திரு.வி.க. தமிழ்க்கொடை 23 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 23 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 36+388=424 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 210/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் நாட்டுப்பற்று, உரிமை வேட்கையே உயிர் எனக் கொள்ளும். விடுதலை வேட்கை அடிமைப்பட்டுக் கிடக்க விடாது. மூச்சும் விடுதலை, பேச்சும் விடுதலை, செயலும் விடுதலை எனக்கிளரும். வேட்கை உரையாய்க் கிளர்வதிலும் பாட்டாய் வெடிப்பதே பரப்புதற்கு ஏற்ற கருவியாகிச் சிறக்கும். இவ்வுள்ளீட்டின் வெளிப்பாடு இந்நூல். விடுதலை வேட்கை வேக்காட்டில் இருந்தாலும் அவ்வேக்காடு பாட்டாகும்போது பொங்கலாகச் சுவைக்கின்றது. பாட்டென்பது சொல்லடுக்கன்று; அணிச்செறிவன்று; யாப்புக்கட்டுமன்று; இயற்கையொடு இயைந்த மனத்தினின்றும் விரைந்தெழும் மகிழ்ச்சியின் பொங்கல் பாட்டாகும் என்னும் திரு.வி.க. முன்னுரையால் பாட்டுப் பொங்கல் விளக்கமுறும். பாட்டு அமைதியை அருளும் கொடைவள்ளல் என்பது எவ்வளவு பட்டறிவுச் செய்தி. அமைதி குன்றும் மனம், அமைதி குன்றும் நிலையில் இயற்கையே அமைதியூட்டும்; இயற்கைக் காவியமும் ஊட்டும். அங்கேயும் கிட்டாத போது ஒருமைப் படுத்த உறுதுணையாவது பாட்டு என்றால் பாட்டின் திறம் என்னே என்னே என வியப்பில் ஆழ்த்தும். அந்நிலையில் பிறந்த பாடல்களே இந்நூல் என்கிறார் பாட்டாளர் திரு.வி.க. தம் இதழ்களிலும் நூல்களிலும் வந்த பாடல் திரட்டே இந்நூல் என்கிறார் ஆசிரியர் (1931) வாழ்த்து முதல் வேண்டுதல் ஈறாகப் பதினான்கு தலைப்பு களில் இயல்கிறது இத்தொகை நூல். விடுதலையையே இறைமை வடிவில் காணும் திரு.வி.க. விடுதலைப் பேற்றை இயற்கை உவமைகளாலேயே காட்டு கின்றார். இறப்பு நேரினும் மறக்கக் கூடாத ஒன்று விடுதலை என்பதைச் சுதந்தரச் சிறப்பாகக் காட்டுகிறார். பாரதநாடு பற்றிய பாடலை குறவஞ்சி யாப்பிலே இசை பெருகப் பாடுகிறார். பாரத இயற்கைச் சிறப்பும் பண்டு முதல் தம்நாள் வரை வாழ்ந்துள்ள பெருமக்கள் தொண்டுச் சிறப்பும் விரித்துக் கூறும் எட்டகமாகத் திகழ்கிறது அது. பொன்னொளி மண்டபம் ஒன்றைக் கற்பனையால் காண்கிறார். அரியணையில் அரசியர் பலர் அமர்ந்துளர். சப்பான், அமெரிக்கா, செர்மன், பிரான்சு முதலாம் அரசியர் இருக்கும் உலகப் பேரவையில் என் அன்னை இல்லையே என ஏங்குகிறார். என் அன்னை எங்கே? v§nf? என அவள் சிறப்பெல்லாம் திரட்டிக் கூறி அலமரு கிறார். அன்னை தன் நிலையை எடுத்துரைத்து அழுங்குகின்றாள். அவளை அரியணையில் அமரவைக்க நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுகிறார். எண்சீர் விருத்தம் 13 பாடல்களை யுடையது இத்தாயின் காட்சி. எண்சீர் விருத்தம் 15 பாடல் களைக் கொண்டது தமிழ்நாடு. அதன் இயற்கை எழில், பொருள் வளம், ஆட்சி, அறிவர், வீரம், நூல், உரைவல்லார், அயல்நாட்டார் தமிழ்ப்பணி, பண்பாடு என்பவற்றை அடைவுற அமைத்துப் பாடியது அது. தமிழ்த்தாய் இருபத்தேழு கண்ணிகளாய் இயலும் பகுதி. இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ எனத் தொடங்கும் அது, தமிழினிமை உரைத்து, தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கு இல்லை இந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே? vd btJ«ã Édhwh®.(9) சாதிமதச் சண்டையெலாம் தமிழின்பம் நுகரார்க்கே என்னும் திரு.வி.க. மொழியை மெய்ப்பித்தால் கூடத் தமிழகம் உய்யும் (23) . சத்தியாக்கிரக விண்ணப்பம் 24 கண்ணிகளை யுடையது. பஞ்சாப் படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் பாடிய பாடல் அது (1921). பெறவேண்டும் சுய ஆட்சி; பெறவேண்டும் இப்பொழுதே என்கிறார் (22) உலகமெலாம் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி இங்கிலாந்துச் செலவு பற்றியது திலகர் பாட்டு. கண்ணிகள் 14. இங்கிலாந்து சென்றார் திலகர் என்பதறிந்து பாடிய பதிகம் இங்கிலாந்தும் திலகரும். கலிவிருத்தம். அடுத்தது திலகர் வாழ்த்து. கலித்தாழிசை ஒன்றும், அறுசீர் விருத்தம் ஒன்றும், காந்தி பற்றிய அகவல் 89 அடிகளால் ஆயது. உற்ற யாக்கையின் உறுபயன் யாது? என வினாவி அதற்கு விடையாக, இல்லற நல்லறத்து நின்று தனக்கென வாழாத் தன்மையன் ஆய காந்தியின் அடிபற்றிக் கடனாற்றல் என்கிறார். கலித்தாழிசை ஒன்றும், அறுசீர் விருத்தம் ஒன்றும் ஆகிய இரண்டு காந்தி வாழ்த்து. காந்தியார் பாடும் வைணவன் எவன் என்னும் பாடல் பொருள் விளக்கம் அப்பெயரால் ஐங்கண்ணிகள் ஆகின்றன. சுதந்திரநாமாவளி சிந்தடிக் கண்ணி 43 கொண்டது. சாதிப் பேயை ஓட்டுவமே சமநிலை எங்கும் நாட்டுவமே (21) இயற்கை நெறியே சன்மார்க்கம் இயைந்தால் அழிவது துன்மார்க்கம் (23) வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே (43) எல்லாக் கண்ணிகளும் இயைபு கொண்டவை. வேண்டுதல் எண்சீர் விருத்தம் ஐந்து கொண்டது. நாட்டுக்கு வேண்டும் நலங்களை எல்லாம் திரட்டி, வள்ளலார் அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் என்று வேண்டிய யாப்புரவில் அமைந்த ஐந்தகம் இது. முருகன் அருள் வேட்டல் இயற்கை வழிபாடு முருகன் அருள் வேட்டலை எழுப்பிற்று என்னும் திரு.வி.க. முருகன் அல்லது அழகு என்னும் தம்நூலில் விரிய, விரிய விளக்கியுள்ளார். இயற்கையைக் கொண்டே இறையாம் முருகனை உணர்தல் கூடும். இயற்கையும் முருகனும் பிரிவின்றி இயைந்து நிற்கும் அழகை என்னென்று கூறுவது? என்று வியப்புறுகிறார் திரு.வி.க. இந்நூல் பாட்டு வழிபாட்டு நூல் என்பதை முன்னுரையில் குறிப்பிடும் திரு.வி.க. வாக்கு மனங்கட்கு எட்டாத ஒரு பொருளை நினைப்பதற்கும் வாழ்த்துதற்கும் வணங்குதற்கும் கோயில்கள் துணைக்கருவிகளாக நின்று வருகின்றன என்று தம்நூல் இயங்குநிலை முறைமையைச் சுட்டுகிறார். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், கதிர்காமம், கழுகுமலை, குன்றக்குடி, சென்னிமலை, திருச்செங்கோடு, வேளூர், திருமயிலம், திருப்போரூர், இளையனார் வேலூர், குமரகோட்டம், திருத்தணிகை, கந்தமாதனம், பொது, காத்தல், வாழ்த்து என்னும் தலைப்புகளில் நடையிடும் இந்நூல் 1932 இல் முதற்பதிப்புக் கண்டது. அகவல் வெண்பா தாழிசை கட்டளைக் கலித்துறை விருத்தம் என்னும் யாப்புகளில் நூல் நடையிடுகின்றது. அகவல் அன்றி மற்றவை பதிகங்களாக அமைகின்றன. காத்தல் நான்கும், வாழ்த்து ஒன்றுமாக ஐந்து பாடல்கள். காத்தலில் இரண்டாம் பாடல் பதிப்புப்பிழையுற்றுள்ளது. திருச்செந்தூர் அகவலில் செந்திலோ நின்னிடம்? சிந்தையோ நின்னிடம்? என அருமையாக வினாவித் தொடங்கு கிறார். சிந்தையில் நீங்காச் செந்தமிழ்ச் செந்திவாழ் வாய்ப் பாடலை முடிக்கிறார். திருப்பரங்குன்றப் பதிகத்தில் குன்றெறிந்த கோமானே! குற்றமுடைச் சாதிநெறி என்றெறிந் தின்பருள்வாய் இங்கு என்று காலத்தால் எறிய வேண்டியதை வேண்டுகிறார். பதிகமுழுவதும் அக்குன்றச் சூழல் படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. மேலும், தீண்டாமை எண்ணுநெஞ்சம் தீண்டுமோ நின்னடியைத் தீண்டாமை மன்பதைக்கே தீட்டு என்பவை முரண்நயம் மட்டுமா? முரண்டர் மனம் மாறுதல் இல்லையே! என்னும் வேக்காட்டின் வெளிப்பாடு அல்லவோ! பழமுதிர்சோலையின் பெயர் என்ன செய்கிறது? பண்ணிலே மூழ்கும் பழமுதிர் சோலை பள்ளு முழங்கும் பழமுதிர்சோலை பற்றெனக் கொண்ட பழமுதிர்சோலை பாழ்தரு நோய்தீர் பழமுதிர் சோலை எனப் பதிக ஈற்றடி முழுவதும் நயங்கொழிக்கின்றது. பழனிப் பதிகம் 160 சீர்களில் இயல்வது. ஆனால் பழனியும் மலையும் அறுபத்தொரு சீர்களில் (50+11) இடம்பெறுகின்றன. எண்ணமெலாம் பழனியிலே என்னும் தோற்றுவாய் விளக்கமாய் அமைகின்றது. மெய்யியல் ஆழம் பொதிந்தது பொதினி (பழனி) போலும்! ஏரகம் என்பதை எண்ணிலா ஏர்கள் சூழ்ந்த ஏரகமாகக் காண்கிறார். அவர் காணும் ஏரகம் சுவாமிமலையேயாம். ஏரகம் தரும் அமைதியால் ஏலவார் குழலியானேன் என்பது பெண்ணின் பெருமையர்க்கே உரிமை பூண்ட தொடராம். தனிப்படை வீடுகளாம் ஐந்தனையும் கூறி, குன்றுதோறாடல் தொடர்கிறார். தொடரைக் கொக்கி போற்றொடர் என அரிய உவமையாக்குகிறார். கூற்றைக் கொல்வது என்பது மரணமிலாப் பெருவாழ்வை நல்குவது என வள்ளலார் உள்ளம் தோய்ந்து குறிப்புரை வரைகிறார். படைவீடுகள் எனப்படாவேனும் தம் உளத்துப் படைவீடு களாகத் திகழ்ந்த கதிர்காமம் முதலியவற்றைப் பாடுகிறார். இங்கு நின்று பாடினார் அல்லர் திரு.வி.க. அங்குச் சென்று பாடிய பேறுடையது அது. தமிழகத்துக் கோயில்களும் கண்டு கண்டு பாடப் பெற்றவையேயாம். கடலெல்லாம் கதிரையென்று கைநீட்டி வழிகாட்ட, காட்டின் முடியெல்லாம் கதிரையென்று வரவேற்ப. விலங்கு, பறவை தாமும் கதிரை என்றே கடிதணைந்து உடன்தொடரும் என இயற்கையெலாம் இசைந்து நிற்கும் இறைமை நிலையைப் பாடுகிறார். கழுகுமலை முருகனிடம் கற்றல் கேட்டல் கண்திறவா; கண்ணைத் திறக்கக் குருவாக எழுந்தருள வேண்டுகிறார். உலகம் பொல்லா தென்கின்றார்; உளமே பொல்லா தென்றுணர்ந்தேன் என்கிறார். மேலே என்ன மெய்யியல்? குன்றக்குடி என்பது இயற்கையேனும் குன்றாக்குடி யாக்குவது இறைமையெனக் காணும் பெருமையது குன்றாக்குடி. முருகன் குன்றாக்குடித் தமிழனாகிறான். சுந்தரர் முதலோர் பாடிய தன்னாதன தன்னாதன தன்னாதன தனனா ச்சந்த விருத்தமாய் அமைந்தது இப்பதிகம். சென்னிமலை வேலனிடம் என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன்; எழிலுடல் ஓம்பலும் வேண்டேன்; மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் மலரடி வழிபெறல் வேண்டும் என்பது தம்பிறவி நோக்குப் பிறங்கும் வேண்டுதல் அல்லவோ! இதன் விளக்கம் போல் திருச்செங்கோட்டுப் பதிகத்தில், தொண்டினைத் துறவேன்; துறவெனக் காட்டினுக் கோடேன்; மூக்கை மூச்சினை அடக்கேன்; பாரினைப் பாழெனக் கொள்ளேன்; உருகிய உயிர்கள் உயர்பணி செய்ய வேண்டுவனே என்கிறார். அடுத்து வரும் வேளூர் புள்ளிருக்கும் வேளூர்; முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் குமரகுருபரர் பாடிப் பரவிய பெருமையது. அழுதும், அரற்றியும் அழுங்கும் பதிகம் இதுவாம். வேளூர், வைத்தீசுவரன் கோயில் என வழங்கப்படுகிறது. திருமயிலப் பதிகம் அடுத்தது. உள்ளுறும் அச்சம் அவலம் ஆதிகளை அகற்றிப் பிறவி வேரறுக்க வேண்டுமென முறையிடுவது இப்பதிகம். பலகலைகள் கற்றாலும் பன்னெறிசேர்ந் தாலும் பற்றுநெறி கூடவில்லை (2) என வருந்தி, மலையேறி மீதமர்ந்தேன் மனவமைதி கண்டேன் (5) என மகிழ்கிறார் நால்வருணம் பிறப்புவழி நாட்டியநாள் தொட்டு நாவலந்தீ வழிந்தொழிந்து நாசமுற லாச்சே என முறையிடுகிறார். mL¤j gâf« ïisadh® ntÿ® ïiw¡FÇaJ; ïjid ïiwadh® ntÿ® v‹W« MŸ»wh® âU.É.f.(3,4). இப்பதிகம், விளியாக இயற்கைநெறி கமழ யாக்கப்பட்டுளது. கோழிகளே, காகங்காள், புறவினங்காள், குருவிகளே, தும்பிகளே, வண்டுகளே, அன்றில்காள், குரற்குயிலே, பசுங்கிளிகாள் பூவைகளே என்பவை விளி உயிரிகள்; பறவை வகைகள். வழி கூவீரே. கரையீரே. முழங்கீரே என்னும் யாப்புரவில் முடிவன. ghyhW« nrahW« NÊa‰ifí« R£L»wh®.(8) குமர கோட்டம் அடுத்துவருவது. காஞ்சி உயர் குமரகோட்டம் என இடம் சுட்டுகிறார்; தென்மொழி வட மொழிப் புலமையர் வாழ்ந்த பதி என்கிறார்(7) பல்சமயப் பதி என்பதைப் பகர்கிறார்(8) முருகனைச் சிவகுருவாகப் பூரிக்கிறார். (1,3,5,10) திருத்தணிகைப் பதிகம் அடுத்தது. தணிகை சாந்தக் காட்சி வழங்குகிறது. (6) கல்வி கேள்வி தருக்கம் ஆயவை இறைமை இன்பம் சேர்க்கா என்கிறார். தணிகை வலம்வரின் தழல் அகலும் என்கிறார். (7) தலவரிசையில் இறுதியது கந்தமாதனம். ïiwik ahî« ïiwaoah® ahU« KUfhf¤ njh‹W« njh‰w« ciu¡»wh® (3) KU»‹ bghUsh« mHF, ïsik, kz«, bjŒt« v‹gt‰iw mL¡F»wh®.(5) பொதுப்பதிகமாம் இறுதிப் பதிகத்தில், வெங்கதிரும் தண்மதியும் வேலவநின் கோயில் வேலைமலை காடுவயல் வெண்மணல்நின் கோயில் என்னும் பாடல் (7) பொதுமைக்குப் பொதுமை. முருகன் அருள்வேட்டல் பதிகங்கள் அனைத்திலும் பொதுமையாகப் பாயும் கருத்தோட்டம், கோயில்கள் சாதி சமயம் வருணம் என்பவை அற்ற நிலையங்களாகத் திகழ வேண்டும் என்பதே. முருகன் அருள் வேட்டல் 1932 இல் வெளிவந்தது. செய்யுள் நூல்களுக்கு வழக்கமாக எழுதும் குறிப்புரைகளையும் கொண்டது. பதிக வரம்பு போற்றப்படும் பெற்றியது. திருமால் அருள் வேட்டல் முன்னுரையில் சமயம் ஒன்றா? பலவா? என்பதை விரிவாக ஆய்ந்து ஒன்றே என்றும், இறையும் ஒன்றே என்றும் தெளிவிக்கிறார். பன்மார்க்கம் உடையாரும் பழுத்த ஆய்வால் சன்மார்க்கமே மார்க்கமெனக் கொள்வார் என்பதையும் கூறுகிறார். தாம் தம் ஆய்வு பட்டறிவு என்பவை கொண்டு தெளிவுற்றதைத் தெரிவிக்கிறார். எவரும் தாம் விரும்பும் மதத்தைக் கொள்ளலாம். பிறர் மதத்தை நிந்தித்தல் ஆகாது. பிறர் மதத்தை நிந்திப்பது தம்மதத்தைத் தாம் நிந்திப்பதேயாம் என்கிறார். இக்கருத்து தேவையான காலம் இதுவாம். இறைநிலைகள் பல எனினும் அவற்றுள் மூன்று சிறந்தவை எனக்கூறும் திரு.வி.க. வாக்குமனம் கடந்தது ஒன்று; இயற்கையைக் கோயிலாக் கொண்டது மற்றொன்று; குருவின் உள்ளத்தைக் கோயிலாக் கொண்டது இன்னொன்று என்கிறார். இவற்றுள் பின்னவை இரண்டுமே வழிபாட்டுக்கு உரியன என்றும் கூறுகிறார். மால், பெரியன். எல்லார்க்கும் பெரியன் இறைவன். அவன் அருட்டிரு உடையன் ஆதலால் திருமால் எனச் சொற்பொருள் விளக்கம் தருகிறார். யான் ஆண்டவன் அருள் பெறாதவன்; அதுபற்றியே அவன் அருள் வேட்டு நிற்கிறேன். என்று தம்மொடுக்கமாகக் கூறுவது, யான் ஆண்டவன் அருள் வேண்டி நிற்பவன்; அதுபற்றியே அவன் அருள் வேட்டு நிற்கிறேன் எனினும் தகுதொடரேயாம்! ஏனெனில் திரு.வி.க. அத்தகையர். இவ் வேட்டல் பொருள், அவர் கூறிய வேட்டல் நூல்களுக் கெல்லாம் பொது விளக்கமாம். இந்நூல் 1938இல் வெளிவந்தது. இருபது தலைப்பு களில் இவ்வேட்டல் நடையிடுகிறது. திருவரங்கம் நான்கு பதிகங்களையும், திருவல்லிக்கேணி மூன்று பதிகங்களையும், திருமலை மூன்று பதிகங்களையும் கொண்டுள்ளது. தென்திருப்பேரை (அகவல்) ஆழ்வார் திருநகரி (வெண்பா) திருமாலிருஞ்சோலை( கண்ணி) ஸ்ரீவில்லிபுத்தூர் (விருத்தம்) சீர்காழி (விருத்தம்), தில்லை (கலித்தாழிசை) திருக்கோவலூர் (விருத்தம்) திருக்காஞ்சி (கலித்தாழிசை) என்பவை தனித்தனி ஒன்றுடையவை. நிறைவில் நாமாவளியும் வாழ்த்தும் உள. நாமாவளிக் கண்ணிகள் 54. நூற்றெட்டு எண்ணை நினைந்து போலும். வாழ்த்து விருத்தம் ஒன்று. தென்திருப்பேரை அழகனைக் கண்டால் துறவாத் துறவே தூய துறவெனப் புலப்படலை விரிய விளக்குகிறார். போற்றி இசைக்க ஏற்ற பாட்டாய் இசைக்கிறார். தென்திருப்பேரையும் ஆழ்வார்திருநகரும் தென் தமிழகம் சார்ந்த பொருநைக் கரையவை. ஆதலால் இரண்டையும் பொருநை வளத்தொடு பொருத்திப்பாடுகின்றார். ஆழ்வார் திருநகர்க்கமைந்த குருகூர் என்னும் பெயரையும் சுட்டுகிறார். திருமால் கொண்ட பத்துப் பிறப்புகள் கூர்தல் அறவிளக்கம் (பரிணாம வளர்ச்சி) எனச் சுட்டுகிறார். மேலும், செத்துப் பிறவாத்திறம் விளக்குவது என்றும் காண் கிறார். திருமாலிருஞ்சோலையின் இயற்கைவளம் திருச்சோலை, பெருஞ்சோலை, பழச்சோலை, பூஞ்சோலை, கனிச்சோலை, பொற்சோலை, தேன்சோலை என்றெல்லாம் பாடவைக்கின்றது. தமிழ்வளர்த்த மதுரை சார்ந்த சோலை என்பதை மறவாமல், ஏழிசையாய் நிற்கும் இருஞ்சோலை, தமிழாய்த் தழைத்து நிற்கும் தண்மை இருஞ்சோலை என்று பாடுகிறார். திருவில்லிபுத்தூர் பெருமானை, பெருமாளை - ஆண்டாள் பெருமாளாகவே பதிக முழுவதும் பாடுகிறார். தம் நிலையை, கல்லை மண்ணைச் சோறாக்கிக் களிக்கும் பிள்ளை என வாழ்ந்தேன் என இரங்கி உரைக்கிறார். திருவரங்கப் பெருமானை காவிரி நங்கை கொள்ளிட மங்கை கைகளால் தைவர அறிதுயில் செய்யும் மரகதமலை யாகக் காண்பவர், அறிதுயில் நுட்பம் உணர்ந்திடில் கலகமோ பாழாம், என்றுரைத்துத் தமக்கு அறிதுயில் நுட்பம் அருள வேண்டுகிறார். பொருட்டொடர் நிலைப்பாட்டென (குளகமென)த் திகழ்கின்றன இவை (5,7,8) பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் என வேண்டாமை கூறியவர், சொன்மேவு கவிகடந்து துயிலுகின்ற இன்பம் சுரக்க வேண்டு கிறார். பேசரிய துயிலின் பெற்றியருள்; துயிலின் மாண்புணர்ந்தால் உய்ந்திடுவேன் என்று அறிதுயிலருளவே வேண்டுகிறார். திருவரங்க மூன்றாம் பதிகம் திருவரங்கப் பெயரிலேயே திளைப்புறுகின்றது. 160 சீர்களைக் கொண்ட இப்பதிகத்தில் 60 சீர்கள் திருவரங்கப் பெயரேயாம். முருகன் அருள் வேட்டலில் உள்ள பழனிப்பதிகம் இப்பதிகத்துடன் ஒப்பிட்டுக் காணத் தக்கதாம். திருமாலைப் பற்றிய தொன்மச் செய்திகளை யெல்லாம் அடுக்கடுக்காகக் கூறி, திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே என்னும் பாடல்களைக் கொண்ட பதிகம் இது. இராம காதையை உள்ளீடாகக் கொண்டது சீர்காழிப் பதிகம். அவ்வுள்ளுறைக் கேற்ப, ஆவியாம் அணங்கு தன்னை ஐம்புல அரக்கர் கோமான் மேவியே பற்றிக் கொண்டான் மேலவ அவனைக் கொன்று பாவியை மீட்ப துண்டோ? என்பது நயமிகக் கொண்டதாம். அதேபோல், நங்கையின் உரிமை நாடி நாமநீர் கடந்த வீரா என்று விளித்து, தாம் செய்யும் பெண்ணியத் தொண்டுக்குத் திருவருள் கூட்ட வேண்டும் என்பதும் அருமைமிக்கதாம். தில்லைப் பதிகத்திலே பாரதப் போரை அறப்போராக்கக் கண்ணன் முனைந்த முயற்சியைச் சுட்டி, இக்கால அரசியல் கேடுகளை அடுக்கடுக்காய்க் கூறி அவற்றை அழித்துதவ வேண்டுகிறார். கற்றவர்கள் எனும் பெயரால் காசினியில் அரசியலார் செற்றமிகு புலிகரடி சிங்கமெனத் திரிகின்றார் கல்லூரி என்றென்றே கட்டுகின்றார் பழிபாவம் மல்லூரு நூல்களிலே மதிவளர்ச்சி பெறுகின்றார் கொள்ளையிலும் கொலையினிலும் கொடும்புரட்சி வெறியினிலும் உள்ளமுறும் அரசியலால் உலகுபடும் பாடென்னே கல்வியெலாம் போருக்கே கருத்தெல்லாம் போருக்கே செல்வமெலாம் போருக்கே செய்கையெலாம் போருக்கே இவை அயலார் ஆட்சிக் காலநிலை. (1938) நம்மவர் ஆட்சி நிலையோ - ஆட்சி என்றா சொல்வது? பெண்ணையாற்று வளங்கொழிக்கும் கோவல்பெருமானுக்குத் தாம் கண்ட புத்தாழ்வார் ஒருவர் புகழை இயைத்துள்ள பேறு குமாரசாமியார் பெற்ற பேறு. பள்ளியிளம் பிள்ளைகளே, வளைக்கரத்து மதிநல்லீர், ஆலரசு வேம்பினங்காள் என அழைத்து அழைத்து, திருக்காஞ்சி வரதர் கோயிலிடம் வினாதலாய், வரதன் புகழ்பாடும் பதிகம் திருக்காஞ்சி. பள்ளியிலே யான் படித்த பருவமதிலுன்றன்; பசுங் கோயில் வலம்வருவேன் பத்திவிளை வாலே என்னும் அந்நாள் பத்திமை, அலைக்கழிவை எண்ணிப்பாடும் பதிகம் திருவல்லிக் கேணி உலக மெல்லாம் ஒருமையிலே ஒன்றின் துயருக் கிடமில்லை என்பதை விரித்துப் பேசுகிறது அடுத்த பதிகம். திருமலை ஏழுமலையாய், ஏழாய் ஏழாய் எழுகின்றது முதற்பதிகம். நகரவாழ்க்கை கொடுமை கேடு செயற்கை என்பவற்றை உரைத்துத் திருமலை மாண்பில் தோய்கிறது இரண்டாம் பதிகம். மீளவும் ஏழுமலைப் பெயரும் எழிலுமே ஆட்கொள்ளப் பதிகம் ஓங்குகின்றது. நாமாவளி இயைபு (முடிநிலை) நயம் கொண்டது. ஆழ்வார் தமிழில் ஆழ்வோமே அன்பில் என்றும் வாழ்வோமே என நாமாவளி நிறைகிறது. வாழ்த்தில், திருமலை முதலா வுள்ள திருப்பதி பலவும் வாழ்க என எல்லாம் திருப்பதியாகக் கொண்டு வாழ்த்துகிறார். பொதுமை வேட்டல் வேள் என்னும் அடிச்சொல்லில் இருந்து பிறந்தது வேட்டல். வேள் என்பதன் பொருள் விருப்பு, மண், மண்ணாட்சி, மண்ணாட்சியர், உதவி என விரிவன. வேட்டம், வேட்டை, வேட்கை, வேள்வி, வேளாண்மை முதலியனவும் அவ்வழிவந்த சொற்களே. திரு.வி.க. வேட்டல் பெயரில் சிலநூல்கள் யாத் துள்ளார். அவற்றுள் இப் பொதுமை வேட்டல் அளவால் பெரியது. பொதுமை பெரியது தானே! திரு.வி.க. இயற்றிய பா நூல்களுள் ஈதொன்று. உலகப் போர்ப் பருந்து பறந்து அச்சுறுத்திய போதில் எழுந்து வீறியது இப்பொதுமை வேட்டல். இதனைத் திரு.வி.க. முன்னுரையில் காண்க. திரு.வி.க. நூல்களின் பொதுமை ஊடகம் எனக் கொள்வ தொன்றுண்டு. அஃது இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது. மற்றொன்று, சமரச சன்மார்க்கம் என்பது. இவ் விரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த இணை மலர்மாலை. துணைமலர்ப் பிணையல் - இப் பொதுமை வேட்டல். இந்நூல் வெளிப்பாட்டை, உலகப் போரிடை - போர் மேகம் சென்னை நகரைப் பலவழியிலும் கலங்கச் செய்துள்ள இவ்வேளையில் - காகிதப் பஞ்சம் நெருக்கும் இந்நேரத்தில் (1942)- விரைந்து விரைந்து அச்சிடப்பட்டது என்கிறார். உள்ளுறை தெய்வ நிச்சயம் முதலாக, போற்றி ஈறாக நாற்பத்து நான்கு தலைப்புகளைக் கொண்டது. இவற்றுள், சன்மார்க்கம் (2) சமரசம் (1) சமரச சன்மார்க்கம் (1) சன்மார்க்க வாழ்வு (1) எனச் சன்மார்க்கம் ஐந்து தலைப்புகளையும், முறையீடு ஐந்து தலைப்புகளையும், தியானம் மூன்று தலைப்புகளையும் பெறுகின்றன. மற்றைத் தலைப்புகளும் தொடர்நிலை போலவே ஒரு கட்டொழுங்குறுகின்றன. உள்ளுறை காண்க. தலைப்பு ஒவ்வொன்றும் பதிகமென (பத்துப்பாடல்) நடையிடுகின்றது. எண்மர் என்னும் தலைப்பு ஒன்பது பாடல் களையும், வாழ்த்து என்னும் தலைப்பு ஒருபாடலையும் கொண்டுள்ளமையால் நூல் 430 பாடல்களைக் கொண்டதா கின்றது. இவற்றுள், அகவல்பா 1, கலிவிருத்தம் 2, கலித்தாழிசை 113, அறுசீர்விருத்தம் 72, எழுசீர் விருத்தம் 71, எண்சீர் விருத்தம் 171 ஆக 430 பாடல்களாம். இயற்கைப் பொதுமை வழியாக இறைமைப் பொதுமையை நிலைநாட்டச், சமரச சன்மார்க்கம் பற்றி நிற்றல் வேண்டும் என்னும் உட்கிடை திரு.வி.க.வுக்கு உண்மையின் அதன் விளக்க மாகவே நூல் எழுவாய் முதல் இறுவாய் வரை இயல்கின்றது. இயற்கை இறைமை குருவன் வழி இறங்கி அருள் சுரத்தலையும் தெளிவிக்கிறார். இயற்கை இறைமைச் சார்பின்றி உலகம் உய்யாது என்பதை உறுதிப்படுத்துகிறார். செயற்கைச் சடங்குகளாலும், செயற்கைத் துறவுக் கடைப்பிடிகளாலும் எப்பயனும் இல்லை என்பதைப் பலப்பல இடங்களில் பொழிகின்றார். உய்யுநெறி உழைப்பாலே உறும் (1:2) தொண்டினிலே ஈடுபட்டுத் தோயத் தோயத், துணைவரும் (1:3) என்று தெய்வ நிச்சயத்தில் சொல்கிறார். ஒப்புரவே உள்ளொளியே உண்மைநிலைப் பேறே என்று இயற்கைத் தெய்வத்தைக் காணும் அவர், கடபட மென் றுருட்டுவெறிக் கடுவாதத் தர்க்கம் கருத்தற்ற கிரியைகளும் கட்சிகளும் போரும் நடனமிடும் நெஞ்சறியா நாயகன் என்கிறார் (2) காலையில் எழுந்து கடன்களை முடித்துக் காற்றிலும் கதிரிலும் குளித்துச் சோலையில் உலவிச் சுரக்குநீ ராடித் தொழுதுனைச் சிந்தனை செய்து சீலமும் நலமும் சேருண வருந்திச் சீர்தொழில் பிறர்க்கென ஆற்ற மேலவர் கொண்ட வேர்நெறி ஓங்க வேண்டுவன் கருணைசெய் இறையே என இயற்கை நெறியில் வேட்கையுரைக்கிறார்(8) சன்மார்க்கத் தில் போலிமை மதங்களின் பட்டியலைக் கூறி அவை தொலைய வேண்டும் என்பதை வேட்டலாக்குகிறார். சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மை அறம் அன்பழிக்கும் துயர்மதங்கள் தொலைய வேட்கிறார் (11:5) அண்டையன் பசியால் வாட அணங்கொடு மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று மன்னிடும் ஆட்சிக் குற்றம் தண்டனை கர்மம் என்னல் தயையிலார் கூற்றே அப்பா (13:8) எனச் சமரசத்தில் கூறுகிறார். அதே சமரசத்தில், உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை; அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே என்கிறார். (13:9) ஒருவனே எல்லாம் என்னும் சமரசத்தை எண்ணினால் துயரம்போம் என்றபடி எனக்குறிப்புரையும் வரைந்துள்ளார். எண்மர், வாழ்த்து என்னும் தலைப்புகளிலும் இச்சமரசத் தையே பொருளாக்கிப் புகல்கிறார். தம் இளமையில் செயற்கை யில் உழன்றதை, கண்ணினை மூடக் காற்றினை அடக்கக் கருத்தினை ஒடுக்கிடச் சொல்லும் பண்ணிலா யோகர் படிகளில் உழன்றேன் பாழினில் கழிந்தது காலம்; மண்ணிலே பிறந்த பயனினை இழக்க மனமிலை என்கிறார் (25:6) இச் செயற்கை என்ன ஆட்டம் போடுகின்றது; எப்படி எப்படிக் கொள்ளைக் கோலம் போடுகிறது; எவ்வளவு பெரிய இடங்கள் தலைமை தாங்கிப் பேருவகை கொள் கின்றன; கண்ணுள்ளார் காண்பாராக! கருத்துள்ளார் சிந்திப் பாராக! திரு.வி.க. அறைகூவலை மேலும் காண்பாராக: காற்றினை மூக்கால் ஈர்த்தல் கனலினை மூலக் காலால் ஏற்றிடல் இறக்கல் மாற்றல் இளமதி ஒளியைக் காண்டல் ஊற்றுள நாடி நிற்றல் உடல்முகம் சிவத்தல் எல்லாம் ஏற்றநன் முறைகள் அல்ல என்றருள் குருவே போற்றி என்கிறார் (34:2) இவையெல்லாம் பயின்று நின்று பாழ் எனக் கண்ட பின்னர்ப் பகர்மொழி இஃதாம். ஆனந்தம் 42ஆம் தலைப்பு. தொன்மைமிகு தமிழ்ச்சொல் ஆனந்தம். தொல்காப்பியத் தில் வரும் ஆனந்தப் பையுள் மூதானந்தம் என்பவை காண்க. குறையாதது யாது? அது, அல்நந்தல் = அனந்தல். கடல் என்னும் பொருள். அனந்தல் ஆடேல் என்பது ஔவை வாக்கு. குறையா இன்பமாம் மூதின்பமாம் ஆனந்தம் அதன் அடிப் பொருள் விளங்க, பதிகம் முழுவதும் அடி, மடக்கடி, உட்சீர் ஆகிய இடங்களில் எல்லாம் பொதுளி நிற்கின்றன. வள்ளலார் வழிஞர் திரு.வி.க. என்பது காட்டும் சான்றுகளில் ஈதொன்று என்க. திரு.வி.க. தம் தொண்டே, தமக்குவரும் தொல்லை நோய்க்கு மருந்து எனக் கண்ட தோன்றல். அக்குறிப்பு விளங்க, தொல்லையை நீக்கும் தொண்டில் துணைசெயும் தோன்றல் போற்றி என நூல் நிறைவாம் போற்றி நிறைவில் இசைக்கிறார். (44:10) கிறிதுவின் அருள்வேட்டல் திரு.வி.க. கிறித்தவர் அல்லர்; ஞானமுழுக்குப் பெற்றவரும் அல்லர்; எனது மார்க்கம் சமரச சன்மார்க்கம் என்பவர் அவர். திரு.வி.க. கிறித்தவ சமயத்தராக இருந்திருந்தால் இந்நூல் இவ்வகையில் எழுந்திராது. அவர் சிவனியராகவோ மாலிய ராகவோ இருந்திருப்பின் இந்நூல் எழுந்திருக்கவே செய்யாது. அவர் சன்மார்க்கியாக இருந்ததால்தான் இந்நூல் இவ்வகையில் எழுந்தது. கிறிதுவின் அருள் வேட்டல் என்னும் பெயரிய இந்நூல் பாநூல். குறட்பா, கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை, எண்சீர்விருத்தம், எழுசீர் விருத்தம், அறுசீர்விருத்தம் என்னும் அறுவகைப் பாவால், வகைக்குப் பத்துப் பாடலாய் அமைந்தது; வாழ்த்துடன் நிறையவும் செய்தது. பின்னே இசைக் கண்ணியாய் இயைபுத் தொடையில் இருபது எழுதி அதனை இணைத்திருக்கக்கூடும் என நூலமைதி கூறுகின்றது. ஆசிரியர் குறிப்பு அன்று இது. கிறித்தவப் பள்ளியில் பயின்றவர்; திரு.வி.க. கிறித்தவப் பள்ளியில் பணி செய்தவரும் அவர். கிறித்தவப் பெருமக்கள் அன்பிலும் நண்பிலும் திளைத்தவர். அவர்தம் வாழ்க்கைக் குறிப்புக்களில் சான்றுகள் மிகப்பல. கிறித்துவின் அருள் வேட்டல், தமிழ்ச் சமய மணம் கமழ்வது. கிறித்தவப் பிழிவாகத் திகழ்வது. கிறித்தவம் அன்று; கிறித்து பெருமான் சால்பு ஓவியம் இஃது என்க. சித்தம் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் என்பதன் உள்ளுறை என்ன? கிறித்துவின் மலைப் பொழிவும் சிலுவைப் பாடுமேயாம்! இந்நூல் பிறந்த மூலம் என்ன? பரிசுக்காகப் பயின்ற விவிலியப் பயிற்சியா? பின்னைப் பயின்ற பயிற்சியா? கிறித்தவச் சார்புகளா? இல்லை! இல்லை! இல்லை! ஒன்றே ஒன்று. அது, என்னுள்ளே நீபிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யான்இறந்தேன் உற்று என்பது. தான் இறந்து அவனாம் பிறப்பெய்திப் பாடிய பாட்டு முனைப்பர் பாட்டாகவோ இருக்கும்? அருள் வேட்டல் உள் தலைப்புகள் மாசுமனிதம், அறத்தின் இயல், அலகிலொளி, உலகமெலாம், பொய்யிலே, உலகெலாம், ஏசு கிறிது என்பவை. இப்பெயரீடு எடுத்த பாடலின் முதல் தொடர்கள். இவ்வாறு அமைக்கும் உத்தி எவ்வகையில் வாய்த்தது? தமிழ் இறைமை வழியர் தந்தவை அல்லவோ! நாலாயிரப் பனுவல் பதிகப் பெயரீடுகளைக் காண்க. அலகிலொளி வினாவும் விடையுமாய்த் தொடர்வதன் மூலம் எது? திருவாசகத் திருச்சாழலையும், தனிப்பாடல் வினாவிடை வெண்பாக்களையும் காண்க. அருள் வேட்பார், அவன் திருப்பெயரை ஒருமுறையோ ஓதுவர்? விளிப்பர்? அண்மை, சேய்மை, பெயர், அணிநயம் கெழும அழைத்து அழைத்து வேட்பர் அல்லரோ! வாரம், வாசகம், திருப்புகழ், நாலாயிரம் சான்றுகள் அல்லவோ! கற்பகமே, அப்பா, பெரும, வள்ளல், தெய்வமே, திருக்குமரா, ஆருயிரே, மாணிக்கமே, தயாபரனே, முன்னவனே, இளங்குமரா, கோவடிவே, அன்பே, இறையவனே, பர ஒளியே, சேயே, ஐயா, அருட்கடலே, குருநாதா, குமரகுருவே, கருணை மாநிதியே, மூர்த்தியே, முன்னவா, பரம, அரசே, ஐயனே, நாதனே, ஈசனே, விமலனே, எந்தையே - இவ்விளிகள் சன்மார்க்கி யாக இருப்பார் வழியன்றிப் பிறர்பால் வருவனவோ? வெள்ளை உடையும் மலைப்பொழிவும் என்னுள்ளக் கள்ளம் அழிக்கும் கலை என்றும் “áYití« MÂí« brªÚU« nr®ªj âUîUt« ght¥ bghU¥ò (kiy) mÊ¡F«” v‹W« fhQ« âU.É.f., மலரைப் பறிக்கிலென்; மாலை புனைந்திலென்; மந்திரத்தின் ஒலியைப் பெருக்கிலென்; ஓவெனப் பாக்களை ஓதிலென் என்னும், வாக்கை அடக்கின், வயிற்றை ஒடுக்கின், மயிர்வளர்த்து மூக்கைப் பிடித்திடின் மூச்சைத் தடுத்திடின் முத்தியின்பம் தேக்குமோ? என்று வினாவுகிறார். ஒழுக்கம் விழுப்பம் உயிரினும் ஓம்பென்று உரைத்திருந்தால் கொழிக்குமோ என வினாவி, கிறித்து வாழ்ந்து காட்டியதைச் சுட்டுகிறார். அன்புடைய அறவோர் என்பும் பிறர்க்கு உரியரென எழுந்த மொழிக்கு உகந்த இலக்கியமாய் இலங்கி நிற்பவர் ஏசுநாதர் என்கிறார். யான் மாணாக்கனாய் இருந்தபோது பைபில் படித்தேன். அப்பொழுது கிறிதுவத்தில் என்னுள்ளம் படியவில்லை. பின்னே என் உள்ளம் அதில் ஈடுபட்டது. இதுபற்றி என் வாழ்க்கைக் குறிப்பில் விளக்கம் செய்துள்ளேன் என இந்நூல் அணிந்துரையில் வரைந்துள்ளார். நூலில், பள்ளியில் உன்றன் பான் மொழி பயின்றேன் பரிசிலை உளங்கொடு; நாயேன் எள்ளினேன் உன்னை; இன் மொழி பின்னை இரங்கவும் வருந்தவும் செய்யக் கள்ளனேன் அழுதேன்; பிழைபொறுத் தாண்டாய் என்கிறார். அறத்தின் இயல்பிலும், ஏசினேன் உன்னை இனிய மொழியை இளமையிலே கூசினே னில்லை குறையினைப் பின்னே குறித்தழுதேன் ஏசுவே! உன்னருள் என்னுளம் எய்திய தெப்படியோ? என்கிறார். வாளேந்திப் போர்புரிந்த வாகையரும் மாண்டுவிட்டார்; வாளேந்தாக் கிறிதுவேநீ மரித்தெழுந்தாய் வீரவள்ளால்! வாளேந்தும் வழியுழன்றேன் வழிகண்டேன் மரித் தெழுவேன் வாளேந்தா நெறிவளர்க்க மலரடியில் அடைக்கலமே. என்கிறார். திரு.வி.க. எங்கேனும் வாளேந்தினாரா? கூறி முறையிடுவது பொய்மையா? ஒப்புக்கா? போலிமைக்கா? உலகுக்கா! இல்லை! பொருநரையும் நேசித்தல், வெட்டுபவர் வெட்டுண்பர்; கொலைஞரின் தீச்செயலைப் பொறுத்தருள் செய்த புனிதம் என்னும் இன்னாசெய்யாமை நெறியைத் தாம் உணர்ந்து போற்றி யமையைக் குறிப்பதே இஃதாம். தீயரைச் சேர்தல் தீமையென் றெண்ணிச் சிந்தையில் ஒதுங்கியே நின்றேன்; நாயினேன் என்றன், நலன்களை நாடி நயந்தனன்; பாவியாய் வளர்ந்தேன்; பேயினை யொழித்த பெரியனே! ஜெபத்தில் பித்தினைக் கொண்டபின் ஐயா! தீயரை நண்ணித் திருப்பணி செய்தேன் தீமைகள் அணுகவும் இலையே என்று தம் முந்தை நிலையையும் பிந்தை நிலையையும் குறித்தல் நோக்கின் உண்மை விளக்கமாம்! இனி இரு குறிப்புகளைக் குறிக்கலாம்: தமிழ் நெறி தவறா வகையில் பிறசொல் செய்யுளிலும் உரையிலும் ஆளப்பட்டு வந்த நெட்ட நெடுங்கால ஆட்சி, மணிப்பவழ நடையால் சிதையத் தொடங்கியது. உரைநடையைப் பற்றிய அந்நோய் 17ஆம் நூற்றாண்டின்பின் பாடலையும் பற்றியது. திரு.வி.க. தம் பாடல்களிலும் பிறமொழி எழுத்துச் சில அமைய நூல்யாத்தமை ஒன்று. தனித்தமிழ் இயக்கம் தோற்றிய பின்னரும் அதனை முற்றாக ஏற்றாரில்லை என்பது அது. பாவலர் பாரதியார் பாடல்களில் ஆயிற்று போயிற்று என்பவை ஆச்சு போச்சு என இடம் பெறலுண்டு. âU.