பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 9 தமிழிலக்கியவரலாறு - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 9 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 248 = 264 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை `` ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'' (தண்டி. உரைமேற்கோள்) என்று பாடினார் ஒரு பழம்புலவர். உலகில் முதன்முதல் மக்கட்கு என்று பாடினார் ஒரு பழம்புலவர். உலகில் தீந்தமிழை, தன்னே ஒள்ளிய நூல்களால் தெள்ளிய அறிவு புகட்டிய தீந்தமிழை, தன்னேரிலாத மொழியென்று புகழ்ந்தது தக்கதே. ஆயின், ஆரியம் அவ்வுண்மையை முற்றும் மறைத்து, தமிழை அடிமுதல் முடிவரை தருக்கப் பொருளாக்கி வைத்திருப்பதால், அப்போராட்டத்தாலும் தமிழ் தன்னே ரிலாததாகின்றது. இத்தகைய எதிர்ப்புநிலை வேறெம் மொழிக்குமில்லை. தமிழ் நெடுங்கணக்கமைப்பு வடமொழி வண்ணமாலையைத் தழுவியதென்றும், தமிழ் வரிவடிவுகள் பிராமியெழுத்தினின்று திரிந்தவை யென்றும்; தமிழ் அடிப்படைச் சொற்களெல்லாம் வடசொல் லென்றும்; தொல்காப்பியம் பிராதிசாக்கியங்களையும் பாணினீயத்தையும் சமற்கிருத நாடக நூல்களையும் அலங்கார சாத்திரத்தையும் பிறவற்றையும் பின்பற்றியெழுந்த தென்றும், ஐந்திணை யென்னும் பகுப்பு வேதத்திற் `பஞ்சஜன' என்று சொல்லப் பட்டதே யென்றும்; திருக்குறள், அறத்துப்பாலில் மனுதரும சாத்திரத்தையும் காமாந்தகர் நீதிசாரத்தையும், பொருட் பாலிற் கௌடிலியர் அர்த்த சாத்திரத்தையும், காமத்துப் பாலில் வாற்சாயனர் காமசூத்திரத்தையும், தழுவிய தென்றும்; ஸ்ரீவல்லப என்பவரே திருவள்ளுவர் என்றும், முப்பால் என்பது திரிவர்க (ப) என்பதன் மொழிபெயர்ப்பென்றும்; தமிழர் வணங்குந் தெற்வங்களெல்லாம் ஆரியத் தெய்வங்களென்றும், உருத்திரனை (ருத்ரனை)ச் சிவன் என்றும், விஷ்ணுவைத் திருமால் என்றும், சுப்பிரமணியனை முருகன் என்றும் தமிழர் மொழி பெயர்த்துக் கொண்டனர் அல்லது பெயர் மாற்றிக் கொண்டனர் என்றும்; தேவார திருவாசக நாலாயிரத் தெய்வப் பனுவல்கல் வேதப்பொருளையே விளக்க வந்தன என்றும், பெரிய புராணமும் திருவிளையாடற்புராணமும் மெய்கண்டான் நூலும் வடநூல்களின் மொழி பெயர்ப் பென்றும்; திராவிடர் என்பார், வேதவொழுக்கத்தினின்று வழுவி யிழிந்த சத்திரியருள் ஒருபிரிவாரே யென்றும், பாரதம் அல்லது சம்புத்தீவம் என்னும் ஆரிய தேசத்தின் தென்கோடி மண்டிலமே திராவிடம் என்றும், தமிழ்மொழி ஆரியத்திரிபான ஒருவகைப் பிராகிருதம் என்றும்; இங்ஙனம் ஆனைகொன்றான் என்னும் மலைப்பாம்பு ஓர் யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று, இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்வி விட்டது. சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் முதலியோர் தமிழைப் பேரளவு மீட்டிருப்பினும், மூல வையாபுரியாரும் வழிநிலை வையாபுரியாரும் அம்மீட்பின் பயனைப் பெரிதுங் கெடுத்துவிட்டனர். அக்கேட்டை நீக்கவும், இனிமேல் அத்தகைய கேடு என்றேனும் நேராதிருக்கவும், வரலாறு, மாந்தனூல் (Anthropology), மொழிநூல் ஆகிய முந்நூலடிப் படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உண்மையான தமிழ் அல்லது தமிழிலக்கிய வரலாறு ஓர் உறழ்ச்சி நூலாகவே யிருக்க முடியும் என்பதை, `` மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ டுதழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'' என்னும் பாட்டும் குறிப்பாக தெரிவிக்கும். பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனா லுண்டோ பயன். காட்டுப்பாடி விரிவு, 30.11.1973 ஞா.தேவநேயன் உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளசிறப்பு .vi சான்றிதழ் . viii முகவுரை .x முன்னுரை 1. மறைந்த குமரிக் கண்டம் .1 2. குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் .1 3. குமரிநாடே தமிழன் பிறந்தகம் .4 4. குமரிக்கண்ட பரப்பு .6 5. குமரிநாட்டுத் தமிழ் 8 6. குமரிநாட்டுத் தமிழர் .19 7. குமரிநாட்டு நாகரிகம் .27 8. குமரி நாட்டு இலக்கியம் 36 9. தமிழர் பரவல் 49 10. ஆரியர் திரும்பல் .56 நூல் I. தலைக்காலம் (தோரா கி.மு. 50,000 - 1,500) 1. குமரிநாடே பழம்பாண்டி நாடு .58 2. பழம்பாண்டி நாடே செந்தமிழ்நாடு .61 3. முக்கழக வுண்மை 62 4. முக்கழகமும் நிறுவியவர் பாண்டியரே .63 5. தலைக்கழகம் .64 6. இடைக்கழகம் 69 II. இடைக்காலம் (கி.மு. 1500 கி.பி. 18-ஆம் நூற்றாண்டு) 1. (1) ஆரியர் நாவலம் (இந்தியா) வருகை 74 (2) ஆரியப் பூசாரியார்தென்னாடுவருகை... 75 2. இடைக்கால இலக்கியம் .79 1. சிவனிய இலக்கியம் .79 2. மாலிய இலக்கியம் .113 3. கடவுள் மத இலக்கியம் .140 4. இரண்டன்மை அல்லது ஓராதன்மை இலக்கியம் .157 5. சமண இலக்கியம் .161 6. புத்த இலக்கியம் .165 7. கிறித்தவ இலக்கியம் 166 8.ïRyhÄa இலக்கியம் .170 9. நம்பாமத இலக்கியம் .171 (2) பொது இலக்கியம் .172 1. இலக்கணம் 172 2. இலக்கியம் .188 3. மூவேந்தர் குடியுஞ் செய்த இனமெழிக் கேடு .212 4. சமற்கிருத இலக்கிய வளர்ச்சியும் தமிழிலக்கியத் தளர்ச்சியும் .223 5. ஆரியத்தால் ஏற்பட்ட இலக்கண இலக்கிய மாற்றமுங் கேடும் .232 6. இறந்துபட்ட தமிழ்நூல்கள் .239 7. ஆங்கிலச் சார்புக்காலம் (19-ம் நூற்றாண்டு) 240 தமிழிலக்கிய வரலாறு - 1 முன்னுரை 1. மறைந்த குமரிக்கண்டம் (The Lost Lemuria) நம் ஞாலத்தின் மேற்பரப்பில், இன்று காய்ந்த நிலமா யிருப்பது, ஒரு காலத்திற் கடலடி நிலமாயும் இன்று கடலடி நிலமாயிருப்பது ஒரு காலத்திற் காய்ந்த நிலமாயும், இருந்ததென்று அறிவியலாற் பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. நிலநூலார் சிலவிடங்களில், இந்த நில மூழ்கல்களும் எழுச்சிகளும் நேர்ந்துள்ள நிலப்பரப்பின் திட்டவட்டமான பகுதிகளைக் குறித்துக் காட்டக் கூடியவராய் இருந்திருக்கின்றனர். மறைந்த அற்றிலாண்டிசுக் கண்டவுண்மை இதுவரை அறிவியலுலகிற் சிற்றளவே ஒப்பம் பெற்றிருப்பினும், இலெமுரியா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பரந்த தென் கண்டம் வரலாற்றிற்கு முந்தியதொரு காலத்தில் இருந்தது பற்றி அறிவியலாரின் பொதுக் கருத்தொற்றுமை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 1 2. குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் (தோரா. கி.மு. 1,00,000) இந்துமாவாரி முன்பு ஒரு கண்டமாயிருந்தது. அது சந்தாத் தீவுகளிலிருந்து ஆசியாவின் தென்கரை வழியே ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரைவரை பரந்திருந்தது. இப் பழங்காலக் கண்டத்திற்கு, அதில் வாழ்ந்திருந்த மாந்தன் போன்ற விலங்குகள்பற்றி, கிளேற்றர் (Sclater) என்னும் ஆங்கிலேயர் இலெமுரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கின்றார். அதோடு, அது மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்கக் கூடுமென்பது பற்றி, மிகுந்த முதன்மை வாய்ந்ததாகும். 2 இலெமுரியரே வரலாற்றிற்குத் தெரிந்த முதல் திட்ட வட்டமான மாந்தன் வகுப்பாரென்பதையும், இலெமுரியாக் கண்டமே மாந்தன் நாகரிகத்தின் உண்மையான பிறப்பிடம் 1. The Lost Lemuria by Scott Elliot., p. 1 2. History of Creation by Earnest Haeckel, Vol. I, p.361 என்பதையும், கருதிப் பார்க்கும்போது, இலெமுரியாவினின்றும் அதன் மக்களினின்றுமே மாந்தனின் இற்றை வகுப்பினங் களெல்லாம் தோன்றியுள்ளன என்னும் இன்புறுத்தும் உண்மையைக் காண்கிறோம். 3 இன்றுள்ள ஐங்கண்டங்களுள், ஆத்திரேலியாவேனும் அமெரிக்காவேனும் ஐரோப்பாவேனும் (மாந்தனின்) இம் முந்தக மாகவோ `பரதீசு என்று சொல்லப்படும் விண்ணுலகமாகவோ மாந்த இனத்தின் பிறந்தகமாகவோ இருந்திருக்க முடியாது. பெரும்பாற் சூழ்நிலைகள் தென்னிந்தியாவையே நாடுமிடமாகக் காட்டுகின்றன. இன்றுள்ள கண்டங்களுள், தென்னாசியா வல்லாது இவ்வகையிற் கருதக் கூடிய ஒரே கண்டம் ஆப்பிரிக் காவே. ஆயின், மாந்தனின் முந்தகம், கிழக்கில் அப்பாலை யிந்தியாவும் சந்தாத் தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரையும் வரையும், ஆசியாவின் தென்கரை யொட்டி, அது இன்று உள்ள அளவு (ஒருகால் அதனொடு ஒன்றாக இணைந்து) பரந்திருந்ததும், இன்று இந்துமாவாரியின்கீழ் மூழ்கிக் கிடப்பதுமான ஒரு கண்டமா யிருந்ததென்று உன்னுவிக்கும் சூழ்நிலைகள் (சிறப்பாக வட்டார வியல் உண்மைகள்) பல வுள்ளன. விலங்குகளும் நிலைத் திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டத்தின் முன்னுண்மையைப் பெரிதும் நம்பத் தக்க தாக்குகின்றன என்று, முன்பே கூறியுள்ளோம்...... இந்த இலெமுரியா மாந்தனின் முந்தகமா யிருந்ததென்று கொள்வதனால், மக்களினங் களின் நாடுபெயர்வா லேற்பட்ட ஞாலவியற் பாதீட்டின் விளக்கத்திற்கு மிகத் துணை செய்கின்றோம். 4 மாந்தன் தோன்றி வாழ்தற்கும் படிப்படியாக நாகரிக வளர்ச்சியடைதற்கும் ஏற்ற நானில அமைப்பு, தென்னாட்டி லேயே இன்றும் சிறப்பாகவுள்ளது. இயற்கை அல்லது அநாகரிக மாந்தன், இயற்கையாக விளையும் காய்கனி கிழங்குகளையும் வேட்டையாடிப் பெறும் விலங்கு பறவை யிறைச்சியையும், உண்டு வாழ்வதற்கேற்ற இடம், குறிஞ்சி என்னும் மலைநிலம்; அதற்கடுத்தபடியாக, ஆடுமாடு களைச் சிறப்பாக வளர்த்தும் வான வாரிப் பயிர்களை விளைத்தும் வாழ்வதற்கு ஏற்ற இடம், புல்வெளியுங் குறுங்காடு முள்ள முல்லை நிலம்; அதற்கடுத்தபடியாக, நன்செய்ப் பயிர் 3. Lemuria - The Lost Continent of the Pacific, p.181 4. History of Creation, Vol. II, pp.125-6 களையும் புன்செய்ப் பயிர்களையும் நன்றாக விளைவித்து, நிலையாக வாழ்ந்து, நாளடைவிற் சிற்றூர் பேரூரும், பேரூர் மூதூரும் ஆகி, கைத்தொழிலும் வாணிகமும் வளர்ந்து, கல்வியும் அரசும் நகரும் நகரமும் தோன்றி, மக்கள் நாகரிகம் அடைதற்கேற்ற இடம், நிலவளமும் நீர்வளமும் மிக்க மருதநிலம்; அதற்கடுத்த படியாக, பலவகை மரக்கலங்கள் புனைந்து கடல் கடந்து நீர்வாணிகஞ் செய்து பல்வகைப் பண்டங் கொணர்ந்து நாட்டை வளம்படுத்துவதற்கு ஏற்ற இடம், கடல் சார்ந்த நெய்தல்நிலம். இந்நால்வகை நிலமும் அடுத்தடுத் திருந்ததும் இன்றும் இருப்பதும், முறையே, முழுகிப்போன குமரிக் கண்டமும் இற்றைத் தமிழகமுமே. பாலை யென்பது, முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முது வேனிற் காலத்தில் நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு நிலமுஞ் சுடும் நிலை. பின்னர் மழைக்காலத்திற் பாலைநிலம் தளிர்த்தும் நீர் நிரம்பியும் மீண்டும் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். ஆதலால், ஐந்திணைகளுட் பாலைக்கு நிலையான நிலமில்லை. அதனால், ஞாலத்தை நானிலம் என்றனர். இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே, பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும், மேல் கோடியிலேயே ஒரு பன்மலையடுக்கத்துப் பெருமலைத் தொடரிருந்தது. அது குமரி யென்னும் காளியின் பெயராற் குமரிமலை யெனப்பட்டது. அதன் தென்கோடியிற் பஃறுளி யென்னும் கங்கை போலும் மாபேரியாறும், வட கோடியிற் குமரியென்னும் காவிரி போலும் பேரியாறும், தோன்றிக் கிழக்குமுகமாய்ப் பாய்ந்தோடின. நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால் குடதிசை மேல்திசை (மேல்-மேற்கு) யென்றும், குணதிசை கீழ்த்திசை யென்றும் (கீழ்-கீழ்க்கு-கிழக்கு), பெயர் பெற்றன. இற்றைத் தமிழகத்திலும் ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்து அடுத்தடுத்திருக்கக் காண்பான். நண்ணிலக்கடல் (Mediterranean Sea) ஒரு காலத்தில் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியிற் (Pacific Ocean) கலந்ததாகத் தெரிவதால், விவிலியத் தொடக்கப் பொத்தகத்திற் கூறியுள்ளவாறு, ஏதேன் தோட்டம் என்னும் மாந்தன் பிறந்தகம், மெசொப் பொத்தாமியா நாட்டில் இருந்திருக்க முடியாது. ஏனெனின், அந் நிலப்பகுதி பண்டு கடலாயிருந்திருக்கும். நிலநூலியல் ஊழிகளுள் (Geological Eras) இறுதியதான புத்தியலுயிர் ஊழியைச் (Cainozoic Era) சேர்ந்த நான்காம் மண்டலத்துக் (Quarternary Period) கழிபல்லண்மைக் (Pleistocene) காலப்பிரிவில் கி.மு. 4,75,000 முதல் கி. மு. 50,000 வரை நான்முறை பனிக்கட்டிப்படல முற்படர்ச்சி (Glacial Advance) வடகோளத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே, ஐரோப்பாவி லேனும் வட அமெரிக்காவிலேனும் மாந்தன் பிறந்தகம் இருந் திருக்க முடியாது. முதற்கால மாந்தனுக்கேற்ற வெப்பமும் இயற்கை வளமும், நண்ணிலக் கோட்டைச் (Equator) சார்ந்த வெப்ப நாட்டிலேயே இருக்க முடியும். அத்தகைய நாடு முழுகிப்போன குமரிநாடே. மாந்தன் தோன்றியது அல்லது படைக்கப்பட்டது எண்ணிற் கெட்டாத தொன்மைக் காலமாதலால், அத்தகைய தொன்மை வாய்ந்ததும் குமரிநாடே. இற்றை நில அமைப்பின்படி, இரு திணையுயிரிகளும் பாரெங்கும் பரவியிருக்கும் நிலைமை, குமரிக்கண்டத்தின் தென்கோடியை மாந்தன் பிறந்தகமாகக் கொண்டால்தான் விளங்கும். 3. குமரிநாடே தமிழன் பிறந்தகம் (தோரா. கி.மு. 50,000) (1) இந்தியாவிற்குள்ளேயே வழங்கும் தமிழ் உள்ளிட்ட திரவிடமொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகள், தெற்கில் வரவரத் திருந்தியும் சொல்வளம் மிக்கும் தூய்மைப்பட்டும் இலக்கிய விலக்கணமுற்றும் செறிந்தும் உள்ளன. திராவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் மூலமும் முந்திய வடிவும் தமிழிலேயே உள்ளன. (2) பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கரு என்னும் இருவகைப் பொருள்களும், இன்றும் தென்னாட்டிற் குரியன வாகவே உள்ளன. (3) பண்டைத் தமிழர் இறந்த போன தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றே குறித்தனர். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை (குறள்.43) தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும் (புறம்.9) (4) பண்டைத் தமிழ்க்கழகங்கள் மூன்றனுள், முதலிரண்டும் முழுகிப்போன குமரிநாட்டிலேயே இருந்தன. (5) கி. பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்தவரும், செங்குட்டுவன் இளவலாரும், பல்கலைப் பெரும்புலவரும், முற்றத் துறந்த முழுமுனிவரும், நடுநிலை திறம்பாதவருமான இளங்கோவடிகள், பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:19-22) என்றும், கடைக்கழகக் காலப் புலவருள் ஒருவரான நெட்டிமையார், செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம்.9) என்றும், தலைக்கழகத் தென்மதுரையைத் தன் கரைமேற் கொண்டிருந்த குமரிநாட்டுப் பஃறுளியாற்றையும், அக் காலத்துப் பாண்டியரையும் பாடியுள்ளார். (6) நடவரசன் தில்லை மன்று, தமிழ் ஞாலத்தின் நெஞ்சத் தாவாகிய நடுவிடமாகவே பாண்டியனால் அமைக்கப்பெற்றது. தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரி மலைக்கும் நடுவிடத்தில் அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று. (7) சிலப்பதிகார வேனிற்காதை முதலடிக்கு வரைந்த வுரையில், தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்ப தாயிற்று. ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமு மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து....... நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையு முள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சின வழுதி முதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத்தொன் பதின்மர் ......... அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க. என்று அடியார்க்கு நல்லார் சிறப்புக்குறிப்பு வரைந்துள்ளார். இது அவர் கட்டிக் கூறிய செய்தியாக இருக்க முடியாது. இவற்றால், குமரிநாடே தமிழ் தோன்றிய இடம் அல்லது தமிழன் பிறந்தகம் என்பது, தெரிதரு தேற்றமாம். 4. குமரிக்கண்டப் பரப்பு ஒரு முதன்மையான இனவியல் உண்மையும் சிறந்த பொருட்பாடுள்ளதும் எதுவெனின், போர்னியோவிலுள்ள தயக்கர் என்னும் மரபினர் மரமேறுவதைப்பற்றி உவாலேசு வரைந்துள்ள வரணனை, தென்னிந்திய ஆனைமலை வாணரான காடருக்கு ஒவ்வொரு நுண்குறிப்பிலும் முற்றும் பொருந்து மாதலால் அம் மலையிலும் எழுதப்படலாம் என்பதே. இந்தியத் தீவக்குறையில் (Peninsula), எனக்குத் தெரிந்தவரை, காடரிடையும் திருவாங்கூர் மலை வேடரிடையும் மட்டும் பெருவழக்காய் வழங்கும் வழக்கம், வெட்டுப்பற்கள் எல்லாவற்றையும் அல்லது அவற்றுட் சிலவற்றை மட்டும், அரம்பம் போலன்றிக் கூர்நுனைக் குவியமாகச் சீவிக்கொள் வதாகும். இந்தச் சீவல், காடரிடையே பையன்களுக்குப் பதினெட்டாம் அகவையிலும் பெண்பிள்ளை கட்குப் பத்தாம் அகவையில் அல்லது அதையடுத்தும், உளிகொண்டோ அறுவாள் கொண்டோ அரங்கொண்டோ செய்யப்படுவதாகச் சொல்லப் படுகின்றது. கீற்றும் (Skeat) பிளாகுதனும் (Blagden) மலையாத் தீவக்குறைச் சாக்குனர் (Jakuns) தம் பற்களைக் கூராகச் சீவிக்கொள்ளும் வழக்கத்தைக் கவனித்திருக்கின்றனர். திரு. கிராபோர்டு (Crawford) மலையாத் தீவகணத்தில் பல்லை அராவுவதும் கறுப்பாக்குவதும் திருமணத்திற்கு முந்தி நிகழ வேண்டிய சடங்கென்றும், பல்லை யராவியிருப்பது ஒரு பெண் மூப்படைந்திருப்பதைக் காட்டும் பொதுவான வகை யென்றும் நமக்குத் தெரிவிக்கின்றார். பர். (Dr.) கே. தி. (K.T) பிரெயசு (Preuss) ஒரு கட்டுரையில் மலாக்காவிலுள்ள சிறுநீகரோவரின் மூங்கிற் சீப்புகளிலுள்ள கோலங்களை நுட்பமாக வரணித்து, அவற்றைத் தென்னிந்தியக் காடர் அணியும் மூங்கிற் சீப்புகளிலுள்ள வியக்கத் தக்கவாறு ஒத்துள்ள கோலங்களுடன் ஒப்பு நோக்குகின்றார். அந்தக் கோலம், நான் சொன்னவாறு அணியியல் வடிவளவைக் கோலமன் றென்றும், படவெழுத்துகளின் தொடரென்றும், ஒரு கொள்கையை நுண்ணிதாக விளக்கிக் காட்டுகின்றார். கீற்றும் பிளாகுதனும் செமங்குப் (Semang) பெண்டிர் தம் முடியில் அணியும் வியப்பான சீப்புவகை, முற்றிலும் நோய்க்காப்பாகவே அணிவதாகத் தோன்றுகின்ற தென்று கவனித்துக் கூறுகின்றனர். இந்தச் சீப்புகள் பெரும்பாலும் மூங்கிலாலேயே செய்யப்பட்டு, கணக்கற்ற கோலங்களால் அணி செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் எந்த இரண்டும் என்றேனும் முற்றும் ஒத்ததில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சிறப்புக்கோலம் உரியதாகச் சொல்லப்பட்டது. அத்தகைய சீப்புகள் பெரக்கிலுள்ள பங்கன் (Pangan) செமங்கு சாக்கை (Sakai) மரபினராலும், செமங்குசாக்கைக் கலப்பு மரபினருள் மாபெரும்பான்மையராலும், அணியப்படுகின்றன. திரு. வின்சென்று (Vincent) அவருக்குத் தெரிந்தவரை, காடர் சீப்புகள் நோய்க்காப்பாகக் கருதப்படவில்லை யென்றும், அவற்றிலுள்ள வரைவுகள் மந்திரக் குறிப்புக் கொண்டன வல்லவென்றும், எனக்குத் தெரிவித்திருக்கின்றார். ஒரு காடன் எப்போதும் ஒரு சீப்புச் செய்து, தன் மனைவிக்குத் திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணச் சடங்கின் இறுதியில், கொடுத்தல் வேண்டும். இளங்காளையர் தம்முள் யார் சிறந்த சீப்புச் செய்ய முடியுமென்று, ஒருவரோ டொருவர் இகலிக்கொண்டு செய் கின்றனர். சில சமையங்களில் அவர்கள் சீப்புகளிற் புதுமையான உருவங்களைப் பொறிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, திரு. வின்சென்று ஒரு சுவர்க்கடிகார முகப்பை மிக நன்றாகப் பொறித்த ஒரு சீப்பைப் பார்த்திருக் கின்றார். 5 குமரிக்கண்டம் கிழக்கில் ஆத்திரேலியாவையும் மேற்கில் தென்னாப்பிரிக்காவையும் வடக்கில் இந்தியாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்த பெருநிலப் பரப்பாத லாலும், மாந்தன் தோன்றியதிலிருந்து தமிழர் முழுநாகரிகம் அடைந்ததுவரை, ஏறத்தாழ ஈரிலக்கம் ஆண்டு மக்கள் அதிற் குடியிருந்ததனாலும், அந் நிலவாணர் பல்வேறு நாகரிக நிலைப்பட்டவராயும் பல்வேறு மொழியினராயும் இருந்தனர். ஆயினும், மேற்பாகத்தினர் பெரும்பாலும் தமிழரும் கீழ்ப்பாகத்தினர் பெரும்பாலும் நாகரும் 5. C. T. S. I. Int. pp. xxi - ii ஆவர். நாகரிகரும் அநாகரிகருமாக நாகர் இருசாரார். நாகரிக நாகருள் ஒரு வகுப்பாரே குமரிக்கண்டத்தின் பெரும்பகுதி மூழ்கிய பின் அமெரிக்காவையடைந்து மாயா நாகரிகத்தை வளர்த்த தாகத் தெரிகின்றது. 5. குமரிநாட்டுத் தமிழ் (தோரா. 1,00,000-50,000) உலகில் முதன்முதல் தோன்றிய திருந்திய மொழி தமிழே. மொழியமைப்பு உணர்ச்சியொலிகள் (Emotional Sounds), விளியொலிகள் (Vocative Sounds), ஒப்பொலிகள் (Imitative Sounds), குறிப்பொலிகள் (Symbolic Sounds), வாய்ச்செய்கையொலிகள் (Gesticulatory Sounds), குழவிவளர்ப்பொலிகள் (Nursery Sounds), சுட்டொலிகள் (Deictic Sounds) என்னும் எழுவகை யொலிகளைக் கொண்ட இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) முழுவளர்ச்சி யடைந்தபின், பண்பட்ட மொழி (Cultivated Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றிற்று. முறையே சேய்மையண்மை முன்மையுணர்த்தும் ஆ, ஈ, ஊ என்னும் முச்சுட்டுகளினின்றே, இழைத்தல் மொழி பெரும்பாலும் உருவாயிற்று. அம் மூன்றனுள்ளும் முன்மைச் சுட்டாகிய ஊகாரமே, தமிழ்ச் சொற்களுள் முக்காற் பங்கிற்கு மேற்பட்ட பகுதியைப் பிறப்பித்துள்ளது. ஈகாரத்தினின்று ஏகாரமும் ஊகாரத்தினின்று ஓகாரமும், மோனைத் திரிவாகத் தோன்றின. முதற்கண் நெடிலாகவே தோன்றிய உயிர்கள் பின்னர்க் குறிலாகக் குறுகின. அகரமும் இகரமுஞ் சேர்ந்து ஐ என்றும், அகரமும் உகரமுஞ் சேர்ந்து ஔ என்றும், இரு புணரொலிகள் (Diphthongs) எழுந்தன. அவை ஒலியளவில் முறையே அய், அவ் என ஒலித்தன. கொச்சை வழக்கில், இலை என்பது எலை என்றும் உனக்கு என்பது ஒனக்கு என்றும் ஒலிப்பதினின்று, ஏகார ஓகாரம் அல்லது எகர ஒகரம் மோனைத் திரிவாகத் தோன்றியமை அறியப்படும். இதழ் குவிந்தொலிக்கும் முன்மைச் சுட்டான உ என்னும் விதையெழுத்து, லகரமெய்யீறு பெற்று உல் என்னும் மூல வேரையும் அதனொடு சொன்முதல் மெய்கள் சேர்ந்த குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழிவேர்களையும் தோற்றுவிக்க, அவ் வெழு வேரினின்றும் மூலவடியும் வழியடிகளும் திரிந்து, முன்மை, முன்வருதல் (தோன்றுதல்), முன்செல்லல் (செல்லல்), நெருங்குதல் (கூடுதல்), பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துகளையும், அவற்றினின்று தோன்றும் நூற்றுக்கணக்கான கிளைக் கருத்து களையும், ஆயிரக்கணக்கான நுண்கருத்துகளையுங் கொண்டு, மாபெரும் பால் தமிழ்ச் சொற்களைப் பிறப்பித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், உலக வழக்குமொழி பொது மக்கள் அமைப்பும், இலக்கியம் புலமக்கள் அமைப்பும் ஆகும். குமரிநாட்டு மக்கள் நாகரிகம் முதிர்ந்து பண்பட்டவரும் நுண்மதியினருமா யிருந்ததனால், எல்லா எழுத்தொலி களையும் செவ்வையாக ஒலித்தும், எல்லாப் பொருள்களையும் வினைகளையும் நுட்பமாக வேறுபடுத்தி அவற்றிற் கேற்பச் சிறப்புச் சொற்களை வழங்கியும், பகுத்தறிவடிப்படையிற் பொருள்களைப் பாகுபடுத்தியும், தம் மொழியை வளர்த்தும் வழங்கியும் வந்தனர். ஒலியெளிமை அவர் உலகமுதல் மாந்தனினத்தாராதலின், அவர் வாயிற் பிற்காலத்திலும் பிறமொழிகளிலும் தோன்றிய வல்லொலிகள் எழவேயில்லை. தமிழிலுள்ள க ச ட த ப வும் சமற்கிருதம் என்னும் வட மொழியிலுள்ள க (க்க) ச (ச்ச) ட (ட்ட) த (த்த) ப (ப்ப)வும், வன்மையில் ஒத்தனவல்ல. தமிழ்க்ககரம் இரட்டித்தால் தான் வட மொழித் தனிக்ககரத்தை ஒத்தொலிக்கும். ஆங்கிலத்தி லும் அங்ஙனமே. `maker' என்னும் சொல், மேக்கர் என்றே இரட்டித்த ககரவொலி கொண்டிருத்தல் காண்க. இங்ஙனமே ஏனை வல்லினமும். மூச்சொலியும் (Aspirate Sound) தனித்த எடுப்பொலியும் தமிழுக் கின்மையால், மூச்சொலி கொண்ட வல்லெழுத்தோ எடுப் பொலி (Voiced Sounds) கொண்ட தனி வல்லெழுத்தோ தமிழில் இல்லவேயில்லை. மெல்லின மெய்களின் பின் அடுத்து வரும் வல்லின மெய்களே, தமிழில் எடுப்பொலி கொள்ளும். மூச்சொலியும் தனியெடுப்பொலியுங் கொண்ட தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிடமொழிகள், குமரி நாட்டுத் தமிழினின்றே திரிந்தனவேனும், மிகமிகப் பிற்காலத் தன வாதலின் அவ் வாரியத் தன்மையடைந்தனவென அறிக. இவ் வுண்மை யறியாதார், தமிழிலும் முதற்காலத்தில் எடுப் பொலிகள் (g, j, d|, d, b,) இருந்து, பின்னர் எடுப்பிலாவொலி களாக மாறின எனப் பிதற்றுவர். தமிழ் தோன்றியது குமரி நாடென்னும் உண்மையறியின், அங்ஙனங் கூறார். எடுப்பிலா வொலி எடுப் பொலியாக மாறுமேயன்றி, எடுப்பொலி எடுப்பிலாவொலியாகத் திரியாது. பிஞ்சு முற்றிக் காயாவதே யன்றி, காய் இளந்து மீண்டும் பிஞ்சா வதில்லை. மாந்தன் வரலாற்றில் தமிழன் சிறுபிள்ளை போன்றவனாதலின், அவன் வாயிற் பிற்கால மாந்தரின் வல்லொலி கள் எழவில்லை. தமிழிலுள்ள சகரம், சமற்கிருதக் கிசுகிசுப்பொலிகளுள் (Sibilants) முதலதையே ஒத்ததாகும். அதை எடுப்பும் மூச்சொலியு முள்ள (Voiceless Unaspirate) சமற்கிருத அண்ண வல்லெழுத் திற்குச் (Palatal Surd) சமமாகக் கொள்வது. தமிழியல்பை அறியாமை யேயாம். ழ, ற பொதுமக்களே தோற்றுவித்த ஒலிகளாதலால், அவை தனித்தும் சொல்லுறுப்பாகவும் வரும்போதெல்லாம், அவற்றை அவர்கள் முழுச் செவ்வையாகவே ஒலித்து வந்தனர். சொற்புணர்ச்சியும் பொதுமக்கள் செயலே. தெற்குத் தெரு, கற்றாழை, முதுமக்கட்டாழி, பாற்சோறு, ஆட்டை வாரியம், அற்றைக் கூலி, கருமக்குறை என மூவகைத் திரிபு புணர்ச்சியையும், பேச்சிலும் எழுத்திலும் இறுகக் கடைப் பிடித்தனர். பொருட்பாகுபாடு எல்லாப் பொருள்களையும் உயிர், மெய், உயிர்மெய் (உயிரோடு கூடிய மெய்) என மூன்றாகப் பகுத்தும்; அவற்றுள் உயிரை நிலைத்திணை இயங்குதிணை என இரண்டாக வகுத்தும்; அவற்றுள் நிலைத்திணையைப் புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனப் பலவாகப் பாகுபடுத்தியும்; அவற்றின் உறுப்புகளை வேர், தூர், அடி, கவை, (கொம்பு, கிளை, போத்து, குச்சு) இலை, பூ, காய் எனப் பிரித்தும்; அவற்றுள் இலையைத் தாள், தோகை, ஓலை, தோடு, இலை, அடை என்றும்; பூவை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்றும், காயைப் பிஞ்சு, பிருக்கு, காய், கனி, நெற்று, வற்றல் என்றும்; நுண்ணிய வகையில் வேறுபடுத்தியும்; பிஞ்சையும் கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா) குரும்பை (தென்னை, பனை) எனத் தனித்தனி சிறப்புப் பெயரிட்டும் வழங்கினர். பொருள்களைப் போன்றே வினைகளையும் நுண்ணிதாக வேறுபடுத்தி, சிறப்புச் சொற்களால், அவற்றைக் குறித்தனர். எ-டு : விழித்தல் = கண் திறத்தல், கண் திறந்து மருளுதல் பார்த்தல் = மனக் குறிப்பின்றி இயல்பாகப் பார்த்தல், பார்த்ததைப் பார்த்தல் கண்ணுறுதல் = குறிப்பொடு பார்த்தல் நோக்குதல் = கூர்ந்து அல்லது கவனித்துப் பார்த்தல் நோங்குதல் = வீட்டுத்திசை நோக்கி விருப்பொடு பார்த்தல் நோடுதல் = ஆய்ந்து பார்த்தல் காணுதல் = தேடினதை அல்லது விரும்பியவரைப் பார்த்தல் தன்மை முன்னிலைப் பெயர்களெல்லாம் தன்வேற்றுமைப் பட்டே (Orthoclite) அக்காலத்து வழங்கின. சொல்லொழுங்கு தன்மைப் பெயர்கள் ஒருமை பன்மை இரட்டைப் பன்மை 1. ஏன் ஏம் ஏங்கள் 2. என்னை எம்மை எங்களை 3. என்னால், எம்மால், எங்களால், என்னொடு எம்மொடு எங்க`ளாடு 4. எனக்கு எமக்கு எங்களுக்கு எங்கட்கு 5. என்னிலிருந்து, எம்மிலிருந்து, எங்களிலிருந்து, என்னினின்று எம்மினின்று எங்களினின்று 6. என் (எனது, என) எம் (எமது, எம) எங்கள் (எங்களது, எங்கள) 7. என்னிடம் எம்மிடம் எங்களிடம் உலக வழக்கில், இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என்னும் முத்திறத்தைக் குறிக்க நீ, நீம், நீங்கள் என்னும் முன்னிலைப் பெயர்கள் ஏற்பட்டுவிட்டதனால், அவற்றுள் நீங்கள் என்பதை யொட்டித் தன்மையிலும் ஏங்கள் என்னும் இரட்டைப் பன்மைச் சொல் தோன்றிவிட்டது. ஏன், ஏம் என்பன இற்றைத் தமிழில் எழுவாயாக வழங்கா விடினும், வினைமுற்றீறுகளாக வழங்குதல் காண்க. எ-டு: வந்தேன், வந்தேம். இல்லிருந்து, இனின்று என்னும் 5ஆம் வேற்றுமையுரு புகள், இக்காலத்திற்போல் இடத்திலிருந்து இடத்தினின்று என்றும் வழங்கியிருக்கலாம். `ஏ' என்னும் அடி `யா' என்று திரிந்தபோது, யான், யாம், யாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. ஆயின், அவை வேற்றுமை யேற்காது எழுவாயளவில் நின்றுவிட்டன, ஆதலால், அவற்றிற்கும் ஏம், ஏங்கள் என்பவற்றின் வேற்றுமை வடிவுகளே உரியவாயின. `யா' என்னும் திரிவடி `நா' என்று திரிந்தபோது, நான், நாம், நாங்கள் என்னும் வடிவுகள் தோன்றின. அவை பின் வருமாறு வேற்றுமையேற்றன. ஒருமை பன்மை இரட்டைப் பன்மை 1. நான் நாம் நாங்கள் 2. நன்னை நம்மை நங்களை 3. நன்னால், நம்மால், நங்களால், நன்னொடு நம்மொடு நங்களொடு 4. நனக்கு நமக்கு நங்களுக்கு, நங்கட்கு 5. நன்னிலிருந்து நம்மிலிருந்து நங்களிலிருந்து நன்னினின்று நம்மினின்று நங்களினின்று 6. நன் நம் நங்கள் (நனது, நன) (நமது, நம) (நங்களது, நங்கள) 7. நன்னிடம் நம்மிடம் நங்களிடம் `நா' என்னும் திரிவடியால் ஒருமைப்பெயர் வடிவிற் பொருள் வேறுபாட்டிற்கு இடமின்றேனும், பன்மைப் பெயர் வடிவிற் சிறந்த பொருள் வேறுபாட்டிற்கு இடமுண்டாயிற்று. நாம், நாங்கள் என்பன, தன்மையோடு முன்னிலையை உளப் படுத்தும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர்களாயின. எ-டு: நாம் = நானும் நீயும், யாமும் நீமும் (நீரும்) ஏங்கள் என்பதற்குச் சொன்ன குறிப்பை நாங்கள் என்பதற்குங் கொள்க. நாங்கள் என்பது, இற்றைத் தமிழில் முன்னிலையை உளப்படுத்தாது தவறாக யாங்கள் என்பதற்குப் பகரமாக (பதிலாக) வழங்குகின்றது. நாம் என்னும் பெயர், வினைமுற்றீறாகும்போது ஆம் என்று முதன்மெய் நீங்கும்; அம் என்று குறுகவுஞ் செய்யும்: எ-டு: நடந்தாம், நடந்தம் ஏம் என்னும் பன்மைப் பெயர், தனித் தன்மைப் பெயரா யிருப்பதொடு, படர்க்கையை உளப்படுத்தும் உளப் பாட்டுத் தன்மைப் பெயராகவும் ஆளப்பெறும். எ-டு: ஏம் 1. யாம் (தனித் தன்மை) 2. நானும் அவனும், யாமும் அவரும் (உளப் பாட்டுத் தன்மை) ஏம் என்பது வினைமுற்றீறாகும்போது, எம் என்று குறுகவுஞ் செய்யும். எ-டு: நடந்தேம், நடந்தெம். முன்னிலைப் பெயர்கள் ஒருமை பன்மை உயர்வுப்பன்மை 1. ஊன் ஊம் ஊங்கள் 2. உன்னை உம்மை உங்களை 3. உன்னால், உம்மால், உங்களால், உன்னொடு உம்மொடு உங்களொடு 4. உனக்கு உமக்கு உங்களுக்கு, உங்கட்கு 5. உன்னிலிருந்து, உம்மிலிருந்து, உங்களிலிருந்து, உன்னினின்று உம்மினின்று உங்களினின்று 6. உன் உம் உங்கள் (உனது, உன) (உமது, உம) (உங்களது, உங்கள) 7. உன்னிடம் உம்மிடம் உங்களிடம் ஊகாரவடி பின்னர் நகரமெய்யூர்ந்தும் வழங்கிற்று. 1. நூன் நூம் நூங்கள் 2. நுன்னை நும்மை நுங்களை 3. நுன்னால், நும்மால், நுங்களால், நுன்னொடு நும்மொடு நுங்களொடு 4. நுனக்கு நுமக்கு நுங்களுக்கு, நுங்கட்கு 5. நுன்னிலிருந்து, நும்மிலிருந்து நுங்களிலிருந்து, நுன்னினின்று நும்மினின்று நுங்களினின்று ஒருமை பன்மை உயர்வுப்பன்மை 6. நுன் நும் நுங்கள் (நுனது, நுன) (நுமது, நும) (நுங்களது, நுங்கள) 7. நுன்னிடம் நும்மிடம் நுங்களிடம் நூ அடி பின்னர் நீ என்று திரியவுஞ் செய்தது. 1. நீன் நீம் நீங்கள் 2. நின்னை நிம்மை நிங்களை 3. நின்னால், நிம்மால், நிங்களால், நின்னொடு நிம்மொடு நிங்களொடு 4. நினக்கு நிமக்கு நிங்களுக்கு, நிங்கட்கு 5. நின்னிலிருந்து, நிம்மிலிருந்து, நிங்களிலிருந்து, நின்னினின்று நிம்மினின்று நிங்களினின்று 6. நின் நிம் நிங்கள் (நினது, நின) (நிமது, நிம) (நிங்களது, நிங்கள) 7. நின்னிடம் நிம்மிடம் நிங்களிடம் நீன் என்னும் ஒருமைப்பெயர், பின்னர் நீ என ஈறுகெட்டு, உலக வழக்கிற் பெருவழக்காகவும் இலக்கிய வழக்கில் முழு வழக்காகவும் வழங்கத் தலைப்பட்டது. நீன் என்னும் பெயர் வழக்கை, இன்றும் பாண்டி நாட்டு நாடார்குல வழக்கிற் காணலாம். கன்னடத்தில் அப் பெயர் உகரவீறு பெற்று நீனு என வழங்கு கின்றது. நீம் என்னும் பன்மைப்பெயரும், இருவகை வழக்கிலும் அருகிய வழக்காயிற்று. அதனால் நீ என்னும் ஈறுகெட்ட பெயர் இர் என்னும் படர்க்கைப் பலர்பாலீறு பெற்று நீயிர் என்றாகி நீம் என்பதற்குத் தலைமாறாக (பதிலாக) வழங்கி வருகின்றது. நீம் என்னும் பெயர் வழக்கை, இன்றும் பாண்டி நாட்டுச் சிற்றூர்ப் பகுதிகளிற் காணலாம். நீயிர் என்பது, நாளடைவில் நீவிர் எனத் திரிந்து பின்னர் நீர் எனத் தொக்கது. நீ, நீர் (நீயிர், நீவிர்) என்னும் இரு வடிவுகட்கும் தன் வேற்றுமையில்லை. அதனால், முன்னதற்கு ஊன் என்னும் பெயரின் வேற்றுமையும், பின்னதற்கு நூம் அல்லது ஊம் என்னும் பெயரின் வேற்றுமையும், வழங்கி வருகின்றன. நீர் என்னும் வடிவிற்குச் சொன்னதே, நீயிர், நீவிர் என்னும் வடிவுகட்கும் ஒக்கும். தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு பரந்திருந்த குமரிநாடு முழுகிப்போனமையால், அதில் வழங்கிய ஆயிரக் கணக்கான உலக வழக்குச் சொற்கள் இறந்துபட்டன. முதலிரு கழகத்தாலும் இயற்றப்பட்டும் போற்றப்பட்டும் வந்த ஆயிரக் கணக்கான தனித்தமிழ் நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டமை யால், அவற்றில் வழங்கிய ஆயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும் இறந்துபட்டன. ஆதலால், மேற்காட்டிய தன்மை முன்னிலைப் பெயர்கள் சிலவற்றிற்கும், அவற்றின் வேற்றுமை வடிவுகட்கும், இன்று எடுத்துக்காட்டில்லையென அறிக. எட்டிற்குமேல் அடுத்த எண்ணின் பெயர் அக்காலத்தில் தொண்டு என்றே வழங்கிற்று. தொண்டு = 9 தொண்பது = 90 தொண்ணூறு = 900 தொள்ளாயிரம் = 9,000 தொண்பதினாயிரம் = 90,000 தொள்ளிலக்கம் = 900,000 தொண்பதிலக்கம் = 9,000,000 தொண்கோடி = 90,000,000 ஒன்று முதல் பத்துவரை எண்ணுப்பெயர்கள் தனிச் சொல்லாகவும் உகரவீறு கொண்டுமே இருந்தன. பலுக்கற் செம்மை கண், மான், ஊர், கல், கூழ், ஆள் என்பன போன்ற பெயர்களும், எண், ஈன், பார், சொல், உமிழ், கேள் என்பன போன்ற வினைகளும், உகர வீற்றைத் துணைக் கொள்ளா மலும், தாய், வாய் என்பன போன்ற பெயர்களும், செய், சாய் என்பன போன்ற வினைகளும், இகரவீற்றைத் துணைக் கொள்ளாமலும் ஒலித்தன. மரம், அவன் என்பன போன்ற பெயர்களும், வந்தான், போனான் என்பன போன்ற வினைகளும், இறுதி மெல்லின மெய் மூக்கொலியளவிலன்றி முற்றும் செவ்வையாக ஒலித்து வழங்கின. அவள், மகள் என்பனபோன்ற பெயர்களும், வந்தாள், போனாள் என்பன போன்ற வினைகளும், இறுதி ளகரமெய் ஒலித்தே வழங்கின. இலக்கண நடை இருக்கிறது, இருந்தது என்பன போன்ற படர்க்கை யொன்றன்பால் வினைகளெல்லாம், கொச்சைவடிவிலன்றி இலக்கண வடிவிலேயே வழங்கின. எல்லா வினைமுற்றுகளும் எழுவாய்க் கேற்ற ஈறு பெற்றே வழங்கின. எ-டு: நான் (யான்) அல்லேன் யாம், நாம் அல்லேம், அல்லோம் நீ அல்லை நீம் அல்லீம் நீர் (நீயிர், நீவிர்) அல்லீர் நீங்கள் அல்லீங்கள் அவனல்லன், அவளல்லள், அவரல்லர், அவர்களல்லர் கள், அதுவன்று, அவையல்ல. அன்மை யின்மைப் பொருட் சொற்கள் தெளிவாக வேறு படுத்தப்பட்டன. எ-டு: அவன் வீட்டில் இல்லை. அவன் புலவன் அல்லன். இருதிணைப் பகுப்பு குமரிநாட்டுத் தமிழர் பண்பாட்டிலும் பகுத்தறிவாற் றலிலும் தலைசிறந்திருந்ததனால், பகுத்தறி வடிப்படையி லேயே உயர்வகுப்பு தாழ்வகுப்பு என எல்லாப் பொருள் களையும் இருவகுப்பாக வகுத்து, பகுத்தறிவுள்ள உயிர் மெய்களைக் குறிக்குஞ் சொற்கட்கே பாலீறு கொடுத்தும், அஃதில்லாத உயிர்மெய்களைக் குறிக்குஞ் சொற்கட்கு எண்ணீறே கொடுத்தும், சொற்றொடர் அமைத்தனர். எ-டு: உழவன் உழுகின்றான். உழத்தி களையெடுக்கின்றாள். அவன் வந்தான். உயர்வகுப்பு அவள் போனாள். காளை உழுகின்றது. ஆவு மேய்கின்றது. ஆண்பனை வளர்கின்றது. பெண்பனை காய்க்கின்றது. தாழ்வகுப்பு அது வந்தது. அவை போயின. இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பல் என்னும் முறையில், இலக்கண நூலார் பகுத்தறிவுள்ள மக்களை உயர் திணை யென்றும், அவரல்லாத உயிருள்ளனவும் இல்லனவு மான எல்லாவற்றையும் அஃறிணை யென்றும், குறித்தனர். மக்களைப் படைத்தவரும் எல்லாம் அறிந்தவருமான, இறைவன் உயர்திணை யென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. இவ் விருதிணைப் பகுப்பு தமிழுக்கே சிறப்பாம். தெலுங் கில் இத்தகைய தொன்றிருப்பினும், அது தமிழைப் பின்பற்றியதே. சொல்வளம் குமரிநாட்டு ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற் களும், இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பின்பும், தமிழ் ஒப்புயர்வற்ற சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது. எடுத்துக்காட்டாக, இன்றும், சொல்லுதலைக் குறிக்க அறை, இயம்பு, இசை, உரை, என், ஓது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு, புகல், பேசு, மாறு, மிழற்று, மொழி, விள், விளத்து, விளம்பு முதலிய சொற்களும், ஓடுதலைக் குறிக்க, ஓடு, கிண்ணு, தொங்கு, பரி முதலிய சொற்களும், யானையைக் குறிக்க, ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கடமா, கரி, கறையடி, குஞ்சரம், கைம்மலை, கைம்மா, தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பூட்கை, பொங்கடி, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலிய பொதுச் சொற்களும்; சிந்துரம், பிணிமுகம், புகர்முகம் முதலிய சிறப்புச் சொற்களும் உள்ளன. அறை முதல் விளம்பு ஈறாகக் குறிக்கப்பட்ட சொற்க ளெல்லாம், சொல்லுதல் என்னும் பொதுப்பொருளில் ஒத்தன வேனும், சொல்லுதல் வகையான சிறப்புப் பொருளில் வேறு பட்டனவாம். இங்ஙனமே ஏனையவும். குமரிநாட்டுத் தமிழே திரவிடமொழிகட் கெல்லாந் தாயாதலால், முன்னதன் ஒருபொருட் சொற்களினின்றே, பின்னவற்றுள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு சொல்லைத் தெரிந்தெடுத்தாளுகின்றது. இது தாய் வீட்டிலுள்ள, ஒரு வினைக்குப் பயன்படும் பல்வகைக் கலங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு மகளும் எடுத்துப் புழங்குவது போன்றது. எ-டு: செப்பு - செப்பு (தெலுங்கு) கிள - ஹேளு (கன்னடம்) பறை - பற (மலையாளம்) செப்பு என்னும் வினைச்சொல், தமிழில் விடை சொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளிலும், தெலுங்கிற் சொல்லுதல் என்னும் பொதுப் பொருளிலும் வழங்கும். இங்ஙனமே ஏனைச் சொற்களும் தன்தன் சிறப்புப் பொருளை இழக்கும். பறைதல் என்னும் சொல், ஏதம்பறைந் தல்ல செய்து (திவ். திருவாய். 4: 6: 8) என்று இலக்கிய வழக்கிலும், சொல்லாமற் பறையாமல் ஓடிப் போய்விட்டான் என்று உலக வழக்கிலும் வழங்குதல் காண்க. வீட்டைக் குறிக்குஞ் சொற்களுள், இல் என்னும் தெலுங்குச் சொல்லும் மனை யென்னும் கன்னடச் சொல்லும் மட்டுமன்றி, சமற்கிருதத்திலும் பின்னிய (Finnish) மொழி களிலும் வழங்கும் குடியென்னும் சொல்லும் தமிழிலுள்ள தென்று, தமிழின் ஒருபொருட் சொல்வளத்தைக் கால்டு வெலார் வியந்திருத்தலை நோக்குக. சமற்கிருதம் பிராகிருத மொழிகளினின்றும் தமிழினின் றும், ஆங்கிலம் உலக மொழிகளுட் பலவற்றினின்றும், ஏராள மாகக் கடன் கொண்டிருப்பதால், அவற்றிலுள்ள ஒருபொருட் சொல்வளத்தை வியத்தற்கில்லை. திரவிட மொழிகளிலுள்ள சில சொற்கள் இற்றைத் தமிழில் இல்லையெனின், அவை குமரி நாட்டுத் தமிழில் வழங்கி இறந்துபட்டன என்றறிதல் வேண்டும். சொல்லிற்குச் சொன்னதே சொல்வடிவிற்கும். சொல்வடிவுகளுள் முன்னதைப் பின்னதினின்று வேறு படுத்தியறிதற்கு, மொழியாராய்ச்சியொடு கூடிய சொல்லா ராய்ச்சி வேண்டும். நால்-நால்கு - நான்கு தெ. நாலுகு (g), க. நால்கு (k) வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி (பெரும்பாண். 489) நால்கு என்பது தமிழ்வடிவே. தூய்மை முதலிரு கழகக் காலத்திலும் ஆரியர் தென்னாடு வராமை யால், அக் கழகங்கள் இருந்த குமரிநாட்டுத் தமிழ், ஒலியிற் போன்றே சொல்லிலும் பொருளிலும் இலக்கியத்திலும் கருத்திலும் முழுத் தூய்மை பெற்றிருந்தது. இலக்கியத்துள் இலக்கணமும் அடங்கும். 6. குமரிநாட்டுத் தமிழர் (தோரா. கி.மு. 50,000-10,000) குமரிநாட்டுத் தமிழர், பெரும்பாலும் ஐந்திணைப்பட்ட நாட்டுப் புறத்தாரும், சிறுபான்மை திணைமயக்குற்ற நகர வாணருமாக, இருவகை வாழ்ச்சியராய் இருந்துவந்தனர். குறிஞ்சிநிலை மாந்தர், கொல்லியும் பறம்பும் போன்ற மலைகளையடுத்துக் கூட்டங்கூட்டமாகக் குடிசைகளில் தங்கி, வேட்டையாடியும் கிழங்ககழ்ந்தும் தேனெடுத்தும் தினை விளைத்தும், முரட்டுக் கம்பளியுடுத்தும் முருகனை வணங்கி யும், வாழ்ந்து வந்தனர். உணவுப் பொருள்களைச் சுடுவதற்கும் எளிய முறையிற் சமைப்பதற்கும், இரவிற் கொடிய விலங்கு களை ஓட்டுவதற்கும், தீக்கடை கோலால் தீயுண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் குடியிருப்புக் குறிச்சியென்றும் சிறு குடியென்றும் பெயர் பெற்றன. குறிஞ்சிநில மகளிர் குறிசொல்வது குறம் எனப்பட்டது. அதனாற் குறவர் என்றும், வேட்டையாடுவதால் வேட்டுவர் என்றும், குறிஞ்சிநில மாந்தர்க்கு இருபெயர்கள் உண்டாயின. முல்லைநில மாந்தர், புல்வெளியுள்ள காடுகளை யண்டி, ஆடுமாடெருமையாகிய முந்நிரைகளையும் வளர்த்து பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஆனைந்தை மருதநிலத்தும் பாலை நிலத்தும் விற்றும், வரகு, சாமை, அவரை துவரை முதலிய வானாவாரிப் பயிர்களை விளைத்தும், பஞ்சாடையும் மென் கம்பளியும் உடுத்தும், புல்வளர்ச்சிக்கு இன்றியமையாத மழைபொழியும் முகில் வண்ணங் கொண்ட மாயோன் (கரியோன்) என்னும் தெய்வத்தை வணங்கியும், வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு, பாடியென்றும் சேரியென்றும் பெயர் பெற்றன. ஆயர், இடையர், பொதுவர், தொழுவர், தொறுவர், கோவர், கோவலர் என்பன முல்லைநிலத்தார் பெயர்கள். கோ (ஆன்) மேய்ப்பதில் வல்லவர் கோவலர் ஆன் வல்லோர் என்று திவாகரத்திலும், ஆன்வல்லவர் என்று சூடாமணியிலும், குறிக்கப்பட்டிருத்தல் காண்க. கண்ணகி கணவனாகிய கோவலன் பெயரே கோபால என்னும் வடசொல்லின் திரிபாகும். அதிலும் கோ என்பது தென்சொல்லே. காட்டுமாடுகளைப் பிடிப்பதற்கும் வீட்டுமாடுகளை அடக்கு தற்கும் மறவலி வேண்டியிருந்ததனால், ஆயர் தம் மகளிரைக் கொல்லேறு பிடித்தடக்கிய இளைஞர்க்கே மணஞ்செய்து கொடுத்தனர். கொல்லேறடக்கல் ஏறுதழுவல் எனப்பட்டது. ஆட்டிடையர் (புல்லினத் தாயர்) என்றும் மாட்டிடையர் (நல்லினத்தாயர்) என்றும், ஆயர் இரு வகையராய்ப் பிரிந்தனர். மருதநில மக்கள் நிலவளமும் நீர்வளமும் மிக்க இடங்களில் தங்கி, நெல் கரும்பு வாழை முதலிய நன்செய்ப் பயிர்களையும் சோளம் கேழ்வரகு முதலிய புன்செய்ப் பயிர்க ளையும் விளைத்து, பஞ்சாடையும் பட்டாடையும் கம்பளியா டையும் அணிந்து, வேந்தன் (இந்திரன்) என்னும் வானவர் கோனை வணங்கி, மண்ணாலுங் கல்லாலுஞ் செங்கலாலும் கட்டிய மச்சுவீடுகளிலும் ஓட்டு முகட்டு வீடுகளிலும் கூரை வீடுகளிலும் வதிந்து, நிலையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடியிருப்பு மட்டும் ஊர் என்று பெயர்பெற்றது. உர்-உறு. உறுதல் = பொருந்துதல், நிலத்தோடு பொருந்து தல், நிலையாகக் குடியிருத்தல். உர்=உறு. உர்-ஊர். ஒ.நோ; உண்-ஊண். பயிர்த்தொழிலில் முதல்வினை உழவாதலால், அத் தொழிலும் உழவெனப்பட்டது. அதைச் செய்தவர் உழவர் எனப்பட்டனர்; போரடிக்குங் களத்தில் வேலை செய்வது பற்றிக் களமர் என்றும் பெயர் பெற்றனர். பெருநிலக்கிழாரெல்லாரும் பிறரைக் கொண்டே வினை செய்து, வீட்டிலிருந்து நிழலில் வாழ்ந்ததனால், சற்று வெளுத்துப் போய் வெள்ளாளரென்றும் வெண்களம ரென்றும்; சிறுநிலக் கிழாரும் நிலமிலிகளும் கடுவெயிலிலுங் காட்டிலும் வேலை செய்து கருத்துப் போனதினால், காராளரென்றும் கருங்களமரென்றும் சொல்லப் பட்டனர். இங்ஙனம், உழுதுண் பார், உழுவித்துண்பார் என உழவர் இரு வகுப்பாராயினர். மருதநில மக்கள் நிலையாக வாழ்ந்ததனால், அவர்கள் குடியிருப்புகள் நாளடைவிற் பேரூரும் மூதூருமாயின. அவற்றுட் சில நகரும் நகரமும் ஆயின. நகரம் மாநகர். உழவருக்குப் பக்கத்துணையாக நெயவர், குயவர், தச்சர், கொல்லர், பறம்பர் (தோல்வினைஞர்), மயிர்வினைஞர், வண்ணார், செக்கார் முதலிய பதினெண் தொழிலாளரும், பிற நுண்வினைஞரும்; படிப்படியாகத் தோன்றினர். நகரத்தில் நாகரிகந் தோன்றி வளர்ந்தது. கடல்நீரால் உப்பு விளைத்தற்கும், ஆறு குளங்கள் நீர் வற்றியபின் கடல்மீன் பிடித்தற்கும், முத்துக் குளித்தற்கும், சில கூட்டத்தார் நெய்தல்நிலத்தில் வதிந்தனர். அவர்கள் குடியிருப் புக் குப்பம், கரை, துறை, காயல், கானல் எனப் பல்வேறு பெயர் பெற்றன. நெய்தல்நிலத்தார், இடத்திற்கும் கருவிக்கும் தொழிலுக் கும் ஏற்ப, கரையார் என்றும், படவர் - பரவர் என்றும், முக்குவர் என்றும், அளவர் என்றும், பெயர்பெற்றனர். அவர் வணங்கியது வாரணன் என்னும் கடல் தெய்வம். முல்லையுங் குறிஞ்சியும் கடுங்கோடைக் காலத்திற் சில விடங்களில் வற்றிவறண்டு விளைச்சலின்றிப் பஞ்சநிலை ஏற்பட்டபோது, பாலையெனப்பட்டன. அத்தகைய சமையங் களில், அந் நிலவாணர் வழிப்பறிக்கவும் அக்கம் பக்கங்களிற் கொள்ளையடிக்கவும் நேர்ந்தது. மூவேந்தரும் அவரைத் தம் படை மறவராக்கியும், தாம் பகைத்த அரசரின் நாடுகளினின்று ஆநிரைகளைக் கவர்ந்துவர ஏவியும், வந்தனர். பாலைநில வாணர் கள்ளர், மறவர், எயினர், வேட்டுவ எனப் பலவகுப்பினர். அவர்கள் குடியிருப்பு குடிக்காடு, நத்தம், பறந்தலை, சேரி எனப்பட்டன. அவர்கள் தெய்வம் காளி. மருதநிலப் பேரூர்களில், முதற்கண் ஒவ்வொரு தொழி லாளரும் தத்தம் விளைபொருள்களையும் செய்பொருள் களையும் நெல்லிற்கும் பிறவற்றிற்கும் பண்டமாற்றுச் செய்து வந்தனர். பின்னர் எல்லாப் பொருள்களையும் வாங்கிவிற்கும் வணிகர் தோன்றினர். முதலில் உள்ளூர்ப் பொருள் விற்பனை யும், பின்னர் வெளியூர்ப் பொருள் விற்பனையும், அதன்பின் வெளிநாட்டுப் பொருள் விற்பனையுமாக, வணிகம் வளர்ந்து வந்தது. நிலவாணிகத்தின் பின் நீர்வாணிகம் தோன்றிற்று. நில வாணிகர் சாத்துவர் என்றும், நீர்வாணிகர் நாவிகர் (நாய்கர்) என்றும் பெயர் பெற்றனர். மக்கள்தொகை பெருகியபின் களவுங் கவர்வும் மிகுந்த தனால் பொருட்காப்பிற்கும் வழக்குத் தீர்ப்பிற்கும் ஆட்சிக்கும் காவலன் ஏற்பட்டான். குடும்பத்தலைவன் நிலைமையில் தொடங்கிய ஆட்சிப் பதவி, ஊர்த்தலைவன், வேள் (குறுநில மன்னன்), கோ (பெருநில அரசன்), வேந்தன், மாவேந்தன் (பேரரசன்) எனப் படிப்படியாக வுயர்ந்தது. வேந்தன் ஏற்பட்ட பின் அவனுக்கடங்கிய சிற்றரசர்க்கு மகுடம் அணியும் உரிமை இல்லாது போயிற்று. இயல்பாகவே பண்டமாற்றினால் ஏற்பட்ட திணைமயக்கம், ஐந்திணை நிலங்களையும் சேர்த் தாண்ட வேந்தன் காலத்தில், மிக விரிவடைந்தது. வேய்ந்தான் - வேய்ந்தன் - வேந்தன் = முடியணிந் தவன். வேய்தல் = தலைமேலணிதல். இங்ஙனம் குறுநில அரசர், பெரு நில அரசர் என ஆள்வார் இருவகையராயினர். பாண்டியன் சோழன் சேரன் என்ற முறையில் முக்குடி வேந்தர் தோன்றி, ஆட்சிக்கு மருதநிலத்தில் ஒன்றும், நீர்வாணிகத்திற்கு நெய்தல் நிலத்தில் ஒன்றுமாக, இரு மாநகரமைத்து ஆண்டனர். மருதநிலத் தலைநகரெல்லாம் பேராற்றங்கரை மேலேயே அமைந்திருந்தன. நாகரிகம் வளர்ந்து பாதுகாப்பும் ஏற்பட்டபின், உழுவித் துண்ணும் உழவரான வெள்ளாளர் தம் ஒழிவு நேரங்களிற் கல்வியை வளர்த்து வந்தனர். இம்மைக்குரிய உலகியற் கல்விக்குப் பின், மறுமைக்குரிய மதவியற் கல்வி தோன்றிற்று. உலக வாழ்க்கையில் வெறுப்புற்றவர் துறவை மேற்கொண்டனர். கற்றோருள் இல்லறத்தார் நூல்களைப் பார்ப்பதனாற் பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்றும், துறவறத்தார் எல்லாவுயிர் களிடத்தும் அருள் பூண்டமையால் அந்தணர் என்றும், பெயர் பெற்றனர். இங்ஙனம், கற்றோர் பார்ப்பாரும் அந்தணரும் என இருதிறத்தாராயினர். சிலர், பார்ப்பனர் என்னும் சொல் பிராமணன் என்னும் வட சொல்லின் திரிபென்றும், துறவு நிலை பிராமணனுக்கேயுரிய தென்றும், பிதற்றிப் பேதையரை ஏமாற்றுவர். குமரி நாட்டுத் தமிழர் காலம் ஆரியர் என்னும் இனக் கருவே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணவாத இளமைக் காலத்தில் கொட்பேரன் எங்ஙனம் தோன்ற வில்லையோ, அங்ஙனமே குமரிநாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன் தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள். 33) என்னுங் குறளினின்று, பார்ப்பான் என்னும் பெயர்க் கரணியத் தையும், அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்னுங் குறளினின்று, அந்தணன் என்னும் பெயர்க் கரணியத் தையுங் கண்டுகொள்க. சிலர், பார்ப்பனன் என்னும் சொல்வடிவு பிராமணன் என்பதைப் பின்பற்றிய தென்பர். ஆன், அனன் என இரு வகையீறுகளைப் பெறுவது தமிழ் வினைமுற்றுகளின் இயல்பே. எ-டு: இ.கா. நி.கா. எ.கா. பார்த்தனன் பார்க்கின்றனன் பார்ப்பனன் பார்த்தனள் பார்க்கின்றனள் பார்ப்பனள் பார்த்தனர் பார்க்கின்றனர் பார்ப்பனர் பார்த்தன்று பார்க்கின்றன்று -------- பார்த்தன பார்க்கின்றன பார்ப்பன அனது - அன்று (அன் + து). பார்த்தன்று = பார்த்தது. மருதநிலத்தில் உழவர், வணிகர், அரசர், பார்ப்பார் என்னும் நால் வகுப்பாரும் தோன்றியபின். வேளாண்மை செய்து விருந்தோம்புவதில் வெள்ளாளரும் காராளருமான இருவகை யுழவரும் தலைசிறந்ததனால், வேளாளர் எனப் பட்டனர். திணைமயக்கம் மருதநிலத்துக் கோநகர்களும் தலைநகர்களும் நகரங் களாக (மாநகர்களாக) விரிவடைந்தபோது, முல்லை நிலமும் சிலவிடத்துக் குறிஞ்சிநிலமும் படிப்படியாக அடுத்து வந்தன. காவிரிப் பூம்பட்டினம் போன்ற நெய்தல் நகரங்களில், மருத மும் முல்லையுங் கலந்தன. சேர நாட்டு வஞ்சி போன்ற நகரங் களில் ஐந்திணையுங் கலந்தன. நெய்தல் நகரங்களெல்லாம் பட்டினம் என்றும், அவற்றின் பிரிவுகள் பாக்கம் என்றும் பெயர்பெற்றன. மருதநிலத் தூர்கட்கு, முதற்கண், நெய்தல்நில மாந்தர் உப்பும் மீனும் சங்கும் பவளமும் போன்ற கடல்படு பொருள் களையும், முல்லைநில மாந்தர் ஆனைந்தையும், குறிஞ்சிநில மாந்தர் தேனும் இறைச்சியும் மருப்பும் (தந்தமும்) காசறையும் (கஸ்தூரியும்) போன்ற மலைபடு பொருள்களையும், கொணர்ந்து நெல்லிற்கும் ஆடைக்கும் மாற்றினர். பின்னர், பிழைப்பிற்காகச் சிலர் நகர் தொறும் வந்து குடியேறினர். பாலை நில மறவரும் காவல்தொழிற் கமர்ந்தனர். திருநாள், பெருநாள், பொருநாள் ஆகிய முந்நாள் களிலும், ஐந்திணை மக்களும் கலந்தனர். அங்ஙனங் கலந்து உரையாடும் போது, மருதவாணனை நோக்கி உன் ஊர் எதுவென்றும், முல்லைவாணனை நோக்கி உன் பாடி (அல்லது சேரி) எதுவென்றும், குறிஞ்சிவாணனை நோக்கி உன் குறிச்சி எதுவென்றும், நெய்தல் வாணனை நோக்கி உன் குப்பம் (அல்லது துறை) எதுவென்றும், பாலைவாணனை நோக்கி உன் குடிக்காடு எதுவென்றும், வினவுவதே இயல்பும் வழக்கமும். பேரூர்களிலும், மூதூர்களிலும் பல தொழிலாளரும் நிலத்தாரும் கலந்து, திணைமயக்கம் மிகுதியாக ஏற்பட்டபோது, ஐந்திணைக் குடியிருப்பும் ஊர் என்னும் பொதுப்பெயர் பெற்றன. குலவகுப்பு முதற்கண், நிலந்தொறும் ஒரு வகுப்பாக ஐந்திணைக் குலங்கள் தோன்றின. பின்னர் மருதநிலத்தில், உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழிற் குலங்கள் தோன்றின. அதன்பின் வணிகர், அரசர், பார்ப்பார் என்னும் குலங் கள் அல்லது குடிகள் தோன்றின. அரசர் என்றது, வேந்தரும் வேளிரும் போல வழிவழியாக வந்த அரசர் குடும்பங்களையே. கல்விச் சிறப்பும் ஒழுக்க வுயர்வும் பற்றிப் பார்ப்பாரும் சிலவிடத்து அந்தணர் எனப் பெற்றனர். ஒவ்வொரு குலமும் நாளடைவில் இரண்டும் பலவுமாகக் கிளைத்துப் பல்கிற்று. எல்லாக் குலங்களும் தொழிலடைப்படையிலேயே தோன்றியியங்கின. ஒருவன் எத்தொழிலையும் மேற்கொள்ள லாம். செய்யுந் தொழில்பற்றியே ஒருவன் குலம் அமைந்தது. ஆயின், தந்தையறிவும் ஆற்றலும் மனப்பான்மையும் இயல் பாகவே மகனுக்கு அமைந்து விட்டதனாலும், ஒவ்வொரு வனும் பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோனைப் பின்பற்றி ஒரு தொழிலிற் பயிற்சி பெற்றுவிட்டதனாலும், தலைமுறை தொறும் மரபுத் தொழிற்றிறமை வளர்ச்சியடைந்து வந்தத னாலும், மக்கள்தொகை பெருகப் பெருக எல்லாத் தொழிலாளர்க்கும் பிழைப்பு ஏற்பட்டதனாலும், பெரும் பாலும் பெற்றோர் தொழிலையே மக்கள் வழிவழி செய்து வருவாராயினர். ஊர்க்கிழவன் (ஊரன்), ஊராளி, ஊர்க்குடும்பன், ஊர்க் காமிண்டன் (கவுண்டன்), நாட்டாண்மைக்காரன், நாடன், நாடான், நாட்டான், பெரியதனக்காரன், அம்பலகாரன், சேர்வைகாரன், மூப்பன், மன்றாடி, பண்ணையாடி, முதலி, தலைவன், தேவன் என இடத்திற்கும் குலத்திற்கும் ஏற்பப் பல பெயர் பெற்றிருந்த ஊர்த்தலைவன் பதவி போன்றே, அரசர் பதவிகளும் தொல்வரவாகத் தொடர்ந்து வந்தன. இயல்பான உறவன்பும் பொருளுதவியும் பாதுகாப்பும் நோக்கி, பொதுமக்கள் பெரும்பாலும் உறவினர்க்குள்ளேயே கொள்வனையுங் கொடுப்பனையுஞ் செய்து வந்தனர். அரசர்க்கோ எவ்வகை விலக்கும் தடையும் இருந்ததில்லை. வேளிர் மகளிரையும் மறக்குடி மகளிரையும் அயல்நாட்டரசர் மகளிரையும் அவர் மணந்து வந்தனர். எக்குலத்தாராயினும், துப்புரவும் ஒழுக்கமுமே உண்டாட்டுற விற்குக் கவனிக்கப்பட்டன. கல்வி, ஒழுக்கம், தவம், அதிகாரம், செல்வம், ஈகை, மறம், ஆற்றல் என்பவற்றா லன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை. அத்தி, மத்தி, ஆதன், பூதன், உதியன், திதியன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், சாத்தன், கூத்தன், நாகன், பேகன், நன்னன், பொன்னன், நாணன், வாணன், வேந்தன், சேந்தன், நள்ளி, கிள்ளி, பாரி, காரி, பிட்டன், வட்டன், தத்தன், தித்தன், மூலன், வேலன், இறையன், பொறையன், மூவன், தேவன், கொற்றன், வெற்றன், மருதன், விருதன், சேரன், கீரன், வங்கன், கொங்கன், வெள்ளையன், பிள்ளையன், கருப்பன், பொருப்பன், பச்சை, செச்சை, மலையன், கலையன், மாறன், வீறன், நல்லன், செல்லன், நம்பி, தம்பி, அப்பன், குப்பன், வேட்டன், சேட்டன் முதலியனவாகத் தனித்தும் புணர்ந்தும் அடையடுத்தும் வரும் பெயர்கள் எத்தொழிலா ருடையன வாயினும், இக்காலத்து வழங்கும் குலப்பட்டமின்றி, ஏனை நாட்டார் பெயர்கள் போன்றே அக்காலத்து வழங்கி வந்தன. வண்ணார், அடுத்தோர் (மயிர்வினைஞர்) முதலிய ஊர்க்குடி மக்கள், பறம்பர் (தோல்வினைஞர்) போன்றே, ஒரே வகுப்பாராய் எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தனர். மேனாடுகளிற் போன்றே, உணவுவகையினால் ஏற்றத் தாழ் வில்லாதிருந்தது. எல்லாத் திருக்கோவில்களிலும் தமிழ் ஒன்றே வழிபாட்டு மொழியாயிருந்தது. உவச்சர், குருக்கள், திருக்கள், புலவர், பண்டாரியர், நம்பிமார், போற்றிமார், சாத்துவார் முதலிய தமிழ்ப் பூசாரியரே, சிவன் திருமால் காளி என்னும் முத் தெய்வக் கோவில்களிலும் வழிபாடு நடத்தி வந்தனர், கோவிற் புகவுரிமையும் வழிபாட்டுரிமையும் எல்லா வகுப்பார்க்குஞ் சமமாயிருந்தது. கோவிலையடுத்திருந்த திருக்குளத்திற் குளித்தபின் அல்லது கைகால் கழுவியபின், எல்லாரும் காணிக்கையொடு கோவிற்குட் புகுந்தனர். திருவிழாக்களிலும் புனலாட்டு விழாக்களிலும் எல்லா வகுப் பாரும் கலந்தே கொண்டாடினர். ஆறுகுளங்களில் வகுப்பிற் கோரிடமாக வரையறுக்கப்படவில்லை. இடுகாடு எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. பிணத்தைச் சுடுவது தமிழர் வழக்கமன்று. வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்பதே இயற்கை முறையாயினும், பொருளிலக்கண நூலார், ஆக்கவழிப்பாற்றல் பற்றியும் முக்கால அறிவுபற்றியும் முழுத்தூய்மைபற்றியும் அந்தணரை முன்னும், இறைவன்போல் எல்லாரையும் முறை செய்து காத்தல்பற்றி அரசரை இரண்டாவதும், நாட்டை வளம் படுத்தியும் போர்க்காலத்தில் அரசர்க்குப் பொருள் கொடுத்தும் உதவும் வணிகரை மூன்றாவதும் வைத்து, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனத் தலைகீழாகச் செயற்கை முறைப் படுத்தினர். 7. குமரிநாட்டு நாகரிகம் நாகரிகம் என்பது திருந்திய பழக்கவழக்கம். அது முதன் முதல் நகரத்தில் அல்லது நகரியில் தோன்றினதனால் நாகரிகம் எனப்பட்டது. ஒ.நோ: L. civis = citizen, civil = polite, civil-civilize-civilization = advanced stage in social development. L. urbis = city, urbane = courteous, urbanity = polished manners. அகநாகரிகம், புறநாகரிகம் என நாகரிகம் இருவகைப் படும். அகநாகரிகமாவது திருந்திய ஒழுக்கம்; புறநாகரிக மாவது திருந்திய உலக வாழ்க்கை. இவற்றுள் முன்னது பண்பாடு என்றும், பின்னது அடையின்றிப் பொதுவாக நாகரிகம் என்றும் சொல்லப்படும். நாகரிகம் உறையுள் வேந்தரும் கோக்களும் மாபெருஞ்செல்வரும் வதியும் நகரங்களும், வேளிரும் மண்டிலத் தலைவரும் வதியும் நகர் களும், கல்லாலும் செங்கலாலும் சுண்ணாம்புக் காரையிட்டுக் கட்டிச் சிப்பி நீற்றுச் சுதையால் தீற்றிய, மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்டு, மாட்சியான காட்சியளித்தன. சிப்பிச் சுதையின் வெண்மைச் சிறப்பை, ``ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்'' (குறள். 714) என்னும் திருக்குறளாலும், ``புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்து'' (புறம். 