ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20+108=128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா 120/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. FOREWORD In complaince with the request made by Pandit M. Rajamanickam Pillai, I have gladly undertaken to write an introduction to this Tamil work of his which consists of essays he contributed to various periodicals on historical, archaeological, epigraphical and linguistic matters. I say gladly, because it supplies a long-felt want in the study of the history, the language and the literature of the Tamil country. Here I may say a word about how I came to learn the importance of Epigraphy for the historical study of Tamil Literature. In my young days, fortunately for me, I had an occasion to meet Professor Sundaram Pillai of Maharajah’s College. Trivandrum who was then not only eminent in the knowledge of western philosophy but was also a great scholar in Tamil and a Poet of exceptional merit as is evident from his famous dramatic Tamil poem the Manonmaniam the first of its kind in Tamil. And it was also he who opened a new field of study in the domain of Tamil Literature by his English work on `The Age of Thirujnanasambandha.’ What commended me to the notice of this great scholar is the critical and historical sense that I happened to possess in my knowledge of the ancient Tamil classics from my very early days. So much was he struck by it, although I did not at that time set any value on it, that he came to take interest in my cultivating it to a high degree and urged me on to combine with my literary study a historical knowledge of the events which occurred in close connection with the works of poets philosophers and religious men of different epochs. He further showed me how this historical knowledge can be acquired by studying the inscriptions and the pre-historic relics wherever available and by relating them carefully to the incidents mentioned in the literary productions of those different epochs. His work on `The Age of Thirujnanasambandha’ itself has stood as a beacon light to illumine what had lain in the past and guide us how to proceed in future in exploring the region of Tamil Literature. After him many scholars came in succession and carried on their historical researches on the lines laid down by Prof. Sundaram Pillai in his writings. I myself have brought out a bulky volume of more than a thousand pages on `The Life and Times of St. Manickavachakar’ dealing critically not only with the biography of the Saint but also with the literary and religious history of the periods which preceded and succeeded the Saint by more than ten centuries. Only in dealing with post Christian times have I had recourse to incriptions, since epigraphy came into use in the South only after the third century A. D. It must be borne in mind that for a correct understanding of the medieval period of Tamil Literature which had its beginning in the fourth century A. D. and its end in the thirteenth, a close and careful study of inscriptions found in the walls of temples existing all over the South of India will greatly aid the student of Tamil. Still this epigraphical evidence requires to be carefully studied and co-ordinated with the evidence afforded by genuine Tamil works; otherwise one is apt to go wrong in forming his conclusions about the history of language and its literature, their authors and their times. For in the incriptions we meet with more than one king and one person who bear the same name; and it is not easy to determine who the person was who is mentioned both in the literary works and in the inscriptions. It is not possible to get over this difficulty without a careful and comparative study of the evidences obtained from the two souces, the epigraphical and the literary. So far as my knowledge is concerned I venture to say that very few Tamil scholars have taken up an extensive study of these two sources as Mr. Rajamanickam has done. In the following treatise and much more in his deep and laborious studies of the lives of the Saints depicted in the Periyapuranam, I am impressed by the critical acumen shown by him in comparing and sifting the details and in bringing out what is of substantial and permanent value. I am glad to say that I am in agreement with almost all his views expressed as regards the times of the literary and religious celebrities of Tamil, except in a few cases where I cannot bring myself to accept his opinions. The few cases in which I hold my disagreement are the times of the Tholkappiam and the Commentary on the Iraiyanarakapporul and the age of St. Manickavachakar. As regards the age of Tholkappiam I have investigated almost all the divergent views expressed by notable scholars and concluded that its composition could not have taken place later than 2500 B. C. That this assignment of a great Tamil work to so high an antiquity may not be deemed extravagant, when this is compared, with the age 4500 B. C. ascribed to the Rig Veda by such eminent oriental scholars and historians as Professor Hermann Jacobi, Bal Gangadhar Tilak and Dr. Bloomfield. No statement of a great event ought to be thought extravagant if it is sufficiently supported by solid facts. For a long time it has been the fashion among some European scholars and their followes to look upon with incredulity anything Asiatic assigned to a remote age. But this incredulity is now slowly passing away as the antiquarian researches of the Egyptian, the Sumerian, the Aryan, the Tamilian and some other civilisations of the ancient world bring to light the history of their remote past. Recently the utterances of Sir John-Marshall made in disclosing the high antiquity of the `Mohenjodaro and the Indus civilisation’ are remarkable for sweeping away the lingering incredulity with regard to the high antiquity of the Tamilian civilisation. After making a minute study of the relics excavated in the two places he observes: “Among the many revelations that Mohenjodaro and Harrappa have had in store for us/ none perhaps more remarkable than the discovery that Saivism has a history going back to the Chalcolithic age or perhaps even further still and that it thus takes its place as the most ancient living faith in the world.” “Because anything whatever had been discovered of the Indus civilization Dr. H. R. Hall proposed to locate the homeland of the Sumerians somewhre to the east of Mesopotamia and suggested that they might belong to the same ethnic type as Dravidians of India, who though now restricted to the South of India are believed on linguistic and ethnological grounds to have once populated virtually the whole of the peninsula, including the Punjab, Sind, and Baluchistan, whre as is well-known the Dravidian speech is still preserved in the language of the Brahuis.” “Five thousand years ago/ before the Aryans were heard of, the Punjab and Sind, if not other parts of India as well, were enjoying an advanced and singularly uniform civilisation of their own, closely akin to but in same respects even superior to that of contemporary Mesopotamia and Egypt.” When this statement of a great European archaeologist is viewed in an impoartial light the assignment of the Tholkappium to 2500 B. C., may not be thought as extravagant. For internal and external evidences which go to prove this age of the Tholkappiam reference might be made to my work on `The Life and Times of St. Manickavachakar’ pages.. . Similarly I hold that the unique commentary on Iraiyanar Akapporul was produced in the first century A. D. by the poet Nakkirar who was a prominent figure in the third Tamil Academy at Madura. And I have also upheld the age of the St. Manickavachakar to be the first half of the third century A. D. and not the ninth as is held by some scholare nowadays. For my reasons about the ages of the above three I refer the reader to my work on Manickavachakar where the three points are elaborately and carefully discussed. A part from these few differences, the main body of the following work gives me great satisfaction since it has re-opened to our view a true picture of the vanished civilisation of the olden day Tamils. Finally I note with pleasure the lucid Tamil style of the work which is almost free from foreign words and phrases. THE SACRED ORDER OF LOVE, PALLAVARAM, MARAIMALAIADIKAL 27th November 1947 alias Swami Vedachalam முகவுரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் பெயர் கொண்டுள்ள இச்சிறு நூல் (1) மொழி, (2) வரலாறு (3) புதைபொருள் ஆராய்ச்சி, (4) கல்வெட்டுகள், (5) தமிழ் இலக்கணம், (6) தமிழ் இலக்கியம் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்டதாகும். இக்கட்டுரைகள் மாத இதழ்கள், நினைவு மலர்கள் முதலியவற்றிலிருந்து தொகுக்கப்பெற்றவை. இத்தகைய ஆராய்ச்சித் துறைகளில் தமிழ் இளைஞர் உள்ளம் செல்லுதல் வேண்டும், எதிர் காலத் தமிழகத்தில் இவை நன்கு வளர்ச்சி பெற வேண்டும் என்னும் கருத்தினால் இக் கட்டுரைகள் நூல் வடிவில் வெளியிடப் பட்டன. மொழி - வரலாறு இலக்கியம் - புதைபொருள் - கல்வெட்டு ஆராய்ச்சி நமது பழமையையும் பெருமையையும் பாங்குற உணர்த்தும் கருவியாகும். விவேகானந்தர் கல்லூரி, சென்னை. மா. இராசமாணிக்கம் உள்ளுரை பக்கம் 1. வரைமொழியும் வாய்மொழியும் 21 2. கோச்செங்கணான் காலம் 27 3. இந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சி 34 4. தமிழகத்துக் கோவில்கள் 44 5. காஞ்சி - கயிலாசநாதர் கோவில் 53 6. காஞ்சி - ஏகாம்பரர் திருக்கோயில் 59 7. திரிபுவனை 74 8. அரிக்க மேடு 88 9. தமிழ் யாப்பிலக்கண நூல்கள் 96 10. தமிழகத்து வட எல்லை 122 பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் 1. வரைமொழியும் வாய்மொழியும்* தமிழ் மொழி மாற்றம் ஒரு காலத்தில் எல்லோராலும் பேசப்பட்ட மொழி எழுதப்பட்டவுடன் இலக்கிய மொழியாக மாறிவிடும். பிறகு அது, பேச்சு மொழி மாறுதலால் நாளடைவில் தனித்து நிற்றலும் உண்டு. இம்மாறுபாடுகள் இயல்பாக உண்டாகி வருதல் கண்கூடு. எழுதப்பட்ட காலத்திற்குரிய சொற்பொருள் பிற்காலத்தில் வேறுபடுதலும் உண்டு. சொற்களும் உருமாறும்; வழக்கொழிந்து விடும். இவ்வுண்மைகளைத் தொல்காப்பிய உரையாசிரியர்களும், சங்க நூல் உரையாளர்களும் ஆங்காங்குக் குறித்துச் செல்லலைக் காணலாம். `அழன், புழன் என்ற தொல்காப்பியச் சொற்கள் வழக்கு ஒழிந்தன; `புரத்தல் என்னம் சங்க காலச் சொல் `காத்தல் என்னும் பொருளில் இடம் பெற்றுவிட்டது. `புரத்தல் - உண்டி கொடுத்துக் காத்தல் என்பதே பழைய பொருள். இப்பொருளைக் கன்னட மொழியிற் காணலாம். இங்ஙனம் பிற்காலத்தில் பொருள் திரிந்த சங்க காலச் சொற்கள் பலவாகும். தமிழின் இனமான தெலுங்கு, கன்னடம் மலையாளம் முதலிய மொழிகளில் பழந்தமிழ்ச் சொற்களுக்கு நேரான பொருளைக் கண்டு மகிழலாம். பல சொற்கள் `ஒரீஇ, நிறீஇ என உருக்குலைந்துவிட்டன அவை முறையே `ஒருவி, நிறுவி என்று இருத்தற்கு உரியன. இங்ஙனம் அவ்வப்போது உண்டாகும் மாறுதல்களை இலக்கண ஆசிரியர்கள் குறித்து, இலக்கிய மொழிக்கும் பேச்சு மொழிக்கும் தொடர்பு உண்டாக்க முயன்றுள்ளனர். ஆங்கில மொழி மாற்றம் இவ்வேறுபாடு தமிழ் ஒன்றுக்கே என்று எண்ண வேண்டா. 16-ஆம் நூற்றாண்டினராகிய ஷேக்பியர் நூலில் உள்ள சொற்கள் பல இன்றுள்ள ஆங்கிலத்தில் வழக்கொழிந்துவிட்டன என்பதைத் தெள்ளத் தெளிய அறிஞர் ஒருவர்1 விளக்கியுள்ளார்; விளக்கி, `இவற்றால் ஷேக்பியர், இறந்தகால மொழியில் தம் நாடகங்களை இயற்றினர் எனல் பொருந்தும் என்று குறித்துள்ளமை கவனித்தற்குரியது. லாட்டின் எப்படி இறந்த மொழியாகிவிட்டதோ அதுபோலவே ஷேக்பியர் காலத்து ஆங்கிலமும் இறந்துபட்டது. என்னை? அம்முறையில் அச்சொற்களைப் பயன்படுத்தி இன்று பேசுவார் இல்லாமை யால் என்க என்று டாக்டர் வீட் என்னும் மொழி ஆராய்ச்சி நிபுணர் `மொழிகளின் நேரிய தன்மை என்ற தமது நூலிற்2 கூறியுள்ளார். வரைமொழி, வாய்மொழி - வேறுபாடுகள் 1. இலக்கிய மொழி என்றும் மாறுதல் அடையாதது. பேச்சு மொழி மாறிக்கொண்டே வரும். 2. இலக்கிய மொழியில் பாடிய அல்லது எழுதிய புலவரே தமது நடைக்குப் பொறுப்பாளி ஆகின்றார். அவர் இலக்கண - இலக்கியங்களைத் துணைக்கொண்டு எழுதியிருப்பின், அவரது காலம் பிற்பட்டதாயினும், பண்டை இலக்கியப் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவர். இந்நிலைமை பேச்சு மொழிக்குப் பொருந்தாது. 3. பேச்சு மொழி (வாய்மொழி) இயல்பாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே வருவது; இயல்பாகப் பேசப்படுவது, ஆனால், இலக்கிய மொழி ஆசிரியர் ஒருவரைக் கொண்டு அறிய வேண்டுவது. இம்மூன்று காரணங்களால் இலக்கிய மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் நன்கு விளங்கும்; பேச்சுத் தமிழ் மாறுதல் அடைதற்குக் காரணமும் இலக்கிய மொழி மாறாமைக்குக் காரணமும் நன்கு விளங்கும். இலக்கியத் தமிழ் பேச்சு வழக்கு அற்றமையின், அஃது அழியாது; பேச்சுத் தமிழ் வழக்கில் இருப்பதால் மாறிக்கொண்டே இருக்கும். பண்டை இலக்கண இலக்கியங்களைப் படித்துச் சொல்பவர் சொல்லும் வரையிற்றான் அவை பொதுமக்கள் கண்ணெதிரே தோன்றும்; இன்றேல், இறந்தவை ஆகும். ng¢R¤ jÄÊš fU¤ij¢ br›itahf És¡f KoahjnghJ«, `g©il¤ jÄÊš ï~J v§‡d« Tw¥g£LŸsJ? என்று பார்க்க உணர்ச்சி உண்டாகும் போதும், பழைய மொழிச்சுவையை நுகர அவா உண்டாகும்போதுமே இலக்கிய - இலக்கண நினைவு எழும். பண்டை வாய்மொழியே வரைமொழி வரைமொழி (இலக்கிய மொழி)கள் யாவும் செப்பம் செய்யப்பட்டவையே ஆகும். அவை, பேச்சு மொழியைத் திருத்த முறையிற்கொண்டவை ஆகும். `பேச்சு மொழி ஒழுங்கு நிலையை அடையின், இந்நிலையிற்றான் இருக்கும் என்பதுபோல நன்முறையில் அமைந்திருப்பது வரை மொழி. இலக்கிய மொழியாக இன்று இருப்பது ஒரு காலத்தில் பேச்சு மொழியாக இருந்தது. இன்று கடினமாகவும் வியப்பாகவும் தோன்றும் டான்ட்டி1, பெட்ராக்2 என்பவர்கள் வரைந்த லத்தீன் மொழி நடை ஒரு காலத்தில் சாதாரண மக்கள் பேசிவந்த மொழியே என்பதை நாம் அறிதல் வேண்டும். இவ்வுண்மை எல்லா மொழிகட்கும் பொருந்தும் என டாக்டர் வீட்3 தமது நூலில் குறித்திருத்தல் கவனிக்கத்தக்கது. நடை வளர்ச்சி இவ்வாறு சாதாரணமாக வழங்கிய மொழி ஒன்றைச் செப்பம் செய்தலும் முடிபு கொடுத்தலும் பிறவும் நீண்ட கால வளர்ச்சியாக இருத்தல் வேண்டும். சான்றாக, ரிக்வேத மோழி வளர்ச்சி அவ்வேத காலத்திற்கு மிக முன்னரே தொடங்கப் பெற்றிருத்தல் வேண்டும். ஏன் எனில், திடீரென மொழி அமைதி அவ்வளவு செம்மையாக அமைதல் இயற்கைக்கு மாறானது ஆதலால் என்க. வாழையடி வாழையாக வந்த செய்யுள் நடையே ரிக்வேத நடையாகும். அவ்வாறே பண்டைச் சங்க நூல் தமிழ்நடை, அச்சங்க காலத்திற்கு முன்பே பண்பட்டு வளர்ச்சி அடைந்துவந்த நடையென்பதை அறிதல் வேண்டும். வாய்மொழி வரைமொழி ஆகும் முறை ஒரு நாட்டு மொழி முதலில் கொச்சையாகவும் கரடு முரடாகவும் இருக்கும். அதனைச் செப்பம் செய்யச் சிற்பிகள் தோன்றுவர்; செப்பம் செய்வர். அங்ஙனம் செப்பம் செய்யப்பட்டதே இலக்கிய மொழி. முதன் முதலில் மொழியைச் செப்பம் செய்து எழுதும் நிலைக்குக் கொண்டு வருபவரே உயர்ந்தவர்; உழைப்பாளிகள். இதற்கெனச் சிலர் தோன்றி வேலை செய்தல் இயற்கையின் சிறப்பென்றே இயம்புதல் வேண்டும். ஒருவர் சொல் முடிபுகளைச் செப்பம் செய்வார்; ஒருவர் நடையை ஒழுங்காக்குவார்; ஒருவர் கருத்துக்களைப் பதப்படுத்துவார்; வேறு ஒருவர் கருத்துக்களை வெளியிடுவதற்குரிய சொல் அடுக்குகளை உண்டாக்குவார். இங்ஙனம் பேரறிஞர் பலரது கூட்டு உழைப்பாற்றான் மொழி செம்மையுறுதல் உலக இயற்கை. இப்பெரு மக்களது தனிப்பட்ட நடை `மொழிச் செல்வமாகப் பின்னோராற் கருதப்படும். அரிய தொடர்கள், ஓசை நயம், எதுகை, மோனை இன்ன பிற அழகுகள் படிப்படியாகப் படித்தவரிடம் பரவும்; அளவளாவும்பொழுது இவை அவரது உரையாடலை அணிசெய்து ஆரா இன்பம் அளித்தல் உறுதி. சொல் அழகும் பொருள் அழகும் பின்னிச் செல்லும் பான்மை கற்றோர்க்குக் கழிபேருவகை விளைப்ப தாகும். இத்தகைய உயரிய பண்பை முதலில் உண்டாக்கித் தரும் மொழி வல்லுநர்க்கு உலகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது அன்றோ? என்று அறிஞர்1 அறைந்துள்ளமை உண்மையே ஆகும். இக்கூற்றால், `வாய்மொழி எங்ஙனம் செப்பம் செய்யப்பட்டு `வரைமொழி ஆகின்றது என்பது எளிதிற் புலனாகும். வரைமொழியை வாய்மொழி ஆக்கலாம் வரைமொழியும் வாய்மொழியும் ஒன்றாக இருத்தல் இயலாதா? `இயலாது என்று கூறுதல் தவறாகாது; மொழிப் புலமை எய்துதல் அனைவர்க்கும் ஆவதொன்றன்று. சாதாரணப் படிப்புடையார் ஓரளவு பயிற்சி பெறின், பிழையின்றி எளிய நடையிற் பேசலாகுமேயன்றிப் புலவர் நடையிற் பேசுதல் இயலாது. ஆயின், அனைவரும் கல்வி அறிவு பெறின் - தாய் மொழியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் அழுத்தமாக இருப்பின் - அந்நிலையில் பிழையற்ற தமிழ், பொது மக்கள் வாழ்வில் நடனம் செய்யும். அந்த முறை இன்று படித்தவர் வாழ்க்கையிலும் காணுதல் அருமையாக இருக்கிறது! உள்ளத்தில் மொழிப்பற்று வன்மையோடு உறுத்துங்கால், பிழையற்ற முறையிற் பேச வேண்டும் என்னும் உணர்ச்சி தோன்றும்; அதற்குரிய முயற்சி தோன்றும். குழந்தைகள் சிறு பருவத்திலேயே பெற்றோர்- மற்றோர் பழக்கத்தால் பிழையறப் பேசப் பயிலுவராயின், மொழி மாறுதல் அடையாது. ஆங்கிலச் சிறார் இன்றும் ஆங்கிலோ-சாக்ஸன் சொற்களைப் பேசுதல் காணலாம். இதற்குப் பழக்கமே காரணம் ஆகும். மொழியில் உண்டாகும் மாறுதல்கள் முதலில் எளியவையாகவும் சிறியவையாகவும் காணப்படினும்-அவையே சில தலைமுறைகளில் அம் மொழியின் தன்மையை மாற்றி விடுவன ஆகும்1 என மொழி இலக்கணப் புலவராய டாக்டர் வீட் கூறியிருத்தல் கருதத்தக்கது. மொழியால் உண்டாகும் பிளவு எனவே, வரைமொழி பயின்று அம்மொழியினைப் பேசுவார்க்கும் அங்ஙனம் பேசார்க்கும் உள்ளதொரு வேறுபாடு நாளடைவில் பெருகித் தோன்றும் என்பது புலனாகும். படித்த மக்கள் ஒருவாறும் படியா மக்கள் ஒருவாறும் பல தலைமுறை களாய்ப் பேசி வருதலால் தமிழ் (ஒவ்வொரு மொழியும்) வரைமொழி எனவும் வாய்மொழி எனவும் இரண்டாகி, வரைமொழி ஒரே நிலையில் மாறாது நிற்ப, வாய்மொழி காலம் கழியக் கழிய மாறுதல்கள் ஏற்று ஏற்றுப் போதல் இயல்பாய் நடை பெறுகின்ற நிகழ்ச்சியாக இருக்கின்றது. மேலும், ஒரே மொழி மக்கள் அறிவு நிலைக்கு ஏற்ப மாறுதல் அடைதலும் இயல்பு; எனவே, ஒரே மொழியை `இழுத்துக் கொண்டு என்று படித்தவரும், `இழுத்துக்கிட்டு, ஈத்துகிட்டு, இதுகினு எனப் படிப்படியாகக் கீழ் நிலையில் உள்ள மக்களும் பேச இயல்பாகவே இடம் ஏற்படுகிறது. இந்நிலை வளரவளர முன்னரே, படியாத மக்களைப் பலவேறு காரணங்கள் காட்டி வேறுபடுத்தி வந்த படித்தவர், இம்மொழி வேறு பாட்டையும் துணையாகக் காட்டித் தம்மைச் சமூகத்தினின்றும் வேறு பிரித்துக்கொள்ள முனைதல் கூடும்; இலக்கணம் வகுத்து, வாய்மொழி, வரைமொழியிற் புகாவண்ணம் எல்லை எடுப்பர்; தம் பிள்ளைகளை அவ்வாய்மொழியைப் பேசாதவாறு பாதுகாத்தலும் செய்வர். இங்ஙனம் மொழி மாறுதல் சமூகத்தில் இரண்டு பிரிவுகளை இயல்பாகவே உண்டாக்கிவிடுகின்றது. பிளவு ஒழிய வழி இப்பிளவு நீங்க வேண்டுமாயின், பிள்ளைகளை இளம் பருவமுதலே வரைமொழியைப் பயிலச் செய்தல் வேண்டும்; அதனிற் பிள்ளைகளைப் பேசப் பழக்கல் வேண்டும். இஃதொன்றே நாளடைவில் சமூகத்தைத் தூய மொழி பேச வைக்கும் தக்க வழியாகும். `தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் ஆதலின், இளமையில் உண்டாகும் சொற்களின் பிழையுற்ற உச்சரிப்பு, ஒலி அமைப்பு முதலியவற்றை இளமையிற் பண்படச் செய்தல் வேண்டும். இவை இளமையில் வலியுறுமாயின், அவரது வாழ்க்கையில் வரைமொழி வாய்மொழியாதல் திண்ணம் என்று சொல்லலாம். முடிவுரை இதுகாறும் கூறியவற்றால்-(1) முதலில் வாய்மொழியாக இருந்த ஒன்றே வரைமொழி ஆனது; (2) காலம் கழியக் கழிய வரைமொழியினின்று வாய்மொழி மாறுபாடு பெறும்; (3) இவ்வேறுபாட்டைத் தமிழர் கல்வி அறிவின்மையால் வளர விடுவாராயின், இரு மொழிகளும் நாளடைவில் தொடர்பற்றுத் தனிமொழிகளாக மாறி விடக்கூடும்; (4) ஆயின், மக்கள் ஓரளவு கல்வி அறிவும் தாய்மொழிப்பற்றும் உடையராயின், இருமொழிகட்கும் இடையே வேறுபாடு சிறந்து தோன்றாது; ஆதலின், இம்முயற்சியில் தமிழ்மக்கள் முயன்று தாய்மொழி கற்றுத் தமிழ்ப் பற்றுடைய தமிழராக வாழ்தல் வேண்டும்; தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படையாகும் என்பனவற்றைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளலாம். - தமிழ்ப் பொழில் 2. கோச்செங்கணான் காலம் இவன் சங்க காலத்தவனா? இவன் சங்க காலத்தவன் என்பதற்குக் காட்டப்படும் காரணங்கள் இரண்டு: (1) 74-ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில் சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து `தண்ணீர் தா என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு எனவரும் செய்தி; (2) பொய்கையார் சோழன்மீது களவழிபாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் என்பது களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப் பட்டுள்ள செய்தி. இவ்விரு கூற்றுகளையும் ஆராய்வோம்: (1) மேற்சொன்ன 74-ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு, பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது `உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடலின்கீழ் உள்ள (பிற்காலத்தார்) எழுதிய அடிக்குறிப்புகள் பல இடங்களில் பொருத்த மற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றுக்காக ஓர் இடம் குறித்துக் காட்டுதும்: புறம் 389-ஆம் செய்யுளில் `ஆதனுங்களைப்போல நீ கொடுப்பாயாக என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டது என்பதையும் கவனியாமல், `இஃது ஆதனுங்களைப் பாடிய பாட்டு என்று அடிக்குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ஙனம் பிழைபட்ட இடங்கள் பல; பொருத்தமற்ற அடிக்குறிப்புகள் பல. இத்தகைய அடிக்குறிப்புகளில் செங்கணானைக் குறிக்கும். அடிக்குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப் பாக்களைக் காண, கோச்செங்கணான் பேரரசன் என்பதும், வீரம் வாய்ந்த பகைவரைக் கொன்றவன்1 என்பதும், போரில் கொங்கரையும் வஞ்சிக்கோவையும் கொன்றவன்1 என்பதும் தெரிகின்றன. பாக்களால், இச்சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன்) போரில் கொல்லப்பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்படவில்லை. (2) முன்சொன்ன 74-ஆம் பாடல் தமிழ் நாவலர் சரிதையில், சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன? (3) புறநானூறு 74-ஆம் செய்யுள் அடிக்குறிப்பு: கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுள் அடியில், இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான் என்பது குறிக்கப் பட்டுள்ளது. இவ்விரு கூற்றுகளும் தம்முள் மாறுபடுவதைக் கண்ட நாவலர் பண்டித ந. மு. வேங்கட சாமி நாட்டார் அவர்கள், துஞ்சினான் கணைக்கால் இரும் பொறையாகச், சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும் என்று கூறி அமைந்தனர்.2 சேரமான் கணைக்கால் இரும்பொறையைத் தளையிட்டவன் விஜயாலயன் என்று குலோத்துங்கன் உலா உரையாசிரியர் கூறியுள்ளது மற்றொரு விந்தை.3 இத்தகைய பொருத்தமற்ற அடிக்குறிப்புக் களைக் கொண்டு, கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது. 2. கோச்செங்கணான் எழுபது சிவன் கோவில்கள் கட்டினான் என்று திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்.4 சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ, திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசானல் கட்டப்பட்ட காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்க காலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழகத்தில் பல சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக்கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஓர் அரசன் 70 கோவில்கள் கட்டுதல் அசம்பாவிதம். ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர்-பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்க காலப் பாண்டியன் அளித்த பிரம்ம தேய வுரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக் கொடுமை இருந்தது என்பது வேள்விக்குடிப் பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற்றான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்புற்றார். சோழ நாட்டில் தண்டியடிகள், நமிநந்தியடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்கள் நடந்தன. இத்தகைய சமயப்பூசல்கள் நடந்து, சைவசமய வுணர்ச்சி மிகுந்து தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோவில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும். 3. கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கையாழ்வார் வெளியிடும் கருத்துக்கள் இவையாகும்1:- (1) உலகமாண்ட தென்னாடன்2 குடகொங்கன் சோழன். (2) தென் தமிழன் வடபுலக்கோன். (3) கழல் மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன். (4) விறல் மன்னர் திறல்அழிய வெம்மாவுய்த்த செங்கணான் சோச்சோழன். (5) படைமன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன். இக்குறிப்புகளால் இவன் (1) வலி பொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன்-வென்றவன் என்பதும், (2) கொங்குநாடு வென்றவன் என்பதும், (3) சோழ நாட்டிற்கு வடக்கிருந்த நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், (4) சிறந்த யானைப் படை, குதிரைப்படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன. `கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர் என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் `தெய்வ வாள் கொண்டு வென்றான் என்பதாலும் பகைவரது பெருவலிமை உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின், அப்போரைப்பற்றிய சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்க வேண்டும். இல்லையாயின் அவர்கள் இன்னவர் என்ற குறிப்பாவது இருத்தல் வேண்டும். கோச்செங்கணான் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் (கி. பி. 200-250) என்பது வரலாற்று ஆசிரியர் கருத்து. அங்ஙனமாயின், அக்காலத்தில் அவனுடன் போரிட்ட `கழல்-விறல்-படை மன்னர் யாவர்? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின், (1) இவன் அரசன் பலரை வென்றான் என்பதற்குச் சங்க நூற்களிற் சான்றில்லை; (2) இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான்; (3) சங்க இறுதிக்காலத்திலேனும் இங்ஙனம் ஓர் அரசன் இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை; (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந்நான்கு காரணங்களால் கோச் செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தல் கூடும் என்ற எண்ணமே பலப்படும். 4. கோச்செங்கணான் தில்லையில் சமயத்தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. `தில்லை ஒரு சிவ தலமாகச் சங்கச் செய்யுட்களில் கூறப்படாமை நோக்கத் தக்கது. அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப்பெற்றது. அவன் அங்கு மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல சமைத்தான்.1 இங்ஙனம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்ககாலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது. 5. கோச்செங்கணானது தந்தை பெயர் சுபதேவன் என்பது. தாய் பெயர் கமலவதி என்பது.2 இப் பெயர்களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்று கொண்டே கூறினராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இவ்வாறு சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக்கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன `கமலவதி என்ற பெயர் ஒப்பு நோக்கத்தக்கது. இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்ககாலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர்-சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற் சொன்ன சங்ககாலத்திற்குப் பிறகும் அப்பர்-சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும்; அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழக் கி. பி. 300-600க்கு உட்பட்டது எனக் கூறலாம். இப்பரந்து பட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத் தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம். கோச்செங்கணான் காலம் வேள்விக்குடிப் பட்டயப்படி சங்க காலத்திற்குப் பிறகு பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது; அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், சோழநாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி. பி. 5-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்ததத்தர் குறித்த அச்சுதனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட களப்பிரர் இன்னவர் என்பது தெரியவில்லை. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையில், `குமார விஷ்ணு என்ற பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான். . . . . . . . . அவன் மகனான புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனைக்கு `வடவைத்தீப் போன்றவன் என்று வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது. கி. பி. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக் கருதப்படும் முதலாம் நந்திவர்மன் விஜய காஞ்சீரபுரத்திலிருந்து பட்டயம் விடுத்துள்ளான்.1 ஏறத்தாழக் கி. பி. 575-ல் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் மீட்டும் காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர், களப்பிரர் முதலியோரை வென்று காவிரிக்கரை வரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பது வேள்விக்குடிப் பட்டயமும் கசாக்குடிப் பட்டயமும் குறிக்கும் செய்தியாகும்.2 இக்குறிப்பு களால் முன் சொன்ன குமார விஷ்ணுவுக்குப் பிறகும் சிம்ம விஷ்ணுவுக்கு முன்பும் காஞ்சி பல்லவர் வசம் இல்லாது அடிக்கடி கைம்மாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுதவிக்கந்தற்குப் பிறகு, சிம்மவிஷ்ணு சோணாட்டை வெல்லும் வரை களப்பிரரே சோணாட்டை ஆண்டனர் என்பதற்குரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக் காண்கையில், சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்டவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என்பது கூறக்கூட வில்லை. கி. பி. 5-ஆம் நூற்றாண்டின் இடையில் புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனையோடு போரிட வேண்டியவன் ஆனான்; 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு சோழரை வென்றான். இவற்றுடன் புத்தவர்மன் போரைக் காணின், அச்சுதக் களப்பிரனுக்குப் பிறகு (கி. பி. 5-ஆம் நூற்றாண்டில்) சோழர் கடல்போன்ற சேனையை வைத்திருந்தனர்; அவர் பல்லவருடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ஙனம் கடல்போன்ற சேனையை வைத்துக்கொண்டிருந்த சோழன் சங்க காலத்திற்கும் பிற்பட்டவனாகக் கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் அரசர் பலரை முறியடித்தவன், பெரிய யானைப்படை, குதிரைப் படைகளை உடையவன் என்பன களவழியாலும் திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. அச்சோழன், தன் நாட்டைக் கைப்பற்றிக்கொண்ட களப்பிரரை அடக்கிப் பின் வடபுலத்திருந்த புத்த வர்மனுடன் போரிட்டு வெற்றி கொண்டனன் போலும்! அவனை `வடபுலக் கோன் என்று திருமங்கையாழ்வார் குறித்தமை இதுபற்றிப் போலும்! இங்ஙனம் கொள்ளின், கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்னலாம். கோச்செங்கணான்மீது பாடப்பெற்ற களவழியின் காலம் ஏறத்தாழக் கி. பி. 450-500 என்ற இராவ்சாஹிப் திரு. ளு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்தும்1 இங்குக் கருதத்தகும். - M. O. L. ஆராய்ச்சிக் கட்டுரை 3. இந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சி நாகரிக வளர்ச்சி முதல் மனிதன் வீடு கட்ட அறியாது மலைக்குகைகளில் வாழ்ந்தான். அவன் அப்பருவத்தில் இயல்பாகக்கிடைத்த கற்களையே தனக்குரிய கருவிகளாகக் கொண்டான்; பின்னர் அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருக, ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் கிடைத்த களிமண்ணைக் கொண்டு வீடுகளை அமைத்தான்; தனக்கு வேண்டிய பாண்டங்களைச் செய்து கொண்டான்; தன் பேச்சைப் புலப்படுத்தச் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினான். அவ்வெழுத்துகளை மட்பாண்டங்கள்மீதும் பிறவற்றின் மீதும் பொறித்தான்; மண்ணை அறுத்துக் கற்களாக்கிச் சுட்டு அச்செங்கற்களைக் கொண்டு வீடுகளை அமைத்தான்; சுடாத கற்களையும் பயன்படுத்தினான். மனிதர் இவ்வாறு படிப்படியாக மலைநாடு, காடு, ஆற்றுவெளி, கடற்கரை என்னும் இடங்களிற் பரவி, அங்கங்குக் கிடைத்த சாதனங்களைக் கொண்டு வாழலாயினர்; நாளடைவில் இப்பல இடத்து மக்கட்குள் வாணிபம் பற்றிக் கூட்டுறவு உண்டாயிற்று. பலவகைக் காலங்கள் முதல் மனிதன் காலத்தில் பதப்படுத்தப்படாத கற்களே கருவிகளாக அமைந்திருந்தன; அடுத்த காலத்தில் பதப்படுத்தப் பட்ட கற்கருவிகள் விளக்க முற்றன. இவ்விரு காலங்களும் கற்காலம் எனப்படும். அறிவுபெற்ற மனிதர் மண்ணில் இயற்கையாகக் கிடைத்த செம்பு, வெண்கலம், பித்தளை, இரும்பு ஆகிய உலோகங்களைப் படிப்படியாகக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினர். அக்காலங்கள் முறையே செம்புக் காலம், வெண்கலக் காலம், பித்தளைக் காலம், இரும்புக் காலம் எனப்படும். இக்காலங்கள் மனிதனுடைய அறிவு வளர்ச்சியையும், நாகரிக வளர்ச்சியையும் உணர்த்து வனவாகும். துறக்கப்பட்ட இடங்கள் முதலிற் கற்கருவிகளைப் பயன்படுத்திய மனிதன் உலோகங்களைக் கொண்டு கருவிகள் செய்ய அறிந்ததும் கற்கருவிகளைப் புறக்கணித்தான்; பயனற்ற மட்பாண்டங்களைப் போகவிட்டான். இவை நாளடைவில் கவனிப்பார் அற்று மண்ணிற் புதையுண்டன. இறந்தவரைப் பெரிய மட்பாத்திரங்களில் (தாழிகளில்) இருத்திப் புதைத்தல் பண்டையோர் மரபு. அத்தாழிகள் எண்ணிறந்தன பண்டை மக்கள் வாழ்ந்த இடங்களில் புதைந்து கிடக்கின்றன. பழைய மக்கள் செழிப்புள்ள இடங்களைத் தேடி அடிக்கடி அலைந்து திரிந்தனர் ஆதலின், அங்கங்கே பயனற்ற பொருள்களைப் போட்டுவிட்டுப் போயினர். அவை நாளடைவில் மண்ணில் மறைந்தன. ஆற்று ஓரங்களில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு ஓரளவு நாகரிகத்துடன் வாழ்ந்த மக்கள், ஆற்று வெள்ளத்தால் நகரம் அழியக் கண்டு, வேறு இடம் புகுந்தனர். இங்ஙனமே கடற்கரை ஓரமாக வாழ்ந்த மக்கள் அமைத்த நகரங்களும் கடலுக்கு இரையாயின. சில நகரங்கள் எரிமலை கட்கு இலக்காகி அழிந்தன. வேற்று நாட்டு மக்கள் படை யெடுப்பால் பாழான நகரங்கள் பல. இங்ஙனம் பல்வேறு காரணங்களால் பண்டைக்கால முதலே பல நகரங்களும் சிற்றூர்களும் அழிந்து, நாளடைவில் பூமியிற் புதையுண்டன; சில மண்மேடிட்டுக் கிடக்கின்றன. பழைய நூல் குறிப்புகள் இப்பொழுதுள்ள கன்னியாகுமரி முனைக்குத் தெற்கே `குமரி நாடு என்ற பெயருடன் பெருநாடு ஒன்று இருந்தது; அந்நாட்டில் குமரி மலைத்தொடர், குமரியாறு, பஃறுளியாறு, பழைய மதுரை என்பன இருந்தன; அவை அழிந்து பிறகு கிழக்குக் கடற்கரையில் அலைவாய் (கபாடபுரம்) என்பதைப் பாண்டியன் தலைநகரமாகக் கொண்டான். அதுவும் கடலுள் ஆழ்ந்தது; பழைய கொற்கை நகரமும் கடலுக்கு இரையானது; சிறந்த துறைமுகப் பட்டினங்களான காவிரிப்பூம்பட்டினம் முதலியன கடல் கொந்தளிப்பால் அழிந்தன என்பன போன்ற செய்திகளைத் தமிழ் நூல்களிற் காண்கிறோம்; அவற்றின் பழைய வரலாற்றை அறிய, அந்த இடங்களை இயலும்வரை அகழ்ந்து காண ஆவல் கொள்கிறோம் அல்லவா? இங்ஙனமே ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்த பாலதீன நகரங்கள் பல இன்று காணுமாறில்லை. ஹோமர் எழுதிய `இலியட் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள `ட்ராய் நகரம் காணப்படவில்லை. அவை மண்ணுள் மறைப்புண்டு மண்மேடிட்டுக் கிடத்தல் வேண்டும். அவற்றைக் கண்டறிந்து அகழ்ந்து ஆராயவேண்டும் என்னும் அவா அறிஞர் உள்ளத்தில் தோன்றுதல் இயல்பன்றோ? இங்ஙனம் வேதங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பௌத்த சமண நூல்களிலும் சிறப்பாகப் பேசப்பட்ட நாலந்தா, தக்ஷசீலம், கோசாம்பி, பாடலிபுரம் முதலிய வடநாட்டுப் பழைய நகரங்களைக் கண்டறிய இந்தியர் விரும்புதல் இயல்புதானே! புதைபொருள் ஆராய்ச்சி இவ்வாறு நூல்களில் கூறப்பட்டும் கூறப்படாமலும் உள்ள - பண்டை மக்கள் வாழ்ந்த - பலதிறப்பட்ட இடங்களை அறிந்து அகழ்ந்து பார்த்து, அவ்விடங்களிற் காணப்படும் பொருள்களை ஆராய்ந்து, அவற்றைப் பற்றித் தோன்றும் செய்திகளையும், அவற்றைப் பயன்படுத்திய மக்களைப் பற்றிய விவரங்களையும் அறியும் முயற்சியே புதைபொருள் ஆராய்ச்சி என்பது. இவ்வாராய்ச்சிக்குத் துணையாக இருப்பவை மண்டை ஓட்டைச் சோதிக்கும் கலை, பிற உயிர்களின் எலும்புகளை ஆராயும் கலை, நில நூல் அறிவு முதலியனவாகும். ஆராய்ச்சி நடைபெற்ற வெளி இடங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் புதை பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.மேனாட்டாரே இவ்வராய்ச்சியிற் சிறந்து விளங்குகின்றனர். மத்தியதரைக் கடலில் உள்ள `மால்ட்டா தீவு, எகிப்து, பாலதீனம், அசிரியா, பாபிலோனியா, ஏலம், பாரசீகம் என்பன குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும். உலகத்துப் பண்டை நாகரிக நாடுகளில் எகிப்து தலைசிறந்தது என்பது இந்த ஆராய்ச்சியாற் புலனாயிற்று. அங்குக் கி. மு. 4000 ஆண்டுகட்கு முன்னும் பின்னும் வாழ்ந்த எகிப்திய அரசர்கள் தமக்கெனக் கட்டிய கல்லறைகளே பிரமிட் கோபுரங்கள் என்பன. அவை ஏறக்குறைய 80 ஆகும். அவற்றுள் மிகப்பெரியது 764 சதுர அடிப் பரப்பும் 480 அடி உயரமும் கொண்டது. அதில் உள்ள கற்களைக் கொண்டு ஒரு நகரத்தை அமைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அறிஞர் அந்தக் கல்லறைகளை ஆராய்ந்து மதிப்பிடத்தக்க பல பொருள்களை எடுத்தனர்; அங்குக் காணப்பட்ட சித்திர எழுத்துகளை ஆராய்ந்தனர்; படித்துப் பொருள் கண்டனர்; எகிப்திய நாகரிகம் மிக்க பழமையானது என்னும் முடிபுக்கு வந்தனர். இங்ஙனமே மேனாட்டு அறிஞர் டைக்ரி, யூப்ரடி ஆறுகட்கு இடைப்பட்ட நிலப் பகுதியையும் அவற்றை அடுத்துள்ள இடங்களையும் அகழ்ந்து ஆராய்ந்தனர். சுமேரியர், பாபிலோனியர், அசிரியர் முதலிய பலதிறப்பட்ட மரபினர் அவ்விடங்களில் தனித்தனி நாகரிகத்தை வளர்த்து மறைந்தனர்; அவர்கள் வழிபட்ட சூரியன், சந்திரன், சிவன், துர்க்கை முதலியவர் கோவில்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவர்கள் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தின மக்களாவர். சுமேரியர் பேசிய மொழி துருக்கி, தமிழ் போன்ற ஒட்டு மொழியாகும் என்று ஆராய்ச்சியாளர் அறிவித்தனர். இந்திய ஆராய்ச்சிக் கழகம் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ்பெற்றது; ஆதலின், புதை பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாகும் என்பது அரசாங்கத்தார் கருத்து; அதனால் `இந்தியப் புதை பொருள் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவினர். அக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்தவர் ஸர் அலெக்சாண்டர் கன்னிங் ஹாம் என்பவர். அவர் வட இந்தியாவில் பல இடங்களில் ஆராய்ச்சி நிகழ்த்தினார். அவரது பேருழைப்பின் பயனாய் நாலந்தா, தக்ஷசீலம், பாடலிபுரம், கோசாம்பி முதலிய பழைய நகரங்களைப் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளிப்பட்டன; தென் இந்தியாவில் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க சிற்பங்களும் கல்வெட்டுகளும் கட்டடச் சிதைவுகளும் கிடைத்தன. சிந்து மாகாணப் புதையல் சிந்து மாகாணம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு வளமான இடமாக இருக்கின்றது. சிந்து நதி பாயப்பெறும் சமவெளியில் நூற்றுக்கு மேற்பட்ட பழைய நகரங்களும் சிற்றூர்களும் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றுள் சான்ஹ்-தரோ, மொஹெஞ்சொ-தரோ, தகஞ்ச-தரோ, அலிமுராத், பாண்டிவாஹி முதலிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அவ்விடங்களில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அங்குப் பலவகைப் பட்ட பழைய கட்டடங்கள், மட்பாண்டங்கள், நுண்ணிய துளையுடைய மிகச் சிறிய மணிகள், வழவழப்பான களிமண் பொம்மைகள், பலவகைக் கற்களால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், சித்திர எழுத்துக்களைக் கொண்ட பாத்திரச் சிதைவுகள், முத்திரைகள் முதலியன கிடைத்தன. இவை அனைத்திலும் மிக்க பயன்தரத்தக்க இடம் மொஹெஞ்சொ-தரோ என்பது. அது 1922-லிருந்து அகழ்ந்து ஆராயப்பட்டு வருகின்றது. இதுவரை பத்தில் ஒரு பங்கே அகழப்பட்டுள்ளது. ஆயினும் அதுபற்றி வந்துள்ள ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். மொஹெஞ்சொ-தரோ இந்நகரம் அமைந்துள்ள இடத்தில் பல மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 1300 கெஜம் நீளமும்670 கெஜம் அகலமும் உடையது. மற்றொன்று 440 கெஜம் நீளமும் 330 கெஜம் அகலமும் கொண்டது. மற்றவை சிறிய அளவின. தோண்டப்பட்ட இடத்தில் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைந்துள்ளன. பெரிய தெருக்களின் அகலம் 33 அடி. பல கட்டடங்கள் மேல் மாடங்களைக் கொண்டவை. எல்லாத் தெருக்களிலும் கால்வாய்கள் நன்னிலையில் அமைந்துள்ளன. வீட்டுக் கால்வாய் தெருக் கால்வாயுடன் கலக்கிறது. தெருக் கால்வாய் பெரிய தெருக் கால்வாயுடன் பெரிய சதுரக் குழியில் கலக்கிறது. எல்லாக் கால்வாய்களும் பெரிய செங்கற்களால் செவ்வையாக மூடப்பட்டுள்ளன. வீட்டு மேல் மாடத்திலிருந்து கழிவுநீர் மண்குழை வழியே கீழே இறங்கிக் கீழ்க் கால்வாயில் கலக்கிறது. மண்குழை சுவர்க்குள் பதிக்கப்பட்டுள்ளது. அகன்ற தெருக்களின் அமைப்பையும் கழிநீர்ப் பாதைகளின் அமைப்பையும் கண்டு ஆராய்ச்சியாளர், இந்நகர மக்கள் சிறந்த சுகாதார முறையில் வாழ்ந்த நாகரிக மக்கள் என்று கூறி வியக்கின்றனர். இக்காலப் பங்களாக்களைப் போன்ற பெரிய விடுதிகளும் சாதாரண மக்கள் வசிக்கத்தக்க வீடுகளும் அங்கு இருக்கின்றன. எல்லா வீடுகளும் செங்கற் கட்டடங்களே ஆகும். வீடுகளின் உட்புறம் சுடாத செங்கற்களும் வெளிப்புறம் சுட்ட செங்கற்களும் காண்கின்றன. சிறிய வீடாயினும் நான்கு அல்லது ஐந்து அறைகளைக் கொண்டதாக இருக்கிறது. சில பங்களாக்களில் மேல் மாடத்திற்குச் செல்ல இரண்டு படிக்கட்டுகள் உள்ளன. மேல் மாடத்திலேயே நீராடும் அறை இருத்தல் வியக்கத்தக்கது. சமையல் அறைகள் தமக்குரிய இலக்கணப்படி அமைக்கப் பட்டுள்ளன. இந்நகரத்தில் கிடைத்துள்ள பொருள்கள் கணக்கில. சித்திர எழுத்துகள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் நூற்றுக் கணக்கில் கிடைத்துள்ளன. அவற்றையும் எழுத்துக்களையும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் கீழ் வருமாறு கூறுகின்றனர்: இப்பொருள்களைப் பயன்படுத்திய மக்கள் ஏறத்தாழக் கி. மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டவர் ஆவர். இவர்கள் நிலம் கடந்தும் கடல் கடந்தும் வாணிகம் செய்து பொருளீட்டியவர்; பல தெய்வ வழிபாடு கொண்டவர்; உயர்ந்த ஆடை அணிகளைப் பயன்படுத்தினவர்; கைத்தொழில்களிற் சிறந்தவர்; இடுதலும் சுடுதலும் கையாண்டவர்; உயரிய நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவர்; நாகரிகக் கலைகளாகிய இசை, ஓவியம், நடனம், மருத்துவம் முதலியவற்றை நன்கறிந்தவர்; பாரசீகம் முதல் எகிப்துவரை நாகரிக நாடுகளுடன் வாணிகம் நடத்தினவர். இவர்கள் தம் காலத்து நாகரிக மக்களுள் உயர்ந்தவர் ஆவர். இவர்கள் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்க்கு முற்பட்ட மக்கள் என்பதில் ஐயமில்லை; ஆயின், `திராவிடரா? பிறரா? என்பது இன்றுள்ள ஆராய்ச்சி கொண்டு திட்டமாகக் கூறுதற்கில்லை. இந்திய வரலாற்றில் புதுமை பத்தாண்டுகட்கு முன்வரை இந்திய வரலாற்றுப் பாட நூல்களில், `ஆரியர் வருகைக்குமுன் இந்தியாவில் அநாகரிக மக்கள் வாழ்ந்திருந்தனர் என்ற வாக்கியம் சிறப்பிடம் பெற்றிருந்தது. ஆனால், இன்றைய நூல்களில் `சிந்துவெளி நாகரிகம் ஒரு பாடமாக இடம் பெற்றுப் பழைய எண்ணத்தை மாற்றிவிட்டது. இப்பாடத்திற்குப் பிறகே `ஆரியர் பற்றிய பாடம் புத்தகங்களில் எழுதப்படுகின்றது. இதனால், `புதைபொருள் ஆராய்ச்சி புரியும் திருவிளையாடலை நன்குணரலாம். அஃது ஒரு நாட்டு வரலாற்றில் மாறுதல்களை உண்டாக்கிக் கொண்டே செல்லவல்லது; நாட்டு மக்கட்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்ட வல்லது. பழைய கொள்கையில் மாற்றம் உலகத்துப் பழைய நாகரிகங்களில் எகிப்திய நாகரிகமே சிறந்தது என்பதும் காலத்தால் முற்பட்டது என்பதும் பழைய கொள்கையாக இருந்தது. மொஹெஞ்சொ-தரோவில் ஆராய்ச்சி தொடங்கியது முதல் அந்தக் கொள்கை மாறுதல் அடைந்துவிட்டது. அதற்குப் பதிலாகச் சிந்துவெளி நாகரிகமே பழமையும் சிறப்பும் உடையது என்னும் புதிய கொள்கை வலுத்து வருகின்றது. இத்தகைய வரலாற்று மாறுதல்களைச் செய்யும் வன்மை புதைபொருள் ஆராய்ச்சிக்கு உண்டு என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிகிறதன்றோ? இது நிற்க. சென்னை மாகாணத்தில் புதை பொருள் ஆராய்ச்சி பல்லாரி ஜில்லாவில் பெருங் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பலவகைச் சமாதிகள் இருக்கின்றன. அவற்றுள் ஏறத் தாழ இரண்டாயிரம் கண்டுபிடிக்கப்பட்டன. அனந்தப்பூர் ஜில்லாவில் கற்கால மக்கள் புறக்கணித்து விட்ட கல் உளிகள், கல் எந்திரங்கள், கத்திகள் முதலியன அகப்பட்டன. கடப்பை ஜில்லாவில் புதிய கற்காலப் பெண்கள் பயன்படுத்திய மரச்சீப்புகள், மதிப்புக்குரிய வேலைப்பாடு கொண்ட மட்பாண்டங்கள் முதலியன தோண்டி எடுக்கப்பட்டன. கிருஷ்ணா ஜில்லாவில் வர்ண வேலைப்பாடு கொண்ட களிமண் காப்புகள், நெல் கொட்டப் பயன்பட்ட குதிர் முதலிய பொருள்கள் கிடைத்தன. செங்கற்பட்டு ஜில்லாவில் (பல்லாவரத்தில்) சவக்குழிகள் பல ஆராயப்பட்டன. அவற்றில் மண் பெட்டிகள், தாழிகள், எலும்புகள் முதலியன கிடைத்தன. இவற்றைப் போன்றே திருநெல்வேலி ஜில்லாவில் ஆதிச்ச நல்லூரில் பல ஏக்கர் பரப்புள்ள இடங்களில் ஏராளமான தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சேலம் ஜில்லாவில் குடிசைகள் வடிவில் அமைந்த பிணப்பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டன. கோயமுத்தூர், கன்னியாகுமரி ஜில்லாவில் (பல்லடம் தாலுகா) பல மண்மேடுகள் இருக்கின்றன. செட்டிபாளையம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள மண்மேடு பதினைந்து ஆண்டுகட்கு முன் சோதிக்கப்பட்டது. அதன் நீளம் 85 அடி; அகலம் 71 அடி; உயரம் 10 அடி. அதன் அருகில் மட்பாண்டச் சிதைவுகளும் பலவகை உலோகப் பொருள்களும் எலும்புகளும் கிடக்கின்றன. அது கல்லால் ஆன பிணக்கோவிலை நடுவே கொண்டுள்ளது. அதன் உட்புறத்தில் பலவகைப் பழைய பொருள்கள் இருந்தன. மழமழப்பான கறுப்புநிற மட்பாண்டங்கள், கோப்பைகள், மான் அல்லது ஆடு மேலே நிற்பதுபோலச் செய்யப்பட்ட மூடிகளைக் கொண்ட கோப்பைகள் முதலியன அகப்பட்டன. இத்தகைய வேலைப்பாடு கொண்ட மூடிகள் பாரசீகத்தில் கிடைத்தனவாம். புதுக்கோட்டை புதுக்கோட்டை சம்தானம் புதை பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம் ஆகும். இங்குப் புதிய கற்கால மக்கள் பிணம் புதைத்த முறைகளைக் காணலாம்: (1) இறந்தவன் உடல் உட்கார்ந்த நிலையில் தாழியில் வைக்கப்பட்டுள்ளது; அதன்மேல் பாதியளவு மணல் பரப்பப்பட்டுள்ளது; அதன்மீது அரிசி முதலிய தானிய வகைகளைக் கொண்ட தட்டொன்று வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வைத்துப் புதைக்கப்பட்ட தாழியின் பக்கங்களில் இறந்தவன் உபயோகித்த கற் கருவிகளும் பிறவும் வைக்கப் பட்டுள்ளன. தாழி, மணல் பரப்பப்பட்டு மூடி இடப்பட்டுள்ளது. தாழியைப் புதைத்த குழி, மணல் இடப்பட்டுப் பாறையால் மூடப்பட்டிருக்கிறது. அப்பாறை மீது மணல் கொட்டிப் பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டிருக்கிறது. இப்பாறையைச் சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டுள. இவ்வாறு தாழிகள் புதைக்கப்பெற்றுள்ள இடங்கள் பல மைல் நீளமுடையனவா இருக்கின்றன. இவ்விடங்கள், சுற்றிலும் உள்ள நிலத்தை விடச் சிறிது உயர்ந்துள்ளன. இவ்விடங்களை மேலாகத் தட்டினால் ஓசை நன்றாகக் கேட்கும். தாழிகள் பல வடிவின; பல அளவின. இரும்புக் காலத்துப் பிணப் பெட்டிகள் இரு பகுதிகள் கொண்டவை; ஒன்றில் பிணமும் மற்றதில் அவ்விறந்தவர் பயன்படுத்தின பொருள்களும் வைக்கப்பட்டன. இவ்விடங்களை முற்றும் அகழ்ந்து பொறுமையோடு ஆராய்ச்சி செய்யின், கற்கால இரும்புக் கால மக்களைப் பற்றிய பல செய்திகளை நன்கறியலாம். அரிக்கமேடு இங்ஙனம் புதை பொருள் ஆராய்ச்சிக்குரிய இடங்கள் மிகப் பலவாகச் சென்னை மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றுள் பிரஞ்சுக்காரர்க்குரிய புதுச்சேரியும் அதனைச் சூழவுள்ள நிலப்பகுதியும் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்யத்தக்கவை ஆகும். புதுவையை அடுத்த அரியாங் (அரையான்?) குப்பம் என்னும் பகுதியில் செஞ்சி யாற்றங்கரை ஓரமாக ஒரு மேடு இருக்கிறது. அஃது அரிக்கமேடு எனப் பெயர் பெற்றது. செஞ்சியாற்று வெள்ளத்தால் பல நூற்றாண்டுகளாக அம்மேடு கரைக்கப்பட்டு வந்துள்ளது. அம்மேட்டின்மீது மாந்தோப்பும் தென்னந் தோப்பும் இருக்கின்றன. 1941-ல் தென்னம் பிள்ளை வைக்கக் குழிகள் எடுத்தபொழுது அவற்றிலிருந்து சில நாணயங்களும் மட்பாண்டங்களும் அரிய வேலைப்பாடு கொண்ட மணிகளும் அகப்பட்டன. இதனை அறிந்த புதுவை-ஆராய்ச்சி நிபுணரான பேராசிரியர் துப்ரெயில் துரை அவர்கள் அங்குச் சென்று ஆராய்ச்சி நடத்தினார்; அங்குச் சங்கு மணிகள் முதலிய பொருள்களைக் கொண்ட தொழிற்சாலை இருந்தது என்றும், அத்தொழிற்சாலையைத் தன் அகத்தே பெற்ற நகரம் மேட்டிற்குள் இருக்கின்றதென்றும், அத்தொன்னகரின் காலம் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகலாம் என்றும், அதனைத் தென்னிந்திய தக்ஷசீலம் என்று கூறலாம் என்றும் ஹிந்துப் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வரைந்தார். அக்கட்டுரையைக் கண்டு ஆராய்ச்சியாளர் பலர் அரிக்கமேட்டைக் காணச் சென்றனர்; அங்குக் கிடைத்த மணிகள், மட்பாண்டச் சிதைவுகள் முதலியவற்றைக் கண்டு மீண்டனர். இறுதியாக அண்மையில் பிரிட்டிஷ் - பிரஞ்சு அரசாங்கங்கள் இணைந்து முயன்ற தன் பயனாக, அரிக்கமேட்டின் சில பகுதிகள் தோண்டப்பட்டன. நம்மவர்க்கு வேண்டுகோள் இத்தகைய ஆராய்ச்சி மிக்க பயன் உடையது. ஆயின், நம் நாட்டுச் செல்வர் இத்துறைகளில் ஊக்கம் காட்டுவதில்லை. மேனாட்டுச் செல்வர் இத்துறைகட்குப் பெரும் பொருள் உதவுகின்றனர். அவருள் புதுமைகளைக் காண்பதில் ஒரு சாரார் ஈடுபடின், பழைய செய்திகளை அறியப் பிறிதொரு சாரார் முன் வருகின்றனர்; உலகின் பல பகுதிகட்குச் சென்று ஆராய்ச்சி செய்கின்றனர்; அவ்வப்போது ஆராய்ந்தவற்றைப் பத்திரிகைகள் வாயிலாக உலகத்தார்க்கு அறிவிக்கின்றனர்; மலைகள்மீது ஏறி ஆராய்கின்றனர்; கடலுக்கடியிலும் சென்று ஆராய்ச்சி புரிகின்றனர்; வானத்திற் பறந்தும் உண்மைகள் பல காண்கின்றனர். சுருங்கக்கூறின், உலக வரலாற்றையும் பிறவற்றையும் அறிய அரும்பாடு படுகின்றனர்; உழைப்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அம்மேனாட்டாரைப் போல நம் நாட்டுச் செல்வரும் அறிஞரும் இத்தகைய ஆராய்ச்சித் துறைகளில் ஆர்வம் காட்டிப் பொருள் உதவி செய்து உழைப்பின், இயல்பாகவே பழம் பெருமை கொண்ட நம் நாடு பலவகையான அற்புத விவரங்களை உலகத்தார்க்கு அறிவிக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? 