É.f., பெருகலாச்சே, சார் பழிந்து போச்சு, அமுதமாச்சு என வழு வழக்குகளைக் கொள்ளுகிறார். பிற சொற்களை விலக்க விலக்கத் தமிழ் வளம் சிறக்கும் என்னும் கொள்கையும், பிறசொல் தமிழொடு புணர்ந்த சொல்லாக இடம் பெறலே மரபுக்காப்பு என்னும் கொள்கை யும், மாறுபடுதல் கொண்டு இக்காலப் படைப்பாளர் இவற்றைத் தம் வழியாக மேற்கொள்ளல் ஆகாது என்பதைச் சுட்டிக் காட்டவே இக்குறிப்புகள் எழுதப் பட்டனவாம். புதுமை வேட்டல் பழமையின் சேயே புதுமை ஆதலால், புதுமையின் தாய் பழமை. என்பது விளக்கமாம். உலகம் மாறுதல் உடையது. அவற்றை அளவிட முடியாது. அறிஞர் மார்க்சு கண்டது புது உலகம் எனப்படுகிறது. ஆனால், அது முழுமையானதன்று. அது சன்மார்க்க வழிப்படுவதாயின் முழுமையாம் என்று அணிந்துரை யில் குறிப்பிடும் திரு.வி.க. அந்நோக்கில் சன்மார்க்க சமாஜம் என்று ஒன்றமைத்து அதன்வழியில் தொண்டாற்று வதைச் சுட்டுகிறார். புதுமை வேட்டல் 1945 இல் வெளிவந்தது. சன்மார்க்கக் கொடி, பழமையும் புதுமையும், தெய்வப் புதுவுலகம், இயற்கைத் தெய்வம், ஒளி, வெங்கதிர், காளம், அறப்புரட்சி, திருப்பணி, சன்மார்க்க ஆட்சி, சன்மார்க்கச் சாத்து, தாய்மைப்பெண் என்னும் பன்னிரு பகுப்பில் நூலை நடைப் படுத்துகிறார். பாடல்கள் இசைப்பா, கண்ணி, அகவல் என்னும் வகையின. சன்மார்க்கக் கொடி வெண்ணிறமானது என்றும், சன்மார்க்கக் குருவர் எண்மர் என்றும் அவர்தம் போதனை எட்டு என்றும் கூறும் திரு.வி.க. சன்மார்க்கத்திற்கு மாறாம் தன்மையை விரித்துக் கூறுகிறார். சன்மார்க்க முரச முழக்கமும் செய்கிறார். பகை முரண் கொலை குண்டு இல்லா நெறி சன்மார்க்க நெறி என்பது இதன் உட்கிடை. மனத்துக்கண் மாசின்மை அறம் என்னும் குறளும், வள்ளலார் ஒளி வழிபாடும், வெள்ளுடையும் ஆகிய வெண்மையைக் கருதலாம். திரு.வி.க. உள்ளம் உடை நடை யாவும் சன்மார்க்கமேயாம். பழமை புதுமை என்பவை நடைமுறையில் இல்லை என்பது பழமையும் புதுமையும். பழமைக்குப் பழமையும் புதுமைக்கும் புதுமையுமாம் ஒன்றைப் பழமை என்பதா? புதுமை என்பதா? பழமையே புதுமையாய்த் தோற்றமுறல் இல்லையா? வடக்கு தெற்கு முதலிய குறியீடு இயற்கையில் மாறாததா? மின்னல் ஒருமை; நிறங்கள் பன்மை; பன்மை ஒருமை நிலைபேறானவையா? பழமைப் பகுப்பு, புதுமை ஒருமை பெறல் நலம் அல்லவோ என்பது பழமையும் புதுமையும். தெய்வம் என்பது வித்தில்லா ஒன்று. அதனை வேர்கண்டு ஆய்வது எப்படி என வினாவி ஆய்வுக்கு எட்டாப்பொருள் என்கிறார் தெய்வப் புது உலகத்தில். ஆழாக்கால் உழக்களத்தல் அறிவுடைமை ஆமோ? அகண்டிதத்தைக் கண்டத்தால் அளக்கும் அறிவென்னே? என எள்ளுகிறார். அன்பாகி அருட்குரவர் வீரரிடம் தெய்வம் அமர்ந்திருக்கும் என எடுத்துக் காட்டுகிறார். இயற்கை தாண்டிய இறைநிலை எட்டாதது. இயற்கையாகி இருக்கும் நிலை எட்டக்கூடியது. எண்ணுவார் உணரக் கூடியது என இயற்கை இறைமையை எடுத்தெடுத்துரைக்கிறார். காற்றை உட்கால் என்றும் மூச்சுக் காற்றென்றும் பிரித்துக் காட்டுகிறார் ஒளிப்பகுதியில். உட்கால் பற்றியே திருமூலர் கூறினார் என்றும், அதனை மூச்சுக் காற்றுக்குக் கொண்டு சோற்றுத்துருத்தியை ஓம்பும் - தூய சோதி உயிரொளி சூழலும் ஆகா என்கிறார். மெய்ஞ்ஞானி உட்காலை, விஞ்ஞானி ஏலான் அவன் சட ஆய்வாளன்: சத்தென்னும் சித்தாய்வாளன் அல்லன் என்கிறார். சாவா நிலையென்று சாற்றல் ஒரு சம்பிரதாயம்; சாகாநிலை பிறவாமை; என்றும் சாந்த ஒளியாகித் தற்பரமாதல் என்கிறார். வெங்கதிரில் வெளிப்படு பாடல்கள் நாற்பதும், காப்பியக் கவிவல்லார் காட்சிகளின் தொகுப்பெல்லாம் ஒருங்கே தொகுப்பினும் விஞ்சுவதாய் அமைந்துளது. காளமாவது ஊது கொம்பு; வளைந்து நீண்ட குழற்கருவி; பேரொலி செய்வது; உலகம் இயற்கையானது; என்றும் இருப்பது; முயற்சிக்கு மூலமானது; மூடம் அழிப்பது - என்பவை முதலாகக் காளம் ஊதேடா என முழங்கும் எண்பாடல்களை யுடையது. அறப்புரட்சி, அமைதிப்புரட்சி வேண்டும்; மற்றைப் புரட்சி வேண்டா என்பது அறப்புரட்சி. நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் முதலியவை சீவக்கோயில் சிதைப்பு குண்டு கூடம் பெருக்கும் அரசு கொல்லும் கல்வி வளர்க்கும் அரசு - தயவு மார்க்கத்தை எங்ஙனே ஓம்பும்? - என்பவை முதலியவை திருப்பணி. சாந்தமளிக்கும் சமதர்ம ஆட்சி சன்மார்க்க ஆட்சி என்பதை விரிப்பது சன்மார்க்க ஆட்சி. இறையைக் கடந்த நிலையில் காணல் எட்டா. கலந்த நிலையில் காணல் முறை. கலந்த நிலைஎது கண்முன் - நிற்கும் காட்சி இயற்கை கருதல் எளிதே புலன்களில் நன்கு படியும் - அதில் புகப்புக ஆனந்தம் பொங்கி வழியும் என்கிறார். சன்மார்க்கச் சாத்து என்பது கல்வி, உலகம், உடல், உணவு, இசை, காதல், குழவி, இல்லம், தொழில், அரசு, எளிமை, பொதுமை, தொண்டு, சோதரம் (சகோதரம்), அறம், வாழ்த்து என்னும் பதினாறு உட்பகுதிகளைக் கொண்டது. 425 அடி அகவலாய் அமைந்தது. தனிச் சுவடித் தகைமையது. வாழ்வின் பிழிவாகச் சிறப்பது. சாத்து என்பது சாற்று. சாற்றுக்கவி சாத்துக்கவி எனப்பட்டது அறிக. இனி, சாத்து என்பது பல்பண்டம் பகர்ந்து விற்கும் உள்நாட்டு வணிகமுமாம்.அச்சாத்து வணிகன் கோவலன் தந்தை மாசாத்தன் என்பதையும் சீத்தலைச் சாத்தன் என்னும் பெருமையனையும் நினைக. ஆசையைச் சுருக்கி அன்பைப் பெருக்க இல்லறக் கல்வி இயற்கைக் கல்வி உள்ளம் திருந்தின் உலகம் திருந்தும் உடல்நலம் மற்றவர்க் குழைக்க ஊக்கும் பல்லும் நாவும் மெய்காப் பாளர் சீறி விழுந்தால் ஏறும் கொதிப்பு குயிற்கும் மயிற்கும் கூலி இல்லை பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை குழந்தை ஆடும் குடிலே வீடு ஊரின் பசுமை உள்ளப் பசுமை நாஞ்சிலும் இராட்டையும் நாட்டின் ஈரல் பட்டினி இன்மை நாட்டின் தன்மை எளிமைப் பொதுமை எவர்க்கும் இனிமை பொதுமை குலைந்தது புரோகித அரசால் ஊறுசெய் யாமை உண்மைத் தொண்டு எல்லாம் ஓருயிர் அவ்வுயிர் இறையே கருத்து வேற்றுமை திருத்தும் உலகை தொண்டு செய்யின் துலங்கும் அறமே சன்மார்க்கச் சாத்தில் வருவன சில இவை. இயற்கையே தாய்மையாய் இலங்குதலைக் கூறும் திரு.வி.க. பாவை தாலி அறுத்திடல் மூர்க்கம் பட்டம் முண்டை என்றீதலும் மூர்க்கம் என்கிறார். இவற்றை வீழ்த்த இளைஞர் எழுக என்கிறார். புதுமை வேட்டலில் சன்மார்க்கச் சாத்து எவரும் பல்கால் பயின்று பற்றுக்கோடாகக் கொண்டு வாழத்தக்க பெற்றியது. சிவனருள் வேட்டல் சிவம் என்னும் செம்பொருளைப் பாழ் எனக் கண்டு தெளிந்து, அப்பாழில் இருந்து இயற்கைக் கூறுகள் கிளர்ந்து, அவ்வியற்கைக் கூறுகளில் இருந்து காவியம் ஓவியம் முதலாம் கலைகள் வடிந்து பெருகிய பெற்றியைக் கூறுவது சிவனருள் வேட்டல். பாழ் ஆராய்ச்சி சிவத்திற் சென்றது; சிவம் தன்னைப் பாட என்னைத் தூண்டியது; பாடல் எப்படி அமைந்தது? தத்துவப் பாடலாக அமைந்தது. பாட்டுப் பாடலாக அமையவில்லை எனத் திரு.வி.க. தம் அணிந்துரையில் கூறுகிறார். நூல் 1947இல் வெளிவந்தது. நூல் கடந்த நிலை முதலாக, சிவநாமம் ஈறாக இருபத்தொரு தலைப்புகளைக் கொண்டுள்ளது. பாழ் என்பதைப் பரிபாடல் வழங்கும். வளியிடை வழங்கா வானம் எனனும் கழக நூற் காட்சி. அதனைக் கடந்த நிலை என்பதில் விளக்குகிறார் திரு.வி.க. அறிவு ஆய்வு தவம் என்பவற்றில் தோயத்தோய இறுதியில் தோற்றமுற்றது பாழ். அப்பாழ், வெறுமை சுட்டும் சுழி (சைபர்). அச்சுழி, ஒன்றிரண்டாய் மேன்மேலும் உயர்ந்து செலல் மரபே ஒன்றுதிக்கும் இடமெங்கே ஒன்றுமிலாச் சைபர் ஒன்றுடனே அதுசேரச் சேரஒரு பத்தாய் ஒருநூறாய்ப் பெருகுமுறை உள்ளங்கைக் கனியே என விளக்குகிறார். பாழ் விரிவாக்கம் பார் என்பது கடந்தநிலை. கலந்த நிலை என்பது பரிதிமுதற் குலங்களெல்லாம் குலவி ஒளிபெறக் கலந்துகூடி நிற்கும் நிலையாகும். சுடர் - ஒளி, கடல் - ஒலி, வயல் - பசுமை எனக் கலந்து நிற்கும் நிலையை விரித்துக் கூறும் பகுதி இது. இயற்கைக்கு அசைவில்லை; இறைமைக்கும் அசைவில்லை; இரண்டும் கலந்த நிலையில் அசைதல் வியப்பினும் வியப்பாம் திருக்கூத்து என்பது மூன்றாம் பகுதி. கூத்து விளக்கம் கூர்தலறம் என்கிறார். சொற்பதம் கடந்த வெளியை நேரிடைக் காண உதவியது எது? அது, சிதம்பரம் என்பது நாலாம் பகுதி. மதங்கலவாத் திருக்கூத்து ஞானவெளி காட்டும் என்கிறார். அன்னை இயற்கை; அதனுடன் அப்பன் கலந்து ஆடுவது கூத்து என்பதை விரிப்பது கூத்தன். ஆடவில்லை கடந்தநிலை; ஆடல் நிலையே அருள்வைப்பு என்கிறார். சீலமே சிவம் என்பது ஆறாம் பகுதி. திருமூலர் மந்திரமொழியென இலங்குகிறது சிவப்பாடல் கலிவிருத்தம் ஐந்தும். மின் ஒன்று; அதன் குவை, நிறங்கள் பலபொருந்துதல் போலச் சிவமொன்றே பலவுருவாய் விளங்கும் என்கிறது உருவம். கலை உருவப் பயன் கண்ணையும் கருத்தையும் கவரும் மாட்சியைக் காட்டுவது என்கிறது கலை உருவம். உருவப் பயன் என்பதில் செஞ்சடை, கங்கை முதலியவற்றால் அறியவரும் உண்மைகளை விரித்துரைத்து, உள்ளுறை கோலம் கொண்ட உத்தமா போற்றி போற்றி என முடிக்கிறார். புராணக் கலைகளில் உள்ளுறை உண்டு; அவற்றை உணராது கதைகளாக மட்டும் கொள்ளல் பாழாம் என்னும் திரு.வி.க. கதைகளின் நுட்பங்களைக் குறிப்பது புராணக்கலை. மும்மலம் அழிக்கும் நுண்மை முப்புரம் எரித்த காதை நம்முயிர் சிவமாம் தன்மை நாடுதல் வள்ளிக் காதை என்பவை அவற்றுள் இரண்டு. சாதிப்பிரிவு, பெண்ணிழிமை முதலியவை கூறும் மூடக் கதைகளைக் கடியும் திரு.வி.க. நற்பயன் விளைக்கும் காவியக் கதைகளை வரவேற்கிறார். இது புராணக் கலையின் இரண்டாம் பகுதி. நூலை ஐந்தகப் பாவாகவே கொண்டு செல்லுதலால், வேறு சில தலைப்புகளிலும் இரட்டை காண்கிறோம். அடுத்துவரும் இரட்டை, வழிபாடு. ஒன்றாத மனம் ஒன்றச் செய்வது வழிபாடு . அது திருத்தொண்டர் வழிபாடாய், திருநாட்டு வழிபாடாய்த் திகழக் குன்றை முனி (சேக்கிழார்) அருளியதைச் சுட்டுகிறார். சன்மார்க்கம் பெருகவும், தொண்டு புரியும் வாழ்வே மல்கவும் வேண்டுகிறார். அடுத்த பகுதி மன அடக்க இரட்டை. மனம் மந்தி என்பர்; மனம் ஐந்தின் தளை அறுத்தால் மந்தி என் செய்யும்; சிவத்தை நினைந்தால் மறக்குறும்புகள் மாயும்; சிவ நிலையாவது தவநிலை; செருக்கு அழிநிலை எனத் தெளிவிக்கிறார். ஒருமை வழிபாடாய்ப் பண்டு இருந்தது; பின்னே பலர் என வழிபாட்டில் இருக்குகள் ஆயின. பால்திக் நாடு, நீலாற்றுப் பகுதிகளிலும் பண்டு சிவ வழிபாடு திகழ்ந்தது. அவ்வழிபாடு பெருகுதல் அமைதிக்கு வழியாம் என்பது உலகப்பாட்டு. பாரத இயற்கை எழில் வழங்கும் இறைமையை விளக்குவது பாரதப் பாட்டு. சிவத்தை நினைத்தால் நரைதிரை மூப்பின்றி வாழலாம்; உயிர்ச்சமனிலை, பெண்ணுரிமை, அகத்தழுக்கு நீக்கம், பொதுமையறம் என்னும் சீர்திருத்த மூலம் சிவமென்பது சீர்திருத்த இரட்டையாம். அன்புருவாம் இறையை அன்பால் அடைந்த அடியார்களை அடுக்கி யுரைப்பது அன்புப்பாட்டு. சிவநாமம் சொல்லல், சிவவுருவம் எண்ணல், நிகழின் கல்லால் மரத்துக் காட்சியைக் காணலாம். அது, கல்லாக் கலைபயில் பள்ளி எனச் சிவநாமா வளியை நிறைக்கிறார். உருவமாட்சியில் ஒன்றி அருவ இறையை உணரச் செய்விப்பதற்கு அமைந்த நூல் சிவனருள் வேட்டல். திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன் பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெற வில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! அன்புடன் இரா. இளங்குமரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் முன்னுரை 2 வாழ்த்து 5 பாரத நாடு 6 தாயின் காட்சி 9 தமிழ்நாடு 14 தமிழ்த்தாய் 20 சத்தியாக்கிரக விண்ணப்பம் 23 திலகர் 26 காந்தி 31 சுதந்திர நாமாவளி 36 வேண்டுதல் 39 முருகன் அருள் வேட்டல் முன்னுரை 43 திருச்செந்தூர் 45 திருப்பரங்குன்றம் 49 பழமுதிர்சோலை 51 பழனி 53 திருவேரகம் 55 குன்றுதோறாடல் 57 கதிர்காமம் 59 கழுகுமலை 62 குன்றாக்குடி 64 சென்னி மலை 66 திருச்செங்கோடு 69 வேளூர் 72 திருமயிலம் 75 திருப்போரூர் 78 இளையனார் வேலூர் 81 குமரகோட்டம் 83 திருத்தணிகை 85 கந்தமாதனம் 88 பொது 90 காத்தல் 93 வாழ்த்து 94 திருமால் அருள் வேட்டல் முன்னுரை 96 1. தென்திருப்பேரை 99 2. ஆழ்வார் திருநகர் 102 3. திருமாலிருஞ்சோலை 104 4. ஸ்ரீவில்லிபுத்தூர் 107 5. திருவரங்கம் 109 6. திருவரங்கம் 112 7. திருவரங்கம் 115 8. திருவரங்கம் 117 9. சீர்காழி 120 10. தில்லை 122 11. திருக்கோவலூர் 124 12. திருக்காஞ்சி 126 13. திருவல்லிக்கேணி 128 14. திருவல்லிக்கேணி 131 15. திருவல்லிக்கேணி 134 16. திருமலை 137 17. திருமலை 139 18. திருமலை 141 19. நாமாவளி 144 20. வாழ்த்து 148 பொதுமை வேட்டல் முன்னுரை 151 1. தெய்வ நிச்சயம் 155 2. தெய்வ முழக்கம் 158 3. தனிமைத் தெய்வம் 161 4. இயற்கைத் தெய்வம் 164 5. இயற்கை நெறி 167 6. இயற்கை வாழ்வு 170 7. பெண்மை 173 8. மனிதப் பிறவி 176 9. மானுடம் 179 10. மனிதம் 182 11. சன்மார்க்கம் 185 12 சன்மார்க்கம் 188 13. சமரசம் 191 14. சமரச சன்மார்க்கம் 194 15. சன்மார்க்க வாழ்வு 197 16. குருமார் 200 17. எண்மர் 203 18. வாழ்த்து 205 19. குருமார் ஒருமை 206 20. குருநாதன் 209 21. மனம் 212 22. மனக்குரு 215 23. முறையீடு 218 24. முறையீடு 221 25. முறையீடு 224 26. முறையீடு 227 27. முறையீடு 230 28. விண்ணப்பம் 233 29. அருள் வைப்பு 236 30. குறை களைவு 239 31. வழிபாடு 242 32. வழிபாடும் கோயிலும் 245 33. திருக்கோயில் 248 34. யோகம் 251 35. யோகப் பயன் 254 36. யோக உடல் 257 37. தியானம் 260 38. தியானம் 263 39. தியானம் 266 40. கருணைத் திறம் 269 41. அருளாட்சி 272 42. ஆனந்தம் 275 43. வேண்டுதல் 278 44. போற்றி 281 கிறிதுவின் அருள் வேட்டல் அணிந்துரை 286 1. மாசு மனிதம் 287 2. அறத்தின் இயல் 288 3. அலகிலொளி 290 4. உலகமெலாம் 292 5. பொய்யிலே 296 6. உலகெலாம் 299 7. ஏசு கிறிது 301 புதுமை வேட்டல் அணிந்துரை 304 1. சன்மார்க்கக் கொடி 305 2. பழமையும் புதுமையும் 308 3. தெய்வப் புது உலகம் 310 4. இயற்கைத் தெய்வம் 313 5. ஒளி 315 6. வெங்கதிர் 319 7. காளம் 325 8. அறப்புரட்சி 327 9. திருப்பணி 329 10. சன்மார்க்க ஆட்சி 332 11. சன்மார்க்கச் சாத்து 334 12. தாய்மைப் பெண் 347 சிவனருள் வேட்டல் அணிந்துரை 350 1. கடந்த நிலை 351 2. கலந்த நிலை 353 3. திருக்கூத்து 355 4. சிதம்பரம் 356 5. கூத்தன் 358 6. சிவம் 360 7. உருவம் 361 8. கலை உருவம் 363 9. உருவப் பயன் 364 10. புராணக் கலை 365 11. புராணக் கலை 366 12. வழிபாடு 367 13 வழிபாடு 368 14. மன அடக்கம் 369 15. மன அடக்கம் 371 16. உலகம் 373 17. பாரதம் 375 18. சீர்திருத்தம் 377 19 சீர்திருத்தம் 378 20. அன்பு 379 21. சிவ நாமம் 381 உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் (1931) முன்னுரை பாட்டென்பது சொல்லடுக்கன்று; அணிச்செறிவன்று; யாப்புக் கட்டுமன்று. இயற்கையோடு இரண்டற இயைந்த மனத்தினின்றும் விரைந்தெழும் மகிழ்ச்சியின் பொங்கல் பாட்டாகும். இம்மகிழ்ச்சிப் பொங்கல் பெரிதும் காலதேச வர்த்தமான நிலைமைகளின் அளவையில் எழுவது. இந்நாளில் இயற்கையோடியைந்த வாழ்விற்கு இடனுண்டோ? பொதுவாக உலகிலேயே இப்பொழுது இயற்கைப் பாவலர் தொகை அருகிவருதல் கண்கூடு. இதற்குக் காரணங் கள் பலபடக் கூறலாம். விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. சிறப்பாகக் குறிக்கத்தக்கன இரண்டு. ஒன்று அரசியற் போராட் டம்; மற்றொன்று இயந்திர இயக்கம். இவை ஆக்கம் பெற் றில்லாப் பழைய காலத்திலேயே உலகில் இயற்கைப் பாவலர் தொகை பெருகியிருந்தது. இடைநாளில் இயற்கை மணமும் யாப்புக் கட்டும் விராவிச் செறியப் பாக்கள் யாக்கப்பட்டன. நாளடைவில் முன்னையது சென்று தேய்ந்து இறுதலாயிற்று. இயற்கைப் பாவலர் தொகை அருக அருக, அழுக்காறு, அவா, எரி, பகை, போர், கொலை, கொள்ளை முதலிய பேய் களுக்கு உலகம் இரையாதல் இயல்பு. இப்பேய்களுக்குத் தற் போதைய உலகம் இரையாகி வருதலை எவ்வெழுத்தால் எழுதிக் காட்டுவது? பொல்லாத கொலை இயக்கங்களும், கொள்ளை இயக் கங்களும் தோன்றி, மக்களை மாக்களாக்கி, உலகை எரிக்கின்றன. இவ்வெரியில் நெய் பெய்து, அழலைப் பெருக்கிப் பரப்புவது பத்திரிகையுலகின் தொண்டாகிவிட்டது. இவ்வெரியுலகில் இயற்கைப் பாட்டு எங்ஙனம் எழும்? இக்கால உலகில் வாழும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது! உரை நடை எழுதுவது எனது தொழில். (உரையிலும் பா அமைதல் உண்டு. உரைச்செய்யுள் பாச்செய்யுள் என்னும் வழக்கை நோக்குக.) பாக்கள் எழுதல் வேண்டுமென்று யான் எண்ணி முயல்வதில்லை. பழைய இயற்கைப் புலவர்களின் பாடல்களைப் பாடி இன்புறுவதில் எனக்கு வேட்கை அதிகம். பாடல் எழுத யானே வலிந்து எண்ணி முயலாதொழி யினும், அதற்குரிய அவசியமும் நெருக்கும்மட்டும் நேராம லிருப்பதில்லை. ஆனால் அவ்வவசியமும் நெருக்கும் பலப்பல சமயங்களில் நேர்வதில்லை. மிகச் சில சமயங்களிலேயே அவை நேர்வதுண்டு. சில புலவர் தமது நூல்களுக்குச் சாற்றுக் கவிகள் விழைந்த போதும், கெழுதகை நண்பர் சிலர் இவ்வுலக வாழ்வை நீத்த போதும் பாடல் எழுதும் அவசியமும் நெருக்கும் நேர்ந்திருக் கின்றன. மன அமைதி குலையும்போதும் பாட்டெழுத அமர்வது எனது வழக்கம். மன அமைதி எனக்கு எளிதில் குலைவதில்லை. பலதிற ஆவேசங்களிடைச் சிக்குறவும், மகாநாடுகளில் - பெரிதும் யான் தலைமை வகித்த மகாநாடுகளில் கருத்து வேற்றுமை காரண மாகச் சில தோழர்கள் எழுப்பிய புயல்களிடை அகப்படவும், சில சமயங்களில் மகாநாடுகள் இருண்ட காடுகளாகிக் கிளப்பிய புலிகளின் பாய்ச்சல், யானைகளின் வீறு, சிங்கங்களின் கர்ச்சனை முதலிய இடி முழக்கங்களில் மூழ்கவும், தொழிலாளர் வேலை நிறுத்தங்களில் நிகழ்ந்த பெரும் பெருங் குழப்பங்களில் ஈடுபட வும் வாய்ப்புகள் நேர்ந்த போதும் என் மன அமைதி குலைந்த தில்லை. இவ்வேளைகளில் அமைதியாகவே என் கடன்களை ஆற்றிக் கொண்டிருப்பேன். கொந்தளிப்பு நுழையாதவாறு ஒல்லும்வகை மனத்தைக் காப்பது எனது இயல்பு. ஆனாலும், அசையா அமைதி, இடை யறாது நிலவும் முழு நெஞ்சம் இன்னும் பெற்றேனில்லை. எளி யேன் என்செய்வேன்! யான் தாங்கியுள்ளது மனிதப் பிறவி! அப்பிறவி குறைபாடுடையது; வழுக்குதற்குரியது. பிறவிக் குறைபாடு ஒவ்வொருபோது சிறிதாதல் அமைதியைக் குலைத்து வழுக்கி வீழச் செய்கிறது. குலைந்த அமைதியை மீண்டும் பெறவேண்டிக் காடு மலை கடற்கரைகட்குச் செல்வேன்; சென்று இயற்கைக் கோலங்களை ஊன்றி நோக்குவேன்; இயற்கைக் காவியங்களைப் படிப்பேன்; அமைதி கூடிவிடும். அங்கேயும் அவைகளிலும் அமைதி கூடாத வேளையில், மனத்தை ஒருமைப்படுத்துதற்குப் பாடல் எழுதப் புகுவேன். அப்பொழுது என் மனம் பாட்டில்படிந்து அமைதி யுறும். இதனால் யான் பாக்கள் யாக்கப்புகுதல் மிகச் சில சமயங்களில் என்பது புலனாகும். அவ்வாறு அடியேனால் யாக்கப்பெற்ற பாக்களுள் சில இந்நூற்கண் திரட்டப்பட்டிருக்கின்றன. இரண்டொன்று வேறு சமயங்களில் பாடப்பட்டன. பாக்களின் பெரும்பான்மைப் போக்கையொட்டி உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்னுந் தலைப்பு இந்நூலுக்குச் சூட்டப்பட்டது. இப்பாக்கள் ஒரே காலத்தில் யாக்கப்பட்டன அல்ல; வெவ் வேறு காலங்களில் யாக்கப்பட்டன. இவைகளிற் சில அவ்வப் போது என்னுடைய பத்திரிகையிலும், நூல்களிலும் வெளியா யிருக்கின்றன. இந்நூற்கண் போந்துள்ள பாக்கள், உரிமையில் வேட்கை, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, உலக சகோதர நேயம், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாமை, ஒப்புரவு, பயன்கருதாப் பணி, இயற்கையில் வேட்கை, சமரச சன்மார்க்க நாட்டம் முதலிய வற்றில் மக்களுக்கு ஊக்கமூட்டுமென்று நம்புகிறேன். குற்றங் குறைகளைத் தமிழ்ச் செல்வர்கள் பொறுத்தருள் வார்களாக. சென்னை இராயப்பேட்டை 12-9-1931 திருவாரூர்- வி. கலியாணசுந்தரன் வாழ்த்து சுதந்திரத் தெய்வம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி. 1 சுதந்திர வாழ்த்து விண்கதிர் நிலவே போலும் விழிமணி யொளியே போலும் பண்ணிசை காதல் போலும் பயில்மனத் தெண்ணம் போலும் தண்ணதி மேக வோட்டம் தமிழ்மொழி பாட்டே போலும் உண்ணிலை யுயிரி னுக்கிங் கொளிர்சுதந் திரமே வாழி. 2 சுதந்திரச் சிறப்பு மீன்கடலே யெழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண்கம்ப மானாலும் ஊன்கொந்திக் கண்டதுண்டம் ஒன்னலர்கள் செய்தாலும் வான்மருவ நேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. 3 பாரத நாடு மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர்சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை இன்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு. கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதியெழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகப்போ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடே. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே. 8 தாயின் காட்சி போரூரன் மலைமீது பொருந்தமைதி நாடிப் புல்செறிந்த பாறையிடம் புங்கமரத் தடியில், பாரூரும் பார்வையெலாம் பையமறைந் தோடப் பாரதத்தாய் நினைவிலுறப் பரிந்தயரும் போதில், காரூரும் பொழிலசைவில் கண்பிடுங்கும் மின்போல் கனகவொளி மண்டபமே காந்தமென ஈர்க்கச் சீரூரும் உள்நுழைந்தேன்; திகழ்ந்ததொரு சபையே செப்பரிய உலகசபை; சிறப்புடைய தென்றார். 1 அரியிருக்கை யேறிமுடி அணிந்துயர்கோல் தாங்கி, ஆண்மையொடு வீற்றிருக்கும் அரசிகளைக் கண்டேன்; தெரியவென்னை ஈன்றவள்தன் திருக்கொலுவைத் தேடிச் சிறுகன்றே யெனவங்குத் திரிந்தலைந்தேன் திகைக்தே கரியநிறத் தென்மீது கண்செலுத்தி னார்கள்; காய்வர்களோ வெனுங்கவலைக் கருத்தொருபால் வாட்ட, அரிவையர்கள் முகநோக்கி யார்யாரென் றுணர; அருகணைந்தேன் தெரிந்தவரும் அருளினரிவ் வாறே. 2 நானாநாற் பத்தாண்டில் நலமுற்ற ஜப்பான் நாயகிநான்; பெருநதிகள் நானிலத்தில் பூண்டே ஆனாத வளமுடைநான் அமெரிக்கா செல்வி; அடுக்கடுக்காய்க் கலைவினைகள் ஆக்குஜெர்மன் யானே; கானாடுங் கனிமொழியும் ஓவியமுங் காதல் கவின்பிரான்ஸு திருமகள்யான்; காண்கவென முறையே தேனாறும் மலர்வாயால் தெரிவித்தார் தம்மைச் சிரித்தொருத்தி முடிவினிலே செப்பியதைக் கேண்மோ. 3 என்னருமை இந்தியனே என்னையறி யாயோ? என்னாட்சி கதிர்மறைதல் எப்பொழுது மில்லை; என்னிலத்தின் என்கடலின் என்வெளியின் பரவல் எவர்க்குண்டோ இவ்வுலகில் எங்குமென தாணை; உன்னலத்தின் பொருட்டாக உன்னையுமே யாளும் ஓரரசி என்னலுமே; உயர்சபையில் அன்னை இன்மை, குடல் முறுக்கியவண் எனைநீக்கக் குமுறி இடியிடிப்ப மழைபொழிய ஈர்ம்பொழிலில் நின்றே. 4 வேறு பொழிலிடையும் ஒளிர்கதிரே! பூவிற் றொன்மைப் புகழ்பரதத் தாயெங்கே? பொங்கி நின்று நிழலருளும் மரஞ்செடிகாள்! நிமல ஞான நிறைவீரக் கொடியெங்கே? நீண்டு வானில் எழுகுடுமி மலைக்குலங்காள்! இனிய வெண்மை இமயமுடி அணங்கெங்கே? எங்கே? அன்பில் அழகுநில வுந்தருவி அலைகாள்! கங்கை ஆறணிந்து கடலுடுத்த அம்மை யெங்கே? 5 ஆடுகின்ற மயிற்குழுக்காள்! ஆடல் நுட்ப அருங்கலையை முதலீன்ற அன்னை யெங்கே? பாடுகின்ற புள்ளினங்காள்! பண்ணின் பண்பைப் பாரினுக்குப் பரிந்தளித்த பாவை யெங்கே? ஓடுகின்ற புயற்றிரள்காள்! உரிமை நீர்மை உலகசகோ தரமென்ற ஒருத்தி யெங்கே? தேடுகின்றேன் தேவியெங்கே? தேவி யெங்கே? திரிகாற்றே நீயாதல் செப்பாய் கொல்லோ? 6 வடமொழியுந் தென்மொழியும் மலர்வா யெங்கே? வகைவகையாய்ச் சித்திரங்கள் வரைகை யெங்கே? திடமளிக்குங் கருணைபொழி செங்கண் ணெங்கே? சேர்ந்தவர்க்கு விருந்தளிக்குஞ் சிந்தை யெங்கே? சுடரொளிபொன் நவமணியுந் துன்ப நீக்குஞ் சுவைமணியுந் துலங்குமுடற் சுரங்க மெங்கே? இடமகன்ற இந்நிலத்தில் என்தா யெங்கே? எங்கேயென் தாயெங்கே எங்கே எங்கே? 7 வேறு எங்கேயென் றொருமனத்தால் ஏக்குற்ற வேளை எழுந்ததொலி விழுந்தகுர லிடத்திருந்தே மைந்தா! இங்கேயென் பழங்கதைகள் இயம்புவதா லென்னே? என்னிலையோ நிர்வாணம்; எச்சபையார் ஏற்பார்? பொங்கார முடிசெங்கோல் பூண்பதென்றோ போச்சு; பொலிவுடலும் பொன்னுடையும் புரியுணவும் போச்சு; கங்காளி; துச்சிலுளேன்; கம்பலையே ஆச்சு; கடும்பசிநோய் முடுக்குகின்ற கர்மமென தாச்சு. 8 வடிவினிலே பெரியள்யான்; வயதினிலே பெரியள்; வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்; கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்; காலினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன் வாழ்வே. 9 அன்புநெறி இறைநெறியை, ஆணவத்தால் மக்கள் அளப்பரிய பகைநெறிக ளாக்கியிழி வுற்றார்; மன்பதையில் பசையிழந்த வற்றல்மர மானார்; மற்றவர்கள் நடையுடையில் மதுமலர்வண் டானார்; என்பழைய சமரசமாம் இன்னமிழ்த முண்ணல் எந்நாளோ! இடைநுழைந்த இகல்சாதிப் பூச்சி, இன்புதரு குருதிகுடித் தீரல்நலம் போக்க, என்புருவாய்க் கிடக்கின்றேன்; எச்சபைக்குச் செல்வேன்? 10 பெண்ணடிமை தீண்டாமை பிறப்புவழிச் சாதி பேய்பிடியா நாளினிலே பெற்றிருந்தேன் மேன்மை; மண்ணினிலே இம்மூன்று மாயைசனி பற்ற வாதிட்டு மடிகின்றார் வகுப்புணர்வால் மைந்தர்; கண்ணினிலே கண்டுதுயர் கடலினிலே மூழ்கிக் கடவுளையே நினைந்துருகிக் கவல்கின்றேன்; மற்றப் பண்மொழியார் சபையிலுளார்; பாவிபடும் பாடோ படமுடியாப் பாடன்றோ பார்க்கமுடி யாதே. 11 என்னாட்சி பரிணமிக்க எழுங்கிளர்ச்சி பலவே ஏரார்சு தேசியத்தில் இருப்பதென்றன் ஆட்சி; தன்னாட்சி அந்நியத்தைத் தாங்குவதி லில்லை; தயையின்றி அந்நியரைத் தாக்கலிலு மில்லை; மன்னாட்சி அறநெறியில் மலர்ந்திடவே வேண்டும்; மாகலைகள் வாழ்விடையே வளர்ந்திடவும் வேண்டும்; நன்னாட்டுத் தொழிலரசு நலம்பெறவே வேண்டும்; நான்சபையில் வீற்றிருக்கும் நாளந்த நாளே 12 வேறு இம்மொழிகள் செவிநுழைய எழுந்தேன்; அன்னை எழிற்சபையி லெழுந்தருள இனிது வேண்டும்; செம்மைவினை யாற்றுதற்குச் சேர வாரும்; தீண்டாமை பெண்ணடிமை சிறுமைச் சாதி வெம்மைதரு நோய்களைய விரைந்து வாரும்; விழுமியசு தேசியத்தை விதைக்க வாரும்; அம்மைசம தர்மவர சாட்சி நாடி அன்பார்ந்த சோதரரே! அணைவீ ரின்னே. 13 தமிழ்நாடு வேங்கடமே தென்குமரி வேலையெல்லை நாடு மென்மைகன்னி இனிமைகனி மேன்மைமொழிநாடு தேங்கமழும் பொதிகைமலை தென்றலுமிழ் நாடு திருமலைகள் தொடர்மலைகள் தெய்வமலை நாடு பாங்குபெறு பாலிபெண்ணை பாவைபொன்னி நாடு பாவளர்ந்த வைகையொடு பழம்பொருநை நாடு தேங்குசுனை பளிங்கருவி தெளிசாரல் நாடு சிற்றோடை கால்பரந்த செய்யதமிழ் நாடே. 1 பொங்குபசுங் காடணிந்து பொழிலுடுத்த நாடு பூங்கொடிபின் செடிவனங்கள் பூண்டுபொலி நாடு தெங்குபனை கன்னலொடு கமுகுசெறி நாடு செவ்வாழை மாபலவின் தேன்சொரியு நாடு தங்கமெனு மூலிகைகள் தாங்கிநிற்கு நாடு தாயனைய கீரைவகை தாதுவளர் நாடு செங்கதிர்நெல் வரகுதினைச் செல்வம்விளை நாடு சீர்பருத்தி நார்மரங்கள் சிறந்ததமிழ் நாடே. 2 மடைகளிலே வாளைபாய மான்மருளு நாடு மழைமுழங்க மயிலாட வண்டிசைக்கு நாடு புடைகூவுங் குயில்கீதம் புசித்தினிக்கு நாடு பூவைபுகல் கிளிமழலை பொருந்தமிழ்த நாடு படைமூங்கில் வெள்வளைகள் பாண்மிழற்று நாடு பரவையலை ஓயாது பாடுகின்ற நாடு நடைவழியே குரங்கேறி மரமேறு நாடு நாகெருமை சேற்றில்மகிழ் நாடுந்தமிழ் நாடே. 3 மயிலிறகு தந்தமொடு மான்மதமீன் நாடு மான்கோடு தேன்கூடு மல்குதிரு நாடு தயிலமரந் தேக்ககிலஞ் சந்தனஞ்சேர் நாடு தண்மலர்கள் காய்கனிகள் சந்தைமிடை நாடு வயலுழவு செய்தொழில்கள் வற்றாத நாடு மயிர்பருத்திப் பாலாவி வண்ணவுடை நாடு வெயில்மணியும் நிலவுமுத்தும் மிளிர்ந்துமலி நாடு விழைபவளம் வெள்ளுப்பு விளங்குதமிழ் நாடே. 4 பாரளிக்குஞ் சித்தர்கணப் பழம்பெரிய நாடு பண்புறுகோல் சேரசோழ பாண்டியர்கள் நாடு வேரிமயக் கல்கொணர்ந்த விறலுடைய நாடு வென்றிமயம் புலிபொறித்த வீரமிகு நாடு நேரியலில் கொலைக்குயிரை நீத்தல்பெறு நாடு நெகிழ்கொடிக்குத் தேரளித்த நிறைந்தவருள் நாடு பேரிடரில் தலைக்கொடைக்கும் வாளீந்த நாடு பீடரசர் புலவர்களைப் பேணுதமிழ் நாடே. 5 புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பு நாடு நிறவெள்ளி வீதியவ்வை நேரெயினி நாடு நிறையொழுக்கக் கண்ணகியின் நீதிநிலை நாடு திறநடன மாதவியின் தெய்வஇசை நாடு சேய்மணிமே கலையறத்துச் செல்வமுற்ற நாடு நறவுமொழிப் புனிதவதி நங்கையாண்டாள் நாடு ஞானமங்கை மங்கம்மாள் நல்லதமிழ் நாடே. 6 மலையமுனி வழிமூன்று தமிழ்வளர்த்த நாடு மார்க்கண்டர் கோதமனார் வான்மீகர் நாடு புலமிகுதொல் காப்பியனார் பொருளுலவு நாடு போற்றுமக இறைகீரன் புலவர்தரு நாடு மலருலகே கொள்மறைசொல் வள்ளுவனார் நாடு வாய்த்தமுன்னோன் அரசுபெறச் சிலம்பில்மகிழ் நாடு விலைமலிந்த கூலமனம் மேகலைசெல் நாடு வெறுத்தவுளஞ் சிந்தாமணி விழைந்ததமிழ் நாடே. 7 வித்துமொழிக் கல்லாடர் வேய்ம்மலையார் நாடு விரிந்தகலைக் கம்பன்கவி விரைசோலை நாடு பத்திபொழி சேக்கிழாரின் பாநிலவு நாடு படர்வில்லிச் சந்தஅலைப் பாட்டருவி நாடு சுத்தபரஞ் சோதிகனிச் சுவையொழுகு நாடு சுற்றிவந்த வீரமுனி சொற்றேன்பாய் நாடு கத்தனருள் ஞானஉமார் கன்னல்சொரி நாடு கச்சியப்பர் விருந்துண்ணுங் கன்னித்தமிழ் நாடே 8 பரமனருள் நால்வராழ்வார் பண்ணொலிக்கு நாடு பழஞ்சித்த மறைபொருளைப் பகர்மூலர் நாடு பரவுபக லிரவற்ற பட்டினத்தார் நாடு பாற்குமரர் பிரகாசர் பாடுதுறை நாடு விரவருண கிரிவண்ண விரைசாரல் நாடு விளங்குகுணங் குடிமதான் வீறுஞான நாடு தரணிபுகழ் தாயுமானார் சன்மார்க்க நாடு சமரசஞ்சொல் லிராமலிங்கர் சாந்தத்தமிழ் நாடே. 9 பேருரையர் அடிநல்லார் பூரணனார் நாடு பேண்வரையர் அழகருடன் பேச்சினியர் நாடு தேரையர் புலிப்பாணி சேர்மருத்து நாடு செகமதிக்குஞ் சங்கரனார் உடையவர்தம் நாடு சீருறுமெய் கண்டமணி சித்தாந்த நாடு சிவஞான முனிக்கல்விச் செல்வநிதி நாடு போருரைக்குஞ் செயங்கொண்ட புலவன்வரு நாடு புகல்நீதி அதிவீரன் புரந்ததமிழ் நாடே. 10 மீனாட்சி சுந்தரக்கார் மேகமெழு நாடு மேவுசந்தத் தண்டபாணி மின்னலொளி நாடு வானாட்ட ஆறுமுக மாகடல்சூழ் நாடு மகிழ்கிருஷ்ணர் கவிராயர் கீர்த்தனங்கொள் நாடு தேநாற்று முத்துதியாகர் சங்கீத நாடு திரிகூடர் குறவஞ்சித் தேன்பிலிற்று நாடு கானார்க்கும் அண்ணாமலை காதல்சிந்து நாடு கவர்வேத நாயகனார் கல்வித்தமிழ் நாடே. 11 கால்ட்வெல்போப் பர்வல்வின்லோ கருத்தில்நின்ற நாடு கனகசபை ஆராய்ச்சிக் கண்ணில்நுழை நாடு நூல்வளர்த்த தாமோதரன் நோன்மைபெற்ற நாடு நுவல் மணீயச் சுந்தரவேள் நுண்மைமதி நாடு மால்பரந்த பாண்டித்துரை வளர்சங்க நாடு மாண்புதினத் தந்தைசுப்ர மண்யன்வரு நாடு சால்பரங்க நாதகணி தழைத்தகலை நாடு தனிக்கணித ராமாநுஜன் தந்ததமிழ் நாடே. 12 கொடைவள்ளல் சடையப்பன் குலவியபொன் னாடு கூடல்திரு மலைநாய்க்கன் கோல்வளர்ந்த நாடு படைவல்ல அரிநாயன் பணிகொழித்த நாடு பாஞ்சாலங் குறிச்சியூமன் பற்றியவாள் நாடு நடைசிறந்த பச்சையப்பன் நறுங்கல்வி நாடு நாயகனாஞ் செங்கல்வ ராயனற நாடு நடுநிலையன் முத்துசாமி நன்னீதி நாடு நவவீர பாரதியின் நடனத்தமிழ் நாடே. 13 பண்பரந்த இயற்கைநெறி பற்றிநின்ற நாடு பற்றியதன் வழியிறையைப் பார்த்தபெரு நாடு தண்ணியற்கை நெறியொன்றே சமயமெனு நாடு சாதிமதப் பன்மைகளைச் சகியாத நாடு மண்பிறப்பில் உயர்தாழ்வு வழங்காத நாடு மக்களெலாஞ் சமமென்னும் மாண்புகண்ட நாடு பெண்மணிகள் உரிமையின்பம் பெற்றிருந்த நாடு பெரும்பொதுமை யுளங்கொண்டு பிறங்குதமிழ்நாடே. 