பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 12 வடமொழிவரலாறு - 2 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 12 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+ 176 = 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். பொருளடக்கம் பக்கம் பதிப்புரை .iii மொழியதிகாரம் 4. தென்சொல் மூலத் திரிசொற்கள் .97 5. தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள் .97 6. மொழிபெயர்ப்புச் சொற்கள் .97 7. இருபிறப்பிச் சொற்கள் .99 8. மயக்கச் சொற்கள் .99 9. தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள்... 106 10. சுட்டுச் சொற்கள் .107 11. வினாச் சொற்கள் 109 12. இடைச் சொற்கள் .110 13. பல்வகைச் சொற்பெருக்கம் .110 14. இடுகுறிச் சொற்கள் .113 15. வடசொற்கள் தென்சொற்களால் விளக்கம் பெறல் ... 113 16. வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச் சொற்களன்மை ... 116 17. வடமொழிவேர்ச்சொல்திரட்டின்குறைகள்... 117 II. இலக்கணவதிகாரம் .121 1. எழுத்தியல் 122 (1) வகையும் தொகையும் .122 (2) பாகுபாடும் பெயரும் .123 (3) ஒலியும் பிறப்பும் .123 (4) எழுத்துச் சாரியை .124 (5) முறை .125 (6) அளபு .126 (7) வடிவம் 127 (8) புணர்ச்சி .128 (9) வடமொழியெழுத்துப் பெருக்கம் .129 (10) வடமொழிவண்ணமாலையின்பின்மை... 130 (11) வடமொழிவண்ணமாலையின்ஒழுங்கின்மை... 131 (12) வடமொழிக் குறுங்கணக்குநூற்பாக்கள்... 131 2. சொல்லியல்... 132 (1) பெயர்ச்சொல் .133 (2) வினைச்சொல் .135 (3) இடைச்சொல் .140 தொடரியல் .144 (1) தொகைச்சொல் (ஸமாஸ) 144 (2) சொற்றொடர் (வாக்ய) .144 III. இலக்கியவதிகாரம் .146 1. வேதம் .146 2. வேதாங்கம் .146 3. வேத சாத்திரம் .149 4. புராணம் .151 5. இதிகாசம் .152 6. பல்வகை நூல்கள் .152 IV. தமிழ்மறைப்பதிகாரம் . 157 V. முடிபதிகாரம் .169 அருஞ்சொல் அகரமுதல் வரிசை 171 வாழ்க்கைச்சுவடு... 172 கருவிநூற்பட்டியல் .176 வடமொழி வரலாறு - 2 1 மொழியதிகாரம் தக்கணம் - தக்ஷிண (இ.வே.) தக்கு = தாழ்வு. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல். தக்கிலே பாடுகிறார் என்னும் வழக்கை நோக்குக. எச்சு(உயர்வு) x தக்கு. வடதிசை பனிமலையால் உயர்ந்திருத்தலால் உத்தரம் எனப் பெற்றது. ”Uttara, northern (because the northern part of India is high)” என்று மா. வி. அ. கூறுதல் காண்க. தக்கு - தக்கணம் = வடதிசையை நோக்கத் தாழ்ந்திருக்கும் தென்றிசை. கிழக்கு நோக்கும்போது தென்றிசை வலமும் வடதிசை இடமு மிருப்பதால்,தக்கணம் என்னும் சொற்கு வலதிசைப் பொருளும் உத்தரம் என்னும் சொற்கு இடதிசைப் பொருளும் தோன்றின. வலமாகச் சுற்றிவருதல் பிரதக்ஷிணம் என்று சொல்லப்படுதல் காண்க. தக்கோலம் - கக்கோல தக்கோலம் = ஒரு நறுமணச்சரக்கு. க. தக்கோல. தக்கோலம் பஞ்சவாசம் என்னும் ஐம்மணங்களுள் ஒன்றாகவும் முப்பத்திருவகை ஓமாலிகைகளுள் ஒன்றாகவும் கூறப்பெறும். தக்கோலந் தீம்பூத் தகைசா லிலவங்கங் கப்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5: 26,உரை) "இலவங்கம்...... தக்கோலம்......... ஓமாலிகை" (சிலப் .6:77,உரை). தக - தஹ் (d) - இ.வே. தளதளத்தல் = விளங்குதல். பசுநரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34). தள - தழ - தழல். தழலுதல் = 1.mHYjš. தழன்றெரி குண்டம் (திருவிளை. eக. 6). 2. விளங்குதல். தழலுந் தாமரை யானொடு (தேவா. 1215 : 27) தழ - தக. ஒ.நோ : மழ - மக. தகதகவெனச் சொலிக்கிறது என்பது உலக வழக்கு. தக - தகம்= vரிவு,Nடு.jf« - jங்கம்= Éளங்கும்bபான்.jf - திகழ் - திங்கள் = நிலா. ஒ.நோ : தமிழர் - திகுளர் (க.). தக - தகு - தகை = தாகம். தகம் - தாகம் = நீர்வேட்கை. j£L-jl(d|) தட்டுதல் = அடித்தல், புடைத்தல், தாக்குதல். தடம்-தட (t|) தடம் = வளைவு, வளைந்த கரை, கரைசூழ்ந்த நீர்நிலை. தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். (தொல். 804) தடம்-தடாகம்.தடம்-தட்டம். ``தட்டத்து நீரிலே தாமரை (திருமந். 2904) தடாகம்-தடாக (t|) தண்டம்-தண்ட (இ. வே.) தள்-தளம் = கனம். தெ. தளமு. 2. கூட்டம்.3. படை. தளம் - jடம்= bபருமை,mகலம்.jl« - தட - தடா - தடவு. தள் - தாள் = 1. திரண்ட அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802) 2. அடித்தண்டு போல் jங்குங்fல்.v©Fz¤jh‹ தாளை வணங்காத் தலை (குறள். 9) 3. மலையடி. ”தாள்வரைப் புறத்து (திருவாலவா. 44: 36) விரிதாள கயிலாய kலையே (தேவா.11: 56) தள்-தண்டு = 1. திரண்ட அடி. எ - டு: கீரைத்தண்டு. வாழைத் தண்டு, விளக்குத்தண்டு. 2. திரண்ட ஊன்றுகோல். தலைநடுங்காத் தண்டூன்றா (நாலடி. 14) 3. âரண்ட உலக்கைப்படை. தண்டுமுதற் சக்கரமு னேந்தும் (திவ். பெரியதி. 3 : 9: 10) 4. திரண்ட தடிபோன்ற பொருள். எ - டு : முதுகந்தண்டு, வீணைத்தண்டு. 5. திரண்ட படை (சேனை). தண்டெடுத்தல் = படை யெடுத்தல். 6. கொடித்தண்டு போன்ற உறுப்பு. எ . டு: காதுத்தண்டு. தண்டுதல் = பொருள் திரட்டுதல். “jobaL¤jt bdšyh« j©l‰fhudh?'' (பழமொழி) தண்டு-தண்டம் = 1. பெருந்தடிப் படைக்கலம். தண்டமுடைத் தருமன் (தேவா. 1055: 6). 2. தடிபோற் கீழே விழுந்து வணங்குதல் (தண்டனிடுதல்). தண்டம்-தண்டன். 3. சேனை. எ - டு: தண்டநாயகன் = சேனைத்தலைவன். தண்டு-தண்டி = தண்டால் தூக்கப்பெறும் பல்லக்கு. தண்டி-தண்டிகை. வால்நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடஞ்சொன்றால் கால் நடையாய்ச் சென்றவரும் கனகதண்டி யேறுவரே. (பழமொழி) தண்டு-தண்டியம் = தண்டியப் படைக்கல் அல்லது கட்டை. தண்டு-தண்டை = தாமரைக்கொடித்தண்டு போன்ற காலணி. தண்டு-தண்டி. தண்டித்தல் = பருத்தல். தண்டி-தடி. தடித்தம் = பருத்தல். தடி = பருத்த கோல். தடிமன் =பருமை. தடியன் = பூசணி. தண்டு-தண்டி. தண்டித்தல் = தடியாலடித்தல், தண்டனை செய்தல். தண்டி-தண்டம் = தண்டனம், தண்டனை. தண்டம்-தண்டா = மூவகைத் தண்டனைகளுள் ஒன்று. தண்டம் = 1. தண்டனை. தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே (புறம். 10: 6) 2. வீண். எ-டு. தண்டச்சோறு. தண்டனம் - தண்டன தபு-தப் (dabh) - இ. வே. தபுதல் = கெடுதல். அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து (தொல். சிறப்புப்.) காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல். 1025) தபுத்தல் = கெடுத்தல். உள்ள மழிய வூக்குநர் மிடல்தபுத்து (பதிற். 13: 18) வடமொழியிற் கெடுத்தல் என்னும் பிறவினை வழக்கே யுள்ளது. தமிழம்-த்ரமில (த்ரமிள) த்ரமிட, த்ரவிட jÄœ-jÄH« (bg.)-jÄH (பெ. எ.) தயிர்-ததி (dadhi)-ï. வே. தை-தயிர். ஒ. நோ: ஐ-அயிர் (நுண்மை), மை-மயிர் (கரியது), வை-வயிர் (கூர்மை), பை-பயிர் (பசியது). தைத்தல் = குத்துதல், முட்குத்துதல். கானவேல் முட்டைக்குங் காடு (பொய்யாமொழிப்புலவர்). பாலிற்கு உறைமோரிடுதலை உறைகுத்துதல், பிரை குத்துதல் என்பது வழக்கு. ததி-தக்ஷீ (இ.) தரங்கம்-தரங்க=அலை. துளங்குதல் = 1. அசைதல். துளங்கிமில் நல்லேற் றினம் (கலித். 106 : 9) 2. நிலைகலங்குதல். கடிமரந் துளங்கிய காவும் (புறம். 23) துளங்கு - தளங்கு - தயங்கு. தயங்குதல் = அசைதல். தயங்கிய களிற்றின்மேல் (கலித். 31: 10) தளங்கு-தரங்கு = அசைந்தியங்கும் அலை. தரங்காடுந் தடநீர் (தேவா. 463: 1) தரங்கு-தரங்கம் = 1. அலை. நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165) 2. இசையலை. ஒண்டரங்க விசைபாடு மளியரசே (தேவா. 87: 1) ஒ. நோ: அரங்கு - அரங்கம். அலைதல் = அசைதல். அலை = அலையும் நீர்த்திரை. அம்போதரங்கம் = கரைநோக்கிவரும் நீரலைபோல் வரவரச் சிறுத்துவரும் கலிப்பாவுறுப்பு. அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே. (தொல். 1408) தொல்காப்பியம் வழிநூலாதலால், ஆரிய வருகைக்கு முற்பட்ட இடைக்கழகக் காலத்திலேயே அம்போதரங்க வொத்தாழிசைக்கலி வழக்கிலிருந்திருத்தல் வேண்டும். வடவர் தரம்+க (ga) என்று பகுத்து, குறுக்கே செல்வது என்று மூலப் பொருளுரைப்பர். தரம் என்பதன் மூலம் த்ரூ. இது துருவு என்னும் தென்சொற் றிரிபு. க என்பது ஏ என்பதன் கான்முளை. ஏ-யா-ஜா-கா-க. தருக்கம்-தர்க்க தருக்குதல் = 1. செருக்குதல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38) 2. மிகுத்துக் கூறுதல். தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து (தொல். 996) 3. போரூக்கங் கொள்ளுதல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர் (சீவக. 1679) 4. தாக்குதல், இடித்தல். தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி (பதினொ. திரு வீங்கோய். 40) 5. தகர்த்தல். மரக்கலமியங்கவேண்டி...jU¡»a விடத்து (கம்பரா.மீட்சிப். 171) தருக்கு = 1. செருக்கு. 2. எதிர்க்கும் வலிமை. எதிர்செயுந் தருக்கி லாமையின் (கம்பரா. தாடகை. 40) 3. சொற்போர். தருக்கினாற் சமண்செய்து (திவ்.bgÇaâ. .2.1: 7). தருக்கு-தருக்கம் = 1. சொற்போர். “பொருவரு தருக்கஞ் bசய்ய (கந்தபு.jÔáí¤. 157) 2. தருக்க நூல். தமிழ்த் தருக்கநூல் எழுபொருட் பாகுபாட்டை அடிப்படை யாகக் கொண்டது. தர்க்க பரிபாஷை என்னும் நூலிற் காட்டப் பெற்றுள்ள அகத்தியத் தருக்க நூற்பாக்களைக் காண்க. தமிழ்த் தருக்க நூலையே வடவர் வைசேடிகம் என வகுத்தனர். தவி-தப் (இ. வே.) தவித்தல் = வெப்பமாக்குதல், நீர்வேட்கை யுண்டாக்குதல். தவிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. தவிப்பு - தாகம். நிரப்புறு தவிப்பினை யொழித்திட (அரிச் .பு. விவாக. 107). தவி-தாவம்-தாகம் = நீர்வேட்கை. தவி-தவம் = வெப்பத்தால் உடம்பை வருத்தி ஐம்புலனையடக் குதல். தவம்-தவன் = தவஞ்செய்பவன். மாதவன் = பெருந்தவஞ் செய் தவன். மாதவர் நோன்பு மடவார் கற்பும் (மணிமே. 22: 208). தவம்-தபஸ் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு (குறள். 261) உற்ற நோயுள், வெயிலின் வெம்மையும் பசிதாகத்தா லுண்டாகும் உடம்பின் வெம்மையும் அடங்கும். தளம்-தல தள்-தளம் = அடி, அடிப்பரப்பு. இதற்கு வடவர் காட்டும் ஸ்த்ரு என்னும் மூலம் பொருந் தாமை காண்க. ஸ்த்ரு = சிதறு. சிதறு என்னும் தென்சொல்லே, strew என்னும் ஆங்கிலச் சொற்கும் ஸ்த்ரு என்னும் வடசொற்கும் மூலமாகத் தெரிகின்றது. தா-தா (da$)-ï. வே. பழந்தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம் என்னும் உண்மையைக் காட்டுஞ் சொற்களுள், தா என்பது ஒன்றாகும். தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே (தொல். 929) அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. (தொல். 512) இப் பொருள்வரம்பு ஏனைமொழிகளில் இல்லை. ம. தா, க. தா. Gk. didomi, L. do. தா-தா (இ. வே.) = தருபவன். தா = பிள்ளையைத் தந்தவன் (அப்பன்). தாதா (தாத்தா) = தந்தையின் தந்தையாகிய பாட்டன். bj.,f. தாத்த. தாகம் - தாஹ தகு - தவு - தவி - தவம் = வெப்பம், வெப்பம் பசிதாகம் முதலிய வற்றால் உடலை வாட்டும் துறவுவினை,அல்லது இறை வேண்டல் வினை. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள். 537) தவு - தவி - தாவம். தவித்தல் = நீர்வேட்கை யுறுத்தல் ஒன்றைப்பெறப் பெருவேட்கை கொள்ளுதல். தாபம் - தா To thirst after என்னும் ஆங்கில வழக்கை நோக்குக. தாடி-தாடிகா (d|h) தாடி = 1. மோவாய். சுருளிடு தாடி (சிலப். 27: 181). 2. மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15:6) 3. மாட்டின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36 : 24) 4. சேவற் கழுத்தின் தொங்குசதை. தாழ்தல் = தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழி-தாடி. ஒ. நோ: தாழ்வாய் = மோவாய் (பிங்.). தாழ்வாய்-தாழ்வாய்க் கட்டை. தாண்டகம்-தண்டக தாண்டு-தாண்டகம் = 26 எழுத்து வரம்பைத் தாண்டிவரும் மண்டில ( விருத்த)ச் செய்யுள். தாண்டவம்-தாண்டவ தாண்டுதல் = குதித்தாடுதல் (பிங்.) தாண்டு-தாண்டவம் (பிங்.). 2. கூத்துவகை (திவா.). தாத்தா-தாத்த தாம்பு-தாமன் (d) தாம்பணி-தாமணீ தாம்பு+அணி - தாம்பணி = மாடுகளை வரிசையாகப் பிணைக்கும் கயிறு. தாம்பு = 1. கயிறு (பிங்.). 2. தாம்பணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111) தாம்பு+இசை = தாப்பிசை = 1. ஊஞ்சல். 2. செய்யுட் சொல் முன்னும் பின்னுஞ் சென்று பொருள் கூடும் பொருள்கோள். தாமரை-தாமரஸ தும் = செம். தும்-தும்பு-துப்பு = சிவப்பு, பவழம், அரக்கு. தும்பு-தும்பரம் = சிவப்பு, சிவப்பான அத்திப்பழம். தும்-(துமர்)-துவர் = சிவப்பு, பவழம், காவி, துவரை, துவர்ப்பு (காசுக் கட்டி). துவர்த்தல் = சிவத்தல், துவர்ப்புச் சுவையாதல். துவர்-துவரை = செம்பயறு, செப்புக்கோட்டை நகர். துவர்-துகிர் = பவழம். துமர்-தமர்-தாமரம் = செம்பு. தாமரை = செம்முளரி, முளரி. தாமரஸ என்னும் வடசொல் வடிவைத் தாம+ரஸ என்று பகுத்துப் பகல் முளரி என்று பொருள் கூறுவர். ஆயின், தாம என்னுஞ் சொற்கு மூலமாகக் கொள்ளும் தம என்னுஞ் சொற்கோ, இருள் அல்லது இரவு என்றுதான் பொருள். இனி, இக் குழறுபடையைப் பெருக்கற்குத் தம் என்பதை அடி மூலமாகக் காட்டுவர். அதற்குத் திணறுதல் அல்லது திக்குமுக்காடுதல் என்பது பொருள். இங்ஙனம் வடவர் திணறித் திண்டாடுவதெல்லாம், வேண்டுமென்றே மெய்ம்மையைப் புறக்கணித்துப் பொய்ம்மையை மேற்கொள்வதன் விளைவே. தாமரம்-தாம்ர தும்பரம்-உதும்பர, உடும்பர (அ. வே.). தாவு-தாவ் (dh) - இ. வே. தாவுதல் = குதித்தல், தாண்டுதல், பாய்ந்தோடுதல். தாளம்-தால தாள் = கால், அடி. தாள்-தாளம்=ஆடுபவர் காலால் தட்டும் காலக் கணிப்பு, ஆட்டிற்கும் பாட்டிற்கும் உரிய காலக் கணிப்பு, காலக் கணிப்பிற்குத் தக்க இசைக்கருவி. தாளி-தால தள்-தாள்-தாளி=திரண்ட கூந்தற்பனை. தானம்-தான (இ. வே.) தள்ளுதல் = ஈனுதல் (உள்ளிருந்ததை வெளித்தள்ளுதல்). (வாழை) குலை தள்ளுதல் என்னும் வழக்கை நோக்குக. தள்-தள்ளை = தாய். ம. தள்ள, தெ. தல்லி. தள்ளுதற் சொல் போன்றே ஈனுதற் சொல்லும் இருதிணைக் கும் பொதுவாம். ஈன்றாள் = தாய். ஈனுமோ வாழை யிருகாற் குலை (பழ. 221). ஈ-ஈன். ஈனுதல் = இடுதல். மணற்கீன்ற முத்தம்' = மணலிலிட்ட பருமுத்து. தள் - (தர்) - தரு - தா - த. தரு-தருகிறான், தருவான், தருகை, தரவு. தா-தா, தானம். த-தந்தான், தத்தம். தருதல் = 1. மகப்பெறுதல். தந்தவளைப் பணிந்தவளும் (சேதுபு. தேவிபுர.7). தந்தவள் = தாய். 2. மரஞ்செடிகள் பயன்தருதல். திடம்-த்ருட (dr|d|ha) - இ. வே. தில்-திள்-திண்-திண்மை = செறிவு, பருமன், வலிமை, உறுதி, கலங்கா நிலைமை. திண்-திண்ணம் = இறுக்கம், வலிமை, தேற்றம் (நிச்சயம்) ம. திண்ணம். திண்ணன் = வலியன், வல்லுடற் கண்ணப்பன். திண்ணகம் = செம்மறியாட்டுக்கடா. திண்ணக்கம் = நெஞ்சுரம். திண்ணிமை = மனவுறுதி. திண்ணியன்=வலியவன், திட மனத்தன் திண்ணை = திரண்ட மேடு. ம. â©z, j., தெ. திண்ணெ. திணை = திரட்சி, குலம், வகுப்பு, பொருள் வகுப்பு, நிலவகுப்பு. திண்ணம்-திணம் = திண்மை. திணம்-திணர் = செறிவு. திணர்த்தல் = செறிதல், கனமாகப் படிந்திருத்தல். திண்-திணி. திணிதல் = செறிதல், இறுகுதல். க. திணி. திணிகம் = நெருங்கிச் செய்யும் போர். திணிப்பு-திணிம்பு = செறிவு. க. திணிம்பு. திணுங்குதல் = செறிதல், உறைதல். திணுக்கம் = செறிவு, கட்டி. திண்-திண்பு = உறுதி. க. திண்பு. திண்பு-திட்பு-திட்பம் = வலிமை, மனவுறுதி, சொற்பொரு ளுறுதி, தேற்றம். â©-â©L = gUk‹, áWâ©iz, gŠriz, bj., ம. திண்டு. திண்டு-திட்டு = சிறு மேட்டுநிலம், மணற்குன்று, ஆற்றிடைக் குறை. k., க. திட்டு. திட்டு-திட்டம் = தேற்றம், நிலைபேறு, உறுதியான ஏற்பாடு. தெ. திட்டமு, க. திட்ட. திட்டு-திட்டை = திண்ணை, மணல்மேடு, மேட்டுநிலம். ம. திட்ட. திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை. திட்டம்-திடம் = பருமன், வலிமை, உறுதி, கலங்காநிலை, நிலை தவறாமை, மனவுறுதி, உண்மை, தேற்றம். திடம்-திடன்-திடல் = மேட்டுநிலம், பொட்டல். திடல்-திடர் = புடைப்பு, மேட்டுநிலம், குப்பைமேடு, சிறுதீவு. திடர்-திடறு = மேட்டுநிலம், கரடு. திடாரி = திடமனத்தன். தெ. திடமரி. திடாரிக்கம் = மனத்திடம். திண்டு-திண்டன் = தடியன். திண்டி = பருமன், தடித்தவள், யானை. வடவர் காட்டும் த்ருங்ஹ் அல்லது த்ருஹ் என்னும் மூலம், திற என்னும் தென்சொற் றிரிபே. திறத்தல் = திறனாதல். தித்தி-த்ருத்தி (இ.வே.) துருத்துதல் = முன்தள்ளுதல், துருத்து - துருத்தி = காற்றை முன் தள்ளும் உலைக்களத் தோற்கருவி, நீரை முன்வீசுங் கருவி, ஊதும் தோலிசைக்கருவி, முன்தள்ளிய வயிறு. துருத்தி-துத்தி-தித்தி. வடவர் காட்டும் த்ரூ (d) என்னும் சொற்குப் பிளத்தல் என்பதே பொருள். திமி-திம, திமீ திம்மை = பருமன். தெ. திம்மெ. திம்மன் = பருத்த ஆண்குரங்கு. க. திம்ம, தெ. திம்மடு. திம்மலி = பருத்தவள். திம் - திமி = எல்லாவற்றுள்ளும் பருத்த மீன். திரு-ச்ரி (ஸ்ரீ) - இ.வே. தில்லுமுல்லு = திண்டுமுண்டு. தில்-திர்-திரள். திர்-திரு = திரண்ட செல்வம், திருமகள், சிறப்பு, பொலிவு, அழகு, நற்பேறு, தெய்வத்தன்மை, தூய்மை. ஒ. நோ: வெறுத்தல் = மிகுதல். வெறுக்கை = மிகுதி, செல்வம். செல்வத்தாற் சிறப்பும் பொலிவும், அரசச்செல்வத்தால் தெய்வத் தன்மையும், தெய்வத்தன்மையால் தூய்மையும் ஏற்படு மென்பது பண்டை யுலகக் கருத்து. செல்வத்தாற் சிறப்பும் பொலிவும் இக் காலத்து முண்டு. திரு என்பது தெய்வத்தன்மையை அல்லது தூய்மையைக் குறிக்கும் அடைமொழியாகக் கொள்ளப் பெற்றது. எ-டு: திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருச்சிற்றம்பலம், திருநீறு, திருப்பள்ளியெழுச்சி, திருமுறை, திருமேனி, திருவிழா, திருவிளையாடல், திருவுளம். தொன்றுதொட்டுத் திருவரங்கம் என்று வழக்கிவந்த இடப் பெயர், இன்று ஸ்ரீரங்கம் எனத் திரிந்து வழங்குகின்றது. வடவர் வடமொழியிலுள்ள சொற்கட்கு வலிந்தும் நலிந்தும் மூலங்காட்டும் தம் வழக்கத்திற்கேற்ப, ச்ரி என்னும் சொல் ச்ரி1 அல்லது ச்ரீ1 என்பதினின்று திரிந்ததாகக் கூறுவர். ச்ரி1 = சார் (to lean). ச்ரீ1 = ஒளி. மா. வி. அ. இரண்டையும் இணைத்துக் கூறும். தீய்-தீ (d) இ.வே. தீய்தல் = எரிதல், விளங்குதல். தீய் - தீய்வு - தீவு - தீவம் = விளக்கு. தீவம் - தீப தீவு - த்வீப (இ.வே.) தீர்தல் = நீங்குதல். தீர்- தீர்வு - தீவு = பெருநிலத்தினின்று நீங்கி யிருக்கும் சிறுநிலம், ஒரு நிலத்தினின்று நீங்கியிருக்கும் இன்னொரு நிலம். ஒ. நோ: கோர்வை-கோவை. தீவு-தீவம்-வ. த்வீப. வடவர் த்வி+அப் என்று பகுத்து, இருபுறமும் நீராற் சூழப்பெற்ற தென்று பொருட்காரணங் கூறுவர். நாற்புறமும் நீராற் சூழப்பெற்ற தீவிற்கு இவ் விலக்கணம் பொருந்தாமை காண்க. துந்தி-துந்த, துந்தி உந்துதல் = முன்தள்ளுதல். உந்து - உந்தி = கொப்பூழ். உந்து - துந்து - துந்தி = முன்தள்ளிய வயிறு, கொப்பூழ். துந்தி-தொந்தி = முன்தள்ளிய வயிறு. ம. தொந்தி வடவர் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன் திரிபே. து(ப்பு)-து1 (இ.வே.) = வலியுறு துப்பு = வலிமை. கெடலருந் துப்பின் (அகம். 105). துத்தல்= உண்ணுதல். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள். 12). உண்டவுடல் உரஞ்செய்யும். ஆதலால், உண்டற் கருத்தினின்று வலிமைக் கருத்துத் தோன்றியிருக்கலாம். து-துவ்வு. துவ்வுதல் = 1. நுகர்தல். துவ்வா நறவின் (பதிற். 60:12). 2. வலியுறுதல். தான்றுவ்வான் (குறள். 862). து-தூ = வலிமை. தூவெதிர்ந்து பெறாஅ (பதிற். 81: 34). துருவு-த்ரூ (இ.வே.) துள்-துரு-துருவு. E. through, OS. thurh. துர-த்வர் = விரை, முடுகு. துரை-த்வரா = வேகம், விரைவு. துலை-துலா துல்-துன். துன்னுதல் = பொருந்துதல். துல்-துல்லியம் = ஒப்பு, சரிமை, ஒப்பக் கையெழுத்து. துல்லியம்-துல்லிபம். துல்-துலம் = நிறைகோல், துலாநிறை. துல்-துலா = நிறைகோல், துலாவோரை, ஏற்றமரம், வண்டியின் ஏர்க்கால், துலாக்கட்டை. துவா-துலாந்து = துலாக்கட்டை. துலா-துலாம் = நிறைகோல், துலாவோரை, துலாமாதம் (ஐப்பசி), 5வீசை கொண்ட நிறை, ஏற்றமரம், உத்தரக் கட்டை, துலாக் கட்டை, தூணுறுப்பு. துலாம்-துலான். ம. துலாம். துலாக்கோல், துலாக்கடைக் கூரை, கைத்துலா, ஆளேறுந் துலா, துலாப்பட்டை என்பன பெருவழக்குச் சொற்கள். ஐயவித்துலாம் = ஒரு மதிற்பொறி (சிலப். 15: 213). துலா-துலை = நிறைகோல், துலாவோரை, 100 பல நிறை, ஒப்பு, தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள். 986). வடவர் காட்டும் துல் என்னும் அடியே தமிழ்ச்சொற்கும் உரியதாம். ஆயின், மா. வி . அ. தூக்கற் கருத்தை முற்படக் கூறும். ஒப்பாதற் கருத்தே அடிப்படையாம். ஒ. நோ: ஒப்பு = நிறைகோல். ஒப்பராவுதல் = நிறைகோல் செய்தல். ஒப்பராவி = நிறைகோல் செய்பவன். குமரிக்கண்டத்தில் வழங்கிய துல் (நிறு) என்னும் வினை இக் காலத்து வழக்கற்றது. துவரம்-துவர, துபர தும்-துமர்-துவர் = 1. சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6: 26). தெ. தொகரு. 2. பவழம் (திவா.). துவர்-துகிர். க. தொகர். 3. காவி. துவருறு கின்ற வாடை (தேவா. 608: 10). 4. துவரை. துவர்ங்கோடு (தொல். எழுத்து. 363, உரை). 5. துவர்ப்பு (காசுக்கட்டி). 6. துவர்ப்புச் சுவை. துவர்மருவப் புளிப்பேற்றி (தைலவ.தைல) 7. துவர்ப்புப்பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக. 623) துவர்த்தல் = 1. சிவப்பாதல். துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை. 13). 2. துவர்ப்பாதல். துவர்-துவரம் = துவர்ப்பு (பிங்.). துவர்-துவரை = துவரம் பயறு. தெ. துவரி, க. தொவரி. துவரை-துவரிகா துவரை = உருக்கிய செம்பைச் சாந்தாக வார்த்துக் கட்டிய கோட்டை நகர். செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201: 19-20) துவரை-த்வாரக வடவர் த்வார+க என்று பகுத்து, பல புறவாயில்களை யுடையது (many-gated) என்று பொருளுரைப்பர். த்வார = வாயில். துவள்-த்வ்ரு (dh) - (இ.வே.) துவளுதல் = வளைதல். துவை-த்வன்2 (dh) துவைத்தல் = ஒலித்தல். துளசி-துலசி துளவு = துளசி. கள்ளணி பசுந்துள வினவை (பரிபா. 75: 54). துளவு-துளவம். துளவமுங் கூடையும் (திவ். திருப்பள்ளி. 10). துளவம்-துளபம். துளபத் தொண்டாய (திங். திருமாலை. 45). துளவு-(துளசு)-துளசி. துழாய் = துளசி. துழாஅ யலங்கற் செல்வன் (பதிற். 31: 8). துளவு-துளவன் = மாயோன். மாயோன் தமிழக முல்லைநிலத் தெய்வம் என்றும், துளவு அவனுக்குரிய முல்லைநிலப் பூவென்றும் அறிக. துறட்டி-த்ரோட்டி, த்ரோத்ர துறடு-துறட்டி-தோட்டி, ம. தோட்டி. க. தொறடு, தோட்டி (d). உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் (குறள். 4) தூணம்-ஸ்தூண, ஸ்தூணா (இ. வே.). துல்-துலை = ஒப்பு. துல்-துன். துன்னுதல் = பொருந்துதல். துல்-துள்-துண்-துணர் = கொத்து. துண்-துணை = சேர்க்கை, இரண்டு, ஒப்பு. துள்-(துடு)-துடவை = தோட்டம். துடு-துடை = தொடை. துடு-துடர் = தொடர். துடு-தொடு-தொடை = தொடர். துண்-தூண் = 1. திரண்ட கம்பம். சிற்றில் நற்றூண் பற்றி (புறம். 86). 2. தாங்கல். துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள். 615). தூண்-தூணம் = 1. பெருந்தூண்: பசும்பொற் றூணத்து (மணிமே.1: 48). 2. பற்றுக்கோடு (அக. நி.). தூண்-தூணி. தூணித்தல் = பருத்தல். வடவர் காட்டும் ஸ்தா (நில்) என்னும் மூலத்திற்கும் அதனின் றமைந்த ஸ்தாணு (நிற்கும் அடி) என்னும் சொற்கும், தூண் என்பத னொடு யாதொரு தொடர்புமில்லை. தூணம்-தூண தூணி1-தூணீ துள்-(தூள்)-(தூளம்)-தூணம் = துளைக்கப்பட்ட கூடு, அம்புப் புட்டில். துள்-(தூள்)-(தூளி)-தூணி = அம்புப் புட்டில். பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணி (பதிற். 45: 1) ஒ.நோ: தோள்-தோணி. வடவர் காட்டும் துல் (நிறு) என்னும் மூலமும், மா. வி. அ. கூறும் பொறுப்பது (bearer) என்னும் பொருளும் பொருந்தா. தூணி2 - த்ரோண (d) - இ. வே. மேற்கூறியதே இதற்கும். தூணி = 4 மரக்கால் கொண்ட முகத்த லளவு. வடவர் த்ரு4 (தரு, தாரு = மரம்) என்பதை மூலமாகக் காட்டுவர். தூது-தூத (du$ta) தூது = 1. தூதுமொழி. தூதுரைப்பான் பண்பு (குறள். 681) 2. தூது சொல்வோன். தக்க தறிவதாந் தூது (குறள். 686) தூது-தூதன் (ஆ. gh.), தூதி (பெ. பா.). தூது என்னுஞ் சொற்கு, முன்சென் றுரைப்பது என்பதே வேர்ப் பொருளாகும். ஒ. நோ: உது-(உதழ்)-உதடு = வாயின் முன்னிருப்பது. உதழ்-இதழ். குது-தெ. கொத்த = புதிய. த. கோடி = புதுமை, புத்தாடை. ம. கோடி. புதுமை என்பது, ஒரு பொருள் தோன்றுவதின் அல்லது பயன் படுவதின் முன் நிலைமையே. துது-தூது = ஓர் அரசனின் வருகையை அல்லது போர்ச் செய்தியை, மற்றோ ரரசனிடம் முன் சென்றறிவிப்பது. பிற்காலத்தில் செய்தி யறிவிப்பது என்று மட்டும் பொருள்பட்டது. நுது-நுதல் = மண்டையின் முன்னுள்ள நெற்றி. நுதலுதல் = முன்சொல்லித் தொடங்குதல். புது - இது வெளிப்படை. மா. வி. அ. து (செல்) என்பதை மூலமாக ஐயுற்றுக் காட்டும். தூரி-தூலி, தூரிகை-தூலிகா தூர் = குத்துச் செடியின் வேர்த்தொகுதி. தூர்-தூரி = தூர் போன்ற தூரிகை (painter’s brush). தூரி- தூரிகை. தூளி-தூலி (dh) துவைத்தல் = இடித்தல். துவை-துகை. துகைத்தல் = இடித்தல். துகை-துகள் = இடித்த தூள். துகள்-தூள்-தூளி-தூசி. தூளித்தல் = தூளாக்குதல். இச் சொல் மா. வி. அகரமுதலியில் இல்லை. ஆயின், சென்னைப் ப. க. க. அகரமுதலியில் வடசொல்லாகக் காட்டப்பட் டுளது. தூளித்தல் என்னும் வினைக்குத் தூளைப் பூசுதல் என்று பொருள் கொண்டுள்ளனர் வடவர். தூலன, உத்தூலன-தொ. bg.(t.) தேவன்-தேவ (இ. வே.) தேய்தல் = உரசுதல். தேய்-தே= 1. (உரசிப் பற்றும்) நெருப்பு. 2. (நெருப்பாகிய) தெய்வம். தேபூசை செய்யுஞ் சித்திர சாலை (சிவரக. நைமிச. 20) 3. (தெய்வம் போன்ற) தலைவன். தே-தீ=நெருப்பு, விளக்கு, சினம், தீமை, எரியகம் (நரகம்). தீமை = தீயின் தன்மை. k., க. தீ. ஒ. நோ: தேன்-தேம்-தீம். தீ-தீ (இ. வே.) - ஒளிர் தீதல் = எரிதல், கருகுதல். தீத்தல் = எரித்தல், கருக்குதல். க. சீ. தீ-தீய். தீய்தல் = தீதல். தீய்த்தல் = தீத்தல். தீ-தீவு-தீவம் = விளக்கு. இனி, தேய்-தீய்-தீ என்றுமாம். தேய்-தேயு = நெருப்பு (பிங்.). தேய்-தேய்வு-தேவு = 1. தெய்வம் (பிங்.). நரகரைத் தேவுசெய் வானும் (தேவா. 696: 2) 2. தெய்வத் தன்மை. தேவு-தேவன் = கடவுள், அரசன், கணவன், தலைவன். தேவி = தெய்வ மகள், அரசி, தலைவி. தேய்வு-தெய்வு-தெய்வம். தெய்வ முணாவே மாமரம் புட்பறை (தொல். பொருள். 18). ம. தெய்வம், தெய்யம், தெ. தேவுடு. பண்டை யுலகில் நெருப்பே தெய்வமாகவும் தெய்வ வடிவாகவுங் கொள்ளப் பெற்றது. ஒ. நோ: சுள்-சுர்-சுரம்-சுரன் = தேவன். குறிஞ்சி மக்கள் முருகனைச் சேயோன் (சிவந்தவன்) என்றது நெருப்பு வடிவம்பற்றியே. Gk. theos, L. deus. தெய்வம்-தைவ வடவர், திவ் (ஒளிர்) அல்லது த்யு என்றொரு செயற்கை யடியினின்று, த்யௌஸ் (ஒளியுள்ள வானம்), திவஸ் (பகல், நாள்), தேவ (விண்ணுலகத்தது), திவ்ய (தெய்வத் தன்மையுள்ள) என்னுஞ் சொற்களை அமைத்துள்ளனர். த்யு என்பது தெய்வம் என்னுஞ் சொல்லினின்றும், திவ் என்பது தேவன் என்னுஞ் சொல்லினின்றும் திரித்துக்கொண்டவையே. தோட்டி-தோத்ர (tottra) வடவர் இதற்குக் காட்டும் துத் (d) என்னும் மூலம் துந்து என்பதன் திரிபே. தோரணம்-தோரண துருவு-தூர்-தோர்-தோரணம் = தெருவிற் குறுக்காகக் கட்டும் சுவடிப்புத் தொங்கல். தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல். தோர்-தோரணை = கோர்வை, கோர்வையாகச் சொல்லும் முறை. தோள்-தோஸ் (d) தொள்-தொண்-தொண்ணை = பருமன். தொள்-தோள்-தோடு = திரட்சி, தொகுதி. தொள்-தொழு-தொழுதி = தொகுதி. தோள் = கையின் திரண்ட மேற்பகுதி (புயம்). சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (பெரும்பாண். 145) k., க. தோள், து. தோளு. தோட்கடகம், தோள்வலி, தோள்வளை, தோளணி முதலிய சொற்களை நோக்குக. பிற்காலப் புலவர் இச் சொல்லைக் கை என்னும் பொதுப் பொருளிலும் ஆண்டுவிட்டனர். நகரம்-நகர நகுதல் = விளங்குதல். நகு-நகர் = விளங்கும் மாளிகை, மாளிகை யுள்ள பேரூர். நகர்-நகரி = மாளிகையுள்ள பேரூர். நகர்-நகரம் = பெருநகர். நசி-நச் (nas) நொள்-நொய்-(நய்)-நை. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56) நைதல் = நசுங்குதல், கெடுதல். நை-நசி-நசியல். நசி-நசுங்கு-நசுங்குணி. நடி-நட், ந்ருத் நளிதல் = ஒத்தல். நளி-நடி. ஒ. நோ: களிறு-கடிறு. நடித்தல் = ஒத்து நடத்தல், நாடகம் நிகழ்த்தல், கூத்தாடுதல், பாசாங்கு செய்தல். நடி-நடம்-நட்டம். நடம்-நட (t |) நட்டம்-ந்ருத்த நடி-நடனம். நடனம்-நடன ( t|) நடி-நடிகன், நடிகை. நடிகன்-நடிக (t |), நடிகை-நடிகா (t |) நட்டம்-நட்டணம், நட்டணை. நட்டணம்-நர்த்தன நாகம்-நாக (g) நகர்-நாகம் = பாம்பு. நகர்தல் = ஊர்ந்து செல்லுதல். ஒ. நோ: E.snake, F. snican, to creep. வடவர் நக (மலை) என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையி லுள்ள தென்று பொருட்காரணங் கூறுவர். நாகரிகம்-நாகரிக நகரம்-நகரகம்-நாகரிகம். நாடகம்-நாடக (t |) நடி+அகம் = நாடகம். நாளம்-நால நுள்-நள்-நாள்-நாளம் = உட்டுளையுள்ள தண்டு. நாணல்-நாட நாளம்-நாணம்-நாணல் = உட்டுளையுள்ள தட்டை. நாடி-நாடி நாள்-நாளி-நாழி-நாடி = அரத்த அல்லது மூச்சுக்குழாய், ஊதை (வாத) பித்துக் கோழை நாடி, நாடித்துடிப்பு. நாலா-நானா அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால் வகுப்பையும் சேர்ந்த எல்லா மக்களும் வந்திருந்தனர் என்பதை, நாலா பேரும் வந்திருந்தனர் என்றும்; நாற்றிசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்பதை, நாலா திசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும்; கூறுவது மரபு. நாலா = நால்வகை, எல்லா, பலவகை. நாவாய்-நௌ, நாவ (இ.வே.) நளியிரு முந்நீர் நாவா யோட்டி (புறம். 66) நாவுதல்=கொழித்தல். நாவு-நாவாய்=கடல்நீரைக் கொழித்துச் செல்லும் பெருங்கலம். வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசுமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட மாடியற் பெருநாவாய் நாடார நன்கிழிதரு மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லி னூர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 75-88) என்று, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மீது, அவன் முன்னோருள் ஒருவன் சாலி (சாவக)த் தீவைக் கைப்பற்றியமை ஏற்றிக் கூறப்பட்டிருத்தல் காண்க. வேத ஆரியர் கடலையும் கப்பலையும் கண்டறியாது நில வழியாக இந்தியாவிற்கு வந்தவர். சிந்தாற்றில் இயங்கிய படகு களைப்பற்றித்தான் அவர்க்குத் தெரியும். அதனால் வடநாட்டில் வழங்கிய நௌ என்னும் சொல்லாற் படகையே முதலிற் குறித்தனர். வடவர் காட்டும் வேடிக்கையான சொன்மூலம் வருமாறு: (1) நௌ=வாச் (c)-ÃU¡j, 1: 11). வாச் = பேச்சு, மொழி, குரல், ஒலி. (2) நு4 = பராவு (praise). தெய்வத்தைப் பராவும் மன்றாட்டு (prayer) வானுலகிற்குச் செலுத்துகின்ற கலமாக இருக்கின்றது. “2. nau = va$e, Nir.i, 11 (either because prayer is a vessel leading to heaven or fr. 4.nu, ‘to praise’)”-kh. வி. அ. ப. 571. நாழி-நாடி நுள்-நள்-நாள்-நாழி=உட்டுளைப் பொருள், மூங்கிற்படி, முகவைப்படி. நெசவுக்குழல், அம்பறாத்தூணி, கன்னல் (நாழிகை வட்டில்), நாழிகை. ம. நாழி, க. நாழி. நாழிக்கிணறு, நாழிச்செம்பு, நாழிமணி, நாழியோடு, நாழிவழி என்பன தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள். நாழிகை-நாடிகா நாழி-நாழிகை = 1. உட்டுளைப் பொருள். 2 . நாழிகை வட்டில். 3. நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுதும் ஒரு முறை விழும் நேரம் = 24 நிமையம் (நிமிஷம்). 4. அறை. உண்ணாழிகை = உள்ளறை (கர்ப்பக்கிருகம்). உண்ணாழிகையா ருமையாளோடு (தேவா. 592: 3). உண்ணாழிகை வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழு (I.M.P.Cg.205). திருவுண்ணாழி-திருவுண்ணாழிகை (கர்ப்பக்கிருகம்). திருவுண்ணாழிகை யுடையார் வசமே நாள்தோறும் அளக்கக் கடவோம் (S. I. I.I, 143). ம. நாழிக, க. நாழிகே. நாழிகைக் கணக்கன் (சிலப். 5: 46, உரை), நாழிகைக்கல் (Mile-stone), நாழிகைத் தூம்பு (நீர்வீசுங் கருவி வகை, பெருங். உஞ்சைக். 38: 106), நாழிகைப் பறை (சிலப். 3: 27, உரை), நாழிகை வட்டம் (கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் முறை), நாழிகை வட்டில் (சிலப். 5: 49, உரை), நாழிகை வழி என்பன தொன்று தொட்ட பெருவழக்குச் சொற்கள். நிமை-நிமி இமை = இமைத்தல், கண்ணிமை. ம. ïk, f., து. இமெ. இமை-நிமை = இமைத்தல், கண்ணிமை. க. எவே. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (பழமொழி). வடவர் நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி) பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன் உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக் கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர் (விஷ்ணு புராணம், 4: 5). நிலையம்-நிலய நில்-நிலை-நிலையம் = 1. நிற்குமிடம், தங்குமிடம், இருப்பிடம். நியாயமத் தனைக்குமோர் நிலைய மாயினான் (கம்பரா. கிளை. 55) 2.கோயில். நல்லூரகத்தே திண்ணிலையங் கொண்டு நின்றான் (தேவா. 414: 5 ), (திவா.) அம் ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு. நிலை = நிற்கும் சிற்றிடம் (stand). எ-டு: கதவுநிலை, தேர்நிலை. நிலையம்-நிற்கும் பேரிடம் (station). எ-டு: புகைவண்டி நிலையம். வடவர் நி + லய என்று பகுத்து, ஒன்று இன்னொன்றோடு ஒன்றிவிடும் இடம் என மூலப் பொருள் கூறுவர். நி = கீழ். லீ = ஒட்டு. லீ-லய = ஒட்டுகை. நிலீ = கீழ்த் தங்கு, படிந்திரு. நிலைத்திரு. நிலய = தங்கிடம், இருக்கை, குடியிருப்பு, குகை, கூடு. தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டி, அதை வடவர் செயற்கை முறையிற் சிதைப்பதற்கு இஃதோர் எடுத்துக் காட்டாம். தம் கொள்கையை நிறுவவே, நிலையம் என்னும் சொல் வருமிடமெல்லாம் நிலயம் என்றே எழுதுவர், அல்லது பதிப்பிப்பர். நீரம்-நீர நீள் - நீர் = நீளும் பொருள். நீர் x நிலம். நில்-நிலம் = நிற்கும் பொருள். நீர் - நீரம் - ஈரம். நீர் - ஈர். ஈர்மை = தண்மை. எ-டு: ஈர்ங்கதிர், ஈர்ங் கை. நீலம்-நீல நீர்-நீல் = நீலம். நீர்நிலைகட்குள் கடலே பெரிதாகவும் ஏனையவற்றிற் கெல்லாம் மூலமாகவு மிருப்பதால், நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே குறிக்கும். நீரொலித் தன்ன நிலவுவேற் றானை (மதுரைக். 369) கடல்நிறம் நீலமா யிருப்பதால், நீர் என்னும் சொல்லினின்று நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன. கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் (சிலப். 10: 116) கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே (சிலப் . 17: 126) நீலித ழுண்கண்ணாய் (கலித். 33: 28) நீனிற மஞ்ஞையும் (சிலப். 12: 34) நீல்-நீலம் = நீலநிறம், நீலச்சாயம், நீலமணி, கருப்பு, கருங் குவளை, நீலமலை. நீலன் = காரி (சனி). நீலி = காளி, அவுரி. நீலக்கடம்பை, நீலக்காலி, நீலச்சம்பா, நீலச்சுறா, நீலநாரை, நீலமுள்ளி முதலிய எத்துணையோ நீலப்பொருட் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. நுகம் - யுக (g) - இ.வே. உத்தல் - பொருந்துதல். உத்தி = 1. விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய் இணைதல். உத்திகட்டுதல் என்பது வழக்கு. தெ. உத்தி (dd). 2. நூலுரைகட்குப் பொருந்தும் நெறிமுறை. ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூல்என மொழிப நுணங்குமொழிப் புலவர். (தொல். 1598) தொல்காப்பியம் கி.மு.7ஆம் நூற்றாண்டினதான வழிநூலே யாயினும், ஏனை மொழியிலக்கண நூல்கட்கெல்லாம் மிக முந்தியதாம். உ - உக - உகம் = இணை, நுகம். உகம் - நுகம் = ஏரிலும் வண்டியிலும் காளைகளைப் பூட்டும் மரம். எருதே யிளைய நுகமுண ராவே (புறம்.102) ம. நுகம், க. நொக (g). நுகக்கோல் என்பது இன்று பாண்டிநாட்டில் முகக்கோல் என்று திரிந்து வழங்குகின்றது. nkh¡fhš v‹gJ mj‹ bfh¢ir tot«.* உயிர்முதற் சொற்கள் நகரமெய்ம் முதலாவது இயல்பே. எ-டு : இமை-நிமை, உந்து-நுந்து, ஊன்-நூன்-நீன். ஊக்கு-நூக்கு. உ-யு2 (இ. வே.) உக. உகு - யுஜ் (இ. வே). ஒ. நோ: பகு - பஜ் (bh), புகு - புஜ் (bh). உத்தி-யுக்தி உகம் - யுக (g) நுந்து - நுத் (d) - இ. வே. உந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல். உந்து - நுந்து. நுந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல், தூண்டுதல். நேயம்-ஸ்நேக நெள் - நெய் - நே = 1. அன்பு. 2.ஈu«. நேஎ நெஞ்சின்' (புறம். 3). நே - நேயம் = 1. நெய், 2. எண்ணெய். 3. அன்பு. நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ. 