சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : சேக்கிழார் - ஆராய்ச்சி நூல் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+114 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 120/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முகவுரை சேக்கிழார் என்னும் திருப்பெயருடன் வெளிவரும் இவ்வாராய்ச்சி நூல், யான் எனது M.O.L. பட்டத்திற்காகத் தயாரித்த ஆங்கில ஆராய்ச்சி நூலின் ஒரு பகுதியாகும் சேக்கிழார் (ஜெர்மன் வரலாற்று ஆசிரியரான வான் ராங்கே (ஏய சுயமேநல) சென்ற ஆராய்ச்சி முறைப்படி (1) நாயன்மார் வாழ்ந்திருந்த தலங்களை எல்லாம் பார்வையிட்டுத் தமிழகம் முழுவதும் சுற்றினவர்; (2) நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை வல்லார் வாயிலாகவும், பழைய நூல்கள் மூலமாகவும், கல்வெட்டுகள் வழியாகவும் தயாரித்தவர்; (3) பழைய நூல்களைப் பழுதறப் பரிசோதித்துப் (Internal and External Criticism) பொருத்தமான குறிப்புகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்; (4) தம் காலத்திருந்த ஓவியங்கள் - சிற்பங்கள் -படிமங்கள் - கோவில்கள் முதலியவற்றை நன்றாகப் பார்வையிட்டுத் தமக்குத் தேவையான குறிப்புகளை மேற்கொண்டவர் என்னும் செய்திகள் ஆராய்ச்சி வல்லார்க்கு நன்கு புலனாகும். சுருங்கக் கூறின், இன்று மேனாட்டார் கூறும் சாத்திரீய ஆராயச்சி (Sceientifc Research) முறையின் பல அம்சங்களைக் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானிடம் கண்டு களிக்கலாம் என்று கூறல் தவறாகாது. இந் நூலில் இக்குறிப்புகள் அனைத்தையும் சுருக்கமாக காணலாம். யான் 1941ஆம் ஆண்டுமுதல் செய்துவந்த பெரிய புராண ஆராய்ச்சிச் சம்பந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வராய்ச்சிக் குறிப்புகள் 1942 முதல் யான் செய்துவந்த பெரிய புராண ஆராய்ச்சிச் சொற்பொழிவு களில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும். யான், சிவக்கவிமணி- கோ. க. சுப்பிலமணி முதலியார் B.A. (1942), தமிழ்ப் பெரியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் (1942), தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர் - ரா. பி. சேதுப் பிள்ளை, B.A., B.L.(1943), தமிழ்ப் பெரியார் - ச. சத்திதானந்த பிள்ளை, B.A., L.T. (1943), வித்வான் S. ஆறுமுக முதலியார், M.A., N.O.L, L.T. (1944), தமிழ்ப் பெரியார் T.M. நாராயணசாமிப் பிள்ளை, M.A., B.L., முதுபெரும் புலவராய மறைமலையடிகள் (1944) முதலிய தமிழ்ப் பெரும் புலவர் தலைமையின் கீழ் முறையே இராஜமன்னார்குடி, சென்னை, இராஜமன்னார்டி, வேலூர், சென்னை, பழநி, சேலம் முதலிய இடங்களிற் பேசிய சொற்பொழிவுகளின் சுருக்கமே இந்நூற் பொருளாகும். யான் M.O.L. பட்டத்திற்குத் தயாரித்த இந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை நன்கு சோதித்து முறைப்படுத்தி ஒழுங்குபெறச் செய்த பெரியார்-சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக்வுள்ள இராவ்சாஹிப் S. வையாபுரிப் பிள்ளை, BN.A., B.L. அவர்கள் ஆவர். என்னை இவ்வாராய்ச்சித் துறையில் ஊக்கிவந்த இப்பெரியார் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றியும் வணக்கமும் உரியவாகுக. இச்சிறு நூல் கல்லூரி மாணவர்க்கும் தமிழ்ப் பொது மக்கட்கும் பயன்படவேண்டும் என்னும் கருத்தினால் மிக எளிய நடையில் எழுதுப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் துறையில் ஆர்வமுள்ள பெருமக்கள் எனது முயற்சியினை ஆசீர்வதிக்குமாறு வேண்டுகிறேன். சேக்கிழார் அகம், சென்னை மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. தொண்டை நாடு - குன்றத்தூர் 15 2. சேக்கிழார் - முதல் அமைச்சர் 22 3. சைவ சமய வரலாறு 32 4. பல்லவர் காலச் சைவ சமயம் 37 5. சோழர் காலத்துச் சைவ சமய நிலை 49 6. பெரிய புராணம் பாடின வரலாறு 67 7. சேக்கிழார் தல யாத்திரை 76 8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும் 88 9. சேக்கிழார் பெரும் புலமை 108 1. தொண்டை நாடு - குன்றத்தூர் தமிழகம் என்பது வேங்கடம் முதல் குமரிவரையுள்ள நிலப்பகுதியாகும். அது சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் நடு நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் அகத்தே கொண்டது. சேர நாடு என்பது திருவாங்கூர், கொச்சி, சமதானங் களும் மலையாள ஜில்லாவும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. முசிறி, தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டை `வானவர் எனப்பட்ட சேரர் பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களும் கீழ்க்கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப் பாகும். இந்நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் என்பன. காவிரிப்பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களும் கீழ்க்கோடிக்கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தரைநகரம் ஆலவாய் எனப்பட்ட மதுரை. காயல், கொற்கை, தொண்டி என்பன இதன் துறைமுகப் பட்டினங்கள். கொற்கை முத்துக்குப் பெயர் பெற்ற பண்டைத் துறைமுக நகரம். இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தவர் பாண்டியர் என்பவர். நடு நாடு. சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள தென் ஆர்க்காடு ஜில்லாவின் பெரும் பகுதி `நடு நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டில் பல சிற்றரசர் இருந்து, திருக் கோவலூர், திருநாவலூர் முதலிய ஊர்களைச் சூழவுள்ள நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். அந்நாடுகள் திருமுனைப்பாடி நாடு, மலைய மானாடு எனப் பெயர்கள் பெற்றிருந்தன. தொண்டை நாடு. இது செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்தூர் முதலிய ஜில்லாக்களையும் தென் ஆர்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன் அகத்தே கொண்டது. இதில் சிறப்புற்று விளங்கிய தலைநகரம் காஞ்சிபுரம் என்பது. இதன் சிறந்த துறைமுகப் பட்டினம் மல்லை (மஹாபலிபுரம்) என்பது. இந்நாட்டிற் சிறப்புடைய பெரிய யாறு பாலாறு என்பது. இந்நாட்டில் மலைகள் மிகுதியாக உண்டு.வேங்கடம், காளத்தி, நகரி, நாகலாபுரம், இராமகிரி, வேலூர், செங்கற்பட்டு, சோழ சிங்கபுரம் முதலிய பல இடங்களிலும் மலைத்தொடர்கள், தனி மலைகள், குன்றுகள் இவற்றைக் காணலாம். இந்நாட்டின் பல பகுதிகளில் பெருங்காடுகளும் சிறிய காடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கு ஒன்றும் விளையாத பாலை நிலங்களும் காண்கின்றன. இவற்றுக்கு இடையே கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்கக் கூறின், வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்கக் கூறின், தொண்டை நாட்டில் நானிலத்து ஐந்திணை வளங்களையும் கண்டு களிக்கலாம். பெயர்க் காரணங்கள். 1.``bjh©il நாடு முதலில் `குறும்பர் நிலம் எனப் பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்குப் பொழுது போக்கினர். அவர்களே தங்கள் நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்துக் கொண்டார்கள். அக்குறும்பர் காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற் காலத்தில் ஆதொண்ட சக்ரவர்த்தி என்பவன் குறும்பரை வென்று நாட்டைக் கவர்ந்தான். அன்று முதல் அந்நாடு அவன் பெயரால் `தொண்டை நாடு என வழங்கலாயிற்று1 என்பது செவிவழிச் செய்தியாகும். 2. ``கரிகாற் சோழன் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் காடு கெடுத்து நாடாக்கினான். பிறகு தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழிவந்த (நாகர் மகளுக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த) இளந்திரையன் என்பவன் ஆண்டதால், குறும்பர் நாடு `தொண்டை நாடு எனப் பெயர் பெற்றது என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. கரிகாலன்-இளந்திரையன். `தொண்டை நாடு என்ற பெயர் எக்காரணம் பற்றி வந்தது என்பது இப்பொழுது திட்டமாகக் கூறுதற்கில்லை; ஆனால், சங்க காலத்தில் அந்நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மட்டும் திட்டமாகக் கூறலாம். கி.பி. முதல் நூற்றாண்டினன் என்று கருத்தகும். ``கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் சிறப்பைக் கூற, அச்சோழர் பெருமான் காஞ்சி நகரைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பினான்; தொண்டை நாட்டில் பலரைக் குடியேற்றினான் என்பது பெரிய புராணக்கூற்றாகும். ``இளந்திரையன் என்பவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான்; அவன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்; தொண்டையர் குடியிற் பிறந்தவன்; பகைவர் அரண்களை அழித்தவன்; நான்கு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன்; சிறந்த கொடையாளி, என்று பெரும்பாண் ஆற்றுப்படை குறிக்கிறது. இளங்கிள்ளி. `மணிமேகலை என்ற காவிய காலத்தில் (ஏறத்தாழக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொண்டை நாட்டை இளங்கிள்ளி என்பவன் ஆண்டு வந்தான். அவன் தமையனான நெடுமுடிக்கிள்ளி சோணாட்டை ஆண்டு வந்தான். இளங்கிள்ளி தொண்டை நாட்டை எதிர்க்கவந்த சேர, பாண்டியரைக் காரிக்கரை (இராமகிரி) என்ற இடத்தில் முறியடித்தான். இளங்கிள்ளி காலத்திற்றான் மணிமேகலை என்ற மாதவி மகள் பௌத்த பிக்ஷிணியாகிக் காஞ்சியை அடைந்தாள்; இளங்கிள்ளியின் உதவி கொண்டு புத்த பீடிகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக் கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர், அந்நகரத்திலேயே தங்கி அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவம் கிடந்தாள். எனவே தொண்டை நாடு சங்க காலத்தில் சோழராட்சியில் இருந்தது என்பதற்குப் படை நூல்களே சான்றாகும். காஞ்சி மாநகரம். இது வடமொழிப் புராணங்களில் பெயர் பெற்றதாகும்; முத்தி தரும் நகரங்கள் ஏழுனுள் ஒன்று. இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய போதனை செய்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் அங்குப் பல தூபிகளை நாட்டிப் பௌத்த சமயப் பிரசாரம் செய்வித்தான். அசோகன் நாட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சங் காலம்வரை (கி.பி. 640-641) அங்கு இருந்ததாகத் தெரிகிறது. கி.மு. 150-ல் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமது விருத்தியுரையில் காஞ்சி நகரைக் குறிப்பிட்டுள்ளார் எனின், காஞ்சி அப்பழங்காரத்திலேயே சிறந்த கலைப் பீடமாக விளங்கினதை அறியலாம். காஞ்சிபுரம் சங்க காலத்திற் `கச்சி எனப்பட்டது. ``அப்பெருநகரம் தேரோடும் தெருக்களைக் கொண்டிருந்தது; பழங்குடிகளையும் மதிலையும் பெற்றிருந்தது என்று பெரும்பாண் ஆற்றுப்படை கூறுகின்றது. பல்லவர் காலம். பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழ 600 ஆண்டுகள் (கி.பி. 300-900) ஆண்டனர். அவர்கள் காலத்தில் தொண்டை நாடு பல துறைகளிலும் சிறப்புற்றது. காஞ்சி பல்கலைத் துறைகளிற் பெயர் பெற்று விளங்கியது. பிறநாட்டு மாணவரும் விரும்பி வந்து கற்குமாறு காஞ்சி-வடமொழிக் கல்லூரி கல்வியிற் சிறப்புற்று விளங்கியது. ``கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர் என்று திருநாவுக்கரசரும் தமது தேவாரத்திற் பாராட்டுவாராயினர். பல்லவர், நாட்டை வளப்படுத்தப் பல ஏரிகளை எடுப்பித்தனர்; பாலாற்றிலிருந்து பல கால்களைப் பெருக்கினர். அவர்கள் ஆட்சியில், தொண்டை நாட்டில் சைவமும் வைணமும் செழித்து வளர்ந்தன. பிற்காலச் சோழர் காலம். பல்லவப் பெரு நாட்டிற்கு நடு நாயகமாக இருந்த தொண்டை நாடு, கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனாற் கைப்பற்றப்பட்டுச் சோழப் பெருநாட்டுடன் இணைக்கப் பட்டுவிட்டது. அது முதல் தொண்டை நாடு ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் ஆட்சி வடக்கே கோதாவரி வரை பரவி இருந்தமையால் ஆந்திரப் பகுதியைக் கவனிக்கக் காஞ்சி ஒரு தலைநகரமாக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காஞ்சியில் அழகுக்கு இருப்பிடமான அரண்மனை ஒன்று `பொன் மாளிகை என்ற பெயருடன் இருந்தது. சோழர் ஆட்சியிலும் காஞ்சிமா நகரம் வடமொழிக் கல்விக்கு நிலைக்களமாக விளங்கியது. தொண்டை நாட்டுச் சிவத்தலங்கள். காஞ்சி, திருமுல்லை வாயில், திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திரு இடைச்சுரம், திருமாற்பேறு, திரு ஒத்தூர், திரு ஆலங்காடு, திருவூறல் போன்ற சிவதலங்கள் அப்பர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உயர்நிலையில் இருந்தன. அவை நாயன்மார் காலமான பல்லவர் காலத்தில் பின்னும் சிறப்புற்றன; ஆதித்த சோழன் மரபினர் காலத்தில் கற்றளிகளாக மாறிவிட்டன; பூசை, விழாக்கள் முதலிய சிறப்புகளில் செம்மையுற்றன. பாடல் பெற்ற கோவில்களைப் போலவே தொண்டை நாட்டுப் பிற (பல்லவர் - சோழர் காலக்) கோவில்களும் வரவரச் சிறப்புப் பெற்றுப் பொது மக்கட்குச் சமய உணர்ச்சியை ஊட்டி வந்தன. தொண்டை நாட்டுக் கோட்டங்கள். தொண்டை நாடு எப்பொழுது - யாரால் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது என்பது திட்டமாக கூறமுடியாது. இருபத்தி நான்கு கோட்டங் களின் பெயர்களும் பல்லவர் காலத்தில் வழங்கியவாறே பிற்காலச் சோழர் காலத்திலும் வழங்கி வந்தன. அவ்விருபத்து நான்கு பிரிவுகளாவன:- 1. புழல் கோட்டம். 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம். 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம். 6. எயில் கோட்டம். 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க்கோட்டம். 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்ற வட்டான கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர் கோட்டம் என்பன. புலியூர்க் கோட்டம். இப்பகுதிக்குத் தலைநகரம் புலியூர் என்பது. அது, சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர். அதனைச் சுற்றியுள்ள கோவூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக்கொண்ட நிலப்பகுதி `புலியூர்க் கோட்டம் எனப்பட்டது. குன்றத்தூர். இது சென்னைக்கடுத்த பல்லாவரம் (பல்லவபுரம்) புகைவண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். இதற்குச் சென்னை யிலிருந்து நேரே `ப போகின்றது. இவ்வூர், சோழர் காலத்தில்-சிறப்பாகச் சேக்கிழார் காலத்தில் சிறந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை, அதன் பழுதுபட்ட தோற்றம் கொண்டு கூறக்கூடும். இன்றைய குன்றத்தூர் - `திருநாகேச்சரம், நத்தம் என்னும் இரண்டு சிற்றூர்களாக இருக்கின்றது. இரண்டையும் ஏறத்தாழ அரைக்கல் நீளமுள்ள பழுதுபட்ட பாதை ஒன்றுபடுத்துகிறது. அப்பாதையின் இரண்டு பக்கங்களிலும் அங்கங்கே இரண்டொரு தெருக்களம் வீடுகளும் பசிய வயல்களும் காண்கின்றன. நத்தம் எனப்படும் சிற்றூரிற்றான் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அக்கோவில் உள்ள இடத்திற்றான் சேக்கிழார் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று அங்குள்ள அவர் மரபினர் கூறி வருகின்றனர். நத்தம் பழமையான இடம் என்பதில் ஐயமில்லை. சில இடங்களில் நீண்ட மதிற்சுவரின் பழுதுபட்ட பகுதிகள் காண்கின்றன; அங்குள்ள சைவ-வைணவக் கோவில்கள் பழுதுபட்டுவிட்டன; சில பகுதிகள் அழிந்து கிடக்கின்றன; கல்வெட்டுகள் சிதைந்து காண்கின்றன. நத்தத்தில் உள்ள பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலி பெயர் திருவூரகப் பெருமாள் என்பது. அதற்கு அண்மையில் உள்ள சிவன் கோவில் மிகவும் பழுதுபட்டுக் கிடக்கிறது. அது சேக்கிழார் கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களிலும் மூன்றாம் இராஜராஜன் கல்வெட்டுகளும் பிற்கால நாயக்க மன்னர் கல்வெட்டுகளும் காண்கின்றன.2 நத்தத்தில் உள்ள தெருக்களும் இல்லங்களும் பள்ளங்களும் மேடுகளும் தம் பழமையைப் புன்முறுவலோடு உணர்த்தி நிற்றலை ஆராய்ச்சியாளர் தாம் அறிதல் கூடும். சேக்கிழார் கோவிலுக்கு அண்மையில் ஒரு குளம் இருக்கின்றது. வயல்கள் செம்பரம்பாக்கத்து ஏரிப் பாய்ச்சலைப் பெற்றுச் செழித் துள்ளன. நத்தம் மலைமீதுள்ள முருகன் கோவில் சொக்கநாத நாயக்கர் காலத்தது; கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் கட்டப்பட்டது; எனவே, சேக்கிழார் காலத்தது அன்று. ஊரின் பண்டை நிலைமை. நத்தம் கல்வெட்டுகளைக் கொண்டும் சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் திருநாகேவரம் கோவிற் கல்வெட்டுக்களைக் கொண்டும் காண்கையில் அப்பதி, சோழர் காலத்தில் பெரிய நகரமாக இருந்தது; சைவ-வைணவக் கோவில்கள் நன்னிலையில் இருந்தன; கோவில் காரியங்களைக் கவனிக்கச் சபையார் இருந்தனர்; ஊர் ஆட்சியை நடத்த `ஊரவர் எனப்பட்ட `ஊர் அவையார் இருந்தனர் என்பன போன்ற செய்திகளை நன்கறியலாம். 2. சேக்கிழார் - முதல் அமைச்சர் சேக்கிழார் குடி. தொண்டை நாட்டை வளப்படுத்தி நாற்பத்தெண்ணாயிரம் குடிகளை அந்நாட்டிற் குடிபுகச் செய்த முயற்சி சோழன் கரிகாலனுக்கு உரியது என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். அக்குடிகளுள் கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குப்பாக்கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் சிறந்தவை. இவற்றுள் முதல் மூன்றும் கூடலூர், புரிசை, குளப்பாக்கம் என்னும் ஊர்ப் பெயர்களை முதலாகக் கொண்டவை. `சேக்கிழான் என்பது அப்படியன்று. சே-காளை; சேக்கிழான் - காளைக்குரியவன் எனக் கொள்ளின், எருதுகளைக் கொண்டு வயல் வேலைசெய்யும் வேளாளனைக் குறிக்கும்; காளையை வாகனமாகக் கொண்ட உரிமையாளன் எனப் பொருள்கொள்ளின், சிவபெருமானைக் குறிக்கும். இரண்டாம் பொருளே சிறப்புடையதாகும். ``சேக்கிழான் என்ற பெயர் கொண்டு தொண்டை நாட்டில் முதன் முதற் குடியேறிய வேளாளன் மரபில் வந்தவர் `சேக்கிழான் குடியினர் எனப்பட்டனர்; அக்குடியில் வந்த ஒவ்வொருவரும் `சேக்கிழான் என்ற குடிப்பெயரை முன்னும், தம் இயற்பெயரைப் பின்னும் பெற்றுச் `சேக்கிழான் - இராமதேவன் `சேக்கிழான் - பாலறாவாயன் என்றாற்போலப் பெயர் பெற்று விளங்கினர் என்பது சோழர்காலக் கல்வெட்டுகளால் தெரிகின்றது. இச் சேக்கிழார் குடியினர் தொண்டை நாட்டு இருபத்துநான்கு கோட்டங்களுட் பலவற்றிற் குடியேறி வாழ்ந்தனர் என்பது, 1. மணவிற்கோட்டத்து மேலப்பழுவூர்ச் சோழமுத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் அரையன் சங்கரநாராயணன்....1 2. மேலூர்க் கோட்டத்துக் காவனூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்l சேக்கிழான் சத்திமலையன்........2 3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்.....3 எனவரும் கல்வெட்டுச்செய்திகளாடல் நன்கறியலாம். மேலும் இச்செய்திகளால், சேக்கிழார் குடியினர், சோழமன்னரால் `சோழமுத்தரையன் முதலியபட்டங்கள் தரப்பெற்று உயர்நிலையில் வாழ்ந்தவர் என்பதும் புலனாதல் காண்க. குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர். இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் காண்கையில், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் (பெரிய புராண ஆசிரியர்) காலமுதலே விளக்கம் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியரும் இதனையே குறித்து, `அநபாயன் காலமுதல் சேக்கிழார் குடியினர் அரசியலில் உயர்ந்த பதவிகள் வகித்துவந்தனர்; இன்றம் வகித்து வருகின்றனர் என்று தம் காலம் வரை சேக்கிழார் மரபினர் சிறப்பைக் குறித்துள்ளார். அவரது இக்கூற்று உண்மை என்பதைக் கீழ்வரும் கல்வெட்டுச் செய்திகளால் அறியலாம்: அரசன் பெயர் கல்வெட்டுக் சேக்கிழார் குடியினர் காலம் 1. இராஜராஜன் II கி.பி. 1162 சயங்கொண்ட சோழ (கி.பி.1416-1173) மண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள்ராமதேவன் என்றஉத்தமnசாழப் பல்லவராயன் 2. “ கி.பி.1164 குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன். 3. குலோத்துங்கள் III கி.பி. 1179 குன்றத்தூர்ச் சேக்கிழான் (கி.பி. 1178-1218) பாலறாவாயன் களப்பாளராயன் 4. “ கி.பி. 1181 குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகதேவன் என்ற கரிகால சோழப் பல்லவராயன். 5. “ “ குன்றத்தூர்ச் சேக்கிழான் புவனப் பெருமாள் என்ற துண்டகநாடு உடையான். 6. இராஜராஜன் III கி.பி. 1225 குன்றத்தூர்ச் சேக்கிழான் (கி.பி. 1216-1246) பட்டியதேவன் ஆட்கொண்டான். 7. ,, கி.பி. 1226 குன்றத்தூர்ச்சேக்கிழான் அரையன் ஆட்கொண்ட தேவன் என்ற முனையதரையன். 8. ,, கி.பி. 1240 குன்றத்தூர்ச்சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப்பெருமாள். 9.மாறவர்மன் குலசேகர கி.பி. 1300 குன்றத்தூர்ச் சேக்கிழான் பாண்டியன் ஆடவல்லான். (கி.பி. 1270-1305) குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர், சேக்கிழார் புராண ஆசிரியர் அறிவித்தபடி, நீண்டகாலம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது, அவர்கள் பெற்றிருந்த `உத்தம சோழப் பல்லவராயர், களப்பாளராயர், கரிகால சோழப் பல்லவராயர், துண்டக நாடு உடையான், அரையன், முனையதரையன் என்னும் பட்டங்களால் விளக்கமாகிறது. இம்மரபினர் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் பலவற்றுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது மேற்குறித்த கல்வெட்டுகள் குறிக்கும் செய்தியாகும். பெரியபுராண ஆசிரியர் யாவர்? மேற்கண்ட சேக்கிழார் ஒன்பதின்மருள் முதல்வரே- சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயர் என்பவரே- பெரியபுராணம் பாடிய நமது சேக்கிழாராக இருக்கலாம் என்று அறிஞர்4 கருதுகின்றனர். சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலமாகும் என்பது கல்வெட்டு அறிஞர் - வரலாற்று அறிஞர் இவர் தம் முடிபாகும். அவன் காலம் கி.பி. 1133-1150. அவன் மகன் இரண்டாம் இராஜராஜன் (கி.பி.1146-1173) என்பவன். சேக்கிழார் புராணப்படி, இந்த இராஜராஜன், சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தபொழுது இளவரசனாக இருந்தவன். இவனது 17-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற்றான் சேக்கிழார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் காலத்தில் அவர் ஓய்வுபெற்றுச் சிவனடியாராக இருந்தார் என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த `உத்தமசோழப் பல்லவராயல் என்ற பட்டமும் அவர் ஒருவருக்குத் தான் காணப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்க, முதற் கல்வெட்டிற் கண்ட இராமதேவன் என்பவரே பெரிய புராணம் பாடிய சேக்கிழார் என்பதை நம்பலாம். இராமதேவன். `இவ்வைணவப் பெயர் சைவமரபில் வந்தவர்க்குப் பெயராக இருந்திருக்குமா? என்று சிலர் ஐயுறலாம். அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராகிய முனையரையர்க்கு `நரசிங்கர் என்ற வைணவப் பெயர் இருந்தமையும், ஒன்பதாந் திருமுறைப்பாக்களைப் பாடிய சிவனடியாருள் ஒருவர்க்குப் புருஷோத்தம நம்பி என்ற பெயர் இருந்தமையும் நோக்கினால், இவ்வையம் எழ இடம் இராது. சேக்கிழார் மரபினர் வைணவப் பெயர் தாங்கள் பண்டை வழக்கம் என்பதை எட்டாம் கல்வெட்டைக் கொண்டும் உணரலாம். மாதேவடிகள். சேக்கிழாரது பக்திச் சிறப்பை நோக்கியும் பெரிய புராணம் ஆகிய அருள்நூலைப் பாடிய தகுதி நோக்கியும் அவரைக் `குன்றை முனி சேக்கிழார், `அருந்தவந்தனில் இருந்தவர் என்றெல்லாம் சேக்கிழார் புராண ஆசிரியர் செப்பியுள்ளார். இஃதுண்மை என்பதை `மாதேவடிகள் என்ற அடையால் கல்வெட்டு வற்புறுத்துகிறது. `மஹா தேவனுக்கு அடிமை பூண்டவர் என்பது இதன் பொருள். இச்சிறப்புடைய அடை, சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பிறகு வழக்கிற்கு வந்திருக்கலாம். அருள்மொழித் தேவர். இது சேக்கிழாரது இயற்பெயர் என்று புராண ஆசிரியர் கூறுகிறார். இப் பெயரும் `மாதேவடிகள் என்றாற்போன்ற சிறப்புப் பெயர்-பெரியபுராணச் சிறப்பு நோக்கி அறிஞர் இட்ட தகுதிப் பெயர் எனக் கோடலே பொருத்தமாகும். உத்தம சோழப் பல்லவராயர். இதனை, `அநாபயன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சேக்கிழார்க்கு வழங்கினான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். இப்பட்டம் முதற் கல்வெட்டிலும் காணப்படுதல், இக்கூற்றை உறுதிப்படுத்துவதாகும். பாலறாவாயர். `சேக்கிழார் இளவல் பாலறாவாயர் என்பவர்; அவர், சேக்கிழார் அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சோழ அரசியலில் உயர்ந்த அதிகாரி யாக்கப்பட்டார் என்பது சேக்கிழார் புராணச் செய்தி ஆகும். இதனை உறுதிப்படுத்துவது போல இராஜராஜன் காலத்துக் கல்வெட்டும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டும் காண்கின்றன. அவ்விரண்டிலும் `சேக்கிழான் - பாலறாவாயன் களப்பாளராயன் என்பது காணப்படுகிறது. இப்பெயர் கொண்டவர் திரு அரத்துறை (தென் ஆர்க்காடு ஜில்லா), கோட்டூர் (தஞ்சாவூர் ஜில்லா)க் கோவில்கட்குச் சில தானங்கள் செய்த சிவ பக்தர் என்பது அக்கல்வெட்டுக்களால் தெரிகிறத. இவர், திரு அரத்துறையிலிருந்து மாசி, வைகாசி விழாக் காலங்களில் ஆளுடைய பிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் நடைபெறும் பூசை முதலியவற்றுக்காக வரியிலியாக நிலதானம் செய்தார். கோட்டூர்க் கோவிலில் விளக்கெரிக்கப் பணம் உதவி செய்தார். அநபாயன். இவன் சிறந்த சிவபக்தன் என்று கல்வெட்டுகளம், ஒட்டக்கூத்தர் இவன்மீது பாடிய உலாவும் உரைக்கின்றன. இவன் காலத்தில் சிதம்பரம் ஒப்புயர்வற்ற சிறப்பைப் பெற்றது. `இவன், புவன முழுதுடையாள் என்ற தன் அரசமாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப்பெருமானைப் பணிந்தான்; கோபுரங்கள், சிற்றம்பலம், பல பல மண்டபம், திருச்சுற்று மாளிகை, அம்மன் கோவில் இவற்றைப் பொன் மயமாக்கினான்; பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்; நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெரு வீதிகளும் நாணுமாறு சிறப்பித்தான்; மறையவர்க்குத் தானம் செய்தான்; பட்டம் பெற்றவுடன், சிறைப்பட்டிருந்த பகைமன்னரை விடுதலை செய்தான் என்று குலோத்துங்கள் உலா, இராஜராஜன் உலா, தக்கயைகப் பரணி என்பன எடுத்தியம்புகின்றன. இவன், தந்தையான விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்று அரைகுறையாக விடப்பட்ட தில்லைத் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்தான் என்னலாம். அமைதியான அரசியல். இவனது ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லை. சோழப் பெருநாட்டில் அமைதியே நிலவி இருந்தது. இவன் காலத்தில் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே பாண்டிய நாடுவரை பரவி இருந்தது. நாடு முழுவதும் அமைதியும் சமயத் திருப்பணிகளும் குடிகொண்டிருந்தன. கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையில் இருந்த அரண்மையிலும் அரசன் சென்று தங்குவது வழக்கம். தில்லையிலும் ஓர் அரண்மனை பொலிவுற்று விளங்கினது. குடும்பம். அரசனது கோப்பெருந்தேவி தியாகவல்லி என்ற புவனம் முழுதுடையாள்; மற்றொரு மனைவி கோவலூர் மலையமான் மரபினள். அவள் பெயர் முக்கோக்கிழாள் என்பது; மகன் இரண்டாம் இராஜராஜன். `அநபாயன் - சிறப்புப் பெயர். குலோத்துங்கன் பெற்றிருந்த பட்டப் பெயர்களுட் சிறந்தது, `அநபாயன் என்பதே ஆகும். இதனையே குலோத்துங்கன் உலாவும் கல்வெட்டுகளும் குறிக்கின்றன. சேக்கிழார் இஃதொன்றையே அவனைக் குறிக்கும் பத்து இடங்களிலும் வைத்துப் பாடியுள்ளார்; இப்பெயரையே இவன் காலத்திற் செய்யப்பட்ட தண்டியலங்கார உதாரணப் பாக்களிலும் காணலாம். இவனது அரசியல் செயலாளன் `அநபாய மூவேந்தவேளான் எனப்பட்டான். இவன் காலத்துச் சிற்றரசருள் ஒருவன் `அநபாய காடவராயன் எனப் பெயர் பெற்றான். இவன் காலத்தில் கோவில்கட்கு விடப்பட்ட நிலங்கள் `அநபாய நல்லூர், `அநபாய மங்கலம் எனப் பெயர் பெற்றன. இவை அனைத்தையும் நோக்க, இரண்டாம் குலோத்துங்கனுக்கு `அநபாயன் என்பதே சிறப்புப் பெயராக விளக்கமுற்றிருந்தது என்பது நன்கு புலனாகும். இவன் காலத்துச் சிற்றரசர். 