பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7 தமிழர் வரலாறு - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 7 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1972 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 136 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை `` ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'' இவ்வுலகில் தமிழனைப்போல முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனு மில்லை. முதன்முதல் நாகரிக விளக்கேற்றி நானில முழுதும் அகவொளி பரப்பியவன் தமிழனே. தெற்கில் இராயிரங் கல் தொலைவு நீண்ட பரந்திருந்த (தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடும் அடங்கிய) குமரிக் கண்டம் இந்துமாவாரி யென்னும் தென்பெருங்கடலில் மூழ்கிய பின், முதலிரு கழகப் பல்துறைப் பல்லாயிரம் தனித்தமிழ் நூல்களுள் கடல் கோள்களாலும் ஆரியராலும் அழிக்கப்பட்டு மூவாயிரம் ஆண்டு ஆகியுள்ள இன்றும், இருநடைப்பட்ட மொழி யமைப்பிலும், முத்திறப்பட்ட இலக்கண வடிப்பிலும், இசை நாடக வளர்ச்சியிலும், நாற்பொருள் தழுவிய அறவியல் இலக்கியத் திலும், பண்பாட்டுச் சிறப்பிலும், தமிழ்நாட்டிற் கொப்பாக வேறெந்தநாடு மில்லை. ஆயினும், பகுத்தறிவைப் பயன்படுத்தாது மூவேந்தரும் எளிய ஓரிரயலாருக்கும் இழிவகை யடிமைப்பட்டுப் போன தினால், அவரைப் பின்பற்ற நேர்ந்த பொதுமக்களின் வழிவந்த இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும், தம்மைத் தாமே தாழ்த்து வதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தனிமொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச் செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும், ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். பிராமணன் தெய்வப் பிறப்பின னென்றும், சமற்கிருதம் ஏனை மொழிகட் கெல்லாத் தாயான தேவமொழி யென்றும், இரு நச்சுக் கருத்துகளை மூவாயிரம் ஆண்டாகத் தமிழருள்ளத்தில் மேலும் மேலும் பசுமரத்தாணிபோல் அறைந்து பதிக்கப்பட்டு, அவருடைய எலும்பொடும் நரம்பொடும் மூளையொடுங் குருதி யொடும் இரண்டறக் கலந்து ஊறிப் போனதினாலும்; வலிமை மிக்க மாபெருந் தமிழ இனம் நூற்றுக்கணக்கான பிறவிக் குலக் கூண்டுகளுள் வெவ்வேறு விலங்கினம்போல் அடைக்கப்பட்டுள்ளமை யாலும்; அதனாற் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் ஆகிய மூவகக்கரண வாற்றல்களையும் நீண்ட நாட்கு முன்பே இழந்து விட்டமையாலும்; ஆங்கிலராட்சி எத்துணை முன்னேற்றினும், அறிவியற் கல்வி எத்துணை அறிவு புகட்டினும், நயன்மைக் கட்சி (Justice Party) எத்துணைக் கைதூக்கினும், மொழி நூலாராய்ச்சி எத்துணை உண்மை வெளிப்படுத்தினும், பெரியார் எத்துணை எச்சரிக்கினும், மறைமலையடிகள் எத்துணை வழிகாட்டினும், மேனாடு சென்று மேலையரொடு எத்துணைப் பழகினும்; இருண்ட நாடுகளும் விடுதலை பெற்று முன்னேறிச் செல்லும் போதும், மேலையர் திங்களையும் பிற கோள் களையுஞ் சென்றடையுங் காலும்; அடுத்த வீட்டிற் குள்ளுங் கால்வைக்கத் தகுதியற்றவராய்க் கடுகளவும் உணர்ச்சியின்றி அடிமைத் தனத்திலேயே பெருமை கொள்வதும், அறிவுறுத்தும் இனத்தானை எள்ளி நகையாடுவதும், அந்தோ! எத்துணை இரங்கத் தக்க துன்பச் செய்தியாம்! அ-ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மைய ரேனும், ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Sovereignty) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே! üwhÆu« M©o‰F K‹ng njh‹¿ xUfhš ehtyªnja KGJ« M©l gH§Fo k¡fshd jÄH® V‹ j« eh£ilí« bgwÉšiy?; வடநாட்டு மொழி (இந்தி) அடர்த்து மீதூர்ந்து வருதையுந் தடுக்கவில்லை? ஆங்கிலர் நீங்கின பின் முறைப்படி தமிழக மன்றோ முதன்முதல் விடுதலை பெற்றிருத்தல் வேண்டும்? ஆங்கிலர் ஆண்ட அக்காலத்து உரிமைகூட இக்காலத்தில் இல்லையே! இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையே யாம். ஒரு நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு மொழியே வழியாயினும், அம்மொழியின் திறமறிந்து அவர்தம் நாட்டுரிமையைக் காத்தற்கு வரலாறு இன்றியமையாத தாம். வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு. அவ் வரலாறும் உண்மையானதா யிருத்தல் வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக் கழகத் துணைக் கண்காணகரும் கல்வியமைச்சரும் கல்வித்துறை யியக்குநருங் கூட, தம் நாட்டு வரலாறும் மொழி வரலாறும் அறியாதிருக்கும் நாடு தமிழ்நாடு ஒன்றே. அரசியல் திணைக் களத்திலும் பல்கலைக் கழகங்களிலும் தாய் மொழித்துறைத் தலைமைப் பதவி தாங்கி ஆயிரக் கணக்காய்ச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அகப் பகையோடும் புறப் பகையோடுங் கூடித் தாய் மொழியைக் காட்டிக் கொடுக்கும் (தன்மானமுந் தகுதியுமற்ற) பேராசிரியர் வாழும் நாடும் தமிழ் நாடொன்றே. இதனால், தமிழரை என்றுந் தம்மடிப் படுத்த வேணவாக்கொள்ளும் வந்தேறிப் பகைவரான வரலாற்றாசிரியர். சென்ற நூற்றாண்டிலேயே சுந்தரம் பிள்ளையும் வின்சென்று சிமிதும் இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்க வேண்டுமென்று எச்சரித் திருந்தும், அதைப் புறக்கணித்து இற்றைத் தமிழரின் அடிமைத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு இயற்கைக்கும் உணமைக்கும் மாறாக, வடக்கினின்று தொடங்கியும் பிற்காலத்ததும் பிறழக் கூறுவதுமான ஆரிய வேதத்தையே அடிப்படையாகக் கொண்டும், தமிழரையும் தம்போன்று அயல் நாட்டினின்று வந்தவ ரென்றும், அதினுங் கேடாக ஆறினக் கலவையினத்தாரென்றும், தமிழருக்குத் தனி யெழுத்தில்லை யென்றும், அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தினின்று கி.மு. 2ஆம் நூற்றாண்டில் திரிக்கப்பட்டதே தமிழெழுத் தென்றும், தாம் விரும்பிய வாறெல்லாம் சொல்லியும் எழுதியும் வருகின்றனர். அறிவியல் நெறிப்படி நடுநிலையாய் ஆய்ந்து உண்மை காணவேண்டிய மேனாட்டாரும், தமிழர் இன்று எல்லாத் துறையிலும் பிராமணர்க்குக் கீழ்ப்பட்டிருப்பதனாலும், குமரிக்கண்டம் முழுகியும் ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ் நூல்க ளெல்லாம் அழிக்கப்பட்டும் போனமையாலும், இந்திய நாகரிக இலக்கியம் இன்று பெரும்பாலும் சமற்கிருதத்திலேயே இருப்பதனாலும், பிராமணரும் தாமும் ஆரியர் என்னும் ஓரினத்தார் என்னும் உணர்ச்சியினாலும், மாந்தன் தோன்றியது பலத்தீன (Palestine) நாடென்னும் ஏதேன் தோட்டக் கதை யினாலும், (பண்டைத் தமிழிலக்கியம் மறையுண்டும் தமிழர் விழிப்பின்றியும் இருந்த காலத்தில்) கால்டுவெலார் தாமாக ஆய்ந்து தமிழ நாகரிகத்தின் உயர் கூறுகள் ஆரிய வழியின வென்று தவறான முடிபு கொண்டமையாலும், பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் தமிழ்நாட்டில் மிக்கிருப்பதனாலும், ஆரியச் சார்பானவரும் அவருக்கு உடந்தை யாளருமே தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைத் தலைவராகவும் துணை கண்காணகராகவும் அமர்த்தப்படுவதனாலும் வையாபுரி களும் வணிகப் புலவரும் மறைமலை யடிகளையும் அவர் வழியினரையும் இருட்டடிப்புச் செய்து வருவதனாலும், இற்றைத் தமிழருள் நூற்றிற் கெழுபதின்பர் தற்குறிகளா யிருப்பதானலும், கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் இன்னும் பெரும்பாலும் சமற்கிருதத்தில் பிராமணராலேயே நடத்தப்பட்டு வருவதனாலும், தமிழரின் பழம் பெருமையை அறியும் நிலைமையில் இல்லை. 1929ஆம் ஆண்டில் (P.T.) சீநிவாச ஐயங்கார் தெற்கினின்று தொடங்கித் தமிழர் வரலாறு (ழளைவடிசல டிக வாந கூயஅடைள) வரைந்து வெளியிட்டாரேனும், அது ஆங்கிலத்தி லிருப்பதனாலும் போதிய அளவு மொழி நூற் சான்று காட்டாமை யாலும், இவ் வரலாற்று நூலை வரையத் துணிந்தேன். இது என் மதுரை மணிவிழாக் குழுவார்1967-ல் தொகுத் தளித்த நன்கொடைப் பயனாக வெளிவருகின்றது. அக் குழுவார்க்குத் தமிழுலகம் என்றும் ஆழ்ந்த கடப்பாடுடையது. கோவைத் திரு. இராமசாமிக் கவுண்டர் அவர்களும் (8/39, 22ஆம் தெரு, தாதாபாத்து) அவர்கள் மகனார் திரு. நித்தலின்பனாலும், இந்நூல் தொடர்பாகச் செய்த பல்வகை யுதவிகள் ஒதுபோதும் மறக்கற் பாலன வல்ல. தம் பெயர்கொண்டு விளங்கும் மன்றத்தாரே, இனித்தமிழும் தமிழ் நாகரிகமும் பற்றிய தனித்தமிழ் நூல்களை அச்சிட வேண்டுமென்று, மறைமலை யடிகளே ஆவி வடிவில் வந்து அமைத்து வைத்தாற் போன்ற மறைமலை அச்சகத்தில், புத்தம்புது முத்தெழுத்துக்களைக் கொண்டு குறுகிய காலத்திற் செவ்வையாக இந்நூலை அச்சிட்டுத் தந்த, அவ்வச்சக உரிமையாளரான புன்செய்ப் புளியம்பட்டி மறைமலை யடிகள் மன்றத்தார்க்கு, தனித்தமிழன்ப ரெல்லாம் நன்றியும் வாழ்த்துங் கூறத் தனிக் கடமைப்பட்டுள்ளனர். காட்டுப்பாடி விரிவு, 29-1-1940 ஞா. தேவநேயன் குறுக்க விளக்கம் (1) பொதுச் சொற்கள் v-L.- எடுத்துக்காட்டு தோரா. - தோராயம் ஒ.நோ - ஒப்பு நோக்க நூற். - நூற்றாண்டு கி.பி. - கிறித்துவிற்குப்பின் பக். - பக்கம் கி.மு. - கிறித்துவிற்குமுன் பேரா. - பேராசிரியர் p. - page (2) இலக்கணக் குறியீடுகள் இ.கா. - இறந்த காலம் comp. - comparative எ.கா. - எதிர்காலம் dim. - diminutive நி.கா. - நிகழ்காலம் pron. - pronoun பி.வி. - பிறவினை suf. - suffix sup. - superlative (3) மேற்கோள் நூற்பெயர்கள் அகம். - அகநானூறு நாலடி. - நாலடியார் அரிச்.பு. - அரிச்சந்திர புராணம் பட்டினப். - பட்டினப்பாலை ஐங். - ஐங்குறுநூறு பிங். - பிங்கலம் கந்த பு. - கந்த புராணம் பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை கம்பரா. - கம்பராமாயணம் புறம். - புறநானூறு கலித். - கலித்தொகை பெரிய பு. - பெரிய புராணம் குறள். - திருக்குறள் பெரும்பாண். - பெரும்பாணாற்றுப்படை குறுந். - குறுந்தொகை பொ. - பொருளதிகாரம் சிலப். - சிலப்பதிகாரம் மணி. - மணிமேகலை சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை மதுரைக். - மதுரைக்காஞ்சி திவ். - திவ்வியப் பிரபந்தம் மலைபடு. - மலைபடுகடாம் திவா. - திவாகரம் தொல். - தொல்பொருள் நன். - நன்னூல் C.O.D. - The Concise Oxford Dictionary C.T.S.I. - Castes and Tribes of Southern India OED. - The Oxford English Dictionary (4) மொழிப் பெயர்கள் இ. - இந்தி பிரா. - பிராகிருதம் க. - கன்னடம் ம. - மலையாளம் து. - துளு, துளுவம் மரா. - மராத்தி தெ. - தெலுங்கு வ. - வடமொழி Af. - Anglo-French MLG. - Middle Low German Ar. - Arabic MSw. - Middle Swedish As. - Anglo-Saxon Norw. - Norwegian Da. - Danish OE. - Old English Du. - Dutch OF. - Old French E. - English OFris - Old Frisian F. - French OHG. - Old High German Fris. - Frisian OLG. - Old Low German G. - German ON. - Old Norse Gael. - Gaelic OS. - Old Saxon Gk. - Greek Pg. - Portuguese Goth. - Gothic Russ. - Russian It. - Italian Sc. - Scotch L. - Latin Skt. - Sanskrit Lg. - Low German Slav. - Slavonic MDu. - Middle Dutch Sp. - Spanish ME. - Middle English Sw. - Swedish MHG. - Middle High German W. - Welsh குறிவிளக்கம் (Symbols) குறி விளக்கம் குறி விளக்கம் - இடைக்கோடு (hyphen) + புணர்ச்சிக்குறி - வலமுறைத் திரிவுக் குறி X எதிர்நிலைக் குறி, முரண்பாட்டுக்குறி = சமக்குறி, பொருட்பாட்டுக்குறி , ,, மேற்படிக் குறிகள் விடுபாட்டுக்குறி உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v சான்றிதழ் .vii முகவுரை .ix குறுக்க விளக்கம் .xiv குறி விளக்கம் xvi முன்னுரை 1. ஞால முந்திய நிலை .1 2. எழு தீவுகள் .1 3. நாவலந் தீவின் முந் நிலைகள் 1 4. குமரிக்கண்டம் .2 5. மாந்தன் பிறந்தகம் ..5 6. நாகரிக மாந்தன் பிறந்தகம் .10 7. தமிழன் பிறந்தகம் .11 8. தமிழ் வரலாற்றடிப்படை .13 9. தமிழர் வரலாறு அமையும் வகை .17 நூல் I. தனிநிலைக் காண்டம் கற்காலம் 24 பொற்காலம் .32 செம்புக்காலம் .47 உறைக்காலம் .59 வெள்ளி .74 இரும்புக்காலம் .78 தலைக்கழகம் .82 தலைக்கழகக் கால நாகரிகமும் பண்பாடும் 84 ஐந்திணைப் பெயர் மூலம் 100 முதற் கடல்கோள் .111 இடைக் கழகம் .114 இரண்டாம் கடல்கோள் .123 பாண்டியன் வெற்றிச் செயல் .130 சோழன் வெற்றிச் செயல்கள் .131 சேரன் அருஞ்செயல் .133 அரும்பொருள் அருஞ்சொல் அகரமுதலி 136 தமிழர் வரலாறு - 1 முன்னுரை 1. ஞாலமுந்திய நிலை ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். பூமி என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென்சொல் லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும். ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன. அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை. இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரி யொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது.1 2. எழுதீவுகள் ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு). அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்). வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே. ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால்(தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது. நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள். ``நாவலந் தீவே இறலித் தீவே குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே சான்மலித் தீவே தெங்கின் தீவே புட்கரத் தீவே எனத்தீ வேழே ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும் என்பது திவாகரம். கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர். அன்றில் என்பது ஒரு பறவை வகை. தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந் தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் சாகத்வீப என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்! ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும். தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்துபோன நிலையைக் காட்டும். 3. நாவலந்தீவின் முந்நிலைகள் 1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தொடு அல்லது பழம் பாண்டிநாட்டொடு கூடியது. 2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும் . பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. (சிலப்.11:19.22) என்று சிலப்பதிகாரம் கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும். 3. பழம் பாண்டிநாடு இல்லாத இந்தியா. நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் (மணிமே. 25:12) 4. குமரிக்கண்டம் (Lemuria) மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி `மடகாசுக்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது 2 என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும். முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி (புறம். 9) என்று நெட்டிமையாரும், பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் (சிலப்.11:19-20) என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம். தொடியோள் பௌவமும் 3 என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது. காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது. பொருநையோ (Borneo), சாலி (Java), RkJuh(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது. 4 செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார். 5 இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப் புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப் படுகின்றன. 6 குமரிக்கண்ட நால்நிலைகள் 1. ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு. 2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு. 3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு. 4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு. 5. மாந்தன் பிறந்தகம் தென்னிலம் மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள்: மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக்கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக வுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா (Lemuria) எனப் பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும். 7 மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும் நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக் காட்டும். இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததா யிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.8 இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof.Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய நெற்றுடைப்பான் (Nut cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப் படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம். உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, v¡nfš, ``இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத் திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும் 9 என்று கூறுகின்றார். தொன்னிலம் நிலவியல் வரலாற் றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது என்பர். இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர். நண்ணிலம் முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே. நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க. முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும். ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக. வண்ணிலம் முதற்கால மாந்தன் காட்டுவிலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே. ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும். ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல். பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது. நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது. அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள. பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந் தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகை களும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ? முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது, அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் (புறம். 109) என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்! காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப்பட்டும், நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள்தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக் கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி(பச்சை), தட்டான்(தட்டை), கல், கரம்பை(வயல்), கொள்(காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன. நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது. காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள். இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத்தான் தெரியும்! பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை. இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர். கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை, கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங் காலை (சிலப்.11: 60-7) என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க. இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. 6. நாகரிக மாந்தன் பிறந்தகம் மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன. இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல். இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே. இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொடரிருந்தது. அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன. ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது. வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ் வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந் திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான். முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது. 7. தமிழன் பிறந்தகம் தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்: 1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச்செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும். 2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும். 3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும், அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும். 4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும். 5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும். 6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும். 7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும். 8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல். 9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற் றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். 10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்),தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர் கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை. 11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்கு மாய்த் திரிகின்றவன், தென்பல்லி வடபல்லி (தலை யணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல். 12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர் பெற்றிருத்தலும். 13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல். 14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக் கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும். 15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை. குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக. 116. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை. குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது. 8. தமிழ் வரலாற்றடிப்படை மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே, வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக்கூட, வரலாற் றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும். அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும் என்று எழுதினார். இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி, குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார். அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன் என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர Ô£ájU«, தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர். குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று. குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது. ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர். அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப் படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இற்றை யறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர். மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரே யென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ் வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக் கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும். சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண் டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டி விட்ட ர். ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டுசெல்லும். இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப் படுகின்றது. வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், வாழைப்பூ என்பதுபோல் தாழைப்பூ என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை. இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது. பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக. ஆகவே, கருவிகொண் டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும். விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந் துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல் லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது. அது பின்னர்க் கல்வி யாலும் பயிற்சியாலும் வளர்ச்சி யடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோ ரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளை யெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறு களும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley), சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல. ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதா யிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும். தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத் திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமகிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக்கொண்டதாகு மாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர். வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V) இராகவனாரும், 1952-ல் வெளிவந்த நந்தமோரியர் காலம் (Age of Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் தெர்மிலை (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) த்ர்ம்மிலி (Trmmili) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் த்ரமிடஅல்லது த்ரமிள என்றும், பின்னர்த் த்ரவிட என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் தமிழ் என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (voiced stops) k ct t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (Voiceless stops) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம். இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும். இதன் விளக் கத்தை என் வண்ணனை மொழிநூலின் வழுவியல் என்னும் நூலிற் காண்க. தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.)ÓÃthira§fh® எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils, Pre-Historic South India என்னும் நூல்களையும் படித்துணர்க. 9. தமிழர் வரலாறு அமையும் வகை காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன்றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது. அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது. வரலாற்று மூலங்கள் (Sources of History) பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்: 1. தொல்பொருள்கள் (Antiquities) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன. 2. இலக்கியம் வெட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன. வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (RLK‹) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும். 3. செவிமரபுச் செய்திகள் (Traditions) 4. பழக்கவழக்கங்கள் 5. மொழிநூற் சான்றுகள் 6. நிலநூற் சான்றுகள் (Geological evidence) 7. கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence) நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல. தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று (Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று. நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே. அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரி நாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம். நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைக ளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின. துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce Foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும். மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே. இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரி யெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று. ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனா ரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியன வாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே. தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும். முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் என்ப என்மனார் புலவர் எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க. உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக. தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன. இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன. முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும். பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப் பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படா திருத்தல் காண்க. இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள். பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட் டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள். தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம். பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம். நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம். கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும். கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத்தமிழரையங்களின்துல்லியமானகாலக்குறிப்போடுகூடியதூயகிளத்தியல் (Narrative)அரசியல்வரலாற்றைஇன்றெழுதவியலாது..............ïj‰Fமறுதலையாக,துல்லியமாdகாலக்குறிப்g நீக்கியமைவேhமாயின்,திரவிடÇன்குமுகhயவரலாற்wத்தொகு¤துவரைத‰குவேண்oயகருÉச்சான்றுகள்பேரsவில்உŸளன எனeம்புகின்w‹. அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும் என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளி வந்துள்ளமையால். இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும். தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிகவளங்குன்றியுள்ளஇந்நிலையிலும்,தமிழரின்கொள்கைகோட்பாடுகளையும்eகரிகப்gண்பாடுfளையும்kâநுட்பத்தையும்gரளவுjரிவிப்பதனாலும்;எGவகைவuலாற்றுமூyங்களுள்ளும்தiலசிறந்ததுkழியியலேயhம்.அjdhš, bபரும்பால்mதனையும்,áறுபால்ïலக்கியத்தில்Mங்காங்குள்ளtரலாற்றுக்Fறிப்புகளையும்,Jணைக்கொண்டேïந்üல்vழுதப்படுகின்றது.bjhl¡fªbjh£L இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும். ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்தி களைக் கூறும் தனிநிலைக் fh©l«, ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் fh©l«, ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல். பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. (பு. வெ. 35) 1 தனிநிலைக் காண்டம் 1. கற்காலம் (Stone Age) (தோரா. கி. மு. 5,00,000-50,000) முந்தியல் தமிழரான அநாகரிக மாந்தர் கல்லாற் பல்வேறு கருவிகளைச் செய்துகொண்ட காலம் கற்காலமாகும். அது பழங் கற்காலம், புதுக் கற்காலம் என இரு பிரிவினது. (1) பழங் கற்காலம் (Old Stone Age) (தோரா. கி. மு. 