39) 4. கடவுட்பற்று. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி" (திருவாச. 1 : 13). நேயம்-நேசம்-நேசன். வடவர் காட்டும் ஸ்நிஹ் (ஒட்டு) என்னும் மூலம், நெய் என்னும் தென்சொற்றிரிபே. பக்கம் - பக்ஷ (இ. வே.) பங்கு - பங்க (bhanga) பகவன் - பகவன் (bhagavan). பாகம் - பாக (bhaga) நுகத்தடி - மோத்தடி என்றும், நுகழ்ழி - மோக்கழி என்றும் சேரணாட்டில் திரிந்து வழங்குகிறது. - பதிப்பாசிரியர் பகு - பஜ் (bh) - இ. வே. பகு - பக்கு = பிளவு, பை. பக்கு - பக்கம் = பகுதி, புறம், ஏட்டுப் புறம். பக்கம் - பக்கல். பக்கு - பாக்கு = பகுதி. பாக்கு - பாக்கம் = பட்டினப் பகுதி. பாக்கு - பாக்கை = பாக்கம், ஊர், நகரப் பகுதி. பகு - பகல் = நாட்பகுதி, நடுப்பகுதி. பகல் - பால் = வகுப்பு, பிரிவு, பகல் - பகர் = ஒளி. பகு - பகவு = பிளவு, பகிர்வு. பகவு - பகவன் = பகிர்ந்தளிப்பவன், படியளப்பவன், ஆண்டவன். பகு - பகிர். பகு - பகுப்பு. பகு - பகுதி - பாதி. பகு - பகை. பகுதி - பஃதி. பகு - பங்கு - பங்கி = பங்குள்ளது. பங்கு - பாங்கு = பான்மை. பாங்கு - பாங்கர் = பக்கம். பாங்கு - பாங்கன் = பக்கத்திலிருப்பவன், தோழன். பகு - பா. பகு - பாகு = பகுதி, பக்கம், பாகன், பாகு - பாகன் = யானைப் பக்கத்திலிருந்து அதை நடத்துபவன். பாகு - பாகம். பாகு - பாகி = பாகமுள்ளது. பாகு - பாகை = பகுதி, வரைப்பகுதி பாகு - பாகர் = தேர்ப் பக்கச்சுவர். பா - பாது = பொருட் பங்கு. பாதீடு = பங்கீடு. பா - பாத்தி = பகுதி, பயிரிடும் செய்ப்பகுதி. பாத்தி - பத்தி = பாத்தி, பகுதி, கட்டுரை கடிதம் முதலியவற்றின் தனிப்பகுதி (para). பத்தி - பந்தி = கூடியிருந்துண்பார் பகுதி, உண்பார் வரிசை. பகு - வகு - வக்கு = வழிவகை. வக்கு - வாக்கு = பக்கம், திசை. காற்று வாக்கு = காற்றுப் பக்கம் அல்லது திசை. வகு - வகிர். வகிர்தல் = பிளத்தல். வகிர் - வகிடு = தலைமயிர் உச்சி வகிர்வு. வகு - வகுதி = வகுப்பு. வகு - வகுப்பு. வகு - வகுந்து = வகுத்த வழி. வகு - வகை = வேறுபட்ட வகுப்பு, வழிவகை. வகு - வாகு = பக்கம், திசை. பஞ்சி-பஞ்சி பைம்மை = பசுமை, இளமை, மென்மை, நொய்ம்மை. பை - (பைந்து) - (பைஞ்சு) - பஞ்சு - பஞ்சி. ஒ. நோ: ஐ - ஐந்து - (ஐஞ்சு) - அஞ்சு. நை - நைந்து - நைஞ்சு - நஞ்சு = நைந்து. பட்டணம்-பட்டண பட்டம் = பட்டையான துணி, பாய். பட்டம் - படம் = துணி, சீலை, சித்திரச்சீலை, திரைச்சீலை. படம்-படகு = பாய்கட்டிய தோணி. பட்டம் = படகுவகை (பிங்.). பட்டி = தெப்பம். பட்டி - பட்டிகை = தெப்பம், தோணி. பட்டம் - பட்டணம் = படகுள்ள நெய்தல்நிலத்தூர். பட்டணம் - பட்டனம் - பட்டினம் = நெய்தல்நிலத்தூர், துறைநகர். "பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின்" (சிறுபாண். 153) இனி, பண்டம் - பட்டம் = பலபண்டம் (பிங்.) பலபல தீவிற் பண்டம் பகர்வபட் டணமென் றாமே". (சூடா. 5: 37) என்றுமாம். பட்டம்-பட்ட பட்டுதல் = தட்டுதல்,அடித்தல். பட்டு - பட்டம் = பட்டை, பட்டையான பொருள், துணி, பெருங்கொடி, காற்றாடி, தகடு, பெயரும் பதவியும் பொறித்து அரசன் நெற்றியிலணியும் தகடு, பதவிப்பெயர், சிறப்புப் பெயர்,பதவி. பெண்டிர் நுதலணி, ம. பட்டம். மேன்மேலும் தட்டுவதால் ஒரு பொருள் தட்டையாகும். பட்டுவதாற் பட்டையாகும் என்பதும் அதுவே. பட்டும் அறை பட்டறை. பட்டும் சாலை பட்டசாலை. பட்டும் அடை பட்டடை (anvil). பட்டி-பட்டி ம. g£o, த. பட்டி பட்டிகை-பட்டிகா பட்டுதல் = தட்டுதல். பட்டு - பட்டி = பட்டை, மூங்கிற் பிளாச்சு, அதனாலமைந்த தொழு, ஏட்டிலெழுதிய பெயர் வரிசை, நாய்க்கழுத்துவார். பட்டி - பட்டிகை = அரைக்கச்சை, மேகலை, துணி, புண்கட்டுஞ் சீலை, ஓக (யோக)ப்பட்டி, உண்ணாழிகையைச் சுற்றியமைக்கும் அணி வேலை, பட்டியற்கல், ஏடு, அரசப்பட்டையம். பட்டி - பட்டியல் = வரிச்சல், தூணின்கீழ் வைக்குங் கல், சரக்குப் பெயர் வரிசை. பட்டை = தட்டை, தட்டையான பொருள், மரப்பட்டை, மரவுரி, வாழைப்பட்டை, ஓலைப்பட்டை, மணிப்பட்டை, தோட்பட்டை, கழுத்துப்பட்டை, மினுகை (சரிகை)ப்பட்டை, பட்டைக்கோடு, பட்டையான திருநீற்றுப்பூச்சு, பட்டைத்தாறு, பட்டைத் தையல். தெ. பட்ட, பட்டெ, க. பட்டெ. பட்டை - பட்டையம் (பட்டயம்)=அரசன் கொடுக்கும் செப்பாவணம். படகம் - படஹ (t |) = பறை படகம் = அகமுழவுகளுள் ஒன்று (சிலப். 3: 27, உரை). படம் - பட (t |) பட்டு - பட்டம் = பட்டையான துணி. பட்டம் - படம் = துணி, துணியி லெழுதிய ஓவியம், சித்திரச்சீலை, திரைச்சீலை, யானை முகபடாம், போர்வை, சட்டை, உடல். படம் - பட்ட படம் = யானை முகபடாம். படம் - படாம். ஒ.நோ: கடம் - கடாம். வெங்கதக் களிற்றின் படத்தினால்" (கலிங். 89), (பிங்.). படம் - பட (phat@a), பணம் - பண (phan|a) பட்டம் - படம் = (பாம்பின் கழுத்து விரிவான) படம். படம் - பணம். நாக பணந்திகழ்" (தேவா. 84: 4). பைந்நாப் படவரவு'' (திருவாச. 34: 1) படலம் - படல (t |) படர்தல் = பரவுதல். படம் - படல் = ஓலை, தட்டை, மாறு முதலியவற்றாலாகிய கதவு போன்ற அடைப்பு, உழுதநிலத்திற் பரம்படிக்கும் பரந்த மாறு, கண்ணிற் படரும் புரை. படி - பட் (t|h) படுதல் = ஒலித்தல். படு - படி = ஒலியெழ வாயித்தல் (வாசித்தல்). ஒ.நோ: ஓதை - ஓசை. ஓதுதல் = படித்தல். படி - பாடம். படி - ப்ரதி பள் - படு. படுதல் = விழுதல். படு - படி. படிதல் = ஒன்றின்மேல் விழுதல், விழுந்து பதிதல், பதிந்து உருவம் அமைதல். நிலத்திற் பதிந்த பொருளின் வடிவம் நிலத்திலும், தாளிற் பதிந்த அச்சின் வடிவம் தாளிலும், அமைதல் காண்க. படி = 1. உருவம். "மயிலனார்க்குப் படிவைத்து" (சீவக. 1156). 2. உடம்பு. நினையார வன்மைப் படியே" (திவ். இயற். திருவிருத். 93) படிந்த உருவம் படிந்த பொருளை ஒத்திருத்தலால், படி என்னும் சொல் ஒப்புமைக் கருத்தை உணர்த்திற்று. அப்படி = அதுபோல். படியொருவ ரில்லாப் படியார் போலும்" (தேவா. 44: 7) படி = ஒத்த வடிவம் (true copy). "கிழித்த வோலை படியோலை" (பெரியபு. தடுத்தாட். 56) மூலமும் படியும் என்னும் வழக்கை நோக்குக. படி - படிவு - படிவம். படி - படிமை - படிமம். படி - வடி (கொச்சை). படிவு - வடிவு. படிவம் - வடிவம். படிமை - ப்ரதிமா படி - படிமை = 1. வடிவம். கட்டளைப் படிமையிற் படியாது" (சீவக. 2752). 2. பாவை. 3. வழிபடு தெய்வ வுருவம். 4. நோன்பு, தவம். பல்புகழ் நிறுத்த படிமை யோனே" (தொல். சிறப்புப்.). ப்ரதிமா-பதுமை-பொம்மை. பண்டாரம் - பாண்டார (bh) பண் - பண்டு - பண்டம் = பண்ணப்பட்ட பொருள். பண்டம் - பண்டாரம் = சரக்கறை, பொக்கசம் (treasure), பொக்கசச் சாலை (Treasury), களஞ்சியம், பொக்கசச்சாலையுள்ள கோயில் அல்லது அரண்மனை, பல்பொருட் சரக்கறைபோன்ற பெரும் பண்டிதன், பெரும்புலமையால் உலகப்பற்று விட்ட துறவி, போலித் துறவியான இரப்போன். பண்டார வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழுவார் (T.A. S. I. 293). பண்டாரம்-பிண்டார பண்டாரம் = போலித் துறவியான ஆண்டி, இரப்போன். வடவர் பிண்டம் (சோற்றுருண்டை) வாங்கிப் பிழைப்பவன் என்று மூலப்பொருள் கூறுவர். இதற்குப் பண்டாரம் என்னும் சொல்லைப் பிண்டார என்று திரித்துக்கொண்டதே காரணம். பண்டிதன் - பண்டித பண்டு - பண்டம் - பண்டிதன் = பல பொருள்களை அறிந்த புலவன். பண்டிதன் - பண்டிதம் = புலமை. பேரா. பரோ வேறு வகையில் இச் சொல்லைத் தென்சொல் லாகக் காட்டுவர். அவர் கூறுமாறு: “pand|ita-‘wise, learned'; properly ‘ripened, mature' cf. Te. pan|d|u ‘to ripen, mature, ripe', pan|d|a‘ wisdom', intelligence,' Pj. pan|d|-to mature, Go., Kol. pan|d|-‘to ripen'.-The Sanskrit Language, p. 384. வடவர், பண்டா (ஓதி, அறிவு, கல்வி) என்னும் சொல்லினின்று சிலரும், ஸ்பந்தித (துடிப்பு) என்னும் சொல்லினின்று சிலரும், ஆக இரு வேறு வகையில் பண்டிதன் என்னும் சொல்லைத் திரிப்பர். பண்டா என்னும் சொல்லும் பண்டம் என்பதின் திரிபே. துடிப்பை மனத்துடிப் பென்பர். பண்ணியம் - பண்ய பண் - பண்ணியம் = பண்ணப்பட்ட பல்வேறு பொருள். கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ'' (மணிமே.7 :124) வடவர் மெச்சத்தக்கது, வாங்கற்கும் விற்றற்கும் உரியது என்று செயற்கை முறையில் வெவ்வேறு மூலப்பொருள் கூறுவர். பதக்கம் - பதக பட - பத - பதக்கம் = பரந்த அணி. ஒ.நோ: படாகை - பதாகை. பதம் - பத (இ.வே) பதி - பதம் = நிலத்திற் பதியும் காலடி. பதம் - பாதம் -பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி. பாதை என்னும் சொல் வடமொழியில் இல்லை. ஆயின், தியூத்தானியத்தில் உண்டு. OE. paeth, E. path. பாதம் - பாத (இ.வே) பதவி - பதவீ பதி - பதம் = பதிந்திருக்கும் நிலை அல்லது நிலைமை, பதவி. பிரிவில் தொல்பதந் துறந்து" `(கம்பரா. திருவடி சூட்டு. 101) பதம் - பதவு - பதவி. பதிகம்-ப்ரதீக பல் - பது - பத்து. பது - பதிகம் = 1. ஒரு பொருள்பற்றி வரும் ஒரே வகைப் பத்துச் செய்யுள். 2. பத்து அல்லது பதினொரு குறிப்பைக் கூறும் சிறப்புப் பாயிரம். ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.'' (நன். 47) காலங் களனே காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே'' (நன். 48) தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றின் சிறப்புப்பாயிரம், பெரும்பாலும் இம் முறையைத் தழுவி அமைந்தவையே. மா. வி. அ. ப்ரதி - அக என்பதன் திரிபென்று ப்ரதீக என்னுஞ் சொல்லைக் காட்டி, நோக்கியது. நோக்கு, தோற்றம், முகம், முற்பகுதி, செய்யுளின் முற்பகுதி, முதற்சொல் என்று பல்வேறு மேற்கோள்களை இடர்ப்பட்டுப் பொருத்தி, வேறுபட்ட கருத்துகளைத் தொடர்புபடுத்தியிருப்பது, அதன் செயற்கைத் தன்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. பந்தி - பங்க்தி (இ. வே.) பக்கம், பாகம் என்னும் இரண்டும் பகு என்னும் ஒரே முதனிலையினின்று தோன்றியிருக்கவும், வடவர் அவற்றுள் முன்னதை ஆரிய இயல்பு வல்லொலிப் பகரத்திலும் (p), பின்னதைக் கனைப்பொலிப் பகரத்திலும் (bh), தொடங்கி யிருக்கின்றனர். அதற்கேற்ப, பக்கம் என்பதற்குப் பக்ஷ் என்பதையும், பகவன், பங்கு, பாகம் என்பவற்றிற்குப் பஜ் (bhaj) என்பதையும், மூலமாகக் கொண்டிருக்கின்றனர். இங்ஙனம் ஒரு மூலச் சொல்லையே வெவ்வேறு மூலத்தினவாகக் காட்டுவது வடவர் வழக்கம். பக்ஷ் என்பது பக்கு என்பதன் திரிபு. தாதுபாட என்னும் நூல் அதற்குப் பற்று, கொள், எடு என்றே பொருள் கூறும். ஆயின், வில்சன் அகரமுதலி பக்கம் (பக்ஷ) என்னும் சொற்கேற்பப் பக்கஞ் சார்தல் என்று பொருளுரைக்கும். பக்கம் என்னும் சொற்குத் தமிழிலும் பகுதி, கூறு, நூற்பகுதி, நூல், புறம் (side), ஏட்டுப் புறம் (page), அருகு, அண்மை, இடம், வீடு, நாடு, விலாப்புறம், சிறகு, இறகு, அம்பிறகு, கை, கையணி, நட்பு, அன்பு, சுற்றம், மரபு (வமிசம்), சேனைப்பகுதி, சேனை, பதினைந்து பிறை நாட்காலம், பிறைநாள், மேற்கோள் (proposition), துணி பொருட் கூற்று, தன்மை எனப் பலபொருள்களுண்டு. கை, சிறகு என்னும் சொற்கள் பக்கத்தைக் குறிப்பதுபோன்றே பக்கம் என்னும் சொல்லும் கையையும் சிறகையும் குறிக்கும். வடவர் சிறகு பொருளினின்று பறவைப் பொருளை விரித்திருக்கின்றனர் எனக் கருதலாம். பக்கம் - பக்ஷ - பக்ஷி = சிறகையுடையது. இனி, சதுரக்கள்ளியில் தங்கும் ஒருவகைப் பறவை பக்கி எனப்படுகின்றது. பக்கி யுவணங் கழுகு" (திருப்பு. 319) என அருணகிரி நாதரும் பாடியுள்ளார். பக (bhaga) என்னும் இருக்குவேதச் சொற்கு, “dispenser', gracious lord, patron (applied to gods, esp. to Savitri), RV." என்று மா.வி.அ. பொருள் வகுக்கின்றது. ஆகவே, பகவன் என்னும் சொற்கு, பகுத்தளிப்பவன், படியளப் பவன் என்பதே மூலப்பொருளாம். ஆண்டவன் படியளப்பான் என்று அடிக்கடி மக்கள் கூறுவதை நோக்குக. நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்'' (தனிப்பாடல்) பகவன் என்பது பல தெய்வங்கட்கும் பொதுப்பெயராய் வழங்கியதினாலேயே, முழுமுதல் தெய்வமாகிய கடவுளைக் குறிக்க `ஆதிபகவன்' என்று அடைகொடுத்துக் கூறினார் வள்ளுவர். ஆதிபவகன் = ஆதிப்பகவன். வலி இடைமிகாதே பல கூட்டுச் சொற்கள் அக்காலத்து வழங்கி வந்தன. எ - டு: மாரிகாலம், கார்காலம். பந்தி என்பது பத்தி என்பதன் மெலித்தல் திரிபே.ஆயின், வடவர் பஞ்சன் (c) என்பதனொடு தொடர்புபடுத்திப் பச் (c) என்பதை மூலமாகக் காட்டுவர். அதன் விளக்கம் வருமாறு: பச் அல்லது பஞ்ச் = விரி, கைவிரி. பஞ்ச் - பஞ்சன் = விரித்த கையிலுள்ள ஐந்து விரல், ஐந்து. பஞ்சன் - பங்க்தி = ஐம்பொருள் தொகுதி அல்லது வரிசை, தொகுதி, வரிசை, கூட்டம். வடவர் ஏமாற்றுக்கலையைக் காட்ட இஃதொன்றே அமையும். பப்படம் - பர்ப்பட (t |) அப்பளித்தல் = சமனாகத் தேய்த்தல். சுவரை அப்பளித்துப் பூசுகிறான் என்னும் வழக்கை நோக்குக. அப்பளி - அப்பளம் = சமனாகத் தேய்த்தமைக்கும் உழுத்தமா வட்டம். மேவுகபந் தீர்க்குங்காண் ஓதுமுழுந் தப்பளம்'' (பதார்த்த. 1426) தெ. அப்பளமு - அப்படமு, க. அப்பா - பப்பள, ம. பப்படம். பரம் - பர பரமன் - பரம புரம் = மேல், மேன்மாடம், உயர்ந்த கோபுரம், கோபுரமுள்ள நகர். புரை = உயர்வு. புரையுயர் வாகும் (தொல். 785). புரம் - பரம் = 1. மேல், மேலிடம். அகிற்புகை......gu§bfhL போகி" (இரகு. நகர. 4). 2. மேலுலகம்.இகபர மாகி யிருந்தவனே" (திருவாச.4:50) 3. மேலானது. விரதமே பரமாக" (திருவாச. 4: 50). 4. வீடு (மோட்சம்) (பிங்.). 5. மேலோன், கடவுள். காணலாம் பரமே (திருவாச. 5: 44) பரம் - பரமன் = fடவுள்.khel மாடும் பரமனார்" `(தேவா. 600:1) பரமன் - பிரஹ்மா (B) வடவர் பர என்னுஞ் சொற்கு உயர்ச்சிக் கருத்தோடு தொலைவு, அயன்மை, பிறிதாகை, பின்மை முதலிய கருத்து களையும் சேர்ப்பர். அதோடு பரம என்னும் வடிவைப் பர என்பதன் உச்சத்தரமாகக் கொள்வர். ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கையைப் படைத் தமைத்தபின், படைப்புத் தெய்வத்தைக் குறிக்கப் பரமன் என்னும் சொல்லினின்று பிரஹ்ம என்னும் வடிவைத் திரித்துக்கொண்டனர். பரிதி - பரிதி (dh) புரிதல் = வளைதல். புரி - பரி - பரிதி = 1. வட்ட வடிவு (திவா.). பரிதி ஞாலத்து" (புறம்.174). 2. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றிய கோட்டை. வளைந்து கொள்ளும் பரிதியை" (இரகு. இந்து.7). 3. கதிரவன். பரிதியஞ் செல்வன்" (மணிமே. 4: 1). 4. தேருருளை. அத்தேர்ப் பரிதி" (களவழி. 4). 5. சக்கரப் படை. பரிதியிற் றோட்டிய வேலை (கல்லா. 82:23). 6. சக்கரவாகப் புள். பரிதியங் குடிங்கு கூடுமே" (இரகு. நாட்டுப். 40) பரிதி-பருதி. பல்லக்கு - பர்யங்க்க ம. பல்லக்கு, க. பல்லக்கி, பிரா. பல்லங்க்க. பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சக. 87). பரி - அஞ்ச் = சுற்றித் திரும்புவது, சுழல்வது என்று வடவர் மூலங்காட்டுவது பொருந்தாது. பல்லி - பல்லீ புல்லுதல் = பொருந்துதல், ஒட்டுதல். (புல்லி) - பல்லி = சுவரில் ஒட்டிக்கொண்டிருப்பது. பலகை = பலக (ph) பலகை = 1. பரந்திருக்கும் தட்டு. பொற்பலகை யேறி (திருவாச. 16: 1). 2. கேடகம். பலகை யல்லது களத்தொழி யாதே (புறம்.282). பலம் - பல பலம் = ஒரு நிறை (4 கஃசு). பலா-பல (ph) பல்-பரு. பல்-பலா = பெரும் பழம். சிறுகோட்டுப் பெரும் பழம் (குறுந். 18) என்றதை நோக்குக. பலாப்பழத் தீயி னொப்பாய் (திருவாச. 6: 16) பலா - பலவு. தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே (புறம். 109). பலாப்பழம் தமிழகக் குறிஞ்சிநிலத்திற்குச் சிறப்பா யுரியதை அறிந்திருந்தும், வடநாட்டுப் பிராமணர் மட்டுமன்றிச் சென்னைப் ப. க. க. த. அ. தொகுத்த தமிழ்நாட்டுப் பிராமணரும், பலா என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டி யிருப்பது வியக்கத்தக்க நெஞ்சழுத்தமே. பவளம் - ப்ரவால பவர் = கொடி. பவளம் = கொடிபோற் கடலுட் படர்வது. பவளத் தன்ன மேனி (குறுந். 1). ப்ரவால (வ.) = இளந்துளிர். இது மூலமெனல் பொருந்தாது. பழு = பல், பழம் - பல (ph) - இ.வே. பள் - பண்டு = பழம், பழமை. தெ. பண்டு = பழம். பள் - பழு - பழம் - பழன். பழம் - பயம். பழன் - பயன். வடவரும் பல என்னும் சொல்லைப் பயன் என்னும் பொருளில் ஆள்வர். பள்ளி - பல்லி பள் = பள்ளம், படுக்கை. பள் - படு. பள் - பள்ளி = 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி என்பன உலக வழக்கு. 2. படுக்கும் இடம் அல்லது அறை. 3. படுக்கும் அறையுள்ள வீடு. 4. கோயில். 5. அரண்மனை. 6. ஊர். 7. வேற்றூரார் படுக்கும் மடம். 8. மடத்தில் அல்லது கோயிலில் நடை பெறும் கல்விச்சாலை. 9. மதக் கல்வி பயிற்றப் பெறும் முனிவர் குடியிருப்பு. 10. சமண அல்லது புத்தப் பள்ளி. 11. இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். 101) வடவர் பல் (pall) = செல் என்று மூலங்காட்டுவது இம்மியும் பொருந்தாது. அவர் வயப்பட்ட மா. வி. அ.வும் “prob. to explain the following words” என்று கூறுதல் காண்க. பளிங்கு - ஸ்படிக (ph, t|) பள் - பள, பளபள - பளபளப்பு, பளிச்சு, பளீர் என்பன மின்னற் குறிப்புகள். பள் - பளிங்கு = 1. பளிங்குக்கல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள். 706) 2. கண்ணாடி. 3. கற்பூரம். பள - பளிதம் = கற்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணிமே. 28:243). பாண்டியன் - பாண்ட்ய பள் - பண்டு - பண்டி - பாண்டி = எருது, காளை (பரிபா. 20: 17, குறிப்பு). பாண்டி = பாண்டில் = எருது மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054) பாண்டி - பாண்டியன் = காளையன், வயவன் (வீரன்). பாண்டியர் குடி குமரிக்கண்டத்தில் கி. மு. 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றியது. பாதிரி-பாடலி (t |) கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (நாலடி. 139) பாதிரியாற் பெயர்பெற்றது திருப்பாதிரிப்புலியூர். அது வடமொழியிற் பாடலிபுர அல்லது பாடலிபுத்ர எனப்பட்டது. இப் பெயரே மகதநாட்டுத் தலைநகர்க்கு இடப்பெற்றது. அது இன்று பாட்னா என்று வழங்குகின்றது. தெ. பாதிரி, க. பாதிரி. பிங்கலை - பிங்கலா பிங்கலை = மூச்சுவிடும் முந்நாடிகளுள் வலத்ததாகச் சொல்லப் பெறுவது. பிசை - பிஷ் (இ.வே.) பிண்டம் - பிண்ட (இ.வே.) பொள் - பொழி. பொழிதல் = நிறைதல். பொழிமணித் தண்டூண் (பெருங். உஞ்சைக். 47: 110). பொழித்தல் = திரட்டுதல். பொழிப்புரை = திரட்டுரை. பொழி = கணு. பொழியமை மணித்தூண்(பெருங். உஞ்சைக். 48: 87). bghÊ - bghÊš = bgUik (ã§.), சோலை, நாடு, ஞாலம். பொள் - பிள் - பிண்டு - பிண்டி - பிண்டம். பிண்டு = பிண்டம். பிண்டாலம் வித்தின் (திருமந். 3025). பிண்டித்தல் =1. தொகுத்தல். 2. திரட்டுதல். பிண்டித்து வைத்த வுண்டியை (தொல். பொருள். 63, உரை). பிண்டி = 1. கூட்டம், 2. வடிவம் (சிலப். 3: 26, உரை). பிண்டம் = 1. சோற்றுத்திரள். பிண்ட மேய பெருங்சோற்று நிலையும் (தொல்.பொருள்.65) 2. உருண்டை (பிங்.). 3. தென்புலத்தார்க்கிடும் சோற் றுருண்டை 4. சதைத்திரள். உறுப்பில் பிண்டமும் (புறம். 28). 5. உடல். உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம். 18). 6. தொகுதி. பிரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறம். 184). 7. தொகுத்துக் கூறும் நூற்பா. பிண்டந் தொகைவகை (நன். 20). 8. பொழிப்புரை. 9. மூவதிகாரமும் திரண்ட முழு இயற்றமிழ் நூல். பிண்டி - பிடி. பிடித்தல் = 1. திரட்டுதல். ஒ.நோ : தண்டி - தடி. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது (பழமொழி). பொரிவிளங்காய் பிடித்தல், கொழுக்கட்டை பிடித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. 2. கை நிறையத் திரட்டியதுபோல் இறுகப் பற்றுதல், பற்றுதல், குறைத்தல், அகப்படுத்துதல், சேர்த்தல், தாங்குதல், விலைக்குக் .கொள்ளுதல். மேற்கொள்ளுதல், விருப்பமாதல். பிடி - பிடிப்பு, பிடிமானம், பிடித்தம். பிடி = கைப்பிடி, குடைக்காம்பு. பிடிகல், பிடிகாசு, பிடிகாரன், பிடித்தராவி, பிடித்தாட்டிக் கழி, பிடிகொடு, பிடித்தபிடி, பிடிசீலை, பிடிதண்டம், பிடிநெல், பிடிபடு, பிடியரிசி, பிடிமண், பிடியாள், பிடிவிடு முதலிய எத்துணையோ கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்டு வழங்கிவரும் உலகவழக்காம். பிடித்து = 1. கைப்பிடியளவு. பிடித்தெருவும் வேண்டாது (குறள். 1037). 2. தொடங்கி (வி. எ.). இவையெல்லாம் பிண்டி என்னும் சொல்லின் தொகுத்தல் வடிவான பிடி என்பதன் திரிபே. பிண்டோதகம், சபிண்டீகரணம் முதலிய வடமொழிக் கூட்டுச் சொற்களை நோக்கி மயங்கற்க. வடவர் காட்டும் பிண்ட் என்னும் மூலம் பிண்டி என்பதன் ஈறுகேடே. பிண்ணாக்கு - பிண்யாக பிள் + நாக்கு = ஆட்டிய எட்பிண்டத்தின் நாக்குப் போன்ற பிளவு. பித்தம் - பித்த பித்து - பித்தம். பிதற்று - பேத்து - பித்து = பிதற்றுநிலை, அந்நிலை நாடி, அறிவுமயக்கம், மயக்கிற்குக் காரணமான கைப்புநீர், அந் நீர் சுரக்கும் உறுப்பு. மா. வி. அ. “etym. unknown” என்று கூறுதல் காண்க. பித்த என்னுஞ் சொல்லினின்று பைத்ய என்னுஞ் சொல்லைத் திரித்துள்ளனர் வடவர். புகு - புஜ்8 (bh) - இ.வே. புகுதல் = உட்செல்லுதல், வாய்க்குட் செல்லுதல். புகு - புகா = வாய்க்குட் செல்லும் உணவு. ஒ. நோ: உள்-உண். புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழி (தொல். 1053). புகா - புகவு - உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறம். 395). புகா - புவா - புவ்வா (கொச்சை). புகு - புஜ். ஒ.நோ: பகு - பஜ். புஜ் என்னும் அடியினின்றே, புக்தி, போக்த்ரு, போக, போகி, போக்ய, போஜ, போஜன முதலிய சொற்கள் பிறந்துள்ளன. புட்டம் - ப்ருஷ்ட (t |) - இ.வே. புள்-புட்டி=உட்டுளையுள்ளது. ஒருவகைக் கலம், சிறுபடி, குடுவை, குப்பி. bj., க. புட்டி (dd). புட்டி-புட்டில் = அம்பறாத் தூணி. தெ. புட்டிக. புட்டி = குடுவைபோன்ற பறவையுடம்பின் பிற்பகுதி. புட்டி - பிட்டி. கொழுத்த கோழிப்புட்டியை நெய்க்குடம் என்று கூறும் வழக்கை நோக்குக. புட்டி - புட்டம் = குடுவைபோற் புடைத்த மாந்தன் உடம்பின் பின்பக்கம் ஒ.நோ: குண்டு - குண்டி. புட்டம் - பிட்டம். மா. வி. அ, ப்ர-ஸ்த (standing forth prominently) = எடுப்பாய் முன் நிற்பது என்பது மூலமாயிருக்கலாம் என்று கருதுகின்றது. புடம் - புட (t |) புள் - புழு. புழுத்தல் = புழுத்துளைத்தல். புழு - புழல் = உட்டுளை. புழு - புழை = துளை, குகை. புழை - புடை = குகை. புழு - (புழம்) - புடம் = பொன்னுருக்குங் குகை. ம. புடம். ஒ.நோ: குழை - குகை - குவை. குழை - குடை - குடைவு. புடம் - புடம்பு = குகை. மலைப்புடம்புந் தேடி யொளிவார் (பஞ்ச. திருமுக. 1895). புடலை - படோல (t |) புள் - புழு - புழல் - புடல் = உட்டுளையுள்ள காய். புடல் - புடலை. ஒ.நோ: குழல் - குடல். f.gly, k.gnlhy«, தெ. பொட்ல. புரசு - பலாச புரம் - புர (இ.வே.) புரம் = உயர்ச்சி, உயர்ந்த கட்டடம், மேன்மாடம், கோபுரம், கோபுர நகர் (பிங்.). மதுரை யந்தண் புரத்தின்கண் (திருவாலவா. 39: 1), கோபுரமுள்ள கோயில்; கோயில். மூவர்க் கோதிய புரமும் (கல்லா.24:23). புரி - ப்ரீ (இ.வே.) = விருப்பப்படுத்து, மகிழ்வி, விரும்பு. புரிதல் = விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல்.பொருள்.261). புரு - ப்ரூண (bh) - (இ.வே.) L. embryo. புரு = குழந்தை. புரு - பிரு - பிருக்கு = இளம்பிஞ்சு. ஒ.நோ: உரு - அரு - அரும்பு. குரு - கரு = சூல், பீள், முட்டைக்கரு, முட்டை, குழந்தை, குட்டி. நுரு = தளிர். நுரு - தொரு = இளம்பிஞ்சு. முரு - முருகு = இளமை. புருவம் - ப்ரு (bh) -(ï.nt.). புரிதல் = வளைதல். புரி - புரிவு - (புரிவம்) - புருவம். கொடும்புருவம் கோடா மறைப்பின் (குறள். 1086) சென்னைப் ப. க. க. த. அ. வடசொல்லை bhruva என்ற வடிவி லேயே குறிக்கின்றது. புரை - புர புரை = 1. துளை. 2. அறை. ஆக்குப்புரை=சமையற் பந்தல் மறைப்பு அல்லது கொட்டகை. 3. வீடு. புரைபுரை யாலிவை செய்யவல்ல (திவ். பெரியாழ். 2: 9: 1). 4. கோயில். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற். 15: 37). பூ - பூ (bh) - (இ.வே.) புல் - புள் - புழு - புகு. புகுதல் = தோன்றுதல். புகு - பூ. பூத்தல் = 1. தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா.கும்பகர். 315). 2. படைத்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரத கிருட்டிண. 12). 3. பெற்றெடுத்தல். ஒருதிருவைப் பூத்தனள் (பிரமோத். 8: 15). 4. இருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று (நீதி. 6). புகு - பொகு - பொகில் = அரும்பு. பொகில்பிடித் தலருஞ் சந்தப் பொதும்பர்(இரகு. குசனயோ. 63). பொகில் - போகில் = அரும்பு (பிங்.). பொகு - போ -போத்து = வளார், சிறு புதுக்கிளை. போத்து வெடித்தல் என்பது மரபு. மலரைக் குறிக்கும் பூ என்னும் சொல் வேறு. அது பொல் என்னும் அடியினின்று பிறந்தது. பொல் - பொலி - பொலிவு. பொல் - பூல் - பூ. பூல் என்னும் வடிவம் இன்று இந்தியில் வழங்குகின்றது. பூசு - பூஜ், பூசை - பூஜா பூசுதல் = கழுவுதல், நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான்மணி. 35) முகம்பூசுதல் என்பது தென்பாண்டி வழக்கு. பூசு - பூசை = தெய்வப் படிமையை நீராட்டிச் செய்யும் வழிபாடு. பூசு - பூசனை. சிறப்பொடு பூசனை செல்லாது (குறள். 18). பூசை - பூசையாரி - பூசாரி. தலையாரி என்னுஞ் சொல்லிற் போல் ஆரி என்பது ஓர் ஈறு. ஆரியர்க்கு வேதகாலத்தில் வேள்வி வணக்கமே யன்றி உருவ வழிபாடிருந்ததில்லை யென அறிக. பூதம்1 - பூத (bh) - (இ.வே.) பூத்தல் = தோன்றுதல். பூ - பூது - பூதம் = தோன்றியது, ஐம்பூதங்களுள் ஒன்று. வளியென வரூஉம் பூதக் கிளவியும் (தொல். 242) பூதம்2 - பூத (bh) ஊதாங்குழலால் நெருப்பூதுவதைப் பூத்துப் பூத்தென ஊதுகிறான் என்பது வழக்கு. காற்றூதுவதால் துருத்தியும் ஊத்தாம்பையும் புடைக்கும். ஊதுதல் = வீங்குதல், பருத்தல். ஊது - பூது - பூதல் - பூதலி. பூதலித்தல் = பருத்தல், தடித்தல். பூது - பூதம் = பருத்தது, பருத்த பேய். பூதக்கால் = யானைக்கால். பூதக்கண்ணாடி = பெருக்கிக் காட்டும் கண்ணாடி. இனி, பொத்து - பொது - புது - பூது - பூதம் என்றுமாம். புதா = பெருநாரை. பொத்து - பொத்தை = பருமிளகாய். புதல் - புதர் = அடர் செடி. புதை = அடர்காடு, அம்புக்கட்டு. புதை - பூதை = அம்புக் கட்டு. பூதி = பொது. பொது - பொதும்பு - பொதும்பர். மா. வி. அ. வும் செ. ப. க. க. த. அ. வும் இருவேறு பூதச் சொல் லையும் ஒன்றாகக் கூறியிருப்பது தவறாம். பூதி - பூதி (bh) புழுதி - பூதி = 1. புழுதி (சூடா.). 2. சாம்பல். 3. திருநீறு (பிங்.). பூதியணி பொன்னிறத்தர் (தேவா. 592: 2). ஒ. நோ: கொழுது - கோது, பொழுது - போது. பெட்டகம் - பேட்டக பிள்ளுதல் = பிளத்தல், விரிதல், அகலுதல். பிள் - பிழா = 1. வாயகன்ற ஓலைக்குட்டான் (நெல்லை வழக்கு). மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி (பெரும்பாண். 276). 2. இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10: 111). பிழா - பிட (t |) பிழா - பிழவு - பிடவு - பிடகு - பிடக்கு = பூத்தட்டுப் போன்ற புத்த மறைநூல். பிடக்கே யுரைசெய்வார் (தேவா. 245 : 10). பிடகு - பிடகம் = 1. தட்டுக்கூடை. 2. புத்தமறை (திரிபிடகம்). பெரியோன் பிடக நெறி (மணிமே. 26: 66) பிடகம் - பிடக (t |) பிடகு - பிடகை = பூத்தட்டு. பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் (மதுரைக். 397). பிடகை - பிடகா (t |) பிள் - பெள் - பெட்டி = 1. வாயகன்ற வட்டமான நார்ப் பின்னற் கலம். 2. வாயகன்ற சதுர அல்லது நீள்சதுர மரக்கலம். பெட்டி - பேட்டீ வடமொழியில் எகரமின்மையாற் பெட்டி பேட்டி என்றாயிற்று. பெட்டி - பெட்டகம் = 1. பெட்டி. ஆங்கி லங்கு மளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27 : 22). 2. கட்டுப்பெட்டி. பெட்டகம்-பேட்டக பெள் - பேழ் = அகன்ற. பேழ்வாய் = அகன்ற வாய். பேழ்வாய்......... பேய்மகள் (திருமுருகு. 47). பேழ் - பேழை = 1. பெட்டி. அருங்கலப் பேழை (சீவக. 557). 2. கூடை. 3. மரக்கலம் (arc). பேழை - பேட (t |) பெரு(கு) - ப்ருஹ் (b) - (இ.வே.). பல் - பரு - பெரு - பெருகு. பெருங்கதை - ப்ருஹத் கதா. பெருவுடையார் = ப்ருஹத் ஈஸ்வர பே - பீ (bh) பேபே என்பது அச்சக் குறிப்பு. பே = அச்சம். பேஎமுதிர் கடவுள் (குறுந். 87). பே - பேம் = அச்சம். பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (தொல். 848) பே - பேய் = அச்சம், அஞ்சப்படும் ஆவி. பே - பீ - பய = அச்சம். பேம் - பேன (ph) பே = நுரை (பிங்.). பே - பேம் = நுரை. பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை.கள.7, உரை). அச்சத்தினாற் பேய்கோட்பட்டவன் வாயில் நுரை தள்ளுவது இயல்பாதலால், அச்சக் கருத்தினின்று நுரைதள்ளற் கருத்துத் தோன்றியிருக்கலாம். பேம் = அச்சம். OHG. feim, OE. fa$m, E. foam. பேசு - பாஷ் (bh) பே - பேசு. பேசுதல் = உதடசைத்துச் சொல்லுதல், மொழிதல், உரையாடுதல். பகரம் இதழ்ப் பிறப்பினது. பேசு-பேச்சு = சொல், உரை, சொற்பொழிவு, மொழி. பேழை - ngl(t@) பொத்தகம் - புஸ்தக புல்லுதல் = பொருந்துதல். புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொட்டு. பொத்துதல் = பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல். பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக் கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி. சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சும்மை = தொகுதி. சும் - சுவ் - (சுவள்) - (சுவண்) - சிவண். சிவணுதல் = பொருந்துதல், ஒத்தல். சுவண் - சுவடு = பாதம். நிலத்திற் பொருந்திய தடம். சுவடு - சோடு = இணை, இரட்டை, இணையுள் ஒன்று, ஒப்பு, செருப்பிரட்டை. சுவடு - சுவடி = இணை, கற்றை, கட்டு, பொத்தகம். கணவனும் மனைவியும் சுவடியாய்ப் போகிறார்கள் என்னும் வழக்கை நோக்குக. சுவடி - சோடி = இணை. சுவடித்தல் = பொருத்தி அழகுபடுத்துதல். சுவடி - சோடி -சோடணை = அழகுபடுத்தல் (அலங்கரிப்பு). பொட்டு = மண்டையோட்டுப் பொருத்து. பொட்டுதல் = பொருத்துதல், கட்டுதல். பொட்டு - பொட்டணம். பொத்தகம் = 1 .நூற் புத்தகம் . நிரைநூற் பொத்தகம் நெடுமணை யேற்றி (பெருங். உஞ்சைக். 34:26) 2. கணக்குப் புத்தகம். பொத்தகப்படி குழி (S.I.I.III, 80). பொத்தகம் - புத்தகம். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி. 318). வடவர் காட்டும் மூலம் புஸ்த் என்பது. அதற்கு மா. வி. அ. "kâ mšyJ mtkâ (?)" என்றும், தாது பாடம் (Dha$tupa$t@ha) கட்டு என்றும், பொருள் கூறியுள்ளன. பிந்திய பொருளில் அது பொத்து என்பதன் திரிபே. ஆரியர்க்கு முதல்நூல் வேதம் என்றும், அது நீண்டநாள் எழுதப்படாதிருந்து எழுதாக் கிளவி என்றும், கேள்வி என்றும் பெயர் பெற்றதென்றும் அறிக. பொறு - ப்ரு (bh) - (இ.வே.) பொல் - பொரு - பொறு. பொறுத்தல் = சுமத்தல், தாங்குதல், தாளுதல். மன்னித்தல். ஏற்றுக்கொள்ளுதல், அமைதியாய் நுகர்தல். காத்திருத்தல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (குறள்.37) இதில் பொறுத்தல் சுமத்தலைக் குறித்தல் காண்க. மகள்-மஹிலா மழ - மழவு - மகவு. மழ - மக - மகன், மகள். மகள் = 1. புதல்வி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித்.56). 2. பெண். "ஆயமக ணீயாயின்" (கலித். 107:19), 3. மனைவி. ``மனக்கினி யாற்கு நீமக ளாயதூஉம் (மணிமே.21:30). வடவர் காட்டும் மஹ் என்னும் மூலம் மகிழ், மகிழ்வி என்று பொருள்படும். மகுடம் - மகுட (t |) முகுட (t |) முகம் - முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி. முகடு = 1. உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண்.246) 2. வீட்டின் உச்சி. 3. வானமுகடு. "வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. .மருத்து. 30). 4. தலை. "முகடூர் மயிர்கடிந்த செய்கை யாரும்" (தேவா. 936 : 10). 5. உயர்வு. "முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609). முகடு - (முகடம்) - மகுடம் = உச்சி மயிர்முடி, மணிமுடி, தேர்முடி, ஒருபொருட் பலபாட்டுப் பொது முடிவு. இனி, முகிழ் - முகிழம் - முகுளம் - முகுடம் - மகுடம் = மொட்டுப்போற் கூம்பிய மணிமுடி என்றுமாம். மாமொட்டொடிந்து.........kh‹nw® சிதைய (பாரத. நான்கா. நாள். 24). பேரா. பரோ. இச் சொல்லைத் தென்சொல்லென்றே கூறுதல் காண்க. (The Sanskrit Language, p. 381). முகுடம் பிறை வடிவினதென்றும், கிரீடம் குவிந்ததென்றும், மௌலி மும்முனையதென்றும் மா. வி. அ. கூறும். மங்கலம்-மங்கல மங்கு - மங்கள் - மஞ்சல் - மங்கலான நிறம். அந்நிறக் கிழங்கு (மஞ்சள்). மஞ்சல் - மஞ்சள். ஒ.நோ : பொங்கு - பொஞ்சு, இங்கே - இஞ்சே (கொச்சை). மங்கல் - மங்கலம் = 1. மஞ்சளால் அல்லது மஞ்சள் நீரால் குறிக்கப்பெறும் நன்னிலைமை. மங்கல மகளிரொடு மாலை சூட்டி (புறம்.332). 2. திருமணம்.k§fy வாழ்த்துப் பாடல் (சிலப்.). 3. திருமணத்தாலி. "மற்றைநல் லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ" (கம்பரா. உருக்காட்டு. 35) 4. மங்கல நிகழ்ச்சி. "சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்" (தொல். 1037). 5. மங்கலச் சின்னம். எண்மங்கலமும் மங்கலம் பதினாறும். 6. மங்கல வழக்கு (நன். 267). 7. நன்மை. மங்கல மென்ப மனைமாட்சி (குறள். 60). மங்கலம் - மங்களம். வடவர் காட்டும் மூலம் மங்க் = செல், இயங்கு. மசி - மஷி மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல், கடைந்து களி அல்லது கூழாக்குதல். மத்தி-மதி. மதித்தல்=மத்தினாற் கடைவதுபோற் கைவிரலாற் குழைத்தல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக. மதி - மசி.மசித்தல் = குழைத்தல். மசிதல் = குழைதல். மசி - மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து மசித்த (குழைத்த) வண்டி மை. எழுது மையும் இங்ஙனமே வேறு பொருளை மசித்து அமைக்கப் பெறும். மசித்துமையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத்.2) மசி = எழுது மை. ``மசிகலந் தெழுதப்பட்ட (சூளா. தூது. 83) மசிக்கூடு, மசிக்குப்பி என்பன உலக வழக்கு. மசி - மயி - மை கருநிறத்தைக் குறிக்கும் மை என்னும் சொல் வேறு. மால்-மா-மை. வடவர் காட்டும் மூலம் மஷ் = சிதை, சேதப்படுத்து. மா. வி.அ. இச் சொல்லின் கீழ், “(prob. invented to serve as the source of the words below)” என்று குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. மஷி என்பது, மேலையாரிய வழியாய் வடமொழி பெற்ற தென்சொல் திரிபுகளுள் ஒன்றாகும். OE. masc. E. mash. mess, Dan. mask, Sw. maska, Sc. mask, MLG. mesch. MHG. meisch, G. maisch,. மசிர் - ச்மச்ரு (இ.வே.) மை = கருநிறம். மை - மயிர் = கரிய முடி. ஒ.நோ : ஐ - அயிர், தை - தயிர், பை - பயிர், வை - வயிர். மா. வி. அ. ”(of unknown derivation, but cf. sman)”. “sman, n. the body, Nir.; the mouth, L.(both meanings prob. invented to explain smasana and smasru)” என்று குறித்திருத்தல் காண்க. மண்டலம் - மண்டல முல் - முன் - முனி = வில். முல் - வில். ஒ.நோ : முழுங்கு - விழுங்கு. முல் - முர் - முரி. முரிதல் = வளைதல். முரி - மூரி = வளைவு. முர் - முரு - முருகு = பிறைபோல் வளைந்த காதணி. முரு - முறு = முறுகு. முறுகுதல் = வளைதல், திருகுதல். முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு - முறுக்கம். முறு - முற்று - முற்றுகை = சூழ்கை. முறு - முறை = வளைவு, தடவை (turn). முறை - மிறை = வளைவு. முறு - முறி. முறிதல் = வளைதல். முறி - மறி. மறிதல் = மடங்குதல். முல்(முள்) - முண்டு = உருட்சி, திரட்சி. முண்டு - முண்டை = உருண்டை, முட்டை. முண்டை விளைபழம் (பதிற். 60: 6). முள் - முட்டு - முட்டை. முட்டு - முட்டான் = திருநீற் றுருண்டை. முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள்வளைதல். முணம்-முடம் = வளைவு, கால் வளைவு. முடம்-முடவு-முடவன். முடம்-முடங்கு, முடங்குதல் = வளைதல். முடங்கு-மடங்கு. முடக்கு-மடக்கு. முடக்கம்-மடக்கம். முடம்-முடந்தை = வளைந்தது. முடம்-(முடல்)-முடலை = குறடு, உருண்டை . முடி-முடிச்சு = வளைத்துக் கட்டியது, மரத் திருகல். முண்டும் முடிச்சும் என்னும் வழக்கை நோக்குக. முண்டு-மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு-மண்டி. மண்டி யிடல் = முழங்காலை மடக்குதல். மண்டு-மண்டலம் = வட்டம், நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற்பகுதி, வட்டவடிவம், வட்டமாய்ச் சுற்றிவருகை, வட்டமான பொருள். கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்பன தொன்றுதொட்ட வழக்கு. மண்டலம்-மண்டலி. மண்டலித்தல் = வட்டமாதல், வட்டமாகச் சுற்றிவருதல், ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) ஈறும் முதலும் ஒன்றித்து வருதல். மண்டலி = வட்டமான பொறிகளுள்ள பாம்பு. மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டமான இடம். பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறம். 