4. தமிழகத்துக் கோவில்கள் `தமிழகத்தில் இன்றுள்ள கோவில்கள் எப்போது தோன்றின? அவற்றிற்கு மூலம் என்ன? கோவிற்கலை உணர்வு தமிழர்க்கே உரியதா? பண்டைக் காலத்திற் கோவில்கள் எவற்றிற்குப் பயன்பட்டது? ekJ flik v‹d? என்பன போன்ற கேள்விகட்கு விடை காணலே இவ்வராய்ச்சிக் கட்டுரையின் நோக்கமாகும். கோவிலும் கல்வெட்டும் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திரசித்தன் (மகேந்திர பல்லவன்-அப்பர் காலத்தவன்) அமைத்த கோவில் இது என்னும் கல்வெட்டு, மண்டபப்பட்டு என்னும் இடத்துக் கோவிலிற் காணப்படுகிறது. இதன் காலம் கி. பி. 615-630 ஆகும். இக்கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன: 1. மகேந்திரன் காலத்திற்கு முன் தமிழகத்தில் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோயில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை. 2. மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின் அவை மண், மரம் முதலியவற்றாலாகி அழியத்தக்கன.1 3. இங்ஙனம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களிற் செதுக்கி அமைத்தான்.2 தரையும் சுவர்களும் செங்கற்கால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆனது. அங்கங்கு இணைப்புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங்ஙனம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காணலாம். இங்ஙனம் கோவில்களை அமைப்பதில் தமிழர் பண்பாட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்றாண்டி லிருந்து பல கோவில்கள் தமிழ் நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய் விடும்.1 விமானங்கள், `தூயது, கலப்பு, பெருங்கலப்பு என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் `தூய விமானம் எனப்படும். இரண்டைக் கொண்டு அமைவது `கலப்பு விமானம் எனப்படும். பல பொருள்களால் அமைவது `பெருங்கலப்பு விமானம் ஆகும்,2 என்பது கட்டடக் கலை நூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக் காலத்திற் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் உண்மையும் அறியலாம். இனித் தமிழகத்தில் மகேந்திரனுக்கு முன்பே கோவில்கள் இருந்தமைக்குக் கல்வெட்டுகளே சான்றாதல் காண்க: 1. திருக்கழுக்குன்றத்துக் கோவிற் பெருமானுக்குக் கந்த சிஷ்ய பல்லவன் (கி. பி. 436 - 460) நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டுக் கூறுகிறது. 2. `தென்னவனாய் உலகாண்ட கோச்செங்கணான் (கி. பி. 400 - 500) திருவக்கரையில் பெருமானுக்கு ஒரு கோவில் கட்டியிருந்தான். அதிராசேந்திரன் அதனைக் கல்லாற் புதுப்பித்தான்; செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலைக் கல்லாற் புதுப்பித்தார்.3 திருக்கோடி காவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல் விமானமாக அமைத்தார்.4 சங்க காலத்துக் கோவில்கள் பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலே வீரர் வணக்கத்துக்குரிய கோவில்கள் இருந்தன. முருகன், திருமால், காடுகிழாள் முதலிய தெய்வங்கட்குக் கோவில்கள் இருந்தன. தொகை நூல்களில் சிவபெருமான், முருகன், திருமால், பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறலை நோக்குக. ஆலமர் செல்வற்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை, ஆய்வேள் அளித்தனன் என்று புறநானூறு புகலல் காண்க. இதனால் அக்காலத்தில் கோவிலும் கடவுள் உருவச் சிலையும் இருந்தமை நன்கறியலாம். கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தும் மணி மேகலையிலும் காணப்படும் கோவில்கள் பல. மணிமேகலையில், காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும் அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் என வரும் அடிகள் - வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமை வலியுறுத்துகின்றன. சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள்போல உயர்ந்திருந்தன என்பது அறியத்தக்கது. அற்புத வேலைப்பாடு இக்கோவில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங் களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது, ஒருதிறம் சாரார் அரைநாள் அமயத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து என வரும் நெடுநல்வாடை அடிகளாலும், அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடு சென்று மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம் என வரும் சிலப்பதிகார அடிகளாலும் நன்குணரக் கிடத்தல் காண்க. `அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்றுமதில் உடையன; உயர்ந்த வாயில்களைப் பெற்றன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) உடையன; அம்மண்ணீடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது மணிமேகலை1 மதுரைக்காஞ்சி2 முதலிய நூல்கள் நுவலும் செய்தியாகும். இக்கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலோகத்தகடுகள் வேயப்பட்டிருந்தன. சாந்து பூசப்பட்டிருந்தது. இங்ஙனமே உயர்ந்த மாட மாளிகைகளும் இருந்தன. விண்பொர நிவந்த வேயா மாடம் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு 3 நிறைநிலை மாடத்து அரமியந் தோறும் 4 இவ்வாறு அமைந்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களையுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக்கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல்வாடை (வரி 76-88) அடிகள் அறிவிக்கும் அரிய செய்தியாகும். சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடன கோலத்தைக் காட்டி அருளினன் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி முனிவர் காலம் கி. மு. 150 என்று ஆராய்ச்சியாளர் அறைவர். எனவே கோவில் எனச் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள திருக்கோவில் கி. மு. 150-க்கு முற்பட்டதாதல் அறிக. அங்குள்ள நடராசர் மண்டபம் மரத்தால் கட்டப்பட்டிருத்தலும் அதன் பழமைக்குச் சான்றாகும்.1 கி. பி. 400 முதல் 500-க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பரும் சம்பந்தரும் இதனைத் தம் பதிகங்களிற் குறித்துள்ளார். தேவாரக் காலத்துக் கோயில்கள் தேவாரக் காலத்தில் தமிழகத்தில் ஏறத்தாழ 200 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் ஆனவை. அவை (1) பெருங் கோவில் (2) இளங்கோவில் (3) மணிக்கோவில் (4) கரக்கோவில் (5) தூங்கானைமாடம் முதலிய பலவகைப்படும். இவற்றுள் தம் காலத்தில் பெருங்கோவில்கள் 78 இருந்தன என்று அப்பரே அறைந்துள்ளார். பெரிய கோவில்களைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வந்துள்ள (பெரிய கோவில் திருச்சுற்றில் உள்ள) சிறிய கோவிலே இளங்கோவில் எனப்படும். பெரிய கோவிலுக்கு அண்மையில் உள்ள சிறிய கோவிலும் இளங்கோவில் எனப் பெயர் பெறும். எனவே, தேவார காலத்திற்கு முன்பே பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம் தூங்கானை மாடம் கோவில் அமைப்பைக் கொண்டு நன்கறியலாம். விமானம் `தூங்கும் யானை வடிவில் அமைந்ததாகும். திரு இன்னம்பர், திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திரு அதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் (மூலதானம்) தேர் போன்ற அமைப்பு உடையவை; உருளைகளும் குதிரைகளும் பூட்டப் பெற்றவை. திருச்சாய்க்காட்டுக் கோவிலை ஒட்டித் தேர்போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் உள்ளது. பழைய கோவில்கள் இந்த விமான அமைப்புடைய தேர் போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப் பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக்கோவில்களைப் போலச் செங்கற்களைக் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான். சான்றாக, நகரியில் உள்ள சில கோவில்களைக் காணலாம். அவை கி. மு. 250-இல் ஆக்கப்பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் உள்ளன. ஆயின் கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டவையே யாகும்.1 மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் கோவில்கள் எல்லாம், பல்லவர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டுக் கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம். என அறிஞர் லாங்ஹர்ட் குறித்தல் காண்க. திராவிடக் கலை கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆரியர் கைக்கொண்டனர்.2 தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆரியர் கடன் பெற்றனர். இவை பிற்காலத்தில் இந்து சமயக் கோவில்களிற் காணப்பட்டன. இவற்றையே பௌத்தர் மேற் கொண்டனர்.3 விமான வகைகள் பல தென் இந்தியாவில் உண்டு. அவை யாவையும் கல்லறைகளிலிருந்து தோன்றின என்னல் தவறாகாது. தென் கன்னடக் கோட்டத்தில் உள்ள `முதுபித்ரி என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில், மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்ட `விமானம் காணலாம். சதுரத்தின் மேல் சதுரம் வைத்துக் கட்டப்பட்ட ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக்கல்லறைகள் பல இந்நாட்டில் உண்டு. இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.4 தென்னாட்டுக் கட்டடக்கலை (Architecture) தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள் இவற்றிற் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியற்றனவே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற்போலவே தமிழகக் கட்டடக்கலையும் வளர்ச்சிபெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்ல புரந்துத் தேர்களைக் கொண்டும், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனார் கோவில் வேலைப் பாட்டைக் கொண்டும் செவ்வனே அறியலாம்.1 கோவில்கள் பயன்பட்ட வகை 1. சங்க காலத்துக் கோவில்கள் அழியக்கூடிய பொருள்களால் ஆனவை. ஆதலால் நமக்குக் `கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. பின்வந்த பல்லவர் கற்கோவில்கள் அமைத்தனர். ஆதலின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவர்க்குப் பின்வந்த சோழர் பழைய கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். ஆதலின் அழியா நிலையுடைய கல்வெட்டுகள் தோன்றின. அவை கோவில் அறப்பணிகளைக் குறிக்க எழுந்தன. ஆயினும், அரசர் மரபு, போர்கள், அரிய செயல்கள் இன்ன பிறவும் முதலிற் பொறிக்கப் பெற்றிருந்தன. அக்குறிப்புகளே இன்று தமிழக வரலாறு காட்ட அடிப்படையாக இருந்து உதவுகின்றன. 2. கோவிலை அடுத்துச் சமய வளர்ச்சிக்குரிய மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வியைப் புகட்டின; விழாக்களைக் காண வந்த அடியார்கட்கு உண்டியும் உறையுளும் உதவின. அம்மடங்கட்குப் பலர் தானம் அளித்துப் பாதுகாத்து வந்தனர். 3. கோவிலை அடுத்து மருத்துவச் சாலை இருந்தது. இதனைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிற் கல்வெட்டால் அறியலாம். 4. நடனம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் கோவிலில் வளர்க்கப் பெற்றன. இவற்றிற் பண்பட்ட பெண்மணிகள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர், உருத்திர கணிகையர் எனப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் 400 பேர் இருந்தனர்; காஞ்சி முத்தீசுவரர் கோவிலில் 42 அடிகள் மார் இருந்தனர். பெருங் கோவில்களில் எல்லாம் நடன அரங்கு, இசை அரங்கு, நாடக அரங்குகள் இருந்தன. 5. கோவிலில் `தருக்க மண்டபம், `பிரசங்க மண்டபம் என்பனவும் இருந்தன என்பது திருவொற்றியூர்க் கோவிற் கல்வெட்டுகளைக் கொண்டு அறியலாம். பாரதம், ஆகமம் போன்ற நூல்களைப் பொது மக்கட்குப் படித்துக் காட்டக் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6. இவை அனைத்திற்கும் மேலாகக் கோவில்கள் ஓவிய-சிற்பக் கலைகட்குத் தாயகமாக விளங்கின. இன்று நமது பழம் பெருமையை உலகிற்குக் காட்டி நிற்பன இந்த இரண்டே அல்லவா? இவற்றைத் தம் அகத்தே கொண்டுள்ள கோவில்களே இன்று நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளன என்னல் மிகையாமோ? இன்றைய நிலை இங்ஙனம் இவ்வுலக வாழ்வில் பேரின்பம் துய்த்தற்குரிய ஒப்பற்ற இடமாகக் கோவில்கள் விளங்கின. இவ்வுயரிய நோக்கம் கொண்டே அவை கட்டப்பட்டன. ஆயின், நாளடைவில் அறிவற்ற - பக்தியற்ற - பழம் பெருமையும் வரலாறும் உணராத பலர் கைகளில் கோவில் ஆட்சி சென்றமையாலும் பூசை முதலியன உணர்ச்சியற்ற முறையில் நடைபெற்றமையாலும், பெறலாலும் கோவில்கள் தம் பொலிவிழந்து விட்டன. அவற்றைப் பண்டைச் சிறப்பில் பாதியளவிலேனும் கொண்டு நிறுத்தல் தமிழறிஞர் - சமயப் பிரியர் நீங்காக் கடமை ஆகும். செய்யவேண்டுவன 1. சைவர் கோவில்களில் தேவார பாடசாலைகள் தேவை; பெருமாள் கோவில்களில் நாலாயிரப் பிரபந்த பாடசாலைகள் தேவை. 2. குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக் கழகத்துச் சார்பில் 4 ஆண்டுகள் வரலாறு, சமயம், ஓவியம், சிற்பம், நடனம், இசை, கட்டடக் கலை இவற்றில் ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப்பட்டதாரிகளே குருக்களாக அமையவேண்டும். அந்நிலையிற்றான் கோவில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். இஃது அறிஞர் உடனே செய்யத்தகுவதாகும். 3. கோவில் இயக்குநராக (Executive Officers) வருபவர் பி,ஏ. பி,எல் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்; வழக்கறிஞராக இருத்தல் பின்னும் சிறந்ததே. இவர்களும் பலகலைகளில் புலமை உடையராக இருத்தல் வேண்டும். 4. இவை அனைத்திற்கும் மேலாக (1) நம் நாடு (2) நம் நாட்டுக் கோவில்கள் (3) நம் நாட்டுச் சமயங்கள் (4) நம் நாட்டுக் கலைகள் இவற்றைப் பாதுகாத்தலும் போற்றுதலும் வளர்த்தலும் நமது கடமை என்பதை உளமார உணர்ந்து பாடுபடும் ஒருமைப்பாடு வேண்டும். இங்ஙனம் யாவும் அமையுமாயின், பண்டை வரலாற்றை இன்று கண்டு (Making the past real) பேரின்பமும் பெருவாழ்வும் பெற வழியுண்டு. இம்முயற்சிக்குத் தமிழர் ஒன்றுபட்ட மனமே வேண்டற்பாலது. இஃது எப்பொழுது கைகூடும்? - சகுந்தலா நினைவு மலர் 5. காஞ்சி - கயிலாசநாதர் கோவில்* கோவில் இடமும் அமைப்பும் இராசசிம்மன் கட்டிய உலகம் போற்றும் கயிலாசநாதர் கோவில் இப்போது நகரத்தின் மேற்றிசையில் கழனிகளுக்கு இடையில் இருக்கிறது. இதற்குப் பின்புறம் சிறிது தொலைவில் இன்றைய கச்சி நகரின் மேற்கு எல்லை முடிவு பெறுகிறது. ஆயின், இது கட்டப்பட்ட காலத்தில் இந்தக் கோவில், நகரத் தெருக்களுக்கு இடையிற்றான் இருந்தது என்பது பல கல்வெட்டு களால் தெரிகின்றது. இக் கோவிலுக்குப் புறமதில், திருமடை விளாகம் முதலியன இருந்தன; ஏராளமாக நிலங்கள் இருந்தன. கோவிலைச் சுற்றிலும் மாட வீதிகள் இருந்தன.1 இராசசிம்மன், `மாடெலாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வம் வகுத்தல் செய்தான் என்று சேக்கிழார் பெருமான் கூறியது முற்றும் உண்மையே ஆகும். கல்வெட்டுகள் கயிலாசநாதர் கோவிலில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன.2 அவை, கி. பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்ட பல்லவர், சோழர், விஜயநகரத்தார் கல்வெட்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் இக்கோவில் கட்டிய இராசசிம்மன் கல்வெட்டுகளும், அவன் மகனான மூன்றாம் மகேந்திரன், அவன் மனைவி ரங்கபதாகை முதலியோர் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரை வென்று தொண்டை நாட்டை ஆண்ட முதற் பராந்தகன், இராச ராசன், இராசேந்திரன், முதற் குலோத்துங்கன், இவர் தம் கல்வெட்டுகளும் பலவாகக் காண்கின்றன. சோழர் காலத்தில் இக்கோவில், மாடவீதிகள், வெளிச் சுற்று, மடவிளாகம், மடங்கள் முதலியவற்றையும் அளவிடற்கரிய செல்வத்தையும் பெற்றிருந்தது என்பதை இக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திற் காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக் கல்வெட்டும் இங்கே இருக்கின்றது. அதனில், `இராசசிம்மன் கட்டிய கோவிலில் உள்ள பெருஞ்செல்வத்தைக் கண்டு வியந்த வல்லபன், அதனைக் கவராது, அப்பெருமானுக்கே விட்டுவிட்டான் என்பது குறிக்கப்பட்டுளது. இவ்வுண்மையைச் சாளுக்கியருடைய வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களும் பகர்கின்றன.1 கோவிற் சிறப்பு `கயிலாசநாதர் கோவில் திருக்கயிலையின் அளவைக் கொண்டே கட்டப்பட்டதாகும் என்று விபுலானந்த அடிகள் போன்றார் கூறுகின்றனர். கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று இதற்கு மறைமுகமாகச் சான்று பகர்கின்றது. இராசசிம்மன் தன்னை வாத்ய வித்யாதரன் என்பதற்கேற்ப, இக்கோவிலில் யாழ் வாசிக்கும் உருவங்கள் பல செதுக்கப் பட்டுள்ளன. இவன் இசை, நடனம், சிற்பம், ஓவியம் இவற்றிற் பேரறிவு படைத்த பெருவேந்தன் என்பதற்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றே போதிய சான்றாக அமைந்துள்ளது. இக்கோவில் ஏறத் தாழ வைகுந்தப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருத்தல் வியத்தற்குரியது. இங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் சுவர்களில் இருத்தல்போலவே அக்கோவிற் சுவர்களிலும் - இருத்தல் இங்கு நினைக்கத்தகும். சுருங்கக் கூறின், கயிலாசநாதர் கோவில் பல்லவரது சிற்பக்கலையை உலகத்திற்கு அறிவிக்க எழுந்த சிற்பக் கலைக்கூடம் என்னலாம். சில கல்வெட்டுச் செய்திகள் இராசசிம்மனைப் பற்றியவை: இராசசிம்மன் (கி. பி. 685-720) கலியுகத்தில் அசரீரி2 கேட்டவன்; சிறந்த மற்போர் வீரன்; யானை நூல் அறிவில் வத்சராசனையும் பகதத்தனையும் ஒத்தவன்; போரில் விசயனுக்கும் இராமனுக்கும் ஒப்பானவன்; உடல் வலியாலும் புகழாலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன்; நாடு பிடிப்பதில் பேரவாவுடையவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; இவனது செல்வாக்கு உயர்கின்றது; அஞ்சத்தக்க பேராண்மை உடையவன்; அடக்கத்தினால் வெல்லத் தக்கவன்; போரிற் சிங்கம் போன்றவன்; வில்லையே துணையாகக் கொண்டவன். பகைவர்க்கு இடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; போர் வீரரை அழிப்பவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் செல்வத்தை வெல்லுபவன்; பகைவருடைய பொருளைப் போரில் கைப்பற்றுபவன்; வீரத்தில் மகேந்திரனை ஒத்தவன்; திடீரென இடிக்கும் இடி போன்றவன்; பல இடங்களை வென்றவன்; போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன். . . . கயிலாசநாதர் கோவிலில்மட்டும் இராசசிம்மனுடைய விருதுப் பெயர்கள் ஏறத்தாழ 250 காணப்படுகின்றன. அவற்றில் `ரிஷபலாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன், ஸ்ரீஆகமப் பிரியன், சிவசூடாமணி,1 என்பன போன்றவை இவனது சைவ சமயப் பற்றைக் குன்றின்மீதிட்ட விளக்குப்போல் ஒளிரச் செய்கின்றன. இராசசிம்மன், சைவ சித்தாந்ததில் பேரறிவுடையவன் என்றும் கயிலாச நாதர் கோவில் கல்வெட்டொன்று கூறுகிறது. சோழர் காலத்துச் செய்திகள் இக்கயிலாசநாதர் கோயில் ஏறத்தாழக் கி. பி. 700-ல் கட்டப்பட்டது என்று சொல்லலாம்; அது முதல் பல்லவர் ஆட்சி முடியும் (ஏறத்தாழக் கி. பி. 900) வரை மிகவுயர்ந்த நிலையில் இருந்தது; `பிற்காலச் சோழர் ஆட்சி ஏற்பட்டது முதல் ஏறத்தாழக் கி. பி. 1100 வரையிலும் அவ்வுயரிய நிலையினின்றும் சிறப்புக் குறையாமல் இருந்தது. இராசராசன் காலத்து, கச்சி நகரப் பொதுமக்கள் இக்கோவில் பண்டாரத்திலிருந்து ஏராளமான பொன்னைக் கடன் பெற்றனர்; பலர் 270 ஆடுகள், 180 ஆடுகள் வீதம் கோவிலுக்குத் தானம் செய்தனர்; கோவில் பத்திரங்கள் (கல்வெட்டுகள்) எல்லாம் சண்டேசுவரர் பெயரால் பொறிக்கப்பட்டன;1 இக்கோவிலில் `திருவுண்ணாழிகைச் சபையார் இருந்தனர்; கோவில் `கணக்கன் இருந்தான். சோழர் காலத்தில் இக்கோவில் `பெரிய கற்றளி எனப் பெயர் பெற்றிருந்தது; பல்லவர் காலத்தில் `இராசசிம்மேசுவரம் எனப் பெயர் பெற்றிருந்தது. இக் கோவிலில் உள்ள இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றினால், இக்கோவிலில் கல்லூரி ஒன்று இருந்தது தெரிகிறது. அக்கல்லூரி, காஞ்சியில் நெடுங்காலமாக இருந்து புகழ்பெற்ற வடமொழிக் கல்லூரியாக இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அக்கல்லூரியில் இராசேந்திர சோழன் காலத்துத் `தேவார நாயகம் என்ற அரசியல் உத்யோகதன் தங்கி இருந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும். இக்கோவிலின் அழிவு முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி. பி. 1070-1120) எக்காரணம் கொண்டோ இக்கோவில் இழி நிலை அடையலாயிற்று. இக்கோவில் மூடப்பட்டது; இதற்குரிய நிலங்கள் விற்கப்பட்டன; கோவிலின் வெளிப் பிராகாரமும் திருமடை விளாகமும் அனய பதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன.2 இங்ஙனம் முதற் குலோத்துங்கன் ஆட்சியில் பொலிவிழந்த இக்கோவில் ஏறத்தாழக் கி. பி. 1364-வரை முடப்பட்டே கிடந்தது. விஜயநகர ஆட்சி இங்ஙனம் ஏறத்தாழ 250 ஆண்டுகள் மூடப்பட்டுக் கிடந்த இக்கோவில், கம்பண உடையார் காலத்தில் (1364-ல் திறக்கப்பட்டது; அவ்வாண்டு ஆடி மாதம் முதல் விழா நடை பெறலாயிற்று முருங்கையூர் சர்வ மானியமாக விடப்பட்டது. அக்காலத்திலும் இக்கோவிலைச் சுற்றி நான்கு மாடவீதிகள் இருந்தன. கயிலாசநாதர் கோவில் ஆட்சிக் குழுவினர் வடக்கு சந்நிதித் தெருவில் இருந்த சில வீடுகளை 150 பணம் வீதம் கைக்கோள முதலிமார்க்கு விற்றுவிட்டனர். வட சிறகில் முன்னாள் இருக்கும் ஆண்டார் சுந்தரப் பெருமாள் மடமும், திரு அகத்தீசுவரம் உடைய நாயனார் கோவிலுக்குக் கிழக்கு - திருமஞ்சனப் பெருவழிக்கு மேற்கு - உள்ள மனை நீங்கலாக மனை அடங்கலும் இந்நாள் முதல் என்றும் கைக்கொள்ளற்கும் கைக்கோள முதலிகட்கும் இந்த வடசிறகில் உள்ள மனையும் மனைப் படைப்பையும் சண்டேசுவர விலையாக விற்று இவர்களிடம் வாங்கிக் கோவில் பண்டாரத்தில் முதல் இட்ட இ. . . . 1 கோவில் அதிகாரிகள் அதிகாரி விருப்பப்படி, கோவிலுக்கு அருகில் மேலைத் தெருவில் இருந்த மேலைச் சந்நிதித் தெரு மடமும் சிறிது நிலமும் கோவிலில் வேதம் ஓதும் தொழிலைச் செய்துவந்த திருக்கழுக்குன்றத்து மாகேசுவரரான காங்கேயற்குக் கொடுத்தனர்.2 சிற்பங்கள் இக்கோவிலினுள் நுழைந்தவுடன் எதிரில் உள்ள சிறிய கோவில் இராசசிம்மன் மகனான மூன்றாம் மகேந்திரனால் கட்டப்பட்டது. இராசசிம்மன் கோப்பெருந்தேவியான ரங்கபதாகை என்பவள் சைவப்பற்று மிக்குடையவள். அவள் கட்டிய சிறிய கோவில் ஒன்றும் கயிலாசநாதர் கோவிலில் இருக்கின்றது. இக் கோவிற் சிற்பங்கள் உள்ளத்தை உருக்குவனவாகும். அவற்றுள் பெரிதும் பாராட்டத்தக்கவை சிவனார் ஆடிய பலவகைக் கூத்து வகைகளைக் குறிப்பனவாகும். அவை (1) நாதாந்த நடனம், (2) லதாவ்ரிசிக நடனம், (3) தாண்டவ நடனம், (4) குஞ்சித நடனம் என்பன. இவற்றுள் பலவாகக் காணப்படுவது குஞ்சித நடனமேயாகும். இதுவே இராசசிம்மன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததுபோலும்! முடிவுரை இக் கயிலாசநாதர் கோவில் தென் இந்தியக் கட்டடக் கலைக்கும் ஓவிய-சிற்ப-இசை-நடனக் கலைகட்கும் இருப்பிடமாகும். இத்தகைய சிறப்புடைய இதனைக் கட்டுவித்த பரம சிவ பக்தனான இராசசிம்மன் இன்று இக் கோவிலைக் காண்பானாயின். . . . . . . . . . . . . . என்ன நினைப்பான்? சற்று எண்ணிப் பாருங்கள். அவன் நாகரிகக் கலைகட்கு இருப்பிடமாக அமைத்த இக்கோவில், இன்று கவனிப்பார் அற்றுப் பாழ்பட்டுக் கிடப்பது, தமிழ் மக்களது அநாகரிக நிலையை விளக்கப் போதிய சான்றாகும். அழிந்ததுபோக எஞ்சியுள்ள கோயிற் பகுதி களேனும் அழிவுறாமல் இருக்கப் பார்த்தல் அறிவுடைத் தமிழ் மக்கள் கடமையாகும். இத்தகைய வியத்தகு வேலைப் பாடமைந்த கோவில்களைக் கொண்டே நமது பழைய நாகரிகம் உயர்ந்தது என்று மேனாட்டார் பாராட்டுகின்றனர் என்பதை நாம் மறத்தலாகாது. வரலாற்றுச் சிறப்புடைய இத்தகைய பழைய கோவில்களைத் தமிழ் மக்கள் பாதுகாக்கப் புறப்படும் நாளே தமிழர் வாழ்வு சிறப்புறுதற்கேற்ற நன்னாள் ஆகும். 