5,00,000-1,00,000) தமிழரின் முதற்கால முன்னோரான குமரிநாட்டு மாந்தர், பொன்னம் (metal) ஒன்றும் கண்டுபிடிக்கு முன், கில்லி (கல்லி), வெட்டி, குத்தி, கத்தி, உளி, சுத்தி (சுத்தியல்), சமட்டி (சம்மட்டி), குந்தம், கூந்தாலம், கோடரி, குத்துக் கோடரி முதலிய கருவிகளைக் கல்லால் முரட்டு வேலைப்பாடாகச் செய்து, பயன்படுத்தி வந்த காலம் பழங் கற்கால மாகும். அவர் வாழ்ந்த இடம் குமரிமலைத் தொடரின் அடிவாரமான குறிஞ்சிநிலம். அவர் செய்த தொழில் காய்கனி பறித்தல், கிழங்ககழ்தல், தேனெடுத்தல், வேட்டையாடல் என்பன. கிழங்கு தோண்டற்குக் கோணலில்லாத கொம்பையும் கூராகச் செதுக்கிய வன்குச்சையும், வேட்டையாடற்குக் கல்லையும் குறுந்தடியையும் நெடுந்தடியையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். அவர் உண்டவுணவு பச்சையும் சுட்டனவுமான இயற்கை விளைவுகளும் வேட்டைக் கறியும் ஆகும். வேனிற் காலத்தில் மூங்கிலும் மரங்களும் உராய்ந்து பற்றிய நெருப்பில் அகப்பட்டுச் செத்த விலங்கு பறவையூன், சுவையாகவும் மெதுவாகவும் இருந்தது கண்டு, வேட்டைக்கறியைச் சுட்டுத் தின்னும் பழக்கத்தை மேற் கொண்டிருத்தல் வேண்டும். அவர் உடுத்திய உடை, கோரை தழைத்தொடையும் தையிலையும், மரப்பட்டையும் விலங்குத்தோலுமாகும். ஆப்பிரிக்க அநாகரிக மாந்தர், இந் நூற்றாண்டு முற்பகுதியிலும், சில மரப் பட்டைகளை ஊறவைத்துத் தட்டி விரிவாக்கி ஆடையாக அணிந்தனர். குமரிநாடு தென்னாப்பிரிக்காவுடன் இணைந் திருந்ததனால், குமரி நாட்டு மாந்தரும் அநாகரிக நிலையில் அத்தகைய மரவுரியை அணிந் திருத்தல் வேண்டும். அவர் உறையுள் (தங்குமிடம்) மலைக்குகை, பல்கவர் மரக்கவடு, பரண், கல்லால் அமைத்த வளிமறை1 ஆகியவை. அவர் அணிந்த அணிகள், மருக்கொழுந்து போலும் நறுந்தழை, மணமுள்ள அல்லது அழகிய மலர், மயிற்பீலி, சேவலிறகு, புலிப்பல் தாலி முதலியன. அவர் புழங்கிய நீர்க்கலம் மூங்கில் நாழியும் சுரைக்குடுக்கை போன்ற நெற்றுக் கூடும். அவர் மணமுறை, பருவம் வந்தபின் பெரும்பான்மை ஆண் பாலார், ஒரோவிடத்துப் பெண்பாலார், இணைவிழைச்சு வேட்கை நேர்ந்த போதெல்லாம் எதிர்ப் பாலாரை இசைவித்தோ இசையுமாறு வற்புறுத்தியோ வலிந்தோ புணரும் பொதுமணம் (promiscuity) ஆகும். கூடிவாழும் குடும்ப வாழ்வு அவரிடை யில்லை. அதனால், ஒரு தலைவனுக்குக் கட்டுப்பட்ட குடிவாழ்வும் (community life) அவரிடை யில்லை. விலங்குகளும் சில பறவைகளும்போல், பகலில் உணவு தேடி யுண்பதும், பழகிய விடத்தில் இராத் தங்குவதுமே அவர் இயல்பா யிருந்தது. கொடிய விலங்குகள் எதிர்ப்பட்டபோது அல்லது இருப்பிடம் வந்து தாக்கியபோது, அவர் தம்மிடமுள்ள கற்கருவியுந் தோமரமுங் கொண்டு சிலவற்றை எதிர்த்துக் கொன்றிருத்தல் வேண்டும்; கொல்லமுடியாத வலியவற்றிற்கு மரத்தின்மீதேறியோ புதருள்ளும் பொதும்பருள்ளும் மறைந்தோ தப்பியிருத்தல் வேண்டும்; அரிமாவும் யானையும் போன்றவற்றை இராக்காலத்தில் தீ வளர்த்து விரட்டி யிருத்தல் வேண்டும். மாடுகளொடும் பகைவரொடும் போரிட நாகரைப்போல் தலையிலுங் கொம்புகளை அணிந்திருக்கலாம். முதற்காலத்தில் தீயைக் கண்டு மிகமிக அஞ்சினாரேனும், பின்பு மெல்ல மெல்ல அதன் பல்வகைப் பயன்பாட்டைக் கண்டு, விலங் காண்டி மாந்தரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அணுகாதும் அகலாது மிருந்து குளிர்காய்தல், இறைச்சி சுடுதல், இருள் நீக்கல், குளவியைக் கலைத்துத் தேனெடுத்தல், கொடுவிலங்கு வெருட்டல் முதலியன தீயின் பயன்கள். நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropus Erectus) என்னும் சாலி (சாவக) மாந்தனினும் முந்தியவனான பீக்கின் மாந்தன் என்னும் சீன மாந்தன் (Sinanthropus Pekinensis), நெருப்பைத் தன் குகையில் வைத்துப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுவதால், சாலிமாந்தனை யொத்த குமரிமாந்தன் நெருப்பைப் பயன்படுத்தியதில் வியப்பொன்று மில்லை. நன்மையோ தீமையோ இரண்டுமோ செய்தவற்றையும் செய்வதாகக் கருதப்பட்டவற்றையும், முதற்கால மாந்தர் தெய்வமாக வணங்கி வந்தனர். அவை தீ, கதிரவன், திங்கள், இறந்தோர் ஆவி, பேய், நாகம் முதலியன. தெய்வம் என்னும் பெயர் தீயைக் குறிக்குஞ் சொல்லினின்று தோன்றியதே. மரங்களின் உராய்வு, இடி, மின்னல் ஆகிய மூவகைகளில் இயற்கைத் தீ உண்டாயிருத்தல் வேண்டும். தீப்பற்றி யெரியுங் கிளைகளினின்று, கொள்ளிக் கட்டைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டுபோய்ப் பழங்கற்கால மாந்தர் பயன்படுத்தி யிருத்தல் வேண்டும். மரந்தொறும், மலைதொறும், நீர்நிலைதொறும் ஆவி அல்லது பேய் குடிகொண்டிருந்ததாகவும், பழங்கால மாந்தர் நம்பினர். இறந்தவ ருடம்பைக் குடியிருப்பிற்குச் சற்றுத் தொலைவான இடத்திலுள்ள குழியிலிட்டு, காகங்கழுகும் நரியோரியும் தின்னாவாறு மண்ணால் மூடிவிடுவது அவர் வழக்கம். மொழித்துறையில், இயற்கை மொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) என்னும் முந்து மொழிக்குரிய, (1) உணர்வொலிகள் (Emotional Sounds) (2) விளியொலிகள் (Vocative Sounds) (3) ஒப்பொலிகள் (nghÈ¢ செய்கையொலிகள் - Imitative Sounds) (4) குறிப்பொலிகள் (Symbolic Sounds) (5) வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatory Sounds) (6) குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds) (7) சுட்டொலிகள் (Deictic Sounds) ஆகிய எழுவகை யொலிகளும், பழங்கற்காலத்திலேயே முறையே தோன்றியிருத்தல் வேண்டும். அதன் இறுதிக் காலத்தில் ஆத்தி ரேலியா நோக்கியும் தென்னாப்பிரிக்கா நோக்கியும் குமரி மாந்தர் படர்ந்திருத்தல் வேண்டும். நால்வகை யெழுத்தில் முதலதான பட வெழுத்து (Picture writing or Pictograph) பழங் கற்காலத்தில் தோன்றி யிருத்தல் வேண்டும். இயற்கை யுணவு தேடத் தெரிந்ததும், எளிய உறையுள் அமைத்ததும், அற்றம் மறைத்ததும், அழகுணர்ச்சி தோன்றியதும், தீயைப் பயன்படுத்தியதும், இயற்கைமொழி வளர்த்ததும், படவெழுத்தைப் பயன்படுத்தியதும் பழங்கற்கால மாந்தரின் அறிவுநிலை யென்னலாம். 2. புதுக் கற்காலம் (New Stone Age) (தோரா. கி.மு. 1,00,000-50,000) முந்தியல் குமரிமாந்தர், பழங் கற்காலக் கருவிகளைத் திண்கனக் கருங்கல்லால், வழவழப்பாகவும் மிகக் கூரியனவாகவும் செய்து கொண்ட காலம் புதுக் கற்காலமாகும். அவர் வாழ்ந்த இடம் குறிஞ்சியும் அதையடுத்த முல்லையு மாகும். வாழ்க்கைத் திருத்தத்தாலும் மாந்தர் தொகைப் பெருக் காலும், இயற்கையாகவே அவர் முல்லைநிலத்திலும் பரவியிருத்தல் வேண்டும். அவர் செய்த தொழில், பெரும்பான்மை கால்நடை வளர்ப்பும் வானாவாரிப் பயிர் விளைப்பும், சிறுபான்மை பழங்கற்கால மாந்தர் செய்தன. மலையடிவாரங்களிலும் மலைமேலும் வாழும் ஆடு, மாடு, எருமை ஆகிய மூவிலங்கினங்களையும், அவர் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கினர். மூன்றும் பால் தந்தன. ஆடு பால் தருவதொடு ஊனுணவுமாயிற்று. காளைமாடும் கடாவெருமையும் ஏருழவிற்குப் பயன்பட்டன. மானையும் ஆமானையும் காட்டுப்பன்றியையும் முயலையும் உடும்பையும் பிடித்து ஊனுணவிற்குப் பயன்படுத்தினர். இன்று பன்றியிறைச்சி யுண்பவர் ஒருசாராரே. அவரினுஞ் சிறு தொகையினர் மாட்டிறைச்சி யுண்பவர். பறவைகளுள் கோழி, புறா, குயில், காடை, கதுவாலி ஆகியவற்றின் ஊனை விரும்பியுண்டனர். காட்டுக்கோழியைப் பழக்கி வீட்டுக்கோழியு மாக்கினர். வானாவாரிப் பயிர்கள் என்பன, ஏர்க்காடும் கொத்துக்காடு மாகிய நிலத்தில் மழையினாலேயே விளைந்த தினை வரகுபோன்ற சிறுதவசங்களும், அவரை துவரை போன்ற பயறுவகைகளு மாகும். புல்வெளிகளா யுள்ளவற்றைக் கால்நடை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, குறுங்காடும் பெருங்காடுமா யுள்ளவற்றைத் தீயினாற் சுட்டெரித்துக் கொன்று விளைநிலமாக்கிய விடம், பிற்காலத்திற் கொல்லை யெனப்பட்டது. அடர்ந்த மரஞ்செடி கொடிகளால் இருண்டு கிடவாது வெட்டவெளியான நிலமெல்லாம், கண்ணிற்குப் புலனான தனால், புலம் எனப்பட்டது. புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் (புறம். 109:2) புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை (புறம்.16:9) என்னும் அடிகளை நோக்குக. விளைநிலத்திலும் வீட்டிலுமுள்ள கூலங்களை எலிகள் தின்று கெடுத்ததனால், அவற்றைக் கொல்லக் காட்டுப்பூனையையும்; ஆடுகளை நரிகள் பிடித்துத் தின்றதனால், அவற்றை விரட்டி மந்தையைக் காக்கக் காட்டு நாயையும் வீட்டிற் பழக்கினர். நிலத்திற் பூசிப்பூசி மெத்தென்று நடப்பதால், பூனை பூசை யெனப்பட்டது. பூசு-பூசை-பூனை-பூஞை. நாய்க்கு ஆட்பற்றுப் போல் பூனைக்கு இடப்பற்று மிகுந்திருப்பதால், தொல்வர வுணர்ச்சி மிக்க ஆண்பூனை பருத்துக் கொழுத்த நிலையில் இன்றும் காட்டிற்குச் சென்று, கண்டார் அஞ்சத்தக்க வெருகாகிவிடுகின்றது. வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல்.மர.19) வெருக்கு விடையன்ன வெருணோக்கு (புறம்.324) பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய (புறம்.117) என்பவற்றால், தமிழகத்திற் காட்டுப்பூனை தொன்றுதொட்டு இருந்து வருவதை அறியலாம். இனி, மேலையாரியப் பூனைப் பெயர்கள் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருத்தலால், தமிழகத்தினின்றே பூனை ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. óir-E.puss-pussy, MLG. pus, Norw. puse, Du. poes, இதன் மூலம் தெரியவில்லை யென்றும், ஒருகால் முதற்காலத்தில் இது ஒரு பூனை விளிச்சொல்லா யிருந்திருக்கலா மென்றும், எருதந்துறை (Oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை வட்டாரத்தில் இன்றும் பூனையைப் பூசுபூசு என்று அழைப்பதைக் காணலாம். bfh¤â (1.)—E.cat, OE. catte, ME. catt(e), LL. cattus, catta, ONF. cat, F. chat, ON. kottr, OHG. kazza. கொத்தை=குருடு, குருடன். பூனைக்குப் பகலிற் சரியாகக் கண் தெரியாமையாற் கொத்தி யெனப்பட்டது. இதன் விரிவை என் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் mfuKjÈ'Ɖ காண்க. முல்லைநிலத்தை உழக் கலப்பையையும், வேட்டையாடற்கு வளரி-வணரி (வளைதடி), கவண், வில் முதலிய கருவிகளையுங் கையாண்டனர். கல்லோடு மரம், கொம்பு, மருப்பு (தந்தம்), எலும்பு முதலியனவும் முதற் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. மாட்டுக் கொம்பும் எருமைக் கொம்பும் யானை மருப்புமே முதற்கண் வளைதடியாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும். அவை கிடையா விடத்தே அவை போன்ற வளைதடிகளைப் பயன்படுத்தியிருப்பர். முல்லைநிலப் பாறைகளிலுள்ள பள்ளங்களிலும் குழிகளிலு முள்ள நீர், கதிரவன் வெம்மையாலும் காட்டுத் தீயாலும் காய்ந்த போது, அதிற் கிடந்த உணவுப் பொருள்கள் சுட்ட வுணவினும் பருத்தும் மென்மையாகியும் சுவைமிக்கும் இருந்ததைக் கண்ட மாந்தர், கற்கலங்களில் வரகு தினை முதலியவற்றின் அரிசியைச் சோறாக்கவும், அவரை துவரை முதலிய பயறுகளை அவிக்கவும் கற்றுக்கொண்டனர். பட்ட மரங்கள் உராய்ந்து அடிக்கடி நெருப் பெழக் கண்டதனால், இயற்கை நெருப்பில்லாத போது ஞெலி கோலாற் கடைந்து செயற்கை நெருப்பையும் உண்டாக்கிக் கொண் டனர். வீடுதொறும் நாள்தொறும் வேளைதொறும் தீக்கடையத் தேவையில்லாவாறு, ஊர் முழுவதற்கும் பொதுவாக ஓர் இடத்தில் இரவும் பகலும் கட்டை யெரியவிட்டு அவியா நெருப்பைப் பேணி யிருத்தலும் வேண்டும். உடுக்க மரவுரி போன்ற நாராடையும், போர்த்திக்கொள்ள ஆட்டுமயிர்க் கம்பளியும், முதற்கண் கைப்பின்னலாகவும் பின்னர்த் தறிநெசவாகவும் அவர் செய்துகொண்டனர். படுக்க மூங்கிற்பாயும் ஓலைப்பாயும் முடைந்துகொண்டனர். சந்தனச் சேற்றாலும் வண்ணச்சாந்தாலும் இருபாலாரும், சிறப்பாகப் பெண்டிர், மேனிமுழுதும் பல்வேறு ஓவியம் வரைந்து கொள்வதும், நிலையாயிருக்குமாறு பல்வகை யுருவங்களைப் பச்சை குத்திக்கொள்வதும் பெருவழக்காயிருந்தது. குடியிருக்க வட்டமான கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். முதலில் மரத்திலும் மரத்தடியிலும் வதிந்ததனால், வட்டமாகக் கிளைகள் படர்ந்தும் நிலத்திற் படிந்துமுள்ள மரத்தின் போங்கைப் பின்பற்றி, வீட்டின் வடிவை அமைத்ததாகத் தெரிகின்றது. சுற்றுச் சுவரைக் கல்லுள்ள விடத்தில் மட்சாந்து பூசிக் கல்லாலும், அஃதில்லா விடத்தில் மண்ணாலும் அமைத்தனர். கூலங்களும் காய்கறிகளும் போன்ற கெட்டிப் பொருள்களை இட்டுவைப்பதற்கு, பனைநார்ப் பெட்டிகளும் மூங்கிற் கூடைகளும் முடையப்பட்டன. நீரையும் நீர்ப்பொருள்களையும் வார்த்து வைப்பதற்கு, மூங்கில் நாழியும் மரத்திற் கடைந்துகொண்ட கடை காலும் ஆட்டுத்தோற் பையும் பயன்படுத்தப்பட்டன. சமைப்பதற்குக் கற்கலம் உதவிற்று. கல்லுதல் = தோண்டுதல் அல்லது குடைதல். கல்லப்பட்ட ஏனம் கலம் என்னப்பட்டது. ஆடு மாடு உடும்பு முதலியவற்றின் தோலை மரத்திலும் கலத்தின் வாயிலும் கட்டி உலர்த்தியபோது, குச்சுங் கையும் பட்டு இன்னோசை யெழுந்ததைக் கண்டு துடி, தொண்டகம் முதலிய தோலிசைக் கருவிகளும்; வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கிற் குழாயிலும் நாணல் தட்டையிலும் காற்றுப் புகுந்தபோது, இனிதாய் ஒலித்ததைக் கண்டு புல்லாங்குழலும்; முறுகக்கட்டிய வில்லின் நாண் தெறித்தபோது, இன்னிசை பிறந்ததைக் கண்டு வில் யாழ் என்னும் நரப்பிசைக் கருவியும்; நாளடைவிற் புதுக் கற்கால மாந்தர் புனைந்து கொண்டனர். இன்பத்திற்கு மட்டுமன்றி, வேளைக்கு வேளை உண்டி சமைக்கவும், தொழிலுக்குத் துணையாயிருக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், நோய்நிலையில் நலம் பேணவும், ஒரு பெண் நிலையாக வீட்டிலிருக்க வேண்டியிருந்ததால், வீட்டு வாழ்க்கை ஏற்பட்டபோதே, ஓர் ஆடவனும் பெண்டும் கூடிவாழும் கூட்டு வாழ்க்கையும் ஏற்பட்டது. அது இல்வாழ்க்கை யென்று பொதுவாகச் சொல்லப்படினும், கூட்டு வாழ்க்கைக்கும் குமுகாய வாழ்க்கைக்கும் உரிய இன்றியமையாத அறங்களைத் தழுவியதால், இல்லறம் எனச் சிறப்பித்துச் சொல்லப்பெறும். அக்காலம் இல்வாழ்க்கைத் தொடக்கக் காலமாதலால், பன் மனை மணமும் (polygamy), தீர்வை (divorce) முறையும் பெரு வழக்கா யிருந்தன. பெற்றோரும் பெண்ணும் இசையாதவிடத்து வன்கவர்வும், கள்ளக்கடத்தமும், சூளுரைத்துப் பெண்ணொடு களவாகக் கூடியபின் சூளை மறுத்தலும், நிறைவேற்றாமையும், பலரறியக் கூடியபின் ஒரு பெண்ணைக் கைவிடுதலும் அடிக்கடி நிகழ்ந்தன. கணவனும் மனைவியுங் கூடியே மகப்பெறினும், வெளிப்படை யாகச் சூல்கொண்டு பத்து மாதம் இடர்ப்பட்டுச் சுமந்து பெரு நோவொடு பிள்ளை பெறுவதால், பிள்ளைகளின்மீதுள்ள உரிமையும் அதிகாரமும் நெடுங்காலம் தாய்க்கே இருந்துவந்தது. இதில் தந்தைமார் தமக்கும் பங்கு கோடற்கு, ஈனியற் படுக்கை' (Couvade) என்னும் ஒரு வலக்காரத்தைக் கையாண்டனர். அஃதாவது, மனைவி பிள்ளை பெற்றவுடன், கணவனும் அவளைப்போல் நோவுற்றதாக நடித்துப் படுத்துக்கொண்டு, தனக்கு மகப்பேற்று மருத்துவம் பார்க்கச் சொல்வது. குறத்தி பிள்ளை பெற, குறவன் காயந் தின்றானாம்'' என்னும் தமிழ்ப் பழமொழி, இன்றும் பண்டை ஆப்பிரிக்க மாந்தரின் வழக்கத்தை யொத்த வினை குமரிநாட்டிலும் இருந்ததைக் குறிப்பாக உணர்த்துகின்றது. இல்வாழ்க்கையும் நிலையான கூட்டுக் குடியிருப்பும் ஏற்பட்டதனால், ஆங்காங்குப் பற்பல வூர்கள் தோன்றிப் பெருகின. ஒவ்வோர் ஊரிலும் குடிவாணர் பெரும்பாலும் பல்தலைமுறைப் பட்ட ஒரே மாபெருங் குடும்ப வுறவினரா யிருந்ததனால், அக் குடும்ப முதியோனே தலைவனாயிருந்து, குற்ற வழக்குத் தீர்த்துத் தண்டித்தும் முறைசெய்தும் வந்தான். அக்காலத்தில் மக்கள் வாழ்வு நீண்டிருந் ததனால் மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன் (சேயான்) என்னும் ஐந்தலைமுறையினரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தனர். ஆடுமாடுகட்குப் புல்விளையவும் வானாவாரிப் பயிர்களை விளைவிக்கவும் மழை இன்றியமையாததா யிருந்ததனால், மழைத் தெய்வம் அல்லது முகில் தெய்வம் பழங்கற்காலத் தெய்வங்களுடன் புதிதாகவும் சிறப்பாகவும் வணங்கப்பெற்றது. குமரி மொழி, முழைத்தல் மொழிநிலையினின்று இழைத்தல் மொழியில் (Articulate Speech), (1) அசைநிலை (Isolating or Monosyllabic Stage) (2) புணர்நிலை (Compounding Stage) (3) கொளுவுநிலை (Agglutinative Stage) (4) பகுசொன்னிலை (Inflexional Stage) என்னும் நால்நிலைகளைப் புதுக்கற்காலம் முடியுமுன் கடந்திருத்தல் வேண்டும். அன்று கருத்தெழுத்துத் (Ideograph) தோன்றியிருத்தல் வேண்டும். அசைநிலைக் காலத்திற் சீனரின் முன்னோரும், கொளுவுநிலைக் காலத்திற் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத் தொடக்கத்திற் சுமேரியரின் முன்னோரும், குமரிநாட்டினின்று பிரிந்து போயிருத்தல் வேண்டும். சுமேரியர் பிரிந்துபோனதை இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக. நகர் என்று பொருள்படும் ஊர்' என்னும் பாபிலோனிய நகர்ப்பெயர் தமிழாயிருப்பதையும், அப்பன் என்னும் முறைப்பெயர் கல்தேயர் (Chaldees) அல்லது பாபிலோனியர் மொழியில் ஆப் என்று திரிந்திருப்பதையும் நோக்குக. தீயுண்டாக்கல், சமைத்தல், வானாவாரிப் பயிர் விளைத்தல், கால்நடை வளர்ப்பு, நெசவு, இல்வாழ்க்கை, ஊராட்சி, இழைத்தல் மொழியமைத்தல், கருத்தெழுத்தைப் பயன்படுத்தல் என்பன புதுக்கற்கால மாந்தரின் அறிவுநிலையைக் காட்டும். கற்கால மாந்தரிடை வகுப்பு வேறுபாடின்மை கற்கால மாந்தர் பழங் கற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலும் புதுக் கற்காலத்திற் குறிஞ்சியிலும் அதையடுத்த முல்லைநிலத்திலும் வதிந்தாரேனும், திணைநிலம்பற்றியோ தொழில்பற்றியோ தெய்வ வணக்கம்பற்றியோ, அவரிடை எவ்வகை வகுப்பு வேறுபாடும் இருந்ததில்லை. எல்லாரும் எல்லாத் தொழிலும் செய்து ஒரே வகையாய் வாழ்ந்து ஒரே வகுப்பாயிருந்தனர். பழங் கற்காலத் தாழ்வுநிலையும் புதுக் கற்கால உயர்வுநிலையும் எல்லார்க்கும் பொதுவாகும். நீலமலையிலுள்ள கோத்தர் பல்தொழிலும் தெரிந்தவராய் ஒரே வகுப்பாராக வாழ்கின்றனர். ஆடவர் ஒவ்வொருவரும் உழவு, கால்நடை வளர்ப்பு, நெசவு, வணிகம், தச்சு, கொல், தட்டார வேலை, சலவை, மஞ்சிகம் (முடிதிருத்தம்) ஆகிய வாழ்க்கைப் பணிகள் அனையவும் செய்து வருகின்றனர். தொகைபற்றி யன்றித் தொழில்பற்றி ஒருவர்க்கும் இன்னொருவர் உதவி வேண்டியதில்லை. இங்ஙனமே கற்கால மாந்தரும் வாழ்ந்திருத்தல் வேண்டும். கற்காலங் கழிந்து மருதநில வாழ்வு தொடங்கிய பின்னரே, தொழிற்பிரிவும் அதுபற்றிய வகுப்பு வேறுபாடுந் தோன்றின. 2. பொற்காலம் (Gold Age) (தோரா. கி. மு. 50,000-30,000) தமிழர் வரலாற்றுக் காலப் பகுதிகளுள், பழங் கற்காலம் புதுக் கற்காலம் என்னும் இரண்டும் அவ்வக் காலத்தொடு முடிந்து போனவையாகும். பழங் கற்காலக் கருவிகள் புதுக் கற்காலத்திலும், புதுக் கற்காலக் கருவிகள் பெரும்பான்மையாகப் பொற்காலத்திலும், வழங்கியிரா. ஆயின், பொற்காலம் முதலிய பிற்காலக் கருவிகள் உலகுள்ள காலமெல்லாம் வழங்கும். பொற்காலம் செம்புக்காலம் உறைக்காலம் இரும்புக்காலம் எனப் பிரித்த தெல்லாம், பெரும்பாலும் அவற்றின் பயன்பாட்டுத் தொடக்கம் பற்றியே யன்றி முடிவுபற்றி யன்று. ஆயினும், முடிவு குறிக்கப்பட்டிருப்பது, அவ்வக் காலத்து மாழை பெரும்பான்மை யாகப் பயன் படுத்தப்பட்ட காலத்தின் முடிவைக் குறித்தற்கே என அறிக. பொன் அணிகலத்திற்கும், செம்பும் உறையும்(வெண்கலமும்) குடவமும்(பித்தளையும்) நீர்க்கலத்திற்கும், இரும்பு எல்லாக் கருவிகட்கும் என்றும் பயன்படுத்தப்படும். இவற்றுள், பொன் மிகச் சிற்றளவாகவும் இரும்பு மிகப் பேரளவாகவும் இருக்கும். மாழைகட்கு இந் நூலிற் கூறப்பட்டுள்ள காலங்கள், மேலை யறிஞர் கூறுவனவற்றொடு ஒவ்வா. அவர் தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் முன்மையையும் அறியாராதலின், மாழைக் காலங்களைப் பிற்படக் கூறுவதில் வியப்பொன்று மில்லை. ஆரியராலும் அவரடியாராலும் மறைக்கப்பட்டுள்ள வுண்மை வெளிப்பட்டபின், மேலையரும் என் கூற்றை ஒப்புக்கொள்வது திண்ணம். பொற்காலம் என ஒன்று, தமிழகம் தவிர வேறெந் நாட்டிற்கும் இருந்ததில்லை. பிற நாடுகளிலெல்லாம், பொற்காலம் என்பது அணியியற் பொருளில், ஒழுக்கத்திலும் செல்வத்திலும் கல்வியிலும் தலைசிறந்த காலத்தைக் (Golden Age) குறிக்குமேயன்றி, செஞ்சொற் பொருளில் பொற்கருவிகளே வழங்கிய காலமொன்றைக் குறிக்காது. தமிழ்நாட்டிற்குள்ள பல்வகைத் தனிச் சிறப்புகளுள் பொற்காலமும் ஒன்றாகும். பொலிவுற்றது பொன்னெனப்பட்டது. பொல்-பொலி-பொலிவு. பொல் - பொற்பு. பொல்லுதல் = அழகாதல், பொலிதல். பொற்ற = அழகிய, சிறந்த, பொன்னாலான. பொல்-பொன். பொல் - பொலம் - பொலன். குமரிநாட்டிற் பொற்கால மிருந்தமைக்குச் சான்றுகளாவன: (1) பொன்னின் பெயர் மாழைப் பொதுப்பெய ரானமை. தமிழரால் முதன்முதற் கண்டுபிடிக்கப்பட்ட மாழை (metal) பொன்னாதலால், அதன் பெயரே பிற்காலத்திற் கண்டுபிடிக்கப்பட்ட பிறவற்றிற்கும் பொதுப்பெயராயிற்று. எ-டு : செம்பொன் = செம்பு, வெண்பொன் = வெள்ளி, கரும்பொன் = இரும்பு. துண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று என்னுங் குறளடியில் (931), பொன் என்னுஞ் சொல் அடையின்றியும் இரும்பைக் குறித்தது. நாக (ஈய) மணல் பொன்வித்து எனப்படும். (2) கடைக்கழகக் காலத்திலும் பொன் மிகுதியாக வழங்கினமை. அக்காலத்துக் காசெல்லாம் பொன்னாயிருந்தமையால், காசு பொன் என்றும், பணமுடிப்பு பொற்கிழி என்றும், பணத்தண்டம் பொன் தண்டம் என்றும் சொல்லப்பட்டன. அரசர் தம்மைப் பாடிய புலவர்க்கு இலக்கக்கணக்கிற் பொற்காசை வாரி வழங்கினர். கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகால் வளவனைப் பாடிப் பதினாறிலக்கம் பொன் பெற்றார். காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடி, நாற்பதிலக்கம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பெற்றார். காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடி, அணிகலனுக்கென்று 9துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார். கபிலர் செல்வக் கடுங்கோ வாழி யாதனைப் பாடி ஓரிலக்கம் பொற்காசும் ஒரு நாடும் பெற்றார். அரிசில்கிழார் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடி, தொண்ணி லக்கம் (ஒன்பது நூறாயிரம்) பொற்காசும் அரியணைக் கீடாக அமைச்சுரிமையும் பெற்றார். பெருங்குன்றூர்கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி, முப்பத்தீராயிரம் பொற் காசும் பல்வகைப் பரிசிலும் பெற்றார். மாதவிபோல் தன் ஆடல்பாடலை அரங்கேற்றிய நாடகக் கணிகைய ரெல்லாரும், ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றனர். அரசரை யடுத்துப் பாடிய பாணரெல்லாரும் பொற்றாமரையும், பாடினியரெல்லாரும் பொன்னரிமாலையும் பரிசாகப் பெற்றனர். தில்லைச் சிற்றம்பலம் பொற்பலகையால் வேயப்பட்டிருந்தது. மதுரையம்பலம் வெள்ளியம்பலம் என்று பெயர் பெற்றிருந்த தனால், தில்லையம்பலம் அன்று பொன்னம்பலமா யிருந்திருத்தல் வேண்டும். மூவேந்தரும் கொடைமடம்பட்டுப் பிராமணப் பூசகர்க்குத் துலைநிறைப் பொன் தானஞ் செய்துவந்தனர். கடைக்கழகக் காலத்தில் இத்துணைப் பொன்வளம் இருந்ததெனின், தலைக் கழகத்தினும் முற்பட்டு மக்கள்தொகை மிகக் குறைவாயிருந்த காலத்தில், சிற்சில கருவிகளையேனுஞ் செய்துகொள்ளப் போதிய பொன்னிருந்ததென்பது நம்பத்தகாத தன்று. (3) தென்னாப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் இன்றும் பொன் கிடைக்கின்றமை. உலகில் இன்று மிகுதியாகப் பொன் கிடைக்கும் இடங்கள் இரசியா, தென்னாப்பிரிக்கா, கானடா, அமெரிக்க ஒன்றிய நாடுகள் (U.S.A.) என்னும் நான்காம். பொன் கிடைக்கும் வகைகள், öŸ(dust), kzš(grain), jfiz(nugget), நரம்பு (lode or vein), கலப்பு (mixture) என ஐந்து. 1850-ல் ஆத்திரேலியப் பொன் கண்டுபிடிக்கப்பட்டபின், பொற்பித்தர் பெருந்திரளாகப் போய் அங்குச் சரிந்தனர். பல விடத்திற் பெருந்தகணைகள் நிலமட்டத்திற்கு ஒருசில விரலங்கட்குக் (inches) கீழேயே கண்டெடுக்கப்பட்டன. அரம்ப மலை மணல்' தகணை (‘Sierra Sands' nugget) 1117 Éuidí«(oz), ஆத்தம் பெருமாட்டி' (lady Hotham) 1,177 விரனையும், நல்வரவு அயலார் தகணை' (Welcome Stranger Nugget) 2000 விரனைக்கு மேலும் ஆலதர்மன் தகணை' (Holtermann nugget) 200 துலத்திற்கு (lb.) மேலும் எடை நின்றன. குமரிக்கண்டம் ஆத்திரேலியாவோடும் தென்னாப்பிரிக்கா வோடும் இணைந்திருந்ததனால், அந் நடுவிடத்திலும் பொற் றகணைகள் எளிதாய்க் கிடைத்திருத்தல் வேண்டும். முழுகிப் போன குமரிக்கண்டத்தைச் சேர்ந்த தமிழ்நிலம் முழுதும் பழம் பாண்டிநாடாகும். சோழநாட்டின் வடபகுதி தொண்டைமண்டலம் என்று பிரிந்தது போன்றே, சேரநாட்டின் வடபகுதியும் கொங்கு மண்டலம் எனப் பிரிந்தது. அக் கொங்கும் பின்னர்க் குடகொங்கு, குணகொங்கு என இருபாற்பட்டது. கொங்குநாட்டிலும் சோழநாட்டிலும் ஓடும் பேராறு காவேரி. அக் காவேரி பொன் கலந்த மணலைக் கொழித்ததனாற் பொன்னி யெனப்பட்டது. சோழநாட்டில் மிகுதியாகப் பொன் கிடைத்ததனால், முதற் பராந்ததகன், இரண்டாங் குலோத்துங்கன் முதலிய சோழவேந்தர் பலர் தில்லைச் சிற்றம்பலம் பொன் வேய்ந்தனர். இரண்டாம் இராசராசன், சிற்றம்பலம் மட்டுமன்றிப் பேரம்பலம், மாட மாளிகை, கூடகோபுரம் முதலிய பலவற்றையும், பொன்னாலணி வித்துத் தில்லையைப் பொன்வண்ண மாக்கினான். சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் - சுற்றியே மாளிகையும் பீடிகையும் மாடமுங் கோபுரமும் சூளிகையு மத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் கோயில் திருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயில் திருச்சுற்று மாளிகையும் - தூயசெம் பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பறுத்து முன்னிற் கடல்களுள் மூழ்குவித்த சென்னி - இராசராச தேவருலா அரண்மனைகளில் அரசன் தங்கும் தனி மாளிகையும் பொன்னால் வேயப்பட்டிருந்தது. சுந்தரச் சோழனைப் பொன் மாளிகைத் துஞ்சிய தேவர் என்று கல்வெட்டுக் கூறுதல் காண்க. கொங்குநாட்டிற் கிடைத்த பொன் கொங்குப்பொன் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. இன்றும் சுரங்கத்திற் பொன்னெடுக்கும் குவளாலபுரம் (கோலார்) பண்டைக் கொங்குநாட்டைச் சேர்ந்ததே. கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும் (சிலப்.10:13:2-5) என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதை யடிகட்கு, செந்நெற் கதி ரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க என்று அடியார்க்குநல்லார் உரை வரைந் துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, இதைப் பின்பற்றிப் பொன்னேர் என்பதற்கு, பருவ காலத்தில் நல்ல நாளில் முதன் முறையாக உழுங் கலப்பை என்று விளக்கங் கூறியுள்ளது. பண்டை மகதநாட்டூர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சா லோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுவதால், குமரிநாட்டில் அதற்கு மூலமான வழக்கம் இருந்திருக்கலாமென்று கருத இடமுண்டு. உருவப் பஃறே ரிளஞ்சேட் சென்னி பொற்றேரை யுடைய வனாயிருந்தான். பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கடல் நிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ (புறம். 4) என்று பரணர் பாடுதல் காண்க. பண்டைத் தமிழரசரின் தேர் குதிரை யானைகள் பொற்படைகளால் அணிசெய்யப் பெற்றிருந்தன. மகிழா தீத்த இழையணி நெடுந்தேர் (புறம்.123:4) பாடிப் பெற்ற பொன்னணி யானை (புறம்.177 :3) வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா எண்ணு வோரே (புறம். 116) அரசருடைய போர் முரசும் அதுபோன்ற பிற சின்னங்களும் பொன்னால் அணிசெய்யப்பட்டிருந்தன. பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் (புறம். 5) கி.மு. 11ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் யூதேயா நாட்டையாண்ட சாலோமோன் அரசன் (1015-975), ஒப்பீர் (Ophir) என்னும் இந்தியத் துறைமுகத்தினின்று வருவித்த பொருள்களுள் பொன்னும் ஒன்று. அத் துறைநகர், வேம்பாய் எனப்படும் பம்பாய் மாநகர்க்கு வடக்கே 37 கல் தொலைவிலிருந்த, உப்பரா அல்லது உப்பரகா என்று ஆராய்ச்சியாளராற் கருதப்படு கின்றது. கால்டுவெலார் அது ஒருகால் பாண்டி நாட்டின் கீழ்க்கரை யிலுள்ள உவரியா யிருக்கலாமென்று கருதினர். எதுவாயினும், ஒப்பீர் ஓர் இந்தியத் துறைநகர் என்பது உறுதி. சாலோமோன் காலத்திற் சேரநாடு குச்சரம் (குசராத்து) வரை பரவியிருந்தது. தொன்றுதொட்டுப் பொன் இந்தியாவினின்று மேனாடுகட்கு ஏராளமாக ஏற்றுமதியாகி வந்ததனால், சேக்கசுப்பியர் (Shakespeare) தம் பன்னிரண்டாம் இரவு' (Twelfth Night) என்னும் நாடகத்தில், பொன்னை இந்திய khiH‘(metal of India) என்றார் (2:5). (4) குமரிநாட்டில் பொன் கிடைத்தமைபற்றிய நெட்டிமையார் கூற்று: ..............................................j§nfh¢ செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம். 9) இதன் பழைய வுரை: தம்முடைய கோவாகிய சிவந்த நீர்மையை யுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற் கெடுத்த விழாவினை யுடைய நெடியோனா லுளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி யென்னு மாற்றின் மணலினும் பலகாலம்''. குமரிநாட்டு மாந்தர் முதற்காலத்தில் இயற்கை நீர்நிலை களையே சார்ந்திருந்ததனாலும், ஆறில்லாத விடமெல்லாம் அடர்ந் திருண்ட காடா யிருந்ததனாலும், மக்கள்தொகை மிகமிகப் பெரும்பாலும் ஆறுகளை யடுத்தே பரவியிருத்தல் வேண்டும். ஆதலால், பெருமலை நாடான குறிஞ்சியையும், குறுமலை நாடான முல்லையையுங் கடந்தபின், கரடும் கல்லும் முரம்பும் பாறையும் அருகி நீர்வளமும் நிலவளமும் மிக்க மருதநிலத்திற்கே இயற்கை யாகப் பரவியிருந் திருப்பர். அங்கு நெல்லும் வாழையும் போன்ற நிலைத்திணை (தாவர) வகைகளையும், அவற்றிற் கேற்ற மென்னிலத்தையுங் கண்டு, அவற்றைச் செயற்கையாக விளைவிக்க முனைந்து உழைத்தனர். என்றும் நீர் வேண்டும் பயிர்களைக் கரிசல் நிலத்திலும், இடையிட்டு நீர் வேண்டும் பயிர்களைச் சிவல் நிலத்திலும் பயிரிட்டனர். செடி கொடி புற்களைதல், கல்லெடுத்தல், உரமிடுதல், பன்முறையுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (பல்லியாடுதல்), புழுதி யாக்குதல், காயவிடுதல் என்னும் பல்வகையில் திருத்தப்பட்ட நிலம் செய் எனப்பட்டது. செய்தல் = திருத்துதல். பேரளவாகத் திருத்தப்பட்டது நன்செய் என்றும், சிற்றளவாகத் திருத்தப்பட்டது புன்செய் என்றும் சொல்லப்பட்டன. நன்செய் உரம் மிகுதியாக வைக்கப்படுவதால் வயல் என்றும் (வை-(வய்)-வயல்), சேறுபடுதலால் செறு என்றும், பள்ளமாயிருத்தலால் பண்ணை யென்றும், போரடிக்குங் களஞ் சேர்ந்திருப்பின் கழனி யென்றும், நீண்ட காலம் பண்படுத்தப்பட்டுப் பழமையானபின் பழனம் என்றும் பெயர் பெற்றது. நெல்வயலில் உழும்போதும் அறுவடை செய்யும் போதும் கிணைப்பறை (உறுமி) கொட்டப்பட்டது. நெல்லும் வாழையும் போன்றவற்றை நன்செயிலும், சோளமும் கேழ்வரகும் போன்றவற்றைப் புன்செயிலும், வரகும் சாமையும் போன்றவற்றை வானாவாரிக் கொல்லையிலும் பயிரிட்டனர். நீர்ப்பாசன ஏந்து (வசதி) இருக்குமிட மெல்லாம் புன்செயை நன்செயாக்கினர். பதினெண் கூலமும் எள்ளும் இஞ்சியும் மஞ்சளும் பருத்தியும் பிறவும் விளைக்கப்பட்டன. நீர்ப்பாசனத்திற்கு முதலில் ஆறும் பொய்கையும் ஆகிய இயற்கை நீர்நிலைகளையே சார்ந்திருந்தனர். பின்னர் அவை யில்லாத விடங்களில், கண்ணாறுங் கால்வாயும் ஏரியுங் குளமும் வெட்டிக் கொண்டனர். அவை எல்லார்க்கும் பொதுவா யிருந்தமையாலும், கோடைக்காலத்தில் வற்றிப்போனமையாலும், ஆண்டு முழுதும் பயன்படுமாறும் சொந்தவுடைமையா யிருக்குமாறும், நீர் சுரக்குமிடமெல்லாம் கிணறுகளையும் வெட்டிக்கொண்டனர். அக்காலத்தில் மக்கள்தொகை மிகக் குறைவாயிருந்தமையாலும், நிலப்பரப்பில் முக்காற் பங்கிற்கு மேலும் மரமடர்ந்த அடவியா யிருந்தமையாலும், கோடைமழை, காலமழை, அடைமழை, படைமழை ஆகிய நால்வகை மழையும் காலந் தப்பாது பெய்து வந்தன. அ(ல்)கால வம்ப மழையும் ஒரோவொரு சமையம் பெய்தது. கால்வாய் நீரிறைக்க இறைபெட்டி (இறைகூடை), உழணி (ஓணி) முதலிய கருவிகளும், கிணற்று நீரிறைக்க ஏற்றம், கம்மாலை என்னும் பொறிகளும் தோன்றின. அம்=நீர். அம்-கம்=நீர். ஆலுதல்=ஆடுதல், சுற்றுதல். ஆல்-ஆலை=சுற்றிவரும் பொறி. செக்காலை, கரும்பாலை முதலியவற்றை நோக்குக. இன்றும், திருக்கோவலூர்க்கும் வில்லிபுரத்திற்கும் இடைப்பட்ட ஊர்களிற் சுற்றுக் கவலையாடுதல் காண்க. கம்மாலை-கமலை-கவலை. ஏற்றம் கையால் இயக்கப்படுவது. அது கைத்துலா, ஆளேறுந் துலா என இருவகை. கம்மாலை எருது பூட்டி இயக்கப்படுவது. நெற்சோறு மருதநிலத்தில் முதன் முதலாகப் பொங்கப்பட்டது. சொல் = நெல். சொல் - சொன்றி - சோறு. சிற்றுண்டியாகப் பயன் படுமாறு, அரிசிப்பொரி பொரிக்கவும் அவலிடிக்கவும் கற்றுக் கொண்டனர். பயறு வகைகளை அவித்தும் சுண்டியும் தின்றனர். அவற்றின் பருப்பாற் கும்மாயமுங் கூட்டும் சாறுங் குழம்பும் ஆக்கிச் சோற்றுடன் கலந்துண்டனர். வாழை, வழுதுணை(கத்தரி), வெண்டை, சுரை, பீர்க்கு, பூசணி முதலிய காய்களைத் தனித்தும் பருப்புடன் சேர்த்தும் கறிவகைகளாகச் சமைத்தனர். ஊனுக்கு, வயலிலும் வாய்க்காலிலும் பிடித்த மீனையும் ஆமையையும், வீட்டில் வளர்த்த ஆடு கோழிகளையும் பயன் படுத்தினர். இடையிடை முல்லைக்குங் குறிஞ்சிக்குஞ் சென்று, தமக்கு வேண்டிய விலங்கு பறவைகளை வேட்டையாடியும் வந்தனர். காரத்திற்கு மிளகையும், இளங்காரத்திற்கும் சுவைக்கும் வெங்காயத்தையும், நிறத்திற்கும் மணத்திற்கும் சளிமுறிப்பிற்கும் மஞ்சளையும், சப்பென்றிருத்தலை நீக்கிச் சுவையூட்டற்கு உமண் என்னும் உவர்நிலத்து உப்பையும் சமையலிற் சேர்த்துக்கொண்டனர். குறிஞ்சியிலும் முல்லையிலும் பெரும்பாலும் பாலும் சூட் டிறைச்சியுமே உண்டதனால், அவ் வுணவிற்கு உவர்ப்புப்பொருள் தேவை யில்லாதிருந்தது. முல்லை நிலத்தில், தினை வரகு சாமை முதலியவற்றின் அரிசியைப் பாலிலுஞ் சமைத்திருக்கலாம். மருத நிலத்திற்கு வந்த பின்பே சிறந்த முறையிற் சமையல் தொடங்கியதால், பொங்கல் புழுங்கல் அவியல் சுண்டல் துவட்டல் புரட்டல் காய்ச்சல் பொரியல் முதலிய வினைகளை நீரிற் செய்தற்கு, உவர்ப்புச் சரக்குச் சேர்க்கவேண்டியதாயிற்று. உப்பு விளைக்கும் உவர்நீர்க் கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தை அடுக்குமுன், உமணையே பயன்படுத்தி யிருத்தல் வேண்டும். உமண் என்பது உவர்மண். அதை முதலில் விற்றவர், பின்பு நெய்தல் நிலத்து உப்பளத்தில் உப்பு விளைத்த போதும், உமணர் எனப்பட்டனர். களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி.133) பொரியல் முதலில் ஆவின் நெய்யிலேயே செய்யப்பட்டது. அதனாலேயே, பின்னர் எள்ளிலிருந் தெடுக்கப்பட்ட நெய்ப் பொருள் எண்ணெய் (எள்நெய்) எனப் பெயர் பெற்றது. எள்ளின் நெய்யே முதற் காலத்தில் பெருவழக்கமாக வழங்கினதனால், பிற்காலத்தில், ஆவின் நெய் தவிர மற்றெல்லா நெய்வகைகட்கும் எண்ணெய் என்பது பொதுப்பெய ராயிற்று. சமையற்கு வேண்டிய நெருப்பு, நாள்தொறும் ஞெலிகோலால் விரைந்து கடையப்பட்டது. அது வீடுதொறும் இறவாணத்திற் செருகப்பட்டிருந்தது. குறிஞ்சி வாணரும் முல்லை வாணரும் வேட்டைக்காரரும், அதை என்றுங் கையில் வைத்திருந்தனர். இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போல (புறம். 