஒருதிறமா யெண்ணிக் காப்பர். பூனையையும் கழுதையையும் கொல்வது பெருந்தீவினை என்று கருதப்படுவதை நோக்குக. பார்ப்பனர் அக்காலத்தில் மிகச் சிறிய தொகையினராயும், எளியவராயும், ஆட்சியில் இடம்பெறாதவரா யும் இருந்ததினால், தம்மைக் களங்கமற்ற சான்றோராகக் காட்டிக் கொண்டனர். பாண்டியன் பல்வேள்வி(யாக)ச் சாலை முதுகுடுமிப் பெரு வழுதியின் செயலாலும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் செயலாலும், ஆரிய வேள்விகளை வேட்கும் வழக்கம் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதை யறியலாம். பாலைக் கௌதமனார் என்னும் பார்ப்பனர், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவியால், தாமும் தம் மனைவியும் துறக்கம் (சுவர்க்கம்) புகவேண்டுமென்று, ஒன்பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வியில் தம் மனைவியுடன் மறைந்து போனார் என்னும் பதிற்றுப்பத்துச் செய்தி ஆராயத்தக்கது. பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள் தமிழ்நாட்டிற் பார்ப்பனருக்குப் பார்ப்பார், ஐயர், அந்தணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. இவற்றை ஆராய வேண்டும். பார்ப்பார் பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல்களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருமுன்பே, தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன. அது பின்னர்க் கூறப்படும். தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் வழிபாடு, திருமணம் முதலியவற்றை நடத்துவதுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமேயிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலை யிழந்து விட்டனர். ஆரியப் பிராமணர் தமிழப் பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை. தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக்கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டி லிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும். பாணருக்குத் தையல் தொழிலு முண்டு. பாணர்க்குச் சொல்லுவதும்.... தை.... என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி8 என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க. ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ்நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை 8 சக்கிலி என்பது சாஷ்குலி (= புலையர்) என்னும் வடசொல்லின் திரிபென்பர் எட்கார் j£°‰w‹(Edgar Thurston) யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப் பட்டனர். தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தாராவர். இவருடைய முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பனராயிருந் திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக் கிடக்கின்றது. ஐயர், அந்தணர் ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு ஐ என்பது பகுதி. ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, ஐ என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு. ஐவியப் பாகும் (தொல். உரி. 89) என்பது தொல்காப்பியம். ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத்தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவே யிருக்கும். ஒருவனுக்குப் பெரியோரா யிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும். தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில், . sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம். ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண்பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப்பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னு மிவரையுங் குறிப்பதாகும். அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொது வாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்ட தாகும். ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர். பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது. ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது `கீழிந்தியக் கும்பனி (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற்கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகிவிட்டது. ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகிவிட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர் அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும். ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ்நாட்டிற் பிற் காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர்போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று. ஆரியற் காக வேகி என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக யார்கொல் அளியர் தாமே யாரியர் என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப்படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக் கேயன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலகவழக்கன்று. ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதைவாயின் இவ் வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப்பார்க்கு மிகச் சேயவருமான பறையர் அங்ஙனமாகா மையின், ஐயன் என்னும் சொல் ஆரியன் என்னும் சொல்லின் சிதைவன்று. ‘Ar’ (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக் கொள்வர் மாக்சுமுல்லர். அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவே யுள்ளது. அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு(வேதாந்தம்)களைப் பொருந்துகின்றவர் என்று பொரு ளுரைப்பர் வடமொழிவழியர்; அம் + தண்மை + அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொரு ளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங்கூட, அணவு என்னும் சொல் அண் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின், அந்தணன் என்பது இருபிறப்பி (Hybrid)ahF«. அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும். அந்த ணாளர்க் குரியவும் அரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே (தொல். மர. 68) அந்த ணாளர்க் கரசுவரை வின்றே (தொல். மர. 80) என்று கூறியிருப்பதால், பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் அரசுவினை யிருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அந்தணர் என்னும் பெயர், முதலாவது, தனித்தமிழ் முனி வரைக் குறித்ததென்று முன்னமே கூறப்பட்டது. அந்தணர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்னும்) பொருளுக்கேற்ப, அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவி களைப்பற்றிக் கூறும் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப (செய். 1711) என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) என்று `நீத்தார் பெருமையிற் குறித்தனர் திருவள்ளுவர். அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால்தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல்லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிராமணருக்கு அருளில்லையென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும். உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றியவரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம். அஜீகர்த்தரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபன் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் நேரிடவில்லை என்று மனுதரும நூல் (10:105) கூறுகின்றது. பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலை பிரமசரிய மென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதியான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவதனாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப்பின், எந்த நிலையிலும் தம்மைத் துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு. தமிழ முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக்கூடும். இதையே அந்தணாளர்க் கரசுவரை வின்றே என்னும் நூற்பா குறிப்பதாகும்.9 வரைவின்றே என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லா முண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால், 9 இந்நூற்பாவிற்கு, அரசர் இல்வழி அந்தணரே அவ் வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது என்றவாறு என்று பேராசிரியர் உரை கூறியதுங் காண்க. அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்படவில்லை என்றும் அறியலாம். தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமை யால் அந்தணரோடு சேர்த் தெண்ணப்பட்டார். இதை, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல். 160) என்பதால் அறியலாம்.10 இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கே யுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார். மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை (குறள். 245) ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர். ஆரிய முனிவரை, வீரமாமுனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக. தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லையென்பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர். 11அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொல்காப்பியத்திலும், வேளாப் 10 ஆயுங்காலை என்றதனால், குடையுஞ் செருப்பும் முதலானவும் ஒப்பன அறிந்துகொள்க. (உ-ம்) எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் (கலித். 4) ........ï‹D« ஆயுங்காலை என்றதனான். ஓருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும், பிறாண்டிருந்து தனதுண்பானும்உலகியலி‹நீங்காமையி‹அவரைaவரைந்தோதினானென்பது’ (தொல். 610, பேரா. உரை) 11 தொல். பொருள். 74. பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் நூற்பாவில், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் என்று சித்தரும், நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க் கொப்பவே எண்ணப்பட்டதை அறியலாம். பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித்bதால்காப்பியத்âற்Tறப்பட்டனரேயன்றி,mவர்jமிழரேvன்னுங்fருத்துப்பற்றிaன்று.ïJnghJ jமிழ்நாட்டுக்Fலங்களைக்Fறிப்பின்,Iரோப்பியரும்,rட்டைக்காரரும்Fறிக்கப்படுவரன்றோ?அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க. மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் Fலத்தினின்றும்Kதன்முதல்nதான்றியeற்பெரும்ãரிவுகளேயன்றிப்ãற்காலத்துத்nதான்றியgலáறுசிறுFலங்களல்ல.bjhšfh¥ãa® காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப் பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தாமலு மிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணருமல்லர், அரசரு மல்லர், வணிகருமல்லர், வேளாளருமல்லர். அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை, வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல். மரபு. 76) வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (தொல். மரபு. 77) என்னும் நூற்பாக்களான் உணர்க. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை (, 73) என்னும் நூற்பாவில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை(சக்கரம்)யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தாசலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடைய தென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது. முனிவரைக் கடவுள12ரென்றும், பகவரெ13ன்றும், கடவுளோ டொப்பக்14 கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்டபின், தமிழர் தங்களைச் சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்துவிட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. தமிழகத்தில் இருசார் பார்ப்பனர் தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரார் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர்; அவர் அகத்தியர், தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக் கெடுத்தோர். இவருட் பிந்தின சாராரே வரவர மலிந்துவிட்டனர். முந்தின சாரார், பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியாருக்குப் பின், விரல்வைத்தெண்ணு மளவு மிகச் சிலரேயாவர். வடநாட்டினின்றும் பிந்தி வந்த பிராமணர் முந்திவந்தவரை மிகக் கெடுத்துவிட்டனர். தமிழையும் தமிழரையும் கெடுத்தோருள் பலர், பாட்டும் நூலும் உரையும் இயற்றியிருத்தலால், தமிழை வளர்த்தார்போலத் தோன்றுவர். ஆனால் ஆராயின், அவர் வருவாய்ப் பொருட்டும், 12 தொன்முது கடவுட் பின்னர் மேக (மதுரைக். 41) 13 பகவரைக் காணின் (திருவாய்.) 14 இக்காலத்தும், ‘His Holiness’ என்று போப்பையும், ‘His Grace’ என்று அரசக் கண்காணியாரையும் மேனாட்டாரும் அழைத்துவருதல் தமிழக வழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது. வடசொற்களையும் ஆரியக் கருத்துகளையும் தமிழ் நூல்களிலும் வடநாட்டுப் பார்ப்பனரைத் தமிழ்நாட்டிலும் புகுத்துவதற்கும் பார்ப்பனக் குலத்தை உயர்த்துவதற்குமே அங்ஙனம் செய்தனர் என்பது புலனாகும். எ-டு: அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்றார் விளம்பி நாகனார். அந்தண ரில்லிருந்தூ ணின்னாது என்றார் கபிலர்.15 ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே என்றார் பூதஞ்சேந்தனார். .....e‹Fz®É‹ நான்மறை யாளர் வழிச் செலவும் இம்மூன்றும்மேன்முwயாள®தொழில்என்றhர்நல்லாதனா®. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார், பார்ப்பார்.... தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூதம் அன்றே கெடும், பார்ப்பார் இடைபோகார். வான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தம் குரவரைப் nபாலொழுகல் நூன்முறை யாளர் துணிவு. பார்ப்பார்...... இவர்கட்காற்ற வழிவிலங்கினாரே பிறப் பினுள் போற்றி எனப்படுவார், பசுக்கொடுப்பின் பார்ப்பார் கைக்16 கொள்ளாரே. தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும் 17òiya®thŒ நாட்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா அந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல் என்றும் பிழைப்பதில்லை (ஆசாரக். 92) என்றார் பெருவாயின் முள்ளியார். இங்ஙனம், தமிழில் சில நூல்களை வரைந்து தாங்களும் தமிழ்ப் பற்றுடையவர் என்று காட்டிக்கொண்டு, வடமொழி யையும் ஆரிய வரண வொழுக்கத்தையும் தமிழ்நாட்டிற் புகுத்துவது ஆரியர் தொன்றுதொட்டுக் கையாண்டு வரும் வலக்காரங் (தந்திரம்)களில் ஒன்றாகும். 15 சில காரணங்களையிட்டு, இவர் பாரியைப் பாடியவரினின்றும் வேறானவராக எண்ணப்படுகிறார். 16 பார்ப்பார்கை = பார்ப்பாரின் கையினின்று. 17 புலையர் = வள்ளுவர். ஆரியரை உயர்த்திக் கூறியுள்ள சில தமிழரும் உளர். அவர் அறியாமையும் தந்நலமுங்கொண்ட குலக்கேடராதலின், அவர் செய்தி ஈண்டாராய்ச்சிக்குரியதன்று. சிவனியரும்18 திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே19 தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலைவராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திராவிட மறையாகக் கொண்டனர்.20 சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக் கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர். பார்ப்பனர் தமிழரை வென்ற வகை பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவே யுள்ளனர். முதன்முதல் தமிழ்நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரே யாவர். போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ் வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ் நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறுகூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்ற லாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப்போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை. 18 ருமால் - விஷ்ணு; திருமாலியம் - வைஷ்ணவம்; திருமாலியர் - வைஷ்ணவர். 19 வடகலையார் தென்கலையார் என்னும் இருசார் திருமாலியருள், இங்குக் குறிக்கப்பட்டவர் தென்கலையார். 20 தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற ஒரேயொரு பார்ப்பனரும், காஞ்சி பரவத்து ராஜகோபாலாச்சாரியார் என்னும் தென்கலைத் திருமாலியரே. தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததே யில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ்நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது. பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள் (1) அரசரையடுத்தல் பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப்படுத்தி னால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கரா யமர்ந்தனர். (2) தவத்தோற்றம் பார்ப்பனர் வைகறை யெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர். (3) தமிழ் கற்றல் பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர். (4) வடமொழியில் நூலெழுதலும் தமிழ்நூல்களை மொழிபெயர்த்தலும் பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ்நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக்கொண்டு, அவ் வடநூல்களை முதனூல் களாகவும் தென்னூல்களை வழிநூல்களாகவும் காட்டினர். வடமொழியில் நூலெழுதலுக்கு ஹாலாஸ்ய மான்மியத் தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசைநூல்களையும் காட்டாகக் கூறலாம். (5) தற்புகழ்ச்சி பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழியென்றும், தாங்கள் பிறப் பிலேயே உயர்ந்தவர்களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களி லும் வரைந்துகொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன. (6) மதத் தலைவராதல் பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்துகொண்டு, தமிழ் மதாசிரியர் களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர். (7) தமிழைத் தளர்த்தல் பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங்களையும்21 வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும்,22 பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வடசொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்துவிட்டனர். (8) பிரித்தாட்சி பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மை யாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர். கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), 21 செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும். 22 சோழவமிச சரித்திரச் சுருக்கம், ப. 53 உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற்கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர். பிராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ்வேறாகவே மனு தருமங் கூறுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில்பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடி யுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே (கற்பியல் 3) என்னும் தொல்காப்பிய நூற்பாவா லறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என்பாரை. அந்தணர் என்பார் துறவிக ளாதலின், அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மணவினை நடத்திவருகின்றனர். அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமையில் லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக. பிறப்பால் சிறப்பு; பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப் பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வரண வொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது. கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப் பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்து விட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு தீண்டாமை (Untouchability), அண்டாமை (Upapproachability), காணாமை (Unseeability), என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையா யிருந்ததே. இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக்கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பன வுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டிமட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க. முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம்வர) முறையினா லும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக்கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர் பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காராளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப்படு வதினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடி வழங்குவது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பனரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதி னாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்த தில்லையென்று அறியலாம். பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும். கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். பார்ப்பானில் ஏழையுமில்லை பறையனில் பணக்காரனுமில்லை என்பது பழமொழி. குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும் பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழாவில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங் கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக்கோயில் கட்கும் இறையிலி விட்டதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் மதப் பகையுமிருந்த தில்லையென் றறியலாம். (9) வடநாட்டாரை உயர்த்தல் இது பின்னர் விளக்கப்படும். (10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்பவும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம்பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொதுமக்கட்கு மறைக்கப்பட்டுளர். தமிழரின் சிறந்த தன்மை மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந்தோம் பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மையுரைத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைகளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுபவராவார். இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரிகத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ் nlÉ£°(Rhys Davids) என்பவர், தமது புத்த இந்தியா (Buddhist India) என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காணமுடியாமையைக் குறிப்பிடுகின்றார். இந்திய நாகரிகம், தமிழ அல்லது திரவிட நாகரிகமே யென்று பின்னர் நூலில் விளக்கப்படுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன். பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக்கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு, அவர்களின் மறைநூலும் அறநூலுமே சான்றாகும். வடமொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும் பிரிந்துவந்த இந்திய ஆரியர், இங்கு வந்த பிறகே திரவிடரைப் பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை. முட்டையும் மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப் பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்டவிடத்தும், நோயுற்றவிடத்தும் பெரும்பாலும் ஊனுண் ணும் நிலையினரே. சைவ வேளாளரென்னுந் தமிழரோ, உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார். சைவ மதத்தில் ஊனுண் ணாமை ஓர் அறமாக விதிக்கப்பட்டிருத்தல்பற்றி, சைவம் என்னும் மதப்பெயருங்கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும். சைவாள் என்றும், சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே. பார்ப்பனர் முன்காலத்தில் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன்: (1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, வில்லவன் சமைத்தளித்த ஆட்டிறைச்சியை உண்டார். (2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின்வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்: புலவு நாற்றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் மெல்லிய பெரும தாமே..... செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே (புறம். 14) இது சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, `மெல்லியவாமால் நுங்கை எனக் கபிலர் பாடியது. உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல என்னும் பழமொழியும் இங்கு நோக்கத்தக்கது. இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும். ஒவ்வொரு நாட்டிலும் - அது எத்துணை நாகரிகமடைந் திருப்பினும் - நாகரிகம், அநாகரிகம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டில் அங்ஙன மிருப்பவற்றுள் ஒவ்வொரு வகையிலும் உயர்ந்ததையே தெரிந்துகொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே, அவர் எதிலும் உயர்வாகவே காணப்படுகின்றனர். பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்; தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக் காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப்பிரிவினையும், பார்ப்பன வுயர்வும். தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம் பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்ந்துவரவேண்டும்? ஆகையால், அக் கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறானதென்று விடுக்க. பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல் பார்ப்பனர் இதுபோது மதிநுட்பமுடையவரெனல் உண்மையே. ஆனால், அது எதனால் வந்தது? ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருந்து வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்றார் முன்றுறை யரையனார். மகனறிவு, தந்தையறிவு என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித்திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத் திறமை எவ்வளவு பெருகியிருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டு களாக ஆரிய வரணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள். ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டு களாக உயர்தரக் கல்வி கற்று வருகின்றனர். அதற்குள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிவைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று. தமிழர் உயர்தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறிப்பால் அறிக. 1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. `மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே; ஏனென்றால், உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத்தான் உரிமையுண்டு. ....khztnu தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால். அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்திற்கும், மாணாக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது23 இங்ஙனம், தமிழ்நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க்கலை ....rÅahd தமிழைவிட்டுத் தைய லார்தம் இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை என்னசென்மம் vL¤துலகில்இரு¡கின்றேhnk” என்று புலவர் வருந்துமாறு வறண்டது. 23 History of the Nayaks of Madura, p. 257. இங்ஙனம் பார்ப்பனர் உயர்தரக் fல்வியைத்jங்களுக்கேtரையறுப்பது,jங்களைப்ãwப்பிலேயேஉaர்ந்தவராகவும்,பிuமாவேத§களைக்கšவிக்குரியவராகப்பiடத்ததாகவும்,கšலாத்தÄழரிடம்கhட்டிஅtர்களைஎ‹றும்அoமைப்பL¤j‰nf. ஆரியத்தால் தமிழ் கெட்டமை தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்ப தாக, மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதைய ரவர்கள், தங்கள் சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள். இது எத்துணை உண்மையென ஆராய வேண்டும். வீண் வடசொல் வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களுக்குப் பதிலாக, வீணான வடசொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன. அவற்றுட் சில வருமாறு: அங்கவதிரம் - மேலாடை அசங்கியம் - அருவருப்பு அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம் அத்தியாவசியம் - இன்றியமையாமை அந்தரங்கம் - மறைமுகம் அநேக - பல அப்பியாசம் - பயிற்சி அபிவிர்த்தி - மிகுவளர்ச்சி அபராதம் - குற்றம் (தண்டம்) அபிஷேகம் - திருமுழுக்கு அபூர்வம் - அருமை அமாவாசை - காருவா அர்ச்சனை - தொழுகை (வழிபாடு) அர்த்தம் - பொருள் அவசரம் - விரைவு (பரபரப்பு) அவசியம் - தேவை அவயவம் - உறுப்பு அற்புதம் - புதுமை (இறும்பூது) அன்னவஸ்திரம் - ஊணுடை அன்னியம் - அயல் அனுபவி - நுகர் அனுஷ்டி - கைக்கொள் அஸ்திபாரம் - அடிப்படை ஆக்கினை(ஆணை) - கட்டளை ஆகாரம் - உணவு ஆச்சரியம் - வியப்பு ஆசாரம் - ஒழுக்கம் ஆசீர்வாதம் - வாழ்த்து ஆதரி - தாங்கு (அரவணை) ஆதியோடந்தமாய்- முதலிலிருந்து முடிவுவரை ஆபத்து - அல்லல் ஆமோதி - வழிமொழி ஆரம்பம் - துவக்கம், தொடக்கம் ஆரோக்கியம் - நலம், நோயின்மை ஆலோசி - சூழ் ஆயுள் - வாழ்நாள் ஆனந்தம் - களிப்பு ஆஸ்தி - செல்வம் ஆக்ஷேபி - தடு ஆட்சேபணை - தடை இந்திரன் - வேந்தன் இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை இஷ்டம் - விருப்பம் ஈஸ்வரன் - இறைவன் உத்தேசம் - மதிப்பு உத்தியோகம் - அலுவல் உபகாரம் - நன்றி உபசாரம் - வேளாண்மை உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து உபவாசம் - உண்ணா நோன்பு உபாத்தியாயர் - ஆசிரியர் உற்சவம் - திருவிழா உற்சாகம் - ஊக்கம் உஷ்ணம் - வெப்பம் கங்கணம் - வளையல் (காப்பு) கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு ஆக்கினை கபிலை - குரால் கருணை - அருள் கர்வம் - செருக்கு கவி - செய்யுள் கனகசபை - பொன்னம்பலம் கஷ்டம்-வருத்தம் கஷாயம் - கருக்கு காவியம் - தொடர்நிலைச் செய்யுள் காஷாயம் - காவி கிரகம் - கோள் கிரீடம் - முடி கிருகப்பிரவேசம் - புது வீடு புகல் கிருபை - அருள், இரக்கம் கிருஷிகம் - உழவு கோஷ்டி - குழாம் சக்கரவர்த்தி - மாவேந்தன் சக்தி - ஆற்றல் சகலம் - எல்லாம் சகஜம் - வழக்கம் சகுனம் - குறி, புள் சகோதரன் - உடன் பிறந்தான் சங்கடம் - இடர்ப்பாடு சங்கரி - அழி சங்கீதம் - இன்னிசை சத்தம் - ஓசை சத்தியம் - உண்மை சத்துரு - பகைவன் சந்ததி - எச்சம் சந்தி - தலைக்கூடு சந்திப்பு - கூடல் (Junction) சந்திரன் - மதி, நிலா சந்தேகம் - ஐயம், ஐயுறவு சந்தோஷம் -மகிழ்ச்சி சந்நிதி - முன்னிலை சந்நியாசி - துறவி சம்பந்தம் - தொடர்பு சம்பாஷணை - உரையாட்டு சம்பூரணம் - முழுநிறைவு சமாச்சாரம் - செய்தி சமுகம் - மன்பதை சமுசாரி - குடும்பி (குடியானவன்) சமுச்சயம் - அயிர்ப்பு சமுத்திரம் - வாரி சர்வமானியம் - முற்றூட்டு சரணம் - அடைக்கலம் சரீரம் - உடம்பு சன்மார்க்கம் - நல்வழி சாதம் - சோறு சாதாரணம் - பொதுவகை சாஸ்திரம் - கலை(நூல்) சாஸ்வதம் - நிலைப்பு சாக்ஷி - கண்டோன் சிங்காசனம் - அரியணை சிநேகிதம் - நட்பு சிரஞ்சீவி - நீடுவாழி சீக்கிரம் - சுருக்கு சுகம் - உடல் நலம் அல்லது இன்பம் சுத்தம் - துப்புரவு சுதந்தரம் - உரிமை சுதி (சுருதி) - கேள்வி சுபம் - மங்கலம் சுபாவம் - இயல்பு சுயமாய் - தானாய் சுயராஜ்யம் - தன்னாட்சி சுரணை (ஸ்மரணை) - உணர்ச்சி சுவர்க்கம் - துறக்கம், உவணை சுவாசம் - மூச்சு (உயிர்ப்பு) சுவாமி - ஆண்டான், கடவுள் சுவாமிகள் - அடிகள் சேவகன் - இளையன் சேவை -தொண்டு (ஊழியம்) சேனாபதி - படைத்தலைவன் சேனாவீரன் - பொருநன் சேஷ்டை - குறும்பு சொப்பனம் - கனா சோதி - நோடு சௌகரியம் - ஏந்து ஞாபகம் - நினைப்பு ஞானம் - நினைப்பு ஞானம் - அறிவு தயவு - இரக்கம் தருமம் - அறம் தாசி - தேவரடியாள் தானியம் - கூலம், தவசம் தினம் - நாள் துக்கம் - துயரம் துரோகம் - இரண்டகம் துஷ்டன் - தீயவன் தூரம் - சேய்மை தேகம் - உடல் தைலம் - எண்ணெய் தோஷம் - சீர் (குற்றம்) நதி - ஆறு நமஸ்காரம் - வணக்கம் நஷ்டம் - இழப்பு நக்ஷத்திரம் - வெள்ளி (நாண்மீன்) நித்திரை - தூக்கம் நியதி - யாப்புறவு நியமி - அமர்த்து நியாயம் - முறை நாசம் அழிவு நாதம் - ஓலி நிஜம் - மெய் நிச்சயம் - தேற்றம் நீதி - நயன் பிரயோகம் - எடுத்தாட்சி (வழங்கல்) பிரயோஜனம் - பயன் பிரஜை - குடிகள் பிராகாரம் - சுற்றுமதில் பக்தன் - அடியான் (தேவடியான்) பிராணன் - உயிர் பிராணி - உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி பக்தி - தேவடிமை பகிரங்கம் - வெளிப்படை பிராயச்சித்தம் - கழுவாய் பசு - ஆன்(ஆவு) பிரியம் - விருப்பம் பஞ்சேந்திரியம் - ஐம்புலன் பத்திரம் - தாள் (இதழ்) பத்திரிகை - தாளிகை பத்தினி - கற்புடையாள் பதார்த்தம் - பண்டம் (கறி) பதிவிரதை - குலமகள் (கற்புடையாள்) பந்து - இனம் பரம்பரை - தலைமுறை பரிகாசம் - நகையாடல் பரியந்தம் - வரை பக்ஷி - பறவை (புள்) பாத்திரம் - ஏனம் (தகுதி) பார்வதி - மலைமகள் பாவம் - தீவினை பானம் - குடிப்பு (குடிநீர்) பாஷை - மொழி பிச்சை - ஐயம் பிச்சைக்காரன் - இரப்போன் பிசாசு - பேய் பிரகாசம் - பேரொளி பிரகாரம் - படி பிரசங்கம் - சொற்பொழிவு பிரசவம் - பிள்ளைப்பேறு பிரசுரம் - வெளியீடு பிரத்திக்ஷணம் - கண்கூடு பிரதக்ஷிணம் - வலஞ்செய்தல் பிரயாசம் - முயற்சி பிரயாணம் - வழிப்போக்கு பிரயாணி - வழிப்போக்கன் பிரேதம் - பிணம் புண்ணியம் - நல்வினை (அறப்பயன்) புத்தி - மதி புத்திமதி - மதியுரை புருஷன் - ஆடவன் புஷ்டி -தடிப்பு (சதைப்பிடிப்பு) புஷ்பம் - பூ புஷ்பவதியாதல் -முதுக்குறைதல் (பூப்படைதல்) பூமி - ஞாலம், நிலம் பூர்வீகம் - பழைமை பூரணசந்திரன் - முழுமதி பூஜை - வழிபாடு போதி - கற்பி, நுவல் போஜனம் - சாப்பாடு போஷி - ஊட்டு பௌரணை - நிறைமதி மத்தி - நடு மத்தியானம் - நண்பகல் (உச்சிவேளை) மயானம் - சுடுகாடு, சுடலை மரியாதை - மதிப்பு மாமிசம் - இறைச்சி மார்க்கம் - வழி மிருகம் - விலங்கு முக்தி - விடுதலை முகஸ்துதி - முகமன் மூர்க்கன் - முரடன் மைத்துனன் - அத்தான் (கொழுந்தன்), அளியன் மோசம் - கேடு மோக்ஷம் - வீடு, பேரின்பம் யதார்த்தம் - உண்மை யமன் - கூற்றுவன் யஜமான் - தலைவன் (ஆண்டான்) யாகம் - வேள்வி யோக்கியம் - தகுதி யோசி - எண் ரகசியம் - மறைபொருள், மருமம் ரசம் - சாறு ரணம் - புண் ரத்தினம் - மணி ரதம் - தேர் ராசி - ஓரை ருசி - சுவை ரோமம் - மயிர் லஜ்ஜை - வெட்கம் லக்ஷ்மி - திருமகள் லாபம் - ஊதியம் லோபம் - இவறன்மை லோபி - இவறி (கஞ்சன், பிசிரி) வசனம் - உரைநடை வமிசம் - மரபு வயசு - அகவை வர்க்கம் - இனம் வர்த்தகம் - வணிகம் வருஷம் - ஆண்டு வாத்தியம் - இயம் வாயு - வளி வார்த்தை - சொல் விகடம் - பகடி விசுவாசம் - நம்பிக்கை விசனம் - வாட்டம் விசாரி - வினவு, உசாவு விசேஷம் - சிறப்பு வித்தியாசம் - வேறுபாடு விநோதம் - புதுமை வியவகாரம் - வழக்கு வியவசாயம் - பயிர்த்தொழில் வியாதி - நோய் வியாபாரம் - பண்டமாற்று விரதம் - நோன்பு விரோதம் - பகை விஸ்தீரணம் - பரப்பு விஷம் - நஞ்சு வீரன் - வயவன் (விடலை) வேசி - விலைமகள் வேதம் - மறை வைத்தியம் - மருத்துவம் ஜயம் - வெற்றி ஜலதோஷம் - நீர்க்கோவை, தடுப்பு ஜன்மம் - பிறவி ஜன்னி - இசிவு ஜனம் - நரல் (நருள்) ஜனசங்கியை - குடிமதிப்பு ஜன மரணம் - பிறப்பிறப்பு ஜாக்கிரதை - விழிப்பு ஜாதகம் - பிறப்பியம் ஜாதி - குலம் ஜீரணம் - செரிமானம், ஜீரணோத்தாரணம் - பழுது பார்ப்பு ஜீவன் - உயிர் ஜீவனம் - பிழைப்பு ஜீவியம் - வாழ்க்கை ஜோதி - சுடர் ஜோதிடன் - கணியன் ஸ்தாபனம் - நிறுவனம் ஸ்திரீ - பெண்டு ஸ்தோத்திரி - பராவு ஸ்நானம் - குளிப்பு க்ஷணம் - நொடி க்ஷீணம் - மங்கல் க்ஷேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு) இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை (அனாவசியம்)யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே வடசொற்கள் தமிழர்கட்குத் தெரியா. அவை பார்ப்பனரே தொன்றுதொட்டுச் சிறிதுசிறிதாய்த் தமிழில் நுழைத்தவையாகும். தமிழ்நாட்டுக் கல்வியும், மதமும் பார்ப்பனர் வயப்பட்டமையான், அவ் விரண்டையும் நிலைக்களமாகக்கொண்டு, பலவகையில் புகுத்தினவாகும் தமிழிலுள்ள வடசொற்கள். இன்றும், பல வடசொற்கள் தமிழுக்கு வந்துகொண்டே யிருக்கின்றன. பார்ப்பனர் தென்சொற்களை அறிந்திருந்தாலும், அவற்றிற்குப் பதிலாக வடசொற்களையே வழங்குவது வழக்கம். பழக்கத்தைப் பரிச்சயம் என்றும், சுவையாய் என்பதை ருசிகரமாய் அல்லது சுவாரசியமாய் என்றும் சொல்லுவர் அவர். கல்லாத தமிழர் பார்ப்பனரை உயர்ந்தாராக மயங்கினமையின், அவர் பேச்சைப் பின்பற்றுவது பெருமையென்று பின்பற்றினர். பார்ப்பனப் பாடகர், தமிழில் இப்போதுள்ள வடசொற்கள் போதாவென்று, திருமணத்தைப் பரிணயம் என்றும், அடியாரைப் பக்தரென்றும் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில், பல பொதுவான தென்சொற்களுக்குப் பதிலாக வடசொற்களை வழங்கினதுடன், ஆட்பெயரும், இடப்பெயரும் தெய்வப்பெயருமான பல சிறப்புப்பெயர்களையும் மொழிபெயர்த்து வழங்கினர் பார்ப்பனர். கயற்கண்ணி, தடங்கண்ணி, அழகன் என்னும் ஆட்பெயர்கள் முறையே மீனாக்ஷி, விசாலாக்ஷி, சுந்தரன் என்றும்; பழமலை, மறைக்காடு என்னும் இடப்பெயர்கள் முறையே விருத்தாசலம், வேதாரண்யம் என்றும்; ஆறுமுகம், சிவன், தாயுமான தெய்வம் என்னும் தெய்வப்பெயர்கள் முறையே, ஷண்முகம், சங்கரன், மாதுரு பூதேஸ்வரர் என்றும் வழங்கிவருதல் காண்க. ஒரு நாட்டார், இரண்டொருவராய், நாடு காண்பவர் போலும், வழிப்போக்கர்போலும், பிழைக்கப்போபவர் போலும், மற்றொரு நாட்டிற் போயமர்ந்து, பின்பு பெருந் தொகையினரான வுடன், அந் நாட்டைக் கைப்பற்றுவது ஒரு வலக்காரமான வழியாகும்; இது மொழிக்கும் ஒக்கும். வடசொற்கள் தமிழில் மிகச் சிலவாயிருந்த பண்டைக்காலத்தில், தமிழைக் கெடுப்பதாகத் தமிழர்க்குத் தோன்றவில்லை. ஆனால், இதுபோதோ, தமிழ் வடமொழியி னின்றும் பிறந்ததே என்று ஆராய்ச்சியில்லாதார் நம்புமளவு அளவிறந்த வடசொற்கள் தமிழிற் கலந்துள்ளன. வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன: (1) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல். (2) தமிழின் தூய்மை கெடல். (3) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல். குடும்பம், இல், குடி, குலம், வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலைமுறை யுள்ள அல்லது பல தலைமுறை யடங்கின) குடும்பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரத்தையும், ஜாதியையும், நிறம்பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பனபோன்ற) பெரும் பிரிவுகளையும், குலவழித் bjhl®igí«(descent) குறிப்பனவாகும்.24 ஆனால், இப் பொருள் வேறுபாடு இன்று எல்லார்க்கும் புலனாவதில்லை. பசும் பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும்25 பசுவின்பால் பசுப்பால் என்றே கூறத்தக்கது. பசுப்பாலை ஆவின்பால் என்றனர் முன்னோர். காட்டு என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொருளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது. (4) புதுச்சொற் புனைவின்மை தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆஸ்திகம், நாஸ்திகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பாமதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும். (5) தென்சொல் வடசொல்போலத் தோன்றல் கலை, மீனம் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வடசொற்கள் போலத் தோன்றுகின்றன. 24 ஒருபொருட் பல சொற்கள் பருப்பொருளில் ஒன்றையே குறிப்பினும், நுண்பொருளில் வேறுபட்டவை என்பதை Handbook of the English Tongue என்னும் புத்தகத்தின் 25ஆம் 26ஆம் பக்கங்களிலும், Hints on the Study of English என்னும் புத்தகத்தின் 49ஆம் 50ஆம் பக்கங்களிலும் காண்க. 25 அந்தகக்கவி வீரராகவர் சரித்திரம் காண்க. (6) தென்சொல்லை வடசொல்போல ஒலித்தல் குட்டம், முட்டி என்னும் தமிழ்ச்சொற்கள் குஷ்டம், முஷ்டி என்று வடமொழியில் வழங்குவதுபோல, வேட்டி என்னும் தமிழ்ச்சொல்லும், உலக வழக்கில் வேஷ்டி என்று தவறாய் வழங்குதலும் `வேங்கட என்பது வெங்கட்ட என்று வலித்தலும் காண்க. (7) சில சொற்கள் தென்சொல்லா வடசொல்லாவென்று மயங்கற்கிடமாதல். எ-டு: மந்திரம். (8) தமிழர் தாய்மொழியுணர்ச்சி யிழத்தல். ஏற்கெனவே ஏராளமான வடசொற்கள் தமிழில் வந்து அடர்ந்தபின், மகமதிய ஆட்சியில் பல உருதுச்சொற்கள் தமிழில் வந்து கலந்தன. அவற்றுட் சிலவாவன: அகஸ்மாத் கோஷா பவுஞ்சு ஜமாபந்தி அசல் சபாஷ் பிராது ஜமீன் அதாலத் சாமான் பைசல் ஜமேதார் அமீனா சுபேதார் மகஜர் ஜல்தி அமுல் டபேதார் மசோதா ஜவாப் அர்ஜீ டாணா மஜூதி ஜவாப்தாரி அவுல்தார் தமாஷ் மராமத் ஜவான் ஆஜர் தஸ்தவேஜ் மாஜி ஜாகிர்தார் உண்டியல் தாக்கல் மிட்டாதார் ஜாகை உஷார் தாக்கீது மிட்டாய் ஜாட்டி கச்சேரி தாசில்தார் ரத்து ஜாப்தா கசாய் தாலுக்கா ரஜா ஜாமீன் (கசாப்பு) தைலி ராஜிநாமா ஜாரி கஜானா தொகையரா லங்கோடு ஜால்ரா காலி நகல் லடாய் ஜாலக் கில்லேதார் நமூனா லாடம் ஜாலர் கிஸ்து நாஷ்ட்டா லுங்கி ஜிகினா கேலி பசலி லேவாதேவி ஜிம்கானா கைதி படுதா வார்சு ஜிமிக்கி கொத்தவால் பர்வா ஜப்தி ஜில்லா ஜீனி ஜோர் ஷரா ஷோக் ஜெண்டா ஷர்பத் ஷாய் ஹுக்கா ஜேப்பு ஷரத்து ஷராப்பு ஹோதா (இவற்றுட் சில, உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.) மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூறவேண்டுவதில்லை. தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச்சொற்கள் கலந்துள்ளன. எ-டு: காங்கிரஸ் (இங்கிலீஷ்), மகாத்மா, சத்தியாக்கிரகம், வந்தேமாதரம், பாரதமாதா, ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரபாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை. இங்ஙனம் பற்பல மொழிகளிளின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது, தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழியுணர்ச்சி யில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வயமில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது. பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல். பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்; பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்; கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும். தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துகள் தமிழ் நூல்களிற் கலத்தல். வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல். இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடுநிலை அறிஞர் அறிந்துகொள்க. ஆரியத்தால் தமிழர் கெட்டமை பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக்கல்வியும் நாகரிகமுமின்மை, தாய் மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன, ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் பலவகை யிலும் கெட்டு வந்ததை நோக்குமிடத்து, தமிழர்கேடு - பார்ப்பனர் ஆக்கம் என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக் கின்றன என்பதை அறியலாம். பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப் புலவர் பிழைப்பும் கெட்டன. தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக் குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிராகர வழியாகச் செல்லக்கூடாதென்றும், மேலாடை யணியக்கூடாதென்றும், இன்றும் சில ஊர்களில் இருந்துவருகின்றது. மேல் வகுப்பாரைக் கண்டவுடன் ஐம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல்வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்? பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டார்க்குச் சமையல் செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது. ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல் ஆரியதமிழப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க் குள் பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப் பட்ட தென்றும், அடிமைத் தமிழரான நீதிக் கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆரிய தமிழ(திராவிட)ப்போர், ஆரியர் இந்தியாவில் கால்வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும். பிராமண மதத்திற்கு மாறாகப் பௌத்த மதத்தைத் தோற்று வித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே. பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்துகொண்டே இருந்தது. ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவர் முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை, நெடுகக் காணலாம். செங்குட்டுவ கனகவிசயப் போர் பதினெண் நாழிகையும், பாரதப்போர் பதினெண் நாளும், இராம விராவணப் போர் பதினெண் மாதமும் தேவ அசுரப்போர் பதினெண் ஆண்டும், நடந்ததாகச் சொல்லப்படும். ஆயின், ஆரிய தமிழப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்துவருகின்றது. ஆய்ந்து நோக்கின் தேவ அசுரப் போர் என்பது ஆரிய திராவிடப் போரே. சேரநாட்டுச் செங்கோல் வேந்தனும் மாபெருங் கொற்றவனுமாகிய மாவலி அசுரனென்றும் பிராமணர் பூசுரர் (நிலத்தோர்) என்றும், கூறப்படுதல் காண்க. தமிழச்சித்தர் இலக்கியத் தொண்டும், நயமைக் கட்சியின் (Justice Party) அரசியல் தொண்டும், ஆரிய திராவிடப் போராட்டமே. (1) நக்கீரர் கடைக்கழகக்காலத்தில், ஒருநாள், வடமொழியறிந்த கொண்டான் என்னுங் குயவன் ஒருவன், பட்டிமண்டப மேறி வட மொழியே சிறந்தது; தமிழ் சிறந்ததன்று என்று கூற, நக்கீரர் சினந்து, முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணிலா ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா என்று பாடினதும், அக் குயவன் வீழ்ந்திறந்தான். பின்பு அங்கிருந்த பிறர் அவனுக்காகப் பரிந்துபேச, ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதிய லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா என்று பாடி அவனை உயிர்ப்பித்தார்.26 நக்கீரர் பார்ப்பாரேயாயினும், நடுவுநிலைமையும் வாய்மை யும் தமிழ்ப்பற்றும் உடையவராதலின், ஆரியவொழுக்கத்தை அறவே விட்டுவிட்டுத் தமிழவொழுக்கத்தை மேற்கொண்டார். தமிழின் தொன்முது பழமையையும், அதற்கு இடையிடை நேர்ந்த பல பெருந் தீங்குகளையும் நோக்குமிடத்து, நச்சினார்க்கினியர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரியார்) போன்ற ஆரியப் பார்ப் பனர் இல்லாதிருந்திருப்பின், தமிழ் மிகக் கெட்டுப் போயிருக்கும். (2) திருவள்ளுவர் அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் , (குறள். 30) எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு , (குறள். 110) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், (குறள். 133) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் , (குறள். 134) அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று , (குறள். 259) ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவின் இளிவந்த தில்* (குறள். 1066) முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பனவாகும். 26 இங்குக் கூறிய குயவன் அபார்ப்பனனேனும், வடமொழி தென்மொழிப்போர் பார்ப்பனராலேயே உண்டானதாதலாலும், இக்காலத்திற்போன்றே அக்காலத்தும் இவ்விரு மொழிக்கும் இகல் இருந்ததென்று தெரிவித்தற்கும், இச் செய்தி இங்குக் கூறப்பட்டது. (3) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே (புறம். 183) இது ஆரியக் கொள்கைக்கு மாறாகும். (4) கம்பர் கம்பர் ஒருமுறை வறுமையுற்றிருந்தபோது, பசியால் வாடி, ஒரு செட்டி கடைக்குச் சென்று அவல் கேட்டார். அவன் போணியாகவில்லையென்று சொல்லிவிட்டான். பின்பு, செக்காட்டிக்கொண்டிருக்கும் ஒரு செக்கானிடம் சென்று, பிண்ணாக்குக் கேட்டார். அவன் இன்னும் எண்ணெயெடுக்க வில்லை என்று சொல்லிவிட்டான். அதன்பின், ஒரு பார்ப்பான் வீட்டிற்குச் சென்று உணவு கேட்க, அவன் சூத்திரனுக்குச் சோறிட்டால் குற்றம், போ என்று சொல்லிவிட்டான். பின்பு, கம்பர் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு உழுதுகொண்டிருந்த ஓர் உழவன், கம்பர் சோர்வைக் கண்டு, தான் வைத்திருந்த கூழை அவருக்கு வார்த்து, அவர் பசியைப் போக்கினான். அப்போது கம்பர், செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும் பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும் காப்பாரே வேளாளர் காண் என்று பாடினார். கீழ்வரும் கம்ப ராமாயணச் செய்யுளால், பார்ப்பனர் பேரவாவுடையவர் என்று கம்பர் கருதினதாக அறியலாம். பரித்த செல்வ மொழியப் படருநாள் அருத்த வேதியர்க் கான்குல மீந்தவர் கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள் (சுந்தர காண்டம், காட்சிப்படலம். 26) பார்ப்பனப் பேரவாவைப்பற்றிப் பஞ்சதந்திரக் கதை யிலும் ஒரு செய்தியுளது. நட்புப்பேறு (சுகிர்லாபம்) என்னும் வலக்காரத்தைப்பற்றிய கதைகளுள், புலியும் பிராமணனும் என்பது ஒன்று. பிராமணன் புலியின் பொற்காப்பிற்கு அவாக்கொண்டு, அதனிடம் சென்றான்; தான் அதனால் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தபோது, நம்முடைய சாதிக்கு இயல்பாயிருக்கிற பேராசையினால், இந்தத் துஷ்டனிடத்தில் விசுவாசம் வைத்து மோசம் போனேன் என்று சொல்லி வருந்தினதாக அதிற் கூறப்பட்டுள்ளது. சீவகசிந்தாமணியின் 400ஆம் செய்யுளில், அந்தணர் தொழிலே னானேன் என்று அந்தணர்க்குச் சால்வு (திருப்தி) தொழிலாகக் கூறியது முனிவரை நோக்கியென்க. (5) ஔவையார் சோழன் ஒருமுறை ஔவையாரை நோக்கி எக்குலத்தானை அமைச்சனாகக் கொள்ளலாம் என்று வினவ, அவர், நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு என்று கூறினதாகத் தனிப்பாடற் றிரட்டில் உள்ளது. காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடு ஊர்கெட நூலைவிடு... என்பது பழமொழி. சாதி யிரண் டொழிய வேறில்லை...... இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்... என்ற நல்வழி வெண்பாவும் ஆரியக்குல முறையை மறுத்ததாகக் கொள்ளலாம். (6) அதிவீரராம பாண்டியன் எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார் (7) சித்தர் சிவவாக்கியர் மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபோத மாயுருத் தரிக்குமாறு போலவே வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே பத்திரகிரியார் சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம். அகஸ்தியர் தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே தாயான பூரணத்தை யறிந்த பின்பு தேனென்ற வமுதமதைப் பானஞ் செய்து தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார் ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கு ஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும் நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும் நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே. பாம்பாட்டிச் சித்தர் சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம் இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதும், பார்ப்பனர் ஆரியரே என்பதும், வெள்ளிடைமலை யாதல் காண்க. பார்ப்பனர் - அபார்ப்பனர் என்று பிரித்து, ஒரு மன்பதை மற்றொரு மன்பதையை வெறுப்பது விலங்குத் தன்மையே. ஆனால், இவ் வெறுப்பை நீக்குவதற்கு, அவ் விரண்டையும் இசைக்கும் வழிகளைக் கையாளவேண்டுமேயன்றி, ஆரியரும் திராவிடரும் ஒரு குலத்தாரென்பதும், பார்ப்பனர் தமிழரே யென்பதும், தமிழ் வடமொழியினின்றும் வந்தது என்பதும் தவறாகும். இதனால், குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology), சரித்திரம் (History) என்ற முக்கலைகளும் கெடுவதாகும். ஜெர்மனியில், ஹிட்லர் யூதரைத் துரத்துவது கொடிதே. ஆனால், அவ் யூதரைக் காப்பதற்குரிய வழிகளைத் தேடாமல், யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்ஙனம் பொருந்தும்? பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழக் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன: (1) ஆரிய மனப்பான்மை ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (Grammar), மரபு (Idiom) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டு களாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழக் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை. பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோ ரின் நாடாகவும், வடமொழியையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப்போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரையும் எவ்வளவோ பிரித்துக்காட்டும். நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற fiy(Science)iaí§ குறித்ததாகும். இப்போது, அது புத்தகத்திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவதில்லை. நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது. (2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்குப் பொதுமக்கட்கும், நூல்வழக்குப் புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத்தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும். பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமையால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர். (3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும் வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப்ப தாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம். ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு, `யூநிவர்சிட்டி (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப்பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியாதல் காண்க. (4) வடமொழியைத் தென்மொழிக்கு அளவையாகக் கொள்ளல் தமிழ்நூல்களுக்கு வடநூல்களை மேல்வரிச் சட்டமாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தழுவியே பொருளுரைத்து வருகின்றனர் பார்ப்பனர். தமிழ் முதனூல்கள் வடமொழி முதனூல்களினின்றும் கருத்தில் வேறுபட்டதுமன்றி, அவற்றுக்கு மிக முந்தியவுமாகும் என்பதை அவர் அறிந்திலர். பரிமேலழகர், தென்புலத்தாரைப் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி என்றார். தென்புலத்தார் (பிதிர்க்கள்) தத்தம் காலத்தில் உலகில் வாழ்ந்து இறந்துபோனவரா யிருக்க, அவரைப் படைப்புக் காலத்துப் படைக்கப்பட்டவர் என்று கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்? இதன் பிழைபாடும், இன்னோரன்ன பிறவும் பின்னர்க் காட்டப்படும். வடநூலைப் பின்பற்றிச் சேனாவரையர், சிவஞானமுனிவர், சங்கர நமச்சியவாயப் புலவர், சுவாமிநாத தேசிகர் முதலிய தனித்தமிழருங்கூடப் பல இலக்கணங்களில் தவறிவிட்டனர். இவற்றையெல்லாம் எனது தொல்காப்பிய வுரையிற் கண்டு கொள்க. திருவையாற்றுக் கீழைக் கலைக்கல்லூரித் தலைவராகிய, பண்டாரகர் சுப்பிரமணிய சாத்திரியார், சில ஆண்டுகளாகத் தமிழுக்கு மாறான சில நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டு வருகின்றார். அவற்றுள், தமிழ்மொழி நூல் என்பது ஒன்று. அதில், ஆராய் என்னுஞ் சொல்லில் ர் செருகல் (intrusion) என்று கூறியுள்ளார். ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive). ஆர (நிரம்ப) + ஆய் = ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க. இன்னும், தொல்காப்பிய நூன்மரபில், லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும் (24) ணனஃகான் முன்னர்க் க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய (26) ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே (27) மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் (28) என்னும் நூற்பாக்களைப் பிறழவுணர்ந்து பண்டைத் தமிழ்ச் சொற்களினிடையில், ல்ய, ல்வ, ள்ய, ள்வ, ண்ய, ண்வ, ன்ய, ன்வ, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம்வ என்னும் இணைமெய்கள் பயின்றதாகக் கூறியுள்ளார். இவர் இங்ஙனம் துணிவதற்குக் காரணமென்ன வெனின், நச்சினார்க்கினியர், மேற்கூறிய நூற்பாக்களுள், முதலதற்கு, எ-டு: கொல்யானை, வெள்யாறு. இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும், நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின், `மருவின் பாத்திய என்று கூறுவாராதலின், இவ் வாசிரியர் இவற்றை ஒருமொழியாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும், வினைத் தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக்கொண்டு, உதாரணங் காட்டுதும் என்று கூறினவர், பின்பு, அன்றி இவ் வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து, வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணுமன்றி, ஒருமொழிக் கண்ணே மயங்குவனவு முளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற்போதலே நன்றென்று கூறலுமொன்று என்றும்; மூன்றாவதற்கு, இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன. இனி உரையாசிரியர் உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரண மாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி, அதன்கண், `மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் (எழு. 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் `உகரமொடு புணரும் புள்ளி யிறுதி (எழு. 163) என்றும், பிறாண்டும், ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர் ஆதலின், ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னும் குற்றமாம். அதனால், அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க என்றும்; நாலாவதற்கு, இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், `வகாரமிசையு மகாரங் குறுகும் (எழு. 330) என்ற விதி வேண்டாவாம் என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம் நச்சினார்க்கினியர் தொகைச் சொல்லை (compound word) ஒரு சொல்லாகக் கொள்ளாமையும், கூறியது கூறலுக்கும் வழிமொழிதலுக்கும் வேறுபாடறியாமையுமே யாகும். எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய (எச்ச. 24) என்றார் தொல்காப்பியர். தண்ணீர், புன்செய், மண்கொண்டான், பிழைபொறுத் தான் முதலிய தொகைப்பெயர்கள் எல்லாம் ஒருசொல் நடைய வதால் காண்க. நெஸ்பீல்டு (Nesfield) என்பவர், தம் ஆங்கில இலக்கணப் புத்தகத்தில், ஒருசொல் தன்மையடையும்படி இருசொல் புணர்ந்தது தொகைச்சொல் என்றுகூறி ink-pot (மைக்கூடு), door-step (படிக்கட்டு), horse-shoe (குதிரைக் குளம்பாணி), drinking-water (குடிநீர்) என்று உதாரணங் காட்டினர்.27 இனி, நச்சினார்க்கினியர் கொள்கைப்படி கொள்ளின்; கூறியது கூறலாகத் தொல்காப்பியத்தில் எத்தனையோ நூற்பாக்க ளிருக்கின்றன. புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் என்று நூன்மரபிற் கூறியதை, யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது எனக் குற்றியலுகரப் புணரியலுள்ளும், மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று நூன்மரபிற் கூறியதை, மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் என்று புணரியலுள்ளும், 27 4ஆம் புத்தகம், ப. 353 உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே என்று புணரியலிற் கூறியதை, உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்று கிளவியாக்கத்துள்ளும், இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான என்று மொழிமரபிற் கூறியதை, வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே என்று குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறியிருப்பதைக் காண்க. நச்சினார்க்கினியர் எவ்வளவோ தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடையவராயிருந்தும், இங்குத் தவறிவிட்டது தமிழியல்பை அறியாததினாலேயே. இனி, சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்றும், தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்பு என்றும் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றுள், சொல்லதிகாரக் குறிப்பு மன்னார்குடிச் சோமசுந்தரம்பிள்ளை யவர்களால் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. ஆயினும், அதைப் பல்கலைக்கழகத்தாரேனும் பண்டிதர்களேனும் சிறிதும் கவனித்தாரில்லை. இதை நினைக்கும்போது குட்டுதற்கோ என்ற செய்யுளே நினைவிற்கு வருகின்றது. இனி, எழுத்ததிகாரக் குறிப்பில், தொல்காப்பியர் வடமொழிப் பிராதிசாக்கியங்களைப் பின்பற்றித் தொல்காப்பியத்திற் பிறப்பியலை வரைந்ததாகக் கூறியுள்ளார். எல்லா மொழிகட்கும் பல எழுத்துகள் பொதுவா யிருக்கின்றன. அவ் வெழுத்துகளெல்லாம் யார் ஒலித்தாலும், அததற்குரிய ஒரேயிடத்தில்தான் பிறக்கும். ஆங்கில இலக்கணிகள், இந்திய இலக்கணிகளைப்போல நூற்பா வடிவாக எழுதாவிடினும், உரைநடையில், எழுத்துகளின் வகைகளையும் அவற்றின் பிறப்பியல்புகளையும் நுட்பமாக வும், விரிவாகவும் எழுதித்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தொண்டையின (Gutturals), அண்ணத்தின (Palatals), பல்லின (Dentals), உதட்டின (Labials) என்றவற்றையே, தமிழ் இலக்கணிகள் பின்பற்றிப் பிறப்பியல் வகுத்தார்கள் என்பது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே வடமொழி வழிகாட்டுவதும் பொருந்துவதாகும். தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயறப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவரா யிருந்தததினாலும், எழுத்தாணியால் ஓலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்துவிடுமாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ்செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக்காலத்திற் கேற்றபடி மிக விரிவாக இலக்கணம் எழுதப்படவில்லை. வட மொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவா யுள்ளது. ஆங்கில விலக்கணம் வடமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாக வுள்ளது. தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார், அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வடமொழி யிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாததென்று கூறுகின்றனர். ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப் பட்டதாயிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும். உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம். (1) அசையழுத்தம் (Accent) அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர். எடுப்பு (Acute), படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளன வென்று நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ் விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை. தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலிலிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க. செம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக்கும்போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும்போது, பதின் என்னும் இடையசையும் அழுத்தம் பெறும். வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின் படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும். சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும். உப்ப கார மொன்றென மொழிப இருவயின் நிலையும் பொருட்டா கும்மே (மொழி. 43) என்றார் தொல்காப்பியர். இதன் உரையில், தபு என்னுஞ்சொல், படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம் என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க. ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப்போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவ துண்டு. எ-டு: படு-பாடு, உண்-ஊண். இங்ஙனமே conduct’ என்னும் ஆங்கில வினையும், con’duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசை யழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது con’voy என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க. தமிழிலும், செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க. இதை, ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் பையச் சென்றால் வையந் தாங்கும் என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக. (2) காலப்பிரிவு ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங் களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க. நிகழ்காலம் (Present Tense) 1. அவன் வருகிறான் - செந்நிலை (Indefinite). 2. அவன் வந்துகொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous). 3. அவன் வந்திருக்கிறான் - நிறைவு (Perfect). 4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் - நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous). இங்ஙனங் fyit¡fhy§(Compound Tense)fis ஒரு வினையாகக் கொள்ளாவிடின், குறைவு நேர்தல் காண்க. (3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood) நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun-equivalent) யாய் எழுவாயாதல் கூடும். எ-டு: எனக்குப் பாடத்தெரியும். இதில், பாட என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க. இவ் வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது. எல்லா மொழிகட்கும் பல நெறிமுறைகள் ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும், அவற்றுள் ஒவ்வொன்றை, அல்லது சிற்சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னும் கண்டு பிடியாதனவும் உள. ஒரு மொழியிற் கண்டுபிடித்திருப்பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமு மாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந் நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில ‘t’ போல, வன்மையாய் ஒன்றியொலிக்கு மேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள ‘nd’ என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று ற்ற, ன்ற என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரி களாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ் வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கிறிதவர்களுங்கூட, ஆங்கில வழியாய் கற்றதினால் அத் தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்து களோடும் ஒப்பிட்டுக் கூறுவதால் அறியலாம். தமிழிலுள்ள வல்லின மெய்கள் தமிழுக்கு வல்லினமாயினும், வடமொழி வல்லினத்துடன் ஒப்புநோக்க, சற்று மெல்லியவே யாகும். வடமொழிக் க ச ட த ப க்கள் தமிழ்க் க ச ட த ப க்களின் இரட்டிப் பாதலை ஒலித்துக் காண்க. தமிழ் வாழ்த்து (பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா) தரவு 1 நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே 2 பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே. (வதனம் - முகம், தரித்த - அணிந்த, திலகம் - பொட்டு, வாசனை - மணம், உதரம் - வயிறு). 1 மொழிநூல் 1. மொழி மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடுதற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி. 2. மொழிவகை உலக மொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத்தில் (Atlas) குறிக்கின்றார். மாக்ஸ் முல்லர் (Max Muller) அவை தொள்ளாயிரத்திற்குக் குறையா என்கிறார்.1 ஏறத்தாழ ஆயிரம் எனினும் தவறாகாது. மொழிகளையெல்லாம், பலப்பல முறையில், பலப்பல வகையாக வகுக்கலாம். அவ் வகைகளாவன: (1) அசைநிலை (Monosyllabic or Isolating), புணர்நிலை (Compounding), பகுசொன்னிலை (Inflectional or Polysyllabic), தொகுநிலை (Synthetic), பல்தொகுநிலை (Polysynthetic) அல்லது கொளுவுநிலை (Agglutinative), பிரிநிலை (Analytical) என்று அறு வகையாக வகுப்பது ஒரு முறை. அவற்றுள், அசைநிலையாவது, சொற்களெல்லாம் ஓரசையாக நிற்பது. காட்டு: வள், செல், வா, போ, தமிழ், மொழி. சீனமொழி அசைநிலைக்குச் சிறந்ததாகும். புணர்நிலையாவது, இரு தனிச்சொற்கள் புணர்ந்து நிற்பது. கா: தமிழ்மொழி, மருமகன். 1 Lectures on the Science of Language, Vol. I, p. 27. துரேனிய மொழிகளிற் Ódbkhʪjit2 òz® நிலைக்குச் சிறந்தவையாய்ச் சொல்லப்படும். பகுசொன்னிலையாவது, புணர்நிலைச் சொற்களில் ஒன்று குறுகித் தனித்தன்மையிழந்து, சொல்லுறுப்பாய் நிற்பது. கா: மருமான், வில்லவன் (வில் + அவன்), வில்லான். பகுசொன்னிலைக்கு ஆரியமொழிகள் சிறந்தனவாகக் கூறப்படும். தொகுநிலையாவது, புணர்நிலைச்சொற்களின் இடையில், எழுத்துகளும் அசைகளும் தொக்குநிற்பது. கா: ஆதன் + தந்தை = ஆந்தை; பெரு + மகன் (பெருமான்) - பிரான், அல்லது பெம்மான். பல்தொகுநிலையாவது, பன்மொழித் தொடரினிடையே பல அசைகள் அல்லது சொற்கள் தொக்கு நிற்பது. கா: நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்), சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தன வாகக் கூறப்படும். மெக்சிக (Mexican) மொழியில், ‘achichillacachocan’ என்னும் பல்தொகுநிலைத்தொடர், நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம் என்று பொருள்படுவதாம். (alt-Ú®, chichiltic-átªj, tlacatl-khªj‹, chorea-mG)3 பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது. கா: வந்தேன்-வந்து (மலையாளம்); brekan (O.E.) - break (Infinitive). (2) மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை. 2. பின்னியம் (Finnish), ஹங்கேரியம் (Hungarian), துருக்கியம் (Turkish), தமிழ் முதலியன. 3. Historical Outlines of English Accidence, p. 2. திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளைமொழியும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியுமாகும். நீலமலையிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத்தின் கிளைமொழி. (3) இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க. (4) இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின்ஸ் கண்காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி (‘A Real Character and a Philosophical Language’) செயற்கை மொழிக்குக் fh£lhF«4 காங்கிரஸ் தலைவர்கள் உருதுவிற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துஸ்தானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும். (5) தனிமொழி (Independent Language), சார்மொழி (Dependent Language), கலவைமொழி (Composite or Mixed Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை. இவை மூன்றுக்கும், முறையே, தமிழையும் பிற திராவிட மொழிகளையும், ஆங்கிலத்தையும் காட்டாகக் கூறலாம். (6) முதுமொழி (Ancient Language), புதுமொழி (New Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழும் இந்தியும் காட்டாகும். (7) இலக்கியமொழி (Classical Language), வறுமொழி (Poor Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் குடகையும் காட்டாகக் கூறலாம். 4 L.S.L. Vol. II, p.p. 50-63. (8) செம்மொழி அல்லது திருந்தியமொழி (Cultivated Language), புன்மொழி அல்லது திருந்தாமொழி (Uncultivated Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. திராவிடக் குடும்பத்தில், தமிழ், தெலுங்கு முதலியவை செம்மொழிகள்; துடா, கோட்டா முதலியவை புன்மொழிகள். (9) அலைமொழி (Nomad Language), நிலைமொழி (State Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை. அலைந்து திரியும் மக்கள் பேசுவது அலைமொழி; ஓரிடத்தில் நிலைத்த மக்கள் பேசுவது நிலைமொழி. (10) தாய்மொழி (Mother Tongue), அயன்மொழி (Foreign Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. (11) வழங்குமொழி (Living Language), வழங்காமொழி (Dead Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்கு, முறையே, தமிழையும் வடமொழியையும் காட்டாகக் கொள்க. ஒரு பெருமொழியில் பல tH¡FfŸ(Dialect) உண்டு. அவற்றை மொழிவழக்கெனலாம். அவை, இடவழக்கு (Local Dialect), திசைவழக்கு (Provincial Dialect), குலவழக்கு (Class Dialect), திணைவழக்கு (Regional Dialect) என நால்வகைப்படும். ஒரு மொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, ïil¡fhy(Middle) வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந்நிலைகளை யடைந்திருக்கும். ஒரு மொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்குகளை யுடையதாயிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள்பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப்படும் (கா: உயர்ஜெர்மன் - High German, தாழ் ஜெர்மன் - Low German). தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும். ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Colloquial Dialect) என்றும் கூறப்படும். 3. மொழிக்குலம் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும்பற்றி, துரேனியம் (Turanian), ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குலமும் பல FL«g§(family)fis¡ கொண் டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது. தமிழ் துரேனியக் குலத்தில் 5திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத்திற்கு இந்தோ-ஐரோப்பியம் (Indo-European), அல்லது இந்தோ-ஜெர்மானியம் (Indo-Germanic) என்றும் பிற பெயர்களு முண்டு. மொழிப் பகுப்புமுறை - Classification of Languages மொழிப் பகுப்புமுறை, (1) வடிவுமாறியல் (Morphological), (2) மரபுவரிசையியல் (Historical or Geneological) என்ற இருமுறை பற்றியது. இவற்றுள், முன்னையது மொழிகளை அசைநிறை முதலிய அறுவகை நிலையாகப் பகுப்பது; பின்னையது, nt®¢brh‰(root)fË‹ உறவும், இலக்கண வொற்றுமையும் பற்றிப் பகுப்பது. இவ் விரண்டும் முன்னர்க் கூறப்பட்டன. மாக்கசு முல்லர், அசைநிலையை வேர்நிலை (Radical Stage) என்றும், பகுசொன்னிலையை ஈற்றுநிலை (Terminational Stage), இருதலைச் சிதைநிலை (Inflectional Stage) என்றும் இரண்டாகப் பகுத்தும் கூறுவர். பகுசொன்னிலையும் ஈற்றுநிலையும் ஒன்றே. இருதலைச் சிதைநிலையாவது, வருமொழிபோன்றே நிலைமொழியும் சிதைதல். கா: பெருமகன் - பெம்மான். மொழிநூல் மொழிநூலாவது சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலியனபற்றிப் பல மொழிகட்கிடையி லுள்ள தொடர்பை ஆராயுங் கலை. 5 திராவிடக் குடும்பம், ஒரு சிறு குழுவாயிருந்தாலும் முக்குலத்தினின்றும் வேறாகத் தனித்துக் கூறப்படற்குரியதென்பது பின்னர்க் காட்டப்படும். மொழி நூல் முதலாவது கிரேக்கு, இலத்தீன் என்னும் மொழிகளைக் கற்குங் கல்வியாக, 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் தோன்றிற்று. பின்பு, ஆங்கிலேயரும் விடையூழி யரும் (Missionaries) இந்தியாவிற்கு வந்து, சமஸ்கிருதத்திற்கும் கிரேக்க லத்தீன் மொழிகட்குமுள்ள நெருக்கத்தைக் கண்டு பிடித்தபின், ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப்பற்றிச் சிறப்பாராய்ச்சி எழுந்தது. ஆரிய மொழிகளை யாராய்ந்தவர் களுள் கிரிம் (Grimm), வெர்ணெர் (Verner) என்ற இருவர் தலை சிறந்தவர். உலகத்தின் பல இடங்களுக்குச் சென்ற விடையூழியரும் வழிப்போக்கரும் அவ்வவ்விடத்து மொழிகளைக் கற்று, மேலை மொழிகளில் அவற்றின் இலக்கணங்களை வரைந்து வெளி யிட்டதுமன்றி, இனமொழிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பல குடும்பங்களாகவும் வகுத்துக்காட்டினர். ஒப்பியன் மொழி நூற்கலையே விடையூழியராலும் வழிப்போக்கராலும்தான் உருவாயிற்று என்று கூறினும் மிகையாகாது. பிறகலை யாராய்ச்சி யாளரும் மொழிநூலுக்கு உதவியிருக்கின்றனர். பல நாட்டு மொழிகள் மேனாட்டு மொழிகளில் வரையப் பட்ட பின், மாக்கசு முல்லர் என்ற மாபெரும் புலவர், சென்ற நூற்றாண்டில், தம் வாழ்நாளையெல்லாம் மொழிநூற் கல்விக்கே ஒப்புக்கொடுத்து, உலக மொழிகளிற் பெரும்பாலனவற்றை ஆராய்ந்து, தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஒப்பியன் மொழி நூலை உருவாக்கினார். மாக்கசு முல்லர் திராவிட மொழிகளைச் சரியாய் ஆராயாத தாலும், அவற்றை வடமொழியின் கிளைகள் என்று தவறாக எண்ணியதாலும் , திராவிடத்தின் உண்மையான இயல்புகளைக் கூறமுடியவில்லை. திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பல சொற்கள் தென்சொற்களேயென்றும், வடமொழி யில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் (Caldwell) கண்காணியரே. திராவிட மொழிகள் மொத்தம் பன்னிரண்டென்பதும். அவற்றுள் ஆறு திருந்தினவும், ஆறு திருந்தாதனவுமாகும் என்பதும், பெலுச்சித்தானத்திலுள்ள பிராஹுயீ திராவிட மொழியேயென்பதும், இவருடைய கண்டு பிடிப்புகளே. திராவிடம் வடமொழிச் சார்பற்றது, வடமொழியில் பல திராவிடச் சொற்களுள்ளன என்னுங் கொள்கைகளில், இவருடன் ஒன்றுபட்டவர், இவர் தமிழைச் சிறப்பா யாராய்ந்ததுபோன்றே மலையாள மொழியைச் சிறப்பாயா ராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Gundert) ஆவர். இவ் விருவர்க்கும் திராவிட வுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதேயெனினும் பொருந்தும். கால்டுவெல், மாக்கசு முல்லர் என்ற இருவர் ஆராய்ச்சிகளே இந் நூலுக்கு முதற்காரணமாகும். bkhÊü‰fiy¡F M§»y¤âš KjÈÈUªJ tH§» tU« bga®fŸ ‘Philology’ (Gk.