1. பல்லவப் பேரரசர் மரபில் வந்தவர் சோழப் பேரரசில் உத்யோகதராக இருந்துவந்தனர். அவருள் மோகன் ஆட்கொல்லி என்பவன் குறிப்பிடத் தக்கவன். அவனுக்குக் `குலோத்துங்க சோழக் காடவராயன் என்ற பெயரும் உண்டு. அவன், தென் ஆர்க்காட ஜில்லாவில் திருமாணிக்குழி என்ற பாடல்பெற்ற தலத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான்; பின்னர்ப் படிப்படியாகப் பல உயர்ந்த பதவிகளை வகிக்கலானான். திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் போன்ற பெரிய கோவில்கட்கு அவன் செய்துள்ள அறங்கள் பலவாகும். சிறப்பாகத் திருவதிகைக் கோவிலுக்கு அவன் செய்த அறங்கள் மிகப் பலவாகும். 2. திருக்கோவலூர் உள்ளிட்ட மலைநாட்டை ஆண்ட மலையமான்கள் `சேதிராயர் என்ற பட்டத்துடன் சோழ ராட்சியில் குறுநில மன்னராக இருந்தனர். அவருள் சேக்கிழார் காலத்தவர் இருவராவர். அவர்- விக்கிரமசோழச் சேதிராயன், குலோத்துங்கசோழச் சேதிராயன் என்பவர் 3. கர்நூல், சித்தூர், நெல்லூர் முதலிய பகுதிகளை ஆண்ட தெலுங்கச் சோழர் (சோடர்), ரேநாண்டுச் சோழர் மரபினர் ஆவர். `இவர்கள் கரிகாலன் மரபினர் என்ற பட்டயங்கள் பகர்கின்றன. அவர்கள் திருக்காளத்திக் கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள் எண்ணிறந்தன. அவருள், சேக்கிழார் காலத்தில் குலோத்துங்க சோழ கொங்கன் என்பவன் சிற்றரசனாக இருந்தான். 4. கடப்பை ஜில்லாவில் பொத்தப்பி நாட்டை ஆண்டவரும் சோழ மரபினரே ஆவர். பொத்தப்பி நாடு கண்ணப்பர் பிறந்த நாடாகும். சேக்கிழார் காலத்தில் பொத்தப்பி நாட்டை யாண்ட சிற்றரசன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன். குறிப்பிடத்தக்க இச் சிற்றரசர்களைத் தவிர வேறு பலரும் சோழப் பெருநாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் உள்ளடக்கிய சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராகத்தான் சேக்கிழார் இருந்து வந்தார்.5 அநபாயன் காலத்துச் சைவத் திருப்பணிகள். இரண்டாம் குலோத்துங்கனது ஆட்சி கி.பி. 1133 முதல் 1150 வரை இருந்தது. இப் பதினேழு ஆண்டுகளில் எந்த ஆண்டில் சேக்கிழார் சோழ முதல் அமைச்சர் ஆனார்- எந்த ஆண்டில் பெரிய புராணம் பாடினார் என்பன துணிந்துரைக்கக் கூடவில்லை. அதனால், பெரிய புராணம் பாடப்பெற்ற பிறகுதான் பல கோவில்களும் அநபாயன் ஆட்சியில் சிறப்புப்பெற்றன என்று கூறுதற்கில்லை. அவனது குறுகிய ஆட்சியில் திருமழபாடி, திருஆமாத்தூர், திருமறைக்காடு, காஞ்சிபுரம், திருப்பழுவூர், திருநெல்வெண்ணெய், பெண்ணாகடம், சீகாழி, திருக்கோவலூர், திருமாணிக்குழி, திருவையாறு, திருவெற்றியூர், அச்சிறுபாக்கம், திருவைகாவூர், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், திருஓத்தூர், திருநாவலூர், திருப்புறம்பயம், திருவாரூர், திருவதிகை, திருவெண்ணெய் நல்லூர், திருப்புகலூர், திருவிடைமருதூர், திருவல்லம், திருஆவடுதுறை, திருமுதுகுன்றம் என்ற பாடல்பெற்ற கோவில்கள் சிறப்புற்றன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். திருவாரூர்க் கல்வெட்டுகள்.1. ``அநபாயன், தில்லைப் பொன்னம்பலத்துள் ஆடல் கொண்டுள்ள பெருமானது பாத செந்தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு போன்றவன். அவன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்பவர் திருமேனிகட்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான் என்று திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. இதனால் அவனது பக்திப் பெருமதிப்பும் தேவார ஆசிரியரிடம் அவன் வைத்திருந்த பெருமதிப்பும் நன்கு விளங்கலாம். 2. ``சுந்தரர் தாயாரான இசைஞானியார், திருவாரூர்-ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன்- சடையனார், இசைஞானியார், சுந்தரர் இவர்தம் திருவுருவச் சிலைகளைப் பூங்கோவிலில் எழுந்தருளச் செய்தான் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது. இங்ஙனம் பரம சிவபக்தனாக விளங்கியவன் அநபாய சோழன். அவன், வழிவழியாகவே சைவராக இருந்து வந்த சோழர் மரபில் பிறந்த வழுவிலா மன்னவன். அவனது நற்காலமோ- அன்றித் தமிழ்நாடு செய்த நற்றவமோ, அறியோம்; வழிவழிச் சைவராக வந்த சேக்கிழார் மரபில் வந்த பெரிய புராண ஆசிரியர், அநபாயனிடம் முதல் அமைச்சராக அமர்ந்தார். அரசனும் அமைச்சரும் பழுத்த சைவப் பெரு மக்களாக விளங்கியதால், சோழப் பெருநாடே சைவ சமயவுணர்ச்சியில் வீறு பெற்றிருந்தது என்னல் மிகையாகாது. சோழநாட்டுத் திருநாகேவரம். `சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது சோழநாட்டுத் திருநாகேவரம் என்ற கோவிற் பெருமானிடம் கரைகடந்த பக்தி கொண்டிருந்தார்; அத்தகைய கோவில் ஒன்றைத் தமது குன்றத்தூரில் எடுப்பித்தல் வேண்டும் என்று எண்ணங் கொண்டார்; அவ்வாறே புதிய கோவிலை எடுப்பித்தார்; அதற்குத் திருநாகேவரம் எனப் பெயரிட்டார் என்பது சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்று. சோழநாட்டுச் திருநாகேவரம் என்ற கோவிற் பெயர் அஃதுள்ள இடத்திற்கே பெயராகிவிட்டாற்போலவே, குன்றத்தூர்த் திருநாகேவரம் என்ற கோவிற் பெயரும் அஃதுள்ள இடத்தையே குறிக்கத் தொடங்கி இன்றளவும் வழக்காறு பெற்றுவிட்டது. சோழநாட்டுத் திருநாகேவரத்தில் சேக்கிழார், அவர் தாயார், தம்பி பாலறாவாயர் இவர்தம் உருவச்சிலைகள் இன்றளவும் இருந்துவருகின்றன. சேக்கிழார் குடும்பத்தினர் அக்கோவிற் பெருமானிடம் அன்பு செலுத்தின வராவர் என்பதற்கு அவ் வுருவச்சிலைகளே சான்றாகுமன்றோ? குன்றத்தூர்த் திருநாகேவரம். இது முன்னதைப் போலப் பெரிய அளவில் அமைந்ததில்லை; ஆயினும், அழகும் அமைதியும் கெழுமிய இடத்தில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்திய கோவில் என்பதைப் பல சான்றுகள் கொண்டு உணரலாம். வெளிச்சுற்றில் சேக்கிழாருக்குச் சிறிய கோவில் இருக்கின்றது. ஆண்டுதோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் சேக்கிழார் திருவிழாப் பத்து நாட்கள் சிறப்பாக நடை பெறுகின்றது. பத்தாம் நாள் சேக்கிழார் திருவுருவம் மிக்க சிறப்பாக அணி செய்யப்பட்டு ஊர்வலம் வருதல் காணத்தக்க ஒரு காட்சியாகும்., கல்வெட்டுகள். அக்கோவிற் கல்வெட்டுகள் 44 ஆகும்.4 அவை யாவும் இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத் துங்கன் என்ற திரிபுவன வீரதேவன் காலத்துக் கல்வெட்டுகளும், விஜயநகர ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுகளுமாக இருக்கின்றன. அக்கோவிலில் திருவுண்ணாழிகைச் சபையார் இருந்தனர்; கோவிற் பூசைகள் நாள்தோறும் குறைவின்றி நடந்து வந்தன. கோவிலை அடுத்த மடம் ஒன்று இருந்தது. அதனில் ஆலால சுந்தரர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், சித்திரமேழி ஈங்கை, உய்யவந்தாள் என்ற திருவுண்ணாழிகை நங்கை முதலிய தேவரடியார் பலர் இருந்தனர். கோவிலுக்குச் சேக்கிழார் மரபினரும் பிறரும் திருப்பணிகள் பல செய்துள்ளனர். பெரிய புராணத்திற்கு அடிப்படை. இங்ஙனம் சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சர் வேலை பார்த்துக்கொண்டே சிவபக்தியிற் சிறந்த செம்மலாய் விளங்கிவந்தார். அவர் முதல் அமைச்சராதலின், சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்ப்ப வேண்டிய கடமை உடையவர். சிறந்த புலவரும் சிவபக்தரும் அரசியல் அறிஞரும் ஆகிய அவர் தமது தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை மிக்க பயனுடையதாகச் செய்திருப்பார் அல்லரோ? அவர் காலத்தில் சைவ சமயம் நன்றாக வளர்ச்சியுற்ற இருந்தது. அது (1) சங்க காலத்தில் எப்படி இருந்தது, (2) நாயன்மார் காலமான பல்லவ மன்னர் காலத்தில் எவ்வாறு இருந்தது, (3) பிறகு சோழ வேந்தர் காலத்தில் எவ்விதம் வளர்ச்சியுற்றிருந்தது, - இவ்வளர்ச்சி அவர் பெரிய புராணம் பாட எந்த அளவு துணைபுரிந்தது என்னும் செய்திகளை இனி அடுத்துவரும் பகுதிகளிற் காண்போம். 3. சைவ சமய வரலாறு (சங்க காலம்) முன்னுரை. உலகச் சமயங்களுட் பழைமையானவை சில. அச் சிலவற்றுள் ஒன்று சைவ சமயம் என்பது சர். ஜான் மார்ஷல் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் கருத்து. ரிக்வேத காலத்துக்கும் முற்பட்டது சைவ சமயம் என்பத மொஹெஞ்சொ-தரோ, மெசொபொடேமியா, கிரீட், எகிப்து, மால்ட்டா முதலிய இடங்களிற் கிடைத்த சிவலிங்கங்களால் வெளியாகிறது என்பதும் அன்னோர் கருத்தாகும். இச் சைவ சமயம் வேதகாலத்தில் விளக்கமுற்றிருந்தது என்பது வேதங் களால் விளங்குகிறது. பின்னர் மஹாபாரதம்-இராமாயணம் போன்ற இதிகாச காலத்தில் மேலும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குரிய சான்றுகள் இதிகாசங்களிற் காணலாகும். இவ்வளர்ச்சி, படிப்படியாக முதிர்ந்தமைக்கு உரிய சான்றுகள் வடமொழிப் புராணங்களிற் புலனாகின்றன. அப் பண்டைக் காலத்திலேயே நம் நாட்டில் சிவ வணக்கத்துக்குரிய கோவில்கள் பல இருந்தன; தீர்த்தங்கள் இருந்தன; மக்கள் இவ்விரண்டிற்கும் யாத்திரை செய்தனர். சிவபிரான் ஏனைய தேவர்க்கும் மேலானவன் என்ற பொருளில் `மஹா தேவன் என்று வழிபடப்பட்டான். காசியிலிருந்து இராமேவரம் வரை கோவில்கள் இருந்தன. இஃது உண்மையாயின், இத் தமிழகத்திலும் இராமேவரம் உட்படச் சில கோவில்களேனும் அப் பண்டைக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவில், மதுரை-மீனாக்ஷியம்மன் கோவில் முதலியன எக்காலத்தில் உண்டாயின என்பது இன்று கூறக் கூடவில்லை. சங்க காலக் கோவில்கள். சங்கத்தின் இறுதிக்காலம் ஏறத்தாழக் கி.பி.400 என்னலாம். அதன் தொடக்கம் கூறக் கூடவில்லை. இச்சங்க காலத்து மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பர். அதனைக் கொண்டு, வீரர் வணக்கத்துக்கு உரிய கோவில்களும் முருகன்-திருமால்-துர்க்கை முதலிய தெய்வங்கட்குக் கோவில்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகிக்கலாம். புறநானூறு முதலிய தொகை நூல்களில் சிவபெருமான் - முருகன்- துர்க்கை- திருமால்- பலராமன் முதலிய கடவுளர் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்பட்டுள்ளனர். அதனால் அவர்கட்குக் கோயில் உண்மையை அறியலாம். ஆலமர் செல்வனான சிவபிரானுக்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேள் அளித்தனன் என்பதனால், கோவிலும் லிங்கமும் (சிவனைக் குறிக்கும் மூலதான அடையாளம்) இருந்தன என்பது தெளிவு அன்றோ? சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்தில் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார், இவர்க்குக் கோவில்கள் இருந்தன. சிவன்-முருகன்-திருமால்-பலராமன் இவர்கட்கும் கோவில்கள் இருந்தன என்பது ``பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும் வால்வளை மேனி வாலியோன் கோவிலும் நீலமேனி நெடியோன் கோவிலும்.... எனவரும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும். கோவில்கள். இக் கோவில்கள் சில இடங்களில் `மாளிகை எனவும் பெயர் பெறும். தெய்வக் கோவிலிலும் அரசன் கோவிலிலும் மண்டபங்கள் உண்டு. இவை யாவும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நேரறி கயிறிட்டுத் திகைளையும் அதிதிசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது, ``ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து -நெடுநல்வாடை என வரும் அடிகளாலும் ``அறக்களர் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம் -சிலப்பதிகாரம் என வரும் அடிகளாலும், ``பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம் என வரும் மணிமேகலை அடியாலும் நன்குணரலாம். கடைசியிற் கூறிய மண்டபம் பலநாட்டுக் கட்டடத் திறனாளருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து சமைத்த அற்புத மண்டபம் என்று மணிமேகலை குறிக்கின்றது. அவ்வற்புத மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன; அவற்றின் மேற் பொன்விதானங்கள் இருந்தன. தரை சாந்தினால் மெழுகப் பட்டு இருந்தது. இக்கோவில்கள் சுற்றுமதிலை உடையன, உயர்ந்த வாயில்களை உடையன, அவ் வாயில்கள்மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) இருந்தன, அவற்றில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பனவும் மணிமேகலை முதலிய நூல்களிலிருந்து தெளியலாம். இக்கோவில்கள் அனைத்தும் சுடுமண்ணால் (செங்கற் களால்) ஆகியவை. மேற்புறம் உலோகத் தகடுகளும் மரப் பலகையும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இவ்வாறே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. இக் கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களையுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதிரு,க்கச் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன. சிதம்பரம். சிதம்பரத்தின் பழைமை கூறுதற்கில்லை. பதஞ்சலி முனிவர் கூத்தப்பெருமான் நடனத்தைக் கண்டு களித்தார் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி காலம் கி.மு. 150 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர்பெற்ற சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பிரான் திருக் கோவில் ஏறத்தாழக் கி.மு. 2-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது விளங்கும். அது படிப்படியாகச் சிறப்பினைப்பெற்று அப்பர் காலத்தில் பெருஞ்சிறப்புற்று விளங்கியது. அவர் காலத்திலேயே சிற்றம்பலம் சிறந்திருந்தது. சிற்றம்பலம் என்ற துணையானே `பேரம்பலம் உண்மையும் பெறப்பட்டது. அப்பர் காலத்திலேயே `பொன்னம்பலம் பொலிவுற்றது என்பதற்கு அவர் பதிகமே சான்றாகும். அப்பர்க்கு முற்பட்ட `சிம்மவர்மன் என்ற பல்லவன், தன்னைப் பீடித்த உடல்நோயைப் போக்கிக் கொள்ளத் தில்லையை அடைந்தான்; வாவியில் மூழ்கினான்; பொன் நிறம் பெற்றான்; அதனால் ஹிரண்ய வர்மன் (பொன்னிறம் பெற்றவன்) எனப்பட்டான் என்று கோயில் புராணம் குறிக்கிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அறிஞர் கருதுகின்றனர். பாடல் பெற்ற கோவில்கள். ஏறத்தாழக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச்செங்கட் சோழன்1 என்ற பேரரசன் 70 சிவன் கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் அருளியுள்ளார். தமது காலத்திற் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பர் அருளிப்போந்தார். கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இடையில் சம்பந்தர் மட்டும் ஏறக்குறைய 220 கோவில்களைத் தரிசித்துப் பதிகம் பாடினார் எனின், அவற்றுள் ஒன்றேனும் அவர் காலத்தில் உண்டானது என்ற குறிப்புக் காணப்படவில்லை எனின், அப்பர்-சம்பந்தர் காலத்திற்கு முன்பே இத்தமிழகத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட சிவன் கோவில்கள் இருந்தமை உண்மை அல்லவா? அக் கோவில்களில் ஆடல்-பாடல், நாளும் பலமுறை வழிபாடு, மக்கள் தவறாது கோவில் வழிபாடு செய்தல் முதலியன சிறப்புற இருந்தன; அவை அப்பர்-சம்பந்தர் காலத்திற் புதியவையாக உண்டாகவில்லை என்பதை நோக்க, பல நூற்றாண்டுகளாகவே இக்கோவில்கள் தத்தம் இடம்-பொருள்கட்கு ஏற்ப ஏற்றமடைந்து விளங்கின என்பது தேற்றமன்றோ? கோவில் வகைகள். தமிழ்நாட்டுக் கோவில்கள் (1) பெருங் கோவில், (2) இளங் கோவில், (3) மணிக் கோவில், (4) கரக் கோவில், (5) தூங்கானை மாடம் (6) மாடக் கோவில் எனப் பலவகைப்படும். இவற்றுள் பெருங்கோவில் என்பது தில்லை, மதுரை, திருவாரூர் போன்ற சிறந்த இடங்களிற் கட்டப்பட்ட பெரிய கோபுரங்கொண்ட கோவில்கள் ஆகும். இளங்கோவில் என்பது பெரிய கோவிலைப் பழுதுபார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு நடைபெற்று வந்த சிறுகோவில் ஆகும். அது பெருங்கோவில் பிராகாரத்திற்கு உள்ளேயே இருக்கும். ஒரே ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தால், அளவு நோக்கி, ஒன்று பெருங்கோவில் என்றும் மற்றது இளங்கோவில் என்றும் கூறப்படலும் உண்டு. மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானை செல்லப்கூடாத திருமுன்பையும் உடையது. நன்னிலம், சாய்க்காடு முதலிய இடங்களில் உள்ள கோவில்கள் மாடக் கோவில்கள் ஆகும். மூலதானத்திற்கு மேலே உள்ள விமானம் (படுத்துத்) தூங்குகின்ற யானை வடிவில் அமையப்பெற்ற கோவில் தூங்கானை மாடம் எனப்பட்டது. பெண்ணாகடம், திருத்தணிகை முதலிய இடங்களில் இத்தகைய கோவில்களைக் காணலாம். திருவதிகைக் கோவில், திருக்கடம்பூர்க் கோவில் களின் உள்ளறைகள் தேர்போன்ற அமைப்புடையவை; உருளை களையும் குதிரைகளையும் கொண்டவை. இங்ஙனம் பலவாறு அமைந்த இக்கோவில்கள் இன்று-நேற்று உண்டானவை அல்ல. அவை அப்பர் காலத்திற்கும் முற்பட்டவை. பலவகை அடியார்கள். சிவ தலங்களில் பல வகை அடியார்கள் இருந்தனர். திருவாரூரில் விரிசடை அந்தணர், மாவிரதியர், காபாலிகர், பாசுபதர் முதலியோர் வாழ்ந்தனர் என்று அப்பர் கூறியுள்ளார். அவர்கள் திடீரென்று அப்பர் காலத்தில் கடவுளாற் படைக்கப்பட்டவர் அல்லர் அல்லவா? எனவே மேற் சொன்ன பலவகைச் சிவனடியார்கள் அப்பர்க்கு முன்னமே இந்நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்தனராதல் வேண்டும். என்று சைவம் உண்டாயிற்றோ, என்று சிவன் கோவில் உண்டானதோ - அன்று தொட்டே இந்நாட்டில் சிவனடியார்கள் இருந்து வந்தனர் என்பது அங்கைக் கனியாகும். முடிவுரை. இதுகாறும் கூறிவந்த செய்திகளால், சங்க காலத் தமிழகத்திலும் அப்பர்க்கு முற்பட்ட தமிழகத்திலும் பல சிவன் கோவில்கள் சீரிய நிலையில் இருந்தன; பல வகைச் சிவனடியார் இருந்தனர்; கோவில்களில் ஆடல்,,பாடல், விழா, வழிபாடு முதலியன சிறப்புற நடைபெற்றன; கோவில் கட்டும் கலையில் நம்மவர் பண்பட்டிருந்தனர்; சைவ சமயம் அரசராற் பேணி வளர்க்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை அறியலாம். 4. பல்லவர் காலச் சைவ சமயம் (கி.பி. 4001-900) பல்லவர் காலம். சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழக் கி.பி. 400 எனச் சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? அந்தக் காலமுதல் பல்லவப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலம் (ஏறத்தாழக் கி.பி. 900) வரை `பல்லவர் காலம் என்னலாம். இக்கால அரசியல் நிலை. இப்பல்லவரது பரந்துபட்ட காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி கி.பி. 400 முதல் 600; இரண்டாம் பகுதி 600 முதல் 900 வரை என்னலாம். முதற் பகுதியில் தமிழகம் களப்பிரர், பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டு அல்லற்பட்டது; காஞ்சி நகரம் பல்லவர் கைப்பட்டது; சோழ நாடும் பாண்டிய நாடும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. இந்நாடுகளை வென்ற முதற் களப்பிரன் அச்சுத விக்கந்தன் என்பவன். அவன் காலம் கி.பி. 450 என்று கூறப்படுகிறது.2 பாண்டியநாடு ஏறத்தாழக் கி.பி. 600-ல் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுபட்டுப் பாண்டியர் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆயின், சோழ நாடு களப்பிரர் கையிலிருந்து பல்லவர் கைக்கு மாறிவிட்டது. அஃது ஏறத்தாழக் கி.பி. 600 முதல் 900 வரை பல்லவர்வசமே இருந்தது. சோழர் கும்பகோணத்தை அடுத்த பழையாறை, திருவாரூர் முதலிய நகரங்களைத் தன்னகத்தே பெற்ற மிகச் சிறிய நிலப்பகுதியைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் வடக்கே பல்லவப் பேரரசுக்கும் தெற்கே பாண்டியப் பேரரசுக்கும் இடையில் இருந்து வாழவேண்டியவர் ஆயினர். ஆயினும், பல்லவர் தம் நாட்டைக் கவர்ந்தனர் ஆதலாலும் தமிழகத்துக்கே புதியவர் ஆதலாலும் சோழர், அவர்கள் வலியை ஒடுக்கப் பாண்டியருடன் உறவுகொண்டு வாழ்ந்து வந்தனர்; எனினும், பல்லவர் பகைமையை விரும்பாமல், அவர்கள் அரசியலில் உயர்ந்த அலுவலாளராகவும் இருந்து பணியாற்றிவந்தனர்; போர்க் காலங்களில் சமயத்துக்கு ஏற்றபடி ஒருகால் பல்லவருடனும் பிறிதொருகால் பாண்டியருடனும் சேர்ந்து போரிட்டனர். கி.பி. 600-க்கு முன்வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து ஆட்சி செய்யக்கூடவில்லை ஆயினும் கி.பி. 600 முதல் 900 வரை அவர்கள் பேரரசு தமிழகத்தில் வன்மையுற்று விளங்கியது; பல்லவர் அரசு தொடர்ச்சியாக இருந்துவந்தது. அங்ஙனமே கி.பி. 600 முதல் பாண்டிய அரசும் தொடர்பாக விளக்கமுற்றிருந்தது. நாயன்மார் காலம். சங்க (கி.பி. 400-க்கு முற்பட்ட) நூல்களில் நாயன்மார் ஒருவரேனும் குறிக்கப்பட்டிலர்; நாயன்மார் பெயர்களைக் குறிப்பிட்டுத் `தொகை பாடிய சுந்தரர் காலம் ஏறத்தாழக் கி.பி. 840-865 என்னலாம். அப்பர்-சம்பந்தர் காலம் ஏறத்தாழக் கி.பி. 580-661. இவ்விருவரும் தமக்கு முற்பட்டவராக நாயன்மார் பலரைத் தம் பதிகங்களிற் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவராற் குறிக்கப்படாமல் சுந்தரரால் மட்டும் அவரது திருமுறையில் சிறப்பாகக் குறிக்கப்பட்ட அடியார் பலர். எனவே, (1) அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்டவர் (கி.பி. 400-600), (2) அப்பர்-சம்பந்தர் காலத்தவர் (கி.பி. 600-661), (3) அப்பர்-சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட (கி.பி. 840-865) என நாயன்மார் நான்கு கால எல்லைக்கு உட்பட்டவர் ஆவர். எங்ஙனம் பார்ப்பினும், நாய;னமார் அறுபத்து மூவரும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் தோன்றிச் சைவத்தை வளர்த்து மறைந்த பெருமக்களே ஆவர் என்னலாம். அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட காலம் (கி.பி.400-600) அப்பர், சம்பந்தர் பாக்களைக் கொண்டு அவர்க்கு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் பதின்மர் ஆவர்; வரலாற்றுக் கண்கொண்டு முற்பட்டவராகக் கூறத்தக்கார் எழுவர் ஆவர். எனவே, இக்காலத்தில் 17 நாயன்மார் வாழ்ந்தனர் எனக் கூறலாம்; அவர் (1) கண்ணப்பர், (2) கணம்புல்லர், (3) அரிவாள் தாயர், (4) நமிநந்தி அடிகள், (5) தண்டியடிகள், (6) கொச்செங்கணான், (7) கூற்றுவ நாயனார், (8) புகழ்ச் சோழர், (9) எறிபத்தர், (10) புகழ்த்துணை நாயனார், (11) காரைக்கால் அம்மையார், (12) மூர்த்தி நாயனார், (13) ஐயகடிகள் காடவர்கோன், (14) சண்டேவரர், (15) திருமூலர், (16) சாக்கிய நாயனார், (17) அமர்நீதி நாயனார் என்பவராவர். இவருள், காரைக்கால் அம்மையாரும் காடவர்கோனும் பாடியுள்ள பாக்களை ஆராய்ந்தால், அக்காலத் தமிழகத்திற் பல ஊர்களில் சிவன் கோயில்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை-உறையூர், சேய்ஞலூர், கருவூர், காஞ்சி, தண்டலை, ஆப்பாடி, ஆலங்காடு, ஆவடு துறை, காளத்தி, ஆலவாய் (மதுரை), தில்லை, ஆரூர்,பழையாறை என்னும் ஊர்களில் உள்ளவை ஆகும். அவை அல்லாமல் கோச் செங்கட்சோழன் சாய்க்காடு, நன்னிலம் முதலிய எழுபது இடங்களில் புதியனவாக எடுப்பித்த கோவில் களும் குறிக்கத்தக்கவை. இவையாவும் கோச்செங்கணான் போன்ற பெரிய அரசர்களால் போற்றிப் பாராட்டப் பட்டமையின், சிறந்த நிலையில் இருந்தன என்னலாம். ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் பாடிய `க்ஷேத்திர வெண்பா என்பது அழிந்த நிலையில் கிடைத்துள்ளது. அதில் 23 சிவதலங்கள் குறிக்கப்பட்டுள. நூல் முழுவதும் கிடைத்திருக்குமாயின், மேலும் பல தலங்களில் பெயர்களை அறியக்கூடும். ஐயடிகள்3 சிவதல யாத்திரை செய்தவர்; சிவன் கோவில்கட்குப் பல திருப்பணிகள் செய்தவர். ஆதலால், அவர் காலத்தில் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டில்) சிவத்தலங்கள் சிறப்புற்ற இருந்தன என்பதை நன்கு அறியலாம். அப்பர் - சம்பந்தர் காலம் (கி.பி. 600-661) மஹேந்திர வர்மன். இவன் அப்பர் காலத்தவன்; சமண சமயத்திலிருந்து சைவராக மாறின அப்பரைச் சமண முனிவர் யோசனைப்படி நீற்றறையில் இட்டவன்; விடங்கலந்த உணவை உண்ணச் செய்தவன்; யானையைக் கொண்டு அப்பரைக் கொல்ல முயன்றவன்; இறுதியில் அவரைக் கல்லிற்கட்டிக் கடலிற் பாய்ச்சினவன்; இத்துன்பங்களிலிருந்து அப்பர் தப்பியதும் தானும் சமணப்பற்றை விட்டுச் சைவத்தைத் தழுவினவன். இவன் இங்ஙனம் சைவனாக மாறியவுடன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைவித்துச் சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்தான்; `வேற்றுத் துறையில் இருந்த எனது அறிவை நன்னிலைக்குத் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகெலாம் பரவட்டும் என்ற தன் கருத்தைக் கல்வெட்டுமூலம் வெளிப்படுத்தியுள்ளான். இவனுடைய விருதுப் பெயர்கள் பலவற்றுள் `குணபரன் என்பது ஒன்று. இவன் பாடலிபுரத்திலிருந்து சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக்கொண்டு `குணபர ஈவரம் என்ற சிவன் கோவிலைத் திருவதிகையிற் கட்டினான். இவன் சிவபெருமானுக்காகச் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் கோவில்களைக் குடைந்தமைந்தான்; காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவிலில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவனே தமிழகத்தில் முதன் முதல் கற்கோவில் கண்ட காவலன் ஆவன். இவன் காலத்தில் இருந்த தமிழகத்துக் கோவில்கள் அனைத்தும் செங்கல், மண், மரம், உலோகம், சுண்ணாம்பு முதலியன கொண்டு கட்டப்பட்டவை. அதனாற்றான் அப்பழங்காரத்துக் கோவில்கள் நாளடைவில் அழிந்துவிட்டன. மஹேந்திர வர்மன் இசையிலும் நடனத்திலும் நாடகத்திலும் சிறந்த புலவனாக இருந்தான். இவன் காலத்தில் தமிழ்நாட்டுச் சைவ சமயம் சிறந்த நிலையில் இருந்தது என்பது அப்பர், சம்பந்தர் பாடல்களாக அறியலாம். அப்பர்-சம்பந்தர் திருமுறைகள் அறிவிப்பன. மஹேந்திரவர்மன் காலத்தும் அவன் மகனான நரசிம்மவர்மன் காலத்தும் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் பாடிய திருமுறைகள் ஆராயத்தக்கன. அவற்றுள் அப்பர் பாடிய தலங்கள் 126; சம்பந்தர் பாடின ஏறத்தாழ 220; வைப்புத் தலங்கள் உட்படப் பாடல் பெற்ற தலங்கள் 300 என்னலாம். இக்கோவில்கள் எல்லாம் அழிந்து விடத்தக்க மண், மரம், செங்கல், உலோகம், சுண்ணாம்பு இவற்றால் கட்டப்பட்டவையே ஆகும். இவை இமயம் முதல் கன்னியாகுமரி முனைவரை பரந்திருந்திருந்தன. இக்கோவில்கள் பலவற்றில் இசை, நடனம் வளர்க்கப்பட்டன; பல கோவில்கள் பெரியன; கோபுரங் கொண்டன. பலவற்றில் விழாக்கள் சிறப்புற நடந்தன. பல தலங்களில் அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் வரலாறுகள் வழக்கில் இருந்தன. பல்லவ அரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்களும் பாடப்பெற்றன. அவை பல்லவன் ஈவரம், மஹேந்திரப் பள்ளி என்பன. பலவகையான சைவ அடியார்கள் தலங்கள்தோறும் இருந்தனர்; யாத்திரை செய்தனர். தில்லை, திருவாரூர், காளத்தி, ஆலவாய் முதலியன சிறந்த சிவதலங்களாக விளங்கின. பழைய நாயன்மார்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் உள்ள கோவில்களில் அவர்களுடைய நினைவுக்கு அறிகுறியாகக் கற்சிலைகள் எழுதப்பட்டிருந்தன போலும்! அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெற்று வந்திருக்கலாம். என்னை? அவ்வத்தலத்துப் பதிகத்தில் அப்பரும் சம்பந்தரும் அவ்வந் நாயன்மார் பக்தியைப் பாராட்டிப் பாடியிருத்தலால் என்ப. அப்பரது திருத்தொண்டின் உறைப்பால் பல்லவநாடு சைவ சமயத்திற்கு ஆட்பட்டாற்போலச் சம்பந்தர் திருத்தொண்டால் பாண்டியநாடு சமணத்திலிருந்து சைவசமயத்தை ஏற்றுக்கொண்டது. சம்பந்தர் பாண்டிய நாட்டில் இருந்த சமணமுனிவரை அனல்வாதம், புனல்வாதம் முதலியவற்றில் வென்றார்; பாண்டியனது வெப்பு நோயை அகற்றினார். சம்பந்தர்க்கு உதவியாகப் பாண்டியன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் அமைச்சராகிய குலச்சிறை நாயனாரும் இருந்து தொண்டு செய்தனர். சமணனாக இருந்த பாண்டியன் நெடுமாறன் சைவன் ஆனான்; சம்பந்தருடன் பாண்டி நாட்டுச் சிவதல யாத்திரை செய்தான்; சமணரது ஆதிக்கத்தைத் தன் நாட்டிலிருந்து ஒழித்தான். சம்பந்தரது இச்செயற்கரிய திருத்தொண்டால் பாண்டி நாட்டுச் சிவதலங்கள் சிறப்புற்றன; மக்கள் பழையபடி சைவத்தைத் தழுவி வளர்க்கலாயினர். அப்பர், சம்பந்தர் பாடிய பதிகங்கள் அவ்வத்தலத்து அடியாரால் எழுதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டிருக்கலாம். அவை அவ்வக் கோவில்களிலும் ஓதப்பெற்றனவாகலாம். அப்பர், சம்பந்தருடன் தலயாத்திரை சென்ற அடியார்கள், தவந்தோறும் அவர்கள் பாடிய பதிகங்களை எழுதிவந்தனர் என்னலாம். அப்பர், சம்பந்தருடன் அடியார் பலர் கூடித் தலயாத்திரை செய்து நாடெங்கும் பக்தியைப் பரப்பி வந்தனர். பல்லவர் ஆட்சியில் கோவில்கள் சிறப்புற்று விளங்கினமையின், அப்பர்க்கும் சம்பந்தர்க்கும் கோவில்களில் வரவேற்பும் பிற சிறப்புகளும் நடைபெற்றன. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் சமய போதனை, அடியார்க்கு உணவு வசதி, தங்கல் வசதி முதலியன சிறப்பாக அளிக்கப்பட்டன. கோவில்களை அடுத்து மடங்கள் இருத்தல், சமணப் பள்ளிகளை அடுத்துப் `பாழிகள் இருந்தமை போலாகும். நாயன்மார் ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தல், உணவுச்சாலை முதலியன வைத்துப் பொது மக்கட்குத் தொண்டு செய்து அவர்களைச் சைவத்தில் பற்றுள்ளம் கொள்ளச் செய்தனர். அக்காலச் சைவ அடியார்களுக்குள் மேல் வகுப்பு- கீழ் வகுப்பு, முதலாளி - தொழிலாளி, அரசன்- ஆண்டி, கற்றவன் - கல்லாதவன் என்ற வேறுபாடுகள் காட்டப்பட்டில; பக்தி ஒன்றையே சமய அடிப்படையாகக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட உள்ளத்தவராய்ச் சைவப் பயிர் தழைக்க உழைத்தனர். இளஞ் சிறுவராகிய சம்பந்தர் என்ற மறையவர், முதுமையும் பக்தியின் மேன்மையும் கொண்ட வேளாளராகிய திருநாவுக்கரசரை, `அப்பரே! (தந்தையே) என அழைத்தமையும், அப்பூதி அடிகள் என்ற மறையவர் திருநாவுக்கரசரைப் பணிந்து பாதபூசை செய்து உடனிருந்து உண்டமையும், திருநீலநக்கர் என்ற மறையவர் தமது இல்லத்தில் வேள்விக் குழியண்டைப் பாணர் வகுப்பினரான திருநீலகண்டரையும் அவர் மனைவியாரையும் தங்கியிருக்க விட்டமையும் மேற்கூறியதற்குக் த்க்க சான்றுகள் ஆகும். இங்ஙனம் அப்பர்-சம்பந்தர் காலத்தில் பல்லவ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் சைவ சமயம் வளர்க்கப் பட்டதற்கு அடியார்களின் ஒத்த கருத்தும் அரசர் காட்டிய ஆதரவுமே சிறப்புடைக் காரணங்கள் ஆகும். இக்கால நாயன்மார். (1) திருநாவுக்கரசர், (2) திருஞான சம்பந்தர், (3) சிறுத்தொண்டர், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர்,(5) முருக நாயனார், (6) குங்கிலியக்கலயர், (7) நீலகக்கர், (8) நெடுமாறர், (9) மங்கையர்க்கரசியர், (10) குலச்சிறையார், (11) அப்பூதி அடிகள் என்ற பதினொருவரும் இக்காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர். அப்பர்-சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலம் (கி.பி. 661-840) பரமேவர வர்மன் (கி.பி. 670-685). இக்காலப் பல்லவ அரசருள் முதல்வன் பரமேவர வர்மன். இவன் சிறந்த சிவபக்தன். உருத்திராக்கம் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப்பட்ட முடியை அணிந்த பெரும் பக்தன். கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கற்கோவில் கட்டிய முதற் பல்லவன் அவன். இவன் இங்ஙனம் சிவன் கோவில் ஒன்றைக் கூரத்திற் கட்டிப் பட்டயம் விடுத்தவன்; மஹாபலிபுரத்து ஒற்றைக் கல் கோவில்களில் உள்ள மேல் அடுக்கு இவன் காலத்திற் குடையப்பட்டது. இவன் சிறந்த வடமொழிப் புலவன். இராஜ சிம்மன் (கி.பி.685-720). இவன் பரமேவரன் மகன் ; தந்தையைவிடச் சிறந்த சிவபக்தன்; உலகப் புகழ்பெற்ற காஞ்சி-கயிலாசநாதர் கோவிலைக் கட்டிப் புகழ்பெற்றவன்; திருநின்றவூரில் மனக்கோவில் கட்டிய பூசலார் காலத்தவன். `சிவ சூடாமணி, சங்கரபக்தன், ரிஷபலாஞ்சனன், என்ற தொடர்களால் இவனது சைவப்பற்றை விளக்கமாக அறியலாம். இவன் `ஆகமப் பிரியன் என்று கல்வெட்டுகளிற் கூறப்படலால், சைவ ஆகமங்களில் பற்றுடையவன் என்பது அறியப்படும். இப்பல்லவ வேந்தன் சிறந்த இசைப்புலவன்; இசைக் கருவிகளை மீட்டுவதில் இணையற்றவன்; நடனக்கலையில் சீரிய புலமை உடையவன்; இக்கலியுகத்தில் வான் ஒலி (அசரீரி) கேட்டவன். இவன் காஞ்சியில் ஐராவதேசர் கோவில், மதங்கீசர் கோவில், கயிலாசநாதர் கோவில் என்பனவும், மஹாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாகவுள்ள கோவில் பன்மலைக் கோவில் என்பவற்றையும் கட்டியவன் இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிலில் இவன் காலத்துச் சிறந்த நடன வகைகள் சிற்பவடிவிற் காட்டப்பட்டுள்ளன; தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன. சிவபெருமானுடைய திருக்கூத்தின் சிறப்பைத் திருநாவுக்கரசர் தேவாரத்திற் படித்து இன்புறாம்; ஆனால், அவ்விவரங்களைக் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களில் கண்களாரக் கண்டு களிக்கலாம். பல்லவ மல்லன் (கி.பி. 725-790). இவன் சிறந்ம வைணவன்; திருமங்கை ஆழ்வார் காலத்தவன். இவன் வைணவன் ஆயினும், இவன் காலத்திற் சிவன் கோவில்கள் சிறப்புற்று விளங்கின. காஞ்சியில் உள்ள முத்தீசர் கோவில் திருக்குறிப்புத் தொண்டர் பூசித்ததாகும். அஃது இவன் காலத்தில் `தர்ம மஹா தேவீவரம் என்ற பெயருடன் விளங்கியது. அதனில் 44 தேவரடியார் இருந்து இசை, நடனக் கலைகளை வளர்த்தனர். சிற்றரசர் பலரும் குடிமக்கள் பலரும் நாடெங்கும் இருந்து கோவில்கட்குப் பல தானங்கள் செய்துள்ளனர். இப்பல்லவ வேந்தன் வேதங்களில் வல்லவ மறையவர்க்குப் பிரமதேயமாகப் பல ஊர்களை விட்டவன். சுருங்கக்கூறின், இவன் காலத்தில் சைவமும் வைணவமும் ஒருங்கே வளர்க்கப்பட்டன என்னல் தவறாகாது. தந்திவர்மன் (790-840) இவன் பல்லவ மல்லன் மகன்; பரம பாகதவன்; எனினும், இவன் காலத்தில் சிவன் கோவிற் பணிகள் நடந்தவண்ணம் இருந்தன. இவன் காலத்துப் பணிகளுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கது கச்சித் திருமேற்றளிக் கோவிலுக்கும் அதனைச் சார்ந்த மடத்திற்கும் முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்ததாகும். இதனால், தமிழ் நாட்டில் தேவார காலத்திற்றானே கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன என்பது உண்மையாதல் காணலாம். ï¡fhy eha‹kh®., அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் 17 பேர்; அப்பர்-சம்பந்தர் காலத்தவர் 11 பேர்; சுந்தரர் காலத்தவன் 13 பேர். எனவே, அப்பர்-சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் 22 பேர் ஆவர். அவராவார்- (1) பூசலார் நாயனார், (2) காரி நாயனார், (3) அதிபத்த நாயனார், (4) கலிக்கம்ப நாயனார், (5) கலிய நாயனர், (6) சத்தி நாயனார், (7) வாயிலார் நாயனார், (8) முனையடுவார் நாயனர், (9) இடங்கழி நாயனார், (10) இயற்பகை நாயனார், (11) நேச நாயனார், (12) இளையான்குடி மாற நாயனார், (13) மெய்ப் பொருள் நாயனார், (14) திருநாளைப்போவார் நாயனார், (15) ஏனாதிநாத நாயனார், (16) ஆனாய நாயனார், (17) உருத்திரபசுபதி நாயனார், (18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார், (19) மூர்க்க நாயனார், (20) சிறப்புலி நாயனார், (21) கணநாத நாயனார், (22) திருநீலகண்ட நாயனார் என்பவர். சுந்தரர் காலம் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.840-865). இவன், ``கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்4 என்று சுந்தரரல் ஏத்தெடுக்கப்பெற்ற பெருமையுடைய சிவபக்தன் என்று அறிஞர் கருதுகின்றனர்.4 இவன், `சிவனை முழுதும் மறவாத சிந்தையன். இவன் திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர், திருநெய்த்தானம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் திருத்தொண்டு செய்தவன். இவன் விருதுப் பெயர்களுட் `குமார மார்த்தாண்டன் என்பது ஒன்று. இவன், அப்பெயரால் விளக்கொன்று செய்து திருவிடை மருதூர்க் கோவிலுக்கு அளித்தான். இவன் காலத்தில், திரு ஆதிரைநாள் பட இடங்களிற் கொண்டாடப்பட்து. இவன் மனைவியன மாறன் பாவையார் என்பவள் சிறந்த சிவபக்தி உடையவன். அவள் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவன். இப்பல்லவ வேந்தன் காலத்துக் கல்வெட்டில்தான் திருக்கோவில்களில் திருப்பதிகம் ஓதப்பெற்ற செய்தி அறியக் கிடக்கிறது. சுந்தரர் இவனிடத்திற் கரைகடந்த அன்பு கொண்டவர் என்பதற்கு, இவனை ஒரு நாயனராகக் கொண்டு மேற்காட்டிய அடிகளிற் பாராட்டினமையே சிறந்த சான்றாகும். சுந்தரர் தேவாரம். சுந்தரர் திருப்பதிகங்களால் அறியத் தக்க செய்திகள்:- 1. பாடல்பெற்ற பல கோவில்களில் இசை வளர்க்கப் பட்டது. 2. பலகோவில்களில் நடனக்கலை கவனிக்கப்பட்டது; 3. கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன; 4. சைவ சமய நூல்கள் பல இருந்தன; வேறு பல கலைகளைப்பற்றிய நூல்களும் இருந்தன; 5. கோவில்களில் பண்டாரம் (பொக்கிஷ சாலை) இருந்தது. 6. பல தலங்களில் சுந்தரர் தமக்கு முற்பட்ட நாயன்மார்களைப் பாடியுள்ளனர். அதனால் அவ்வத்தலத்துக் கோவிலில் அவ்வந் நாயன்மார் உருவச் சிலைகள் இருந்திருத்தல் கூடியதே; 7. கோவில்களில் பாடியும் ஆடியும் பக்திசெலுத்திய அடியார் பலர் தலந்தோறும் இருந்தனர். இக்கால நாயன்மார். (1) சுந்தரர், (2) சடையனார், (3) இசைஞானியார், (4) நரசிங்க முனையரையர், (5) ஏயர்கோன் கலிக்காம நாயனார், (6) மானக்கஞ்சாறர், (7) பெருமிழலைக் குறும்பர், (8) கோட்புலி நாயனார், (9) கழற்சிங்கர், (10) செருத்துணை நாயனார், (11) சேரமான் பெருமாள், (12) விறல்மிண்டர், (13) சோமாசி மாற நாயனார் என்போர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர். திருமுறை ஓதுதல். சுந்தரர் காலத்திலேயே வட ஆர்க்காடு ஜில்லாவைச் சேர்ந்த திருவல்லம் சிவன் கோவிலில் திருப்பதிகம் ஓதப்பட்டது என்பது கல்வெட்டால் தெரிகிறது. சுந்தரர் காரத்தவரான மானக்கஞ்சாற நாயனார் திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) சிவன் கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தார் என்று அக்கோவில் கல்வெட்டுக் கூறுகிறது. திருமுறைகள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதற்கு முன்பே எறும்பியூர், பழவூர், ஆவடுதுறை, தவத்துறை (லால்குடி) முதலிய இடத்துக் கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது. இவற்றை நோக்க, நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்திலேயே பல கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன என்பதை எளிதில் உணரலாம். நாயன்மார் உருவச்சிலைகள். அப்பர்-சம்பந்தர் காலத்திலேயே, அவர்க்கு முற்பட்ட நாயன்மார் உருவச் சிலைகள் அவர்கள் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் எடுப்பித்துப் பூசை முதலியன வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்று முன் சொல்லப்பட்டதன்றோ? அதனை உறுதிப் படுத்துவன போலச் சுந்தரர் அக்கால வழக்கப்படி அப்பெயர் கள் இடப்பட்டனவா என்பது திட்டமாகத் தெரியவில்லை. பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் நிரம்பக் கிடைக்கவில்லை: கிடைத்துள்ளவை மிகச் சிலவே. அவற்றிற் காணப்படும் சில பெயர்கள் நாயன்மார் பெயர்களுடன் ஓரளவு ஒப்புமை உடையனவாகக் காண்கின்றன. அவற்றைக் காலமுறைப்படி கீழே காண்ப:- மக்கள் பெயர் நாயன்மார் பெயர் 1. மானி இது மங்கையர்ககரசியியாரது இயற்பெயர். 2. தண்டி தண்டியடிகள். 3. கலிப்பகை திலகவதியார் கணவன் பெயர். 4. புகழ்த்துணை புகழ்ந்துணை நாயனார். விசையரசன் 5. நம்பி நம்பி ஆரூரர், 6. கம்பன் கலிக் கம்ப(ன்) நாயனார். 7. கலிமூர்க்க கலிக் கம்ப நாயனார் .மூர்க்f இளவரையன் நாயனார். 8. சடையன் பள்ளி சடையனார் (சுந்தரர் தந்தையர்). 9. சிறு நங்கை, நங்கை பரவையார். பெருநங்கை, வெண்காட்டு நங்கை (சிறுத் போற்றிநங்கை தொண்டர் மனைவி). 10. பூதி கண்டன் அப்பூதி அடிகள். 11. நந்தி நிறைமதி நமி நந்தி அடிகள். 12. பாதிரிகிழார் சிங்கன் கழற்சிங்கன். 13. குறும்ப கோளரி பரசமய கோளரி (சம்பந்தர் பெயர்) 14. கஞ்சாறன் அமர் நீதி மானக் கஞ்சாற நாயனார்; அமர்நீதி நாயனார். 15. சத்திப் பல்லவன் சத்தி நாயனார். முடிவுரை. இதுகாறும் கூறிந் போந்த விவரங்களால் பல்லவர் காலத்தில்- 1. பாடல்பெற்ற கோவில்கள் படிப்படியாக வளர்ச்சி யடைந்து வந்தன 2. கோவில்களை அடுத்துப் பல பதிகளில் மடங்கள் தோன்றிச் சமயக் கல்வியைப் புகட்டிவந்தன; 3. கோவில்களில் திருப்பதிகங்கள் ஓரளவு ஓதப்பெற்று வந்தன; 4. நாயன்மார் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் அவர்தம் உருவச்சிலை எழுந்தருளப் பெற்று வழிபாடு நடைபெற்று வந்தது; ஆரூர்க் கோவில் போன்ற பெரிய கோவில்களில் நாயன்மார் பலருடைய உருவச்சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன. 5. பல கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன. 6. நாயன்மார் பெயர்கள் பல்லவர் கால மக்கள் கொண்டிருந்த பெயர்களோடு ஏறத்தாழ ஒன்றுபட்டனவே யாகும். நாயன்மார்க்குக் காலத்தாற் பிற்பட்ட மக்கள், அப்பெரு மக்கள் பெயர்களைத் தாங்கி இருந்தமைக்கு அந்நாயன்மாரிடம் அவர்கள் கொண்டிருந்த சைவப்பற்றே சிறந்த காரணம் என்னலாம். இங்ஙனம் நாயன்மார் காலத்தில் வளர்ந்துவந்த சைவ சமயம், பல்லவர்க்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் (சேக்கிழார் காலம் வரை) எங்ஙனம் தளர்ச்சியடைந்தது, நாயன்மார் வரலாறுகள்-வழிபாட்டுமுறைகள்-விழாக்கள் முதலியன எங்ஙனம் பலர் அறியச் சிறப்புப் பெற்றன- இவை அனைத்தும் எங்ஙனம் பெரியபுராணம் பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன என்பதை அடுத்த பகுதியிற் காண்போம். 5. சோழர் காலத்துச் சைவ சமய நிலை (கி.பி. 900-1133) முன்னுரை. பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தின ஆதித்தசோழன் காலம் முதல் சேக்கிழார் காலத்து அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம் வரை - சைவ சமய நிலையை ஆராய்வதே இப்பகுதியின் நோக்கம். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகள், அவர்கள் பாடிய திருப்பதிகங்கள் முதலியன நன்றாகப் பரவி வளர்ந்த காலம் இச்சோழர் காலமே ஆகும். பல்லவ அரசருள் சைவர் பலர்; வைணவர் பலர்; பௌத்தர் சிலர்; சமணர் மிகச் சிலர். பாண்டிய மன்னருட் சைர் பலர்; வைணவர் சிலர்; சமணர் மிகச் சிலர்; ஆயின், சோழர் அனைவரும் சைவரே. `மத மாற்றம் என்பது சோழ வரலாற்றிற் காண்டல் அரிது. பல்லவர்கக்கு அடங்கிய சிற்றரசராக இருந்தபொழுதும் சோழர் தம்மால் இயன்ற சிவத்தொண்டைச் செய்து தாம் வந்தனர். அவர்கள் பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தின வுடன், நாடெங்கும் சைவ சமய வளர்ச்சிக்கு முழுக் கவனத்துடன் பாடுபட்டனர். அவர்கள் காலத்தில் உண்டான புதிய கோவில் கள் பல; பாடல்பெற்ற பழைய கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன; கோவில்கட்கு ஏராளமாக நிவந்தங்கள் விடப்பட்டன; விழாக்கள் சிறப்புற நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய கற்றளிகள். சோழப் பேரரசை உண்டாக்கின ஆதித்த சோழன், முதற் பராந்தகன் முதலிய சோழ வேந்தர் தத்தம் பெயக்ளைக் கெண்ட புதிய கற்கோவில்களைக் கட்டின; பழைய கோவில்களைப் புதுக்கினர். இராஜராஜ சோழன் பல ஆண்டுகள் உழைத்து எடுத்த தஞ்சைப் பெரிய கோவிலை அறியாதா உளரோ? அவன் அக்கோவிலுக்கு விடுத்த மானியம் அளவிடற்கரியது; தமிழ்நாடு முழுவதிலும் இருந்த கோவில்களிலிருந்து ஆடல் பாடல் வல்ல மகளிர் நானூற்றுவரைத் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்த்தினான்; ஒவ்வொரு மகளுக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் மானியமாக விட்டான்; 48 பேரை அமர்த்தித் திருப்பதிகம் ஓதச் செய்தான். இங்ஙனம் சோழர் கோநகரான தஞ்சாபுரியில் இராஜராஜன் எடுப்பித்த பெரிய கோவில் நடுநாயகமாக விளக்கமுற்று இருந்தது. இவ்வரசன் இலங்கை, பழையாறை, திருவலஞ்சுழி முதலிய இடங்களில் புதிய கோவில்களைக் கட்டினான். இவன் மனைவியரும் மக்களும் தமக்கையும் நாடெங்கும் செய்துள்ள சிவப் பணிகள் மிகப் பல ஆகும். இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை உண்டாக்கினான்; அதில் கங்கைகொண்ட சோழிவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் வியக்கத்தகும் வேலைப்பாடு கொண்ட மிகப் பெரிய கோவில். இராஜேந்திரன் மகனான இராஜாதிராஜன் பல கோவில்களைக் கட்டினான். முதல் குலோத்துங்க சோழன் வேம்பற்றூர், கோட்டாறு, சூரியனார் கோவில் முதலிய இடங்களிற் கோவில்களை எடுப்பித்தான். இவன் மகனான விக்கிரம சோழன் திருமங்கலம், குற்றாலம் உத்தமசோழபுரம் முதலிய பதிகளிற் சிவன் கோவில்களை எடுப்பித்தான். சோழ மன்னரைப் பின்பற்றி அவர் தம் பேரரசில் இருந்த சிற்றரசரும் பிரபுக்களும் எடுப்பித்த புதிய கோவில்கள் பலவாகும். இவை அல்லாமல், பாடல் பெறாதனவும் சோழர் காலத்தில் புதியனவாகக் கட்டப் பெறாதனவுமாக இருந்து, சோழர் ஆட்சியில் புதுப்பிக்கப்பெற்ற கோவில்கள் பலவாகும். பாடல் பெற்ற கோவில்கள். பாடல் பெற்ற கோவில்கள் பல, முழுவதும் கற்கட்டடங்களாக மாற்றப்பட்டன; வேறு சில கோவில்களில் விமானம் மட்டும் கற்கட்டடமாக மாற்றப் பட்டது; சிலவற்றில் கோபுரம், திருச்சுற்று (பிரகாரம்) என்பவை புதுப்பிக்கப்பட்டன. இராஜராஜன் பாட்டியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணி ஆவர். அவரது பொருள் உதவியால் திருத்துருத்தி (தஞ்சை ஜில்லா-குற்றாலம்), திருக்கோடிகா, திருவாரூர்-அரநெறி, திருவக்கரை, திருமுதுகுன்றம் முதலிய கோவில்கள் கற்றளிகள் ஆயின. திருவையாறு திருவெண்காடு முதலிய முப்பதுக்கு மேற்பட்ட தலங்களில் உள்ள கோவில்கள் பொன்தானம், நிலதானம், பொன், வெற்றிப் பாத்திரங்கள் முதலியவற்றைப் பெற்றனவாகும். பாடல் பெற்ற கோவில்கள் பலவற்றில் சித்திரை, வைகாசி, ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்பது பல கோவில் கல்வெட்டுகளாற் புலனாகிறது. இவ்விழாக்கள் புதியனவாகச் சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்டவை என்பது அக் கல்வெட்டுகளிற் காணப்படாமையால், இவை அனைத்தும் நீண்ட காலமாகவே வழக்கில் இருந்தவை என்று கொள்ளத் தடை இல்லை. மடங்கள். சோழர் காலத்திற் புதிய மடங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன. ஆயின், சோழர் கல்வெட்டுகளிற் `புதியன என்று கூறப்படாமல் சிறந்த நிலையில் இருந்த பழைய மடங்களும் பலவாகும். அவற்றுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை இவையாகும்:- (1) திருப்புகலூர் - நம்பி திருமுருகன் திருமடம், (2) திரு ஆவடுதுறை - திருவீதி மடம், திருநீலவிடங்கன் மடம் முதலியன; (3) திருக்கழுக்குன்றம் - நமிநந்தி அடிகள் மடம், (4) திருவதிகை - வாகீசன் மடம், திருநாவுக்கரசன் திருமடம்; (5) திருமுதுகுன்றத்து மடம், (6) திருமங்கலம் - பரஞ்சோதி மடம், (7) திருமணஞ்சேரி - பரசமய கோளரி மடம், (8) திருவையாற்று மடம். இம்மடங்கள் பலவற்றில் சிவயோகியர், மாவிரதியர், மாஹேவரர், அடியார், வேதியர், ஆண்டார் முதலியவரை உண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை, பல கலைகளில் வல்ல சமயத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. இம்மடங்கள் தலையாத்திரை செய்யும் அடியவர் தங்கும் இடங்களாகவும், உள்ளதை இறைவன்பால் நிறுத்தி வீடுபேற்றை விரும்பும் முனிவர் தங்கும் அமைதி நிலவிய இடங்களாகவும், மக்கட்குச் சமயக் கல்வி புகட்டும் சமயப் பள்ளிகளாகவும் இருந்து சைவ சமயத் தொண்டாற்றி வந்தன. இவை கோவில்களை அடுத்து இத்தகைய நற்பணிகளில் ஈடுபட்டு இருந்தமையால் சைவ சமயப்பிரசாரம், சமண-பௌத்த சமயப் பிரசாரத்தை விஞ்சி விட்டது; சைவ சமயம் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பலவகை அடியார்கள். 1. மடங்களில் உணவு கொண்ட அடியவருட் சிவயோகியர் ஒரு சாரார். அவர்கள் சிவபெருமானைச் சிந்தித்தபடியே இருப்பவர்; இறக்குந் தறுவாயில் உடம்பு முழுவதும் நீற்றைப்பூசிச் சிவமந்திரங்களைச் சொல்லிக்கொண்டே தங்கள் மார்பில் உள்ள லிங்கத்தைப் பூசிப்பவர். இவர்களை உண்பித்த கோவில்கள் பலவாகும். 2. காலாமுகச் சைவருள் கடுமையான நோன்பினர் `மாவிரதியர் எனப்பட்டனர். இவர்கள் மண்டை ஓட்டில் உண்பவர்; பிணச் சாம்பலை உடலில் பூசிக் கொள்பவர்; அப்பிணச் சாம்பலை உண்பர்; தண்டு ஏந்தி இருப்பர்; மதுப்பாத்திரம் கையில் வைத்திருப்பர்; அம்மதுவில் கடவுள் இருப்பதாக எண்ணி வழிபடுவர்; நரபலி இடுவர். இம்மாவிரதியர் ஆட்சியில் சில கோவில்களும் மடங்களும் இருந்தன. 3. மாஹேவரர் லிங்கதாரணம் உடையவர்; சிறந்த பக்திமான்கள்; ஒழுக்கம் உடையவர்; துறவிகள். பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் இருந்தன. 4. அடியார் என்பவர் சிவனுக்குத் தொண்டு பூண்ட பக்திமான்கள். 5. வேதியர் என்பவர் வேதங்களில் வல்ல பிராமணர். 6. ஆண்டார் என்பவர் திருமுறை ஓதுபவர்; திருநந்தவனம் அமைப்பவர்; மலர் பறிப்பவர்; அடியார்க்கு அடியவர்; கோவிலிலும் திருவீதியிலும் பணி செய்பவர்; மடங்களில் குற்றமற்ற முறையில் வாழ்பவர். இவர்கள் அனைவரையும் உண்பித்த மடங்களும் திருக்கோவில்களும் பலவாகும். நாயன்மார் உருவச்சிலைகள். நாயன்மார் உருவச் சிலைகளைக் கோவில்களில் வைத்து வழிபடல் அப்பர், சம்பந்தர்க்கு முன்பிருந்தே வந்த வழக்கமாதல் வேண்டும் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இவ்வாறு கோவில்களில் நாயன்மார் உருவச்சிலைகளை எடுப்பித்தல் சோழர் காலத்தில் மிகுதிப்பட்டது. 1. திருவதிகைக் கோவிலில் திருநாவுக்கரசர்க்குத் தனிக் கோவில் ஒன்று `வாகீவரம் என்ற பெயருடன் இருந்தது. 2. குஹுர்க் கோவிலில் சுந்தரர்க்குக் கோவில் இருந்தது; அங்குச் சித்திரைத் திருவிழா நடந்தது. 3. செங்காட்டங் குடியில் சிறுத்தொண்ட நம்பி விழா நடைபெற்றது. 4. தந்தைப் பெரிய கோவிலில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் ஏற்பட்டது; பூசை சிறப்பாக நடைபெற்றது. 5. சண்டீசர் சிவலிங்க பூசை செய்தல் - அவர் தந்தையின் கால் வெட்டுண்டு கீழே விழுதல்- அம்மையப்பர் தோன்றிச் சண்டீசர்க்குச் `சண்டீசப் பதம் தருதல் - இவற்றை விளக்கம் செப்பு உருவச் சிலைகள் தஞ்சைப் பெரிய கோவிலில் எடுப்பிக்கப் பெற்றன. 6. அதே கோவிலில் சுந்தரர், நங்கை பரவையார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுப்பிக்கப் பெற்றன; அவற்றுக்குப் பல ஆடை அணிகள் வழங்கப் பெற்றன. 7. 1`தத்தா! நமரே காண் என்ற மிலாடுடையார் படிமம் ஒன்று அதே கோவிலில் எழுந்தருளப் பெற்றது. 8. அப்பெரிய கோவிலில் பைரவர், சிறுத் தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, சீராள தேவருடைய செப்பு உருவச் சிலைகள் எடுக்கப் பெற்றன; பல ஆடை அணிகள் வழங்கப் பட்டன. 9. திருமழபாடிக் கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகள் வைத்துப் பூசிக்கப் பெற்றன. 10. திருவொற்றியூர்க் கோவிலில் 63 நாயன்மார் உருவச்சிலைகள் எழுந்தருளப் பெற்றன; நாள்தோறும் பூசை செய்வதற்காக 75 கலம் நெல் தரப்பட்டது. 11. திருவாரூர்ப் பூங்கோவிலில் ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் இவர்தம் உருவச்சிலைகள் இருந்தன. அவற்றின் பூசைக்காகச் சிற்றூர் ஒன்று தானமாக விடப்பட்டது. 