315:4) கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து (புறம். 247:2) புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியுங் கல்லா விடையன் போல (புறம்.331:4) செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை கானதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின் இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின் (புறம்.150:7-13) இவை பிற்காலத்துச் செய்யுளாயினும், முற்காலத்து நிலைமை யையுங் குறிக்கும். தீப்பட்ட விடத்தில் களிமண் இறுகிக் கற்போற் கெட்டியான தைக் கண்டு, களிமண்ணாற் பானை சட்டிகளை வனைந்து சுட்டுச் சமையற் கலங்களாகப் பயன்படுத்தினர். பருத்திப் பஞ்சால் நூலிழைத்துப் பல்வகை ஆடைகளை நெய்துகொண்டனர். நூல் நூற்றல் பெண்டிராற் செய்யப்பட்டு வந்தது என்பதை, நுண்ணிய பலவாய பஞ்சுநுனிகளாற் கைவன் மகடூஉ தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம், உலகத்து நூனூற்ற லென்பது" என்னும் இறையனா ரகப்பொருளுரைக் கூற்றாலும்(நூற்பா.1), பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு (நன். 23) என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவாலும் அறியலாம். வீட்டிலிருந்து செய்யும் தொழிலுக்கு ஏற்றவர் பெண்டிரே. பருத்தி நூல் நூற்ற பெண்டிர் பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர். பருத்திப் பெண்டின் பனுவ லன்ன (புறம். 125) கணவனொடு கூடிய பெண் வீட்டுவேலையுஞ் செய்யலாம்; நன்செய் புன்செய்க் காட்டுவேலையுஞ் செய்யலாம். கணவனை யிழந்த கைம்பெண், தன் கற்பைக் காத்துக்கொண்டு பிழைக்க வீட்டுவேலையே செய்தல் கூடும். அத்தகைய வேலை அக்காலத்து நூல் நூற்றலே. ஆதலாற் கைம்பெண்டிர் அதனை மேற்கொண்டனர். ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போல (நற்.353) ஆடைநெசவு இருபாலாராலுஞ் செய்யப்பட்டு வந்தது. அழகிற்கும் மணத்திற்கும், பல்வகை நறுமலர்களைக் கண்ணி யாகக் கட்டியும் மாலையாகத் தொடுத்தும், ஆடவர் கழுத்திலும் பெண்டிர் கொண்டையிலும் நாள்தொறும் புதிது புதிதாக அணிந்து கொண்டனர். மருதநில மண் கெட்டியா யிருந்ததனால், உயர்ந்த மண்சுவர் எழுப்பிப் பெருவீடு கட்டிக் கூரை வேய்ந்துகொண்டனர். ஊர்த் தலைவராயிருந்தவர், முல்லை நிலத்துக் கரடுகளிலுங் குன்றுகளிலு மிருந்து கற்கொணர்வித்து, காரை (மணல் கலந்த சுண்ணாம்புச் சாந்து) பூசிக் கல்வீடு கட்டிக்கொண்டனர். சுடுமட்கலந் தோன்றியபின் சுடுமட் கல்லுஞ் சுடுமண் ஓடுந் தோன்றியதனால், அதிகாரமுஞ் செல்வமுஞ் சிறந்தவர் காரைபூசிச் செங்கல் மனைகள் கட்டி ஓடு வேய்ந்துகொண்டனர். ஓடு வேயாது மட்டமாக முகட மைத்த காரைவீடு மச்சுவீடெனப்பட்டது. சுடுமண் என்பது, முதலில் சுட்ட கலம், சுட்ட செங்கல், சுட்ட ஓடு ஆகிய மூன்றையுங் குறித்தது. சுடுமண் = 1. மட்கலம் (சிலப். 14: 146 அரும்.). 2. செங்கல் .சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண்.405). 3. ஓடு. சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14:146). சுட்ட செங்கல் சுடுமட் பலகை யென்றுஞ் சொல்லப்பட்டது. பயிலுஞ் சுடுமட் பலகைபல கொணர்வித்து (பெரியபு.ஏயர்கோன். 49) இறுதியில் செங்கல் என்னும் பெயரே நிலைத்தது. பார்வைக்கு நன்றாயிருக்கவும் வண்ண ஓவியம் வரையவும், செங்கற் சுவரெல்லாம் மணல் கலவாத வெண்சாந்தினால் தீற்றப்பட்டன. வெண்சாந்து பூசிய காரைவீடு, கூரை வேய்ந்த மண் வீட்டொடு ஒப்புநோக்கிய போது விளங்கித் தோன்றியதனால், நகர் என்று பெயர் பெற்றது. நகுதல் = விளங்குதல். நகு-நகர். நகர்மிக்க வூரும் சினையாகு பெயராக நகர் எனப்பட்டது. வீட்டைக் குறிக்கும் குடி என்னுஞ் சொல்லும், குடிமிக்க வூரைக் குறித்தல் காண்க. (எ-டு: மன்னார்குடி, காரைக்குடி). இம் மயக்கந் தவிர்த்து ஊரையே குறிக்க நகரி என்னுஞ் சொல் எழுந்தது. நகர்களை (காரை வீடுகளை) உடையது நகரி. பெரிய நகர் (ஊர்) நகரம் எனப்பட்டது. இக்காலத் தில் மாநகர் என்பர். அங்ஙனஞ் சொல்லத் தேவையில்லை. அம்' என்பது பெருமைப் பொருள் குறிக்கும் பின்னொட்டு. எ-டு: நிலை-நிலையம், விளக்கு-விளக்கம், மதி-மதியம் = முழுநிலா. நகர்களிலேயே நாகரிகந் தோன்றியதனால், நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்னுஞ் சொல்லினின்றே திரிந்தமைந்தது. நகர்-நகரகம்-நகரிகம்-நாகரிகம். இதன் விளக்கத்தை என் பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' என்னும் நூலிற் காண்க. அரசன் அல்லது அவனுடைய துணையதிகாரிகள் வதிதல், அறிஞரும் புலவரும் பேராசிரியரும் வாழ்தல், கணக்காயர் பள்ளி களும் தனிப்பட்ட பெரும்புலவரின் உயர்நிலைக் கல்வி நிலையங்களும் அமைந்திருத்தல், பெரும்பாலார் எழுதப் படிக்கத் தெரிந்தவரா யிருந்து திருத்தமாகப் பேசுதல், எல்லாருந் திருந்திய பழக்கவழக் கங்களை மேற்கொள்ளுதல், அழகிய ஆடையணிகள் உடல் மறைய அணியப் படுதல், துப்புரவான காரைவீடுகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நேரான பெருந்தெருக்களும் புதைசாலகங்களும் இருத்தல், ஏந்தான அழகிய வூர்திகள் இயங்குதல், உயர்ந்த அறுசுவை யுண்டிகள் உண்ணப்படுதல், பலவகை யுயர்ந்த பிறநாட்டு ஐம்புல நுகர்ச்சி யரும்பொருட் கடைகள் அடுத்தடுத்திருத்தல், களவுங் கொள்ளையும் நிகழாவாறு ஊர்காவலர் அல்லும் பகலுங் காத்தல், கொலையாளிகளையும் பிற குற்றவாளிகளையுந் தண்டிக்கும் அறமன்றமும், திருக்கோயில்களும் துறவியர் மடமும் சொற்பொழி வுக் கூடமும் பட்டிமண்டபமும் உண்மை முதலிய ஏதுக்களால், நகரங்களும் நகர்களுமே நாகரிகப் பிறப்பிடமாயின. அநாகரிகனை நாட்டுப் புறத்தானென்றும், பட்டிக்காட்டானென்றும் சொல்வதே, இதை வலியுறுத்தும். நகர மேம்பாடுகள் நகர்களிற் குன்றியிருக்கு மேனும் நாகரிகத்திற் கேதுவானவையே. நாகரிகம் நகரிற் பிறந்ததெனின், நகரத்திற் சிறந்த தெனலாம். பாண்டியன் மதுரை ஒரு நகரம் (மாநகர்). அக்காலத்து நெல்லை (திருநெல்வேலி) ஒரு நகர். வைகை மதுரை போன்றதே பஃறுளியாற்றுத் தென்மதுரை. நாகரிகத்தின் மூளை குறிஞ்சிநிலத்திலேயே தோன்றியதேனும், அது முழுவளர்ச்சி யடைந்தது மருதநிலத்து நகர்ப்பாங்கே யென்றும், குறிஞ்சி நாகரிகமும் முல்லை நாகரிகமும் மருத நாகரிகத்தின் கீழ்நிலைகளே யென்றும், நெய்தல்நிலை வணிக வளர்ச்சிக்கும் செல்வப் பெருக்கத்திற்குமே ஏதுவென்றும், பாலைநிலை நாகரிக வளர்ச்சியின்றிப் பண்பாட்டிழிபையே காட்டுமென்றும் அறிதல் வேண்டும். மருதநிலக் குமுகாய வாழ்வில், ஒருமனை மணமும் இறப்பு வரை பிரியா இல்வாழ்வும் பெரும்பான்மையாயின. ஒருவனால் மணஞ் செய்யப்பட்டமைக்கு அறிகுறியாகப் பெண்ணின் கழுத்திற் பொற்றாலி கட்டப்பட்டது. பன்மனை மணமும் தீர்வை முறையும் தொடர்ந்தன வேனும், தொல்லை மிகுதியும் பண்பாட்டிழிபும்பற்றி அவை தாழ்வாகக் கருதப்பட்டன. ஊர்த் தலைவனும் அவனுக்கு மேற்பட்ட அரசரும், இன்பச் சிறப்பு நோக்கிப் பன்மனை மணத்தையே கடைப் பிடித்தாரேனும்,அதன் இழிவை அவரது தெய்வத்தன்மையான அதிகாரம் முற்றிலும் மறைத்துவிட்டது. மருதநிலத்து நிலையான குடியிருப்பும் பயிர்த்தொழிலிற் குடும்பக் கூட்டுழைப்பும், கணவன் மனைவியர் காதலை வளர்த்து மண வாழ்க்கையை நீடிக்கச் செய்தன. உயிருக் கின்றியமையாத உணவுப் பொருள்கள் ஏராளமாகக் கிடைத்ததனால், வயிறாரவுண்டு இன் புறவும், உழைக்க இயலாதவர்க் குதவி அறம் வளர்க்கவும் ஏதுவாயிற்று. பொற்கால மருதநில ஆட்சித்துறையில், தனியூராட்சி போய், ஒரு பேரூரும் அதனைச் சூழ்ந்த உட்கிடை போன்ற சிற்றூர்களுஞ் சேர்ந்த கூட்டூராட்சி தோன்றி, பின்னர் அதற்கும் மேற்பட்ட குறுநில மன்னராட்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். தனியூராட்சி என்பது, எல்லையளவில் இக்காலத்து நாட் டாண்மைக்காரன், பெரியதனக்காரன், பட்டக்காரன், அம்பலகாரன், மூப்பன், தலைவன், கவுண்டன், குடும்பன் முதலிய பெயர்களாற் குறிக்கப்படும் குடித்தலைவன் ஆட்சி போன்றது. ஆயின், அதிகார அளவில் பிற்காலத்து வேந்தன் ஆட்சி போன்றே கோன்மை (Sovereignty) கொண்டது. கூட்டூராட்சி என்பது, கிரேக்க நாட்டு நகர நாடு (City State) போன்றது. ஆதலால், அதுவுங் கோன்மை கொண்டதே. குறுநில மன்னராட்சி என்பது, பாரி காரி முதலிய வேளிராட்சி போன்றது; சின்னூறூர்களும் பன்னூறூர்களுங் கொண்டது. அம் மன்னரின் அரசு வீற்றிருக்கைக ளெல்லாம் நகர்கள். அமைச்சரும் படைமறவரும் அவருக்குத் துணையா யிருந்தனர். மருதநிலக் குடியிருப்புப் போன்றே, முல்லை குறிஞ்சிநிலக் குடியிருப்புகளும் ஆட்சியில் மாறுதலடைந்தன. அதாவது, தனியூராட்சி போய்க் கூட்டூராட்சி தோன்றிற்று. படைத்துணை யின்மையாற் குறுநில வாட்சி தோன்றவில்லை. இவ் வாட்சி மாற்றம் பண்டமாற்று, விழாக் காண்டல், வேட்டையாடல் முதலிய தொடர்புகளால் ஏற்பட்டது. ஆயின், மருதம்போல் நாகரிக வளர்ச்சி யடையவில்லை. இதற்கு நில அமைப்பே அடிப்படைக் கரணியம். அதனால், நகரங்களுந் தோன்றவில்லை; ஊர்ப் பெயர்களும் வேறுபட்டன. மருதநிலத்து ஊரே ஊரெனப்பட்டது. உர்=உறு. உறுதல் = பொருந்துதல். உர்-ஊர். உழவுத்தொழிலே நிலத்தொடு பொருந்தி நிலையாக வாழ ஏதுவாயிற்று. அதனால், சிற்றூர் பேரூரும், பேரூர் மூதூரும் ஆயின. நகரங்கள் பெருமைபற்றிப் பேரூர் என்றும், முதுமைபற்றி மூதூர் என்றும் சொல்லப்பட்டன. வாணன் பேரூர் (மணிமே.3 :123) அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் (சிலப்.பதி.39) முல்லைநிலத்திற் கால்நடைகட்குப் புல்வெளி தேடி அடிக்கடி இடம் பெயரவேண்டி யிருந்தது. அதனாற் கட்டை மண்மேற் கூரை வேய்ந்து, உயரமின்றித் தாழ்வான வீடுகளைக் கட்டிக்கொண்டனர். அதனால் அந் நிலத்தூர் பாடி எனப்பட்டது. படுத்தல்=தாழ்தல், தாழ்வாயிருத்தல். படு-பாடு-பாடி. இனி, படு-படி-பாடி என்றுமாம். வீடுகள் செறிந்திருந்ததனால், அவ் வூர் சேரி எனவும் பட்டது. குறிஞ்சிநிலக் குடியிருப்பு நிலம்பற்றிக் குறிச்சி யெனப்பட்டது. குறிஞ்சி-குறிச்சி. சிறுசிறு கூட்டமாக வாழ்ந்ததனால் சிறுகுடி யெனவும் பட்டது. குடியென்றது குடித் தொகுதியை. குடி = வட்ட மான சிறு வீடு. பொற்கால மொழி, பகுசொன்னிலை (Inflexional Stage) கடந்து தொகுநிலை (Synthetic Stage), பல்தொகுநிலை (Polysynthetic Stage) என்ற நிலைகளும் அடைந்திருத்தல் வேண்டும். முறையெண் நிலை எடுத்துக்காட்டு 1. அசைநிலை: (1) இயல்நிலை ஏ, உள், பல் (2) திரிநிலை யா, உண் (உட்கொள்). (பர் - பரு - பெரு). 2. புணர்நிலை பெருமகன், செய்கை, நல்லது. 3. கொளுவுநிலை வர் + ஒத்து + இ = வருத்துவி, சுள் - சுண் + அம் + பு = சுண்ணம்பு - சுண்ணாம்பு. 4. பகுசொன்னிலை (பெருமகன்-) பெம்மான், பிரான்; செய்கை, நன்று. 5. தொகுநிலை ஏ + ஒன் = ஏன் - யான். ஏ + உம் = ஏம் - யாம். 6. பல்தொகுநிலை எல் + அ + உம் = எல்லவும் - எல்லாம், செய் + அல் + ஒண் + அர் + இது + அ = செய்ய வொண்ணாத -செய்யொணாத - செய்யொணா. அரிது - அருது = கூடாது. செய்யருது = செய்யக்கூடாது. புதுக் கற்காலத்தில், பெயர்வினை யென்னும் சொல் வேறு பாடும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் இடவேறுபாடும், ஒருமை பன்மை யென்னும் எண் வேறுபாடுமே இருந்திருந்து, பொற்காலத்தில் இருதிணையும் ஐம்பாலும் தோன்றியிருத்தல் வேண்டும். மருதநிலச் சொற்களால் சொல்வளம் பெருகிற்று. மதவியல் வாழ்க்கையில், பொற்கால மருதநிலத் தமிழர், பழைய குறிஞ்சி முல்லைத் தெய்வங்களுடன் இறந்த அரசனையும் தெய்வமாக வணங்கியதாகத் தெரிகின்றது. அக்காலத்தில், பெரும்பண்ணைகளி லெல்லாம், தாமாக வந்து ஒட்டிக்கொண்டவரும் விலைக்கு வாங்கப்பட்டவருமாக, இருசார் அடிமையர் இருந்தனர். அவர் தப்பி ஓடிப்போனாலும் அடிமைய ரென்று அறியப்படுவதற்கு, அவர் காதில் துளையிடப்பட்டது. தெய்வப்பற்று மிகுந்த பிற்காலத்தில், ஆண்டி முதல் அரசன்வரை எல்லா வகுப்பாரும் தம்மை இறையடியார் என்று காட்டுதற்குத் தம் காது குத்தித் துளையிட்டுக்கொண்டதாகத் தெரிகின்றது. அத் துளை தூர்ந்து போகாவாறே, முதலில் ஓலைச் சுருளும் பின்னர்ப் பொன்னோலையும் பிறவணிகளும் பெண்டிர் அணிந்து வந்திருக்கின்றனர். பாம்படம் (நாகபடம்), தண்டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, மேலீடு என்னும் ஐவகை நகைகளை யணிதற்குத் தம் இளமையிலேயே குணுக்கு என்னும் குதம்பையால் தம் காதுத் துளையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டனர். குமரிநாட்டுடன் இணைந்திருந்த பாண்டிநாட்டில், இவ் வழக்கம் இன்றும் இருந்துவருகின்றது. அது காது வளர்த்தல் எனப்படும். ஆடவர் தம் சோணைத்தண்டை அத்துணை நீட்டாவிடினும், குழையும் குண்டலமும் குண்டுக் கடுக்கனும் அணியுமளவு துளையை அகலித்துக் கொண்டனர். உழவுத்தொழில் வரவர வளர்ந்து முழுநேர வுழைப்பையும் வேண்டியமையாலும், அதற்குப் பல புதுக் கருவிகள் வேண்டி யிருந்தமையாலும், வாழ்க்கையிலும் நாகரிகம் வளரவளரப் புதிது புதிதாகப் பல தேவைகள் தோன்றியமையாலும், எல்லார்க்கும் எல்லா வேலையுஞ் செய்ய நேரமில்லை யென்றும்; நேரமிருப்பினும், விருப்பங்களும் திறமைகளும் இயற்கையாகவே மக்கட்கு வேறு பட்டிருப்பதால், எல்லாரும் எல்லா வேலையுஞ் செய்ய வியலா தென்றும் கண்டபோது, இயற்கையாகவே பற்பல தொழிற் பாதீடுகள் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்டன. மருதநில வாழ்க்கையில், அளவான ஊர்தொறும், முதன்முதற் கோவில் வழிபாடு செய்ய ஒரு பூசகனும், காவல் செய்து வழக்குத் தீர்க்க ஒரு தலைவனும், பண்டமாற்ற ஒரு கடைக்காரனுந் தோன்றியிருத்தல் வேண்டும். அதன்பின், உழவர்க்கு வேண்டிய பொருள்களைச் செய்துதவப் பக்கத் துணையாகப் பல தொழிலாளர் படிப்படியாகத் தோன்றினர். அவரைப் பதினெண்குடி மக்கள் என்பது மரபு. அக் குடிகளை வின்சிலோ (Winslow) அகரமுதலி பின்வருமாறு கூறும்: வண்ணான் தச்சன் கோவிற்குடியான் நாவிதன் எண்ணெய் வாணிகன் (சங்கூதுவோன்) குயவன் உப்புவாணிகன் ஓச்சன் தட்டான் இலைவாணிகன் வலையன் கன்னான் பள்ளி பாணன் கற்றச்சன் பூமாலைக்காரன் கொல்லன் பறையன் இவற்றைப் பின்வருமாறுங் கூறலாம்: வண்ணான் உமணன் மருத்துவன் மஞ்சிகன் தச்சன் கணியன் (முடிதிருத்தி) (மரக்கொல்லன்) பறம்பன் கல்தச்சன் கிணையன் (தோலின்துன்னன்) தட்டான் (பறையன்) உவச்சன் (பொற்கொல்லன்) துடியன் கோலிகன் பணிசெய்வோன் பாணன் (நெசவாளன்) குயவன் கூத்தன் செக்கான் கன்னான் செம்புக் காலத்திலும், இருப்புக் கொல்லன் இரும்புக் காலத்திலுமே தோன்றியிருத்தல் கூடும். துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை (புறம்.335) என்னும் புறநானூற்றுக் கூற்று, ஒரு குறிப்பிட்ட இடம்பற்றியதே யன்றிப் பொதுப்படக் கூறியதன்று. குடிமக்கள் என்னுஞ் சொல், நிலையான குடிகளாகிய உழவர்க் குப் பல தொழிலுஞ் செய்து மக்கள்போல் உதவுபவர் என்று பொருள் படுவது. குடிமக்கள் எல்லாருள்ளும் விதப்பாகக் குடிமகன் என்று இன்றுஞ் சொல்லப்படுபவன் முடிதிருத்தாளனே. குடிமக்கள் பலரும் தம் தொழிற்கு அல்லது தொண்டிற்கு உரிய கூலியைக் களத்திலும் உழவர்மனையிலும் வாங்கி வந்தனர். வயலிலும் வாய்க்காலிலும் மீன் பிடிக்கப்படுமேனும், கடுங் கோடைக் காலத்தில் ஆறுங் குளமும் வற்றிவிடுமாதலாலும், களர் நிலத்து உப்பினும் கடலுப்பே சிறந்ததாகையாலும், செம்படவரும் உமணரும் மருதத்தை யடுத்த நெய்தல் நிலத்தில் தங்கி, முறையே மீன் பிடித்தும் உப்பு விளைத்தும் வருவாராயினர். அவர் குடியிருப் பிற்குக் குப்பம் என்றும் துறை யென்றும் பெயர். பழங் கற்காலத்திற் படவெழுத்தும் (Pictograph), புதுக் கற் காலத்திற் கருத்தெழுத்தும் (Ideograph) தோன்றியிருத்தல் வேண்டு மென்பது முன்னரே கூறப்பட்டது. படவெழுத்தாவது, ஒரு செய்கை யைப் படமாகவே வரைந்து காட்டுவது. கருத்தெழுத்தாவது, ஒவ்வொரு கருத்தையும் படவெழுத் தடிப்படையில் ஒரு குறியாற் குறிப்பது. பொற்காலத்தில் அசையெழுத்துத் தோன்றியிருத்தல் வேண்டும். அசையெழுத்தாவது (Syllabary), உயிர்மெய்யை உயிரும் மெய்யுமாகப் பிரிக்காமல் தனியெழுத்தாக எழுதுவது. பழங் கற்காலத்தில் பத்துவரையும், புதுக் கற்காலத்தில் நூறு வரையும், பொற்காலத்தில் ஆயிரம்வரையும், குமரி மாந்தர் எண்ணத் தெரிந்திருக்கலாம். கூட்டூராட்சி நிலையில், மருதநிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் (மகிணன்) என்றும், முல்லைநிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் என்றும், குறிஞ்சிநிலத் தலைவன் வெற்பன், சிலம்பன், பொருப்பன் என்றும், நெய்தல்நிலத் தலைவன் துறைவன், சேர்ப்பன், கொண்கன், மெல்லம் புலம்பன் என்றும் பதவிப்பெயர் பெற்றிருந்தனர். மகிழ்நன் என்பது, மருதநிலத்து ஆடல்பாடலைக் கண்டுங் கேட்டும் பிற இன்பங்களை நுகர்ந்தும் மகிழ்வுற்றவன் என்பதை யுணர்த்தும். குறுநில வாட்சிநிலையில், அரசர் அனைவரும் மன்னர் எனப்பட்டனர். 3. செம்புக்காலம் (Copper Age) (தோரா. கி. மு. 30,000-15,000) பொன்கிடைப்பு வரவரக் குன்றியதாலும், அணிகலன்கட்கும் உண்கலங்கட்கும் குடிகலங்கட்குமே பொன்னைப் பெரிதும் பயன் படுத்தியதாலும், நாளடைவிற் பல கருவிகளையுங் கலங்களையும் செய்தற்கேற்ற செம்பைக் கண்டுபிடித்தனர். குய்க்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில் மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக் கேடின் றாக பாடுநர் கடும்பென அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் (புறம்.140) என்னும் பிற்காலச் செய்யுள் முற்கால நிலைமையையும் உணர்த்தும். பொருநை யென்னும் நெல்லை மாவட்ட ஆற்றங்கரையிற் செம்பு கிடைத்ததால், அவ் வாறு தாம்பரச் செப்பு என்று பொருள்படும் தாமிரபரணி என்னும் இருபிறப்பிச் சொல்லால் (hybrid) பிற்காலத்திற் குறிக்கப்பட்டது. நெல்லை யருகிலுள்ள ஒரு நகர் செப்பறை (செம்பு + அறை) எனப் பெயர் பெற்றுள்ளது. சிவபெரு மானின் ஐவகை அம்பலங்களுள் ஒன்றான நெல்லை யம்பலம், செப்போடு வேயப் பெற்றதால் செப்பம்பலம் (தாமிரசபை) எனப்பட்டது. பொதியமலை செம்பிற் பொருப்பு எனப்பட்டது. தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பு (கல்லா.51:11) செம்பிற் பொருப்பு = செம்புத்தாது உள்ள மலை. இதைச் செப்புவரை யென்று குற்றாலத் தலபுராணங் கூறும். செந்நிறமாயிருந்ததனால், செம்பு என்றும் செம்பொன் என்றும் தாம்பரம் என்றும், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மாழை அல்லது பொன்னம் பெயர் பெற்றது. செம் - செம்பு - செப்பு. தும் - தும்பு - தும்பரம் = சிவப்பான அத்திப்பழம், அப் பழம் பழுக்கும் மரம். தும்பரம் - வ. உதும்பர. தும்பு - துப்பு = 1. சிவப்பு. 2. பவழம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 3. அரக்கு (பிங்.). தும் - துமர் - துவர் = 1. சிவப்பு துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6:26). 2. பவழம் (திவா.) 3. துவரம்பயறு அல்லது செடி. துவர்ங்கோடு (தொல். எழுத்து.393,உரை).4. காவி. துவருறு கின்ற வாடை யுடல்போர்த்து (தேவா.608:10). 5. துவர்ப்பு. துவர்மருவப் புளிப் பேற்றி (தைலவ.தைல.). 6. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப் பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக.623). 7.பாக்கு. வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும் (பரிபா.12:22). காசுக்கட்டியும் சாயப்பாக்கும் போன்ற செஞ்சரக்குத் துவர்ப்பா யிருப்பதால், துவர் என்னுஞ் சொல் துவர்ப்புப் பொருள் கொண்டது. துவர் (சிவப்பு) - bj. தொகரு, f.bjhf®. துவர் (துவர்ப்பு) - வ. துவர. துவர்த்தல் = 1. சிவத்தல். துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை.13).2. துவர்ப்பாதல். துவர்ப்பு = 1. அறுசுவைகளுள் ஒன்று (பிங்.). 2.பத்து (துவர்ப்புப் பொருட்டொகை) (தைலவ.தைல.135) துவராடை = காவியாடை. அந்துவ ராடைப் பொதுவனொடு (கலித்.102:35) துவர்க்கட்டி = காசுக்கட்டி. துவர்க்கண்டல் = செந்தாழை (தைலவ.தைல.135) துவர்க்காய் = பாக்கு. ``துவர்க்காயொடு சுக்குத்தின்னும் (தேவா.660:10.) துவர்ப்பூ = வாடிச்சிவந்த பூ.தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி (பதினொ. திருக்கண். மறம்.நக்.61) துவர்வலியுறுத்தி = துவர்ப்பு மருந்து (Astringent tonic) துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்.). துவரம் - t. துவர. துவர் - துவரி = 1.இலவம்பூ. துவரிக் கனிவாய் நிலமங்கை (திவ்.பெரிய தி.8:8:9) 2.காவிநிறம். துவரி யாடையர் மட்டையர் (திவ்.பெரிய தி.2:1:6) துவரித்தல் = செந்நிறமூட்டுதல். துவரித்த வுடையவர்க்கும் (திவ்.பெரிய தி.5:6:8) துவர்-துவரை = 1. துவரம் பயறு. 2.துவரஞ்செடி. 3.காட்டத்தி. 4.கருந்துவரை. 5.செம்புருக்கி வார்த்துக் கட்டிய செப்புக் கோட்டை மதில். செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம்.201) 7.கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா. துவரஞ்சம்பா=ஒரு நெல்வகை. துவரைக்கோமான்=இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும் ஒருவர் (இறை.கள. உரை). துவரைப்பதி - t.த்thutÔ. துவர் - துகர் - துகிர் = 1. பவழம். பொன்னுந் துகிரு முத்தும் (புறம்.218) 2.பவழக்கொடி செந்துகிர் படருந் திரைக்கடல் (கல்லா. முருக. வண.) J»® - bj., f., து. தொகரு. துகிர்த்தாளி = பவழமல்லிகை (மலை.) துகிர் - துகில் = 1 செந்நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி.264) 2. செந்துணிக்கொடி(பிங்.). துகில் - துகிலிகை = செந்துணிக்கொடி புரிசைமேற் புனைந்தவா ணிலாநெடுந் துகிலிகை (கந்தபு.திருநகர.20) தும்பரம் - தம்பரம் - தாம்பரம் = செம்பு (பதார்த்த.1170) தாம்பரம் -t. தாம்ர. தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில் (மாறனலங்.470, உதா.) தம்பரம்=தம்பலம்=1. வெற்றிலை தின்று சிவந்த எச்சில். தில்லைநல் லார்பொதுத் தம்பலங் கொணர்ந்தோ (திருக்கோ.396) bj.j«k. 2.வெற்றிலை பாக்கு. தையால் தம்பலந் தின்றியோ (கலித்.65) .3. தம்பலப் பூச்சி. தம்பலம் - வ. தாம்பூல. தம்பலப் பூச்சி = தம்பலம்போற் சிவந்த மூதாய். தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில். வெள்ளிலைத் தம்பல் (கம்பரா. வரைக்கா.49) தம்பலம் - தம்பலை = சிவந்த இலந்தைப் பழம், அது பழுக்கும் முட்செடி. துமர் - தமர் - தமரை = தாமரை = செம்முளரி. தாமரை என்னுஞ் சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில் வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச் செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்ல வேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்த தண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே. தாமரை - வ. தாமரஸ. இதுகாறுங் கூறியவற்றால், வடசொல்லாகக் கருதப்படும் தாம்பரம், தாமரை என்னுஞ் சொற்களும் தென்சொல்லே யென்றும், இங்ஙனமே நூற்றுக் கணக்கான தென்சொற்கள் வடமொழியில் இனம்மறைந்து வழங்குகின்றன வென்றும், தமிழ் உண்மையில் திரவிடத் தாயும் ஆரிய மூலமும் ஆகுமென்றும் அறிந்துகொள்க. பொற்காலத்திற் பொன்னால் உண்கலம் குடிகலம் நீர்க்கலம் முதலிய பல்வகைக் கலங்கள் செய்யப்பட்டனவேனும், அவை பெருமக்களாலேயே பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். முதன் முதலாகப் பொதுமக்கள் புழங்கிய மாழைக் கலங்கள், செம்பினாற் செய்யப்பட்டவையே. அதனால், சில குறிப்பிட்ட வடிவையுடைய கலங்கள் எவ்வெக் கருவியாற் செய்யப்படினும், இன்றும் செம்பு, செப்பு, செப்புக்குடம் எனச் செம்புக்காலப் பெயர்களாலேயே வழங்கி வருகின்றன. நிலையாக வைத்துப் போற்ற வேண்டிய ஆவணங்களும் முறிகளும், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில், செப்பேடுகளிற் பொறிக்கப்பட்டுச் செப்புப் பட்டையம் எனப் பட்டன. செம்பில் வார்க்கப்பட்ட தெய்வப் படிமைகள் செம்புக் குட்டி யென்றும், செப்புத் திருமேனி யென்றும் சொல்லப்பட்டன. புளியிட்ட செம்பையும் போற்று கிலேனுயர் பொன்னெனவே (பட்டினத்தார்,பொது.61) முதன்முதல் மரத்திற் குடையப்பட்ட அல்லது செய்யப்பட்ட மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி, செம்பிலும் வார்க்கப் பட்டுச் செப்புக்கால் எனப் பெயர் பெற்றது. செப்புக்கால் திருச்சிற்றம்பல முடையான் என்பது, சோழர் காலத்தில் வழங்கிய நெல்லளக்குங் கருவி வகை. உளி, கத்தி, அரம், வாள், கறண்டி, கலப்பைக் கொழு முதலிய பலவகைக் கருவிகளும், பொற்காலத்திற்குப் பின் செம்பிலேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும். வலிய பகைவராலும் எளிதாய்த் தகர்க்க முடியாவாறு, செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய இஞ்சி யென்னுங் கோட்டை மதில்வகை, எருமையூர்(மைசூர்) நாட்டுத் துவரை நகரி லிருந்தமை மேற்குறிக்கப்பட்டது. இராவணன் கோட்டை அத்தகைய மதிலுடைமையாற் செப்புக்கோட்டை யெனப்பட்டது. செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி (கம்பரா.கும்ப.160) நெய்தல்நில மாந்தர் கட்டுமரம், திமில், படகு முதலிய கலங்களைச் செலுத்தி ஆழ்கடலில் மீன் பிடித்ததொடு, சலங்குகளிற் சென்று முத்துக் குளித்தும் பவழத் தீவுகளினின்று பவழங் கொணர்ந் தும் தம் வாழ்க்கையை வளம்படுத்தினர். கிளிஞ்சில் முத்துமாலை களைச் செல்வரும், வலம்புரி இடம்புரி முத்துமாலைகளை அரசரும் வாங்கியணிந்தனர். சங்கு வளையலும் பவழமாலையும் பெண்டிரால் விரும்பியணியப்பட்டன. சிப்பி நீற்றுச் சுண்ணம், சிறந்த வெண் சுதையாகப் பயன்படுத்தப்பட்டது. ஒருவன் ஒருத்தியொடு மறைவாகக் கூடிய பின் அவளொடு கூடவில்லை யென்று மறுத்துரைத்தலும், அவளைக் கைவிடுதலும், ஒருவன் ஒருத்தியொடு வலிந்து கூடுதலும் ஆகிய பொய்யும் ஒழுக்கக் கேடும் பலரிடைத் தோன்றியபின், பெற்றோரின் இசைவு பெற்றே ஒரு பெண்ணைக் கொள்ளுமாறும், இருபாலாரும் வெளிப் படையாகக் கற்புடன் ஒழுகுமாறும், விழாவொடு கூடிய கரணம் என்னும் திருமணச் சடங்கைப் பெரியோர் ஏற்படுத்தி வைத்தனர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல்.1091) கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. (தொல்.1011) திருமணக் கரணம் பெரும்பாலும் பின்வருமாறு நடந்தது. உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் 5 கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் 10 புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி 15 பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர 20 ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல் (அகம்.86) இதன் பொருள்:1-4.உழுத்தம் பருப்பொடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ, வரிசையான கால் களையுடைய குளிர்ந்த பெரிய பந்தற்கீழ்க் கொண்டுவந்து கொட்டிய மணலைப் பரப்பி, வீட்டில் விளக்கேற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு, 5-10. தீய கோள்களின் தொடர்பு நீங்கிய வளைந்த வெண்ணி லாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய சகடம் என்னும் நாள் அடைய, மிகுந்த இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற் காலையில், உச்சந்தலையிற் குடத்தையும் கையிற் புதிய அகன்ற மொந்தையையும் உடைய, மணஞ் செய்து வைக்கும் ஆரவாரமுள்ள முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறைப்படி எடுத்தெடுத்துக் கொடுக்க, 11-16. மகனைப் பெற்ற தேமலுள்ள அழகிய வயிற்றையும் தூய அணிகளையும் உடைய மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் தவறாது பல நற்பேறுகளைப் பெற்று, உன் கணவன் விரும்பிப் பேணும் விருப்பத்திற் கிடமாகுக என்று வாழ்த்தி, நீரொடு சேர்த்துப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், அடர்ந்த கரிய கூந்தலில் நெல்லொடு விளங்க, 17. நல்ல மணவிழா முடிந்த பின்பு. 