பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 10 தமிழிலக்கியவரலாறு - 2 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 10 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12 + 84 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சிறப்பு .vi III. இக்காலம் (20ஆம் நூற்றாண்டு) 1. செய்யுள் உரைநடை யிலக்கியம் .1 2. ஆங்கிலராட்சியால் விளைந்த நன்மைகள்... 15 3. அல்பிராமணர் கட்சி (Non-Brahmin Party) .23 4. தமிழாரியப் போராட்டம் .24 5. தனித்தமிழ் இயக்கம் .24 6. பேராயக் கட்சியால் விளைந்த தீங்கு .26 7. பெரியார் தன்மான இயக்கம் 27 8. தமிழர் ஆட்சித்தொடக்கம் .28 9. இற்றைத் தமிழர் நிலைமை .29 10. தமிழுக்கு ஆகாத நூல்கள் .36 IV. எதிர்காலம் 1. தமிழின் தலைமை .52 2. தமிழ் விடுதலையேதமிழன்விடுதலை... 58 3. தமிழரும் பிராமணரும் ஒத்து ழ்தல் ... 62 4. தமிழர் ஒற்றுமை .64 5. வரிசை யறிதல் .65 6. இந்து மதத்தினின்று தமிழ் மதத்தைப் பிரித்தல்... 67 7. வண்ணனை மொழிநூல் விலக்கு .67 8. இந்தியொழிப்பு . 68 9. தமிழ்ப்பல்கலைக் கழகம் .71 10. செந்தமிழ்ப் சொற்பிறப்பியல்அகரமுதலி... 72 ஏ. பின்னிணைப்பு 1. புரட்சி .73 2. இலக்கியப் பாகுபாடு .74 3. மொழிபற்றிய சில வுண்மைகள் .74 4. தமிழ் எழுத்து மாற்றம் .77 5. பகுத்தறிவு விளக்கம் .77 6. தமிழ் திரவிட வேறுபாடு .79 7. உலகத்தமிழ் மாநாடுகள் .81 வாழ்த்து 84 தமிழிலக்கிய வரலாறு - 2 1 இக்காலம் (20ஆம் நூற்றாண்டு) 1. செய்யுள் உரைநடை யிலக்கியம் பரிதிமாற் கலைஞன் (1870-1903) இவர் தம் சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றிக்கொள்ளும் அளவும், தாம் தமிழாசிரியப் பணியாற்றிய கிறித்தவக் கல்லூரியிற் பிராமண kணவர்Kன்பும்ãராமணர்jமிழரைVமாற்றிவிட்டனர்vன்றுbசால்லும்mளவும்,jமிழின்cண்மைÆயல்புணர்ந்துjமிழ்ப்பற்றுÉஞ்சியãராமணத்jமிழ்ப்òலவர்.ït® எழுதியவையும் இயற்றியவையும்: ரூபாவதி, கலாவதி, மானவிசயம் என்னும் நாடக விலக்கியம்; நாடகவியல் என்னும் நாடக விலக்கணம்; தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து என்னும் தனிப்பாடற் றொகுப்புகள்; மதிவாணன் vன்னும்òதினம்;jமிழ்மொழியின்tரலாறு,jமிழ்ப்புலவர்rரித்திரம்,kÂயசிtனார்சÇத்திரம்எ‹Dம்வரyறுகள்;சித்âரக்கவிவிள¡கம்என்Dம்விள¡கவுரை;தமிœவியhசங்கள்என்Dம்கட்Lரைத்திர£டுமுதÈad. கதிரைவேற் பிள்ளை இவர் தமிழ் அகரமுதலி 1904-ல் வெளிவந்தது. நாகலிங்க முதலியார் இவரது தமிழகரமுதலி 5ஆம் சியார்ச்சு அரசர் தில்லி முடிசூட்டு விழா நினைவு வெளியீடாக 1911-ல் வெளி வந்தது. பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர் (1867-1911) பாண்டியர்குடி மறைந்தபின், பாண்டித்துரைத் தேவர் என்னும் ஆண்டகை பாண்டியன் போன்று, நாலாங் கழகம் என்னும் இற்றை மதுரைத் தமிழ்க் கழகத்தை 1901-ல் தோற்று வித்தார். பெரும் புலவரின் அரிய ஆராய்ச்சிகளைக் கொண்ட செந்தமிழ் என்னும் உயரிய இலக்கிய மாதிகை, இக் கழக இதழாக 1903-ல் வெளிவரத் தொடங்கிற்று. இக்கழக அச்சகத்திற் பல்வகைத் தமிழ்நூல்களும் பனுவல்களும் பிழையின்றி அச்சிடப்பட்டு எளிய விலைக்கு விற்கப்பட்டன. அவற்றுள் சங்கத்தமிழ் அகரமுதலியும் சிங்காரவேல் முதலியாரின் அபிதான சிந்தாமணியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பாண்டித்துரைத் தேவர் பன்னூற்றிரட்டு என்னும் பாடல் தொகுப்பைத் தொகுத்தார்; 1911-ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிக் குழுவுறுப்பினராகி, இறுதிவரை பணி யாற்றினார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862-1914) இவர் நற்றிணைக்கு உரைவரைந்து வெளியிட்டார். குமாரசாமிப் பிள்ளை இவரது இலக்கியச் சொல்லகராதி 1914-ல் வெளிவந்தது. அராவ ஆண்டகை(ராவ் பஹதூர்) பவானந்தம் பிள்ளை இவர் ஆங்கிலராட்சியில் காவல்துறையில் இந்தியர் அடையக் கூடிய உச்சநிலைப் பதவி தாங்கி, தமிழ்நாடு காவல் போன்றே தமிழ்க் காவலும் பூண்டு, ஒல்லும் வகையாற் பல்வேறு வகையில் சிறந்த தொண்டாற்றியது, மிகமிகப் பாராட்டத் தக்கது. இறையனாரகப் பொருளுரையும் யாப்பருங்கல விருத்தியும் இவரால் 1916-ல் வெளியிடப்பட்டன. இங்ஙனம் அறிவும் ஆண்மையும் செறிந்தவர் ராவ் பஹதூர் என்னும் அராவ ஆண்டகைப் பட்டம் பெற்றது வியப்பன்று. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் மருத்துவப் பண்டிதராகவு மிருந்து, புலத்துறையிலும் நலத்துறையிலும் தலைசிறந்த தொண் டாற்றியதொடு, ஆழ்ந்த இசைத் தமிழாராய்ச்சியும் செய்து 1917ஆம் ஆண்டில் கருணாமிர்த சாகரம் என்னும் பெரு நூலை வெளியிட்டார். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை (1883-1941) இவர் 1911-ல் கரந்தைத் தமிழ்க் கழகத்தைத் தோற்றவித்தும், 1925-ல் தமிழ்ப்பொழில் என்னும் உயரிய தமிழ் மாதிகையைத் தொடங்குவித்தும், காலமெல்லாம் தமிழின் தூய்மையைப் போற்றிக்காத்த தந்நேரில்லாத் தமிழ ஆண்டகை. திருவரங்கம் பிள்ளை இவர் 1920-ல், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தோடிணைந்த திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தும், 1927-ல் செந்தமிழ்ச்செல்வி என்னும் செந்தமிழ் மாதிகையைத் தொடங்குவித்தும், தமிழைத் தாய்போற் பேணிக் காக்கவும், இந்தியை வன்மையாய் எதிர்க்கவும், திருக்கோயில் தமிழ் வழிபாட்டைப் புதுப்பிக்கவும், தமிழர் தன்மானத்தொடு வாழவும், எல்லாப் புலவரையும் ஒன்றாய் இணைக்கவும், ஆயிரக்கணக்கான செந்தமிழ் நூல்களை அச்சிட்டு நேர்மை விலைக்கு விற்கவும், தமிழ் ஆராய்ச்சியை ஊக்கவும், தமிழை உலகெங்கும் பரப்பவும், இயன்றவரை தமிழ்ப் பெரும்புலவர்க்குப் பிழைப்பூட்டவும், ஆழ அடிகோலியவர். சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) இவர் தேசவிடுதலையென்னும் ஆங்கிலராட்சி நீக்கப் போராட்டத் தொடர்பாக, நூற்றுக்கணக்கான தலைப்புப்பற்றி ஏராளமாகப் பாடியுள்ளார். அவற்றுட் பெரும்பாலானவற்றின் மொழிநடையும் சொல்வடிவும் செந்தமிழிலக்கணத்தொடு பொருந்துவன வல்ல. தமிழின் சிறப்பை யுணர்த்தித் தமிழ்ப் பற்றூட்டும் சில பாடல்கள் ஏற்கத்தக்கன. எ-டு : யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை யுலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். செல்வக்கேசவராய முதலியார் இவர் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரேனும், தமிழில் மிகுந்த ஆர்வமுடையவர். இவருடைய திருவள்ளுவர், கம்பன், தமிழ் என்னுந் தலைப்புக் கட்டுரைகளும், ஒரு போகு பழமொழிகள் (Parallel Proverbs) என்னும் தமிழாங்கிலப் பழமொழித் திரட்டும், மிகச் சிறந்தவை. அரசஞ் சண்முகனார் இவர் பாடியவை ஏகபாத நூற்றந்தாதிமாலை, மாலை மாற்று, இன்னிசை இருநூறு முதலியன. இவர் ஆய்வுகள் திருக்குற ளாராய்ச்சி, தொல்காப்பியப் பாயிர விருத்தி முதலியன. மயிலைச் சண்முகம் பிள்ளை இவர் பாடியது திருமுல்லைவாயிற் புராணம் சுன்னாகம் சு. குமாரசாமிப் புலவர் இவர் தொகுத்தது தமிழ்ப்புலவர் சரித்திரம். நெல்லைப் பால்வண்ண முதலியார் இவர் இயற்றியது சொற்பொழிவாற்றுப்படை என்னும் தனித்தமிழ் உரைநடை நூல். தஞ்சைச் சீநிவாசப் பிள்ளை இவர் தமிழ் வரலாறு (2 பாகம்) தொகுத்துள்ளார். மாகறல் கார்த்திகேய முதலியார் இவர் எழுதியது தமிழ்மொழி நூல். இதுவே முதன்முதல் தமிழில் எழுந்த மொழியாராய்ச்சி நூல். பாம்பன் குமரகுருதாச அடிகள் இவர் பாடியன சேந்தன் செந்தமிழ் என்னும் 50 தனித் தமிழ் வெண்பாவும், குமாரசுவாமியம் என்னும் பெரும்பாவியமும் ஆகும். உ.வே.சாமிநாதையர் (1855-1942) இவ்விருபதாம் நூற்றாண்டு மாபெரும் புலவர் ஒருசிலவருள் ஒருவரும், நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியரும், ஏட்டுச் சுவடித் தேட்டாளரும் ஆய்வாளரும் பதிப்பாளரும், தென் கலைச்செல்வர், பெரும்பேராசிரியர், பண்டாரகர் (Dr.) என்னும் பட்டங்கள் பெற்றவரும், தமிழுலகம் என்றும் நன்றியறிவோடு நினைவு கூரத்தக்கவரும் உ.வே. சாமிநாதையர் ஆவர். இவர் பதிப்பித்த ஏட்டுச்சுவடிகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் ஐந்து (ஐங்குறுநூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு), பெரும் பாவியம் நான்கு (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை), சிறுபாவியம் ஒன்று (உதயண குமார காவியம்), இலக்கணவுரை நான்கு (மயிலை நாதருரை, சங்கரநமச்சிவாயருரை, தமிழ்நெறிவிளக்கம், புறப்பொருள் வெண்பா மாலையுரை), புராணம் 13, கோவை 7, மும்மணிக் கோவை 2, உலா 10, அந்தாதி 3, கலம்பகம் 1, பிள்ளைத்தமிழ் 1, மாலை 2, பரணி 2, தூது 6, குறவஞ்சி 2, வெண்பாப்பனுவல் 3. பனுவற்றிரட்டு 4 முதலியன. இவர் எழுதிவெளியிட்ட உரைநடைப் பொத்தகங்கள் மான்மியம் 1, மதவியல் 1, கதைச்சுருக்கம் 2. வாழ்க்கை வரலாறு 6, இலக்கிய வரலாறு 1, கட்டுரைத்திரட்டு 9 முதலியன. உரைநடைப் பொத்தகங்களுள், ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (3 பாகம்), சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் தலைசிறந்தவை. சிறுமணவூர் முனிசாமி முதலியார் இவர் பிரபஞ்சோற்பத்தி, நாரதர் கலகம், வைத்திய ரத்தினா கரம், மூலிகை மருமம், அனுபவ வைத்தியம், சோதிடவிளக்க சிந்தாமணி முதலியன எழுதி வெளியிட்டார். விருதை சிவஞான யோகிகள் இவர் ஆராய்ச்சியாலும் நூலாலும் தமிழின் தனி மாண்பை நாட்டினார். கா. நமச்சிவாய முதலியார் இவர் அக்காலப் பள்ளிக் கல்விப் பல்வகுப்புத் தமிழ்ப் பாடப் பொத்தக ஆசிரியர்; தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த சமற்கிருதப் பகுதியை நீக்க ஏற்பாடு செய்தவர். க.ப. மகிழ்நன் இவர் சந்தோஷம் என்னும் தம் வடசொற்பெயரை மகிழ்நன் என்று தனித் தமிழாக மாற்றி, நகைச்சுவையாகவும் தமிழ்நலமாகவும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சில பாடப்பொத்தகங்களும் எழுதியவர். துடிசைகிழார் அ. சிதம்பரனார் இவர் உருத்திராக்க விளக்கம், துடியலூர்ப் புராணம், தமிழ்ச் சங்கங்களின் வரலாறு, சேரர் வரலாறு முதலியவற்றின் ஆசிரியர்; திருமந்திர ஆராய்ச்சியால் திருமந்திரமணி எனப் பெயர்பெற்ற துடிப்புமிக்க தமிழறிஞர். இராமநாத பிள்ளை குலசேகரம் பட்டினத்தைச் சேர்ந்த இராமநாதபிள்ளை தனித் தமிழிலேயே பேசுவதும் எழுதுவதும் கடமையாகக் கொண்டவர். சைவசமய உணர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய வேலை யாது? சிவ சின்னங்கள் அணிவதேன்? என்பன இவர் எழுதியவை. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் இவர் இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் சொற் பொழிவாளராகவும் சீர்திருத்தத் தலைவராகவும் சிறந்த பொதுநலத் தொண்டாற்றியவர். இவர் எழுதியவை என் கடன் பணிசெய்து கிடப்பதே, காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நூல்களில் பௌத்தம், தமிழ்த் தென்றல், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார், பெரியபுராணக் குறிப்புகள் முதலியன. முதலில் வெசிலிக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். கா. சுப்பிரமணியப் பிள்ளை தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி முதுகலைப் பட்டம் பெற்றவரும் தாகூர்ச் சட்ட விரிவுரையாளருமான கா. சுப்பிரமணியப் பிள்ளை, தனித்தமிழ்க் காப்பாளருள் ஒருவர். இவர் எழுதியவை தமிழ்மொழியமைப்பும் மொழிநூற் கொள்கையும், தமிழ் இலக்கிய வரலாறு (2 பாகம்) முதலியன. பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலப் பேராசிரியரும் ஞானபோதினி இதழாசிரியரு மான முந்நீர்ப்பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, சிறந்த தமிழ்ப் பற்றாளரும் நடுநிலை யாராய்ச்சியாளரு மாவர். இவர் எழுதியவை தமிழ் இந்தியா, நபிநாயகமும் கவிவாணர்களும் முதலியன. பா.வே.மாணிக்க நாய்க்கர் சென்னை அரசியற் பொதுப்பணித் துறையில், வினையாட்சிச் சூழ்ச்சியகராய் (Executive Engineer) இருந்த பா.வே. மாணிக்க நாய்க்கர், ஒருவகைப் பெற்றிய (சித்த) முறையில் நெடுங்கணக்கை ஆய்ந்து தமிழின் மூல முதன்மையைக் கண்டவர். இவர் எழுதியவை அஞ்ஞானம், தமிழ்மறை விளக்கம், தமிழ் அலகைத் தொடர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் முதலியன. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1884-1940) இவர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வில் முதன் முதலாகவும் முதல்தரமாகவும் தேறிப் பொற்கடகம் பெற்ற பெரும் புலவர். இவர் எழுதியவை: வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, நக்கீரர் (வரலாறு), கபிலர் (வரலாறு), கள்ளர் சரித்திரம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது முதலிய 9 சிறு பனுவல்கட்கு உரை, கண்ணகியின் வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணவுரை, அகத்தியர் தேவரத் திரட்டு உரைத்திருத்தம், தண்டியலங்காரப் பழையவுரைத் திருத்தம், யாப்பருங்கலக் காரிகையுரைத் திருத்தம், சிலப்பதி காரவுரை, மணிமேகலையுரை, இரு கட்டுரைத் திரட்டுகள், (கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து) அகநானூற்றுரை என்பன. இவற்றுள் இறுதியது மாபெரும் புலவரே செய்தற்குரிய ஏற்றமான தமிழ்த் தொண்டாம். பம்மல் சம்பந்த முதலியார் இவர் சென்னைச் சிறுவழக்கு மன்ற நடுத்தீர்ப்பரா யிருந்தவர். இவர் எழுதியவை யயாதி, வேதாளவுலகம் முதலிய நாடகங்களும், நாடகத் தமிழ் என்னும் நாடக நூலும், யான்கண்ட புலவர்கள் என்னும் வரலாறும் ஆகும். கார்மேகக் கோனார் இவர் தமிழின் பெருமையைப் பேணிய புலவருள் ஒருவர். இவர் எழுதியது நல்லிசைப்புலவர் வரலாறு. மறைமலையடிகள் (1876-1950) பொதுத் தமிழிலக்கிய மனைத்தும் பொருந்தக் கற்று, ஆங்கிலரும் வியக்கும் அழகிய நடை கைவரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு, எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுத வொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலையடிகள், திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்தெண்ணத்தக்க தனிப்பெருந் தகுதியுடையவராவர். இவர் புதிய படைப்புகளாவன: அறிவியல் (நூல்கள்) மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை (2 பாகம்), பொருந்தும் உணவும் பொருந்தா வுணவும், மரணத்தின் (மாய்வின்) பின் மனிதர் (மாந்தர்) நிலை, யோக நித்திரை (ஓகவுறக்கம்) அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் (தொலைவுணர்வு), மனித (மாந்தன்) வசியம் அல்லது மனக்கவர்ச்சி. புதுச்செய்யுள் திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம். புதினம் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள். ஆராய்ச்சி சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், சிவஞானபோத ஆராய்ச்சி. எதிர்நூல் இந்தி பொது மொழியா? சீர்திருத்த நூல் சாதி (பிறவிக்குல) வேற்றுமையும் போலிச் சைவரும் (சிவனியரும்). சமய நூல்கள் தமிழர்மதம், சைவசித்தாந்த ஞானபோதம் (சிவக் கொண் முடிபு அறிவை நுவற்சி), பழந்தமிழ்க் கொள்கையே சைவ (சிவ) சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் (சிவனியம்) ஆகா. உரை திருவாசக விரிவுரை (4 அகவல்கள்). வரலாறு வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர். கட்டுரை சிந்தனைக் (ஓர்வுக்) கட்டுரைகள், இளைஞர்க்கான இன்றமிழ், சிறுவர்க்கான செந்தமிழ், உரைமணிக் கோவை, அறிவுரைக் கொத்து. நாடகம்: அம்பிகாபதி அமராவதி. பேரா. வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் இவர் மூன்றாங் குலோத்துங்கச் சோழன் வரலாற்றை ஆய்ந்தெழுதி 1943-ல் வெளியிட்டார். வரகுண பாண்டியனார் இவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இளைய மகனார்; 1950-ல் பாணர்கைவழி என்னும் அரிய ஈடிணையற்ற மறுக்கொணா யாழாராய்ச்சி நூலை வெளியிட்டார். அ. இராமசாமிக் கவுண்டர் (1899-1950) சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர், திருக்குறள் புத்துரை, பகவற்கீதைச் சுருக்கம் (மொழி பெயர்ப்பு), நெல்சன் (வரலாறு), நெப்போலியன் (வரலாறு) முதலிய வற்றின் ஆசிரியர்; தலைசிறந்த தமிழ்க் காவலர். என்னைச் சேலங் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்த்தியவரும், என் மொழியாராய்ச்சி முற்றுவதற்குத் தோதா யிருந்தவரும், இவரே. வரதநஞ்சையப் பிள்ளை சலகண்டபுரம் கணக்குப் பிள்ளையாயிருந்த வரத நஞ்சையப் பிள்ளை ஒரு பெரும்புலவர்; சிறந்த சொற்பொழிவாளர். இவர் இயற்றியது தமிழரசி குறவஞ்சி. பண்டிதமணி கதிரேசச் செட்டியார் (1881-1953) தன்முயற்சியாலும் தாளாண்மையாலும் தென்மொழியிற் போன்றே வடமொழியிலும் தேர்ச்சிபெற்று, பண்டிதமணியென் னும் பட்டத்தொடு உ.வே. சாமிநாதையர்க்கொப்பப் பெரும் பேராசிரியர் பட்டமும் பெற்றுச் செருக்கின்றி வாழ்ந்த பெருந் தகையார் மகிபாலன் பட்டிக் கதிரேச் செட்டியார். இவர் படைப்புகள் உரைநடைக் கோவை, மேலைச்சிவபுரி விநாயகர் பதிற்றுப்பத்து, கௌடிலீயம், சுக்கிரநீதி, மண்ணியல் சிறுதேர்(மிருச்சகடிகம்) முதலியன. இறுதி மூன்றும் வட மொழியினின்று மொழிபெயர்த்தவை. ரா. இராகவையங்கார் இவர் சேதுநாட்டு அரண்மனைப் புலவர். இவர் எழுதியவை சேதுநாடுந் தமிழும், வஞ்சிமாநகர், நல்லிசைப் புலமை மெல்லிய லார், தமிழ் வரலாறு; பாடியது பாரி காதை (வெண்பா யாப்பு). மு. இராகவையங்கார் இவர் ரா. இராகவையங்காரின் அளியர் (மைத்துனர்). இவர் எழுதியவை தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும் ஆந்திரரும், சேரவேந்தர் தாய வழக்கு, ஆராய்ச்சித் தொகுதி (கட்டுரைகள்); தொகுத்தது பெருந்தொகை (தனிப்பாடற் றிரட்டு). சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் குழுவில், தலைமையாயிருந்தவர் இவரே. மதுரைக் கோபாலகிருட்டிணக் கோனார் இவர் 1956-ல் மதுரைத் தமிழ்ப் பேரகராதியை வெளி யிட்டார். சதாசிவ பண்டாரத்தார் இவர் தமிழ்ப்புலவர்க்குள் தலைசிறந்த கல்வெட்டாராய்ச்சி யாளர்; அண்ணமாலை பல்கலைக் கழகத்திற் கல் வெட்டாராய்ச்சித் தலைவராய்ப் பணியாற்றியவர். இவர் எழுதியவை முதற் குலோத் துங்கச் சோழன், பாண்டியர் வரலாறு, இலக்கியமுங் கல்வெட்டு களும் முதலியன. கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் இவர் எழுதியது பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் (2 பாகம்). சேதுப்பிள்ளை இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரா யிருந்தவர். இவர் எழுதியவை திருவள்ளுவர் நூல்நயம், கங்கை வேடனும் காளத்தி வேடனும், வில்லும் வேலும், கால்டுவெல் ஐயர், ஊரும் பேரும், கிருத்தவத் தமிழ்த் தொண்டர் முதலியன. புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார் (1891-1964) இந்தியாவில் ஆங்கிலராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் சுப்பிர மணிய பாரதியார்; தமிழகத்தில் ஆரியராட்சி நீக்கத்திற்குப் பாடி யவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார். கனியிடை யேறிய சுளையும் - முற்றல் கழையிடை யேறிய சாறும் பனிமல ரேறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை யேறிய சுவையும் நனிகற வைபொழி பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர். தமிழ்தமி ழினம்தமி ழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனினும் மற்றவும் ஒழியும் நாட்டின் உரிமையைக் காத்தல் வேண்டும். தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும் நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம் தமிழல்லால் நம்முன் னேற்றம் அமையாது சிறிதுமிதில் ஐயமில்லை ஐயமில்லை அறிந்து கொண்டோம். சொற்கோவின் நற்போற்றித் திருவகவல் செந்தமிழில் இருக்கும் போது கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம் தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச் செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால். செந்தமிழ் தன்னில் இல்லாத - பல சீமைக் கருத்துகள் இந்தியில் உண்டோ எந்த நலம் செய்யும் இந்தி - எமக் கின்பம் பயப்பது செந்தமி ழன்றோ. இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ கன்னங் கிழித்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம். செழிப்போரே இளைஞர்களே தென்னாட்டுச் சிங்கங்காள் எழுக நம்தாய் மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ்செய் வீர்வெல்வீர் மொழிப்போர் வெல்க. என்று பாடி, ஆரிய அடிமைத்தனத்தினின்றும், இந்தித் தாக்குத லினின்றும் விடுதலைபெற மொழிப்போர் தொடுக்குமாறு, புரட்சிப் பாவேந்தர் தமிழ இளங்காளையரை ஏவினார். இவர் படைப்புகளாவன: 1.பனுவல்கள் குடும்ப விளக்கு, தமிழியக்கம், குயில், அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், இருண்ட வீடு, இசையமுது, ஏற்றப்பாட்டு, காதல் நினைவுகள், காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், தேனருவி, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம். 2.