30). 3. வட்டமான கதிரவன். பகல்செய் மண்டிலம் (பெரும்பாண். 442). 4. வட்டமான திங்கள். செய்வுறு மண்டிலம்" (கலித்.7). 5. வட்டமான கண்ணாடி. ``மையறு மண்டிலம் (மணிமே. 25 :137). 6. t£lkhd Phy«.``flšNœ மண்டிலம் (குறுந்.300). 7. ஞாலப்பகுதியான நாடு, நாட்டுப்பகுதி. மண்டிலத் தருமையும் (தொல். பொருள். 41). 8. கூத்தின் மண்டில நிலை. 9. வட்டமாயோடுகை. செலவொடு மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14) 10. வட்டமாயோடுங் குதிரை (பிங்.). ``மண்டிலங் கொட்பு (இன்னா. 35). 11. அளவடி. ``மண்டில யாப்பும் (தொல். 1372). 12. செய்யுளின் எல்லாவடியும் அளவொத்து வருதல். எ-டு : நிலைமண்டில வாசிரியம், மண்டிலம் (விருத்தம்). மண்-மணி = நாழிகைவட்டில், மணியடிக்கும் வட்டமான வெண்கலத்தட்டு, மணியென்னுங் கால அளவு, உருண்டை, உருண்டையான விதை. இச் சொற்கு வடமொழியில் இத்தகைய வரலாறுமில்லை; மூலமுமில்லை. மணி-மணி (இ.வே.). மண்ணுதல் = கழுவுதல்; மண்-மண்ணி-மணி = கழுவப்பெற்ற ஒளிக் கல். ``மண்ணி யறிப மணிநலம் (நான்மணி. 5). வடமொழியில் இச் சொல் அகரமுதலிகளில் மட்டும் உளதென்று மா. வி . அ. குறித்திருத்தல் காண்க. மத்தளம்-மர்தல மொத்துதல் = வீங்குதல், பருத்தல். மொத்தம் = பருமன், முழுமை, பொது, கூட்டுத்தொகை. மொத்து = உடல்தடிப்பு, மதித்தடிப்பு, மடமை. மொத்தி = புடைப்பு. மொத்தை = பருமன், உருண்டை, மடப்பெண். மோத்தை = செம்மறியாட்டுக்கடா. மொத்தளம் = மொத்தம், கூட்டம். மொத்தளம்-மத்தளம் = பருமேளம். ஒ. நோ: மொத்து-மத்து, மொத்திகை-மத்திகை, மொண்டை- மண்டை. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை (திருப்பு.) மத்தளம்-மத்தளி-மத்தளிகன் = மத்தளம் இயக்குவோன். மத்தளிகன்-மர்தலிக மர்தலிக என்னும் வடிவம் மா. வி. அ. வில் இல்லை. சென்னைப் ப. க. க. த. அ. வில் மட்டும் உளது. மத்தம்-மந்த்த மொதுமொதெனல் = மக்கள் திரளுதற்குறிப்பு. மொது-மொத்து. மொத்துதல் = வீங்குதல், பருத்தல். மொத்து = பருத்தது. மொத்து-மத்து = அடியில் திரண்ட கடைகருவி. ``ஆயர் மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). ``பருமத்தி னாலடித்த (காளமேகம்). மத்து-மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மத்து - மத்தம் = தயிர்கடைகருவி. ``ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல்"(கலித். 119). மத்தி-மத், மந்த் மதங்கம்-ம்ருதங்க மதங்கம் என்பது மத்தளத்தின் சிறுமை. இடக்கண்ணையும் வலக்கண்ணையும் தொடர்ந்து தட்டுவதால் ஏற்படும் ஒலியினின்று இப் பெயர் பெற்றது. மதங்கமொடுதுந்துபி...KH§fnt” (திருவாத. பு. கடவுள். 1) ம்ருதங்க என்னும் சொல் பின்வருமாறு இருவகையுள் ஒன்றில் தோன்றியிருக்கலாமென்று மா. வி. அ. கூறும். (1) ம்ருதம்+க = அடிக்கும்போது செல்வது (going about while being beaten) இப் பொருளில் க (ga) என்பது கம் (gam) என்பதன் fடைக்குறை.(2) மர்தல-ம்ருதங்க. ஆரியர் வருமுன்பே தமிழ் முத்தமிழாய் வழங்கிற்றென்பதும் மதங்கம் ஆட்டிற்கும் பாட்டிற்கும் உரிய இசைத்தமிழ்க் கருவியென் பதும் அறிக. மதம் - மத (t) (இ.வே.) முத்துதல் = 1. பொருந்துதல், சேர்தல். திருமுத்து ஆரம் = திருமகள் சேருமாரம். கழைபோய் விண்முத்தும் என்றாற் போல (சீவக. 504, உரை). 2. முகத்தொடு அல்லது வேறுறுப்பொடு முகம்பொருந்துதுல். முத்து - முட்டு. முட்டுதல் = 1. பொருந்துதல். முட்டு = பொருத்து. 2. முடிதல். முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்(தொல். பொருள்.435) முட்டுமிடம் ஒரு பொருளின் முடிவாகவே யிருக்கும். முட்டு-மட்டு = அளவு. முட்டம்-மட்டம். முத்து-மத்து-மத்தி-மதி. மதித்தல் =அளவிடுதல், உயர்வாய் அளவிடுதல், உயர்வாய்க் கருதுதல், மனத்தால் அளவிடுதல். மதிப்பு =அளவீடு, உயர்வாய்க் கருதுகை, தோராய அளவு. மதி - மதம் = மனஅளவீடு, ஒரு பொருளைப்பற்றிய கருத்து, கொள்கை, கடவுட்கொள்கை, மறுமைக்கொள்கை. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே'' (நன்.11) என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவால் , மதம் என்னும் சொல்லின் உண்மைப்பொருள் கண்டு தெளிக. மதி-மதி மதி = 1. அளவு, அளவீடு. 2. அளந்தறியும் அறிவுக் கரணம். மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு (குறள். 636) 3. gF¤j¿î.``kâÆÈ மடநெஞ்சே (திருவாச. 5: 33). 4. அறிவு. ``மதிமை சாலா மருட்கை நான்கே (தொல்.பொருள்.255) வடவர் மன் (கருது) என்னும் சொல்லினின்று மதம், மதி என்னும் சொற்களைத் திரிப்பர். மன் என்பது வேறுவழிச் சொல்லாயிருப்பதோடு தூய தமிழ்ச்சொல் என்பது, பின்னர் விளக்கப்பெறும். மத்தம்-மத்த (இ.வே.) மதம்-மத (இ.வே.) kJ-kJ (dh) - ï.nt., முத்துதல் = பொருந்துதல், சேர்தல், கலத்தல். முத்து-மத்து-மத்தம் = கலக்கம், மயக்கம். "மத்தமாம் பிணிநோய்க்கு" (தேவா. 426: 3) ஒ. நோ: கல-கலுழ்-கலுழி = கலக்கம். கல-கலங்கு-கலக்கு-கலக்கம். முயங்குதல் = தழுவுதல், கூடுதல், கலத்தல். முயங்கு-மயங்கு-மயக்கு-மயக்கம் = கலப்பு, கலக்கம். முய-முயல்-மயல்-மால் = மயக்கம். வெறுத்தல் = செறிதல், கலத்தல். வெறு-வெறி = கலக்கம், மயக்கம். கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றுதல் காண்க. மத்து = பித்தியம் (பைத்தியம்) உண்டாக்கும் சாற்றுச் செடி (ஊமத்தை), "நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்ப னேபோல் (கம்பரா. உருக்கா. 81). மத்து-மத்தம் (ஊமத்தை). "மத்தநன் மாமலரும் மதியும் வளர்" (தேவா. 923: 8) மத்தம் என்னுந் தென்சொல்லையே உன்னென்னும் முன் னொட்டுச் சேர்த்து வடசொல்லாக்கினர். மத்து-மத்தை (ஊமத்தை)-(மலை.) மத்தம்-வ. உன்மத்த-ஊமத்தம், ஊமத்தை. மத்தம் = மயக்கந்தரும் கடாம். மத்தமா = யானை. மத்தம் - மதம். மதமா = யானை. மதம் - மதர். மதர்த்தல் = 1. செருக்குதல். 2. களித்தல். ``துப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கும்" (கம்பரா. நாட்டுப். 24). 3. மதங்கொள்ளுதல். ``மதர்விடையிற் சீறி" (பு. வெ. 7: 14). மதர் - மதர்வை = செருக்கு, களிப்பு, மயக்கம். மதம் - மதன் = 1. செருக்கு. ``மதனுடை நோன்றாள்" (பட்டினப். 278). 2. மடமை. 3. கலக்கம். மதம் = 1. யானைக்கடாம். ``மதயானை"(சீவக. 2485). 2. மதுவெறி (மலைபடு. 173, உரை). 3. தேன். ``மதங்கமழ் கோதை" (சீவக. 2584). 4. காம மிகை. 5. வெறி. 6. செருக்கு. ``போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப" (பரிபா.18:1 ). மதம்-மத. மதத்தல் = மயங்குதல், கள்ளுண்டு களித்தல், காமம் மிகுதல், மதங்கொள்ளுதல், செருக்குதல். மத-மதக்கம் = மயக்கம். மதமதப்பு = திமிர், செருக்கு. மத்து-மது = 1. கள். ``மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல" (தொல். பொருள். 114, உரை). 2. தேன். ``மதுவின் குடங்களும்" (சிலப். 25: 38). மத்து-மட்டு = 1. கள். ``வெப்புடைய மட்டுண்டு"(புறம். 24). 2. தேன். ``மட்டுவா யவிழ்ந்த தண்டார்"(சீவக. 1145). 3. இன்சாறு. ``கருப்புமட்டு வாய்மடுத்து" (திருவாச.5: 80). 4. காமக்குடிப்பு ``மட்டுடை மணமகள்" (சீவக. 98). 5. கட்சாடி. ``மட்டுவாய் திறப்பவும்" (புறம். 113). "மட்டுவார் குழலம்மை" என்பது மலைமகள் பெயர்களுள் ஒன்று. மதம் - OE. gemad, E. mad. மது - Gk. methu, AS. medu, ME. mede, OE. meodu, E. mead, OHG. metu, MLG. mede, ON. mjqthr, L. mel, G. meth, Russ. med, W. medd, Lith.middus, Sw. mjod, Dan. miod, Ice. mjodr, D. mede. மது என்னுஞ் சொல் தமிழில் அருகியும் வடமொழியிற் பெருகியும் வழங்குவதனாலேயே, அது வடசொல்லெனக் கருதப்படுகின்றது. மதுரை-மதுரா (dh) மதி-மதிரை. ஒ. நோ: குதி-குதிரை. மதி-மதிரை-மதுரை = மதிக்குலத்தவனான பாண்டியன் முதல் தலைநகர் (தென்மதுரை), கண்ணன் ஆண்ட வடமதுரை, அப் பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியர் தலைநகர் (வைகைமதுரை). சிவபெருமான் தம் சடைமுடியிலுள்ள திங்களினின்று மதுவைப் பொழிந்த இடம் (வைகை) மதுரை எனப்பெற்றது என்றும், மது என்னும் அரசன் ஆண்டதினால் மதுபுர என்று ஏற்பட்ட பெயர் மத்ரா (வடமதுரை) எனத் திரிந்ததென்றும் காரணங் காட்டுவர். மந்திரம்1-மந்த்ர (இ.வே.) முன்னுதல் = கருதுதல். முன்-மன். மன்+திரம்(திறம்) = மந்திரம். எண்ணத்தின் திண்மையினால் எண்ணியவாறு நிறைவேறும் எண்ணம் அல்லது கூற்று அல்லது பாட்டு மந்திரமாம். ``எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்'' (குறள். 666) மந்திரம் = 1. எண்ணம் (பிங்.). 2. சூழ்வினை 3. சூழ்வினைஞர் (மந்திரிமார்) அவை. ``மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத் துள்ளேன்" (கம்பரா. உருக்காட். 34). 3. கொண்முடிபு (சித்தாந்த) மந்திரநூல். ``போகமிகு மந்திரமா மறையொன்று" (திருமுறை. கண். 26). 4. சாவிப்புக் கூற்று. மந்திரம்-மந்திரி = அரசனுக்குச் சூழ்வினைத் துணையாயிருப் பவன். மந்திரக்காரன் = சாவிப்பு மந்திரம் பண்ணுபவன்(மந்திரவாதி). மந்திரம்-மந்திரி. மந்திரித்தல் = (செ. குன்றாவினை) 1. மந்திரத்தால் அடக்குதல். 2. மந்திரத்தால் ஆற்றலுண்டாக்குதல். 3. மந்திரத்தால் ஊழ்குதல்(தியானித்தல்). ``மந்திரிப்பார் மனத்து ளானை" (தேவா: 590: 4) 4. கூடிச்சூழ்தல். ``மகட்பேசி மந்திரித்து" (திவ். நாய்ச். 6: 3). 5. மந்திர மன்றாட்டுச் செய்தல். ``சிரத்தினஞ் சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார்" (பிரபோத. 5: 7) ``மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்" (தொல். 982) ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" (தொல்.1434) என்று தொல்காப்பியமும், ``நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்" (குறள் .28) என்று திருக்குறளுங் கூறுவதால், திருமந்திரம் போன்ற மறை நூல்கள் அக்காலத் திருந்தமை அறியப்படும். ``பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (தொல். 1336) என்னும் தொல்காப்பிய நூற்பாவும் அதை வலியுறுத்தும், வாய்மொழி யென்றது மந்திரத்தை. எண்ணத்தின் திண்மையே அல்லது மன்னும் திறமே மந்திரமாதலால், மன் என்னுஞ் சொல்லும் மந்திரத்தைக் குறிக்கும் (பிங்.). மன்-மநு மந்திரம்2-மந்திர மன்னுதல் = 1. பொருந்துதல். "மன்னா சொகினம்" (பு. வெ.10: 11). 2. தங்குதல். "உத்திரை வயிற்றின் மன்னிய குழவி" (பாகவத. 1, பரிட்சித்துவின்றோ. 1). 3.நிலைபெறுதல். "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை" (குறள். 556). 4. கூடுதல். மன்-மனை = பொருந்தி வாழும் இடம். மன்-மன்று = கூட்டம், கூடுமிடம், அம்பலம். மன்று-மன்றம். மன்று-மந்து-மந்தை = கால்நடைக் கூட்டம். மன்+திரம் = மந்திரம் 1. வீடு. "மந்திரம் பலகடந்து" (கம்பரா. ஊர்தேடு. 138). 2. அரண்மனை (பிங்.). 3. கோயில். 4. மண்டபம். 5. குகை. "அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும்" (நீதிவெண். 2). 6. குதிரைச்சாலை (பிங்.). மயிர்-ச்மச்ரு இது முன்பு கூறப்பெற்றது. மயில்-மயூர மை = கருநிறம். இல் = இடம், கண். மை-மயி+இல் = மயில் = கரிய அல்லது நீலப் பீலிக் கண்களை யுடையது. மயில் தமிழகக் குறிஞ்சிநிலப் பறவை; குறிஞ்சிநிலத் தெய்வ மாகிய முருகனூர்தி. வடவர் ஐயுற்றுக் காட்டும் மூலம் மா2 = ஒலி (to sound). மரி-ம்ரு (இ.வே.) மடி-மரி. ஒ. நோ. கடி-கரி. மரி+அணம் = மரணம். இது ஒரு திரவிடச் சொல். L. mori (மொரி). மருமம்-மர்மன் (இ.வே.) மருவுதல் = தழுவுதல். மரு-மார்-மார்பு-மார்பம் = தழுவும் உறுப்பாகிய நெஞ்சு. மார் = மார்பு. க. மார். ``இப்பா தகன்மாரி னெய்வ னென்று'' (கம்பரா. இராவணன் வதை. 192) ``ஊரிலே கலியாணம், மாரிலே சந்தனம்'' (பழமொழி) மார்பு = நெஞ்சு. "கள்ளற்றே கள்வநின் மார்பு'' (குறள். 1288) மார்பம் = நெஞ்சு. "பொன்றுஞ்சு மார்பம்"(சிலப். 11: 64). மரு-மருமம் = 1 .மார்பு. "மருமத்தி னெறிவேல்" (கம்பரா. கையடை. 11). 2. மறைவிடம், 3. மறைபொருள் (இரகசியம்). 4. உயிர்நிலை. "எங்கு மருமத் திடைக்குளிப்ப" (பு. வெ. 7: 23). ஒ.நோ. L. arca=chest, arcanum = mystery, secret. வடவர் காட்டும் மூலம் ம்ரு = மரி. மர்மன் = மரணத்திற்கேதுவான இடம், சேதப்படத்தக்க உறுப்பு, உயிர்நாடி நிலை. மரி என்பது தென்சொற் றிரிபென்பது மேலே கூறப்பட்டது மல்லன்-மல்ல முல்-மல் = 1. பருமை. 2. வலிமை (பிங்.). 3. மற்போர்த் தொழில். ``மல்லலைத் தெழுந்து வீங்கி" (சீவக. 268). 4. மற்போர் செய்பவன். ``மல்லொடு கஞ்சனுந் துஞ்ச வென்ற மணிவண்ணன்" (திவ். பெரியதி. 11 : 2 : 3). மல்-மல்லன் = மற்போர் செய்வோன். "மறத்தொடு மல்லர் மறங்கடந்த" (பு. வெ. 9 : 4). மல்-மல்லம் = மற்போர். மல் = வலிமை. மல்லல் = வலிமை. முல்-மொல்-மொலு. மொலுமொலு - மொதுமொது. மொலு மொலு, மொலோர் என்பன மொய்த்தல் அல்லது திரளுதற் குறிப்புகள். மொல்-(மொள்)-மொய் = நெருக்கம், கூட்டம், திணுக்கம், பெருமை, வலிமை, போர். மல்-மல்கு. மல்குதல் = கூடுதல், மிகுதல், நிறைதல். மல் = கூடிச் செய்யும் போர். மல்-மலை. மலைதல் = பொருதல். வடவர் மல் (mal, mall = வைத்திரு, கொண்டிரு, உடமை கொள்) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். மல்லி-மல்லி, மல்லிகை-மல்லிகா மலையம்-மலய மலை-மலையம் = பொதியமலை. "ஓங்குயர் மலையத் தருந்தவன் உரைப்ப"(மணிமே. 1 : 3). அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. ஐகாரம் அகர மானது சமற்கிருத வடிவைப் பின்பற்றி. ஒ. நோ: நிலையம்-நிலய, வளையம்-வலய. மனம்-மனஸ் (இ.வே.) உன்னுதல் = 1. கருதுதல். 2. ஊழ்குதல் (தியானித்தல்). உன்னலே தியானம் (கந்தபு. திருநகர. 81). ம. உன்னு, க. உன்னிசு. உன்-உன்னம் = 1. கருத்து (திவா.). 2. ஊழ்கம் (தியானம்). "அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த" (தேவா. 847 : 2). 3. மனம் (திவா.). ம. உன்னம். உன்-உன்னல் = 1. கருதுகை (பிங்.). உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே (தொல். உரைநூற்பா). 2. மனம் (பிங்.). உன்னுதல்-முன்னுதல் = முற்படக் கருதுதல், கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3) தெ. முன்னு, க. முன்னு, AS. munan = to think. முன்-முன்னம் = 1. கருத்து. முன்ன முகத்தி னுணர்ந்து (புறம். 3). 2. மனம் (திவா.). 3. குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61:7) முன்-முன்னல் = 1. கருத்து, நெஞ்சு, மனம் (சூடா.). முன் = மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொருள். 127). முன்னம்-முனம்-மனம். மனத்தொடு வாய்மை மொழியின் (குறள். 295) மனம்-மனன். ஆறறி வதுவே அவற்றொடு மனனே (தொல்.1526) L. mens, OE. gemynd, ME. mynd, E. mind. மன்-மநு (இ.வே.) முன்-மன் = கருதும் ஆறாம் அறிவுள்ள மாந்தன். மன்பது= மக்களினம். மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15 : 52). மன்பது-மன்பதை = 1. மக்களினம். மன்பதை காக்குநின் புரைமை (புறம். 210). 2. மக்கட் கூட்டம், படை. மன்பதை பெயர (பதிற். 77 : 3). OS., OHG. man, OE. man (n), E. mar, Goth. manna. kid-khd(ï.nt.). = வீடு. மன்னுதல் = பொருந்துதல், தங்குதல், மிகுதல், கூடுதல், நிலைபெறுதல். மன்-மனை = நிலையாகத் தங்கும் வீடு. E manse, L mansus, fr. mans, remain. வடவர் மா (அள) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். kh1 (kf)-kAh (ï.nt.), மகிழ் - மஹ் முழுத்தல் = திரளுதல், பருத்தல், முழுமையாதல். முழு = பருத்த. முழுமுதல் தொலைந்த கோளி யாலத்து (புறம். 58) முழுத்த = முழுவளர்ச்சி யடைந்த. முழுத்த ஆண்பிள்ளைக்கு மூன்று வெற்றிலை (பழமொழி) முழு-முகு. ஒ. நோ: தொழு-தொகு, புழு-புகு. முகு-மிகு-மிகல். முகு-மகு-மகிழ். ஒ. நோ: நெகு-நெகிழ். மகிழ்தல் = மலர்தல். அகமலர்தல், களித்தல். முகு-முகை = கூட்டம் (பிங்.). முகு-மொகு-மொக்கு-மொக்கன் = தடித்தவன். மொக்கு - மொக்கை = பருமன். மொக்கைச் சோளம் - மக்கைச் சோளம் - மக்காச் சோளம். மொக்காளி - மக்காளி = மிகத் தடித்தவன். மகு-மகம் = பருமை, பெருமை. மகம்-மக-மா = பெரிய. மகக்கதை-மாக்கதை. எடுக்கும் மாக்கதை (பெரியபு. பாயிரம், 3). மகம்-மகன் = பெரியோன், சிறந்தோன் (சூடா.). நூல்கற்ற மகன்றுணையா நல்ல கொளல் (நாலடி. 136) மகன்-மான் = பெரியோன். மானே தொழுகை வலி (சி. போ. 12 : 4, வெண்பா 3). மிகு-க. மிகு, மிக்கு,தெ. மிக்கிலி. OG. michel, E. mickle, much. kf«-Gk. megas, L. magnus. வடசொன்மூலம் மஹ் = மிகு, மகிழ். ஆதலால், மஹ் என்பது மகு என்பதன் திரிபே. மேலும், மா.வி.அ. “orig.magh” என்று குறித்திருத்தலுங் காண்க. மா - மா = அள. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. மா-மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்னும் உலக வழக்கை நோக்குக. மேலை வடார்க்காட்டில் ஒரு பொருளின் விலையை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்று வினவும் வழக்கு இன்று முள்ளது. அங்கேயே நாட்டுப் படியை மானம் என்கின்றனர். மா+அனம் = மானம் = அளவு, படி, மதிப்பு. மா-மாத்திரை = அளவிட்ட மருந்து, கண்ணிமைக் கால அளவு. மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ (1259) என்பது தொல்காப்பியம். அளவு என்பது போன்றே மாத்திரை என்பதும் தென்சொல்லே. அதன் வடமொழி வழக்கும் தமிழில் அளவு என்னுஞ் சொல்லுண்மையும் வடமொழி தேவமொழி என்னும் ஏமாற்றும், மாணவரையும் ஆராய்ச்சியில்லாரையும் மயக்குகின்றன. தென்மொழி சொல்வளஞ் சிறந்தது என்பதை அறிதல் வேண்டும். மாத்திரை என்பது, ஆரியர் வருமுன்பே தமிழகத்து வழங்கிய மருத்துவ நூற் குறியீடு. பண்டைக்காலத்து, மா என்னுஞ் சொல் வெவ்வேறு அளவு குறித்து வழங்கிவந்தது. மா = 1. ஒருநிறை. (தொல். எழுத்து. 170, உரை). 2. ஒரு கீழ்வாயிலக்கம் (1/20)-(பிங்.) ம; மா; தெ. மாவு. 3. ஒரு நில அளவு (1/20 வேலி). மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறம். 184) மாத்திரை-மாத்ரா (இ.வே.) Gk. metron, L. meter, E. meter, metre, measure. இச் சொல் மேலை யாரியத்திலிருப்பதனால் மட்டும் ஆரியச்சொல் ஆகிவிடாது. மேலை யாரியத்திலும் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் தென்சொல்லா யிருப்பதை, The Primary Classical Language of the World என்னும் நூலைக் கண்டு தெளிக. மாகம்-நாக (இ.வே.) மால்-மா = கருமை. மாயிரும் பீலி (சிலப். 2: 53). மா-மாகம் = 1. முகில் (சீவக. 569, உரை). 2. கரிய வானம். மாக விசும்பின் (புறம். 35). 3. மேலிடம். மாக மாடத்து (கம்பரா. மிதிலைக். 83). 4. விண்ணுலகம். மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா. 34: 15). வடவர் காட்டும் மூலம்: 1. நம் = வளை (to bend). 2. ந+அக = நோவில்லாத இடம். மாகாளி-மஹா காலீ மாடை-மாஷ மழ-மாழை = 1. மழமழப்பான பொன் (பிங்.). ``உருகி மாழையும் வெள்ளியும்" (தணிகைப்பு. சீபரி. 374). 2. பொற்கட்டி (பிங்.) கனக மாழையால்" (சீவக. 913). மாழை-மாடை = பழம் பொற்காசு. வந்த மாடை நெல்லாக்கி (S. I. I. III, 137). மாணவன்-மாணவ முள்-முளை = இளமை. முளையமை திங்கள் (கம்பரா.கும்பக. 16). முளையான் = சிறுவன், சிறுபிள்ளை. முள்-மள்-மழ = 1. இளமை. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். சொல். 311). 2. குழந்தை. அழுமழப் போலும் (திருக்கோ. 147). மழ-மாழை = இளமை. மாழை மடமான் பிணையியல் (கலித். 131). மள்-மள்ளன் = இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகு. 262). மள்-மண்-மணி = சிறியது, ஒரு சிறுமைப்பொருள் முன்னொட்டு. எ-டு: மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணித் தக்காளி, மணிப்பயறு, மணிப்புறா. மணி-மாணி = 1. குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1: 4: 1, ஸ்வா.) 2. சிறுவன். 3. மாணவன். கருமாணி யாயிரந்த கள்வனே (திவ். இயற். 2: 61). மாணி-மாண் = 1. கற்குஞ் சிறுவன். மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8: 10: 8). 2. குறளன். குறுமா ணொருவன்தற் குறியாகக் கொண்டாடும் (தேவா. 164: 5). மாணி-மாணவன். ஒ. நோ: பள்ளிப்பிள்ளை. E. pupil. இனி, மண்-மாண்-மாணி என்றுமாம். வடமொழியிலும் மாணவ என்னுஞ் சொற்கு இளைஞன், குறளன் என்னும் பொருள்களே உள. மாணவன்-மாணவகன்-மாணாக்கன். மாதம்-மாஸ், மாஸ (இ.வே.) மதித்தல்=அளவிடுதல். மதி=1. அளவு. 2. அளவிடப்பெற்ற பொருள். ஏற்றுமதி, இறக்குமதி என்னும் சொற்களை நோக்குக. 3. பக்கம், மாதம் முதலிய கால அளவிற்குத் துணையான நிலா. மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள். 782). 4. நிலவினாற் கணிக்கப் பெறும் கால அளவு (மாதம்). 5. ஓரை. ஆறிரு மதியினும் (சிலப். 26: 25). மதி-மாதம். ஒ. நோ: மானம்=அளவு. AS. mona, E. moon, Gk. men, mene, L. mensis, mena, Ger. mano, mane, mond., Goth. mena, Lith. menu, menesis, Slav. meseci. இனி, மத்து-மத்தி-மதி = மயக்கஞ் செய்யும் நிலா என்றுமாம். ஒ. நோ: L. luna = moon, lunatic = insane, lunacy = insanity. வடவர் மா3 (அள) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அதன் பொருந்தாமையையும், ஒருகாற் பொருந்துவதாகக் கருதினும் அதுவும் தென்சொல்லே யாதலையும், காண்க. சென்னைப் ப. க. க. த. அ. மாஸ-மாதம் என்று தலைகீழாகக் காட்டும். மதி என்னும் மூலத்தினின்று, மாதம் என்னும் தகரச் சொல் லன்றி மாஸ என்னும் ஸகரச் சொல் எங்ஙன் தோன்றும்? மாதர்-மாத்ரு (இ. வே.) = தாய். மா = அழகு. மாவீழ் பள்ளி (ஞானா. 10: 6). மா-மாது = 1. அழகு. மாது குலாய மென்னோக்கி (திருக்கோ .316). 2. ( அழகுள்ள) பெண். வாட்டடங்கண் மாதே (திருவாச. 7: 1). 3. (பெரும்பாலும் அழகினால் ஏற்படும்) காதல். மாதுகு மயிலி னல்லார் (சீவக. 363). மாது-மாதர் = 1. அழகு (பிங்.) மாதர்கொண் மாத ரெல்லாம் (திருவாத. 4. திருவம்பல. 40). 2. பெண். மறுவுண்டோ மாதர் முகத்து (குறள். 117). 3. காதல். மாதர் காதல் (தொல். சொல். 328). மாதர்-மாதராள் = (அழகுள்ள) பெண். மடமொழி மாதராள்" (நாலடி .384). பெண்கள் பெரும்பாலும் தாய்மாராதலாலும், தெய்வப் பெண்டிர் தாய்போற் கருதப் பெறுவதாலும், பெண்ணின் பெயர் தாய்க் கருத்தையுங் கொள்ளும். எ-டு: மலைமகள், மலைமடந்தை, மலைமாது. இம் முறையிலேயே, மாதர் என்னும் சொல்லும் தாய்ப் பொருளைப் பெற்றது. Gk. mater, L mater, E. mother. G. muotar, mutter, ther, Litemote, Slav. mati. வடவர், காட்டும் மூலம் மா3 = அள. “derivation from 3.ma$ very doubtful” என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. மாந்தம்-மாந்த மொத்து = 1. தடித்த-வன்-வள்-து. 2. சுறுசுறுப்பில்லாத-வன்-வள்-து. மொத்து-மத்து-மந்து-மந்தம் = செரிமான வுறுப்பின் சுறுசுறுப் பின்மை, செரியாமை. மந்தம்-மாந்தம் = செரியாமையாற் குழந்தைகட் குண்டாகும் நோய். வடவர் காட்டும் மூலமும் இதுவே. மாமன்-மாம1,மாமக அம்மை-அம்மான் = அம்மையின் உடன்பிறந்தான். அத்தன் (தந்தை)-அத்தை = அத்தனின் உடன்பிறந்தாள். அம்மான் மனைவி அத்தையென்றும், அத்தை கணவன் அம்மான் என்றும், அழைக்கப் பெறுவர். ஒருவன் அம்மான் மகளையும் அத்தை மகளையும், ஒருத்தி அம்மான் மகனையும் அத்தை மகனையும் மணப்பது முறை மரபு. இங்ஙனம் நெருங்கிய உறவில் மணமகனோ மணமகளோ இல்லாதபோதும், அயலில் மணமகனோ மணமகளோ செல்வத்திலும் அழகிலும் பிறவற்றிலும் சிறந்திருக்கும்போதும், அயலில் மணவுறவு கொள்வது வழக்கம். மகனின் மனைவியையும் மகளின் கணவனையும் மக்களைப் போற் கருதவேண்டுமென்றும், அவர்களும் கணவன் தன் மனைவி பெற்றோரையும் மனைவி தன் கணவன் பெற்றோரையும் தன்தன் சொந்தப் பெற்றோரைப்போற் கருதவேண்டுமென்றும், பண்டைத் தமிழர் தீர்மானித்தே, மகன் மனைவியை மருமகள் (மருவிய மகள்) என்றும், மகள் கணவனை மருமகன் (மருவிய மகன்) என்றும், அழைத்தனர். மருவுதல் = பொருந்துதல், குடும்பத்தொடு கலத்தல், இனமாகத் தழுவுதல். அயலில் மணவுறவு கொண்டபோது, மனைவியின் தந்தையை யும் கணவனின் தந்தையையும் மருவம்மான் (மருவிய அம்மான்) என்று அழைத்திருக்கலாம். மருவம்மான்-மாமன். மணவுறவு கொண்ட அம்மானும் மருவம்மானும் முறையளவில் ஒரே நிலையிலிருப்பதால், பெண்கொடுத்த அல்லது பெண்கொண்ட அம்மானும் மாமன் எனப் பெற்றான். அதன்பின் மணவுறவு கொள்ளாத அம்மானும் அப் பெயர் பெற்றான். மாமான் மகளே (திவ். திருப்பா. 9). மாமான்-மாமன். ம. மாமன், தெ. மாம. மாமனு மருகனும் போலு மன்பின (சீவக. 43). சில குலத்திலும் குடும்பத்திலும் ஒருத்தி தன் அம்மானை மணந்துகொள்ளும் வழக்கமிருப்பதால், கணவனை மாமன் என்றழைக்கும் நிலைமையும் நேர்ந்தது. ஒருவன் தன் அக்கை அல்லது தங்கை மகளை மணப்பதும் இதுவே. மாமன்-மாமி = 1. அம்மான் மனைவி. அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா. 1228: 1). 2. அத்தை. 3. மனைவி அல்லது கணவன் தாய். சிறக்கு மாமியர் மூவர்க்கும் (கம்பரா. சூளா. 33). அம்மான் மாமி-அம்மாமி (ஆரியப் பார்ப்பன வழக்கு) = 1. அம்மான் மனைவி. 2 . மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப். 29: தேவந்தி யரற்று). வடமொழியில் மாமி என்னும் பெண்பால் வடிவில்லை. மாம (மாமக) என்னும் ஆண்பாற் சொற்கு மம (எனது) என்னும் தன்மை யொருமைப் பெயரின் 6ஆம் வேற்றுமையடியை மூலமாகக் காட்டுவர். மாம = எனக்குரியவன். “ma$ma$, m. (fr. mama, lit. ‘belonging to mine’) dear friend, uncle (only in voc.sg. as a term of affection among animals in fables), Pancat” என்று மா. வி.அ. (ப. 810) கூறுதல் காண்க. மாயை-மாயா (இ.வே.) மாள்-மாய் மாய்தல் = மறைதல், மறந்துபோதல், இறத்தல், அழிதல். மாய்-மாயம் = 1. திடுமறைவு. 2. மயக்கம். 3. நிலையின்மை. என்மாய வாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய் 10: 7: 3). 4. பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (தொல். பொருள்.114). 5. பாசாங்கு. 6. ஏமாற்று (வஞ்சனை). "மாய மகளிர் முயக்கு" (குறள். 918). 7. பொய்த் தோற்றம் (மாயை). வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் (கம்பரா. மாயா சீதை. 96). 8. மாயக்கலை. மாய்கை = மயக்கம், மயக்கக் காதல். மாய்-மாயை = 1. மறைவு. 2. மாயக்கலை. மாயையி னொளித்த மணிமே கலைதனை (மணிமே. 18: 155). 3. மறைப்பாற்றல் (திரோதான சத்தி). 4. பொய்த்தோற்றம். 5. பொய்த்தோற்ற உலகம். தோன்றிக்கெடு மாயாகாரியத்தை மெய்யெனநீ கண்டனையே (mU£gh,I, நெஞ்சறி. 527). 6. ஐம்பூதமூலம். பூதலய மாகின்ற மாயைமுத லென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). ஒ. நோ: சாய்-சாயை-வ. சாயா (cha#ya#). மாலை-மாலா முல்-முள்-முள்கு. முள்குதல் = முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125:8). முள்-(முய்)-முய-முயங்கு-முயக்கு-முயக்கம். முயங்கு-மயங்கு-மயக்கு-மயக்கம். முய-மய.மயத்தல் = மயங்குதல். "மயந்துளே னுலக வாழ்க்கையை" (அருட்பா, VI, அபயத்திறன். 14) முய-முயல்-மயல் = மயக்கம். மயலிலங்குந் துயர் (தேவா. 121: 2). ம. மய்யல், தெ. மயல, க. மயமு. மயல்-மால் = மயக்கம். மாலுதல் = மயங்குதல். மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை (அகம். 3). மயக்கக் கருத்திற்கு அடிப்படை கலத்தற் கருத்தே. மயங்குதல் = கலத்தல். மயக்குதல் (பி.வி.) = கலத்தல். பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறம். 34). மால்-மாலை=1. பல மலர்கள் கலக்குந் தொடை. 2. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை. மசங்கல், மசங்கு பொழுது, மசண்டை, மயண்டை என்னும் வழக்குகளை நோக்குக. மயங்கு-மசங்கு. மயல்-மயன்றை-மயண்டை-மசண்டை. தொடைப் பொருளில் கலத்தற் கருத்தும், அந்திவேளைப் பொருளில் கலத்தற் கருத்தொடு கலக்கக் கருத்தும் அமைந்துள்ளன என அறிக. கண் தெரியாது கலங்குவதும் இராத்தங்க இடமின்றிக் கலங்குவதும் காதலர் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து கலங்குவதும், மாலைக்கால மயக்க வகைகளாம். இதனையே மருண்மாலை என்னும் இலக்கிய வழக்கு உணர்த்தும். வடமொழியில் இச் சொற்கு மூலமில்லை. மாவலி-மஹாபலி (b) மாவலி = பெரு வலிமையுள்ள ஒரு பழஞ் சேரவேந்தன். மூரி வார்சிலை மாவலி (மணிமே. 19 : 54). ஒ. நோ: உறுவலி = மிகுந்த வலிமையுள்ளோன். உறுவலி தாக்கி னானே (சீவக. 2282). மதவலி (மீமிசைச் சொல் = மிக வலிமையுள்ளோன். வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக. 204). மாவலி வாணன் = மாவலி வழிவந்த ஒரு சிற்றரச ஆள்குடியான். வையமொரு கோலாற் புரந்தருள் மாவலிவாணன் (S.I.I. IV, 98). மாளிகை-மாலிகா மல்-மால். மாலுதல் = மாட்சிப்படுதல். மான்றபூண் முலையினாள்" (காஞ்சிப்பு. திருக்கண். 194). மால் = பெருமை (பிங்.). மால்-மாள்-மாண்-மாண்பு, மாட்சி. மாள்-மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.). மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 2. மாடம் போன்ற கோயில். உத்தரகோசமங்கை......khËifபாடி” (திருவாச. 16: 3). வடவர் மாலிமா என்னும் சொல்லை மாலாஎன்பதனொLதொடர்புபடுத்தி,மேன்மாடியுள்sவீLஎன்Wபொருளுரைப்பர். மலரடுக்குப் போன்ற மாடியடுக்கு என்பது அவர் கருத்துப் nghY«! “a white-washed upper-storied house” என்னும் பொருளை மா. வி. அ. எங்ஙன் பெற்றதோ, அறிகிலம். மானம்1-மான = பெருமை (greatness) மல்-மல்லை = பெருமை. மல்லைச் செல்வ tடமொழிkறைவாணர் (திவ். திருவாய். 8 : 9 : 8). மல்-மன். மன்னுதல் = மிகுதல். விதவாதன மன்னே (நன். 165). மன் = மிகுதற் குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறம். 75). மன் = 1. பெருமை. 2. பெரியோன், தலைவன். மன்னுயிர் நீத்த வேலின் (பு. வெ. 4 : 23, கொளு). 3. கணவன். 4. அரசன். மன்-மன்னன். மன்-மான்-மானம் = பெருமை. புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் (தொல். பொருள். 41) மானம்2-மான = மதிப்பு (honour) மா+அனம் = மானம் = அளவீடு, அளவு, அளவை, மதிப்பு. மா. வி. அ. வும் சென்னைப் ப. க. க. த. அ. வும் இவ்விரு சொல்லையும் ஒரு சொல்லாகக் காட்டுகின்றன. மானியம் = மான்ய மானம்-மானி. மானித்தல் = அளத்தல், மதித்தல்,பெருமைப் படுத்துதல், தன்னை மிக மதித்துச் செருக்குதல். ஒ. நோ: தீர்மானம் = முடிவு. தீர்மானித்தல் = முடிவு செய்தல், முடிபு கொள்ளுதல். மானம்-மானி = அளக்குங் கருவி, தன்மானமுள்ளவன், செருக்கன். மானி-மானியம் = புலவரையும் மறவரையும் மதித்துச் செய்யும் சிறப்பு, அவர்க்களிக்கும் முற்றூட்டு அல்லது இறையிலி (சர்வ மானியம்), கோயில்கட்கும் அறச்சாலைகட்கும் விடும் அறப்புறம் (இறையிலிநிலம்). மானியம்-மானிபம். இவ் வடிவம் வடமொழியி லில்லை. நிலமானியம் (Endowment of land) என்னும் பொருளும் மா. வி. அ. விற் குறிக்கப்பெறவில்லை. மிதி-ம்ருத் (d) மிதித்தல் = பாதத்தை மேல்வைத்தல், பாதத்தால் தேய்த்தல். மீனம்-மீன மின்-மீன் = வெண்ணிறத்தால் மின்னும் கெண்டைமீன், மீன். கெண்டைமீன் வகைகளுள் வெள்ளிபோல் மின்னுவது வெளிச்சி. பெண்ணின் கண்ணிற்கு வடிவால் உவமை கூறப்படுவது கெண்டை மீனே. கயல் என்பது கெண்டையின் மறுபெயர். மீன்வகைகளுள் மிக மென்மையானது கெண்டையாதலின் அப் பெயர் பெற்றது. கயவென் கிளவி மென்மையும் செய்யும் (தொல். 805) பொதுவாக வரையப் பெறுவதும் பாண்டியன் கொடியின் உருவமும் எண்மங்கலங்களுள் ஒன்றும் கெண்டைமீனே. ஏரி குள நீருட் பெருவாரியாய் வாழ்வதும் அம் மீனே. மீன்-மீனம் (திவா.). அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு. மீன் என்னும் வடிவம் வடமொழியிலில்லை. வடவர் காட்டும் மூலம் மீ1=குறை, சிறு, அழி; வழிதப்பு, வழிவிலகு; மீறு, கலக்கடி, மாற்று. திரிவது (சஞ்சரிப்பது) என்று மூலப்பொருள் கூறுவர். சிறுத்தற் பொருளில் மீ என்பது மின் (min) என்னும் இலத்தீன் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. முகம்-முக (kh) - (இ.வே.) முகம்=முன்பக்கம், தலையின் முன்பக்கம், முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, நுனி, தொடக்கம், முன்பு, முதன்மை. இவை யெல்லாம் முன்மைக் கருத்தைப் பொதுவாகக் கொண்டவை. இப் பொருள்கட்கெல்லாம் அடிப்படை தோன்றற் கருத்தே. இயல்பான தோற்றமும் இயக்கமும் முன்னோக்கியே நிகழ்வதால், ஒரு பொருள் தோன்றும்போது அதன் முன்புறமே தெரியும். முகஞ்செய்தல் = 1. தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக். 35 : 49). 2. முன்னாதல். தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 3. நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408). முகம் = 1. தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298). 2. நோக்கு. புகுமுகம் புரிதல் (தொல். பொருள். 261). முகு = முகிழ். முகிழ்தல் = அரும்புதல். முகிழ்த்தல் = தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங். கடவுள்). முகு-முகை. முகைதல்=அரும்புதல். பொய்கை முகைந்த தாமரை (ஐங். 6). அரும்புதல் = தோன்றுதல். முகிழ்த்தல் = தோற்றுவித்தல், ஈனுதல். முகு என்னும் அடிபோன்றே உகு, நுகு, புகு என்னும் அடிகளும் தோன்றற் கருத்துச் சொற்களைத் தோற்றுவித்துள்ளன. உகு-உகை-அகை. அகைதல் = துளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி (கலித். 74). நுகு-நுகும்பு = பனை, வாழை முதலியவற்றின் குருத்து. பனைநுகும் பன்ன (புறம். 249). புகு-பொகு-பொகில் = அரும்பு. முகம்-முகர்-முகரை = மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி. முகர்-முகரி = முதன்மை, தலைமை. முகம்-முகவு = முன்மண்டபம். முகம்-முகப்பு = வீட்டின் முற்பகுதி, அணிகலப் பொருத்துவாய். முகம்-முகமை = முதன்மை, தலைமை. முகமை-முகாமை. முகம்-முகன்-முகனை = முன்புறம், தொடக்கம், முதலெழுத்து. முகனை-மோனை = முதலெழுத்து ஒத்து வருகை. முகம்-முக. முகத்தல் = மூக்கால் நுகர்தல். முக-மோ-மோப்பு-மோப்பம். முகம்-முகர். முகர்தல் = மோத்தல். வடமொழியில் முக என்னுஞ் சொற்கு மூலமில்லை. வடவர் அச் சொற்கு முகம் என்பதைவிட வாய் என்பதையே சிறப்புப் பொருளாகக் கொள்வதால், பின்வருமாறு பொருந்தப் பொய்த்தலாக மொழிப்பொருட் காரணங் கூறுவதுமுண்டு. முக = மு+க (kha). க = கன் (தோண்டு). முக = தோண்டப்பட்ட கிடங்குபோன்ற வாய். இது ஒரு நகையாட்டுச் செய்தியாக இருப்பதொடு, கன் (khan) என்னும் சொல்லும் தென்சொல்லாகவே யிருத்தல் காண்க. கல்லுதல் = தோண்டுதல். கல்-கன்-கன்னம் = சுவரில் தோண்டும் துளை . முகிழம்-முகுல, முகுர முகு-முகிழ். முகிழ்தல் = அரும்புதல், தோன்றுதல். முகிழ் = அரும்பு. முகிழ்-முகிழம் = மலரும்பருவத் தரும்பு. முகிழ்-முகிழி. முகிழித்தல் = அரும்புதல். முகு-முகை = அரும்பு. முகைதல் = அரும்புதல். முகு-முகுள்-முகுளம் =அரும்பு. முகுள்-முகுளி. முகுளித்தல் = குவிதல். க. முகுள் = முகிழ். முகுளி-முகுலீ முகு-மொக்கு = மொட்டு. க. மொக்கு (gg), தெ. மொக்க (gg). மொக்கு-மொக்குள் = 1. பேரரும்பு. க. முகுல் (g). முகைமொக்கு ளுள்ளது நாற்றம் (குறள். 1274) 2. மொக்குள் போன்ற நீர்க்குமிழி. படுமழை மொக்குளின் (நாலடி. 27). முட்டு-மித் (th) - (இ.வே.) முட்டுதல் = எதிர்ப்படுதல், பொருந்துதல், மோதுதல். முட்டி-முஷ்டி (இ.வே.) முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். பொருள். 112). 2. மோதுதல். 3. தாக்குதல். 4. இறுகப் பிடித்தல். குழலாள்......ifÆid¡ கையாலவன் முட்டிடலும் (உத்தரரா. திக்குவி. 16). 5. பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (கம்பரா. நட்புக் . 50). முட்டு-முட்டி = 1. தாக்குதற்கு விரல் முடக்கிய கை. 2. கைக்குத்து. முட்டிகள் படப்பட (பாரத வேத்திர. 56). 3. நான்கு விரல்களை யிறுக Kடக்கிmவற்றின்மீதுfட்டைÉரலைaழுத்தும்ïணையாÉனைக்கை(சிலப்.3: 18, உரை). 4. படைக்கலம் பிடிக்கும் வகை. துய்ய பாசுபதத் தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129). 