14 யாதும்மூர் எவருங் கேளிர் என்றுணர்ந்த நாடு எவ்வுயிர்க்கும் அன்புசெய்க என்றிசைத்த நாடு ஓது குலந் தெய்வமொன்றே என்றுகொண்ட நாடு ஒக்குமுயிர் பிறப்பென்னும் ஒருமைகண்ட நாடு நாதன் அன்பு நீதிஇன்பு நட் பென்ற நாடு நாமார்க்கும் குடியல்லோம் என்றிருந்த நாடு தீதில்லா மொழி வளர்க்கத் தெளிவுபெற்ற நாடு செந்தண்மை விருந்தளிக்குந் தெய்வத்தமிழ் நாடே. 15 தமிழ்த்தாய் இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ. 1 பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளுந் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ. 2 தமிழென்ற போதினிலே தாலூறல் உண்மையதே அமிழ்தாகி உயிரினுக்கும் யாக்கைநிலை செழிப்புறுமே. 3 சுவைத்துணருந் தமிழினிமை சொல்லாலே சொலுந்தரமோ தவத்துணர்வி லெழுமினிமை தமிழினிமைக் கிணையாமோ. 4 கனியினிமை கரும்பினிமை காதலிலே இனிமைபெருந் தனியரசி லினிமையென்பர் தமிழினிமை யுணராரே. 5 புலிகரடி அரியானை பொல்லாத பறவைகளும் வலிமறந்து மனங்கலக்க வயப்படுத்துந் தமிழொலியே. 6 கடவுளென்றும் உயிரென்றுங் கன்னித்தமிழ் ஒளியினிலே படிந்துபடிந் தோம்பினரால் பழந்தமிழர் கலைப்பயிரே. 7 இந்நாளைத் தமிழுலகம் இயற்கையொளி மூழ்காதே இன்னாத சிறைநீர்போல் இழிவடைதல் நன்றாமோ. 8 தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கும் இல்லைஇந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே. 9 தமிழரெனுந் திருப்பெயரைத் தந்ததுதான் எதுவேயோ கமழ்மணத்தை மலரறியாக் காட்சியது மெய்ம்மைகொலோ. 10 இமிழ்திரைசூழ் உலகினிலே இயற்கைவழி யொழுகினிமை அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமை நுழைந்ததென்னே.11 பல்லாண்டாய் அடிமையிலே பசுந்தமிழ்த்தாய் வீழ்ந்ததெனில் கல்லாத விலங்குகட்குங் காட்டைவிடுங் கருத்தெழுமோ. 12 கண்ணிலையோ காண்பதற்குக் காதிலையோ கேட்பதற்குப் புண்ணினிலே புளியென்னப் பூங்கொடியிற் புகுதுயரே. 13 உன்னஉன்ன உளமுருகும் ஊனுருகும் ஒருதமிழ்த்தாய் இன்னலது நுழையாத இழிநெஞ்சங் கல்லாமே. 14 பழந்தமிழர் வீரவொளி படர்ந்தீண்டில் இந்நாளே இழிந்தோடும் இடர்ப்பனிகள் எழுந்தாயின் தமிழ்நடமே. 15 தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல்நலம் போய்க்கடலில் விழுதல் நலம் பொலிதருமோ உடலுயிரே. 16 உயிரெதுவோ தமிழருக்கென் றுரைத்துணர்தல் வேண்டாவே அயர்வின்றித் தமிழர்களே! ஆர்த்தெழுமின் நிலைதெரிந்தே. 17 குறள்சிலம்பு மேகலையுங் கோதில்சிந் தாமணியும் அருள்சிலம்புந் தமிழினிலே அமைந்ததுவுந் திருவன்றே. 18 பழஞ்சித்த மறையருளப் பரனருளால் திருமூலர் நுழைந்தஇடம் எதுவேயோ நுவலுமது தமிழ்மாண்பே. 19 காவியமும் ஓவியமுங் கடவுளின்போ கடந்தஒன்றோ தாவிநிற்கும் நெஞ்சமதே தமிழ்சுவைக்கும் வாழ்வினிலே. 20 விலங்கியல்பின் வேரறுக்கும் விரலுடைய காவியமே. கலங்குமனத் துயர்போக்குங் கருத்தொன்றும் ஓவியமே. 21 காவியநெஞ் சுடையவர்கள் கருதார்கள் பிரிவுகளே ஓவியத்தில் உளங்கொண்டோர் உறுயோகம் பிரிதுளதோ. 22 சாதிமதச் சண்டையெலாந் தமிழின்ப நுகரார்க்கே ஆதியிலே சண்டையிலை அருந்தமிழை அருந்தினரால். 23 கலைத்தமிழின் கள்ளுண்டால் கலகமன வீறொடுங்கும் புலங்கடந்த அருளின்பம் பொருந்துவதும் எளிதாமே 24 காலத்துக் குரியஅணி கருதாளோ தமிழ்க்கன்னி மேலைச்செங் கலைபெயர்ப்பும் விளங்கிழையாம் புலவீரே. 25 பன்மொழியி லுளகலைகள் பசுந்தமிழி லுருக்கொள்ள நன்முயற்சி யெழவேண்டும் நலமுறுவள் தமிழ்த்தாயே. 26 தனித்தெய்வந் தமிழனுக்குத் தமிழன்றி வேறுண்டோ இனித்தநறுங் கோயில்களோ எழிற்கலைகள் வாழியரோ. 27 சத்தியாக்கிரக விண்ணப்பம் [gŠrh¥ படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் (1921இல்) ghl¥bg‰wJ.] பொறுமைக்கு நிலனாகிப் புனலாகி அளியினுக்குத் தெறலுக்கு நெருப்பாகித் திறலுக்கு வளியாகி 1 வெளியாகிப் பரப்பினுக்கு வெயில்நிலவுக் கிருசுடராய்த் தெளிவினுக்கே உடலுயிராய்த் திகழனையாய்ப் பிறராகி 2 இலகுவழி வழியாக எமையீன்று புரந்துவரும் உலகமெலாங் கலந்துகடந் தொளிர்கின்ற ஒருபொருளே! 3 உலகமெலாங் கடந்துகடந் தொளிர்கின்ற நினதியல்பைக் கலகமிலா உளங்கொண்டு கணித்தவரார் முதன்முறையே. 4 அவ்வியல்பை அளந்தாயும் அறநிலையே உறுதியெனச் செவ்வியறி வுழைப்பெல்லாஞ் செலுத்தாம லிருந்ததுண்டோ? 5 காட்சியொன்றே பொருளென்னுங் கருத்தைவிட்டுப் பொழுதெல்லாம் மாட்சியுடை நினதடியே வழுத்துவதை மறந்ததுண்டோ? 6 எண்ணமெலாம் உனதெணமே எழுத்தெல்லாம் உனதெழுத்தே மண்ணதனைப் பொருளாக மயக்கும்வழி யுழன்றதுண்டோ? 7 எல்லாநின் செயலென்றே இருந்தஒரு குலத்தார்க்குப் பொல்லாங்கு வரும்பொழுது புரப்பதெவர் கடனேயோ? 8 ஆத்திகத்தி லறிவுபழுத் தருளொழுகும் பரதகண்டம் நாத்திகத்துக் கிரையாகி நலிவுறுதல் நலமேயோ? 9 மூர்க்கநெறி யறியாத முனிவரர்கள் வதிந்தபதி பார்ப்பவர்கள் நகையாடும் படுகுழியில் விழுந்ததன்றே. 10 கொலைகளவு குடிகாமம் கொடும்பொய்யே மலியாத கலைநிறைந்த பரதகண்டம் கருதுவதோ அவைகளையே. 11 மலையளித்தாய் நதியளித்தாய் வனமளித்தாய் வளமளித்தாய் நலமளிக்கும் அவையெல்லாம் நழுவினவெம் மிடமிருந்தே. 12 வயிற்றுக்கே வனவாசம் மரணத்துக் களவில்லை கயிற்றுக்கும் பிறநாட்டைக் கைகுவித்துக் கவல்கின்றேம். 13 நாட்டுமுறைத் தொழிலெல்லாம் நசிக்கவிவண் பிறர்புரிந்த கேட்டினைநாம் எவர்க்குரைப்பேம் கிளந்துரைக்குஞ் சரிதமதே.14 பேச்சுரிமை எழுத்துரிமை பிறவுரிமை எமக்குளவோ சீச்சீயென் றிழிமொழியால் சிறுமைசொலும் வெளிநாடே. 15 உள்ளசட்டம் நிறைவிலையென் றுரிமைகொலுங் கருஞ்சட்டம் நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்ததுவே. 16 அழிக்க அதைத் தவமுதல்வர் அரியசத்தி யாக்கிரக ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே. 17 இரவொழித்துப் பகலுமிழும் இளஞாயி றதைமறைக்க விரவுபுயல் பரவியெரி வெடிகுண்டு பொழிந்தனவே. 18 இவ்வாரம் பஞ்சநதம் இரத்தநத மென இலங்கி ஒவ்வாத செயல்கண்டே உடைந்திரிந்த ததன்மனமே. 19 உரிமையெனும் உயர்வேட்கை உளத்தெழுமிக் கிழமையிலே ஒருமைமனத் தொழுகைசெய்தே உனைவேண்டும் வரமருளே.20 குறைகளெலாம் ஒழிந்துரிமை குலமடைய மருந்துண்டு தறையதனில் சுயஆட்சி தகைமைதரு மருந்தாமே. 21 பெறவேண்டும் சுயஆட்சி பெறவேண்டும் இப்பொழுதே அறமுறைகள் பிறவெல்லாம் அழகுபெறத் தழைத்திடுமே. 22 காந்திவழி கடைப்பிடிப்பின் கருத்தாட்சி மலர்ந்துவிடும் சாந்தமிகும் அவர்வழிதான் சத்தியாக் கிரகமதே. 23 சன்மார்க்க நெறியோங்கத் தயைபுரியெம் இறையவனே உன்மார்க்கத் துறைபற்றி உலகமிகச் செழித்திடுமே. 24 திலகர் திலகர் விஜயம் (திலகர் பெருமான் கொழும்பு வழியாக இங்கிலாந்து நோக்க 1918ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10ஆம் நாள் சென்னை நண்ணியவேளையில் பாடப்பெற்றது; அம்முறை கொழும்பில் திலகர் பெருமான் செலவு தகையப்பட்டது) பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் 1 கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் 2 அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! 3 திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திகலரெனு மியற்பெயரால் திறமுறவே நிறுத்தினையே 4 செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே 5 ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஓரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? 6 கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே. 7 இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லாத உரையதனை அகிலமெலாம் பரப்பினையே. 8 உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே. 9 பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? 10 உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே. 11 சிந்தியா உளம்உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் வடிவன்றே 12 தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே. 13 சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. 14 இங்கிலாந்தும் திலகரும் (பின்னே சில மாதங்கடந்து, திலகர் பெருமான் பம்பாய் வாயிலாகச் சென்று, 1918ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இங்கிலாந்து சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்தபோது பாடப்பெற்றது.) எங்கள் மன்னர் இணையடி யேந்தியே பொங்கு பேற்றைப் புனைந்தெமை யாண்டிடுந் தங்கு சீர்த்தி தழைத்தொளி வீசுநல் இங்கி லாந்தெனும் இன்ப அணங்குகேள். 1 தண்மை செம்மை தகைமையுங் கொண்டவோர் வண்ண மாமுனி வந்தனர் நின்னிடை வெண்மை நீலம் விரிந்து பரந்தநின் கண்க ளாலவர் காட்சியைக் காணுமே. 2 கல்வி ஞானங் கருணை நிரம்பிய செல்வ மாமுனி சேர்ந்தனர் நின்னிடைப் பல்வ ளங்களும் பான்மையுங் கொண்டநீ ஒல்லை அன்னார் ஒளிமுகங் காணுமே. 3 மற்ற வர்க்கே மனத்தை நிறுத்தியே உற்ற நேரத் துதவும் அறமுனி பற்றி வந்தனர் பண்புடை நின்னிடைச் செற்ற மில்லவர் சிந்தையை நோக்குமே. 4 பரத மென்னும் பழையவோர் நாடளி விரத மாமுனி வேந்தர் கிழக்குதி பரிதி யென்னப் பரிந்து படர்ந்தனர் கருதி யன்னார் கரத்தினை நோக்குமே. 5 எங்கள் தலைக்கணி எம்பெரு மானடி பங்க யப்பனி மாமலர் பூத்தது துங்க மிக்க சுகமுடை நின்னிடை அங்க ணாலதை அன்பொடு காணுமே. 6 உரிமை வேண்டி உவந்துனை நாடினர் பெரிய மாமுனி பேச அருள்புரி அரிய வாசகம் அன்பி லுதிப்பது தெரிய ஓதுவர் எங்கள் சிறுமையே. 7 அன்ன வர்பெயர் ஆரும் புகழ்பெயர் பின்னை யென்றும் பெயர்வது மின்றியே இந்நி லத்தி லிருப்பது கூறுவல் சென்னி கொள்ளுந் திகல ரெனும்பெயர். 8 இப்பெ யர்ப்பொருள் இந்தியா என்பது செப்பு மித்தகைச் செம்பொருள் சேர்ந்தது அப்பு மிக்க அருணதி பாய்ந்திடும் ஒப்பில் இந்தியா உற்றதை ஒக்குமே. 9 சிந்தை நல்ல திலகர் சொலும்மொழி இந்தி யாவின் இனிமொழி யாகுமால் அந்த ணர்சொலை யார்ந்து செவிகொடு சொந்த மாகச் சுதந்திர நல்குமே. 10 திலகர் வாழ்த்து மறப்பாலும் பிறவாலும் மதிப்பிழந்த எந்தமக்குப் பிறப்புரிமை சுயஆட்சி பெறவேண்டும் எழுமெனவே குறிப்புடைய ஒருமொழியைக் கொடுத்துதவி கிளர்ச்சியதால் சிறப்பருளுந் திலகமுனி திருவடியை வணங்குதுமே. 1 உலகன்னை உயிராகும் ஒருபரத கண்டமதில் உதித்த கோமான் பலகலையின் பயனுணர்ந்து பற்றறுத்து மற்றவர்க்குப் பண்பு செய்வோன் கலகமிலா உளங்கொண்டு கட்டுரையிற் பிறழாது காப்பில் நின்றோன் திலகமுனி எனும்பெயரான் திருவடியை எஞ்ஞான்றுஞ் சிந்திப் பேமால். 2 காந்தி காந்தியம் அல்லது இன்பப்பேறு என்னை அறியா என்னுளங் கொண்ட மயலொடு கலவா இயல்பெனுந் தேவி, எழுந்தொரு பொழுது செழுந்தமிழ்க் குரலால் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென பொறித்தனள் ஒருவினா; கருத்தினில் நின்றது அலைத்தும் ஆட்டியும் குலைத்த தென்னை; உண்மை தெளிய நண்ணினன்; கால்கள் நடந்தன உணரேன்; கடந்தனன் வழிபல அந்தி மாலை சிந்தையிற் றோன்றலும் கடற்கரை கண்டேன்; இடமென இருந்தேன் 10 உருகிய செம்பொன் கருகிய வானும் பளிங்கு நொய்யென இலங்குவெண் மணலும் நீனிறக் கடலும் நீளின அலையும் இறைவன் வடிவா யென்னை ஆண்டன நிறைகாண் போழ்தில் நிலவிழிப் பொழிந்தே உறக்கம் புகுந்தும் உணர்வழி விலையால் அவ்வுணர் வொளியில் செவ்விய மெல்லியல் தும்பை யன்னதோர் தூசணிந் தெதிரே எழுதரும் வடிவோ டெழில்வெண் டாமரை பூத்தது போலப் பொலிந்தன ளன்றே; 20 அன்னவள் அடியை அன்புடன் தொழுதே என்னிலை யுணர்த்த; எழிலணங் கவளும், மைந்த! கேட்டி இந்தமா நிலத்தில் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென வருந்தல் வேண்டா; திருந்து நல்வழி இன்று கூறுவல், நன்று கேட்டி! மக்கள் யாக்கையே மிக்கது மிக்கது அன்னதன் பயனை இன்னதென் றுணர இல்லம் விடுத்துச் செல்லலும் வேண்டா காடுகள் பலவும் ஓடவும் வேண்டா 30 மலைக ளேறி அலையவும் வேண்டா காற்றை யீர்த்து மாற்றவும் வேண்டா மனைவி மணந்தும் மக்களை யீன்றும் இனத்தொடு வாழ்ந்தும் இருந்தொழில் செய்தும் உண்பன உடுப்பன உண்டும் உடுத்தும் நாட்டை விடாது வீட்டி லுறைந்தும் பிறவிப் பயனைப் பெற்று வாழலாம்; இலக்கிய மிதற்கொன் றியம்புவன் கேட்டி, கலக்கமி லுளத்தைக் காளைநீ பெறுக; இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன் 40 கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாய னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் மக்களை யீன்று மிக்கவ னானோன் செயற்கை வெறுத்த செம்மை யாளன் இயற்கை இன்பமே இன்பெனக் கொள்வோன் உண்மை கடைப்பிடித் தொழுகுஞ் சீலன் உண்மைகா ரணமா உயிரையும் விடுவோன் வானந் துளங்கினும் மீனம் படினும் 50 மலைகள் வீழினும் அலைகள் பொங்கினும் தன்னிலை மாறாத் தன்மை யாளன் உலகி லுள்ள அலகிலா உயிர்கள் தன்னுயி ரென்னும் தருமம் பெற்றவன் பிறர்க்குக் கேடு மறந்துஞ் சூழான் அன்புடை யார்பிறர்க் கென்பு முரியர் என்னு மெய்ம்மொழிக்கு இலக்கிய மானோன் உண்மைஅஞ் சாமை ஒண்பே ராயுதம் தாங்கி என்றும் ஈங்கு முரண்படு தேக சக்தியை ஏக சக்தியாம் 60 ஆன்ம சக்தியால் அடக்கும் வீரன் சினத்தை யொழித்த இனத்தவ ருறவோன் யாண்டுத் துன்பம் எவர்க்கு நேரினும் ஆண்டே அவனுடல் அணையு மன்றே; அவனுடல் மற்றவர் உடலே யாகும் அவன்பொருள் மற்றவர் பொருளே யாகும் அவனுயிர் மற்றவர் உயிரே யாகும் தனக்கென வாழாத் தன்மை பெற்றவன் அன்பே வடிவாய் அமர்ந்த அண்ணல் இன்பு பிறர்க்கே உழைத்தல் என்போன் 70 சாந்த மயமெனுங் காந்திப் பெயரான் நற்றவன் அடியைப் பற்றுவை யாயின் ஐய! யாக்கையின் பயனது விளங்கும் நல்லாள் பகர்ந்ததும் பொல்லா விழிப்பால் ஒழிந்தது உறக்கமும் கழிந்தது இரவும் அலையொலி யோடு வலைஞர்கள் ஒலியும் கலைத்தன நிலையை அலைந்த உளத்தொடு வீட்டைச் சேர்ந்து நாட்டினன் சிந்தையைக் காந்தி யடிகளின் காந்தி யடிகளில்; கேடும் ஆக்கமும் ஓடும் செம்பொனும் 80 ஒன்றென மதிக்கும் நன்றுசேர் உண்மையும் பெற்ற யாக்கையால் மற்றவர்க் குழைத்தலில் இன்பப் பயனுண் டென்னுமோர் உண்மையும் கண்டு யானுந் தொண்டுசெய் கின்றேன்; நம்மை யீன்ற அம்மை உரிமையை இழந்து வாடும் இந்நாள் இந்நாள் காந்தி யாணை காந்தி யாணை இன்போ டுழைக்க என்னுடன் சேர வாருஞ் செகத்து ளீரே. 89 காந்தி வாழ்த்து சாந்தமய மென இலங்குந் தனிப்பொருளை உளத்தென்றும் ஏந்தியுயிர் தமக்கெல்லாம் இனிமைசெய உலகிடையே போந்தகுண மலையாகும் புனிதநிறை கடலாகும் காந்தியடி இணைமலரைக் கருத்திருத்தி வழுத்துவமே. 1 எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன் செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க அவ்விரு தொடர்புகண்ட அடிகளார் காந்தி வாழ்க இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க. 2 வைஷ்ணவன் எவன்? (காந்தியடிகள் நாடோறும் பிரார்த்தனையிற் பாடும் ஒரு கூர்ஜரப் பாட்டின் மொழிபெயர்ப்பு) பிறர்துயரைத் தன்துயராப் பேணியவர்க் கேவல்செயுந் திறனதனைப் பாராட்டாத் திறமுடையான் எவனவன். 1 எல்லாரை யும்வணங்கி இகழாதான் ஒருமனையான் சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையாள் அவன்தாயே. 2 சமநோக்கன் தியாகமுளான் தாயென்பான் பிறர்மனையை அமைநாவால் பொய்ம்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான். 3 மோகமொடு மாயைநண்ணான் முழுவைராக் கியமுடையான் ஏகன்பெய ரின்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான். 4 காமவுலோ பஞ்சினமுங் கரவுமிலான் வைணவனே ஏமநல்கு மவன்காட்சி எழுபானோர் தலைமுறையே. 5 சுதந்திர நாமாவளி பாரத நாட்டைப் பாடுவமே பரமா னந்தங் கூடுவமே. 1 முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் மாரதமே 2 பாரத தேசம் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் 3 வந்தே மாதர மந்திரமே வாழ்த்த வாழ்த்தசு தந்திரமே. 4 வந்தே மாதர மென்போமே வாழ்க்கைப் பிணிகள் பின்போமே. 5 காலை சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே. 6 சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை. 7 கங்கை யோடுங் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே. 8 காடும் மலையும் எங்கள்மடம் கவியும் வரைவும் எங்கள்படம். 9 மயிலில் ஆடும் எம்மனமே குயிலில் பாடும் எங்குரலே. 10 பறவை யழகினில் எம்பார்வை பாடுங் கீதம் எம்போர்வை. 11 பெண்ணிற் பொலியுந் திருப்பாட்டே பெருவிருந் தெங்கள் புலன்நாட்டே. 12 பெண்கள் பெருமை பேசுவமே மண்ணில் அடிமை வீசுவமே. 13 அடிமை யழிப்பது பெண்ணொளியே அன்பை வளர்ப்பதும் அவள்வழியே. 14 பெண்ணை வெறுப்பது பேய்க்குணமே பேசும் அவளிடந் தாய்க்குணமே. 15 தாய்மை யுடையவள் பெண்ணன்றோ தயையை வளர்ப்பவள் அவளன்றோ. 16 இறைமை யெழுவது பெண்ணிடமே இன்பம் பொழிவதும் அவ்விடமே. 17 பெண்மை தருவது பேருலகே பீடு தருவதும் அவ்வுலகே. 18 பெண்வழி சேர்ப்பது இறைநெறியே பேய்ந்நெறி யொழிப்பதும் அந்நெறியே. 19 நல்லற மாவது இல்லறமே அல்லாத அறமெலாம் புல்லறமே. 20 சாதிப் பேயை யோட்டுவமே சமநிலை யெங்கும் நாட்டுவமே. 21 சாதி மதங்கள் சச்சரவே சன்மார்க்கம் நீப்பது நிச்சயமே. 22 சமரச மென்பது சன்மார்க்கம் சார்ந்தா லொழிவது துன்மார்க்கம். 23 இயற்கை நெறியே சன்மார்க்கம். இயைந்தா லழிவது துன்மார்க்கம். 24 பாவிகள் சொல்வது பன்மார்க்கம் பக்தர்கள் நிற்பது சன்மார்க்கம் 25 சமரச மொன்றே சத்தியமே சன்மார்க்கஞ் சேர்ப்பது நிச்சயமே. 26 சமயம் ஆவது சன்மார்க்கம் சகத்தி லொன்றே நன்மார்க்கம். 27 எல்லா உயிரும் நம்முயிரே என்றே சொல்லும் மெய்ம்மறையே. 28 தென்மொழி யாவது தேன்மொழியே தெய்வக் கலைகள் சேர்மொழியே. 29 செந்தமி ழின்பந் தேக்குவமே தீராக் கவலை போக்குவமே. 30 வள்ளுவர் வாய்மை தென்மொழியே வளர்ப்போம் அந்த மென்மொழியே. 31 கன்னித் தமிழ்நடஞ் சிலம்பினிலே கண்டே அருந்துவம் புலந்தனிலே. 32 சுதந்திர வாழ்வே சுவைவாழ்வு அல்லாத வாழ்வெல்லாம் அவவாழ்வு 33 உழவுந் தொழிலும் ஓங்குகவே உலகம் வளத்தில் தேங்குகவே. 34 பகையும் எரிவும் பாழ்நிலையே பணிவும் அன்பும் பரநிலையே. 35 பாரும் பாரும் மலர்நகையே பரிந்தே மூழ்கும் மணவகையே. 36 ஒளியில் காற்றில் மூழ்குவமே உடலாங் கோயில் ஓம்புவமே. 37 நீலக் கடலில் நீளலையே நித்தம் விருந்தளி கதிர்வழியே. 38 வானே அமைதி வாழிடமே வாழ்த்தல் பொழியும் மீன்நடமே. 39 குழந்தை மழலை யாழ்குழலே கோதில் அமிழ்தங் குளிர்நிழலே. 40 கண்ணன் குழலிசை கேளுங்கள் கவலை துன்பம் மீளுங்கள். 41 அன்பே சிவமென் றாடுவமே அருளே வழியென் றோடுவமே. 42 வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே. 43 வேண்டுதல் எங்குநிறை அன்பறிவே! எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனிமைசெயல் வேண்டும். பொங்கியற்கை வழிநின்று புவிஇயங்கல் வேண்டும். பொய்சூது பகைசூழ்ச்சி பொருந்தாமை வேண்டும். மங்கையர்கள் உரிமையுடன் வாழ்வுபெறல் வேண்டும். மக்களெலாம் பொதுவென்னும் மதிவளரல் வேண்டும் தங்குமுயர் தாழ்வென்னுந் தளையறுதல் வேண்டும் சமதர்மச் சன்மார்க்கத் தாண்டவம்வேண் டுவனே. 1 கடவுள் நெறி யொன்றென்னுங் கருத்துநிலை வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல் வேண்டும் நடமாடுங் கோயிலுக்கு நலம்புரிதல் வேண்டும் நான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே வேண்டும் கொடியகொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும் கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைந்திறுகல் வேண்டும் இடமொழியுங் கலையுமென்றும் இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும் இனிமையும்வேண் டுவனே. 2 காடுமலை சென்றேறிக் கவியெழுதல் வேண்டும் கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும் பாடுகடல் மணலிருந்து பண்ணிசைத்தல் வேண்டும் பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் நாடிவயல் கதிர்குளித்து நாஞ்சிலுழ வேண்டும் நகையடிமைக் கோலுருட்டல் நண்ணாமை வேண்டும் ஆடுமனம் ஒன்றராட்டை ஆட்டிடுதல் வேண்டும் ஆவிகொலும் இழிதொழில்கள் அடங்கவும்வேண் டுவனே. 3 ஒருவன்பல மனைகொள்ளும் முறையொழிதல் வேண்டும் ஒருவனொரு மகள்கொள்ளும் ஒழுங்குநிலை வேண்டும் தருமமிகக் காதல்மணந் தழைத்தோங்கல் வேண்டும் சாதிமணக் கொடுமைகளின் தடையுடைதல் வேண்டும் பெருமையின்ப இல்லறமே பிறங்குநலம் வேண்டும் பெண்தெய்வம் மாயையெனும் பேயோடல் வேண்டும் உரிமையுற ஆண்கற்பை ஓம்பொழுக்கம் வேண்டும் உத்தமப்பெண் வழியுலகம் ஒளிபெறவேண் டுவனே. 4 ஒருநாடும் ஒருநாடும் உறவுகொளல் வேண்டும் ஒன்றடக்கி ஒன்றாளும் முறையழிதல் வேண்டும் பொருதார்க்கும் படையரசு பொன்றிடலே வேண்டும் புன்சாதி மதவரசு புரியாமை வேண்டும் தருவாதை முதலாக்கம் தளர்ந்தகலல் வேண்டும் தக்கதொழில் தனியாக்கம் தலைதூக்கல் வேண்டும் அருளாரும் ஆட்சிநின்றே அமைதியுறல் வேண்டும் அனைத்துயிரும் இன்பநுகர் ஆட்சியைவேண் டுவனே. 5 திருச்செந்தூர் செந்திலாண் டவனே! செந்திலாண் டவனே! செந்திலோ நின்னிடம்? சிந்தையோ நின்னிடம்? இங்குமோ இருக்கை? எங்குமோ இருக்கை? போக்கும் வரவும் நீக்கமும் இல்லா நிறைவே! உலகம் இறையென நின்னை உன்னுதல் எங்ஙன்? உணருதல் எங்ஙன்? மண்ணும் புனலும் விண்ணுங் காற்றும் அங்கியும் ஞாயிறுந் திங்களும் உயிரும் உடலா யிலங்குங் கடவுள் நீயெனில் உன்னலுங் கூடும் உணரலுங் கூடும்; 10 செயற்கை கடந்த இயற்கை ஒளியே! உறுப்பிலா அறிவே! குறிப்பிலா மாந்தர் எண்ணவும் ஏத்தவுங் கண்களி கூரவும் மூல ஒலியே கோழிக் கொடியாய், விதவித மாக விரியும் இயற்கை நீல மஞ்ஞை கோல ஊர்தியாய், இச்சை கிரியையே நச்சிரு தேவியாய், மூன்று மலமாம் மூன்று சூர்தடி ஞானமே வேலாய், மானவைம் புலன்கள் மருள்மனம் நீக்கி அருள்மனப் புலஞ்செய, 20 மூவிரு முகங்கொள் மூவா அன்பே! வெண்மணல் வெளியில் தண்கடல் அலைவாய் வீற்றிருந் தருளுஞ் சாற்றருங் கோலம் அஞ்சையுங் கவர்ந்து நெஞ்சையுங் கவர்ந்தே ஒருமையில் நிறுத்தும் பெருமைதான் என்னே! எந்நிலை போதும் அந்நிலை நீங்கா வரமே வேண்டும் உரமே வேண்டும் செந்திற் சிறக்குஞ் சிந்தையே வேண்டும் இருளைச் சீக்கும் அருளது வேண்டும் வருக வருக அருள வருக 30 அய்யா வருக மெய்யா வருக வேலா வருக விமலா வருக சீலா வருக செல்வா வருக அன்பா வருக அழகா வருக இன்பா வருக இளையாய் வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக எந்தாய்! எளியேன் என்னே செய்குவன்! கந்தா! கடம்பா! கதிர்வடி வேலா! கல்வி அறிவால் அல்லலை அழிக்க 40 முயன்று முயன்றே அயர்ந்தயர்ந் தொழிந்தேன் என்றுஞ் செந்நெறி துன்றி நிற்கக் காதல் பெரிதே ஆதல் இல்லை; எங்கும் நின்னருள் தங்குதல் கண்டு துன்ப உலகை இன்பமாக் காணக் குருமொழி வேண்டும் ஒருமொழி வேண்டும் அம்மொழி வேட்டு வெம்மனம் அலைதலை நீயே அறிவாய் சேயே! சிவமே! பெறுதற் கரிய பிறவியை ஈந்தாய்; அவ்வரும் பிறவியின் செவ்வியல் தெளிய, 50 ஏட்டுக் கல்வியில் நாட்டஞ் செலுத்தி, இல்லற மென்னும் நல்லற மேற்றுச், செருக்குச் செல்வமும் உருக்கு வறுமையும் இரண்டு மில்லா எளிமையில் நின்று, வாதச் சமயமும் பேதச் சாதியும் ஆதியி லில்லா நீதியைத் தெரிந்து, பற்பல குரவர் சொற்றன யாவும் ஒன்றென உணர்ந்து, நன்றெனக் கொண்டு, தொண்டின் விழுப்பங் கண்டுகண் டாற்றிச். செயற்கையை வெறுத்தே இயற்கையை விரும்பி 60 அத்தா! நின்னடிப் பித்தே நெஞ்சில் முருகி எழும்பக், கருதிய தருளே; முற்றுமவ் வருளும் பெற்றே னில்லை; மெய்ய! நின் உண்மையில் ஐயமோ இல்லை; முனைப்பறுந் தொதுங்கின் நினைப்புலன் உணரும் நுட்பம் அறிந்து பெட்பில் சிறியேன், உழன்று பன்னெறி உழைத்துழைத் தலுத்தேன்; அறவே முனைப்புள் அறுதல் என்றோ? அழுக்கு வாழ்வில் வழுக்கலோ அதிகம்; குறைபல உடையேன்; முறையிடு கின்றேன்; 70 வேறென் செய்வேன்? வேறெவர்க் குரைப்பேன்? பன்னிரு கண்ண! என்னொரு மனங்காண்; ஆலைக் கரும்பெனப் பாலன் படுதுயர் களைய வருக களைய வருக அழல்படு புழுவெனப் புனல்விடு கயலெனத் துடிக்கும் ஏழையை எடுக்க வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக சிந்தா மணியே! நந்தா விளக்கே! மயிலூர் மணியே! அயிலார் அரசே! 80 பிழைபொறுத் தருள்க; பிழைபொறுத் தருள்க; குன்ற மெறிந்த கன்றே போற்றி சூரனை வென்ற வீரனே போற்றி வள்ளி மணந்த வள்ளலே போற்றி அன்பருக் கருளும் இன்பனே போற்றி போற்றி போற்றி புனிதா போற்றி மக்கள் பலப்பலச் சிக்கலுக் கிரையாய் நலனை இழந்தே அலமரு கின்றார்! சாதியால் சில்லோர் நீதியை யிழந்து, நிறத்தால் சில்லோர் அறத்தைத் துறந்து, 90 மொழியால் சில்லோர் வழுவி வீழ்ந்து, மதத்தால் சில்லோர் வதைத்தொழில் பூண்டு, நின்னை மறந்தே இன்ன லுறுதல் என்னே! என்னே! மன்னே! மணியே! பேரும் ஊரும் பிறவு மில்லா இறைவ! நிற்குத் தறைமொழி பலகொடு அன்பர்கள் சூட்டிய இன்பப் பெயர்கள் எண்ணில எண்ணில; எண்ணில் அவைகளின் பொருளோ ஒன்று; மருளே இல்லை; பன்மைப் புறப்பெயர்ச் சொன்மையில் கருத்தை 100 நாட்டி ஆணவம் பூட்டிப் போரிடும் அறியாமை நீங்க, அறிவை அருள்க; எங்குமோ ருண்மை தங்குதல் கண்டே ஒன்றே தெய்வம் ஒன்றே அருள்நெறி என்னும் உண்மையில் மன்னி நிற்க அருள்க அருள்க தெருளொளி விளக்கே! சிந்தையில் நீங்காச் செந்தமிழ்ச் செந்தி வாழ்வே! செந்தி வாழ்வே! திருப்பரங்குன்றம் மங்கையர்க ளென்ன மலர்சோலைத் தண்ணீழல் தங்கு பரங்குன்றச் சண்முகனே! - இங்கடியேன் அன்னையினும் மிக்க அருளுடையான் நீயென்றே உன்னை அடைந்தேன் உவந்து. 1 மக்களுக்கு முன்பிறந்த மந்தி செறிசோலை மிக்க பரங்குன்ற மேயவனே! - இக்கலியில் உன்னை நினைந்துருக ஊக்கியதும் உன்னருளே இன்னல் களைந்தருள்க இன்பு. 2 சேய்களென மந்திகளுஞ் சேர்ந்தாடும் பூம்பொழில்கள் தோய்ந்த பரங்குன்றத் தோகையனே! - ஆய்ந்தறியின் எங்குநீ எல்லாநீ என்றபே ருண்மையன்றி இங்குமற் றுண்டோ இயம்பு. 3 பச்சைப் பசுங்கிளிகள் பாடுகின்ற பண்ணொலியை நச்சு பரங்குன்ற நாயகனே! - உச்சிமுதல் கால்வரையு நெஞ்சாக் கசிந்துருகல் எக்காலம் வேல்விளங்கு கைம்மனமே வேண்டு. 4 மாங்குயில்கள் கூவ மயிலாலுந் தேம்பொழில்கள் தேங்கு பரங்குன்றத் தெய்வமே! - வாங்கிவேல் குன்றெறிந்த கோமானே! குற்றமுடைச் சாதிநெறி என்றெறிந் தின்பருள்வா யிங்கு. 5 கண்ணாழும் மந்தி கனிகொண்டு பந்தாடும் விண்ணார் பரங்குன்ற வித்தகனே! - புண்ணாடுஞ் சாதி மதங்களெலாஞ் சாய்ந்தொழிந்து சன்மார்க்க நீதி பெருகவருள் நின்று. 6 அன்றிலும் பேடும் அழகா யுலவிவரும் வென்றிப் பரங்குன்ற வேலவனே! - நன்றுடைய நின்பெயரால் தீண்டாமை நின்பெயரால் சாதிநெறி வன்னெஞ்சர் செய்தனரே வம்பு. 7 தெய்வ மணங்கமழுஞ் செந்தமிழின் தேன்பாயுஞ் செய்ய பரங்குன்றச் செல்வமே! - வையமதில் தீண்டாமை எண்ணுநெஞ்சம் தீண்டுமோ நின்னடியைத் தீண்டாமை மன்பதைக்கே தீட்டு. 8 நீலப் புறாக்கள் நிமிர்ந்தாடும் மாடஞ்சேர் கோலப் பரங்குன்றக் கோமளமே! - சீலமளி சன்மார்க்கச் செம்பொருளே! சண்முகனே! பூவினிலே பன்மார்க்க நோய்தவிர்ப்பாய் பார்த்து. 9 வானாருந் தேவர்களும் வந்து தவஞ்செய்யுங் கானார் பரங்குன்றக் கற்பகமே! - ஊனாறும் ஊற்றை யுடல்கொண்டேன் உண்மை யுடலீந்து கூற்றுவனைக் காய்ந்தெனைக்கா கூர்ந்து. 10 பழமுதிர்சோலை கண்ணிலே காண்பன காதிலே கேட்பன கந்தநின்றன் எண்ணமா நெஞ்சில் இயங்கிடும் வாழ்வினை ஈந்தருள்க விண்ணிலே முட்டி விரிநிலம் பாய்ந்து விளங்கிநின்று பண்ணிலே மூழ்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 1 உள்ள மிருக்கும் உனையுணர் காதல் உறுதிகொள்ளாக் கள்ள வினையேன் கசிவிலாப் பாவி கருணைபுரி துள்ளு மறிமான் சுழிப்புன லஞ்சுஞ் சுனையினிலே பள்ளு முழங்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 2 கற்ற கலைகள் களிபெருஞ் செல்வங் கடைவருமோ சற்றும் அழியாக் கலைகளுஞ் செல்வமுந் தந்தருள்வாய் வெற்றி விறலியர் யாழின் விருந்துணு வேழவினம் பற்றெனக் கொண்ட பழமுதிர் சோலைப் பரம்பரனே. 3 வாழ்கநின் வேன்மயில் வாழ்கவென் றேதினம் வாழ்த்துமன்பர்க் கூழ்வலி யின்மை உறுதியென் றுண்மை யுணர்ந்து கொண்டேன் ஏழ்கதிர் மூழ்கி இழிபுன லாட இயற்கைநல்கிப் பாழ்தரு நோய்தீர் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 4 ஆறு முகமும் அருட்டாயர் நோக்கும் அயில்மயிலின் வீறுங் கொடியும் விழிமுன் விளங்கின் வினையுமுண்டோ தேறு பழம்பொழி சாறிழிந் தோடத் திரளருவி பாறும் இடர்கள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 5 மண்புனல் தீவளி வான்சுடர் யாவுநின் வாழியுடல் திண்ணுயிர் நீயெனில் உண்மையில் ஐயந் திகழலென்னே வண்டுகள் யாழ்செய் மலரணி வல்லி வனப்பொழுகும் பண்புடை ஞானப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 6 மலைபொழில் பூக்கள் மதிகடல் சேய்கள் மயிலனையார் அலைவழி பாடல் அழகுநின் எண்ணம் அறிவுறுத்தும் சிலைநுதல் வேடச் சிறுமியர் சேர்த்த செழியதந்தம் பலகுவ டாகும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 7 ஆண்டவ நின்றன் அறிகுறி யாகிய ஆலயத்துள் தீண்டல் தீண்டாமை சிறத்தலால் அன்பர்கள் செல்வதெங்கே வேண்டல்வேண் டாமை கடந்தவர் வாழ்வும் விரதமுஞ்சூழ் பாண்டிய நாட்டுப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 8 சாதிநோய் பேய்மதம் சார்தரு கோயிலுள் சண்முகநின் சோதி விளங்குமோ சூர்தடிந் தாண்ட சுடர்மணியே நீதியே என்று நினையடி யார்கள் நிறைந்துநின்று பாதமே போற்றும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 9 எல்லாரும் ஓருயிர் அவ்வுயிர் நீயென்ற ஆண்டவனே பொல்லாத சாதி புகுந்திவண் செய்யிடர் போக்கியருள் சொல்லாத மோனச் சுவையிலே தேக்குஞ் சுகர்களிலே பல்லோர்க ளுட்கொள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 10 பழனி எண்ணமெலாம் பழனியிலே எழுத்தெல்லாம் பழனியிலே கண்ணெல்லாம் பழனியிலே கருத்தெல்லாம் பழனியிலே மண்ணெல்லாம் பழனியிலே விண்ணெல்லாம் பழனியிலே பண்ணெல்லாம் பழனியிலே பகர்மனமே பழனியையே. 1 சொல்லெல்லாம் பழனிமலை சுகமெல்லாம் பழனிமலை இல்லெல்லாம் பழனிமலை இயற்கையெலாம் பழனிமலை கல்வியெலாம் பழனிமலை கலைகளெலாம் பழனிமலை செல்வமெலாம் பழனிமலை சிந்திப்பாய் பழனியையே. 2 தேடாயோ பழனிமலை திரியாயோ பழனிமலை நாடாயோ பழனிமலை நண்ணாயோ பழனிமலை ஆடாயோ பழனிமலை அணையாயோ பழனிமலை பாடாயோ பழனிமலை பாழ்மனமே பாழ்மனமே. 3 பழனிமலை என்னுயிரே பழனிமலை என்னூனே பழனிமலை என்னுடலே பழனிமலை என்பொருளே பழனிமலை என்னுறவே பழனிமலை என்னூரே பழனிமலை என்னுலகே பழனிமலை பணிமனமே. 4 சித்தரெலாம் பழனிமலை சிவயோகர் பழனிமலை பித்தரெலாம் பழனிமலை பெரியோர்கள் பழனிமலை புத்தரெலாம் பழனிமலை புனிதரெலாம் பழனிமலை பத்தரெலாம் பழனிமலை பழனிமலை பணிமனமே. 5 அன்பெல்லாம் பழனிமலை அறிவெல்லாம் பழனிமலை இன்பெல்லாம் பழனிமலை இரக்கமெலாம் பழனிமலை துன்பறுக்கும் பழனிமலை துரியநிலை பழனிமலை என்புருகப் பழனிமலை எண்ணாயோ பாழ்மனமே 6 ஓங்கார மூலமலை உள்ளெழுந்த பாம்புமலை நீங்காத சோதிமலை நிறையமிர்த தாரைமலை தூங்காமல் தூங்குமலை துரியசிவ யோகமலை வாங்காத ஞானமலை வளர்பழனி மலைமனமே. 7 ஆறாறு தத்துவத்தில் அடங்காத ஆண்டிமலை கூறாத மொழியினிலே கூர்ந்துநிற்கும் வானமலை மாறாத அழகினிமை மணம்வழங்கும் மகிழ்ச்சிமலை சீறாத சிந்தையிலே திகழ்பழனி மலைமனமே. 8 உலகமெலாந் தொழுதேத்தும் உயர்பழனி மலையினிலே அலகில்லா உயிர்க்குயிராய் அமர்ந்துநிற்கும் பெருமானே! கலகமிடு மனமுடையேன் கருணைபெற வந்தடைந்தேன் இலகுமொரு மொழிபகர எழிற்குருவா யெழுந்தருளே. 9 பிறந்துபிறந் துழன்றலுத்தேன் பெரும்பிழைக ளிழைத்தலுத்தேன் இறந்திருந்து களைத்தலுத்தேன் இறையவனே! உனைமறந்தே திறந்தவெளிப் பழனிமலை திறமுணரிப் பிறவியிலே சிறந்தவொரு மொழியருளத் திருவுளங்கொள்சிவகுருவே. 