நாடகங்கள் இரணியன், படித்த பெண்கள், சேரதாண்டவம், நல்லதீர்ப்பு, கழைக்கூத்தியின் காதல், கற்கண்டு, சௌமியன், அமைதி. பர் (Dr.) மு. வரதராசனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பணி யாற்றி வரும் பர். மு. வரதராசனார் எழுதியவை படியாதவர் படும்பாடு, தமிழ்நெஞ்சம், கண்ணுடைய வாழ்வு, கள்ளோ காவியமோ, மொழிநூல், மொழிவரலாறு, அன்னைக்கு முதலிய 40 உரைநடை நூல்கள். பர். (Dr.) இலக்குவனார் இவர் நாகர்கோவில் இந்துக்கல்லூரி முதல்வராயிருந்தவர்: கட்டாய இந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர். இவர் எழுதியவை தொல்காப்பிய ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், திருக்குறள் பொழிப்புரை முதலியன. மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேய்ந்தர் பதவிக்கு முழுத்தகுதி இவர்க்கிருந்தும், அதைப் பெறாது போனது வருந்தத் தக்கது. மருத்துவ கணியப் புலவர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை தமிழ்ப் பெரும்புலவரும் பெற்றிய (சித்த) மருத்துவரும் பெருங்கணியரும் தலைசிறந்த தமிழ்க்காவலருமான இ.மு. சுப்பிர மணியப்பிள்ளை, சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கந் தோற்றுவித்தும், அதன் சார்பாகத் தமிழ்த்தாய் என்னும் காலாண்டிதழ் ஆசிரியரா யிருந்தும், கலைச்சொல்லாக்க மாநாடுகள் நடத்திக் கலைச் சொற்கள் என்னும் சொற்றொகுப் பும் ஆட்சிச்சொல் மாநாடுகள் நடத்தி ஆட்சிச்சொல் அகர வரிசையும் தொகுப்பித்தும், உலகப் பொதுமறை திருக்குறள் ஒழுக்க முறை, உலகப் பொதுச்சமயம், தம்பிரான் றோழர், நெல்லை மாவட்டக் கோவில் வரலாறு, இராமாயண ஆராய்ச்சி, திருமுருகாற்றுப்படை விளக்கவுரை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாறு (5 பகுதிகள்) முதலியன எழுதி வெளியிட்டும், தமிழ் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுதும் அல்லும் பகலும் அரும்பாடுபட்டுவருபவர். சிவனிய ஐந்திறம் (சைவப் பஞ்சாங்கம்) 5 ஆண்டு செவ்வை யாகக் கணித்து, இடையறாது வெளியிட்டும் வெளியிடு வித்தும் வருவது, இவரது கணியப் புலமையையுந் தொண்டையும் புலப்படுத் தும். சென்றவிடமெல்லாஞ் செந்தமிழ்த் தொண்டாற்றிய இவர்க்கு, அரசினர் சிறப்போ பொதுமக்கள் பாராட்டோ ஒரு சிறிதும் இல்லாதிருப்பது, இற்றைத்தமிழின் நிலைமையையும் தமிழர் இயல்பையுந் தெளிவாகக் காட்டும். புருடோத்தம நாயுடு கண்ணுழையாக் காரிருட் கடுங்கானத்துள் கதிரவன் தோன்றி னாற் போன்று, வடமொழிப் புலமையில்லார்க்குப் பயன்படாத ஈடு என்னும் திருவாய்மொழி மணிப்பவள வுரைக்கு விளக்கஞ் செய்த இவர் உதவி, ஈடிணையற்றது. கவியோகி (பாவர சோகியார்) சுத்தானந்த பாரதியார் தமிழ், இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானி யம் ஆகிய அறுமொழிப் புலவரும், ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா ஆகிய முக்கண்டமும் தமிழ்மறையைப் பரப்பியவரும், திருவருட்பா, ஆழ்வார் தெய்வப் பனுவல் ஆகிய வற்றை இந்தியிலும், திருக்குறள், திருவாசகம், தாயுமானவர் பாடல் முதலியவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளிநாடுகள் அறியச் செய்தவரும், திருக்குறட் கும் திரு மந்திரத்திற்கும் தமிழில் தெளிவுரை வரைந்தவரும், சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. (குறள். 118) என்னுந் திருக்குறட்கு இலக்கியமானவரும், ஓகப் பயிற்சியில் உயர்ந்தவரும் பிராமணர் என்னுங் கருத்தால் தமிழராலும் தமிழ்ப் பற்றாளர் என்னுங் கருத்தாற் பிராமணராலும், வெளிநாடுகளில் உள்ள அளவுகூடத் தமிழ்நாட்டிற் போற்றப் படாதவரும், பாரத மகாசக்தி காவியம் என்னும் பாவியம் பாடியவரும், சுத்தானந்த பாரதி யென்னும் துய்யவின்பக் கலைமகனார் ஆவர். பேரா. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை இவர் சித்தாந்த கலாநிதி (கொண்முடிபுக் கலைச்செல்வர்), உரைவேந்தர் என்னும் பட்டங்கள் பெற்ற பேராசிரியப் பெரும் புலவர்; முப்பெருங்காப்பிய ஆராய்ச்சியாளர்; ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்கட்கு விளக்கவுரை கண்டவர்; யசோதர காவியத்திற்கு உரை வகுத்தவர். சேரமன்னர் வரலாறு இவரது சீரிய வரலாற்றறிவையும் ஆராய்ச்சியையும் புலப் படுத்தும். இற்றைக் கழகநூற் புலமைக்கு இவர் தலைமை தாங்கு பவர் என்னின் மிகையாகாது. பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை இவர் இலக்கண ஆசிரியர் என்று பெயர்பெற்ற சிறந்த இலக்கணப்புலவர்; சித்தர் ஞானக்கோவை, சாத்தனார் கூத்தநூல் முதலிய சிறந்த நூல்களின் பதிப்பாசிரியர்; நன்னூல் இராமானுச கவிராயர் விரிவுரைப் பதிப்பிற்கு மிக வுதவியவர்; இன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலித் திருத்தப் பதிப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குபவர். ஆராய்ச்சிப் புலவர் மயிலை சீனி. வேங்கடசாமி தமிழிலக்கிய ஆராய்ச்சியையே தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்ட மயிலை சீனி. வேங்கடசாமியார் எழுதிய நூல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம், தமிழர் வளர்த்த அழகு கலைகள், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், துளுநாட்டு வரலாறு, காவியப் புலவனும் ஓவியக் கலைஞனும், மறைந்து போன தமிழ்நூல்கள், கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் முதலியன. இப் பணி தமிழ் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற தலை சிறந்த தமிழ்த் தொண்டாகும். திரு. பி. எல். சாமி மாகி ஆட்சித்தலைவர் உயர்திரு. பி.எல். சாமியார் சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்திற் புள்ளின விளக்கம் என்னும் உயிரின ஆராய்ச்சி நூல்களை எழுதிச் சை.சி.நூ.ப.கழக வாயிலாக வெளியிட்டுள்ளார். இவர் ஆராய்ச்சி அறிவியன் முறைப் பட்டது. பேரா. மா. வி. இராசேந்திரனார் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரி உயிரியற் பேராசிரியர் மா.வி.இராசேந்திரனார் நம் நாட்டுப் பாம்புகள் என்னும் ஆராய்ச்சி நூலை வெளியிட்டுள்ளார். சாத்தன்குளம் அ. இராகவனார் நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவனார் நம் நாட்டுக் கப்பற்கலை, தமிழ்நாட்டு அணிகலன்கள் என்னும் ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவித்துள்ளார். புலவர் மு. அருணாசலனார் இவர், 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை, நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரையில்லா வகையில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ச்சியாளர் உட்பட அனைவர்க்கும் பயன்படுமாறு, அரும்பாடுபட்டுத் தொகுத் தெழுதிக் காந்தி வித்தியாலய வாயிலாக வெளியிட்டுள்ளார். 2. ஆங்கிலராட்சியால் விளைந்த நன்மைகள் மக்கள் மனப்பான்மையும் நிலைமையும் தொழிலும் வெவ் வேறு வகைப்பட்டிருப்பதால், ஒரே நிலைமை அல்லது நிகழ்ச்சி எல்லார்க்கும் நல்லதாயிருப்பதில்லை. ஆதலால், சிறிதேனும் தீமை கலவாத நன்மையுமில்லை; அடைமழைக் காலத்தில் மற்றெல்லாத் தொழிலாளரும் துன்புறினும், குடை வாணிகர், குடையொக்கிடுநர், தாழங்குடை முடைவோர் முதலிய சில தொழிலாளர் இன்புறுவர். இள வெயிற்காலத்தில் இதற்கு நேர்மாறான நிலைமை நேரும். நல்லா ரெனத்தாம் நளிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லிற் குமியுண்டு நீர்க்கு நுறையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு. (நாலடி.221) என்பது, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குறையுண்டு என்பதைத் தெரிவிக்கும். ஒரு பொருள் அல்லது நிலைமை நல்லதா தீயதா என்று துணிவதற்கு, குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள்.504) என்று, திருவள்ளுவர் ஒரு சிறந்த நெறிமுறை வகுத்திருக்கின்றார். இந்த நெறிமுறையைக் கையாளும்போதும் நடுநிலையைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்பதை, காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். (அறநெறிச். 42) என்று முனைப்பாடியார் அறிவித்துள்ளார். ஆங்கிலராட்சியால் தமிழர்க்கு விளைந்த நன்மை கொஞ்ச நஞ்சமன்று. அது பின்னர் விளக்கப்படும். இந்தியா முழுவதையும் நோக்கினும், ஆங்கிலர் ஆட்சியின் நன்மைகள் அளவிறந்தன. இந்தியா ஓராட்சி நாடானமை இந்தியா ஒருகாலத்தில் முந்நாடாயிருந்து, பின்னர் முறையே 13, 15, 19, 25, 56 நாடாகப் பல்கி, ஆங்கிலராட்சிக் காலத்தில் 545 நாடாகப் பெருகியிருந்தது. அவற்றுட் பல சிற்றரசுகளாயிருந்து பேரரசுகட்குத் திறை செலுத்தினவேனும், ஆட்சிமுறையிலும் தண்டனையதிகாரத்திலும் கோன்மை (sovereignty) பெற்றேயி ருந்தன. ஒரு சிறு நாட்டிற்குள்ளும், காந்தியாரும் நேருவும்போல எத்துணைப் பெரியவரேனும், அரசனுக்கு மாறாகப் பேசிவிட்டு உயிரோடு வீடு திரும்ப முடியாது. வடக்குந் தெற்கும் கிழக்கும் மேற்கும் மலையுங் கடலும் நிலை யான எல்லைகளாக இருந்தனவேனும், வடகிழக்கும் வட மேற்கும் அடிக்கடி எல்லைகள் மாறிக் கொண்டேயிருந்தன. ஆங்கிலர் இங்கு ஆள வரவில்லை. கிழக்கிந்தியக் குழும்பு (East India Company) எலிசபெத்து அரசியிடம் பட்டயம் பெற்று இங்கு வணிகஞ் செய்யவே வந்தது. அக்காலத்திற் கொள்ளையும் போரும் பெருவழக்கா யிருந்ததனால், கிழக்கிந்தியக் குழும்பார் தம் பண்டசாலைக் காப்பிற்கு நல்ல படை வைத்திருந்தனர். குழும்பைத் தாக்கித் தோற்ற அரசர் கொடுத்த தண்டத்தினாலும், வெற்றியரசர் தமக்குப் படைத்துணை யுதவியதற்காக நல்கிய நன்கொடையாலும், குழும்பின் நிலவுடைமை படிப் படியாகப் பெருகி வரலாயிற்று. எந்த உள்நாட்டரசையும் வெல்லத்தக்க வலிமை பெற்றபின், காப்புத் துணையுடன்படிக்கை (Subsidiary Treaty), பிறங்கடையில்லாக் கடப்பு (Annexation by Lapse) ஆளுந்தகுதியில்லா அரசர் நாடிணைப்பு (Annexation of Misruled States), எதிர்த்துத் தோற்ற அரசர் நாடுகவர்வு (Annexation of defeated Enemy’s Territory) என்னும் நால்வகை ஆம்புடைகளால், கிழக்கிந்தியக் குழும்பு இந்தியா முழுவதையும் தன் அதிகாரத்திற்குக்கீழ்க் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில், நாடும் பதவியும் இழந்த சில வடநாட்டு அரசரும் தலைவரும் இந்தியப் படைஞரைக் கலகஞ் செய்யத் தூண்டினர். ஏற்கெனவே, சம்பளம் போதாதென்னும் மனக் குறையும் வெளிநாட்டுப் பணிவெறுப்பும் படைஞரிடையிருந்து வந்தன. எல்லா வகுப்பாரையும் படிக்கவைத்து அரசியற் பதவி யளித்த வகையில் ஆங்கிலராட்சி பிராமணப் பகையையுந் தேடிக்கொண்டது. ஆகவே, படைஞரின் குடுமியையுங் கொண்டை யையுங் கத்தரிக்கச் சொன்னதைக் கிறித்தவராக்கும் முயற்சியென் றும் , துமுக்கிக் (துப்பாக்கிக்) குண்டுகள் பதப் படாவாறு சுற்றி யிருந்ததும் சுடுமுன் கடித்தெறிவதுமான மெழுகுத் தாளை இந்திய மதத்தாரிடை மாட்டுக் கொழுப் பென்றும் முகமதிய ரிடைப் பன்றிக்கொழுப்பென்றும், அஞ்சல் துறைக்கு நடப்பட்டிருந்த கம்பங்களையும் அவற்றை யிணைத்த கம்பிகளையும் இந்தியாவை இங்கிலாந்திற்கு இழுத்துச் செல்லும் வலையென்றும் கூறி, மூடநம்பிக்கை மிக்க படைஞரின் கலகவெறியை மூட்டிவிட்டனர் ஆங்கில அரசப் பகைவர். 1857-ல் கலகங் கிளர்ந்தது. நூற்றுக்கணக் கான ஆங்கிலர் உயிரிழந்தனர். பல்வேறு அரசினர் கட்டடங்கள் பாழாயின. அடுத்த ஆண்டில் (1858) கிழக்கிந்தியக் குழும்பு கலைக்கப் பட்டது; இந்திய ஆட்சியை இங்கிலாந்தரசு ஏற்றது. அதிலிருந்து மேன்மேலுந் தொடர்ந்து பல ஆட்சிச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இந்தியர் தன்னாட்சிக்குப் பயிற்சி பெற்றுவந்தனர். இந்திய வொற்று மைக்கும் நாளடைவில் இந்தியர் ஆட்சிப் பொறுப்பேற்றற்கும் இந்தியத் தேசியப் பேராயத்தை (The Indian National Congress) ஆலன் ஆக்த்தேவியன் கியூம் (Allan Octavian Hume) என்ற ஆங்கிலேயரே 1885-ல் தோற்றுவித்தார். அவரையே இந்தியத் தேசியப் பேராயத் தந்தையென்று, காந்தியாரும் 2ஆம் வட்டமேசை மாநாட்டிற் குறிப்பிட்டார். ஆங்கில ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்ட இந்திய நாடுகளிலெல்லாம் காந்தியாரும் நேருவும் பிறரும் புகுந்து, பேராயக் கொள்கைகளைப் பரப்பவும் கட்சிக் கிளைகளைத் தோற்றுவிக்க வும், இன்றியமையாத உரிமையும் பாதுகாப்பும் ஆங்கிலராட் சியினாலேயே ஏற்பட்டன. இன்றேல், உள் நாட்டரசுகள் இதற்கு உடம்பட்டிரா. நிலப்படை, கலப்படை, வானப்படை என்னும் முத்துறைப் பட்ட மாபெருஞ் சேனை, ஆங்கில அரசால் தில்லியில் தொகுக்கப் பட்டது. 1947-ல் விடுதலையும் அளிக்கப்பட்டது. உள்நாட்டு அரசு கள் ஏற்கெனவே படைக்குறைப்புச் செய்யப்பட்டிருந்ததனால், விடுதலை பெற்ற இந்திய நடுவணரசிற்கு எதிர்ப்பில்லாது போயிற்று. இன்றேல், நைசாம், மைசூர், திருவாங்கூர் ஆகிய மூன்றும் தென்னிந்தியாவையும், காசுமீரம், கெலத்து, இராசத்தானம் ஆகிய மூன்றும் வடஇந்தியா வையும் எளிதாய்க் கைப்பற்றியிருக்கும். ஆங்கிலர் இடத்தில் சீனம் அல்லது இரசியா மட்டும் இருந்திருப்பின், இந்தியா ஒருபோதும் விடுதலையடைந் திருக்கவே முடியாது. இந்திய விடுதலையுடன் அந்தமான் நக்கவாரத் தீவுகளும் இலக்கத் தீவுகளும் கிடைத்தமை ஆங்கிலர் கூட்டுறவா லேற்பட்ட எதிர்பாராத ஆக்கப்பேறாம். உலகந் தோன்றியது முதல் ஆங்கிலராட்சிக் காலம்வரை, பன்னாட்டிந்தியா ஒரு காலும் ஓராட்சிக் குட்பட்டதில்லை. இடையிடை யெழுந்த பேரரசுகளெல்லாம் திறைகொள்ளும் மேலதிகாரம் பெற்றனவேயன்றி, இந்தியா முழுவதையும் தாமாக நேரடியாய் ஆண்டதில்லை. அரசியலமைப்பு (Constitution) இந்திய அரசியலமைப்பு அமெரிக்க அரசியலமைப்பைத் தழுவியது. அமெரிக்கரது ஆங்கில அரசியலமைப்பை அடிப் படையாகக் கொண்டது. இந்திய அரசியலமைப்பைத் தொகுக்க உதவியது ஆங்கில அறிவே. ஆட்சிமுறை பிறவிக்குல வொழுக்கமுறை (வருணாசிரம தருமம்) நீங்கிய நடுநிலைச் செங்கோலாட்சி ஆங்கிலரது. பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும் என்ற பொதுமக்கள் பழமொழியே, ஆங்கில ராட்சியியல்பைத் தெரிவிக்கப் போதுமானது. கல்வி இற்றைக் கல்வியின் பிழிவெல்லாம் அறிவியலும் (Science) கம்மியமும் (Technology). இவற்றை உலகில் தோற்றுவித்தவர் ஆங்கிலர். அவரே இந்தியாவிற்கு வந்து அவர் கல்வியைப் புகட்டி யது, இறைவன் இந்தியர்க்களித்த சிறப்புப் பேரருளே. முந்நிலைப் பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி ஆகிய கல்வி முறைகளும் ஆங்கிலர் நமக்குக் கற்பித்தனவே. சீர்திருத்தம் தக்கர் பிண்டாரிகள் ஒழிப்பு, உடன்கட்டை யேறல் நிறுத்தம், தீண்டாமை விலக்கு, நரக்காவு (நரபலி) நீக்கம், இள மணத்தடுப்பு, செடிலாட்டத் தடை முதலியன சிறந்த சீர்திருத்தங்கள். ஆங்கிலராட்சியில், அரசியல் அலுவலகங்களுள்ளும் தொடர் வண்டிகளுள்ளும் பொதுவிடங்களிலும் குலவேற்றுமை நீக்கியதே தீண்டாமை விலக்குத் தொடக்கம். தாழ்த்தப்பட்டவரையே நாகரிகப்படுத்திச் சமைப்போரும் பரிமாறிகளுமாக அமர்த்தி, அவர் படைத்ததைப் பிராமணரும் பெருமையுடன் உண்ணுமாறு செய்தது, ஆங்கில அதிகாரிகள் செய்த அருஞ்செயலாகும். போக்குவரத்து அஞ்சல்துறை, இருப்புப்பாதை, தானியங்கிகள், நீராவிக் கலங்கள், வானூர்திகள், கம்பியிலி, வானொலி, தொலைக் காட்சி முதலியன, ஆங்கில நாகரிகத்தைப் பழிக்கும் பகுத்தறிவிலிகளே நாணமற்றுப் பயன்படுத்தும் நற்போக்குவரத்து வாயில்களாகும். ஆட்சிக் கழகங்கள் சட்டப்பேரவை, சட்டமன்றம் ஆகிய இரண்டும் சேர்ந்த சட்டசபை என்னும் நாடாளு மன்றமும், உலகவை, அரசவை ஆகிய இரண்டும் சேர்ந்த பாராளுமன்றம் என்னும் நடுவணாளு மன்றமும், அவற்றின் நடப்பு முறையும், அவற்றிற்குரிய தேர்தல் முறையும் ஆங்கிலரை அல்லது ஆங்கில அமெரிக்கரைப் பின்பற்றிச் செய்வனவே. கல்வித்துறையிற் கையாளும் கலைமன்றம் (Academy), மூப்பரவை (Senate), மீயாட்சிக்குழு (Syndicate) என்னும் அமைப்பு முறைகளும் இத்தகையனவே. இக்காலக் காவல் பயிற்சியும் படைப் பயிற்சியும் ஆங்கில முறைப்பட்டவை. கூட்டியம் (Band) ஊர்வலத்திற்கும் விழாக் கொண்டாட்டத்திற்கும் ஆங்கிலர் அல்லது மேலையர் கூட்டியம் போற் சிறப்பது வேறொன்றுமில்லை. உரைநடை வளர்ச்சி பண்டைத் தமிழ்ப் புலவர் உரைநடையைப் போற்றாது செய்யுளையே இலக்கியத்திற்குக் கையாண்டமை, அவரது சீரிய அகக்கரண வளர்ச்சியைக் காட்டுமேயன்றித் தளர்ச்சியைக் காட்டாது. எக்காலத்தும் உரைநடையினும் செய்யுளே ஆற்றல் மிக்க தென்பதை எவரும் மறார். முற்காலத் தமிழ்ப்புலவர் செயலை இக்காலத் தமிழரும் ஏனை நாட்டாரும் குறைகூறுவது, பொரி மாவை மெச்சினானாம் பொக்கை வாயன் என்னும் பழமொழியை விளக்குவதே. மூவாயிர வாண்டு ஆரிய அடிமைத்தனத்துள் மூழ்கி அகக் கரண வலிமையும் கடுத்துப்பாடும் ஆற்றலு மிழந்து, கடுகளவும் நாணமின்றித் தம்மைப் பிறப்பில் தாழ்ந்தவராகக் கருதும் இற்றைத் தமிழர், உரைநடை யிலக்கியத்தையே கையாளவியலும். பண்டைத் தமிழிலக்கியம் அகரமுதலியுட்பல பெரும் பாலும் செய்யுளாகவே யிருந்தது. பாட்டிற்குப் பொருள் கூறும் உரையையும் ஒரு சாரார் எளிய செய்யுளிலேயே இயற்றினர். செய்யுள் நிலைக் களங்கள் ஏழனுள் உரையையும் ஒன்றாகத் தொல்காப்பியங் கூறுதல் காண்க. பண்டை யிலக்கிய வுரைநடை, பாட்டிடை வைத்த சிறுபகுதி, பாட்டின் அல்லது நூற்பாவின் பொருளுரைப்பு, அஃறிணை பற்றிய கட்டுக் கதை, இயற்கையொடு பொருந்திய நகைச்சுவைக் கதை, பாட்டொடு கலந்து சமமாக மாறிமாறி வரும் பகுதி என ஐவகைப்பட்டதாகத் தொல்காப்பியங் கூறும். பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென் றுரைநடை வகையே நான்கென மொழிப. (தொல். செய். 173) தொன்மை தானே யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே. (தொல். செய். 237) இவற்றுள் முதலது, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யு ளாகிய சிலப்பதிகாரத்தில் வருவது போன்றது; இரண்டாவது, இறையனாரகப் பொருளுரை போல்வது; மூன்றாவது, பஞ்சதந்திரக் கதையைப் பேரள வொத்தது; நாலாவது, அவிவேக பூரணகுரு கதையை ஒரு மருங்கொத்தது; ஐந்தாவது, பெருந்தேவனார் பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வ தென்பர் பேராசிரியர். எண்வகை வனப்பும் தொல்காப்பியர் காலத்திற்கு முந்தியவை யாதலால், வடமொழிச் சம்பு (Campu) தமிழ்த் தொன்மையைப் பின்பற்றியதாகவே யிருத்தல் வேண்டும். ஊர்ச்சபை யுள்ளிட்ட அரசியல் நடபடிக்கைகளும் பொது மக்கள் எழுத்துப் போக்குவரத்துமே, பண்டைக் காலத்தில் உரை நடையில் நிகழ்ந்தன. ஆங்கிலராட்சி தோன்றிய பின், அகரமுதலி, பாடப்பொத்தகம், அறிவியல் நூல், ஆராய்ச்சி நூல், கலைநூல் முதலிய கல்விநூல்கள் அனைத்தும் உரை நடையிலேயே எழுதப் பட்டன. செய்யுள் வடிவிலுள்ள இலக்கண இலக்கியப் புலவியங்கட் கெல்லாம் உரைகள் வரையப்பட்டன. பத்துப்பாட்டுப் போன்ற பாட்டுத் தொகைகளும் பெரிய புராணம் போன்ற தொன்மங்களும் உரைநடை வடிவில் நடைபெயர்க்கவும், அயன்மொழிப் பொத்தகங் கள் அவ்வடிவில் மொழிபெயர்க்கவும், பட்டன. செய்தித்தாள், ஆராய்ச்சியிதழ், கட்டுரை, புதினம் முதலிய பல புது இலக்கிய வகைகள் தோன்றின. செய்தித்தாள், நாட்சரி (Daily), கிழமையன் (Weekly), மாதிகை (Monthly), காலாண்டிதழ் (Quarterly), ஆண்டிதழ் (Annual) எனப் பல வகைப்பட்டு, ஆராய்ச்சியுங் கலந்தது. உரைநடை முறையில் 17ஆம் நூற்றாண்டில் தோன்றி அகர முதலி ஆங்கிலராட்சிக் காலத்திற்கு முன்பே வளர்ச்சி யுற்று. தமிழ்-தமிழ் என்னும் ஒருமொழியனும் தமிழ்-அயன் மொழி என்னும் இரு மொழியனுமாக இருவகைப்பட்டிருந்தது. ஆங்கிலர் காலத்தில் அது மிக விரிவடைந்து இலக்கத்திற்கு மேற் பட்ட சொற்களைக் கொண்டதாயிற்று. ஆனந்தபோதினி, ஞானபோதினி, விவேகபோதினி, முதலிய மாதிகைகளின் பின், செந்தமிழ், தமிழ்ப்பொழில் செந்தமிழ்ச் செல்வி முதலிய மாதிகைகள் தோன்றின. தமிழ்ப்பாடப் பொத்தகங்கள் மிகுதியாக எழுதினவர் கா. நமச்சிவாய முதலியார். சிறந்த புராணங்களை உரைநடைப்படுத்தியவர் ஆறுமுக நாவலர். புதினத்தைத் தொடங்கியவர் வேதநாயகம் பிள்ளை. தொடர்ந்து பல புதினங்கள் எழுதியவர் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர். பல்வகை ஆண்டுமலர், விழாமலர், நினைவுமலர், என்னும் பெயரில் பல அரிய கட்டுரைத் திரட்டுகள் வெளிவந்தன. புலவர் பலர் தனித்தனி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டனர். திரு. நாரண துரைக்கண்ணனார், திரு. அகிலனார் முதலியோர் சிறுகதைகளும் புதினங்களும் புனைந்தனர். திருந்திய முறையிற் பல நாடகங்களை எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வரலாறு, நாட்டுவரலாறு, இனவரலாறு, மொழி வரலாறு, மதவரலாறு, வாழ்க்கை வரலாறு முதலியனவாகப் பலதிறப்பட்டது. பல உரைநடைப் பொத்தகங்களைத் தனித்தமிழில் எழுதி யவர் மறைமலையடிகள்; கலவைத் தமிழில் எழுதியவர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர். இலக்கியப் பண்பாடு வரலாற்றுணர்ச்சி, பொருட்சிறப்பு, கால மலையாமை, இட மலையாமை, உலக மலையாமை, அறிவியலமைப்பு, முறையின் வைப்பு, வாய்மை வண்ணனை, உயர்வுநவிற்சியின்மை, சொல்லணி யினும் பொருளணி சிறத்தல், பொதுநல நோக்கு, இரட்டுறலின்மை, நடையெளிமை, பொருட்டெளிவு முதலிய பண்புகளமைய நூலெழுதுதலும், பிறர்நூலை நடுநிலையாகத் திறனாய்வு செய்தலும், சில அறிஞர்க்கேனும் அமைந்திருப்பது ஆங்கில இலக்கியப் பயிற்சியினாலேயே என்பது மறுக் கொணாததாம். ஆங்கிலராட்சி நீக்கம் மிக முந்தியமை ஆங்கிலர் நீங்கி முப்பதாண்டிற்கு மேலாகியும், இன்னும் வறுமையும் குலப்பிரிவினையும் ஒழியவில்லை; தாழ்த்தப்பட்டவர்க் கும் செல்வர்க்கும் உயிர்ப் பாதுகாப்பில்லை; வேலையில்லாத் திண்டாட்டமும், மக்கட் பெருக்கமும், அஞ்சி நடுங்கத்தக்க வகையில் மேன்மேலும் விரைந்து வளர்ந்தோங்கி வருகின்றன; இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், குலைத்தற்கு அடிகோலும் இந்தித் திணிப்பு இன்னுந் தீர்ந்தபாடில்லை. எல்லா வகையிலும் இந்திய முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஆங்கிலக் கல்வியின் அருமை பெருமை உணரப்படாமையால்,இந்திய ஆட்சிமொழியும் பொது மொழியும் இன்னும் திட்டஞ் செய்யப்பட வில்லை; சீனத்தினால் மட்டுமன்றி இந்தியாவினின்று பிரிந்துபோன பாக்கித்தானத்தினாலும் போரச்சம் இருந்து கொண்டேயிருப்ப தனால், அமைதிகுலைந்து என்றும் கவலைக்கும் கலக்கத்திற்குமே இடமாகியிருந்து வருகின்றது. இதை எண்ணிப் பார்க்கின், ஆங்கிலர் கால் நூற்றாண்டு முந்திப் போய்விட்டனர் என்னும் அறிஞர் கூற்றுத் திண்ணம் பெறவே செய்கின்றது. 