5. கையுள் மறைத்ததை இன்னதென்று கூறும் கலை. வடவர் காட்டும் மூலம் முஷ் = திருடு, கொள்ளையடி, சிறை கொண்டுபோ; உளங்கவர் , மகிழ்ச்சியால் மயக்கு, உடை, அழி. “Mus@t@i, m.f. stealing, filching, W.; the clenched hand, fist (perhaps orig. `the hand closed to grasp anything stolen’)”. முண்டம்-முண்ட (முள்)-மொள்-மொண்-மண். மண்ணுதல் = மழித்தல். இந்தக் கத்தி மண்ணாது என்னும் வழக்கை நோக்குக. மொண்-மொண்ணன் = வழுக்கைத் தலையன். வன்கண்ணர் மொண்ணரை (தேவா. 705 : 4). மொண்-மொண்ணை = வழுக்கை, கூர்மையின்மை. மொண்ணையன் = அறிவு மழுங்கியவன். மொண்ணை-மண்ணை = 1. கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகம். 24). 2. மூடன். இம்மணியை நின்மணியொடு கலக்கும் மண்ணைதா னுளனோ மேருமந். 303). (மொள்)-மொழு-மொழச்சு. மொழச்சுதல் = மழித்தல். மொழு-மழு-மழி. மழித்தல் = மொட்டையடித்தல், தலை வறண்டுதல். மழித்தலும் நீட்டலும் வேண்டாவாம் (குறள். 280). மழித்தலை = மொட்டைத்தலை. கொய்ம்மழித் தலையொடு கைம்மையுற (புறம். 261). மழி-வழி. முகம் வழித்தல், நாக்கு வழித்தல் என்பன உலக வழக்கு. வழி-வழல். வழலுதல் = மயிர் நீங்குவதுபோல் தோலுரிதல். வழல்-வழற்று (பி. வி.). வழல்-வழன்று-வரன்று-வறண்டு. வழன்றுதல் = தோலுரிதல். வரன்றுதல் = வழித்து வாருதல். மணிவரன்றி வீழு மருவி (நாலடி. 369). வறண்டுதல் = வழித்தல். தலை வறண்டுதல் என்பது பாண்டி நாட்டு வழக்கு. களைவறண்டி, பாதாள வறண்டி என்னும் கருவிகளைக் கருதுக. மொழு-மொழுப்பு-மோப்பு-மோப்பி = முண்டை. தெ. மோப்பி, க.மோப்பு. மொழு-மொழுக்கு. மொழுக்குதல் = வழித்த தலைபோற் சமனாகுமாறு உழுத நிலத்திற் பரம்படித்தல். மொழுக்கு-மொழுக்கன் = வேலைப்பாடில்லாது வழுக்கை யான அணிகலம். மொழுக்கன்-மொழுங்கன்-மழுங்கன் = வேலைப்பாடில்லாத அணி. மொழு-மழு. மழுமட்டை, மழுகூழை (வால் முற்றுமற்றது) என்னும் வழக்குகளை நோக்குக. மழ-மழுகு. மழுகுதல் = மொட்டையாதல், மழுங்குதல். நுதிமுகமழுகிய......bt©nfh£L” (அகம். 24). மழுகு-மழுக்கு-மழுக்கம் = மொட்டை, கூரின்மை. மழுகு-மழுங்கு. மழுங்குதல் = 1. கூர்நீங்கி மொட்டையாதல். நுதிமழுங்கிய (புறம். 4). 1. மதிக்கூர்மை குறைதல். உதிக்கின்ற புத்தியும் மழுங்கிடும் (திருவேங். சத. 15). மொழு-மோழல் = மொட்டை _ஞ்சியுள்ளgன்றி(பிங்.).bkhG-nkhiH = 1. மொட்டை. 2. கொம்பிலா மாடு. ஏழையைக் கண்டால் மோழையும் gயும்(பழமொழி).3. மரத்தின் அடிமுண்டம். 4. மடமை. 5. நொய் சேராத கஞ்சி. மொட்டைக் கூழ் என்னும் வழக்கை நோக்குக. மோழைமுகம் = பன்றி. முள்-முண்-முண்டு-முண்டம் = 1. மழித்த தலை. சடையு முண்டமுஞ் சிகையும் (அரிச். பு. விவாக. 2). 2. வழுக்கைத்தலை. 3. அம்மணம். முண்டக்கட்டை = மயிரில்லாத் தலைபோல் ஆடையில்லா வுடம்பு. 4. தலையில்லா வுடம்பு. முண்டம்-முண்டன் = 1. மழித்த தலையன். கண்டராய் முண்ட ராகி (தேவா. 269: 3). 2. அமணன். 3. மஞ்சிகன் (நாவிதன்). K©l‹-K©il (bg.gh.)=jiykʤj கைம்பெண், கைம்பெண். முண்டை-முண்டைச்சி (இரட்டைப் பெ. பா.) முண்டு-முண்டி. முண்டித்தல் = தலையை மொட்டை யடித்தல். தலைமுண்டிக்கு மொட்டரை (தேவா. 423: 4). முண்டி = மழித்த தலையன், மஞ்சிகன். முண்டி+அனம் = முண்டனம் (தலைமழிக்கை). மொள்-மொட்டு = மொட்டை, கூரின்மை. மொட்டம்பு (பிங்.). மொட்டு-மொட்டம். மொட்டந்தலை = மொட்டைத்தலை. மொட்டந் தலையிற் பட்டங்கட்டி யாள வந்தானோ? மொட்டு-மொட்டை. ம. மொட்டு, தெ. மொத்து (dd). மொட்டைத் தன்மையைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும், உருட்சியைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும் வெவ்வேறென அறிக. வடவர் காட்டும் முண்ட் (mun@d@) என்னும் மூலம் செயற்கை யென்பது தெளிவு. “mun|d@ (prob. artificial, to serve as the supposed source of the words below), cl. I. P. to cut (khan|d|ane=chidi), Dha$tup. IX, 40; to crush, grind, IX, 38 (V. l. for mut@); cl. I. A. to. cleanse `or to sink’ or `to shave’ என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. முத்தம்-முக்தா முள்-முட்டு-முத்து = 1. உருண்டை வடிவாயிருக்கும் சிறு பொருள். 2. தொண் (நவ) மணிகளுள் ஒன்று. முல்லை முகைமுறுவன் முத்தென்று (நாலடி. 45). 3. ஆமணக்கு விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (காளமேகம்). 4. அம்மைநோய்க் கொப்புளம். 5. கண்ணீர்த் துளி. பருமுத் துறையும் (சீவக. 1518). ஆமணக்கு முத்து (கொட்டைமுத்து), குருக்குமுத்து, புளியமுத்து, வேப்பமுத்து என்பன ஓரளவு உருண்டை வடிவான விதைகள். முத்துச்சம்பா, முத்துச்சோளம், முத்துமாதுளை என்பனவும் அத்தகையனவே. முத்துக்குளிப்பு மன்னார்குடாக் கடலில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முத்தூர்க்கூற்றம் என்பது பாண்டிநாட்டின் கீழ்கரைப் பகுதி. உரோம நாட்டிற்கு ஏற்றுமதியான பாண்டிநாட்டு முத்து வரலாற்றுப் புகழ் பெற்றது. வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து என்பது பிற்காலத்து ஔவையா ரொருவர் பாட்டு. முத்து-முத்தம். அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. முறிமேனி முத்த முறுவல் (குறள். 1113). வடவர், முக்தா என்னும் சொல்லை முச் (c) என்னும் வினை முதனிலையொடு தொடர்புபடுத்தி, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் காரணம் கூறுவது எத்துணை வேடிக்கை யானது! முச் = விடு, விடுதலை செய். K¤âiu-K¤uh(d) முகம்-முகர்=அரசனது முக அல்லது தலையுருவம் பொறித்த முத்திரை. பெர். முஹர். முக+திரம் = மோதிரம், முத்திரையிட்ட விரலணி. முத்திரை மோதிரம் என்னும் வழக்கை நோக்குக. முகத்திரம்-(முத்திரம்)-முத்திரை. ஒ. நோ: மாத்திரம்-மாத்திரை. வடவர் முத்ர (மகிழ்ச்சியான) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். முரசம்-முரஜ முருள்-முருடு = 1. பெருங்குறடு. 2. முடிச்சுள்ள மரக்கணு. 3. உருண்ட மரக்கட்டை. வன்பராய் முருடொக்கு மென்சிந்தை (திருவாச. 23 : 4). 4. பறைப்பொது (பிங்.). 5. பெரு மத்தளம். முருடதிர்ந்தன (சிலப். மங்கல.). முருடு-(முருசு)-முரசு. இடியென முழங்கு முரசின் (புறம். 17). முரசு-முரசம் = பெருமுரசு. திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க (புறம். 288). வடமொழியில் மூலமில்லை. ``fr. mura+ja?" என்று வினவுகின்றது. மா. வி. அ. முழுகு-மஜ்ஜ் (இ.வே.) முள்-முழு-முழுத்து. முழுத்துதல் = அமிழ்த்தல். முழுத்து- மூழ்த்து. முழு-முழுகு. முழுகுதல் = உட்செல்லுதல், அமிழ்தல், மீளா நிலையடைதல். முழுகு-மூழ்கு. ம. முழுகுக, க. முழு, தெ. முனுகு. முழுகு-முழுங்கு-விழுங்கு. தெ. மிங்கு. முழுங்குதல் = வாய்க்குள் முழுகச் செய்தல். முழுங்கு-முங்கு. முங்குதல் = நீர்க்குள் முழுகுதல். முழுக்கு-முக்கு (பி.வி.). க. முழுகிசு. KGF-L. mergo-VL. majj. முனி, முனிவன்-முனி முனிதல் = 1. சினத்தல். முடிபொரு ளன்று முனியன் முனியல் (பரிபா. 20 : 99). 2. வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொருள். 260). k., f., து. முனி. முனி-முனிவு = 1. சினம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண.82). 2. வெறுப்பு. (தொல். சொல். 386). ம. முனிவு, க. முனிப்பு. முனிவு-முனிவன் = உலகப் பற்றைத் துறந்த அறிவன். வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85). முனி = முனிவன். முனியுந் தம்பியும் (கம்பரா. மிதிலைக். 139). வடவர் காட்டும் மூலம் மன் = கருது. இது முன் என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னரே விளக்கப்பெற்றது. மூசை-மூஷ, மூஷீ முள்-முழை. முழைத்தல் = துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத . காண்டவ. 17). முழை=குகை. அவ்விசை முழையேற் றழைப்ப (பரிபா. 19 : 63). முழை-முழைஞ்சு = 1. துளை. குழன்முழைஞ்சு களி னூடு குமிழ்த்து (திவ். பெரியாழ். 3 : 6 : 11). 2. குகை. மாரி மலைமுழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா. 23). முழை-மூழை = 1. குழிந்த இடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. மருத்து. 116). 2. அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி. 321). மூழை-மூசை = மண்குகை, மட்கரு. வடமொழியில் மூலமில்லை. மா. வி. அ. இச் சொல்லை மூஷ (சுண்டெலி) என்னும் சொல்லோ டிணைக்கின்றது. மூட்டை-மூட்ட, முட்ட முள்-மூள். மூளுதல் = பொருந்துதல், கூடுதல். மூள்-மூட்டு (பி. வி.). மூட்டுதல் = 1. பொருத்துதல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631 : 3). 2. தைத்தல். மூட்டு = பொருத்து. மூட்டு-மூட்டை = கட்டு, பொட்டணம், பொருள் நிறைத்த கோணி. k., தெ. மூட்ட, க. மூட்டே. மூத்திரம்-மூத்ர (இ.வே.). முள்-(மொள்) = மோள். மோளுதல் = சிறுநீர் விடுதல். ம. முள். மோள்+திரம் = (மோட்டிரம்)-மோத்திரம்-மூத்திரம். மோள் என்னும் வினையும் மோத்திரம் என்னும் பெயர் வடிவும் இன்றும், பாண்டிநாட்டு வழக்கென அறிக. மூளை-மஜ்ஜன் (ï.nt.). முள்-மூளை = எலும்பிற்கு அல்லது மண்டையோட்டிற்கு உள் ளிருப்பது. ம . மூள. OS., OHG. marg, OE. mearg, E. marrow, ON. mergr. மெது-ம்ருது (வே.) மெல்-மெது-மெத்து-மெத்தை. மெது-க. மெது. மெத்தை-ம. மெத்த,. தெ. மெத்த, மெது-மெதுக்கு = சோறு. தெ. மெதுக்கு. மெத்தெனவு-தெ. மெத்தன, க. மெத்தனெ. மெது-மெதுகு-மெருகு. OE. smoth, smette, smeeth, E. smooth. மேகலை-மேகலா (kh) மேகலம்-மேகலை = பெண்டிர் அரையில் ஆடையின்மேல் அணியும் எண்கோவைப் பட்டிகையான அணிகலம். மேகலை தமிழர் அணிகலங்களுள் ஒன்று. மேழம்-மேஷ (இ.வே.) மேழகம்-மேஷக இவை முன்னர்க் கூறப்பட்டன. வக்கா-பக (baka) வக்கா = கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93 : 2). வக்கா-வங்கா = பறவை வகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). வங்கு-வக், வங்க் வள்-வண்-வணம்-வணர் = வளைவு, யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. வணர்-வணரி = வளைதடி. வணம்-வணங்கு-வாங்கு-வங்கு-வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி. வணங்குதல் = வளைதல். வணக்கம் = வளைவு. வில்வணக்கம் (குறள். 827). வாங்கு = வளைவு. வாங்குதல் = வளைதல். வாங்குகதிர் வரகின் (முல்லைப். 98). வாங்கு-வாங்கா = வளைந்த ஊதுகருவி. வங்கம் = வளைவு, ஆற்றுவளைவு. வஞ்சி-வஞ்ச் வங்கு-வஞ்சு-வஞ்சி. ஒ. நோ: அங்கு-அஞ்சு. பொங்கு-பொஞ்சு. வஞ்சி-வஞ்சம், வஞ்சகம், வஞ்சனம், வஞ்சனை. வஞ்சு = வஞ்சகம். வஞ்சே வல்லரே (தேவா. 828 : 3). வஞ்சகம்-வஞ்சக வஞ்சனம்-வஞ்சன இரு மொழியிலும் வங்கு என்பதே மூலம். ஆயின், வடவர் வக்கு (வக்) என்னும் வலித்தல் வடிவிற் காட்டுவர். இதினின்றே வக்ர, வக்ரீகரண முதலிய வடசொற்கள் பிறக்கும். ஒருவனை ஏமாற்றுவது வட்டஞ் சுற்றி அவனை வளைவது போலிருத்தலால், வளைதற்கருத்தில் ஏமாற்றுக் கருத்துப் பிறந்தது. Circumvent என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. வட்டம்-வ்ருத்த (இ.வே.). வல்-வள்-வட்டு-வட்டம் = 1. வளைவு. வில்லை வட்டப்பட வாங்கி (தேவா. 5 : 9). 2. வளைதடி. புகரினர்சூழ் வட்டத்தவை (பரிபா. 15 : 61). 3. வட்டவடிவம். 4. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றிய கோட்டை. 5. வண்டிச்சக்கரம். 6. திரிகை, 7. தோட்கடகம் (பிங்.). 8. வட்டமான அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம்(பெரும்பாண். 378). 9. வட்டக்கல். வடவர் தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51). 10. நிறைகோல் தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே(திருமந். 1781). 11. வட்டக் கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப(திருமுருகு. 111). 12. ஆலவட்டம் (வட்டப் பெருவிசிறி.) செங்கேழ் வட்டஞ் சுருக்கி 13. வட்டமான நீர்ச்சால் (பிங்.). 14. வளைந்த குளம் (பிங்.). 15. சுற்றுப் பக்கம். கோயில் வட்ட மெல்லாம் (சீவக. 949). 16. சிலவூர்களைக் கொண்ட நாட்டுப் பகுதி. 17. வட்டமான செலவு. புரவிவட்டந் தான்புகக் காட்டுகின் றாற்கு (சீவக. 442). 18. ஒரு சுற்று. 19. ஒரு கோள் வானமண்டலத்தை ஒரு முறை சுற்றி வருங் காலம். 20. ஒரு தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74 : 214). 21. தோறும். ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு (S. I. I. II, 122, 27). இச் சொற்கு இன்னும் பல பொருள்கள் உள. முதன்மையான வையே இங்குக் குறிக்கப்பட்டுள. வள்-வள்கு-வட்கு. வட்குதல் = வளைதல், வணங்குதல். வட்கார் = வணங்கார், பகைவர். வட்கார்-வட்கர். வட்கு என்னும் வடிவம் வடமொழியி லில்லை. வட்டம்-வட்டகை = நாட்டுப்பகுதி, வட்டில், சிறு கிண்ணம். வட்டகை என்னும் வடிவம் வடமொழியி லில்லை. வட்டணம்-அட்டன வட்டம்-வட்டணம் = கேடகம். இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413). வட்டணம்-வட்டணி. வட்டணித்தல் = வட்டமாதல், வட்ட மாக்குதல். வட்டணி என்னும் வினைவடிவம் வடமொழியி லில்லை. வட்டணம்-வர்த்தன வட்டணம்-வட்டணை = வட்டம், வட்டமான செலவு, இடம் வலம் சுற்றுகை, வட்டமான தாளக் கருவி, வட்டக் கேடகம், உருண்டை. வட்டரவு = வட்ட வடிவு. வட்டு-வட்டன் = வட்டுப்போல் உருண்டு திரண்டவன். குறுவட்டா......TÅ‹ பிறப்பு (கலித். 94). இவ் வடிவம் வடமொழியில் இல்லை. வட்டம்-வட்டாரம் = சுற்றுப்புற நாட்டுப்பகுதி. தெ. t£lhuK, f., து. வட்டார. வட்டாரம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. வட்டு-வட்டா = வட்டமான fலம். வட்டாவுந் தாம்பூலமுந் துகிலுந் jங்கிநிற்ப(Ój¡.). t£o-t®¤â வட்டு-வட்டி. வட்டித்தல் = வட்டமாதல், சுழலுதல், சுழற்றுதல், சுற்றிக் கட்டுதல், வளைத்தல், வளைத்தெழுதுதல், உருட்டுதல். க. பட்டிசு (bad|d|isu). வட்டி = கடகப்பெட்டி, கூடை. வட்டிகை-வர்த்திகா வட்டி-வட்டிகை = 1. சித்திரம். வட்டிகைப் பாவை நோக்கி (சீவக. 2085). 2. சித்திரமெழுதுங் கோல். வட்டிமைச் செய்தியின் (மணிமே. 4 : 57). 3. tட்டம். 4. சுற்றளவு. 5. கூil. 6. பரிசல். 7. ஒருவகை விருது. இவற்றுள் முதலிரு பொருள்களே வடமொழியில் உள. வட்டி-வட்டில் = வட்டமான உண்கலம், கிண்ணம், கடகப் பெட்டி, நாழிகை வட்டில், ஒருவகை விருது. க. பட்டலு (b). இவ் வடிவம் வடமொழியில் இல்லை. வட்டு = வட்டமான சில், வட்டமான சூதாட்டுக் கருவி, வட்டமான கருப்புக்கட்டி. இவ் வடிவம் வடமொழியில் இல்லை. வட்டை = சக்கரத்தின் சூட்டு, வட்டகை. பிரா. வட்டா. இவ் வடிவம் வடமொழியில் இல்லை. வடகம்-வடக (t|) வட்டம்-வடம்-வடகு-வடகம் = அரைத்த பருப்புடன் கறிச்சரக்குச் சேர்த்துலர்த்திய தாளிப்புருண்டை. வடம்-வட (t|) வட்டம்-வடம் = 1. வட்டமாகப் பரவும் ஆலமரம். வடநிழற்கண் ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41). 2. உருண்டு திரண்ட கயிறு. கமலை (கம்மாலை) வடம், தேர்வடம் முதலியவற்றை நோக்குக. 3. உருண்டு திரண்ட பொற்கொடி அல்லது மணிக்கோவை. “Vat@a, m. (perhaps Pra$kr|it for vr|ita, `surrounded, covered” என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. வடவை-வடபா (b) வடவா, படவா (b) படபா (b, b). வடம்-வடவை = வடதிசை நெருப்பு (Aurora borealis). வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து (தனிப்பாடல்). வடவனல் = வடவை. அக்கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ (தாயு. பரிபூர.9). ``வெள்ளத் திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா. 86). வடவனலம் = வடவை. கடுகிய வடவன லத்திடை வைத்தது (கலிங். 402). வடந்தை = வடக்கிலுள்ளது. வடந்தைத்தீ = வடவை. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384). உத்தர மடங்கல் = வடவை (திவா.). உத்தரம் = வடக்கு. மடங்கல் = ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ (பிங்.). பண்டைத் தமிழர் சுற்றுக் கடலோடிகளா (circumnavigators) யிருந்தமையால், வடமுனையில் ஒரோவொருகால் தோன்றும் மின்னொளியைக் கண்டு அதற்கு வடவை அல்லது வடவனல் எனப் பெயரிட்டிருந்தனர். குமரிக்கண்டத்திற் பல பேரழிவுகள் நேர்ந்ததினால், ஊழியிறுதியழிவிற்கு அவ் வடவையே காரணமென்றுங் கருதினர். தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்றுமேனும், பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது. “Aurora, n. Luminous atmospheric (prob. electrical) phenomenon radiating from earth’s northern (borealis) or southern (australis) magnetic pole” என்று COD கூறுதல் காண்க. வடவர் வடவை என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, வடபா என்னும் அதன் வடமொழி வடிவிற்குப் பெண்குதிரை என்று பொருளிருத்தலால், அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி வடபாக்னி என்றும் வடபா முகாக்னி என்றும் பெயரிட்டு, பெண்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று பொருளும் விரித்துவிட்டனர். அக் கதை வருமாறு: கிருதவீரியன் மக்கள், பிருகு முனிவர் ஈட்டிவைத்த பெருஞ் செல்வத்தைக் கவரவேண்டி அம் முனிவரின் மக்களையும் பேரப் பிள்ளைகளையுங் கருநிலையிலுங் கொன்றதினால், அக் குடும் பத்தைச் சேர்ந்த ஒரேயொரு பெண் தன் கருவைத் தன் தொடையில் மறைத்து வைத்திருந்து, அது பிறந்தபின் ஔர்வ எனப் பெயரிட்டாள். (ஊரு=தொடை. ஔர்வ=தொடையிற் பிறந்தவன்). அவ் வாண்பிள்ளை பெரியவனானபின், தன் தந்தைமாரைக் கொன்றவரைப் பழிவாங்கும் பொருட்டுத் தவஞ்செய்ய, அத் தவத்தினின்று உலகையே அழித்துவிடத்தக்க ஒரு பெருந்தீ கிளர்ந்தெழுந்தது. அதைக் கண்டு அவன் முன்னோர் அஞ்சி அதைக் கடலில் இட்டுவிடுமாறு கட்டளை யிட, அவனும் அதற்கிணங்கி அங்ஙனமே இட்டுவிட்டான். அது ஒரு பெண்குதிரைமுக வடிவு கொண்டு அங்குத் தங்கிற்று. மா. வி. அ. இக் கதையையும் வரைந்து, வடபாக்னி என்னுஞ் சொற்கு, “mare’s fire,‘ submarine fire or the fire of the lower regions (fabled to emerge from a cavity called the ‘mare’s mouth‘ under the sea at the South Pole'') என்று விளக்கமுங் கூறியுள்ளது. மேலையர் தமிழைக் கல்லாமையால் விளையும் தீங்கு இதனால் வெளியாகின்றது. வடை-வடா வட்டை-வடை = வட்டமான பலகார வகை. ஒ.நோ: பெட்டை-பெடை. “globule, round mass or cake, L.“ என்று மா. வி. அ. வும் குறித்திருத்தல் காண்க. வரணம்-வர்ண (இ.வே.) வள்-வளை. வளைத்தல் = எழுதுதல், வரைதல். உருவப் பல்பூ வொருகொடி வளைஇ'' (நெடுநல். 113). வள்-வட்டு-வட்டி. வட்டித்தல் = 1. வளைத்தல் (இலக். அக.). 2. எழுதுதல் (சிலப்.21: 46, அரும்.). எழுத்திலும் ஓவியத்திலும் வளைகோடும் வளைபூச்சும் நிரம்பி யிருப்பதால், வளைத்தற் கருத்தில் எழுதுதற் கருத்துத் தோன்றிற்று. வள்-வண்-வண்ணம் = 1. வளைத்தெழுதும் எழுத்து அல்லது ஓவியம். 2. எழுதும் மை அல்லது கலவை நீர். பலகை வண்ணநுண் டுகிலிகை'' (சீவக. 1107). 3. எழுதிய கலவை நீரின் நிறம். வான்சுதை வண்ணங் கொளல்'' (குறள். 714). 4. ஓவிய அழகு. பிறைநுதல் வண்ண மாகின்று'' (புறம். 1). 5. அழகிய கோலம். 6. ஓவியக்கலவை, நிறத்தின் வகை. 7. ஓசைவகை, பாட்டு, செய்யுள், சிறப்போசைச் செய்யுள், மெட்டு, பண். வண்ணமாலை = நெடுங்கணக்கு (எழுத்துக் கோவை). வண்ணத்துப் பூச்சி-வண்ணாத்திப் பூச்சி = பல நிறம் அல்லது கோல முள்ள பூச்சி. வண்ணத்தான், வண்ணான் = ஆடைகளை நன்றாய் வண்ணஞ் செய்பவன். வண்ணக்கன் = பொற்காசுகளின் அல்லது பொற்கட்டிகளின் மாற்று நிறத்தை அல்லது திறத்தை நோட்டஞ் செய்பவன். வண்ணமகள் = கோலம் (அலங்காரம்) செய்பவள். வண்ணம்-வண்ணகம் = 1. முடுகிய வோசைக் கலிப்பாவுறுப்பு. 2. வரணித்துப் புகழ்கை. வண்ணம் - வண்ணி. வண்ணித்தல் = பலவகையில் அல்லது பலவேறு ஓசைபடப் புகழ்ந்து பாடுதல். வண்ணி-வண்ணிகன் = எழுத்தாளன். வள்-வர்-வரி. வரிதல் = 1. எழுதுதல் (பிங்.). 2. சித்திரமெழுதுதல், பூசுதல். வரிவனப் புற்ற வல்லிப் பாவை (புறம். 33). வரித்தல் = 1. எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை'' (சீவக. 2532). 2. சித்திரமெழுதுதல், பூசுதல். 3. கோலஞ் செய்தல். அணிமலர் துறைதொறும் வரிக்கும்'' (ஐங். 117). வரி = 1. வளைகோடு (வரிப்புலி = வேங்கை). 2 கோடு. 3. எழுத்து (அரிவரி = அரியென்று தொடங்கும் நெடுங்கணக்கு). 4. இசைப்பாட்டு. வரிநவில் கொள்கை'' (சிலப். 13:38). 5. நிறம். வரியணிசுடர் வான்பொய்கை'' (பட்டினப். 38). 6.அழகு. வரிவளை''(பு.வெ. 11:12). தெ. வரி, க. பரெ. (b), ம. வரெ. வரி+அணம் = வரணம் = எழுத்து, பூச்சு, நிறம், வகை, அழகு, நிறம்பற்றிய குலம். வரணி-வர்ண் வரணம்-வரணி. வரணித்தல் = புனைந்துரைத்தல். வரணம், வரணி என்னும் இரு சொல்லும், வடசொல் வடிவைப் பின்பற்றி வருண, வருணி எனத் தமிழில் வழுப்பட எழுதப்பட்டுள்ளன. gh©oeh£o‰ Fy« Édî«nghJ “v‹d tuz«?'' என்றே இன்றும் ரகர வடிவில் நாட்டுப்புறத்தில் வழங்குதல் காண்க. வண்ணம், வரணம் என்னும் இரு சொல்லும் ஒரே மூலத்தினின்று தோன்றியவையே. ஆயின், முன்னது அடிப்படை மூலமாகிய வள் என்பதினின்றும், பின்னது மேற்படை மூலமாகிய வரி என்பதினின்றும் திரிந்தவையாகும். வள்-வண்-வண்ணம்-வண்ணி-வண்ணனை. (வள்-வர்)-வரி-வரணம்-வரணி-வரணனை. ஒ.நோ; திள்-திண்-திண்ணை (அடிப்படை மூலம்). (திள்-திர்-) திரள்-திரளை-திரணை (மேற்படை மூலம்). திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே மூலத்தி னின்றும் தோன்றிய ஒருபொருட் சொற்களே. இவை யிரண்டும் இன்றும் நெல்லைநாட்டு உலக வழக்காம். இங்ஙனமே வண்ணம், வரணம் என்பனவும். வண்ணம் என்னும் அடிப்படை மூலத்திரிபு வடமொழியி லின்மையும், வரணம் (வர்ண) என்னும் மேற்படை மூலத்திரிபே அதி லுண்மையும், கவனிக்கத் தக்கன. வண்ணக வொத்தாழிசைக்கலி என்னும் செய்யுள்வகைப் பெயர், தொல்காப்பியர் முந்து நூலிற் கண்ட இலக்கணக் குறியீ டாதலின், தலைக் கழகக் காலத்தது என்று அறிதல் வேண்டும். வர்ண் என்று வடவர் காட்டும் மூலம் செயற்கையே. “var|n (rather Nom. fr. var|n|a)'' என்று மா.வி. அ. குறித்திருத்தல் காண்க. tÂf‹-tÂ{ (ï.nt.), வணிஜ பண்ணுதல் = செய்தல், உண்டாக்குதல், விளைவித்தல், உரு வாக்குதல். இச் சொற்கு வடவர் கூறும் பண்டமாற்றுப் பொருள் கற்பனையே. பண்ணியம் = 1. பண்ணப்பட்ட பொருள், பண்டம். பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்'' (மதுரைக்.405). காம ருருவிற் றாம்வேண்டும் பண்ணியம்'' (மதுரைக். 422). சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்'' (மதுரைக். 506). 2. விற்கப்படும் வணிகப்பொருள். கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ'' (மணிமே. .7:24). பண்ணிய விலைஞர் = பண்டவாணிகர். பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய விலைஞர்'' (பதிற். 76:5). பண்ணியாரம்-பண்ணிகாரம் = பலபண்டம் (திவா.). தெ. பண்யாரமு. பண்ணியன்-(பண்ணிகன்)-(பணிகன்)-வணிகன். ஒ.நோ. பண்ணியாரம்-பண்ணிகாரம். பண்ணியாரம்- பணியாரம். பகு-வகு. வணிகன்-வணிகம். வணிகன்-வாணிகன்-வாணிகம். வாணிகன்-வாணியன். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.'' (தொல். 1578). Guj. van|iyo, baniya, A. banyan, Port. banian, E. banian, banyan. குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு கழக இலக்கிய இறந்துபாட்டாலும், பல சொற்களின் வேர்களையும் இணைப்பு அண்டுகளையும் இன்று காட்ட இயலவில்லை. வணிகன்-வணிகு. ஒ.நோ: வேந்தன் (வேய்ந்தோன்)-வேந்து. அதன்கண் வணிகொருவ னுளன்'' (மேருமந். 280). வணிகு - வணிஜ். இனி, பொருள் பண்ணுபவன் (ஈட்டுபவன்) பணிகன் என்றுமாம். “vanij. m. (also written banij.) a merchant, trader RV. &.&'' என்பது மா. வி. அ. வதி-வஸ் பதிதல் = தங்குதல். பதிசென்று பதிந்தனன்'' (தணிகைப்பு. பிரமன். 2). பதி = 1. உறைவிடம் (திவா.). பதியிற் கலங்கிய மீன்'' (குறள்.1116). 2. வீடு (திவா.) 3. கோயில் (சங். அக.). 4. நகரம். பதியெழு வறியாப் பழங்குடி'' (சிலப். 1 : 15). மதுரையம்பதி, தில்லையம்பதி முதலியன இலக்கிய வழக்கு. பதி-வதி. ஒ. நோ: பகு-வகு, படிவு-வடிவு. வதிதல் = தங்குதல். வதிமண வம்பலர் வாயவிழ்ந் தன்னார்'' (பரிபா. 10: 20). வதி = தங்குமிடம். மாவதி சேர'' (கலித். 119). வதி-வஸ்-வாஸ். ஒ.நோ: மதி-மஸ்-மாஸ (மாதம்). வயிரம்-வஜ்ர வல்-வள்-வலிமை (பிங்.) வள்வார் முரசு'' (பு. வெ.3: 2. கொளு). வள்-(வய்)-வை-வயிர் = திண்ணிய கொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப'' (திருமுருகு. 120). இதன் உரை: திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்ப'' - நச். வயிர்த்தல் = 1. வயிரங்கொள்ளுதல். வயிர்த்தன ணிலத்தினுயர் வானமினி தென்பாள்'' (பாரத.சம்பவ. 102). 2. செற்றங்கொள்ளுதல். வயிர்-வயிரி = 1. வன்னெஞ்சன் 2. செற்றமுள்ள பகைவன். வயிரித்தல் = மனம் முதலியன கடினமாதல். ஒட்டாரம் = (பிடிவாதம்) செய்தல். வயிர்-வயிரம் = 1. திண்மை. உலந்தரு வயிரத் திண்டோள்'' (கம்பரா.பூக்கோ.10). 2.வலிமை. ``தோள்வயிரந் தோன்ற'' (சீவக.645). 3. மரவயிரம் (பிங்.). 4. தொண்மணியுள் ஒன்று. "வயிரப் பொற்றோடு'' (சிலப். 29, செங்குட்டுவன் கூற்று). 5. மனவயிரமாகிய செற்றம். வடமொழியில் இதற்கு மூலமில்லை. “Another vuj or uj, ‘to be hard or strong‘ may be inferred from ugra, ojas, va$jra, va$ja, (qq. vv.) the last of which gave rise to the Nom. va$jaya'' என்று மா. வி. அ. குறித்திருப்பதை நோக்குக. வரால்-முரல வரி = நீளம்; வரி-வரால் = குறவையினும் நீண்டிருப்பது E. murrel. முர்(சூழ், பின்னு, பிணை) என்பது மூலமாயிருக்கலாமென்று, மா.வி.அ. கருதுவது சரியன்று. வரி-வ்ரீறி (அ.வே.) வரி = வரிச்சம்பா, வரியுள்ள நெல், நெல் (பிங்.). எடுத்துவரி முறத்தினி லிட்டு'' (தனிப்பாடல்). மா.வி.அ. “of doubtful derivation'' என்று குறித்திருத்தல் காண்க. வல்-வல் வல்-வல. வலத்தல் = 1. வளைத்தல். 2. சூழ்தல். இழைவலந்த (புறம். 136). 3. சுற்றுதல். நெடுங்கொடி...th§Fáid வலக்கும்'' (புறம். 52). வலந்தம் = வளைவு. வலம்-பல (d) -(இ.வே.) L. valere, be strong. வகரம் பகரமாய்த் திரிந்துள்ளது வடமொழியின் பின்மையைக் காட்டும். வள்ளி-வல்லி வள்-வள்ளி = வளைந்த கொடிபோன்ற பெண், குறிஞ்சிநிலப் பெண், முருகன் தேவி. ஒ.நோ: கொடு-கொடி = வளைந்த தண்டு. கொடி- கொடிச்சி = குறிஞ்சிநிலப் பெண். கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல்'' (ஐங். 296). வளையம்-வலய வள்-வளை-வளையம் = வட்டம், வளையல். வனம்-வனஸ்- (இ.வே.) வனம் = அழகு. வனமுலை'' (கலித். 97). வனப்பு = அழகு. செவ்வானத்து வனப்பு'' (புறம். 4). thlif-ghl¡ (bh, t |) thழ்-(வாHif)-thlif = வீட்டிற் குடியிருத்தற்குக் கட்டும் மாத அல்லது ஆட்டைக் கட்டணம். பின்பு ïa§குதிணைப்பெhUŸfளைப்பயன்படு¤தற்குக்கொடுக்Fங்கட்டணமு«இப்பெaர்gற்றது. வடவர்g£ (bhat |) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டி, அதையும் ¥U¤j(bhr|ta) vன்பதன்âரிபாக்குவர்.bhr|= பொறு. bhr|ta=jh§f¥bg‰wt‹, கூலிக்கு அமர்த்தப்பெற்ற வேலைக்காரன் அல்லது உழைப்பாளி அல்லது படைஞன். இவ்வகையிலும் மூலம் தமிழ்ச்சொல்லே. bghW-bhr|. வாடி-வாடீ (t|) வாடுதல் = வளைதல், பயிர் பச்சை வளைந்து பட்டுப்போதல். வாட்டம் = வளைவு, பொலிவழிவு. அங்கணம் வாட்டசாட்டமாயிருந்தால் தண்ணீர் சரட் டென்று போகும் என்னும் வழக்கை நோக்குக. வாடு-வாடி = வளைசல், அடைப்பு, சூழ வேலி கோலிய விறகு கடை அல்லது மரக்கடை. வாரி-வாரி (இ.வே.) வார்தல் = ஒழுகுதல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள'' (தொல். 800) வார்-வாரி = நீர், வெள்ளம், கடல், நீர்நிலை. வார் = நீர். வாராயிர முகமா நுகர்மஞ்சு'' (பாரத அருச்சுனன்றவ. 159). வாரணம்-வாருண, வருண வரிதல் = வளைதல். வரி-வார்-வாரணம் = நிலத்தைச் சூழ்ந்துள்ள கடல்.வாரணஞ் சூழ்புவி'' (தனிப்பாடல்). வாரணம்-வாரணன் = கடல்தெய்வம். வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்) என்பதை மூலமாகக் காட்டி அனைத்தையும் மூடும் வானம் (All-enveloping sky) என்று பொருள் கூறுவர். இது வருணனை மழைத் தெய்வமாகக் கொண்ட இடைக்காலத்திற்கு மட்டும் பொருந்துமேயன்றி, கடல்தெய்வமாகக் கொண்ட முற்கால பிற்கால நிலைமைக்குப் பொருந்தாது. தமிழர் வாரணனை என்றும் கடல்தெய்வமாகவே கொண்டனர். வருணன் மேய பெருமண லுலகமும்'' (தொல். 951) இது `வாரணன் மேய நீர்மண லுலகமும்' என்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் வருண என்னும் வடசொல் வடிவிற் கேற்ப வருணன் என்று திரித்துக்கொண்டார். வடவர் காட்டும் வ்ரு என்னும் மூலத்திற்குச் சூழ்தற் பொருளு முள்ளது. இனி, வரி என்னும் தமிழ்ச்சொற்கு மூடுதற் பொருளுமுள்ளது. வரிதல் = மூடுதல். புண்ணை மறைய வரிந்து'' (திவ். திருவாய்.5:1:5). வளைவுக் கருத்தடிப்படையிலேயே, வாரணம் என்பது கேடகத்தையும் சங்கையும் குறிக்கும். வாலம்-வால, பால (b), வார வார்-வால் = நீண்ட வுறுப்பு. ஒ.நோ: நீர்-நீல். "வால் குழைக்கு நாய்'' (நாலடி. 213). வால்-வாலம் = 1. வால். வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி''(காஞ்சிப்பு. மணிகண். 14). 2. நீண்டு ஒடுங்கிய துணி அல்லது கந்தை. வாலமுகம் = நீண்டமுகம்(உ. வ.). வாலுகம்-வாலுக, ghYf(b) = மணல். வால் = வெள்ளை. வாலுகம் = வெண்மணல். வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பின்'' (சிலப்.6:131). மா. அ. É.of doubtful derivation'' என்று குறித்திருத்தல் காண்க. வாளம்-வால வள்-வாள்-வாளம் = வட்டம், வட்டமான மதில், மதில் போன்ற மலைத்தொடர். வாளி1-பாலி வள்-வாள்-வாளி = வட்டமாயோடுகை. மாதிர முறப்பல வாளி போதுமால்'' (பாரத. சூது. 121). வாளி வெம்பரி''(பாரத. குரு. 108). மா. அ. வி. சுற்றளவு (circumference) என்று மட்டுங் குறித்துள்ளது. வாளி2-வாலீ வள்-வாள்-வாளி = வளையம், வளைந்த அல்லது வளைய வடிவான காதணி. வாளிமுத்தும்'' (குமர. பிர. முத்து. பிள்.11). வாளிகை-வாலிகா வாளி-வாளிகை = வளைய வடிவான காதணி. சுட்டிகையும் வாளிகையும்'' (பதினொ. திருக்கைலாய. 68). விக்கல்-ஹிக்கா விக்கு-விக்குள், விக்கல். உண்ணுநீர் விக்கினா னென்றேனா'' (கலித். 51). நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்'' (குறள். 355). நெஞ்சே விக்கல் வராது கண்டாய்'' தெ. வெக்கில்லு, க. பிக்கலு (b), k. எக்கில். E. hicket, hiccup, hiccough. இது ஒலிக்குறிப்புச் சொல்லாயினும், ஆரிய இனத்தினும் தமிழ் இனம் முந்தியதாலின், இது தமிழ்ச்சொல்லே யெனத் தெளிக. விட்டம்-விஷ்ட விள்-விடு-விட்டம். விள்ளுதல் = பிரிதல். விடுதல் = பிரித்தல். விட்டம் = 1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் கோடு. 2. குறுக்குத்தரம் இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென'' (அகம்.167). குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்தது போல'' (பழமொழி). விட்டை-விஷ்டா விள்ளுதல் = நீங்குதல், வெளிப்படுத்துதல். விள்-விட்டை. கழுதை விட்டையைக் கைநிறைய ஏந்தினாற் போல'' (பழமொழி) வடவர் விக்ஷ்3 என்பதை மூலமாகக் காட்டி, அதன் புணர்ப்புத் திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர். விள்-விக்ஷ் (மலம்). ஒ.நோ: உள்-உஷ், சுள்-சுஷ். விள்-விண். பிள்-விள். பிள்-(பிய்)-பீ. பிள்-பீள்-பீளை = கண்மலம். விடி-வ்யுஷ்டி (இ.வே.) வெள்-வெளு. வெளுத்தல் = 1. வெண்மையாதல். 2. விடிதல். கிழக்கு வெளுத்தது (உ. வ.). வெள்-வெளி. வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல். 2. விடிதல். வெளி-வெடி. ஒ.நோ: வெளி-வெடி = திறந்தவெளி (பிங்.). களிறு-கடிறு, கெளிறு-கெடிறு. வெடிதல் = விடிதல். என்றூழ் வெடியாத போதிற் கொய்தான்'' (செவ்வந்திப்பு, உறையூரழி. 47). வெடி = விடிவெள்ளி (பிங்.). வெடியல் = விடியல். வெடிவு = விடிவு. வெடி-விடி. விடிதல் = கதிரொளி தோன்றுதல். வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே'' (சீவக. 219). விடி = விடிகாலை. ``விடிபக லிரவென் றறிவரி தாய (திவ். பெரிய. 4 : 10 : 8). விடி-விடியல். வைகுறு விடியல் '' (தொல். பொருள். 8). விடியல் வைகறை யிடூஉ மூர (அகம். 196). விடி-விடிவு-விடிவை. "விடிவை சங்கொலிக்கும் (திவ். திருவாய். 6 : 1 : 9). மா. வி. அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு: வ்யுஷ்1 (ப்யுஷ்) = 1. எரி. 2. பிரி. 3. தள், வெளிவிடு. வி+வஸ்2 (ஒளிர்) = வ்யுஸ்2 (vy-us|) = விடியல் (அ. வே.) = வ்யுஷி (7ஆம் வேற்)-இ. வே.). வ்யுஷித (7ஆம் வேற்.) = விடியல். வ்யுஷ்ட = விடிந்து. வ்யுஷ்டி = விடியல் (இ.வே.). இதை நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ் என்று திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின் றனர் என்பது தெரிய வருகின்றது. உள் (ஒள்) - உஷ் என்பது, முன்னரே உண்ணம் (உஷ்ண) என்னும் சொல்லின்கீழ்க் காட்டப்பெற்றது. விடை-வ்ருஷ, வ்ருஷப விடைத்தல் = விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல். விலங்கினத்திற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை உணர்த்தும். விடை = 1. காளை. பீடுடைய போர்விடையன் (தேவா. 539:2). 2. எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7:14). 3. வெள்ளாட்டுக்கடா. மாடந்தோறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33). 4. ஆண்மரை. மரையான் கதழ்விடை (மலைபடு. 331). 5.ஆண்வெருகு. வெருக்கு விடையன்ன (புறம். 324). விடை-விடலை = இளங்காளை, காளை போன்ற மறவன், பாலைநிலத் தலைவன். விடலை. L. vitula, Gk. italos, Skt. vatsa. விடை என்பது விலங்கினத்தின் ஆண்பாலைக் குறிக்கும் பொதுச் சொல்லாயினும், வழக்கு மிகுதிபற்றிச் சிறப்பாகக் காளையையே உணர்த்தும். வடவர் காட்டும் மூலம் வ்ருஷ் (மழைபெய்) என்பதே. மழைக் கருத்தினின்று, ஆண்மைக் கருத்தை இருவேறு வகையில் கடுகளவும் பகுத்தறிவிற் கொவ்வாதவாறு வலிந்து வருத்தியிருக்கின்றனர். ›UZ = kiHbgŒ (ï.nt.), மழைபோல் அம்பைப் பொழி, ஆண்மைகொள், பிறப்பிப்பு ஆற்றல் பெறு. வ்ருஷன்-(ஒருகால்,முதலில்பெய்கின்ற,தெளிக்கின்ற,சினைப்பிக்கின்ற'')ஆண்மையுள்ள,வலிமையுள்ள,மைந்துள்ள(இ.வே.)ஆடவன், ஆண், ஆண்விலங்கு, காளை, ஆண்குதிரை, தலைவன். வ்ருஷ = ஆடவன், ஆண், கணவன், ஆண்விலங்கு, காளை, விடையோரை,தலைவன்,தலைசிறந்தது. வ்ருஷப (bh) =வ்ருஷ‹(இ.வே.). வ்ருஷப-ருஷப = காளை (இ.வே.). வ்ருஷப என்பதன் முதற்குறையே ருஷப என்பது.ஆயினும், வடவர் அது வந்த வழியை அறியாமலோ, tடசொல்லாகக்fட்டல்nவண்டிnவண்டுமென்றோ,Uஷ்2vன்பதைUஷபvன்னும்toவிற்குமூyமாகக்கhட்டுவர். ருZ2 = செல், இயங்கு; குத்து, கொல்; உந்து, தள். விடை என்னும் சொல்லின் திரிபாதலாலேயே, ›ருஷvன்பதில்tகரமுள்ளது.MÆ‹, வ்ருஷ் (மழைபெய்) என்னுஞ் சொல்லொடு அதைத் தொடர்புபடுத்தி உத்திக்கொவ்வா முறையில் பொருள் தொடர்பு காட்டினர். அதனோடமையாது, ருஷப என்னும் முதற்குறைத் திரிபையும் வேறு சொல்லாகக் கொண்டு, அதற்கும் பொருந்தா முறையிற் பொருள் பொருத்தினர். விடை என்பது கொச்சை வடிவில் விட என்று நிற்கும். இடையின விடைச்செருகல் வழக்கப்படி வி-வ்ரு என்றும், மெய்த்திரிபு மரபுப்படி ட-ஷ என்றும், திரிந்தனவென உண்மை அறிக. விண்டு-விஷ்ணு விள்ளுதல் = விரிதல், வெளியாதல். விள்-வெள்-வெளி. விள்-விண் = 1. விரிந்த அல்லது வெளியாகிய வானம். விண்பொருபுகழ் விறல்வஞ்சி (புறம். 11). 2. வானத்திலுள்ள முகில் (திவா.). 3. மேலுலகம். விண்மீ திருப்பாய் (திவ். திருவாய்.6:9:5). விண்-விண்டு = 1. வானம். விண்டுலாய் நிமிர் கிரவுஞ்சகிரி '' (கந்தபு. தாரக. 2). 2. முகில் (பிங்.). 3. வானளாவு மலை. ``விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி" (மதுரைக். 202). 4. வானவெளியில் இயங்கும் காற்று (பிங்.). 5. திருமால் (பிங்.). குமரிக்கண்ட முல்லைநிலத்து மக்கள், தங்கட்கும் தங்கள் ஆடுமாடுகட்கும் இன்றியமையாத மழையைத் தரும் தெய்வமென்று கருதியே, கரிய வானத்தை அல்லது முகிலை மாயோன் (கரியோன்) என்னும் பெயரால் வணங்கிவந்தனர். ஒ.நோ: மால் = முகில், மாயோன்: இச் சொல்லே திரு என்னும் அடைபெற்றுத் திருமால் எனத் தெய்வப்பெயராய் வழங்கி வருகின்றது. ஆரியர் வேதக்காலத்தில் கதிரவனையே விஷ்ணு என்றழைத் தனர். பின்னர், தமிழரொடு தொடர்புகொண்டு தமிழ்மதத்தை மேற்கொண்ட பின்பே, விஷ்ணு என்னும் சொல் திருமாலைக் குறிக்க லாயிற்று. வடவர் காட்டும் மூலம் விஷ்1 = வேலைசெய், ஓடு, மேம்படு, மூடு, உண். மா. வி. அ. “prob. for vish, ‘All-pervader’ or worker’ என்று கருதும். எங்கும் நிறைந்திருப்பது என்னும் கருத்தில், விஷ் என்பது விள் என்பதன் திரிபே. ஒ. நோ: உள்-உஷ், சுள்=சுஷ். வித்து-(விதை)-வீஜ, பீஜ (இ.வே.) வித்து = 1. விதை. சுரைவித்துப் போலுந்தம் பல் (நாலடி. 315). 2. விந்து (நாமதீப. 601). 