18-20 சுற்றத்தார் ஆரவார ஓசையுடன் விரைந்து வந்து, பெரிய மனைக்கிழத்தி யாவாய் என்று சொல்லிச் சேர்த்துவைக்க, ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில். மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் 5 சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணும் இமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை 10 பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற மன்னுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித் 15 தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் (அகம்.136) இதன் பொருள்:1-9. நெஞ்சே, குற்றமறப் பருப்புடன் கலந் தாக்கிய நெய்மிகுந்த வெண்சோற்றை, நீக்காத ஈகைத் தன்மையுடன் உயர்ந்த சுற்றத்தார் முதலியோரை உண்பித்து, புட்குறி இனிதாகக் கூட, தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரிய வானம் களங்கமற விளங்க, திங்களைச் சகடம் கூடிய குற்றமற்ற நன்னாளில், மணமனையைச் சுவடித்துக் கடவுளை வழிபட்டு, மணமேளத்துடன் பெரிய முரசம் முழங்க, தலைவிக்கு மணநீராட்டிய மகளிர், தம் கூரிய கண்களால் இமையாது நோக்கி மறைய, 10-18. மெல்லிய பூவையுடைய வாகையின் அழகற்ற பின் புறத்தைக் கொண்ட கவர்த்த இலையை முதிய கன்று கறித்த பள்ளத்திற் படர்ந்த அறுகின், இடி முழங்கிய வானத்து முதன் மழைக்கு அரும்பிய கழுவிய நீலமணிபோலும் கரிய இதழையுடைய பாவை யொத்த கிழங்கிடத்துள்ள குளிர்ந்த மணமுள்ள அரும்புடன் சேர்த்துக் கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூய புத்தாடையாற் பொலியச் செய்து, விருப்பத்துடன் கூடி, மழையோசை போன்ற மணவோசை மிகுந்த பந்தலில் அணிகளை மிகுதியாய் அணிந் திருந்ததனால் உண்டான வியர்வையை விசிறியால் ஆற்றி, அவள் சுற்றத்தார் அவளை நமக்குத் தந்த முதல் நாள் இரவில். இவை பிற்காலத்தனவாயினும், பிராமணனும் சமற்கிருத மந்திரமுங் கலவாத பண்டைத் தூய தமிழத் திருமண விழாவின் இயல்பைத் தெளிவாகக் காட்டுவனவாகும். மருதத்தை யடுத்து நாட்டிற் கணித்தாக வுள்ள முல்லை நில வாணர், ஆடுமாடெருமை யென்னும் முந்நிரையையும், சிறப்பாக ஆநிரையை வளர்ப்பதை முதன்மைத் தொழிலாகவும், வானாவாரிப் பயிர் விளைவிப்பதைத் துணைத்தொழிலாகவுங் கொண்டு, பிறர்க்குத் தீங்கு செய்யாதும் ஏறு தழுவி மணக்கும் மறவியலை மேற்கொண்டும் வாழ்ந்துவர; குறிஞ்சியை யடுத்துக் காட்டுச் சார்பாகவும் நாட்டிற்குத் தொலைவிலும் உள்ள முல்லைநில வாணரோ, தம் வாழ்நிலம் ஆண்டு தொறும் வேனிலில் வற்றி வறண்டு வெம்பாலையாக மாறியதால், ஆறலைத்தலையுஞ் சூறைகோடலையுமே தம் குலத் தொழிலாகக் கொண்டுவிட்டனர். கொடுவறட்சி கொள்ளைக்கே தூண்டும். இங்ஙனம், தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைப் பாகுபாடுற்றது. திணை ஐந்தாயினும், நிலையான நிலம் நான்கே யாதலால், ஞாலம் நானிலம் என்னப்பட்டது. பாலைநிலத் தலைவர் விடலை, கோ, வேள், மீளி, காளை எனப் பல்பெயர் பெற்றனர். மருதநிலத்து ஊர்களிலேயே நெல் விளைந்ததனால், பாலை நிலந் தவிர மற்ற முந்நில மாந்தரும் தத்தம் நிலத்துச் சிறப்புப் பண்டங் களை அங்குக் கொணர்ந்து நெல்லிற்கு மாறினர். கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பு நிறைய ஏரின் வாழ்நர் பேரி லரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும் (புறம்.33:1-7) உமணர், நெய்தல் நிலத்து உப்பளங்களினின்று உப்பை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, மற்ற நிலத் தூர்களில் விற்றனர். ...........................................fhdš கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன (புறம்.60) ஈத்திலைக் குப்பை யேறி யுமணர் உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ (புறம்.116) விற்பனை பெரும்பாலும் பண்டமாற்றாகவே நடந்தது. முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன்பெரு வட்டி நிறைய மனையோள் அரிகாற் பெரும்பயறு நிரைக்கும் ஊர (ஐங்.47) கெளிறு - கெடிறு = முள்ளுள்ள ஒருவகை மீன். வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர (ஐங்.48) மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் இடைப்பட்ட முல்லைநிலத்து இடைச்சி, ஆனைந்தை மருதநிலத்தில் நெல்லிற்கு விற்றதொடு குறிஞ்சிநிலத்தில் பாலெருமைக்கும் ஆவிற்கும் எருமைக் கடாரிக்கும் மாறி வந்தாள். ஆனைந்து என்பன பால் தயிர் மோர் வெண்ணெய் நெய். குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள் அளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி நெய்விலைக் கட்டி பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம் மடிவாய்க் கோவலர் குடி (பெரும்பாண்.162-7) பாலைநில மாந்தர் வழிப்போக்கரைக் கதறப் புடைத்துப் பொருள் பறித்ததையும், பொருளொடு வராதவரின் கைகால்களைத் துண்டித் jதையும்,Mநிரைfவர்தலும்Mறலைத்தலுஞ்bசய்யாது‘அறஞ்செய்யின்kறங்கெடும்vன்னும்mவர்bகாள்கையையும்ã‹ tUபவற்றால்அ¿யலாம். அத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவுங் களவோர் வாழ்க்கைக் கொடியோர் (பெரும்பாண்.39-41) வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர் அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை (கலித்.4) கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் (சிலப். வேட்டு.12-15) பாலைநில மகளிரும் மறஞ்சிறந்தவர் என்பதை, யானை தாக்கினும் அரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் சூன்மகள் மாற மறம்பூண் வாழ்க்கை வலிக்கூட் டுணவின் வாட்குடி (பெரும்பாண்.134-7) என்பதால் அறியலாம். பொற்காலத்திற் குறுநில மன்னவரா யிருந்தவருட் சிலர் செம்புக் காலத்திற் பெருநில மன்னராயினர். முன்னவர் மன்னர் என்றும், பின்னவர் கோக்கள் என்றுஞ் சொல்லப்பட்டனர். கோக்கண்டு மன்னர் குடைகடல் புக்கிலர் கோகனகப் பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில என்னும் தனிப்பாடலால், மன்னனினும் பெரியவன் கோ என்பதை அறிக. கோ என்பது கோவன் என்பதன் மரூஉ. கோக்களை (ஆக்களை)க் காக்கும் ஆயன் போல மக்களைக் காப்பவன் அரசன் என்பது கருத்து. இவ் வொப்புமை பற்றியே, ஆயன் கோல்போல் அரசனும் ஒரு கோலைக் கையிற் கொண்டான். ஆட்சி நேர்மையா யிருக்க வேண்டுமென்பதைக் காட்டவே, நேரான கோல் கொள்ளப் பட்டது. கோல் ஆட்சியைக் குறிக்குஞ் சின்னமாதலால், முறையான ஆட்சி செங்கோல் என்றும், முறைதவறிய ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்பட்டன. கொடுமை = வளைவு. செம்மை = நேர்மை. கோன் என்னும் தென் சொல்லே துருக்கியிற் கான் என்று திரிந்ததாகக் கால்டுவெலார் கூறுவர். கோவன்-கோன்-கோ = அரசன். கோவன், கோன் என்னுஞ் சொற்கள் இன்றும் ஆயனையுங் குறித்தல் காண்க. கோன் என்னுஞ் சொல் ஆர் என்னும் உயர்வுப் பன்மை யீறு பெற்றுக் கோனார் எனவும் வழங்கும். பாலைநிலந் தவிர மற்ற நான்கு நிலங்களுள் ஒன்றும் பலவுங் கைக்கொண்டவர் கோக்களாவர். அமைச்சர், படைத்தலைவர், பூசகர், தூதர், ஒற்றர் என்னும் ஐம்பெருங் குழுவார் அவருக்கு ஆட்சித் துணையாயிருந்தனர். ஐந்திணைகளுந் தோன்றியபின், முதற்கண் குறிஞ்சியில் வேட்டையாடுங் குறவரும், முல்லையில் முந்நிரை வளர்க்கும் இடையரும்,மருதத்தில் உழுதொழிலைச் சிறப்பாகச் செய்யும் உழவரும், பாலையில் வழிப்பறித்துக் கொள்ளையடிக்கும் மறவரும், நெய்தலில் மீன்பிடிக்கும் படவரும், ஆகப் பெரும்பாலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருப்பர். ஒவ்வொரு திணைநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மக்கட் குடியிருப்பிலும், அடக்கியாளவும் வழக்குத் தீர்க்கவும் ஒரு தலைவன் தோன்றியிருப்பன். அவன் இற்றை நாட்டாண்மைக்காரன்போல் பிறர் செய்யுந் தொழிலையே செய்திருப்பன். தெய்வ வணக்கம் அல்லது அச்சம் இயற்கைப் பண்பாதலால், தலைவனுக்குப் பின் ஒரு பூசகன் அல்லது தேவராளனுந் தோன்றியிருப்பன். அவர்க்குமுன், மருதநிலப் பேரூர்களில் பண்டமாற்றியர் அல்லது வணிகர் தோன்றியிருப்பர். ஆண்டுதோறும் பல கூலங்களும் புதிதாகவும் ஏராளமாகவும் விளைந்த தால், முந்தின ஆண்டில் மீந்துபோன கூலங்களை வாங்கவும், அவற்றிற் கீடாக உழவர்க்கு வேண்டிய பிறநிலத்துப் பொருள்களைக் கொண்டுவந்து தரவும், உழவரினின்றே ஒருசிலர் வணிகராகப் பிரிந்திருத்தல் வேண்டும். யாண்டுகழி வெண்ணெல் என்று ஐங்குறுநூற்றுப் பாடல் கூறுவதை நோக்குக. ஒன்றிரண்டாம் வாணிகம் என்பதும் வணிக முயற்சியை ஊக்கி யிருத்தல் வேண்டும். வணிகருக்குப்பின் பல்வேறு கைத்தொழிலாளர் படிப்படியாகத் தோன்றலாயினர். நாகரிகமும் அரசியலும் வணிகமும் வளர வளர, நூற்றுக்கணக்கான பணிகளும் அலுவல் களும் புதிதுபுதிதாக ஏற்பட்டன. அறிவு வளர்ச்சி யடைந்ததனால், பூசகர் கல்வி கற்பிக்கும் ஆசிரியத் தொழிலும் மேற்கொண்டனர். உழவு, வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெருந் தொழில்பற்றி, மருதநில மக்கள் உழவர், வணிகர், அரசர், பார்ப்பார் என நால்வகுப்பாராய் அமைந்தனர். பதினெண் கைத்தொழி லாளரும் உழவர்க்குப் பக்கத் துணைவராகக் கருதப்பட்டதனால், அவருள் அடக்கப்பட்டனர். பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள், விற்பனைப் பண்டம். (மதுரைக்.405) பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் - பணிகன் - வணிகன் = பல பண்டங்களை விற்பவன். வணிகன் - வாணிகன். பார்ப்பான் = நூல்களைப் பார்ப்பவன். இது அன் சாரியை அல்லது அனன் ஈறு பெற்றுப் பார்ப்பனன் என்றும் நிற்கும். முக்கால வினைமுற்றும் இங்ஙனம் ஈறு கொள்ளும். எ-டு. பார்த்தனன் - இறந்த காலம் பார்க்கின்றனன் - நிகழ்காலம் பார்ப்பனன் - எதிர்காலம் படைப்பனர் (சிலப்.10:134), விரைவனன் (புறம்.150) என்னும் எதிர்கால வினைமுற்றுகளை நோக்குக. பார்ப்பனன் என்பது பிராமணன் என்னும் சொல்லின் திரிபன்று. கல்வித்தொழில் செய்யும் ஆசிரியரும் சமய குரவரும் போன்ற தமிழரையெல்லாம் பார்ப்பாரென்றே சொல்ல வேண்டும். பிராமணரை இச் சொல்லாற் குறிக்க வேண்டின், ஆரியப் பார்ப்பார் (அல்லது பார்ப்பனர்) என்று அடைகொடுத்தே கூறவேண்டும். அரசர் என்னுஞ் சொல் பின்னர் விளக்கப்படும். மொழிவளர்ச்சியில், எண்வேற்றுமைகளும் முக்காலமும் பல்வகை எச்ச முற்றுகளும், முழுநிறைவான சொற்றொட ரமைப்பும், செம்புக் காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். எழுத்து வகையில் ஒலியெழுத்துத் (Phonetic characters) தோன்றியிருக்கும். ஆயின், எகர வொகரக் குறிலுயி ரொலிகளும் ளகர ழகர றகர னகர மெய் யொலிகளும் பெரும்பாலுந் தோன்றியிரா. இக்காலத்தில்தான், பிராகிருதம் என்னும் வடதிரவிட மொழியாளரின் முன்னோர் வட நாவலம் (இந்தியா) சென்றிருப்பர். பாவகையில் ஆசிரியமும் கலியும் தோன்றியிருக்கும். மக்களின் எண்ணுந்திறன் பதினாயிரம்வரை சென்றிருக்கும். மதத்துறையில், மறுமையுணர்வும் விண்ணுலகக் கொள்கையும் தோன்றி யிருக்கலாம். 4. உறைக்காலம் (Bronze Age) (தோரா. கி.மு. 15,000 - 10,000) உறை யென்பது வெண்கலம். இது முறியெனவும் படும். கஞ்சம் உறைவெண் கலமா கும்மே. (பிங்.6:140) வெண்கலப் பெயரும் விழுமமும் பெருமையும் .......................................... ஓரிடைச் சொல்லும் வாழ்நாளும் உறையெனல். (பிங்.10:184) எட்டுப் பங்கு செம்பும், ஒரு பங்கு தகரமுங் கலந்த கலப்பு மாழையே உறை. இது செம்புபோலத் தனிமாழை யன்மையாலும், வெண்ணிறக் கலவடிவிலேயே மக்கள் இதைக் கண்டமையாலும், கருமிய (காரிய) வாகுபெயராக வெண்கலம் என்னும் பெயர் பெற்றது. செம்பு, கும்பா, கிண்ணம், குடம், வட்டில் முதலிய கலங்களும்; மாடவிளக்கு, குத்துவிளக்கு, பாவைவிளக்கு முதலிய திரிவிளக்கு வகைகளும்; வாள், கறண்டி முதலிய கருவிகளும் உறையாற் செய்யப்பட்டன. வெண்கல ஏனத்தில் வார்த்த அல்லது வைத்த நீருங் கட்டியு மான உணவுப்பொருள்கள், சிறப்பாகப் புளிப்புப் பண்டங்கள், கைத்துங் கெட்டும் போகாவாதலால், பொன்னும் வெள்ளியும் »டையாதVழைkந்தர்க்கும்ïடைத்திறtகுப்பார்க்கும்bவண்கலVனமேáறந்தkழைக்கலமாகïருந்துவந்தது.br¥ò¡Fl« என்னும் நீர்க்கலம் செம்பினாற் பெயர் பெறினும், வெண்கலத்தி னாலேயே இன்றுஞ் செய்யப்பட்டு வருகின்றது. வண்கல வோசை முழங்குவதாலும் மிக நீண்டு நிற்பதாலும், கைத்தாளம், வண்டித்தாளம், கைம்மணி, நாழிமணி, ஆன்மணி, குதிரைமணி, யானைமணி, தேர்மணி, கோபுரமணி, சேமக்கலம், பலகைமணி முதலிய இசைக்கருவிகட்கு உறையையே முதற் கருவி யாகப் பயன்படுத்தினர். இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் (சிலப்.26:194). இதிற் பாண்டில் என்றது வண்டித் தாளத்தை. உவச்சரும் பிற பூசகரும் பூசையிற் பயன்படுத்துவது கைம்மணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன் சொன்ன மும்மணிக் கோவை முதற்சீர் பிழை........... என்று வாணியன் தாதன் கம்பர்மீது அங்கதம் பாடினான். தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி ஆம்ப லூதி இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே (புறம்.281) என்னும் புறப்பாட்டில் இசைமணியென்றது கைம்மணியையே. கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை (மலைபடு.573) என்பதில் குறித்தது ஆன்மணி. கறங்குமணி வாலுளைப் புரவியொடு (சிறுபாண்.91-2) என்பதில் குறித்தது குதிரைமணி. கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின் பெருங்கை யானையிரும் பிடர்த்தலை யிருந்து (புறம்.3:10-11) என்பதில் குறித்தது யானைமணி. பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகம்4:10-12) என்பதில் குறித்தது தேர்மணி. யானையை மணி கட்டாது தெருவழிச் செல்ல விடுவதில்லை. அதனால், யானைவரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி யெழுந்தது. மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா (இன்னா.14) என்றார் கபிலர். வழக்கிழந்தோ பெருந்தீங்கு செய்யப்பட்டோ அரசனிடத்தில் முறையிடுவோர் அசைக்குமாறு, அரண்மனை வாயிலிற் கட்டப் பட்ட ஆராய்ச்சி மணி வெண்கல மணியே. வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன் (சிலப்.20:53-5) ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும் நீடுங் குடையைத் தரித்தபி ரானிந்த நீணிலத்தில் பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்கச் சோழனென் றேயெனைச் சொல்லு வரே என்பது, ஒட்டக்கூத்தரும் இரண்டாங் குலோத்துங்கச் சோழனும் முன்னீரடியும் பின்னீரடியுமாகப் பாடிய தனிப்பாடல். பொதுமக்கள் நேரமறியுமாறு, நாழிகைதோறும் அடிக்கக் கோபுரத்திற் கட்டிய பெருமணி கோபுர மணியாம். உறுதியும் பார்வையுள்ளதும், போதிய அளவு கிடைக்கக் கூடியதும், பெரும்பாலுங் களவுங் கொள்ளையும் போகாததும் ஆன மாழை உறையே யாதலால், அதிலேயே சிறியவும் பெரியவுமான தெய்வப் படிமைகளும் மக்கட்படிமைகளும் வார்க்கப்பட்டன. உறைக்காலத்தில் நெய்தல்நில மக்கள் கப்பல், நாவாய் முதலிய பெருங்கலங்களிற் சென்று, அக்கரை நாடுகளிலும் அவற்றையடுத்த தீவுகளிலுமுள்ள பல்வகை அரும்பண்டங்களைக் கொண்டுவந்து நீர்வாணிகத்தைப் பெருக்கினர். ஆட்சித்துறையில் கோவினும் பெரிய வேந்தன் தோன்றி, ஐந்திணை யரசரையும் அடக்கி யாண்டான். தனக்கொரு தனிச் சிறப்பு வேண்டி, முடியணியும் உரிமையைத் தனக்கே கொண்டான். இதனாலேயே, அவன் வேந்தன் எனப்பட்டான். மே = மேல். மே - மேய். மேய்தல் = விலங்கு புல்லின் மேற் பகுதியைத் தின்னுதல், கூரையின்மேல் வைக்கோலிடுதல். மேய்-வேய். வேய்தல்=கூரையின்மேல் வைக்கோலிடுதல், ஒற்றன் ஒரு கோலத்தை மேற்கொண்டு உளவறிதல், தலைமேல் மகுடமணிதல். வேய் - வேய்ந்தோன் = மகுடமணிந்தோன். வேய்ந்தோன் - வேய்ந்தன் - வேந்தன். கொன்றைவேய்ந்தோன் = கொன்றை மாலையை அல்லது மலரைத் தலையிற் சூடிய சிவன். கொன்றைவேய்ந்தோன் - கொன்றைவேந்தன் = சிவன். வேந்தன்-வேந்து. ஒ.நோ:அரசன் - அரசு. அமைச்சன் - அமைச்சு, பாங்கன் - பாங்கு, பார்ப்பான் - பார்ப்பு. முடியுடை மூவேந்தர் என்னும் வழக்கை நோக்குக. வண்பொழில் மூவர் தண்பொழில் வரைப்பின் (1336) என்று தொல்காப்பியங் கூறுவதால் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரை இச் சிறப்புரிமை காக்கப்பட்டு வந்ததென அறியலாம். அதன்பின், கடைக் கழக காலத்தில் குறுநில மன்னர் தலை யெடுத்ததால், மூவேந்தரும் இவ் வதிகாரத்தை இழந்துவிட்டனர். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப்.11:19-22) என்று இளங்கோவடிகள் பாடுவதாலும், தமிழன் பிறந்தகம் குமரி நாடாதலாலும், குமரிக்கண்டத் தமிழ்நில முழுதும் பழம் பாண்டிநாடாதலாலும், மூவேந்தருள்ளும் முதலில் தோன்றி யவன் பாண்டியனே என்பது அறியப்படும். பிற்காலத்தில், நாவலந் தேயத்தின் கீழ்ப்பாகத்தையும் மேற்பாகத்தையும் துணையரசராக அல்லது மண்டிலத் தலைவராக ஆளுமாறு அமர்த்தப்பெற்ற பாண்டியன் குடியினர் இருவரே, சேரசோழராக மாறியிருத்தல் வேண்டும். பண்டி = வண்டி(சக்கரம், சகடம்) பண்டி - பாண்டி = 1. வட்டமான விளையாட்டுச் சில். 2. அதைக்கொண்டு விளையாடும் விளையாட்டு (வட்டாட்டு) 3. மாட்டு வண்டி. "அகவரும் பாண்டியும்" (பரிபா.10:16) 4. கூடாரப்பண்டி. (சிலப். 14:168, அரும்.) 5. (உருண்டு திரண்ட) எருது (பரிபா.20:17, குறிப்பு) ஒ.நோ: குண்டு - குண்டை = எருது. பாண்டி - பாண்டியம் = 1. எருது. ``செஞ்சுவற் பாண்டியம்" (பெருங். உஞ்சைக் .38:32) 6. (எருதுகொண்டு உழும்) உழவு. "பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித். 136) பாண்டி - பாண்டில் = 1. வட்டம். "பொலம்பசும் பாண்டிற் காசு" (ஐங்.310). 2. வட்டக்கட்டில். "பேரள வெய்திய பெரும் பெயர்ப் பாண்டில்" (நெடுநல். 123). 3. வட்டத்தோல். "புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெய்திய திகழ்விடு பாண்டில்" (பதிற். 74), 4. வட்டத்தாளம். "இடிக்குரன் முரச மிழுமென் பாண்டில்" (சிலப்.26:194), 5. வட்டக் கண்ணாடி. "ஒளிரும்..... பாண்டில்" (பு.வெ.6:12) 6. வட்டக்கிண்ணி. " பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே" (திருக்கோ.249). 7. விளக்குத் தகழி (பிங்.). 8. தேர்வட்டை (சிலப்.12:168, உரை), 9. இருசக்கர வண்டி. "வையமும் பாண்டிலும்"(சிலப்.14:168), 10. குதிரை பூட்டிய தேர் (திவா.). 11. நாடு. ஒ.நோ: மண்டலம், வட்டாரம். 12. எருது, காளை. காளை மறம் விஞ்சியதாதலின், போர்மறவன் காளை யெனப் பட்டான். காளை =1. இளவெருது. 2. கட்டிளம் பருவத்தினன் (திவா.). 3. பாலைநிலத் தலைவன்(திவா.). 4. போர் மறவன். "உரவுவேற் காளையும்"(புறம்.334). காளை மறம் விஞ்சியது மட்டுமன்று, கற்பாறையிலும் ஆற்று மணலிலும் சேற்று நிலத்திலும் மேட்டிலும் பள்ளத்திலும் பொறைவண்டியை "மருங்கொற்றி மூக்கூன்றித் தாள் தவழ்ந்து" இழுத்துச் செல்லுங் கடைப்பிடியுமுள்ளது. அதனால், மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (குறள்.624) என்றார் திருவள்ளுவர். அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ (புறம்.90) என்றார் ஔவையார். அரசன் போர்மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கே யுடையவன் என்பதை யுணர்த்தற்கு, குமரிநில முதல் தமிழ வேந்தன் பாண்டியன் எனக் குடிப்பெயர் பெற்றான். செழியன், வழுதி, மாறன் முதலிய குடிப்பட்டங்களும் பின்னர்த் தோன்றின. பாண்டிநாடு வெப்ப நாடாதலால், குளிர்வெண்மதி குலமுதலாகக் கொள்ளப்பட்டது போலும்! வேப்பந்தாரை யணிந்ததற்கும் கயற்கொடி கொண்ட தற்கும் இதுவே கரணியமா யிருக்கலாம். தாராலும் கொடியாலும் வேம்பன் மீனவன் என்னும் பெயர்களும் எழுந்தன. கயல்மீன் யானைமீனும் பனைமீனும் போலப் பருமீனன்றாதலின், அதைக் கொன்றதனாற் பிடித்த வெற்றிச்சின்னமாகக் கயற்கொடியைக் கருத இடமில்லை. குளிர்ந்த பேரொளி வீசும் முழுமதி போன்றவன், குடிகள் பேரின்பமும் அறிவும் பெற ஆளும் அரசன் என்னுங் கருத்திற் பிடிக்கப்பட்ட மதிவட்டக்குடை அல்லது வெண்கொற்றக் குடையும் தமிழகத்தின், சிறப்பாகப் பாண்டிநாட்டின் வெப்ப நிலையைக் குறிப்பாக வுணர்த்தும். நண்ணிலக்கோடு குமரிமுனைக்குத் தெற்கிற் பதின் பாகைக்குள் இருப்பதும், இற்றைத் தமிழகத்திலும் வடவாணரினும் தென்வாணர் பெரும்பாலுங் கருத்திருப்பதும், முழுகிப்போன தென்பாண்டி நாட்டின் வெம்மை மிகுதியை யுய்த்துணர ஏதுவாகும். சோழ பாண்டியர் பாண்டவர்க்குத் துணையாகவும் சேரன் நடுநிலையாகவும் பாரதப்போரிற் கலந்துகொண்டதனாலும், மூவேந்தர் குடிகளும் பாண்டவ கௌரவர்க்கு முன்பே வரலாற்றிற் கெட்டாத் தொன்முது பழங்காலத்தில் தோன்றியமையாலும், பாண்டியன் என்னும் சொல்லைப் பாண்டவன் என்னுஞ் சொல் லினின்று திரிப்பது, வரலாற்றறிவும் ஆராய்ச்சித்திறனும் இல்லாதவர் செயலெனக் கூறி விடுக்க. இனி, பழையன் என்னும் குறுநிலமன்னன் ஒருவன் பாண்டி நாட்டில் வாழ்ந்து, வேம்பைக் காவல்மரமாக வளர்த்ததையும், பாண்டிய வேந்தரின் பழைமையையும் நோக்கி, பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னுஞ் சொல்லைத் திரிப்பர் சிலர். பாண்டிய வேந்தன் இன்றுதான் நமக்குப் பழைமையானவனே யன்றி, அவன் முதன்முதலாகக் குமரிநாட்டில் தோன்றியபோது ஒருவருக்கும் பழைமையானவன் அல்லன் என்றும், பழையன் என்னுஞ் சொல் ஒருவனது இயற்பெயருக்கே யன்றி, ஓர் ஆள்குடிப் பெயருக்கு ஏற்கா தென்றும், அவர் அறிதல் வேண்டும். பாண்டிய வேந்தன் ஐந்திணை நிலங்களையுங் கைப்பற்றி ஆண்டதனால், கருங்கடல் முதல் கருமலைவரை நாடு முழுதுங் காவற்குட்பட்டது. பாலைநிலவாணர் வேந்தனின் படை மறவராயினர். அந்நிலத் தலைவன் காட்டுப்படைத் தலைவனானான். ஏற்கெனவே யிருந்த மருதநிலப் படை நாட்டுப்படை யெனப்பட்டது. போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் நிலையாக விருந்த படை நிலைப்படை யென்றும், அவ்வப்போது போரின் தேவைக்குத் தக்கவாறு கூலிக் கமர்த்தப்பட்ட படை கூலிப்படை யென்றும், பெயர்பெற்றன. காவல் மிகுந்து களவுங் கொள்ளையும் போரும் நீங்கவே, நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவின. தொழில்கள் பெருகின. வழிப்போக்கும் இடம்பெயர்வும் அச்சம் நீங்கின. வணிகம் வளர்ந்தது. மக்கள் பெருகப் பெருக மெல்ல மெல்ல வடக்கே சென்று பரவினர். நாட்டுச் செல்வத்தை மிகுக்கவும், நாகரிக வாழ்க்கைக்கேற்ற பொருள்களைத் தொகுக்கவும், காட்டுவழிகளி லெல்லாம் காவற் படையை நிறுவி நில வாணிகத்தையும், கடற்கரை வளைந்துள்ள இடங்களிலெல்லாம் துறைநகர்களை யமைத்து நீர்வாணிகத்தையும், வேந்தன் ஊக்கினான். ஏற்கெனவே, இயற்கை மொழிக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் ஆப்பிரிக்க ஆத்திரேலிய நிலப்பகுதிகளிலும், இழைத்தல் மொழியின் அசைநிலைக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் சீன மங்கோலிய நிலப்பகுதிகளிலும், கொளுவு நிலைத் தொடக்கக் காலத்திற் பிரிந்து சென்ற மாந்தரினங்கள் மேலையாசிய நிலப்பகுதிகளிலும், செம்புக்காலத்தில் ஏகார ஓகாரங்கள் குறுகு முன்னும் ள ழ ற ன தோன்றுமுன்னும் பிரிந்து போன மாந்தரினங்கள் வடஇந்தியாவிலும், பெருகிப் பரவி வந்தன. பெருநிலங்களில் வாழ்ந்தவருட் சிலர் அவற்றையடுத்த சிறுநிலங் களான தீவுகளிலுங் குடியேறினர். பெருநிலத்தினின்றும் தீர்ந்து நாற்புறமும் நீராற் சூழப்பட் டிருக்கும் சிறுநிலமே தீவாகும். தீர் - தீர்வு - தீவு. ஒ.நோ. கோர் - கோர்வை - கோவை. குரு(வு) - கோர் - கோ. தீவு - தீவம் = பெருந்தீவு. வடமொழியாளர் தீவு என்னுஞ் சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபக்கம் நீராற் சூழப்பட்டதெனப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையைக் கண்டுகொள்க. நிலவணிகத்தார் பாதுகாப்பும் உதவியும் நோக்கி, எப்போதுங் கூட்டமாகவே சென்று வந்தனர். அக் கூட்டத்திற்குச் சாத்து என்று பெயர். சார்தல் = சேர்தல், கலத்தல், கூடுதல். நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித்.142) சார் - சார்த்து - சாத்து = 1. கூட்டம். சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா.63:32) 2.வணிகர் கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப்.11:190) சாத்து - t. ஸார்த்த. சாத்து - சாத்தன் = 1.வணிகக் கூட்டத் தலைவன் (நன்.130, மயிலை.) 2. வணிகர் தெய்வமான ஐயனார்(அரு.நி.).3. வணிகர்க் கிடும் இயற்பெயர்களுள் ஒன்று. 4.சீத்தலைச் சாத்தனார். அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப்.பதி.10). 5. யாரேனும் ஒருவனைக் குறிக்கும் பொதுப் பெயர். அக் கடவுளாற் பயன்பெற நின்றானோர் சாத்தனை (தொல். பொருள். 422,உரை). 6. உழவர் எருதிற்கிடும் விரவுப்பெயர். வடவர் ஐயனாரைக் குறிக்கும்போது சாஸ்தா என்றும், சாஸ்த்ரு என்றும் திரிப்பர். இதனின்று அவர் ஏமாற்றை அறிந்து கொள்க. சாத்தர் = வெளிநாடு சென்றுவரும் வணிகக் கூட்டத்தார். அதர்கெடுத் தலறிய சாத்தரொ டாங்கு (அகம்.39) சாத்தவர் = சாத்தர். பழுதில் சாத்தவர்கள் சூழ (திருவாலவா. 27:1) சாத்தன் என்னுஞ் சொல் பிற்காலத்திற் சாத்துவன் என்றும் சாத்துவான் என்றுந் திரிந்தது. கண்ணகியின் தந்தை மாசாத்துவான் (பெருஞ்சாத்தன்) என்று இயற்பெயர் பெற்றிருந்தமை காண்க. சாத்தர் தம் வணிகச் சரக்குகளை ஏற்றிச் செல்ல முதலிற் பொதியெருதுகளைப் பயன்படுத்தினர். பின்னர் மேலையாசியாவி னின்று கழுதை, குதிரை, ஒட்டகம், கோவேறு கழுதை ஆகிய வற்றைப் படிப்படியாகக் கொண்டுவந்து பழக்கினர். கழுதையின் பிறப்பிடம், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தி யோப்பியா சோமாலி முதலிய நாடுகளும், மேலையாசியாவில் சிரியா பாரசீகம் பெலுச்சித்தானம் முதலிய நாடுகளும், நடு ஆசியாவில் திபேத் தும் மங்கோலியாவும் ஆகும். குதிரையின் பிறப்பிடம் ஆசியாவின் வடநடுப்பாக மென்றும், அங்கிருந்து அது கிழக்கே சீன மங்கோலிய நாடுகட்கும், மேற்கே ஐரோப்பாவிற்கும், தென்மேற்கே பாரசீகம் அரபியா முதலிய நாடு கட்கும், சென்றதாகச் சொல்லப்படுகின்றது. ஒட்டகத்தில், ஒற்றைத் திமிலிக்கு அரபியாவும், இரட்டைத் திமிலிக்குப் பகத்திரியாவும் (Bactria) பிறப்பிடமாகச் சொல்லப் படுகின்றது. கோவேறு கழுதை, பிற்காலத்திற் ».K.ஈuhÆu« ஆண்டுகட்கு முன்பே சின்ன ஆசியாவிற் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அது ஆண்கழுதைக்கும் பெண்குதிரைக்கும் பிறந்த கலப்பினமாகும். வணிகச் சாத்திற்குக் கழுதையும் குதிரையுமே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப நெரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத் தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும். (பெரும்பாண்.77-80) அரபிக் குதிரைகள் பெரியனவும் பேணுதற் கரியனவுமாதலால், பெரும்பாலும் படைகட்கும் அரசர் ஊர்தற்குமே பயன்படுத்தப்பட் டிருக்கும். நாட்டுத்தட்டு என்றும் அச்சிமட்டம் என்றும் சொல்லப் படும் சிறுதரக் குதிரைகளையே சாத்துகள் பயன்படுத்தி யிருக்கும். நாட்டுத்தட்டு இந்தியாவிலேயே வளர்க்கப்படுவது. அச்சிமட்டம் சுமதுராத் (Sumatra) தீவின் வடமேற்குப் பகுதியாகிய அச்சியிலிருந்து (Achin) வந்தது. சாத்துகள் குதிரைகளைப் பயன்படுத்தியதை, பெருஞ்சாலை வழிகளில் ஆங்காங்குக் கட்டப்பட்டிருக்கும் சாத்தனார் (ஐயனார்) கோவிற்குமுன், சுதையாலும் சுடுமண்ணாலும் செய்து நிறுத்தப் பட்டுள்ள குதிரையுருவங்களினின்று அறிந்துகொள்ளலாம். குதிரை தமிழகத்திற்கு வந்த பின்னரே, குமரர் காதல் வாழ்வில் மடலேற்றம் என்னும் மணமுறை வினை தோன்றியிருத்தல் வேண்டும். ஓர் இளைஞன் தான் காதலித்த பெண்ணை அவள் பெற்றோர் தர இசையாவிடின், நீர்ச்சீலை மட்டும் அணிந்து உடம்பு முழுதும் சாம்பற்பூசி எருக்குமாலை யணிந்து, ஊர் நடுச்சந்தியிற் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிரைமே லமர்ந்து, தான் காதலித்த பெண்ணின் உருவப்படத்தை வலக்கையிலேந்தி, அதை உற்று நோக்கியவண்ணமா யிருப்பான். ஊர்ப்பெருமக்கள் அதனைப் பார்த்தவுடனேயே, அவன் எல்லா வகையிலும் பெண்ணிற்குத் தகுதியுள்ளவ னென்றும் அவனிலுஞ் சிறந்தவன் இல்லையென்றுங் காணின், பெண்ணின் பெற்றோரிடம் பேசித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவுங் கூடும். அது அத்துணை எளிதாக முடிவதா யில்லாவிடின், அவர் அவனை நோக்கி, நீ ஆய்வு தருகின்றையா? என வினவுவர். அவன் தருகின்றேன் எனின், அவனை அம் மடற் குதிரைமீது அமர்ந்திருந்த வாறே பெருந்தெரு வழியாக ஊரைச் சுற்றி யிழுப்பர். பனங்கருக்காற் காயம் படுந்தொறுங் காதல் மறம் (வீரியம்) கிளரின், அவன் கடைப் பிடியையும் அவன் எண்ணம் நிறை வேறாவிடின் இறந்துபடும் நிலைமையையும் உன்னி, பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி இசைவித்து மணத்தை முடித்துவைப்பர். இது இக்காலத்து உண்ணா நோன்பும் பாடுகிடப்பும் (சத்தியாக் கிரகமும்) போன்றது. பழைய வுரையிலுள்ள வீரியம் என்னும் சொற்கு விந்து என்று பொருள் கொள்ளுவது பொருந்தாது. பெண்ணின் பெற்றோர் ஊரைப் பகைத்துக்கொள்ள முடியாது. அதனால், மடலேற்றத்தாற் காதலன் கருதியது கைகூடும் வாய்ப்புண்டு. ஆயின், அதே சமையத்தில், காதலன் தன்மானத்தைத் துறக்கவும் நோவைத் தாங்கவும் காயம் மிகின் உயிரை இழக்கவும் அணிய மாயிருத்தல் வேண்டும். இதன் அருமை நோக்கியே எல்லாரும் இதை மேற்கொள்வதில்லை. சிலர் வெற்றரட்டாக விளம்பிச் சொல்லளவிலேயே நின்றுவிடுவர். இம் மடலேற்ற வழக்கு நாகரிகம் நிரம்பாத பழங்காலத்திற் குரியதாதலால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அற்றுப் போயிருத்தல் வேண்டும். ஆயின், இன்றும் ஒருவர் கோவை பாடின், மடலூர்தலும் ஒரு துறையாக அமைதல் வேண்டுமென்பது புலனெறி வழக்கமாகும். ஆதலால், அயல்நாட்டார் அகப்பொருட் செய்யுள் களைப் படித்தவுடன் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப்பற்றித் தவறான எண்ணங் கொள்ளாவாறு, மறைமலையடிகள் வழிப்பட்ட தனித் தமிழாசிரியரிடமே தமிழ் பயிலுமாறு செய்தல் வேண்டும். கோடன் மாரும் வையாபுரிகளும் தமிழைப் பழிப்பதிலுங் கெடுப்பதிலும் ஆரியரினும் விஞ்சியவராவர். அரபிக் குதிரைகள் வந்தபின், பாண்டியனுக்கும் அவன் சிற்றரசர்க்கும், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்னும் நால்வகைப் படைகள் அமைந்தன. ஆட்சித்துணையாக, ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் எனப் பதினெண் குழுவார் அமைந்தனர். அமைச்சர் பூசகர் அணிபடைத் தலைவர் தூதர் மிக்க துணிவுடை யொற்றர் அரசர்க் கான ஐம்பெருங் குழுவார். கணக்கிய லாளர் கருமத் தலைவர் கருவூ லத்தார் கடைகாப் பாளர் நகர மாந்தர் நளிபடைத் தலைவர் குதிரை மறவர் கொல்யானை மறவர் அரசர்க் கெண்பே ராயத் துணைவர் அடுத்தமெய்ந் நண்பர்அந்த ணாளர் மடைத்தொழி லாளர் மருத்துவக் கலைஞர் வருவது கூறும் வானூற் கணியர் அரசர்க் கைவகை யுறுதிச் சுற்றம். பாண்டியன் தன் ஆள்நிலத்தை மூன்று மண்டலங்களாகவும், ஒவ்வொரு மண்டலத்தையும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாட்டையும் பல கூற்றங்களாகவும் பிரித்தாண்டதாகத் தெரிகின்றது. மண்டலம் என்னுஞ் சொல் மண்டிலம் என்றுந் திரியும். மண்டலம் என்பது வட்டம். அச் சொல் வட்டம், வட்டகை, வட்டாரம் என்னும் சொற்கள் போன்று நாட்டுப் பகுதியைக் குறித்தது. அது தூய தென்சொல்லே. முண்டு = உருட்டுக் கட்டை. முண்டு - முண்டம் = உருண்டு திரண்ட கட்டி, சதைத்திரள், கை கால் தலையில்லா வுடல், பெரிய வுருட்டுக் கட்டை. முண்டு - முண்டை = முட்டை. முண்டு - முட்டு - முட்டை. முண்டு - மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை மடக்குதல். மண்டு - மண்டலம் = 1. வட்டம் (பிங்.). சுடர் மண்டலம்' (திருநூற்.80). 2.t£l tot« (âth.), 3. மந்திரச் சக்கரம். 4. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றியுள்ள ஊர்கோள் (வட்ட வொளிக்கோடு). 5.காதலன் காதலியின் உடம்பிற் பொறிக்கும் வட்ட வடிவமான உகிர்க்குறி. 6. கயிறு பாம்பு முதலியவற்றின் சுற்று. மண்டலம் பயிலுரகர் (பாரத. குருகுல.3). 7. வட்ட வடிவமான படை வகுப்பு(குறள். 767, உரை). 8. குதிரை வட்டமாகச் சுற்றி யோடுதல். பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே (சீவக.795). 9.நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் கூடி வளைந்திருக்க மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை (சிலப். 3:18, உரை). 10.வில் லோர் இருகாலையும் வளைத்து நிற்கும் நிலை. மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = 1.வளைத்தல்.2.காலை வளைத்து நிற்றல். 3.சுற்றிச் சுற்றி வட்டமிடுதல். 4. ஒரு பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் சொல் என்பவற்றுள் ஒன்று அடுத்த பாட்டின் முதலில் அமையப் பாடுதல். மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டவடிவம். 3. கதிரவன். பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு (பெரும்பாண். 442). 4. திங்கள். செய்வுறு மண்டிலம் (கலித்.7). 5. வட்டக் கண்ணாடி மையறு மண்டிலம் போலக் காட்ட (மணிமே.25:137). 6. வானம். (பிங்.). 7. பார் வட்டம். செஞ்ஞாயிற்று..........gÇ¥ò¢ சூழ்ந்த மண்டிலமும் (புறம். 30). 8. பார்நிலம் கடல்சூழ் மண்டிலம் (குறுந்.300).9. வட்டமா யோடுகை. செலவோடு மண்டிலஞ் சென்று (பு.வெ.12வென்றிப். 14). 10 இருகாலும் வளைத்து நிற்கும் நிலை. இருகால் மண்டலத் திடுதல் மண்டிலநிலை (பிங். 6:369). மண்டலம் - t.k©ly. மண்டலம் என்னும் சொல் மட்டுமன்று, வட்டம் என்னும் சொல்லும் வடசொற் றிரிபாகவே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது. வல் - வள் - வண்டு. வட்டு - வட்டம். வட்டம் - வட்ட(பிரா.) - வ்ருத்த (வ.). L.verto (turn). இத் திரிபைத் தலைகீழான வ்ருத்த - வட்ட - வட்டம் என்று காட்டியுள்ளது செ.ப.க.த. அகரமுதலி. இதைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரோ கல்வியமைச்சரோ கடுகளவுங் கவனிப்பதே Æல்லை.k©ly«, வட்டம் என்னும் இருசொற்கும் அடிவேர் முல் என்பதென்றும், வடமொழி தமிழ்த்திரிபே யென்றும், என் செந்தமிழ்ச் சொற்பிறப்பிய லகரமுதலியில் ஐயந்திரிபற விளக்கப் பெறும். உழவு, கைத்தொழில், வணிகம், அரசியல் முதலியவற்றால் உலகியல்அறிவு பலதுறையிலும் வளர்ந்து வந்தது. அதன் விளைவாக, மதத்துறையிலும் பல மாறுதல்கள் நேர்ந்தன. ஐந்திணை நிலத்தாரும், ஐம்பூதங்களையும் நன்மையுந் தீமையும் செய்யும் உயிரிகளையும் இறந்த முன்னோரையும் போரிற் பட்ட பெருமறவரையும் பேய் களையும் பொதுவாக வணங்கி வந்தாலும், ஒவ்வொரு திணை நிலத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பாக நிலைத்துவிட்டது. குறிஞ்சிநிலத்தில் முதற்கண் தோன்றி, ஏனை நிலங்களிலும் மட்டுமன்றி உலகமுழுதும் பரவிய முதல் தெய்வம் தீயாகும். அதனால், தெய்வம் என்னும் பொதுப்பெயரே தீயின் பெயரினின்றுதான் திரிந்தது. தேய்தல் = மரங்கள் அல்லது கற்கள் உராய்தல், உராய்ந்து தீப் பற்றுதல். தேய் - தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு. தேயு-தேசு=நெருப்பின் ஒளி. njR-t.nj#°. தேய்-தே=தெய்வம் (பிங்.). தேபூசை செய்யுஞ் சித்திர சாலை" (சிவரக.நைமிச.20). 2. நாயகன் (இலக்.81). தே-தீ=1. நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறம்.2). 2.விளக்கு. தீத்துரீஇ யற்று, (குறள். 929). 3.வயிற்றுத்தீ, கடும்பசி. வயிற்றுத்தீத் தணிய (புறம். 74). 4.சினத்தீ, சினம். மன்னர்தீ யீண்டுதங் கிளையோடு மெரித்திடும் (சீவக.250). 5. தீயின் தன்மை, தீமை.தீப்பால தான்பிறர்கட் செய்யற்க(குறள். 206). 6. நஞ்சு. வேகவெந் தீநாகம் (மணிமே.20:98). 7. நரகத்தீ. அழுக்காறு....ÔíÊ யுய்த்து விடும் (குறள். 168). ஒ.நோ: தேம்பால் - தீம்பால். தேய் - தேய்வு. தேவு = க. தெய்வம் (பிங்.) நரகரைத் தேவுசெய் வானும் (தேவா. 699:2). 2. தெய்வத் தன்மை. தேவு - தேவன் = கடவுள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்.104). தேவன் - வ. தேவ. தேய்வு - தெய்வு - தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். தெய்வ முணாவே (தொல்.பொருள்.18). 2. தெய்வத் தன்மை. 3. தெய்வத்தன்மையுள்ளது. 4. கடவுள். 5. கடவுள் ஏற்பாடு, Cழ்.bjŒt« - வ. தைவ. தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருத்தல் காண்க. குறிஞ்சி நிலத்தார், தெய்வம் தீவடிவினது' அல்லது தீயொத்தது என்னுங் கருத்தினரேனும், தெய்வம் அல்லது தேவன் என்பது பொதுப்பெயராகிவிட்டதனால், தீயைப்போற் சிவந்தவன் என்னுங் கருத்தில் தம் தேவனைச் சேயோன் என்றனர். அவன் தம்மைப்போல் மறவனாயிருக்க வேண்டுமென்று கருதி, மறத்திற்குச் சிறந்த இளமைப் பெயரால் அவனை முருகன் என்றனர். முருகு இளமை. அழகு என்பது அதன் வழிப்பொருள். தம் படைக்கலமாகிய வேலை யேந்தியும், குறிஞ்சிக்குரிய கடப்ப மாலையை யணிந்தும் இருப்பதாகக் கருதி, வேலன் என்றும் கடம்பன் என்றும் இருபெயர் சேர்த்தனர். மேலெழுந்து விண்ணுலகஞ் செல்ல வுதவுமென்று கருதி, குறிஞ்சிக் குரிய அழகிய பெரும்பறவையாகிய மயிலை முருகனுக்கு ஊர்தியாகக் கொண்டனர். அவன் பிற பெயர்களும் இயல்களும் செயல்களும், என் தமிழர் மதம் என்னும் நூலில் விளக்கப்பெறும். முல்லைநிலத்தார், தம் கன்றுகாலிகட்குப் புல்வளரவும் வானாவாரிக் கொல்லையிற் பயிர்கள் விளையவும், இன்றியமையாத மழை பெய்யும் கருமுகிலை அல்லது அது திரளும் நீலவானைத் தம் தேவன் வடிவாகக் கொண்டு, அவனை மாயோன் என்றும் கரியவன் என்றும் மால் என்றும் குறித்தனர். மருதநிலத்தார், விண்ணுலகக் கொள்கை கொண்டதனால், இம்மையிற் சிறந்த நல்வினை செய்யும் பொதுமக்கள் தேவராகவும் வேந்தன் தேவர்கோனாகவும், மறுமையில் விண்ணுலகத்திற் சேர்வர் என்னும் நம்பிக்கையினால், ஒருங்கே விண்ணுலக வேந்தனாகவும் மழைத் தெய்வமாகவுங் கொண்ட தம் தேவனை, வேந்தன் என்றே விளம்பினர். நெய்தல் நிலத்தார், கடல்படு செல்வத்திற்கும் நீர்வாணிகத் திற்கும் கடலையே நம்பியிருந்ததனால், கடல் தலைவனே தம் தேவன் எனக் கொண்டு, அவனை வாரணன் என்றனர். வாரணம் = கடல். வாரணன் கடல் தலைவன். வார்தல் = வளைதல். வள்-வர்-வார்-வாரணம். கடல் நிலத்தைச் சூழ்ந்திருப்பதால் வாரணம் எனப் பட்டது. வளைகடல் வலையிற் சூழ்ந்து" (சீவக.1115). கேடகமும் சங்கும் வாரணம் எனப்படுவதும் வளைந்திருத்தல் பற்றியே. thuz‹-t.tUz.fl‰nfhthuz‹ (உபதே.உருத். 