3. அல்பிராமணர் கட்சி (Non-Brahmin Party) ஒவ்வொரு நாட்டிலும் மக்களை அகத்தார் புறத்தார் என இரு பகுப்பாராகப் பகுக்கும் இரட்டைப் பகுப்பிலெல்லாம் அகத்தாரை முன்வைத்தே புறத்தாரை அவரல்லார் என்று குறிப்பது வழக்கம். எ-டு: வெள்ளையர் x வெள்ளையரல்லார்; கிறித்தவர் x கிறித்தவரல்லார். இம் முறையில், தமிழ்நாட்டாரைத் தமிழர் x தமிழரல்லார் என்றும், தென்னாட்டாரைத் திரவிடர் x திரவிடரல்லார் என்றுமே பகுத்தல் வேண்டும்; இதற்கு மாறாகப் பிராமணர் x பிராமண ரல்லார் என்று பகுத்திருப்பதே பிராமணரின், மீச் செலவையும் மிகை மேம்பாட்டையுங் குறிக்கின்றது. இப் பகுப்பீடு தமிழர் அல்லது திரவிடரதேயாயினும், அதற்கும் பிராமணியமே காரண மென்பதை அறிதல் வேண்டும். செல்வத்திலோ கல்வியறிவிலோ உடல்வலிமையிலோ சிறந்தவராயிருந்தாலன்றி, வேற்று நாட்டார் தன்னாட்டாரை அடிப்படுத்தி வாழ்தல் தமிழ்நாடு தவிர வேறெந் நாட்டிலு மில்லை. மூவாயிரம் ஆண்டுகட்கு முன் முதன்முதலாகத் தென்னாடு வந்த ஆரியர், (விரல்விட்டெண்ணுதற்கும் ஏற்காத) அகத்தியர் என்னும் ஒருவரே. அவர் தமிழ் கற்று மேம்பட்டிருந்ததைக் கேட்ட பிற ஆரியப் பூசாரியரும், ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ பின்னர் வந்து, தமிழிலக்கியத்தின் தனிப் பெருஞ் சிறப்பையும் தமிழ நாகரி கத்தின் தலைமையையும் அதே சமையத்தில் தமிழரின் எவரையும் நம்பும் ஏமாளித்தனத்தையுங் கண்டனர். அதன்பின் தமிழெழுத் தினின்று கிரந்த எழுத்தைத் திரித்து, தமிழ்ச்சொற்களாற் போதிய அளவு வளம்படுத்திக் கொண்ட தம் வேத ஆரிய இலக்கிய மொழி யில் தமிழிலக்கிய முதனூல்களையெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டு, தம் இலக்கிய மொழி தேவமொழியென்றும், அதினின்றே தமிழும் பிற மொழிகளும் திரிந்துள்ளனவென்றும், தாம் தேவர் வழியினரென்றும், தமிழரை ஏமாற்றி, பிறவிக்குலப் பிரிவினை யாலும் உயர்கல்வித் தடையாலும் அவரை அடிமையரும் அறிவிலி களுமாக மாற்றி, மூவாயிரம் ஆண்டாக முன்னேறி விட்டனர். ஆயினும், நாட்டு மக்கள் தொகையில் அவர் நூற்றிற்கு மூவராகவே யிருந்ததனாலும், அவர் ஏமாற்று ஆங்கிலக் கல்வியினாலும் சுந்தரம் பிள்ளை விழிப்பூட்டாலும் மேலையர் ஆராய்ச்சியாலும் வெட்ட வெளிச்சமாய் விட்ட தனாலும், (T.M.) நாயர் நயன்மைக் கட்சியைத் (Justice Party) தோற்றுவித்து, நூற்றிற்கு மூவரான பிராமணர் நூற்றிற்கு 95 அரசியற் பதவிகளைக் கைப்பற்றி, நூற்றிற்குத் தொண்ணூற் றெழுவரான தமிழ திரவிடரின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்ததைத் தடுத்து, நாட்டை நல்வழிப்படுத்த வழி வகுத்தனர். அதனால், ஒவ்வொரு பெருவகுப்பார்க்கும் பயிற்சியிடங் களும் பதவியிடங்களும் பொருத்த விழுக்காட்டிற்கேற்ப ஒதுக்கப் பட்டுள்ளன. மாநகராட்சித் தலைமைப் பதவி எல்லாப் பெருவகுப் பாரிடையும் சுழன்று வருகின்றது. தமிழ்நாட்டிற் பிராமணரில்லாத அமைச்சுக்குழு ஏற்பட வாய்த்துள்ளது. திரவிட நாடுகளில் திரவிடரே முதலமைச்சராகவும் பெரும் பான்மை அமைச்சுப் பதவிகளைப் பெறவும் நேர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலேனும் பிராம ணியம் படிப்படியாய் அடியோ டொழிய அடிகோலப்பட்டுள்ளது. 4. தமிழாரியப் போராட்டம் தமிழாரியப் போராட்டம், ஆங்கிலர் இந்தியரைப் பிரித் தாளும் சூழ்ச்சியாகப் புகுத்தியதன்று. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்.30) என்று திருவள்ளுவரே தமிழாரியப் போராட்டத்தைக் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டார். ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினாற் செந்தமிழே தீர்க்க சுவா. என்பது, நக்கீரர் (கி.பி. 2ஆம் நூற்.) ஆரியத்தைப் புகழ்ந்து தமிழை இகழ்ந்த ஒருவனைச் சாவித்த பாட்டு. தமிழாரியப் போராட்டம் வெளிப்படையாய்த் தோன்றியது கி.மு. முதல் நூற்றாண்டேனும், ஆரியர் வந்ததிலிருந்து அதுவரை அமைந்த முறையில் மறைவாக இருந்தே வந்திருக் கின்றது. 5. தனித்தமிழ் இயக்கம் 1916ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, மறைமலையடிகள் தம் பதின்மூன்றகவை மகள் நீலாம்பிகையுடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. என்னும் இராமலிங்க அடிகள் பாட்டைப் பாடி, நீலா! இப் பாட்டில் தேகம் என்னும் வடசொல்லை நீக்கி யாக்கை என்னும் தென்சொல்லை யமைத்திருந்தால் எத்துணை இன்னோசையாகவும் தூய தமிழாகவும் இருக்கும்! 劉d« ma‰brh‰fis MŸt jdhš, ï‹ndhirí« öŒikí§ bfLtJl‹, ehsilÉš jÄœ¢brh‰fS« x›bth‹whf tH¡bfhʪJ ngh»‹w dnt!'' என்று மகளிடம் கூறி வருந்த, அம் மகளும் ``அப்பா'' அப்படி யானால் இனிமேல் நாம் தனித்தமிழிலேயே பேசுவோம்'' என்று தம் ஆர்வத்தைத் தெரிவித்தார். அடிகள் அதை மெச்சி அன்றே சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றி, அன்றுமுதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தலைப்பட்டார். இனி, மேல்வரைந்த பாட்டின் ஈற்றடிப் பிற்பகுதியை, நற்சிவ போற்றியை நான்மற வேனே என்று மாற்றிக் கொண்டால் இன்னும் நன்றாயிருக்கும். தனித்தமிழ் என்பது ஒரு செயற்கையமைப்பென்றும், அதன் காலம் மறைமலையடிகளொடு கடந்துவிட்டதென்றும், பலர் கருதுகின்றனர். இது தமிழின் சிறப்பியல்பை அறியாமையால் அல்லது பிறமொழிகளைப்போல் தமிழையுங் கருதுவதால் எழுங் கருத்தே. ஆரியர் வருமுன் தமிழ் இயற்கையாக எப்படி வழங்கினதோ, அப்படி வழங்குவதே தனித்தமிழ். அது உலக முதன் மொழி யாதலால், பிற்காலப் பிற மொழிகளில் எழுந்த வல்லொலிகள் பல அதிலில்லை. அவை அதற்குத் தேவையல்ல. மக்களின் கருத்தைத் தெரிவிக்கும் மொழிக்கு வேண்டியவை சொற்களேயன்றித் தனி யெழுத் தொலிகளல்ல. தமிழர் தம் கருத்தைத் தெரிவிக்கவேண்டிய சொற்களெல்லாம், ஏற்கெனவே தமிழில் அமைந்துள்ளன. புதுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடிய புதுச்சொற்களைப் புனைந்து கொள்வதற்கும், தேவையான கருவிச்சொற்களும் கருச்சொற்களும் அதில் உள்ளன. எம்மொழியிலும் எல்லா மொழியொலிகளு மில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனியுடம்புள்ளது. அது அவ்வம் மொழியின் ஒலித்தொகுதியினாலேயே அமைவது. ஒரு மொழி தன் இயல்பிற் கேற்காத ஒலிகளை யேற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறு மொழியாகிவிடும். ஆகவே, தமிழ் என்றும் தனித்தமிழாகவே வழங்குதல் வேண்டும். தூய்மையே அதன் இயற்கை; கலவையே அதன் செயற்கை. மொழிபெயர்க்கக்கூடாத இயற்பெயர்களையும் சிறப்புப் பெயர்களையும் ஒலிபெயர்த்தல் வேண்டும்; பிற அயற்சொற்களை யெல்லாம் மொழிபெயர்த்தல் வேண்டும். 6. பேராயக் கட்சியால் விளைந்த தீங்கு ஆங்கிலர் அயல்நாட்டார். அவர் ஆட்சி இங்கு நிலைக்காது. என்றேனும் ஒருநாள் அது நீங்கவே வேண்டும். அதை அவரும் அறிந் தனர். ஆயினும், இந்தியாவை ஓராட்சிக்குட் கொணரவும், இந்தியர்க் குள் ஒற்றுமையுண்டாக்கித் தன்னாட்சிக்குத் தகுதிப் படுத்தவும், ஆங்கிலராட்சி ஒரு காலவரம்புவரை இன்றியமையாததாயிருந்தது. ஆயின், உயர்நிலைக் கல்வியை எல்லார்க்கும் பொது வாக்குவதும், அரசியற் பதவிகளை எல்லா வகுப்பார்க்கும் பகிர்ந்து கொடுப்பதும், நாட்டுமக்கள் ஆரிய அடிமைத் தனத்தினின்று விழித் தெழுவதும், பிராமணியம் வரவரக் குன்றுவதும், வரலாற்றாராய்ச் சியும் மொழியாராய்ச்சியும், வளர்ந்தோங்கி வருவதுங்கண்ட பிராமணர், ஆங்கிலராட்சி நீடிப்பின் பிராமணியம் அடியோடு குலைவதுணர்ந்து, ஆங்கிலரை விரைந்து வெளியேற்றும் முயற்சி யில் ஆழ்ந்து ஈடுபட்டனர். உரிமையுணர்ச்சித் தமிழ திரவிடரோ, ஆங்கிலராட்சி நீங்கின் தம் இனம் மீண்டும் மீளா அடிமைத்தனத்துள் ஆழும் என்று அஞ்சி, அதை தடுக்கப் பெரிதும் முயன்றனர். பிராமணர் நூற்றிற்கு மூவரேயாயினும், வரலாற்றறிவும் தாய்மொழிப் பற்றும் இனவுணர்ச்சியும் பெருமிதப்பான்மையும் இல்லாத சில தமிழ திரவிடச் சிறுதலைவரைத் துணைக் கொண்டு, எழுதப் படிக்கத் தெரியாத பொதுமக்களுட் பெரும்பாலரை வயப்படுத்தி விட்டதனாற் போராட்டத்தில் வென்றனர். ஆங்கிலர் நீங்கினால், மூவேளைப் பேருண்டியும் ஆறு மாற்றுடையும் கிடைக்குமென்று, பேராயப் பேச்சாளர் அவையோர் வாயூறப் பொதுமேடைகளில் வாய்நேர்ந்ததை (வாக்களித்ததை) ஏழை மக்கள் நம்பியதும், பேராய வெற்றிக்குத் துணை செய்தது. நயன்மைக் கட்சிக்கும் பேராயக் கட்சிக்கும் இடையே கடும் பகையிருந்ததனாலும், பேராயக் கட்சித் தமிழர்க்குத் தமிழ்ப் பற்றின்மையாலும், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி எளிதாய்க் கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது. இராசகோபாலாச் சாரியார் 200 பள்ளிகளில் மட்டும் புகுத்தினார். பின்னர், திரு. சி. சுப்பிரமணியனார் 600 பள்ளிகளிலும், அதன்பின், திரு. அவிநாசி லிங்கஞ் செட்டியார் எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைப் புகுத்தி விட்டனர். உண்மைத் தமிழரான மாணவரும் ஆசிரியரும் புலவரும் பொதுமக்களும் அரசியற் கட்சிக்காரரும் பெரியாரின் தன்மான இயக்கத்தாரும், எத்துணையோ வன்மையாக எதிர்த்துச் சிறை சென்றனர். எண்மர் தம் உடம்பிற் கன்னெயூற்றித் தம்மையெரித்துக் கொண்டனர். ஆயினும், பேராயத் தமிழமைச்சரே சற்றும் இரங்காது வடநாட்டு இந்தியார் போன்று நடந்துகொண்டனர். மதுரைத் தமிழ் மாணவர் இந்தியெதிர்த்து ஊர்வலம் வந்தபோது, பேராயக் கட்சி வெறியர் மாணவர் கைகளை வெட்டினர். திரு. பக்தவச்சலனார் முதலமைச்சராயிருந்த காலத்தில் அண்ணாமலை, பல்கலைக்கழக மாணவர் ஊர்வலத்தில் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தியைப் புகுத்தின இராசகோபாலாச்சாரியாரே பிற்காலத்தில் இந்தியை வன்மையாக எதிர்த்தும், பேராயக் கட்சித் தமிழர் அவரைப் பின்பற்றவில்லை. இந்தியெதிர்த்துச் சிறை சென்ற மறவர்க்குத் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட அரசினர் உதவித் தொகையும், பேராயத் தமிழர் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுப் பேராயக் கட்சி, வடநாட்டு இந்தியாரை மேல் தலைவராகவும், தென்னாட்டுப் பிராமணரைக் கீழ்த் தலைவராகவும், கொண்டது. அதனால், ஆட்சித்துறை இந்தித் திணிப்பில் இந்தியா ரோடும், திருக்கோயில் வழிபாட்டுச் சமற்கிருதத் திணிப்பிற் பிராமணரோடும், பெரிதும் ஒத்துழைத்துத் தமிழுக்கும் தமிழருக் கும் பெருந்தீங்கு செய்துவருகின்றனர் பேராயத் தமிழர். 7. பெரியார் தன்மான இயக்கம் தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள் அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர் தமியின் மொழியினர் தவநன் மறைமலை இமிழ்தன் மானியர் இராம சாமியார். அரிய செயல்களை ஆற்று வார்தமைப் பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள் உரியர் இப்பெயர்க் கொருவர் தேரினே இரியீ ரோடையர் இராம சாமியார். இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுறும் செல்வச் சிறப்பினிற் சிறிதும் வேட்டிலர் வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார் ஒல்லும் வகையெலாம் உழைக்க இனவர்க்கே. மல்லைக் பதவிகொள் மாட்சி யிருப்பினும் அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம் கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ் சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர். மலையெ னும்மறை மலையென் அடிகளும் தலையென் சோமசுந் தரபா ரதியும்பின் தொலையும் இந்தியைத் தொடர்ந்தெ திர்க்கினும் நிலைசி றந்ததி ராம சாமியால். குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே மடிசெய் தேயவர் மானங் கொளக்கெடும் இடி செய் உடம்புபல் இடும்பைக் கலமெனத் துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார். தான மிட்டதன் தலைவன் நிலைகெட ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை வானங் காட்டென வணங்குந் தமிழன்தன் மானங் கெட்டுவாழ் வழமை கடிந்துளார். படிமை மேல்மிகு பாலை யூற்றலும் குடுமி மலையெரி கோநெய் கொட்டலும் கடவுள் தேரினைக் கடத்த லும்முனோர் கொடைம டம்பகுத் தறிவில்கோ ளென்றார். கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப் பிட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை வெட்ட வெளிச்சமாய் விளக்கி னார்முனம் பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே. அடருந் தமிழரோ டணையுந் திரவிடர் மடமை தவிர்ந்துதன் மான வாழ்வுற இடர்கொள் ஆர்வலர் இராம சாமியார் கடவுள் இலையெனக் கழறும் எல்லையே. 8. தமிழர் ஆட்சித்தொடக்கம் செல்வம் அல்லது அதிகாரம் சிறந்தவிடத்துச் செருக்கு விளைவது இயல்பாதலால், பேராயக் கட்சித் தலைவர் நடுநிலை யின்றி வரம்பு கடந்து ஒழுகலாயினர். அதனால், அறிவும் ஆற்றலு மிக்க இராசகோபாலாச்சாரியார் பேராயத்தினின்று பிரிந்து, தன்னுரிமைக் (சுதந்தரக்) கட்சியென ஒரு புதுக் கட்சியைத் தோற்று வித்துக் கொண்டார். இந்தியெதிர்ப்பும் வரவர வலுத்தது. பெரி யாரின் திராவிடர் கழகத்தினின்று பிரிந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்திருந்த அறிஞர் அண்ணாதுரையார், 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தன்னுரிமைக் கட்சியொடு கூட்டுச் சேர்ந்து, எதிர்பாராத முழு வெற்றியடைந்ததனாலும், அமைச்சுக் குழுவிற்கு வேண்டிய பெரும்பான்மை தம் கட்சியே பெற்றிருந்ததனாலும், தி.மு.க. ஆட்சியே தோற்றுவித்துவிட்டார். இதுவே தமிழ்நாட்டுத் தமிழராட்சித் தொடக்கம். தி.மு.க. கட்சியிற் பிராமணர் உறுப்பினராக இடமின்மையால், அமைச்சுக் குழுவிலும் அவர்க்கிடமில்லாது போயிற்று. எதிர்பார்த்தவாறு, இந்திக் கட்டாயப் பாடம் நீக்கப் பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டமே தமிழ்நாடாட்சி மொழிக் கொள்கையாயிற்று. ஈராண்டு கழித்து, அறிஞர் அண்ணாதுரையார் இறந்து போய்விட்டதனால், இன்று மாண்புமிகு கலைஞர் கருணாநிதியார் என்னும் அருட்செல்வனார் தமிழ்நாட்டு முதல்வராய் இருந்து வருகின்றார். 9. இற்றைத் தமிழர் நிலைமை ஆங்கிலவரசும், ஆங்கிலக் கல்வியும், நயன்மைக் கட்சியாட்சி யும், சுந்தரம் பிள்ளை விழிப்பூட்டும், மறைமலையடிகள் தனித் தமிழ்த் தொண்டும், பெரியார் பகுத்தறிவியக்கமும், பாரதி தாசனார் இனமுன்னேற்றப் பாடல்களும் தோன்றி எத்தனையோ ஆண்டு களாகியும், தமிழர் இன்னும் கடந்த மூவாயிர ஆண்டுக்கால உறக்கத்தினின்று பெருவாரியாக விழித்தெழவில்லை. (1) வரலாற்றுப் பொத்தகங்களில், தமிழ இனத்தின் உடம் பமைப்பைக் காட்டத் தாழ்த்தப்பட்டவருள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இரப்போனின் அல்லது எளியோனின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. உண்மையான தமிழன் உடம்பமைப்பை, ஆனந்தரங்கப் பிள்ளை, பச்சையப்ப முதலியார், சுந்தரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, பாண்டித் துரைத் தேவர், உமாமகேசுவரம் பிள்ளை, அ. இராமசாமிக் கவுண்டர், வெ.வ. இராமசாமி (நாடார்), ஆ. இராமசாமி முதலியார், நல்லசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர், மறைமலையடிகள், கார்மேகக் கோனார், கி.ஆ.பெ. விசுவநாதம், சிங்கைக் கோபால கிருட்டிண னார் போன்றார் உருவப் படங்களே காட்டமுடியும். இதை ஒருவருங் கவனிப்பதில்லை. (2) தொல்காப்பியக் கற்பியல் 5ஆம் நூற்பாவின் முதலீர டிக்கும், நச்சினார்க்கினியர் உரை வருமாறு: கரணத்தின் அமைந்து முடிந்தகாலை - ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமு மென்னும் இருவகைச் சடங்கானும், ஓர் குறை பாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து; ஆன்றோராவார், மதியுங் கந்தருவரும் அங்கியும். (ப. 576) நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் - களவிற் புணர்ச்சி போலுங் கற்பினும் மூன்று நாளுங் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும் அது நாலாம் நாளை யிரவின் கண்ணதாம் “In this connection reference may be made to Hamilton's `New Account of the East Indies', where it is stated that when the Zamorin marries, he must not cohabit with his bride till the Nambudri, or chief priest, has enjoyed her, and he, if he pleases, may have three nights of her company, because the first fruits of her nuptials must be an holy oblation to the god she worships. And some of the nobles are so complaisant as to allow the clergy the same tribute, but the common people cannot have that compliment paid to them, but are forced to supply the priests' places themselves.” (-Castes and Tribes of Southern India, by E. Thurston, Vol. V., p. 326) இதனால், பிராமணர் நாயர் வகுப்பாரைத் தம்மை நிலத் தேவரென்று நம்பவைத்து, அவர் திருமணஞ் செய்யும்போது, மணமகள் முதல் மூன்றிரவு திங்களும் யாழோரும் (கந்தருவரும்) அழலோனும் (அக்கினியும்) ஆகிய முத்தேவரோடும் புணர வேண்டு மென்றும், அவர் பிராமண வடிவிலேயே வருவராதலால் பிராமணப் பூசாரியரே அந்நுகர்ச்சிக்குரியவரென்றும், அதையும் அருமைப் படுத்துவதற்கு, நாயர் வகுப்பைச் சேர்ந்த குறுநில மன்னரின் அரண் மனைத் திருமணங்களிலேயே அங்ஙனம் நிகழ்தல் கூடுமென்றும், ஏமாற்றி அங்ஙனமே நடப்பித்து வந்தமை புலனாகின்றது. திரவிடருள் அளவிறந்து ஆரியப்படுத்தப்பட்டவர் கேரளர் என்னும் மலையாளியர். அவருள் தலைமையானவர் நாயர் வகுப் பார். ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது அரசனை, அரசனில்லா விடத்துத் தலைமையான மக்கள் வகுப்பாரை, அடிமைப்படுத்து வதே ஆரியர் வழக்கம். அவ்வழக்கப்படி நாயர் வகுப்பார் ஆரிய அடிமையரான தினாலேயே, சேரநாட்டுச் செந்தமிழ் தெலுங்கு கன்னடத்தினும் மிகுதியாக வடசொற் கலந்து, கொடுந்தமிழாக மட்டுமன்றி மணிப்பவள மொழியாகவும் மாறிவிட்டது. சேரநாட்டு நாயர் திருமண வழக்கத்தையே, சோழ பாண்டி நாடுகளிலும் புகுத்த முயற்சி நடந்ததாகத் தெரிகின்றது. அம் முயற்சி யையே நச்சினார்க்கினியர் உரை குறிப்பாகத் தெரிவிக்கின்றது. இவ் விழிதகையான உரையை, எத்தமிழ்ப் புலவரும் பேராசிரி யரும் ஆராய்ச்சியாளரும் தமிழ்க்கழகமும் பல்கலைக் கழகப் பாடப் பொத்தகக் குழுவும், மறுத்ததோ கடிந்ததோ இல்லவேயில்லை. (3) வேறெந்நாட்டிலும், கல்விசெல்வத்தால் அல்லது தொகை வலிமையால் சிறந்தாலன்றி, வந்தேறியர் முன் வாணரைத் தாழ்த்து வதேயில்லை. இந் நாட்டிலோ, விரல் விட்டெண்ணத் தக்க சிறுதொகையினரும் தாழ்ந்த அறிவினரும் வலிமையில்லாதவரும் இரப்போர் நிலையினரும் ஆன ஒரு குடிபுகு வகுப்பார். முதுகுடி யரையெல்லாம் உடனுண்ணத் தகாதவரென்று ஒதுக்கி வைத்துள்ளார். ஒரு வகுப்பார் எத்துணை உயர்ந்தோராயினும், உடனுண் ணும் உறவிற்குரிய தகுதிகள் நிறம், தோற்றப்பொலிவு, துப்புரவு, ஒழுக்கம், நாகரிகம் என்னும் ஐந்தே. இவ் வைந்தும் ஒருங்கே யுடைய அருளூண் வெள்ளாளர், முதலியார், செட்டியார் முதலிய பல வகுப்பார் தமிழரிடையே உள்ளனர். ஆயினும், பிராமணர் அவருடன் இல்லத்தில் உண்பதில்லை. இதைச் சரியென்று தமிழரும் ஒப்புக்கொள்வதுபோல் அமைந்திருக்கின்றனர். இதிலேயே இரு வகுப்பாரிடையும் பகுத்தறிவின்மை தோன்றுகின்றது. உண்டிச் சாலையிலும் வெளியிடத்திலும் உடனுண்ணும்போது, வீட்டிலும் ஏன் உடனுண்ணக்கூடாது ? ஆரியக் குலப்பிரி வொழுங்குப்படி, இடையர் வெள்ளா ளரினுந் தாழ்ந்தவர். அவரிடைக் கொள்வனை கொடுப்பனை யில்லை. ஆயின், ஒரு வெள்ளாளன் பொற்கலத்தில் தயிர் கொடுத் தாலும் பிராமணர் வாங்கிக் குடிப்பதில்லை. ஓர் இடைச்சி தன் பழைய மட்கலத்தில் தன் வீட்டுத் தண்ணீர் விட்டுக் கலந்து தயிர் கொடுப்பின், பிராமணர் வானமுதம் போல் வாங்கிக் குடிப்பர். ஆயினும், அவ்விடைச்சியின் உறவினன் படித்து ஆசிரியனாய் அல்லது அரசியல் அலுவலனாயிருந்து தன் வீட்டில் தயிர் கொடுத் தால், பிராமணர் அதை வாங்குவதில்லை. இடையர் குடும்பத்துப் பிறந்த ஆடவனோ பெண்டோ படியாதவரா யிருந்தால்தான், அவர் விற்குந் தயிரைப் பிராமணர் வாங்குவர்; படித்தவராயின் வாங்கார். இதைத் தமிழர் ஆய்ந்து பார்ப்பதேயில்லை. பகுத்தறிவின்மையே அதற்குக் காரணம். இனி, அவல்,கடலை வகைகள், பொரி வகைகள், அப்பம் (ரொட்டி), ஈரட்டி (biscuit) முதலிய பல உண்பண்டங்களுந் தின்பண்டங்களும் தமிழர் சமையல் வினைப்பட்டனவேனும், அவற்றைப் பிராமணர் நாணாது கோணாது வெளிப்படையாய் வாங்கி விரும்பியுண்கின்றனர். இனி, மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் பலவும் சமையல் வினைப்பட்டனவே. பிராமணர் வெளிநாடுகள் செல்லின், அங்குள்ள நிலைமைக் குத் தக்கபடி தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கின்றனர். மேனாட்டா ரெல்லாரும் மாட்டிறைச்சி யுண்பவர். நம் நாட்டிலோ மாட்டிறைச்சி யூண் கடைப்பட்ட குலச் சின்னம். இனி, வடநாட்டுப் பிராமணரோ வெனின், தென்னாட்டுப் பிராமணர்போல் அத்துணைக் குலவேற்று வாழ்க்கையை விரும்பு வதில்லை. பிராமணர் பிறகுலத்தார் உண்டிச்சாலையிலும் உண்பர். பிராமணர் வீடுகளிற் பிறரும் குடியிருக்கலாம். இவற்றையெல்லாம் நோக்குங்கால், தமிழர் பகுத்தறிவிழந்து தன்மானமின்றித் தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டமை புலனா கின்றது. நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றா னாகுங் குலம். (நாலடி. 195) நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான். (நாலடி. 248) (4) பிறநாட்டார், தம்மைப்பற்றியோ தம் மொழியைப் பற்றியோ ஏதேனுமொரு பொத்தகத்தில் தவறாய் அல்லது தாழ்வாய் எழுதியிருப்பின், உடனே அதைக் கண்டித்து அதைத் திருத்தும்வரை கிளர்ச்சி செய்வர். ஆயின், தமிழரோ, எங்கெழிலென் ஞாயிறெ மக்கு என்றிருப்பர். எருதந்துறை (ஆக்கசுப் போர்டு) ஆங்கிலச் சிற்றகர முதலியில், ‘Dravidian’ என்னுஞ் சொல்லிற்கு, “Skr. Dravida, a province of S.`India'.” என்றும், `ginger' என்னுஞ் சொல்லிற்கு, “OE & LL gingiber f. L. zingiber. f. Gk ziggiberis f. Skr. crngavera (crnga horn, vera body”) என்றும், மூலங்காட்டப்பட்டுள்ளன. தமிழ்-தமிழம்-வ. த்ரமிள-த்ரமிட-திரவிட என்பதும், இஞ்சி வேர் -zingiber-LL gingiber-E. ginger என்பதுமே, சரியான மூலமாகும். (5) பிறநாட்டார் வேறெவ்வகையிலும் கருத்து வேறுபட்டிருப் பினும், தாய்மொழிபற்றிய செய்தியில் ஒன்றுபட்டிருப்பர். தமிழ் நாட்டிலோ, தமிழைக் காக்க வேண்டிய தலைமைப் பேராசிரியரும் தமிழைக் காட்டிக்கொடுப்பர். அரசும் அவரையே ஊக்கிப் போற்றி உயர்த்தும். (6) பிற நாடுகளில் ஆராய்ச்சியாளர் ஏதேனும் ஒரு சிறந்த உண்மை கண்டு கூறின், அதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தமிழருட் பெரும்பாலரோ, முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிகொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். (நீதிநெறி. 31) கண்கூடாப் பட்டது கேடெனினிங் கீழ்மக்கட் குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பினும் மாசுணங் கண்டுயில்வ பேரா பெருமூச் செறிந்து (நீதிநெறி. 34) என்னும் பாக்கட்கே சிறந்த எடுத்துக்காட்டாவர். (7) ஒரு நாட்டில் நிகழ்ந்த செய்தி அந் நாட்டார்க்கே முதலில் தெரிந்திருக்கும். அதன்பின் அதை அவரிடமிருந்து பிற நாட்டாரும் அறிவர். தமிழ்நாட்டிலோ, அவ்வகையில் முற்றும் இயற்கைக்கு மாறாக நேர்ந்துள்ளது. கடைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய மதுரையில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும், சிவ பெருமான் 64 திருவிளையாடல்களைக் கூறும் புராணம் ஐந்தனுள், திருவாலவாயு டையார் திருவிளையாடற் புராணம் உத்தரமகா புராணம் என் னும் வடமொழிப் புராணத்தின் ஒரு பகுதியாகிய சாரசமுச்சயம் என்பதிலிருந்தும், கடம்பவன புராணம் நீபாரண்ய மாஹாத் மியம் அல்லது கதம்பவன புராணம் என்னும் வடமொழிப் புராணத் திலிருந்தும், சுந்தரபாண்டியம் அப்பெயருள்ள வட மொழிப்புராணத்திலிருந்தும், பரஞ்சோதி முனிவர் திருவிளை யாடற் புராணம் ஸ்ரீஹாலாஸ்ய மாகாத்மியம் என்னும் வட மொழிப் புராணத்திலிருந்தும், அட்டமிப்பிரதக்ஷிண மான்மியம் (அப் பெயருள்ள) ஒரு வடமொழிப் புராணத்திலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இனி, சேக்கிழார் பெருமான் நம்பியாண்டார் நம்பியின் திருத் தொண்டர் திருவந்தாதியைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணமாகப் பெருக்கிப் பாடியிருக்கவும், அது உபமந்யு பக்தவிலாசம் என்னும் வடமொழிப் புராணத்தின் வழிப்பட்டதாக ஒருசாரார் துணிந்து கூறுவர். பகுத்தறிவுள்ளவர் இவற்றின் உண்மையைக் கண்டு கொள்க. (8) இரணியாட்சன் ஒருமுறை ஞாலத்தைப் (பூமியைப்) பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிக்க, திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பினால் அவன் மார்பைப் பிளந்து ஞாலத்தைப் பண்டுபோல் நிறுத்தினார் என்றும், அன்று நிலமகட்கும் அவருக் கும் நேர்ந்த தொடர்பினால் நரகாசுரன் பிறந்தானென்றும், கூறிக் கல்லா மக்களை விலங்காக்கும் கட்டுக்கதைகளின் இழிவையும் இடக்கரையும் பொய்ம்மையையும் புரட்டையும் படவாயிலாகப் பெரியார் விளக்கிக் காட்டியபோது, அறிவியலும் ஞாலநூலும் உயிர்நூலும் உடல்நூலும் வரலாற்று நூலும் கற்ற இக்காலத்தில் அவருடன் ஒத்துழையாது, ஆரியருடன் சேர்ந்து கண்டித்தது, அவர் கூறியவாறு காட்டு விலங்காண்டித்தனமே யன்றி வேறன்று. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை (குறள். 345) என்று, திருவள்ளுவர் துறவு என்னும் அதிகாரத்தில் துறவியர்க்குக் கூறியிருக்கவும், அறுபான் விழாக் கொண்டாடும் சில ஆரியப் போலித் துறவியர் பொன்னை வேண்டும்போது, சில தமிழச் செல்வரும் சிறிதும் பகுத்தறிவின்றி அவருக்குக் காசு மாலையும் கட்டிப் பொன்னும் பொற்காசுங் கொடுத்துக் கும்பிட்டு வருகின் றனர். அறுபான் விழா இல்லறத்தார்க்கே யுரிய தென்பதை, அறுபதாங் கலியாணம் என்னும் அதன் பெயரே தெரிவிக்கும். (10) அரசியல் அதிகாரியாயிருந்த ஒரு தமிழர், ஓய்வு பெற்ற பின்பு ம், தமிழ் நீச பாஷை என்று ஒரு பிராமணத் துறவியார் தம்மிடம் சொன்னதைப் பொதுமேடையிற் கண்டிக்க அஞ்சுகின் றார். இவர் போன்றோரே ஏனையர் பலரும். (11) நாடு தமிழ்நாடு; மதம் தமிழர் மதம்; கோயில்கள் தமிழ அல்லது திரவிட அரசர் கட்டியவை; தெய்வம் தமிழர் தொன்று தொட்டு வழிபட்டுவருந் தெய்வம்; தெய்வப் படிமைகள் தமிழக் கம்மியர் உருவாக்கியவை. அங்ஙனமிருந்தும், திருக்கோவிற் கட்டட நூல் ஒன்றேனுந் தமிழில் இல்லை. மருதநிலத்தில், நாகரிகந் தோன்றிய முதற்காலத்தில், அறிவும் ஆற்றலுமிக்க ஒரு செங்கோல் அரசனே தெய்வமாக வணங்கப் பட்டிருத்தல் வேண்டும். அவன் மனை கோவில் எனப்பட்டது. (கோ = அரசன். இல் = வீடு. கோவில்-கோயில்.) அம்மண்ணகவரசன் இறந்தபின் விண்ணக அரசனாகக் கருதப்பட்டு, முகில் அல்லது மழைத் தெய்வமாகத் தொடர்ந்து வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். வேந்தன் என்பது மகுடம் வேய்ந்த அரசனைக் குறிக்குஞ் சொல்லே. (வேய்ந்தான் - வேய்ந்தன் - வேந்தன். வேய்தல் = முடியணிதல்.) வேந்தன் மேய தீம்புன லுலகமும் (தொல். அகத். 5) வேந்தன் விண்ணகத்தானானபின், அரசன்மனை அரண் மனையென்றும், தெய்வமனை கோயில் என்றும் சொல்லப்பட்டன. குறிஞ்சி நிலத்தினின்று சேயோன் (முருகன்) வணக்கமும், முல்லைநிலத்தினின்று மாயோன் (திருமால்) வணக்கமும், பாலை நிலத்தினின்று மாயோள் (காளி) வணக்கமும், மருத நிலத்திற் புகுந்தபின், கோயில் என்னும் சொல் தெய்வமனையையே சிறப்பாகக் குறிக்கலாயிற்று. இங்ஙனம் அரசன் மனையே திருக்கோயிற்கு மூலமாகும். இடைக்கழக நூல்களின் வழிப்பட்ட தொல்காப்பியம், அரசன் தலைநகர்ப் புறமதிலையும் அதின்மேற் செய்யும் போரையும் பற்றி முழுமுதல் அரணம் (புறத். 10), தொல்லெயிற் கிவர்தல், வருபகை பேணார் ஆரெயில் (புறத். 12), இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும் (புறத். 13) என்று கூறுதல், உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள். 743) என்னுந் திருக்குறளை நினைவுறுத்தலால், இந்தியக் கட்டடக் கலை தமிழகத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். இனி, தமிழர் வரலாற்றிற்கெட்டாத் தலைக்கழக முன்னைக் காலந் தொட்டு முருகன், சிவன், திருமால், அம்மன் (காளி) என்னும் நால்தெய்வங்கட்கு எடுத்துவரும் கோவிலமைப்பையும்; இறை வனைச் சிவன் திருமால் என்னும் பெருந்தேவ வடிவிலும் கடவுள் என்னும் உருவற்ற முழு முதல் வடிவிலும் வழிபட்டு (ஆராதித்து) வழுத்தி (துதித்து) வரும் போற்றி (அர்ச்சனை) முறையையும் பற்றிய நூல்கள் தமிழாயிராது, கடுகளவுங் கடவுளறிவின்றிச் சிறுதெய்வ வேள்வி களையே வளர்த்து வந்த ஆரியரின் அரைச் செயற்கையான சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழியில் காமிகம், காரணம், சுப்பிரபேதம், மிருகேந்திரம் முதலிய சைவ ஆகமங்களும், பாஞ்ச ராத்திரம், வைகானசம் என்னும் வைணவ ஆகமங்களும், அக்கினி புராணம், மச்ச புராணம், பிரமாண்ட புராணம், கருட புராணம், பவிஷிய புராணம், முதலிய புராணங்களும், சகளாதிகாரம், காசியபம், மயமதம், மானசாரம், சிற்பரத்தினம் முதலிய சிற்ப நூல் களும், சுக்கிரநீதி, பிருகத்சங்கிதை முதலிய பிறநூல்களுமாக இருப்பது, ஆரிய அடிமையர்க்கு ஒருகால் மகிழ்ச்சியை வூட்டினும் வரலாற்றாராய்ச்சியாளர்க்கும் மொழியாராய்ச்சி யாளர்க்கும் தமிழிரின் விழிப்பின்மை பற்றி அளவிறந்த மன வருத்தத்தையே உண்டு பண்ணுகின்றது. (12) தமிழ் இனமோ, மொழியோ, நாடோ பற்றி எவரேனும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் வருந்தி அரும்பெருந் தொண்டு செய்யினும், அவர் இருக்கும்போது அரசும் பொதுமக்களும் ஊக்காதும் உதவாதும் போற்றாதும் புகழாதும், அவர் மறைந்த பின், பல்லாயிரக்கணக்காகச் செலவிட்டுப் பாராட்டெடுப்பதும் பரிசு வழங்குவதும் பட்டிமன்றம் நிகழ்த்துவதும் படிமை நிறுவுவதும், இற்றைத் தமிழர் வழக்கமாக இருந்துவருகின்றது. மறைமலையடிகட்கு, இறுதிக்காலத்திற் சிற்றளவான பொத்தக விற்பனை தவிர வேறொரு வருவாயும் இருந்ததில்லை. வருமானவரி அதிகாரிகள் வரம்பிறந்த தொல்லை கொடுத்த தன்றி, கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கரின் (G.D.ehíL வின்) புதுப்புனைவுகட்கு ஒருவகை ஊக்குவிப்பும் இன்மையால், அவர் வயிறெரிந்து மாண்டார். பாரதிதாசன் இறுதி மருத்துவப் படுக்கையிலிருந்தபோது, ஐம்பதுருவாவிற்கு விடுத்த வேண்டுகோள் விரைந்து நிறைவேற வில்லை. 10. தமிழுக்கு ஆகாத நூல்கள் (1) ஆரியப் புராணங்கள் மாபுராணம் பூதபுராணம் என்னும் இறந்துபட்ட தமிழ் இலக்கண நூல்களும், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், பெரிய புராணம் முதலிய சில தமிழ்ப் புராணங்களும் தவிர, பதினெண் புராணமும் துணைப்புராணமும் ஊர்ப் புராண மும் ஆகிய ஆரியப் புராணங்கள் அனையவும், தமிழையுந் தமிழ னையுந் தாழ்த்திச் சமற்கிருதத்தையும் பிராமணனையும் உயர்த்து வதால், தமிழுக்கு ஆகாதனவே. (2) வரணப் பாகுபாட்டு நாடக நூல்கள் நாடகக் கதைத் தலைவர்பற்றி, நாற்பொருளிலும் தொண் (ஒன்பான்) சுவையிலும் நால்வரணத்தைப் புகுத்தும் ஆரிய நாடக நூல்கள் தமிழுக்காகா. வரணம் பொருள் சுவை பிராமணன் நாற்பொருளும் தொண்சுவையும் அரசன் அறம்பொருளின்பம் இளிவரலும் (க்ஷத்திரியன்) சமநிலையும் அல்லாதவை வணிகன் அறமும்பொருளும் சமநிலை யொழிந்த எட்டும் சூத்திரன் அறம் மட்டும் பெருமிதமும் (வேளாளன்) சமநிலையும் அல்லாதவை மூவேந்தரும் ஆரிய அடிமையரானபின், பிராமணர் ஒல்லும் வகையாற் செல்லுமிடமெல்லாம் நால்வரணப் பாகுபாட்டைப் புகுத்திவிட்டனர். பாம்பு, பறவை, வண்டு முதலிய அஃறிணை யுயிரினங்களுள்ளும், வீடுகட்டும் மரம், மனைநிலம், வீடு, குடியிருப்பு (ஊர்) முதலிய உயிரற்ற பொருள்களுள்ளும், இடங் களுள்ளும் அப் பாகுபாடு புகுந்துவிட்டது. அதை மக்கள் மறவாத படி, நகர மதிலரணிலும் நாடக மேடையிலும் நால்வரணப் பூதவடி வங்களை வண்ணப் பூச்சாக வரைந்து வைத்தனர். தோற்றிய வரங்கிற் றொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்து (சிலப். 3:106-7) என்று சிலப்பதிகாரங் கூறுதலையும், அதற்கு அடியார்க்கு நல்லார், அந்தணர் அரசர் வணிகர் சூத்திரர் என்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்க வைத்தென்க. என்னை? கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை வழுவில் பூத நான்கு முறைப்பட எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே. (சீவக. 672 நச். மேற்.) என்றா ராகலின். இப் பூத நான்கின் உண்டியும் அணியும் ஆடையும் மாலை யும் சாந்தமும் பொழுதும் செயலுமுதலிய வெல்லாம் அழற்படு காதைக் கண்ணே விரித்துக் கூறுதும் என்று உரைத் ததையும் காண்க. நால்வகை வரணப் பூதங்கட்கும், வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுவரன் என்று பெயரும் இட்டிருக்கின்றனர். இவற்றின் நிறம், முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை. ஆரியர்க்கு முந்தின தமிழ் நாடகங்களிலும் நாடகவரங்கு களிலும், இத்தகைய குறிப்பே இருந்திருக்க முடியாது. நாடகங்கள் நாள்தொறும் நிகழா வாதலாலும், அவற்றைக் காண்பவர் சிலரேயாதலாலும், எந்நாளும் எந்நேரமும் எல்லாரும் காண்பதற்கே, நகர்ப்புற மதிலின் நாற்புரத்திலும் நால்வரணப் பூதங்களை எழுதியிருந்திருக்கின்றனர். மேலையர் நாடகத்தைத் தனிக்கூத்து (Drama), இசைக்கூத்து (Opera) என்று இருவகைப்படுத்துவர். சேக்கசுப்பீயர் எழுதினவெல் லாம் தனிக் கூத்தே. பிராமணரும் மேலையினத்தவராதலின், பல தனிக்கூத்து நாடகம் எழுதி வைத்துள்ளனர். சமற்கிருதம் பிராமண இலக்கிய மொழியாதலின், காளிதாசன் முதலிய வடமொழிப் புலவரும் அம் முறையைப் பின் பற்றியுள்ளனர். தமிழர் நாடகம் தொன்றுதொட்டு இசைக்கூத்தே. சுந்தரம் பிள்ளை மனோன்மணீய நாடகம் ஆரிய முறையைப் பின் பற்றியதே. அது தமிழர் அரங்கில் நடித்தற்குரிய தன்று. திரைப்படக் கதை போன்று உரைநடையும் இசைப்பாட்டுங் கலந்ததே தமிழ்நாடகம், இராசராசன் காலத்து இராசரா சேசுவர நாடகம் அத்தகையது. இவ் வுண்மையை அறியாதவர் தமிழில் நாடக விலக்கியம் இல்லையென வருந்துவர். தமிழ் நாடகம் காலத்திற் கேற்றவாறு புதிது புதிதாகத் தோன்றக் கூடியது. நிலையான இலக்கியமாயின், அது நடித்தற்குரிய தல்லாத சிலப்பதிகாரம் போன்றதே. (3) ஆரியந் தழுவின இலக்கண நூல்கள் வீரசோழியம் ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்மிய தண்டமி ழீங்குரைக்க என்றும், பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே என்றும், பாயிரத்திலேயே புத்தமித்திரன் புத்தமதப் பித்தாற் புரை படுகின்றார். அகத்தியன் தமிழ் கற்ற ஆரியருள் முதல்வன். அவன் காலத்திற் புத்தமதமே தோன்றவில்லை; புத்தரும் பிறக்கவில்லை; அவலோகிதன் என்றொருவன் வந்ததுமில்லை. சொன்ன மொழிப்பொரு ணீக்கு நகாரமச் சொன்முன் மெய்யேல் அந்நிலை யாக வுடல்கெடு மாவிமுன் னாகிலது தன்னிலை மாற்றிடும்........... (சந்தி. 11) ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடி லாறொடைந்தாம் (சந்தி. 18) என்னும் புணர்ச்சிக் கூற்றுகள் தவறாம். அல் என்னும் தென் சொல்லே அன்-அ என்று திரிந்து குறுகும். அன்(அந்) என்பது வடமொழியில் முன்பின்னாக மாறி ந(ன) என்றாகும். ழகரமெய் புணர்ச்சியில் திரிவதில்லை. டகர ணகரத் திரி பெல்லாம் மரூஉப் புணர்ச்சியே. வேற்றுமைப்படலம் 2ஆம் நூற்பாவில், சு(ஒருமையீறு), அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் ஏழும் முதல் வேற்றுமை யுருபுகள் என்று கூறியிருப்பது, பல்வேறு வகையிற் பெரும்பிழை யாகும். தமிழ் எழுவாய்க்கு உருபே யில்லை. அது வேற்றுமை யெனப்படுவது பெரும்பான்மை பற்றியும், வேற்றுமைகளினின்று வேற்றுமைப்படுவது பற்றியுமே. அன், ஆன், அள், ஆள், இ என்பன ஒருமையும், அர், ஆர் முதலியன பன்மையும்பற்றிவந்து பாலும் எண்ணும் ஒருங்கே யுணர்த்தும் ஈறுகள். எழுவாய் இயல்பாகவும் ஈறுபெற்றும் இருவகையில் நிற்கும். ஒருமையீறுகளைச் சுவ்வில் அடக்க முடியாது. சுப்பிரத்தியயம் என்பது ஆரிய இலக்கண வழக்கு. அது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. ஒன்றை ஒரு வேற்றுமை யுருபென்றால், அவ் வேற்றுமைப் பொருளிலேயே அதை எல்லாப் பெயர்களும் ஏற்றல்வேண்டும். மேற்கூறிய பாலெண்ணீறுகள் அத்தகையன வல்ல. இங்ஙனம் படலந்தொறும், தமிழுக்கு மாறான செய்திகளைக் கூறிச்செல்கின்றார் வீரசோழிய ஆசிரியர். படல அமைப்பும் சந்திப் படலம் என்று தொடங்குவதும், தமிழ் மரபிற் கேற்றவையல்ல. இறுதியில், மணிப்பவள நடையை வழா நிலைப் படுத்தியிருப்பதும் தமிழுக்கு முற்றும் முரணாகும். பாட்டியல்கள் பிராமணியம் வேரூன்றிய பிற்கால இலக்கியத்தில், மக்கள் மேற்பாடும் பாட்டிலும் பனுவல்களிலும், முதற்சீ ரெழுத்துக்கள், பாடப்படும் பாவகை, பாடும் பனுவலின் பாத்தொகை முதலியன பற்றி நால்வரணப் பாகுபாடாக வெவ்வேறு வரம்புகளிடப் பட்டுள்ளன. அவற்றையெல்லாங் கூறும் நூல் பாட்டியல் எனப் படும். கடைக்கழகக் காலத்திலிருந்து, பதின்கணக்கான பல்வேறு பாட்டியல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் தலைமை யாகக் கருதப்படுவது பன்னிருபாட்டியல். அதன் கூற்றுகள் வருமாறு: முதற் சீரெழுத்துகள் நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன் அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி. (5) அவை பன்னீருயிரும் கங, சஞ, டணவும் இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன துன்னருஞ் சிறப்பின் மனைவர் சாதி. (6) அவை தந, பம, யர. திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன அணிமிகு சிறப்பின் வணிகர் சாதி. (7) அவை லவ, றன. கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும் ஏத்திய மரபிற் சூத்திர சாதி. (8) அவை ழள. பாவகை அந்தணர் சாதி யாகிய வெள்ளை (91) காவலர் சாதி யாகிய அகவல் (92) நெடுநிலைக் கலியே வணிகர் சாதி (93) எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி (94) கலம்பகச் செய்யுள் தொகை தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும் நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே. ஒப்பில் எழுப தமைச்சிய லோர்க்குச் செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள். (130) பன்னிருபாட்டியற்கு முந்தியவை பொய்கையார், பரணர், இந்திரகாளியார், அவிநயனார், அகத் தியர், கல்லாடனார், கபிலர், சேந்தம்பூதனார், கோவூர் கிழார், மாபூதனார், சீத்தலையார், பல்காயனார், பெருங்குன்றூர் கிழார், தொல்காப்பியர், மாமூலர் முதலியோர் பாட்டியல்கள். அகத்தியர் என்றது பிற்காலக் கடைக்கழக அகத்தியர் ஒருவரை முதற்கால அகத்தியர் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டுத் தொல்காப்பியர்க்கு முந்தி வாழ்ந்தவர். அகத்தியர் பாட்டியல் பருணர் பாட்டியல் என்றும் வழங்கும். பன்னிருபாட்டியற்குப் பிற்பட்டவை வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், இலக்கணவிலக்கப் பாட்டியல் முதலியன. சில பாட்டியல்கள் வேறு வகையான பெயர்கள் பெற்றும் வழங்குகின்றன. அவை, பிரபந்தத் திரட்டு, பிரபந்த தீபம், அகத்திய னார் ஆனந்தவோத்து, அவிநயனார் காலவியல், செய்யுள் வகைமை, திருப்பிரவாசிரியர் தூக்கியல், முள்ளியார் கவித்தொகை முதலியன. எப் பெயர் பெற்றிருப்பினும், வரணப் பாகுபாட்டைப் புகுத்தியிருக்கும் இலக்கணமெல்லாம் தமிழுக்கு மாறானவை யென்றும், புலவர் பாடத் தேர்விற்குப் பாடமாக வைக்கத் தகாதவே யென்றும், திட்டமாகவும் திண்ணமாகவும் அறிதல் வேண்டும். பிரயோக விவேகம் இது, வடமொழியிலக்கண வழியது. தென்மொழி யிலக்கண மென்று, வலிந்தும் நலிந்தும் தமிழ்ப் பற்றில்லாத ஒரு பிராமணரால் எழுதப்பட்டதனால், விலக்கற்குரியது. இலக்கணக் கொத்து இதன் ஆசிரியரான சுவாமிநாத தேசிகர் வையாபுரியார்க்கு மூலவர். அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ அன்றியு ஐந்தெழுத் தாலொரு பாடையென் றறையவே நாணுவர் அறிவுடை யோரே ஆகையால் யானும் அதுவே யறிக வடமொழி தென்மொழி யெனுமிரு மொழியினும் இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக என்று, அவர் கூறியது வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மில்லாத அக்காலத்திற்கு ஏற்கும்; இக் காலத்திற்கு ஏற்காது. உ-உவ்-உவ, உவத்தல் = ஒத்தல். உ-ஒ-ஒவ்-ஒவ்வு. ஒ-ஓ-ஓவு-ஓவம், ஓவியம். உவ + மை = உவமை-உவமம்-உவமன். உவமை-வ. உபமா. வ-ப, மை-மா. ஒ. நோ: உவண்- உவணம்-சுவணம்-வ. ஸுபர்ண, படி-படிமை-வ. ப்ரதிமா. வடமொழியாளர், உப என்பது உடன் (கூட) என்று பொருள்படும் உபஸர்க்கம் (prefix) என்றும், மா என்பது அளவு குறித்த சொல் என்றும், பொருந்தப் பொய்ப்பர். உப என்னும் முன்னொட்டிற்கும் உ என்பதே வேர். உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்தும் நூன் முறை, மதிமை. உத்திகட்டுதல் = விளையாட்டிற் கன்னை பிரிக்க இருவர் இணைந்து வரல். அளவுகுறித்த மா என்னுஞ் சொல்லுந் தென்சொல்லே. மா =ஓர் அளவு (1/20). மா + அனம் = மானம் (அளவு). மா + திரம் = மாத்திரம் (அளவு). உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உருப்படி = தனி யெண்ணிக்கைப் பொருள். உரு-உருவு-உருவம் = தோற்றம், வடிவம். உருவு-உருபு = வேற்றுமை வடிவான சொல் அல்லது அசை. ஒ.நோ : அளவு-அளபு. உருவாக்குதல்= தோற்றுவித்தல், உண்டாக்குதல் உருவம்-உருவகம் = ஒரு பொருளை இன்னொன்றாகக் கூறுதல். உருவம் - t.ரூg. உருவகம் - t.