378) என்னும் புறநானூற்று அடியாலும், ``வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே.'' என்னுந் திருக்கோவைச் செய்யுளாலும் (15), அறியலாம். மாடங்களிலெல்லாம் கண்கவர் வண்ண வோவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. ``சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்'' (3: 127-131) என்று மணிமேகலையும், ``மாடக்குச் சித்திரமும்'' என்று நன்னூற்பாயிரமும் கூறுதல் காண்க. நகரந்தொறும் வானளாவும் எழுநிலைக் கோபுரமும் கட்டப்பட்டிருந்தது. முதற்கண் அரசர்வதியும் அரண்மனைக் காவற் கோபுரமாக இருந்த கட்டடம், பிற்காலத்தில் வானளாவுந் திருக்கோவிற் கோபுரமாக வளர்ந்தது. கோ = அரசன், புரம் = உயர்ந்த கட்டடம். ``புரையுயர் வாகும்.'' (தொல், உரி. 4) (கோநகருந் தலைநகரும் கோட்டை மதிலாலுஞ் சூழப் பட்டிருந்தன. கோட்டையுள்ள நகரங்கள் புரி என்றும், கோபுர முள்ள நகரங்கள் புரம் என்றும் பெயர் பெற்றன.) புரிதல் = வளைதல். புரி = வளைந்த (சூழ்ந்த) கோட்டை யுள்ளது. புரி - புரிசை = கோட்டை மதில். மதில், எயில், இஞ்சி, சோ என மதிலரண் நால்வகைப் பட்டிருந்தது. மிக உயரமானது மதில்; முற்றுகையிடும் பகைவர் மீது அம்பெய்யும் ஏவறைகளையுடையது எயில்; செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியிறுகியது இஞ்சி; அரிய கடும் பொறிகளையுடையது சோ. கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் போக்குவதற்கு, கரந்துபடையென்னும் புதைசாலகம் இருந் தது. அது மறுகு (பெருந்தெரு) நடுவிற் கட்டப்பட்டு யானைக் கூட்டம் மேற்செல்லும்படி, கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. அதிற் சென்றநீர் யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது. அரசர் குடும்பத்துடன் போர்க்காலத்தில் தப்பிக்கொள் வதற்கு, அரண்மனையின் கீழும் கோநகர்களிடையும், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆடை பஞ்சு, பட்டு, மயிர் ஆகிய மூவகைக் கருவிப் பொருளாலும் இழைக்கப்பட்ட நுண்ணூலினால், பூவிதழ் போன்ற மென்மையும், இழை பிரித்தறியாச் செறிவும், பாம்புச் சட்டையும் மூங்கிற் சொலியும் நீராவியும் நறும்புகையும் ஒத்த நனிதவ நொய்ம்மையும், கண்கவர் பல்வண்ணப் பூத்தொழிலும், உடைய பல்வகை ஆடைகள் அறுவகைப் பருவத்திற்கும் ஏற்றவாறு நெய்யப்பட்டன. மயிர் என்றது, ஆட்டுமயிரையும் ஒருவகை எலி மயிரையும். ஊண் உலகில் முதன்முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண் டவன் தமிழனே. உண்ணல் தின்னல் நக்கல் பருகல் என்னும் நால்வகை ஊண் வினையும் ஒருங்கே சேர்ந்தது சாப்பிடுதல். உணவைச் சோறும் குழம்பும் கறியும் என மூன்றாகப் பகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்து, குழம்பையும் கறியையும் கண்ணிற்கு அழகும் மூக்கிற்கு நறுமணமும் நாவிற்கு இன்சுவையும் உணர்த்துவனவும், உடம்பை வலுப் படுத்து வனவும், நோய்வராது தடுத்து வாழ்நாளை நீட்டிப் பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளைச் சேர்த்து ஆக்கி, முதலிற் குழம்பும் இடையில் மிளகுநீரும் இறுதியில் தயிர் அல்லது மோரும் ஊற்றி, இயற்கையான மெல்லிய வாழையிலையில் அறுசுவை யுண்டி தொன்றுதொட்டு இன்பமாகச் சாப்பிட்டு வருபவன் தமிழனே. அரிசி வகையில், நெல்லரிசி தலை; வரகு தினை சாமை குதிரை வாலி காடைக்கண்ணி ஆகியவற்றின் அரிசி இடை; கஞ்சி களி கூழுக்கு மட்டும் உதவும் சோளம் கம்பு கேழ்வரகு கடை. நெல்லரிசியில் சீரகச் சம்பா சிறுமணிச் சம்பா என்பவை தலை; பிற சம்பா இடை; மட்டையரிசி கடை. சோளம் கம்பு கேழ்வரகுண்ணும் பாட்டாளி மக்களும் சுவையான குழம்பும் தொடுகறியும் விரும்புவர். குழம்பிற் குதவும் பயற்று வகைகளுள், துவரை தலை; அவரை மொச்சை பச்சை இடை: உழுந்து தட்டான் கல் கரம்பை கொள் (காணம்) கடை. (மிளகு) நீர், நீட்டாணம் (soup), சாறு, குழம்பு, கூட்டு என்பன குழம்பு வகையில் முறையே ஒன்றினொன்று திண்ணியவை. பல்வகைக் காய்களும் மீனும் இறைச்சியும், வாட்டல், வதக்கல், வறுவல், பொரியல், துவட்டல், புரட்டல், அவியல், ஒடியல் எனப் பல்வேறு முறையில் கறியாக்கப்பட்டன. குழம்பிற்கும் கறிக்கும் இறுதிவினை தாளிப்பு (உசிலிப்பு). அதற்கு எண்ணெயும் ஆநெய்யும் பயன்படுத்தப்பட்டன. இறைச்சி வகையில், முழுவுடும்பு, முக்கால் காடை, அரை கோழி, கால் ஆடு என்பது பழமொழி. அணி பொன்னும் முத்தும் மணியும் குமரிநாட்டில் ஏராள மாய்க் கிடைத்தன. நுண்ணிய ஓவிய வேலைப்பாடுள்ள அணிகளும் கலங்களும் தட்டுமுட்டுகளும் உருவங்களும் செய்யப்பட்டன. கைத்தொழில் எல்லாத் தொழில்களையுஞ் செவ்வையாகச் செய்தற்கு, இரும்பினாலும் செம்பினாலும் வெண்கலத்தினாலும் சிறந்த கருவிகள் செய்யப்பட்டன. இரும்பு முதன்முதல் தமிழகத் திலேயே கண்டுபிடிக்கப்பட்ட தென்பதற்கு, அதன் தமிழ்ப் பெயர் ஆரிய மொழிகளில் வழங்குவதே சான்றாம். E. iron, OE. iren, isen, Ger. eisen, Skt. ayas. மக்கட் கருத்துகள் ஒவ்வொருவரும் பால் வகுப்பு வேறுபாடின்றி அறம் பொருளின்பம் வீடு அடைதல் வேண்டும். எந்தவூரும் சொந்தவூர். எல்லாரும் ஓரினம். அறிவாற்றல் குணஞ்செயல் களாலன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை. ஒருவனுக்குப் பெருமை யும் சிறுமையும் தன்னாலேயே வரும். இன்பமும் துன்பமும் வருதற்கு அவரவர் பழவினையே காரணம்; பிறரல்லர். பிறந்தவையெல்லாம் இறக்கும். அதற்கு அஞ்சல் கூடாது. அது ஒரு நிலைமையினின்று இன்னொரு நிலைமைக்குப் புகு வாயிலே. ஒவ்வொருவர்க்கும் வாழ்க்கையில் ஒரு கடமையுண்டு. அது நிறைவேறியபின் இறப்பு வரும். உடலுழைப்பிற்கும் மனவுழைப்பிற்கும் உயர்பதவிக்கும் தாழ்பதவிக்கும் ஏற்றவாறு, குணங்களும் திறமைகளும் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆதலால், பெரியோரைப் புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் தக்கதன்று. ஒவ்வொருவரும் தம்மைப் போற் பிறரைக் கருதுதல் வேண்டும். இறந்தபின் உடன் வருவன அவரவர் செய்த இருவகை வினைகளே. அரசியல் அரசர் தம்மை உயிராகவும் தம் குடிகளை உடம்பாகவும் கருதி, ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஐவகை உறுதிச் சுற்றம், நால்வகைப் படை, நால்வகை யரண் ஆகியவற்றைத் துணைக் கொண்டு, நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செய்து வந்தனர். பொதுக்கல்வி இக்காலத்திற்போல் அரசியலுறுப்பான பொதுக்கல்வித் திணைக்களம் அக்காலத்தில் இல்லையேனும், ஏறத்தாழ எல்லாரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருந்தனர். பாட்டாளியுட்படப் பல தொழிலாரும் பாவலராகவு மிருந்தனர். செய்யுள் அக்காலத் திலக்கிய மெல்லாம் செய்யுளாகவே யிருந்தது. அது வெண்பா, ஆசிரியப்பா (அகவற்பா), கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களாக வழங்கிற்று. செய்யுள் நூலிற்குப் பொருள் கூறும் உரையும் எளிய செய்யுளாகவே யிருந்தது. வெண்பாவிற்கும் கலிப்பாவிற்கும் இணையான யாப்புவகை வேறெம்மொழியிலும் காணவியலாது. மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் எனச் செய்யுளுறுப்பு கள் இருபத்தாறாகக் கொள்ளப்பட்டன. அறிவியல் இலக்கணம் எத்துணைச் சிறந்தனவேனும், ஏனை யுயர்தனிச் செம்மொழிகளிலெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என மொழியிலக்கணம் நால்வகைப்பட்டதே. தமிழிலக்கணம் மட்டும், உலகில் முதன்முதல் இயற்றப்பட்டதேனும், சொற் றொடரும் செய்யுளும் நூலும் கூறும் பொருளுக்கும் இலக்கணங் கண்டதாகும். அகம், புறம் எனப் பொருள் இருபாற்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் எவ்வேழு திணைகளைக் கொண்டது. பொதுவாக, அகம் காதல் வாழ்க்கையையும், புறம் போர் வினையையும் கூறும். இவை யிரண்டுமல்லாத எல்லாப் பொருள்களும், வாகை யென்னும் புறத்திணைக்குள் அடக்கப் படும். கணக்கு குமரிநாட்டுத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஒன்றிலிருந்து மேற்பட்டது மேல்வாயிலக்கம் என்றும், ஒன்றிற்குக் கீழ்ப்பட்டது கீழ்வாயிலக்கம் என்றும் சொல்லப் பட்டன. கும்பம் = நூறு கோடி சங்கம் (சங்கு) = இலக்கங் கோடி தாமரை = கோடா கோடி வாரணம் = நூறு கோடா கோடி (கோடா கோடி?) இவற்றின் மதிப்பு வேறுவகையாகவுஞ் சொல்லப்படும். குவளை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்பனவும் அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்களாகும். கீழ்வாயிலக்கம் முக்கால், அரை, கால், அரைக்கால், மாகாணி (வீசம்), மா (1/20), காணி (1/80), முந்திரி (1/320), கீழ்முந்திரி (முந்திரியில் 1/320) என்பன. சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய் பாடிருந்தது போன்றே, சதுர வாய்பாடும் இருந்தது. அது குழிக்கணக்கு எனப்பட்டது. சிற்றிலக்கக் குழிப்புச் சிறுகுழி யென்றும், பேரிலக்கக் குழிப்புப் பெருங்குழி யென்றும், பெயர் பெற்றன. கணியம் குமரிநாட்டுத் தமிழக் கணியர் நுழை மதியருங் கூர்ங் கண்ணருமாயிருந்ததனால் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங் கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்னும் இருபத்தெழு நாள்களையும்; மேழம், விடை, ஆடவை, அலவன், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்னும் பன்னீரோரைகளையும்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி (சனி) என்னும் ஏழு கோள் களையும், கண்டு, கணிய நூலை வளர்த்து வந்தனர். எழுகோள்களின் பெயரால் எழுநாட்கிழமை (வாரம்) வகுக்கப்பட்டது. அது உலக முழுதும் பரவி இன்றுவரை வழங்கி வருகின்றது. கிழமைப் பெயர்கள் சமற்கிருதத்திலும், ஓரைப் பெயர்கள் சமற்கிருதத்திலும் இலத்தீனிலும், மொழி பெயர்க்கப்பட்டுள. இன்னிசை முரல் (சுரம்), பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது. பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல்), திறம் (ஐம்முரல்), திறத்திறம் (நான்முரல்) என நால்வகைப்பட்ட பண்கள் நரப்படைவால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப் பாலை, சதுரப்பாலை, முக்கோணப் பாலை (திரிகோணப் பாலை) என்னும் நால்வகை முறையில், எழுபெரும்பாலைகளும் அவற்றின் கிளைகளும் திரிக்கப் பட்டன. அத் திரிவு முறைகள், முறையே முழுமுரல், அரை முரல், கால் முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல்நிலைகளைத் தழுவியன என்பர். இந் நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின. தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக்கருவிகளுள் சிறந்தது நரப்புக் கருவி. நரப்புக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டி யாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண்-வீண்-வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல். நாடகம் இசையொடு நடமும் நடிப்பும் சேர்ந்தது நாடகம். நடி + அகம் = நாடகம். நடம் என்பது, கதை தழுவியதும் தழுவாததும் என இருவகைத்து. நாடகம் என்பது பொதுவாக உலகவழக்கிற் கதை தழுவி வரும் நடிப்பையே குறிக்கும். கூத்து என்னும் பெயர் நடத்திற்கும் நாடகத்திற்கும் பொது. நடம் (நடனம்) என்பது ஆடல் என்றும் பெயர்பெறும். ஆடல்கள், நிலைத்தனவும் அவ்வப்போது ஆடலா சிரியனாற் புதிதுபுதிதாய்ப் பயிற்றப்படுவனவும் என இருபாற் படும். நாடகமெல்லாம் புதிதுபுதிதாய்த் தோன்றுவனவே. ஆடல்கள் வேத்தியல், பொதுவியல், தேவியல் என முத்திறப்படும். கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, பாண்டரங்கம், கொட்டி என்னும் பதினோராடலும், பிற்காலத்தில் தெய்வங்கள் ஆடினவாகக் கதைகள் கட்டப்பட்டு விட்டன. குரவை, வரி என்பனவும் தேவியலின் பாற்படும். நடக்கரணங்கள் அறுபத்து நான்கு. நடவினைக் கை, ஒற்றைக்கை (பிண்டிக்கை) இணைக்கை என இருவகைப்படும். ஒற்றைக்கை முப்பத்துமூன்று; இணைக்கை பதினைந்து. நடிப்பிற்குரிய நளிநயம் (அபிநய) முப்பத்திரண்டு. செய்யுட்கும் இன்னிசைக்கும் நாடகத்திற்கும் உரிய சுவைகள்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு. இன்னிசையிலும் நாடகத்திலும் குமரிநாட்டுத் தமிழர், ஆழ்ந்து ஈடுபட்டும் சிறந்த தேர்ச்சி பெற்றும் நிரம்ப இன்புற்றும் வந்ததனால், இன்னிசை நாடகத்தையும் தமிழொடு சேர்த்து, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முக்கூற்றதாக்கி முத்தமிழ் என்றனர். இத்தகைப் புணர்ப்பு வேறெந் நாட்டிலு மில்லை. மருத்துவம் ஊதை பித்துக் கோழை யென்னும் முந்நாடியியல்பை, தெய்வத்தன்மையான நுண்மாண் நுழைபுலத்தா லறிந்து, எல்லா நோய்கட்கும் மருத்துவம் அறுவை என்னும் இருவகைப் பண்டுவம் செய்வது தமிழ மருத்துவம். அதன் தலைசிறந்த மருந்து இரும்பு செம்பு முதலிய பொன்னங்களைத் தூய பொன்னாக்குவதும், கழிநெடுங்காலம் (1,00,000 ஆண்டு ?) வாழச் செய்வதுமான முப்பு (மூவுப்பு) என்னும் ஒருவகைக் கலவையுப்பு. அது செய்யும் வகை மறையுண்டு போயிற்று. மதவியல் குறிஞ்சிநிலத்திற்குரிய சேயோன் (முருகன்) வணக்கத் தினின்று சிவனியமும், முல்லைநிலத்திற்குரிய மாயோன் (கரியவன், மால்) வணக்கத்தினின்று மாலியமும், ஆகிய பெருந்தேவ மதம் இரண்டும் வளர்க்கப்பட்டன. ஓகப்பயிற்சியாலும் உள்ளத்தூய்மையாலும் எண்ணத் திண்மையாலும் இறைப்பற்றாலும் நுண்மை, பருமை, நொய்ம்மை, கனதி, கருதியது பெறுதல், கருதியவிடஞ் செல்லுதல், கருதிய வடிவெடுத்தல், கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஆகிய எண்வகைப் பெற்றிகளைப் பெற்ற பெற்றியர் (சித்தர்), இரு பெருந் தேவ மதத்திற்கும் பொதுவான கடவுள் மதத்தைக் கண்டனர். கடவுள் மதமாவது, காலம் இடம் வடிவு குணம் முதலிய எல்லாவற்றையுங் கடந்து இயல்பான முற்றறிவும் முழுவல்லமையுமுள்ள ஒரு தனிப் பரம்பொருளை, உள்ளத்தில் தொழுதல். குமரிநாட்டுத் தமிழர் இங்ஙனம் உலகியலிலும் மதவிய லிலும் உயர்நிலையடைந்திருந்ததற்குக் கரணியம், அவர் நெற்றியிற் பெற்றிருந்த ஒருவகை அறிவுக்கண் என்றும், அது கண்ணாற் காணாததைக் காணவும் காதாற் கேளாததைக் கேட்கவும் வல்லது என்றும், அதைப் பின்னோர் நெடுங்காலம் பயன்படுத்தாமையால் அதை இழந்துவிட்டனர் என்றும், ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். இக் கருத்தை. சிவ பெருமானுக்கு நெற்றிக்கண் உண்டென்னுங் கூற்று ஓரளவு வலியுறுத்துகின்றது. பண்பாடு வேளாளர் பண்பாடு புதிதாக இல்லத்திற்கு வந்தவர்க்கும் வழிச் செல்லும் அயலார்க்கும் சிறந்தவுணவளிப்பதும், இரப்போர்க்கு இல்லை யென்னாது ஈவதும், வேளாளர் பண்பாடு. வணிகர் பண்பாடு பொருள்களை வாங்கும்போது அளவைக் கூட்டிப் பெறாமலும், விற்கும்போது குறைத்துக் கொடாமலும், நேர்மை யாக வணிகஞ் செய்வதும்; உறுப்பிலிகட்கு ஊட்டுப் புரையும், அயலார் தங்கச் சத்திரஞ் சாவடியும், கட்டி வைப்பதும்; வழிப் போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டி வைப்பதும்; நீர்நிலையில்லாக் காட்டு வழிகளில் நெல்லி மரங்கள் வளர்த்து வைப்பதும் வணிகர் பண்பாடு. அரசர் பண்பாடு காட்சிக் கெளியராயும் கடுஞ்சொல்ல ரல்லராயுமிருப் பதும், நடுநிலையாக முறைசெய்து செங்கோலாட்சி செலுத்து வதும், வழக்கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டிவைப்பதும், வறட்சிக் காலத்தில் வரி நீக்குவதும், திருநாள் பெரு நாள்களில் சிறைஞரை விடுதலை செய்வதும், மதம்பற்றிய உண்மையை மக்களறிதற்குப் பட்டிமன்றம் நடத்துவதும், கூனர் குறளர் முதலிய எச்சப் பிறவிகளை அரண்மனைக் குற்றேவற் கமர்த்துவதும், போர் தொடங்குமுன் பெண்டிர் பிள்ளைகள் பிணியாளர் முதியோர் முதலியோரைப் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றிவிடுவதும் படைக்கலமிழந்தவனும் எளிய படைக்கலமுள்ளவனும் கீழே விழுந்தவனும் முடிகுலைந்த வனும் ஆடையவிழ்ந்தவனும் தோற்றோடுகின்றவனும் ஆகியோர் மீது படைக்கலம் ஏவாமையும், தோற்ற அரசனைத் திறைகட்டச் செய்து அவனொடு மணவுறவு கொள்வதும், போரில் முதுகிற் புண்பட்ட போதும் வாழ்க்கையில் மானங் கெட நேர்ந்தபோதும் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப் பதும், அரசர் பண்பாடாம். புலவர் பண்பாடு அரசர் மதியாது தரும் பரிசிலைப் பெறாது போவதும், வறுமையிற் செம்மையாய் ஒழுகுதலும், பேராசையின்மையும், அரசர் தீங்குசெய்யின் தடுப்பதும், அவர்க்கு அஞ்சாது அறிவுரை கூறுவதும் பொதுநலம் பேணுவதும், சொற் பொழிவரங்கிற்குச் செல்லின் இறுதிவரையிலிருந்து கேட்பதும் புலவர் பண்பாடாம். 8. குமரிநாட்டு இலக்கியம் இலக்கியம் (1) எழுதப்பட்ட இலக்கியம், (2) எழுதப்படா இலக்கியம் என இருவகைப்படும். எழுதப்பட்ட இலக்கியமும், (1) உரைநடையிலக்கியம் (2) செய்யுளிலக்கியம் என்றும், (1) பொதுவிலக்கியம் (2) சிறப்பிலக்கியம் என்றும், நடை பற்றியும் பயன்படுத்தும் மக்கள்பற்றியும் இவ்விரு வகைப்படும். குமரிநாட்டுத் தமிழிலக்கியம், நடைபற்றிச் செய்யுளிலக் கியமும் பயன்படுத்துவார்பற்றிப் பொதுச்சிறப்பிலக்கியமு மாகும். பொதுவிலக்கியம் பாட்டு, உரை, நூல், வாய்மொழி அல்லது மந்திரம், பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலைக்களத்திற் செய்யுளிலக்கியம் தோன்றிற்று. நிலைக்களம் யாப்பு வகை, அவற்றுள் : பாட்டு எண்வகை வனப்பாகப் பகுக்கப் பட்டது. எண்வகை வனப்புகள் 1. அம்மை சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே. (தொல்.செய்.233) 2. அழகு செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே. (தொல்.செய்.234) 3. தொன்மை தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. (தொல்.செய்.235) 4. தோல் இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோல்என மொழி தொன்மொழிப் புலவர். (தொல்.செய்.236) 5. விருந்து விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. (தொல்.செய்.237) 6. இயைபு ஞகார முதலா னகார வீற்றுப் புள்ளி யிறுதி இயைபெனப் படுமே. (தொல்.செய்.238) 7. புலன் ``சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலன்என மொழிப புலனுணர்ந் தோரே.'' (தொல்.செய்.239) 8. இழைபு ``ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி யொப்பித் தோங்கிய மொழியான் ஆங்ஙனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்.'' (தொல்.செய்.240) இவற்றுள் ஒன்றுகூட இக்காலத்தில்லை. சிலப்பதி காரமும் மணிமேகலையும் னகரமய்யீற்றுப் பாட்டுகளைக் கொண்டிருப்பதால், இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக் காட்டாகும். ஆயின், அவை தொல்காப்பியத்திற் குறிக்கப் பட்டவையல்ல. தொல் காப்பியக்காலம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு; சிலப்பதிகார மணிமேகலை காலமோ கி. பி. 2ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள ஆரியமல்லாத இலக்கண விலக்கியங்களும் மொழிச் செய்திகளும், முதலிரு கழகக் காலத்திற் குரியனவேயன்றித் தொல்காப்பியர் காலத்திற்குரியன வல்ல. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று பனம்பாரனாரும், என்ப, என்மனார் புலவர், நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே, எனமொழிப, ஒத்த தென்ப வுணரு மோரே, ``செவ்வி தென்ப சிறந்திசி னோரே என்றும், பிறவாறும், சார்புநூலாசிரியர் முறையில் தொல்காப்பியனாரும், கூறியிருத்தல் காண்க. இயைபு வனப்புப் பாட்டுகள் ஞ், ண், ந், ம், ன் என்னும் ஐம் மெல்லின மெய்களுள் ஒன்றில் இறும். சிலப்பதிகார மணிமேகலையாகிய இரட்டை வனப்புப் பாட்டுகள் `ன்` என்னும் ஒரே மெய்யில் இறுகின்றன. ஒரு மெய்க்கு ஒரு வனப்பு என்று வைத்துக் கொள்ளினும், ஐம்மெய்க்கும் ஐவனப்பாவது இருந்திருத்தல் வேண்டும். ஒன்றுகூட இன்றில்லை. இங்ஙனமே ஏனை வனப்புகளும். விருந்து என்பது, அவ்வப்போது புதிதுபுதிதாகத் தோன்றும் பல்வகைப் பனுவல்கட்கும் பொதுப்பெயர். தொல்காப்பியத் தில் விருந்துப் பனுவலென்று ஒன்றும் விதந்து குறிக்கப் பெறவில்லை. குழவி மருங்கினுங் கிழவ தாகும் (தொல். புறத். 29) என்பது பிள்ளைத்தமிழ் என்னும் பனுவலையும், ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப(தொல். புறத். 30) என்பது உலா அல்லது ஊரின்னிசையையும் குறிக்கலாம். உரை என்பது, விளங்காத நூன் மூலத்திற்குப் பொருள் கூறுவது. அதுவுஞ் செய்யுளாகவே இயற்றப்பட்டது; ஆயின், அல்லியரசாணிமாலை, `பவளக் கொடிமாலை' என்பன போல எளிய நடையில் அமைந்திருந்தது. உரைநடையில் இருக்க வேண்டிய உரையும் செய்யுளில் இயன்றமை, அக் காலத்துத் தமிழ் மக்களின் செய்யுள் திறத்தைச் சிறப்பக் காட்டும். நூல் என்பது அறிவியல். இலக்கணம் ஓர் அறிவியல். ஒவ்வொரு கலையிலும் தெரிவியல் (Theory) பற்றியதெல்லாம் இலக்கணம் போன்ற அறிவியலே. வாய்மொழி அல்லது மந்திரம் என்பது திருமூலர் திருமந்திரம் போல்வது. மந்திரம் என்பது தூய தென்சொல்லே. முன்னுதல் = கருதுதல், எண்ணுதல். முன்-மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ: மன் - மன்று - மந்து - மந்தை = கூட்டம். இன்னது நிறைவேறும் அல்லது உண்மை என்று எண்ணும், எண்ணத்திண்மையொடு அல்லது மன வலிமையொடு கூடிய நிறைமொழியே மந்திரம். பிசி யென்பது விடுகதை. அங்கதம் என்பது கண்டனநூல் அல்லது மறுப்புநூல். அது எதிர்நூல் எனவும்படும். முதுசொல் என்பது பழமொழி. பாட்டுப் போன்றே, ஏனை யறுவகை யாப்புச் செய்யுளும் இன்றில்லை. பண்ணத்தி யென்னும் ஒருவகை யாப்பும் இன்றில்லை. எழுவகை யாப்பும் வெண்பா, அகவற்பா (ஆசிரியப்பா), கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் தூய பாக்களும், மருட்பா, பரிபாடல் என்னும் கலவைப் பாக்களும் ஆகிய அறுவகைப் பாக்களால் இயன்றன. பாக்கட்குரிய வண்ணங்கள் : பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என இருபது. வண்ணம், சித்திரம் என்பன தென்சொற்களே. வள்ளுதல் = வளைத்தல், வளைத்தெழுதுதல். வள்-வண்-வண்ணம் = எழுதும் எழுத்து அல்லது வரையும் படம், எழுத்தின் நிறம், நிறம் போன்ற செய்யுளொலி வகை, வகை. வள்-வர்-வரி-வரணம் = எழுத்து, நிறம், வகை, வகுப்பு, இசைப்பா வகை. ஒ.நோ : திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள்-திரளை-திரணை. செத்தல் = ஒத்தல். செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஓவியம். ஒ.நோ : செந்திரம் - சிந்துரம் = சிவப்பு, செந்தூள், செந்நீறு, செம்பொறிமுக யானை. தொல்காப்பியர் காலத்திற்கு முந்திய அறுவகைப் பாக்கட்கும், இருபது வண்ணங்கட்கும், நூற்றுக்கணக்கான அகப்பொருள் புறப்பொருள் துறைகட்கும், இன்று எடுத்துக் காட்டில்லை. எல்லாம் அழிக் கப்பட்டு விட்டன. சிறப்பிலக்கியம் இசையும் நாடகமும் தொல்காப்பியத்திற்கு முந்தியது அகத்தியம். அது முத்தமிழிலக்கணம். இலக்கிய மின்றி இலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம். (அகத்.) இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின் (நன். 141) என்றார் பவணந்தியார். அகத்தியம் முத்தமிழிலக்கணம் என்பதால், இயற்றமி ழிலக்கியம் போன்றே இசைத்தமிழ் நாடகத் தமிழிலக்கியங் களும் அவ் விலக்கண நூற்கு முன்பிருந்திருத்தல் வேண்டு மென்பது பெறப்படும். அகத்தியம் தொல்காப்பியத்திற்குச் சிலபல நூற்றாண்டு முந்தியதேனும், இடைக் கழகத்திற்குப் பிற்பட்ட தென்பதை அறிதல் வேண்டும். அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல். எழுத்து 33) தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. (தொல். அகத். 18) என்பவற்றால் இன்னிசையிலக்கியமும், நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். அகத். 53) என்பதனால் நாடகவிலக்கியமும், குமரிநாட்டிலிருந்தமை அறியப்படும். கணக்கு ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும் (தொல். புள்ளி. 98) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குவளை, தாமரை, சங்கம், வெள்ளம், ஆம்பல் என்னும் மாபேரெண்கள் குறிக்கப் பட்டுள்ளன. சங்கம் = இலக்கங் கோடி தாமரை = கோடா கோடி இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் (தொல். குற்றிய. 76) என்னும் தொல்காப்பிய நூற்பா மா என்னும் அளவைக் குறிப்பதால், கீழ்வாயிலக்கத்தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழங்கின வென்றே கொள்ளப்படும். கணியம் திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல். உயிர். 84) ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம். (தொல். கிளவி. 58) மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும். (தொல். கள. 44) என்னுந் தொல்காப்பிய அடிகள் கணியக் குறிப்பைக் கொண்டன. மருத்துவம் பொதிய மலையில் வதிந்த அகத்தியர் ஒரு மருத்துவ நூலாசிரியர் என்று சொல்லப்படுவதனாலும், பெற்றிய (சித்த) மருத்துவம் தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழ மருத்துவ மாதலாலும், ஒருசில மருந்துப் பெயர்கள் அகத்தியர் பெயரை அடையாகப் பெற்றிருப்ப தனாலும், வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. (தொல். செய்.111) என்னும் தொல்காப்பிய நூற்பாவிலுள்ள மருத்துவக் குறிப் பினாலும், குமரிநாட்டில் மருத்துவ இலக்கிய மிருந்தமை உய்த்துணரப்படும். மொழிநூல் செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் மொழிப் பகுப்பும் இயற்சொல் திரிசொல் என்னும் செந்தமிழ்ச் சொற்பகுப்பும், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. (தொல். எச்ச. 4) என்னும் கொடுந்தமிழ்ச் சொல் விளக்கமும் வலித்தல் மெலித் தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் என்னும் சொற்றிரிவு முறைகளும், மொழிநூலின் கருநிலையேயாயி னும், உலகில் முதன்முதற் சொல்லப்பட்டதனால், மொழி நூலின் தொடக்க மேயாம். உளநூல் எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. (தொல். மெய்ப். 4) இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே. (தொல். மெய்ப். 5) மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. (தொல். மெய்ப். 6) புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. (தொல். மெய்ப். 7) அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. (தொல். மெய்ப். 8) கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. (தொல். மெய்ப். 9) உறுப்பறை குடிகோள் அலைகொலை யென்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே. (தொல். மெய்ப். 10) செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே. (தொல். மெய்ப். 11) இவையும் பிற மெய்ப்பாட்டியல் நூற்பாக்களும் உளநூற் கருவாம் ஏரணம் (Logic). அகத்தியத் தருக்க சூத்திரம் 1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப. 2. மண்புனல் அனல்கால் வெளிபொழு தாசை ஆன்மா மனத்தோ டொன்பதும் பொருளே. 3. வடிவம் சுவையிரு நாற்றம் ஊறென் அளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கெனல் ஓசை உணர்ச்சி யின்பம் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி அறமறம் வாதனையொடு குணம்அறு நான்கே. 4. எழும்பல் விழுதல் வளைதல் நிமிர்தல் நடத்த லுடனே கருமம்ஐ வகைத்தே. 5. பொதுமை மேல்கீழ் என இரு வகையே. 6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாம் சிறப்பே. 7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. 8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை ஒன்றினொன் றின்மையென் றின்மை நான்கே. 9. மண்நீர் அனல்கால் முறையே நாற்றம் தட்பம் வெப்பம் ஊற்றம் ஆகி மெய்ப்பொருள் அழிபொருள் மேவும் என்க. 10. அணுக்கள் மெய்ப்பொருள் காரியம் அழிபொருள் பிருதிவி நித்திய அநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருள்நிலை யில்லது காரியம். 11. அதுவே உடல்பொறி விடயம் மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியின் நுனியே மண்கல் முதலிய விடயம் ஆகும். 12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு சுவைத்திறம் கவர்வது நாவின் நுனியே கடல்யா றாதி விடயம் ஆகும். 13. கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே உருவம் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரம்நால் விடயம். 14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே ஊற்றம் கவர்வது மீந்தோல் என்க விடயம் மரமுதல் அசைதற் கேதுவே பிராணன் உடலகத் தியங்கும் காற்றே. 15. விசும்பே காலம் திசையோ டான்மா மனம்இவை யைந்தும் நித்தியப் பொருளே. 16. ஓசைப் பண்பிற் றாகா யம்மே. 17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. அறிவுப் பண்பிற் றான்மா என்க இறையே ஈசன்முற் றறிவன்ஓர் முதலே உயிர்தான் உடல்தொறும் வெவ்வே றாகும். 20. மனம்அணு வடிவாய் வரும்இன் பாதி அறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவாய் அழிவின் றுறுமே. இவை தமிழ்ப் பண்டிதர் கோ. வடிவேலுச் செட்டியாரின் தருக்க பரிபாஷைப் பதிப்பிற் கண்டவை. ஏரணம் என்பது தருக்க நூலைக் குறிக்கும் தூய தென்சொல். இச் சொல் சமற் கிருதத்தில் இன்மை கவனிக்கத் தக்கது. ஏரணங்காண் என்பர் எண்ணர் என்னும் திருச்சிற்றம் பலக் கோவைச் சாத்துப்பாத் தொடரும், ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள என்னும் தனிப்பாடலும், பண்டைத் தமிழிலக்கியத்தில் தருக்கநூல் இருந்தமையையும், அதன் பெயர் ஏரணம் என்பதனையும், தெளிவாகக் காட்டும். தமிழிலுள்ள ஏரணநூல் ஒரே வகையே. வடமொழி யிலுள்ள தருக்க நூல் வைசேடிகம், நையாயிகம் என இரு வகைப்படும். அவற்றை முறையே சிறப்பிகம், முறையிகம் எனலாம். தமிழ் ஏரணம் சிறப்பிக முறைப்பட்டதாகும். உறழும் அல்லது தருக்கும்வகை பொதுவாயினும், அடிப்படைப் பொருட் பாகுபாட்டை நோக்கின், சிறப்பிக முறையே சிறந்த தும், முந்தியதுமாகும். எல்லாப் பொருள்களையும், முறையிக முறைப்படி பதினாறு வகையாகப் பகுப்பதினும், சிறப்பிக முறைப்படி எழுவகையாகப் பகுப்பதே முழுநிறைவாயும் இடைவெளியில்லதாயும் ஒன்றையொன்று தழுவாததாயு மிருத்தல் காண்க. ஏரணம் (Logic) என்னும் சொல் மட்டுமன்றித் தருக்கம் (Debate) என்னுஞ் சொல்லும், தமிழாயிருப்பது கவனிக்கத்தக்கது. ஏர்தல் = எழுதல். ஏரணம் = சொற்போரில் ஒருவன் தன் பகைவன்மீது எழுச்சி கொள்வதற்கு ஏதுவான முறைகளைக் கற்பிக்கும் நூல். துள்-துளிர். துளிர்த்தல் = 1. கொழுந்துவிடுதல், 2. செழித்தல். துளிர்-தளிர். தளிர்த்தல் = 1. கொழுந்து விடுதல், 2. தழைத்தல். மாரியால் வற்றி நின்ற சந்தனந் தளிர்த்த தேபோல். (சீவக. 545) 3. செழித்தல். துள்-தள் - தள. தளதளத்தல் = பருமையாதல், கொழு கொழுத்தல். தள்-தழு-தழை. தழைத்தல் = 1. செழித்தல், 2. மிகுதல். மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன் (திருக்கோவை, 102), 3. வளர்தல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய. 15). தழு- தழுக்கு. தழுக்குதல் = செழிப்புறுதல். தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் (திருமந். 254). தழுக்கு - தருக்கு. தருக்குதல் = 1. மிகுத்தல். தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து. (தொல். அகத். 50), 2. ஊக்கம் மிகுத்தல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர். (சீவக. 1679), 3. அகங்கரித்தல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38). தருக்கு - தருக்கம் = தன் கூற்றை மிகுக்கும் சொற்போர். தருக்கு - செருக்கு = அகங்காரம். தருக்கு - வ. தர்க். தருக்கம் - வ. தர்க்க. தருக்கு என்னும் சொற்கு வடமொழியில் மூலமின்மை கவனிக்கத் தக்கது. மேற்காட்டிய ஏரண நூற்பாக்கள் அகத்தியத் தருக்க நூற்பாக்களல்லாவிடினும், தருக்க நூலை வளர்த்தற்கேற்ற அடிப்படை நிறைவாயமைந்திருத்தல் காண்க. அவை மிகப் பழையனவாயிருத்தல் பற்றியே அகத்தியர் பெயரில் வழங்கு கின்றன. அவற்றில் வரும் வடசொற்கள் மிகச் சிலவாயிருப்பது கவனிக்கத் தக்கது. அவ் வடசொற்கட்கு நேர் தென்சொற்கள் வருமாறு: வடசொல் தென்சொல் ஆசை மாதிரம், திகை ஆன்மா ஆதன், உறவி, புலம்பன் வாதனை வாடை காரியம் கருமியம் பிருதிவி புடவி நித்தியம் நிற்றியம் அநித்தியம் அநிற்றியம், நிலையாமை விடயம் புலனம், இடையாட்டம் நாசி மூக்கு, மூசி ஆதி முதல், முதலியன ஆகரம் கனி, சுரங்கம் பிராணன் உயிரன் ஆகாயம் காயம், வானம் ஈசன் இறைவன், உடையான் குணம், மனம், அணு, உருவம், மணி, காலம், ஏது என்பன தென்சொற்களே. என் வடமொழி வரலாறு பார்க்க. இலக்கியத் திறனாய்வு (Literary Criticism) அங்கதந் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. (தொல்.செய்.123) செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. (தொல்.செய்.124) மொழிகரந்து சொலினது பழிகரப் பாகும். (தொல்.செய்.125) செய்யுள் தாமே இரண்டென மொழிப. (தொல்.செய்.126) புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யுள் அதுவென மொழிப. (தொல்.செய்.127) வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். (தொல்.செய்.128) இலக்கியத் திறனாய்வு நெறி திறம்பாததாயின் செவியுறை (Criticism) என்றும், நெறிதிறம்பிப் பழித்ததாயின் அங்கதம் (Satire) என்றும், பெயர் பெற்றது. அங்கதமும், செம்பொருளங்கதம் (Open lampoon) என்றும், பழிகரப்பங்கதம் (Disguised lampoon) என்றும் இருவகைப்பட் டிருந்தது. நக்கீரர் குயக்கோடனைச் சாவித்த செய்யுள், வெகுளிப் பாட்டே (Imprecatory poem)a‹¿ அங்கதப்பாட்டாகாது. மறைநூல் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல்.செய்.176) மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் (தொல். எச்ச. 53) என்பன, குமரிநாட்டுத் தமிழிலக்கியம் மறைநூலுங் கொண்டி ருந்தமையைப் புலப்படுத்தும். தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே, மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் பாண்டி நாடே பழம்பதி யாகவும் தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்னும் திருவாசக அடிகள், முழுகிப்போன குமரிநாடே பழம் பாண்டி நாடென்பதையும், சிவநெறி துய தமிழமத மென்பதையும், உணர்த்தும். ஆரிய இலக்கியத்தில் வேதம் முந்தித் தோன்றியதனால், வேதம் என்னுஞ் சொல் ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் என நூற் பொதுப்பெயராயிற்று. அங்ஙனமே, மறையென்னும் தென்சொல்லும், நரம்பின்மறை (இசை நூல்) என்றும் மறையென மொழிதல் மறையோர் (இலக்கண நூலார்) ஆறே என்றும் நூற் பொதுப்பெயரானதினால், தமிழிலும் மறைநூலே முதல் நூலோ என்று எண்ணக்கிடக் கின்றது. வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்.மரபு. 95) என்னும் தொல்காப்பிய நூற்பாவும் அதனை ஒருவாறு வலியுறுத்தும். மெய்ப்பொருள் நூல் ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. (தொல். மரபு. 27) நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம்உலகம்..... (தொல். மரபு. 90) என்னும் நூற்பாக்களும், உயிர், மெய், உயிர்மெய், என்னும் எழுத்துப் பெயர்களும், கடவுள் என்னும் தெய்வப் பெயரும், பிறவும், குமரிநாட்டுத் தமிழரின் மெய்ப்பொருளறிவைக் காட்டும். ஏனை நூல்கள் “வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க. (தொல். புறத். 5) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின். (தொல். புறத். 16) என்பவற்றால், வாள் வில் வேல் முதலிய படைக்கலப் பயிற்சி நூல்களும், தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் (தொல். புறத். 17) என்பதனால், யானைநூல் குதிரைநூல் என்பனவும், அக்காலத் திருந்தமை உய்த்துணரப்படும். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் (தொல். புறத். 10) வருபகை பேணார் ஆரெயில் உளப்பட (தொல். புறத். 12) என்பன மனைநூல் என்னும் கட்டடநூலிருந்தமையைத் தெரிவிக்கும். தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் (தொல். புறத். 21) என்பது தேர்த்தச்சையும், முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. (தொல். அகத். 34) என்பது கலத்தச்சையும், உணர்த்தும். இனி, வனைவும் நெசவும் கம்மியமும் போலப் பல கலைகள் எழுதப்பட்ட இலக்கியமின்றியே வழிவழி வழங்கி வந்திருத்தல் வேண்டும், என்பது சொல்லாமலே விளங்கும். 9. தமிழர் பரவல் மக்கட் பெருக்கம், வாணிகம், புதுநாடு காணும் விருப்பம், போர், கொள்ளை, பகை, பஞ்சம், கடல்கோள் முதலிய பல கரணியங்கள்பற்றி, குமரிநாட்டுத் தமிழர் பல்வேறு நிலைகளிற் பல்வேறு திசையிற் பரவிச் சென்றனர். தமிழ் வளர்ச்சியடைந்தபின் அவர் பரவிச் சென்றது வடக்கு நோக்கியே. வங்கத் தலைநகர்க்கு இன்றும் காளிக் கோட்டம் என்னும் தூய தென்சொற் பெயர் வழங்குவதே, பண்டைக் காலத்தே தமிழர் பனிமலைவரை அல்லது கங்கைவரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாம். தமிழ் இயன்மொழியாயும் ஒரே மொழியாயும் வழங்கிய தனால் நீண்ட காலமாக அதற்குச் சிறப்புப் பெயர் ஏற்பட வில்லை; மொழியென்னும் பொதுப்பெயரே வழங்கிற்று. வடக்கே செல்லச் செல்ல மொழி மெல்ல மெல்லத் திரிந்தது. அதனால் வடநாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். பின்னர்த் தென்னாட்டு மொழிக்குத் தமிழ் என்னும் பெயர் தோன்றிற்று. தமிழ் திரிந்து தமிழர்க்கு விளங்காக் கிளைமொழியாய் மாறியபோது, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் என்று திரிந்தது. (தமிழ் - தமிழம் - த்ரமிள - த்ரமிட - த்ரவிட - திரவிடம் - திராவிடம்.) அதனால், தமிழினின்று திரிந்த மொழி திராவிடம் எனப்பட்டது. அது முதற்கண் ஒன்றாயிருந்து பின்பு பலவாகக் கிளைத்தது. முதன் முதலாகத் திரிந்த திரவிடமொழி தெலுங்காதலால் அது வடகு (வடநாட்டு அல்லது வடக்கத்து மொழி) எனப்பட்டது. அது பின்னர் வடுகு எனத் திரிந்தது. வடுகு என்பது அம்மீறு பெற்று வடுகம் எனவும் வழங்கும். வடகு என்பது இன்று கன்னடத்திற் படகு என்று திரிந்துள்ளது. நீலமலையில் வாழும் கன்னடத் திரிமொழியாளர் படகர் எனப்படுதல் காண்க. அண்மையிற் பிரிந்த மலையாளம் நீங்கலாகத் திரவிட மொழிகளெல்லாம் வடபாலே வழங்குவதும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் சிதைந்தும் சிறுத்தும் சிதறியும் இலக்கண விலக்கியம் குன்றியும் இன்றியும் போவதும், இந்தியாவிற்கு வெளியே வழங்காமையும், இன்று தமிழும் ஓரளவு திரிந்துள்ளமையும், குமரிநாட்டுத் தமிழே இற்றைத் தமிழுக்கும் எல்லாத் திரவிட மொழிகட்கும் தாயென்பதைத் தெரிவிக்கும். மொழிகளின் அல்லது சொற்களின் இயல்பும் திரிபும் நோக்காது, சிறிதும் பெரிதும் வடிவொப்புமை யொன்றையே நோக்கி, தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் வட மேலை நாட்டினின்று வந்திருக்கலாமென்று, வரலாற்றாசிரியர் மட்டுமன்றி மொழி நூலறிஞரும் மயங்கி இடர்ப்படுகின்றனர். சொற்களின் வேரும் வரலாறும் அறியின் அங்ஙனம் இடர்ப் படார். எடுத்துக் காட்டாக, ஒரு தெலுங்குச் சொல்லையும் ஒரு பிராகுவீச் சொல்லையும் எடுத்து ஈண்டு விளக்குவாம். தெலுங்குச் சொல் : மாட்டாடு, மாட்லாடு. மாறு-மாற்றம் = மாறிச்சொல்லும் சொல், சொல். மாற்றம் - தெ. மாட்ட. மாட்ட + ஆடு = மாட்டாடு. ஒ. நோ : சொல்லாடு, உரையாடு. தெ. மாட்டலு (பன்மை) + ஆடு = மாட்டலாடு. த. கள் (பன்மையீறு)- தெ. களு-கலு-லு. கள்ளுதல் = கலத்தல், கூடுதல். கள்-களம் = கூட்டம், அவை. கூடுதலைக் குறிக்கும் சொல், பல பொருட் கூட்டமாகிய பன்மையையுணர்த்துங் குறியாயிற்று. தெ. மாட்டு-க. மாத்து, மாத்தனு. மாத்து + ஆடு = மாத்தாடு, மாத்தனு + ஆடு = மாத்தனாடு. க. மாத்து. கோ. மாந்து, மாந்த் = சொல், மொழி. க. =கன்னடம். கோ. = கோத்தம் ( கோத்தர் மொழி) பிராகுவீச் சொல்: பாக் = வாய்கள். த. வாய்- பி. பா. த. கள்-பிக் வடநாட்டுத் திரவிடருள் ஒரு சாராரே, வடமேற்கிற் சென்று சுமேரிய நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். கி. மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த ஆபிரகாமின் ஊர், ஊர் என்றே பெயர் பெற்றிருந்தது. ஊர் என்பது பாபிலோனிய மொழியில் நகரம் என்னும் பொருளது. பண்டைத் தமிழ் நாட்டில் ஊர் என்று பெயர் பெற்றிருந்தது மருதநில மக்கள் குடியிருப்பே. நகரம் தோன்றியதும் மருதநிலமே. ஊர் என்னும் நகரம் இருந்த இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட உத்தரம், கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கென்று சொல்லப்படுகின்றது. ஆபிரகாம் என்னும் பெயரின் முற் பகுதியாகிய ஆப் என்பது, அப்பன் என்னும் தமிழ்ச்சொல் திரிபே. ஆபிரகாமின் பேரனான யாக்கோபு தூங்கிக் காட்சி கண்ட இடம், பெத்தெல் எனப்பட்டது. பெத்தெல் என்பது தேவன் வீடு என்னும் பொருளது. த. வீடு-க. பீடு-பீட்-கா.பெத். த. எல் = ஒளி, கதிரவன், தெய்வம், பெத் + எல் = பெத்தெல். இங்ஙனம் கூட்டுச் சொல் முறைமாறி யமையவது சேமிய வழக்கு. கா. = கானானியம். ஆபிரகாம் காலத்தில அரபியும் எபிரேயமும் தோன்ற வில்லை. அவன் பேசினது அக்கேடியன். ஆதம் (ஆதாம்) என்னும் பெயர், செங்களி மண்ணில் உருவாக்கப்பட்டவன் என்று பொருள்படின் அத்தம் என்னும் தமிழ்ச்சொல்லொடும், மக்களினத் தந்தை என்று பொருள் படின் அத்தன் என்னும் தமிழ்ச்சொல்லொடும், (முதல்) மாந்தன் என்று பொருள்படின் ஆதன் (ஆன்மா) என்னும் தமிழ்ச் சொல்லொடும், தொடர்புடையதா யிருக்கலாம். அத்தம் = சிவப்பு. அத்தி = சிவந்த பழமரம். ஏவா (ஏவாள்) என்னும் பெயர், மக்களினத்திற்கு உயிரைத் தந்தவள் என்று பொருள்படின் ஆவி என்னும் தமிழ்ச் சொல்லோடும், மக்களினத் தாய் என்று பொருள்படின் அவ்வை என்னும் தமிழ்ச் சொல்லோடும் தொடர்புடையதா யிருக்கலாம். சுமேரிய நாகரிகத்தை வளர்த்த மக்கள் வழியினருள் ஒரு சாரார் எகிபது வழியாகவும் மற்றொரு சாரார் சின்ன ஆசியா வழியாகவும், நண்ணிலக்கடல் புகுந்து ஐரோப்பாவை யடைந்து மேலையாரியராக மாறியிருக்கின்றனர். பூனை எகிபது நாட்டில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப் பட்டு வந்தபின் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்டதென்றும், அது கிரேக்கத்தில் கத்த என்றும் இலத்தீனில் கத்துஸ் என்றும் பெயர் பெற்றதென்றும், ஆரிய நாட்டினங்கள் பிரிந்து போகுமுன் அவற்றிடை அதற்குப் பொதுப் பெயர் இல்லையென்றும், சமற்கிருதத்தில். மார்கார (margara) விடால என்னும் இரு பெயர் அதற்குண் டென்றும், மாக்கசு முல்லர் கூறியிருக்கின்றார். பூனை தொன்றுதொட்டுத் தமிழகக் காட்டில் இயற்கை யாக வாழ்ந்து வருகின்றது. அந்நிலையில் அதற்கு வெருகு என்று பெயர். அது வீட்டிற் பழக்கப்பட்ட பின், அடிக்கடி முகம் பூசுவதால் (கழுவுவதால்) பூசையென்றும், பிள்ளைபோல் வளர்க்கப்பட்டமையால் பிள்ளை யென்றும், பகற்காலத்தில் நன்றாய்க் கண் தெரியாமையால் கொத்தி யென்றும், பெயர் பெற்றது. பூசு-பூசை-பூனை-பூஞை. ம. பூச்ச. பிள்ளை-தெ. பில்லி. ஒ.நோ: தள்ளை-தெ. தல்லி. கொத்தை = குருடு, குருடன். கொத்தை - க. கொத்தி. இச்சொல் குமரிநாட்டுத் தமிழிலும் வழங்கியிருத்தல் வேண்டும். வீட்டுப் பூனையின் முப்பெயரும் மேலையாரிய மொழிகளிற் பரவி வழங்குகின்றன. óir-E. puss, pus, pusse, Du. poes, LG. puns, Sw. pus, Norw. puse, puus, Lith. puz, puiz, Ir. and Gael. pus. E. pussy, pussie, pussey, Sc. poussie, poosie. “bt›thŒ வெருகினைப் பூசை யென்றலும் (தொல். மர. 19). பில்லி- L. feles. bfh¤â-E. cat, Gk. katta, kattos, L. catta, catus, It. gatto, Sp., Pg. gato, Cat. gat, Pr. cat, ONF. cat, F. chat, OE. cat, catt, ON kott-r, Sw. katt, Da. kat, OE. catte, WGer. katta, MLG. katte, MDu. katte, kat, Du. kat, Sw. katta, OHG. chazza, (MHG. mod. G. katze), fem. OIr. cat, Gael cat, Welsh and Cornish cath, Breton kaz, Vannes kach, Slav. kot, OSlav kot'ka, Bulg. kotka, Slovenish kot, Russ. kot, Pol kot, Boh. kot, Sorabian kotka, Lith. kate, Finnish katti. Pussy என்ற சொற்கு வேர் தெரியவில்லை யென்றும், cat என்ற சொற்கு வந்த வழி தெரியவில்லையென்றும், பிரித்தானியக் கலைக் களஞ்சியம் கூறுகின்றது. இனி, பூனையைக் குறிக்கும் இரு வடசொற்களும், தென் சொல்லினின்று பிறந்தவையேயாம். மார்கார அல்லது மார்ஜால என்னும் பெயர் கழுவுவது அல்லது துடைப்பது என்று பொருள்படுவதால், பூசை யென்னும் தென் சொல்லின் மொழிபெயர்ப்பேயன்றி வேறன்று. வ. ம்ருஜ் = கழுவு, துடை, துப்புரவாக்கு. இனி, விடால என்னும் சொல்லும் விடரவன் என்னும் தென் சொல்லின் திரிபே யென்பது, ஆய்ந்து பார்ப்பின் தெளிவாம். பூனையின் பகற்கண் நடுவில் தோன்றும் திறப்புக் கீற்று ஒரு விடர் போலிருப்பதால், பூனைக்கு விடரவன் என்றும் ஒரு பெயர் (யாழ். அக.) உண்டு. விடர் பிளப்பு. விடரவன் - விடரகன் - வ. விடாரக- விடாலக - விடால - பிடால. பூனைக்கண் நிறமுள்ள ஒரு மணிவகைக்குப் பூனைக்கண் (cat’s eye) என்பது உவமையாகு பெயர். இக் கரணியம்பற்றியே விடார என்னும் வடசொல்லினின்று வைடூர்ய என்னும் பெயர் திரிந்துள்ளது. விடாரக -விடார -வைடூர்ய. மாக்கசு முல்லர் இச் சொற்குக் கூறியுள்ள பொருட்கரணியமும் இதுவே. Puss என்பது பூனைக்கு விளிப்பெயரென்று, எருதந்துறை (Oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை மாவட்டத் தில் இன்றும் பூனையைப் பூசு பூசு என்றழைப்பது இயல்பு. காட்டுப்பூனைக்குக் கான்புலி, பாக்கன், மண்டலி என்றும் பெயருண்டு. மேற் கூறியவற்றால், பூனை தமிழகத்தினின்று மேனாடு சென்றதென்பது வெள்ளிடை மலை. பழைய எகிபதிய மொழியில் வேறுசில தமிழ்ச் சொற்களும் உள. குமரிநாட்டுத் தமிழர் சுற்றுக்கடலோடிகளால் (Circumnavigators) இருந்ததனால், கடற்பெயரும் சில கலப் பெயர் களும் மேலையாரிய மொழிகளிற் சென்று வழங்குகின்றன. வள் - வர்- வார். வார்தல் = வளைதல், சூழ்தல். வார் - வாரி. நிலத்தைச் சூழ்ந்த கடல். வார் - வாரணம் = கடல். வாரணம் - வாரணன் = கடல் தெய்வம். வாரணன் - வ. வருண. வாரி - L. mare. E. marina (f. It. and Sp.) = a promenade or esplanade by the sea. படகு படம் = சீலை, திரைச்சீலை, பாய்ச்சீலை. படம் - படவு - படகு. படவு- படவர் - பரவர். செம்படவு - செம்படவர். E. bark, barque, F. barque, Pr., Sp., It barca, L. barca, OIr. barc, Romanic barca. E. barge, OF. barge, Pr. barga, L. barga, baris, Gk. bares, Coptic bari. கலம் E. galley, OF. galie, med. L. galea, galeie, Gk. galaia, galia, Pr. galeya, galee, galea, Sp. galea, Pg. gale, It. galea, galia. கப்பல் E. ship., Com. Teut: OE. scip, OFris. skip, schip, N. Fris skapp, skep, WFris skip, OS. skip, MLG. schip, schep, LG. schipp, MDu. sc(h)ip, sc(h)eep, Du. schip, WF lem. scheep, OHG. seif, skef, MHG. schif, schef, G schiff, ON skip, Sw. skepp, Da. skib, Goth skip. E. skiff, F. esquif, Sp., Pg. esquife, It. schifo, OHG. scif. நாவாய் L. navis = ship OF. navie = fleet, E. navy = a fleet. நாவாய் (பெருங்கலம்) - வ. நௌ = படகு. நங்கூரம் E. anchor, OE. ancor, L. ancora, Gk. ankura, OHG. anchar, LG., MHG. anker, ON . akkeri, Sw. ankare, Da. anker, OF ancre, It. ancora, L. anchora. நாங்கூலம் - நாங்குளு (நாங்கூழ்), மண்ணைத் துளைப்பதுபோல் நிலத்தைத் துளைத்து உழும் கலப்பை. தெ. நாகேல. வ. லாங்கல, த. நாங்கூலம்-நாங்குல்-நாஞ்சில் = கலப்பை. நாங்கூலம்-நாங்கூரம்-நங்கூரம்-நங்குரம் = கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான இருப்புக் கருவி. பார. லங்கர். வளைவைக் குறிக்கும் ank என்னும் வினை முதனிலை யினின்று anchor என்னும் சொல் திரிந்துள்ளதாக, ஆங்கில அகரமுதலிகள் கூறும். அஃதுண்மையாயின், அதுவுந் தமிழ் வழியே. வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கணம் = வாட்டஞ்சாட்டமான சாலகம் (சாய்கடை). இனி, வடபார் முனையில் அவ்வப்போது தோன்றும் ஒருவகை மின்னொளியையுங் கண்டு, அதற்கு வடவை அல்லது வடந்தை எனப் பெயரிட்டனர் குமரிநாட்டுக் கடலோடிகள். ஊழியிறுதி யுலகழிவு நெருப்பினால் நேருமென்று சிவநெறியார் நம்பினதினால், அவ் வடவையே அந் நெருப்பின் மூலமாயிருக்கு மென்று ஒரு கருத்தெழுந்தது. அதனால் அதை உத்தரமடங்கல் என்றனர். உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன். உத்தரமடங்கல் என்பது உத்தரம் என்று சுருங்கியும் வழங்கும். வடக்கிலுள்ள நெருப்பு என்னும் பொருளில், அது இலக்கியத்தில் வடவைக் கனல், வட அனல் என்றும் பெயர் பெறும். மேலையர் வடவையை Aurora borealis என்பர். அதற்கு வட விடியல் அல்லது வடவெளிச்சம் என்று பொருள். Borealis என்பது வட திசையையும் வடகாற்றையும் குறிக்கும். வடந்தை என்னும் சொல் வடகாற்றையுங் குறிப்பதும், வடகாற்றின் பெயரான வாடை என்பது வடவைக்கும் பெயராக வழங்கு வதும், ஒப்புநோக்கத்தக்கன. ஆரியர் வடவை என்னும் தென்சொல்லை வடவா அல்லது படபா என்று திரித்து, முகம் என்னும் சொல்லையுஞ் சேர்த்து, பெட்டைக் குதிரையின் முகத்தில் தோன்றும் நெருப் பென்று பொருள் கூறுவது, பழங்கருநாடகப் பட்டிமருட்டாம். 10. ஆரியர் திரும்பல் வட திரவிடர் ஐரோப்பாவின் வடமேற்கிற் காண்டினே வியம் வரை சென்று ஆரியராக மாறியபின், அல்லது ஆரியத் தன்மையடைந்த பின், அவருள் ஒரு சாரார் தென்கிழக்கு நோக்கித் திரும்பி இத்தாலி யாவிலும் கிரேக்க நாட்டிலும் குடியேறினர். கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசின கூட்டத்தார், தென்கிழக்கு நோக்கியே தொடர்ந்து பாரசீக வழியாக வந்து இந்தியாவிற்குட் புகுந்தனர். வட இந்தியாவிலிருந்த பிராகிருதப் பேரினத்தொடு கலந்து போனதனால், அவர் மொழியும் பிராகிருதத்தொடு இரண்டறக் கலந்து, எகர ஒகரக் குறில்களை யிழந்தது. அக் கலவை மொழியிலேயே வேதம் இயற்றப்பட்டது. ஆரிய மாந்தர் நூற்றிற்குத் தொண்ணூற்றொன்பதின்மர் பிராகிருதப் பழங்குடி மக்களொடு கலந்து போனாலும், ஆரியப் பூசாரியர்மட்டும் பிரிந்துநின்று, வேதவாயிலாகவும் வேள்விகள் மூலமாகவும் ஆரியப் பழக்கவழக்கங்களை அவியாது காத்து வந்திருக்கின்றனர். ஆரியம் என்னும் மொழிப்பெயரும் ஆரியன் என்னும் இனப்பெயரும், இந்திய ஆரியரிடையே முதன்முதல் தோன்றி ஏனை நாடுகளிலும் மாக்கசுமுல்லர் வாயிலாகப் பரவியுள்ளன. வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக ராகவேயிருந்ததனால், அவர் பூசாரியரும் எழுத்தறியாதவ ராகவேயிருந்தனர். ஆயின், வேத மந்திரங்களை மனப் பாடமாக ஓதி வந்ததனால் நினைவாற்றலும், தம் மேம் பாட்டைக் காத்து வந்ததனால் சூழ்ச்சித் திறனும், அவர்க்கு மிகுதியாக இருந்தன. அதனால், வடநாட்டுப் பிராகிருதப் பழங்குடி மக்களைப் போன்றே தென்னாட்டுத் தமிழப் பழங்குடி மக்களையும், தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம் வேத மொழி தேவமொழி யென்றும் ஏமாற்றி அடிமைப்படுத்தி விட்டனர். இதற்கு அவர் வெண்ணிறமும் வேதமொழியின் எடுப்பொலியும் துணை நின்றன. இருசார் பழங்குடி மக்களும் ஏமாற்றப்படுவதற்கு, அவர் பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடைமடமும் ஏதுவாயிருந்தன. விரல்விட் டெண்ணக்கூடிய ஒரு சிலரான ஆரியப் பூசாரியரே, தென்னாடு வந்து தமிழரொடு தொடர்புகொண்டு அவர் மொழியையும் இலக்கியத்தையுங் கற்று, தமிழெழுத் தினின்று கிரந்த எழுத்தையமைத்து, ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை வேதமொழியொடு கலந்து சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய மொழியைத் தோற்றுவித்து, தமிழ் நூல்களையெல்லாம் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்தபின் மூல நூல்களையழித்துவிட்டு மொழி பெயர்ப்பு நூல்களையே முதனூல்களாகக் காட்டி, இந்திய நாகரிகம் ஆரியர் கண்டதென மேலையரும் நம்புமாறு நாட்டி விட்டனர். தமிழிலக்கியம், குமரிநாட்டு மக்களான ஒரு பேரினத் தார், கற்காலம் முதல் இருப்புக்காலம் வரை பன்னெடுங் காலமாக வளர்த்து வந்த பல்துறை நாகரிகப் பண்பாட்டின் விளைவென் றும்; சமற்கிருத இலக்கியம், ஒருசில வந்தேறிகள், ஐந்திலிரு பகுதி தமிழாயுள்ள சமற்கிருதமென்னும் இலக்கியக் கலவை மொழியில், தமிழிலக்கியத்தை மொழிபெயர்த்தும் விரிவுபடுத்தியும் மாற்றியும் அமைத்ததென்றும்; வேறு பாடறிதல் வேண்டும். 1 தலைக்காலம் 1. குமரிநாடே பழம் பாண்டிநாடு இந்தியா என்னும் நாவலந் தேயம் முழுதும் ஒருகாலத்தில் தமிழ்நாடாக இருந்ததாகத் தெரிகின்றது. முழுகிப் போன குமரியாற்றை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டால், அதற்குத் தெற்கிருந்த நில மெல்லாம் பழம் பாண்டிநாடும், வடக்கிருந்த நிலமெல்லாம் பனிமலைவரை கீழைப் பகுதி சோழநாடும் மேலைப் பகுதி சேரநாடும் ஆகும். பண்டைச் சேரமா வேந்தனாகிய மாவலியின் (மகா பலியின்) மகனான வாணன் (பாணாசுரன்) தலைநகராயிருந்த சோணிதபுரம், கண்ணன் துவாரகைக்கு அண்மையிலிருந்தது, இங்குக் கவனிக்கத் தக்கது. இன்று பாண்டிநாடு என்று சொல்லப்படும் நிலப்பகுதி, இறுதிக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியன், தன்போல் தப்பிய தன் குடிகளைக் குடியேற்றற்குச் சோழ நாட்டினின்றும் சேரநாட்டினின்றும் கவர்ந்து கொண்டதே. அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லை யிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க்கூற்றமு மென்னு மிவற்றை இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் என்று அடியார்க்கு நல்லாரும், மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் என்று நல்லுருத்திரனாரும், உரைத்தும் பாடியுமிருத்தல் காண்க. இனி, முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம்.8) என்று, குமரிநாட்டுத் தென்கோடியிலிருந்த பஃறுளியாற்றை நெடியோன் என்னும் பாண்டியனுக் குரியதாக நெட்டிமை யார் பாடியிருப்பதனாலும், பழம் பாண்டிநாடு முழுகிப் போன தென்கண்டத்துள் ளடங்கிய தென்பது பெறப்படும். இனி, இறையனா ரகப்பொருளுரையிலுள்ள முக்கழக வரலாறு, தலைக்கழக இருக்கையைக் குறிக்குமிடத்து, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை யென்ப என்று கூறியிருப்பதும், பழம் பாண்டிநாடு குமரி நாட்டின் கண்ணதென்பதற்குச் சான்றாம். தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் கொடிதுகடிந்து கோல்திருத்திப் படுவதுண்டு பகலாற்றி யினிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல (புறம்.17) என்று, குறுங்கோழியூர் கிழார் யானைக்கட் சேய் மாந்த ரஞ் சேர லிரும்பொறையைப் பாடியிருப்பதினின்று, ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தமிழ் பரவியிருந்தமையை உய்த்துணரலாம். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11: 19-22) என்னும் சிலப்பதிகாரப் பகுதி, தலைக்கழகப் பாண்டியன் நாவலந்தேய முழுவதையும் ஒருதனியாயாண்டதையோ மூவேந் தருள்ளும் முதன்மையாயிருந்ததையோ, குறிக்கும். பாண்டவ கௌரவர் பிறந்த திங்கட்குலம் பாண்டியர் குடிக்கிளையும், இரகுராமன் பிறந்த கதிரவக் குலம் சோழர் குடிக்கிளையுமேயாகும். வடநாட்டுக் கதிரவக்குல அரசர்க்கும் தென்னாட்டுக் கதிரவக்குல அரசர்க்கும் முசுகுந்தன், செம்பி (சிபி) முதலிய முன்னோர் பொதுவாயிருத்தலை நோக்குக. வடநாட்டிற் சிவமதத்தையும் திருமால் மதத்தையும் பரப்பியவர் தென்னாட்டினின்று அங்குக் குடியேறிய தமிழரே. வேதக் காலத்தில் , ஆரியப்பூசாரியர் வடநாட்டுச் சிவக்குறி (சிவலிங்க) வழிபாட்டினரை ஆண்குறிவணக்கத்தார் (சிசின தேவர்) என்று பழித்ததையும், எண்ணிக் காண்க. முதற்காலத்தில் காளி பாலைநிலத் தமிழத் தெய்வமா யிருந்ததையும், வங்கநாட்டுத் தலைநகர் காளிக்கோட்டம் என்னும் தூய தமிழ்ப்பெயர் தாங்கி நிற்றலையும், கூர்ந்து நோக்குக. இன்றும், பிராகுவீ, மாலத்தோ முதலிய திரவிட மொழிகள் வடஇந்தியாவில் வழங்குவதும், இந்தியின் அடிப் படைச் சொற்கள் தமிழ்த் திரிசொல்லாயிருப்பதும், பொதுவாக வட இந்திய மொழிகளின் சொற்றொடரமைப்பு தமிழ்ச் சொற்றொட ரமைப்பைப் பெரும்பாலும் ஒத்திருப் பதும், ஒருகாலத்தில் வடஇந்தியாவிலும் தமிழ் பரவியிருந் தமைக்குச் சான்று பகரும். வேதக்காலத்திலும் வடஇந்தியாவில் தமிழ அரசரும் வேளிரும் இருந்ததனாலேயே, அகத்தியர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண் குடி வேளிருள்ளிட்டாரையும் அருவா ளரையுங் கொண்டுபோந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதி யின்கணிருந்து'' என்று நச்சினார்க் கினியர் தம் தொல்காப்பிய எழுத்ததிகார வுரை முகத்தில் எழுத நேர்ந்தது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பல ஊர்ப்பெயர்கள், வேள் என்னுஞ் சொல்லை நிலைச்சொல்லாகக் கொண்டுள் ளன. பிற்கால நிலைக்கேற்ப, அச் சொல்லின் வகரம் பகரமாகத் திரிந்துள்ளது. தக்காணம் (தெக்காணம்) என்னும் நடுவிந்தியப் பகுதி வேளிரால் ஆளப்பட்டதனால் வேள்புலம் எனப்பட்டது. அதையாண்ட சளுக்கு மன்னன் வேள்புலவரசன் எனப்பட் டான். வேள்புல வரசர் சளுக்கு வேந்தர். (திவா. 2), (பிங். 5;27) நீயே, வடபான் முனிவன் தடவிலுட் போன்றிச் செம்புனைந் தியற்றிய சேணொடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே ..... ........ (புறம். 