230). பாலைநிலத்தார் அடிக்கடி ஆறலைத்தும் சூறையாடியும் போரிட்டும் மக்களைக் கொன்று பிணமாக்கியதனால், அப் பிணங் களைத் தின்பதாகக் கருதப்பட்ட கூளிகளின் (பேய்களின்) தலைவியாகிய காளியை, தமக்குப் போரில் வெற்றி தருபவளாகக் கருதி, அவளை அவர் தெய்வமாகக் கொண்டு காவிட்டு வழிபட்ட னர். பேய்நிறம் கருப்பென்பது பற்றி, அவள் காளி எனப்பட்டாள். கள்-காள்-காளம்-காளி=கருப்பி. அவளை மாயோள் என்பதும் அந் நிறம்பற்றியே. மாமை = கருமை. fhË-t.fhä. கருப்பி என்பது உலக வழக்கு. காளி வணக்கம் அடிப்படையிற் பேய் வணக்கமாயினும், அது தாய் வணக்கமும் கண்ணகிபோலும் கற்புடைத் தேவி வணக்கமுங் கலந்ததாகும். காளியம்மை, கொற்றவை என்னும் பெயர்கள் தாய் வணக்கக் கருத்தைக் காட்டும். கொற்றம்+அவ்வை=கொற்றவை (வெற்றித் தாய்). இனி, அம்மை யென்னும் பெயர் அடையடுக்காது தனித்தும் அவளைக் குறிக்கும். அதனால், அவளால் நேர்வதாகக் கருதப்பட்ட கொப்புள நோய், அம்மை யென்றே பெயர் பெற்றது. இங்ஙனம் ஐந்திணை வணக்கமும் ஏற்பட்டபின், மருதநிலப் பார்ப்பாருட் சிறந்த அறிஞர் சிலர், பிறவியறுக்கும் வீடுபேற்றுக் கருத்துங்கொண்டு, அப் பேற்றைப் பெறும் சிவநெறி, திருமால்நெறி ஆகிய இரு மதங்களையுங் கண்டனர். குறிஞ்சிநிலத்திலிருந்து ஆய்ந்தவர் சிவநெறியையும், முல்லைநிலத்திலிருந்து ஆய்ந்தவர் திருமால் நெறியையும் கண்டதாகத் தெரிகின்றது. வீடுபேற்று முயற்சியை மேற்கொண்டவர், உலகப் பற்றை முற்றத் துறந்து எல்லா வுயிர்களிடத்தும் அருள் பூண்டமையால் அந்தணர் எனப்பட்டார். அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (குறள். 30) இங்ஙனம், கல்வித் தொழிலாளர், இல்லறம் பேணும் பார்ப்பார் என்றும், துறவறம் பூணும் அந்தணரென்றும் இருபாற்பட்டனர். இங் ஙனமே, அரசரும் குறுநில மன்னர் பெருநில மன்னர் என்றும், வணிகரும் நிலவணிகர் நீர்வணிகர் என்றும், உழவரும் உழுதுண் போர் (கருங்களமர்) உழுவித்துண்போர் (வெண்களமர்) என்றும், இவ்விரு திறப்பட்டனர். கருங்களமர் காராளர் என்றும், வெண்களமர் வெள்ளாளர் என்றும் சொல்லப்பட்டனர். இவ்விரு சாரார்க்கும் வேளாளர் என்பது பொதுப்பெயராகும். ஏனை மூவர் போலாது, புதிதாய் வந்தவர்க்கும் அன்புடன் விருந்தோம்பி வேளாண்மை செய்வதனால், உழவர் வேளாளர் எனச் சிறப்பிக்கப் பட்டனர். வேளாண்மை பிறரை விரும்பியாளுந் தன்மை. வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான். (திரிகடு.12) குறிஞ்சிநிலத்தார், குறவர், குன்றவர், இறவுளர்,கானவர் வேட்டுவர் என்றும்; முல்லைநிலத்தார், ஆட்டிடையர், மாட்டி டையர் என்றும்;நெய்தல்நிலத்தார் நுளையர், திமிலர், பரதர் (பரவர்) என்றும்; பாலைநிலத்தார் எயினர், மறவர், வேட்டுவர், வேடர் என்றும்; இடம்பற்றியும் தொழில்பற்றியும் கருவிபற்றியும் சிற்சில வகுப்பாராய்ப் பிரிந்து போயினர். ஆயர், இடையர், கோவர், தொறுவர், பொதுவர் என்னும் பெயர்கள், பெயர்வேற்றுமையே யன்றிக் குலவகுப்பைக் குறியா. ஆன்வல்லோர் (திவா.) என்றும், ஆன்வல்லவர் (சூடா.) என்றும் ஆயர்க்குப் பெயருண்மையால், கோவலன் என்பது கோ மேய்ப்பதில் வல்லவன் என்று பொருள்படும் தென்சொல்லே யன்றி, கோபாலன் என்னும் இருபிறப்பி வடசொல்லின் திரிபாகாது. பாலைநிலம் குறிஞ்சியை யடுத்ததாதலின், வேட்டுவர் என்னும் பெயர் கொண்ட வகுப்பார் இருநிலத்திலும் இருந்தனர். கடிய நெடுவேட்டுவன் என்னுங் கொடையாளி கோடைமலைக்குத் தலைவன். சிலப்பதிகாரத்திற் பாடப்பட்டுள்ள வேட்டுவ வரி பாலைவாணரைப்பற்றியது. உறைக்காலத்து மொழித் துறையில், எகர ஒகரக் குறிகளும் ள,ழ,ற,ன மெய்களுந் தோன்றி நெடுங்கணக்கு நிரம்பியிருத்தல் வேண்டும். வெண்பாவும் வஞ்சிப்பாவுந் தோன்றி நால்வகைப் பாவிலும் இலக்கியம் நடைபெற்றிருக்கும். இசை நாடகக் கலை களும் வளர்ச்சியுற்று இலக்கிய விலக்கணம் பெற்றிருக்கும். எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூறு தழுவிய பிண்ட விலக்கணமுந் தோன்றி யிருக்கும். தமிழர் மீண்டும் வடக்கே சென்று பரவியிருப்பர். வடஇந்தியா திரவிடநாடாகவும், நடுவிந்தியா மொழிபெயர் தேயமாகவும் மாறியிருக்கும். மக்கள் பெருகி ஆள்நிலம் மிக விரிவடைந்துவிட்டதனால் பாண்டியன், குமரியாற்றிற்கு வடக்கிற் பனிமலை வரையுள்ள நிலப்பாகத்திற் கீழ்ப்பாதியை ஒருவனும் மேற்பாதியை ஒருவனும் ஆளுமாறு, இரு துணையரையரை அமர்த்தியிருத்தல் வேண்டும். வெள்ளி (வெண்பொன்) செம்பும் வெள்ளீயமுங் கலந்து உறையென்னுங் கலப்புப் பொன்னம் (metal) அமைத்ததற்கு முன்னோ பின்னோ வெள்ளி அல்லது வெண்பொன் என்னும் பொன்னமும் தமிழகத்திற் கிடைத்துப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். வெண்ணிற மாயிருப்பது வெள்ளி. வெள்-வெள்ளி. இரும்பல்லாத பொன்னத் தனிமங்களுள் (elements) தலை சிறந்து பயன்படுபவற்றுள் ஒன்றான செம்பு, கற்காலத்தின் பிற் பகுதியில் கி.மு. 8000 போல் புதுக் கற்கால மாந்தனாற் கண்டு பிடிக்கப்பட்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. செம்பு இயற்கையில் தனிப் பொன்ன நிலையிற் காணப்படுகின்றது. இவ் வியற்கைச் செம்பு புதுக் கற்கால மாந்தன் கல்லிற்கீடாகப் பயன் படுத்திய கருவிப்பொரு ளாகும். அதனின்று அவன் முருட்டுச் சம்மட்டிகளையும் கத்திகளையும் பின்னர் மற்றக் கலங்களையும் அமைத்தான். அதன் சமட்டப்படுந் தன்மையால், அதை வேண்டிய வடிவத்திற்கு அடித்துக் கருவிகளை உருவாக்குவதற்கு மிக எளிதா யிருந்தது. தட்டுவதனாற் செம்பு இறுகிக் கூர்மை மிக்கனவும் நீண்டுழைப்பனவு மான ஓரங்கள் தோன்றின. அப் பொன்னத்தின் பளபளப்பான செம்பட்டை நிறமும் நிலையான தன்மைகளும் அதை மிகுந்த விலைமதிப்புள்ளதாக்கின. இம் முந்து காலத்திற் செம்பிற்காகச் செய்த தேடுகை, இயற்கைச் செம்பைக் கண்டுபிடிக்கவும் அதன் வைப்புகளிலிருந்து அதை யெடுக்கவும் வழிவகுத்தது. கி.மு. 4000 ஆண்டுகட்குச் சற்றுப் பின்பு, அப் பொன்னத்தைக் குடியிருப்புத் தீக்களத்தில் உருக்கி வேண்டிய வடிவத்தில் வார்த்துக்கொள்ள முடியுமென்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்பு, பொன்னவியற் செம்பிற்கும் செம் புள்ள பாறைக்குமுள்ள உறவும், செம்பு கலந்த மணலிலிருந்து நெருப் பினாலும் கரியினாலும் செம்பைப் பிரித்தெடுக்க முடியுமென்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனின்று பொன்னவூழி தொடங்கிப் பொன்னக்கலை சிறந்தது. (பொன்னக்கலை வரலாறு பார்க்க). செம்புக் காலத் தொடக்கத்தில் அதன் மாபெரு வளர்ச்சி எகிபதுவில் இருந்திருக்கக் கூடும். கி.மு. 5000 ஆண்டுக் காலத்திலேயே, கல்லறைகளில் இறந்தவர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட படைக் கலங்களும் கருவிகளும் செம்பினாற் செய்யப்பட்டிருந்தன. கி. மு. 3800 போல், சீனாய்த் தீவக்குறை (Peninsula), சினெப்புரு (Snefru) அரசனால் செப்புச் சுரங்கங்கள் நடத்தப்பட்டதைப்பற்றிய திட்ட மான எழுத்தேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச் சுரங்கங் களிற் கண்டெடுக்கப்பட்டுள்ள குகைகள், அப் பொன்னத்தைப் பிரித் தெடுக்குங் கலை தூய்மைப்படுத்தலையும் உட்கொண்டதென்பதைக் காட்டுகின்றன. அக் கலை, செம்பைச் சன்னத் தகடுகளாக அடித்து, அவற்றைக் குழாய்களாகவும் பிற வுருப்படிகளாகவும் செய்கிற அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. அக்காலத்தில் உறை (வெண்கலம்) முதன்முதல் தோன்றிற்று. அம் மூலக்கருவிப் பொருளின் அறியப்பட்ட முதற் பழந்துண்டு, மெதும் (Medum) கூம்புக் கோபுரத்திற் கண்டெடுக்கப் பட்டுள்ள ஒரு வெண்கலப் பாரையாகும். அதன் தோற்றக்காலம் தோரா. கி.மு. 3700 என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. செம்பும் வெள்ளீயமுங் கலந்த அளையம் (alloy) ஆகிய உறை, செம்பினும் உயர்ந்த வன்மை, விறப்பு ஆகிய தன்மைகளை உடையது. இது பொதுவாகப் படைக்கலங்களும் கலையுருப்படிகளும் செய்யுங் கருவிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது மிகுதியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்ட காலம் உறைக்காலம் (Bronze Age) எனப்படும். உறையைப் பயன்படுத்துகை, எகிபதுவிலிருந்து கிரேத்தாவிற்குக் (Crete) கி.மு. 3000-லும், சிசிலிக்குக் (Sicily) கி.மு. 2500-லும், பிரான்சிற்கும் ஐரோப்பாவின் பிறவிடங்கட்கும் கி.மு. 2000-லும், பிரித்தனுக்கும் காண்டினேவியப் பரப்பிற்கும் கி. மு. 1800-லுமாக, நண்ணிலக்கடற்கரை நாடுகட்கு விரைந்து பரவியது. கி.மு. 3000 போல் செம்பு செப்பறைத் (Cyprus) தீவில் ஏராளமாக எடுக்கப்பட்டது. அங்குள்ள செம்பு வைப்புகள் மிகப் பெரியன வாகவும் மிகவுயர்ந்த விலைமதிப்புள்ளனவாகவும் இருந்ததனால், அத் தீவின் ஆட்சி, அடுத்தடுத்து எகிபதியர்க்கும் அசீரியர்க்கும் பீனிசியர்க்கும் கிரேக்கர்க்கும் பாரசீகர்க்கும், உரோமர்க்கும் தாவிற்று. உரோமர்க்கு வேண்டிய செம்பு ஏறத்தாழ முற்றிலும் அத் தீவினின்றே வந்தது. அதனால் அது செப்பறைப் பொன்மணல் (aes cyprium) எனப் பெயர் பெற்றது. அப் பொருளுள்ள இலத்தீனப் பெயர் கிப்ரியம்' என்று குறுகிப் பின்னர்க் குப்ரம்' என்று திரிந்தது. இப் பெயரினின்றே காப்பர்' என்னும் ஆங்கிலச் சொல் வந்தது. இலத்தீனப் பெயரின் முதலீரெழுத்துகளுஞ் சேர்ந்து கு' (cu) என்னும் இதளியக் (chemical) குறியமைகின்றது. ஆசியாவிற் செம்பும் உறையும் எப்போது முதலிற் பயன் படுத்தப்பட்டன வென்பது தெரியவில்லை. சு சிங்ஙின் (Shu Ching) பாவியங்கள் (epics) சீனத்தில் கி. மு. 2500-லேயே செம்பு பயன்படுத்தப் பட்டதாகக் கூறுகின்றன. ஆயின், அக் கலையின் அற்றை நிலையைப் பற்றியாவது, அப் பொன்னம் அதற்குமுன் பயன்படுத்தப்பட்டதைப் பற்றியாவது, ஒன்றும் அறிதற்கில்லை. கி. மு. 1795-லிருந்து 1122 வரை யாண்ட r§(Shang) MŸFo¡(Dynasty) காலத்திற் செய்யப்பட்டனவும், பேரழகுடையனவும், உயர்ந்த கலைத்திறனைக் காட்டுவனவுமான உறைக்கலங்கள் கிடைத்துள்ளன. MÆD«, ï¥ bgh‹d§fË‹ _y¤ij¥g‰¿a kUk«, KªJfhy¢ ÓdÇ‹ âU¡fšyiwfËš v‹bw‹iw¡F« ó£oit¡f¥g£LŸsJ nghY«." பிரித்தானியக் கலைக்களஞ்சியம். (1970) 6,ப.468 வெண்கலம் திண்மையும் வன்மையும் உடைமையினாலேயே உறையெனப்பட்டது. முறியென்பதும் அப் பொருட்டே. உறத்தல் = செறிதல். உறுதல் = உறுதியாதல். உறைதல்=இறுகுதல். முறத்தல்= விறப்பாதல். முறுகு=திண்மை. வெள்ளி, பொன்னிற்கு அடுத்தபடியாக அழகுள்ளதும் விலையுயர்ந்ததும் அணிகலத்திற்குப் பயன்படுவதுமான பொன்ன மாகும். அது பொன்போல் அத்துணையுயர்ந்த தன்றேனும், உலகத்திற் கிடைக்குமளவு மிகக் குறைவாகவே யுள்ளது. ஞாலத்தின் கற்புறணியிற் கிடைக்கும் அரைக்கோடிப் பங்கு இரும்பிற்கு, ஒரு பங்குதான் வெள்ளி கிடைக்கின்றது. வெள்ளியின் நடைமுறைப் பயன்பாட்டுத் தொடக்கம், தொன் மைக்குள் மிகத் தொலைவு செல்கின்றது. எனினும், மாந்தன் முதன் முதற் பணிக்குப் பயன்படுத்திய பொன்னங்கள், பொன்னும் செம்புமே யென்று நம்பப்படுகின்றது. கி.மு. 4000 வரை பழைமையான அரசர் கல்லறைகளில், வெள்ளி யணிகலன்களும் சுவடிப்புகளும் காணப் படுகின்றன. கி.மு. 3100 போல் எகிபதை ஆண்டதாகக் கருதப்படும் மெனெசின் (Menes) நெறியீட்டுத் தொகுப்பில், ஒரு பங்கு பொன், விலை மதிப்பில் இரண்டரைப் பங்கு வெள்ளிக்குச் சமமென்று தீர்க்கப்பட்டுள்ளது. இதுவே முதற் பொன்னளவைத் திட்டமாக இருக்கலாம். கி.மு. 700ஆம் ஆண்டு, சிந்தாற்றிற்கும் நீலாற்றிற்கும் இடைப்பட்ட எல்லா நாடுகளிலும், பொன்னும் வெள்ளியும் பணமாக வழங்கின என்பது பெரும்பாலும் தேற்றம். cnuhk®, j« fhy«tiu, btŸË¥ g¡fiyÆY« m¿ÉaÈY« ntbwª eh£lhÇD« Äf¤ nj®¢á bg‰¿Uª âU¡fyh«.”-ãǤjhÅa¡ கலைக் களஞ்சியம் (1970). 20, ப. 536. மேற்காட்டிய மேற்கோட் பகுதிகள், தமிழறியாதவராற் பெரும் பாலும் மேனாடுகளேபற்றி யெழுதப்பட்டவையாதலால், அவற்றுள் தமிழர் வரலாற்றிற்கு ஒவ்வாதன வெல்லாம் அறியாமையின் விளை வென்று கருதியமைக. இற்றையுலகில் மிகப் பெரிய வெள்ளிச்சுரங்கம் மெக்சிக் கோவில் (Mexico) உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் (U.S.A.) கானடாவிலும் வெள்ளி பெருவாரியாகக் கிடைக்கின்றது. தென்னமெரிக்காவிலும் வெள்ளி எடுக்கப்படுகின்றது. முதன்மை யான வெள்ளி யீய நாக மணல்கள் ஆத்திரேலியாவிற் கிடைக் கின்றன. சிற்றளவாக வெள்ளி கிடைக்குமிடங்கள் உலகெங்கும் பரவியுள்ளன. பண்டைத் தமிழகத்தில், வெள்ளிக் கலங்கள் பயன்படுத்தப் பட்டது மட்டுமன்றி, வெள்ளி வேய்ந்த மாடங்களும் அம்பலங் களும் அரண்மனைகளிலும் கோவில்களிலும் அமைந்திருந்தன. அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி (புறம். 390) விளங்கில வந்தி வெள்ளி மாடத் திளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி (சிலப் 25:4-5) வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலப். பதி. 41) வெள்ளி சிற்றளவாகக் கிடைத்ததனால், அரசராலும் பெருஞ் செல்வராலும் அணிவகைப் பொருள்கட்கன்றி, பொது மக்களாற் பல்வகைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்படவில்லை. அதனால், வெள்ளிக்காலம் என ஒரு காலமும் ஏற்படவில்லை. 5. இரும்புக்காலம் (Iron Age) (தோரா. கி.மு. 10,000-உலக முடிவு) உறைக்குப் பின் தனிப் பொன்னமாகக் கண்டுபிடிக்கப் பட்டதும், உலகெங்கும் ஏராளமாகக் கிடைப்பதும், எல்லாக் கருவிகளுஞ் செய்தற்கேற்ற உறுதிமிக்கதும், நாகரிகமும் அறிவும் விரைந்து வளர்தற் கேதுவாயிருந்ததும், கரும்பொன் என்னும் இரும்பாகும். அதன் கருமை நிறத்தால் இரும்பெனப்பட்டது. இர்-இரு-இருள். இருமை = கருமை. இரு-இரும்-இரும்பு. E. iron. OE. iren. அசீரியரும் எகிபதியரும் இரும்பை மிகுதியாகப் பயன் படுத்தினர். திருப்பொத்தகம், படைப்பியல் (ஆதியாகமம்), 4ஆம் அதிகாரம் 22ஆம் திருமொழியில், தூபால் காயீன் இரும்பு செம்பு வினைஞர்க்கெல்லாம் பயிற்றாளனாக இருந்தானென்று சொல்லப் பட்டுள்ளது. தாவீதின் காலத்திற் கருவிகளும் படைக் கலங்களுஞ் செய்ய இரும்பு பயன்படுத்தப்பட்டது. இலக்கியக் கிரேக்கரின் முன்னோடிகளான தோரியப் படையெடுப்பாளர், இருப்புக் கருவிகளையும் படைக்கலங்களையுங் கொண்டிருந்தார்கள். ஆக்கிலெசிற்கு, அவனது வல்லுடம் பாண்மைப் பரிசாக ஓர் இருப்புப் பந்து அளிக்கப்பட்ட செய்தியை ஓமர் குறித்திருக்கின்றார். கிரேக்கர் கருங்கடலின் தென்கரை யினின்றும், உரோமர் இசுப்பானியாவி னின்றும் எல்பாவினின்றும் இரும்பைப் பெற்றனர். தெளிவாக வுள்ளபடி, அதற்கு முந்திய மூலங்கள் இந்தியாவில் இருந்தன. பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (1970), 12, ப.598 தூபால் காயீன் காலம் கி.மு.3874. கி.மு. 1725-ல் கானானியர் இருப்புத்தேர் வைத்திருந்தனர். 1296-ல் கானான் அரசனான யாபீன் 90 இருப்புத்தேர் உடையவனாயிருந்தான். இரும்பு மட்டுமன்றித் தேரும் முதன்முதல் தமிழகத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். தமிழ், உலகில் முதன்முதல் தானே தனியாகத் தோன்றிய மொழியாதலால், நீண்ட காலமாகச் சிறப்புப் பெயரின்றி மொழி என்னும் பொதுப் பெயராலேயே வழங்கி வந்தது. ஓர் ஊரில் ஒரே ஆறிருப்பின், ஆற்றிற்குப் போய் வந்தேன் என்றே சொல்வர். அதுபோல் ஒரே மரமிருப்பின், மரத்தடிக்குப் போ என்றே சொல்வர். இங்ஙனம் தமிழும் தமிழகத்தில் ஒரே மொழியாயிருந்ததனால், மொழியென்றே முதலில் வழங்கிற்று. தென்னில மக்கள் வடக்கே சென்றபின், தட்பவெப்பநிலை சுற்றுச் சார்பு முதலியவற்றின் வேறுபாட்டாலும்,பேச்சுறுப்புகள் வன்மை பெற்றுவிட்டதனாலும், இலக்கிய விலக்கணங்களும் புலவரு மின்மையாலும், வாய்க்கிசைந்தவாறு பேசி வந்ததனாலும், அவர் மொழி வல்லோசையும் கொச்சைத் தன்மையும் பெற்றுத் திரவிட நிலையடைந்துவிட்டது. அதன்பின் அங்குச் சென்ற தென்னில வணிகர், வடநாட்டில் மொழிபெயர்ந்திருந்ததைக் கண்டனர். அதனால் அந் நாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். அம் மொழிபெயர் தேயத் தென்னெல்லை வரவரத் தெற்கே தள்ளி வந்தது. குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (குறுந்.11) வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத் தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே. (அகம்.31) பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் (அகம்.211) தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தன ராயினும் (அகம்.295) இவை பிற்காலத்தனவாயினும், முற்காலத்து நிலைமையையும் ஒருவாறு குறிக்கும். நிலவாணிகம் போன்றே நீர்வாணிகமுஞ் சிறந்தது. ஆற்றைக் கடக்கப் பரிசல், அம்பி, ஓடம், பள்ளியோடம் முதலிய கல வகைகளும்; கால்வாய் ஆறு கரையோரக் கடல் ஆகியவற்றிற் சரக்குகளைக் கடத்தத் தோணி, பஃறி முதலிய கடத்து வகைகளும்; கடலிலுட் சென்று மீன் பிடிக்கக் கட்டுமரம், மேங்கா, திமில், படகு முதலிய சிறுகல வகைகளும்;முத்துக் குளிக்கச் சலங்குப் படகும்; ஆழ்கடலைக் கடந்து அக்கரை நாடுகளில் வாணிகஞ்செய்து மீளக் கப்பல், நாவாய், வங்கம் முதலிய பெருங்கல வகைகளும் ஏற்பட்டன. நெய்தல் நிலத்தில் மீன்பிடிக்கும் தொழிலராயிருந்த படவர் அல்லது பரவர் சிலர், நெடுங்கடல் செல்லும் நீர்வணிகராயினர். அவருள் தலைவர் குறுநில மன்னருமாயினர். அவர் குடிப்பெயர் பரதர், பரதவர் எனவுந் திரிந்தது. படம்=துணி, சீலை, பாய். படம்-படவு = பாய் கட்டிய தோணி. படவ தேறி (திருவாச. 43:3). படவு - படகு. படவு - படவன் = படகோட்டி. படவர் மடமகளிர் (திருப்போ. சந். பிள்ளைத். முத்.4). படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன் (திருமந். 2031). பரவன் - பரதவன் = 1. மீன் பிடிப்போன். மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). திண்டிமில் வன்பரதவர் (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். தென்பரதவர் மிடல்சாய (புறம். 378). பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். படர்திரைப் பரதர் முன்றில் (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2). 3 .வணிகன். பரத குமரரும் (சிலப். 5:158). பரதவர் கடலோடிகளும் (Mariners) சுற்றுக் கடலோடிகளுமா யிருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று வடபார் முனையில் சிற்சில வேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு, அதற்கு வடவை யென்று பெயரிட்டனர். வடம் - வடவை = வடதிசை நெருப்பு. வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து (தனிப்பாடல்). வடவனல் = வடவை. அக்கடலின் மீது வடவனல் நிற்க விலையோ (தாயு. பரிபூர.9) வெள்ளத் திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா. 86) வடவனலம் = வடவை கடுகிய வடவன லத்திடை வைத்தது (கலிங். 402) வடம் - வடந்தை = வடதிசையிலுள்ளது, வடகாற்று. வடந்தைத்தீ = வடவை. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384). உத்தர மடங்கல் = வடவை (திவா.). உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன்போல் உலகையழிக்கும் ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ, வடவை (பிங்.). பாரின் தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்று மேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது. வடவனல் குமரிநாடு முழுகு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட தேனும், அதைப்பற்றிய குறிப்புள்ள இற்றைப் பண்டைநூல் 7ஆம் நூற்றாண்டினதான திவாகரமே. எனினும் வடவையை முதன் முதல் கண்டவன் தமிழனே என்பதற்கு, அதுவே போதிய சான்றாம். ஏனெனின், இற்றை யறிவியல்களைக் கண்ட மேனாட்டாரும் அதை 17ஆம் நூற்றாண்டிலேயே அறிந்தனர். காசந்தி (Gassendi) என்னும் பிரெஞ்சிய அறிவியலார் 1621 -ல் அதைக் கண்டு அதற்கு வடவிடியல்' (Aurora Borealis) என்று பெயரிட்டனர். இன்று அப் பெயர்க்கு வடவொளி யென்றே பொருள் கொள்ளப்படுகின்றது,. அதன் விளக்கம்: “A luminous atmospheric phenomenon, now considered to be of electrical character, occurring in the vicinity of, or radiating from, the earth's northern or southern magnetic pole, and visible from time to time by night over more or less of the adjoining hemisphere, or even of the earth's surface generally; popularly called the Northern (or Southern) LIghts.......” என்று எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலியிற் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப்பெயரும் இலத்தீனப் பெயரும் ஏறத்தாழ முற்றும் பொருளொத்திருத்தல் காண்க. நிலவணிகர் வடக்கிற் பனிமலைவரையும் வடமேற்கில் மேலையாசியாவரையும், நீர்வணிகர் பல்திசையிலுமுள்ள அக்கரை நாடுகள் எல்லாவற்றிலும் பேசப்படும் மொழிகளை யெல்லாங் கேட்டபின், தம் மொழி ஒன்றிலேயே ழகரம் சிறப்பா யொலித்தலைக் கண்டு, அதற்குத் தமிழ் என்று பெயரிட்டிருக்கலாம். தம்-தமி=1. தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 2. ஒப்பின்மை (சங். 81). தமி + ழ் = தமிழ் (தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி). தமிழ் - தமிழம். தமிழின் இனிமையையும் தமிழப் பண்பாட்டின் சீர்மையையும் நோக்கி, இனிமையு நீர்மையுந் தமிழென லாகும் (10:580) என்றார் பிங்கல முனிவர். அவ் விரண்டும் வழிப்பொருளே யன்றித் தமிழ் என்னுஞ் சொல்லின் வேர்ப்பொரு ளாகா. சொல்லமைப்பும், செம்மரபும், இலக்கண வொழுங்கும், ஐவகைத் தொடை யமைந்த நால்வகைப் பாவின் இன்னோசையும், பொருளிலக்கணமும், சிறப்பாக அகப்பொருட்டுறைகளும், இன்கதை தழுவிய வனப்பியலும், தமிழின் இனிமையையும்; பொருண்மொழிப் பாக்களும் அரசியல் நூலும் அறநூலும் மெய்ப்பொருள்நூலும் தமிழப் பண்பாட்டின் நேர்மையையும் காட்டும். அகப்பொருட் டுறைகளின் இனிமையை நுகர்ந்தே, மாணிக்க வாசகர் யாவையும் பாடியபின் கோவையும் பாடி, அதில், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண்டீந்தமிழின் துறைவாய்நுழைந்தனையோ......... (திருக்கோ. 20) என்று, தம் சிறப்பான ஈடுபாட்டைக் குறிப்பாகத் தெரிவித்தார். இரும்புக்காலத்தில், வெண்பா முதலிய நால்வகைப் பாக்களுள் முதல் இரண்டின் கலப்பால் மருட்பா என்னும் கலவைப் பாவும், கலிப்பாவின் திரிபால் பரிபாடல் என்னும் திரிபாவும் தோன்றின. இசை, நாடகம், மருத்துவம், சமையல், கணக்கு, கணியம், ஏரணம், மறை, மெய்ப்பொருள் முதலிய பல்துறைக் கலைகளும் அறிவியல் களும்பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பியலும் தோன்றியிருத்தல் வேண்டும். மொழியுடன் இசையும் நாடகமும் இணைக்கப்பட்டு, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஐந்திணைச் சொற்களும் சேர்ந்து, தமிழ் பெருவளம் பெற்றிருந்தது. தலைக்கழகம் முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர் üற்றுக்கணக்கினர்nதான்றிaதனால்,gழையïலக்கியத்தைMராயவும்òâயஇyக்கியத்தைஇaற்றவும்,பhண்டியன்ப~றுளியhற்றங்கரைkலிருந்தமJரைaன்னும்த‹தiலநகரில்ஒUகHகம்நிWÉனான்.அத‹ உறுப்பினர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினாரென்றும், அவராற் பாடப்பட்டன முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் பல பரிபாடலும் பிறவுமென்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்றும், அவருட் பாவரங்கேறினார் எழுவ ரென்றும், அக் கழகம் இருந்த கால நீட்சி நாலாயிரத்து நானூற்று நாற்பதாண்டென்றும் இறையனா ரகப்பொருள் உரையிற் சொல்லப்பட்டுள்ளது. அக் கழக வுறுப்பினர் பெயர்கள் இறந்துபட்டன. அகத்தியர் இடைக்கழகக் குலைவிற்குப்பின் வடநாட்டினின்று வந்த ஆரியர். முதலிரு கழக வுறுப்பினரும் தூய தமிழராவர். சிவன் பெயரும் முருகன் பெயருங் கொண்ட இருவர் தலைக்கழக வுறுப்பினரா யிருந்திருக்கலாம். முரஞ்சியூர் முடிநாகராயர் கி.மு. பத்தாம் நூற்றாண்டுப் பாரத காலத்தவர். நிதியின் கிழவன் என்பது. வடதிசைத் தலைவனைக் குறிக்கும் தொல்கதைக் கட்டுப்பெயர். தலைக்கழகம் கி. மு. 10,000 போல் தோன்றியது. அக் காலத்து மக்கள் இக்காலத்தாரினும் மிக நீண்டு வாழ்ந்திருப்ப ராதலால், சராசரி ஆளுக்கு 50 ஆண்டு வைத்துக்கொள்ளின், 86 பாண்டி யருக்கும் 4450 ஆண்டாகும். முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால நீட்சி 4440 ஆண்டு. இது முற்றும் பொருத்தமானதும் நிகழ்ந்திருக்கக் கூடியதுமாகும். தலைக்கழகத்திற்கு அளவை நூலாயிருந்த மாபிண்ட நூற் பெயரும் மறைந்துவிட்டது. அகத்தியம் ஒரு மாபிண்டமாயினும், இடைக்கழகத்திற்குப் பிற்பட்டதாதலின், தலைக்கழக நூலாயிருந் திருக்கமுடியாது. எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூற் றிலக்கணமுங் கொண்ட இயற்றமிழ் நூல் பிண்டம்; இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலக்கணமுங் கொண்ட நூல் மாபிண்டம். ஒவ்வொரு தமிழும் இலக்கணம் இலக்கியம் என்னும் இருபாற் பட்டது. முத் தமிழ்க்கும் இலக்கணம் ஒரே நூலாயிருக்கும்; ஆயின், இலக்கியம் வெவ் வேறு வனப்புகளாகவும் பனுவல்களாகவும் இருக்கும். இயற்றமிழிலக் கணப் பொருட்கூற்றில் யாப்பும் உவமை யென்னும் அணியும் அடங்கும். தலைக்கழகம் வரலாற்றிற் கெட்டாத தொன்மையதாதலால், அதைப்பற்றிய வண்ணனையிற் சில விளத்தங்கள் கி.பி.6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட வுரையில், தவறாகக் குறிக்கப் பட்டிருப்பது இயற்கையே. தலைக்கழகம் தொடங்கியபின், உலகியற் கலைகளும் அறி வியல்களும் வளர்ந்து வந்ததுபோன்றே, மதவியல் ஆராய்ச்சியும் ஆழ்ந்து வளர்ந்தது. சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் மேற்பட்ட, கடவுள் நெறியென்னும் பொது நெறியும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் சிறுதெய்வ வணக்கத்தையும், புலமக்கள் பெருந்தேவ மதத்தையும், துறவியர் கடவுள் நெறியையும் கடைப்பிடித்தனர். ஆயின், காளி போர்வெற்றித் தெய்வமாகவும் அம்மை நோய்த் தெய்வமாகவுங் கருதப்பட்டதனால், நாளடைவில் ஐந்திணைப் பொதுத் தெய்வமானாள். தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடுமாகிய தென்னிலத்தின் தென்கோடியிலிருந்த பெருமலைத் தொடருக்கும், வடகோடியிலிருந்த பேராற்றிற்கும், குமரி யென்னும் காளியின் பெயரே இடப்பெற்றது. பாண்டியன் மதிக்குலத்தா னாதலால், அவன் முதல் தலைநகர் அவன் குலமுதல்வன் பெயரையொட்டி மதுரை யெனப்பட்டது. மதி-மதிரை-மதுரை. ஒ.நோ; குதி - குதிரை. குதித்தல் = தாண்டுதல். வைகை மதுரை பிற்காலத்த தாதலால், மருத முன்றுறை' என்னும் தொடரினின்று மதுரைப் பெயர் வந்த தென்பது பொருந்தாது. பஃறுளி மதுரைப் பெயரே வைகை மதுரைக்கும் பிற்காலத்தில் இடப்பட்டது. தலைக்கழகக் கால நாகரிகமும் பண்பாடும் ஆரியர் தென்னாடு வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களனைத்தும் அழியுண்டு போயினும், மொழியமைப்பி னின்றும் முக்கழக வரலாற்றினின்றும் கடைக் கழகப் பாடல்களிலும் பனுவல்களிலுமுள்ள குறிப்புகளினின்றும், தலைக்கழகக் கால நாகரிகப் பண்பாட்டை ஒருவாறுணரலாம். மொழி அஃறிணையினின்று மக்களைப் பிரித்துக் காட்டுவதும், ஒரு நாட்டு மக்களின் நாகரிகப் பண்பாட்டு அளவுகோலும் மொழியே. மொழியினாலேயே மாந்தன் நரன் என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். நரலுதல் = 1. ஒலித்தல். ஆடுகழை நரலும் சேட்சிமை (புறம். 120). 2. கத்துதல்.வெண்குருகு நரல வீசும் நுண்ப ஃ றுவலைய (அகம். 14). 3. பேசுதல். நரல் - நரன் = மாந்தன். வறிதே நிலையாத விம்மண் ணுலகின் நரனாக வகுத்தனை (தேவா.934:2). நரன் - நரம் = மாந்தப்பிறவி. நரத்திலும் பிறத்திநாத (திவ். திருச்சந்.29). வானரம் (வால்நரம்)=வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. வானர முகள (சீவக. 1168). நரன் - வ. நர. வானரம் - வ. வாநர. நர என்னுஞ் சொல்லிற்கு வடமொழியில் வேரில்லை. வானர என்னுஞ் சொல்லை நர ஏவ' என்று பிரித்து, நரனைப் போன்றது என்று பொருள் கூறுவர் வடமொழியாளர். மொழிக்கு அடுத்தபடியாக, மாந்தனின் சிறப்பாற்றல் முன்னுதல். முன்னுதல்=கருதுதல். முன்னுவான் (வானீற்று நி.கா.வி.எ.) - முன்னான் (ம.) AS. munan (to think). முன்-முன்னம்=1. கருத்து.முன்ன முகத்தி னுணர்ந்து (புறம். 3). 2. kd«.(âth.). முன்னம் - முனம் - மனம் = உள்ளம். மனம்- t. மனஸ். L. mens, ME. mynd, E. mind. முன் - மன் = கருதும் ஆற்றலுள்ள மாந்தன். மன்பது - மக்கட் கூட்டம், மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15:52). மன்பது - மன்பதை = மக்கட்கூட்டம். மன்பதை காக்குநின் புரைமை (புறம். 210). மன்- t.kE. OS.,OHG. man, E man. மொழியிலுங் கருத்திலும் அன்றும் இன்றும் என்றும் சிறந்தவன் தமிழனே. ஒவ்வொரு நாட்டிலும், மொழியை வளர்ப்பவர் பொதுமக்கள்; இலக்கியத்தை வளர்ப்பவர் புலமக்கள். மொழிகள் இயன்மொழியும் திரிமொழியும் என இருவகைப்படும். தானே தோன்றியது இயன்மொழி; ஒன்றினின்று திரிந்தது திரிமொழி. ஆகுபெயர்கள் இருமடியும் மும்மடியும் ஆகுவது போன்று, திரிமொழிகளும் இருமடியும் மும்மடியுந் திரியும். திரவிடம் தமிழினின்று திரிந்த திரிமொழி; ஆரியம் திரவிடத்தினின்று திரிந்த இருமடித் திரிமொழி. குமரிநாடு தமிழன் பிறந்தகம் மட்டுமன்றி மாந்தன் பிறந்தகமு மாதலால், தமிழே இம்மியும் ஏனைமொழி கலவாத முழுத் தூய இயன்மொழியாகும். இருதிணை ஐம்பால் ஈரெண் மூவிடங்களாகிய கிளவியிலக் கணமும், நுண்பிரிவுகளையுடைய எண் வேற்றுமைப் பெய ரிலக்கணமும், நந்நான்கு வகைப்பட்ட முக்கால வினை யிலக்கணமும், வளமை, செம்மை, மரபு, தகுதி, தூய்மை முதலிய சொற்றிறங்களும்; சுருக்கம், தெளிவு, மதிப்புறவு, இடக்கரடக்கல், மங்கலம் முதலிய சொற்றொடரமைதிகளும் கொண்டு; பதினெண் திரவிட மொழிகட்குத் தாயும் பதினாறாரியப் பிரிவுகட்கு மூலமுமா யமைந்தது தமிழ். இருதிணை எல்லாப் பொருள்களையும், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) என மூவகையாக வகுத்தாலும், தனக்கும் பிறர்க்கும் நல்லதுந் தீயதுமாகிய இரண்டையும் பகுத்தறியும் பண்பையே சிறப்பாகக் கொண்டு, அஃதுள்ளதை உயர்ந்த வகுப்பென்றும் அஃதில்லதைத் தாழ்ந்த வகுப்பென்றும் துணிந்து, அதற்கேற்ப, உயர்ந்த வகுப்பைக் குறிக்குஞ் சொற்கட்கே ஆண் பெண் என்னும் இருபாலீறும், தாழ்ந்த வகுப்பைக் குறிக்குஞ் சொற்கட்கெல்லாம் ஒருமை பன்மை யென்னும் ஈரெண்ணீறுமே கொடுத்து, மொழியை வளர்த்தவர் தமிழப் பொதுமக்களே. மக்களும் தேவரும் உயர்ந்த வகுப்பு; மற்றவை தாழ்ந்த வகுப்பு. எ-டு : ஒருமை : முருகன் வந்தான், வள்ளி சென்றாள். - உயர்திணை. காளை உழுகிறது, ஆவு கறக்கின்றது, கல் குத்துகிறது, அது பறக்கின்றது. - அஃறிணை. பன்மையீறும் இருவகுப்பிற்கும் வெவ்வேறாம். பன்மை : அரசர் வாழ்ந்தனர் (வாழ்ந்தார்), ஆசிரியன்மார் பேசினர். - உயர்திணை. காளைகள் உழுகின்றன, மாடுகள் மேய்கின்றன, அவை இனிக்கின்றன, இலைகள் அசைகின்றன. - அஃறிணை. மக்கள், குருக்கள், அவர்கள், வந்தார்கள் என்பன வழுவமைதி யாகக் கொள்ளப்பெறும். இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பல் என்னும் முறையில், பொதுமக்கள் வகுத்த வகுப்புகட்கே இலக்கண நூலார் உயர்திணை அஃறிணை யெனப் பெயர் கொடுத்தனர். இன்றும், கல்லா மாந்தர் இக் குறியீடுகளை அறியாவிடினும், இருதிணை முறைப்படியே பேசுவர். உயிரையும் பாலையுமே யன்றிப் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டு வேறெம் மொழியாரும் பொருள்களைப் பகுத்திலர். தெலுங்கில் மகத், அமகத் என்றது தமிழைப் பின்பற்றிப் பிற்காலத்திலேயே. வளமை நால்வகையடை: வாழையிலை, நெல்தாள், கரும்புத் தோகை, பனையோலை. பல்வகைப் பிஞ்சு: மா வடு, பலா மூசு, வாழைக் கச்சல், தென்னங் குரும்பை, பாக்கு நுழாய். காய்ப்பு மாறியபின் தோன்றும் பிஞ்சு நுரு (நொரு). யானைப்பெயர்கள்: ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கரி, கறையடி, கைம்மலை, கைம்மா, தூங்கல், தும்பி, தோல், நால்வாய், பகடு, புழைக்கை-பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலியன. முகத்திற் செம்புள்ளி யுள்ளது சிந்துரம் அல்லது புகர்முகம். முருகன் ஊர்தி பிணிமுகம். ஆண்யானை களிறு; பெண்யானை பிடி. அயல்நாட்டினின்று வந்த குதிரையினத்தையும், பத்திற்கும் மேற்பட்ட வகையாகப் பிரித்தமை முன்னர்க் கூறப்பட்டது. தமிழ்மொழி, தனக்குரிய வீடு என்னுஞ் சொல்லை மட்டுமன்றி, இல் என்னுந் தெலுங்குச் சொல்லையும், மனை யென்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish) மொழிகட்கும் பொதுவான குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் தமிழ்ச்சொல் வளத்தைப் பாராட்டிக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. கொடை வேண்டற் சொற்கள்: ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே (தொல். 928) தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே. (தொல். 929) கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே. (தொல்.930) ஒன்றைச் சொல்லும் வகையைப்பற்றிமட்டும் முப்பதிற்கு மேற்பட்ட வினைச்சொற்கள் உள. தமிழ் வரலாறு' பார்க்க. குமரிநாட்டுத் தமிழ் ஓரிலக்கம் சொற்களைக் கொண்டிருந்தது. அந் நாட்டு முழுக்கினாலும், முதலிரு கழக விலக்கிய அழிவினாலும், பாதிச் சொற்கள் இறந்துபட்டன. செம்மை எழுத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும், ஒலியும் பொருளும் திரிக்காதும் சிதைக்காதும் இலக்கண நெறியிற் பேசுவது செம்மை. செம்மை தவறியது கொடுமை. செம்மையான தமிழ் செந்தமிழ். கொடுமையான தமிழ் கொடுந்தமிழ். தமிழை என்றுஞ் செந்தமிழாகவே வழங்கவேண்டு மென்பது, தொன்னூ லாசிரியர் இட்ட நிலையான வரம்பு. அவ் வரம்பினாலேயே, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரியர் எத்துணையோ கேடு செய்திருப் பினும், தமிழ் இன்னும் அழியாது இருந்துவருகின்றது. தெலுங்கில் னகர வீற்றை டகர வீறாகவும், கன்னடத்திற் பகர முதலை ஹகர முதலாகவும், மலையாளத்தில் மெலியடுத்த வல் லெழுத்தையும் மெலியாகவும் வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் ழகரத்தை யகரமாகவும் ஒலிப்பது ஒலித்திரிபான கொடுந்தமிழாம். செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்பு என்பவற்றை, முறையே, செப்பு, திப்பு, நிப்பு, பப்பு எனத் தெலுங்கில் திரிப்பது சொற்றிரிபான கொடுந்தமிழாம். ‘v‹dJ M»‹wJ?' என்பதை எந்தாணு என்றும், `நான் செய்யவேண்டும்' என்பதை `ஞான் செய்யேணம்' என்றும் மலை யாளத்தில் திரிப்பது சொற்றொடர்த் திரிபான கொடுந்தமிழாம். விடைசொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளுள்ள செப்புதற் சொல்லைச் சொல்லுதல் என்னும் பொதுப் பொருளில் தெலுங்கில் திரிப்பதும், ஆய்ந்து பார்த்தல் என்னும் சிறப்புப் பொருளுள்ள நோடுதற் சொல்லைப் பார்த்தல் என்னும் பொதுப் பொருளிற் கன்னடத்தில் திரிப்பதும், புதுப்பெருக்கு நீர் என்னும் சிறப்புப் பொருளுள்ள வெள்ளம் என்னும் சொல்லை நீர் என்னும் பொதுப் பொருளில் மலையாளத்தில் திரிப்பதும், பொருட்டிரிபான கொடுந்தமிழாம். இக்காலத்துப் பேராசிரியர் சிலர் உலக வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும் வேறுபாடறியாது, வச்சிருக்கோம் (வைத்திருக்கிறோம்) என்பதை உலகவழக்காகக் கொள்வர். நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். (தொல். 1589) வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான (தொல்.1592) என்பவற்றைக் கண்டும் அவர் உணர்வதில்லை. பொதுமக்களுள் ஒரு சாராரான கீழ்மக்கள் பேச்சையுந் தழுவவேண்டு மெனின், அவர் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டியதாகும். இது உயர்ந்தோர்க் குடம் பாடன்று. செய்யுள் வழக்கிற்கும் உலக வழக்கிற்கும் சிறிது வேறுபாடிருப்பினும், இரண்டும் செந்தமிழ் வழக்கேயென்றும், செம்மை தமிழின் உயிர்நாடிப் பண்பென்றும், தமிழுக்கு வழுநிலை யானவை திரவிட மொழிகட்கு வழாநிலை யாகுமென்றும், அத னாலேயே அவை தனிமொழிகளாக வழங்குகின்றனவென்றும் அறிதல் வேண்டும். மரபு எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே. (நன்.388) இளமை, ஆண்பால், பெண்பால், விலங்குக் காவலர், உறுப்புகள், வினைகள், கழிபொருள் முதலிய பல்வகைப் பொருளும் பற்றி, பண்டை மேன்மக்கள் எச் சொற்களை வழங்கினரோ அச் சொற்களையே வழங்குதல் மரபாம். எ-டு: இளமை மாந்தன் மகவு (குழவி, சேய், பிள்ளை), ஆட்டுக்குட்டி, மாட்டுக் கன்று, எருமைக்கன்று, நாய்க்குட்டி (குருளை), பூனைக்குட்டி (பிள்ளை), கழுதைக்குட்டி, குதிரைக் குட்டி, ஒட்டகக் கன்று, கீரிப்பிள்ளை, நாவிப்பிள்ளை, அணிற்பிள்ளை, யானைக் கன்று (கயந்தலை, முனி, களவம், குட்டி), யாளியணங்கு, புலிக்குருளை, அரிமாக்குருளை, ஓநாய்க்குருளை, கரடிக்குட்டி (குருளை), நரிக்குருளை, குரங்குக்குட்டி (குழவி, பார்ப்பு, பறழ், மகவு), மான்குட்டி (கன்று), காசறைக்கரு, வெருகுப்பிள்ளை, எலிக்குட்டி (குஞ்சு), தேட்குஞ்சு, பாம்புக்குட்டி. ஆமைப் பார்ப்பு (குட்டி),நண்டுக் குஞ்சு (பார்ப்பு), மீன் குஞ்சு, கெண்டைக் கசளி, அயிரைப் பொடி, முதலைக்கன்று. பறவைக் குஞ்சு (பார்ப்பு), கோழிக்குஞ்சு, காக்கைக் குஞ்சு, கீரிப்பிள்ளை, கொக்குப்பிள்ளை, வண்டுப்பார்ப்பு, புழுப்பார்ப்பு, பேன்செள், வேப்பங்கன்று, வாழைக்கன்று (கருந்து), தென்னம் பிள்ளை, பனைமடலி (வடலி), நெல்நாற்று. ஆடு, மான், கழுதை, குதிரை ஆகியவற்றின் இளமைப் பெயர் மறியென்று செய்யுள் வழக்கில் வழங்கினும், உலக வழக்கில் அச் சொல் அவற்றின் பெண்பாற் பெயராகவே வழங்கிவருகின்றது. x.neh.E. mare, oe. mere (பெண்குதிரை). சிறுமியைக் குட்டி யென்பதும், கடைச்சனை அல்லது கடைப் பிள்ளையைக் கடைக்குட்டி யென்பதும் இழிவழக்காம். ஊண்வினைகள் உறிதல், - நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும் உறிஞ்சுதல் காற்றால் வாய்க்குள் இழுத்தல். குடித்தல் - நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல். பருகுதல் - நீர்க்கலத்திற் பற்படக் குடித்தல். அருந்துதல் - சிறிது சிறிதாகக் குடித்தல். மண்டுதல் - மண்டியுட்படக் குடித்தல். மாந்துதல் - பேரளவாகக் குடித்தல். சப்புதல் - ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி, அதன் சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல்; அல்லது அப் பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல். சுவைத்தல் - ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல். சவைத்தல் - மெல்லிய பொருளை மெல்லுதல், குழந்தை தாய்ப்பாலைச் சப்புதல். சூம்புதல் - தித்திப்புக் குச்சும் மூளையெலும்பும் விரலும் சூப்புதல் போன்றவற்றை வாயிலிட்டுச் சப்புதல். தின்னுதல் - பழமும் பலகாரமும் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல். உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல். சாப்பிடுதல் - குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த சோற்றைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி) உட்கொள்ளுதல். மடுத்தல், - கம்பங்கஞ்சியும் கேழ்வரகு கூழும் போன்ற வாய்மடுத்தல் வற்றைக் கட்டிகட்டியாகக் கூட்டில் தொட்டுண்ணுதல், கவளங் கவளமாகப்பிறர் ஊட்டுதல். அசைத்தல், - விலங்கு அசையிடுவதுபோல் அலகை யசைத்து அசைவுசெய்தல் மென்று உட்கொள்ளுதல். அயிலுதல் - குழந்தை அளைந்து சோறுண்ணுதல். அயில்-அயின்-அயினி = உணவு. தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே (புறம்.77) அள்ளல் = நெருக்கம், குழைந்த சேறு. அள்-(அய்)-அயில். அளிதல் = கலத்தல்,குழைதல். அள்-அளாவு. அள்-அளை. சிறுகை யளாவிய கூழ் (குறள். 64) ..................................ï‹doáš புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர். (நள.கலிதொ.68) ஒ.நோ:பள்-(பய்) - பயில். பயிலுதல் = பழகுதல். கப்புதல் - மொக்கி விரைந்து உட்கொள்ளுதல். மொக்குதல் - வாய் நிறையக் கொண்டு மெல்லுதல். கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக னடிபேணி. (திருப்பு.விநாயக.1) மிசைதல் - விருந்தினரை யுண்பித்து மிஞ்சியதை யுண்ணுதல். வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (குறள். 85) மொசித்தல் = பலர் கூடி யுண்ணுதல். விழவின் றாயினும் படுபதம் பிழையாது மையூன் மொசித்த வொக்கலொடு. (புறம்.96) மொய்கொண் மாக்கள் மொசிக்கவூண் சுரந்தனள்" (மணிமே.19:136) மொய்த்தல் = திரளுதல். மொய்-மொயி-மொசி. மொசிதல் = மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற். 71:6) ஆர்தல் - வயிறு நிரம்ப வுண்ணுதல். விழுங்குதல் - மெல்லாதும் சுவை பாராதும் ஒரே தடவையில் விரைந்து வாய்வழி வயிற்றிற்குள் இடுதல். உட்கொள்ளுதல்-எவ்வகையிலேனும் வயிறு சேர்ப்பித்தல். இது எல்லா ஊண்வினைகட்கும் பொதுவாம். கடைக்கழகக் காலத்தில் புலவர் பலர் மரபும் (idiom) தகுதியும் (propriety) போற்றாமையால், பல சொற்கள் தம் சிறப்புப் பொருளை இழந்துவிட்டன. இன்று, குளம்பி(காப்பி)சாப்பிடுதல், சுருட்டுக் குடித்தல், கொசுவலை, தேட்கடி என்பன மரபுவழுவாம். இவை குளம்பி குடித்தல், சுருட்டுப் பிடித்தல் அல்லது புகைத்தல், உலங்கு வலை அல்லது நுளம்புவலை, தேட்கொட்டு என்றிருத்தல் வேண்டும். சம்பளத்தை (salary) ஊதியம் (profit, gain) என்பதும் வழுவாம். இலக்கணப் புலமை நிரம்பாதவர் நூலாசிரியரும் பொத்தக ஆசிரியரும் ஆவதனாலும் மரபு கெடுகின்றது. தூய்மை செம்மை போன்றே தூய்மையும் தமிழின் உயிர்நாடிப் பண்பாம். வெளிநாடுகளினின்று வந்த பொருள்கட்கெல்லாம், அவற்றின் சிறப்பியல்பு நோக்கி உடனுடன் தமிழ்ப்பெயர்கள் இடப்பட்டன. எ-டு: அடைக்காய்(பாக்கு), அண்டிமா (முந்திரி - cashew), உருளைக்கிழங்கு, ஒட்டகம், கரும்பு, கழுதை, குச்சுக்கிழங்கு (ஆழ்வள்ளிக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கொம்புக் கிழங்கு, சவரிக் கட்டை, மரவள்ளிக்கிழங்கு), குதிரை, செந்தாழை (pineapple), புகையிலை, புகைவண்டி, பேரீந்து, மிதிவண்டி, மிளகாய், முந்திரி (கொடிமுந்திரி - grape), வான்கோழி. காள் காள் என்று கத்துவது கழுதை. தமிழின் இயல்பை அறியாதார் சிலர், குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த அவ்வழக் குண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே (தொல்.1568) என்பதைப் பிறழவுணர்ந்து, தமிழில் வரைதுறையின்றிப் பிற மொழிச் சொற்களை வழங்கத் தொல்காப்பியம் இடந்தந்து விட்டதாகக் கூறுவர். இந் நூற்பாவிலுள்ள சொற்களெல்லாம் தூய தமிழ்ச் சொற்களே யென்பதையும், அவற்றுட் சில சிறிதே பொருள் திரிந்தவை யென்பதையும் அவர் அறிந்திலர். கடுவன் என்பது கணவன் என்பதன் திரிபு. கணவன் என்னுஞ் சொல் அஃறிணையிலும் வழங்கும். வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது (குறுந்.151) என்பதை நோக்குக. கோட்டான் மரக்கொம்பில் அல்லது பொந்தில் வாழ்வது. தத்தை இலைகளிலும் ஓலைகளிலும் தொத்தி நிற்பது. தொத்து-தொத்தை-தத்தை. தொத்தை-தோத்தா (இந்தி). பூசை என்பது வீட்டுப் பூனையின் பெயர். சேவல் என்பது பறவை யாணின் பெயர். சே என்பது விலங்காணின் பெயர். எ-டு: சேங்கன்று = ஆண்கன்று. சே-சேவு-சேவல். ஏனம் என்பது கரியது என்னும் பொருளுள்ளது. ஏனல் = கருந்தினை. ஏனை-யானை. கண்டி = கடியது (கடுமையானது). சேவும்சேவலும்இரலையும்கலையும் ........................................................ போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப 1501 என்று முன்னரே நூற்பாவில் சேவல், கண்டி, கடுவன் என்னும் முச்சொற்களை ஆண்பாற் பெயராகத் தொல்காப்பியங் குறித் திருத்தல் காண்க. ஆயினும், தொல்காப்பியர்க்கு இருபது நூற்றாண்டுகட்குப் பிற்பட்டுத் தோன்றிய நன்னூலார், தமிழின் தூய்மையைக் காவாது, எல்லா வடசொற்களையும் தமிழில் வழங்க இடந்தந்தது போன்றே, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே (நன்.462) என்று வழுப்படக் கூறிவிட்டார். இது தழுவத் தக்கதன்று. சுருக்கம் சுருங்கச் சொல்லல் ஒரு பண்பாட்டுக் கூறாகப் பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டது. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (குறள். 196) பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற áலசொல்லல்nதற்றாjவர்(Fறள்.946) என்றார் திருவள்ளுவர். ஒருவன் கூலக்கடைக்குச் சென்று, கடைகாரனிடம் பாசிப்பயறு (பச்சைப்பயறு) உள்ளதா என்று வினவின், கடைகாரன் அஃதில்லா விடத்து, உழுந்தல்லதில்லையென்று தன்னிடமுள்ள வேறொரு பயற்றை அல்லது சரக்கைப்பற்றிச் சொல்லவேண்டு மென்றும், வினவிய பொருள்மட்டுமே யிருக்குமாயின், அதை இப் பயறல்ல தில்லையென்று சுட்டிக் கூற வேண்டுமென்றும், இங்ஙனங் கூறின் மேற்கொண்டு பல வினாக்களும் விடைகளும் வீணாக எழாவாறு தடுக்குமென்றும், பண்டையிலக்கண நூலார் வணிகர்க்குச் சொன்னது, மற்றெல்லாத் தொழிலாளர்க்கும் பொருந்தும் பொது வாய்பாடாகும். எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். (சொல்.35.36) என்பன தொல்காப்பியம். தெளிவு சுருங்கச் சொல்லல் சிறந்த பண்பாயினும், விளக்கமின்றிச் சொல்வது பயன்படாது குற்றமாகுமாதலின், மாப்பூத்தது என்று பலபொரு ளொருசொல்லின் சிறப்புவினை குறியாது,மா வீழ்ந்தது என்று பொதுவினை குறிப்பது கூடாதென்றும், அதை மாமரம் வீழ்ந்தது, விலங்குமா வீழ்ந்தது என்று தெளிவுபடுத்திக் கூறவேண்டுமென்றும்; ஒரு பொருளின் இயற்கைக்கு மாறான இயலையும் செயலையுங் கூறும்போது, அதற்குக் கரணியத்தையும் குறிப்பாகவோ வெளிப்படை யாகவோ குறித்தல் வேண்டுமென்றும் தொன்னூலாசிரியர் நெறியிட்டுள்ளனர். ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும் குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி (சொல்.54,55) என்பன தொல்காப்பியம். இலக்கியம் இசை, நாடகம், கணிதம், கணியம், ஏரணம், மந்திரம், மறை, பட்டாங்கு, மடை, மருத்துவம், அறம், அரசியல், மல், போர், நிலம், நீர் முதலிய பல்வேறு நூல்கள்பற்றிய சிறப்பிலக்கியமும்; அறுவகைப் பாவான தனிநிலைச் செய்யுளும், எண்வகை வனப்பான தொடர்நிலைச் செய்யுளும் ஆகிய பொதுவிலக்கியமும்; மூலமும் உரையும் செய்யுளாகவே யிருந்தன. இங்ஙனம் வேறெம்மொழியிலும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (1336) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. இலக்கியம் முழுதும் செய்யுளாகவே இருந்ததனால், இலக்கிய வழக்கு செய்யுள் வழக்கெனப்பட்டது. எல்லாப் புலவரும் பாவலரா யிருந்ததனால், பாவலர் எனப்படாது புலவர் என்றே பெயர் பெற்றனர். அவர் இக் காலத்துப் பாவலர் போல், ஏடும் எழுது கோலும் எடுத்து ஓரிடத் தமர்ந்து எண்ணியெண்ணி அடித்துந் திருத்தியும் செய்யு ளியற்றாது, உரைநடையிற் பேசுவதுபோல், எங்கும் என்றும் எப்பொருளும்பற்றிக் கடுத்துப் பாடியவராவர். ஆசிரியரும் அறிவுறுத்துவோரும் கணியரும் ஆகிய கல்வித் தொழிலாளர் மட்டுமன்றி உழவர், வணிகர், மருத்துவர், கொல்லர் முதலிய பல்வகைப் பிற தொழிலாளரும், குறிஞ்சிநிலத்துக் குறவரும், பாலைநிலத்துக் கள்ளர் மறவரும், முல்லைநிலத்து ஆயரும், நெய்தல்நிலத்துப் பரவரும் ஆகியவருள்ளும் சிலர் பாவலரா யிருந்தனர். அதனாலேயே, தலைக்கழகத்துப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் உள்ளிட்டு, நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினர். இலக்கணம் தமிழில் இலக்கண முதனூல் இயற்றியவர், முற்றத் துறந்து முழுமுனிவரான ஒரு மெய்ப்பொருளறிஞர். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும். (தொல்.1594) முனைதல் = வெறுத்தல். முனை - முனைவு - முனைவன். முனிதல் = வெறுத்தல். முனி - முனிவு - முனிவன் - உலகை வெறுத்துப் பற்றைத் துறந்தவன். எழுத்து முதனூலாசிரியர் ஒரு சிறந்த மெய்ப்பொருளறிஞரா யிருந்த தனாலேயே, உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் (உயிரியும்) போன்று எழுத்தொலிகள் மூவகைப்பட்டிருத்தலைக் கண்டு, முப்பொருட் பெயர்களையே எழுத்தொலிகட்கும் உவமையாகுபெயராக இட்டிருக்கின்றார். தானாக இயங்கும் உயிரைப் போன்று தானாக வொலிக்கும் உயிரெழுத்தும்; உயிரின் சேர்க்கையின்றித் தானாக வொலிக்காத மெய்யெழுத்தும்; உயிரொடு சேர்ந்த வுடம்பு அதனால் இயக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய் போன்று, உயிரெழுத்தொடு சேர்ந்த மெய்யெழுத்து ஒலிக்கப்பட்டு அதனொடு ஒன்றி அதனினும் முற்பட்டுத் தோன்றும் உயிர்மெய்யெழுத்தும் இருத்தலைக் காண்க. உயிர்மெய் உயிரையுடைய மெய். பிராணி என்னும் வடசொல் வழக்கினால், உயிர்மெய் என்னுஞ் சொல்லின் பொருள் மறைந்தது. ஒலியின் நிலைமையையே உருவத்திலுங் காட்டுவதற்கு, உயிர்மெய்க்கு மெய்யுருவமும் உயிர்க்குறியுஞ் சேர்ந்த தனிவடி வமைத்தார். இவ் வமைப்பு முதன்முதல் தமிழிலேயே ஏற்பட்டது. உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதிக்கு நெடுங்கணக்கு என்றும் பெயர். இவை உறவுக் குறியீடுகளாதலால் (Relative Terms), ஒருங்கே தோன்றினவை யாகும். மேலைநாடுகள் உட்படப் பிறநாட்டு வண்ணமாலைக ளெல்லாம் (Alphabets) குறுங்கணக்கே. சப்பானிலும் எத்தியோப்பி யாவிலும் உள்ள அசையெழுத்துகளும் (Syllabaries), மெய்யின்மையால் நெடுங் கணக்காகா. மேனாட்டுக் குறுங்கணக்கெல்லாம் ஒழுங்கின்றி உயிரும் மெய்யுங் கலந்திருப்பதால், தமிழ்க் குறுங்கணக்குப்போல் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட முறையைக் (order) காட்டுவதில்லை. சொல்லின் மூவிடத்திலும் எந்த எழுத்தும் வரலாமாதலால், முதனிலை இடைநிலை இறுதிநிலை என்னும் இடவரம்பும் மேலை மொழி யெழுத்துகட் கில்லை. சொற்கள் நீண்டகாலமாக மேன்மேலுந் திரிந்து திரிந்து உருமாறி, துருப்பிடித்த இருப்புக் கருவிகள்போல் உறுப்புப் பிரிக்கமுடியா திருப்பதால், பகுசொல் லமைப்பும் சொற்புணர்ச்சியும் ஆகிய எழுத்தின் புறத்திலக் கணங்களும் பெரும்பாலும் மேலை மொழிகட் கில்லை. ஆகவே, பத்துவகை யகமும் இருவகைப் புறமும் ஆகிய பன்னீரெழுத் திலக்கணங்களும் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே. எழுத்திலக் கணமே யீரா றவைதாம் எண்பெயர் முறைபிறப் புருவம் அளவே முதலீ றிடைநிலை போலி யகமாம் கிளவியும் புணர்ச்சியுங் கிளப்பின் புறமாம். மாத்திரை என்பதும் தென்சொல்லே. அது இன்று இருமொழிப் பொதுவாய் மயக்கத்திற் கிடமாயிருத்தலின், அளவு என்னும் ஐயுறவற்ற தென்சொல் இங்கு ஆளப்பட்டது. குமரிநாட்டார் பொதுவாக எஃகு செவியராயிருந்தமையின், கண்ணிமையளவான ஒரு மாத்திரையின் அரையளவொடு காலளவையும் எழுத்தொலி களிற் கண்டறிந்தனர். தமிழில் எழுத்துத் தோன்றிய காலம் கி.மு. 10,000. வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குட் புகுந்த காலம் கி.மு. 1500. அவருக்கு எழுத்தில்லை. அவர் வேதம் நீண்ட காலமாக எழுதாக் கிளவியாகவே யிருந்தது. தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின், தமிழெழுத்தைப் பின்பற்றிக் கிரந்த எழுத்தை அமைத்துக் கொண்டனர். அதன்பின், கிரந்த எழுத்தை அடிப்படையாகக் கொண்டு, வடநாட்டில், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் 11ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், தேவநாகரி தோன்றிற்று. தமிழ் நெடுங்கணக்கையும் எழுத்திலக் கணத்தையும் தழுவி, எழுத்து முறையும் உயிர்மெய்த் தனிவடிவும் சொற்புணர்ச்சியும், முதற்கண் சமற்கிருதத்திலும் பின்னர் ஏனை யிந்திய மொழிகளிலும் ஏற்பட்டன. கால்டுவெலார் தமிழ் அல்லது தமிழர் வரலாற்றை அறியாமையால், தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத வண்ண மாலையைத் தழுவியதென்று தவறாகக் கூறிவிட்டார். கி.மு.3ஆம் நூற்றாண்டில், அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்து, தமிழகத்துப் புகுந்தது. அதனின்றே வட்டெழுத்துத் தோன்றிற்று. ஆரியர் தம் தமிழொழிப்புத் திட்டத்தை அடிப்படை யினின்று தொடங்கியதால், மூவேந்தரும் ஆரிய அடிமையராய்ப் போன பிற்காலத்தில், தமிழ்நாட்டுக் கல்வெட்டில் வட்டெழுத்துப் புகுந்திருக்கின்றது. தமிழுக்கும் வட்டெழுத்திற்கும் யாதொரு தொடர்பு மில்லை. இன்றுள்ள தமிழெழுத்துத் தொன்றுதொட்டு வருவதே. தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி (நன்.98) என்று 13ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் கூறுதல் காண்க. எகர ஒகரமெய் புள்ளி நீங்கியதும், ஏகார ஓகாரமெய் இரட்டைச்சுழிக் கொம்பு பெற்றதும், ஏகாரவுயிர் கீழிழுப்புக் கொண்டதுமே பிற்காலத்து வேறுபாடாம். 1968-ல் சென்னையில், வையாபுரிகள் குழுச்சார்பாக நடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டில், ஒரு தமிழ்ப் பகைவர், தமிழெழுத்து அசோகன் கல்வெட்டுப் பிராமி லிபியினின்று தோன்றியதென்று கட்டுரை படித்துவிட்டதனாற் கலங்கற்க. இலக்கணத்தின் முந்தியது இலக்கியம்; இலக்கியத்தின் முந்தியது எழுத்து; எழுத்தின் முந்தியது மொழி. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்றும், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் அதுவேயென்றும், மொழியாராய்ச்சி முரசறைந்து முழக்குகின்றது. சொல் சொற்களை முதனிலை, ஈறு, புணர்ச்சி, சாரியை, இடைநிலை, திரிபு என்னும் ஆறுறுப்பாகப் பகுத்தும்; இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என மூவகையாக வகுத்தும் மொழிநூற்கு அடிகோலியது தமிழே. பொருள் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்தமையால், சொல்லிலக்கணத்தை யடுத்துச் சொற்றொட ரிலக்கணத்தைக் கூறாவிடினும், செய்யுளிலக்கணத்தைக் கூறி அதன்பின் பொரு ளிலக்கணத்தைக் கூறியிருக்கலாம். ஆயின், முதனூலாசிரியர் மெய்ப் பொருளறிஞரா யிருந்ததனால், மொழிநடை எதுவாயினும் பொருளே அதன் உள்ளீடென்றும், தனிச்சொற்கும் பொருளுண் டென்றும் கண்டு, அதனையே சொல்லிற்கடுத்துக் கூறியதோடு, அதற்கே சிறப்புக் கொடுத்துச் செய்யுளை அதனுள்ளடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப் பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கண நூலின் முடிமணியாக்கினார். திருக்கோவிலின் முகமண்டபமும் இடைமண்டபமும் உண்ணாழிகையும் போல, எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றனொன்று சிறந்தன வாகும். பிற்காலத்துப் பாண்டியனொருவன், எழுத்ததிகாரமும் சொல்ல திகாரமும் வல்லாரைமட்டும் தலைப்பட்டுப் பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்படாதபோது, புடைபடக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம் என்று வருந்தியதாக, இறையனா ரகப்பொருளுரை கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது. இதனால், தமிழன் பெருமையையும் தமிழின் பெருமையையும் ஒருங்கே உணரலாம். ஏனை மொழி யிலக்கண நூலாரெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நாலொடு நின்றுவிட, தமிழிலக்கண நூலார் மட்டும் யாப்பின் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தது, குமரிநாட்டுத் தமிழரின் ஒப்புயர்வற்ற அகக்கரண வளர்ச்சியைக் காட்டும். பொருளிலக்கணம் போலப் பண்டைத் தமிழனின் புலமை நுணுக்கத்தைக் காட்டும் சான்று வேறெதுவுமில்லை. எல்லாப் பொருள்களையும் அகம், புறம் என இரண்டாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் எவ்வேழு திணையாக வகுத்திருக்கின்றார் முதனூலார். கூலிக்காரன் முதல் கோமகன்வரை எந்நிலையராயினும் எத்தொழிலராயினும், மக்களையெல்லாம் ஆண்டு நடத்தும் குணம் இரண்டு. அவை காதலும் மறமும். மக்களெல்லாரும் ஆடவரும் பெண்டிருமாகப் படைக்கப்பட்டிருப்பதால், காதல் வாழ்க்கை மாபெரும்பாலர்க்கு இன்றியமையாததாகும். பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லையாதலால், ஒரு தொழிலை மேற்கொள்வது எல்லார்க்கும் இன்றியமையாதது. எத் தொழிலிலும் போட்டி தொன்றுதொட்டுச் சிற்றளவாகவோ பேரளவாகவோ இருந்தே வந்திருக்கின்றது. எதிரிகளை வென்று வாழ்க்கையைத் திறம்பட நடத்த மறமும் இன்றியமையாதது. இனி, ஒரே பெண்ணைப் பலர் மணக்க விரும்பும்போது, காதலிலேயே மறமுங் கலக்கின்றது. இவ்விரு குணங்களுள்ளும் அல்லது குணவாழ்க்கையுள்ளும், உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். இங்ஙனம் இரண்டையும் வேறுபடுத்திக் கூறினும், அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது, அகங்கையும் புறங்கையும்போல ஒன்றியே நிற்கும். தமிழனுக்குத் தமிழ் அகம்; திரவிடம் அகப்புறம்; ஆரியம் புறம்; சேமியம் புறப்புறம். இவ்வகைக் கூற்றினின்று, அகம் புறம் என்னும் சொற்களின் பொருளை ஒருவாறுணரலாம். அரசன் எல்லார்க்குந் தலைமையாகவும் பொதுவாகவும் எல்லாரையுந் தன்னுளடக்கியும் நிற்பதால், அரசனுக்குச் சொன்னது அனைவர்க்குஞ் சொன்னதாகு மென்றும், காதல் வாழ்க்கையிலும் மறவாழ்க்கையிலும் தலைசிறந்த நுகர்ச்சியும் பட்டறிவும் அரசனுக்கே யுண்டென்றுங் கண்டு, ஓர் இளவரசனையே காதலனாகவும் ஓர் இளவரசியையே காதலியாகவுங் கொண்டு, அகப்பொருளிலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இது புலனெறி வழக்கம் எனத் தமிழுக்கே சிறந்த மரபாகும். ஆயினும், இது நாடக வழக்கமும் உலகியல் வழக்கமும் கலந்ததாதலால், சிறுபான்மை பொதுமக்கள் காதல் வாழ்க்கையும் ஆங்காங்குக் கூறப்பெறும். அகப்பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, கைக்கிளை (ஒருதலைக் காமம்), ஐந்திணை (இருதலைக் காமம்), பெருந்திணை (பொருந்தாக் காமம்) என மூவகையாக வகுக்கப் பட்டுள்ளது. அவற்றுள், எல்லாவகையிலும் நல்லதென ஒப்புக் கொள்ளப்பட்ட இருதலைக் காமம் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐந்து உரிப்பொருளாகப் பிரிக்கப் பட்டும்; அவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நிலங்கட்கு உரிமையாக்கப்பட்டும் உள்ளன. இப் பிரிப்பும் நிலவுரிமைப்படுத்தமும், முதனூலாசிரியரின் நெடுங்காலக் கூர்ங் கவனிப்பையும் நுண்மாண் நுழைபுலத்தையும் தெற்றெனக் காட்டுகின்றன. இதனை என் `bghUËy¡fz kh©ò' என்னும் நூலில் விளக்கிக் காட்டுவேன். ஐந்திணைப்பெயர் மூலம் குறிஞ்சி குறி = அடையாளம், காலம், அளவு, தடவை. குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்கால அளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச் செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்த இடமும், மலைநாடு. ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி. கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள், பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலை யிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந் தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டு வந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும் இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும். ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சி வகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும் காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர். குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம். முல்லை முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள் நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி. முல் - முள் = 1. கூர்மை. முள்வாய்ச் சங்கம் (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணை யுறுப்பு. இளைதாக முண்மரங் கொல்க (குறள். 879 ).3. ஊசி. 4. பலாக்காய் முனை. முள் - முளை = கூரிய முனை. முள்ளுறழ் முளையெயிற்று (கலித்.4 ) முல் - முல்லை = கூரிய அரும்புவகை, அஃதுள்ள கொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்த இடமும். முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு (அகம். 4:1). என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல் காண்க. வை = கூர்மை. பாலை பால் - பாலை = இலையிற் பாலுள்ள செடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணை யினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும் நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில் தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும் வன்னிலம். பகல் (பகுப்பு) என்னும் சொல்லின் மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும், பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும் தொடர்பில்லை. மருதம் மல் = வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ.178) மல் - மல்லல் = 1. வளம் .மல்லல் வளனே. (தொல்.788 ) . 2. அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு (சூடா.). மல் - மல்லை = வளம். மல்லைப் பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா.8). மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும் பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்க நிலத்தில் வளரும் மரம். ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது = வெற்றிச் சின்னம். பருதி.....ÉUJ மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை.5) மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருத மரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும்,நீர்வளமு«நிலவளமு«மிக்fஅகநாடு. அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி மருது தொகல்கொள வோங்கி (அகம். 97) வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரின்" (புறம்.52) பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.(òw«.351) மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறை (ஐங்.33) கரைசேர் மருத மேவி" (ஐங்.74) திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை" (கலித்.27) மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு (பதிற்.23) வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை (சிலப்.14:72) ......................................................fhÉÇ¥ பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த (குறுந்.258) இம் மேற்கோள்களிலெல்லாம், மருதமரம் ஆற்றையும் பொய் கையையும் வயலையுமே அடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. நெய்தல் நள்ளுதல் = 1. அடைதல். உயர்ந்தோர் தமைநள்ளி (திருவானைக். கோச்செங்.25). 2. செறிதல். நள்ளிருள் யாமத்து (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல். 4.நட்புச்செய்தல். நாடாது நட்டலின் கேடில்லை (குறள்.761) நள்ளார் = பகைவர். நள் - நண். நண்ணுதல் = 1. கிட்டுதல். நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது (திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல். நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர். நண்ணாரும் உட்குமென் பீடு (குறள்.1088) நள் - நளி. நளிதல் = 1. செறிதல். நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் (மலைபடு.197). 2. ஒத்தல். நாட நளிய நடுங்க நந்த (தொல்.1232) நள் - நெள் - நெய். நெய்தல் = 1. தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா.19:80). 2. ஆடை பின்னுதல். நெய்யு நுண்ணூல் (சீவக.3019). 3.ஒட்டுதல். நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கின வெண்ணெய். நீர்நாண நெய்வழங்கியும் (புறம்.166:21).2. வெண்ணெய். நெய்குடை தயிரி னுரையொடும் (பரிபா.16:3).3. எண்ணெய். நெய்யணி மயக்கம் (தொல். பொருள்.146).4.புனுகுநெய். மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப (சிலப்.4:56). 5. தேன். நெய்க்கண் ணிறாஅல் (கலித்.42). 6.அரத்தம். நெய்யரி மற்றிய நீரெலாம் (நீர்நிறக்.51).7.கொழுப்பு. நெய்யுண்டு (கல்லா.71).8. நேயம், நட்பு. நெய்பொதி நெஞ்சின் மன்னர் (சீவக.3049). நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.). 2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. நேயத்த தாய் நென்ன லென்னைப் புணர்ந்து (திருக்கோ.39). 4.தெய்வப் பற்று. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச.1:13) நேயம் - நேசம் = 1. அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச.9:4 ) .2. ஆர்வம். வரும்பொரு ளுணரு நேசம் (இரகு. இரகுவு.38). நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்பு வைத்தல். நேசிக்குஞ் சிந்தை (தாயு. உடல்பொய்.32).2. மிக விரும்புதல். நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர.13). நெய் - நெய்தல் = நீர் வற்றிய காலத்திலும் குளத்துடன் ஒட்டி யிருக்கும் செடிவகை, அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும். அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு (மூதுரை,17) என்பதை நோக்குக. பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள் பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியே ஏற்பட்டன. எ-டு : ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு, பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம். நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு, ஏழ்குறும்பனை நாடு. பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு, இலவந்தீவு, தெங்கந்தீவு. ஒவ்வொரு பெருந்தீவும் பொழில் (சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால், உலகமும் பொழிலெனப்பட்டது. ஏழுடையான் பொழில் (திருக்கோ.7) குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணை நிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரிய கருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றிய நிலைமை யையும், உரிப்பொருள் என்னும் புணர்தல் இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும், இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே, பாலை நின்ற பாலை நெடுவழி (சிறுபாண்.11) முல்லை சான்ற முல்லையம் புறவின் (சிறுபாண்.169) மருதஞ் சான்ற மருதத் தண்பணை (சிறுபாண்.186) என்னும் அடிகளில், முன்னிற்கும் திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர் களாய் அமைவதும் இம் முறையிலேயே. மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படை யடிகட்கு, பாலைத் தன்மை நிலைபெற்றமையாற் பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி; பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல் மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவதொரு காலம் என்றும்; கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்த அழகினை யுடைய காட்டிடத்து என்றும்; ஊடியுங் கூடியும் போகநுகருந் தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலிடத்து என்றும்; நச்சினார்க்கினியர் உரை கூறியிருத்தலைக் காண்க. இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும், ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரிய உரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன. மருதஞ் சான்ற = ஊடலாகிய உரிப்பொருளமைந்த. முல்லை சான்ற = இருத்தலாகிய உரிப்பொருளமைந்த. குறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகிய உரிப்பொருளமைந்த. பாலை சான்ற = பிரிவாகிய உரிப்பொருளமைந்த. நெய்தல் சான்ற = இரங்கலாகிய உரிப்பொருளமைந்த. குறிஞ்சி முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லை என்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பது தொழிலாகு பெயரும் ஆகும். ஐந்தும் முன்பு நிலத்தைக் குறித்துப் பின்பு நிலவொழுக் கத்தைக் குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகு பெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும். இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக் குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங் கொச்சை வழக்குப் போன்றது. நிலவொழுக்கத்தின் பெயரே நிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகை என்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப் பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வ தொத்ததே. காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வ ஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத் தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள் வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படை யொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங் காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம் ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர் (கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம் கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு, இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக் காமப் புணர்ச்சியு மன்று. கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையே பெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச் சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோ ரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும் இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள். காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல் முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவை என்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும் காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்கு நுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப் பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச் செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்கு வழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர் நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தே இறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார். ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே என்னும் மதிப்புரைத் தனிப்பாடலை நோக்குக. திருவள்ளுவரும், நடவாமுறை அறத்தைக் கூறாது நடைமுறை யறத்தையே கூறுவதால், கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புல வின்பமும் ஒருங்கே தரும் ஒண்டொடி, அருள் நிறைந்த இறைவனால் ஆடவனுக்கு அளிக்கப்பெற்ற வாழ்க்கைத்துணை யென்று கண்டு, அவளோடு கூடி அறவழியில் இன்பம் நுகர்ந்து, ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செய்யின், இம்மைச் சிற்றின்பமும் மறுமைப் பேரின்பமும் அடையலாம் என்பதை யுணர்த்தற்கே, இன்பத்துப் பாலை இறுதியிற் கூறினார். இதை யுணராது, துறவறத்தினாலேயே வீடுபேறுண்டாம் என்னும் ஆரியக் கொள்கையை நம்பும் சிற்றறிவாளர், இன்பத்துப்பாலைப் பழிக்கவும் திருவள்ளுவரைக் கண்டிக்கவும் துணிவர். அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் (FwŸ 46) என்னுங் குறளை நோக்குக. இனி, அகப்பொருள் போன்றே புறப்பொருளும் அரசனையே தலைமையாகக் கொண்டு, அவன் மறவாழ்க்கைக்குரிய போர்த் தொழிலை எழுதிணையாக வகுத்துக் கூறுகின்றது. அவற்றுள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கும் போர் வகைகளையும், வாகை போர் வெற்றியையும், காஞ்சி போரால் விளங்கித் தோன்றும் உலகநிலையாமையையும், பாடாண் போர் வெற்றியால் ஏற்படும் புகழையும் பற்றியனவாம். தமிழ்ப் பொருளிலக்கணம் காதலையும் போரையுமேபற்றிக் கூறுவதால், மற்றப் பொருள்களெல்லாம் விடப்பட்டுள்ளன வென்றும், அரசனும் படைமறவருமே போர்புரிவதால் பிறர் தொழில்களை யெல்லாம் அது தழுவவில்லை யென்றும், சிலர் கருதிக் குறைகூறாவாறு, வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் மேற்கொள்ளும் எல்லாத் தொழில் வெற்றிகளும் வாகைத் திணையுள் அடக்கப்படுகின்றன. அது, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் பாலறி மரபின் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையின் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் (1021) என்று தொல்காப்பியமும், பார்ப்பன வாகை, வாணிகவாகை, வேளாண்வாகை, பொருந வாகை, அறிவன்வாகை, தாபத வாகை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, கிணைநிலை என்று வாகைப் படலத்திலும்; மல்வென்றி, உழவன்வென்றி, ஏறுகொள்வென்றி, கோழிவென்றி, தகர்வென்றி, யானைவென்றி, பூழ்வென்றி, சிவல்வென்றி, கிளி வென்றி, பூவைவென்றி, யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல்வென்றி, பாடல் வென்றி என்று ஒழிபிலும், புறப்பொருள் வெண்பா மாலையும் கூறுவ தால் அறியப்படும். சிலர், சிறப்பாக ஆரிய வழியினர், பொருளிலக்கணம் பாட்டியலே (Poetics) யன்றி வேறன்று என்று, அதன் சிறப்பை இறப்பக் குறைத்தும் மறைத்தும் கூறுவர். பிராமணனைத் தலையாக வுயர்த்தியும் தமிழனைக் கடையாகத் தாழ்த்தியும், எழுத்து, சொல், பா, பனுவல் முதலியவற்றிற்கு நால்வகை வரணம் வகுப்பதே பாட்டியல். பொருளிலக்கணமோ, மாந்தன் இதுவரை அறிந்ததும் இனிமேல் அறியப்போவதுமான எல்லாப் பொருள்கட்கும் புலனெறி வழக்கப்படி இலக்கணம் வகுக்கும் ஈடிணையற்ற அறிவியம். காஞ்சித்திணையுள் இளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உடல்நல நிலையாமை ஆகிய பல்வேறு நிலையாமைகளை எடுத்துக் கூறுவதை, மக்களை நன்னெறிப் படுத்தற்கு வாய்ப்பாகக் கொள்வதும், தமிழப் பண்பாட்டுக் கூறாம். மக்களெல்லாரும் இறப்பையும் வாழ்நாட் குறுக்கத்தையும் எண்ணி, சொல்லைச் சுருக்கிச் செயலைப் பெருக்கி, செந்தமிழிற் பேசி, காதல் மனையாளொடு கூடி இன்பம் நுகர்ந்து, இயன்றவரை அறஞ்செய்து, தத்தம் தொழிலில் வெற்றிபெறுமாறு மேன்மேல் திறம் மிகுத்து இறுதியில் இறைவனையடைய வேண்டுமென்பதே முதனூலாசிரியர் நோக்கமாம். செய்யுள் பண்டைய புலவர் உரைநடை, செய்யுள் என்னும் இருவகை நடையுள்ளும் செய்யுள் சிறந்ததென்று கண்டே, உரைகளும் அகரமுதலி போன்ற உரிச்சொற்றொகுதிகளும் உட்பட, எல்லாப் பனுவல்களையும் செய்யுளில் இயற்றினர். இதையறியாது, பண்டைப் புலவர்க்கு உரைநடையில் எழுதத் தெரியாதென்றும், உரைநடை நூலில்லாதது பண்டை யிலக்கியத்திற்கு ஒருபெருங் குறையே யென்றும் கூறுவார் பொரிமாவை மெச்சினானாம் பொக்கை வாயன் என்ற பழமொழிக்கே எடுத்துக்காட்டாவார். நால்வகைப் பாக்கட்குள்,வெண்பாவும் கலிப்பாவும் போன்றவை வேறெம்மொழியினுங் காணமுடியாது. இறைவனை வழுத்துவதற்கும் காதற் செய்தியை வண்ணிப்பதற்கும், ஒத்தாழிசைக் கலிவகை போன்ற யாப்பு வேறொன்றுமில்லை. அணி பொருளை விளக்குவதற்கும் தெரியாத பொருளைத் தெரிவிப் பதற்கும் உவமை இன்றியமையாத தாகையாலும், பெரும்பாலும் எல்லா அணிகட்கும் உவமையே மூலமாதலாலும், செய்யுளியற்று வாரின் திறமைக்குத்தக்கவாறு இயல்பாகவே அணி அமையுமாத லாலும், காலஞ் செல்லச்செல்லப் புதிதுபுதிதாக அணிகள் தோன்றுமாதலாலும், முதனூலாசிரியர் அணிவகையில் விளக்கக் கருதியது உவமை யொன்றே. உவமை எல்லா மொழிகளிலுங் கையாளப்படுமேனும், உள்ளுறையென்னும் உவமைவகை தமிழுக்கே சிறப்பாக வுரியதாம். ஒரு தலைவனைத் தலைவி அல்லது தோழி விளிக்கும் போது, அவன் தன்மை புலப்படுமாறு அவன் நாட்டுக் கருப்பொருளின் செயலை எடுத்துக் கூறுவது உள்ளுறை யுவமமாம். பைந்தலைய நாகப் பணமென்று பூகத்தின் ஐந்தலையின் பாளைதனை யையுற்று - மந்தி தெளியா திருக்குந் திருநாடா வுன்னை ஒளியாது காட்டுன் னுரு. (நள. கலிநீங்.70) இது இருதுபன்னனின் தேரோட்டியாக வந்திருந்த நளனை நோக்கித் தமயந்தியின் தோழி கூறியது. நளன் கார்க்கோடகன் என்னும் பாம்பினாற் கடியுண்டு நிறம் மாறியிருந்ததனால், தெளிவாக அடையாளந் தெரியாது மயங்கி நின்ற தோழி, உன் நாட்டு மந்தி, ஐம்பிரிவான கமுகம் பாளையைப் பார்த்து ஐந்தலை நாகமோ என்று ஐயுற்றுத் தெளியாதிருக்கின்றது என்றது, நானும் உன்னைப் பார்த்து நளனோ வேறொருவரோ என்று மயங்கித் தெளியாதிருக்கின்றேன் என்னும் பொருள்பட நிற்பதால், உள்ளுறை யுவமமாம். இசை தலைக்கழகக் காலத்திலேயே, மிடற்றிசையும் (வாய்ப்பாட்டும்), தோல் துளை நரம்பு உறை (t. கஞ்சம்) என்னும் நால்வகைக் கருவியிசையும் வளர்ச்சி யடைந்திருந்தன. பண் (7 இசை), பண்ணியல் (6 இசை), திறம் (5 இசை), திறத்திறம் (4 இசை) எனப் பண்களை நால்வகையாக வகுத்திருந்தனர். நரப்புக்கருவிகள் முந்தியாழ் (ஆதியாழ், பெருங்கலம், ஆயிர நரம்பு), வில்யாழ் (பல நரம்பு), பேரியாழ் (21 நரம்பு),சுறவியாழ் (மகரயாழ்19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), முண்டகயாழ் (9 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு), சீறியாழ் (4 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) எனப் பலவகைய. ஆயிரம் என்றது பெருந்தொகையை. உறை யென்றது உறையினாலேயே செய்யப்பட்ட தாளக் கருவியை. நரப்புக்கருவி இசைவளர்ச்சியின் உச்சநிலையைக் காட்டும். யாழ்த்தண்டின் கடையில் யாளித்தலை யுருவம் பொருத்தப்பட்ட தனால், நரப்புக்கருவி யாழ் எனப் பெயர் பெற்றது. மடங்கல்(சிங்க) உடம்பும் யானைத்துதிக்கை போன்ற நீண்ட மூக்குங் கொண்ட யாளி என்னும் விலங்கினம், குமரிநாட்டிற்கே யுரியதாகும். யாழிசையின்பத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட அசுணம் என்னும் விலங்கும் குமரிநாட்டிற் குரியதே. அது பறவையோ என்று சிலர் ஐயுறுகின்றனர். ஆயின், அதை அசுணமா என்று சிந்தாமணி கிளந்தே கூறுகின்றது. இன்னளிக் குரல்கேட்ட வசுணமா (சீவக.1602). நற்றிணை அசுணங் கொள்பவர் கைபோல் (304) என்று இனச்சிறப்புப் பெயரையே குறித்திருப்பினும், இசையறி விலங்காகிய அசுண மானை என்று, ஒரு மான்வகையாகவே நாராயணசாமி ஐயர் உரை வரைந்திருக்கின்றார். மானிறைச்சி எல்லாராலும் விரும்பப் படுவதாலும், மான்வேகமாய் ஓடும் விலங்கினமாதலாலும், அசுணம் ஒரு சிறந்த மான்வகையாகவே இருந்திருக்கலாம். யாளிக்கும், வலிமையும் தோற்றப் பொலிவும் மட்டுமன்றி, இசையுணர்ச்சியும் இருந்திருக்கலாம். ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை என்னும் பண்திரிப்பு முறைகள், முறையே, முழுவிசையும் அரையிசையும் காலிசையும் அரைக்காலிசையும் பற்றியவாயின், தமிழிசைக்கு உலகில் இன்றும் இணையில்லை யென்றே சொல்லலாம். நாடகம் இயற்றமிழ்க்குரிய புலனெறி வழக்கத்தில் நாடக வழக்கமும் கலந்திருப்பதனாலும், தலைக்கழகத்து இலக்கணம் மாபிண்ட மென்னும் முத்தமிழிலக்கணமாகவே வழங்கியதாலும், நாடகமும் அக்காலத்து வளர்ச்சியடைந்திருந்தமை அறியப்படும். இசை நாடக விரிவை யெல்லாம், இனி நான் எழுதும் ‘K¤jÄœ’ என்னும் நூலிற் கண்டுகொள்க. கணக்கு குமரிநாட்டு மக்கள் பழங் கற்காலத்திற் பத்து வரையும், புதுக்கற் காலத்தில் நூறு வரையும், பொற்காலத்தில் ஆயிரம் வரையும், செம்புக்காலத்திற் பத்தாயிரம் வரையும், உறைக்காலத்தில் நூறாயிரம் வரையும், இரும்புக்காலத் தொடக்கத்திற் பத்து நூறாயிரம் என்னும் கோடி வரையும் எண்ணத் தெரிந்திருத்தல் வேண்டும். அதன்பின், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம், பரதம் முதலிய அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்கள் எழுந்தன. பரதம் என்பது, 1-ன்பின் 24 சுன்னங் கொண்டது. தொடக்கத்தில் இருகை விரல்களையும் எண்ணிப் பத்தென்னும் எண்ணைப் பெருந்தொகையாகக் கொண்டதனாலேயே, மேற்பட்ட பிற்காலத்துப் பெருந்தொகைகளை யெல்லாம் முறையே பப்பத்து மடங்கு உயர்ந்தனவாகக் கொண்டிருக்கின்றனர். மேல் வாயிலக்கம் போன்றே கீழ்வாயிலக்கமும் (fractions) நெட்டளவு கண்டனர். முந்திரி 1/320, கீழ் முந்திரி 1/320-ல் 1/320 இரு வாயிலக்கங்கட்கும் சதுர வாய்பாடுகளும் (Square tables) இருந்தன. கீழ்வாய்க்குச் சிறுகுழி; மேல்வாய்க்குப் பெருங்குழி. கோலாரிய மாந்தர் கைவிரல்களோடு கால்விரல்களையுஞ் சேர்த்து எண்ணியதனால், பேரெண்களையெல்லாம் பப்பத்து மடங் காகக் கொள்ளாது இவ்விருபது மடங்காகக் கொண்டிருக்கின்றனர். ஆயின், மேலைநாடுட்பட நாகரிக நாடுகளெல்லாம் தமிழ் முறையையே பின்பற்றி வருவது கவனிக்கத்தக்கது. கணியம் குமரிநாட்டுக் கணிதநூல் வல்லார் கூர்ங்கண்ணராயிருந் தமையின், 27 நாள்களையும் கதிரவனுந் திங்களுமல்லாத ஐங்கோள் களையும் பன்னீ ரோரைகளையும் கண்டுபிடித்தனர். பகலிரவால் நாளையும், வளர்பிறை தேய்பிறையால் மாதத் தையும், இருதிசை இயனத்தால் (அயனத்தால்) ஆண்டையும் அறிந்தனர். எழுகோள்களால் கிழமை (வாரம்) என்னும் எழுநாட் கால அளவும், பன்னீ ரோரைகளாற் பன்னிரு மாதப்பெயரும் ஏற்பட்டன. மாதம் என்பது தென்சொல்லே. மதி = திங்கள், மதி - மாதம் - t. மாஸ. திங்களைக் குறிக்கும் மதி என்னுஞ் சொல் வடமொழியில் இல்லை. ஒ.நோ: moon-month. எழுநாட் கிழமை உலகமெங்கும் தொன்றுதொட்டு வழங்கி வருவது , தமிழ் நாகரிகப் பரவலின் விளைவாகும். விவிலியத்தின் முதற் பொத்தக முதலதிகாரத்திற் கூறப்பட்டுள்ள படைப்பு வரலாற்றில், இறைவனார் அறுநாள் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்றது, தமிழர் வகுத்த கிழமை முறையைத் தழுவியே. ஆரிய மொழிகளில் வழங்கிவரும் பன்னீ ரோரைப் பெயர்களும், தமிழ்ப்பெயர்களின் மொழிபெயர்ப்பே. இளவேனில், முதுவேனில், கார், கூதர், முன்பனி, பின்பனி என்னும் பெரும்பொழுது (ஆண்டின் பகுதிகள்) ஆறற்கும் எதிராக காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை என்னும் சிறுபொழுது (நாளின் பகுதிகள்) ஆறும், இயற்கையாக அமைந்தன. மதம் தலைக்கழகக் காலத்தில், சிவ மதத்திற்கும் திருமால் மதத்திற்கும் பொதுவானதும், ஊர் பேர் குணங்குறியற்று எங்கும் நிறைந்திருக்கும் ஒரு பரம்பொருளை எங்கும் என்றும் உள்ளத்தில் தொழுவதும் ஆன கடவுள் நெறி (சித்த மதம்) என்னும் உயர்நிலை மதம், தமிழத் துறவியரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் விளத்தமும் (விவரமும்), சமயம் மதம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பதும், அடுத்து வெளிவரும் ‘jÄH® kj«’ என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். வடக்கே சென்று திரவிடராகத் திரிந்த குமரிநில மக்களுள் ஒருசாரார், வடமேற்குத் திசையிற் பரவி ஐரோப்பாவிற்குள் புகுந்து ஆரியராக மாறத் தொடங்கியிருத்தல் வேண்டும். முதற் கடல்கோள் அக்காலத்திற் புயலாலும் பாறையாலும் கலச்சேதம் அடிக்கடி நிகழ்ந்ததால், பெருங்கடலைக் கடப்பதும் கடந்தால் மீள்வதும் அரிதாக விருந்தன. நெடியோன் என்னும் பாண்டியன் ஒருவன், கடல் கடந்து கீழ்த்திசை நாடுகட்குச் சென்று, ஏமமாக மீண்டான். கடல் தனக்கு உதவியாக இருந்ததென்று கருதி, தன் நன்றியறிவைக் காட்டும் முகமாகக் கடல் தெய்வத்திற்கு ஒரு விழாக் கொண்டாடினான். அவனையே முந்நீர் விழவின் நெடியோன் (புறம்.9) என்று நெட்டிமையார் குறித்தார். இன்னொரு பாண்டியன், கலப்படையமைத்துக் கீழ்த்திசைத் தீவொன்றிற்குச் சென்று, தான் கடலைக் கடந்துவிட்டமையால் அதை வென்று தனக்கு அடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடையாளமாக, கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் அடிச் சுவடுகளைப் பொறித்து, அவற்றைக் கடல் தன் அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான். அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். கடலுக்கு அஞ்சின நெடியோன் வேறு; அதற்கு மிஞ்சின வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வேறு. இன்னுமொரு பாண்டியன் கடன்மேற் செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல் தலைவனின் வினையாகக் கருதி, அதையடக்க ஒரு வேலை விட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாக அடங்கிற்று. ஆயின், அது வேலெறிந்ததன் விளைவென்றே அப் பாண்டியனும் அவன் உழையரும் கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ என்று அஞ்சியிருத்தல் வேண்டும். சிறிது காலத்தின்பின், அவ் வச்சத்திற் கேற்பவே, பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டது. அது கி.மு.5000 போல் நிகழ்ந்ததாகும். அதனையே, அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப்.11:17-20) என்று இளங்கோவடிகள் கூறுகின்றார். முன்னொரு காலத்துத் தனது பெருமையின தளவை அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல் பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ண தாகிய பஃறுளி யாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக்கண்ணதாகிய கங்கை யாற்றினையும் இமய மலையினையும் கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென்றிசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக. .......flš எறிந்து கொண்ட எல்லையளவும்வடபாšதனதாக்கி,மீண்டு«தென்றிசைaயாண்டவெdஒப்பாக்கYமொன்று. அடியாலுணர்த்தி எறிந்த பகைபொறாது கொள்ளத் தானுங் கொண்டு ஆண்ட தென்னவ னென்க என்று அடியார்க்கு நல்லார் இப் பகுதிக்கு வரைந்துள்ள உரையை நோக்குக. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தியது வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தி. ஈரரசரும் ஒரு குடியினர் என்னுங் கருத்தால், இருவர் செயலும் ஒருவர் செயலாகக் கொள்ளப்பட்டன. தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதற் கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவே பிரிந்து நெடுந்தொலைவு நீங்கிவிட்டன. ஆப்பிரிக்கா பிரிந்ததனால் அரபிக் கடல் தோன்றிற்று. அது வங்கக் கடலினும் முந்தித் தோன்றியதனாலேயே, வாரணன் மேற்றிசைத் தலைவனாகக் கொள்ளப்பட்டான். பழம்பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதி மூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது. கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒரு பெருங்கூட்டத்தார் tடதிசைnநாக்கிச்brன்றிருத்தல்t©Lம்.சிWசிW கூட்டத்தாரும் தனிப் பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறு நாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப் பரப்பியிருக்கின்றனர். பிற்காலத்தில், அந் நாடுகள் ஒவ்வொன்றிலும் கடல்கோள் அல்லது பெரு மழை வெள்ளம் நிகழ்ந்ததாகக் கதை எழுந்திருக்கின்றது. அலோரசு (Alorus) vன்னும்gபிலோனியmரசன்fலத்தில்,ãலித்தியரின்(Philistines) jகோன்(Dagon) bதய்வத்தைப்போல்mரைkந்தனும்mரைமீனுமான(அதாவது,mரைக்கு(இடுப்பிற்கு)nமல்kந்தன்tடிவமும்mதற்குக்கீழ்Ûன்tடிவமுங்bகாண்ட),Xயன்னெசு(Oannes) vன்னும்Xர்cயிரிgரசீகக்Fடாக்கடல்(Persian Gulf) tழியாகtந்து,gபிலோனியருக்குக்fல்விKழுவதையும்eகரிகக்fலைகள்aவற்றையும்f‰ãத்ததாகப்பாãலோனியவரyறுகூறு»ன்றது. அவ் வோயன்னெசு, மேற்கூறிய முதற் கடல்கோட்குப் பின், பாண்டிநாட்டினின்று சென்ற ஒரு தமிழறிஞனாகவே யிருத்தல் வேண்டும். அவனுக்கு அரைமீன் வடிவங் கட்டிக் கூறியதற்கு அவன் கடல் வழியாகச் சென்றதும், பாண்டியனுக்கு மீனக்கொடியும் மீன Kத்திரையும்பற்றிÛdவன்எ‹னும்gயரிருந்தமையுமேகuணியமhகும். தÄH¡ கலவணிகர் மேல்கடற்கரை யோரமாகவே கராச்சி வழியாகச் சென்று, பாரசீகக் குடாக்கடலுள்ளும் செங்கடலுள்ளும் புகுந்து, மேலையாசியாவொடும் vகிபதுeட்டொடும்tணிகஞ்bசய்துtந்ததாகத்bதரிகின்றது.ïuhk¢rªâu தீட்சிதரின் தமிழர் தோற்றமும் பரவலும் என்னும் ஆங்கில நூலைப் பார்க்க. இடைக்கழகம் பாண்டியநாட்டின் பெரும்பகுதி மட்டுமன்றி, பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் மூழ்கவே, பாண்டியர் குடியில் எஞ்சியிருந்தவன் தன் பேரிழப்பை யெண்ணி வருந்தி அதற்கு ஒருவாறு ஈடுசெய்துகொள்வதுபோல், வடக்கிற் சென்று பனிமலைக் குவட்டிலும் கங்கையாற்றங் கரையிலும் தன் கயல் முத்திரையைப் பொறித்து மீண்டான். அன்று அங்கு வல்லரசின்மையாலும் பெரும்பகுதி காடாயிருந்தமையாலும், சிறிதும் அவனுக்கு எதிர்ப்பில்லாது போயிற்று. அரசியல் அக்காலத்தில் விரிவடையா திருந்ததனாலும், வடநாவலப் பகுதி மிகத் தொலைவிலுள்ளமை யாலும் மொழிபெயர் தேய மாகையாலும், அவன் அங்குத் தன் குடியினன் ஒருவனைத் துணையரையனாக இருத்திவிட்டுத் தென்னாட்டிற்கே மீண்டு அதை ஆண்டு வந்தான். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப்.11:19-22) என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. கடல்கோட்குத் தப்பிய குடிகளைக் குடியமர்த்துவதிலும், தலைநக ரமைப்பதிலும், ஆட்சித்துணைவரைத் தேர்ந்தெடுப் பதிலும், படை தொகுப்பதிலும் நீண்ட காலஞ் சென்றதனால், பாண்டியனால் நேரடியாகத் தமிழ்நிலம் முழுவதுங் கவனிக்க முடியவில்லை. நாவலந்தேயப் பகுதிகளையாண்ட இரு துணை யரையரும், அந் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு இரு வேந்தராகப் பிரிந்துபோயினர். கீழ்நாடு நெல்விளைவாற் சோழ நாடென்றும், மேல்நாடு மலைச்சரிவாற் சாரல் நாடென்றும் பெயர் பெற்றிருந்ததனால் கீழைவேந்தன் சோழன் என்றும், மேலைவேந்தன் சேரன் என்றும், ஆள்குடிப் பெயர் பெற்றனர். சொல் = நெல். சொல் - சொன்றி = சோறு. சொல் = (சொறு) - சோறு. சொல் - (சோல்) - (சோள்) - சோழ் - சோழம் - சோழன். ஒ.நோ: கல்(கருமை) - கள் - காள் - காழ் - கருமை. காழ் - காழகம் = கருமை. கில்(தோண்டு) - கீள் - கெள் - கேள்- கேழல் = மண்ணைத் தோண்டும் ஆண்பன்றி. துல்(பொருந்து) - தொள் - தோள் - தோழன். புல்(துளை) - பொல் - பொள் - போழ் = பிளவு, துண்டு, வார். சோழநாடு நெல்வளமும் அதனாற் சோற்றுவளமும் மிக்கிருந்தது. முதன்முதல் இயற்கையாகவும் நெல் அங்கு மிகுதியாக விளைந் திருத்தல் வேண்டும். வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து என்று ஔவையார் ஒருவர் பாடியிருத்தல் காண்க. நெற்பயிர் எங்கும் மிகுதியாக விளைக்கப்படும் இக்காலத்திலும், சோழநாட்டின் கருவகமாகிய தஞ்சை மாவட்டமே தமிழகத்தின் நெற்களஞ்சியமா யிருத்தல் காண்க. இன்று இதற்குக் காவிரியாற்று வளமே அடிப்படைக் கரணியமாகும். சோழனுக்குக் கிள்ளி, சென்னி, வளவன் என்றும் குடிப் பெயருண்டு. குடமலை யென்னும் மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப் புறமாயினும் மேற்புறமாயினும், சேரநாட்டின் பெரும்பகுதி அம் மலையின் அடிவாரச் சரிவே. மலையடிவாரம் சாரல் எனப்படும். சாரல் நாட நடுநாள் (குறுந்.19:5) சாரல் நாட செவ்வியை யாகுமதி (குறுந்.18:2) சாரல் நாட வாரலோ எனவே (குறுந்.141:8) என்பன மலைப்பக்க நாட்டைச் சாரல் நாடு எனக் கூறுதல் காண்க. சாரல் - சேரல் - சேரலன். சேரல் - சேரன். சேரமகன் - சேரமான். சேரல்,சேரலன்,சேரன், சேரமான் என நால்வடிவிலும் சேரன் குடிப்பெயர் வழங்கும். குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு (சிலப்.பதி.1) சேரலர்,சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க (அகம்.149:7-8) குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு (சிலப்.23:62) பான்மை நண்பாற் சேரமான் தோழரென்று பார்பரவும் (பெரியபு.கழறிற்.66) சேரனுக்கு உதியன், குடநாடன், கோதை, பொறையன், மலையன், வானவன், வானவரம்பன், வில்லவன் என்னும் குடிப் பெயர்களு முண்டு. பாண்டியனுக்குப் போன்றே சேரசோழர்க்கும் நாற்படையும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன. மூவேந்தர்க்கும், அரசச் சின்னம் பத்தென்றும் அரசியலுறுப்பு ஏழென்றும் கொள்ளப்பட்டன. முகுடம் (முடி), செங்கோல், மாலை, முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரை என்பன பத்துவகைச் சின்னம். கொடியும் முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள் வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம். நாடு, குடி, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம். நாடில்லாமற் குடியில்லையாதலின், நாட்டைக் குடியுள் அடக்கி, படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையான் அரசருள் ஏறு (குறள்.381) என்றார் திருவள்ளுவர் . ஆயினும், நாடும் ஓர் உறுப்பாம் என்பதை அறிவித்தற்கே, அதை 74ஆம் அதிகாரத் தலைப் பாக்கினார். நாடில் லாமற் குடியில்லை; ஆயின், குடியில்லாமல் நாடுண்டு. அரசனின் சின்னம் (அடையாளம்) வேறு; அரசனின் அரசிய லுறுப்பு வேறு. அரசியலுறுப்பு ஏழும் சேர்ந்து ஓர் உடம்பும், அரசன் அதன் உயிரும் ஆகும். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறம். 186) உறுப்புஞ் சின்னமும் ஒன்றென மயக்கி, பெயர்(நாமம்), நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்று திருவாசகமும், ஆறு மலையும் யானையுங் குதிரையும் நாடு மூரும் கொடியு முரசும் தாருந் தேருந் தசாங்க மெனப்படும் என்று திவாகர வுரிச்சொற் றொகுதியும், மலை, யாறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, தானை என்று சூடாமணி யுரிச்சொற் றொகுதியும், யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு, தார், கொடி என்று வெண்பாப் பாட்டியலும், மலையே யாறே நாடே யூரே பறையே பரியே களிறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம் என்று பன்னிருபாட்டியலும், மலைநதி நாடூர் வனைதார் இவுளி கொலைமத களிறு கொடிமுர சாணை இவையே தசாங்கம் என்மனார் புலவர் என்று இலக்கண விளக்கமும் கூறும். இவற்றின் பொருந்தாமையை எண்ணிக் காண்க. முடிகோல் மாலை முத்திரை குடைகொடி முரசுதேர் யானை குதிரை சின்னம். படைகுடி கூழமைச்சு நட்பரண் நாடோ டுடையான் அரசருள் ஏறு. இவை உரைச் செய்யுள் எனக் கொள்க. முகுடம் என்பது தென்சொல்லே. முகு - முகிள். முகிள்தல் = அரும்புதல். முகிள் - முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம் = பேரரும்பு. முகிழ் - முகிழி. முகிழித்தல்= அரும்புதல். முகிள்-முகுள் - முகுளம் = பேரரும்பு, மொட்டு. முகுள் - முகுளி. முகுளித்தல் = 1.அரும்புதல். 2. குவிதல். முகுளிக்கும்..... அரவிந்த நூறாயிரம் (தண்டி.62). முகுளம் - முகுடம் = குவிந்த அரசர் மணிமுடி. முகுடமும் பெருஞ்சேனையும் (பாரத.குரு.14). முகுடம் - வ. முகுட்ட. முகுடம் - மகுடம் = மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ.246). மகுடம் - t. மகுட்ட. பரோ தம் சமற்கிருத மொழியில் (Sanskrit Language) முகுடம் தென்சொல்லே யென்று காட்டியிருப்பதைக் காண்க (ப.385). நாட்டுத்தட் டல்லாத சிறந்த குலக்குதிரைகள் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், கனவட்டம், கோரம் முதலிய பலவகைகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவற்றுள், பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; சிற்றரசர் குதிரை கந்துகம். திசைபற்றிப் பாண்டியநாடு தென்புலம் என்றும், சோழநாடு குணபுலம் என்றும், சேரநாடு குடபுலம் என்றும் சொல்லப்பட்டன. பாண்டியனுக்குத் தென்னன் அல்லது தென்னவன் என்னும் பெயரும் எழுந்தது. முந்நாடும் தனித்தனி நாடென்றும், ஒருங்கே தமிழகம் என்றும் பெயர் பெற்றன. கடல்கோட்குப்பின் எஞ்சியிருந்த பழம்பாண்டி நாட்டுப் பகுதியின் ஊடு, குமரி என்னும் பேரியாறு ஓடிற்று. தெனாஅ துருகெழு குமரி (புறம்.6:2) என்பதனால் அதன் பெருமையும் வேகமும் அறியப்படும். வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண வுவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்ட மஞ்சித் தென்றிசைக் குமரி யாடிய வருவோள் (மணிமே.13:3-7) என்பதனால் , பண்டைநாளில், வடநாட்டிற் கங்கையாற்றின் கரையில் வாழ்ந்தோரும், தம் தீவினை போக்க வந்து நீராடுமாறு, குமரியாறு ஒரு சிறந்த திருநீர்நிலையாக விருந்ததை யறியலாம். பாண்டியன் தன் தலைநகரைக் குமரியாற்றின் கயவாயில் அமைத்ததாகத் தெரிகின்றது. கயவாய் என்பது ஆறு கடலொடு கலக்குமிடம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு.528) பாண்டியன் தலைநகர் கடல்வழியாக வருவோர்க்கு வாயில் போல் இருந்தமையால், கதவம் அல்லது கதவபுரம் என்று பெயர் பெற்றிருக்கலாம். கபாடபுரம் என்னும் வடசொல் `அலைவாய், என்பதன் மொழி பெயர்ப்பாகவும் இருக்கலாம். கடத்தல் = கடந்துசெல்லுதல். கட-கடை = வாயில். கட-கடவு = கடந்து செல்லும் வழி. கடவு - கதவு = வாயில், வாயிலடைப்பு. ஒ. neh:door-shutter, entrance. கதவு - கதவம் = பெருங்கதவு. கதவம் - t. கவாட - கபாட (முறைமாற்றுப் போலி). வடமொழியில் இச் சொற்கு மூலம் இல்லை. குமரிமலை, கடல்கொண்ட நாட்டில் எவ்வாறு அமைந் திருந்தது என்று ஆயுமிடத்து, அந் நாட்டின் பகுதிகளை நன்கறிந்து காட்டு எலியட்டு (Scott Elliot) எழுதியுள்ள மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெரு மலையானது மேலைக்கடலில் தொடங்கி.......... மடகாசுக்கர் (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரி கின்றது.. ........ இம் மலையைத் தமிழிற் குமரியென்றும் வடமொழியில் மகேந்திரம் என்றும், முன்னோர் கூறினாரென்பதற்குக் காரண முண்டு. சிவதருமோத்தரம் என்னுஞ் சைவவுபாகமத்தில், பொதியிற்குத் தென்பால் மகேந்திர முண்டென்றும், அந் நூலுரையுள் தெற்குமுதல் வடக்கு ஈறாக அஃது இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ள தேசம் பொன்மயமான இலங்கை யென்றும் குறிக்கப்படுகின்றது என்று பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை சை. சி.நூ.