12. திருவாமூர்க் கோவிலில் அப்பர் உருவச் சிலையும் சீகாழிக் கோவிலில் சம்பந்தர் உருவச்சிலையும் வைத்தும் பூசிக்கப் பெற்றன. இங்ஙனம் பல கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகள் விளக்கமுற்றன. இவற்றுக்கு நாளும் பூசை நடந்தது; உரிய காலங்களில் விழாக்கள் நடைபெற்றன. இவை கல்வெட்டுகளால் அறியப்படும் செய்திகள். இப்பூசையாலும் விழாக்களாலும் நாயன்மார் வரலாறுகள் தலங்கள்தோறும் பொதுமக்கள் பால் பரவி வந்தன என்பது தெளிவாகின்றதன்றோ? திருப்பதிகம் ஓதுதல். கோவில்களில் திருப்பதிகம் ஓதுதல் நாயன்மார் காலத்திலேயே இருந்து வந்தது என்பதைச் சென்ற பகுதியிற் குறிப்பிட்டோம் அல்லவா? அப்பழக்கம் சோழர் காலத்தில் மிகுதிப்பட்டது என்பதைப் பல கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. திருஎறும்பியூர், திருப்பழுவூர், திருஆவடுதுறை, திருத்தவத்துறை, திருமுதுகுன்றம், திருவீழிமிழலை, திருநல்லம், திருச்சோற்றுத்துறை, திருமறைக்காடு, திரு ஆமாத்தூர், தில்லை, திருவாரூர் முதலிய பாடல்பெற்ற கோவில்களிலும், பாடப்பெறாத பல கோவில்களிலும் திருப்பதிகம் ஓதம்பெற்றது. பிராமணர் முதலிய பல வகுப்பாரும் திருப்பதிகம் ஓதலில் ஈடுபட்டிருந்தனர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. திரு ஆமாத்தூர்க் கோவிலில் குருடர் பதினாறு பேர் நாளும் மும்முறை திருப்பதிகம் ஓதிவந்தனர்; பதினாறு தேவரடியார் இருந்தனர் தில்லையில் மாசி மாதத் திருவிழாவில் திருத்தொண்டத் தொகை பாடப்பெற்றது. இராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் `தேவார நாயகம் என்றோர் அரசியல் உத்தியோகதன் இருந்தான். அவன் சோழ நாட்டுத் தேவாராப் பள்ளிகளையோ அல்லது கோவில்களில் தேவாரம் ஓதுவார்களையோ கவனிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் போலும்! ஆடல்-பாடல். தஞ்சைப் பெரிய கோவிலில் இசைக் கலையையும் நடனக் கலையையும் வளர்க்க 400 பதியிலார் இருந்தனர். அவர் அனைவரும் தமிழ்நாட்டுப் பல கோவில்களி லிருந்து வரவழைக்கப்பட்டனர் என்று இராஜராஜன் கல்வெட்டுக் கூறுகிறது. இதனால் தமிழ் நாட்டுக் கோவில்கள் பெரும்பாலானவற்றுள் இசை-நடனக் கலைகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று வந்தன என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாகிறதன்றோ? கோவில்களில் படிக்கப்பெற்ற நூல்கள். பல்லவர் காலத்தில் பாரதம் சில கோவில்களிற் படித்து மக்கட்கு விளக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அங்ஙனமே சோழர் காலத்தில் பாரதம், இராமாயாணம், பிரபாகரம், சிவ தருமம், இராஜராஜ விஜயம் என்பன கோவில்களில் படித்து விளக்கப் பெற்றன. நீடூர்க் கோவிலில் `புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை என்று ஒரு மாளிகை இருந்ததை நோக்கக் கோவில்களில் புராண நூல்களும் படித்து விளக்கப்பட்டன என்பதை அறியலாம். நரலோகவீரன் செய்த திருப்பணிகள். நரலோக வீரன் என்பவன் முதல் குலோத்துங்கள் தானைத் தலைவருள் ஒருவன்; தொண்டைநாட்டு மணிவிற் கோட்டத்து அரும்பாக்கம் என்ற ஊரினன். அவன் சிறந்த சிவபக்தன். இவன் பல கோவில்களுக்குப் பலவகை அறங்கள் செய்துள்ளான்; அவற்றுள் சிதம்பரம் கோவிலுக்கும் திருவதிகைக் கோவிலுக்கம் இவன் செய்த திருப்பணிகள் குறிக்கத்தக்கவை. இவன் சிதம்பரத்திற் செய்த பல திருப்பணிகளில் சிறந்தவை- (1) தில்லைவாழ் அந்தணர்க்கு ஏராளமாகப் பொருள் உதவி செய்தமை, (2) சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தமை, (3) மூவர் தேவாரத்தையும் செப்பெடுகளில் எழுதுவித்தமை என்பன. இப்பெருமகன் (1) திருவதிகை வீரட்டானத்தில் திருநாவுக்கரசர்க்குத் தனிக்கோவில் கட்டினான்; (2) திருநாவுக்கரசர் திருமடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலத்தைத் தானம் செய்தான். திருக்கைக்கோட்டி. இஃது கோவிலில் உள்ள ஒரு மண்டபம். இதனில் தேவார ஏடுகள் படிக்கப்படும்; எழுதப்படும்; புதுப்பிக்கப்படும்; திருமுறைகள் பூசிக்கப் பெறும். இப் பணிகளைச் செய்து வந்தவர் தமிழ் விரகர் என்பவர். இவர்க்கு மானியம் உண்டு. இத்தகைய மண்டபங்கள் தில்லை, சீகாழி முதலிய இடத்துக் கோவில்களில் இருந்தன என்று கல்வெட்டுகள் குறிகின்றன. இக்கல்வெட்டுச் செய்திகளைக் காண்கையில், சேக்கிழார்க்கு முன்பே தேவாரப் பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டுவிட்டன; திருக்கோவில்களில் தேவார ஏடுகள் வைத்துப் பூசித்துப் பாதுகாக்கப் பெற்றன என்பன வெளியாகின்றன அல்லவா? சிவனடியார் சிற்பங்கள். சோழர்கள் கற்றளிகளாக மாற்றிய பாடல்பெற்ற கோவில்கள் சிலவற்றிலும் நாயன்மார் வரலாற்றுச் சிற்பங்கள் காண்கின்றன. அவற்றுள் குறிக்கத் தக்கவை - (1) சிதம்பரத்திற்கு அடுத்த மேலக் கடம்பூர்க் கோவிற் சிற்பங்கள், (2) கீழக் கடம்பூர்ச் சிற்பங்கள், (3) கங்கைகொண்ட சோழீச்சரத்துச் சிற்பங்கள் ஆகும. 1. மேலக் கடம்பூர்க் கோவில் பல்லவர் காலத்தது. அதன் கருவறையின் புறச்சுவர்கள் மூன்றில் இரண்டு வரிகைளில் நாயன்மார் அறுபத்து மூவர் வரலாற்று நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், காரைக்கால் அம்மையார் தலைகீழே நடந்து செல்வதுபோன்ற காட்சி ஒன்று. நாயன்மார் சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறிக்கும் இச்சிற்பங்கள் பல்லவர் காலத்தனவாகலாம்; அல்லது இராஜராஜன் காலத்தன (திருத்தொண்டர் திருவந்தாதி உண்டான காலத்தன) வாகவோ, சிறிது பிற்பட்டனவாகவோ இருக்கலாம். உண்மை எது வாயினும், இவை சேக்கிழார்க்கு முற்பட்டவை என்பதில் ஐயமில்லை. 2. கீழ்க் கடம்பூர்க் கோவில் இன்று இடிந்து சிதைந்து கிடக்கிறது. அதன் கருவறைப் புறச்சுவர்கள் மூன்று மட்டும் நின்றவண்ணம் இருக்கின்றன. அவற்றில் பெரியனவும் சிறியனவுமான புரைகள் காண்கின்றன. பெரிய புரைகளில் சிவனுடைய பலவகை உருவச் சிலைகளும் சிறிய புரைகளில் நாயன்மார் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. புரைகட்க அடியில் அம்மூர்த்தங்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று தெளிவாகக் காணத்தக்க நிலையில் இருக்கும் நாயன்மார் பெயர்கள் - உலகாண்ட மூர்த்தி2 (மூர்த்தி நாயனார்), முருகாண்டார் (முருக நாயனார்), திருக்குறிப்புத் தொண்டர், தண்டிப் பெருமாள் என்பன. இக்கல்வெட்டு எழுத்துக்கள் முதல் இராஜராஜன் காலத்தனவாகக் காண்கின்றமையால், இந்நாயன்மார் உருவச்சிலைகளும் ஏறத்தாழ .இராஜராஜன் காலத்தன என்று கொள்ளலாம். 3. கங்கைகொண்ட சோழபுரம். அதன்கண் உள்ள வியத்தகு பெரிய கோவிலும் இராஜேந்திரன் காலத்தன என்பது முன்பே குறிக்கப்பட்ட செய்தியாகும். அப்பெரிய கோவிலில் நடுமண்டபத்திற்குச் செல்லும் வடக்கு வாயிற்படி ஓரம் காணப்படும் சண்டீசர் உருவம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கது. சிவபெருமான் உமையம்மையுடன் இருந்து சண்டீசர் முடியில் தம் கொன்றை மாலைசூட்டி, அவருக்கச் சண்டீசப்பதம் தருகின்ற காட்சியை விளக்கும் அச்சிற்பம் கண்டு களிக்கத்தக்கது. அதனைப் படத்திற் கண்டு மகிழ்க. இஃதன்றி, நடு மண்டபச் சுவரில் நான்கு வரிசைகளிற் சண்டீசர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்களும் அக்கோவிலில் உள்ள ஏனைய சிற்பங்களும் ஒரே காலத்தனவாகக் காண்கின்றன. எல்லாச் சிற்பங்களும் கோவில் கட்டப்பெற்ற காலத்திலேயே செய்யப் பட்டனவாகவே காண்கின்றன. ஆகவே, இச்சிற்பங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் முற்பட்டவை என்னலாம். சிவனடியார் சித்திரங்கள். இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவர் ஒன்றில் காணப்படும் ஓவியங்கள் கவனிக்கத் தக்கவை. அவை சுந்தரர் வரலாற்று விளக்குவன. 1. ஒரு சித்திரம் சிவபெருமான் கயிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அவர் மான்தோல் மீது யோக நிலையில் இருக் கிறார். அவரைச் சூழ அடியவரும் கணங்களும் காண்கின்றனர். 2. சிவபிரான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட வரலாற்றை விளக்கும் சித்திரம் அழகானது. மணத்திற்கு வந்த மறையவர் ஒரு மண்டபத்தில் கூடியுள்ளனர். அவர்கட்கு இடையில் இருவர் எதிர் எதிராக நிற்கின்றனர். ஒருவர் கிழவர்; மற்றொருவர் குமரர். கிழவருடைய ஒரு கையில் தாளங்குடை இருக்கிறது; மற்றொரு கையில் பனையோலை காணப்படுகிறது. இளைஞர் அடக்கமாக நிற்கின்றார். கூட்டத்தினர் முகத்தில் திகைப்பும் வியப்பும் மாறி மாறிக் காண்கின்றன. அவர்கட்கு வலப்புறம் ஒரு கோவில் காண்கிறது. கூட்டத்தினர் அதற்குள் விரைவாக நுழைகின்றனர். 3. அடுத்த ஓவியம் சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைக் காட்டுவதாகும். வெள்ளையானை நான்கு கோடுகளுடன் தெரிகிறது. அதன் கோடுகளிற் பூண்கள் இடப்பட்டுள்ளன. அந்த யானைமீது இளைஞர் ஒருவர் இவர்ந்து செல்கிறார். அந்த இளைஞர் தாடியுடையவராகக் காண்கிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. அது விரைந்து செல்வதாகத் தெரிகிறது. அதன்மீது கட்டமைந்த உடல்வளம் கொண்ட ஒருவர் அமர்ந்து அதனைச் செலுத்துகிறார். யானையும் குதிரையும் ஒரே திசை நோக்கிச் செல்கின்றன. யானைமீது செல்வபவர் சுந்தரர்; குதிரைமீது செல்பவர் சேரமான் பெருமாள் நாயனார். 4. இவ்விரண்டு பக்த சிரோமணிகட்கு மேற்புறமாகக் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவர்களுள் சிலர் சுந்தரர்மீதும் சேரமான்மீதும் மலர்மாரி பெய்கின்றனர்; வேறு சிலர் பலவகை இசைக் கருவிகளை இசைக்கின்றனர். தஞ்சாவூர், இராஜராஜன் காலம்வரை சோழப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. அவனுக்குப் பின் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இறுதிவரை விளங்கினது. அதனால் இராஜராஜனுக்குப் பிறகு தஞ்சாவூர் சிறப்பிழந்துவிட்ட தென்னல் தவறாகாது. இராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டினவன். அக் கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் உருவச்சிலைகள் அவன் காலத்திற்றான் எடுப்பிக்கப் பெற்றுச் சிறப்படைந்தன. அப்பேரரசன் காலத்திற்றான் திருமுறைகள் வகுக்கப்பட்டன: மூவர் சிறப்பு மிகுதியாகத் தமிழ்நாடு அறிய வாய்ப்பு உண்டானது. இவை அனைத்தையும் நோக்க, மேற்சொன்ன ஓவியங்களும் இராஜராஜன் காலத்தனவாக இருத்தல்வேண்டும் என்று கொள்ளலே பொருத்தமுடையது. இம்முடிவு பொருத்தமாயின், இச்சித்திரங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் முற்பட்டன என்று கூறலாம். மக்கள் வழங்கிய நாயன்மார் பெயர்கள். பல்லவர் காலத்திலேயே மக்கள் நாயன்மார் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? அப்பெயர்களைச் சோழர் கால மக்கள் மிகுதியாக இட்டு வழங்கினர் என்பது எண்ணிறைந்த கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவை அனைத்தையும் கூற இடமில்லை. ஆதலின், இன்றியமையாத சில பெயர்களை மட்டும் இங்குக் கூறுவோத்: மக்கள் பெயர் நாயன்மார் பெயர் 1. மூர்க்கன் ஐயாறன் மூர்க்க நாயனார் 2. நங்கை வரகுணப் நக்கன் பரவையார் பெருமானார்,நங்கை பரவையார் 3. திருவெண்காட்டு நங்கை வெண்காட்டு நங்கை 4. நீலகங்கன், புலியூர் நீல நக்கன் நக்கன் 5. பூதி மாதேவடிகள் அப்பூதியடிகள் 6. புகழ்த்துணை அடிகள் புகழ்த்துணை நாயனார் (iii) சேரமான் ஆதியுலாவை அரங்கேற்றினமை, தில்லையில் பொன் வண்ணத்து அந்தாதியைப் பாடினமை என்ற குறிப்புகள் காண்கின்றன. (4) நக்கீரர் பாடிய பாக்களில் சண்டீசர், சாக்கியர், கோச்செங்கணான், கண்ணப்பர் வரலாறு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (5) கல்லாடர் பாட்டில் கண்ணப்பர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. (6) பட்டினத்தடிகள் பாக்களில் சண்டீசர், சிறுத்தொண்டர், சம்பந்தர், சாக்கியர், சுந்தரர், இவர் தம் பக்திச் சிறப்புப் பாராட்டப்பட்டுள்ளது. (7) இவையாவற்றினும் மேலாகத் திருமுறைகள் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களே சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன என்று துணிந்து கூறலாம். நம்பி, சம்பந்தரைப்பற்றி ஆறு நூல்கள் பாடியுள்ளார்; அவற்றிற் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாகக் குறித்திருக்கிறார்; அப்பரைப்பற்றி ஒரு நூல் பாடியுள்ளார்; அதனில், அப்பரைப்பற்றிப் பல செய்திகளை விளக்கியுள்ளார். இவர் நாயன்மார் அறுபத்துமூவர் மீதும் பாடிய `திருத்தொண்டர் திருவந்தாதி யே மிகவும் இன்றியமையாதது. அது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக் கொண்டு ஓரளவு விளக்கமாகப் பாடப்பட்டது. அதனில் சுந்தரர் வரலாறு 18 பாக்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின், இது பெரிய புராணத்திற்குப் பேருதவி புரிந்த மூல நூல்களில் முதல் இடம் பெற்றது என்னலாம். கல்வெட்டுகளிற் கண்ட நூல்கள் சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்ட சோழர் காலத்து நூல்கள் சில, சமயத் தொண்டிற்காகச் செய்யப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுட் சிறந்தவை - (1) இராஜராஜ விஜயம், (2) இராஜ ராஜேவர நாடகம், (3) கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்பன. 1. இராஜராஜ விஜயம். இந்நூல் திருபூந்துருத்திக் கோவிலிற் படித்துக் குடிமக்களுக்கு விளக்கப்பட்டது. இதனில், இராஜராஜன் பெற்ற வெற்றிகள் சமயத் திருப்பணிகள் என்பன குறிக்கப்பட்டிருக்கலாம். சமயப் பணிகளில், அவன் நம்பியைக் கொண்டு திருமுறைகள் வகுத்தமையும் அவன் பெரிய கோவிலில் எடுப்பித்த நாயன்மார் உருவச் சிலைகள் பற்றிய குறிப்புகளும் தக்க அளவு இடம் பெற்றிருக்கலாம். 2. இராஜ ராஜேவர நாடகம். இந்நூலில் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட விவரம், அதனில் நாயன்மார் உருவச்சிலைகள் எடுக்கப்பட்ட விவரம் முதலியன இடம் பெற்றிருக்கும் என்பது அறிஞர் கருத்து. அஃது உண்மையாயின், அந்நூலிற் கண்ட நாயன்மார்களைப்பற்றிய குறிப்புகள் சேக்கிழார்க்கு ஓரளவு பயன்பட்டன என்னலாம். 3. கன்னிவனம் என்பது திருப்பாதிரிப்புலியூர் ஆகம். அதுபற்றிய புராணம், நாடகம் என்ற இரண்டும் அவ்வூரின ரான புலவர் ஒருவராற் செய்யப்பட்டவை. இவை முதற் குலோத்துங்கன் காலத்தில் இயன்றவை. திருப்பதிரிப்புலியூரைப் பற்றிய வரலாறு யாதாக இருத்தல் கூடும்? நாம் அறிந்த அளவில், அவ்வூரில் புகழ்பெட்றற சமணப் பள்ளியும் பாழிகளும் இருந்தன; பெயர்பெற்ற சமண முனிவர் பலர் அங்கு இருந்து சமயநூல்கள் பலவற்றைச் செய்தனர்; மொழி பெயர்த்தனர். சமண மடத்திற்குப் பல ஆண்டுகள் சமணத் தொண்டு செய்து வந்தார். பிறகு அவர்க்குச் சூலைநோய் காணச், சமணரோடு மாறுபட்டுத் திருவதிகை சென்று சைவரானார்; சமண அரசனான பல்லவனால் பல இடர்பாடுகளை அடைந்தார்; முடிவில், கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரம் கரையேறினார்; கரையேறி, அவ்வூர்ச் சிவன்கோவிலை அடைந்து பதிகம் பாடினார். அரசன் அப்பரது திருத்தொண்டின் உறைப்பை உள்ளபடி அறிந்து சைவன் ஆனான்; பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கட்டடங்களை இடித்தான்; அச் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் தன் பெயரால் `குணபர ஈவரம் என்ற கோவிலைக் கட்டினான். இவ்வராற்றுக் குறிப்புகள் அனைத்தும் திருப்பாதிரிப் புலியூரை நடுநாயகமாகக் கொண்டு நிகழ்ந்தவை ஆதலின், இவை கன்னிவன புராணத்துள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாகக் கூறப்பட்டிருக்கலாம்; இங்ஙனமே பூம்புலியூர் நாடகத் துள்ளும் இவை பல காட்சிகளாக விளக்கம் பெற்றிருக்கலாம் என்று நினைத்தல் தவறாகாது. 4. புராண நூல்கள்., கோவில்களில் புராணங்கள் படித்துக் குடிகட்கு விளக்கிக் கூறும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்தது. `புராண நூல் விரிக்கும் புரிசைமாளிகை ஒன்று நீடூர்க் கோவிலில் இருந்தது என்பதை நோக்க, இவ்வுண்மை நன்கு புலனாகும். இதனால், இந்நாட்டில் சேக்கிழார்க்கு முன்பே, சைவ சமய சம்பந்தமான புராணங்கள் சிலவேனும் இருந்திருத்தல் வேண்டும்; அவை சிவன் கோவில்களிற் படித்து விளக்கப் பட்டனவாதல் வேண்டும் என்ற செய்தி தெளிவுறத் தெரிகிறதன்றோ? தில்லை உலா. இது சேக்கிழார்க்கு முற்பட்டதாகக் கருதத் தக்கது. இது முழுவதும் கிடைக்கவில்லை. கிடைத்த அளவு ``தமிழ்ப் பொழில் மாத வெளியீட்டில் வந்தது. இதனை வெளியிட்ட பெரியார் பண்டிதர் - உலகநாத பிள்ளை ஆவர். இதனில் `திருநீற்றுச் சோழன் எனப்பட்ட முதற் குலோத்துங்கன் படிமம் நடராஜப் பெருமானது உலாவிற் கலந்து கொண்டது என்பதால், அவனுக்குப் பின் செய்யப்பட்ட நூல் என்று திட்டமாகக் கூறலாம். ஆயின, தில்லையில் விக்கிரம சோழனோ, இரண்டாம் குலோத்துங்கனோ செய்த திருப்பணிகள் சிறப்பிடம் பெறாமையாலும், சைவ உலகம் போற்றும் பெரிய புராணம் தில்லையிற் செய்யப்பட்டதைக் கூறாமையானும் - இந்நூல் சேக்கிழார்க்கு முற்பட்டதெனத் திண்ணமாகக் கூறலாம். இதனிற் கூறப்பெற்ற செய்திகள். கூத்தப் பெருமான் உலாப்போகையில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மாணிக்க வாசகர், வரகுண பாண்டியன், சண்டீசர் இவர்தம் உருவச்சிலைகளைக் கொண்டதேர்கள் உடன் சென்றன. இவர்கட்கு முன், திருமுறை ஏடுகள் கொண்டு செல்லப்பட்டன, இந்நூலில் (1) சிவன், சுந்தரர்க்கும் பரவையார்க்கும் இடையே தூது சென்றமை, (2) கோட்புலி நாயனார் பிள்ளையைவாளால் துணித்தமை, (3) சிறுத் தொண்டர் பிள்ளையைக் கொன்று விருந்திட்ட முழு விவரம், (4) சம்பந்தர் சைவத்தைப் பரப்பப் பாண்டிய நாடு சென்றமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் மூன்று விவரங்களும் இன்று கிடைத்துள்ள வேறு நூல்களிற் கூறப்படாதவை. எனவே, இவை பெரிய புராணத்திலும் காணப்படுகின்றன எனின், சேக்கிழார் இவ்வுலா நூலையும் இதுபோன்ற தம் காலத்து வேறு நூல்களையும் பார்த்திருத்தல் வேண்டும் என்று கொள்ளுதல் பொருத்தமே அன்றோ? சோழர் காலத்திற் சமண சமய நிலை. சமண சமயக் கொள்கைகளை நன்கு விளக்கிக் கூறும் நூல்களான நீலகேசி, சிந்தாமணி என்ற இரண்டில் முன்னது சோழர்க்கு முற்பட்டது; பின்னது சோழர் காலத்தது. சம்பந்தர் மதுரையில் இருந்த சமணருடன் வாதிட்ட விவரத்தைச் சேக்கிழார் தமது நூலில் விரிவாகக் கூறியிருத்தலையும், புற புராணங்களில் ஆங்காங்கச் சமணர் பழக்க வழக்கங்களைச் சுட்டியிருத்தலையும் நோக்க, அவர் தம் காலம் வரை நாட்டில் இருந்த சமண நூல்களைச் செவ்வையாகப் படித்தவர் என்பதை எளிதில் உணரலாம். இத்துடன், அவர் தம் காலச் சமணப் பெரு மக்களுடன் அளவளாவி, அவர்களுடைய கொள்கைகளையும் பிறவற்றையும் நன்கு விசாரித்தறிந்தவராகவும் இருத்தல் கூடும் என்று நம்ப இடமுண்டு. சேக்கிழார் காலத்துச் சோழப் பெரு நாட்டில் சமணர் இருந்தனரா? எனி, ஆம்; இருந்தனர். சமணப் பள்ளி களும் பாழிகளும் இருந்தன. சமண சமய நூல்கள் இருந்தன. அவை சமணர் கோவில்களில் படித்து விளக்கப்பட்டன. வெடால்3, சிற்றாமூர்4, ஆனந்த மங்கலம்5, விளாப்பாக்கம்6, திருப்பாருத்திக்குன்றம்7, முதலிய இடங்களில் சமணர் கோவில்களும் மடங்களும் இருந்தன. அவற்றில் `குரத்திமார் என்றும் `அடிகள் என்றும் கூறப்பெற்ற சமணப் பெண் துறவிகள் பலராக இருந்து சமயத் தொண்டு செய்து வந்தனர். சமணத் துறவிகள் `ரிஷி சமுதாயம் என்ற பெயரால் விளங்கினர். எனவே, சேக்கிழாரது சமண சமயப் புலமை, சமண நூல்களாலும் சமணப் பெருமக்களாலும், உண்டாகி இருத்தல் வேண்டும் எனக் கூறல் தவறாகாது. பௌத்த சமய நிலை, மணிமேகலை, வளையாபதி என்ற இரு நூல்களும் சேக்கிழார்க்கு முற்பட்ட பௌத்த நூல்கள். அவற்றில் பௌத்த சமயக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள. சேக்கிழார் காலத்தில் நாகப்பட்டினம் சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் பௌத்த சமயத்தவரான சீன வணிகர் குடியேறியிருக்கத் தக்கதாகவும் விளங்கியது. சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் கடல் வாணிபத்திற் கவின் பெற்று விளங்கிய நாகப்பட்டினம் சென்றிருத்தல் இயல்பே; அங்கிருந்த பௌத்த வாணிபருடன் அளவளாவி அவர்தம் சமய நுட்கங்களை நேரிற் கேட்டறிந் திருத்தலும் இயல்பே. முடிவுரை. இதுவரை கூறப்பெற்ற பலவகை விவரங்களால், சேக்கிழார், பெரிய புராணம் பாடுவதற்கு முன்பே- இந்நாட்டில் நாயன்மாரைப்பற்றிய வரலாறுகள் சுருக்கமாவும் பெருக்க மாகவும் ஓரளவு பரவி இருந்தன என்பதும்; அங்ஙனம் அவை பரவக் காரணமாக இருந்தவை கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், விழாக்கள், மடங்கள், புராணங்கள் முதலான சமய நூல்கள், சைவத் திருமுறைகள், பிறசமய நூல்கள் என்பதும்; இவை அனைத்தையும் பயன்படுத்தியே சேக்கிழார் ஒப்புயர்வற்ற பெரிய புராணத்தைப் பாடியிருத்தல் வேண்டும் என்பதும் அறியக்கிடத்தல் காணலாம். இனி அடுத்த பிரிவில், நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கச் சேக்கிழார் மேற்கொண்ட பெருமுயற்சியைக் கண்டறிவோம். 6. பெரிய புராணம் பாடின வரலாறு புராண வரலாறு. `சேக்கிழார் புராணம் என்ற `திருத்தொண்டர் புராண வரலாறு என்ற நூலிற் சேக்கிழார் பெரிய புராணம் பாட நேர்ந்த சந்தர்ப்பத்தைப்பற்றிக் கூறப்படும் செய்தி இதுவாகும்:- `சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது, அரசன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியம் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். அரசன் இங்ஙனம் சமண காவியத்தில் ஈடுபாடு காட்டி மகிழ்வதைச் சேக்கிழார் கண்டு மனம் வருந்தினார்; அவர் ஒருநாள் இளவரசனைத் தனியே கண்டு, ``ஒழுக்கமற்ற அமணரது காவியம், நம் அரசரை ஒத்த சீவகன் என்பவனது வரலாறு கூறுவதாகும். அதனைப் படிப்பதனாலோ கேட்பதனாலோ அரசர் பெறத்தக்க நன்மை ஒன்றும் இல்லை. அதனை விடுத்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாயன்மார் வரலாறுகள் கொண்ட சிவகதை படிக்கக் கேட்பது மிகவும் நல்லது, என்று மொழிந்தனர். `இம்மொழியை இளவரசன் வாயிலாக உணர்ந்த சோழர் பெருமான் சேக்கிழாரை வரவழைத்து, ``நீர் மொழிந்த சிவகதை நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? சிவனடியாருள் இன்றும் உயிருடன் இருப்பவர் உளரோ?.. எனப் பலவாறு, நாயன்மார்களைச் சிறிதளவேனும் அறியாத, - சோழர் மரபுக்கே முற்றும் புதிய ஓர் அரசன் கேட்பதுபோலக் கேள்விகள் கேட்டான். `சேக்கிழார், ``அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறுகளை உள்ளடக்கிச் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி யருளினார்; இராஜராஜன் காலத்து நம்பியாண்டார் நம்பி அதனை ஓரளவு வகைப்படுத்தி, நாயனார் வரலாறு ஒன்றுக்குச் செய்யுள் ஒன்று வீதம் `திருத்தொண்டர் திரு அந்தாதி என்று ஒரு நூல் பாடியுள்ளார். அந்நாயன்மார் வரலாறுகள் இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவன. அவற்றைக்கேட்பதும், அந்நாயன்மார் வரலாறுகளிற் பொதிந்துள்ள உயரிய கருத்துகளை உணர்ந்து நடப்பதும் நன்மை பயக்கும், என்றார். அரசன், ``அஃதாயின், அந்நாயன்மார் வரலாறுகளை நீரே கூறி அருளுக, என்று வேண்டினான். சேக்கிழர், தொகை - வகை- திருமுறைகள் இவற்றைத் துணையாகக் கொண்டு, நாயன்மார் வரலாறுகளை விரித்து உரைத்தார். சோழர் பெருமான் கேட்டு வியந்தான்; ``அமைச்சர் ஏறே, இவ்வியத்தகு அடியார்கள் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க நீரே வல்லவர். ஆதலின், அதனைப் பாடியருள்க, என்று கூறி, அவரைத் தில்லைக்கு அனுப்பினான்; அவருக்கு வேண்டும் பொருள் வசதி, ஆள்வசதிகளை அளித்தான். `சேக்கிழார் சிதம்பரம் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்து, ``ஐயனே, பெருமை மிக்க நின் அடியார் வரலாறுகளை மிகச் சிறியேனாகிய யான் எங்ஙனம் கூறவல்லேன்! நான் பாட இருக்கும் பெரு நூலுக்கு `முதல் தந்து ஆசீர்வதித்து அருளுக, என்று சிற்றம்பலத்தின் முன் திரிகரண சுத்தியாக நின்று வேண்டினார். அப்பொழுது ``உல கலாம் என்ற தொடர் சேக்கிழார் காதிற்பட்டது. அவர் அதனைக் கூத்தப்பிரானது அருள் மொழியாகக் கொண்டு, புராணம் பாடத் தொடங்கி, ஓராண்டில் பாடி முடித்தார். இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி சிந்தாமணி. அநபாய சோழன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியத்தைப் படிக்கக் கேட்டுப் பரவசமடைந்தான் என்பது இப்புராணம் மட்டுமே கூறும் செய்தி. இதனை உறுதிப்படுத்த வேறு சான்று இல்லை. அரசன் மெய்யாகவே அந்நூலைப் படிக்கக் கேட்டான் எனினும், அதனால் இழுக்கொன்றும் இல்லை. சிந்தாமணி படிப்பதாலோ- பிறர் படிக்கத் தான் கேட்பதாலோ அரசன் கெட்டுவிடவோ, சமணம் மாறவோ வழியில்லை. மிகச் சிறந்த தலையாய புலவர் பெருமான் என்று மதிக்கத்தக்க சேக்கிழாரே சிந்தாமணியைச் செவ்வை யாகப் படித்தவர் என்பது அவரது பெரிய புராணத்தால் தெளிவாகத் தெரிகிறது. உயர்தரப் புலவர் பெருமக்கள், புலமைபெற எல்லாச் சமயத்தவர் நூல்களையும் படித்தே தீருவர். அவர்கட்குப் புலமை பெரியதே தவிரக் கேவலம் சமய வேறுபாடு பெரிதன்று. அந்த முறையில் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாகப் படித்தவராவர். சிந்தாமணி சோழர் காலத்து முதற் காவிய நூல் ஆகும். பெரிய புராணம் இரண்டாம் காவிய நூலாகும். கம்பராமாயணம் அடுத்துச் செய்யப்பட்ட நூலாகும். சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தாற் போலவே, பின் வந்த கம்பர் பெருமான் சிந்தாமணியையும் பெரிய புராணத்தையும் அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது இராமாயாணம் கொண்டு கூறலாம். இங்ஙனம் சிந்தாமணியைச் செவ்வையாகப் படித்த பழுதற்ற புலவராகிய சேக்கிழார், அரசனை மட்டும் படிக்கலாகாது என்றோ, படிக்கக் கேட்கலாகாது என்றோ தடுத்தார் என்பது நம்பத்தக்கதன்று. `அவர் தடுத்தார்; அந்நூலை இழித்துரைத்தார் என்பது அவரது பெரும் புலமைக்கும் தலைமை அமைச்சர் பதவிக்கும் ஏற்றதாகாது. சிறந்த பௌத்த-சைவ, சமண-சைவ வாதங்களைப் பழுதற்ற சாத்திரீய முறையில் விளக்கமாகப் பாடியுள்ள சேக்கிழார், பௌத்த, சமணச் சார்பான சமய நூல்களை நன்கு கற்ற நவையறு புலவராவர். அப்பெரியார் மீது இத்தகைய சமய வெறுப்புக் குற்றத்தை ஏற்றிக் கூறல் பெருந்தவறு. அக்குற்றம் சேக்கிழார் புராணம் பாடிய ஆசிரியரையே சாரும். அநபாயன் கேள்விகள். `சிவதை கேட்டல் நல்லது என்று சேக்கிழார் கூறக்கேட்ட சோழ மன்னர், நாயன்மார் பெயர்களைக்கூட அறியாத பாமரனாக இருந்து, `நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? எனப் பலவாறு வெளிநாட்டான் ஒருவன் கேட்டாற்போலக் கூறப்படும் வினாக்கள் சோழர் வரலாற்றை அறிந்த அறிஞர் நகைக்கத் தக்கனவாகும். `மெய்யாகவே இக்கேள்விகளை அநபாயன் கேட்டிருத்தல் இயலுமோ? என்பது இங்கு ஆராயத் தக்கது. சோழர் சைவ சமயத் தொண்டு. சோழர் சைவ சமயத்தைத் தம் உயிர்போலக் கருதிப் பாதுகாத்து வளர்த்து வந்தவர் என்பது வரலாறு கூறும் உண்மை. சோழப் போரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் காவிரியின் பிறப்பிடதிதிலிருந்து கடல்புகம் வரை அதன் இருகரைகளிலும் சிவக் கோவில்களைப் புதியனவாகக் கட்டியும், பழையவற்றைப் புதுக்கியும் அழியாப் புகழ் பெற்றான். அவன் மகனான பராந்தக சோழன் அளப்பரிய சிவப்பணிகள் செய்தான்; கூத்தப் பெருமான் அம்பலத்தைப் பொன்மயமாக்கினான். உலகப் புகழ்பெற்ற இராஜராஜன் செய்த சைவப் பணிகள் அளவிடற் கரியன. நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்தியவன் அப்பெருமகன் அல்லனோ? சிறப்புடைய நாயன்மார் உருவச் சிலைகளை எழுப்பி அவற்றுக்குப் பூசை, விழாக்கள் குறைவற நடக்க ஏற்பாடு செய்தவன் அப்பெருந்தகை அல்லனோ? அவன் மகனான பெருவீரன் - இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரம் வியத்தகு பெருங்கோவில் அல்லவா? `தேவார நாயகம் என்ற தேவாரத் திருமுறைகளை வளம்பெற வளர்த்த பேராரசன் இராஜேந்திரன் எனின், அவனது சைவச் சமயப்பற்றை என்னெனன் கூறி வியப்பது! சோழ-சாளுக்கிய மரபில் வந்த முதல் கலோத்துங்கள் பெரிய சிவபக்தன். அவன் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து சிறப்புப் பெற்றவன்; தில்லைக் கூத்தப்பிரானைத் தன் குலநாயகமாகக் கொண்டவன். அவன் மகனான விக்கிரம சோழன் அவனினும் சிறந்த சிவபக்தன். அவன் கூத்தப்பிரான் கோவில் முழுவதையும் பொன்மயமாக்க முயன்றவன்; சிதம்பரம் கேவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தவன். அவனது அமைச்சனும் தானைத் தலைவனுமான நரலோக வீரன் சிதம்பரத்திலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் எண்ணிறந்தன; பாராட்டத்தக்கன; வியக்கத் தக்கன. சோழ மாதேவியர் செய்த சைவப் திருப்பணிகள் தாம் எண்ணத் தொலையுமோ? கண்டாராதித்தரது மனைவியாரும் இராஜராஜன் பாட்டியாருமாகிய செம்பியன் மாதேவியார் கட்டிய புதிய சிவன்கோவில்கள் பல; புதுப்பித்த பாடல்பெற்ற கோவில்கள் பல; பொன்- வெள்ளிப் பாத்திரங்கள் அளிக்கப் பெற்ற கோவில்கள் பல. இராஜராஜன் தமக்கையாரான குந்தவையார் செய்த அறப்பணிகள் பலவாகும். இராஜராஜன் மனைவியாரான உலகமகாதேவியார் திருவையாற்றில் கோவில் கட்டிப் புகழ் பெற்றவர். இராஜராஜன் மகளிர் செய்த திருப்பணிகள் பல. இங்ஙனமே ஒவ்வொரு சோழ அரசன் மனைவியரும் மகளிரும் செய்துள்ள சைவத் திருப்பணிகள் பலவாகும். அநபாயன் காலம். இங்ஙனம் கனவிலும் சிவத் தொண்டை மறவாத சோழர் மரபில் வந்தவன் அநபாயன்; கூத்தப்பிரானை `நம் குலநாயகம் என்று அழைத்து, அளப்பரிய திருப்பணிகளை அப்பெருமான் கோவிலுக்குச் செய்ய முனைந்த விக்கிரம சோழன் திருமகன் அநபாயன். அவன், தன் தந்தை அரைகுறையாக விட்டுச் சென்ற திருப்பணிகளை முற்றச் செய்து அழியாப் புகழ்பெற்றவன். அவனது சைவப் பற்றைக் குலோத்துங்கன் உலா, இராஜராஜன் உலா, குலோத்துங்கன் கோவை இவற்றாலும் எண்ணிறந்த கல்வெட்டுகளாலும் அறியலாம். இராஜராஜன் காலமுதல் நாயன்மார் உருவச் சிலைகள் ஆங்காங்கப் பேரளவில் எடுப்பித்துப் பூசைகளும் விழாக்களும் நடைபெற்று வந்துள்ளன. அநபாயன் புதுப்பித்த சிதம்பரம் கோவிலிலேயே நரலோகன் விருப்பப்படி திருமுறைகளை ஓத மண்டபம் சமைக்கப்பட்டது. அங்குத் திருமுறைகள் ஓதப்பட்டு வந்தன. அநபாயன் இருந்த சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்துப் பெருங் கோவிலிலேயே சண்டீசர் வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் இருந்தன; தஞ்சைப் பெரிய கோவிலில் நாயன்மார் உருவச்சிலைகளும் முன்சொன்ன ஓவியங்களும் அழகொழுகக் காட்சி அளித்தன. சுருங்கக் கூறின், அநபாயன் காலத்தில் நாடெங்கும் சைவமணம் நன்றாக வீசிக்கொண்டிருந்தது; நாயன்மார் வரலாறுகள் திருமுறைகள், பூசைகள், விழாக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றின் வாயிலாக நன்கு பரவியிருந்தன. இத்தகையபொற்காலத்தில் - சைவ நன்மரபில் பிறந்து வளர்ந்த அநபபயன், `நாயன்மார் வரலாறுகளை அறியாத முழுமூடனாக இருந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியிருத்தல் உண்மைக்கு மாறாகும். இஃது அவ்வாசிரியரது அறியாமையே அறிவிப்பதே அன்றி வேறன்று. சேக்கிழார் பெரிய புராணம் பாடியதற்குக் காரணம் கூறவேண்டும் என்பதற்காக ஆசிரியரே கட்டிச் சொன்ன காரணமாக இது காணப்படுகிறதே தவிர, இக்கூற்றிற் கடுகளவும் உண்மை இருப்பதாக அறிவும் ஆராய்ச்சியும் உடைய பெருமக்கள் கொள்ளார். சேக்கிழார் புராண ஆசிரியர் யாவர்? `இங்ஙனம் பொறுப்பற்ற முறையில் புராணம் பாடிய இந்நூலாசிரியர் யாவர்? என்பது நாம் அறியவேண்டும் ஒன்றாகும். `(1) திருமுறைகண்ட புராணம், (2) சேக்கிழார் புராணம், (3) திருத்தொண்டர் புராணசாரம், (4) திருப்பதிகக் கோவை, (5) திருப்பதிக் கோவை என்ற ஐந்து நூல்களையும் பாடியவர் உமாபதி சிவாசாரியார் என்பவர், என்பது நாட்பட்ட கொள்கையாகும். இக்கூற்றுச் சில ஏடுகளில் உள்ளன; சில ஏடுகளில் இல்லை. உமாபதி சிவாசாரியார் என்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த `கொற்றவன் குடி என்னும் நகரப் பிரிவ;ல வாழ்ந்தவர்; சிறந்த சிவபக்தர். இத்தகைய பெரும் புகழ் பெற்ற சைவப் புலவர் ஒருவர் இந்த ஐந்து நூல்கட்கும் ஆசிரியர் என்பது கூறப்படுகிறது. இதன் உண்மையை இங்கு ஆராய்வோம். உமாபதிசிவம் சேக்கிழார் புராண ஆசிரியரா? சேக்கிழார் புராணத்தில் நாயன்மார் அறுபத்துமூவரைப் பற்றிய குறிப்புகள் காண்கின்றன. திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலிலும் அந் நாயன்மார் வரலாறுகள் சுருக்கமாகத் தரப் பெற்றுள்ளன. (1) முதல் நூலில் பல்லவப் பேரரசரான கழற்சிங்கன், ஐயடிகள் காடவர்கோன் இவர்கள் சிற்றரசர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆயின், பின் நூலில் இவ்விருவரும் பல்லவப் பேரரசர் என்பது தெளிவாகக் காண்கிறது. (2) `பேரரசர் அறுவர் என்று கூறிச் சிற்றரசரான இடங்கழி நாயனாரும் அந்த அறுவரில் ஒருவராகக் குறிக்கப்பட்டனர். (3) இசையில் வல்லவராக நந்தனார் கூறாது விட்டார். இங்ஙனம் சிறந்த பிழைகள் பல சேக்கிழார் புராணத்துட் காண்கின்றன. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் செய்தவர் ஒருவராயின், இத்தகைய தவறுகள் - ஒன்றுக்கொன்று முரணாக உள்ள கூற்றுகள் நூலில் இடம் பெற முடியுமா? முடியாது. ஆதலின், முன்னூலைப் பாடியவர் வேறு; பின்னூலைப் பாடியவர் வேறு எனக்கொள்ளலே பொருத்தமாகும். திருமுறை கண்ட புராணம். நம்பி, இராஜராஜனைக் கொண்டு திருமுறைகள் தொகுத்த வரலாற்றைக் கூறுவது இப்புராணம். நம்பி, முதல் ஏழு திருமறைகளைத் தொகுத்தார் என்று கூறி, அவர் மேலுந் திருவாசகத்தையும் திருக்கோவை யாரையும் எட்டாந் திருமுறையாகவும், நம்பிக்கே காலத்தாற் பிற்பட்டவராகக் கருதத்தக்க அடியார் பலர் பாடல்களை ஒன்பதாந் திருமுறையாகவும், அப்பர்-சம்பந்தர்க்கே காலத்தாற் முற்பட்டவரான திருமூலர் பாடிய திருமந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும், நாயன்மார் காலத்தவரும் நம்பி காலத்தவருமான கபிலதேவர், பட்டினத்தார் போன்ற அடியார் பாக்களை பதினோராந் திருமுறையாகவும் நம்பி தொகுத்தார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. நம்பிக்குப் பிற்பட்டவர் பாக்களை நம்பியே தொகுக்க முடியுமா? காலத்தால் முற்பட்ட அடியார்கள் பாக்களைப் பின்வைக்க இயலுமோ? அங்ஙனம் வைப்பதில் ஒருவகைப் பொருத்தமேனும் இருக்கவேண்டும் அல்லவா? இவ் விவரங்களை வரலாற்று முறையிலும் ஆராய்ச்சி முறையிலும் இருந்து கவனிப்பின், `நம்பி முதல் ஏழு திருமுறைகளையே தொகுத்தனர்; பிற்பட்ட திருமுறைகளை அவை கிடைக்கக் கிடைக்கப் பின்வந்த அறிஞர் முறைப்படுத்தினர், என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.1 சேக்கிழார் புராண ஆசிரியர் வேறு; உமாபதி சிவம் வேறு. இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராயின், தவறான கருத்துகள் பலவற்றைக் கூறும் சேக்கிழார் புராணமும் திருமுறைகண்ட புராணடும் பாடியவர் - பொறுப்புள்ள சைவப் பெரும் புலவராகிய உமாபதி சிவம் ஆகார்: ஏனைய மூன்றையும் பாடியவர் உமாபதிசிவம் எனக்கொள்ளலாம் என்ற முடிவே ஏற்புடையதாகும். எனவே, முன்னூல்கள் இரண்டையும் பாடியவர் பெயர் தெரியாத புலவர் ஒருவராவர். அவர் நூல்களை உமாபதிசிவம் பாடினார் எனக் கூறுவதால் புகழ்பெற்ற அச்சைவ சமயப் புலவர்க்குச் சிறுமை உண்டாகுமே தவிரப் பெருமை ஒருபோதும் உண்டாகாது. இத்தகைய பெயர் தெரியாத புலவர் ஒருவர் கூறிய சேக்கிழார் புராண வரலாற்றில் காணப்படும் சிந்தாமணி பற்றிய செய்தியும் அநபாயன் கேள்விகளும் உண்மைக்கு முற்றும் மாறானவை என்பதறிக. உண்மை யாதாக இருக்கலாம்? சைவ நன்மரபில் வந்த அநபாயன், நாயன்மார் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை அறிந்திருக்கலாம். அவனது முதல் அமைச்சரான சேக்கிழார் சைவக்குடியிற் பிறந்தவர்; இலக்கண இலக்கியங்களைப் பழுதறப் படித்தவர்; சைவத் திருமுறைகளையும் தம்காலத்துச் சைவ சித்தாந்த நூல்களையும் நன்கு கற்ற விற்பன்னராவர். அவர் சோழர் முதல் அமைச்சரானதும், தமது பதவியின் காரணமாகப் பெருநாடு சுற்றியபொழுது, பல கோவில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அவர்க்கு இயல்பாகவே ஏற்பட்டது. அப்பொழுது அவர் நாயன்மார் வரலாறு பற்றிய பல குறிப்புகளைத் தொகுத்திருத்தல் கூடும். இங்ஙனம் நாளடைவில் அவர் நேரிற் கண்டும் வல்லார்வாய்க் கேட்டும், தம்காலத்து இருந்து இன்று இறந்துபட்ட பல நூல்களைப் படித்தும் நாயன்மார் வரலாற்று உண்மைகளை ஒருவாறு செப்பஞ் செய்து வைத்திருத்தல் கூடும். அக்குறிப்புகளை வாழையடி வாழையாகச் சைவ நன்மரபில் வந்த அநபாய சோழன், இளவரசனான இராஜராஜன் வாயிலாக அறிந்து, சேக்கிழாரைக் கொண்டே நாயன்மார் வரலாறுகளைக் கேட்டு அறிந்திருக்கலாம். அங்ஙனம் கேட்டு அறிந்து மகிழ்ந்ம அப்பரம பக்தன், அடியார் வரலாற்றுக் குறிப்புகளை அரும்பாடுபட்டுத் தொகுத்துவந்த சேக்கிழாரே அவற்றை விரிவான முறையில் ஒரு புராணமாகப் பாடத்தக்கவர் என்று எண்ணி, அங்ஙனமே புராணம் பாடித் தருமாறு அவரை வேண்டியிருத்தல் இயல்பே. சேக்கிழார் அவ்வேண்டுகோளுக்கு இணங்கிக் கூத்தப்பிரான் எழுந்தருளி யுள்ள சிதம்பரத்தை அடைந்து, அப்பெருமானை வேண்டி, `உலகெலாம் என்று விண்வழி எழுந்த தொடரையே தமது நூலுக்கு முதலாகக் கொண்டு நூல் பாடத் தொடங்கியிருக்கலாம். இடையிடையே உண்டான ஐயங்களை அவ்வத்தலம் சம்பந்தமான உத்யோகதர் வாயிலாகவும் சிற்றரசர் வாயிலாகவும் அங்காங்கு இருந்த பெரும் சைவப்புலவர் வாயிலாகவும் போக்கிக் கொண்டு, தமது நூலைப் பாடி முடித்திருக்கலாம். இவ்வாறின்றி, அரசன் வேண்டுகோள் மீதே சேக்கிழார் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து ஆராய்ந்து, தம் ஆராய்ச்சியிற் போந்த முடிவுகளையும் நூல்களிற் கண்ட செய்திகளையும் சேர்த்துப் புராணம் பாடி முடித்தார் எனக்கொள்வதும் தவறாகாது. அவரது பெரிய புராணத்தைக் கூர்ந்து கவனிப்பின், அவர் (1) தமிழ்நாடு முழுவதும் சுற்றி நாயன்மார் பற்றிய குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும், (2) ஆங்காங்கு இருந்த சிற்றரசர், அறிஞர் முதலியோரைக் கேட்டும் கல்வெட்டுக்களைப் படித்தும் குறிப்பு களைத் தயாரித்தவர் என்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகள் ஆகும். இவை இரண்டையும் பற்றிய குறிப்புகளைச் சுருக்கமாக அடுத்த இரு பிரிவுகளிற் காண்போம். 7. சேக்கிழார் தல யாத்திரை முன்னுரை. சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில்- அப்பர், சம்பந்தர், சுந்தரர் செய்த தல யாத்திரை விவரங்களும் நாயன்மார் பிறந்த பதிகளைப் பற்றிய விவரங்களும், ஒவ்வொரு பதியின் அமைப்பு, இயற்கைவளம் முதலியனவும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றளவும் உண்மையாக இருத்தலைக் காண சேக்கிழார் நாயன்மார் சம்பந்தப் பட்ட பதிகளையும் சிவதலங்களையும் பிற இடங்களையும் நேரிற் சென்று கண்டவராவர் என்பது தெள்ளிதிற் புலனாகம். அவர் அமைச்சரான பிறகே இத்தகைய யாத்திரை எளிதாக இருந்திருத்தல் கூடும். அமைச்சர் தமது ஆணைக்கு உட்பட்ட நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கக் கடமைப்பட்டவராவர். அங்ஙனம் சுற்றுகையில், இயல்பாகவே சைவப் பிறப்பும் சைவ சமயப் பற்றும் பேரளவு கொண்டு, திருமுறைகளை நன்கு பயின்ற சிறந்த இலக்கண-இலக்கியப் புலவரான சேக்கிழார், நாயன்மாருடன் தொடர்புகொண்ட பதிகளையும் இடங்களையும் அவர்களுடைய யாத்திரை வழிகளையும் பிற செய்திகளையும் மிகவும் நுட்பமாகக் கண்டும் ஆங்காங்கு இருந்த வல்லார்வாய்க் கேட்டும் குறிப்புகள் தொகுத்திருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமே ஆகும். இங்ஙனம் சேக்கிழார் தல யாத்திரை செய்து, போதிய செய்திகள் அசைத்தும் தொகுத்த பின்னரே பெரிய புராணம் பாடியிருத்தல் வேண்டும். இவ்வாறு சேக்கிழார் தல யாத்திரை செய்தனர் என்பதைப் பல சான்றுகள் கொண்டு காட்டலா மாயினும் இடமஞ்சிச் சில காட்டுவோம். உடுப்பூரிலிருந்து காளத்திவரை. கண்ணப்பரது வரலாற்றைக் கூறிய முன்னூல் ஆசிரியர்கள் கூறாதுவிட்ட உடுப்பூர் வருணணை, வேடர்சேடி வருணனை, உடுப்பூர்க்கம் காளத்திக்கும் இடைப்பட்ட நில அமைப்பு, மலைத் தொடர் வருணனை முதலிய விவரங்கள் இன்றளவும் ஒத்திருத்தல் வியப்பினை ஊட்டுவதாகும். அவ்விடங்களை நேரிற் சென்று கண்டு, சைவத் திருவாளர் இராவ் பஹதூர் சி. எம். இராம சந்திரஞ் செட்டியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் கடப்பை, சித்தூர் ஜில்லாக்களின் விளக்க நூல்களிற் (District Manuals & Garzetteers) காணப்படும் விவரங்களும் சேக்கிழார் கூற்றோடு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது. அப்பரது தொண்டைநாட்டு யாத்திரை. `அப்பர் தொண்டை நாட்டு யாத்திரை செய்யும்பொழுது திருவாலங்காடு பணிந்தார்; பிறகு பல பதிகளையும் நெடுங்கிரிகளையும் படர்வனங்களையும் கடந்து, காரிக்கரை அடைந்தார்; அங்கிருந்து காளத்தி சென்றார் என்பது சேக்கிழார் கூற்று. காரிக்கரை என்பது இக்காலத்தில் இராமகிரி என வழங்குகிறது. அங்கு இராமகிரி என்ற மலையும் அதன் அடிவாரத்தில் சிறிய சிவன் கோவிலும் உண்டு. அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் அவ்விடத்திற்குக் `காரிக்கரை என்பது பழைய பெயர் என்பது தெரிகிறது. திருவாலங்காட்டிற்கம் காரிக்கரைக்கும் இடையில் மலைகளும் காடுகளும், இவற்றை அடுத்துப் பல ஊர்களும் இருத்தலை இன்றும் காணலாம்; சென்னையிலிருந்து நகரி- நாகலாபுரம் செல்லும் பஸில் பிரயாணம் செய்பவர் காரிக்கரையில் இறங்கலாம்; வழிநெடுக வுள்ள குறிஞ்சி நிலக் காட்சிகளைக் கண்டு செல்லலாம்; அங்ஙனமே காளத்திவரை பஸில் யாத்திரை செய்யின், அவ்வழி அமைப்பும் வழி நெடுகவுள்ள காட்சிகளும் சேக்கிழார் கூற்றோடு பெரும்பாலும் ஒத்திருத்தலைக் காணலாம். ``சேக்கிழார் கூறியுள்ள யாத்திரை வழி அவர் காலத்திருந்த வழியாகும். ஆனால், அவ்வழியே ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அப்பர் காலத்திலும் இருந்ததெனக்கோடலில் தவறில்லை. `வடுக வழி மேற்கு, வடுவ வழி கிழக்கு என்ற பெரிய பாதைகள் தமிழ் நாட்டிற்கும் ஆந்திர நாட்டிற்கும் தொடர்பை உண்டாக்கி இருந்தன. அப்பர்போன்ற யாத்திரிகர்க்குரிய பெருஞ்சாலைகள் நாடெங்கும் இருந்திருத்தல் வேண்டும் என்பது 7, 8-ஆம் நூற்றாண்டுகளிற் செய்யப்பட்ட நூல்களைக் கொண்டும் ஊகிக்கலாம்.1 3. திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திற் கூறப்பட்டுள்ள குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளைப்பெற்ற தொண்டைநாட்டு வருணனை கூர்ந்து கவனிக்கத் தக்கது. குறிஞ்சியும் முல்லையும் மயங்குதல், முல்லையும் மருதமும் மயங்குதல், குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல் போன்ற திணை மயக்க வகைகள், ஒவ்வொரு நிலத்திலும் அமைந்துள்ள சிறப்புடைய கோவில்கள், ஊர்கள், அவ்வூர்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகள் முதலியன ஏறக்குறைய 46 செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளன. காட்டுப்பாடி, மஹாபலிபுரம், திருமுல்லைவாயில் போன்ற இடங்களை நேரிற் கண்டவர் இவ்வருணனையைப் படிப்பாராயின், சேக்கிழார் தொண்டைநாடு முழுவதும் நன்கு சுற்றி மூலைமுடுக்குகளையும் கவனித்த நில அமைப்பு நிபுணர் என்பதை எளிதில் அறியக் கூடும். சம்பந்தர் யாத்திரை. அக்பர், சம்பந்தர், சுந்தரருடைய தல யாத்திரைகளைக் குறிக்கும் இடங்களில், `இவர் இன்ன வூரில் உள்ள கோவிலைப் பணிந்த பிறகு இன்ன வழியே சென்று அன்னவூர்க் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்; பிறகு இன்ன இன்ன கோவில்களைத் தரிசித்து இன்ன பதியை அடைந்தார் என்று சேக்கிழார் கூறியுள்ளார். அந்தந்த யாத்திரையில் கூறப்படும் தல முறைவைப்பு ஊன்றி நோக்கத்தக்கது. அஃது இன்றளவும் ஒத்திருத்தலைக் காணக் காண, அவ்விடங்களை எல்லாம் காணச் சேக்கிழார் மேற்கொண்ட உழைப்பை எண்ணி எண்ணி நாம் மகிழ வேண்டுபவராகிறோம். சான்றாகச் சில குறிப்புகளைக் காண்க. 1. தலையாலங்காடு என்பது திருவாரூர்க்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கும் சிவதலமாகும். அங்கிருந்து திருவாரூர்க்கு வரும் பெருவழியில் பெருவேளூர், சாத்தங்குடி, கரவீரம், விளமர் என்ற தலங்கள் இருக்கின்றன. சம்பந்தர் தமது யாத்திரையில் இத்தலங்களை முறையே சென்று தரிசித்துத் திருவாரூரை அடைந்தார் என்று சேக்கிழார் செப்பி யிருத்தல் உண்மைக்கு எத்துணைப் பொருத்தமாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது. 2. சம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து மதுரை சென்ற வழியைக் கூறுதல் கவனிக்கத்தக்கது. அவர், திருமறைக் காட்டிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று அகத்தியன் பள்ளி, கோடிக்கடிர இவற்றைத் தரிசித்து மேற்க நோக்கிச் சென்று இடும்பாவனம் முதலிய தவங்களைப் பணிந்து முல்லையும் நெய்தலும் கூடிய வழியே சென்று பிரான்மலை முதலியவற்றைப் பாடி, மதுரை அடைந்தார் என்பது - தஞ்சை இராமநாதபுரம் , மதுரை ஜில்லாப்படங்களைக் கொண்டு கவனித்து இன்புறத் தக்கது. 3. `சம்பந்தர் பாண்டிய நாட்டிலிருந்து மீண்டு சோழநாட்டு வழியே வருகையில் திருக்களர், பாதாளீவரம் இவற்றைப் பணிந்து முள்ளியாற்றைக் கடந்தார்; கொள்ளம்பூதூரை அடைந்தார்; பின்னர்ப் பல தலங்களைப் பணிந்து திருநள்ளாறு சென்றார்; பிறகு தெளிச்சேரி பணிந்தார்; அங்கிருந்து திருக்கடவூர் பிரயாணமானார்; வழியில் போதிமங்கை என்ற பதியில் புத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்றார். என்பது சேக்கிழார் கூற்று. இத்தலங்கள் முறையே தெற்கிலிருந்து வடக்குநோக்கி இருத்தலும், போதி மங்கை இருக்கும் இட அமைப்பும், முள்ளியாற்று நிலைய;ம பிறவும் இன்றளவும் உண்மையாகக் காண்கின்றன. தங்கும் தலைமை இடங்கள். அப்பர் தமது யாத்திரையில் சில முக்கியமான தங்களில் தங்கி, அங்கிருந்து நாற்புறங்களிலும் அண்மையில் உள்ள கோவில்களைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் தாம் தங்கிய தலைமை தலத்திற்கே வந்து சேர்ந்தனர். இங்ஙனமே சம்பந்தரும் சுந்தரரும் தமது தல யாத்திரையின்போது பல பதிகளைத் தங்கும் தலைமை இடங்களாகக் கொண்டனர் என்பது சேக்கிழார் கூறும் விவரம் ஆகும். இங்ஙனம் சேக்கிழார் செப்பியுள்ள ஒவ்வொரு தலைமை இடமும் அதனைச் சுற்றியுள்ள பதிகளும் இன்றளவும் எவ்வித மாறுதலும் இல்லாமல் இருத்தல் கவனித்து மகிழத் தக்கது. யாத்திரை வழிகள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் யாத்திரைசெய்த வழிகளைச் சேக்கிழார் குறித்துள்ளார். அப்பர் திருப்பழனத்திலிருந்து காவிரித் தென்கரையே சென்று திருநல்லூரை அடைந்தார். சம்பந்தர் தில்லையிலிருந்து திருமுதுகுன்றம் போகும்பொழுது நிவாநதிக் கரைமீது மேற்குநோக்கிச் சென்றார்; வடகரை மாந்துறை பணிந்து பிற தலங்களையும் தரிசித்தார்; பின்னர் மழநாட்டுப் பொன்னி வடகரைமீது போய்த் திருப்பாச்சில் ஆச்சிராமம் அடைந்தார்; திருஈங்கோய் மலையைப் பணிந்த பிறகு கொங்குநாட்டு மேற்குப் பகுதி நோக்கிச் சென்றார். சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் சேரநாடு செல்லப் புறப்பட்டு ஆரூரிலிருந்து மேற்குப் பக்கம் சென்றார்; காவிரித் தென்கரை வழிப் போய்ச் சிவபிரான் கோவில்களைப் பணிந்து திருக்கண்டியூரை அடைந்தார்; வடகரையில் திருவையாறு எதிர்ப்பட்டது. . . இங்ஙனம், நாயன்மார் யாத்திரைசெய்த ஆற்றின் பெயர்களையும் கரைகளையும், அக்கரைகளில் அவர்கள் தரிசித்த கோவில்களையும், அக்கரைகளின் வழியே அவர்கள் சென்ற நாடுகளையும் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அப்புலவர் பெருமானது தமிழகத்து நில அமைப்பு அறிவு எந்த அளவு தெளிவாக இருந்தது என்பதும், அத்தகைய தெளிந்த அறிவிற்கு அவரது தல யாத்திரையே சிறந்த காரணம் என்பதும் நன்கறியலாம். நாயன்மார் பதிகள் ஆதனூர். நந்தனார் ஆதனூரைச் சேர்ந்தவர். அவரது ஆதனூர் இன்னது என்று சேக்கிழார் குறிக்கவேண்டும். ஆயின், தமிழ்நாட்டில் ஆதனூர்கள் பல சேக்கிழார் காலத்திலேயே இருந்தன என்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களில் ஆதனூர்கள் இருக்கின்றன. நந்தனார் திருப்பணி செய்த திருப்புன்கூருக்குப் பக்கத்திலேயே ஆதனூர் ஒன்று உண்டு. தமது நூலைப் படிப்பவர் இடமறியாது மயங்குவர் என்ற நோக்கத்துடன் சேக்கிழார், கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்தில் உள்ளது ஆதனூர். அது கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கின்றது. அது `மேல்-கானாடு என்ற பெரும்பிரிவைச் சேர்ந்த பகுதி யாகும். என்று மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் நேரே சென்று கண்டிராவிடில், இவ்வளவு தெளிவாக இடங் குறித்தல் இயலுமா? மிழலை. பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் `பெருமிழலை என்ற ஊரினர். தமிழ்நாட்டில் இப்பெயர் கொண்ட பதிகள் சில உண்டு. சிறப்பாகச் சுந்தரர் தமது தேவராத்துள் `மிழலை நாட்டு மிழலை என்றும், `வெண்ணி நாட்டு மிழலை என்றும் இருவேறு நாடுகளில் இரு வேறு மிழலைகள் இருத்தலைச்சுட்டியுள்ளார். இவை அனைத்தையும் கவனித்த சேக்கிழார், குறும்பரது பதி `மிழலை நாட்டில் உள்ள பெருமிழலை என்று தெளிவாகக் குறித்துச் சென்றனர். மிழலை நாடு என்பது கும்பகோணத்தை அடுத்த நிலப்பகுதி. அங்கு `மிழலை என்ற பெயருடன் அழிந்த நிலையில் ஓர் ஊர் இருக்கின்றது. அங்கு அழிந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதன் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளில் குறும்ப நாயனாரது சிலையும் காணப்படுகிறது. இங்ஙனம் குழப்பத்திற்கு இடமாகவுள்ள பதிகளைச் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அவர் தமது யாத்திரையிற் கொண்ட பேருழைப்பை நாம் நன்கறியக்கூடுமன்றோ? தஞ்சாவூர். செருத்துணை நாயனார் என்பவர் பிறந்த பதி தஞ்சாவூர் என்பது. அது மருகல் நாட்டைச் சேர்ந்தது என்று நம்பியாண்டவர் நம்பி குறித்தார். `மருகல் நாடு எந்தப் பெருநாட்டைச் சேர்ந்தது? என்ற ஐயம் நூலைப் படிப்பவர்க்கு உண்டாகுமன்றோ? சேக்கிழார் அக்குறையைப் போக்க, ``பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர் என்று கூறுமுகத்தான், மருகல் நாடு சோழ நாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெளிய வைத்தார். இம்மருகல் நாட்டின் தலைநகரான மருகல், பாடல்பெற்ற `திருமருகல் என்னும் பழம்பதியாகும். அது நன்னிலம் தாலூகாவில் உள்ள ஊராகும். அதற்கு ஐந்து கல் தொலைவில் தஞ்சாவூர் இருக்கின்றது. இஃது இராஜராஜன் காலத்துத் தலைநகரான தஞ்சாவூரினும் வேறுபட்டதாகும். திருப்பெருமங்கலம். இது கலிக்காம நாயனார் பிறந்த ஊராகும். இதனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையிற் குறிக்கவில்லை; நம்பியாண்டார் நம்பியும் தமது திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் ஒருவரே இவ்வூரின் பெயரையும் இதன் வளத்தையும் விளக்கமாகத் தமது நூலிற் கூறியுள்ளார். ``சோழ நாட்டில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரைக்குக் கிழக்குப் பக்கம் உள்ளது திருப்பெருமங்கலம். அஃது ஆடும் கொடிகளைக் கொண்ட உயர்ந்த மாடங்களையுடைய பெரிய நகரம். அதுவே சோழர் சேனைத் தலைவராய கலிக்காம நாயனார் வாழ்ந்த திருப்பதி, என்பது சேக்கிழார் வாக்கு. இப்பழம்பதி காவிரி வடகரைக்குக் கிழக்கே திருப்புன்கூருக்குப் பக்கத்தில் சிற்றூராக இருக்கின்றது. கஞ்சாறூர். இவ்வூரைப்பற்றிச் சுந்தரரும் நம்பியும் ஒன்றுமே குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் இவ்வூரின் பெயர், வளம் இவைப்பற்றி ஆறு பாக்களைப் பாடியுள்ளார். ``வயற் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் என்பது சேக்கிழார் வாக்கு. இப்பதி சீகாழியை அடுத்துள்ள ஆனந்த தாண்டவபுரம் என்பது. மானக்கஞ்சாறர் வரலாற்றில் கூறப்பட்ட பஞ்சவடி ஈசர், மாவிரதியார், மானக்கஞ்சாறர், அவர் திருமகளார் இவர்களுடைய உருவச்சிலைகள் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மேற்கில் கரும்புப் பயிர் செழித்து வளர்கிறது. இக்கரும்பு வளத்தாற்றான் சேக்கிழார் மேற் சொன்ன தொடரைக் குறித்தாற் போலும்! செங்குன்றூர். விறல்மிண்ட நாயனார் வாழ்ந்த பதி `செங்குன்றம் என்பது நம்பி கூற்று; அவ்வளவே. அது `சேர நாட்டுச் செங்குன்றூரா? கொங்கு நாட்டுச் செங்குன்றூரா (திருச்செங்கோடா)? என்று அந்தாதி படிப்போர்க்கு ஐயமுண்டாதல் கூடும். சேக்கிழார், இவ்வையத்தை அறவே அகற்ற விரும்பி `சேர நாட்டில் உள்ள பதிகளில் முன் வைத்து எண்ணத் தக்கது, விறல்மிண்டர் பிறந்த செங்குன்றூர், என்று தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். இவ்வாறு மயங்கத்தக்க இடங்களை எல்லாம் தெளிவாகக் கூறிச்சென்ற சேக்கிழார், சிவதல அறிவும் தமிழ் நாட்டு அறிவும் நிரம்பப் பெற்றவர், அங்ஙனம் நிரம்பிய அறிவைப் பெற்றமைக்கு அவர் செய்த தலயாத்திரையே காரணம் என்பன இதுகாறும் கூறிய பல சான்றுகளைக் கொண்டு நன்கு உணரலாம். நாயன்மார் மரபுகள். நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் ஏறத்தாழ 35 நாயன்மார்க்கு மரபு குறித்திலர். ஆயின், சேக்கிழார் அவருள் ஏறக்குறைய 27 நாயன்மார்க்கு மரபு குறித்துச் சென்றனர். இஃது அவரால் எங்ஙனம் இயன்றது? அவர் தமது தல யாத்திரையில் அந்தந்த தலத்தில் வாழ்ந்த வல்லார்வாய்க் கேட்டுணர்ந்த குறிப்புகள் கொண்டே இது கூற முடிந்தது எனக் கோடல் பொருத்தமே ஆகும். புதிய செய்திகள். பதினொரு திருமுறைகளிலும் பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்துட் காண்கின்றன. அவற்றுட் சிறப்பாகத் (1) திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, (2) நந்தனார் செய்த திருப்பணிகள், (3) சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை (4) சுந்தரர் - சங்கிலியார் திருமணம் என்பன குறிக்கத்தக்கவை. இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது. சண்டீசப் பதம். இதனைக் குறிக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துச் சிற்பத்தைப் பற்றிச் சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இறைவன் உமையம்தயாருடன் அமர்ந்து, தமது மடித்து ஊன்றிய வலக்காலின் அடியில் சண்டீசரை அமரவைத்து, தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து அவரது முடிமீது ஆட்டிச் `சண்டீசப் பதம் அருளும் நிலையை உணர்த்தும் இச்சிற்பம் கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கது. இதற்கு வலப்பக்கம் கணநாதர் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். இடப்பக்கம் பசுக்கள் (வேதங்களின் அறிகுறி) நிற்கின்றன. இச்சிற்பம் சேக்கிழார்க்கு முற்பட்டதென்பது சென்ற பிரிவில் விளக்கப்பட்டது. இம்மூன்று நிலைகளையும் ஒருங்கே பெற்ற சண்டீசப்பதச் சிற்பம் ஒரு பக்கமும், சண்டீசப் பதத்தை விளக்கும் சேக்கிழார் பாக்களை ஒரு பக்கமும் வைத்துப் பார்ப்பது நல்லது. ``அண்டர் பிரானும் தொண்டர்தமக் கதிப னாக்கி, `அனைத்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற் நடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார். `எல்லா வுலகும் ஆர்ப்பெடுப்ப எங்கும் மலர்மா ரிகள்பொழியப் பல்லா யிரவர் கணநாதர் பாடி ஆடிக் களிபயிலச் சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ நல்லா(று) ஓங்கநயகமாம் நங்கள் பெருமான் தொழுதணைந்தார். முதற் செய்யுள், இறைவன் சண்டீசர் முடியில் கொன்றைமாலை சூட்டுவதைக் குறிப்பது. இரண்டாம் செய்யுள் சண்டீசப்பதம் கண்ட உலகத்து உயிர்கள் நிலையை விளக்குபது: (1) எல்லா உலகத்தாரும் ஆரவாரித்து மலர்மாரி பொழிந்தனர்; (2) கணநாதர் பாடி ஆடிக் களித்தனர்; (3) மறைகள் துதி செய்தன; (4) பல்லியங்கள் ஒலித்தன. இவற்றுள் கணநாதர் கூத்தும் மறைகளும் (பசுக்கள் வடிவில்) சிற்பங்களாகக் காட்டப் பட்டுள்ளன. இராஜேந்திரன் காலமுதல் சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, சோழர் தலைநகரமாக இருந்த சிறப்புக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உண்டு. ஆதலின், சேக்கிழார் காலத்திலும் அதுவே தலைநகராமாக இருந்தது என்பது தெளிவு. சோழர் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார், நாளும் இக்கங்கை கொண்ட சோழீச்சரத்தைத் தரிசித்திருந்தமை இயல்பே: அங்குள்ள சண்டீசப்பதச் சிற்பம் அவருடைய கண்ணையும் கருத்தையும் ஈர்த்தது என்பதில் விளப்பில்லை. எனவே, இவர் இச்சிற்பச் சிறப்பை மேற்சொன்ன இரண்டு பாக்களில் சித்திரித்து விட்டார் போலும்! பழையாறையில் உருவச்சிலைகள். `இறைவனது கோவணத்துண்டை ஒரு தட்டில் வைத்து, அதற்க ஈடாக அமர்நீதியார் தம் செல்வங்களை எல்லாம் மற்றொரு தட்டில் வைத்தும் இரண்டும் சமமாக நிற்கவில்லை. ஆதலின், அவரும் அவர் மனைவியரும் இறைவனைத் தொழுது தட்டில் ஏறினர். இரு தட்டுகளும் நேர்நின்றன என்பது நம்பியாண்டார் நம்பி கூற்று. ஆயின் சேக்கிழார், `நாயனாரும் மனைவியாரும் அவர் தம் ஒரே புதல்வருடன் தட்டில் ஏறினர் என்று குறித்தார். சேக்கிழார் கூற்றில் புதிதாகப் `புத்திரர் சேர்க்கப்பட்டதேன்? அங்ஙனம் சேர்க்கக் காரணம் என்ன? அமர்நீதி நாயனாரது திருப்பதியாகிய பழையாறையில் உள்ள வடதளியில் - அமர்நீதி நாயனார், அவர் மனைவியார் இவர் தம் உருவச்சிலைகள் உள்ளன. அம்மையார் கைகளில் குழந்தை