10 திருவேரகம் அன்னையே அப்பா என்றே அடைந்தனன் அருளை நாடி உன்னையே உள்கு முள்ளம் உதவியோ வேறு காணேன் பொன்னியே என்ன இன்பம் பொங்கருள் பொழிக இங்கே இந்நில மதிக்குஞ் செல்வ ஏரகத் தியற்கைக் கோவே. 1 உடலருங் கோயி லாக உன்னிடங் கூடுங் காதல் விடுவது மில்லை அந்தோ வெற்றியும் பெறுவ தில்லை கடலதைக் கையால் நீந்தக் கருதிய கதைபோ லாமோ இடரிலா வயல்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 2 நீலவான் குவிந்து நிற்க நிலவுகால் மணலில் சீப்பப் பாலதாய்ப் பொன்னி நீத்தம் பளிங்கென வெள்ளஞ் சிந்துங் கோலமே உள்ள மேவிக் கூட்டுநல் அமைதி வேளை ஏலவார் குழலி யானேன் ஏரகத் தியற்கைக் கோவே. 3 சிந்தையைக் கொள்ளை கொண்ட செல்வமே! கோயில் நின்றால் வெந்தழல் கதிரில் மூழ்கி விளைபசுங் கடலி லாடி முந்துகா விரிநீர் தோய்ந்து முற்றுநின் ஒளியி லாழ்ந்தே. இந்துவின் குழவி ஆனேன் ஏரகத் தியற்கைக் கோவே. 4 பொன்னொளி மேனிச் செல்வ! புலங்கவர் மேனி தன்னைக் கன்னியர் அழகே என்கோ காளையர் வீர மென்கோ பொன்னியின் பொலிவே என்கோ புலம்பயிர்ப் பசுமை என்கோ என்னென உரைப்பன் ஏழை ஏரகத் தியற்கைக் கோவே. 5 சாதியும் மதமும் வாதத் தர்க்கமும் வேண்டேன் வேண்டேன் ஆதியே அலைந்து போனேன் அடிமலர் வண்டே யானேன் மேதிகள் சேற்றி லாழ்ந்து மிகமகிழ் பழன மாந்தர்க் கீதலே போல ஓங்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 6 ஆதியில் ஆல யத்துள் அருளிலாச் சாதி யுண்டோ நீதியில் கூட்டத் தாலே நிறைந்தது சாதி நாற்றம் மாதுயர் இடும்பை போக்கி மாநிலம் உய்யச் செய்வாய் ஏதமில் மருதங் கேட்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 7 பெண்ணினை நீத்தல் ஞானப் பேறெனப் புகல்வோர் உள்ளார் கண்ணினில் ஒளியை வேண்டாக் கருத்தினர் அவரே யாவர் மண்ணிலக் கொடுமை தேய்ப்பாய் மங்கையர் வடிவே! செய்யில் எண்ணிலா ஏர்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 8 பிறப்பினைத் தந்து தந்து பேயனை மகனாய்ச் செய்த அறத்தொழில் நினதே யன்றோ? அன்னையின் அன்பே கண்டேன் புறப்பசுங் கடலை நீந்திப் புலன்விழிப் பசுமை போர்க்க இரக்கமாம் பசுமை மேனி ஏரகத் தியற்கைக் கோவே. 9 ஓமொலி கோழி கூவ உலகமே மயிலா நிற்கத் தேமொழி வள்ளி இச்சை தெய்வப் பெண் கிரியை யாக நாமற ஞானம் வேலாய் மனப்புலன் முகங்க ளாறாய் ஏமுறக் கோலங் காட்டாய் ஏரகத் தியற்கைக் கோவே. 10 குன்றுதோறாடல் எண்ணி எண்ணி இணையடி சேர்ந்தனன் கண்ணு நெஞ்சுங் கருதுங் கருணையே விண்ணுங் காடும் விரிகடல் காட்சிசெய் குண்டு கல்செறி குன்றுதோ றாடியே. 1 ஆர வாரம் அவனியில் வேண்டுமோ தீர ஆய்ந்து திருவடி பற்றினன் பாரும் வானும் பரவி வரம்பெறக் கூர நின்றிடுங் குன்றுதோ றாடியே. 2 வெற்றுப் பேச்சால் விளைவது தீவினை கற்ற கல்வி கழலடி கூட்டுமோ செற்ற நீத்துச் சிவம்விளை சிந்தையர் குற்ற மில்லவர் குன்றுதோ றாடியே. 3 நெஞ்சி லுன்னை நினைந்து வழிபடின் அஞ்ச லில்லை அடிமையு மில்லையே செஞ்சொல் வேடச் சிறுமியர் கிள்ளைகள் கொஞ்சிப் பேசிடுங் குன்றுதோ றாடியே. 4 மக்கள் வாழ்வு மலர்ந்த இடமெது துக்க நீக்கிச் சுகஞ்செய் இடமெது பக்கஞ் செங்கதிர் பான்மதி நேரிடம் கொக்கி போற்றொடர் குன்றுதோ றாடியே. 5 உலக வாழ்வை உனக்கு வழங்கிய திலகன் யாரெனச் சிந்தைசெய் நெஞ்சமே மலியு மாபலா வாழையை மந்திகள் குலவி யுண்டிடுங் குன்றுதோ றாடியே. 6 தேனும் பாலுந் திரண்ட அமுதென வானும் மண்ணும் வளரத் துணைபுரி மானும் வேங்கையும் மாவும் விலங்கினக் கோனும் வாழ்திருக் குன்றுதோ றாடியே. 7 காலை வேளைக் கழல்பணி வின்றெனில் மாலை வேளை மறலி வருவனே நீல மங்கையர் நீள்குரல் ஓப்பிடுங் கோலங் கொள்ளிருங் குன்றுதோ றாடியே. 8 செயற்கைக் கோயிலைச் செற்றிடும் மாந்தரே இயற்கைக் கோயி லிருப்பிடம் நோக்குமின் மயிற்கு லங்கள் மகிழ்நட மாடவுங் குயிற்கு ரற்பெறுங் குன்றுதோ றாடியே. 9 காற்றும் வெய்யொளி கான்றிக் கலத்தலால் ஆற்ற லாயுள் அதிகம தாகுமே தேற்றஞ் சாந்தஞ் சிவமணஞ் சேரவெங் கூற்றைக் கொன்றருள் குன்றுதோ றாடியே 10 கதிர்காமம் கலியுகத்துங் கண்கண்ட கற்பகமே! கருத்தினிக்குங் கரும்பே! தேனே! வலியிழந்து பிணியடைந்தேன் மலரடியே துணையென்று மருந்து கண்டேன் நலிவழித்துப் பொன்னுடலம் நல்கியருள் நாயகனே! ஞான நாதா! கலிகடலில் மலரிலங்கைக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 1 தீராத பிணியெல்லாந் தீர்த்தருளும் மருந்தாகித் திகழுஞ் சேயே! பாராத நாளெல்லாம் பாழ்நாளே யென்றுணர்ந்தேன் பரமா! நின்னைச் சேராத பிழைபொறுத்துத் திருவடிக்கே அன்புசெயுஞ் சிந்தை நல்காய் காராலுங் கானமர்ந்த கதிரைவேற் பெருமானே கருணைத் தேவே. 2 விழியில்லார் விழிபெற்றார் செவியில்லார் செவிபெற்றார் விளம்பும் வாயில் மொழியில்லார் மொழிபெற்றார் முருக! நின தருளாலே, மூட நாயேன் வழியில்லா வழிநின்று வளர்த்தவினை வேரறுப்பாய் வரதா! மூங்கில் கழிவில்லார் களியாடுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 3 ஆண்டவனே! உடலளித்தாய் அதைநின்றன் ஆலயமா யாக்கா திங்கு மூண்டசின விலங்குலவுங் காடாக்கும் முயற்சியிலே முனைந்து நின்றேன் தீண்டரிய சிவசோதி! செய்ந்நன்றி கொன்றபெருஞ் சிதட னானேன் காண்டகுநித் திலங்கொழிக்குங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 4 பகலெல்லாம் நின்நினைவே இரவெல்லாம் நின்கனவே பாவி யேற்குச் செகமெல்லாம் நினைக்காணச் சிவகுருவே யெழுந்தருளச் சிந்தை கொள்க குகவென்றால் பிடியுடனே கொல்யானை ஒதுங்கிநிற்குங் குணமே மல்கக் ககனவழிச் சித்தர்தொழுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 5 மண்பொன்னை மங்கையரை மாயையென மறைந்தொழுகல் மதியா குங்கொல் மண்பொன்னில் மங்கையரில் மாதேவ நீயிலையோ மயக்க மேனோ பண்ணிசைபோல் எங்குநிற்கும் பரமநினை மறுத்தொழுகல் பாவ மன்றோ கண்கவரும் மணியருவிக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 6 நீலமயக் கடலினிலே நீண்டெழுந்த பவளமலை! நின்னை நாடிச் சீலமுடன் இருங்காட்டில் செல்வோரைக் கரிகரடி சிறுத்தை வேங்கை பாலணுகிப் பாயாது பத்தியிலே மூழ்கிநிற்கும் பான்மை யென்னே காலமிடங் கடந்தொளிருங் கதிரைவேற் பெருமானே! கருணைத்தேவே. 7 கடலெல்லாங் கதிரையென்று கைநீட்டி வழிகாட்டக் கரிய காட்டின் முடியெல்லாங் கதிரையென்று முழங்கியன்பால் வரவேற்ப மூள்வி லங்கு கடவின்றிக் கதிரையென்று புறமேகப் புட்களெலாங் கதிரை யென்றே கடிதணைந்தே உடன்தொடருங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 8 சாதிமதப் பிணக்கின்றிச் சமரசமா யெல்லோருஞ் சார்ந்து சென்றே ஆதியந்த மில்லாத அறுமுகனே யென்றுன்னை அரற்று கின்றார் சோதி! நின தருளவர்க்குத் துணைபுரிதல் இயல்பன்றோ சொல்ல வொண்ணாக் காதலன்பு கரைகடந்த கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 9 தண்ணமருங் கடலெழுந்த தரைக்காட்டில் தமிழ்க்கோயிற் றனிமை கண்டால் மண்ணருவி முழவதிர மயிலாடக் குயில்கூவ வண்டு பாடும் பண்மயத்திற் புலனுழைந்து பகரரிய அமைதியுறும்; பண்பு கூடும்; கண்மணியே! கருத்தொளியே! கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 10 கழுகுமலை கந்தா குமரா கதிர்வேலா கருணை பெருகு காங்கேயா சிந்தா மணியே சிவகுருவே சித்தந் தெளியத் திருவருளை நந்தா ஒளியே நல்காயோ நானென் முனைப்பால் கெட்டேனே எந்தாய் வள்ளி மணவாளா எழிலார் கழுகு மலையானே. 1 குற்ற நீக்கிக் குணஞ்செய்யக் கொடுத்த பிறவி பலபலவே உற்ற இந்தப் பிறவியிலே உன்னை யுணரும் வாய்ப்புண்டு கற்றல் கேட்டல் கண்திறவா கண்ணைத் திறக்கக் குருவாக வெற்றி வேலா எழுந்தருளாய் விமலா கழுகு மலையானே. 2 உலகம் பொல்லாதென்கின்றார் உளமே பொல்லாதென் றுணர்ந்தேன் கலக உளத்தைக் கடந்துநின்றால் கருணை வடிவேஉலகமெலாம் இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கேகுற்றம் இறையோனே அலகில் அழகே அன்பருளே அறிவே கழுகு மலையானே 3 பொல்லா ஊனைப் புசியாத புனித அறமே உலகமெலாம் நல்லாய் பெருக வேண்டுகின்றேன் நாதா அருளாய் அருளாயே எல்லா உலகும் எவ்வுயிரும் இருக்கும் பெரிய பெருமானே கல்லார் கற்றார் கைகூப்புங் கருணைக் கழுகு மலையானே. 4 வேண்டேன் செல்வம் பேறெல்லாம் வேண்டேன் புகழும் பெருமையுமே வேண்டேன் பதவி விருப்பமெலாம் வேண்டேன் அரசும் விண்ணுலகும் வேண்டும் இரங்கும் நெஞ்சமென்றும் விளங்கும் மற்ற அறமெல்லாம் ஈண்டி யடியார் பணிசெய்யும் ஈசா! கழுகு மலையானே. 5 எல்லா உயிரும் என்னுயிரே என்னும் ஞானம் உளத்தென்றும், நில்லா தொழியின் வாழ்வேனோ நிமல யோகர் கண்ணொளியே! சொல்லாய்ப் பொருளாய்ச் சுகமளிக்குஞ் சுகமே! சுகத்தில் வரும்பயனே! செல்லார் பொழில்கள் பழனங்கள் சேர்ந்த கழுகு மலையானே. 6 மரமாய் நிழலாய் நறுங்காற்றாய் வாச மலராய் மணித்தடமாய்ப் பரவு திங்கள் நிலவாகிப் படர்ந்து புலன்கள் விருந்தளிக்கும் பரனே! பத்தர் பழவினைகள் பரிதி முன்னே பனிபோல இரிய அருளின் ஒளியுமிழும் இனிய கழுகு மலையானே. 7 எந்தச் சமயம் நுழைந்தாலும் இறுதி இன்பம் ஒன்றன்றோ இந்த உலகம் பலபெயரால் இசைக்கும் ஒருவ! பன்னிறங்கள் சிந்தும் ஆக்கள் பொழிபாலில் திகழும் நிறங்கள் பலவேயோ சந்தத் தமிழில் பண்பாடுஞ் சங்கக் கழுகு மலையானே. 8 வாது சமய வழியினிலும் வகுப்புச் சமய நெறியினிலும் சாதிச் சமயச் சார்பினிலும் சார்ந்து நில்லா வாழ்வளித்த கோதி லமுதே! குணக்குன்றே! குறைவில் நிறைவே! அருட்கடலே! சோதிப் பொருளே! நீவாழி! தூய கழுகு மலையானே! 9 மண்ணாய் நீராய் அனலாகி வளியாய் வெளியாய் ஒளியாகிக் கண்ணாய் மணியாய் உயிராகிக் காக்குங் கருணைக் கடவுளுனை எண்ணா வாழ்வு இருள்நரகம் எண்ணும்வாழ்வே அருளின்பம் அண்ணா! அருண கிரிக்கருளி ஆண்ட கழுகு மலையானே. 10 குன்றாக்குடி மண்ணோர்களும் விண்ணோர்களும் மகிழத்திரு மலைமேல் அண்ணா! அறு முகவா! எழுந் தருளுந்திருக் கோயில் கண்ணாரவும் நெஞ்சாரவுங் கண்டே தொழ வந்தேன் தண்ணார்பொழில் குன்றாக்குடித் தமிழா! எனக் கருளே. 1 கதிரோன்பொழி ஒளிமேய்ந்திடுங் கருணைப்பெரு மலைமேல் நிதியாளரும் மதியாளரும் நிறையுந் திருக் கோயில் gâna!பர மேட்டி! உனைப் பரிவாய்த்தொழ வந்தேன் கதியேயெனக் குன்றாக்குடிக் கண்ணே! எனக் கருளே. 2 நீலந்தரு வானில்மதி நிலவுந்திய மலைமேல் சீலந்திரு மயின்மங்கையர் சேர்ந்தேபணி கோயில் காலன்வினை தொடராவழி காணப்புகுந் தேனால் கோலம்பெறு குன்றாக்குடிக் குணமே! எனக் கருளே. 3 புறச்சோலையும் அறச்சாலையும் பொலியுந்தெரு மலைமேல் kw¢rh®ãid mW¡F§FU kÂna!திருக் கோயில் உறச்சேர்ந்தனன் உளங்கொண்டனன் ஒளிபெற்றிட முருகா! Ãw¢nršÉÊ¡ F‹wh¡Fo Ãkyh!எனக் கருளே. 4 முன்னம்வினை பலவேசெய மூர்க்கன்முனைந் திட்டேன் இன்னம்வினை செயவோமனம் எழவேயிலை ஈசா! ò‹bdŠád‹; KUfh!நினைப் புகலேயெனப் புக்கேன் Ä‹d‰bfho¡ F‹wh¡Fo ntyh!எனக் கருளே. 5 மலைநோக்கினன் மலையேறினன் மலையாகவே நிற்கச் சிலைவேடரைச் செற்றுக்கொடிச் சிவவள்ளியைக் கொண்ட இலைவேலவ! முயன்றேவரும் ஏழைக்கருள் செய்யாய் miyntbraš F‹wh¡Fo m‹gh!நினக் கழகோ. 6 கல்லாதவன் பொல்லாதவன் கருணைப்பொருள் வேண்டி நில்லாதவன் என்றேஎனை நீக்கிப்பெரு மொழியைச் சொல்லாதிவண் நீத்தாலினிச் சூழப்புக லுண்டோ bršyhUa® F‹wh¡Fo¢ átnk!இது வழகோ. 7 அறுமாமுகந் தோளாறிரண் டழகுத்திரு மார்பும் உறுகோழியும் மயில்வேலுடன் ஓதும்பிடி மானும் நறுமாணடி மலரும்விழி நாடற்றெரிந் தருளாய் òwnkÉlš F‹wh¡Fo¥ bghUns!நினக் கழகோ. 8 சாதிப்பிரி வாலேயுயர் சன்மார்க்கமுந் தளர நீதித்துறை வழுவுங்கொடு நிலைநேர்ந்துள நேரம் nrhâ¥bgU khnd!துணை சூழாதிவ ணிருத்தல் ஆதிப்பொருள்! F‹wh¡Fo munr!நினக் கழகோ. 9 kÆšnkbyhË® kÂna!உயர் மலைமேல்திகழ் மருந்தே! cÆ®nfhÆÈ bdhËna!உணர்ந் தோதற்கரும் பொருளே! துயில்கூரிருட் டுன்பங்கெடத் தொடுவேலவ! வாழி FÆšTîe‰ F‹wh¡Fo¡ nfhnd!சிவ குருவே. 10 சென்னி மலை பொன்மயி லரசே! புண்ணிய முதலே! புனிதனே! பூதநா யகனே! என்பெலாம் உருக எண்ணியே இருக்க எத்தனை நாட்களோ முயன்றேன் துன்பமே சூழ்ந்திங் கிடையிடை வீழ்த்தத் துயருறு கின்றனன் ஐயா! இன்பமே! சென்னி இறைவனே! ஈசா! இணையடித் துணையரு ளின்றே. 1 என்பிழை பொறுத்தே என்றனுக் கருள எத்தனை உடலமோ ஈந்தாய் அன்புநீ ஐயா! அன்பிலாப் பேய்நான் அளப்பருங் குறைகளே உடையேன் மின்னொளி வேலா! நின்னரு ளின்றி விடுதலை யில்லையென் றுணர்ந்தேன் கன்னியர் சூழுஞ் சென்னிமா மலைவாழ் கடவுளே! ஆண்டருள் செய்யே. 2 நானெனும் முனைப்புள் நாயினேன் சிக்கி நான்படுந் துயரமென் சொல்வேன் கானவர் வலையில் கலையெனக் கலங்குங் கடையனேன் கருத்தினை அறிவாய் வானவர் பொருட்டு வட்டவே லேந்தும் வள்ளலே! முனைப்பற வேண்டித் தேனமர் சென்னி மாமலை சேர்ந்தேன் சிறியனை ஆண்டருள் செய்யே. 3 நின்வழி நின்று நிகழ்த்திடுந் தொண்டே நேரிய தாய்நலம் பயக்கும் என்வழி நின்றே இயற்றிடுந் தொண்டால் எரிபகை எழுதலுங் கண்டேன் மன்னுயிர்த் தொண்டாம் மலரடித் தொண்டே மகிழ்வுடன் ஆற்றுதல் வேண்டும் பன்மணி கொழிக்குஞ் சென்னிவாழ் பரமா! பாவியேன் வேண்டுதல் கேளே. 4 என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன் எழிலுடல் ஓம்பலும் வேண்டேன் மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் மலரடி வழிபெறல் வேண்டும் துன்பமே உலகாய்த் தோன்றுதல் மாறிச் சுதந்திர உணர்வுட னெங்கும் இன்பமே ஓங்க இளமையே! சென்னி ஏந்தலே! என்றனுக் கருளே. 5 சாதியில் அடிமை மதத்தினில் அடிமை தங்கிடும் வீதியில் அடிமை நீதியில் அடிமை நிறத்தினில் அடிமை நிலவுல கெங்கணும் அடிமை ஆதியே! அடிமை நோயினை அகற்ற அருளொளி ஆண்மையே வேண்டும் கோதிலாச் சென்னிக் குணமலை யரசே! குவலயத் திடர்களை யாயே. 6 உலகினை யளித்தாய் உயிரெலாம் வாழ்ந்தே உன்னொளி காணுதற் பொருட்டே கலகமே செய்து காலமே கழித்துக் கடவுளே! உன்னையும் மறுத்தே அலகையாய் உயிர்கள் அழிநிலை நோக்கி அடியனேன் படுதுயர் அறிவாய் திலகமாய்ப் பொலியுஞ் சென்னிவாழ் சிவமே! தீமையைக் களைந்தருள் செய்யே. 7 அரசியற் பெயரால் ஆருயிர்க் கொலைகள் அவனியில் நாளுநாள் பெருகிப் பரவுதல் கண்டுங் கேட்டபோ தெல்லாம் படுதுயர் பரமனே! அறிவாய் கரவுள நெஞ்சம் எங்கணும் மலிந்தால் காசினி எந்நிலை யுறுமோ திருவெலாம் பொலியுஞ் சென்னிமா மலைவாழ் சித்தனே! திருவருள் செய்யே! 8 ஆறுமா முகனே! அண்ணலே! உயிர்கள் அகத்துறு நோய்களை நீக்கித் தேறுதல் செய்யுந் தெய்வமே என்று திருவடி அடைக்கலம் புகுந்தேன் ஈறிலா இளமை எழில்கொழி முருகா! இயைந்திடும் மணமலி இறையே! மாறிலாச் சென்னி மலையமர் வாழ்வே வளர்வினை தேய்த்தருள் செய்யே. 9 குமரனே என்று கூவியே உள்ளக் குகையிலே ஒளியினைக் கண்டோர் அமரரும் போற்றும் அடிகளே யாவர் அருவினைக் கோள்களுஞ் சூழா எமபய மில்லை இன்பமே யென்றும் ïiwt!நின் பெருமைதான் என்னே சமரிலே சூரைத் தடிந்தருள் சென்னிச் சண்முகா! அடைந்தனன் கழலே. 10 திருச்செங்கோடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே தோய்ந்தவெம் பாவி மெய்யிலே நிற்க விழைந்தனன் விழைந்து மேவிய நெறிகளும் பலவே அய்யனே! இயலா தலமரு கின்றேன் அருளொளி வேண்டுமென் றுணர்ந்தேன் மெய்யனே! திருச்செங் கோட்டினில் மேவும் மேலவா! எழுந்தருள் செய்யே. 1 பொய்யிலா நெஞ்சில் புகுந்தருள் விளக்கே! புனிதனே! புண்ணிய முதலே! பொய்யினைக் கழிக்கப் பொய்யனேன் நொந்து புலம்பிய புலம்பலை அறிவாய் மெய்யிலே விளங்கும் மெய்யனே! ஏழை மெலிந்தனன் நலிந்தனன் அம்மா! செய்யனே! திருச்செங் கோட்டினிற் றிகழுந் தெய்வமே! திருவருள் செய்யே. 2 மண்ணிலே பிறந்த மனிதனே அடியேன் மனத்தினாற் பொய்முதற் பாவம் நண்ணவும் அஞ்சி நடுங்குவ தறிவாய் நடுங்கினுந் தொலைவதோ இல்லை தண்ணரு ளொளியே! சண்முகா! பாவச் சார்பிருள் முற்றிலுஞ் சாய்க்கும் விண்ணெழு திருச்செங் கோட்டினில் விளங்கும் வேலவா! அருள்புரி யாயே. 3 எண்ணிலா உடலம் தந்துதந் திந்த எழிலுடல் தந்ததும் அருளே மண்ணிலே பாவ இருளிலே மயங்க வைப்பதும் அருளினுக் கழகோ பண்மொழி இருவர் பங்கனே! கமலப் பன்னிரு கண்ணனே! வேலின் அண்ணலே! திருச்செங் கோட்டினி லமர்ந்த அப்பனே! ஆண்டருள் செய்யே. 4 பாவமே முற்றும் பற்றிடா திருக்கப் பற்றினேன் பலதுறை முயற்சி சேவலங் கொடியாய்! சிறுமகன் முயற்சி திறத்துள எல்லையுங் கண்டேன் ஆவதொன் றில்லை யாதுயான் செய்கேன் அடர்பழி என்றனை யுறுமோ தேவனே! திருச்செங் கோட்டினிற் சிறக்குஞ் செல்வனே! காத்தருள் செய்யே. 5 திருவடி யொன்றே துணையெனக் கொண்டு தெளிந்தனன் வழியினை அமுதே! குருவென வந்து குறிக்கொளின் கொள்க குறிக்கொளா திருப்பினும் இருக்க கருமமே யுடையேன் கனன்றிட மாட்டேன் கழலிணை மறக்கவும் மாட்டேன் தருமனே! திருச்செங் கோட்டினி லெழுந்த சண்முகா! தயைநிறை கடலே. 6 முற்றிய பாவ மூலத்தை யறுக்க முறையிலா வழிகளி லுழலேன் சுற்றிய உயிரைத் தொண்டினைத் துறவேன் துறவெனக் காட்டினுக் கோடேன் பற்றியே மூக்கை மூச்சினை அடக்கேன் பாரினைப் பாழெனக் கொள்ளேன் உற்றசெங் கோட! உருகியே உயிர்கள் உயர்பணி செய்யவேண் டுவனே. 7 உருகியே அருளால் முனைப்பினை யொடுக்கி உயிர்வழி நின்பணி உஞற்றக் கருதிய கருத்தைக் கடவுளே! அறிவாய் கருத்தது கூடிட அருள்வாய் முருகிய வேட்கை மூண்டெழல் காணாய் மூடனேன் பிறநெறி செல்லேன் முருகனே ! திருச்செங் கோட்டினி லமர்ந்த மூர்த்தியே அன்புவேண் டுவனே. 8 ஆறுமா முகமும் ஆறிரு தோளும் அணிகடம் பாரமும் அன்பின் கூறெலாங் கூடித் திரண்டிரு புறமுங் குலவிய தாய்மையின் பொலிவும் வீறிடு வேலும் வீரமா மயிலும் விரைமலர்த் தாள்களுஞ் செம்மை மாறிலாத் திருச்செங் கோட்டினிற் கண்டு மனிதனாம் பணியைவேண் டுவனே. 9 நாத்திகப் பணியை நாடிலேன் அடியேன் நாடுவன் ஆத்திகப் பணியே நாத்திகம் எனல்நான் ஆத்திகம் அறல்நான் நான்எனும் பணிகளே உலகில் ஆத்திரம் ஊட்டும்; நான்அறும் பணிகள் ஆருயிர் அன்பினை யோம்பும்; பாத்திரத் திருச்செங் கோடனே அருள்செய் பணியெனும் ஆத்திகப் பணியே. 10 வேளூர் என்னையேன் பிறப்பித்தாய் இறையவனே! இங்கே ஏன்வளரச் செய்வித்தாய் இடர்க்கடலில் விழவோ g‹Dfiy gƉWɤjhŒ guk!நின துண்மை பகுத்தறிவால் உணர்ந்துமனம் பார்க்கவெழ லாச்சே மன்னுவெறுங் கல்லாக மண்ணாகத் தோன்றின் மாதுயரில் அழுந்தாது மகிழ்ச்சியுடன் வாழ்வேன் உன்னடியைக் காட்டாயேல் உயிர்தரியா திங்கே ஒளிமுத்துக் குமரகுரு உயர்வேளுர் மணியே. 1 உன்னுண்மை யுணர்ந்தமையால் உன்னொளியைக் காண உளமுருக ஊனுருக உடலுருக அழுதே உன்னுகின்றேன் இரவுபகல் ஓயாதே அந்தோ! உடைந்துமனம் வாடுகின்றேன் உடையவனே! அறிவாய் பன்னிரண்டு கண்ணுடையாய்! பாவிபடுந் துயரைப் பார்க்கமன மெழவிலையோ பரங்கருணைக் கடலே! மின்னுசுடர் வேலேந்தி மேதினியைக் காக்க விளங்குமுத்துக் குமரகுரு வேளூர்வா ழரசே! 2 ஆணவத்தால் பலவினைகள் ஆற்றிவிட்டேன் ஐயா! அவைநினைந்தே அழுகின்றேன் அருள்புரிதல் வேண்டும் வீணுரைகள் மிகப்பேசி வெறுப்பனவே செய்தேன் வேலவனே! அவைபொறுத்து விழைந்தேற்றல் வேண்டும் தோணிபுய லெழுகடலின் சுழியுழன்றா லென்னச் சுழலுகின்ற மனமுடையேன் துணைபுரிதல் வேண்டும் தாணுவென உனையடைந்தேன் சண்முகனே! காவாய் தவம்வளரும் வேளூரில் தமிழ்க்குமர குருவே. 3 எண்ணாத எண்ணமெலாம் எவ்வளவோ எண்ணி ஏழைமனம் புண்ணாகி இளைக்கின்றேன் நாளும் பண்ணாத வடிவழகா! பாவிபடுந் துயரைப் பாராயோ பசுங்கொடிசூழ் பவளமலை யண்ணா! கண்ணார உனைக்கண்டால் கவலையெலாம் மாயும் கலியுகத்து வரதனெனக் காரணப்பே ருடையாய்! விண்ணாரும் பொழிலுடுத்து வேதனைகள் தீர்க்கும் வேளூரில் வீற்றிருக்கும் வேற்குமர குருவே. 4 எழுதரிய வடிவழகை ஏழைவிழி காண எழும்வேட்கை நீயறிவாய் எவரறிவார் ஐயா! அழுதழுதே அயர்கின்றேன் அருளுடைய அரசே! m¥gh!நீ கைவிடுத்தால் அணைப்பவர்தாம் யாரே பழுதுடையேன் பிழையுடையேன் பாவமிக வுடையேன் பற்றுதற்கோ வேறில்லை பரம்பரனே! பாராய் விழுதுடைய ஆல்வேலும் வேம்பரசுஞ் சூழ்ந்த வேளூரில் குருவடிவாய் வீற்றிருக்குந் தேவே. 5 ஞானவடி வேலேந்தி நலஞ்செயவே கொண்ட நல்லபெருங் கோயில்பல நண்ணிநின்ற போது ஊனமிகு சாதிப்பேய் உலவுதலைக் கண்டே உளமுடைந்தே ஓடிவந்த உண்மைநிலை யறிவாய் வானவனே ஏழைதுயர் வருத்தமெலாங் களைய வல்லவர்யார் இவ்வுலகில் வள்ளலுனை யன்றித் தேனமரும் பொழில்சூழ்ந்து தெய்வமணங் கமழும் திருவீதி வேளூரில் திகழ்குமர குருவே. 6 வெள்ளையுடை அணிவித்து விழுப்பொருளும் ஈந்து வீட்டிலிரு என்றுசென்றாய் வீதிவழிப் போந்தேன் தள்ளரிய துகளெழுந்து தாக்கிவிழி பொத்தத் தக்கவுடை கறைபடியத் தவிக்கின்ற வேளை கள்ளரணி கலன்கவர்ந்து காற்றெனவே பறந்தார் கண்விழித்தே அழுகின்றேன் காக்கவெழுந் தருளாய் வள்ளியினைப் பிரியாத வடிவழகு முதலே! வயற்சாலி சூழ்வேளூர் வள்ளல்குரு மணியே. 7 சூரனொடு சிங்கமுகன் தாரகனுஞ் சூழ்ந்தே துளைக்கின்றார் என்னுயிரைத் துயர்க்கொடுமை அறிவாய் கீரனுக்குக் கருணைபுரி கேண்மைமிகு தேவே! கிளரந்த அரக்கர்துயர் கெடுக்கவல்லார் யாரே வீரநெடு வேதாந்த வேலெழுந்த ஞான்றே வீழ்ந்துபடும் அரக்கர்குலம் வீறுகரங் காணச் சீரிணையை வேண்டுகின்றேன் சிவனடியார் நேயா! செல்வமுத்துக் குமரகுரு செவ்வேளூர் அரசே. 8 அறுபொறியாய் வெளிவந்தே அசைகாற்றும் அனலும் அணைத்தேந்திச் சரவணத்தில் அன்புடனே சேர்க்கச் சிறுகுழவி யாகியங்கே செகமதிலே ஏறித் தீங்குவிளை சூரர்களைச் செவ்வேலால் சாய்த்து நறியகுழல் யானையொடு நங்கைவள்ளி மணந்த ஞானநிலை யுணர்ந்துன்னை நண்ணுகின்றேன் ஐயா! நறவமடு வண்டிசைக்கும் நகைமலர்பூண் சோலை நற்றவத்து வேளூரில் நாதசிவ குருவே. 9 ஐந்துபெரும் பூதமுறை ஆண்டவன்நீ யென்றும் ஆருயிரின் தீமையழி அருள்வேள்நீ யென்றும் உந்திச்சை கிரியைசத்தி உடையவன்நீ யென்றும் உபநிடதம் உரையுண்மை ஓர்ந்துன்னை யடைந்தேன் கந்தசிவ சண்முகனே! கண்புருவ நடுவில் கற்பூர விளக்கெனவே காட்சியளி சோதி! சந்தவிசைப் பண்ணினிலே தாண்டவஞ்செய் பொருளே! தமிழ்முத்துக் குமரகுரு தவவேளூர் அரசே. 10 திருமயிலம் மண்ணெழுந்து விண்காட்டு மலையாய் வெங்கால் வாங்கிநில வாக்குநிழல் வண்மைக் காடாய் தண்ணமரும் பசுமைகொழி வயலாய் நீலச் சாந்தநிறக் கடலாகித் தாங்குந் தாயே! உண்மையிலே ஒளிர்கின்ற ஒளியே! என்றும் உளக்கோயில் கொண்டவர்தம் உயிரே! நாயேன் வண்ணமயில் திருக்கோல வனப்புள் மூழ்க வந்தடைந்தேன் மயிலமலை வாழுந் தேவே. 1 பசுங்கடலில் மிதக்கின்ற படவே போன்று பயிர்சூழ ஒங்கிநிற்கும் பரிவுக் கோயில் விசும்புள்ளார் பாதலத்தார் விரும்பி யேத்த வீற்றிருக்கும் பெருமானே! விமலா! பாசம் நசுங்குவழி காணாது நாயேன் பன்னாள் நாயகனே! கழித்துவிட்டேன் ஞானம் இன்றுன் வசம்பெறவே வந்தடைந்தேன் வள்ளால்! பார்த்து மருள்நீக்கி அருள்செய்க மயில வாழ்வே. 2 வித்தாகி முளையாகி வேர்கள் வீழ்த்தி விண்ணோங்கு செடியாகி விரிந்து நீண்டு சத்தாகிக் கவடாகித் தாங்குங் கோடாய் தளிரிலைகள் தழைத்துநிற்குந் தருவே! நீழல் பித்தாகி ஓடிவந்தேன் பாலைக் கள்ளிப் பெருங்கழுகு எதிர்க்கஎனைப் பின்னிட் டேனால் அத்தா! என் வேட்கையுணர்ந் தச்சம் நீக்காய் அமரர்தொழும் மயிலமலை அன்புத் தேவே. 3 மண்ணாகி மணலாகி வளர்கல் லாகி மகிழ்குன்றாய் மனங்கவரும் மலையே! நின்பால் கண்ணாகிக் கல்லாலிற் கதிருள் மூழ்கி கறையில்லா உயிர்ப்பருந்திக் கருத்திற் சாந்தம் உண்ணாடி வழியடைய உவந்து வந்தேன் ஒருபுலியின் பார்வைவிழ உடைந்து வீழ்ந்தே m©zh!நான் நடுநடுங்கி அகன்றேன்; அச்சம் அழித்தருள்செய் மயிலமலை அழகுத் தேவே. 4 மழையாகிக் கால்நீராய் வனப்பா றாகி வாய்பாய்ந்து புனற்காடாய் வாரி போல விழியாலுங் கரைகாணா விண்சாய் ஏரி! வெம்மைகொள வேட்கையெழ விரைந்தே யோடி வழியாலே நடந்திழிந்து வந்த வேளை மகரங்கள் குழுகுழுவாய் வளைந்து பாய்ந்து சுழியாடல் கண்டஞ்சித் தூரஞ் சென்றேன் துயர்களையாய் மயிலமலைத் தூய்மைத் தேவே. 5 எங்கெங்கு நீங்காம லிருக்குந் தேவே! எங்கிருந்து துன்பஇருள் எழுந்த தையோ தங்குமிடந் தெரியவிலை தமியேன் நாளும் தாங்குதுயர்க் கெல்லையிலை தாயே யாகி இங்கடியார்க் கருள்புரிய எழுந்த ஈசா! ஏழைமுகம் பாராம லிருப்ப தென்னே திங்கள்பொழி நிலவாடத் தென்றல் வீசத் திருக்குளஞ்சூழ் மயிலமலைச் செல்வத் தேவே. 6 அத்தநின துண்மையினை அறிந்துஞ் செய்த அடாதசெயல் அத்தனையும் அழிதல் என்றோ? சித்தரெலாந் தொழுந்தலைமைச் சித்த ரேறே! சிந்தைகொண்டால் தீப்பஞ்சாய்த் தீந்து போகும் பத்தருளக் கோயில்கொளும் பரமா! செம்பில் படுகளிம்பைப் பாற்றுவித்துப் பசும்பொன் னாக்குஞ் சுத்தசெழு மூலிகைகள் சூழ்ந்து நிற்கும் தொன்மயில மலைமருந்தே! துணைசெய் யாயே. 7 சாதியிலே மதங்களிலே சார்பு விட்டேன் சண்முகனே! திருவடியின் சார்பு கொண்டேன் வீதியிலே விளையாடித் திரிந்த காலை வேலவனே! நின்தொண்டு விளங்க வில்லை நீதியிலே நின்றுயிர்க்கு நிகழ்த்துந் தொண்டே நின்தொண்டாம் என்றுணர்ந்தேன் நிமலா! பின்னாள் வாதமிலா இடத்தொளிரும் வள்ளி நாதா! மயிலமலைச் சிவகுருவே வருவா யின்றே. 8 விண்ணுறுநீல் பந்தரிட மிளிருங் கோள்கள் மின்விளங்கு நிரைவழங்க விரிந்த திங்கள் வெண்ணிலவு விருந்தூட்ட விசிறச் சோலை மெல்லியகால் பன்மலரின் விரையைத் தூவத் தண்ணருவி முழவதிர்ப்பச் சங்கம் ஆர்ப்பத் தமிழ்வண்டு பாண்மிழற்றத் தனியே நின்றேன் கண்ணுலவு நாயகனே! கந்தா! வந்து கருணைபுரி மயிலமலைக் கரும்பே தேனே. 9 மண்ணொடுங்கி நீர்வறண்டு வன்னி மாய்ந்து வளியடங்கி வெளிகலங்கி மடிவுற் றாலும் கண்மயிலில் ஏறிவிளை யாடுங் கந்தா! கடையின்றிக் கேடின்றிக் கலக்க மின்றிப் பண்ணடியார்க் கருள்புரியும் பரமன் நீயே பாழ்பிறவி வேரறுக்கப் பாவி நாளும் தண்ணருளை நாடியலை கின்றேன் அந்தோ! தயைபுரிவாய் மயிலமலைச் சாந்தத் தேவே. 10 திருப்போரூர் என்னுயிரே! என்னுடலே! எனையீன்ற தாயே! என்தந்தை! என்னுறவே! எனக்கினிய கலையே! இந்நிலமும் எந்நிலமும் இயங்கவருட் செங்கோல் ஏந்துமிறை நீயென்றே இளமைமுதல் கொண்டேன் பொன்னவிருந் திருமேனிப் பொங்கொளியைக் காணப் புந்தியிலே எழும்வேட்கை புண்ணியனே! அறிவாய் என்விழிக்கு விருந்தளிக்க எழுந்தருளல் என்றோ ஏருழவர் பாவொலிக்கும் எழிற்போரிச் சிவமே. 1 உலகளித்தாய் உடலளித்தாய் உயர்பிறவி யுள்ளம் உவந்தளித்தாய் அப்பிறவி உறுபயனைக் காண அலைகின்றேன் அலைவெல்லாம் ஆண்டவனே! அறிவாய் அலைந்தொழிந்தே அகங்குழைய அழுதுகிடக் கின்றேன் பலகலைகள் கற்றாலும் பன்னெறிசேர்ந் தாலும் g‰Wbe¿ TlÉšiy guk!நின தருளே நிலையளிக்கும் என்றடைந்தேன் நீயுமெனை விட்டால் நிலைப்பதெங்கே திருப்போரூர் நீலமயி லரசே. 2 படவேறிக் கழியுழுது பக்கமெலாம் பசுமைப் படர்சோலை தொடர்ந்துவரப் பரவையெழு காற்றும் உடலேற உளங்குளிர உன்றன்திருப் போரூர் ஒருமுறையோ இருமுறையோ உவந்துவந்த தந்தோ நடமேறும் மயில்கண்டு நறுங்குளத்தில் மூழ்கி நல்லதிருக் கோயில்மலை நண்ணிவலம் வந்து விடமேறும் வாழ்விலேநின் விருந்தமுதம் ஏற விழைந்தழுத தெத்தனையோ முறைமுருக வேளே. 3 மலையடியில் மரஞ்சூழ்ந்த மண்டபத்தில் நின்று மயிலேறும் பெருமானே! மலரடியை யுன்னிக் கலையுலவுங் காட்டின்வழிக் கருணைகுரு வாகிக் காட்சியளிப் பாயென்று காத்திருந்தேன் நாளும் jiyt!நினைக் காணாது தளர்ந்தழுத அழுகை சண்முகனே! நீயறிவாய் தமியனென்ன செய்வேன் சிலையுழவர் கிளிவளர்க்குந் திருப்போரூர் முருகா! சிதம்பரனார்க் கருள்சுரந்த தெய்வசிகா மணியே. 4 மலையேறி மீதமர்ந்தேன் மனவமைதி கண்டேன் மாதேவா! நின்வடிவோ மால்கடலா யொருபால் தலையாலும் பசுங்கடலாய்த் தழைதழைப்ப வொருபால் தாரகைகள் மிளிர்நீலத் தனிவானாய் மேற்பால் நிலையாக இறைபோது நிறைவினிலே நின்றேன் நிலைக்கவது நீகுருவாய் அருள்புரிதல் வேண்டும் கலையாலுங் காணவொண்ணாக் கற்பூர விளக்கே! கானமயில் திருப்போரூர் கருணைபொழி தேவே. 5 என்னுடலம் நின்கோயில் என்னுயிரோ நீயே எளியனைநீ மறந்தாலும் இறைவநினை மறவேன் சின்னபரு வத்திருந்தே சிந்தைகொளச் செய்தாய் சிற்பவுரு காட்டுவித்தாய் திகழியற்கை யூடே மன்னழகு காட்டுகின்றாய் மாதேவ! குருவாய் மகிழுருவங் காட்டாயோ மனங்குவியா துன்னை உன்னுவதா லென்னபயன் உறுத்துவினை யுயரும் உம்பர்தொழுந் திருப்போரூர் உண்மைவடி வரசே. 6 சாதிமத நெறிப்பேய்கள் தலையெடுத்தே யாடித் தயைநெறியாந் தெய்வநெறி சாய்த்துவரல் காணாய் நீதியிறை நின்பெயரால் நித்தலுமே சூது நிகழ்ச்சிபல முகமாக நீண்டுவரல் காணாய் ஆதிநெறி சாதிமத அழுக்கில்லா நெறியே அவனியெங்கும் பரவவருள் ஆண்டவனே! செய்வாய் nrhâ!நின தருணெறிக்குத் தொண்டு செயல்வேண்டும் துணையருள்வாய் திருப்போரூர் தூயமணி விளக்கே. 7 போரூரா! நின்மலைமேல் போந்திருந்தால் விளையும் புத்தமிர்த போகமது புகலவுமொண் ணாதே காரூரும் வான்கண்கள் கதிர்மதியின் பொழிவு, கடல்நீலம் கான்பசுமை கலந்துவருங்காட்சி, ஏரூரும் எருதுகன்றா ஈண்டிவருங் கோலம், ஏரிநிறை பறவையெல்லாம் எழும்புகின்ற ஓசை, சீருருந் தென்றல்தெளி, செல்வவிருந் தாகும் தெய்வபசும் மயில்திகழுஞ் செம்பவளக் குன்றே. 8 நால்வருணம் பிறப்புவழி நாட்டியநாள் தொட்டு நாவலந்தீ வழிந்தொழிந்து நாசமுற லாச்சே தோல்வருணஞ் செய்கொடுமை சூதுநிறை சூழ்ச்சி சொல்லாலே சொல்லுதற்குச் சொற்களிலை யந்தோ! மேல்வருணங் கீழ்வருண வேற்றுமைகள் வீழ்ந்தால் ntyt!நின் மெய்ம்மைநெறி விளங்கும்வழி வழியே பால்வழங்கும் பசுவனையார் பத்திவிளை யமுதே! பனைசூழுந் திருப்போரூர் பச்சைமயி லரசே. 9 சாதியென்றும் மதமென்றுஞ் சாத்திரங்கள் காட்டிச் சந்தைகடை விற்பவர்கள் சார்பறுத்துக் கொண்டேன் ஓதுநெறி யொன்றிறைவன் நீயொருவன் என்றே உணர்ந்தறிந்தேன் உத்தமனே! உயர்பொருளே! என்னைச் சோதனையிற் படுத்தாதே சூர்தடிந்த வேலா! சோதியுருக் காட்டியருள் சூழ்வினைகள் ஓடப் பாதையிலே சோலைநிழல் பசுநிரைகள் தேங்கும் பழம்பெரிய திருப்போரூர் பான்மைமற வேனே. 10 இளையனார் வேலூர் செழுங்கொண்டை திரைத்தசையச் சீக்குங்கால் கோழிகளே! உழும்பழனம் பலசூழ்ந்தே உமிழ்பசுமை ஒளியிடையே விழும்புனல்சேர் இளையனார் வேலூர்க்கிவ் வழிதானோ கெழும்பயலை நோய்தீரக் கிளர்ந்தெழுந்து கூவீரே. 1 இளங்குழவி கையிலுள இடியப்பங் கவர்ந்துண்ண உளங்கொண்டு குறிபார்க்கும் ஒத்தகருங் காகங்காள்! வளங்கொழிக்கும் வயல்சூழ்ந்து வளர்வேலூர் எதுவென்றென் களம்பயலை பிணிதீரக் கருணையுடன் கரையீரே. 2 வட்டணையில் சுழன்றாடும் வகைநீலப் புறவினங்காள்! மட்டொழுகும் மலர்ப்பொழிலில் மதிநிலவில் மங்கையரும் கட்டழகுக் காளையருங் கவிபாடி யின்பநுகர் எட்டுடைய இறைவேலூர் எங்கென்று முழங்கீரே. 3 மேயெருமை முதுகிடத்து மேவுகருங் குருவிகளே! வேயிசைக்கும் இறையனார் வேலூரில் மயங்குகின்றேன் சேயனிள அழகுமணத் திருமேனிச் செல்வன்திருக் கோயிலுள இடமெங்கே கூரலகால் குறியீரே. 4 காலையிலும் மாலையிலுங் கண்களிக்கப் பறக்கின்ற வாலிறகுத் தும்பிகளே! வளர்திங்கள் நிலவினிலே பாலிமணற் கரைசேர்ந்தேன் பண்மொழியார் வேலூரில் நீலமயில் வீரனுக்கென் நிகழ்ச்சியினை யுரையீரே. 5 செங்கமல வாவியிலே தேன்மடுக்கும் வண்டுகளே! தொங்குகுலை வாழைசெறி தொல்பதியான் வேலூரான் தங்குவொளி வண்ணத்தான் தமிழ்முருகன் கடம்பணிந்தோன் பொங்கழகற் கென்வரவைப் போய்மிழற்றிப் புகலீரே. 6 பேடையுடன் பிரியாத பெட்புடைய அன்றில்காள்! கோடையிலும் வற்றாத குணமுடைய ஈராற்றின் ஓடைகளின் ஓதநிறைந் தோங்குதனி வேலூரில் மேடையிலே வாழிறைக்கென் வேட்கைதனை விளம்பீரே. 7 விண்ணேறு மரத்தழையில் விளங்குமிடந் தெரியாமல் பண்ணேறு குரற்குயிலே! பாலாறுஞ் சேயாறுந் தண்ணேறு பழனஞ்சூழ் தமிழிளைய வேலூரான் எண்ணேறு மாண்புகழை இங்கிதமாய்க் கூவாயே. 