ப. கழகப் பதிப்பான தொல் காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியத்திற்குத் தாம் வரைந்துள்ள ஆராய்ச்சி முன்னுரையிற் கூறியுள்ளார். உன்னதத்தென் மயேந்திரமே யுயர்மலையஞ் சையகிரி வின்னவிலுஞ் சுத்திகமே யிருக்குமுயர் விந்தியமே பன்னுபுகழ் மிகுபாரி யாத்திரமே யெனப்பகர்ந்த இன்னகிரி யேழுமுதற் குமரிதலத் திசைந்தனவே. அங்கமெதிர் நிரனிறையாற் சமாக்கியமு மணிமலையுஞ் சங்கமுந்தண் குமுதமுநல் வராகமெனுந் தலந்தானுந் துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம். (சிவதருமோத்தரம், கோபுரவியல்,47,48) இச் செய்யுள்களினின்று, இடைக்கழகக் காலத்தில், குமரி முனைக்குத் தெற்கில் பழைய குமரிமலைத் தொடரின் பகுதி யாகவோ தனியாகவோ ஒரு மலை யிருந்த தென்றும், அதனின்றே குமரியாறு தோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும், இலங்கை இந்தியா வொடு இணைந்திருந்ததென்றும், குமரியாறும் பொருநையாறும் இலங்கையூடும் ஓடியிருக்கலா மென்றும், பாண்டிநாடு குமரி முனையினின்று 500 கல் தொலைவு தெற்கே நீண்டிருந்திருக்கலா மென்றும் உய்த்துணரப்படும். சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கருவூரும் தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர், ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கே பயன்பட்டது. நெல்லை மதுரை முகவை மாவட்டங்களின் மேல்பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay) மாநிலத்தின் மேல்பாகமும் சேரநாடா யிருந்தன. கதவபுரம் கட்டியமைக்கப்பட்டுப் பல்லாண்டு சென்றபின் இரண்டாம் கழகம் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் ஐம்பத் தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடினார் மூவாயிரத் தெழுநூற்றுவர் என்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத் தொன்பதின்பர் என்றும், அவருட் பாவரங்கேறினார் ஐவர் என்றும், கழகம் இருந்த கால நீட்சி மூவாயிரத்தெழுநூற் றாண்டு என்றும் இறையனா ரகப்பொருளுரை கூறுகின்றது. தலைக்கழக வரலாற்றிற் போன்றே, இதன் வரலாற்றிலும் பல செய்திகள் தள்ளத்தக்கன. கழக மிருந்தது மட்டும் உண்மையான செய்தியாகும். இடைக்கழக நூல்நிலையத்தில் இருந்த நூல்கள் எண்ணாயிரத்தெச்சம் என்று, ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வருகின்றது. செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் மாபெரும் பகுதியைக் கடல் கொண்டுவிட்டதனால், தலைக்கழகத்தில் 549 ஆக இருந்த புலவர் தொகை 59ஆகக் குன்றிற்று. மூவேந்தரும் ஒரே குடியினரும் ஒரே மொழியினருமாதலால், தம்முட் பெண்கொண்டுங் கொடுத்தும் இயன்றவரை ஒற்றுமையைப் பேணி வந்தனர். ஆயினும், ஒரோவொரு சமையத்து, பழவிறல் தாயத்தோ டமையாது புதுவிறல் தாயத்தை நச்சிய பேராசைப் பெருவலி வேந்தன், ஏனை வேந்த னொருவனொடு பொருது அவன் நாட்டைக் கைப்பற்றுவதற்குத் தோற்றுவாயாக, தன் நாட்டுப் பாலைநில மறவரை யேவி அவன் நாட்டு முல்லைநிலத்து ஆநிரைகளைக் கவர்ந்துவரச் செய்து, அவனைப் போருக்குத் தூண்டுவதும் நேர்ந்தது. இதை, வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே (தொல்.1002) வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும். (தொல்.1003) வஞ்சி தானே முல்லையது புறனே. (தொல்.1007) எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. (தொல்.1008) என்பவற்றால் அறியலாம். ஒரு வேந்தன் இன்னொரு வேந்தனுக்குப் பெண் கொடுக்க மறுத்தபோதும், ஒரு வேந்தன் கொடுங்கோலாட்சி செய்யின் ஒரு செங்கோல் வேந்தன் அவனைத் திருத்தும்போதும் போர் நிகழும். ஆயின், அன்று நிரை கவர்தலும் நிரை மீட்டலு மின்றி நேரடியாகப் போர் தொடுக்கப்படும். பாலைநிலத் தலைவர், வேந்தரால் ஏவப்படும்போது மட்டுமன்றி, வலிமையற்ற வேந்தர் ஆளும்போதும், அடுத்துள்ள முல்லைநிலத்து ஆநிரைகளைக் கவர்வது வழக்கம். இங்ஙனம் ஒருபுறம் பாலை மறவரால் நிரை கவரப்பட்டும், மற்றொருபுறம் கோநாய் புலி முதலிய காட்டுவிலங்குகளால் மந்தை யாடுமாடுகள் அடிக்கப்பட்டும், இடர்ப்பட்டு வந்த இடையர், தற்காப்பு வினையிலும் தடுப்பு வினையிலும் தொடர்ந்து ஈடுபட்ட தனால், நாளடைவில் குறிஞ்சிநிலக் குறவர்க்கும் பாலைநில மறவர்க்கும் எள்ளளவும் இளைக்காத காளையரும் ஆளியரும் ஆயினர். ஆயினும், பாலைநிலத்தார்போல் வலியப் போர்க்குச் சென்றதில்லை. ஆயின், வந்த போரை விட்டதில்லை. ஆயர் போல ஆய்ச்சியரும் மறமிகுந்து பாலைநிலத்திற்கும் சென்று ஆனைந்து விற்றனர். பாலைநிலத்தார்போற் சூறையாடலையும் போர்புரிதலையும் வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளாது, ஆடவர் ஆடுமாடெருமை யாகிய முந்நிரைகளை மேய்த்தும், வானாவாரிப் பயிர்களை விளைத்தும், பெண்டிர் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய்யாகிய ஆனைந்தைக் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய முந்நிலத்தும் விற்றும், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஆயர், தம் மறத்தைக் குன்றாமற் காத்தற்கும் தம் உடல் வலிமையை மேன்மேல் வளர்த்தற்கும், ஏறுதழுவல் என்னும் பெண்கோடல் முறையை ஏற்படுத்தினர். ஆயர் குலத்தில் வினைவல பாங்கரல்லாத உயர்குடியிற் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும், பிறந்தவுடன் அவ்வப் பெண்ணின் பெயரால் ஒவ்வொரு சேங்கன்று ஒதுக்கப்பெற்றது. அக் கன்றுகளை, வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்த வூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவை கொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில், கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்ற கால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச் சிவந்த கண்களுடனும், கண்டார் அஞ்சும் கடுந்தோற்றத்தை அடைந்தன. ஆண்டுதோறும், பூப்படைந்து மணத்திற் கேற்ற கன்னியர்க்குரிய காளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி, ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக்கப்பட்ட ஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொரு குமரியையும் மணக்க விரும்பும் ஆயர்குலக் குமரர் அவ்வக் குமரிக்குரிய காளையைத் தனிப்படப் பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்து விட்டனர். அவை இருமருங்குங் கூடிநிற்கும் பெருங்கூட்டத்தைக் கண்டும், அக் கூட்டத்தாரின் ஆரவாரத்தொடு கூடிய பல்லியப் பேரோசையைக் கேட்டும், மருண்டு மிரண்டு, கூற்றுவன் தூதர்போற் கொடிய பார்வையுடன், வாலை முறுக்கியும் காலைக் கிளப்பியும் உடலை வளைத்தும் கழுத்தைத் திரித்தும், குளம்பு பட்ட விடமெல்லாம் தீப்பறக்கக் குதித்தோடியபோது, ஏறுதழுவுங் குமரர் பலர் எதிர்நின்று கொம்பைப் பற்றியும், அள்ளையிற் பாய்ந்து கழுத்தைத் தழுவியும், பின்சென்று காலை வாரியும், பிறவாறும், தாம் குறித்த காளையை அடக்கிநிறுத்த இயன்றவரை முயன்றனர். சிலர் கண்ட அளவில் அஞ்சி நின்றுவிட்டனர். சிலர் மறு விழாவிற்குக் கடத்தி வைத்தனர். சிலர் சிறு புண்ணொடு திரும்பினர். சிலர் விழுப்புண்பட்டனர். சிலர் குடல் சரிந்து அங்கேயே மாண்டனர். சிலர் வென்றனர். வென்றவர் தம் விலைமதிப்பில்லாப் பரிசைப் பெற்று விண்ணின்பந் துய்த்தனர். கடல்கோளின் பின், கடல்கோளச்சத்தாலும் மக்கட் பெருக்கின் விளைவாலும், பெருங்கூட்டத்தார் வடநாவலஞ் சென்று குடிய மர்ந்தனர். அங்குத் தம் தாய்நாட்டை நினைவுகூர்தற்கு, தொழுநை யாற்றங்கரையடுத்து ஒரு நகரமைத்து அதற்கு மதுரை என்று பெயரிட்டனர். அது தென்வாரியில் முழுகிப் போன பஃறுளி மதுரையை நோக்கி, தமிழரால் வடமதுரை எனப்பட்டது. அதனால், பஃறுளி மதுரையும் வடமதுரை நோக்கித் தென்மதுரை யெனப் பட்டது. ஆகவே, வட ,தென் என்பன உறவியல் அடைகளே என அறிக. மது என்னும் ஓர் அரசன் பெயரால் அவன் தலைநகர் மதுபுரி எனப்பட்டதென்றும், அது பின்னர் மதுரை-மத்ரா என்று திரிந்த தென்றும் கூறுவது பொருந்தாது. மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை (திவ்.திருப்பா.5) என்று ஆண்டாள் தென்மதுரையொடு ஒப்புநோக்கியே பாடுதல் காண்க. பாண்டியன் கடல்கோட்குப்பின் பனிமலை சென்று அதன் மேற் கயற்பொறி பொறித்து, கங்கையாற்றங்கரை நகரில் தன் உறவினனைத் துணையரையனாக அமர்த்திவிட்டு வந்தது போன்றே, சோழனும் தான் வேந்தனானபின் பனிமலைமேற் புலிப்பொறி பொறித்து, கங்கை நாட்டை ஆளுமாறு ஒரு படிநிகராளியை அமர்த்திவிட்டு வந்தான். இங்ஙனம், பாண்டியர் குடியான திங்கள் மரபும், சோழர் குடியான கதிரவன் மரபும் வடநாட்டில் நிறுவப் பெற்றன. வடநாடு மொழிபெயர் தேயமாயினும், தமிழரும் அங்குக் குடியிருந்ததனாலும், திரிமொழியாளர்க்கும் தமிழ் ஓரளவு விளங்கியதனாலும், கற்றார் அனைவர்க்கும் தமிழே இலக்கிய மொழியா யிருந்தமையாலும், சேர சோழ பாண்டியம் போலும் வல்லரசு அங்கின்மையாலும், சில்லாயிரம் ஆண்டுகள் தமிழரசு அங்குச் செவ்வன் நடைபெற்றது. தலைக்கழகத்திற் போன்றே, இடைக்கழகத்திலும் முந்நாட்டை யுஞ் சேர்ந்த தமிழகத் தலைமைப் புலவரெல்லாரும் கலந்திருந்து, முதுநூலாய்ந்தும் புதுநூலியற்றியும் வந்தனர். பாண்டிய நாட்டின் பெரும்பகுதியை ஏற்கெனவே கடல் கொண்டதனாலும், கதவபுரம் கடல்வாயி லிருந்ததனாலும், ஆழ் கடலிற் செல்லும் நாவாயும் வங்கமும் போன்ற பெருங்கலங்கள் தமிழகத்திற் புணர்க்கப்பட்டதனாலும், பாண்டியன் முன்விழிப்பா யிருந்து, மறுகடல்கோள் நேரின் குடும்பத்தொடு தப்புமாறு, ஒரு பெருங்கலத்தை என்றும் அணியமாய் வைத்திருந்திருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள் தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்டுள்ள இரண்டாம் கடல்கோள், தோரா. கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக் கடல்கோளால், நாகநாடு என்று சொல்லப்படும் கீழ்த்திசை நிலப்பகுதி, ஏறத்தாழ 1200 கல் தொலைவு பரப்புள்ளது மூழ்கிப்போயிற்று. அதுவே, தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை யின்றேழ் நாளி லிருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமிநடுக் குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் (மணிமே.9:17-22) என்று மணிமேகலையில், முன்னறிவிப்புப்போற் கூறப்பட்ட பின்னறிவிப்புச் செய்தி. கதவபுரமும் குமரியாற்றிற்குத் தென்பால் நிலமும் மூழ்கிப் போயின. இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்துவிட்டது. வங்கக் குடாக்கடல், புதிதாகத் தோன்றியதனால், தொல்கதை (புராண) முறையில் சகரரொடு தொடர்புபடுத்தித் தொடுகடல் எனப்பட்டது. தொடுதல் தோண்டுதல். வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறம்.6) என்று காரிகிழார் பாடுதல் காண்க. உருகெழு குமரி என்பதற்கு, உட்குந் திறம் பொருந்திய கன்னியாறு என்றே பழைய உரையாசிரியர் கூறுவதையும் நோக்குக. குமரியாறிருக்கவும் அதன் கயவாயிலிருந்த கதவபுரம் மூழ்கியது, காவிரியாறிருக்கவும் அதன் கயவாயிலிருந்த காவிரிப் பூம்பட்டினம் மூழ்கியது போலாம். கோவலன் காலத்திலேயே வங்கக்கடல் இருந்ததனால்தான் அவன் மாமன் மாநாய்கன் (மாநாவிகன்) நீர்வாணிகத் தலைவனா யிருக்கவும், சாதுவன் கலத்திற் சென்று கீழைத்தீவுகளுடன் வாணிகஞ் செய்யவும் இயன்றது. கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் நாகமுத்திரையுங் கொண்டிருந்ததனால், நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகரும் அநாகரிகருமாக இருசார் மாந்தரும் இருந்தனர். கீழ்நில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னவர் (மணிமே.9:55) என்றும், நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் (மணிமே.24:54-5) என்றும் குறிக்கப்பட்டவர் நாகரிக மக்கள். நக்க சாரணர் நாகர் (மணிமே.16:15) என்றும், நக்க சாரணர் நயமிலர் தோன்றி .................................. ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் (மணிமே.16:56-9) என்றும் குறிக்கப்பட்டவர் நரவூனுண்ணிகளான விலங்காண்டி மாக்கள். வங்கக் கடல் தோன்றுமுன் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகலும் குடியேறியதனால், அவர் சேர்ந்த வூர்கள் நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றன. அங்கமெதிர் என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளின் (கோபுர.48) சிறப்புரையில் கனகமயமான இலங்கை யென்னுந் தேசம், இரத்னபூமியுடன் கூடி யைஞ்ஞூறு யோசனை சமுத்திரத்துக்குட் புகுந்திருக்குமென்க என்னுங் குறிப்பும், சேண்டொடர் சிமையத் தெய்வ மகேந்திரத் தும்பர்ச் சென்றான் (கம்பரா.மகேந்.25) கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர் வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன (கம்பரா.கடல்தாவு. 21) என்னும் கம்பராமாயண mடிகளும்,ïங்குக்fவனிக்கத்தக்கன.MÇa¤ தொல்கதை மயக்கினால், இடைக்காலப் பெரும்புலவரும், நாகர் என்னும் மாந்தரினத்தாரைப் பாம்பினமாகக் கருதிவிட்டனர். கீழ்நாடு என்பதையும் கிழக்கு நாடென்று கொள்ளாது, நிலத்திற்கும் நீருக்கும் கீழுள்ள நாடென்று கொண்டுவிட்டனர். கடல்கோள் நிகழ்ந்தவுடன், பாண்டியன் முன்னரே தான் அணியமாக வைத்திருந்த பெருங்கலத்திலேறி வெள்ளத்தைக் கடந்து, கொற்கைத்துறைப் பக்கம் வந்து சேர்ந்திருத்தல் வேண்டும். அதன்பின், கடல்கோட்குத் தப்பிய தன் குடிகள் வாழ்தற்கு, சோழநாட்டிலும் சேர நாட்டிலும் தென்கோடிப் பகுதிகளை வென்று கொடுத்தான் என்பது, மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலித்.104) என்னும் முல்லைக்கலித் தரவால் அறியக் கிடக்கின்றது. மேவார் நாடு, வலியினான் வணக்கிய என்னுங் குறிப்புகளால், சேர சோழர் நிலந்தர இணங்காமையும் பாண்டியன் பொருது வென்றதும் அறியப்படும். அடியிற் றன்னளவு..........bj‹dt‹ வாழி என்னும் சிலப்பதிகாரப் பகுதியுரையில், அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் வாழ்வானாக வென்றவாறு என்று அடியார்க்குநல்லார்வரைந்திருப்பது,இரண்டா«கடல்கோட்கு¥பிற்பட்lசெய்தியைaகுறிக்கும். முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்தது போன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும்,தென்னாட்Lமக்கŸவடதிசையு«வடநாட்Lமக்கŸவடமேலை¤திசையு«பரவி¢சென்றனர். கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று. முதற் கடல்கோள் மாபேரளவினதா யிருந்து ஞாலத்தின் மேற்புறத்தைப் பலவிடத்தும் மிக மாற்றியிருப்பினும், அது மிகப் பழங் காலத்ததாதலின், அதுபற்றிய செய்தி பிறநாட்டு வரலாறுகளில் இடம் பெறவில்லை. ஆயின், இரண்டாம் கடல்கோட் செய்தி, முதற்கண் பாபிலோனிய நாட்டிலும் பின்னர் யூதேயாவிலும் அதன்பின் பிறநாடுகளிலும் பரவி, அவ்வந் நாட்டுச் செய்தியாக நிலைத்துவிட்டது. பாபிலோனியாவில், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, கடல்கோள் போன்ற ஒரு தொடர்மழை வெள்ளக் கதை வழங்கி வந்திருக்கின்றது. அதையே யூதர் கொண்டு கூறியதாகத் தெரிகின்றது. தென் கல்தேயத் தலைநகராகிய ஊர் என்னும் பாபிலோனிய நாட்டுப் பேரூரில், ஆபிரகாம் கி.மு.1996-ல் பிறந்தான். அவன் மரபில் வந்த மோசே (».K.1571-1451) எழுதினதாகச் சொல்லப்படும் திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis) 7ஆம் அதிகாரத்தில் உள்ள வெள்ளக் கதை, பாபிலோனியக் கதைக்கு ஏறத்தாழ 500 ஆண்டு பிற்பட்டது. வெள்ளக்கதை வழங்கும் நாடுகளிலெல்லாம், கலத்தின் வாயிலாகக் கடல்கோட்குத் தப்பிய பாண்டியன்போல் ஒவ்வொருவன் சொல்லப்படுகின்றான். கல்தேயர்(பாபிலோனிய) நாட்டில் சிசுத்துரசு (Xisuthrus) அல்லது அசிசு அதரா (Hasis Adra); யூத நாட்டில் நோவா (Nova); கிரேக்க நாட்டில் ஒசீசெசு (Ogyges) அல்லது âயூக்கேலியன்(Deucalion); Óனeட்டில்nபாகி(Fohi). பிற்காலத்தில் வேத ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் ஓரளவு உண்மையறிந்ததனால், சத்தியவிரதன் என்னும் திராவிட பதி என்றனர். பல்வேறு நாடுகளிற் கடல்கோட்கு அல்லது வெள்ளத்திற்குக் குறிக்கப்பட்ட காலம்: நாடு காலம் பாபிலோனியா தோரா. கி.மு. 3000 - ற்குச் சற்று முன்பு. ônjah(Bible) '' 2348 இலங்கை '' 2387 தமிழகம் '' 2500 ஓயன்னெசு போன்றே, பலர் கிழக்கினின்று பாரசீகக் குடாக்கடல் வழியாகப் பின்னர் இடையிட்டிடையிட்டு வந்ததாக, பாபிலோனியச் செங்கற் பட்டையங்கள் கூறுகின்றன. திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis),6M« அதிகாரம் முதலிரு திருமொழிகள், மாந்தர் ஞாலத்தின்மேற் பெருகத் தொடங்கி, அவர்கட்கு மகளிர் பிறந்தபோது, தேவகுமரர் மாந்தர் மகளிரை மிக அழகுள்ளவரென்று கண்டு, அவர்களுள் தமக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள் என்றிருப்பது, குமரி நாட்டினின்று நாகரிக வளர்ச்சியில்லா நிலையில் மேனாடு சென்ற மாந்தர் வழியினர், நாளடைவில் வெள்ளையராகி, பிற்காலத்தில் அங்குச் சென்ற நாகரிக மாந்தரின் மகளிரை மணந்துகொண்டனர் என்பதையே குறிக்கும். அதே அதிகாரம் 4ஆம் திருமொழியில் அக்காலத்தில் அரக்கர் ஞாலத்தி லிருந்தனர் என்பது, ஆப்பிரிக்க மாந்தர் அக்காலத்திலும் கருத்தும் பருத்தும் இருந்ததையே காட்டும். இனி, 7ஆம் 8ஆம் அதிகாரங்களில் வெள்ளச் செய்தியையும், 9ஆம், 10ஆம் அதிகாரங்களில் நோவாவின் மரபுப் பெருக்கத்தையும், கூறியபின், 11ஆம் அதிகாரம் 2ஆம் திருமொழி, மக்கள் கிழக்கே யிருந்து வழிநடந்து வருகையில், சினெயார் நாட்டிற் சமநிலத்தைக் கண்டு, அங்கே குடியிருந்தனர் என்றிருப்பது, கடல்கோட்குப்பின், நாவலந் தேயத்தினின்று ஒரு கூட்டத்தார் நிலவழியாக மேலையாசியா சென்று தங்கினர் என்பதையே தெரிவிக்கும். கடல்கோளச்சத்தினால் மட்டுமன்றி, வாணிகஞ் செய்தற்கும் தமிழர் பலர் வடக்கே சென்று கங்கை நாட்டிற் குடியேறினர். குறிஞ்சித் தெய்வமாகிய சேயோன் வணக்கத்தினின்றே சிவநெறி திரிந்ததனால், சிவனுக்கும் மலையகமே சிறந்த இருக்கையாகக் கொள்ளப்பட்டது. பனிமலை கடலடியினின் றெழுந்த பின்பும், குமரிமலையின் பெருமை குன்றாதிருந்ததனால், அஃதிருந்தவரை பாண்டியன் பெருமிதத்தோ டிருந்தான். அஃது மூழ்கியபின், அவன் தன் நாட்டின் சிறுமையையும் தாழ்வையும் நீக்குவதற்காக மட்டு மன்றி, தன் குடி தொன்றுதொட்டு வழிபட்டுவந்த சிவனுக்கு ஒரு தகுந்த இருக்கை யமைக்கவுமே, பனிமலையைக் கைக்கொண்டான். அம் மலையின் மேற்பகுதி வெண்பனிக்கட்டி மூடி என்றும் வெண்ணிறமாய்த் தோன்றுவதால், வெள்ளிமலை யெனப்பட்டது. அதன் கொடுமுடியே சிவனிருக்கை யாகவும் மண்ணுலகப் பேரின்ப நிலையமாகவும், சிவநெறியாராற் கருதப் பெற்றது. பாண்டியர் பன்முறை பனிமலைமேற் கயற்பொறி பொறித்தது, வேத்தியல் மட்டுமன்றித் தேவியல் தொடர்புங் கொண்டதாகும். இக்காலத் தமிழகச் சிவமடங்களும் வெள்ளிமலைத் தொடர்பு கூறுதல் காண்க. சிவனடியார்க்குச் சிறந்த அக்கமணி (உருத்திராக்கம்), பனிமலை யடிவாரத்துள்ள நேபாள நாட்டிலேயே தொன்றுதொட்டு விளைகின்றது. பஃறுளியாறு மூழ்கிய பின் கங்கையாறே நாவலந் தேயப் பேரியாறானதனாலும், வெள்ளிமலையைத் தன் குடுமியாகக் கொண்ட பனிமலையினின்று அது தோன்றி வருவதனாலும், சிவநெறியார்க்கு அதுவே தலைசிறந்த திருநீர்நிலை யாயிற்று. இதனால், சமயப்பற்றாலும் தமிழர் பலர், சிறப்பாகப் பெருஞ் செல்வர், கங்கை நாட்டிற் குடியேறினர். அதன் விளைவாகத் திருக்கேதாரம், வாரணாசி (காசி) முதலிய சிவநகர்கள் வடநாட்டில் தோன்றின. காவிரிப் புதல்வர் என்பதுபோல், தமிழக வேளாளருட் சிலர் தம்மைக் கங்கை குலத்தார் என்று சொல்லிக்கொண்டனர். கங்கையம்மன் என்னும் நாட்டுப்புறத் தெய்வமும் தோன்றிற்று. சிவநெறியார்க்கு நேபாளத்தினின்று அக்கமணி வருவது போன்றே, அரசர்க்கும் தெய்வப் படிமைகட்கும் வீச வெண்கவரியும், கூந்தலில்லாப் பெண்டிர் கொண்டை முடிக்கக் கருங்கவரியும் பனிமலை யடிவாரத்தினின்றும் திபேத்தினின்றும் வந்திருக்கின்றன. நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி யயல தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம் (புறம்.132) என்பதனால், கவரிமயிர் தரும் எருமை பனிமலை யடிவாரத்திற் புல் மேய்ந்ததைத் தமிழர் கண்ணாரக் கண்டமை அறியப்படும். கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசல் மேவற் சேயிழை மகளிர் (பதிற்.43:1-2) என்பது, பண்டைக்காலப் பெண்டிரும் கவரிமுடி யணிந்ததைத் தெரிவிக்கும். கவரிமா என்னும் எருமைக்குக் கியாக்கு (gyak) என்பது திபேத்தில் வழங்கும் பெயர். ஆங்கிலத்தில் அது யாக்கு (yak) என்றும் தமிழில் ஆகு என்றும் திரியும். ஆகு கவரி சீகரம் சவரி. (பிங்.8:135) இதில், ஆகு என்பது முதலாகுபெயராக முடியைக் குறித்தது. கவரிமா ஒருவகை எருமையாதலால், கல்லாடர் தமிழ்நாட்டு எருமையையும் கவரி என்று குறித்துவிட்டார். படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா.53:30) இதைப் பிங்கலமும் காரான் மகிடம் கவரி காரா என்று பின்பற்றிவிட்டது. வணிகர் மட்டுமன்றி, அடியாரும் புலவரும் அரசரும் படை மறவரும் அடிக்கடி வடநாடு சென்று வந்ததனால், அந் நாட்டு இயற்கையமைப்பும் அரசியலும் மக்கள் வாழ்க்கைமுறையும் சிறப்பு நிகழ்ச்சிகளும், தமிழர்க்குத் தெரிந்து இலக்கியத்திலும் குறிக்கப் பட்டன. கங்கை சிந்தாறுகளும், சோணை, வாரணை, அசி, தொழுனை முதலிய கங்கைக் கிளைகளும் பண்டைத் தமிழ்ப் புலவர்க்குத் தெரிந்திருந்தன. கங்கை நாட்டில் முதற்கண் குமரிநாட்டினின்று சென்ற தமிழரே குடியிருந்தமையால், ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன. முதலிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரி என்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து, பின்னர்ப் பொது வீறுகளாயின. புரம் = உயர்வு, உயர்ந்த கட்டடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த) கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்திற் பாடலிபுரம் எனத் திரிந்தது. காளிவணக்கங் கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக் கங்கைக் கரையிற் காளிகோவிலுடன் அமைத்த நகரே காளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த் தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூய தென்சொல். காளிக்கோட்டம் என்பது, இன்று ஆங்கிலச் சொல் வழியாகக் கல்கத்தா எனத் திரிந்துள்ளது. கங்கைக் கயவாய் அடுத்துத் தம்லுக் அல்லது தமுல்க் என்னும் பெயர் கொண்டுள்ள துறைநகர்ப் பெயர், தமிழகம் என்னும் சொல்லின் திரிபாயிருக்கலாம். தமலித்தி என்று பாலிமொழியிலும், தம்ரலப்திஎன்று சமற் கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர், தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்ற தென்சொல்லின் திரிபா யிருக்கலாம். வேம்பாய் (Bombay) மாநிலப் பகுதி முழுதும் பதினெண்குடி வேளிர் பரவியிருந்ததனால், வேளகம் எனப்பட்டது. கண்ணன் ஆண்ட குச்சரநாட்டு மேற்பகுதியின் தலைநகர்ப் பெயரான துவாரகை என்னும் சொல், துவரை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. எருமை (மைசூர்) நாட்டுத் துவரை நகரில் கி.பி. 2ஆம் நூற்றாண்டு ஆண்டுகொண்டிருந்த இருங்கோவேள், தன் ஆள்குடியின் 16ஆம் தலைமுறையினன் என்று சொல்லப்படுவதால், அவன் குடி முதல்வன் கண்ணன் காலத்தவனாகவே யிருந்திருத்தல் வேண்டும். அது கி.மு.1000. செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே.............. (புறம்.261) என்று இருங்கோவேள் கபிலரால் விளிக்கப் பெற்றமையையும், அவன் வேள் என்று பெயர் பெற்றிருந்தமையையும் நோக்குக. ஒட்டர (Orissa) நாட்டுத் தலைநகரின் பெயரான கடகம் (Cuttack) என்னும் சொல், கோட்டை மதிலைக் குறிக்கும் தூய தென்சொல்லே. மதிலாற் சூழப்பட்டதனால் அந் நகர் கடகம் எனப் பெயர் பெற்றது. இன்று தெலுங்கு நாட்டுப் பகுதிகளாக விருக்கும் நெல்லூர் குண்டூர் மாவட்டங்கள், முன்னர்த் தமிழ்நிலமா யிருந்ததை, அவற்றின் பெயர்களே தெரிவிக்கும். நெல்லூர் மாவட்டத்தூடு ஓடும் வடபெண்ணையாறு, தமிழ்நாட்டுத் தென்பெண்ணை யாற்றுடன் ஒப்புநோக்கி யிடப்பெற்ற பெயர் கொண்டதென்பது சொல்லாமலே அறியப்படும். கருநாடகம் (கன்னடம்), துளு, குடகம் முதலிய நாடுகள் கடைக்கழகக் காலத்திலும் தமிழ்நிலங்களாகவே யிருந்தமை, பின்னர் விளக்கப்படும். பாண்டியன் வெற்றிச் செயல் வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லின் ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக்.75-88) என்று, மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை, அவன் முன்னோருள் ஒருவன் செய்த வெற்றிச் செயலை அவன்மேலேற்றிக் கூறி விளித்தார். அவ் வெற்றிச் செயல், கடல்கடந்து சென்று, சாவகம் என்னும் சாலித் தீவைக் கைப்பற்றிய தாகும். சாலி என்பது செந்நெல் என்று பொருள்படும் தென்சொல். பிற்காலத்திற் பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலி என்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதை வடமொழியில் யவ என்று மொழிபெயர்த்தான். அது பின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழிற் சாவகம் என்னும் வடிவுகொண்டது. சாலித்தீவின் தலைநகர் சாலியூர். சாலித்தீவைப் பாண்டியன் கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்று குடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப் பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி, செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டு விளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னு மிடத்துள்ள மலையர், தம் முன்னோர் இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர் என்றும்; கெரினி (Gerini) என்னும் ஆசிரியர், அங்கு வழங்கும் மலையன் கோலன் (Maleon Kolan) என்னுங் குடிப்பெயரை, மலையர் சோழர் என்னும் தமிழரசர் குடிப்பெயர்களுடன் இணைத்துக் காட்டுகின்றனர் என்றும்; திருவிசயம் (ஸ்ரீ விஜய) என்னும் அரையத் தலைவனுக்குச் சுறவக் கொடியும் திருமாற விசயோத்துங்கன் (ஸ்ரீமாற விஜயோத்துங்கன்) என்னும் பெயர் உண்டென்றும்; ரா. ராகவையங்கார் தாம் எழுதியுள்ள தமிழ் வரலாறு என்னும் நூலிற் கூறியுள்ளார் (பக்.338-9). மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடி யுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன் காவலுள்ள இடம் என்று பொருள்படும். தமிழர் படிப்படியாகப் பக்கத்துத் தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத் தெரிகின்றது. சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவு மதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra) என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo) என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறை மலையா (Malaya) என்றும் பெயர் பெற்றுள்ளன. பொருநை (தாம்பரபரணி) என்பது பாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பது பொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன் முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore) என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால் ஏற்பட்டனவாகும். புரம் என்னும் ஈறு தமிழ். சோழர் வெற்றிச் செயல்கள் நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக (புறம்.66) என்று சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியிருப்பதால், அவன் முன்னோருள் ஒருவன் ஆழ்கடல் கடந்து மீண்டமை அறியப்படும். வளிதொழிலாள்வ தென்பது, பருவக் காற்றறிந்து அதன் வாக்கிற் கலஞ்செலுத்துதல். ஒரு பருந்தினால் துரத்தப்பட்ட புறா, செம்பியன் என்னும் சோழன் காலடியில் வீழ்ந்தது. அவன் அதைக் காத்தற்கும் பருந்தின் பசியைத் தீர்த்தற்கும், தன் உடம்பினின்று அப் புறாவளவு தசையறுத்துப் பருந்திற் கிட்டான். இச் செய்தி பின்னர்த் தொல்கதை முறையில் விரிவாக்கப்பட்டது. நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக (புறம்.43) என்று செம்பியன் வழிவந்த சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் விளிக்கப்பட்டமை காண்க. செம்பியன் பெயர் அவனுக்குப் பிற்பட்ட சோழர்க்கு ஒரு குடிப்பெயராயிற்று. அக்காலத்தில் இலங்கையில் அரக்கர் என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார் இருந்திருக்கின்றனர். அவர் மாயக்கலையில் வல்ல வராயிருந்ததனால், பிற்காலத்தில், ஆரியத் தொல்கதைஞர், அவரை வானியங்கும் அல்லது மக்களினத்திற்கு அப்பாற்பட்ட பதினெண் கணத்தாருள் இரு கணத்தாராகக் கொண்டனர் போலும்! அரக்கர் அரசன் இராவண்ணன். அவன் தலைநகர் இலங்கை. இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன் தலைநகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம் தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இரு பொக்கசம் (நிதி) ஈட்டி வைத்திருந்ததாகச் சொல்லப் படுகின்றான். இரு என்னும் சொல்லிற்குப் பெரு என்றும் இரண்டு என்றும் பொருளுண்டு. அச் சொல் நிதி என்னும் வடசொல்லைத் தழுவும்போது, இடையில் மகரமெய் தோன்றா தாதலால், இருபொருட்கும் பொதுவாக நிற்கும். அதனால், இருவேறு பொக்கசம் என்று தொல்கதைஞர் கொண்டிருக் கலாம். உண்மையில் இருவேறு பொக்கசமாயின், ஒன்று மூலபண்டார மாகவும் இன்னொன்று வழங்கும் பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும். அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட் பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடும்போரில், இயக்கர் குலம் வேரறுக்கப் பட்டது. பிங்கலன் தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய்விட்டான். பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்) தமிழகத்தில் நாட்டுப்புறத் தெய்வமும் ஆனாள். புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி யென்போள் (சிலப்.15:116-8) என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இலங்கை, தொன்றுதொட்டு, மருமம் மிக்க அருங்கட்டட வினைகட்குச் சிறந்ததா யிருந்துவந்திருக்கின்றது. மாந்தை (மாதோட்டம்) என்னு மிடத்தில், இரும்பினாற் செய்த காந்தமலை என்னும் காந்தக் கோட்டை யிருந்ததாகவும், அக் கோட்டையி லுள்ளார் அண்மையிற் செல்லும் கப்பல்களை யெல்லாம் காந்தத்தா லிழுத்துக் கொள்ளையடித்ததாகவும், மாந்தைப்பள்ளு, விசுவபுராணம், விசுவகர்ம நாடகம் என்னும் பனுவல்களிற் சொல்லப் பட்டுள்ளது. சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த (சிலப்.ஆய்ச்சி. படர்க்.1) என்பதனால், ஆரெயில் முழுமுத லரணம் ஒன்று அங்கிருந்ததாகத் தெரிகின்றது. அசுரர் என்று தொல்கதைஞர் கூறும் இலங்கை அரக்கர், அந்தரத்தில் தொங்குமாறு மூன்று அரணான கோட்டைகளை அமைத்து இருந்திருக்கின்றனர். அவற்றை ஒரு சோழன் அழித்து, ``தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்னும் விருதுப் பெயர் பெற்றான். ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் (புறம்.39) என்பது செம்பியன் செயலை அவன் பின்னோர்மேல் ஏற்றிக் கூறு கின்றது. தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை என்பதும் அதுவே. ஒன்னார், ஓங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் (79-82) என்பது சிறுபாணாற்றுப்படை சேரன் அருஞ்செயல் கரும்பு முதலில் நியூகினியாவில் இயற்கையாக விளைந்த தென்றும், பின்னர்ச் சீனத்திற்கும் அதன்பின் பிற நாடுகட்கும் கொண்டுபோகப்பட்ட தென்றும், பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது. சாலி (சாவகம்) நியூகினியாப் பக்கத்திலிருப்பதால்,சீனத் திற்குமுன் சாலிக்குக் கரும்பு சென்றிருக்கும் என்பதை உய்த்துணரலாம். விண்ணுலகத்திற்கு மாகம் என்பது ஒரு பெயர். மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா.34:15) மாகம் என்பது நாகம் எனத் திரியும். நாகநீள் நகரொடு நாகநா டதனொடு (சிலப்.1:21) என்பதில் நாகநீள்நகர் என்பது தேவருலகைக் குறித்தல் காண்க. ஆகவே, நாகநாடென்பது மேலை யுலகத்திற்கும் கீழை நாடுகட்கும் பொதுப் பெயராம் . சாலிநாட் டரசர்க்கு இந்திரன் என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானை கீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில் (பர்மாவில்) வாழ்ந்தது. இந்திரன் யானை வெள்ளையானை யென்றும், அதன் பெயர் ஐராவதம் என்றும் தொல்கதை கூறும். கடாரத்தில் வெள்ளை யானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதி எனப்பட்டது. விண்ணுலகப் பெயரும் தேவர்கோன் பெயரும் வெள்ளை யானையும் கீழைநாட்டிற்கு இசைந்ததால், எண்டிசைத் தலைவருள் ஒருவனாகிய தேவர்கோனுக்குக் கீழைத்திசை குறிக்கப்பட்டது. சேரருள் ஒருவன், இந்திரன் என்னும் பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்று தமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கினான். அதனால், அவன் மரபில் வந்த அதிகமான் நெடுமான் அஞ்சியை, அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து நீரக விருக்கை யாழி சூட்டிய தொன்னிலை மரபினின் முன்னோர் போல ..............................tGÉ‹ bறய்தியும்mமையாய்(புறம்.99) என்றும், அவன் மகன் பொகுட்டெழினியை, அந்தரத் -தரும்பெற லமிழ்தம் அன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே (புறம்.392) என்றும் பாடினார் ஔவையார். இங்ஙனம், நிலவணிகரும் நீர்வணிகரும் மூவேந்தரும், ஞாலத்தின் பலவிடங்கட்கும் சென்று, ஆங்காங்குள்ள அரும் பொருள்களையெல்லாம் கொணர்ந்து, தமிழகத்தையும் தமிழர் வாழ்க்கையையும் வளம்படுத்தினர். சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டு சீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்பு கராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும், மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்), இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத் தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும் சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும் அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்று பெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை), கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும், மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறு கழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்று கொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம், கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும், மெகசிக்கோ வினின்று மிளகாயும், அமெரிக்காவினின்று வள்ளி யென்றும் சருக்கரைவள்ளியென்றும் சொல்லப்படும் சீனிக் கிழங்கும், பிறவிடங் களினின்று பிறவும் வந்து சேர்ந்தன. கி.மு. 1500 போல் ஆரியர் இந்தியாவிற்கு வரும்வரை, தமிழ் மொழியும் தமிழிலக்கியமும் தமிழ நாகரிகமும் தமிழர் வாழ்க்கையும், இம்மியும் ஆரியங் கலவாது முழுத் தூயநிலையில் இருந்துவந்தன. அரும்பொருள் அருஞ்சொல் அகரமுதலி (எண் பக்கத்தைக் குறிக்கும்) அமசோனியம் 1 அரசச் சின்னம் 116 அரசிய லுறுப்பு 116 அலோரசு 113 ஆனைந்து 56 இடைக்கழகம் 133 இடைமண்டை 18 இயற்கைமொழி 26 இலெமூரியா 6 இழைத்தல்மொழி 31 ஈனியற் படுக்கை 30 உவாலேசு 4 எக்கேல் 6 எண்பேராயம் 68 எழுதீவுகள் 1 ஏதேன் 7 ஏர்மங்கலம் 35 ஐம்பெருங்குழு 68 ஐவகையுறுதிச்சுற்றம் 68 ஒப்பீர் 36 ஓயன்னெசு 113 ஓல்டுகாம் 4 கடகத் திருப்பம் 1 காட்டு எலியட்டு 119 காண்டவனம் 1 காந்தக் கோட்டை 133 காளிக்கோட்டம் 129 கிளேற்றர் 6 குமரிக்கண்டம் 3 சாமிக்கண்ணுப்பிள்ளை 15 சாலித்தீவு 130 சிவதருமோத்தரம் 119 செப்பறைத் தீவு 75 ஞெலிகோல் 39 தலைக்கழகம் 82 தாகோன் 113 தூங்கெயில் 133 நாவலந்தீவு 2 நீள்மண்டை 18 பதிணென்குடிமக்கள் 46 பாலதிக்கம் 1 புரூசு பூட்டு 19 பொன்கிடைக்கும் வகைகள் 34 மடலேற்றம் 67 முழைத்தல் மொழி 26 யோவான் இங்கிலாந்து 6 வளிமறை 25 வின்சென்று சிமிது 14 வெள்ளக் கதை 126 வேளகம் 129 1. ஏ.சு.இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியாவின் (ஞசந-ழளைவடிசஉ ளுடிரவா ஐனேயை) முகப்புப் படத்தைப் பார்க்க. 2. சிலப் : 8:1 3. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு 4. C.T.S.I. Vol.1,pp.20, 21. 5. C.T.S.I. Vol.1,p.24. 6. கால்டுவெல். 7. M.A.M. P. பக் : அடிக்குறிப்பு(2) 8. M.A.M. P., - ப. 111. 9. C.T.S.I Vol. 1, ப.20. 10. Early India, PP. 7 & 8 1. காற்றை மறைக்கும் சிறு குடில்