6. காஞ்சி - ஏகாம்பரர் திருக்கோயில் காஞ்சீபுரம் இந்நகரம் எப்பொழுது - யாரால் உண்டானது என்பது திட்டமாகக் கூறக்கூடவில்லை. கரிகாலன் இந்நகரைச் சிறப்பித் தான் என்பது சேக்கிழார் கூற்று. அதற்கேற்ப, திருவேகம்பத்தில் கரிகாலன் உருவச்சிலை காணப்படுகிறது. திருவேகம்பம் எக்காலத்தில் உண்டான தென்பதும் கூற இயலாது. காஞ்சீபுரம் ஏறத்தாழக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்த சமயச் செல்வாக்குப் பெற்றிருந்த இடமாகும். பௌத்த சமயக் கலைஞானங்களிற் சிறந்த பெரியார் பலர் நாலந்தாப் பல்கலைக் கழகத்திற்கும் சீன நாட்டிற்கும் பேராசிரியராகச் சென்றிருத்தலைக் காண, காஞ்சியில் அவர்களைத் தயாரித்து அனுப்பிய பல்கலைக் கழகம் ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பதை அறியலாம். பல்லவர் காலத்தில் வடமொழிக் கல்லூரி ஒன்று நன்னிலையில் இருந்தமை தெரிகிறது. பௌத்த - சமண - சைவ - வைணவ சமயங்கட்குச் சிறப்பிடம் ஈந்த காஞ்சிமா நகரம் இந்நால்வகைச் சமய நூல்களையும் பொதுவாகப் பல கலைகளையும் போதிக்கத்தக்க கல்லூரிகளைத் தன்னகத்தே பெற்றிருந்தது என்று கூறுதல் பொருந்தும். பலவகைக் கோவில்கள் கி. பி. 640-ல் சிறுத் தொண்டரைச் சேனைத் தலைவராகக் கொண்ட நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சியைக் கண்டு சென்ற ஹியூன்-சங் என்ற சீன வழிப்போக்கன் காஞ்சியில் பல கோவில்கள் இருந்தன என்பதும் அவற்றுள் பல திகம்பர சமணருடையன என்பதும் குறித்துள்ளான். அவன் காலமே அப்பர் சைவராக மாறிப் பிரசாரம் செய்து வந்த காலம். காஞ்சியில் ஏகாம்பரர் கோவிலையும் திருக்கச்சி மேற்றளியையும் அப்பர் பாடியுள்ளார் என்பதைக் காண, ஹியூன்-சங் காஞ்சிக்கு வந்த பொழுது இவ்விரு சிவன் கோவில்களும் சிறந்த நிலையில் இருந்தன என்பதை நன்குணரலாம். அப்பருக்குப் பின்னரே கச்சி நெறிக் காரைக்காடு, அநேகதங்காபதம், ஓணகாந்தன்தளி என்பன சிறப்புற்றன என்பது தேவாரத்திலிருந்து அறியலாம். சுந்தரர்க்குச் சிறிது அடுத்து வந்த மாணிக்கவாசகரும் திருவேகம்பம் ஒன்றையே சிறப்பித்துக் கூறியிருத்தல் அதன் பழமையையும் பெருமையையும் வலியுறுத்துவதாகும். திருவேகம்பம் - அமைப்பு நாயன்மார் காலத்துக் கோவில்களெல்லாம் சிறிய அளவில் அமைந்தவையாகும். கருவரை, நடுமண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றைக் கொண்டதே கோவிலாகும். அதனைச் சுற்றிலும் மதிற்சுவர் உண்டு. இத்தகைய சிறிய கோவில்கள் பல்லவர் காலத்தில் படிப்படியாகப் பெரிதாக்கப்பட்டன. பிற்காலச் சோழர் காலத்தில் மேலும் பெரிதாகக் கட்டப் பட்டன. முன்சொன்ன சிறிய கோவிலைச் சுற்றிலும் இசை மண்டபம், வியாக்யான மண்டபம், நடனமண்டபம், நாடக அரங்கு முதலியன அமைந்தன. இப்பெருக்கம் பல்லவர் காலத்திலேயே (நாயன்மார் காலத்திலேயே) ஓரளவு இருந்ததாயினும், பின்வந்த சோழர் காலத்தில் விரிவடைந்தது. திருக்கச்சி மேற்றளி, திருவேகம்பம், திருஒற்றியூர்க் கோவில் முதலியவற்றில் மடங்கள் இருந்தன. அவை சமயக் கல்வி, தமிழ்க்கல்வி, இவற்றைப் பரப்பி வந்தன. அப்பர் காலத்தில் திருவேகம்பத்தில் காபாலிக மடம் ஒன்று இருந்திருத்தல் கூடும் என்பது மகேந்திரவர்மன் எழுதிய `மத்த விலாசப் பிரஹசனத்தால் ஊகித்து அறியப்படும். திருவேகம்பம் பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், பின்னர் சோழர் ஆட்சியில் விரிவடைந்தும், அதன் பின்னர் விஜய நகரத்தார் ஆட்சிக் காலத்தில் மிக்க விரிவடைந்தும் இருத்தல் வேண்டும் என்பது அக்கோவிலில் உள்ள கல்வெட்டுக் களைக் கொண்டும் கட்டட அமைப்பு முறைகளைக் கொண்டும் துணியலாம். இன்றைய கோவிலுக்குள் கவனிப்பாரற்றுப் பாழடைந்து கிடக்கும் (நந்தவனத்திற்குள் இருக்கும்) நடராஜர் கோவில், உருமாறி இடிந்து கிடக்கும் அம்மன் கோவில், திருச்சுற்று மாளிகை என்னும் பகுதிகள் சோழர் காலத்தனவாகும். ஏனைய பெருக்கங்கள் பிற்காலத்தனவாகும். இஃது உண்மை என்பதை மதுரை மீனாக்ஷியம்மன் கோவில், திரு அண்ணாமலைக் கோவில், சிதம்பரம் கோவில் முதலிய பெருங்கோவில் கடட்டக் கலை உணர்வைக் கொண்டு நன்கு அறியலாம். கல்வெட்டுச் செய்திகள் அரசரும் காலமும் ஏகாம்பரநாதர், நடராஜர், திருக்கச்சிமயானர் இவர் தம் கோவிற் கல்வெட்டுகள் சோழர், விஜயநகர அரசர், அரசப் பிரதிநிதிகள் இவர்தம் காலங்களில் வெளியிடப்பட்டவை யாகும். சோழர் கல்வெட்டுகள் முறையே முதல் இராசாதிராசன், முதற் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் (கி. பி. 1178- 1218) காலத்தவை; எனவே, இப்பெருங் கோவில் சோழப் பேரரசர் காலத்தில் ஏறத்தாழ 200 வருடகாலம் நல்ல நிலையில் இருந்ததை இக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. சோழர் ஆட்சிக்குப் பிறகு உண்டான விஜயநகர ஆட்சிக் காலத்திலும் இக்கோவில் நன்னிலையில் விளங்கியது என்பது எட்டுக்கல்வெட்டுகளால் தெரிகிறது. அவை முறையே புக்கராயர், புவனேகவீரன், கணபதி தேவன், கம்பணவுடை யார் என்பவர் (கி. மு. 14, 15-ஆம் நூற்றாண்டுகள்) காலமாகும். நாட்டுப் பிரிவுகள் தொண்டை மண்டலம் முதல் இராஜராஜனால் `ஜயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டது. அப்பெயர் அவனுக்குப்பின் 5 நூற்றாண்டுகள் வரை அப்படியே இருந்தது. 24 கோட்டங்களின் பெயர்களும் வழக்கில் இருந்தன. அவற்றுட் சில காண்க: 1. எயிற்கோட்டத்துக் கோனேரி நாட்டுக் கோனேரி (867). 2. எயிற்கோட்டத்து எயில் நாட்டுப் புதுப்பாக்கம் (824). 3. பழுவூர்க் கோட்டத்துத் தனியூரான காவிரிப்பாக்கம் என்ற விக்ரம சோழச் சதுர்வேதி மங்கலம் (822). 4. தாமல் கோட்டத்துக் களத்தூர் (814). 5. பாண்டி மண்டலத்து வீரநாராயண வளநாட்டுச் சமரகோலாகல நல்லூர். 6. புலியூர்க் கோட்டத்து உகும்பில் வல்லம் (350). 7. ஊற்றுக்காட்டுக் கோட்டத்து ஏனாதிபுதூர் என்ற ஏகாம்பரநாத நல்லூர் (351). 8. எயிற்கோட்டத்துக் காரையூர் (351). 9. பெரும் பாணப்பாடிக்கரை வழி ஆந்தி நாட்டு மேல் கூற்றுத் தாமரைச்செலுர் (817). கோவிலுக்கு விடப்பட்ட தானங்கள் 1. திருநுந்தா விளக்கு ஒன்று, இரண்டு வைக்கக் காலிகள் தானமாக விடப்பட்டன. ஒரு விளக்குக்கு 32 பசு வீதம் தானம் விடப்பட்டது என்பதும் இரண்டு விளக்குகட்கு 64 பசுக்கள் தானம் விடப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கன. இவற்றைக் கோவில் இடையர் பெற்று நாளும் விளக்கு எரிக்க நெய் அளித்து வந்தனர். 2. அரசன் அல்லது அரசப் பிரதிநிதி பிறந்த நாளன்று கோவிலில் சிறப்புப் பூசை நடத்தவிட்ட தானம். (a) தாமல் கோட்டத்துக் களத்தூர் தேவதானம். (b) சமரகோலாகல நல்லூர் தேவதானம். 3. உத்தர அயநம் மாசிமகம் முதலிய விசேட காலங்களில் சிறப்புப் பூசைக்காகக் காசு தானம். 4. கோவிலுக்கென்றே ஊர், நிலம் முதலியனதானம். (a) எயிற்கோட்டத்து எயில் நாட்டுப் புதுப்பாக்கம் தேவதானம் (824). (b) பொன் மேய்ந்த கம்பன் வளாகம் குழி ஆயிரம் தேவதானம் (821). (c) திருப்புக்குழிக்குப் பக்கத்தில் நிலதானம் (825). (d) ஏனாதி புதூர், காரையூர், திருவாய்ப்பாடி, சிங்காரத் தோப்பு தேவதானம் (351). தானம் விடப்பட்ட பசுக்கள் வகை (1) பால்பசு பத்து + சிணைப்பசு பன்னிரண்டு + வறள் பசு ஆறு + கி டாரி நான்கு + எருது ஒன்று. (822) (2) நற்பசு முப்பத்தி இரண்டு + எருது ஒன்று. (816) (3) பால்பசு + சினைப்பசு+நாகு உட்பட உரு முப்பத்தி இரண்டு + எருது ஒன்று. (819) (4) பசு முப்பத்தி இரண்டு + எருது ஒன்று. (817) (5) பசு முப்பத்தி இரண்டு + எருது ஒன்று. (823) (6) பால் பசு பத்து + சினைப்பசு பத்து + பொலிமுறைநாகு முப்பத்தி இரண்டு + எருது ஒன்று. (350). பசு வகைகளை நோக்க நாகு என்பது மணப்பருவத்துப் பசு என்பதும், பொலிமுறை நாகு என்பது கன்று ஈனத் தகுதி யுடையது என்பதும், இவ்வனைத்தின் இனம் பெருக்க எருது ஒன்று உடன் தானம் செய்யப்பட்ட தென்பதும் அறியலாம். `நாகு என்பதன் பொருள் சிறப்பு நோக்கத் தக்கது. கோவில் இடையர் இப்பசுக்களைப் பெற்ற இடையர் கோயில் சுரபி இடையர் (818) என்றும், கோயிலில் விளக்குக்காக இவற்றைப் பெற்று நெய் நாடோறும் தந்து வந்தனர் ஆதலால் கோயில் விளக்குக் குடிமக்கள் (816) என்றும் பெயர் பெற்றனர். இக் கல்வெட்டு களில் வழக்காறு கொண்ட அவர்தம் பெயர்கள்-செல்வக்கோன், தழுவக்குழைந்தான், அமுத வல்லவக்கோன், சிறு நம்பிக்கோன், குருகுலராயக்கோன், பெருமாள்கோன், சோமக்கோன், திருவேகம்பக்கோன், காக்குநாயகக்கோன், சந்திரக்கோன், மலையக் கோன் என்பன. இவர்கட்குத் தலைவன் `திருவிளக்கு மன்றாடி எனப்பட்டான். கோவில் அர்ச்சகர் பெயர்கள் அக்காளிபட்டன், தேவசிவன், நாற்பத்தெண்ணாயிர பட்டன், (இவன் மனைவி சூரியதேவ ஆச்சானி). போரேற்றுப் பெருமாள் (இவன் சிறியதாய் அன்புடை ஆச்சானி), காமக்கொடி* பட்டன், கம்பாண்டான், புராண சிந்தாமணி பட்டன், திருச்சிற்றம்பல பட்டன், விடங்கப் பட்டன் என்பன. கோவிலில் நடைபெற்ற விசேட பூசைகள் மாசி மகவிழா, உத்தர அயந விசேடபூசையில் சஹர கலசம் ஆட்டல், திருவோணநாள் விழா, புவனேகவீரன் சந்திபூசை, கணபதி தேவன் சந்தி என்பன. வழக்கில் இருந்த அளவைகள் நெல் அளக்க அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க அளவையாக இருந்தது (867). கோவிலில் நெய் அளக்க திரு ஏகம்ப நாழி என்பது பயன்பட்டது (350). பண்டாரம், நாணயம் முதலியன கோவில் பண்டாரம் (வசநயளரசல)-தேவர் பண்டாரம், ஸ்ரீ பண்டாரம் எனப் பெயர்பெற்றன. கோவில் கணக்கன் இருந்தான். அவன் பெயர் திருவேகம்பம் உடையான் என்பது. குருக்கள் பட்டர் என்றும் நம்பிமார் என்றும் பெயர் பெற்றனர். பரிசாரகர், திருமஞ்சனம் எடுப்பார், திருப்பள்ளித் தாமம் தொடுப்பார், கோவிலைக் கண் காணிக்கும் மாஹேசுவரர், தேவரடியார் முதலியோர் கோவிலில் வேலை பார்த்து வந்தனர். கோவிற் பண்டாரத்தில் பொன்னை உறைத்துப் பார்க்கக் `கட்டளைக்கல் (867) இருந்தது. மாற்றுக் குறையாத தூய பொன் என்பதற்கு அடையாளமாக அரசாங்கத்தாரால் துளையிடப் பட்ட பொன் நாணயம் `துளைப்பொன், `துளை நிறைப் பொன் எனப்பட்டது. `கழஞ்சு என்பது பொன் நிறைப்பெயர். வழக்கில் இருந்த காசு `அன்றாடு நற்காசு எனப் பெயர் பெற்றது. இப்பொழுது `பட்டைச் சாதம் என்பது அக்காலத்தில் `சட்டிச்சோறு என வழங்கியது (867). கோவில் வேலைகளில் மாணிகள் (பிரமசாரிகள்) விசேட காலங்களில் பங்கெடுத்துக் கொள்வர். முதற்குலோத்துங்கன் காலத்தில் உத்தர அயந விசேட பூசையில் மாணிகள் எண்மர் பங்குகொண்டனர். பொதுச் செய்திகள் (1) அக்கால நில அளவை அறுபத்தொன்தே எண்மா அரையரைக் காணி முந்திரிகை.நூற்றிருபத்து நாலரையே நாலுமாக்காணி முந்திரிகை என வரும் குறிப்புகளால் அறியலாம். வேலி-மா-முந்திரிகை என்பன நில அளவைப் பெயர்கள். (2) `தனியூர் என்பது இக்கால town என்பது (காவிரிப் பாக்கம்-822). `நகரம் என்பது இக்கால city என்பது (காஞ்சீபுரம் - 820). (3) சதுர்வேதிகள் எனப்பட்ட (நான்குவேதங்களில் வல்ல) மறையவர்க்குத் தானமாக விடப்பட்ட ஊர் `சதுர் வேதி மங்கலம் எனப்பட்டது. புதுப்பாக்கமான குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம் (824), காவிப்பாக்கமான விக்கிரமச் சோழச் சதுர்வேதி மங்கலம் (822) என்பன இத்தகையவை. (4) இக்காலத்தில் `உருப்படி என்பது அக்காலத்தில் `உரு என வழங்கியது. (5) `அவ்வையார் என்ற வழக்கு `அம்மையார் என்பது போன்றதாகும். இராஜராஜன் தமக்கையார் `குந்தவ்வையார் எனப்பட்டதும், கம்பணவுடையார் மனைவி `இராமதேவி - அவ்வையார் எனப்பட்டதும் காண்க. `அவ்வையார் என்பதே `ஔவையார் என்பதினும் பொருட்சிறப்புடைய வழக்காகும். இச் சொல்லே `அவ்வா எனத் தெலுங்கில் குறைந்து வழங்குவது. (6) கரியமுது எனப்படும் பதார்த்தவகைக்கு `வெஞ்சனம் என்ற வழக்குண்டு (814). இஃது இன்றும் தென்னாட்டில் வழங்குகின்றது. கல்வெட்டு 348-A-š உள்ள செய்யுட்கள் அடுகயிலை முன்னாளில் ஆடகக் குன்றிட்ட வடுமறைந்து போயும் மறையா - முடுகுசமர் மாற்றோர் தொழுந்திருமால் மாவுதைப்ப வேல்வழுதி தோற்றோடிப் போன சுவடு. 1 மாலாக்கி இந்திரையைத் திருத்தோள் வைத்து வையகத்தைக் கோலாற் புரந்தருள் மாவலி வாணன்நன் கொற்றவடி ; வேலால் துரப்புண்ட பின்விறல் மாறன் வெகுண்டுபண்டு காலாற் குடித்த கடற்கண்க ளால்விழக் கண்டனமே. 2 ஏற்றார்க் கிடாதார் இலைஎன்ப தினறிந்தெஞ் சீற்றத் திருமால் செருவெல்க - மாற்றிலாப் பொன்னிட்டான் சென்னிகொடிப் பள்ளியிட்டான் சேரமான் வென்னிட்டான் கொற்றையார் வேந்து. 3 அரசர் மெய்க்கீர்த்திகள் 867 - முதல் இராசாதிராசன் 27-ஆம் ஆண்டு. வதிஸ்ரீ திங்களேர் தரு தன்தொங்கல் வெண்குடைக் கீழ் நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து செங்கோல் ஓச்சிக் (கருங்) கருங்கலி கடிந்து மன்னு பல்லூழியுள் தென்னவர் மூவருள் மானாபரணன் பொன் முடி ஆனாப் பருமதுள் பசுந்தலைப் பொருகளத் தரிந்து வீரகேரளனை ஆனைக்கிடு வித்து அசையில் சுந்தர பாண்டியனை. . தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரசைச் சோணாட் டொதுக்கி மேவுபுகழ் ராமகுட மூவர்கெட முனிந்து வேலைகெழு காந்தளுர்ச் சாலை கலமறுப்பித்து ஆகவமல்லனும் அஞ்சக் கேவுதன்றாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள் கண்டப்பையனுங் கங்காதிரனும் வண்டமர் களிற்றொடு மடியத் திண் திறல் விருதர் விக்கியும் விசயாதித்தனும் கருமுரட் சாங்கமையனும் முதலினர் ஸத்ர ஹிருவோத்துடை நிமிர் சுடர்ப் பொன்னோடை கரி புரவியொடும் பிடித்துத் தன்னாடையிற் ஐயங் கொண்டு ஒன்னார் கொள்ளிப்பாக்கை உள்ளெரி மடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சினச் சாளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்க வீற்றிருந்த ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ் கோ இராஜகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு 27 ஆவது. 813 - முதற் குலோத்துங்கன் 6-ஆம் ஆண்டு. வதி ஸ்ரீ புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொன்நேமி யளவுந் தன்நேமி நடப்ப விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்து விக்கிரமத்தால் புதுமணம் புணர்ந்து மநு வரை யீட்டம் வயிராகரத்து வாரி அயர் முனைக்குந் தெவ்வரசர் தம்தளவிரிய வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்திசை நிறுத்தி வட திசை வாகை சூடி, தென்திசை பூமகள் பொதுமையும் புவிமகள் தனிமையுந் தவிர்த்து நிபுதத் திருமணி மகுடம் உரிமையிற் சூடி தன்னடி இரண்டும் தட முடியாகத் தொன் நிலவேந்தர் சூட முன்னை மனுவாறு பெருகக் கலியாறு வறப்ப இருநில வளாகம் எங்ஙணம் தனாது திரு நில வெண்ணிலாத் திகழ ஒரு தனி மேருவில் புலி விளையாட வார்கடல் தீவாந்தரத்துப் பூவா நிறைவிடு கலஞ்சொரி களிறு முறை நிற்ப விலங்கிய தென்னவன் கருந்தலைப். பொன் நகர்ப் புறத்திடைக் கிடப்பத் தன் மணியாரமும் அலங்கலும்.வீரமும் தியாகமும் விளங்க மேவலர் வணங்க. வீற்றிருந்தருளிய கோ ராஜ கேசரி பன்மரான உடையார் ஸ்ரீகுலோதுங்க சோழ தேவர்க்கு 6 - ஆவது. 818 - இரண்டாம் குலோத்துங்கன் 2 - ஆம் ஆண்டு. வதிஸ்ரீ பூமன்னுபாவை காமுற்று முயங்க இருநிலக் கிழத்தியைத் திருமணம் புணர்ந்து கலையின் செல்வி தலைமையோங்கப் போர்மகள் காப்பச் சீர்மகள் போற்ற மரகதப்புரவி இரவிகுலம் விளங்கப் பாற்கடல் தெய்வம் பள்ளிநீங்கி நாற்கடல் வட்டம் நாடொறும் தாங்கி எண்டிசை யானை தண்டு விடை நிற்பக் காவல் தேவர்கள் ஏவல் கேட்பக் கலிப்பகை ஓட்டிப் புலிக்கொடி எடுத்துத் தென்னவர் கேரளர் சிங்களர் தெலுங்கர் கன்னடர் விலாடர் கலிங்கர் முதலாகக் கொற்றவர் வந்து குடிமை செய்ய ஒற்றை வெண்குடை உலகு தனிகவிப்ப ஊழி பலகோடி ஆழி நடாத்தி செம்பொன் வீர ஸிங்காதனத்துத் திரி புவன முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவி ராஜகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இரண்டாவது. 824 - இரண்டாம் குலோத்துங்கன் 2 - ஆம் ஆண்டு. வதிஸ்ரீ பூமேய வளர் திருப்பொன் மார்பு புணர நாமேஷ கலைமகள் நலம் பெரிது சிறப்ப, விசய மாமகள் வெல்புயத்திருப்ப, இசையின் செல்வி எண்டிசை வளர்ப்ப, நிருபர் வந்திறைஞ்ச நீணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து திருவளர் திருமணி முடிகவித்தென மணிமுடி சூடி மல்லைஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம் எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த வெண்குடை நிழற்றச் செங்கோல் ஓச்சி வாழி பல்லூழி ஆழி நடப்பச் செம்பொன் வீர சிம்மாஸனத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோ ராஜ கேசரிபன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இரண்டாவது. 822 - இரண்டாம் இராஜராஜன் 15-ஆம் ஆண்டு. வதிஸ்ரீ பூமருவிய திருமாதும் புவிமாதும் ஜெயமாதும் நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க அருமறை விதிநெறி அனைத்துந் தழைப்ப வருமுறை யுரிமை மணி முடி சூடித் திங்கள் வெண்குடைத் திசைக்களிறு எட்டும் தங்கு தெனிக்கூடந் தானன விளங்கக் கருங்கலி படிமிசைச் செங்கோல் துரப்பப் பொருவலியாழி வளர்ந்துடன் வர வில்லவர் இரட்டர் மீனவர் சிங்களர் பல்லவர் தெலுங்கர் பார்த்திவர் பணிய எண்ணருங் கற்பில் மண்ணகம் புணர்ந்து செம்பொன் வீர சிங்காதனத்து உலகுடை முக்கோக் கிழான் அடிகளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜ ராஜ தேவற்கு யாண்டு பதினைந்தாவது. 820 - இரண்டாம் இராஜாதி ராஜன் 8-ஆம் ஆண்டு. வதி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார் மாதரும் பூமாதரும் கலைமாதரும் அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்து வாழ நாற்கடல் சூழ் புவியேழும் பாற்கடல் சூழ் புகழ் பரவ ஆதியுகம் வந்ததெனச் சோதிமுடி புனைந்தருளி அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில் வந்துபசரிப்பத் தென்னவரும் சேரலரும் சிங்களரும் கொங்கணரும் பல்லவரும் முதலாய பார்மன்னர் வந்திறைஞ்சச் செம்பொன் வீர ஸிங்காதனத்துப் புவனம் முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு 8-ஆவது. 823 - மூன்றாம் குலோத்துங்கன் 27 - ஆம் ஆண்டு. வதிஸ்ரீ திருவாய்க்கேள்வி முன்பாகத் திரிபுவனச் சக்ரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 27-ஆவது. கல்வெட்டு கல்வெட்டு உள்ள அரசன் பெயர் ஆட்சி எண் இடம் ஆண்டு (S.I.I. Vol. IV) 867 திருக்கச்சி மயானம் இராஜாதி ராஜன் I 27 வடக்கு-மேற்குச் (கி.பி. 101-1254) சுவர்கள் 813 தென்புறச் சுவர் குலோத்துங்கன் I 6 (கி.பி. 1070-1120) 818 ஏகாம்பரர் கோவில் குலோத்துங்கன் II 2 இரண்டாம் பிரா (கி.பி. 1133 - 1150) காரத்து மேலைச்சுவர் 824 821 இராஜ ராஜன் II 2 (கி.பி. 1146-1173) 822 தென்புறச் சுவர் 7 15 816 மேலைச் சுவர் இராஜ ராஜன் II 10 (கி.பி. 1146-1173) 819 17 817 19 கி.பி. அறச்செயல் 1044 மாசி விழா நடத்தவும் விழாவன்று தேவரடியார் உள்ளிட்ட பலருக்கும் சட்டிச்சோறு நாற்பது வழங்கவும் கோனூர் உடையான் மாறன் மாதேவடிகள் ஐந்து கழஞ்சு பொன் தானம். 1075 ஆண்டுதோறும் உத்தர அயநந்தோறும் சகர கலசம் ஆட்டவும், கலசமிடும் குடவர் உள்ளிட்ட பலர்க்கும் காசுகள் நல்கவும் என்று இக்கோவில் வீரணுக்கன் தாமோதரன் கேரளாந்தக மாராயன் கொடுத்த அன்றாடு நற்காசு 108 தானம். 1134 நித்தம் இரண்டு திரு நந்தா விளக்கு வைக்கப் புவனாதி கங்க உடையார் விட்ட பசு 64 + எருது 2. எயிற் கோட்டத்து - எயில்நாட்டு - புதுப்பாக்கம் தேவதானமாக விடப்பட்டது. 1147 சாளுக்கி நாராயணன் மநுமசித்தரசன் திரு வேகம்பமுடையார்க்குத் தேவதானமாகவிட்ட `பொன் மேய்ந்த கம்பன் வளாகம் குழி ஆயிரம். 1152 காவிப்பாக்கத்துக்கு மகாசபையோர் நில தானம் செய்தது. (சிதைந்த கல்வெட்டு) 1160 வெண்குன்றக் கோட்டத்து - அறியூர்நாட்டு - அனுப்பத்தூர் ஆடுவாணான பல்லவராயன் பால்பசு பத்தும் சினைப்பசு பன்னிரண்டும் வறள்பசு ஆறும் கிடாரி நான்கும் காளை ஒன்றுமாக ஆக உரு 33 தானம். 1155 வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்மடி விஷ்ணு தேவன் ஒரு விளக்கு வைக்க நற்பசு 32-ம் காளை ஒன்றும் தானம். 1192 மதுராந்தகப் பொத்தப்பிச்சோழன் கண்ட கோபாலர் முதலிகளில் காழி நாயக்கர் வைத்த திரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பால்பசுவும் சினைப்பசுவும் நாகும் உள்பட உரு 32 தானம். 1164 ஆந்திநாட்டு-மேல் கூற்றுத் தாமரைச் செறுகங்கள் கொம்மரசன் மகன் புவனாதி கங்கன் ஒரு திரு நுந்தாவிளக்கு எரிக்க விட்ட பசு 32-ம்+எருது 1 தானம். கல்வெட்டு கல்வெட்டு உள்ள அரசன் பெயர் ஆட்சி எண் இடம் ஆண்டு 820 மேலைச்சுவர் இராஜாதி ராஜன் II 8 (கி.பி. 1163-1173) 823 வடபுறச் சுவர் குலோத்துங்கன் III 27 (கி.பி. 1178-1218) 825 நடராஜர் கோவில் - புக்கராயர் கீழைச்சுவர் 348 தென் சுவர் சகரை யாண்டு 1191 348-A 814 இரண்டாம் பிரா 1172 காரம் வடபுறச் சுவர் 815 (Telugu) 815-A 1172 826 ஆயிரக்கால் மண்டபம் 349 2-ஆம் பிராகார வடபுறச் 350 சுவர் விஜயகண்ட 1187 கோபாலர் 351 இராயர் மண்டபம் கம்பண புடையார் தென் சுவர் கி.பி. அறச் செயல் 1170 செங்கேணி அம்மையப்பன் எதிரிலிச்சோழ சாம்புவராயன் தானம் (கல்வெட்டு முழுவதும் இல்லை). 1204 குவலாளபுர பரமேசுவரன் சீயகங்கன் அமரா பரணன் திருவேகம்பமுடையான் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு 32 - ம் எருது ஒன்றும் தானம். திருக்கச்சாலை உடைய நாயனார் கோவில் குருக்கள் மனைவியர் மூவர் ஏகாம்பரர் கோவிலுக்கு நிலதானம் செய்தனர். 1269 புவனேகவீரன் என்ற மாகாணத்தலைவன் தன் பெயரால் சந்தி ஒன்றும் பிறந்த நாள்தோறும் விசேஷபூசை நடத்தும்படி பாண்டி மண்டலத்து வீரநாராயண வளநாட்டுச் சமர கோலாகல நல்லூரைத் தேவதானமாக விட்டான். மூன்று செய்யுட்கள் வழுதி ஒருவனைப் பற்றி யவை; வரலாற்றுக் குறிப்பொன்றும் இல்லை. 1250 கணபதி தேவன் என்பவன் தன் பெயர்கொண்ட சந்தி பூசைக்கும் திருவோணவிழாவிற்கும் தாமல் கோட்டத்துக் களத்தூரைத் தேவதானமாக விட்டான். 1250 துலா நாயிற்றுப் பூர்வபக்ஷத்துப் பௌர்ணமி சோமவாரம் சோமக்கிரகண புண்ணிய காத்திலே . . . (சிதைந்த கல்வெட்டு) வடமொழிக் கல்வெட்டு; சிவன் - ஊமை வருணனை (கல்வெட்டுச் சிதைந்தது). 1265 திரு ஏகம்பமுடையார் திருமுன்பு ஒரு விளக்கு என்றும் எரியப் புலியூர்க்கோட்டத்து உகும்பில் வல்லங்கிழான் பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளை பால்பசு பத்து + சினைப்பசு 10 + பொலி முறை நாகு 12+ எருது 1 ஆக உரு 33 தானமாக விட்டான். கம்பணவுடையார் மனைவி இராமதேவி அவ்வையார் தேவதானம்: ஊற்றுக்காட்டுக் கோட்டத்து இராம சமுத்திரம் என்ற ஏனாதி புதூர் என்ற ஏகாம்பர நாதநல்லூர், எயிற்கோட்டத்துக் காரையூர், திருவாய்ப்பாடி ஊர் ஆக மூன்றும் தானம்; ஏகாம்பரர் கோவிலுக்கு இராமதேவி அவ்வை யார் பெயரால் பண்ணின காக்கு நாயக விளாகமான சிங்காரத்தோப்பு ஒன்று தானம். 