இலக்கியஅமுதம் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : இலக்கிய அமுதம் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப் பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடு களைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலை முறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந் தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந் துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கி யிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதி யிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்து? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற் களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனை களுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினை வூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கை களாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969ய 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) பொருளடக்கம் 1.தமிழக வரலாறு 1 2. தமிழ் வேந்தர் ஒழுக்கம் 12 3. வறுமையிலும் மான உணர்ச்சி 16 4. சங்ககாலக் கல்வி நிலை 22 5. சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை 25 6. பூங்குன்றனார் பொன் மொழிகள் 28 7. அகநானூறு - 1 33 8. அகநானூறு - 2 36 9. புலவர் பெருந்தகை 39 10. அகப்பொருள் 45 11. சேக்கிழார் பெருமான் 49 12. சோழர் வரலாறு 57 13. நாடகத் தமிழ் 66 14. இடைக்காலத் தமிழ் 74 இலக்கிய அமுதம் 1 தமிழக வரலாறு அரசியல் வரலாறு இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி.பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடியுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். சங்க காலத்தில் தமிழகத்து மன்னிரிடையே பலபோர்கள் நடந்தன. ஒரு காலத்தில் சோழன் பேரரசனாய் விளங்கினான்; வேறொரு காலத்தில் பாண்டியன் பேரரசனாய் விளக்கமுற்றான்; பிறிதொரு சமயம் சேரன் பேரரசனாய்த் திகழ்ந்தான். கரிகாற் சோழன் இமயம்வரை சென்று இமயத்தில் புலிப் பொறி பதித்து மீண்டான். இவ்வாறே வடநாடு சென்று நெடுஞ்சேரலாதன் `இமயவரம்பன் எனப் பெயர் பெற்றான். பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியர்களை வென்று, `ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று புகழ் பெற்றான். கி.பி. 300 முதல் 900 வரை தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சியில் இருந்தது. சோழர் சிற்றரசர் ஆயினர். தெற்கே இருந்த பாண்டியரும் மேற்கே இருந்த சேரர், கங்கர், கதம்பர் என்பவரும், பல்லவ நாட்டுக்கு வடமேற்கே இருந்த சாளுக்கியரும், அவர்க்குப் பின்வந்த இராட்டிரகூடரும் பல்லவருடன் ஓயாது போரிட்டனர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு ஒழிந்து, சோழப் பேரரசு ஏற்பட்டது. சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், நந்திக் கலம்பகத்திலும், பாரத வெண்பாவிலும், சில தனிப்பாடல்களிலும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழப் பேரரசைத் தோற்றுவித்த ஆதித்த சோழன் முதல் மூன்றாம் இராசராசன் வரையில் சோழப் பேரரசர் பலர் தமிழகத்தின் பெருநிலப் பரப்பை ஒரு குடைக்கீழ் வைத்தாண்டனர். இப்பேரரசரும் பாண்டியருடனும் சேரருடனும் இலங்கை அரசருடனும் இராட்டிர கூடருடனும் அவர்க்குப்பின் வந்த சாளுக்கிய ருடனும் பல போர்கள் செய்ய வேண்டியவராயினர். ஆயினும், போர்க் கப்பல்களைச் செலுத்திப் பல தீவுகளை வென்ற பெருமை இச் சோழர்க்கே உரியது. சோழப் பெருநாடு வடக்கே துங்கபத்திரை யாறுவரை பரவியிருந்தது. இப்பெரு நாட்டை ஏற்படுத்தியவன் முதலாம் இராசராசன். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சலர் படையெடுப்பாலும், தம்மாட்சி பெற்ற பாண்டியர் படை யெடுப்பாலும் சோழப் பேரரசு ஒழிந்தது. சோழர்களின் போர்ச் செயல்களை ஒன்பதாம் திருமுறை, கலிங்கத்துப் பரணி, மூவருலா, பெரியபுராணம் முதலிய தமிழ் நூல்களில் காணலாம். கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலிக்-காபூர் என்பவர் விந்த மலையைக் கடந்து யாதவ அரசரையும், ஹொய்சல அரசரையும் வென்று, பாண்டி நாட்டையும் கைப்பற்றினார். தமிழகத்துச் செல்வம் கொள்ளை போயிற்று. சிறிது காலம் தமிழகம் நிலை தளர்ந்தது. விஜயநகர அரசு ஏற்பட்ட பின்பு தமிழகம் அமைதியுற்றது. மதுரையிலும் தஞ்சையிலும் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. பின்பு தஞ்சையில் மகாராட்டிரர் ஆட்சி உண்டானது. விஜயநகர ஆட்சிக்குப் பின்பு தமிழகம் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. யாண்டும் ஓயாத போர்கள் நடைபெற்றன. வாணிகத்துக்காக வந்த ஆங்கிலேயரும் பிரெஞ்சக்காரரும் உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டுத் தமிழகத்தை மேலும் பாழாக்கினர். இறுதியில் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது. அதுவும் ஒழிந்து இன்று நம் நாட்டில் குடியாட்சி நடைபெறுகிறது. ஆட்சி முறை சங்க காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச்சர்களும் பலதுறை அலுவலர் களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்த ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், `உடன் கூட்டத்து அதிகாரிகள் எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றூர் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. ஊராட்சி ஒவ்வொரு கிராமமும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும் பல குடும்புகளாகப் (wards) பிரிக்கப்பட்டிருந்தது. கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராய், பல சாத்திர நூல்களையும் கற்றுப் பிறர்க்கு உணர்த்த வல்லவராய், செயலாற்றலில் திறமை உடையவராய், முப்பத்தைந்துக்கு மேற்பட்டு எழுபத்தைந்துக்கு உட்பட்ட வயதினராய், நல்வழியில் சம்பாதித்த பொருளும் தூய வாழ்க்கையும் உடையவராய், மூன்று ஆண்டுகட்கு உட்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்பினராய் இராதவராய் இருப்பவரே ஊரினரால் தேர்ந்தெடுக்க உரிமை உடையவராவர். அவையில் உறுப்பினராய் இருந்து கணக்குக் காட்டாத வரும், ஐவகைப் பெருந்தீமைகள் செய்தவரும், கிராமக் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், கள்ளக் கையெழுத்திட்டவரும், பிறர் பொருளை வவ்வினோரும், குற்றம் காரணமாகக் கழுதையின்மீது ஏற்றப்பட்டவரும், கையூட்டு (லஞ்சம்) வாங்கினவரும், கிராமத் துரோகி என்று கருதப் பட்டவரும், இவர்கட்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர். தேர்தல் முறை தேர்தல் நடைபெறும் நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுவதற்கான மாளிகையில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்படும். அங்குள்ள பெரியவருள் ஒருவர், அக்குடத்துள் ஒன்றுமில்லை என்பதை ஊரார்க்குக் காட்டிக் கீழே வைப்பர். பின்னர், ஒவ்வொரு குடும்பினரும் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதுவர்; அவ்வோலைகள் சேர்த்து அக்குடும்பின் பெயரெழுதிய வாயோலையால் மூடப்பட்டுக் கட்டப்படும்; அக்கட்டு, குடத்துள் வைக்கப்படும். இவ்வாறே எல்லாக் குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், ஊர்த் தலைவரான முதியவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் குடத்திலிருந்து ஓர் ஓலைக்கட்டை எடுப்பிப்பர்; அதனை அவிழ்த்து வேறொரு குடத்தில் இட்டுக் குலுக்குவர்; அவற்றுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுப்பிப்பர்; அதனைத் தாம் வாங்கிக் கிராமக் கணக்கனிடம் தருவர். அவன், தன் கையில் ஒன்றும் இல்லையென்பதை அவையோர்க்குக் காட்டி, அவ்வோலையைப் பெற்று, யாவரும் கேட்க அதில் எழுதப் பட்டுள்ள பெயரை உரக்க வாசிப்பான். பின்னர், அதனை அங்குள்ள அறிஞர் எல்லோரும் வாசிப்பர். பிறகு அப்பெயர் ஓர் ஓலையில் வரையப்படும். இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவரே, அக் குடும்பின் பிரதிநிதியாவர். இவ்வாறு பிற குடும்புகட்கும் தேர்தல் நடைபெறும். இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஓராண்டுவரை ஊராட்சிக் கழகத்தினர் ஆவர். உட்கழகங்களும் வேலைகளும் ஒவ்வொர் ஊராட்சிக் கழகத்திலும் சில உட்கழகங்கள் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினருள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் அநுபவத்திலும் மிக்கவர் பன்னிருவரைச் சம்வத்சரவாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றவருட் சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன் வாரியராகவும், சிலர் பஞ்ச வாரியராகவும், மற்றுஞ் சிலர் தோட்டவாரியராகவும் தேர்ந் தெடுக்கப்படுவர். இங்ஙனம் ஊராட்சிக் கழகம் ஊர்த்தேவை கட்கு ஏற்பப் பல உட்கழகங்களாகப் பிரிந்து நின்று கடனாற்றும். நியாய விசாரணை செய்தலும் அறநிலையங்களை மேற்பார்வை இடுதலும் சம்வத்சர வாரியர் கடமை. ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நீலைகளைப் பாதுகாத்தலும் விளை நிலங்கட்டு வேண்டுமளவு நீரைப் பாயச் செய்தலும் ஏரி வாரியத்தார் கடமை. `நிலங்கள், தோட்டங்கள் இவற்றைப் பற்றிய எல்லாவற்றையும் கவனித்தல் தோட்டவாரியர் தொழிலாகும். பலவகையாலும் வாங்கப்பட்ட காசுகளை ஆராய்வது பொன் வாரியர் பொறுப்பாகும். ஊரில் எப்பொழுதேனும் பஞ்சம், வெள்ளச்சேதம் இவை ஏற்படின், ஊராரைக் காப்பதற்கு முன்னேற்பாடாக ஆண்டுதோறும் குடிமக்களிடம் `பஞ்ச நெல் முதலியன வாங்கிச் சேமித்தல் பஞ்ச வாரியர் தொழிலாகும். இவ்வூராட்சியினர் `பெருமக்கள் எனவும் ஆளுங்கனத்தார் எனவும் வழங்கப்பட்டார்கள். இவர்களது ஆட்சிக்குரிய மாளிகை ஒன்று ஒவ்வொரு சிற்றூரிலும் இருந்தது. வாணிகம் கிறிதுவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர் மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத் தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய உறவு கொண்ட காரணத்தால், `யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்று கூறலாயினர். சங்க காலத்தில் முசிறி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் முதலியன தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களாய் விளங்கின. பிற்காலத்தில் நாகப்பட்டினம், காயல்பட்டினம், காந்தளுர்ச் சாலை, மாமல்லபுரம், மயிலை முதலியன துறைமுக நகரங்களாய் இருந்தன. சீனப் பேரரசர் தமிழகத்துடன் வாணிக உறவு கொண்டிருந்தனர். உட்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்தது. கடல் வாணிகத்தால் தமிழகத்துப் பொருளாதார நிலை உயர்ந்து காணப்பட்டது. தொழில்கள் பயிர்த் தொழிலுக்கு அடுத்தபடி நெசவுத்தொழில் சிறப்பாகக் கருதப்பட்டது. பருத்திநூல், பட்டு நூல், எலிமயிர் இவைகளால் ஆடைகள் நெய்யப்பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட ஆடைவகைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது அடியார்க்கு நல்லார் உரையால் அறியப்படும். பொது மக்களுக்குத் தேவையான பலதிறப்பட்ட பொருள்கள் கைத்தொழில்களால் வளம் பெற்றன. பொற் கொல்லத் தொழில் மிகவுயரிய முறையில் அமைந்திருந்தது. பயிர்த்தொழில் நாட்டின் உயிர்நாடி. ஆதலால், தமிழரசர் அதனைக் கண்ணுங்கருத்துமாகக் காத்து வந்தனர். ஆற்றுவசதி இல்லாத இடங்களில் பெரிய ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் எடுப்பிக்கப்பட்டன. மகேந்திர தடாகம் முதலிய பெயர்கள் பல்லவ வேந்தரை நினைவூட்டின. சோழப் பேரரசர், வீரசோழன் ஆறு, முடிகொண்டான் ஆறு என்னும் ஆறுகளையும், இராசராசன் வாய்க்கால் முதலிய வாய்க்கால்களையும் வெட்டு வித்தனர். திருமலைராயன் ஆறு என்பது பின்நூற்றாண்டுகளில் வெட்டப்பட்டது. இவ்வாறு நாடாண்ட மன்னர்கள் ஆறுகளைத் தோற்றுவித்தும், வாய்க்கால்களைப் படைத்தும், ஏரி குளங்களை ஏற்படுத்தியும், ஆற்றின் கரைகளை உயர்த்தியும் பயிர்த் தொழிலைப் பாதுகாத்து வளர்த்தனர். அளவைகள் நிறுத்தலளவை, நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணலளவை என்பன வழக்கில் இருந்தன. இராசகேசரி மரக்கால், ஆடவல்லான் மரக்கால், அருண்மொழி நங்கை மரக்கால் என முகத்தலளவைக் கருவிகள், கடவுள், அரசன், அரசியின் பெயர்கள் பெற்று விளங்கின. பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கிலிருந்தன. சமுதாய வரலாறு சங்க காலத்தில் தொழில் பற்றிய பிரிவுகளே சமுதாயத்தில் இருந்தன. பின்பு, கொல்லன் மகன் கொல்லனாகவும், பறையன் மகன் பறையனாகவும் கருதத்தகும் முறையில் சாதிகள் ஏற்பட்டுவிட்டன. வடநாட்டு வருண பேதங்கள் இந்நாட்டிலும் நுழைக்கப்பட்டன. இவ்வேறுபாடுகளால் சமுதாயத்தில் இருந்த ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. ஒருவனை ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் கருதினமையால், உயர்வு மனப்பான்மையும் இழிவு மனப்பான்மையும் மக்களிடையே வேரூன்றின. சமுதாயத்தில் ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதி யிலும் 3 முதல் 12வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. மநுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் வகுக்கப்பட்டது. அம்முறைப்படி நாடாண்டதாக மன்னர்களும் வெட்கமின்றிப் பறை சாற்றினார்கள். இவ்விழி நிலையால், சங்க காலத்தில் ஒன்றுபட்டிருந்த தமிழ்ச் சமுதாயம், பின் நூற்றாண்டுகளில் சின்னபின்னப்பட்டது. சோழப் பேரரசில் இச்சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின. இன்ன வகுப்பார் தெருக்களில் செருப்பபணிந்து போகலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டினாலும் இத்துணைச் சன்னல்களுக்குமேல் வைக்கக் கூடாது என்று மன்னனது ஆணை இருந்தது. இத்தகைய கொடுமைகள் சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன; சித்தர்களும், இராமலிங்கர் போன்ற பெரியாரும் சாதிகளையும் அவற்றை வற்புறுத்தும் பாழான சாத்திரங்களையும் வன்மையாகக் கண்டித்தனர். காந்தியடிகளாலும் பெரியாரது பெருந்தொண்டினாலும் அரசாங்கத்தின் சட்டத்தினாலும் இன்று இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சங்ககாலச் சமுதாய வாழ்க்கையை நோக்கி இன்றைய தமிழ்ச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆயினும், இப்போக்கில் விரைவு வேண்டும்; யாவரும் தமிழர் என்ற எண்ணம் வேண்டும்; கலப்பு மணங்கள் மிகுதல் வேண்டும்; சாதிகள் அறவே ஒழிதல் வேண்டும்; தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் புதிய சட்டம் வகுக்க வேண்டும். `ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் சட்டம் மாய்ந்தொழிதல் வேண்டும். கல்வி நிலை சங்க காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக் காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. காலப் போக்கில் தொழிலாளர்கள் கல்வியை இழந்தார்கள். கற்கும் உரிமை ஒரு சில வகுப்பினர்க்கே இருந்து வந்தது. சாதி வேறுபாட்டாலும் தீண்டாமையினாலும் பல வகுப்பினரும் சேர்ந்து படிக்க வசதி ஏற்படவில்லை. இந்த அவல நிலையில், அரசியல் போர்களும் குழப்பங்களும் கொள்ளைகளும் சமயப் போர்களும் சமுதாய அமைதியைக் கெடுத்தன. நாம் செய்த நற்பேற்றின் பயனாக, சாதி வேறுபாட்டைப் பெறாத வெள்ளையர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. யாவரும் கல்வி கற்க முற்பட்டனர். ஏழைகள் பணவசதியின்றி அல்லற்பட்டார்கள். தமிழன்னையின் தவப்புதல்வரான காமராசர் ஆட்சியில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இப்பொழுது தமிழ் உணர்ச்சியும் தமிழ் நாட்டுப் பற்றும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து வருகின்றன. சமய வரலாறு தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட தமிழர் பலவகைக் கடவுளரை வணங்கிவந்தனர். குறிஞ்சி நில மக்கள் முருகனையும், முல்லை நில மக்கள் கண்ணனையும், பாலை நில மக்கள் கொற்றவையையும், மருதநில மக்கள் மன்னனையும் , நெய்தல் நில மக்கள் கடலையும் வழிபட்டு வந்தனர். வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குடியேறிய காரணத்தால் தொல்காப்பியர் காலத்தில் கடல்-வருணனாகவும், மன்னன்- இந்திரனாகவும் உருவகப்படுத்தப்படும் நிலைமை உண்டாயிற்று என்று கூறலாம். வடவர் கூட்டுறவால் முருகன் சுப்பிரமணியனானான்; கொற்றவை துர்க்கையானாள்; இவ்வாறே பல மாற்றங்களும் சேர்க்கைகளும் சமயத்துறையில் உண்டாயின. இந்திரனுக்கும் அவன் வாகனமான வெள்ளையானைக்கும், பலதேவனுக்கும் மன்மதனுக்கும் தமிழகத்தில் கோவில்கள் ஏற்பட்டன. சமணராலும் பௌத்தராலும் ஏற்பட்ட கோவில்கள் பல. வைதிகரின் நுழைவால் வடமொழி மந்திரங்கள் தமிழகத்தில் நுழைந்தன. சுருங்கக் கூறின், சங்க இறுதிக் காலத்தில் பழந்தமிழ்ச் சமயம், வைதிகர் சமயத்தோடு கலப்புண்டது. தமிழர்தம் சிவன் உருத்திர-சிவனாக்கப்பட்டான். வடவர் சமயக்கலைகள் யாவும் தமிழகத்தில் பரவின. கண்ணன் வழிபாடு விஷ்ணு வழிபாடாக மாறியது. இவ்வாறு உண்டான மாறுதல்கள் பல. பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் பௌத்த சமண சமயங்களைத் தாக்கி வெற்றி பெற்றன. அப்போது நாட்டில் பல நூறு கோவில்கள் தோற்ற மெடுத்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தலந்தோறும் சென்று அருட்பாடல்களைப் பாடினார்கள். நாயன்மார் பாடியவை `திருமுறைகள் என்றும், ஆழ்வார்கள் பாடியவை ` அருளிச் செயல் என்றும் பெயர் பெற்றன. பல்லவர்கள் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களை அமைத்தார்கள்; பாறைகளையே கோவில்களாக மாற்றினார்கள்; கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டினார்கள்; பல்லவ மன்னர் சைவ வைணவ சமயங்களுக்குப் பெரிதும் ஆக்கமளித்தனர்; மறையவர்களுக்குப் பல புதிய ஊர்களையும் நிலங்களையும் வழங்கினர்; வடமொழிக் கல்லூரிகளை ஏற்படுத்தினர். இவற்றால் வைதிகர் செல்வாக்கு நாட்டில் மிகுதிப்பட்டது. சோழர் காலத்தில் இக் கோவில்களெல்லாம் சிறப்புற்றன. பல கோவில்கள் கற்றளிகளாய் மாறின. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற புதிய கற்கோவில்களும் தோற்றமெடுத்தன. சைவ சித்தாந்த சாத்திரங்களும் புராணங்களும் தோன்றின. வைதிகர் செல்வாக்கும் மிகுதிப்பட்டது. வைணவமும் வளர்ந்தது. ஆழ்வார் அருட்பாடல்கட்கு மணிப்பிரவாள நடையில் விளக்கவுரை எழுதப்பட்டது. வடநாட்டுச் சான்றோர் சோழர்க்கு அரசகுருமாராய் அமர்ந்தனர். முலீம் படையெடுப்பினால் சமயநிலை பெரிதும் தளர்ந்தது; ஆனால், நாயக்கர் ஆட்சியிலும் மகாராஷ்டிரர் ஆட்சியிலும் புத்துயிர் பெற்றது. அக்காலத்திய குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலியோர் சைவத்தை வளர்த்தனர். வெள்ளையர் ஆட்சியில் சமயம் ஓரளவு நலம் பெற்றது. சைவத்திலும் வைணவத்திலும் சாதி வேறுபாடுகளின் கொடுமையால் வாடி வதங்கிய மக்கள், சாதி வேறுபாடு அற்ற இலாத்தையும், கிறிதுவத்தையும் தழுவித் தங்கள் மனக்கவலையை மாற்றிக் கொண்டனர். மேனாட்டுப் பாதிரிமார் தமிழகம் போந்து கல்வியறிவையும் மருத்துவ உதவியையும் அளித்தனர். இவ்வருந்தொண்டால் தமிழர் பலர் கிறிதவராயினர். இங்ஙனம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இலாமும் கிறிதுவமும் தோன்றி வளர்ந்தன. சுருங்கக் கூறின், சைவர் வைணவர் கொடுமைகளே இச்சமயங்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்னலாம். மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வாணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும் பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப் பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவு தொடர்பில்லை என்பதை நன்கு விளக்கியுள்ளனர். பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்த முப்பொருள்கள் அறிஞரால் ஒப்புக்கொள்ளக் கூடியவை. ஒவ்வொரு சமயத்திலும் உள்ள சமயக் கட்டுக்கதைகள் நீக்கப்பட்டு, உண்மைக் கொள்கைகள் மட்டும் மக்களால் பின்பற்றப்படுதல் வேண்டும் என்பது நாட்டில் பிறந்த நல்லறிஞர் கருத்து. மக்களுக்குக் கல்வியறிவும் எண்ணிப் பார்க்கும் ஆற்றலும் வளர வளர, இக்கருத்து வலுப்பெற்று வருகின்றது. மொழிவரலாறு இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம். அஃது ஏறத்தாழக் கி.மு. 300-இல் இயற்றப்பட்டது என்று கூறலாம். அந்நூலில் சில வட சொற்கள் கலந்துள்ளன. அவை வடவர் நுழைவால் தமிழிற் கலந்துள்ளன. இதனால் வடவர் நுழைவிற்கு முன் இருந்த தமிழ் நூல்களெல்லாம் தனித் தமிழிலேயே இயன்றவை என்னும் உண்மையை எளிதில் உணரலாம். பின்னர் நாளடைவில் வேதியர் சமயத்தலைவர் ஆயினர். அவர் தம் வழிபாட்டு முறைகள் தமிழ் நாட்டில் பரவின. இன்ன பிற காரணங்களால் சங்ககாலத்திலேயே வடசொற்கள் தமிழிற் கலந்தன. புத்த சமயத்தவராலும் சமண சமயத்தவராலும் பிராகிருதச் சொற்களும் தமிழிற் கலந்தன. வடவர் செல்வாக்கு மிக மிக, தமிழிலும் வடசொற்கள் மிகுந்துகொண்டே வந்தன. தமிழ் யாப்பிலக்கணத்திலும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றிப் புதிய பாக்கள் தோன்றின; அணியிலக்கண நூல்களும் தோன்றின. இன்னின்ன சாதியினரைப் பாடும்பொழுது இன்னின்ன எழுத்துக்கள் பாவின் முதலில் இருக்க வேண்டும் என்னும் கேடான வரையறையும் ஏற்பட்டது. தமிழாசிரியருள் சிலர் வடமொழியையும் கற்று, `வடநூல் வழித் தமிழாசிரியர் என்று பெயர் பெற்றனர். வடமொழி இலக்கணத்தால் உண்டான புதுமைகளை யாப்பருங்கல விருத்தியுரையில் நன்கு காணலாம். சோழப் பேரரசர் காலத்தில் பாதி தமிழும் பாதி வடமொழியும் கலந்து புதிய நடையில் ஆழ்வார் அருட்பாடல்கட்கு விளக்கவுரை எழுதப்பட்டது. சைவமும் வைணவமும் வடமொழி வாணரால் பரப்பப்பட்டன. ஆதலால், அச்சமய நூல்களின் நடை கலப்பு நடையாகவே காணப்பட்டது. சைவசித்தாந்தக் கருத்துக்களும் கலப்பு நடையிலேயே எழுதப்பட்டன. ஏறத்தாழ 500 ஆண்டுகட்கு முன் இருந்த வில்லிபுத்தூர் ஆழ்வார் இயற்றிய பாரதத்தில் வடசொற்கள் மிகுந்திருத்தலைக் காணலாம். இவ்வாறே அருணகிரிநாதர் பாடல்களிலும், தாயுமானவர் பாடல்களிலும் எண்ணற்ற புராணங்களிலும் வடசொற்கள் மிக்குள்ளன. விஜய நகர ஆட்சியில் தமிழிசை ஒழிந்து, கருநாடக இசை தமிழகத்தில் வேரூன்றியது. ஒரு மொழியின் சேர்க்கையால் தமிழின் தனித்தன்மை எவ்வாறு கெட்டது என்பதை இதுகாறும் கூறியவற்றால் நன்கறியலாம். இன்று தமிழுணர்ச்சி வீறு கொண்டிருக்கிறது. தூய தமிழில் பேச வேண்டும் என்று மாணவர் உலகம் துடிக்கின்றது. தமிழறிஞர்களும் தூய எளிய நடையில் நூல்களை வெளியிடுகின்றனர்; தூய தமிழில் பேசுகின்றனர். பழந் தமிழ்ப் பெயர்கள் வழக்கில் வந்து கொண்டிருக்கின்றன. மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற தமிழ்ச் சான்றோர்களால் தனித்தமிழ் நடை உருவானது. இன்று அதனை வளர்க்க நற்றமிழர் விழைகின்றனர். முடிவுரை தமிழ் மக்களுக்குத் தமிழ், தமிழர், தமிழ் நாடு என்னும் கவலை ஏற்படுதல் வேண்டும்; மொழியைப் பாதுகாக்கவும் தமிழர் இன ஒற்றுமையை வளர்க்கவும் அறிவு வேண்டும்; சுய நலமே பெரிதெனக் கருதி மொழியையும், இனத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கும் கயமை ஒழிதல் வேண்டும். மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று ஆகிய மூன்றும் தமிழ் நாட்டுத் தலைவர்களிடம் உண்மையில் தோன்றுமாயின், இத்தமிழகம் சங்க காலத் தமிழகமாக மாறுவது எளிது. 2. தமிழ் வேந்தர் ஒழுக்கம் ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தமிழ் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் வேந்தர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்ல புலவர், பாணர், கூத்தர் என்போரை ஆதரித்தனர். வேந்தருட் சிலர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர்தம் பாக்களும் , புலவர்கள் தமிழ் முடிமன்னரையும், குறுநில மன்னரையும், பிற வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களும் மிகப் பல. அவற்றுள் அழிந்தன போக, எஞ்சியுள்ள பாக்கள் புறநானூறு என்னும் தலைப்பில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலிலுள்ள பாக்கள் பல நூற்றாண்டுகளில் பல புலவர்களால் பாடப் பெற்றவை; அப் புலவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். புறநானூற்றுப் பாடல்களில் பண்டைத் தமிழ் வேந்தர் செங்கோற் சிறப்பும், போர் முறையும், அவர்கள் புலவர்களைப் போற்றிய திறனும், தமிழ் மக்களுடைய பழக்க வழக்கங்களும், நாகரிகமும், நாகரிகத்தின் தலைமணியான பண்பாடும் நன்கறியலாம் பூத பாண்டியன் இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு எனப் பெயர் பெற்றது. மதுரையைத் தலை நகராகக் கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னருள் பூத பாண்டியன் என்பவன் ஒருவன். இப் பூத பாண்டியன் மீது பகையரசர் படையெடுக்கத் துணிந்தனர். அதனைக் கேள்வியுற்ற பாண்டியன் மிக்க சீற்றம் கொண்டான். அவ் வேந்தர் பெருமான் தனது அவைக் களத்தில் இருந்தோரைப் பார்த்து, ``பகை வேந்தர் ஒன்று சேர்ந்து என்னோடு போர் புரிவதாகச் சொல்லுகின்றனர். அவர்கள் மிக்க படையை யுடையவர்கள்; சிங்கம் போலச் சினந்து புறங்கொடாத மன வலிமை யுடையவர்கள், கடும்போரில் நான் அவர்களை வெல்வேன். அங்ஙனம் நான் அவர்களை வெல்லேனாயின், என் மனைவியைவிட்டு நான் பிரிந்தவன் ஆகக்கடவேன். அறநெறி மாறுபடாத அறங்கூறவையத்தில் அறநெறி அறியாத ஒருவனை வைத்து நீதி பிழைக்கச் செய்த கொடியவன் ஆகுக. மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதன், அழிசி, இயக்கன் என்பவரும் பிறருமாகிய என் உயிர் நண்பரை விட்டும், பல உயிர்களையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் பிறவாதும் மாறிப்பிறப்பேனாகுக. என்று சூள் உரைத்தான். இச் சூளுரையிலிருந்து நாம் பாண்டியனைப் பற்றி அறிவன யாவை? (1) இப் பெருமகன் தன் மனைவி மீது நீங்காத அன்புடையவன்- அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பன நன்கு புலனாகின்றன. (2) அறங்கூறவையத்தில் அறநெறி தெரிந்த சான்றோரே இருந்து வழக்குகளை விசாரித்து முறை வழங்குதல் வேண்டும். இதற்கு மாறாக , அறநெறி தெரியாத ஒருவனை நீதிபதியாக வைத்து நீதி வழங்கச் செய்தல் குடி மக்கட்குத் துரோகம் செய்வதாகும். அந்நிலையில் அரசன் கொடுங்கோலன் என்று கருதப்படுவான் என்பன காவலன் கருத்துக்கள் என்பது நன்கு விளங்குகின்றது. (3) உயிரொத்த சிறந்த நண்பர்களை விட்டுப் பிரிதலும், உயிர்களைப் பாதுகாக்கும் அரச பரம்பரையிலிருந்து ஒருவன் மாறிப் பிறத்தலும் கொடிய நிகழ்ச்சிகள் என்பது பாண்டியன் கருத்தாதல் அறியலாம். இவ் வுண்மைகளை நோக்க, (1) பாண்டியன் தன் மனைவியை நன்கு நேசித்து வந்தான் என்பதும், (2) அறநெறி உணர்ந்த சான்றோரையே அறங்கூறவையத்தில் நீதிபதியாக அமர்த்தி முறை வழங்கி வந்தான் என்பதும், (3) தன் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பதும், (4) உயிர்களைக் காக்கும் அரச குடியிற் பிறத்தல் சிறந்தது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு வெளியாகின்றன. இத்தகைய சீரிய ஒழுக்கமுடைய வேற்தனது ஆட்சி செங்கோலாட்சியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமுண்டோ? பாண்டியன் நெடுஞ்செழியன் `` `நெடுஞ்செழியன் வயதில் இளையவன்; சிறிய படையை உடையவன், எம்மிடம் நால்வகைப் படைகளும் நல்ல நிலையில் இருக்கின்றன, என்று பகைவர் கூறிக் கொண்டு என் மீது போருக்கு வருகின்றனர். இங்ஙனம் வரும் பகைவரை யான் வெல்லேனாயின், (1) என் குடை நிழலில் வாழும் குடிமக்கள் நிற்க நிழல் காணாமல், ` எங்கள் அரசன் கொடியவன் என்று கூறிக் கண்ணீர் சிந்திப் பழி தூற்றும் கொடுங்கோல் மன்னன் ஆகக் கடவேன்; (2) கல்வி, கேள்வி, ஒழுக்கம் இவற்றிற் சிறந்த மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் கூட்டம் எனது பாண்டிய நாட்டைப் பாடாதொழிவதாக; (3) வறியவர்க்குக் கொடுக்க முடியாத நிலையில் யான் வறுமையை அடைவேனாக. என்று மதுரை மன்னன் நெடுஞ்செழியன் சூள் உரைத்தான். இச் சூளுரையிலிருந்து நாம் அறியும் உண்மைகள் யாவை? (1) குடிகளுக்கு நிழலை அருளி அவர் மனம் மகிழ ஆட்சி புரிபவனே செங்கோல் அரசன், (2) கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களது பாராட்டுப் பெறுதலே காவலன் கடமை. (செங்கோல் அரசனையே ஒழுக்கம் மிகுந்த சான்றோர் பாராட்டுவர்) (3) `இல்லை என்று இரப்பவர்க்கு `இல்லை என்று சொல்லாத செல்வ நிலையும், மன நிலையும் அரசனுக்கு இருத்தல் வேண்டும்- என்னும் மூன்று உண்மைகளும் இச் சூளுரையிலிருந்து தெளிவாகத் தெரிகின்றன. சோழன் நலங்கிள்ளி இன்றைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களும், தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் தாலுக்காவும் சங்க காலத்தில் சோழ நாடாக இருந்தன. இதனை ஆண்ட முடி மன்னர் பலர். அவருள் கவி பாடும் ஆற்றல் பெற்ற காவலர் சிலரே. அச்சிலருள்ளும் போர்த் திறனிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவன் நலங்கிள்ளி என்பவன். ஒருமுறை அவன் மீது பகைவர் படையெடுத்தனர். அது கேட்டுச் சினந்த அப்பெருமகன், ``இப் பகைவர் என்னை வணங்கி, `எமக்கு நினது நாட்டைத் தரவேண்டும் என்று வேண்டுவாராயின், மன மகிழ்ச்சியோடு கொடுத்துவிடுவேன். அங்ஙனம் பணிவோடு வராமல் படைச் செருக்குடன் வருவதால், இவர்களை எதிர்த்துப் பொருதலே முறை. இவர்களை நான் வெல்லேனாயின், பொதுப் பெண்டிரது சேர்க்கையில் எனது மாலை துவள்வதாக, என்று சூளுரை புகன்றான். இச் சூளுரையால் இவனைப்பற்றி நாம் அறிவன யாவை? (1) வலிமை மிகுந்த இப் பேரரசன் அடியவர்க்கு எளியவன் - பணிவாரிடம் பண்புடன் நடப்பவன் என்பதும். (2) பொது மகளிரது சேர்க்கையை விரும்பாதவன், பொது மகளிரைச் சேர்தல் வெறுக்கத் தக்கது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு தெளிவாகின்றன. முடிவுரை இம் மூன்று சூளுரைகளிலிருந்தும் - பழந் தமிழரசர், (1) இல்லற வாழ்க்கையை இனிது நடத்தியவர், (2) பிற பெண்டிர் சேர்க்கையை வெறுத்தவர், (3) சிறந்த நண்பர்களை விட்டுப் பிரியாதவர், (4) குடிகள் வருத்தங் காணப் பொறாதவர், (5) சான்றோராகிய புலவர் பெருமக்களின் பாராட்டுதலை மதித்தவர், (6) வறியவர்க்கு வழங்கி மகிழ்ந்தவர், (7) ஆட்சிப் பொறுப்பை அணுவளவும் தவற விடாதவர் என்னும் உண்மைகள் புலனாதல் காணலாம். 3. வறுமையிலும் மான உணர்ச்சி செல்வம் உடையவராயிருக்கும் பொழுதும் வறியரா யிருக்கும் பொழுதும் மானவுணர்ச்சி உடையராயிருத்தல் சிலரது இயல்பாகும். செல்வரா யிருந்த பொழுது மானவுணர்ச்சி உடையவரா யிருந்தும், வறுமை ஏற்பட்டவுடன் மான உணர்ச்சி குறைந்தும் காணப்படுவர் பலர் ஆவர். கேவலம் வயிற்றுக்காக மானத்தை விற்பவரும் உண்டு. செல்வர் மன நிலையைப் படித்தறிந்து, அதற்கேற்பத் தாளம் போட்டு வயிறு கழுவுவோரும் சிலர் உண்டு. இத்தகைய பலருள் சங்க காலப் புலவர் எத்தகையவர்? சங்க காலப் புலவர் வறுமை மிகுந்த வாழ்க்கையர்; ஆயினும் தன்மான உணர்ச்சி மிக்கவர்; செல்வத்துக்கு வளைந்து கொடாதவர்; தம்மை மதியாதவர் பேரரசர் ஆயினும் பொருட்படுத்தாதவர்; தம்மை மதிப்பவரையே மனமுவந்து மதிப்பவர்; அரசர் அறநெறி தவறி நடப்பினும், அவர் முன் அஞ்சாது சென்று அறவுரை கூறும் மன வலி படைத்தவர்; குணமென்னும் குன்றேறி நின்றவர். சான்றாகப் புலவர் சிலருடைய செயல்களையும் சொற்களையும் கீழே காண்போம். ஔவையார் `பாண் என்னும் சொல் இசையைக் குறிப்பது. ஆதலால் இசையில் வல்லவர் `பாணர் எனப்பட்டனர். இப்பாணர் தாமே செய்யுள் இயற்றிப் பண்களில் அமைத்துப் பாடுதல் மரபு. எனவே, பாணர் இயற்றமிழில் வல்லவர் என்பது அறியத் தகும். இசையில் வல்ல பெண்பாலர் `பாடினியர் எனப்பட்டனர். இப் பாடினியர் மரபில் வந்தவர் ஔவையார் என்ற சங்ககாலப் புலவர். இவர் பைந்தமிழைப் பாங்குறக் கற்றவர்; கவி பாடும் ஆற்றல் மிக்கவர்; ஒழுக்கத்தில் விழுப்பமுள்ளவர். அப்பெரு மாட்டியார் தகடூரை ஆண்ட அதியமானது கொடைத் திறனைக் கேள்வியுற்றார்; அவனது நட்பைப் பெற விரும்பித் தகடூரை அடைந்தார். அதியமான் ஔவையாரோடு அளவளாவினான்; அவரது பெரும் புலமையை நன்கு அறிந்தான். ஆயினும் பரிசு கொடுப்பின் அவர் தம்மைவிட்டு நீங்குவர் என்ற எண்ணத்தால் பரிசில் கொடாது நீட்டித்தான். இந்த உண்மையை ஔவையார் அறியார். `` நாம் வந்து சில நாட்களாகியும், மன்னன் நமது புலமையை நன்கு சோதித்து அறிந்தான். ஆயினும் இன்னும் பரிசில் தரவில்லையே! ït‹ e«ik kâ¡F« âw« ïJjhdh? என்று ஔவையார் எண்ணி மனம் வருந்தினார்; அவன் உண்மையாகவே தம்மை மதிக்க வில்லை என்று எண்ணிக் கொண்டார். அவ்வளவில் அவருக்கு எல்லை யில்லாத சீற்றம் உண்டானது. அவர் உடனே தம் பொருள்களை ஒரு மூட்டையாகக் கட்டினார்; அதை எடுத்துக்கொண்டு அரண்மனையின் வெளிவாயிலை அடைந்தார். அங்கு வாயிற் காவலன் நின்று கொண்டிருந்தான், சீற்றம் மிகுந்த ஔவையார் அவ் வாயிற் காவலனை உறுத்து நோக்கி, ``வாயிற்காவலனே, வள்ளல்களை நாடி வரும் நுண்ணறிவு மிகுந்த புலவர் அடையாத வாயிலைக் காக்கும் காவலோய், நின் கொற்றவனாகிய நெடுமானஞ்சி தன் தகுதியை அறியாதவனா? என் தகுதியையும் அறியாதவனாய் எனக்குப் பரிசில் தராது காலங் கடத்திவிட்டான். இவன் தாராவிடின் உலகில் வேறு வள்ளல்கள் இல்லையா? இத் தமிழகம் வள்ளல்களே அற்ற பாலைவனம் ஆகி விட்டதா? கோடாரி கொண்டு செல்லுவோர்க்குக் காட்டில் விறகுப் பஞ்சமா ஏற்படும்? என் போன்ற புலவர்க்கு எப்பக்கம் சென்றாலும் சோறு கிடைப்பது உறுதி (புறநானூறு 206) என்று கூறினார். இக் கூற்றிலிருந்து, அரசனது செல்வத்தையும் செல்வாக்கையும் மதியாத ஔவையாரது மன வலிமையை நாம் நன்கு அறியலாம். பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருமான் குமண வள்ளல் காலத்தவர். அவர் வறுமையில் உழன்றார். mt® jhah® nfhÿ‹¿a »HÉ; m›t«ikah® tWikÆš tho, `vd¡F V‹ ï‹D« ïw¥ò tuÉšiy! என்று வருந்திக் கொண்டிருந்தார். பல நாள் பட்டினியால் மனைவியும் உடல் நலமற்றிருந்தாள். மனைவிக்குப் பால் கொடுக்கும் மார்பு வற்றிவிட்டது. பால் வந்து கொண்டிருந்த கண்கள் தூர்ந்து விட்டன. குழந்தைகள் அம்மார்பைச் சுவைத்துப் பால் வராதது கண்டு அழுதனர். குப்பையில் தானாக முளைத்த கீரையைப் பறித்து உப்பின்றிச் சமைத்துத் தின்றனர். அவர் மனைவி கந்தை ஆடையை உடுத்தி இருந்தாள். இத்தகைய கொடிய வறுமையில் வாடிய புலவர், பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவையைப் போல வள்ளல்களை நோக்கிச் சென்றார்; முதலில் வள்ளல் வெளிமான் என்ற சிற்றரசனைக் கண்டார். அப்போது அவன் இறக்கும் தறுவாயில் இருந்தான். புலவர்க்குப் பொருளுதவி செய்யும்படி அப் பெரு மகன் தன் தம்பியிடம் கூறி இறந்தான். வெளிமான் தம்பி புலவரது தகுதியை அறியாத காரணத்தாலோ அல்லது அவரை மதியாத காரணத்தாலோ சிறிது பொருள் கொடுத்தான். புலவர் தமது வறிய நிலையை நினைந்து அப்பொருளை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தம் தகுதி கவனிக்கப்படவில்லை என்பது அவர் உள்ளத்தைப் புண்படுத்தியது. தன்மான உணர்ச்சி மேலெழுந்து நின்றது. அதனால் அப் புலவர் பெருமான் அப் பரிசிலை ஏற்காது நடந்தார். அக்காலத்தில் முதிரமலை நாட்டை ஆண்டு வந்த குமணன் வரையாது கொடுக்கும் வள்ளலாய் விளங்கினான். அவனது கொடைச் சிறப்பைக் கேள்வி யுற்ற பெருஞ்சித்திரனார் அவ் வள்ளலைச் சென்று கண்டார்; தமது வறிய நிலையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். குமணன் கேட்டு உள்ளம் கனிந்தான்; புலவர்க்கு வேண்டும் ஆடை அணிகளையும் பிற பொருள்களையும் அவர் ஏறிச் செல்ல யானையையும் வழங்கினான். கண்ணில்லாதவர் கண் பெற்றோர் போலப் பெருஞ்சித்திரனார் பெரு மகிழ்ச்சி யடைந்தார்; யானை மீது அமர்ந்தபடி வெளிமான் அரண்மனையை அடைந்தார்; வெளியே காவல் மரத்தில் தமது யானையைக் கட்டிவிட்டு அரண்மனையுள் சென்றார்; இளவெளிமானைக் கண்டார்; கண்டு, ``அரசனே, எளியவர் வறுமையைப் போக்கும் ஈரம் உன்னிடம் இல்லை. எளியவரைக் காக்கும் வள்ளல்கள் நாட்டில் பலர் உண்டு. இரப்போர் உண்டாதலும் அவர்க்கு இடுவோர் உண்டாதலும் நீ கண்டாய். உனது காவல் மரத்தில் கட்டப்பட்டுள்ள யானை, யான் குமணனிடம் பெற்ற பரிசில். இதனை நீ அறிந்துகொள். இனி யான் போவன், (புறநானூறு, செ. 162) என்று கூறிவிட்டுப் பெருமிதத்துடன் நடந்து சென்றார். இதனால் நாம் அறிந்து கொள்வது யாது? புலவர் எவ்வளவு வறுமை யுற்றிருந்த போதிலும், தம் தகுதி அறியாது கொடுக்கப்படும் பரிசிலைப் பெறார் என்பதும், தம் மதிப்பறியாத மன்னர்க்கு, மதிப்பறிந்த மன்னர்பால் பெற்று வந்த பரிசிலைக் காட்டித் தமது மதிப்பை அறியும்படி அறிவுறுத்துவர் என்பதும் இப் புலவர் பெருமானது செய்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பெருந்தலைச்சாத்தனார் இப் புலவர் பெருமானும் குமணவள்ளல் காலத்தவர்; உள்ளதை உள்ளவாறு சித்திரித்துப் பாக்கள் புனைவதில் வல்லவர். வழக்கம்போல் இவரையும் வறுமை வாட்டத் தொடங்கியது. அதனால் இவர் கோடை என்னும் மலைப் பகுதியை ஆண்ட கடிய நெடுவேட்டுவன் என்பவனிடம் சென்றார். வேடர்கள் தலைவனான அத்தலைவன் இன்றுள்ள கோடைக்கானல் என்னும் மலைப் பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவன் தன்னைச் சார்ந்தவர்க்கு உதவிப் பகைவரை அழிக்கும் வன்மை உடையவன். புலவர் வேட்டுவர் தலைவனைக் கண்டு தம் புலமையைச் செய்யுள் வாயிலாக உணர்த்தினார். அவன் எக் காரணங் கொண்டோ பரிசில் கொடுக்கத் தாமதம் செய்தான். புலவர் வருத்தமும் சினமும் பொங்க அவனைப் பார்த்து, ``முல்லைக் கொடிகளை வேலியாக உடைய கோடை மலைத் தலைவனே, சினம் மிக்க நாயையும் வலிய வில்லையும் உடைய வேடர் தலைவனே, நிறைந்த செல்வத்தையுடைய சேர சோழ பாண்டியராயினும் எம்மை மதியாமல் கொடுப்பதை நாங்கள் விரும்போம். கடலை நோக்கிச் செல்லும் வெண்மேகம் கடல் நீரை முகவாமல் திரும்புவதில்லை. அது போலவே வள்ளல்களை நாடிச் செல்லும் புலவர் கூட்டம் யானையைப் பரிசிலாகப் பெறாது மீள்வதில்லை, செ.205 என்று புலவர் அழுத்தம் திருத்தமாக அறைந்துள்ளது கவனிக்கத் தக்கது. முடிவுரை இதுகாறும் கண்ட சான்றுகளால், சங்க காலப் புலவர் வறுமைக் காலத்திலும் மான உணர்ச்சி மிக்கவர் என்பதும், தம்மை அவமதிப்பவர் வேந்தராயினும் அஞ்சாது அவர்முன் எதிர் நின்று இடித்துரைப்பவர் என்பதும், தம்மை மதியாதவரை மதிக்கவைக்கும் திறனுடையவர் என்பதும் நன்கு புலப்படுகின்றன அல்லவா? 