-L. philos, desire; logos, discourse), ‘Glottology’ (Gk.L Glotta, tongue; logos, discourse) என்பன. இவற்றுள் முன்னையதே பெருவழக்கு. ஆனால், மாக்கசு முல்லர் ‘Science of Language’ என்று தாம் இட்ட பெயரையே சிறப்பாகக் கொண்டனர். மொழிநூலுக்கு ஆங்கிலத்தில் Linguistics, Linguistic Science என்றும் பெயருண்டு. ‘Philology’ என்னும் பெயர் விரும்பிக் கற்கப்படுவது என்னும் பொருளது. கிரேக்கும் லத்தீனும், மேனாட்டாரால் இலக்கிய மொழிகளென விரும்பிக் கற்கப்பட்டதினால், இப் பெயர் தோன்றிற்று. தமிழில், முதன்முதல் தோன்றிய மொழிநூற் பனுவல், மாகறல் கார்த்திகேய முதலியார் 1913ஆம் ஆண்டு வெளியிட்ட மொழிநூல் ஆகும். மொழிநூல் என்னும் குறியீடும் அவரதே. அதன் பின்னது டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதி 1936-ல் வெளியிட்ட தமிழ் மொழிநூல் ஆகும். அதன்பின்னது, கலைத்திறவோரும் (M.A.) சட்டத் திறவோரு (M.L.)khd கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1939ஆம் ஆண்டில் வெளிவந்த மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும், என்பதாகும். மொழிநூல் நிலை உலகில் ஒவ்வொரு கலையும், (1) ஆய்வுநிலை (Empirical Stage), (2) பாகுபாட்டுநிலை (Classificatory Stage), (3) கொண்முடிபுநிலை (Theoretical Stage) என முந்நிலைப்படும். அங்ஙனமே மொழிநூற்கலையும். மொழி நூற்கலையில் ஆய்வுநிலையாவது, மொழிகளைத் தனித்தனி ஆராய்தல்; பாகுபாட்டுநிலையாவது, தனித்தனி ஆராய்ந்த மொழிகளைச் சொற்களிலும் இலக்கணத்திலும் உள்ள ஒப்புமை பற்றி, பல குடும்பங்களாகவும் அக் குடும்பங்களைப் பல குலங்களாகவும் வகுத்தல்; கொண்முடிபு நிலையாவது, ஒரு குடும்ப மொழிகட்குள்ளும், பல குடும்பங்கட்குள்ளும், பல குலங்கட் குள்ளும் உள்ள தொடர்பையும், அவற்றின் நிலைகளையும், ஒலிநூல் (Phonology), உளநூல் (Psychology) முதலிய கலைகளையும் துணைக்கொண்டு, எல்லா மொழிகட்கும் பொதுவும் அடிப்படை யுமான ஒரு மூலமொழியைக் கண்டுபிடித்தற்கான விதிகளை யறிந்து, அதைக் கண்டுபிடித்தல். இக் கொண்முடிபு நிலையும் (1) ஆராய்ச்சி, (2) முடிவு என இருநிலைப்படும். உலகில், மொழிநூற்கலை முதலிரு நிலைகளையுங் கடந்து, இதுபோது மூன்றாம் நிலையில் ஆராய்ச்சிநிலைமையிலுள்ளது. 4. மொழிநூல் நெறிமுறைகள் - Principles of Comparative Philology மொழிநூலானது, ஒரு சிறந்த தனிக் கலையானாலும், அதன் நெறிமுறை யறியாத சிலருடைய வழூஉக் கூற்றுகளால், பொதுவாய் மிகவும் பழிக்கப்படுகின்றது. மொழி நூல் நெறிமுறைகளாவன 1. மொழிநூல் ஒரு தனிக்கலை பலர் மொழிநூல் ஒரு தனிக்கலை யென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரேனும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லாதிருப்பின் இழிவென்றெண்ணி, பொருந்தப் புளுகல் என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லிவிடுகின்றனர். பாண்டித்தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர். காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சிராப் பள்ளியில் ஒருமுறை வடை என்னும் தின்பண்டப் பெயர், வடு என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத்தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும் கூறியுள்ளனர். வடை என்பது வள் என்னும் வேரினின்று பிறந்ததென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென்பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும்படி துளையிடுவ தென்பதையும், துளையினால் சுவையாவது மணமாவது கெடா தென்பதையும் அவர் அறிந்திலர். ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை - பெடை; வள்+தை = வட்டை - வடை. பெள் = விரும்பு, வள் = வளை. 2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது அட்டையாடல் என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங்கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. m£l mšyJ m£bl = K©l« (bj.,க.)6 அம்பு (வளையல்), அம்பி (படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன. amphi = round; amphitheatre என்னும் தொகைச்சொல்லை நோக்குக. 3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது மொழிநூல், கணிதத்தைப்போலப் பிறகலை சாராத கலை யன்று. மொழிநூலின் ஒவ்வொரு கூற்றும், அவ்வக் கலைக்குப் பொருந்தியதாயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலுள்ள teak என்னுஞ் சொல், தேக்கு என்னும் தமிழ்ச்சொல்லே யென்பதற்குத் திணைநூல் (Geography) சான்றாகும். இந்தியாவில், விந்திய மலைக்கு வடக்கே தேக்கு வளர்வதில்லை என்று, ராகொஸின் (Ragozin) தமது வேதகால இந்தியா (Vedic India) என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார். எழுத்தொலிகளை ஒலிப்பதில் வயிறு, நுரையீரல், மூச்சுக் குழாய், தொண்டை, நா, அண்ணம், பல், உதடு, மூக்கு ஆகிய பலவுறுப்புகள் தொடர்புறுவதால், clšüY«(Physiology); உள்ளக்கருத்துகளின் வெளிப்பாடே மொழியாதலின், உளநூலும் (Psychology); 6 வேங்கடராஜுலு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்). மொழிகளைப் பேசும் மக்களின் இடமாற்றத்தையும் நாகரிக வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியதால், சரித்திரமும் (History); தட்பவெப்ப நிலைக்கும் அவ்வந் நாட்டுப் பொருள்கட்கும் தக்கபடி, ஒலியும் சொல்லும் மாறுபடுவதால், திணைநூலும் (Geography); நாகரிக மக்களின் மொழிகள், மதவியலைப் பெரிதுந் தழுவியிருப்பதால், மதநூல் (Theology), பழமை நூல் (Mythology), பட்டாங்கு நூல் (Philosophy) முதலிய கலைகளும்; இன்னும், சுருங்கக் கூறின் பல கலைகளும் மொழிநூற் பயிற்சிக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். 4. மொழிகளெல்லாம் ஓரளவில் தொடர்புடையன: சில சொற்களும், அவற்றையாளும் நெறிமுறைகளும், பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றன. கா : தமிழ் - மன், E. - man, A.S. - mann, Skt. - மநு. தமிழ் - தா, L. - do, Skt. - da.; தமிழ் - நாவாய், L. - navis, Skt. - நௌ. தனிக்குறிலையடுத்த மெய் உயிர்வரின் இரட்டுவது பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றது. கா : தமிழ் - மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு. ஆங்கிலம் - thin + er = thinner, sit + ing = sitting. 5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமையிருக்கும். 6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன்வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராய வேண்டும். சிலர், தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளனவும், ஆரியக் கலப்பு மிக்குள்ள னவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதியுள்ள கேரளபாணினீயம், கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம் போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக்கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழிநூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய மனவிரிவை யடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரிஸ் (Morris), ஆங்க (Angus), ஸ்கீற்று (Skeat), ஸ்வீற்று (Sweet), உவிட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங்களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிஞரும் பெரும் புலவருமான வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத் திலக்கணங்களையும் பின்பற்றியதால் தாம் எழுதியுள்ள இலக்கணக் கட்டுரைகள், திராவிட மொழியின் மூவிடப் பெயர் என்னும் இலக்கணங்களுள், சில சோர்வுபட்டுள்ளார். அவையாவன: (1) தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றேயென்பது. தொல்காப்பியத்தில், மொழிமரபில், உச்ச காரம் இருமொழிக் குரித்தே உப்ப காரம் ஒன்றென மொழிப (41, 42) என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றியலுகர வீற்றையன்று. குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பனபோன்ற சொற்களி னிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற்களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்கால வியல்பு நோக்கி)க் குற்றிய லுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ, து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றியலுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. உகரம், குற்றுகரம், குற்றியலுகரம் என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்னவற்றில் குறு, குற்றியல் என்னும் அடைமொழிகளால், குறுகிய உகரம் பொருளளவில் குறிக்கப்படுகின்றதேயன்றி ஒலியளவிலன்று. ஆகவே உச்சகாரம் உப்பகாரம் என்பவை முற்றியலுகரத்தைக் குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம். மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகர வீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன. சுக்கு, குச்சு, பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றியலுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர். பு, து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற் பெயர்களும், து, சு என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த பிறவினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே, உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும் (36) என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு உச்சகாரம்.... உரித்தே என்றும், உப்பகாரம்.... மொழிப... என்றும் முற்றுகரத்தை விதந்தோதினார் தொல்காப்பியர். (2) தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது. தொல்காப்பியப் புணரியலில், மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (2) குற்றிய லுகரமும் அற்றென மொழிப (3) என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறிய தால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல் காப்பியர் என்றார் ரெட்டியார். குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக் காலத்தி லிருந்ததென்பது பெறப்படுமேயன்றி, ஆசிரியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது பெறப் படாது. பண்டைத் தமிழர் நுண்ணிய செவிப்புலன் வாய்ந்திருந்த மையின், குற்றுகரம் முற்றுகரத்தினும் குறுகினதென்பதைக் காட்டும்பொருட்டுப் புள்ளியிட்டெழுதினர். குற்றுகரத்தின்மேல் அரைமதி (அல்லது குறும்பிறை) வைத்தெழுதுவது இன்றும் தென்மலையாள நாட்டில் உள்ளது என்று ரெட்டியாரே கூறுகின்றார். மலையாள நாட்டில், இற்றைத் தமிழ்நாட்டிலில்லாத பல பண்டைத் தமிழ் வழக்கங்கள் உள்ளன என்பது பின்னர்க் காட்டப்படும். தொல்காப்பியர் காலத்தில், குற்றியலுகரத்தைப் புள்ளியிட் டெழுதினாராயின், அவ் வழக்கம் ஏன் பிற்காலத்திலில்லை என்று கேட்கலாம். அதற்கு விடை கூறுகின்றேன். தொல்காப்பியர் காலத்தில், எகர ஒகர உயிர்களையும் அவையேறின மெய்களையும், மேற்புள்ளியிட்டுக் காட்டுவது வழக்கமாயிருந்ததென்பது, நூன்மரபிலுள்ள, மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (16) என்னும் நூற்பாக்களான் அறியலாம். ஏகார ஓகாரங்களும், அவையேறின மெய்களும், புள்ளி பெறாமையாலேயே, தத்தம் குறில்களினின்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இவ் வழக்கம் அற்றுப்போய்விட்ட தென்பது, தமிழில் எகர ஒகர உயிரேறின மெய்களும், ஏகார ஓகார உயிரேறின மெய்களும், வேறுபாடின்றி யெழுதப்பட்ட மையால், பின்னவற்றை வேறுபடுத்திக் காட்டற்கு வீரமா முனிவர் கொம்புகளை மேற்சுழித்தெழுதினதாகக் கொடுந்தமிழ் இலக்கணத்திற் கூறியிருப்பதால் அறியப்படும். இங்ஙனமே குற்றுகரப்புள்ளியும் வழக்கு வீழ்ந்ததெனக் கொள்க. தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி (எழுத்து. 43) என்னும் நன்னூல் நூற்பாவின் உரையில், ஆண்டு என்ற மிகையானே.... குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளர் எனக்கொள்க என்று கூறியிருத்தலின், அவ் வழக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்தான் வீழ்ந்ததென அறியலாம். தமிழ்நாட்டிற் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கல்விக் களம் பார்ப்பனர் கைப்பட்டுவிட்டதினாலும், தமிழ் வறள வடமொழியை வளம்படுத்துவதே அவர் கடைப்பிடியாதலாலும், தமிழர் உயர்நிலைக் கல்வியை இழந்துவிட்டதினாலும் தமிழ் எழுத்துமுறை கவனிப்பாரின்றிச் சீர்கேடடைந்தது. புள்ளிபெறும் என்பதினாலேயே, குற்றுகரத்தை மெய் யீறாகக் கொள்ளின், மொழிமரபில், மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (16) என்று தொல்காப்பியர் கூறியிருப்பதால், எகர ஒகர வீறுகளையும் மெய்யீறாகக் கொள்ளவேண்டும். அங்ஙனம் கொள்ளலாகாமை வெளிப்படை. இனி, கண்+யாது=கண்ணியாது என்பதுபோன்றே, சுக்கு+யாது=சுக்கியாது என்று புணர்வதால், குற்றியலுகரம் மெய்யீறாகக் கொள்ளப்படுமென்றார் ரெட்டியார். அங்ஙன மாயின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் புணர்வ தால், அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு, உகரவுயிரே தமிழுக் கில்லை யென்றாகும். ஆகையால், அவர் கூற்று உண்மையன்மை யறிக. வடமொழியில், புரிக், விராட், சத் என்று வல்லின மெய்யீறு வந்திருப்பதுபற்றித் தமிழிலும் அவ்வாறே வருமென்றும், குற்றியலுகரமெல்லாம் மெய்யீறேயென்றும் கொள்வது தமிழ் முறைக்கு நேர்மாறாகும். குற்றியலுகரமெல்லாம் மெய்யீறா யின், எனக்கு, பாய்ச்சு, கட்டு (கண் + து), தாட்டு (தாள் + து), வாழ்த்து, பிடிப்பு, கொட்பு, திரும்பு, பாற்று (பால் + து), அற்று (அன் + து) என்பவற்றின் உண்மையான வடிவங்கள், முறையே, எனக்க், பாய்ச்ச், கட்ட், தாட்ட், வாழ்த்த், பிடிப்ப், கொட்ப், திரும்ப், பாற்ற், அற்ற் என்பன வாதல்வேண்டும். அங்ஙனமாகாமை அறிக. தொல்காப்பியர் குற்றியலுகரத்தைமெய்யீறாகக்கொண்டிருப்பின்,.....F‰¿aYfu«... எழுத்தோ ரன்ன என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார். குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்கமுடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில்முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றி bயாலிக்கின்றதெனக்bகாள்க.(3) பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது. ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி (45) என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற்களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம்பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள் கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார். உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகரவீறா யிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முதலில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறுபெற்று வழங்கினவல்ல. தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழியொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப்பெற்றபோது, மெல்லின இடையின மெய்களினின்றுமட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ் வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும், சில மெல்லின இடையின மெய்யீற்றுச் சொற்கள், பகாச்சொன்னிலையில் அங்ஙனம் மெய்யீறாக நிற்குமேயன்றிப் பகுசொன்னிலையில் நில்லா. கா: பண்-பண்ணுகிறான், அள்-அள்ளுகிறான். இவை பண்கிறான், அள்கிறான் என்று வழங்காமை காண்க. இதனால், உயிரீற்றுநிலை முந்தியதேயன்றி, மெய்யீற்று நிலை முந்தியதன்று என்பது அறியப்படும். ஆரிய மொழிகள் தமிழுக்குப் பிந்தினவையாதலானும், திரிபு வளர்ச்சி மிக்கவையாதலானும், அவற்றில் வல்லின மெய்யும் ஈறாகக்கொள்ளப்பட்டது. பின்னியத்திலும் (Finnish), வடதுரேனிய மொழிகளுள் யூரலிய (Uralic) வகுப்பு முழுவதிலும், சொன்முதலில் இணை மெய்களையும், சொல்லீற்றில் ஒரு மெய்யையும் சேர்ப்பதில்லை. கிளாஸ் (glas) என்னும் ஜெர்மனியச்சொல் பின்னியத்தில் லாசி என்றெழுதப்படுகிறது. ஸ்மக் (smak), ஸ்ற்றார் (stor), ஸ்ற்றிரான்று (Stand) என்னும் சுவீடியச் (Swedish) சொற்கள் முறையே, மக்கு, சூரி, ரந்த என்றெழுதப்படுகின்றன என்று7 மாக்கசு முல்லர் கூறுகிறார். திராவிடம் துரேனியக் கிளையாகக் கொள்ளப்படுவதையும், ஹாஸ்பிற்றல், பாங்க், ப்வீஸ் முதலிய ஆங்கிலச் சொற்கள், முறையே, ஆஸ்பத்திரி, பாங்கி, பீசு என்று உயிரீறாகத் தமிழில் வழங்குவதையும் நோக்குக. (4) வல்லினமெய் இரட்டித்தல் இல்லை என்பது. வல்லினமெய் இரட்டித்தல் என்பதே யில்லையென்றும், ஆட்டு, போக்கு முதலிய பிறவினைகள் எல்லாம், ஆடு + து = ஆட் + து = ஆட்டு, போகு + து = போக் + து = போக்கு, 7 L.S.L. Vol. II, p. 207 என்ற முறையிலேயே அமைவனவென்றும் கூறியுள்ளார் ரெட்டியார். தன்வினைப் பகுதியின் ஈற்றெழுத்தில் அழுத்தம் (stress) விழுவதால் அது பிறவினையாகக் கூடுமென்பது, உப்ப கார மொன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்மே (தொல்.மொழி. 43) என்னும் நூற்பாவாற் குறிக்கப்பட்டது. ஆடு, போகு முதலிய தன்வினைகளின் ஈற்றெழுத்துகள்மேல், அழுத்தம் விழுவதா லேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடுவது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழியில் இந் நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது. அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததேயன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலியிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதினர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதினால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவதாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல்களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை ஒன்றென மொழிப என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம். காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்தமுற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித்தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள்களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும். கா : காட்டுவிலங்கு, ஆற்றுநீர். நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றியனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டாகும் இறுக்கத்திற் கொப்பிடலாம். புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட்டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினாலேயே. புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றாகவும் எச்சமாகவும் வழங்கப்பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனி வடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது. போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத் தத்தால் ஈறு இரட்டித்தவையே. சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும், சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார். பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இருவகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க. (5) அரவு என்றொரு தொழிற்பெயரீறு இல்லையென்பது. அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே, கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும் என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக் கின்றன. அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம் என்னும் தொழிற்பெயரா லறியப்படும். அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும். அரம் - (அரமு) - அரவு. ஒ.நோ. உரம் - உரவு, தடம் - தடவு, புறம் - புறவு. (6) மூவிடப்பெயர் வினாப்பெயர்களின் அமைப்பு, உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது. அ, இ, உ, எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச்சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப்பெயர் முன்னிலைப் பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்துகளின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். இதன் தவறு பின்னர் விளக்கப்படும். ஆயினும் இங்கொரு செய்தியைமட்டும் கூற விரும்புகின்றேன். அதாவது, மேற்கூறிய நாற்பாற் பெயர்களும் அரிவரித் தோற்றத்திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்றுதற்கு) முந்தினவென்பதே. ரெட்டியார் இலக்கணக் கூற்றுகளுள் பிற பிழைகளுமுள. அவற்றைப் பின்னர் இந் நூலிற் கூறுபவற்றினின்றும் அறிந்துகொள்க. 7. மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம். ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக்கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழு முடிபிற் கிடமாகும். கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, parliament என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லியலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும். Condemn - L. condemno, from con intensive, damno to damn. Parliament - Lit. ‘a parleying or speaking,’ Fr. parlement - parler, to speak, ment, a Lat. suffix. பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல்லாயு மிருத்தல் காண்க. சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடுகின்றமையின், அவற்றின் மூலவடிவை யறிந்தே பொருள் காண வேண்டும். மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர்.8 தண்டை அடியென்றுங் கூறலாம். மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியுமாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும். மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப்பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ணுப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா, போ என்பன போன்ற முக்கிய வினைகள் என்பனவே போதுமாயினும், பல சொற்களும் தெரிந்திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறுதலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்ததாகும். 8. ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழிநூல் பயிலலாம். ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத்திற்குச் செல்வது இன்றியமையாததன்று; தம் இடத்திலிருந்துகொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதிகளையுந் துணைக்கொண்டு அயன் மொழிகளைக் கற்கலாம். 9. ஒரு மொழியறிவு பிறமொழி யறிவுக்குத் துணையாகும். ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழி யிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டுபிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக்கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பத னாலும், உலகத் தாய்மொழியின் இயல்பையும் வளர்ச்சியையும் அறியத்தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலாலும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவு 8 வேரும் முதல் வேர் (Primitive root), வழி வேர் (Secondary root) சார்பு வேர் (Tertiary root) என மூவகைப்படும். அவற்றுள், முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும். பெருகுவதாலும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழியறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும்.9 10. தாய்மொழி முன்னும் அயன்மொழி பின்னும் கற்கப்பட வேண்டும். ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடு மாயினும், அதன் மரபையும் இலக்கணத்தையும் கற்றே யறிய வேண்டியதிருக்கின்றது. தாய்மொழியியல்பை யறியுமுன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர். தமிழைக் கல்லாது ஆங்கிலத்தையே பயின்ற சில தமிழர், பெரும்பாலுங் கிறிஸ்தவர், நன்றாய் விளையாடினார்கள் என்பதை விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் என்று கூறுதல் காண்க. 11. முக்குல மொழிகளும் ஒரே மூலத்தின.10 ஒரு மரத்தில், ஒரே அடியினின்று பல கவைகளும், அக் கவைகளினின்று பல கிளைகளும், அக் கிளைகளினின்று பல கொம்புகளும், அக் கொம்புகளினின்று பல கப்புகளும், அக் கப்புகளினின்று பல வளார்களும் தோன்றுகின்றன. இங்ஙனமே, உலக மூல மொழியினின்று, பல குலநிலைகளும், அக் குல நிலைகளினின்று, பல குடும்ப நிலைகளும், அக் குடும்ப நிலைகளினின்று பல மொழிகளும், அம் மொழிகளினின்று பல கிளைமொழிகள் அல்லது மொழி வழக்குகளும் தோன்றியுள்ளன. உலக மொழிகளின் முக்குலத் தாய்களும் ஒரே மூலத்தின என்று, சென்ற நூற்றாண்டிலேயே, மாக்கசு முல்லர் தேற்றமாய்க் கூறிவிட்டார். பண்டைக் காலத்தில், ஆரியர் வருமுன், இந்தியா முழுதும், பல மொழிவழக்குகளாக வேறுபட்ட ஒரே மொழி (தமிழ்) வழங்கினதாகச் சில தொல்காப்பியக் குறிப்புகளாலும் மொழிநூ லாராய்ச்சியாலும் அறியக் கிடக்கின்றது. ஆரியர் வந்த பிறகுங்கூட, உண்மையான மொழிகளாக ஒப்புக்கொள்ளப் 9 இங்குக் கூறியது மொழியறிஞருக்கேயன்றி, இந்திக் கட்டாயக் கல்விபோல எல்லார்க்குமன்று. 10 L.S.L. Vol. I, pp. 35, 375, 387. பட்டவை, வடக்கில் சமஸ்கிருதமும் தெற்கில் தமிழுமாக இரண்டே யென்பது, வடமொழி தென்மொழியென்னும் அவற்றின் பெயர்களாலேயே அறியப்படும். இன்றும், தென்னாட்டு மொழிகளை யெல்லாம் தமிழுக்குள்ளும் வடநாட்டு மொழிகளை யெல்லாம் சமகிருதத்திற்குள்ளும் அடக்கிவிடலாம். திராவிடக் குடும்பம் முழுதும் தமிழுக்குள் அடங்குவது போலப் பிற குடும்பங்களும் ஒவ்வொரு மொழிக்குள் அடங்கிவிடும். இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றினால், இறுதியில், துரேனியம் ஆரியம் சேமியம் என்னும் முக்குல நிலைகளே எஞ்சி நிற்கும். அவற்றையும் ஒன்றாயடக்குவதற்குரிய நெறிமுறைகள் இல்லாமற் போகவில்லை. (நோவாவுக்கு முந்திய காலத்தில், கி.மு. 3000 ஆண்டு களுக்கு முன்) உலக முழுவதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாய் இருந்தது என்று, கிறிஸ்தவ மறையில் ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது. இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற் கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன: (1) மக்கள் தொகை வரவர மிகுதல். (2) எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல். (3) அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப் பெயர் வினாப்பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழி கட்கும் பொதுவாயிருத்தல். (4) எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப் படல். (5) நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை. (6) நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு. கா : ஆங்கிலம் தமிழ் tonic (from tone) ஒலித்தல் (தழைத்தல்) to catch fire தீப்பற்று to fall in loveவீழ்(தாம்வீழ்வார்.....cyF”) blacksmith கருமான் முதலாவது கணவனும் மனைவியுமாக இல்லறந்தொடங்கு«இருவர்,பின்òபெரிaகுடும்பமாக¥பெருகுவதையும்,நாளடைவிšசிற்றூ®நகரு«நக®மாநகருமாவதையும்,குoமதிப்பறிக்கைகளிšவரவuமக்கட்டொfமிகுந்Jவருவதையு«காண்பார்க்கு,மக்கŸஎல்லா«ஒருதாŒவயிற்றின®என்பJபுலனாகாமா‰போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தினவாதல் வேண்டும். மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன். ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும்போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர். முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும். மக்கள் பெரும்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டா லேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும், நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையராகவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும். 12. ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய. உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Onomatopoeic theory)í«, சிலர் உணர்ச்சியொலிக்கொள்கை (Interjectional theory)í«, சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory)í« எடுத்துக்கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும். மொழி இயற்கையாய்த் தோன்றியதென்னும் இயற்கைக் bfhŸif(Natural theory)í«, இடுகுறிகளாய்த் தோன்றிற் றென்னும் ïLF¿¡bfhŸif(Arbitrary theory)í«, பலர் கூடி இன்னபொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு Koî¡bfhŸif(Conventional theory)í«, கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் bfhŸif(Divine theory)í« இக்காலத்திற் கேலா. 13. இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது. சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற்றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப்பெயர்களை யிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா. ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டுமென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ் விலக்கணத்தை அம் மொழி யிழந்துவிடுகிறது என்று மாக்கசு முல்லர் கூறுகிறார்.11 எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். 639) என்றார் bjhšfh¥ãa®. 14. உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும். திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமஸ்கிருதத்தை, இன்றும் சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன் மொழியாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத்திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாகமுடியும்? உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளை யுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலைகளைக் கொண்டதாய், இடுகுறியில்லதாய், தனிமொழியா யிருத்தல் வேண்டும். 11 L.S.L. Vol. I, p. 47. 15. சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும். மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப் படுகின்றது. 16. மொழி மாந்தன் அமைப்பே.12 மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே. எப்பிக்கூர (Epicurus), அரிஸ்ற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தே யிருந்தது. ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிஸ்தவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர். தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை. 17. மொழி மக்கள் கூட்டுறவா லாயது. மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானாயின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது. ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப் பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும். இக்காலத்தில் உவில்க்கின்ஸ் போன்ற ஒருவர், இடுகுறி களைக்கொண்டு ஒரு புதுமொழி யமைக்க முடியுமாயினும், 12 L.S.L. Vol. I, p. 31 இயற்கையாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன்மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது. 18. மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று. மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும். தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற்களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியிலுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும். மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர். கா : கூ(என்று கத்தினான்) - இடைச்சொல் கூவி - வினைச்சொல் கூவல் - பெயர்ச்சொல் தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம் மூவகைச் சொற்களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன. மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய்ஸ் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது. 19. மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று. மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும். மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண்டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்க வேண்டுமாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சியிலிருந்துதான் பின்னர் மொழி உருவாகியிருக்கும். 20. மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும் கலைகள் இயற்கலை (Physical Science), ஆக்கக்கலை (Historical Science) என இருவகைப்படும். பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக்கலையும் ஓர் ஆக்கக்கலையே. 21. மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ஆக்கப்பெற்றவை. 22. ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம். ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன: (1) மன்பதைப்பெருக்கம் ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும். பொதுவாய், 100 மைல் சேய்மையில் இரண்டொரு சொற்களும், 200 மைல் சேய்மையில் சில சொற்களும், 400 மைல் சேய்மையில் மொழிவழக்கும், அதற்கப்பால் மொழியும் வேறுபடுவதியல்பு. இப் பொதுவிதிக்குச் சில தவிர்ச்சி (exception) களுமுண்டு. (2) ஒலித்திரிபு (Phonetic Decay and Phonetic Variation) i. சோம்பலால். கா: பளம் (பழம்) ii. உறுப்பு வேறுபாட்டால். தட்பவெப்பநிலை, நிலச்சிறப்பு, ஊண், தொழில், பழக்க வழக்கம், இயற்கை முதலிய காரணங்களால், எழுத்தொலிக்குக் கருவியாகும் உறுப்புகள், ஒவ்வொரு நாட்டாரிடத்தும் நுட்பமாய் வேறுபடுகின்றன. அதனால், ஒலிப்புமுறையும் வேறுபடுகின்றது. மலையாளத்தில் வலி மெலியாதலும் (Nasalization) கன்னடத்தில் பகரம் ஹகரமாதலும், தெலுங்கில் ழகரம் டகரமாதலும் காண்க. (3) சொற்றிரிபு (Verbal Changes) i. ஈறுகெடல் (Discardance of Inflection) ii. ஈறு திரிதல் (Inflectional Changes) iii. போலி (Mutation) iv. இலக்கணப்போலி (Metathesis) v. மரூஉ (Disguise) vi. சிதைவு (Corruption) vii. முக்குறை (Apherosis Syncope and Apocope) viii. முச்சேர்ப்பு (Prosthesis, Epenthesis and Epithesis) ix. அறுதிரிபு x. எதுகை (Rhyming) xi. வழூஉப்பகுப்பு (Metanalysis) xii. ஒப்பு (Analogy) xiii. மேற்படையமைப்பு (Superstructure)13 (4) பொருட்டிரிபு (Semantic Changes). i. வேறுபடுத்தல் (Differentiation) ii. விதப்பித்தல் (Specialisation of general terms) iii. பொதுப்பித்தல் (Generalisation of special terms) iv. இழிபு (Degradation) v. உயர்பு (Elevation) vi. விரிபு (Extension) vii. அணி (Metaphor) viii. சுருக்கல் (Contraction) 13 உண்டு என்னும் தமிழ் வினைமுற்றைப் பகுதியாகக்கொண்டு உண்டாடு, உண்டாதி முதலிய தெலுங்கு வினைமுற்றுகளை யமைப்பது, மேற்படையமைப்பாகும். ix. வரையறை (Restriction) x. வழக்கு (Usage) (1) இலக்கணமுடையது; (2) வழுவுள்ளது. (5) சொற்றெரிந்து கோடல் (Natural Selection) தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மனை என்னுஞ் சொல்லையும் தமிழினின்றும் தெரிந்துகொண்டது சொற்றெரிந்துகோடல். (6) வழக்கற்ற சொல் வழங்கல் (Colonial Preservation).14 நோலை என்னும் தமிழ்ச்சொல்லின் மூலம் தெலுங்கில் நூன (எள்நெய்) என்று வழங்குவது வழக்கற்ற சொல் வழங்கல். (7) புதுச்சொல்லாக்கம். தாய்வழக்கி லில்லாத சொல், தொகைச்சொல், ஈறு, ஒட்டுச் சொற்கள் முதலியவற்றைப் புதிதாய் ஆக்கிக் கொள்ளல். (8) தாய்வழக்கொடு தொடர்பின்மை. சேரநாட்டுத் தமிழ், சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பின், தமிழொடு தொடர்பின்மையாலேயே வேறு மொழியாய்ப் பிரிய நேர்ந்தது. (9) பிறமொழிக் கலப்பு (Admixture of foreign elements) மேற்கூறிய திரிபு முறைகளெல்லாம், சோம்பலாலும் அறியாமையாலும் நேர்ந்து ஒரு பயனும் பயவாதிருப்பின், மொழிச்சிதைவு (Linguistic Corruption) என்னும் கேட்டிற்குக் காரணமாகும்; அங்ஙனமன்றி, அதற்கு மறுதலையாயிருப்பின், மொழி வழக்கு வளர்ச்சி (Dialectic Regeneration) என்னும் ஆக்கத்திற்குக் காரணமாகும். தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகள் தமிழினின்றும் பிரிந்துபோனது, திராவிடர் தவறுமன்று, ஆரியர் தவறுமன்று, மொழிவழக்கு வளர்ச்சியேயாகும். ஆனால், அம் மொழிகளில் 14 English, Past and Present by Trench. p. 55 வடசொற்களைக் கலந்ததும், அம் மொழிகளைத் தமிழினின்றும் வேறுபடுத்தினதும் திராவிட மொழிகளுக்கு வடமொழியைத் தாயாகக் காட்டியதும், தமிழைத் தாழ்த்திவிட்டு வட மொழியைத் தலைமையாக்கியதும், ஆரியத்தால் திராவிடர்க்கு நேர்ந்த தீமைகளாகும். மிகப் பெரிய திராவிட மன்பதையை ஆரியர் முதலாவது பல பிரிவாகப் பிரித்தது மொழியினால் என்பது, இதனால் விளங்கும். மொழியினால் திராவிடரைப் பல பிரிவாகப் பிரித்தபின், மதத்தாலும் வரணவொழுக்கத்தாலும் தமிழரைப் பல பிரிவாகப் பிரித்தனர்.15 தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள், செந்தமிழ் நாட் டிற்குச் சேயவாதலாலும், சேர சோழ பாண்டிய ஆட்சிகட் கப்பாற்பட்டவாதலாலும், சில நல்ல சொல்வடிவுகளையுடைய வாதலாலும், தமிழினின்றும் பிரிந்து கிளைமொழிகளாய், வேறாக வெண்ணப்படுவதற்குத் தகுதியுடையனவே. ஆனால், 12ஆம் நூற்றாண்டுவரை சேரநாட்டுத் தமிழாயிருந்த மலையாள மொழி, தமிழினின்றும் வேறாக எண்ணப்படுவதற்குச் சற்றும் தகுதியுடையதன்று. மலையாள மொழியைக் கெடுத்த ஆரியருள் தலைமையானவர், தமிழெழுத்தின் வகைகளான வட்டெழுத்திலும் கோலெழுத்திலுமே தங்கள் மொழியை எழுதிவந்த மலையாளி கட்கு, ஆரியவெழுத்தை யமைத்துக் கொடுத்த துஞ்சத்து எழுத்தச் சன் என்பதற்கு எள்ளளவும் ஐயமேயில்லை. 23. ஒரு மொழி சில காரணத்தால் திரியலாம் : ஒரு மொழி திரிதற்குக் காரணங்களாவன (1) பேசுவோர் நாடோடிகளாயிருத்தல் (2) பேசுவோர் சிறு குழுவினராயிருத்தல் (3) வரிவடிவின்மை (4) அரசியலின்மை (5) தாங்குநரின்மை (6) சிதைவுகாப்பின்மை (7) சொன்மாற்றம் - i. பணிவுடைமையால் ii. தனிமக்கள் விருப்பத்தால் 15 இதுபோது நாட்டியலியக்கத்தாலும் தமிழர் பிரிக்கப்படுகின்றனர். (8) பிறமொழிக்கலப்பு ஒலி, சொல், பொருள் என்னும் மூவகையிலும் ஒரு மொழி திரியும் முறைகள் முன்னர்க் கூறப்பட்டவையே. இத் திரிபுகளெல்லாம், இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாய் விளக்கப்படும். இவற்றுள், சிலவற்றை இப் புத்தகத்தின் இறுதியிற் காணலாம். 24. ஒரு மொழி சில காரணங்களால் வழக்கழியலாம் . ஒரு மொழி வழக்கழிதற்குக் காரணங்களாவன : (1) செயற்கை வளர்ச்சி முதிர்வு. கா : சமஸ்கிருதம். (2) பேசுவோர் அநாகரிகராயிருந்து பிறநாகரிக மொழியை மேற்கொள்ளல். ஆப்பிரிக்காவினின்றும் அமெரிக்கா சென்ற நீகரோவர், தம் மொழிகளை விட்டுவிட்டு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டமை காண்க. (3) பேசுவோர் சிறு குழுவாய்ப் பிறமொழி பேசும் பெரும்பான்மையோர் நடுவிலிருத்தல். (4) போர், கொள்ளைநோய், எரிமலைக் கொதிப்பு முதலியவற்றால் ஒரு மொழியாரெல்லாரும் அழிக்கப் படல். 25. ஒரு மொழி புதிதாய்த் தோன்றலாம். புதுமொழி தோன்றும் வகைகள் i. செயற்கை கா: எஸ்பெரான்ற்றோ (Esperanto) ii. கலவை கா: இந்தி iii. மொழிவழக்கு வளர்ச்சி கா: தெலுங்கு. 26. அடுத்தடுத்து வழங்கும் மொழிகள் தம்முள் ஒன்றி னொன்று கடன்கொள்ளும். இவ் விதி தமிழுக்குப் பெரும்பாலுஞ் செல்லாதென்பது பின்னர் விளக்கப்படும். 27. ஒரு தனிமொழி பேசுவோர் தொன்றுதொட்டுத் தனிக் குலத்தினரா யிருந்திருத்தல் வேண்டும். பிற மொழியோடு சிறிதும் தொடர்பில்லாத ஒரு தான் றோன்றி மொழியிருப்பின், அதைப் பேசுவோர் தொன்று தொட்டுப் பிற குலத்தாரொடு தொடர்பில்லாத ஒரு தனிக் குலத்தினராயிருத்தல் வேண்டும். 28. மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். 29. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசுவோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது. 30. மொழிநூலாளர் பல மொழிகளைப் பேசவேண்டும் என்னும் யாப்புறவில்லை. முக்கியமான இரண்டொரு மொழிகளிற் பேசுந்திறனும், பிற மொழிகளின் இலக்கணவறிவும் சொல்லறிவும், மொழி நூலார்க் கிருந்தாற் போதும். 31. ஒரே மொழி பேசுவோரெல்லாம் ஓரினத்தாரல்லர். பார்ப்பனரும் தமிழரும் ஒரே மொழி பேசுவதால் ஓரினமாகார். 32. மக்கள் நாகரிகத்தைக் காட்டுவதற்கு மொழியே சிறந்த அடையாளம். விலங்கினின்றும் மாந்தனை வேறுபடுத்துவது மொழி யொன்றே. அம் மொழியும் பலதிறப்பட்டு, அவற்றைப் பேசும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகும். 33. மொழிநூற் கலைக்கு நடுவுநிலையும் பொறுமையும் வேண்டும். இவ் விதி எல்லாக் கலைக்கும் பொதுவாயினும், மொழி நூற் கலைக்குச் சிறப்பாய் வேண்டுமென்பதற்கு இங்குக் கூறப் பட்டது. ஒருவர் பெருமை பாராட்டிக்கொள்ளும் பொருள்களுள், தாய்மொழியும் ஒன்று. ஆகையால், அதன் மீதுள்ள பற்றினால் நடுவுநிலையை நெகிழவிடக் கூடாது. தமிழ்நாட்டில், நடுவுநிலை யாராய்ச்சிக்குத் தடையாக ஈருணர்ச்சிக ளிருந்துவருகின்றன. அவற்றுள் ஒன்று, ஆரியத்திற்கு மாறாக இருப்பது உண்மையாயினும் கூறக்கூடாதென்பது. இன்னொன்று மதப்பற்று. சுவாமிநாத தேசிகர் திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலியவற்றைப் படிக்கக்கூடா தென்றும் கூறியது மதப்பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினாலொழிய, அதன் உண்மை காணமுடியாதென்பது தேற்றம். காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறையிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந்தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சியியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர் ஒப்பியலறிவின்மையாற் பல செய்திகளை உண்மைக்கு மாறாகக் கூறிவிட்டனர். ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தன வென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தையும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென்றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழிகளைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படுமெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்பதென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக்காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடிவத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா.வே. மாணிக்கநாயகர். இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என்பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறு கின்றேன். ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன்படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி. கா : he + is = ஹீயிஸ், my + object = மையாப்ஜெக்ற்ற் - ய், fuel = ப்வியூவெல், go + and (see) = கோவன்று - வ். Drawer, sower முதலிய ஆங்கிலச்சொற்களில், வகரவுடம்படு மெய்க்குப் பதிலாக யகரவுடம்படுமெய் வருகிறதேயெனின், வகரத்தினும் யகரம் ஒலித்தற்கெளிதாதல்பற்றி, பிற்காலத்தில் யகரவுடம்படுமெய் பெருவழக்காயிற்றெனக் கொள்க. தமிழிலும் இங்ஙனமே. ஆயிடை, கோயில், சும்மாயிரு முதலிய வழக்குகளைக் காண்க. மாணிக்க நாயகரைப் பின்பற்றுஞ் சிலர், அவரைப் போன்றே குறுகிய நோக்குடையராய், பல சொற்கட்குத் தவறான பொருளும், தமது கருத்திற்கிசையாத நூற்பாக்களையும் சொல்வடிவங்களையும் இடைச்செருகலும் பாடவேறுபாடு மென்றும் கூறி வருகின்றனர். அவர் இனிமேலாயினும் விரி நோக் கடைவாராக. மேனாட்டார் நடுநிலையும் ஒப்பியலறிவும் உடைய ராயினும், தமிழின் உண்மைத்தன்மையைக் காணமுடியாமைக்குப் பின்வருபவை காரணங்களாகும் : (1) தமிழ் தற்போது இந்தியாவின் தென்கோடியில் ஒரு சிறு நிலப்பரப்பில் வழங்கல். (2) (தமிழுட்பட) இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வடசொற்கள் கலந்திருத்தல். (3) (கடல்கோளாலும், ஆரியத்தாலும், தமிழர் தவற்றாலும் பண்டைத் தமிழ்நூல்கள் அழிந்துபோனபின்) இந்தியக் கலை நூல்களெல்லாம் இப்போது வடமொழியிலிருத்தல். (4) இதுபோது பல துறைகளிலும் பார்ப்பனர் உயர்வாயும் தமிழர் தாழ்வாயுமிருத்தல். (5) பார்ப்பனர் தமிழரின் மதத்தலைவராயிருத்தல். (6) தமிழைப்பற்றித் தமிழரே அறியாதிருத்தல். (7) ஐரோப்பியர் தமிழைச் சரியாய்க் கல்லாமை. கால்டுவெல் கண்காணியார், தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி யென்றறிந்தும், தமிழர் உயர்நிலைக் கலைகளை ஆரியரிடத்தினின்றும் கற்றதாகத் தவற்றெண்ணங் கொண்டமையால், தமிழில் மனம், ஆன்மா என்பவற்றைக் குறிக்கச் சொல்லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வடசொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர். உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வடமொழியி லேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிகமெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர். மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வருகின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழிநூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப் பனர், ஆரியத்தை உயர்த்திக்கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக்கொண்டு, அவற்றை மாற்றுகின்ற புத்தாராய்ச்சி தோன்றாதபடி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காணவேண்டுமென்று பெருமுயற்சி நடந்துவருகின்றது; ஆனால், கீழ்நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டு மென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக்கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரிகத்தை யிழித்துக்கூறும்) சில மேற்கோள் கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் மொழிநூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக் கையே குறிக்கும். 2 பண்டைத் தமிழகம் - குமரிநாடு 1. FkÇehL1 i. அகச்சான்றுகள் தெற்கே, இந்துமா கடலில், ஒரு பெருநிலப்பரப் பிருந்த தென்றும், அதுவே பண்டைப் பாண்டிநாட்டின் பெரும்பகுதி யென்றும், அது பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டதென்றும் பல தமிழ்த் தொன்னூல்களிற் கூறப்படுகின்றது, அந் நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், மேனாட்டுக் கலைஞர் லெமுர் (Lemur) என்ற ஒரு குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமுரியா (Lemuria) என்றும் அழைக்கின்றனர். குமரிநாட்டின் தென்பாகத்தில் பஃறுளியென்றோர் ஆறோ டிற்றென்றும், அதன் கரையில் மதுரையென்றோர் நகரிருந்த தென்றும், அதுவே, பாண்டிநாட்டின் பழந்தலைநகர் என்றும், அங்கேயே தலைக்கழகம் இருந்ததென்றும், அக் கழகத்தின் பின் நெடியோன் என்னும் பாண்டியன் காலத்தில் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார் என்றும், அப்போது மதுரையைக் கடல்கொள்ள, நெடியோன் வடக்கே வந்து கபாடபுரத்தை யமைத்துத் தலைநகராகக் கொண்டானென்றும், அங்கே இடைக்கழகம் நிறுவப்பட்டதென்றும், பின்பு கபாடபுரமும் கடல் வாய்ப்பட, பாண்டியன் உள்நாட்டுள் வந்து மணவூரில் இருந்தா 1 பண்டைத்தமிழகம் (The Original Home of the Dravidian Race) குமரிநாடே என்று யான் எழுதிய நூலை 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்குக் கீழ்கலைத் திறவோன் g£l¤â‰F(M.O.L Degree), இடுநூலாக (Thesis), சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு விடுத்தேன். மூன்றாமாதம் அது தள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழக அறிவிப்பு வந்தது. என் இடுநூலை ஆய்ந்தவர் யாரென்றும், தள்ளினதற்குக் காரணங்கள் எவையென்றும் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டதற்கு, அவை மறைபொருள் என்று பதில் வந்துவிட்டது. னென்றும், பின்பு இப்போது வைகைக்கரையிலுள்ள மதுரை கட்டப்பட்டதென்றும், குமரிமுனைக்குத் தெற்கில் குமரியென்றோர் மலைத்தொடரும் ஓர் ஆறும் இருந்தனவென்றும், அவ் வாற்றுக்கும் அதற்குத் தெற்கிலிருந்த பஃறுளியாற்றுக்கும் இடைநிலச்சேய்மை 700 காதமென்றும், குமரியாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடல் வாய்ப்பட்டதென்றும் பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது. (1) பஃறுளியாறு செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம். 9) (2) (தென்) மதுரை தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார்...........................jÄHhuhŒªjJ கடல்கொள்ளப்பட்ட மதுரையென்ப.2 (3) குமரிமலை மேற்குத்தொடர்ச்சிமலை, முன்காலத்தில், தெற்கே நெடுஞ்சேய்மை சென்றிருந்ததாகவும்,அங்கு¡குமரியென்Wஅழைக்கப்பட்டதாகவும்,தமிழ்நூல்களாšதெரிகின்றது. குமரிமலையையே மகேந்திரமென்று வடநூல்களும், பிற்காலத் தமிழ்நூல்களும் கூறும். அநுமன் மகேந்திரமலையினின்று கடலைத் தாண்டி, இலங்கைக்குச் சென்றதாக இராமாயணம் கூறுகின்றது. மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் (கீர்த்தித் திருவகவல்) என்றார் kணிக்கவாசகர்...... தாமிரபரணி நதியைத் தாண்டுங்கள்.... அதை விட்டு அப்பாற் சென்றால்... பாண்டிநாட்டின் கதவைக்3 காண்பீர்கள். 2. இறை. பக். 6 3. கபாடபுரம் அதன்பின் தென் சமுத்திரத்தையடைந்து... நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின் கண்ணே, மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளையுடையதும், பொன்மய மானதும், நானாவித மரங்களுங் கொடிகளுஞ் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டங் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திரமலை,4 என்று, சுக்கிரீவன் அங்கதனுக்குச் bசான்னதாக,tல்மீகிKனிவர்»ஷ்கிந்தாfண்டத்திற்Tறியிருப்பதினின்றும்,“c‹dj¤ தென் மயேந்திரமே என்று சிவதருமோத்திரமும், பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு (சிலப். 11:19-20) என்று இளங்கோவடி களும் கூறுவதினின்றும், குமரிமலையின் பெருமையை உணரலாம். (4) குமரியாறு மேற்கூறிய குமரிமலையினின்றும் பிறந்தோடிய ஆறு, அம் மலையின் பெயரால் குமரியென்றே அழைக்கப்பட்டது. இங்ஙனமன்றி, ஆற்றின் பெயரே மலைக்கு வழங்கினதாகவும் கொள்ளலாம். குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை (மணிமே. 52) தென்றிசைக் குமரி யாடிய வருவோள் (மணிமே. 142) தெற்கட் குமரி யாடிய வருவேன் (மணிமே. 148) என்று மணிமேகலையிலும், தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் (புறம். 6) குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி (புறம். 67) என்று புறநானூற்றிலும், கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி (சிலப். 7:3) மாமறை முதல்வன் மாடல னென்போன்...... குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து (சிலப். 15:13-5) என்று சிலப்பதிகாரத்திலும் வந்திருத்தல் காண்க. 4. நடேச சாத்திரியார் மொழிபெயர்ப்பு புறநானூற்றில், குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. அயிர் - நுண்மணல். அயிரை நீர்க்குள் அடிமட்டத்திலுள்ள மணலின், அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒருவகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தா னிருக்கும். கடல் மீன்களில் அயிரைக் கொத்தது நெய்த்தோலி (நெத்திலி) என்று கூறப்படும். ஆகையால், மேற்கூறிய அடியில் குமரியென்றது ஆறென்பது தெளிவு. இதைச் சிலப்பதிகாரத்தில் கன்னியை (குமரியை)க் காவிரியோடுறழக் கூறியதாலும், மேற்கூறிய அடிகளில் உள்ள குமரி என்பதை ஆற்றின் பெயராகவே உரையாசிரியர் கூறியிருப்பதாலும் அறியலாம். பழம்பாண்டி நாட்டில், முதலாவது,பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல்கொண்டமை, அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 17-22) என்னும் சிலப்பதிகார வடிகளால் அறியலாம். இவ் வடிகட்கு, முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை, அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃளியாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கையாற்றினையும் இமயமலை யினையும் கைக்கொண்டு, ஆண்டு மீண்டும் தென்திசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக வென்க என்று உரை கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். இச் செய்தியையே, மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்* (கலித்.135) என்று கலித்தொகை கூறுகின்றது. இதனால், கடல்கோளால் நாடிழந்தவன் பாண்டியனே என்பதும், அதற்கீடாக அவன் சேரசோழ நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அறியப்படும். இதையே, அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல் லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னுமிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட bj‹dt‹”5 என்று, அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். தென்னாட்டைக் கடல்கொண்டமைக்குக் காரணம், முன்னொரு காலத்தில் பாண்டியன் அதன்மீது வேலெறிந்த செயலாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது. இந்திரன் ஒருமுறை மதுரைமீது கடலை விட்டதாகவும், அப்போது ஆண்டுகொண்டிருந்த உக்கிரகுமார பாண்டியன் ஒரு வேலை யெறிந்து அக்கடலை வற்றச் செய்ததாகவும், திரு விளையாடற் புராணத்தில் கடல்சுவற வேல்விட்ட படலம் கூறு கின்றது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனின், ஒருமுறை நிலநடுக்கத்தால் கீழ் கடலிலிருந்து ஒரு பேரலை மதுரை வந்து மீண்டதென்பதே. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பல நிலநடுக்க வரலாறுகளினின்று அறிகின்றோம். உவாலேஸ் (Wallace) என்பவர் தாம் உவைகியௌ (Waigiou) தீவிலிருந்து தெர்னேற்றுத் (Ternate) தீவிற்குப் போகும் வழியில், நிலநடுக்கத்தால் கடன் மட்டம் உயர்ந்ததாகக் F¿¥ãL»‹wh®.6 தென்னாட்டில் நிகழ்ந்த பல கடல்கோள்களில், ஒன்று பஃறுளியாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரியாற்றுக்குத் தெற்கில் ஓர் எல்லை வரையுள்ள நிலத்தைக் கொண்டதென்றும், இன்னொன்று குமரியாற்றையும் அதற்குத் தெற்கிலும் வடக்கிலுமிருந்த நிலத்தையும் கொண்டதென்றும் தெரியவருகின்றது. பஃறுளிநாட்டை யிழந்த பாண்டியன், தொல்காப்பியப் பாயிரத்தில் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்றும் மதுரைக் 5 சிலப் . பக். 303 6 The Malay Archipelago, p. 412 காஞ்சியில், நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் என்றும், புறநானூற்றில் நெடியோன் என்றும் கூறப்படுபவன் ஆவன். முந்தின இருபெயர்களின் பொருளும், மலிதிரை யூர்ந்து என்னுங் கலித்தொகைச் செய்யுட் செய்திக்கு ஒத்திருத்தல் காண்க. குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப் பக்கத்துள்ள நிலக் கோடி குமரிமுனை யென்னப்படுகிறது. கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப் பின், குமரியாற்றைக் கடல்கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதினால், தொடியோள் பௌவமும்7 என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது. தொடியோள் பௌவம் என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறிய குறிப்புரையாவது : தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்ப தாயிற்று. ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தியனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவ ருள்ளிட்ட, நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார். காய்சினவழுதிமுதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர்; பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தி யனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் 7 சிலப். ப. குமரியென்னு மாற்றிற்குமிடையே, எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ்குறும் பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னைபெறுமாறெனின், `வடிவேலெறிந்த.... கொடுங்கடல் கொள்ள என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும், v‹gJ.8 இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படிகொண்டாலும், தென்துருவத்திற்கும் குமரிமுனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப் பகுதியும் குமரிமுனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடுநிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவவரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆத்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம் முக்கண்டங்களுக்கும் நிலைத்திணை, பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலிய வற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும் , தெற்கே 3000 கல் தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது. குமரியாறு கடலில் அமிழ்ந்தது கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது, தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அதுதானும் பனம்பாரனார், 8 சிலப். 8 : 1. வடவேங்கடந் தென்குமரி (பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமை யிற்..... கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம்,9 என்று பேராசிரியர் கூறியதினின் றறியப்படும். ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்க ளெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவேயாகும். வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்..... எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் brŒjüš”10 என்று பேராசிரியர் கூறியதுங் காண்க. (5) வீரமகேந்திரம் குமரிநாட்டைக் கடலானது, பகுதிபகுதியாகவும், பல முறையாகவும் கொண்டமையின், இலங்கைக்குத் தெற்கே வீர மகேந்திரபுரத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு நிலப்பகுதி, பல கடல்கோளுக்குத் தப்பிக் கடைசியில் சூரபன்மன் காலத்திற்குப் பின், முழுகிப்போனதாகக் கந்தபுராணத்தினின்றும் தெரிய வருகின்றது. (6) இலங்கை இலங்கை ஒருகாலத்தில் இப்போதிருந்ததைவிடப் பெரி தாயும், வடபுறத்தில் தமிழ்நாட்டொடு சேர்ந்தும் இருந்தது. முதலில், தென்புறத்திலும் பிரிவில்லாதிருந்தமை சில சான்றுகளாலறியப் படும். தாப்பிரப்பனே (Tabropane) தலைநிலத்தினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் வதிநர் `பழையொ கொனாய் (Palaiogonoi) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் 9 தொல். பொ. 649, உரை. 10 தொல். பொ. 650, உரை. நாடு இந்தியாவினும் மிகுதியாகப் பொன்னும் பெருமுத்தும் விளைவது. தாப்பிரப்பனே இந்தியாவினின்றும், தமக் கிடையோடும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்படுகின்றது. அதன் ஒரு பாகம் இந்திய இனங்களினும் மிகப் பெரிய காட்டுவிலங்குகளும் யானைகளும் நிறைந்தது; அடுத்த பாகம் மக்கள் வதிவது11 என்று மெகஸ்தனிஸ் (Megasthenes) கூறுகிறார். இக் கூற்று, அவர்தம் முன்னோர் கூறியதைக் கொண்டு கூறியதேயாகும். ஏனெனில், அவர் தென்னாட்டிற்கு வரவில்லை, அவர் கூற்றிலுள்ள சில குறிப்புகளால், இலங்கையின் வடபாகம் ஒருகாலத்தில் இந்தியாவொடு சேர்ந்திருந்ததென்றும், தாமிரபணி இலங்கையூடும் ஓடிற்றென்றும், அதனால் இலங்கை தாம்பிரபரணி (Taprobane)bad¥g£lbj‹W« அனுமானிக்க இடமுண்டு. ஆனால், தாமிரபரணியின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டையே தாப்பிரப்பனேயென்றும், அதற்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டை இந்தியாவென்று, பண்டை யவன சரித்திராசிரியர் கூறினர் என்று கொள்ளவும் இடமுண்டு. ஏனெனில், இத்தகைய மயக்குகள் யவனாசிரியர் குறிப்புகளில் பலவுள்ளன. அதோடு, தாப்பிரப்ப னேயிலுள்ளவாகக் கூறப்பட்ட பொருளெல்லாம் பாண்டி நாட்டிலுமிருந்தன. வடநாட்டில், வடமொழியிற் பழமைகளை யெழுதிய நூலாசிரியர்கள், இலங்கை இப்போதிருப்பதைவிட மிகப் பெரிதாயிருந்ததாயும், விதப்பாக, மேற்கிலும் தெற்கிலும் மிக அகன்றிருந்ததாயும் கூறியிருக்கின்றனர். இக் கூற்று, புராண காலத்து உண்மையைக் கூறாவிடினும், இந்திய நாடுகளுக்குள் வழங்கிய ஒரு வழிமுறைச் செய்தியைக் குறிப்பிடுகின்ற தாயிருக்கின்றது. வடமொழி வானூலார் தங்கள் தலைமை உச்சகத்தை (Chief Meridian) இலங்கையில் வைத்தார்கள். ஆனால், அது இப்போதை இலங்கைக்கு மேற்கிலுள்ள கோடாயிருந்தது. இக் குறிப்புக்கள் தொன்முது காலத்தில் தென்னிந்தியாவும் மடகாஸ்கரும் இணைக்கப்பட்டிருந்தன வென்னும் கொள்கைக்குத் துணை செய்கின்றன... இலங்கை சிறிது சிறிதாய்க் கடலுண் மூழ்கிக் 11 Foreign Notices of South India, p. 41. குறுகியது என்று பௌத்தர் எழுதிவைத்த இடவழக்குச் செய்தி யோடும் இது ஒத்திருக்கின்றது.12 இராமர் காலத்தில், இலங்கை இப்போதிருப்பதைவிடப் பெரிதாயும், தமிழ்நாட்டிற்கு மிக நெருங்கியதாயுமிருந்தது. இவ்விரு நிலங்கட்கும் இடைப்பட்ட கடல், ஒருவர் நீந்திக் கடக்குமளவு இடுகிய கால்வாயாகவே யிருந்தது. அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல்தாண்டியதும், இராமர் வானரப்படைத் துணையால் அணைகட்டியதுமான இடம், இப்போது இந்துமாக் கடலில் உள்ளது. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம், பிற்காலத்தில் gǪij(current)ahY« எரிமலைக் கொதிப்பாலும், புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணை யாகும். தமிழ்நாட்டின் தென்பகுதி கடலுண் முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின், சரித்திர மறியாத மக்களால், அது இராமாயணக் கதையொட்டி இராமர் அணைக்கட்டெனப்பட்டது. ஆதாம் வாரைவதி (Adam’s Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே இராமர் அணைக்கட்டு என்னும் பெயரும் பொருந்துவதாகும். இதை, அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல் தாண்டி னானென்றும், வானர வயவர் குட (மேற்குத் தொடர்ச்சி) மலை வழியாகத் தெற்கே சென்றன ரென்றும், கற்களைக் குவித்தே கடலில் அணைகட்டினரென்றும், இராமர் பொதியமலையிலிருந்த அகத்தியரிடம் வில் பெற்றனரென்றும், இராமாயணங் கூறுவ தாலும்; துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தி லங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம் என்று சிவதருமோத்திரங் கூறுவதாலும்; இலங்கையின் பழங்குடிகள் அதன் தென்பாகத்திலேயே இன்று வதிவதாலும் அறியப்படும் குமரிநாட்டுக் கடல்கோள்கள் உலகத்திலே, இன்றுவரை நேர்ந்துள்ள கடற் பெரு வெள்ளங்களுள், முதன்மையானது பதினூறாயிரம் ஆண்டுகட்கு 12 Manual of the Administration of the Madras Presidency, Vol. I, p. 4. முன்னர் நேர்ந்திருத்தல் கூடுமென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், நான்காவது வெள்ளம் எண்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், ஐந்தாவது வெள்ளம் ஏறக்குறைய ஒன்பதாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரும் நிகழ்ந்திருத்தல் கூடுமென்றும் `காட்டெலியட்டு என்னும் நிலநூல் வல்லார் கூறுகின்றார்13 என்று கா. சுப்பிரமணிய பிள்ளையவர் கள் எழுதுகின்றார்கள். குமரிநாட்டில் நிகழ்ந்த கடல்கோள்களுள், தமிழ்நூல்களிற் குறிக்கப்படுபவை மூன்றாகும். அவையாவன : (1) பஃறுளியாற்றுடன்.... குமரிக் கோடும் கொண்டது. இதுவே தலைக்கழகத் தாவாகிய மதுரையின் அழிவு. (2) இடைக் கழகத்தாவாகிய கபாடபுரத்தைக் கொண்டது. இதை , இடைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் bfh©lJ”14 என்பதனாலறியலாம். (3) காவிரிப்பூம்பட்டினத்தையும் வங்காளக்குடாவில் இருந்து தென்கடல்கள் (South Seas) வரையும் உள்ள பல தீவுகளையுங் கொண்டது. இதை, தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை யின்றேழ் நாளி லிருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாக நன்னாட்டு நானூ றியோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் (மணிமே. 9:17-22) மடவர னல்லாய் நின்றன மாநகர் கடல்வயிறு புக்கது (மணிமே. 25:176-7) என்னும் மணிமேகலைப் பகுதிகளால் அறியலாம். காவிரிப்பூம் பட்டினம் அழிந்தபோதே குமரியாறும் முழுகினதாகத் தெரிகின்றது. 13 இலக்கிய வரலாறு, ப. 11. 14 இறையனார். ப. 7. தமிழ்நூல்களால் தெரியவருங் கடல்கோள்கள் மூன்று. அவற்றுள் முதலது மிக முக்கியமானது. ஏனெனில், அது ஒரு பெருநிலப் பரப்பின் அழிவாயும் அதன் கதை உலக முழுதும் வழங்குவதாயும், மக்கள் ஒருதாய் வயிற்றினரென்றும் மாந்தன் பிறந்தகம் குமரிநாடென்றும் துணிவதற்குச் சான்றாயுமுள்ளன. இம் முதற் கடல்கோளே நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளமாகக் கிறித்தவ மறையிற் கூறப்படுவது. இது வெள்ளப் பழமை (The Flood Legend) என்று ஆங்கிலத்தில் வழங்கும். மேனாட்டார் இக் கதையை யூதரிடத்தினின்று, பழைய ஏற்பாட்டு வாயிலாய்த்தான் அறிந்தார்கள். ஆனாலும், இது யூதரிடத்து முதன்முதல் தோன்றவில்லை. யூதர் இக் கதையைப் பாபிலோனியரிடமிருந் தறிந்தார்கள். ஆனால், கில்கமேஷ் (Gilgamesh) என்னும் பாபிலோனியக் காதைநூலில் இது இணைக்கப்பட்டிருக்கிற முறையை நோக்கும்போது, இது பிற் காலச் செருக லென்றும், பாபிலோனியருக்கு மிக முற்பட்ட தென்றும் கருத இடமுண்டு. வெள்ளக்கதை பாபிலோனில், அல்லது சேமிய வரணத் தாருக்குள் மட்டும் காணப்படுவதன்று, அதற்கு மாறாக, அது உலக விரிவானது. யூதர் நோவா வொருவனையே எஞ்சினோனாகக் கொண்டனர்; பாபிலோனியர் உத்தானபிஷ்திம் (Utanapishtim) என்பவனைக் கொண்டனர். கிரேக்கருக்குள், தியூக்கேலிய னையும் (Deucalion) அவன் மனைவி பைரா (Pyrrha)ití§ காண்கின்றோம். மெக்ஸிகோவில், இருவேறு வரலாறுகள் உள. அவற்றுள் முந்தின நகுவாத்தல் (Nahuatl) கதை காக்ஸ் காக்ஸை (Cox cox)í« அவன் மனைவி சொச்சிக்கு வெத்ஸலை (Xochliquetzal)í« கூறுகின்றது; இன்னொன்று இவ் விருவரையும், முறையே, நத்தா (Nata) நானா (Nana) என்று கூறுகின்றது. இதோடு பெயர்வரிசை முடியவில்லை. உண்மையில் எல்லா மக்களுக்கும் இவ் வெள்ளத்தைப்பற்றி ஒவ்வொரு கதை யிருப்பதாகத் தெரிகிறது.15 சீனப் பழமையில் ப்வோகி (Fohi)í«, கல்தேயப் பழமையில் சிசுத்துருசும் (Xisuthrus) நோவாவாகக் கூறப்படுகின்றனர். 15 The Illustrated Weekly of India, August 6, 1939, p. 73. ஆங்கில மதாசிரியர்கள் நோவாவின் வெள்ளத்திற்குக் குறித்த காலம் கி.மு. 2348. இலங்கைப் பௌத்த மதாசிரியர் இலங்கையில் கடைசியாக நேர்ந்த கடல்கோளுக்குக் குறித்த காலம் கி.மு. 2387. தமிழ்நாட்டுக் கடல்கோளும் இதே காலத்ததாயிருத்தல் மிகவும் வியக்கத்தக்கது. ஆரியர் இந்தியாவிற்கு வந்தது, கி.மு. 3000 போல். அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தது, கி.மு. 2500 போல். தமிழ்நாட்டுக் கடல்கோள், சதாபத பிராமணம், மச்ச புராணம், அக்கினி புராணம், பாகவத புராணம், மகாபாரதம் ஆகிய வடநூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகப் பழைய வரலாறு சதாபத பிராமணத்தது. மகாபாரதத்தது மிகப் பிந்திய தாதலின் மிகப் பெருக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தைப்பற்றி மகாபாரதமும், கல்தேயப் பட்டயமும் கிறித்தவ மறையும் கூறும் வரலாறுகள், வெள்ளத்தின் நோக்கம், வெள்ளத்துக்குத் தப்பியவரின் பன்மை, வெள்ளத்தின்பின் மக்கட் பெருக்கம் என்ற குறிப்புகளில் ஒத்திருப்பதை, ராகொஸின் தமது வேதகால இந்தியாவில் 340ஆம் பக்கத்திற் காட்டியிருக் கின்றார். வடநூல் வெள்ளக்கதைகளில், மனுவென்றும் அரசமுனி (ராஜரிஷி)யென்றும் திராவிட நாட்டரசனாகிய சத்திய விரதனென்றும் குறிக்கப்படுகின்றவன், நிலந்தரு திருவிற் பாண்டியனாய்த்தான் இருக்கவேண்டும். திராவிடத் தேசத்தரசன் என்னும் பட்டமும், அரச என்னும் அடையும் அகத்திய முனிவருக் கேலாமையின், அவராயிருக்க முடியாது. தமிழர் கி.மு. 2000 ஆம் ஆண்டுகட்கு முன்னமே, வாரித்துறை (Maritime) முயற்சிகளுள் சிறந்திருந்தமை. அவர்கள் அயல் நாடுகளோடு செய்துவந்த நீர்வாணிகத்தாலும், பல்வகை நீர்க்கலங்களையுங் குறிக்கத் தமிழிலுள்ள பெயர்களாலும், முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை (தொல். 983) என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆகையால், நோவாவும் அவன் பேழையும், நிலந்தரு திருவிற் பாண்டியனும் அவன் நாவாயுமாய்த்தா னிருந்திருத்தல்வேண்டும். இது பின்னர்த் தெளிவாக விளக்கப்படும். குட(மேற்கு)மலைத்தொடர், கடலில் அமிழ்ந்துபோன தென்னாட்டை நோக்க வடக்கிலுள்ளமையால், இவ் வெள்ளத் துன்பத்திற்குமுன், வடமலைத்தொடர் எனப்பட்டது. மனுவின் பேழை வடமலைத்தொடரில் தங்கிற்றென்று சதாபத பிரா மணமும், திராவிட நாட்டரசன்மலையமலையில்தவஞ்செய்துகொண்டிருந்தானென்றுபுராணங்களும்கூறுகின்றன.... மனுவின் சரிதையை முதன்முதற் கூறும் சதாபத பிராமணம், வடமலைத்தொடரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், வடமலைத்தொடர் என்றது மேற்குத் தொடர்ச்சி மலையையே என்றும், பேழை தங்கிய இடம் மலையமலையே என்றும் கொள்வதற்குப் போதிய புராணச் சான்றுகள் உள்ளன என்று பண்டிதர் டி. சவரிராயன் (M.R.A.S.) கூறுகின்றார்.16 தமிழ்நாட்டில் நெட்டிடையிட்ட மூன்று அழிவுகள் தோன்றினமையின், ஈரழிவிற் கிடைப்பட்ட காலப்பகுதியை ஓர் Cழியென்றும்,_வழிவுகளால்Vற்பட்டfலப்பகுதிகளைeலூழி(சதுர்யுகம்)bயன்றும்bகாண்டதாகத்bதரிகின்றது.CÊf£F¡ குறிக்கப்பட்ட அளவுகளும், நாலூழியைச் சுற்றளவாகக் கொண்டதும் பிற்காலத்தன என்று தோன்றுகிறது. ஊழி என்னுஞ் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து, முதிர்வு அல்லது அழிவு என்று பொருள்படுவது. ஊழியால் ஏற்படும் கால அளவை ஊழியென்றது ஆகுபெயர். தமிழ்நாட்டில், நாள்முதல் ஊழிவரையுள்ள கால அளவுகளெல் லாம், ஒவ்வொரு வகையில் ஈரழிவிற் கிடைப்பட்ட காலத்தையே உணர்த்துவனவென்பதை, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை என்னும் கட்டுரையிற் கண்டுகொள்க. தெற்கேயே பல அழிவுகள் தோன்றியுள்ளமையாலும், பண்டைத் தமிழரெல்லாம் இந்துமாக் கடலில் அமிழ்ந்துபோன தென்னாட்டிலேயே புதையுண்டு அல்லது எரியுண்டு கிடப்ப தாலும், கூற்றுவன் தென்றிசையிலிருக்கிறானென்றும், தம் முன்னோரைத் தென்புலத்தாரென்றும் கூறினர் தமிழர். புலம்-நிலம். தெற்கே பெருநிலமும் பெருமலையும் கடலில் அமிழ்ந்து போனதினாலும், இதற்கு மாறாக வடக்கே கடலாயிருந்த பாகத்தில், 16 கருணாமிர்தசாகரம், 1 ஆம் பாகம், பக். 26. பனிமலை(இமயம்) ஆகிய பெருமலை தோன்றியுள்ளதினாலும், வடதென்றிசைகளை முறையே, மங்கலமும் அமங்கலமு முள்ளன வாகக் கொண்டனர் தமிழர். இதை ஆரியர் பயன்படுத்திக் கொண்டு, வட இந்தியாவை நல்வினை நிலம் (புண்ணிய பூமி) என்றும், தென்னிந்தியாவைத் தீவினை நிலம் (பாவ பூமி) என்றும் கூறியதாகத் தெரிகின்றது. தமிழர் திசைகளை நல்லதும் தீயதுமாகக் கொண்டாரேயன்றி இடங்களையல்ல. திபேத்தை நோக்க, வட இந்தியா தீயதும், தென்துருவத்தை நோக்க தென் இந்தியா நல்லதுமாதல் காண்க. திசைபற்றிய ஆரியக் கொள்கையைக் கண்டிக்கவே, எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங் கொன்னாளர் சாலப் பலர். (நாலடி. 243) என்னும் நாலடிச் செய்யுள் எழுந்ததாகத் தெரிகின்றது. சிவன் அல்லது முருகன் குறிஞ்சித் தெய்வமாதலின், தெற்கே குமரிமலையமிழ்ந்து போனபின், பனிமலையைச் சிவபெருமானின் சிறந்த இருக்கையாகக் கொண்டனர் தமிழர். (இதையும் ஆரியர் சிவபெருமானை ஆரியத் தெய்வமாகக் கூறுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர்.) பஃறுளி.... வாழி என்னும் சிலப்பதிகாரப் பகுதியை நோக்குக. புதுச்சேரிக்கு மேற்கே ஒரு காததூரத்திலுள்ள பாகூர்ப் பாறையில், பாகூருக்குக் கிழக்கே கடல் நான்கு காதம்..... எனக் கல்வெட்டிருக்கின்றதெனவும், இப்பொழுது அப் பாகூருக்குக் கிழக்கே கடல் ஒரு காத தூரத்திலிருக்கின்றதெனவும் கூறுவர். இதனால் மூன்று காதம் கடல்கோள் நிகழ்ந்துள்ளதென்பது புலனாம்17 என்று கார்த்திகேய முதலியாரும், இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று முற்றிலும் அழிந்துகிடக்கின்றது. அது நாள் 17 மொழிநூல், ப. 14. தோறும் கடலில் முழுகிக்கொண்டே வருகின்றது என்று எ.வி. தாமசும் (Thomas) கூறியிருப்பதினின்று, குமரியாறு மூழ்கின பின்னும் தமிழ்நாடு குறுகி வந்திருப்பதை யறியலாம். சீகாழி ஒருமுறை வெள்ளத்தாற் சூழப்பட்டமை தோணிபுரம் என்னும் அதன் பெயரால் விளங்கும். குமரிநாடு - புறச்சான்றுகள் (1) வியன்புலவர் எக்கேல் உயிர்களின் `பெயர்வும் பிரிந்தீடும்பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல் இந்துமாக் கடல் ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய், ஆப்பிரிக்காவின் கீழ்கரை மட்டும் படர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. ஸ்கிளேற்றர் இப் பழம் பெருங்கண்டத்தை, அதில் வதிந்த குரங்கொத்த உயிரி (பிராணி) பற்றி லெமுரியா என்றழைக்கிறார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக் கூடுமாதலின், மிக முக்கியமானது. காலக்கணித உண்மைகளைக் கொண்டு, இப்போதை மலேயத் தீவுக் கூட்டம், முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேஸ் கூறியுள்ள முக்கியச் சான்று, விதப்பாய் உவகை யூட்டத்தக்கது. போர்ணியோ, ஜாவா, சுமத்திரா என்னும் பெருந்தீவுகளைக்கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலேயத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால், ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சற்று முந்திக்கூறிய லெமுரியக் கண்டத்தோடும் அது இணைக்கப் பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிஸ், மொலுக்காஸ், புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக்கொண்ட கீழைப்பிரிவாகிய ஆஸ்திரே-மலேயத் தீவுக்கூட்டம், முன் காலத்தில் ஆஸ்திரேலியாவோடு நேரே யிணைக்கப்பட் டிருந்தது18 என்று கூறுகின்றார். (2) திருவாளர் ஓல்டுகாம் செடிகொடிகளிலும், உயிரி(பிராணி)களிலும், ஆப் பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக 18 Castes and Tribes of Southern India, Vol. I, pp. 20, 21. நெருங்கிய ஒப்புமைகளைக் கொண்டு திருவாளர் ஓல்டுகாம், ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப் பிருந்ததென்று முடிவு செய்கிறார்.19 இந்துக்கட்குப் பேரே தெரியாத சில பழைய காலத்துப் பெருமகமையான பப்பரப்புளி, அல்லது யானைப்புளி, அல்லது சீமைப்புளி (Baobab or Adansonia digitata) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்திய தீவக்குறை (Peninsula)Æ‹ தென்கோடியில் அயல் நாட்டு வணிகம் நிகழ்ந்துவந்த சில துறையகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள கோட்டாற்றிலும் திருநெல்வேலிக் கோட்டகை (ஜில்லா)யில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கை யிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னும் காணப்படுகின்றன என்று கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார். தேக்கு பர்மாவிலும், தென்னிந்தியாவிலும், ஆப்பிரிக்கா விலும்; புளி சாவகத்திலும் இந்தியாவிலும்; தென்னை இந்தியாவிலும் இலங்கையிலும் nkyÜáa¤(Melanesia) தீவுகளிலும்; நெல் பர்மாவிலும் இந்தியாவிலும் சீனத்திலும் ஜப்பானிலும் சாவகத்திலும்; கரும்பு சீனத்திலும் ஜாவாவிலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டு வளர்கின்றன. கோளரி (சிங்கம்) இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மாவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர (ஐங். 63) அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் (ஐங். 364) என்னுங் குறிப்புகளால் பண்டைத் தமிழ்நாட்டில் நீர்நாய் என்றோர் உயிரியிருந்தமை யறியப்படும். அரிப்பான் (Rodent) இனத்தைச் சேர்ந்த நீர்நாய் (Beaver), நீர்வாழி (Aquatic), இருவாழி 19. Castes and Tribes of Southern India, Vol. I, p. 24 (Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)ÉY« வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொது வகராதி (New International Dictionary)Æš20 குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்புகளிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டிருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) இனமான தாகத் தெரிகின்றது. அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இருவகை யுண்டு. இவ் விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை, ஓதிம விளக்கின் என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, ஈண்டுக் காரன்ன மென்றுணர்க என்றும், வெள்ளையன்னங் காண்மின் என்னும் சீவக சிந்தாமணித் தொடருக்குக் காரன்னமு முண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு21 என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத்திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று22 தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம். உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயைபின்மைக் குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம். சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டிலும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ஙனமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டிநாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா, (3) காட் எலியட் காட் எலியட் என்பவர் எழுதியுள்ள மூழ்கிய லெமுரியா (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப்படத்தினால், ஒரு 20. Vol. I. p. 200 21. சீவக. 4 : 80. 