8 மணியென்ன மரகதத்தில் மரம்படருங் கொடிக்கொவ்வை அணிகனிக ளுண்பவள அழகலகுப் பசுங்கிளிகாள்! தணிபொழிலும் பைங்கூழும் தழைதழைக்கும் வேலூரான் கணியறியா மெய்க்கீர்த்தி காதினிக்க மொழியீரே. 9 புற்பூச்சை வாய்க்கொண்டு புரிபேடைக் கீயும்வழி அற்பூட்டும் பூவைகளே! அணியிளைய னார்வேலூர் பொற்பூருஞ் சோலையிலே பூமணக்கும் நேரமிது சிற்பரன்றன் திருநாமஞ் செவிகேட்கச் செப்பீரே. 10 குமரகோட்டம் உன்னுவதும் உரைப்பதுவும் உஞற்றுவதும் உன்வழியே மன்னவொரு வழிவேண்டி மலரடியைப் பற்றிநிற்குஞ் சின்னவுயி ரெனையாளாய் திருக்குமர கோட்டத்தில் மின்னுவடி வேலேந்தி மேவுசிவ வேட்குருவே. 1 அழுகின்றேன் பிழைநினைந்தே அநுதினமும் அறுமுகனே! தொழுகின்றேன் திருவடியைத் துகளறுத்துத் தூய்மைபெற உழுகின்ற வயற்காஞ்சி உயர்குமர கோட்டத்தில் எழுகின்ற ஒளிவேலா! இறையவனே! ஆண்டருளே. 2 எத்தனையோ பிழைசெய்தேன் இறையவனே! அறியாமல் அத்தனையும் பொறுத்தாள அவனிதனில் பிறருண்டோ? வித்தைமிகு காஞ்சியிலே விறற்குமர கோட்டத்துச் சத்தியனே! சங்கரனே! சண்முகனே! எனக்கருளே. 3 பத்திநெறி அறியாமல் பாழ்நெறிகள் வீழ்ந்துழன்றேன் சித்திநெறிப் பெரியோர்கள் சேவிக்கும் பெருமானே முத்திநெறிக் காஞ்சியிலே முகிழ்குமர கோட்டத்து வித்தகனே! மயிலேறி வேட்குருவே! ஆண்டருளே. 4 பிறவாத இறவாத பெருநெறியை யான்விழைய மறவாது திருவடியை மனங்கொள்ள வரந்தருவாய் நறவாரும் மலர்க்காஞ்சி நற்குமர கோட்டத்தில் திறவாக உயிர்கட்குத் திகழ்கின்ற சிவக்கொழுந்தே. 5 மஞ்சுதவழ் சோலைகளும் வண்டிசைக்கும் வாவிகளும் அஞ்சுவழி ஒளிகாலும் அகல்விளக்கு வரிசைகளும் பஞ்சடியார் யாழேந்திப் பண்ணிசைக்கும் மாடிகளும் துஞ்சுதிருக் காஞ்சியிலே சுடர்கோட்டக் குருவருளே. 6 தென்மொழியும் வடமொழியுஞ் செறிபுலவர் வாழ்ந்தபதி தொன்மைமிகப் பதிந்தபதி தொழில்பலவும் விளங்குபதி பன்மையிலே உலவொருமை பண்புறவே காணும்பதி கன்மமறு காஞ்சியொளிர் கண்மணியே எனக்கருளே. 7 சிவனாகிச் சைவருக்குத் திருமாலாய் வைணவர்க்குத் தவவமண பௌத்தருக்குத் தனியருகன் புத்தனாய் புவிநெறிகள் பிறவற்றும் புகுந்துபுகுந் தருள்குருவே etFku nfh£l¤J ehaf!என் குறைதீரே. 8 கண்ணினிலே காண்கின்ற கதிரொளியை யுள்ளமெனுங் கண்ணினிலே காண்பதற்குக் கற்பூர மணிவிளக்கே! எண்ணியெண்ணி நாடோறும் ஏக்குறுதல் நீயறிவாய் É©Fku nfh£l¤J ntyh!என் குறைதீரே. 9 ஆறுமுகம் அருள்விழிகள் அழகுபுயம் அணிமார்பும் வீறுமயில் வேற்கரமும் விளங்கிவிட்டால் என்மனத்தே மாறுபுவி வாழ்வினிலே மயங்குதற்கு வாய்ப்புண்டோ தேறுமொழி எனக்கருளாய் திகழ்காஞ்சிச் சிவகுருவே. 10 திருத்தணிகை ஆன்ற கல்வியுங் கேள்வியும் ஆய்தலும் ஆதி யந்த மளவி லடங்குமே தோன்றி நின்றழி யாத பொருட்கவை துணைசெய் யாவெனச் சோதித் தறிந்தனன் ஊன்று நெஞ்சுங் கடந்தொளிர் சோதியே! உன்னை என்னறி வெங்ஙன் உணருமே கான்ற பச்சைக் கவின்கொடி வள்ளியைக் காதல் செய்தணி காசலத் தெய்வமே. 1 எங்கு நீங்கா திருந்திடும் ஈசனே! இங்கு நின்னிடம் என்ற மகிழ்ச்சியால் தங்கல் நல்லறி வோவறி யாமையோ தாயுந் தந்தையு மாகிய சேயனே! பொங்கும் மின்னொளி யாண்டும் நிலவினும் பொறியி லாவிடம் பூத்தொளி காட்டுமோ தங்க மேனியர் தாழ்ந்து பணிசெயும் தணிகை மாமலைச் சண்முகத் தெய்வமே. 2 எங்கு நீயெனில் என்னிடம் ஆணவம் எங்கி ருந்து பிறந்தது சண்முகா! தங்குமிவ் வையம் சாத்திரம் போக்குமோ தர்க்க வாதச் சமயமும் நீக்குமோ சங்க ராசிவ என்று திருப்பணி சாரச் சாரத் தயைநிலை கூடவும் துங்க சற்குரு வாகித் தெரித்தருள் தோகை யூர்தணி காசலத் தெய்வமே. 3 நூலும் வேண்டிலன் தர்க்கமும் வேண்டிலன் நுவலும் பன்னெறி நோய்களும் வேண்டிலன் காலும் வேலுங் கடுநர கெய்தினுங் காக்கு மென்று கருத்தி லிருத்தினன் சீலம் மண்ணிற் சிறக்கவே வள்ளியின் தேனும் பாலுந் திரளமு துண்டருள் கோலங் கொண்ட குருவே! அடைக்கலம் கோதி லாத்தணி காசலத் தெய்வமே. 4 எங்கு நின்றிடு நின்னிலை ஏழையேன் எவ்வு ளத்தினில் எண்ணவும் வல்லனே பொங்கு சங்கர! புண்ணிய மூர்த்தியே! புவனம் உய்யப் பொருந்திய தேசிகா! நங்கை வள்ளிமுன் நாட்டிய கோலமே நாடி வந்தனன் ஞான மொழிபெறக் கங்கை யாற்றிற் கருணை பொழிந்தருள் கட்டி லாத்தணி காசலத் தெய்வமே. 5 சாந்தம் சாந்தம் சிவமெனுந் தண்மொழித் தன்மை காணத் திரிந்தனன் பல்லிடம் சாந்த முன்னித் தணிகைப் பதிவரச் சாந்தம் சாந்தம் தரைவழிச் சோலையில் சாந்தம் பொய்கைச் சரவண நீத்தமே சாந்தம் சாந்தம் தணிகை மலையெலாம் சாந்தம் நீலத் தமிழ்மயில் வள்ளியில் சாந்தம் சாந்தச் சரணருள் சாந்தமே 6 தணிகை மாமலை யுன்னி வலம்வரின் சார்ந்த ஊன்தழல் உள்ளத் தழலொடு பிணியு யிர்த்தழல் பின்னுந் தழல்களும் பிறவும் மாறிப் பிறங்கும் அமைதியுள் பணிகை நெஞ்சப் பயிற்சியில் லாமலே பாவி யுற்ற படுதுயர் போதுமே கணிகை மேவுங் கடவுள் குறமகள் கணவன் கந்தன் கடம்பணி கத்தனே. 7 பொன்னைப் பெண்ணைப் புவியை வெறுத்துடல் பொன்றக் கானம் புகுந்து கிடப்பது மன்னி யற்கை மறுக்கு நெறியது மகிழும் இல்லிருந் தன்பு பணிசெயின் உன்னைக் காண்டல் உறுதி உயர்படைப் பொன்றை நீத்தலும் உன்னை வெறுத்தலாம் கன்னி வள்ளிமுன் காதல் நிகழ்த்திய fªj nd!தணி காசலத் தெய்வமே. 8 தெய்வ மொன்றெனச் செப்ப மறையெலாம் செகத்தில் வாதஞ் சிறப்பது மென்கொலோ mŒa nd!உனக்கெப் பெயர் சூட்டினும் அப்பெ யர்ப்பொரு ளாவது நீயென bkŒa nd!இள மைப்பரு வத்திலே மேவச் செய்ததும் வேலவ! நின்னருள், செய்ய நன்றி சமரசஞ் சேர்த்தது திகழுஞ் சீர்த்தணி காசலத் தெய்வமே. 9 சாதி யென்னும் படுகுழி நாட்டினில் சார்ந்து தோன்றினன் சண்முக! அப்பெருங் கோதை நீக்கிக் குணஞ்செய வேண்டுவல் குமர தேவ! Ff!அருள் தேசிகா! நாத விந்து நடந்து கடந்துமே நட்ட மாடி நகைமுக வள்ளியின் காத லுண்ட கருணைக் கடவுளே! fªj nd!தணி காசலத் தெய்வமே. 10 கந்தமாதனம் கட்டில்லா அறிவாகிக் கணக்கில்லா அகண்டிதமாய் முட்டுண்ட அறிவறியா முழுமுதலா யிலங்குமொன்றே! கட்டுடைய உயிர்ப்பொருட்டுக் கருணைபொழி குருவாகி வட்டகந்த மாதனத்தில் வருகுமர! அடிபோற்றி. 1 குமரகுரு பரமணியே! குவலயத்தில் பலபெயர்கள் அமையநிற்கும் பெருமானே! அநாதியிறை முதலென்றும் அமரருளின் குருவென்றும் அடியர்சொலும் அழகுநுட்பம் சமயவழக் கொழித்தடியில் தனிநின்றால் விளங்கிடுமே. 2 தென்முகத்த னெனச்சொல்வேன் திகழருக னெனப் புகல்வேன், பொன்முகத்துக் குமரனென்பேன் புகழ்கண்ணன் புத்தனென்பேன் நன்மொழிசொல் கிறித்துவென்பேன் ஞானசம் பந்தனென்பேன் இன்னுமுரை குருவென்பேன் எழிலழகுக் குருவுனையே. 3 நின்னொளியால் உலகமெலாம் நிகழ்கின்ற நிலையுணர்ந்தால் பொன்னுருவை யருந்தாது புகன்மொழியைப் பருகாது சின்மயத்தை நினைப்பதுவுஞ் சிரிப்பாகுஞ் சிவகுருவே! மன்னுகந்த மாதனத்து மணிவிளக்கே! அருள்வாயே. 4 அழகிளமை மணந்தெய்வ அருள்கமழும் திருவுருவைப் பழகவிவண் திருக்கோயில் பரக்கவைத்தார் சிற்பவழி அழுகுகின்ற தவ்வழியும் அருமையிழந் திதுபோழ்தே அழுகின்றேன் விழுகின்றேன் அருள்கந்த மாதனனே. 5 கோயிலெலாம் வருணமுடை குடிகொண்டால் அருளுருவ நாயகனே! அழகொளியை ஞாலத்தார் பெறுவதெங்ஙன் தாயிழந்த கன்றெனவே தவிக்கின்றேன் சிவகுருவே! மாயிருளை யொழித்தருளாய் மகிழ்கந்த மாதனனே. 6 வாயாலே அத்துவித வளமெல்லாம் மிகப்பேசி ஓயாதே உழன்றலுத்தேன் ஒளியடியைக் கொழுக்கொம்பா தாயானே! பிடித்துள்ளேன் தயைபுரிவாய் தனிமுதலே மாயாதே உயர்கந்த மாதனத்தில் மகிழ்குருவே. 7 எங்குமுள அழகெல்லாம் எழுமூற்றா யிலங்குகின்ற மங்கலிலாத் திருமேனி மலரழகைப் புலனுகர இங்குபடுந் துயரறிவாய் இளையோனே! அருள்புரிவாய் பொங்குகந்த மாதனத்தில் பொலிந்தமயி லயிலரசே. 8 சினமுதலாம் அரக்கருளம் தெறுகின்றார் தெளிஞானம் எனும்அயிலால் சிதைக்கவிரி இயற்கைமயில் இவர்ந்துவரின் நினக்கினிய கொடியாகும் நிலைகூடும் குமரகுரு! மனவமைதி வளர்கந்த மாதனத்துப் பெருமானே. 9 அத்துவித முத்தியையும் அருட்குருவே! யான் வேண்டேன் மற்றுமுள பதம்வேண்டேன் மகிழ்கந்த மாதனத்தில் சுத்தபசும் மயிலழகில் துலங்கிளமை யழகலையில் பத்தியெழ முழுகிநிற்கும் பரவசத்தை வேண்டுவனே. 10 பொது எங்குநிறை செம்பொருளே! ஏழைமுக நோக்கி இடர்களைய விழியிலையோ எண்ணந்தா னிலையோ பொங்குமிடர்க் களவிலையே; பொறுக்கமுடி யாதே; போகுமிடம் வேறுண்டோ புண்ணியனே! கூறாய் சங்கையறக் குருவாகித் தரையினிலே அருளின் சாந்தநிலை பெற்றிடுவேன்; தழல்களெலாந் தணியும்; தங்கவொளித் திருமேனி தாங்கிவரல் என்றோ தவிக்கின்றேன் சண்முகனே! தமிழியற்கை யரசே. 1 ஊனுடலம் பெற்றுணர்ச்சி யுற்றநாள் முதலா உறுதுயரஞ் சொல்லுதற்கும் உரைகளுண்டோ ஐயா! கானுமிழும் எரியிடையே கடையன்தவிக் கின்றேன் காண்பதற்குக் கண்ணிலையோ கருத்திலையோ அருளத் தேனுகரும் வள்ளியுடைத் தெய்வமென உலகம் செப்புகின்ற திறமென்னே? திருவருளைப் பொழியாய் வானுலகும் மண்ணுலகும் வாழ்த்துபெருந் தேவே! வளரியற்கைக் கோயில்கொண்ட வள்ளல்சிவ குருவே. 2 ஆரஎண்ணி எண்ணியகம் அனலாச்சே ஐயா! அழுதழுது விழியெல்லாம் அழலாச்சே நோய்தான் தீரவழி யுண்டோசொல் செல்வவள்ளி நாதா! செய்துவிட்டேன் பிழைபலவும் சிறியஅறி வாலே வீரவடி வேலேந்தி வினையறுக்க எழுவாய் வேறுபுகல் இல்லையென வேதனைசெய் யாதே சேரவருஞ் சேய்கடிதல் சிறந்ததந்தைக் கழகோ செழுமியற்கைக் கோயில்கொண்ட தெய்வமயி லரசே. 3 பொருளில்லார்க் கிவ்வுலகும் அருளில்லார்க் கந்தப் புவியுமிலை என்றுரைத்தார் பொய்யாமொழி யாளர் தெருளிரண்டில் ஒன்றுமின்றித் திரிகின்றேன் இங்கே திருவெல்லாம் விளங்குகின்ற தெய்வமுரு கையா! இருளிருந்து கூவுகின்றேன் எடுத்தணைப்பா ரில்லை ïu§FªjhŒ jªijba‹nw ïiwt!நினை அடைந்தேன் மருளிருக்கு மதியனென்று வாளாநீ இருந்தால் வாழ்வதெங்ஙன் இயற்கையிலே வாழும்பெருந் துரையே. 4 பொருண்முடையும் அருண்முடையும் புகுந்தலைத்தல் அறிவாய் பொருள்அருளை அடியவர்க்குப் பூக்கின்ற தருவே! அருண்முடையை யொழித்தென்னை ஆண்டுவிட்டால் போதும் அல்லலெலாம் தொலைந்தகலும் ஆறுமுக வேலா! சுருண்முகிழுந் தார்கடம்ப! சுத்தபரம் பொருளே! சுந்தரனே! வள்ளிமகிழ் தோகைமயி லரசே! தெருண்மனத்தில் திகழ்சிவமே! திருமாலே! என்றுஞ் செறிஇயற்கைக் கோயிலுறை செல்வப்பெரு மாளே. 5 கவலையெலாந் திரண்டுருண்டு கருத்தினிலே நின்றால் கானமயில் வீர! நின்றன் கருணைபெறல் எங்ஙன்? சவலையுற்று வாடுகின்றேன் சந்ததமும் இங்கே சவலையற்றுக் கவலையிற்றுச் சாந்தமுற்று வாழப் புவியினிலே மூச்சடக்கும் புன்னெறியில் செல்லேன் போரூரா வேன்முருகா பொன்வண்ணா என்றும் சிவமுதலே சண்முகனே சின்மயனே என்றும் சேரவரும் எனையாள்வாய் திகழியற்கை மணியே. 6 bt§fâUª j©kâí« ntyt!நின் கோயில் வேலைமலை காடுவயல் வெண்மணல்நின் கோயில் பொங்கருவி ஓடைகளும் பூக்களுநின் கோயில் பொன்வண்டு பொலிபறவை ஆன்மான்நின் கோயில் மங்கையருங் குழவிகளும் மகிழ்தருநின் கோயில் மாண்கலைகள் ஓவியமும் மறைகளுநின் கோயில் இங்கடியன் உளங்கோயில் கொள்ளஇசை யாயோ ஏழைமகன் உய்யவருள் இயற்கையிறை யோனே. 7 இயற்கையிலே நீயிருக்கும் இனிமைகண்ட ஆன்றோர் எழிலழகை ஒவியத்தில் இறக்கிவைத்த காட்சி, செயற்கையிலே கோயில்களாய்த் திகழ்ந்திருந்த தந்நாள் சிற்பநுட்பத் தத்துவத்தில் சிறந்துநின்றார் மக்கள் பயிற்சிகுறை வருணப்பேய் பற்றியநாள் தொட்டுப் பாழுங்கல் செம்பாகப் பாவிக்க லாச்சே அயிற்கரத்து வேலவனே! அருமைத்திருக் கோயில் அழகியற்கை மூலமெனும் அறிவுவிளக் கேற்றே. 8 உடலியற்கை உயிர்நீயென் றுண்மைநிலை காட்டும் உயர்கோயில் உட்பொருளும் உறங்கிவிட்ட தம்மா மடவருணச் சடங்கிடமாய் வேசையர்தம் வீடாய் மடைப்பள்ளி பொருட்போர்கள் மலிகளனாய்க் கண்டு படமுடியாத் துயரமதிற் படுகின்றார் பத்தர் பத்தருளங் கோயில்கொண்ட பன்னிரண்டு கண்ணா! நடனமெங்கு மிடுகின்ற நாயகனே! ஞானம் நல்வழியில் வளர்ந்தோங்க நானிலத்தில் செய்யே. 9 எக்கோயில் கெட்டாலும் எழிலிறையே! நின்றன் `இயற்கைவளக் கோயிலென்றும் இருப்பதன்றோ? எவரும் புக்கோடி ஆடிநின்று பொருந்திவழி படலாம் புன்குறும்புச் சேட்டையிலை; பொலிவமைதி கூடும்; சிக்கோதும் நெறிகளெல்லாஞ் சிதற அருள் வேலா! செங்கதிருங் கடலுமெனச் சிகியிலுறுஞ் சேயே! இக்கோலம் இந்நிலையென் றெண்ணாமல் யார்க்கும் இன்புசொரி கருணைமழை! எளியன்குறை தீரே. 10 காத்தல் கத்தனே! உயிரைக் காக்க கந்தனே! அறிவைக் காக்க சித்தனே! மனத்தைக் காக்க திகழ்புலன் ஐந்தைக் காக்க அத்தனே! உறுப்பை யெல்லாம் அழகுறக் காக்க காக்க சித்தனே! உடலைக் காக்க பன்னிரு கரத்துச் சேயே. 1 பொய்பகை பொறாமை லோபம் புகுந்துறா வாறு காக்க வெய்சினம் காழ்ப்பு வெஃகல் விரவிடா வாறு காக்க நொய்பிணி கேடு வஞ்சம் நுழைந்திறா வாறு காக்க செய்பணி சிறக்கக் காக்க சிவகுரு! தெய்வச் சேயே. 3 கொலைபுலை நீக்கி யெங்குங் குணஞ்செயல் அறிவைக் காக்க அலைமன அவதி போக்கி அமைதியைக் காக்க காக்க உலகெலாம் ஒன்றி நிற்க உயரறங் காக்க காக்க கலைவளர் மதியந் தோயுங் கடிவரைச் செம்மைத் தேவே. 4 வாழ்த்து அருள்பொழியும் முகம்வாழி அழகுதிருத் தோள்வழி உருள்கடம்பத் தார்வாழி ஒலிகோழி மயில்வாழி இருள்கடியும் வேல்வாழி எழில்வள்ளி பிடிவாழி சுருள்படிந்த தணிகைமுதல் தொல்பதிகள் வாழியரோ. திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனாரால் பாடப்பெற்ற முருகன் அருள் வேட்டல் முற்றிற்று.  1. தென்திருப்பேரை பேரை அரைசே! பேரை அரைசே! பெரிதுநின் னரசே பெரிதுநின் னரசே நின்னா ராட்சி மன்னா இடமிலை விண்ணெலாம் ஆட்சி மண்ணெலாம் ஆட்சி கடலெலாம் ஆட்சி காற்றெலாம் ஆட்சி ஒளியெலாம் ஆட்சி ஒலியெலாம் ஆட்சி சிறியதிற் சிறிதிலும் பெரியதிற் பெரிதிலும் ஆட்சி நினதே ஆட்சி நினதே எங்கும் ஆட்சி தங்கும் மாட்சியால் கூர்த லாங்காங் கூர்தல்நின் னருளே 10 மீனமாய் ஆமையாய் ஏனமாய்ச் சிங்கமாய்க் குறளனாய் மழுவனாய் அறவில் வீரனாய்க் கலப்பை ஆளியாய் உலப்பில் குழலனாய் உலகை ஓம்பும் அலகிலா ஆட்சி அங்கிங் கெனாமல் எங்கும் அறிவாய்ச் செறியும் இறைவ! சிறிது நெஞ்சில் நின்னை எங்ஙன் உன்னுவல் அம்ம! என்றன் பொருட்டோ தென்திருப் பேரையில் பொருநைக் கரையில் கருணை பொழிய மணியொளிர் முடியும் அணிகிளர் மாலையும் 20 தண்மரைக் கண்ணும் கண்மலர் நோக்கும் பவள வாயும் தவள நகையும் நீல மேனியும் கோல மாவும் ஆழி வளையும் வாழிசெங் கையும் மின்னொளி உடையும் பொன்னருள் அடியும் கொண்டது கொல்லோ அண்டர் நாயக! அழகிய வடிவம்! அழகிய வடிவம்! நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் பாழு நெஞ்சே! வாழ நினையாய் வேடமும் கோலமும் நாடவும் வேண்டாம் 30 நீட்டலும் மழித்தலும் காட்டலும் வேண்டாம் துறத்தலும் உலகை ஒறுத்தலும் உடலை வேண்டாம் வேண்டாம் பூண்தா ரணிந்து மண்ணை வெறாது பெண்ணுடன் வாழ்ந்து பொருளை ஈட்டியும் அருளை நீட்டியும் நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் முனைப்பற நினைவாய் வினைப்பற் றறுப்பாய் அழக னிருக்கப் பழகு நெஞ்சே! வேண்டுவன் இதுவே ஆண்டகைப் பொருளே! வருக வருக அருள வருக 40 அண்ணா வருக வண்ணா வருக அய்யா வருக மெய்யா வருக இறையே வருக மறையே வருக ஆலிலே துயிலும் மூலமே வருக கரியினுக் கருளிய அரியே வருக சேயினைக் காத்த தாயே வருக குன்றை எடுத்த கன்றே வருக சாதி இல்லா நீதி வருக மதப்போர்க் கெட்டா இதமே வருக நிறத்திமிர் காணா அறமே வருக 50 அறிதுயில் புரியும் அறிவே வருக அன்பில் விளங்கும் இன்பே வருக அத்த! நின்னருள் மொய்த்த நெஞ்சம் உருகும் உருகும் அருகும் போர்கள் பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள் பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம் ஒன்றே அன்றோ நன்றே தெளியின் ஒருவ நிற்கே மருவிய பெயர்கள் பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி எப்பெயர் நின்பெயர் எப்பதி நின்பதி 60 எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி பேரெலாம் நீயே பேரிலான் நீயே பதியெலாம் நீயே பதியிலான் நீயே உருவெலாம் நீயே உருவிலான் நீயே மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே எல்லாம் நீயே எல்லாம் நின்னில் பேரையில் பொலியும் பெருமை அழகு தத்துவ நுட்பச் சத்தியம் விளக்கும் போதம் அழிந்த நாத முடிவிலே பணிசெயும் நெஞ்சம் அணிசெய அரசே! 70 வருக வருக அருள வருக வருக வருக குருவாய் வருக தென்தமிழ் கமழும் தென்திருப் பேரை அரைசே! பேரை அரைசே! 2. ஆழ்வார் திருநகர் பன்னிறத்து மீன்களெலாம் பார்த்தனுப்புந் தண்பொருநை பொன்மணியும் பூவும் பொருதாழ்வார் - நன்னகரில் வீற்றிருக்கும் பெம்மானே வேண்டுகின்றேன் சேவடியை ஏற்றருள்செய் இன்றே இசைந்து. 1 தாழ்குழலா ரெல்லாந் தமிழ்பொருநை நீராடி ஆழ்வார் மொழியோதும் அன்புநகர் - வாழ்வாய் இறவாத இன்புபெற ஏழையேன் வந்தேன் அறவாழி காட்டி அருள். 2 பூம்பழன மெங்கும் பொலியுங் குருகூரில் தேம்பொழி லென்னத் திகழ்பொருளே - பாம்பணையில் எம்மானே வந்தடைந்தேன் ஏழை எனக்கிரங்கிச் செம்மாலே செந்நெறியிற் சேர். 3 ஆறாய்ப் பொழிலாய் அழகுவிளை அன்புருவே தேறாதார் தேறத் திருக்குருகூர்ப் - பேறாய் எழுந்து நிலவுபொழி இன்பமே வெம்மை விழுந்தேன் எடுத்தாள் விரைந்து. 4 எங்கு நிறைபொருளே எவ்வுருவும் நீயென்றால் பொங்கு குருகூர்ப் பொலிவோனே - தங்கத் தனியிடங்கள் கொண்டதென்ன? தத்துவமே என்று பனிமலர்த்தாள் வந்தணைந்தேன் பார். 5 பார்தனிலே பத்துருவம் பண்டெடுத்தாய் என்னுஞ்சொல் கூர்தல் அறத்தைக் குறிப்பதென - ஓர்ந்துணர்ந்தோர் ஆரமுதே ஆழ்வார் அருள்நகரில் ஆண்டவனே சீரருளில் சேர்த்தெனையாள் தேர்ந்து. 6 பத்துப் பிறப்பையொட்டிப் பாவலர்கள் செய்தகதைத் தத்துவத்தை யோர்ந்து சரணடைந்தேன் - பத்திமிகு நல்லோர் உளமுறையு நாதனே தென்குருகூர்ச் செல்வா எனக்குவழி செப்பு. 7 பத்துப் பிறப்பைப் பகுத்துணர்ந்தால் இவ்வுலகில் செத்துப் பிறவாத் திறம்விளங்கும் - சித்தரெலாம் பார்க்க அறிதுயில்செய் பாம்பணையாய் தென்குருகூர்ச் சேர்க்கை அருளாயோ செப்பு. 8 மலையாய்க் கடலாய் மகிழ்வூட்டும் மாண்பே கலையாய்க் குருகூரில் கண்டேன் - அலையா மனம்வேண்டி வந்தேன் மலரடியை என்னுள் புனைந்தாள்வாய் இன்றே புரிந்து. 9 விண்ணீல மென்ன விளங்குந் திருமேனி உண்ணீடின் வெம்மை ஒழியுமால் - தண்ணீர்மை ஆழ்வார் திருநகரில் ஆண்டவனே நின்னருளால் வாழ்வா ருடன்சேர்த்து வை. 10 3. திருமாலிருஞ்சோலை தென்பாண்டிச் செல்வம் திருமா லிருஞ்சோலை அன்பால் தொழுதுய்ய ஆர்த்தெழுவாய் நன்னெஞ்சே. 1 விண்ணவரும் மண்ணவரும் வேட்குந் திருச்சோலைத் தண்மையிலே மூழ்கித் தயைபெறுவாய் நன்னெஞ்சே. 2 செல்வமெலாம் பூக்குந் திருமா லிருஞ்சோலை செல்ல நினைந்தாலும் செம்மையுறும் நன்னெஞ்சே. 3 காணாத காட்சியெலாம் காட்டும் பெருஞ்சோலை வாணாள் வழுத்திநின்றால் வாழ்வுவரும் நன்னெஞ்சே. 4 வண்டினங்கள் பண்பாடி வாழுந் திருச்சோலை கண்டு பணிந்தால் கருணைவரும் நன்னெஞ்சே. 5 சாதிமதக் கட்டெல்லாந் தாண்டின் பழச்சோலை நீதியிலே நிற்கும் நினைப்புறுவாய் நன்னெஞ்சே. 6 உள்ள சமயமெலாம் ஓலமிடும் பூஞ்சோலைக் கள்ளருந்துங் கல்வி கதிகாட்டும் நன்னெஞ்சே. 7 எல்லா உயிரும் இருக்க இடமருளும் வில்லார் இருஞ்சோலை வேண்டுதல்செய் நன்னெஞ்சே. 8 எவ்வுயிர்க்கும் இன்பநல்கும் ஏமத் திருச்சோலைச் செவ்வியிலே தோயாது செல்லுவதோ நன்னெஞ்சே 9 உலகெலாந் தோன்ற உயிராகும் பூஞ்சோலை பலகலையாய் நின்றருளும் பண்புணர்வாய் நன்னெஞ்சே. 10 சொல்லுக் கடங்காச் சுகச்சோலை ஞானநல்கும் கல்வியாய் நிற்குங் கருத்துணர்வாய் நன்னெஞ்சே. 11 ஏழிசையாய் நிற்கும் இருஞ்சோலை எண்ணிஎண்ணித் தாழிசையாற் பாடித் தழுவுவாய் நன்னெஞ்சே. 12 பழமைப் பழமைக்கும் பண்பாம் பழஞ்சோலைக் கிழமைக் குறிநின்றால் கேட்குமொலி நன்னெஞ்சே. 13 புதுமைப் புதுமைக்கும் புத்துயிராம் பூஞ்சோலைப் பதுமையாய் நின்றுன்னப் பாயுந்தேன் நன்னெஞ்சே 14 சித்தர்தம் உள்ளத்தில் தேனொழுக்குஞ் செஞ்சோலைப் பித்தங்கொண் டானந்தப் பேறுறுவாய் நன்னெஞ்சே. 15 இயற்கைத் திருமா லிருஞ்சோலை இங்கிருப்பச் செயற்கை அலகையிடஞ் செல்லுவதென் நன்னெஞ்சே. 16 செம்மைவழித் தண்மைபொழி செஞ்சோலை சேராதே வெம்மையிலே வீழ்ந்தால் விரதம்போம் நன்னெஞ்சே. 17 பத்தருக் கெஞ்ஞான்றும் பண்பாந் திருச்சோலை முத்திக் கரையென்றே முன்னுவாய் நன்னெஞ்சே. 18 பச்சைப் பசுஞ்சோலைப் பள்ளியினைப் பாராதே நச்சுமிழும் வெம்மையிலே நண்ணுவதென் நன்னெஞ்சே. 19 அருணெறியை ஓம்புநருக் கன்பாந் திருச்சோலைப் பொருளுணர்ந்து போற்றிப் புகக்கற்பாய் நன்னெஞ்சே. 20 பறவையெலாந் தங்கும் பழச்சோலை இங்கிருப்பத் துறவையுன்னி ஓடுதலும் சூதாகும் நன்னெஞ்சே 21 அரும்புமலர் காய்கனிகள் ஆர்ந்த திருச்சோலை விரும்பின் அறங்கூடும் வேருணர்வாய் நன்னெஞ்சே. 22 உண்ணஉண்ணத் தித்திக்கும் ஓங்கு கனிச்சோலை கண்ணினாற் கண்டாலும் காப்புவரும் நன்னெஞ்சே. 23 என்று மழியா தினிக்கும் பெருஞ்சோலை ஒன்றே உளதென் றுணர்ந்திடுவாய் நன்னெஞ்சே. 24 வினையும் விதியும் விளைநோயும் பொற்சோலை நினையாத மாக்களுக்கே நேர்தலறி நன்னெஞ்சே. 25 செய்த பிழைக்கிரங்கிச் சிந்தித்தால் செஞ்சோலை உய்யு நிலைகூட்டும் உண்மையுணர் நன்னெஞ்சே. 26 தமிழாய்த் தழைத்துநிற்குந் தண்மை இருஞ்சோலை அமிழ்துண்ட அன்பருக் கன்பாவாய் நன்னெஞ்சே. 27 ஆழ்வார்கள் சூழ்ந்துநிற்கும் ஆனந்தத் தேன்சோலை பாழ்பிறவி போக்கப் பணிசெய்வாய் நன்னெஞ்சே. 28 ஆண்டா ளெனுங்கொடிசூழ் அன்புத் திருச்சோலை வேண்டாதே சென்றால் விறலிழப்பாய் நன்னெஞ்சே. 29 ஆழ்வார் தமிழ்ப்பாட்டாய் ஆர்ந்த இருஞ்சோலை வாழ்வே உரியதென்று வாழ்த்துவாய் நன்னெஞ்சே. 30 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஓசை ஒலியாய் உலகமெலாம் ஓங்கும் பொருளே உனையடையும் ஆசை கொள்ளா தயர்ந்தொழிந்தேன் ஆவி சாவி யாகாமல் பாசை படரா மனமருளாய் பரமா வில்லி புத்தூரா வாச மலர்கள் சூட்டியநல் வாழ்வாம் ஆண்டாள் பெருமாளே. 1 உலகை உடலை உவந்தளித்த ஒருவன் நீயென் றுணராத கலதி இனத்தில் நாணாளுங் கலந்தே கெட்டேன் கெட்டேனே அலகில் பிழைகள் பொறுத்தாளும் அருளே வில்லி புத்தூரில் இலகு பெரிய பெருமாளே இனிய ஆண்டாள் இறையோனே. 2 நல்ல பிறவி எனக்களித்தாய் ஞானம் பெற்றே உயவேண்டி அல்ல நிகழ்த்தி அடிமறந்தேன் அருளுக் குரிய னாவேனோ கல்லை மண்ணைச் சோறாக்கிக் களிக்கும் பிள்ளை எனவாழ்ந்தேன் வில்லி புத்தூர் வாழ்மணியே வெற்றி ஆண்டாள் பெருமானே. 3 எல்லாப் பொருளும் நீயென்றே இசைக்குங் கலைகள் பலகற்றேன் வல்லாய் வாழ்வில் அவ்வுண்மை மலர்ந்தால் உய்வேன் உய்வேனே நல்லாய் அருள நீயன்றி ஞாலந் தன்னில் பிறருளரோ சொல்லாய் வில்லி புத்தூரா தூய ஆண்டாள் துணையோனே. 4 எங்கும் எல்லாம் நீயென்றே எளிதில் இசைக்கும் நிலைவேண்டேன் தங்கி வாழ்வில் நிறையுறவே தாளை வழிபட் டுய்யநினைந் திங்கு வந்தேன் அருள்புரியாய் ஈசா வில்லி புத்தூரில் செங்கை ஆழி வளையேந்துஞ் செல்வா ஆண்டாள் சேகரனே. 5 சாதி சமய நினைவெல்லாம் தடையே நின்றன் நினைவினுக்கு நீதிப் பொருளே அக்கடலை நீந்தி நீந்தி அடிசேர்ந்தேன் ஆதி அந்த மில்லாத அகண்டா காரப் பேரறிவே சோதி வில்லி புத்தூரா துணைசெய் ஆண்டாள் துணையோனே. 6 ஆலவெம்மை ஆற்றாமல் அடியேன் வந்தேன் ஐயாநின் நீலமேனி நிலவினிலே நின்று மூழ்கித் தண்மையுறக் கோலங் காட்டி எனையாளாய் கோதில் வில்லி புத்தூரா சீல மில்லேன் சிறுநாயேன் தெய்வ ஆண்டாள் பெருமாளே. 7 பொன்னார் முடியும் பூவடியும் பூத்த விழியும் செவ்வாயும் மின்னார் மார்பும் மலர்க்கையும் மிளிரு நீல உருக்கோலம் என்னே! நெஞ்சில் நிலைக்கவினை இரியும் வில்லி புத்தூர்வாழ் மன்னே மணியே மாமருந்தே மறைசொல் ஆண்டாள் மனத்தோனே. 8 உன்றன் நீல மேனியிலே ஒன்றி ஊன்றி உளம்வைத்தால் என்றன் கரண வெம்மையெலாம் இனிமைத் தண்மை பெறலுறுதி அன்றி லகன்றி லுடனாடும் அடவி வில்லி புத்தூரில் நன்று செய்யு நலநலமே நங்கை ஆண்டாள் பெருமாளே 9 உருவோ பேரோ ஒன்றுமிலாய் உனக்கோ உலகம் உரைத்துள்ள உருவோ பேரோ பலபலவே உண்மை யொன்றே எனத்தெளிந்தேன் உருவோ டுறவு கொளவருளாய் ஓங்கு வில்லி புத்தூரில் உருவே கருவே உயர்வான ஒளியே ஆண்டாள் பெருமாளே. 10 5. திருவரங்கம் இருளிலே கிடந்த என்றனுக் கிரங்கி ஈந்தனை உலகமும் உடலும் அருளிலே பெற்ற நன்றியை மறந்தேன் அகந்தையால் எனதெனக் கொண்டேன் மருளிலே வீழ்ந்தேன் மறவினை புரிந்தேன் மாயனே பிழைபொறுத் தாளாய் தெருளிலே இனிக்குந் தெள்ளிய அமுதே தெய்வமே அரங்கநா யகனே. 1 துன்பிலே அழுந்தித் துயருறு கின்றேன் தூயனே ஞானவா ரிதியே அன்பிலே மூழ்கி அழுகிலேன் பலவா றலைந்தலைந் தயர்ந்தனன் நாளும் என்பெலாம் உருக எண்ணிலேன் பாவி எங்ஙனம் உய்குவன் அந்தோ இன்பமே என்னை ஏன்றுகொ ளருளால் ஈசனே அரங்கநா யகனே. 2 வாக்கினை யொடுக்கேன் வனங்களி லுழலேன் வட்டணை ஆசன மிட்டு மூக்கினைப் பிடியேன் மூச்சினை யடக்கேன் முன்னிலை நின்றழு கின்றேன் பாக்கியப் பயனே பாவியை ஆளாய் பாரதம் நடத்திய பரனே தேக்கிய இன்பத் திருவெலா முடைய தேவனே அரங்கநா யகனே. 3 தத்துவக் கலையைச் சந்ததம் பயின்று தர்க்கமே புரிகுழு சார்ந்து பித்தனாய்க் கெட்டேன் பிழைபல செய்தேன் பேச்சிலே வாழ்வினைக் கழித்தேன் அத்தனென் றுன்னை அடைந்தனன் இன்றே ஆதரித் தருள்புரி வாயே முத்தனே முதல்வா மூவுல களந்த மூர்த்தியே அரங்கநா யகனே. 4 காவிரி நங்கை கொள்ளிட மங்கை கைகளால் தைவர என்றும் பூவிரி கோலப் பொழினிழல் செய்யப் பொன்சிறை வண்டுக ளார்ப்ப மாவறி துயில்செய் மரகத மலையே மனத்தமு தொழுக்குநன் மதியே பாவியேன் வந்தேன் பணிந்திட அறியேன் பார்த்தருள் அரங்கநா யகனே. 5 ஆடினேன் அலைந்தேன் அகந்தையால் கொடுமை ஆற்றினேன் அஞ்சினேன் பின்னை நாடினேன் ஞானம் நயந்தனன் பலரை நண்ணிய தொன்றிலை ஐயா வாடியே வந்தேன் மலரடி வணங்க வழிவகை அறிந்திலேன் பாவி காடியில் விழுந்த பல்லியாய்ச் சாய்ந்தேன் காத்தருள் அரங்கநா யகனே. 6 உலகெலாம் ஆக்கி உயிரெலாம் புகுத்தி உணர்வினை எழுப்பினை இடையில் கலகமால் நுழைந்து கலக்குவ தென்ன காரணம் பலபல சொல்வர் அலகிலா ஒளியே அறிதுயில் நுட்பம் அறிந்திடில் கலகமோ பாழாம் இலகுமந் நுட்பம் எளியனுக் கருள எண்ணமோ அரங்கநா யகனே. 7 அறிதுயில் நுட்பம் அடியனேன் உணர அலைந்தலைந் தழுததை அறிவாய் வெறிகொடு திரிந்தேன் வித்துவ மக்கள் வீடுதோ றுழன்றனன் விதியால் பொறிபுலன் ஒடுக்கும் புரையிலும் புகுந்தேன் புலையனேன் பெற்றதொன் றில்லை நெறிபட வந்தேன் நின்மல அருள நினைவையோ அரங்கநா யகனே. 8 சோலைகள் கண்டேன் சூழ்நதி கண்டேன் சுந்தர வீதிகள் கண்டேன் மாலைகள் கண்டேன் மங்கலங் கண்டேன் வணங்குநல் லடியரைக் கண்டேன் வேலையிற் பாம்பின் மீதுறங் கண்ணல்! விளங்கொளி விழியினாற் காணக் காலையே நோக்கிக் கைதொழு கின்றேன் கருணைசெய் அரங்கநா யகனே. 9 அன்றொரு வேழம் ஆதியே என்ன அருளிய மூலமே முதலே இன்றுனை யடைந்தேன் ஏழையேற் கிரங்காய் இருநதி நடுவினிற் றங்கும் குன்றமே நிறைவே குறைவிலாக் குணமே கோதிலா அமுதமே கோலம் நன்றுடை யானே ஞானமா நிதியே நாதனே அரங்கநா யகனே. 10 6. திருவரங்கம் எங்கிருந்தேன் இங்குவந்தேன் எப்படியென் றாய்ந்தேன் இவ்வுடலும் இவ்வுலகும் எவ்வழியென் றோர்ந்தேன் சங்கைதெளி யாதயர்ந்தேன் சாத்திரங்கள் பார்த்தேன் சாதனங்கள் செய்துழன்றேன் சற்றுமொளிர் வில்லை பொங்கிவழி காவிரியில் புகுந்துகுடைந் தெழுந்தேன் பூவிரிந்த பொழிற்பசுமை புலன்கவர ஆழி சங்குடையாய் நின்னருளால் சார்ந்தகதை தெளிந்தேன் சந்நிதியில் வந்தடைந்தேன் தமிழரங்க மணியே. 1 இருண்மயமாய்க் கிடந்தவெனக் கிவ்வுடலந் தந்தாய் இவ்வுலக வாழ்வினிலே இனிமைபெறச் செய்தாய் அருண்மறந்தேன் அகந்தையினால் ஆற்றிவிட்டேன் பிழைகள் அத்தனையும் பொறுத்தருளும் ஆண்டவன்நீ யென்றே மருண்மனத்தன் வந்தடைந்தேன் மலர்மருவு மார்பா மாயவனே அறிதுயிலில் மாதவனே உறங்கும் பொருண்மையெனக் கருள்புரிந்தால் பொன்றும்வினை யெல்லாம் போதாந்தச் செல்வர்தொழும் பொன்னரங்கப் பொருளே. 2 புற்செடியே மீன்புழுவே புள்விலங்கே முதலாம் புன்னுடலந் தந்துதந்து புங்கவநின் னுணர்வுக் கற்பமைந்த கரணம்விரி கனகவுடல் தந்தாய் கருணைநினைந் தொழுகுமனங் கருணைசெய விலையே அற்புடைய நெறிவிடுத்தேன் அலைந்துடலைக் கெடுத்தேன் அறியாமைச் செயல்நினைக்கும் அறிவுபெற்றே னின்றே பொற்பொளிசெய் அடியணைந்தேன் புரிந்தபிழை அப்பா பொறுத்தருளாய் புண்ணியனே புகழரங்கப் பொலிவே. 3 பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பூவுலகும் வேண்டேன் புகழ்வேண்டேன் நூல்வேண்டேன் புலமையெலாம் வேண்டேன் மன்வேண்டேன் வான்வேண்டேன் வாழ்வுமகிழ் வேண்டேன் மழைமுகிலே நீன்மலையே வானதியே ஏழை என்வேண்டி வந்தனனோ எழின்மருவு மார்பா எங்குமுள இறையோனே எண்ணமறி யாயோ சொன்மேவு கவிகடந்து துயிலுகின்ற இன்பஞ் சுரக்கவெனக் கருளாயோ தொல்லரங்கக் குருவே. 4 பாற்கடலில் பாம்பணையில் பள்ளியுணர் வென்றோ பரநாத விந்துநிலை பார்த்துநிற்ப தென்றோ மேற்கருமை இருளெல்லாங் கீழ்ச்சாய்த லென்றோ மென்மேலும் பொங்கமிழ்தம் மேவுவது மென்றோ காற்கடிமை ஏழையுயிர் கண்பெறுவ தென்றோ கல்லாத கல்வியெலாங் கற்றறிவ தென்றோ மாற்குலமா யுலகமெலாம் மன்னுவது மென்றோ மாயையறத் தெளிவருள்வாய் மனத்தரங்க வமுதே. 5 கடல்கடந்தேன் மலைகடந்தேன் காடுகளைக் கடந்தேன் கானாறு கழிகடந்து கடந்து வந்தேன் ஐயா உடல்கடந்தே உளங்கடந்தே உணர்வுகடந் துன்னை உன்னியுன்னி ஒன்றும்வழி உணராதே கெட்டேன் குடல்குடைய மனமுருகக் குமுறியழும் அழுகை கோவிந்தா நீயறிவாய் கோதிலறி துயிலைப் படல்கடிய அறிவுறுத்திப் பாவிதுயர் களையாய் பரங்கருணைத் தடங்கடலே பதியரங்க மலையே. 6 மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய் மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய் அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய் அமைதியளி திங்கள்பொழி ஆனந்த நிலவாய் பணிகொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய் பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின் பெற்றியருள் செய்யாயோ பேரரங்க வேந்தே. 7 அறிதுயிலின் வேட்கைகொண்டே அணையவந்தேன் அப்பா அம்மயக்கந் தலையேற அவதிபடு கின்றேன் சிறிதருளத் திருவுள்ளஞ் செய்யநினை யாயோ திருமகள்தன் கேள்வனெனுஞ் சிறப்புடைய அரசே பொறிபுலனைச் சிதைக்கும்வழிப் போகமன மில்லை பொன்னடியே பொருளென்று புந்திகொண்ட தின்று வெறிமலரில் வண்டிசையால் விருந்தளிக்கும் பழனம் மேவிவளம் பெருகுசெல்வம் மிளிரரங்க ஒளியே. 8 காலெழுப்பிக் கனலெழுப்பிக் கல்லெனவே நின்று காலில்லாப் பாம்பெழுப்பிக் ககனவட்ட நோக்கி மேலெழும்பு நெறிமயக்க வெறிவிழுந்தேன் பாவி விடுதலைபெற் றின்றுவந்தேன் வென்றிவளர் மார்பா தோலெலும்பா யுடல்வறண்டேன் தொல்லைபடு கின்றேன் சூதுவழி அரசியலில் தொலைத்துவிட்டேன் காலம் மாலெனும்பே ருடையவனே மாதவனே துயிலின் மாண்புணர்ந்தால் உய்ந்திடுவேன் மலரரங்கத் தேனே. 9 பொன்முடியும் மலர்விழியும் பூம்பவள வாயும் பொலிதோளுந் திருமார்பும் போராழி வளையும் மின்னவிலுஞ் செவ்வடியும் மிளிர்நீலக் கோலம் மேவுமனம் பெற்றவரே மேனெறியிற் சென்றார் என்மனமும் ஈரமுற அந்நெறியே விழைதல் எங்குமுள இறையோனே எம்பெருமான் அறிவாய் சொன்மறந்த வாழ்த்தறியாச் சூழலிடை வீழ்ந்தேன் தொல்லையறுத் தருள்புரியாய் தொல்லரங்க முனியே. 10 7. திருவரங்கம் திருவரங்கம் என்னுயிரே திருவரங்கம் என்னுடலே திருவரங்கம் என்னுணர்வே திருவரங்கம் என்னுறவே திருவரங்கம் என்பொருளே திருவரங்கம் என்பதியே திருவரங்கம் என்னுலகே திருவரங்கம் எல்லாமே. 