ரூgf. காண் - OE. con. kon - know (க்னோ) - L. gna - Skt. ஜ்ஞா - ஜ்ஞாபி - ஜ்ஞாபக - த. ஞாபகம். கரம், காரம் என்னும் எழுத்துச்சாரியைகள் தமிழினின்று வடமொழிச் சென்றவையே. மேலையாரிய மொழிகளில் இத்தகைய சாரியை ஒன்றுமில்லை. இங்ஙனமே பிற பலவும். அன்றியும் வடநூற் களவிலை யவற்றுள் ஒன்றே னுந்தனி வடமொழி யுண்டோ என்றே இன்று வினாவற்குரியதாம். சமற்கிருதத்திலுள்ள சுட்டுச் சொற்கள் அனையவும், தமிழ் முச்சுட்டெழுத்துகளினின்று திரிந் தவையே. மேலும், வடமொழியடிப்படைச் சொற்களெல்லாம் பெரும்பாலுந் தென்சொற்களினின்றே திரிந்துள்ளன. இனி, தமிழ் யாப்பின் சிறப்பையும் பொருளிலக்கணத்தின் தனிச்சிறப்பையும் கண்ட பின்பும், இருமொழியிலும் இலக்கணம் ஒன்றே யென்றது, மதிமாற்றத்தின் பாற்பட்டதே. திரவிட ஆய்வுக்கல்வி (3ஆம் பாகம்) அனவரத விநாயம் பிள்ளையின் Dravidic Studies (Part III) என்னும் ஆங்கிலப் பொத்தகம், பிராகிருதத்தினின்று தமிழ் திரிந்த தாகக் காட்டுவதாலும், காலஞ்சென்ற சுநீதிகுமார சட்டர்சியின் தமிழ்பற்றிய செவ்வையான கருத்தைக் கெடுத்ததானாலும், முற்றும் புறக்கணிக்கப்படத்தக்கதாம். (4) S. வையாபுரிப்பிள்ளையின் வழுவாராய்ச்சி முண்டாமொழியும் திரவிடமும் சமற்கிருதமுஞ் சேர்ந்து தமிழ் தோன்றிற்று. தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. அதற்கு மூலநூல்கள் பாணினீயம், பதஞ்சலி மாபாடியம், கௌடிலீய அர்த்த சாத்திரம், மனுதரும சாத்திரம், பரத நாட்டிய சாத்திரம், வாதசாயனரின் காமசூத்திரம் என்பன. மரபியலிலுள்ள அறுவகை உயிரினப் பகுப்பு சமணர் ஆராய்ச்சி. ஐந்திரம் என்பது ஓர் இலக்கண முறையே யன்றி நூலன்று. உண்மையான தமிழ்க்கழகக் காலம் கி.பி. 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளாகும். வச்சிரநந்தி சங்கம் கி. பி. 470-ல் தோன்றிற்று. அதன் முதல் வெளியீடு திருக்குறளாயிருக்கலாம். திருவள்ளுவர் காலம் தோரா. கி.பி. 600. அவர் சமணர். சிலப்பதிகார மணிமேகலைக் காலம் தோரா. கி.பி. 800. திருக்குறளும் மனுதரும சாத்திரம், கௌடிலியர் அர்த்த சாத்திரம், காமாந்தகர் நீதிசாரம், ஆயுர் வேத நூல்கள், காமசூத்திரம் முதலிய சமற்கிருத நூல்கட்குப் பெரிதும் கடம்பட் டுள்ளது. அதிற் பல வடசொற்கள் உள்ளன. தமிழெழுத்து பிராமியினின்று திரிந்தது. இக் கூற்றுகள் வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி முடிபுகள். அவர் எழுதிய நூல்கள் :- (1) தமிழ்ச்சுடர்மணிகள் (8) இலக்கியச் சிந்தனைகள் (2) காவ்ய காலம் (9) இலக்கணச் சிந்தனைகள் (3) உதயம் (2 மடலம்) (10) சொற்கலை விருந்து (4) தமிழர் பண்பாடு (11) சொற்களின் சரிதம் (5) இலக்கிய மணிமாலை (12) திரவிடமொழிகள் ஆராய்ச்சி (6) தமிழின் மறுமலர்ச்சி (13) சிறுகதை மஞ்சரி (7) கம்பன் காவியம் (14) இலக்கிய தீபம் இவையனைத்தும் மெய்யும் பொய்யுங் கலந்து மாணவரை மயக்கிக் கெடுக்கும் நச்சு வெளியீடுகள். கால்டுவெல் ஐயர் தமிழின் தொன்மைக்குக் கிரேக்க விவிலியத்தினின்று காட்டியிருக்கும் சான்றுச் சொற்களை மறுத்திருப்பதும், மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்னும் தொல் காப்பிய நூற்பாவை (உரி. 96) “Tolkappiyar only says that the origin of words is beyond ascertainment” என்று தவறாக மொழி பெயர்த்திருப்பதும், வையா புரிப்பிள்ளையார் தமிழைத் தாழ்த்த வேண்டுமென்னுங் குறிக் கோள் கொண்டே மேற்குறித்த பொத்தகங்களை எழுதியிருப்பதைத் தெரிவிக்கின்றன. அதனால், இன்று வையாபுரி என்னும் பெயர் தமிழைக் காட்டிக்கொடுப்பவன் எனப் பொருள்படுவது மிகவுந் தக்கதே. (5) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி (The Madras University Tamil Lexicon) சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலி, சிலவகையிற் சிறந்ததும் பிற்றை யகரமுதலித் தொகுப்பிற்குப் பெரிதும் பயன்படுவதுமா யிருப்பினும், அடிப்படைக் கொள்கையிலும், பல சொற்களின் மூலமும் பொருளும் பற்றியும், பல பொருள்களின் இயல்வரையறை யிலும், மிகமிக வழுவி, உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரியமூலமுமாயுள்ள தமிழை, பன்மொழிக் கலவைப் புன்சிறு புதுமொழியாகக் காட்டியிருப்பதால், தமிழுக்கு மாபெருங் கேட்டை விளைப்பதாகும். ஏறத்தாழ நாலரையிலக்கம் உருபா செலவிட்டு 29 ஆண்டு நீடிய காலத்தில் தொகுக்கப்பட்ட அகரமுதலி, இங்ஙனம் குறை பாடுள்ளதாயிருப்பதற்கு, அதன் தலைமைத் தொகுப்பாளரின் பற்றின்மையும், அதற்குத் துணைநின்ற வையாபுரிப் பிள்ளையின் காட்டிக்கொடுப்புமே காரணம். அடிப்படைத் தமிழ்ச் சொற்களெல்லாம் ஆரியமாகக் காட்டியிருப்பது, அதன் தலையாய களங்கமாகும். எ-டு : ஐயன், குடும்பம், சிவன், தானம், நாடகம், பள்ளி, முகம். சாயுங்காலம் என்பது வேண்டுமென்றே சாயங்காலம் என வடிவுமாற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவையும் விளக்கத்தையும், என் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு என்னும் சுவடியிற் காண்க. (6) வே. வேங்கடராசுலு ரெட்டியாரின் கட்டுரைகள் ஆங்கிலராட்சியின் பின் நேரடியாகத் தமிழராட்சி வரவில்லை. ஆரியராட்சியும் திரவிடராட்சியும் வையாபுரிகளாட்சியும் முறையே இடையிட்டன. தமிழ்ப்புலவர் எம்மொழியரா யிருப்பினும் தமிழ்ப்பற்று டையராயின், தமிழெழுத்திலேயே தம் பெயரைக் குறிப்பர். இராமானுசக் கவிராயரை நோக்குக. வேங்கடராசு ரெட்டியார் தம் பதவியையும் பெயரையும், சென்னைச் சருவகலாசாலை ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட் யூட் தமிழ் ஜூனியர் லெக்சரர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று குறிப்பதே வழக்கம். வரலாற்றொடு கூடிய மொழிநூலா ராய்ச்சியின்மையால், அவர் தமிழின் முன்மை முதன்மைகளை உணர்ந்திலர். ஆதலால், அவர் எழுதிய இலக்கணக் கட்டுரைகள், திராவிட மொழியின் மூவிடப் பெயர் என்னுங் கட்டுரைத் தொகுதி கள் தமிழுக்கு மாறானவையே. ஒற்றைக் கண்ணணுக்கு ஓரக் கண்ணன் உதவினது போல, வடமொழிப் பித்தருக்கு வையாபுரியார் புனைந்துரை வழங்கியிருப்பது இயற்கையே. (7) பர். (Dr) ஆ. ஆந்திரனோவ் இக்காலச் செந்தமிழ் அளவை யிலக்கணம் (A Standard Grammar of Modern and Classical Tamil, by Dr. M. Andronov)-bkhÊbga®¥ò பெயர்ச்சொற்களின் அடிகளும் (bases) வேற்றுமையும் அடி எழுவாய் பிறவேற்றுமை அளவ் அளவு அளவை காத் காது காதை அடி எழுவாய் வேற்றுமையடி பிறவேற்றுமை வீட் வீடு வீட்ட் வீட்டை ஆற் ஆறு ஆற்ற் ஆற்றை இக்கால இலக்கியநடை மாடுக்குத் தவிடைப் போடு. (ஏ. பி. நாகராஜன் மக்களைப் பெற்ற மகராசி, ப. 11) அவள் செய்த தவறைத் தன் மாமனிடம் சொல்லிக் கொண்டே போனாள். (ராஜவேலு தங்கசுரங்கம் ப.18) வினைவேர்களும் பெயரெச்சங்களும் வினை வேர் இ. கா. பெயரெச்சம் விடு விட் விட் + த் + அ = விட்ட பெறு பெற் பெற் + த் + அ = பெற்ற தென்னாட்டுப் புடைமொழி (Southern dialect) வினைமுதனிலை இ.கா. நி.கா. எ.கா. சொல் சொன்னிக சொல்லுதிய சொல்விக முன்னிலைப் பன்மை பார் பாத்தேள் பாக்கிறியள் பாப்பிக வினைமுற்று இங்ஙனம் எழுதப்பட்ட இலக்கண நூலிற்கு, வங்கச் சுநீதி குமார சட்டர்சி முகவுரையும், பர். தெ.பொ.மீ. அணிந்துரையும், வழங்கியிருக்கின்றனர். அதனால், இதன் வெளியீட்டாளர்க்குத் தமிழ்நாட்டு அரசுத் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஈராயிரம் உருபா பரிசு வழங்கியிருக்கின்றது. (8) பர். (Dr.) மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட போது, கேரளாவைச் சேர்ந்த திருவிதாங்கூர்த் தமிழ்ப் புலவர் ஒருவர் தலைவராக இருந்தார். (ப. 3) வடமொழி இலக்கிய வளர்ச்சிபெற்ற காலத்திலேயே தமிழும் இலக்கிய வளர்ச்சி பெற்று விளங்கியது. (ப. 9) பிற்காலத்தில் (கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டில்) சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திக் கல்வித்தொண்டும் சமயத் தொண்டும் புரிந்தார்கள். அவர்களின் காலத்துச் சங்கங்கள் போலவே, அதற்கு முந்திய காலத்திலும் புலவர் களின் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், பழைய பாட்டு கள் (எட்டுத்தொகை பத்துப்பாட்டின் பாட்டுகள் முதலியவை) அந்தச் சங்கங்களைச் சார்ந்த புலவர்களால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், அறிஞர்கள் கருதினர். (ப. 27) இக் கூற்றுகள் தமிழின் முன்மைக்கும் முதன்மைக்கும் ஏற்றவையல்ல. இனச்சார்பினால் இவை நேர்ந்திருக்கலாம். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு. (குறள். 462) (9) பர். தெ.பொ.மீ.தமிழுக்குச் செய்த தீங்கு பர். தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் வையாபுரியாரைப் போன்றே பெரும்புலவர்; அவரைப்போன்றே மொழிக் கொள்கை யர். அதனால், அவருக்குப் பின் அவர் பணிக்குப் பூனாப்பட்டக் கல்விப் பின்னைப் படிப்பாராய்ச்சிக் கல்லூரி முதல்வர் பர். கத்திரேயால் அமர்த்தப்பட்டார். பர். bj.bgh.Û.க்F மாந்தன் பிறந்தகம்பற்றியோ தமிழன் பிறந்தகம் பற்றியோ ஆராய்ச்சியில்லை. அதனால், தமிழன் குமரி நாட்டுத் தோற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை. இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளதென்றும், இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்கவேண்டுமென்றும், சென்ற நூற்றாண்டே வரலாற்றாராய்ச்சியாளராலும் நூலாசியராலும் உரைக்கப்பட்டது. ஆயினும், மேலை மொழிநூலார் சமற்கிரு தத்தை அடிப்படையாக வைத்தாய்ந்து, மொழிமூலங் காணமுடி யாது, எல்லா மொழிகளும் இடுகுறித்தொகுதிகளேயென்றும், ஆயிரம் ஆண்டிற்கொருமுறை மொழிகளெல்லாம் முற்றும் மாறி விடுகின்றனவென்றும், தவறா முடிபு செய்து, பிறர் கண்ணைக் கட்டியதொடு தம் கண்ணையும் இறுக மூடிக் கொண்டனர். சொற்களின் வேரையும் பொருட் காரணத்தையும் இயன் மொழிச் சொற்களாலன்றித் திரிமொழிச் சொற்களால் எங்ஙனங் காணமுடியும்? தேகலீ என்னும் வடசொற்கு மூலமாகிய இடைகழி என்னுஞ் சொல், தென்மொழியிலன்றோ இருக்கின்றது! இடைகழி-டேகழி-தேகளி-தேகலீ, டேகழி - டேழி - ரேழி. தியூத்தானியத்தி லுள்ள through என்னுஞ் சொல்லிற்கு மூலம் துருவு என்பதை, தமிழையன்றோ துருவிக் காணல் வேண்டும்? மேலையர் இற்றை அறிவியலிலும் கம்மியத்திலும் மேலோர் தான். அதனால் திங்கள் மேலருமானார். ஆயின், மொழிகளெல்லாம் பண்டைச் செய்தியாத லின், அவற்றின் மூலத்தையறியக் கீழை மொழிகளிலன்றோ ஆழ இறங்குதல் வேண்டும்! இனி, நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (தொல். மொழி. 10) எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. (தொல். பெயர்.1) என்னும் ஈராயிரத்தைந்நூறு ஆண்டிற்கு முற்பட்ட தொல்காப்பிய நூற்பாக்களும், செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. (236) என்னும் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருக்குறள்களும், சொல்லும் பொருளும் சொற்றொடரமைப்பும் நடையும் சிறிதும் மாறாது, அன்றுபோல் இன்றும் தெளிவாய்ப் பொருளுணர்த்து கின்றனவே! ஆகவே, கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழி நூலையே கையாளல் வேண்டும். அஃதன்றி வண்ணனை மொழி நூலை முதற்கண் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் அதன் பின் மதுரை சென்னைப் பல்கலைக்கழகங்களிலும் புகுத்தி நான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுப்பதைத் தடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழியாக் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார் பர். தெ.பொ.மீ. இனி, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (தொல். மொழி. 49) என்னும் போலி பற்றிய தொல்காப்பிய நூற்பாவை எண் பற்றிய தாகப் பிறழவுணர்ந்து, குளன் என்பது ஒருமையையும் குளம் என்பது பன்மையையும் உணர்த்தும் என்று, தமிழ்க் களஞ்சியத் திலும் வழுப்படவுரைத்து மாணவரும் ஆசிரியரும் மயங்க வைத்துள் ளார். அறுவகை யுயிரினப் பகுப்பு சமணர் ஆராய்ச்சியென்னும் வையாபுரியார் கருத்தே இவரதும். RnjrĤâu‹ ÔghtË ky® x‹¿š (1964?), தமிழிற் பிற மொழிச் சொற்கள் என்னுந் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில், தமிழின் சொல்வளத்திற்கு இழுக்குண்டாகும் வண்ணம் இளநீர் என்னுஞ் சொல் பொதுப்படத் தேங்காயைக் குறிக்குமென்றும், முண்டாமொழியினின்று வந்ததென்றும் கூறியிள்ளார். குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை எனத் தெங்கங்காய் நால்நிலைப்பட்டது. இளநீரைத் தேங்காய் என்றும், தேங்காயை இளநீர் என்றும், எவரும் சொல்லார். வழுக்கையொடு கூடியும் கூடாதும், பருப்பின்றி நீர்மட்டும் இருப்பதே இளநீர். இப் பெயர் தெறுக்கால் என்பது போன்று அடையடுத்த ஆகுபெயர். தொல்காப்பியக் காலம் கிறித்தவ வூழித் திருப்பம் என்பது இவர் கொள்கை. டேராடூனில் 1959-ல் நடைபெற்ற வண்ணணை மொழி நூல் வேனிற் பள்ளியில், கன்னடப் பேராசிரியர் ஸ்ரீகண்டையா பொன் என்னுஞ் சொல்லே ஹொன் என்று திரிந்துள்ளதென்று கூறியதை, வண்ணனை மொழிநூற் பள்ளியில் வரலாற்று மொழிநூலைக் கற்பித்தது தவறென்று பர். தெ.பொ.மீ. கண்டித்ததாக மாணவர் கூறுவர். இனி, குசராத்தியாரும் பேராயக் கட்சியினரும் சென்னை ஆளுநராயிருந்தவருமான திரு. கே.கே. சா என்பர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பர். (Dr) பாலசுப்பிர மணியனாரிடம் தமிழ் பயின்று, உண்மை கண்டு, தமிழ் சமற்கிருதத் திற்கு முந்தியதென்று கூறியதைப் பாராட்டி ஊக்குவதற்குத் தலைமாறாக, அவர் கூற்றை மறுத்து, இந்திய நாகரிகம் கூட்டு நாகரிகமென்று நடுநிலையாளர்போற் கூறியது, பர்.தெ.பொ.மீ. யின் வடமொழிப் பற்றையே தெளிவாகக் காட்டுகின்றது. (10) பரோ எமெனோ திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி (A Dravidian Etymological Dictionary, by T. Burrow and M. B. Emeneau) இது பெயரளவில்தான் சொற்பிறப்பியல் அகரமுதலி; உண்மையில் ஓர் ஒப்பியல் (Comparative) அகரமுதலியே. இது திரவிட மொழிகளை 22 எனக் கணக்கிட்டு, 4572 பல்திரவிடப் பொதுச் சொற்களைத் தெரித்தெடுத்து இனச்சொற் காட்டி முதன்மையான பொருள்களைக் கூறுகின்றது. வண்ணனை மொழிநூலைத் தழுவியதனாலும், சமற்கிருத அடிப்படையில் தொகுக்கப்பட்டதனாலும், இது தமிழுக்கு மாறானது; உண்மையான மொழியாராய்ச்சிக்கும் உதவாது. பரோ என்னும் ஆங்கிலரும் எமெனோ என்னும் அமெரிக்கரும் தமிழ்ச் சொற்களின் வேர் காணும் ஆற்றலரல்லர்; பல அடிப்படைத் தமிழ்ச்சொற்களை வடசொற்களென்று கருதிக் கொண்டிருக்கின் றனர்; தகப்பன் என்னுஞ் சொல்லைத் தகு + அப்பன் என்று தவறாகப் பிரித்துள்ளனர். (11) டி. பாலகிருட்டிணன் நாயரின் மொழிநூல் மாந்தனூல் தொல்பொருள் நூல்வழித் திரவிடத் தோற்ற ஆராய்ச்சி (The Problem of Dravidian Origins-A Linguistic, Anthropological and Archaeological Approach) T. பாலகிருட்டிணன் நாயர், 1956-57ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில், நிகழ்த்திய வயவர் உவில்லியம் மெயெர் மானியச் brh‰bghÊîfŸ(Sir William Meyer Endowment Lectures) இன்று சென்னைப் பல்கலைக்கழகச் செய்தியிதழில் (Journal) பகுதி பகுதியாக வெளிவருகின்றன. இற்றைத் தமிழுக்கும் அதற்கினமான திரவிட மொழி கட்கும் குமரிநாட்டுத் தமிழே தாயாதலால், தமிழை அடிப்படையாகக் கொள்ளாததும் தெற்கினின்று அல்லது குமரிநாட்டினின்று வரலாற்றைத் தொடங்காததுமான எந்த ஆராய்ச்சியும் இம்மியும் பயன் படாது; உண்மையறிய ஒருவகையிலும் உதவாது. தமிழ் பிராமணியத்தினால் கடந்த மூவாயிரம் ஆண்டு மறையுண்டிருப்பதனால், பிராமணியத்தை எதிர்க்கும் மதுகை அல்லது நெஞ்சுரம் இல்லாதவர், திரவிட மூலங்காணும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. தமிழரும் திரவிடருமான தென்மொழிப் பேரினத்திற்குள், ஆரிய அடிமைப் பாட்டில் விஞ்சியவர் மலையாளியர். அவருள்ளும் நாயர் வகுப்பினர். அதைக் காட்டும் அவரது திருமணக் கொள்கை முன்னரே கூறப்பட்டது. கேரளம் பழைய சேரநாடாகவும், 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே தமிழகத்தினின்று பிரிந்துபோனதாக வும், இருந்தும், அதன்மொழி வடசொற் கலப்பில் அளவிறந்த தாகவும் திரவிட மொழிகட்குள் முதலிடங் கொண்டதாகவும் அதனாற் பெருமை பெறுவதாகவும் உள்ளது. ஆதலால், நயன்மைக் கட்சி (Justice Party) தோற்றுவித்த T. மாதவன் நாயர் போன்றாரன்றி, வேறெம் மலையாளியரும், சிறப்பாக நாயர் வகுப்பினர், திரவிட மூல ஆராய்ச்சியிற் கனவிலும் ஈடுபடத் தகுதியுடையவரல்லர். தமிழன் பிறந்தகம் தென்னாட்டதென்று, முன்னரே சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராயிருந்த P.T. சீநிவாச ஐயங்கார், 1926-ல் Stone Age in India என்னும் பொத்தக வாயிலாகவும், 1929-ல் History of the Tamils என்னும் பொத்தக வாயிலாகவும், தெள்ளத் தெளியவும் திட்ட வட்ட மாகவும் நாட்டிவிட்டார். mj‹ã‹, 1951-š V.R. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Pre-Historic South India என்னும் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, அதற்கு முழு அரண் செய்துவிட்டது. அங்ஙனமிருந்தும், தமிழ்ப்பகைவரும் சிறிதும் பொறுப்பற்றவரு மான ஒரு சிலர் தூண்டுதலால் அல்லது முயற்சியால், T.ghy கிருட்டிணன் நாயர் சொற்பொழிவுகளைச் சென்னைப் பல்கலைக் கழகம் தன் செய்தியிதழில் வெளியிட்டு வருவது, தமிழாரிய அல்லது தமிழ பிராமணப் போராட்டத்தையும் பகைமையையும் வளர்க்கும் வகையில், தூங்கின மடங்கலை ஓங்கித் தட்டியெழுப்புவதாகவே யுள்ளது. T. பாலகிருட்டிணன் நாயர் ஆராய்ச்சியில், ஒருசிறிதும் அவர் சொந்தமன்று; அவர் கொள்கையை நாட்டுவதுமன்று. பர். ïyhnfhthÇ(Dr. N. Lahovary) எழுதிய திரவிடத் தோற்றமும் மேற்கும் (Dravidian Origins and the West) என்னும் பொத்தகத்திலுள்ள, Phonetic Peculiarities, Structural and Morphological Parallels, Examples of Etymological Parallels, Summary and Final Considerations என்னும் ஐம்பகுதிகளும், ஆசிரியர் அறியாவாறு, திரவிடத் தோற்றம் கிழக்கத்தது என்னும் உண்மையையே நாட்டுவனவாயுள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் வழங்கும் இடப்பெயர்களின் வடிவொப்புமையையே இலாகோவாரி கண்டார்; அவற்றின் வேர்ச் சொற்களையும் அவற்றின் அடிப்படைப் பொருளையும் உணர்ந் திலர். எ-டு: mal, mala, mall என்னும் ghR¡F(Basque) மொழிச் சொற்கள், மலை யென்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. மல் = வளம். மல்-மல்லம் = வளம். மல்லல் வளனே. (தொல். உரி. 7). மல்-மலை = ஆண்டு முழுதும் வளமுள்ள இடம். அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே. (நன். பாயி. 28) மக்கள் குமரிநாட்டினின்றே பலதிசையும் பரவிச் சென்றனர் என்பதை, இராமச்சந்திர தீட்சிதரின் Origin and Spread of the Tamils என்னும் நூலிற் காண்க. முதற்கால மக்கள் நீள்மண்டையராகவே (Dolichocephalic) இருந்தனர். அதனால், நண்ணிலக் கடற்கரை நாடுகட்குக் குடிபோன மாந்தர், மண்டை வகையில் குமரிநாட்டுத் தமிழரை ஒத்திருந்தனர். அகல் மண்டையரும் கழியகல் மண்டையரும் பிற் காலத்தவராவர். கற்கால நாகரிகத்தில், பெருங்கற் கட்டட முறை முன்னும் சிறுகற் கட்டட முறை பின்னும் தோன்றுவதே இயற்கை. ஊர் என்னுங் குடியிருப்பு முதன்முதல் தோன்றியது குமரிநாட்டு மருதநிலத்திலேயே என்பதை, அறிதல் வேண்டும். ஐந்திணை மயக்கம் ஏற்பட்ட பின்னரே, ஏனை நால்நிலத்துக் குடியிருப்புகளும் ஊர் என்னும் பொதுப்பெயர் பெற்றன. அதற்கு முன் பாடி, சேரி, என்பன முல்லை நிலத்திலும், குறிச்சி, சிறுகுடி என்பன குறிஞ்சிநிலத்திலும்; நத்தம், குடிக்காடு என்பன பாலை நிலத்திலும், துறை, குப்பம், என்பன நெய்தல் நிலத்திலும் வழங்கிய குடியிருப்புப் பெயர்களாகும். உல்லுதல் = பொருந்துதல், கூடுதல். உல்-உர்(உறு) - ஊர் = மக்கள் நிலைத்து வாழுங் குடியிருப்பு. குமரிநாடு முழுகிப் போனதினால், தமிழரின் முதற்கால வரலாற்றிற்குத் தொல்பொருட் கலை துணை செய்யாது என்பதை, வரலாற்றாசிரியரும், தொல்பொருட் டுறையரும் அறிதல் வேண்டும். 