4. சங்கக்காலக் கல்வி நிலை இன்றைய கல்வி நிலை நமது நாட்டில் வெள்ளையர் ஆட்சி ஏற்பட்டது முதல் இன்று வரையில் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக-பல ஆயிரக் கணக்கான தொடக்க நிலைப் பள்ளிகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இன்று இந்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் தொகை நூற்றுக்குப் பதினைந்துதான் என்பத கவனிக்கத் தக்கது. இப் பதினைந்து பேரும் தமிழ் மொழியிலோ, ஆங்கிலத்திலோ போதிய புலமை பெற்றவர் அல்லர்; ஆங்கிலத்திலோ தமிழிலோ நன்கு பேசவோ எழுதவோ இயலாதவர். இடைக்காலக் கல்வி நிலை தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான சாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் மலிந்து கிடக்கின்றன. வெள்ளையர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இன்னின்ன வகுப்பார்தாம் கல்வி கற்க வேண்டும் என்னும் வரையறை இருந்து வந்தது. மிகச் சில வகுப்பினரே கல்வி கற்க உரிமை பெற்றிருந்தனர். குறிப்பிட்ட சில வகுப்பார் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவர் என்று வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். வேறு சில வகுப்பார் தொழிலாளர் என்ற காரணத்தால் சமுதாயத்தில் தனியாக ஒதுக்கப்பட்டிருந்தனர். இங்ஙனம் பற்பல காரணங்களால் தமிழ்ச் சமுதாயம் சின்ன பின்னப்பட்டுச் சீர் கெட்டிருந்தமையால், மன்னர்களால் மதிக்கப்பட்ட மறையவருட் பெரும் பாலர் வடமொழிக் கல்வியையும் பிற வுயர் வகுப்பினர் தமிழ்க் கல்வியையும் கற்று வந்தனர். பாடத் திட்டத்தில் சமயக் கல்வியே சிறப்பிடம் பெற்றிருந்தது. இடைக்கால நூல்கள் பல சமயத் தொடர்பான நூல்களாகவே இருத்தல் இந்த உண்மைக்கு ஏற்ற சான்றாகும். சங்க காலத்தில் ஏறத்தாழ இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்ட காலம் `சங்ககாலம் என்று கூறப்படும். அக்காலத்தில் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், திருக்குறள், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தோன்றின. புறநானூறு, அகநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்கள் தோன்றின. இவற்றில் உள்ள பாக்கள் பல; இவற்றைப் பாடிய புலவர் பலர்; அவருள் அரசர் சிலர்; அரச மாதேவியர் சிலர்; புலவர் பலர்; மருத்துவர், கூல வாணிகர், கொல்லர் முதலிய பல தொழில் செய்தோர் பலராவர். சமுதாயப் பெண்களுள் காவற் பெண்டு, குயத்தி, பாண்மகள், வேட்டுவச்சி முதலியோரும் இடம் பெற்றுள்ளனர். அதாவது, சமுதாயத்தின் மிகவுயர்ந்த அரசன் முதல் சிறிது காலம்வரை மிகத் தாழ்ந்தவர் என்று கருதப்பட்ட குறத்தி ஈறாக ஏறத்தாழ எல்லா வகை மக்களும் கல்வி கற்றிருந்தனர் என்பது இப்பாடல்களால் நன்கு விளங்குகிறது. விளங்கவே, சங்க காலத்தில் இன்னார்தாம் கல்வி கற்க வேண்டும் என்ற வரையறையில்லாமல் எல்லோருமே கல்வி கற்க வசதி அளிக்கப்பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது. காவற் பெண்டு வளமனையைக் காக்கும் காவற்பெண்டு தன் சிறு குடிலில் இருக்கின்றாள். அவள் ஒரு கவியரசி; அவள் மகன் சிறந்த போர் வீரன். அவன் போர்க்களம் சென்றிருக்கின்றான். mjid m¿ahj mtdJ e©g‹, mtid¤ njo¡ bfh©L fht‰bg©o‹ FoY¡F tªjh‹; m¡FoÈš ïUªj öiz¥ g‰¿¡bfh©L Ëwh‹; j‹ e©gÅ‹ e‰whia neh¡», ``Ë kf‹ ah©Ls‹? என்று கேட்டான். mtŸ mtid m‹òw neh¡», ``ï¢á¿a å£oš cŸs öiz¥ g‰¿ ËW, `Ë kf‹ ah©Ls‹? என்று கேட்கின்றாய். வலிய புலி .இருந்து சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுதான். அவன் போர்க்களத்தில் இருப்பான் என்று விடையளித்தாள். இவ்வாறு உரை நடையில் அவள் விடையிறுத்தாளா? இல்லை, இல்லை; கீழ் வரும் செய்யுளாக விடையளித்தாள்: ``சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோஎன வினவுதி; என் மகன் யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே! தோன் றுவன் மாதோ போர்க்களத் தானே சங்க காலக் காவற் பெண்டின் கவிதையைக் கண்டு மகிழ்க! பொன்முடியார் பொற் கம்பிகள் போலத் தலை முடி நரைத்த மூதாட்டியார் ஒருவர் `பொன்முடியார் என்று அக்காலப் புலவரால் அழைக்கப்பட்டார். அவ்வம்மையார் கீழ்வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்: ``மகனைப் பெற்றுச் சமுதாயத்திற்குத் தருதல் எனது கடன்; அவனைக் கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந்தவன் (சான்றோன்) ஆக்குதல் தந்தையினது கடமை. அவனை நல்ல குடி மகனாக வாழச் செய்வது வேந்தன் கடமையாகும். அவனுக்குத் தேவையான போர்க் கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லன் கடமையாகும். போர்க் களத்தில் யானையை வென்று மீளுதல் மகனது கடமையாகும். இக்கருத்து அடங்கிய கீழ் வரும் செய்யுள் பொன்முடியார் பாட்டாகும்: ``ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஒளிறுவான் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. நெடுஞ்செழியன் `கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். என்னும் உண்மையைப் பழந்தமிழ் அரசர் பண்புற உணர்ந்தவர். அதனால் அவர்கள் எல்லோருக்கும் கல்வி வசதி யளித்தனர்; வெளிப்படையாகக் கல்வியின் நலனைக் குடி மக்களுக்கு வற்புறுத்தி வந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியன், ``ஒரு தாய், தான் பெற்ற மக்களுள் கற்றவனையே பெரிதும் விரும்புவாள்; சமுதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இருந்தாலும், கல்வியில் தேர்ந்த தாழ்ந்தவனையே உயர்ந்தவன் விரும்புவான்; நாடாளும் மன்னன் ஒரு குடியிற் பிறந்த பலருள் வயதால் மூத்தவனை யோசனைக்கு அழையாமல், அறிவாற் சிறந்தவனையே அழைத்து யோசனை கேட்பான். இங்ஙனம், கற்றவனே வீட்டிலும், சமுதாயத்திலும், நாட்டிலும் சிறப்படை வான். ஆதலால் ஒவ்வொருவரும் எப்பாடு பட்டாகிலும் கல்வி கற்பது நல்லது, என்னும் கருத்துப்பட ஒரு செய்யுளைப் பாடியுள்ளான். அச் செய்யுள் பின் வருமாறு:- ``உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோனாறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. 5. சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை மூவகைத்தமிழ் மனிதன் உரை நடையிலும் செய்யுள் நடையிலும் செய்திகளை அறிகின்றான். இவ்விரண்டும் இயல் எனப்படும். பண் இசைத்துத் தாள வரையறை செய்து பாடப்படுவதும் ஒரு வகை. அது இசை எனப்படும். இயலும் இசையும் கலந்து காண்பார் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க வல்லதாய் நடித்துக் காட்டப்படுவது நாடகம் எனப்படும். இம் மூன்றும் ஒவ்வொரு மொழியிலும் அமைந்துள்ளன. ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை இங்ஙனம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வளர்த்த பெருமை தமிழ் ஒன்றுக்கே உரியது என்பது தவறாகாது. அப்பண்டைக் காலத்தில் தமிழ்-இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. இயற்றமிழில் வவ்லவர் புலவர் என்றும், இசைத் தமிழில் வல்லவர் பாணர் பாடினியர் என்றும், நாடகத் தமிழில் புலமை பெற்றவர் கூத்தர் கூத்தியர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். முத்தமிழ்ப் பயிற்சி இக்காலத்தில் இருத்தலைப் போலச் சங்க காலத்தில் கல்லூரிகள் இருந்தன என்று துணிந்து கூறுதல் இயலாது. ஆயினும், நாட்டின் மொழியாகிய தமிழை நலமுறக் கற்பிக்க எண்ணிறந்த திண்ணைப் பள்ளிகளோ உயர்நிலைப் பள்ளிகளோ இருந்திருத்தல் வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இயற்றமிழ்ப் பள்ளிகள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டும்; இசைத் தமிழ்ப் பள்ளிகள் பல இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே நாடகத் தமிழ்ப் பள்ளிகளும் நன்முறையில் நடை பெற்றிருத்தல் வேண்டும். இவை இருந்திராவிடில், நானூற்றுக்கு மேற்பட்ட இயற்றமிழ்ப் புலவர்களையும் எண்ணிறந்த இசைவாணர்களையும் மிகப் பலராகிய கூத்தரையும் சங்க காலம் பெற்றிருக்க வழி இல்லை. இயற்றமிழில் வல்ல புலவர்கள் எண்ணிறந்த இலக்கண நூல்களையும் மிகப் பல இலக்கிய நூல்களையும் கற்றவர். இசைத் தமிழ்ப் புலவராகிய பாணர்களும் பாடினியர்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளிலும் வல்லவராய் அக்காலத்தில் விளங்கிய சீறியாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் முதலிய பலவகை யாழ்களையும் வாசிக்கும் திறன் வாய்ந்தவராய் விளங்கினர். அக்காலத் தமிழிசை பற்றிய செய்திகள் மிகப்பலவாகும். இன்றுள்ள சிலப்பதிகாரம் முதலிய நூல் உரைகளில் இவை பற்றிய செய்திகள் இருத்தலை நோக்க, மிகப் பல இசை நூல்கள் அக் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றனது. உள்ளக் கருத்தை உடற் குறிப்புகளால் காண்போர்க்கு உணர்த்துவது நடனமும் நாடகமும் ஆகும். இக்கலையில் வல்லவர் கூத்தர், கூத்தியர் எனப்பட்டனர். இக்கலை பற்றியும் பல நூல்கள் தமிழகத்தில் இருந்தன என்பது இன்றுள்ள சங்கத் தமிழ் நூல்களால் அறியப்படுகின்றது. உள்ளக் குறிப்பை வெளியில் தெரியும்படி நடிப்பதில் விறல் படைத்தவள் விறலி எனப்பட்டாள். தமிழ் வளர்த்த முறை படித்துப் புலமை பெற்ற புலவர் பலர் பள்ளி ஆசிரியர்களாய் அமைந்தனர். வேறு பலர் முடி மன்னர் அவைகளிலும் சிற்றரசர் அவைகளிலும் அவைப் புலவராக அமர்ந்தனர். பின்னும் பலர், ஊர்தோறும் சென்று பேரிகை கொட்டி வாணிகம் நடாத்திய பேரி-செட்டிமார் போலவும், பழமரம் நாடிச் செல்லும் பறவைகளைப் போலவும் தமிழைப் பேணி வளர்த்த தகைசான்ற மன்னர்களை நாடிச் சென்று, தம் புலமையை வெளிப்படுத்தி, அவர் தந்த பரிசினைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அப் பரிசில் கழிந்தவுடன் பிற மன்னர்பால் சென்று தம் புகழ் நிறுவிப் பரிசு பெற்று மீண்டும் வந்தனர். இத்தகைய புலவர் பெருமக்கள் பாடியனவே சங்க காலப் பாடல்கள். போர்க்களத்தில் வெற்றி பெற்ற அரசர்களைப் புலவரும் பாணரும் கூத்தரும் சென்று பாடுதல் மரபு. விறல் வேந்தர் அம்முத்தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி அவர் மனம் மகிழும்படி பரிசளித்தல் வழக்கம். சேரன், சோழன் என்னும் முடியுடை அரசர் இருவரையும் அவரோடு இணைந்து வந்த பெரு வேளிர் ஐவரையும் தலையாலங்கானத்தில் முறியடித்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனார். மரங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் போன்ற புலவர் பெருமக்கள் உளமாரப் புகழ்ந்து பாராட்டியுள்ள பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். வேந்தர்களது வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும், குணநலன்களையும் புலவர்கள் பாராட்டிப் பரிசு பெற்றனர். அங்ஙனமே தக்க காலங்களில் அவர்களுக்கு அரிய அறிவுரைகளைப் புகட்டிய புலவர்களுக்கும் மனமுவந்து பரிசளித்தனர். அரசர் இருவருக்குள் போர் நிகழ இருத்தலை உணர்ந்து, அப்போர் நடைபெறாமற் காத்த புலவர்களும் உண்டு. அப்புலவர் பெருமக்களும் பரிசில் பெற்றனர். ஆட்சி முறையிலும் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் அரசர்க்கு அறிவுரை கூறிய அருந்தமிழ்ப் புலவர்களும் அக்காலத்தில் வாழ்ந்தனர். தன் மனைவியைத் துறந்த பேகனுக்குக் கபிலர், பரணர் முதலிய சான்றோர் அறிவுரை பகன்றனர் என்பதைப் புறநானூற்றில் காணலாம். தம் மன்னனோடு போர்க்களம் புகுந்து, அவனை அவ்வவ்போது ஊக்கப்படுத்தி, அவனோடு இன்புற்றும் துன்புற்றும் வாழ்ந்த புலவர்களும் உண்டு. கபிலரும் ஔவையாரும் இத்துறைக்கு ஏற்ற சான்றாவர். `புலமை புலமைக்காகவே என்பது பண்டைக் காலக் குறிக்கோளாகும். மருத்துவர், கொல்லர், கூலவாணிகர், பேரிகை அடித்து வாணிகம் செய்தவர், வளமனையைப் பாதுகாத்த காவற் பெண்டிர், குயத்தியர், குறத்தியர் முதலிய பலரும் தத்தம் தொழில்களைச் செய்துகொண்டே பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் மக்களிடம் காணப்பட்ட வீரம், கொடை, அன்பு, அருள் முதலிய நற்பண்புகளைப் பாராட்டிப்பாடிய பாடல்கள் பலவாகும். புலவர்கள் அரசர்பால் பரிசில் பெற்று மீண்டும் தம் ஊர் செல்லும்போது வள்ளல்களை நாடிச் செல்லும் புலவர்களை வழியில் சந்திப்பதுண்டு; உடனே அவர்தம் வறுமையைப் போக்க விழைந்து, அவர்களைத் தமக்குப் பரிசில் ஈந்து மகிழ்ந்த மன்னர்பால் ஆற்றுப்படுத்துதல் வேண்டும். தமக்குப் பரிசில் தந்த மன்னனுடைய சிறப்பியல்புகள், அவனது அரண்மனைச் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அந்நகரத்திற்குச் செல்லும் வழி பற்றிய விவரங்கள் இன்ன பிறவற்றைப் பரிசில் பெற்று மீளும் புலவர், வழியில் காணப்பட்ட புலவர்க்கு விரித்துரைத்து, அவரை அவ்வள்ளல்பால் ஆற்றுப் படுத்தல் ஒரு நீண்ட பாவாக அமையும். இங்ஙனம் அமைந்த பாட்டுப் புலவர் ஆற்றுப்படை எனப்படும். இங்ஙனமே பாணரை ஆற்றுப்படுத்தலும் உண்டு. அது பாண் ஆற்றுப்படை எனப்படும். இவ்வாறே விறலியை ஆற்றுப்படுத்தலும் உண்டு. அது விறலி ஆற்றுப்படை எனப்படும். இப்படியே கூத்தரை ஆற்றுப்படுத்தலும் வழக்கம். அது கூத்தர் ஆற்றுப்படை எனப் பெயர் பெறும். இத்தகைய ஆற்றுப் படைப் பாடல்களைப் பத்துப் பாட்டில் காணலாம். புறநானூற்றிலும் பல பாடல்கள் உண்டு. 6. பூங்குன்றனார் பொன் மொழிகள் சங்ககாலப் புலவர் சங்ககாலத்தில், இன்று நமது சமுதாயத்திலுள்ள முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர், ஐயங்கார் என்ற சாதிப் பெயர்களோ சாதிகளோ இருந்தமைக்குச் சான்று இல்லை. இயற்பெயர் `சாத்தன் என்று இருந்தால், அச்சாத்தன் மரியாதைக் குரியவனாக மாறும்பொழுது `ஆர் விகுதி கொடுக்கப்படும். அவன் `சாத்தனார் என வழங்கப் படுவான்; கபிலன், கபிலர் என்று வழங்கப் படுவான். அவன் இன்ன ஊரினன் என்பதைக் குறிக்க ஊர்ப்பெயர் பெயருக்கு முன் குறிக்கப்படும்; `சீத்தலைச் சாத்தனார் `உறையூர் மோசியார் என்றார்போல வரும். ஒரே ஊரில் ஒரே பெயர் கொண்ட புலவர் பலர் இருப்பின், அவர் செய்து வந்த தொழிலால் வேறுபாடு குறிக்கப்படும்; `கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றார் போல வரும். பிறந்த ஊர் வேறாகவும் தங்கித் தொழில் நடத்தும் ஊர் வேறாகவும் இருந்தால் இவ்விரண்டு ஊர்களையும் அவன் செய்யும் தொழிலையும் அவனது இயற் பெயரையும் சேர்த்து வழங்குதல் பண்டை மரபு; சீத்தலை என்னும் ஊரில் பிறந்த சாத்தனார் மதுரையில் கூலவாணிகராக இருந்தார் என்பதை உணர்த்த `மதுரைக் கூலவாணிகன் சீத்தலைத் சாத்தனார் என்று குறிக்கப்பட்டார். மயிலையார், நாகையார் என்றார் போலப் பிறந்த ஊரால் பெயர் பெற்றோர் பலர். பூங்குன்றம் என்பது பாண்டிய நாட்டு ஊர்களில் ஒன்று. இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியே சங்ககாலத்தில் பூங்குன்றம் எனப் பெயர் பெற்றிருந்தது என்பது கல்வெட்டால் தெரிகின்ற உண்மையாகும். கோள் நிலைகளைக் கணக்குப் பார்த்து மக்களுக்கு நேரும் நலன் தீமைகளைக் கணித்துக் கூறுபவன் இக்காலத்தில் சோதிடன் எனப்படுகிறான்; அக்காலத்தில் `கணியன் எனப்பட்டான். பூங்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த கணியன் ஒருவன், கணியன் பூங்குன்றன் என்று பெயர் பெற்றான். அக்கணியன் தன் தொழிலோடு நில்லாது, பைந்தமிழைப் பாங்குறக் கற்றுப் பெரும் புலவனாகவும் விளங்கினான். சங்க காலப் பெரும் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் இவர்தம் வரிசையில் வைத்து எண்ணத் தக்க பெரும் புலவனாக அப்பெருமான் விளக்கமுற்றிருந்தான். அப்பெரியோன் அருளிய பாடலொன்று புறநானூற்றில் (192) உள்ளது. பழந் தமிழர் கொண்டிருந்த சீரிய கருத்துக்களை அப்பாவில் வைத்துப் புலவன் பாடியுள்ளான். புலவர் பொன்னுரை (1) ``எமக்கு எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் எம்முடைய சுற்றத்தார். (2) ஒருவனுக்குக் கேடோ ஆக்கமோ வருவது அவனாலேயே தவிரப் பிறரால் அன்று. (3) சாதல் என்பது புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது. ஆதலால் வாழ்தலை இனியது என்று மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வெறுப்பு வந்தபோது இது கொடியது என்று எண்ணவுமில்லை. (4) பேரியாற்று நீரின் வழியே செல்லும் மிதவை போல நமது அரிய உயிர் ஊழின் வழிப்படும் என்பது அறிஞர் நூலால் தெளிந்திருக்கிறோம். ஆகவே நாம் நன்மையால் மிக்கவரை மதிப்பதும் இல்லை; அவ்வாறே நன்மையால் சிறியோரைப் பழித்தலும் இல்லை. விளக்கம் (1) இக்கூற்றின் கருத்து யாது? பண்டைக் காலத் தமிழர் பல நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தவர்; உள்நாட்டு வாணிகத்திலும் வெளி நாட்டு வாணிகத்திலும் சிறந்த பழக்கம் உடையவர். அவர்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றனர். அங்கங்குத் தங்கி அவ்வந் நாட்டு மக்களோடு பழகித் தங்கள் வாணிகத்தைப் பெருக்கினர். அயல் நாடு செல்வோர் அந்நாட்டு மக்களோடு அகங்கலந்து பழகினாற்றான் வாணிகம் சிறந்த முறையில் நடைபெறும். அந்நாட்டு மொழியையும் ஓரளவு அறிந்து அம்மக்களோடு பேசி அம்மக்கள் உள்ளத்தைத் தம்பால் ஈர்க்க வேண்டும். இத்துறைகளில் எல்லாம் பண்பட்ட தமிழ் வணிகர் தம் நாட்டைப்போலவே, தாம் தங்கி வாணிகம் நடத்திய பிற நாடுகளையும் மதித்தனர்; அம்மதிப்பு மிகுதியாற்றான் பல நூற்றாண்டுகள் பல நாடுகளோடு வாணிகத் தொடர்பு வலுப்பெற்று வந்தது. தமிழகத்துச் செல்வ நிலைக்கு இவ்வயல் நாட்டு வாணிகம் ஒரு சிறந்த காரணமாகும். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; அயல் நாட்டு வணிகரைத் தம் நாட்டில் வாழ்வித்தனர்; வசதிகள் அளித்தனர்; நன்கு கலந்து பழகினர். சீனர் அராபியர் யவனர் முதலிய பல நாட்டாரும் சங்காலத் தமிழகத்தில் தங்கி வளமுற வாழ்ந்தனர் என்பதைச் சங்க நூல்களால் அறிகின்றோம். அயல் நாட்டார் குறிப்புக்களும் இவ்வுண்மையை வலியுறுத்தும் சான்றாக நிற்கின்றன. இந்த உண்மையை உளம் கொண்ட கணியன் பூங்குன்றனார் என்ற புலவர், ``யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சுருங்கக் கூறினார். இவ்வுயரிய கருத்து இன்று ஈழம், பர்மா முதலிய நாடுகளுக்கு இல்லாது ஒழிந்தது வருந்தத் தக்கது. தமிழ் வணிகர் அந்நாடுகளில் படும் துன்பம் சொல்லக் கூடவில்லை. ஆனால் வந்தவர்க் கெல்லாம் வாழ்வளித்த தமிழ்நாடு, இந்த விரிந்த மனப்பான்மையால் இன்றும் வடநாட்டவர்க்கும் அயல் நாட்டவர்க்கும் வாழ்வளித்து வருகின்றது. `இது பிற நாட்டார் கடை, இங்கே பொருள் வாங்குதல் கூடாது என்ற எண்ணமே அவனது பண்பட்ட உள்ளத்தில் தோன்றவில்லை. இவ்வுயரிய பண்பாடு தமிழனை வாழ வைப்பதாக இல்லை; அஃதாவது, பண்பாட்டு அளவில் வாழ வைக்கின்றது; பொருளாதார அளவில் வாழ்விக்கவில்லை. (2) ``மனிதன் தன் நற்செயல்களால் தன்னை உயர்த்திக் கொள்கிறான். தன் தீச் செயல்களால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான் என்று விவேகானந்த அடிகள் கூறியுள்ளார். ``மனிதன் ஆவதும் அழிவதும் தன்னாலே தான் என்று ஜேம் ஆலன் என்னும் மேனாட்டு அறிஞன் புகன்றுள்ளான். இப்பேருண்மையையே ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் கணியன் பூங்குன்றனார் கழறியுள்ளார்-``தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று. மனித வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் இவ்வுயரிய உண்மையை அறிந்தவர் எத்துணையர்? மனிதன் தன் சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் உள்ளங்களைக் கவர்கிறான்; அவ்வாறே தன் தீய சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் வெறுப்புக்கு ஆளாகிறான்; கோள் சொல்லுவது, பிறர் வெறுக்கும் செயல்களைச் செய்தல் முதலிய இரு செயல்களால் பலராலும் வெறுக்கப்படுகிறான். இங்ஙனம் பலர் வெறுப்புக்கும் காரணம் அவனே தவிரப் பிறர் அல்லர். ``நான் அவனால் கெட்டுவிட்டேன், இவரால் இக்கேடு நேர்ந்தது என்று தன் கேட்டிற்குப் பிறரைக் குறை கூறும் மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை. இந்த உண்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து விட்டால், அவனது வாழ்வு செம்மைப்படும். கணக்கற்ற அறநூல்களைப் படிப்பதாலோ சமய நூல்களைப் படிப்பதாலோ ஒருவன் பெறும் பயனைவிட இப்பயன் மிகப் பெரியது; உயர்ந்தது. மனிதனது இன்ப வாழ்வுக்கு உயிர் நாடியான இப்பேருண்மையை மிகச் சுருக்கமாக உரைத்தருளிய புலவர் பெருமானுக்கு நமது நன்றி உரியதாகுக. (3) உலகில் மலர்ந்த பூ வாடுதல் இயல்பு; தோன்றிய ஒன்று மறைவதும் இயல்பு; அதுபோல் பிறந்தவர் இறத்தலும் இயல்பு. `பிறந்த நாம் இறவாமல் இருக்கப் போகிறோம்; இவ்வுலக இன்பங்களை எல்லாம் நுகரப் போகிறோம் என்று எண்ணுதல் அறிவற்றார் இயல்பு. அறிவு படைத்தவர், பிறந்தவர் இறத்தலால் எப்பொருளும் நிலையுடையதன்று என்னும் உண்மையை உணர்வார்; அதனால் பற்றற்ற நிலையில் வாழ்வர். அறிவுடைய செல்வர் ஊர் நடுவில் உள்ள பழுத்த மரம் போல மக்கட்குப் பயன்படுவர்; வாழ்வைப் பெரிதாக எண்ணி, வறுமையால் வாடும் எளியவர்பால் இரக்கம் கொள்ளாதிரார் இச் சிறந்த மனிதப் பண்பை ஊட்டி வளர்க்கக் தக்கது கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழி. அது, ``சாதலும் புதுவதன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே. என்பது. முடிவுரை இப்பொன்னுரைகளையும் இவற்றின் பரந்த பொருளையும் உள்ளத்தில் ஆழப் பதித்தல் நன்று. மனிதன் தன்னைப் போலவே பிறரை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; அந்நிலையில் அவன் எந்த நாட்டையும் தன்னோடென்று மதிப்பான். மனிதன் எந்த நாட்டவனாயினும் எங்கும் சென்று வாழலாம் என்னும் மன அமைதி பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் ``யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று மனம் மகிழப் பாடுவான். தான் உயர்வதும் தாழ்வதும் தன்னாலே தான் என்பதை உணரும் அறிவு மனிதனை வாழ்விக்கும். தோன்றுவது அழியும் என்ற உண்மை மனிதனுக்குச் சுயநலத்தை மிகுதியாக உண்டாக்காது. இவ்வுயரிய பண்புகள் மனிதனிடம் கருக்கொள்ளு மாயின், மனிதவாழ்வு மாண்புடைய வாழ்வாகும். கணியன் பூங்குன்றனாரின் அரிய பாடலைக் கீழே காண்க: ``யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவ தன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னா தென்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல்பொரு திரங்க மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 7. அகநானூறு - 1 சங்க நூல்கள் இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்குமுன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புலவர் பலர் இருந்து தமிழாராய்ந்தனர். அக்காலத்தில் செய்யப்பட்ட நூல்கள் ``சங்க நூல்கள் என்றும், அக்காலம் ``சங்க காலம் என்றும் பெயர் பெற்றன. அக்காலப் புலவர்கள் பேரரசரையும் சிற்றரசரையும் நாடிச் சென்று தனிப் பாடல்கள் பாடிப் பரிசு பெற்றனர். அப்பாடல்கள்``அகப் பாடல்கள் என்றும், ``புறப்பாடல்கள் என்றும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழும் வாழ்க்கை பற்றிய பாக்கள் ``அகப் பாக்கள் எனப்படும். அறம், பொருள், வீடு பற்றிய பாக்கள் ``புறப் பாக்கள் எனப்படும். அகப்பாக்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என ஐந்து நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. புறப்பாக்கள் புறநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்று மூன்று நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. அகப்பொருள் விளக்கம் பண்டைக் காலத்தில் ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு மணந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அம்மனம் ``களவு, ``கற்பு என்று இருவகைப்படும். பெற்றோரும் பிறரும் அறியாமல் காதல் வாழ்கின்ற நிலை ``களவு எனப்படும். பெற்றோர் அறிய மணந்து வாழும் வாழ்க்கை ``கற்பு எனப்படும். களவு மணம் குறிஞ்சித் திணை என்றும், கணவன் மனைவியை வீட்டில் விட்டு ஒரு காரணமாகப் பிரிதல் பாலைத்திணை என்றும், அப்பிரிவில் மனைவி ஆறுதல் பெற்றிருத்தல் முல்லை என்றும், மனைவி கணவனோடு கற்பு மணத்தில் வாழ்தல் மருதம் என்றும், கணவன் ஒரு காரணமாகப் பிரிந்து சென்ற பொழுது மனைவி இரங்குதல் நெய்தல் என்றும் பெயர் பெறும். இந்த ஐவகை ஒழுக்கங்களையும் பற்றிய பாடல்களே அகப் பாடல்கள் என்று பெயர் பெறும். அகநானூறு `கணவன் தன் இல்லற வாழ்க்கையில் கற்பதற்காகவும், வாணிகத்திற்காகவும் வேறு அலுவல் காரணமாகவும் மனைவியை விட்டுப் பிரிதல் உண்டு. அங்ஙனம் அவன் பிரிந்து சென்று மீண்டதும், தான் சென்ற ஊர்களில் அல்லது நாடுகளில் தான் கண்ட சிறந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும், தான் கேட்ட சிறந்த நிகழ்ச்சிகளையும் தன் இல்லத்தாரிடம் கூறுவது வழக்கம். இங்ஙனம் கூறப்பெற்ற செய்திகளில் பல நாட்டு வரலாற்றுச் செய்திகள் அடங்கும்; பல ஊர்களின் இயற்கைச் சிறப்பும் பொருளாதாரப் பொலிவும் பிறவும் அடங்கியிருக்கும். அவன் இல்லாத பொழுது அவன் மனைவியும் தோழியும் அவை பற்றிப் பேசுவதுண்டு. பாடலிபுரம் சந்திரகுப்த மௌரியன் அரசன் ஆவதற்கு முன்பு பாடலியைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை ஆண்டு வந்தவர் நந்தர் என்பவர். மகா பத்ம நந்தன் தன் எட்டுப் பிள்ளைகளோடும் மகத நாட்டை ஆண்டு வந்தான். அதனால் இவர்கள் ``நவ நந்தர்கள் என அழைக்கப்பட்டனர். இந் நந்தர் செல்வச் சிறப்பு வாய்ந்தவர். இந்த உண்மையை ``நந்தரது செல்வம் பெறுதற்கு வாய்ப்பு இருந்தாலும் என் தலைவர் அதற்காக அங்குத் தங்காமல் குறித்த காலத்தில் இங்கு வந்து விடுவார், என்று ஒரு தமிழ்ப் பெண்மணி தன் தோழியிடம் கூறுகின்றாள்: ``நந்தன் வெறுக்கை பெறிலும் தங்கலர் வாழி தோழி நந்தர் செல்வம் பெற்றவர் என்ற செய்தியைத் தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள் என்பது இதனால் தெரிகிறதன்றோ? அலெக்சாந்தர் படையெடுப்பு நந்தர்கள் பாடலியை ஆண்டபொழுது அலெக்சாந்தர் என்ற கிரேக்க மன்னன் இந்தியாவின் மீது படையெடுத்தான்; பஞ்சாப் மாகாணத்தில் புருசோத்தமனுடன் போரிட்டு வென்றான். அவன் கங்கைச் சமவெளியின்மீது படையெடுப் பான் என்ற செய்தியைக் கேட்ட நவநந்தர் அச்சம் கொண்டனர்; உடனே பாடலி நகரத்தில் ஒன்று கூடி ஆலோசித்தனர். அலெக்சாந்தர் மகத நாட்டின் மீது படையெடுப்பின், தமது செல்வம் அவனிடம் அகப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்; அதனை எவ்வாறு மறைத்து வைக்கக் கூடும் என்று ஆலோசித்தனர்; நீண்ட யோசனைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர். கங்கையாற்றில் நந்தர்கள் தங்கள் செல்வத்தைக் கங்கை யாற்றின் அடியில் புதைத்து வைப்பது என்று முடிவு செய்தனர். ஆற்றின் நடுவில் நீரோட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தனர்; இரண்டு பிரிவுகளுக்கு இடையே இருந்த மணற்பரப்பின்கீழ் உறுதியான நிலவரையைக் கட்டினர்; கற்சுவர்களில் ஈயத்தை உருக்கி வார்த்தனர்; இங்ஙனம் உறுதியாக அமைக்கப் பெற்ற அந்த நிலவரையில் ஐந்து அறைகளைக் கொண்ட பெட்டியை வைத்தனர்; அப் பெட்டியில் பொன்னையும் மணியையும் நகைகளையும் குறித்து நிரப்பினர்; நிலவறையை மூடி அம் மூடியின்மீது ஈயத்தை உருக்கி வார்த்தனர்; பின்பு முன் போலவே நீரோட்டத்தை ஒழுங்காகச் செல்ல விடுத்தனர். இச் செய்தி சந்திரகுப்தன் வரலாறு என்றும் தெலுங்கு நூலில் குறிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை ஒரு தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள் அவள். மிக்க புகழ் வாய்ந்த நந்தர்கள் பாடலிபுரத்தில் கூடிக் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செல்வம். நம் தவைர் குறீத்த காலத்தில் வராமைக்குக் காரணமாக இருக்குமோ? என்று ஐயப்பட்டாள். இச் செய்தியை அகநானூற்றுப் பாடலொன்று அறிவிக்கின்றது. ``பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ? இத்தகைய பல அரிய செய்திகள் அக்காலத் தமிழ்ப் பெண்கள் அறிந்திருந்தனர் என்பதை அகநானூறு அறிவிக்கின்றது. 8. அகநானூறு - 2 இக்காலத் தமிழர் திருமணத்தில் புரோகிதன் இடம் பெறுகிறான்; எரி ஓம்பப்படுகிறது; மணமக்கள் தீவலம் வருகின்றனர்; அம்மி மிதிக்கப்படுகிறது; அருந்ததி காட்டப் படுகிறது; மணமகன் காசி யாத்திரை போகிறான்; புரோகிதன் தமிழர் திருமணத்தில் தமிழர்க்குப் புரியாத வேற்று மொழியில் மந்திரங்களைச் சொல்கிறான். இவை எல்லாம் அகநானூறு போன்ற பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கின்றனவா? இவை தமிழருக்குரிய திருமணச் சடங்குகளா? அகநானூறு என்னும் தொகை நூலில் இரண்டு பாக்களில் கூறப்பட்டுள்ள இரண்டு திருமண நிகழ்ச்சிகளை இங்குக் காண்போம்: 1. திருமண வீட்டு முற்றத்தில் வரிசையாகக் கால்களை நிறுத்திப் பந்தல் போடப்பட்டிருந்தது. மணவறையில் மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. ஒருபால் உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த பொங்கலோடு மணவிருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. சந்திரனும் உரோகிணியும் கூடிய விடியற் காலையில் முதிய மங்கல மகளிர் மணப் பெண்ணை நீராட்டுவதற்குரிய நீரைக் குடங்களில் கொண்டு வந்து தந்தனர். மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் அக்குடங்களை வாங்கி, ``கற்பு நெறியினின்றும் வழுவாமல் நல்ல பல பேறுகளைத் தந்து கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடைய ஆகுக, என்று வாழ்த்திக் கொண்டே மணமகளை நீராட்டினர். அந்நீரில் மலர்களும், நெல் மணிகளும் இடப்பட்டிருந்தன. இங்ஙனம் நீராடப் பெற்ற மணமகள் புத்தாடையணிந்து மணப் பந்தலில் அமர்ந்தாள். பின்பு சுற்றத்தார் விரைந்து வந்து, ``பெரிய மனைக் கிழத்தி ஆவாய், என்று வாழ்த்தினர். அன்று இரவு மணமக்கள் ஒன்று கூடினர். ``உழுந்துதலைப் பெய்த கொழுக்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல். (அகம்-86) (2) திருமண நாளன்று இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய்மிகுந்த வெண்சோறு மணத்திற்கு வந்த அனைவருக்கும் படைக்கப்பட்டது. பின்பு சந்திரனும் உரோகிணியும் கூடிய நல்ல நேரத்தில் மணவரையில் கடவுள் வழிபாடு நடைபெற்றது. முரசம் முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. முன் சொன்ன முறைப்படி மணமகள் மணநீராட்டப்பட்டாள். மணமகள் தூய உடையிற் பொலிந்தாள். அப்பொழுது சுற்றத்தார் அவளை வாழ்த்தி மணமகனுக்குக் கொடுத்தனர். ``மைப்பறாப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையார் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பம லறுகைத் தழங்கு குரல் வானின் றலைப்பெயற் கீன்ற மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித் துவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைப்பட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீத்த தலைநா ளிரவின். (அகம்-136) இவ்விருவகைத் திருமணங்களிலும் இக்காலத் திருமணச் சடங்குகள் இடம் பெறாமையைக் காண்க. மணமகளை வாழ்வர சியர் வாழ்த்தி மணநீராட்டுதலும் சுற்றத்தார் பெண்ணைக் கணவனோடு சேர்ப்பித்தலுமே சிறந்த சடங்குகளாகக் கருதப் பட்டன என்பது தெளிவு. ``கற்பு நெறியினின்றும் வழுவாமல் கணவன் உள்ளங்கவர்ந்த காரிகை ஆகுவாய், என்று வாழ்வரசியரால் கற்பிக்கப்பட்டதால் மணமகள் கற்புடையவள் ஆயினாள். அங்ஙனம் கற்பிக்கப்பட்டபடி நடந்தவள் `கற்புடை மனைவி எனப் பட்டாள். திருமணத்திற்கு இன்றியமையாதது, பலரறிய இருதிறத்துப் பெற்றோரும் மணமக்களை ஒன்றுபடுத்தலே ஆகும். இன்னவர் மகள் இன்னவர் மகனை மணந்து கொண்டாள் என்பதை அறியச் செய்வதே திருமணத்தின் சிறப்பு நிகழ்ச்சியாகும். முன்னரே வாழ்வரசியராக இருக்கும் பெண்கள் வாழ்வரசியாகப் போகும் பெண்ணை வாழ்த்தி நீராட்டுதல் வரவேற்கத் தக்கதே. இந்த இரண்டு திருமணங்களிலும் முதல் நிகழ்ச்சியாக விருந் துண்ணல் கூறப்பட்டுள்ளது. எல்லோரும் உண்டு மனமகிழ்ச்சி யோடு வாழ்த்துக் கூறுதல் நல்லதுதானே! இவ்விரண்டு திருமண முறைகளையும் படித்துத் தெளிந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச ஐயங்கார் அவர்கள், ``இவ்விரு திருமண முறைகளிலும் எரிவளர்த்தல் இல்லை; தீவலம் வருதல் இல்லை; தட்சிணைப் பெறப் புரோகிதர் இல்லை. இவை முற்றும் தமிழர்க்கே உரியவை என்று கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது. 9. புலவர் பெருந்தகை சங்க காலப் புலவர் சங்க காலப் புலவர்கள் சிறந்த கல்விமான்கள்; அதே சமயத்தில் வறுமையால் வாட்டமுற்றவர்கள்; ஆயினும் வணங்கா முடியினர்; தவறு செய்பவன் அரசனாயினும் வலிந்து சென்று கண்டிக்கும் இயல்புடையவர்; பிறர் துயர் காணாப் பெற்றியினர்; தாமே சென்று அத்துயர்களையும் மனப்பண்பு நிறைந்தவர். அரசரிருவர் போர் செய்யுங்காலை அவரிடம் சென்று இரு நாடுகளுக்கும் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்துப் போர் நிறுத்தம் செய்யும் புகழ்மிக்க மனவலி படைத்தவர். இங்ஙனம் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த சங்க காலப் புலவர்களில் தலை சிறந்த பெரியார் கோவூர் கிழார் என்பவர். நலங்கிள்ளி-நெடுங்களிள்ளி-போர் சோழப் பெருவீரனான கரிகால் வளவனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளி என்னும் அவன் பங்காளிக்கும் சோழ நாட்டில் போர் மூண்டது. இருதிறத்தாரும் தத்தம் படைகளை முடுக்கிப் போரிட்டனர். உறையூர் ஆண்டுவந்த நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்குத் தோற்றுக் கோட்டையுள் ஒளிந்துகொண்டான். நலங்கிள்ளி அவனை விடாமற் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகை யிட்டான். முற்றுகை பன்னாள் நீடித்தது. கோட்டையுள் இருந்த மக்கள் வெளியிலிருந்து பொருள்கள் வாராமையால் துன்புற்றனர்; வழக்கம்போல் கோட்டைக்கு வெளியே வந்து போகும் வாய்ப்பிழந்து வருந்தினர். கோட்டைக்கு வெளியிலிருந்த மக்களும் நலங்கள்ளி படையினரால் துன்புற்றனர்; தம் உரிமையோடு பல இடங்களில் நடமாட இயலாமல் வருந்தினர். புலவர் வருகை இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது. அருள் உளம் கொண்ட அப்புலவர் போர்க்களத்தருகில் விரைந்து வந்தார். போரினால் இருதிறத்து மக்களும், மாக்களும் படும் துன்பங்களைக் கண்டு அவர் மனம் நெகிழ்ந்தது. தமிழ் நாட்டு மூவேந்தர்களும் தமிழ் வேந்தரென்னும் ஒரு குடியிற் பிறந்தவர்களே. அவ்வா றிருந்தும் அம் மூவரும் தம்முள் இருந்த மாறுபாட்டால் பல போர்கள் நிகழ்த்தி நாட்டை அவல நிலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்த செயல் முன்னரே புலவர் நெஞ்சை வருத்தியது. இங்கு நடைபெறுகின்ற போரோ ஒரே சோழர் குடியில் தோன்றிய இரு மன்னரால் நடைபெறுவதன்றோ? பகைவர் இருவர் போர்செய்வது இயல்பு. ஒரு குடிப்பிறந்தோர் இவ்வாறு போரிட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் அழிக்கும் செயல் கண்டு ஒருபுறம் வியப்பும் ஒருபுறம் இரக்கமும், ஒருபுறம் இகழ்வும் புலவர் நெஞ்சில் எழுந்தன. புலவர் அறிவுரை புலவர், போரிடும் மன்னரிருவர் இடையிலும் சென்று நின்றார். ``சோணாட்டுப் பெருவேந்தர்களே! நிறுத்துங்கள் போரினை. உங்கள் முன்னோருட் சிறந்தவர் தமிழ் நாட்டுக்கும் அப்பாலுள்ள பிறநாடுகளை வென்று வாகை சூடிப் புகழ் பெற்றார்கள். உங்கள் முன்னோரில் பின்னோர் சிலர் பிற நாடுகளை வெல்லும் ஆற்றலின்றிச் சேர பாண்டியரையாவது வென்று விளங்கினர். நீங்களோ அத்துணையும் ஆற்றலின்றி உங்களுள்ளேயே போரிட்டு வெற்றி காண விழைந்தீர் போலும்! மிக நன்று உங்கள் செயல்! உங்களுடன் எதிர் நின்று பொருபவன் பனைமாலை யணிந்திருக்க வில்லையே! பனை மாலையணிந்த சேரனுடன் போர் உடற்றி வென்றி யெய்துவீராயின் அச் செயல் பாராட்டுதற்குரியதாகுமே; அல்லது வேப்பந் தாரையணிந்த பாண்டியனாகவும் தோற்ற வில்லையே; எதிர்த்து நின்ற இருவீரும் ஆத்தி மாலையை யல்லவா அணிந்திருக்கிறிர்கள். ஒரே சோழர் குடியில் தோன்றியவர்களல்லவா நீங்கள்? அயல் நாட்டு மன்னரை வென்றி கொண்டீரில்லை; அன்றி உள்நாட்டுச் சேர பாண்டியருடனும் போர் செய்து வெற்றி எய்த நினைந்திலீர். ஒரு நாட்டு மன்னராகிய உங்களுள்ளேயே போரிட உறுதி கொண்டீர் போலும்! உங்களில் ஒருவர் எப்படியும் தோற்பது உறுதி; இருவரும் வென்றியெய்துதல் எங்கும் காணாத செயல். உங்களில் யார் தோற்பினும் சோழர் குடி தோற்றொழிந்தது என்றல்லவா உலகம் பழிக்கும்? நீங்கள் பிறந்த குடிக்குப் புகழ் தேடாதொழியினும் பழியையாவது தேடாதிருத்தல் கூடாதா? இச் செயல் நும் சோழர் குடிக்கே பெரும் பழி விளைப்பதன்றோ? தம் குடியைத் தாமே அழித்து, தம் குடிக்குத் தாமே பழிதேடி மகிழ நினைக்கும் உங்கள் இருவர் செயலும் மிகமிக நன்று! நீங்கள் செய்யும் இவ்வதிசயப் போர் பிற நாட்டு மன்னர்களுக்கு விடா நகைப்பை யன்றோ விளைவிக்கும், என்று உள்ள முருகக் கூறினார். செல்லுஞ் சொல் வல்லராகிய கோவூர் கிழாரின் அறிவுரை கேட்ட இருபெரு வேந்தர் மனமும் நாணின; தங்கள் இழி செயலுக்கு வருந்தித் தலையிறைஞ்சிப் புலவர் பெருமானை வணங்கினர். புலவரும், தம் குற்றத்தை யுணர்ந்து வருந்திய மன்னர்களை நோக்கி, `` புவிபுரக்கும் மன்னர் பெருமக்களே! கழிந்ததற் கிரங்காமல், இனியேனும் நீங்கள் ஒன்று பட்டு வாழ்வதுடன், தமிழ் நாட்டுப் பிற மன்னருடனும் சேர்ந்து பகையின்றி நெடிது வாழுங்கள், என வாழ்த்திப் போரை நிறுத்தி ஏகினார். 