7. திரிபுவனை I இத்தலம் விழுப்புரத்திலிருந்து போகும் வழியில் கண்ட மங்கலம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்றுகல் தொலைவு மேற்கே உள்ளது. அவ்விடத்திற்காக ஜூன் மாதம் முதல் தேதி (1-6-41) நானும் புதுவைக் கல்விக் கழகத்து நண்பர்களும் சென்றோம்; அங்குள்ள போலீ சப் இன்பெக்டர் அவர்களாலும், பெருநிலக் கிழவர் அழகிய மணவாள இராமாநுஜ ரெட்டியார் அவர்களாலும் வரவேற்கப் பட்டோம். அவ்வூரினது பழைமை பற்றிய குறிப்புக்களைப் பலர் பலவாறு கூறினர்; அவ்வூரின் பெயர் திரிபுவன மாதேவி என்றும், திரிபுவன மாதவி என்றும், திருநாமதி என்றும் பலவாறு பகர்ந்தனர்; அதற்கு ஒரு கல் தொலைவிலுள்ளது கோவலன் ஏரி என்றும், சுற்றுப் புறங்களில் பண்டைக் குட்டைகள் பல இருக்கின்றன என்றும் சிற்றூர்களின் பல பெயர்கள் மருவி உள்ளன என்றும் தெரிவித்தனர். நாங்கள் அறிந்தவை பழைய சதுர்வேதி மங்கலத்தின் எல்லைகள்:-மேற்கே கோலியனூர் (7 கல் தொலைவு), வடக்கே செஞ்சியாறு (8 கல் தொலைவு), தெற்கே மலட்டாறு (6 கல் தொலைவு), கிழக்கே மூலைக்குளம் (10 கல் தொலைவில்) எல்லைகளாகும். இப்பரந்துபட்ட நில எல்லைக்குள் புகழ்மிக்க ஆலயங்கள் பலவும் வியத்தகு ஏரி ஒன்றும் இருந்தன என்பதற்கு உரிய சான்றுகள் இன்றும் கிடைத்துவருகின்றன. இப்பொழுது திரிபுவனை என்று கூறப்படும் கிராமத்தில் நடக்குமிடம் எல்லாம் பண்டைக் கட்டடச் சிதைவுகளைக் காணலாம். மண்வெட்டி கொண்டு சிறிது ஆராயின் செங்கற் சுவர்கள் ஊர் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் போதலைக் காணலாம். இன்று அவ்வூரில் அரங்கநாதப் பெருமாள் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், பிடாரி கோவில், தருமராஜர் கோவில் முதலியன இருக்கின்றன: ஊரிலும் ஊரைச் சுற்றிலும் (1) இரங்க நாதன் குளம் (2) தாமரைக்குளம் (3) தம்பலக்குட்டை (4) கழுநீர்க்குட்டை (5) சங்கிலிக்குட்டை (6) மண்டகப்பட்டான் ஊரல் (7) செவிட்டு ஊரல் என்னும் பெயருடைய நீர்நிலைகள் இன்று வற்றிக்கிடக்கின்றன. ஊருக்குச் சிறிது தூரத்தே திரு ஆண்டார் கோவில் என்னும் பழமை மிக்க மூதூரில் இடிந்த மதில்களையுடைய சிவன் கோவில் ஒன்று தன் பழமையைப் பாங்குற நிலைப்படுத்தி நிற்கின்றது. ஊருக்குத் தென்திசையில் உள்ள பருத்திக் கழனிகளில் ஓரிடத்தில் ஏறக்குறைய 12அடி நீளமுடைய பெருமாள் கற்சிலை (பள்ளிகொண்ட கோலத்தில்) ஒன்றும், வேறு பல சிலைகளும் சில ஆண்டுகட்குமுன் அகப்பட்டன. தங்கச் சிலைகள் பாரிசிற்கு (Paris) அனுப்பப்பட்டன. இரண்டொரு சிலைகள் புதுச்சேரி கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டொன்று ஊரிலுள்ள அரங்கநாதர் கோவிலுள் பூசிக்கப்பட்டு வருகின்றன. இச்சிலைகள் கிடைத்த விடத்தில் பண்டை வைணவக் கோவில் ஒன்று பெரிய அளவில் இருந்திருத்தல் வேண்டும். அந்தக் கழனிகளில் எங்குத் தோண்டினும் செங்கற்சுவர்கள் 6 அடி ஆழத்திற்குக் கீழ்க் காணப்படுகின்றன என்று அந்நிலங்களுக்கு உரியவர்கள் உரைக்கின்றார்கள். அக்கழனிகளிலே `மிளகாய்ப் பணம் என்று சொல்லத்தக்க பழைய சிறு நாணயங்களும், மண் அகல்களும், பிற மட்பாண்டங்களும், அம்மி-எந்திரம்-குழவி-வெண்கல உண்டியல்கள் முதலியனவும் கிடைத்தனவாம். களத்து மேடு ஊருக்கு வடமேற்கே 300 கெஜம் தொலைவில் களத்துமேடு என்னும் இடம் இருக்கின்றது. அவ்விடம் இன்று களமாகப் பயன்படுத்தப்படுகின்றது. தரைமீது அடியிலுள்ள செங்கற் சுவரின் தோற்றம் தெற்றெனத் தெரிகிறது. மூன்றங்குல ஆழத்தில் வேலைப்பாடமைந்த கருங்கற்பாறைகள் கிடைக் கின்றன. சுமார் பத்தாண்டுகட்குமுன் ஊரார் அம்மேட்டின் ஒரு பகுதியைத் தோண்டி ஊருக்குள் சிறிய கோவில் கட்டுவதற்கு வேண்டிய கருங்கற்களைக் கொண்டு சென்றனராம். அவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்ட பொழுது களத்து மேட்டிற்கு அடியில் நீள் சதுர வடிவில் கற்சுவர் மண்டபம் ஒன்று கண்டனராம். அவ்விடத்துக் கற்களில் இரண்டை நாங்கள் பார்வையிட்டோம். அவை இன்றும் அம்மேட்டின்மீதே கிடக்கின்றன. ஒன்றோ டொன்று இணைப்பதற்கு உரிய முறையில் அவை வேலைப்பாடு பெற்றுள்ளன. அவற்றின் ஒருபுறம் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்பன போலப் பொறிக்கப் பட்டுள்ள வேலைப்பாடு வியத்தற்குரியது. பாதிமுட்டை அளவுடைய கல்லொன்று சிறந்த வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. யாங்கள் களத்து மேட்டை பார்வையிடும் பொழுது நூறடிக்கப்பால் இருவர் வீடுகட்ட மண்ணெடுத்தனர். அவர்கள் தோண்டிய பள்ளத்தி னின்றும் சிறிய பெரிய மண் அகல்களும், மண்சட்டிகளும், மண்கூஜாவின் வாய் போன்ற மட்பாத்திரமொன்றும் கிடைத்தன. நாங்கள் அவர்களை வேண்டி அவற்றினைப் பெற்றுக்கொண்டோம். பருத்திக் கொல்லையில் தோண்டிப் பார்த்த பொழுது சில பழைய மட்பாண்ட ஓடுகளும், திருநீற்று உருண்டைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட சுண்ணாம்பு உருண்டைகளும் தம் பழைமையை உணர்த்துவனபோல வெளிப்பட்டன. அரங்கநாதர் கோவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவிலின் மூலத்தானம் தவிர ஏனைய பகுதிகளும் மதிலும் இடிந்து சப்பாத்தி முளைத்துப் பாழிட்டுக் கிடந்தன. அவ்வழிவைக் கண்டு மனம் வருந்திய அவ்வூர்ப் பெரு நிலக்கிழவர் (அழகிய மணவாள இராமாநுஜ ரெட்டியாரின் தந்தையார்) பெரும் பொருள் செலவிட்டுச் சிதறிக்கிடந்த கற்களைக் கொண்டு கோவிலை நன்முறையில் அமைத்தார். அக்கோவிலுக்கு எதிரே இருந்த கல் மண்டபமும் இடிந்து விட்டது. மதிற்சுவரெடுத்த வேலை யாட்களின் அறியாமையால் கல்வெட்டுப் பகுதிகள் பல வைப்பு முறையினின்றும் நீங்கிக் கண்டவாறு கண்ட இடங்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளவை கல்வெட்டறிஞர் உள்ளத்தைக் கலக்குவதாகும். இப்பழங்கோவிலைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கற்கள் கோவிலுக்கு அண்மையில் இன்றும் சிதறிக் கிடக்கின்றன. மூலத்தானத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் வெளிப்புறங்களிலெல்லாம் பல கல்வெட்டுகள் காணப் படுகின்றன. மூலத்தானத்திற்கெதிரே உள்ள மண்டபத்தின் இருபுறப் படிக்கட்டுக் கற்கள்மீது யானை உருவங்களும், சிங்க உருவங்களும், பெண்கள் உருவங்களும் சிறப்புறப் பொறிக்கப் பட்டுள்ளன. அம் மண்டபத்திற்கும், கோவில் வாயிலுக்கும் இடைப்பட்ட வெளிநிலத்தில் கொடிக் கம்பம் நடுதற்கு உரிய துளையோடு கூடிய கல்லொன்று புதைந்து கிடக்கின்றது. இப்பழங்கோவிலைப் புதுப்பித்த ரெட்டியார் அவர்கள் பெருமாளுக்கு வாகனங்கள் முதலிய கோவில் திருப்பணிகள் சிறப்புறச்செய்து வந்தமையும் அவர் செல்வக் குமரர் தந்தை வழி நின்று கோவிற் பணியாற்றி வருதலும் நம் பாராட்டுக்கு உரியனவாகும். கலிதீர்த்தாள் குப்பம் நாங்கள் திரிபுவனையிலிருந்து கோவலன் ஏரியை நோக்கிச் சென்றோம். வழியில் உள்ள ஒரு சிற்றூர் கலிதீர்த்தாள் குப்பம் என்பது. அஃது இப்பொழுது `கல்தா குப்பம் என மருவி வழங்குகிறது. இவ்வூரில் பழங்காலத்தில் இருந்த கணிகை மகள் ஒருத்தி இரண்டு கல் தொலைவில் உள்ள திரு ஆண்டார் கோவிலில் நடனம் செய்து கொண்டிருந்தாள். அவள் காலத்தில் பெருங்கலி (பஞ்சம்) ஏற்பட்டபொழுது அல்லலுற்ற இவ்வூரார்க்கு அவள் நல்லறம் புரிந்து அவர் கலியைப் போக்கினாள். அதனால் அவளைப் பாராட்டு முகத்தால் இச்சிற்றூர்க்குக் `கலிதீர்த்தாள் குப்பம் என்பது பெயராயிற்று என்று அவ்வூரில் இருந்த எழுபது வயதுடைய கிழவர் ஒருவர் கூறினார். இக்கதையைக் கேட்டதும், கோவலன் மகளாகிய மணிமேகலை தொண்டை நாட்டில் செய்த (கலிதீர்த்த) அறச் செயல் எனது நினைவிற்கு வந்தது. கோவலன் ஏரி பின்னர் நாங்கள் கோவலன் ஏரிக்கரையை அடைந்தோம். அது தெற்கு வடக்காகச் சுமார் பத்துக்கல் நீளமும் கிழக்கு மேற்காகச் சுமார் ஆறுகல் நீளமும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இந்த ஏரிக்கரை திருவதிகை வரை செல்கிறதென்று கூறுகின்றனர். நாங்கள் நின்ற மதகடிப்பட்டு என்னும் இடத்திலிருந்து தெற்கே நான்கு கல் தொலைவுவரை ஏரிக்கரை மேடாகவே இருக்கின்றது. அதன்பின், கரையின் உருவம் கரைந்து காணப்படுகிறது. கரைமீதிருந்து நோக்கின், கரைக்குக் கீழுள்ள வயல்கள் சுமார் இருபதடி ஆழத்தில் காட்சியளிக்கின்றது. அவ்விடம் மிகுந்த பள்ளமாக இருந்தது என்று உழவர் உரைக்கின்றனர். ஏரிக்கரை 18 அங்குல நீளமும் 12 அங்குல அகலமும் 4 அங்குல கனமும் கொண்ட வியப்புக்குரிய செங்கற்களாலும் சிறிய கனத்த அளவையுடைய செங்கற் களாலும் கட்டப்பட்டுள்ளதை நோக்க, அவ்வேரி ஒரு பேரரசனால் தக்க முறையில் அமைக்கப்பட்டது என்னும் உண்மை புலப்படுகிறது. நாங்கள் நின்ற மதகடிப்பட்டு என்னும் மேடு எழுபது ஆண்டுகட்குமுன் பாதையிலிருந்து சுமார் 60 அடி உயரம் வரை இருந்ததென்பதை 90 வயதுடைய உழவர் ஒருவர் உரைத்தார். அவ்வேரியின் மேல் வயலுக்குப் பாய்வதற்கென்று மதகு அமைக்கப் பெற்றுள்ள இடம் அஃதாதலின், `மதகடிப்பட்டு என்னும் பெயர் பெற்றதாம். அம்மதகில் நீர் வடிவதற்குப் பயன்பட்ட பாதி விட்டத் துளையுள்ள நீண்ட கற்கள் இரண்டு நன்றாய்ப் பொருத்தப்பட்டு மதகில் இணைக்கப்பட்டு இருந்தனவாம். இவ்விரண்டும் வயலிலிருந்து உழவரால் வெளிப்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றை நாங்கள் நன்கு பார்வையிட்டோம். அதன் வெளிப்புறத்தில் இடப்புறமிருந்து சிங்கம் ஒன்று, குதிரை ஒன்று, மனிதன் ஏறப்பெற்ற யானை ஒன்று, சிங்கம் ஒன்று ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் அக்கல்லை ஒழுங்குபெற ஓரிடத்தல் வைத்துப் புகைப் படம் எடுத்தோம். இந்த ஏரியைப்பற்றி மதகடிப்பட்டில் வழங்கும் கதைகள் இரண்டாகும்: (1) கோவலன் என்னும் அரசன் கட்டின ஏரியாதலின் இப்பெயர் பெற்றது. (2) சதுர்வேதி மங்கலத்தை அரசாண்ட அரசன் ஓர் இரவு மாறு வேடம்பூண்டு ஏரியை நோக்கிச் சென்றான். அப்பொழுது உழவர் சிலர் கள்ளத் தனமாய்த் தங்கள் வயல்கட்கு ஏரி நீரைப் பாய்ச்சிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மாறுவேடமிட்ட அரசனை ஒற்றன் எனக் கருதித் துன்புறுத்தி ஓரிடத்தில் மறைத்து வைத்தனர். மறுநாள் அரசனைக் காணாமையால் வருந்திய குடிகள் அவ்வூரிலும் பிற இடங்களிலும் தேடி அலைந்து இறுதியில் ஏரிக்கரையோர மாகத் தேடிச் சென்றனர். செங்கோல் வேந்தன் மறைந்த மாற்றம் கேட்ட கோக்களும் (பசுக்களும்) ஊராரைப் பின்பற்றி ஏரியை வலம் வந்தன. அஃறிணைப் பொருள்களான கோ (பசுக்கள்) வலம் வந்தமை பாராட்டி ஊரார் அவ்வேரிக்குக் `கோ வந்த ஏரி எனப் பெயரிட்டனர். அப்பெயர் நாளடைவில் கோவலன் ஏரி என மருவி வழங்குகிறது. சோழனுக்கு வளவன் (வளமுடைய நாட்டுக்குரியவன்) என்னும் பெயர் உண்டு. தேனால் கோ (ஆகிய) வளவன் அமைத்த ஏரியை அக்கால மக்கள் கோ வளவன் ஏரி என அழைத்திருக்கலாம். அப்பெயர் சிதைந்து, `கோவலன் ஏரி’ என மாறி வழங்கலாம் என்று கொள்ளலாம். அப்பெயர் சிதைந்து, `கோவலன் ஏரி’ என மாறி வழங்கலாம் என்று கொள்ளலாம். ஈட்டி மேடு திரிபுவனைக்கு வடகிழக்கே அரைக் கல் தொலைவில் ஈட்டி மேடு என்னும் மேடு ஒன்று இருக்கின்றது. ஒரு காலத்தில் ஒட்டக்கூத்தர் 1000 செங்குந்தர் தலைகளை ஆசனமாக அமைத்து அவ்வாசனத்தின் மீதிருந்து ஈட்டி எழுபது என்னும் நூலைப் பாடினார் என்று சிலர் செப்புகின்றனர். சில ஆண்டுகட்கு முன் ஈட்டி மேடு உயர்ந்த மேடாக இருந்ததென்றும் வரவரக் கரைக்கப்பட்டது என்றும் ஊரார் உரைக்கின்றனர். திரு ஆண்டார் கோவில் திரிபுவனையை அடுத்துள்ள இந்தச் சிற்றூரில் உள்ள சிவன் கோவில் பழைமை வாய்ந்தது. அக்கோவிலின் நான்கு மதிற் சுவர்களும் இப்பொழுது இடிந்து கிடக்கின்றன. மதில் நீளம் சுமார் 150 கெஜம்; அகலம் சுமார் 100 கெஜம்; கனம் 4 1/2 அடி. இம்மதில் சிற்சில இடங்களில் 6 அடி உயரம்வரை இருக்கின்றது. பல இடங்களில் தரைமட்ட அளவு இடிந்திருக்கிறது. அம்மதில் செங்கல் கட்டடமும், இருபுறமும் கருங்கற்கட்டடமும் அமையப் பெற்றது. தென்னண்டைப் புறச்சுவர் ஓரத்தில் கிழக்கு நோக்கியபடி உள்ள கற்சிலை ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. புறச்சுவர் முழுவதும் கற்கள் ஒன்றன் மீது ஒன்று பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளனவே யன்றிச் சாந்து பூசப்பெற்றனவாக இல்லை. ஆயின் இறை இடச்சுவர் சுண்ணாம்புப் பற்றுடன் இருக்கிறது. அக் கற்சுவரின் மேற்பகுதி சிற்சில இடங்களில் சில செங்கற்கள் அடுக்கப் பெற்றுள்ளது. அவ்வேலைத்திறம் பிற்காலத்ததாகும். புறச்சுவர் சில இடங்களில் சரிந்து காணப்படுகின்றது. அவை பிறகு சாய்ந்துவிட்டன போலும்! புறச்சுவரை அடுத்துள்ள அம்மன் சந்நிதி சுமார் 70 ஆண்டுகட்கு முன்வரை தளர்ச்சியுற்ற நிலையில் இருந்ததென்றும், பின்னரே அது தரைமட்டமாகிய தென்றும், அதற்கு முன்னரே அங்குள்ள அம்மன் படிவம் உட்கொண்டு வைக்கப்பட்டதென்றும் ஆண்டிருந்தார் எங்கட்குக் கூறினர். அம்மன் சந்நிதி இருந்த இடத்தில் கிடக்கின்ற கற்பாறைகள்மீது வேலைப்பாடு காணப்படுகிறது. பல கற்கள் மனித உருவம் (ஆண் அல்லது பெண்) பொறிக்கப் பெற்றுள்ளன. உட்சுவருக்கும் இடிந்து கிடக்கும் மதிலுக்கும் உட்பட்ட பிரகார அகலம் ஏறக்குறைய 18 அடி இருக்கலாம். கோவிலின் உட்புறம் முதற் பிராகாரத்தின் வடசுவரின் வெளிப் பக்கத்தில் அடுக்கப்பெற்றுள்ள கற்களில் ஆங்காங்கு 11 குமிழிகளும் மேற்சுவரில் 9 குமிழிகளும், தென் சுவரில் 17 குமிழிகளும், கீழ்ச் சுவரில் 12 குமிழிகளும் காணப்படுகின்றன. இவ்வாறு உட்புறத்திலும் இக்குமிழிகள் காணப்படுகின்றன. இவை எந்நோக்கம் கொண்டு இவ்வாறு அமைக்கப்பெற்றுள்ளன என்பது அறியக்கூடவில்லை. உட்பிராகாரத்தின் தரைமட்டும் செங்கல் தளத்தை உடையது; ஆயினும், முள்ளும் புல்லும் வளர்ந்து அக்கோவிலின் பழமையையும், அழிவுற்ற நிலைமையையும் நமக்கு நன்கு அறிவிப்பதைப்போலக் காட்சி அளிக்கின்றது. பிராகாரத்தில் முருகன் கோவில் ஒன்று சிறிய அளவில் இருக்கின்றது. அதன் மேல்தளம் முக்கோண வடிவில் அமைந்தது; கற்களைக் கொண்டு மூன்று உயர்ச்சிகளை யுடையதாய்க் காணப்படுகின்றது. அங்கு முருகன் வேலேந்திய கையினனாய்த் தனியே அமர்ந்துள்ளான். அவன் இடப்புறம் வள்ளியம்மையின் சிலை தனியே நிறுத்தப்பட்டுள்ளது. அச்சிறு கோவிலின் மண்டபத்தூண் ஒன்றில் குண்டலங்களை அணிந்த பெண்ணொருத்தி வலக்காலை மடக்கி, இடது காலைப் பின்புறம் மடக்கி உயர்த்தி நடனமாடுவது போன்ற உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. மற்றொரு தூண்மீது ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுதல் காட்டப்பட்டுள்ளது. இறையிடப் புறச்சுவர்கள் தென் சுவரில் ஆறிடங்களில் ஆறு உருவங்கள் இடம் விட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன: (1) சிவனது பிச்சாண்டவர் கோலம்; பாம்பு அரைஞாண், (2) விநாயகர், (3) இவ்விடத்தி லிருந்த தனிச்சிலை காணப்படவில்லை. (4) வலக்கால் மீது இடக்கால் வைத்துள்ள தக்ஷிணா மூர்த்தி உருவம். இதன் இடக்காது குண்டலமுடையது, வலக்காதில் ஒன்றுமில்லாமை கவனிக்கத்தக்கது. இவ்வுருவம் பாதங்களில் தண்டையை யுடையது (5) மார்க் கண்டேயர் சிவலிங்க வழிபாடு செய்வதனைக் குறிக்கும் உருவம் (6) இன்னதென்று உணரமுடியாத அழிந்த நிலையிலுள்ள உருவம். மேற்புறச் சுவரில் ஆறிடங்களில் வேலைப்பாடு கொண்ட உருவங்கள் சுவரில் செதுக்கியும் தனியே நிறுத்தியும் வைக்கப் பெற்றுள்ளன:-(1) இரு பெண்கள் கைகோத்து நடனமாடுதல், (2) அறிந்து கொள்ள இயலாத சிதைந்தவுருவம், (3) யானை சிவலிங்கத்தை வழிபடுதல், (4) அடிமுடி கண்ட வரலாற்று உருவங்கள், (5) அழிந்த உருவம். (6) நடனமாடும் நங்கை யொருத்தியை மற்றொரு பெண் வழிபடல். இந்த ஆறு உருவங்களுக்கும் கீழே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வடபுறத்துச் சுவரில் 7 உருவங்கள் காணப்படுகின்றன;-(1) விளங்காதது. (2) அநுமான் லிங்கவழிபாடு செய்தல், (3) ஒரு பக்தன் சிவலிங்கத்தை வழிபடுதல், (4) அநுமான், இராமன், இலக்குவன், சீதை இந்நால்வரும் நிற்றல் போன்ற வேலைப்பாடு, (5) மாதொரு பாகன் திருவுருவம், (6) கச்சணிந்த தனங்களை யுடைய காளியம்மன் உருவம், (7) சிவனும் உமையும் காளையின் முன்புறம் நிற்றல். கோவிலின் உட்புறப் பெருஞ்சவரில் (இப்பொழுது உள்ள முதற் சுவரின் உட்பகுதியில்) வாசலிற்கு வலப்புறம் மூன்று உருவங்கள் தனித்தனியே செதுக்கப்பட்டுள்ளன: (1) பெண்ணொருத்தி தன் இடுப்பில் வைத்துள்ள குழந்தைக்குப் பால் தருவது போன்ற உருவம், (2) சிவபெருமான் வலதுகாலை மடக்கி இடதுகாலை நிறுத்தி உள்ள நிலை, (3) சிவபிரானும் உமையம்மையும் கைகோத்து நிற்றல் என்பன. இத்திருக்கோவிலின் சிவபெருமான் திருப்பெயர் ஆரைநக்கன்; அம்மையின் திருப்பெயர் திரு ஆரையார்; ஊரின் பெயர் திரு ஆரை. இப்பழங்கோவிலில் 7 மதில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்றும், கோவிலின் குளம் வில்லியனூர்க்கு (8 கல் தொலை விலுள்ள) அண்மையிலுள்ள மூலைக்குளம் என்றும் ஊரார் உரைக்கின்றனர். இது மிகை படக் கூறுதலாயினும், இப்பழங் கோவில் ஓரளவு பெரிதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இக்கோவிலுக்கு உரிய பிரகாரக் கிணறுகள் என்று சொல்லத் தக்கவை கோவிலை அடுத்து 100 அடித் தொலைவில் இருக்கின்றன. இக்காரணத் தால், இப்பழங்கோவில் மிகப் பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உரணத்தக்கது. இக்கோவிலின் ஆண்டு வருமானம் ஏறக்குறைய 400 ரூபாய் பெறும் என்று அதன் கண்காணிப்பாளர் ஒருவர் கூறினார். அவ்வருமானம் எஞ்சியுள்ள கோவிற் பகுதி இடிந்து விழாமற் காப்பதற்குப் போதியதாயில்லை என்பதையும் அவர் தெரிவித்தார். பெருங்குண வள்ளல்கள், அழிந்த அம்மன் சந்நிதியைப் புதுப்பித்து, அழிந்த மதிலையும் புதுப்பித்து, கோவிலினது பழமையைப் புதுமையால் நிலை நாட்டுதல் பெருங்கடனாகும். இத்தகைய பழங்கோவில்கள் பல இத்தமிழகத்தில் ஆங்காங்குப் பாழடைந்து கிடக்கின்றன. ஆராய்ச்சி வல்லார் அவற்றின் விவரங்களை அறிந்து, அவ்வப் பொழுது வெளியிடுதல் தமிழகத்து வரலாற்றுக்குப் பெருந்துணை செய்வதாகும். II முன்னுரை இன்று பிரஞ்சுநிலப் பகுதியாகவுள்ள புதுச்சேரியைச் சூழவுள்ள நிலப்பகுதி நடுநாட்டைச் சேர்ந்த தமிழ் நிலப் பகுதி என்பதைத் தமிழறிந்தார் அறிவர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட நாகரிகச் சின்னங்கள் அப்பகுதியிற் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அங்கு ஆராய்ச்சிக்குரிய பகுதிகளாக அரிக்கமேடு, மூர்த்திக்குப்பம், திரிபுவனை, பாகூர் முதலிய வற்றைக் கூறலாம். பாகூர் பல்லவர் காலத்தில் (கி.பி. 600-900) சிறப்புற்றிருந்த தலமாகம். திரிபுவனை பிற்காலச் சோழர் காலத்திற் (கி. பி. 900-1200) பெருமையுற்றிருந்த பகுதியாகும். அதனைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையிற் காண்போம். இன்றுள்ள `திரிபுவனை என்னும் சிற்றூரும் `திருவாண்டார் கோவில் என்னும் சிற்றூரும் பண்டை நாளில் ஒரு பேரூராக இருந்தன என்னலாம். பின்னதில் உள்ள சிவன் கோவிலும் முன்னதில் உள்ள பெருமாள் கோவிலும் சோழர் ஆட்சியில் சிறப்புற்றிருந்தன என்பதைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. திருவாண்டார் கோவில் இக்கோவில் முதல் இராஜ ராஜ சோழனுக்கு (கி. பி. 985) முன்னரே சிறப்புற்றிருந்தது. இக்கோவில் ஊரவையின் மேற்பார்வையில் இருந்தது. இக்கோவிலுக்குச் சொந்தமான வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் ஊரவையார் ஊர்நலனுக்காகச் செலவிட்டு அவற்றிற்கு ஈடாகச் சில நிலங்களைக் கோவிலுக்கு விட்டனர்.1 இராஜராஜ சோழனது பன்னிரண்டாம் ஆட்சி ஆண்டில் (கி. பி. 996) இக்கோவிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் திரிபுவனை மகாதேவிச் சதுர்வேதி-மங்கலச் சபையார் கூடினர். அவர்கள் கூடிய மண்டபம் `மும் முடிச் சோழ உம்பள நாட்டு வேளான் என்பவனால் கட்டப்பட்டது. `இம் மும்முடிச்சோழ மூவேந்த வேளான் என்பவன், `முண்டியன் வள்ளைப்பாக்கம் என்ற சிற்றூரில் சில நிலங்களை வாங்கி வரியிலியாகக் கோவிலுக்கு விட்டதை முன் சொன்ன ஊரவையார் ஏற்றுக் கொண்டனர்.2 திரிபுவனை இங்குள்ள ஏரியின் பெயர், `கோக்கிழானடிப் பேரேரி என்பது.3 இங்குள்ள `பெருமாள் கோவில் நடுவில்-வீர நாராயண விண்ணகர்* என்ற பெயர் பெற்றது. இவ்வூர், மறையவர்க்கு வரியின்றி விடப்பட்ட ஊராகும். இக்கோவில் `ஸ்ரீவாதனூர் தில்லையாளிப் பெரும்படை. பல்லாயிரவன் பெரும் படைகளின் பாதுகாவலில் (எக்காரணம் கொண்டோ) இராஜேந்திர சோழனது ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி. பி. 1016) இருந்தது.1 முன்சொன்ன ஏரி அன்றி `மதுராந்தகப் பேரேரி’ என்ற ஒன்று கல்வெட்டுகளில் காண்கிறது.-அதன் உதவியைப் பெறும் வயல்களில் ஆறு மாவுக்கு ஒரு கலம்வீதம் `ஏரி ஆயம் என்ற பெயரால் ஏரி வாரியப் பெருமக்களிடம் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.2 இவ்வூரை ஆண்ட அவை கோவில் முன் மண்டபத்தில் இரவில் கூடிக் காரியங்களைக் கவனிப்பது வழக்கம். இராஜேந்திர சோழனது பதினாறாம் ஆட்சி ஆண்டில் (கி. பி. 1027) `வரகூர் என்ற தேவதான சிற்றூர் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, விற்கவும் அடைமானம் வைக்கவும் கூடிய உரிமையோடு நாற்பத்தெட்டு குடிமக்கட்குக் கொடுக்கப் பெற்றது. அவர்கள் `நடுவில்-ஸ்ரீகோயிலுக்கும், கோக்கிழானடிப் பேரேரிக்கும் செலுத்தவேண்டிய வரிகளை மட்டும் செலுத்த வேண்டும் என்று ஊரவையார் விதித்தனர்.3 முன் சொன்ன அரசனது இருபத்தொன்பதாம் ஆட்சி ஆண்டில் கோவிலைத் தரிசிக்க வரும் ஸ்ரீ வைணவர்களுக்கு உணவு படைக்க ஊரவையார் ஒப்புக்கொண்டனர்.4 இராஜாதி ராஜனது முப்பதாம் ஆட்சி ஆண்டில், இராஜேந்திர சோழனது பெயரால் அவன் நலத்துக்காகச் சேனாபதி இராஜேந்திரசோழ மாவலி வாணராயர் என்பவன் 72 வேலி நிலம் விட்டான். அதன் ஆண்டு வருவாய் 12000 கலம் நெல்; அதில் 2475 கலம் குறிப்பிட்ட விழாக்களுக்கும், வைணவரை உண்பிக்கவும், திருவாய்மொழி ஓதவும் செலவிடப்பட்டது; எஞ்சியது அங்கிருந்த வடமொழிக் கல்லூரிக்குப் பயன்பட்டது. அரசன் ஆணைப்படி ஊரவையார் `அரங்கன் குமாரன் என்ற இராஜாதி இராஜப் பெருந்தட்டான் என்பவனுக்கு இரண்டு வேலி நிலம் கொடுத்தனர். அவன் அவ்வூரார்க்கே வேலை செய்யக் கடமைப்பட்டவன்.5 சேனாபதி வாணாதி ராயர் வேண்டுகோள் மீது திருமந்திர ஓலை - பல்லவன் பல்லவரையர் விடுத்த கட்டளை- வாகூர் வேளாளரைத் தவிர சிற்றூர்க்குள் வேறு எவரும் வரிவதிக்கவோ வாங்கவோ உரிமை உடையார் அல்லர். இதனை மீறுபவர் சட்டம் கடந்தவராகக் கருதப்படுவர். இக்கட்டளை அரசாங்கச் சார்பில் கோவில் கணக்குகளை மேற்பார்வை இட்டு வந்த பெரும்புலியூர் நம்பி என்பவரால் அங்கீகரிக்கப்பட்டது1; திரிபுவனையில் உள்ள பெருமாள் பெயர் இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சியில் `வீரசோழ விண்ணகர் ஆழ்வார் எனப்பட்டது.2 திரிபுவனையில் `திருநாகீசுவரம் என்ற பெயருடன் ஒரு சிவன் கோவில் இருந்ததாகத் தெரிகிறது. முதற் குலோத்துங்கன் ஆட்சியில் திருவிழா நடத்துவதற்காக அக்கோவிலுக்கு நிலம் விடப்பட்டது.3 ஊரவையார் `கூட்டப் பெருமக்கள் என்று பெயர் பெற்றிருந்தனர்.4 முதற் குலோத்துங்கன் ஆணைப்படி ஊரவையார் `குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலைப் படிக்கக் கேட்டனர். அதனை எழுதியவன் திருநாராயண பட்டன் என்ற கவிகுமுத சந்திரன்; மானகுலாசனிச் சேரியைச் சேர்ந்தவன். ஊரார் அவனுக்கு `அரை Ãy«† இரண்டு மா நிலம் பரிசாகக் கொடுத்தனர்.5 பாக்கு மரங்களை வைத்துப் பயிராக்க விதிகள் விதிக்கப்பட்டன. அவற்றைப் பயிரிடும் நிலங்கள் ஐந்தாண்டுவரை வரியிலியாக இருக்கவேண்டும் என்பது அரசாங்கக் கட்டளை.6 கி. பி. 1100-ல் கோக்கிழானடிப் பேரேரி உடைப்பு எடுத்தது. உடனே, கரைகள் புதுப்பிக்கப்பட்டன; `குலோத்துங்க சோழன் என்ற கற்படை இடப்பட்டது, ஏரி மகாசபையார் மேற்பார்வையில் விடப்பட்டது.7 திரிபுவனையில், ஊரின் கிழக்குப் பக்கத்த்தில் `ஏமளத்துத் துர்க்கையார் ஓங்கார சுந்தரி கோவில் இருந்தது. அதன் நிலங்களும், பூந்தோட்டமும், கோவிலுக்குரிய குளமும் `பூபால சுந்தர விளாகம் என்ற பெயரால் பன்னிரண்டாம் தரத்து நிலமாகப் பதிவு செய்யப்பட்டன.1 `கிராமத் தொழில்களைச் செய்பவர் உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும்; இக் கட்டளையை மீறுவோர் மகாசபையை அனுமதித்த குற்றத்திற்கு ஆளாவர்; மகா கிராமங்களை அழித்த பாவத்திற்கும் ஆளாவர் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.2 திரிபுவனையில் திருநாவுக்கரசன் மடம் என்ற பெயரால் ஒரு மடம் இருந்தது. அதனில் அரசன் உடல் நலத்திற்காகவும், ஊரின் செழிப்பிற்காகவும் சிவயோகி யாரையும், மகாகேசுவரரையும் உணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.3 திரிபுவனையில் வேறொரு மடமும் இருந்தது. அதன் பெயர் `வேதாந்த வேதியர் மடம் என்பது. அதில் `சம்பிரதாயிகள் என்ற மறைவல்ல பார்ப்பனரை உண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.4 மணவில் கோட்டத்து `அரும்பாக்கிழான் பொன்னம்பலக் கூத்தன் என்ற சிவ பக்தன். `அருளாகர ஆசுவரமுடையார் என்ற சிவனார்க்கு மண்டபம், பூந்தோட்டம் முதலியவற்றுக்காக நிலம் விட்டனன். இது விக்ரம சோழனது ஆறாம் ஆட்சி ஆண்டில் நடந்தது.5 அவனது ஒன்பதாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக் கவனிக்கத்தக்கது. நெய்தற் றொழிலை மேற்கொண்ட சிலர்க்கு நிலமும் பத்து வீடுகளும் தரப்பட்டன. அவர்கள் `ஆயோகவர் எனப்பட்டனர். அவர்கள் கோவிலுக்கு வேண்டிய ஆடையையும் கொடிச் சீலையையும் நெய்து தரக் கடமைப்பட்டவர்.6 முடிவுரை இதுகாறும் கூறப்பட்ட செய்திகளால், திரிபுவனை ஏறக்குறைய 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையும் பெருமையும் உடையது என்பதும், சைவத்தையும் வைணவத்தையும் வளமுற வளர்த்தது என்பதும், வடமொழிக் கலைக்கு நிலைக்களமாக இருந்தது என்பதும் கோக்கிழானடிப் பேரேரி என்ற பெரிய ஏரியின் பாய்ச்சலால் வளமுற்று இருந்தது என்பதும் பிறவும் நன்கறியலாம். இப்பதியினை 1941-ல் புதுவை - ரா. தேசிகப் பிள்ளை அவர்களின் உதவியால் நான் நேரிற் கண்டு களித்தேன். பெருமாள் கோவில் கல்வெட்டுகள் கவனக் குறைவால் சிதறுண்டு கிடக்கின்றன. திரு ஆண்டார் கோவில் பெரிதும் பாழடைந்து விட்டது. சைவரது கவனக் குறைவுக்கு வெளிப்படையான சான்றாகும். ஊரின் எந்தப் பகுதியைத் தோண்டினாலும் பழங்கால மட்பாண்டச் சிதைவுகள், பிற உலோகப் பொருள்கள், கற்சிலைகள், உலோகச் சிலைகள் கிடைக்கின்றன. இப்பழம்பதியின் சிறப்பைப் பொதுவாகத் தமிழ் மக்களும், சிறப்பாக அவ்வூராரும் அறிந்து மகிழவேண்டுவது அவசியம். பாழடைந்த - வருந்தத்தக்க காட்சியை நல்கும் திருவாண்டார் கோவிலை நன்னிலைக்குக் கொண்டுவரல் சைவ நன்மக்கள் கடனாகும். -`வெண்ணிலா, புதுவை 8. அரிக்க மேடு அல்லது மண்ணுள் புதையுண்ட மாநகரம்* முன்னுரை அரிக்க மேடு அரிக்கமேடு என்பது புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பத்திற்கு ஒருகல் தொலைவில் செஞ்சியாற்றங் (அரியாங்குப்பத்து ஆற்றங்) கரையில் இருக்கின்றது. அதன் கிழக்குப் பகுதி ஆற்று வெள்ளத்திற்கு இலக்காகி அழிந்துகொண்டே வந்திருக்கிறது. ஆற்றோரமுள்ள மேடு பல இடங்களில் அறுக்கப்பட்டுப் புதை பொருள்கள் ஆற்று வெள்ளத்திற்கு இரையாகி வந்தன; இன்றும் வருகின்றன. ஏனைய பகுதிகள் செவ்விய நிலையிலேயே இருக்கின்றன. அம்மேட்டின்மேல் பெரிய மாந்தோப்பு இருக்கின்றது. மேட்டின் ஒரு பகுதியில் தென்னம் பிள்ளைகள் வைத்துப் பயிராக்கப் படுகின்றன. எங்குக் குழிவெட்டினும் அங்குச் செங்கற்கள் கிடைக்கின்றன. அரிக்கமேடு மிகப் பரந்தது; அம்மேட்டின் உயரம் ஆற்று நீர்மட்டத்திலிருந்து 20 முதல் 30 அடி இருக்கலாம். ஆற்றோரமாக உள்ள மேட்டைப் பார்க்கும்பொழுதே ஆங்காங்குச் செங்கற் சுவர்களின் பகுதிகள் இருத்தலைக் காணலாம். கடுமழை பெய்தவுடன் மண் கரைந்த பின்னர்ப் புதைப் பொருள்களான மணிகள், சங்குகள், எலும்புத் துண்டங்கள், பலவகைக் கற்கள் முதலியன வெளிப்படு கின்றன. அவற்றை அம்மேட்டுக்கு அரைமைல் தூரத்தில் உள்ள காக்கையன் தோப்பில் உள்ள சிறுவர்கள் எடுத்துச் சேர்த்து வைக்கின்றனர். பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் புதைபொருள் ஆராய்ச்சியிற் பெயர்பெற்ற துப்ரேய்ல் (Prof. Jouvean Dubreuil) என்னும் துரை மகனாரும் அவரது நண்பருமே சில ஆண்டுகட்கு முன் அரிக்க மேட்டைக் கண்டுபிடித்தனர்; அப்பொழுது அங்கே கிடைத்த அரிய பொருக்ளை ஹநாய் (Hanoi) பொருட்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொருள்களுள் பாராட்டத்தக்கது உரோம சக்கரவர்த்தியான அகட உருவம் பொறிக்கப் பெற்ற கார்னீலியன் மணியே ஆகும். துப்ரேய்ல் துரைமகனார் ஆராய்ச்சியை அறிந்த சென்னைப் பொருட்காட்சி நிலையத் தலைவர் டாக்டர் ஐயப்பன் அவர்கள் தமது காட்சிச் சாலைக்கும் சில பொருள்களை அனுப்புமாறு வேண்ட, அப்பெரியார் பல பொருள்களை உதவினார். பின்னர் அரிக்கமேட்டில் கி. பி. முதல் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் ஆந்திர அரசர்களான சாதவாஹர் வெளியிட்ட நாணயங்கள் சில கிடைத்தன. கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட நாணயம் ஒன்றும் கிடைத்தது. டாக்டர் ஐயப்பன் ஆராய்ச்சி துப்ரேய்ல் துரைமகனார் தமக்கு அனுப்பிய பொருள் களை டாக்டர் ஐயப்பன் அவர்கள் ஆராய்ச்சி செய்தனர். மணிகளும் பானை ஓடுகளும் ஆந்திர நாட்டில் உள்ள அமராவதியிற் கிடைத்தன போலவே காணப்பட்டன. கரு நிறத்தனவாக இருந்த ஏந்தல் தட்டுகள், சித்திர வேலைப்பாடு கொண்ட ஓடுகள் முதலியன அமராவதியிற் காணப்பட்டன போலவே காட்சி யளித்தன. டெர்ர கோட்டாவினால் (ஒரு வகை உயர்தர களிமண்) செய்யப் பெற்ற பதுமைகள் அரிக்கமேட்டில் பண்டைக் காலத்தில் இருந்த ஓவியத் திறனை வெளிக்காட்டின. அவ்வேலைப்பாடு (இன்றுள்ள ஆராய்ச்சிப் படி) தென் இந்தியாவிற்கே புதியது என்னலாம். ஒரு பதுமையின் இடக்கைப்பக்கம் தலைக்குப் பின் பெருங் கொண்டை இடப் பட்டுள்ளது. அப்பதுமை சிறிதளவு முயற்சியில் பெரிதளவு வேலைப்பாடு கொண்டதாகக் காணப்படுகிறது. மற்றொன்று மஹாபுருஷர் முகத்தை ஒத்துக் காணப்படுகிறது. அரிய வேலைப்பாடு கொண்ட இவை இரண்டும்-இந்தியாவில் ஓவியமும் சிற்பமும் செழித்திருந்த கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். அரிக்கமேட்டிற்குரிய செட்டியார் தென்னம் பிள்ளையை வைத்துப் பயிராக்கக் குழிகள் தோண்டிய பொழுது சித்திர வேலைப்பாடு கொண்ட பலவகைப் பானை ஓடுகள் எடுக்கப்பட்டன. ஒற்றைக் கைப் பிடி, இரட்டைக் கைப் பிடிகளைக் கொண்ட மண் சாடிகளின் சிதைவுகள் காணப்பட்டன. இரட்டைக் கைப்பிடி கொண்ட சாடிகள் தென் இந்தியாவில் இதுகாறும் வேறெங்கும் கிடைத்தில. அரிக்கமேட்டிற் கிடைத்த கணக்கற்ற கண்ணாடி மணிகளையும் பலவகைக் கற்களாலான மணிகளையும் நோக்க அரிக்கமேடு பழைய காலத்தில் மணிகள் செய்யும் வாணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டா கிறது. சில வகை மணிகளைச் சோதித்த M. கார்ட்டனௌ (M. Cortenaw) என்னும் பிரெஞ்சு அறிஞர், அவற்றின் காலம் கி. மு. 