1 திருவரங்கந் தெய்வமெலாம் திருவரங்கம் உயிரெல்லாம் திருவரங்கம் உணர்வெல்லாம் திருவரங்கம் உலகெல்லாம் திருவரங்கங் கலையெல்லாம் திருவரங்கஞ் சமயமெலாம் திருவரங்கம் நலமெல்லாம் திருவரங்கம் எல்லாமே. 2 புனலெல்லாந் திருவரங்கம் புவியெல்லாந் திருவரங்கம் கனலெல்லாந் திருவரங்கம் காற்றெல்லாந் திருவரங்கம் கனமெல்லாந் திருவரங்கம் கதிரெல்லாந் திருவரங்கம் இனமெல்லாந் திருவரங்கம் எண்ணாயோ மடநெஞ்சே. 3 எண்ணெல்லாந் திருவரங்கம் எழுத்தெல்லாந் திருவரங்கம் பண்ணெல்லாந் திருவரங்கம் பாட்டெல்லாந் திருவரங்கம் தண்ணெல்லாந் திருவரங்கம் தமிழெல்லாந் திருவரங்கம் கண்ணெல்லாந் திருவரங்கம் கருதாயோ மடநெங்சே. 4 உன்னாயோ திருவரங்கம் உணராயோ திருவரங்கம் பன்னாயோ திருவரங்கம் பணியாயோ திருவரங்கம் துன்னாயோ திருவரங்கம் தொடராயோ திருவரங்கம் மன்னாயோ திருவரங்கம் மகிழாயோ பாழ்மனமே. 5 சொல்லாயோ திருவரங்கம் துதியாயோ திருவரங்கம் கல்லாயோ திருவரங்கம் கருதாயோ திருவரங்கம் நில்லாயோ திருவரங்கம் நினையாயோ திருவரங்கம் புல்லாயோ திருவரங்கம் புகழாயோ பாழ்மனமே. 6 நாடாயோ திருவரங்கம் நண்ணாயோ திருவரங்கம் பாடாயோ திருவரங்கம் பரவாயோ திருவரங்கம் கூடாயோ திருவரங்கம் கூப்பாயோ திருவரங்கம் ஓடாயோ திருவரங்கம் ஒடுங்காயோ பாழ்மனமே. 7 ஊனாகுந் திருவரங்கம் உயிராகுந் திருவரங்கம் வானாகுந் திருவரங்கம் வழியாகுந் திருவரங்கம் தானாகுந் திருவரங்கம் சார்பாகுந் திருவரங்கம் தேனாகுந் திருவரங்கம் தெவிட்டாது பாழ்மனமே. 8 எங்கெங்குஞ் சங்கொலியே எங்கெங்குஞ் சக்கரமே எங்கெங்குந் தண்டுளவம் எங்கெங்குந் திருமலரே எங்கெங்கும் அரியணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 9 எங்கெங்கும் பாற்கடலே எங்கெங்கும் பாம்பணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குங் கோயில்களே எங்கெங்கும் அடியவரே எங்கெங்குந் திருப்பணியே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 10 8. திருவரங்கம் வாக்குமனங் கடந்தொளிரும் வாழ்த்தரிய தெய்வம் வழிஇயற்கை வடிவாகி வாழ்த்தேற்குந் தெய்வம் பாக்குலமாய்க் கலைகளெல்லாம் படர்ந்தமருந் தெய்வம் பண்ணிசையாய் எங்கெங்கும் பரந்துநிற்குந் தெய்வம் ஆக்கமெலாம் உடையதிரு அணங்ககலாத் தெய்வம் அனைத்துயிர்க்கும் அருள்புரியும் ஆனந்தத் தெய்வம் தேக்கமிர்த போதநுகர் செல்வர்தெளி தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 1 பரநாத விந்துவிலே படிந்திருக்குந் தெய்வம் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொள்ளுந் தெய்வம் உரமான நான்முகனை உந்தியளி தெய்வம் உலகுயிர்கள் அத்தனைக்கும் உறைவிடமாந் தெய்வம் வரமாகி வரமளிக்கும் வண்மையுடைத் தெய்வம் மதங்கடொறும் விளையாடி மதங்கடந்த தெய்வம் சிரமாரும் அமிர்துண்ணுஞ் சித்தருணர் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 2 நீராகி உலகீன்று நிறுத்துகின்ற தெய்வம் நித்தியமா யெங்கெங்கும் நிலவுகின்ற தெய்வம் காராகி மழைசொரிந்து காக்கின்ற தெய்வம் கதிர்க்கெல்லாம் ஒளிவழங்குங் கருநீலத் தெய்வம் நேராகி அரவெழுப்பி நிற்பவருள் தெய்வம் நிலவுபொழி அமிழ்துண்போர் நினைவிலுறை தெய்வம் சீராகி உயிர்வாழச் சிந்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 3 பத்துருவாய் கூர்ந்துநின்று பாரளிக்குந் தெய்வம் பத்தருளப் பாசமறப் பாவைகொண்ட தெய்வம் புத்தமிர்த போகமெலாம் புணர்விக்குந் தெய்வம் பூந்துளப மாலையசை புயந்திரண்ட தெய்வம் சத்தியமாய்ச் சின்மயமாய்ச் சாந்தமளி தெய்வம் சார்ந்தவர்தம் நெஞ்சினிலே தலைசாய்க்குந் தெய்வம் சித்தருளத் தேனெனவே தித்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 4 மண்ணார்ந்த கோசலத்தில் மருவிவந்த தெய்வம் மரகதக்குன் றெனவளர்ந்து மனங்கவர்ந்த தெய்வம் பண்ணார்ந்த சீதைமொழி பருகியநற் றெய்வம் பற்றறுத்த முனிவரெலாம் பணிந்துமகிழ் தெய்வம் கண்ணார்ந்த தனிமுடியைக் கணந்துறந்த தெய்வம் கானவனைத் தம்பியெனக் கருணைசெய்த தெய்வம் திண்ணார்ந்த தோள்வலிக்குத் தெவ்வர்தொழுந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 5 மலையெல்லாம் வனமெல்லாம் மலர்ந்தஅடித் தெய்வம் மாரீச மான்மாயம் மாய்த்தொழித்த தெய்வம் கலைவல்ல மாருதிக்குக் காலளித்த தெய்வம் கருணைதந்தை யெனஅவர்பால் கருத்துவைத்த தெய்வம் அலைகடலைத் தாண்டியன்றே அறம்வளர்த்த தெய்வம் அரக்கர்குல வேரறுத்த ஆண்டகைமைத் தெய்வம் சிலையெல்லாம் வணங்குமுயர் சிலைதாங்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 6 மன்பதையின் துயரொழிக்க மதுரைவந்த தெய்வம் மதலையாய்த் தவழ்ந்துலகை மலர்வித்த தெய்வம் அன்புநவ நீதமளி ஆயர்தவத் தெய்வம் அழகுதிரள் கருமேனி அமிர்தொழுகுந் தெய்வம் மென்புலத்திற் கோக்களொடு விளையாடுந் தெய்வம் வேதாந்த முடியினிலே விளங்குமொரு தெய்வம் தென்புலவர் பாட்டினிலே திகழ்கின்ற தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 7 சீதமலர் புன்னைநின்று செகம்விரிக்குந் தெய்வம் செவ்வாயிற் குழலூதிச் செகநிறுத்துந் தெய்வம் மாதவரே மங்கையராய் மகிழ்ந்துண்ணுந் தெய்வம் மற்றவரும் பெண்ணாக மனங்கொள்ளுந் தெய்வம் கீதையினைத் தேரிருந்து கிளர்ந்துரைக்குந் தெய்வம் கேட்டவர்க்குங் கற்றவர்க்குங் கேடழிக்குந் தெய்வம் தீதறுக்கப் பாரதப்போர் செய்வித்த தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 8 களியானை இடரழித்துக் காத்தளித்த தெய்வம் கான்முளைக்கு நலம்புரியக் கம்பம்வந்த தெய்வம் அளியாலுந் திருமகளால் அழகுவிரி தெய்வம் அகங்காரக் கொடுங்கிழங்கை அறுத்தருளுந் தெய்வம் வளையாழி வில்கதையும் வாளேந்துந் தெய்வம் மலரடியில் வண்டெனவாழ் மாண்புடையார் தெய்வம் தெளிவான மலருளத்தில் தெரிதுயில்செய் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 9 காவிரியாய்க் கொள்ளிடமாய்க் கருணைபொழி தெய்வம் கருநீல மலையாகிக் கண்கவருந் தெய்வம் பூவிரியும் பொழிலாகிப் பொங்கிவருந் தெய்வம் பொன்மாத ரொளியினிலே பொலிவு செய்யுந் தெய்வம் பாவிரித்த ஆழ்வார்கள் பத்திவிளை தெய்வம் பற்றிநின்றோர் பற்றறுக்கும் பற்றில்லாத் தெய்வம் தேவிரியும் மதில்சூழ்ந்த திருக்கோயில் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 10 9. சீர்காழி கோசலம் எழுந்து நீலக் குளிர்பொழி கதிரே என்றும் மாசில ருளத்தில் நிற்கும் மரகத ஒளியே செல்வக் கேசவ மணியே ஆளாய் கிளரடி வணங்க வந்தேன் வாசனை கமழுந் தெய்வ வண்டமிழ்க் காழி வேந்தே. 1 சிலையெலாம் பணியுஞ் செம்மை சிலையினை ஏந்தும் ஏந்தால் கலையெலாம் பூத்த அன்னைக் கலையினில் மூழ்குந் தோளா அலைவெலாந் தீர்க்க வேண்டி அணைந்தனன் அடியில் வீழ்ந்தேன் விலையிலா மணியே ஆளாய் விரிபொழில் காழி வேந்தே. 2 சின்னவள் சொன்ன மாற்றஞ் செவியினில் நுழைந்த போழ்தே பொன்முடி வாழ்வை நீத்துப் புங்கவர் வாழ்வைக் கொள்ள இந்நிலந் துணிந்தார் யாரே எத்தகைத் தியாகம் அந்தோ அன்னது வேட்டு வந்தேன் அருள்புரி காழி வேந்தே. 3 மன்னவர் வாழ்வை நீத்து மகிழ்ச்சியே பொங்கக் கானம் பொன்னடி வைத்த செல்வா புந்தியில் அந்தத் தாளே துன்னினால் மலரு நெஞ்சம் தூயனே கருணை செய்யாய் நன்னயப் புலவர் பாடும் நாதனே காழி வேந்தே. 4 அன்பெனும் ஆற்றி னூடே அகமெனுந் தோணி பற்றி இன்புற நின்ற வேடற் கீந்தசெம் பசுமைக் காட்சி என்றுகொல் பெறுவேன் ஏழை என்புநெக் குருகு நேய நன்மையில் புலைய னானேன் ஞானமார் காழி வேந்தே. 5 வேட்டுவர் அரக்கர் புட்கள் விலங்குகள் குரக்கி னங்கள் பாட்டவிர் மேனி கண்டு பகைமைநீத் தன்பால் வாழக் காட்டினில் நடந்த காலென் கருத்தினில் நடக்குங் கொல்லோ கோட்டமில் உளத்தார் சொல்லுங் குருமணி காழி வேந்தே. 6 அரக்கனை அன்று கொன்றாய் அணங்கினைக் காக்க வேண்டி இரக்கமே உருவாக் கொண்ட இராகவா ஏழை யேனைப் புரக்கவும் நினைப்ப தென்றோ புண்ணிய மூர்த்தி பொய்கை சுரக்குநன் செய்கள் சூழ்ந்த சுந்தரக் காழி வேந்தே. 7 ஆவியாம் அணங்கு தன்னை ஐம்புல அரக்கர் கோமான் மேவியே பற்றிக் கொண்டான் மேலவ அவனைக் கொன்று பாவியை மீட்ப துண்டோ பரமனே இராம நாதா காவிய மயில்களாடுங் கழனிசூழ் காழி வேந்தே. 8 வில்லினைத் தாங்குங் கோலம் விளங்கிழை தொடருங் கோலம் நல்லியற் பின்னோன் கோலம் நடந்தருள் கோலங் கண்டால் வல்வினை இரிந்து போகும் மனமலர் கோயி லாகும் கல்வியாய் நிறைந்த சோலைக் கற்பகக் காழி வேந்தே. 9 நங்கையின் உரிமை நாடி நாமநீர் கடந்த வீரா பங்கயம் பற்றி நாயேன் பாவையர் உரிமை நாட்டச் சிங்கமே பணிசெய் கின்றேன் திருவுள வைப்பு வேண்டும் பைந்துணர் வாகை பூண்ட பரமனே காழி வேந்தே. 10 10. தில்லை ஆண்டவனே அறமில்லா அரசியலில் விழுந்தொழிந்தேன் பாண்டவரின் வழிவளர்த்த பரமசுக அரசியலே மீண்டுமுயிர் பெறஅருளாய் மேதினியிற் கோவிந்தா நீண்டவுல களந்துறங்கும் நிழற்றில்லைப் பெருமாளே. 1 பாழான அரசியலே பார்மீது பரவிவந்தால் வாழாமல் உயிர்மடியும் வல்லிதிரு மகிழ்மார்பா சூழாமல் தகர்த்தருளாய் சுந்தரகோ விந்தாஇங் கேழான இசைவளரும் எழிற்றில்லைப் பெருமாளே. 2 கற்றவர்க ளெனும்பெயரால் காசினியி லரசியலார் செற்றமிகு புலிகரடி சிங்கமெனத் திரிகின்றார் உற்றுவருந் துயரவரால் உரைகளுக்கு மெட்டாதே சிற்றுயிருக் கிரங்கியருள் தில்லையமர் பெருமாளே. 3 கல்லூரி என்றென்றே கட்டுகின்றார் பழிபாவம் மல்லூரு நூல்களிலே மதிவளர்ச்சி பெறுகின்றார் அல்லூரு நெறியொழிக்க ஆணையென்று பிறந்திடுமோ செல்லூரும் பொழிலுடுத்த சீர்தில்லைப் பெருமாளே. 4 கொள்ளையிலுங் கொலையினிலும் கொடும்புரட்சி வெறியினிலும் உள்ளமுறும் அரசியலால் உலகுபடும் பாடென்னே தெள்ளுதமிழ்த் திருமாலே தேய்த்தருளாய் சிறுநெறியைக் கள்ளவிழு மலர்ச்சோலைக் கடிதில்லைப் பெருமாளே. 5 தேர்தலெனும் ஓரரக்கன் செகமனைத்தும் வயப்படுத்தி ஆர்கலியில் அழுத்துகின்றான் அலறுகிறார் அறிஞரெலாம் தேர்தனிலே கீதை சொன்ன திருவருளைச் செலுத்தாயோ பார்தனிலே அருள்கொழிக்கும் பழந்தில்லைப் பெருமாளே. 6 கல்வியெலாம் போருக்கே கருத்தெல்லாம் போருக்கே செல்வமெலாம் போருக்கே செய்கையெலாம் போருக்கே பல்லுலகும் போருக்கே பாழாகுங் காலமிது தொல்லையழித் தமைதியருள் துலங்குதில்லைப் பெருமாளே.7 ஒருயிரே எல்லாமென் றுரைத்தமொழி வாழ்வினிலே சீருறவே செயுங்கல்வி செவ்வரசு தொழின்மலர ஆருயிரே அருள்புரியாய் அய்யாவே கோவிந்தா ஓருருவே உண்மையொளி ஓங்குதில்லைப் பெருமாளே. 8 கல்வியிலும் வாழ்க்கையிலுங் கடைப்பட்ட தன்னலமே மல்குநெறி பரவிவரின் மாநிலமே கொலைக்களமாம் தொல்புவியைக் காத்தருளுந் தொழிலுடையாய் அருள்பொழியாய் புல்குபர நலம்வளரப் பொழிற்றில்லைப் பெருமாளே. 9 கொலையேவும் அரசியலைக் குலைத்தருளி எங்கெங்கும் நலமேவும் அரசியலே நண்ணஅருள் செய்யாயோ புலமேவு புள்ளினங்கள் புண்டரீகா எனப்புகன்றே அலையேறும் புனல்மூழ்கும் அணிதில்லைப் பெருமாளே. 10 11. திருக்கோவலூர் வெம்மையில் விழுந்த வாழ்வு விடுதலை பெறுமோ என்றே இம்மையில் ஏங்கி நின்றேன் எய்ப்பினில் வைப்பே என்னச் செம்மலே அடியில் சிந்தை சென்றது சேர வந்தேன் பொய்ம்மையில் புலவர் சூழ்ந்த புண்ணியக் கோவல் வாழ்வே. 1 உலகினை அளந்த மாலென் றுன்னிய போதே ஐயா கலகமுள் நெஞ்சம் மாறுங் காட்சியை என்னே சொல்வேன் திலகமே நெஞ்சி லென்றுஞ் சேவடி நின்றால் வெம்மை விலகியே பொன்று மன்றோ வித்தகக் கோவல் வாழ்வே. 2 விண்ணொளிப் பசுமை ஓங்கி விரிபொழிற் பசுமை நல்ல கண்ணமைப் பசுமை எங்குங் கடற்பயிர்ப் பசுமை யாழின் பண்ணளிப் பசுமை யெல்லாம் பாவியின் வெம்மை சாய்க்கும் தண்ணளிப் பசுமை யென்றே சார்ந்தனன் கோவல் வாழ்வே. 3 பச்சையே எண்ணி எண்ணிப் பாவியேன் பரிந்து வந்தேன் இச்சையுள் வேறொன் றில்லை ஈசனே அறிவா யுண்மை உச்சியிற் காலை வைத்தே ஒருமொழி உரையாய் கொல்லோ செக்கைக ளாலுஞ் சோலைச் செல்வமே கோவல் வாழ்வே. 4 வான்விடு நீலஞ் சூழ மதிவிடு நிலவு வீழ மீன்விடு நகைக ளுந்த மென்விடு தென்றல் வீசத் தேன்விடு பாண்மு ழங்கத் திரைவிடு முத்தஞ் சிந்த ஊன்விடு நிலையி லுள்ளேன் உரைவிடு கோவல் வாழ்வே. 5 எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவாய் நன்று புண்ணினிற் கோலிட் டாற்போல் புந்தியுள் நொந்து வந்தேன் கண்ணினிற் காணா யேனுங் கருத்தினில் நினைய லாமே பெண்ணையின் அலைகள் பாடும் பெருந்துறைக் கோவல் வாழ்வே. 6 பண்ணிய பாவ மெல்லாம் பரமனே அறிவாய் நன்று எண்ணியே உருகு கின்றேன் இதயமும் நைந்த தையா பெண்ணையின் வெள்ளங் கண்டேன் பேரருள் வெள்ளங் காணேன் புண்ணியந் திரண்ட செல்வப் புனிதனே கோவல் வாழ்வே. 7 உலகெலாம் நின்னில் ஒன்றும் உண்மையை உணர்த்த வேண்டி உலகெலாம் அளந்த மாயா உன்னையார் அளக்க வல்லார் அலகிலாப் பாவ நெஞ்சை அருளினால் அளந்தால் உய்வேன் சிலைசெறி பெண்ணை சூழுந் தெய்வமே கோவல் வாழ்வே. 8 கண்ணென வாழ்ந்த நண்பர் கடிமணம் பூண்டி நின்று விண்ணுயர் சிகரங் கண்டு வித்தகா விமலா என்றே எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவா யன்றே தண்ணருள் செய்யாய் இன்று தமிழ்வளர் கோவல் வாழ்வே. 9 குற்றமே செய்து செய்து குறைபல உடைய னானேன் செற்றமே சிறிது மில்லாத் தெய்வமே பொறையே அன்பே உற்றனன் அடியில் வீழ்ந்தேன் உறுபிழை பொறுத்தே யாளாய் நற்றவர் நெஞ்சில் வாழும் நாதனே கோவல் வாழ்வே. 10 12. திருக்காஞ்சி பந்தாடக் குழுமிவரும் பள்ளியிளம் பிள்ளைகளே! பைந்தாரன் திருமார்பன் பவமறுக்கும் ஒருவீரன் வந்தார்க்கு வரமளிக்கும் வரதனெழுந் தருள்காஞ்சி நந்தாத மணிக்கோயில் நண்ணும்வழி சொல்லீரே. 1 குடமேந்திக் குலவிவருங் கோதில்பிணாப் பிள்ளைகளே! தடமேந்து மலர்க்கினியன் தண்டுளவம் அசைமார்பன் வடமேந்துங் காஞ்சியிலே வரதனெழுந் தருள்கோயில் இடமேந்தும் வழியுணர்த்த எழின்முத்தஞ் சிந்தீரே. 2 மட்டவிழு மலர்பறிக்க மரத்தடியிற் செறிந்தீண்டி வட்டமிடும் வளைக்கரத்து மதிநல்லீர்! வளர்காஞ்சிக் கட்டழகன் பொலமுடியன் கருணைபுரி கரிவரதன் எட்டுடையன் திருக்கோயில் ஏகும்வழி இதுவேயோ. 3 ஆலரசு வேம்பினங்காள்! அழகுதிருக் காஞ்சியிலே சீலருளும் வரதனிடம் செல்வழியோ இதுவென்று கோலமவிர் கரநீட்டிக் குறிப்பிடவே குலவுகின்றீர் பாலிமண லெனப்பொலிந்து பல்லாண்டு வாழ்வீரே. 4 புற்றரவப் பெரியீரே! புன்மையனைக் கண்டவுடன் செற்றமறு பணம்விரித்துச் செல்கின்றீர் விரைந்துமுனே கற்றவரெண் காஞ்சியிலே கரிவரதன் கோயில்வழி பற்றிநட எனவுணர்த்தும் பான்மைதனை மறவேனே. 5 செங்கமலத் தேனருந்திச் சிறுமீன்கள் விளையாடும் பொங்குமடுக் காட்சிவிட்டீர் புரிவுடனே பறக்கின்றீர் சங்குடைய வரதனமர் தனிக்கோயில் வழியிதுவென் றிங்குணர்த்தும் புள்ளரசீர்! இருங்கருணைத் திறமென்னே. 6 மணியொலிக்கப் புல்மேய்ந்து மகிழ்பசுவின் நிரைதோன்றித் தணிவளிக்கக் கோபாலா வெனத்தாழச் சிலகன்று கணமருண்டு துள்ளிவழிக் கனைத்தோடக் கவர்கண்ணில் அணிமையென வரதனுள அருட்கோயில் பூத்ததுவே. 7 செங்கொண்டை சாய்ந்தசையச் சீக்கின்ற சேவல்களே! பைங்குஞ்சு புடைசூழப் பார்க்கின்ற கோழிகளே! அங்கண்ணன் வரதனென்றே அகங்குளிரக் கூவீரே இங்குள்ளங் கவர்வரதன் என்றென்றே கூவிரே. 8 மயிலனங்காள்! ஆடீரே மால்வரத னென்றென்றே குயிலினங்காள்! கூவீரே குருவரத னென்றென்றே பயிலளிசெவ் வாய்க்கிளிகாள்! பாடீரே வரதனென்றே உயிரளிக்க வருவானோ உயர்காஞ்சிப் பதியானே. 9 திருக்குளமெல் லலையெடுப்பச் சிறுதென்றற் காற்றெறிப்பத் தருக்கணிரை நிழல்பரப்பத் தனிமைநிலை உடன்கூட அருக்கனொளி மறைந்ததுவே அகல்நிலவும் எழுந்ததுவே பெருக்கமுத வரதாவோ பேயனையாள் வரதாவோ! 10 13. திருவல்லிக்கேணி அறங்குலை நாளில் அவதரித் துலகுக் கருள்புரி ஐயனீ என்றே நிறங்கிளர் மேனி நிலவிலே மூழ்கும் நினைவொடு வந்தனன் அடியேன் மறங்கிளை மனத்தை மாற்றியே ஆளாய் மாநிலத் தேர்விடு கோலத் திறங்குல வல்லிக் கேணியிற் சிறக்குஞ் செல்வமே கல்விநா யகனே. 1 மதுரையில் முளைத்த மரகத மலையே மன்னுயிர் மகிழ்நிழல் வனமே விதுரனுக் கருள்செய் வெள்ளமே வயிற்றில் மேதினி தாங்கிய விசும்பே குதிரைகள் புனைதேர்க் குலவிய கோலக் குறியுணர் திருவெனக் கருளாய் சதுரனே அல்லிக் கேணியிற் சான்ற தந்தையே சிந்தைநா யகனே. 2 தொன்மையில் மிகுந்த துவரையை யாண்ட சோதியே சுடர்விளக் கொளியே பன்மையில் மயங்கும் பாரினில் ஒருமைப் பார்வையே பெறுநிலை விழைந்தேன் நன்மையே புரிய நாதமாந் தேரை நடத்திய வள்ளலே அருளாய் மென்மையு ளல்லிக் கேணியில் மேவும் மேலவா சீலநா யகனே. 3 அலைகடற் றுயிலும் அற்புதக் காட்சி ஆனிரை சூழ்தரு காட்சி மலைகுடை பிடிக்கும் மாண்புறு காட்சி மரத்தினிற் குழலிசை காட்சி சிலைகளி னிடையே தேர்விடுங் காட்சி சிறியனேற் கருள்செய மனமோ கலைவள ரல்லிக் கேணியி லமர்ந்த கண்ணனே வண்ணநா யகனே. 4 அம்புகள் பொழியும் அமரிடைத் தேரில் அருச்சுனற் கருளினை உண்மை அம்புவி யதனில் அகத்தினைச் செலுத்த அமைதியே எங்கணும் ஓங்க ஐம்புலன் அடங்க ஆருயிர் மகிழ அருள்புரி ஆண்டகை அரசே வம்புறை அல்லிக் கேணியில் வாழும் வள்ளலே உள்ளநா யகனே. 5 பண்டைநாள் நிகழ்ந்த பாரதப் போரே பாவியேன் மனத்தினில் நிகழக் கண்டவா றென்னே கண்ணநின் கீதை காதிலே கேட்டவா றென்னே தொண்டனேன் நெஞ்சிற் றுணையடி கிளந்து தோன்றுமா றுளதுகொல் அறியேன் அண்டனே அல்லிக் கேணியி லமர்ந்த ஆதியே சோதிநா யகனே. 6 புன்னையில் நின்று புங்கவா இசைத்த புல்குழல் ஓசையை மடுத்த மன்னுயிர் வகைகள் மரமென நின்று மகிழ்ச்சியில் மலர்ந்தன வன்றே சின்னவ னந்தச் செவ்வொலி பருகச் சிந்தைகொண் டணைந்தனன் அருளே நன்னய அல்லிக் கேணியில் நண்ணும் நாதனே ஆதிநா யகனே. 7 உலகெலாம் நீயாய் ஓங்கிய உருவை ஓதியோ காணுதல் இயலும்! பலகலை விடுத்துப் பார்த்தசா ரதியாய்ப் படிந்தநின் வடிவினிற் படிந்தால் இலகிடும் அருளென் றெண்ணியே வந்தேன் ஈசனே அடியனை யாளாய் திலகமே அல்லிக் கேணியிற் றிகழும் தெய்வமே மெய்ம்மைநா யகனே. 8 செயற்கையில் விழுந்த சிந்தையர்க் கெட்டாச் செல்வமே உன்னடி அடைந்தேன் இயற்கையின் உயிரே ஏழிசை அமுதே எந்தையே எளியனை ஆளாய் பயிற்சியில் மிகுந்தோர் பாவனை அறியேன் பாவியேன் பார்த்தசா ரதியே அயர்ச்சியி லல்லிக் கேணியி லமர்ந்த அத்தனே பத்திநா யகனே. 9 தேரினி லிருந்த தெய்வமே கீதை செப்பிய தேசிகா உன்னை நேரினிற் காணும் நிலைமையு முண்டோ நீசனேற் கருள்செய லுண்டோ பாரினில் வேறு களைகணு மில்லேன் பார்த்தருள் பார்த்தசா ரதியே சீரிய வல்லிக் கேணியிற் சிறக்குஞ் சித்தனே முத்திநா யகனே. 10 14. திருவல்லிக்கேணி பள்ளியிலே யான்படித்த பருவமதி லுன்றன் பசுங்கோயில் வலம்வருவேன் பத்திவிளை வாலே தெள்ளறிவோ தீவினையோ சிதைந்ததந்தப் பத்தி திறமறியேன் சிறுமதியேன் செய்வதொன்று மறியேன் உள்ளநிலை பண்படவோ ஒருவழியுங் காணேன் உன்னடியி லுடும்பாகி உருகியழு கின்றேன் கள்ளவிழு மலர்த்தருவே கரியமணிக் குன்றே கருணையல்லிக் கேணிமகிழ் கடவுளருள் புரிவே. 1 கடலாடி வலம்வந்து கைதொழுவேன் கோயில் கமலமுகங் கண்டுகண்டு கசிந்துருகி நிற்பேன் படலாடும் அரசியலால் பத்திமனம் போச்சே பரமநின்றன் அரசியலைப் பரப்பமனங் கொண்டேன் உடலாடும் வேளையுறின் உளமாடு மன்றோ உளமாடி வாழஇங்கே ஒருகணமுந் தரியேன் மடலாடும் பாவையர்தம் மனம்பெறினோ உய்வேன் மலரல்லிக் கேணிமகிழ் மணவாளா அருளே. 2 கோலமிகு கோயில்வலங் கொண்டுவந்த போது கோதிலுரு நின்றுநின்று குவிந்தமனப் பண்பால் காலையிலே விழித்தவுடன் கண்ணிலுறு மன்றோ காயாம்பூ மேனியனே கமலவிழி மணியே சோலையிலே விளையாடிச் சோர்ந்தமரும் வேளை தூயவுரு எதிருலவுந் தோற்றமுறு மன்றோ வேலையொலி வேதவொலி விரவுமல்லிக் கேணி வித்தகனே அந்நிலையும் வீழ்ந்ததருள் செய்யே. 3 அந்நாளில் கோயில்புகுந் தகங்கொண்ட உருவம் ஆழ்வார்க ளந்தமிழில் அமர்ந்திருக்கும் அழகு பின்னாளில் புலனாகும் பேறுபெற்றே னருளால் பிரியாம லியற்கையிலே பின்னிநிற்கும் பெற்றி இந்நாளில் இசையரசே இனிதுணரச் செய்தாய் எல்லாநின் னருட்செயலே ஏழைஎன்ன அறிவேன் எந்நாளி லொளிகாண்பேன் ஏகாந்தம் பெறுவேன் எழிலல்லிக் கேணிவளர் எந்தைபெரு மானே. 4 வான்பொழியு நீலமதில் வளர்ந்துநிற்கு நெஞ்சம் மழைபொழியுங் கருமையிலே மகிழ்ந்துநிற்கு நெஞ்சம் கான்பொழியும் பசுமையிலே கலந்துநிற்கு நெஞ்சம் கடல்பொழியும் வண்ணமதில் களித்துநிற்கு நெஞ்சம் தேன்பொழியு மேனியென்றே திருமருவு மார்பா தெளிந்தொன்றின் சாந்தமெனுந் தெய்வநிலை யுறுமே ஊன்பொழியும் உடலுளமும் ஒளியமுதம் பெறுமே ஓங்கல்லிக் கேணியமர் உத்தமச்சின் மயமே. 5 கண்கவரும் புன்னைநிழல் காலடிவைத் துலவிக் கனிவாயிற் குழல்பொருத்திக் கானஞ்செய் கருணை எண்கவர ஏங்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் இசையமுதம் உண்டவர்கள் இனியஅணங் கானார் புண்கவரு மனமுடையேன் புந்திநினை யாயோ போரிடைத்தேர் விடுத்தன்று புனிதமறை சொன்னாய் விண்கவரு மாடஞ்சூழ் வீதிமலி செல்வம் மேவுமல்லிக் கேணிவளர் வேதாந்தப் பொருளே. 6 கரும்போர்வை அணிகழற்றிக் கறையில்லாப் போர்வை கருணையினா லெனக்களித்தாய் கறைப்படுத்தி விட்டேன் இரும்போடு மனக்குறும்பால் இழைத்தகறை போக்கி எழில்வெண்மை யாக்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் அரும்போடும் இளம்பருவம் அருளிஎன்னை ஆளாய் அருச்சுனற்குக் கீதைசொன்ன அறவாழி அரசே சுரும்போது மலர்ப்புன்னைச் சோலைநிழல் செய்யும் தூயஅல்லிக் கேணிமகிழ் சுந்தரநா யகனே. 7 அழுக்ககற்றி வெள்ளையுடை அணிந்துகொண்டேன் ஐயா அன்புளத்தால் மாலையிட்டால் அருள்வழிநின் றுய்வேன் வழுக்கிவிழும் வழிமறையும் வாழ்வுபெற லாகும் மதங்களெலாம் மறைகளெலாம் வழுத்துகின்ற மணியே இழுக்குடைய நெறிசெலுத்த எந்தைதிரு வுளமோ எழிலுடையுங் கறைப்பட்டால் ஏழைஎன்ன செய்வேன் செழிக்குமலர்ப் புன்னைநிழல் சீரடிவைத் துலவும் திருவல்லிக் கேணியமர் செல்வப் பெருமாளே. 8 புன்னையிலே கனிவாயிற் பூங்குழல்வைத் தூதப் புங்கவரும் மங்கையராய்ப் புத்தமிர்தம் உண்டார் அன்னையினுந் தயையுடையாய் ஆணுருவில் யானும் அணங்குமனம் பெற்றுவந்தேன் அரிமாலை யணிந்தால் மன்னருளில் திளைத்துநிற்பேன் மயக்கநெறி வீழேன் மதங்கடொறும் ஒளிசெய்யும் மாதவனே என்றுங் கன்னிமொழித் தமிழ்க்கவியில் கருத்துடைய அரைசே கருணையல்லிக் கேணியமர் கரியபெரு மாளே. 9 எண்ணாத எண்ணமெலாம் எண்ணியெண்ணி ஏங்கி ஏழைபடுந் துன்பமெலாம் எந்தையறி வாயே பெண்ணாகி முனிவரெல்லாம் பெற்றுவிட்டார் பேறு பெண்ணினத்தி லெனைச்சேர்த்தால் பேறெல்லாம் பெறுவேன் கண்ணாரக் காணவுனைக் கருத்தார நினைத்துக் கங்குல்பக லுருகுகின்றேன் கமலமுகக் கண்ணா விண்ணாடும் மண்ணாடும் வேதமொழி யாலே விளம்புமல்லிக் கேணியுள வித்தகமெய்ப் பொருளே. 10 15. திருவல்லிக்கேணி உலக மெல்லா மொருமையிலே ஒன்றின் துயருக் கிடனுண்டோ கலகப் பன்மை மனம்வீழ்ந்தால் கருணை யுலகொன் றேவிளங்கும் அலகில் ஒளியே அன்புருவே அந்த நிலையை அருள்புரியாய் இலகும் அல்லிக் கேணியமர் எந்தை பார்த்த சாரதியே 1 சாதி மதங்கள் தலையெடுத்தே தரணி யழிக்கும் நிலையறிவாய் நீதி நெறிகள் குன்றிவரல் நிமலா அறிவாய் இடர்களையாய் ஆதி யந்த மில்லாத அரசே அன்பே ஆண்டகையே சோதி அல்லிக் கேணிமகிழ் சுகமே பார்த்த சாரதியே. 2 பெண்க ளுரிமை பாழாச்சே பேயா யுலகம் அலைவாச்சே கண்க ளிரண்டி லொன்றற்றால் கருமம் நன்கு நடைபெறுமோ மண்கண் கூர வந்தவனே மகளிர் வாழ்வு தந்தவனே பண்ணின் மொழியார் துயர்களையாய் பழமைக் கேணிப் பெருவாழ்வே. 3 மண்ணைப் பொன்னை மங்கையரை மாயை யென்றே சிலர்கூடிக் கண்ணில் நூல்கள் எழுதிவைத்தார் கருணை யற்ற மனத்தாலே மண்ணில் பொன்னில் மங்கையரில் மாயா நின்றன் ஒளியிலையோ பண்ணில் நெறிகள் அழியஅருள் பரமா அல்லிக் கேணியனே. 4 உலக வாழ்வு உனையுணர்த்தும் உயர்ந்த கருவி யெனுமுண்மை இலகிப் பரவ வேண்டுகின்றேன் இனிய கருணை நெறிவாழ அலகி லழகு மருமார்பா அன்பை வளர்க்கும் அருள்மனமே திலக மென்னத் திகழ்சோதி தெய்வ அல்லிக் கேணியனே. 5 உலகம் நீயென் றுயிர்நீயென் றுவந்த வாழ்வில் தலைப்பட்டால் கலக மெல்லாம் பாழாகிக் கனிவே எங்குங் கால்கொள்ளும் விலகுந் துறவுக் கிடனுண்டோ வேந்தே இயற்கை நெறியோம்பாய் நிலவுங் கதிருங் கரங்கொண்ட நிமலா அல்லிக் கேணியனே. 6 வாழ்வை நின்றன் வழிநிறுத்தின் வலிய மாயை என்செய்யும் பாழ்பட் டொழியும் படராதே பழைய வினையும் நில்லாதே தாழ்வும் உயர்வும் அற்றழியும் சமமே எங்கும் இனிதோங்கும் காழ்வில் பொருளே அருள்புரிவாய் கருணை அல்லிக் கேணியனே. 7 சின்ன வயதில் நினைத்தவெலாம் சிறக்க அளித்தாய் பெரியோனே பின்னே அந்தப் பேறிழந்தேன் பேயேன் பிழையை யுன்னியுன்னி முன்னே நின்று முறையிட்டு முதல்வா என்றே அழுகின்றேன் என்னே செய்வேன் எனைஆளாய் எழிலா ரல்லிக் கேணியனே. 8 அரவில் துயிலும் அன்புடைமை அறிந்தே அணைந்தேன் திருவடியைக் கரவு மலிந்த அரசியலில் கலந்தே கெட்டேன் ஐயாவே இரவும் பகலு மில்லாத இடத்தில் நின்றுன் அரசியலைப் பரவச் செய்ய அருள்புரிவாய் பரமா அல்லிக் கேணியனே. 9 வெண்மை மதியில் இளஞ்சேயில் விரிந்த மலரில் நறும்பாட்டில் பெண்மை அமிழ்தில் அறவோரில் பெருமை பிறங்க வைத்தனையோ நண்ணும் பொழுதே நின்னினைவு நயமா யெழுத லென்னேயோ கண்ணே மணியே கமலமலர்க் கண்ணா அல்லிக் கேணியனே. 10 16. திருமலை வாழி ஏழு மலையென்றும் வாழி ஏழு மேகங்கள் வாழி ஏழு நிறவழகு வாழி ஏழு நாள்முறையே வாழி ஏழு இசைவகையே வாழி ஏழு மூலங்கள் வாழி ஏழு முனிவரர்கள் வாழி ஏழு மலைவாழி. 1 வெல்க ஏழு மலையொளியே வெல்க ஏழு மலைநாதம் வெல்க ஏழு மலைக்கொடியே வெல்க ஏழு மலைவாகை வெல்க ஏழு மலைவீரம் வெல்க ஏழு மலைநேயம் வெல்க ஏழு மலைவளமே வெல்க ஏழு மாமலையே. 2 போற்றி ஏழு மலையடிகள் போற்றி ஏழு மலைமார்பம் போற்றி ஏழு மலைத்தோள்கள் போற்றி ஏழு மலைவிழிகள் போற்றி ஏழு மலைவளையே போற்றி ஏழு மலையாழி போற்றி ஏழு மலைவில்லும் போற்றி ஏழு மலைப்புகழே. 3 சேரும் ஏழு மலைகாணச் சேரும் ஏழு மலைநண்ணச் சேரும் ஏழு மலைவணங்கச் சேரும் ஏழு மலைவாழ்த்தச் சேரும் ஏழு மலைஎண்ணச் சேரும் ஏழு மலைசுற்றச் சேரும் ஏழு மலைவாழச் சேரும் ஏழு செகத்தீரே. 4 ஊனும் உயிரும் ஏழுமலை உணவுஞ் சார்பும் ஏழுமலை கானும் மலையும் ஏழுமலை கடலும் வயலும் ஏழுமலை வானும் வளியும் ஏழுமலை மதியுங் கதிரும் ஏழுமலை கோனுங் குடியும் ஏழுமலை கூறாய் ஏழு மலையென்றே. 5 எண்ணும் எழுத்தும் ஏழுமலை எல்லாக் கலையும் ஏழுமலை பண்ணும் இசையும் ஏழுமலை பாட்டும் பொருளும் ஏழுமலை கண்ணும் மணியும் ஏழுமலை கருத்தும் ஒளியும் ஏழுமலை நண்ணும் நண்ணும் ஏழுமலை நாதன் ஏழு மலையென்றே. 6 மண்ணும் பரலுங் கூர்ங்குண்டும் வலிய அறையும் வளருமலை தண்மைப் புல்லும் செடிகொடியும் தழைக்குங் காவும் வளருமலை நுண்மைப் புழுவும் நந்தரவும் நுழையும் உடும்பும் வளருமலை வண்டும் புறவும் மயில்குயிலும் வளரும் ஏழு மலைதானே. 7 ஏனங் கரடி புலியானை எருதா குரங்கும் வளருமலை ஊனர் தேனர் உரவோர்கள் உறவோர் உம்பர் வளருமலை கானர் சித்தர் பத்தரொடு காணர் புத்தர் வளருமலை மான யோகர் ஞானியர்கள் வளரும் ஏழு மலைதானே. 8 மூல ஒலியாய் முழங்குமலை முதலின் எழுத்தாய் முகிழ்க்குமலை காலிற் பாம்பாய் எழும்புமலை கனக ஒளியாய் எரியுமலை நீல நிறங்கால் நிமலமலை நெஞ்சில் அமுதம் பொழியுமலை சீல உருவாய்த் திகழுமலை சிந்தை செய்யாய் திருமலையே. 9 சிரமே வணங்காய் ஏழுமலை செந்நா வழுத்தாய் ஏழுமலை கரமே கூப்பாய் ஏழுமலை கண்ணே பாராய் ஏழுமலை உரமே சூழாய் ஏழுமலை உணர்வே ஒன்றாய் ஏழுமலை வரமே நல்கும் ஏழுமலை வாழாய் ஏழு மலையென்றே. 10 17. திருமலை பனிவரையை முடிகொண்ட பரதமெனுந் திருநாட்டில் கனிமொழியின் எல்லையிலே காவல்புரி கற்பகமே இனிமைவிருந் துணவிழைந்தேன் எழுமுயற்சிக் கிடனிலையே சனிநகர வாழ்வதற்குத் தடைபுரிதல் கண்டருளே. 1 என்னபாவஞ் செய்தேனோ எவ்வுயிரை ஒறுத்தேனோ தொன்மலையில் வீற்றிருக்குந் துளவமணி பெருமாளே உன்னருளைப் பெறவேண்டி உழைக்கஎழும் முயற்சியெலாம் சின்னநகர் தகைந்திடுதல் திருவுள்ளம் அறியாதோ. 2 அருவிநிறை வேங்கடத்தில் அமர்ந்தருளும் பெருமாளே திருவடியே நினைந்திருந்தால் சிந்தனையில் சாந்தமுறும் கருவினிலே உயிரழிக்குங் கருணையிலா யமபடர்சூழ் பெருமையிலா நகர்வாழ்வைப் பெயர்த்தருள வேண்டுவனே. 3 சாக்கடையும் மலஅறையும் தார்ததும்பும் பாதைகளும் மாக்கிளரும் பொழிலணியா மாளிகையும் பிணிப்படையும் பாக்களிலே உனையுணரும் பகுத்தறிவை ஓம்பாவே தேக்கமுத முனிவர்தொழுந் திருமலையின் மெய்ப்பயனே. 4 சிற்றறையில் பலமாந்தர் சேர்ந்துறங்கிச் சாகின்றார் கற்றலிலா நகர்வாழ்வைக் கண்டுமனம் நொந்துடைந்தேன் செற்றமெழுப் பவ்வாழ்வைச் சிதைத்தருள வேண்டுகின்றேன் உற்றதுயர் களைஇறையே ஓங்குமலைப் பெருவாழ்வே. 5 அருகனொளி படராத அறைநிறைந்த மாடிகளில் உருக்களென எலும்புலவும் உயிர்ப்பில்லா நகரங்கள் திருக்குலவு மணிமார்பா திருவடியைச் சிந்திக்கும் பெருக்களிக்கும் வாழ்வழித்துப் பேயாக்கல் நலமேயோ. 6 மின்சார விளக்கொளியில் மின்னுகின்ற பாவையர்கள் பொன்சார மிழந்திருமும் புகைமாடி நிறைநகரில் உன்சாரம் படிவதெங்ஙன் உயிர்ப்பருளும் மலைக்கரசே தென்சாரம் படிசோலைத் திருநகர வாழ்வருளே. 7 மெய்யழிக்கும் பள்ளிகளும் மின்விளக்கு நாடகமும் பொய்வளர்க்கும் மன்றுகளும் பொருந்தாத உணவிலமும் வெய்யமலச் சிக்களித்து வேதனைசெய் நகரிடையே ஐயஉனைச் சிந்திக்கும் அமைதிநிலை கூடிடுமோ. 8 அன்பழிக்குஞ் சட்டதிட்டம் அலைக்கின்ற நகரங்கள் துன்பளிக்கும் எரிநரகாய்த் துயருழற்று மிந்நாளில் இன்பநெறி கடைப்பிடித்தல் எளியவருக் கியலுங்கொல் மன்பதையைக் காத்தருள மலைகொண்ட பெருமாளே. 9 ஏழுமலை பணிதலையும் ஏழுமலை சொலும்வாயும் ஏழுமலை நினைமனமும் எழும்வாழ்வைத் தகைந்துநிற்கும் பாழுநகர் படவருளாய் பார்த்தனுக்குக் கீதைசொன்ன தோழனென உனையடைந்தேன் தூயதிரு மலைக்கொழுந்தே.10 18. திருமலை ஏழுமலை ஏழுமலை என்றெண்ணி வந்தேன் ஏழுமலை ஏழுமலை என்றடியார் முழங்கும் ஏழுமலை ஒலியினிலே ஈடுபட்டு நின்றேன் ஏழுமலை அதிசயத்தை என்னவென்று சொல்வேன் ஏழுமலை கழகமென எனையாண்ட தம்மா இளமையிலே அக்கழகம் எளியன்பயின் றிருந்தால் ஏழுமலை வடிவான எந்தைபெரு மானே இப்பிறவிப் பேறுபெற்றே ஏழையுயிர் உயுமே. 1 ஏழுமலை ஏழுமலை என்றுகதிர் பொழிய ஏழுமலை ஏழுமலை என்றுவிசும் பார்ப்ப ஏழுமலை ஏழுமலை என்றுவளி உலவ ஏழுமலை ஏழுமலை என்றுகனல் மூள ஏழுமலை ஏழுமலை என்றுபுனல் விம்ம ஏழுமலை ஏழுமலை என்றுநிலந் தாங்க ஏழுமலை ஏழுமலை என்றுயிர்கள் வாழ ஏழுமலை அருள்புரியும் இனிமையுணர் வேனோ. 2 ஏழுமலை ஏழுமலை எனப்பணியாய் தலையே ஏழுமலை ஏழுமலை எனநோக்காய் விழியே ஏழுமலை ஏழுமலை எனமுரலாய் மூக்கே ஏழுமலை ஏழுமலை எனஇசையாய் நாவே ஏழுமலை ஏழுமலை எனக்கேளாய் செவியே ஏழுமலை ஏழுமலை எனநினையாய் நெஞ்சே ஏழுமலை ஏழுமலை எனக்கூப்பாய் கையே ஏழுமலை ஏழுமலை எனச்சூழாய் காலே. 3 பரிதிமதி ஒளிபொழியப் படர்காற்று வீசப் பளிங்கருவி முழவொலிக்கப் பாம்புமயி லாடக் கரிகரடி புலிமான்கள் காட்டாக்கள் சூழ்ந்து கலந்துகலந் தொன்றிமனங் கசிந்துகசிந் துருக வரிசிறைகள் யாழ்முழக்க வான்பறவை பாட மரக்கரங்கள் மலர்தூவ மாந்தர்தொழ அருளும் அரிதிருமால் நாரணனே அணங்குவளர் மார்பா அடியடைந்தேன் களைகணிலை ஆண்டருளாய் அரைசே. 4 வான்பசுமை தவழ்பொழிலின் வளர்பசுமை போர்த்த மலைமுடியில் பசுமைவிரி மணிக்கொழுந்தே அமுதே கோன்பசுமை நாணாளுங் குலைந்துகுலைந் திறுகக் குடிப்பசுமை வழிவழியே குன்றிவிட்ட தந்தோ ஊன்பசுமை உளப்பசுமை உயிர்களிழந் தாலோ உலகிலுன்றன் இயற்கைநெறி ஓங்கஇட முண்டோ தேன்பசுமைத் துளவமணி தெய்வத்திரு மார்பா சீவருய்யப் பசுமையருள் செல்வப்பெரு மாளே. 