22. All About Birds, p. 141. பெருமலையானது மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக் குமரிக்குத் தென்பாலுள்ள நிலப்பகுதியிலே நெடுஞ்சேய்மை சென்று, பின் தென்மேற்காகத் திரும்பி, மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுகின்றார். (4) சாண் மர்ரே ஆராய்ச்சிப்படை (இந்தியப் பட விளக்க வாரகை - ஜூலை 29, 1934) இந்து மாக்கடலைத் துருவுவதற்கு 20,000 பவுன் வைத்து விட்டுப்போன, காலஞ்சென்ற வயவர் சாண் மர்ரே (Sir John Murray)ahš தோற்றுவிக்கப்பட்ட கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒருகாலத்தில், தென் அமெரிக்காவி னின்று ஆப்பிரிக்காவையொட்டியும் இந்தியாவையொட்டியும் தென்கண்டம் (Australia) வரை படர்ந்திருந்ததும் காண்டுவானா (Gondwana)¡ கண்டம் அல்லது காண்டுவானா நாடு என்று அறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, அண்மையில் வியக்கத்தக்க வுண்மைகளைக் கண்டுபிடித்திருக் கிறது. இதன் சான்று, பனிமலையும் (Himalayas), காக்கஸஸ் (Caucasus), ஆல்ப்ஸ் (Alps), பிரனீஸ் (Pyrenees) என்னும் மலைகளும் கடலுக்குள்ளிருந்த காலத்தில், நாலு கண்டங்களிலும் ஒரே வகையான நிலவுயிரிகளும் செடிகொடிகளும் கன்னிலையிற் காணப்படுகின்றன என்னும் உண்மையைச் சார்ந்ததாகும். மபாஹி (Mabahiss) என்னும் சிறிய எகிபதிய மரக்கலத்தில், பிழம்புத்தலைவர் செய்மூர் செவல் (Colonel Seymour Sewell, F.R.S.) என்பவரின்கீழ், கடந்த ஏழு மாத காலமாக நடைபெற்றுவந்த புதுக் கண்டுபிடிப்புகளை, வியன்புலவர் ஜே. ஸ்ற்றான்லி காடினர் (Professor J. `Stanley Gardiner’) வரணிக்கிறார். வியன்புலவர் காடினெரைக் கண்டு பேசியபின், எவ்ப். ஜீ. பிரின்ஸ் ஒயிற்று (F.G. Prince White) `நாளஞ்சல் (“Daily Mail”) தாளிகையில், பின் வருமாறு வரைகிறார்: காண்டுவானா நாடு நச்சுயிரிக்காலத்திற்குரியதாயும் (Reptilian Period), ஐயமற, சினாம்புள்ள நச்சுயிரிப் பூதங்களின் இருப்பிடமாயுமிருந்தது. தென்மேற்காகச் சொக்கோத்ராவை (Socotra) நோக்கிச் செல்லும் 10,000 அடி உயரமுள்ள மலைத் தொடர், தெளிவாக, (இந்தியாவில் ஆஜ்மீரிலுள்ள) அரவல்லி மலைத்தொடரும் பிற மலைகளுமானவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதன் தென்கிழக்கில் ஓர் ஆழ்ந்த பள்ளத்தாக்கு இருக்கிறது. அது தொல்லூழிகளில், இந்தஸ் (Indus) ஆற்றுப் படையின் தொடர்ச்சியாயிருந்த தென்பது தேற்றம். இதிலிருந்து ஒருவர், அப் பெரிய நிலப்பரப்பின் முழுமையும் இந்தஸ் ஆற்றின் பகுதியும், ஒரு பெருவாரியான எரிமலை யெழுச்சியில், சொல்லப் போனால், தலைகீழாக அமிழ்ந்தன என்றுதான் அனுமானிக்க முடியும் என்று அவ் வியன்புலவர் சொல்லுகிறார், (இவ் வுருப்படிக் குரிய திணைப்படத்தை இப் புத்தக முகப்பிற் காண்க.) (5) திருவாளர் சாண் இங்கிலாந்து .......... கோடி யாண்டுகளுக்கு முன் - ஒருவேளை அதற்கு மிக முந்தி - ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவை யும் இணைத்திருந்தது. மாந்தன் அப்போது ஞாலத்தில் தோன்றியே யில்லை. அக் கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டாமா வும் லெமுர் என்னுங் குரங்கினமும் பூத ஆமையும் குடியிருந்தன. உலகம் ஓர் இன்பமான கானகமாயிருந்தது. எனினும், பறவைகள் பாடவில்லை; ஏனென்றால் அவை அப்போது இல்லை. இங்ஙனம் சில வகைகளில், இப் பெருங் கண்டம், ஒவ்வொன்றும் பெரும்போடாயிருந்த உயிரிகளுடன் அமைதியாகவும் இயற் கைக்கு மாறுபட்டு மிருந்தது. அது தோன்றி, அல்லது நிலையாகவே 20,000,000 ஆண்டுகள் போலிருந்தது. பின்பு மூழ்கத்தொடங்கிற்று....23என்Wசா©இங்கிலாந்Jகூறுகிறார். இங்ஙனம் மறுக்கமுடியாத பல சான்றுகளிருக்கவும், வட மொழிக்கு மாறாகத் தமிழுக்குப் பெருமை வந்துவிடுமே என்றெண்ணியோ, அல்லது வேறு காரணத்தாலோ, இந்திய சரித்திராசிரியர் குமரிநாட்டைப்பற்றி இன்னும் ஆராயாமலும், ãறர்Mராய்ந்துTறியதைxப்புக்கொள்ளாமலும்ïUக்கின்றனர்.எ¤jid நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்? 23 The Hindu, July 3, 1938. திராவிடம் தெற்கிற் சிறத்தல் i. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல் (1) தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை. கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் TW»‹wJ.1 சேரசோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளன. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று (குறள். 955) என்னுங் குறளுரையில், பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்... தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று கூறினார் பரிமேலழகர். சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்ன ரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழசேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவின ரென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது. பாண்டியன் சோழன் சேரன் என்னும் பெயர்கள் வட சொற்களென்றும், பாண்டியன் பஞ்சவன் என்னும் பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்தவை யென்றும் மயங்கினர் கால்டுவெல். அப் பெயர்களின் பொருள்களாவன : பாண்டியன் வண்டி - பண்டி - பாண்டி - பாண்டியன். 1 புறம். 2 பாண்டி அல்லது பாண்டில் என்னும் பெயர் முதலாவது வட்டத்தையும் பின்பு வட்டமான வட்டு, கிண்ணம், தாமரைப்பூ, காளை முதலிய பொருள்களையுங் குறிக்கும். வட்டத்தின் பெயர் காளையைக் குறிப்பது உருட்சியானது என்னும் கருத்துப்பற்றி. இளவட்டம் (வாலிபன்), கனவட்டம் (பாண்டியன் குதிரை) என்னும் பெயர்களை இதனுடன் ஒப்புநோக்குக. பாண்டி என்பது காளையைக் குறித்து, பின்பு அக் காளைபோன்ற வயவனாகிய பாண்டியனைக் குறித்தது. விடலை, காளை என்னும் மாட்டுப் பெயர்கள் வயவரைக் குறித்தல் காண்க. காட்டுமாடு மறத்திற்குச் சிறந்தது; எதிரியைக் கொன்றாலொழிய வேறு வினை செய்வதில்லை. புலியும் கோளரியும் அங்ஙனமல்ல. நாட்டுமாடு காயடிப்பு, சூடுபோடல், வேலைப்பழக்கம், குறைந்தவுணவு முதலியவற்றாலேயே தன் மறத்தை யிழக்கின்றது. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் என்று சொல்லத்தக்க குணம் அரசாட்சிக்கு இன்றியமையாததாதலுங் காண்க. வட்டாடுதலுக்குப் பாண்டி விளையாட்டு என்னும் பெயர் பாண்டிநாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது. வட்டு (வட்டமான சில்) பாண்டி என்பன ஒரு பொருட்சொற்கள். பாண்டி என்னும் பெயரே இல் என்னும் குறுமையீறு (Diminutive suffix) பெற்றுப் பாண்டில் என்றாகி, கிண்ணம் தாளக்கருவி முதலிய சில பொருள்களை யுணர்த்தும். குறுமையீறு பெறாத நிலையில், ஆழி (சக்கரம்) என்னும் பெரும் பொருளை யுணர்த்தும். ஒ.நோ: புட்டி-புட்டில், விட்டி-விட்டில். பாண்டில் என்னும் பெயர் காளையைக் குறிப்பது வடிவு பற்றியே யன்றி, அளவுபற்றியன்று. இனி, பாண்டி என்னும் பெயர் காளைக் கருத்தின்றி இளவட்டம் என்னும் பெயர்போல, வட்டக் கருத்தினாலேயே வயவன் என்னும் பொருளில் பாண்டியனைக் குறித்தது எனினும் பொருந்தும். வண்டி (வள் + தி) என்னும் பெயர் முதலாவது வட்டமான சக்கரத்தையுணர்த்திப் பின்பு ஆகுபெயராய் இன்று சகடத்தை யுணர்த்துகின்றது. சக்கரத்தை வண்டியென்னும் வழக்கு இன்றும் தென்னாட்டிலுள்ளது. சிறுவர் களிமண்ணாற் செய்த சக்கரத்தை வண்டி யென்பர். உழவர் கபிலையேற்றத்தின் மேலுள்ள உருளை (pulley)ia¡ கமலைவண்டி யென்பர். பஞ்சவன் பாண்டியன் தன் நாட்டை ஐந்து பகுதியாக்கி, ஐந்து பதிலாளிகளால் ஆண்டு வந்தமையால், பஞ்சவன் எனப்பட்டான். இதை விசுவநாத நாயக்கர் சரித்திரத்தாலறிக.2 குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்து நிலங்களை யுடையவன் பஞ்சவன் என்ற காரணங் கூறுவது பொருந்தாது, அது ஏனைச் சேரசோழர்க்கும் ஏற்குமாதலின். கௌரியன் மலைமகளுக்குப் பசுமை நிறம்பற்றிக் கௌரி யென்று பெயர். கௌரி பண்டொருகால் மலையத்துவச பாண்டியனின் மகளாய்ப் பிறந்து (தடாதகைப்பிராட்டி யென்னும் பெயருடன்), பாண்டிநாட்டை யாண்டதாகக் கூறும் திருவிளையாடற் கதை பற்றிப் பாண்டியனுக்குக் கௌரியன் என்னும் எச்சமுறைப் பெயர் (Patronymic) தோன்றிற்று. அருச்சுனன் நீராட்டுப் போக்கிற்காகத் (தீர்த்த யாத்திரை) தென்னாடு வந்தபோது பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாண்டியன், பஞ்சவன், கௌரியன் என்னும் பெயர்கள், முறையே, பாண்டவர், பஞ்சவர், கௌரவர் என்னும் பெயர் களுடன் ஒலியில் ஒத்திருப்பதாலும், பாண்டியன் என்னும் பெயர் பாண்டவன் என்னும் வடிவிலும் இலங்கைச் சரிதை நூலில் வழங்குவதாலும், பாண்டியன் முதலிய பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்த வடமொழிப் பெயர்கள் என மயங்கினர் கால்டுவெல். பாரதத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முந்தின இராமாயணத்திற் கூறப்பட்ட பாண்டியன், பாரத வயவராற் பெயர் பெற்றதாகக் கூறுவது, பாட்டனின் முதற் கலியாணத்திற் பேரன் பந்தம் பிடித்த கதையேயன்றி வேறன்று. இற்றையுலகிலுள்ள நாகரிக நாடுகளெல்லாம், பெரும் பாலும் கிறித்தவ ஆண்டூழிக் குட்பட்டவையாதலானும், மேனாடுகள் தற்கால நாகரிகமடைந்ததெல்லாம் சென்ற மூன்று 2 Pandyan Kingdom, p. 121, 122. நூற்றாண்டுகட்குள்ளேயே யாதலானும், பொதுவாய் உலகம் வரவர எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து, சென்ற நூற்றாண்டில் அநாகரிகராயிருந்த பலநாட்டார் இந் நூற்றாண் டில் நாகரிகமடைந்திருக்கவும், தமிழர் இவ் விருபதாம் நூற்றாண் டிலும் மிகத் தாழ்நிலையிலிருப்பதாலும், தமிழின் அல்லது தமிழ் நாட்டின் சரித்திரம் தமிழர்க்கே தெரியாதிருப்பதாலும், மேனாட்டார்க்குத் தமிழர் நாகரிகத்தின் தொன்மை விளங்குவ தில்லை. அவருள், இன்னெஸ் (Innes) என்பவரோ தமிழ்க் கழகமென்பதே இல்லையென்று கொண்டவர். சோழன் வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து எனப் பிற்காலத்து ஔவையார் ஒருவர் பாடியிருப்பதால், முத்தமிழ் நாட்டுள்ளும் சோழநாடு சோற்றிற்குச் சிறந்திருந்தமை அறியப் படும். இன்றும் சோழநாட்டின் சிறந்த பகுதியாயிருந்த தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு நெற்களஞ்சியமாயிருப்பது கவனிக்கத் தக்கது. சோறு என்பது முதற்கண் நெல்லரிசிச் சோற்றையே குறித்தது. சொல் = நெல். சொல் - சொன்றி = சோறு. சொல் - சோறு. முதற்காலத்தில் நெல் சோழநாட்டில் இயற்கையாகக்கூட விளைந்திருக்கலாம். சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே. எ-டு: கல் - கள் - காளம் - காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல். கஃறென்னும் கல்லத ரத்தம் (தொல். எழுத்து. 40. உரை) சுல் - சுள் - சூள் - சூழ். துல் - துள் - தொள் - தொழு - தோழன். நுல் - நுள் - நுளை - நுழை - நூழை. புல்-பொல்-பொள்-போழ். கில்-கிள்-கீள்-கீழ். சொல்-(சோல்)-(சோளம்)-சோழம்-சோழன். இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும். கா: நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே. சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும். கா : தமிழ் தெலுங்கு வடமொழி தமிழம் திரவிடம் (திராவிடம்) கிழங்கு கெட்ட கோழி கோடி சேரன் தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு. சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித் தலை வனுக்கும் முறையே சாரல், சாரனாடன் என்னும் பெயர்கள் தொகைநூல்களிற் பயின்றுவருகின்றன. சார் என்னுஞ் சொல் சேர் என்றானாற் போல, சாரல் என்னுஞ் சொல்லுஞ் சேரல் என்றாகும். சேரநாடு குடமலையின் இருமருங்குமுள்ள சாரலா தலின், அதையாளும் சேரன் சேரல் எனப்பட்டான். இது இடவாகுபெயர். சேரல் - சேரன். சேரல் - சேரலன் - கேரளன். ல்-ன், போலி. கா: உடல்-உடன், வெல்-வென். ச-க, போலி. கா: சீர்த்தி - கீர்த்தி, செய் (தெ.) - (சை) - கை. ல-ள, போலி. கா: செதில் - செதிள், மங்கலம் - மங்களம். தமிழ்மொழியின் பழைமை தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற்பெயரா யிருந்தமையாலும், சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக்கழக வுறுப்பினராய்க் கூறியிருத்த லாலும், சிவனே தமிழை உண்டுபண்ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம். தமிழ்நூல்களின் பழைமை தொல்காப்பியர் பெயர் - தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக்கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரே யாகும். இப் பெயருக்குப் பழைமையான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படுகின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபினராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொரு ளிருத்தல் வேண்டும். அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ்நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், முந்துநூல் கண்டு என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல்காப்பிய ரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன. வடநூல் வகைகளில் ஒன்றானதும் காதை நூலுமான காவியத்தின் பெயர், வடமொழியில் காவியமே தோன்றுமுன், தமிழிலக்கண நூலுக்குப் பெயரான தெங்ஙனமெனின், கூறுகின்றேன். வடநூல்வகைகளில் ஒன்றான புராணம் என்னும் காதை வகைக்கு, படைப்பு, வழிநிலைப் படைப்பு, மரபுவழி, மனுவூழி, சரித்திரம் என்னும் ஐந்தும் கூறுவது இலக்கணமாகக் கூறப் பட்டுள்ளது. ஆயினும், வடமொழியில் புராணமே தோன்றுமுன், தமிழ்நூல்களுக்குப் புராணம் என்னும் பெயர் வழங்கினமை இனி இடைச்சங்கமிருந்தார்.... என்ப. அவர்க்கு நூல்... மாபுராணமும் ... பூதபுராணமுமென இவையென்ப3 என்பதனால் அறியப்படும். இங்ஙனமே காவியம் என்னும் பெயரும் என்க. இதனால், காவியம், புராணம் என்னும் பெயர்கள், முறையே, கவியினால் (செய்யுளாலும் நூற்பாவாலும்) செய்யப்பட்டது, பழைமையானது என்னுங் கருத்தில், முதன்முதல் தமிழ்நாட்டில் தமிழ்நூல்களுக்கே ஆரியரால் வழங்கப்பட்டன என்பதும், அவை வடமொழியிற் காதை நூல்களின் பெயரானதும், காவியத்திற்கும் புராணத்திற்கும் இப்போது உள்ள இலக்கணம் வகுக்கப்பட்டது பிற்காலத்தில் என்பதும் அறியப்படும். குலம்: தொல்காப்பியர் தம்மை ஆரிய வேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தி யிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தருவத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றியதாலும் தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக்களாலும் தொல் காப்பியர் ஆரியர் என்று துணியப்படும். தொல்காப்பிய வழுக்கள் (1) சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூன்றலங் கடையே (தொல். மொழி. 29) சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு 3 இறை. பக். 7. சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை (எழு. 51) என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே. இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந் தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசைகிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு : க த ந ப ம எனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே (தொல். மொழி. 28) சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ, ஐ, ஔவெனும் மூன்றலங் கடையே (தொல். மொழி. 29) இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன. சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்: க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற்றாய் மொழிக்கு முதலாக வரும். ச் என்ற மெய்யெழுத்தும் அவ் வைந்து மெய்யெழுத்து களைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெழுத்து களோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும். ஆனால், க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்து களும் ஔ என்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாக வரா என்பதாம். (எ-டு:) நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது)4 என்பது. இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித் துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்றுகின்றது. இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், பண்டைத் தமிழிலக்கணங்க ளெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற் பட்டவை யென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் கடக்கும் அல்லது தப்புவிக்கும் முகமாக, அவர் காலத்திற்குமுன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்குவதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலி யன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லையென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மையையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலகவழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமை யாதனவாகவும் அதன் சொல்வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவு மிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு : சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சரகர், சரி, சருகு, சருவம், சல்லடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை-சாட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு - சறுக்கு, சன்னம். மேலும், தனித்தும் இரட்டியும் வரும் பல குறிப்புச் சொற்களும் சகர முதலவாய் உள. எ-டு: சக்கு, சகசக, சட்டு, சடக்கு, சடசட, சடார், சதக்கு, சம், சர், சரசர, சரட்டு, சரேல், சல்சல், சலசல, சள், சள்சள், சளசள, சளப்பு, சளார், சறுக்கு. 4 செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15, பரல் 2, பக். 67, 69. இனி, இற்றைச் செகர முதற் சொற்கள் சில பண்டு சகர முதலவா யிருந்தன வென்றும் அறிதல் வேண்டும். எ-டு: சத்தான் - செத்தான், சக்கு - செக்கு. இவற்றை யெல்லாம் நோக்காது, குருட்டுத்தனமாய்த் தொல்காப்பியரைக் காத்தற்பொருட்டுத் தொல்பெருந் தமிழின் பெருமையைக் குலைப்பது அறிஞர்க்கு அழகன்று. சவதலி, சம்பளி, சமாளி என்பன போன்ற திராவிடச் சொற்கள் பிற்காலத்தனவா யிருக்கலாம். ஆயின், மேற்காட்டிய தூய தென்சொற்களெல்லாம் தொன்றுதொட்டவையே. சம்பு என்பது சண்பு என்னும் இலக்கியச் சொல்லின் திரிபா யிருப்பினும், சம்பங்கோரை, சம்பங்கோழி என்பன தொன்றுதொட்ட உலக வழக்கே. (2)குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல். மொழி. 34) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோவெனின், நுந்தை யுகரங் குறுகிமொழி முதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். எழு. 51) (3) வகரக் கிளவி நான்மொழி யீற்றது (தொல். மொழி. 48) அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க. (4) மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (தொல். மொழி. 49) என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை. (5) ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும் (தொல். குற். 40) ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக. தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக. தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம். இதை ஆறாயிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்க ளுடன் ஒப்பு நோக்குக. தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101) என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். தொண்டுபடு திவவின்5 என்றார் பெருங்கௌசிகனாரும். 5 மலைபடுகடாம், 21. எண்ணுப்பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று. எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர் 9 தொண்டு ஒன்பது (தொன்பது) 90 தொண்பது தொண்ணூறு 900 தொண்ணூறு தொள்ளாயிரம் 9000 தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம் (ஒன்பது + ஆயிரம்) ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 X 9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும். ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனை யெண்ணுப்பெயர்க ளெல்லாம் தனிமொழிகளா யிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கிவருகின்றது. ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, பொருந்தப் புகலல் என்னும் உத்திபற்றியது. இக் கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையிலமைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம். தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது - ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயு மிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கையாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும். தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண் ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார். கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார். (6) ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும் (தொல். குற். 58) இதன் வழுநிலை முன்னர்க் கூறப்பட்டது. இந் நூற்பாவில், `இயற்கைத் தென்ப என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோ ரது என்பது புலனாகும். (7) நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே (தொல். புண. 30) அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை யாகும் (தொல். புண. 31) என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு, இனித் தொல்காப்பியரும், தமிழில் `எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென் றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிகமாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, `அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமை யென்னும் பிரதமாவிபக்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமையாலும், `எல்லா நீயிர் நீ எ-ம், `நீயிர் நீயென வரூஉங் கிளவி எ-ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிக மாகச் சூத்திரஞ் செய்தலானும், `அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும்மென்னு நிலைமொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க எனக் கூறியுள்ளார். (பிரயோக விவேகம், நூ. 7, உரை) பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும். இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர், ...... விகாரப் பெயரே பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன் அனவன் ஆவான் ஆகின் றவன்முத லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே என்று நூற்பா வியற்றி, தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந் திரிபில் பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழிகளையும் ஏற்று நிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங்காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க. இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாளமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக. இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாலால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக என்று உரையும் கூறி, இறுதியில், இவ் வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று என்று அதன் புன்மையையும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன்றுஞ் சில மாணவரிலக்கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினையாலணையும் பெயர்களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவனால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்டவேண்டிய விடத்து வருவனவேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்ல வென்பதையும் அறியாமல், தமிழிலக்கணத்திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர். இனி, ஆயவன், ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ்வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வேறாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்பதையும்; ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியினின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்கு மென்பதையும் அவர் நோக்கிற்றிலர். நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடியென்றும். நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றா யிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்பதையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தி யென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். தொல்காப்பியர் காலத்தில் வட மொழியில் இலக்கணநூலே யில்லை யென்பது பின்னர் விளக்கப்படும். நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென்னாட் டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறையாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின. நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு. கா : பிறம் - புறம் நூ. வ. பிட்டு - புட்டு உ.வ. பீளை - பூளை பீடை - பூடை (கொச்சை) நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ்வேறு வடிவங்களினின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம். நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்த தாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன்றிற்று என்று கூறுவதையே ஒக்கும். (8)ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (தொல். மொழி. 39) இதில், நொ என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும். நொ என்பது அதன் குறுக்கமே. ஏவல் இ.கா. நி.கா எ.கா. பெயர் நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய் காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவமாயின், அது து என்னும் வினை துக்கிறான், துப்பான் என்றாவதுபோல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க. இனி, உச்ச காரம் இருமொழிக் குரித்தே என்ற வரையறை கூட வழுவோவென் றையுறக் கிடக்கின்றது. இங்ஙனம் தொல்காப்பியர் பல இடத்தில் தவறினதற்குக் காரணம், அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகள்போல் தமிழை யாராய்ந்தும், அவரது ஒப்பியலிலக்கணத்தில் சிலவிடத்துத் தவறினது, அவரது அயற் பிறப்பாலேயே. இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க. காலம் : தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை நான்மறை முற்றிய என்றும், தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்த என்றும், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடைகொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட `அஷ்டாத்யாயீயை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல்காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே. தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது. கடைக்கழகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு. விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல். 1336) என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித்திருப்ப தால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியுடையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரது என்பது அறியப் படும் மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்தமையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சி யாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல (தொல். 510) என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளி லும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக்கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும். இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் நாற்பெய ரெல்லையகம் என்றொரு தொடர்மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத்தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள். நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன : வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும். முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடா யிருந்தது. சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில் என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க. பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்கள மாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அகநாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது. மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது. நாற்பெய ரெல்லை என்றது நாற்றிசை எல்லைகளையே யன்றி நால்வேறு மண்டலங்களை யன்று. மேலும், பிற்காலத் துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்குமண்டலம் என்பன வாகும். சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம். இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். இனி, முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப் பியனார், வியங்கோள் தன்மை முன்னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது முடி நாகராயர் செய்யுளிற் காணப்படுகின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங்கோள், பிற்காலத்தே முன்னிலை யிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்?6 என்கிறார் சாத்திரியார். ......K‹Åiy தன்மை ஆpரிடத்தொL மன்னா தாகும் வியங்கோட்கிளவி” (தொல். வினை. 29) 6 P.S.S. சாத்திரியார், தொல். எழுத்ததிகாரம், முகவுரை, பக். 1, 2 என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொருளையே சாத்திரியார் நன்றா யறியவில்லை. மன்னா தாகும் என்னும் வினைக்குப் பெரும்பாலும் வராது என்பதே நூற்பாவிற் குறித்த பொருள். ஒருவேளை, கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே (தொல். இடை. 4) என்னும் நூற்பாவில் மிகுதிப் பொருள் மன்னைச் சொற்குக் குறிக்கப்படவில்லையே என்று அவர் கூறலாம். தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படாமை யானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்)களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப்பியத் தில் ஒன்றைப்பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது. நன்னூலார் பிற்காலத்தவராதலின், தொல்காப்பியரினும் விரிவா யாராய்ந்து, மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும் (நன். 432) என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர். இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள மன்னா தாகும் என்னுஞ் சொல் வினைச்சொல்லாதலின், இடைச்சொல் லாகா தெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரினாயது, வினையினாயது என மூவகையென்றும், அவற்றுள் மன் என்னும் சொல் வினையி னாயதென்றும் கூறிவிடுக்க. கா : இயற்கை பெயர் வினை ஆவா! ஐயோ! (என்றான்) என்று சீ(பாவம்!) (போன்றான்) போல சலசல முறையோ! (கொண்டான்) கொண்டு (3-ம் வே.உ.) கசதப மிகும்வித வாதன மன்னே (நன். 165) என்று, மன்னையிடைச் சொல்லை, நன்னூலார் மிகுதிப் பொருளில் வழங்கியதுங் காண்க. வியங்கோள் வினை வாழ்த்து, சாவிப்பு, ஏவல், வேண்டு கோள், வஞ்சினம், விருப்பம், சொல்லளிப்பு முதலிய பல பொருள்களில் வரும். இவற்றுள், வாழ்த்து முதல் வேண்டுகோள் வரையுள்ள பொருள்கள் தன்மைக்கும், வஞ்சினம் சொல்லளிப்பு என்னும் பொருள்கள் முன்னிலைக்கும் படர்க்கைக்கும் ஏற்கா. வியங்கோள் வினைக்குச் சிறந்த பொருள்களான வாழ்த்து, வேண்டுகோள் என்னு மிரண்டும் அவற்றின் மறுதலைகளான, சாவிப்பு, ஏவல் என்பனவும் தன்மைக்கு ஏற்காமையின், வியங்கோள் பெரும்பாலும் தன்மையில் வராது எனக் கூறப் பட்டது. ஆனால் முன்னிலைக்கு இவ் வரையறை கூறினது தவறேயாகும். ஆகையால், முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில் நிலீயர் என்னும் வியங்கோள் வினை வந்திருப்பது கொண்டு, அவரைத் தொல்காப்பியருக்குப் பிந்தியவராகக் கூறமுடியாது. மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே அதோடு தொல்காப் பியத்திலேயே, தொல்காப்பிய இலக்கணங்கட்கு மாறான சில சொல்வடிவங்களைக் காணலாம். இதுவரை, தனித்தமிழ்க் கருத்துகளையே தழுவின முழு நிறைவான தமிழ் இலக்கணமாவது, இலக்கண உரையாவது இயற்றப்படவே யில்லை. ஆதலின், மொழிநூலைத் துணைக் கொண்ட தமிழ் முறையான நடுநிலை யாராய்ச்சியாலன்றி, உண்மையான தமிழிலக்கணத்தை யறியமுடியாததென்பது தேற்றம். தொல்காப்பியம் ஒன்றையே தழுவுவார் தமிழியல்பை அறியமுடியாதென்பதற்கு ஒரு காட்டுக் கூறுகின்றேன். கள் என்னும் ஈறு பலர்பாலுக்குரியதாகத் தொல்காப் பியத்தில் விதிமுறையிற் கூறப்படவில்லை. ஆயினும், உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கியிருக் கிறார். இதையறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர். இனி, பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீயசுக்லயஜுர்வேதீயப்ராதிசாக்கியசூத்திரங்களுக்கும்ஒற்றுமையிருத்தலானும்....MáÇa® தொல்காப்பியனார்க்கு வேதங்கள், ப்ராதிசாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாஸ்க நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், அந் நூல்கள்தற்போதுள்ளஆராய்ச்சியாளர்களால்கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்குமுன்னருள்ளனஎனக்கூறப்படுகின்றமையான்bதால்காப்பியம்».பி.ïu©lhtJ ü‰றாண்டதhகும் எ‹றுசhத்திரியார்கூ¿யுள்ளது,e°¥åšL (J.C. Nesfield) M§கிலத்தில்எGதியஇyக்கணநூšகளிற்rல்லப்ப£டவற்றிற்கும்,jல்காப்பியத்திற்rல்லப்பட்டவற்றிற்கும்,சிygருள்களில்ஒ‰றுமையிருப்பதால்,eஸ்ப்வீல்டுஇyக்கணத்தைப்பoத்துத்தான்jல்காப்பியர்த«இyக்கணநூšஇaற்றினார்எ‹றும்,gh¥ (G.U. Pope) M§கிலத்தில்எGதியதிUவாசகத்தைத்தான்மhணிக்கவாசகர்தÄழில்kழிgயர்த்தாரென்றும்கூWவதுgன்றதேயன்றிtறன்று.jhšfh¥ãa¤â‹செந்தமிழ்நடையொன்w,mந்நூÈன்தொன்மைaக்காட்டற்Fப்போதுமானJ. தொல் காப்பியத்திற் பயின்று வரும் அலங்கடையே, இவணையான சிவணும்ஓரன்ன’முதலிaசொற்றொடர்களும்,தொšகாப்பியத்தி‹வடசொல்லருகிaதனித்தமிழ்¡காyநிலைaஉணர்த்துவனவாகும். பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள படிமையோன் என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுத் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், bதால்காப்பியர்rமணரென்றுKடிவுசெய்ததுடன்,‘படிமைvன்றbrhல்தமிœ¢சொல்லாகத்தோ‹றவில்லைஎன்று தம்jமிழ¿யாமையையும்புலப்gடுத்தியிருக்»‹றார்கள். படிமை என்ற சொல் படி என்னுஞ் சொல்லடியாகப் பிறந்தது. படு-படி-பதி. படுதல் - வீழ்தல். படு என்னுஞ் சொல்லே படி, பதி எனத் திரியும். படிதல் - பதிதல். ஒரு பொருள் இன்னொரு பொருள்மேற் படும்போது, மேற்பொருள் கீழ்ப்பொருள்மேற் படியும்; அப்போது, முன்னதன் வடிவம் பின்னதிற் பதியும். அவ் வடிவம், அப் படிந்த பொருளின் வடிவத்தையே போன்றிருக்கும்; (அடிச்சுவடுகளையும் முத்திரைகளையும் நோக்குக) இதனால், படி என்னுஞ் சொல் போல அல்லது வகையில் என்னும் பொருளில் வழங்கும். கா : அப்படி, இப்படி, உப்படி, எப்படி. அப்படி = அவ் வடிவம், அம் முறை - In that form. அப்படிச் செய் = அம் முறையிற் செய், = அதுபோலச்செய் do so. போல இருப்பது போன்மை. அங்ஙனமே, படியிருப்பது படிமை. ஒ.நோ: like-likeness. வழிபடு வுருவமாவது, பொம்மையாவது, கடவுளைப் போல அல்லது மாந்தனைப்போலச் செய்யப்பட்டிருப்பதால் படிமை எனப்பட்டது. இஃதொரு பண்பாகுபெயர். படிமை என்னுஞ் சொல்லில், படி பகுதி; மை பண்புப் பெயரீறு. மையீறு தமிழ்க்கே யுரியதென்பது பின்னர்க் காட்டப் படும். வடமொழியில் படிமை, மகிமை முதலிய சொற்களை யெல்லாம் பகாச்சொற்களாகவே கொள்வர். அம் மொழியில் மையீறில்லை. தமிழிலோ அச் சொற்கள் பண்புப்பெயர்களான பகுசொற்களாகும். படி - மை என்னுஞ் சொல்லை, அடி - மை, குடி - மை, மடி - மை, மிடி - மை முதலிய பண்புப்பெயர்களோடு ஒப்புநோக்குக. ஒரு மூலவோலையைப் பார்த்தெழுதினது, அல்லது அச்சிட்டது, அம் மூலத்தின்படி யிருப்பதால் go(copy)bad¥ படும். படியோலை என்று பண்டை நூல்களில் வழங்குதல் காண்க. படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதி, ப்ரதிமா என வழங்குவர் வடநூலார். இப்போது, மூலச்சொற் களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ் நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப் படுகின்றன வென்க. தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். அவையெல்லாம் இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய் விளக்கப்படும். ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில், கையாளப்பட்ட முறைகள்: (1) முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், (2) டகரத்தைத் தகரமாக்கல், (3) ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன. பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும், ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க. வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரியவென்று துணிதற்கு விதிகள் இப் புத்தகத்தின் இறுதியிற் கூறப்படும். அவற்றுள் முக்கியமானது, பகுதிப்பொருள்பற்றியது. ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற்றிற்குப் பொருந்தப் புளுகல் என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலாவிடின் இடுகுறியென முத்திரையிட்டு விடுவர். அவ் விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச்சொற்களே யென்பது ஐயமறத் துணியப்படும். ஒரு மூலத்தின் படி (copy), அம் மூலத்தின் அளவாயே யிருத் தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் சொல் வழங்குவதாகும். கா : காற்படி (அரிசி),பட்டணம்படி - முகத்தலளவு. படிக்கல் - நிறுத்தலளவு. படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப்பற்றியனவே. வரும்படி - வரும் பொருளளவு. படி என்னுஞ் சொல் பதி என்று திரிவது முன்னர்க் கூறப்பட்டது. படிமானம் = பதிவு. பண்டமாற்றிலும், ஈட்டுக்கடனிலும், ஒரு பொருளுக்கு அதன் மதிப்பளவுள்ள இன்னொரு பொருள் கொடுக்கப் படுகின்றது. ஓர் அலுவலாளர் விடுமுறையிலிருக்கும்போது, அறிவிலும் ஆற்றலிலும், அவரளவுள்ள இன்னொருவர் அவருடைய இடத்தில் அமர்த்தப்படுகிறார். இதனால், பதில் என்னும் சொல் ஈடு, பதிலி (substitute) என்னும் பொருள்களில் வழங்கத் தலைப்பட்டது. பதி என்னும் சொல்லே லகரமெய்யீறு பெற்றுப் பதில் என்றாகும். இங்ஙனம் ஈறுபெறுவது பொருள் வேறுபடுத்தற்கென்க. படி - (படில்) - பதில். பண்டமாற்றில் ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாறித் தருவதுபோல, உரையாட்டில் அல்லது எழுத்துப் போக்குவரவில், ஒரு சொலவுக்கு இன்னொரு சொலவை மாறித்தருவது பதில் எனப்படும். மாற்றம் என்னுஞ் சொல்லை இதனுடன் ஒப்புநோக்குக. மாறிச் சொல்வது அல்லது (இருவர்) மாறிமாறிச் சொல்வது மாற்றம். வழக்காளிகள் இருவருள், வழக்காடி வாதியென்றும், பதில் வழக்காடி ப்ரதிவாதியென்றும் வடசொல்லாற் கூறப்படு கின்றனர். வழக்காடியின் கூற்றுக்கு மாறிக்கூறுவதால், பதில் வழக்காடி ப்ரதிவாதியெனப்படுகின்றான். (பதில் வழக்காடி, வழக்காடியின் வழக்கிற்கு எதிராக, மற்றொரு வழக்குத் தொடுப்பது எதிர்வழக்காகும்.) ப்ரதியுபகாரம் - மாறிச்செய்யும் நன்றி. கைம்மாறு என்னுஞ் சொல்லை நோக்குக. ப்ரதிபிம்பம் - மாறித்தோன்றும் வடிவம். ஓரினத்தைச் சேர்ந்த எல்லாப் பொருள்களும், ஒரேபடி (வடிவு அல்லது வகை)யாயிருத்தலான், (படி அல்லது) ப்ரதி என்னும் சொல், ஒவ்வொரு என்னும் பொருளிலும் வழங்குவ தாகும். படி + உ = படிவு + அம் = படிவம் படிவு - வடிவு. படிவம் - வடிவம். ப-வ போலி. எனக்கு ஒரு படி(வகை)யாய் வருகிறது என்பதை, எனக்கொரு வடியாய் வருகிறது என்பர் தென்னாட்டார். பகு-வகு, பகிர்-வகிர், தபம்-தவம், என்பவற்றில் பகரத்திற்கு வகரம் போலியாய் வருதல் காண்க. படிமை என்னும் சொல், ஒன்றன் வடிவத்தைக் குறிக்கு மென்பது, முன்னர்க் காட்டப்பட்டது. நோன்பி(விரதி)கள் விதப்பான உடையும் அணியும் பூண்டிருப்பராதலின், அவரது வடிவம் அல்லது தோற்றம் சிறப்பாய்ப் படிமை யெனப்பட்டது விரதியரை வினாவல் என்னுந் துறைபற்றிய திருக்கோவைச் செய்யுளில், சுத்திய பொக்கணத் தென்பணிகட் டங்கஞ்சூழ் சடைவெண் பொத்தியகோலத்தினீர்... (242) என்று கூறியிருத்தல் காண்க. பார்ப்பனர்க்கும் ஒரு படிமையுண்டென்பது,வேதியuவினவல்’என்னுªதுறைபற்றிaசெய்யுளிš(243), வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ வதிரேய் மறையினிவ் வாறுசெல்வீர்.... என்றும், பாலைக்கலியில் (8), எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் என்றும் கூறியிருப்பதா லறியப்படும். படிமையுடையோன் படிமையோன். நோன்பைப் படிமை யென்றது ஆகுபெயர். படிமை என்னுஞ் சொல் படிமம் என்றும் நிற்கும். மம் என்பது பண்புப் bபயருக்கும்bதாழிற்பெயருக்கும்bபாதுவானXர்<றாகும்.cUk«, கருமம், பருமம், (பருமன்), மருமம் என்னுஞ் சொற்களை நோக்குக. படிமத்திற்கு (நோன்பிற்கு) உணவுமுறை வேறுபட்ட தாதலின், அது படிமவுண்டி யெனப்படும். `படிம வுண்டிப் பார்ப்பன மகனே (குறுந். 