201: 8-12) என்னும் புறநானூற்றுப் பகுதியும் ஒரு புனைகதையைஉள்ளிடினும்,பண்டை¡காலத்திšதமிHவேளி®இந்தியhவuபரவியிருªதமைக்கு¤தப்பாjசான்றாம். நடுவ(ண்) மாநிலம், இராசத்தானம், உத்தர மாநிலம் ஆகிய மூன்றும் கலக்கும் eடுவÄசைநிலங்களில்(Central Highlands ) வhழும்பீy® (Bhils) v‹னும்கhடுவாழ்குy¤தார்,தமிœeட்டினின்றுவடபhற்சென்றவில்லிaர்என்னு«வகுப்gரின்வழியிdரே. தமிழ், ஒருகாலத்தில் வடநாட்டிலும் பேச்சு மொழியாய் வழங்கி, பின்னர் இலக்கிய மொழியாய்ச் சுருங்கி,அதன்பின் அரசோலை மொழியாக வொடுங்கி, இன்று வேர்ச்சொல் மொழியாக மறைந்து நிற்கின்றது. 2. பழம் பாண்டிநாடே செந்தமிழ்நாடு தமிழ் தோன்றி வளர்ந்ததும், பண்படுத்தப் பட்டதும், செம்மை வரம்பிடப்பட்டதும், பழம் பாண்டிநாடே. குமரி நாட்டுத் தமிழரே தமிழைச் செம்மைப்படுத்தினதனால், அவர்களே அச் செம்மை திறம்பியிருக்க முடியாது. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் இயற்றிய பனம்பாரனார், வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என்று பாடியபின், மீண்டும், செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி என்று கூறுவதால், அப் பிற்கூற்று முழுகிப்போன பழம் பாண்டி நாட்டையே குறித்ததாகல் வேண்டும். மூவேந்தர் நாடும் தமிழ்நாடாகவே யிருந்தும், பாண்டியன் மட்டும் தமிழ்நாடன் என்று சிறப்பித்துக் குறிக்கப் பட்டமை கவனிக்கத் தக்கது. செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன் (திவா. 2) பிற்காலத்துப் பாண்டிநாடான நெல்லை மதுரை முகவை மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிற் போன்றே செந்தமிழ் வழங்காது ஒருவகைக் கொடுந்தமிழே வழங்கி வருகின்றது. ஆதலால், செந்தமிழ்நாடு குமரிநாட்டைச் சேர்ந்ததாக வேயிருத்தல் வேண்டும். செந்தமிழ் நாடே மன்ற வாணன் மலர்திரு வருளால் தென்தமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பரவுறுஞ் சோழனும் சைவமா தவருந் தழைத்தினி திருந்த மையறு சோழ வளநா டென்ப என்பது, நாட்டுவெறிமிக்க ஒரு சோழ நாட்டான் கட்டிய தாகும். 3. முக்கழக வுண்மை ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் நூல்கள் அத்தனையும், முன்னைத் தமிழர் நாகரிகத்திற்குச் சான்றும் பின்னைத் தமிழர் முன்னேற்றத்திற்குத் துணையும் ஆகாத வாறு, அழிக்கப்பட்டுவிட்டன. மொழியாராய்ச்சியும் நடு நிலையும் நெஞ்சுரமும் இல்லாத வையாபுரிகட்கும் தொடை நடுங்கிகட்கும், இவ் வுண்மையைக் காணும் அகக்கண் இல்லை. தமிழ், வரலாற்றிற் கெட்டாத உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யாதலாலும், ஆரிய வருகை முன்னைத் தமிழிலக் கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதனாலும், இறைய னார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ள முக்கழக வரலாறு, முற்காலச் செய்திகளும் பிற்காலச் செய்திகளும் மயங்கி, நடுநிலையாராய்ச்சி வல்லுநர் அல்லாதார் சிக்கறுக்க முடியாப் பெருமுடிச்சாய்க் கிடக்கின்றது. பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் என்னும் இளங்கோவடிகள் கூற்று, பொல்லாப் புன்சிறு பொய்ம் மொழியாய் இருத்தல் எவ்வகையிலும் இயலாது. அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார வுரையில், முழுகிப் போயினவாகப் பெயர் குறித்துக் கூறிய ஏழேழ் நாடுகளும் பிறவும் பற்றிய செய்தியும், கட்டுக் கதையாய் இருத்தல் முடியாது. வைகை மதுரையைத் தென்மதுரை யென்னும் பெருவழக் கில்லை. ஆதலால், தென்மதுரை யென்பது பஃறுளி மதுரையே. முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்-கடைச்சங்கம் ஆம்போ ததுவூதும் என்னும் பட்டினத்தடிகள் பாட்டு, சங்காகிய சங்கத்தைப் பற்றிய தேனும், முக்கழகத்தை முன்னிய தென்பது வெளிப் படை. காலத்தால் மட்டுமன்றிக் கருத்தாலுங் கடைப்பட்ட வைகை மதுரைப் பாண்டியரே தமிழ்வளர்ச்சிக் கழகம் நிறுவினரெனின், அவர்க்கு முற்பட்ட தலையிடைக்காலப் பாண்டியர் ஏன் கழகம் நிறுவியிரார்? முக்கழக வுண்மையை இற்றை இலக்கியச் சான்றின்மை பற்றி நம்பாதார் பாட்டனைப் பெற்ற பூட்டனைக் கண்டிராமையால் அவன் இவ்வுலகி லிருந்ததை நம்பாதாரே. 4. முக்கழகமும் நிறுவியவர் பாண்டியரே மோனையாந் தெய்வத் தமிழ்மொழி நிறீஇய சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டங் கறம்வள ரவையில் அரங்கே றியநாள் வழுதியர் வளர்த்தது சங்க காலம் என்பது பேரிசைச் சூத்திரம் என்னும் திரட்டில், தமிழ் மொழி விளக்கம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு நூற்பா. பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் (கி.பி. 9ஆம் நூற்.) தளவாய்புரச் செப்பேடு, மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனி லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் என்றும், அவன் மகனான பாண்டியன் இராசசிம்மனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு, மகாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்றும், முன்னோர் செயலைப் பின்னோர்மேல் ஏற்றிக் கூறுகின்றன. வைகை மதுரையைத் தென்மதுராபுரம் என்றது, கண்ணன் மதுரையை வடமதுரை யெனக் கருதியதாகல் வேண்டும். சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும் சவுந்தர பாண்டியன் எனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருந்தது மங்கலப் பாண்டி வளநா டென்ப. உங்களிலே நானொருவ னொப்பேனோ வொவ்வேனோ திங்கட் குலனறியச் செப்புங்கள் - சங்கத்துப் பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ ஏடவிழ்தா ரேழெழுவீ ரின்று. பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப் பாவேந்த ருண்டென்னும் பான்மைதான் - மாவேந்தன் மாற னறிய மதுரா புரித்தமிழோர் வீறணையே சற்றே மித என்பவை, 12ஆம் நூற்றாண்டினரான பொய்யாமொழிப் புலவர், மதுரையிற் கடைக்கழகப் புலவரின் கற்படிமையையும் கழகப் பலகையையும் நோக்கிப் பாடியன. இவையெல்லாம் கடைக்கழகத்தையே பற்றியவை யேனும், முதலிரு கழகமும் பாண்டியர் நிறுவினவேயென் பதைக் குறிப்பாக வுணர்த்துவன வாகும், இந்துமாவாரியில் மூழ்கிப் போன தமிழ் நிலமெல்லாம் பாண்டிநாடேயாதலின், அதில் சேர சோழர் எவ்வகை யிலேனும் இருந்திருக்க முடியாது. இறையனா ரகப்பொருளுரை முக்கழக வரலாறு, தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள் என்றே தொடங்கு தல் காண்க. 5. தலைக்கழகம் (தோரா. கி.மு. 10,000-5,000) இறையனா ரகப்பொருளுரையிலுள்ள முச்சங்க வரலாறு தலைச்சங்கம் தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரி பாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற் றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கமிரீ இயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன் பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம். இதன் விளக்கம் கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்பது பிற்காலத்துச் சமற்கிருதச் சொல்லாதலால், அச் சொல்லே அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கியிருக்க முடியாது. ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தகாலம் தோரா. கி. மு. 1500. அதற்கு நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டிற்குப் பின்னரே, வேத ஆரியமுந் தமிழுங் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய வழக்கு வகைமொழி (Dialect) தோன்றிற்று. சமற்கிருதம் என்னுஞ் சொல்லே கலந்து செய்யப் பட்டது என்னும் பொருளதே. அம்பலம், அமை-அவை, ஆயம், கடிகை, களம், களரி, கழகு-கழகம், குழு, குழாம், குழுமல்-குழுவல், குறி, கூட்டு-கூட்டம், கூடல், கோட்டி, சேகரம், தொகை, பண்ணை, பொது-பொதியம், மன்று-மன்றம் என்னும் சொற்களுள் ஒன்றே அக்காலத்துக் கழகத்தைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும். முதலிரு கழகமும் மூழ்கிய பின்னரே அகத்தியர் தென்னாடு வந்ததனால், அவர் தலைக்கழகத்தில் இருந்திருக்க முடியாது. இடைக்கழக விருக்கையை மூழ்குவித்த இரண்டாங் கடல் கோளுக்குத் தப்பிய மாவேந்த (மகேந்திர) மலையும், அகத்தியர் வந்தபின் முழுகிவிட்டது. அதனால் அவர் பொதிய மலையிலேயே நிலையாக வதிய நேர்ந்தது. அந்த மலய மலையினது உச்சியில் வீற்றிருக்கிறவரும், சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் விளங்குபவரு மான, அகதிய முனிவர் பெருமானைக் காண்பீர்கள்............ சாகரத்தின் மத்தியில் அகதியரால் வைக்கப்பட்டதும். அழகிய பல மரங்களடர்ந்ததும், அழகிய பொன்மயமானதும், மலைகளில் சிறந்ததெனத் திரிலோகப் பிரசித்தி பெற்றதுமான, மகேந்திரம் என்னும் பர்வதம் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கின்றது என்று சுக்கிரீவன் சீதையைத் தேடித் தென்றிசை சென்ற வானரப் படையை நோக்கிக் கூறியதாக, வான்மீகியார் தம் வடமொழி யிராமாயணத்தில் வரைந்திருத்தல் காண்க. 1 அகத்தியர் இராமர் காலத்தவராதலாலும் அவர் மகேந்திர மலையை வாரியிடை வைத்தார் என்பதனாலும், அனுமன் மகேந்திர மலையினின்று கடலைத் தாண்டினான் என்பதனாலும் அகத்தியர் காலத்தில் அம் மலையின் மேற் பகுதி ஒரு தீவாக இருந்ததெனக் கருதலாம். திரிபுரமெரித்த விரிசடைக்கடவுள் என்றது, இறையனார் போலச் சிவபெருமான் பெயர் தாங்கிய ஒரு புலவரையே. இது குணசாகரர் தம் யாப்பருங்கல விரிவுரையில் திரிபுரமெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என்றும், திரிபுரமெரித்த விரிசடை நிருத்தர் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் என்றும், ஒரு புலவர் பெயரைக் குறித்ததை ஒருபுடை யொத்தாகும். குன்றெறிந்த முருகவேள் என்றது முருகன் என்னும் பெயர் கொண்ட புலவரையே. பெயரொப்புமை பற்றி மாந்தரைத் தேவரெனக் கொண்டது, எழுதப்பட்ட வரலாறின்மையையும் அப் புலவரின் சேணெடுந் தொன்மை யையும் காட்டும். ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை யென்பார் செந்தமிழில் வெளியிட்ட ஈழமும் தமிழ்ச்சங்கமும் என்னுமொரு கட்டுரை யில், கி. மு. ஐந்நூற்று நாற்பத்து மூன்றாவது ஆண்டில் விசயன் என்னும் அரசன் சிங்கள அரசினை நிலைபெறுத்துவதற்கு முன், தமிழரது அரசு இலங்கையில் இருந்ததென்றும், ஈழநாட்டு வேந்தர்க்கு முடிநாகரென்ற பேர் இருந்ததென்றும், அந் நாட்டிற்கே நாகத்தீவு என்ற பெயர் வழங்கிய தென்றும், நாகர்கோயில், முசிறி என்ற பெயர்கள் ஈழநாட்டில் வழங்கின வென்றும், சோழன் மணந்த நாககன்னிகை அந்நாட்டு அரசன் மகளென்றும், இளநாகன் என்னும் அரசன் கி.பி. 38-ல் அவண் அரசாண்டா னென்றும் கூறுதலால் உதியஞ் சேரலாதனைப் பாடிய முடிநாகராயர் ஈழமன்னர் மரபினராயிருத்தல் கூடுமென்று கருதுதற்கு இடமுண்டு.2 என்று கூறியுள்ளார் பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இடைக்கழகத்திற்குப் பிற்பட்ட பாரதக் காலத்தவனாதலால், அவனைப் பாடிய முடிநாகராயர் 1. கிருஷ்ணவாமி ஐயரின் வால்மீகி ராமாயண மொழி பெயர்ப்பு - கிஷ்கிந்தா காண்டம், பக்.377-8 2. இலக்கிய வரலாறு, முதற்பாகம், ப.31 தலைக்கழகத்தில் இருந்திருத்தல் முடியாது. அப் பெயரார் ஒருவர் அக் கழகத்தில் இருந்திருப்பின், அவர் வேறொருவரா யிருந்திருத்தல் வேண்டும். என்ரி, சியார்சு, எட்வார்டு என்னும் பெயரினர் பலர் இங்கிலாந்தரசரா யிருந்ததை நோக்குக. முடிநாகர் என்பார் சூட்டுநாகர் என்னும் நாகர் வகுப்பார். நாகவுருவைத் தலையில் அணிந்திருந்ததனால் அப் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. முடிநாகரின் அரையர் முடிநாகராயர். கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர் வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன ஆண்டகை யதனை நோக்கி யரவினுக் கரசர் வாழ்வுங் காண்டகு தவத்த னானேன் யானெனக் கருத்துட் கொண்டான். என்னும் கம்பராமாயணக் கடல்தாவு படலச் செய்யுள் (20) ஈண்டுக் கவனிக்கத் தக்கது. நிதியின் கிழவன் என்றது அளகையாளி அல்லது திருமாவளவன் என்பது போன்ற பெயருடைய ஒரு புலவரை. தலைக்கழகக் காலத்துப் பாண்டிநாடு குமரிமுனைக்குத் தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு பரந்திருந்ததனால், அக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதி லும் அவருள்ளிட்டுப் பாடினார், நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதிலும், இம்மியும் ஐயுறவிற்கு இடமில்லை. கழகமிருந்தார் நிலையான உறுப்பினர்; உள்ளிட்டுப் பாடினார் இடையிடை வந்து பாடிச்சென்ற பிறர். அவர் பாடியதாகச் சொல்லப்படும் பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே. அவற்றுள், முதலது இசையிலக்கியமும் இடையிரண்டும் இசையிலக் கணமுமாகும். அந்நான்கனுள் ஒன்றுகூட இக்காலத்தில்லை. கலிப்பாவின் திரிபான பரி பாடல் தலைக்கழகக் காலத்திற் பாடப்பட்ட தென்பது ஐயத்திற்கிட மானதே. தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன் பதின்மர் என்பதிலும், அவர் ஆண்ட காலம் நாலாயிரத்து நானூற்று நாற்பதியாண்டு என்பதிலும், அவருட் பாவரங் கேறினார் எழுவர் என்பதிலும், எவ்வகை ஐயத்திற்கும் இட மில்லை. அக்காலத்து மக்கட்கு வாழ்நாள் நீண்டிருந்ததனால், தலைக்கு ஐம்பதியாண்டு நிரவலாக வைத்துக் கணிப்பின், மொத்தம் நாலாயிரத்து நானூற்று ஐம்பதாக, பத்தாண்டு கூடியே வருதல் காண்க. கடுங்கோன் என்பவன், களப்பாளர் (களப்பிரர்) காலத்தின் பின் பாண்டி நாட்டைக் கைப்பற்றிய கடுங்கோன் அல்லன். பெயரொப்பு மையைத் தீதாகப் பயன்படுத்தித் தமிழினத்தின் தொன்மையையும் தலைமையையும் மறைப் பதும் குறைப்பதும், தமிழ்ப் பகைவரான ஆரிய வரலாற்றாசிரி யரின் வழக்கமான குறும்பாகும். காய்சின வழுதி என்னும் பெயரினன் ஒருவனும் பிற்காலப் பாண்டியருள் இன்மை காண்க. தலைக்கழகப் பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் பெயரும் குறித்திருப்பின், அவரனைவரும் குமரிநாட்டின ரென்பது வெள்ளிடை மலையாகும். தலைக்கழக இருக்கை கடல் கொள்ளப்பட்ட மதுரை என்று தெளிவாக அடைகொடுத்துப் பிரித்திருத்தலை ஊன்றி நோக்குக. அகத்தியம் தலைக்கழக நூலன்று. முதலிரு கழக நூல்கள் அத்தனையும் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழ் உலக முதன் மொழி. அதன் இலக்கியமும் உலக முதல் அறிவியற் படைப்பு. ஆதலால் வரலாற்றிற் கெட்டாத தொன்மைத்தது. நெடுகலும் தொடர்ந்து தமிழகப் பொது வரலாறெழுதும் வழக்கம் பண்டை நாளிலில்லை. நாடுவாரியாகவும் ஆட்சி வாரியாகவும் பகுதிபகுதியாக எழுதப்பட்ட வரலாறுகளும் வரலாற்றுச் சான்றுகளும், அவ்வப்போது நேர்ந்த போர்களில் அழிக்கப் பட்டுவிட்டன. கி.மு. 1200 போல் எழுதப்பட்ட அகத்தியமே கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முதற் பண்டை நூலாக இருந்ததனால், அது தலைக்கழக இலக்கண நூலாக இறையனாரகப் பொருளுரையிற் குறிக்கப்பட்டது. தலைக்கழகக் காலமோ கி.மு. 52 நூற்றாண்டுக்கு முந்தியது. அவர் சங்கமிருந்து செய்யுள் செய்தது அல்லது நூலியற்றியது என்னாது, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந் தது என்று தலைக்கழகத் திற்குங் கூறியதனால். அக் கழகத் தோற்றத்திற்கு முன்பே நல்லிசைப் புலவர் பலர் செய்யுள் செய்திருந்தனரென்பதும் அவற்றை ஆராய்வதே கழகத்தின் முதல் நோக்கமும் முதன்மையான நோக்கமு மென்பதும், அறியப்படும். இதனால் தமிழின் தொன்மையும் பண்பாடும் ஒருங்கே விளங்கும். 6. இடைக்கழகம் இடைச்சங்கம் இனி, இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல் காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத் தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலுமென இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல் காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமு மென இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண் டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாட புரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது. இதன் விளக்கம் அகத்தியர் தென்னாடு வந்தது கி.மு. 12ஆம் நூற்றாண் டென்று முன்னரே கூறப்பட்டது. அதற்குள் முதலிரு கழக விருக்கையும் மூழ்கிவிட்டன. தொல்காப்பியர் காலம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு. ஆகவே, அகத்தியரும் தொல்காப்பியரும் ஒருகால வாணராகவோ இடைக்கழகப் புலவராகவோ இருந்திருக்க முடியாதென்பது வெள்ளிடை மலை. தமிழ்ப் புலவர் வரலாற்றில், அகத்தியரையும் தொல் காப்பியரையும் ஆசிரியரும் மாணவருமாக இணைத்தது, உண்மை வரலாற்றிற்கு ஒரு பெரிய இடறுகட்டை யாகும். முதலிரு கழக இலக்கிய மனைத்தும், நூற்பெயரும் நூலாசிரி யர் பெயரும் எதிர்காலத்தில் எவருக்கும் தெரியாவாறு கூட்டுக் கட்டுப்பாட்டுடன் அழிக்கப்பட்டுவிட்டமையால், அகத்தியரே முதல் தமிழாசிரியரும் அகத்தியமே முதல் தமிழிலக்கணமும் ஆகக் கருத நேர்ந்துவிட்டது. அகத்தியம் மாபிண்டம் என்னும் முத்தமிழிலக்கணம். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம் என்பதும், இலக்கணத்துள்ளும் முத்தமிழிலக்கணத்திற்கு முந்தியது இயற்ற மிழிலக்கணம் என்பதும், இயற்றமிழிலக் கணத்துள்ளும் பொருளுக்கு முந்தியது சொல்லும் சொல்லிற்கு முந்தியது எழுத்தும் ஆகும் என்பதும், ஒவ்வொரு துறையிலும் அதன் படிநிலைகளிலும் முதலும் வழியும் சார்பும் சார்பிற் சார்புமாகப் பல நூல்கள் பன்னூற்றாண்டு வழங்கிய பின்னரே, பெரும்பாலும் நிறைவான அளவை நூல் தோன்றுமென்பதும், பண்டையாசி ரியர்க்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. அகத்தியர்க்குத் தொல்காப்பியர் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு பிற்பட்டவர். அகத்தியத்திற்கு அடுத்துத் தோன்றிய இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியமாதலின், பிற்காலத்தார் தொல்காப்பியரை அகத்தியரின் மாணவராகக் கருதிவிட்டனர். அகத்தியரைத் தொல்காப்பியத்தில் குறிப்பாக வேனும் ஓரிடத்துங் குறிப்பிடாமையும், என்ப, என்மனார் புலவர், எனமொழிப என்றும், பிறவாறும், முன்னூலா சிரியரைப் பன்மையிலேயே தொல்காப்பியர் நெடுகலுங் குறித்துச் செல்லுதலும், அவர் உடன் மாணவரான பனம் பாரனார், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்றும் தம் சிறப்புப்பாயிரத்திற் கூறியிருத்தலும், தொல் காப்பியர்க்கு அகத்தியரொடு தொடர்பின்மையைத் தெளிவாகக் காட்டும். ஆயினும் நச்சினார்க்கினியர், மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்தை நம்பி, பகுத்தறிவிற் கொவ்வாத ஒரு கதையைக் கட்டிவிட்டார். அகத்தியம் இறந்துபட்டமைக்குத் தொல்காப்பியரின் எதிர்ச் சாவிப்பு கரணியமன்று. அது முத்தமிழ் முழு நூலாயிருந்து தமிழின் பெருமையைச் சிறப்பக் காட்டின தனாலும், தொல்காப்பியம் போல் ஆரியக் கருத்துகளைப் புகுத்தாமையாலும், வடசொல்லைச் செய்யுட் சொல்லாகக் கொள்ளாமையாலுமே, முதுகுடுமிப் பெருவழுதி போன்றார் காலத்தில் தமிழ்க் கடும் பகைவரான ஆரிய வெறியரால் அழிக்கப்பட்டு விட்டது. அகத்தியரையும் தொல்காப்பியரையும் முதலிற் குறித்த தனால் இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன் சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன், கீரந்தை என்பவரும் பிற்காலத்தவரே. துவரைக்கோன் என்றது, எருமையூர் (மைசூர்) நாடென் னும் கன்னட நாட்டில் இன்று துவாரசமுத்திரம் என வழங்கும் துவரை நகரைத் தலைநகராகக் கொண்ட, இருங்கோவேளின் முன்னோன். கழகமிருந்தார் தொகை ஐம்பத்தொன்பதாகவும் உள்ளிட்டுப் பாடினார் தொகை மூவாயிரத்து எழுநூறாகவும் குறைந்து போனமைக்கு, பனிமலைவரை வடக்கிலுள்ளது போன்ற ஒரு பெரு நிலப்பரப்பு முழுகிப்போனமையே கரணியம். அவர் பாடியதாகச் சொல்லப்படும் கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலும் பிறவும் இறந்து பட்டன. அவையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே. அவர்க்கு இலக்கண நூலென்ற ஐந்தும் இடைக்கழகத் திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவையே, மாபுராண மும் பூதபுராணமும் இறந்துபட்டன. இசைநுணுக்கம் இன்றும் கையெழுத்துப் படியாயிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆயின், அச்சேறி வெளிவராமையோடு மறைவாகவும் உள்ளது. புராணம் என்னும் வடசொல்லே, மாபுராணமும் பூத புராணமும் ஆரியம் வழக்கூன்றிய பிற்காலத்தன வென்பதைத் தெரிவிக்கும். அதே சமையத்தில், அவை கூறும் இலக்கணச் செய்தியின் தொன்மையையும் உணர்த்தும். புராணம் என்னும் பெயர் வடமொழியிலக்கியத்திற் பழங்கதை அல்லது அதுபற்றிய பனுவலையே குறிக்கும். பிற் காலத்தில் படைப்பு, துணைப்படைப்பு, மன்னூழி (மன் வந்தரம்), அரச மரபுகள், அவற்றின் வரலாறுகள் ஆகிய ஐந்தையும் பற்றிக் கூறுவதே புராணம் என்று ஒரு வரையறை செய்யப்பட்டது. அவ் வரையறைக்கு முந்தி மாபுராணமும் பூதபுராணமும் தோன்றி யிருக்கலாம். இடைக் கழகத்தைப் புரந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை ஐம்பத்தொன் பதின்மர். தலைக்கு நாற்பதாண்டு நிரவலாக வைத்துக் கொள்ளின். அவர் ஆண்ட காலம் ஈராயிரத்து முந்நூற்றறுப தாண்டாகும். முக்கழக வரலாற்றில் அது மூவாயிரத்தெழு நூறாண்டென்றது, கழகமில்லாத இடைக் காலத்தையும் சேர்த்ததாகல் வேண்டும். ஏனெனின், தலைக்கழக விருக்கையை உட்கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பு திடுமென மூழ்கியபின், உடனடியாக ஆட்சி ஏற்பட்டிருக்க முடியாது. ஆட்சி ஏற்பட்டபின்னும், நாடு முழுதுந் தழுவிய தலைமைப் புலவர் கழகம் உடன் தோன்றியிருக்க முடியாது. ஆதலால், ஆயிரத்து முந்நூற்று நாற்பதாண்டு இடையீடு பட்டிருத்தல் வேண்டும். கடல்கோளுக்குத் தப்பிய குடிகளைக் குடியேற்றவும், புதிய அரசமைக்கவும் ஆட்சிக்கு மருதநிலத் தலைநகரும் வணிக வளர்ச்சிக்கு நெய்தல்நிலத் தலை நகரும் எடுப்பிவிக்கவும், எதிர்காலக் கடல்கோள் தடுப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், மீண்டும் புலவர் கழகந் தோற்று வித்தற்கேற்ற செழிப்பும் அமைதியும் நாட்டில் நிலவவும், அத்துணைக் கால இடையீடும் வேண்டியது இயற்கையே. வெண்டேர்ச் செழியன் முடத்திருமாறன் என்னும் பெயர்கள் பிற்காலத்துப் பாண்டியர் பெயர் போலாது தூய தமிழாயிருத்தல், ஆரிய வருகைக்கு முந்திய நிலையைக் காட்டும். சிலர், முடத்திருமாறன் கடல்கோளுக்குத் தப்பும் முயற்சி யில் முடம்பட்டு அப் பெயர் பெற்றானென்று கூறுவர். அவன் பிறப்பிலேயே முடம்பட்டு மிருந்திருக்கலாம். புலவர் தொகை போன்றே, பாண்டியர் தொகையும் அவருட் பாவரங்கேறினார் தொகையும் குறைந்தமை, பழம் பாண்டிநாடு மிகக் குறுகிப் போனமையைக் காட்டும். கபாடபுரம் என்னும் பெயர் வான்மீகி யிராமாயணத் தினின்று அறிந்தது. அச் சொல்லிற்கு வடமொழியில் வாயில் அல்லது கதவு என்பதே பொருள். அண்மையில் வெளிவந்த (P.S.) கிருட்டிணசாமி ஐயரின் மொழிபெயர்ப்பிலும், கபாட என்பது வாயிலின் கதவு என்றே மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. (பாண்டயாநாம் கபாடம் த்ரக்ஷ்யத = பாண்டிய நாடுகளின் உட்புகும் வாயிலின் கதவைக் காண்பீர்கள்). ஆரிய வருகைக்கு முற்பட்ட பழம் பாண்டிநாட்டு நகருக்கு வேற்றுமொழிப் பெயர் அமைந்திருத்தல் இயலாது. கபாட என்னும் சொல்லிற்கு வடமொழியில் மூலமும் இல்லை. ஆறு, கடலொடு கலக்குமிடம் வாய் போன்றிருத்தலால், அதற்குக் கயவாய் என்று பெயர். (ஒ.நோ : Portsmouth, Plymouth). கயம் = கடல். குமரியாறு கடலொடு கலந்த இடத்திலேயே கபாடபுரம் என்னும் பட்டினம் இருந்திருத்தல் வேண்டும். அதன் பெயரும் அதனொடு முழுகிப் போயிற்று. ஒருகால், புகார் (ஆறு கடலிற் புகுமிடம்) என்பது போன்றே கயவாய் என்பதும் சிறப்புப் பெயராய் வழங்கி யிருக்கலாம்; அல்லது, புதவம் (வாயில்) என்று பெயரிருந்திருக்க லாம். கபாட என்னும் சொல் கதவம் என்னும் தென்சொல்லின் முறைமாற்றுத் திரிபாயுமிருக்கலாம். கடைக்கழகக் காலத்தின் முற்பகுதியிலும் குமரியாறிருந்த தாகத் தெரிவதால், காவிரியாறிருக்கவும் காவிரிப்பூம்பட்டினம் முழுகிப் போனதுபோன்றே, குமரியாறிருக்கவும் கபாடபுரம் என்னும் பட்டினமும் முழுகிப் போயிருத்தல் வேண்டும். அம் முழுக்கும் ஒரு பகுதி முன்னும் ஒரு பகுதி பின்னுமாக இருந்திருக்கலாம். தென்னாட்டார் வடதிசையிற் கங்கையாடச் சென்றது போன்றே, வடநாட்டார் தென்றிசையிற் குமரியாட வந்ததும், பண்டைக்காலத்திற் பெருவழக்காயிருந்தது. தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் (புறம்.6) தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் (சிலப், 8: 1, அடியார். உரை) என்பன குமரியாற்றின் பெருமையைக் காட்டும். இடைக்கழக விருக்கையைக் கொண்டது இரண்டாம் அல்லது மூன்றாங் கடல்கோள். அது கி. மு. 1500 போல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏறத்தாழ அதுவே கீழையாரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலமும். ஆகவே, முதலிரு கழகமும் முற்றும் ஆரியத் தொடர் பற்றன என்பதை அறிதல் வேண்டும். 2 இடைக்காலம் (தோரா. கி.மு. 1500-கி.பி. 1800) 1. ஆரியர் குடியமர்வுக் காலம் (தோரா கி. மு. 1500-500) 1. ஆரியர் நாவலம் (இந்தியா) வருகை (தோரா. கி.மு. 1500) ஆடுமாடு மேய்க்கும் முல்லைநாகரிக நிலையினரான ஆரியர் கி.மு. 1500 போல் சிறுசிறு கூட்டமாகப் பிழைப்பிடந் தேடி நாவலந் தேயத்திற்குட் புகுந்தனர். அடுத்தடுத்துப் பன்முறை வந்தாரேனும் மொத்தத்திற் பழங்குடி மக்களை நோக்கச் சிறுபான்மையரே யாதலின், அம் மக்களொடு இரண்டறக் கலந்துபோயினர். அதனால், அவர் மொழியும் அம் மக்கள் மொழியாகிய பிராகிருதத்துடன் கலந்து போயிற்று. ஆயின், தம்மினத்துள் உயர்வையும் சிறப்புச் சலுகை களையும் பெற்று உழைப்பின்றி இன்பமாக வாழ்ந்து வந்த ஆரியப் பூசாரியர் மட்டும், பழங்குடி மக்களின் உயரிய நாகரிக த்தையும் அறிவொழுக் கங்களையும் கண்டும், அவர்களின் பேதைமை, மதப்பித்தம், கொடை மடம் ஆகிய குறைகளைப் பயன்படுத்திக்கொண்டு, உண்டாட்டிலும் கொள்வனை கொடுப்பனையிலும் அவர்களொடு கலவாது தனிநின்று, தாம் நிலத்தேவரென்றும் தம் மொழி தேவமொழியென்றும் ஏமாற்றி, தாம் புகுந்த நாட்டிலும் தமக்கு உயர்வைத் தேடிக் கொண்டனர். இதற்கு அவர் வெண்ணிறமும் எடுப்பொலி மொழியும் துணை நின்றன. எனினும், பழங்குடி மக்களெல்லாரும் அவரை நம்பிப் போற்றவில்லை. அதனாற் போற்றினாரைக்கொண்டே போற்றாதாருடன் போர் தொடுத்தனர். இக் கொலைப்போரை, தமிழ்நாட்டுப் பேராயக் கட்சித் தமிழர்க்கும் நயன்மைக் கட்சித் (Justice Party) தமிழர்க்கும் அல்லது திரவிடர்க்கும் இடைப்பட்ட அரசியற் கட்சித் தேர்தற் போருக்கு ஒப்பிடலாம். இரண்டும் ஆரிய திரவிடப்போரே. பிராமணர் 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எங்ஙனம் தமிழரைக் கொண்டே தமிழரை வென்றனரோ, அங்ஙனமே வேதக் காலத்திலும் ஆரியப் பூசாரியர் பழங்குடி மக்களைக் கொண்டே பழங்குடி மக்களை வென்றடக்கிவிட்டனர். இதற்குத் தோதாக இருவழிகளைக் கையாண்டனர். ஒன்று சிவன், திருமால், முருகன், காளி முதலிய தமிழ் அல்லது பழங்குடித் தெய்வ வழிபாட்டை மேற் கொண்டமை; இன்னொன்று, வருணாசிரம தருமம் என்னும் பிறவிக்குலப் பிரிவினையால், பழங்குடி மக்களிடைப் படி முறைத் தாழ்வும் ஒற்றுமைக் குலைவும் தன்னின வெறுப்பும் உண்டுபண்ணியமை. இங்ஙனம் அடுத்துக் கெடுத்தல், பிரித் தாட்சி என்னும் இரு வலக்காரங்களைக் கையாண்டு, விரல்விட் டெண்ணத் தக்க ஓர் அரை நாகரிகச் சின்னஞ்சிறு வகுப்பு, நாகரிகப் பண்பாட்டிற் சிறந்த ஒரு மாபேரினத்தை நிலையாக அடக்கியாண்டு வருவதற்கு இணையானது, மாந்தன் வரலாற்றில் வேறெந்நாட்டிலு மில்லை. 2. ஆரியப் பூசகர் தென்னாடு வருகை (தோரா. கி.மு. 1200) வேதக்காலத்திலேயே, ஆரியப் பூசாரியர்க்குத் தமிழ ரொடு கலை நாகரிகத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. தமிழத் தெய்வ வழிபாட்டை வடநாட்டுத் தமிழரிடமிருந்தே கற்றிருக் கலாம். ஆயின் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் பகுப்பிற்கு மூலமான, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பாற் பகுப்பை, தமிழர் இயற்றமிழிலக்கணப் பொருளதிகாரத்தினின்றே அறிந்திருத் தல் வேண்டும். பெரியவுஞ் சிறியவுமான நூற்றுக்கணக்கான தொழில் களும் தொழிற்குலங்களும் ஆரியப் பூசாரியர் வருமுன்பே ஏற்பட்டு விட்டன. எல்லாத் தொழில்களையும் உழவு வணிகம் காவல் கல்வி என்னும் நாற்பெரும் பிரிவுள் அடக்கியதும், அவற்றிற்குரிய வகுப்பாரை அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்று தலைமாற்றி வரிசைப்படுத்தியதும், ஆரிய இனத்தின் கருவுந் தோன்றாத தலைக்கழகக் காலத்திலேயே ஏற்பட்ட பொருளிலக்கண அமைப்பாகும். ஏனை நாடுகளிற் போன்றே யிருந்த தொழிற்குலங்களை, கல்வித் தொழிலினின்று விலக்கற்கும் அறியாமையுள் அமிழ்த்தி என்றும் தமக்கு அடிமைப்படுத்தற்கும், பிறவிக்குலங்களாக மாற்றியதே ஆரியப் பூசகர் தொழிலாம். வடநாட்டிற் குடியேறிய முழு ஆரியக் கூட்டத்தாரே சின்னஞ்சிறு பான்மையர். அதனால் அவர் மொழி பழங்குடி மக்கள் மொழியொடு இரண்டறக் கலந்து, எகர ஒகரக் குறிலிழந்து, பிராகிருதப் பான்மை பெற்றுவிட்டது. அங்ஙன மிருக்க, ஆரியப் பூசகர் மட்டும் இரண்டொருவர் அல்லது நாலைவர் தென்னாடுவந்து எங்ஙனம் தமிழப் பேரினத்தை நால்வேறு தொழிற்குலங்களாக முதன்முதல் வகுத்திருக்க முடியும்? ஆங்கிலராட்சிக் காலத்தில் எங்ஙனம் ஓர் ஆங்கி லேயனைக் காணினும் ஆயிரக்கணக்கான இந்தியர் அல்லது தமிழர் அஞ்சியடங்கி நின்றனரோ, அங்ஙனமே ஆரியனைக் கண்ட போதும் நின்றனர். இம்மையில் உடலைமட்டும் தாக்கிய ஆங்கில மாந்தன் அதிகாரம் அத்துணை வல்லமையுள்ள தெனின், இம்மையிலும் மறுமையிலும் உடம்பையும் ஆதனை யும் (ஆன்மா வையும்) ஒருங்கே தாக்கும் நிலத்தேவன் அதிகாரம், எத்துணை வல்லமையுள்ள தாயிருந்திருக்கும்! அன்று கொல்லும் கண்கண்ட தெய்வங்களாகிய மூவேந்தரே, ஆரிய உவச்சனை நிலத் தேவனென்று நம்பி நெடுஞ் சாண் கிடையாய் விழுந்து வணங்கிய போது, அவர் கட்டளை வழி நிற்கும் பேதைக் குடிகள் எங்ஙனம் மீறி நடக்க வொண்ணும்? அறிவாராய்ச்சியும் கண்திறப்பும் மிக்க இக் காலத்திலும், ஆரிய ஏமாற்றும் தமிழ ஏமாறலும் தொடர்ந்து நடைபெறின், அக்காலத்தில் இந் நிலைமை எத்துணை மடங்கு மிக்கிருந் திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? ஆரிய மூலமுதல் மறையாகிய இருக்கு வேதத்தில் 9ஆம் மண்டலம்வரை, நால்வரணப் பகுப்பைப்பற்றி எவ்வகைக் குறிப்புமில்லை. இறுதியதாகிய 10ஆம் மண்டலத்தில்தான் முதன் முறையாக புருட சூத்தம் (புருஷ சூக்தம்) என்னும் மந்திரத்தில், பிராமணன் இறைவனது வாய் ஆயினன்; சத்திரியன் (ராஜந்யன்) அவனுடைய தோள்கள் ஆயினன்; வைசியன் அவனுடைய தொடைகள் ஆயினன்; சூத்திரன் அவனுடைய பாதங்களில் தோன்றினான் என்று கூறப்பட்டுள்ளது. கி.மு. 1300-ற்கும் 1200-ற்கும் இடைப்பட்ட இராமனாட் சியில், சம்புகன் என்னும் சூத்திரன் தவஞ்செய்ததனால் ஒரு பிராமணனின் பிள்ளை இறந்ததென்று, அவன் கொலைத் தண்டம் இடப்பட்டான். கி.மு. 1200-ற்கும் 1000-ற்கும் இடைப்பட்ட பாரதக் காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் விற்பயிற்றும் சத்திரியத் தொழில் செய்து கொண்டே ஆச்சாரியன் என்னும் பட்டந் தாங்கி, ஏகலைவன் என்னும் இளவேடனுக்கு விற்பயிற்ற மறுத்ததன்றி, அவன் தன் வலக்கைப் பெருவிரலை இழக்கவும் செய்தான். இராமன் காலத்தவரான அகத்தியர் தென்னாடுவந்து பொதியமலையில், வதிந்து, இடைக்கழக நூல்களைப் பின் பற்றி, அகத்தியம் என்று ஆசிரியனாற் பெயர்பெற்ற முத்தமிழி லக்கணம் ஒன்று இயற்றினார். இதனால் அகத்தியர் காலம்வரை முத்தமிழ் வெவ்வேறு பிரியவில்லை யென்பது தெரிகின்றது. அகத்தியர் காலத்தை யடுத்தவரான நாரதரும் தென்னாடு வந்து பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலியற்றினார். இது அகத்தியத்திற்கு அல்லது, அகத்தியர்க்குச் சற்றுப் பிந்தியதா யிருத்தல் வேண்டும். எங்ஙனமெனின், அகத்தியர் தென்னாடு வருங்கால் முதற்கண் தண்டக அடவியில் இராமனாற் காணப் பட்டார். பின்னர் இராமன் சீதையையிழந்து தேடினபோது பொதிய மலைக்கு வந்துவிட்டார். அதன்பின், இராமன் சீதையிருக்குமிடமறிந்து இராவணனைக் கொன்று அவளை மீட்டு, அயோத்திக்கு மீண்டு அரசாண்டு வருங்கால் அவளைத் துரத்திவிட, அச் செய்தியை முற்றும் நாரதர் வான்மீகி முனிவர்க்கு அறிவித்தார் என்று இராமாயணக் கதை யிருத்தலால் என்க. இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங் குருகும், பிறவும், நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாக வுள்ள தொன்னூல்க ளிறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன என்று அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரைப்பாயிரத்திற் கூறியிருத்தல் காண்க. இதனால், பரதசாஸ்திரம் என்னும் சமற்கிருத நூலுக்கும் தமிழ்ப் பரதமே மூலம் என்பது விளங்கும். பாண்டவ கௌரவரின் பாட்டனான பீடுமன் பரசுரா மனிடத்தில் விற்பயிற்சி பெற்றவனென்று சொல்லப்படுதலால், இராமாயணக் காலம் பாரதக்காலத்திற்கு ஓரிரு தலை முறையே முந்தியதாகும். பாரதப்போரிற் கண்ணபிரான் அருச்சுனனுக்கு ஓதிய ஊக்குரையை அடிப்படையாகக்கொண்டு, இரண்டன்மைக் (சத்துதக்) கொள்கை பரவிய பிற்காலத்தில் ஒரு பிராமணனால் இயற்றப்பட்ட பகவற்கீதையில், 4ஆம் அதிகாரம் 13ஆம் சொலவம், ``குணவினை வேறுபாட்டினால் நால்வரணமும் என்னாலேயே படைக்கப்பட்டன. நானே அவற்றின் வினை முதலாயினும், நான் வினையிலியும் வேறுபாடிலியும் என்று அறிவாயாக. என்று உண்முரண்படப் புகல்கின்றது. ஆரியம் என்னும் சொல் ஆரியம் என்னும் பெயர் இன்று வடஇந்திய மொழிகட்கும் ஐரோப்பிய மொழிகட்கும் பொதுவாக வழங்கினும், முதற்கண் வேத ஆரியர் மொழிக்கும் அவரினத்திற்கும்தான் குறியீடாய் வழங்கிற்று. ஆர்ய என்னும் சொல், `அர்ய என்னும் அடியினின்றும் `ரு என்னும் வேரினின்றும், திரிந்துள்ளதாக மானியர் உவில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலி காட்டி, தலைவன் அல்லது பெருமகன் என்பது அதன் பொருளாகக் கூறும். ஒருசில ஆரிய வெறியர், `அர்ச் என்னும் மூலத்தொடு தொடர்புபடுத்தி, ஆரியன் என்பதற்கு வணங்கப்படத்தக்கவன் என்று பொருள் கூறுவர். அர்ய என்னும் அடிக்குப் பக்கமான (பக்ஷமான) அல்லது அருமையான என்று பொருள் கூறப்படுவதால், ஆரி என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் ஆரியன் என்னும் பெயர் திரிந்திருக்கலாம். அரு-ஆரி = 1. அருமை. ஆரிப்படுநர் (மலைபடு. 161). 2. மேன்மை. ஆரி யாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129). 3. அழகு. (சூடா.) ஆரி-ஆரியன் = மேலானவன், உயர்ந்தோன். ஆரியனை எங்ஙனம் தமிழ்ச்சொல் உயர்த்திக் குறிக்க வொண்ணுமெனின், வேத ஆரியரின் முன்னோர் மொழியும் பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி யாதலாலும், வேத மொழியுந் தமிழுங் கலந்ததே சமற்கிருதமாதலாலும், முதற்காலத் திரவிடமே வட நாட்டுப் பிராகிருதமாதலாலும், அம் மூவகை மொழிகளுள் ஒன்றிலுள்ள ஓர் உயர்வுப்பொருட் சொல்லையே ஆரியர் தம் இனத்தைக் குறிக்கத் தெரிந்து கொண்டனர் என்க. சென்ற நூற்றாண்டினரான மாக்கசுமுல்லர் என்னும் ஆரிய வெறியரே, ஐரோப்பிய மொழிகட்கும் வடநாட்டுப் பிராகிருதங் கட்கும் ஆரியம் என்னும் சொல்லைப் பொதுப் பெயராக்கினர். ஆரிய இலக்கியத் தொடக்கம் இந்திய ஆரியரின் முதல் இலக்கியப் படைப்பு, இருக்கு என்னும் சிறுதெய்வ வழுத்துத் திரட்டே. அது பின்னர் அதனின்று வேள்வி யியற்றுதற்குரிய மந்திரமெல்லாம், தொகுக்கப்பட்டு யசுர் என்றும், வேள்வியிற் பாடக்கூடிய மந்திர மெல்லாந் தொகுக்கப்பட்டுச் சாமம் என்றும், பெயர் பெற்று மூவேத மாயிற்று. ஆரியரின் முதற்பனுவல் அல்லது வனப்பு (காவியம்) வால்மீகி யிராமாயணமாகும். அதற்கடுத்தது பாரதம். 2. இடைக்கால இலக்கியம் (1) மதவிலக்கியம் 1. சிவனிய இலக்கியம் சேயோன் மேய மைவரை யுலகமும் (அகத். 5.) என்று தொல்காப்பியமும் தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (சிவபு.) மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் (கீர்த்தி.) பாண்டி நாடே பழம்பதி யாகவும் (கீர்த்தி.) தென்னாடுடைய சிவனே போற்றி (கீர்த்தி.) என்று திருவாசகமும், கூறுவதால், கிறித்துவிற்கு முன்பே பல சிவனியப் பாடல்களும் பனுவல்களும் தோன்றி அழிந்தோ அழியுண்டோ போயிருத்தல் வேண்டும். திருமுருகாற்றுப்படை இது, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய், பழனி என்னும் திருவாவினன்குடி, திரு வேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடைவீடுகளிற் கோயில் கொண்டுள்ள முருகனிடத்தே, வீடுபெற்றா னொருவன் வீடுபெறக் கருதிய மற்றொருவனை வழிநிலைக் காட்சிகளை வண்ணித்து ஆற்றுப் படுத்தியதாக, கடைக்கழகப் புலவர் நக்கீரர் பாடிய 517 அடி கொண்ட அகவல். திருவேரகத்தைக் குடந்தைக் கருகிலுள்ள சுவாமிமலை யென்பர். அது பிற்கால வழக்காதலிற் பொருந்தாது. தென் கன்னடத்திலுள்ள உடுப்பியே நக்கீரர் குறித்த ஏரகமாதல் வேண்டும். ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி என்று பாடிய அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டின ராதலால், அவர் கூற்றுப் பிற்கால வழக்கைத் தழுவியதே. குன்றுதோறாடல் என்பதும் ஏனையவற்றைப் போல் ஒரு தனி யிடமே. அஃதுள்ள விடத்தைப் பிற்காலத்தார் அறியாது போயினர். குன்றுதோ றாடலுமுரியன் என்னாது, குன்று தோறாடலு நின்றதன் பயனே, என்றே நக்கீரரும், குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி வெறியாடிக் கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதோ றாடல் மேவு பெருமாளே என்று அருணகிரிநாதரும், பாடியிருத்தலை நோக்குக. பலகுன்றிலும் (30), ``கிரியெங்கணும் (653) மலையாவையும் (778) என்று அருணகிரிநாதர் பாடியிருப் பவையெல்லாம் முருகன் குறிஞ்சி நிலத்தலைவன் என்பதையன்றிக் குன்று தோறா டலைக் குறிப்பனவல்ல. குன்றுதோறாடல் என்னும் பெயர் வருமிடமெல்லாம், குன்று தோறு மாடல் என்று முற்றும்மை பெறாமையையும் நோக்குக. முருகன் இருக்கைகளுட் சிறந்தவை திருப்பரங்குன்றம் முதலிய ஆறு படைவீடுகள் என்று கொண்டு, அவற்றுள் ஒன்று குன்று தோறாடல் எனக் குறிப்பின், அது ஒரு தனியிடமாகவே யிருத்தல் வேண்டும். அன்றேல், படைவீடுகள் ஆறென்னும் வழக்கிற்கு இழுக்காகும். குன்றுதோறாடல் என்பது பல மலை யிடங்களில் ஆடலைக் குறிப்பின், அது திருமுருகாற்றுப் படையில் பழமுதிர் சோலைக்குப்பின் இறுதியிலேயே கூறப்பட் டிருத்தல் கூடும். பழமுதிர்சோலை யென்பது அழகர்மலை. முகம் என்னுஞ் சொல்லிற்கு இடம் என்னும் பொருளுண் மையால், முருகனின் ஆறுபடை வீடுகளும் ஆறுமுகம் என்னப் பட்டன. அதனால் முருகனுக்கு ஆறுமுகம் (அடையடுத்த இடவாகுபெயர்), ஆறுமுகன் என்னும் பெயர்கள் தோன்றின. வடவர் இதையறியாது, ஆறுமுகம் என்பதை ஷண்முக என்று மொழிபெயர்த்து, ஆரல் (கார்த்திகை) மாதர் அறுவர்பெற்ற பிள்ளையென்று பகுத்தறிவிற்குப் பொருந்தாத ஒரு கதையைக் கட்டி, ஆரியக்கருவே தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குமுன், குமரிநாட்டில் முதன் முதலாகத் தோன்றிய குறிஞ்சிநிலத் தனித்தமிழ்த் தெய்வமாகிய முருகனை ஆரியத் தெய்வமாகக் காட்டி, கார்த்திகேய (ஆரலன்), சரவணபவ (bhava) (நாணற்காடன்), சுப்ரமண்ய (Subrahmanya), (பிராமணர்க்கு நல்லான்) முதலிய பெயர்களைத் தோற்றி விட்டனர். தமிழரும் அக் கதையை இன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆற்றுப்படை யென்பது, ஓர் அரச வள்ளலிடம் பரிசில் பெற்றா னொருவன், பெறக்கருதிய மற்றொருவனை அவனி டம் ஆற்றுப் படுத்தியதைப் பாடிய பாட்டு. பரிசில் பெறற் குரியவர் புலவர், பாணர். பொருநர், கூத்தர், விறலியர் என்பார். இதை, கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல். புறத். 36) என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதில், புலவர் என்பது விட்டுப்போயிற்று. இக் குறையை, புரவலன் பரிசில் கொண்டு மீண்ட இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர் பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப் புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅய் ஆங்குச் செல்கென விடுப்பதாற் றுப்படை (201) என்று பன்னிரு பாட்டியல் நூற்பா நிறைக்கின்றது. ஆற்றுப்படை, ஆற்றுப்படுக்கும் அல்லது படுக்கப்படும் வகுப்பாரால், புலவராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொரு நராற்றுப் படை, கூத்தராற்றுப்படை, விறலியாற்றுப்படை என வெவ்வேறு பெயர்பெறும். புலவர் பரிசில், இம்மைக்குரிய உலகியற் பொருளும் மறுமைக்குரிய வீடுபேறும் என இரு வகைத்து. ``கோதை மார்பிற் கோதை யானும்'' என்னும் புறப்பாட்டு (48), பொய்கை யார் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஒரு புலவரை ஆற்றுப் படுப்பது போற் படைத்துறையாகப் பாடிய புலவராற்றுப் படை. அது உலகியற் பொருளைப் பரிசிலாக நோக்கியது. திருமுருகாற்றுப் படை வீடு பேற்றைப் பரிசிலாக நோக்கியது. அதுவும் படைத்துறைப்பாட்டே. இவ் விலக்கியங் கண்டே புலவராற்றுப் படையை (230) ஒரு பாடாண் துறையாக்கி, இருங்கண்வானத் திமையோருழைப் பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று என்று கொளுவும், வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட் கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயும் ஆழி யவன் என்று ஓர் ஆற்றுப்படை வெண்பாவும் பாடியுள்ளது புறப் பொருள் வெண்பாமாலை. அதன் வழியே, புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே என்னும் பன்னிருபாட்டியல் நூற்பா எழுந்தது. சிவனியமும் மாலியமும் தமிழரின் இருபெரு மதங்களாத லால், திருமுருகாற்றுப்படை சிவனியச் சார்பாயிருத்தல் நோக்கி, ஐயனாரிதனார் தம் ஆற்றுப்படை வெண்பாவை மாலியச் சார்பா யமைத்தார் போலும்! இங்ஙனம் மதவியலாக வரும் புலவராற்றுப் படையைத் (திருத்) தொண்டராற்றுப்படை யெனல், பொருந்தும். திருமுருகாற்றுப்படை, கடைக்கழகக் காலத்திற்குப்பின் தொகுக்கப்பட்ட பத்துப்பாட்டு என்னும் அகவற்பாட்டுத் தொகையின் முதலதாகவும், அதன் கடவுள் வாழ்த்துப் போலும், அமைகின்றது. திரு என்னும் அடை தெய்வத்தன்மை பற்றியது. பரிபாடல் இது நல்லந்துவனார், இளம்பெருவழுதியார் முதலிய பலர் பாடிய பரிபாடல் என்னும் பாவகை 70 கொண்ட பாடற்றிரட்டு. இதில் திருமாலுக்கு 8-ம் முருகனுக்கு, 31-ம் காடுகிழாள் என்னும் காளிக்கு 1-ம் வையைக்கு 26-ம் மதுரைக்கு 4-ம் உரியன. இதை, திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடல் திறம். என்னும் பழம்பாட்டுத் தெரிவிக்கும். பரிபாட லடிகளின் சிற்றெல்லை 25 என்றும், பேரெல்லை 400 என்றும் கூறுவர். அருகனையும் புத்தனையும்பற்றிய பரிபாடலின்மை, சமண புத்தம் தமிழ மதங்களன்மையைக் காட்டும். வையையை யும் மதுரையையும் பாடியது, அவற்றையும் தெய்வத்தோ டொப்பக் கருதி, வையைபற்றிய பாடல்களில், அக்கால மழைவளம், கோடையும் படகுவிடும் வையைப் பெருக்கு, மதுரை முழுதுங் கொண்டாடும் புது நீர் விழா. காதலரும் தனிப்பட்டவரும் தத்தமக் கேற்ற ஊர்திகளிற் சென்று பொன்மீன் முதலியவற்றை வையைக்குக் காணிக்கையாக இடல், நீர்விளையாட்டிற்குக் கொண்டு செல்லும் சிவிறி முதலிய கருவிகள், பல்வகை மிதவைகளும் தெப்பங்களும், நீர்விளையாட்டு விளையாடும் மக்கட் பெருக்கமும் நெருக்கமும், விளையாட்டின் விளைவாக நேரும் மகளிரூடல்களும் வஞ்சினங்களும் முதலியனவும்; மதுரைபற்றிய பாடல்களில் மதுரை நகரமைப்பு, நகர வளம், மக்கள் தொழில், வாழ்க்கை முறை, பாண்டியன் செங்கோன்மை, தமிழ்ச்சிறப்பு முதலியனவும் கூறப்பட்டன. இன்றுள்ள திரட்டுப் பரிபாடல்கள் இருபத்திரண்டே. அவற்றுள், திருமாலுக்கு 6-ம்,முருகனுக்கு 8-ம் வையைக்கு 8-ம் உரியன. ஏனைய பெரும்பாலும் இறந்துபட்டன. முருகனுக்குரிய 5ஆம் பரிபாடல் ஆரியக் கட்டான கந்த புராணக் கதையைச் சுருக்கிக் கூறுகின்றது. இற்றைத் திரட்டிலுள்ள 22 அல்லாது, திருமாலுக்கும் வையைக்கும் மதுரைக்கும் உரிய, முழுமையும் அரைகுறையு மான நான்கு பரி பாடல்கள் உரைமேற்கோள்களாக வந்துள்ளன. ஒவ்வொரு பரிபாடற்கும் பின் பண் குறிக்கப்பட்டிருப் பதால், எழுபது பரிபாடலும் இசைப்பாக்களென்று தெரிகின்றது. பரிந்து பாடுவது பரிபாடல் என்பர். பரிதல் காதல் கொள்ளுதல் அல்லது காதலால் உருகுதல். கலியும் வெண்பா வுங் கலந்த கலவைப்பாவே பரிபாடல். ஞானாமிர்தம் இது 6ஆம் நூற்றாண்டுபோல், வாகீச முனிவர் கடவுள் கட்டுணி கட்டுகளின் (பதிபசு பாசங்களின்) பொதுவியல்புகள் பற்றி 75 அகவற் பாக்களால் இயற்றிய சிவக்கொண்முடிபு (சைவ சித்தாந்த) நூல். உவமைகளை அடுக்கிக் கூறுவது இதன் சிறப்பியல்பு. இது 5ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென் பதைப் பிள்ளையார் வாழ்த்து தெரிவிக்கும். திருமந்திரம் பண்டைத் தமிழ் யாப்பின் வழிப்பட்ட எழுவகை நிலத்துள் ஒன்றான மந்திரம், முற்றத் துறந்த முழுமுனிவரான தெய்வப் புலவரால் இயற்றப்படுவது. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல். செய்.176) தொல்காப்பியர் காலத்திற்கு முந்தின தமிழ் மந்திர நூல்கள் யாவும் பெயருந் தெரியாது மறைந்து போயின. இன்றுள்ள மந்திரப் பெயர்மறை திருமூலர் திருமந்திரம் ஒன்றே. அது முப்பது நுவலுரைகளையும் முந்நூறு மந்திரங் களையும், மூவாயிரம் திருமொழிகளையும், கொண்டது; சிவக்கொண்முடி பனைத்தையும் முற்றக்கூறும் முழுநூல். மூலன் உரைசெய்த முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த மூன்றுமொன் றாமே. (திருமந். சை.சி.நூ.ப.க. பதிப்பு. சி.பா. 2) பழைய விசுவநாத பிள்ளை பதிப்பில் மிகையாகவுள்ள 47 பாவிசைகள், பிற்கால இடைச்செருகலென்று தள்ளத்தக்கன. மணிமேகலை காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே, சிவநெறிக் கொண்முடிபு (சைவ சித்தாந்தம்) பெரிதும் ஆரிய வண்ண மாக்கப்பட்டு விட்டதென்பது, இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும் .................................. அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன் (27:89-95) என்னும் மணிமேகலை யடிகளால் அறியக் கிடக்கின்றது. ஆகவே, 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருமந்திரம் முற்றும் ஆரியவண்ணமானதில் வியப்பொன்று மில்லை. சிவமாம் பரத்தினிற் சக்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. (திருமந். பாயி. 72) பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. (திருமந்.பாயி. 73) ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே. (திருமந்.பாயி. 74) இவற்றால், முதற்கண் ஒன்பதாகவிருந்து பின்னர், இருபத் தெட்டாகப் பெருகிய ஆரிய ஆகமங்களே, திருமந்திரத்திற்கு மூல மென்பது பெறப்படும். வேகத்தை விட்ட அறமில்லை (61) இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே (63) ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் (944) இவையும் இவைபோன்ற பிற கூற்றுகளும், ஆரிய மறையையும் (வேதமொழியும் சமற்கிருதமுமாகிய) ஆரிய மொழியையும் முதன்மையாகக் கொண்டது திருமந்திரம் என்பதைக் காட்டும். ஆயினும், எல்லா நாட்டாரும் எல்லா மதத்தாரும் மகிழ்ந்து போற்றத்தக்க பல அருந்திருமந்திரங்கள் இதிலுள் ளன. அவற்றுள் ஐந்து வருமாறு : 1. அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (257) 2. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (704) 3. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்(று) உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (705) 4. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம். (2251) 5. இருட்டறை மூலையில் இருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புரிந் தாளே. (1488) சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டனுட் பத்தாவதான திரு மந்திரம் ஒழுகிசையுள்ள இழுமென் மொழியால் விழுயியது நுவலும் கலிமண்டிலத்தால் (விருத்தத்தால்) இயன்றது; பிற்காலத் தமிழ்ச் சிவக் கொண்முடிபு நூலனைத்திற்கும் உலவா மூலக் களஞ்சியமாகவுள்ளது; ஆறு தந்திரம் என்னும் பகுப்பு களைக் கொண்டது. திருமூலர் சித்தர் வகுப்பைப் சேர்ந்தவர்; வெள்ளிமலை யினின்று திருவாவடுதுறை வந்து சேர்ந்தவராகச் சொல்லப் படுவர். மூவர் தேவாரம் கி. பி. 6ஆம் 7ஆம் 8ஆம் நூற்றாண்டிடைப்பட்ட, அப்பர் என்னும் திருநாவுக்கரசு நாயனார், ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும், தமக்கியன்றவாறு சிவநகர்தொறும் சென்று சிவபெரு மான் வழுத்தாகப் பாடிய இசைப்பாட்டுப் பதிகங்களின் திரட்டு, தேவாரம் எனப்படும். மூவரும் பாடிய பதிகங்கள் மொத்தம் ஓரிலக்கத்து இருபதினாயிரம் என்பது மரபுவழிச் செய்தி. மூவரும் உலகைவிட்டு நீங்கியபின், தில்லைச்சிற்றம்பலப் பூசாரியர் தேவாரப் பதிக ஏடுகளை யெல்லாம் தொகுத்து ஓர் அறையிலிட்டுப் பூட்டி, பெரும் பகுதியைச் சிதலரிக்க விட்டு விட்டனர். இன்று கிடைப்பவற்றின் விளத்தம் வருமாறு: ஆசிரியர் மொத்தப் பதிகம் சம்பந்தர் 384 அப்பர் 307 சுந்தரர் 100 தொகு மொத்தம் 791 பாட்டுகளெல்லாம், பெரும்பாலும் துறையும் மண்டில மும், சிறுபான்மை தாழிசையுமான, பாவினங்களே, ஒருசில தரவு கொச்சகங்கள். திருஞானசம்பந்தர் பாடல்கள் தொகை யில் மட்டுமன்றி வகையிலும் மிகச் சிறந்தனவாகும். அடி முற்றெதுகை, நாலடி அல்லது பாவின முற்றெதுகை முதலிய தொடைநயங்களும், திருமுக்கால், திருவிருக்குக் குறள், ஈரடி, ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு முதலிய யாப்பு வகை களும், மடக்கு, மாலைமாற்று, ஓரடி (ஏகபாதம்); திருவெழு கூற்றிருக்கை, கரந்த (கூட) சதுக்கம் முதலிய அணிகளும் யாழ்முரி என்னும் பண்வகையும், அவற்றைத் தனிப்படச் சிறப்பிக்கின்றன. திருப்பிரமபுரம் வழிமொழித் திருவிராகப் பதிகத்தின் பன்னிரு பாவிசைகளும், வெவ்வேறெழுத்துக் கொண்ட நேரும் நிரையுமான அசைகளுடன் தொடங்கி, நாலடி முற்றெ துகையுடன் மிளிர்கின்றன. பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழமுட லாளருணரா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங் கீழிசைகொண் மேலுலகில் வாழரைசு சூழரைசு வாழவரனுக் காழியசில் காழிசெய வேழுலகிலூ ழிவளர் காழிநகரே. என்பது, அப் பதிகத்தின் பத்தாம் பாவிசை. திருஞானசம்பந்தரின் கயிலைப்பதிகமும் இத்தகையதே. திருநாவுக்கரசர் திருப்பதிகங்களுள் 135 தாண்டகம் எனப் பெயர் பெற்றுள்ளன. பண்டை யிலக்கணப்படி 26 எழுத்திற்கு மேற்படாத 4 அடிகளைக் கொண்ட பாவினம், மண்டிலம் என்றும், அத்தொகைக்கு மேற்பட்ட எழுத்துகளையுடைய 4 அடிகளைக் கொண்ட பாவினம் தாண்டகம் என்றும், பெயர்பெறும். மண்டில (விருத்த) எழுத்தளவைத் தாண்டிச் செல்வது தாண்டகம். திருநாவுக்கரசர் தாண்டகங்களுள் மாபெரும்பாலன மண்டில எழுத்தளவே கொண்டிருப்பதால், மூவிரண் டேனும் இருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள் அறுசீர் குறியது நெடியதெண் சீராம் (195) என்னும் பன்னிரு பாட்டியல் நூற்பாவால் அமைக்கப்படும். திருநாவுக்கரசர் தேவாரங்களுள், திருக்குறுந்தொகை யென்பன கலிமண்டிலமாகவும், திருநேரிசை யென்பன அறுசீர்க் கழிநெடிலாசிரிய மண்டிலமாகவும், திருவிருத்த மென்பன கட்டளைக் கலித்துறையாகவும், அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. இன்றுள்ள தேவாரப் பாடல்களில் ஆளப் பட்டுள்ள அல்லது பெயர் குறிக்கப்பட்டுள்ள பண்கள் 24. பண் குறிக்கப்படாத தேவாரப் பண்களும், சிதலரிக்கப்பட்ட தேவாரப் பண்களும், எவையென்றும் எத்தனை யென்றும் அறியோம். பத்தாம் நூற்றாண்டில் தேவாரப் பதிகங்கள் சிவன் கோயில்களிற் பாடப்படும் வழக்கற்றிருந்ததனாலும்; முதலாம் அரசவரசன் (இராஜராஜன்) சிதலரிப்பினின்று மீட்ட தேவாரப் பதிகங்கட்கு இசைவகுக்க அமர்த்தின இசைஞானி யார், அப் பதிகங்கள் பாடப்பட்ட பண்ணறியாது புதிதாக வேறு பண்களையே வகுத்ததனாலும், அப் பண்களுள்ளும், சிலவற்றை ஓதுவார் சிலர் மாற்றிவிட்டதாகத் தெரிவதனாலும், இற்றை வழக்கைக்கொண்டு தேவாரப் பண்ணாராய்ச்சி செய்வது ஓரளவு வானத்து மீனுக்கு வன்றூண்டிலிடும் கதையேயாகும். இதுபோதுள்ள பண்டை இசைத்தமிழிலக்கியத்துள் தலை சிறந்தது தேவாரத் திரட்டே. சம்பந்தர் தேவாரம் மூன்றும் அப்பர் தேவாரம் மூன்றும் சுந்தரமூர்த்தியார் தேவாரம் ஒன்றும் ஆக மூவர் தேவாரமும் 7 திருமுறைகளாக வகுக்கப் பட்டுள்ளன. இவ் வேழுஞ் சேர்ந்தது அடங்கன்முறை யெனப்படும். இதுவே பன்னிரு திருமுறைத் தொகுதியின் தொடக்கம். தேவாரம் என்பது, இறைவனைப்பற்றிய இசைப்பாடல் என்று பொருள்படும். தே = தேவன். வாரம் = சொல்லொழுக்க மும் இசை யொழுக்கமுமுள்ள பாடல். தேவாரம் பொதுவான கீர்த்தனை போலாது, செந்தமிழ்ப்பாவும் பாவினமுமாக விருப்பது கவனிக்கத்தக்கது. தனியர் மட்டுமன்றி அவை யோரும் சேர்ந்து பாடக்கூடியனவாகவும், உள்ளத்தையுருக்கி இறைவன்பால் உய்க்கக் கூடியனவாகவும், எவரும் இன்புறும் இனிய இசையொடு கூடியனவாகவும், தேவாரப் பாடல்கள் அமைந்திருப்பது, மிகப் போற்றத்தக்கதாகும். சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பதிகங்களுட் சிறந்தது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்திற்கு மூலமாயிருந்த திருத்தொண்டத் தொகை. அந் நாயனார் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான்மேற் பாடியவை, ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானவுலாவும் பொன்வண்ணத்தந்தாதியும் ஆகும். திருவாசகம் இது மாணிக்கவாசகர் என்னுந் திருவாதவூரரால், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை 51 தலைப்புகளிற் பாவும் பாவினமுமாகப் பாடப்பட்ட பனுவற்றிரட்டு. இது சிவனடி யார்க்குச் சிறந்த வுருக்க மூட்டுவ தென்பது, திருவாசகத்திற் குருகார் ஒருவாசகத்திற்கு முருகார் என்னும் பழமொழியாலும், விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதின் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகின் மற்றையர் இலரே என்னும் சிவப்பிரகாச அடிகள் பாட்டாலும், வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்தும் உயிர்கலந்தும் உவட்டாமல் இனிப்பதுவே என்னும் இராமலிங்க அடிகள் பாட்டாலும், அறியப்படும். தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (சிவ.4) மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் (கீர்த்தி.) பாண்டி நாடே பழம்பதி யாகவும் (கீர்த்தி.) தென்னா டுடைய சிவனே போற்றி (போற்றி) என்னுந் திருவாசக அடிகள், சிவநெறி குமரிநாட்டில் தோன்றிய தமிழர்மதம் என்பதைத் தெரிவிக்கும். சிவப் பன்னிரு திருமுறைகளுள் திருவாசகம் எட்டாவதாகச் சேர்க்கப் பட்டது. திருச்சிற்றம்பலக்கோவை இதுவும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டதே. தில்லைச் சிற்றம் பலத்தானாகிய சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமையால், சிற்றம்பலக் கோவையெனப் பெயர் பெற்றது. இது பொதுவாகத் திருக் கோவையென வழங்கும். புறநோக்கில் இது பிற கோவைகள் போன்றே அகப்பொருட் கோவையாகத் தோன்றினாலும், அக நோக்கில், பழுத்த ஆதனையும் (ஆன்மாவையும்) அதற்குப் பேரின் பந்தரும் இறைவனையும் முறையே கிளவித்தலைவன் தலைவியராகக் கொண்ட உருவக நாடகமே (Allegory). இங்ஙனம் இருவேறு பொருண்மை யுடைமையால், பிற்காலச் சான்றோரொருவர், ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே என்று பாடி இதனைச் சிறப்பித்தார். இக் கோவையின் உட்பொருளை யுணர்த்துதற்கு, `திருக் கோவையுண்மைக் கருத்து' என்றோ ருரையுமுள்ளது. தமிழிலுள்ள கோவைகளெல்லாவற்றுள்ளும் தலை சிறந்து சொற்சுவை பொருட்சுவை விஞ்சி நிற்பதால், ``தேனூறூ செஞ்சொற் றிருக்கோவை நானூறு என்று மற்றொரு சான்றோர் பாடியதும் முற்றும் உண்மையே. கோவை யெல்லாம் கட்டளைக் கலித்துறையாலேயே இயலும். காட்சி என்னும் முதல் துறைச் செய்யுளே, திருக் கோவையின் தனிச்சிறப்பைக் காட்டிவிடும். அது வருமாறு: திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. இதினுஞ் சிறப்பாக வல்லாவிடினும், இது போன்றேனும் ஒரு கட்டழகியின் தோற்றத்தை வேறெவரும் வண்ணிக்க இயலுமோ? கம்பரைத்தான் கேட்கவேண்டும். பாங்கன் வினாதல் என்னுந் துறைபற்றிய, சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே என்னும் பாவிசை, அக்காலத் தில்லைக் கடலண்மையையும், மதுரைக் கடைத்தமிழ்க் கழக வுண்மையையும், இசைத் தமிழினிமையையும், இயற்றமிழின்பத்தையும், ஒருங்கே யுணர்த்துதல் காண்க. பாவை பாடிய வாயாற் கோவை பாடுக என்று சிவ பெருமான் ஏவினார் என்பதற்கேற்ப, அமைந்தது திருக்கோவை. மாணிக்கவாசகர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டென்று இன்று தெரிய வருகின்றது. திருவிசைப்பா இது, திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, காடவ நம்பி, கண்டராதித்தர், வேணாட் டடிகள், திருவாலி யமுதனார், புருடோத்தம நம்பி, சேதுராயர் என்னும் ஒன்பதின்மர் பாடற்றிரட்டு. இது புறச்சமயங்களைக் கண்டித்துச் சிவச்சமயத்தை நாட்டுவது; சிவத்திருமுறை பன்னிரண்டனுள் ஒன்பதாவதாகச் சேர்க்கப்பட்டது. முன்னரே கூறப்பட்ட திருமூலர் திருமந்திரம் பத்தாந் திருமுறை. கல்லாடம் இது, அகப்பொருட்டுறைகள் நூற்றைத் தெரிந்து கொண்டு அவற்றைப்பற்றிய திருக்கோவைச் செய்யுள்களைப் பெரிதுந் தழுவிக் கல்லாடனாரால், இயற்றப்பட்ட 100 அகவற் றொகுதி. சிவவழுத்துப் பகுதிகள் இதிற் சிறப்பான கூறுகளா யமைவதால் இது சிவநெறி யிலக்கியத்தின் பாற்படும். கல்லாடம் ஒரு சிறந்த பனுவல் என்பதைக் காட்ட, கல்லாடங் கற்றவனொடு சொல்லாடாதே, கல்லாடங் கற்ற வனொடு மல்லாடாதே. என்று இரு பழமொழிகள் வழங்கி வருகின்றன. இக் கல்லாடர் கடைக்கழகப் புலவரென்பதும், திருக் கோவையிற் குற்றங் கூறிய புலவரைக் கண்டித்தற்கே கல்லாடம் பாடினரென்பதும், சிவபெருமான் அதைக் கேட்டு மகிழ்ந்து ஒவ்வோரகவற்கும் ஒருமுறை தலையசைத்தார் என்பதும், கட்டுக்கதையே. கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல் வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயும் மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறு தரம் என்னும் வெண்பாவும் ஒருவர் கட்டியதே. பதினோராந் திருமுறை 1. திருவாலவா யுடையார் பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமான் நாயனார்க்கு விடுத்த திருமுகப் பாசுரம். 