3. காரணம். நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் (குறள். 138). k., bj., து. வித்து, க. பித்து. மா. வி. அ. “of doubtful origin'' என்று குறித்திருத்தல் காண்க. ஆங்கிலர் மதுரையை மெஜுரா என ஒலித்ததையும் நோக்குக. விந்து-பிந்து, விந்து (அ.வே.) வித்து-விந்து = 1. வித்துப்போன்ற நீர்த்துளி 2. நீர்த்துளியாகிய கருநீர் (சுக்கிலம்). 3. உலகத்திற்கு வித்துப்போன்ற மாயை. விந்துவின் மாயையாகிய (சி.சி. 1:19). வியம்-வியத் (இ.வே.) விள்ளுதல்=விரிதல். விள்-(விய்)-வியம் = விரிவு. வியம்பெறு தோற்றமும் (திருக்காளத். பு. ஞானோப. 62). வடவர் வி-யத் என்று பிரித்துப் பிரிந்து போகை என்று பொருள் கூறி, யத் என்பதற்கு இ5 என்பது மூலமெனக் காட்டுவர். இவ் இ என்பது இயல் என்னும் தமிழ்ச்சொல்லின் முதனிலை யாகிய இய்யே என்று முன்னரே காட்டப்பெற்றது. வியம்-வியன்-வியல் = அகலம். ஒ.நோ: திறம்-திறன்-திறல். வியலென் கிளவி யகலப் பொருட்டே. (தொல். சொல். 354). வியன் = 1. அகலம், 2. பெருமை (திவா.) 3. வானம். வியனிடை முழுவதும் கெட (தேவா. 833:7). விருது-விருத, பிருத, பிரத வெல்-(வில்)-(விர்)-(வீறு = வெற்றி). வீறுபெற வோச்சி (மதுரைக். 54). (விர்)-விருது = 1. வெற்றிப்பட்டம். தலம்புகழ் விருது (திருவாலவா. 49:9). 2. வெற்றிக்கொடி. கயல்விரு தனங்கன் (தனிப்பாடல்). 3. வெற்றிச் சின்னம். பருதி.....ÉUJnk‰ கொண்டுலாம் வேனில் '' (கம்பரா. தாடகை. 5) வடவர் காட்டும் மூy«: வி-ருத் (d)=mG, கரை, ஏங்கு, புலம்பு, துயர்கொண்டாடு. விருத=புகழ்ச்சிச் செய்யுள், பாடாண்பாட்டு, ஏத்துரை. இரங்கற் செய்யுளாகிய கையறுநிலையில் ஒரு தலைவனை அல்லது வள்ளலைப் புகழ்ந்து பாடுவது வழக்கமேனும், அழுகைக் கருத்தில் வெற்றிக்கருத்துத் தோன்றுமா என்பதை அறிஞர் ஆய்ந்து காண்க. Éšt«-ãšt (m.nt.), வில்வ விள்-விளம் = வெள்ளையான தோடுடைய fனி.ÉŸ-Ésh-Ésî-Ést«. Éள«-És®-ÉsÇ = விளர். விளா-விளாத்தி. விளவம்-விலவம்-வில்வம் = fருவிளத்திற் »னமானTவிளம்.tlbkhÊÆš மூலமில்லை. விழி-வித் (d) - (ï.nt.) விள்ளுதல் = விரிதல், திறத்தல். விள்-விழி. விழித்தல் = 1. கண் திறத்தல். ``இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித். 144). 2. தூக்கந் தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள். 339). 3. காணுதல். 4. எச்சரிக்கையா யிருத்தல், முற்காப்பா யிருத்தல். 5. கவனித்து நோக்குதல். ``நாட்டார்கள் விழித்திருப்ப'' (திருவாச. 5: 28). 6. விளங்குதல், ஒளிர்தல். பொன்ஞா ணிருள்கெட விழிப்ப (சீவக. 2283). 7. அறிதல். விழி = 1. அறிவு. 2. ஓதி (ஞானம்). தேறார் விழியிலா மாந்தர் (திருமந். 177). L. vide, E. vide, Skt. vid = to know. வித்யா, வித்வான், வைத்ய, வேத, வேதஸ் (dh) முதலிய பல சொற்கள் வித் என்னும் மூலத்தினின்று பிறந்தவையே. ஆகவே ஆரியர்க்கு ஞானமும் வித்தையும் தமிழினின்றே தோன்றின என அறிக. வித்யா என்னும் வடசொல், தமிழில் வித்தை, விச்சை , விஞ்சை என முறையே திரியும். ஆரியர் இதைக்கொண்டு, விழி என்பதன் திரிபே வித் என்பதை அறியாத தமிழரை மயக்குவர். வீ-வீ (இ. வே.) விள்-(விய்)-வீ. வீதல் = நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும் (குறள். 207) 2. மாறுதல். வானின் வீயாது சுரக்கும் (மலைபடு. 76). 3. சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3:7). 4. அழிதல். வீயாச் சிறப்பின் (புறம். 15). வீ = 1. நீக்கம் (பிங்.). 2. சாவு (பிங்.). 3. அழிவு. வீகலந்த மஞ்ஞைபோல் (சீவக. 1104). வடவர் வி-இ5 என்று மூலங்காட்டி, வ்யய் (vyay)=ãǪJ போ (to go apart or in different directions) என்று விரித்து விளக்குவர். வி என்பது விள் என்பதன் திரிபு. இ என்பது இயல் என்பதன் முதனிலை. இயல் = செல்கை, நடக்கை. வீசு1-வீஜ் = விசிறி - வீசு வடவர் விஜ்1 (விசையாக இயங்கு) என்பதை மூலமாகக் கருதுவர். அதுவும் விசை என்பதன் திரிபே. விசு-விசை. விசுவிசு = விருவிரு. விசுவிசென்று பிடித்தெரிந்து விட்டது என்னும் வழக்கை நோக்குக. விசு-விசிறு-விசிறி. விசிறு = வீசு. விசு-வீசு. வீசு2-வாஸ்2 வீசுதல் = மணம் வீசுதல், மணத்தல். வீச்சம்-மணம், நாற்றம். நாறு என்னும் சொற்போன்றே வீசு என்பதும், செய்யுள் வழக்கில் நறுமணத்தையும் உலக வழக்கில் தீய மணத்தையும் உணர்த்தும். வாஸ்-வாஸ = மணம். வாஸ் என்பது பெயரடி வினையே. மா.வி.அ. “perhaps only Nom. fr. next” என்று குறித்திருத்தல் காண்க. `next' என்றது வாஸ என்னும் சொல்லை. வீணை-வீணா விண் = வில் நரம்பு தெறித்தற் குறிப்பு. விண்விண் = 1. யாழ் நரம்பு இசைத்தற் குறிப்பு. 2. புண்ணினால் நரம்பு நோவெடுத்தற் குறிப்பு. விண்-வீணை. நாரதன் வீணை நயந்தெரி பாடலும் (சிலப். 6 : 18). மங்கலம் இழப்ப வீணை (சிலப். 6 : 22). மாசில் வீணையும் மாலை மதியமும் (அப்பர்). ஆரியர் வருமுன்பே தலைக்கழகத் தமிழ் முத்தமிழாய் வழங்கி வந்ததினாலும், நாரதர் தமிழ்நாடு வந்தே இசைத்தமிழ் கற்றுப் பஞ்சபாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலியற்றியதினாலும். கி.பி. 2ஆம் நூற்றாண்டுச் சிலப்பதிகாரம் வீணையைக் குறித்தலாலும், 7ஆம் நூற்றாண்டில் அப்பர் மாசில் வீணை (குற்றமற்ற யாழ்) என்று பாடியிருத்தலாலும், வீணை 11ஆம் நூற்றாண்டில் வடக்கினின்று வந்த ஆரிய இசைக்கருவி என்பார் கூற்றுத் தமிழ் வெறுப்பாலெழுந்த தென்க. வீணை தமிழர் இசைக்கருவியே என்பதைப் பாணர் கைவழி என்னும் நூலுட் கண்டு தெளிக. வடவர் வேண் என்றொரு சொல்லைப் படைத்து இசைக்கருவி யியக்குதல் என்று பொருள் கூறி, வேணு (மூங்கில்) என்னும் சொல்லோடு தொடர்பு காட்ட விரும்புவர். வேணு என்பது வேய் என்னும் தென்சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. மேலும், அதன் பொருந்தாமையையும் விண் என்பதன் முழுப் பொருத்தத்தையும் பகுத்தறிவுள்ளார் கண்டறிக. மா. வி. அ. “of doubtful derivation” என்று குறித்திருத்தலையும், மூலங் காட்டாமையையும், வேண் என்னும் சொல்லைப்பற்றி “prob. artificial” என்று கருதுதலையும், நோக்குக. வெஃகு-பிஷ் (bh) - இ.வே. வெள்ளுதல் = விரும்புதல். வெள்-வெண்டு. வெண்டுதல் = ஆசைப்படுதல். வெள்-வேள். வேட்டல் = விரும்புதல். வேள்-வேண்டு. வேண்டுதல் = விரும்புதல், கெஞ்சுதல், இரத்தல். வெள்-வெள்கு-வெஃகு. வெஃகுதல் = விரும்புதல், பேராசை கொள்ளுதல், பிறர் பொருளை விரும்புதல். வெஃகு-க. பேக்கு (b). E. beg. பிக்ஷ் என்பது பஜ் (bh) என்பதன் ஆர்வ வினையென்றும், பங்கு கொள்ள விரும்பு என்று பொருள்படுவதென்றும், மா.வி.அ. கூறும். “Desid. of bhaj, lit. ‘to wish to share or partake.” பஜ் என்பது பகு என்பதன் திரிபென்று முன்னரே காட்டப் பெற்றது. Beg என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் மூலத்தை அறியாது, “perh. shortened fr. F. beguiner be a beghard or beguin, lay brother of mendicant order named f. Lambert Begue” என்று COD வரைந்திருப்பது பொருந்தாது. வெஃகா-வேகா (g) வெஃகு = மிக விரும்பு. வெஃகு-வெஃகா=1. காஞ்சிபுரத்தருகில் ஓடும் ஆறு. சேயாற்றாலும் வெஃகாவினாலும் (S .I.I.II, 352: 115). 2. திருமால் திருப்பதிகளுள் ஒன்று (திவ். இயற். 3: 62). வெஞ்சணம்-வ்யஞ்சன அண்ணுதல் = நெருங்குதல், கூடுதல், பொருந்துதல். அண்-ஆணம் = கூட்டு, நேயம், கறிக்கூட்டு, குழம்பு. வெந்த ஆணம்-வெஞ்சணம் = வேக வைத்த கூட்டு. பச்சடி x ஆணம். ஆணம் வெஞ்சணம் என்னும் இரு சொற்களும் பெரும்பாலும் கீழ் வகுப்பாரிடையே வழங்குகின்றன. ஆணம் என்னும் சொல்லே வெந்த குழம்பைத்தான் குறிக்கும். ஆயினும் பச்சடியினின்று தெளிவாய் வேறுபடுத்திக் காட்டற்கு வெந்த என்னும் அடை பெற்றது. நண்டாணமுங் களியும் தின்றாலல்லோ தெரியும் என்பது பழமொழி. இதில் ஆணம் என்பது சமைத்த குழம்பைக் குறித்தல் காண்க. வெஞ்சணம்-வெஞ்சனம்-வெஞ்சினம். வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது (காளமேகம்) வெஞ்சினங்க ளென்றும் விரும்பாளே (தனிப்பாடல்) வடவர் காட்டும் வி+அஞ்ச் (vy-anj) என்னும் மூலத்திற்கும் வெஞ்சணத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. அஞ்ச் = எண்ணெய் தேய் அல்லது சாயம் பூசு, தோற்றுவி, வெளிப்படுத்திக் காட்டு (இ. வே.). வ்யஞ்ச் = நன்றா யெண்ணெய் தடவு, தோற்றுவி, வெளிப்படுத்திக் காட்டு (இ. வே.). அணிகலம், அடையாளம், மெய்யெழுத்து முதலிய பொருள் கட்கு வடவர் காட்டும் மூலம் பொருந்தும். ஆயின், வெஞ்சணத் திற்குப் பொருந்தாது. வடிவொப்புமைபற்றித் தென்சொல்லை வடசொல்லோடு தொடர்புபடுத்தியுள்ளமை வெளிப்படை. வேண்-வேந் (இ.வே.) வெள்-வெண்டு. வெள்-வேள்-வேண்-வேண்டு. வேள்-வேட்பு, வேட்கை. வேண்+அவா=வேணவா. வேணும் (உ.வ.) = வேண்டும். வெள்-வெள்கு-வெஃகு. வேந் = பேரார்வங்கொள், ஏக்கமுறு (இ.வே), பொறாமைப்படு (இ. வே.). தாது பாடம் இதை வேண் (பற்று, எடு) என்னும் சொல்லின் மறுவடிவாகக் கொள்வது பொருந்தாது. வேலை-வேலா = கடல் வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாயிற்று (பழமொழி) 2. சூழெல்லை. வேல்-வேலை = 1. எல்லை. 2. நிலத்திற்கு எல்லையாக வுள்ள கடல். வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் (திருவாச. 6 : 46). 3. கடற்கரை (பிங்.). பௌவ வேலை (கந்தபு. மேருப். 46). வேளை-வேலா வேலை = 1. எல்லை. காவலெல்லை, அமையம். ஒ.நோ: கூறிய வெல்லையில் (கம்பரா. விபீடண. 97). 2. காலம் (பிங்.). மணந்தா ருயிருண்ணும் வேலை (குறள். 1221). வேலை-வேளை=1. அமையம். எ-டு: வந்த வேளை நல்ல வேளை. 2. சிறுபொழுது. எ-டு: காலைவேளை. 3. பகற்பகுதி. எ-டு: இருவேளைப் பள்ளி. 4. நாட்பகுதி. எ-டு: பகல்வேளை, இராவேளை. 5. மருந்துண்ணும் நேரம். எ-டு: மூவேளை மருந்து. 6. நேரம், காலப்பகுதி. எ-டு: வேளைபார்த்து அனுப்பி வைக்க வேண்டும். வைகை-வேகவதீ வைகுதல் = தங்குதல். வைகு-வைகை-தங்கிச் செல்லும் ஆறு. தங்கிச் செல்லுதலாவது மெல்லச் செல்லுதல். வையை யன்ன வழக்குடை வாயில் (மதுரைக். 35: 6). வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் (புறம். 71). 4. தென்சொல் மூலத் திரிசொற்கள் தமிழ் வடமொழி (1) F¿¥bghÈ¢ brhš âUâU ¤U¢(ï.nt.)=gh® grgr g¢(ï.nt.)= " (2) மரூஉ அருந்து அத் (d)ï.nt. (3) சிதைவு செவியுறு ச்ரு (இ.வே.) (4) மேற்படை வளர்ச்சி கரணம் கரண-காரண, கார்ய முகம் முக-முக்ய (அ.வே.) (5) விரிப்பு கரு f®¥g(garbha)-ï.nt. வரி (நெல்) வ்ரீஹி (6) தொழிற்பெயர் வள்-வட்டு வ்ருத் = திரும்பு வினைமுதலாதல் - வட்டம் வளை குரு - குருத்தல் க்ருத் (dh) = சின = சினத்தல் இவ் வியல்பு மேலையாரியத்திலும் அமைந்துள்ளது. ›U¤-L. vertere, Slav. vruteti, vratite. Lith. vartyti, Goth. wairthen, Ger. werden, E-ward. 5. தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள் தமிழ் வடமொழி உ+தூளி c¤(d)+öyd (dh) = உத்தூலன கும்+பிண்டம்+சரணம் ஸபிண்டீகரணம் F«k-L. கும், Gk. á«-(sym), Skt. ஸம்-ஸ 6. மொழிபெயர்ப்புச் சொற்கள் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி அங்குற்றை தத்ரபவத் நிலை ஸ்தாய் ஆனைத்திப்பிலி ஹஸ்திப் நூற்றுவரைக் சதக்நீ பிப்பலி கொல்லி இங்குற்றை அத்ரபவத் புள் சகுந இடையினம் அந்தஸ்த பூப்பு புஷ்ப உடனே ஸகயா பொறாமை அக்ஷமா காண்வரு தர்சநீய மன்பதை ஜனபத காலதர் வாதாயந மான்றலை ம்ருக சீர்ஷ கேள்வி ச்ருதி(இசையலகு) விலங்கு த்ரியக்ஸ் கைம்மா ஹஸ்திந் அறுபருவப் பெயர் வேத ஆரியரின் முன்னோர் இருந்த வடமேலை நாடுகட்கு, இளவேனில் (Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நாற் பெரும்பொழுதே உரியன. தென்னாடு வந்து தமிழரோடு தொடர்புகொண்ட பின்னரே, தமிழகத்திற்குரிய அறு பெரும் பொழுதுகளையும் ஆரியர் மொழிபெயர்த்துக் கொண்டனர். தமிழ் வடமொழி தமிழ் வடமொழி இளவேனில் வஸந்த்த கூதர் சரத் முதுவேனில் க்ரீஷ்ம (g) முன்பனி அச்சிர கார் வர்ஷ பின்பனி ஹேமந்த்த எழுகிழமைப் பெயர் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி ஞாயிறு ஆதித்ய அறிவன் புத (b, dh) திங்கள் ஸோம வியாழன் ப்ருஹஸ்பதி செவ்வாய் அங்கார, வெள்ளி சுக்ர அங்காரக காரி (சநி) பன்னீரோரைப் பெயர் தமிழ் வடமொழி இலத்தீனம் மேழம் (மேடம்) மேஷ Aries விடை வ்ருஷப Taurus இரட்டை(ஆடவை) மிதுன Gemini கடகம் கர்க்கடக Cancer ஆளி (மடங்கல்) ஸிம்ஹ Leo கன்னி கன்ய Virgo துலை துல Libra நளி வ்ருச்சிக Scorpio சிலை தநு (dh) Sagittarius சுறவம் மகர Capricorn கும்பம் கும்ப (bh) Acquarius மீனம் மீன Pisces இன்று தமிழ்நாட்டில் வழங்கும் கணிய (ஜோதிட) நூல், குமரி நாட்டிலேயே தமிழரால் முற்றும் அறியப்பட்டுவிட்டது. அதை வழிவழி கையாண்டுவந்த வள்ளுவரைத் தீண்டத்தகாதவரென்று தாழ்த்தி, ஆரியர் பெரும்பாலும் தமக்கே அந் நூலாட்சியை உரிமை யாக்கிக்கொண்டனர். எழுகோள்களும் இருபத்தேழு நாண்மீன்களும் ஓர் ஆண்டு வட்டத்தை யமைக்கும் பன்னிரு திங்கட்குரிய பன்னீரோரைகளும், தமிழர் கண்டவையே. இன்று உலக முழுவதும் வழங்கிவரும் எழு கோட்பெயர்களைக் கொண்ட எழுநாட் கிழமையமைப்பு, தமிழரதே. ஆரியர் வந்தபின் அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இரு கிழமைப் பெயர்கள் வழக்கு வீழ்த்தப்பட்டதால், பண்டைத் தமிழர் ஐங்கோளே அறிந்திருந்தனர் என்று கால்டுவெலார் பிறழ்ந்துணரவும், அதனால் உலக முழுவதும் தமிழ் நாகரிகத்தைத் தாழ்வாகக் கருதவும் நேர்ந்துவிட்டது. பன்னீரோரைப் பெயர்களுள் மிதுன, ஸிம்ஹ, வ்ருச்சிக, தநு, மகர என்னும் ஐந்தே மொழிபெயர்ப்பாகும்; ஏனையவெல்லாம் எழுத்துப் பெயர்ப்பே. குமரிக்கண்டத்தில் பன்னீரோரைப் பெயர்களே பன்னிரு மாதப் பெயர்களாய் வழங்கி வந்தன. ஆரியர் வந்தபின் அவை நாட்பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. 7. இருபிறப்பிச்சொற்கள் (Hybrids) v-L: mš(j.)+ááu(t.) = அச்சிர (முன்பனி) flh (j.)+mB(t.) = கடாக்ஷ (கடைக்கண்) கடை என்பது கட அல்லது கடா (t) எனத் திரிந்தது. கடாக்ஷி = கடைக்கணி. கட (t) என்னும் தனிச் சொல்லையும், கடைக்கண் பார்வை என்னும் பொருளில் பாகவத புராணம் ஆண்டுள்ளது. 8. மயக்கச் சொற்கள் (1) மருளற் குரியவை எ-டு: அதிகாரம்: இது முன்னரே விளக்கப்பெற்றது. ஆசை-ஆசா (அ.வே.) ஆசு = பற்று. ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ (புறம். 235) ஆசு-ஆசை = பற்று, விருப்பம், அவா. ஒ.நோ: பூசு-பூசை (பூனை). பொற்கொல்லர் பொன்னணி கலத்திடையே இடும் பற்றும் ஆசெனப்படுதல் காண்க. ஆசிடையிட்ட எதுகை என்னும் செய்யுள் தொடையமைப் பையும் நோக்குக. பற்று என்னுஞ் சொல் பற்றும் அல்லது பற்றப் பெறும் பொருளைக் குறித்தல் போன்றே, ஆசு என்னும் சொல்லும் ஆசிற்குரிய பொருளைக் குறிக்கும் என்க. அள்-அண்-அடு-(அசு)-ஆசு. அள் = பற்றிரும்பு. ஆசு-ஆசி. ஆசித்தல்=அவாவுதல். வடவர் ஆசா என்னும் சொல்லை ஆ- சா எனப் பகுத்து, ஆ - சம்ஸ் என்பதன் வழிப்பட்டதாகவும் ஆ - சஸ் என்பதன் திரிபாகவுங் காட்டி, விரும்பு, எதிர்பார் என்று பொருள் கூறுவது பொருந்தாது. சம்ஸ் = ஒப்பி, புகழ், சொல், முன்விளம்பு, சூளிடு. கட்டம்-கஷ்ட கடு-கடுமை = வன்மை, வருத்தம், செயற்கருமை. கடு-கட்டம். ஒ.நோ: அடு -அட்டம், கொடு-கொட்டம், அறு-அற்றம், செறு-செற்றம். வடமொழியில் மூலமில்லை. ஒருகால் கஷ் என்பதன் இறந்தகால வினையெச்சமா யிருக்கலாமென்று மா.வி.அ. கூறும். fZ = njŒ, Rw©L, nrj¥gL¤J (gh.); சேதப்படுத்து, கொல், அழி (தாது). கருமம்-கர்மன் (இ.வே.) கருமம், கர்மன் என்னும் இருசொல்லும் செய்கை, வினை, தொழில் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இருவேறு வடிவுகளே. கருமம் என்பதனொடு தொடர்புடைய கருவி என்னும் சொல் வடமொழியி லில்லை. காரணம் காரியம் என்னும் வடசொல்லிணை யொத்ததே கருவி கருமம் என்னும் தென்சொல் லிணையும். மூன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே (தொல். 557) கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு உரிமையும் உடைத்தே கண்என் வேற்றுமை (தொல். 568) இங்ஙனம் கருவி கருமம் என்னும் இரு சொல்லும், தொன்று தொட்டுத் தமிழில் வழங்கி வருவதுடன், இலக்கணக் குறியீட் டுறுப்புகளாகவும் அமைகின்றன. இவ் விரண்டும் கரு என்னும் ஒரே முதனிலையினின்று பிறந்தவை. ஆதலால், கருவி என்னும் சொற்போன்றே கருமம் என்னும் சொல்லும் தென்சொல்லாதல் தெளிவு. கரு என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல் செய்தல். கருங்களமரும் வெண்களமரும் போலப் பல்வகைப்பட்ட கரியரும் பல்வகைப்பட்ட பொன்னருமென, இருவேறு நிற வகையினராகத் தமிழர் தொன்றுதொட்டு இருந்துவந்திருக் கின்றனர். வருந்தியுழைப்பதன் விளைவாக, கரியர் கை மிகக் கருப்பதும் பொன்னர் கை சிவப்பதும் இயல்பு. கருங்கை வினைஞருங் கூடி (சிலப். 10 :125) செய்தகை சேவெறும், செய்யாதகை நோவேறும் (பழமொழி) கை கருத்தல்பற்றிக் கரு என்னும் வினைச்சொல்லும் சிவத்தல் பற்றிச் செய் என்னும் வினைச்சொல்லும், தோன்றியதாகத் தெரிகின்றது. இவற்றிற்குப் பிறவினை வடிவம் வேண்டுவதில்லை. x.neh: btS¤jš = btŸisahjš (j.É.), துணியை வெள்ளையாக்குதல் (பி. வி.). கருமம்-கம்மம்-கம். கம்மம் = முதற்றொழிலாகிய பயிர்த்தொழில். கம்மவர்-கம்மவாரு = பயிர்த்தொழில் செய்யும் தெலுங்கர். கம் = பல்வேறு கனிய (உலோக)த் தொழில். ஈமுங் கம்மும் (தொல். 328). கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் ஒருவன். கம்மியன் = கற்றச்சன் (சிற்பி). கரு+வி = கருவி. கரு+அணம் = கரணம் = செய்கை, திருமணச் சடங்கு, கருவி, அகக்கருவி. கற்பெனப் படுவது கரணமொடு புணர (தொல். 1088). இதிற் கரணம் என்பது திருமண வினையாகிய சடங்கைக் குறித்தது. வடவர் கரு என்னும் முதனிலையைக் க்ரு எனத் திரித்துள்ளனர். இங்ஙனம் சொன்முதல் உயிர்மெய்யில் உயிரை நீக்குவது ஆரிய மரபு. ஒ.நோ: பொறு-ப்ரு (bh), திரு-ச்ரீ, வரி-வ்ரீஹி. fiu-E. cry, JUî-E. through, òUt«-E. brow. வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி, அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லையுந் திரித்துள்ளனர். காரணம் என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், கார்ய என்னும் திரிப்பு ஏற்காது. ஏற்கெனவே கரணம் என்பதினின்று கரணியம் என்னும் சொல் திரிந்துள்ளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று கருமியம் (காரியம்) என ஒரு சொல்லைத் திரித்துக்கொள்ளலாம். செய், பண்(ணு), புரி முதலிய பல பிற ஒருபொருட் சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனத னாலும். பின்னது வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழி யென்றும் அறியின், இம் மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திரவிட மொழிகட்குரிய இல், மனை, வீடு முதலிய சொற்களை மட்டுமன்றி, ஆரிய மொழிகட்குரிய குடி என்னுஞ் சொல்லையும் தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்குக. (2) வியப்பை விளைப்பவை எ-டு: சதரம். இது முன்னரே விளக்கப் பெற்றது. நித்தம்-நித்ய (இ.வே.) நில்+தம் = நிற்றம் = நிலையானது. ஒ. நோ : கொல்-கொற்றம் = பகையைக் கொன்று பெறும் வெற்றி. முடக்கொற்றான் = முடங் கொன்றான். வெல்-வெற்றம் = வெற்றி. அதம், அத்தம். இதம், இத்தம், உதம், உத்தம் என்னும் சுட்டுச் சொற்கள், முதல் கெட்டு முதனிலையொடு புணர்ந்து தம், த்தம் என்னும் அளவில் நிற்பதை, என் தமிழ் வரலாறு என்னும் நூலிற் கண்டு தெளிக. நிற்றம்-நித்தம். ஒ. நோ: குற்று-குத்து, முற்றகம்-முத்தகம். நித்த மணாளர் (திருவாச. 17:3) நித்தக்கட்டளை = நித்தியக் கட்டளை. நேரி னித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652) இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் (தொல்.516) என்னும் நெறிமொழிப்படி, நித்தம் என்பது நித்தமும் என உம்மை யேற்றது. நித்தம்-நிச்சம். ஒ. நோ: அத்தன்-அச்சன், நத்து-நச்சு, மொத்தை-மொச்சை. அச்சமு நாணு மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல். 1045) நில்-நிற்றல் (நில்+தல்) = நிலைப்பு. குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி (சூடா. 7: 76). நிற்றல்-நித்தல் = என்று முண்மை, எந்நாளும் நிகழ்வு. நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே (சிலப். உரைபெறு கட்டுரை) வினையொடு முடியின் உம்மை பெறவேண்டிய முற்றுப் பொருட் சொற்கள், தம்மை யுணர்த்தும்போதும், கூட்டுச்சொல் லுறுப்பாகவும் குறிப்புப் பெயரெச்சமாகவும் நிற்கும்போதும், உம்மை பெற வேண்டுவதில்லை; தம்மையுணர்த்தும்போது பெறவே பெறா. எ-டு: முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே (தொல். 809). உலகமுழுதுடையாள், முழுதுலகு. உமை நித்தலுங் கைதொழுவேன்(தேவா. 825: 1). நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து (இறை.கள. 1: 14) என்பது செய்யுள்திரிபாகவோ வழுவமைதியாகவோ கொள்ளப்பெறும். நித்தல்-நிச்சல் நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய(திவ். திருவாய். 1 : 9 : 11). வடவர் காட்டும் மூலம் வருமாறு: நி (முன்னொட்டு) = கீழ், பின், இல், உள், உட்கு, உட்பெற. நி - ஜ (ஜன்) = உள்ளான, உடன்பிறந்த, சொந்த, தன்னின, தன் நாட்டிற்குரிய; அடிக்கடி நிகழ்கின்ற, தொடர்கின்ற. நி - நித்ய = உள்ளான, தன் நாட்டிற்குரிய; சொந்த; தொடர்கின்ற, நிலையான, என்றுமுள்ள. நி என்னும் வடமொழி முன்னொட்டு, இல் (E. in) என்னும் தமிழ் இடவேற்றுமை யுருபின் முறைமாற்றுத் திரிபே. இல்-இன்-நி. ஒ. நோ: அல்-அன் (E. an, un) - ந (வ.). ந என்னும் வடமொழி எதிர்மறை முன்னொட்டை மூலச் சொல்லாகக் கொண்டு, அதுவே அந் என்று பிரிந்ததாகத் தலைகீழாய்க் கூறுவர் வடவர். என்று முண்மைப்பொருட் சொல்லிற்கு மூலமாக இருக்கக் கூடியது, நில் என்னும் தென்சொல்லா, நி என்னும் வடமொழி முன்னொட்டா என்று, நடுநிலையறிஞர் ஆய்ந்து தெளிக. பருவம்-பர்வன் (இ.வே.) பரு-பருவு-பருவம்=காய்கனி முதலியன பருத்துள்ள நிலை, தக்கநிலை, தக்க காலம், ஒவ்வொன்றிற்குத் தக்க வெவ்வெறு காலப்பகுதி, பெரும்பொழுது. வளர்ச்சியடைந்த மக்களையும் பூப்படைந்த மகளிரையும் பருவம் வந்தோர் என்றும், பருத்து உடையும் நிலையிலிருக்கும் சிலந்தியைப் பருவச் சிலந்தியென்றும், கூறும் வழக்கை நோக்குக. வடவர் காட்டும் மூலமும் பொருள் வரிசையும் வருமாறு: ப்ரீ = நிரப்பு, நிறைவாக்கு, நிரம்பக் கொடு (இ. nt.); நிறைவேற்று, முற்றுஞ் செலவிடு, முற்றும்வளை, மூடு (அ. வே.). பரு = கைகால், உறுப்பு; மலை, கடல், வானம், விண்ணுலகு. பருஸ் = கணு, முடிச்சு; உறுப்பு, பகுதி (இ. வே.). மா. வி. அ. “a joint or knot (esp. of a cane or reed, orig. ‘fullness’, i.e. the full or thick part of the stalk” என்று குறித்திருப்பதைக் கூர்ந்து நோக்குக. பர்வன் = கணு. முடிச்சு, உறுப்பு (இ. nt.); பிளவு, இடையீடு, பிரிவு, பகுதி (ச. ã.); ஒரு கூட்டின் உறுப்பு (பிராதி. ÃU.); ஒரு குறித்த காலப்பகுதி (இ. வே.). இது மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுவதா யிருத்தலைக் காண்க. பத்தி-பக்தி (bh) பகு-பஜ் (bh). பக்தன்-பக்த (bh). இங்ஙனம் பகு, பத்தன், பத்தி என்னும் தென்சொற்களும், பஜ், பக்த, பக்தி என்னும் வடசொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றியிருப்பதால், வடசொற்கட்குக் காட்டிய மொழிப்பொருட் காரணமே தென்சொற்கும் ஒக்கும் என அறிக. பக்த = பகுக்கப் பெற்றது, பகுதியானது, பாற்பட்டது, பாற்பட்ட வன், பற்றுள்ளவன், போற்றுபவன், வணங்குபவன், வழிபடுபவன், அடியான் (மா. வி. அ.). பக்தி=பகுக்கப் பெற்றமை, பகுதியானமை, பாற்பட்டமை, போற்றுகை, வணங்குகை, வழிபடுகை, தேவடிமை (மா. வி. அ.). பத்தி என்னும் சொல்லின் வடிவ வரலாற்றையும், அதன் பொதுப்பொருளையும், பகு என்னும் சொல்லின்கீழ்க் காண்க. பற்று என்பது இருதிணைப் பொருள்கள்மீது முள்ள அழுந்திய ஆசையையே குறிக்கும்; பத்தி என்பது இறைவனிடத்தும் தலைவ னிடத்துங் கொண்ட அச்சத்தொடு கூடிய உண்மையான பணி வன்பையே குறிக்கும். (3) ஐயுறவிற் கிடமானவை கலியாணம்-கல்யாண (இ.வே.) கலித்தல்=ஆரவாரித்தல், மிக்கெழுதல், பெருகுதல், செருக் குதல், தருக்குதல், செருக்கி வளர்தல். தழைத்தல், மகிழ்தல். கலி=ஆரவாரம், பெருக்கு, செருக்கு, தழைத்தல், மகிழ்ச்சி. யாணம் = அழகு. யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் (தொல். 1446) ஏண்-ஏணம் (எழுச்சி, அழகு)-யாணம்=அழகு. யாணம்-யாணர்=புதுமை, புதுவருவாய். கலியாணர்=மனச்செருக்கு எழுதற்குக் காரணமான புது வருவாய் (பட்டினப். 32). கலிகொள் யாணர்=தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய (புறம். 66). கலியாணர் = ஓசையையுடைய புதுப்பெயல் (புறம். 205). கலியாணர் = செருக்கினை யுடைத்தாகிய புதுவருவாய் (மதுரைக். 330). கலியாணர்-பெருக்கினை யுடைத்தாகிய புது வருவாய் (மதுரைக். 118) யாணர் என்பது யாணம் என்பதன் திரிபாதலின், கலியாணம் என்பதே முன்னை வடிவாம். கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற (இ. nt.), சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், அதன் கல்யாணம் என்னும் வடிவிற்கு ஆகூழ், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருப்பதால், அது கலியாணம் என்னும் தென்சொல்லின் திரிபோ என ஐயுறக் கிடக்கின்றது. அதன் மூலமாகக் காட்டும் கல்ய என்னும் சொற்கு நல்ல, நலமான என்னும் பொருள்களும், அதன் கல்யம் என்னும் வடிவிற்கு உடல்நலம் என்னும் பொருளும் கூறப்பட்டுள. ஆயினும், இச் சொல் கல்யாண என்பதன் சிதைவாகவு மிருக்கலாம். யாண என்னும் பிற்பகுதியை ஈறாகக் கொள்ளாது கிளவியாகக் கொள்வதே பொருத்தமாம். வடசொல்லாகக் கருதப்படும் கல்யாணம் என்னும் சொற்கு உலகவழக்குத் தமிழில் திருமணம் என்னும் பொருளுண்டு; வடமொழியில் அஃதில்லை. மங்கலம் என்னும் பொருளே இரு மொழிக்கும் பொதுவாம். ஆகவே, திருமணப் பொருள் தென் னாட்டிலேயே வடசொற்குக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். மங்கலம் என்னுஞ் சொல் வடமொழியில் நன்மை என்று பொருள்படுமே யன்றித் திருமணத்தைக் குறிக்காது. கல்யாண குணம் = நல்ல பண்பு. கலி என்னும் சொல் இசைக்கருவி முழக்கத்தையும்; யாணம் என்னுஞ் சொல் பந்தற் சுவடிப்பும் மணமக்கள் கோலமுமாகிய அழகையும், வரிசை வைத்தலும் மொய் யெழுதுதலும் சீர் செய்தலுமாகிய புதுவருவாயையும் குறிப்பது கவனிக்கத்தக்கது. கப்பி-கபி (இ.வே.) கப்பு = கிளை. கப்பி = மரக்கிளையில் தங்கும் குரங்கு. கப்பி-கபி. கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப (தொல். 1512). வடமொழியார் காட்டும் கம்ப் (நடுங்கு) என்பது மூல மாகாது. சோம்பு-ஸோம (இ.வே.) சோம்புதல் = தூக்கமயக்கமா யிருத்தல், வேலை செய்யா திருத்தல். L. somnus = தூக்கம். ஸோமச்சாறு மயக்கந்தரும் கள்ளாதலால், அப் பெயர் பெற்றிருக்கலாம். மயக்கந் தருவதாகப் பண்டைக்காலத்திற் கருதப் பட்ட திங்களும் வடமொழியில் ஸோம என்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. வடவர் காட்டும் ஸு (பிழி) என்னும் மூலத்தினின்று ஸுத (சோமச்சாறு) என்னும் சொல் திரிந்துள்ளது. அதுவே ஸோம என்பதற்கும் மூல மென்பது பொருந்தாது. வானரம்-வாநர வால்+நரம் = வாலுள்ள மாந்தன் போன்ற விலங்காகிய குரங்கு. வடவர் வனர் (வனம்) என்னும் சொல்லை மூலமாகக்கொண்டு காட்டுவிலங்கு என்றும், நர ஏவ என்பதை மூலமாகக்கொண்டு மாந் தனைப் போன்றது என்றும், பொருள் கூறுவர். முன்னதற்குப் பொருட் பொருத்தமும் பின்னதற்குச் சொற்பொருத்தமும் இன்மை காண்க. வடமொழியில் இச் சொற்கு மூலமில்லை. Gk. ane$r, stem -ner, OL. nero, Skt. nero$n. L. nero, S. nard, nr|u, Z. nar, OE. wer. நரம் அல்லது நரன் என்னும் சொல் நரல் என்பதினின்று திரிந்திருக்கலாம். நரலுதல் = ஒலித்தல். மாந்தனுக்கு மொழி சிறப்பான ஒலியமைப்பா யிருத்தல் காண்க. 9. தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள் (1) எழுத்துத் திரிப்பு. எ-டு: சுள்-சுஷ், பகு-பஜ். (2) திரிசொல் எழுத்து மாற்று. எ-டு: சாய்-சயன, ஸாயம், ca$ya$. (3) சொற்றிரிப்பு. எ-டு: அப்பம்-அபூப, பேசு-பாஷ். (4) எழுத்துக் குறைப்பு. எ-டு: மண்டலம்-மண்டல. (5) எழுத்துச் சேர்ப்பு. எ-டு: மயிர்-மசிர்-ச்மச்ரு (வ.). (6) முன்னொட்டுச் சேர்ப்பு. எ-டு: காயம் - ஆகாச, ஆயிரம் ஸகஸ்ர. (7) பின்னொட்டுச் சேர்ப்பு: எ-டு:-தாமரை-தாமரஸ (எழுத்து) சதுரம்-சதுரஸ்ய (அசை) வடவை-வடவாமுக (சொல்) (8) இடைச்செருகல். எ-டு: திடம்-த்ருட, மெது-ம்ருது, சொம்- ஸ்வாம் (9) முறைமாற்று (Metathesis). எ-டு: கதவம்-கபாடம். (10) தவற்று மூலம் 1. பொருள் மாற்று. எ-டு: இஞ்சிவேர்-ச்ருங்கவேர, முத்தம்-முக்தா. 2. தவற்றுப் பிரிப்பு. எ-டு: குமரன்-கு+மார, சுவணம் ஸு+பர்ண (11) இடுகுறியெனல். (12) தேவமொழியெனல். (13) கதை கட்டல். எ-டு: சொலவம்-ச்லோக. சோக-ச்லோக (கதை) வான்மீகி ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு துயருற்றபோது முதற்செய்யுளை யியற்றியதினால், செய்யுள் சுலோகம் எனப் பெயர் பெற்றதென்பது கதை கட்டல். 10. சுட்டுச் சொற்கள் தமிழிலும் திரவிடத்திலுமுள்ள சுட்டுச் சொற்கள், ஆ (அ), ஈ (இ), ஊ (உ) என்னும் மூன்று சுட்டொலிகளும் அவற்றின் வளர்ச்சியு மாகும். சுட்டொலிகள் மூன்றும் கைச்சுட்டை யொத்த வாய்ச் சுட்டொலிகளாகத் தோன்றியவை. வாய்ச்சுட்டாகத் தோன்றக்கூடிய ஒலிகள் ஆ ஈ ஊ என்னும் மூன்றே. வாயை விரிவாய்த் திறப்பதால் சேய்மைச் சுட்டாகிய ஆகாரமும், வாய்மூடியாகிய உதட்டைப் பின்னுக்கிழுப்பதால் அண்மைச் சுட்டாகிய ஈகாரமும், அதை முன்னுக்குக் குவிப்பதால் முன்மைச் சுட்டாகிய ஊகாரமும், பிறக்கின்றன. சுட்டுகளெல்லாம் முதலில் நெடிலாகவே தோன்றிப் பின் குறுகின. குறில் நிலையில் வாய்ச்சைகை தெளிவாய்த் தோன்றாது. நெடில் நிலையிலும் முதற்காலத்திற்போல் அத்துணைத் தெளி வாயில்லை. ஒலியளவிலேயே பொருள் தெரிந்துவிடுவதாலும் சோம்பலாலும், இற்றைத் தமிழர் முதற்காலத் தமிழர்போல் வாய்ச்சைகையோடு சுட்டுகளை ஒலிப்பதில்லை. ஆயினும், இன்றும் பொருளளவிற் சுட்டொலிகள் கைச்சுட்டுப் போன்றே திட்டவட்டமா யுள்ளன. எக் கரணியத்தையிட்டும் முச்சுட்டுகளும் இடமாறிச் சுட்டுவதில்லை. இவ் வியல்பு ஆரிய மொழிகளில் இல்லை. இதனால் ஆரியமொழிச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் தமிழ்ச் சுட்டொலிகளே மூலமென்பது தேற்றம். சுட்டொலிகள் இன்றும் தமிழிலும் திரவிடத்திலும் குறிப்புப் பெயரெச்சமாகத் தமித்து வழங்குகின்றன. எ-டு: ஆயிடை, இக்காலம் (தமிழ்) ஈயாள், அவ்விடே (மலையாளம்) ஊகார அல்லது உகரச் சுட்டு இன்று தாய்நாட்டுத் தமிழில் வழக்கற்றது; யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகச் சொல்லப்படு கின்றது. இந்தியில் ஈகாரச் சுட்டு ஏகாரமாகவும் முன்மைச் சுட்டுச் சேய்மைச் சுட்டாகவும் திரிந்து வழங்குகின்றன. எ-டு: ஈ-ஏ = இது, இந்த ஊ-ஓ = அது, அந்த; உதர் = அங்கு. ஈகாரம் ஏகாரமாகத் திரிந்துள்ள நிலை வடமொழியி லுள்ளது. இடமாறா வடமொழிச் சுட்டுச்சொற்கள் சேய்மை அண்மை எ-டு : அதஸ் (adas) = அது, அங்கு, இஹ = இங்கு, இவ்வுலகில். அவ்வாறு. ததா (ta$tha) = அப்படி ஏத்தத் (e$tad) = இது, அஸவ் = அந்த இங்கு இடமாறிய வடமொழிச் சுட்டுச்சொற்கள் சேய்மை அண்மை எ-டு : இயத் = அவ்வளவு அதஸ் (atas) = இங்கிருந்து அதுநா (dh) = இப்போது, அயம் = இந்த ஈரிடப் பொது வடமொழிச் சுட்டுச் சொற்கள் எ-டு : அத்ர = இங்கு, அங்கு தத் (d) = அவன், அவள், அது, இது. இதம் = இந்த; அங்கு. ஏநா = இங்கு, இவ்வாறு; அங்கு, அன்று. 11. வினாச்சொற்கள் சுட்டுச்சொற்கள் போன்றே வினாச்சொற்களும், தமிழிலும் திரவிடத்திலும் ஓரெழுத்துச் சொல்லாகவும் பலவெழுத்துச் சொல்லாகவும் இருக்கும். எ-டு: எ, எந்த. வினாவெழுத்துகள் மூன்றென்றார் தொல்காப்பியர். ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ. (தொல். 32) இவற்றையே பவணந்தியார் ஐந்தாக விரித்துரைத்தார். எயா முதலும் ஆஓ ஈற்றும் ஏயிரு வழியும் வினாவா கும்மே (நன். 67) இவ் வைந்தும் மூல அளவில் ஓரெழுத்தாகவே தோன்று கின்றன. ஏ-எ. ஏ-யா-ஆ-ஓ. இவற்றுள், சொன்முதலில் வரும் எ, ஏ, யா என்னும் மூன்றும் சுட்டெழுத்துப் போன்றே வகர மெய்யும் தகர மெய்யும் அடுத்து வினாப் பெயராகும். எ-டு: எவன், எது. எவை என்பதன் திரிபான எவி என்னும் தெலுங்கச் சொல், அற்றுச் சாரியை யேற்று வேற்றுமைப்படும்போது, வேட்டி எனத் திரியும். இங்ஙனமே எவ், ஏவ் என்னும் வினாச் சொற்களும், முறையே வெ, வே என முன்பின்னாக எழுத்துமுறை மாறி நிற்கும். இத் திரிபுகளின் வகர முதலே, ஆரிய மொழிகளிற் ககரமாக மாறியுள்ளது. வெ-கெ-க. வே-கே-கா. இவ் வ-க திரிபு தெலுங்கையடுத்த மராத்தியிலேயே தொடங்கி விடுகின்றது. மராத்தி முதலில் ஐந்திரவிடத்துள் ஒன்றாயும், பின்பு நடுத்திரவிடம் என்று கருதத் தக்கதாயும், அதன்பின் ஐம்பிரா கிருதத்துள் ஒன்றாயும், இருந்தமை கவனிக்கத் தக்கது. தமிழ் ஆரிய மொழிகட்கு முன்தோன்றிய தொன்மொழி யாதலின், அதில் நேரியல் வினாச் சொற்களும் உறவியல் (Releative) வினாச் சொற்களும் வேறு பிரிக்கப்பெறவில்லை. எ-டு: யார் என்ன செய்தார்? - நேரியல் யார் என்ன சொன்னாலும் - உறவியல் இந்திய ஆரியமொழிகளில், நேர்வினாச் சொற்கட்கு வகரத்தின் திரிபான ககர வடியும், உறவியல் வினாச்சொற்கட்கு எகரத்தின் திரிபான யகர வடியும், ஆளப்பெறுகின்றன. யகரம் ஜகரமாகவும் திரியும். நேர்வினா உறவியல்வினா மராத்தி கோட்டெ(ங்) திக்டை இந்தி கஹான் யஹான்-ஜஹான் வடமொழி குத்ர யத்ர சில தமிழ் வினச்சொற்கள் வடிவிலேனும் பொருளிலேனும் வடமொழியிற் சற்றே வேறுபட்டுள்ளன தமிழ் வடமொழி எ-டு : எதோள் = எங்கு யத்ர = எங்கு (வடிவு) எதா-எங்கே யதா = என்று (பொருள்) 12. இடைச்சொற்கள் (1) ஒலிக்குறிப்புகள் எ-டு: தும், துப் (துந்துபி) (2) விளியொலிகள் எ.டு: ஊ, ஏ, ஓ-ஹூ, ஹே, ஹோ (3) உணர்ச்சிக் குறிப்பொலிகள் எ-டு: வியப்பு-ஆ-ஹா, ஓ. ஹாஹா மகிழ்ச்சி-ஹோ இரக்கம்-ஆ, ஓ நோவு-ஆ, ஈ, ஆ-ஹா, (உம்-) ஹும் நினைவு-ஏ,ஓ கழிவு வருத்தம்-ஆ இகழ்ச்சி = ஏ, (உம்-)ஹும் உடன்பாடு-(உம்-)ஹும் 13. பல்வகைச் சொற்பெருக்கம் ஆரியர் தென்னாட்டிற்கு வந்ததிலிருந்து மறைமலையடிகள் காலம் வரை, தமிழ் வளர்ச்சி யடையவில்லை. ஏற்கெனவே அமைந் திருந்த பல சொற்களும் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. வடமொழியோ தமிழை இன்றியமையாத துணையாகக் கொண்டு, தமிழுக்கே மாறாக இடையறாது மேன்மேலும் சொல்வளர்ச்சி யடைந்து வந்திருக்கின்றது. (1) காண்-(த்யூத்.) fh‹, f‹, bf‹, ¡ndh-(ïy¤.), க்னோ (g)-(»). க்னோ (g)-ï. வே. ஜ்ஞா=அறி. ஜ்ஞா என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ-டு: i. முன்னொட்டுப் பெறாதவை ஜ்ஞாத்வ = மதியுடைமை ஜ்ஞாத்ர = அகக்கரணம் ஜ்ஞாப்தி = அறிகை, உணர்கை ஜ்ஞாந = அறிவு, ஓதி ஜ்ஞாதி = நெருங்கிய உறவினன் ஜ்ஞாநி = அறிஞன் ஜ்ஞாத்ரு = அறிவோன் ஜ்ஞாபக = அறிவிக்கை, நினைப்பிக்கை. ஜ்ஞாதேய = இனமை ஜ்ஞேய = அறியப்படுவது ii. முன்னொட்டுப் பெற்றவை அஜ்ஞா, அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய; அநுஜ்ஞப்தி, அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக, அநுஜ்ஞாபந; ஆஜ்ஞா (ஆணை), ஆஜ்ஞப்தி (ஆணத்தி), ஆஜ்ஞாத்ரு, ஆஜ்ஞாபந; ப்ரஜ்ஞா, ப்ரஜ்ஞ, ப்ரஜ்ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந; ப்ரதிஜ்ஞா, ப்ரதிஜ்ஞாந, ப்ரதிஜ்ஞேய; விஜ்ஞா, விஜ்ஞாந, விஜ்ஞாநி, விஜ்ஞாபக, விஜ்ஞாபந (விண்ணப்பம் ), விஜ்ஞாப்தி, விஜ்ஞேய; ஸம்ஜ்ஞா (ஸமிக்கை), ஸம்ஜ்ஞாபந, ஸம்ஜ்ஞாந, ஸம்ஜ்ஞாநி. (2) பூ-இ. வே. பூ (bhu$). E. be, O.Teut. beo, Gk. phu, L. fu. பூ (bhu#) என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ-டு: i. முன்னொட்டுப் பெறாதவை பின்வருஞ் சொற்களின் முதற் பகரமெல்லாம் `bh' என்னும் கனைப்பொலி அல்லது மூச்சொடு கூடிய எடுப்பொலி என அறிக. புவ, புவத் (d), புவந, புவஸ், புவி, பூ, பூத, பூதி, பூமந், பூமி, பூயஸ். பூர்; பவ, பவக, பவத், பவந, பவந்த்த, பவாநீ, பவித்ர, பவித், பவிஷ் ய, பவீத்வ, பவீயஸ், பவ்ய; பாவ, பாவக. பாவந, பாவி-பாவிந், பாவிக, பாவித்ர. ii. முன்னொட்டுப் பெற்றவை அபவ, அபாவ, அபாவந, அபாவிந்; அதிபூ, அதிபூத; அநுபூ, அநுபவ, அநுபாவ, அநுபாவக, அநுபாவந, அநுபாவிந், அநுபூத, அநுபூதி; mg(p) பூ, அபபூதி; அபி (bh)ó, அபிபவ, அபிபவந, அபிபாவக, அபிபாவத, அபிபாவிந், அபிபு, அபிபூத, அபிபூதி, அபிபூய, அபிபூவந்; c¤(d) பூ, உத்பவ, உத்பாவ, உத்பாவந, உத்பாவிந், உத்பூத, உத்பூதி; சம்பூ, சம்பு; தத்பவ, தத்பாவ, தத்பூத; ப்ரபூ, ப்ரபு, ப்ரபவந, ப்ரபாவ, ப்ரபாவந, ப்ரபூத, ப்ரபூதி, பரிபூ, பரிபவ, பரிபவந, பரிபவிந், பரிபாவந, பரிபூத, பரிபூதி, ப்ரதிபூ, ப்ரதிபாவ; ஸம்பூ, ஸம்பாவித, ஸம்பவ. ஸம்பாவந; ஸ்வபாவ, ஸ்வயம்பூ, ஸ்வயம்பு, ஸ்வயம்புவ, ஸ்வயம்பூத. (3) மா-மா (இ. வே.) = அள. மா என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ-டு: i. முன்னொட்டுப் பெறாதவை மாந, மாத்ர, மாத்ரு, மாதி. ii. முன்னொட்டுப் பெற்றவை அநுமா, அநுமாந, அநுமிதி, அநுமேய; அபமா, அபமாந, அபமாநிந்; உபமா, உபமாதி, உபமாத்ரு, உபமாந, உபமிதி, உபமேய; நிர்மா, நிர்மாண, நிர்மாத்ரு. நிர்மிதி; ப்ரமா, ப்ரமாண, ப்ரமாத்ரு. ப்ரமிதி, ப்ரமேய; ப்ரதிமா, ப்ரதிமாந, ப்ரதிமிதி; பரிமா, பரிமாண, பரிமிதி, பரிமேய. சமாந, சந்மாந; ஸம்மா, ஸம்மாந, ஸம்மாத்ரு, ஸம்மிதி. 