2 எதிர்காலம் 1. தமிழின் தலைமை தமிழ், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழி. அதன் வளர்ச்சி நிலைகள், முழைத்தல் மொழி, இழைத்தல் மொழி என இரண்டு. (1) முழைத்தல் மொழி அல்லது இயற்கை bkhÊ-Natural Language or Rudimentary Speech விளியொலிக் கிளவிகள் - எ-டு: ஏ, ஏய், ஏல், ஏல, எல்லா ஒப்பொலிக் கிளவிகள் - எ-டு: காகம், குரங்கு,மாடு, விக்கு உணர்ச்சியொலிக் கிளவிகள் - எ-டு: ஆ, ஆவா-ஆகா, எல்லே குறிப்பொலிக் கிளவிகள் - எ-டு: ஊம், சீ, சே, சை, பூ வாய்ச்செய்கையொலிக் கிளவிகள் - எ-டு: ஊது, துப்பு, கவ்வு, அங்கா குழவி வளர்ப்பொலிக் கிளவிகள் - எ-டு: இங்கா, லாலா, லோலோ சுட்டொலிக் கிளவிகள் - எ-டு: ஆ, ஈ, ஊ (2) இழைத்தல் மொழி அல்லது வளர்ச்சி bkhÊ-Developed Language or Articulate Speech இழைத்தல் மொழிச்சொற்கள் பெரும்பாலும் முச் சுட்டொலி களினின்றே, அவற்றுள்ளும் சிறப்பாக உகரச் சுட்டினின்றே, தோன்றியுள்ளன. சேய்மையைச் சுட்டுவதற்கு விரிவாக வாயைத் திறக்கும் போது ஆகார அகரமே ஒலித்தற் கியலுதலும், அண்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைப் பின்னோக்கி இழுக்கும்போது ஈகார இகரமே ஒலித்தற் கியலுதலும், முன்மையைச் சுட்டுவதற்கு வாயிதழைக் குவிக்கும் போது ஊகார உகரமே ஒலித்தற்கியலுதலும், ஒலித்துக் காண்க. இங்ஙனம் ஆ ஈ ஊ அல்லது அ இ உ என்னும் மூவுயிரெழுத்து களும், வாய்ச் செய்கை யுதவியால், கையினாற் கட்டுவது போன்றே சேய்மை யண்மை முன்மைகளைச் சுட்டுவதால், சுட்டெழுத்துகள் எனப்பட்டன. இவ் வியல்பைத் தமிழிலும் திரவிட மொழிகளிலுந் தான் காணவியலும். இம் முச்சுட்டெழுத்துகளினின்றே, ஆரியமொழிச் சுட்டுச் சொற்களெல்லாந் தோன்றியுள்ளன. ஆயின், அம் மொழிகள் திரி மொழிகளாதலின், அவற்றின், சுட்டுச்சொற்கள் இடத்தையும் பொருளையும் இடம் மாறியுஞ் சுட்டுகின்றன. எ-டு: ஆங்கிலம் - it = அது, இது இலத்தீனம் - is = அவன், அவள், அது சமற்கிருதம் - அத்ர = இங்கே, அத்ய = இன்றைக்கு, அதுநா = இப்போது. இனி, சுட்டெழுத்துகள் ஆரியமொழிகளில் வேறெழுத் தாகமாறியும் உள்ளன. எ-டு: ஆங்கிலம் - there = அங்கே, so = அப்படி இலத்தீனம் - hoc = இது சமற்கிருதம் - ஏதத் = இது. உகரச் சுட்டு, லகர மெய்யொடு சேர்ந்து உல் என்னும் மூல வேரையும், க ச த ந ப ம என்னும் சொன்முதல் மெய்களொடு கூடிக் குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் அறு சினைவேர்களையும், அதன்பின் லகரவீறு வேறெழுத்துகளாக மாறும் முதலடியையும் அறு வழியடிகளையும், தோற்றுவித்துள்ளது. இவ் வேர்களினின் றும், அடிகளினின்றும், தமிழ்ச் சொற்களுள் முக்காற்பங்கிற்கு மேற்பட்டவை தோன்றியுள்ளன. எ-டு: உரு. உல் - உர் - உரு. உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், தனிப்பொருள், உடம்பு, பாட்டு, மனப்பாடம். உருப்படி = தனிப்பொருள், நிறைவான பொருள். உரு - உருவு = தோற்றம், வடிவம். உருவு - உருவம் = வடிவம், வடிவுடைப் பொருள், உருவப்படம், படிமை, சிலை. உருவு - உருபு = வேற்றுமை வடிவமான சொல் அல்லது அசை. உருச்செய்தல், உருப்போடுதல், உருவடித்தல், உருவேற்றுதல் என்பன, மந்திரத்தின் அல்லது பாட்டின் அல்லது பாடத்தின் வடிவை அப்படியே மனத்திற் பதித்தலாகிய மனப் பாடஞ் செய்தலைக் குறிக்கும். உருவம் - வ. ரூப. இச் சொல் இருக்கு வேதத்திலும் உள்ளது. உருபா (ரூபா) என்னுஞ் சொல்லும் இதினின்று திரிந்ததே. அரசன், தெய்வம், தோற்றரவு, சின்னம் முதலிய வற்றின் உருவம் பொறித்த காசு உருபா. (உருவு - உருவா, உருபு = உருபா) உரு - அரு - அரும்பு = மொட்டு. அரும்புதல் = தோன்றுதல். அரும்பு - அருப்பு - அருப்பம் = தோன்றும் இளமீசை. குரு குருத்தல் = தோன்றுதல். குரு = சிறு கொப்புளம் (வேர்க்குரு), கொட்டை. குரு - குருகு = குருத்து, இளமை, குட்டி. குருகு - குருக்கு = இளம் பனந்தோப்பு. குரு - குருத்து = தாள், தோகை, ஓலை முதலிய வற்றின் இளங்கொழுந்து. குருத்து - குருந்து = வெண்குருத்து, குழந்தை. குரு - குருப்பு = தோன்றிய பரு. குருப்பு-குரும்பு-குரும்பை = தென்னை பனை யிளம் பிஞ்சு, குருமா-குருமான்-குருமன் = விலங்குக்குட்டி. குரு - குருள் - குருளை = குட்டி. FU(= gU.)-k., f., தெ, குரு, குருப்பு. குரு-கரு = சூல் (கருப்பம்), முட்டைக்கரு, முட்டை, பிறப்பு, குழந்தை, குட்டி, உடம்பு, நிலத்தில் தோன்றும் பொருள். ம.கரு. கரு-கருத்து=மரக்கன்று. சுரு (வழக்கற்றது) துரு துருத்தல் = தோன்றுதல். துரு-துருத்து. துருத்துதல் = தோன்றச் செய்தல், கொட்டை காற்று முதலியவற்றை முன்தள்ளுதல். துருத்து-துருத்தி. நுரு நுருத்தல் = தோன்றுதல். நுரு = அறுத்த தாளில் முளைக்குந் தளிர். நுரு-நொரு = முதிர்ந்த பயிரின் அடியில் முளைக்குந் தளிர், காய்ப்பு ஓய்ந்தபின் தோன்றும் பிஞ்சு. நொருப்பிஞ்சு, நொருப் பிடித்தல் என்பன உலகவழக்கு. புரு புருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது). புரு = குழந்தை புரு-வ. புரூண (bhrn@a) முரு முருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது). முரு-முருகு = இளமை, இளமை யழகு, இளமையான முருகன். முருகு-முருகன் = இளைஞனான குறிஞ்சித் தெய்வம். முரு-முறு = முறி. முறிதல் = தளிர்த்தல். முறி = தளிர், கொழுந்து. முறி-மறி = குட்டி. இங்ஙனமே, முன்வருதல் என்னும் பொருளில் உது, குது, -, துது, நுது, புது, முது என்றும்; கூரிய நுனியாற் குத்துதல் என்னும் பொருளில் உள், குள், சுள், துள், நுள், புள், முள் என்றும்; வளைந்தியங்குதல் என்னும் பொருளில் உருள், குருள், சுருள், (துருள்) . நுருள், புருள், முருள் என்றும்; துளைத்தல் அல்லது துளை என்னும் பொருளில் உளை, குழை, -, துழை, நுழை, புழை, முழை என்றும்; துருவுதல் என்னும் பொருளில், உருவு, குருவு, சுருவு, துருவு. -, புருவு, - என்றும்; இங்ஙனமே பிறவாறும், ஏழடிகளினின்றும் சொற்கள் தோன்றியிருத்தல் காண்க. இங்ஙனம் சொற்கள் அமைந்திருத்தலை வேறெம் மொழியிலுங் காணமுடியாது. பழம்பாண்டி நாடான பண்டைத் தமிழகம் முழுதும் முழுகிப் போனமையாலும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட இலக்கியமனைத்தும் அழிவுண்டமையாலும், இருவகை வழக்கினின்றும் பல இணைப் பண்டுச் சொற்களை எடுத்துக்காட்ட இயலவில்லை என அறிக. இற்றை நிலையதே பண்டைத் தமிழும் என்று கருதிக் கொண்டும், சமற்கிருதத்தை உண்மையில் தேவமொழி யென்று நம்பிக்கொண்டும், திரவிட மொழியாளரெல்லாம் தமிழின் தலைமையை ஒப்புக் கொள்வதில்லை. ஆரிய மயக்கும் இதற் கொரு காரணம். பொருளிலக்கணமும் எழுநிலத்தெழுந்த பண்டைச் செய்யுளிலக்கியமும் முத்தமிழ்ப் புணர்ப்பும் திரவிட மூலங்காண்டற் கேற்ற வரலாற்றுக் குறிப்பும் திருக்குறளும், தமிழின் தலைமையை நாட்டப் போதிய சான்றுகளாம். இனி, தமிழ்ச்சொற்களின் செம்மையும் திரவிடச் சொற்களின் கொடுமையும், துணைச்சான்று களாம். தமிழ்மொழியின் வளர்ச்சிநிலைகள், (1) அசைநிலை - (Isolating or Monosyllable Stage) (2) புணர்நிலை - (Compounding Stage) (3) பகுசொன்னிலை - (Terminational Stage) (4) கொளுவுநிலை - (Agglutinative Stage) (5) பிரியாநிலை - (Inflexional Stage) (6) தொகுநிலை - (Synthetic Stage) (7) பல்தொகுநிலை - (Polysynthetic Stage) (8) பிரிநிலை - (Analytical Stage) என எண்வகைப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கரும் ஆத்திரேலியரும் சீனரும், அசை நிலைக் காலத்தில் குமரிநாட்டினின்று பிரிந்து போனதாகத் தெரிகின்றது. துரேனியர் அல்லது சித்தியர் எனப்படும் மக்கள், கொளுவு நிலைக் காலத்திற் பிரிந்து போயிருக்கலாம். அவருக்குச் சற்றே பிற்பட்ட தமிழருள் ஒருசாரார் வடக்கே சென்று பிராகிருதராக மாறினர். அவருக்குப் பிற்பட்டவர் திரவிடராகத் திரிந்தனர். பிராகிருதருந் திரவிடருங் கலந்த வகுப்பார் ஒருசாரார் வடமேற்காகச் சென்று ஐரோப்பாவில் ஆரியராக மாறினர். அவருள் ஒரு பிரிவினரே இந்தியாவிற்குட் புகுந்து வேத ஆரியராயினர். ஆரியன் என்ற பெயர் தோன்றியது இந்திய நிலத்திலேயே. ஐரோப்பியரை ஆரியர் என்றது மொழியினம்பற்றியே. ஆரி=மேன்மை. ஆரியன்=மேலோன். இத் தென் சொல்லையே ஆரியர் தங்கட்கு இட்டுக்கொண்டனர். இந்திய வரலாற்று நூலில், ஆரியர் என்பது, பூசகரோடு கூடிய ஆரிய ஆயர் கூட்டத்தையே, குறிக்குமேனும், தமிழாரியப் போராட்டத்தில் ஆரியர் என்பது, ஆரியப் பூசாரியரையே என்பதை அறிதல் வேண்டும். ஐரோப்பா சென்று ஆரியராக மாறிய பிராகிருதத் திரவிடர், முதற்கண் காண்டினேவியம் (Scandinavia) சென்று தங்கியதனால், அதையடுத்த தியூத்தானிய மொழி தமிழுக்குச் சற்று நெருங்கிய தாகவும், அதற்குத் தெற்கிலுள்ள இலத்தீனம் அதினுஞ் சற்று விலகிய தாகவும், அதற்குத் தென்கிழக்கிலுள்ள கிரேக்கம் மிக விலகினதாகவும், இந்தியா வந்த ஆரியம் மிகமிக விலகினதாகவும், உள்ளன. தமிழ் தியூத் இலத்தீனம் கிரேக்கம் இந்திய தானியம் ஆரியம் உகை-அகை -- mnfh(ago) அகோ (ago) அஜ் இதோள் ஹிதெர் சித்ர (citra) -- அத்ர காண் கன், கான், ¡ndh(gno) க்னோ (gno) ஜ்ஞா கென், கேன். (cun con, ken,can) ¡ndh(know) கும் - கும் சும் ஸம் பொறு பெர்,பேர் ப்வெர் பெர் ப்ரு, பர் (ber, bear) (fer) (pher) (bhr, bhar) விடலை வெலெ விதுல இதலொஸ் வத்ஸ வடமொழியின் ஐந்நிலைகளில் தமிழ்ச்சொற்கள் கலந் துள்ளன. அவையாவன : (1) வடுகநிலை, (2) ஐரோப்பிய நிலை, (3) பிராகிருத நிலை, (4) வேத நிலை, (5) சமற்கிருத நிலை. இவ் வைந்நிலைகளிலும் கலந்துள்ள தென்சொற்கள் வடமொழியில் ஐந்திலிரு பகுதியாகும். தமிழ்த்துணையின்றி வடமொழி இயங்க இயலாது. வடமொழி தேவமொழியென்று கூறி, தென்சொற்கட்கெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந் தாப் பொய்த்த லாகவும், வலிந்தும் நலிந்தும் பொருளும் பொருட் காரணமுங் கூறும் வழக்கம், இனிப் பயன்படாது. அதை அடியோடு விட்டுவிடல் வேண்டும். பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் தலைமை யாகவும் (Main) வடமொழி கீழ்த்துணையாகவும் (Subsidiary) இருத்தல் வேண்டும். பொதுத் திருக்கோவில் வழிபாடெல்லாம் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். பிராமணரே தமிழ் வழி பாட்டை நடத்தி வைக்கலாம். பிராமணக் குடியிருப்புகளிற் பிராம ணருக்கென்று கட்டிய கோவில்களில் சமற்கிருத வழிபாடு நடத்திக் கொள்ளலாம். முதலமைச்சர், கல்வியமைச்சர், பல்கலைக்கழகத் துணை வேந்தர், தமிழ்த்துறைத் தலைவர், கல்வித்துறை இயக்குநர்கள், கல்வி நிலையங்களில் தமிழாசிரியன்மார், வரலாற்றுத்துறை தொல் பொருட்டுறை ஆசிரியரும் ஆராய்ச்சியாளரும் தலைவரும், ஆகிய அனைவர் பதவிகட்கும், பர். சி. பாலசுப்பிரமணியம், பர். ஔவை து. நடராசன். பர். ச. வே. சுப்பிரமணியம், புலவர் ஆ. முத்துராம லிங்கம் போன்றோரே அமர்த்தப் பெறல் வேண்டும். பரிதிமாற் கலைஞன் போன்றவராயின் பிராமணரும் அமர்த்தப் பெறலாம். ஆங்கிலப்பட்டம் பெற்ற பிற பாட ஆசிரியர்க்குரிய சம்பளமே, புரலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்க்கும் அளிக்கப் படல் வேண்டும். ஆராய்ச்சிப்பட்டங்கட்கும் இடுநூல்களைத் (Thesis) தமிழிலும் எழுதி விடுக்க, அரசும் பல்கலைக்கழகங்களும் இசைவு தரல் வேண்டும். எவ்வகையிலும் தமிழுக்குத் தாழ்விருத்தல் கூடாது. தமிழறியாத வடவரும் தமிழ்ப்பகைவரான ஆரியரும் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகளும் இந்திய நாகரிகம் ஆரியரது என்பர். நடுநிலையாளர்போல் நடிக்கும் ஒருசில வையாபுரிகள், அது ஆரியரும் திரவிடரும் அல்லது பல்வேறு இனத்தார் கூடிவளர்த்த கூட்டு நாகரிகம் என்பர். உண்மையில், அது குமரிநாட்டுத் தமிழன் வளர்த்த தனிநாகரிகமே. தமிழர் என்பார் கோடிக்கணக்கான ஒரு பேரினத்தார் என்றும், ஆரியர் என்பார் விரல்விட்டெண்ணத்தக்க ஒருசிறு கூட்டமான ஆரியப் பூசாரியரே யென்றும், வேறுபாடறிதல் வேண்டும். இரவில் மதியொளி எத்துணை விளக்கமாயிருப்பினும் கதிரொளியின் மறுநிழலாகவே யிருப்பது போன்று, இற்றைச் சமற்கிருத இலக்கியம் எத்துணை விரிவுபட்டிருப்பினும் தமிழ் மூலத்தின் பெருக்கமே என்பதை உணர்தல் வேண்டும். ஆரிய இலக்கியம் எழுதப்பட்டுள்ள சமற்கிருதமும், அதற்கு மூலமான வேதமொழியும், வேதமொழிக்கு மூலமான மேலை யாரியக் கிளையும், தமிழின் திரிபாயிருக்கும்போது, இந்திய நாகரிகம் ஆரியம் என்பது, பேரனே பாட்டனைப் பெற்றான் என்பதொத்ததே. 2. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. ஆங்கிலர் ஆட்சி நீக்கம் வேறு; விடுதலை வேறு; விடுதலை பெற்றதாகக் கருதும் தமிழன், ஆரிய அடிமைத்தனத்தில் ஆழ மூழ்கித் தமிழறிவையும் வரலாற்றறிவையும் பகுத்தறிவையும் இழந்திருப்பதால், தன் ஆரியத் தலைவன் கற்பித்ததையே தானுஞ் சொல்லிக்கொண்டிருக்கின்றான். ஒருவனது இன்பநுகர்ச்சி அல்லது மகிழ்ச்சிப்பேறு, கீழ் வருமாறு அறுவகைப்படும்: (1) உண்மை நுகர்ச்சியின்பம் (Real enjoyment) இது என்றும் உண்மையென்று தோன்றும் அறிவொடு கூடிய ஐம்புல அல்லது அறுபுல நுகர்ச்சி யின்பம். (2) கருதுகோளின்பம் (Fancied pleasure) இது தாழ்ந்ததை உயர்ந்ததென்று கருதிக்கொண்டு இன் புற்றுப் பின்னர் உண்மையறிந்து, வருந்துதற்கேதுவான இன்பம். (3) தொழுவாட்டின்பம் (Habituated pleasure) இது கள்ளும் புகையிலையும் போன்ற பொருளையுண்டு அடிப்பட்ட பழக்கத்தினால் நுகரும் இன்பம். (4) பரிவின்பம் (Sympathetic pleasure) இது தன் உறவினன் அல்லது நாட்டான் அல்லது மதத்தான் அல்லது மொழியான் அல்லது கட்சியான் பெற்ற இன்பத்தை, தனதுமாகக் கருதும் இன்பம். (5) மனமாற்றின்பம் (Indoctrinated pleasure) இது ஒருவருடைய கற்பிப்புத் திறத்தினால் மனப்பான்மை மாற்றப்பட்டவன் உணரும் இன்பம். (6) கட்டாய இன்பஅறிக்கை (Coerced statement of pleasure) இது சொல்லளவாக மட்டுமுள்ள இன்பம்; கட்டாயத்தால் நிகழ்வது. கட்டாயம் இருவகையில் நிகழும். ஒன்று தண்டனை யச்சம்; இன்னொன்று மந்திர மருந்து துயில் மனவசியம். பேராயத் தமிழர் விடுதலையுணர்ச்சி, பரிவினால் அல்லது மனமாற்றினால் விளைந்ததே. t.c.á., திரு.வி.க. முதலிய தமிழறி ஞரும், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைகளை அறிந்தவரல்லார். வ.உ.சி. கப்பலோட்டியதைத் தடுத்தது ஆங்கில ராட்சியால் விளைந்த சிறு தீங்கே. ஆயின், உலகில் முதன்முதற் கலம்புணர்த்து, நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் (புறம். 66) தமிழன் என்பதை மறைத்து, நாவாய் என்னும் கலப்பெயரையும் தமிழென வழங்கவிடாது நௌ என்னும் வடசொற் றிரிபெனத் தடுக்கும் பிராமணியம், பிரித்தானியத்தினுங் கொடியதென்பதை, அவர் அறிந்தாரில்லை. ஆங்கிலர் வருமுன் தமிழ்நாட்டிற் பிராமணியம் எவ்வளவு ஆழ்ந்து வேரூன்றியிருந்ததென்பதையும்,தமிழன் எங்ஙனம் நாய்போல் நடத்தப்பட்டான் என்பதையும் ஆங்கிலராட்சி யின்றேல் இந்தியா ஓராட்சிக்குள் வந்திரா தென்பதையும், அவர் அறிந்தும் உணர்ந்தும் இலர். பண்டைப் பிராமணியக் காலத்தில், திருவாங்கூர் அரசர் போன்றார் ஆட்சியில், இந்தியரே இந்தியாவில் இருப்புப் பாதை அமைத்திருப்பின், தொடர்வண்டி வகுப்புகள் 1ஆவது 2ஆவது, 3ஆவது என்றிராது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்றே ஐவகுப்பாக அமைந்திருக்கும். தமிழ் நலத்தையும் தமிழர் நலத்தையும் கருதாது தந்நலத்தை மட்டுங் கருதுபவரே, தம் பேதைத்தனத்தையும் பேடித்தனத்தையும் மறைத்து, நடுநிலையும் பரந்தநோக்கும் உள்ளவர்போல் நடித்து, இந்தியரெல்லாரும் ஓரினமென்றும் வகுப்பு வேற்றுமை கூடா தென்றும், விளம்பரச் சிறுவர் கத்திச் செல்வதுபோற் சொல்லியும் எழுதியும் வருவர். ஆங்கிலராட்சிக் காலத்தும், தேவாரப் பாடகர் குழாம் பிராமணத் தெரு வழியே செல்லக்கூடாதென்றும், சில பிராமண உண்டிச் சாலைகளில் தமிழர்க்கு எடுசாப்பாடும் இல்லை யென்றும், அரசினர் நடத்தும் மாணவர் விடுதிகளில் பிராமணன் சமைத்த வுண்டியையே பிராமண மாணவரும் தமிழ மாணவரும் வெவ்வேறி டத்தில் உண்ண வேண்டுமென்றும், தமிழர்க்கு நூற்றுமேனி நாற்பத்தைந்து விழுக்காடே அரசியல் அலுவல் அளிக்கவேண்டு மென்றும், தமிழர் தம் அறிவாற்றலால் இம்மையில் எத்துணை முன்னேறினும் தம் பிறப்பை மறுமையில்தான் மாற்றமுடியு மென்றும், கட்டுப்பாடுங் கோட்பாடும் இருந்ததை நோக்கின், மேலை நாகரிகம் புகாப் பண்டைக்காலத்தில் இந்தியத் தொல்லின மக்கள் வாழ்வு எத்துணை இழிந்ததும் இரங்கத்தக்கதுமாயிருந் திருத்தல் வேண்டுமென்பதை, எளிதாய் உய்த்துணர்ந்து கொள்ள லாம். ஆங்கிலன் தமிழனுக்கு மீட்பனாய் வந்தான் என்பதை எவரும் மறுக்கமுடியாது. அவனாட்சியால் பிராமணியம் ஓரளவே நீங்கிற்று. அவன் நீங்கின பின்னும் பிராமணியம் பேரளவாயிருப்பதுடன், இந்தி மணியம் என்னும் மேலுமொரு புத்தடிமைத்தனத்திற்கு இடந் தந்துள்ளது. பேராயத் தமிழர் இந்தியா ஒரு நாடென மயங்கிக்கொண்டு, இந்திப் புத்தடிமைத்தனத்தையும் வரவேற்கின்றனர். இந்தியா பரப்பளவில் இரசியா நீங்கின ஐரோப்பா என்று, முன்னரே இராகொசின் தம் வேத இந்தியா (Vedic India) என்னும் நூலிற் கூறியுள்ளார். இனவகைகளை நோக்கின், இந்தியா ஐரோப்பாவினும் ஆப்பிரிக்காவை ஒத்ததெனத் தெரிய வரும். இத்தாலியர், பிரெஞ் சியர், இசுப்பானியர், போர்த்துக்கீசியர் முதலியோர், ஓரின மொழிகளைப் பேசும் நாட்டினத்தார். ஆங்கிலர், செருமானியர், ஆலந்தர், தேனியர் முதலியோர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ் வேறு நாட்டினத்தார். இரசியர், போலந்தர், செக்கோசுலோவக்கியர் முதலியோர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத் தார். கிரேக்கர் ஒருமொழி பேசும் தனிநாட்டினத்தார். இவரெல் லாருஞ் சேர்ந்து ஆரியம் என்னும் ஒரு பெருங் குடும்பத்தின் கிளை களைப் பேசும் ஒரே பேரினத்தர். பாசுக்கர், அங்கேரியர், இலாப் பியர், துருக்கியர் முதலியோர் ஆரியமல்லாத வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார்; இவரும் ஆரியருஞ் சேர்ந்து ஐரோப்பியர் என்னும் தனிக்கண்டத்தார். இங்ஙனமே, தமிழர் ஒரு தனி நாட்டினத்தார். தெலுங்கர், கன்னடியர், மலையாளியர் முதலியோர் தமிழுக்கினமான திரவிட மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். தமிழருந் திரவிடருஞ் சேர்ந்து தென்மொழியார் என்னும் பேரினத்தார். ஒட்டரர், மராட்டியர், குசராத்தியர், இராசத்தானியர், இந்தியார், பஞ்சாபியர், வங்காளர் முதலியோர் ஆரியமுந் திரவிடமுங் கலந்த வெவ்வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். முண்டாமொழிகளைப் பேசுபவர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ்வேறு மக்கள் வகுப்பார். இவரெல்லாருஞ் சேர்ந்து இந்தியர் என்னும் ஓர் உட்கண்டத்தார். இந்தியரின் நிறமுக வடிவ ஊணுடை நடை பழக்கவழக்க மணவுறவு வேறுபாடுகளை நோக்கின், இந்தியா ஆப்பிரிக்காவையும் ஒக்கும். தமக்கென ஒரு நாடில்லாது இந்தியா முழுவதும் பரவி இந்தியரையெல்லாம் அடிப்படுத்தி, சமற்கிருத வழிபாட்டை எங்கும் புகுத்தியிருப்பதால், தந்நலமாகவும் தமக்கர ணாகவும் இந்தியா ஒரு நாடென்னும் பிராமணக் கூற்றை மேற் கொண்டே, பேராயத் தமிழரும் அடிப்படையில் தம்மைத் தமிழ ரென்றுணராது இந்தியர் எனச் சொல்லிப் பெருமை கொள்கின் றனர். இது ஒரு தமிழன் தன்னை ஆசியன் என்று சொல்லிப் பெரு மைப்படுவ தொத்ததே; ஆட்சி வகையில் மட்டும் வேறுபட்டதாகும். வரலாற்றையும் தமிழ நாகரிகப் பண்பாட்டையும் நோக்கின், பிராமணியத்தையும், இந்திமணியத்தையும் எதிர்ப்பாரே உண்மை யான நாட்டுப் பற்றாளர். அவ்விரண்டையும் ஏற்பவர் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இரண்டகரே (துரோகியரே). தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பேராயத்தாரின் ஆங்கிலராட்சி நீக்கப் போராட்ட மறவரினும், இந்தியெதிர்ப்புப் போராட்ட மறவரே சிறந்தவருந் தெளிந்தவருமாவர். பிராமணர் நிலத்தேவரென்றும், சமற்கிருதம் தேவமொழி யென்றும், நிற அடிப்படையிலும் மொழியடைப்படையிலும் பிரா மணியம் அடிநாளிற் புகுத்தப்பட்டது. இன்று பிராமணர் வெண் ணிறத்தை இழந்துவிட்டதனாலும் தமிழரின் கண் திறந்துவிட்ட தனாலும், அறிவியற்கதிர் இருள் நீக்குவதனாலும், நிற அடிப் படையில் பிராமணர் தம் மேம்பாட்டை நிலைநிறுத்த முடியாமல், மொழியடிப்படையில் முயல்கின்றனர்; தமிழன் பிராமணனுக்கு அடிமைப்பட்டிருப்பது போன்றே, தமிழும் சமற்கிருதத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. அப் பிணிப்பினின்று தமிழை மீட்பின், தமிழனும் மீட்பையடைவான். ஆதலால், தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை என அறிக. பேராயத் தமிழர் வரலாறறியாமையாலும் தம் திரிபுணர்ச்சி யாலும், தாமே விடுதலை மறவரென்றும், நயன்மை அல்லது நேர்பாட்டுக் கட்சியர் (Justice partymen) அடிமையரென்றும், கூறுவர். உண்மையில், முன்னவரே அடிமையரும் தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்ப வருமாவர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பின்னவரே உண்மையான நாட்டுப்பற்றாளரும் உரிமையுணர்ச்சி யரும் விடுதலை மறவருமாவர். பேராயத் தமிழர் இன்றும் தம் அடிமைத்தனத்தை உணர்வதில்லை. அது இன்னும் மிகக் கேடான தாகும். கொடிய நோயாளி ஒருவன் தன் நோயை அறியாதிருப்பின், அது மிகக் கொடிய நிலைமையே யாகும். 