156:4) என்று குறுந்தொகை யில் வந்திருத்தல் காண்க. இனி, உயிர்களின் அறுவகைப் பகுப்பைப்பற்றிச் சிறிது கூறுகின்றேன். உயிர்களை அறிவுபற்றி ஆறாகப் பகுப்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டிலுள்ளது. இது ஒரு படிமுறைப் பகுப்பு. கிறித்தவமறையில், ஆதியாகமம் முதலதிகாரத்தில், படைப்பைக் கூறும்போது, நிலைத்திணை, நீர்வாழி, பறவை, விலங்கும் ஊர்வனவும் என்பன முறையே படைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இதுவும் ஒரு படிமுறைப் பகுப்பே. இதனால், கிறித்தவமறைக்கும் தொல்காப்பியத்திற்கும் ஓர் இயைபு கூறமுடியாது. சின்கிளேர் ஸ்ற்றீவென்சன் அம்மையார் (Mrs. Sinclair Stevenson) தாம் எழுதிய ஜைன நெஞ்சம் (The Heart of Jainism) என்ற நூலில், 7ஆம் அதிகாரத்தில் சமண முறைப்படி உயிர்களை 13 முறையிற் பலவாகப் பகுக்கின்றார். அவற்றுள், 4ஆம் முறையிற் புலன்பற்றி உயிர்களை ஐந்தாகப் பகுத்து, அவ் வைந்தனுள் ஐயறிவுயிரை மீட்டும் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி இரண்டாக வகுக்கின்றார். பின் 10ஆம் அதிகாரத்தில், பிரதிமா என்னும் பெயரால், ஒரு ஜைனன் மேற்கொள்ளவேண்டிய 11 சூளுறவுகளை யுங் குறிக்கின்றார். ப்ரதிமா என்பதற்குப் படிமா என்னும் மறுவடிவமும், 221ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பிற் காட்டப் பட்டுள்ளது. இங்ஙனம் அவர் கூறியதால், வடநாட்டில் வழங்கும் தமிழ்ச்சொற்களையும் தமிழக் கொள்கைகளையும், சமணர் மேற்கொண்டு வழங்கினர் என்பதல்லது, தொல்காப்பியர் சமணர் என்பது எங்ஙனம் பெறப்படும்? தமிழின் தொன்மையைப் பற்றியே திருவாளர் வையாபுரிப்பிள்ளையவர்கட்கு ஒரு கருத்தில்லையென்பது, அவர்களெழுதிய ஆராய்ச்சியுரைத் தொகுதியால் அறியக்கிடக்கின்றது. அவர்கள் முடிபெல்லாம், மகன் தந்தையை ஒத்திருப்பதால் மகனே தந்தையைப் பெற்றவன் என்பது போன்றவையே. வடமொழியுட்பட, வடநாட்டு மொழிகள் எல்லாவற்றிலும், தனித்தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்காகக் கலந்துள்ளன என்பதை, அவர் அறியார்போலும்! வடநாட்டில் தோன்றிய, பௌத்த மறைக்குச் சிறப்புப் பெயராய் வழங்கும் பிடகம் என்னும் சொல்லுங்கூட, பெட்டகம் என்னும் தமிழ்ச் சொல்லாயிருக்கும்போது, வேறென்ன சொல்ல வேண்டுவது? பிடகம் (பெட்டகம்) = பெட்டி, கூடை, தட்டு. கி.மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த தொல்காப்பியருக்கு, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண மதத்தோடு எங்ஙனம் தொடர்பிருந்திருக்க முடியும்? மகேந்திரமலை முழுகிக்கிடக்கின்றது என்று சுக்கிரீவன் அங்கதனுக்குக் கூறுவதாக வால்மீகி கூறியிருப்பதால், கபாடபுரம் இராமர்காலத்தது என்பது வலியுறும். ஒரு மொழியில் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும். இலக்கிய மின்றி யிலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம். (அகத்தியம்) தொல்காப்பியர் காலத்தில், ஆரியர்க்கு வேதமும் பிராமண மும் ஒருசில மிருதிகளும் இராமாயண பாரத இதிகாசங்களும் தமிழைப் பின்பற்றிய எழுத்து சொல் இலக்கணங்களும்மட்டு மிருந்தன. இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல். பொருள். 89) என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை, ஆரிய மணங்கள் எட்டனுள் ஒன்றான கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதாலறிய லாகும். இதனால், ஆரிய தமிழ வழக்கங்களையும் நூல்களையும், ஒப்பிட்டுப் பார்ப்பதில் தொல்காப்பியர் விருப்பமுடையவர் என்பதும் வெளியாகும். புறத்திணையியலில் வாகைத்திணைபற்றிய நூற்பாவில், `அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று கூறியிருப்ப தாலும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்க்கு வேதமிருந்தமை யறியப்படும். வேறேயொரு நூலாவது கலையாவது, ஆரியர்க் கிருந்ததாகத் தொல்காப்பியத்தில் எங்கேனும் குறிக்கப்படவே யில்லை. பிறப்பியலில், எல்லா எழுத்தும் அந்தணர் மறைத்தே என்று கூறியது, ஆரிய மறையை யன்றென்பது பின்னர் விளக்கப்படும். களவியலுரையில், நச்சினார்க்கினியர், பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப (13) என்னும் நூற்பாவிற்கு, அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம் என்றவாறு. எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான், இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை, அவர் புணர்தற்கு நிமித்தமாதலின். அவை அவன் கண்ணவெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப.... அவ்வாற்றானே பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசுரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம் என்றும், முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (14) என்னும் நூற்பாவிற்கு, இதற்கு முன்னின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும் என்றும், பின்னர் நான்கும் பெருந்திணை bgWnk”*7 (15) என்ற நூற்பாவிற்கு, பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வத மென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் என்றும், முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே (16) என்னும் நூற்பாவிற்கு, மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும், கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறு 7 இதுவும் முந்தின நூற்பாவும் நமச்சிவாய முதலியார் பதிப்பில் இரண்டாகவும், கனகசபாபதி பிள்ளை பதிப்பில் ஒன்றாகவும் காட்டப்பட்டுள்ளன. தலின், அவை ஐந்தெனப்படும் என்றும் தமிழ்முறைக்கு மாறாக உரை கூறினார். இவ் வுரை தவறென்பதற்குக் காரணங்களாவன : (1) தமிழ்முறைக்கு மாறானமை. இதை, நச்சினார்க்கினியரே, இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்போலா இவை யென் பதூஉம்.... இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க, என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம். (2) ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல். களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோ ளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர். தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப்படலாம். ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச் சொற்பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல் கூடாது. (3) முறைமாற்று. ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், அசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையிலமைந் திருக்கவும், இவற்றுள் முன்னைய நான்கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர். (4) தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை. இதை, இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும் என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. இது பின்னரும் விளக்கப்படும். (5) பார்ப்பனத் தொடர்பு கூறல். பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில்லை யென்று, முன்னமே முன்னுரையிற் கூறப்பட்டது. ஆயினும் தெளிவுறுத்தற் பொருட்டு இங்கும் கூறுகின்றேன். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக்கத் தையும் இல்லறத்தையும் சிறப்பாய்க் கூறும் அகத்திணையியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப்படக் கூறும் பிற வியல் களிலேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை. `அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். புறத். 16) என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்குமேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா. பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன : கற்பியல் : காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (36) தோழி தாயே பார்ப்பான் பாங்கன் .............................................................. யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (52) செய்யுளியல் : பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி .............................................................. களவிற் கிளவிக் குரியர் என்ப. (181) பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். (182) பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. (189) மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலா ரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். `வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர். அந்தணர், ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும். கற்பியலில், திருமண வினையைப்பற்றி நான்கு நூற் பாக்கள் உள்ளன. அவையாவன : கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. (1) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. (2) மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே. (3) பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (4) இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையைமட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க் கினியர் திருமண வினைக்குக் காட்டாகக் கூறிய செய்யுள் வருமாறு : உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த வீரித ழலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றை..... (அகம். 86) இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க. பொய்யும் வழுவும் என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை. ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்கவில்லை. என்ப என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வா யறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத் தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழரா லேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும் மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே. பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்பதற்கு, இளம் பூரணர் உரைத்த உரையாவது : பன்னிரண்டாவன : பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற் பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும் என்பது. இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத் தைக் கலந்துணர்ந்தமையாலேயே தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமையால், அவர்மீதும் குற்றஞ் சுமத்தற்கிடமில்லை. இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு : கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந் திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டாம். ``காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்; நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்; சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும் (அகத். 53) (ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. இவையே, முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொடரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க. ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (அகத். 54) இவையே, பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்று சுட்டப்பட்டவை. `முன்னைய, `பின்னர் என்னும் முறையையும், `மூன்றும் `நான்கும் என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக. அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப்பாரை. யாழ் இசை. யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார். கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்பவை, முறையே, ஒருதலைக் காமமென்றும், இருதலைக் காமமென்றும், பொருந்தாக் காமமென்றுங் கூறப்படுகின்றன. இவை தெளிவும் நிறைவுமான இலக்கணங்களல்ல. கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பாலும் (சிறிது) காலமே நிகழ்பவான காமக் குறிப்புகளும் புணர்ச்சிகளுமாகும். கைக்கிளைக் குறிப்பே, பெருந்திணைக் குறிப்பே என்று கூறுதல் காண்க. அன்பினைந்திணை அங்ஙனமன்றி, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுள்ள நீடித்த அன்பொத்த இன்பவாழ்க்கையாகும். நெறிதிறம்பிய காமம் ஒரு பெண்ணுக்கு எவ்வகையிலேனும் தீமை செய்யாவிடத்துக் கைக்கிளையாம்; தீமை செய்தவிடத்துப் பெருந்திணையாம். காமஞ்சாலாத ஒரு சிறு பிள்ளையோடு பேசிமட்டும் இன்புறுவது கைக்கிளை; வரம்பு கடப்பின் பெருந்திணை. இன்பநெறிக்கு மாறாக விலங்குத் தன்மையும் பேய்த்தன்மையுமான கூட்டமெல்லாம் பெருந்திணையே. கொடிய குட்டநோய் பெருநோய் எனப்பட்டதுபோல, கொடியமணக் கூட்டம் பெருந்திணை யென்னப்பட்டது. இதையறியாமல், எண்வகை மணங்களில் நால்மணம் பெற்றதால் பெருந்திணை யெனப்பட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர். மேலும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்மணங்களும் பெருந்திணை யாகாமையு மறிக. பண்டைக்காலத்தில், களவின் தொடர்ச்சியாகவே கற்பு நிகழ்ந்துவந்தது. இதுபோது, பெரும்பாலும் பெற்றோராலேயே புணர்க்கப்படும் மணங்களுள், பெண் மாப்பிள்ளை என்னும் இருவர்க்குள்ளும், ஒருவர்க்கே அன்பிருப்பின், கைக்கிளையின் பாற்படும்; இருவர்க்கும் அன்பிருப்பின் அன்பின் ஐந்திணையாம்; இருவர்க்கும் அன்பில்லாதிருப்பின் பெருந்திணையின் பாற்படும். அகத்தியர் காலம் இனி, அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போதுகின் றவர்.... துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகார வுரையிற் கூறியிருப்பதின் பொருளையுணராது. அகத்தியரைக் கண்ணனுக் குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர். நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவுகளுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவதென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறத்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவ ராதல் எங்ஙனம்? அரசரைத் திருமாலின் வழியினராகக் கூறுவது தமிழ்நாட்டு வழக்கமென்பதும், திருமாலின் முதல் ஐந்து தோற்றரவுகளும் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தனவென்பதும் பின்னர்க் கூறப்படும். அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழரசரையும் அவர்க் கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை. காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரையினின்றும் கொண்டுபோந்த குடிகளைக் குடியேற்றியதை. அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாடபுரத்தை)க் கடல் கொண்டபின். துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும். துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற் காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட் டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையானதென்பதை. அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும், உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறம். 201) என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம். மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக்கழக அகராதியில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்றதென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதை யறியாமையாலேயே, மேற்கூறிய தவறுகளும் அன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிடரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர்களை யிட்டனர் என்க. மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோ வேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அச் செய்யுளின் அடிக்குறிப்பில், தபங்கரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, `ஹொய்ஸள என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமையால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தை யடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக் கோயிலி லிருந்த பெரியவர் அவனை நோக்கி `ஹொய்ஸள என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி `ஹொய்ஸளன் என்றும் `புலிகடிமால் என்றும் பெயர்பெற்றன னென்று வேறு சிலர் கூறுவர் என்று வரைந்துள்ளார்கள். இவை கல்வெட்டுச் செய்திகள். இதனால், இருங்கோவேளின் மரபினர் ஹொய்சளர் என்பதும், அவ் வேள் ஒருமுறை ஒரு புலியைத் தன் குடிகட்குத் துன்பஞ் செய்வதினின்று விலக்கினான் என்பதும், பிற்காலத்தில் ஹொய்சளன் என்னும் பேருக்குப் பழங்காலக் கதை சற்றுப் பொருத்திக் கூறப்பட்ட தென்பதும் அறியப்படுமேயன்றி, புலிகடிமாலே ஹொய்சளக் குடியினன் என்பது பெறப்படாது, காலவிடையீடு பெரிதாயிருத்தலின்.8 இனி, புலிகடிமால் என்னும் பெயராலும் ஹொய்சள என்னும் பெயராலும் சுட்டப்பட்ட கதைகள் வெவ்வேறாகவு மிருக்கலாம். மைசூர் நாட்டில் சிறுத்தைப் புலிகள் நிறைந்திருப் பதும், அடிக்கடி அவை சிற்றூர்களுக்கு வந்து குடிகளுக்குத் துன்பம் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப்போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. ஐயரவர்கள் குறிப்பிலேயே இருவேறு வரலாறுள. வடபால் முனிவரன் தடவுட் டோன்றினதாக இருங்கோ வேளைப்பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனை யான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று. இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவ ரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும்; இடைக்கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க. தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழியாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் 8 Ancient India, pp. 228, 229. கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப் பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற்றுணர்ச்சி அற்று விட்டதுமே, கரணியமாகும். ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்திலேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூ லறிவின்மையும், மிக்க பண்டைக் கால அல்லது இடைக்காலத் தமிழரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்! தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும் தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களு மிருந்தனவேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழ்க் கலை களைப்பற்றி விரிவா யெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனை யடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத்தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று இங்கெடுத்துக் கூறுகின்றேன். (1) இலக்கணம் தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந் தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம். பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவே யுடையன. ஆனால், தமிழோ அவற்றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக் கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்ளின் பொருளை யுணர்தற்குக் கருவி களாதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங் கலக் காரிகை என்பவை, தொல்காப்பியத்திற் கூறப்படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனிநூல்களா யெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று. தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியா யுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியென்று முன்னர்க் கூறப்பட்டது. பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒருமொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே. ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும். பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை, பாண்டிய அரசனும் புடைபடக் கவன்று, `என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட் டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின்,இவைபெற்றும்பெற்றிலேம்....9 எனக் கூறியதால் அறியலாம். பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல்லிலக் கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருக்கும் வாயிலும் நடையும் போல்வன. 9 இறை. (ப), ப. 8, 9 பொருளிலக்கண முடைமையால் தமிழ் மிக்க இலக்கண வரம்புள்ளது என்று முன்னோர் கொண்டமையை, கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்ற பரஞ்சோதி முனிவர் கூற்றாலுணரலாம். பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என ïரண்டாகவும்,mவற்றுள்,mகம்iகக்கிளைIªதிணைgருந்திணைஎdஏHகவும்,புwம்tட்சி,வŠசி,உÊஞை,து«பை,வhகை,கhஞ்சி,பhடாண்எdஏHகவும்வFக்கப்படும். ஒG¡fü‰ பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களுள் இன்பம் இன்னவாறிருந்ததென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாதவாறு, அகத் தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அகமெனப்பட்ட தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப்படக் கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப்பட்டதென்றும் கூறப்படுகின்றது. சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவி யிருவரிடையே யாதலாலும், அன்பிற் கெதிரான பகையாலேயே போர் நிகழ்வதாலும் இவ் வுரை கோளும் ஒருவாறு பொருந்துவதே. மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனை யிரண்டையும் பற்றியே யிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழி யால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்துகொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இது பெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவனான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு. புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்றும் பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர். இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ் விருபால்பற்றிய தொழில்களையும் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர்திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத் தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத்தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணையாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று. பெள் - பெண். பெட்பு = விருப்பம். பெண் - பேண். பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல். பெண் - பிணா. பிணவு - பிணவல். பெள் + தை = பெட்டை - பெடை - பேடை - பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனாலேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவியையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப்பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் - ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் - (ஆடு) - ஆடவன். (ஆடு) - ஆடூஉ. ஆண்மைத் தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள். பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லாக் கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கை யையே, அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந் தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழி பாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின், அகப்பொரு ளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண் டனர். இதையறியாது சில பார்ப்பனர் அகப்பொரு ளிலக் கணத்தைக் காமநூ லென்கின்றனர். ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும். காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளிடம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னை யறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக்குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள்களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொரு ளிலக்கண மென்க. இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளி லில்லாத பொருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொருளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத்திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னை யிலக்கணிகள். வாகைத்திணையின் இலக்கணமாவது : வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப* (தொல். புறத்.15) v‹gJ. வாகைத்திணையின் பாகுபாடாவது : அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையான் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் (தொல்.புறத். 16) v‹gJ. பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்ட தாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற் குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த்தொழில் பொருளிலக்கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க. சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்புநோக்குக. இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை அனை நிலை வகை யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த)ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் அறிவன் தேயமாய் அடங்கும். செய்யுளிலக்கணம்: செய்யுளுறுப்புகளில் அடிப் படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு miraG¤j¤ij¥(Accentuation of syllables) பொறுத்தது. அங்கு அசைகள் எடுப்பசை (Arsis - accented syllable) படுப்பசை (Thesis-unaccented syllable) என இரண்டாக வகுக்கப்பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறை யொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள் தனித்தொலிப்பதும் இணைந்தொலிப்பதும்பற்றி, நேரசை நிரையசையென்றும், அவை குற்றியலுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை. செய்யுள்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை. செப்பலோசைக்கு வெண்பாவும், அகவலோசைக்கு ஆசிரியமும் துள்ளலோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டுபிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாட லையும் அகப்பொருட்கும், அம்போதரங்க வொத்தாழிசைக் கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பனவாகும். செப்பல் - விடையிறுத்தல். அகவல் - ஒருவரை விளித்துக் கூறல். கலிப்பாவின் சிறப்பைக் கலித்தொகையிற் கண்டறிக. எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங்களிற் பாடுவதும், சொற்செறிவும், தமிழுக்கே சிறப்பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது. தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். அதன் வகை யிரண்டற்கு இங்குக் காட்டுத் தருகின்றேன். (திருமால் வாழ்த்து) (1) அம்போதரங்க வொத்தாழிசைக்கலி தரவு ``கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிறும் வாறுளைஇ யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்; தாழிசை 1 முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; 2 கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ; 3 படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ; பேரெண் இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை; சிற்றெண் கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை; தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை; ஒலியிய லுவண மோங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய வடியினை: இடையெண் போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ; அளவெண் ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ தனிச்சொல் எனவாங்கு; சுரிதகம் அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன். (தோழி தலைவனை வரைவுகடாயது.) (2) வண்ணக வொத்தாழிசைக்கலி தரவு விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார் பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்; தாழிசை 1 காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ; 2 அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ; 3 பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த் தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ; அராகம் தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்; போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி; தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை; மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்; நாற்சீரீரடி யம்போதரங்கம் கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ; கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ; நாற்சீரோரடி யம்போதரங்கம் நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே; துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே; அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே; முச்சீரோரடி யம்போதரங்கம் அத்திறத்தா லசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தனகண்; பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்தன [Kiy; அழலினா லசைந்தது நகை; அணியினா லொசிந்த திடை; குழலினா னிமிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை; இருசீரோரடி யம்போதரங்கம் உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்; கட்கொண்ட றுளித்தொருபால்; கழிவெய்தும் படித்தொருபால்; பரிவுறூஉந் தகைத்தொருபால்; படிறுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉந் தகைத்தொருபால்; இளிவந்த வெளிற்றொருபால்; மெலிவுறூஉந் தகைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்; ஏதில்சென் றணைந்தொருபால்; இயனாணிற் செறிவொருபால்; தனிச்சொல் எனவாங்கு ; சுரிதகம் இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம் என்னவு முன்னாட் டுன்னா யாகிக் கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணியம் யாமே பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே. வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரையுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அளவழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப்புள் அடங்கும். தமிழ்ச்செய்யுள்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள், பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற்காலத்தார் விருத்தம் என்னும் வடசொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். இதன் விளக்கத்தைத் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள பாவினம் என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க. ஒரு மொழியின் வடிவம் உரைநடை, செய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்டெல்லாம் செய்யுளாகவே யிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப்பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யு ளியற்றுந் திறமையுடையவரா யிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம். செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தார்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகையாவன: மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ . . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . . ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும் . . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . . நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. (தொல்.செய். 1) (1) மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரை களைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவையென்ற வாறு.... (2) எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. (3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். (4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு. (5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தா வதோர் உறுப்பு. (6) யாப்பு என்பது, அவ் வடிதொறும் பொருள்பெறச் செய்வதொரு செய்கை. (7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை. (8) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல். (9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு. (10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். (11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (12) அளவியல் என்பது, அப்பா வரையறை. (13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச்செய்தல். (14) கைகோள் என்பது, அவ்வத் திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்..... (15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்.... (16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல். (17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்.... (18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும்பொழு தென்னுங் காலப்பகுதி முதலாயின. (19) பயன் என்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். (20) மெய்ப்பாடு என்பது, சொற்கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல். (21) எச்சவகை யென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல். (22) முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச்சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். (23) பொருள் என்பது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மை. (24) துறைவகை என்பது, முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படு மென்று ஒரு துறைப்படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்குளதாகச் செய்தல். (25) மாட்டு என்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (26) வண்ணம் என்பது, ஒரு பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம்.10 இவற்றுள் கூற்று, கேட்போர், களன் முதலிய சில வுறுப்புகள் எல்லா மொழிகட்கும் பொதுவேனும், அவை செய்யுளுறுப்புகளிற் சேர்க்கப்பட்டதும், நோக்கு, திணை, துறை முதலிய பிறவுறுப்புகளும் தமிழுக்குச் சிறப்பாகும். மேற்கூறிய 26 உறுப்புகளையும் தொல்காப்பியத்திற் கண்டு கொள்க. இங்கு நோக்கு என்பதற்கு மட்டும் ஒரு காட்டுத் தருகின்றேன். முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் 10 தொல். செ. 1. பேராசிரியர் உரை. கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெரு கானங் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேர னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே. (அகம். 4) முல்லையென்னாது `வைந்நுனை என்றதனான், அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னுமாகலின். இல்லமும் கொன்றை யும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை, `இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந்தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்ட வழி வெப்பம் மாறா விட்டவாறுபோல வெம்பா நின்றன வின்னுமென்றவாறு. `பரலவ லடைய விரலை தெறிப்ப எனவே, பரல் படுகுழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. `கருவி வானங் கதழுறை சிதறி என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறின வென்றவற்றையும் புதுமை கூறினாள்; எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. `குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே, தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான்றோனாதலா னென்றவாறு. அதற்கென்னை காரண மெனின், `துணையொடு வதியுந் தாதுண் பறவை எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணி நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாமைமணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தேரனாகி வாராநின்றானென இவையெல்லாந் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. `கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள். தெய்வமலை ஆகலான் அதனுளமன்ற காந்தளைத் தெய்வப் பூவெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப்போன்று வடிவொத்து மனங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மை யினென, இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று11 அணியிலக்கணம்: அணியை முற்காலத் தமிழர் யாப்பினின்றும் பிரிக்கவில்லை. உவமையின் வேறுபாடுகளையும், எழுத்திலக் கணத்திலும் சொல்லிலக்கணத்திலுமுள்ள பல அமைதிகளையுமே பிற்காலத்தார் அணியிலக்கணமாகப் பிரித்துக் காட்டினர். உவமை யென்னுந் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவ ரிதய நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே. 12 இனி, இவ் வோத்தினிற் (உவமவியல்) கூறுகின்ற உவமங் களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள் ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத் தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந்தாங் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது..... இனி, இரண்டுபொரு ளெண்ணியவற்றை வினைப்படுக் குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணி 11 தொல். செய்.103. பேராசிரியர் உரை. 12 மாறனலங்காரம்; வரலாறு, பக். 10. யென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென்பது அவர் கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள்கூறி, `எனவாங்கு என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் `எனவாங்கு என்பதோர் மொழி எனவென்பது ஓரலங்காரமெனல் வேண்டுமாகலான், அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன. இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனா லணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது. இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.13 உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறை யுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள்களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதா யமைந்து, அந்நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப்பதாகும். இது மன்ன னெப்படி மன்னுயி ரப்படி என்னும் நெறிமுறை பற்றியது. உள்ளுறுத் தியற்றப்படும் உவமம் உள்ளுறையுவமம். கா: வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர. (கலித். 