14. இடுகுறிச் சொற்கள் ஸம்வர்த்த, ஆவர்த்த என்பன போன்ற முகிற்பெயர்களும், சங்கராபரணம், நாதநாமக் கிரியை என்பன போன்ற பண்ணுப் பெயர்களும், இவைபோன்ற பிறவும், இடுகுறிச் சொற்களாம். ஆட்பெயர்கள் இக்காலத்திற் பெரும்பாலும் இடுகுறி களாகவே எங்கும் இடப்பெறுகின்றன. தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பன போல வடமொழிப் புராணங்களில் வரும் படைப்புப் பெயர்கள் இடுகுறியுள் இடுகுறியாகும். பஞ்சதந்திரக் கதைகளுள் வரும் புனைபெயர்களும் இத்தகையனவே. 15. வடசொற்கள் தென்சொற்களால் விளக்கம் பெறல் பல வடசொற்களின் வேர் தமிழிலும் திரவிட மொழிகளிலுமே காணக்கிடக்கின்றன. எ-டு: புது-புதல் = அரும்பு. புதல்-புதல்வு-புதல்வன் = மகன் புதல்வி = மகள். புதல்வன்-புத்ர = பிள்ளை, மகன் (இ. nt.); புத்ரீ = மகள். புத் என்னும் நரகத்தினின்று பெற்றோரை மீட்பவன் புத்ர என்பது, வடவர் பொருந்தப் பொய்த்தலாகப் படைத்துக் கூறும் செய்தியாகும். இதற்குத் த்ரா (காப்போன்) என்னும் சொல் லுண்மையே துணையாம். புத்ர என்னும் சொல்லின்கீழ், “etym. doubtful” என்றும், புத் என்னும் சொல்லின்கீழ், “a world invented to explain putra or put-tra” என்றும், மா. வி. அ. குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆயின், புஷ்2 (ஊட்டங் கொடு) என்பது மூலமா யிருக்கலாம் என்று அது கருதுவதும் தவறாகும். சார்தூல (வே.) = புலி, வேங்கை. இது சாரதோல என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாகச் சொல்லப்படுகின்றது. சார = வரி. தோல = தோல். வரித்தோலையுடையது என்னும் பொருட்காரணம் பொருத்தமானதே. இதற்கு வடமொழியில் மூலமில்லை. மா. வி . அ. “of unknown derivation” என்று குறித்திருத்தல் காண்க. வடமொழி எண்ணுப் பெயர்கள் பெரும்பாலும் தென்சொற் களாலேயே விளக்கம் பெறுவனவாயுள்ளன. Vf(k) ஒ-ஒக்கல் = ஒப்பு, இனம். ஒக்க = ஒப்ப, ஒருங்கு. தெ. ஒக்க = ஒரு. ஒகட்டி = ஒன்று. ஒக்க-(எக்க)-ஏக (வ.). ஒ. நோ: சொருகு-செருகு. வடமொழியில் எகரமின்மையால் எக்க-ஏக என்றாயிற்று. கால்டுவெலாரும் இங்ஙனங் கருதுவதைக் காண்க. தமிழ் முதல் எண்ணுப் பெயரின் மறுவடிவான ஒன் (ஒன்னு, ஒன்று, ஒண்ணு) என்பது மேலையாரியத்தில் வழங்குவதையும் நோக்குக. com.-Teut. one, OE. an, Du. ce#n, G. ein, Gk. oinos, oine, L. unus. த்வி (d) இது துமி என்னுஞ் சொல்லினின்று திரிந்ததா யிருக்கலாம். துமித்தல் = வெட்டுதல், இரண்டாகப் பகுத்தல். ஒரு வெட்டில் ஆகக்கூடிய துண்டுகள் இரண்டே. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு. என்னும் சொலவடையை நோக்குக. துமி-துவி-த்வி. ஒ. நோ: குமி-குவி. இரண்டு என்னும் தமிழ் எண்ணுப் பெயரின் வேர்ப் பொருளும் இதுவேயா யிருத்தல் காண்க. ஈர்தல் = அறுத்தல், பிளத்தல். ஈர்-இர்-இரது-இரடு-இரண்டு. த்ரி நார்க்கயிறும் நூற்கயிறும் திரிப்பதற்குப் பொதுவாகச் சேர்ப்பது முப்புரியே. திரிக்கும் புரித்தொகைபற்றித் திரி என்னும் மூன்றாம் எண்ணுப் பெயர் தோன்றியிருக்கலாம். திரி-த்ரி. சதுர் (c) இது முன்னரே விளக்கப்பெற்றது. சட்டம்-சடம்-சடல்-சதர் - சதிர். சதுர்=நாற்கோணம், நாற்புறம், நான்கு. சடல்-சடலம்-சதரம் - சதிரம். சதுரம் = நாற்கோணம், நாற்புறம், நான்கு. பஞ்ச்சன் ஐந்து-அஞ்சு-பஞ்சு-பஞ்ச்சு-பஞ்ச்சன். ஒ. நோ: அஞ்சவன்-பஞ்சவன் (பாண்டியன்). அப்பளம்-அப்படம்-பப்படம் (ம.). அப்பன்-அப்பா-பப்பா (E.f.F.f.L.). ஷஷ் ஆறு என்னும் தமிழெண்ணுப் பெயர் மத (சமயநெறி) வகை பற்றித் தோன்றியது. சாஸன என்னும் வடசொற்கு மதம் என்னும் பொருளுண்டு. ஆதலால், சாஸ் = ஷஷ் என்று திரிந்திருக்கலாம். ஸப்தன் ஏழ் என்னும் தமிழ் எண்ணுப்பெயர் எழுவும் இசைத்தொகை பற்றித் தோன்றியிருத்தலால், வடமொழிலும் அதைப் பின்பற்றி முதலெழுத்து மாறி ஸப்தன் என்னும் சொல் அமைந்திருக்கலாம். சப்த (b)-[¥j‹. சப்த = ஒலி, ஓசை பொருள் மாறும்போது எழுத்துகள் மாறுவதும் இயல்பே. அஷ்ட்டன் எட்டு-(அட்டு)-அஷ்ட்ட-அஷ்ட்டன். எ-அ. ஒ.நோ: வெறுமை-வறுமை. நவன் தொண்டு (ஒன்பது) என்னும் தமிழ் எண்ணுப்பெயர்,உடம்பி லுள்ள ஒன்பான் தொளைபற்றித் தோன்றியதாகும். ஒள், கொள். சொள், தொள், நொள், பொள், மொள் என்னும் ஏழடிகளும் தொளைத்தலை அல்லது தொளையைக் குறிப் பனவே. நொள்-நொள்ளல், நொள்ளை. நொள்-நெள்-நெள்ளல்-ஞெள்ளல் = பள்ளம், குழி, குழிந்த தெரு (புறம். 15). நெள்-நெளி. நெளிமருங்கு = குழிந்த இடம் (புறம். 18). நொள்-நொள்வு-நொவு-(நவு)-நவி = வெட்டுக்கோடரி. நவி-நவியம். ஒருகால் நவு-நவம்-நவன் என்றாகியிருக்கலாம். தசன் (d) தசன = பல், கடி (கடிப்பு). தச = கடி. தம்ஸ்2 = கடி, to bite. தந்த்த = பல் (இ. வே.). தத் = பல் (இ. வே.) பத்து என்னும் தமிழ் எண்ணுப்பெயர் பல் என்னும் சொல் லினின்று திரிந்தது. ஆயின், அது பல என்று பொருள்படுவது. வடவர் தவறாக அதைக் கடிக்கும் பல்லைக் குறிக்குஞ் சொல்லாகக் கருதி, தசன் என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் போலும்! ஸஹஸ்ர அயிர்=நுண்மணல். அயில்-அயிரம்-ஆயிரம் = மணல் போன்ற பெருந்தொகை. ஆயிரம் (அயிரம்) - ஹஸ்ர-ஸஹஸ்ர. ஸ' முன்னொட்டு. இனி, க. சாவிர, வ. ஸஹஸ்ர என்றுமாம். இ.ஹஸார் (z), பெ. haza$r. லக்ஷ இலக்கம்-லக்ஷ = பெரிய இலக்கம் (எண்). கோடி (t|) கோடி-கோடி (t |) = ஒழுங்கான கடைசி யெண். அடுக்கிய கோடிப் பெயர்களாகிய குமுதம், சங்கம் முதலியன தமிழினின்று கடன் கொண்டவையே. ஸமுத்ர என்பது வாரணம் என்பதன் மொழிபெயர்ப்பாகும். 16. வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச்சொற்களன்மை வேதமொழி வழக்கற்ற கலவைத் திரிமொழியாதலாலும், சமற்கிருதம் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழியாத லாலும், வடசொற்களினின்று பெரும்பாலும் வேர்ச்சொற்களை அறிய முடியாது. இடைகழி என்பது முறையே டேகழி, டேழி, ரேழி எனக் கொச்சை வழக்கில் திரிந்துள்ளது. இடைகழி என்னும் சொல்லிற் போல் அதன் கொச்சைத் திரிபுகளில் வேர்ச்சொல்லும் பொருளும் தோன்றவில்லை. இங்ஙனமே, தமிழ் போன்ற இயன்மொழியில் தோன்றும் வேர்ச்சொற்கள் ஆரியம் போன்ற திரிமொழிகளில் அத்துணைத் தெளிவாய்த் தோன்றா; அவற்றுள்ளும், திரிபில் திரிபாகிய சமற்கிருதத்திற் பெரும்பாலும் தோன்றவே தோன்றா. வடமொழியாளர் தம் மொழியைத் தேவமொழி யென்று காட்டி, தமிழை என்றும் அதற்கு அடிப்படுத்தல் வேண்டி, வட சொற்களின் முதனிலைகளை அல்லது முதலசைகளையெல்லாம் வேர்ச்சொல்லென்று கொண்டு அவற்றைப் பிரித்துக் கோவைப் படுத்தி மொத்தம் 1,750 வேர்ச்சொற்களெனக் கணக்கிட்டிருக்கின் றனர். அவற்றுட் பல பல்பொரு ளொருசொற்களாதலால், மேலையர் அவற்றை ஆய்ந்து கண்டு வேர்ச்சொற்றொகையை 2,490 ஆகப் பெருக்கியுள்ளனர். ஆயின், சிறந்த ஆராய்ச்சியாளர் எல்லா வேர்ச் சொற்களையும் 120-ற்குள் அடக்கிவிடலாம் எனக் கருதுகின்றனர். மேலையர் வடமொழி வேர்ச்சொற் றிரட்டுகளின் குறை பாட்டை ஒருவாறுணர்ந்தவராயினும், தமிழைச் செவ்வையாய்க் கல்லாமையால் அவற்றைத் திருத்தியமைக்கும் ஆற்றலற்றவராயுள் ளனர். வடமொழி வேர்ச்சொல் திரட்டின் குறைபாடுகள் (1) சொன்னிலை சொன்மூலம் வேர் (Root), அடி (Stem), முதனிலை (Theme) என மூவகைப்படும். வேரும் முதல்வேர், வழிவேர், சார்புவேர் என முத் திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும். முளைக்கு மூலம் வித்தே. அடி என்பது கவையுங் கொம்புங் கிளையும் போத்துங் குச்சுமாகப் பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழி யிலேயே தெளிவாய்க் காணப்பெறும். வடவர் திரிபுற்ற முதனிலைகளையும் சொற்களையுமே வேர்ச் சொல்லாகக் கொண்டுள்ளனர். எ-டு : சுள்-சுஷ், பகு-பஜ் (bh)- முதனிலை. bgUF-¥Uà(b)-tÊ முதனிலை செவியுறு-ச்ரு-மரூஉ முதனிலை. சுண்ணம்-சூர்ண் (c), வட்டு-வட்-சொன்னிலை. (2) பல்வடிவச் சொற்கள் எ-டு : அக் = வளைந்து செல், m¡(g) = வளைந்து செல். அண் = உயிர் (மூச்சுவிடு), அந் = உயிர் (மூச்சுவிடு). (3) மூலச்சொல்லும் திரிசொல்லும் எ-டு : அத் (d) =உண், அச் (s) = உண். அஸ் = இரு, ஆஸ் = உட்கார். (4) இனக்கருத்துச் சொற்கள் எ-டு : c¢(c) = தொகு, cŠ¢(ch) = அரித்துத் தொகு. (5) பல்லசைச் சொற்கள் எ-டு : ஒலண்ட் = வெளியெறி, கண்டூய் = தேய். (6) பல்மெய்ச் சொற்கள் எ-டு : ஸாந்த்வ் = அமைதிப்படுத்து, ஸ்த்ருஷ் = செல். (7) பிற்கால வெழுத்துச் சொற்கள் எ-டு : காங்க்ஷ் = ஆசைப்படு, ஸ்த்ம்ப் (bh) = அசையாமல் நிறுத்து. (8) படைப்புச் சொற்கள் எ-டு : கல்ய, பிண்ட். (9) ஒரு சொல்லைப் பல சொல்லாக்கல் எ-டு : rhŒ-rhia-rhah(c). சாய்-சாய (சாய்கை, படுக்கை). சாய்-ஸாயம்(சாயுங்காலம்). பகு-பக்கம்-பக்ஷ. gF-ghF-ghf«-ghf(bh). (10) தொடர்பிலாப் பொருள் கூறல் எ-டு : ஈஜ் = போ, கண்டனஞ்செய். ப்ருஹ்4 = பேசு, ஒளிர். (11) செயற்கைப் பொருளிணைப்பு எ-டு : வர்ஷ் = மழைபெய், மழைபோல் அம்புபொழி, அம்பெய்யும் ஆண்மை பெறு. வர்ஷ்-வ்ருஷ-வ்ருஷப-ருஷப. (12) ஒருபொருட் பலசொற்களின் மிகை பின்வருஞ் சொற்களெல்லாம் போதலைக் குறிப்பனவாம். அங்க் (g), m§¡(gh), m¢(c), அஞ்ச் (c), அஜ், m¥u(bh), அம், அய், அஹ், இ, ï¡(kh), ï§¡(g), ï£(t |), இஷ்,ஈ,ஈஜ்,ஈர், ஈஷ், c¡(kh), U|. ரூ, ஏஷ், கங்க், f£(t |), f«¥(b), கல், கஸ், கேப், கப் (kh,b), f®›(kh), f«(g), f®¥(gh), T®(g), ¡Y¢(g,c), க்லுஞ்ச், சஞ்ச் (c, e), r«¥(c,p), rŒ(c), nrš(c) o¡(t |),O¡(t |), டீ, டௌக், தங்க் (g), தஞ்ச். தய், திக், தில், தீக், து, தூர் (பரபரப்பாய்), த்ருஷ், த்ரங்க். த்ரக், த்ரஸ், ¤Ç¡(kh), த்ரௌக், ¤tŒ¡(g), jº(d). (விரைவாய்), J(d), jª›(dh), ¤U(dh), ¤u{(dh), ¤Ç{(dh), ¤a{(dh), நேஷ், g£(t |). g©£(d |). பய், g¤(th), g¤(d), பர்ப், பர்ப் (b), பல், பஷ், பி, பேஸ், ப்ரேஷ், ப்லி, ப்லீர், பண் (ph), gš(ph), ngš(ph), g«¥(b), g®¥(b), ã°(b), மங்க் (g), மப்ர (bh), மய், மவ்ர், மீவ், மேப், ம்ருச் (c), ம்லுச் (c), யா, u¡(kh), u§¡(g), ரங்க் (gh) (சுருக்காய்), u¥(ph), ரய், ரி, ரீ, ரு, ருண்ட், ரேப், ரேப் (b), y¡(kh), y§¡(kh), y§¡(g), லய், y®¥(b), ȧ¡(kh), ȧ¡(g), லிச், Y£(th), Y©£(t@) Y©£(t@h), லேப், லைண், வக், t¡(kh), வங்க், t§¡(g), வஜ் , வஞ்ச் (c), t¥u(bh), வர்ப் (bh), tš¡(g), வல்ல், வஸ்க், வா, வேல், வ்யஸ், வ்ரீ, வ்லீ, rŠ¢(c), r¤(d), r¥(b), r®¥(b), சல், சவ், á¡(kh), சுக், சுந், சேல், சோண், ச்யே, ச்ரக், ¢u¡(g), ச்ரி, ச்ரு, ¢y§¡(g), ச்வங்க், ¢t¢(c), ச்வஜ், ¢t£(t@h), ¢t¥u(bh), ஷ்வக்க், ஷ்வஷ்க்; ஸம்ப் (b), ஸய், [®¥(b), ஸல், [h¤(dh), ஸு, ஸ்ரு, ஸேக், ஸேல், ஸ்கு (தாண்டி), ஸ்த்ருஷ். ஹ்வல் (நெளிந்து). இவற்றுட் சில வேறுபட்ட போக்குகளைக் குறிப்பினும், இத்தனை சொற்கள் ஒரே பொருள் குறிக்குமென்பது ஐயத்திற் கிடமானதா யிருக்கின்றது. இங்ஙனமே உண், கொல் என்னும் பொருள்கள்பற்றியும் ஏராளமான சொற்கள் உள்ளன. (13) எளிதாய்ப் பொருள் வளர்த்தல் பல வடசொற்கட்குப் போதற் பொருளை முதலிற் குறித்து, அதன்பின் வேண்டிய பொருள்களையெல்லாம் பொருந்தா வகையிற் பொருத்திக் கொள்கின்றனர். எ-டு: ரு4-செல், இயங்கு, எழு, உயரநோக்கு; ஒன்றை நோக்கிச் செல், தலைக்கூடு, மேல்விழு, சேர், பெறு; ஒருவன் பங்கிற்கு விழு, நிகழ், நேர்; இயக்கு, தூண்டு, எழுப்பு, உயர்த்து, இயக்கு, எறி; ஊடெறி, துளை, துருவு; உள்ளிடு, வை, பதி, இறுக்கு. இவை வேதப் பொருள்கள். பிற்கால நூல்களில் இன்னுஞ் சில பொருள்கள் கூறப்பட்டுள. (14) மூலங் கூறப்படாமை எ-டு: க்ருக்ஷ்ண = கருப்பு, கரிய. க்ருஷ்ணபக்ஷ = கரும்பக்கம் (தேய்பிறை). கண்ணன் பிறக்கு முன்பே இச் சொல் வேதத்தில் உள்ளது. இது இருவகையாய் வந்திருக்கலாம். 1. கரு-கருள். கருளுதல் = கருத்தல், கருள்-க்ருஷ்-கிருஷ்ண. 2. கள்-கண்-கண்ணன் = கரியன். கண்ணன்-க்ருஷ்ண. ஒ.நோ: உள் = உண்-உண்ணம்-உஷ்ண. ரு இடைச்செருகல். ஒ. நோ: கத்(தி)-க்ருத். (15) தமிழ்மூலம் மறைக்கப்பட்டுள்ளமை வடசொற்களுள் குறைந்த பக்கம் ஐந்தி லிருபகுதி தமிழாயினும், அவற்றுள் ஒன்றுகூடத் தமிழென்று காட்டப்பெறாமையும், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் முழுக்குவதுபோல் தமிழ் என்னும் பெயரே த்ரவிட என்னும் வடசொல்லின் திரிபென்று கூறுவதும், எத்துணை நெஞ்சழுத்தமான இரண்டகச் செயல். நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு மூலம் அல்லது முதனிலை தமிழிலிருக்கவும், அவற்றைக் குறியாது வடசொல்லின் பெயர் வடிவினின்றே வினைச்சொல்லைச் செயற்கையாகத் திரித்திருக்கின்றனர். சமற்கிருதம் உலக வழக்கிலில்லாத இலக்கிய நடைமொழி யாதலின் (Literary dialect), அதிற் பெயரடி வினைகளை விருப்பம்போல் மிக எளிதாகத் திரித்துக்கொள்ளலாம். தாதுபாட என்னும் வடமொழி வேர்ச்சொற் றிரட்டின் ஆசிரியர், தந்துபுனைந் துரைத்தல் என்னும் உத்தியை இவ்வகையில் தாராளமாகக் கையாண்டுள்ளனர். எ-டு : பிண்டம் என்னும் பெயர் பிடி என்னும் தமிழ் வினையின் முன்னை வடிவான பிண்டி என்பதினின்று திரிந்திருக்கவும், தாது பாடம் அதற்குப் பிண்ட் என்றொரு செயற்கை மூலவினையைப் படைத்து, கட்டியாக அல்லது உருண்டையாகத் திரள், ஒன்று சேர்,பொருந்து, கூடு என்று பொருளுரைத்துள்ளது. இது பெயரடி வினை என்பதை prob. Nom. fr. .next” என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. Nom.=Nominal verb. 2 இலக்கண வதிகாரம் வியாகரணம் என்னும் சொல் விளக்கம் இலக்கணம், இலக்கியம் என்னும் இரு சொற்களும் தென்சொற் களாதலால், தொன்றுதொட்டு நூலும் வனப்பும் என இருபாற்பட்ட தமிழ்ச் செய்யுட் டொகுதிகட்கே முறையே பெயராகி வழங்கி வந்திருக்கின்றன. இவற்றிற்கு நேர் வடசொற்கள் வியாகரணம் (வ்யாகரண), சாகித்தியம் (ஸாஹித்ய) எனபனவாகும். வ்யாகரண என்னும் சமற்கிருதச்சொல் வி+ஆ+க்ரு என்னும் முக்கூற்றுக் கூட்டுச் சொல். வி8 என்பது, வேறு அல்லது துண்டாக என்று பொருள்படும் முன்னொட்டு; ஆ என்பது சொல் வேறுபடுத்தலன்றித் தனக்கென ஒரு பொருளில்லா இடையொட்டு. க்ரு என்பது செய் என்று பொருள்படும் வினை முதனிலை. வ்யாக்ரு = துண்டு செய், வேறு பிரி, பகு, கூறுபடுத்து, விளக்கு. வ்யாகரண = வேறுபடுத்தம், கூறுபடுப்பு (Analysis), விளக்கம், இலக்கணம் (Grammar). வி8 என்னும் முன்னொட்டு த்வி(இரண்டு) என்னும் சொல்லி னின்று திரிந்திருக்கலாமென்று மா. வி. அ. கூறும். இரண்டாக்குதல் என்னும் கருத்தினின்று பகுத்தற் கருத்துத் தோன்றுவது இயல்பே. ஆயின், விள் என்னும் தென்சொல்லின் கடைக்குறையாக வி என்னும் வடமொழி முன்னொட்டைக் கொள்வதே மிகப் பொருத்தமாம். ஒ. நோ: அல்-அ, குள்-கு, நல்-ந, பொள்-பொ. விள்ளுதல் = பிளத்தல், பிரிதல், பகுதல், வேறுபடுதல், கூறுபடுதல். விள்-விறு-வீறு-வீற்று. வீற்று வீற்று = துண்டு துண்டாய். வீறு-வேறு-வேற்று. ஆ என்னும் இடையொட்டு ஆக என்னும் வினையெச்ச வீற்றின் கடைக்குறையாகவு மிருக்கலாம். பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு (நன். 24) என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவில், சொல்லாக என்பது சொல்லா என்றும் சேயிழையாக என்பது சேயிழையா என்றும், ஆகவீறு ஆவீறாக ஈறு குன்றி நிற்றல் காண்க. வ்யாக்ரு என்னும் சொற்கு, வேறாகச் செய் என்னும் பொருளும் பொருந்துதல் காண்க. க்ரு என்பது, கருவி கருமம் என்னும் தென்சொற்கட்கு முத னிலையாகிய கரு என்பதன் முதன்மெய்ந் நீக்கமே. இவ் வினை கடைக்கழகத்திற்கு முன்பே வழக்கற்றது. சொல்லைக் கூறுபடுப்பதும் சொற்றொடரைக் கூறுபடுப் பதும் சொற்றொகுதியாகிய மொழியைக் கூறுபடுப்பதும், ஆக மூவகைக் கூறுபடுப்பே வியாகரணம். 1. எழுத்தியல் (1) வண்ணமாலை (வர்ணமாலா) வடமொழி நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு வர்ணமாலா எனப்பெறும். வண்ணம்-வர்ண. மாலை-மாலா. வர்ண, அக்ஷர என்பன எழுத்தின் பொதுப் பெயர்கள். இவற்றுட் பின்னது அசையையுங் குறிக்கும். வகையும் தொகையும் உயிரெழுத்துகள் (13) அ, ஆ, இ, ஈ. உ, ஊ, ரு. ரூ, லு, ஏ, ஐ, ஓ, ஔ. a, a$, i, i, u, u$, r|u, r|u#, lu, e$, ai, o$, au. அனுஸ்வார . É[®f(g) : மெய்யெழுத்துகள் (33) ஐவர்க்கம் (25) k, kh, g, gh, n( c, ch, j, jh, n$ t |, t|h, d|, d|h, n| t, th, d, dh, n p, ph, b, bh, m இடையினம் (4) ய், ர், ல், வ் இரைப்பினம் (3) ச், ஷ், ஸ் மூச்சொலி (1) ஹ் பாகுபாடும் பெயரும் உயிரெழுத்து அச் (ac) என்றும் ஸ்வ்ர என்றும் பூத (bhu$ta) என்றும், அவற்றுள் குறில் ஹ்ரஸ்வ என்றும், நெடில் தீர்க்க (dirgha) என்றும் பெயர்பெறும். மெய்யெழுத்து ஹல் என்றும் வ்யஞ்சன என்றும் பெயர் பெறும். அவற்றுள் ஐவர்க்கமும் ஸ்பர்சா (mutes) என்றும், இடையினம். அந்தஸ்தா (anta$stha# : semi-vowels) என்றும், இரைப்பினமும் மூச்சொலி யும் (aspirate) ஊஷ்மாண: (sibilants) என்றும் பெயர் பெறும். ஐவர்க்கங்களும் முறையே, ஒலிபற்றிக் கவர்க்கம் (kavaraga), சவர்க்கம் (ca$varga), டவர்க்கம் (t@avarga), தவர்க்கம் (tavarga), பவர்க்கம் (pavarga) என்றும்; பிறப்பிடம்பற்றிக் கண்ட்யா (Gutturals), தாலவ்யா (Palatals), மூர்தன்யா (Murdhanya#: Linguals or Cerebrals), தந்த்யா (Dantya$:-Dentals), ஓஷ்ட்யா (Labials) என்றும், சொல்லப்பெறும். (2) ஒலியும் பிறப்பும் உயிரெழுத்துகளுள், ருகரம் குற்றியலுகரம் சேர்ந்த ரகரமாகும்; ரகரவூகாரம் அதன் நெடில் அல்லது நீட்டம். லுகரம் குற்றியலுகரம் சேர்ந்த லகரம். அனுஸ்வார என்பது முந்தின வுயிரை யடுத்தொலிக்கும் மகர வகை. விஸர்க்கம் (விஸர்க) என்பது ஆய்தப்போலி; ஆயின் வரி வடிவின்றி உயிரேறப் பெறுவது; ஸகரத்தின் திரிபாக வரக்கூடியது. k, kh ஆகியவற்றின் முன்னும் p, ph ஆகியவற்றின் முன்னும் வந்து அரை விஸர்க்கமாக ஒலிக்கும் ஒலிக்கு முறையே, ஜிஹ்வா மூலீய என்றும் cg¤khÜa(dh) என்றும் பெயர். முன்னதற்கு மிடறும் பின்னதற்கு இதழும் பிறப்பிடமாம். சிலவிடத்து, உயிர்களும் ய வ ல ஆகிய இடையின மெய்களும் மூக்கொலியுடன் இசைக்கும். அன்று அவை அனுநாசிகம் எனப் படும். ஊஷ்மாணங்களுள் ஹகரத்திற்கு மிடறும், சகரத்திற்கு இடை யண்ணமும், ஷகரத்திற்கு முன்னண்ணமும், ஸகரத்திற்குப் பல்லண் ணமும் பிறப்பிடமாம். ஐ, ஔ என்னும் இரு நெடிலும் முதற்காலத்தில் ஆய், ஆவ் என நீண்டொலித்தன வென்றும், ஆரியம் தமிழொடு தொடர்பு கொண்ட பின், அவை தமிழிற்போல் அய், அவ் எனக் குறுகி யொலிக்கின்றன வென்றும் கூறுவர். தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான பிற எழுத்து களெல்லாம், தமிழிற்போன்றே ஒலிக்குமென அறிக. ஏ,ஓ இரண்டும் தமிழில் எகர ஒகரங்களின் நீட்டமான தனியொலிகளாகக் (simple vowels) கொள்ளப்பெறும்; சமற்கிருதத் தத்தில் தவறாகப் புணரொலிகளாகக் (diphthongs) கொள்ளப்பெறு கின்றன. இதற்கு அம் மொழியில் எகர ஒகர மின்மையும் குணசந்தியுமே காரணம். அ,ஆ + இ,ஈ = ஏ. எ-டு : மஹா+இந்திர(ன்) = மஹேந்திர(ன்) அ,ஆ+உ,ஊ = ஓ. எ-டு : குல+உத்துங்கன் = குலோத்துங்கன். (3) எழுத்துச்சாரியை காரமும் கரமும் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை'' (தொல்.134) என்பது தொல்காப்பியம். உயிரெழுத்தின் உதவியின்றித் தாமாக வொலிக்காத மெய் யெழுத்துகளை ஒலிப்பித்தற் பொருட்டும், தாமாக வொலிக்கும் உயிரெழுத்துகளையும் எளிதாக ஒலிப்பித்தற் பொருட்டும், சில துணையொலிகளைப் பண்டைத் தமிழிலக்கண நூலார் அமைத் துள்ளனர். அவை சாரியை எனப்பெறும். உயிரெழுத்துகளுள் குறிற்குக் கரமும், நெடிற்குக் காரமும் சாரியையாம். ஐகார ஔகாரங்கட்குக் கான் என்பது சிறப்புச் சாரியை. இதைக் குறிற்கும் மெய்க்கும் பயன்படுத்தியது பிற்காலத்ததாகத் தெரிகின்றது. மெய்யெழுத்துகட்கு அவ்வும் அகரமும் சாரியை. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (தொல்.46) எ-டு : ``வல்லெழுத் தென்ப கசட தபற (தொல். 19) ``வகரக் கிளவி நான்மொழி யீற்றது'' (தொல். 81) வடமொழி மெய்களும் தமிழ்முறைப்படியே அகரமொடு இயங்குகின்றன. உயிர்மெய்கட்குள் குறிற்குக் கரமும் நெடிற்கு மெய்ச் சாரியையொடு கூடிய உயிர்நெடிற் சாரியையும் சாரியையாம். எ-டு: ககரம் (க), ககர ஆகாரம் (கா). ஆய்தத்திற்கு அ-கேனம் என்பது சாரியையாம். எ-டு. அஃகேனம். இது தொல்காப்பியத்திற் சொல்லப்பெற வில்லை. இங்ஙனம் தமிழெழுத்துச் சாரியை யொழுங்கு நிறைவாக அமைந்துள்ளது. வடமொழியார் கரம், காரம் என்னும் இரண்டையே தமிழினின்று கொண்டுள்ளனர். அதோடு குறிற்கு இரண்டையும் வேறுபாடின்றி ஆள்வர். இதனாற் சாரியை யமைப்பின் தமிழ்மூலம் தெளிவாகத் தெரிகின்றது. கரம், காரம் என்பன வடமொழியில் கர, கார என்று ஈறுகெட்டு நிற்கும். சாரியை என்னுங் குறியீடும் வடமொழியி லில்லை. ரகார ழகாரம் குற்றொற் றாகா'' (தொல். 49) உஊ காரம் நவவொடு நவிலா (தொல். 74) என்பன போன்றவற்றைச் செய்யுள் திரிபில் அடக்குதல் வேண்டும். கரமும் கானும் நெட்டெழுத் திலவே (தொல். 135) என்று விலக்கியபின், ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும் (தொல். 137) என்று தொல்காப்பியரே முரண்படக் கூறுவதால், வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய (தொல். 136) என்று அவர் குறித்திருப்பது குமரிநாட்டு வழக்கொடு பொருந் தியதாய்த் தோன்றவில்லை. (4) முறை மேலையாரிய மொழிகட்குள் ஒன்றிற்காவது முறை என்னும் எழுத்திலக்கணம் இன்றுமில்லை. வேத ஆரியர் எழுத்தும் இலக்கியமுமின்றி இந்தியாவிற்குட் புகுந்தனர். வேதமொழிக்கும் வேதத்திற்கும் எழுதாக்கிளவி என்று பெயர். வேதத்தைக் குறிக்கும் ச்ருதி (கேள்வி) என்னும் பெயரே ஆரியர்க்கு எழுத்தின்மையை உணர்த்தும். இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திலேயே முதன்முதல் நெடுங்கணக்கு வகுத்ததும் அதற்கு முறையமைத்ததும் தமிழரே. வேத ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்னரே, தமிழ்நெடுங்கணக்கைப் பின்பற்றி வட மொழிக்குக் கிரந்த வண்ணமாலையை அமைத்துக்கொண்டனர். உயிர் முன்னும் மெய் பின்னும், உயிருள் ஆ ஈ ஊ முன்னும் ஏ ஓ பின்னும், ஒவ்வோர் உயிரிலும் குறில் முன்னும் நெடில் பின்னும், ஏயின் பின் ஐயும் ஓவின் பின் ஔவும், ஆய்தமொத்த விஸர்க்கம் உயிர்க்கும் மெய்க்கும் இடையும், மெய்யுள் வலிவகை முன்னும் மெலி பின்னுமாகக் கசடதப முறையிலும், அவற்றிற்குப்பின் இடையினம் ய ர ல வ முறையிலும், அமைந்திருப்பது, வடமொழி வண்ணமாலை தமிழ் நெடுங்கணக்கு முறையை முற்றுந் தழுவிய தென்பதை, எத்துணைத் தெள்ளத் தெளிவாகக் காட்டு கின்றது ! இஃதொன்றே வடமொழியின் பின்மையைக் காட்டப் போதிய சான்றாம். உயிர் வரிசையுட் செருகப்பட்ட சிறப்பெழுத்துகளை நோக் கினும், முற்றுகரத்தை யடுத்துக் குற்றுகரமும், ரகரக் குற்றுகரத்தின் பின் லகரக் குற்றுகரமும் வைக்கப்பெற்றிருப்பது, எத்துணைத் தமிழ்முறை யொட்டியது ! இங்ஙன மிருப்பினும்,தமிழர் வேற்று நாட்டினின்று வந்தவ ரென்றும், ஆரியரால் நாகரிகப்படுத்தப் பெற்றவரென்றும், இரு தவறான முற்கோள் கொண்டிருந்ததினாலும், பண்டைத் தமிழிலக் கியத்தைப் பார்க்கப் பெறாமையாலும், தமிழின் தொன்மை முதன்மை தாய்மை தலைமை ஆகியவற்றை யுணராது, வடமொழி வண்ண மாலையைத் தழுவியது தமிழ் நெடுங்கணக் கென்று, தலைகீழாகத் தவறான முடிபிற்குக் கால்டுவெலார் வர நேர்ந்த தென்று கண்டுகொள்க. (5) அளபு அளபு என்பது எழுத்தொலியின் மாத்திரை அல்லது அளவு. அளபு, மாத்திரை என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுள் முன்னது தமிழ்ச் சிறப்புச் சொல், பின்னது தென்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுச் சொல். மெய்க்கு அரையும் குறிற்கு ஒன்றும் நெடிற்கு இரண்டும் மாத் திரை என்பது இருமொழிக்கும் பொது. வடமொழியில் புலுதம் என்னும் அளபெடையையும் உயிர் அல்லது உயிர்மெய் வகைகளுள் ஒன்றாகச் சேர்த்து, அதற்கு மும்மாத்திரை என வகுத்துள்ளனர். அளபெடை தமிழிலும் உண்டு. ஆயின் அதை ஒழுங்கான உயிர் வகையாகக் கொண்டிலர். ஏனெனின், அது உலகியல் அல்லது இயற்கை யளபெடையில் மும்மாத்திரை முதல் பத்து அல்லது பன்னிரு மாத்திரைவரை நீண்டளபெடுக்கும். செயற்கையாகிய செய்யுளில் அளபெடை குறுகியொலிப்பினும், அருகியும் திட்ட மான மாத்திரை வரம்பின்றியுமே நிகழும். அளபெடையையும் ஓர் உயிர்வகையாகக் கொண்டது வடமொழி யிலக்கணத்தின் பின்மையையே காட்டும். (6) வடிவம் வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ் நாட்டில்தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்த வெழுத்து. அதன் காலம் தோரா. கி. மு. 10ஆம் நூற்றாண்டு. ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணம் தொல்காப் பியத்திற்கு முந்திய நூலாதலால், வடமொழிக் கிரந்தவெழுத்து அதற்கு ஓரிரு நூற்றாண்டு முற்பட்டதா யிருத்தல் வேண்டும். கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்குமட்டும் பயன்படுத்தப்பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர். இன்றுள்ள தேவநாகரி கி. பி. 4ஆம் நூற்றாண்டிற் கருக்கொண்டு 11ஆம் நூற்றாண்டில் முழுநிறைவடைந்தது. அதையும் உற்றுநோக்கின் அதற்கும் கிரந்தவெழுத்திற்குமுள்ள நுண்ணிய வடிவொப்புமை புலனாகும். தேவமொழி யென்னும் வடமொழிக்கு நகரங்களில் ஆளப் பெற்ற எழுத்து தேவநாகரி. தேவர் நகரங்களில் ஆளப்பெற்றது தேவநாகரி என்பர் வடமொழியாளர். அவர் தேவரென்று நாணாது குறிப்பது பிராமணரை. சில எழுத்துகளின் வடிவங்கள்: எழுத்து வடிவம் அனுநாசிகம் ஜிஹ்வாமூலீய (k, kh ஆகியவற்றின் முன்) உபத்மானீய (p,ph ஆகியவற்றின் முன்) தமிழ்க் கையெழுத்தில் சில கூட்டெழுத்துகளை ஆள்வது போல், வடமொழி அச்செழுத்தில் ஏராளமான கூட்டெழுத்துகளை அமைத்திருக்கின்றனர். அவை சந்தியக்ஷரம் எனப்படும். எ-டு : க்ஷ- க்ஷ, ச்ரீ- ஸ்ரீ இவை கிரந்தம் . இங்ஙனம் தேவநாகரியில் ஏராளமாகவுண்டு. மெய்யைக் குறிக்கக் கிரந்தத்தில் மேற்புள்ளியும் தேவ நாகரியிற் கீழிழுப்பும் இட்டதும், இருவகை யெழுத்திலும் உயிர் மெய்க்குத் தனி வடிவமைத்ததும், முற்றும் தமிழைப் பின்பற்றியே. (7) புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி, சொற்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும். தமிழிலக்கணத்தை முதன்முதல் ஆய்ந்து கண்டு நூலியற்றி யவர் தலைசிறந்த முனிவர் என்பது, வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும் ( தொல்.1594) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் விளங்கும். முனிவர் மெய்ப்பொருளுணர்வு முதிர்ந்தவராதலின், உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் உயிர், உயிரில்லது (மெய்), உயிருள்ளது (உயிர்மெய்) என மூவகையாக இருக்கக்கண்டு, அவற்றையொத்த மூவகை எழுத்தொலிகட்கும் அவற்றின் பெயரையே உவமையாகு பெயராக இட்டு, உயிர்மெய்க்குத் தனி வடிவம் அமைத்தனர். இதனால், உயிர்மெய்யொலியை உயிரும் மெய்யுமாக முதன்முதற் பகுத்தவர் தமிழர் என்பதும், உயிர்மெய்யிலேயே எழுத்துப் புணர்ச்சி தோன்றிவிட்டதென்பதும் தெளிவாம். சொற்புணர்ச்சி எல்லா மொழிகளிலு முண்டு. ஆயின், இயன் மொழியிலேயே புணர்ச்சி ஒழுங்காகவும் புணர்ச்சொற்கள் எளிதாய்ப் பகுக்கக் கூடியனவாகவு மிருக்கும். திரிமொழிகளில் தனிச்சொல்லும் கூட்டுச் சொல்லும் பெரும்பாலும் திரிந்திருப்ப தாலும், திரிபுபுணர்ச்சி நிகழவேண்டிய விடத்தும் இயல்பு புணர்ச்சியே பெரும்பான்மையாய் நிகழ்வதாலும், திரிபு புணர்ச்சி நிகழ்ந்தவிடத்தும் அது வரிவடிவிற் காட்டப் பெறாமையாலும், அவற்றிற் புணர்ச்சியிலக்கணம் வகுக்கப் பெரிதும் இடமில்லை. சமற்கிருதம் திரிமொழியாயினும், தொன்றுதொட்டுத் தமிழொடு தொடர்பு கொண்டமையானும், ஐந்தி லிருபகுதிக்குக் குறையாது தமிழாயிருத்தலானும். தமிழைத் தழுவியே இலக்கணஞ் செய்யப் பெற்றமையானும், புணர்ச்சியிலக்கணம் அதற்கமைந்த தென்க. ஆயினும், திரிமொழியாதலின், தமிழ்ப் புணர்ச்சிபோற் பெரும்பாலும் ஒழுங்குபடாது எத்துணையோ விலக்குகளைக் கொண்டுள்ளதென அறிக. வடமொழிப் புணர்ச்சியும் தமிழ்ப் புணர்ச்சி போன்றே உயிரீறும் மெய்யீறும்பற்றி இருவகைப்படும். உயிரீற்றுப் புணர்ச்சியை அச்ஸந்தி அல்லது ஸ்வரஸந்தி என்றும்,மெய்யீற்றுப் புணர்ச்சியை ஹல்ஸந்தி என்றுங் கூறுவர். உயிரீற்றுப் புணர்ச்சியில் குணம், விருத்தி என்னும் இருவகை உயிர்த்திரிபுகள் வடமொழிக்குச் சிறப்பானவை. இன்னின்ன சிற்றுயிர் கட்கு (simple vowels) இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் குணம் என்றும், இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் விருத்தி என்றும் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பின்வருங் கட்டமைப்பிற் கண்டு கொள்க. இயலுயிர் அ இ,ஈ உ,ஊ ரு,ரூ லு குணவுயிர் அ ஏ ஓ அர் அல் விருத்தியுயிர் ஆ ஐ ஔ ஆர் ஆல் தீர்க்கஸந்தி என்னும் மூவகை நெடிற்புணர்ச்சி, குளாம்பல் (குள ஆம்பல்), புதூர் (புது ஊர்) என்னும் மரூஉப் புணர்ச்சி யொத்தவையே. தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் முப்புணர்ச்சித் திரிபுகளும், ஆகம(ம்), ஆதேச(ம்), லோப(ம்) என மொழிபெயர்க்கப் பட்டுள. எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே (நன். 57) என நன்னூலார் கூறும் பன்னிருவகை எழுத்திலக்கணங்களுள், முதல் ஈறு இடைநிலை என்னும் மூன்றும் திரிமொழியாகிய வடமொழிக் கில்லை. (8) வடமொழியெழுத்துப் பெருக்கம் கிரேக்கக் குறுங்கணக்கு (24) A (a and a$), B, G (g and n(), D, F, Z, E#, TH, I (i and i), K, L, M, N, O,X, P , R, S (s and z), T, U (u and u$), PH, KH, PS, O#. இவற்றுள், TH, X (ks), PH, KH, PS என்னும் ஐந்தே புணர்மெய்கள்; TH, PH, KH என்னும் மூன்றே மூச்சொலிப் புணர்மெய்கள். X (ks) வடமொழியில் க்ஷ (ks@) ஆக வளர்ந்துள்ளது. இலத்தீன் குறுங்கணக்கு (21) A, B, C, D, E, F, Z, H, I (J), K, L, M, N, O, P, Q, R, S, T, V (U), X. இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய், அதுவும் மூச்சொலி யற்றது. C = G, J = Y. தியூத்தானியக் குறுங்கணக்கு (ஆங்கிலம்) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய். கிரேக்க அரிவரி பினீசியரிடத்தினின்றும், இலத்தீன் அரிவரி கிரேக்கரிடத்தினின்றும், ஆங்கில அரிவரி இலத்தீனராகிய உரோம ரிடத்தினின்றும் பெறப்பட்டவையாகும். இன்று ஐரோப்பா முழுதும் வழங்கும் ஆரியமொழி அரிவரிகள், இலத்தீன் அரிவரியைத் தழுவியவையே. ஆங்கிலம் பிற்கால மொழியாதலால், சில பிற்கால வொலிகள் இணைவரிகளால் (Digraphs) குறிக்கப்பெறுகின்றன. எ-டு : ch = ச்ச, sh = ஷ. சமற்கிருதம் ஆரியமும் திரவிடமும் கலந்த மொழியாதலின், பல முதிரொலிகளைக் கொண்டிருப்பதுடன், வல்லின ஐவகையுள்ளும் பொலி (voiced) யொலியுடனும் பொலியா (voiceless) வொலியுடனும் மூச்சொலியை ஒழுங்காகச் சேர்த்து அவற்றிற்குத் தனி வடிவம் அமைத்துள்ளது. kh, gh, ch, jh; t@h, d@h; th, dh, ph, bh என்னும் பத்துக் கூட்டு மெய்கட்கும், வடமொழியில் தனி வடிவம் அமைந்திருத்தல் காண்க. இந் நிலைமை வேறெம் மொழியிலு மில்லை. (9) வடமொழி வண்ணமாலையின் பின்மை வடமொழி வண்ணமாலையின் பின்மை பின்வருஞ் சான்று களால் துணியப்பெறும்: (1) வடமொழியின் பின்மை. (2) ஆரியவேதம் பன்னூற்றாண்டு எழுதாக் கிளவியா யிருந்தமை. (3) தமிழெழுத்தைப் பின்பற்றிய கிரந்தம் தேவநாகரிக்கு முற்பட்டமை. (4) ஒலிவடிவு, மாத்திரை, சாரியை, வரிவடிவு, முறை முதலிய வற்றில் இயன்றவரை தமிழைப் பின்பற்றியிருத்தல். (5) ஒலிப்பெருக்கம். (6) கூட்டு மெய்கட்குத் தனி வடிவு கொண்டுள்ளமை. ஐவர்க்கங்களும் கவர்க்கம் சவர்க்கம் (c) என முதன்மெய் யாலேயே பெயர்பெற்றிருப்பதால், அம் முதன்மெய்யின் திரிபே பிற்பட்ட மூன்றும் என்பது பெறப்படுதல் காண்க. இனி, தமிழ்ப் பொலியா வொலிச்சொற்கள் திரவிடத்திற் பொலிவொலிச் சொற்களாகவும், ஆங்கிலப் பொலியாவொலிச் சொற்கள் இலத்தீன் கிரேக்கத்திற் பொலிவொலிச் சொற்களாகவும், திரிந்திருத்தலையும் நோக்கித் தெளிக. இனி, வடமொழி யைவருக்க முதன்மெய்களும் தமிழ் வல்லினத்தின் வலித்த வடிவே யென்பதையும் கண்டறிக. (7) மேலையாரியம்போற் குறுங்கணக்கு மட்டுங் கொண் டிராது தமிழ்போல் நெடுங்கணக்குங் கொண்டிருத்தல். (10) வடமொழி வண்ணமாலையின் ஒழுங்கின்மை (1) ரு, ரூ, லு என்னும் உயிர்மெய்கள் உயிரினத்திற் சேர்க்கப் பட்டிருத்தல். (2) தேவநாகரியிற் சில எழுத்துகட்கு ஒன்றோடொன்றை மயக்கற்கேற்றவாறு வடிவமைந்திருத்தல். (3) மகரவொலியாகிய அனுஸ்வாரக் குறி மெல்லினப் பொது வாயிருத்தல். (11) வடமொழிக் குறுங்கணக்கு நூற்பாக்கள் 1. அ இ உ ண், 2. ருலுக், 3. “VX§”, 4."Ixs¢” (c), 5. “Aatu£”(t@), 6. லண், 7. ஞமஙணநம், 8. “JHA BHA ஞ், 9. “GHA D@HA DHA ஷ், 10. “# BA GA D@A DA ச், 11. “KHA PHA CHA T@HA THA CA T@A T@A வ், 12. “KA PA ய், 13. சஷஸர், 14. ஹல். இப் பதினால் நூற்பாக்கட்கும் மகேசுவர சூத்திரங்கள் அல்லது சிவசூத்திரங்கள் என்று பெயர். இவை பாணினீயத்தொடு பொதுவாகச் சேர்த்துக் கூறப்படினும், சிவபெருமானாற் செய்யப் பெற்றவை யென்றும், அவர் துடியைப் பதினான்முறை இயக்க இப் பதினால் ஒலித் தொகுதிகளும் தோன்றினவென்றும், வடமொழி யாளர் கூறுவர். வடமொழியையே தேவமொழி யென்பார் இங்ஙனங் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆயினும் துணிச் சலான ஏமாற்றே. அஷ்டாத்யாயீ என்னும் பாணினி யிலக்கணத்தின் மூலபாடத் தில் இவை சேர்க்கப்பெறாமையாலும், பாணினீய நூற்பாக்கள் போல் அதிகாரவியல் எண் பெறாமையாலும், நன்னூற் பொதுப் பாயிர நூற்பாக்கள்போல் முன்னரே பலராற் செய்யப்பட்டு வழிவழி திருந்தி வந்தவையாயு மிருக்கலாம். இந் நூற்பாக்களின் இறுதியெழுத்துகட்கு இத் என்று பெயர். ஒரு நூற்பாவின் முதலெழுத்தையும் அதன்பின் வரும் ஓர் இத்தையும் சேர்ப்பின் ப்ரத்யாகார என்னுங் குறியீடாகும். அக் குறியீடு, அதன் முதலெழுத்தையும், அதன் ஈரெழுத்திற்கும் இடைப்பட்ட இத்தல்லா எல்லா நூற்பா எழுத்துகளையும் குறிக்க உதவும். இம் முறையில், அண் என்பது அகரத்தையும் அகர இகர வுகரங்களையுங் குறிக்கும். அச் என்பது எல்லா உயிர்களையும், ஹல் என்பது எல்லா மெய்களையும், அல் என்பது எல்லா உயிர்களையும் மெய்களையும் குறிக்கும். இதனால், மேற்கூறிய பதினால் நூற்பாக்கட்கும் பிரத்தியாகார சூத்திரங்கள் என்றும் பெயர். 2. சொல்லியல் எல்லா மொழிகளிலும் இலக்கணவகைச் சொற்கள் பெயர், வினை, இடை என மூன்றே. இவை சிக்ஷை, நிருக்தம் என்னும் தொடக்க வடநூல்களில், நாம(ம்), ஆக்யாத(ம்), நிபாத(ம்) எனக் குறிக்கப்பட்டன. பாணினி இவற்றை முறையே சுபந்தம், திஙந்தம், அவ்யய(ம்) எனக் குறித்தார். உபஸர்க்கம் என்னும் முன்னொட்டு நிபாதத்துள் அடங்கும். ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்பே, நாமம் என்னுஞ் சொல் மேலை யாரியத்தில் namon, nomen என்று வழங்கியதாகத் தெரிவ தாலும், தியூத்தானியத்தில் வினையாகவும் வழங்கி வருவதனாலும், ஒருகால் அது மேலையாரியச் சொல்லாக இருப்பினும் இருக்கலாம். ஆக்யாத (kh) என்னும் சொல், சொல் என்றே பொருள்படுவது. இது பொருளிலும் ஆட்சியிலும் verb (L.verbum) என்னும் ஆங்கிலச் சொல்லை யொத்தது. கியா = சொல். verb = சொல். நிபாத என்பது நிபத் என்னும் கூட்டு முதனிலையினின்று திரிந்தது. நீ = கீழ். பத் = விழு. நிபாத = நெறிதிறம்பியது, ஒழுங்கற்றது. படி(த.) - பத். வேற்றுமை யுருபேற்ற பெயரும் கால வெண் ணிடங் காட்டும் ஈறேற்ற வினையும் பதம் எனப்படும். (12) பெயர்ச்சொல் (ஸுபந்த) தாது எனப்படும் முதனிலையொடு, கிருத் எனப்படும் பெயரடி யிடையொட்டும் தத்திதன் எனப்படும் வழிநிலை யிடையொட்டும் சேர்ந்த வடிவிற்குப் பிரகிருதி அல்லது பிராதிபதிகம் என்று பெயர். இப் பிராதிபதிகத்துடன் வேற்றுமை யுருபு சேரின் பெயர்ப்பதமாம். அது சுபந்தம் எனப்படும். சுப் (ஸுப்) என்பது வேற்றுமையுருபுகளை யெல்லாம் பொதுவாகக் குறிக்கும் பாணினீயக் குறியீடு. அந்தம் ஈறு. கிருத் ஈறு கிருதந்தம் என்றும், தத்தித ஈறு தத்திதாந்தம் என்றும் சொல்லப்படும். இவை யிரண்டிற்கும் பிரத்யயம் என்பது வடமொழிப் பொதுப்பெயர். பிராதிபதிகத்திலும் பெயர்ப்பதத்திலும் க்ருத், தத்திதன் ஆகிய இருவகை யிடையொட்டும் சேர்ந்துமிருக்கலாம்; அவ் விரண்டி லொன்று தனித்துமிருக்கலாம். பால் (லிங்க) வடமொழியில் திணையில்லை; பால்மட்டும் உண்டு. அது புல்லிங்கம் (ஆண்பால்), ஸ்திரீலிங்கம் (பெண்பால்), நபும்ஸக லிங்கம் (அலிப்பால்) என மூவகைப்படும். வடமொழிப் பால்வகுப்பு இயற்கையான பொருளியல்பு பற்றிய தன்று; பெரும்பாலும் செயற்கையான இலக்கண முறைபற்றியது. சில பெயர்களே உண்மையான பால் காட்டும். எ-டு: புஸ்தகம் (ஆ. gh.), சிலா(பெ. பா.) = கல். மனைவியைக் குறிக்கும் தாரம் (ஆ. gh.), பாரியா(பெ. பா), களத்திரம்(அ. பா.) என்னும் முச்சொற்களும், பால் வேறுபடும். எண் (வசன) வடமொழியில் ஏகவசனம் (ஒருமை), த்விவசனம் (இருமை), பஹு வசனம் (பன்மை) என எண் மூவகைப்படும். மேலையாரியத்தைச் சேர்ந்த தியூத்தானியத்திலும் இலத் தீனிலும் இருமையெண் இல்லை; சமற்கிருதத்திற்கு மிக நெருங்கிய கிரேக்கத்தில்தான் உண்டு. இடம் (புருஷ) இடம் தமிழிற் போன்றே வடமொழியிலும் மூன்றாம். அவை உத்தம புருஷ (தன்மை), மத்யம புருஷ (முன்னிலை), ப்ரதம புருஷ (படர்க்கை) எனப்படும். வேற்றுமை (விபக்தி) கிரேக்க இலக்கணத்தில் எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கிழமை வேற்றுமை, கொடை வேற்றுமை என்னும் ஐவேற்றுமைகளும்; இலத்தீன் இலக்கணத்தில் எழுவாய் வேற்றுமை, கிழமைவேற்றுமை, கொடைவேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, விளிவேற்றுமை, நீக்கவேற்றுமை என்னும் அறுவேற்றுமைகளுமே கூறப்படுகின்றன. முதற்கால ஆங்கிலத்தில் எழுவாய், விளி, செய்பொருள், கிழமை, கொடை, கருவி என்னும் அறு வேற்றுமைகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆயின் மேலையாரிய மொழி ஒன்றிலாவது எண் வேற்றுமை சொல்லப்படவில்லை. வடமொழியிலோ தமிழிற்போல் எண்வேற்றுமை காட்டப் பெறுவதுடன் , அவற்றின் வரிசையும் பெயரும் பொருளும் முற்றும் தமிழை ஒத்திருக்கின்றன. வேற்றுமைப்பெயர் வேற்றுமைப்பொருள் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி முதல் வேற்றுமை ப்ரதமா விபக்தி வினைமுதல் கர்த்தா இரண்டாம் '' த்விதீயா '' செய்பொருள் கர்ம(ம்) மூன்றாம் '' த்ருதீயா '' வினைமுதல், கர்த்தா, கரணம் கருவி நான்காம் '' சதுர்த்தீ '' கொடை ஸம்பிரதானம் ஐந்தாம் '' பஞ்சமீ '' நீக்கம் உபாதானம் ஆறாம் '' ஷஷ்டீ '' கிழமை ஸம்பந்த(ம்) ஏழாம் '' ஸப்தமீ '' இடம் அதிகரணம் எட்டாம் '' ஸம்போதன '' விளி ஸம்போதனம். (விளி) ப்ரதமா இங்ஙனம் முற்றும் ஒத்திருப்பதால், வடமொழி வண்ண மாலை போன்றே வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியதென்பது வெள்ளிடைமலை. விபக்தி என்னும் சொல்லே விள்-பகு என்பதன் திரிபான வி-பஜ் என்னும் கூட்டுமுத னிலையினின்று திரிந்து வேறு பிரிப்பு என்று பொருள்படும் மொழிபெயர்ப்பாகும். தமிழில் எண்வேற்றுமையும் எண்வரிசையால்மட்டுமன்றி, எழுவாய், செய்பொருள், கருவி, கொடை, நீக்கம், கிழமை, இடம், விளி எனப் பொருள்பற்றியும்; பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி என உருபுபற்றியும் பெயர்பெறும். வடமொழியில் எட்டாம் வேற்றுமை எண்ணாற் பெயர் பெறா திருப்பதும் கவனிக்கத்தக்கதாம். கால்டுவெலார் தொல்காப்பியத்தையும் தமிழின் முன்மை யையும் அறியாமையால், மூலத்தைப் படியாகவும் படியை மூலமாகவும் பிறழவுணர்ந்து, தமிழ்வேற்றுமையமைப்பு வடமொழி வேற்றுமை யமைப்பைப் பின்பற்றியதென்று தலைகீழாகக் கூறிவிட்டார். தமிழ் இயன்மொழியாதலால் அதில் முதல் வேற்றுமைக்கு உருபில்லை; சமற்கிருதம் திரிமொழியாதலின், அதற்கு அஃதுண்டு. வடசொற்கள் ஈற்றிற் கேற்ப வேற்றுமையுருபுகள் சிறிதும் பெரிதும் வேறுபடும். இங்கு அகரவீறொன்று காட்டப்பெறும். ராம (வேற்றுமைப்படா வடிவு) ஒருமை இருமை பன்மை முதல் வேற்றுமை ராம: ராமௌ ராமா: இரண்டாம் '' ராமம் '' ராமான் மூன்றாம் '' ராமேண ராமாப்யாம் ராமை: நான்காம் '' ராமாய '' ராமேப்ய: ஐந்தாம் '' ராமாத் '' '' ஆறாம் '' ராமஸ்ய ராமயோ: ராமாணாம் ஏழாம் '' ராமே '' ராமேஷு விளி '' ஹே ராம ஹே ராமௌ ஹே ராமா: 3ஆம் 4ஆம் 5ஆம் வேற்றுமைகளிலும் 6ஆம் 7ஆம் வேற்றுமைகளிலும் இருமை வடிவும், 4ஆம் 5ஆம் வேற்றுமைகளிற் பன்மை வடிவும், எல்லா ஈற்றுப் பெயர்கட்கும் பெரும்பாலும் ஒத்தே யிருக்கும். வடமொழியிற் பெயரெச்சங்களும் (விசேஷணங்களும்) வேற்றுமைப்படும். அஸ்ய என்னும் 6ஆம் வேற்றுமை யொருமை யுருபு, உடைய என்னும் சொல்லுருபின் திரிபாயிருக்கலாம். (2) வினைச்சொல் (திஙந்த) தாது என்னும் முதனிலையொடு கால வெண் ணிடங் காட்டும் ஈறுசேரின் வினைப்பதமாம். அது திஙந்தம் எனப்படும். ங் என்பது வினையீறுகளை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பாணினீயக் குறியீடு. சமற்கிருத வினைகள், ஆறுகாலங்களும் (Tenses), நான்கு படிசுகளும் (Moods), மூன்று உறவுகளும் (Voices) கொள்ளும். காலம் கால என்றும், படிசு அர்த்த என்றும், உறவு ப்ரயோக என்றும் பெயர் பெறும். ஆறுகாலங்களும் நான்கு படிசுகளும் லக்கரங்கள் எனப்படும். வடமொழியில் எல்லா வினைவகைகட்கும் இடுகுறியான குறியீ டுண்டு. அறுகாலம் காலவகை வடமொழிப்பெயர் வடமொழிக் குறியீடு நிகழ்காலம் வர்த்தமான: y£(t |) இறந்தகாலம் இன்றலா இ.கா. அனத்யதனபூத: லங் சேய்மை '' பரோக்ஷபூத: È£(t |) வரையிலா '' பூத: லுங் எதிர்காலம் முதல் எ.கா. பவிஷ்யன் லுட் 2ஆம் எ.கா. அனத்யதன பவிஷ்யன் லுட் நாற்படிசு தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் வடமொழிக் குறியீடு ஏவல் வினை ஆஜ்ஞா லோட் (t |) ஆற்றல் வினை விதி லிங் வாழ்த்துவினை ஆசீ: ஆசீர்லிங் நிலைப்பாட்டுவினை ஸங்கேத லுங் ny£(t |) என்று ஓர் இணைப்புப் படிசு (Subjunctive mood) வேதமொழியி லிருப்பதாகவும், பின்பு வழக்கற்றுப் போனதாகவுஞ் சொல்லப்படும். மூவுறவு தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் எடுத்துக்காட்டு செய்வினை கர்த்தரிப்ரயோக ராம: ஸத்யம் பாஷதே. செயப்பாட்டுவினை கர்மணிப்ரயோக ஹரிணா பலம் பக்ஷ்யதே. தன்பாட்டுவினை பாவேப்ரயோக ராமேண கம்யதே. சமற்கிருத வினைமுற்றீறுகள், தற்பொருட்டுவினை (ஆத்மனே பத) ஈறுகள் என்றும் , மற்பொருட்டுவினை (பரஸ்மைபத) ஈறுகள் என்றும் இருவகைப்பட்டுள்ளன. சிவ வினைகள் தற்பொருட்டு வினையீறுகளையும், சில வினைகள் மற்பொருட்டு வினையீறு களையும்,சில வினைகள் இரண்டையும் ஏற்கும். முன்னொட்டுச் சேர்க்கையால், த.பொ.வினை ம.பொ.வினையாகவும், ம.பொ.வினை த. பொ.வினையாகவும் மாறுவதுண்டு. த.பொ. வினைப்பயன் செய்வானையும், ம.பொ. வினைப் பயன் பிறனையுஞ் சாரும். எ-டு: njtj¤j: a#nj (t) .= தேவதத்தன் தனக்கு வேட்கிறான். தேவதத்த: a#â(t) = தேவதத்தன் பிறனுக்கு வேட்கிறான். வேட்டல் = வேள்வி செய்தல். எல்லா வினைகளும் பத்து லக்கரங்களிலும் மூவிடத்தும் மூவெண்ணிலும் புடைபெயரும். நிகழ்காலம் , இன்றலா இறந்தகாலம், ஏவல்வினை, ஆற்றல் வினை ஆகிய நாலிலக்கரங்களிலும், வினைகள் சில வேறுபாடடை கின்றன. அவ் வேறுபாடு விகரண(ம்) எனப்படும். வேறுபாட்டை யும் லக்கரங்கள் ஸார்வ தாதுக என்றும், வேறுபாடடையா லக்கரங்கள் அர்த்த தாதுக என்றும் சொல்லப்படும். விகரணம்பற்றி வினைகள் பத்துக் கணங்களாக வகுக்கப்பட் டிருக்கின்றன. இப் பத்துக் கணங்களும் மீண்டும் இரு தொகுதி களாகப் பகுக்கப்பட்டுள. முதலாம் இரண்டாம் மூன்றாம் பத்தாங் கணங்கள் முதல் தொகுதியும், ஏனைய இரண்டாம் தொகுதியும் ஆகும். முதல் தொகுதி வினையடிகள் அகரத்தில் இற்று என்றுந் திரியாது நிற்கும்; இரண்டாந் தொகுதி வினையடிகள் அகரத்தில் இறாது திரிந்துவரும். வடமொழிச் செயப்பாட் டிறந்தகால வினையெச்ச வீறாகிய த, தமிழிறந்தகால வினையெச்ச வீறாகிய துவ்வை ஒருபுடை யொத்தது. வடமொழி எதிர்மறை யேவலசையாக வரும் மா, வத்து என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. கூடாது என்னும் எதிர்மறை யாற்றல்வினை விலக்குப் பொருளையும் உணர்த்தும். நீ போகக்கூடாது = நீ போகாதே, நீ போகவேண்டா. ஒல்லும் = கூடும். ஒல்லாது = கூடாது. ஒல்லாது-(தெ.) ஒத்து (வேண்டா)-வத்து-(இ.) மத். வேதகாலச் சூரசேனியிலும் மத்து என்றே இருந்திருக்கலாம். மத்து-மத்-மா(வ.) Gk. me$. மா பை: (bh) = அஞ்சாதே. வடமொழியில், த்வித்வலிட் என்னும் சேய்மை யிறந்தகால வினையும் ஸன் என்னும் ஆர்வ வினையும் முதனிலை யிரட்டித்தல், சில தமிழ் இறந்தகால வினைகள் முதனிலை யிறுதி வலி இரட்டிப்பதை யொத்தது. கிரேக்க மொழியிலும் இத்தகைய இரட்டிப்புண்டு. வடமொழி திரிமொழியாதலின், அதன் வினைகட்கு வேர்ச் சொற்கள் அம் மொழியிலில்லை. அவை பெரும்பாலும் இயன் மொழியாகிய தமிழில்தான் உள்ளன. ஆயினும், வடமொழி தேவ மொழி யென்னும் ஏமாற்றிற்கேற்ப, வடமொழி வினைச் சொற்களின் முதனிலைகளையும் (Themes) அடிகளையும் (Stems) வேர்களாகக் (Roots) காட்டியுள்ளனர். மேனாட்டாரும், தமிழை வரலாற்று முறைப்படி ஆராயாமையால், வடமொழியை இயன்மொழியென்றும் ஆரியத் தாய்மொழியென்றும் மயங்கி, வடவர் காட்டியுள்ள போலி வேர்ச்சொற்களை உண்மையான வேர்ச்சொற்களென்றே நம்பியிருக்கின்றனர். வடவர் காட்டியுள்ள தாதுக்கள் (வேர்ச்சொற்கள்) ஏறத்தாழ 1750. அவை எங்ஙனம் தவறானவை என்பது, இங்கு ஐந்தாதுக்களால் எடுத்துக் காட்டப்பெறும். கீர்த் சீர் = சிறப்பு, புகழ். சீர்-சீர்த்தி = பெரும்புகழ். சீர்த்தி மிகுபுகழ் (தொல்.796). சீர்த்தி-கீர்த்தி. ச-க. ஒ. நோ: செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு. சேரலம்-கேரளம், சேது-கேது. சீர் என்னும் முதனிலையும், தி என்னும் ஈறும், த் ஆகிய புணர்ச்சித் தோன்றலும் கொண்ட சீர்த்தி என்னும் தொழிற் பெயரின் (அல்லது தொழிலாகு பெயரின்) முற்பகுதித் திரிபாகிய கீர்த் என்பதை முதனிலையாகக் கொள்வது எத்துணை இயற்கைக்கு மாறானது! வடமொழி நூன்மொழியே யாதலால், அதில் எச்சொல் வடிவையும் எப்பொருளிலும் ஆளலாம். கீர்த்தி என்பதனோடு நேர்த்தி என்பதனை ஒப்பு நோக்குக. இனி, இதற்கு வேராக, க்ரு2 என்பதைப் பாணினியார் (3:3:97) குறித்துள்ளார். அது கரை என்னும் தென்சொல்லின் திரிபே. கரைதல் = 1. அழைத்தல். கலங்கரை விளக்கம் (சிலப்.6:14). 2. சொல்லுதல், கற்பித்தல். அறங்கரை நாவின் நான்மறை முற்றிய (தொல். சி. பா.). 3. எடுத்துச் சொல்லுதல், புகழ்தல். அழைத்தலைக் குறிக்கும் அகவல் என்னும் சொற்போல், கரைதல் என்னும் சொல்லும் பாடுதலை உணர்த்தும். ஆதலால், வடமொழியிற் பாணனை அல்லது பாவலனைக் காரு (இ. வே.) என்பர். ஜ்ரு »H«-Gk. கெரோன் (gero$n) - வ. ஜரா. ஜ்ரு என்பது செயற்கை வேர். அதற்குக் கிழமாகு என்னும் பொருள் பொருந்தாது. மந்த்ர் முன்னுதல் = கருதுதல், எண்ணுதல், சூழ்தல். முன்-மன்+திரம் (திறம்) = மந்திரம் ஒ. நோ: மன்+து = மன்று-மந்து-மந்தை. மந்திரம்- மந்த்ர (வ.). மந்த்ர என்னும் வடிவினின்று மந்த்ர் என்றொரு செயற்கைச் சொல்லை யமைத்து, அதை முதனிலை யாகவோ வேராகவோ காட்டுவது, எத்துணை நகைப்பிற்கிட மானது! அது, உசாவு அல்லது சூழ் என்னும் பொருளை எங்ஙன் ஏற்கும்? வருத் வள்-வட்டு(வள்+து)-வட்டம்-வ்ருத்த(வ.). L verto (to turn). ஒ. நோ: நட்டம்-(நடம்)-ந்ருத்த (வ.). வ்ருத்த என்னும் திரிசொல்லினின்று, வ்ருத் என்னும் பகுதியை வெட்டி, அதை வேராகக் காட்டுவது எத்துணைச் செயற்கை முறை! இங்ஙனம் எத்தனையோ தமிழ்த் தொழிற்பெயர்கள் ஆரிய மொழி களின் முதனிலையாகவும் வேராகவும் காட்டவும் ஆளவும் பெறு கின்றன என அறிக. வேப் விது-விதிர்-விதிர்ப்பு = நடுக்கம். அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும். (தொல். 799) விதிர்ப்பு-வேப் (வ.) = நடுங்கு. வேப் - வேபன = அதிர்ச்சி. (3) இடைச்சொல் (அவ்யய) உபஸர்க்கம் (முன்னொட்டு) அதி (ati,adhi) இது முன்னரே விளக்கப் பெற்றது. அந்தர் (antar), அந்தர (antara) இல் (cŸ)-L. in -inter-t. அந்தர்-அந்தர, அந்த: அநு அல்லுதல் = பொருந்துதல். அல்-அன்-அநு = உடன், பின். mg(apa) m¥ghš-Gk. apo, வ. அப. உத் உ=மேல். உ-உகள், உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர், உவண், உறை (உயரம்), உன்னு. உ-உத்(வ.) = மேல். உப (upa) உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்து முறை, விளையாடுவார் இணை. உ-ஒ. ஒத்தல் = பொருந்துதல். உ-உவ்-உவ. உவத்தல் = ஒத்தல், உளம் பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல். உவ-உவமை = ஒப்பு. உ-உவ்வு-ஒவ்வு. உவ்வு-உவ்வ-உவ = ஒக்க, பொருந்த, உடன். உவ-உப (வ.) ந அல்-அன்-அந்-ந (முறைமாற்று) நி1 இல் (உள்) -இன்-இந்-நி = உள். நி2 இல்-இன்-இந்-நி = இன்மையாக, மாறாக. ப்ரதி படி-ப்ரதி பர பிற-பர guh òw«-òw-gu(t.)-guh = அப்பால், பின், மாறாக. பரி புரிதல் = வளைதல். புரி- பரி = வட்டமாக, சுற்றி. வி விள்-வி = வேறாக. ஸம் கும்முதல் = கூடுதல். F«k-L. cum- Gk. sym-t. ஸம். குறிப்புச் சொற்களும் அசைகளும் வியப்புக் குறிப்பு: ஆ, ஏ, ஐ, ஓ. இவை இருமொழிப் பொது. M-Ah(t.), ஆகா-ஹாஹா(வ.). துயரக் குறிப்பு: ஆவா-ஹாஹா அத்தன்-அத்தோ-அந்தோ-ஹந்த(வ.). அக்கை-அக்கோ-அகோ-அஹோ(வ.). விளியசைகள் ஏ-ஹே, ஓ-ஹோ mnl-mnu(t.)-nu. mnlnl-mnunu(t.)-nunu. பாலீறுகள் தமிழ் ஈறு வடமொழியீறு எடுத்துக்காட்டு (பெண்பால்) அனி ஆநி உபாத்யாயாநீ இ ஈ சுந்தரீ ஐ ஆ ஆர்யா கை கா கன்யகா அர்(உயர்வுப்பன்மை) ரு மாத்ரு (ஆண்பால்) அன் அந் ராஜந் அன் அ பாண்ட்ய(பாண்டியன்) அர்(உயர்வுப் பன்மை) ரு ப்ராத்ரு மன் மந் வர்மந் மான் மாந் அர்யமாந் இணைப்பிடைச்சொல் உம்உந் தாகும் இடனுமா ருண்டே (தொல். 777) என்பதால், பெயரெச்ச வினைமுற்றீறன்றி எண்ணிடைச் சொல்லான உம்மும் உந்தாகத் திரிவது பெற்றாம். cªJ-t.c¤j.OE., E. and. சுட்டும் வினாவும் சுட்டும் வினாவும், ஆரியமும் சேமியமுமான பிற மொழிகளி லெல்லாம் சொற்களாகவே யிருக்கின்றன. தமிழிலோ அவை சொற் களாக மட்டுமன்றிச் சொற்கட்கு மூலமான எழுத்துகளாகவும் இருக்கின்றன. அவ் வெழுத்துகள் உண்மையில் ஓரெழுத்துச் சொற்களே. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி, (43) குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே, (64) ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே, (301) ``அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு, (31) ``ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ,'' (32) ``எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி (552) என்று தொல்காப்பியம் கூறுவதாலும், சுட்டும் வினாவும் இன்றும் தனி நெடிலாகத் திரவிடத்திலும் வடதிரவிடக் கான்முளையாகிய இந்தியிலும் வழங்குவதாலும், குறில் நெடில் பலுக்க வெளிதா யிருப்பதனாலும், ஆண்டு ஈண்டு யாண்டு (ஏண்டு) என்னுஞ் சொற்கட்கு முதல் குறுகிய வடிவின்மையாலும். சுட்டு வினாவெழுத்து கள் முதற்காலத்தில் நீண்டேயிருந்து பின்னர்க் குறுகியமை அறியப்படும். சுட்டடிகளும் வினாவடிகளும் தனியெழுத்துகளாயிருப்பத னால், அவற்றை இடைச்சொல்லென்று கொண்டனர் முன்னோர். அவை தனியெழுத்துகளாயினும் பொருளுணர்த்துவதாற் சொல் லாயும் பலவெழுத்துச் சொற்போன்றே பொருள் நிரம்பியும் இருப்பதை அறிக. ஆவூர், அவ்வூர். அந்தவூர் என்னும் மூன்றும் ஒன்றே. அ = அந்த (that). That என்னும் ஆங்கிலச் சொற்போன்றே, அ, அந்த என்பனவும் சுட்டுப் பெயரெச்சம் (Demomstrative Adjective) என அறிக. பெயரைத் தழுவுவதெல்லாம் பெயரெச்சமே. அது தெரிநிலை வினையாகவு மிருக்கலாம்; குறிப்பு வினையாகவு மிருக்கலாம்; பிறவாறும் இருக்கலாம். இயல்பான சுட்டுகள் சேய்மை, அண்மை, முன்மை என மூன்றே. ஆகவே, அவற்றைக் குறிக்கும் ஒலிகள் அல்லது எழுத்து களும். ஆ (அ), ஈ (இ), ஊ(உ) என்னும் மூன்றே. இவை குமரிக்கண்டத்தில் தமிழ்த் தோற்றக் காலத்தில் கைச் சுட்டுகளுக்குப் பகரமாக (பதிலாக) வாய்ச்சுட்டுகளாகத் தோன்றிய ஒலிகள். இம் மூவொலிகளன்றி வேறெவ்வொலிகளும் அம் மூவிடத் தையும் சுட்டாமையை ஒலித்துக் காண்க. முச்சுட்டும் முதன்முதல் தமிழில் தோன்றியதனாலேயே, அவை தமிழிலும் அதன் வழிப்பட்ட திரவிடத்திலும் இன்றும் தனியெழுத்து வடிவிலிருப்பதுடன், மூவிடத்தையும் ஒழுங்காகச் சுட்டவும் செய்கின்றன. இஃதொன்றே தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்னும் உண்மையைக் காட்டவும் நாட்டவும் போதிய சான்றாம். வடமொழி திரிமொழி யாதலின் , அதிற் சுட்டெழுத்தில்லா திருப்பதொடு, சுட்டுச் சொற்கள் இடமாறியுஞ் சுட்டுகின்றன. எ-டு : அத்ர = இங்கே. அத்ய = இன்றைக்கு. அதுநா = இப்போது. சில அகரச் சுட்டுச் சொற்கள் சேய்மை யண்மையாகிய ஈரிடத்தையுஞ் சுட்டுகின்றன. எ-டு : அதஸ் = அது, இது. சில இகரச் சுட்டுகள் ஏகாரமாகத் திரிந்துள்ளன. எ -டு : ஏதத் = இது, ஏவம் = இப்படி. சில சுட்டுகளின் சார்பு மெய்யான தகரம் ஸகரமாகத் திரிந் துள்ளது. எ-டு. j¤(d) = அவன், அவள், அது. இதன் வேற்றுமைப்பாடு (Declension) வருமாறு: ஒருமை இருமை பன்மை ஆ. பா ஸ: தௌ தே முதல் வேற்றுமை பெ. பா ஸா தே தா: '' அ. பா. தத் தே தானி '' ஒ. நோ: OE. sio, se$o, sie, E. she. வினாவெழுத்தும், வடமொழியி லில்லை. அதோடு, ஏகார(எகர) வடியின் திரிபான யகரவடியும் ககரவடியுமே வடமொழியி லுள்ளன. ஏ-யா. ஏது-யாது. ஏவன்-யாவன். இவை தமிழ். ஏ-எ-எவ்-வெ-கெ. தெலுங்கில் எவற்றினை என்பது (வேற்றினி) வேட்டினி என்று திரிதல் காண்க. தமிழில் உறவியல் (Relative) வினாவும் நேர்வினாவும் ஒரே வகை யடிகொண்டிருக்கும். வடமொழியில் உறவியல் வினா யகரவடி கொண்டும் நேர்வினா ககரவடி கொண்டும் உள்ளன. எ-டு: உறவியல் வினாச்சொல் நேர்வினாச்சொல் a¤(d) கிம் = யார், எது யத்ர குத்ர = எங்கு யத: குத: = எங்கிருந்து ajh(d) fjh(d) = எப்போது இந்தியில் உறவியல் யகர வினாவடி ஜகர வடியாகத் திரிந்துள்ளது. 3. தொடரியல் (1) தொகைச்சொல் (ஸமாஸ) வேதமொழியின் மூலமாகிய மேலையாரிய முறைப்படி சமற் கிருதச் சொற்றொடரமைப்பு ஒருமருங்கு வேறுபட்டிருப்பினும், வேதமொழியின் வடதிரவிட அல்லது பிராகிருதக் கலப்பினாலும், சமற்கிருதத்தின் தமிழ்த் தொடர்பினாலும், அது ஒருமருங்கு தமிழை யும் தழுவியுள்ளது. சமாசம் என்னும் சமற்கிருதக் கூட்டுச்சொற்கள் அல்லது தொகைச் சொற்கள் பின்வருமாறு ஐவகைப்படும்: (1) துவந்துவம் (த்வந்த்வ) உம்மைத் தொகை (2) தற்புருடன் (தத்புருஷ) வேற்றுமைத் தொகை (3) கருமதாரயன் (கருமதாரய) பண்புத்தொகை (இருபெயரொட்டு) (4) பகுவிரீகி (பகுவ்ரீஹி) அன்மொழித் தொகை (5) அவ்வியயீபாவம் (அவ்யயீபாவ) இடைச்சொல்லியல் தொகை அல்லது வினையெச்சவியல் தொகை ஸமாஸ என்னும் சொல்லை, ஸம்+அஸ்2 என்று பகுப்பர். ஸம் = கூட. அஸ்-எறி. ஸமாஸ = (இருசொல்லை) உடனிட்டது. கருமதாரயனைப் பல இலக்கண நூல்கள் தற்புருடனில் அடக்கிக் கூறும். அது பொருந்தாது. எண்ணுப் பண்புத் தொகையைத் தனியாய்ப் பிரித்துத் த்விகு என்று பெயர் கொடுப்பர். பொதுவாக நோக்கின், வடமொழிச் சமாசப் பகுப்பினும் தமிழ்த் தொகை தொடர்ப் பகுப்பு மிகச் சிறந்தது. அடுக்குத்தொடர் (வீப்ஸா) தமிழிற் போன்றே வடமொழியிலும் சொற்கள் அடுக்கி வரலாம். எ-டு: வ்ருக்ஷ்ம் வ்ருக்ஷ்ம் ஸிஞ்சதி = மரம் மரமாய்த் தண்ணீர் ஊற்றுகிறான். (2) சொற்றொடர் (வாக்ய) வடமொழிச் சொற்றொடர்ச் சொல்வரிசை பெரும்பாலும் தமிழ்முறையை ஒத்ததே. எழுவாய் முன்னும், செயப்படுபொருள் இடையும், பயனிலை பின்னும் வருவதே இயல்பான முறை. பாலக: க்ரந்தம் படதி = பையன் பொத்தகத்தைப் படிக்கிறான். ஸ வா இமே பாலகா வா ஆம்ரம் க்ருஹ்ணந்து. = அவனாவது இந்தப் பையன்களாவது மாம்பழத்தை எடுத்துக்கொள் ளட்டும். சொற்றொடரின் மூவுறுப்பும் அடைமொழியொடும் வரும். அடைமொழி பொதுவாக அடைகொளிக்கு முன்நிற்கும். எ-டு: ரூபவதி ஸ்த்ரீ = அழகான பெண். அப்யகார்யஸதம் க்ருத்வா பர்த்தவ்யா = நூறு தீவினைகளைச் செய்தும் காக்கப்படவேண்டும். இரு, உண்டு என்னும் இணைப்புவினை யின்றிப் பெயரும் பயனிலையாக வருவதுமுண்டு. எ-டு: ஸிம்ஹ: ச்வாபதராஜ: =அரிமா விலங்கரசு. ஏஷ மே நிச்சய: = இது என் தீர்மானம். இனி. சொற்றொடரின் மூவுறுப்புகளும், ஏதேனும் ஒரு பயன் நோக்கி, பொருள் மாறா வகையில் மேற்குறித்த முறை மாறியும் வரும். மணீம் சோரயதி ஸ்தேந:= மணியைத் திருடுகிறான் திருடன். இனி, கூட்டுக் கிளவியப் பயில்வு, நெடுந்தொடர் யாப்பு, சார்பு கிளவியங்கட்குப் பகரமாக எச்சவினை வரல், முற்றுவினைக்கீடாக இறந்த கால வினையெச்ச ஆட்சி, நேரல் கூற்றின்மை முதலிய கூறுகளிலும், வடமொழிச் சொற்றொடரமைப்புத் தமிழைத் தழுவியதே என அறிக. வடமொழியிலக்கணம் எழுத்து, சொல், சொற்றொடர் என்னும் மூன்றொடு முடிகிறது. செய்யுளிலக்கணம் சந்தஸ் என்றும், அணியிலக்கணம் அலங்கார சாஸ்திரம் என்றும் வேறு நூல்கள்போல் வெவ்வேறாகக் கூறப்படும். தமிழில் வடமொழியிலில்லாப் பொருளிலக்கண முண்மை யாலும், பண்டை யிலக்கியமெல்லாம் செய்யுள்வடிவி லிருந்தமை யாலும், சொல்லையடுத்த மொழியுறுப்புப் பொருளென்று கொண்டு, அதனுள்ளேயே செய்யுளையும் உடம்பின் இயற்கை யழகுபோற் செய்யுளி லமைந்திருக்கும் அணியையும் அடக்கி விட்டனர், மெய்ப்பொருளியல் முற்றத் துறைபோய மேதகு பண்டைத் தமிழ் நூலோர். நன்னூல், சின்னூல் முதலிய தென்னூலும், எழுத்துஞ் சொல் லும், சொற்றொடருமே கூறுகின்றனவேயெனின், அவை வடநூன் முறை தழுவிய பின்னூலென்றும், தொல்காப்பியம்போல் நிறைவான பிண்ட நூலாகாது குறைவான துண்ட நூலேயென்றும் கூறிவிடுக்க. 3 இலக்கிய வதிகாரம் வடமொழி என்பது ஒருகாலும் பேசப்படாத நூன்மொழியே யாதலின், அதன் வரலாறென்பது உண்மையில் இலக்கிய வரலாறே. 1. வேதம் வடமொழியில் முதலாவது ஏற்பட்ட நூல் வேதம். அது முதலில் ருக் என்னும் ஒரே மறையாயும், பின்னர் இருக்கு, எசுர் (யஜுர்), சாமம் (ஸாம) என்னும் மும்மறையாயுமிருந்து, இறுதியில் அதர்வ வேதத்தொடு நான்காயிற்று. வேதம் என்பது அறிவு அல்லது அறிவுநூல் என்று பொருள் படும். ÉÊ-L-vide-M (wit).ɤ=m¿. வித்-வேதம். வேதம் நீண்டகாலமாய் எழுதப்படாது செவிவழக்காகவே வழங்கி வந்ததால், ச்ருதி என்றும் பெயர் பெற்றது. ச்ரு=கேள். ச்ருதி=கேள்வி. செவியுறு-ச்ரு. வேதங்கள் மூன்றாயிருந்தபோது த்ரயீ எனப்பட்டன. இருக்கு வேதமே ஏனை மூன்றிற்கும் பெரிதும் சிறிதும் மூலமாம். அது ஏறத்தாழ 10,500 (10,402-10,622) மந்திரங்களைக் கொண்டது. அவற்றுள் ஏறத்தாழப் பாதியைக் கொண்டது எசுர்வேதம். சாமவேத மந்திரங்கள் 1549. அவற்றுள்78 நீங்கலாக ஏனையவெல்லாம் இருக்கே. அதர்வ வேதம் ஏறத்தாழ 6000 மந்திரங்களையுடையது. அவற்றுள் 1/3 பகுதிக்குமேல் இருக்காகும். இருக்குவேதம் பல்வேறு சிறுதெய்வ வழுத்துத்திரட்டு; எசுர் வேதம் பல்வேறு வேள்வி செய்யும் முறைகளைக் கூறும் பகுதித் திரட்டு; சாமவேதம் இசை வகுத்த இருக்கு மந்திரத்திரட்டு; அதர்வ வேதம் தெய்வவழுத்தும் வாழ்விப்பும் வசியமும் சாவிப்பும் கருமாற்றும்பற்றிய மந்திரத்திரட்டு. இது பொதுமக்களின் குருட்டு நம்பிக்கையைத் தழுவியது. இருக்கும் சாமமும் செய்யுள் வடிவின; ஏனை யிரண்டும் செய்யுளும் உரைநடையும் கலந்தன. செய்யுட்பகுதி வேதமொழியும், உரைநடைப் பகுதி சமற்கிருதத் தொடக்கமும் ஆகும். வேதமொழியும் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களும் கலந்ததே சமற்கிருதம். அது வான்மீகி யிராமாயணத்தொடு முழுவளர்ச்சி யடைந்தது. மந்திரம் என்னும் சொல்லும் வேதப் பெரும்பிரிவுப் பெயர்களான மண்டலம், காண்டம் என்பனவும், தென்சொல்லே யென்பது முன்னரே விளக்கப்பெற்றது. வேதக்காலம் தோரா. கி.மு. 1500 - 1000 வேதக்காலத் திறுதியில் வேத ஆரியர் வடஇந்தியா முழுதும் பரவிப் பல்வேறிடங்களி லிருந்ததால், வேதங்களைத் தொகுத்த போது இடத்திற்கேற்ப வேறுபட்டிருந்தன. அவ் வேறுபாடுகள் சாகைகள் எனப்பட்டன. சாகை கிளை. வேத ஆரியரின் முன்னோர் மொழி இருக்கு வேதத்திற்கு முன்பே வழக்கற்றுப்போனமையும், அவ் வேறுபாட்டிற்குக் காரணமாம். ஆரியமொழி வழக்கறவிற்குப் பேசினார் தொகைச் சிறுமையும் பேசிய மொழியின் செயற்கை வளர்ச்சியுமே காரணம். ஒவ்வொரு வேதத் தொகுப்பிற்கும் ஸம்ஹிதை என்று பெயர். வேதக்காலத்திலேயே இந்திய ஆரியர்க்குத் தென்னாட்டொடு தொடர்புண்டாய்விட்டது. இதற்குச் சான்றுகள் : (1) இருக்கு வேதத்தில் மேலையாரியத்தி லில்லாத தமிழ்ச் சொற்களும் சாமசாகையில் எகர ஒகரமு முண்மை. (3) மாவலி என்னும் சேரவேந்தன் குறள் தோற்றரவு (வாமனா வதார)க் கதையொடு தொடர்புபடுத்தப்பட்டிருத்தல். (2) சத்திய விரதன் என்னும் பெயரால், ஒரு தமிழவரசன் (திரவிடபதி) மீனத் தோற்றரவு (மச்சாவதார)க் கதையொடு தொடர்புபடுத்தப் பெற்றிருத்தல். (4) பரசுராமன் சேரநாடு வந்து தவஞ் செய்ததாகச் சொல்லப் படுதல். (5) அகத்தியரும் நாரதரும் தென்னாடு வந்து தமிழ் கற்றுத் தமிழ்நூ லியற்றியதாகக் கதையுண்மை. (6) தமிழ்ப் பொருளிலக்கணம் வகுத்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாற் கிளவித்தலைவர் வகுப்பை மூலமாகக் கொண்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் மக்கட்பாகுபாடு வேதக் காலத்திலேயே செய்யப்பட்டமை. (7) குமரிக்கண்டப் பாண்டியனொருவன் வாரியில் வடிவே லெறிந்தது (கடல் சுவற வேல்விட்டது) போன்ற பண்டைத் தென்னாட்டுச் செய்தி, திருவிளையாடற் புராணத்திற்கு மூலமான வடமொழிப் புராணத்திற் சொல்லப்பட் டிருத்தல். (8) பிராதிசாக்கியங்கள் கூறும் எழுத்தொலி யிலக்கணம் தமிழிலக்கணத்தை ஒத்திருத்தல். (9) ஆரியர் பல்வேறு சிறுதெய்வங்களை வணங்கிக்கொண்டு பிள்ளைமை நிலையிலிருந்த வேதக்காலத்தில், திடுமென உயர்ந்த கடவுள் வழிபாட்டு மெய்ப்பொருள் நூல்கள் (உபநிஷத்துகள்) வடமொழியில் எழுந்தமை. (10) பிற்காலத் தமிழருக்குத் தெரியாத தென்கடல் மகேந்திரத் தீவும் மலையும் வடநூல்களிற் சொல்லப்பட்டிருத்தல். பிராமணம் வேதத்தின்பின், வேதப் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பிராமணனுக்குரியது பிராமணம். பிரமனை யறிந்தவன் பிராமணன். பிரமன் (ப்ரஹ்மன்) என்னும் சொல் பரமன் என்னும் தென்சொல்லின் திரிபு. மா. வி. அ. இதைப் ப்ருஹ் (b) என்னும் மூலத்தினின்று திரிக்கும். ப்ருஹ் என்பது பெருகு என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னரே விளக்கப் பெற்றது. ஆரணியகமும் உபநிடதமும் பிராமணத்தின்பின் ஆரணியகம் (ஆரண்யக) என்னும் உபநிடதத் தோற்றுவாய் நூல்கள் தோன்றின. ஆரணியத்திலிருந்து ஆராய்ந்தது ஆரணியகம். ஆரணியம் காடு. ஆரணியம் என்னும் சொல் அரணம் என்னும் தென்சொற் றிரிபு. அக்காலத்தில் நாடு சிறிதாகவும் காடு பெரிதாகவும் இருந்ததி னால், ஊரையடுத்தே காடு அல்லது சோலையிருந்தது. தமிழ திரவிட முனிவர் காட்டிலுறைவதைக் கண்ட வேதப் பிராமணர், தாமும் அவர்போல் நடித்தே, ஊரையடுத்த அல்லது தடிவழி (Trunk Road) மேலுள்ள சோலைகளிலும் மக்கள் வழங்கும் மலையடிவாரங்களிலும், குடும்பத்துடன் வதிந்தனர். சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே'' (புறம்.2) என்னும் புறப்பாட்டுப் பகுதியை நோக்குக. தமிழ முனிவர் முற்றத் துறந்தவர்; ஆணவம் அற்றவர்; ``பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லெவருக்குந் தாழ்மைசொலிச் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே.'' காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி ஓடே யெடுத்தென்ன உள்ளன் பிலாதவ ரோங்குவிண்ணோர் நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே'' என்னும் பட்டினத்தடிகள் பாட்டிற் கிலக்கானவர். வேதப் பிராமண முனிவரோ, தம்மைப் பிறப்பி லுயர்ந்தவ ரென்றும் வீடுபேறும் அதற்கு வாயிலான துறவும் பிராமணர்க்கே உரியன வென்றும் கருதி, ஆணவம் என்னும் குன்றேறி நின்று, காம விருப்பம் நீங்கும்வரை மனைவியொடு கூடிவாழ்ந்தவர். ஆதலால், அவர் உண்மையான துறவியருமல்லர்; துறவு முதிர்ச்சியால் மெய்ப்பொருள் கண்டவருமல்லார். ஆரணியகத்திற்குப்பின், எழுந்த உபநிடதம் (உபநிஷத்) என்னும் மெய்ப்பொருள் நூல்களெல்லாம், ஓத்துகள் என்னும் தமிழ்நூல்களின் மொழிபெயர்ப்பே. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான'' (977) என்பது தொல்காப்பியம். உபநிஷத் என்னும் வடசொல் உப+நி+ஸத் என்று பிரியும். உப = உடன், அருகு. நி = கீழ் . ஸத் = குந்து. ஆகவே, உபநிஷத் என்னும் சொற்கு அருகடியமர்தல் என்பது திரண்ட பொருள்; ஆசிரியன் கீழிருந்து மெய்ப்பொருள் கற்றல் என்பது விரிந்த பொருள். ஆயின், பரமவோதியால் அறியாமையை அடக்குதல் என்பது ஆரியர் கூறும் விளக்கப் பொருள். (“Setting at rest ignorance by revealing the knowledge of the Supreme Spirit''). வேத முனிவர் காட்டில் வதிந்ததினால், கடவுளைப்பற்றிய வுண்மைகளைத் தாமே கண்டறிந்ததுபோற் காட்டிக்கொண்டனர். அவர் முனிந்ததெல்லாம் தமிழையும் தமிழனையும் தமிழப் பண்பாட்டையுமே. முனிதல் வெறுத்தல். முனிந்தவன் முனிவன். உபநிடதங்கள் 108 என்பர். 2. வேதாங்கம் வேதத்திற்கு உறுப்பாகச் சொல்லப்படும் சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகரணம் என்னும் அறுவகை நூல்கள், வேதத்திற்குப் பின் முறையே, வெவ்வேறு காலத்தெழுந்தன. சிட்சை (சிக்ஷா) என்பது வேத ஒலியிலக்கணம். அது சாகைதொறும் தனிப்பட இருந்ததினால் பிராதிசாக்கியம் (பிராதிசாக்ய) எனப்பட்டது. அதற்கு மூலம் தமிழிலக்கணமே. நிருத்தம் (நிருக்த) என்பது வேதச் சொற்பொருள் கூறுவது. சந்தசு (சந்தஸ்) என்பது வேத மந்திரச் செய்யுளிலக்கணங் கூறுவது. அச் செய்யுள்கள் ஓரடிமுதல் எட்டடிவரைப் பட்டு, காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருகதீ, பங்க்தீ, த்ரிஷ்டுப், ஜகதீ முதலிய பலபெயர் கொண்டவை. சோதிடம் (ஜ்யௌதிஷ) என்பது வேள்வியியற்றற்குரிய நாள் கோள் நிலை கூறும் கணியநூல். அதற்கு மூலம் தமிழ்க் கணியமே. கற்பம் (கல்ப) என்பது, இம்மை மறுமைக்குரிய இருவகைச் சடங்குகளையும் ஒழுக்கத்தையும் வகுத்துக் கூறுவது. அது, வேத வேள்விபற்றிய சிரௌதசூத்திரம் (ச்ரௌத ஸூத்ர), இல்ல வேள்வி பற்றிய கிருகிய சூத்திரம் (க்ருஹ்ய ஸூத்ர), நால்வகை வரண ஒழுக்க வேறுபாடுபற்றிய தரும சூத்திரம் (தர்ம ஸூத்ர) என மூவகைப்படும். இவற்றுள் தமிழரையும் திரவிடரையும் அடிமைப்படுத்திப் பிராமணரை நிலத்தேவராக உயர்த்திய வகை, வரணாசிரம தருமங் கூறும் தரும சாத்திரமே. வியாகரணம் என்பது, வேதச் சொல்லையும் பொதுச் சொல்லையும் ஆராய்ந்து, நன்னூல்போல் எழுத்தும் சொல்லும் சொற்றொடரும்பற்றிக் கூறும் இலக்கண நூல். வேதக் காலத்திலேயே முதன்முதல் தோன்றிய சமற்கிருத இலக்கணம் ஐந்திரம். அது தமிழகத்திலேயே தோன்றியதாகத் தெரிகின்றது. அதன் காலம் தோரா. கி. மு. 1200. சமற்கிருத இலக்கணங்களுள் தலைசிறந்தது பாணினியாரின் அஷ்டாத்யாயீ. அதற்குமுன் 64 இலக்கணங்கள் வடமொழியில் தோன்றியதாக மாக்கசு முல்லர் கூறுவர். வண்ணமாலை, புணரியல், வேற்றுமை யமைப்பு ஆகிய மூன்றும், வடமொழி யிலக்கணங்களின் தமிழ் மூலத்தைக் காட்டும். 3. வேதசாத்திரம் வேதத் தொடர்புள்ளனவாகச் சொல்லப்படும் அறுவகை நூல்கள் மீமாம்சை, வேதாந்தம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம் என்பன. மீமாம்சை வேதத்தின் முற்பகுதியை ஆராய்வது, அதனால் பூர்வ மீமாம்சை எனப்படுவது. இதை இயற்றியவர் ஜைமினியார். வேதாந்தம் வேதத்தின் பிற்பகுதியை ஆராய்வது: அதனால் உத்தரமீமாம்சை யெனப்படுவது. இதை இயற்றியவர் பாதராயண வியாசர். வைசேடிகம் பொருள்களை எழுவகையாகப் பகுக்கும் தருக்கநூல். இதை இயற்றியவர் கணாதர். இதற்கு மூலம் ஏரணம் எனப்படும் தமிழ்த் தருக்க நூல். நியாயம் பொருள்களைப் பதினாறுவகையாகப் பகுக்கும் தருக்க நூல். இதை இயற்றியவர் கௌதமர். சாங்கியம் 25 மெய்ப்பொருள்களைக் கூறும் பட்டாங்கு நூல். இதை இயற்றியவர் கபிலர். இதற்கு மூலம் தமிழே. யோகம் துறவுக்குரிய எண்வகை ஓக நிலைகளைக் கூறும் நூல். இதை இயற்றியவர் பதஞ்சலியார். இவர் தென்னாட்டார். ஆதலால், இவர் நூலும் தமிழ்வழியதே. 4. புராணம் புராணம் என்பது பழைமை. ஆதலால், பழஞ்செய்திகளைப் பற்றிக் கூறும் நூல் பொதுவாகப் புராணம் எனப்படும். மாபுராணம், பூதபுராணம் என்பன தென்னாடு வந்து தங்கிய ஆரியர் இயற்றிய பழந்தமிழ் இலக்கண நூல்கள். பிற்காலத்தில், (1) உலகப் படைப்பு, (2) உலக அழிவும் மறுதோற்றமும், (3) தெய்வங்களின் வழிமரபு, (4) மநுக்கள் ஆட்சி, (5) கதிரவ திங்கட்குல அரசர் வரலாறு ஆகிய ஐந்தையுங் கூறுவது புராணம் என இலக்கணம் வகுக்கப்பட்டது. தரும சாஸ்திரங்கள் தமிழரை அடிமைப்படுத்தினவெனின், புராணங்கள் அவரை மடமைப்படுத்தின. வடமொழிப் புராணங்கள் முன்னெழுந்தவை 18; பின்னெழுந் தவை 18. பின்னெழுந்தவை உபபுராணம் எனப்படும். பதினெண் புராணம் பிரமம், பதுமம், விஷ்ணு, சிவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்நேயம், பவிஷ்யம், பிரமவைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், கருடம், பிரமாண்டம். உபபுராணம் சனற்குமாரம், நரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், கபிலம், மானவம், ஔசனசம், வசிட்டலிங்கம், வருணம், காளிகம், சாம்பேசம், அங்கிரம், சௌரம், பராசரம், மாரிசம், பார்க்கவம். புராணங்களின் காலம் கி. மு. 11ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரைப் பட்டதாகும். 5. இதிகாசம் (இதி-ஹ-ஆஸ = இப்படி உண்மையில் இருந்தது.) இராமாயணம், மகாபாரதம் என இதிகாசம் இரண்டு. மகாபாரதக் காலம் கி. மு. தோரா. 1000. மகாபாரதத்தொடு தொடர்புடையது பகவற்கீதை. நால்வகை வரணத்தையும் அவற்றின் ஏற்றத்தாழ்வுடன் இறைவனே படைத்த தாக, கண்ணன் கூற்றில் வைத்து வலியுறுத்தப் பகவற்கீதை பயன் படுத்தப்பட்டுள்ளது. வியக்கத்தக்க அரசர் வரலாறு இதிகாசம். 6. ஆகமம் வேதப் பிராமணர் தென்னாட்டிற்கு வந்தவுடன், மதக்கொண் முடிபு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் முதலியன பற்றிய நூல்களை அமைத்துக்கொண்டனர். அவை சிவநெறி பற்றியவாயின் ஆகமம் என்றும், திருமால் நெறி பற்றியவாயின் ஸம்ஹிதை யென்றும், சாக்தம்பற்றியவாயின் தந்த்ரம் என்றும் பெயர் பெறும். ஆகம = வந்தது, தோன்றியது, வழிவந்த நூல். 7. பல்வகை நூல்கள் பாணினீயம் (அக்ஷ்டாத்யாயீ) இயற்றப் பெற்றது, கி. மு. 5ஆம் நூற்றாண்டு. அர்த்த சாஸ்திரம் சாணக்கியரால் இயற்றப்பெற்றது, கி.மு. 3ஆம் நூற்றாண்டு. பிற்காலத் தர்ம சாஸ்திரங்கள் மநுதர்ம சாஸ்திரம் (கி.பி. 200), யாக்ஞவல்கிய ஸ்மிருதி (கி.பி. 408) , நாரத ஸ்மிருதி (கி.பி. 500). காவியம் வடமொழி முதற்காவியம் வான்மீகி யிராமாயணம். அது மகா பாரதத்திற்கு முந்தியது. கவியினாற் செய்யப் பெற்றது காவியம் (காவ்ய). ஆயினும் வடமொழியாளர் பத்யம் (செய்யுள்), கத்யம் (உரைநடை) , சம்பு (செய்யுளும் உரைநடையுங் கலந்த கலவை) என மூவகையாகக் காவிய நூல்களை வகுத்திருக்கின்றனர். இனி, படிக்கப்பட்டுக் காதால் மட்டும் கேட்கப்பெறுவது சிரவியம் (ச்ரவ்ய) என்றும், படிக்கப்படுவதுடன் நடிக்கவும்பட்டுக் கண்ணாலுங் காணப்பெறுவது திருச்சியம் (த்ருச்ய) என்றும், வேறும் இருவகையாகக் காவியங்களை வகுத்துள்ளனர். திருச்சியம் என்பது நாடகக் காவியம். காளிதாஸன் முதல் நாகராஜ கவிவரை 54 காவிய வாசிரியர் பெயர்களும், அவர்களியற்றிய நூற்றுக்கணக்கான பத்திய காவியங் களும், P. S. சுப்பிரமணிய சாத்திரியார் இயற்றிய 'வடமொழி நூல் வரலாறு' என்னும் நூலிற் குறிக்கப்பெற்றுள. பத்திய காவியம் என்னும் வனப்பியற்றிய பாவலருள் தலை சிறந்தவர் காளிதாசர். அவரியற்றிய குமாரஸம்பவம், மேக ஸந்தேஸம், ரகுவம்சம், ருதுஸம்ஹாரம் என்னும் கேள்வி வனப்புகளும், மாளவி காக்னிமித்ரம், விக்ரமோர்வசீயம், சாகுந்தலம் என்னும் காட்சி வனப்புகளும் உலகப் புகழ்பெற்றவை. காளிதாசன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டா யிருக்கலாம். விருத்த விலக்கணம் விருத்த விலக்கணங் கூறும் நூல்கள், காளிதாஸரின் ச்ருத போதம், கேதாரபட்டரின் விருத்த ரத்நாகரம், ஸோமேந்திரரின் ஸுவிருத்த திலகம் முதலியன. வடமொழி விருத்தம் வேறு; தமிழ் மண்டிலச் செய்யுள் வேறு. பின்னதை விருத்தம் என்பது வழுவாம். நாடகம் காளிதாஸன், அச்வகோஷன், ஸ்ரீஹர்ஷன், பவபூதி முதலியோர் இயற்றிய வடமொழி நாடக நூல்களும் நூற்றுக்கணக் காக வுள. அவை ஆங்கில நாடக நூல்கள் போன்றன. பிற்காலச் சோதிடம் ஸூர்ய ஸித்தாந்தம் (கி.பி. 300), ஆர்யபட்டரின் ஆர்யபட் டீயம் (கி.பி. 476), வராஹ மிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை, பஞ்ச ஸித்தாந்திகை (கி.பி. 505-78) ப்ரும்மகுப்தரின் ப்ராம்மஸ்புட ஸித்தாந்தம் (கி.பி. 598), பாஸ்கராச்சாரியாரின் ஸித்தாந்த ஸிரோமணி (கி.பி. 1114). அலங்காரம் வடமொழியில் முதன்முதற் சிறப்பாகக் காவ்யாதர்சம் என்னும் அணியிலக்கணம் தொகுத்தவர் தண்டி. இவர் தென்னாட்டார்; காஞ்சியில் வாழ்ந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் காலம் கி.பி. 