2. காரைக்காலம்மையார் பாடல்கள் 1. திருவாலங் காட்டுத் திருப்பதிகங்கள் (2) 2. திருவிரட்டை மணிமாலை 3. அற்புதத் திருவந்தாதி 3. கல்லாடனார் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் மறம். 4. நக்கீரர் பனுவல்கள் 1. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி 2. திருவீங்கோய்மலை யெழுபது 3. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 4. பெருந்தேவ பாணி 5. திருவெழு கூற்றிருக்கை 6. கோவப்பிரசாதம் 7. காரெட்டு 8. போற்றிக் கலிவெண்பா 9. திருகண்ணப்ப தேவர் திருமறம் 10. திருமுருகாற்றுப்படை (திருமுருகாற்றுப்படை தொடக்கத்திலேயே கூறப்பட்டது.) 5. கபிலர் பனுவல்கள். 1. மூத்த நாயனார் இரட்டைமணி மாலை 2. சிவபெருமான் திருவிரட்டைமணி மாலை 3. சிவபெருமான் திருவந்தாதி 6. பரணர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி 7. அதிராவடிகள் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும் மணிக் கோவை 8. இளம்பெருமானடிகள் இயற்றிய சிவபெருமான் திருமும்மணிக் கோவை. 9. ஐயடிகள் காடவர் கோன் இயற்றிய சேத்திரத் திருவெண்பா. 10. சேரமான் பெருமான் நாயனார் பனுவல்கள் 1. பொன் வண்ணத் தந்தாதி 2. திருவாரூர் மும்மணிக்கோவை 3. திருக்கயிலை ஞானவுலா இவற்றுள் இடையது தவிர ஏனை யிரண்டும் முன்னரே குறிக்கப்பட்டன. 11. பட்டினத்தடிகள் என்னும் திருவெண்காடர் 1. கோயில் நான்மணி மாலை 2. திருக்கழுமல மும்மணிக் கோவை 3. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை 4. திருவேகம்ப முடையார் திருவந்தாதி 5. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 12. நம்பியாண்டார் நம்பி பாடல்கள் 1. கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் 2. திருத்தொண்டர் திருவந்தாதி முதலியன. பெரியபுராணம் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தா தியை முதனூலாகக் கொண்டு, தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடியார் எழுவகையாருமான சிவத்திருத்தொண்டர் வரலாற்றை , 2ஆம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1133-50) முதல்மந்திரி யாயிருந்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார், 13 சருக்கங்களும் 4253 பாவிசைகளுங் கொண்ட தாகப் பாடிய திருத்தொண்டர் புராணமே பெரியபுராணம் என வழங்குவது. பல புராணங்களைத் தன்னுள்ளடக்கியதனால், அல்லது தொண்டரின் பெருமையை எடுத்துக் கூறுவதனால், பெரியபுராணம் எனப்பட்டதென்று கொள்ளலாம். ஒவ்வோ ரடியாரும் ஒவ்வோ ரடியாராகவே யிருந்த திருத்தொண்டத் தொகை யென்னுங் கருவுற்று, ஒவ்வோ ரடியாரும் ஒவ்வொரு பாட்டாரான திருத்தொண்டர் திருவந்தாதி யென்னும் குழவியாகி ஒவ்வோ ரடியாரும் ஒவ்வொரு புராணரான முழு வளர்ச்சியடைந்தது பெரிய புராணம். பிறப்பாற் சிறப்பில்லை; எல்லா வகுப்பாரும் வீடுபேற்றிற் குரியர்; இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்னும் தமிழக் கொள்கைகளையும்; கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (குறள்.2) என்னுந் திருக்குறட் கருத்தையும்; அறிவு அன்பு தொண்டு ஈகம் (தியாகம்) என்பனவே வீடுபேற்று நால்வாயில் என்பதையும்; நடை முறைச் செய்தியால் விளக்கிக் காட்டுவதும் நாட்டுவதும் பெரியபுராணம் ஒன்றே. இது புராணம் என்று பெயர் பெற்றிருப்பினும், பல வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டிருப்பதும், அடியார் வாழ்க்கைகளைப் பெரும்பாலும் வரலாற்று முறையிற் கூறுவதும், பாராட்டத் தக்கனவாகும். மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ (திருநகர. 36) என்னும் பாவிசை சேக்கிழாரின் மந்திரத் திறமையைக் குறிப்பாய்க் காட்டும். புலமை யில்லார்க்கும் பொருள் விளங்குமாறு, இயன்ற வரை எளிய இனிய ஒழுகிசை நடையில் அமைந்திருப்பதும், பெரியபுராணச் சிறப்பாகும். தக்கயாகப் பரணி இது 2ஆம் இராசராசன் (கி.பி. 1146-63) விருப்பப்படி, அவன் வேத்தவைப் புலவராயிருந்த ஒட்டக்கூத்தரால், தக்கன் சிவ பெருமானை அவமதித்துச் செய்யப்புகுந்த வேள்வியை வீரபத்திரத் தேவர் அழித்து, அவனுக்கு உதவிபுரிய வந்த தேவரையெல்லாம் வென்று அவன் தலையைக் கொய்த தொன்ம (புராண) வரலாற்றைப் பொருளாகக் கொண்டு, பரணி யென்னுங் களவழி முறையிற் பாடப்பட்ட ஈரடித் தாழிசைப் பனுவல். இது, செந்தமிழுக்கும் ஒட்டக்கூத்தர் பெயருக்கும் பேரிழுக்குத் தருமாறு, செயற்கையான தொடை யும் நடையும் சீர்கெட்ட வடசொற் பெருக்குங் கொண்டு பொருட் சிறப்பற்றிருப்பது, பலராற் பயிலப்படாமைக்குக் கரணியங்காட்டுவதொடு, பரணிக்கோர் சயங்கொண்டான் என்னுங் கூற்றைப் பறையறைந்து சாற்றுவதாகவும் உள்ளது. இதன் வடசொல்லாட்சி வகைகள் வருமாறு: 1. இணைந்தியல் மெய்கள் எ-டு: சக்ரபாணி, வச்ரமாலை, பத்ரகாளி, மந்த்ரம், 2. மெய்ம்முதற்சொற்கள் எ-டு. த்ரிசூலம், ந்ருபதீபன், ப்ரத்தம் 3. தொடர்ச்சொற்கள் எ-டு; நூபுராதாரசரணி, வர்க்கத்வாதசாதிபர் கந்த புராணம் கி.மு. 2000 போல் இந்தியாவிற்குட் புகுந்த ஆரியர், சிந்து வெளியில் தங்கியிருந்தவரை, தம் வேதத் தெய்வங்களையே வணங்கி வேள்வி மதத்தையே மேற்கொண்டு வந்தனர். கிழக்கே பரவிச் சென்று காளிக்கோட்டத்தை அடைந்தபின், அவர் பழங்குடி மக்களான தமிழர்திரவிடரின் தெய்வச் சிறப்பையும், சிவமால் நெறிகளின் உயர்வையுங் கண்டு, அவரைத் தம்வயப் படுத்துதற்கு அவர் மதங்களைத் தமவென்று காட்டத் தலைப் பட்டுவிட்டனர். அம் முயற்சியில், முதற்கண் முத்திருமேனிக் கொள் கையைத் தோற்றுவித்து, பிராமணக்குல முதல்வனாகக் கருதப் படும் பிரமன் என்னும் படைப்புத் திருமேனியைப் படைத்துக் கொண்டு, சிவனென்றும் திருமாலென்றும் இருவேறு பெயரில் தமிழரால் வணங்கப்பட்டுவந்த ஒரே முத்தொழில் முழுமுதற் கடவுளை, காப்புத்திருமேனி திருமாலென்றும் அழிப்புத் திருமேனி சிவனென்றும் இருவேறு ஒரு தொழில் திருமேனிய ராக்கி, அக் கொள்கைகளைப் பழங்குடி மக்கள் ஏற்குமாறு பதினெண் பெரும் புராணங் களையும் பதினெண் துணைப் புராணங்களையும் கட்டிவிட் டனர் ஆரியப் பூசாரியர். பெரும்புராணம் பதினெட்டுள், சைவபுராணம், பவிடிய புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்கபுராணம், காந்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மச்சபுராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் என்னும் பத்தும் சிவபுராணங் களாம். அவற்றுள், ஓரிலக்கம் பாவிசை (கிரந்தம்) கொண்ட காந்த புராணம், சனற்குமார சங்கிதை, சூதசங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என ஆறு சங்கிதைகளை யுடையது. அச் சங்கிதைகளுள் முப்பதினாயிரம் பாவிசை கொண்ட சங்கர சங்கிதை 12 கண்ட முடையது. அக் கண்டங்களுள் முதலதான சிவ ரகசிய கண்டம், பதின்மூவாயிரம் பாவிசைகள் கொண்டதாய், சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என்னும் ஏழு காண்டங்களை யுடையது. அவற்றுள் முதலாறையும், காஞ்சிபுரக் குமரகோட்டப் பூசாரியராயிருந்த காளத்தியப்ப சிவாசாரியர் மகனார் கச்சியப்ப சிவாசாரியர் தமிழிற் பாடிய பாவியமே கந்த புராணம். இப் பாவியம் அரங்கேறும்போது, காப்புச் செய்யுளி லுள்ள திகடசக்கரம் (திகழ்+தசக்கரம்) என்னும் திரிதற் புணர்ச்சிக்கு நெறிகாட்ட முடியாமையால் அரங்கேற்றம் தடைப்பட்ட தென்றும், பின்னர் வீரசோழியத்திலிருந்து நெறி காட்டியபின் அரங்கேற்றம் நிறைவேறிற்றென்றும் சொல்லப் படுகின்றது. முதன்முதற் குமரிநாட்டுக் குறிஞ்சிநிலத் தெய்வமாகத் தோன்றிய தமிழ ஒருமுக முருகனை, பனிமலைச்சாரற் சரவணப் பொய்கையிற் பிறந்த ஆறுமுக ஆரியத் தெய்வமாகக் கதைபுனைந் திருப்பதும், அதைத் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் எடுத்துக்கூறுவதும், தமிழத் தெய்வத்தை ஆரியத் தெய்வமாகத் திரித்தற்கேயன்றி, ஆரியத் தெய்வத்தைத் தமிழர் ஏற்றுக் கொண்டனர் என்பதற்குச் சான்றாகா. அட்டாங்கயோகக் குறள் இது 2ஆம் ஔவையாரால் இயற்றப்பட்டதுபோலும்! இதை எண்ணுறுப் போகக்குறள் என்னலாம். சிவக்கொண்முடிபு (சைவசித்தாந்த) நூல்கள் (12ஆம் 13ஆம் 14ஆம் நூற்றாண்டுகள்) சித்தாந்த சாத்திரம் 14 1. திருவுந்தியார்-திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றியது (1148). 2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றியது (1178). 3. சிவஞானபோதம்-மெய்கண்டதேவர் இயற்றியது (1215 போல்). 4. சிவஞான சித்தியார் அருணந்தி சிவாசாரியார் 5. இருபா விருபஃது இயற்றியவை 6. உண்மை விளக்கம்-மனவாசகங்கடந்தார் இயற்றியது. 7. சிவப்பிரகாசம், 8. கொடிக்கவி, 9. உண்மை நெறிவிளக்கம், இவை 10. நெஞ்சுவிடுதூது, உமாபதிசிவாசாரியாரால் 11. வினாவெண்பா, இயற்றப்பட்டவை 12. திருவருட் பயன், 13. சங்கற்ப நிராகரணம், 14. போற்றிப்பஃறொடை கோயிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம் என்பனவும், உமாபதி சிவாசாரியார் இயற்றி னவை என்பர். சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள்ளும் தலைமை யானது சிவஞானபோதமே. அது தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் என்பதற்கேற்ப, நாலடி கொண்டவை 3-ம் மூவடி கொண்டவை 8-ம் ஆகப் பன்னிரு நூற்பாவே கொண்டு, பரந்த நூலாக விரியுமளவு உரையைத் தன்னுள் அடக்கியுள்ளது. அதன் ஆசிரியரும் அங்ஙனமே சிற்றுருக்கொண்ட இளம் பருவத் திலேயே சிவக்கொண்முடிபில் முற்றறிவு வாய்ந்தவ ராயிருந்தார். அதனால், அவர் தந்தையார்க்குக் குலகுருவா யிருந்த அருணந்தி சிவாசாரியாரும் அவருடைய மாணவ ரானார். பதினாலாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடவளாக ஆசிரியராயிருந்த தெக்கணாமூர்த்தி தேசிகர், தசகாரியம் உபதேசப் பஃறொடை வெண்பா என்னும் இரண்டு அறிவை (ஞான) நூல்களியற்றினார். அதன்பின் அம் மடவளாகத் தலைவராயமர்ந்த அம்பலவாண தேசிகர் தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாயநிட்டை வெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசயமாலை, நமச்சிவாயமாலை என்னும் பத்து நூல்களை இயற்றினார். இவற்றொடு ஈசானதேசிகர் இயற்றிய தசகாரியமும், பின்வேலப்பதேசிகர் இயற்றிய பஞ்சாக்கரப் பஃறொடையுஞ் சேர்ந்து, பண்டார சாத்திரம் பதினான்கு எனப்பட்டு, சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் துணை நூல்களாய் நிலவும். பின்னர் 19ஆம் பட்டத்திற்கு வந்தவர் திருப்பறியலூர்ப் புராணம் பாடினார். அவர்காலச் சின்னப்பட்டத்தார் பஞ்சாக்கரப் பஃறொடை, ஞானபூசாவிதி, மரபட்டவணை என்னும் நூல்களை யியற்றினார். தருமபுர மடவளாகத்தைச் சேர்ந்த சிற்றம்பல நாடிகள் இயற்றிய நூல்கள் துகளறு போதம், சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம், திருச்செந்தூர் அகவல் முதலியன. அவர் மாணவரான தத்துவப் பிரகாசர், தத்துவப் பிரகாசம் என்னும் நூலை யியற்றினார். சிற்றம்பல நாடிகளின் மாணவரின் மாணவரான கமல ஞானப்பிரகாசர் இயற்றிய நூல்கள், சிவானந்த போதம், பிரசாதக் கட்டளை, அத்துவாக் கட்டளை, சிவபூசை யகவல் முதலியன. அவர் மாணவரான ஞானசம்பந்த தேசிகர் இயற்றியவை சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்திநிச்சயம் முதலியன. பதினாலாம் நூற்றாண்டிறுதியில், தொல்காப்பியத் தேவர் என்னும் புலவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடினார். பதினாலாம் பதினைந்தாம் நூற்றாண்டுகளின் இடை யிலிருந்த காளமுகில் (காளமேகம்) என்னும் ஒப்புயர்வற்ற கடும்பாப்புலவர் திருவானைக்கா வுலாப் பாடினார். அவர் காலத்தும் பின்னுமிருந்த முடவருங் குருடருமான இரட்டையர், திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், ஏகாம்பரநாத ருலா முதலிய பனுவல்களைப் பாடினர். கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் என்று ஒரு புலவர் பாராட்டிப் பாடியது கருதத்தக்கது. வள்ளலும் புலவருமான நெற்குன்றவாணர் என்னும் தொண்டைநாட்டு வேளாளர் தலைவர் ஒருவர், திருப்புகலூர் அந்தாதியைப் பாடியுள்ளார். இரண்டாம் பட்டினத்தார் பாடல்கள் இவை 3 கோயிற் றிருவகவல். கச்சித் திருவகவல் திருவேகம்ப மாலை, திருநகர்ப் பாடல்கள், தனிப்பாடல்கள், உடற்கூற்று வண்ணம் என்பன. பதினைந்தாம் நூற்றாண்டில், வேறெம்மொழியிலும் என்றும் எவராலும் பாடவியலாத நூற்றுக்கணக்கான வண்ணக் குழிப்புகளிற் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற தமிழ்ப் பனுவல், அருணகிரிநாதரின் திருப்புகழ்த்திரட்டே. அது தேவாரம் போன்று இசைத்தமிழிலக்கிய மாகவும் உள்ளது. பதினாறாயிரம் திருப்புகழ் பாடப்பட்டன வென்பது மரபுச் செய்தி. இன்றுள்ளன ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்றே. திருப்புகழ் வண்ணங்கள் நூற்றுக்கணக்கின. அவற்றுட் சிலவற்றின் குழிப்புகள் (வாய்பாடு கள்) வருமாறு : 1. தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன3 - தனதான. 2. தனத்த தத்தந் தத்தன தானன3-தனதான. 3. தனத்தத் தந்ததத்தத் தானன தானன3-தனதான. 4. தனனதன தான தந்த தனனதன தான தந்த தனனதன தான தந்த - தனதான. 5. தனனதன தனனதன தனனதன தனனதன தான தானனா தான தானனா3 -தனதன தனதான. 6. தான தந்தன தானான தானன3-தனதான 7. தானதத்த தனந்த தனா தனா தன3-தனதான. 8. தந்தன தான தான தந்தன தான தான தந்தன தான தான - தனதான. 9. தந்தந் தந்தந் தந்தந் தந்தத் தனதன தனதன தனதன தனதன3 - தனதான. 10. தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் - தனதான. 11. தாந்தன தத்தன தாந்தன தத்தன3-தனதான. 12. தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த - தனதான. 13. தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த - தனதான. 14. தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன - தனதான. 15. தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன - தந்ததான. 16. தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் - தனதானா. வண்ணக் குழிப்பிற் குறிக்கப்பட்டுள்ள 3 என்னும் எண், அதற்கு முந்தின பகுதியை மும்முறை மடக்க வேண்டு மென்பதைக் குறிக்கும். திருப்புகழில் வடசொற் கலப்பு மிகுதியென ஒரு குறை கூறுவதுண்டு. அது பாடினவர் குற்றமன்று. அக்காலத்து வழக்கே அதற்குக் கரணியம். முதலிரு கழகக் காலத்தில் அவர் இருந்திருப் பின் முழுத்தூய்மையாய்ப் பாடியிருப்பார். திருப்புகழல்லாது, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, கந்தரனுபூதி, மயில்விருத்தம், வேல்விருத்தம், திருவகுப்பு என்னும் பனுவல்களும் அருணகிரிநாதர் பாடியவையே, அவற்றுள் திருவகுப்பும் வண்ணயாப்பினதே. கந்தரந்தாதி அருணகிரிநாதர் வில்லிபுத்தூராழ்வா ரொடு நிகழ்த்திய பாப்போரிற் பாடப்பட்டதென்றும், அதிலுள்ள தகரப்பாட்டிற்குப் பின்னவர் பொருளுரைக்க வியலாது தோற்றுப் போனாரென்றும், தோற்றவர் காது அறுபட வேண்டும் என்னும் முன் முடிபை அருணகிரிநாதர் தம் அருட்குணத்தால் நிறைவேற்ற வில்லை யென்றும், ஒரு கதை வழங்கிவருகின்றது குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னீங்கில்லை என்னும் பாட்டில் குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி யெட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை என்பதும், அக்கிளிதான்-வில்லிபுத்தூரான் செவி யின்மே லறுவாள் பூட்டியன்று வல்லபத்தான் வாதுவென்று வந்ததுகாண் என்று கந்தப்பதேசிகர் பாடியதும், காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி யென்னுந் தனிப்பாட்டுமே அதற்குச் சான்றாம். மேற்குறித்த தகரப்பாட்டு வருமாறு : திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. செய்யுளின் ஒலிப்புமுறை ஓசை, வண்ணம், குழிப்பு வண்ணம் என மூவகைப்படும். அவற்றுள் வண்ண மென்பது, எல்லா வடியும் மாத்திரையும் எழுத்தினமுஞ் சீரும் ஒத்துவரப் பாடுவது. அதை நூற்றுக்கணக்கான வகையிற் பல்லாயிரமாகப் பாடுவது இறைவன் திருவருள் பெற்றவர்க்கே இயலும். வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனவில் தாக்கிற் றிருஞான சம்பந்தர் - நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார் சொற்குறுதிக் கப்பரெனச் சொல் என்பது ஒரு தனிப்பாட்டு. பாண்டிநாட்டிலுள்ள தேவாரம் பெற்ற 14 சிவநகர்களுள் தலைமையானது கூடல் என்னும் மதுரை. கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர் ஏடகநெல் வேலி யிராமேசம் - ஆடானை தென்பரங்குன் றஞ்சுழியல் தென்றிருப்புத் தூர்கானை வன்கொடுங் குன்றம்பூ வணம். மதுரைக்குரிய பழைய வரலாறுகளைப் புலப்படுத்தும் வடமொழிப் பனுவல்களிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டவை திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், கடம்பவனபுராணம், சுந்தரபாண்டியம், திருவிளையாடற் புராணம், அட்டமிப் பிரதட்சிண மான்மியம் என்னும் ஐந்து. அவற்றுள், திருவால வாயுடையார் திருவிளையாடற்புராணம், 13ஆம் நூற்றாண்டில், செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால், உத்தர மகாபுராணம் என்னும் வடமொழிப் புராணத்தின் ஒரு பகுதியாகிய சாரசமுச்சயம் என்பதிலிருந்து, 1753 பாவிசை கொண்டதாக மொழிபெயர்த்துச் செய்யப் பட்டது. இது வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும் வழங்கும். கடம்பவனபுராணம், தொண்டைநாட்டு இலம்பூரி லிருந்த வீமநாத பண்டிதரால், நீபாரண்ய மாஹாத்மியம் அல்லது கதம்பவன புராணம் என்னும் வடமொழிப் புராணத்திலிருந்து 1090 பாவிசை கொண்டதாக மொழி பெயர்த்துச் செய்யப்பட்டது. சுந்தரபாண்டியமும் திருவிளையாடற்புராணமும் 16ஆம் நூற்றாண்டுப் பகுதியிற் காண்க. அட்டமிப் பிரதட்சிண மான்மியம் இ. இராமசாமிப் பிள்ளையால் உரைநடையாக மொழிபெயர்க்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு பதினாறாம் நூற்றாண்டில், தில்லையிலிருந்த மறைஞான சம்பந்தர் (கி.பி. 1555), என்னுந் துறவியார், சிவதருமோத்தரம் சைவசமயநெறி முதலிய நூல்களை இயற்றினார். தொண்டைநாட்டு வாயற்பதியூரில் வதிந்த அனதாரியப் பர் என்னும் புலவர், திருந்த வந்தவன் என்னும் வள்ளல் வேண்டுகோட்கிணங்கி, வடமொழியிலுள்ள சுந்தரபாண்டி யம் என்னும் மதுரை மான்மியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். மறைக்காட்டில் சிவாசாரியர் மரபிற் பிறந்த நிரம்பவழகிய தேசிகர் சேதுபுராணம் பாடினார். அதே மரபிற் பிறந்த பரஞ்சோதி முனிவர், வடமொழிக் காந்தத்தின் ஈச சங்கிதையிற் கூறப்பட்ட ஹாலாஸ்ய மான்மியத்தை மொழிபெயர்த்துத் திருவிளையாடற் புராணம் பாடினார். அவர் ஆரியக் கோட் பாடுடையவர் எனச் சொல்லப்படினும், நாட்டுப்படலத்தில் (55-8), கடுக்க வின்பெறு கண்டனுந் தென்திசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்க வாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்தா எண்ணவும் படுமோ. தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் என்று பாடியிருப்பது மிகப் பாராட்டத்தக்கது. நிரம்பவழகிய தேசிகரின் ஆசிரியராகிய இராமநாத முனிவரின் மற்றொரு மாணவர் ஞானக்கூத்தர். அவர் பஞ்ச நதிப் புராணம் பாடினார். நிரம்பவழகிய தேசிகரின் மாணவ ருள் ஒருவராகிய சம்பந்த முனிவர் திருவாரூர்ப் புராணம் பாடினார்; மற்றொருவரான அதிவீரராம பாண்டியனார் (1565) கூர்ம புராணம், காசிக் காண்டம், இலிங்கபுராணம், மாக புராணம், திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி என்பவற்றைப் பாடினார். அவருடன் பிறந்தாரான வரதுங்கராம பாண்டியர் பிர மோத்தர காண்டம் பாடினார். திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் திருவொற்றியூர்ப் புராணம் பாடினார். அவரும் திருவுத்தரகோசமங்கைப் புராணம் பாடிய மாசிலாமணிச் சம்பந்தரும் கமல ஞானப் பிரகாசரின் மாணவராவர். திருவண்ணாமலைக் குகை யொன்றில் ஓகம் (யோகம்) செய்து கொண்டிருந்த குகை நமச்சிவாயர் என்னுஞ் சித்தர் அருணகிரி அந்தாதி பாடினார். அவர் மாணவரான குருநமச் சிவாயர் சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா, பரம ரகசியமாலை என்பவற்றைப் பாடினார். தில்லையிலிருந்த இரேவணசித்தர் என்னும் வேளாளப் புலவர், சிவஞான தீபம் என்னும் நூலும் பட்டீச்சுரப் புராணமும் இயற்றினார். குகைநமச்சிவாயரின் மாணவரான ஆறுமுக அடிகள் என்பார் நிட்டானுபூதி என்ற நூலை யியற்றினார். பதினேழாம் நூற்றாண்டு தொண்டை நாட்டில் தாழைநகரிற் பிறந்து வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப் புராணம், திருவருணைக் கலம்பகம், செவ்வந்திப் புராணம், திரு வெண்காட்டுப் புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம் முதலியன பாடினார். அவர் சிவநெறியை நிலை நாட்டினமையால் சைவ என்னும் அடைமொழி கொடுக்கப் பெற்றார். திருமலை நாயக்கர் காலத்திற் குமரிமுதற் பனிமலை வரை சிவநெறியைப் பரப்பிய துறவியார் குமர குருபர அடிகள். அவர் தருமபுர வளாக நாலாம் பட்டத்தினரான மாசிலாமணி தேசிகரின் மாணவர். திருநெல்வேலி மாவட்டச் சீவைகுண்டத் தில் அருளூண் வேளாள மரபிற் பிறந்து, ஐயாண்டுவரை ஊமையாயிருந்து, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவி லில் நாப்பூட்டு நீங்கி, அன்றே முருகன் புகழ் பாடத் தொடங்கி னார் என்பர். அவர் பயிற்சி பெற்றுப் பருவ மடைந்தபின், தம் அறிவை யாசிரியர் (ஞானாசிரியர்) கட்டளைப்படி காசி சென்று, இந்துத்தானி மொழியைக் கற்றுத் தேர்ந்து, அக்கால முகலாயப் பேரரசனைக் கண்டு பல இறும்பூதுகள் செய்து, அவன் நட்பும் உதவியும் பெற்று, காசியில் ஒரு சிவமடங் கட்டுவித்து அதன் கிளையாகத் திருப்பனந்தாள் சிவ மடத்தைத் தோற்றுவித்து, காசியிலேயே இறைவன் திருவடி யடைந்தார் என்பது வரலாறு. அவரியற்றிய பனுவல்கள், திருச்செந்தூர்க் கந்தர் கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட் சியம்மை குறம், மீனாட்சியம்மையிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமியம்மையிரட்டை மணி மாலை, பண்டார மும்மணிக்கோவை காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, கயிலைக் கலம்பகம் என்பன. மூன்றாம் பட்டினத்தார் பாடியவை, அருட்புலம்பல், முதல்வன் முறையீடு, இறந்தகாலத் திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரண மாலை, நெஞ்சொடு மகிழ்தல், பட்டினத்தார் ஞானம் என்பன. தருமபுரத்தில் 6ஆம் பட்டத்திலிருந்த திருஞான சம்பந்த ரின் மாணவர் வெள்ளியம்பலத் தம்பிரான் திருநெல்வேலிச் சிந்துபூந் துறையிலிருந்த காலை (1630), துறைமங்கலம் சிவப் பிரகாச அடிகட்கு ஐந்திலக்கண நுவலாசிரியராக விளங்கினார். சிவப்பிரகாச அடிகட்கு இளமையிலேயே உலக வெறுப்பும் துறவு வேட்கையும் விஞ்சிவிட்டதென்பது, அவரை மணஞ் செய்து கொள்ளச் சொன்ன அண்ணாமலை இரெட்டி யார்க்கு, சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப் பாய்கொண்டா னும்பரவும் பட்டீச் சுரத்தானே நோய்கொண்டா லுங்கொளலா நூறுவய தாமளவும் பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே. நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளைக் கிட்டையிலே தொடுத்துமுத்தி பெறுமளவும் பெரியசுகம் கிடைக்கும் காம வெட்டையிலே மதியமங்குஞ் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி கட்டையிலே தொடுத்துநடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே என்று அவர் அளித்த விடை தெரிவிக்கும். சிவப்பிரகாச அடிகள் இயற்றிய நூல்கள் 1. சோண சைல மாலை 2. சிவப்பிரகாச விகாசம் 3. சதமணி மாலை 4. நால்வர் நான்மணி மாலை 5. திருச்செந்தில் நிரோட்ட யமக வந்தாதி 6. பழமலை யந்தாதி 7. பிச்சாடண நவமணி மாலை 8. கொச்சகக்கலிப்பா 9. பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம் 10. பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை 11. திருவெங்கைக் கோவை 12. திருவெங்கைக் கலம்பகம் 13. திருவெங்கை யுலா 14. திருவெங்கை யலங்காரம் 15. சிவநாம மகிமை 16. இட்டலிங்க வபிடேக மாலை 17. இட்டலிங்க நெடுங்கழிநெடில் 18. இட்டலிங்கக் குறுங்கழிநெடில் 19. இட்டலிங்க நிரஞ்சன மாலை 20. கைத்தல மாலை 21. சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு 22. சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது 23. சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி 24. சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் 25. சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம் 26. திருக்கூவப் புராணம் 27. சீகாளத்திப் புராணத்திற் கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும் 28. வேதாந்த சூடாமணி 29. சித்தாந்த சிகாமணி 30. பிரபுலிங்க லிலை 31. தர்க்க பரிபாடை மொழிபெயர்ப்பு சிவப்பிரகாச அடிகள், காளமுகில்போற் கடும்பாவும் கம்பர்போற் பெரும்பாவும் பாடவல்லவர். அவர்க்கு ஐந்திலக்கணமுங் கற்பித்த வெள்ளியம்பலத் தம்பிரான், கு என்பது முதலிலும் முடிவிலும் ஊருடையான் என்பது இடையிலும் வர ஒரு வெண்பாப் பாடுக என்று சொன்னவுடன், குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல் முடக்கோடு முன்னமணி வார்க்கு - வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு என்று அவர் அருமையாகப் பாடி முடித்தார். அவர் இளவலர் திருமணத்தில், அனைவரும் மகிழ்ந் தின்புறுமாறு நகைச்சுவையாகப் பாடிய சில பதினாற்சீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலங்களுள் ஒன்று வருமாறு : அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயஎன் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன்வே லவனை நோக்கி விரைவுடன் வினவவே அண்ணன்என் சென்னியில் விளங்குகண் எண்ணி னன்என வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி விகடம்ஏன் செய்தாய் என்ன மருவும்என் கைந்நீள முழமளந் தானென்ன மயிலவன் நகைத்து நிற்க மலையரையன் உதவவரும் மையவளை நோக்கிநின் மைந்தரைப் பாராய் என்ன கருதரிய கடலாடை யுலகுபல அண்டம் கருப்பமாப் பெற்ற கன்னி கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள் களிப்புடன் உமைக்காக்கவே. சிவப்பிரகாச அடிகள் வீரசிவனியரா யிருந்ததனால், சிவனியர் பலர் பாராட்டவில்லை. சிவப்பிரகாச அடிகளின் சிற்றிளவலான கருணைப் பிரகாச அடிகள் இட்டலிங்க அகவலையும் சீகாளத்திப் புராணத்திற் சீகாளத்திச் சருக்கம் வரையும் பாடித் தம் தமையனார்க்கு முன்பே இறைவனடி சேர, பேரிளவலான வேலைய அடிகள் நல்லூர்ப் புராணம், இட்டலிங்கக் கைத்தலமாலை, வீரசிங்காதன புராணம், நமச்சிவாய லீலை, பாரிசாத லீலை, மயிலத் திரட்டைமணி மாலை, மயிலத்துலா என்னும் பனுவல்களையும் சீகாளத்திப் புராண எச்சத்தையும் பாடி, இறுதியில் இறையடி சேர்ந்தார். தருமபுர மடத்தில 8ஆம் பட்டத்திலிருந்த அழகிய சிற்றம்பல தேசிகர் சுவர்க்கபுர மடத்தைத் தோற்றுவித்தார். அம் மடத்தைச் சேர்ந்த அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் திரிபதார்த்த தீபம் என்னும் நூலை இயற்றினார். சீகாழி இசைவேளாண் குலத்திற் பிறந்த முத்துத்தாண்ட வராயர் பதம் 17ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியிற் பாடப்பட்டது. இராமநாதபுரம் கடார ஊரினரான சர்க்கரைப் புலவர் (1645-70) திருச்செந்தூர்க்கோவை பாடினார். இரண்டாம் சர்க்கரைப் புலவர் மிழலைச் சதகம் பாடினார். தொண்டை மண்டலத்திற் பூதூரிற் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் (1654), ஏடா யிரங்கோடி எழுதாது தன்மனத் தெழுதிப் படித்த விரகர். அவர் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூருலா, கழுக்குன்ற மாலை, கழுக்குன்றப் புராணம் முதலியன பாடினார். இலங்கைப் பரராச சேகர மன்னனின் மருகராகிய அரச சேகரியார், யாழ்ப்பாணத்து நல்லூரிற் பிறந்து வளர்ந்து, ஆழ்வார் திருநகரியில் ஒரு பாவலரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்து, காளிதாசனின் இரகுவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். பரராச சேகரனுக்குப் பின் ஆண்ட செகராச சேகரன் தமிழ் வளர்த்துத் தக்கிண கைலாச புராணம் பாடினான். வடமலையப்பன் காலத்தவரான வென்றிமாலைக் கவிராயர் (1654) திருச்செந்தூர்ப் புராணம் பாடினார். எட்டையபுரம் குறுநில மன்னரின் அரண்மனைப் புலவராய் விளங்கிய கடிகைமுத்துப் புலவர் திருவிடைமருதூ ரந்தாதி பாடினார். பதினெட்டாம் நூற்றாண்டு தொண்டைநாட்டில் பேறையூரில் சங்கம குலத்தில் தோன்றிய சாந்தலிங்க அடிகள் வைராக்கிய சதகம், வைராக் கிய தீபம், அவிரோத வுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது முதலிய மெய்ப்பொருள் நூல்களை இயற்றினார். அவர் மாணவரான சிதம்பர அடிகள் உபதேச வுண்மை, உபதேசக் கட்டளை, பஞ்சதிகார விளக்கம் என்னும் அறிவை நூல்களை யும், திருப்போர்ச் சந்நிதிமுறை, தோத்திரமாலை முதலிய வழுத்து நூல்களையும், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தையும் இயற்றினார். கோனேரியப்ப முதலியார் உபதேச காண்டமும், மறை ஞானதேசிகர் அருணகிரிப் புராணமும் இயற்றினர். சீகாழியில் திகழ்ந்த கண்ணுடைய வள்ளல் ஒழுவிலொ டுக்கம் என்னும் நூலை இயற்றினார். சிவஞான வள்ளல் வள்ளலார் சரித்திரமும், சட்டைநாத வள்ளல் வாதுளாகமச் சாரமாகச் சதாசிவரூபமும் இயற்றினர். தருமபுரம் 10ஆம் பட்டத்தி லமர்ந்திருந்த சிவஞான தேசிகர் பால் அறிவை நுவற்சி (ஞானோபதேசம்) பெற்ற சிதம்பரநாத முனிவர், குறட்பாவால் நித்திய கன்மநெறி என்னும் நூலியற்றினார். திருமறைக்காட்டில் அருளூண் வேளாளர் குலத்திற் பிறந்து, இளமையிலேயே தென்மொழி வடமொழி யிரண்டுங் கற்றுத் தேர்ந்து, திரிசிரபுரத்தில் ஆட்சி செய்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்காளராயிருந்து, அவரிறந்தபின் அரசியின் காதலுக்குத் தப்பியோடி, தம் தமையனாரின் கட்டாயத்திற் குட்பட்டு ஒரு பெண்ணை மணந்து ஒரு குழந்தை பெற்று அவள் இறந்துபோனபின் துறவுபூண்டு மௌன குருவிடம் அறிவையுரை பெற்று, திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டைத் தாயுமானவர் மடத்தில் தங்கி ஓகிருந்து, கடவுட் பற்றும் பத்திச்சுவையும் துறவுணர்ச்சியும் ததும்பி வழியும் பல்வேறு திருப்பாடல்களைப் பாடி, நொசிப்புற்ற (சமாதி யடைந்த) தாயுமான அடிகள், திருவெண் காடர் என்னும் பட்டினத்தடிகட்கு அடுத்தபடியாகத் தமிழராற் போற்றப்படும் துறவியாராவர். அவர் பாட்டுகளுள் மூன்று வருமாறு: அங்கிங் கெனாதபடி யெங்கும்ப்ர காசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய் என்றைக்கும் உள்ள தெதுமேல் கங்குல் பகலறநின்ற எல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே கண்டனவெ லாமோன உருவெளிய தாகவும் கருதியஞ் சலிசெய்குவாம். கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றுமறி வில்லாதஎன் கர்மத்தை யென்சொல்வேன் மதியையென் சொல்வேன் கைவல்ய ஞானநீதி நல்லோர் உரைக்கிலோ கர்மமுக் கியமென்று நாட்டுவேன் கர்மமொருவன் நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் வடமொழியிலே வல்லான் ஒருத்தன்வர வுந்திரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனமே வடமொழியில் வசனங்கள் சிறிதுபுகல்வேன் வெல்லாமல் எவரையும் மருட்டியிட வகைவந்த வித்தையென் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே. பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்ச வாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க மனமும் நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின் நாணுமென் னுளநிற்றிநீ நான்கும் பிடும்போ தரைக்கும்பி டாதலால் நான்பூசை செய்யன் முறையோ விண்ணேவிண் ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேயவி வித்தின் முளையே கண்ணே கருத்தே யென்எண்ணே யெழுத்தே கதிக்கான மோனவடிவே கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு கருணாகரக் கடவுளே. பாண்டிநாட்டுத் திருக்குற்றாலத் தருகிலுள்ள மேலகரத் தில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர், குற்றாலத் தல புராணம், குற்றாலமாலை, குற்றாலச் சிலேடை, குற்றால யமக வந்தாதி முதலிய பனுவல்களைப் பாடினார். தஞ்சைச் சரபோசி மன்னர் காலத்தவரான ஒப்பிலா மணிப் புலவர், சிவரகசியம் என்னும் பெருநூலை இயற்றினார். சீகாழி அருணாசலக் கவிராயர் (1712-77) சீகாழிப் புராணம், சீகாழிக் கோவை என்னும் பனுவல்களைப் பாடினார். சரபோசி மன்னர் அவையைச் சேர்ந்த அபிராமிபட்டர் அபிராமியந்தாதியைப் பாடினார். யாழ்ப்பாணத்துச் சுன்னாக வூரரான வரத பண்டிதர் என்னும் சிவப்பிராமணர், சிவராத்திரிப் புராணம் பாடினார். அவருக்குப்பின் பாண்டிநாட்டு நெல்லைநாதர் பாடிய சிவ ராத்திரிப் புராணமும் ஒன்றுண்டு. பாண்டிநாட்டு விக்கிரமசிங்கபுரத்தில் வாழ்ந்த நமச் சிவாயக் கவிராயர் உலகம்மை யந்தாதி, சிங்கைச் சிலேடை வெண்பா முதலியவற்றைப் பாடினார். சோழநாட்டுத் தண்டலை யூரினரான சாந்தலிங்கக் கவிராயர் தண்டலையார் சதகம் பாடினார். அம்பலவாணக் கவிராயர் அறப்பளீசுர சதகமும், குருபாததாசா குமரசே சதகமும் பாடினர். திருநெல்வேலிக் கடுத்த சந்நியாசி யூரரான பகழிக் கூத்தர், திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடினார். சிவன்பாக்கத்துச் சிவனியத் துறவியாரான ஞானக் கூத்தர் விருத்தாசலப் புராணம் பாடினார். மார்க்கசகாய தேவர் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் பாடினார். தலைமலைகண்டதேவர் நெல்லைநாட்டு மருதூரீசர் மீது மருதூர் யமக வந்தாதி பாடினார். தில்லைக்கருகில் வதிந்த மாரிமுத்துப் பிள்ளை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடுதூது என்னும் பனுவல் களைப் பாடினார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டி நாட்டு விக்கிரமசிங்கபுரத்தில் அருளூண் வேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என்பவரின் அருந்தவ மகனாகத் தோன்றிய முக்களாலிங்கர் இளமையிலேயே தென்மொழி வடமொழி யிரண்டுந் தெள்ளிதிற் கற்று, திருவாவடுதுறை வளாகத் தலைவராயிருந்த பின்வேலப்ப தேசிகரிடம் அறிவையுரையும் சிவஞானயோகி என்னுஞ் சிறப்புப் பெயரும் பெற்று, பல மாணவரை பயிற்றிச் சிறந்த புலவராக்கிப் பல நூல்களும் பனுவல்களும் இயற்றி, கி.பி. 1785ஆம் ஆண்டு இறைவன் திருவடியடைந்தார். வடமொழியைப் பயின்ற மட்டில் தலைகொழுத்துத் தண்டமிழைப் பழிக்குந் தறிதலைகள் போலாது, இருமொழியு நிகரென்னும் இதற்கையு முளதேயோ (காஞ்சி. தழுவக். 249) என்று இயம்பியது, சிவஞான முனிவரின் செழும் புலமையை யும் செப்பமுடைமையையும் சிறப்பக் காட்டும். முனிவர் ஒருகால் திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த போது, வரையேற விட்டமுதஞ் சேந்தனிட வுண்டனைவல் லினமென் றாலும் உரையேற விட்டமுத லாகுமோ எனைச்சித்தென் றுரைக்கி லென்னாம் நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுநறும் புலிசை மேவும் கரையேற விட்டமுதல் வாவுன்னை யன்றியுமோர் கதியுண் டாமோ என்னும் பாட்டைப் பாடிக்கொடுத்து, ஓர் ஏழைப் பிராமணன் ஒரு பெருங்கிழி பெற்று வறுமைதீரச் செய்தது, அவரது அருளுடைமை யையும் கடும் பாவாற்றலையுந் தெரிவிக்கும். அவர் பாடிய பனுவல்கள், அகிலாண்டேசுவரி பதிகம், இளசைப் பதிற்றுப்பத் தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப்பத் தந்தாதி, குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, சோமேசர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக் கோவை, திருமுல்லை வாயில் அந்தாதி, திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, பஞ்சாக்கர தேசிகர் மாலை, காஞ்சிப் புராணம் (மொழி பெயர்ப்பு) முதலியன. சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம், சிவசமவாதவுரை மறுப்பு முதலியன அவருடைய ஆராய்ச்சி வன்மையையும் ஏரணப் புலமையையும் தருக்கவாற்றலையும் புலப்படுத்தும். சிவஞான முனிவரின் முதன் மாணவரான கச்சியப்ப முனிவர், திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணம் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ், கச்சியானந்தருத்திரேசர் வண்டுவிடு தூது, பதிற்றுப்பத் தந்தாதி, திருத்தணிகை யாற்றுப்படை, பஞ்சாக்கர வந்தாதி முதலியன பாடினார். அவர் நண்பரான கடவுண் மாமுனிவர் திருவாதவூரடிகள் புராணம் பாடினார். சிவஞான முனிவரின் மற்றொரு மாணவரான சிதம்பர நாத முனிவர் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் பாடினார். சிவஞான முனிவரின் மற்றொரு மாணவரான தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர் சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம், துறைசைக் கோவை, கலைசைக் கோவை, கலைசைச் சிலேடை வெண்பா, சிதம்பரேசர் வண்ணம், திருக்குற்றாலச் சித்தித் திருவிருத்தம், பழனி முருகக் கடவுள் பஞ்சரத்தினமாலை, திருச் சிற்றம்பல தேசிகர் சிந்து, அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு முதலியன பாடினார். திருப்பூவணத்திலிருந்த கந்தசாமிப் புலவர், திருப்பூவண வுலா, திருப்பூவணப் புராணம், ஆப்பனூர்ப் புராணம் என்பன பாடினார். வீரசைவரான சென்னமலையர் சிவசிவ வெண்பாப் பாடினார் பின்வேலப்ப தேசிகர் இருவருள் முன்னவர் திருப்பறிய லூர்ப் புராணம் பாடினார். கச்சியப்பர் மாணவரும் சங்கம குலத்தாருமான கந்தப்பையர், தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை யந்தாதி, தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகாசல வனுபூதி முதலியன பாடினார். 2. மாலிய (வைணவ) இலக்கியம் மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். அகத். 5) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொல். புறத். 5) என்று தொல்காப்பியங் கூறுவதால், தலைக்கழகக் காலந் தொட்டு மாலிய இலக்கியமுந் தோன்றியிருத்தல் வேண்டும். பரிபாடல் இது கடைக்கழகப் பாடல்களுள் மேற்கணக்கு என்னும் வகுப்பில் எட்டுத்தொகை யென்னும் பிரிவைச் சேர்ந்தது. திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம் என்னும் வெண்பாவினால், பழைய எழுபது பரிபாடல்களுள் எட்டு திருமாலுக்குரியன என்பது அறியப்படும். இன்றுள்ள 22 பரிபாடல் தொகையில், ஆறு (1, 2, 3, 4, 13, 15) திருமாலுக்குரியன. அவற்றுள் முதலது கடவுள் வாழ்த்து, அதைப் பாடினார் பெயர் தெரியவில்லை. இரண்டாம் பாடல் கீரந்தை யாராலும், மூன்றாம் நான்காம் பாடல்கள் கடுவனிள வெயினனாராலும், பதின்மூன்றாம் பாடல் நல்லெழுநியா ராலும், பதினைந்தாம் பாடல் இளம்பெருவழுதியாராலும் பாடப்பட்டன. பரிபாடல் பரிபாட்டென்றும் வழங்கும். முதலாம் பெருந்தேவனார் பாரதம் இது, கடைக்கழகக் காலத்தில் தொண்டைநாட்டிற் பிறந்து வாழ்ந்த பெருந்தேவனாரால், உரையிடையிட்ட பன்னீராயிரம் பாவிசை (Stanzas) கொண்டதாகப் பாடப்பட்ட பனுவல். சீருறும் பாடல்பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு வீரர்தஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார் பாரதம் பாடிய பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண் மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே என்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுள் காண்க. இப் பனுவல் பின்னர் இறந்துபட்டது. இதன் செய்யுள்கள் சில, தொல் காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியருரையிலும் யாப்பருங் கல விருத்தியிலும் மேற்கோளாகக் காட்டப்பட் டுள்ளன. நாலாயிரத் தெய்வப் பனுவல் (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்) சிவனிய இலக்கியத்திலுள்ள தேவாரத்திற்கு ஒப்பாக மாலிய இலக்கியத்திலுள்ளது, நாலாயிரத் தெய்வப் பனுவல். இது 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில், முதலாழ்வார் முதல் திருமங்கையாழ்வார்வரை பன்னிரு தலைசிறந்த திருமாலடியாராற் பாடப்பெற்ற திருமால் வழுத்துத் திரட்டு. வேதாந்த தேசிகரின் பிரபந்தசாரம், வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் மழீசையர் கோன் மகிழ் மாறன் மதுரகவி பொய்யில்புகழ் கோழியர் கோன் விட்டு சித்தன் பூங்கோதை தொண்டரடிப் பொடிபா ணாழ்வார் ஐயனருட் கலியன்.................. என்று பன்னீராழ்வார் பெயரையும் கால முறைப்படுத்திக் கூறும். ஆயின், பாடற்பொருள் நோக்கி, பன்னீராழ்வார் பாடல் களும் நாலாயிரத் தெய்வப் பனுவற்றிரட்டில் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளன. I முதலாயிரம் 1. திருப்பல்லாண்டு 2. பெரியாழ்வார் திருமொழி பெரியாழ்வார் (8ஆம் நூற்.) 3. திருப்பாவை 4. நாய்ச்சியார் திருமொழி ஆண்டாள் (8ஆம் நூற்.) 5. பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் 6. திருச்சந்த விருத்தம் - திருமழிசை யாழ்வார் (7ஆம் நூற்.) 7. திருமாலை - தொண்டரடிப் பொடியாழ்வார் 8. திருப்பள்ளி யெழுச்சி (7ஆம் நூற்.) 9. அமலனாதிபிரான் - திருப்பாணாழ்வார் (7ஆம் நூற்.) 10. கண்ணிநுண் சிறுத்தாம்பு - மதுரகவியாழ்வார்(9ஆம் நூற்.) II இரண்டாமாயிரம் அல்லது பெரிய திருமொழி 1. பெரிய திருமொழி 2. திருக்குறுந் தாண்டகம் திருமங்கையாழ்வார் (8ஆம் நூற்.) 3. திருநெடுந்தாண்டகம் III மூன்றாமாயிரம் அல்லது இயற்பா 1. முதல் திருவந்தாதி - பொய்கை யாழ்வார் 2. இரண்டாந் திருவந்தாதி - பூதத்தாழ்வார் (6ஆம் நூற்.) 3. மூன்றாந் திருவந்தாதி - பேயாழ்வார் 4. நான்முகன் திருவந்தாதி - திருமழிசையாழ்வார் (7ஆம் நூற்.) 5. திருவிருத்தம் 6. திருவாசிரியம் - நம்மாழ்வார்(9ஆம் நூற்.) 7. பெரிய திருவந்தாதி 8. திருவெழு கூற்றிருக்கை 9. சிறிய திருமடல் திருமங்கை யாழ்வார் (8ஆம் நூற்.) 10. பெரிய திருமடல் IV நாலாமாயிரம் அல்லது திருவாய்மொழி திருவாய்மொழி - நம்மாழ்வார் (9ஆம் நூற்.) காஞ்சிபுரத்திற் பிறந்த பொய்கையாழ்வார், திருக்கடன் மல்லை யென்னும் மாமல்லபுரத்திற் பிறந்த பூதத்தாழ்வார், மயிலையிற் பிறந்த பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் ஒருகாலத்தவர். அம் மூவரும் ஒருநாள் மாலை பெண்ணை யாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரையடைந்து, மிருகண்டு முனிவர் திருமாளிகையில் தங்க நேர்ந்தது. முதலிற் சென்ற பொய்கை யாழ்வார் அம் மாளிகையிலுள்ள இடுக்கமான இடைகழியிற் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது பூதத்தாழ் வார் அங்கு வந்து அவரைக் கண்டவுடன், பொய்கையாழ்வார் இங்கு ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம் என்று சொல்லியெழுந்து கொண்டபின், இருவரும் உட்கார்ந்திருந் தனர். சற்றுப்பின்பு, பேயாழ்வாரும் அங்கு வந்தார். அப்போது முன்னையிருவரும் இங்கு ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் என்று சொல்ல, பேயாழ்வாரும் இசைந்து, மூவரும் நின்று கொண்டிருந்தனர். பின்னர்ப் பெருமழையும் பேரிருட்டும் உண்டாகி, ஒரு பெரிய ஆள் அவரிடையே புகுந்து நெருக்குவது போன்ற உணர்ச்சி தோன்றிற்று. மூவரும் அது யாரென்று தெரியாது சிறிது நேரந் திகைத்து நின்றபின், அது இறைவன் திருவிளையாட்டே யென்று தம் அறிவைக் (ஞானக்) கண்ணாற் கண்டு, பொய்கை யாழ்வார், வையந் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யானடிக்கே சூடினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று என்றும், பூதத்தாழ்வார், அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் என்றும், பேயாழ்வார், திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பா லின்று என்றும் மூவெண்பாப் பாடினர். இம் மூன்றும் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந் திருவந்தாதி என்னும் தெய்வப் பனுவல்களின் தொடக்கப் பாவிசைகளாகும். திருமழிசையிற் பிறந்து காஞ்சியிற்போய் வதிந்திருந்த திருமழிசையாழ்வாரின் மாணவத்தொண்டரான கணிகண் ணனார் தெய்வப் புலமை யுள்ளவரென்றும், அவர் வாழ்த்தும் வாய்மொழியும் தப்பாது வாய்க்குமென்றும், அக்காலத்துப் பல்லவ அரசன் கேள்விப் பட்டு, நான் என்றும் மாறாத இளமையாயிருக்க ஒரு பாப் பாட வேண்டும் என்று அவரை வற்புறுத்தி வேண்ட, அவர் இறைவனையன்றி எம்மாந்தனை யும் புகழாதவராதலால், ஆடவர்கள் எங்ஙன் அகன்றொழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு என்று, அவன் தலைநகராகிய காஞ்சியையே பாடினார். உடனே பல்லவன் வெகுண்டு, நீ நம்மைப் பாடு என்றால், நகரத்தைப் பாடியிருக்கின்றாய். இனிமேல் இங்கிராதே. உடனே வெளியேறு என்று அச்சுறுத்த, அவர் தம் ஆசிரியரான திருமழிசை யாழ் வாரிடம் சென்று நடந்ததைச் சொல்லி, விடை வேண்டினார். அப்போது ஆழ்வார் நானும் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு உடன் வருவேன் என்றுரைத்து, திருக் கோயிலுட் சென்று திருவடி தொழுது, கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடனே செந்நாப் புவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் என்று வேண்டியவுடன், அப் பெருமாளும் தம் அறிதுயில் விட்டெழுந்து வர, மூவரும் அந் நகரைவிட்டு நீங்கி அருகி லுள்ள ஓரிடத்தில் தங்கினர். அதனால் நகர் முழுதும் பொலி விழந்து இருள் மூண்டது. அது கண்ட அரசன் அமைச்ச ரொடு சென்று, கணிகண்ணனார் காலில் விழுந்து தன் பிழை பொறுத்தருள வேண்டினான். அவரும் அவனை மன்னித்து, ஆழ்வாரை மீண்டும் எழுந்தருளுமாறு வேண்ட, அவரும் அதற்கிசைந்து, கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவன்யான் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள் என்று மன்றாடி யிரந்து, பெருமாளையும் தம்மொடு மீளப் பண்ணினார். இதனால், காஞ்சிப்பெருமாளுக்குச் சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் என்னுந் திருப்பெயர் தோன்றிற்று. திருமங்கையாழ்வார் திருவிண்ணகர யாத்திரை செய்து வருங்கால், சீகாழியில் திருஞான சம்பந்தரைத் தலைக்கூடித் தம் பாவன்மையால் அவரது பாராட்டுப் பெற்றாரென்று, ஒரு செய்தி அவர் வரலாற்றில் வழங்கி வருகின்றது. பன்னீராழ்வாருள்ளும் தலைமையானவர் நம்மாழ்வார் என்பது. அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனால், அவரை உடம்பாகவும் ஏனையரை உறுப்பாகவும் உருவகித்து, பூதத்தாழ்வாரைத் தலையென்றும், பொய்கை பேயாழ் வார்களைக் கண்க ளென்றும், பெரியாழ்வாரை முகமென்றும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தென்றும் குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் கைகளென்றும், தொண்ட ரடிப் பொடியாழ்வாரை மார்பென்றும், திருமங்கை யாழ்வாரைக் கொப்பூழென்றும், மதுரகவியாழ்வாரைப் பாதமென்றும், கூறுவது மரபு. இவ் வுருவகத்தில், கண்ணும் முகமும் தலையினின்று பிரிக்கப்பட்டிருப்பதும், இருபாதங்கட்கு அல்லது கால்கட்கு ஒருவரே குறிக்கப்பட்டிருப்பதும், இலக்கணப்படி யிழுக்காகு மாகையால், தலையை நம்மாழ்வாரென்றும், அரை இரு கால் ஒரு பாதம் ஆகிய நான்கும் ஏனை நாலாழ்வாரென்றும், உடம்பு முழுவதும் பரவி நிற்பவன் இறைவனாகிய திருமா லென்றும், கூறின் மிகப்பொருத்த மாயிருக்கும். கொப்பூழை வயிறென்று குறிப்பதும் நன்றாகும். மாறன், சடாரி, சடகோபன், மகிழ்மாலையன் (வகுளா பரணன்), பராங்குசன் (புறத்துறட்டியன்) என்று பல பெயரிருப் பினும், நம் என்னும் அடைபெற்று நம்மாழ்வார் என்று குறிக்கப்பெறுவது, தலைமையாழ்வாரின் அருமையையும் திருமாலடியாரின் அன்புப் பெருக்கத்தையும் உணர்த்தும். நெடுங்கணக்கிற்கு அரிச்சுவடி யென்னும் பெயரும், நம் மாழ்வார் காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். நம்மாழ்வார் திருப்பாடற்றிரட்டு விரிவினால் திருஞான சம்பந்தர் தேவாரத்தையும், பெயரினாலும் ஓரளவு பொருளி னாலும் திருமூலர் திருமந்திரத்தையும், ஒக்கும். மந்திரம், வாய்மொழி என்னும் இரு சொற்களையும் ஒருபொருட் சொற்களாகவே தொல்காப்பியம் ஆண்டிருத்தலை நோக்குக. தேவாரத்திற்குப் போன்றே நாலாயிரத் தெய்வப் பனுவற் பாடல்கட்கும் இசை வகுக்கப்பட்டிருப்பதால், இப் பாடற்றி ரட்டும் இசைத்தமிழிலக்கியமாகும். முதலாழ்வார் மூவரும் வெண் பாவாலும், அவருக்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்ட திருமழிசை யாழ்வார் வெண்பா கலிப்பாக்களாலும். இரு நூற்றாண்டு பிற்பட்ட நம்மாழ்வார் வெண்பா ஆசிரியப்பா கலிப்பாக்களால் அந்தாதி யென்னும் ஈறு தொடங்கித் தொடையிலும், பாடியிருப் பது தனிச்சிறப்பாகும். இராமாவதாரம் என்னும் கம்பவிராமாயணம் சோழநாட்டுத் திருவழுந்தூரில் உவச்சர் குலத்தில் தோன்றிய கம்பர், 9ஆம் நூற்றாண்டினராகவும் 12ஆம் நூற்றாண்டினராகவும் இருவேறு வகையிற் சொல்லப்படுவர். அவரியற்றிய ஒப்புயர்வற்ற இராமாவதாரம் என்னும் இராமா யணம், வனப்பியல் வகையில் தோல் என்று சொல்லத்தக்க பெரும்பாவியம் ஆகும். அதனாலேயே, அவர் திருவள்ளுவ ரோடும் இளங்கோவடிகளோடும் சேர்த் தெண்ணத்தக்க பெருமை பெற்றார். கல்வியிற் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியுங் கவிபாடும், தமிழுக்குக் கதி என்பன அவர் பெருமை யுணர்த்தும் பழமொழிகள். விருத்த மெனும் ஒண்பாவிற் குயர் கம்பன் என்பது அவர் தேர்ச்சிபெற்ற பாவினம் பற்றிய பாராட்டு. இம்பர் நாட்டிற் செல்வமெலாம் எய்தி யரசாண் டிருந்தாலும் உம்பர் நாட்டிற் கற்பகக்கா வோங்கு நீழ லிருந்தாலும் செம்பொன் மேரு வனையபுயத் திறல்சே ரிராமன் திருக்கதையிற் கம்ப நாடன் கவிதையிற்போற் கற்றோர்க் கிதயங் களியாதே என்னுந் தனிப்பாடலும் அதுபற்றி யெழுந்ததே. வடமொழியில் இராமாயணம் இயற்றிய மூவர் அல்லது நால்வருட் சிறந்த வான்மீகியாரைப் பின்பற்றி யிருப்பினும், மூலத்தினுஞ் சிறந்ததாய்க் கம்பவிராமாயணம் அமைந்திருப் பது, தமிழுக்குந் தமிழினத்திற்கும் பெருமை தருவதாகும். ஆரே யெனுமொன்று சொல்லத் தொடங்கினு மவ்விடத்துள் பேரே வரும்என்ன பேறுபெற் றேன்பெரு நான்மறையின் வேரே மிதிலையின் மின்னொடும் போய்வெய்ய கானடைந்த காரே கடல்கொளுந் தச்சிலை வாங்கிய காகுத்தனே என்றும், ஆசை பற்றி யறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ என்றும் பாடியிருப்பினும், உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யார்அவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே என்றும், அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப் பரகதிசென் றடைவரிய பரிசேபோல் என்றும் பாடியிருப்பது, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நடனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே (திருமந். 2066) என்னும் திருமூலர் திருமந்திரக் கருத்தினர் கம்பர் என்பதைக் காட்டும். இனி, தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாருமஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார் (உலாவியற். 19) என்னும் பாட்டு, தந்தெய்வ மெந்தெய்வ மென்றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது என்னுந் தாயு மானவர் கூற்றை விளக்குவதுடன், இராமனின் கரையறு கட் டழகையும் உணர்த்துவது, கம்பரின் தலையாய பாவன் மைக்குத் தக்கதொரு சான்றாம். எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்றுநாள் விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் (வேள்விப். 41) என்னும் பாட்டிலுள்ள உவமை நயமும் எண்ணுந் தொறும் இன்புறத் தக்கதே. தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ (நாட்டுப். 4) என்பது, கம்பரின் வண்ணனைத் திறமைக்கு எடுத்துக் காட்டாம். என்றுமுள தென்றமி ழியம்பி யிசைகொண்டான் (அகத். 47) என்று அவர் அகத்தியரைப் பாடியது அவரின் தமிழ்ப் பற்றையும். அரியணை யநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க இருவருங் கவரி வீச விரைசெறி குழலி யோங்க வெண்ணெய்மன் சடையன் வண்மை மரபினோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி (திருமுடி. 38) என்பது, அவரது செய்ந்நன்றி யறிவையும், செவ்வையாய்ப் புலப்படுத்தும். விரைசெறி குழலியோங்க என்பதற்கு, விரை செறி கமலத் தாள்சேர், விரிகட லுலக மேத்தும் என்பன பாட வேறுபாடுகள். கம்ப விராமாயணத்தில் ஒருசில இடைச்செருகல்கள் இருக்கலாம், ஆயின், அவற்றை ஆயிரக்கணக்கென மிகுத்துக் காட்டுவது சற்றும் பொருந்தாது. நாடவிட்ட படலத்தி லுள்ள அடிமுதல் முடி வண்ணனையில் மருமவுறுப்புகள் பற்றிய செய்தி, இடைச் செருகலாகவே யிருத்தல் வேண்டும். அல்லாக் கால், கம்பருக்கு அது இழுக்காகும். பல இடங்களில் வரும் உயர்வுநவிற்சிகள்பற்றி, கம்பர்மீது குற்றஞ் சுமத்துவதுமுண்டு. ஆயின், அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள். 1115) என்பதை நோக்குங்கால், அக் குற்றம் மறைந்துபோம். மேலும், நொய்தின் நொய்யசொல் நூற்கலுற் றேன்எனை வைத வைவின் மராமரம் ஏழ்தொளை யெய்த எய்தவற் கெய்திய மாக்கதை செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே. முத்த மிழ்த்துறை யின்முறை போகிய உத்த மக்கவி கட்கொன் றுணர்த்துவென் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ என்று, கம்பர் தமிழ்ப்புலவ ரவையை முற்றும் அடக்கி விட்ட தையும் நோக்குதல் வேண்டும். இராமாயணக் கதையைப்பற்றி, அது துரும்பைத் தூணாக்கிய சிறுகதைப் பெருக்கமென்றும், புத்த சாதகக் கதையின் மாற்றியமைப் பென்றும், முற்றும் கட்டுக்கதை யென்றும், மூவேறு கருத்துகள் திருமாலடியா ரல்லாத மக்களிடையிருந்து வருகின்றன. காலஞ் சென்ற சுநீதி குமார சட்டர்சி மேற்குறித்த இரண்டாம் கொள்கையினராவர். இக் கருத்துகட்கும் கம்பவிராமாயணத்திற்கும் கடு களவுந் தொடர்பில்லை. சடகோபரந்தாதி இது நம்மாழ்வார்மீது, கம்பரால் அந்தாதி யென்னும் ஈறு தொடங்கித் தொடையிற் பாடப்பட்ட புகழ்ப்பனுவல். இதன் பாவிசைகளுட் சில வருமாறு : மொழிபல வாயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும் வழிபல வாயவிட் டொன்றா யதுவழு வாநரகக் குழிபல வாயின பாழ்பட் டனகுளிர் நீர்ப்பொருநை சுழிபல வாயொழு குங்குரு கூரெந்தை தோன்றலினே. (5) உயிர்த்தாரை யிற்புக் குறுகுறும் பாமொரு மூன்றனையுஞ் செயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால் மயிர்த்தாரை கள்பொடிக் குங்கண்கள் நீர்மல்கு மாமறைகள் அயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாமெங்கள் அந்தணர்க்கே. (33) பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப்பசுங் கற்பகத்தின் பூவைப் பொருகடற் போதா அமுதைப் பொருள்சுரக்கும் கோவைப் பணித்தஎங் கோவையல் லாவென்னைக் குற்றங் கண்டென் நாளைப் பறிப்பினும் நல்லரன் றோமற்றை நாவலரே. (57) உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றுமின்றி விரிக்குந் தொறும்வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய் தெரிக்கின்ற கோச்சட கோபன்தன் தெய்வக் கவிபுவியில் சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்குத் தோண்டச் சுரத்தலினே. (63) 12ஆம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தர், கம்பர் பாடாதுவிட்ட இராமாயண உத்தர காண்டத்தைப் பாடி முடித்ததாகச் சொல்லப்படும். அப் பனுவல் 22 படலங்களும் 1390 பாடல்களுங் கொண்டதாக, சிங்காரவேல் முதலியாரின் அபிதான சிந்தாமணி கூறும். ஆயின், இன்று, புலவர் மு.அருணாசலனார், அதன் மூவேறு வெளியீடுகள் அல்லது பதிப்புகளினின்று, பின்வருமாறு படலத்தொகையும் பாடற் றொகையுங் காட்டுவர்: பதிப்பு அல்லது வெளியீடு படலத்தொகை பாடற்றொகை இராமரத்தினம் ஐயர் பதிப்பு 17 1511 சரசுவதிமகால் ஏடு 25 1503 பெரியன் பதிப்பு 30 1532 இராமர் வாழ்க்கை வரலாற்றில் கம்பவிராமாயணச் செய்தி முற்பகுதியாயும் உத்தர காண்டச் செய்தி பிற் பகுதியாயும் இருப்பதும் உத்தரகாண்டப் பாடல்கள் சில கம்ப விராமாயணப் பாடல்களை அடியொற்றியும் தொடரொற் றியும் இருப்பதும், கம்பவிராமாயணத்தின் காலமுன்மையைக் காட்டும். ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமென் றுரைக்கின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா. என்பது, கம்பவிராமாயண யுத்தகாண்டக் கடவுள் வழுத்து. ஒன்றாய்ப் பலவாய் உளவாய் இலவாய் உரைப்போர்க் கன்றாகி யாமாய் அருவாயுரு வாகி மெய்ம்மை குன்றாத ஞானக் கொழுந்தாய்க் குணமூன் றிறந்து நின்றான் யாவன் அவன்நீள்கழல் நெஞ்சின் வைப்பாம் என்பது, உத்தர காண்டக் கடவுள் வழுத்து. இதன் பின் மூன்றடியும் பின்வருமாறு இருந்திருத்தல் வேண்டும். அன்றாய் ஆமாய் அருவாய் உருவாய் மெய்ம்மை குன்றா ஞானக் கொழுந்தாய்க் குணமூன் றிறந்து நின்றான் யாவன் அவன்கழல் நெஞ்சில் வைப்பாம். அச்சுப்படிப் பாடம் ஏட்டுப் பிழையால் நேர்ந்திருக்கலாம். கம்பவிராமாயண நாகபாசப் படலத்தில், 251-லிருந்து 261 வரை பதினொரு பாவிசைகள் ஆருன் அதிரேக மாயை யறிவார் என்னும் மகுடங் கொண்டுள்ளன. அதையொட்டியே, உத்தர காண்டத்தில், தேவர் திருமாலைப் போற்றியதாகவுள்ள எண் பாடல்கள் ஆர்உனை அறிவார் என்னும் மகுடங் கொண்டுள்ளன. இங்ஙனம் கம்பவிராமாயண உத்தரகாண்டங்களின் முன்மை பின்மை தெளிவாயினும், கம்பரும் ஒட்டக்கூத்தரும் ஒரு காலத்தவரா, வெவ்வேறு காலத்தவரா என்பதுபற்றிப் புலவரிடைக் கருத்து வேறுபாடிருந்து வருகின்றது. ஒருகாலத்தவர் என்னுங் கொள்கையர், ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத் தேவன் திருவழுந்தூர் நன்னாட்டு - மூவலூர்ச் சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான் காரார்கா குத்தன் கதை என்னும் பாடலைச் சான்றாகக் காட்டுவர். கம்பர் தம் இராமாயணத்தைச் சக ஆண்டு 1100-ல் (கி.பி.1178-ல்) பாடிமுடித்தவர் என்பது, இப் பாட்டால் தெளியப் படும். இதுவே மற்றக் காரணங்கள் பலவற்றோடு பொருந்தி வலியுறுதலைக் கம்பர் காலம் என்ற தலைப்பின் கீழ், மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையுட் கண்டுகொள்க. (செந்தமிழ், தொ.3) என்று பல்வகை யாராய்ச்சிப் பெரும்புலவர் மு.இராகவையங் கார் அவர்கள் தம் பெருந்தொகைச் சிறப்புக் குறிப்பில் வரைந்திருப்பது கவனிக்கத்தக்கது. வெவ்வேறு காலத்தவர் என்னுங் கொள்கையர், எண்ணிய சகாத்தம் எண்ணூற் றேழின்மேற் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி யுத்த ரத்திற் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே என்னும் பாட்டைக்காட்டி, 9ஆம் நூற்றாண்டினர் என்றும் ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுவர். திரு.வை.மு.கோபாலகிருட்டிணமாசாரியர் தம் கம்ப விராமாயண வுரைமுகத்தில், ஒருசாரார் இராமாயணத்தை அரங்கேற்றியதைத்தெரிவிக்கின்றஎண்ணிய........V‰¿dhnd” என்ற பாடலில் எண்ணூற் றேழின்மேற் சடையன் வாழ்வு என்று கூறிய சாலிவாகன சகாத்தம் 807 என்பது கி.பி. 885ஆவது வருடம் ஆதலால், கம்பர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டென்று திண்ணமாக ஏற்படுமென்பர். மற்றொரு சாரார், கலிங்கத்துப் பரணிக்குக் கதாநாயகனாகிய முதற்குலோத்துங்கச் சோழனது பேரனும் அகளங்கன் என்று ஒரு பேரையுடைய விக்கிரமச் சோழனுக்கு மகனுமான இரண்டாவது குலோத்துங்கனையும் அவனது மகனான இராசராசச் சோழனையும். புவிபுகழ் சென்னிநாட்bடரியல்åரன்.....gh‹Å eடுvன்று‘சென்னி'‘வீரன்vன்றbசாற்களால்jமதுüலிற்fம்பர்F¿த்திருத்தலhலும்;bசன்னிதிUமகன்சீuசரhசன் எdவும்bநடுஞ்சிiலயைநhணெறிந்தவீuதரா(åரோதயா) எdவும்ஒ£டக்கூ¤தர்தhம்பhடியஉyவில்முiறயேஇuண்டாவதுகுnலாத்துங்கனையும்அtன்மfனானஇuசராசனையும்bசன்னி `åரன் எ‹றுகூ¿யிருத்தyலும்;தhம்அuசரையுங்கு‰றேவல்fள்ளும்வ‹மையுiடயவuன்பதைக்க«பர்rழனுக்குக்கhட்டுமாறு,ஓuங்கல்அâபதியாய்க்கhகதீயகzபதியuசருள்ஒUவனாகியபிuதாபருத்திரனைத்தkக்குஅiடப்பைக£டிவரப்பhடியதாகத்தÄழ்நாவலர்சÇதையில்வUவதாலும்;முiறயேஇuண்டாவதுகுnலாத்துங்கன்கி.பி1132முjல்1162வiரக்கும்,அjற்குமேல்அtன்மfனானஇuசராசன்கி.பி.1200 வருடங் கட்குமேல் சில வருடங்கள் வரைக்கும் அரசாண்டன ரெனவும், ஓரங்கற் பிரதாபருத்திரன் கி.பி. 1162-ற்குச் சிறிது முற்காலந் தொடங்கிக் கி.பி. 1197-ற்குச் சிறிது பின் வரையில் அரசாட்சி புரிந்தன னெனவும், சிலாசாசனங்களால் ஏற்படுவ தாலும்; பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியென ஏற்படுகின்ற தென்பர். இங்கன்.... கொள்வது எண்ணிய சகாத்தம் என்று வழங்குஞ் செய்யுளோடு மாறுபடுகின்றதே யெனின், அன்னார், காலத்தால் முற்பட்டதாக ஒரு நூலைக் கூறின் அது நூலுக்குச் சிறப்பாகுமென்ற கருத்துக்கொண்ட ஒருவரால் இச் செய்யுள் அமைக்கப்பட்டதென்றாவது முன்வழங்கிய வேறு வகைப் பாடம் இங்ஙனம் மாற்றி வழங்கப் பட்டதென்றாவது, கொள்ளவேண்டும் என்ப. இனி, எண்ணிய சகாத்த முன்னூற் றேழின்மேல் என்று காணப்படும் பாடம், ஆயிரத்து நூற்றேழின் மேல் என்று பொருள்பட்டுப் பன்னிரண் டாம் நூற்றாண்டென்ற கொள்கைக்குச் சாதகமாம் என்ப. கம்பருடைய காலம் எதுவாக இருப்பினும் இந்தக் கம்ப ராமாயணம்....... பதின் மூன்றாம் நூற்றாண்டில் மிகவும் பிரசாரம் பெற்றுவிட்டதென்பது தெற்றென விளங்கும் என்று வரைந்துள்ளார். இனி, கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் சோழர் வரலாறு பற்றிய தம் ஆங்கில நூலில், “The date of Kamban has been much disputed, but there seems to be now little room left to doubt that he was a junior contemporary of Ot@t@aku#ttan and of Se#kkil_a#r or followed close upon them. The palaeography of the inscriptions of Sadaiyan mentioned above, and Kamban's description of the Co#la# country as belonging to Tya#gama#vino#lau, a title which recalls the surname of Kulottunga III, are fairly conclusive on the point. The distant echoes of the Si#va#ka-Sinda#mani in Kamban’s great work constitute, in the light of the date assigned to the former poem, another circumstance confirming the date thus suggested for Kamban.” (2ஆம் பதிப்பு, ப.672) என்று, இருசாரார் கொள்கையினும் பெரிதும் சிறிதும் வேறுபட்டுக் கூறியுள்ளார். கம்பரும் ஒட்டக்கூத்தரும் எவ்வெக் காலத்தராயினும், கம்பவிராமாயணம் உத்தரகாண்டத்திற்கு முந்தியதென்பது மட்டும் தெரிதரு தேற்றம். ஒருவர் வாழ்க்கை வரலாற்றின் முற்பகுதிதான் முதற்கண் பாடப்படுவது இயற்கை. முதற்கண் பாடியவர் முடிக்காது விட்டுவிட்ட பிற்பகுதியைப் பிற்பட்டுத் தான் ஒருவர் பாடவியலும். முதற்கண் பிற்பகுதியையே ஒருவர் பாடுவதாயின், முற்பகுதி அறியப் படாதிருத்தல் வேண்டும்; அல்லது வேறொருவர் பாட ஏற்றுக் கொண்டதாயிருத்தல் வேண்டும்; அல்லது பாடத்தகுதியற்ற செய்தியாயிருத்தல் வேண்டும். எழுதவோ பாடவோ ஒருவர் எடுத்துக்கொண்ட வரலாற்றை முடிக்காமைக்கு, எண்வகைத் தடைகளே நிகழ்தல் கூடும். அவையாவன: 1. முடிவு அறியப்படாமை 2. முடிவின் அமங்கலத் தன்மை 3. முடிவின்றியும் நிறைவுண்மை 4. ஆசிரியன் விருப்பின்மை 5. வறுமை 6. நோய்த்தடை 7. பிறர்தடை 8. வாழ்நாட்குறுக்கம் கம்பர் உத்தரகாண்டம் பாடாமைக்கு, முடிவின் அமங்கலத்தன்மையும் முடிவின்றியும் நிறைவுண்மையுமே கரணியமாகும். தற்சிறப்புப் பாயிரத்தில், தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவ ரானவர் தம்முளு முந்திய நாவி னான்உரை யின்படி நான்தமிழ்ப் பாவி னாலிது ணர்த்திய பண்பரோ என்று கம்பர் பாடுகிறார். அவர் குறித்த மூவரையும் அவருள் முதல்வரையும்பற்றி, திரு. it.K.கிU£ozkhrhÇa®, மூவர்-வான்மீகி வசிட்டர் போதாயனர். வசிட்டர் செய்தது வாசிட்ட ராமாயணம் எனவும், போதாயனர் செய்தது போதாயன ராமாயணம் எனவும் படும். வசிட்டருக்குப் பதிலாகவியாசர்என்றுகூறி,வியாசர்செய்தராமாயணம்அத்யாத்மராமாயணம்என்றுகூறுவாரும்....cs®” என உரைப்பர். வான்மீகி யிராமாயணம்,மகிழ்ச்சிபொங்கு«மகுடŠசூட்LவிழாவொLமங்கyமாட்சியாfமுடிகின்றது. அதன் பிற்பட்ட வரலாறு அவலம் மிக்க அமங்கலமாயிருப்பதால், அதன் சுருக்கம் மட்டும் கதைச்சுருக்கம், பிரமன் வரவு, இராமகதைக் கண்கூட்டறிவு, குசலவர் வரவு என்னும் நாற்சருக்கமாக, பாலகாண்ட முகப்பிற் பாவிய (காவிய) முகம்போல் வைக்கப் பட்டுள்ளது. அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளவாறு உத்தரகாண்டச் செய்தி, அபிதான சிந்தாமணியிற் பின்வருமாறு சுருக்கிக் கூறப்பட்டுள்ளது: இராமர் அரசாண்ட காலத்தில், சம்புகன் என்னுஞ் சூத்திரன் தவஞ் செய்ததால், (ஒரு) பிராமணப்பிள்ளை இறக்க, (அவன்தந்தையாகிய)பிராமணன்அகாலÄருத்தியுவென்றுÉசனப்gடுகையில், ïதனைeரதராலுணர்ந்துïராமமூர்த்திNத்திரனைச்rங்கரிக்கப்ãராமணப்பிள்ளைcயிர்பெற் bwழுந்தனன்.Óij ïரண்டாம்Kiறவdம்போகஇ¢சைfண்டகhலத்தில்,ஊuர்brல்லைவிaசமாகக்fண்டுகhட்டிற்கDப்பிஅRவkதத்தில்குrலவர்களாகியபு¤திரர்களைக்க©டுஆdந்தங்fண்டுசீiதயைப்பிuமாணஞ்rய்விக்கக்fட்டு,அtள்பூÄயில்மiறயவிrனமும்fபமும்அiடந்துபூÄதேவியைமUட்டிப்பிuமனால்ஒUவிjந்jறித்தhம்பâனொராயிரம்வUடம்அuசாண்டு,த«குkரராகியகுrலவர்க்குஉ¤தரதட்சிணfசலநhட்டைத்தªது,பuதஇyட்சுமணகுkரருக்குக்கhருகபதம்மšலபூமிமுjலியவற்றைக்fடுத்து,வீ‰றிருந்தனர்.ït® ஒருநாள் காலமுனிவர் வர அவரை ஏகாந்தத்தில் கொண்டு, இலக்குமணரை யார்வரினும் விடவேண்டாவென வாயிலில் காவல் வைத்துத் தனித்து வசனித்துக் கொண்டிருந் தார். அப்போது துருவாசர் இராமரைக் காணவந்தார். இலக்குமணர் அவரை விட்டதால், இராமமூர்த்தி அவரிடம் கோபித்துத் தேவர் எதிர்கொள்ளச் சரயுவடைந்து சோதியில் கலந்தருளினார்..... (அத்யாத்ம ராமாயணம்) ஒட்டக்கூத்தர் சிவனியத்தையும் மாலியத்தையும் ஒக்கக் கொண்டவர்; அதனாலேயே, தக்கயாகப் பரணியையும் உத்தர காண்டத்தையும் பாடினார். கம்பரோ, முத்திரு மேனிக் கொள்கையை ஒப்பாவிடினும், மாலியச் சார்பிலேயே முழுமுதற் கடவுளைக் கருதியவர். இது, வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை யொத்தார் என்று அவர் பாடியதால் அறியப்படும். மேலும் கம்பர் திருமாற்பற்று மிக்கவர் என்பதை, ஆசை பற்றி யறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ. பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ என்னும் தற்சிறப்புப் பாயிரப் பகுதிகள் தெரிவிக்கும். இனி, S. வையாபுரிப்பிள்ளை கம்பர்திருநாள்பற்றியதம்கட்டுரையில்ஆரேயெனுமொன்று........fhF¤jnd”என்wஅழகிaசெய்யுளி‹பொருŸகம்ப®பெருமானதுதிருவுsத்தன்மைiயநினைக்Fம்பொழுதுதhன்நமக்Fப்புலப்gடுகின்றJஎ‹றுமொழிந்திருப்பதுகவனிக்கத்தக்fJ. ஆராய்ச்சிப்பெரும்புலவ®மு.இராகவையங்கா®இ¥பாட்lஒட்டக்கூத்த®பாடியதாக¡கூறி,இதனை¡கம்ப®வாக்காfஇக்காலத்தா®மாறி¡கருதுவர்”என்பர். இத்தகைய பத்திச்சுவை மிக்கொழுகும் பாட்டை bநக்குருகிப்ghடும்மd¥பா‹மை,கம்gருக்கேஇருªâருத்தல்வேண்Lம். ஒருN¤âu‹ தவஞ்செய்ய ஒரு பிராமணப் பிள்ளை இறந்ததென்றும், அச் சூத்திரனை ïராமன்bகால்லmப்ãராமணப்ãள்ளைcயிர்பெற்றெழுந்ததென்றும்,Tறும்ãராமணியக்bகாடுமைச்bசய்தியும்;Óதைïலங்கையில்jன்fற்பின்öய்மையைத்Ôக்குளித்துக்fட்டியãன்பும்ïராமன்mயோத்தியில்Cரார்cவலையைப்bபாருட்படுத்திச்Nலியாயிருந்தÓதையைக்fட்டிற்கனுப்பியதும்,Fசலவர்fட்டிற்ãறந்துtன்மீகிKனிவர்jவநிலையத்தில்tழ்ந்ததும்,gரிக்காவுnவள்வியில்(அசுவமேதaகத்தில்)jன்kக்கள்jன்tரலாற்றைப்gடக்nகட்டபின்ïராமன்Óதையைச்Nளிடச்bசால்லmவள்mங்ஙனமேïட்டுÃலவெடிப்புள்åழ்ந்திறந்ததும்,ãன்னர்ïராமன்ïலக்குkணனைbவறுத்துKடிவெய்துதலும்,ïராமாவதாரம்vன்னும்fம்பவிராமாயணïன்பத்தைkறைக்கும்Jன்பச்bசய்தியாதலால்,cத்தரïராமாயணத்தையும்tன்மீகிÆராமaணத்தின்Kதல்eற்rருக்கங்களையும்fம்பர்gடாதுÉட்டார்nபாலும்!நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடைநி கழ்ந்தவி ராமாவ தாரப்பேர்த் தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை என்னுங் கம்பர் கூற்றும் ஒருகால் இதைக் குறிப்பாகக் குறிக்கலாம். இராமாயணம் என்னும் இராமன் வரலாற்றில் பிறப்பு முதல் முடிசூட்டு விழா வரைப்பட்ட செய்தியைக் கூறும் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும் கம்பரும், அவற்றிற்குப் பிற்பட்ட செய்தி முழுவதையுங் கூறும் உத்தரகாண்டத்தை ஒட்டக் கூத்தரும், பாடினர் என்பது, பூணிலாவுங் கம்பனலம் பொலியுந் தமிழாற் புகழெய்திக் காணும்ஆறு காண்டமுறுங் கதையிற் பெரிய காதையெனும் தாணிலாவுங் கழலபயன் சபையிற் பயிலுத் தரகாண்டம் வாணிதா சன்அரங் கேற்றவைத் தார்சோழ மண்டலமே என்னும் சோழமண்டல சதகப் பாட்டால் தெரியவரும். வாணிதாசன் என்பது, கலைமகளடியான் என்னுங் கருத்தால் ஒட்டக்கூத்தருக் கொருபெயர். வாணிதாசன் வேறு; கம்பரை நெடுநாட் பகைத்துப்பின் நட்பான வாணியதாதன் வேறு. முன்னவர் செங்குந்த மரபினர்; பின்னவர் வாணியர் என்னுஞ் செக்கார் மரபினர். உத்தர காண்டத்தில், இராமனுக்கு முற்பட்ட அரக்கர் செய்தியும் சொல்லப்பட்டிருப்பினும், அது உண்மையில் இராமாயணச் செய்தியாகாது. ஒட்டக்கூத்தரும் கம்பரும் முறையே மூத்தோரும் இளை யோருமாக ஓரளவு ஒருகாலத்தவ ரென்று கொள்ளுங்காலும், வீராசாமிச் செட்டியாரின் விநோதரசமஞ்சரிக் கதையை நம்பவேண்டியதில்லை. இளைய கம்பரே சிறந்த முற்பகுதியைச் சிறப்பாக முந்திப் பாடியபின், மூத்த ஒட்டக்கூத்தர் சிறவாத பிற்பகுதியைத் தமக்கியன்றவாறு பிந்திப் பாடியிருக்கலாம். புலமை முதிர்ச்சிக்கோ வினைத்திறமைக்கோ மூப்பு அல்லது பெரும்பருவம் இன்றியமையாததன்று. திருஞான சம்பந்தரும் நம்மாழ்வாரும் இளமையிலேயே அறிவையும் ஞானமும் பாத்திறமும் முதிர்ந்திருந்தனர். அத்தகைய இள முதிர்ச்சி (precocity) சிறப்பருட் செயலாகும். திருஞானசம்பந்தர் மிக இளையவராயிருந்தும் மிக மூத்தவராயிருந்த திருநாவுக்கரசராற் சிவிகை சுமக்கப் பெற்றதும், நாட் பார்த்து வினை செய்யாமையும், பாண்டியன் சுரந்தணித்துச் சமணரை வென்று வீழ்த்தியதும், தென்மொழித் தேவாரத்தால் வடமொழி மந்திரத்தை வலியறுத் தொழித்த தும், பிறவும், அவரது பெருஞ் சிறப்பை விளக்கிக் காட்டுவது போன்றே, கம்பரின் நுண்மாண் நுழைமதியும் வியன் புலமையும் வண்ணனை வன்மையும் பாத்திறனும் படைத்து மொழியாற்றலும், பகைவரும் வியக்கும் அவரது தனிச் சிறப்பைப் பிறங்கக் காட்டும். தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லாம் அராவும் அரமாயிற் றன்றே - இராவணன்மேல் அம்புநாட் டாழ்வான் அடிபணியும் ஆதித்தன் கம்பநாட் டாழ்வான் கவி என்பது கம்பர் பாடலைச் சிறப்பித்துக் கூறும் தனியன். பரிவேள்விச்சாலையில் குசலவர் இராமாயணக் கீர்த்தனம் பாடக் கேட்ட இராமன் அவரை நோக்கி, இந்த இராமாயணம் எவ்வளவு பெரிது? இது எதுவரையில் எழுதப்பட்டது? இதை எழுதியவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? என வினவ, அக் குசலவர் இராமாயணம் இயற்றியது வான்மீகி பகவான். அவர் இங்கு யாகத்துக்கு வந்திருக்கிறார். இராமாயணம் 24,000 சுலோகம், 100 உபாக்கியானம், 500 சருக்கம், முதலில் ஆறு காண்டம், கடைசியில் உத்தரகாண்டம். இப்படி எங்கள் ஆசிரியனால் உம்முடைய சரித்திரம் அமைக்கப் பெற்றது. கதாநாயக னுடைய சீவகால பரியந்தமான விடயம் இதில் அடக்கம். இதைக் கேட்க விருப்பமாகில், காரியம் முடிந்ததும் விநோதமாய்க் கேட்கலாம் என விடையிறுத்தனர். இராமன் அப்படியே ஒப்புக் கொண்டார். குசலவர் வான்மீகியிடம் போயினர் என்று,திருவரங்கம் பெரிய கோயில் இதழாசிரியர் திரு. பார்த்தசாரதி ஐயங்கார் தம் உத்தர காண்ட சங்கிரகம் என்னும் பொத்தகத்தில் எழுதியிருப்பதால், வான்மீகியார் இராமர் காலத்திலேயே ஆறு காண்டங் கொண்ட தம் இராமாயணம் முழுவதையும் பாடிவிட்டார் என்றும், அவர் மறைந்த பின் உத்தரகாண்டம் என்பதைத் தனிப் பனுவலாகப் பாடி முடித்தார் என்றும், அறியலாம். திருவரங்கத் தமுதனார் இவர் 108 கட்டளைக் கலித்துறை கொண்ட இராமானுச நூற்றந்தாதியும், 40 கலிவெண்பாக் கண்ணி கொண்ட திருப்பதிக் கோவையும் பாடினார். இராமானுச நூற்றந்தாதியின்படி, ஆழ்வார் காலவரிசை பின்வருமாறு அமையும். 1. பொய்கை யாழ்வார் 2. பூதத் தாழ்வார் முதலாழ்வார் மூவர் 6ஆம் நூற்றாண்டு 3. பேயாழ்வார் 4. திருப்பாணாழ்வார் 5. திருமழிசை யாழ்வார் 7ஆம் நூற்றாண்டு 6. தொண்டரடிப்பொடி யாழ்வார் 7. குலசேகராழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாளாழ்வார் 8ஆம் நூற்றாண்டு 10. திருமங்கையாழ்வார் 11. நம்மாழ்வார் 9ஆம் நூற்றாண்டு 12. மதுரகவி யாழ்வார் அருளாளப்பெருமான் எம்பெருமானார் வடநாட்டினின்று வந்து இராமானுசரின் மாணவடி யாரான இவர், ஞானசாரம், பிரமேயசாரம் என்னும் இரு மாலிய நூல்களை இயற்றினார். முன்னது 40 வெண்பாக்களும் ஒரு தனியனுங் கொண்டு, திருமால் திருவடிப் பற்று வீடுபேற்றைத் தப்பாதளிக்கும் என்றும்; பின்னது 10 வெண்பாவும் ஒரு தனியனுங் கொண்டு வீடுபேற்றுவழி இறைவன் தொண்டே யன்றிக் கரும ஞானமல்ல என்றும் கூறுவன. 14ஆம் நூற்றாண்டு திருவேங்கட முடையான் (வேங்கட நாதன்) என்னும் இயற்பெயர் உடையவரும் மாலிய வடகலை மரபைத் தோற்றுவித்தவருமான வேதாந்த தேசிகர், பிறப்பிலேயே பெறற்கரிய திருவருட்பேறு பெற்று இளமையிலே வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லுநராய், இனிய தமிழில் 24 பனுவல்கள் பாடியுள்ளார். அவற்றுள் 4 இறந்து பட்டன. எஞ்சிய 20 வருமாறு: 1. அமிருத ரஞ்சனி (திருமால் திருவடி சேர்க என்னும் திருநுவற்சி, பல்வகை யாப்புடைய 39 பாடல்) 2. அதிகார சங்கிரகம் (கட்டளைக் கலித்துறையும் பல்வகை மண்டிலமுமான 55 பாடல் கொண்டது, திருவடிப் பெருமை கூறுவது.) 3. அமிருதா சுவாதினி (கலித்துறையும் மண்டிலமுமான 37 பாடல்) 4. பரமபத சோபனம் (21 பாடல்) 5. பரமத பங்கம் (54 பாடல்) 6. அத்திகிரி மகாத்துமியம் (காஞ்சி அத்தகிரி வரதராசப் பெருமானைப் புகழும் 29 பாடல்) 7. அடைக்கலப்பத்து (11 பாடல்) 8. அர்த்த பஞ்சகம் (உறுதிப் பொருள் ஐந்தும் பற்றிய 11 பாடல்) 9. வைணவ தினசரி (குற்றெழுத்தே கொண்ட கலிமண்டிலம் 10) 10. திருச்சின்னமாலை (11 பாடல்) 11. பன்னிரு திருநாமம் (திருமாலின் 12 திருப்பெயரைச் சொல்லிப் போற்றும் 13 பாடல்) 12. திருமந்திரச் சுருக்கு (திருமந்திரப் பொருளைச் சுருக்கிக் கூறும் 10 பாடல்) 13. துவயச் சுருக்கு (துவய மந்திரப் பொருளைச் சுருக்கிக் கூறும் 12 பாடல்) 14. சரம சுலோகச் சுருக்கு (கண்ணபிரான் பாரதப் போரில் தேர்வலவனாக இருந்து அருச்சனனுக்குத் தன்னிடம் அடைக்கலம் புகச் சொன்ன திருநுவற்சியைச் சுருக்கி யுரைக்கும் 10 பாடல்) 15. கீதார்த்த சங்கிரகம் (பகவற்கீதைச் சுருக்கமான 21 பாடல்) 16. மும்மணிக் கோவை (அகவல் வெண்பா கலித்துறை யாப்பில் திருமாலைப் புகழும் 10 பாடல்) 17. நவரத்தின மாலை (திருவகீந்திரபுர வழுத்தான 10 பாடல்) 18. ஆகார நியமம் (மாலியன் (வைணவன்) உணவுமுறை பற்றிய 21 பாடல்) 19. பிரபந்த சாரம் (ஆழ்வார் பன்னிருவரின் ஊர் பேர் நாள் பாடல் முதலியவற்றைத் தொகுத்துக் கூறும் 20 பாடல்) 20. முனிவாகன போகம் (திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் என்னும் பனுவல் உரை) வெள்ளைப் பரிமுகர் தேசிக ராய்விர காலடியோம் உள்ளத் தெழுதிய தோலையி லிட்டனம் யார்இதற்கென் கொள்ளத் துணியினும் கோதென் றிகழினும் கூர்மதியீர் எள்ளத் தனையும்உக வாதிக ழாதெம் எழில்மதியே என்னும் பாட்டு, வேதாந்த தேசிகரின் உள்ளத் தூய்மையையும், நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ மாநகரின் மாறன் மறைவாழ - ஞானியர்கள் சென்னியடி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றாண் டிரும் என்னும் வாழ்த்து, அவரைப்பற்றிப் பிறர்க்கிருந்த மதிப்பையும், புலப்படுத்தும். அவருடைய புதல்வரான வரதாசாரியர் நயினாராசாரியர், தம் தந்தையார் மீது பிள்ளை யந்தாதி என்னும் பனுவல் பாடினார். கந்தாடை மன்னப்பையங்கார் தேசிகர்மீது தேசிகர் நூற்றந்தாதி என்னும் வெண்பா வந்தாதி பாடினார். வடக்குத் திருவீதிப் பிள்ளையின் புதல்வரும் பிள்ளை லோகாசாரியாரின் இளவலும் ஆகிய அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மாணிக்கமாலை, அருளிச் செயல் ரகசியம், ஆசாரிய இருதயம் என்னும் சமய நூல்களை இயற்றினார். வாதிகேசரி அழகிய மணவாளப் பெருமாள் சீயர் பகவத்கீதை வெண்பா பாடினார். விளாஞ்சோலைப்பிள்ளை ஏழ் வெண்பாக் கொண்ட சப்த காதை பாடினார். இவர் ஆரிய முறைப்படி தாழ்ந்த வகுப்பாரேனும், இவர் பாடலைத் தென்கலைப் பிராமணரும் அன்றாட ஓதுகைக் குரியதாகக் கொண்டுள்ளனர். வில்லிபாரதம் திருமுனைப்பாடி என்னும் நடுநாட்டிற் சனியூரிற் பிறந்த வில்லிபுத்தூராழ்வார், கொங்கர்கோனாகிய வரபதியாட் கொண்டான் வேண்டுகோட்கிணங்கி, வடமொழியிலுள்ள வியாச பாரதத்தையும் அகத்திய பட்டரின் பால பாரதத்தையும் தமிழி லுள்ள பெருந்தேவனார் பாரதத்தையுந் தழுவி, வடமொழிப் பாரதத்திலுள்ள பதினெண் பருவங்களுள் முதற்பத்தை மட்டும் 4351 பாவிசைகளாற் பாடி முடித்தார். வில்லிபாரதம் ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட தென்று, கலியுக வியாதன் சொல்லக் கணபதி யெழுது பாடல் பொலிவுறு தமிழா லாறா யிரமென விருத்தம் போற்றிச் சலிவறு வில்லிபுத்தூர் இறைவனாம் சார்வ பௌமன் ஒலிகெழு மறையோர் கோமான் உயர்ந்தவர் உவப்பச் சொன்னான். என்னும் பழம்பாட்டுக் கூறும். ஆயின், அது அவருடைய புதல்வராகிய வரந்தருவார் 1649 பாட்டுச் சேர்த்துப் பாடி வரந்தருவார் பாரதம் என்று வழங்கிய பனுவலா யிருக்கலாம். வில்லிபுத்தூராழ்வார்க்கும் அவர் தம்பியார்க்கும் இடையே பாகப்பிரிசல் பற்றியிருந்ததாகச் சொல்லப்படும் கலாம் மெய்யா யினும் பொய்யாயினும், வரபதியாட் கொண்டான் தமிழ்ப் பாரதம் பாடுவிக்கக் கொண்ட வேட்கையே, வில்லிபாரதத் திற்கு உண்மையான கரணியம் என்பது, ஆற்றியமெய்ச் செல்வத்தால் அளகையைவென் றிருங்கவினால் அமர ரூரை மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபாகை யினறத்தின் வடிவம்போலத் தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழான் ஆட்கொண்டான் சுற்றத் தோடு போற்றியவிப் புவிமுழுதும் தன்திருப்பேர் மொழிகொண்டே புரந்தான் அம்மா'' பிறந்துய்யக் கொண்டவன்இப் பேருலகம் பெருவாழ்வு கூரும் நாளில் நிறைந்தபுகழ்ச் சனிநகர்வாழ் வில்லிபுத்தூ ரனைநோக்கி நீயு நானும் பிறந்ததிசைக் கிசைநிற்பப் பாரதமாம் பெருங்கதையைப் பெரியோர் தங்கள் சிறந்தசெவிக் கமுதமெனத் தமிழ்மொழியின் விருத்தத்தாற் செய்க வென்றான் என்று, வரந்தருவார் சிறப்புப் பாயிரங் கூறுவதால் அறியப்படும். ஆக்கு மாறய னாமுதல் ஆக்கிய வுலகங் காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம் வீக்கு மாறர னாமவை வீந்தநாள் மீளப் பூக்கு மாமுதல் எவன் அவன் பொன்னடி போற்றி. முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும் பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன் மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும் என்னும் ஆசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன் என்னும் வில்லிபுத்தூராழ்வார்தற்சிறப்புப்பாயிரப்பாட்டுகள்,உலகம்யாவையும்......ru© நாங்களே, ஓசை பெற்றுயர்.... இராமன் கதையரோ, என்னும் கம்பர் தற்சிறப்புப் பாயிரப் பாட்டுகளை முறையே ஓரளவு ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித் தட்டுதற்கோ அறிவில்லாத் Jரைகள்cண்டு nதசமெங்கும்òலவர்எனத்âÇயலhnk” என்ற பாட்டுச் செய்தியை இன்று பலர் நம்பாவிடினும், அதிகாரத் தொடு கூடிய கல்விச் செருக்கும் போலிப் புலவரின் புரட்டுத் தொல்லையும் மிக்குள்ள காலத்தில், அத்தகையன நிகழக் கூடியனவே. ஒட்டக்கூத்தர் தலை வெட்டினார் என்பது, முடி கத்தரித்து அவமானப்படுத்திய தாகவும் இருக்கலாம். இக் காலத்தும் முடி கத்தரித்தலை முடிவெட்டுதல் என்னும் வழக்குண்மை காண்க. வில்லிபுத்தூராழ்வார் அருணகிரிநாதரை வலியப் போருக் கழைத்து ஒரு பாட்டில் தோற்று mவமானKற்றாரென்பதும்,xப்பந்தப்படிjண்டஞ்bசய்யாமையால்“கருணைக்fருணகிரிvன்னும்gராட்டெழுந்தbதன்பதும்,áவப்புகழ்gடுதலையேmருணகிரிநாதர்jண்டமாகïட்டார்vன்பதற்கேற்ப,“ï‹d«gy பலயோனியில் எய்தாநெறி பெறவே முன்னம்பலர் அடிதேடவும் முடிதேடவும் எட்டா அன்னம்பல பயில்வான்புனல் அணிதில்லையுள் ஆடும் பொன்னம்பல நாதன்கழல் பொற்போடுப ணிந்தான். ஓரேனந் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் அந்தப் போரேனந் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான் புனங்க ளெல்லாம் சீரேனல் விளைகிரிக்குத் தேவதையாம் குழவியையும் செங்கை யேந்திப் பாரேனை யுலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன் பதிபின் வந்தாள் என்பவற்றிலும் இவை போன்ற பிறவற்றிலும், வில்லிபுத்தூ ராழ்வார் சிவ மேம்பாட்டைக் கூறியிருப்பதும், நம்பத் தக்கவாறு ஒன்றோடொன்று தொடர்புடையனவே. வில்லிபுத்தூராழ்வார் என்பது, பெற்றோரால் இடப்பட்ட பெரியாழ்வார் பெயரேயாதலால், அதை வில்லிபுத்தூரர் என்று மாற்றத் தேவையில்லை. இறுதிப் பத்துப் பருவம் இல்லாதும் வடசொல் மிக்கும் இருப்பது, வில்லிபாரதத்திற்குப் பேரிழுக்காம். 15ஆம் நூற்றாண்டு ஆழ்வார் திருநகரியிற் பிறந்து அழகிய மணவாளன் என்று இயற்பெயர் பெற்ற மணவாள மாமுனிகள், நாலாயிரத் தெய்வப் பனுவல் அனைத்தையும் நன்றாய்க் கற்று, 1. உபதேச ரத்தினமாலை (71 வெண்பா) 2. ஆர்த்திப் பிரபந்தம் (60 வெண்பாவும் மண்டிலமும்) 3. திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் முப்பனுவல்களைப் பாடினார். உபதேசரத்தினமாலை ஆழ்வார் மாலிய ஆசிரியர் ஆகியவரின் ஊர் பேர் நாள் தொண்டு முதலியவற்றைக் கூறும். ஆர்த்திப் பிரபந்தம் இராமானுசரைச் சிறப்பாகப் போற்றிப் புகழும். திருவாய் மொழி நூற்றந்தாதி, திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திற் கும் ஒன்றாக 100 வெண்பாக் கொண்டு, பதிகத்தின் முதலீற்றுச் சொற்களையே வெண்பாவின் முதலீற்றுச் சொற்களாக அமைத்து அந்தாதித் தொடையிற் பாடியது. அத்தியூர்க்கோவை இது அத்தியூர் வரதரைப் பற்றியது. ஆசிரியர் தெரியவில்லை. 16ஆம் நூற்றாண்டு செவ்வைச்சூடுவார் பாகவதம் வேம்பற்றூரைச் சேர்ந்த செவ்வைச்சூடுவார் என்னும் பிராமணப் புலவர் 4973 பாடல்கொண்ட பாகவதம் ஒன்று பாடினார். அது பாகவத புராணம் எனவும் வழங்கும். நெல்லி நகர்த் தலைவராயிருந்த வரதராசையங்கார் என்னும் அருளாளதாசர் 9147 பாடல் கொண்ட பாகவதம் ஒன்று பாடினார். அது மகா பாகவதம் என வழங்கும். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் திருக்குருகை யென்னும் ஆழ்வார் திருநகரியிற் பிறந்த தனால் அந்நகர்ப் பெயரை அடையாகப்பெற்ற இப் புலவர், மாறன் திருப்பதிக் கோவை, நம்மாழ்வார் மும்மணிக் கோவை, மாறன் கிளவிமணிமாலை, திருக்குருகை மான்மியம் என்னும் நாற்பனுவலைப் பாடினார். கூடற்புராணம் இது மதுரையிலுள்ள கூடலழகர் கோயில்பற்றியது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. இருசமய விளக்கம் இது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அரிகண்டபுரம் என்னும் ஊரில் காராளர் குலத்திற் பிறந்த அரிதாசர் என்பவரால் இயற்றப்பட்டது. மாலியம் சிவனியம் ஆகிய இரு சமயத்தையும் ஒப்ப நோக்கி, மாலியமே சிறந்ததெனக் கூறுவது. கஞ்சவதைப் பரணி இது கண்ணபிரான் கஞ்சனைக் கொன்றதைக் கூறுவது. 17ஆம் நூற்றாண்டு சோழநாட்டுத் திருமங்கை நகரிற் பிறந்து, வடநூல் தென்னூல்களை முற்றக்கற்று, இரட்டுறல் மடக்கு திரிபு முதலிய அணிகள் அமைய அந்தாதி யென்னும் ஈறு தொடங்கித் தொடையிற் பாடுவதிற் பேராற்றல் பெற்ற பிள்ளைப் பெரு மாளையங்கார் என்னும் அழகிய மணவாள தாசர், திருவரங்கத் தில் வதிந்து திருவரங்கப் பெருமாளையே பாடுவதென்றும் பூட்கைபூண்டு, திருவரங்கத் தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயக ரூசல் என்பவற்றை முன்னும் திருவேங்கடமாலை, திருவேங்கடத் தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி என்பவற்றைப் பின்னும் பாடினார். அவ் வெண்பனுவலும் அட்டபிரபந்தம் எனப்படும். அவையல்லாது, பரப்பிரம வேகம் என்னும் நூலும் திருநறையூர் நம்பி மேகவிடுதூது என்னும் பனுவலும், அவர் பாடினார் என்பர். எண்பனுவலுட் பிற்பட்ட நான்கும் அவர் பாடியதற்கு, பின் வருமாறு ஒரு கதை சொல்லப்படும். முதற்கண் திருவரங்கப் பெருமாளையே அவர் பாடி வந்ததனால், திருவேங்கடப் பெருமாளும் தம்மைப் பாடும்படி வேண்ட, அவர் அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன் என்று மறுத்தார். குரங்கன் = குரங்குகள் வாழும் திருவேங்கடத்திலுள்ள பெருமாள். எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஒருவனே யென்னும் உண்மையை உணர்த்தி அவரது குருட்டுத் தன்மையைப் போக்குதற்கு, பெருமாள் அவரைக் கண்டமாலை நோய் பற்றவிட்டார். அதனாற் பெரும்பாடுபட்டு வருந்தியபின், புலவர் தம் தெய்வப் பழிப்புக் குற்றத்தை யுணர்ந்து, எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஒருவனேயென்று கண்டு வடமலையாகிய திருவேங்கடத்திலும் அதனையொத்த தென்மலையாகிய அழகர்மலையிலும் எழுந்தருளியிருக்கும் பெருமாளைப் பாடி, அதன்பின் தம் தெளிவை முற்றக்காட்ட நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியும் பாடத் தலைப்பட்டார். இனி, திருவானைக் காவிற்கோவில் கொண்டுள்ள சிவ பெருமான் மீது பாட மறுத்துவிட்டார் என்றும் ஒரு வரலா றுள்ளது. அது வருமாறு: திருவானைக்கவிலுள்ள சிவப்பிராமணர் புலவரின் பாத்திறனைப்பற்றிக் கேள்விப்பட்டு, தம்மூர்ச் சிவபெருமான் மீதும் பாட வேண்ட, அவர் யாம் அரங்கனைப் பாடிய வாயால் மற்றொரு குரங்கனைப் பாடுவதில்லை என்று மறுத்துவிட்டார். இங்குக் குரங்கன் என்றது சிவனை. குரங்கம் = மான். குரங்கன் = கையில் மானை யேந்திய சிவன். ஒருநாள் திருவரங்கம் கோயிலைச் சேர்ந்த குரால் (கபிலை) திருவானைக்காப் புனத்துட் புகுந்து மேய்ந்தது. உடனே அங்கத்துச் சிவப்பிராமணர் அதைக் கட்டிவைத்து விட்டனர். திருவரங்கத் தார் சென்று கேட்டபோது, புலவர் வந்தால்தான் விடுவோம் என்றனர். அதைத் திருவரங்கத்தார் புலவரிடம் சொன்னபோது, அவர் ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக் காவில் நுழையாதே என்று பழமொழியும் இருக்கிறதே! நான் அங்கு வரேன். அவரே இங்கு வரட்டும் என்று சொல்லி விட்டார். அதன்பின் திருவானைக் காவாரே திருவரங்கம் சென்று எம் சிவன்மீது பாப் பாடினால்தான் குராலை விடுவோம் என்றனர். அதற்குப் புலவர் பாடுவேன். முதலிற் குராலை விடும் என்றார். அப்போது திருவானைக்காவர் சரி. விடுகிறோம். நீர் பாடும் பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்சொல்லும் என்றனர். அதற்கு அவர் மங்கை பாகன் என்றார். உடனே குராலை விட்டு விட்டனர். ஆயின், அப் பாட்டு அச் சீர்களையே கொண்டு தொடங்கி, மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்ப தத்துநீர் வனச மேவு முனிவனுக்கு மைந்த னான தில்லையோ செங்கையா லிரந்த வன்கபாலம் ஆர்அகற்றினார் செய்ய தாளின் மலர்அரன் சிரத்தி லான தில்லையோ வெங்கண் வேழம் மூலம் என்ன வந்த துங்கள் தேவனோ வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்த தில்லையோ அங்கண் ஞாலம் உண்டபோது வெள்ளி வெற்ப கன்றதோ ஆதலால் அரங்க னன்றி வேறுதெய்வ மில்லையே என்று முடிந்தது. திருவானைக்காவர் பெரிதும் ஏமாற்ற மடைந்து எரிசினத்துடன் திரும்பினர். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சிவப்பழிப்பையே செய்கையாக் கொண்டவர் என்னுங் குற்றத்தை மறைத்து, சிவனை நிந்தனை செய்தவ னேயென இவனைச் சிற்சி லிளஞ்சைவர் ஏசுவார் அவன்தன் மாயவன் ஆகத்திற் பாதியென்(று) உவந்து பாடிய பாக்களும் உள்ளவே. என்றென் றுந்தன திட்டதெய் வத்தையே நன்றென் றேத்திடல் ஞானிகள் சம்மதம் அன்றென் றோதவொண் ணாதத னால்அவன் குன்றென் றச்சுத னைக்குறிக் கொண்டதே. சைவ ரிற்சிலர் தாமரைக் கண்ணனை வைவ தொப்ப வயிணவ ரிற்சிலர் மைவ னக்கள வள்ளலை நிந்தனை செய்து துண்டு மதங்கொண்ட சிந்தையால். திரிவு சொற்றிறந் தேடித் தினந்தினம் அரியின் மேற்கவி பாடிடும் அந்தணன் கரிவ லஞ்செய் கருவைமன தன்னிலும் பெரிது நிந்தனை பேசிலன் உண்மையே. வளங்கு லாந்துறை மங்கல வாசன்போல் உளங்க னன்றரி யன்பர் ஒருவரும் களங்க றுத்தவர் ஆயிரர்க் காதுதல் விளங்கொர் பாடல் விளம்பிலர் மெய்ம்மையே என்று புலவர் புராண முடையார் பாடியுள்ளார். பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரனாரான கோனேரியப்பனையங்கார், காப்புப் பாடல் உட்பட 16 எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலங் கொண்ட சீரங்கநாயகரூசல் ஒன்று பாடியுள்ளார். 18ஆம் நூற்றாண்டு அரங்கநாதர் பாரதம் இது, எண்கவனம் (அட்டாவதானம்) அரங்கநாதக் கவிராயர் என் பவரால் வில்லிபாரதத்தொடு 2477 பாடல்கள் சேர்த்துக் கதை முடிக்கப்பட்டது. 3. கடவுள் மத இலக்கியம் காலம், இடம், பெயர், தோற்றம் (வடிவமும் நிறமும்), தோற்றரவு (அவதாரம்), இயல்வரையறை (definition) முதலிய வரம்பீடின்றி, ஒன்றாய் நிற்றமாய் (நித்தியமாய்)த் திரிபின்றி எங்கும் நிறைந்திருக்கும் கருத்துப்பொருளாய், இயல்பாகவே எல்லா அறிவும் எல்லாம் வல்லமையுங் கொண்டு, மனம் மொழி மெய் ஆகிய முக்கரணமுங் கடந்து நிற்கும் முழுமுதல் இறைவனான அறவாழி யந்தணனே கடவுள். மாந்தர் சிறுதெய்வ வணக்கநிலை கடந்து சிவனியரும் மாலியருமாகி முழுத்தெளிவு பெற்றபின், கடவுண் மதத்தாராவர் துறவு முதிர்ந்து காட்டிலும் மலையிலும் வாழும் முழுத்தூயரான முனிவரே கடவுள் மதத்தாராதல் கூடும். எல்லா நோய்களையுந் தீர்க்கவும் வாழ்நாளை நீட்டிக்கவும் வல்ல மருத்துவ மூலிகளும் தழைகளும் மலைகளிலேயே உண்டு. மலையின் பெருமைக்குத் தக்கவாறு மருந்துச் செடிகளும் சிறந்திருக்கும். இந்திரசித்து விடுத்த பிரமன் கணையால் மயங்கி விழுந்த இலக்குமணனைத் தெளிவிக்க, பனி மலையிலுள்ள நல்வாழ்வி (சஞ்சீவி) மூலியை மலைமுடி யொடும் அனுமன் பெயர்த்து வந்ததாகக் கூறும் இராமகாதைச் செய்தியை நோக்குக. ஒருவகைப் பச்சிலைச் சாற்றிற்குத் தாழ்ந்த மாழையை (உலோகத்தை) உயர்ந்த பொன்னாக மாற்றும் ஆற்றலுமுண்டு. அதனால், மருத்துவமும் பொன்னாக்கமும் (இரசவாதமும்) சித்தர் என்னும் கடவுண்மத முனிவரொடு தொடர்புபடுத்திச் சொல்லப் படும். ஆடவராயினும் பெண்டிராயினும், கற்றோராயினும் மற்றோராயினும், இளையோராயினும் மூத்தோராயினும், ஒருவர் மனத்தூய்மையும் உள்ளத்திண்மையும் உடையவராயின், அவர் எண்ணியதும் சொன்னதும் முயன்றதும் தப்பாது வாய்க்கும். இல்லறத்தார்க்கே இத்துணை யாற்றல் இயலுமாயின், முற்றத் துறந்த முழுமுனிவர்க்குக் கூடுவிட்டுக் கூடுபாய்தல், மறைந்தியங் கல், வான் வழிச் செல்லுதல், நிலத்துட் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்புள்ளி ருத்தல் முதலிய இறும்பூது வினைகள் இயலாதனவல்ல. இத்தகைய இறும்பூது ஆற்றற்பேற்றைச் சித்தி (siddhi) என்றும், அதையடைந்தவரைச் சித்தர் (Siddhar) என்றும், வடமொழியாளர் சொல்வர். சித்தியென்னுஞ் சொல்லிற்குக் கைகூடல் அல்லது முயற்சி வெற்றி யென்பதே பொருள். ஆதலால், சித்தியைப் பெற்றியென்றும், சித்தரைப் பெற்றியர் என்றும், தமிழிற் கூறலாம். பெறு - பெற்றி = பெற்றது, பெற்ற தன்மை, பேறு. பெற்றியர் = சிறந்த பேறு பெற்றவர். பேறு என்னும் பொதுச் சொற்கும் சிறந்த பேறு என்றும் பொருளிருத் தலால், சித்தரைப் பெற்றியர் என்று சொல்வது பொருத்தமே. வடமொழியாளர், சித்திகளை (பெற்றிகளை) அணிமா (நுண்மை) மகிமா (பருமை), லகிமா (நொய்ம்மை), கரிமா (பளுமை), பிராப்தி (விருப்புப்பேறு). பிராகாமியம் (விருப்பிடஞ் சேறல்). ஈசுரத்துவம் (இறைமை), வசித்துவம் (வயப்படுத்தம்) என எட்டாக வகுத்து அட்டமாசித்தி (எண்பெரும் பெற்றி) என்பர். இறைமையும் இறையடக்கலும் இயலாதனவும் தெய்வப் பழிப்பு மாதலால், தமிழர் கொள்கைக்கும் உண்மைக்கும் மாறாம். ஏனையவை உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ முற்கூறிய வற்றுள் அடங்கும். ஒரு வகுப்பார் பெற்றிகளை எண்வகையாக வகுத்துக் கூறிய மட்டில், அவற்றைப் பெற்றவராகார். பிறப்பில் ஏற்றத் தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் தூய்மையும் இல்லார்; உலகத் துறவுங் கொள்ளார்; ஒருவகைப் பெற்றியும் ஒல்லார். கடவுள் என்னுஞ்சொல், இலக்கியத்தில், சிவன் அல்லது திருமால், முத்திருமேனிகளுள் ஒருவன், வானவன், அருகன், புத்தன், முனிவன், குரவன் முதலிய பொருள்களில் தவறாக ஆளப்பட்டு விட்டதனால், இன்று தன் தொல்சிறப்பை இலக்கிய வழக்கில் இழந்துள்ளது. ஆயினும், உலகவழக்கில் அதன் உயர்வு குன்றவில்லை. தமிழகத்திற் சித்தர் தொன்றுதொட்டுப் பல்வேறு காலத்திற் பற்பலர் இருந்து வந்திருக்கின்றனர். ஆயினும், பதினெண்மர் என்று ஒரு குறித்த தொகையினரையே இலக்கிய மரபு கூறி வருகின்றது. அப்பதினெண்மர் யார் என்று எப் பண்டை நூலுங் கூறவில்லை. அண்மைக்கால வெளியீடுகளே அவர் பெயர்களைப் பின் வருமாறு சிறிதும் பெரிதும் வேறுபடக் கூறிவருகின்றன. நிசா(ஜா)னந்த போதம் (19ஆம் நூற்றாண்டில் அருணாசல குரு இயற்றியது) 1. உதளிகன் (?) 10. பிரமமுனி 2. பொதிகை முனிவர் (அகத்தியர்) 11. உரோமமுனி 3. போகர் 12. வாசமுனி 4. நந்தீசர் 13. குருபரமமுனி 5. பிண்ணாக்கீசர் 14. கமலமுனி 6. கருவூரர் 15. கோரக்கர் 7. சுந்தரானந்தர் 16. சட்டைமுனி 8. திருமூலர் (5-6ஆம் நூற்.) 17. மச்சமுனி 9. கொங்கணர் 18. இடைக்காடர் (15ஆம் நூற்.) இப் பட்டியைக் குறிக்கும் பாட்டு வருமாறு: சீரார்ந்த துணர்மலியு தளிகன்பண் பட்டவிதி திகழ்கின்ற பொதிகை முனிவர் திவ்யகுண போகர்நந் தீசர்பிண் ணாக்கீசர் சீலகரு வூரர்எங்கும் பேரார்ந்த சுந்தரா னந்தர்திரு மூலர்மிகு பெருமைசேர் bகாங்fணமுனிãukKÅ ரோமமுனி வாசமுனி அமலகுரு gரமமுனி கமல முனிவர் ஏரார்ந்த கோரக்கர் சட்டைமுனி மச்சமுனி இடைக்காடர் முதலியர்களோ(டு) இன்னமுயர் முத்தருயர் சித்தர்நவ நாதர்புவி Æவர்மரபிYற்றòனிதர் காரார்ந்த கந்தரக் கடவுளடி யார்மலர்க் கண்ணனடி யாரிவர்கள்தம் கனமிகுந் திடுவனை பாதமல ரென்றும் கருத்திலஞ் சலிசெய்குவாம் 2. பதினெண் சித்தர் ஞானக்கோவை (19ஆம் நூற்றாண் டிறுதியிற் சரவணமுத்துப் பிள்ளையால் தொகுக்கப்பட்டது.) 1. சிவ வாக்கியர் (7-8ஆம் நூற்.) 2. பட்டினத்தார் (14ஆம் நூற்.) 3. பத்திரகிரியார் (14ஆம் நூற்.) 4. பாம்பாட்டீசர் (15ஆம் நூற்.) 5. இடைக்காடர் (15ஆம் நூற்.) 6. அகப்பேய்ச்சித்தர் (15ஆம் நூற்.) 7. குதம்பைச் சித்தர் (15ஆம் நூற்.) 8. கடுவெளிச்சித்தர் (15ஆம் நூற்.) 9. குருமுனிவர் 10. அழுகணிச்சித்தர் (15ஆம் நூற்.) 11. நந்தீசர் 12. ராமதேவர் 13. கொங்கணவர் 14. ரோமநாதர் 15. திருமூலர் (5-6ஆம் நூற்.) 16. கருவூரர் (16ஆம் நூற்.) 17. பொதிகைச்சித்தர் (அகத்தியர்) 18. காகபுசுண்டர் (16ஆம் நூற்.) 3. அபிதான சிந்தாமணி 1. அகத்தியர் 10. மச்சமுனி 2. போகர் 11. வாசமுனி 3. கோரக்கர் 12. கூர்ம முனி 4. கைலாச நாதர் 13. கமலமுனி 5. சட்டைமுனி 14. இடைக்காடர் 6. திருமூலர் 15. பிண்ணாக்கீசர் 7. நந்தி 16. சுந்தரானந்தர் 8. கூன்கண்ணர் 17. உரோமருடி 9. கொங்கணர் 18. பிரமமுனி இனி, இப் பெயரகரமுதலி சித்தர் ஒன்பதின்மர் என்றும் சிலரைக் குறிக்கின்றது. அவர் பெயர் வருமாறு : சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வெகுளிநாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர். 4. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி 1. திருமூலர் 10. கொங்கணர் 2. இராமதேவர் 11. பதஞ்சலி 3. கும்பமுனி 12. நந்திதேவர் 4. இடைக்காடர் 13. போதகுரு 5. தன்வந்திரி 14. பாம்பாட்டி 6. வால்மீகி 15. சட்டைமுனி 7. கமலமுனி 16. சுந்தரானந்த தேவர் 8. போகநாதர் 17. குதம்பைச் சித்தர் 9. மச்சமுனி 18. கோரக்கர் 5. சாம்பசிவம் பிள்ளை தமிழ்-தமிழ்-ஆங்கில அகரமுதலி 1. நந்தி 7. பூனைக்கண்ணர் 2. திருமூலர் 8. போகர் 3. புலத்தியர் 9. புலிக்கை யீசர் (புலிப்பாணி) 4. இடைக்காடர் 10. கொங்கணவர் 5. அகத்தியர் 11. அழுகண்ணி 6. பிண்ணாக்கீசர் 12. பாம்பாட்டி 13. குதம்பை 16. அகப்பேயர் 14. கருவூரார் 17. தேரையர் 15. காலாங்கி 18. சட்டநாதர் இப் பெயர்ப் பட்டிக்குச் சான்றாகப் பின்வரும் பாட்டுக் காட்டப்பட்டுள்ளது: நந்தியகத் தியர்மூலர் பிண்ணாக் கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர் கந்திடைக்கா டரும்போகர் புலிக்கை யீசர் கரூரார்கொங் கணவர்கா லாங்கி யன்பிற் சிந்தியழு கண்ணர்அகப் பேய்பாம் பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர் செந்தமிழ்ச்சீர்ச் சித்தர்பதி னெண்மர் பாதம் சிந்தையுனிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம். 6. மற்றொரு பட்டி 1. திருமூலர் 10. கொங்கணர் 2. இராமதேவர் 11. பதஞ்சலி 3. அகத்தியர் 12. நந்திதேவர் 4. இடைக்காடர் 13. பாம்பாட்டிச்சித்தர் 5. தன்வந்திரி 14. சட்டைமுனி 6. வால்மீகி 15. சுந்தரானந்த தேவர் 7. கமலமுனி 16. குதம்பைச்சித்தர் 8. போகநாதர் 17. கோரக்கர் 9. மச்சமுனி 18. உரோமரிசி சித்தர் ஞானக்கோவை (1947) பதினெண் சித்தர் ஞானக்கோவை என்று முதற்கண் வழங்கிவந்த பாடற்றொகுப்பு, பிற்காலத்தில் திருவள்ளுவர், பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், சுப்பிரமணியர் முதலிய வேறு சிலர் பெயரும் சித்தர் பெயர்ப்பட்டியிற் சேர்க்கப் பட்டுவிட்டதனால், அவர்கள் பாடலுஞ் சேர்ந்து சித்தர் ஞானக்கோவை என்றே இன்று வழங்கி வருகின்றது. இதன் பதிப்பாசிரியர் பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை. பொன்னாக்கமும் மருத்துவமும் உலகியற் பொருள்களா தலால், கடிவு (இயமம்), ஒழுக்கம் (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), தொகைநிலை (பிரத்தியாகாரம்), பொறைநிலை (தாரணை), ஊழ்கம் (தியானம்), நொசிப்பு (சமாதி) என்னும் எண்ணுறுப்போகம் (அட்டாங்கயோகம்), உருவிலா வழிபாடு, உண்மைப்பத்தி, பிறவிக்குலமின்மை, பிராமணியக் கண்டனம், உயிருடலியல்பு, சிற்றின்ப இழிவு, உலக நிலையாமை, ஐம்புல வடக்கம், மனத்தூய்மை, பேரின்பச்சிறப்பு முதலியன கூறும் அறிவை (ஞானம்) ஆகிய மதவியற் செய்திகளே இப் பகுதியிற் கூறப்படும். சித்தர் ஞானக் கோவை கூறும் அகத்தியரும் திருவள்ளு வரும் திருமூலரும் அப் பெயர் கொண்ட பண்டை யறிஞரல்லர். திருமூலர் திருமந்திரம் கடவுண் மத நூலொடு சிவக் கொண் முடிபு நூலாகவும் இருத்தலால், சிவமத இலக்கியப் பகுதியிலும் சேர்க்கப்பட்டது. ஓகம் (யோகம்) அறிவை (ஞானம்) என்னும் இரு பொருட்டுறை பற்றிய செய்திகளும் அதிற் பரக்கக் கூறப் பட்டுள்ளன. எல்லாச் சித்தர் பாடல்களுங் குறிப்பின் மிக விரியு மாதலால், பெருவழக்கான ஒரு சிலர் பாடற் பகுதிகள் மட்டும் இங்குக் குறிக்கப்பெறும். (1) பண்டை மரபுச் சித்தர் பாடல் பாம்பாட்டிச் சித்தர் பாடல் (15ஆம் நூற்றாண்டு) எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய் இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர் அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியு நின்ற ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே தூணைச்சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம் துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம் ஆணைப்பெண்ணும் பெண்ணையாணும் ஆகச் செய்குவோம் ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே.'' மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம் முந்நீருள் இருப்பினும் மூச்ச டக்குவோம் தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம் தார்வேந்தன் முன்புநீநின் றாடு பாம்பே சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச் சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம் வீறுபெறுங் கடவுளை எங்க ளுடனே விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ கூடுபோன பின்பவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன்பதங் குறித்துநின் றாடு பாம்பே சீயுமல முஞ்செறிசெந் நீரும் நிணமும் சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடம துடைந்தால் நாயும்நரி யும்பெரிய பேயுங் கழுகும் நமதென்றே தின்றிடுமென் றாடு பாம்பே கள்ளங்கொலை காமமாதி கண்டித் தவெல்லாம் கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து தெள்ளிதான வெட்டவெளிச் சிற்சொ ரூபத்தை தேர்ந்து பார்த்துச் சிந்தைதெளிந் தாடு பாம்பே சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம்பல தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடு பாம்பே குதம்பைச் சித்தர் பாடல் (15ஆம் நூற்.) வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்பார்க்குப் g£la« VJ¡fo ?-Fj«ghŒ பட்டயம் ஏதுக்கடி ? மெய்ப்பொருள் கண்டு விளங்கமெய்ஞ் ஞானிக்குக் f‰g§fŸ VJ¡fo ?-Fj«ghŒ கற்பங்கள் ஏதுக்கடி ? காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் nfhy§fŸ VJ¡fo ?-Fj«ghŒ கோலங்கள் ஏதுக்கடி ? மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்பார்க்குத் nj§fhŒ¥ghš VJ¡fo ?-Fj«ghŒ தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தார்க்குப் ã‹dhir VJ¡fo ?-Fj«ghŒ பின்னாசை ஏதுக்கடி ? கடுவெளிச் சித்தர் பாடல் பல்லவி பாவஞ்செய் யாதிரு நெஞ்சே - நாளைக் கோபஞ்செய் தேயெமன் கொண்டோடிப் போவான். உருக்கள் 1. நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பண்ணா திருந்திடப் பண்ணும் உபாயம். -பா. 2. நந்த வனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான்ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. -பா. 3. காசிக்கோ டில்வினை போமோ ? - அந்தக் கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ? பேசும்உன் கன்மங்கள் சாமோ ? - பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ ? -பா. 4. பொய்வேதந் தன்னைப்பா ராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போதவா ராதே. மைவிழி யாரைச்சா ராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்துசே ராதே. -பா. பின்றை மரபுச்சித்தர் பாடல் சிவவாக்கியர் பாடல் (7-8ஆம் நூற். ) (1) கடவுளின் கடந்தநிலை அரியு மல்ல அரனு மல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் பெரிய தல்ல சிறிய தல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமுங் கடந்து நின்ற தூர தூர தூரமே (2) உருவிலா வழிபாடு நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றி வந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக் கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவனிருப்பன் என்கிறீர் உம்பதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ச்சிடுந் தராக்களில் வல்ல தேவ ரூபபேதம் அங்கமைந்து போற்றிடில் தொல்லையற் றிடப்பெருஞ் சுகந்தருமோ சொல்லவாய் இல்லையில்லை யில்லையில்லை யீசனாணை யில்லையே கட்டையாற்செய் தேவரும் கல்லினாற்செய் தேவரும் மட்டையாற்செய் தேவரும் மஞ்சளாற்செய் தேவரும் சட்டையாற்செய் தேவரும் சாணியாற்செய் தேவரும் வெட்டவெளிய தன்றிமற்ற வேறுதெய்வம் இல்லையே (3) குருட்டுப் பத்தி கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலுங் குளங்களுங் கும்பிடுங் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லையில்லை யில்லையே பண்டுநாள் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோ திறைத்தநீர்கள் எத்தனை மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை எத்திசையெங் கெங்கும்ஓடி யெண்ணிலா நதிகளிற் சுற்றியுந் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ பத்தியோ டரன்பதம் பணிந்திடாத பாவிகாள் முத்தியின்றிப் பாழ்நரகில் மூழ்கிநொந் தலைவிரே (4) குலவேற்றுமை யின்மை பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டி ருக்குதோ பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரும் உம்முளே மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபேத மாயுருத் தரிக்குமாறு போலவே வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்குலங்க ளானநேர்மை நாடியே யுணர்ந்தபின் மிகைத்தசுக்ல மன்றியேநீர் வேறுமொன்று கண்டிலீர் பகைக்குலங்க ளாகவேநீர் பகர்வதேதும் நல்லதோ. (5) பிராமணியக் கண்டனம் இருக்குநாலு வேதமும் எழுத்தையற வோதினும் பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான் உருக்கிநெஞ்சை யுட்கலந்திங் குண்மைகூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே. பிறந்தபோது கோவணம் இலங்குநூலுங் குடுமியும் பிறந்துடன் பிறந்தவோ பிறங்குநூற் சடங்கெலாம் மறந்தநாலு வேதமும் மனத்துளே யுதித்தவோ நிலம்பிறந்து வானிடிந்து நின்றதென்ன வல்லிரே. (6) ஓகம் (யோகம்) புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத் தவனசோம ரிருவருந் தாமியங்கும் வாசலில் தண்டுமாறி யேறிநின்ற சரசமான வெளியிலே. இரண்டும்ஒன்று மூலமாய் இயங்குசக்கரத் துளே சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோற் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி யூடுபோய் அரங்கன்பட்ட ணத்திலே யமர்ந்ததே சிவாயமே. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரேல் விருத்தராரும் பாலராவிர் மேனியுஞ் சிவந்திடும் அருட்டரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. எழுப்பிமூல நாடியை யிதப்படுத்த லாகுமே மழுப்பிலாத சபையைநீர் வலித்து வாங்க வல்லிரேல் சுழுத்தியுங் கடந்துபோய்ச் சொப்பனத்திலப்புறம் அழுத்தியோ ரெழுத்துளே யமைப்பதுண்மை யையனே. (7) பொய்ச் சித்தர் வாதஞ்செய்வேன் வெள்ளியும்பொன் மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிக்கப் பொன்பணங்கள் தாவெனச் சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக் கவர்ந்துமே காததூரம் ஒடிச்செல்வர் காண்பதும் அருமையே. யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகங்கண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயதுபிடித்தவன்போற் பேருலகிற் சாவரே. காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வதெங்கு மடிப்புமோசஞ் செய்பவர் நேயமாக்கஞ்சாவடித்து நேரபினைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே. காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் தாவிருத்தி ராட்சம்போக தண்டுகொண்ட மாடுகள் தேவியை யலையவிட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட் டலைவரே. சிவவாக்கியர் பற்றிய முரண்பட்ட கதை பன்னீராழ்வாருள் ஒருவரான திருமழிசை யாழ்வாரே, பல மதங்களையும் ஆய்ந்துபார்த்து முடிவிற் சிவனியத்தைக் கடைப் பிடித்தாரென்றும், `சிவசிவ' என்னும் வாக்குடன் பிறந்ததினாலும் `சிவவாக்கியம்' என்னும் 529 பாடற்றொகையைப் பாடினதினாலும் சிவவாக்கியர் எனப்பட்டார் என்றும், சிவனியர் கூறுவர். இக் கூற்றிற்கு, அவ் வோகியர் சிவன் பெயர், அம்மையப்பர் கோலம், திருவைந்தெழுந்து, முப்பத்தாறு மெய்ப்பொருள் முதலிய சிவக் கொண்முடிபுச் செய்திகளையே பரக்கக் கூறியிருப்பது சான்று பகரும். அந்திகாலை யுச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப்ப ணங்களுந் தபங்களுஞ் செபங்களும் சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம் சிந்தைராம ராமராம ராமவென்னும் நாமமே. கதாவுபஞ்ச பாதகங் களைத்துரந்த மந்திரம் இதாமிதாம தல்லவென்றிங் கெய்த்துழலும் ஏழைகாள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாமிதா மிராமராம ராமராம வென்னும் நாமமே. நானதேது நீயதேது நடுவில்நின்ற தேதடா கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே ஆனதேத ழிவதே தப்புறத்தில் அப்புறம் ஈனதேதி ராமராம ராமஎன்னும் நாமமே. என்னும் முப்பாவிசையும் அவர் மாலியத்தைத் தழுவியிருந்த போது பாடியன என்பர். ஆயின், மாலியரோ, அவர் பேயாழ்வாராற் மாலிய ராக்கப்பட்டார் என்றும், அதன்பின்; சாக்கியங் கற்றோம் சமண்கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் - பாக்கியத்தாற் செங்கட் கரியானைச் சேர்ந்தோம்யாம் தீதிலமே எங்கட் கரியதொன் றில். இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான் என்றும் பாடி, இறுதியிற் குடந்தையில் தங்கித் திருச்சந்த விருத்தமும் நான்முகன் திருவந்தாதியும் பாடினர் என்றும் கூறுவர். சிவவாக்கியப் பாடலும் திருச்சந்த விருத்தமும் ஒரே யாப்பிலும் ஒரே சந்தத்திலும் இருப்பதுடன், ஐந்து பாட்டுகள் இரண்டிற்கும் பொதுவாயிருப்பது கவனிக்கத் தக்கது. சிவ வாக்கியப் பாடல்கள் மூன்று முப்பத் தாறினோடு மூன்று மூன்று மாயமாய் மூன்று முத்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்த் தோன்று சோதி மூன்றதாய்த் துலக்க மில்விளக்கதாய் ஏன்றெ னாவி னுட்புகுந்த கென்கொ லோஎம் ஈசனே. ஐந்து மைந்து மைந்துமா யல்ல வற்று ளாயுமாய் ஐந்து மூன்று மொன்றுமாய் நின்ற வாதி தேவனே ஐந்து மைந்து மைந்துமா யமைந்த னைத்து நின்றநீ ஐந்து மைந்து மாய நின்னை யாவர் காண வல்லரே. ஆறு மாறு மாறுமாயொ ரைந்து மைந்து மைந்துமாய் ஏறு சீரிரண்டு மூன்று மேழு மாறு மெட்டுமாய் வேறு வேறு ஞான மாகி மெய்யி னோடு பொய்யுமாய் ஊறு மோசை யாய மர்ந்த மாய மாய மாயனே. எட்டு மெட்டு மெட்டுமாயொ ரேழு மேழு மேழுமாய் எட்டு மூன்று மொன்று மாகி நின்ற வாதி தேவனே எட்டு மாய பாதமோ டிறைஞ்சி நின்ற வண்ணமே எட்டெழுத்து மோது வார்கள் அல்லல் நீங்கி நிற்பரே. பத்தி னோடு பத்துமாயொ ரேழி னோடு மொன்பதாய் நத்தி நாற்றிசைக் குள்நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் பத்து மாய கொத்த மோடு மத்தலமிக் காதிமால் பத்தர்கட் கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே? திருச்சந்தப் பாடல்கள் மூன்று முப்ப தாறினோடொ ரைந்து மைந்து மைந்துமாய் மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய் ஏன்றெ னாவியுட் புகுந்த தென்கொலோஎம் ஈசனே. ஐந்து மைந்து மைந்துமாகி அல்லவற்று ளாயுமாய் ஐந்து மூன்று மொன்று மாகி நின்ற ஆதி தேவனே ஐந்து மைந்து மைந்து மாகி யந்தரத் தணைந்து நின்(று) ஐந்து மைந்து மாய நின்னை யாவர் காண வல்லரே. ஆறு மாறு மாறுமாயொ ரைந்து மைந்து மைந்துமாய் ஏறு சீரிரண்டு மூன்றும் ஏழு மாறு மெட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறொ டாசை யாய ஐந்தும் ஆய ஆய மாயனே. ``எட்டு மெட்டு மெட்டுமாயொ ரேழு மேழு மேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே எட்டி னாய பேதமோ டிறை ஞ்சிநின் றவன்பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வான மாளவே. பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய் பத்தினால் திசைக்கண்நின்ற நாடுபெற்ற நன்மையாய் பத்தினாய தோற்றமோடொ ராற்றல் மிக்க ஆதிபால் பத்தரா மவர்க்கலாது முத்திமுற்ற லாகுமே? மேற் குறித்த பாவிசை யைந்தும், சிவவாக்கியத்தில் தொடர்ந்தும் வரிசையாகவும், திருச்சந்த விருத்தத்தில் இடை யிட்டும் வரிசை தப்பியும், உள்ளன. முன்னதன் மண்டிலங்கள் (விருத்தங்கள்) 529; பின்னதன் மண்டிலங்கள் 120 மட்டுமே. கீழ்வரும் பாட்டு ஒருசொல் வேறுபட்டிருப்பினும், இரண்டிலும் பொருட் போங்கு ஒன்றே யென்பது தெளிவாம். வீடு வேறுபாடு (முக்தி விகற்பம்) ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மைசேர் போக முத்தி புண்ணியத்தில் முத்தி யன்றி முத்தியாய் நாக முற்ற சயனமாய் நலங் கடல் கடந்த தீ ஆக முத்தி யாகிநின்ற தென்கொல் ஆதி தேவனே. (சிவவாக். 252) ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய் நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்துமேல் ஆக மூர்த்தியான வண்ணம் என்கொல் ஆதி தேவனே. (திருச்சந். 17) முத்தியென்ற சொல்லே ஏட்டுப் பிழையாய் மூர்த்தி யென்று மாறியது போலும்! இங்ஙனம் பல நுண்தொடர்புகள் சிவ வாக்கியத்திற்கும் திருச்சந்த விருத்தத்திற்கும் உள்ளன. இனி, ஆகி கூவென்றே யுரைத்த அட்சரத்தின் ஆனந்தம் யோகியோகி யென்பர் கோடி யுற்றறிந்து கண்டிடார் பூகமாய் மனக்குரங்கு பொங்கு மங்கு மிங்குமாய் ஏகமேக மாகவே யிருப்பர் கோடி கோடியே. உதித்தெழுந்த வாலையு முயங்கி நின்ற வாலையும் கதித்தெழுந்த வாலையுங் காலை யான வாலையும் மதித்தெழுந்த வாலையு மறைந்து நின்ற ஞானமும் கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும் ஹீயு மானதே. கூவுங் கீயு மோனமாகிக் கொள்கையான கொள்கையை மூவிலே யுதித் தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே நறைகள்போற் பொருந்தி நின்ற பூரணம் ஆவியாவி யாவியாவி யன்ப ருள்ள முற்றதே. நாத மான வாயிலில் நடிந்து நின்ற சாயலில் வேத மான வீதியில் விரிந்தமுச் சுடரிலே கீத மான ஹீயிலே கிளர்ந்து நின்ற ஹூவிலே பூத மான வாயிலைப் புகலறிவன் ஆதியே. சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே அடுதியான ஆவிலே யரனிருந்த ஹூவிலே இடுதி யென்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே நடுதியென்று நாத மோடி நன்குற வமைந்ததே. அருளிருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே குருவிருந்த வழியில்நின்று ஹூவும் ஹீயு மானதே. என்னும் பாடல்களால், சிவவாக்கியர் இசலாம் மதத்தையும் ஆய்ந்தாரென்றோ, அரபிய ஓகியரொடு தொடர்புகொண்டா ரென்றோ, கொள்ளக் கிடக்கின்றது. முகமது நபியின் காலம் கி.பி. 