5 மரத்தடியில் வீற்றிருந்தாய் மதிலெடுத்துச் சில்லோர் மாளிகைகள் கோபுரங்கள் மடங்கள்பல வகுத்தார் சிரத்தையுடன் அன்பர்குழு சேர்ந்தஇட மெல்லாம் சிறுமைமுழை ஆயினவே செயற்கைவெம்மை என்னே வரத்தையருள் இயற்கைநெறி வளர்வதெங்ஙன் ஐயா மந்திவிளை யாடிமகிழ் மரஞ்செறிந்த மலையில் கரத்தினிலே ஆழிகொண்டு காக்கின்ற அரசே காசினியோர் உய்யும்வழி கருணைபுரி யாயோ. 6 சாதியிலாச் சந்நிதியில் சாதிநுழை வாச்சே சட்டமிலா முன்னிலையில் சட்டம்புக லாச்சே நீதிநிலை திருமுன்னே நீதிவிழ லாச்சே நிறைசிறந்த இடமெல்லாம் நிறைசிதைய லாச்சே ஆதிநெறி மீண்டுமிங்கே ஆக்கம்பெற லுண்டோ ஆழ்வார்தம் தமிழ்மறையை ஆலயமாக் கொண்ட சோதிமலை முடியரசே சுதந்திரமே நிலவும் தூயவெளி ஒளியினிலே சூழஅருள் செய்யே. 7 இயற்கையிறை நீயென்னும் எண்ணமிலார் சூழ்ந்தே எத்தனையோ செயற்கைவினை இயற்றுகிறா ரந்தோ பயிற்சியிலார் புன்பொருளைப் பரப்புகின்றார் முன்னே பாராதி அண்டமெலாம் பரமநின தலவோ முயற்சியுள முனிவர்வழி முன்னாளில் வளர்ந்த முத்திநெறி வளம்பெறவே முதற்பொருளே அருளாய் குயிற்குரலும் மயில்நடமும் குரங்குவிளை யாட்டும் கோபாலா எனுமுழக்குங் குலவுமலைக் கொழுந்தே. 8 ஏழுமலை மீதிருக்கும் ஏழிசையின் பயனே ஏழைமுகம் பாராயோ எத்தனைநாட் செல்லும் வாழுமலை என்றுவந்தேன் வாழ்வுபெற வேண்டி வழியறியேன் துறையறியேன் வாழ்த்தும்வகை யறியேன் ஆழநினைந் தழவறியேன் அவனியிலேன் பிறந்தேன் ஆண்டகையே என்னசெய்வேன் ஆதரிப்பா ரிலையே வேழவினக் களிகண்டு வெருவுகின்றேன் ஐயா விசயனுக்குக் கீதைசொன்ன வேதாந்தப் பொருளே. 9 நற்பிறவி எனக்களித்தாய் நல்லுடலுந் தந்தாய் நானிலத்தில் வாழ்ந்துனது நளினமலர் மேவச் சிற்பரம வீணுரையால் சிதைத்துவிட்டேன் உடலைச் சீருடலை மீண்டும்பெறச் சித்தநெறி அறியேன் எற்புருகத் தவங்கிடக்க என்னுடலந் தாங்கா எங்குமுள இறையோனே என்றனிலை யுணர்வாய் வெற்பினிலே மங்கைமகிழ் வேந்தனென வந்தேன் வேதனைகள் தீர்ந்துய்ய வேங்கடவா அருளே. 10 19. நாமாவளி நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 1 நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 2 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 3 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 4 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 5 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 6 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 7 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 8 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 9 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 10 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 11 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 12 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 13 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 14 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 15 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 16 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 17 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 18 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 19 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 20 மனத்துக் கெட்டா மாதவனே மரணந் தவிர்ப்பாய் கேசவனே 21 எங்கு முள்ள இறையோனே என்னை ஆளாய் மறையோனே 22 உருவா யருவா யுளபொருளே உவந்தே குருவாய் வந்தருளே 23 எதற்கும் எதற்கும் காரணனே அதற்கும் அதற்கும் பூரணனே 24 வைகுந்த வாசா வாவா வண்மைத் திருவொடு வாவா 25 கமலத் திருவொடு வாவா கருடக் கொடியொடு வாவா 26 அடியவர் சூழ வாவா அணைந்தருள் புரிய வாவா. 27 பொன்னொளி மின்னும் முடியோனே பொருளென வந்தேன் அடியேனே 28 கமலக் கண்ணால் கருணைபொழி களைத்தே வந்தேன் இருளையொழி. 29 மலர்மகள் மார்பா வந்தேனே மனத்திற் பொழியாய் செந்தேனே. 30 சக்கரம் நோயை அழிப்பதுவே சங்கொலி சாவை ஒழிப்பதுவே. 31 நீலமேனி நிலவினிலே நித்தம் மூழ்கு நலமினியே. 32 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 33 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 34 ஒளியுறு திருவடி உருகாயோ ஒழுகுந் தேனைப் பருகாயோ 35 செந்தேன் பொழியுந் திருவடியே சிந்தையிற் சேர்ந்தால் போமிடியே 36 திருவடி சேர நினையாயோ செகத்தில் வாழ்வை வனையாயோ 37 கோசலம் வந்த கோமானே கோதண்ட மேந்திய பூமானே 38 நங்கை யுரிமை காத்தவனே நான்மறை போற்றும் மூத்தவனே 39 சோதர நேயப் பிறப்பிடமே சுந்தர மேனி அறப்படமே 40 மதுரையி லெழுந்த வான்மணியே மாதவர்க் கருளிய மேன்மணியே 41 தேரிடைப் பொலிந்த திருக்காட்சி தெய்வ மறைசொல் அருட்காட்சி 42 ஆக்க ளிடையே நின்றனையே ஆளாய் ஆளாய் என்றனையே 43 புன்னை முழங்குங் குழலோசை புந்தியி லுணர எனக்காசை. 44 கீதை குழலாய்க் கேட்ட லென்றோ கீழோன் வினைகள் வீட்ட லென்றோ 45 இனியகுழலைக் கேட்பதுவே இரவும் பகலும் வேட்பதுவே 46 பிழையைப் பொறுக்கும் பெரியோனே பிழைபல செய்தேன் சிறியேனே 47 கண்ணன் திருப்புகழ் பாடுவமே காதல் இன்பம் ஆடுவமே 48 கண்ணன் திருவடி சூடுவமே கருணை மழையில் ஆடுவமே. 49 கடலை மலையைப் பாருங்கள் கண்ணன் காட்சி ஓருங்கள் 50 கரிய மேகங் காணுங்கள் கண்ணன் வடிவம் பேணுங்கள். 51 சோலைக் கலையைச் சூழுங்கள் சோதி அலையில் வீழுங்கள் 52 எல்லாம் கண்ணன் திருக்கோலம் என்றுணர் அன்பே உருக்கோலும். 53 ஆழ்வார் தமிழில் ஆழ்வோமே அன்பில் என்றும் வாழ்வோமே. 54 20. வாழ்த்து திருமகள் வாழ்க வாழ்க தெய்வஐம் படைகள் வாழ்க தெருளளி துளவம் வாழ்க செழுங்கொடி வாழ்க வாழ்க கருநிறம் வாழ்க வாழ்க கருணைசேர் அடியார் வாழ்க திருமலை முதலா வுள்ள திருப்பதி பலவும் வாழ்க. திரு.வி.கலியாண சுந்தரனார் பாடிய திருமால் அருள் வேட்டல் முற்றிற்று  முன்னுரை இக்கால உலகம் எப்படி இருக்கிறது? எங்கணும் என்ன பேச்சு? விளக்கம் வேண்டுகொல்! வீடுகளில் வேற்றுமை - ஊர்களிற் பிரிவு - நாடுகளிற் பிணக்கு - யாண்டும் உறுமல் - கறுவல்! இவையெல்லாம் உருண்டு திரண்டு உலகைப் போர்க்களமாக்கிவிட்டன. ஐந்து கண்டமும் போரிலே மூழ்கியுள்ளன. இந்நிலைமை எப்பொழு தேனும் நேர்ந்ததுண்டோ? விலங்குச் சண்டையிலாதல் அறக்கடவுளுக்கு இடமிருக் கும். இக்கால மனிதச் சண்டையில் அறக்கடவுளுக்கு இட முண்டோ? உலகம் விரிந்தது; பரந்தது; பெரியது; மிகப் பெரி யது. பெரிய உலகில் அறக்கடவுள் தலைசாய்ப்பதற்கு ஒரு சிறு இடமுமில்லை! மன்பதை அலமருகிறது; நடுக்குறுகிறது; குண்டு குண்டு என்று கூக்குரலிடுகிறது; அங்கும் இங்கும் ஓடுகிறது; அலை கிறது; மடிகிறது. இந்நிலையில் புது உலகம் அறிஞரால் பேசப் படுகிறது. மன்பதை கேடுற்று அழிவதற்குக் காரணம் என்னை? ஒவ்வோர் உலகினர் ஒவ்வொன்று கூறுவர். அவற்றைத் திரட்டிப் பார்த்தால், அவை யாவும் ஒன்றில் அடங்குதல் காணலாம். அவ்வொன்று, மக்கள் கூட்டம் இயற்கை இறையை மறந்து, தன்னலம் என்னுஞ் செயற்கைப் பேய்க்கு இரையா யினமை என்று சுருங்கச் சொல்லலாம். மக்கள் கூட்டம் இயற்கை இறைவழி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்படி ஒழுகுகிறதா? ஒழுகியிருப்பின், உலகில் சாம்ராஜ்யமே முளைத்திராது; பொதுமை அறமே முகிழ்த் திருக்கும். சாம்ராஜ்ய முறை மாறவேண்டுமானால் மனிதரிடத் துள்ள குறைபாடுகள் நீங்குதல் வேண்டும்; சில குறைபாடுகளா தல் நீங்குதல் வேண்டும். இங்கே, சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அது, தன்னலத்துக்கு முதலாக உள்ள ஆசைப்பேய். ஆசைப்பேய் இப்பொழுது என்ன செய்கிறது? உயிர்களை அலைக்கிறது; உலகைப் பெரும் போர்க் களமாக்கி யிருக்கிறது; அரக்கரும் அஞ்சும் நிணக்களமாக்கி யிருக்கிறது. இப்போர், முடிவில் ஆசைப்பேயை ஓரளவிலாதல் அடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆசைப் பேய் அடங்க அடங்க ஒருவிதப் புது உலகம் அவ்வவ்வளவில் அரும்பிக்கொண்டே போகும். புதுமை உலகம் யாண்டிருந்து பிறக்கும்? வெறும் பாழிலிருந்தா பிறக்கும்? பழமைத் தாயினிடமிருந்து புதுமைச் சேய் பிறக்கும்? பழமை எது? இயற்கை இறைவழி. இவ்வழியி னின்றும் இக்கால உலகம் வழுக்கி வீழ்ந்துள்ளது. வீழ்ச்சியைப் போக்கவே இயற்கை இறை விரைந்து நிற்கிறது. இஃது அருளுடைய இயற்கை இறையின் கடமை. ஆதலின், இயற்கை இறையின் அருளால் ஒருவிதச் செம்மைப் புது உலகம் அரும்பியே தீரும். இறை ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே. இறை நெறியே சத் மார்க்கம் என்பது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - இறை; அதை அடைதற்குறிய மார்க்கம் இயற்கை. இயற்கைவழி இறையை உணரல் வேண்டுமாதலின், அவ்வழி இயற்கை - இறைவழி என்று சொல்லப்படுகிறது. இயற்கை - இறை வழியாவது சத்மார்க்கம் - சன்மார்க்கம். சன்மார்க்கம் உலகில் பல பெயர் பெற்றிருக்கிறது. பெயர்ப்பன்மையை நீக்கிப் பொருளை நோக்கினால் ஒருமையே புலனாகும். பெயர்ப் பன்மையில் மக்கள் மயக்குற்றமையால், அவர்கட்குப் பொதுமைப்பொருள் புலனாகாதொழிந்தது. அதனால் போராட்டம் மக்களிடைப் புகலாயிற்று. பொதுமையே சமரசம் என்பது. சமரசமே சன்மார்க்கம். எங்கே சமரசம் உண்டோ அங்கே சன்மார்க்கம் உண்டு. எங்கே சன்மார்க்கம் இருக்குமோ அங்கே சமரசம் இருக்கும். இரண் டுக்கும் தொடர்புண்மையால் சமரசம் சன்மார்க்கம் என்றும், சன்மார்க்கம் சமரசம் என்றும் இரண்டும் பொதுளச் சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றன. சுருங்கிய முறையில் சமரச சன்மார்க்கத்தை மார்க்கமென்றுங் கூறலாம். மார்க்கம் என்பதும், சன்மார்க்கம் என்பதும், சமரசம் என்பதும், சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே. சன்மார்க்கம் என்ன அறிவுறுத்துகிறது? ஈண்டைக்கு விரிவுரை வேண்டுவதில்லை. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டும் உள்ளது. அதை அடைய, மார்க்கம் என்னும் இயற்கையுடன் இயைந்து வாழ்தல் வேண்டும் என்று சன் மார்க்க போதமும் திறவும் என்றொரு நூல் என்னால் யாக்கப் பட்டுள்ளது. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டுமுள்ளது என்னுங் கொள்கை, மன்பதையில் ஆக்கம் பெறப்பெற, அதன்கண் சகோதரநேயம் ஓங்கி வளர்தல் ஒருதலை. சகோதர நேயத்தின் முன் ஆசைப்பேய் இடம் பெறுமோ? இடம் பெறுதல் அரிது. சன்மார்க்கம் ஆசைப் பேயை அடக்கவல்லது என்று சொல்வது மிகையாகாதென்க. சன்மார்க்கம் இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. சத் என்னுஞ் செம்பொருள் உணர்வை மக்கள் என்று பெற்றார்களோ அன்றோ சன்மார்க்கமும் அவர்களிடை விளங்கியிருக்கும். சத் அநாதி; சன்மார்க்கமும் அநாதி. யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற திருமொழி புற நானூற்றில் ஒரு மூலையில் ஒளிர்வது. இத்திருமொழியி லுள்ள பொதுமைச் செல்வம், முதல்முதல் என் உள்ளத்தை கவர்ந்தது. இப்பொதுமை, உலகின் நானாபக்கங்களிலும் அவ்வப்போது தோன்றிய பெரியோர் வாயிலாகப் பல மொழியில் வெளிவந்த பொது மறைகளிலெல்லாம் மிளர்தலை எனக்கு விளங்கச் செய்தது. வேறு சில கூட்டுறவுகளும் பொதுமை உணர்வை என்பால் வளர்த்தன. பொதுமை என்னுஞ் சமரசம் - சன்மார்க்கம் - உலகில் பல பெயர்களாக வழங்கப்படுகிறது. அவை: ஜைனம், பௌத்தம், சைவம், வைணவம், வேதாந்தம், கிறிதுவம், இலாம் முதலி யன. இந்நாளில் பொது நெறியை மாடம் பிளவட்கி என்ற சமரச சன்மார்க்க ஞானியார் தியோசபி என்றனர். மக்கள் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி விழும்போ தெல்லாம், பெரியோர் - தீர்க்க தரிசிகள் - நபிமார் - தோன்றிக் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற முறையில் சன்மார்க்கத்தை அறிவுறுத்திச் செல்வது வழக்கம். அதனால் அடையும் மாறு தலைப் புது உலகமலர்ச்சி என்று மக்கள் கொள்வதும் வழக்கம். மெய்யறிவு பெற்றவர்களுக்குப் பழமையும் புதுமையும் ஒன் றாகவே விளங்கும். இந்நாளில் புது உலக மலர்ச்சி பேசப்படுகிறது. அப்புது உலகம் சமரச சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதா யிருத்தல் வேண்டும். சமரச சன்மார்க்கமே புது உலக ஆக்கத் துக்குரிய அவதாரமென்று யான் கருதுகிறேன். இவ்வேளையில் சமரச சன்மார்க்கத்தொண்டு ஆங்காங்கே நிகழப்பெறுதல் சிறப்பு. பல துறையில் உழன்று பலவிதப் பணிசெய்த எளியேனுக்கு இற்றை ஞான்று சன்மார்க்கப் பணியிலே வேட்கை மீக்கூர்ந்து செல்கிறது. இதை ஆண்டவன் அருள் என்றே யான் கொள் கிறேன். சன்மார்க்கத் தொண்டுகள் பலதிறத்தன. அவற்றுள் ஒன்று நூற்றொண்டு. இத்தொண்டிலும் என்னைத் திருவருள் உந்தியது. என்னால் இயற்றப்பெற்ற நூல்களிற் பெரும்பான்மை யன சமரச சன்மார்க்கக் கொள்கைக்கு அரண் செய்வனவாம். பாட்டுத் தொண்டில் யான் பெரும் பொழுது போக்குவ தில்லை. ஓய்ந்த நேரங்களில் மிகச் சிறு பொழுது யான் பாட்டுத் தோண்டில் தலைப்படுவதுண்டு. பொதுமைப் பாடல்கள் சில என்னால் யாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப, பொதுமை வேட்டல் என்னுந் தலைப்பு அணியப்பட்டது. தலைப்பு நூலின் உள்ளுரையை நன்கு விளங்கச் செய்யும். விளக்கம் வேண்டுவதில்லை. பொதுமை வேட்டல் புது உலக மலர்ச்சிக்கு வேண்டற் பாலது. இப் பொதுமை வேட்டல் அப்புது உலக ஆக்கத்துக்கு ஒரு மூலையிலாதல் ஓரளவிலாதல் துணை செய்யுமென்று நம்புகிறேன். மலர்க புது உலகம்; மலர்க பொதுவுலகம்; மலர்க அற உலகம்; வாழ்க மார்க்கம்; வாழ்க சங்கம்; வாழ்க தொண்டு. இந்நூல், உலகப் போரிடை - போர் முழக்கம் சென்னை நகரைப் பலவழியிலும் கலங்கச்செய்த வேளையில் - காகிதப் பஞ்சம் நெருக்கிய நேரத்தில் வெளிவந்தது. பிழை பொறுக்க. இராயப்பேட்டை 10-1-1942 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் 1. தெய்வ நிச்சயம் தெய்வமெனும் ஒருமொழியைச் செப்பக் கேட்டேன் செறிகலையில் மொழிப்பொருளைச் சேரக் கற்றேன் மெய்யெனவே அதையுணர மேலுஞ் சென்றேன் மேதினியில் பலதுறைகள் மேவிப் பார்த்தேன் பொய்யென்ற முடிவினுக்குப் போகுங் காலைப் புத்தமிர்தப் பெரியர்சிலர் போதங் கண்டேன் உய்யுநெறி உழைப்பாலே உறுமென் றெண்ணி உனையுணரும் பணியேற்றேன் ஒருமைத் தேவே. 1 அண்டமெலாம் இயங்கருமை ஆய்ந்து நோக்கின் அத்த! நின துண்மையிலே ஐயந் தோன்றா எண்டிசையுங் கடந்திலங்கும் இறைவ! உன்னை எல்லையுற்ற பொருளளவில் எடுத்தல் நன்றோ கண்டநிலை கொண்டுநின தகண்டந் தேர்ந்தேன் கண்ணுக்குப் புலனாகாக் கருத்துந் தேர்ந்தேன் தொண்டினிலே ஈடுபட்டுத் தோயத் தோயத் துணைவருமென் றறிந்துவந்தேன் தூய ஒன்றே. 2 தத்துவமெல் லாங்கடந்த தனித்த ஒன்றே தடைஎல்லைக் கட்டில்லாத் தனிமைத் தேவே தத்துவத்துள் உழன்றுழன்று தடவிப் பார்த்தும் தடைஎல்லைக் கட்டுள்ளே தடவிப் பார்த்தும் சத்தியனே உனக்கின்மை சாற்ற லாமோ தடைகடக்கும் வழிநாடல் சால்பே யாகும் பித்தருக்குங் குருடருக்கும் பிறங்கா எல்லாம் பேருலகில் இல்லையெனப் பேசல் நன்றோ. 3 வாக்குமனங் கடந்துநிற்கும் வள்ளால் உன்னை வாக்குடையேன் மனமுடையேன் வாழ்த்தல் எங்ஙன் போக்குவர வில்லாத பொருளே உன்னைப் போக்குடையேன் வரவுடையேன் போற்றல் எங்ஙன் யாக்கையிலே புகுந்துள்ள யானென் செய்வேன் யாதொன்று பற்றினதன் இயல்பாய் நிற்பேன் தாக்குடையேன் கரணத்தால் சார வந்தேன் தக்கவழி காட்டாயோ தனிமைத் தேவே. 4 என்னறிவுக் கெட்டாத இறையே உன்னை ஏத்துநெறி காணாமல் எண்ணி எண்ணிக் கன்னெஞ்சும் புண்ணாகிக் கரையுங் காலை, கவலற்க; இயற்கையுடல் கடவுட் குண்டு நின்றொழுக என்னுமொலி நெஞ்சிற் றோன்றி நிறைமகிழ்ச்சி யூட்டியதும் நின்றன் அன்பே நன்றுடையாய் இருநிலையாய் ஞான மூர்த்தி நாயகனே அருட்பெருக்கு நவிலற் பாற்றோ. 5 எட்டாத ஒருநிலையை எண்ண வேண்டேன் எனக்கினிய இயற்கைநிலை ஏன்று கொண்டேன் முட்டாத வழிகண்டேன் முதல்வா வெய்ய மூர்க்கநெறி இனியுழலேன் முன்னி முன்னிக் கட்டாத வீட்டினிலே கருத்து வைத்தேன் காணாத காட்சியெலாங் காண்பேன் சொல்ல ஒட்டாத நிலையெல்லாம் உணர்வேன் எல்லாம் உன்னருளே எனைஆளும் உண்மைத் தேவே. 6 இறையவனே இயற்கையுடல் என்றே கொண்டாய் என்றோநீ அன்றியற்கை இரண்டும் ஒன்றே முறைமுறையே பிரித்தெடுத்தல் முடியா தப்பா மூத்தவரும் இம்முடிவே முழங்கிச் சென்றார் நிறைவாகி இயற்கையிலே நிலவுங் கோலம் நெஞ்சினிலே பதிவாகி நிலைக்க, நோயும் நறைமூப்பும் சாக்காடும் நாச மாக, நலியாத இளமைநலம் நண்ணச் செய்யே. 7 இயற்கைவழி நின்றொழுக இன்பந் தோன்ற எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இரக்கங் கூடச் செயற்கையிலே கருத்திருத்துஞ் சித்தஞ் சாகச் சீவவதை நினையாத சிந்தை சேர முயற்சியுயிர் ஈடேற மூல மாகி முந்துதுணை புரிந்தருளும் முதல்வா நல்ல பயிற்சி மிகவழிகாட்டிப் பண்பு செய்வாய் பரங்கருணைப் பெருங்கடலே பான்மைத் தேவே 8 ஒன்றான இறையேஉன் இயற்கைக் கோலம் ஓவியமாய்க் காவியமாய் உதவ வேண்டி நன்றாகச் செய்தமைத்தார் ஞானச் செல்வர் ஞாலத்தில் அந்நுட்பம் நாளும் நாளும் பொன்றாது பொலிந்திவரின் புகழே யோங்கும் பொன்றிவரின் சிற்பமெலாம் பொறியாம் கல்லாம் கொன்றாடும் விலங்காகிக் குலைவர் மக்கள் குறித்தருளாய் கலைவளரக் கோதில் கோவே. 9 மலையாகிக் காடாகி வயலாய் ஆறாய் மணல்வெளியாய்க் கடலாகி மதியாய் எல்லாய்க் கலையாகி எஞ்ஞான்றுங் காட்சி நல்கும் கருணையிலே நாடோறுங் கலந்து வாழ்ந்தும் சலியாத உனக்கின்மை சாற்றல் நன்றோ தரைநடந்தும் அதைமறப்போர் தலத்தி லுண்டு தலையான வான்பொருளே தண்மை நீங்காச் சத்தியமே நித்தியமே சாந்தத் தேவே. 10 2. தெய்வ முழக்கம் உலகமெலாங் கடந்துகடந் தொளிருமொரு தெய்வம் உலகுதொறுங் கலந்துகலந் தோங்குவிக்குந் தெய்வம் இலகுசரா சரமெல்லாம் இயக்கி நிற்குந் தெய்வம் இன்பறிவாய் அன்பருளாய் என்றுமுள தெய்வம் அலகிலொளி ஒலியாகி அகிலஞ்செய் தெய்வம் அருங்கலையில் நடம்புரியும் ஆனந்தத் தெய்வம் பலசமய ஒருமையிலே பயன்விளைக்குந் தெய்வம் பழம்பொருட்கும் பழம்பொருளாம் பழந்தெய்வம் பாரே. 1 அங்கிங்கென் னாதபடி எங்குமுள தெய்வம் அளவைகளுக் கெட்டாத அகண்டிதமாந் தெய்வம் பொங்கியற்கை உடற்குயிராய்ப் பொலிகின்ற தெய்வம் பொழிந்தருளை உயிர்களுக்குப் புகலாகுந் தெய்வம் தங்கியற்கை நெறியினிலே தாண்டவஞ்செய் தெய்வம் சாகாத வரமளிக்குஞ் சால்புடைய தெய்வம் புங்கவர்தம் நெஞ்சினிலே புகுந்திருக்குந் தெய்வம் புதுப்பொருட்கும் புதுப்பொருளாம் புதுத்தெய்வம் போற்றே. 2 மண்புனல்தீ வளிவெளியாய் மன்னிநிற்குந் தெய்வம் மதிகதிராய் மன்னுயிராய் மகிழ்விக்குந் தெய்வம் கண்முதலாம் உறுப்புயிர்க்குக் கதிக்கின்ற தெய்வம் கருத்தினிலே கோயில்கொண்டு காக்கின்ற தெய்வம் எண்ணெழுத்தாய் ஏழிசையாய் இசைப்பயனாந் தெய்வம் எம்மறையுங் குருவழியே இயம்புகின்ற தெய்வம் உண்மைஅறி வானந்த உருவான தெய்வம் ஒருநெறியாம் பொதுமையிலே ஓங்குதெய்வம் ஒன்றே. 3 விண்ணாடு நீலஒளி விரிக்கின்ற தெய்வம் வெண்கோளாய்ப் பிறகோளாய் மின்னுகின்ற தெய்வம் தண்ணாரும் மதியாகி நிலவுபொழி தெய்வம் தனிச்சுடராய் வெயிலுமிழும் சத்துடைய தெய்வம் மண்ணாகி மலையாகி மனங்கவருந் தெய்வம் மரமாகிக் காடாகி வளர்பசுமைத் தெய்வம் பண்ணாத பாட்டாறாய்ப் படர்ந்தோடுந் தெய்வம் பரவையாய் அலைகொழிக்கும் பரதெய்வம் பாடே. 4 நீரருந்து மானிறத்தில் நிலவுகின்ற தெய்வம் நிறைஅமைதி ஆனினத்தில் நிறுத்தியுள்ள தெய்வம் காரமருங் குயில்குரலில் கலந்தினிக்குந் தெய்வம் கானமயில் நடத்தினிலே காட்சியளி தெய்வம் வாரமிகு பைங்கிளியாய் வாய்மலருந் தெய்வம் வானப்புள் பாட்டொலியாய் வாழுகின்ற தெய்வம் நாரலரில் வண்டிசையாய் நாதஞ்செய் தெய்வம் நல்லரவாய்ப் படமெடுத்து நண்ணுதெய்வம் நாடே. 5 இயற்கை அன்னை தனைக்கலந்தே இன்பளிக்குந் தெய்வம் ஏகாந்த இனிமையிலே இயங்குகின்ற தெய்வம் செயற்கையெலாம் ஓடுங்கிடத்தில் திகழுகின்ற தெய்வம் சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தனையாந் தெய்வம் உயிர்க்கெல்லாம் உயிர்ப்பாகி ஊக்கம்விளை தெய்வம் ஒழுக்கத்தில் உயர்ந்தோருக் கொழுங்கான தெய்வம் பயிற்சியினால் மனங்குவிந்தால் பார்வையளி தெய்வம் பாராதி அண்டமெலாம் பரவுதெய்வம் பாரே. 6 ஆதியின்றி அந்தமின்றி அறுதியற்ற தெய்வம் அகலமொடு நீளமற்ற அளப்பரிய தெய்வம் சாதிமதக் கட்டுகளில் சாராத தெய்வம் சமயப்போர்ச் சாத்திரத்தின் சார்பில்லாத் தெய்வம் நீதியிலே விளங்குகின்ற நின்மலமாந் தெய்வம் நித்தியமாய்ச் சத்தியமாய் நிறைந்துள்ள தெய்வம் சோதியெலாம் விளங்கும்அருட் சோதியெனுந் தெய்வம் சுதந்திரத்தின் சுதந்திரமாஞ் சுத்ததெய்வம் சூழே. 7 அறிவினிலே உணர்வோருக் கறிவாகுந் தெய்வம் அன்பினிலே தெளிவோருக் கன்பாகுந் தெய்வம் அறியாமைச் செயற்கழுதால் அணைந்திரங்குந் தெய்வம் அன்பிலர்க்கும் அன்பூட்ட ஆர்வங்கொள் தெய்வம் செறிஉயிர்க்கு நலஞ்செயவே சீவிக்குந் தெய்வம் சிந்தனையில் தேனெனவே தித்திக்குந் தெய்வம் வெறிமலர்வாய்ப் பெண்ணொளியில் விளங்குகின்ற தெய்வம் விண்ணுலகும் மண்ணுலகும் விளம்புதெய்வம் மேவே. 8 அண்டமெலாம் அடுக்கடுக்கா அமையவைத்த தெய்வம் அவைஇயங்க ஓயாமல் ஆற்றலளி தெய்வம் பிண்டமெலாம் ஒழுங்குபெறப் பிறப்பிக்குந் தெய்வம் பிறக்கும்உயிர் அத்தனைக்கும் பேரருள்செய் தெய்வம் தண்டனையே அறியாத தயையுடைய தெய்வம் தாயினிலும் பரிவுடைய தனிக்கருணைத் தெய்வம் தொண்டர்படை உயிர்ப்பாகச் சூழுகின்ற தெய்வம் சூதுபகை கொலையற்ற தூயதெய்வம் சொல்லே. 9 கருவினிலே பிறவாது கருவளிக்குந் தெய்வம் கரணமின்றி உயிர்களுக்குக் கரணம்அமை தெய்வம் கருதுமன மின்றியெலாங் கருதுகின்ற தெய்வம் கண்களின்றி எதையெதையுங் காண்கின்ற தெய்வம் உருவின்றி எங்கெங்கும் உலவுகின்ற தெய்வம் ஓதலின்றி மறையெல்லாம் ஓதுவிக்குந் தெய்வம் குருவினுளத் திலங்கியுண்மை குறித்தருளுந் தெய்வம் குறைவில்லா நிறைவான கோதில்தெய்வங் கூறே. 10 3. தனிமைத் தெய்வம் மண்கடந்து புனல் கடந்து தீக்கடந்து வளிகடந்து விண்கடந்து மதிகடந்து வெயில்கடந்து மற்றுமுள ஒண்சுடரெல் லாங்கடந்தே ஒளிவழங்கும் பெரும்பிழம்பின் கண்கடந்து நிற்குமொன்றே கருதுவதெவ் வாறுனையே. 1 அண்டபகி ரண்டமெலாம் அடுக்கடுக்கா ஆய்ந்தாலும் அண்டஒணா தகன்றகன்றே அப்பாலுக் கப்பாலாய்த் துண்டஅணு வுக்கணுவாய்ச் சூழணுவுக் கிப்பாலாய் மண்டியொளி ரகண்டிதமே வாழ்த்தலுனை எப்படியோ. 2 பெரிதுக்கும் பெரிதாகிச் சிறிதுக்குஞ் சிறிதாகும் பெரியவனே சிறியவனே எனப்பேச்சும் பேச்செல்லாம் அரியஉனை அறியும்வழி அறிவுறுத்துங் கருவிகளோ தெரிவழியும் உண்டுகொலோ சிற்பரமே மெய்ப்பொருளே. 3 விழிகளுக்கு மெட்டவிலை செவிகளுக்கு மெட்டவிலை மொழிகளுக்கு மெட்டவிலை முனைமனத்துக் கெட்டவிலை செழிஉயிர்ப்புக் கெட்டவிலை சிற்பரனே உனைநினைந்து தொழுகைக்கு வழியறியேன் தொழும்பனென்ன செய்வேனே. 4 அளவையெலாம் உனையரற்றும் அவையுன்னை அறிந்ததுண்டோ உளமறைகள் உனைஉரைக்கும் உன்னைஅவை உணர்ந்ததுண்டோ தெளிகலைகள் செப்புமுனைத் தெரிந்தனவோ உன்னிருக்கை முளைசிறியேன் உனைக்கண்டு முன்னலெங்ஙன் முன்னவனே. 5 உலகமெலாம் தோன்றி நின்றே ஒடுங்குதற்கு நிலைக்களனாய்க் கலைகளுமே பிறந்தொடுங்குங் கருவாகி நின்றநிகழ் ஒலிகடந்தும் ஆதார ஒளிகடந்தும் மேலோங்கி இலகுமிறை உனைஏழை எவ்வண்ணம் இறைஞ்சுவனே. 6 அறிவேநீ என்றுன்னை அகிலமறை முழங்கஎன்றன் அறிவாலே ஆய்ந்தலைந்தேன் அணுகிஎட்ட இயலவில்லை அறிவாலும் உனையுணரல் அரிதாதல் விளங்கியதே அறிவரிய மெய்ப்பொருளே அடையும்வழி உண்டுகொலோ. 7 குறிகாணின் கும்பிடுவன் குணம்விளங்கின் நினைந்திடுவன் நெறிதோன்றின் நடந்திடுவன் நிலம்பெற்றால் உழுதிடுவன் உறைவடைந்தால் குடிபுகுவன் ஊற்றெழுந்தால் குளித்திடுவன் பொறிவாயி லில்லாத பொருளேஎன் செய்குவனே. 8 எப்பொருளும் நீயென்றும் எங்கெங்கும் நீயென்றும் செப்புமொழி கலப்புநிலை சிறப்புறுநின் தனிமைநிலை எப்படியில் முயன்றாலும் எந்நிலைக்கும் எட்டவிலை ஒப்பரிய மெய்யறிவே ஒருவழியுங் காணேனே. 9 தனிமைநிலை அடைவாகும் தனிமுயற்சி தேவையிலை எனவெழுந்த மெய்க்குரவர் ஈரமொழி பற்றிநின்று பனிமழையீர் வான்மலையீர் பசும்பொழிலீர் கனைகடலீர் இனிகுயிலீர் நடமயிலீர் ஏழையுமை அடைந்தேனே. 10 4. இயற்கைத் தெய்வம் எப்பொருட்கும் எட்டாத இயல்புடைய ஐயா ஏழைஉயிர்க் கருள்புரிய இயற்கையுடல் கொண்டாய் அப்பநின தருளுடைமை அளவெவரே உடையார் அழகியற்கை வழியொன்றே அருள்வழியென் றுணர்ந்தேன் தப்பறுக்க அவ்வழியே சாரவந்தேன் என்றும் தயையுடையாய் பிழைபொறுத்துத் தண்மைவழங் காயோ ஒப்புரவே உள்ளொளியே உண்மைநிலைப் பேறே ஓதுகலை உணர்வினருக் குணர்வரிய ஒன்றே. 1 உடலியற்கை உயிர்நீயாய் உதவுகின்ற அருளை உன்னிஉன்னி உருகிநிற்க உளமொன்று போமோ கடலுலகில் சாதிமதக் கட்டழிந்தால் நின்றன் காட்சியளி இயற்கைநெறிக் கண்பெறலாம் நன்றே கடபடமென் றுருட்டுவெறிக் கடுவாதத் தர்க்கம் கருத்தற்ற கிரியைகளும் கட்சிகளும் போரும் நடனமிடும் நெஞ்சறியா நாயகனே என்றும் நாதாந்த மோனநிலை நண்பருணர் பொருளே. 2 மண்ணுலகும் விண்ணுலகும் மற்றுலகுங் கோயில் மதிகதிருங் கோளெல்லாம் மண்டிலமுங் கோயில் கண்கவரும் கான்மலையுங் கடல்வயலுங் கோயில் கருத்தொலியும் எழுத்துடனே கலைகளுமே கோயில் எண்ணரிய எவ்வுடலும் எவ்வுயிருங் கோயில் எந்தைநின்றன் கோயிலில்லா இடமுமுண்டோ ஐயா தண்மைபெற என்னுளத்தைக் கோயில்செய்யத் தமியேன் தவறிவிட்டேன் வான்சுடரே தயைபுரிவாய் இன்றே. 3 எங்குநிறை அகண்டிதமே எல்லையற்ற ஒன்றே ஏழைமனம் எவ்வழியில் எண்ணுவதென் றிரங்கி இங்கியற்கை உடல்கொண்டாய் எழிற்கருணைத் திறத்தை எவ்வுளத்தால் எவ்வுரையால் எங்ஙன்நான் புகழ்வேன் பொங்கியற்கைக் கூறுகளில் புந்திசெலல் வேண்டும் புன்செயற்கை நெறியுழலும் புந்திகெடல் வேண்டும் தங்குபிணி அறுக்கஎன்றுஞ் சாகாமை வேண்டும் தண்டனையே புரியாத தயைநிறைந்த அரசே. 4 ஓருருவும் ஒருபெயரும் ஒன்றுமிலா ஒன்றே உனைநினைக்கும் வழியறியேன் ஊனஉளம் உடையேன் சீருருவ இயற்கையிலே சேர்ந்தினிக்கும் நிலையைச் சிந்திக்க என்றுரைத்தார் செந்நெறியில் நின்றோர் பாருருவம் முதலாய பகருருவம் நினைந்தேன் படியுருவம் அவையெல்லாம் பாட்டொலியாய் நேர்ந்தால் ஏரொளியை உணர்ந்திடுவேன் எண்ணாமை தெளிவேன் எதற்கும்நின தருள்வேண்டும் இறங்கிஅருள் செய்யே. 5 மலையினிலே சென்றிருந்தால் மாதேவ நின்றன் மாணியற்கைக் கூறெல்லாம் மனஅமைதி செய்யும் நிலையதனை என்னென்பேன் நேர்மைஅக விளக்கே நிலமடியாய் வான்முடியாய் நீல்கடலுங் கானும் பொலிவுடையாய்ப் போர்வையுமாய்ப் பொற்கதிர்கள் விழியாய்ப் பொங்குருவத் தோற்றமெலாம் புந்திவிருந் தாகும் கலையுரைக்குங் கற்பனையில் கண்மூடி வழக்கில் கருத்திருத்திச் சாவோர்க்குக் கடவுளருள் செய்யே. 6 மலையிவர்ந்து பசுங்குடைக்கீழ் மனமொன்றி நோக்கின் வனம்பெருக்கும் பசுமைவெள்ளம் வந்திழியுங் காட்சி பலநதிகள் பாட்டணியாய்ப் பரந்தோடுங் காட்சி பச்சைமணிக் குழைவெனவே பயிர்பரப்புங் காட்சி நிலைமணல்கால் வெண்ணிலவு நிறைவழங்குங் காட்சி நீள்கடலில் கட்டுவண்ண நீலநிறக் காட்சி கலவையுற எய்தொருமைக் கவின்வனப்பு நினதாம் கருணையமு துண்பதற்குக் கடவுளருள் செய்யே. 7 மணியருவி முழவொலியாய் வண்டிசைக்கும் பாட்டாய் மயில் நடமாய் குயில்குரலாய் மலர்மணமாய் வந்தே அணைமந்த மாருதமாய் ஐம்புலனில் ஒன்றி அகஅமுதாய்ச் சுவைத்தினிக்கும் ஆனந்த மயமே பிணிபுனலில் பொய்யிசையில் பேய்நடவெங் குரலில் பெயர்மணத்தில் பொறிகாற்றில் பெற்றியிழந் தெரிந்து திணியுலகம் நரகாச்சே தெளிவுபெற இறையே தெய்வநிலை இயற்கைவழித் திருவருள்செய் இன்றே. 8 காலையிலே கடல்முளைக்கும் கனலுருண்டைப் பிழம்பே கதிர்மூழ்கி உயிர்ப்புண்டு கவலைபிணி போக மாலையிலே கிளர்ந்தெழும்பும் மணிக்கலச அமுதே வழிந்துபொழி நிலவுமழை வளமைவிளை வாகச் சோலைமல ரெனவானில் சூழ்விளக்கு நிரையே துலங்குநகை மகிழ்வாலே தொடர்புலன்க ளொன்ற ஓலமிடும் என்னிருளை ஒழித்தருளாய் ஒளியே ஒளிக்கெல்லாம் ஒளிவழங்கும் ஒளிவண்ண மலையே. 9 மங்கையர்கள் சூழலிலே மருவுகின்ற மதியே வளர்தெய்வ மனக்குழவி மழலையொழு கமுதே பொங்கிவரும் வேனிலிடைப் புகுந்தளிக்கும் விருந்தே பூந்துணர்கள் ஏந்துகரப் பொழில்பொழியு மணமே பங்கயத்துப் பாணரினம் பரிந்தனுப்பும் பண்ணே பரநாதப் பாக்கலையில் பள்ளிகொண்ட அறிவே புங்கவருண் மலர்பிலிற்றும் புதியசுவைத் தேனே பொலிவியற்கை வடிவிறையே புந்திஎழுந் தருளே. 10 5. இயற்கை நெறி இயற்கையின் னெறியே இறைவநின் னெறியென் றிசைத்தனர் குரவர்க ளெல்லாம் பயிற்சியி லதுவே பண்பென விளங்கும் பான்மையைத் தெளிந்தனன் அரசே செயற்கையின் நெறியால் தீமையே விளைதல் தெரிந்தனன் தெரிந்ததைத் தடுக்கும் முயற்சியி லிறங்க முனைந்தனன் முதலே முழுத்துணை அருளுதி விரைந்தே. 1 இயற்கையே கோயில் இயற்கையே வாழ்வு இயற்கையே யாவுமென் றறிந்தே இயற்கைநன் னெறியில் இயைந்துநின் றொழுக ஏந்தலே கொண்டனன் உறுதி செயற்கைவெந் நகரச் சிக்குறு வாழ்வு சிதைப்பதைத் தெய்வமே உணர்வாய் அயர்ச்சியில் அழுந்தும் அடியனென் செய்வேன் ஆதரித் தாண்டருள் செய்யே. 2 பசுந்தலை யாட்டி மலர்க்கர நீட்டிப் பரிவுடன் அழைமர மின்றி விசும்புயர் கோப்பு வெளிறுகள் நின்றென் விண்புடை விரிபொழில் போர்த்துத் தசும்பொளி காலுந் தழைக்குடில் வீடாம் சாந்தமே வேண்டுவன் இயற்கை வசம்பொலிந் துயிர்க்கு வளஞ்செயு மழகு வள்ளலே அருள்பொழி மழையே. 3 உலகினி லிருந்தே உடலினை யோம்பி உத்தமப் பெண்ணுடன் வாழப் பலகலை இயற்கைப் பண்புகள் விளங்கப் பரவருள் நிலைதெளி வாக அலகிலா ஒளியே அவைகளைத் துறத்தல் அன்பிலாச் செய்கையென் றுணரத் திலகமே இயற்கைச் செல்வமே செய்த திருவருட் டுணைமற வேனே. 4 நாடெலாம் வளர நல்குர வொழிய ஞானமா நெறியெலாந் தழைக்க ஆடவர் மகளிர் அன்பினில் திளைக்கும் அறநெறி ஓங்குதல் வேண்டும் வீடென ஒருவர் ஒருவரை விடுத்து வெறுப்பது வேதனை வேண்டா தேடரும் பொருளே தெய்வமே இயற்கைச் செல்வமே திருவருள் செய்யே. 5 இந்தநல் லுலகம் இயந்திரப் பேயால் இனிமையை எரிப்பதால் மைந்தர் சுந்தர மிழந்தார் தொல்லையில் படிந்தார் துயர்விளை நோயினை மணந்தார் சிந்தனை யற்றார் செயற்கையில் வீழ்ந்தார் தெய்வமே செய்வதொன் றறியார் எந்தநாள் உய்வர் எந்தையே இயற்கை எழினெறி காப்பதுன் கடனே. 6 பிறவியில் வாழ்வில் பேற்றினில் பொருளில் பெட்புறு சமத்துவம் நிறைந்தால் தறையினிற் பிணக்கும் சண்டையுஞ் சாய்ந்து சாந்தமே நிலவுமென் றறிந்து முறைமுறை தொண்டு முன்னியே ஆற்ற மூர்த்தியே முடிவிலா முதலே கறையிலா இயற்கைக் காட்சியே அன்பால் கடையனுக் குதவிய தருளே 7 காலையி லெழுந்து கடன்களை முடித்துக் காற்றிலுங் கதிரிலுங் குளித்துச் சோலையி லுலவிச் சுரக்குநீ ராடித் தொழுதுனைச் சிந்தனை செய்து சீலமும் நலமும் சேருண வருந்திச் சீர்தொழில் பிறர்க்கென ஆற்ற மேலவர் கொண்ட வேர்நெறி யோங்க வேண்டுவன் கருணைசெய் இறையே. 8 மலைகடல் போந்து மகிழ்ச்சியில் திளைத்து மனத்தமு துண்ணலும் நல்ல கலைகளில் நுழைந்தக் காட்சியைக் கண்டு கருத்தினி லுண்ணலும் என்றும் அலைதரு புலன்கள் அமைதியிற் படிவித் தருணெறிக் கரண்செயல் தெளியத் தலையடி யில்லாத் தனிமுதற் பொருளே தற்பரா நிகழ்த்திய தருளே. 9 மலைகடல் காடு மதிகதிர் முதலா மன்னிய இயற்கையின் கூறு பலபல வாறு நலங்கரு தாது பரிந்துயிர்க் குதவுதல் காட்டி உலகினில் ஒருவர் மற்றவர்க் குதவ உறைவதே இயற்கையென் றுணர்த்த இலகொளி விளக்கே இழிநெறி யுழலும் ஏழையை எடுத்தருள் இறையே. 10 6. இயற்கை வாழ்வு ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் அமர்ந்துறை செந்நெறி வாழ வீணிலே ஒருவர் ஒருவரை விலக்கி வெறுத்தழி வெந்நெறி வீழத் தாணுவே இயற்கைத் தாயுடன் பிரியாத் தந்தையே உயிரொளி பெற்று மாணுற உலக வாழ்வினை வைத்த மன்னனே அருள்புரி இன்னே. 