3. தமிழரும் பிராமணரும் ஒத்து வாழ்தல் ஆரியர் இந்தியாவிற்குட் புகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்பே, தமிழர்க்கு முழு வளர்ச்சியடைந்த மெய்ப்பொரு ளறிவு மிக்க இரு மதமும் இருந்தன. அவருக்குப் புதுமொழியும் மதமும் இம்மியும் தேவையில்லை. ஆயின், தமிழரொடு தொடர்பு கொண்டபின் பிராமணர் எனப் பெயர் பூண்ட ஆரியப் பூசாரியர், பழந்தமிழ் மக்களின் மதப்பித்தத்தையும் கொடைமடத்தையும் ஏமாளித்தனத்தையும் கண்டு, அவரை என்றைக்கும் அடிப்படுத்தி யாள எண்ணங் கொண்டு, ``உரோமை நகரிலிருக்கும்போது உரோமையர் போல் நடந்துகொள்.'' (“When you are at Rome do as Rome does.”) என்னும் பழமொழிக்கு மாறாக, தமிழரையே தம் விருப்பப்படி நடக்கச் செய்துவிட்டனர். அதற்கு அவர் வகுத்த திட்டங்கள், தமிழரைத் தாழ்த்துவதும் அவர் மதத்தை மாற்றுவதும் அவர் மொழியைத் தாழ்த்திப் படிப்படியாய் ஒழிப்பது மாகும். ஆகவே, தமிழன் தாழ்வே பிராமணன் வாழ்வு என்றும், தமிழின் தாழ்வே சமற்கிருதத்தின் வாழ்வு என்றும் ஆகிவிட்டன. அதனால் ஈரினமும் சமமாக வாழ்தல், புலியும் மானும் ஒரு காட்டுள்ளும், பருந்துங் கிளியும் ஒரு கூட்டுள்ளும், கீரியும் பாம்பும் ஒரு வளைக்குள்ளும் சமமாக வாழ்தல் போலாயிற்று. ஏமாற்று வாழ்வு நீடிக்காது. (“Cheating play never thrives.”) ஒரு குற்றத்தை மறைக்குந்தொறும் குற்றம் பெருகும்; ஓர் உண்மையை மறைக்குந்தொறும் பொய் பல்கும். ``எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும்.'' (“Oil and truth will get uppermost at last.”) இரண்டொரு வையாபுரிகளும் ஒருசில செல்வரும் துணை நிற்பதால், ஏமாற்று வினை நிலைத்துவிடாது. இறைவன் துணை செய்யான். பிராமணப் புலவர் பலர் செய்த தமிழ்த்தொண்டைச் சுட்டி, பிராமணரெல்லாரும் தமிழ்ப் பற்றாளர் என்று நாட்டிவிடமுடி யாது. பிராமணர் தமக்கென நாடும், மொழியுமின்றி, இந்தியாவிற் பல நாடுகளிலுஞ் சென்று தங்கி அவ்வந்நாட்டு மொழியைத் தத்தம் தாய் மொழியாகக் கொண்டு வாழ்கின்றனர். இதனால், வேதம் ஓதுவதிலும் சமற்கிருதத்தை வளர்ப்பதிலும் பிராமண வுயர்வைக் காத்துக் கொள்வதிலும் ஒன்றுபட்டிருப்பினும், தாய்மொழி வகையிலும் வாழிட வகையிலும் வேறுபட்டுள்ளனர். தாய்மொழி யைப் பேசாதும் பேணாதும் ஒருவன் வாழவும், அதிற் புலமை பெறாது ஒருவன் உயரவும் முடியாதாகையால், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழ்ப் புலமை பெறுவதும் சிறந்த தமிழ்நூலியற்றுவதும் அடிப்படையில் தந்நல வினையே என்பதை எவரும் மறுக்கமுடி யாது. ஆதலால், கடமையை அறமாகக் கூறுதல் பொருந்தாது. இனி, பிராமணர் எத்துணைப் பெரும்புலவரேனும், அவருக்கு முதற்பற்று சமற்கிருதத்தின்மீதே யுள்ளது. அதனால், சமற்கிருதத்தைத் தலைமையாகவும் தமிழைக் கீழ்த்துணையாகவுமே கொள்கின்றனர்; இயன்றவிடமெல்லாம் தமிழ்ச் சொற்கட்குத் தலைமாறாகச் சமற்கிருதச் சொற்களையே ஆள்கின்றனர். அதோடு, ஆங்கிலம் முதலிய அயன்மொழிச் சொற்களை மொழி பெயர்ப்பதுமில்லை. இது தனித்தமிழ் மீதுள்ள வெறுப்பையே காட்டுகின்றது. சமற்கிருதச் சொற்களையும் எழுத்துப் பெயர்க்காது வடவெழுத்தொடு தற்சம வடிவில் எழுதுவதே அவர் வழக்கம். வடமொழி தேவமொழியென்னுங் காலம் மலையேறி விட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால், வடமொழியைத் தேவமொழி யெனின், தமிழைத் தேவதேவ மொழியெனல் வேண்டும். ஆகவே, பிராமணர் பழைய செருக்கை விட்டுவிட்டுத் தமிழரொடு உடன்பிறந்தார்போல் ஒன்றி வாழ்வதே தக்கது. அதனாற் பகைமை நீங்கும். பிராமணர் முதலமைச்சருமாவர். தலைமைப் பதவிகளை அவர் தாங்கத் தடையிராது. தகுதிபற்றி வேலை கிடைக்கு மாதலால், பெருந்தொகையான பிராமணர் அரசியல் அலுவல்களைப் பெறவும் வாய்ப்பிருக்கும். பிராமண வுண்டிச்சாலைகள் பற்றியோ, பிராமணர் கோயிற் போற்றியர் (அர்ச்சகர்) ஆதல் பற்றியோ, எதிர்ப்பிருக்காது. தமிழ்நாட்டுப் பிராமணர், இன்று தமிழ்நாட்டாரும் தமிழ் பேசுவோருமா யிருக்கின்றனரே யன்றித் தமிழராயில்லை. பரிதிமாற் கலைஞன்போல் தமிழை ஒரே உண்மையான தாய்மொழியாகக் கொள்ளின், முழுவுரிமைத் தமிழராவர். அதுவரை அயலார் போன்றே கருதப்படுவர். பாரதக் காலத்தையோ இராமாயணக் காலத்தையோ ஆரியர் வந்த காலத்தையோ, பல்லாயிர வாண்டு முன்தள்ளிப் போட்டு விடுவதனால் ஒரு பயனும் விளையாது, தம்பி அகவை பதிவேட்டிற் குறித்திருப்பதினும் மிகுந்த தென்று கணிக்கப்படின், அவனுக்குப் பல்லாண்டு முன் பிறந்த தமையன் அகவை தானே மிகுதலையும், அதனால் தந்தை பாட்டன் முதலிய முன்னோரகவையும் தாமே மிகுதலையும் காண்க. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழியாதலால், எந்த வானநூற் கணிப்பும் அதன் முதன்மை யைக் கடுகளவுந் தாக்கா தென்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க. இனி, பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையார் திருமணம் பொருத்தமில்லதெனக் கணித்த அற்றைச் சென்னைத் தலைமைக் கணியர் தவற்றையும், கோவலன் புகாரினின்று மதுரை சென்ற காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டென்று சாமிக்கண்ணுப் பிள்ளை தவறாகக் கணித்ததை, கி.பி. 2ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர தீட்சிதர் திருத்தியதையும், நோக்குக. ஊமைப்போர் குலவியல், மொழியியல், மதவியல், பொருளியல் ஆகிய நால் துறையிலும், பிராமணர்க்குந் தமிழர்க்கும் இடையே நடந்துவரும் ஊமைப்போர் வரவர வலுத்துவருவது, இருவகுப்பாரும் அறிந்ததே. பிராமணர் தம் முன்னோரின் ஏமாற்றுக்கலையை அறவே விட்டு விட்டுத் தமிழருடன் ஒன்றி, உண்மையான தமிழராக மாறி நாட்டிற் கும் மொழிக்கும் உண்மையாக ஒழுகி வருவதே அறிவுடைமையாம். நெல்லை அருளூண் வெள்ளாளரும் வெள்ளாண் முதலி யாரும் வெள்ளாண் செட்டியாரும் அவர்போன்ற பிறரும், பிராம ணர்க்கு எவ்வகையிலும் இம்மியுந் தாழ்ந்தவரல்லர். குலத்தில் ஒன்றா விடினும் மொழியில் ஒன்றுவது இன்றியமையாததாம். 4. தமிழர் ஒற்றுமை எந்த நாடும் ஒற்றுமையின்றேல் முன்னேறாது ஒழிந்துபோம். நயன்மைக் கட்சிக் கொள்கையினின்று திராவிடர் கழகம் தோன்றிற்று. திராவிடர் கழகத்தினின்று திராவிடர் முன்னேற்றக் கழகம் கிளைத்தது. திராவிடர் முன்னேற்றக் கழகத்தினின்று, அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் பிரிந்து வலுத்து வருகின்றது. தி.மு.க.வும் அண்ணாதுரையார் தோற்றுவித்ததே யாதலால், அதுவும் அ.தி.மு.க.வே. அவர் காலத்தில் அவர் பெயர் அவர் தோற்றிய கட்சிப் பெயரோடு சேர இடமில்லை. ஆயின், அவர் காலத்திற்குப்பின் இடமுண்டு. _thÆu« M©L MÇa¤ jilahš Kl§»¡ »lªj jÄG« jÄHU« K‹ndwî«, ïªâia tleh£o‰F¤ Ju¤jî« jÄH® x‰Wik ï‹¿aikahjjhjyhš, â.f., â.K.f., அ.தி.மு.க. ஆகிய முக்கட்சியும் உடனே ஒன்றாதல் வேண்டும் அல்லது ஒன்றுசேர்தல் வேண்டும். கட்சித் தலைவர் இனநலம் நோக்கித் தத்தம் பிணக்கை விட்டுவிடுதல் வேண்டும். இங்கிலாந்திலுள்ள மூவேறு கட்சிகளும் தத்தம் கொள்கை குறிக்கோளில் முற்றும் அல்லது மிகவும் வேறுபட்டிருப்பினும், மொழியென்னும் ஒரு செய்தியில் ஒரு கட்சிபோன்றே இயங்கும். அத்தகைய பண்பாட்டையே, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அல்லாத தமிழ்நாட்டுக் கட்சிகளும் மேற்கொள்ளல் வேண்டும். தமிழைப் போற்றாத கட்சி தமிழர் கட்சியுமாகாது; தமிழ்நாட்டுக் கட்சியுமா காது. 5. வரிசை யறிதல் அரசன் அல்லது ஆட்சித்தலைவன் கலைஞர், புலவர், பாவலர், அறிஞர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பணித்திறவோர் முதலியோர்க்குப் பரிசளிக்கும்போதும் பட்டம் வழங்கும்போதும் வேறு சிறப்புச் செய்யும்போதும், அவரது தகுதியுந் தரமுமாகிய வரிசை யறிந்து செய்தல் வேண்டும். பரிசளித்தல் எளிது; வரிசையறிந் தளித்தல் அரிது. ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மாவண் டோன்றல் அதுநற் கறிந்தனை யாயின் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டேம் (புறம். 121) என்று, கபிலர் மலையமான் திருமுடிக்காரியை நோக்கிப் பாடினார். இவ் வேண்டுகோள் எல்லா ஈகையாளர்க்கும் ஏற்கும். தமிழர் வழிகாட்டியருள் திருவள்ளுவர்க்கு அடுத்தவர் மறை மலையடிகளே; சுப்பிரமணிய பாரதியா ரல்லர். ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்த - நிறை மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான். இது தொன்மக் கதை. வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு ............................................... வந்தே மாதரம் வந்தே மாதரம். இது அசுணமாவிற்கு முன்பு இன்னியாழெழீகிப் பின்பு வன்பறையறைவது போன்றது. செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன். இதை இராசகோபாலாச்சாரியார் போன்றாரும் ஒத்துக்கொள்ளார். ஓம் சக்தி சக்தி சக்தி யென்று சொல்லு இத்தகைய வடசொற் கலப்பு தமிழ்ப்பாட்டிற்கு ஏற்காது. ஆரியன் என்ற சொல்லும் உணர்ச்சியும் ஆங்காங்கு ஓங்கித் தோன்றுகின்றன. பாரதியார் பாடல்களுட் பெரும்பாலன பிராம ணருக்கும் பேராயத்தாருக்குமேயேற்கும். புலவருக்குள், ஆரியத்தையும் இந்தியையும் எதிர்த்துத் தமிழைப் போற்றும் வாய்மைக் கொள்கையரையும்; அவ்விரண் டையும் ஏற்றும் எதிர்க்காதும் தமிழைக் காட்டிக்கொடுக்கும் அல்லது பொருளீட்டும் வையாபுரிகளையும் வணிகப் புலவரையும் பிரித்தறிதல் வேண்டும். பெரும்புலவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் வல்லவர். பேரா. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரைவேந்தர்; சிந்தாமணிச் செல்வர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை இலக்கணப் புலவர்; மயிலை. சீனி வேங்கடசாமி வரலாற்றாராய்ச்சியாளர். பாவருள் இசைப்பாட்டிசைப்பாரும் செய்யுள் செய்வாரும் வெவ்வேறு. செய்யுள் செய்வாருளுள்ளும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் வாழ்விற்கும் ஏற்றவாறு பல்வகைப் பனுவல் இயற்றுவாரும் காதற் பாட்டொன்றே பாடுவாரும் வெவ்வேறு. கலைஞர்க்குப் பரிசளிக்கும்போது, தகுதியை மட்டுமன்றித் தேவையையுங் கவனித்தல் வேண்டும். அடிக்கடி இசையரங்கு நிகழ்த்தி ஆயிரக் கணக்காகப் பொருள்பெறும் மிடற்றிசைஞர்க்குப் பொற்றாமரையும், அங்ஙனமே, நடவரங்கு நிகழ்த்திப் பெரும் பொருள் பெறும் நடனியர்க்குத் தலைக்கோலும் வழங்கினாற் போதும். இயல் இசை நாடகம் மூன்றும் முத்தமிழ் எனப்படுதலாலும், இயலில் தேர்ச்சி பெறவும் மதிநுட்பமும் நெடுங்கால வுழைப்பும் வேண்டியிருத்தலாலும், பரிசளவில் அல்லது சிறப்புச் செய்யும் வகையில், வேறுபாடின்றி, முத்தமிழ்ப் புலவரையும் சமமாகவே கருதுதல் வேண்டும். மிடற்றிசை வாய்ப்பாட்டு. 6. இந்து மதத்தினின்று தமிழ் மதத்தைப் பிரித்தல் இந்துமதம் என்பது ஒரு தனி மதமன்று. தமிழர் மதம் இரண்டும் ஆரியர் படைத்துக்கொண்ட பிரம வணக்கமுங் கலந்த கலவையே இந்துமதம். சிவமதம் (சிவனியம்), திருமால்மதம் (மாலியம்) இரண்டும் தூய தமிழர் மதங்கள். இவை முறையே, குறிஞ்சிநிலச் சேயோன் வணக்கத் தையும் முல்லைநில மாயோன் வணக்கத்தையும் மூலமாகக் கொண்டவை. சமணமும் புத்தமும் அல்லது கிறித்தவ மும் இசலாமும் போல, இவ்விரண்டும் முற்றும் வேறுபட்டவை. திருவானைக்காச் சிவனடியார் திருவரங்கஞ்சென்று திருமாலையும், திருவரங்கத் திருமாலடியார் திருவானைக்கா சென்று சிவனையும் தொழார். சிவனும் திருமாலும் தனித்தனி முத்தொழிலிறைவன் என்பதே, இவ்விரு மதக் கொள்கையும். ஆரியப் பூசாரியர் தமிழ மதங்களை ஆரியப்படுத்தும் பொருட்டு, இறைவன் முத்தொழிலைத் தனித்தனி பிரித்து, தாம் படைத்துக் கொண்ட நான்முகனைப் படைப்புத் திருமேனியென் றும், திருமாலைக் காப்புத்திருமேனியென்றும் வகுத்து, முத்திரு மேனிக் கொள்கையைத் தோற்றுவித்துவிட்டனர். ஆயினும், இது இன்றும் புராண ஏட்டளவில் உள்ளதேயன்றி நடைமுறையிற் கைக்கொள்ளப்படவில்லை. தமிழர் நான்முகனை எங்கேனும் வணங்குவது மில்லை. ஆரியர் இந்து மதத்தில் தம் சிறுதெய்வ வணக்கத்தையும் பல தெய்வ வணக்கத்தையும் வேள்வி வளர்ப்பையும் புகுத்தியிருப் பதனாலும், பிராமணப் பூசாரியரைக் கொண்டு சமற்கிருதத்திலேயே வழிபாட்டை நடத்துவதனாலும், இதனால் தமிழுக்கு இழிவும், தமிழர்க்கு இழிவோடு பிழைப்பின்மையும் நேர்வதனாலும், தமிழர் தம் மதத்தைத் தூய்மைப்படுத்தி ஆரிய அடிமைத்தனத்தினின்று விலகிக்கொள்வதே தக்கதாம். ஆதலால், இறைவனைச் சிவன் என்னும் பெயரால் வழிபடுபவன் தன்னைச் சிவனியன் (சிவமதத்தான்) என்றும், திருமால் என்னும் பெயரால் வழிபடுபவன் மாலியன் (திருமால் மதத்தான்) என்றும், சொல்லல் வேண்டும். பொதுப்படச் சொல்லின், தென் மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்றே சொல்ல வேண்டும். இந்து என்பது ஆரிய அடிமைத்தனத்தையே குறிக்கும். 7. வண்ணனை மொழிநூல் விலக்கு மேலை மொழிநூலார், தமிழின் தொன்மை முன்மை யறியாது சமற் கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்து மொழிமூலத்தை அறிய முடியாது முட்டுண்டு, இயற்கைக்கும் உண்மைக்கும் உத்திக் கும் மாறாக, வரலாற்றுத் தொடர்பை அறவே விலக்கி அறிவியன் முறைப் படாததும் நிறைவற்றதுமான வண்ணனை மொழிநூல் என்னும் புது மொழிநூல் முறையைத் தோற்றுவித்துள்ளனர். இது பர்.தெ.பொ.மீ. யால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் புகுத்தப்பட்டுள்ளது. இது பழந்தமிழிலக்கண நூலார் இட்ட செந்தமிழ் வரம்பு மீறி அவர் விலக்கின கொடுந்தமிழையும் கொச்சைத்தமிழையும் ஏற்றுக் கொள்வதனாலும், மொழிகளின் கொடிவழி முறையை அறிய முடியாவாறு வரலாற்றை விலக்குவதனாலும், தமிழின் வளர்ச்சிக்கு நிலையான வலுத்த முட்டுக்கட்டை யிடுவதனாலும், சொற்களின் வேரையும் மூலப்பொருளையும் காணும் முயற்சியை அறவே தடுப்பதனாலும், தமிழ்நாட்டு முப்பல்கலைக் கழகங்களினின்றும் உடனே விலக்கப்படற் பாலதாம். அதிகாரிகள் இதை உடனடியாய்க் கவனித்து நீக்கி, இன்னும் ஓராண்டிற்குள் கால்டுவெல் ஐயர் காலத்து வரலாற்று மொழிநூலை மீண்டும் புகுத்தாவிடின், மாணவர் வாயிலாக முழு வெற்றி பெறும்வரை வலுத்த கிளர்ச்சி நடைபெறும் என்பதை இதனால் அறிவிக்கின்றேன். 8. இந்தியொழிப்பு (1) இந்தியைப் புகுத்திய சூழ்நிலை எல்லா வகையிலும் நலம்பயப்பதும் இந்திய ஓராட்சிக்கும் தன்னாட்சிக்கும் வழிகோலியதும் ஈடிணையற்றதுமான, ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியா யிருக்கும்போது, பொதுமொழி வினாவிற்கே இடமின்மை. திடுமென்று `விடுதலை' (ஆங்கிலராட்சிநீக்கம்) கிடைத்ததால், தேசமெங்கும் மருட்சியும் மகிழ்ச்சியும் மலிந்து, எதிர்க்கட்சி களெல்லாம் அடங்கியொடுங்கி, பேராயத்தலைவர் எது செய்யினும் எதிர்ப்பிற் கிடமில்லா திருந்தமை. தமிழரும் திரவிடருமான தென்னாட்டுப் பேராயத்தாரெல் லாம் ஆரிய அடிமைத்தனத்தில் ஆழ்ந்துள்ளமை. (2) இந்தியைப் புகுத்திய முறைகேடு `விடுதலை' பெறுமுன் இந்தியைப்பற்றி முடிபு செய்யாமை. அரசியற் கட்சித் தலைவர் கல்வித்துறையிலும் மொழித்துறை யிலும் அடாது தலையிட்டமை. கல்வியதிகாரிகள் மொழியறிஞர் ஆகியோரின் கருத்தைக் கேளாமை. பொதுமொழித் திட்டக்குழுவில் மொழிக்கொரு படிநிக ராளியைச் (Representative) சேர்க்காமல், இந்திக்குப் பலவுறுப்பி னரைச் சேர்த்துக் கொண்டமை. தமிழுக்கு மறைமலையடிகளையேனும் சோமசுந்தர பாரதி யையேனும் சேர்க்காமை. தொடர்ந்து நடைபெற்ற முக்கூட்டத்திலும் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் சரிசமக் குடவோலை கிடைத்தும், குழுத் தலைவர் நடுநிலை திறம்பித் தம் குடவோலையை இந்திக்கிட்டமை. (3) இந்தியின் தகுதியின்மை இக்கால அறிவிய லிலக்கியத்தோடு, வடமொழியிலும் தமிழி லுமுள்ள பண்டையிலக்கியமு மின்மை. சொல்வளமில்லாச் சிறுமொழியும், மிகத் திரிந்த கொச்சை மொழியும், வளர்ச்சிக்கேற்ற வேர்ச்சொல் இல்லாமொழியும், வடஇந்திய ஒருநாட்டு மொழியும், தென்னாட்டார்க்கு ஆங்கிலம் போன்றே அயன்மொழியு மாயிருத்தல். (4) ஆங்கிலம் அயன்மொழியன்மை இந்தியருள் ஒரு வகுப்பாரான ஆங்கிலோ இந்தியரின் தாய் மொழியாயிருத்தல். நூற்றிற்கெழுபது கிரேக்க இலத்தீனமும், பத்து ஆங்கில சாகசனி யமும், பத்துத் தமிழும், பத்து ஏனை மொழிகளுமாக ஏறத்தாழ எல்லா மொழிச் சொற்களையுந் தன்னகத்துக்கொண்டு உலகப் பொதுக் கலவை மொழியாயிருத்தல். தமிழுக்கு மிக நெருக்கமா யிருத்தல். (5) ஆங்கிலத்தின் இன்றியமையாமை இக்கால அறிவியல் தோன்றியதும் வளர்ந்துவருவதுமான மொழியாயிருத்தல். மூவிலக்கத்திற்குமேல் ஐயிலக்கம் வரை மதிப்புள்ள சொற் களைக் கொண்டு, இற்றை மாந்தன் நுண் கருத்துகளையெல்லாம் தெரிவிக்கும் மாபெரு வளமொழியாயிருத்தல். இன்று உலகப் பொதுமொழிகளுள் ஒன்றாயும், எதிர்காலத் தில் ஒரே உலகப் பொதுமொழியாய் வழங்கக் கூடியதுமாயிருத்தல். இந்தியப் பல்கலைக்கழகங்களின் தொடர்பு மொழியாயிருத்தல். இந்திய வொற்றுமைக்கும் இந்தியரின் வெளிச்செலவிற்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிழைப்பிற்கும் இன்றியமையாத மொழியாயிருத்தல். (6) இந்தியால் வருங்கேடு இரண்டாந்தரக் குடிவாணர் நிலை, இந்தியார்க்கு ஏனையர் என்றும் அடிமைப்பட்டிருத்தல், மாணவர்க்கு மும்மொழிக் கல்விச் சுமை, தமிழாங்கிலம் மட்டுங் கற்றவர்க்கு வேலையின்மை முதலியன. (7) இந்தியார் ஏமாற்று இந்தியைத் திணிக்கமாட்டோம் என்பதும், ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்பதும், மும்மொழித் திட்டத்தையே யாமுங் கடைப் பிடிப்போம் என்பதும் துணிச்சலான முதல்தர ஏமாற்றே. இந்தியாரின் மும்மொழித்திட்டம் பிறமொழியார்க்கே; தாம் இந்தியும் ஆங்கிலமும் ஆகிய இரு மொழித்திட்டமே மேற் கொள்வர். ஆங்கில அறிவின்றி இக்காலம் வாழ இயலாததலால், இந்தியை இந்தியா முழுவதும் புகுத்தும்வரை, ஆங்கிலத்தை மறை முகமாகவும் அதன்பின் வெளிப்படையாகவும் கற்பர். (8) நேரு உறுதிமொழியும் நீலியுறுதி மொழியும் ஒன்றே நேரு உறுதிமொழி, இந்தித் திணிப்புப் பிந்திநிகழும் என்பதே யன்றி நீக்கப்படும் என்பதன்று. இது மும்மொழித் திட்டத்தை மேற் கொண்ட திரவிட நாடுகட்கே ஏற்கும்; இருமொழித் திட்டத்தைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஏற்கவே ஏற்காது. ஆதலால் அது தனித்தே உடனடியாக முழுவலிமையுடன் இந்தித் தொடர்பை எதிர்த் தொழித்தல் வேண்டும். தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று சொன்ன வனுக்கு, ஒருகிழமை பொறுத்துத் தூக்குவோம் என்பது நன்மை பயக்கும் விடையன்று. (9) தமிழ்நாட்டரசின் கடமை அரசினர் அலுவலகமாயினும் தனியார் அலுவலகமாயினும், பெயர்ப் பலகைகளில் தமிழும் ஆங்கிலமுமன்றி இந்திச்சொல் இருத்தல் கூடாது. தமிழ்நாட்டில் வழங்கும் அஞ்சற் படிவங்களும் அட்டை உறை முத்திரைகளும் தமிழாங்கிலச் சொற்களையே கொண்டிருத் தல் வேண்டும். சென்னை மாநகரிலுள்ள தென்னிந்திய இந்திப் பரப்பற் கழகம் தமிழுக்குத் தீங்கு விளைத்துவரலால், உடனே தமிழ் நாட்டினின்று நீக்கப் படல் வேண்டும். (10) இருமொழித் திட்டம் கல்வித்துறையில் அடிமுதல் முடிவரை இருமொழித் திட்டத் தையே கடைப்பிடித்தல் வேண்டும். கல்விநேரமல்லாத வேளை யிலும், கல்வி நிலையங்களில் இந்தி கற்பிக்கப்படல் கூடாது. இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவரைத் தமிழ்ப் பகைவ ராகக் கொண்டு, நாட்டிரண்டகக் குற்றத்திற்குரிய தண்டனையிடல் வேண்டும். தமிழ்நாடு போன்றே திரவிடநாடுகளும் இருமொழித் திட்டத்தை மேற்கொள்ளத் தூண்ட வேண்டும். 9. தமிழ்ப் பல்கலைக்கழகம் மதுரை கரந்தை நெல்லை முதலிய நகரத் தொடர்புள்ள தமிழ்க் கழகங்களும், தமிழ்நாட்டு அரசு தமிழ் வளர்ச்சியாராய்ச்சிக் கழகமும், அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழகமும், உலகத் தமிழ்க் கழகமும், பிறவும் ஒன்றுசேர்ந்து பழைய பாண்டியன் தமிழ்க்கழகம் போல் இயங்குதல் வேண்டும். உண்மையான தமிழ் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு ஆகிய மூவரலாறும் விரிவாக எழுதப் பெறல் வேண்டும். இசை, நாடகம், கணியம், ஐந்திறம் (பஞ்சாங்கம்), சிற்பம் முதலிய பழந்தமிழ்க் கலைகளைத் தக்க அறிஞரைக் கொண்டு தனித்தமிழில் எழுதுவிக்க வேண்டும். முருகன் வழிபாடு, சிவன் வழிபாடு, திருமால் வழிபாடு, அம்மன் வழிபாடு ஆகிய நால்வகை வழிபாட்டு முறைகளையும், அவற்றிற்குரிய போற்றி(அர்ச்சனை)களையும் தனித்தமிழில் தொகுத்து, ஓதுவாரைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு நடத்துவித்தல் வேண்டும். தமிழையும் 21 திரவிடமொழிகளையும் ஆராய்ச்சி முறையிற் கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். தொல்காப்பியவுரைகள் பலவிடத்து வேறுபட்டும், சில விடத்து வழுவியும், இக்கால மாணவர்க்கு எளிதாய் விளங்காத நடையிலும், இருப்பதால், இலக்கணப் பெரும் புலவரையெல்லாம் ஒன்றுகூட்டி, ஒரே புதிய திருந்திய விளக்கமான தெளிநடை விரிவுரை வரைவிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். மேலையறிவியல் கம்மியக் குறியீடுகளை யெல்லாம் மொழி பெயர்க்கவும், அவ்வப்போது வேண்டிய புதுச்சொற்களைப் புனையவும், அறிவியல் திறவோரும் தனித்தமிழ் வல்லுநரும் கொண்ட ஒரு நிலையான குழுவை அமர்த்தல் வேண்டும். தமிழ்மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு வரலாறு முதலியவற்றை உலகெங்கும் பரப்புமாறு, ஒரு சுற்றுலாக் குழுவையும் தோற்றுவித்தல் வேண்டும். தாளைச் சிக்கனமாகச் செலவிடவும், வழுவுள்ளனவும் பயனற்றனவுமான வெளியீடுகளைத் தடுக்கவும், பொத்தகக் குழு வொன்றும் இருப்பது நல்லது. ஐந்திணை நிலமும் அறுதிணைப் போரும் பெயர்பெறக் காரணமாயிருந்த பூச் செடி கொடி பூண்டு மரங்களை, ஒரு பூங்காவில் வளர்த்துப் பொருட்காட்சியகமாக்கலாம். முப்பு (மூவுப்பு) முறை தெரிந்த தமிழ் மருத்துவர் யாரேனு மிருப்பின், தேடிக் கொணர்ந்து போற்றிக் காக்கலாம். (10) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஒரு மொழியின் பெருமையை அதன் சொல்வளம் காட்டும். ஒரு மக்கள் வகுப்பாரின் நாகரிகத்தை அவர் இலக்கியங் காட்டும். இலக்கியமெல்லாம் சொல்லால் ஆக்கப்படுவதால், ஒரு மொழியின் சொற்களையெல்லாந் தொகுத்துக் கூறும் அகரமுதலி அதன் சொல் வளத்தையும் அதிலுள்ள இலக்கிய வளத்தையும் ஒருங்கே காட்டும். இன்று தமிழிலுள்ள பெரியகரமுதலி தமிழ்ப் பகைவரால் தொகுக்கப்பட்டு, அடிப்படைத் தமிழ்ச்சொற்களை யெல்லாம் வட சொல்லென்று காட்டியிருப்பதால், தென்சொற்கட் கெல்லாம் பொருள் கூறுவதோடு, வேர்ப்பொருள் காட்டித் தமிழென விளங்கும் சொற் பிறப்பியல் அகரமுதலி இன்றியமையாத தாகின்றது. இதற்கு ஒரு கோடியுருபா வேண்டினும் ஒதுக்கித் தொகுப்பிப்பது, தமிழரசின்மேல் விழுந்த தலையாய கடமையாகும். பின்னிணைப்பு 1. புரட்சி தமிழ் சமற்கிருதப் பிணிப்பினின்றும், தமிழன் ஆரிய அடிமைத் தனத்தினின்றும் விடுதலை பெறும்வரை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழன் முன்னேற்றத்திற்கும் இடமின்மையால், தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் என்று பாடினார் புரட்சி பாவேந்தர். ஆயின், அது போதாது. தமிழாய்ந்த தறுகண்மைத் தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச் சாய் வருதல் வேண்டும். பேதைக்கில்லை ஊதியம்; பேடிக்கில்லை படைக்கலம்; அடிமைக்கில்லை விடுதலை; அஞ்சிக்கில்லை அடைக்கலம். உலக வரலாறு (World History), குமுகவியல் பண்பாட்டியல் மாந்தனூல் (Social and Cultural Anthropology), ஒப்பியன் மொழிநூல் (Comparative Philology) என்னும் மூவறிவியல் தமிழ் விடுதலையைச் சார்ந்திருப்பதால், தமிழியக்கத்தை மொழிவெறி யென்றோ இனவெறி யென்றோ எவருஞ் சொல்லமுடியாது. ஆயினும், ஆராய்ச்சியில்லாக்கு உண்மையை அறிவுறுத்தற் பொருட்டு, பின்வருமாறு ஒரு பட்டிமன்றம் நிகழலாம். மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார் (கருணாநிதியார்), மாண்புமிகு கல்வியமைச்சர் நெடுஞ்செழியனார், அரசவயவர் அ. முத்தையாச் செட்டியார், தவத்திருக் குன்றக்குடி யடிகள், அருட்டிரு அழகரடிகள், கவியோகியார் சுத்தானந்த பாரதி யார், அருட்டிருக் கிருபானந்த வாரியார் (அருளின்ப வாரியார்), உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, பெரும்புலவர் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பர். (Dr.) பாலசுப்பிரமணியனார், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. உலகநம்பியார் (விசுவநாதம்) முதலிய நடுவர் முன், உலகம், காலம், சமையம், தானம், தெய்வம், நாடகம், பள்ளி, பூதம், முகம், வட்டம் முதலிய நூறு வடமொழி தென்மொழிப் பொதுச்சொற்களைத் தென்சொல்லென்று நாட்டுவேன். சமற்கிருதப் பண்டிதர் அதை மறுத்தல் வேண்டும். நடுவர் பெரும்பான்மை முடிபே தீர்ப்பாகும். 