5-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதுகின்றார். அவற்றுள் சில அமராவதியிற் கிடைத்தவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. `உண்மையான உயர்தரக் கற்களாலான மணிகள் இவை - போலி இவை என்று எளிதிற் கூறமுடியாதபடி, அரிக்க மேட்டுத் தொழில் வல்லுநர் அப்பண்டைக் காலத்தில் போலி மணிகளை உண்மை மணிகள் போலச் செய்துள்ளமை வியத்தற்குரியது. இம்மணிகளையும் நாணயங்களையும் நோக்குகையில் - இவற்றுக்கும் அமராவதியிற் கிடைத்த பொருள்களுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை உணர்கையில் அரிக்கமேட்டின் செழித்த காலம் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளாக இருக்கலாம் என்பது தோற்றுகிறது. துப்ரேய்ல் துரை மகனார் அரிக்கமேட்டைத் தென் இந்திய தக்ஷசீலம் என்று கூறுதல் பொருத்தமே ஆகும். என்னை? தென் இந்திய சரித்திரத்தின் விடுபட்ட பகுதியாகிய கி. பி. முதல் ஆறு நூற்றாண்டுகள் பற்றிய செய்திகளைக் கூற இவ்வரிக்கமேடு பெருந்துணை புரியுமாதலின் என்க. டாக்டர் ஐயப்பன் அவர்கள் துப்ரேய்ல் துரை மகனாருடன் அரிக்கமேட்டில் ஆறு இடங்களைத் தோண்டிப் பார்த்தனர். ஓரிடத்தில் பெரிய தடித்த சுவரின் பகுதி காணப்பட்டது. அதில் உள்ள செங்கற்கள் மிகப் பெரிய அளவின: நீளம் 14 3/4 அங்குலம்; அகலம் 10 1/4 அங்குலம்; கனம் 2 3/4 அங்குலம். அந்த இடம் ஒரு கோவிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிறிதோர் இடம் சாதாரண இல்லம் என்று கூறப்படுகிறது. ஓரிடத்தில் செங்கல் கட்டடக் கிணறு ஒன்று கண்டறியப்பட்டது. அதனுள் வெண்கல முக்காலி ஒன்றும், சிறிய அழகிய ஏந்திரக் கல் ஒன்றும் அகப்பட்டன. மண்மோதிரக் கிணறு ஒன்று ஆற்றோர மாகவுள்ள மேட்டில் கண்டறியப் பட்டது. அதனுள் சூளையிடப்பெற்ற ஓடுகள் கிடைத்தன. மேட்டின் உயரத்தில் ஓர் இடம் தோண்டப்பட்டபோது சுவர் ஒன்று காணப்பட்டது. முதலில் களிமண் பூசப்பட்ட சுவரின் பகுதி, பிறகு சுண்ணாம்பு பூசப்பட்டதாகச் சில இடங்களில் காணப்படுகிறது. அச் சுண்ணாம்பின் மேற் பகுதி வேலைப்பாடு கொண்டதாகக் காணப்படுவது வியத்தற்குரியது. நாங்கள் கண்டவை நாங்கள் டாக்டர் ஐயப்பன் தோண்டிய கிணற்றைக் கண்டோம்; அதன் நீர் சுவை யுடையது, அக்கிணறு போல வேறு ஒரு கிணறு பாதி தோண்டப்பட்டு விடப்பட்டுள்ளது. நாங்கள் ஆற்றோரமாக வேறொரு கிணற்றைக் கண்டுபிடித்தோம். ஆனால் அது தோண்டப்படவில்லை. நாங்கள் மதிற்சுவர் ஒன்றன் பகுதியைக் கண்டோம் அதில் இருந்த பெரிய செங்கல்லை அளந்து பார்த்தபோது, டாக்டர் ஐயப்பன் கூறியது சரியாக இருக்கக் கண்டோம். ஓரிடத்தில் சிப்பிகளே நிறைந்திருக்கக் கண்டோம்; பிறிதோர் இடத்தில் பலவகை மணிகள் புதையுண்டு கிடக்கக் கண்டோம். மட்பாண்டச் சிதைவுகள் நாங்கள் கண்ட மட்பாண்டச் சிதைவுகள் பல. அவை செந்நிறமும், கறுப்பு நிறமும், மேற்புறம் செம்மை உட்புறம் கருமை என்று இவ்வாறு மூவகைப்பட்டவை ஆகும். அவற்றின் உறுதிப்பாடு வியத்தற்குரியது. நிறங்கள் பழுதுறவில்லை. கறுப்புப் பானை ஓடுகள் மீது புள்ளிகளும் சிறு கோடுகளும் இடப்பட்டுள்ளன. குமிழ் கொண்ட மட்பாண்ட ஓடு ஒன்றும் கிடைத்தது. ஏந்தலாக உள்ள செந்நிற மண்தட்டின் உடைந்த பகுதி ஒன்று கிடைத்தது. சிறிது குழிந்த மட்பாண்டத்தின் உடைந்த பகுதி ஒன்றும் கிடைத்தது. ஒரு மட்பாண்டத்தின் உடைந்த கைப்பிடி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேற்புறம் செந்நிறமும் உட்புறம் கறுநிறமுமாகப் பூச்சு வேலை செய்யப்பெற்ற மட்பாண்டச் சிதைவுகள் கண்ணைக் கவர்வனவாகும். அந்நிறம் தோயச்செய்தவர் மதிநுட்பம் வியந்து பாராட்டற்குரியது. பலவகைக் கற்கள் வெண்மை, பசுமை, ஆரஞ்சு, நீலம் முதலிய நிறங்களைக் கொண்ட கற்கள் சில கிடைத்தன. இவற்றைக் காக்கையன் தோப்பில் உள்ள சிறார் கொடுத்தனர். அக்கற்கள் பலவகை மணிகளைச் செய்யப் பயன்பட்ட முதற் கருவிகள் என்பது தெரிந்தது. சில கற்கள் அரைகுறையான வேலைப்பாடு கொண்ட வையாகக் காணப்படுகின்றன. சில கற்கள் வேலை தொடங்கப் பெறாத நிலையில் உள்ளன. நீலம் முதலிய பலவகை நிறங்களைக் கொண்ட பொருள்கள் கட்டிகளாகக் காணப்படுகின்றன. அவை இன்ன பொருள்களால் ஆனவை என்று துணிந்து கூறற்கில்லை. ஆயினும் அவற்றுள் பெரும்பாலான மிக உயர்ந்த களிமண் கலவைகளால் செய்யப் பெற்றவை எனக் கூறலாம். பிற பொருள்கள் சிப்பியால் மணிகள் முதலியன செய்யப்பட்டன. சில சிப்பிகள் அரைகுறை வேலைப்பாட்டுடன் கிடைத்தன. எலும்புத் துண்டங்கள் இரண்டு கிடைத்தன. துருப் பிடித்த இரும்பு ஒன்று கிடைத்தது. ஓவியம் தீட்டற்குரிய சிலவகைக் கற்றுண்டுகள் கிடைத்தன. பலவகை மணிகள் சிவப்பு, பச்சை, கறுப்பு, நீலமணிகளே சிறப்புடையன. அவை இரண்டங்குல நீளம் முதல் மிக நுட்பமான சிறிய அளவு வரை உடையன; அகலம் 3 அங்குலம் முதல் மிக நுணுக்கமான அளவு வரை உடையன. பல மணிகள் துளையிடப்பட்டுள்ளன. சில மணிகளே துளையிடப்படாதன; துளையிடப்பட்ட மணிகள் அற்புத வேலைப்பாடு கொண்டவையாகக் காண்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பல சிறிய மணிகள் எவ்வளவு மதிநுட்பத்துடன் துளையிடப் பெற்றுள்ளன என்பதைக் கவனிக்கும் பொழுது, அரிக்கமேட்டுத் தொழிலாளர்தம் தொழிற்றிறமை வியத்தற் குரியதாகும். இவற்றைத் துளையிடப் பயன்பட்ட நுண்ணிய கருவி எத்தகையதாக இருந்திருத்தல் வேண்டும்! இவ்வளவு அரிய வேலைப்பாடுடைய மக்கள் தம் நாகரிகம் எத்தகையதாக இருந்திருத்தல் வேண்டும்! அண்மையில் நடந்த ஆராய்ச்சி 1941-லிருந்து ஆராய்ச்சி மெதுவாக நடைபெற்று வந்தது. அதன் பயனாகச் சில உண்மைகள் வெளிப்பட்டன. 1944 - ஜூன் மாதம் நான் அங்குச் சென்றேன். ஓர் இடத்தில் இரண்டு தெருக்கள் சந்திக்கும் இடம் அகப்பட்டது. பிறிதோர் இடத்தில் ஆற்றோரமாக வீடுகள் அல்லது தொழிற்சாலையின் பகுதிகள் காண்கின்றன. அவ்விடத்தில் பத்தடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள கிணற்று அமைப்புடைய வட்டத் தொட்டிகள் மிகப் பலவாகக் காணப்படுகின்றன. கழிநீர்ப் பாதைகள் போன்றவை இருக்கின்றன. அவை சில இடங்களில் ஒன்றன்மேல் ஒன்றாக (இரண்டும், மூன்றுமாக) அமைந்துள்ளன. சுவர்கள் ஓரடிக்கு மேற்பட்ட அகலம் உடையவை. செங்கல் மிகப் பெரியது. சுவரின் பகுதிகள் பலமுறை உயர்த்தப்பட்டுக் காண்கின்றன. அங்குக் கிடைத்துள்ள எழுத்துக்கள் `பிராமி எழுத்துக்கள் எண்கின்றனர்; மட்பாண்டச் சிதைவுகள் அழகு மிக்கவை; பலவகை வேலைப்பாடுகள் கொண்டவை. `பொதுசா ஆகலாம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தென் இந்தியத் துறைமுகங்களைப் பார்வையிட்ட தாலமி, பிளைநி, பெரிப்புளூ ஆசிரியர் வரைந்துள்ள குறிப்புகளில் சோபட்டினம், பொதுசா என்பன கீழ்க்கரைத் துறைமுக நகரங்கள் என்பது காணப்படுகிறது. சோபட்டினம் மரக்காணம் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. `பொதுசா இன்னது என்பது தெரியவில்லை என்பது அன்னார் கூற்று. அப் பொதுசா கடற்கரை ஓரமுள்ள அரிக்க மேட்டினுள் புதையுண்டு கிடக்கும் நகரமாக இருத்தல் கூடும். முடிவு மெய்யாகவே அரிக்கமேடு தென்னிந்திய நாகரிகத்தைத் தெளிவுற விளக்கும் பண்டை இடமாகும். மாந்தோப்பின் அடியில் மாண்புடைய நகரம் ஒன்று புதையுண்டு கிடக்கிறது. புதையுண்ட; நகரத்தில் சில மாடி வீடுகளும் இருத்தல் கூடுமென்று நினைத்தற்கு இடமுண்டு. மொஹெஞ்சொ - தரோவை ஒழுங்காகத் தோண்டி எடுத்தாற்போலச் சாத்திரீய முறையில் ஆராய்ச்சி நடைபெறுமாயின், முழு வீடுகள் கண்டறியப்படலாம்; பலவகைப் பொருள்களைக் காணலாம். மேட்டுக்கருகில் ஓடும் செஞ்சியாற்றையும் தோண்டிப் பார்த்தல் வேண்டும். ஆற்றின் அடியில் பல பொருள்கள் இருப்பதாக வலைஞர் கூறுகின்றனர். அவர் கூற்று உண்மையே ஆகும். அரிக்கமேட்டின் காலம் கி. மு. 500-லிருந்து கி. பி. 500 என உத்தேசமாகக் கூறலாம். அதனில் கிடைத்துள்ள மட்பாண்டச் சிதைவுகள் பல மொஹெஞ்சொ - தரோவில் கிடைத்தவற்றை ஒத்துள்ளன. மேலும் மேட்டினுள் இரண்டு அடுக்குகள் இருத்தல் கூடுமென்று டாக்டர் ஐயப்பன் கூறுகின்றார். அவ்வரிய மேட்டை - தமிழர்தம் பழைய நாகரிகத்தைப் பாதுகாத்து வைத்துள்ள அப்பெரிய சுரங்கத்தை- தோண்டிப் பார்த்தல் அரசியலார் கடமை ஆகும். தமிழ்ப் பெருமக்கள் ஊக்கங்கொண்டு அரசியலாரைத் தூண்டித் தாமும் பொருளுதவி செய்வாராயின், அரிக்கமேட்டின் அற்புதங்கள் பல வெளிக் கொணர ஆராய்ச்சி வேலை செவ்வனே நடைபெறும். இம்முயற்சிக்குத் தமிழ்த் தாயின் திருவருளை வேண்டுதும். அரிக்கமேடு வாழ்க! -செந்தமிழ் செல்வி 9. தமிழ் யாப்பிலக்கண நூல்கள் உலகில் மிகப் பழைய ஹீப்ரு, இலத்தீன்,கிரீக், சம்கிருதம் போன்ற மொழிகளைப் போன்றது தமிழ்மொழி என்பது வரலாறு கண்ட உண்மை. எனவே, அத்தகைய பண்டை மொழிக்கு உகந்த இலக்கிய - இலக்கண நூல்கள் எண்ணிறந்தன இருந்திருத்தல் இயல்பே. அவற்றுள் மிகச் சிலவே இப்போதுள்ளவை. மிகப்பல நூல்கள் அரைகுறையாகக் கி. பி 12-ஆம் நூற்றாண்டு வரை இருந்தன என்பது யாப்பருங்கல விருத்தியுரை, காரிகையுரை, தொல்காப்பியச் செய்யுளியல் உரை, களவியல் உரை முதலிய உரைகளால் அறியக் கிடக்கிறது பெயர் தானும் இன்றி அழிந்த நூல்கள் எண்ணிலவாதல் வேண்டும் என்பதும் இனிது புலனாகும். இப்போதுள்ள தொல்காப்பியச் செய்யுளியல் உரையையும் யாப்பருங்கல விருத்தி உரையையும் பொறுமையோடு விடாது படிப்பவர் மனங் குளிரப் பல உயரிய இலக்கிய - இலக்கண நூல்கள் இருந்தமை இனிதுணர்வர். சூத்திரங்களையும் உரையையும் ஆராயுமுன் அகத்தியர் காலம், தொல்காப்பியர் காலம், யாப்பருங்கலம் இயற்றிய அமித சாகரர் காலம்இவை அறிதல் பெருந்துணை புரிவதாகும். அகத்தியர் - தொல்காப்பியர் காலங்கள் மூன்று சங்கங்கள் இருந்தன என்ற களவியல் கூற்றுக்கு வேறு சான்றில்லை. அக்கூற்றில் `முதற் சங்கம் தென் மதுரையில் நடந்தது. அஃது அகத்தியர் காலம். பிறகு அது கடல் கொண்டது. அதன் பின்னர் இரண்டாம் சங்கம் அலைவயிற் (கபாடபுரம்) கூடியது. அப்பொழுது தொல்காப்பியம் செய்யப்பட்டது. பின்னர் அந்நகரமும் கடல் கொண்டது. அதற்குப் பிறகு இன்றைய மதுரையில் கடைச் சங்கம் கூடியது என்பது காணப்படுகிறது. இக்கூற்றினால் கடல் அழிவுகள் இரண்டு முறை நடந்தன என்பது தெரிகிறது. இலங்கை வரலாற்றில் மூன்று அழிவுகள் கூறப்படுகின்றன. அவை பெரும்பாலும் தமிழகத்தின் பகுதிகளையும் அழித்தே இருத்தல் வேண்டும். அவற்றின் காலங்கள் முறையே (1) கி. மு. 2387, (2) கி. மு. 504, (3) கி. மு. 306 என்பன. இவற்றுள் பழைமையானதை விடுத்து மஹாவித்வான் ரா. இராகவையங்கார் அவர்கள் கி. மு. 306 தொல்காப்பியர் காலமாகக் கொண்டனர்.1 எனவே அதற்கு முற்பட்ட கடல்கோள் அகத்தியர் காலத்த தென்னல் தவறாகாது. எனவே, மஹாவித்வான் மதிப்புப்படி அகத்தியர் காலம் ஏறத்தாழ கி. மு. 500 என்னலாம்; தொல்காப்பியர் காலம் கி. மு. 300 என்னலாம். இந்தக் கால வரையறையைத் தற்காலிகமாகக் கொண்டு பின்வரும் செய்திகளைக் காண்போம். வீரசோழியம் இந்நூல் வீரராசேந்திர சோழன் எனப்பட்ட வீர சோழனைப் பாராட்டுவது; அவன் காலத்தது. எனவே இதன் காலம் அவனது ஆட்சிக்காலம் (கி. பி. 1063-69) என்னலாம். அஃதாவது இந்நூல் 11-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் செய்யப்பட்டது என்னலாம். இந்நூலுக்கு உரை செய்த `பெருந்தேவனார் புத்த மித்திரனார் மாணவர். எனவே, அவர் காலமும் ஆசிரியர் காலமும் மேற்கூறப்பெற்ற வீரசோழன் காலமாதல் வேண்டும். எனவே, இம்மூவரின் அதிக கால எல்லை கி. பி. 1070 எனக்கோடல் தவறாகாது. பெருந்தேவனார் வீரசோழியத்துள், `யாப்பருங்கல ஆசிரியர் அமிதசாதரர் எனக் கூறியிருத்தலால், பெருந்தேவனார் காலத்துக்கு யாப்பருங்கலம் முற்பட்டது என்பது உணரக்கிடத்தல் காண்க. எனவே, யாப்பருங்கலத்தின் காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம். யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் விருத்தியுள் எட்டாரைச் சக்கரத்துக்கு மேற்கோளாகக் காட்டிய செய்யுளில் பல்லவ மல்லனைப் பிற்றிக் கூறியுள்ளார். பல்லவமல்லன் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டு. எனவே, விருத்தியுரையாளர் கி. பி. 8-ஆம் நூற்றாண்டினர் அல்லது அதற்குப் பிற்பட்டவர் என்பது போதரும். விருத்தியாசிரியரும் காரிகை யாசிரியரும் ஒருவரேயாதல் பற்றியும், யாப்பருங்கலக் கரிகை பத்தாம் செய்யுள் உரையில், வெண்பாவினோடும் ஆசிரியத்தினோடும் வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, யாப்பருங்கல விருத்தியுரையுள் `காமர் கடும் புனல் என்னும் பழம் பாட்டில் கண்டு கொள்க. என்று குணசாகரர் கூறியிருத்தல் பற்றியும் குணசாகரரே விருத்தியுரை யாசிரியருமாயிருத்தல் கூடும் என்பர் புலவர் பலர். காரிகை, விருத்தி இரண்டின் உரைகளையும் நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு புலனாகும். இது நிற்க. `யாப்பருங்கலம் என்பதில் உள்ள `அருங்கலம் என்பதனை ஆராய்வோம். கல்வெட்டுப் பரிசோதகரான திரு. கோபிநாத ராயர் `செந்தமிழ்த் தொகுதியில் வரைந்த கட்டுரை நோக்கத்தக்கது: ஜைன ஆசாரியர் பல சங்கத்தாராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு சங்கமும் பல கணங்கள் கொண்டது. தென் தேயச் சங்கங்களிற் சிறந்தது `திரமிள (தமிழ்ச்) சங்கம்; இதிற் பிரசித்தியடைந்தது `நந்தி கணம். இக் கணத்திற் சிறப்புற்றிருந்தது `அருங்கலான்வயம் (அன்வயம் - பரம்பரை). அருங்கலான்வயம், `தீபங்குடியின் நிடும்பறை தீர்த்தத்தின் அருங்கலான்வயம் என்று ஒரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின், இப்பரம்பரையினர் முதன் முதல் தீபங்குடியினராக இருந்திருத்தல் வேண்டும். இத்தீபங்குடி திருவாரூர்ப் பக்கத்து நான்குமைல் தூரத்தில் உள்ளது. இவர் தமிழரே ஆயினும், தமிழ் - கன்னடம் - வடமொழி முதலிய மொழிகளில் வல்லவர். இதனால், `அருங்கலம் என்பது ஜைனாசாரிய பரம் பரையில் ஒரு பிரிவு என்பதும், அது பிற்பட்ட தமிழ்ச் சங்கத்தின் பகுதி என்பதும், தீபங்குடியில் இப் பிரிவினர் முதலில் இருந்தனர் என்பதும் தெளியலாம். அமிதசாகரர் அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் ஆதலின், தம்யாப்பு நூல்கட்கு யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி யெனப் பெயரிட்டனர். இவ்வருங்கலான்வயத்தார் சிறப்புற்றிருந்த காலம் கி. பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகள் எனக் கல்வெட்டால் தெரிகிறது. அதனால், இந்தக் காலத்தே தான் இவ்விருநூல்கள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். எனவே, இதுகாறுங் கூறியவற்றால் அகத்தியர் காலம் ஏறத்தாழக் கி. மு. 500 எனவும், தொல்காப்பியர் காலம் கி. மு. 300 எனவும் யாப்பருங்கலக் காரிகை, விருத்திகளின் காலம் கி. பி. 700-1000க்கு உட்பட்டகாலம் எனவும் கொள்ளச் சரித்திர அறிவும் நூலறிவும் பகுத்தறிவும் இடந்தருதல் காண்க. இனி, யாப்பருங்கல விருத்தியுரையுள் காணப்படும் நூல்கள் யாவை எனக் காண்போம்: அவை, செயல்முறை, செயிற்றியம், அகத்தியம், மயேச்சுரர் யாப்பு, கையனார் இலக்கணநூல், தொல்காப்பியம், பல்காயம், காக்கை பாடினியம், நற்றத்தம், அவிநயம், வாய்ப்பியம்; சிறு காக்கை பாடினியம், பரிமாணனார் இலக்கண நூல், செய்யுளியல், நல்லாறனார் இலக்கண நூல்; நக்கீரர் நாலடி நாற்பது. சங்க யாப்பு, மாபுராணம், பாட்டியல் நூல், யாப்பருங்கலம், காரிகை முதலியன. இனி இவற்றின் கால வரையறை காண்போம். கி. மு. -கி. மு. 500 கலியுறுப்புக்கு அளவை செயல் முறை யுள்ளும் செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் கண்டுகொள்க. அவை ஈண்டு உரைப்பிற் பெருகும் (யா. வி. சூ. 82-ன் உரை) எனவும், இஃதல்லாதன செயல்முறை யோடும் செயிற்றியத்தோடும் அகத்தியத்தோடும் ஒக்கப்பாடின இல்லை என்ப (யா. வி. சூ. 83-ன் உரை) எனவும், மற்றையன இவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத்துள்ளும் ஓதிய இலக்கணம் தழுவிக் கிடந்தன இல்லை என்பது இவ்வாறு சொன்னார் நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (யா. வி. சூ 84-ன் உரை) எனவும் உரையாசிரியர் கூறுவதை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். அவர் மும்முறை கூறியுள்ள நூற் பெயர்களுள் அகத்தியத்தை ஈற்றில் வைத்திருத்தல் நோக்கத் தக்கது. எனவே, செயல் முறை, செயிற்றியம் என்னும் இலக்கண நூல்கள் அகத்தியத்துக்கு முற்பட்டவை என்பதோர் உண்மை உணரக் கிடத்தல் உணர்க. கி. மு. 500-கி. மு. 300 அகத்தியத்தை முதனூலாகக் கொண்டு யாப்பு நூல்கள் பல செய்யப்பட்டன என்பது `அகத்தியனார் ஆணையினால் செய்யப்பட்ட நூல்கள் யாவும் வகையுளி சேர்த்துக என்பதினால் (யா. வி. சூ 95-ன் உரை) என்னும் உரை நோக்கி உணர்க. யாப்பருங்கல விருத்தி உரையுள் கூறப்படும், பேராசிரியர் சிவபிரானுக் குரிய பல பெயர்களால் கூறப்படுதலையும், ஏடுகளில் அப்பெயர்களோடு `மயேச்சுரர் எனும் பெயர் காணப்படுதலையும் நோக்கப் பல பெயர்களைக் கொண்ட பேராசிரியர் `மயேச்சுரர் என்பவரே என்பது உறுதிப்படுகிறது. இம்மயேச்சுரரே மேற்காட்டியபடி செயல் முறை, செயிற்றியம், அகத்தியம் எனக் கூறியவர். மயேச்சுரர் செயல் முறை, செயிற்றியம், அகத்தியம் என்ற மூன்றையும் தழுவி நூல் செய்தவர் என்பது மேற்காட்டியுள்ள மூன்றிடங்களில் அவர் கூறியன கொண்டு உணரலாம். எனவே, இவர் தொல்காப்பியர்க்கு முற்பட்டவராகவோ சமகாலத்தவராகவோ இருத்தல் வேண்டும்.* இப்போதுள்ள இலக்கண நூல்களுள் தொல்காப்பியமே பண்டையது என்பதும் அதன் காலம் சுமார் கி. மு. 300 எனவும் மேற்கூறினோம். அதற்குப் பாயிரம் பகர்ந்த பனம்பாரனார், `வடவேங்கடம் தென் குமரி எனத் தெற்கெல்லை குமரியாறாகக் கூறியுள்ளார். அதே போன்று காக்கை பாடினியாரும் தமது யாப்பு நூலில், வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை அகவயிற் கிடந்த நூலதின உண்மை வாலிதின் விரிப்பின் எனக் கூறியிருத்தலால் காக்கை பாடினியார் குமரியாறு கடல் கொள்ளப்படாமுன் (கி. மு. 300-க்கு முன்) இருந்தவர் என்பர் பேராசிரியர் (தொ. செ. முதற் சூத்திரவுரை). யாப்பருங்கல விருத்தி முதற் சூத்திர வுரையில், தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்: பல்காய னார்பகுத்துப் பண்ணினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கைப் பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து எனவரும் வெண்பாவில் காக்கை பாடினியார் இறுதியில் கூறப்பட்டுள்ளனர்; அவரே கடல்கோளுக்கு முற்பட்டவர் எனின், அவர்க்கு மேலாகக் கூறப்பட்டுள்ள பல்காயனார் என்பாரும் குமரியாறு கடல் கொள்ளப்படாமுன் இருந்தவர் என்பதில் ஐயமென்ன? எனவே பல்காயனாரும் தொல்காப்பியர் காலத்தவர் என்பது உண்மை. காக்கை பாடினியாரை, `தொல்லாசிரியர்-மாபெரும் புலவர் என யாப்பருங்கல விருத்தியுரையாளர் பாராட்டி யுள்ளார். காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர் மதம் பற்றி ஈண்டு நாலசைச் சீர் எடுத்தோதினார் (யா. வி. சூ 10-ன் உரை) எனவும் அவ்வாறு வரின் வெண்பா வழியும் செப்பலோசை தழுவி நில்லா தாகலின் என்று மறுத்துரைத்தார் காக்கைபாடினியார் முதலிய மாபெரும் புலவர். அவரது துணிபே இந்நூலுள்ளும் துணிபென்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்ட தென்க (யா. வி. சூ. 22-ன் உரை) எனவும் கூறுவனவற்றால், இவர் தம் புலமையும் பெருமையும் பழமையும் பாங்குற உணரலாம். தொல்காப்பியர் காலத்தில் பன்னிருபடலம் என்னும் புறப்பொருள் இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தானும், யாப்பருங்கல விருத்தியுரையானும் உணரலாம். அஃது, உரையாளர், . . . இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துள் காண்க (யா. வி. பக்கம் 562) எனக் கூறியிருத்தலை நோக்கத் தெரிகிறது. தொல்காப்பியம் - செய்யுளியல், சூ. 150-ன் உரையில் பேராசிரியர், . . . . . .பாவென மொழியினும் தூக்கினது பெயரே என்றார் இந்நூலின் (தொல்காப்பியத்தின்) வழிநூல் செய்த ஆசிரியரும் என்பர். இச் சூத்திரம் செய்தார் நற்றத்தனார் (நத்தத்தனார்) என்பது யாப்பருங்கல முதற் சூத்திர உரையில் காணப்படுகிறது. இந்நற்றத்தனார் தொல்காப்பியரோடு இருந்த பதினொருவருள் ஒருவர் எனக் கூறப்படுதலின், இவரும் தொல்காப்பியர் காலத்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. `அவிநயர் யாப்புக்கு நாலடி நாற்பது போல-யாப்பருங்கலம் என்னும் யாப்புக்கு அங்கமாய் எனக் காரிகைத் தற்சிறப்புப் பாயிரத்தடியில் வருவதால், `நாலடி நாற்பது என்னும் யாப்பு நூல் ஒன்று, `அவிநயம் என்னும் யாப்பு நூலுக்கு அங்கமாய்ச் செய்யப்பட்டது என்பது இனிது புலனாகும். `நாலடி நாற்பது நக்கீரர் செய்த தென்பது யா. வி. உரையால் அறியலாம். அவர், ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எற்றாற் பெறுதுமெனின், `ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற்குரிய அல்ல என்று நக்கீரர் அடிநூலுள் எடுத்து ஓதினமையாற் பெறுதும் (சூ. 40-ன் - உரை) எனக் கூறினமையால் அறிக. இதனைப் பேராசிரியரும் செய்யுளியல் சூத்திரம் 43-ன் உரையிற் கூறியுள்ளார். எனவே, அவிநயர் நக்கீரரது காலத்திலோ முற்பட்ட காலத்திலோ இருந்தவராதல் வேண்டும். ஆனால் அவிநயர் தொல்காப்பியரோடிருந்த பதினொருவருள் ஒருவராகக் கூறப்பட்டிருத்தலின் இருவரும் இரண்டாம் கடல் கோளுக்கு முற்பட்டவர் என்பதில் ஐயமில்லை. யா. வி. உரையாளர் 15-ஆம் சூத்திர உரையில், அவிநயத்துள்ளும். . . . . . . எனப் பொது வகையாற் கூறி இன்ன இடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று `கணக்கியலுள் புறநடை எடுத்தோதினார் எனக் கூறுவதிலிருந்து, `கணக்கியல் என்பது அவிநயத்துள் `ஓர் இயல் என்பது புலனாதல் காண்க. வாய்ப்பியர் என்பவரும் தொல்காப்பியரோடிருந்த பதினொருவருள் ஒருவர் எனக் கூறப்படுதலின், அவரும் குமரியாறு கடலால் கொள்ளப்படாமுன் இருந்தவர் என்பது புலனாம். (கி. மு. 300-கி. பி. 300) பேராசிரியர் செய்யுளியல் முதற் சூத்திர வுரையில் வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் எனத் தொடங்கித் தென்திசையும் கடலை எல்லை எனக் கூறலால், சிறு காக்கை பாடினியார் குமரியாறு கடல் கொள்ளப்பட்ட பின்னர் இருந்தவர் என்பர். இடைச் சங்கத்துக் காக்கை பாடினியாரை நோக்கி, இவர் `சிறு காக்கை பாடினியார் என வழங்கப்பட்டனர் என்க. இவரன்றிப் பரிமாணனார், நல்லாறனார் செய்த இலக்கண நூல்களும், நக்கீரர் நாலடி நாற்பதும், செய்யுள் இயல் முதலியனவும் இக்காலத்திய நூல்களாம். மாதிரிக்கொரு சூத்திரமாகப் படித்துப் பார்ப்பினும் இவற்றின் பழமையும் அருமையும் நன்குணரலாம். (கி. பி. 300-கி. பி. 