570-632. அவர் மதம் 630-லேயே நாட்டப்பட்டுவிட்டது. ஆதலால் 7ஆம் நூற்றாண்டிலேயே இசலாமியரான அரபியர் காவிரிப்பூம்பட்டினம், நாகை, காயல் முதலிய துறைநகர்கட்கு வந்திருக்கலாம். அரியுமல்ல அரனுமல்ல என்றும், அரியுமாகியயனு மாகியண்ட மெங்கு மொன்றதாய் என்றும் இறைவனையும், வடிவுபதும வாசனத் திருத்திமூல வனலையே மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையும் முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால் முளரி யாலயங் கடந்து மூலநாடி யூடுபோய் அடிதுவக்கி முடியளவும் ஆறு மாநிலங்கடந் தப்புறத்தில் வெளிகடந்த ஆதி யெங்கள் சோதியை உடுபதிக்கண் அமுதருந்தி யுண்மை ஞான வுவகையுள் உச்சிபட் டிறங்குகின்ற யோகி நல்ல யோகியே என்று அறுநிலைக்கள ஓகத்தையும் பாடக் கூடிய நிலை, திருமழிசையாழ்வாரின் வாழ்க்கையில் இறுதியிலேயேயிருந் திருத்தல் வேண்டும். இரண்டாம் பட்டினத்தார் பாடல் (14ஆம் நூற்.) காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி ஓடே யெடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஓங்குவிண்ணோர் நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரி யர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே. உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணை உண்டுணவிங்(கு) அடைகா யிலையுண் டருந்தத்தண் ணீருண் டருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாம முண்டிந்த மேதினியில் வடகோடுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.'' வீடு நமக்குத் திருவாலங் காடு விமலர்தந்த ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்குசெல்வ நாடு நமக்குண்டு கேட்டவெல் லாந்தர நன்னெஞ்சமே ஈடு நமக்குச் சொலவே ஒருவரும் இங்கில்லையே. கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே. சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்துவிட்டோர் இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈசன் இருக்குமிடம் கல்லிலுஞ் செம்பிலு மோஇருப் பான்எங்கள் கண்ணுதலே. வாதுற்ற திண்புயர் அண்ணா மலையர் மலர்ப்பதத்தைப் போதுற்றெப் போதும் புகலுநெஞ் சேயிந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென் காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே. அட்டாங்க யோகமும் ஆதார மாறும் அவத்தையைந்தும் விட்டேறிப் போன வெளிதனி லேவியப் பொன்றுகண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூற லுண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே. நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே. பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லனைவர்க்குந் தாழ்மைசொல்லித் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெளிந்தவரே. நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றித் தொழூஉம் எழுகோடி மந்திரம் என்னகண்டாய் ஆற்றைக் கடக்கத் துறைதெரி யாமல் அலைகின்றையே. நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணஞ் சந்தி செபமந்த்ர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே. உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேன்உயர் பொன்னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேன்இனி மேலொன்றும் வேண்டிலனே. ஞானவெட்டி(யான்) இது 17-18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது; ஓகச் செய்திகளைக் கூறுவது. ஆசிரியர் தெரியவில்லை. தாயுமானவர் பெற்றியர் (சித்தர்) பெறக்கூடிய பெற்றிகளை (சித்திகளை) எடுத்துக்கூறி, மனவடக்கமே மாபெரும் பெற்றி யென்று குறிப்பிடுகின்றார். கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம் கரடிவெம் புலிவாயையும் கட்டலாம் ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம் கட்செவி யெடுத்தாட்டலாம் வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத்து லாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம் சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம் சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம் தன்னிகரில் சித்திபெறலாம் சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. இனி, இலக்கிய வழக்கிலில்லாது உலக வழக்கில் மட்டும் அடிக்கடி சொல்லப்படுபவர் கல்லுளிச் சித்தர் என்பார். கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி என்பது அவரைப்பற்றிய பழமொழி. தாயுமானவர் (18ஆம் நூற்.) தம் மௌனகுரு வணக்கத்தில் நவநாத சித்தர்களுமுன் னட்பினை விரும்புவார் என்று பாடியிருப்பதால், முதற்கண் ஒன்பதென்று தோன்றிய பெற்றியர் (சித்தர்) தொகை பின்னர் இரட்டித்தது போலும்! அவ் விரட்டிப்பும் இரட்டித்தபின், அவர் தொகைகுறியாது சித்தர்கணம் என்று பாடத்தொடங்கியதாகத் தெரிகின்றது. பெற்றியர் எல்லாரும் பிறவிக்குலத்தை மறுத்தவராதலின், அவர் பெற்றோரை யொட்டி அவர்க்குங் குலங் கூறுவது பொருந்துவதன்று. இரண்டன்மை அல்லது ஓராதன் கொள்கை இலக்கியம் இருபொருளுக்கு இடைப்பட்ட உறவு ஒருமை, இருமை, சிறப்பொருமை என மூவகையாகத்தான் இருக்க முடியும். கதிரவனும் வெயிலும் போன்றது ஒருமை; கதிரவனும் கலங்கரை விளக்கமும் போன்றது இருமை; கதிரொளியும் நிலவொளியும் போன்றது சிறப்பொருமை. இறைவனுக்கும் ஆதனுக்கும் (ஆன்மாவிற்கும்) இடைப் பட்ட உறவு சிறப்பொருமையாகத்தான் இருக்க முடியும். அதுவே இயற்கைக்கும் உத்திக்கும் ஒத்தது. இறைவனும் ஆதனும் ஒரே பொருளாயின், ஆதன் இறைவனால் இன்பம் நுகர இடமில்லை; மேலும், அமலனாகிய இறைவனும் மலனாகிய ஆதனும் ஒளியும் இருளும்போல வேறுபட்டிருப் பதால், ஒரே பொருளாயிருத்தல் இயலாது. இறைவனும் ஆதனும் முற்றுந்தொடர்பற்ற இருவேறு பொருளாயின், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கும் எல்லாம் வலமைக்கும் இழுக்காகும். ஆதலால், இரு நிலைமைக்கும் இடைப்பட்டு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் சிறப்பொரு மையே இறையாதனுறவாம். இது உத்திக்கும் இயற்கைக்கும் முற்றும் ஒத்திருப்பதால், இதுவே தொன்றுதொட்டுத் தமிழர் கொள்கையாயிற்று. இதிற் கருத்துவேறுபா டின்மையால், இது பற்றிய ஆராய்ச்சியும் என்றேனும் எழுந்ததில்லை. வேள்வி யொழுங்கையே மதமாகக் கொண்ட ஆரியப் பூசாரியர், தென்னாடு வந்து தமிழர் மதங்களாகிய சிவனியத்தை யும் மாலியத்தையுங் கடைப்பிடித்தபின், தம் தாழ்வை மறைத்துத் தம்மை மேம்பட்டவராகக் காட்டல் வேண்டி, ஓராதன் உறழ் (ஏகாத்மவாதம்) அல்லது இரண்டன்மைக் கோள்(அத்வைதம்) என்னும் கோட்பாட்டைத் தோற்று வித்தனர். இதை ஒரு நெறியாக வளர்த்தற்குப் பாரதப்போர் ஒரு வாய்ப்பை யளித்தது. கண்ண பிரான் அருச்சுனனின் மனத் தளர்ச்சியைப் போக்கி நெஞ்சுர மூட்டுதற்கு நிகழ்த்திய செவியறி வுறூஉவை, 700 சொலவங் கொண்ட 18 அதிகாரமாக விரிவு படுத்திப் பகவற்கீதை யெனப் பெயரிய ஒரு வடமொழி மறை நூலாக்கி, உலகெங்கும் பரப்பியுள்ளனர். இரண்டன்மைக் கொள்கை மறைமுடிபுகளைக் கூறும் உபநிடதங்களைத் தழுவி யிருத்தலால், வடமொழியில் வேதாந்தம் (மறைக்குடுமி அல்லது மறைமுடிபு) எனப்படும். ஆரிய வேத மந்திரங்கள் சிறு தெய்வங்களை யன்றி இறைவனைக் கூறாமையால், மறைமுடிபுகள் என்பது தமிழ்மறை முடிபுகளையே குறிக்கும். குரவன் பாதத்தண்டை யிருந்து பணிவுடன் கற்கும் மெய்ப் பொருள்நூல் உபநிடதம் (உடன் கீழிருக்கை) எனப்பட்டது என்பர் மேலையறிஞர். (உப = உடன், நி = கீழ், ஸத் = இரு. உபநிஷத் = the sitting down at the feet of another to listen to his words.) அறியாமையை அடக்கி வைப்பதனால் (setting at rest ignorance by revealing the knowledge of the supreme spirit) அப் பெயர் பெற்ற தென்பர் இந்திய வடநூலார். இரண்டன்மை யிலக்கியம், சிவனியச் சார்பாகவும் மாலியச் சார்பாகவும் அவ் விருமதச்சார்பாகவும் தனிச்சார்பாகவும் நால்வழியில் தோன்றியுள்ளது. சிவனியச் சார்பு சிவனிய வகைகளுள் ஒன்று ஒன்றிய உறழ் (ஐக்கிய வாதம்) என்பது. இது, வீடுபெறும் ஆதன் (ஆன்மா) சிவனொடு இரண்டறக் கலந்துவிடும் என்னுங் கொள்கையுடைமையால், இரண்டன்மையின் பாற்பட்டதே. சீகாழிக் கண்ணுடைய வள்ளல் இக் கொள்கையர். அவர் செய்த நூல்கள்: ஒழுவிலொடுக்கம், பஞ்சாக்கர மாலை, நியதிப் பயன், ஞானசாரம், மாயாப்பிரலாபம். பஞ்ச மலக் கழற்றி, சிவஞானபோத விருத்தம், தேவாரவுரை, திருக்களிற்றுப் படியார் அனுபூதியுரை முதலியன. இவை 15ஆம் நூற்றாண்டின. மாலியச் சார்பு பகவற்கீதை. இது ஸ்ரீபட்டர் என்பவரால், 13ஆம் நூற்றாண் டில் வடமொழிப் பகவற்கீதையினின்று மொழி பெயர்க்கப் பட்டது. இருமதச் சார்பு காழிக்கண்ணுடைய வள்ளலின் மாணவரின் மாணவரான சிவஞான வள்ளல், சிவக்கொண்முடிபையும் தேவார திருவாசகங் களையும் போன்றே பகவற்கீதையையும் திருவாய் மொழியையும், போற்றியதொடு இரண்டன்மையையும் மேற்கொண்டு, சத்திய ஞானபோதம், பதிபசுபாச விளக்கம், சித்தாந்த தரிசனம், உபதேச மாலை, சிவஞானப்பிரகாச வெண்பா, ஞான விளக்கம், அத்துவிதக் கலிவெண்பா, அதிரகசியம், சிவாகமக் கச்சிமாலை, கருணாமிர்தம், சுருதிசார விளக்கம், சிந்தனை வெண்பா, நிராமய அந்தாதி, திருமுகப்பாசுரம் முதலிய நூல்களை இயற்றினார். சைவம் சிவத்தோடு சம்பந்த மானவையாற் சைவமே அத்துவிதஞ் சாதிக்கும் - சைவத்தை வேறென்று கொள்ளற்க வேறற்ற வேதாந்தக் கூறென்று கொள்ளுதலே கோள். சைவசித் தாந்தமெல்லாம் தானவ னாகி நிற்றல் மையறு வேத சித்தம் மற்றது நானே யென்னல் உய்வகை யிரண்டு மொன்றென் றோதியென் னுயிர்க்கிலாபம் செய்தசற் குரவன் நீயே திருப்புலி வனத்துளானே. என்னும் பாடல்கள், இவரது இரண்டன்மைக் கொள்கையை விளக்கிக் காட்டும். இவரும் 15ஆம் நூற்றாண்டினர். தனிச்சார்பு பதினைந்தாம் நூற்றாண்டினரும் சோழநாட்டு வீரைமா நகரிற் பிறந்தவருமான தத்துவராய அடிகள், பிற மதச்சார்பற்ற தூய இரண்டன்மை நெறியைத் தோற்றுவித்து. சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம், திருத்தாலாட்டு, பிள்ளைத் திருநாமம், வெண்பா அந்தாதி, கலித்துறை யந்தாதி, சின்னப்பூவெண்பா, தசாங்கம், இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை, நான் மணிமாலை, கலிப்பா, ஞான வினோதன் கலம்பகம், உலா, சிலேடையுலா, நெஞ்சு விடு தூது, கலிமடல், அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, அமிர்தசாரம், பாடுதுறை, ஈசுரகீதை, பிரம கீதை முதலிய இரண்டன்மைக் கொண்முடிபு நூல்களையும் பாடல்களையும் பனுவல்களையும் இயற்றினார். இவர் பாடல்கள், குறுந்திரட்டு. பெருந்திரட்டு (2833 பாடல்) என இரு தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மோகவதைப் பரணியில், பேய்களுக்குத் தேவி கூறியதாக வுள்ள 110 பாடல்கள், சசிவண்ணபோதம் என்னும் பெயரொடு தனிநூலாக வழங்குகின்றன. தத்துவராயர் பாடல்களுள், பாடுதுறை தலைசிறந்ததாகக் கொள்ளப்படும். 17ஆம் நூற்றாண்டு பிரபோதசந்திரோதயம் இப் பெயர் கொண்ட வடமொழி நாடகத்தை மாதைத் திருவேங்கட நாதர் தமிழில் மொழிபெயர்த்தார். ஞானவாசிட்டம் இது வேம்பத்தூர் ஆளவந்தார் வடமொழி யோக வாசிஷ்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது. சிறப்பொருமை யென்னும் இறையாதன் உறவுவகை வடமொழியில் விசிட்டாத்துவிதம் (விசிஷ்டாத்வைத) எனப்படும். இதை மாலியத்திற் கடைப்பிடித்தவர் இராமாநுசர். துவைதம் (த்வைத) என்னும் இருமைக் கொள்கையை மேற்கொண்டவர் மத்துவாசாரியர். 5. சமண இலக்கியம் சாந்தி புராணம் இது இறந்துபட்டது. இதன் பாட்டொன்று வருமாறு: ஆனை யூற்றின் மீன்சுவையின் அசுணம் இசையின் வளிநாற்றத் தேனைப் பதங்கம் உருவங்கண் டிடுக்கண் எய்தும் இவ்வனைத்தும் கான மயிலஞ் சாயலார் காட்டிக் கெளவை விளைத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே. 8ஆம் நூற்றாண்டு பெருங்கதை இது கொங்குநாட்டு விசயமங்கலத்திற் பிறந்த கொங்கு வேளிர் என்பவரால், வடமொழிப் பாவியத்தினின்று அகவல் யாப்பில் மொழி பெயர்க்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுள்; சிலப்பதிகார மும் மணிமேகலையும் போன்று இயைபு என்னும் வனப்பு வகையைச் சேர்ந்தது; குருகுலத்தவனும் கௌசாம்பி நகரத் தரசனுமான சதானிகனுடைய புதல்வன் உதயணனது வரலாற்றை விரிவாகக் கூறுவது; ஆறு காண்டங்களையும் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளையுங் கொண்டது. இது கொங்குவேண் மாக்கதை எனவும் உதயணன் கதை எனவும் படும். இதன் முதற் காண்டத்தின் முதல் 31 பகுதிகளும், 5ஆம் காண்டத்தில் 9ஆவதிற்கு மேற்பட்ட பகுதிகளும், 6ஆம் காண்டம் முழுமையும், இறந்துபட்டன. 9ஆம் நூற்றாண்டு வளையாபதி இது இறந்துபட்ட ஒரு தொடர்நிலைச் செய்யுள். இன்று கிடைப்பன இதன் பாவிசைகளுள் எழுபத்திரண்டே. அவை யாவும் பாவினங்கள். (கிறித்துவிற்குப் பிற்பட்ட) ஐம்பெரும்பாவியங்களுள் வளையாபதி ஒன்று. சீவகசிந்தாமணி இது திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவரால், சீவகன் என்னும் ஒர் அரசன் பிறந்தது முதல் வீடு பெற்றது வரையுள்ள கதையைப்பற்றி, பாவினயாப்பிற் பாடப்பட்ட ஒரு பெரும்பாவியம். இது காண்டத்தையொத்த 13 இலம்பகம் என்னும் பகுதிகளையும், 3145 பாவிசைகளையுங் கொண்டது. இது எண்வேறு மணங்களைக் கூறுவதால் மணநூல் என்றும் சொல்லப்படும். இதற்கு முதனூல் வடமொழியிலுள்ள க்ஷத்திரசூடாமணி என்று சமணர் கூறுகின்றனர். பண்டையிலக்கிய வுரையாசிரியராலும் இலக்கண வுரையாசிரியராலும் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெற்ற, அளவை நூல்களுள் இதுவும் ஒன்று. அதனால், ஐம்பெரும் பாவியங்களுள் ஒன்றாக இதையுங் கொண்டுள்ளனர். சீவக சிந்தாமணி என்பதே இதன் முழுப்பெயராயினும், சிந்தாமணி யென்று குறுகிவழங்குவதே பெருவழக்கு. சிந்தா மணிதிகழ் சிலப்பதி காரம் மணிமே கலைவளை யாபதி குண்டல கேசி பஞ்சகா வியமெனக் கிளத்துவர். திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர் விருத்தக் கவத்திறமும் வேண்டேம் - உருத்தக்க கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் குறளணுகேம் எங்கெழிலென் ஞாயி றெமக்கு. என்னும் பாட்டுகளில், சிந்தாமணியை முன் வைத்திருப்பது உயர்வுநவிற்சியுங் காலவழுவுமாயினும், ஒருசார் மக்கட்கு அது பற்றியுள்ள உயர்ந்த மதிப்பு புலனாகின்றது. திருத்தக்கதேவர் சோழர் குடியினர் என்பது செவிமரபுச் செய்தி. கலியாணன் கதை இது இறந்துபட்டது. இறுதியெழுத்துஞ் சொல்லு மிடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம் உதயணன் கதையும் கலியாணகதையும்.....v‹DÄt‰W£ கண்டுகொள்க. (யாப்.வி.உரை, ப. 195) உதயணன் கதையும் கலியாண கதையும் என் என்னும் அசைச்சொல்லா லிற்ற நிலைமண்டிலம். (யாப்.வி.உரை,ப. 262) இவற்றால், கலியாணன் கதை இயைபு வனப்பைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. எம்பாவை கோழியுங் கூவின குக்கில் குரலியம்பும் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழீசூழ் வையத் தறிவ னடியேத்தி கூழை நனையக் குடைந்துங் குளிர்புனல் ஊழியுள் மன்னுவோம் என்றேலோ ரெம்பாவாய். (யாப்.வி.உரை மேற். ப. 345) இதினின்று, திருப்பாவையும் திருவெம்பாவையும் போன்று ஒரு பாவைப்பனுவல் இருந்திறந்ததாக உய்த்துணரப்படுகின்றது. புத்தமத கண்டன நூல் இங்ஙனம் ஓர் எதிர்நூல் இருந்ததாக உய்த்துணரப்படு »ன்றது.(K.m.,j.ï.tuyhW, 9ஆம் நூற். முதற்பாகம், ப. 405) 10ஆம் நூற்றாண்டு நாரத சரிதை இது இறந்துபட்ட ஒரு தொன்மம் (புராணம்). அமிர்தபதி இது இறந்துபட்ட ஒரு பாவியம் சூளாமணி இது தோலாமொழித்தேவர் என்னும் புலவர் பயாபதி என்னும் அரசனையும் அவன் புதல்வரான விசயன், திவிட்டன் என்னும் இரு மன்னரையும்பற்றிய கதையை, சருக்கம் என்னும் 12 பிரிவும் 2131 மண்டிலங்களும் (விருத்தங்களும்) கொண்ட தாகப் பாடிய பாவியம். இதை ஐஞ்சிறு பாவியங்களுள் ஒன்றாகக் கூறுவது வழக்கு. ஆயின், திறனாய்வுப் புலவர் அதை மறுத்து, இதையும் ஒரு பெரும் பாவியமாகக் கொள்வர். நீலகேசி இது, பழையனூர் நீலிப்பேய் நீலகேசி யென்னும் பெண் வடிவு கொண்டு, சமணத்தை மேற்கொண்டு, குண்டலகேசி, அருக்க சந்திரன், மொக்கலன், புத்தர் ஆகியோரைத் தருக்கத்தில் வென்று புத்த மதத்தையும், பின்னர் அங்ஙனமே ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேத வாதம், பூதவாதம் ஆகிய மதங்களையும், கண்டனஞ்செய்து சமணத்தை நிலைநாட்டிய தாகக் கூறும் படைத்துமொழிப் பாவியம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது சருக்கம் என்னும் 10 பகுதிகளையும் 894 பாவிசைகளையுங் கொண்டது; ஐஞ்சிறு பாவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுவது. இதற்கு நீலகேசித்திரட்டு (அல்லது தெருட்டு) என்றும் பெயர். 12ஆம் நூற்றாண்டு அருங்கலச்செப்பு இது 180 குறட்பாக் கொண்ட சமணக் கொண்முடிபு நூல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 13ஆம் நூற்றாண்டு யசோதர காவியம் இது யசோதரன் என்னும் அவந்திநாட்டு மன்னன் வரலாற்றை, சருக்கம் என்னும் 5 பிரிவுகளும் 330 பாவிசைகளுங் கொண்ட பாவியமாகப் பாடியது; சிறுபாவியம் ஐந்தனுள் ஒன்றாகச் சொல்லப்படுவது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 14ஆம் நூற்றாண்டு மேருமந்தர புராணம் இது, வாமன முனிவரால் மேரு, மந்தரன் என்னும் இரு அரசப் புதல்வரின் பல பழம் பிறவிகளையும் இறுதி வீடு பேற்றையும்பற்றி, சருக்கம் என்னும் 13 பகுதிகளையும் 1405 பாவிசைகளையும் கொண்ட பாவியமாகப் பாடப்பட்டது. அவிரோதிநாதர் இவர் பாடியவை திருநூற்றந்தாதி, திருஎம்பாவை என்னும் இரு அருக வழுத்துப் பனுவல்கள். முன்னது, ஈறு தொடங்கித் தொடையிற் பாடப்பட்ட 100 கட்டளைக் கலித்துறைகளையும், பின்னது 20 பாவைப் பாட்டுகளையும், கொண்டனவாகும். சீவசம்போதனை இது தேவேந்திர முனிவரால், பல்வகை யாப்பில் 550 பாடல் கொண்டதாக இயற்றப்பட்ட சமணக் கொண்முடிபு நூல். 15ஆம் நூற்றாண்டு உதயண குமார காவியம் இது பெருங்கதையிற் சொல்லப்பட்ட உதயணன் வரலாற்றை, மண்டில யாப்பில் தொகைச் செய்யுள் இரண்டைச் சேர்த்து 379 பாவிசை கொண்டதாகப் பாடிய பாவியம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐஞ்சிறு பாவியங்களுள் ஒன்றாகச் சேர்க்கப்பட் டுள்ளது. இச் சேர்ப்பைத் திறனாய்வாளர் கண்டிப்பர். இது சிறுபாவிய மாயினும் மூலப்பாவியம் போன்றே உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக் காண்டம் என ஆறுகாண்டமாகப் பகுக்கப்பட்டு முற்றுஞ் சிதையாதிருப்பதால், முன்னும் பின்னும் இறந்துபட்ட பெருங்கதைப் பகுதிகளிலுள்ள உதயணன் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு, பெரிதுந் துணையாயிருக்கின்றது. இஃதொன்றே இதன் பயனாகும். திருக்கலம்பகம் இது, தொண்டைநாட்டுப் பையூர்க் கோட்டத்து ஆரணி நெடுந்துறையைச் சேர்ந்த ஆர்ப்பாகை என்னும் ஊரினரான. உதீசித் தேவர் என்னும் சமணத் துறவியால், அருக வழுத்தாகப் பாடப்பட்ட 110 பாடல் கொண்ட கலம்பகப் பனுவல். ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் இது அயோத்தியில் அரசாண்ட விடப (விருஷப) தேவர் மீது பாடப் பட்ட பிள்ளைத்தமிழ். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. குறிப்பு : மணிப்பவள நடையினவும் சின்னஞ் சிறியனவும் முற்றும் இறந்துபட்டனவுமான நூல்களும் பனுவல்களும் இங்குக் கூறப்படவில்லை. 6. புத்த இலக்கியம் 2ஆம் நூற்றாண்டு மணிமேகலை கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையையும் துறவையும்பற்றி, கடைக்கழகப் புலவருள் ஒருவராகச் சொல்லப்படும் சீத்தலைச் சாத்தனாரால், அகவல் யாப்பில் (காதை யென்னும்) 30 பாட்டுகளால் இயைபு என்னும் வனப்பாகப் பாடப்பட்ட பாவியம், மணிமேகலை என்றே பெயர் பெற்றது. இது ஐம்பெரும் பாவியங்களுள் ஒன்று. காதை என்பது வடசொல்; பாட்டு என்பது தென்சொல். 9ஆம் நூற்றாண்டு விம்பிசாரக் கதை, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், புத்த நூல், மானாவூர்ப் பதிகம் இந் நூற்றாண்டின. இவை இன்றில்லை. 10ஆம் நூற்றாண்டு குண்டலகேசி ஐம்பெரும் பாவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குண்டலகேசி, அப் பெயர் கொண்ட ஒரு வணிகக் கன்னிகை காளன் என்னுங் கள்வனைக் காதலால் மணந்து, ஒருநாள் அவனைக் கள்வனென்று பழித்ததனால் அவன் சினந்து ஒரு சூழ்ச்சியால் தன்னைக் கொல்ல முனைய, அச் சூழ்ச்சியை வேறொரு சூழ்ச்சியால் வென்று தானே அவனைக் கொன்றபின், சமணத் துறவியாகித் தருக்கத்தில் ஒரு புத்த மாணவர்க்குத் தோற்றுப் புத்தரிடம் அடைக்கலம் புகுந்தாள் என்னும் கதைபற்றிய, இறந்துபட்ட பாவியம். இது, ஒரு தருக்கப் பாவியம் என்பது, தருக்கமாவன : ஏகாந்தவாதமும் அநேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும், சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளுங் காண்க என்னும் யாப்பருங்கல விரிவுரையால் (ஒழி. 3) அறியப்படும். இதன் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார் என்று நீலகேசியுரை கூறும். இது தவறென்றும், நாகசேனர் என்பதே அவர் பெயரென் றும் ஆராய்ச்சிப் புலவர் மயிலை சீனி. வேங்கடசாமியார் கூறுவர். 7. கிறித்தவ இலக்கியம் 16ஆம் நூற்றாண்டு கிறித்தவ வேதோப தேசம் என்னும் உரைநடை நூல் 1577-ல் ஏசுசபைக் குரவர் ஒருவரால் எழுதப்பட்டது. கிறித்தவ வணக்கம் (Doctrina Christiana) என்னும் உரைநடைநூல் 1579-ல் ஆன்ரிக்சு (Anriquez) என்னும் ஏசுசபைக் குரவரால் எழுதப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு இராபர்ட்-டி-நொபிலி (Robert De Nobili) என்னும் இத்தாலிய ஏசுசபைக் குரவர் 1606-ல் தமிழ்நாடு வந்து தமிழும் சமற்கிருதமுங் கற்று, மதுரையில் தங்கி, காவியும் பூணூலும் அணிந்து மரக்கறியுணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று சொல்லிக்கொண்டு, நூற்றுக்கணக்கான பிராமணரைக் கிறித்தவராக்கினார். அவர் எழுதிய உரைநடைநூல்கள் : ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம், தூஷண திக்காரம், சத்தியவேத லஷணம், சகுணநிவாரணம், பரமசூட்சுமாபிப் பிராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்திய ஜீவன்சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்தியாசம், பிரபஞ்ச விரோத வித்தியாசம் முதலியன. அவர் இறுதிக் காலத்தில் இனமறியப்பட்டு மதிப்பிழந்து மயிலையில் 1656-ல் இறந்தார். 18ஆம் நூற்றாண்டு வீரமா முனிவர் என்று தமிழராற் பாராட்டப் பெற்றவரும் இத்தாலிய ஏசுசபைக் குரவருமான கான்சுத்தாந்தியசு யோசேப்பு பெசுக்கி (Constantius Joseph Beschi), தம் திருவூழியத்திற் கேற்றவாறு பன்மொழிக் கல்வித்திறனும் தருக்க மதிநுட்பமும் நாவன்மை பாவன்மையும் வசியத் தோற்றப் பொலிவும் அயராவுழைப் பாற்றலும் இறைவனருளால் இயற்கையிலமையப் பெற்று, தம் தாய்நாட்டிலேயே இத்தாலியம், இலத்தீனம், பிரெஞ்சு, இசுப்பானியம், போர்த்துக் கீசியம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய இலக்கியச் செம் மொழிகளை முற்றுக்கற்று, 1707-ல் இந்தியா வந்து 1708-ல் மதுரையடைந்து தமிழ் தெலுங்கு சமற்கிருதம் ஆகிய மும்மொழியும் செம்மையாய்க் கற்றுத் தேர்ச்சிபெற்று, தம் ஊண் உடை உறையுள் வழிச்செலவு வாழ்க்கை முறை ஆகியவற்றை அக்காலத்திற்கேற்ப ஒரு தமிழத் திருமடத் தம்பிரான்போல் ஆரவாரத் துறவொழுக்க முறையில் அமைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டக் காமயா நாயக்கன்பட்டி, கயத்தாறு, கல்லுப்பட்டி முதலிய ஊர்களில் முன்னும், திருச்சிராப் பள்ளி மாவட்ட வடுகப்பட்டி (திருக்காவலூர்), ஆவூர் முதலிய இடங்களிற் பின்னும், வதிந்து, கிறித்தவ மதப் பரப்புரை செய்து பாடியும் வரைந்தும் அருளிய கிறித்தவ இலக்கியம் வருமாறு: செய்யுள் 1) திருக்காவலூர்க் கலம்பகம், 2) கித்தேரி யம்மாள் அம்மானை, 3) அடைக்கலமாலை, 4) அடைக்கல நாயகி வெண்கலிப்பா, 5) அன்னை அழுங்கல் அந்தாதி, 6) தேவாரம், 7) வண்ணம், 8) தேம்பாவணி முதலியன. உரைநடை 1) வேதியர் ஒழுக்கம், 2) வேத விளக்கம், 3) பேதகமறுத்தல், 4)லுத்தேரினத்தியல்பு, 5) கடவூர் நாட்டுத் திருச்சபைக்குத் திருமுகம், 6) திருச்சபைக்குப் பொதுத் திருமுகம், 7) திருச்சபைக் கணிதம் முதலியன. இவர் கற்ற ஏனை மொழிகளும் இவரது அகக்கரணச் சிறப்பும், இவர் தமிழுக்குச் செய்த ஈடிணையற்ற பல்வகை அரும் பெருந் தொண்டும், பொதுவிலக்கியம் என்னுந் தலைப்பின் கீழ்க் கூறப்படும். தேம்பாவணியென்னும் தீம்பாப் பாவியம், 3 காண்டங் களையும் 36 படலங்களையும் 3615 பாவிசைகளையுங் கொண்டது. போலிகைத் தேம்பாவணிப் பாடல்கள் சீரிய வுலக மூன்றுஞ் செய்தளித் தழிப்ப வல்லாய் நேரிய வெதிரொப் பின்றி நீத்தவோர் கடவு டூய வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி யாரிய வளன்றன் காதை யறமுதல் விளங்கச் சொல்வாம். இது கடவுள் வழுத்தும் பாவியப் பொருளுங் கூறும் பாயிரச் செய்யுள். பூரி யார் திருப் போறலை பசியகூழ் நிறுவி நீரி னார்தலை நேரநேர் வளைவொடு பழுத்த ஆர மானுநெல் லறுத்தரி கொண்டுபோ யங்கட் போரி தாமெனக் களித்தனர் போர்பல புனைவார். என்பது சீவக சிந்தாமணியையும், கல்லை ஏற்றலும் கவணினைச் சுழற்றலும் அக்கல் ஒல்லை ஓட்டலும் ஒருவருங் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன சிலைநுதல் பாய்தலும் அன்னான் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலுங் கண்டார். என்பது கம்பவிராமாயணத்தையும், முனிவர் முறைமையாய் நிறை வுறக் கற்றமையைக் காட்டும். திருவாய் மணித்தேன் மலர்சேர்த்த தேம்பா வணியைத் தொழுதேந்தி மருவாய் மணிப்பூ வயனாடு வடுவற் றுய்ய வீங்குற்றேன், உருவாய் வேய்ந்த வென்னிறையோன் உடன்மூ வரின்பொற் பதந்தணிய வெருவாய்ப் புன்சொல் லஞ்சியபின் விருப்பந் தூண்டத் தொழுதணிந்தேன் என்பது, பாவியப் பெயர்ப் பொருளையும் பாவியப் புனைவின் நோக்கத்தையுங் கூறும் இறுதிப் பாடல். தாளணிந்த மதிமுதலாத் தமியனும்அக் கமலத்தாள் தாங்கிலேனோ கோளணிந்த குழலணிதார் குடைவண்டாப் புகழ்பாடி மதுவுண்ணேனோ வாளணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம் ஈன்றவொரு மானாய்வந்தாள் கேளணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப் பசும்புல்லாய்க் கிடவேன்நானோ. என்பது, முனிவர் நாலாயிரத் தெய்வப் பனுவலை நன்கனம் பயின்றதைத் தெரிவிக்கும் திருக்காவலூர்க் கலம்பகப் பாடல். வீரமாமுனிவர் தமிழகத்திற் பிறந்து வளர்ந்தவராயிராது நேரே இத்தாலிய நாட்டினின்று வந்து, அந் நாளிற் சிறந்த தமிழாசிரியராயிருந்த சுப்பிரதீபக் கவிராயர் முதலியோரிடம் ஏட்டுச் சுவடி வாயிலாகத் தமிழிலக்கண விலக்கியங்களை முற்றக்கற்று விரைந்து பாப்பாடும் வன்மையும் பெற்று, வரலாற்றா லன்றி வேறெவ் வகையாலும் வெளிநாட்டாரென்று எவரும் அறியவொண்ணா வகையில், பிற்காலத் தமிழத் தமிழ்ப் பாவலரும் நாணுமாறு பெரிதும் வடசொற் கலப்பின்றி, இயன்றவரை தூய எளிய இனிய ஒழுகிசை நடையில், உயர்ந்த கருத்துகளும் தகுந்த உவமைகளும் அமைத்து, சிறுபனுவல் முதற் பெரும்பாவியம்வரை விரைந்து பாடியிருப்பது பெரிதும் வியக்கத் தக்கதே. வீரமாமுனிவர் நவகாண்டம் என்னும அரிய சித்த மருத்துவ நூலும் இயற்றியதாகத் தெரிகின்றது. அவர் விரைவாகப் பாடும்போது, நான் மாணவர் வரிசையாக அமர்ந்து வரிசைப்படி ஒவ்வோரடியை ஏட்டி லெழுத, ஐந்தாம் மாணவர் அந் நாலடிகளையுஞ் சேர்த்துப் பாட்டாக எழுதிக் காட்டுவர் என்று, ஒரு கதை வழங்கி வருகின்றது. 8. இசுலாமிய இலக்கியம் 18ஆம் நூற்றாண்டு உமறுப் புலவர் செய்கு முகம்மது அலியார் என்பவரின் மகனாராய்ப் பிறந்த உமறுப் புலவர், எட்டயாபுரம் வேளகப் புலவராய்த் திகழ்ந்த கடிகை முத்துப் புலவரின் மாணவர். சேதுநாட்டரசரான இரகுநாத சேதுபதி யவர்களின் அமைச்சரா யிருந்த செய்கு அப்துல் காதிர் என்னும் சீதக்காதி மரைக்காயர், ஒருமுறை எட்டயாபுரம் சென்றிருந்தபோது உமறுப்புலவரைக் கண்டு அவரொடு தொடர்புகொண்டு மகம்மது நபியின் (முன் விளம்பியாரின்) வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் ஒரு பாவியமாகப் பாடித் தம் நெடுநாள் வேணவாவை நிறை வேற்றுமாறு வேண்ட, அவரும் அதற்கிசைந்து, மரைக்காயருடன் அரபிப் பேரறிஞரான செய்கு சதக்கத்துல்லா அப்பா அவர்களை யணுகி, மகம்மது முன்விளம்பியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிவிக்கும் படி வேண்டினார். புலவரின் ஆரவாரத் தோற்றத்தை யும் உடை வகையையும் கண்டு அருவருத்த அரபிப் பேரறிஞர், கடுகடுத்துப் பேசி மறுத்துவிட்டார். மிகுந்த முகவாட்டத்துடனும் மனவருத்தத்துடனும் மரைக்காயருடன் திரும்பிய புலவர், அன்றிரவு பள்ளிவாயிலை யடைந்து, தூதர் நாயகத்தை என்று காண்பேனோ என்னும் ஏக்கமுடிபுடைய 88 பாடல்கொண்ட முதுமணி மாலையைப் (முதுமொழி மாலை) பாடிப் படுத்துக்கொண்டார். மீண்டும் அப் பாவைக் காணும்படி முன்விளம்பியர் நாயகம் ஏவியதாகக் கனாக்கண்ட புலவர், மறுநாள் மரைக்காயருடன் சென்று கண்டவுடன், முந்தின நாள் மறுத்த அரபிப் பேரறிஞர் முகமலர்ச்சியுடன் வரவேற்று, தாமும் பறங்கிப்பேட்டை யிலிருந்த தம் மாணவரான மாமு நைனார் லெப்பையுமாக இருவரும் புலவர் வேண்டிய வரலாற்றை எழுதி யுதவினர். அதன்பின், புலவர் 3 காண்டமும் 92 படலமும் 5627 மண்டிலமும் கொண்ட சீறாப் புராணத்தைப் பாடிமுடித்தார். புராணம் பாடுமுன், மரைக்காயர்மீது 400 பாடல் கொண்ட கோவையும் பாடினர் என்று பேரா. பூரணலிங்கம் பிள்ளை கூறுவர். நாகை யந்தாதி, மக்காக் கலம்பகம் என்னும் இரு பனுவலும் உமறுப்புலவர் பாடினார் என்பர். 9. நம்பா மத இலக்கியம் எல்லா மதங்களும், கடவுள் நம்பிக்கை யுண்மையின்மை பற்றி, நம்புமதம் (உண்டு மதம்), நம்பா மதம் (இல்லை மதம்) என இருவகைப்படும். அவற்றுள், நம்பா மதமும், இம்மைபற்றியதும் மறுமை நோக்கியதும் என இருதிறப்படும். இம்மைபற்றியது உலகியம்; மறுமை நோக்கியது புத்தம். உலகியம் வடமொழியில் லோகாயதம் என்றும் சார்வாகம் என்றும் பெயர் பெறும். சார்வாகன் (Ca#rva#ka) இயற்றிய கொண்முடிபு நூலும் கடைப் பிடித்த மதமும் சார்வாகம். சார்வாகக் கொள்கை வருமாறு காட்சி ஒன்றே அளவை. நிலம், நீர், தீ, வளி (காற்று) எனப் பூதம் நான்கே. அவற்றின் சேர்க்கையால் தோன்றிப் பிரிவால் மாய்வது உடம்பு. அவ் வுடம்பில் அறிவு மதுவின் வெறிபோல் வெளிப்பட்டழியும். இம்மையொடு வாழ்வு முடியும். மறுமை இல்லை. கடவுளும் இல்லை. உடம்பே ஆதன் (ஆன்மா). இன்பமும் பொருளுமே மாந்தன் பெறும் உறுதிப்பொருள். ஆதலால், உலகிலுள்ளவரை இயன்ற அளவு பொருளீட்டி இன்புற வேண்டும். இங்ஙனம் கொண்முடிபு முறையில் இல்லாவிடினும், கடவுளும் மறுமையும் இல்லை யென்றும் இம்மையில் இயன்ற வரை இன்பநுகர வேண்டுமென்றும் கொண்ட கொள்கை, சார்வாகன் தோன்று முன்பே, தொன்றுதொட்டு உலக முழுதும் இருந்து வந்திருக்கின்றது கடவுளில்லை யென்பாரை நோக்கியே, உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும் (குறள். 850) என்றார் திருவள்ளுவர். எள்ளாமை வேண்டுவான்'' (281) என்னும் குறளுரையில்,எள்ளாமைவேண்டுவான்என்னுந்தொடருக்குவீட்டினைஇகழாதுவிரும்புவான்என்றுபொருளுரைத்து,வீட்டினையிகழுதலாவது,காட்சியேஅளவையாவதென்றும்.............ïwªj வுயிர் பின் பிறவா தென்றும்,...... சொல்லும் உலகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல் என்று சிறப்புரையுங் கூறினார் பரிமேலழகர். உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே கண்கூ டல்லது கருத்தள வழியும் இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல் (மணிமே. 27:273-6) என்பது உலகாயதம் பற்றிய மணிமேகலைச் செய்தி. சிவஞான சித்தியார்-பரபக்கத்தில் 22 மண்டிலங்கள் உலகாயதக் கொள்கை பற்றியன. òத்தkதம்fடவுள்bகாள்கைÆன்மையால்eம்பாkதத்தின்gற்படும்.rkz¤ijí« நம்பா மதத்தின் பாற் படுத்துவர் ஒரு சாரார். 2. பொது விலக்கியம் 1. இலக்கணம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு தொல்காப்பியம் இடைக்கழக நகர் (கயவாய்) மூழ்கியபின், பாண்டியன் தனக்கும் தன்போற் கடல்கோட்குத் தப்பிய தன் குடிகட்குமாக, சோழநாட்டிலும் சேரநாட்டிலும் தென்கோடிப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டான். அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லை யிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னு மிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் என்று அடியார்க்கு நல்லாரும் (சிலப். 11 : 17-22, உரை), மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன். (கலித். 104) என்று சோழன் நல்லுருத்திரனும், கூறியது காண்க. மேனாட் டறிஞரான பிளினி (Pliny) என்பாரது குறிப்பை ஆராயுங்கால், சேரநாட்டின் தென்னெல்லை இப்போதுள்ள கொல்லமும் nfh£lh‰W¡fiuí«(Kottarakkara) எனத் தெரிகிறது. மேலும், திருவிதாங்கூரின் தென்பகுதி முற்றும் பாண்டிநாடாகவே இருந்ததென்றும் விளங்குகிறது. பெரிப் புளுசு நூலாசிரியர் குறிப்பும் இம் முடிபையே வற்புறுத்துகிறது என்று உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையும், (சேரமன்னர் வரலாறு, ப. 5) கூறியிருத்தல் காண்க. திருவிதாங்கூர் என்பது திருவதங்கோடு என்பதன் திரிபு. தொல்காப்பியர் வேங்கட மலைக்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட நாட்டு இருவழக்குத் தமிழையும் ஆய்ந்தபின், முழுகிப் போன பழம்பாண்டி நாட்டுத் தனித்தமிழ் இலக்கண நூல்கள் சில கிடைக்கப்பெற்றார் என்பது, செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி (சி. பா.) என்பதனாலும் அவர் தென்திருவாங்கூர் நாட்டிலேயே வதிந்தா ரென்பது யா, பிடா, தளா, உதி, புளி, எரு, செரு, ஒடு, சே, விசை, பனை, அரை, ஆவிரை, ஆண், இல்லம், எகின், ஆர், வெதிர், சார், பீர், பூல், வேல், ஆல், குமிழ், இருள் என்னுங் குறிஞ்சி முல்லை நிலைத்திணைப் பெயர்களையே, பனியென வரூஉம் காலவேற் றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை யாகும். வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. மழையென் கிளவி வளியியல் நிலையும். வெயிலென் கிளவி மழையியல் நிலையும். என்று சேரநாட்டு வழக்கொடு தொல்காப்பியப் புணரியல்களிற் கூறியிருப்பதனாலும்; அவர் பாணினி காலத்திற்கு முந்தியவர் என்பது, மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி (சி. பா.) என்பதனாலும்; அவர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது வைகை மதுரையும் கடைக்கழகமும் தோன்றவில்லை யென்பது, நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து (சி. பா.) என்பதனாலும், அவர் காலத்திலேயே தமிழில் வடசொற் கலக்கத் தொடங்கிவிட்ட தென்பது, இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. (எச்ச. 1) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (எச்ச. 5) சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். (எச்ச. 6) என்பவற்றாலும் அவர் ஆரிய இனத்தார் என்பது, எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரிதல்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே. அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே. (பிறப். 20) அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. (கள.20) அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் (கற். 20) நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. (மர. 71) அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. (மர. 75) என்னும் நூற்பாக்களாலும்; அரங்கேற்ற அவையிற் காரணிகராய் (ஒப்புத லதிகாரியாய்) இருந்தவரும் ரா. இராகவையங்கார் போன்ற ஆரிய வகுப்பினரே யென்பது, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து (சி. பா.) என்பதனாலும்; ஒருசில ஆரியக் கருத்துகள் தவிர மற்றத் தமிழிலக்கண மெல்லாம் முந்துநூல் தொகுப்பே யன்றித் தொல் காப்பியரின் சொந்த அறிவன் றென்பது. புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் (சி. பா.) எழுத்தெனப் படுப ....K¥g~தென்ப.” (எழுத்து. 1) உயர்திணை யென்மனா®மக்க£சுட்l அஃறிணை யென்மனார் அவரல பிறவே (சொல். 1) கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப. (அகத். 1) அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே. (புறத்.1) ஒத்த கிழவனுங் கிழத்தியும் காண்ப (கள. க) சிறந்ததுழி ஐயம் சிறந்த தென்ப (கள. 3) பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற். 4) வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம். (உவம.1) விரவியும் வரூஉம் மரபின என்ப. (உவம 2) மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ .................................................... ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ, நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. (செய். 1) ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே. (செய். 104) பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (செய். 78) என்பவற்றாலும், நூல் நெடுகலும் இடையிடையே ஆசிரியர் என மொழிப, ``என்றிசினோரே, வரையார் என்றும் பிறவாறும் முந்து நூலாரைப் பன்மையிற் சுட்டிச் செல்வதாலும் அறியப்படும். ஐந்திணை நிலத்தையும் தெய்வத்தொடு கூறுமிடத்தில், பாலையை விட்டுவிட்டும் குறிஞ்சியொடு தொடங்காதும், மாயோன் மேய காடுறை யுலகமும் என்று முல்லையோடு தொடங்கி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (அகத். 5) என்று இறந்தது தழீஇய எச்ச வும்மை வினையால் முடித்தது, தொல்காப்பியர் மாலியர் (வைணவர்) என்பதைத் தெரிவிக்கும். வருணன் மேய பெருமணல் உலகமும் என்பது வாரணன் மேய வார்மண லுலகமும் என்றிருத்தல் வேண்டும். வாரணம் = கடல். வாரணம் - வாரணன் = கடல் தெய்வம். வருணன் என்பவன் ஆரிய மழைத் தெய்வம். பாலையின் இயல்பைத் தொல்காப்பியர்கூறவில்லை. கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப். 11:60-6) என்று, அவருக்கு ஏழு நூற்றாண்டு பிந்தித் தோன்றிய இளங்கோ வடிகளே பாலையின் இயல்பைச் செவ்வையாய் விளக்கி யருளினார். பாலையின் தெய்வம் காளி யென்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. தொல்காப்பியர் கூறும் புணர்ச்சி முடிபுகள் சில தவறானவை. நும்என் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே. (புள்ளி. 30) அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை யாகும். (புள்ளி. 31) இது தவறு. நூம்-நும். நீன்-நீ + இர் = நீயிர் என்பதே உண்மை. உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே டகரம் ஒற்றும் ஆவயி னான. (உயிர். 38) இது சரியன்று. நாழி + உரி = நாழுரி-நாடுரி என்று கொள்வதே பொருத்தம். நாழுரி என்னும் வடிவம் இன்றும் வழக்கில் உள்ளது. செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐஎன் இறுதி அவாமுன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் டகாரம் ணகார மாதல் வேண்டும் (உயிர். 86) வேள்-வேண் = விருப்பம். வேண் + அவா = வேணவா என்பதே இயற்கை. வேட்கை + அவா = வேணவா என்பது உத்திக்கும் இயற்கைக்கும் ஒவ்வாது. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும். (குற். 40) ஒன்பது + பஃது = தொண்ணுறு என்பது தொல் காப்பியரின் மந்திரப் புணர்ச்சி. தொண்டு (9) + நூறு = தொண்ணூறு என்பதே குமரிநாட்டு வழக்கு. குமரிநாடு மூழ்கியபின் தொண்டு என்னுஞ் சொல் உலகவழக்கற்றது. தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று (செய். 100) என்று தொல்காப்பியரே தொண்டு என்னுஞ் சொல்லைக் குறிக்கின்றார். அச் சொல் வழக்கற்றுப் போகவே, அதை நிலைச் சொல்லாகக் கொண்ட மேலிட எண்ணுப் பெயர்களெல்லாம், முறையே ஒவ்வோரிடம் தாழ்ந்து கீழிட எண்ணுப் பெயர்களாக மாறிவிட்டன. எண்ணுப் பெயர் முன்னைப் பொருள் பின்னைப் பொருள் தொண்பது- ஒண்பது-ஒன்பது 90 9 தொண்ணூறு 900 90 தொள்ளாயிரம்- தொளாயிரம் 9000 900 எண்பது, எண்ணூறு, எண்ணாயிரம் என்னுஞ் சொற்களுடன் ஒப்புநோக்குக. தொண்டு + பத்து = தொண்பது. தொண்டு + நூறு = தொண்ணூறு. தொள்-தொண்டு = தொளை, தொளைத் தொகை. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊ ஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும். (குற். 58) இதுவும் முற்காட்டியது போன்ற மந்திரப் புணர்ச்சியே. ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்று புணர்க்கின்றது. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்பதே உண்மையான புணர்ச்சி. அக்கு, இக்கு, வற்று என்று புணர்ச்சிச் சாரியைகளே இல்லை. கரம் குறிற் சாரியை; காரம் நெடிற் சாரியை; கான் ஐ ஔ என்னும் புணரொலிச் சாரியை; அ-கேனம் ஆய்தச் சாரியை. இத்தகைய விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லை. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூன்றலங் கடையே. (மொழி. 29) என்பதன் ஈற்றடிக்குள்ள, அவைஔ என்னும் ஒன்றலங் கடையே என்னும் பாடவேறு பாட்டை ஏற்றுக்கொள்ளின் மறுப்பிற் கிடமில்லை. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று) ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே (மர. 1) சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே (மர. 26) என்று வரையறுத்துக் கூறிவிட்டார் தொல்காப்பியர். ஆயின், அவர் சொல்லாத இளமைப் பெயர்கள் அணங்கு, கசளி, கயந்தலை, கரு, கருந்து, குஞ்சு, குருமன், குழந்தை, குன்னி, செள், சேய், நன்னி, நாகு, பொடி, முனி எனப் பல வுள. இவையெல்லாம் பிற்காலத்தன வென்று சொல்ல முடியாது. இங்ஙனம் பல்வேறு மறுக்களும் மயக்குகளும் இருப்பதால், மொழியாராய்ச்சி யில்லாதார் தொல்காப்பியத்தை ஆராய முடியாது. பலர், இருக்கின்ற நூல்களுள், தொல்காப்பியந்தானே முந்தியதும், முதன்மையானதும் முழுநிறைவானதும் தமிழ் நாகரிகத்தையும் பண் பாட்டையும் தாங்கி நிற்பதும், அதையே ஆரியன் இயற்றியது என்னின் தமிழனுக்கு என்ன பெருமை யிருக்கின்றது என வினவுவர். அவர் அறியார். தொல்காப்பியத் தமிழிலக்கணம் முற்றும் முன்னைத் தமிழ் நூல்களின் தொகுப் பென்றும், அத் தொகுப்புப் பணியில் தொல்காப்பியரே பல் வகையில் வழுவினாரென்றும், தமிழிலக்கியப் பொற்காலம் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், தொல்காப்பியர் காலம் கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டேயென்றும், காட்டும் போது, தமிழனுக்கு எங்கே இழுக்கு அல்லது இழிவுள்ளதென்று எதிர் வினவி விடுக்க. மேலும், திருக்குறட்கு முந்திய நூல்களுள், அதற்கும் தொல்காப்பியத்திற்கும் இடைப் பட்டவையெல்லாம் இறந்துபட, எழு நூற்றாண்டிற்கு முற்பட்ட தொல்காப்பியம் மட்டும் இறவாதிருத்தற்கு அதன் ஆரியக் கருத்துகளே கரணியம் என்பதையும் அறிதல் வேண்டும். தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றுறுப் படக்கிய பிண்டம். அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முந்திய அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலக் கணங் கூறும் மாபிண்டம். அது பாரதக் காலத்திற்கு முந்திய இராமாயணக் காலத்தது. பாரதக் காலத்திற்குப் பிற்பட்ட தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர். அகத்தியம் இறந்துபட்டது. இன்று பேரகத்தியத் திரட்டு என வழங்குவது பிற்காலத்தது. அகத்தியம் தான் ஆரியத் தமிழ் முதனூலாய் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முற்பட்டவை யெல்லாம் குமரிநாட்டுத் தமிழாசிரியரின் தனித்தமிழ் நூல்களாகவே இருந்திருக்க முடியும். அவற்றுட் சிலவற்றையே செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலத்து முந்துநூல் என்று பனம்பாரனார் குறித்தார் போலும்! யாப்பணியைத் தன்னுளடக்கிய பொருளிலக்கணங் கொண்ட தொல்காப்பியம் போன்ற பிண்டநூலை, வேறெம் மொழியிலுங் காண முடியாது. முத்தமிழிலக்கணங் கூறும் மாபிண்டத்தைப் பற்றியோ, சொல்லவே வேண்டுவதில்லை. ஆரியத்தால் தமிழ் மறையுண்டிருப்பதால், பொருளிலக் கணச் சிறப்பை இன்றும் பல தமிழ்ப் பேராசிரியர் உணர் வதில்லை. காதலைப் பொதுப்படக் கூறுவது அகப்பொரு ளென்றும், போரையே கூறுவது புறப்பொருளென்றும், அவர் கருதிக் கொண்டிருக்கின்றனர். பிறப்பாற் சிறப்புக் கூறாதும் நிறம்பற்றி மக்களை நால்வகுப்பாக வகுக்காதும் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று விருந்தோம்பி வேளாண்மை செய்த வரும், நிலத்திலும் நீரிலுஞ் சென்று வணிகத்தாற் பெரும் பொருளீட்டியவரும், அதுகொண்டு இன்பந்துய்த்தவரும், வீடருளும் முழுமுதற் கடவுளை முதன்முதல் வணங்கி வீடுபெற்ற வரும், தமிழராதலால், அறநூலார் மாந்தன் வாழ்க்கைக் குறிக் கோளை அறம் பொருள் இன்பம் வீடென நான்காக வகுத்தனர். அவற்றையே இலக்கண நூலார், இன்பம் ஒன்றும் அகமென்றும் ஏனை மூன்றும் புறமென்றும், மறு பாகுபாடு செய்து, அறிவியல் முறையில் நூற்றுக்கணக்கான துறைகளை நுண்ணிதின் வகுத்தனர். இருவகைப் பொருட் பாகுபாடும் தமிழர் கண்டனவே. புறப்பொருளில் வாகைத் திணையில் எல்லாத் தொழில்களும் அடக்கப்பட்டுள்ளன. அரசன் வெற்றி அரச வாகை; உழவன் வெற்றி உழவன் வாகை; ஒவ்வொருவனும் தன்தன் தொழிலைத் திறம்படச் செய்து மேம்பட வேண்டு மென்பது அடிப்படைக் கருத்து. இதைத் தொல்காப்பியம் விளக்கவில்லை; புறப்பொருள் வெண்பா மாலை ஓரளவு விளக்குகின்றது. பாணினீயம் (அட்டாத்யாயீ) என்னும் தலைமையான வடமொழி யிலக்கணத்தின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. அதற்கு முந்திய வடமொழியிலக்கணம் ஐந்திரம். தொல் காப்பியர் காலத்திற் பாணினீயம் தோன்றி யிராமையால், அவர் ஐந்திரமே கற்றிருந்தார். அதனால் அவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதன்று. கடைக்கழக நூல்கள் (கி.மு. 3ஆம் நூற் - கி.பி. 2ஆம் நூற்.) சாத்தனார் கூத்தநூல் சிலப்பதிகாரப் பதிகத்தின் 89ஆம் அடியிலுள்ள கூலம் என்னும் சொல்லிற்கு, கூலம் எண்வகைத்து; அவை: நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி; பதினெண் வகைத்தென்பர் கூத்தநூலார் என்று சிறப்புரை வரைந்துள்ளார் அடியார்க்குநல்லார். கடைக்கழகக் காலத்ததாகத் தெரிகின்ற இந் நூல், பாவலர் ச.து.சு.யோகியார் என்பவராற் கண்டெடுக்கப்பட்டு, அவரால் வரையப்பட்ட பொழிப்புரை விளக்கக் குறிப்புடன் பெரும் புலவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை யவர்களாற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. கூத்தனூர் நான்முகக் கூத்தன் சாத்தன் வேத்தவை யெல்லாம் வியப்பத் தந்ததே என்னுஞ் சிறப்புப்பாயிர அடிகளால், இக் கூத்தநூலை இயற்றியவர் கூத்தனூரைச் சேர்ந்தவரும், நான்முகக் கூத்தன் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவருமான சாத்தனார் என்பது பெறப்படும். அகத்தியன் இயற்றிய அகத்திய முதனூல் ................................................................ கூத்தின் விளக்கம் கூறுவன் யானே. என்னும் தற்சிறப்புப்பாயிரத்தில், அகத்தியத்தை முதனூல் என்றது, இடைக்கழக நாட்டையுங் கடல்கொண்டபின் ஆரிய வழியினர் இயற்றிய தமிழ் நூல்களுள் முதலது என்னும் பொருளதே. இந் நூல், சுவைநூல், தொகைநூல், வரிநூல், கலைநூல், கரணநூல், தாளநூல், இசைநூல், அவைநூல், கண்நூல் என்னும் 9 பகுதிகளைக் கொண்டது. இதன் நூற்பாக்களில் தனித்தமிழ்ச் சொற்கள் விஞ்சியிருப்பது கவனிக்கத்தக்கது. 7ஆம் நூற்றாண்டு காக்கைபாடினியம் இது காக்கைபாடினியார் என்பவரால் நூற்பா அகவல் யாப்பில் இயற்றப்பட்ட யாப்பிலக்கண நூல். இது 11ஆம் நூற்றாண்டிற்குப் பின் தனி அல்லது முழு நூலாக வழங்கும் வழக்கு இறந்தது. ஆயின், யாப்பருங்கல விரிவுரையாளரின் பேரறிவால் அல்லது மேற்கோள் விருப்பால், அதன் பெரும்பகுதி தனித்தனி நூற்பாவாக அவருரையில் மறைந்து வாழ்ந்து வருகின்றது. புலவர் இரா. இளங்குமரனார் அம் மேற்கோள் நூற்பாக்களை யெல்லாம் தொகுத்து நூல் வடிவில் அமைத்து விளக்கவுரை வரைந்தபின், அது கழக வெளியீடாக வெளிவந்துள்ளது. 8ஆம் நூற்றாண்டு இறையனார் அகப்பொருள் இது இறையனார் என்னும் புலவரால் நூலகவல் யாப்பில் 60 நூற்பாக்கொண்டு இயற்றப்பட்ட அகப்பொருளிலக்கண நூல். இது களவு கற்பு என்னும் இரு கைகோளுங் கூறுவதேனும், சிறப்புப் பற்றி இறையனார் களவியல் எனவும் படும். இப் பெயரே உரையிற் குறிக்கப்பட்டது. பிற்காலத்தார் பெயரொப்புமைபற்றி, இது சிவபெருமான் செய்த இலக்கண நூலென்று கதைகட்டிவிட்டனர். 9ஆம் நூற்றாண்டு புறப்பொருள் வெண்பாமாலை இது, சேரர்குடியைச் சேர்ந்த ஐயனாரிதனார் என்பவரால், கடைக்கழகக்கால நூலாகிய பன்னிரு படலத்தைப் பின்பற்றி, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் 12 திணைகளையும் ஒழிபு என்னும் பகுதியையும்பற்றிய 19 நூற்பாக்களையும் அவற்றின் பிரிவுகளான 330 துறை களையும், அத் துறைகளைப் பற்றிய 361 வெண்பாக்களையும் கொண்டு இயற்றப்பட்ட பிற்காலப் புறப்பொருள் இலக்கணநூல். இது இலக்கணநூல் எனப்படினும், எடுத்துக்காட்டுச் செய்யுள்களும் உடன் கொண்டுள்ளமையால், இலக்கண விலக்கிய இணைநூல் என்பதே மிகப் பொருத்தமாம். தொல்காப்பியர் காலம் வரை, மாண்பொருள் அல்லது உறுதிப்பொருள் என்னும் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள், இன்பம் அகமென்றும், இம்மைக்குரிய அறமும் பொருளும் புறமென்றும்,மறுமைக்குரிய வீடு புறப்புறமென்றும், கைக்கிளையும் அன்பின் ஐந்திணையும் பெருந்திணையும் சேர்ந்த அகம் எழுதிணை யாதல்போலப் புறமும் வெட்சிமுதற் பாடாண் ஈறாக எழுதிணையே யென்றும், கொள்ளப்பட்டன. அகத்துள், இருதலைக் காமமாகிய அன்பினைந்திணை சிறப்பாக அகமென்றும், ஒருதலைக்காமமும் பொருந்தாக் காமமுமாகிய ஏனையிரண்டும் அகப்புறமென்றும், கொள்ளப் பட்டன. புறத்துள், கரந்தை வெட்சியுள்ளும் நொச்சி உழிஞை யுள்ளும் அடக்கப்பட்டன. ஒருவன் ஆநிரை கவரும்போது கவரப்பட்டவன் அதை மீட்டலும், ஒருவன் முற்றுகையிடும் போது முற்றுகையிடப்பட்டவன் தன்னைக் காத்தலும், ஒருங்கே நிகழ்தலின், அவற்றைப் போர்க்களத்திற் பொரும் இரு படைகளின் செயல்போல ஒன்றாகவே கொண்டு ஒவ்வொரு திணையாகவே கூறினர் முன்னோர். சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புறம்.31) என்பதனாலும், வீட்டிற்கும் அறமே துணையாதலாலும், அறத்தை ஏனை முப்பொருட்பொது எனக் கூறினும் பொருந்தும். பிற்காலப் புறப்பொருளிலக்கண நூலாரொருவர், தாம் புதுவதாக ஒரு பாகுபாடு செய்யக் கருதி, கரந்தையையும் நொச்சியையும் தனித் திணைகளாக்கியும், அகத்திற்குரிய கைக்கிளையையும் பெருந்திணையையும் புறத்திற் சேர்த்தும், பன்னிரண்டு என்னும் தொகை பெறப் பொதுவியல் என ஒன்றைத் தோற்று வித்தும், பன்னிரு படலம் இயற்றியதாகத் தெரிகின்றது. சிவபெருமானுக்கு வெள்ளிமலையில் (கைலாயத்தில்) திருமணம் நிகழ்ந்த தென்பதும், திருமண அவையின் பொறையைத் தாங்காது நாவலந்தீவின் வடபால் தாழத் தென்பால் உயர்ந்த தென்பதும், கும்பத்துட் பிறந்தவரும், பெருவிரலளவினருமான அகத்தியர் பொதிய மலைமேற் போய் நின்றவுடன் நிலம் சமநிலை யடைந்ததென்பதும், அகத்தியர் மாணவர் தொல்காப்பிய ருள்ளிட்ட பன்னிருவர் என்பதும், அப் பன்னிருவரே பன்னிரு படலம் இயற்றினர் என்பதும், இக்காலத்திற்கேற்காத இழிதகவான கட்டுக்கதைகள் எனக் கூறி விடுக்க. ஆகவே, மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த நுன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும்................... என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரப் பகுதி பகுத்தறிவுடையோர் கொள்ளத்தக்கதன்று. சிவபெருமான் அருகிலிருக்கவும் தேவர் அகத்தியரை விடுக்க வேண்டினார் என்பது, சிறுவரும் நகையாடத்தக்க செய்தியே. ஒருகால், மணவாளப்பிள்ளைக் கோலத்திலிருந்த தனால், மகிழ்ச்சிமிக்கு மற்றொன்றையுங் கவனித்திலர் போலும்! கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப. (அகத். 1) வெட்சி தானே குறிஞ்சியது புறனே. (புறத். 1) வஞ்சி தானே முல்லையது புறனே. (புறத். 6) உழிஞை தானே மருதத்துப் புறனே. (புறத். 9) தும்பை தானே நெய்தலது புறனே. (புறத். 14) வாகை தானே பாலையது புறனே. (புறத். 18) காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. (புறத். 22) பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (புறத். 25) என்று முதலிரு கழகநூல் வழக்குப்படி அறிவியன் முறையிற் கூறியுள்ளார் தொல்காப்பியர். அவர் இம் முறைக்கு மாறாக வேறொரு நூலோ நூற்பகுதியோ இயற்றியிருக்க முடியாது. அகத்தியரொடு தொடர்புபடுத்தினாற் பெருமையென்றும், எவரும் மறுக்காது ஒப்புக் கொள்வரென்றும், அகத்தியர் மாணவர் பன்னிருவர் என்னும் வழக்கு நோக்கியும், பன்னிருபடலம் பன்னிருவராற் செய்யப்பட்ட தென்று கதைகட்டப்பட்டுவிட்டது. புறப்பொருள் வெண்பாமாலைப் பன்னிரு படலத்தை எங்ஙனம் ஒருவரே இயற்றினாரோ, அங்ஙனமே அதற்கு முதனூலாயிருந்த பன்னிரு படலத்தையும் ஒருவரே இயற்றியிருத்தல் வேண்டும். ஐயனாரிதனார், தொல்காப்பியர் போல் அகத்திணை புறத் திணைகளை இதற்கிது புறமென்று எதிர்ப்படுத்திக் கூறவில்லை. கைக்கிளையை ஆண்பாற் கைக்கிளை பெண்பாற் கைக்கிளை யென்றும், பெருந்திணையைப் பெண்பாற் கூற்றுப் பெருந்திணை இருபாற் கூற்றுப் பெருந்திணை யென்றும், இவ்விரண்டாகப் பகுத்தாரேயன்றிப் புறப்பொருளோடு தொடர்புபடுத்திக் கூறவில்லை. இறுதியில் இயற்றிய வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி யுட்குடை யுழிஞை நொச்சி தும்பையென் றித்திறம் ஏழும் புறமென மொழிப வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் போகிய மூன்றும் புறப்புற மாகும் (புறத். 19) என்னும் நூற்பாவில், கைக்கிளை பெருந்திணையைப் பற்றி ஒரு குறிப்புமில்லை. வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம் என்னும் பழஞ்செய்யுளும், புறத்திணைகளையும், திணைப் பகுதி களையும் விளக்கியதேயன்றித் தொல்காப்பியத்திற்கு மாறா யில்லை. ஆதலால், தொல்காப்பியப் புறப்பொருட் பாகுபாடே போற்றத் தக்கதாம். இங்ஙனமிருப்பினும், புறப்பொருண் வெண்பாமாலை யாசிரியர் இருவகையிற் பாராட்டிற்குரியர். ஒன்று, வாகைத் திணையை விரிவு படுத்திக் கூறியது; இன்னொன்று புகழேந்திப் புலவரினும் சிறப்பாக வெண்பாப் பாடியுள்ளது. எ-டு: பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. (35) பஞ்சமரபு இது அறிவனார் என்பவர் வெண்பாவால் இயற்றிய இசை நாடக நூல். இசைமரபு, முழாமரபு, காளமரபு, கூத்தமரபு, அவிநய (நளிநய) மரபு என்னும் ஐம்மரபுபற்றிக் கூறுவதாற் பஞ்சமரபு எனப் பெயர் பெற்றது. அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார உரைச் சிறப்புப் பாயிரத்தில், சாரகுமாரனென அப் பெயர் பெற்ற குமரன் இசை யறிதற்குச் செய்த இசைநுணுக்கமும், பாரசவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், கடைச்சங்க மிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த, முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலுமென இவ் வைந்தும், இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும், ஒருபுடை யொப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ் வுரையெனக் கொள்க எனக் கூறியிருத்தலால் இதன் பெருமை விளங்கும். 11ஆம் நூற்றாண்டு யாப்பருங்கலம் இது அமிதசாகரனாரால் இயற்றப்பட்ட யாப்பிலக்கண நூல்; 96 அகவல் நூற்பாக் கொண்டது. இதன் விரிவுரையாள ரால் இது மிகப் பெருமை யடைந்துள்ளது. தொல்காப்பி யத்திற்குப் பிற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சியையும் வேறுபாடு களையும் விளக்குவதில், இந் நூலும் உரையும் தலைசிறந்தன. யாப்பருங்கலகாரிகை இதுவும் அமிதசாகரனார் இயற்றிய யாப்பிலக்கண நூலே. இது 47 கட்டளைக் கலித்துறை நூற்பாக்கொண்டது. 12ஆம் நூற்றாண்டு நேமிநாதம் இது குணவீர பண்டிதர் எழுத்துஞ் சொல்லும்பற்றி இயற்றிய சிற்றிலக்கண நூல். இதன் சிறுமைபற்றி இது சின்னூல் எனவும் படும். இது 71 வெண்பா நூற்பாக் கொண்டது; நேமிநாதன் என்னும் அருகன் பெயராற் செய்யப்பட்ட மையால், நேமிநாதம் என்னும் பெயரது. தண்டியலங்காரம் இது தண்டி யென்பவர், வடமொழியில் தண்டியாசிரியர் இயற்றிய காவியதரிசம் என்னும் அலங்கார நூலைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்த அணிநூல். கடைக்கழகக் காலத்தில் தமிழில் இயற்றப்பட்ட அணியியல் என்னும் நூல் இறந்து பட்டது. 13ஆம் நூற்றாண்டு நன்னூல் இது தொண்டைமண்டலச் சனகாபுரத்திலிருந்த பவணந்தி என்னும் சமண முனிவரால், எழுத்துஞ் சொல்லும் பற்றி இயற்றப்பட்ட நிறைவான நூல்; அகவல் யாப்பில் பொதுப் பாயிரம் நீங்கலாகப் 407 நூற்பாக் கொண்டது. தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன் நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும் சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும் மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே என்பதால், இந் நூலாசிரியர் ஊர் அறியப்படும். குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் தொகைவகை விரியிற் றருகென'', சீயகங்கன் ஏவினான் என்பதனாலும், எழுத்ததிகாரத் தொடக் கத்தில் நான்முகன் பெயராலும், சொல்லதிகாரத் தொடக்கத் தில் திருமாலின் பெயராலும், ஆசிரியர் அருகனை வழுத்தி யிருப்பதனாலும், பொருளதிகாரத் தொடக்கத்தில் சிவன் பெயரால் வழுத்தக் கருதினாரென்றும் யாக்கை நிலையாமை யால் அது நிறைவேறவில்லை யென்றும் உய்த்துணரலாம். தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த இலக்கண நூல்களுள், பலவகையில் நன்னூல் நன்னூலே. விரிவான பொதுப்பாயிரஞ் சேர்க்கப் பெற்றிருப்பதும், தொல்காப்பியத்திற் பரக்கக் கூறிய பகுசொல்லுறுப்புகளை யெல்லாம் ஓரியலில் தொகுத்துக் கூறி விளக்கியிருப்பதும், னலமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகும் தநக்கள் ஆயுங் காலே. (237) எனச் சொற்சுருக்கி நூற்பா யாத்திருப்பதும், பொருள்கோள் வகைகளை விரிவாகக் கூறியிருப்பதும், ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல். (442) என்றும், ...................