66) இதனுள், `வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலை வனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் 13 தொல். உவ. 37, பேரா. உரை. வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர்வித்த லாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தை யருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க. இலக்கியம் தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகையாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர். இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனொடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட்டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ். முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமிழிலக் கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக்கவிராயர் இயற்றிய இராமாயண நாடகம் போன்றது (ஆனால் உரையிடை யிட்டது) நாடக இலக்கியம். mf¤âa« K¤jÄÊy¡fz«.;áy¥gâfhu« முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம். தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளிலுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித்தற்கேற்ற நிலையி லுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும். இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.14 இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவையாகும். இலக்கு இலை. இலக்கித்தல் எழுதுதல் (சீவக. 180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்கள். வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம் 14 ‘ïy¡fz«’, இலக்கியம் என்னும் சொற்களைப்பற்றித் தமிழ்ப்பொழிலில் யான் வரைந்துள்ள கட்டுரையைக் காண்க. என்பது. செந்தமிழ்ச் சொற்களைத் திரித்து வடநூல்களில் வரைந்துகொண்டு அவற்றை வடசொல்லென்று வற்புரைப்பது ஆரிய வழக்கம். இலக்கணத்தைக் குறிக்க இலக்கணம் என்ற சொல்லன்றி வேறு சொல் தமிழில் இல்லை. இங்ஙனமே இலக்கியத்திற்கும். சிறந்த இலக்கணமும் இலக்கியமுமுடைய தென்மொழிக்கு அவற்றைக் குறிக்கும் சொல் இல்லையென்றால், அறிஞர் நம்ப முடியுமா? இசைத்தமிழ் - (Musical Literature) இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி). தமிழ் தலைக்கழகக் காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றிமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன : அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (எழுத்து. 33) .....brŒâ யாழின் பகுதியொடு தொகைஇய அவ்வகை பிறவும் கருவென மொழிப (அகத். 20) துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவு. 1) பாணன் பாடினி.... வாயில்கள் என்ப. (கற்பு. 52) .... பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே (செய். 173) என்பன. இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேனும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமைபற்றி அதை மொழிப்பகுதியாக்கினர். இழவு åட்டில்mழுவதுகூடmராகத்தோடுmழுவதுjமிழர்tழக்கம்.muhf¤njhL அழாவிட்டால், அழத் bதரியாதவராகv©ணப்பLவர். இir¡F உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வுறுப்புக்களில் ஒன்றற்குப் பெயராயமைந்ததும் இச் சொல்லே. அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க. தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் - தாளம். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய்-(சை)-கை (த.) (செய்கை - சைகை.) பாணி கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. கொட்டு அமுக்குதல்; அதற்கு மாத்திரை 1/2. அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1. தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை 2. அளவு தாக்கினவோசை 3 மாத்திரை பெறுமளவும் வருதல். அரை மாத்திரையுடைய ஏகதாள முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என முப்பிரிவை யுடையது. சுரம் மொத்தம் ஏழு, அவை ஏழிசை யெனப்படும். ஏழிசைகளாவன : தென்மொழிப் வடமொழிப் அடையாள பெயர் பெயர் வெழுத்து (1) குரல் ஷட்ஜமம் ச (2) துத்தம் ரிஷபம் ரி (3) கைக்கிளை காந்தாரம் க (4) உழை மத்திமம் ம (5) இளி பஞ்சமம் ப (6) விளரி தைவதம் த (7) தாரம் நிஷாதம் நி ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ்விரண்டாகப் பகுக்கப்படுவன. இவ் விருசார் சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதிஸ்வரம்), பகுவிசை (விக்ருதி ஸ்வரம்) எனக் கூறப்படும். எழுசுரங்களும் நுட்பப் பிரிவால் 12 ஆவதும் 24 ஆவதும் 48 ஆவதும் 96 ஆவதும் ஓர் இசையை நான்காகக் கருணாமிர்த சாகரத்துட் (பக். 860 - 62) கண்டுகொள்க. தமிழர் பகுத்துணர்ந்தது அவரது நுண்ணிய செவிப்புலனைக் காட்டும். ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு Ãiy(octave) யெனப்படும். இதை ஸ்தாய் என்று மொழிபெயர்த்தனர் வடநூலார். தா= நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.) மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன. பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும்போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள், கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல்களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கி றார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழாசிரியர் இராஜகோபாலையரவர்களும், தமிழ்க் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள். ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துகளான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங் காட்டிக் கூறுகின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.15 15 கருணாமிர்த சாகரம். பக். 11. 2-5 இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம். ச ரி க ம ப த நி என்பவற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்துக்களையே, கு து க உ இ வி த என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக்கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை. பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றை, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஔடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை. பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலை யெனப்படும். அது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப்பாலை என நால்வகை. இந் நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம்பாலைப்பண் (தீர சங்கராபரணம்) படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும். பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்-யாழ் = ஏழிசையுடையது. இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க. பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நரப்படைவாலுரைக்கப் பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம். குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலியவாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர். இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர். பண்ணைப் பாடும்போது, ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில். ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக் கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக. ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன. பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையொடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை. சீர்த்தி - கீர்த்தி. ``சீர்த்தி மிகுபுகழ் என்பது தொல் காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என்றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றினின்றும் பிறந்ததாகும். தோற்கருவிகள் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, நிமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை முதலியன. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நடமுழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர். துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டியின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப்பட்டது. நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு). செங்கோட்டியாழ் (7 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) என்பன. நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட் டியாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டி. செங்கோல் என்பதை இதனொடு ஒப்புநோக்குக. கணைகொடி தியாழ்கோடு செவ்விது (குறள். 279) என்று கூறியது, வளைந்த பிற யாழ்களை நோக்கியேயன்றிச் செங்கோட்டியாழை நோக்கியன்று. இசைத்தமிழ் வழக்கற்றுப்போன பிற்காலத்தில், கம்பர் முதலியோர் யாழும் வீணையும் வேறாகக் கருதினர். யாழ் என்னும் தென்சொற்குப் பதிலாகவே, வீணையென்னும் வடசொல் வழங்கி வருகின்றதென்க. இப்போது ப்விடில் (Fiddle) என்று சொல்லப்படும் மேனாட்டிசைக்கருவி, பண்டு கீழ்நாட்டிலிருந்தே சென்றதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் அதற்கு வழங்கும் பெயர் கின்னரி அல்லது கின்னரம் என்பது. கின்னரி வாசிக்குங் கிளி என்றார் காளமேகரும். தென்னாட்டில், யாழ்பயின்ற ஒரு வகுப்பார் யாழோர் எனப்பட்டது போல, கின்னரம் பயின்ற ஒரு வகுப்பார் கின்னரர் எனப்பட்டனர்போலும்! யாழோரும் (கந்தருவர்) கின்னரரும் பதினெண்கணத்தைச் சேர்ந்தவராகப் புராணங் கூறும். யாழுறுப்புகள் வாய், கவைக்கடை, கோடு, மாடகம், நரம்பு, திவவு, பத்தர், போர்வை, ஒற்று, தந்திரிகரம், ஆணி முதலியன. இவற்றுள், மாடகம், ஒற்று, தந்திரிகரம், ஆணி என்பவற்றால் வீணை போன்றிருந்த ஒரு யாழ் அனுமானித்தறியப் படும். யாழில் இசையமைக்கும் வகை பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என எட்டு. யாழை இயக்கும் (வாசிக்கும்) வகை வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என எட்டு. நின்ற நரம்பு(ச), இணை நரம்பு (ப), கிளை நரம்பு (ம), நட்பு நரம்பு (க), பகை நரம்பு என்பன நரம்புகட்கிடையுள்ள தொடர்பைக் காட்டும் குறியீடுகள். செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள். யாழ்நரம்பின் குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க. இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர். மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித் திட்டத்தை (Scale)í« குறிக்கும் செந்தமிழ்ச்சொல். பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர். ``பாண்சேரிப் பற்கிளக்கு மாறு என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்கு மாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும். ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாஸ்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது ..... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தினின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89), வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி (சிலப். 13:28-9) என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது. சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்புநாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார்.16 வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது. பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன் களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின்றனர்; ஆயினும், புல்லாங்குழல் மிருதங்கம் போன்ற மதிப்பான கருவிகளையே பயில்வர். பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையாலேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல்வேண்டும். 16 சாம வேதம் : முகவுரை, ப. 19. நாடகத்தமிழ் (Dramatic Literature) நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். அகத். 56) கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப (தொல். கற்பு. 52) என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப் படும். நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர். நடி + அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் = நடம் - நட்டம். நட்டம்-நிருத்தம் (வ). ஒ.நோ: வட்டம் - விருத்தம் (வ.). (வள் + தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்று பவன் நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடுபவள் நாடகக் கணிகை. தாளத்தைக் கணித்தாடுவதால் கணிகை யென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர். தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர். தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் - குதித்தல். நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே அம் ஈறுபெற்று நடம் என்றானது எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று சொல்லும் வழக்கை நோக்குக. நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங் குறிக்கும். நடக்கை, நன்னடக்கை முதலிய வழக்குகளை நோக்குக. நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய் வகுக்கலாம். நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத்தையும் உணர்த்துகின்றது. குதித்தாடுவது கூத்து. கூத்தாடு கிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான் என்னும் வழக்குகளை நோக்குக. நாடகத்தை முன்னோர் (1) வசைக்கூத்து, புகழ்க்கூத்து, (2) வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, (3) வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, (4) சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் கூத்து, (5) ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, (6) இயல்புகூத்து, தேசிகக்கூத்து, (7) அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர். இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை : (1) சொக்கம் - தனிநடம் (சுத்தநிருத்தம்). (2) மெய் - தேசி, வடுகு, சிங்களம். (3) அவிநயம் - கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ்செய்வது. (4) நாடகம் - கதை தழுவிவருவது. அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி. விநோதக்கூத்தின் வகை (1) குரவை (2) கலிநடம் - கழாய்க்கூத்து (3) குடக்கூத்து (4) கரணம் (5) நோக்கு - மாயம், கண்கட்டு முதலியன. (6) தோற்பாவை (7) நகைத்திறச்சுவை. சிலர் நகைத்திறச்சுவைக்குப் பதிலாக வெறியாட்டைக் கூறுவர். வரிக்கூத்து கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டுவகைப்படும். அவிநயம் வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன், தெய்வமுற்றோன், ஞஞ்ஞையுற்றோன், உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழைபெய்யப் பட்டோன், பனித்தலைப்பட்டோன், வெயிற்றலைப்பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணோவுற்றோன், தலைநோவுற்றோன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன் என 24 வகைகளையுடையது. இவற்றை இன்னும் மலையாள நாட்டுக் கதகளியிற் காணலாம். அவிநயத்திற்குரிய கை இணையாவினைக்கை (பிண்டி, ஒற்றைக்கை), இணைக்கை (இரட்டைக்கை, பிணையல்) என இருவகை. இவற்றோடு ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என நான்கைக் கூட்டுவாருமுளர், இணையாவினைக்கை பதாகை முதல் வலம்புரியீறாக 33 வகைப்படும். இணைக்கை அஞ்சலி முதல் வருத்தமானம் ஈறாக 15 வகைப்படும். இனி, அவிநயக்கை எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என மூன்றாகவும் வகுக்கப்படும். நாடகமாடும் சாலை அரங்கு எனப்படும். இச் சொல் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து, அறை என்னும் பொருளையுடையது. அறையை அரங்கு என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. அரங்கிற் கட்டும் திரை எழினி யெனப்படும். மேல் எழுந்து செல்வதால் எழினி யெனப்பட்டது. அது ஒருமுக வெழினி (ஒருபுறத்தினின்று இழுப்பது), பொருமுக வெழினி (இரு புறத்தினின்றும் இழுக்கும்), இரட்டைத்திரை. கரந்துவரல் எழினி (மேனின்று கீழிறங்கி வருவது) என மூவகைப்படும். வடநூல் களில் ஒரேயொருவகைத் திரைமட்டும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாடகம்பற்றிய பிற விலக்கணங்களை யெல்லாம், அடியார்க்குநல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரை யினின்றும் அறிந்துகொள்க. இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க. இவற்றை ஆரியக்கலைகளாகக் காட்டவேண்டியே, தென்சொற் கட்குப் பதிலாக வடசொற்களைப் புகுத்திவிட்டனர் ஆரியர் என்க. குரல் என்பதைக்கூடச் சாரீரம் என்று சொன்னால் பிறவற்றைப் பற்றி என் சொல்வது? இசைத்தமிழும் நாடகத்தமிழும் மறைந்துபோனமைக்கு ஆரியமும் சமணமும் பெரிதுங் காரணமாகும். தொல்காப்பியத்தினின்று அறியும் பாக்களும் நூல்களும் அறுவகைப்பாக்கள் (Poetic Metres) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல் என்பன. இருபான் வண்ணங்கள் (Poetic Rhythms) பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர (ஓவிய) வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன. பொருளீடுகளும் நூல்வகைகளும் (Different Themes and Kinds of Poetry) காமப் பொருளீடுகள் (Amatory Themes) கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை, மடல் முதலியன. வரணனைப் பொருளீடுகள் (Descriptive Themes) குறிஞ்சி, முல்லை (Pastoral), மருதம், நெய்தல், பாலை என்பன. போர்ப் பொருளீடுகள் (Martial Themes) வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை முதலியன. கருதற் பொருளீடுகள் (Reflective Themes) பெருங்காஞ்சி, முதுகஞ்சி, மறக்காஞ்சி, வஞ்சினக் காஞ்சி, மகட்பாற்காஞ்சி, கையறுநிலை (Elegy) முதலியன. பாடாண் பொருளீடுகள் (Euology and Doxology) உலா, கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால்வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன. வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ (Didactic.) புறநிலை வாழ்த்து (Benedictory.) செய்யுளின் எழுநிலம் (Bases of Poetical Composition) பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன. இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளொடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால்வகைப்படும். நூல்வகை (Different Kinds of Poems) பண்ணத்தி - பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல். எண் வனப்பு அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic), விருந்து (Novel Composition), இயைபு (Epic whose sections end in any of the nasals or liquids), புலன் (Dramatic), இழைபு (Lyrical) என்பன. மறைநூல் (Scripture) ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது தோன்றக்கூடிய சிறந்த நூல் மறைநூலாகும். அதனால் அதன் பெயர் அறிவு அல்லது புத்தகம் என்று பொருள்படுவதாயிருந்து, பிற்காலத்தில் பிற நூல்களுக்கும் கலைகளுக்கும் பொதுப் பெயராவதுண்டு. ஆங்கிலத்தில் கிறித்தவ மறைநூலுக்கு Bible என்று பெயர். இது புத்தகம் என்று பொருள்படும் biblos என்னும் கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. Bible என்னும் சொல் இன்றும் புத்தகம் என்று பொருள் படுவதை, bibliography, bibliomania முதலிய சொற்களா லறியலாம். Scripture என்பதும் முதலாவது எழுத்து (எழுதப்பட்ட நூல்) என்றே பொருள்படும். Script - எழுத்து. வடமொழியில் வேதமே முதலாவது நூல். வேதம் என்னும் பெயர், வித் (அறி) என்னும் வேரினின்று பிறந்து, அறிவு என்று பொருள்படுவதொரு சொல். பிற்காலத்தில் ஆயுர்வேதம், காந்தருவ வேதம், தனுர்வேதம் என்று பிற கலைகட்கும் வேதம் என்னும் சொல் பொதுப்பெயராயிற்று. இங்ஙனமே தமிழிலும் முதலாவதெழுந்த நூல் மறை நூலாகும். மறை என்னும் சொல் மறைவான (Esoteric) பொருளுள்ளது என்று பொருள்படுவது. பின்பு அது பிற கலைகட்கும் பொதுப் பெயரானதை, நரம்பின் மறை என்றும், காமப் புணர்ச்சியும்.... மறையென மொழிதல் மறையோர் ஆறே17 என்றும், முறையே, இசைநூலையும் இலக்கண நூலையும் குறிக்க அச் சொல்லைத் தொல்காப்பியர் வழங்கியதினின் றறியலாம். தமிழர்க்குத் தனிமறையிருந்த தென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே (75) மறைமொழி கிளந்த மந்திரத் தான (158) நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (171) என்று கூறியிருப்பதா லறியப்படும். மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளுவரும் கூறுகின்றார். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) நக்கீரர் பாடிய முரணில் பொதியில் என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், `நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய், குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது (குறள். 29) 17 தொல் செய். 178. என்று கூறியிருப்பதாலும், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண்டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும். பக்குவான்மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது. மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பனவாகும். நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்துகொண்டனர். வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல்லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென்றும் பொருள்படும். மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் - நினைத்தல். முன் + அம் = முன்னம் - முனம். A.S. munan, to thinks. Ger. meinen, to think. முனம் - மனம் (முன் - மன்) ஒ.நோ: முடங்கு - மடங்கு. முறுமுறு - மர்மர் (murmur), E. kd« - kd° (Skt.), mens (L.), menos (Gk.), mind (E.). திரம் = உறுதி. திரம் - திறம். ர - ற. ஓ.நோ: ஒளிர் - ஒளிறு; கரு(ப்பு) - கறு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து ஸ்திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ. நாகம் - snake (E). முன் - மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ: தேன் + தட்டு = தேந்தட்டு. வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுக்கு வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும். எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொல். பிறப்பு.20) என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் கூறியது தமிழ மறையையே யன்றி ஆரிய மறையையன்று. முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தென்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும். இரண்டாவது, அஃதிவண் நுவலாது.... அளவுநுவன் றிசினே என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாத தாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்ததில்லை யென்று முன்னமே கூறப்பட்டது. அகத்தெழு வளியிசை.... நுவலாது, புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை.... நுவன்றிசினே என்று கூறுவதால், வாயினின்றும் வெளிப்பட்டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றாரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது. வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய் (வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல் காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம். பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியரு மிருந்தமையும் அவர் யோகு பயின்றமையும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கிற் றாபதப் பக்க மும், அந்தணர், நிறைமொழி மாந்தர் என்று தொல்காப்பியர் கூறுவதாலறியலாம். யோகம் தமிழில் தபம் அல்லது தவம் எனப்படும். தபுத்தல் (பிறப்பைக்) கெடுத்தல். தபு + அம் = தபம் - தவம். ஒ.நோ: தபல்- தவல். திருவள்ளுவர் தவம் என்னுஞ் சொல்லை யோகம் என்னும் பொருளிலேயே வழங்கியிருக்கிறார். தொல்காப்பியரும் அதே பொருளில் அதன் மறுவடிவான தபம் என்பதை வழங்கியிருக் கிறார். தபம் செய்வார் தபத்தோர் அல்லது தாபதர் எனப்படுவர். தபத்தில், எண்ணம் இறைவன்மேலேயே யிருப்பதால், வினைக்குக் காரணமாக அவாவும், அதன் காரியமாகிய வினையும், அதன் பயனான பிறப்பும் தபுகின்றன. இதுவே தபம். துறவொழுக்கத்தின் முக்கிய நிலை தவமே. தவமில்லாவிடின் துறத்தலரிது. இதனாலேயே, துறவறவியலில், தவத்தை முன்னும் துறவு அவாவறுத்தல்களைப் பின்னும் வைத்துக் கூறினார் திருவள்ளுவர். இல்லறத்தினின்றும் துறவறத்தை வேறுபடுத்திக் காட்டுவதும் தவநிலையே. தபம் என்னுஞ் சொல் முதலாவது துறவுநிலை முழுவதையுங் குறித்துப் பின்பு அதில் முக்கியப் பகுதியான யோகுநிலையை மட்டுங் குறித்தது. துறவறத்தைப்பற்றிய பகுதி முழுமைக்கும் துறவறவியல் என்று பெயரிட்டு, அதில் துறவு என ஒரு தனியதிகாரமும் அமைத்திருக்கிறார் திருவள்ளுவர். இங்ஙனமே தவம் என்னும் பெயரும் என்க. தபம் - தபஸ் (வ). ஒ.நோ: மனம்-மனஸ் (வ.). தவத்திற்குரிய எண்கூறுகள் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். இவற்றுள் முதல் மூன்றும் கடையொன்றும் வடசொற்கள். இவற்றுக்குப் பதிலாகக் கடிவு, நோன்பு, இருக்கை, கலத்தல் என்பவற்றை முறையே வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தார் எண்ணுறுப்புகளையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட் டொகைகளை முதலிலிருந்து கவனித்துக்கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வடசொற்களே தோன்றிப் பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட் பாகுபாடுகளெல்லாம் ஆரியமோ என்று மயங்கும்படியா யிருப்பது தோன்றும். தவத்திற்குரிய எண்ணுறுப்புகளில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார். உண்மூச்சு, வெளிமூச்சு என்னும் இருவகை மூச்சுகளில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்குமாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுகளையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்து களையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும்படியான முறையை யும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக் கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலுமாகவுள்ள சிவா என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும். அவற்றைச் சிவ என்னும் விளிவடிவை யொக்குமாறு சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சுகளையும் சிவ என்னும் ஈரெழுத்தொலிகளாகக் கருதுவதுடன், அவ் வொலிகளாகவே அம் மூச்சுகளைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டு மென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை, கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே (திருமந். 576) வளியினை வாங்கி வயத்தி லடக்கிற் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளும் சிவசிவ வென்றிடத் தேவரு மாவர் சிவசிவ வென்னச் சிவகதி தானே (திருமந். 2716) என்னும் திருமந்திரங்களான் உணர்க. இதன் விளக்கத்தைத் திருவாளர் சி.எ. சுந்தர முதலியார் எழுதிய திருமந்திர உபதேசப் பகுதியுரையிற் கண்டுகொள்க. (பக். 52-4). சிவம் அல்லது சேயோன் (முருகன்) என்பது பண்டைத் தமிழ்த்தெய்வம் என்பதும், ஆரிய வேதங்களிலுள்ள ருத்திரன் என்னும் தெய்வமும் தமிழர் தெய்வமாகிய சிவம் என்பதும் வேறு என்பதும் பின்னர்க் காட்டப்படும். சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் சிவ என்னும் ஈரெழுத்துகளே தமிழர்க்குரியன. ஆய என்னும் நான்காம் வேற்றுமையுருபும், நம என்னும் வணக்கங்குறித்த சொல்லும், வடமொழியாகும். தமிழர்க்குத் திருவைந்தெழுத் திருந்திருப்பின், அது சிவபோற்றி என்பது போன்றிருக்குமேயன்றிச் சிவாய நம வென்றிருக்கவே யிருக்காது. ஆரியர் தமிழ மதத்தலைவரான பிற்காலத்தில், வடமொழி தேவமொழி யெனப்பட்டு, தமிழிற் புகுந்த ஒவ்வொரு வடசொல்லும் வடவெழுத்தும் தெய்வத்தன்மை யேற்றிக் கூறப்பட்டது. சரித்திரமும் மொழிநூலுமறியாத தமிழர்க்கு இன்றும் நான் சொல்வது விளங்காதென்றே நினைக் கின்றேன். ஆங்கிலவறிஞரும் Nœ¢áa¥òytU(Engineer)khd மாணிக்க நாயகரே மயங்கின ரென்றால் பிறரை யென்சொல்வது? மூச்சுகள் இரண்டேயாதலும், சிவ என்னும் சொல் ஈரெழுத்துச் சொல்லேயாதலும் அதனால் வளிநிலை அஞ்செழுத்தெண்ண லாகாமையும் அறிந்துகொள்க. எல்லா வெழுத்தும் என்னும் தொல்காப்பிய நூற்பாவில், உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் என்பதைச் `சிவ என்னும் திருவிரண்டெழுத்துப் போன்ற வொலிகளைத் தவத்தோர் ஒலித்தலாகவே கொள்ள வேண்டும் என்க. தொல்காப்பியப் பாயிரத்தில், நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு என்னும் பகுதியில், நான்மறையென்றது தமிழ் மறையையே. நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென்னும் கீழ்க்கணக்கு நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளிலுள்ள நான்மறை என்னுந் தொடர்க்கும் இங்ஙனமே பொருள் கூறப்பட்டுள்ளது. மற்றப்படி, சமணர்க்கு நான்கு மறைகளின்மை யறிக. பதினான்கு சுரமுள்ள கோவையைப் பதினாற்கோவை யென்பதுங் காண்க. ஆரியர்க்குத் தொல்காப்பியர் காலத்தில் ஒரே மறைதானிருந் தது. இப்போதும் உண்மையானபடி ஆரிய மறைகள் ருக்கு, அதர்வணம் என இரண்டேயாகும். யசுர், சாமம் என்பன பெரும்பாலும் ருக்வேத மந்திரங்களைக் கொண்டவையே. ருக் வேதத்திலுள்ள மூலமந்திரங்கள் 102818 என்று சொல்லப்படுகிறது. ருக்வேத மந்திரங்களுள் வேள்விக்குரியவற்றைப் பிரித்து யஜுர் வேதமென்றும், பாடுவதற்கேற்றவற்றைப் பிரித்து இசைவகுத்துச் சாமவேத மென்றும் பெயரிட்டனர். அதர்வண வேதம் பெரும்பாலும் மாந்திரீக முறையான மந்திரங்களைக் கொண்டது; அது பிற்காலத்தது. திராவிடர் ஆரியர் வருமுன்னமே மாந்திரீகத்தில் தேர்ந்திருந்ததினாலும், ஆரியர் முதலாவது திராவிட மாந்திரீகத்தைப் பழித்தமை ருக்வேத மந்திரங்களா லறியக் கிடப்பதாலும் அதர்வணம் மற்ற மூன்று வேதங்கட்கும் பிற்பட்டதினாலும், ஆரியர் திராவிடரிடமிருந்து மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்ட பின்பே அதர்வண வேதம் தோன்றினதாகத் தெரிகின்றது. இதன் மந்திரங்களிலும் ஏறத்தாழ ஆறிலொரு பாகம் ருக்வேதத்திலுள்ளவை என்று சொல்லப்படுகிறது. ஆரிய வேதங்களை நான்காக வகுத்தது வியாசர் என்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும் சொல்லப் படுவதினால், தொல்காப்பியர் காலத்தில் ஆரிய வேதம் ஒன்றாகவே யிருந்தது என்பது தேற்றம். ஆகையால், தொல் காப்பியப் பாயிரத்திலுள்ள `நான்மறை என்பது நான்கான ஆரிய வேதங்களைக் குறிக்கமுடியாது. தொல்காப்பியத்திற் சுட்டப்பட்ட தமிழ்மறைகள் இதுபோது இறந்துபட்டன. இப்போது தமிழ்மறையாக வுள்ளன, பன்னிரு திருமுறை களுள் முதற் பதினொன்றும், நாலாயிர திவ்வியப் பனுவலும், திருக்குறளுமே. 18 Vedic India, p. 114. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் என்று ஔவை கூறியதுங் காண்க. சில தமிழ்ப்பகைவர், திருக்குறள் மறையாவ தெங்ஙனம் என்கின்றார். திருக்குறள் தமிழ்மறை, பொதுமறை, உத்தர வேதம், தெய்வநூல், பொய்யாமொழி என்று கடைக்கழகப் புலவராலேயே மறையாகக் கொள்ளப்பட்டிருக்க, இப்போது அதன் மறைத்தன்மையைப்பற்றி ஐயங்கொள்வானேன்? கடவுள், அவரை ஆன்மாக்கள் அடையும் வழி, அங்ஙனம் அடைவதால் உண்டாகும் பயன், அடையாமையால் நேரும் கேடு என்றிவற்றைக் கூறுவதே மறைநூ லிலக்கணமாகும். திருக்குறள் இவ்வனைத்தும் கூறுவதால் மறைநூலாவதற்குத் தடையென்னை யென்க. சிறுதெய்வ வழுத்துகளும், சிலர் சோமச்சாற்றைக் குடித்து விட்டு வெறியிற் கூறினவைகளும்19 மறைகளா யிருக்கும்போது, எல்லா மதத்திற்கும் பொதுவான முழுமுதற் கடவுளையடையும் வழியைக் கூறுவதும், கள்ளூணைக் கண்டிப்பதுமான திருக்குறள் மறையாவதற்குத் தடையென்னை யென்க. கடவுட்பற்றில்லாத சிலர், திருக்குறளில் வீட்டைப்பற்றிச் சொல்லவில்லையே என்கின்றனர். வீட்டைக் கண்டு வந்தவன் இங்கொருவனு மில்லையென்றும், வீட்டையடையும் வழி அறத்துப் பாலில் ஈரியல்களிலும் சொல்லப்பட்டுள்ளதென்றும், அங்ஙனம் காரண வகையானன்றி, வரணனை வகையான் வீட்டைக் கூற முடியாதென்றும் அவர் அறிந்து கொள்க. எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும் என்பது ஒரு பழைய வெண்பா. இதனாலும், தமிழர்க்கு மறையிருந் தமை யுணரப்படும். தமிழர்க்கு மறையிருப்பவும், ஆரியரை 19 Vedic India, p. 74. மறையோர், வேதியர் என்றது, புதுமைபற்றி யென்க. கிறித்தவ மறையை வேதமென்றும் கிறித்தவரை வேதக்காரரென்றும் தமிழர் கூறுதல் காண்க. செங்கோன் றரைச்செலவின் ஒரு பகுதி தவிர, தொல்காப்பியத்தின்படி, பாக்கள் முதல் மறையீறாகச் சொல்லப் பட்டவற்றுள் ஒன்றுக்காயினும் இலக்கியம் இப்போதில்லை. தவநூல் இது முன்னர்க் கூறப்பட்டது. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது (கற்பு. 47) என்றும், காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பு. 51) என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், பண்டைக் காலத்தில், தமிழரசர் பட்டாங்கு நூலறிந்து இறுதிக் காலத்தில் துறவு புகுந்தமை யறியப்படும். பட்டாங்குநூல் (Philosophy) தமிழ் இலக்கணக் குறியீடுகளிலிருந்தே, பண்டைத் தமிழர்க்குப் பட்டாங்குநூல் தெரிந்தமை யுணரப்படும். பொருள்களெல்லாம் உயிர், மெய் (body), உயிர்மெய் (பிராணி) என மூவகைப்படும். இவை, முறையே, தனியுயிரும் தனியுடம்பும் உயிரோடு கூடிய உடம்புமாகும். பிராணனை யுடையது பிராணி யெனப்பட்டாற்போல, உயிரையுடைய மெய் உயிர்மெய் எனப்பட்டது. (இது 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.) பிராணி என்னும் வடசொல் வழங்கவே, உயிர்மெய் என்னும் சொல் வழக்கற்றுத் தன் பொருளையும் இழந்து, இலக்கணநூல் வழக்கிலும், உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து என்று உம்மைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகத் தவறாகக் கருதப்படுகின்றது. இச் சொல்லுக்குப் பதிலாக உயிர் என்னும் சொல்லும், உயிர்ப்பிராணி என்னுஞ் சொல்லும், முறையே, குன்றக் கூறலாகவும் மிகைபடக் கூறலாகவும் வழங்கி வருகின்றன. எழுத்துகளில், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் போல்வன. அவற்றின் பெயர்களாலேயே கூறப்பட்டன. இப் பெயர்கள் எழுத்தைக் குறிக்கும்போது உவமையாகு பெயர். எழுத்திற்கு உயிராவது ஒலி. பொய்யான உடம்பை மெய்யென்றது மெய்ப்பொருள் நூலுக்கு முரணென்று கூறுவர் சிலர். உடம்பு பொய்யான தென்று முன்னைத் தமிழர் அறிந்திருந்தாலும், உடம்போடு கூடிய நிலையே உயிர்வாழ்க்கையாதலின், உடம்பை மெய்யென்று மங்கல வழக்காய்க் கூறினர் என்க. சாவைப் பெரும்பிறிது என்றும் சுடுகாட்டை நன்காடு என்றும் அவர் கூறியதுங் காண்க. ஓர் ஆளில், அல்லது உயிர்ப்பொருளில், உயிர் உடம்பு என இருபொருள் கலந்திருப்பினும், காண்பார்க்கு உடம்பே முற்பட்டுத் தோன்றும்; அதன் பின்னரே அதற்குள் உயிரிருப்பது அறியப் படும். அதுபோல, உயிர்மெய்யெழுத்திலும் மெய்யெழுத்தே முன் ஒலிக்கும்; அதன் பின்னரே உயிர் ஒலிக்கும். இதை, மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே (தொல். நூன். 18) என்றனர் இலக்கணிகள் . எல்லா மொழிகளிலும் மெய்யும் உயிருமாய் வரும் எழுத்துக்கள் இணைந்தே ஒலிக்கும். இதை மேனாட்டார் நோக்காததினால், உயிர்மெய்க்குத் தனிவடிவம் வகுக்காமல், மெய்யையும் உயிரையும் அடுத்தடுத்து வெவ்வேறா யெழுதுவா ராயினர். இது மாணவர்க்கு எளிதாயினும், ஆங்கில தமிழ இலக்கணிகளின் மெய்ப்பொருளுணர்ச்சித் தாழ்வேற்றங்களைக் குறிக்கத் தவறாதென்க. சொற்களுக்கு இலக்கணத்தில் பெயர் வினை என்று மக்கள் தொடர்பான பெயர்களே இடப்பட்டிருக்கின்றன. பெயர் = ஆள். பெயர் = பேர். எத்தனை பேர் என்னும் வழக்கை நோக்குக. வினை = செய்கை. பொருள்களைப் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி, உயர் திணை, அஃறிணை என இரண்டாக வகுத்தனர் தமிழர். இப் பாகுபாடு வேறு மொழியில் இல்லை. சொற்களையும் அவை குறிக்கும் பொருள்கள்பற்றி இரு திணையாக வகுத்தனர். தமிழில், சொற்கள் அவை குறிக்கும் பொருள்கள்பற்றியே பாலுணர்த்தும், ஆரிய மொழிகளிலோ, அவை ஈறுபற்றியே பொருளுணர்த்தும். வடமொழியில் மனைவியைக் குறிக்கும் சொற்களும், தாரம், பாரியை, களத்திரம் என்னும் மூன்றும் முறையே ஆண்பாலும் பெண்பாலும் அலிப்பாலுமாம். உயிர்களை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயி ரீறாக அறுவகையாகப் பகுத்தனர் தமிழர். ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபு. 27) என்று முன்னோர் உயிர்களைப் பகுத்தமையைக் கூறி, அதற் கடுத்த நூற்பாக்களில், அவ் வுயிர்கட்குப் புல்லும் மரனும், நந்தும் முரளும், சிதலும் எறும்பும் நண்டும் தும்பியும் மாவு மாக்களும், மக்களும் பிறவும் என முறையே காட்டுத் தந்தனர் தொல்காப்பியர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் (தொல். மரபு. 