1000) தமிழ்ப் புலவரும் வடநூல் வழித் தமிழாசிரியரும் செய்தவை சங்கயாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் (ஈற்று நூல் யா. வி. உரையில் குறிக்கப்படவில்லை.) முதலியனவாம். இதுகாறும் யாம் காலமுறையிற் பகுத்துக் கூறிய இந்நூல்கள் அவ்வக் காலத்தேதான் செய்யப்பட்டன வாதல் வேண்டும் என்பதற்கு வேண்டும் ஆதாரங்களைக் காட்டுதல் இன்றியமையாததாகும். முதல் இரு சங்கங்கட் குரிய நூல்களையும் அவற்றின் காலத்தையும் முன்னரே குறிப்பாகக் கூறினோம். பிற்பட்ட இருகால நூல்கள் அவ்விரு காலங்களிற்றான் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதைத் தக்க சரித்திரச் சான்று கொண்டு விளக்குவோம்: அதன் முன்னர்த் தமிழகத்தில் யாப்பு நூலில் பரந்து பட்ட கால அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பதைக் கீழ்வருவனகொண்டு உணர்தல் நலமாகும். அஃது ஈறுபற்றி அறியும் தன்மைத்தாகலின், இயைபுத் தொடைக்கு இவ்வாறு எட்டு விகற்பமும் சொன்னார் கையனார்-தொல்காப்பியனார் முதலிய ஒருசார் ஆசிரியர். ஈண்டு அவர் மதவிகற்பம் பற்றிச் சொல்லப்பட்டது இது சார்பு நூலாகலின் (யா. வி. சூ. 34-ன் உரை) எனவும், . . .வெண்சீரின் ஈற்றசை நிரையசையாகவும் இயற்றித் தொல்காப்பியனாரும் நற்றத்தனாரும் முதலாகிய ஆசிரியர் சொன்ன மதமெல்லாம் வல்லார் வாய்க் கேட்டுணர்க (யா. வி. சூ. 95-ன் உரை) எனவும், நான்கு பாவிற்கும் பெருமைக்கெல்லை பாடுவோனது பொருள் முடிபின் குறிப்பே, வரையறை இல்லை என்பாரும், அடிவரையறுத்துச் சொல்வாரும் என இருதிறத்தார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கென்க. (யா. வி. சூ. 32-ன் உரை) எனவும், தொல்காப்பியனார் நக்கீரனார் முதலாகவுள்ள ஒருசார் ஆசிரியர் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீரடியும் அருகிவரப் பெறும் என்று கூறினர் (யா. வி. சூ. 95-ன் உரை) எனவும், காக்கை பாடினியாரும் பாட்டியலுடையாரும் யாப்பியல் உடையாரும் முதலிய ஒரு சாராசிரியர் இவற்றையும் இனத்தின் பாற்படுத்தி வழங்குவர். தொல்காப்பியனார் முதலிய ஒரு சாராசிரியர் இவற்றையும் மேற்கூறப் பெற்ற பாவினங்களையும் கொச்சக்கலி பாற்படுத்தி வழங்குவர் எனக் கொள்க. இனி ஒருசார் வட நூல்வழித் தமிழாசிரியர் `ஒருபுடை ஒப்புமை நோக்கி இனமெனப்படா; மூவகைப்பட்ட விருத்தங்களுள்ளும் சந்தத் தாண்டகங்களுள்ளுமே பட்டடங்கும் என்பர். இந்நூலுடையார், காக்கை பாடினியார் முதலிய ஒருசார் ஆசிரியர் மதம்பற்றி எடுத்தோதி இவையும் உடன்பட்டார் எனக் கொள்க (யா. வி. பக்கம் 475) எனவும் வருவன - அமிதசாகரர் காலத்தும் உரையாளர் காலத்தும் அவர்க்கு முற்பட்டுப் பரந்துபட்ட காலங்களிலும் பல யாப்பிலக்கண நூல்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்தமை கவினுறக் காட்டுகின்றன அல்லவா? ஈண்டுக் காட்டப்பெற்றவருள் கையனார், தொல் காப்பியனார், நற்றத்தனார், அவிநயனார், நக்கீரனார் முதலியோர் ஒரு சாரர்: காக்கை பாடினியார், யாப்பியலுடை யார், பாட்டியல் உடையார் முதலியோர் பிறிதொரு சாரர்: வடமொழிப் புலமையும் தமிழ்மொழிப் புலமையும் ஒருங்கே பெற்ற `வடநூல் வழித் தமிழாசிரியர் மூன்றாம் பிரிவினர், இக் கடைப் பிரிவினர் கி. பி. 300-கி. பி. 1000 உட்பட்டவராவர். என்னை? வடமொழி தமிழகத்திற் பலப்பட்டது சமணராலும் பௌத்தராலும் வடமொழிப் பண்டிதராலுமே என்பதை அனைவரும் ஒப்புவர். பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தும், தொண்டை சோழ நாடுகளில் பல்லவர் காலத்துமே வடமொழி நடம் புரியலாயிற்று. இதற்குப் பல்லவர் வடமொழிச் சாஸனங்களே சான்று பகரும். பல்லவர் காலத்தில் காஞ்சீபுரமும் கோயில்களும் வடமொழிக்கு நிலக்களனாக இருந்தனவென் பதை எவரே அறியார்? கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் களப்பிரர் காலத்தில் `சமணர் சங்கம் ஒன்று கூடியது என்பது சரித்திர வாயிலாக உணர்கிறோம். சமணர் வடமொழிப் பண்டிதர். அவரும் வைதிக மதத்தினரும் பௌத்தரும் `வட நூல் வழித் தமிழாசிரியர் எனப் பட்டனர். அக்காலத்தில் கி. பி. 4 முதல் 8-ஆம் நூற்றாண்டுவரை ஏறக்குறையச் சமணம், பௌத்தம், வைதீகமதம் இவை ஒன்றோடொன்று போரிட்டு வந்தன. சமணர் செல்வாக்கு உயர்ந்திருந்த 4, 5, 6ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி தழுவிய தமிழ்நூல்கள் பல வெளி வந்தன. அவையே நாலடியார் முதலியன. அக்காலத்தேதான் மேற் கூறப்பெற்ற நான்காந்தர இலக்கண நூல்கள் வெளி வந்திருத்தல் வேண்டும். அவற்றை `நான்காம் சங்ககால நூல்கள் எனினும் பொருந்தும், தமிழகத்தின் நிலைகுலைந்த 4, 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் - சேர சோழ பாண்டியர் ஆட்சி ஒழிந்து பல்லவர் ஆட்சியும் களப்பிரர் ஆட்சியும் வலுப்பெற்றிருந்த அக்காலத்தில்* சமணர் மதப்பிரசாரம் உச்ச நிலையிலிருந்த அக்காலத்தில்-மூவேந்தர் வலி குன்றி அடிமைப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட காலத்தில் - தூய தமிழ் நூல்கள் வெளிவந்தன; அவற்றுள்ளும் இலக்கண நூல்கள் வந்தன எனக் கூறுதல் முற்றும். அசம்பாவிதமே ஆகும். அக்காலத்தே மொழி பெயர்ப்பு நூல்களே வெளியிடப் பெற்றன. மதச் சண்டை நடந்த பிற்காலத்தும் (7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளிலும்) தேவார திருவாசகம் போன்ற மத நூல்கள் வெளியிடப்பட்டன; சமணரை ஆசிரியராகக் கொண்ட `யாப்பருங்கலம் போன்ற `சார்பு நூல்கள் இரண்டொன்று பின்னர் வெளி வந்தனவே யன்றி வேறில்லை. எனவே கி. பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து 10-ஆம் நூற்றாண்டு வரை, செயல் முறை முதல் நக்கீரர் நாலடி நாற்பது ஈறாகவுள்ள இலக்கண நூல்கள் வெளிவந்திருத்தல் இயலாதென்பது வெள்ளிடைமலை. மேலும் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி. பி. 3-ஆம் நூற்றாண்டொடு முடிந்து ÉLjš† சரித்திரம் கொண்டு காண்க. `சங்கம் என்ற சொல் `பௌத்தர் அல்லது சமணர் இடத்திலிருந்தே தமிழர் கொண்டிருத்தல்கூடும். முதல் இடைச் சங்கங்கட்குக் `கழகம் போன்ற சொல் ஏதேனும் வழங்கியிருத்தல் கூடும். கடைச் சங்க காலத்தில் `சங்கம் என்ற சொல் தமிழகத்தில் பௌத்தராலும் சமணராலும் வழங்கப்பட்டிருக்கலாம். அதிலிருந்து அச்சொல் வழக்காறு பெற்று, களவியல் உரையிலும் சின்னமனூர்ப் பட்டயத்தும் இளம்பூரணர் போன்றோர் உரைகளிலும் வழங்கலாயின. எனவே, `சங்கம் என்னும் சொல் கடைச் சங்க காலத்திலோ அதற்குப் பின்னரோ இருந்த (தமிழ்ச்) சங்கத்துக்கு வழங்கியதாதல் வேண்டும். ஆதலின், `சங்க யாப்பு என்னும் பெயர் கொண்ட யாப்புநூல் கடைச் சங்கத்தது அல்லது அதற்குப் பிற்பட்டதாதல் வேண்டும். அது ஜைனர் கூட்டிய நான்காம் சங்க காலத்தில் செய்யப் பெற்றதாக இருத்தலும்கூடும். அதற்கும் பிற்பட்ட காலத்திற்றான் மாபுராணமும் செய்யப்பட்டதாதல் வேண்டும். என்னை? முதல் - இடை - கடைச் சங்க நூல்களில் `புராணம் என்னும் பெயருடன் இலக்கண நூலோ, இலக்கிய நூலோ இருந்ததில்லை - இருந்திருத்தலும் இயலாது. `புராணம் என்ற சொல்லே வடசொல் ஆதலின் என்க. மேலும் யா. வி. உரையாளர் சந்தம் தாண்டகம் பற்றிய உரையில், நான்கடி ஒத்து வருவனவும், நான்கடியும் ஒவ்வாது வருவனவும் பிறவற்றால் வருவனவும் – மாராச்சையும் முதலாகிய சாந்தோபிசிதிகள் உள்ளும் பாட்டியல் மரபு, மாபுராணம் முதலாகிய தமிழ் நூல் உள்ளும் புகுதியுடையார்வாய்க் கேட்டுணர்க (யா. வி. பக். 474) எனவும் இவற்றை எல்லாம் சரணாச் சிரையமும் சயதேவமும். . . குணகாங்கி என்னும் கருநாடகச் சந்தமும்1 வாஞ்சியார் செய்த வடுகச் சந்தமும்1 ஆகியவற்றுள்ளும் மாபுராணம் முதலாய தமிழ் நூலுள்ளும் புகுதியுடையார்வாய்க் கேட்டுணர்க (யா. வி. பக். 514) எனவும் வருவனவே மாபுராணத்தின் காலம் மிகப் பிற்பட்டதென்ற முடிபை உறுதிப்படுத்தப் போதியது. இப்பிறமொழி நூல்களோடு மாபுராணத்தைப் புணர்த்திக் கூறியதிலிருந்தே மாபுராணத்தின் காலம் குறைந்தது கி. பி. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது தான் எனத் துணிந்து கூறலாம். மேலும், `சந்தம், தாண்டகம் என்று தொல்காப்பியர் எதனையும் கொண்டிலர்; இனமும் கொண்டாரில்லை. யாவற்றையும் கொச்சகக் கலியுள் அடக்கினர். எனவே, அவற்கு முற்பட்டதாக மாபுராணம் (களவியல் கூறுமாப்போல) இருப்பின், சந்தம், தாண்டகம் எனத் தனித்தனியாகவும், பல்வேறு விகற்பங்களோடும் இலக்கணம் வகுத்துக் கூறியிருத்தல் இயலுமா? சந்தமும் தாண்டகமும் பெருகி வழிந்த காலத்தேதான் அவற்றின் இலக்கணமும் விகற்பங்களும் மல்கி யிருத்தல் வேண்டும். தமிழகத்தில் சந்தம், தாண்டகம் என்பவை தோன்றி வேரூன்றிய காலம் அப்பர் காலத்திலிருந்தே (கி. பி. 7-ஆம் நூற்றாண்டு) என்பதை மறுப்பார் எவர்? மேலும், இத்துணை வடநூல்களோடு ஒப்பிடக்கூடிய இலக்கணங் களையும் விகற்பங்களையும் பெற்றிருக்கக் கூடிய காலம் இதற்கு முந்தியதாய் இருத்தலும் இயலாதன்றே! ஆகவே, மாபுராணம் கி. பி. 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் செய்யப் பெற்றதாதல் வேண்டும். அது களவியல் உரைக்கு முற்பட்டது. அதன் பெயரைக் கண்டு மயங்கியோ, வேறு எக்காரணத்தாலோ மாபுராணத்தை முதற் சங்க வரிசையில் கூறினர் களவியல் உரையாளர். கால அளவில் பூத புராணமும் பாட்டியல் மரபும் அக்காலத்தனவே. பாட்டியல் நூல்கள் பல, சமணரால் செய்யப் பெற்றவை என்பதைத் தமிழ்ப் புலவர் நன்குணர்வர். மேலும், சமண நூலாக `மகாபுராணம் என ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. அம் மகாபுராணம், தமிழ் இலக்கண மாபுராணம், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் இம் மூன்று பெயர் களையும் கூர்ந்து நோக்குக. முன்னவை சமணர் உச்ச நிலையிலிருந்தபோது செய்யப் பெற்றவை. பின்னது சைவம் ஓங்கப்பெற்ற காலத்தது. சுருங்கக் கூறின், வடநூல்வழித் தமிழ் ஆசிரியர் செய்த நூல்களே சங்கயாப்பு, மாபுராணம், பாட்டியல் மரபு முதலான இலக்கண நூல்கள் என்பது இதுகாறும் கூறியவற்றால் அறியலாம். இவை யாவற்றையும் உரையில் குறித்திருத்தலின், இவற்றுக்குப் பிற்பட்டவையே யாப்பருங்கலக் காரிகை, விருத்தி என்பதும், அமித சாகரரைக் குறித்திருப்பதால் இவற்றுக்குப் பிற்பட்டதே வீர சோழியம் என்பதும் நன்கறியக் கிடத்தல் காண்க. வடமொழி யாப்பிலக்கணப் பகுதிகள் கி. பி. 4-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நூல்களில் இடம் பெற்றன என்பதை ஒருவாறு மேல் விளக்கினோம். இதனைப் பேராசிரியர் கூற்றும் வலியுறுத்தல் காண்க. யாப்பிலக்கண விருத்தியுரையுள், `காலத்திற் கேற்றன கோடல் என்ற முறைப்படி, `குரு, லகு என்பனவும் பிறவும் (பக். 464 முதலாக வரும் பக்கங்கள்) காணலாம். இவற்றைப் பற்றிப் பேராசிரியர் தொல்காப்பியம் செய்யுளியல் ஆ. 5-ன் உரையில் வடநூலாசிரியார் அறுவகைப் பிரத்தியங்களால் எழுத்துக்களைக் குருவும் லகுவும் என இரு கூறு செய்து உறழ்ந்து பெருக்கிக் காட்டுவதோர் ஆறு (வழி) ஒன்று உண்டு. அவரும் 26 எழுத்துவரை உறழ்ந்து காட்டி ஒழிந்தன நெகிழ்ந்து போவார் எனக் கூறியிருத்தலை நோக்க, `குரு, லகு, பிபீலிகாமத்திமம் முதலியவை வடநூலாசிரியர் இலக்கணங்கொண்டு சேர்க்கப்பட்டவை என்பது வெளிப்படை. இவை தொல்காப்பியம் முதலிய தொன்னூல்களில் இல்லை என்பது, இவை கூறும் இடத்து யா. வி. உரையாசிரியர் தொல்லாசிரியர் சூத்திரங்களை ஆதாரமாகக் காட்டாமை யானும் உணரலாம். யா. வி. உரையிற் காணப்பெற்று இப்பொழுதில்லாப் பண்டை நூல்கள் 1. முத்தொள்ளாயிரம் (2700 செய்யுட்களில் 105 கிடைத்துள்ளன), 2. புராண சாகரம், 3. கலியாண கதை, 4. குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம். 5. பெருஞ் சித்திரனார் செய்யுள் (சங்க நூல்களுள் உள்ளவை அல்ல), 6. ஔவையார் செய்யுள் (சங்க நூல்களில் உள்ளவை அல்ல), 7. பத்தினிச் செய்யுள், 8. அடி நூல், 9. அணி இயல், 10. அமிர்தபதி, 11. அரச சந்தம், 12. அவிநந்தமாலை, 13. ஆசிரியமுறி, 14. காலகேசி, 15. இரணியம், 16. சயந்தம், 17. தும்பிப் பாட்டு, 18. தேசிகமாலை, 19. நாலடி நானூறு, 20. பசந்தம், 21. பாவைப்பாட்டு, 22. பிங்கலகேசி, 23. புணர்ப்பாவை, 24. பெரிய பம்மம், 25. பொய்கையார் நூல், 26. போக்கியம், 27. மணியாரம், 28. மந்திரநூல், 29. மார்க்கண்டேயனார் காஞ்சி, 30. வதுவிச்சை, 31. வளையாபதி முதலியன. இவற்றுள் இரண்டொன்று தவிர, ஏனைய நூல்கள் கடைச் சங்கத்துக்குப் பிற்பட் காலத்தேதான் செய்திருத்தல் கூடுமென்பது அவற்றின் பெயர்களைக் கொண்டே எளிதில் கூறிவிடலாம். இது நிற்க. கம்பராமாயணத்துக்கு முற்பட்ட தமிழ் இராமாயணம் யா. வி. உரையாசிரியர் இன்னும் பல தொடையால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும் புராண சாகரமும் முதலாகவுள்ள செய்யுட்களில் கண்டுகொள்க என (சூ. 62-ன் உரை) கூறியுள்ளவை நோக்க, வெண்பாவில் இராமாயணம் ஒன்று இருந்திருத்தல் கூடுமெனத் தெரிகிறது. கம்பராமாயணம் விருத்தப்பாவால் ஆகிய தென்பதை விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன் என்ற தொடரே உறுதிப்படுத்துதல் காண்க. இப்போது அரைகுறையாக உள்ள பாரத வெண்பாவைப் பாடிய பெருந்தேவனார் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர் என்பது, அவர் பாரத வெண்பாவில் `தெள்ளாறு என்னும் இடத்தில் பல்லவன் கொண்ட வெற்றியைக் குறிப் பிடுவதால் உணரலாம்* இங்ஙனம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் பாரத வெண்பாவில் செய்யப்பட்டதைப் போன்றே இராமாயணமும் வெண்பாவிற் செய்யப்பட்டிருத்தல் கூடுமோ, இரண்டு இதிகாச நூல்கள் ஆதலின்? இன்றேல், `பஃறொடை வெண்பாவிற்கு உதாரணம் இராமாயணச் செய்யுட்களிற் காண்க என உரையாசிரியர் கூறிப் போந்ததேன்? வடமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சமணர் காலத்தே சிந்தாமணி, சூளாமணி, பாரதம் போலவே இராமாயணமும் மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் கூடாதோ? இந்நிலையில் களப்பிரர் காலத்திலோ, பல்லவர் காலத்திலோ பாரத வெண்பாவைப் போலவே `இராமாயண வெண்பா ஒன்று செய்திருத்தல் கூடியதே என்ற முடிபே கொள்ள வேண்டுவதாயுளது. இது மேலும் ஆராய்ச்சிக்குரியது. தொல். செய்யுளியல் உரையில் காணப்பெறும் இப்பொழுதில்லாப் பண்டை நூல்கள். 1. யாழ் நூல், 2. தகடூர் யாத்திரை, 3. பாரதம் 4. பருப்பதம், 5. சிறுகுரீயுரை, 6. தந்திரவாக்கியம், 7. வஞ்சிப்பாட்டு, 8. மோதிரப் பாட்டு, 9. கடகண்டு, 10. கந்தர்வநூல், 11. விளக்கத்தார் கூத்து, 12. மூவடி முப்பது முதலியன. பேராசிரியர் உரையால், அக்காலத்திய கூத்து வகையினையும் கூத்தர் நூல்களையும் நன்குணரலாம்; `சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள். அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலன். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பது கண்டுகொள்க சூ. 241 உரை) யா. காரிகை உரையால் அறியப்படுவன. 1. உரையாசிரியர் குணசாகரர் மேற் கோளாகக் காக்கை பாடினியார் யாப்பிலக்கணத்தினின்றும் சுமார் 27 சூத்திரங்களையும், மயேச்சுரர் யாப்பினின்றும் சுமார் 10 சூத்திரங்களையும், அவிநய யாப்பினின்றும் 10 சூத்திரங்களையும் பல்காயனார் யாப்பினின்றும் 5 சூத்திரங்களையும் சிறு காக்கைப் பாடினியார் யாப்பினின்றும் இரண்டொன்றும், நற்றத்தனார் யாப்பினின்று நான்கும். கையனார் யாப்பிலிருந்து இரண்டும், சங்க யாப்பினின்று ஒன்றும், கலிதயனார் யாப்பினின்று ஒன்றும் பெயர் தெரியாத புலவர் ஒருவர் யாப்பினின்றும் சுமார் 41 சூத்திரங்களையும் காட்டியுள்ளமை, மேற் கூறப்பெற்ற நூல்கள் அவர் காலத்தில் சிதறுண்டிருந்த நிலைமையைச் செவ்விதாகக் காட்டுவதாகும். 2. யா. வி. உரையிற் கூறப்பெறாத யாப்பு நூற் புலவர் மூவர் இவ்வுரையில் இடம் பெற்றுள்ளார். அவருள் `கலிதயனார் என்பவர் ஒருவர்; `பாடலனார் என்பவர் ஒருவர். இவர் `மாடலனார் என்பவர்போலும்! பெயர் நாளடைவில் ஏடெழுதுவோர் கவனக் குறையால் இக்கதி யடைந்திருத்தல் கூடும். பெயர் தெரியாப் புலவர் மூன்றாமவர். -செந்தமிழ்ச் செல்வி 10. தமிழகத்து வட எல்லை I நாம், தமிழகத்தைப் பற்றிய எவ்வகைச் செய்தியை ஆராய வேண்டுமாயினும், `சங்க நூல்கள் என்று கூறப்படும் பழந்தமிழ் நூல்களையே முதலில் அடைக்கலம் புகவேண்டுபவராக இருக்கின்றோம்; பின்னரே சங்க நூற் கூற்றுக்கள் எந்த அளவு உண்மை என்பதைப் பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டும் இலக்கியங்களைக் கொண்டும் அறிய வேண்டுபவராக இருக்கின்றோம். சங்க நூல்களின் பரந்துபட்ட காலம் ஏறத்தாழக் கி. மு. 1000 முதல் கி. பி. 300 என்னலாம். அவை தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலியன. இவற்றுள் தமிழக வட எல்லையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள குறிப்புகளைக் காண்போம். தொல்காப்பியம் இதன் காலம் ஏறத்தாழக் கி. மு. 4-ஆம் நூற்றாண்டு என்னலாம். இதன் பாயிரத்தில். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்பது காணப்படுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஏறக்குறைய வேங்கடமே தமிழக வட எல்லையாகத் தமிழ்ப் புலவராற் கருதப்பட்டது என்பது தெரிகிறது. பெருங் காக்கைப் பாடினியம் இஃதொரு யாப்பிலக்கண நூல். இதனைச் செய்தவர் தொல்காப்பியர் காலத்தவரான பெருங் காக்கைப் பாடினியார் என்ற பெண்பாற் புலவர் என்பதை யாப்பருங்கல விருத்தியுரை விளக்குகின்றது. இவர் செய்த இலக்கண நூலுள். வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை 1 என வரும் அடிகளால், தமிழக வட எல்லை வேங்கடமே என்பது பெறப்படுகிறது. இசைநூற் சான்று இசைநூல் ஆசிரியராகிய சிகண்டியார் சங்க காலத்தவர் என்று கருதப்படுவர். அவர் தமது இசைநூலுள், வேங்கடம் குமரித் தீம்புனல் பெளமென் றிந்நான் கெல்லை தமிழது வழக்கே 2 என்று மிகத் தெளிவாகக் கூறியிருத்தலால், இசைத் தமிழ் வழக்கினும் இவ்வெல்லைகளே கொள்ளப்பட்டன என்பது தெரிகின்றது. சிறுகாக்கைப் பாடினியம் இதுவும் சங்ககால யாப்பிலக்கண நூல். இதனைச் செய்தவரும் பெண்பாற் புலவர். இவர் முன்னவரின் வேறானவர் என்பதை உணர்த்தச் சிறுகாக்கைப் பாடினியார் எனப்பட்டார். முன்னவர் குமரியாறு கடல் கொள்ளப்படாத காலத்தில் இருந்தவர்; பின்னவர் அது கடல் கொண்ட பிறகு தோன்றியவர் என்பது இருவரும் தமிழகத் தெற்கெல்லை கூறியிருத்தலை நோக்கி அறியலாம். வடதிசை மருங்கில் வடுகு வரம்பாகத் தென்திசை உள்ளிட் டெஞ்சிய மூன்றும் கடல்1 என்பன இவ்வம்மையார் கூறும் எல்லைகள். தமிழகத்துக்கு வடக்கே `வடுகு (வடுகர் மொழி) என்பது அம்மையார் கூற்று. வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம் வேங்கடத் தும்பர் வடுகர் தேயம் என வரும் சங்க நூற் பாடல் வரிகளால், வடுகு என்பது வேங்கட மலைக்கு அப்பாற்பட்ட நாட்டுமொழி என்பதை அறியலாம். அறியவே, இவ்வம்மையார் காலத்தும் ஏறத்தாழ வேங்கடமே வட எல்லையாக இருந்ததெனக் கருதலாம். அசோகன் காலத்தில் வடஎல்லை அசோகன் காலத்தில் (கி. மு. 3-ஆம் நூற்றாண்டில் வடபெண்ணையாறே தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது என்னலாம்.1 அவன் தன் பெருநாட்டில் பல கற்றூண்களை நட்டு அவற்றில் பௌத்த சமயக் கொள்கைகளைப் பொறித்துள்ளான். அவற்றில் இரண்டு தூண்கள் தமிழகத்தைப்பற்றிய செய்தியைக் குறிக்கின்றன. என் நண்பர்களான சேர - சோழ - பாண்டிய - சத்திய (சதீய?) புத்திரர் நாடுகட்கும் அறப் பிரசாரகரை அனுப்பியுள்ளேன்.1 சேர-சோழ-பாண்டிய நாடுகளின் பரப்பு யாவரும் அறிந்ததே. ஆயின், அசோகன் குறித்த சத்திய (சதீய) புத்திரர் யாவர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்கள் குடகு நாட்டை ஆண்டவர்கள் என்பது ஒருசார் வரலாற்று ஆசிரியர் கருத்து.2 அவர்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர் என்பது பிறிதொருசார் ஆசிரியர் கருத்து.3 உண்மை எதுவாயினும், இவர்கள் அனைவரும் வட பெண்ணையாற்றுக்குத் தெற்கே இருந்த அரசர் என்பது உண்மை. வடபெண்ணையாற்றுக்கும் தென் பெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியான அருவா நாடு (தொண்டை நாடு) அசோகன் பேரரசில் சேரவில்லை. அந்நாட்டிற்றான் வேங்கடம் இருக்கின்றது. அந்நாடு சங்க காலத்தில் யாவர் ஆட்சியில் இருந்தது? சோழரும் தொண்டை நாடும் கி. மு. அல்லது கி. பி. முதல் நூற்றாண்டினன் என்று கருதப்படும் கரிகாற் பெருவளத்தான் அருவாளரை வென்று அருவா நாட்டைக் கைப்பற்றினான் என்று தமிழ் நூல்கள் கூறும்.1 கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் கடப்பை ஜில்லாவை ஆண்ட ரேநாண்டுச் சோழர் தம்மைக் `கரிகாலன் மரபினர் என்று கூறிக் கொண்டனர்.2 கடப்பை ஜில்லா - பொத்தப்பி நாட்டை ஆண்ட பொத்தப்பிச் சோழரும் தம்மைக் `கரிகாலன் மரபினர் என்றே குறித்துள்ளனர். கரிகாலன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஏகாம்பரர் கோவிலைப் புதுப்பித்தான் என்று வரலாற்று உணர்ச்சியுடைய பெரும் புலவராய சேக்கிழார் குறித்துள்ளார்.3 இவற்றை நோக்கக் கரிகாலன் தொண்டை நாட்டைக் கைப்பற்றித் தன் மரபினரை விட்டு ஆள ஏற்பாடு செய்தான் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். திரையரும் தொண்டை நாடும் அகநாநூற்றுப் பாக்களில், தொண்டை நாடு திரையர் ஆட்சியில் இருந்தது என்பதைக் காணலாம். ஒரு திரையன் பவத்திரி என்பதைத் தன் நாட்டில் ஒரு நகராகக் கொண்டவன் என்பது, சேல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பல்பூங் கானல் பவத்திரி அன்ன 4 எனவரும் அடிகளால் தெரிகிறது. இப்பவத்திரி என்பது இன்றைய நெல்லூர் ஜில்லா - கூடூர்த் தாலுகாவில் உள்ள ரெட்டிபாளையம் என்பது அவ்விடத்துக் கல் வெட்டுகளால் அறியப்படுகிறது. அத்திரையனுக்கு வேங்கடமலைத் தொடரும் உரியது என்பதை, வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை 5 என்பது தெளிவாக்குகிறது. இத் `திரையர்-`தொண்டையர் என்றும் வழங்கப் பெற்றனர் என்பது, வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்(டு) ஓங்குவெள் ளருவி வேங்கடம் 1 என்று வரும் அடிகளால் விளக்கமாதல் காண்க. இங்கும் வேங்கடம் அவர்கட்கு உரியது என்பது வற்புறுத்தப்படுதல் காண்க. பெரும்பாண் ஆற்றுப் படையில் தொண்டைமான் - இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்டதாகக் குறிக்கப்பட்டுள்ளான். இக் குறிப்புகளை நோக்க, அருவா வடதலை நாட்டைத் தொண்டைமான் - திரையனும், அருவா நாட்டைத் தொண்டைமான் - இளந்திரையனும் ஆண்டனர் என்பது பொருத்தமாகலாம். அருவா நாடு அருவா நாட்டார் `அருவாளர் என்று சங்க காலத்திலேயே பெயர் பெற்று இருந்தனர் என்பது பட்டினப் பாலையால் அறியலாம். அப்பெயர் அருவா நட்டிற்கு அப்பாற்பட்ட தெலுங்கரால் அருவா நாட்டுத் தமிழரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. `அருவாளர் என்னும் பெயர் நாளடைவில் `அரவாளர், `அரவாளு, `அரவவாளு எனத் திரிந்து, பொதுவாகத் தமிழக மக்களைக் குறிக்கலாயிற்று. அருவா நாடு எனப்படும் தொண்டை நாடு பழைய காலத்தில் குறும்பர் ஆட்சியில் இருந்தது; அவர்கள் அதனை 24 கோட்டங்களாகப் பிரித்து வாழ்ந்து வந்தனர் என்பது செவி வழிச் செய்தி. தொண்டை நாட்டைத் திரையர் ஆண்டனர் என்பது சங்கநூற் செய்தி. மணிமேகலை காலத்தில் தொண்டை நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பது மணிமேகலை என்னும் காவியத்தால் அறியலாம். காஞ்சியில் - இளந்திரையன் ஆண்டாற் போல, மணிமேகலை காலத்தில் காஞ்சியில் இளங்கிள்ளி அரசப் பிரதிநிதியாக இருந்தான் என்பது மணிமேகலை கூற்று. சோழர்க்குப் பிறகு தொண்டை நாடு பல்லவர் ஆட்சிக்குச் சென்றுவிட்டது. அவர்கள் ஏறத்தாழ அநுநூறு வருடகாலம் (கி. பி. 300-900) அந்நாட்டை ஆண்டனர். அக்காலப் பட்டயங் களையும் கல்வெட்டுகளையும் காணத் தொண்டைநாடு 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்ற செவி வழிச் செய்தி உறுதிப்படுகிறது. அப்பிரிவுகள் யாவை? 24 கோட்டங்கள் (1)புழல் கோட்டம், (2) ஈக்காட்டுக் கோட்டம், (3) மணவிற் கோட்டம், (4) செங்காட்டுக் கோட்டம், (5) பையூர்க் கோட்டம், (6) எயில் கோட்டம், (7) தாமல் கோட்டம், (8) ஊற்றுக் காட்டுக் கோட்டம், (9) களத்தூர்க் கோட்டம், (10) செம்பூர்க் கோட்டம், (11) ஆம்பூர்க் கோட்டம், (12) வெண்குன்றக் கோட்டம், (13) பல்குன்றக் கோட்டம், (14) இளங்காட்டுக் கோட்டம், (15) கலியூர்க் கோட்டம், (16) செங்கரைக் கோட்டம், (17) பழுவூர்க் கோட்டம், (18) கடிகூர்க் கோட்டம், (19) செந்திருக்கைக் கோட்டம், (20) குன்றவட்டான கோட்டம், (21) வேங்கடக் கோட்டம், (22) சேத்தூர்க் கோட்டம், (23) வேலூர்க் கோட்டம், (24) புலியூர்க் கோட்டம். சேர - சோழ - பாண்டிய நாடுகளில் `கோட்டம் என்ற பெயர்கொண்ட பிரிவினை இல்லை. இப்பெயர் இந்நாட்டிற்கு உரியது-ஆனால் பல்லவரால் உண்டாக்கப் பட்டது அன்று என்பன நோக்க, இப்பிரிவினை திரையர் காலத்தில் அல்லது அதற்கு முற்பட்ட குறும்பர் காலத்தில் ஏற்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதலாம். இக் கோட்டப் பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாக இருத்தல் காண்க. தமிழகத்தின் வட எல்லை என்று குறிக்கப்பட்ட வேங்கடம் ஒரு கோட்டத்தின் தலைநகரமாக இருந்தது என்பது அறியத்தகும். திரையன் ஆண்ட பவத்திரியைத் தன் அகத்தே பெற்ற (நெல்லூர் ஜில்லா-கூடூர்த் தாலுகா - ரெட்டி பாளையம்) இடம் பையூர் இளங்கோட்டம் எனப்பட்டது.1 திருப்பதியை அடுத்த சந்திரகிரி குன்றவட்டான கோட்டத்தைச் சேர்ந்தது.2 புத்தூர், நாராயணவனம் முதலிய சுத்தூர் ஜில்லாப் பகுதிகள் திருவேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்தவை.1 சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த பூத்தலைப்பாட்டு2 முதலிய இடங்கள் பழுவூர்க் கோட்டத்தைச் சேர்ந்தவை3. காளத்தி திருவேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்தது. காளத்திக்கு அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்பது.4 இச் சான்றுகளால் தொண்டை நாடு கூடூர்-காளத்தி-வேங்கடம் இவற்றைத் தன் கேத்தே பெற்றிருந்தது என்பதை அறியலாம். சங்க நூல்களில் வேங்கடம் சங்க காலப் புலவர் சிலர் வேங்கடத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றனர். அம்மலைத் தொடரைப் பற்றிய பல விவரங்களை அவர்கள் அறிந்திருந்தனர். அப்புலவர்கள் - மாமூலனார், கல்லாடனார், மதுரைக் கணக்காயனார், அவர் மகனார் நக்கீரனார், காட்டூர் கிழார் மகனார் கண்ணனார், தாயன் கண்ணனார், நன்னாகனார், கள்ளில் ஆத்திரையனார் முதலியோர் ஆவர். அவருள் மாமூலனாரும் கல்லாடனாரும் பாடியன பல. அவர்கள் கூறும் செய்திகளை நோக்க, அவர்கள் வேங்கடக் கோட்டத்தினராக இருந்திருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. பொதுவாக மேற் சொன்ன புலவர் அனைவரும் வேங்கடம் பற்றிக் கூறுவன இவை: வேங்கட மலையில் விழாக்கள் நடைபெறுகின்றன. அங்கு மூங்கிற் காடுகள் மிகுதி; சுரபுன்னை மரங்கள் பல; வெள்ளருவிகள் பாய்ந்த வண்ணம் இருக்கும். யானைகள் மிகப் பலவாக வாழ்கின்றன. அவை தமிழக அரசர்க்கு, சிறப்பாகப் பாண்டியர்க்குப் பயன்பட்டன. கொடுந்தொழில் வில்லியர்-வேடர்-கள்வர் வசிக்கின்றனர்; அவர்கட்குத் தலைவன் புல்லி என்பவன். அவன் மழவர் நாட்டை அடிபணியச் செய்தவன்; சிறந்த கொடையாளி. வேடர்கள் விலையாக யானைக் கன்றுகளைத் தருவர். வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதி வடுகர் நாடு; வேங்கட மலைப்பகுதி திரையனைச் சேர்ந்தது.. . . கரும்பனூர் கிழான் வேங்கட நாட்டைச் சேர்ந்த தலைவன்; சிறந்த வள்ளல்; தமிழ்ப் புலவரை ஆதரித்தவன். ஆதனுங்கன் என்பவன் வேங்கடங்கிழவோன். அவனும் சிறந்த கொடையாளி. அவன் கள்ளில் ஆத்திரையனார் என்ற தொண்டை நாட்டுப் புலவரை ஆதரித்தவன்.1 இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால் தமிழகம் சங்க காலத்தில் வட வேங்கடத்தை வட எல்லையாகப் பெற்றிருந்தது; வேங்கடக் கோட்டம் தமிழ் நிலமாக இருந்தது; அங்குத் தமிழ் அரசர் - வள்ளல்கள் - புலவர்கள் வாழ்ந்தார்கள்; வேங்கடக் கோட்டம் தொண்டை நாட்டு இருபத்துநான்கு கோட்டங்களுள் ஒன்று என்பன போன்ற உண்மைகள் வெளிப்பட்டன. இனிப் பின்னூல்களில் கூறப்படும் வட எல்லை பற்றிய செய்திகளைக் காண்போம். II பின்னூல்களில் வட எல்லை சிலப்பதிகாரம் கி. பி. 