2 கோவூர் கிழாரது பெருந்தன்மையை விளக்கப் பிறிதொரு சான்றும் காணலாம். மேற்கூறப்பெற்ற நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உறையூர் முற்றுகையில் ஈடுபட்டிருந்தகாலை, கோவூர் கிழார் அங்குத் தோன்றி முற்றுகையால் உண்டான துன்ப நிலையைக் கண்டு மனம் வருந்திக்கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இளந்தத்தன் சங்க காலப் புலவர் பெருமக்கள் ``திருவேறு தெள்ளிய ராதலும் வேறு என்னும் இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாக விளங்கினர். அறிவும் வறுமையும் ஒன்றுபட்டுக் கைகோத்துச் சென்று புலவர் வாழ்வில் பங்கு கொண்டன. ஆயினும் பெருந்தன்மையையே அணிகலனாகக் கொண்டு அப்பெரு மக்கள் ``பழுமரந்தேரும் பறவைபோல வள்ளலை நாடி வளம் பெற்று வறுமை யொழிவர், வாங்கி வந்த வளமனத்தையும் வைத்தினிது வாழாமல், ஏங்கிக் கிடக்கும் ஏழை பலர்க்கும் வாரி வழங்கும் வள்ளல் தொழிலில் இறங்கிப் பின்னும் வறுமையில் இறங்குவர். ,இங்ஙனம் நாடாறு திங்களும் காடாறு திங்களும் வாழ்ந்த பிற்கால விக்கிரமாதித்தனைப் போலவே முற்காலப் புலவர்கள் சில காலம் வள்ளலாகவும் சிலகாலம் வறியராகவும் மாறி மாறி வாழ்ந்து வரலாயினர். இவ்வாறு வாழ்வு நடாத்திய புலவர் பெருமக்களுள் இளந்தத்தரும் ஒருவராவர். நலங்கிள்ளிபால் இளந்தத்தர் சோழன் நலங்கிள்ளி புவிமன்னனாகவும் கவி மன்னனாகவும் விளங்கியவன்; கல்வியும் ஒழுக்கமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவன். ``தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே என்று அவ்வேந்தன் பாடும் வஞ்சினப் பாட்டு அவன் புறப் பகைவரை வென்றி கொள்ளும் போராண்மையினையும் காமம் என்னும் அகப்பகைவனை வென்றி கொள்ளும் பிறர் மனைவிழையாப் பேராண்மையினையும் ஒருங்கு காட்டு மன்றோ? ஒழுக்கமும் கல்வியும் உயிரும் உடம்புமாகக் கொண்ட இப்பெரு வேங்தன், அத்தகையினராகிய புலவர் பெருமக்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மையுடையனாகவும் விளங்கினான் என்பது கூறவும் வேண்டுமோ! இம்மன்னன் புகழைக் கேள்வியுற்ற புலவர் இளந்தத்தர் அவனைக் கண்டு பாடிப் பரிசு பெறும் வேட்கை மிகுந்தார்; புகாருள் புகுந்தார்; வளவன் கோயிலை வந்தடைந்தார். நலங்கிள்ளியைக் காணாமல் வருந்தினார்; நெடுங்கிள்ளியின் உறையூரை முற்றுகையிட்டு, ஆண்டு அவன் படையுடன் உறைகின்றான் என்பதை அறிந்தார்; `போர்க்களத்தில் சென்றா பரிசு கேட்பது எனப் புலவர் மனம் வாடியது; எனினும், புலவர் தம் வறுமை பின்னிருந்து தள்ள; மன்னனின் பண்பு நலம் முன்னிருந்து இழுக்க, உறையூர்க்கு விரைந்தார் இளந்தத்தர். உறையூர் முற்றிய நளங்கள்ளியை முற்றுகையிட்டார் தத்தர்; புகார் வேந்தன் பால் தம் வறுமையைப் பற்றி அமைதியுடன் இனிது எடுத்தியம்பினார். போரிலேயே ஊக்கம் செலுத்திய நலங்கிள்ளியின் மனம் புலவர் பக்கம் திரும்பியது. புலவர்தம் ஒட்டிய கன்னமும் கட்டிய கந்தையும், நரைத்த தலையும் திரைத்த உடலும் வாடிய மேனியும் பாடிய வாயும் கிள்ளியின் உள்ளத்தை உருக்கின. ``புகாரை அமைதியுடன் அரசு புரிந்த அந்த நாள் வந்திலீர்! அருங்கவிப் புலவீர்! உறையூர் முற்றிய இந்த நாள் வந்தெனை நொந்து நீர் எய்தினீர். பெரும் பரிசு தரும் பேற்றினை யான் பெற்றேனில்லையே? என வருந்தி, இயன்ற பரிசிலை இனிது நல்கிப் புலவரை மகிழ்வித்தான் நலங்கிள்ளி. நெடுங்கிள்ளிபால் இளந்தத்தர் கோட்டைக்கு வெளியே நளங்கிள்ளிபால் பரிசு பெற்று மகிழ்ந்த புலவர் உள்ளே யிருந்த நெடுங்கிள்ளியை மட்டும் விடுவாரா? அவன்பாலும் சென்றார். அரண்மனை மாடியில் நெடுங்கிள்ளி பலவகைச் சிந்தனையுடன் உலாவினான். நலங்கிள்ளியை வெல்லும் வழிகளை அவன் மனம் ஆராய்ந்தது. அவ்வேளை இளந்தத்தர் அரசர் தெருவழியே வந்தார்; நெடுங்கிள்ளியின் பார்வைக்கு இலக்கானார்; சோழன் நளங்கிள்ளியின் ஒற்றருள் ஒருவனே இவன் என நெடுங்கிள்ளியின் நெஞ்சு துணிந்தது. வறுமையெனும் இருளால் புலமையெனும் ஒளி மறைக்கப்பட்டு மாசுண்ட மணிபோல் வந்த தத்தரைப் பிடித்து வர ஏவலாளரை அனுப்பினான் வேந்தன். போர் என்னும் அச்சமே மன்னன் மனத்தில் நிலவியது; அச்சம் நிறைந்த அவன் மனம் புலவரைப் புலவராகத் தெளியவும் இயலாமல் ஒற்றரெனவே துணிந்தது. ``இவ்வொற்றனை வெட்டி வீழ்த்தினால்தான் நாம் உய்வோம் என எண்ணி வேந்தன், புலவரைக் கொல்ல வாளை உருவி ஓங்கினான். ``உடுக்கை யிழந்தவன் கைபோல ஆண்டு ஓடி வந்து மன்னன் கையைப் பற்றி நிறுத்தி நின்றார் கோவூர் கிழார். கோவூர் கிழார் அறிவுரை ``மன்ன! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்! ஆண்மை இருள் நின் அறிவுக் கண்ணை மறைத்தது கொல்! புலவர் வாழ்க்கையை நீ அறிவாயோ? பழுமரம் நாடும் பறவை போல வள்ளலை நாடும் தெள்ளியோர்தம் வறுமையிற் செம்மையை நீ உணர்வாயா? அரிய நெறிகளையும் நெடியவெனக் கருதாமல் வள்ளலை நாடியடைந்து கற்றது பாடிப் பெற்றது கொண்டு சுற்றம் அருந்தி மற்றது காவாது உண்டு வழங்கி உவந்து வாழும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குக் கொடுமை நினைந்தறியுமா? அறியாதன்றே! வறுமையில் வாடினும் பெருமிதத்தில் நும் போன்ற வேந்தர்களுக்குக் குறையாததன்றோ புலவர் வாழ்வு! தம் வறுமையைப் பிறர் எள்ளினும் பொறுத்திடும் புலவர், தம் புலமையை எள்ளும் புல்லறிவாளரை ஒரு போதும் விடார்காண். ``தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என வீறு கொண்டெழுந்து புலமையைப் பழித்த புல்லறிவாளரைத் தம் அறிவு மதுகையால் வாதிட்டு வென்று, ``தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா எனக் கூறி நிமிர்ந்து சொல்லும் கவியரசர் வாழ்வு புவியரசர் வாழ்விற்கு எட்டுணையும் குறைந்ததன்று. பூமாதும் புகழ்மாதும் திருமாதும் பொருந்திய உன்போன்ற வேந்தரை யொத்த தலைமையுடையது புலவர் தம் பரிசில் வாழ்க்கை என்பதை நன்குணர்ந்து நடப்பாயாக, என்று சினந்து கூறினார் கோவூர் கிழார். gift® ád¤â‰F« mŠrhj beL§»ŸË òyt® ád¤â‰F mŠá¤ jiytz§»dh‹; j‹ jtWz®ªjh‹; ``m¿î¤ bjŒtkhf És§f« òytiu¡ bfh‹W cyf« cŸssî« Ú§fh¥ gÊia¤ njo¡ bfhŸs¤ Jªnjnd! என்று மனங்கவன்று, இருபெரும் புலவர்பாலும் மன்னிப்பு வேண்டினான்; புலவர்க்குப் பெரும் பரிசிலை நல்கி உவந்தனுப்பினான். 10. அகப்பொருள் பொருள் இலக்கணம் உலகத்திலுள்ள ஒவ்வொரு மொழியிலும் இலக்கண நூல்கள் உண்டு. எனினும் அவை மொழி இலக்கணத்தையே எடுத்தோதுவனவாகும். ஆயின் தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் இலக்கணத்தையும் அம்மொழியினைப் பேசும் மக்களது வாழ்க்கையின் இலக்கணத்தையும் எடுத்துக் கூறுதல் வியத்தற் பாலது. இத்தகைய தனிச்சிறப்புத் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு. இஃதொன்றே தமிழரது நாகரிகம், உலக மக்களின் தனிப்பட்ட நாகரிகத்தைவிட மிகச் சிறந்தது என்பதற்குப் போதிய சான்றாகும். வாழ்க்கையின் இலக்கணம் அக இலக்கணம், புற இலக்கணம் என இருவகைப்படும். ஒருவனும், ஒருத்தியும் கூடி வாழ்கின்ற வாழ்க்கையின் விவரங்களை விரித்துக் கூறுதல் அகப்பொருள் இலக்கணமாகும். அஃதாவது, இன்பப் பகுதியே அகப் பொருளாகும். அறம், பொருள், வீடு என்னும் மூன்று பேறுகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கணம் புறப்பொருள் இலக்கணம் எனப்படும். அஃதாவது, ஒருவனது வாழ்க்கையின் இன்பப் பகுதி நீங்கலாக உள்ள ஏனைய செய்திகள் புறப்பொருள் என்று தொல்லாசிரியரால் கொள்ளப்பட்டன. ஆகவே, பண்டைத் தமிழர் பாங்குற வகுத்த அகம், புறம் என்ற இரண்டனுள் வடமொழியாளர் வகுத்துக் கூறும் பேறுகள் நான்கும் (அறம், பொருள், இன்பம், வீடு) அடங்குதல் காண்க. வாழ்க்கையின் உயிர்நாடி மனித பேறுகள் நான்கனுள் அகப்பொருளென்னும் இன்பப் பகுதியே வாழ்க்கையின் உயிர் நாடியாக விளங்குவது. மனிதன் இன்பம் பற்றியே பொருளைத் தேடுகிறான். பொருள் கொண்டு அறஞ் செய்கிறான். இம் முப்பேறுகளும் செம்மையுறச் செய்பவன் நான்காம் பேற்றை இயல்பாகவே அடைவான். இதனாற்றான் பண்டைத் தமிழர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையுமே வாழ்க்கையின் உயிர்நாடியாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பது சங்கப் பழம் பாடல்களால் அறியக் கிடக்கிறது. தொல்காப்பியர்க்கு முற்பட்ட தொல்லாசிரியர்கள் வகுத்த அகம், புறம் என்னுனம் இரண்டு பகுதிகளையும் தழுவி, தம் காலத்திய மாறுதல்களையும் உள்ளடக்கித் தொல்காப்பியர் எழுதியுள்ள பொருள் இலக்கணம் ஒன்றே இன்றுள்ள சிறந்த ஆதார இலக்கண நூலாகும். அதனை இலக்கணமாகவும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலியவற்றையும், திருக்கோவையார் முதலியவற்றையும் .இலக்கியமாகவும் கொண்டு ஆராயின், பழந் தமிழ்ப் பெருமக்கள் பகுத்தறிவோடு அமைத்த அகப்பொருளென்னும் அழகிய இன்ப மாளிகையைக் கண்டு களிக்கலாம். இவற்றுடன் சைவ சமய ஆசிரியர்கள் பாடியருளிய திருமுறைகளையும் ஆழ்வார்கள் பாடியருளிய அருட்பாடல்களையும் பக்கத்தில் வைத்து உணர்ச்சியோடு படிக்கப் படிக்க, அப்பக்த சிகாமணிகள் அகப்பொருள் இலக்கணத்தைத் தமது பக்தி நெறிக்கே உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பது தெள்ளிதில் உணரலாம். அகப்பொருள் இலக்கணம் இவ்வகப்பொருள் இலக்கணத்தை ஆராய்வதால் பண்டைத் தமிழ் மக்கள் மணம் செய்து கொள்ளும் முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவன் தலைவியரது இன்பத்திற்கு உதவும் பாங்கன் பாங்கியர், களவுப் புணர்ச்சியில் தலைவியும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு உண்டாகும் பல இடுக்கண்களைப் பொருட்படுத்தாமல் தலைவியை அடைவதில் தலைவன் கொள்ளும் முயற்சி, களவு வெளிப்பட்டபின் இரு திறத்துப் பெற்றோரும் நடந்துகொள்ளும் முறைமை, பெற்றோர் உடன் படாதபோது தோழி தலைவியைத் தலைவனோடு கூட்டியனுப்புதலும் அங்ஙனம் அனுப்பும்போது அவள் தலைவனிடம் கூறும் வாழ்க்கைக்கு இன்றியமையாத உபதேசமும், காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தாய்மார்க்குக் குறிப்பாக உணர்த்தும் திறமையும் இன்ன பிறவும் நாம் அறிந்து மகிழலாம். களவொழுக்கம் இனி இவை பற்றிய செய்தியைக் காண்போம்: ஓர் இளைஞன் (தலைவன்) பூம்பொழில் ஒன்றில் தனித்துப் பூக் கொய்யும் நங்கை (தலைவி) ஒருத்தியைக் காண்கிறான். இருவரும் ஒருவரை யொருவர் நோக்குகின்றனர். இருவர் விழிகளும் சந்திக்கின்றன. இருவரும் மாறி இதயம் புகுகின்றனர். அவ்வமயம் உள்ளத்துத் தோன்றும் இன்ப உணர்ச்சியே அவ்விருவர் பிற்காலக் காதல் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றது. பார்வை ஒன்ற, உள்ளம் ஒன்ற, உணர்ச்சி ஒன்ற அவ்விருவரும் ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். அவ்வின்பப் பூங்காவில் உள்ள நறுமணமுள்ள மலர்களிளிடையே நங்கை-நம்பி ஆகிய இருவர்தம் காதல் அரும்பும் போதாகி மலர்ந்து மணம் வீசுகின்றது. அம்மட்டோ! தேனும் பிலிற்றுகின்றது. காதல் மணமும் காதல் தேனும் அப் பூங்காவைப் பொன்னுலகமாக்குகின்றன. அன்று முதல் அவர்தம் காதல் வாழ்க்கை களவிலேயே நடந்துவருகின்றது. எனினும் நீடித்த களவு வாழ்க்கைக்குத் தோழியும் தோழனும் உதவி செய்யும் பாத்திரங்களாக அமைகின்றனர். தோழி தலைவனது காதலைப் பரிசோதிக்கும் திறம் மிக வியந்து பாராட்டத்தக்கது. தலைவியைத் தலைவன் பெறமுடியாது என்பதற்குப் பல நியாயங்களைத் தோழி கூறுகிறாள். அவளைத் தான் பெறாவிடில் மடல் ஏறுவதாகத் தலைவன் சூள் உரைக்கின்றான். இங்ஙனம் பலவாறு முதற்கண் அவனது உள்ளத்தைச் சோதித்த தோழி, அவனோடு தலைவியைக் கூட்டுகிறாள்; அக்கூட்டம் நடைபெறும் பொழுதே மீண்டும் அவனைச் சோதிக்கக் கருதி, பகலில் வருகின்றவனை இரவில் வரும்படியும், இரவில் வருகின்றவனைப் பகலில் வருமாறும் மாறி மாறி வரச் செய்து அவனுக்குத் துன்பத்தைத் தருகின்றாள். ``தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள்; ஆதலின் அவளைப் பெற நள்ளிரவில் வருக என்பாள். தலைவனும் அவள் சொற்படி நடப்பான். தோழி மீண்டும், ``நீ வரும்பொழுது நாய் குரைக்கிறது; காவலர் திருடன் என்றெண்ணித் தேடுகின்றனர். ஊர் விழித்துக் கொள்கிறது என்றெல்லாம் கூறி அவனைத் துன்புறுத்துகின்றாள். தலைவன் இத்துணைச் சோதனைகட்கும் உட்பட்டு அவள் சொற்படி நடந்து, தான் தலைவிமீது கொண்ட களங்கமற்ற காதலின் உறுதியை வெளிப்படுத்துகிறான். அறத்தொடு நிற்றல் களவுப்புணர்ச்சியால் தலைவியின் வேறுபாடு கண்ட தாய்மார் தோழியை வினவுவர். தோழி களவை வெளிப்படக் கூறாமற் கூறும் திறன் அறிந்து வியக்கற்பாலது: (1) தலைவியும் நாங்களும் சுனையில் நீராடுகையில் தலைவி கால் தவறிச் சுனையில் வீழ்ந்துவிட்டாள். நாங்கள் அலறினோம். அவ்வமயம் கட்டழகுள்ள இளைஞன் ஒருவன் அங்குத் தோன்றினான்: சரேலென நீரிற் குதித்தான்: தலைவியை அணைத்துக்கொண்டு சுனையினின்றும் வெளிப் போந்தான். தன் உயிரைக் காத்த அவ் வண்ணல்பால் தலைவி உள்ளம் நெகிழ்ந்தாள். (2)தலைவியும் யாங்களும் பூப்பறிக்குங்கால் தலைவி விரும்பியதொரு பூவை நாங்கள் பறிக்கக் கூடவில்லை. தலைவி வாட்டமுற்றாள். அப்பொழுது நம்பி ஒருவன் தோன்றி அம்மலரைப் பறித்துத் தலைவியின் கையிற் கொடுத்தான். தலைவி அவன்பால் நன்றியறிதல் உடையவள் ஆயினாள். (3) பண்டொரு நாள் யாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது காட்டானை ஒன்று மதங்கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. தலைவி அலறினாள். அவளது மையுண்ட கண்களிலிருந்து நீர் அருவிபோலப் பெருகியது. அவ்வமயம் கையில் வேலேந்திய இளைஞனொருவன் அங்குத் தோன்றினான்; அச்சத்தால் அலறிய தலைவியைத் தன் இடக்கையால் அணைத்து நின்று, வலக்கையால் தாங்கிய வேலால் யானையைக் குத்தினான்; யானை பிளிறிக்கொண்டு ஓடியது. தன் உயிரைக் காத்த அத்தலைவன்பால் தலைவியின் உள்ளம் ஈடுபட்டது. இங்ஙனம் கூறுதல் முறையே புனல் தருபுணர்ச்சி, பூத்தருபுணர்ச்சி, களிறுதருபுணர்ச்சி எனப்படும். இங்ஙனம் தோழி கூறுதலை அறத்தொடு நிற்றல் என்று இலக்கணம் கூறும். தான் காதல் கொண்டகாதலுனுக்குத் தன்னைத் தன் பெற்றோர் தாராரெனத் தெரிந்ததும், தலைவி தலைவனுடன் ஓடுதல் உண்டு. இஃது `உடன் போக்கு எனப்படும். அவன் அவளைத் தன் வீடுகொண்டு சென்று மணம் முடித்துக்கொள்ளலுமுண்டு. போகும் பொழுதே தலைவியைச் சேர்ந்தவர் இடைமறித்துக் கொண்டுசென்று தலைவி வீட்டில் திருமணம் நடத்தலுமுண்டு. சரியாகக் கூறுமிடத்து, இவ்வுடன்போக்கிலிருந்தே கற்புத் தொடங்கி விடுகிறது. இதன்பின் நிகழ்வதெல்லாம் கற்பியற் செயல்களெனப்படும். கற்பு-ஒருவன் ஒருத்தியொடு உள்ளம் ஒன்ற வாழ்க்கை நடத்தல். 11. சேக்கிழார் பெருமான் சேக்கிழார் உழைப்பு வால்மீகி முனிவர் வடமொழியில் இயற்றிய இராமாயணத்தைத் துணையாகக் கொண்டு கம்பர் தமிழில் இராமாவதாரம் என்றும் பெருநூலைப் பாடினார். இப்படியே வியாசர் எழுதிய பாரதத்தைத் துணையாகக் கொண்டு வில்லிபுத்தூரர் தமிழில் பாரதம் பாடினார். ஆனால் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழாருக்கு 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், ``தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கிப் பாடிய திருத்தொண்டத்தொகை என்னும் நாயன்மார் பெயர்ப் பட்டியலும், கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்பியாண்டார் நம்பி ஒவ்வொரு நாயனாருக்கும் ஒரு செய்யுள் வீதம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியுமே சிறந்த மூலங்கள் என்னலாம். இவற்றுடன் நாயன்மார் பாடிய திருமுறைகள் பதினொன்றும் அவருக்குத் துணை செய்தன. நாயன்மார் அறுபத்துமூவருள், சேர சோழ பாண்டியரும், சிற்றரசரும் சேனைத் தலைவரும் அமைச்சரும் சிலராக இருந்தனர். எனவே, பொறுப்புள்ள அவர்தம் வரலாறுகள் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை சேக்கிழாருக்கு ஏற்பட்டது. அதனால்அவர் அவ்வம்மரபினரைக் கேட்டுப் பல விவரங்களைத் தொகுத்தார். அப்பரும் சம்பந்தரும் சமண பௌத்த போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆதலால், சமண பௌத்த சமயக் கொள்கைகளையும் அச்சமயங்களின் வரலாறுகளையும் சேக்கிழார் அறியவேண்டியவரானார். எனவே, அவர்தம் காலத்திலிருந்த சமண பௌத்த நூல்களைக் கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாயன்மார் வரலாறுகளில் அவர்கள் செய்த தலயாத்திரை பற்றிய விவரங்களைக் குறிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்பவர் முறையாகச் சென்ற தலங்களையும் அங்குப் பாடிய பதிகங்களையும் முறைப்படுத்த வேண்டிய வேலை சேக்கிழாரைச் சார்ந்தது. இது மிகவும் கடினமான செயல். சேக்கிழார் ஒவ்வொரு பாடல் பெற்ற தலத்தையும் நேரில் சென்று கண்டார்; தமிழகத்து ஆறுகளைப் பார்த்தார்: இன்ன ஆற்றின் வடகரையில் இன்னின்ன பெயருடைய கோவில்கள் இருக்கின்றன என்பதை அறிந்தார்; நாயன்மார் வாழ்ந்து மறைந்த ஊர்களில் உள்ள சிவன் கோவில்களைப் பார்வையிட்டார்; கோபுரம் உடைய கோவில் இது என்னும் விவரத்தை அறிந்தார்; நாயன்மாரின், செப்புத்திருமேனிகளைப் பார்வையிட்டார்; சைவத் திருமுறைகளைக் கொண்டு சைவசித்தாந்த உண்மைகளை அறிந்தார்; இவை அனைத்திற்கும் மேலாக, நாயன்மார் பற்றிய விவரங்களை அறிவிக்கும் தம் காலத்திலிருந்த கல்வெட்டுக்களையும், செப்புப்பட்டயங்களையும் நன்றாக ஆராய்ந்தார். இத்துணை மூலங்களையும் கொண்டுதான் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிமுடித்தார். சேக்கிழார் சைவ வேளாளர்; சென்னையை அடுத்த குன்றத்தூரில் பிறந்து வளர்ந்தவர்; இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் முதல் அமைச்சராக இருந்தவர்; அதனால் சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்; அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தியவர். தாம கார்லைல் என்னும் பெரியார் `பிரெடரிக் பெரியார் வரலாற்றை எழுத இரண்டு முறை ஜெர்மன் நாட்டுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தார் என்று அவர் வரலாறு கூறுகிறது. சேக்கிழார் பெருமானும் இவ்வாறே நாயன்மார் வரலாறுகளை அறியத் தமிழகம் முழுவதும் சுற்றி, அவர்தம் வரலாறுகளுக்குரிய சான்றுகளைத் திரட்டினார். எலும்பைப் பெண்ணாக்குதல், முதலை உண்ட பாலனை அழைத்தல் போன்ற அற்புதச் செய்திகள் நீங்கலாக உள்ள பிற எல்லாச் செய்திகளும் தக்க சான்றுகள் கொண்டே கூறப்பட்டுள்ளன என்று கூறலாம். வரலாற்றுச் சிறப்பு கி.பி. 642-இல் நரசிம்ம பல்லவனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் நடந்த வாதாபிப் போர் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் விக்கிரமாதித்தனுக்கும் பாண்டியன் நெடுமாறனுக்கும் நெல்வேலியில் நடைபெற்ற போர் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சேக்கிழார் கொடுத்த வாதாபிப் போர் விவரங்களைக் கொண்டுதான் சிறுத் தொண்டர் காலமும், அவர் காலத்தவரான அப்பர் சம்பந்தர் காலமும் வரலாற்று ஆசிரியரால் துணியப்பட்டன. அப்பர் காலத்தில் வாழ்ந்த பல்லவன் சமணத்திலிருந்து சைவனாக மாறிப் பாடலிபுரத்தில் (பாதிரிப்புலியூரில்) இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு குணபர ஈசுவரம் எடுத்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். `குணபரன் என்ற விருதுப் பெயரை உடையவன் முதலாம் மகேந்திரவர்மன் என்பவன். அவன் காலம் கி,பி. 