காண்கிறது. இவை கல்உருவங்கள், இவற்றைத் தவிரச் சேக்கிழார் கூற்றுக்கு வேறு சான்று இருந்ததென்று கூறக் கூடவில்லை. நாயன்மார் வாழ்ந்த இடத்துக் கோவில்களில் அவர் தம் உருவச் சிலைகளை எழுப்பி வழிபடல் பண்டை மரபு என்பது முன்பே குறிக்கப்பட்டதன்றோ? அம் மரபுப்படி பழையாறையில் எழுந்தருளப்பெற்றிருந்த உருவச்சிலைகளைப் பார்த்தே சேக்கிழார் இப்புதிய செய்தியைச் சேர்த்தனர் என்று கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால், சேக்கிழார் கேவலம் தலங்களைக் கண்டதோடு திருப்தி கொள்ளாமல், ஒவ்வொரு கோவிலிலும் உள்ள நாயன்மார் உருவச்சிலைகளை யும் நன்றாகக் கவனித்துக் குறிப்புகள் தயாரித்தவர் என்பது நன்கு வெளியாகும். திருமடங்கள். இன்னின்ன ஊர்களில் மடங்கள் இருந்தன என்பது திருமுறைகளில் குறிக்கப்படவில்லை. நாயன்மார் காலத்தில் எங்கெங்கு மடங்கள் இருந்தன என்று கூறத்தக்க வேறு நூலும் இல்லை. ஆனால், சேக்கிழார் காலத்தில் தமிழ் நாட்டில் பழையனவும் புதியனவுமாகப் பல மடங்கள் இருந்தன. திரு ஆவடுத்துறை, திருவதிகை போன்ற சிறந்த பதிகளில் பல மடங்கள் இருந்து சைவப்பணி ஆற்றிக்கொண்டு இருந்தன. சாதாரணப் புலவன் இங்ஙனம் விரவி இருந்த பழைய-புதிய மடங்கள் எல்லாம் நாயன்மார் காலத்தில் இருந்தனவாகக் கொண்டு நூல்பாடி விடுவான். அங்ஙனம் சேக்கிழார் மயங்கிக் கூறியிருப்பினும், அவர் தவறு செய்தார் என்பதைப் பிறர் அறிதலும் அருமை. அங்ஙனம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த அப்பெரும் புலவர் எல்லாப் பழைய மடங்களைப்பற்றியும் கூறவில்லை; புதிய மடங்களைப் பற்றியும் கூறவில்லை. அவர் திருவதிகை, சித்தவடம், திருநல்லூர், சீகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களூர், திருமருகல், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, ஒற்றியூர் முதலிய சில இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். இவற்றுள், (1) திருவதிகையில் இருந்து சேக்கிழாராற் குறிக்கப்பட்ட திலகவதியார் திருமடம் இன்று அழிந்த நிலையிற் கிடக்கின்றது; (2) திருப்பூந்துருத்தியில் அப்பரால் அமைக்கப்பட்ட திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று இன்று இடிந்து காணப்படுகிறது; (3) இவ்வாறே அமர்நீதி நாயனார் திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று திருநல்லூரில் பாழ்பட்டுக் கிடத்தலைக் காணலாம். காஞ்சியில் திருமேற்றளியை அடுத்து மடம் இருந்தது என்று பல்லவர் காலத்துக் கல்வெட்டே குறித்தலை முன்பு கண்டோம் அல்லவா? அங்ஙனமே திருவெற்றியூரிலும் திருமடம் இருந்ததைப் பல்லவர் கல்வெட்டே உறுதிப்படுத்துகிறது. இவற்றை நோக்கக், கல்வெட்டிற் குறிக்கப்படும் சந்தர்ப்பம் பெறாத மேற்சொன்ன மடங்கள் இருந்தில என்று கூறக் கூடுமா? சேக்கிழார் பெருமான் தமது தலயாத்திரையின்போது, `இன்னின்ன திருமடம் நாயன்மார் காலத்தது என்பதை நன்கு விசாரித்து அறிந்தமையாற்றான் பலவற்றையும் குழப்பிக் கூறாது, தெளிவாக மேற்சொன்ன திருமடங்களை மட்டும் குறித்துப் போந்தார் என்று கொள்வதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. கோவில்கள். நாயன்மார் காலத்தில் பாடல்பெற்ற கோவில்களாக இருந்தவற்றின் உண்மையான தொகை நமக்குத் தெரியவில்லை. தேவார ஏடுகள் நம்பிக்கு முன்னும் நம்பிக்குப் பின்னும் பல அழிந்து விட்டன. அவ்வளவோ? சேக்கிழார்க்குப் பிறகும் பல பதிகங்கள் ஒழிந்தன என்பது சேக்கிழார் கூற்றாலேயே அறியலாம். போனவை போக, இன்றுள்ள திருமுறைகளைக் கொண்டு காண்கையில், பாடல் பெற்ற கோவில்கள் ஏறத்தாழ 300 இருந்தன என்பது தெரிகிறது, அவற்றுட் பல, சோழர் காலத்திற் பெருஞ்சிறப்பு அடைந்தன: பல கோவில்கள் புதிய கோபுரங்களைக் கொண்டு விளங்கின. அங்ஙனம் இருந்தும் சேக்கிழார், `மதுரைக் கோவில், திருமுதுகுன்றக் கோவில், காஞ்சி - ஏகாம்பர நாதர் கோவில், தில்லைக் கூத்தப்பிரான் கோவில் போன்ற சிலவே நாயன்மார் காலத்திற் கோபுரத்துடன் விளங்கினவை; மற்றவை கோபுரம் அற்றவை என்று தெளிவாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது. அவர், `எல்லாக் கோவில்கட்கும் கோபுரம் உண்டு என்று பாடியிருப்பின், `அது தவறு என்று கூறத்தக்கவர் ஒருவரும் இல்லை அல்லவா? அங்ஙனம் இருந்தும், 300 கோவில்களில் ஏறக்குறைய 30 கோவில்களே கோபுரம் கொண்டனவாக இருந்தன என்று அவர் கூறுதல் - அவரது தலயாத்திரை நுட்பத்தை நமக்கு நன்கு அறிவிக்கும் சான்றாகும். முடிவுரை. `தாம் வரையப்புகும் நூலிற் குறிக்கத்தக்க இடங்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் நேரிற் சென்று கண்டு உள்ளவாறு உணர்ந்து வரைதலே சாத்திரீய வரலாற்று ஆசிரியரது சிறப்பியல்பு என்று இன்று மேனாட்டு நிபுணர் குறிக்கும் இலக்கணம், நம் தமிழ்ப் பெரும் புலவராகிய சேக்கிழாரிடம் இன்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்னரே குடி கொண்டிருந்ததை என்பதைக் காட்ட, இதுகாறும் கூறிய ஒவ்வொரு செய்தியும் தக்க சான்றாதல் காணலாம். 8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும் முன்னுரை. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் எந்த நூலாசிரியனும் தனது நூலை இயன்றவரை உண்மைக்கு மாறாக வரையத் தலைப்படான்; பொறுப்பற்றவன் வேண்டும் விகற்பங்களைக் கூறி நூலைப் பெரிதாக்கிப் பலவகை அபூத கற்பனைகளைப் புகுத்தி விடுவான். சேக்கிழார் பொறுப்புள்ள தலைமை அமைச்சர் பதவியில் இருந்தமையின், பொறுப்புணர்ச்சியோடு நாயன்மார் வரலாறுகளை எழுத விரும்பினார்; அதனாற்றான் தமிழகம் முழுவதும் சுற்றிக் குறிப்புகள் திரட்டினார். அவர் அமைச்சராக இருந்தமையின், அரசியல் அறிவுடையவராக இருந்தவர் என்று கோடல் முறையே ஆகும். அவர் அவ்வரசியற் கண்கொண்டு 63 நாயன்மாரைக் கவனித்ததில், கீழ்வரும் விவரங்களைக் கண்டனர். 63 நாயன்மாருள், 1. சேரர் ஒருவர்- சேரமான் பெருமாள் நாயனார்; 2. சோழர் இருவர் - (1) கோச்செங்கட் சோழர், (2) புகழ்ச்சோழர்; 3. பாண்டியர் ஒருவர் - நின்றசீர் நெடுமாற நாயனார்; 4. மங்கையர்க்கரசியார் - சோழன் மகளும் பாண்டியன் மனைவியுமாவர்; 5. பல்லவர் இருவர் - (1) ஐயடிகள் காடவர்ககோன், (2) கழற்சிங்கத்; 6. களப்பிரர் ஒருவர் - கூற்றுவ நாயனார்; 7. சிற்றரசர் நால்வர் - (1) திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற மலைநாட்டை யாண்ட மெய்ப் பொருள் நாயனார், (2) திருநாவலூரைத் தலைநகராகக் கொண்ட திருமுனைப்பாடி நாட்டை யாண்ட நரசிங்க முனையரையர், (3) கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்ட கோனாட்டை (புதுக்கோட்டைச் சீமையை) ஆண்ட இடங்கழி நாயனார், (4) சோழநாட்டின் உட்பகுதிகளுள் ஒன்றான மிழலை நாட்டை ஆண்ட குறும்ப நாயனார்; 8. பல்லவர் படைத்தலைவர் - பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர்; 9. சோழர் படைத்தலைவர் மூவர் - (1)கோட்புலி நாயனார், (2) மானக்கஞ்சாற நாயனார், (3) கலிக்காம நாயனார், 10. பாண்டிய அமைச்சர் - குலச்சிறையார்; 11. களப்பிரர் குழப்ப காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மூர்த்தி நாயனார் என்பவராவர். இவ்வாறு 63 நாயன்மாருள் அரசியல் தொடர்பு கொண்டோர் 18பேர் ஆவர். இவர்கள் வரலாறுகளை இயன்ற வரை அவ்வம் மரபினரைக் கேட்டுக் குறிப்புகள் தொகுத்தல் நல்லதன்றோ? சேக்கிழார், இவ்வரசியற் கண்கொண்டு ஏனைய நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்தபொழுது மேலும் பல புதிய அரசர்களைப்பற்றி அறியவேண்டியவர் ஆனார். அவர்கள்- 1. அப்பரது வரலாற்றிற் குறிக்கப்பட்ட மஹேந்திரவர்மன் என்ற பல்லவன்; 2. பூசலார் புராணத்திற் கூறப்பட்ட இராஜசிங்கன் என்ற பல்லவன்; 3. தண்டியடிகள் வரலாற்றிற் சொல்லப்பட்ட சோழ அரசன்; 4. அப்பரைக் கண்டு லிங்கத்தை மறைத்த சமணரைத் தண்டித்து லிங்கத்தை வெளிப்படுத்திய சோழ அரசன்; 5. திருப்பனந்தாளில் யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயன்ற- குங்கிலியக் கலயரைப் பணிந்து பாராட்டிய சோழ அரசன்; 6. சுந்தரர் காலத்தில் பாண்டியனுடன் இருந்த அவன் மருமகனான சோழ அரசன் என்பவர் ஆவர். இங்ஙனம் அரசியர் தொடர்புடையார் பலருடைய உண்மை வரலாறுகளை அறியவேண்டிய பொறுப்புச் சேக்கிழாரைச் சேர்ந்தது. இவர்களைப் பற்றித் தம் மனம் போனவாறு அவர் நூல் பாடியிருப்பின், இவர்களைச் சேர்ந்த - சேக்கிழார் காலத்தில் இருந்த அரச மரபினர் அவர் நூலை மதிக்க வழியில்லை அல்லவா? ஆதலின், அந்தந்த அரச மரபினரும் ஏற்றக் கொள்ளத்தக்க நிலையில் தமது பெருநூல், உண்மைச் செய்திகள் பொருந்தியதாக இருத்தல் வேண்டும் என்ற கவலை, பொறுப்புள்ள சேக்கிழார்க்கு உண்டாகி இருத்தல் வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. இனி, இவ்வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார்களைப் பற்றியும், அரசர்களைப்பற்றியும் சேக்கிழார் கூறும் குறிப்புகள் இன்றளவும் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுச் செய்திகட்குப் பொருந்தியனவாக உள்ளனவா என்பதையும், அப்பெரும் புலவர் எந்தச் சான்றுகள் கொண்டு இவர்கள் வரலாறுகளைப் பாடியிருத்தல் கூடும் என்பதையும் ஒருவாறு ஆராய்வோம். மூர்த்தி நாயனார். `இவர் காலத்திற்றான் வடுகக் கருநாடர் வேந்தன் ஒருவன் கடல்போன்ற சேனையோடு வந்து பாண்டியனை விரட்டி நாட்டைக் கைக்கொண்டான். அவன் சைவன் அல்லன்; ஆதலின், சிவன், கோவில்கட்குத் தீங்கு செய்தான்; நாளும் சொக்கநாதர் கோவிலுக்குச் சந்தனம் அரைத்து உதவிவந்த மூர்த்தி நாயனாருக்குச் சந்தனம் கிடைக்காதவாறு செய்தான் என்பது சேக்கிழார் குறிப்பாகும். இங்ஙனம் பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டவன் களப்பிகுல காவலனான `அச்சுத விக்கந்தன் என்பது தமிழ் நாவலர் சரிதை, புத்ததத்தர் கூற்று, வேள்விக்குடிப் பட்டயம் இவற்றால் அறியப்படும் உண்மையாகும். இக்களப்பிரர் காலத்தில், பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்த பாண்டியனால் விடப்பட்ட பிரம்மதேய உரிமை அழிக்கப்பட்டுவிட்டது என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தால் அறியலாம். மேலும், இக்களப்பிரர் ஆட்சியிற்றான் சமண சங்கம் பாண்டிய நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. எனவே, பாண்டிய நாடாண்ட களப்பிரர் சைவ விரோதிகள் - வைதிய விரோதிகள் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாகம். விளக்க மாகவே, மூர்த்தியார் சிவப்பணி செய்யாவாறு களப்பிர அரசன் இடையூறு விளைத்தான் என்று சேக்கிழார் கூறுதல் வரலாற்றுச் செய்திக்குப் பொருத்தமானதாகவே காணப்படல் காண்க. மூர்த்தியார் காலம் அச்சுத விக்கந்தன் காலமான (ஏறத்தாழக்) கி.பி. 450 என்னலாம். கோச்செங்கட் சோழன். இவன் பொய்கையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்றவன்; அப்பர், சம்பந்தர், சுந்தரரால் ஏத்தெடுக்கப் பெற்றவன். பிறகு திருமங்கையாழ்வாராற் பலபடப் பாராட்டப்பெற்றவன். இவன் சோழராட்சிக்கு உட்பட்ட தொண்டைநாட்டையும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட சோணாட்டையும் வென்ற பெருவீரன் என்று சொல்லலாம். இவன் குடகொங்கர், சேரர் முதலியோரையும் வென்றவன். இப்பேரரசன், பல்லவராலும் களப்பிரராலும் சைவ சமய ஆதரவு குறைந்து வருதலைக் கண்டு, எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோவில்களைத் தமிழ் நாட்டிற் கட்டுவித்த பெரும் பக்தன்; தில்லையைச் சிறப்புடைய சிவதலமாக அமைத்த சிறப்புடையான்; தில்லைவாழ் அந்தணர்க்கு மாடங்கள் பல சமைத்தவன். இவன், வரலாற்றில் இடம்பெற்ற சோழ வேந்தன். இவனைப்பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமையாகப் பேசுகின்றன. சோழர் காலத்து நூல்கள் யாவும் சிறப்பிக்கின்றன. இத்தகைய பேரரசனைப் பற்றிச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புகளில் மாறானாவை என்று ஒதுக்கத் தக்கவை இல்லை என்னலாம். பிற சோழ மன்னர்கள். புகழ்ச்சோழர் முதலிய சோழ மன்னர்களைப்பற்றி அறியத்தக்க இலக்கியமோ, பிற சான்றுகளோ இன்று கிடைக்குமாறில்லை. ஆயின், இவர்களைப்பற்றிச் சேக்கிழார் கூறும் விவரங்களோ பலவாகும். சோழர் அமைச்சரான அவர், சோழ அரசர் செய்திகளை அச் சோழர் மரபினரைக் கேட்டே எழுதியிருப்பார் எனக் கொள்ளலே நேர்மையான முடிவாகும். ஐயடிகள் காடவர்கோன். `இவர் வடமொழி - தென்மொழிகளில் சிறந்த புலவர்; வடபுலம் கைக்கொண்டவர்; தம் மகனிடம் அரசை ஒப்புவித்துச் சிவதல யாத்திரை செய்தவர்; ஒவ்வொரு தலம் பற்றியும் ஒரு வெண்பாப் பாடினார் என்பது சேக்கிழார் கூறும் செய்தியாகும். இக்குறிப்புக் கல்வெட்டைக் கொண்டு மெய்ப்பிக்கக் கூடவில்லை. சேக்கிழார் காலத்தில் இக் காடவர் கோன் மரபில் வந்த பல்லவன் - மோகன் ஆட்கொல்லி என்பவன். அவன் சோழப் பேரரசில் உயர் அலுவலாளனாக இருந்தான். அவனுடைய முன்னோரும் சோழப் பேரரசில் பங்குகொண்டு இருந்தனர். ஆதலின், அவனது மரபினருள்முன்னோரான ஐயடிகள் வரலாற்றுக் குறிப்புகள் அவன் வழியாகச் சேக்கிழார் அறிந்திருத்தல் கூடும். ஐயடிகள் வாடிய சேக்ஷத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழுவதும் இருந்திருக்கலாம். அதன் பாயிரத்தில் ஐயடிகள் வரலாறு சுட்டப்பெற்றிருக்கலாம். இவ்விரண்டில் ஒன்றன் மூலமாகவே சேக்கிழார் ஐயடிகளைப் பற்றிய குறிப்புகளைத் தொகுத்தார் எனக் போடலே பொருத்தமானது. மஹேந்திரவர்மன். `இவன் அப்பர் காலத்துப் பல்லவப் பேரரசன். இவன் முதலிற் சமணனாக இருந்தான்; பிறகு சைவனாக மாறினான். திருப்பாதிரிப் புலியூரில் இருந்த வரலாற்றுப் புகழ்பெற்ற சமணர் கோவிலையும் மடத்தையும் அழித்தான்; அந்தச் சிதைவுகளைக் கண்டு திருவதிகையில் குணபர ஈவரம் கட்டினான் என்பது சேக்கிழார் கூற்று. `குணபரன் என்பது பல்லவ மஹேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்று. அவன் சமணனாக இருந்து சைவனானதை அவன் வெட்டுவித்த திருசிரபுரம் மலைக்கோவில் கல்வெட்டே உணர்த்துகிறது. திருப்பாதிரிப்புலியூருக்கு அண்மையில் திருவந்திபுரம் செல்லும் பெரிய சாலை ஓரம் இடிந்து கிடக்கம் கட்டடச் சிதைவுகளும் அங்குள்ள சமண விக்கிரகமும் புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்தை நினைப்பூட்டுவனவாகும். திருவதிகையில் -பண்ணுருட்டியிலிருந்து பாதிரிப்புலியூர் செல்லும் பெரிய சாலையில் திருவதிகைப் போலீ நிலையத்திற்கு எதிரில் பழுதுபட்டுக் கிடக்கும் சிவன்கோவிலே `குணபர ஈவரம் என்பது. மண்மேடிட்டுப் புதையுண்டு கிடந்த அக்கோவில் 30 ஆண்டுகட்கு முன்புதான் கண்டறியப்பட்டு, இன்றைய நிலையிற் காட்சி அளிக்கின்றது. சிறுத்தொண்டர். (1) `இவர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர்; வைத்தியக்கலை, வடநூற்கலை, படைக்கலப் பயிற்சி முதலியவற்றில் சிறந்த புலமை உடையவர்; (2) தம் மன்னற்காகப் பல போர்களில் ஈடுபட்டவர்; (3) தம் அரசன்பொருட்டு வாதாபியைத் தாக்கி அழித்தவர்; (4) திருச்செங்காட்டங் குடியில் கணபதீச்சரத்துக் கடவுளுக்குத் தொண்டு செய்துவந்தவர் என்பது சேக்கிழார் கூறும் குறிப்பாகும். 1. `மஹாமாத்திரர் என்பவர் அரசியல் மந்திராலோசனைச் சபையினர். அரசர் இவர்களைக் கலந்தே யுத்த யாத்திரை செய்வதும் வேறு செயல்களிற் புகுவதும் வழக்கம் என்பது சாணக்கியர் பொருள் நூல் புகலும் விளக்கமாகும். `இம் மயாமாத்திரர்பல கலைகளில் வல்லவராகவும் சிறந்த போர் வீரராகவும் நற்குடிப் பிறப்புடையவராகவும் இருத்தல் வேண்டும் என்பது மநுதர்ம சாதிரக் கூற்றாகும். சேக்கிழார் கூறும் சிறுத்தொண்டர் இலக்கணம், சாணக்கியர்பொருள் நூலுக்கும் மநுவின் விதிக்கும் ஒத்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. 2. வாதாபியைத் தூளாக்கிச் சாளுக்கியரை ஒடுக்கிப் பதின்மூன்று ஆண்டுகள் தன் ஆட்சியில் வாதாபியை வைத்துக்கொண்ட புகழுடையவன், முன் சொன்ன மஹேந்திரன் மகனான நரசிம்மவர்மன் ஆவன். எனவே, அவனிடமே சிறுத்தொண்டர் சேனைத் தலைவராக இருந்தனராதல் வேண்டும். நரசிம்ம பல்லவன் வாதாபியைப் பிடித்த காலம் ஏறத்தாழக் கி.பி. 642. அவனது ஆட்சியில் அத்தொன்னகரம் இருந்த காலம் கி.பி. 642-655 ஆகும் என்பது வரலாற்று ஆசிரியர் கருத்தாகும். இங்ஙனம் பல்லவரால் தமது பண்டை நகரம் பாழானதால், தங்கள் பெருஞ் சிறப்புக்கு இழுக்கு ஏற்பட்டது என்று சாளுக்கியரே புலம்பினர் என்பதற்கு அவர் தம் பட்டயங்களே போதிய சான்றாகும். இங்ஙனம் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கொண்டே அறியத்தக்க வாதாபிப் படையெடுப்பைச் சேக்கிழார் பெருமான் சிறுத்தொண்டர் வரலாற்றிற் செருகியுள்ளனர் எனின், அவரது வரலாற்றுப் புலமையையும் நுண்ணிய அறிவையும் என்னெனக் கூறி வியப்பது! 3. கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங் குடியில் உத்தராபதீசர் கோவிலுக்குள் சிறிய கோவிலாக இருக்கின்றது. இதன் சுவர்களிற்றாம் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் காணக் கிடக்கின்றன. இக் கோவிலைத் தன் அகத்தே பெற்ற உத்தராபதீசர் கோவிற் சுவர்களில் சோழர் கல்வெட்டுகள் இல்லை. எனவே, சிறுத்தொண்டர் காலத்தில் இன்றைய பெரிய கோவில் இல்லை என்னலாம். முதல் இராஜராஜன் காலம் முதல் கணபதீச்சரம் சிறப்புறத் தொடங்கியது. அங்கச் சித்திரைவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டது; அப்போது அடியாரை உண்பிக்கச் `சிறுத்தொண்ட நம்பி மடம் கட்டப்பட்டது. ``சிறுத் தொண்டர், `சீராளதேவர் என்ற பெயர்கொண்ட சிவபிரானுக்கும் வீரபத்திரர்க்கும் தொண்டு செய்து வந்தவர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. உத்திராபதியார் சிறுத்தொண்டர் மாளிகையில் உபசரிக்கப்பட்டார்; படவே, அம்மாளிகை இருந்த இடமே நாளடைவில் உத்தராபதீசர் கோவிலாக மாறி இருக்கலாம். `சிறுத்தொண்டர் வரலாற்றில் உள்ள தெய்வீகச் செயல் ஒழிந்த ஏனைய அனைத்தும் இங்ஙனம் கல்வெட்டுச்சான்று கொண்டனவாகக் காண்கின்றன.1 நெல்வேலி வென்ற நெடுமாறன். `சம்பந்தரால் சைவமதம் புகுந்த நெடுமாறன் நாட்டை நன்னெறியில் ஆண்டுவருங்கால், வடபுலத்துப் பெருமன்னன் ஒருவன் கடல்போன்ற தானையுடன் வந்து பாண்டிநாட்டை எதிர்த்தான்; இருதிறத்தார் படைகளும் திறட்படிப் போரிட்டன; யானைகள் யானைகளுடன் போரிட்டன; குதிரைகள் குதிரைகளுடன் போரிட்டன; வீரர் வீரருடன் போரிட்டனர். வடபுலத்து முதல் மன்னன் படை நெல்வேலியில் சரிந்தது. பாண்டியன் வெற்றி பெற்றான். இச்செய்தி நெடுமாறன் புராணத்திற் சேக்கிழார் குறித்துள்ளார். இது சம்பந்தமான வரலாற்று உண்மை யாதென இங்குக் காண்போம். பல்லவர் - சாளுக்கிய போர் I. சிறுத்தொண்டர் வாதாபியை வென்றபொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்து அப்போரில் தோற்றவன் இரண்டாம் புலிகேசி என்பவன். அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தன் என்பவன். அவன் பல்லவனைப் பழிக்குப் பழி வாங்கச் சமயம் பார்த்திருந்தான். அவன் காலம் கி.பி. 654-680. அப்பொழுது பல்லவப் பேரரசனாக இருந்தவன் பரமேவரவர்மன் (கி.பி. 668-685). அதே காலத்திற் பாண்டிய நாட்டை ஆண்டவன் நெடுமாறன் (கி.பி. 640-680). முதல் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக்கொண்டான். பரமேவரவர்மன் ஆந்திர நாட்டை நோக்கி ஓடிவிட்டான். தன்னை எதிர்ப்பவர் இல்லாததால், சாளுக்கியன் பல்லவப் பெருநாட்டின் தென் எல்லையான உறையூர்வரை சென்று அங்குத் தங்கி இருந்தான். அவன் அங்கிருந்த ஆண்டு கி.பி. 674 ஆகும். சாளுக்கியர்-பாண்டியர் போர். பல்லவ நாட்டைக் கைப்பற்றி அதன் தென் எல்லையில்-பாண்டிய நாட்டின் வட எல்லையில் தங்கிய சாளுக்கியன், தெற்கே இருந்த பாண்டிய நாட்டையும் கைப்பற்ற எண்ணினான் போலும்! அவனது கடல்போன்ற படை பாண்டிய நாட்டைத் தாக்கியது. சிறந்த சிவபக்தனும் பெரு வீரனுமான நெடுமாறன் தன் படைகளுடன் சாளுக்கியனை எதிர்த்தான். இருதிறத்தார்க்கும் கொடிய போர் நடந்தது. போர் நடந்த இடம்2 நெல்வேலி என்பது. பல நாட்களாகப் பல இடங்களில் பல்லவப் படைகளுடன் போர் நடத்திய சாளுக்கியர் படை, பாண்டியர் படைக்கு ஆற்றாது முறிந்தது. இறுதியில் பாண்டியன் வெற்றி பெற்றான். பல்லவர்-சாளுக்கியர் போர் II. பாண்டியர் - சாளுக்கியர் போர் நடந்துகொண்டிருந்தபோழுதோ அல்லது பாண்டியர் வெற்றிக்குப் பிறகோ, அறியோம்; வடக்கு நோக்கி ஓடிய பல்லவன் பெருஞ்சேனையைத் திரட்டிக் கொண்டு வந்து சாளுக்கியனைத் திடீரெனத் தாக்கினான். `போர் கடுமையாக நடந்தது. வெற்றி மகள் எவர் பக்கம் சேருவாளோ என்று ஐயிறத்தக்கவாறு ஒருகால் பல்லவர்க்கு வெற்றி, மற்றொருகால் சாளுக்கியர்க்கு வெற்றி கிடைத்துவந்தது. இறுதியில் பெருவள நல்லூர் என்ற இடத்தில் பல்லவன் வெற்றி பெற்றான்; சாளுக்கியன் முற்றிலும் முறியடிக்கப்பட்டுக் கந்தையாடையுடன் தப்பி ஓடினான் என்று பரமேவரவர்மனது கூரம் பட்டயம் அறிவிக்கின்றது. நெல்வேலிப் போரில் நெடுமாறனக்குத் துணையாக அவன் மகன் கோச்சடையன் பங்கெடுத்துக்கொண்டு `ரண ரஸிகன் என்ற விக்கிரமாதித்தனை வென்றதால், தன்னை `ரண தீரன் என்று அழைத்துக் கொண்டான். இங்ஙனமே பரமேவரனுக்குத் துணை சென்ற அவன் மகனான இராஜ சிங்கன், தன்னை `ரண ஜயன் என்று அழைத்துக்கொண்டான். நெல்வேலிப் போரின் முக்கியத்துவம். விக்கிரமாதித்தன் முதலில் பரமேவரனைத் தோற்கடித்து அவனது பெருநாட்டைக் கைப்பற்றிக்கொண்டான்; தெற்கே இருந்த பாண்டிய நாடும் அவன் படைக்கு இரையாகி இருக்குமாயின், விந்தமலை முதல் கன்னிமுனைவரை சாளுக்கியர் பேரரசு நிலைபெற்றுவிடும். சாளுக்கியன் நெடுமாறனைப்போல அழுத்தமான சைவன் என்று கூறமுடியாது. ஆதலின், சாளுக்கியன் வெற்றி சைவத்தின் வெற்றியாகாது. சமணத்தி லிருந்து பாண்டிய நாட்டை மீட்கச் சம்பந்தர் அரும்பாடு பட வேண்டியவரானார். அங்ஙனம் அருட்பாடு பட்டு நாடும் அரசனும் சைவமயமான பிறகு, இப்பெரும் போர் நிகழ்ந்தது. சைவத்தில் அழுத்தமான நெமாறன் வெற்றியே தமிழ் நாட்டில் சைவம் வளரத் துணைசெய்யும்; மேலும், நெடுமாறன் தமிழன். நெல்வேலிப் போரில் பாண்டியன் சாளுக்கியனை எதிர்த்திரா விடில், பின்னர் நடந்த பெருவள நல்லூர்ப் போரில் சாளுக்கியனைப் பல்லவன் வென்றிருத்தல் இயலாது. எங்ஙனம் பார்ப்பினும், நல்வேலி வெற்றி தமிழ் நாட்டு உரிமைக்கும் சைவசமய வளர்ச்சிக்கும் உயிர் நாடி போன்றதாயிற்று. இந்த முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் நன்குணர்ந்து `நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று பாண்டியனை வழிவழியாகப் பாராட்டி வந்தனர்போலும்; அப்பாராட்டின் பொருட்சிறப்பை நெல்வேலிப் போருக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகட்குப் பின்வந்த சுந்தரர் நன்குணர்ந்து, தமது திருத்தொண்டத் தொகையில் அவனது பக்திச் சிறப்பைப் பாராட்டாமல் ``நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நிறன்சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன், என்று பாண்டியனது போர்ச்சிறப்பு ஒன்றையே பாராட்டி ஏத்தெடுப்பாராயினர் என்பது இங்கு நுட்பமாக உணரத்தக்கது. சேக்கிழார் வரலாற்று உணர்ச்சி. இக்காலத்தில் கல்வெட்டு, பட்டயம் இவற்றைக்கொண்டே அறியத் தக்க (மேற்சொன்ன) பல்லவர்-சாளுக்கியர் போர்கள், பாண்டியர்-சாளுக்கியர் போர் ஆகியவற்றின் விவரங்களைச் சேக்கிழார் எங்ஙனம் சேகரித்தார்? அவர் பாண்டியர்-சாளுக்கியர் போர் விவரங்களை ஆறு பாக்களில் அழகாக விளக்கியுள்ளார். முதல் விக்கிரமாதித்தனைப் பாண்டியனும் எதிர்த்தான் என்பதனைச் சாளுக்கியர் பட்டயமே ஒப்புக்கொள்ளகிறது. இங்ஙனம் பட்டயச் செய்திக்கும் இலக்கியச் செய்திக்கும் மிகவும் பொருத்தமாக நெல்வேலிப் போரை விளக்கமாகப் படம் பிடித்துத் தந்த சேக்கிழாரது வரலாற்று உணர்ச்சியை நாம் என்னென்று பாராட்டுவது! நம்பியாண்டார் நம்பி போரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகத் தெரியவில்லை. சேக்கிழார் அதன் சிறப்பை நன்கு உணர்ந்து, நெடுமாறர் புராணத்துட் அப்போர் ஒன்றையே பற்றிப்பாடியிருத்தல், அவரது அரசியல் அறிவு நுட்பத்தையும் முதல் நூல் ஆசிரியர் கருத்தை அறியும் ஆற்றலையும் அங்கைக் கனிபோல் அழகுறக் காட்டுவதாகும். பூசலார் வரலாறு. `பூசலார் என்பவர் திருநின்றவூரின்; பிராமணர். இவர் சிவன் கோவில் கட்டப் பொருள் தேட முயன்றார்; பொருள் கிடைக்கவில்லை; உடனே மனத்தாற் கோவில் கட்ட முயன்று சில நாட்களிற் கட்டிமுடித்தார்; கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பிட்டுவிட்டார். அதே நாளில் தான் கட்டிய கயிலாசநாதர்கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதாகப் பல்லவ வேந்தனான இராஜ சிங்கன் தீர்மானித்தான். இறைவன் அரசன் கனவிற் சென்று பூசலார் விருப்பத்தைத் தெரிவித்து வேறொரு நாளைக் குறிக்குமாறு ஆணை இட்டான். அரசன் வியந்து திருநின்றவூருக்கு விரைந்து சென்று பூசலாரைச் சந்தித்து அவரது அகக்கோவிற் சிறப்பை அறிந்து மீண்டான். அப்பல்லவன் தான் கட்டிய கோவிலுக்குப் பெருஞ் செல்வத்தை வைத்தான். அது சேக்கிழார் கூறும் புராண விவரமாகும். அசரீரி கேட்டமை. இராஜ சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவில் வடமொழிக் கல்வெட்டு ஒன்றில், சென்ற யுகத்தில் துஷ்யந்தன் அசரீரி கேட்டதாகப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தக் கொடிய கலியுகத்தில் இராஜ சிங்கன் அசரீரி கேட்டது வியப்பே! என்ற குறிப்புக் காணப்படுகின்றது. இக் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டே பல்லவன் கனவு கண்டதாகச் சேக்கிழார் கூறியுள்ளார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும். பூசலார் கோவில். பூசலார் மனத்தில் எடுத்த கோவிலின்அடையாளமாகச் சிவன் கோவில் ஒன்று நின்றவூரில் இருக்கின்றது. அஃது அராய்ச்சிக்கு உரியது.3 அக்கோவிலைச் சுற்றிலும் இராஜ சிங்கன் காலத்துக் கற்றூண்கள் சிதைந்து காணப்படுகின்றன. கோவில் பல்லவர் காலத்துக் கோவில். அதன் வெளி மண்டபத்தில் இராஜ சிங்கன் உருவச்சிலை இருக்கின்றது. மூலதானத்தில் லிங்கத்திற்கு எதிரில் பூசலார் உருவச்சிலை இருக்கின்றது. கோவிலில் உள்ள லிங்கத்திற்கு மனக்கோவில் கொண்டார் என்னும் பெயர் வழங்குகிறது. கச்சிக் கற்றளி. காஞ்சிபுரத்தில் முதற் கற்கோவிலாகக் காட்சியளித்தது இராஜ சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிலே ஆகும். அஃது அழிவுற்ற இந்நிலையும் பார்ப்பவர் வியக்கத் தக்கவாறு காட்சி அளிக்கின்றது எனின், இராஜ சிங்கன் காலத்தில் எவ்வளவு சீரும் சிறப்பும் பெற்றதாக இருந்திருத்தல் வேண்டும்! அக்கோவிலுக்கு இராஜ சிங்கன் பெருஞ்செல்வம் வைத்திருந்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். அவர் கூற்று உண்மை என்பதைச் சாளுக்ககியர் கல்வெட்டுகள் குறிக்கின்றன. 1. இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, இராஜ சிம்மேவரத்தின் (கயிலாசநாதர் கோவிலின்) பெருஞ்செல்வத்தைப் பார்வை யிட்டு மகிழ்ந்தான்; அதனை அக் கடவுளுக்கே விட்டு மகிழ்ந்தான் என்று இரண்டாம் விக்கிரமாதித்தனது (கயிலாசநாதர் கோவிலில் உள்ள) கன்னடக் கல்வெட்டு அறிவிக்கிறது. 2. காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்ரமாதித்தன் இராஜ சிம்மேவரத்துப் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்தான்; அதனை அக்கோவிலுக்கே விட்டு மகிழ்ந்தான் என்று அவனது கேர்ந்தூர்ப் பட்டயம் குறிக்கின்றது. 3. காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராஜ சிம்மேவரத்தின் பெருங் செல்வத்தைக் கைக் கொள்ளாது, அங்குள்ள விக்கிரகங்களைப் பொன்மயமாக்கி மீண்டான் என்று வக்கலேரிப் பட்டயம் கூறுகிறது. வியப்பினும் வியப்பு. இத்தகைய பெருஞ்செல்வம் கொண்டு வியத்தகு முறையில் சிறப்புற்று விளங்கிய கற்றளி, முதற் குலோத்துங்கன் காலத்தில் தன் சிறப்பை இழந்தது. அக்கோவில் மூடப்பட்டது; அதற்குரிய நிலங்கள் விற்கப் பட்டன; கோவில் திருச்சுற்றுகள், திருமடைவிளாகம் முதலியன பக்கத்தில் உள்ள அனைய பதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன. இவ்வாறு சிறுமையுற்று மூடப்பட்ட கோவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கழிந்த பிறகே விஜய நகர ஆட்சியின் போது திறக்கப்பட்டதாக அக்கோவில் கல்வெட்டே கூறுகின்றது. எனவே, சேக்கிழார் காலத்தில் அக் கோவில் மூடப்பட்டுக் கிடந்தது; திருச்சுற்று, திருமடை விளாகம் முதலியன இன்றி இழிநிலையில் இருந்தது என்பது தெளிவு. அங்ஙனம் இருந்தும், காவுணர்ச்சியும் வரலாற்று நுட்பமும் உணர்ந்த சேக்கிழார், அது கட்டப்பட்டபோது இருந்த சிறப்பைக் கல்வெட்டுகளைக்கொண்டு ஆராந்தும், காஞ்சியில் இருந்த சான்றோர் வாயிலாகக் கேட்டும் உண்மையை உணர்ந்த பிறகே, ``காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற மாடெலாம் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்தான் என்று தெளிவாக அதன் சிறப்பினைத் தாம் நேரிற் கண்டாற் போல அழுகுபடக் கூறியுள்ளார். இங்ஙனம் அவர் வரலாற்று உண்மை உணர்ந்து பாடி யிருத்தல் வியப்பினும் வியப்பே அன்றோ? கழற் சிங்கன். `இவன் மூன்றாம் நந்திவர்மன் என்று அறிஞர் ஆராய்ந்து கூறியிருத்தல் பொருத்தமானது.4 இவனைப் பற்றிச் சேக்கிழார் கூறும் செய்திகள் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் நந்திக் கலம்பகத்தையும் கொண்டே கூறத் தக்கவையாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இங்குக் காண்போம். 1. இவன், ``சிவனை வழிபட்ட சிறந்த பக்தன் என்பது பெரிய புராணக் கூற்று. இவன் ``சிவனை முழுதும் மறவான சிந்தையான் என்று நந்திக்கலம்பகம் நவில்கின்றது. இவன், ``நெற்றியில் நீறு தரித்தவன்; பல சிவன் கோவில்கட்குப் பல திருப்பணிகள் செய்தவன் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. 2. ``இவன் வடபுலத்தைச் சிவபிரான் அருளால் வென்றான் என்பது பெரியபுராணத் செய்தி. இதனை நந்திக் கலம்பகமும் ஒப்புகிறது. இவனது வேலூர்ப் பாளையப் பட்டயமும் இதனைக் குறிப்பாக உணர்த்துகின்றது. 3. இவன், ``நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான் என்பது சேக்கிழார் வாக்கு. ``நந்திவர்மன் (கழற் சிங்கன்) ஆட்சிக் காலத்தில்- வசந்தகாலம் மிகுதியாக விளக்க முற்றது போலவும், உயர்குடி மக்கள் நற்பண்புகளுடன் விளங்கினாற் போலவும், பெண்மணிகள் கற்பரசிகளாகத் திகழ்ந்தாற் போலவும், செல்வர் ஈகைக் குணத்துடன் வாழ்ந்தாற் போலவும், அறிஞர் அடக்கத்துடன் விளங்கினாற் போலவும், திருக்குளங்கள் தாமரையுடன் திகழ்ந்தாள் போலவும் - நந்திவர்மன் தன் குடிமக்களுடன் விளக்கமுற்றிருந்தான் என்பது வேலூர்ப் பாளையப் பட்டயக் கூற்றாகும். 4. இவன், ``பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. இதனையே திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளும் வேலூர்ப் பாளையப் பட்டயமும் உறுதிப்படுத்துகின்றன. 5. இவனுக்கு உரிமை மெல்லியலார் (சிலர் அல்லது பலர்) இருந்தனர் என்பது சேக்கிழார் வாக்கு. இவனுக்கு இரட்ட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கள் மகளான சங்கா என்பவன் பட்டத்தரசியாவள்; சிவபக்தி மேற்கொண்டு சிவபணிகள் செய்து வந்த மாறன் பாவை என்பவள் ஒருமனைவி என்று பாகூர்ப் பட்டயமும் கல்வெட்டுகளும் வறுகின்றன. .6. பட்டத்தரசி, `உரை சிறந்து உயர்ந்தவள்என்பது பெரிய புராணம். இதனை விளக்க வந்தது போல் உள்ள பாகூர்ப் பட்டய அடிகளைக் காண்க:- ``திருமாலுக்கு மனைவியாக அமைந்த இலக்குமி போல இராஷ்டிரகூடர் குடும்பத்திற் பிறந்த சங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்மர்க்கு மனைவியாக வாய்த்தாள். அவள் பொறுமையில் நில மகளை ஒத்தவள்; குடிமக்களால் தாயாகப் பாராட்டப்பட்டவள்; அரசனது புண்ணியமே உருவெடுத்தாற்போல விளங்கினவள். அவள் பேரரழகி; அறிவு நுட்பம் வாய்ந்தவள்; பல கலைகளிலும் வல்லவள். இந்த விளக்கத்தைப் படித்த பிறகுதான் ``உரை சிறந்து என்ற சேக்கிழார் தொடர்க்குப் பொருட் சிறப்பு உண்டாகிறது. சேக்கிழார், இத்தகைய தொடரை வேறு பெண்மணிகளைப் பற்றிக் கூறுமிடங்களிற் குறிக்கவில்லை. இங்குமட்டும் அவள் குறித்திருத்தலும், அதற்கேற்பப் பாகூர்ப் பட்டய விளக்கம் இருத்தலும், மேற்சொன்னவை அனைத்தும் கல்வெட்டுக்களைக் கொண்டே நிரூபிக்கவேண்டி இருத்தலும் நோக்கச், ` சேக்கிழார் பாகூர்ப் பட்டயத்தையும் பார்த்திருப்பார் போலும் என்பது எண்ண வேண்டுவதாகிறத. நரசிங்க முனையரையர். `முனையரையர் அல்லது `முனையதரையர் என்பவர் திருமுனைப்பாடி நாடாண்டவர். இவர்கள் முதலிற் பல்லவர் ஆட்சிக்கு அடங்கியும் பிறகு சோழர்க்கு அடங்கியும் இருந்த சிற்றரசர் ஆவர். இம்மரபினரைப் பற்றிய கல்வெட்டுகள் சிலவே ஆகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுகளிற் பழமையானது சுந்தரர் காலத்துக்குப் (கி.பி. 840-865) பதினைந்து ஆண்டுகட்கப் (கி.பி. 880) பிற்பட்டதாகும். அதனில், ``முனைபேரரையர் மகன் முனையர்கோன் இளவரையன் என்பது காணப்படுகிறது. சுந்தரரை வளர்த்த நரசிங்க முனையரையர் இக்கல்வெட்டிற் குறிக்கப்பட்ட முனைபேரரையர் ஆகலாம் என்று கோடல் பொருத்தமானது. முனையதரையர். 1. ``பல்லவப் பேரரசின் அழிவுக் காலத்தில் `முனையதரையன் அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார் என்று ஒருவன் இருந்தான் என்று திருவாலூர்க் கல்வெட்டு குறிக்கிறது. 2. வீர ராஜேந்திரன் ஆட்சியில் `வீர ராஜேந்திர முனையதரையன் என்பவன் இருந்தான். 3. விக்கிரமசோழன் ஆட்சியில், `முனையதரையன் ஒருவன் அமைச்சனாகவும் சேனைத்தலைவனாகவும் இருந்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது. இங்ஙனம் இம்முனையதரையர் மரபினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவருள் ஒருவரே சுந்தரரை வளர்த்தவரும் 63 நாயன்மாருள் ஒருவருமாகிய நரசிங்க முனையரையர் என்பவர். அவரைப்பற்றிய பல குறிப்புகளைச் சேக்கிழார் மேற்சொன்ன இறுதி முனையரையன் பால் பேட்டறிந்திருக்கலாம்; பொறுப்புள்ள அம்மரபினரைக் கேட்டு அந்நாயனார் புராணம் பாடுதலே சிறப்புடைத்தன்றோ? திருவாரூர்க் கல்வெட்டு. (1) ``சுந்தரர் தாயாரான இசைஞானியார் திருவாரூரிற் பிறந்தவர்; இசைஞானியார், திருவாரூர் - ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன் இசைஞானியார், சடையனார், சுந்தரர் என்ற மூவர் படிமங்களையும் ஆரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான், என்பது சேக்கிழார் காலத்துத் திருவாரூர்க் கல்வெட்டுச் செய்தியாகும். இக்குறிப்பை நோக்க, சுந்தரர் பிறந்த சிவாசாரியர் மரபினர் சேக்கிழார் காலத்தில் திருவாரூரில் இருந்தனர் என்பதை நம்பலாம். சேக்கிழார் அம்மரபினர் வாயிலா, (1) சுந்தரர் முனையரையரால் வளர்க்கப்பட்டமை, (2) சுந்தரர் - பரவையார் திருமணம், (3) சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பம், (4) பரவையார் ஊடலைத் தீர்க்க இறைவன் தூது சென்றமை போன்ற செய்திகளை - நூல்களைக் கொண்டு அறியப்படாத இத்தகைய செய்திகளைக் கேட்டறிந்திருக்கலாம் என்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமே ஆகும். சிற்றரசரான நரசிங்க முனையரையர் ஆதிசைவராகிய சுந்தரரை மகனாக ஏற்று வளர்த்துவந்தார் என்பதை நமக்கு முதன்முதல் அறிவிப்பவர் சேக்கிழாரே ஆவர். அவர் அத்துடன் விட்டு விடவில்லை; சுந்தரர் திருமணத்திற்கு ஓலை போக்கிய பொழுது, ``கொற்றவர் திருவிற்கேற்பக் குறித்து நாள் ஓலை விட்டார் என்று கூறினர்; பரவையாரை மணந்து சுந்தரர் திருக்கோவிற்குச் சென்ற பொழுது `அரசகுமாரனைப் போல ஊர்வலச் சிறப்புடன் சென்றார் என்றும் கூறினர். மேலும், பல இடங்களில் சுந்தரரை `நாவலூர் மன்னன், `நாவலூர்க் கோன் என்றும் சுட்டியுள்ளார். இங்ஙனம் பல இடங்களிலும், சுந்தரர் அரசர் செல்வாக்குப் பெற்றவர் என்பதைச் சேக்கிழார் வற்புறுத்திச் சென்றமைக்குத் தக்க ஆதாரம் இருக்கவேண்டும் அல்லவா? சேக்கிழார், நாம் மேலே குறிப்பிட்ட முனையரையர் மரபினரிடமும் திருவாரூர்ச் சிவாசாரியார் மரபினரிடமும் கேட்டறிந்த செய்திகளின் வன்மையாற்றான் இங்ஙனம் வற்புறுத்திச் சென்றார் என்று கொள்வதே தக்கது. மநுச்சோழன் வரலாறு., பெரிய புராணம்-நகரச் சிறப்பில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மநுச்சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது. `மநுச்சோழன், தன் மகனது தேர்க்காலில் அகப்பட்டு இறந்த பசுக் கன்றுக்காக, அத்தனி மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்பது கதைச் சுருக்கம். இந்தச் சுருக்கமே அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட சிலப்பதிகாரத்துள் முதன்முதலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வரலாறு பிற்பட்ட நூற்றாண்டுகளில் எழுந்த திருமுறை களிற் குறிக்கப்படவில்லை; வேறு நூல்களிலும் சிறப்பாகக் காணப்படவில்லை. இவ்வரலாற்றின் முழு நிகழ்ச்சிகளை அறிய இலக்கியச் சான்றில்லை. இங்ஙனம் இருப்பச் சேக்கிழார் இவ்வரலாறு சம்பந்தமான பல விவரங்களைத் தெளிவுற முதன்முறையாகத் தந்துள்ளார். அவை - (1) அரசன், இறந்த கன்றுக்காகத் தன்மகனைத் தேர்க்காலி லிட்டுக் கொல்லும்படி அமைச்சனை ஏவுதல், (2) அவன் அதனைச் செய்ய இசையாது தற்கொலை செய்துகொள்ளல், (3) அரசனே தன் மகனைக் கொன்ற பொழுது சிவனார் அருளால் இறந்த கன்று, அரசகுமரன், அமைச்சன் ஆகிய மூவரும் உயிர் பெற்றெழுதல் என்பன. இக்குறிப்புகள் சேக்கிழார்க்கு எங்ஙனம் கிடைத்தன? திருவாரூர்க் கல்வெட்டு. திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் திருக்கோவில் இரண்டாம் திருச்சுற்றின் வடபுறச் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகிறது. அஃது அநபாயன் தந்தையான விக்கிரம சோழனது ஐந்தாம் ஆட்சி யாண்டில் (கி.பி. 1123-ல்) வெட்டப்பட்டது. அது, திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே மநுச்சோழன் வரலாற்றைக் கூறுவது போல வெட்டப்பட்டுள்ளது. ``மநுச்சோழன்மகன் பெயர் `ப்ரியவ்ரதன். அமைச்சன் `இங்கணாட்டுப் பாலையூர் உடையான் உபயகுலாமலன் என்பவன். அவன் அரசனது கட்டளையை நிறைவேற்ற மனம் வராது தற்கொலை செய்துகொண்டான். இறுதியில் அவ்வமைச்சன், பசுக்கன்று, அரசிளங்குமரன் ஆகிய மூவரும் சிவபிரான் அருளால் உயிர் பெற்று எழுந்தனர். மநு, தன் மகனை அரசனாக்கி, அமைச்சன் மகனான சூரியன் என்பவனை அம் மகனுக்கு அமைச்சனாக்கித் தானும் உயிர் பெற்றெழுந்த அமைச்சனும் தவநிலை மேற்கொண்டனர். மநு, தன் அமைச்சனுக்குப் பரிசாகத் தந்த திருவாரூரில் இருந்த மாளிகை ஒன்று, அவன் மரபில்வந்தனும் விக்கிரமசோழனது அமைச்சனு மான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மஹாபலி பாணராயனுக்கு உரியது. அது பழுதுபட்டுக் கிடந்ததால், அதனைப் பழையபடி மாளிகை யாக்கிக் குடிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் சிவபெருமான் திருவாரூர் மாஹேவரர்க்கும் கோவில் ஆதிசைவர்க்கும் அருளிய படி கல்லில் வெட்டப்பட்டனவாம். சேக்கிழார்க்கு ஏறத்தாழ 12 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டு மிகவும் முக்கியமானது. இதனால், விக்கிரம சோழன் காலத்தில், மநுச்சோழன் வரலாறு திருவாரூர் மக்கள் அளவிலேனும் தெரிந்திருந்தது என்னலாம்.கல்வெட்டுச் செய்திகள் பழைய காலத்தன ஆயினும், அதிற் கூறப்பட்முள்ள `ப்ரியவ்ரதன் போன்ற பெயர்கள் பிற்காலத்தனவாகும். இந்த உண்மையை உணர்ந்தவர் சேக்கிழார்.அதனாற்றான், இக்கல்வெட்டிலிருந்து தமக்கு வேண்டிய முக்கியமான நிகர்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டாரே யன்றிப் பெயர் களை எடுத்துக்கொள்ளவில்லை. சேக்கிழார் இக்கல்வட்டைப் படித்திராவிடில், மநுச்சோழன் வரலாற்றை இவ்வளவு விளக்கமாகப் பாடியிருத்தல் இயலாதென்னலாம். முடிவுரை. இங்ஙனம் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகள் அனைத்தையும் இலக்கியமும் கல்வெட்டும், நம்பத்தக்க செவிவழிச்செய்தியும் கொண்டு சேக்கிழார் பாடியுள்ளார் என்பதனை, ஒவ்வொரு நாயனார் வரலாறாக எடுத்துக்கொண்டு சான்றுகள் காட்டிக்கொண்டே போகலாம். அவ்விரிவிற்கு இஃது இடமன்று. சேக்கிழார் கூறும் பேரரசர், சிற்றரசர் பற்றிய குறிப்புகள், நாயன்மார் காலத்தில் நடந்த பல்லவர்-பாண்டியர் போர், பாண்டியர்- சாளுக்கியர் போர், பல்லவர்- இரட்டர் போர், பல்லவர் சோழ பாண்டியர் போர் என்பனவும்; அப்பர் - சம்பந்தர் காலத்து மிழலைப் பஞ்சம், பூசலார் காலத்துப் பல்லவ நாட்டுப் பஞ்சம், கோட்புலியார் (சுந்தரர்) காலத்துத் தமிழ் நாட்டுப் பஞ்சம் என்பனவும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. அவைபற்றிச் சேக்கிழார் கூறியுள்ள அனைத்தும் உண்மை என்பதைப் பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் கொண்டு மெய்ப்பிக்கலாம் இங்ஙனமே நாயன்மார் காலத்துக் கடல் வாணிபம் மறையவர் சிற்றூர்கள் (பிரம்மதேயங்கள்), கிராம நீதி மன்றங்கள், கணவன், அரசன் ஆகிய இவருடன் முறையே மனைவி, மெய்காப்பாளர் இறத்தல், நாயன்மார் காலத்தில் வாழ்ந்த பலவகைச் சிவனடியார், அவர் தம் இலக்கணங்கள் என்பனவும் - வரலாற்றுச் சிறப்புடைய பிறவும் இலக்கியமும் கல்வெட்டுகளும் கொண்டு மெய்ப்பிக்கலாம்.5 அதிகம் அறைவதேன? சேக்கிழார், சிறுத்தொண்டர் வரலாற்றில் வாதாபிப்போரைக் குறித்திராவிடில், நாம், சம்பந்தர் காலம் அறிந்திருத்தல் இயலாது: அங்ஙனமே, பல்லவன் `குணபர ஈவரம் எடுத்தான் என்பதைச் சேக்கிழார் குறியாதிருப்பின், அப்பர் காலத்துப் பல்லவன் மஹேந்திர வர்மனே என்பதை உறுதிசெய்திருக்க முடியாது. சேக்கிழார் சிறந்த வரலாற்று உணர்ச்சி கொண்ட பெரும் புலவர் என்பதை வரலாற்று உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த இரண்டே போதும்! கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வரலாற்று உணர்ச்சி யுடைய பெரும் புலவரைப் பெற்றிருந்த தமிழகத்திற்கு நமது வணக்கம் உரியதாகுக. 9. சேக்கிழார் பெரும் புலமை பெரிய புராணம் - சுந்தரர் புராணம். நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறுகள் பெரும்பாலும் தனித் தனியானவை; ஒன்றொடொன்று தொடர்புடையன அல்ல. ஆயின், அப்பர்-சம்பந்தர் சமகாலத்தவர் பதினொருவர்; சுந்தரர் சமகாலத்தவர் பதின் மூவர். ஏனையோர் அனைவரும் தனித்தனிக் காலத்தவர் என்று கொள்ளலாம். தம்மை ஒழிந்த 62 நாயன்மார் பெயர்களையும் சிலருடைய சிறப்பியல்புகளையும் தொகுத்துப் பாடித் திருத்தொண்டர் பெயர்ப் பட்டியலைத் தயாரித்துத் தந்தவர் சுந்தரர். சுந்தரர் வரலாறே முக்கியமானது. (1) அவரது வரலாற்று நிகழ்ச்சிகளில் ஒன்று அவர் பரவையாரை மணந்தமை. அவர் அவ்வம்மையாரை மணந்த பிறகு அக்கோலத்துடன் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் கோவிலுக்கு அரச மரியாதையுடன் ஊர்வலமாகச் சென்றார்; தேவாசாரிய மண்டபத்திற் குழுமி இருந்த நாயன்மார்களைக் கண்டார்; அவர்களைப் பாட விழைந்தார். இறைவன் ஆணையும் பிறந்தது. சுந்தர். ``தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன், என்று தொடங்குத் தனியடியார் அறுபத்து மூவரையும் தொகை அடியார் ஒன்பதின்மரையும் பாராட்டித் திருதொண்டத் தொகை பாடினார். இது சுந்தரர் வாழ்க்கையிற் சிறப்புடைய நிகழ்ச்சியாகும். (2) பிறகு சுந்தரர் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவொற்றியூரை அடைந்தார்; சங்கிலியாரை மணந்தார்; கண் இழந்து தல யாத்திரை செய்து கண் பெற்றார்; திருவாரூரை அடைந்து பரவையாரைச் சமாதானப்படுத்தி வாழ்ந்தார்; ஏயர்கோன் கலிக்காமனார் தம்மிடம் கொண்டிருந்த வெறுப்பை விருப்பாக மாற்றினார். (3) சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரர் நட்பைத் பெறத் திருவாரூரை அடைந்தார்; அவருடன் பல தலங்களைத் தரிசித்தார். சுந்தரர் அவருடன் கூடிச் சேரநாட்டை அடைந்தார்; அங்குள்ள சிவதலங்களைத் தரிசித்து மீண்டார். (4) இறுதியிற் சுந்தரர் சேர நாடு அடைந்து திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானை மீது புறப்பட்டுக் கயிலை சென்றார். சேரமான் குதிரை மீது அவரைப் பின் தொடர்ந்தார். சுந்தரர் வாழ்க்கைப் பிரிவுகளாகிய இந்த நான்காம் நூலின் முதலில் (1) தடுத்தாட்கொண்ட புராணம் என்ற பகுதியிலும், நூலின் இடையில் (2) ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணம் என்ற தலைப்பிலும், (3) சேரமான் பெருமாள் புராணம் என்ற வரலாற்றிலும், நூலின் இறுதியில் (4) வெள்ளானைச் சருக்கம் என்ற தலைப்பிலும் முறையே கூறப்பட்டுள்ளன. சேக்கிழார், சுந்தரர் புராணத்தை இங்ஙனம் நூலின் முதல், இடை, கடை என்னும் மூன்று பகுதிகளிலும், அவராற் பாராட்டப்பெற்ற நாயன்மார் வரலாறுகளை இந்நான்கு பகுதிகட்கும் இடையிடையே வைத்தும் பாடியிருத்தல், சுந்தரர் புராணமே - திருத்தொண்டர் புராணம் என்ற கொள்கையை வற்புறுத்துவ தாகும். பெரிய புராணத்திற்குத் `திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் இட்ட பெயர் ஆகும். திருத்தொண்டர் புராணம் - சுந்தரர் புராணம் ஆயின், `திருத்தொண்டர் என்ற பெயர் சுந்தரர்க்கு உரியதாதல் வேண்டும். இங்ஙனம் சேக்கிழார் உரிமையாக்கினரா? ஆம். அவர், தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரரைச்,``சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே, திருத்தொண்டர் புராணம் - சுந்தரர் புராணமே என்பது இதனாலும் அறியப்படும். பெரிய புராணம் பெருங்காவியமா? பெருங் காவியத்திற்குச் சிறப்பு இலக்கணங்கள் சில உண்டு: 1. நூல் முழுவதும் சிறப்புடைத் தலைவன் ஒருவன் பற்றியே பேசப்படல் வேண்டும். 2. பெருங்காவியம் சருக்கம், படலம், இலம்பகம் என்ற பிரிவுகளில் ஒன்றைப் பெற்றதாக விளங்குதல் வேண்டும். 3. அஃது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை உணர்த்துவதாக இருத்தல் வேண்டும். 4. மலை, கடல், நாடு, நகர், பருவகாலங்கள் (பெரும் பொழுதுகள்), சிறு பொழுதுகள் ஆகியவை பேசப் பெற்றதாக இருத்தல் வேண்டும். 5. பலவகை விளையாட்டுகள், பிள்ளை வளர்ச்சி முதலியன கூறப்பட்டிருத்தல் வேண்டும். இவை அனைத்தும் பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ளனவா? 1. பெரிய புராணம் முழுவதும் சுந்தரர் வரலாறே பேசப்பட்டுள்ளது என்பது மேலே தெளிவாகத் தெரிவிக்கப் பட்டதன்றோ? 2. சுந்தரர் பாண்டிய திருத்தொண்டத் தொகை பதினொரு செய்யுட்களைக் கொண்டது. சேக்கிழார் அந்தப் பதினொரு செய்யுட்களையும் பதினொரு சருக்கங்களாக அமைத்துக் கொண்டார்; ஒவ்வொரு செய்யுளின் தொடக்கத் தொடரையே சருக்கத்தின் பெயராக அமைத்துக்கொண்டார். அச்சருக்கங்க ளாவன: செய்யுளின் முதல் வரி சருக்கத்தின் பெயர் 1. தில்லைவாழ் அந்தர்தம் அடி தில்லைவாழ் அந்தணர் யார்க்கும்அடியேன்.... சருக்கம் 2. இலைமலிந்த வேல்நம்பி எறிவத் இலைமலிந்த சருக்கம் தர்க்கடியேன்.... 3. மும்மையால் உலகாண்ட மூர்த் மும்மையால் திக்கம்அடியேன்....உலகாண்ட சருக்கம் 4. திருநின்ற செம்மையே செம்மை திருநின்ற சருக்கம் யாக்கொண்... 5. வம்பறா வரிவண்டு மணம்நாற வம்பறா வரிவண்டுச் மலரும்... சருக்கம் 6. வார்கொண்ட வன...வார்கொண்ட வன rUக்கம் 7. பொய்யடிமை யில்லாத பொய்யடிமை இல்லாத புலவர்க்கும்அடியேன்...புலவர் சருக்கம் 8. கறைக்கண்டன்கழலடியே... கறைக்கண்டன்சருக்க« 9. கடல் சூழ்ந்த உலகெல்லாம் கட்லசூழ்ந்தசருக்க« 10. பத்தராய்ப் பணிவார்கள் எல் பத்தராய்ப் பணிவார் லார்க்கு«அடியேன்... சருக்கம் 11. மன்னியசீர் மறைநாவன் நின்ற மன்னியசீர்ச் சருக்கம் வூர்ப்பூசல்... இந்த ஒவ்வொரு சருக்க முடிவிலும் புராணத்தலைவராகிய சுந்தரர் வரலாறு மறவாதிருத்தற்காக அவரைப் பற்றிய செய்யுள் ஒன்றைச் சேக்கிழார் பாடியிருத்தல் கூர்ந்து கவனிக்கத் தக்கது. இங்ஙனம் எல்லாச் சருக்கங்களும் சுந்தரர் வரலாற்றால் இணைப்புண்டு ஒரு தலைவனைப்பற்றியே பேசும் பெருங் காவியமாகப் பெரிய புராணம் திகழ்கின்றது. சேக்கிழார், இக்கருத்துக் கொண்டே சங்கிலி கோத்தாற் போலச் சுந்தரர் வரலாற்றை ஒவ்வொரு சருக்கத்துடனும் இணைத்திருத்தல் கண்டு வியக்கத்தக்க ஒன்றாகும். 3. நாற்பொருள். சுந்தரர் வரலாற்றிலும் அவராற் சுட்டப்பெற்ற நாயன்மார் வரலாறுகளிலும் சத்துப் பொருள் களாக விளங்குபவை அறம், பொருள், இன்பம், வீடேயாகும். 4. மலை, கடல் முதலியன. மலைநாட்டு வளம் கண்ணப்பர் புராணத்துள் பண்படப் பேசப்பட்டுள்ளது. கடல் வளம் அதிபத்தர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், சேரமான் பெருமாள் புராணம் முதலிய பல புராணங்களில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாட்டு வளங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. நகரச் சிறப்பில் திருவாரூரும், திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் காஞ்சியும், பிற இடங்களில் பிற நகரங்களும் (மதுரை முதலிய பழம்பதிகள்) பாராட்டப்பட்டுள்ளன. பெரும் பொழுதுகளான கார் காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என்பன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் வரலாறுகளிற் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனமே காலை, நண்பகல், மாலை முதலிய சிறு பொழுதுகள் Mறும்Mங்காங்குப்nபசப்பட்டிருக்கின்றன.5. பலவகை விளையாட்டுகள். பெண் மக்கள் விளையாடும் பந்தாட்டம், அம்மானை, கழங்கு, ஊசல், சிற்றில் அமைத்து விளையாடல் போன்ற பலவகை விளையாட்டுகள், மானக்கஞ்சாறர் புராணத்தும் சம்பந்தர் புராணத்தும் காணலாம். ஆண் மக்கள் விளையாட்டுகள் கண்ணப்பர், திருநாளைப் போவார், சம்பந்தர் புராணங்களிற் கண்டு களிக்கலாம். பிள்ளை வளர்ச்சி. (1) ஆண்பால் வளர்ச்சியைச் சம்பந்தர், கண்ணப்பர் புராணங்களிற் காணலாம். (2) பெண்பால் வளர்ச்சியைச் சம்பந்தர், காரைக்கால் அம்மையார், மானக்கஞ்சாறர் புராணங்களிற் கண்டு இன்புறலாம். இவ்வளர்ச்சி முறைகள் `பிள்ளைத் தமிழ் நூல்களிற் கூறப்படும் இலக்கண முறைக்கு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது. இங்ஙனம் ஒரு பெருங்காவியத்திற்கு உரிய இலக்கணங் களை எல்லாம் தன் மாட்டுச் சிறக்கப்பெற்று விளங்குவது சேக்கிழார் பாடியருளிய பெரிய புராணம் ஆதலின், அப் பெருநூல் `பெருங்காவியம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவே சேக்கிழார் கருத்துமாகும் என்பதற்கு அவரது பாயிரம் சான்றாதல் காணலாம். சேக்கிழார், `எடுக்கும் மாக்கதை என்று பெரிய புராணத்தைக் குறிக்கின்றார். இதனால் அஃது, உதயணன் வரலாறு உரைக்கும் `பெருங்கதை என்று `கொங்கவேள் மாக்கதை போன்றதொரு காவியம் என்பது பொருளாகு மன்றோ? சேக்கிழார் பல்கலைப் புலவர். இங்ஙனம் பெரியதொரு காவியம் பாடிய சேக்கிழார் பெரும்புலவர் என்பதை அவரது பெருங்காவியம் நன்கு விளக்கி நிற்கின்றது. அவர், (1) தமிழ் நூற்களில் நிரம்பிய புலமை உடையவராக விளங்கினார்; (2) சைவசமய நூல்களில் சிறந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்; நாகரிகக் கலைகள் எனப்படும் வானக்கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக்கலை, இசைக்கலை, உடல்நூற்கலை, உளநூற்கலை, மருத்துவக்கலை முதலியவற்றிற் சிறந்து விளங்கினார். இப்பலவகைக் கலைப் புலமையையும் விளக்க வகைக்கொரு சான்று இங்குக் காட்டுவோம். (1) தமிழ் நூற் புலமை பெருங்காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைப் பாடிய ஆசிரியர் சேக்கிழார் பெருமான் தமக்குக் காலத்தால் முற்பட்ட புறநானூறு, அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற பழைய இலக்கியங்களை அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது காவியத்தால் நன்கு புலனாகிறது. அப்பெரியார் மேற்சொன்ற நூற் கருத்துக்களை எங்ஙனம் தமது நூலுள் எடுத்து ஆண்டுள்ளனர் என்பதைக் கீழே காண்க. புறநானூறு. சேக்கிழார் திருநகரச் சிறப்பில் `அரசன் தன் நாட்டு உயிர்கட்கக் கண்ணும் ஆவியும் போன்றவன் (செ. 14) என்றும், புகழ்ச்சோழர் புராணத்தில் `மன்னவன் தன் நாட்டு உயிர்கட்க உயிர் (செ. 33) என்றும் கூறியிருத்தல், ``நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற புறநானூற்றுச் செய்யுள் (செ, 186) அடிகளோடு ஒத்துவரல் காணலாம். அகநானூறு. கண்ணப்பர் புராணத்தில் `இரும்புலி எயிற்றுத் தாலி (செ.9) என்றமை, ``புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி (செ.7) என்னும் அகநானூற்று அடியுடன் ஒன்றுபடல் உணரலாம். நற்றினை.கண்ணப்பருடன் வேட்டையாடச் சென்ற நாய்கள் தம் நாக்களை நீட்டியும் சுருக்கியும் தொங்கிவிட்டுக் கொண்டு ஓடின. அக்காட்சி, வேடரது வில்மீது பொருந்தும் வெற்றி மகளது சிவந்த பாதமம் முன்போய் நீள்வது போலக் காணப்பட்டது என்ற (செ.6) கருத்து, ``முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் நன்னாப் புரையும் சீறடி என்ற நற்றிணைச் செய்யுள் (252) அடிகளிற் பார்க்கலாம். ஐங்குறுநூறு. திருநீலகண்ட நாயனார் பரத்தை வீட்டி லிருந்து மீண்டதை உணர்ந்த அவர் மனைவியார், அவரோடு உடனுறைதலை விரும்பாராய்த் தம்மைத் தீண்டலாகாது என்று ஆணையிட்டனர். இக்கருத்து, ``என்னலம் தொலைவதாயினும் துன்னேம் பெரும, பிறர்த்தோய்ந்த மார்பே, என்ற ஐங்குறுநூற்றுப் பாவடிகளின் பொருளோடு ஒத்துவருதல் காணத்தக்கது. கலித்தொகை. மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் (செ.11) கூறப்பட்டுள்ள `மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி, என்ற தொடரின் கருத்தும் ``வான்தரு கற்பினாள், ``அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே, என்று வரும் கலித்தொகைச் செய்யுட்களில் (16, 39) வந்துள்ள கருத்தும் ஒன்றுபடல் ஓர்க. திருக்குறள். சேக்கிழார் உலகப் புகழ்பெற்ற திருக்குறட் பாக்களை அழத்தந் திருத்தமாகப் படித்து உணர்ந்தவர் என்பதற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட சான்றுகள் காட்டலாம். அப்பரை நேரிற் கண்டு பழகாகிருந்தும் அப்பூதியடிகள் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரையே நினைந்திருந்தார்; அவரது திருப்பெயரையே தம் வீட்டில் இருந்த உயர்திணை - அஃறிணைப் பொருள்களுக்குப் பெயராக இட்டு வழங்கினார்; அவரது திருநாமத்தையே ஜெபித்துக்கொண்டிருந்தார். சேக்கிழார் இதனை விளக்கமாகக் கூறி, இறுதியில், ``காண்டகைமை இன்றியு(ம்) முன் கலந்தபெருங் கேண்மையினார் என்று (செ.213) குறித்தார். இக் கருத்தை, ``புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்று திருக்குறள் தன்னகத்தே பெற்றதன்றோ? பட்டினப்பாலை (பத்துப்பாட்டு). சண்டீசர் வரலாற்றில் காவிரியின் சிறப்பைப் `பூந்தண் பென்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல் நாடு என்று சேக்கிழார் செப்பியது, ``வான் பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி எனவரும் பட்டினப்பாலை அடிகளை உளங்கொண்டு அல்லவா? சிலப்பதிகாரம். பெரிய புராணத்துள் இசைபற்றி வரும் இடங்கள் பலவாகும் அவற்றுட் சிறந்த பகுதி ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது. இசைபற்றி வரும் இவ்விடங்களிற் கூறப்படும் செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடிகளிலும் அவைபற்றிய அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கமாகக் காணலாம். இஃதன்றிக் கரிகாலன் இமயம் சென்று அதன்மீது புலிப்பொறி பொறித்து மீண்ட செய்தியைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும், புகழ்ச்சோழர் புராணத்திலும் கூறினமை, சிலப்பதிகார (இந்திரவிழவூர் எடுத்த காதையில் வரும்) அடிகட்கும் அவற்றின் உரைக்கும் பொருத்தமாதல் காணத்தக்கது. மணிமேகலை. பெரிய புராணத்திற் பௌத்த சமயத்தைப் பற்றி வரும் சம்பந்தர் புராணம் முதலிய இடங்களிற் காணப்படும் பௌத்த சமயக் குறிப்புகள் பல, மணிமேகலை என்னும் பௌத்த காவியத்திற் காணக்கிடக் கின்றன. ஆதலின், காலத்தால் முற்பட்ட இதனைச் சேக்கிழார் கவனித்தவர் என்பதில் ஐயமில்லை. சேக்கிழார், நாட்டுச் சிறப்பில் (செ.2), அகத்திய முனிவன் கமண்டலத்திலிருந்து கவிழ்ந்த நீதே காவிரியாறாகப் பெருக்கெடுத்தது என்று குறிப்பிடும் செய்தியை, ``அமர முனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்ந்த காவிரிப் பாவை. எனவரும் மணிமேகலை அடிகளிற் காணலாம். சிந்தாமணி. சேக்கிழார் சிந்தாமணியைச் சிறக்கப் படித்த சீரிய புலவர் என்பதனை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? அதற்குச் சான்றுகள் பல காட்டலாம் இடமஞ்சி இரண்டு காட்டுதும். 