ã§fy முதலாம் நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே. (460) என்றும், உரியெனுறும் சொற்பொருட் காரணத்தைக் குறித் திருப்பதும், நன்னூலின் சிறப்புக் கூறுகளாம். அகப்பொருள் விளக்கம் இது, பொருநையாற்று வடகரையிலுள்ள திருப்புளிங்குடி யென்னும் ஊரைச் சேர்ந்தவரும், சமணரும், நாற்கவிராசர் என்னும் பட்டம் பெற்றவருமான நம்பி நயினார் என்பவரால் அகத் திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் ஐந்தியல்களும், 252அகவல் நூற்பாக்களுங் கொண்டதாக இயற்றப்பட்ட விளக்கமான அகப் பொருளிலக்கண நூல். களவியற்காரிகை இது இறையனா ரகப்பொருள் போன்று களவும் கற்புங் கூறும் இலக்கணநூல்; கட்டளைக்கலித்துறை நூற்பாக்களால் இயன்றது. இதன் ஆசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயருந் தெரியவில்லை. நூற் பெயரும் திரு. வையாபுரிப் பிள்ளை இட்டதே. இதன் சில பகுதிகள் கிடைத்து அச்சிடப்பட்டுள்ளன. ஆயினும், இதை இறந்துபட்ட நூல் வரிசையிற் சேர்ப்பதே தக்கதாம். 16ஆம் நூற்றாண்டு மாறனகப் பொருள் இது, ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால், களவியல், கற்பியல், என்னும் ஈரியல்களையும் 106 அகவல் நூற்பாக்களையும் கொண்டதாக, மாறன் என்னும் நம்மாழ்வார் பெயரில் இயற்றப்பட்ட அகப் பொருளிலக்கண நூல். மாறனலங்காரம் இதுவும் திருக்குருகைப்பெருமாள் கவிராயர் இயற்றிய நூலே. இது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என்னும் நாலியல்களும் 327 அகவல் நூற்பாக்களுங் கொண்டு, 64 பொருளணிகளும் 17 மிறைப்பாவுள்ளிட்ட பல்வேறு சொல்லணிகளும் கூறும் அணியிலக்கண நூல். 17ஆம் நூற்றாண்டு இலக்கண விளக்கம் இது, திருவாரூர் வைத்தியநாத தேசிகர், எழுத்திற்குஞ் சொல்லிற்கும் தொல்காப்பியத்தையும் நன்னூலையும், அகப் பொருளுக்கு நம்பியகப் பொருளையும் புறப்பொருளுக்குத் தொல்காப்பியத்தையும், யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகையை யும், அணிக்குத் தண்டியலங்காரத்தையும் தழுவி அகவல் நூற்பாவால் ஐந்திலக்கண நூலாகத் தொகுத்த தொகுப்பு நூல். 2. இலக்கியம் பதினெண் மேற்கணக்கு(கி.மு. 3ஆம் நூற். - கி.பி. 3ஆம் நூற்.) பத்துப்பாட்டுப் பொதுவிலக்கியம் (2) பொருநராற்றுப்படை இது, முடத்தாமக் கண்ணியார் கரிகாற் பெருவளவன்மீது பொரு நராற்றுப்படையாகப் பாடிய 248 அடிகொண்ட அகவல். பொருநர், ஏர்க்களம் பாடுநர்,போர்க்களம் பாடுநர், களவழி (பரணி) பாடுநர் என மூவகையர். ஒரு வள்ளலிடம் பரிசுபெற்ற ஒருவன், தன்போன்ற இன்னொருவனை அவனிடம் பரிசுபெற வழிப் படுத்துவது ஆற்றுப்படை. அதைப் பாடுவது (ஆற்றுப்படை யென்னும்) ஒருவகைப் பனுவல். அது உண்மை யானதாகவும் புகழ் கருதிய போலியானதாகவும் இருக்கலாம். ஆற்றுப்படுப்பானும் படுக்கப்படு வானும் ஒரே வகுப்பினரா யிருத்தல் வேண்டும். அவ் வகுப்பின்படி ஆற்றுப்படை பெயர் பெறும். (3) சிறுபாணாற்றுப்படை இது, இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் ஏறுமாநாட்டு நல்லியக் கோடன் மீது சிறுபாணாற்றுப் படையாகப் பாடிய 269 அடி கொண்ட அகவல். பாணர், இசைப்பாணர், யாழ்ப்பாணர், குழற் பாணர், மண்டைப்பாணர் என நால்வகையர். யாழ்ப்பாணரின் உட்பிரிவு களைக் கீழ்க்காண்க. (4) பெரும்பாணாற்றுப்படை இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டை மான் இளந்திரையன்மீது பெரும்பாணாற்றுப் படையாகப் பாடிய 500 அடிகொண்ட அகவல். இதுவும் முந்தினதும் பாண் என்னும் ஒரே வகையான ஆற்றுப்படை. ஆயின், சிறு, பெரு என்னும் வெவ்வேறு அடை பெற்றுள்ளன. இதற்கு அவற்றின் அடிச் சிறுமை பெருமை காரணமாகக் காட்டப்படும். இது பொருத்தமாகவே தோன்று கின்றது. ஆயினும், உண்மை வேறாகவு மிருக்கலாம். சிறுபாணாற்றுப்படையில், பாணனது யாழ் சீறியாழ் என்று சொல்லப்படுவதுடன், அதன் வண்ணனை பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரற் சீறியாழ் என ஒன்றரை யடியுள் முடிக்கப்படுகின்றது. பெரும்பாணாற்றுப் படையிலோ, பாணனது யாழ் உறுப்புறுப்பாகப் பதினைந்தரை யடிகளில் வண்ணிக்கப்படுகின்றது. பேரியாழ் என்னாவிடினும் சீறியாழ் என்னும் பெயரில்லை. அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கையும் (5:37) என்னும் சிலப்பதிகார அடிக்கு, பெறுதற்கரிய இசை மரபை யறிந்த குழலர் பாணர் முதலாய பெரிய இசைக்காரர் இருக்குமிடங்களும் என்று அடியார்க்குநல்லாரும், அழுந்து பட்டிருந்த பெரும்பா ணிருக்கையும் என்னும் மதுரைக்காஞ்சி (342) அடிக்கு, நெடுங்காலம் அடிபட்டிருந்த பெரிய பாண் சாதியின் குடியிருப்பினையும் என்று நச்சினார்க்கினியரும், உரை வரைந்துள்ளதை நோக்குமிடத்து களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழும் (புறம். 127) புல்லாங்குழலும் மதங்கமும் (மிருதங்கமும்) இயக்குவார் சிறு பாணரென்றும், செங்கோட்டியாழும் இசைக்குழலும் (நாதஸ்வரமும்) மத்தளமும் இயக்குபவர் பெரும்பாணரென்றும், இருவகைப் பாணர் இருந்தனரோ என்று கருத நேர்கின்றது. (5) முல்லைப்பாட்டு இது காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூ தனார், போர்மேற் சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்ததாகப் பாடிய 103 அடிகொண்ட அகவல். (6) மதுரைக்காஞ்சி இது, மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு, வீடுபேற்றின் பொருட்டு நிலையாமையை அறிவுறுத்திய செவியறிவுறூஉ; ஆசிரியம் விரவி 782 அடி கொண்ட வஞ்சிப்பா. (7) நெடுநல்வாடை இது, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ் வருத்தந் தீருமாறு, அவன் பகையை வென்று விரைவில் வருவானாக வென்று கொற்றவையை(காளியை)ப் பரவுவாள் (வழுத்துவாள்) கூறியதாக, நக்கீரனார் பாடிய 188 அடிகொண்ட அகவல். (8) குறிஞ்சிப்பாட்டு இது, தலைவியின் வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்கு அறத்தொடு நிற்கும் பாங்கி கூற்றாக, ஆரிய வரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தற்குக் கபிலர் பாடிய 261 அடிகொண்ட அகவல். (9) பட்டினப்பாலை இது, வேற்றுநாடு செல்லத் தொடங்கிய தலைவன் தன் நெஞ்சை நோக்கித் தலைவியைப் பிரிந்து வாரேனென்று செலவழுங்கி(செலவுதவிர்த்து)க் கூறியதாக, கடியலூர் உருத்திரங் கண்ணனார் சோழன் கரிகாற் பெருவளவனை அவன் செங்கோலையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துப் பாடிய 301 அடிகொண்ட வஞ்சி நெடும்பாட்டு. (10) மலைபடுகடாம் இது, பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் பரிசுபெற்ற கூத்தன் ஒருவன் இன்னொரு கூத்தனை அவனிடம் ஆற்றுப்படுத்தியதாக, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய 523 அடிகொண்ட அகவல். இதில் மலைக்கு யானையை உவமித்து அம் மலையின்கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்ததனால், இது மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது. இது கூத்தராற்றுப்படை யெனவும் வழங்கும். கடாம் யானை மதம். முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. முருகாற்றுப்படையை மதவிலக்கியத்திற் காண்க. எட்டுத்தொகை (1) ஐங்குறுநூறு இது, அகப்பொருளில் இருதலைக்காமங் கூறும் அன்பின் ஐந்திணையுள், குறிஞ்சித்திணையைக் கபிலரும், முல்லைத் திணையைப் பேயனாரும், மருதத்திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத்திணையை ஓதலாந்தையாருமாக, தனித்தனி நூறு பாடிய குற்றகவற்பாத் தொகுப்பு. இதன் பாட்டுகள் மூவடிச் சிற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் உடையன. மருதம்ஓ ரம்போகி நெய்தல்அம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் - மருவிய பாலைஓத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு என்பது ஐங்குறுநூற்றின் ஐந்திணை முறைவைப்பைத் தெரிவிக்கும். இத் தொகையைத் தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்; தொகுப்பித்தான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. (2) குறுந்தொகை இது, திப்புத்தோளார் முதல் அம்மூவனார் வரை, இருநூற்றைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 குற்றகவற்பாத் திரட்டு. இதைத் தொகுத்தவன் பூரிக்கோ. இதன் பாக்கள் நாலடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடையன. (3) நற்றிணை இது, கபிலர் முதல் ஆலங்குடி வங்கனார் வரை நூற்றெழு பத்தைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. இதைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையும் உடையன. (4) அகநானூறு இது மாமூலனார் முதல் உலோச்சனார் வரை நூற்று நாற்பத்தைவர் அகப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. இதைத் தொகுத்தவன் மதுரை உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திர சன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இத்தொகைப் பாக்கள் பதின்மூவடிச் சிறுமையும் முப்பத்தோரடிப் பெருமையும் உடையன. முதல் 120 பாக்கள் களிற்றியானை நிரை யென்றும்; 121 முதல் 300 வரைப்பட்ட பாக்கள் மணிமிடைபவளம் என்றும், இறுதி நூற்பாக்கள் நித்திலக்கோவையென்றும் பெயர் பெறும். இத் தொகை புறநானூற்றை நோக்கி அகநானூறு எனப் பட்டது: குறுந்தொகையை நோக்கி நெடுந்தொகையெனப்படும். (5) புறநானூறு இது முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர் கிழார்வரை பல புலவர் புறப்பொருள்பற்றிப் பாடிய 400 அகவற்பாத் தொகுப்பு. சில பாக்கள் சிதைந்திருப்பதனால், அடித்தொகையின் சிறுமை பெருமை தெரியவில்லை. இத் தொகைப் பெயர் புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு எனவும் வழங்கும். (6) கலித்தொகை இது, சேரமான் பெருங்கடுங்கோ பாடிய 35 பாலைக்கலியும், கபிலர் பாடிய 25 குறிஞ்சிக்கலியும், மதுரை மருதனிளநாகனார் பாடிய 35 மருதக்கலியும், சோழன் நல்லுருத்திரன் பாடிய 17 முல்லைக்கலியும், மதுரையாசிரியர் நல்லந்துவனார் பாடிய 33 நெய்தற்கலியும் ஒரு கடவுள் வழுத்துக் கலியும், ஆக 150 கலிப்பாத் தொகுப்பாம். இதைத் தொகுத்தவர் நெய்தற்கலி பாடிய நல்லந்துவனாரே. இச் செய்திகள் கீழ்வரும் பழம்பாக்களாலும் அறியப்படும். போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர்நெய்தல் புல்லுங் கலிமுறை கோப்பு. பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன் நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி. நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான் சூடுபிறைச் சொக்கன் துணைப்புலவோர் - தேடுவார் கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே கூட்டினான் ஞாலத்தோர்க் கு. இவற்றுள் முதலது, போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம் - நோக்குங்கால் இல்லிருக்கை முல்லை இரங்கல் நறுநெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை என்பதன் திரிப்பாகத் தெரிகின்றது. (7) பதிற்றுப்பத்து இது, பத்துப் புலவர் பத்து அரச வள்ளல்களைப் புகழ்ந்து பாடிய பப்பத்து அகவற்பாத் திரட்டு. முதற்பத்தும் இறுதிப் பத்தும் இறந்து பட்டன. இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனாரும், மூன்றாம் பத்து இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனாரும், நாலாம் பத்து களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனாரும், ஐந்தாம் பத்து கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பரணரும், ஆறாம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் நச் செள்ளையாரும், ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலரும், எட்டாம் பத்து தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையை அரிசில்கிழாரும், ஒன்பதாம் பத்து குடக்கோ இளம் சேரலிரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழாரும், பாடியவை. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியே யகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (கி.மு. Kjš ü‰.- கி.பி. 8ஆம் நூற்.) (1) திருக்குறள் (கி.மு. முதல் நூற்றாண்டு) இது எக்காலத்திற்குமேற்ற ஒப்புயர்வற்ற உலகப் பொது வாழ்வியல் மறை. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி. தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக் கூழி னுரைத்தார்க்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று. அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார். ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்கும் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க் காய்தொறும் ஊறும் அறிவு. திருக்குறள் 9 இந்திய மொழிகளிலும், 5 ஆசிய மொழி களிலும், 11 ஐரோப்பிய மொழிகளிலும், மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சில மொழிகளிற் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் இந்தியர் பத்தொன்பதின்மரும் ஆங்கிலர் பதின்மருமாக முப்பத்திருவர் மொழிபெயர்த்துள் ளனர். (2) களவழி நாற்பது (கி.மு. முதல் நூற்றாண்டு) இது பொய்கையார் என்னும் புலவர், சேரமான் கணைக் காலிரும் பொறையைச் சோழன் செங்கணானது சிறையினின்று மீட்டற்குப் பாடிய போர் வெற்றிப் பனுவல் என்றும், செங்கணான் அதற்கு மகிழ்ந்து சேரனைச் சிறைவீடு செய்தான் என்றும் கூறுவர். ஆயின், குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளின் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாம்இரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே (புறம். 24) என்னும் புறப்பாட்டின் கீழ், சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறைவாயிற் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்றுள்ள கொளு சிறை வீட்டுச் செய்தியொடு முரண் படுகின்றது. இம் முரணைத் தீர்க்க, சிறைவீட்டுச் செய்தி சிறைச்சாலை சேரு முன் சேரன் துஞ்சிவிட்டான் என்பர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை. திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனாரோ, விடுதலை பெற்ற சேரன், சில்லாண்டின் பின் தன் மானவுணர்ச்சிமிக்குத் தன்பழியைத் தீர்த்துக்கொள்ள மீண்டும் சோழனொடு பொருது தோற்றுச் சிறைப்பட்டு, தண்ணீர் கேட்டுத் தாழ்த்துப்பெற்று, குழவி யிறப்பினும் என்னும் பாட்டைப் பாடித் துஞ்சினான் என்று, புதிரை விடுவிக்கப் பார்ப்பர். (3) கார்நாற்பது இது மதுரைக் கண்ணங் கூத்தனார் பாடியது; தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலத்தில் அவன் வருமளவும் ஆற்றியிருந்ததைக் கூறுவது. (4) இனியவை நாற்பது இது பூதஞ்சேந்தனார் பாடியது; நல்வினைகளும் நற்செய்திகளுமான நாற்பதைக் கூறுவது. (5) இன்னா நாற்பது இது கபிலர் பாடியது; தீவினைகளும் தீயசெய்தி களுமாகிய நாற்பதைக் கூறுவது. (6) திணைமொழி ஐம்பது இது, கண்ணன் சேந்தனார் ஒவ்வொரு திணைக்கும் பப்பத்தாக, குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைக்கும் பாடிய ஐம்பது அகப் பொருட்பாக் கொண்டது. (7) திணைமாலை நூற்றைம்பது இது, கணிமேதாவியார், ஒவ்வொரு திணைக்கும் மும் முப்பதாக ஐந்திணைக்கும் பாடிய 150 அகப்பொருட்பாக் கொண்டது. (8) ஐந்திணையைம்பது இது, மாறன் பொறையனார் ஒவ்வொரு திணைக்கும் பப்பத்தாக ஐந்திணைக்கும் பாடிய 50 அகப்பொருட்பாக் கொண்டது. (9) ஐந்திணை யெழுபது இது, மூவாதியார் திணைக்குப் பதினான்காக ஐந்திணைக்கும் பாடிய 70 அகப்பொருட்பாக் கொண்டது. (10) திரிகடுகம் இது, நல்லாதனார் பாடியது; புறவுடம்பிற்கு நலந்தரும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்துக்கூட்டுப் போன்று, அக வுடம்பிற்கு நலஞ்செய்யும் மூவறவினைகளைப் பாத்தொறும் கூறும் 100 வெண்பாக் கொண்டது. (11) நான்மணிக்கடிகை இது விளம்பிநாகனார் பாடியது; நான்மணி பதித்த கடகம் போன்று பாத்தொறும் நாலறவினைகளைக் கூறும் 100 வெண்பாக் கொண்டது. (12) சிறுபஞ்சமூலம் இது காரியாசான் பாடியது; புறவுடம்பின் நோய்நீக்கும் சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், கண்டங்கத்தரி வேர் என்னும் ஐம்மருத்து வேர் போன்று, அகவுடம்பின் நோய் நீக்கும் ஐயறவினைகளை அல்லது ஒழுக்க வுண்மைகளைப் பாத்தொறுங் கூறும் 100 வெண்பாக் கொண்டது. (13) ஏலாதி இது கணிமேதாவியர் பாடியது; ஏலம், இலவங்கப் பட்டை, சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறும் சேர்ந்த மருந்துக்கூட்டு உடம்பிற்கு உறுதிபயப்பது போல, உயிருக்கு உறுதி பயக்கும் ஆறு அறவியற் பொருள்களைப் பாத்தொறுங் கூறும் 80 வெண்பாக் கொண்டது. (14) முதுமொழிக்காஞ்சி இது கூடலூர்கிழாராற் பாடப்பட்ட அறிவுரைக்கொத்து. சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லைப்பத்து, பொய்ப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப் பத்து என்னுந் தலைப்புகளுடைய பத்துச் செய்யுள்களைக் கொண்டது. (15) பழமொழி இது முன்றுறையரையனார் பாத்தொறும் ஒரு பழமொழி யமைத்துப் பாடிய 400 வெண்பாக் கொண்டது. (16) நாலடியார் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) இது அறம்பொருளின்பம் பற்றிப் பலர் பாடிய பாடற்றிரட்டு; 400 வெண்பாக்கொண்டது. அறநூல் என்னும் வகையில் இது திருக்குறட்கு அடுத்து வைக்கப்படுவது. இதற்கு இயல் வகுத்தவர் பதுமனார். ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி என்பது பழமொழி. நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போய். என்பது ஓர் ஔவையார் வாய்மொழி. (17) கைந்நிலை இது புல்லங்காடனார் பாடியது; ஐந்திணையொழுக்கம் பற்றிய 60 வெண்பாக் கொண்டது. (18) ஆசாரக்கோவை இது பெருவாயின் முள்ளியார் பாடியது: இதன் பெயருக் கேற்ப, ஆரியக் கருத்துகளும் ஒழுக்கங்களும் இதிற் புகுத்தப் பட்டுள்ளன. இதை, ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அறனாய மற்றவற்றை ஆசாரக் கோவை யெனத்தொகுத்தான் என்னுஞ் சிறப்புப் பாயிரமும் வலியுறுத்தும். பதினெண் கீழ்க்கணக்குள் முதுமொழிக்காஞ்சி தவிர ஏனைய வெல்லாம் வெண்பா யாப்பே; திருக்குறள் குறள் வெண்பா; ஆசாரக் கோவை குறளும் சிந்தியலும் அளவியலும் பஃறொடையுங் கலந்தது; களவழி பஃறொடை பயின்றும் நான்மணிக்கடிகை அஃது அருகியும் வருவன; எஞ்சிய வெல்லாம் அளவியல் வெண்பாவே. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு கீழ்க்கணக்கும் மேற்கணக்குப்போற் கழகநூல் எனப்படினும், அதனுட் பெரும்பாலன கடைக்கழகத்திற்கு மிகமிகப் பிந்தியன. ஒருகால் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய வச்சிரநந்தியின் சமணசங்க நூல்கள் என்பது பொருந்தும். இன்னிலை இது அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால், என்னும் நாற்பகுதிகளும் 43 வெண்பாக்களும் கொண்டது; பொய்கையார் ஒருவர் இயற்றியதாகச் சொல்லப்படுவது. கைந்நிலை என்னும் நூல் வெளிவருமுன், இதைப் பதினெண் கீழ்க்கணக்குள் ஒன்றாகக் கருதினர். அதற்குப் பதினெண் கீழ்க்கணக்குப் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பாட்டில் இன்னிலைய என்னுஞ்சொல் இருத்தலே காரணம். இன்று அக் கருத்து ஒருவருக்கு மில்லை. சிலப்பதிகாரம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) கோவலன் ஒழுக்கத் தவற்றையும் கண்ணகியின் கற்புச் சிறப்பையும்பற்றி, சேரன் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோவடிகள், அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி கார மென்னும் பெயரால் நாட்டினார் ஓர் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். அது பல்வகையில் தமிழின் பெருமையைக் காட்டும் தலைசிறந்த முத்தமிழ்ப் பாவியம். 8ஆம் நூற்றாண்டு முத்தொள்ளாயிரம் இது மூவேந்தரையும் பற்றித் தனித்தனி தொள்ளாயிரமாக முத்தொள்ளாயிரம் (2700) வெண்பாவாற் பாடிய புகழ்ப் பனுவல். இன்று கிடைப்பன 130 பாக்களே. ஏனைய இறந்து பட்டன. வைத்தியநாத தேசிகர் தம் இலக்கண விளக்கப் பொருளதி காரத்தில் ``ஊரையும் பெயரையும் என்று தொடங்கும் எண் செய்யுள் பற்றிய நூற்பா (848) வுரையில், ``பாட்டுடைத்தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து, எண்ணாலே பத்துமுதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் , அவ்வவ் வெண்ணாற் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுளாம்... அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன. என்றுரைத்ததைப் பிறழவுணர்ந்து, மூவேந்தரைப் பற்றிய தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் என்று புலவர் சேது ரகுநாதன் கூறியிருப்பது தவறாகும். இலக்கண விளக்க நூலார் பத்துமுதல் ஆயிரமளவும் என்றது பாட்டுடைத் தலைவன் ஒருவனை நோக்கியே. முத்தொள்ளாயிரப் பாட்டுடைத் தலைவர் மூவராதலால், மூன்று தொள்ளாயிரம் ஈராயிரத்தெழுநூறாகும். 9ஆம் நூற்றாண்டு திவாகரம் இது தமிழில் இதுபோதுள்ள உரிச்சொற் சுவடிகளுள் முதலாவது; சேந்தன் என்னும் சிற்றரசன் புரவினால் திவாகர முனிவர் தொகுத்தது; கீழ்வருமாறு பன்னிரு தொகுதிகளைக் கொண்டது. (1) தெய்வப் பெயர்த் தொகுதி (7) செயற்கைவடிவப் பெயர் தொகுதி (2) மக்கட் பெயர்த் தொகுதி (8) பண்பு பற்றிய பெயர்த் தொகுதி (3) விலங்கின் பெயர்த் தொகுதி (9) செயல் பற்றிய பெயர்த் தொகுதி (4) மரப் பெயர்த் தொகுதி (10) ஒலி பற்றிய பெயர்த் தொகுதி (5) இடப் பெயர்த் தொகுதி (11) ஒருசொற் பல்பொருட் பெயர்த்தொகுதி (6) பல்பொருட் பெயர்த் தொகுதி (12) பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி இப் பன்னிரு தொகுதியும், ஒருபொருட் பலசொல், பல பொருளொருசொல், பல்பொருள் தொகுதி என்னும் மூவகையுள் அடங்கும். ஒருபொருட் பல சொற்களைத் தனித்தனி ஒப்பொருளி (synonym) என்றும், பலபொரு ளொருசொல்லைப் பல்பொருளி (homonym) என்றும், சொல்லாம். உரிச்சொல் எல்லாம் செய்யுளில் வரும் அருஞ்சொல்லே யாதலால், உரிச்சொல் என்பது செய்யுட்குரிய சொல்லே, ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (நன். 442) என்று நன்னூலார் கூறுதல் காண்க. ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரிமை தோன்றுதல் என்பது, நால்வகைச் சொல்லிற்கும் பொதுவாதலால், உரிச்சொல்லிலக்கணமாகாது. பெயரும் வினையும் இடையும் உரிச்சொல்லிலுமிருத்தலால், உரிச்சொல் இலக்கண வகைச் சொல்லும் ஆகாது. தொல்காப்பியர் செய்யுட் குரிய அருஞ் சொற்களையே ஒவ்வொன்றாக எடுத்துப் பொருள் கூறி, அங்ஙனமே ஏனையவற்றிற்கும் பொருள் காணுமாறு, பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (உரி. 1) என்று கூறுதல் காண்க. அதிர்வு, தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது, கம்பலை, செழுமை என்னுஞ் சொற்களைச் செய்யுட் சொல்லாக அல்லது அருஞ் சொல்லாகக் குறித்தமை, தொல்காப்பியரின் இனவயன்மை யையே காட்டும். எம்மொழியிலும் எளிய சொல்லும் அயலார்க்கு அருஞ் சொல்லாயிருப்பதே இயல்பு. உரிச்சொற் றொகுதிகளை அல்லது சுவடிகளை அவற்றின் ஆசிரியர் பெயரொடு சார்த்தி, உரிச்சொல் என்றே பொதுப் படக் கூறினர் முன்னோர். பிங்கல முதலா நல்லோர் உரிச்சொல் என்று (460) நன்னூலார் கூறுதல் காண்க. நிகண்டு என்னும் வட சொல் வழக்குப் பிற்காலத்ததே. அச் சொல்லிற்குச் சொற் றொகுதி என்பதே பொருள். நந்திக் கலம்பகம் இது தெள்ளா றெறிந்த பல்லவன் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதிற் பல தனிப் பாட்டுகள் கலந்துள்ளன. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நந்திவர்மப் பல்லவன் முடிவைப்பற்றிய கதை நம்பத்தக்க தன்று. 10ஆம் நூற்றாண்டு பிங்கல வுரிச்சொல் இது திவாகரத்திற் கடுத்ததும் மிகச் சிறந்ததுமான உரிச்சொற் சுவடி. இது கீழ்வருமாறு வகையென்று பெயர்பெறும் பத்துத் தொகுதிகளை யுடையது. (1) வான்வகை (6) அனுபோகவகை (2) வானவர்வகை (7) பண்பிற் செயலின் பகுதிவகை (3) ஐயர்வகை (8) மாப்பெயர் வகை (4) அவனி வகை (9) மரப்பெயர் வகை (5) ஆடவர் வகை (10) ஒருசொற் பல்பொருள் வகை செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த பிங்கல முனிவன்எனத் தன்பெயர் நிறீஇ யுரிச்சொற் கிளவி விரிக்குங் காலை என்று சிறப்புப் பாயிரங் கூறுவதால், பிங்கலர் திவாகரருக்கு மகன்முறையினர் என்பது தெரிகின்றது. அது மாணவ மகன் முறையாகவுமிருக்கலாம் சினேந்திரமாலை இது உபேந்திராசாரியார் இயற்றிய கணியநூல். 11ஆம் நூற்றாண்டு சிலப்பதிகார விரிவுரை இது தமிழிலக்கண விலக்கியம் முற்றக் கற்ற தலைசிறந்த உரையாசிரியருள் ஒருவரான அடியார்க்குநல்லார் வரைந்தது. அவருரையின்றேல், அரங்கேற்று காதைப் பொருளை இன்று போல் உணர்ந்திருக்க முடியாது. வழக்குரை காதைக்குமேல் அவருரையில்லாவாறு யாக்கை நிலையாமை தடுத்தது போலும்! கனாநூல் இது பொன்னவன் இயற்றியது; கனாவின் பொருளை விளக்குவது. வினாமுந் துறாத வுரையில்லை யில்லை கனாமுந் துறாத வினை (பழ. 12) என்பது பண்டைநாளில் உலகமுழுதும் பரவியிருந்த நம்பிக்கை; 12ஆம் நூற்றாண்டு கலிங்கத்துப் பரணி இது முதற் குலோத்துங்கச்சோழன் கருணாகரத் தொண்டைமான் வாயிலாகக் கலிங்கப்போர் வென்றதை, சயங் கொண்டார் பாடிய பாடாண் பனுவல். பரணி என்னும் முக் கூட்டு நாளில் நிகழ்த்திய போரிற் பெற்ற வெற்றியைப் பாடிய பனுவலைப் பரணி யென்றது, மும்மடியாகு பெயர். இப் பனுவல், கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திர சாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம் (தோற்றரவு), காளிக்குக் கூளி கூறியது, களங் காட்டியது, கூழ் அடுதல், என்னும் 13 பகுதிகளையுடையது. களப்போர் வாகையைப் புகழ்ந்து பாடுவதில் வாகை பெற்ற சயங்கொண்டார், பரணிக்கோர் சயங்கொண்டான் என்று பாராட்டப் பெற்றார். இப் பனுவல் ஈரணியும் எண்சுவையும் ஒழுகிசையும் ஓவிய வண்ணனையும் கொண்ட 599 ஆசிரியத் தாழிசைகளால் இயன்றது. ஒட்டக்கூத்தர் இயற்றியவை காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா, குலோத் துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், எதிர்நூல், ஈட்டியெழுபது, உத்தர காண்டம் முதலியன. அம்பிகாபதி கோவை இது பாட்டுடைத்தலைவனின்றி 564 துறைகளைக் கொண்டது. இவற்றுட் சில புதியனவாகப் புனையப்பட்டவை. இக் கோவை யாசிரியர் பெயர் தெரியவில்லை. கம்பர் இயற்றியவை ஏரெழுபது, திருக்கை வழக்கம், சிலையெழுபது முதலியன. சூடாமணி உள்ளமுடையான் இது திருக்கோட்டியூர்நம்பி இயற்றிய கணியநூல். 13ஆம் நூற்றாண்டு நளவெண்பா இது புகழேந்திப் புலவர் நளன் கதையைப்பற்றி 424 நேரிசை வெண்பாவாற் பாடியது. வெண்பாவிற் புகழேந்தி என்னும் பாராட்டு இவரது வெண்பாவியற்றுந் திறமையைக் காட்டும். திருக்குறள் பரிமேலழகர் உரை பரிமேலழகர் திருக்குறட்கு ஆங்காங்கு ஆரியச் சார்பாக உரை கூறியிருப்பினும், அவருடைய செந்தமிழ் நடையும் நுணுகிய நோக்கும் பிறருரை மறுப்பும் பெரிதும் பாராட்டற் பாலனவே. குலோத்துங்கச்சோழன் கோவையும் சங்கரச்சோழன் உலாவும் இந் நூற்றாண்டின. சித்தராரூடம் இது ஒரு நஞ்சு மருத்துவநூல். ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. 14ஆம் நூற்றாண்டு உரிச்சொல் நிகண்டு இது காங்கேயர் வெண்பா யாப்பில் தொகுத்தது. கருமாணிக்கங் கப்பற்கோவை இதற்குக் கப்பலூர் வள்ளல் பாட்டுடைத்தலைவர். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சரசோதிமாலை இது போசராசர் இயற்றிய கணியநூல். கணக்கதிகாரம் இது காரியார் இயற்றிய கணக்குநூல்; நால்வகை அளவை முறைகளும் கீழிலக்க வாய்பாடுகளும் சில அளவறியும் வகை களும் குழிக்கணக்கும் விடுகதைக் கணக்கும் பிறவும் கூறி விளக்குவது. 15ஆம் நூற்றாண்டு காதம்பரி இது ஆதிவராக கவிஞரால் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட மண்டில (விருத்த) யாப்புப் பாவியம். கயாதர நிகண்டு இது கயாதரர் என்பவராற் கலித்துறை யாப்பில் தொகுக்கப்பட்டது. காளமேகம் (காளமுகில்) பனுவல்கள் சித்திரமடல், சமுத்திர விலாசம், களவகுப்பு முதலியன. காளமேகம் தனிப்பாடல்கள் கடுத்துப்பாடுவதிலும் குறிப்பனைப்படி பாடுவதிலும் இரட்டுறல் பாடுவதிலும் வசை பாடுவதிலும் சாவித்துப் பாடுவதிலும், காளமேகர் தலைசிறந்தவர். வசைபாடக் காளமேகம் என்று மட்டுங் கூறினாற் போதாது. எ-டு: கடும்பா கீழ்வரும் பாடல்களெல்லாம் கடும்பாக்களே. குறிப்பனைப்பா மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென் இச்சையிலுன் சென்மம் எடுக்கவா - மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய். ஓகாமா வீதோ வுரைப்பன் டுடுடுடுடு நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் எடுப்பர் நடமிடுவர் ஏறுவர்அன்பர்க்குக் கொடுப்பர் அணிவர் குழைக்கு. செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்குத் தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமா றே. விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கையடங் கும். இரட்டுறற்பா ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது. நீரில் உளதால் நிறம்பச்சை யால்திருவால் பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான வில்விண்டு நேர்வெற் றிலை. சென்னிமுக மாறுளதால் சேர்கரமூன் நாலுகையால் இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக் கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும் எண்ணரனும் நேராவ ரே. கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையிலிட வூரடங்கும் ஓரகப்பை யன்னம் இலையிலிட வெள்ளி யெழும். வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே. முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கா இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது. இவற்றுள்ளுஞ் சில குறிப்பனைப் பாக்களே. வசைப்பா சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய். வாழ்ந்து திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக் கழுதைகெட்ட வண்ணான் கண்டேன்கண் டேனென்று பழுதையெடுத் தோடிவந்தான் பார். காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின் வாரொன்று மென்முலையாய் மாதர்கை யுற்றதற்பின் மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே. சாவிப்புப்பா கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான். பாளைமணங் கமழுகின்ற கயிற்றாற்றுப் பெருமாளே பழிகாராகேள் வேளையென்றா லிவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலாயிற்றென் தோளைமுறித் ததுமன்றி நம்பியா னையுங்கூடச் சுமக்கச்செய்தாய் நாளையினி யார்சுமப்பார் எந்நாளும் உன்கோயில் நாசந் தானே. காளமேகத்தின் இயற்பெயர் வரதன் என்பது. காளமுகில் கனமழை பொழிவதுபோற் கடும்பாப் பொழிந்ததனாற் காள மேகம் எனப் பெற்றார். இதை, இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதா - சும்மா இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாகிற் பெருந்தாரை மேகம் பிளாய். கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வன்கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னிப் பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே. என்று அதிமதுர கவிராயர்முன் அவர் கூறிய நெடுமொழி யாலும், ஆசுக்குக் காளமுகில் ஆவனே என்னும் பிறர் கூற்றாலும் அறியலாம். பிறர் குறித்த குறிப்பனைப்படி பல புலவர் பாடியிருப் பினும், என்ன குறித்தாலும் அன்ன குறிப்பனைப்படி அரிகண்டமும் எரிகண்டமும் (எமகண்டமும்) பாடுவதும், அவையல் கிளவியாகிய இடக்கர்ச் சொற்களைக் குறிப்பினும் அவற்றைப் பிறசொல்லொடு புணர்த்தி இடக்கரகற்றிப் பாடுவதும், காளமுகிற்கே யுரிய தனிச்சிறப்பாற்றலாகும். மேற்கூறிய பாக்களிற் சில மதக்கருத் துள்ளனவேனும், குறிப்பனைப் பாட்டுகளாதலால் இங்குக் கூறப்பட்டன. இரட்டையர் முறையே, மருகன் அம்மான் முறையினரும், குருடரும் முடவருமாகப் பிறந்தவரும், இளஞ்சூரியன் முதுசூரியன் என்னும் பெயரினருமான இரு புலவர், இரட்டையர் என்றும் இரட்டைப் புலவர் என்றும் சொல்லப்படுவர். இவருள் குருடர் முடவரை எங்குந் தோளில் தூக்கிச்செல்ல, முடவர் ஒன்றைக் கண்டவுடன் நாலடிப் பாவில் முன்னீரடியைப் பாடியபின், குருடர் அதன் பொருளை யறிந்து பின்னீரடியையும் பாடி முடிப்பர். இவர்கள் பாடின தனிப்பாக்களுட் சில வருமாறு : தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனேயல் லாளியப்பா நாங்கள் பசித்திருக்கை நாயமோ - போங்காணும் கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமல் சோறுகண்ட மூளியார் சொல். இது ஆங்கூர்ப் போற்றியானின் (அர்ச்சகனின்) திருட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது. தேன்பொழியும் வாயான் திருவேங்க டேசனுடன் ஏன்பிறந்தான் இந்த இனியன்காண் - யான்சொலக்கேள் சீதேவி யார்பிறந்த செய்யதிருப் பாற்கடலுள் மூதேவி யேன்பிறந்தாள் முன். இது ஈகையில்லாத் தம்பியைப் பழித்தது. மன்னுதிரு அண்ணா மலைச்சம்பந் தாண்டார்க்குப் பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன் - மின்னின் இளைத்த மடவார் இவன்குடுமி பற்றி வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு. இது சம்பந்தாண்டானின் செருக்கடக்கியது. சாற்றரிய ஆயிரக்கால் மண்டபத்தின் சார்வாக ஏற்ற முடனே இனிதிருந்து - போற்றும் விறல்விகட சக்கரவி நாயகனை யேத்தும் திறல்விகட சக்கராயு தம். இது புதைந்துகிடந்த மண்டபத்தைத் தெரிவித்தது. குன்றும் வனமுங் குறுகி வழிநடந்து சென்று திரிவதென்றுந் தீராதோ - ஒன்றும் கொடாதவரைச் சங்கென்றுங் கோவென்றுஞ் சொன்னால் இடாதோ அதுவே இது. இதன் பாடவேறுபாடு: குன்றுங் குழியுங் குறுகி வழிநடப்ப தென்று விடியுமெமக் கென்கோவே - ஒன்றும் கொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின் இடாதோ நமக்கிவ் விடி. மூடர்முன் பாடல் மொழிந்தால் அறிவரோ ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா - ஆடகப்பொன் செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன் அந்தகனே நாயகனா னால். இவை தம் வறுமையையும் ஈயாதாரையும் நோக்கிப் புலந்தவை. ஆசு கவியால் அகில வுலகெங்கும் வீசு புகழ்க்காள மேகமே - பூசுரா விண்கொண்ட செந்தழலில் வேவதே ஐயகோ மண்டின்ற பாணமென்ற வாய். இது காளமேகத்தின் உடல் ஈமத்தெரிவது கண்டு புலம்பியது. புறத்திரட்டு இது கடைக்கழகச் செய்யுள்கள்முதல் கம்பராமாயணம் வரைப்பட்ட பண்டையிலக்கியத்தினின்று, பல்வகைப் பொருள் பற்றித் தொகுத்த 1570 பாடல்திரட்டு. இன்றில்லை. உவமான சங்கிரகம் (1) இது அடிமுதல் முடிவரை உறுப்புவமங்களை நூற்பா யாப்பில் தொகுத்துக் கூறுவது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வருணகுலாதித்தன் மடல் இது வருணகுலாதித்தன் என்னும் வள்ளல்மீது காளிமுத்து என்னும் ஓர் அம்மை பாடியது. கபிலர் அகவல் இது ஒரு கபிலர் பிராமணனுக்கும் புலைச்சிக்கும் பிறந்ததனாற் பிறந்தவுடன் பெற்றோராற் கைவிடப்பட்டுக் கிடந்து, ஒரு பிராமணனால் எடுத்து வளர்க்கப்பட்டு, பருவம் வந்தபின் பூணூற்சடங்கு பிற பிராமணரால் தடுக்கப்பட்ட போது, அவர் பிறவிக்குல வேற்றுமையைக் கண்டித்துப் பாடிய 136 அடிகள்கொண்ட அகவற்பாட்டு. தேரையர் இவர் பல மருத்துவ நூல்கள் இயற்றினார். முதுபண்டைக் காலத்தில் தமிழர் அறுவை மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந் தனர் என்பது, தேரையர் வரலாற்றினின்று தெரிகின்றது. 16ஆம் நூற்றாண்டு அரிச்சந்திர புராணம் இது நல்லூர் வீரன் ஆசுகவிராயர் இயற்றியது. ஆதிவீராம பாண்டியன் இவன் இயற்றியவை வெற்றிவேற்கை என்னும் நறுந் தொகையும் நளன் கதை பற்றிய நைடதமும். கொக்கோகம் இது வரதுங்கராம பாண்டியன் வடமொழியின்று மொழிபெயர்த்த காமநூல். இது வரகுணராம பாண்டியன் மொழிபெயர்ப் பென்று சென்னைத் தமிழகரமுதலி கூறும். சூடாமணி நிகண்டு இது மண்டல புருடன் மண்டில யாப்பில் தொகுத்தது. திவாகரம் போன்றே 12 தொகுதிகளை யுடையது. அகராதி நிகண்டு இது இரேவண சித்தர் நூற்பா யாப்பில் தொகுத்தது. சீவல மாறன் கதை இது அதிவீரராம பாண்டியன்மீது சிதம்பரநாத கவிஞர் பாடியது. தினகர வெண்பா இது தினகர வள்ளலைப் புகழ்ந்து நாகராசன் பாடியது. ஔவையார் கடைக்கழகக் காலத்திலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தோன்றிய ஔவையார் எழுவர். (1) கடைக்கழக ஔவையார் (கி.பி. 2ஆம் நூற்றாண்டினர்) அதிகமானால் தொண்டைமானிடம் தூதுபோக்கப் பட்டவர். (2) அங்கவை சங்கவை கால ஔவையார் (3) சேரமான் பெருமாள் நாயனார் கால ஔவையார் (8ஆம் நூற்றாண்டினர்) (4) கம்பர் கால ஔவையார் (12 ஆம் நூற்றாண்டினர்) (5) அறிவைக்குறள் ஔவையார் (14ஆம் நூற்றாண்டினர்) (6) ஆத்திசூடி ஔவையார் (16ஆம் நூற்றாண்டினர்) (7) பந்தனந்தாதி ஔவையார் (17ஆம் நூற்றாண்டினர்) ஆறாம் ஔவையார் இயற்றியவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை முதலிய நன்னெறிச் சுவடிகள். வான்கோழி துருக்கிநாட்டினின்று இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது 16ஆம் நூற்றாண்டாதலால், அதைப் பாடிய ஔவையார் அறநூல் அதன் வரவிற்குப் பிற்பட்டது என்பது கால்டுவெல் ஐயர் கருத்து. அம்மை-அவ்வை (தாய், பாட்டி)-ஔவை (ஒரு புலத்தியார் பெயர்). ஒரு பொதுப்பெயர் இயற்பெயராகும்போது எழுத்து மாறுவது நன்றே. இவ் வழக்கை ஆங்கிலர் செருமானியர் முதலிய மேலையர் பெயர்களிற் காணலாம். நீதிவெண்பா இது 100 வெண்பாக் கொண்ட அறநூல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உலகநீதி இது, வேண்டாம் வேண்டாம் என்று எதிர்மறை நல்வினை களான உலகப்பொது நேர்பாடுகளை (நீதிகளை)க் கைக்கொள்ள ஏவும், 13 எண்சீர் ஆசிரிய மண்டிலங் கொண்ட எளியநடைச் சிற்றற நூல். இதன் ஆசிரியர் உலகநாக பண்டிதர். தையூர் உத்தண்டன் கோவை 400 துறை கொண்டது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. தெய்வச்சிலையார் விறலிவிடுதூது இதைப் பாடியவர் குமாரசாமி அவதானி. இரத்தினச்சுருக்கம் இது முடிமுதல் அடிவரை உறுப்புவமங்களைக் கட்டளைக் கலித் துறை, வெண்பா, மண்டிலம் ஆகிய மூவகை யாப்பில் தொகுத்துக் கூறுவது; புகழேந்திப் புலவர் பெயரில் வழங்கு கின்றது. 17ஆம் நூற்றாண்டு ஆசிரிய நிகண்டு இது ஆண்டிப்புலவர் ஆசிரிய மண்டில யாப்பில் தொகுத்தது. கைலாச நிகண்டு இது கைலாசர் என்பவர் நூற்பா யாப்பில் தொகுத்தது. பாரதிதீப நிகண்டு இது திருவேங்கட பாரதி கலித்துறை யாப்பில் தொகுத்தது. பல்பொருட் சூடாமணி நிகண்டு இது ஈசுவரபாரதி மண்டில யாப்பில் தொகுத்தது. நீதிநெறி விளக்கம் இது, குமரகுருபரர் பாடிய அறநூல்; 102 அளவியல் வெண்பாக் கொண்டது. நன்னெறி இது சிவப்பிரகாச அடிகள் பாடிய அறநூல்; 40 நேரிசை வெண்பாக் கொண்டது. பந்தனந்தாதி இது பந்தன் என்னும் வணிகன்மீது பாடப்பட்ட ஈறு தொடங்கிப் பனுவல். இது ஓர் ஔவையார் பாடினதாகச் சொல்லப்படுகின்றது. உவமான சங்கிரகம் (2) இது முடிமுதல் அடிவரை உறுப்புவமங்களை வெண்பா யாப்பில் தொகுத்துக் கூறியது. இதன் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. 18ஆம் நூற்றாண்டு அரும்பொருள் விளக்க நிகண்டு இது அருமருந்தைய தேசிகர் மண்டில யாப்பில் தொகுத்தது. உசித சூடாமணி நிகண்டு இது சிதம்பரக் கவிராயர் மண்டில யாப்பில் தொகுத்தது, பொதிகை நிகண்டு இது சாமிநாத கவிஞர் மண்டில யாப்பில் தொகுத்தது. பொருட்டொகை நிகண்டு இது சுப்பிரமணிய பாரதியால் நூற்பா யாப்பில் தொகுக்கப் பட்டது. ஔவை நிகண்டு இது மண்டில யாப்பில் தொகுக்கப்பட்டது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. உவமான சங்கிரகம் (3) இது அடிமுதல் முடிவரை உறுப்புவமங்களை மண்டில யாப்பில் தொகுத்துக் கூறியது. இதன் ஆசிரியர் தெரியவில்லை. 3. மூவேந்தர் குடியுஞ் செய்த இனமொழிக் கேடுகள் இக்கால வரலாற்றறிவும், அறிவியலாராய்ச்சியும், உரிமை யுணர்ச்சியும், விடுதலைக் கிளர்ச்சியும், இம்மியுமில்லாத பண்டைக் காலத்தில் பழங்குடிப் பேதைமையும் மதவெறியும் கொடைமடமும் இயல்பாகக்கொண்ட மூவேந்தரும், வெண்ணிறத்தொடும் வெடிப்பொலி மிக்க வேதமொழி யொடும் வடக்கிருந்து வந்து, தம்மை நிலத்தேவர் என்றும், தம் சிறுதெய்வ வழுத்துமொழியைத் தேவமொழியென்றும், தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்கள் என்றும், ஏமாற்றிய ஆரியப் பூசாரியரை முற்றிலும் நம்பி அவருக்கு அடிமைப்பட்டுப் போனதினால், மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி என்னும் பழமொழிக்கிணங்க, அவர் குடிகளான தமிழரும் அவரைப் பின்பற்றி, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரிய அடிமைத் தனத்தில் முற்றும் முழுகிவிட்டனர். (1) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆரிய மதம் சிறுதெய்வ வேள்வி வளர்ப்பு; தமிழ மதம் கடவுள் அல்லது பெருந்தேவ வழிபாடு. ஆரியப் பூசாரியர் இவ் விரண்டையும் இணைத்துவிட்டதனால், தமிழவேந்தர் அவற்றின் வேறுபாடறியாது, ஏராளமான பொருளைச் செலவிட்டு ஒருவரோடொருவர் போட்டியிட்டு, ஆயிரக்கணக்கான வேள்விகளை இயற்றத் தலைப்பட்டுவிட்டனர். இதனால் விளைந்த கேடுகளாவன: (1) ஆரியப் பூசாரியரின் உயர்வும் தமிழர் தாழ்வும். (2) வடமொழியின் உயர்வும் வளர்ச்சியும் தமிழின் தாழ்வும் தளர்ச்சியும். (3) தமிழப் போற்றியாரின் பிழைப்பின்மையும் ஆரியப் பூசாரியரின் செழித்த வாழ்வும். (4) பெருந்தொகையான பொதுப்பணத்தின் வீண்செலவு. (5) மீட்க முடியாத தமிழிலக்கிய இழப்பு. இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே. (புறம். 6) நற்பனுவல் நால்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல். (புறம். 15) இவை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியன. வேள்வி யென்னுந் தென்சொல்லினும் யாகம் என்னும் வடசொல் அவனுக்கு விருப்பமாயிருந்திருக்கின்றது. இளங்கோ வடிகள் போலும் முற்றத் துறந்த மூதறிஞர்க்குரிய முனிவர் என்னும் பெயர், வேதங்கற்ற பிராமணர்க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. (2) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டிநாட்டுத் தங்காலூரில் தட்சிணாமூர்த்தியின் தந்தை வார்த்திகன் என்னும் பிராமணன், விலைமிகுந்த பொன்மணி யணி கலங்கள் பலவற்றைத் திடுமென்று பெற்றதனால், அரசிறை யதிகாரிகள் அதைப் புதையலெடுத்த தென்று கருதி. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் (குறள்.756) என்னுங் குறளொத்த பண்டைக்காலச் சட்டப்படி அப்பிராம ணனைச் சிறையிலிட்டனர். அணிகலம் வந்த வழியைத் தக்க சான்று கொண்டு அதிகாரிகளிடம் அல்லது அரசனிடம் விளக்கிச்சொல்லி, தண்டனை யினின்று தப்பியிருக்கலாம். ஆயின், வார்த்திகன் மனைவி நிலத்தில் விழுந்து அழுது புரண்டதும், காளிகோயிலை அடைக்கச் செய்ததும், ஆரியச் சூழ்ச்சியேயாகும். பாண்டியன் நெடுஞ்செழியன் அதையறிந்தபோது, அணி கலங்களைத் திருப்பி இழப்பீடு செய்துவிட்டு, ஆராயாது சிறைப்படுத்திய அதிகாரிகளைத் தண்டித்திருந்தால், அதுவே போதுமானது. ஆயின், தானே மன்னிப்புக் கேட்டதுடன், தங்காலொடு வயலூரையுந் தானமாக வழங்கின பின்னும், வார்த்திகன் சினந் தணியாமையால், அவன் காலில் விழுந்து வணங்கியது, கண்கண்ட தெய்வம் போன்ற பாண்டியனின் பதவிக் கும், ஆரியப்படை கடந்த என்னும் அவனது அடைமொழிக்கும் இழுக்கான மாபேரிழிவாகும். இதை யுணர்ந்தே இளங்கோவடி களும், அவன் இழிசெயலை, கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே. (சிலப்.23:120-2) என்று ஓர் அணியால் மறைத்துக் கூறினார். இந் நிகழ்ச்சியால், வார்த்திகனின் வரையிறந்த இனச் செருக்கும் இடங்கொடுத்தால் மடம்பிடுங்குந் தன்மையும், ஓர் ஏழைப் பிராமணன் காலில் விழுந்து வணங்குமளவு நெடுஞ் செழியனின் மானங்கெட்ட தன்மையும் ஏமாளி இயல்பும், புலனாகின்றன. (3) முதலாம் இராசராசன் என்னும் அரசவரசன் (அருண்மொழித் தேவன்) 10ஆம் நூற்றாண்டிற் கோவில்களில் தேவாரம் ஓதுதலைத் தடுத்தற்பொருட்டு, ஆரியப் பூசாரியர் தேவார ஏடுகளை யெல்லாம் தொகுத்துத் தில்லையம்பலத்தில் ஓர் அறைக் குள்ளிட்டுப் பூட்டி, பெரும்பகுதியைச் சிதலரிக்க விட்டு விட்டனர். முதலாம் அரசவரசன் தேவார ஏடுகள் அங்கிருப் பதையறிந்து, அங்குச் சென்று அவ் வறையைத் திறக்கச் சொன்னான். அங்குள்ள பூசாரியர், தேவார மூவரும் பூட்டிவைத்துவிட்டுச் சென்று விட்டனரென்றும், அவர் வந்தால்தான் திறக்கமுடியும் என்றும், சொல்லித் திறக்க மறுத்து விட்டனர். அதன் பின், அரசவரசன் ஒரு சூழ்ச்சியாகத் தேவார மூவர் உருவப் படிமைகளைக் கொணர்ந்து நிறுத்தித் திறக்கச் சொன்னான். அப்போது, மறுக்க வழியின்றிப் பூசாரியர் திறந்தனர். சிதலரித்த பகுதிகண்டு அரசன் சினவாதவாறு, இக்காலத்திற் கேற்காத ஏடுகளையெல்லாம் யாமே சிதலரிக்கவிட்டேம் என்று இறைவனே சொல்வது போன்று, ஓர் உடம்பிலிக் கூற்றுப் போலி மேலெழுந்தது. வேகிற வீட்டில் பிடுங்கினது ஊதியம் என்று அரசனும் ஓரளவு அகமகிழ்ந்து திரும்பிச் சென்றான். அரசன் நல்லாண்மையனாய் இருந்திருந்தால், முதன் முறையிலேயே தேவார அறையைத் திறக்கச்சொல்லி யிருக்கலாம். பூசாரியர் துணிச்சலுடன் மறுத்தது, அவரது ஆணவத்தையும், அரசனின் அடிமைத்தனத்தையுமே காட்டுகின்றன. அகர மேற்றுதல் அகரம் மருதநிலத்தூர். அகரமேற்றுதலாவது, ஆயிரக் கணக்கான பிராமணரை வடநாட்டினின்று வருவித்துத் தமிழகத்து மருதநில வளநகரிற் குடியேற்றி, அதை அவர்க்குத் தானமாக அளித்தல். மணலூரிலிருந்த குலசேகர பாண்டியன், அகரமேற்ற நினைந்து, சாகேதபுரி என்ற இடத்திலிருந்து பிராமணர் ஈராயிரத்தெண்மரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேம்பற்றூருக்கு வரவழைத்து, ஒவ்வொருவருக்கும் நிலமும் மனையும் வழங்கினதினால், அவ்வூர் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் எனப் பெயர்பெற்றது. இதை, தனக்கொருபத் தேழு கலிக்கொருபத் தாறு புனக்குடுமிக் கோமான் புதல்வன் - மனக்கினிய தென்னிம்பை யூரதனைத் சீர்மறையோ ருக்களித்தான் கன்னன் குலசே கரன் என்னும் பழைய வெண்பாத் தெரிவிக்கும். இனி, அப் பாண்டியன் ஈராயிரத்தெண் பிராமணக் குடும்பங்களை வருவித்து, ஒவ்வொன்றிற்கும் ஓர் ஊரை நல்கினான் என்றும், ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வருகின்றது. வேம்பத்தூர் என்பது வட மொழியில் நிம்பை என வழங்கும். கடைக்கழகக் காலத்தவனான முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக்குடி யென்னும் ஊரைக் கொற்கைகிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்குத் தானஞ் செய்தான். கி.பி. 9ஆம் நூற்றாண்டினனான வரகுணபாண்டியன் பிராமணரை அகரமேற்றியதை, பொன்றிகழ் தருவிமானப் புரிசைசெய் தகர மேற்றி நன்றிகொள் தேவதானம் நல்கியாங் கிருக்கு நாளில் (48:22) என்னும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண அடிகள் தெரிவிக்கும். முதலாம் இராசராசன் காலத்தில், இராசராசச் சதுர்வேதி மங்கலம் என்னும் அகரம் ஏற்பட்டது. இங்ஙனம் மூவேந்தரும் அடிக்கடி அகரமேற்றியதை, அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை யென்றது நிச்சயந் தானே. (திருமந். 1824) ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர் கூறிடும் விப்பிரர் கோடிபேர் உண்பதில் நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. (திருமந். 1825) என்று திருமூலர் கண்டித்தார். தானம் வேந்தரும் வேளிரும் பெருஞ்செல்வரும் பிராமணர்க்குக் கொடுக்கவேண்டிய தானங்கள், கீழ்வருமாறு பதினாறென மச்ச புராணங் கூறும். (1) துலைநிறை (துலாபாரம்) (9) பொன்யானைத்தேர் (இரணிய ஹஸ்திரதம்) (2) பொன்பிறப்பு (இரணிய கர்ப்பம்) (10) ஐயேர் நிலம் (பஞ்சலாங்கலபூ) (3) பெருங்கோளம் (பிரமாண்டம்) (11) நாவலந்தீவு (தராதலம்) (4) விண்மரம் (கல்பபாதவம்) (12) உலகச்சக்கரம் (விஸ்வ சக்கரம்) (5) ஆவாயிரம் (கோஸ கஸ்ரம்) (13) விண் பெருங்கொடி (மகா கல்பலதா) (6) பொன்னா (இரணிய காமதேனு) (14) மணியா (இரத்ந தேனு) (7) பொற்பரி (இரணியா சுவம்) (15) எழுகடல் (ஸப்த ஸாகரம்) (8) பொற்பரித் தேர் (16) ஐம்பூதக்குடம் (மகாபூதகடம்) (இரணியாசுவ ரதம்) இவற்றுள், துலைநிறை, பொன்பிறப்பு, ஆவாயிரம் என்பன பெருவழக்கானவை. ஒவ்வொரு போர் வெற்றியின் பின்பும், ஒரு பிராமணத் தலைவற்குத் துலைநிறைப் பொன் தானஞ்செய்வது மூவேந்தர் மரபு. சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் போர் வெற்றியின்பின், மாடல மறையோனுக்குத் தன் நிறையான 50 துலாம் பொன் தானஞ் செய்தான். எச்சிறப்புப் பற்றியும் தமிழர்க்கு இத் தானமில்லை. பொன்பிறப்பென்பது, தானஞ்செய்பவன் தான் புகுந்து வெளிவரக்கூடிய அளவு பொன்னாற் பெரிய ஆவுருவஞ் செய்து, அதனை ஊடுருவியபின் அதை ஒரு பிராமணனுக்கு அளிப்பது. அங்ஙனஞ் செய்த அல்பிராமணன் பிராமணப் பிறப்பை யடைவான் என்பது, மூடநம்பிக்கையை வளர்க்கும் துணிச்சலான ஏமாற்றே. மூவேந்தருக்குப்பின், திருவாங்கூர் அரசரும் தஞ்சை விசயராகவ நாயக்கரும், பிராமணர்க்குப் பொன்பிறப்புத் தானங் கொடுத்து வந்தனர். கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்(கு) அருங்கல நீரொடு சிதறி. (புறம். 361) ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறைய பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து. (புறம். 367) ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே (இனி. நாற். 22) என்று, புலவர் கூற்றுகளெல்லாம், உயர்பொருட் கொடை களைப் பிராமணர்க்கே வரையறுத்துவிட்டன. பிராமணர் பெற்ற பூசனையுரிமை மூவேந்தரும், அரண்மனைச் சடங்கும் திருக்கோவில் வழிபாடும் சமற்கிருதத்தில் நடத்துமாறு ஆரியப் பூசாரியரை வழிவழி நிலையாக அமர்த்திவிட்டதனால், இன்று அதை மாற்றுவது அரிதாயுள்ளது. முதலாம் அரசவரசனின் மகனான இராசேந்திரன், தன் கோயிற் பூசகராகிய சர்வசிவ பண்டிதரைத் தன் மெய்க்கீர்த்தியில் இறைவனோ டொப்ப உடையார் என்று குறித்திருப்பதும், அவருக்கும் ஆரியம் மத்தியம் கௌடம் என்னும் வடநாடு களிலிருந்த அவருடைய மாணவருக்கும் மாணவரின் மாணவருக்கும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆடவல்லான் மரக்காலால் ஈராயிரங்கல நெல் ஆண்டுதோறும் அளித்து வந்தமையும், அவன் எந்த அளவிற்குத் தன்னை ஆரிய அடிமை யாக்கிக் கொண்டான் என்பதைத் தெரிவிக்கும். கல்வி ஆங்கிலராட்சி ஏற்படும்வரை, பண்டைக்காலத்தில் தமிழ கத்திலும் ஏனை யிந்திய நாடுகளிலும் கல்வித்துறை அரசியல் திணைக் களங்களுள் (departments) ஒன்றாக இருந்ததில்லை. பழங்குடி மக்களான தமிழரும் திரவிடரும், தனிப்பட்ட கணக்காயர் பள்ளிகளிலும் ஆசிரியர் இல்லங்களிலுமே பொருள் கொடுத்தும் பணிவிடை செய்தும் விரும்பிய அல்லது இயன்ற அளவு கல்வி கற்று வந்தனர். உயர்கல்வி கற்றுப் பாவலராகிப் புகழ்ச்சிப் பனுவல் பாடியவர்க்கும் சிறந்த நூலியற்றியவர்க்கும், அரசர் பரிசளிப்பது வழக்கமாயிருந்தது. ஆயின், பிராமணர்க்கோ, எல்லாப் பெருங்கோயில் களிலும், மடங்களிலும், அரசியற் செலவிலும் அரசியல் அதிகாரிகளான பெரு மக்கள் நன்கொடையாலும், தென்மொழி யிலும் வடமொழியிலும் உயர்மட்டம்வரை ஊணுடை யுறையுளொடு கூடிய இலவசக்கல்வி அளிக்கப்பட்டு வந்தது. (1) காமப்புல்லூர் வடார்க்காட்டைச் சேர்ந்த காமப்புல்லூர்ச் சபை (ஆளுங்கண) உறுப்பினர் ஒருவர் ஒரு வேதப்பாடசாலை நடத்தி வந்ததாக, முதலாம் பராந்தகன், சுந்தரச்சோழன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் தெவிக்கின்றன. (2) ஆனையூர் கி.பி. 999-ல், செங்கற்பட்டைச் சேர்ந்த ஆனையூர்ப் பெருஞ்சபை, வேதம், பாணினீயம், அலங்காரம், மீமாம்சை ஆகிய வற்றைக் கற்பிக்க வல்ல ஒரு பிராமணர்க்குப் பட்டவிருத்தி ஏற்படுத்திற்று. மாணவர்க்கு இலவச வூண் அளிக்கப்பட்டது. (3) எண்ணாயிரம் முதலாம் இராசேந்திரன் காலத்தில், இராசராசச் சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரத்தில், ஒரு வேதக் கல்லூரி தோற்று விக்கப்பட்டது அல்லது நிலையுயர்த்தப் பட்டது. அதில் 270 கீழ்க்கல்வி மாணவரும் 70 மேற்கல்வி மாணவரும் கற்றனர். ஆசிரியர் பதினால்வர். ரூபாவதாரம், நால்வேதம், போதாயன கற்பம், வியாகரணம், மீமாம்சை, வேதாந்தம் முதலியன கற்பிக்கப்பட்ன. மாணவர் படியும் ஆசிரியர் சம்பளமும் நெல்லாகக் கொடுக்கப்பட்டன. மாணவர் அன்றாடப் படி, கீழ்க்கல்வியர்க்குத் தலைக்கு 6 நாழி; மேற்கல்வியர்க்குத் தலைக்கு 10 நாழி. ஆசிரியர் அன்றாடச் சம்பளம், வேதாந்தப் பேரா சிரியர்க்கு 11/3 கலம்; மீமாம்சை வியாகரண ஆசிரியர்க்குத் தலைக்கு 1 கலம்; பிறருக்குத் தலைக்குக் காற்கலம் அல்லது முக்குறுணி. மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் அன்றாட நெல்லளப்பொடு ஆட்டைப்பொன்னும் அளிக்கப்பட்டது. வியாகரண மீமாம்சை ஆசிரியர்க்கும் மேற்கல்வி மாணவர்க்கும், பாடம் நடத்தப்பட்ட அதிகாரம் ஒன்றிற்கு 1 கழஞ்சு மேனியும், பிறருக்கு அரைக் கழஞ்சு மேனியும் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டது. வேதாந்த ஆசிரியர்க்கு மட்டும் பொன்னளிப்பில்லை. (4) திரிபுவனி புதுச்சேரி யருகில் திரிபுவனி யென்னும் நகரிலும், எண்ணாயிரம் வேதக்கல்லூரி போன்றதொன்று இருந்ததாக, இராசாதிராசனின் 13ஆம் ஆண்டுக் (1048) கல்வெட்டொன்று குறிக்கின்றது. அதில் 260 மாணவரும் 12 ஆசிரியரும் இருந்தனர். பாடத் திட்டம் எண்ணாயிரத்திற் போன்றதே. ஆயின், பிரபாகரம் மட்டும் குறிக்கப்படவில்லை. அதற்குப் பன்மடங்கு ஈடுசெய்ய, சத்தியாசாட (ஸத்யா ஷாட) சூத்திரம், மனுதரும சாத்திரம், வைகானச சாத்திரம், பாரதம், இராமாயணம் என்பன கற்பிக்கப் பட்டன. மாணவர் அன்றாடப் படி, கீழ்க்கல்வியர்க்கு 6 நாழி; மேற் கல்வியர்க்கு 8 நாழி. ஆசிரியர் அன்றாடச் சம்பளம், வேதாந்தப் பேராசிரியர்க்கு 11/6 கலம்; பிறருக்குத் தலைக்குக் காற்கலம் முதல் ஒரு கலம்வரை. (5) திருமுக்கூடல் நெல்லைநாட்டு முக்கூடலில், ஒரு வேதக்கல்லூரியும் அதைச் சேர்ந்த மருத்துவசாலை யொன்றும் இருந்ததாக, வீரராசேந்திரன் கல் வெட்டொன்று (1067) குறிக்கின்றது. கல்லூரியில் இருக்கு எசுர் வேதங்களும் ரூபாவதாரமும் வியாகரணமும் கற்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வேதத்திற்கும் ஓராசிரியரும் 10 மாணவரும், வியாகரணத்திற்கு ஓராசிரியரும் 20 மாணவரும் இருந்தனர். மாணவருக்கு விடுதி, இலவசவூண், படுக்கப் பாய், காரி(சனி) முழுக்கெண்ணெய், இராவிளக்கு, இரு வேலைக் காரிகள் முதலிய ஏந்துகள் (வசதிகள்) இருந்தன. ஆசிரியர் சம்பளம், வேத ஆசிரியர்க்கு அன்றாடம் பதக்கு நெல்லும் ஆண்டிற்கு 4 பொற்காசும்; வியாகரண ஆசிரியர்ககு அன்றாடம் 1 தூணி நெல்லும் ஆண்டிற்கு 10 பொற்காசும். மருத்துவசாலையில், ஓர் அறுவை மருத்துவரும் மூலிகை கொணரிகள் இருவரும் இருந்தனர். நோயாளிகட்கு 15 படுக்கைகளும் இருந்தன. (6) திருவாவடுதுறை திருவாவடுதுறையில் ஒரு மடத்தில் ஒரு மருத்துவப்பள்ளி நடைபெற்று வந்ததாக, விக்கிரமச் சோழன் 3ஆம் ஆண்டுக் (1121) கல்வெட்டொன்று குறிக்கின்றது. மருத்துவம், வாகடம், ரூபாவதாரம், வியாகரணம் என்பன அங்குக் கற்பிக்கப்பட்டன. (7) பெருவேளூர் தென்னார்க்காட்டைச் சேர்ந்த பெருவேளூரில், வேதமும் சாத்திரமும் வல்ல 10 பட்டர், 1 சிவாச்சாரியார், 1 மருத்துவர் ஆகியோருக்கு 12 வேலி நிலமும் குடியிருக்க வீடுகளும் கொடுக்கப்பட்டதாக, இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் 13ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று குறிக்கின்றது. (8) திருவொற்றியூர் திருவொற்றியூரில் பாணினீயங் கற்பிப்பதற்கு வியாகரண தான மண்டபம் என ஒன்று கட்டப்பட்டிருந்ததென்றும், அதற்கு 65 வேலி நிலங் கொண்ட குலோத்துங்கன் காவனூர் மானியமாக ஒதுக்கப்பட்டிருந்த தென்றும், இரண்டாங் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டொன்று (1213) குறிக்கின்றது. பாணினீயத்தோடு சோம சித்தாந்தமும் அங்குக் கற்பிக்கப் பட்டது. சிவசூத்திரம் எனப்படும் முதற் பதினான்கு பாணினீய நூற்பாக்கள், அம் மண்டபத்திலேயே எழுந்தனவென்று குறிக்கப் பட்டதாகத் தெரிகின்றது. (9) திருவிடைக்கழி தஞ்சையைச் சேர்ந்த திருவிடைக்கழியில், மலபாரிலிருந்து வந்து வேதாந்தங் கற்ற பிராமண மாணவர்க்கு ஊட்டுப்புரை (இலவச ஊணகம்) ஒன்றிருந்ததாக, 1229ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று குறிக்கின்றது. இவையெல்லாம் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளி னின்று தெரிந்த செய்திகள். இனி, வெளியிடப் பெறாத (பன்னீராயிரத்திற்கு மேற்பட்ட) வற்றினின்று எத்தனை தெரிய வருமோ, இறந்துபட்டன வற்றுள் எத்தனை குறிக்கப் பெற்றனவோ, அறியோம். இங்ஙனம் மூவேந்தரும் பிராமணர் கல்வியையே கவனித்து வந்ததனால், பிராமணர் வரவரக் கல்வியிலும் அறிவிலும் உயர்ந்தனர்; தமிழர் தாழ்ந்தனர். “While we thus find evidence on the nature and organisation of higher studies in Sanskrit, it is somewhat disappointing that we are left with practically no tangible evidence of the state of Tamil learning” என்று nguh.K.A. நீலகண்ட சாத்திரியாரே எழுதியிருப்பதை நோக்குக. (The Cholas, p.633). பிராமணர்க்குத் தனிச்சலுகை ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் (புறம்.9) பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம்.34) ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் (புறம்.43) ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து (புறம்.367) என்பன பிராமணரை வேறுபடுத்திச் சிறப்பிக்கின்றன. வரகுணபாண்டியன் தற்செயலாகவும், மூன்றாங் குலோத் துங்கச் சோழன் குற்றத்தண்டனையாகவும், ஒவ்வொரு பிராமணனைத் கொல்ல நேர்ந்தது. அதனால் பிராமணப்பழி (பிரமஹத்தி) அவரைப் பிடித்தது. அவ் விருவரும் என்னென்ன கழுவாய் (பிராயச்சித்தம்) செய்தும் எங்கெங்குச் சென்றும், இறைவனாலும் தப்பமுடியவில்லை. இறுதியில் திருவிடை மருதூர் சென்று தப்பினர் என்பது கதை. கொலைப்பழி என்பது எல்லாக் கொலைக்கும் பொது; பிராமணக் கொலைக்கு மட்டும் உரியதன்று. மேலும், தற்செயற்கொலைக்குக் கழுவாய் போதும்; தண்டனைக் கொலை அரசனின் கடமை; அது அறத்தின் பாற் பட்டது. ஆதலால் மேற்கூறிய பிராமணப் பழிக்கதைகள், பிராமணனைக் கொல்லக்கூடாது என்பதற்கும், திருவிடை மருதூர்க் கோயில் வழிபாடு வலிமையிற் சிறந்தது என்பதற்கும், கட்டப் பட்டவையே. தமிழவேந்தரின் முன்னோக்கின்மை ஆங்கிலர் பத்தாயிரங் கல் தொலைவினின்று வந்து, ஆத்திரேலியா என்னும் தென்கண்டம் முழுவதையுங் கைப்பற்றிக் கொண்டனர். தமிழவேந்தர் கங்கைகொண்டும் கடாரம் வென்றும், ஐம்பது கல் தொலைவில் அண்மையிலுள்ள இலங்கையைப் பற்றாது, தமிழர் தத்தளித்துத் திண்டாட விட்டுவிட்டனர். இது அவரது ஆரிய மயக்கின் விளைவே. வீண்பகட்டான அவரது மெய்க்கீர்த்தியால் என்ன பயன்? தமிழரின் தாழ்வு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் அகப் பொருளிலக்கணம் பற்றிய நால்வகுப்புள், அந்தணர் வகுப்பை ஆரியர் கவர்ந்துகொண்டனர்; வேளாளர் சூத்திரராயினர். மூவேந்தர் அரசு அற்றுப்போனபின், இடையிரு வகுப்பாரும் சூத்திர வகுப்புள் தள்ளப்பட்டனர். வேளாளர்க்குக் கீழ்ப்பட்ட மக்களுள் ஒருசாரார் தீண்டாதார் என்னும் பஞ்சமராயினர். அவருள்ளும் ஒரு சிறு தனி வகுப்பார் காணாதாராயினர். அவர் நாயாடிகள். தமிழின் தாழ்வு தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாத மொழியென்று தள்ளப்பட்டபோதே, தமிழின் தாழ்வு தொடங்கிவிட்டது. ஆரியச் சிறுதெய்வ வழுத்துத் திரட்டுகள் தெய்வமறைகளாகப் போற்றவும், தமிழர் முழுமுதற் கடவுள் மெய்ம்மறைகள் இழிந்தோர் நூல்களாகத் தூற்றிப் புறக்கணிக்கவும் பட்டன. ஆரியச் சிறுதெய்வ வழுத்துகளை ஓதுபவரே மறையோர் எனப் பட்டனர். தமிழைத் தமிழரே புறக்கணிக்கவும் பழிக்கவும் தலைப்பட்ட தனால், அது பல்வேறு வகையிற் சிதைந்தும் புதைந்தும் இற்றை நிலை யடைந்தது. அது சிதைந்த வகைகள் பின்னர் விளக்கப்படும். 