600-630 எனவே, நரசிம்மவர்மன் தந்தையான மகேந்திரவர்மன் காலத்திலும் அப்பர் வாழ்ந்திருந்தார் என்ற உண்மை இதனால் புலனாகிறது. மூர்த்தி நாயனார் என்பவர் சந்தனக் கட்டைகளை அரைத்து மதுரைச் சிவன் கோவிலுக்குச் சந்தனம் வழங்கி வந்தார். அவர் காலத்தில் பாண்டிய நாடு வடுகக் கருநாடன் ஆட்சிக்குட்பட்டது. அப்புதிய மன்னன் வேற்றுச் சமயத்தவன் ஆதலின் சிவபூசைக்கு இடையூறு விளைத்தான் என்று பெரிய புராணம் பேசுகிறது. இங்ஙனம் உண்டான இடையீடு `களப்பிரர் இடையீடு என்று வரலாறு குறிக்கின்றது. கூற்றுவ நாயனார் என்பவர் சோழ நாட்டைப் பிடித்து ஆண்ட களப்பிரர். பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்றும் பிறகு கடுங்கோன் என்பவன் அவர்களை வென்று ஆட்சி செலுத்தினான் என்று சின்னமனூர்ச் செப்பேடு செப்புகின்றது. இங்ஙனம் வரலாற்று விவரங்களைக் காணப் பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-860 என்று சொல்லலாம். இப்பரந்துபட்ட காலத்திற்குள் அறுபத்துமூவர் வாழ்ந்து மறைந்தனர். அதாவது, நாயன்மார் அனைவரும் பல்லவர் காலத்தினர். அவர்களைப் பற்றிப் புராணம் பாடிய சேக்கிழார் பிற்காலச் சோழர் காலத்தினர் (கி.பி. 1135 1150). எனவே, சேக்கிழார் இந் நாயன்மார்க்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட வந்தவராவர். அப்படி இருந்தும், வரலாற்றுக் காலத்திற்குப் பழுது உண்டாகாதபடி சேக்கிழார் பாடியிருத்தல் அவரது ஆராய்ச்சித் திறனையும், பொறுப்புணர்ச் சியையும் நன்கு விளக்குவதாகும். பெருங்காவியம் பெரிய புராணச் செய்திகளைச் சேர்க்க இவ்வாறு அரும்பாடு பட்ட சேக்கிழார், அச்செய்திகளை முறைப்படுத்தி, ஒரு பெருங் காவியமாகப் பாடி முடித்தது, அவரது இணையற்ற புலமைக்குச் சிறந்த சான்றாகும். சேக்கிழார் இந்நூலுள் சுந்தரர் வரலாற்றை நூலின் முதல்-இடை-கடைகளில் வைத்தும் சுந்தரரால் குறிக்கப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இடையிடையே வைத்தும் சென்றதை நோக்க, காவியத் தலைவர் சுந்தரர் என்பது தெளிவாகப் புலனாகும். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பிறந்ததும் பரவையார் காதல் மணம் நிகழ்ந்ததும் ஆகிய திருவாரூரே நகரமாகக் கொள்ளப்பட்டு நகரச் சிறப்பும், அந்நகரைத் தன் அகத்தே கொண்டதால் சோணாட்டுச் சிறப்பும் காவிய முறைக்கேற்ப ஆசிரியராற் கூறப்பட்டன. சேக்கிழார், திருத்தொண்டத் தொகைப் பாடல்கள் 11-ஐயும் 11 சருக்கங்களாகக் கொண்டார். ஒவ்வொரு சருக்க முடிவிலும் சுந்தரரைப்பற்றிப் பாடிச்செல்வது, பெரிய புராணம் ஒரு தொடர் நிலைச் செய்யுள் என்பதை வற்புறுத்துவதற்கே என்பது தெளிவாகும்.சுந்தரர் கதை திருமலை (கயிலாய)ச் சருக்கத்தில் தோன்றி வெள்ளாளைச் சருக்கத்தில் முடிவதும் பெரியபுராணம் சுந்தரர் பற்றிய காவியமே என்பதை வலியுறுத்துவதாகும். பெருங் காவியத்து இலக்கணங்களான நாற்பொருள் கூறல் முதலியன இதன்கண் நன்முறையில் அமைந்துள்ளன என்பது கற்றவர் அறிந்ததே. இதனை ஒவ்வொன்றாகக் கூறின் விரியும். பெரும் புலமை பெருங் காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைச் செய்த ஆசிரியர் சேக்கிழார் பெருமான், தமக்கு முற்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்னும் பழைய இலக்கியங்களைப் பழுதறப் படித்த பெரும்புலவர் என்பது அவரது காவியத்தால் அறிய முடிகிறது. சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும் அழுத்தந்திருத்தமாகப் படித்து இன்பப்பட்டவர் என்பது அவர் கூறியுள்ள மூவர் புராணங்களிலிருந்து நன்குணரலாம். சேக்கிழார் அத் திருப்பதிகங்களைத் தம் புராணத்தில் கையாண்டுள்ள சில முறைகளைக் காண்போம்: (1) பல இடங்களில் பதிக முதற் குறிப்பே தரப்பட்டுள்ளது. ``பித்தாபிறை சூடீஎனப் பெதொந்திருப் பதிகம் இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார் (2) சில இடங்களில் பதிகத்தின் முதலும் இறுதியும் குறிக்கப்பட்டிருக்கும். (3) நாயன்மார் பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டுள்ளது. ``செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றின் முன்தேவா ரியன் சார்ந்து, `கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயில்ஆலும் ஆரூ ராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேன்என் றெய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே. (4) (அ) பதிகத்தின் கருத்துப் பல பாக்களுள் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் `தோடுடைய என்று தொடங்கிப் பாடிய முதற் பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல பாக்களில் விளக்கிக் கூறியுள்ளார். (ஆ) தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர் `பையவே என்று குறித்தமைக்குச் சேக்கிழார் காரணங் காட்டல் படித்தின்புறத்தக்கது: ``பாண்டியமா தேவியார் தமது பொற்பில் பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி னாலும் அரசன்பால் அபராத முறுத லாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும் தீப்பிணியைப் `பையவே செல்க என்றார். (5) (அ) சேக்கிழார், நாயன்மார் பதிகவகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார். (ஆ) சம்பந்தர் அப்பரை முதன் முதல் சீர்காழியிற் சந்தித்துத் தங்கியிருந்த பொழுது பலவகைப் பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் கூறியுள்ளார். (6) நாயன்மார் பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக்களும் அமைந்திருத்தல் இன்பமூட்டுவதாகும். (அ) `பித்தா பிறைசூடீ என்ற பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்பதைக்கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்து இன்புறத்தக்கது. (ஆ)அப்பர் திருவையாற்றைத் தரிசிக்கையில் பாடிய ``மாதர் பிறைக் கண்ணியானை என்ற திருப்பதிகத்தைக் குறிக்கையில், சேக்கிழார் அதே சந்தத்தில் செய்யுள் செய்திருத்தல் படித்துச் சுவைக்கத்தக்கது. (7) நாயன்மார் பாடலைக் கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் வன்மையும் சேக்கிழார்க்கு உண்டு. (8) சேக்கிழார் சில இடங்களில் தேவாரப் பதிகங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவார்; சேக்கிழார் சைவத்திருமுறைகளில் புலமை பெற்று விளங்கினாற் போலவே இசைக்கலை, நடனக்கலை, வான நூற்கலை, மருத்துவக்கலை முதலிய பல கலைகளிலும் சிறந்த புலமை சான்றவர் என்பது பெரிய புராணத்தால் தெரிகின்றது. (1) இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் முதன் முதல் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய `பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் பதிகத்தை `இந்தளம் என்ற பண்ணில் பாடினார் என்பதைக் கூறும் இடத்து, சேக்கிழார் விளக்கும் பண்வகை முதலியன இசைப்புலமை உடையவரே நன்குணர்ந்து இன்புறக்கூடும். ``முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால், நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான். (2) ஆனாயர் புராணத்தில் புல்லாங்குழலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, அக் குழல் வைத்து ஆனாயர் பாடியமுறை, அக்குழல் இசையால் உலகத்து உயிர்கள் அடைந்த இன்பம் என்பவற்றை மிக்க விளக்கமாகக் கூறியுள்ளதை நோக்க, சேக்கிழார் இத்துறையிற் பண்பட்ட புலமையுடையார் என்பதை நன்குணரலாம். சேக்கிழார் நடனக்கலை நுட்பத்தையும் நன்கறிந்தவர் என்பது அப்பர் புராணச் செய்யுட்களால் அறியலாம் ``கற்பகப் பூந்தளிரடிபோய்க் காமருசா ரிகைசெய்ய வுற்பலமென் முகிழ்விரல்வட் டனையோடுங் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிநுடங்கி யாடுவபோலாடுவார். வான நூற்கலை சம்பந்தர் திருவலஞ்சுழியில் தங்கியிருந்த பொழுது இளவேனில் முதுவேனில் ஆயிற்று என்பதைச் சேக்கிழார் கூறல் நோக்கத்தக்கது. அது, ``சூரியன் மிதுனராசியிற் சேர்ந்ததால், வெங்கதிர் பரப்பினர்; அதனால் முதுவேனிற் காலம் தொடக்கமாயிற்று என்பது. மிதுனம் இரட்டை யாதலின் சேக்கிழார் அதனைத் `துணைப்புணர்ஓரை என்று குறித்தது, அவரது வானநூற் புலமையை நன்கு உணர்த்துகிறது. இங்ஙனமே சேக்கிழார் கார்காலம், பனிக்காலம், இளவேனிற் காலம் முதலியன பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வானநூற் புலமை நன்கு விளங்கக் காணலாம். மருத்துவக்கலை சேக்கிழார், தாம் பாடிய புராணத்தில் (1) சூலை நோய், (2) கண்ணோய், (3) பாம்புக்கடி, (4) முயலகன் என்ற நோய், (5) பனிநோய், (6) வெப்பு நோய் என்பவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். அவர் கூறியன மருத்துவ நூல்களில் கூறப்பட்ட உண்மைகளேயாம் என்பதை மருத்துவ நூல்கள் நன்கு விளக்குகின்றன. ஐந்திணைவளம் ஆதனூர்ச் சேரி வருணனை, நுழைப்பாடி வருணணை, வேடர்சேரி வருணணை என்பன படிக்கப் படிக்க இன்பம் தருபவை. திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை மண்டல நிலப் பிரிவுகள், திணை மயக்கம் முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் மருதமும் மயங்குதல், நெய்தலும் மருதமும் மயங்குதல்-இங்ஙனம் குறிப்பிட்ட ஒரு முறையை வைத்துக்கொண்டு இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் நானிலத்தியல்பும் ஐந்திணை இயல்பும் திணைமயக்கமும் வேறு தமிழ்க் காவியங்களில் காணல் அரிதாகும். இவ்வருமைப் பாட்டை, ``திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந் திணைவளமும் தெரித்துக் காட்ட மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர் குலகவியே வல்லான் அல்லால் கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்! என்று சிவஞான முனிவரே பாராட்டுவாராயின், சேக்கிழார் பெருமானது செய்யுட் சிறப்பும் நிறைந்த புலமையும் சிறுவனாகிய நான் எங்ஙனம் எடுத்துரைக்க வல்லேன்? 12. சோழர் வரலாறு* முன்னுரை இந்தியாவின் தென்கோடிப் பகுதி பண்டைக் காலத்தில் தமிழகம் எனப் பெயர்பெற்றது. தமிழகத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஏற்பட்டிருந்தன. இன்றைய திருவாங்கூர்-கொச்சி நாடுகளும் மலையாள மாவட்டமும் சேரநாடு எனப்பெயர் பெற்றது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களைக் கொண்ட நிலப்பகுதி சோழநாடு எனப்பெயர் தாங்கியது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் சேர்ந்த நிலப்பகுதி பாண்டியநாடு என வழங்கியது. சேலம், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் கொங்குநாடு எனப் பெயர் பெற்றது. திருக்கோவலூரும் அதனைச் சேர்ந்த நடுநாட்டுப் பகுதியும் மலையமான்நாடு எனவும், அதற்கு வடபால் அமைந்த பெருநிலப் பகுதி (நெல்லூர் வரையில்) தொண்டை நாடு எனவும் பெயர் பெற்றிருந்தன. தமிழகம் இங்ஙனம் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்த போதிலும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தான் முடிமன்னர் மூவர் இருந்து வந்தனர். பிறநாடுகளில் சிற்றரசர்களே இருந்து ஆட்சி புரிந்தனர். சிற்றரசர் ஆட்சி புரிந்த நாடுகள் சில காலங்களில் பேரரசர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன; கொங்குநாடு சிலகாலங்களில் சேரர் கைப்பட்டிருந்தது; சில காலங்களில் சோழர் கைப்பட்டிருந்தது. அவ்வாறே மலையமான் நாடும் தொண்டைநாடும் சில காலங்களில் சோழர் கைப்பட்டிருந்தன; சில காலங்களில் பாண்டியர் கைப்பட்டிருந்தமையுமுண்டு. சோழர் வரலாற்றில் மூன்று காலங்கள் சோழரைச் (1) சங்ககாலச் சோழர் (கி.மு. - கி.பி. 300), (2) இடைக்காலச் சோழர் (கி.பி. 300-900), (3) பிற்காலச் சோழர் (கி.பி. 900-1300) என மூன்று காலத்தவராகப் பிரிக்கலாம். சங்க காலச் சோழர் சங்க காலச் சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன் என்பன சிறந்தவை. `கிள் என்பது தோண்டு, வெட்டு என்னும் பல பொருள்களைக் குறிக்கும். நிலத்தைத் தோண்டி வளம் செய்பவன் என்னும் பொருளில் `கிள்ளி என்பது வந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. வளமுடைய நாட்டவன் `வளவன் எனப் பெயர் பெறுதலும் உண்டு. சோழரது அரச இலச்சினை புலி. கீழ்வரும் மன்னர் சங்க காலச் சோழர் ஆவர்:- (1) சிபி, (2) முசுகுந்தன், (3) காந்தன், (4) தூங்கெழில் எறிந்த தொடித்தோட் செம்பியன், (5) செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, (6) மனுநீதிச் சோழன், (7) முதற் கரிகாலன், (8) இரண்டாம் கரிகாலன், (இயையம்வரை சென்றவன்) (9) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், (10) வளவன், (11) பெருநற்கிள்ளி, (12) கோப்பெருஞ்சோழன், (13) வேறு சோழ மரபினர் சிலர், (14) நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி முதலியோர். இவருள் போரிலும் கொடைத்திறத்திலும் முத்தமிழ் வாணரைப் போற்றுவதிலும் தலைசிறந்தவன் இரண்டாம் கரிகாலன். இவன் காலத்தில் வடபெண்ணையாறு வரை சோழப் பேரரசாக பரவி இருந்தது. தெற்கே இலங்கை முடிய இவனது செல்வாக்குப் பெருகி இருந்தது. இவன் இமயம் வரை படையெடுத்து மீண்டான். வடஇந்தியாவில் இருந்த வச்சிரநாட்டு வேந்தன், அவந்தி நாட்டு அரசன், மகதநாட்டு மன்னன் என்பவர் இவனை நண்பனாகக் கொண்டனர். இவன் இமயத்தில் புலிக்கொடி பொறித்தான். இவனது காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டுத் துறைமுக நகரமாக விளக்கமுற்றிருந்தது. அத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் வந்து பண்டங்களை இறங்கியும், தமிழ்நாட்டுப் பண்டங்களை ஏற்றியும் சென்றன. துறைமுகத்தில் சுங்கச் சாவடி இருந்தது. மலைநாட்டு மிளகும் பொன்னும் தென்கடலில் பிறந்த முத்தும், கீழ்க்கடலில் பிறந்த பவளமும், காழக (பர்மா) நாட்டுப் பொருள்களும், சீனம் முதலிய இடங்களிலிருந்து வந்த பனி நீர் முதலியனவும், இலங்கைப் பொருள்களும், மேனாட்டு இயந்திரப் பொறிகள், மது முதலியனவும் சோழநாட்டு இறக்குமதிப் பொருள்களாக வந்து குவிந்தன. பல நாடுகளிலிருந்து வந்த பல்வேறு மொழிகளைப் பேசும் வணிகர் காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறியிருந்தனர். சங்க காலச் சோழருள் கரிகாலன் சிறந்திருந்த காரணத்தால் அவனைப் பின்வந்த சோழரும் புலவரும் பலபடப் பாராட்டினர். இடைக்காலச் சோழர் (கி.பி. 300-900) ஏறத்தாழக் கி.பி.300-க்குப் பிறகு தொண்டை நாடு பல்லவர் என்ற புதியவர் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்களாலும் அவர்க்கு முன்னோடிகளாக வந்த களப்பிரராலும் சோழர் ஆட்சி எல்லையில் சுருங்கியது. கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை கோச்செங்கணான், புகழ்ச் சோழர் போன்ற அரசர் இருந்து பகைவரை ஓரளவு வென்றனர். கோச் செங்கணான் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த சோழப் பேரரசனாவான். அவன் காலத்தில் சைவசமயம் சமண பௌத்த சமயங்களால் வலிகுன்றத் தொடங்கியது. அதனால் அப்பெருமகன் சைவத்தை வளர்க்கப் பல சிவன் கோவில்கள் கட்டினான்; வைணவரையும் ஆதரித்தான்; இவ்வறிவுடைய செயலால் சைவசமய குரவராலும், திருமங்கையாழ்வாராலும் பாராட்டப் பெற்றான். அவனுக்குப் பின் வந்த சோழர்கள் கும்பகோணத்தை அடுத்த பழையாறையைத் தலைநகராகக் கொண்டு மிகச் சிறிய நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். அவருள் மங்கையர்க்கரசியார் தந்தை, தமையன், சுந்தரர் காலத்தில் பாண்டியன் மருமகனான சோழன் என்பவர் குறிக்கத்தக்கவர். ஒரு சமயம் பல்லவர்க்கும் பிறிதொரு சமயம் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்த இடைக்காலச் சோழர்கள், தங்கள் அரச செல்வாக்குச் சுருங்கிய போதிலும், சைவ சமயப்பற்றுச் சுருங்காது வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் சைவத்திற்குச் சமணராலும் பௌத்தராலும் ஏற்பட்ட துன்பங்களை நீக்கிச் சைவத்தைப் பாதுகாத்த பெருமை சோழர்க்கே உரியது. பிற்காலச் சோழர் (கி.பி. 900-1300) கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் என்னுமிடத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் கடும்போர் நடந்தது. அப்போரில் ஆதித்த சோழன் என்பவன் பல்லவர் சார்பில் நின்று பாண்டியனை முறியடித்தான். அந்த ஆதித்தனே பின்பு பல்லவனையும் வென்று, சங்ககாலக் கரிகாலனைப் போல, வடபெண்ணையாறு வரை சோழப் பேரரசை ஏற்படுத்தினான். இவன் மரபினர் பலர் சோழப் பெருநாட்டை ஆண்டனர். இச்சோழப் பேரரசருள் முதல் இராசராசனே சிறந்த அரசியல் பேரறிஞன். சோழப் பேரரசை நன்கு அமைத்து நிலைபெறச் செய்த பெருமை இவனையே சாரும். இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலையுற்று இருந்தது. இவனது ஆட்சிச் செல்வாக்கு வடக்கே துங்கபத்திரைவரை பரவி இருந்தது. இவன் சிறந்த கடற்படையைக் கொண்டு இலங்கையையும் மாலத் தீவுகளையும் அடிப்படுத்தினான். இவனது தரைப்படை தென்னிந்தியாவில் இணையற்றது. கீழைச் சாளுக்கியருடன் மணவுறவு கொண்டு, மேலைச் சாளுக்கியரின் வலிமையை ஒடுக்கிய பெருவீரன் இராசராசன். இவனது ஆட்சியில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு வளர்க்கப் பட்டன. இவன் காலத்திற்றான் சைவத் திருமுறைகள் நாடெங்கும் பரவின; சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து, மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராசராசனே ஆவன்; அப்படை இவன் நினைத்தனயாவும் தடையின்றிச் செய்து வந்தது பாராட்டற்பாலது. அரசியல் அமைப்பைத் திறம்பெற அமைத்தவனும் இராசராசனே ஆவன். நாகரிகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அரசியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடு இல்லை. இராசராசனுக்கு முன்பு இராட்டிரர்கூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு, இராசராசன் காலத்தில் கிருஷ்ணையாறுவரை பரவியது-மேற்கே அரபிக்கடல் வரை பரவியது-தெற்கே இலங்கை வரை பரவியது எனின், இராசராசன் போர்த்திறனை என்னெனப் புகழ்வது! மெய்க் கீர்த்தி இச் சோழர்க்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் பல கிடைத்துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும். அந்தந்த அரசன் சிறப்புச் சிறிதளவே கூறப்பட்டிருக்கும்; முற்றும் கூறப்பட்டிராது; விளக்கமாகவும் குறிக்கப்பட்டிராது. இம்முறையை விசயாலயன் வழி வந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆனால், இராசராசன் இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்; தனது ஆட்சி யாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுக்களில் முறைப்படி குறித்துவரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன் முதலில் காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல்வெட்டுக்களில் முதல் இடம் பெற்றது. இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப்பட்டன. இங்ஙனம் இப்பெரியோன் ஒழுங்கு பெறக் குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன. அக்குறிப்புக்களே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொடரை, அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். `இஃது இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது. அது `திருமகள்போல .’ எ ன்பதாகும். இவனது வீர மகனான இராசேந்திரன் கல் வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே பின் வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் வேறு வேறு தொடக்கம் கொண்டவை. இத்தகைய ஒழுங்கு முறையை அமைத்த இப்பேரரசன் அறிவாற்றல்களை என்னெனப் பாராட்டுவது! போர்ச் செயல்கள் இப்பிற்காலச் சோழர்கள் வடமேற்கே மேலைச் சாளுக்கியருடன் ஓயாது பல போர்கள் செய்து வெற்றி கண்டனர்: பாண்டியர்களுடனும் இலங்கை அரசர்களுடனும் பல போர்கள் செய்து தங்கள் பேரரசைக் காத்து வந்தனர். முதல் இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரன் தன்கடற்படையை ஏவிக் கிழக்கிந்தியத் தீவுகளிலும், மலேயா, இந்தோசீனம் முதலிய இடங்களிலும் சோழர் செல்வாக்கை மிகுதிப்படுத்தினான்; வடக்கே பெருஞ் சேனையை அனுப்பி, வடவேந்தர்களை முறியடித்துக் கங்கையாறு வரையில் தன் போர்த்திறனைக் காட்டித் தான் புதிதாக அமைத்த பெருநகரத்தைத் தூய்மைப்படுத்தக் கங்கை நீரைக் கொண்டு வந்தான்! அவன் ஏற்படுத்திய புதிய தலைநகரம் கங்கை நீர் கொண்டு தூய்மைப் படுத்தப்பட்டதால், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் பெற்றது. அங்கு அவனால் கட்டப்பட்ட கோவில் கங்கை கொண்ட சோழேச்சரம் எனப்பட்டது. அங்கு வெட்டுவிக்கப் பெற்ற மிகப் பெரிய ஏரி `சோழகங்கம் எனப் பெயர் பெற்றது. இன்றும் பல இடங்களில் `கங்கை கொண்டான் என்னும் பெயரால் ஊர்களும் மண்டபங்களும் வழங்கி வருதலுக்கு இப்பேரரசனே காரணன் என்பது அறியத்தகும். சோழர் வீழ்ச்சி கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்ற சோழ வேந்தர் காலத்தில் பாண்டியர் படையெடுப்பாலும், மைசூர் நாட்டை ஆண்டு வந்த ஹொய்சலர் படையெடுப்பாலும் சோழப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர் ஆங்காங்கு விளைத்து வந்த குழப்பங்களாலும், முதலாம் இராசராசன் வலிமையுற அமைத்த சோழப் பேரரசு சிறிது சிறிதாக நிலைகுலைந்து சிதறத் தொடங்கியது. சோழர்கள் பாண்டிய நாட்டில் செய்த கொடுமைகளுக்கெல்லாம் பாண்டியர்கள் சோழ நாட்டில் பழி தீர்த்துக் கொண்டனர். ஆங்காங்கு இருந்த அரண்மனைகள் தவிடுபொடியாயின. இறுதியில் சோழநாடு சீர்குலைந்துவிட்டது. சிற்றரசர்கள் சோழப் பெரு நாட்டில் மலையமான்கள், சாம்புவராயர், காடவராயர், வாணகோவரையர், அதியமான்கள், கங்கர், தெலுங்குச் சோழர் முதலியோர் சிற்றரசர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் தங்கள் குறு நாடுகளை ஆண்டுவந்தததுடன் பேரரசனுக்குக் கப்பங்கட்டியும் படை உதவி செய்தும் வந்தனர். அரசியல் கிராம ஆட்சி அரசியலின் முதுகெலும்பாய் இருந்தது. சோழப்பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழப் பேரரசனுடைய மக்களும் நெருங்கிய உறவினரும் மண்டலத்தலைவராகப் பணியாற்றினர், புதியனவாக வெல்லப்பட்ட நாடுகளில் அமைதிகாக்க நிலைப்படைகள் நிறுவப்பட்டன. விற்படை, வாட்படை, ஈட்டிப்படை எனப்பட்ட காலாட்படையும், குதிரைப்படை, யானைப்படை, கப்பற்படை முதலியனவும் சோழப் பெரு நாட்டைக் காத்து வந்தன. சோழவேந்தர் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு உரிய பருவத்தில் இளவரசுப் பட்டம் கட்டி, அவர்களை அரசியலிலும் போரிலும் பழக்கி வந்தனர். அமைச்சர், தானைத் தலைவர், குறுநில மன்னர், நாட்டுப் பெருமக்கள், அரசாங்க உயர் அலுவலர் முதலியோர் கொண்ட குழு `உடன் கூட்டம் எனப்பட்டது. இவ்வதிகாரிகளைக் கலந்தே அரசன் எதனையும் செய்வது வழக்கம். நில அளவை அதிகாரிகள், வரி வாங்குவோர், வரியைப் பலவாறு பிரிப்பவர், பொருட்காப்பாளர், கோயில்களை மேற்பார்க்கும் அதிகாரி எனச் சோழர் அரசியலில் பலதுறைகளையும் சேர்ந்த உயர் அலுவலர் பலர் இருந்தனர். அரசியல் அதிகாரிகளுக்குச் சோழப் பேரரசர் மூவேந்த வேளான், காலிங்கராயன், கச்சிராயன், சேதிராயன் முதலிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர். நிலவரியும்,தொழில்வரியும், பிறவகை வரிகளும் அக்காலத்தில் இருந்தன. கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி, உலகு, காணம் முதலியன அக்கால வரிகளை உணர்த்தும் சொற்கள். சோழப்பெருநாடு முழுவதும் சோழ அரசர்கள் காலத்தில் நன்கு அளக்கப்பட்டது. பலவகைக் கோவில்கள், மடங்கள் இவற்றைச் சேர்ந்த நிலங்களுக்கு வரி இல்லை. சோழப் பேரரசர் காலத்தில் பொன்னாலும் செம்பாலும் செய்யப்பட்ட காசுகள் வழங்கி வந்தன. அக்காலத்தில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் அளவைகள் வழக்கில் இருந்தன. குன்றி, மஞ்சாடி, கழஞ்சு, பலம், கஃசு என்பன நிறுத்தல் அளவைப் பெயர்கள். செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, கலம் என்பன முகத்தல் அளவைப் பெயர்கள். சாண், முழம், குழி, வேலி, காணி என்பன நில அளவைப் பெயர்கள். கிராமஆட்சி கிராம ஆட்சிக்கு, கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஓர் உறுப்பினர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக் காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும் பாதகங்கள் புரிந்தோரும், கிராமக் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர் பொருளைக் கவர்ந்தோரும், கள்ளக் கையெழுத்திட்டவரும், குற்றங் காரணமாகக் கழுதைமீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் கொண்டோரும், கிராமத்துரோகி என்று கருதப்பட்டவரும், இங்கக் குறிக்கப் பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராம சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர். இத்தேர்தல் குடவோலை வாயிலாக அரசாங்க அதிகாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் பல வேலைகளைக் கவனிக்கக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்; சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரியம், தோட்டவாரியம், பொன்வாரியம் என்பன அக்குழுக்களின் பெயர்கள். இவர்கள் ஆளுங்கணத்தார் எனவும், கணப் பெருமக்கள் எனவும் பெயர் பெற்றனர். ஊர்தோறும் எழுதப்படும் ஆவணங்களைக் (பத்திரங்களை) காப்பிட ஆவணக்களரி இருந்தது. கோவில்கள் நாயன்மார் காலத்தில் (கி.பி.600-900) பாடல் பெற்ற கோவில்கள் செங்கற்கோவில்களே. சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுடைய சோழப் பேரரசரும், சோழ மாதேவியரும் சிற்றரசரும் அக் கோவில்களைக் கற்றளிகளாக மாற்றினர். பல புதிய சிவன் கோவில்களும் கட்டப்பெற்றன. அவற்றுள் தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழேசுவரம், கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் கோவில், திருபுவனம் சிவன் கோவில் என்பன சிறந்தவை. இப்பெருங்கோவில்களின் கோபுர அமைப்பும், விமான அமைப்பும், படிவங்கள், திருமேனிகள் இவற்றின் அமைப்பும் சோழர் காலக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலிய கலைகளின் வளர்ச்சியை நன்கு அறிவிக்கின்றன. இவற்றை நேரில் கண்டு உணர்தலே சாலச் சிறந்தது. வழி வழிச் சைவராகிய சோழர் சைவத்தைத் தம் உயிரென வளர்த்தனர். அவர்கள் செய்துள்ள கோவில் திருப்பணிகள் எண்ணில. ஒவ்வொரு பெருங் கோவிலிலும் திருமுறைகள் ஓதப்பட்டன. இசையையும் நடனத்தையும் வளர்க்க இசைவாணிகள் அமர்த்தப்பட்டனர். விழாக்கள் சிறப்புற நடைபெற்றன. நாடெங்கும் மடங்கள் தோன்றிச் சைவத்தை வளர்த்து வந்தன. கோவில்களில் இசையும் நாடகமும் வளர்ச்சி பெற்றன. வைணவமும் சமணமும் சோழர்களால் ஆதரிக்கப் பெற்றன. கோவில்களில் நூல் நிலையங்களும் மருத்துவமனைகளும் இடம்பெற்றிருந்தன. கல்வி சோழப்பேரரசர் வடமொழியை ஆதரித்தனர்; தமிழ் நாட்டு மொழியான தமிழைத் தம் உயிர் போலப் பாதுகாத்தனர். சைவத்திருமுறைகள் செப்பேடுகளில் எழுதப்பட்டன. சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற பெருங் காப்பியங்கள் சோழர் காலத்திற்றான் தோன்றின. கலிங்கத்துப்பரணி, மூவருலா. ஒட்டக்கூத்தர் நூல்கள், சிவஞானபோதம் முதலிய சித்தாந்த சாத்திரங்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்குரிய பேருரைகள் என்பன யாவும் சோழர் காலத்திற்றான் வெளிப்பட்டன. வீரசோழியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி முதலிய இலக்கண நூல்களும் இக்காலத்தேதான் எழுந்தன. முதலாம் இராசேந்திரன் `பண்டித சோழன் எனப் பாராட்டுப் பெற்றவன். இரண்டாம் குலோத்துங்கன் பெரிய புராணம் செய்வித்தவன். முதல் குலோத்துங்கன் மீது கலிங்கத்துப்பரணி பாடப்பெற்றது. அவனுக்குப்பின் வந்த விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் இம்மூவரும் ஒட்டக்கூத்தர் மாணவர்கள். இம்மூவர்மீதும் அப்புலவர் பெருமான் `உலாப் பிரபந்தம் பாடியுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கம்ப ராமாயணம் எழுந்தது. இவையன்றிப் பல நாடக நூல்களும் அந்தாதி முதலிய சிறு பிரபந்தங்களும் செய்யப்பட்டன. முடிவுரை இப்பிற்காலச் சோழர்க்கு முற்பட்ட பல்லவர் தமிழரல்லர். ஆதலால் அவர்தம் ஆட்சியில் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை. சங்ககாலச் சோழரும் பிற்காலச் சோழரும் தமிழ் மன்னராதலால், இவ்விரு காலங்களிலும் தமிழ் ஓங்கி வளர இடம் அளித்தனர். பிற்காலச் சோழருக்குப் பின்பு தமிழரசர் ஆட்சி தமிழகத்தில் மறைந் தொழிந்த காரணத்தால், வளமான இலக்கியங்கள் தோன்ற வழி இல்லாது போய் விட்டது. தமிழகம் தமிழர் ஆட்சியில் இருந்தாற்றான் தமிழ் வளம்பெறமுடியும் என்பதைச் சோழர் வரலாறு மெய்ப்பிக்கின்றது. 13. நாடகத் தமிழ் சங்க காலத்தில் கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே நாடகத்தையும் நடனத்தையும் கூத்தர் என்பவர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர்; உள்ளக் குறிப்புப் புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி எனப்பட்டாள். கூத்தி, ஆடுமகள், ஆடுகள மகள் என நடனமாடிய மகள் சங்க காலத்தில் பல பெயர்களைப் பெற்றிருந்தாள். நடனமாடிய மகன் கூத்தன், ஆடுமகன், ஆடுகள மகன் என்று பெயர் பெற்றான். இவர்களே கதை தழுவி வரும் கூத்துக்களை ஆடினர். அங்ஙனம் ஆடிய பொழுது ஆண்மகன் `பொருநன் என்றும் பெயர் பெற்றான். தமிழ் தொன்று தொட்டு இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. கூத்த நூல், செயிற்றியம், பரதம், முறுவல், அகத்தியம், சயந்தம், குணநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் என்பன சங்க கால நாடக நூல்கள் என்று உரைகளால் அறிகின்றோம். இவையெல்லாம் அழிந்து விட்டன. சிலப்பதிகாரம் ஒன்றே இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகின்றது. சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத்தில் நாடகம் என்று சொல் கூத்து என்ற சொல் போலவே நடனத்தையும், கதை தழுவி வரும் கூத்தையும் குறித்தது. ``நாடகக் காப்பிய நன்னூல் நுனிப் போர் (மணிமேகலை 19-80) என வரும் தொடரில் உள்ள `நாடகம் என்னும் சொல்லுக்குக் `கதை தழுவி வரும் கூத்து என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் எழுதியிருப்பது கவனிக்கத்தகும். எனவே, நாடகம் பற்றிய காவியங்கள் மணிமேகலை ஆசிரியர் காலத்தில் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டில்) இருந்தன என்பது தெளிவு. மணிமேகலைக்கு முற்பட்ட திருக்குறளிலும் `கூத்தாட்டு அவை (குறள், 332) குறிக்கப் பட்டுள்ளது. இங்குக் கூத்தாடுதல் நடித்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்து அல்லது நாடகம் என்பது நுண்கலைகளுள் ஒன்றாகும். வெளி நாடுகளுடன் பன்னெடுங்காலமாக வாணிகம் செய்து வந்த தமிழர்-இயல், இசைக் கலைகளில் வல்லராயிருந்த தமிழர்-நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று கொள்வது தவறாகாது. இயல், இசை என்னும் இரண்டு பிரிவுகளும் கேட்பவருக்கு இன்பத்தைத் தருவன; நாடகம் கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பமும் பயப்பதாகும். எனவே, நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடையோர் கருதுவர். நாடகத்தில் இயல், இசை ஆகிய இரண்டும் கலக்கின்றன. நாடகத்தில்தான் முத்தமிழையும் ஒருங்கே காண இயலும். கோவில் விழாக்களில்தான் நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு பாட்டாக அமைந்த உரைநடை இடை இடையே கலந்தது. அதன் பின்னர்ப் பேச்சு நடையில் அமைந்த உரைநடை சேர்ந்தது. எனவே ஆடல், பாடல், பாடல் வடிவில் அமைந்த உரைநடை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன. இங்ஙனம் வளரத்தலைப்பட்ட நாடகம், பொது மக்களுக்கென்றும், அரசர்க்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது. அவை `வேத்தியல், `பொதுவியல் எனப்பட்டன. நாடகம் நன்முறையில் வளர்ந்து வந்தபொழுது இந்நாட்டில் வந்து தங்கிச் செல்வாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப்படுத்துவதென்று தவறாக எண்ணினர்; அதனால் தாம் செய்த நூல்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப் பட்டிருந்த காலத்தில் நாடகத் தமிழை வளர ஒட்டாது தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது.1 இடைக்காலத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் மத்தவிலாசப்பிரகசனம் என்னும் வேடிக்கை நாடகத்தை வடமொழியில் இயற்றினான்.2 மேலும், வடமொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்லவன் காலத்தில் செய்யப்பட்டன.3 பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய அக்காலத்தில் சமயத் தொடர்பான நாடகங்கள் தலை தூக்கின என்பது இதனால் தெரிகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் செய்யப் பெற்ற உதயணன் வரலாறு கூறும் பெருங் கதையிலும் நாடகம் பற்றிய செய்திகள் சில காணப்படுகின்றன: ``நயத்திறம் பொருந்த நாடகம் கண்டும் (1.58, வரி 66) ``நண்புணத் தெளித்த நாடகம் போல (3.2, வரி 12) ``வாயிற் கூத்தும் சேரிப் பாடலும் கோவிலும் நாடகக் குழுக்களும் வரு கென (1.37, வரி 88-89) கோவில் நாடகக் குழு-அரண்மனையில் நடிப்போர் கூட்டம் எனவரும் டாக்டர். உ. வே. சாமி நாதையர் அடிக் குறிப்புக் காணத்தகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்கப்பட்டதையும், நாடகக் குழுவினர் இருந்ததையும் இவ்வரிகள் தெரிவிக்கின்றன அல்லவா? கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், ``நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து என்று கூறியிருத்தலாலும், நம்மாழ்வார், ``பிறவி மாயக் கூத்தினையே என்று கூறியிருத்தலாலும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலும் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன என்பதை நன்கறியலாம். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கிறது என்று கூறியுள்ளது காணத்தகும். ``இளைமையங் கழனிச் சாயல் ஏருழு தெரிபொன் வேலி வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோல் வனப்பு வித்திக் கிளை நரம் பிசையுங் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்ற காம விளைபயன் இனிதிற் நுய்த்து வீணைவேந் துறையு மாதோ. - 2598 ``நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும் இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்துயாமும் நுகர்ச்சியைக் கை விட்டோம்’ எனவரும் வாக்கியம்., சமணர் நாடகத்தை எநத அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்டவல்லது, ``நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும் - முத்தியிலம்பகம், 2989.இவற்றால் சிந்தாமணி எழுதப்பெற்ற கி.பி.10 ஆம் நூற்றாண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் நடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம். பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டு தோறும் வைகாசி விழாவில் தஞ்சை இராசராசேச்சுரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசய ராசேந்திர ஆசாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது.4 இராசராசன் தஞ்சை பெரியகோவில் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனைவியர் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள், அக்கோவிலைப் பற்றிக் கருவூர்த் தேவர் பாடியது போன்ற பல செய்திகள் இந்நாடகத்திற் பல காட்சிகளாக அமைந்திருக்கலாம். விக்கிரமாதித்த ஆசாரியன் என்ற இராசராச நாடகப் பெரியன் என்பவன் பந்தணை நல்லூரில் நட்டுவப் பங்கு, மெய் மட்டிப் பங்கு (நாடகக் காணி) இவற்றைப் பெற்றவனாய் இருந்தான். என்று அவ்வூர்க் கல்வெட்டுக்5 கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது, என ஒன்று இருந்தது, அந்நாடகம் நடிக்கப் பட்டது என்பன அறியலாம். இந் நூலில் இராசராசனது இளமைப் பருவம், அவன் அரசன் ஆனமை, போர்ச் செயல்கள், ஆட்சிமுறை, இராசராசேசுவரம் எடுப்பித்தமை, திருமுறைகளைத் தொகுத்தமை முதலிய செய்திகள் பல காட்சிகளாக இடம் பெற்றிருக்கலாம். முதற் குலோத்துங்கள் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப்பட்டது. செய்தவனுக்குப் பரிசு தரப்பட்டது.6 அஃது திருப்பாதிரிப் புலியூரைப் பற்றியது. அம்மன் கன்னியாக இருந்து சிவனை வழிவட்டமை, அப்பர் சமணராயிருந்தமை, பின் சைவரானமை, சமணருடைய கொடுமைகட்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரை சேர்ந்து அவ்வூர்க்கோவிலில் பதிகம் பாடினமை, மகேந்திரன் அங்கிருந்த சமணப்பள்ளியை இடித்துக் குணபர ஈசுவரம் கட்டினமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லையாயினும், சமயப் பற்று மிக்கிருந்த அக்காலத்தில் அது நடிக்கப்பட்டதெனக் கருதுதல் தவறாகாது. இங்ஙனம் சைவ அரசர்களையும் நாயன்மார்களையும் பற்றிய நாடகங்கள் சிலவேனும் அக்காலத்தில் நடிக்கப்பட்டன எனக் கொள்ளலாம். சோழர்க்குப் பின் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மாலிக்-காபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் நிலை தளர்ந்தன. விசய நகர வேந்தர் ஆட்சி சிறிது காலம் சமயத்தைப் பாதுகாத்தது. அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும் வரையில் இக்கலைகள் ஓரளவு உயிர்பெற்று வாழ்ந்தன. 17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற்பட்ட காரணத்தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. ``கி.பி. 17-ஆம் நூற்றாண்டினிறுதி தொட்டுக் கூத்து நூல்கள் சில வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்று மேவி, இழிசினர் நடக்கும் இயல்பினவாகிக் கூத்தும் பாட்டும் கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீகாழி அருணாசலக் கவிராயர் செய்த `இராமர் நாடகமும் , குமர குருபர சுவாமிகள் செய்த `மீனாட்சியம்மை குறமும் திரிகூட ராசப்ப கவிராயர் செய்த `குற்றாலக் குறவஞ்சியும் இக்கூத்து நூலின்பாற் படுவனவாம். `முக் கூடற் பள்ளு `பறாளை விநாயகர் பள்ளு முதலியனவும் கூத்து நூல்களேயாம். இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலமை சான்ற பாவலர் இயற்றினவாம். `சுத்தாநந்தப் பிரகாசம் என்றதோர் பரதநூல் இடைக் காலத்தில் தொடக்கத்தில் ஏற்பட்டது வெளிப்படாமலிருக்கின்றது. பின்னர்க் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்த நாவலர் என்பார் `பரத சாதிரம் என்றதோர் நூல் செய்துள்ளார்.7 19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத் தக்கது. அந் நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நூற்றாண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடிய மனோன்மணீய நாடகமும் போற்றத் தக்கதாகும். 