2. இலக்கியப் பாகுபாடு புலவியம் (Art) கலை நூல் தொழிற்கலை கவின்கலை அறிவியல் கம்மியம் (Science) (Technology) இயற்கை செயற்கை உயர்திணை அஃறிணை விரவுத்திணை பூதநூல் வேதிநூல் உயிரி உயிரிலி 3. மொழிபற்றிய சில வுண்மைகள் (1) மொழிமாந்தன் அமைப்பே உலக மொழிகளுள் எதுவும் இறைவன் படைத்ததன்று. இயற்கை யொலிகளான கிளவிகளும் செயற்கை யொலிகளான சொற்களுமாக, ஒவ்வொன்றாய்ப் பையப் பையப் பல்லாயிர மாண்டுக் காலஞ் செலவிட்டு, ஒரு மக்கட் கூட்டத்தார் கூட்டுறவால் ஓர் ஒழுங்குபட அமைத்துக்கொண்ட ஒலித்தொகுதியே மொழி. உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் முதல் நாலாயிரம் வரை வெவ்வேறு தொகையினவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. மாந்தரெல்லாரும் ஓரிணைப் பெற்றோரினின்று தோன்றிப் பல்கி வேறுபட்டிருத்தல் போன்றே, மொழிகளும் ஒரே மூல மொழியி னின்று திரிந்து பல்வேறு வகையில் வேறுபட்டிருத்தல் வேண்டும். (2) கருத்துநிகழ்விற்கு மொழி தேவையில்லை நிலைத்திணை தவிர மற்றெல்லா உயிரினங்கட்கும் கருத் துண்டு. மொழிபேசாத ஊமையரும் பேசுவார் போன்றே கருதுவர். சிறப்பாகக் கட்டபொம்மன் இளவலை நோக்குக. உணர்ச்சி, விருப்பு, சூழ்வு, துணிபு, மகிழ்ச்சி, இரங்கல், நினைப்பு என்னும் எழுவகையே கருத்தின் இயல்கள். இவற்றிற்கு மொழி தேவையில்லை. (3) தாய்மொழியுங் கற்கப்படுவதே ஒரு குழவியை அரையாண்டிற்குள் தாயினின்று பிரித்து மக்கள் மொழித் தொடர்பில்லாது வைத்து வளர்த்தால், எத்தனை யாண்டாயினும் எம்மொழியும் பேசாது. ஒரு தமிழக் குழவியைப் பிறந்தவுடன் ஓர் ஆங்கில மாதிடம் வளர்க்கவிட்டால், அது நாளடைவில் ஆங்கில மொழியே பேசும்; ஓர் அரபி மாதிடம் வளர்க்கவிட்டால், வாயமைப்பு நுண்வேறு பாட்டால் ஒலிப்பு முறையிற் சற்று இடர்ப்படினும், அரபி மொழியே பேசும். ஒவ்வொரு பிள்ளையும், குழந்தைப் பருவத்திற் பெற்றோரி டமும், பிள்ளைப் பருவத்திற் பெற்றோர் உற்றோரிடமும், பையற் பருவத்திற் பெற்றோர் உற்றோர் மற்றோரிடமும், ஒவ்வொரு சொல்லாக முயற்சி வருத்தமும் வினையுணர்ச்சியு மின்றிக் கற்றே தன் தாய்மொழியைப் பேசப் பயில்கிறது. தாய்மொழியை நன்கு பேசக் கற்றபின்பும், அதிற் பேசுவதை நிறுத்திவிட்டுப் பல்லாண்டு அயன்மொழியிலேயே பேசிவரின், தாய்மொழிப் பேச்சாற்றால் மிகக் குறையும். (4) மொழிவாழிடம் நாவே மொழியென்பது, ஒரு விலங்கும் பூதமும் போன்று மக்கட்கு அப்பாற்பட்ட ஓர் உருவமன்று. ஒரு மக்கள் வகுப்பார் தம் கருத்து களைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வாயிலாகப் பயன்படுத்தப்படும் ஒலித் தொகுதியே மொழி. ஒலி நிகழ்வது வாயில். ஆகவே, மொழி வாழிடம் நாவே. மொழிவலர் நாவலர். மொழித் தெய்வம் நாமகள். ஒரு சொல்லை வழங்காவிடின், அது ஒலியிழக்கும். அதனால் இறந்துபடும். அது இலக்கியத்தில் எழுதப்படாவிடின், பிணம்போற் கிடப்பதுமின்றி மறைந்தொழியும். பல சொற்கள் ஒலியிழப்பின் ஒரு பகுதியும், எல்லாச் சொற்களும் ஒலியிழப்பின் முழுவதும், ஒரு மொழியழியும். ஒருமொழி ஆட்சிமொழியாயின், பொதுமக்கள் அதன் சொற்களையே ஆள விரும்புவர்: அதனால், இந்தியால் தமிழ் கெடாது என்று பேராயத் தலைவர் சொல்வது பிதற்றலே. ஆங்கிலம் ஆட்சிமொழியானது தமிழில் இல்லாத அறிவியல் இலக்கியச் சிறப்பினாலேயே. அவ் வியல்பு இந்திக்கில்லை. மேலும், ஆங்கிலர்க்குத் தமிழை யொழிக்க வேண்டும் என்னும் குறிக்கோ ளில்லை. வடமொழியார்க்கும் இந்தியார்க்கும் அஃதுண்டு. மொழியென்பது உண்மையில் ஒலித்தொகுதியே. மக்கள் அறிவுங்கருத்தும் சேய்மையார்க்கும் பிற்காலத்தார்க்கும் பயன் படுமாறு, மொழியின் ஒலியுறுப்புகளைக் கட்புலனாகிய வரிவடிவில் எழுதிக்காட்டுவதே இலக்கியம் என்னும் எழுத்துமொழி. ஆகவே, மக்களின்றிக் கருத்தில்லை; கருத்தின்றி ஒலியில்லை; ஒலியின்றி வரிவடிவென்னும் எழுத்தில்லை; எழுத்தின்றி எழுதப்பட்ட இலக் கியமில்லை. ஆகவே, ஆரியவேதம் மாந்தனாலும் இறைவனாலும் இயற்றப்படாது தானே தோன்றிற்றென்றும், மரைக்காடு என்னும் ஊர்ப் பெயரை மறைக்காடு என்று மாற்றி, வேதங்கள் வழிபட்டுத் திருக்காப்புச் செய்த இடமென்றும், கூறி மக்களை யேமாற்றுவது, துணிச்சலான பொய்யும் கடுந் தண்டனைக்குரிய குற்றமுமாகும். (5) சமற்கிருதம் இலக்கிய மொழியே இந்திய ஆரியர் மொழி வழக்கற்றபின் எழுந்த வேத இலக்கிய மொழி தமிழொடு கலந்துற்ற விரிவே சமற்கிருதம். அது ஒருகாலும் பேசப்பட்டதன்று. ஆதலால், அது பிறந்ததுமில்லை; இறந்தது மில்லை; செயற்கையாகப் புனையப்பட்ட பாவை போன்றதே. இதை மேலையர் இனி அறிவர். (6) எல்லா மொழியும் கடன்கொண்டு வளர்ச்சி பெறா உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. கடிவாளமுஞ் சேணமும் இட்டாலும் கழுதை குதிரையாகாது. ஒரு மொழி வளர்ச்சியடைய, ஏற்கெனவே சொற்பெருக்கும் வேர்ச்சொல் வளமுங் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது, ஆங்கிலம்போற் புதுப்புனைவாளர் மொழியாயிருத்தல் வேண்டும். இரண்டுமில்லா இந்திபோன்ற இந்திய மொழிகளெல்லாம் ஆங்கிலம்போல் அறிவியல் மொழிகளாகப் பண்படுத்தப்பட வேண்டுமென்று, அளவிறந்து பொதுமக்கள் பணத்தைச் செலவிட்டு, ஆங்கிலத்தை யொழிக்கப் பார்க்கும் மூடக் கொள்கையையும் முட்டாள்தனத்தை யும், பகடித் தனமாய்ப் பழித்துக்காட்டத் தென்னாலியிராமன் போன்ற திறமிக்க நகையாண்டி நாட்டிலில்லை. (7) செந்தமிழும் நாப்பழக்கம் தாய்மொழியில் தேர்ச்சி பெறுதற்கே பேச்சுப் பழக்கம் வேண்டு மெனின்,அயன்மொழியில் திறம்பெற அதன் இன்றி யமையாமையைச் சொல்லவேண்டுவதில்லை. ஆங்கிலங் கற்கும் மாணவர்க்கு இலக்கணங் கற்பித்தல் மட்டும் போதாது; பேச்சுப் பயிற்சிக்கும் போதிய வாய்ப்பளித்தல் வேண்டும். 4. தமிழ் எழுத்து மாற்றம் ஆரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையடைவதும், இந்தித் திணிப்பைத் தடுப்பதும், பிறவிக்குலப் பிரிவினையை ஒழிப்பதும், ஒற்றுமை யுறுவதும், அறிவியற்கல்வியில் தேர்ச்சி பெறுவதும், மூடப் பழக்கவழக்கங்களை விடுவதும், புத்தாராய்ச்சி செய்து புதுப்புனை வாற்றல் வாய்ப்பதுமான வழிகளாலன்றி, பண்டாடு பழநடையாக வழங்கிவரும் எழுத்துமாற்றத்தால் தமிழன் முன்னேற முடியாது. பிறமொழி யெழுத்துகளோடு ஒப்புநோக்கின், தமிழ் எழுத்துமுறை எத்துணையோ திருந்திய தென்று சொல்லவேண்டும். ஈ என்னும் வடிவை என்று குறிப்பதும், ஔகார வடிவின் உறுப்பான ள என்னுங் குறியைச் சிறிதாக எழுதுவதும், ஆகிய இரண்டே தமிழுக்கு வேண்டிய எழுத்துத் திருத்தமாம். குகர நெடிலை மேற்சுழிக்கலாம் . 5. பகுத்தறிவு விளக்கம் குமரிநாட்டுத் தமிழிலக்கண முதனூலாசிரியன், பகுத்தறி வடிப்படையிலேயே, பொருள்களையெல்லாம் உயர்திணை, அஃறிணையென இரண்டாகப் பகுத்து, உலகம் போற்றும் ஒப்புயர் வற்ற இலக்கணம் வகுத்திருக்கின்றான். கடவுள் இல்லை யென்பதற்குப் போன்றே, உண்டு என்பதற் கும் பகுத்தறிவே துணை செய்கின்றது. உலகில் எத்துணை நாகரிகப் பண்பாட்டு நாடாயினும், இரவில் நகரவிளக்கு அரைமணி நேரம் எரியாது போயினும், ஐந்து நிமையம் அரசன் அதிகாரம் இல்லாது போயினும், காட்டுவிலங்கினுங் கேடாக நாட்டுமக்கள் நடந்து கொள்கின்றனர். அங்ஙனமிருக்க, உயிரற்ற பன்னிரு கோள்களும் பற்பல நாண்மீன்களும் இடைவிடாது பெருவெளியில் ஒழுங்காய் இயங்கிவருவது இயக்குவான் ஒருவனின்றி இயலுமோ? கடவுளுண் மையைக் காட்ட இதுபோல் வேறு சான்றுகள் எத்தனையோ இருப் பினும், இஃதொன்றே போதுமானதாம். ஆயினும், நடுநிலையாக நோக்கி, இருசாராரும் ஒருவரை யொருவர் இகழாதுங் குறைகூறாதும் இருப்பதே பகுத்தறிவிற் கழகாம். பகுத்தறிவின் பயன் இனி, உலகில் வேறு எந்நிலப் பகுதியிலும் இல்லாததும், இந்தியாவிலும் வடநாட்டினுந் தென்னாட்டிற் கடுமையாகவும் கண்டிப்பாகவும் கைக்கொள்ளப்படுவதும், தென்மொழியினத்தின் ஒற்றுமையைக் குலைத்து அதன் வலிமையைக் கெடுப்பதற்கே ஆரியராற் புகுத்தப்பட்டதும், தொழிலோடு சிறிதுந் தொடர் பற்றதும், பகுத்தறிவிற்கு முற்றும் முரணானதும், ஆன பிறவிக்குலப் பிரிவினையை உணர்த்தும் குலப்பட்டங்களை இன்றுந் தமிழர் தாங்கி வருவது இக்காலத்திற் கேற்காததாகும். பண்டைத் தமிழகத்தில் இம் மூடவழக்கம் இருந்ததே யில்லை. எல்லா வகுப்பாரும், பிறநாட்டார்போல் தம் பெயரை இணைப்பு வாலின்றி வெறுமையாகவே வழங்கிவந்தனர். அறிவும் நாகரிகமும் துப்புரவும் ஒழுக்கமும் உண்மையின்மைகளே, உயர்வுதாழ்வைக் குறித்துவந்தன. ஆரியப் பிறவிக்குல வுயர்வுதாழ்வைத் திருவள்ளுவர் தெளிவாகக் கண்டித்தார். பகுத்தறிவியக்கப் பகலவன் என்னும் பெரியார் தம் கற்பிப்பிற் கேற்ப, பிறவிக்குல வொழுங்கை மீறியே ஒரு பெண்ணை மணந்தார். அவரைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் பலர், மதவியல் ஒன்று தவிர மற்றவற்றில் அவர் பெயர் கெடுமாறே ஒழுகிவருகின்றனர். பிறவிக் குலவுணர்ச்சியைச் சொல்லளவில் நீக்கினும் உள்ளளவில் நீக்க வில்லை. பகுத்தறிவியக்கம் தமிழரெல்லார்க்கும் பொதுவாயினும், பெரியாரைப் பின்பற்றியர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர், தாமே முன்பு பகுத்தறிவொழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ் என்பது, மறைமலையடிகள் புதிதாகத் தோற்று வித்ததும் அவரொடு முடிந்து போவதுமான ஓர் ஏற்பாடன்று. பால் எங்ஙனம் தனிப்பாலாகவே தோன்றிப் பின்னர் விற்பனையாளரின் பேராசையால் தண்ணீர் கலக்கப்படுமோ, அங்ஙனமே தமிழும் முதற்கண் தனித்தமிழாகவே தோன்றிப் பின்னர் ஆரியரின் பொறா மையால் வடசொற் கலக்கப்பட்டது; ஆங்கிலர் வருமுன் ஆங்கிலச் சொல் கலவாதிருந்தது போன்றே, ஆரியர் வருமுன் ஆரியச் சொல்லுங் கலவாதிருந்தது. முதலிரு கழகக் காலத்தும், வேந்தர் பெயர்களும் பொது மக்கள் பெயர்களும் முழுத் தூய தமிழ்ச்சொற்களாகவேயிருந்தன. எ-டு: பாண்டியர் சோழர் சேரர் கடுங்கோன் இளஞ்சேட் சென்னி சேரலாதன் காய்சினவழுதி தொடித்தோட்செம்பியன் செங்குட்டுவன் இளமாறன் பெருநற்கிள்ளி கணைக்காலிரும்பொறை நெடுஞ்செழியன் மாவளவன் சேரமான் மாக்கோதை பொதுமக்கள்: ஆதன், பூதன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், நன்னன், பொன்னன், நாகன், பேகன், தென்னவன், மன்னவன், தேவன், மூவன், வள்ளுவன், மள்ளுவன், வேலன், மூலன், மருதன், விருதன். இன்று வடநாடும் தென்னாடும் ஒன்றென்னும்படி பெயர்கள் மாறியுள்ளன. தென்சொல்வளங் குறைந்த மூவகை (1) பழம்பாண்டி நாடு முழுகிப்போனமையால் அந் நாட்டு உலகவழக்குச் சொற்கள் மறைந்தமை. (2) பண்டும் இடையும் தமிழிலக்கியம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்டாமையால், அவற்றின் இலக்கிய வழக்குச் சொற்கள் ஒழிந்தமை. (3) தமிழர் அயற்சொற்களை வழங்கினமையால்அவற்றிற்கு நேரான தென்சொற்கள் இறந்துபட்டமை. தமிழ் தனித்து வழங்காதென்று சிலர் கருதற்குக் காரணங்கள் (1) ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டமை. (2) வடமொழிச் சென்று வழங்கும் நூற்றுக்கணக்கான தென்சொற்களை வடசொற்களென்று தவறாகக் கருதுகை. (3) புதுச்சொற்களை வேண்டிய அளவு புனைந்து கொள்ள லாம் என்னும் அறிவின்மை. 6. தமிழ் திரவிட வேறுபாடு ஒருகாலத்தில் ஒரு நாட்டில் ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்த மக்கட்கூட்டம், பின்னர்ப் பல்வேறிடத்திற் பரவிப் பல்வேறின மொழிகளைப் பேசும் பல்வேறு நாட்டினங்களாய்ப் (nations) பிரிந்து போகலாம். மாந்தன் வரலாற்று முதற்காலத்திற் குமரிநாட்டில் தமிழொன்றே பேசிவந்த மக்களினம், இன்று இந்தியா முழுதும் பரவி, தமிழும் தெலுங்கு, கன்னடம் முதலிய இருபதிற்குக் குறையாத இனமொழிகளும் பேசும் மக்களினங் களாகப் பெருகியும் பிரிந்தும் உள்ளது. தமிழ் திரிந்ததுபோன்றே, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் எனத் திரிந்துள்ளது. அத் திரிசொல் முதற்கண் தமிழின் மறுபெயராக வழங்கிப் பின்பு தமிழையும் அதன் திரிமொழி களையும் ஒரே இனமாக அடக்குங் குடும்பப் பெயராக வழங்கி வருகின்றது. இது பிறநாட்டு மொழிநூலறிஞரால் ஒப்புக்கொள்ளப் படினும், இயற்கை வேறு பாட்டாலும் ஆரியக்கலப்பாலும் நேர்ந்துள்ள சில இடர்ப்பாடுகளால், தமிழைத் திரிமொழி களினின்று பிரித்து, அத்திரிமொழிகளை மட்டும் திரவிடமென்று குறிக்கவும், அவ் விரண்டையும் பொதுப்படக் குறிக்கத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவும், வேண்டியுள்ளது. இம் முடிபிற்குத் தூண்டும் தமிழ் திரவிடவேறுபாடுகளும் மாறுபாடுகளும் வருமாறு: தமிழ் 1. மூச்சொலியும் தனியெடுப் பொலியுமின்றிப் பெரும்பாலும் மெல்லொலி மொழியாயிருத்தல். 2. சொல்வளமும் சொல்லாக்க ஆற்றலும் மிக்குப் பிறமொழிச் சொற்கலப் பில்லாத் தூய்மையை வேண்டல். 3. சமற்கிருதத்தைப் பகையாகச் கோடல். 4. வடமொழி தமிழ்த்திரிபென்னுங் கொள்கையுண்மையும் திருக் கோவில் வடமொழி வழி பாட்டை விலக்கலும். 5. சொற்கள் பெரும்பாலும் திருந் திய வடிவில் வேர்ச்சொல் காட்டி நிற்றல். 6. ஆரியச் சார்பற்ற தூய தனி யிலக்கியமுண்மை. 7. தமிழன் பிறந்தகத்தை அறிதற் கான தொல் வரலாற்றுச் சான்றுண்மை. 8. பொருளிலக்கணமுங் கூறும் முழுநிறைவான இலக்கண முண்மை. 9. வடமொழித் தொன்மங்களை (புராணங்களை)ஒப்புக் கொள் ளாமை. 10. கட்டாய இந்தியை எதிர்க்கும் உணர்ச்சி தமிழர்க்கு விஞ்சி யிருத்தல். 11. பெரும்பாலும் குமரிநிலத் தமிழுக்கு நெருங்கிய இயன் மொழி. 12. வடசொல் தீரத்தீரச் சிறப்பது இவற்றால், தமிழ் திரவிடத்தினின்று மிக வேறுபட்ட தென்பது தெளிவாகும். 7. உலகத்தமிழ் மாநாடுகள் அனைத்துலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நான்கு நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழுக்கு எத்தகைய ஆக்கமும் ஏற்பட வில்லை. அதற்கு மாறாகக் கேடே விளைந்துள்ளது. நான் மாநாடு களும் தமிழின் பெயரால் நிகழ்ந்த விரிநீர் வியனுலகச் சுற்றுலாக்களே யன்றி வேறல்ல. முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறாது அயல்நாட்டில் (மலேசியாவில்) நடைபெற்றதே, தமிழுக்கு நற்குறியன்று. அம் மாநாட்டிற்கு, தனித்தமிழ்ப் புலவரும் உண்மையான ஆராய்ச்சியாள ரும் குமரிநாட்டுத் தமிழ்த்தோற்றக் கொள்கையினரும், ஆரியத் தையும் இந்தியையும் எதிர்த்துத் தமிழைக் காக்கும் உறுமனத்தரும், வெற்றழைப்புமின்றி வரையறவாக விலக்கப்பட்டனர். மறைமலை யடிகள் உடலோடிருந்திருப்பினும் அதற்கு அழைக்கப்பட்டிரார் என்பது திண்ணம். வையாபுரிகளும், வலவன்பாடிகளும், நிலைத்த கொள்கையின்றிக் காலத்திற் கேற்பக் கருத்துமாறும் தன்னலக் காரரும்,இந்தித் திணிப்பையும் வடமொழி வழிபாட்டையும் எதிர்க்க எண்ணுவதுஞ் செய்யாத போலி நடுநிலைப் பேடிமனத் தரும், தமிழறியாத பெருமாளரான கட்சித்தலைவரும், தூய ஆரியருமே தமிழ்நாட்டினின்று இருவழி வானூர்தி யேற்பாட்டுடன் வரவழைக்கப் பட்டனர். இரண்டாம் மாநாடு தமிழ்நாட்டில் நடந்தது. அது அண்ணா துரை ஆட்சிக் காலமாதலால், தனித் தமிழ்ப்புலவர்க்கும் உண்மை யாராய்ச்சியாளர்க்கும் இடங்கிடைத்தது. ஆயின், மாநாடு நடத்தும் அதிகாரக்குழு ஆரியச் சார்பானதினால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற கருத்தையன்றி, `கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி என்பது போன்ற கருத்தைத் தழுவக் கூடாதென்று கட்டுரை வழி காட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுவிட்டது. அதனால், நான் அதிற் கலந்துகொள்ள இயலவில்லை. மாநாட்டுக் குழு எங்ஙனம் தமிழுக்கு மாறான தென்பதற்கு, இஃதொன்றே போதுமானது. விழாத்தொடக்க ஊர்வலம், மக்கட்பெருக்காலும் கலைக் காட்சி வகையாலும், அமெரிக்கரும் மெச்சும் வண்ணம் மாபெருஞ் சிறப்பினதாயிருந்தது. ஆயின், கிறித்துவிற்குப் பிற்பட்டனவும், பெரும்பாலும் தமிழ மதங்களைத் தழுவாதனவுமான ஐம்பெரும் பாவியங்களைத் தமிழ்த்தாயின் ஐம்மக்களாகக் காட்டியது, தமிழின் பெருமைக்குப் பேரிழுக்காகும். முதலிரு கழகங்களைச் சார்ந்தனவும், முழுத் தூயனவும், இறந்துபட்டனவும், தொல்காப்பியத்திற் கூறப் பட்டுள்ளனவுமான எண்வகைப்பட்ட எத்துணையோ வனப்புக் களே, தமிழ்த்தாயின் உண்மையான மக்கள் போன்றவையாகும். பிற்கால ஐம்பெரும் பாவியங்களுள், இரண்டு சமணம்; இரண்டு புத்தம்; ஒன்றே ஓரளவு தமிழம். இனி, மாநாட்டு நடப்புநோக்கின், மறைமலையடிகள் போலும் வழிகாட்டும் அல்லது தமிழின் தலைமை நாட்டும் தலைவரின்றி, தமிழ் நெடுங்கணக்கைப் பிராமியின் திரிபென்றும், சில தென்சொற்களை அயற்சொற்களென்றும், சிந்துவெளி நாகரிகத்தை ஆரியரதென்றும், ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியவாறே தமிழுக்கு மாறான பல்வேறு கட்டுரைகளை, அச்சிட்டு வழங்கிப் படித்துச் சென்றமை தெரியவரும். மூன்றாம் மாநாடு மேலையாரிய நாட்டுப் பாரிசு மாநகரிலும், நாலாம் மாநாடு சிங்கள ஆட்சிக்குட்பட்ட யாழ்ப்பாணத்திலும், அவ்வவ் விடத்திற் கேற்றவாறு நடந்தேறின. ஒன்றிலும், தமிழ் தோன்றிய இடம் கூட ஆராயப்படவில்லை. இந் நான்கு மாநாடுகளாலும் தமிழ்நிலைமை சற்றுந் திருந்த வில்லை. திருக்கோவில் வடமொழி வழிபாடோ தமிழ்நாட்டில் இந்தித் திணிப்போ, நீங்கியபாடில்லை; பர். பாலசுப்பிரமணியனார், பர். ஔவை நடராசனார், பர்.ச.வே. சுப்பிரமணியம் போன்றார் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேய்ந்தராகும் வாய்ப் பில்லை; வயவர் சாண் மார்சல், அப்பர் ஈராசு, பர். ஆசுகோ பார்ப் போலா முதலிய பேரறிஞர் திரவிடம் என்று கூறிவந்த சிந்துவெளி நாகரிகம் ஆரியமாக மாறிவருகின்றது; தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ்நாட்டிலும் இன்னும் ஒப்புக் கொள்ளப் படவில்லை; தமிழன் தமிழ்ப்பெயரே தாங்கி இயன்றவரை தனித் தமிழிலேயே பேசவேண்டும் என்னும் உணர்ச்சியும், தமிழ்க்காவலர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்க்கும் பிறக்கவில்லை. உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவரும் குழு, பெயர் விளம்பரத்தையே யன்றி உண்மையில் தமிழ் வளர்ச்சியை நோக்க மாகக் கொண்டதன்று. அதைத் தோற்றுவித்த அதன் செயலாளர் திரு தனிநாயக அடிகள் என்பார். அவர் பர்.தெ.பொ.மீ. யின் மாணவர். அவர் தமிழிற் பெரும்புலவருமல்லர்; மொழியாராய்ச் சியாளருமல்லர்; தனித்தமிழ் விருப்பினருமல்லர்; குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றக் கொள்கையினருமல்லர். சமற்கிருதப் பேரறிஞரான பேரா. பிலியோசா (Filliozat) என்னும் பிரெஞ்சியத் தொல் பொருளாராய்ச்சியாளரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவருகின்றனர். அவருக்குப் பெருந்துணை வராயுள்ள மேலை மொழிநூலறிஞர் செக்கோசிலாவோக்கியா நாட்டுப் பர். காமில் சுவெலபில் என்பார். அவர் நாலுவேலி நிலம் என்னும் கொடுங் கொச்சைத்தமிழ்ப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்ந்தவர்; சமற்கிருதத்தை ஆரியத்திற்கும் திரவிடத் திற்கும் மூலமாகக் கருதுபவர். இந்திய நாகரிகம் ஆரியரதெனக் கொண்டு பிராமணியத்தைப் பெரிதும் பேணுபவர். இம் மூவரையுங் கொண்ட குழு, ஆங்காங்குத் தன் கொள்கைக் கிணங்கியவரைத் துணைக்கொண்டு, உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது. இத்தகைக் குழுவின் பொறுப்பில் உலகத்தமிழ் மாநாடுகள் தமிழாராய்ச்சியின் பெயரால் தொடர்ந்து நிகழின், உலக நாட்டுத் தலைவரெல்லாம் மாநாட்டிற் கலந்துகொள்ளினும், கடல்வெள்ளம் போல் ஊர்வலம் திரளினும், உலகத் தலைமை நடிகையரெல்லாம் வந்து நடித்துப் பாடினும், இஞ் ஞாலம் உள்ளவரை, தமிழுக்கு மாறான பன்னாட்டுமொழிக் கருத்துச் சரக்குகள் பரிமாறும் உலகப் பொதுச்சந்தையாயிருக்குமேயன்றி, இம்மியும் தமிழ் திருந்தவும் தமிழர் முன்னேறவும் போவதில்லை. தமிழர் என்றும் அடிமை யராயேயிருப்பர். இதுவரை இம் மாநாட்டமைப்பால் தமிழுக்கு வாய்த்த நன்மையெல்லாம் அடையாற்று அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனமே. அதற்கு மேனாட்டுப் பணவுதவி நின்றுபோயினும், தமிழ் நாடு அல்லது நடுவணரசு முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ளலாம். வாழ்த்து வான்வாழி வாய்மை வளமுத் தமிழ்வாழி ஆன்வாழி அன்போ டறம்வாழி - கான்வாழி நூல்வாழி நல்லறிவு நுண்புதுமை ஆய்வுசெங் கோல்வாழி பல்லரசுக் கூட்டு.