2-ஆம் நூற்றாண்டினது என்பர் ஒரு சாரர்; பிறிதொரு சாரர் கி. பி. 5-ஆம் நூற்றாண்டினது என்பர். உண்மை எதுவாயினும் அக்காலத்தில், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு2 என்பது தமிழர் முடிபாக இருந்தது. முன்சொன்ன சங்கப் பாடல்களில் `வேங்கடம் என்று குறிக்கப்பட்டது, சிலப்பதிகார காலத்தில் திட்டமாக `நெடியோன் குன்றம் என்ற வழக்குப் பெற்றது கவனிக்கத் தக்கது. சிலப்பதிகார காலத்தில் வேங்கட மலை சிறந்த வைணவத்தலமாக விளங்கியது என்பது இதனால் நன்கு புலனாகிறது. சேர நாட்டு மாங்காடு என்னும் ஊரினனான பிராமணன் ஒருவன் வேங்கட மலைக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து மீண்டவன், வழியில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோவலனைக் கண்டு பெருமாளது நின்ற கோலத்தை வருணித்திருத்தல் சிலப்பதிகாரத்துட் கண்டு இன்புறத் தகும் பகுதியாகும்.1 பல்லவர் காலத்தில் (கி. பி. 300 - 900) தோன்றி மறைந்த ஆழ்வார் அனைவரும் வேங்கடத்தைப் பாடிக் களித்தனர். அவருட் குலசேகராழ்வார் பாடிய பாக்கள் பல. அவை உள்ளத்தை உருக்குவன; வேங்கடத்தில் உள்ள கோனேரி முதலிய பல இடங்களைக் குறிப்பன. வைணவப் பெரியார்க்கு வேங்கடம் தமிழக வடகோடியிற் சிறந்திருந்தாற் போல - அதே காலத்தில் வாழ்ந்த சைவ சமய குரவராகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்போர்க்குக் காளத்தி தமிழக வடகோடியில் சிறந்த சிவத்தலமாக விளங்கியது. அவர்கள் மூவரும் அங்குச் சென்று பதிகங்கள் பாடியுள்ளனர். அப்பர் ஒருவரே வடநாடு சென்று மீண்டவர்; மற்ற இருவரும் காளத்தியில் இருந்தே வடநாட்டுத் தலங்கள்மீது பதிகங்களைப் பாடித் திரும்பிவிட்டனர். இதற்குக் காரணம், அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின வழக்கங்கு நிகழா தாக 2 என்று சேக்கிழார் பெருமான் செப்பியிருத்தல் காண்க. பல்லவர்க்குப் பின்வந்த சோழப் பேரரசர் காலத்தில் (கி. பி. 900-1300) உண்டான நூல்களில் வட எல்லை குறிக்கப் பட்டுள்ளதா என்பதைக் காண்போம். வீர சோழன் கங்கை கொண்ட சோழனுக்கு மூன்றாம் மகன். அவன் காலம் 11-ஆம் நூற்றாண்டு. அவன் பெயரால் செய்யப்பட்ட இலக்கணம் வீரசோழியம் என்பது. அதனில், வீறு மலிவேங் கடம்கும ரிக்கிடை மேவிற்றென்று கூறுந் தமிழினுக் கீற்றெழுத்தாம் என்பர் கோல்வளையே! 3 என வருதலைக் காண, அக்காலத்திலும் வேங்கடமே தமிழக வட எல்லையாகக் கருதப்பட்டது என்பது தெளிவாகின்றது. கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்டதாகக் கருதப்படும் நன்னூலில், குண கடல் குடகம் குமரி வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் 1 என்று தமிழக எல்லைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. யாப்பருங்கல விருத்தி என்னும் நூல் கி. பி. 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. அந்நூலுள் கீழ்க்கண்ட செய்யுள் ஒன்று காணப்படுகிறது. விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க மின்வாள்வீசி விரையார் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி வேங் வடஞ்சூழ் கொங்கைமலைதாந்தாம் வடிக்கணீல மலர்தாந்தாம் தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம் என்னும் மதன் கை தண்ணுமையே2 இச் செய்யுளில் வேங்கடமலை நாட்டுக்குத் தலைவன் காளிங்கன் என்பது கூறப்படுகிறது. அவன் தமிழ்ப் புலவர் பாராட்டுக்கு உரியவனாகத் திகழ்ந்தான் என்பது தெரிகிறது. கல்வெட்டுச் செய்திகள் மேற்சொன்ன சோழப் பேரரசர் காலத்தில் வேங்கட மலையில் இராமாநுசர் செய்த திருப்பணிகள் மிகப்பல; அவரால் குடியேற்றப்பட்ட ஸ்ரீவைணவர் பலர். அவர் அனைவரும் தமிழரே. அவர்கள் திருநந்தவனங்கள், அன்னசந்திரங்கள் வைத்துப் பாதுகாத்தனர்; கோவிற் பூசை, விழா முதலியவற்றைக் கவனித்தனர். சோழர்க்கு அடங்கி வேங்கடக் கோட்டத்தையும் சுற்றுப்புறப் பகுதியையும் ஆண்டுவந்த யாதவராயர்கள் செய்த திருப்பணிகள் பல; பிற அற நினைவு கொண்ட பெரியோர் செய்த தானங்கள் பல; கோவிலில் திருப்பாவை, திருவாய் மொழி, இராமாநுசர் நூற்றந்தாதி முதலியன உரிய காலங்களில் ஓதப்பட்டன. கோவில் அலுவலாளர் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே; இடங்களின் பெயர்கள், பொருள்களின் பெயர்கள் முதலியன எல்லாம் தமிழ்ப் பெயர்களே. அம்மன் பெயர் அலர்மேல் மங்கை என்பது. இது தூய தமிழ்ப் பெயர் அல்லவா? நகரத்தின் தெருக்களின் பெயர்கள், ஆட்சிக் குழுவினர் பெயர்கள் யாவும் தமிழப் பெயர்களே. திருவேங்கட நாட்டில் விஜயநகர ஆட்சி முடிய (கி. பி. 14, 15, 16, 17-ஆம் நூற்றாண்டு வரை) இருந்த நாணயங்கள், பலவகை அளவைகள் இவற்றின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே ஆகும்.1 திருமலைப் பெருமானுக்குத் தேவதானமாக விடப்பட்ட கிராமங்கள் பெரும்பாலன தொண்டை நாட்டுக் கிராமங்கள் - தமிழ்ப் பெயர் கொண்ட கிராமங்கள். இந்த உண்மைகள் அனைத்தையும் திருப்பதி தேவதானத்தார் வெளியிட்டுள்ள கல்வெட்டு நூல்களைக்2 கொண்டு தெளிவாக அறிந்துகொள்ளலாம். அரசியல் உறவும் வடுகர் நுழைவும் சோழப் பேரரசருள் சிறந்தவனான முதலாம் இராசராசன் கோதாவரி - கிருஷ்ணையாறுகட்கு இடைப்பட்ட வேங்கி நாட்டு மன்னனைத் (விமலாதித்தனை) தன் மருமகனாக ஏற்றுக் கொண்ட நாள்முதல் தமிழர் - வடுகர் கூட்டுறவு நெருக்கமுறத் தொடங்கியது. தமிழ்ப் படை வீரர் வேங்கி நாட்டில் இருந்தனர்; அரசயில் அலுவலாளர், வணிகர் முதலியோர் அங்குத் தங்கினர். அவ்வாறே வடுகர் சோழ அரசியலில் அலுவலாளராக இடம் பெற்றனர்; தமிழகத்திற் குடியேறினர். இராசராசன் மருமகனான விமலாதித்தன் மகனே சாளுக்கிய இராசராசன். அவனே நன்னையபட்டரைக் கொண்டு தெலுங்கில் பாரதத்தை எழுதச் செய்தவன். அவன் தாய் வழியில் தமிழன்; தந்தை வழியில் வடுகன். அவனுக்குக் கங்கை கொண்ட சோழன் தன் மகளான அம்மங்கா தேவி என்பவளைக் கொடுத்தான். அவளுக்குப் பிறந்தவனே முதற் குலோத்துங்கன். இக் குலோத்துங்கன் தாய் வழி உரிமை கொண்டு சோழப் பேரரசைக் கைப்பற்றி ஆண்ட பேரரசன் ஆவன். இவன் வழியினரே பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சோழப் பேரரசராக இருந்தனர். இங்ஙனம் உண்டான பெரிய மாறுதலால் வடுகர் தமிழகத்தில் ஓரளவு செல்வாக்குப் பெற்றனர்; குடியேறி வாழலாயினர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் கன்னடரான ஹொய்சளர் தமிழ் அரசருடன் திருமணக் கலப்பால் உறவுகொண்டு தம் செல்வாக்கைப் புகவிட்டனர். அதனால் தமிழக எல்லைப் புறங்களில் கன்னடர் செல்வாக்குப் பரவியது; திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள கண்ணனூர், திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஹொய்சளர் படைகள் இருந்தன; திருவண்ணாமலை மூன்றாம் வல்லாள மகாராசன் தலைநகரமாக விளங்கியது. விஜயநகர ஆட்சி ஹொய்சளர்க்குப்பின் தமிழகத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடந்தது. அக் குழப்ப நிலைக்குப் பின் விஜயநகர அரசு தோற்ற மெடுத்தது. அதன் பிரதிநிதியாகக் கம்பணவுடையார் தமிழகம் முழுவதையும் கைப்பற்றினார். அப்பொழுது அவருடன் வந்த தெலுங்க வீரர், கன்னட வீரர் நாட்டில் அமைதியை நிலைநிறுத்த அங்கங்கே பாளையம் அமைத்துத் தங்க விடப்பட்டனர். அங்ஙனம் விடப்பட்டவர்கள் நாளடைவில் குறுநில மன்னராகிவிட்டனர். அவர்களே பாளையக்காரர் எனப்பட்டவர். விஜயநகர ஆட்சி மூன்று நான்கு நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. அப்பொழுது வடக்கே பாமினி சுல்தான்களின் தாக்குதலுக்கு அஞ்சியவரும் வாணிகம், உழவு, உத்தியோகம் இவற்றைக் கருதியவருமாகத் தெலுங்கர் பலர் வடபெண்ணை யாற்றைக் கடந்து வேங்கடம், காளத்திவரை நன்கு பரவிக் குடியேறினர்; பிற்கால விசயநகர வேந்தர்க்குச் சந்திரகிரி தலைநகரம் ஆனது முதல் தெலுங்கர் செல்வாக்கு வேங்கடம், காளத்தி, கூடூர் முதலிய இடங்களில் மிகுதிப்பட்டது. கோல்கொண்டா, பிஜப்பூர் அரசர்களுடைய கணக்கற்ற படையெடுப்புகளால் அல்லலுற்ற தெலுங்கர் சித்தூர், நெல்லூர், செங்கற்பட்டு, வடஆற்காடு முதலிய தொண்டை நாட்டு ஜில்லாக்களில் குடிபுகுந்தனர். தாமல் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு வேங்கடப்ப நாயக்கர் ஆண்டனர். வேலூரிலும் சந்திரகிரி அரசர் சரண்புக நேர்ந்தது எனின், தெலுங்க நாடும் தொண்டை நாடும் சுல்தான்கள் படையெடுப்புகளால் பட்டபாட்டை ஒருவாறு உணரலாம். இன்ன பிற காரணங்களாற்றான் தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டை நாடு 15, 16, 17, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தமிழரும் தெலுங்கரும் விரவிவாழும் பகுதியாகக் காட்சி அளித்தது. அதனால் இந்த நூற்றாண்டுகளில் தெலுங்கு மொழியில் சில கல்வெட்டுகள் இருக்கக் காணலாம்; பல ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் சிதைந்து (பூத்தலைப்பட்டு என்பது பூதல்பட்டு, சூரலூர் என்பது சூலூர் என) வழங்கலாயின; பல பெயர்கள் முழுவதுமே மாறி (திரு ஆன்பூர் - மல்லம் என)ப் புதுப் பெயர் கொண்டுவிட்டன. ஆயின் இந்த உண்மையை அவ்வவ்வூர்க் கோயில் கல்வெட்டுகள் இன்றும் உணர்த்திக்கொண்டு இருத்தல் நாம் செய்த பேறே ஆகும். நெல்லூர், கூடூர் முதலியன நெல்லூர் வடபெண்ணை யாற்றங்கரையில் இருக்கின்றது. நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று என்று வரும் பழம் பாட்டு அடியில் குறிக்கப்பட்டுள்ள `நெல் என்பது தமிழ்ச் சொல். அத்துடன் `ஊர் சேரின் `நெல்லூர் என்றாகும். இது தூய தமிழ்ச் சொல். இவ்வூர் தொண்டை நாட்டைச் சேர்ந்ததே என்பதை, ஜயங்கொண்டசோழ மண்டலத்து (தொண்டை நாட்டு) விக்கிரமசிங்கபுரமான நெல்லூர். . . . . . . . எனவரும் நெல்லூர்க் கோவில் கல்வெட்டுத் தொடரால் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். நெல்லூருக்குத் தென்பாற்பட்ட ஊர்கள் பலவற்றின் பெயர்கள் பழங்காலத்தில் தமிழ்ப் பெயர்களாக இருந்தன - பின்னர் மாறிவிட்டன என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது. சான்றாகச் சில காண்க: (1) கொல்லத் துறையான கண்ட கோபாலப் பட்டினம் (2) பையூர் இளங்கோட்டத்து வேலூர் நாட்டுச் சூரலூர். (3) முனையூர் இப்பொழுது `மோபூர் எனப்படுகிறது. (4) இருங்குண்டை இப்பொழுது `இனுகுண்டா எனப்படுகிறது. (5) தும்பையூர் இப்பொழுது `தும்மூர் எனப்படுகிறது. (6) உச்சியூர் இப்பொழுது `உட்சூரு எனப்படுகிறது. (7) திருஆன்பூர் இப்பொழுது `மல்லம் எனப்படுகிறது. இங்ஙனம் குறிப்பிடத் தக்கவை பல உள. இப்பதிகளில் உள்ள கோவிற் பெயர்கள், கடவுளர் பெயர்கள், ஏரிகளின் பெயர்கள், வாய்க்கால்களின் பெயர்கள், ஊரவையார் பெயர்கள், பலவகை அளவைப் பெயர்கள் முதலிய யாவுமே தமிழ்ப் பெயர்களாக இருத்தலைக் காணலாம்.1 கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் கூடூர்த் தாலூகாவில் உள்ள மல்லம் என்ற ஊரில் வெட்டப்பட்ட கல்வெட்டு இதுவாகும்: வதிஸ்ரீ நந்திபோத்தரசற்குப் பதினைந்தாவது பையூர் இளங்கோட்டத்துத் திருஆன்பூர் ஸூப்ரமண்யன அவ்வாட்டைப் பொன் அயிம்பத்தங் கழஞ்சு கொள்ளும் மதுவார் அட்டுவித்த கழஞ்சு பொன்னும் விளக்க. . . . . . . . . புறமாக ஆளுவ அரசர் விண்ணப்பத்தினால் சளுக்கி அரசரான. . . . . . . . . . த்தியாகப் பாவித்தோம். நாட்டாரும் ஊராரும் ஆள்வாரும் அறம் மறவற்க.2 நெல்லூர் ஜில்லாவில் உள்ள இத்தகைய தமிழ்க் கல்வெட்டுகள் பலவாகும். தமிழகத்தின் வட எல்லைப் புறப் பகுதியாக இருந்த இப்பகுதிகள் நாளடைவில் முன்சொன்ன பல்வேறு காரணங்களால் ஆந்திரர் குடியிருப்புக்கு உரியவையாயின. சென்னை நகரம் சென்னைக்கு வடபால் நெல்லூர் வரையுள்ள நிலப் பகுதி தமிழகம் என்பதை மெய்ப்பிக்கும்போது தொண்டை நாட்டுச் சென்னை நகரம் தமிழகத்தது - தமிழருடையது என்பது கூறாதே அமையும் அல்லவா? இன்றைய சென்னை மாநகரத்தின் பகுதிகள் பல இன்று-நேற்று உண்டானவை அல்ல. திருவொற்றியூர், திருமயிலாப்பூர், திருஅல்லிக்கேணி என்பன கி. பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவ - வைணவ சமய ஆசாரியர்களால் பாடப்பெற்ற தலங்கள் ஆகும். நுங்கம்பாக்கம், எழுமூர் (எழும்பூர்), பிரம்பூர், சேற்றுப்பட்டு, தங்கசாலைத் தெருப்பகுதி (இதற்கு அக்காலப் பெயர் தெரியவில்லை) என்பன கி. பி. 10, 11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. `தொண்டை மண்டலத்துப் புழல் கோட்டத்து எழுமூர் நாட்டைச் சேர்ந்த பகுதிகள் இவை என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. பிற்கால விஜயநகர ஆட்சிக் காலத்திற்றான் சந்திரகிரி அரசர்க்குக் கீழ்ப்பட்ட தாமல்-வேங்கடப்ப நாயக்கர் காலத்தில் சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனிபார் குடியேறினர். அந்தக் காலத்திற் செய்யப்பட்ட வடமொழி நூல்களிலும் வேங்கடம் தமிழகப் பகுதியே என்பது திட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது; அதுவும் அதற்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதியும் `திராவிட தேசம் என்று குறிக்கப்பட்டுள்ளது.1 முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற வரலாற்று, இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளால்-(1) தொண்டை நாடு நெல்லூர்வரை பரவி இருந்தது; (2) தொன்றுதொட்டு வேங்கடம் தமிழக நேர் வடக்கு எல்லையாகக் கருதப்பட்டது; (3) சைவர்கட்குத் திருக்காளத்தி தமிழக வடகோடித் தலமாக இருந்து வந்தது; (4) கூடூர்த் தாலூகா பையூர் இளங்கோட்டத்தைச் சேர்ந்தது; (5) சென்னை தொண்டை நாட்டுப் புழல் கோட்டத்தைச் சேர்ந்தது; (6) தெலுங்கர் - தமிழர் கூட்டுறவாலும் விஜயநகர ஆட்சியினாலும் பிஜப்பூர், கோல்கொண்டா அரசர் படையெடுப்புகளாலும் தெலுங்கர் வேங்கடம் - காளத்தி-நெல்லூர் - கூடூர் முதலிய பகுதிகளில் நுழைந்து பரவி நாளடைவில் வேரூன்றினர்; (7) எனினும் வெள்ளையர் சென்னையிற் குடியேறிய கி. பி. 17-ஆம் நூற்றாண்டிலும் வேங்கடமே தமிழகத்தின் வடஎல்லையாகக் கருதப்பட்டு வந்தது என்பன நன்கு விளங்கும். தமிழர் கடமை தமிழர் - தெலுங்கர் - கன்னடர் - மலையாளர் ஒரு தாயீன்ற மக்கள்; ஆதலின் என்றும் ஒன்றுபட்டே வாழக் கடமைப் பட்டவர். ஆதலால் ஒருவர் நிலப்பகுதியை மற்றவர் இலக்கிய - வரலாற்று - கல்வெட்டுச் சான்றுகட்கு மாறாகக் கவர எண்ணுதல் பெருந்தவறு; அதனால் நிலைத்த பகைமையும் பூசலும் ஏற்பட வழியுண்டாகும் பாழும் எல்லைப்புறப் போராட்டங்களால் அழிந்த நாடுகள் பல. மண்ணாசையால் மாண்டொழிந்த பேரரசுகள் பல. ஆதலின் அன்பும் அறமும் துணை செய்யத் தமிழரும் ஆந்திரரும் எல்லைப் பிரிவினையைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டும். தமிழர்க்கு நெல்லூர் உரியதாயினும் அதனினும் உயிர் போலச் சிறந்தவை வேங்கடமும் காளத்தியுமே ஆகும். முன்னது வைணவர்க்கும் பின்னது சைவர்க்கும் உரியவை. இவை இரண்டையும் தமிழகத்தின் வட எல்லைப்புறத் தலங்களாக இருக்கத் தக்கவாறு தமிழக வட எல்லை அமைக்கப் படல் வேண்டும். தமிழர் நெல்லூர் வரை வற்புறுத்தாமல், இவற்றுடன் நிற்கவேண்டும் என்பது நமது வேண்டுகோள். தமிழர் இங்ஙனம் விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையைக் கண்டும், ஆந்திர சகோதரர் தமிழருடைய சைவ, வைணவத் தல உரிமைகள் மதித்தும் மேற் சொன்னவாறு எல்லை வகுத்தல் அறமாகும். இம்முயற்சி வெற்றிபெற வேங்கடத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் நீலவண்ண நெடியோன் அருளையும், `மாகமர் திருக்காளத்தி மலையெழு கொழுந்தாயுள்ள ஏகநாயகன் அருளையும் இறைஞ்சுகின்றோம். * எழுத்து மொழியும் பேச்சு மொழியும் (Written and Spoken dialects) R. J. Gunliffe. p. 228. Dante. Petrarch. p. 50. Cardinal Newman’s `English Catholic Lectures,’ Section 4. p. 75. செ. 6, 16. செ. 14 39. அவர் பதிப்பு, முகவுரை, பக். 5. (கழகப் பதிப்பு). மூவர் உலா (அடையாற்றுப் பிரமஞான சங்கத்தார் பதிப்பு). திருமறையூர்ப் பதிகம், 8. திருநறையூர்ப் பதிகம் - 3, 4, 5, 6, 9. `தென்னவனாய், உலகாண்ட செங்கணான் என்ற சுந்தரர் தொடர் இதனுடன் ஒப்புநோக்கத் தக்கது. கோச்செங்கட்சோழர் புராணம், 15, 16. கோச்செங்கட்சோழர் புராணம், 7. Ep. Indica, III p. 142 Ibid. Heras - `Studies in Pallava History’, p. 20. பல்கலைக்கழகப் பதிப்பு - திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், பக். 10, 11, 75. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங் கோவிலுக்குள் இருக்கிறது. அதன் அற்புத வேலைப்பாடு வியக்கத்தகுவது. Longhurst - `The Pallava Architecture,’ Part I pp. 22-23 R. Gopinatha Rao-`Epigraphia, Indica’ Vol. 15, p. 15. Ram Raz - `Essay on Indian Architecture,’ pp. 48-49. K. A. N. Sastry’s Cholas Vol, II, Part I, p. 486; Vol. I. p. 385 M. E. R. 36 of 1931 சக்கரவாளக் கோட்டம், வரி, 42-48, 58-59: மலர்வனம் புக்க காதை 113-127. மதுரைக்காஞ்சி, வரி 352-355. பெரும்பாண் ஆற்றுப்படை, மதுரைக்காஞ்சி Navaratnam’s S. I. Sculpture, pp. 56-57. O. C. Gangooly’s `Indian Architecture’ p. 13. Dr. N. V. Ramanayya’s `Orign of S. I. Temple, p. 44. Ibid. p. p. 39, 54. Ibid. pp. 72, 75. Prof. Dubreil’s Dravidian Architecture, pp. 1, 10, 22. நான் இக்கோவிலை (10-1-43) விளக்கமாகக் காண உதவி புரிந்த பெரியார், இக்கோவில் கண்காணிப்பாளராக இருந்த காஞ்சீபுரம் சி. குமரகாளத்தி முதலியார் ஆவர். இஃது இக்கோவிலில் மின் விளக்குத் திருவிழா அன்று கோவிலிற் செய்த சொற்பொழிவு. S. I. I. Vol. I. Nos. 24-30, 86-88; 140-150. Vide S. I. I. Vol. I. Nos. 24-30, 82-88, 144-150. Ep. Ind. Vol. 5, P. 200; Vol. 9, p. 200. இந்த அசரீரி கேட்ட செய்தியையே, பூசலார் புராணத்தில் `பல்லவன் கனவு கண்ட செய்தி யாகச் சேக்கிழார் கூறியுள்ளார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இவனும் தன் தந்தையைப் போலவே கண்மணியால் செய்யப்பட்ட லிங்கத்தை மகுடமாகத் தாங்கி இருந்தான் போலும்! S. I. I. Vol. I. Nos. 84, 85 89, 110, 112, 131. 140, 146, 150. S. I. I. Vol. I 86. Ibid. 86. Ibid. 88. இச்சிற்பங்களைப்பற்றிய முழு விவரங்கள் டாக்டர் மீனாக்ஷி அம்மையார் வரைந்துள்ள `கயிலாசநாதர் கோவில் சிற்பங்கள் என்னும் ஆங்கில நூலிற் காணலாம். ïJnt `காமகோடி என மாறியது போலும்! இதன் உண்மைப் பெயர் அடுத்த பகுதியிற் காண்க. 1359 of 1917 359 of 1917 196 of 1919 வீரநாராயணன் - முதற் பராந்தகன் பெயர்களில் ஒன்று. 174 of 1919 192 of 1919 189 of 1919. 187 of 1919 210 of 1919 180 of 1919 183 of 1919 197 of 1919 212 of 1919 198 of 1919 201 of 1919 215 of 1919 † நிலம்-நில அளவைப் பெயர். 207 of 1919 205 of 1919 203 of 1919 202 of 1919 175 of 1919 208 of 1919 *1941, மார்ச்சு மாதம் 23-ஆம் தேதி வெளியான `ஹிந்து பத்திரிகையில் டாக்டர் ஐயப்பன், M. A., Ph. D. (Lond), அவர்கள் அரிக்கமேட்டைப் பற்றி அழகிய கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்கள். அக்கட்டுரையைப் படித்த சில நாட்களுக்குப் பின், அரிக்கமேட்டை அடுத்துள்ள புதுச்சேரியில் உள்ள கல்விக் கழக ஆண்டு விழாவிற்கு யான் செல்லல் நேர்ந்தது. கிடைத்தற்கரிய அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விழைந்த யான், அக்கழகத்தினருட் சிலருடன் 11-4-41-ல் அரிக்கமேட்டைச் சென்று பார்வையிட்டேன்; பல பொருள்களைக் கண்டேன்; அம்மேட்டைப் பற்றிய சில விவரங்களை அங்குள்ளார் கூறக் கேட்டேன். அடுத்த நாள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் திருவாளர் S. K. கோவிந்தசாமி பிள்ளை, M. A. அவர்கள், (அப்பொழுது) தமிழ் விரிவுரையாளர் திருவாளர் டாக்டர்-அ. சிதம்பரநாதச் செட்டியார், M. A. Ph. D. அவர்கள், விழுப்புரம் முனிசிபல் கமிஷனர் திருவாளர் கீ. இராமலிங்க முதலியார், M. A. அவர்கள் , கல்விக் கழகத் தலைவர்-திருவாளர் தேசிகன் பிள்ளை, B. A, B. L. அவர்கள், செயலாளர் திருவாளர் திருநாவுக்கரசு அவர்கள் முதலியோரும் வந்திருந்தனர். அவர்களுடனும் சென்று அரிக்கமேட்டைப் பார்வையிட்டேன். மூன்றாம் கடல் கோள் காலம் கி. மு. 306 என்று இலங்கை வரலாறு கூறும். அதனைத் தொல்காப்பியர் காலமாகக் கூறுவர். ரா. இராகவையங்கார் mt®fŸ-Vide his Tamil Varalaru. Vide his Tamil Varalaru. அஃது சொன்னார் கையனார், தொல்காப்பியனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் (யா. வி. சூ. 34-ன் உரை) என வருதலை நோக்கத் தொல்காப்பியர்க்கு முன் கையனார் இலக்கணம் செய்தனராதல் வேண்டும் எனக் கொள்ளலாம். Vide Dr. S. Krishnaswamy Iyengar’s Valuable introduction to `The Pallavas of Kanchi’ by R. Gopalan. Vide Dr. S. K. Iyengar’s introduction to his `Manimekalai; Vide the Author’s `History of the Cholas’, Part I. கன்னடத்தில் மிகப் பழைய நூல் எனக் கருதப்படும் `கவிராஜ மார்க்கம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டினதாதலின், அதற்குப் பிற்பட்டதே கர்நாடகச் சந்தமாகிய `குணகாங்கியம் என்பதை யுணர்க. தெலுங்கில் மிகப் பழைய நூல் கி. பி. 11-ஆம் நூற்றாண்டினதான `நன்னையர் பாரதம் என்பது. சாஸனங்களில் பழமையானது கி. பி. 6-ஆம் நூற்றாண்டினனாதலாலும், `வடுகச் சந்தம் கி. பி. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே என்பதையும் ஐயமற உணரலாம். Vide p. 232. `Pallavas of Kanchi’ by R. Gopalan. தொல் - செய்யுளியல், 1-சூ. உரை. சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் மேற்கோள், காதை 8. V. A. Smith, Asoka, Map. “From the River South Únnar began the division known as Aruvanaduï which extended north wards along the coast almost as far as the Northern Únnar. This division fell into two Ærtsï Aruvanadu or Aruva South and Aruva Vadathalai or Aruva North.” -Dr. S. K. Aiyangar‡s Int. to the pallavas of Kanchi. Asoka, p. 105 Ibid. R. Sathyanatha Ayyar - Ancient History of Tondaimandalam, pp. 4-5. பட்டினப்பாலை. Rangachari, Cuddappa Ins. 309, 318, 405, 409, 435, 453, 455, 550, 560, 560. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், செ. 85. அகம் - 340. அகம் - 85. அகம் - 213. Nellore Inscriptions, Vol. I, p. 430; S. I. I. IV. 647. 628 of 1905. A. R. E. 1912, Nos, 373 - 382. இப்பொழுது `பூதலபட்டு என வழங்குகிறது. A. R. E. 1908, Nos. 53-56. S. I. I. IV. 645. அகம் - 61, 211, 265, 393, 295, 311, 359, 88, 209, 85, 213, 141, 27; புறம் - 371, 389. வேனிற்காதை, வரி. 1-2. காடுகாண்காதை, வரி. 41-51. சம்பந்தர் புராணம், செ. 1026. வீரசோழியம், சந்திப்படலம், 8. சிறப்புப் பாயிரம். மேற்கோள், பக். 271. பொன், பணம், காசு-நாணயப் பெயர். குழி, மா, நிலம், வேலி, காணி - நில அளவைப் பெயர்கள். நாழி, உறி, மரக்கால், கலம் - முகத்தல் அளவைப் பெயர்கள். Tirumalai Ins. Volumes I to VI. Vide Nellore Ins. Vols. I to III. Ibid. Vol. I, p. 430. ”Leaving the Andhra and Karnataka regions, the two gandharvas proceed to places which poet Venkatadrin definitely considers as falling out of the boundaries of the Andhra Desa, that is, places belonging to Dravida desa, which is described next. The first Tamil region which the two gandharvas describe is Venkatagiri or Tiruppati.” - Madras Tercentenary Commemoration Volume, p. 107.