650-700. தமிழ்த் தண்டியலங்காரம் இயற்றியவரும் இவரேயாயின், ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்னும் எடுத்துக்காட்டுச் செய்யுளால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையையும் வடமொழி தமிழுக்குப் பட்டுள்ள கடப்பாட்டின் அளவின்மையையும், தம் உள்ளான தமிழ்ப்பற்றினால் உலகிற்குணர்த்தியுள்ளார் என்னலாம். நாட்யம் (நடம்) தமிழில் நடமும் நாடகத்துள் அடங்கும். வடமொழியில் நாடகம் வேறு; நடம் வேறு. தோரா. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழக இலக்கணமே முத்தமிழாயிருந்தது. பரதம் என்னும் பெயரால் முதன்முதல் தோன்றிய நாடக நூல் தமிழ்நூலே யென்று, அடியார்க்குநல்லார் கூறியிருத்தலைக் காண்க. மதிவாணர் நாடகத் தமிழ்நூல் கி. மு. சில நூற்றாண்டுகட்கு முற்பட் டது. வடமொழிப் பரத சாஸ்திரம் இயற்றப்பட்ட காலம் கி. பி. 500. சங்கீதம் ஆசிரியர் வடநூல் காலம் சாரங்கதேவர் சங்கீத ரத்னாகரம் கி. பி. 1200 அகோபிலர் சங்கீத பாரிஜாதம் கி. பி. 1600 வேங்கடமகி சதுர்தண்டி பிரகாசிகா கி. பி. 1637 தலைக்கழக இடைக்கழகத் தமிழ் இசை நாடக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயம், யாமளேந்திரர் இயற்றிய இந்திர காளியம், சிகண்டியார் இயற்றிய இசைநுணுக்கம் ஆகிய தமிழ் இசை நூல்கள் பாரதக் காலத்தையடுத்து, அதற்கு முன்னும் பின்னும் இயற்றப் பெற்றவையாகும். கி. பி. 12ஆம் நூற்றாண்டுவரை பாணருங் கூத்தருமே தமிழகத்தில் இன்னிசையும் நாடகமும் பயிற்றியும் வளர்த்தும் வந்தாரேனும், பிராமணர் கழகக் காலத்திலேயே முன்னோக்கொடு அவ்விரு கலைகளையும் பயின்றும் அவைபற்றிய நூல்களை வடமொழியிற் பெயர்த்தும் வைத்திருந்திருக்கின்றனர். ஆரியர் தமிழ் நூல்களை வடமொழியில் மொழிபெயர்க்கும் போது, பெயர்ப்புத் தோன்றாவாறு சில வழிகளைக் கையாண் டிருக்கின்றனர். அவை, மறு பாகுபாடு (Re-classification), புதுப் பெயரீடு (Change of nomenclature), மாற்றம் (Alteration), சேர்க்கை (Addition) என்பன. இது இசைநூலிற் பிறங்கித் தோன்றுகின்றது. குமரிக்கண்டத் தமிழ்ப் பாணர், செங்கோட்டியாழ் என்னும் வீணை வாயிலாக இசை நுட்பங்களையெல்லாம் தம் எஃகுச் செவி யாலும் கூர்மதியாலுங் கண்டறிந்து; பண்ணும் பண்ணியலும் திறமும் திறத்திறமுமாக நால்வகைப் பண்கள் வகுத்து, நாற்பெரும் பண்களினின்று நூற்றுமூன்றும் பன்னீராயிரமுமாக (11991) நரப்படைவாற் பண்பெருக்கி; ஆயப்பாலை வட்டப்பாலை சதுரப்பாலை திரிகோணப்பாலை என்னும் பண்திரிவுமுறைகளால் பேரிசைகள் அரையுங் காலும் அரைக்காலுமான சிற்றிசைகளாக நுணுகும்வகை நுணித்தறிந்து; பெண்ணிற்குப்பின் பண் என்னுமாறு எல்லையற்ற இன்பம் பயக்கும் முறையில் வளர்த்திருந்த இசைத்தமிழ் என்னும் தமிழிசையைக் கருநாடக சங்கீதம் எனப் பெயர் மாற்றி, பாணரைத் தீண்டத்தகாதவரென விலக்கி, பன்னீரிசைக் கோவையைப் பதினாறிசைக் கோவையெனக் காட்டி, ஆகணவுழை (சுத்த மத்திமம்) அந்தரவுழை (பிரதிமத்திமம்) என்னும் இசை வேறுபட்டால் எழுபத்திரு தாய்ப்பண்ணென வகுத்து; ஆம்பல், குறிஞ்சி, சுருட்டி, செவ்வழி, தக்கம், நாட்டை, நேரிசை, புறநீர்மை, முல்லை, விளரி என்பன போன்ற தூய தமிழ்ப் பெயர்களை மாற்றிக் கரகரப்பிரியா, சங்கராபரணம், தந்யாசி, நீலாம்பரி, பைரவி, மத்தியமாவதி, வனஜாட்சி என ஆரிய இடுகுறிப் பெயர்களையிட்டு, வடமொழியிலும் வடமொழி கலந்த திரவிடத்திலும் பாட்டுகளை இயற்றிப் பாடி, ஆரியக் கலையாகக் காட்டியிருப்பது எத்துணை யிரண்டகச் செயல்! இங்ஙனமே தமிழ் முதனூல்களையொட்டிய கணிதம், மருத் துவம் முதலிய பல நூல்களும், காமசூத்திரம், கொக்கோகம் முதலியனவும் பிறவும், வெவ்வேறு காலத்து வடமொழியில் இயற்றப்பட்டன. வடமொழியாளர் கலைகளையெல்லாம் 64 ஆக எண்ணினர். நால்வேதம், ஆறுசாஸ்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைஞானம் என்று சொல்வது மரபு. கலைகள் என்று எண்ணப் பட்டவற்றுட் சில, கலைகளல்ல. வடமொழி பேச்சுமொழி யன்றாயினும், பிராமணர் தம் கூட்டரவியல் மேம்பாட்டைப் போற்றிக் காக்க, இன்றும் அதில் நூலியற்றியும் கட்டுரை வரைந்தும் திருமுகம் விடுத்தும் வரவேற் பிதழ் படித்துக் கொடுத்தும் வருவது, அவரது ஒப்புயர்வற்ற மொழி வெறியை விளக்கிக் காட்டுகின்றது. வடநூல்கள் தோன்றத் தோன்றத் தென்னூல்கள் மறைந்து கொண்டே வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தென்மொழித் தொன்னூலெல்லாம் இறந்துபட்டபின், வடமொழிப் பெயர்ப்பு நூலும், புதுநூலும், முதுநூலும், மூலநூலும்போற் காட்சியளிக் கின்றன. இது, கதிரவன் கரந்தபின் திங்கள் திகழ்வ தொத்ததே. வடமொழி தமிழகத்தில் தமிழாலேயே வளர்ந்ததென்பதை, வடமொழிச் சொற்களும் வியாகரணங்களும் இசைநட கணிய மருத்துவ நூல்களும், சிவ திருமால் நெறிகளும் மட்டுமன்றி, சிறந்த வடநூலாசிரியர் பலர் தமிழ்நாட்டாரா யிருந்ததும், 14ஆம் நூற்றாண் டில் வேதங்கட்கு விளக்கவுரை வரைந்த சாயனாச்சாரியார் தென்னாட்டாரா யிருந்ததும், இன்றும் தலைசிறந்த வடமொழிப் பண்டிதர் தமிழ்நாட்டாரா யிருப்பதும், தெள்ளத் தெளியக் காட்டும். வடமொழிப் பட்டாங்கு நூல்களில், பெருந்தொடரியம் (மஹா வாக்ய) எனப் பறைசாற்றப்பெறும் தத் த்வம் அஸி என்னும் சொற்றொடரே, முற்றுந் தமிழ்த்திரிபாயிருந்து வடமொழி யாளரைத் தலைகவிழச் செய்கின்றது. jh‹-j¤, ü«-E«-J«-¤t«, ïU-ï° (âô¤.)-v° (ïy¤, ».)-m° (t.), தி (முன்னிலையொருமையீறு)-ஸி. தான் என்பது முதற்காலத்திற் படர்க்கையொருமைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு தற்சுட்டுப் பெயராயிற்று. 4 தமிழ்மறைப்பதிகாரம் வேதப் பிராமணர், தம்மை நிலத்தேவரென்றும் தம் முன்னோர் மொழியைத் தேவமொழியென்றும் கூறி யேமாற்றித் தமிழ்நூல்களை யெல்லாம் வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டபின், தமிழ் முதல் நூல்களும் தமிழ்த் தூய்மையும் இருக்கும்வரை என்றேனும் தம் ஏமாற்றம் வெளியாகிவிடுமென் றறிந்து, அதைத் தடுத்தற்கு அரசரும் பொதுமக்களுமான தமிழ்ப்பேதைகளையும் தந்நலக்காரரையுந் துணைக்கொண்டு, நூலுரையாலும் பிற செயலாலும் பல்வேறு மறைப்பு வினை களையும் அழிப்பு வினைகளையும் செய்துவந்திருக்கின்றனர். அவற்றையே அவர் வழியினரும் கையாண்டு வந்திருக்கின்றனர். மூவகை வினைகளும் வருமாறு : சொன் மறைப்பு, சொற்பொருள் மறைப்பு, முதனூல் மறைப்பு, கழகக் கலைப்பு, முன்னூலழிப்பு, கலை மறைப்பு, அறிவியல் மறைப்பு, தெய்வ மறைப்பு, சமய மறைப்பு, கொள்கை மறைப்பு, கருத்து மறைப்பு, ஒழுக்க மறைப்பு, நாகரிக மறைப்பு, பண்பாடு மறைப்பு, கருப்பொருள் மறைப்பு, அறிவு மறைப்பு, மொழி மறைப்பு, எழுத்து மறைப்பு, கழக மறைப்பு, வரலாறு மறைப்பு, தமிழன் பிறந்தக மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ இனமறைப்பு, வனப்புக்கதை மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, புலவரை மறைப்பு, மொழியாக்க முயற்சித் தடுப்பு, தனித்தமிழ் வழக்குத் தடுப்பு, தமிழ்ப்பற்றுத் தடுப்பு, தமிழ் விழாத் தடுப்பு, தமிழ்ப்புலவர் பதவிப்பேறு தடுப்பு, தமிழ்த்தொண்டர் வாழ்வுத் தடுப்பு முதலியன. கடல்கோளும் நிலநடுக்கமும் போன்ற இயற்கைப் பேரழிவு ஏதும் நேராதுபோயினும், தமிழகத்தில் ஆரியம் வேரூன்றின தினாலேயே கடைக்கழகம் கலைக்கப்பட்டது. அதன்பின், முதலிரு கழக நூல்கள் அத்தனையும் அழிக்கப்பட்டுவிட்டன. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிரயோக விவேகம், தமிழ்ச் சொல்லிலக்கணம் முழுவதையும் மறைக்க முயன்ற சிறு கேது. இந் நூற்றாண்டில் ஏறத்தாழ நாலரை யிலக்கம் உருபா செல வழித்து முப்பதாண்டாகத் தொகுக்கப்பட்ட சென்னைப் ப. க. க. த. அகரமுதலியில், ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் விடப்பட்டுள; அடிப்படைத் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள; வேண்டாத ஆயிரக்கணக்கான அயற்சொற்கள் தமிழ்ச்சொற்களாக இடம்பெற்றுள; தமிழ்ச்சொற்கட்குத் தரப்பட்டுள பொருள்கள் முற்றுப்பெறா திருப்பதொடு, ஆங்காங்கு வழுவாகவும் உள. பல தமிழ்ச்சொற்கள் தொடர்பற்ற ஆரியச் சொற்களொடு தொடர்புபடுத்தப்பட்டுள. எ-டு : அச்சன்-ஆர்ய, ஐயன்-ஆர்ய, அந்தரம்-அந்தர, அம்பலம்-அம்பர, ஆகுளி-ஆகுல, ஆசிரியன்-ஆசார்ய (c), ஆமை (வடை)-ஆம (வடா), உல்லரி-வல்லரி, ஏடன்-சேஷ, ஏணி, சேணி-ச்ரேணி, ஓரை-ஹோரா, கம்பம்-ஸ்தம்ப, கும்மாளம்-குமால, கெஞ்சு-கஞ்ச் (kh), சட்டன்-சத்த்ர (ch), சடங்கு-ஷடங்க (d|), சாரி-சாரி (c), சம்பளம்-சம்பல, சரி-ஸத்ருச, சாலி-சாலி, சுணை-ஸ்மரண, சும்பன்-சும்பன (c), சேந்தன்-ஜயந்த, தச்சன்-தக்ஷ (d), தகழி-ஸ்தாலீ, தாயம்-தாய (d), தாலி-தாலீ, திசை-திசா, ea«-Úâ(t), நாயகன்-நாயக, பட்டி(மண்டபம்)-பட்டி (விக்கிரமாதித்தன் மந்திரி). பரண்-பரண (bh), பரத்தன்-பரஸ்தா, பார்ப்பனன்-ப்ராமண (b), புடவி-ப்ருத்வீ, மஞ்சள்-மஞ்சிஷ்டா, மாரி-மாரி, வரி-பலி (b). வயம்-வச, வல் (விரைவு)-வல், வாசி-வாச் (c). அம்மணம் ஆடையில்லா வுடல்நிலையைக் குறிக்க, அற்றம் என்னும் இலக்கிய வழக்குச் சொல்லும் அம்மணம், முண்டம், மொட்டைக் கட்டை என்னும் உலக வழக்குச் சொற்களும், தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. இவற்றுள், அம்மணம் என்னும் சொல் சமணம் என்பதன் திரிபாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலியிற் காட்டப்பட்டுளது. சமணம் என்பது ச்ரமண என்னும் வடசொல்லின் திரிபு. ச்ரம் (ஏ. வி.) = களை, அயர், சோர், சலி, உழை, வெட்டிவேலை செய். ச்ரம (பெ.) = களைப்பு, அயர்வு, சோர்வு, உழைப்பு, மெய்வருத்தம், ஓகப்பயிற்சி, தவம், உடம்பை வாட்டல். ச்ரமண (பெ. எ.) = உழைக்கின்ற, இழிந்த, கெட்ட, அம்மண; (பெ.) புத்தத் துறவி, சமணத் துறவி, முனிவன், அடியான், ஆண்டி. ஆச்ரம் = தவநிலையம், முனிவர் குடில். Gk. gumnos=naked. gumnosophistes-E. gymnosophist=One of ancient Hindu philosophic sect going nearly naked and given up to contemplation. mystic, ascetic. Gk. gumnasticos-E. gymnastics=bodily exercise. ச்ரமண என்னும் வடசொல் சமணம், சமண, அமணம், அமண் என்றே தமிழில் திரிந்துள்ளது. அம்மணம் என்னும் தென்சொல் என்றும் அற்றம் ஒன்றையே குறிக்கும். அதுவும் சமயச் சார்பின்றி எல்லார்க்கும் பொதுவானதே. வடசொற் றிரிபுகளுள் ஒன்றேனும் அற்றத்தை உணர்த்துவதில்லை. அமணம் என்னும் வடிவும் செய்யுளில் அம்மணம் என்பதன் தொகுத்தல் திரிபாக வந்தே அற்றத்தை உணர்த்தும். சமணத் துறவியருள் ஒரு வகுப்பாரே திசையாடையர் (திகம்பரர்) என்னும் அம்மணர். சமணம் என்னும் சொல் உடம்பை வாட்டலையும் சமண மதத்தையுமேயன்றி அற்றத்தை உணர்த்தாது. பண்டைநாளில் அடியாருள்ளும் நாட்டில் வதியும் துறவிய ருள்ளும் சிலர் நீர்ச்சீலையே (கோவணமே) அணிந்திருந்தனர். காட்டில் வதிந்த முனிவர் சிலர் அதுவுமின்றி யிருந்தனர். ஆதலால், அம்மண நிலை சமணத் துறவியர்க்கே சிறப்பாக வுரியதன்று. அம்மணத்தைக் குறிக்கும் கும்னொஸ் என்னும் கிரேக்கச் சொல்லும், பொதுவானதேயன்றிச் சமயச் சார்பானதன்று. ஆதலால், அம்மணம் என்னும் சொல்லைத் தென்சொல்லென்று கொள்வதே பொருத்தமாம். அத்தன்-அச்சன், ஐ-ஐயன். தந்தையைக் குறிக்கும் இத் தமிழ்ப் பெயர்கட்கும் ஆரிய என்னும் பேரினப் பெயருக்கும் எள்ளளவுந் தொடர்பில்லை. உம்-அம். அம்முதல் = பொருந்துதல், கூடுதல், குவிதல். அம்-அம்பு-அம்பல் = குவிந்த அரும்பு. அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் ( தொல். 1085). அம்பல்-ஆம்பல் = பகலிற் குவிவதாகச் சொல்லப்படும் நீர்ப்பூ. அம்பல்-அம்பலம் = கூடும் கூட்டம், அவை. அம்பரம் என்பது வானத்தைக் குறிக்கும் உம்பரம் என்பதன் திரிபு. அதுவுந் தமிழ்ச்சொல்லே. ஆசு (குற்றம்) இரியன் (நீங்கினவன், நீக்குபவன்) ஆசிரியன். சர் (c) = நட. ஆ(முன்னொட்டு)-சார = நடக்கை, ஒழுக்கம். ஆசார்ய = ஒழுக்கங் கற்பிப்பவன். ஆகவே, இவ் விரு சொல்லும் வெவ்வேறு. ஆசிரியன் கற்பிக்கும் நூலில் ஆளப்பெற்ற அகவல் என்னும் பாவும், தலைக்கழகத்திலேயே ஆசிரியம் எனப்பெற்றது. அகவல் என்ப தாசிரி யம்மே (தொல். 1338) உழுந்துவடைபோல் தட்டையாயிராது ஆமைபோல் மேல்வளைவா யிருப்பது ஆமைவடை. ஆமைத்தாலி, ஆமைப் பலகை, ஆமைப் பூட்டு என்பன இக் கரணியம்பற்றியே இப் பெயர் பெற்றன. ஆமை என்பதை ஆம எனத் திரித்து, நன்றாய் வேகாதது ஆமவடை எனப் பொருள் கூறுவது எத்துணை இழிவான குறும்புத்தனம்! ஓர்தல் = பொருந்துதல். ஓர்-ஓரை = கூட்டம், மகளிர் கூட்டம், விண்மீன் கூட்டம் (இராசி). Constellation என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக. ஹோரா என்னும் கிரேக்கச் சொல் மணிக் fhy¤ij¡(hour) குறிப்பது. கொம்பு-கம்பு-கம்பம் = பெரு மரத்தூண். அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. ஸதம்ப் = ஊன்று, நில், தாங்கு. ஸ்தம்ப்-ஸ்தம்ப = ஊன்றிய (மர அல்லது கல் அல்லது செங்கல்) தூண். ஸ்கம்ப என்பது தென்சொல்லின் அல்லது வடசொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும். மா. வி. அ “Prob. a mere phonetic variety of stambh” என்று குறித்திருத்தல் காண்க. சட்டம் = எழுதப்பெற்ற ஓலை. சட்டம்-சட்டன் = ஓலைக் கணக்கன் என்னும் மாணவன். சட்டர் (மாணவர்) தலைவன் சட்ட நம்பி. சட்டநம்பிப்பிள்ளை-சட்டம்பிப்பிள்ளை-சட்டாம்பிள்ளை. சத்ர = குடை, குடைபோல் மாணவர்க்குக் காப்பான ஆசிரியன். இவ் விரு சொற்கும் என்ன தொடர்புண்டு? சட்டம் = ஒழுங்கு. சட்டம்-சடம்-சடங்கு-ஒழுங்கான வினை. ஷடங்கம் = ஆறுறுப்பு. இரண்டிற்கும் வேறுபாடு வெளிப்படை. சம்பு = சம்பா, நெல். அளம் = உப்பு. பண்டைக் காலத்தில் நெல்லும் உப்பும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டன. உப்பிட்ட வரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியையும், `உப்புக்கு உழைக்காதவன் என்னுந் தொடரையும் நோக்குக. Salary என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே பொருளதே. சம்பல என்னும் வடசொற்கு வழியுணவு, வழிப்போக்குப் பண்டம் என்பனவே பொருள். ஆதலால், தென்சொல்லே மூலமாதல் அறிக. சுள்-(சுண்)-சுணை = முள். சுள்ளெனல் = குத்துதல். சுள்சுள் ளென்று குத்துகிறது என்னும் வழக்கை நோக்குக. தன்மான வுணர்ச்சி ஒருவன் நெஞ்சை முட்போற் குத்துவது. அதனால், உனக்குச் சுணையில்லையா? என்று கேட்பது வழக்கம். சுரணை என்பதும் இதே பொருளதே. அது சுரி என்னும் முதனிலையினின்று திரிந்தது. ஸ்ம்ரு2 = நினை. ஸ்மரண = நினைவு. ஆகவே, தென்சொல் வேறு; வடசொல் வேறு. சும்பன் என்பது இடக்கர்ச் சொல். சும்பன = முத்தமிடுகை. ஜயந்த = வெற்றி பெற்றவன். சே-சேந்தோன்-சேந்தன் = சேயோன் (சிவந்தவன்), முருகன். அசுரனை வென்றோன் என்னுங் கருத்தில், வடமொழியில் ஜயந்த (ஜயித்தவன்) எனப் பெற்றான். தைத்தல் = பொருத்துதல். தை-தைச்சு-தச்சு = மரத் துண்டுகளை அல்லது பலகைகளைப் பொருத்திச் செய்யும் வேலை. ஒ. நோ: ஐந்து-அஞ்சு, மைந்தன்-மஞ்சன். Joiner என்னும் ஆங்கிலச் சொல் இப் பொருளதே. தக்ஷ் = வெட்டு. தக்ஷன்-மரம்வெட்டி. இது வேறு சொல்லாயிருத்தல் வேண்டும்; அல்லது தமிழ்ச்சொல்லின் திரிபாதல் வேண்டும். தாய்-தாயம் = தாயினின்று பெறும் உரிமை. முதற் காலத்தில் தாயே குடும்பத் தலைவியாயிருந்தாள். தாய்நாடு, தாய்மொழி என்னும் சொற்களை நோக்குக. இனி, தா (தந்தை)-தாயம் என்று கொள்ளினுங் குற்றமாகாது. தாயம் (உரிமை)பற்றிப் பாண்டவ கௌரவர்போற் பண்டை நாளிற் காயுருட்டி விளையாடியதால், அவ் வாட்டிற்குத் தாயம் என்பது கருமிய அல்லது விளைவாகு பெயராயிற்று. பாணினியார் இச் சொல்லைக் கொடை என்னும் பொருளில் தா என்னும் வினையினின்று திரித்திருக்கின்றனர். தா என்பது தூய தமிழ்ச்சொல்லென்று முன்னரே விளக்கப் பெற்றது. நால்-நாலி-தாலி=கழுத்தில் தொங்கும் அணி. சிறுவர் கழுத்தில் தொங்கிய ஐம்படைத் தாலியும், வெள்ளாட்டுக் கழுத்தில் தொங்கும் சதைத்தாலியும் போல, மணமகள் அல்லது மனைவி கழுத்தில் தொங்கும் மங்கலவணி. Pendant என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. வடமொழியாளர் பனையோலை யென்றும் காதணி யென்றும் பொருள் கூறுவர். இதன் பொருந்தாமை காண்க. மேலும், தாலி கட்டும் வழக்கம் தமிழரதே என்பதையும் நோக்கித் தெளிக. திகைதல் = முடிதல், முடிவாதல். இன்னுந் திகையவில்லை என்பது நெல்லைநாட்டு வழக்கு. தமிழில் எல்லைக் கருத்து திசைக் கருத்தையுந் தழுவும். எல்லை = முடிவு, திசை. ஐந்தா வதனுரு பின்னும் இல்லும் நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே (299) என்று நன்னூலார் கூறுதல் காண்க. திகை-திசை. திசைச்சொல் = செந்தமிழ் நிலத்திற்கப்பால். வெவ்வேறு திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ் நிலச்சொல். கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் (நன். 302) பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி (நன்.302) பின்சார் அயல்புடை தேவகை எனாஅ (தொல். 566) திசை-தேசம்-தேயம்-தேம்-தே. இச் சொல் வடிவுகளெல்லாம் இடப்பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின. தேவகை = இடவகை. தேசம் = திசை, நாடு, இடம், பகுதி. நெறியி னாற்றிய அறிவன் தேயமும் (தொல். 1021) என்னுமிடத்து, தேயம் என்பது பக்கம் (பகுதி) என்று பொருள்படுதல் காண்க. தேசம் என்னும் தென்சொல்லை யொத்தே, ஸீமா என்னும் வடசொல்லும் எல்லையையும் நாட்டையும் உணர்த்தும். வடமொழியில் திசா என்னும் சொற்கு â¢(s) என்பதை மூலமாகக் காட்டுவர். திச் = காட்டு. Gk. deiknumi (to show). காட்டற் கருத்து திசைக் கருத்திற்கு மூலமாதற்குப் பொருத்தமானதே. இந்தியில் திக்கா என்னுஞ் சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு-தேக்கு (த. É.)-â¡fh (பி. வி.) ஒ. நோ: காண்-காட்டு. திக்கா என்னும் இந்திச் சொற்கு மூலமான சூரசேனிச் சொல் கிரேக்க நாட்டிற்குச் சென்றிருக்கலாம். அங்கிருந்து வேத ஆரியரின் முன்னோர் மொழிக்கு வந்திருக்கலாம். வடமொழியில் திக் என்னும் வடிவமும் உள்ளது. அதுவே திச் என்று திரிந்திருக்கலாம். ஆகவே, தமிழ்ச்சொல் எல்லைப்பொரு ளடியாகவும், வடசொல் காட்டற்பொரு ளடியாகவும், வெவ்வேறு வகையில் தோன்றியிருப்பதாகத் தெரிகின்றது. நயத்தல் = விரும்புதல். நய-நாயன் = விரும்பப்படும் தலைவன். ஒ. நோ: நம்பு = நசை. நம்பன் = தலைவன். வேள் = விரும்பு, விருப்பம், தலைவன். நாயர்-(நாயிர்)-நாயிறு-ஞாயிறு = கோள்களின் நாயகம். நாயன்-நாயகன்-நாயக்கன்-நாய்க்கன்-நாய்கன். நாயன்-நாயனார்-நயினார். கணவன், தந்தை, அரசன், படைத்தலைவன், ஊர்த்தலைவன், வணிகத் தலைவன், அடியார் தலைவன் முதலிய பல்வேறு தலைவரை, நாயன் என்னுஞ் சொல் வெவ்வேறு வடிவில் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றது. நாயகன்-நாயகம் = சிறந்தவன், சிறந்தவள், சிறந்தது. ஞாயிறு என்னும் சொல் ஆரியர் வருமுன்பே தோன்றியது. வடமொழியில் நீ (நடத்து) என்பதை மூலமாகக் காட்டுவர். நாய, நாயக என்னும் இருவடிவே அதில் உள. பட்டுதல் = அடித்தல். பட்டசாலை = சுத்தியலால் அடிக்குங் கூடம். தருக்கத்தில் எதிரி கூற்றை மறுத்தலை வெட்டிப் பேசுதல் என்றும், அடித்துப் பேசுதல் என்றும் கூறுவது மரபு. பட்டிமண்டபம் = சமயக் கணக்கர் எதிரிகள் கூற்றையடித்துத் தம் கோளை நிறுவும் மண்டபம். விக்கிரமாதித்தனின் மந்திரியாகிய பட்டியின் பெயரால் ஏற்பட்ட மண்டபம் என்பது எள்ளி நகையாடத்தக்கது. நால்வகுப்பாருள் அந்தணர் ஐயரும் பார்ப்பாரும் என இருவகையர். முன்னவர் துறவியர்; பின்னவர் இல்லறத்தார். இவருள் சிறப்பாக அந்தண்மையுடையவர் துறவியர். இவ்விரு வகையரும் ஆரியர் வருமுன் தமிழரே. நூல்களைப் பார்க்கின்றவன் பார்ப்பான். இது செய்வான் வாய்பாட்டது. பார்ப்பனன் என்பது செய்வனன் வாய்பாட்டது. பிரமத்தை யறிந்தவன் பிராமணன் என்பர். இவ்விரு சொல்லையும் ஒன்றாக இணைப்பது, பிராமணரின் தமிழ்ப் பகைமை யையே காட்டுகின்றது. மடம் மடுத்தல் = உண்ணுதல். மடு-மடை = உணவு. மடைத்தொழில் = சமையல் தொழில். மடையன் = சமைப்போன். மடைப்பள்ளி = சமையலறை அல்லது சமையல் மனை. மடைநூல் = சமையற்கலை நூல். மடு-மடம் = அறவுணவுச்சாலை, துறவியரும் இரப்போரும் உண்டு தங்கும் இடம், சமயச் சார்பான துறவியர் விடுதி, துறவியர் கல்லூரி. தமிழகத்திற் பேரூர்தொறும் மடமுண்டு. அதில் பண்டாரம் பரதேசி என்னும் ஆண்டிகளும் இரப்போரும் அயலூர் எளியாரும் தங்குவர். ஆண்டிகள் கூடி மடங்கட்டினாற்போல் என்பது பழமொழி. ஆண்டிமடம் என்பது பெருவழக்கு. செல்வப் பெற்றோர், தமக்கடங்காது தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற மக்கள் பல்லாண்டு கழித்துத் தம்மூர் மடத்திற்கு வந்து தங்குவாராயின், தம் உறவைக் காட்டிக்கொள்ளாதே அவர்க்கு இரவில் நல்லுணவளிப்பது வழக்கம். அதற்கு இராமடம் ஊட்டுதல் என்று பெயர். வடமொழியில் மடம் என்னும் தென்சொல் மட (matha) என்று திரியும். அதற்கு, “a hut, cottage, (esp.) the retired hut (or cell) of an escetic (or student),......a cloister, college (esp. for young Brahmans), temple...” என்று மா. வி. அ. பொருள் கூறும். இதற்கு மட் (math) என்பதை மூலமாகக் காட்டுவர். அது மூலமன்று என்பதை, “(prob. invented for the word below) என்று மா. வி. அ. கூறுவதினின்று தெரிந்துகொள்க. வடவர் கூறும் மூலப்பொருள் வருமாறு: தாது பாடம் - to dwell or to be intoxicated, nthgnjt®-to grind. ãw®-to go. மால் = கருப்பு. மால்-மார்-மாரி = கரிய முகில், மழை, கரிய காளி. மரணத்தை உண்டாக்குபவள் மாரி என்பது ஒருசிறிது பொருந்தப் பொய்த்தல். வரிதல் = சுற்றிக் கட்டுதல். வரி = கட்டு, கட்டணம், அரசிறை. பண்டைத் தமிழ்நாட்டில், உழவர் பொலி தூற்றிய களத்தில் ஆறிலொரு பங்கைக் கோணிப்பைகளிற் கட்டி அரசனுக்குக் கடமையாக இறுத்ததினால், கட்டுதற் சொற்குக் கட்டணப் பொருள் தோன்றிற்று. இதைத் தெய்வங்கட்குப் படைக்கும் படைப்பைக் குறிக்கும் பலி என்னும் சொல்லொடு தொடர்பு படுத்துவது எத்துணை மடமையாகும்! வாய்-வாயி. வாயித்தல் = வாயாற் படித்தல். ஒ. நோ: கண்-கணி. கடைக்கணித்தல் = கடைக்கண்ணாற் பார்த்தல். மலை யாளத்தில் வாயித்தல் என்னும் வடிவம் வழங்குகின்றது. வாயி-வாசி. வாசித்தல் = வாயாற் படித்தல், புல்லாங்குழல் போன்ற துளைக்கருவி யியக்குதல். வாசி-வாசினை = குழல் வாசிப்பு. வாசி-வாசகம் = வாசிக்கும் அல்லது வாசித்தற்குரிய பகுதி, வாசகப் பொத்தகம் (Reader). வடமொழியில் வாசக என்னும் சொற்குப் பேசுதல், சொல்லுதல், ஒப்பித்தல், வெளியிடுதல் என்னும் பொருள்களே உள; வாசித்தல் (reading) என்னும் பொருளில்லை. அதற்கு வாச் என்பது மூலம்; வச் என்பது அடிமூலம். அதினின்று வசனம் என்னும் சொல் தோன்றும். வாச் என்பது வாக் என்று திரிந்து வாக்ய என்னும் சொல்லைப் பிறப்பிக்கும். வாசிப்பது வேறு; சொல்வது வேறு. வடசொல் வேறுவகையில் தோன்றியிருத்தல் வேண்டும்; அல்லது தென்சொல்லினின்று ஒலியும் பொருளும் திரிந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே ஏனைச் சொற்களும். விரிவஞ்சி அவை இங்கு விளக்கப்பட்டில. காரன்-காரி யீறுகள் காரன், காரி என்பன தமிழில் உடைமை அல்லது உரிமைபற்றிய ஆண்பால் பெண்பால் ஈறுகள். கடுமை = மிகுதி, வலிமை. கடு-கடி-கரி-காரம் = கடுமை, மிகுதி, வலிமை, அதிகாரம், உரிமை, உடைமை. இச் சொல் உறைப்பையும் எரிவையும் குறிப்பதும் கடுமைபற்றியே. காரம்-காரன் = உரிமையாளன், உடையவன். காரன்-காரி = உரிமையாட்டி, உடையவள். அதிகாரம் என்னும் சொல்லும் மிகுதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டதே. அதிகரி = அதிகாரம். அதிகரித்தல் = மிகுதல். வடமொழியிலுள்ள க்ரு (செய்) என்னும் வினையடியாகப் பிறந்து, செய்பவனைக் குறிக்கும் கார என்னும் சொல்லினின்று காரன் ஈறு திரிந்ததாக ஆரியவழிப் புலவர் கூறுவது ஒருசிறிதும் பொருந்தாது. கும்பகார என்னும் வடசொல் குடத்தைச் செய்யும் குயவனையே குறிக்கும். குடத்துக்காரன் அல்லது பானைக்காரன் என்னும் தென்சொல், அக் கலத்திற்கு உரியவனையே குறிக்கும். ஆட்டுக்காரன், கடைகாரன், கப்பற்காரன், காய்ச்சற்காரன், குடைகாரன், குருவிக்காரன், கூலிக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன், திருநெல்வேலிக்காரன், தோட்டக் காரன், நிலத்துக்காரன், பட்டக்காரன், பணக்காரன், பாளையக் காரன், பிள்ளைகுட்டிக்காரன். புள்ளிக்காரன், புன்செய்க்காரன், பெருமைக்காரன், பொறாமைக்காரன், மாட்டுக்காரன், முட்டைக் காரன், வண்டிக்காரன், வாடிக்கைக்காரன், வீட்டுக்காரன், வெள்ளைக்காரன் முதலிய நூற்றுக்கணக்கான தென்சொற்கள் உரிமையையன்றிச் செய்கையை எங்ஙன் உணர்த்தும்? கோழிக்காரன் கோழியைச் செய்பவனா? முட்டைக்காரன் முட்டையைச் செய் பவனா? திருநெல்வேலிக்காரன் திருநெல்வேலியைச் செய்பவனா? கொள்ளைக்காரன், தையற்காரன், வேலைக்காரன் முதலிய தொழில்பற்றிய சொற்களும், அத் தொழிலை உடையவர் அல்லது அத் தொழிற்கு உரியவர் என்றே பொருள்படுவனவாகும். செய்பவர் என்னும் பொருள் இவற்றிற்குப் பொருந்துவது தன்னேர்ச்சியே. அண்ணன்காரன், தம்பிகாரன் என்னும் முறைபற்றிய சொற்களும், அம் முறையை உடையவன் என்றே பொருள்படும். காரன் ஈறு பெண்பாலிற் காரி என்றாகும். மா. வி. m., செய்பவனைக் குறிக்கும் கார என்னுஞ் சொல் லொடு கார(ம்) என்னும் நெடிற் சாரியையைத் தொடர்புபடுத்தி யிருப்பது தவறாகும். சாலி என்னும் ஈறு இகரவீறு பெற்ற சால் என்னுஞ் சொல்லே. சாலுதல் நிறைதல். சாலி (இருபாற்பொது) = நிறைந்தவன், நிறைந்தவள். சாலினி (பெ. பா.). பேரா. K. A. நீலகண்ட சாத்திரியார் தாம் இயற்றிய தென்னிந்திய வரலாறு (A History of South India) என்னும் பொத்தகத்தில், தமிழர் அறுவகை யினங்கலந்த கலவையினத்தா ரென்றும், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள ஐயர் என்னுஞ் சொற்குப் பிராமணர் என்று பொருள் கொண்டு. தமிழரின் இல்லற வாழ்க்கைக்குரிய திருமணக் கரணம் பிராமணரால் வகுக்கப் பெற்றதென்றும், அவர் வருகைக்குமுன் தமிழர் மனையறவொழுங் கின்றித் திரிந்தன ரென்றும், வரைந்துள்ளார். பர். P. S. சுப்பிரமணிய சாத்திரியார், தொல்காப்பிய எழுத்ததி காரப் பிறப்பியல் நூற்பாக்கள் பாணினி சிட்சையிலும் பிராதிசாக்கியங்களிலுமுள்ள நூற்பாக்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பென்றும், சொல்லதிகார நூற்பாக்கள் சில யாஸ்கரின் நிருக்தத்தைப் பின்பற்றியவையென்றும், பொருளதிகார மெய்ப்பாட்டியலில் எண்சுவை பற்றிய நூற்பாக்கள் நாட்டிய சாத்திர நூற்பாக்களின் மொழிபெயர்ப் பென்றும், களவியல் நூற்பாக்கள் சில கௌதம தரும சாத்திரத்தை யொட்டியவை யென்றும், மாயோன் வேந்தன் வருணன் என்பவை இருக்குவேதத் தெய்வங்களென்றும், மரபியலிற் சொல்லப்பட்டுள்ள உத்திகள் சில அருத்த சாத்திரத்தினின்று மேற்கொண்டவை யென்றும், பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலுங் கூறப்பட்டுள்ள பல செய்திகள் வடநூல்களைத் தழுவியவை யென்றும், பொரு ளிலக்கண மென்பது பாட்டியலே (Poetics) யென்றும், திருவள்ளுவர் இரண்டன்மை (அத்துவைத)க் கொள்கையைத் தழுவியவரென்றும், தாம் விரும்பியவாறெல்லாம் தமது ‘An Enquiry into the Relationship of Sanskrit and Tamil’ என்னும் பொத்தகத்தில் எழுதியுள்ளார். இனி, அவர் தம் வடமொழி நூல் வரலாறு என்னும் பொத்தகத்தில், நாட்ய சாஸ்த்ரம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாய் இருத்தல் வேண்டும். அங்குக் கூறப்பட்ட செய்திகள் பல: வேதத்திலுள்ள செய்திகளைச் சூத்திரர் அறியாமையான், சூத்திரர்க்கும் ஏனையோர்க்கும் கண்ணிற்கும் காதிற்கும் ஆனந்தத்தைத் தரும் நூலை இயற்ற வேண்டுமெனத் தேவர்கள் பிரும்மாவை வேண்ட, அவர் அதனை இயற்றினர். ஆங்குக் கூறப்படும் பொருள்களை ருக்வேதத்திலிருந்தும், கீதிகளை ஸாமவேதத்திலிருந்தும், அபிநயங்களை யஜுர் வேதத்திலிருந்தும், ரஸங்களை அதர்வ வேதத்திலிருந்தும், அவர் கொண்டனர். அதற்கு நாட்ய வேதம் எனப் பெயர். அதனை நடிக்கத் தேவர்களால் இயலாமையான், பரத முனிவரைத் தம் நூறு புதல்வரைக் கொண்டு நடிக்குமாறு பிரும்மா ஏவினர். முதலில் அம்ருத பந்தனம் பரதரால் பிரும்மாவின் முன்னர் நடிக்கப்பட்டது. பின்னர் த்ரிபுரதாகம் சிவபிரானின் முன்னர் நடிக்கப்பட்டது (பக். 536-7) என்று வரைந்திருப்பதும், இத்தகைய செய்திகள் நிறைந்த நூல் அண்ணா மலை பல்கலைக்கழகத்தால் இவ் விருபதாம் நூற்றாண்டில் வெளி யிடப்பட்டிருப்பதும், இதற்கு அங்குள்ள தமிழ்ப் பேராசிரியர் தடை நிகழ்த்தாதிருப்பதும், தமிழரின் அடிமைத்தனத்தையே காட்டு கின்றன. பர். P.S. சு.சாத்திரியார் கிழவன் என்னும் சொல் முதலில் உரியவனைக் குறித்து இன்று முதியவனைக் குறிக்கின்றதென்று, தம் தமிழறியாமையைப் புலப்படுத்தியுள்ளார். இன்றும் அச் சொல் அவ் விருபொருளையும் உணர்த்தும். உரியவன் என்னும் பொருளில் கெழு என்னும் அடியினின்றும், முதியவன் என்னும் பொருளில் கீழ் என்னும் அடியினின்றும், அது திரிந்ததாகும். குழு-கெழு-கெழுமை-கிழமை = உரிமை. கீழ்-கிழம்-கிழமை = முதுமை. திரு. சாம்பமூர்த்தி ஐயர் தம் இந்திய இன்னிசை வரலாறு (History of Indian Music) என்னும் நூலில், சாமவேத இசைக்கோவையே இந்திய இசைக்கோவைகட்குள் முந்தியது எனக் கூறியுள்ளார். பர். சு. கு. சட்டர்சியும், பர். S. M. கத்திரேயும் இந்தியத் திணை யியற் களஞ்சியத்தில் (Gazetteer of India) மொழிகள் (Languages) என்னும் 7ஆம் அதிகாரத்தில், தமிழிலக்கியம் கிறித்தவ வூழியில் தொடங்கிய தென்றும், திருவள்ளுவர் காலம் கி. பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதன்றென்றும், இருளரும் காடரும் தம் ஆப்பிரிக்க மொழியை மறந்துவிட்டுத் தமிழைப் பேசி வருகின்றனரென்றும் வரைந்துள்ளனர். இனி, பர். சட்டர்சி தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும் ஸந்தி, ஸஹஸ்ர, கன்யகா, ஸ்தூணா, ஸ்த்ரீ, துலஸீ, லோக, பிராஹ்மண, த்ரோணீ, ஸ்நேக, தேச முதலிய வடசொற்கள், தமிழில் முறையே, அந்தி, ஆயிரம், கண்ணகி, தூணம், தி(பெண்பாலீறு), துழாய், உலகு, பார்ப்பான், தோணி, நேஎம், தேஎம் முதலியனவாகத் திரிந்துள்ளவென்றும், விஷ்ணு, குமார, துர்கா என்னும் ஆரியத் தெய்வங்களே மாயோன், முருகன், கொற்றவை யெனத் தமிழ்த் தெய்வங்களாக மாறியுள்ளன வென்றும், திருவள்ளுவரின் முப்பால் ஆரியத் திரிவர்க்கமே யென்றும், அ. ம. ப. க. க. மொழிநூல் துறைத் தொடக்கவிழாத் தலைமையுரையிற் கூறியுள்ளார். இவற்றையெல்லாங் கவனித்துக் கண்டியாது, பொருளீட்டுந் தம் பாட்டையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர். நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். (குறள். 1072) இன்று தமிழைக் கெடுப்பவர், தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் அரசியற் கட்சித் தலைவருமாகிய இரு சாராரே. 5 முடிபதிகாரம் 1. தேவ மொழியொன்று தேரின் உலகிலில்லை யாவும் நிலமக்கள் யாத்தனவே - சாவினால் தெய்வ நிலைமையெனின் தேவ ருலகினையே எய்தி விடுதல் இயல்பு. 2. ஆரியம் தேவமொழி யாகு மெனின்மேலை யாரிய மெல்லாம் அதுவாகும் - ஆரிய நான்மறை தெய்வமெனின் நானிலத் தேனைமொழி நூன்மறை மேலாம் நுவல். 3. இந்திய ஐரோப் பியமென்னும் மாமரத்தின் முந்திய ஆணிவேர் முத்தமிழாம் - பிந்திய உச்சாணிக் கொம்பே உரப்பும் வடமொழியாம் அச்சேது மின்றி யறை. 4. இயல்பே திரிபே யெனுந்தமிழின் பாங்கில் இயல்பே தமிழாகும் என்க - அயலாம் திரிபே திரவிடமாம் தேரினதன் முற்றே மருவும் வடமொழி மாண்பு. 5. வடமொழியே தெய்வ வகைமொழியேல் அந்த மடமொழியின் மூலந் தமிழாம் - திடமொழி தெய்வத்தின் தெய்வத் திருமொழி யென்றின்றே உய்வுற்றுச் சீராக வோம்பு. 6. சொற்பொருள் யாப்புஞ் சுவையாம் அணியியலும் நற்புல நூலுமே நல்வளமாம் - வற்பொலியின் மூச்சுங் கனைப்பும் மொழியின் சிறப்பாயின் ஓச்சங் கழுதை யுலகு. 7. எல்லா வகையாலும் எண்ணினா லிவ்வுலகில் எல்லேர் தமிழுக் கிணையில்லை - அல்லாச் சிறந்த மொழியெல்லாம் செந்தமிழ்போ லன்றி இறந்த மொழியாகும் இன்று. 8. ஆரிய ஏமாற்றிற் காளா யடிமைமடப் பூரிய வாழ்வழுந்திப் போந்தமிழா - சீரிய செந்தமிழ் மானஞ் சிறந்துரிமை பெற்றுயர்க முந்திய தென்னோர் முறை. 9. ஒருமுறை யேமாறின் ஏமாற்றி குற்றம் மறுமுறை யேமாறி குற்றம் - பலமுறையும் ஏமாறும் பேதை யியல்பன் தமிழனெனின் ஆமாறே யில்லை யறி. 10. மொழியே யினமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண் முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான். 11. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனா லில்லையொரு மேன்மை - வகுத்தநன்னூற் கற்றைகளைத் தின்றாலுங் காளவாய் நல்லறிவு பெற்றிடுமோ எத்துணையும் பேசு. 12. உடம்பளவில் மாந்தர் உயர்திணைய ராகார் மடந்தவிரும் நல்லறிவு மானம் - திடம்பெறவே தாழ்வுணர்ச்சி நீங்கித் தகுநற் றொழிலொழுக்கம் வாழ்வுயர்ச்சி காணும் வழி. 13. அடிமைத் தனத்தின் அடிநீக்கி யின்றே குடிமைத் தனந்தமிழா கொள்க - மடிமை இருக்குந் தமிழையும் இல்லாத தாக்கும் தருக்கும் பெயருந் தப. 14. செங்கதிரின் நீண்மறைவிற் செந்தமிழும் ஆரியத்தால் மங்கி மறைந்தநிலை மாய்ந்ததினால் - எங்குமினி மூல மொழியென முத்தமிழே யாளுகின்ற கால மணுகியதே காண். 15. குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனத் தப்பி வடமொழி தான்கவர்ந்த - செப்பத் தமிழணையை விட்டினித் தானதற்குத் தாழ்க குமரியனை யென்றதைக் கொண்டு. 16. மறைமலை மாணடிகள் மாபெயர் வாழி நிறைமொழி முத்தமிழ் வாழி - இறைமொழியான் என்னும் வடமொழியும் ஏமாற்றா தெந்நிலத்தும் மன்னுக நூன்மொழி மற்று. அருஞ்சொல் அகர முதல் வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அந்தஸ்தா, 122 அவ்யய, 131 அறுபெரும்பொழுது, 97 அனுநாசிகம், 122 அனுஸ்வார, 122 அஷ்டாத்யாயீ, 130 ஆயப்பாலை, 154 ஆரணியகம், 148 இடையொட்டு, 120 இயங்குதிணை, 84 இயலுயிர், 128 இயன்மொழி, 127 இருபிறப்பிச் சொற்கள், 98 இரைப்பினம், 122 உபத்மானீய, 122 உபநிடதம், 148 உபஸர்க்கம், 131 ஊஷ்மாண, 122 ஐந்திரம், 126 ஐவர்க்கம், 121 கத்யம், 151 காளிதாசன், 329 கிரந்தவெழுத்து, 152 கிருகிய சூத்திரம், 126 குணம், 128 குணவுயிர், 128 குணசந்தி, 123 குறுங்கணக்கு, 121 சத்தியவிரதன், 146 சதுரப்பாலை, 154 சம்பு, 151 சாகை, 146 சிரவிய காவியம், 151 சிரௌத் சூத்திரம், 149 சூரசேனி, 136 ஜிஹ்வா மூலீய, 122 தரும சூத்திரம், 149 தற்பொருட்டு வினை, 135 தன்பாட்டு வினை, 135 திணையியற் களஞ்சியம், 166 தியௌஸ் (த்யௌஸ்), 34 திரிகோணப்பாலை, 154 திரிமொழி, 127 திருச்சிய காவியம், 152 தீர்க்க ஸந்தி, 128 தேவநாகரி, 129 நடைமொழி, 119 நெடுங்கணக்கு, 125 பன்னீரோரை, 98 பாணினியார், 149 பாணினீயம், 151 பிராமணம், 147 புலுதம் (ப்லுதம்), 125 புணரொலி, 123 பொலியொலி, 129 பொலியாவொலி, 129 மற்பொருட்டு வினை, 135 முன்னொட்டு, 120 லக்கரம், 135 வட்டப்பாலை, 154 வண்ணமாலை, 121 வான்மீகி, 151 விகரணம், 136 வியஞ்சனம் (வ்யஞ்சன), 122 விருத்தி, 128 விருத்தியுயிர், 128 விசர்க்கம் (விஸர்க), 122 வேதாந்தம், 150 ஸம்ஹிதை, 323 ஸமாஸ, 143 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை'' என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணி விழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென்மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப் பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். கருவிநூற்பட்டி (Bibliography) சமற்கிருதம்: வடமொழி வரலாறு - சுப்பிரமணிய சாத்திரியார் (P.S.) எழுதியது வடமொழி நூல் வரலாறு - First Book of Sanskrit - By Ramakrishna Gopal Bhandarkar. Second Book of Sanskrit - By --Do.-- Sanskrit Grammar. Laghu Kaumudi with English Commentary - By Ballantyne. Astadhyayi Sutrapatha: - By Bhattacarya. The Sanskrit Language - By Burrow. An Enquiry into the Relationship of Sanskrit and Tamil - By P. S. Subrahmanya Sastri. A Sanskrit - English Dictionary - By Monier Williams. Panini: His Place in Sanskrit Literature - By Theodor Goldstucker. India as known to Panini - By V. S. Agrawala வேதமொழி: Sama Veda (Text and Tamil Translation) - By Sivananda Yatindira. Krishna Yajur Veda (Text and Tamil Translation) - By --Do.-- A Vedic Grammar for Students - By A. A. Macdonell. A Vedic Reader for Students - By --Do.-- An Account of the Vedas - C. L. S., Madras. The Atharva Veda - --Do.-- The Brahmanas of the Vedas - --Do.-- மொழிநூல்: Lectures on the Science of Language (2 Vols.) - By Max Muller. Three Lectures on the Science of Language - By --Do.-- Historical Outlines of English Accidence - By Rev. Richard Morris.