86) என்பதனால், ஐம்பூத வுணர்ச்சியும் தமிழர்க்கிருந்தமை யறியப்படும். மறுவில் செய்தி... அறிவன் தேயமும் என்று தொல் காப்பியர் கூறுவதினாலும். தமிழர் மெய்ப்பொருளுணர்ச்சியை ஒருவாறுணரலாம். ஒழுக்க நூல் (Ethics) தொல்காப்பியத்தில், புறத்திணையியலில் 44ஆம் நூற்பாவில் மூன்றன் பகுதி என்று கூறியிருப்பதால், ஒழுக்கநூல் அக்காலத்தில் தமிழிலிருந்தமை உணரப்படும். மூன்றன் பகுதியாவது அறத்தினால் பொருளாக்கி அப் பொருளால் இன்பம் நுகர்தல் என்றல். அறம்பொரு ளின்பம் என்பது ஒழுக்கநூற் பாகுபாடு. அறம் எனவே, இல்லறம் துறவறம் இரண்டும் அடங்கும். துறவறம் - வீட்டுநெறி. அறம்பொரு ளின்பம் வீடென்னும் பாகுபாடு தமிழரதே. ஆரியரே அவற்றைத் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டனர். அதோடு இப்போது வடசொற்களை மூலமாகவும் தென்சொற்களை மொழி பெயர்ப்பாகவுங் காட்டுகின்றனர். தமிழ்ப் பொருட்பாகுபாடு களை யெல்லாம் இங்ஙனம் மொழிபெயர்த்துக் கொண்டு, மூலமாகக் காட்டுவது ஆரிய வழக்கம் என்க. தமிழர் அறத்திற் சிறந்திருந்தமை, தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் அறவொழுக்கங்களா லறியப்படும். பொருள்களை அகம் புறம் என்று பகுப்பதே தமிழ முறையென்றும், அறம்பொரு ளின்பம் வீடென்று பகுப்பது ஆரிய முறையென்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு மொழியிலேயே நூலுக்கும் கலைக்கும் ஏற்றபடி, வெவ்வேறு வகையாய்ப் பொருள்கள் பகுக்கப்படும். இலக்கணநூல் ஒன்றிலேயே, எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்று மூன்று வகையாகவும், சொல்லதிகாரத்தில் பொருள் இடங் காலம் சினை குணம் தொழில் என்று ஆறு வகையாகவும், மற்றோர் முறையில் உயர்திணை அஃறிணை என்று இருவகையாகவும் பொருள்கள் பகுக்கப்படுகின்றன. தருக்கநூலில் ஏழாகவும் பதினாறாகவும் பகுக்கப்படுகின்றன. ஆகையால், அகம் புறம் என்பது பொருளதி காரப் பாகுபாடென்றும், அறம்பொரு ளின்பம் வீடென்பது ஒழுக்கநூற் பாகுபாடென்றும் அறிந்துகொள்க. சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை யிடை யுரி யென்றும், சொல்லியல் முறையில், இயல் திரி திசை வட சொற்களென்றும், ஒழுக்கநூலிற் பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென்றும், கொண்முடிபு (சித்தாந்த) நூலில் வேறுவகையாகவும் பகுக்கப்படுகின்றன. இங்ஙனமே பொருள்களு மென்க. ஆரிய நூல்களை முற்படியாக வைத்துக்கொண்டு தமிழ் நூல்களுக்குப் பொருளுரைப்பவரெல்லாம், எவ்வகையேனும் தவறவே செய்வர். திருக்குறள் தனித்தமிழ் முறையில் இயற்றப் பட்டிருக்கவும், பரிமேலழகர் அதை ஆரியவழியாகக் கொண்டு, அறத்துப்பால் முகவுரையிலும் காமத்துப்பால் முகவுரையிலும் உண்மைக்கு மாறானவற்றை உரைத்துள்ளார், ஐந்திணையும் தனித்தனி கூறப்படும்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென்று பெயர் பெறுமென்றும், கோவையாய்க் கூறப்படும் போது களவு, கற்பு என இரு கைகோள்களாகக் கூறப்படு மென்றும்அவர்அறியாதுபோயினர்.nfhitÆY«, முன்னைய நான்கும் முன்னதற் கென்ப என்பதால் கைக்கிளை முன்னும், கூட்டத்தினால் ஐந்திணை இடையும், கூட்டம் நீடிக்காது மடலேற்றம் நிகழின் பெருந்திணை பின்னும் அமைந்திருத்தலும், முறையே நிகழ்கின்ற புணர்தல் பிரிதல் இருத்தல் அல்லது இரங்கல், ஊடல் என்பவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைகளா யமைதலும் அவர் அறிந்திலர் போலும். உளநூல் (Psychology) தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப (4) இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே (5) மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ டியாப்புற வந்த இளிவரல் நான்கே (6) புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே (7) அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே (8) கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே (9) உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே (10) செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே (11) என்றும் பிறவாறு நுட்பமாய் இவற்றை விரித்தும் கூறியிருப் பதால், தமிழர்க்கு உளநூலுணர்ச்சி யிருந்தமை யறியப்படும். இதன் விரிவை மெய்ப்பாட்டிய லுரையிற் கண்டுகொள்க. கணிதநூல் (Arithmetic) கண் + இதம் = கணிதம். கண் = கருது, மதி, அள. கண் + இயம் = கண்ணியம் (மதிப்பு). கண் - கணி, to calculate. கணி + கை = கணிகை (தாளங்கணித்தாடும் கூத்தி). கணி + அன் = கணியன் (ஜோதிடன்). கண் + அக்கு = கணக்கு. அக்கு என்பது ஓர் ஈறு. கா: இலக்கு இலை, பதக்கு. கணி - குணி - அளவிடு. கண், கணி என்னும் தென்சொற்களையே gan, gani என உரப்பி யொலித்து வடசொல்லாகக் காட்டுவர். கண்ணுதல் என்னுஞ் சொல், அகக்கண்ணின் தொழிலைக் குறித்தலால் வடமொழி வடிவங்கள் தென்சொற்களின் திரிபே என்பது தெற்றென விளங்கும். கண்படை கண்ணிய, கபிலை கண்ணிய என்று தொல் காப்பியத்திலேயே வருதல் காண்க. அரை, குறை, கலம், பனை, கா, பதக்கு, தூணி, உரி, நாழி என்னும் அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும், தொல் காப்பியத்தில், தொகைமரபு, உயிர்மயங்கியல் என்னும் இயல்களிற் கூறப்பட்டுள்ளன. தொகைமரபில், 28ஆம் நூற்பாவில், அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும் க ச த ப ந ம அ உ என்னும் ஒன்பதெழுத்து களில் தொடங்குமென்று கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியர் அதற்கு, எடுத்துக்காட்டும்: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மாவரை அந்தை இவை நிறை.... இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க...... தேயவழக்காய் ஒரு ஞார் ஒரு துவலி என்பனவுங் கொள்க என்று உரை கூறியுள்ளார். புள்ளி மயங்கியல் 98ஆம் நூற்பாவில், ஐ, அம், பல் என முடியும் சில பேரெண்ணுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள. அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில் நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும் என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடி யென்றும் சொல்லப்படுகின்றது. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப் பேரெண் கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்துநூறாயிரமென்றும், கோடியை நூறு நூறாயிர மென்றும் கூறினர் என்றே கொள்ளப்படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப் பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், hundred thousand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க. ïy¡f« (yB«, Skt., lakh, Eng.), nfho (nfh£o, Skt., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவா யிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்துஸ்தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க. இலக்கம் கோடி யென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், நூறாயிரப்பத்து பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம். பண்டைத் தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் சான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் குறிக்கின்றேன். கீழ்வாயிலக்க வாய்பாடு 20 1/2, 3238245,3022720,0000000 - தேர்த்துகள் 61/2 = 1 நுண்மணல் 1/3575114,6618880,0000000 - நுண்மணல் 100 = 1 வெள்ளம் 1/35751,1466188,8000000 - வெள்ளம் 60 = 1 குரல்வளைப்பிடி 1/595,8524436,4800000 - குரல்வளைப்பிடி 40 = 1 கதிர்முனை 1/14,8963110,9120000 - கதிர்முனை 20 = 1 சிந்தை 1/7448155,5456000 - சிந்தை 14 = 1 நாகவிந்தம் 1/532011,1104000 - நாகவிந்தம் 17 = 1 விந்தம் 1/31294, 7712000 - விந்தம் 7 = 1 பாகம் 1/4470,6816000 - பாகம் 6 = 1 பந்தம் 1/745,1136000 - பந்தம் 5 = 1 குணம் 1/149,0227200 - குணம் 9 = 1 அணு 1/16,5580800 - அணு 7 = 1 மும்மி 1/2,3654400 - மும்மி 11 = 1 இம்மி 1/2150400 - இம்மி 21 = 1 கீழ் முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 320 = 1 மேல்முந்திரி 1/320 - மேல்முந்திரி 320 = 1 (ஒன்று) 20 கருணாமிர்தசாகரம், பக். 644 இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு நிகரலு முரித்தே (76) என்று தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவில் மா என்னும் அளவு கூறப்பட்டிருப்பதால், கீழ்வாயிலக்கத்தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின வென்றே கொள்ளப்படும். நீட்டலளவை வாய்பாடு 8 அணு = 1 தேர்த்துகள் 8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை 8 பஞ்சிழை = 1 மயிர் 8 மயிர் = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 கடுகு 8 கடுகு = 1 நெல் 8 நெல் = 1 பெருவிரல் 12 பெருவிரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 கோல் அல்லது பாகம் 500 கோல் = 1 கூப்பீடு 4 கூப்பீடு = 1 காதம் சிலப்பதிகாரத்தில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றுக்கு மிடையிலிருந்த சேய்மை எழுநூற்றுக் காவதம் என்று அடியார்க்கு நல்லார் கூறியது, இவ் வளவு பற்றியதாயின், அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றுக்குத் தெற்கும் குமரியாற்றுக்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின், அழிந்துபோன தமிழ்நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தென்னலாம். அங்ஙனமாயின், இற்றை யிந்தியா அளவு ஒரு பெருநிலம் தென்கடலில் மூழ்கியதாகும். சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், முதல் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது. இவை முறையே, கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளாகும். நிலம் அளந்த கோலை `உலகளந்த கோல் என்று வழங்குவர். இக் கோல் பதினாறு சாண் நீளமுடையது... நிலங்கள் நூறு குழிகொண்டது ஒரு மாவாகவும் இருபது மாகொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன.... அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறு பகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது `இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் என்பதனால் விளங்கும்.21 இங்குக் குறிக்கப்பட்ட அளவு 1/52428500000 வெளியாகும். வானநூல் (Astronomy) நாள்கோள் (புறத். 11) எனவே நாண்மீனும், (Lunar asterism), ஞாயிறு திங்கள் (கிளவி. 58) எனவே, எழுகோளும் (Planets), அவற்றாற் பெயர் பெறும் ஏழு கிழமைகளும் (days), ஓரையும் (Signs of the Zodiac) (கள. 45) எனவே இராசியும், காரும் மாலையும் (அகத். 6), கூதிர் யாமம் (அகத். 7), பனியெதிர் பருவமும் (அகத். 8), வைகறை விடியல் (அகத். 9), எற்பாடு (அகத். 10), நண்பகல் வேனிலொடு (அகத். 10), பின்பனி (அகத். 12) எனவே பெரும்பொழுதும் (Seasons) சிறுபொழுதும் (Divisions of the day) தொல்காப்பியர்காலத் தமிழர்க்குத் தெரிந்தும் வழக்கிலு மிருந்தமை யறியப்படும். (அசுவினி முதல் ரேவதியீறான) இருபத்தேழு நாள்மீன் (நட்சத்திரம்)கட்கும் பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள், முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றுக்கு வேறு பெயர்களுமுண்டு. அவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க. வெள்ளி, உடு, விண்மீன் என்பவை பொதுவான நட்சத்திரப் பெயர்களாகும். 21 முதற் குலோத்துங்க சோழன், பக். 84, 85. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 58. கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட்கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக் காட்டவேண்டுமென்று, கதிரவன் மறைவும் திங்கள் மறைவு மாகியவற்றைத் தம் திரிபுணர்ச்சியால் இருகோள்களாகக் கருதி அவற்றுக்கு ராகு கேது என்று பெயரிட்டு, அவற்றை எழுகோள்களோடு கூட்டி நவக்கிரகமென்றனர். புதன் சனி என்னும் இரு பெயர்கட்கும், பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள் அறிவன் காரி என்பன. பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் வடமொழிப் பெயர்கட்குப் பதிலாக, பன்னீர் ஓரை(ராசி)யின் பெயர்களே மலையாள நாட்டிற்போலப் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் ஓரைப்பெயர்களில் மேடம், இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்னும் ஏழும் தமிழ்ச் சொற்களே. இவற்றுள் முதலாறுக்கு முறையே, தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்றும் பெயருண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில், முறையே, இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும். பன்னிரு மாதங்களும் ஓரைப்பெயர் பெறுமாறு 1. சித்திரை - மேடம் 7. ஐப்பசி - துலை 2. வைகாசி - இடபம் 8. கார்த்திகை - தேள் 3. ஆனி - இரட்டை 9. மார்கழி - வில் 4. ஆடி - கடகம் 10. தை - மகரம் 5. ஆவணி - ஆளி 11. மாசி - கும்பம் 6. புரட்டாசி - கன்னி 12. பங்குனி - மீனம் மாதம் என்பது மதி என்பதினின்றும் பிறந்த தமிழ்ச் சொல்லே. மதி - மாதம் (த.) - மாஸம் (வ.) மதி = சந்திரன். காலத்தை மதிப்பதற்குக் கருவியாயிருப்பது மதி. மதித்தல் அளவிடுதல். ஒ.நோ: moon-month. மதி என்பதினின்று மாதம் என்னும் வடிவம் தோன்று மேயன்றி மாஸம் என்னும் வடிவந் தோன்றாது. த-ஸ, போலி. திங்கள் என்னும் சொல் ஒரு கிழமைப் பெயராதலின், மாதம் என்னும் சொல்லே மாதத்தைக் குறிப்பதாகும். ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம். மதியாலுண்டாகும் கால அளவு மாதமெனப்பட்டது. மதி என்னும் பெயரும் மாதத்தைக் குறிக்கும். வளர்பிறைக்காலத்தை ஒளிப்பக்க மென்றும், தேய்பிறைக் காலத்தை இருட்பக்கமென்றும்22 முன்னோர் கூறினர். இவற்றையே, முறையே, சுக்கிலபக்ஷ மென்றும் கிருஷ்ணபக்ஷ மென்றம், நிலைமொழிகளை மொழி பெயர்த்தும் வருமொழிகளை எழுத்துப் பெயர்த்துங் கொண்டனர் ஆரியர். சில ஓரைப்பெயர்களின் மூலங்களாவன: மேழகம் - மேடகம் - மேடம் - மேஷம் (வ.) ஒ.நோ: புழலை - புடலை, நாழுரி - நாடுரி, விடை - விடபம் (வ்ருஷபம், வ.) - இடபம், கும் - கும்பு - கும்பம். கும்பு + அம் = கும்பம். கும்புதல் - குவிதல். மின் - மீன் - மீனம். ஒ.நோ: தின் - தீன். கடகம் (நண்டு) என்பது வட்டமானது என்னும் பொருளது. தோட்கடகம், கடகப்பெட்டி என்னும் வழக்குகளை நோக்குக. நாழிகை வட்டிலைக் குறிக்கும் கடிகை என்னுஞ் சொல்லும் கடகம் என்பதன் மறுவடிவமே. வட்டமானது வட்டில். கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். தோட்கடகம் தோள்வளைவி என்றும் கடிகை என்றும் வழங்குதல் காண்க. கடகம் ஒரு பருமைப் பெயருமாகும் (Augmentative). துலை என்னும் சொற்குப் பகுதி, தோல் என்று இந்தியில் வழங்குகின்றது. தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பண்டைத் தமிழ்நூல்களில் தொல்காப்பியந் தவிர மற்றவையெல்லாம் அழிந்துபோனதினாலும், தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு வேர்கள் தமிழில் மறைந்துவிட்டன. வடநாட்டில், ஆரியர் வருமுன் திராவிடமொழிகளே வழங்கி வந்தமையால் சிந்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளில் பல திராவிடச் சொற்கள் கலந்துள்ளன. அவை இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய்க் கூறப்படும். மேலும், ஒரு மொழியின் தாய்வழக்கில், ஒரு பொருட்குரிய பல சொற்களில், வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில் தான் வழங்கும். இதுவே வழக்கற்றசொல் வழங்கல் என 22 சிலப். 23: 133. முன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது. தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க. துல்லிபம், துலை, துலைநா, துலா, துலாம், துலான், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந்துலா என்று இருவழக்கிலும், துலை என்னும் சொல்லும் அதன் பிற வடிவங்களும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவருகின்றன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின் பனி என்னும் அறுவகைப் பருவங்களையும், முறையே, வசந்தம் கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர் ஆரியர். வசந்தம் (Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நால்வகைப் பருவங்கள்தாம் ஆரியநாடு என்னும் வடநாட்டிற்கேற்கும். இளவேனில் முதலிய அறுவகைப் பருவங்கள் தமிழ்நாட்டிற்கே யுரியன. இதனால், மூலம் எவையென்றும் மொழிபெயர்ப்பு எவையென்றும் அறிந்துகொள்ளலாம். இங்ஙனமே ஆரிய மொழி பெயர்ப்புகள் சிலவிடங்களில் மறைந்திருப்பினும் சிலவிடங்களில் வெளியாய்விடுமென்க. நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் என்று தொல் காப்பியத்தில்(புறத். 30) கூறியிருப்பதால், குறிநூலும் (Astrology) தொல்காப்பியர் காலத்திலிருந்தமை யறியப்படும். வானநூ லறிஞனுக்குத் தமிழில் கணியன் என்று பெயர். கணியன் காலத்தைக் கணிப்பவன். பண்டைத் தமிழ்நாட்டில் வள்ளுவரே பெரும்பாலும் கணியராயிருந்தனர். தமிழர் கணிதத் தில் வல்லவராயிருந்ததினால் வானநூலிலும் வல்லவரா யிருந்தனர். இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலி வாகனன் என்பவனால், அல்லது கனிஷ்கனால்23 கி.பி. 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாயுள்ளன. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதினாலும், மிகக் குறுகியதினாலும், சரித்திர நூற்குப் 23 The Hindu, March 10, 1940, p. 7. பயன்படாது. ருத்ரோத்காரி என்று கூறினால், எந்த ருத்ரோத்காரி யென்று அறியப்படாமையால், இவ் வளவின்மைபற்றித் தமிழுக்கொரு குறையுமில்லை யென்க. சொல்லியல் நூல் (Etymology) தொல்காப்பியத்தில், எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (பெயர. 1.) இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே (எச்ச. 1) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (எச்ச. 4) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (எச்ச. 5) என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைகளும் (எச்ச. 57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வே றுருபுகளும் (உவ. 12-6) கூறியிருப்பதாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லியலுணர்ச்சி யிருந்தமை யறியப்படும். மொழிநூற்கு முற்படியானது சொல்லியலே. ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகு மென்றறிக. தருக்கநூல் (Logic) தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல். தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து என்று தொல்காப்பியத்திலேயே (அகத். 53) வந்திருத்தல் காண்க. தருக்கு - செருக்கு. த-ச, அ-எ, போலிகள். (ஒ.நோ: ஓதை - ஓசை, சத்தான் - செத்தான்.) தருக்கு + அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல் லாகக் காட்டுவர் ஆரியர். தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள் கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமாவது, தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல். (தொல். புறத். 15) அகத்தியத் தருக்க நூற்பாக்கள் கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல் செட்டியார் பதிப்பித்த `தர்க்க பரிபாஷை என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல்காப்பியர் காலத்தில் தருக்கநூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும். 1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை யின்மை யுடன்பொரு ளேழென மொழிப. 2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை யான்மா மனதோ டொன்பதும் பொருளே. 3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண் ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி யறமறம் வாதனையொடு குணமறு நான்கே. 4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த னடத்த லுடனே கருமமை வகைத்தே. 5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே. 6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே. 7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. 8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே 9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந் தட்பம் வெப்ப மூற்ற மாகி மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க. 10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள் பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருணிலை யில்லது காரியம். 11. அதுவே: உடல்பொறி விடய மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியி னுனியே மண்கல் முதலிய விடய மாகும். 12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு சுவைதிறங் கவர்வது நாவி னுனியே கடல்யா றாதி விடய மாகும். 13. கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே யுருவங் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரநால் விடயம். 14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே யூற்றங் கவர்வது மீந்தோ லென்க விடய மரமுத லசைதற் கேதுவே பிராண னுடலகத் தியங்குங் காற்றே. 15. விசும்பே காலந் திசையோ டான்மா மனமிவை யைந்து நித்தியப் பொருளே. 16. ஓசைப் பண்பிற் றாகா யம்மே. 17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. அறிவுப் பண்பிற் றான்மா வென்க விறையே யீசன்முற் றறிவனோர் முதலே யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும். 20. மனமணு வடிவாய் வருமின் பாதி யறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவா யழிவின் றுறுமே. இந் நூற்பாக்களையே, நுண்ணறிவுள்ள ஒருவர் ஒரு நூலாக விரித்துவிடலாம். இந் நூற்பாக்கள் சிறப்பிக முறையைச் சேர்ந்தவை. சிறப் பிகம் (வைசேடிகம்), முறையிகம் (நியாயம்) என்னும் இருவகைத் தருக்க முறைகளுள், முன்னதே சிறந்ததென்க. தொழிற்கலைகள் (Arts) சிற்பம் (Architecture) முழுமுதல் அரணம் (புறத். 8), ஆரெயில் (புறத். 10), மதிற்குடுமி (புறத். 10) முதலிய குறிப்புகளால், தொல்காப்பியர் காலத்தில் சிற்பத்தொழில் தமிழ்நாட்டிற் சிறந்திருந்தமை யுணரப்படும். சுவர், மதில், பதணம், இஞ்சி, அகப்பா, புரிசை, எயில், சோ முதலிய மதில்வகைகளும், ஞாயில், சூட்டு, ஏப்புழை முதலிய மதிலுறுப்புகளும், எழுநிலை மாடமும் பண்டைத் தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பை உணர்த்துவனவாகும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க. பண்டைத் தமிழர் நாடகவரங்கு அமைத்த நுட்பம் (சிலப். 113-3:6) மிக வியக்கத்தக்கது. வளைவிற்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ்கவண், பாகடு குழிசி, காய்பொன்னுலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலையடுப்பு, கவை, கழு, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறிசிரல், பன்றி, பனை, நூற்றுவரைக்கொல்லி, தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும்பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி24 முதலிய மதிற்பொறி வகைகள், பண்டைத் தமிழரின் goik¡fiyiaí«(Sculpture) சூழ்ச்சியக் கலையையும் (Engineering) தெரிவிப்பனவாகும். படிமை - பதுமை. பாவைவிளக்கு கந்திற்பாவை முதலிய பெயர்களையும் நோக்குக. சிற்பம் படிமைக்கலை முதலியவற்றாலும், நாடகவரங்கின் எழினியாலும் XÉaüY«(Drawing) பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமை சொல்லாமே யுணரப்படும். சிற்பநூல் ஓவிய நூல் என்று இருநூல்கள் கடைக்கழகக் காலத்திலிருந்தனவாக, அடியார்க்கு நல்லார் அரங்கேற்று காதையுரையிற் குறிப்பிடு கின்றார். உழவு (Agriculture) உழவு பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமையை ஒருவரும் ஐயுறார். ஆயினும், அதைப்பற்றிய சில குறிப்புகள் அறியத் தக்கன. ஏரோர் களவழி என்பது தொல்காப்பியம்(புறத். 16). Agriculture என்னும் ஆங்கிலப்பெயர் தமிழ் மூலத்ததாகவே தெரிகின்றது. Agriculture, L. agricultura - ager, a field, cultura, cultivation - colo, to cultivate. 24 சிலப். பக். 413 - 415. அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக் கிரகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிராகரம். அக்கிரம் = நுனி, முதல், தலைமை. அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென் என்றார் திருமூலர். E. acre, A. S. aceer, Ger. acker, Gk. agros, L. ager, Skt. ajra. கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் - colo, to till. தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இளல் = தொளில் - தொழில். ஒ.நோ: பொள் + இல் = பொளில் - பொழில். பொள் - பொளி. பொளித்தல் வெட்டுதல். (பொள் - பொழ்) பொள்ள (வெட்ட)ப்படுவது பொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயிருந்தது. காடுவெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தமிழகம் முழுதும் ஒரு பெருஞ்சோலையா யிருந்ததினா லேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. நாவலந் தண்பொழில் வண்புகழ் மூவர் தண் பொழில், ஏழ்பொழில் என்னும் வழக்குகளை நோக்குக. தொள் = தோண்டு. தொள் - தொடு = தோண்டு. தொள்- till, to cultivate. தொள்ளுவது தொழில். மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில்கட்கும் பொதுப்பெயராயிற்று. செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர்களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல். முதலாவது கையினாற் செய்யப்பட்ட தொழில் உழவு என்னுங் கருத்துப்பற்றியே, உழவரைக் கைசெய்தூண் மாலையவர் என்றார் திருவள்ளுவர். முதலாவது தோன்றிய ஒரு பொருளின் அல்லது தொழிலின் பெயர், பிற்காலத்தில் அதன் இனத்திற்குப் பொதுப்பெயராய் வழங்குதல் இயல்பே. தோடு என்னும் ஓலைப் பெயர், பிற்காலத்தில் அதற்குப் பதிலாயணிப்படும் கம்மல் (கமலம்) வகைக்குப் பொதுப் பெயராய் வழங்குவதையும்; வில்லேருழவர், சொல்லேருழவர், தேரோர் களவழி யென்னும் வழக்குகளையும் நோக்குக. பழ நார்வீஜியம் (Old Norse), ஆங்கிலோ-சாக்ஸன் என்ற மொழிகளில், முறையே, erfidhi, earfodh என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு உழைப்பைக் குறித்தன வென்றும். லத்தீனில் ars, artis என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு கலைப் பொதுப்பெய ராயிற்றென்றும், அச் சொற்கட்கு மூலம் ar(to plough) என்பது என்றும், முதலாவது கற்பிக்கப்பட்ட கலை உழவேயென்றும் மாக்கசு முல்லர் கூறியிருத்தல் காண்க.25 ஏர் = கலப்பை. ஏர்த்தொழில் = உழவு. E. ear (V®.), to plough. A.S. erian, L. aro, Gk. aroo - root ar. to plough. E. arable, adj. E. share - bfhG. M.E. schar, A.S. scear, Ger. schar, schaar. காறு = கொழு. க-ச, போலி. ஒ.நோ: திகை - திசை (தேவா. 308:1), இகல் - இசல். சேம்பர்ஸ் அகராதியில் shear (to cut) என்பது share என்பதன் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், shear என்பது சிறை என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்திருத்தல் காண்க. இங்ஙனம், மேனாடுகளில் மாந்தன் முதற்றொழில்பற்றிய தமிழ்ச்சொற்கள் வழங்குவதற்குக் காரணம் பின்னர்க் கூறப்படும். கைத்தொழில் (Industries) தாழ், வாள், வேல், கழல், தோல் (கேடகம்), குடை, கணை, தேர், யாழ், இழை, துடி, பொன் முதலிய பெயர்களும், ஊழணி தைவரல் (மெய். 14) என்னுந் தொடரும் தொல்காப்பியத்தில் 25 L.S.L. p. 294. கூறப்பட்டிருப்பதால், அது இயற்றப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டிற் கைத்தொழில் சிறந்திருந்தமை யுணரப்படும். அக் கைத்தொழில் பல திறத்தன. அவற்றுள் நெசவு மட்டும் இங்குக் கூறப்படும். நெசவு (Weaving) உடைபெயர்த் துடுத்தல் என்பது தொல்காப்பியம் (மெய். 14). பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் வயவர் சாண் மார்சல் கூறுகிறார். பண்டைக்காலச் சரித்திராசிரியரெல்லாம். மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணி ஒன்றாகத் தவறாது குறிப்பிடுகின்றனர். 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவினின்றே மேனாடுகட்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினா லறியலாம். தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங் காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத்தொழில் தேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர்களுக்கே விதப்பா யுரியவுமான கைத்தொழில்களிலும் செய்பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்டதினால், உண்மையில் இனி யொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறிவிட்டன. இவ் வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றது. ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறைகளெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும் இலக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டன்றிப் பிற தொழிலையும் மேற்கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும்பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டிரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன். யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது26 என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறு கின்றார். பண்டைக் காலத்திற் பெண்டிர் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோருங் கூறியுள்ளனர். பருத்திப் பெண்டு என்று புறநானூறு (125, 326) கூறும். நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த வறுவை வீதியும் (சிலப். 14 : 205-7) என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும். மயிரினும் என்பதற்கு எலிமயிரினாலும் என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும், புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி (1898) செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம் (2686) என்று சிந்தாமணி கூறுவதா லறியப்படும். பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை, துகில் (ஆடை): கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், 26 Hindu Manners, Customs and Ceremonies, Ch. VI. கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி27 என 36 வகையென்று அடியார்க்குநல்லார் கூறுவதினின் றறியலாம். ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம் (பத். 4 : 169) என்பதி னாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப்பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும். நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. பன்னல் = பருத்தி. L. punnus, cotton, It. panno, cloth. கொட்டை = பஞ்சு. Ar. qutun, It. cotone, Fr. coton, E. cotton. கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை. வேட்டி = ஆடை. L. vestis, Skt. வஸ்த்ர, E. vesture. வெட்டுவது வேட்டி. ஒ.நோ: துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை. தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு என்று பட்டினத்தார் கூறுத ல் காண்க. (திருத்தில்லை, 17) சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி. A.S. segel, E. sail. தச்சு = L. texo, E. texture, anything woven. தை + சு = தைச்சு - தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், மரக்கொல்வேலைக்கு வழங்கிவருகின்றது, 27 சிலப். பக். 379. அதிலும் தைப்புத் தொழிலுள்ளமையின். வண்டியைத் தைக்க வேண்டும் என்று தச்சர் கூறும் வழக்கை நோக்குக. தைத்தல் பல வுறுப்புகளை ஒன்றாயிணைத்தல். நெசவில் நூல்கள் ஒன்றாயிணைக்கப்படலும், தச்சில் வண்டியாயின் குறடு ஆரை சூட்டு என்னும் உறுப்புகளும், பெட்டி நாற்காலியாயின் பலகை களும் கால்களும் ஒன்றாயிணைக்கப்படலும் காண்க. வாணிகம் (Commerce) வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக்கும் என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு -சொல். வாய்நீர் - வாணீர் - வாணி = நீர், சொல். வாணி - பாணி. கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா - (கொண்டா) - கொணா - கொணர், பழம் - பயம். வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க. வாணி + இகம் = வாணிகம். வாணி = சொல். சொல்லுதல் என்று பொருள்படும் வாணிகம் என்னும் சொல், விலை சொல்லுதல் என்னும் பொருளில் பண்டமாற்றைக் குறிப்பதாகும். ஒ.நோ: பகர்தல் = சொல்லுதல், விற்றல். நொடுத்தல் = சொல்லுதல், விற்றல். நொடி = கதை. நொடை = விற்பனை. வாணி என்னும் சொல் வழக்கிலில்லாமையினாலேயே வடசொல்லாகக் கருதப்படுகின்றது, பாணி என்னுஞ் சொல் போல. வர்த்தகம், வியாபாரம், வைசியம் என்னும் சொற்களே வட சொற்கள். வானி (வான் + இ) என்னுஞ் சொல் வாணியென்று திரிந்திருக்கலாம். ஒலியை வானத்தின் பண்பாக முன்னோர் கருதினர். வாணிகம் என்பது வணிகம் என்று குறுகியும் வழங்கும். வாணிகம் முதலாவது உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இருதிறப்படும். அவற்றுள் அயல்நாட்டு வணிகமே சிறந்தது. அதுவும் நிலவாணிகம் நீர்வாணிகம் என இருதிறப்படும். அவற்றுள் நீர்வாணிகமே சிறந்தது. தமிழர் பண்டைக்காலத்தில் நீர்வாணிகத்திற் சிறந்திருந் தமைக்கு அகச்சான்றும் புறச்சான்றும் நிரம்பவுள. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதான ஊர் என்னும் கல்தேயநகர் அகழ்வில், இந்தியத் தேக்கு மரத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டதென்றும், தேக்குமரம் இந்தியாவில் விந்தியமலைக்கு வடக்கே வளர்வதே யில்லையென்றும், மஸ்லி னுக்குப் பாபிலோனிய பழம்பெயர் சிந்துவென்றும், அது இந்தியாவினின்றும் ஏற்றுமதியானதினால் அப் பெயர் பெற்ற தென்றும் ராகொஸின் கூறுகிறார். 28 எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மஸ்லினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்து வுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற்குள் புகுந்தமையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியா விற்கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மஸ்லின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது என்று திருவாளர் ஏ. கோஸ் (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார்.29 கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோ னுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்று தொல் காப்பியத்திற் (அகத். 37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டு கட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்தமை யறியப் படும். தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன. 28 Vedic India, pp. 305, 306. 29 The Madras Mail dated 2nd Dec. 1915. கலஞ்செய் கம்மியர் கலம்புணர் கம்மியர் என்று மணிமேகலையிலும், நீரினின்று நிலத்தேற்றவு நிலத்தினின்று நீர்பரப்பவு மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போர் (பட்டினப். 1130-7) என்றும், நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் என்று பட்டினப்பாலையிலும், இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்30 என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் fyŠbrŒÉidí«(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும். வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன : வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (உரி. 21) என்பது தொல்காப்பியம், நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது. நீள் - நீர். ஒ.நோ: கள் - கரு (நிறம்). தெள் - தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம். வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன. 30 கலங்கரை விளக்கம் - Light House. வாரி - L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger. and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake. வாரணம் - L. marinus, E. marina, n. marine, maritime, adj. வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என்னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தையொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலையாசியா வினின்றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறையறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லி யிருப்பது, வானத்திலுள்ள nkf¥gly¤ij.31 நாவாய் - L. navis, O.Fr. navis, Gr. naus, Skt. nau, E. navy, n. nautical, adj. நால்வாய் (யானை) - நாவாய், நால்வாய்போல் அசைவதால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகுபெயர்). நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப என்றார் முன்றுறையரையனார். களி - மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம். வெளி விளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை (பட்டினப். 172-3) என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க. நால்வாய் - நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது. படகு - Low. L. bargia, Gk. baris, O. Fr. barge, a boat. Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size. படகு - barge - bark. ட-ர, போலி. ஒ.நோ: முகடி - முகரி, குடகு - Coorg. Galleon (Sp. galeon - Low. L. galea), galley (O. Fr. galee - Low. L., galea) என்னும் பெயர்கள் கலம் என்னும் பெயரையும், ship (L. scapha, Gk. skaphos, Ger. schiff, Ice. skip, Goth. skip, A.S. scip, E. skiff) என்னும் பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன. 31 Vedic India, p. 107. கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மை யிலாகும். Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது முன்னர்க் கூறப்பட்டது. நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor. நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப் பெயர் பெற்றது. eh§Tœ, ehnfy (bj.), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் - நங்கூரம் - anchor. ஆங்கிலப் பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஓ.நோ: நாரந்தம் - naranj (Pers.) - arancio (Fr. - It.); E. orange. கவடி - cowry. கவடி - (பலகறை) ஒரு கடற்பொருள். பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது. மண் + தலம் = மண்டலம் (பூமி) - மண்டிலம் = வட்டம். மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறிவாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்தவர்க்கு வான நூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டி களும் கடிகாரமும். இதை மாக்கசு முல்லரும் கூறுகின்றார். நாலம் - ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றப்படி, அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் ................................................................ நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய சிறிய வாகப் பெரியோன் (திருவி. 3:1-6) என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது. ந-ஞ, போலி. கா: நயம் - ஞயம், நண்டு - ஞண்டு. உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம் தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப்பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின். அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பெற்றதும், பண்டைத்தமிழரின் வாரித்துறைத் தேர்ச்சியைக் காட்டுவதாகும். அம், ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள். அம் - அம்பு. ஒ.நோ: கும்-கும்பு, திரும்-திரும்பு. அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல, தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி. வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச் சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு = வளையல். அம்பி-ஆம்பி = காளான். L. amb, ambi, Gk. ambhi, round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த nf(Ke)¤ தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.32 உலகத்திலேயே முதன்முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத்தக்கதா யிருக்கின்றது. உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே.  32 The Malay Archipelago, pp. 321 - 2.