20-ஆம் நூற்றாண்டில் நாம் வாழும் இவ்விருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் நாடகக்கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதியுள்ள பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப் பெற்றன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதா சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பலவாகும். அவற்றுள் அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம். பாதுகாபட்டாபிஷேகம், இலங்காதனம், அல்லி அர்ஜூனா, சிறுத்தொண்டர், சதி அனுசூயா, பவளக்கொடி, சுலோசனா சதி, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன், பிரகலாதன், ரோமியோவும் ஜூலியத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. கண்ணைய (நாயுடு) நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ண லீலை, தசாவதாரம் முதலிய நாடகங்கள் 30 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின. இந் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரதா சுவாமிகள் இணையற்ற நாடக ஆசிரியராக இலங்கினார். இவரது மாணவர்கள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கின்றனர். அவர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு இக்கலையைத் தம்மால் இயலும் அளவு வளர்த்து வருகின்றனர். தமிழ் வளர்த்த மதுரையில் இவருடைய மாணவர்கள், சங்கங்களை அமைத்து நாடகப் பயிற்சி அளிக்கின்றனர்; மதுரை, இராமநாதபுரம், திருச்சி மாவட்ட ஊர்களில் நாடகங்களை நடத்துகின்றனர். சங்கர்தா சுவாமிகளின் மாணவர்களாகிய டி.கே. சண்முகம் சகோதரர்கள் இன்றைய நாடகத் துறையிலும் நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்குகின்றனர். அக்கலைக்கேற்ற ஒழுக்கமும் அவர்கள்பால் அமைந்துள்ளமை குறிப்படத்தகும். அவர்கள் நடித்துவரும் நாடகங்களுள் அவ்வையார், மனிதன், இன்பெக்டர், இராசராச சோழன் என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றுள்ளும் இராசராசசோழன் இணையற்ற நாடகமாகும். காண்பவர் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் மிகச் சிறந்த நாடகம் என்று இதனைக் கூறலாம். சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்றுள்ள இந் நாடகம் மக்களுக்கு வரலாற்று உணர்ச்சியையும், பக்தியையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்ட வல்லது. இது போன்ற நாடகங்கள் பல வரையப் பெற்று நடிக்கப் பெறுதல் வேண்டும். நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண இராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வருகின்றனர். காலத்திற் கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன. என். எ. கிருஷ்ணன்8 குழுவினர், எம். ஜி. இராமசந்திரன் குழுவினர், எ. எ. இராசேந்திரன் குழுவினர், கே. ஆர். ராமசாமி குழுவினர், கே. ஏ. தங்கவேலு குழுவினர், சிவாஜி கணேசன் குழுவினர் முதலியோர் பயன் தரத்தக்க நாடகங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்லாயிரம் இளைஞர்களை நல்ல தமிழில் பேசப் பழக்கிவரும் அறிஞர் அண்ணாதுரை சந்திரமோகன், நீதி தேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி, சுவர்க்கவாசல், இரங்கோன் இராதா என்ற நாடகங்களை வரைந்துள்ளார். அவற்றுள் சந்திர மோகனில் ஆசிரியரே கங்கு பட்டராக நடிப்பார். இவர் நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்குகிறார். ஸ்ரீ தேவி நாடக சபாவின் உரிமையாளரான கே. என். இரத்தினம் குழுவினர் பல நாடகங்களை நடத்தி வருகின்றனர். அவற்றுள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது நந்திவர்மன் நாடகமாகும். தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் வரலாற்றுப் புகழ் பெற்றவன்; சிறந்த போர்வீரன்; மிகச் சிறந்த சிவபக்தன்; நந்திக் கலம்பகம் பாடப் பெற்றவன். அப்பெரு மகனைப் பற்றிய நாடகம் மிகவும் நல்லமுறையில் அமைந்துள்ளது. முடிவுரை தமிழ் நடிகர் தமிழகத்து வரலாற்றையும் இலக்கியத்தையும் நன்கு பயிலுதல் நல்லது; தூய எளிய தமிழ் நடையில் உரையாடல்களை அமைத்து நடித்தல் வரவேற்கத்தக்கது. பாடல்கள் சிலவாகவும், உரையாடல்கள் பலவாகவும் அமைந்துள்ள நாடகங்களையே நடித்தல் ஏற்புடையது. பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் பாடுதல் வெறுப்பைத் தரும். இவை அனைத்திற்கும் மேலாக, நடிகரிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகுந்திருத்தல் வேண்டும். வருங்காலத் தமிழகத்தில் பட்டம் பெற்ற இளைஞர்களும் இக்கலையில் பயிற்சி பெறுதல் நல்லது. கல்விமான்கள் நாடகத்தில் நடிப்பது வரவேற்கத் தக்கது. தமிழுணர்ச்சி வீறுகொண்ட இக்காலத்தில், தமிழ் நடிகர் நாடகக் கலை வளர்ச்சியில் ஊக்கம் கொள்ளுதல் நல்லது. நன் முறையில் அமையும் நாடகங்களைத் தமிழ் மக்கள் எப்பொழுதும் வரவேற்பர் என்பது திண்ணம். 14. இடைக்காலத் தமிழ் (கி.பி. 300-கி.பி. 1800) அரசியல் நிலை ஏறத்தாழக் கி.பி. 300-க்குப் பிறகு காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் என்ற புதிய மரபினர் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆளத் தொடங்கினர். அப்பல்லவரால் தாக்குண்டு தமிழ்நாடு புகுந்த களப்பிரர் சோழநாட்டையும் பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக் கொண்டனர். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டுவந்த சோழ பாண்டியர்கள் இங்ஙனம் தம்மாட்சியை இழந்து களப்பிரருடனும் பல்லவருடனும் போரிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இக்குழப்ப நிலை ஏறத்தாழ 300-வருட காலம் நிலைத்திருந்தது என்னலாம். இதனை இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர் கூறுவர். கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவன் பகைவரை அடக்கிப் பல்லவப் பேரரசை நிலைநாட்டினான்; அவ்வாறே கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரரை ஒழித்துப் பாண்டிய அரசை ஏற்படுத்தினான். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவரை அழித்துச் சோழர் பேரரசை ஏற்படுத்தினர். அவர்கள் ஏறத்தாழ 400-வருடகாலம் தென்னிந்தியாவை ஒரு குடைக்கீழ் வைத்தாண்டனர். கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படையெடுத்தார். அந்நிகழ்ச்சியால் தக்கணத்தை ஆண்ட யாதவ அரசர், காகதீயர், மைசூர் நாட்டையாண்ட ஹொய்சளர் என்பவர் நிலைகலங்கினர். தமிழகம் தத்தளித்தது. மதுரையில் ஐம்பது ஆண்டுகள் முலீம் ஆட்சி ஏற்பட்டது. அதன் பின்னர்த் தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்தம் பிரதிநிதிகளாக இருந்து சோழநாட்டையும் பாண்டிய நாட்டையும் நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்கட்குப் பின்பு கருநாடக நவாபுகள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. சுருங்கக் கூறின், சங்க காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ 400-வருடகாலமே (கி.பி. 900-1300) தமிழரசர் ஆட்சி சோழப் பெருநாட்டில் இருந்ததென்று கூறலாம். சமயநிலை புதியவராய்த் தமிழகம் புகுந்த களப்பிரரும் முற்காலப் பல்லவருள் பலரும் சமண பௌத்த சமயங்களை ஆதரித்தனர். இக்காரணத்தால் சைவ வைணவ சமயங்கள் பேரளவு குன்றின. பௌத்த சமயத்தை விடச் சமணசமயமே மிகுந்த செல்வாக்குப் பெற்றது. குப்தர் பேரரசு வட இந்தியாவிலிருந்தபொழுது, (கி.பி. 300-600)அதுகாறும் செவி வழியாக வந்த புராணச் செய்திகளும் பிறவும் நூல்வடிவில் அமைக்கப்பட்டன. சமணத்தையும் பௌத்தத்தையும் ஒடுக்கத்தக்க முறையில் பக்திநெறி புதுவதாக அமைக்கப்பட்டது. `இறைவனை ஆடலாலும் பாடலாலும் வழிபடலாம், எவரும் வழிபடலாம், என்ற விரிவான போக்கில் பக்திநெறி அமைந்தது. வட இந்தியாவில் தோன்றிய இந்நெறி தமிழகத்திலும் பரவத் தொடங்கியது. வடக்கே இருந்து வந்த திருமூலர் என்ற சைவப் பெரியார் வடமொழியிலிருந்த சைவ ஆகமக் கருத்துக்களை மூவாயிரம் பாக்களைக்கொண்ட திருமந்திரமாகப் பாடியுள்ளார். அவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 400-600 என்னலாம். பக்தி நெறியைப் பின்பற்றித் தமிழகத்தில் பல கோவில்கள் எழுந்தன. வேதங்களில் வல்ல வேதியர் மிகப்பலராகப் பல்லவர் காலத்தில் தமிழகம் புக்கனர். பல்லவ மன்னர் அவர்களுக்குப் பல சிற்றூர்களை மானியமாக வழங்கி வடமொழிக் கல்வியை வளர்த்தனர். தமிழ்ச் சிவ நெறியோடு புதிய வைதிக நெறியும் சங்ககாலத்திலேயே இணைப்புண்டது. அவ்விணைப்புப் பல்லவர்காலத்தில் உறுதிப்பட்டது. தங்கள் சிவ-மால் நெறிகளை வளர்க்க இடையூறாக இருந்த சமண பௌத்தங்களை ஒழிக்கத் தமிழ்ச்சைவரும் வைணவரும் வைதிகரோடு சேர்ந்து சமயப் போரில் குதித்தனர். சங்ககாலத்திற்குப் பின்பு ஆட்சிமுறை மாறுபாட்டாலும், அரசர்கள் சமயத்துறையில் நடுவுநிலைமை காட்டத் தவறியதாலும், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொர் அரசன் பாராட்டிய சமயமே உயர்நிலையில் இருந்தது. இந்நிலையில் சமணமும் பௌத்தமும் தம்முள் போரிடலாயின. இவ்வாறே பௌத்தம் சமணத்தோடு பிற சமயங்களையும், சமணம் பௌத்தத்தோடு பிறசமயங்களையும் எதிர்த்து நின்றன. இறுதியில் சமணம் வெற்றி பெற்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் தமிழகம் முழுவதிலும் சமணமே மிக்க செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. கி.பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் சைவர்க்கும் சமணர்க்கும், வைணவர்க்கும் சமணர்க்கும் மேலே சுட்டப் பெற்றவாறு சமயப் போர் நடைபெற்றது. திருநாவுக்கரசரது இடைவிடாத பிரசாரத்தால் பல்லவநாடு சைவ நாடாக மாறியது; சம்பந்தரது பிரசாரத்தினால் பாண்டிய நாடு சைவ நாடாக மாறியது. சமணரையும் பௌத்தரையும் சைவரும் வைணவரும் வென்றனர். சமணம் பௌத்தம் ஆகிய இரண்டின் செல்வாக்கையும் பெரிதும் குறைத்துவிட்ட சைவ வைணவ சமயங்கள் சோழர் காலத்தில் தம்முள்ளேயே போரிட்டுக் கொண்டன என்பதைக் கல்வெட்டுக்களாலும் நூல்களாலும் அறியலாம். இராமாநுசர் சோழநாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிந்தராசர் சிலையைப் பெயர்த்துக் கடலில் எறிந்துவிட்டான். `மாலும் நான்முகனும் காணாத சிவன் என்று பெரிய புராணத்தில் பல இடங்களில் திருமாலைக் குறைத்துப் பேசும் நிலை ஏற்பட்டது. நீல கேசியில் காணப்படும் சமயவாதங்களைப் போன்ற செய்திகள் சிவஞான சித்தியாரில் காணப்படலாயின. சைவம் ஒழிந்த ஒவ்வொரு சமயத்தையும் எடுத்து விளக்கி, அதன் குறைகளைக் காட்டிக் கண்டிப்பது சிவஞான சித்தியார் `பரபக்கம் என்பது. சோழராட்சிக்குப் பிறகும் இச்சமய வெறுப்பு நின்றபாடில்லை என்பதை சிவப்பிரகாசர் செய்த ``இயேசுமத நிராகரணம், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் செய்த ``அஷ்டப் பிரபந்தம் முதலியவற்றைக் கொண்டு நன்கறியலாம். கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இசுலாம் பரவத் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, சமுதாய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் புண்பட்ட நெஞ்சோடு வாழ்ந்த மக்களும், சாதிகளை வெறுத்து வந்த பிறரும் சாதி வேறுபாடுகளைப் பற்றிப் பேசாத இசுலாத்தையும், பின்வந்த கிறித்தவத்தையும் உளமாறத் தழுவி மகிழ்ந்தனர். சமயங்களால் மொழிக்கலப்பு பல்லவ வேந்தர் முதலில் பிராகிருத மொழியையும் பின்பு வடமொழியையும் தங்கள் பட்டயங்களில் எழுதினர். அக்காலத்தில் காஞ்சியில் சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அதனிற் கல்வி கற்கக் கதம்ப குல முதல் மன்னனான மயூரசர்மன் காஞ்சிக்கு வந்திருந்தான். நாலந்தாப் பல்கலைக் கழகப் பேராசிரியராயிருந்த தர்மபாலர் காஞ்சிப்பதியினர்; எனவே, அவர் அக்கல்லூரியிற் கல்வி பயின்றவராதல் வேண்டும். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணமடத்தில் பாலிமொழி நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதப் பெற்றன. போதி மங்கை, பூம்புகார் ஆகிய இடங்களில் இருந்த பௌத்த மடங்களில் பல நூல்கள் எழுதப் பெற்றன. வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சோழ சிங்கபுரத்தில் வடமொழிக் கல்லூரி இருந்தது. புதுச்சேரிக்குச் செல்லும் பாதையில் பெண்ணை யாற்றங்கரையில் பாகூர் உள்ளது. அதனில் ஒரு வடமொழிக் கல்லூரி இருந்தது. இவை அனைத்தும் வடமொழியை வளம் பெற வளர்த்த கலைக்கூடங்கள் என்னலாம். கி.பி.5-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் (470இல்) வச்சிரநந்தி தலைமையில் மதுரையில் திரமிள சங்கம் ஒன்று கூடியது. அதன் பயனாகப் பலநீதி நூல்கள் தமிழில் எழுந்தன. சமணர்கள் வடமொழியிலும் தமிழிலும் வல்லுநர் ஆதலின், வடமொழிச் சொற்கள் அவர்களை அறியாது தமிழிற்புகுந்தன. பல்லவர்க்குப் பின் வந்த சோழராட்சியில் சாதி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மநுதர்ம ஆட்சியே நிலவியது என்று கூறுதல் பொருந்தும். வைதிகநெறியும், தமிழர் சைவநெறியும், வைதிக நெறியும் தமிழர் மால் நெறியும் இணைந்தமையாலும் வடமொழியாளர் ஆதிக்கம் சமயத்துறையில் இடம் பெற்றமையாலும், சமயத் தொடர்பான வடசொற்கள் பல தமிழிற் கலந்தன. நாயன்மார் பாடல்களிலும் ஆழ்வார் அருட்பாடல்களிலும் வடசொற்கள் பலவாயின. வடமொழி இலக்கணம் பற்றிய விருத்தம் முதலிய பாவகைகள் தமிழ் யாப்பிலக்கணத்தில் புகலாயின. இவ்வாறே பௌத்த சமயக் கருத்துக்களைக் குறிக்கும் பாலி மொழிச் சொற்களும், தமிழிற் கலந்தன. தருக்க வாதத்தில் வல்ல சமணர் செய்த தமிழ் நூல்களிலும் இப்பிறமொழிச் சொற்கள் பல நுழைந்து விட்டன. வடமொழி வெள்ளம் சைவமும் வைணவமும் தமிழகத்தில் நிலைபெற்ற பின்னர், வடமொழிவாணர் எண்ணிறந்த தலபுராணங்களை வடமொழியில் எழுதினர். தமிழ்நாட்டுத் தலங்களைப் பற்றிய அப்புராணங்கள் தமிழில் எழுதப்படலன்றோ முறை? இறைவழிபாடுகளும் வடமொழியில் ஆக்கம் பெற்றன. பல்லவமன்னர் பாரதி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களையே பெரிதும் ஆதரித்தனர். அவர்கள் வடமொழி இலக்கண நூல்களையும் காவியங்களையும் செய்தனர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தண்டி செய்த `காவ்யாதர்ஸம் என்பதையே, கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் ஒருவர் தண்டி அலங்காரம் என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். பின்னர் வடமொழி அணியிலக்கணம் தழுவியே மாறனலங்காரம் 16-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. சந்தம், தாண்டகம், குரு, லகு, சமானம், பிரமாணம், சித்திரக்கா, விசித்திரக்கா, சருபதோபத்திரம், எழுத்து வருத்தனம், சக்கரச்சுதகம், மாத்திரைச் சுதகம், பிந்துமதி, நிரோட்டி, திரிபாகி, திரிபங்கி, சிலேடை, தீவகம், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி, வாதி, வாக்கி முதலிய எண்ணிறந்த வடசொற்கள் தமிழ் யாப்பிலக்கணத்தில் புகுந்து கொண்டன. இவற்றின் விவரங்கள் யாப்பருங்கல விருத்தியுரையில் காணலாம். ``.இவற்றையெல்லாம் சரணாச்சிரையமும், செயதேயமும், மிச்சாகிருதியும், பிங்கலமும், மாபிங்கலமும், இரணமhமஞ்சுடையு«சந்திரகோடி¢சந்தமும்,குணகாங்கியென்னு«கருநாடக¢சந்தமு«வாஞ்சியா®செய்jவடுக¢சந்தமு«ஆகியவற்றுள்ளும், மாபுராணம் Kதலாகியjமிழ்üYள்ளும்புFâயுடையார்வாய்க்கே£டுணர்க.-யா¥பருங்கலவிரு¤தி,பக்.514. இக்கூற்றில், ``மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் என்று கூறினமையால், சரணாச்சிரையம் முதல் வடுகச் சந்தம் ஈறாகக் குறிக்கப்பெற்ற நூல்கள் பிறமொழி நூல்கள் என்பது பெறப்படல் காண்க. தமிழ் யாப்பிலக் கணத்தைப் பெருக்கப் பிற மொழி இலக்கண நூல்களையும் இவ்விடைக்கால இலக்கண ஆசிரியர்கள் கைக்கொண்டனர் என்பது இதனால் பெறப்படுகின்ற தன்றோ? வடநூல் வழித் தமிழாசிரியர் என்று ஒருசார் ஆசிரியர்கள் இடைக்காலத்தில் இருந்தனர் என்பது யாப்பருங்கல விருத்தியுரையால் தெரிகிறது. தொல்காப்பியர் செய்த செய்யுளியலில் காணப் பெறாத பல, பின் வந்த யாப்பருங்கலத்திற் காணப்படுகின்றன என்பதை நோக்க, வடவர் செல்வாக்கு எந்த அளவு தமிழ் மொழியில் சென்றிருந்தது என்பதை நன்கு உணரலாம். பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாக்களுக்குச் சோழர் காலத்தில் பேருரை வகுக்கப்பட்டது. அப்பேருரை பாதி தமிழும், பாதி வடமொழியும் கலந்த புதிய நடையில் எழுதப் பெற்றது. அதற்கு `மணிப்பிரவாள நடை என்பது பெயர். முத்தும் பவளமும் கோத்தாற் போன்றது என்பது பொருள். பின் நூற்றாண்டுகளில் எழுந்த அஷ்டப் பிரபந்தம் வடமொழிச் சொற்களை மிகுதியாக உடையது. வில்லிபாரம் பாதிதமிழ், பாதி வடமொழி என்னும் அளவில் பாடப்பெற்றது. சுருங்கக்கூறின், வடமொழி வல்ல பிராமணர்கள் செய்த நூல்களெல்லாம் வடமொழிக் கலப்பு மிக்குடையனவாகக் காணப்பட்டன. பிராமணர் ஒழிந்த ஏனையோர் பாடிய நூல்களில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களே மிகுந்து, வடசொற்கள் குறைந்து பயிலுதலைக் காணலாம். தமிழகத்தில் பல நூற்றாண்டுகள் தங்கித் தமிழ்ப் புலவர் மரபில் வந்த பிராமணர் செய்த பாக்களில் பெருங்கலப்பைக் காணுதல் அரிது. சம்பந்தர் பாடல்கள் இதற்கு ஏற்ற சான்றாகும். புதியவராகத் தமிழகம் புகுந்த வடமொழியாளர் (பிராமணர், சமணர், பௌத்தர் முதலியோர்) ஆரியர் எனப்பட்டனர். அவர்கள் தொடக்கத்தில் தமிழ்பேச அறியாது துன்புற்றனர். அவர்கள் பேசிய தமிழ் தமிழர்க்கு நகைச்சுவையை உண்டாக்கியது. நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறும் தமிழும் குருடரும் முடவரும் செல்லும் செலவும் ...nghštd,’ என்றுபேராáரியர்தொல்கா¥பியம்மெய்ப்பாட்oயலில்கூறியுŸளமைகவனிக்கற்ghyJ பிறமொழிக் கலப்பு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் டில்லி பாதுஷாவிடம் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் சலாம், சொக்காய் முதலிய பிறமொழிச் சொற்களைத் தம் பாக்களில் கையாண்டுள்ளார். இசுலாம் தமிழகத்தில் பரவிய காரணத் தாலும் முசுலிம் புலவர்கள் தங்கள் சமய நூல்களைப் பாடநேர்ந்த காரணத்தாலும், அரபுச் சொற்களும், பாரசீகச் சொற்களும், இந்துதானிச் சொற்களும், உருதுச் சொற்களும் தமிழிற் கலந்தன. சீறாப்புராணம் இவ்வுண்மையை விளக்கத் தக்க சான்றாகும், ஜமீன், சிபாரிசு, சிப்பந்தி, சிப்பாய், சுமார், பந்தோபது, ததாவேஜ், பக்கிரி, மேஜை, ரதா என்பன பாரசீகச் சொற்கள். ஆசாமி, அநாமத், இலாகா, கஜானா, காடிகானா, காய்தா, ஜப்தி, மாமூல், வசூல், முனிசீப் என்பன அராபியச் சொற்கள். அசல், அந்தத், அபின், அல்வா, அம்பாரி, ஆஜர், இதிரி, உஷார், குமாதா, குல்லா, ஜமுக்காளம், ஜாப்தா, ஜல்தி, பஞ்சாயத் என்பன இந்துதானி சொற்கள். முகலாயர் ஆட்சிக்காலத்தில் தென்னாட்டில் வாணிகம் செய்ய வந்த போர்த்துகீசியர் கூட்டுறவால் கிராம்பு, சன்னல், சாவி, அலமாரி, பாதிரி என்பன தமிழிற் கலந்தன. இவ்வாறே இந்தியாவில் தங்கி வாணிகம் செய்த டச்சுக்காரர், பிரெஞ்சியர், ஆங்கிலேயர் முதலியவராலும் தமிழிற் புகுந்த சொற்கள் பலவாகும். ஆயினும் இவற்றைக் கூடியவரை ஒழித்துப் பெரும்பாலும் தூய தமிழில் எழுதுவதே நன்மக்கள் கடமையாகும்.