4. சமற்கிருத இலக்கிய வளர்ச்சியும் தமிழிலக்கியத் தளர்ச்சியும் வேத ஆரியரின் முன்னோர் கி.மு. 2000 போல் இந்தியாவிற் குட் புகுந்தபோது, வாய்மொழியான சில சிறுதெய்வ வழுத்துகள் தவிர , ஒருவகை யிலக்கியமும் அவருக்கிருந்த தில்லை. தமிழர்க்கோ பாட்டு, உரை, நூல், மந்திரம் (வாய் மொழி), விடுகதை(பிசி), எதிர்நூல் (அங்கதம்), பழமொழி ஆகிய எழுவகைப்பட்ட செய்யுள் இலக்கியம் ஏராளமாக இருந்தது. நூல் என்பன இலக்கணமும் பல்வேறு அறிவியலும். மந்திரம் என்பது திருமந்திரம் போன்ற மறைநூல். வேத ஆரியர் சிறுசிறு கூட்டமாக வந்தனர். அவருட் பூசாரியரே பிரிந்து நின்றனர். ஏனையோரெல்லாம் பழங்குடி மக்களோடு இரண்டறக் கலந்துபோயினர். அதனால் அவர் மொழியும் வழக்கற்றுப்போயிற்று. அவர் மொழியொடு பிராகிருதம் என்னும் வடநாட்டுப் பழங்குடி மக்கள் மொழி கலந்ததே வேதமொழி. பிரா = முன்பு. கிருதம் = செய்யப்பட்டது. ஆரியப் பூசாரியர் சிந்துவெளியில் இருந்தபோதே, இந்திரன் என்று வழங்கிய தமிழவேந்தன் வணக்கத்தை மேற்கொண்டனர். வேந்தன் என்பவன், தமிழரின் திணைநிலைக் காலப் பழைய மருதநில மழைத்தெய்வம். வேந்தன் மேய தீம்புனல் உலகமும் (தொல். அகத். 5) வடநாட்டில் வேந்தன் என்னும் பெயர் இந்திரன் என மாறிற்று. இரு சொற்கும் அரசன் என்பதே பொருள். நரேந்திரன், மிருகேந்திரன் முதலிய சொற்களை நோக்குக. காவிரிப்பூம் பட்டினத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழா தமிழர் விழாவே. தெய்வப்பெயர் வடசொல்லாயினும் தெய்வமும் விழாவும் தமிழரன என்பதை அறிதல் வேண்டும். சிவனியமும் மாலியமும் ஆகிய ஐந்திணைப் பொதுவான பெருந்தேவ மதங்கள் வளர்ச்சி யடைந்தபின், மருதத்திணைக்கு மட்டுமுரிய வேந்தன் வழிபாடு வழக்கற்றது. மாக்கசு முல்லர், What can India teach us? என்னும் தம் கட்டுரைப் பொத்தகத்தில், “In some of the hymns addressed to Indra his original connection with the sky and the thunderstorm seems quite forgotten. He has become a spiritual god, the only king of all worlds and all people, who sees and hears everything, nay, who inspires men with their best thoughts. No one is equal to him, no one excels him. “The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German.” (p.182) வடநாட்டுப் பழங்குடி மக்கள் ஏற்கெனவே ஆரியப் பூசாரியரின் வெண்ணிறத்தாலும் வெடிப்பொலி மந்திர மொழியாலும் கவரப்பட்டிருந்தனர். தம் தெய்வமாகிய இந்திரனை அவர் வணங்கி அவனைத் தந் தெய்வமென்று சொன்னபின், அவருக்கு முற்றும் அடிமையராய்ப் போயினர். இந்திர வழிபாடு பெருவழக்கா யிருந்ததனால், ஆரியப் பூசாரியர்க்குப் பெரும்பான்மைத் துணை கிட்டிற்று; அத்துணை கொண்டே, தமக்கு மாறானவரையெல்லாம் பொருது வென்றனர். இங்ஙனம் பழங்குடி மக்களைக்கொண்டே பழங்குடி மக்களை வென்றதை மேலையறிஞர் அறியாது, ஆரியர் பெரும்பான்மை யால் அல்லது போர்த்திறத்தால் தஸ்யுக்கள் என்று அவர் பழித்த பழங்குடி மக்களை வென்றதாகக் கூறுவர். அறிவாராய்ச்சி மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும், தமிழகத்தில் தமிழர் முன்னேற்றத்திற்கென்றே ஏற்பட்ட நயன்மைக் கட்சியை (Justice Party), தமிழரைக்கொண்டே சிறுபான்மைப் பிராமணர் தோற்கடித்ததையும், மறைமலையடிகளும் பெரியாரும் புல மக்களிடையும் பொதுமக்களிடையும் எத்துணையோ எடுத்து விளக்கினும், இன்னும் பேராயக்கட்சித் தமிழர் சமற்கிருத வழிபாட்டையும் இந்தி யாட்சியையும் ஏற்பதையும், நோக்கும் போது மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வேதக்கால வடநாட்டுப் பழங்குடி மக்களின் நிலைமையையுணர்தற்கு, எட்டுணையும் முட்டுப்பாடில்லையென்பதை அறிக. ஆரியப் பூசாரியர் சிந்துவெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று காளிக்கோட்டத்தை யடைந்தபின், தமிழரின் காளி வணக்கத்தையும் மேற்கொண்டனர். காளியென்பது, குமரி நாட்டில் தோன்றிய பாலை நிலத் தெய்வம். கூளி(பேய்) களின் தலைவி காளி. கரியவள் என்பது சொற்பொருள். கள்-காள்-காளம்-காளி. மாயோள் என்னும் இலக்கிய வழக்குப் பெயரும் இப் பொருளதே. காளி, கருப்பி, கருப்பாய், கருப்பம்மை என்பன, நாட்டுப்புறப் பெண்டிர்க்கு இடும் பெயர்கள். காளி தெய்வமானமைபற்றி அம்மை(தாய்) எனப்பட்டாள். வேனிற்காலத்திற் கிளம்பும் வெப்பக் கொப்புளநோய், அம்மை என்னுங் காளியால் ஏற்படுவதென்னும் மூடக் கொள்கையால் அம்மை யெனப் பெயர்பெற்றது. அந் நோய்பற்றி எல்லா மக்களும், போரில் வெற்றிதரும் தெய்வம் ( கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை-கொற்றவை) என்பதுபற்றிச் சிறப்பாக எல்லா அரசரும், காளியை வணங்கினர். காளி என்னுஞ் சொல் வடமொழியிற் காலீ என்று திரியும். இத் திரிவைத் தென்சொல்லிற்கு மூலமாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியிற் குறித்திருப்பது துணிச்சலான ஏமாற்றே. கீழை யாரியர் இந்தியாவிற்குள் வந்தபின், முதன் முதலாகத் தோன்றிய இலக்கியம் இருக்கு வேதமந்திரத் திரட்டே. அதினின்று வேள்வியியற்றுதல் பற்றிய மந்திரங்களைத் தொகுத்து எசுர் என்றும், வேள்வியிற் பாடவேண்டிய மந்திரங்களைத் தொகுத்துச் சாமம் என்றும் பெயரிட்டனர். அம் மூன்றுஞ் சேர்ந்து வேதத்திரயம் எனப் பட்டது. அதன்பின், ஆக்க வழிப்புக் கோரும் அதர்வம் என்னும் மந்திரத் திரட்டுத் தோன்றிற்று. பின்னர் நான்கையுஞ் சேர்த்துச் சதுர்வேதம் என்றனர். வேத மந்திரங்களைப் பயன்படுத்துவதும், வேள்வி களியற்று வதும்பற்றிய முறைகள், பல்வேறு குறியீட்டுப் பொருள், பலவகைச் சடங்குகளின் மரும விளக்கம், எடுத்துக்காட்டுக் கதைகள், முதலிய வற்றைக் கூறும் பிராமணம் என்னும் உரைநடைப் பகுதிகள் நால் வேதத்திற்கும் நாளடைவில் எழுந்தன. வேதக்காலத்தில், வடஇந்தியாவிற் பிராகிருதரும் திரவிட ரும் தமிழரும் இருந்ததனால், தமிழரிடமிருந்து இலக்கணம் கணியம் முதலியவற்றை ஆரியப் பூசாரியர் கற்றுக் கொண்டு வேதாங்கம் என்னும் அறுவகை வேத வுறுப்பு நூல்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தோற்றுவித்துக் கொண்டனர். அவையாவன: (1) சிட்சை (சிக்ஷை-எழுத்திலக்கணம்), (2) சந்தசு (சந்தஸ்-யாப்பிலக்கணம்), (3) வியாகரணம் (சொல்லிலக்கணம்), (4) நிருக்தம் (அருஞ்சொல் விளக்கம்), (5) சோதிடம் (ஜோதிடம்-கணியம்), (6) கல்பம் (சடங்குச் சுவடி). அண்ணாமலை பல்கலைக்கழகத்திற் சமற்கிருதப் பேராசிரியராயிருந்த P. S. சுப்பிரமணிய சாத்திரியார், தாம் எழுதியுள்ள `An Enquiry into the Relationship of Sanskrit and Tamil’ என்னும் சுவடியில், இருக்கு, தைத்திரியம் (எசுர்ப்பிரிவு), அதர்வம் என்னும் வேதங்களைச் சேர்ந்த பிராதிசாக்கிய நூற்பாக்களைச் சில தொல்காப்பிய நூற்பாக்கட்கு மூலம் போற் காட்டியிருக் கின்றார். தொல்காப்பியர் காலம் கி. மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு. அகத்தியர் காலம் தோரா. கி.மு. 12ஆம் நூற்றாண்டு. அவர் பழந்தமிழ் நூல்களைப் பயின்றே அகத்தியம் இயற்றினார். அவர் வேதக்காலத்தவராதலின், அவர் பயின்ற பழந்தமிழ் நூல்கள் வட நாட்டுத் தமிழரிடையும் வழங்கியிருத்தல் வேண்டும். பிராதிசாக்கியம் என்பது, ஒவ்வொரு வேதசாகைக்கும் (கிளைக்கும்) ஏற்பட்ட தனி எழுத்திலக்கணம். அது கி.மு. 10ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம். உரிச்சொற்றொகுதி யொத்த நிருக்தத்தின் ஆசிரியர் யாசுக்கர் பாணினிக்கு முந்தியவர். அவர் காலம் கி.மு. 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு. வடமொழி தமிழின் பன்மடித் திரிமொழி என்பதை யறியாது, அவர் வடசொற்கட்குத் தாமாகவும் பிறரைப் பின்பற்றியும் வடமொழி யுள்ளேயே மூலம் நாடிப் பலவிடத்தும் வழுவியுள்ளார். எ-டு : agni: `It is derived from three verbs, says S@a#kapu#ni from going, from shining or burning, and from leading, He, indeed, takes the letter a from the root ( to go), the letter g from the root anj (to shine), dah (to burn), with the root ni (to lead) as the last member. - (The Nighantu & the Nirukta, translated by Lakshman Sarup, p.120). இச் சொல்லின் உண்மையான மூலம் வருமாறு:- அழல்-அழன் -அழனம் = தீ (பிங்.) அழல்-அழலி = நெருப்பு, தீ (பிங்.) அழலி-அழனி-(அகனி)-வ. அக்நி (agni)-L. ignis. ழ-க,போலி. ஒ.நோ: மழ-மக, தொழு-தொகு, முழை-முகை. வடமொழியில் முதன்முதலாகத் தோன்றியது சிட்சை என்னும் எழுத்திலக்கணமே. அதன் பின்னரே, எழுத்துஞ் சொல்லும் பற்றிய நன்னூல் போன்ற இலக்கணங்கள் எழுந்தன. அவற்றுள் முதலது, தமிழகத்திற் பழந்தமிழிலக்கணத்தையும் அகத்தியத்தையும் பின்பற்றித் தோன்றிய ஐந்திரம். அதன் பின்னர் அதன் வளர்ச்சியாக ஏறத்தாழ 60 இலக்கண நூல்கள் எழுந்தபின் பாணினீயம் கிளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாணினியாரே தம் நூலில் சாகல்யர், சாகடாயனர் முதலிய சில முன்னூலாசிரியரைக் குறிக்கின்றார். ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையால் இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன் என்னும் பழைய மேற்கோள் நூற்பாவையும், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் என்னும் சிலப்பதிகார அடிகளையும் (11:98-9) நோக்குங்கால். ஐந்திர வியாகரணம் ஓரளவு தமிழ்த் தொடர்பைக் காட்டின தினால், பாணினீயம் தோன்றியபின், முன்னதன் படிகளெல் லாம் தொகுக்கப்பட்டு அழகர்மலைக்கண் ஒரு பொய்கையில் அல்லது சுனையில் எறியப்பட்டனவோ என்று ஐயுறவுண்டா கின்றது. வடமொழி வியாகரணங்களுள் தலைமையான பாணினீயம் எத்துணைச் சிறப்பும் விரிவும் அடைந்திருப்பினும், நன்னூல் போன்று எழுத்துஞ்சொல்லுமே கூறுதலால், யாப்பும் அணியும் உள்ளடங்கிய பொருளதிகாரத்தைக் கொண்ட தொல்காப்பியம் போலும் பிண்ட நூலுக்கு எவ்வகையிலும் ஈடாகாது. ஆயினும், அதற்குத் தொல்காப்பியத்தினும் மேலாகச் சிறப்புக் கொடுத்ததற்கு, வடமொழி தேவமொழியென்று நம்பப் பட்டமையும், பாணினீயத்தின் முதற் பதினான்கு நூற்பாக்களும் சிவபெருமான் உடுக்கையினின்று தோன்றிய சிவசூத்திரங்கள் என்று ஏமாற்றியமையும், அக்காலத்து மொழியாராய்ச்சி யின்மையும், தமிழரின் பழங்குடிப் பேதையுமே கரணியம். பாணினீயம் தோன்றியது கி.மு. 5ஆம் நூற்றாண்டு. ஐந்திர வியாகரணம் கி. மு. 8ஆம் நூற்றாண்டினதா யிருக்கலாம். அகத்தியர் காலத்திலேயே, வடமொழி முதற் பாவியமான (ஆதிகாவியமான) வான்மீகி யிராமாயணம் சற்றுச் சிற்றளவில் தோன்றியதாகத் தெரிகின்றது. அதற்கு இரண்டொரு நூற்றாண் டிற்குப் பின் பாரதக்காலத்தில், மகாபாரதம் தோன்றிற்று. இவ் விரண்டும் வடமொழிப் பாவியங்களுள் இதிகாசம் (மறவனப்பு) என்னும் தனிப்பிரிவைச் சாரும். இராமாயணத்தொடு சமற்கிருதக் காலம் தொடங்கு கின்றது. அதற்கு முந்தியதெல்லாம் வேதக்காலம். வேதமொழி தமிழொடு கலந்து வளர்ச்சியடைந்த பின்னரே, சமற்கிருதந் தோன்றிற்று. இதையறியாது, மேலையரும் வேதமொழியை வேத சமற்கிருதம் என்பர். அது முற்காலப்படுத்தம் (prochronism) என்னும் வழுவாகும். அதர்வவேதம் மட்டும் இராமாயணத்திற்குப் பின்பும் பாரதத்திற்கு முன்பும் தோன்றியதாகத் தெரிகின்றது. நால்வேதத் திற்கும் பின்னர்த் தோன்றியதனால், பாரதம் உத்தரவேதம் அல்லது ஐந்தாம் வேதம் எனப்பட்டது. இராமாயணமும் பாரதமும் முதன்முதல் வடமொழியில் தோன்றினும், இடத்தாலும் பாட்டுடைத் தலைவராலும் தென்ன வர்க்கும் வடவர்க்கும் அல்லது தமிழருக்கும் ஆரியர்க்கும் கதையளவிற் பொதுவானவையே. வரலாற்றுக் காலத்திற்குமுன் வடநாடு சென்று வாழ்ந்த மதிக்குல மென்னும் பாண்டியர் குடிக்கிளைக் கொடிவழியே, பாண்டவ கௌரவர் பிறந்த பரதகுலம். அங்ஙனமே சென்று வதிந்த கதிரவக் குலமென்னும் சோழர்குடிக் கிளைவழியே இராமன் பிறந்த அரசக் குடி. இனி, இராம கதையும் பாண்டவர் வாழ்க்கை வரலாறும், தென்னாட்டுத் தொடர்பும் உடையன. பாரதப்போரில் மூவேந்தரும் கலந்து கொண்டனர். கண்ண பிரான் குமரிநாட்டினின்று வடநாடு சென்ற ஆயர் குடியினரே. இராமாயணக் காலத்திலேயே தமிழெழுத்தினின்றும் திரிந்த ஒருவகை வடவெழுத்துத் தோன்றியிருக்குமேனும், வேதமந்திரங்கள் நெடுங்காலம் எழுதாக் கிளவியாகவே இருந்து வந்தன. அதற்குக் கரணியங்கள் ஐந்து, அவையாவன : (1) கால முன்னேற்றத்திற் கேற்றவாறு சில கருத்துகளையுஞ் சொற்களையும் மாற்றிக்கொள்ள இடந்தருதல். (2) மறைவாயிருக்கும் வரை, பழங்குடி மக்களிடை ஓர் உயர்ந்த தெய்வீக மதிப்பை உண்டுபண்ண இயலுதல். (3) எல்லார்க்கும் பொதுவாகாது ஒரு வகுப்பார்க்கேயுரிய பிழைப்புக் கருவியாயிருத்தல். (4) பலுக்கத் தெரியாத பொதுமக்கள் வாய்ப்பட்டு ஒலியுஞ் சொல்லும் சிதையாமற் காத்தல். (5) தெளிவு பெற்ற மக்களின் எள்ளலாலும் இகழ்ச்சியாலும் மந்திர ஆற்றல் கெடுவதைத் தடுத்தல். பாரதப் போருக்குப்பின் ஆரியப் பூசாரியர்க்குத் தமிழரொடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால், தமிழரின் தெய்வவுயர்வையும் மதவுயர்வையும் வழிபாட்டு யர்வையுங் கண்டு அவற்றைத் தழுவி, இறைவனின் முத்தொழி லையும் வெவ்வேறு பிரித்து, படைப்பிற்குப் பிரமா என்னும் ஒரு புதுத்தெய்வத்தைப் படைத்துக் கொண்டு, விண்டு என்னும் திருமாலை விஷ்ணு என்னும் கதிரவத் தெய்வத்தோடிணைத்துக் காப்புத் திருமேனி யென்றும், சிவனை உருத்திரனோ டிணைத்து அழிப்புத் திருமேனி யென்றும், வகுத்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துச் சிவனியம் மாலியம் என்னும் தமிழ மதங்களை ஆரியவண்ணமாக மாற்றி, படிப்படியாக 28 சிவனிய (சைவ) ஆகமங்களையும், 108 மாலிய (வைணவ) ஆகமங்களையும் 77 காளிய (சாக்த) ஆகமங்களையும் அமைத்துக் கொண்டனர். பேரா. P.T. சீநிவாச ஐயங்காரின், ‘History of the Tamils’ என்னும் தமிழர் வரலாற்றுப் பொத்தகத்தில் ‘The Origin of the Agamas’ என்னும் பகுதியைப் (பக். 112-115) பார்க்க. தமிழரின் கோயிற் கட்டுமானம், தெய்வப்படிமை யமைப்பு, வழிபாட்டுமுறை, கொண்முடிபு, மெய்ப்பொருள் நூல் ஆகியவற்றைக் கூறுவதே ஆகமம். ஆகமம் என்னும் பெயரிற்கே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பதே பொருள். Ú©l fhykhf tleh£L¢ átÅaiu M©F¿¤ bjŒt tz¡f¤jh®(s!$is!na devas) என்று பழித்துவந்த ஆரியப் பூசாரியர், சிவனியத்தைத் தலைமேற் கொண்டது கவனிக்கத்தக்கது. அவர் தமிழ மதங்களைத் தழுவிய பின், வைதிக சாத்திரம் என்று மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என்னும் ஆறு நூன்முறைகள் தோன்றின. நியாயம், வைசேடிகம் இரண்டும் தருக்க நூல்கள். அவற்றுட் பின்னதே சிறந்தது. அது தமிழ ஏரணத்தின் மொழி பெயர்ப்பாகும். `அகத்தியத் தருக்க சூத்திரங்கள்' என்பவற்றைக் காண்க. சாங்கியம் என்பது, 27 தனிப்பொருள் கூறும் தமிழ மெய்ப் பொருள்நூலின் மறுவடிவே. ஓகம் என்பது, உயர்நிலை உளத் தூய்மையுடைய துறவியர்க்கே உரியது; தம்மைத் தெய்வப் பிறப் பென்று ஏமாற்றிச் செருக்கிப் பிறரை இழித்துக்கூறி வெறுக்கும் வகுப்பார்க்குரியதன்று. வேதாந்தம் என்பது, உபநிடதம் என்னும் உயரிய மதவியல் அறிவுநூல்களின் பொழிப்பான மறைமுடிபு நூல். ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டே யாதலால், ஒரே முழுமுதற் கடவுளை யுணர்த்தும் உபநிடதத் திற்கும் அதற்கும், மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்ளது. ஆதலால், ஆரியப் பூசாரியர் தமிழ மதங்களைத் தழுவியபின்பே உபநிடதங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். ஆகவே, மறைமுடிபு என்பது தமிழ மறைமுடிபே யாகும். தமிழ மதங்களை ஆரிய வண்ணமாக மாற்றியபின் அதற்குச் சான்றாகவும் சார்பாகவும் பின்வருமாறு பதினெண் புராணங்கள் புனையப்பட்டன: சிவபுராணம் (10) : சைவ புராணம், பவிடிய புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்க புராணம், காந்த புராணம், வராகபுராணம், வாமன புராணம், மச்சபுராணம், கூர்மபுராணம், பிரமாண்டபுராணம். விண்டு (மால்) புராணம் (4) : வைணவ புராணம், காருட புராணம், நாரதீய புராணம், பாகவத புராணம். பிரம புராணம் (2) : பிரம புராணம், பதும புராணம். அக்கினி புராணம் (1) : ஆக்கினேயம். சூரிய புராணம் (1) : பிரமகைவர்த்தம். இவற்றின்பின், உப புராணங்கள் என்னும் 18 துணைப் புராணங்கள் எழுந்தன. அவையாவன : சனற்குமாரம், நரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், காபிலம், மாணவம், ஔசனம், வாசிட்டலைங்கம், வாருணம், காளிகம், சாம்பேசம், அங்கிரம், சௌரம், பராசரம், மாரீசம், பார்க்கவம். சிவனியம் மாலியம் என்னும் இருவேறு தமிழ மதங்களையும் பிரம வணக்கம் என்னும் ஆரியப் புனை மதத்தையும் ஒன்றாக இணைத்த முத்திருமேனிக் கொள்கை, செயற்கைப் புணர்ப் பேயாதலால், அதற்குச் சான்றாகப் புனையப்பட்ட பதினெண் புராணமும் கட்டுச் செய்தியே என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. ஆரியப் பூசாரியர் தமிழகம் வந்தபின், தமிழ்ச்சொற்களை ஏராள மாகக் கையாண்டும், அவற்றினின்று நூற்றுக்கணக்கான நுண்பொருட் சொற்களைத் திரித்துக் கொண்டும், சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைப் பெருவளப்படுத்தி, தமிழ் நூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாக அதில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். அன்று தமிழ் முத்தமிழாக வழங்கியதனால், முதற்கண் இசைநாடகங்களை மொழி பெயர்த்தனர். தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால், ஆரியப் பூசாரியர் சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கு முன், தமிழில் வழிநூல்கள் இயற்றித் தமிழரின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. தமிழர் முற்றும் ஆரியர்க்கு அடிமைப்பட்டுப் போனபின், மனுதரும சாத்திரம் போன்ற குலவொழுக்க நூல்கள் எழுந்தன. வடநாட்டில் தமிழ் மறைக்கப்பட்டுப் போனமையால், தமிழ் திரவிடப் புலவரும் பாவலரும் சமற்கிருதத்திலேயே பனுவல்களும் பாவியங்களும் பாடவும் நூல்களியற்றவும் நேர்ந்துவிட்டது. கி. மு. முதல் நூற்றாண்டு போல் இடைக் குடியிற் பிறந்து அல்லது வளர்ந்து இயற்கையாகவே பாவன்மையும் படைப்புத்திறனும் வாய்ந்த காளி தாசன் என்னும் பாவரையர் பாடியவற்றுள், இருதுசம்மாரம், குமார சம்பவம், மேகசந்தேசம், இரகுவமிசம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், சாகுந்தலம் என்பன உலகப் புகழ்பெற்றன. இங்ஙனம் மொழிபெயர்ப்பாகவும் புதுப்படைப்பாகவும் மேன்மேலும் நூல்களும் பனுவல்களும் தோன்றி, இன்று இந்தியாவிற் சமற்கிருத இலக்கியமே வியன் பரப்புள்ளதாகவும் இந்தியக் கலைகளெல்லாவற்றையும் தழுவினதாகவும், உள்ளது. எல்லாக் கலைகளையும் ஆரியப் பூசாரியர் 64ஆக வகுத்தனர். அவ் வகுப்பு அறிவியன் முறைப்பட்டதன்று. சமற்கிருதத்திலும் வேதமொழியிலும் சில சிறுதெய்வ வழுத்துத் தவிர வேறொன்று மில்லாதிருந்தபோது, பல்வேறு கலையும் நூலும் பற்றிப் பல்லாயிரம் ஏட்டுச் சுவடிகளையும் பொத்தகங்களையும் கொண்டிருந்த தமிழ், ஆரியரழிப்பி னாலும் தமிழர் புறக்கணிப்பினாலும், படிப்படியாகத் தாழ்ந்தது. இன்று திரவிடமொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலையில் உள்ளது. ஆரிய மொழிபெயர்ப்பு நூலெல்லாம் மூலமாகவும் தமிழ் முதனூலெல்லாம் படியாகவும், தோன்றுகின்றன. முதற்கண் அகத்தியத்திற்கு முந்திய ஆயிரக்கணக்கான தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன; அதன்பின், கிறித்துவிற்கு முந்தின இடைக்கால நூல்களுள், தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர, ஏனைய வெல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. பின்னர்க் கிறித்துவிற்குப் பிற்பட்ட இலக்கண விலக்கியப் புலவியத்துள்ளும் பெரும்பகுதி, இறந்து பட்டது. நில முழுக்கால் உலகவழக்குச் சொற்களும், இலக்கிய அழிவாற் செய்யுள் வழக்குச் சொற்களும், ஆயிரக்கணக்கானவை அழிந் தொழிந்தன. பிற நாடுகளிலில்லாத புறப்பகையும் அகப்பகையும் ஒன்று சேர்ந்ததனால், தமிழரே தமிழைப் பழிக்கும் நிலைமை யேற்பட்டு, சமற்கிருதம் வளரவளரத் தமிழ் தளர்ந்துவிட்டது. புலவரைப் புரப்பாரும் போற்றுவாரும் நூல்களைக் கற்பாரும் காப்பாருமின்றி, சிதலரித்தும், அடுப்பிலெரிந்தும், குப்பையில் மக்கியும், பதினெட்டாம் பெருக்கில் எறியுண்டும், கணக்கற்ற ஏட்டு நூல்கள் மீளாநிலையடைந்தபின், எஞ்சிய தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் கழக மருவிய வனப்புகளும் இருந்தவிடந் தெரியாமற் கரந்து கிடந்தன. 5. ஆரியத்தால் ஏற்பட்ட இலக்கண விலக்கிய மாற்றமுங் கேடும் தொல்காப்பியம் வாரணன் தமிழரின் கடல் தெய்வம். வருணன் ஆரியரின் மழைத் தெய்வம். வாரணன் என்பது இறந்துபட்டுள்ளது. தமிழ அந்தணர்க்குத் தூதிற் பிரிவேயன்றி ஓதற் பிரிவில்லை. மணத்தின்பின் இல்லறம் நடத்துவதும், உயர்கல்வி கற்பின் வாழுமூரிலேயே அல்லது மனைவியுடன் கூடி வாழ்ந்தே, கல்வி கற்பதும், தமிழர் மரபு; மணந்தபின் தொலைவிலுள்ள குரு குலத்திற்குத் தனித்துப் போய் மூவாண்டு கல்வி கற்பது ஆரிய மரபு. தமிழிலக்கியப் பாகுபாடு பாட்டு, உரை, நூல், வாய்மொழி அல்லது மந்திரம், பிசி (விடுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்று செய்யுளை எழுவகையாய் பகுப்பதும், அவற்றுட் பாட்டை எண் வனப்பாக வகுப்பதும், பண்டைத் தமிழமுறை. பெருங்காவியம் சிறுகாவியம் என்றும், 96 பிரபந்தங்கள் என்றும், இலக்கியப் புலவியம் இக்காலத்திற் பகுக்கப் பட்டுள்ளது. காவியத்தைப் பாவியம் என்னலாம். கவியினாற் செய்யப்படுவது காவியம். கவி என்னுஞ் சொல்லிற்குக் `கூ' என்பது வேராகக் காட்டப்பட்டுள்ளது. கூதல் = ஒலித்தல், குரலிடுதல். அது கூவு என்னுஞ் சொல்லின் மறுவடிவான அல்லது மூலமான தூய தென்சொல்லே. பிரபந்தம் தமிழிற் பனுவல் எனப்படும். பனுவல் வகைகள் இன்று 96-ற்கு மேற்பட்டுள்ளன. இனியும் மேன்மேலும் புதுவகைகள் தோன்றலாம். தொல் காப்பியத்திற்குப் பிந்தியவை யெல்லாம் விருந்து என்னும் வனப்புள் அடங்கும். ஆதலால், இற்றைத் தமிழ்ப் பனுவல் தொகுதியின் இரட்டைப் பகுப்பைப் பெருவனப்பு (அல்லது பெரும்பாவியம்). சிறுவனப்பு (அல்லது சிறுபாவியம்) என்று சொல்லுதல் வேண்டும். தமிழ்நூற் பொருட்பகுப்பு அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே (நன். பாயி.10) எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறும்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். (பழம் பாட்டு) இதுவே அறநூற் பாகுபாடு. இன்பத்தை அகம் என்றும், ஏனை மூன்றையும் புறம் என்றும், பொருள்களை இரண்டாகப் பகுப்பது பொருளி லக்கணப் பாகுபாடு. அறவழியிற் பொருளீட்டி, அப் பொருளைக் கொண்டு அறவழியில் இன்பந் துய்த்தல் என்பதே தமிழர் இல்வாழ்க்கை நெறி. இது மூன்றன் பகுதி எனப்படும். (தொல். அகத். 41) ஆரிய வொழுங்கில், அறம் என்பது வருணாசிரமம் என்னும் குலவொழுக்கமேயன்றி நல்வினையன்று. மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்பனபற்றி ஆரியர் என்பதெல் லாம் ஆரியப் பூசாரியரையே யாதலால், பொருளீட்டலும் அறஞ்செய்தலும் அவர் தொழிலன்று. அவர் முதற்கண் கடவுளல்லாத சிறு தெய்வ வழிபாட்டினரே யாதலால், மறுமையில் விண்ணுலகப் பேறேயன்றி வீடுபேறு அவர்க் கில்லை. ஆதலால் தர்மார்த்த காமமோக்ஷம் என்பது, அறம் பொருளின்பம் வீடு என்பதன் மொழிபெயர்ப்பே. இசை நாடகப் பெயர்கள் தமிழ் ஆரியம் இசை, இன்னிசை சங்கீதம் தமிழிசை, (இசைத்தமிழ்) கர்நாடக சங்கீதம் நடம், தமிழ் நடம் பரதநாட்டியம். புதிதாய்த் தோன்றிய வடசொற் குறியீடுகளை மொழி பெயர்த்தல் வேண்டும். பனுவற் பெயர்கள் (மொழிபெயர்ப்பு) அந்தாதி - ஈறுதொடங்கி, ஆகமம் - தோன்றியம், சதகம் - பதின்பதிகம், பதிற்றுப்பத்து, நூறு; சாத்திரம் - புலத்திரம், தந்திரம்,-இழையம், புராணம் - தொன்மம். உரைப்பெயர்கள் (மொழிபெயர்ப்பு) பாடியம் - பேருரை, விருத்தி-விரிவுரை. பேசு - வ. பாஷ் - பாஷ்ய - பாடியம். பாஷ் - பாஷா - த. பாழை, பாடை - மொழி. நூற்பகுதிப் பெயர்கள் அத்தியாயம்-அதிகாரம், படலம்; அநுக்கிர மணிகை-உள்ளடக்கம், பொருளடக்கம்; இலம்பகம்-பேரிகம், உபக்கிர மணி-முகவுரை, பாயிரம்; உபோத்சாதம்-பாயிரம், விஷயசூசிகை-பொருட்குறிப்பு, சூத்திரம்-நூற்பா, விருத்தம்-மண்டிலம் (கலித் துறையினின்று தோன்றியது). அணிப்பெயர்கள் அக்கரச்சுதகம்-எழுத்துச்சுருக்கம், அக்கரவருத்தனம்-எழுத்துப் பெருக்கம், அட்டநாகபந்தம்-எண்ணாகப் பிணையல், இரட்டை நாக பந்தம்-(இரு, இணை) இரட்டை நாகப்பிணையல், இரதபந்தம்-தேர்க்கட்டு, ஓட்டியம்-இதழ்குவிபா, காதை கரப்பு -பாட்டுக் கரப்பு, கூட சதுக்கம்-நாலடிமறை, சக்கர பந்தம்-சக்கரக் கட்டு, சருப்பதோ பத்திரம்- எண்வழிவாசகம், சித்திரக்கவி-சித்திரப்பா, மிறைப்பா; திரிபங்கி-முப்பங்கி, திரிபாகி-முப்பாகி, நியாயமலைவு - முறைமைமலைவு, நிரோட்டியம்-இதழகல்பா, பதுமபந்தம்-தாமரைக்கட்டு, மாத்திரை வருத்தனம்-மாத்திரைப் பெருக்கம், முரசபந்தம்-முரசக்கட்டு, யதிவழு-சீர்முடிவழு, யமகம்-மடக்கு. செத்தல் = ஒத்தல். செ + திரம் = செத்திரம்-சித்திரம் = ஓவியம் ஒ.நோ ; செந்தூளம்-செந்தூரம்-செந்துரம் = சிந்துரம். நால்வகைப் பாக்கள் ஆசு-கடுமை. மதுரம்-இனிமை, சித்திரம்-மிறைமை, வித்தாரம்-அகலம். கடும்பா, இன்பா, மிறைப்பா, அகலப்பா (விரிபா, பெரும்பா) என்றும் சொல்லலாம். மதுரம், சித்திரம் என்பனவும் தென்சொற்களே. நால்வகைப் புலவர் கவி-பாவலன், கமகன்-விளக்கி, வாதி-தருக்கி, வாக்கி-பொருண்மொழியன். கடவுள் வணக்கம் தமிழ முறைப்படி, சிவனியர் சிவன் என்னும்பெயராலும், மாலியர் திருமால் என்னும் பெயராலும், ஒரே கடவுள் வணக்கஞ் செய்தல் வேண்டும். ஆயின், ஆரியச்சார்பினால், பெரும்புலவரான தமிழத் துறவியரும் தம் நூல்களிலும் பனுவல்களிலும் பல்தெய்வ வழுத்துப் பாடிவருகின்றனர். திரு என்னும் அடைமொழி திரு = செல்வம், அழகு, செல்வத்தெய்வம், தெய்வத் தன்மை, தெய்வத் தூய்மை. இத் தூய தென்சொல்லை வடவர் ச்ரீ என்று திரித்து ஸ்ரீ என்று குறித்து வடசொல் போலாக்கி, இருவகை வழக்கிலும் திருப்பொருட் பெயர்கட்குமுன் அடை மொழியாக வழங்கச் செய்திருக்கின்றனர். அது சீ யென்று சிதைந்து முள்ளது. எ-டு: திருவரங்கம்-ஸ்ரீரங்கம்-சீரங்கம். இங்ஙனம் மாற்றப்பட்ட சொற்கள் எத்தனையோ உள. ஓம் என்னும் முழுமூலக் குறியெழுத்து மந்திரம் இது தமிழரது என்பது, அதன் வரிவடிவே காட்டும். இது பகுக்கப் படாதது. ஆயின், ஆரியப் பூசாரியர் அ + உ + ம் என்று பகுத்துப் பிரணவ என்று பெயரிட்டு ஆரிய மந்திர அசை மொழியாகக் காட்டுவர். ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. (திருமந். 2628) இது ஓம் என்பது அனைத்திற்கும் மூலம் என்பதை உணர்த்துதல் காண்க. இதன் மருமப் பொருளைத் தமிழ் வாயிலாகவன்றி வேறெம் மொழி வாயிலாகவும் உணர வியலாது. மறைநூல் மந்திரம் என்றும் வாய்மொழி என்றும் இருந்த தமிழமறை நூல் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆரிய நான்மறைகளே இன்று தமிழர்க்கும் மறைகளாகக் காட்டப்படுகின்றன. அதனால் மறையெழுத்துகளும் ஐம்பத்தொன்றென்பர். ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும் ஆதி யெழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் (திருமந். 942) திருமூலர் ஆரிய ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு ஓதுவதால், என்பர் என்று பிறர் கூற்றாகக் குறித்தல் காண்க. இதையறியாது, துடிசைகிழார் அ. சிதம்பரனார் திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் உயிர் 16 உண்டு என்பது இதனால் அறிகின்றோம், என்று குறிப்புரை வரைந்துள்ளார். இது அவரது தமிழ்ப்பற்றையே காட்டுகின்றது. 6. இறந்துபட்ட தமிழ் நூல்கள் - பெயர் தெரிந்தவை (1) இயற்றமிழ் i. இலக்கியம் அகத்திணை, அசதிக்கோவை, அஞ்சனகேசி, அட்டாதச புராணம், அண்ணாமலைக் கோவை, அந்தாதிக் கலம்பகம், அந்தாதி மாலை, அமிர்தபதி, அரசச்சட்டம், அரும்பைத் தொள்ளாயிரம், அரையக் கோவை, அவிநந்தமாலை, அளவை நூல், அறம்வளர்த்த முதலியார் கலம்பகம், அறிவுடை நம்பியார் சிந்தம், ஆசிரிய மாலை, ஆயிரப் பாடல், ஆரிய படலம், இசையாயிரம், இராசராச விசயம், இராமாயண வெண்பா, இராமீசுரக் கோவை, இரும்பல்காஞ்சி, இளந் திரையம், இறை வானறையூர்ப் புராணம், இன்னிசைமாலை, ஈங்கோய் எழுபது, உன்னியம், ஊசிமுறி, எண்ணூல், எதிர்நூல், எலிவிருத்தம், எழுப் பெழுபது, ஏரம்பம், ஐந்திணை, ஓவிய நூல், கச்சிக் கலம்பகம், கண்டன் கோவை, கண்டனலங்காரம், கலி, கலியாணன் கதை, கலைக்கோட்டுத் தண்டு, களிப்பெழுபது, கன்னிவன புராணம், காங்கேயன் நாலாயிரக் கோவை, காங்கேயன் பிள்ளைக் கவி, காசியாத்திரை விளக்கம், காரிக் கோவை, காரிகைச் செய்யுள், காரைக் குறவஞ்சி, காலகேசி, கிளவித் தெளிவு, கிளவி மாலை, கிளவி விளக்கம், கிளிவிருத்தம், குண்டலகேசி, குண நாற்பது, குமார சேனாசிரியர் கோவை, குருகு, குலோத்துங்கச் சோழ சரிதை, கோட்டீச்சுரவுலா, கோயிலந்தாதி, கோலநற்குழல் பதிகம், சங்க காலப் பாரதம், சதகண்ட சரித்திரம், சாதவாகனம், சாந்திபுராணம், சித்தாந்தத்தொகை, சிற்றெட்டகம், சூத்திரக சரிதம், செங்கோன் தரைச் செலவு, செஞ்சிக் கலம்பகம், சேயூர் முருகன் உலா, சைன இராமாயணம், தகடூர் யாத்திரை, தசவிடுதூது, தண்டகாரணிய மகிமை, தத்துவ தரிசனம், தமிழ் முத்தரையர் கோவை, தன்னையமக வந்தாதி, திருக்காப்பலூர்க் குமரன் உலா, திருப்பட்டீச்சுரப் புராணம், திருப்பதிகம், திருப்பாலைப் பந்தல், மத்தியத்த நாத சுவாமி உலா, திருமறைக் காட்டந்தாதி, திருமேற்றளிப் புராணம், திருவதிகைக் கலம்பகம், திருவலஞ்சுழிப் புராணம், திரையக் காணம், தில்லை யந்தாதி, துரியோதனன் கலம்பகம், தென்றமிழ்த் தெய்வீகப் பரணி, தேசிகமாலை, நந்திக்கோவை, நல்லை நாயக நான்மணிமாலை, நறையூரந்தாதி, நாரத சரிதை, பரமபத திமிர பானு, பரிப் பெருமாள் காமநூல், பரிபாடை, பல்சந்தமாலை, பழம்பாட்டு, பழைய இராமாயணம், பாசண்டத் தொகை, பிங்கல கேசி, பிங்கல சரிதை, பிம்பசார கதை, புட்கரனார் மந்திரம், புராண சாகரம், புறத்திரட்டு, பெருந்தேவனார் பாரதம், பேர் வஞ்சி, பொருளியல், மஞ்சரிப்பா, மல்லிநாதர் புராணம், மழவை யெழுபது, மாடலம், மார்க்கண்டேயனார், காஞ்சி, மாறவர்மன் பிள்ளைக் கவி, முத்தொள்ளாயிரம் (2570 வெண்பா), முப்பேட்டுச் செய்யுள், வங்கர் கோவை, வச்சராசன் பாரதம், வச்சத் தொள்ளா யிரம், வருத்தமானம், வல்லையந்தாதி, வளையாபதி, வாசு தேவனார் சிந்தம், வாமன சரிதை, விக்கிரமன் கலிங்கத்துப் பரணி, விஞ்சைச் கோவை, வியாழமாலை யகவல், வீரணுக்க விசயம், வீரமாலை, வெண்டாளி முதலியன. 2. இலக்கணம் அகத்தியம், அணியியல், அவிநயம், இன்மணியாரம், கடிய நள்ளியார் கைக்கிளைச் சூத்திரம், கவிமயக்கிறை, காக்கைபாடி னியம் (பெரும்பகுதி), கிரணியம், குறுவேட்டுவச் செய்யுள், கையனார் யாப்பியல், சங்கயாப்பு, சிறுகாக்கை பாடினியம், செய்யுளியல், செய்யுள் வகைமை, தக்காணியம், தமிழ்நெறி விளக்கம், நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, நத்தத்தம், நல்லாறம் மொழிவரி, நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை, பரிப்பெருமாள் இலக்கணநூல், பரிமாணனார் யாப்பிலக்கணம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்காயம், பனம்பாரம், பன்னிருபடலம், பாடலம், புணர்ப் பாவை, பூதபுராணம், பெரிய பம்மம், பெரிய முப்பழம், பெரும்பொருள் விளக்கம், போக்கியம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், முள்ளியார் கவித்தொகை, யாப்பியல், வதுவிச்சை முதலியன. குறிப்பு: பாட்டியல் நூல்கள் தமிழ் மரபிற்கு மாறான செய்திகளைத் தெரிவிப்பதால், இங்குக் குறிக்கப் பெறவில்லை. (2) இசைத்தமிழ் i. இலக்கியம் gÇghlš (46 ghlš), njthu« (119209 gâf«?), திருப்புகழ் (15639 பாட்டு?) முதலியன. ii. இலக்கணம் அகத்தியம், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை, இசை நுணுக்கம்,இந்திரகாளியம்,குலோத்துங்கன் இசைநூல், சிற்றிசை, பஞ்சபாரதீயம், பதினாறு படலம், பெருநாரை (முதுநாரை), பெருங் குருகு (முதுகுருகு), வாய்ப்பியம் முதலியன. (3) நாடகத்தமிழ் i. இலக்கியம் இராசஇராசேசுவர நாடகம், காரைக் குறவஞ்சி, குருசேத்திர நாடகம், சோமகேசரி நாடகம், ஞானாலங்கார நாடகம், திருநாடகம், பரிமளகா நாடகம், பூம்புலியூர் நாடகம், மோதிரப் பாட்டு, வஞ்சிப்பாட்டு, விளக்கத்தார் கூத்து முதலியன. ii. இலக்கணம் அகத்தியம், கடகண்டு, குணநூல், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம், நூல், பரதம், பரத சேனாபதியம் (பழையது), மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் முதலியன. இறந்துபட்ட நூல்கள்-பெயர் தெரியாதவை ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள்வன் நின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள. இயல்நூல், இசைநூல், நாடகநூல், மடைநூல், மருத்துவம், இதளியம் (இரசவாதம்), நிலநூல், கூவனூல், புதையல்நூல், மணி நூல், மாழைநூல் (Metallurgy), ஓவியநூல், உருவநூல் (Sculpture), f£llüš(Architecture), அறநூல், பொருள்நூல், இன்பநூல், கணக்குநூல், வானூல் (Astronomy), கணியநூல் (Astronomical Astrology), ஏரணம் (Logic), மறைநூல் (Scripture), மந்திரம், மதநூல், மெய்ப்பொருள்நூல் (Philosophy), ஓக (யோக) நூல், நரம்பு நூல், மறநூல். பரிநூல், யானைநூல், கோழிநூல், புள்நூல் (சகுன சாத்திரம்), நாடி நூல், கைவரை நூல், சால நூல் (கண்கட்டுக்கலை), வசியநூல், மாயநூல். பேய் நூல், கரவட (களவு) நூல், கனாநூல் முதலிய முதலிரு கழகப் பல்வேறு துறைப்பட்ட பல்லாயிரம் நூல்களும் கடல்கோளாற் கரந்தன போக, எஞ்சியிருந்தவை யெல்லாம் ஆரியப் பூசாரியரால் அழியுண்டதாகத் தெரிகின்றது. இதை, அறிவும் ஆராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் விடுதலைப் பேறும் மிக்க இக்காலத்திலும் பிராமணர் கோயில் தமிழ் வழிபாட்டிற்குத் தடைசெய்து என்றும் தமிழரைத் தம் அடிக்கீழ்ப்படுத்தத் துணிந்திருப்பதால் அறியலாம். திருக்குறளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களுள் தொல் காப்பியம் மட்டும் அழிவிற்குத் தப்பியதற்கு, அதிலுள்ள ஆரியச் சார்பான குறிப்புகளே காரணம் என்பதை அறிதல் வேண்டும். கடல்கோள், ஆரியப்பகை, என்பவற்றொடு, தமிழவேந்தர் தமிழைத் தாழ்த்தியமை, புலவரைப் புரப்பாரின்மை, மதப் போராட்டம், பொதுமக்கள் கல்லாமை என்பனவும், நூலழிவிற்குக் காரணமா யிருந்தனவேனும், அவையும் ஆரியப் பகையின் விளைவே என்பதை அறிதல் வேண்டும். பாலவ நத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர், பாடுபட்டு நாடுநகர் பட்டிதொட்டியெல்லாம் தேடித்தொகுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான அருந்தமிழ ஏட்டுச் சுவடிகள் யாவும், ஒருநாள் திடுமெனத் தீப்பற்றி அரை நாழிகைக்குட் சாம்பராய்ப் போயின. இதன் மாயத்தை ஆய்ந் துணர்க. அச்சேறாத திருக்குறளுரை பத்து அந் நூற்றொகுதியுள் இருந்ததாகச் சொல்லப் படுகின்றது. 16ஆம் நூற்றாண்டில் வரதுங்கராம பாண்டியன் பிறங்கடை யின்றி யிறந்ததால், மாபெரு நூலகம் உட்பட்ட அவன் சொத்துகள் யாவும் கரிவலம் வந்த நல்லூர்ப் பால்வண்ண நாதர் கோவிலுடைமை யாயின. 1889ஆம் ஆண்டில், தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர் பண்டாரகர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் சுவடிதேடிக் கருவை சென்று வினவியபோது, கோவில் முதுகேள்வி யார், அந்தக் குப்பை கூளங்களை யெல்லாம் ஆகமப்படி நெய்யெரி யூட்டிவிட்டேம் என்றாராம். அடுத்த ஆண்டு, ஐயரவர்கள் திருநெல்வேலித் தெற்குப் புதுத்தெரு வழக்கறிஞர் சுப்பையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த சுவடிகளைப்பற்றிக் கேட்டபோது. ``அவர் வண்டிக் கணக்கான ஊர்க்காட்டுக் கணக்காயர் பொத்தகங்கள் எங்கள் வீட்டில் இடத்தை யடைத்துக் கொண்டிருந்தன. அவற்றை யெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் எடுத்தெறிந்து விட்டேம்'' என்று சொன்னாராம். இம் முந்நிகழ்ச்சிகளினின்று அறியவேண்டியவற்றை யெல்லாம் அறிந்து கொள்க. 7. ஆங்கிலச் சார்புக்காலம் (19ஆம் நூற்றாண்டு) சரவணப் பெருமாள் கவிராயர் இவர் சிவஞான முனிவர் மாணவரின் மாணவர்; முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவர்; பணம் விடுதூது, அசுவ மேதயாக புராணம் முதலியன பாடியவர். இராமானுச கவிராயர் இவர் மாலியர்(வைணவர்); பார்த்தசாரதி மாலை, திருவேங்கட அநுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன பாடியுள்ளார். இவர் எழுதிய நன்னூல் விரிவுரை 1845-ல் இவராலேயே வெளியிடப்பட்டது. முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் இவர் திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை முதலியன பாடியுள்ளார். சேனாதிராயர் இவர் ஆறுமுக நாவலரின் ஆசிரியருள் ஒருவர்; எந்தப் புதுப்பாட்டையும் இருகாலிற்பற்றியெனப் பெயர்பெற்றவர். இவர் ஓர் அகர முதலியும் தொகுத்தார் என்பர். இராமச்சந்திர கவிராயர் இவர் சகுந்தலை விலாசம், தாருகாவிலாசம் முதலிய நாடகங்களை இயற்றியவர்; எல்லிசு துரையாற் புகழ்ந்து பாடப்பெற்றவர். நூற்றுப்பங்கி (சதபங்கி), தொண்பங்கி (நவபங்கி) முதலிய சித்திரப் பாக்களைப் பாடவல்லவர். ஒருவர்க்கு ஒருங்கே அடுக்கி வரக்கூடிய துன்பங்களைப் பற்றி இவர் பின்வருமாறு பாடியுள்ளார். ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக மாவீரம் புலர்வதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவெண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே. நிசகுணயோகி இவர் விவேகசிந்தாமணி என்னும் இன்னோசை யெளி நடை யொழுகிசை அறநெறிப் பாமாலை பாடியுள்ளார். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இவர் கோடீசுரக் கோவை முதலியன பாடியுள்ளார். இளையாற்றங்குடி முத்தப்பச் செட்டியார் இவர் செயங் கொண்டார் சதகம் பாடியுள்ளார். திருவானைக்காத் தில்லைநாயக சோதிடர் இவர் சாதக சிந்தாமணி பாடியுள்ளார். தாண்டவராய முதலியார். இவர் 1824-ல் பஞ்சதந்திரத்தை மராட்டியினின்று மொழி பெயர்த்தார். விசாகப் பெருமாளையர் இவர் சென்னை மாகாண அரசியலார் கலாசாலைத் தமிழாசிரியராயிருந்து, உவின்சிலோ அகரமுதலித் தொகுப் பிற்குத் துணைபுரிந்தார். இவர் எழுதியவை நன்னூற் காண்டிகை யுரை, யாப்பணியிலக்கண வினாவிடை முதலியன. சரவணப் பெருமாளையர் இவர் இராமானுச கவிராயரின் மாணவர்; வெங்கைக் கோவை, பிரபுலிங்கலீலை, நைடதம் முதலியவற்றிற்கு உரை வரைந்தார். நாகநாத பண்டிதர் (1826-54) இவர் மேகதூதம், பகவற்கீதை, இதோபதேசம், சாந்தோக்கிய உபநிடதம் என்பவற்றை வடமொழியினின்று தமிழில் மொழிபெயர்த்தார். வேதநாயக சாத்திரியார் (1774-1864) தஞ்சைச் சரபோசி மன்னர்க்குப் பையற் பருவத்திலிருந்து அறிவுத்தந்தையாரா யிருந்த சுவார்த்தர் ஐயரால், 12ஆம் அகவையிற் பாளையங்கோட்டையிலிருந்து தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டு, தரங்கப்பாடிக் கல்லூரியில் தக்க பயிற்சி பெற்றுத் தஞ்சை மறைக் கல்லூரித் தலைமையாசிரியரான வேதநாயக சாத்திரியார், தம் பெரும்புலமையினாலும் இறைவன் திருவருளாலும், ஆரணா திந்தம், பெத்தலேகங் குறவஞ்சி, ஞானத்தச்சன் நாடகம், வண்ணசமுத்திரம், ஞானக் கும்மி, ஞானநொண்டி நாடகம், ஞானவுலா, வேதவினா விடையம்மானை, பேரின்பக் காதல், பராபரன் மாலை, செபமாலை, கீர்த்தனைகள் முதலிய பனுவல்களையும் பாடல்களையும் பாடியுதவினார். சீர்திருத்தச் சபைத் தமிழ்க் கிறித்தவர்க்குள் தலைமை யாகக் கருதப்படும் தமிழ்ப் புலவர் வேதநாயக சாத்திரியாரே. இராமலிங்க அடிகள் (1823-74) இருபதாம் நூற்றாண்டில் ஓரளவு பெற்றிய (சித்த) முறையில் திகழ்ந்த பெரும்புலவரும் அருட்பாவலரும் சிவமுனிவரும் சிதம்பரம் இராமலிங்க அடிகளே. அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் திருவருட்பா எனப் பெயரிட்டு ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், ஒழுவி லொடுக்கப் பாயிரவிருத்தி, மெய்ம்மொழிப் பொருள் விளக்கம், திருநெறிக் குறிப்புகள் முதலியன, அவர் எழுதிய உரைநடைச் சிறு பொத்தகங்களும் குறிப்புகளுமாகும். மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-76) இவர் திருவாவடுதுறைச் சிவ மடத்திலிருந்து நாடறிந்த உ.வே. சாமிநாதையர் முதலிய பெரும்புலவர் பலர்க்குத் தமிழ் கற்பித்த தலைசிறந்த தமிழாசிரியரும்; 16 ஊர்ப்புராணமும் 16 அந்தாதியும் 10 பிள்ளைத்தமிழும் 4 மாலையும், திருவாரூர்த் தியாகராசலீலை, திருவிடைமருதூர் உலா, காழிக்கோவை, எறும்பியீச் சுரவெண்பா, குசேலோபாக்கியானம், ஆனந்தக் களிப்பு முதலிய பனுவல்களும், மிறைப்பாவுள்ளிட்ட பல தனிப்பாடல்களும் பாடிய நல்லிசைப் பாவலரும்; சூதசங் கிதையை மொழிபெயர்த்த இரு மொழிப் புலவரும்; குமர குருபரர் வரலாறு, சிவஞான முனிவர் வரலாறு ஆகியவற்றை வரைந்த வரலாற்றாசிரியரும் ஆன பல்புகழ்ப் பேரறிஞர். இவ்விருபதாம் நூற்றாண்டில் இவரைப்போல் விரிவாகப் பாடிய பாவலர் வேறொருவருமில்லையென, இவரை வியந்து கூறுவர். கோபாலகிருட்டிண பாரதியார் இவர் பொதுமக்கட் கேற்றவாறு இனிய மெட்டு களமைத்து எளிய நடையில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடியுள்ளார். ஆறுமுக நாவலர் (1823-79) சேனாதிராயர், சரவணமுத்துப்பிள்ளை ஆகிய இருவரின் மாணவரும், பொன்னம்பலம் பிள்ளை, சபாபதி நாவலர் ஆகிய இருவரின் ஆசிரியருமான யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், கன்னித் துறவியா(நைட்டிகபிரமசாரியா)யிருந்து, தமிழகத் திலும், யாழ்ப் பாணத்திலும் தமிழையும் சிவநெறியையும் காலமெல்லாம் கருத்தாய்ப் போற்றிக்காத்த அரும்பெருந் தொண்டர்; சென்னை யில் தாம் நிறுவிய வித்தியாநுபாலன இயந்திர சாலையில், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் உரை, சேனாவரையம், பிரயோகவிவேகம், கந்த புராணம், சேது புராணம், பாரதம், சைவசமய நெறி, தருக்க சங்கிரகம் முதலிய நூல்களையும் பனுவல்களையும் அச்சிட்டார்; சிறுவர்க்காக 4 பால பாடப் பொத்தகங்களையும் 2 சைவ வினாவிடைச் சுவடிகளையும் இலக்கணச் சுருக்கத்தையும்; புலவரல்லாதவர்க்குப் பயன்படும் பொருட்டுப் பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கந்தபுராண வசனம், சிதம்பர மான்மிய வசனம் முதலிய உரைநடைப் பொத்தகங்களையும், கோயிற் புராண வுரையையும்; மாணவர்க்குதவுமாறு நன்னூற் காண்டிகை, இலங்கைப் பூமி சாத்திரம் முதலியவற்றையும் எழுதி வெளியிட்டார். செந்தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு, அவர் உரைநடை நூல்களே சிறந்த முறையில் அடிகோலின. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836-84) இவர் பழனியில் தட்டாரக் குடும்பத்திற் பிறந்து, மூன்றாம் அகவையில் அம்மை நோய்வாய்ப்பட்டுக் கண்ணிழந்து, இறைவனருளால் அந்தகக்கவி வீரராகவர் போல் இலக்கண விலக்கியங்களை யெல்லாம் கேள்வியாற் கற்றுத் தேர்ந்து, காளமேகம் போற் கடும்பாவும், நெடும்பாவும் தட்டுத்தடை யின்றிப் பாடவல்லவராய், முத்துராமலிங்க சேதுபதியிடம் கவிச்சிங்க நாவலர் என்னும் பட்டம் பெற்று, சரசுவதியம்மன் பஞ்சரத்தினம், சந்தப்புகழ் பழனிப்பதிகம், குமரகுருபதிகம், சிவகிரிப்பதிகம், திருச்செந்திற் பதிகம், பழனிநான் மணிமாலை, திருப்பழனி வெண்பா, பழனி வெண்பா வந்தாதி, பழனா புரிமாலை, குமரனந்தாதி, சிவகிரிய மகவந்தாதி, பழனிக் கோயில் விண்ணப்பம், தயாநிதிக் கண்ணிகள், ஆனந்தகீத ரசம் துதிப்பாசுரத் தொகை, சென்னராயப் பெருமாள் திருப்பதிகம் சிங்கார ரசமஞ்சரி, இசைப்பாடல்கள், சந்திர விலாசம், தனிச்செய்யுட் கோவை என்னும் பல்வகைப் பனுவல்களைப் பாடியுள்ளார். அவையெல்லாம் அக்கால வழக்கப்படி கலவைத் தமிழ்நடையிலுள்ளன. வேதநாயகம் பிள்ளை (1826-89) இவர் சீர்காழி, மயிலாடுதுறை (மாயூரம்) முதலிய நகர்களில் கோட்ட நயனாளியாக (District Munsif) இருந்து, பகைவரும் போற்று மாறு நேர்மையாகவும் நடுநிலையாகவும் பணியாற்றியவர். இவரது தேவபத்தி இவரது நடுநிலைக்குப் பெரிதும் துணையாயிற்று. பல்லவி அப்பா இதென்ன அதிகாரம் - ஐயோ எப்போது பக்திசெய்ய இல்லையே நேரம் துணைப்பல்லவி சுப்பையரே அபத்தமூட்டை - அந்தச் சுந்தரையர் வழக்கிலே தொள்ளாயிரம் ஓட்டை அப்பையர் கற்பிப்பார் பொய்ச்சீட்டை - அந்த அனந்தையர் கட்டுவார் ஆகாசக் கோட்டை - (அப்பா) பாதம் அண்டப் புரட்டன் அந்த வாதி - அகி லாண்டப்புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி சண்டப் பிரசண்டன் நியாயவாதி - நாளும் சகத்திரப்புளுகன் சாட்சிக்காரன் எனும் கியாதி - (அப்பா) என்னும் இவரது கீர்த்தனை அதைத் தெரிவிக்கும். இவர் கிறித்தவராயிருந்தும் புலால் மறுத்து அருளுணவே உண்டுவந்தார். ஒரு சில பிராமணரின் புலாலுணவை, ஆரண வாயினர் மாடாடு கோழி யடித்தவித்துப் பாரணஞ் செய்யப் பழகிக்கொண் டார்மது பானத்திலும் பூரண ராயினர் இன்னவர்க் கிந்தத்துர்ப் புத்திதந்த காரணங் கண்டயற் கோர்சிரங் கொய்தனன் கண்ணுதலே என்று நகைச்சுவையாகவும் நாகரிகமாகவும் கண்டித்தார். ஒருமுறை மழை பெய்யாது நாட்டிற் பஞ்சந் தோன்றிய போது, மழைபெய்விக்க எல்லா மதத்தாரும் இறைவனை வேண்டுமாறு சர்வ சமய சமரசக் கீர்த்தனை பாடினார். இவர் வேலைவிட்டு ஓய்வுபெற்றபின், மக்கள் நடத்தையில் மாற்றங்கண்டு, தண்டுகொண் டோட்டினும் போகாமல் நம்மைத் தரிசிக்கவே பண்டுவந் தோரின்று தாம்பூலம் வைத்துப் பரிந்தழைத்தும் திண்டுமிண் டுஞ்சொல்லி வாரா திருந்தனர் செய்கையெல்லாம் கண்டுகொண் டோம் இனித் தொண்டுகொண் டோம்நம் கடவுளுக்கே என்று பாடியது, பெரும்பால் மாந்தரின் உண்மையான இயல்பைக் காட்டுகின்றது. இவர் பாடிய ஏனைப் பாடல்கள், பெண்மதிமாலை, நீதிநூல், தனிப்பாடற்றிரட்டு என்பன; எழுதிய உரைநடைப் பொத்தகங்கள் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி என்னும் புதினங்கள். முருகதாச அடிகள் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ்ச் சுவாமிகள், ஸ்ரீமத் சண்முக சுவாமிகள் என்றும் இவர்க்குப் பெயருண்டு. இவர் தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம் என்னும் வழுத்துப் பாடல்களையும்; திருச்செந்தூர்க் கோவை, திருச்செந்தூர்த் திருப்புகழ், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம், முதலிய பனுவல்களையும்; ஆமாத்தூர்ப் புராணம், அருணகிரிநாதர் புராணம் முதலிய புராணங் களையும்; புலவர் புராணம் என்னும் எழுபது புலவர் வரலாற்று நூலையும்; பாடினார். வண்ணத் திலக்கணம், அறுவகை யிலக்கணம் என்னும் இலக்கண நூல்களையும் இவர் இயற்றினார் என்பர். அண்ணாமலை இரெட்டியார் சென்னிகுளம் அண்ணாமலை இரெட்டியார், சொற் சுவை பொருட்சுவை ததும்பிப் பாடுந்தோறும் பத்திச் சுவையூட்டி நெஞ்சையுருக்கும் ஈடிணையற்ற இன்னிசைக் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடினார். சங்கரநாராயண கோயிற் றிருவந்தாதி, நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ் என்பன இவர் பிற பனுவல்கள். இவர் உலகை நீத்தது கி. பி. 1890ஆம் ஆண்டு. கிருட்டிண பிள்ளை நெல்லை மாவட்ட இரெட்டியார் பட்டியைச் சேர்ந்த புலவர் கிருட்டிண பிள்ளை, மாலியராயிருந்து கிறித்தவராகி, வீட்டுலக வழிப்போக்கு (Pilgrim's Progress) என்னும் ஆங்கில உருவக நாடகத்தை இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரால் செய்யுள் நடையில் மொழிபெயர்த்து, இரட்சணிய மனோகரம் என்னும் தேவாரம் போன்ற இசைப் பாடற்றிரட்டையும் பாடினார். இவர் வாழ்க்கை முடிந்தது கி.பி. 1890. கால்டுவெல் ஐயர் (1814-91) 1838-ல் அயர்லாந்திலிருந்து இந்தியா வந்து, நெல்லை மாவட்ட இடையன்குடியில் நிலையாக வதிந்து, தம் கிறித்தவ வூழியத்தைச் செய்யும்போதே மொழியாராய்ச்சியில் ஆழ்ந்து ஈடுபட்டு, பண்படுத்தப்பட்ட மொழியாறும் பண்படுத்தப் படாத மொழியாறு மாகத் தெளிவான திரவிடமொழிகள் பன்னிரண்டென்று கண்டு, அவற்றை ஒப்புநோக்கி ஆழ்ந்து ஆராய்ந்து, திரவிடம் ஆரியத்திற்கு முந்தியதென்றும், உலக முதன் மொழிக்கு மிக நெருங்கிய தென்றும், திரவிடச் சுட்டெழுத்துகளினின்றே, ஆரியச் சுட்டுச் சொற்களெல்லாம் தோன்றியுள்ளன வென்றும், திராவிடத்திற்குள் முந்தியதும் முதன்மையானதும் தமிழே யென்றும் தக்க சான்றுகொண்டு தெள்ளத் தெளியவும் திட்டவட்டமாகவும் நிறுவி, உலகிற்கு முதன் முதல் எடுத்துக்காட்டியவர் கால்டுவெல் ஐயரே. பின்னர், பெலுச்சித்தான மலைநாட்டில் வழங்கும் பிராகுவீ என்னும் சிதைந்த சிறுகலவை மொழியும், திரவிட மொழியின் திரிபென்று கண்டார். குணங்குடி மத்தான் சாயபு இவர் தாயுமானவர் போன்று, உயரிய ஓகநிலையடைந்து, அவர் போன்றே பாடற்றிரட்டும் பாடியவர். அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம் என்பன இவர் பாடிய பனுவல்கள். மகமது முன்விளம்பி யாரையும் இவர் பாடியுள்ளார். சுந்தரம் பிள்ளை (1855-97) ஆரிய அடிமைத்தனத்தில் அடங்கியொடுங்கி உணர்வற்றுக் கிடந்த தமிழர் விழித்தெழுமாறு, பள்ளியெழுச்சி பாடிய பெருமை சுந்தரம் பிள்ளைக்கே உரியது. அப் பள்ளியெழுச்சிப் பாடல், அவர் இயற்றிய மனோன்மணீய நாடகத் தமிழ்த்தெய்வ வணக்கமே. அது வருமாறு: நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் முகமெனவே திகழ்நாவற் கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும் தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும் அத்தகும்பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. சதுர்மறையா ரியம்வருமுன் சாலுலகே நினதாயின் முதுமொழிநீ முதலிலியா மொழிகுவதும் வியப்பாமே. பத்துப்பாட் டெண்தொகையே பகுத்தறிந்து பற்றினவர் எத்துணையும் பற்றுவரோ இலக்கணமில் பொய்க்கதையே. வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுமுதலா ஒருகுலத்துக் கொருநயனே. குறிப்பு: 1. இப் பாட்டில் ஆங்காங்கு இரண்டொரு சொற்கள் மாற்றப்பட்டுள்ளன. அந் நாளில் தனித்தமிழுணர்ச்சி தமிழுலகில் தோன்றவில்லை. ஆசிரியர் இக்காலத் திருந்திருப் பின் இங்ஙனமே பாடியிருப்பர். 2.ஆரியம்போல்.....áijahî‹” என்பது ஓர் உயிர் நாடியடி. தமிழை ஆரியத்தோடுறழ்ந்து தமிழின் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுவதே ஆசிரியர் குறிக்கோள். இதை மாற்றியதில் அரசு தன் பேடித்தனத்தைaகாட்டியுள்ளது. ஆசிரியர் உள்ளம் இதற்கு இம்மியும் இசையாது. குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள் குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள். 3. தமிழ்நாட்டில் வாழ்பவரெல்லாம் தமிழைப் போற்று வது jலையாயfடமை. தமிழ்ப்பகைவர் தமிழ்நாட்டில் வாழத் தகுதியற்றவர் Mவர்.jÄÊ‹ பெருமையைச் சொல்வதில் வெறுப்புக்கொள்பவர் எங்ஙனம் தமிழராயிருக்க முடியும்? பேசும் மொழியும் வாழும் மொழியும் ஒன்றாயிருக்க, ஒரு போதும் பேசப்படாத ஒரு tழங்காïலக்கியbமாழியை,mதுவுந்jமிழினின்றேâரிந்தâரிமொழியை,nதவமொழிbயன்றுcயர்த்தியும்;Mள்வார்bமாழியும்tழ்வளிப்பார்bமாழியும்cலகKதன்மொழியுமானjமிழைச்`சூத்திரbமாழிmல்லது‘நீசbமாழிbயன்றுjழ்த்தியும்,eட்டிற்கும்bமாழிக்கும்ïரண்டகம்bசய்வதுïனிச்bசல்லாதென்றுtந்தேறிகள்tழியினர்mறிவாராக.“When you are at Rome do as Rome does” இங்கே ரோம் என்பது தமிழ்நாடே. வீராசாமிச் செட்டியார் இவர் பல அரிய கட்டுரைகளும் புலவர் செய்திகளும் பொதிந்த விநோதரச மஞ்சரி என்னும் உரைநடைப் பொத்தகத்தை எழுதி வெளியிட்டார். தொழுவூர் வேலாயுத முதலியார் இவர் இராசதானிக் கலாசாலைத் தலைமைத் தமிழாசிரிய ராயிருந்து, திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல், சங்கரவிசயம் என்னும் உரைநடைப் பொத்தகங்களை வரைந்தார். சபாபதி நாவலர் இவர் திராவிடப் பிரகாசிகை என்னும் சிறந்த இலக்கிய வரலாற்றை எழுதி வெளியிட்டார். சோமசுந்தர நாயகர் (1846-1901) இவர் சென்னைச் சூளையில் வாழ்ந்த சிவநெறிச் செல்வர்; வடமொழி தென்மொழி யிரண்டிலுமுள்ள சமயநூல்களை முற்றக் கற்றவர்; ஏரண முறைப்படி தருக்கித்து எவரையும் எளிதில் வெல்ல வல்லவர்; பாற்கர சேதுபதியின் பேரவையின் கண் `வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் என்னும் பட்டம் பெற்றவர். இவருடைய நூல்களெல்லாம் சமயச்சார்பின வாதலால், வடசொற் கலப்பு மிகுந்திருக்கும்; ஆயினும் செய்யுள்களில் செந்தமிழ்ச் சொற்கள் விஞ்சியிருக்கும். தாமோதரம் பிள்ளை (1832-1901) இவர் ஆங்கிலப் பட்டக்கல்வி பெற்றிருந்ததனால், பல பெரு நூல்களைச் சீரிய முறையில் ஆய்ந்து வெளியிட ஏதுவாயிற்று. இறையனா ரகப்பொருள், இலக்கண விளக்கம், தொல்காப்பியப் பொருளதிகாரம், சூளாமணி முதலிய பல நூல்களை அரிய ஆராய்ச்சியுரைகளுடன் பதிப்பித்தார். (ஜி.யூ.) போப்பு ஐயர் (1820-1903) இவர் நாலடியார், திருக்குறள், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்திற் செய்யுள் நடையில் மொழிபெயர்த்து, மேலையுலகத்தில் தமிழைப் பரப்பினார்; தம் கல்லறையில் `தமிழ் மாணவர்' என்று பெயர் பொறிக்கச் சொன்னதினின்று, இவர் தமிழ்ப் பற்றின் பெருக்கை உய்த்துணரலாம். பெயர்ச்சிக் காலம் (Transition Period) ஆங்கிலச் சார்புக்காலம், இந்தியா முழுமைக்கும், சிறப் பாகத் தமிழகத்திற்கு, கைவினை நாகரிகத்தினின்று பொறிவினை நாகரிகத்திற்கும், கீழைமுறைப் பொதுக்கல்வி யினின்று மேலை முறைப் பொதுக் கல்விக்கும், ஏட்டுச்சுவடி யினின்று அச்சுப் பொத்தகத்திற்கும், இந்திய வாழ்க்கை முறையினின்று ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும், கோவர சாட்சியினின்று குடியர சாட்சிக்கும், பிறவிக்குலப் பிரிவினையினின்று தொழிற் குலப் பிரிவினைக்கும், அடிமைத்தனத்தினின்று உரிமைத்தனத் திற்கும், புராண வரலாற்றினின்று உண்மை வரலாற்றிற்கும், ஆரியவுயர்வினின்று தமிழவுயர்விற்கும், பெயர்ச்சிக் காலமாகும். இப் பெயர்ச்சிக்காலம், இதுவரை நாட்டுமக்களை ஏமாற்றி வாழ்ந்தவர்க்குப் பெருந்துன்பமாகத் தோன்றுவதும், ஏமாறி வாழ்ந்தவர்க்குப் பேரின்பமாகத் தோன்றுவதும், இயல்பே. * * * * *