1. பசிய வயல்களுக்கு இடையில் உள்ள தாமரை மலர்கள்மீது சங்குகள் இருத்தல் - ஊர்கோளால் (பரிவேடம்) சூழப்பட்ட சந்திரனின் தோற்றத்தை ஒத்திருந்தது-திருக்குறிப்புத் தொண்டர் புராணம், (செ. 26.) இந்த உவமை, ``கட்டழற் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார் என்று சிந்தாமணியில் (செ.1136) ஆளப்பட்டிருத்தல் காண்க. 2. கண்ணப்பர் சிவனைவிட்டு நீங்காமையைக் கண்ட நாணன், வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான் என்று (செ.116) கூறிய உடும்பைப்பற்றியே உவமையே சிந்தாமணியில், ``தணக்கிறப் பறித்தபோதும் தானளை விடுத்தல் செல்லா நிணைப்புடை உடும்பன் னாரை... என்று (செ.2887) கூறப்பட்டிருத்தல் காணத்தக்கது. தொல்காப்பியம். முல்லை நிலத்திற்குக் கடவுள் திருமால். இதனைத் தொல்காப்பியர், ``மாயோன் மேய காடுரை உலகம் என்று கூறிப் போந்தார். இதனையே சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில், ``முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால் என்று விளக்க வுரைத்திருத்தல் காண்க. ஐந்திணைச் சிறப்பு, திணை மயக்கம், பெரும்பொழுது சிறுபொழுதுகள், காதலர் களவுநிலை முதலிய பற்றிவரும் பெரியபுராணச் செய்திகட்கு இலக்கணம் தொல்காப்பியமே என்னலாம். இறையனார் களவியல் உரை. சேக்கிழார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் அழுத்தமாகப் படித்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். சடங்கவி சிவாசாரியார் என்பவர் சுந்தரர் குலம் முதலியவற்றை ஆராய்ந்து, ``ஓத்த பண்பினால் அன்பு நேர்ந்தார் என்று சேக்கிழார் குறித்துளர். இஃது, ``இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய்.... எனவரும் களவியல் உரையுடன் வைத்து ஒப்பு நோக்கத் தக்கது. சமயநூற் புலமை சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும் படித்து அறுபவித்தாற்போல வேறு எவருமே படித்திரார் என்பது, பெரிய புராணத்தைப் பழுதறப் படித்த அறிஞர் அறிவர். அவர், திருப்பதிகங்களைத் தம் பெரிய புராணத்துட் கையாண் டிருத்தலே இதற்குக் தக்க சான்றாகும். அவர் திருப்பதிகங்களைக் கையாண்ட சில முறைகளை இங்குக் காண்போம். 1. சேக்கிழார் பலஇடங்களில்பதிகமுதற்குறிப்பைக்கூறி,`....v‹Wதொடங்கு«திருப்பதிக«பாடினார்’என்Wசொல்லி¢செல்வார். ``பித்தாபிறை சூடி, எனப் பெரிதாந் திருப்பதிகம் இத்தாரணிமுதலாம்உyகெல்லாம்உaஎடுத்தார்.” 2. சில இடங்களில் பதிகத்தின் முதலும் ஈறும் குறிக்கப்படும். ``ஈன்றாளு மாய்எனக் கெந்தையு மாகிஎனவெடுத்துத் `தோன்றாத் துணையாய் ,ருந்தனன் தன்னடி யோங்கட்கென்று வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ் வுயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. 3. நாயன்மார் திருப்பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டிருக்கும். ``செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றின் முன்தேவா சிரியன் சார்ந்து, `கொய்யுலா மலர்ச்சோலைச் குயில்கூவ மயிலாலும் ஆரூ ராரைக் கையினால் தொழதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் [என்(று)vய்தரியiகயறவால்âருப்பதிகம்mருள்செய்தங்»ருந்தார்mன்றே.4. திருப்பதிகத்தின் கருத்து புராணத்தில் - பல பாக்களில் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் `தோடுடைய என்ற தொடங்கிப் பாடிய பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல செய்யுட்களில் (செ.75-79) விளக்கிக் கூறியுள்ளார். தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர் `பையவே சென்று பாண்டியற்காக என்று ஏவினர். அவர் `பையவே என்று சொன்னதற்கரிய காரணங்களைச் சேக்கிழார் விளக்குதல் நயமுடையது: ``பாண்டியமா தேவியார் தமது பொற்பில் பயிலுநெடு மங்கலநான் [ghJfh¤J«,1 ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும்2, அரசன்பால் அபராதம் [cWjyhY«3, மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்4, வெண்ணீறு [bt¥gfy¥ புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடையான் ஆத லாலும்5 தீப்பணியைப் [`igant செல்வ என்றார். 5. சேக்கிழார் நாயன்மார் பதிக வகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார் ; சான்றாக, `அப்பர் திருப்பூந்துருத்தி மடத்தில் தங்கி இருந்தபொழுது (1) கல்வகைத் தாண்டகம், (2) பரவும் தனித்தாண்டகம், (3) அடைவு திருத்தாண்டகம், (4) திரு அங்கமாலை முதலியவற்றைப் பாடினார் என்று ஒரே பாட்டில் இவ்வகைகளை அடக்கிப் பாடியிருத்தல் கவனிக்கத்தக்கது. ``பல்வகைத் தாண்டகத் தோடும் பரவுந் தனித்தாண் டகமும் அல்லல் அறுப்பவர் தானத் தடைவு திருத்தாண் டகமும் செல்வதி காட்டிப் போற்றும் திரு அங்கமாலையும் உள்ளிட்(ஈ) எல்லையில் பண்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார். 6. நாயன்மார் பாடிய பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார். பாக்களும் அமைந்திருத்தல் கண்டு இன்புறத்தக்கது. `பித்தா, பிறை சூடி என்ற திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்று கூறும் சேக்கிழார் பாக்களும் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்துப் பாராட்டத்தக்கது. ``கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால் மெய்த்தாயினும் இனியானை அவ் வியன்நாவலர் பெருமான் `பித்தா, பிறை சூடீ, எனப் பெரிதாம்திருப் பதிகம் இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார். 7. நாயன்மார் பாடலைக் கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் திறமையும் சேக்கிழார் பெருமானுக்கு உண்டு. சான்றாக ஒன்று கூறுதும்: அப்பர், நமிநந்தி அடிகள் சிறப்பைத் தமது திருவாரூர்ப் பதிகத்தில், ``ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கி... என்று தொடங்கிப் பாடிப் பாராட்டியுள்ளனர். சேக்கிழார் இதனை நினைவிற்கொண்டு அந் நமிநந்தி அடிகள் புராணத்தில், `நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணி யெனும் பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார். என்று பாடியுள்ளார். 8. சேக்கிழார் பல இடங்களில் திருப்பதிகங்களின் உட்குறிப்பே எடுத்துக் காட்டுவர். 9. பெரிய புராணம் தேவாரத்திற்கு உரை காணப் பெருந் துணையாக இருப்பது என்னலாம். சேக்கிழார், வையை யாற்றில் எதிர்சென்ற ஏட்டில் அடங்கிய திருநள்ளாற்றுப் பதிகத்தின் பொருளை மிகவும் விரிவாகக் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது. திருவாசகம். சேக்கிழார் திருவாசகத்திலும் சிறந்த புலமை யுடையவர் என்பது தெரிகிறது. மணிவாசகர், சண்டீசர் வரலாற்றைக் கூறி, ``சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கம் அத்தன்... என்று கூறியுள்ளார். சேக்கிழார் இதனை அதே சண்டீசர் புராணத்தில், ``... ஈறி லாதார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால் என்ற அடிகளில் ஆண்டிருத்தல் காண்க. திருமந்திரம் சேக்கிழார் பாடியுள்ள திருமூலர் புராணத்தைக் காணின், அவர், திருமந்திரத்தைத் திறம்படிப் படித்துணர்ந்தவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் இறைவனது இலக்கணத்தை, ``ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச் சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகி... என்று கூறியுள்ளார். இக்கருத்து, ``யாரறி வாரெங்கள் அண்ணல் பெருமையை யாரறி வாரந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே. எனவரும் திருமந்திரச் செய்யுளில் பொதிந்திருத்தல் காணலாம். சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் சிறந்ததனவாகக் கூறப்படும் சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்பவற்றிற் குறிக்கப்படும் விழுமியே சித்தாந்த கருத்துகள், இந்நூல்கள் வெளிவராக் காலத்திலேயே சேக்கிழாராற் பெரிய புராணத்துட் கூறப்பட்டுள்ளன. 1. சேக்கிழார், மானக்கஞ்சாற நாயனாரது அடியார் பக்தியைப் பாராட்டுமிடத்து, `அவர் சிவனடியாரைச் சிவபெருமானாகவே கருதி வழிபட்டவர் என்று குறித்துள்ளார். இக்கருத்துச் சிவஞான போதம் 12-ஆம் சூத்திரத்தும் அதன் உரையிலும் காணலாம். 2. சேக்கிழார் அதே புராணத்தில், `சிவனடியார் ஆதலே பெரும்பேறு என்று குறிப்பிட்டனர். இதே கருத்து அவர்க்குப் பின்வந்த சிவஞான சித்தியாரில், ``வாழ்வெனம் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் (அரிது என்று விளக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. `சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கிற்க முன் வாழ்ந்த சேக்கிழார் எந்தச் சித்தாந்த நூல்களைப் பயின்றவர்? என்ற கேள்வி எழும் அன்றோ! இக்கேள்விக்கு விடை, பதினொரு திருமுறைகளும் இராஜ சிங்கன் கல்வெட்டிற் காணப்பட்ட சைவ சித்தாந்த நூல்களுமேயாம். `சைவ சித்தாந்தத்தில் வல்லவன் என்று இராஜ சிங்கன் கூறப்பட்டான் எனின், அவன் காலத்தில் (கி.பி. 690-720) சைவ சித்தாந்த நூல்கள் இத் தமிழ்நாட்டில் இருந்தன என்பது வெள்ளிடை மலையன்றோ? அந் நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும் பொதிந்துள்ள சைவ சித்தாந்த கருத்துகளையே சேக்கிழார் தமது பெரிய புராணத்துட் பல இடங்களிற் குறித்துள்ளனர். இசைக்கலை. சங்க காலத்திலிருந்தே இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகள் தமிழர் வாழ்வில் வீறு கொண்டிருந்தன. அவை இடைக்காலத்தில் சமய வளர்ச்சிக் காகப் பெருந் தொண்டாற்றும் கருவிகளாகக் கொள்ளப்பட்டன. திருமுறைகள் சமயாசிரியர் காலமுதல் பண்ணோடு பயிலப் பட்டன. அதனால், தமிழிசை பற்றிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. அவ்வாறு இசைபற்றிய நூல்கள் மிக்கிருந்தமையாற்றான், அடியார்க்கு நல்லார், அரங்கேற்று காதைக்குச் சிறந்த உரைகாண முடிந்தது. அவ்விசை நூல்களைச் சேக்கிழார் அழுத்தமாகப் படித்தவர் என்பது, இசைபற்றிய அவருடைய பாடல்களிலிருந்து நன்குணரலாம். சான்றாகச் சில இடங்களைக் காண்க: 1. ``இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய `பித்தா, பிறை சூடீ என்று தொடங்கும் முதற் பதிகம் `இந்தளம் என்ற பண்ணிற் பாடப்பட்டது; அதனைச் சுந்தரர் இன்ன முறையிற் பாடினார் என்று சேக்கிழார் விளக்கிக் கூறலைக் காண, அவரது இசைப் புலமை இற்றென இனிது விளங்கும். ``முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான். -தடுத்தாட்கொண்ட புராணம், 75 2. ஆனாயர் புராணத்தில், (1) புல்லாங்குழலுக்குரிய மூங்கிலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, (2) அக்குழலை வைத்து ஆனாயர் பாடிய முறை, (3) அக்குழல் இசையால் உயிர்கள் உற்ற இன்பம் முதலியவற்றை மிகவும் தெளிவாகக் கூறியுள்ள முறையை நோக்கி, சேக்கிழார் இசைத் துறையிற் பண்பட்ட புலமை உடையவர் என்பதைத் தெளிவாக உணரலாம்.1 நடனக்கலை. அப்பர் திருப்புகலூரில் தம் இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டு இருந்தபொழுது அவரது உள்ளத்தைப் பரிசோதிக்கச் சிவபெருமான் ஏவற்படி தேவலோக நடனமங்கையர் வந்து அப்பர்முன் தோன்றினர்; ஆடல்பாடல் களை நிகழ்த்தினர் என்ற இடத்தில், சேக்கிழார், ஆடல்பாடல் பற்றிய நுட்பங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார். 1. ``வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தால் எனவந்து தானநிறை சுருதிகளில் தருமலங்கா ரத்தன்மை கான அமு தம்பரக்கும் கனிவாயில் ஒளிபரப்பப் பானல்நெடுங் கண்கள்வெளி பரப்பிஇசை பாடுவார். 2. ``கற்பகப்பூந் தளிரடிபோய்க் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடையெர அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவதுபோல் ஆடுவார். - அப்பர் புராணம்,செ. 419-420. வானநூற் புலமை. பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம், பனிக்காலம், இளவேனில் முதலியவற்றைப் பற்றிச் சேக்கிழார் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வானநூற் புலமையையும் அவ்வப் பருவகால மாற்றங்களை அளந்துகூறும் அறிவு நுட்பத்தையும் நண்குணரலாம். ``சூரியன் துணைப்புணர் ஓரையைச் சேர்ந்தான்; அதனால் வெங்கதிர் பரப்பினான்; பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று என்று சேக்கிழார் கூறல் நுட்பம் வாந்ததாகம். `துணைப்புணர்ஓரை என்பது மிதுனமாகும்; மிதுனம் இரட்டை ஆதலன், `துணைப்புணர் ஓரை என்றார். இதுவன்றோ வானநூற் புலமை நுட்பம்! ``மகிழ்ந்த தன்தலை வாழுமந் நாளிடை வானில் திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து நிகழ்ந்த தன்மையில் நிலவுமேழ் கடல்நீர்மை குன்ற வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில். -சம்பந்தர் புராணம், செ. 384. உடற்நூற் புலமை: `மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக்கட்டை கிடைக்காமற்போகவே, அவர் சந்தனக்கல்மீது தம் முழங்கையைத் தேய்த்தார்; அதனால் புறந்தோல், நரம்பு எலும்பு கரைந்து தேய்ந்தன என்று சேக்கிழார் கூறல் கூர்ந்து நோக்கத்தக்கது. ``உள்ளே நின்ற எலும்பு, நரம்பு, தசை, இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மேலே கட்டிய புறந்தோல் முதலில் தேய்ந்தது; அதனை அடுத்து நரம்பு தேய்ந்தது; பின் எலும்பும் தேய்ந்தது என்பது இதன் பொருள். இம்முறை வைப்பு உடல் நூலுக்கு இயைந்ததே யாகம்.2 1. ``நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும்பிறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய. 2. ``கல்லின்புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்த சோரி செல்லும்பரப் பெங்ஙணும் என்பு திறந்து முறை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார் அல்லின்கண் எழுந்தது வந்தருள் செய்த வாக்கு. -மூர்த்தியார் புராணம், செ.20-21 மருத்துவக்கலை. சேக்கிழார் மேற்கூறிய கலைகளிற் புலமை பெற்றாற் போலவே மருத்துவக் கலையிலும் திப்பிய புலமை சான்றவராக இருந்தனர் என்பது தெரிகிறது. சேக்கிழார், இக்காலத்துச் சிறந்த மருத்துவ நிபுணர் ஆராய்ந்து வியந்து பாராட்டத்தக்க முறையில் மருத்துவக் கலை நுட்பங்களை ஆங்காங்க விளக்கியுள்ளார். (1) சூலை நோய், (2) கண்ணோய், (3) பாம்புக்கடி, (4) முயலகன் என்ற நோய், (5) பனி நோய், (6) வெப்பு நோய் முதலியவற்றைப் பற்றி அவர் கூறியுள்ள விவரங்கள் படித்து ஆராயத்தக்கவை. இங்குச் சான்றாக இரண்டு காண்போம். 1. வெப்பு நோய். இது சம்பந்தரால் ஏவப்பட்டுப் பாண்டியன் நெடுமாறனைப்பற்றிய கொடிய ஜ்வர நோய் ஆகும். இது வடமொழியில் `ஆகந்து ஜ்வரம் எனப்படும். `ஆகந்துகம் என்பது அடி முதலியன தாக்குவதாலும் சாபம் முதலிய வற்றாலும் பூர்வரூபம் இல்லாமல் திடீரென்று உண்டாகும் ஜ்வரம். இது நான்கு வகைப்படும். அவை (1) அபிகாத ஜ்வரம், (2) அபிஷங்க ஜ்வரம், (3) சாப ஜ்வரம், (4) அபிசார ஜ்வரம் என்பன. இவற்றுள் சாப ஜ்வரம் ரிஷிகள், ஆசாரியர், தேவதைகள் முதலியவர்கள் இடும் சாபத்தினால் திடீரென உண்டாவது, இது பொறுக்க முடியாத கொடிய ஜ்வரம். இது வாய் பிதற்றலும் நடுக்கமும் உண்டாக்கும்.3 `நெடுமாறனுக்கு உண்டான வெப்பு நோய் சாப ஜ்வரம் ஆகும். அஃது அரசனுக்கு உடல் நடுக்கத்தையும் கொடிய உஷ்ணத்தையும் உண்டுபண்ணியது. அது மருத்துவப் புலவரால் ஒழிக்கப்படவில்லை. அரசன் வாய் பிதற்றலானான் என்ற விவரங்கள் சேக்கிழார் கூறக் காணலாம். இக்கூற்று மேற் சொன்ன மருத்துவர் கூற்றுடன் ஒன்றுபடல் காண்க. 2. சூலை நோய். `இஃது ஒருவகைக் கொடிய வயிற்றுவலி. வாதம்-பித்தம்-கபம் என்னும் மூன்றன் நிலை மாறுதல்களால் நிகழ்வது. இது பல துன்பங்களைத் தருவது; சிகிச்சைக்கு வசப்படாதது. வயிற்றுக் குடைச்சல், வயிற்று இறைச்சல், நாவரட்சி, மூர்ச்சை, பொருமல், வயிறு மந்தமாக இருத்தல், வாய் சுவை உணர்வு அற்று இருத்தல், கபம் அதிகரித்தல், பெருமூச்சு விடல், விக்குள் உண்டாதல் முதலிய துன்ப நிலைகள் இந் நோயினால் தோன்றும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.4 சூலை நோயினால் வருந்திய அப்பர்க்கு இத்துன்பங்கள் உண்டாயின என்பது அவருடைய வாக்காலும் சேக்கிழார் வாக்காலும் அறியலாம். அப்பர் வாக்கு: (1) ``தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்....... (2) ``வலிக்கின்றது சூலை தவித்தருளீர் பயந்தேயென் வயிற்றி னகம்படியே பறித்துப்புரட் டியறுத் திடநான் அயர்ந்தேன்..... (3) ``கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்.... (4) ``வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய். சேக்கிழார் வாக்கு: (1)``.....கடுங்கனல்போல் அடுங்கொடிய மண்டுபெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால். (2) அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையும் அது வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் கொடியஎலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்கடையப் படருழந்து நடுங்கி அமண் பாழியறை யிடைவிழுந்தார்.(3)``உச்சமுwவேதனைநோŒஓங்கியெழ....” (4) ``கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித் தீராமை எல்லாரும் கைவிட்டார்... -அப்பர்புராணம்,செ. 9-51, 57. நீதிநூற் புலமை. நீதிநூற் புலமையிலும் சேக்கிழார் சிறந்திருத்தார் என்பதைத் தடுத்தாட்கொண்ட புராணத்தாலும் கண்ணப்பர் புராணத்தாலும் சண்டீசர் புராணத்தாலும் நன்கறியலாம். சான்றாக ஒன்று காண்போம்: சிவபெருமான், சுந்தரர் திருமணத்தைத் தடுக்க மறையவராக வந்தார்; சுந்தரர்க்குப் பாட்டனார் தமக்கு வழிவழி அடிமை செய்வதாகப் பத்திரம் ஒன்று எழுதித் தந்தார் என்றும், அதன்படி சுந்தரர் தமக்கு அடிமை என்றும் வாதித்தார். அவர் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதன் மூல ஓலை (Original) திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் அரண் தரு காப்பில் (Safe custody) இருந்தது. ஓலையைக் கிராம நீதிபதிகளாகிய ஊரவையார்முன் வாசிக்கக் கரணத்தான் (Clerk of the village court) இருந்தான். வழக்கு விசாரணையில் ஆட்சி (Ora Evidence), ஆவணம் (Documentary Evidence), அயலால் காட்சி (Circumstantial Evidence) என்பன கவனிக்கப் பட்டன. சேக்கிழார் இவை அனைத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறியுள்ளமை 5நேக்க, அவரது நீதிநூற் புலமை எண்ணி எண்ணிக் களிக்கத்தக்கதாகும். சேக்கிழார் செய்யுட் சிறப்பு 1. சேக்கிழார் செய்யுட்கள் பிறபுலவர்பாக்களைப்போலக்fரடுமுரடானவைmல்ல.mit vளியeடையில்mமைந்தவை;bசம்பாகமானவை.rh‹whf¡ கடவுள் வாழ்த்தையே காண்க. ``உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 2. சேக்கிழாருடைய பெரும்பாலான பாடல் வரிகள் நிறுத்தக்குறிகள் பெய்யப்படின், எளிய தனித்தனி வாங்கியகளாக அமைதலைக் காணலாம். ``சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி, `என் இது மொழிந்த வாநீ? யான்வைத்த மண்ணோ டன்றிப் பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்ற முன்னைநான் வைத்த ஓடே கொண்டுவா என்றான் முன்னோன். - திருநீலகண்டர் புராணம், 24. 3. `பாக்களில் சொற்சிதைவு நேர்தல் பெரும்பாலும் தடுக்கப்படல் வேண்டும் என்பது இன்றைய தமிழ்ப்புலவர் கொள்கை. இதனைச் சேக்கிழார் அக்காலத்திற்றானே கொண்டிருந்தவர் என்பதை அவர் பாக்கள் பலவற்றால் அறியலாம். அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப் பொய்ப்பிறவிப் பிணிஓட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து பாடிச் செல்வார். அப்பர் புராணம், 179. 4. அவ்வத் தலத்தைப் பற்றிக் கூறுகையில் அத்தலத் தொடர்பான பண்டை நிகழ்ச்சிகளை மறவாது கூறும் இயல்பு சேக்கிழாரிடம் உண்டு. இதனைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் பரக்கக் காணலாம். 5. சேக்கிழார், தன்மை நவிற்சி ஒன்றையே பெரும்பாலும் கையாண்ட சங்ககாலப் புலவரைப் போன்றவர் ஆவர். ஆதனூர்ச் சேரிவருணனை, நாகை -நுளைப்பாடியவருணனை, உடுப்பூர்-வேடர்சேரி வருணனை என்பவற்றைப் படிப்பார்க்கு இவ்வுண்மை விளங்கும். 6. இடத்திற்கு ஏற்பச் சந்தங்கள் அமைத்துப்பாடுதல் என்பது பெரும் புலவர் வழக்கம். அதனைச் சேக்கிழாரிடம் சிறப்புறக் காணலாம். கண்ணப்பர் வேட்டைக்குப் புறப்படல், வேட்டையாடல், புகழ்ச் சோழர் படைகள் போரிடல் போன்ற இடங்களில் எல்லாம் அதனதனுக்குரி சந்தம் அமைத்திருத்தலைக் காண்க. 7. சேக்கிழார் கடுஞ்சொற்களைக்கூற அஞ்சியவர் என்பது பெரிய புராணத்தை ஊன்றிப் படித்தவர் உணர்ந்த ஒன்றாகும். பகைவன் சிவனடியாரைக் குத்த விரும்பி, அடியார் வேடத்தில் வந்து, அமயம் பார்த்துக் குத்தியதைக் கூறவந்த சேக்கிழார், ``பகைவன், நினைந்த அப் பரிசே செய்தான் என்று நயம்படக் கூறல் காணலாம். இங்ஙனமே பிறிதோர் இடத்திலும், ``பகைவவன், தன்கருத்தே முற்றுவித்தான் என்று தீயதை மறைத்துக் கூறியிருத்தல் காண்க. சேக்கிழார் செய்யுட்களில் சிறப்பியல்புகள் மேலும் பலவாகும். நீவிர் அவற்றை மூலநூல் கொண்டு படித்துச் சுவைத்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒப்பற்ற உயரிய புலவர்; எல்லாக் கலைகளிலும் வல்லவர்; பிற புலவர் நூல்களிற் பேரளவிற் காணப்பெறாத திணைமயக்கம் முதலியன விளங்கக்கூறி நம்மை வியப்புறுமாறு செய்விக்கும் பேராற்றல் மிக்க பெரும்புலவர். திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை நாட்டு வருணனையில் வரும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணைகளின் பொது இலக்கணமும் பின் சிறப்பிலக்கணமும், பிறகு ஒவ்வொரு நிலத்துக் கருப்பொருள் உரிப்பொருள்களும் பிறவும், அவற்றின் பின் திணைமயக்கமும் (நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல் போன்றவை) படித்துப் படித்து இன்புறத் தக்கவை. தொல்காப்பியத்துள் குறிப்பாகக் கூறப்பட்ட இத்திணை மயக்க இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாகச் சேக்கிழார் பாக்கள் இலங்கக் காணலாம். இத்தகைய வியத்தகு புலமை யுணர்வை நன்குணர்ந்தே, காஞ்சிப் புராணத்துள் தொண்டை நாட்டு வருணனையைக் கூறப் புகுந்த மாதவச் சிவஞான யோகிகள், ``திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தை திணைவளமும் தெரித்துக் காட்ட மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர் குலகவியே வல்லான் அல்லால் கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்!.... என்று சேக்கிழார் பெருமானைப் பாராட்டியுள்ளார் எனின், அப்பெரும் புலவர் புலமைத்திறனைப் பாராட்டாதார் யாவர்? இத்தகைய பெரும்புலவர் காவியங்களைத் தமிழ் மக்கள் படித்து இன்புற்று, அப்புலவர் நாட்களை நாட்டவர் அறியச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் நாளே தமிழ் வளர்ச்சிக்குரிய நன்னாள் ஆகும்.  1. R. Gopalan’s Pallavas of Kanchi, pp. 26-27 2. Inscriptions 177 to 179; 183 and 184 of 1929-`30. 1. 585 of 1920 2. 183 of1931 3. 208 of 1930 4 மு. இராகவையங்கார் `சாஸன தமிழ்க்கவி சரிதம் பக். 71-77. 5. சேக்கிழார் புராணம். செ-18 4. Ins.187-231 of 1929-’30. 1. திரிகடுகம் - பல்கலைக் கழகப் பதிப்பு, பக். 10-11, 75. 1 பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது கி.பி. 400-க்கு முன்பே எனினும், சைவத் தொண்டு செய்த முதற் பல்லவன் கந்த சிஷ்யனே (கி.பி. 400-436) ஆதலின், சைவசமய வளர்ச்சிக்காக, இவன் காலமே பல்லவர்கால முதலாகக் கொள்ளப்பட்டது. 2 History of Pali Literature, Vol. II, pp. 384, 385 - 389. 3. ஐயடிகள் - பஞ்சபாத சிம்ஹன்; அஃதாவது, மூன்றாம் சிம்மவர்மன் (சிம்ம விஷ்ணுவின் தந்தை) என்பவர் ஆராய்ச்சியாளர். 4. இவன் கழற்சிங்கன் என்பதற்குரிய சான்றுகளை எனது ``பெரிய புராண ஆராய்ச்சி என்னும் விரிவான நூலிற் கண்டு bfhŸf.Vide also Dr. C. Minakshi’s Administration and Social Life Under the Pallavas’, pp. 299-304. 1. ``தத்தா! நமரே காண் என்ற தொடர் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றில் உயிர்நாடியாகும். இதன் விளக்கம் பெரிய புராணத்திற் காண்க. 2. `மும்மையால் உலகாண்ட மூர்த்தி என்பது திருத்தொண்டத் தொகை. 3. வடஆற்காடு ஜில்லாவில் உள்ளது. 4. தென் ஆற்காடு ஜில்லாவில் உள்ளது. 5. செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. 6. செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. 7. செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. 1. இதனைப்பற்றிய விரிவான ஆராய்ச்சியை எனது `பெரிய புராண ஆராய்ச்சி என்ற பெருநூலிற் கண்டுகொள்க. 1. Dr. S. K. Aiyangar - `Manimekalai in its Historical Setting’, P. 46. 1. A. R. E. 1913. II. P. P. 87-88. 2. `சோழமண்டலத்துத் தென்வரைப்பனையூர் நாட்டு நெல்வேலி நாட்டு நெல்வேலி; 276 of 1916. 3. நான் அதனை நேரிற் சென்று கவனித்தேன். 4. இதுபற்றிய விளக்கம் எனது ``பெரியபுராண ஆராய்ச்சி என்னும் பெரிய நூலிற் காண்க. 5. இவைபற்றிய விரிவை எனது ``பெரியபுராண ஆராய்ச்சி என்னும் பெரிய நூலிற் காண்க. 1. ஆனாயர் புராணம், செ. 13, 22-28, 29-36. 2. C. K.S. Mudaliyar - Periyapuranam, Vol II pp. 1276-77. 3. இதன் விவரங்கள் `சார்ங்கதர சம்ஹிதை, அஷ்டாங்கயிருதயம், மாதவ நிதானம் என்ற மருத்துவ நூல்களிற் காணலாம். 4. இதன் விவரம் `மாதவ நிதானம், வைத்ய சார சங்கிரகம் போன்ற மருத்துவ நூல்களிற் காணலாம். 5. தடுத்தாட் கொண்ட புராணம், செ. 41-62.