1 அன்புநீ யன்றோ அன்பினை யடைய அன்புசேர் நெறியதே வேண்டும் கன்னியை மணந்து கான்முளை ஈன்றால் கடலெனப் பெருகுநல் லன்பே அன்னவள் தன்னை அகன்றுநீத் துறைந்தால் அடைத்திடும் அன்பெனும் ஊற்றே அன்பழி துறவு அழிதலே வேண்டும் அன்பினில் விளைந்தஆ ரமுதே. 2 பொழிலெனப் பொலியும் பொன்னொளிப் பெண்ணைப் பொறுமையை அன்னையை அன்பை இழிவெனக் கருதி ஏசுவோ ரிங்கே எங்கிருந் துதித்தனர் அந்தோ! பழியினைச் சுமக்கும் பாவரே யாவர் பகுத்தறி வவர்பெறச் செய்யே வழிவழி இயற்கை வாணியை மணந்து மாநிலம் வளர்த்தருள் பதியே. 3 மண்ணினைப் பொன்னை மங்கையைத் துறந்தால் மாநெறி கூடுமென் றுரைத்தல் கண்ணிலார் கூற்றாங் கடவுளே எங்கும் கலந்தநீ மூவிடங் கரவோ எண்ணமே மாயை இயற்கையின் உயிரே ஈசனே வெறுப்புறு துறவாம் புண்ணெறி எரிவால் புகுந்தநோய் போதும் போலியை ஒழித்தருள் செய்யே. 4 தாய்மையின் ஒளியே தனிமுத லெங்கும் தங்குறு நின்னொளி யுணர்த்தும் தூய்மையாந் திறவு துணைபுரி தாயைத் தூற்றலும் பழித்தலும் அறமோ பேய்மனச் சிறியர் பேச்செலாம் ஒழிக்கப் பெரியனே திருவுளங் கொள்க வாய்மையே வளர வள்ளலே கருணை வருவழி வேண்டுவன் முறையே 5 மங்கையை மாயா மலமெனச் சில்லோர் மருட்சியால் சொற்றனர், மாயை எங்குள தென்றே எண்ணின ராயின் ஏங்குவர் தம்முள மென்றே தங்கிடந் தேர்ந்து சாய்த்திடின் மங்கை தற்பர நின்னொளி யாடும் பொங்கிட மென்று போற்றுவர் தெளிந்த புந்தியிற் பொலிதரு பொருளே. 6 எங்கணு முள்ள இறைவனே உன்னை எப்படிக் காணுத லென்று சங்கையே கொண்டு சாதனஞ் செய்தும் சார்நிலை பெறுவதோ இல்லை நங்கையை மணந்து நன்னெறி நின்றால் ஞானமும் தியாகமும் அன்பும் துங்கமும் தோன்றித் தொடர்வழி காட்டும் தூயனே துணைபுரி யாயே. 7 தேமொழிப் பெண்கள் சேரிடச் சூழல் தெய்விகப் பூம்பொழிற் காட்சி ஏமுற வழங்கும் இனிமையை, மாயை என்றெண எம்மனம் எழுமே தோமுள மனத்தர் சொல்லிய உரையால் தொல்லையே விளைந்தது போதும் சேமுறும் இயற்கைச் செந்நெறி வளரச் செல்வமே திருவருள் செய்யே. 8 முத்தியென் றெண்ணி முகமெலாஞ் சிவக்க மூச்சினை அடக்கியே வந்தோர் சத்திழந் தீரல் சவலையுற் றிறந்த சரித்திரம் பலபல என்னே பத்தியை வளர்க்கும் பாவையை மணந்து பரநலம் பேணியே வாழும் சத்திய மார்க்கந் தழைத்தினி தோங்கத் தற்பர தயைபுரிந் தருளே. 9 மாசிலா வீணை மாலையின் மதியம் மலர்மணஞ் சொரிபொழில் நன்று வீசிடு தென்றல் வீங்கிள வேனில் வெறிமலர் வண்டறை பொய்கைத் தேசெலாம் பொலியுந் தெய்விகப் பெண்ணோ சிற்பர தற்பர மாயை நேசமே! இயற்கை நெறியினைத் தூர்க்கும் நீசத்தைக் களைந்தருள் செய்யே. 10 7. பெண்மை தாய்மையுறை பெண்ணுலகம் தயவுடைய பெண்ணுலகம் வாய்மைவளர் பெண்ணுலகம் வண்மைமலர் பெண்ணுலகம் தூய்மைவழிச் சிறந்தோங்கத் தொல்லியற்கை வடிவான ஆய்பொருளே அருள்புரியாய் அகிலமெலாம் ஒளிபெறவே. 1 பெண்ணிலவு பொழிந்தெங்கும் பெருநலங்கள் புரிந்துவரும் வண்மைநிலை அறியாதார் வரைந்துவிட்டார் சிறுமொழிகள் உண்மையிலா மொழியெல்லாம் ஒடுங்க அருள் செய்யாயோ தண்ணியற்கைத் தாய்வடிவாய்த் தனிக்கருணை பொழிமுகிலே 2 பெண்ணொளியால் நலம்பெற்றும் பேசுவதோ சிறுமைமொழி கண்ணொளியை இழித்துரைத்தல் கயமையன்றிப் பிறிதென்னே பெண்பெருமை உலகமெலாம் பிறங்கி நின்றால் உளங்குளிரும் மண்முதலாம் வடிவாகி மகிழியற்கைப் பெருமானே 3 சிறுபுல்லில் பெண்ணாண்மை செடிகொடியில் பெண்ணாண்மை பிறவுலகில் பெண்ணாண்மை பிறங்கவைத்த பரம்பொருளே துறவென்னும் ஒருகவடு தோன்றியதும் அறமேயோ கறவையிலா மலட்டாவால் கலக்கமின்றிப் பிறிதென்னே. 4 வெம்மையென்றுந் தண்மையென்றும் மிளிரவைத்தாய் இயற்கையிலே வெம்மையின்றித் தண்மையுண்டோ தண்மையின்றி வெம்மையுண்டோ வெம்மையிலே தனித்துநின்றால் விளையன்பு நீறாமே வெம்மையொடு தண்மையுமாய் விளங்குமொரு பரம்பொருளே. 5 வெங்கதிருந் தண்மதியும் விளங்கவைத்தாய் அண்டமதில் இங்குலகில் வலமிடத்தில் இருகலைகள் விளங்கவைத்தாய் பொங்காண்மை பெண்மையுடன் பொலிஅறமே வளர்ந்தோங்கப் புங்கமெனத் தனித்துறைதல் பொருந்தறமோ பெருமானே. 6 பெண்மையெனுந் தண்மைபொழி பெரும்பசுமைக் கொடிசூழ்ந்தால் வண்மையருள் அன்புகனி வளராண்மை மரமாகும் உண்மையறம் உலகமெலாம் உயரஅருள் புரியாயோ பெண்மையுடன் ஆண்மையுமாய்ப் பிறங்கியற்கைப் பெருமானே 7 நங்கையிடம் பெருமானே நடம்புரியும் அழகொளியை இங்கருந்தின் எங்குநினை எளிதிலுணர் நிலைகூடும் மங்கையினை மாயையென்று மதிசுருங்கத் தனித்துறைந்தால் எங்குமுள நினதுண்மை எவ்வாறு விளங்குவதே. 8 புற்பூண்டு செடிகொடிகள் புழுப்பறவை விலங்கினங்கள் அற்புடனே கலந்துகலந் தவனிவளர் நெறியோம்பச் சிற்பரனே மனிதரிடைச் சிறுதுறவு புகுந்தியற்கை பொற்புநெறி அழிப்பதென்னே பொலிவிலதை ஒழித்தருளே. 9 தனியுறைவால் மனக்கோளும் தன்னலமும் பெருகலுமாம் பனிமொழியா ருடன்வாழ்ந்தால் பரிவன்பும் பரநலமாம் மனிதவுயிர் கலப்பாலே மலரஉல கருளினையால் கனியுடையாய் திருநோக்குக் கலையாமற் காத்தருளே. 10 8. மனிதப் பிறவி எங்கிருந் திங்கு வந்தேன் எப்படி என்றென் றெண்ணிச் சங்கையில் மூழ்கி நின்றேன் சத்திய ஞான நூலும் புங்கவர் கூட்டுங் கூற்றும் புந்தியில் தெளிவு நல்கப் பொங்கொளி! அருள்சு ரந்தாய் பொன்னடி போற்றி போற்றி. 1 செறிவறி யாமை யாலே சிந்தனை இழந்த ஆவிக் கறிவினை விளக்கி யாள யாக்கைகள் பலவுந் தந்தாய் குறியினை உணரா தந்தோ குணப்பெருங் குன்றே கெட்டேன் பொறியிலேன் அருளல் வேண்டும் பொன்னடி போற்றி போற்றி. 2 புல்லினில் புழுவில் நிற்கப் புள்ளினில் விலங்கில் நிற்கச் சொல்லரும் மனுவில் நிற்கத் தூயனே கருணை செய்தாய் நல்லருள் மறந்து கெட்டேன் நானெனுஞ் செருக்கில் வீழ்ந்தேன் செல்வமே பொறுத்தல் வேண்டும் சேவடி போற்றி போற்றி. 3 மானுடப் பிறவி தந்த மாண்பினைத் தேறா திங்குக் கானுறை விலங்காய்க் கெட்டேன் கழிந்தது காலம் வீணில் ஊனுடை சுருங்கும் வேளை உதிருமே உரங்க ளெல்லாம் தேனுறு மலர்வண் டாக்கத் தெய்வமே உளங்கொள் ளாயோ. 4 பொறிபுலன் நன்கு பூத்த பொன்னுடல் எனக்குத் தந்தாய் அறிவிலேன் அதனைத் தேய்த்தேன் ஆணவச் செயல்க ளாலே நெறியிலே நின்றே னில்லை நித்தனே முதுமை நேரம் சிறியனேன் தளர்ந்து வந்தேன் சிந்தனை சிறிது கொள்ளே 5 கோடையின் அலகை என்னக் கொக்கரித் தலறிக் கூவி மேடையிற் பேசிப் பேசி மெலிந்ததை அறிவா யன்றே ஒடையும் வற்றிப் போச்சே ஒருவரும் வருவ தில்லை வாடையில் வீழா வண்ணம் வானுடல் அருள்வாய் ஐயா. 6 பிணியுடை யாக்கை வேண்டேன் பிறந்திறந் துழலல் வேண்டேன் அணிபெறப் புதுக்கும் ஆற்றல் அடியனேற் குண்டு கொல்லோ பணிக்கென உடலை வேண்டும் பான்மையை உணர்வாய் நீயே மணியொளி மேனி நல்காய் மதமெலாம் போற்றுந் தேவே. 7 மூக்கினைப் பிடிக்குங் கூட்டம் மூச்சினை ஈர்க்குங் கூட்டம் தேக்கிய இடங்க ளெல்லாம் சென்றுசென் றலுத்தேன் எந்தாய் யாக்கையை ஓம்ப வல்ல அமிழ்தம்நின் அருளே என்ற வாக்கியம் தெளிந்து வந்தேன் வள்ளலே கருணை செய்யே. 8 பரிதியின் ஒளிகாற் றாகிப் படர்புனல் கீரை யாகிப் புரிகனி மணிபாட் டுன்னல் போதமாம் அமிழ்தம் உண்டால் நரைதிரை மூப்பு நீங்கி நல்லுடல் பெறுதல் கூடும் அரிதினை எளிமை யாக்கும் அத்தனே அருள்செய் வாயே. 9 உடம்பினைக் கோயில் கொண்ட உத்தமன் நீயே என்று திடம்பெறத் தெளியச் செய்த திருவருள் மறவேன் எங்கும் நடம்புரி கருணை எண்ணி நண்ணினேன் பணிகள் ஆற்ற உடம்பினை ஓம்பி வாழ உன்துணை வேண்டும் வேந்தே. 10 9. மானுடம் என்னுயிரைப் பொன்னாக்க எவ்வெவ்வுடல் தந்தனையோ அன்னையினுந் தயவுடைய ஐயாவே யானறியேன் நன்மையுற மனிதவுடல் நல்கியருள் புரிந்துள்ளாய் துன்னுபயன் அடைவதற்குன் துணைவேண்டும் அருளரசே. 1 எச்சிலையாய்க் கிடந்தேனோ எம்மலையாய் நின்றேனோ எச்செடியாய் வளர்ந்தேனோ எப்புழுவாய் ஊர்ந்தேனோ எச்சரபம் ஆனேனோ எப்புள்ளாய்ப் பறந்தேனோ எச்சுதையாய்ப் பாய்ந்தேனோ இறைவஒன் றும் அறியேனே. 2 எடுத்தவுடல் எத்தனையோ அத்தனையும் உளஉணரேன் உடுத்தவுடல் இந்நாளில் உயர்ந்ததெனப் பெரியோர்கள் விடுத்தமொழி பலபலவே விழித்தவழி நடவாது மடுத்துவரின் வெறுமொழியை வள்ளாலென் விளைபயனே. 3 மானுடமே வந்ததென்று மகிழ்ந்துவிட லறியாமை வானுடலோ ஊனுடலம் மயிர்ப்பாலம் தம்பி எனத் தேனுடலர் எச்சரிக்கை செய்துள்ள திறமுணர்ந்து மானமுடன் வந்தடைந்தேன் மறைபொருளே அருளுதியே. 4 மக்களிடை மாண்புமுறும் மாசுமுறும் நிலையுண்டு சிக்கலுறுங் காரணமோ சிறுவிளக்கப் பகுத்தறிவே புக்கபகுத் தறிவாலே புண்ணியநின் னடிபற்றித் தக்கவழி காணவந்தேன் தமியேனைக் காத்தருளே. 5 பகுத்தறிவு விளங்காத பிறவியினும், வழிநடக்கும் பகுத்தறிவுப் பிறவிக்கே பாடுகளுண் டென்றறிஞர் உகுத்தஉரை உளங்கொண்டே உனதடியில் குறிவைத்தேன் புகுந்தபிழை எவ்வளவோ பொறுத்தருளாய் புண்ணியனே. 6 மக்களுளம் பகைசீற்றம் பேய்மைகணம் ஒருபாலே தக்கஅரு ளன்பழகு தெய்வகணம் ஒருபாலே நெக்குறுவெந் நிலையுணர்ந்து தெய்வகண மயமாக்கப் புக்கவருள் எனைச் சேர்த்தால் புனித! நலம் பெறுவேனே. 7 மானுடத்தின் பயன்நாடி மனத்துறுபேய்க் கணஞ்சாய்க்கத் தானொடுக்கத் தெய்வகணங் கால்கொள்ளப் பணிபுரிய வானிடத்தும் மண்ணிடத்தும் மற்றிடத்தும் அருளாட்சிக் கோனடத்தும் பெருமானே கோதிலடி வேண்டுவனே. 8 மன்பதைநின் னருணெறியில் மனஞ்செலுத்தின் வளர்ச்சியுறும் கன்மவிதி முதலாய கண்மூடி வழக்குகளை உன்னிவரின் எவ்வண்ணம் உண்மைவழி வளர்ச்சியுறும் அன்பரசே இன்புருவே அருளுலகை அளியாயோ. 9 பிறவிநலம் பிறவுலகப் பேறென்று சொல்வருளர் அறநிலயந் துறவாமல் ஆருயிர்க ளிடைவாழ்ந்து திறமையுடன் பணிசெய்தல் செல்வமெனத் தெளிவடைய இறையவனே உளங்கொண்டாய் ஏதமெலாம் பொறுத்தருளே 10 10. மனிதம் எத்தனையோ உடலளித்தே இம்மனித உடலை ஈந்துள்ளாய் ஈடேற இறையவனே இதுவே உத்தமமாம் என்றறவோர் உரைத்தமொழி பலவே உரைஓதும் அளவினின்றால் உறுபயனோ விளையா பத்திமைநன் னெறிநடக்கை பண்புசெயும் வாழ்வைப் பாழ்நடக்கை வாழ்வழித்துப் படுகுழியில் தள்ளும் இத்தனையும் நின்னியதி மானுடத்தின் நிலைமை ஏந்துமயிர்ப் பாலமென ஏழைதெளிந் தேனே. 1 மக்களுடல் தாங்குவதால் மட்டுநலன் விளையா மயிர்ப்பாலம் நடக்கையிலே மதிவிழிப்பு வேண்டும் மிக்க விழிப்புடன் நடந்தால் விழுமியதே மனிதம் விழிப்பின்றி நடந்துவிடின் வீழ்ச்சியதே என்று பக்குவரெல் லாருமிகப் பரிந்துரைத்தும் நல்ல பகுத்தறிவு மலர்பிறப்பின் பண்புகெட லென்னே புக்கபகுத் தறிவாலே புனிதமொடு புரையும் புரிஉரிமை உண்மையினால் பொறுப்புணர்த்தாய் அரசே. 2 மக்களின உடலமைப்பில் மருவவைத்த நுண்மை மற்றஇன உடலமைப்பில் மருவவைத்தா யில்லை ஒக்கஅது திகழுமிடம் உள்ளமல ருள்ளே ஒளிர்நுண்மை விளக்கமுற உழைப்பெடுத்தல் வேண்டும் புக்கதென உழைப்பிலையேல் பொலிந்துமிளி ராது பொலியாத படிவிடுப்பின் புகழ்பிறவி விலங்காம் எக்கணமும் அமைதியிலே இருமுயற்சி செய்வோர் ஈசநின தொளி காண்பர் எங்குமுள இறையே 3 எங்குமுளன் இறைவனென இயம்புவதா லென்ன இந்நூலை அந்நூலை எடுப்பதனா லென்ன அங்கெனவும் இங்கெனவும் அலைவதனா லென்ன அசத்துலகை அசத்தாகக் காண்பதனா லென்ன தங்குலகைச் சத்தாகக் காண்பதுவே அறிவு தகுந்தவழி காண்முயற்சி தலைப்படுத லறிவு பொங்குமுள மலருளதைப் பொறியாக்கிப் பார்த்தால் பொலிதருமே ஒளிஇறையே புனிதமுற அருளே. 4 உள்ளமல ருள்ள நுண்மை ஊடுருவிப் பாயும் ஒளிக்கருவிக் கதிராலும் உணரலிய லாதே உள்ளொளியர் யோகியர்கள் உரைத்தவெலாங் கூடம் உலகவற்றைப் பலவழியில் உருத்திரித்த தையா கள்ளர்பலர் இடைநுழைந்து கரவுகளைக் காட்டிக் கடையவரை ஏமாற்றிக் காசுபறிக் கின்றார் கொள்ளுநெறி இயற்கைஎன்று குருவாயில் சொற்ற குணவழியே நிற்கஅருள் குறைவில்லா நிறைவே. 5 அன்பியற்கை நெறிக்குரிய அறத்துறைகள் பலவே அச்சாணி அகவொழுக்கம் அதன்விளைவாம் எல்லாம் துன்பினிற்சென் றுழல்புலன்கள் இயற்கையிலே தோய்ந்தால் தொல்லைஅலை மனம்விரைந்து சூழும்உரு ஒன்றை என்புருக்கு முறையிலெண்ணி எண்ணியொன்றின் ஒடுங்கும் எப்பயனுங் கருதாது பணிசெயவும் தூண்டும் மன்மலர்நுண் பொலிவுமெங்கும் நின்மயமே தோன்றும் மானுடத்தின் மாண்பென்னே வள்ளால்நின் கொடையே. 6 நெஞ்சமல ருள்திகழும் நிதிகாண நீங்கா நீதிவளர் நிட்காமம் நிறைந்தபணி வேண்டும் நஞ்சனைய காமியமோ நான்நானே பெருக்கும் நானானால் எங்கெங்கும் ஞானநிலை என்னாம் வெஞ்சினமும் வஞ்சனையும் வேர்விடுத்து வளர்ந்து வெடிகுண்டாய் அமர்க்களமாய் வெறும்பிணமாய் அழுகும் துஞ்சிடவோ மானுடத்தைத் தோற்றுவித்தாய் இறையே தொண்டர்படை சூழ்ந்துலகைத் தூய்மைசெய அருளே. 7 கண்மூக்கு சாண்வயிறு கைகாலோ மனிதம் கட்டுநரம் பெலும்புநிணம் தோலுடுப்போ மனிதம் வெண்வாக்கு வீண்நினைக்கும் வெறுமனமோ மனிதம் வேடிக்கை தாள்படிப்பு விளம்பரமோ மனிதம் மண்ணோக்கிக் களியாட்டில் மயங்குவதோ மனிதம் வனவிலங்காய் உண்டுறங்கி வாழ்வதுவோ மனிதம் உண்ணோக்கிப் பணிபுரிந்தே ஒளிபெறுதல் மனிதம் உனையுணர்த்தும் மனிதமதை ஓம்பஅருள் அரசே. 8 உலகுடலம் புறக்கரணம் உட்கரணம் ஏனோ ஓங்குமலை காடுவயல் ஓதவெளி ஏனோ கலைகளுடன் ஓவியங்கள் காவியங்கள் ஏனோ கதைநடனம் இசையரங்கம் காட்சிநிலை ஏனோ பலமதமும் கோயில்களும் பள்ளிகளும் ஏனோ பரஞானம் சத்தியமும் பத்திமையும் ஏனோ கலகமிடும் விலங்காகிக் கழிவதற்கோ மக்கள் கருணைகொழி தண்கடலே காசினிபார்த் தருளே. 9 அரிதாய பிறவியெனக் கருளரசே ஈந்தாய் அதைநெறியிற் பயன்படுத்தா அறியாமை எனதே உரிதாய அகமலருள் உன்னைஉண ராதே உற்றபிறப் பரும்பயனின் உறுதிஇழந் தேனே கரிதாய செயல்புரிந்தேன் கடவுளுனை மறந்தேன் கடையவரிற் கடையவனாய்க் கழிவுபட லானேன் பெரிதாய பிழைபுரிந்தேன் பொறுத்தருளல் வேண்டும் பிள்ளைகுறை கண்டுதள்ளும் பெற்றவளும் உண்டோ. 10 11. சன்மார்க்கம் சன்மார்க்கம் தோன்றியநாள் சாற்றுதற்கோ இல்லை சான்றுகளும் கருவிகளும் சாத்திரமும் இல்லை பன்மார்க்கக் காலமெலாம் பகர்கின்றார் புலவோர் பார்த்தறியார் அவைபிறந்த பதமறியார் ஐயா சன்மார்க்க வேரினின்றுந் தழைத்தவகை தெளிந்தால் தனித்தோற்றம் இல்லைஎன்பர் சரித்திரத்துக் கெட்டா உன்மார்க்கம் சன்மார்க்கம் உனக்குண்டோ தோற்றம் ஒடுக்கமொடு தொடக்கமிலா உண்மையெனும் பொருளே. 1 மாறாத சத்தாகி மருவுகின்ற அறிவே மார்க்கமெலாஞ் சன்மார்க்க மலரென்று தேர்ந்தோர் சீறாத சிந்தையிலே தெளிதேறல் இன்பே சித்தர்வழிச் சன்மார்க்கம் செறியவைத்த இறையே வேறான கருத்துடையார் வேரறியா வெறியர் விதவிதமா மார்க்கமென்று வீண்வாதஞ் செய்வர் தேறாத அவர்வினையால் செகங்கெடுத லாச்சே தீமைஎரி பரவிவரல் திருவருளுக் கழகோ. 2 காண்கின்ற பலதீவு கால்கொளிடம் ஒன்றே காராவும் வெண்ணாவும் கறக்கும்பால் ஒன்றே பாண்மொழிகள் பலஒலிக்கப் படியும்பொருள் ஒன்றே பன்னிறத்து விளக்குநிரை படருமின்னல் ஒன்றே பூண்தொடையல் புகுந்தகயி றொன்றேஆ மாறு புகல்மதங்கள் உயிராகப் பொலியுஞ்சன் மார்க்கம் மாண்புறும்அம் மார்க்கமென்றன் மனம்பதியச் செய்தாய் மதக்கழுது விடுத்ததென்னை மாதேவா அருளே. 3 மதங்களெலாஞ் சன்மார்க்க அடிகொண்டே மலரும் மாண்புணர அருள்புரிந்த மன்னவனே வாழி மதங்களென்றே அடியிலுள மார்க்கம்மறந் தாலோ வாதப்பேய் தலைவிரிக்கும் மக்கள்நிலை திரியும் இதஞ்செய்யும் அடிமார்க்கம் இழந்தமதம் நஞ்சாய் எஞ்ஞான்றும் இகல்பெருக்கும் இன்னாமை விளைக்கும் அதஞ்செய்யும் துன்மார்க்க அலகையெலாம் அழிய அன்புவிளை சன்மார்க்கம் ஆக்கமுற அருளே. 4 சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மைஅறம் அன்பழிக்குந் துயர்மதங்கள் தொலைய ஆதிமுடி வில்லாத அருட்சோதி தேவே அகிலமெலாஞ் சன்மார்க்கம் ஆர்த்தெழச்செய் யரசே. 5 இறையவனே சன்மார்க்கம் உன்னருளால் வளர்த்தோர் எழில்மௌனி சனத்குமரன் இளங்கண்ணன் அருகன் அறமுரைத்த புத்தனுயர் ஆப்பிரகாம் மோசே அன்பேசு வள்ளுவனார் நபிநால்வர் ஆழ்வார் மறைமூலர் தாயுமானார் மாதுபிள வட்கி மதிஇராம கிருஷ்ணருடன் இராமலிங்கர் முதலோர் நிறைநின்ற திருக்கூட்டம் நீங்காத ஒளியே நின்மலனே சன்மார்க்க நிதிவளரச் செய்யே. 6 மொழியாலும் நிறத்தாலும் நாட்டாலும் மற்ற முறையாலும் பிரிஉலகை முழுஒருமைப் படுத்தும் வழியாதென் றறிஞர்பலர் வகைவகையே ஆய்ந்து வகுத்தனர்பல் சட்டதிட்டம் வாழ்வுபெற வில்லை பழியேதும் அறியாத சன்மார்க்கம் ஒன்றே பாழ்பிரிவு நினைவறுத்துப் பரிந்தொருமை கூட்டும் அழியாத அன்புடைய அப்பாஅம் மார்க்கம் அவனியெலாம் பரவிநிற்க அருள்புரிவா யின்னே. 7 இறையென்றும் இயற்கையென்றுஞ் சிலஅறிஞர் பிரித்தே இயற்கையினைத் துறந்துதனி இறைவஉனைப் பற்றல் அறமொன்றும் ஆத்திகமென் றறிவுறுத்த லழகோ அறிவேஉன் திருவுடலம் அழகியற்கை யன்றோ உறவொல்லும் இயற்கைவிடல் உன்னைவிட லன்றோ ஒளிஇயற்கை உன்னிருக்கை என்றுதெளி வடைதல் சிறையில்லாச் சன்மார்க்கச் சேர்க்கையென உணரச் செய்தஉன்றன் அருள்மறவேன் சித்தருள விளக்கே. 8 பாரினிலே கலையென்று கொலைக்கலையே இந்நாள் பரவிநஞ்சம் உமிழ்ந்துவரல் பரம்பொருளே அறிவாய் போரினிலே விஞ்ஞானம் புரிகின்ற ஆடல் புலைமறமே அச்சோவென் றலமரலை அறிவாய் வேரிழந்த அரக்கர்கலை மீண்டுமெழல் நன்றோ வீரமென ஈரமிலா வினைபெருக்க லழகோ சீரிழந்த உலகுய்யச் சிற்பர! சன்மார்க்கச் bršt!அருள் மழைபொழியாய் சிறுபிழைகள் பொறுத்தே. 9 மண்ணெல்லாஞ் சன்மார்க்க மலராட்சி வேண்டும் மார்க்கமெலாஞ் சன்மார்க்க மணங்கமழல் வேண்டும் கண்ணெல்லாஞ் சன்மார்க்கக் காட்சியுறல் வேண்டும் காதெல்லாஞ் சன்மார்க்கச் கேள்விநுழை வேண்டும் பெண்ணெல்லாஞ் சன்மார்ககப் பிள்ளைபெறல் வேண்டும் பேச்செல்லாஞ் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும் பண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும் பரம்பொருளே சன்மார்க்கப் பணிசெய வேண்டுவனே. 10 12 சன்மார்க்கம் பிள்ளைவிளை யாட்டினிலும் பின்னைவிளை யாட்டினிலும் பள்ளிவிளை யாட்டினிலும் படிந்துழன்ற சிந்தையிலே கள்ளமழி சன்மார்க்கம் கருவிழுந்த தறியேன்யான் வள்ளலுன தருட்பெருக்கை வகுத்துரைப்ப தெவ்வாறே. 1 சாதிமதக் குழிநரகச் சாக்கடையில் விழுந்தேற்கும் ஆதிநெறிச் சன்மார்க்க அருட்கரையை உணர்வித்த நீதிஇறை! நின்கருணை நிறைதெளிய வல்லேனோ சோதிமுடி அடியில்லாச் சொலற்கரிய சுகப்பொருளே. 2 பன்மார்க்க அடியாகிப் பண்புவளர் சன்மார்க்கம் உன்மார்க்கம் ஒருமார்க்கம் உயர்மார்க்கம் வேறில்லை தொன்மார்க்கம் என்னுளத்தில் துலங்கவைத்த மெய்ப்பொருளே துன்மார்க்கம் சாயஇங்குத் துணைசெய்ய அருள்பொழியே. 3 சன்மார்க்க மரந்தாங்கும் பன்மார்க்கக் கிளைகளிலே நன்கார்ந்தே எம்மார்க்கம் நடந்தாலுஞ் சன்மார்க்கம், என்மார்க்கம் உன்மார்க்கம் என்றுசமர் விளைப்பவரே துன்மார்க்கர் தாய்மறந்த துகளரவர்க் கருளிறையே. 4 மார்க்கமெலாம் ஊடுருவி மருவிநிற்குஞ் சன்மார்க்கம் பார்க்கமுடி யாதவரே பலசமய அமர்விளைப்பர் சேர்க்கையினால் நஞ்சுலகில் தேக்கிவரல் நீஅறிவாய் ஆர்க்கஅவர்க் கருள்பதியே அதுவுமுன்றன் கடனன்றோ. 5 சன்மார்க்கம் கல்வியிலே சன்மார்க்கம் காதலிலே சன்மார்க்கம் வாழ்க்கையிலே சன்மார்க்கம் பொருளினிலே சன்மார்க்கம் ஊரினிலே தழைத்துவரின் உலகமெலாம் சன்மார்க்க மயமாகும் சார்பரசேன் தனிப்பொருளே. 6 சிக்கோடு மதவாதச் சேற்றிருந்த எனைஎடுத்தே எக்கோயில் கண்டாலும் இறைநிலையம் என்றுதொழப் புக்கோடு நெஞ்சளித்துப் புதுப்பித்த பெருந்தகையே தக்கோனே சன்மார்க்கம் தழைக்கஎங்கும் அருள்புரியே. 7 அவனியிலே கிறித்துவரி லாமியரும் பௌத்தர்களும் சைவர்களும் வைணவரும் ஜைனர்களும் சார்புடைய எவரெவரும் பலபெயரால் ஏத்துமிறை ஒருநீயே தவறணைதல் ஆணவத்தால், சன்மார்கக ஒளிகாலே. 8 மண்ணீறு தாடிசடை மழிமொட்டை பட்டைஇடை வெண்ணீளம் காவி அங்கி வேடங்கள் பொருளானால் கண்ணீள மில்லாதார் காழ்ப்பிகலில் பயன்படுத்திப் புண்ணீள மாக்கிடுவர் சன்மார்ககம் புகுத்திறையே. 9 சாதிமத நிறநாட்டின் சண்டையெலாம் ஒழிந்தழிய மேதினியில் காலநிலை மேவுவணம் சான்றோர்கள் ஓதியபன் முறையுண்டே உயிர்அவற்றுள் சன்மார்க்கக் காதலிவர் மணநிகழ்ச்சி கடவுளதை ஓம்புகவே. 10 13. சமரசம் சாதியும் மரபுங் கொண்ட சந்ததி வழியே வந்தேன் சாதியும் மரபுந் தேய்க்குஞ் சமரசக் கருவி யானேன் நீதியே நெஞ்சில் மாற்றம் நிகழ்ந்தமை என்னே என்னே ஆதிநின் அருளின் ஆடல் அற்புதம் அறிவார் யாரே. 1 சத்தியம் சைவ மென்னுஞ் சால்புறு மரபில் வந்தேன் நித்தியச் சமய மெல்லாம் நிறைசம ரசமாக் கண்டேன் உத்தம அருள்செய் மாற்றம் உணர்வினுக் கெட்ட வில்லை அத்தனே இரும்பைப் பொன்னா ஆக்கிய பெருமை என்னே. 2 வாதமே தூண்டும் நூல்கள் வகைவகை பயின்றேன் ஆய்ந்தேன் பேதமே படிய வில்லை பெருஞ்சம ரசமே நாளும் போதமா ஓங்கப் பெற்றேன் பொன்னருள் செய்யும் வேலை நீதனேன் அறிவேன் கொல்லோ நித்தனே வாழி வாழி. 3 அரசியல் நிலையை ஆய்ந்தேன் அத்துறை படிந்தும் பார்த்தேன் கரவினைக் கண்டு கொள்ளக் கடவுளே கருணை செய்தாய் கரவர சிருளைப் போக்கச் சமரச பானு தேவை பரமனே உலகைக் காக்கப் பரிந்தருள் அதனை இன்றே. 4 செல்வனே சிறந்து வாழச் சிறுமையில் ஏழை வீழப் புல்கர சாட்சி மாறப் புனிதமாஞ் சமர சத்தை நல்கவே வேண்டு மென்று ஞாலமே கேட்டல் காணாய் பல்கவே உயிர்க ளெங்கும் பரமனே அருள்செய் யாயோ. 5 சமரசம் பொருளி லுற்றால் சாந்தமே ஆட்சி செய்யும் அமரரும் மண்ணில் வாழ ஆசைகொண் டலைவ ரையா சமரினைத் தூண்டும் ஆட்சி சாய்த்தது போதும் போதும் சமரச மார்க்கம் ஓங்கச் சத்தனே சிந்தை செய்யே 6 சமரச மார்க்கம் பல்கின் தரைபிடி அமர்கள் நேரா அமரெழுப் பாசை மாயும் அரும்பசி பிணிநோய் நீங்கும் குமரரின் வாழ்க்கை இன்பாம் குணம்வளர் கலைகள் பொங்கும் அமைஅரு ளாட்சி ஓங்கும் அப்பனே கடைக்கண் நோக்கே. 7 அண்டையன் பசியால் வாட அணங்கொடு மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று மன்னிடும் ஆட்சிக் குற்றம் தண்டனைக் கர்மம் என்னல் தயைவிலார் கூற்றே அப்பா எண்டிசை சமர சத்தை இன்புடன் நுகரச் செய்யே. 8 உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை, அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே. 9 சாதியும் மதமுஞ் சாய சண்டையும் மிடியும் மாய நீதியும் நிறையும் மல்க நித்தமும் வழிபா டோங்க ஆதியே காதல் மன்றல், ஆட்சியில் பொதுமை தேவை சோதியே சமர சத்தால் சூழ்தரும் கடைக்கண் நோக்கே. 10 14. சமரச சன்மார்க்கம் மார்க்கம் ஒன்றே சன்மார்க்கம் மலரச் செய்யும் சமரசமே யார்க்கும் உரிய அதுவளர்ந்தால் ஆக்கம் உறுமே உலகியல்கள் மூர்க்கம் அழியும் பன்மார்க்க மூடக் குறும்பு மாண்டொழியும் பார்க்கப் பொதுமைச் சன்மார்க்கம் பரமா அருளாய் அருளாயே. 1 சாதி ஆசை மதஆசை தரையின் ஆசை படிநெஞ்சம் நீதி ஆசை நின்னாசை நினையும் நிலையில் இல்லையே ஆதி சோதி அருட்சோதி அறிவுக் கறிவாம் மெய்ச்சோதி ஓதி ஒழுகின் சன்மார்க்கம் உறலாம் நல்ல நினைவினையே. 2 காத லொழுங்கில் சமரசமே கண்டால் உறலாம் சன்மார்க்கம் ஓதல் உணவில் சமரசமே உற்றால் பெறலாம் சன்மார்க்கம் வீதி உலவில் சமரசமே விளங்கின் இலகுஞ் சன்மார்க்கம் ஆதி எங்குஞ் சன்மார்க்கம் அடைய அருளாய் அருளாயே. 3 சாதி மதத்தில் சமரசமே சார்ந்தால் சேரும் சன்மார்க்கம் நீதி அரசில் சமரசமே நிறைந்தால் நிலவும் சன்மார்க்கம் வாதப் பொருளில் சமரசமே வாய்ந்தால் வளரும் சன்மார்க்கம் சோதி! எங்குஞ் சன்மார்க்கம் சூழ அருளாய் அருளாயே. 4 ஒளியுங் காற்றும் மலையாறும் ஓங்கு மரமும் நீல்கடலும் தளிமக் கலையும் சன்மார்க்கம் தழைக்கத் துணையாய்த் திகழ்நுட்பம் தெளியும் உள்ளம் நின்கோயில் செறியும் இயற்கை வடிவான வெளியே அளியே சன்மார்க்கம் விரிந்து பரவ அருளுதியே. 5 பரிதி எழுந்து மறையொழுங்கும் மதியம் தேய்ந்து வளரொழுங்கும் பருவம் மாறி வருமொழுங்கும் பார்த்துப் பார்த்துப் பழகிநிதம் கருவில் நெஞ்சில் உணவுறக்கில் காக்கின் ஒழுங்கு சன்மார்க்கம் மருவும் வாழ்வி லொழுங்குபெற மருந்தே தேவை உன்துணையே. 6 நெஞ்சி லெண்ணம் ஒழுங்கானால் நிரலே எல்லாம் ஒழுங்காகும் அஞ்சு மடங்கி ஒழுங்காகும் அங்கம் கரணம் ஒழுங்காகும் விஞ்சு ஒழுங்கில் சன்மார்க்கம் விளங்கி நிலவும் ஒழுங்கினிலே தஞ்ச மாகத் தற்பரமே தயவே வேண்டும் தனித்துணையே. 7 மலையில் பிறந்த சன்மார்க்கம் வனத்தில் வளர்ந்த சன்மார்க்கம் கலையில் அமைந்த சன்மார்க்கம் காணோம் காணோம் நாடுகளில் கொலையைக் கலையாக் குறிக்கொண்டு குண்டு தாங்கும் நாடுகளில் நிலவுங் கொல்லோ சன்மார்க்கம் நிலைமை எண்ணாய் இறையோனே. 8 எங்கும் உள்ள இறையோனே எல்லா உயிருள் இருப்போனே பொங்கும் அன்பு மக்களிடைப் பொருந்தா திகல்போர் எழுவதென்னை தங்குஞ் சுத்த சன்மார்க்கம் தழுவா தொழியின் அன்பெழுமோ துங்க உலகம் பரிணமிக்கத் துணைசெய் அரசே மெய்ப்பொருளே. 9 புல்லாங் குழலில் இசைமுழக்கிப் போதி நிழலில் தவங்கிடந்து கல்லா லடியில் பேசாது கல்லாம் மலையில் மறைபேசி எல்லா ருங்கொள் சமரசசன் மார்க்க மிசைத்தே உரிமையளி செல்வா சிறியர் பிழைபொறுக்குந் தேவா வாழி அருள்வாழி. 10 15. சன்மார்க்க வாழ்வு சமரசசன் மார்க்கமென்று தரைவெறுக்கும் வாழ்வு சார்ந்ததிடை நாளினிலே சனிபிடித்த தன்றே அமைஉலகம் ஆண்டவநின் அருட்பெருக்கின் கொடையே அதைவெறுத்தல் அறமாமோ ஆணைவழி யாமோ சுமையெனநின் கொடைவெறுப்போர் சோம்பரவர் பிறர்க்குச் சுமையாகி இடர்விளைக்குந் தொல்லையரே யாவர் சமரசன் மார்க்கஉண்மை தரணியிலே விளங்கித் தழைத்தோங்க அருள்புரியாய் தயையுடைய அரசே. 1 நிலநான்கு வகைபிரிய நிரனிரலே உரிய நெடுமரம்புள் விலங்குமக்கள் நின்றுகிளர் அன்பில் உலமான்ற குறிஞ்சிமுல்லை மருதநெய்தல் ஒன்றி ஒழுக்கமுறக் காதலெழு உடையவஏன் செய்தாய் நலமூன்றுஞ் சன்மார்க்க நாட்டமிக அன்றோ நண்ணியற்கை வாழ்வொறுத்தல் ஞானமெனல் நன்றோ புலநோன்பு கெட்டொழியும் பொறிகளலை சாடும் புனிதம்வளர் காதல்நெறி புவிபெருக அருளே. 2 பெண்பனையும் ஆண்பனையும் பேசிநிற்குங் காட்சி பெண்கொடியும் ஆண்கொடியும் பின்னிவளை காட்சி வண்டுளறச் சுரும்பிசைத்து மயங்கிவருங் காட்சி வாரணஞ்செம் பேடையிடம் மனஞ்செலுத்துங் காட்சி திண்ணெருமை நாகுடனே சேர்ந்துதிரி காட்சி செவ்வெருது பசுவருகே சிரித்தணையுங் காட்சி பண்மொழியின் அமிழ்துண்டு பத்தன்செலுங் காட்சி பண்பளிக்குஞ் சன்மார்க்கக் காட்சியன்றோ பரமே. 3 சன்மார்க்கம் இயற்கைஇறை! நின்னெறியென் றறியார் தவழிளமை வளமையினைத் தழற்கனலில் தீப்போர் துன்மார்க்க வினையியற்றித் தொலைவரவர் சொன்ன துகளுரைகள் துறைகளெல்லாம் தொல்லுலகை அரித்துப் பன்மார்க்கப் பகைவிளைத்துப் பாழ்செயலை அறிவாய் பாரெல்லாம் பாவஎரி பரவிவரல் அழகோ சன்மார்க்கம் நல்லியற்கை வாழ்வென்னும் உண்மை தரணியிலே வேரூன்றத் தயைபுரியாய் ஐயா. 4 இயற்கையிலே நீஇருந்தே இன்பளிக்கும் அன்பை இனிதுணர்ந்தால் காதல்நெறி இயல்விளங்கும் அப்பா செயற்கையிலே புலன்கெடுத்துச் சிந்தைகொலை புரிந்தால் சிற்பரனே உன்னருளின் சிறப்பையுறல் எங்ஙன் பயிற்சியிலே சன்மார்க்கம் இயற்கையர ணென்னும் பாடம்பெற லாமென்று பயின்றவரே சொற்றார் முயற்சியிலை மன்பதையில் மூர்க்கமெழ லாச்சு முழுஇயற்கை வாழ்க்கையெழ முன்னவனே முன்னே. 5 காதலுணர் வோங்கிநின்றால் கறைகள்படி யாவே காசினியே அன்பாகிக் கருணையொளி வீசும் காதலினைக் காமமெனல் கண்ணில்லா மடமை காதலொரு மகனொருத்தி ஓருயிராய் ஒன்றல், நீதியிழந் தொருவன்பல மனைகொள்ளல் காமம், நீசமிகு காமத்தால் நிலமெல்லாம் தீயாம் காதலிலே காதல்கொளல் சன்மார்க்க மென்னும் கருத்தளித்த இறையவனே காலடிகள் போற்றி. 6 ஆடல்நெறி பாடல்நெறி அன்பறிவு நெறிகள் அனைத்துமுள நெறிகளெலாம் அறிவுறுத்துங் காதல் நாடகமும் காவியமும் ஒவியமும் மற்றும் ஞானம்வளர் கலைகளெலாம் நன்குபுகழ் காதல் பீடுறுசன் மார்க்கநின்ற பெரியருக்கும் ஞானப் பித்தருக்கும் பத்தருக்கும் பேறளித்த காதல் ஈடிலருள் மாதருள்நின் இறைமையளி காதல் எவ்வீடும் எழுஅருளாய் இயற்கைஇன்ப இறையே. 7 காதலுறு இடம்நினது கருணைபொலி வீடாம் காதலுறா இடம்நினது கருணையற்ற நரகாம் காதனெறி சன்மார்க்கம் காட்டுவித்தல் கண்டே கலைவரைந்தார் அறிஞரெலாம் காட்டாக ஐயா காதலருள் மாதருள்நின் காட்சிபெறல் ஞானம் காணாது மாயையென்று கருதல்அவ ஞானம் காதலினைக் காமமென்று கருத்தழிக்கும் அமைப்பின் கால்சாய்ந்தால் உலகுய்யும் கடவுளருள் செய்யே. 8 மகனொருவன் மகளொருத்தி மணக்குமுறை உலகில் வளர்ந்துவரின் சன்மார்க்க வாழ்வினுக்குத் துணையாம் அகமடங்கி ஒருமைஎய்த ஐயஉனை நினைக்கும் அன்புவழி எளிதாகும் அறவொழுக்கம் இயல்பாம் இகலமைந்த கரணங்கள் இனியனவாய் மாறும் எவ்வுயிர்க்குந் தண்மைசெயும் இரக்கநிலை கூடும் தகவுடைய நடுநிலைமை சாருமென்று விளங்கத் தயைபுரிந்த அப்பாவே தாளிணைகள் வாழி. 9 எங்குமுள உனைக்காண எவ்வளவோ முயற்சி இவ்வுலகில் நிகழ்வதனை எவ்வுரையால் சொல்வேன் நங்கையரில் உன்னொளிகாண் ஞானம்வரல் போதும் நாதஉனை எங்குங்காண் ஞானமெளி தாகும் சங்கையிலாச் சன்மார்க்க வாழ்வுபெறலாகும் தன்னலத்தை அழிபணிசெய் சார்புவரு மென்றே இங்குளத்தில் தெளிவெழுந்த தெப்படியோ அறியேன் எல்லாமுன் னருளென்றே ஏழையடைந்தேனே. 10 16. குருமார் அளவுகடந் தோங்கண்ட அறிவே நீங்கா அழகியற்கைக் கோயிலமர் அன்பே ஞான ஒளியுடைய குருமாரின் உளத்தே மற்றும் ஒருகோயில் கொண்டருளும் ஒன்றே நல்ல வளமடைய உயிர்கட்கு மார்க்கங் கண்ட வான்கருணை வள்ளால் நீ வாழி வாழி தெளிவுபெற வழிபாட்டிற் சிந்தை வைத்த திருக்கூட்டம் நாடோறுஞ் செழிக்கச் செய்யே. 1 கண்ணாவுங் கைகாலுங் கருது நெஞ்சம் கரணவுறுப் பொன்றில்லாக் கடவு ளேநீ கண்ணாதி உறுப்புடைய குருமா ருள்ளக் கமலத்துள் விற்றிருக்குங் கருணை என்னே மண்ணார விண்ணார வயங்கி மேலும் மருவுகின்ற மணிவிளக்கே மக்கள் கூட்டம் கண்காண நாவாழ்த்தக் கைகள் போற்றக் கருத்தொன்ற வழங்குமருட் காட்சி வாழி. 2 எங்கெங்கும் நீங்காமல் இருந்தே எல்லாம் இயக்கிறையே எங்கெங்கும் பால்நெய் போலும் தங்கவுடல் குருமாருள் தயிர்நெய் போலும் தங்கும்வகை உணரவுநின் தயவு வேண்டும் அங்கமிலா ஆண்டவனே அங்கந் தாங்கும் அருட்குருமார் உளத்தொளியாய் அமர்ந்தும் அன்பு பொங்குவழி பாட்டேற்கும் புனிதத் தேவே பொன்னடிஎன் மனம்பூக்கப் பொருந்தச் செய்யே. 3 கோதிலவர் வழிபாட்டைக் கொள்வோர் யாவர் குருமாரோ அவருளத்திற் குலவும் நீயோ சோதனையும் வேண்டுங்கொல் சோதி நீயே தொல்லுலகில் முறைபற்றிக் குருமார் நீயென் றோதுநரும் உளரானார் உறவால் ஐயா ஒருகுணமுங் குறிதொழிலும் ஊரும் பேரும் ஆதிநடு முடிவுமிலா அறிவே அன்பர் ஆழநினை பொருளாகி அருளுந் தேவே. 4 பளிங்கனைய குருமாரைப் பலரென் றெண்ணாப் பண்புணரச் செய்தபரம் பரமே அன்னார் உளங்கனிய வீற்றிருக்கும் ஒளியே ஒன்றே ஒன்றேநீ இரண்டல்ல என்னும் உண்மை விளங்கியபின் பலருணர்வு விளைவ தெங்கே விதம்விதமே குருமாரென் றுணர்தல் விட்டுக் களங்கமிலாக் குருநாதன் என்று கொள்ளுங் கருத்தளித்த கற்பகமே கருணைத் தேவே. 5 குருநாதன் வரலாற்றுக் குறிப்பே இல்லான் குறிபருமை யல்லாத கோதில் நுண்ணி பருஞாலம் நெறிதவறும் பருவ மெல்லாம் பரிந்தெடுத்த கோலங்கள் பலவே நல்ல ஒருநாதன் பலமாராய் ஓதப் பட்டான் ஊர்பலவும் மொழிபலவும் உறைந்து பேசித் திருஞான நெறிவிளங்கச் செய்தான் என்று சிறுமனத்தைத் தெளிவித்த சித்தே வாழி. 6 குருநாதன் இறைநீயோ தனியோ என்றென் குறுமதியும் ஆய்ந்தாய்ந்து குலைந்த பின்னை ஒருநாளும் ஆய்வாலே உண்மை தேறல் உறாதென்றும் குருஅடியில் ஒன்றின் உண்மை ஒருவாத சிந்தனையில் ஒளிரும் என்றும் உறுதியிலா என்னுளத்தும் உணர்த்தி னாய்கொல் கருவாதை தீர்ப்பதென்ற கருணை போலும் கற்பனையெல் லாங்கடந்த கற்புத் தேவே. 7 குருமாரிவ் வுலகணைந்து குறித்த மார்க்கம் குவலயத்தில் பலமதமாய்க் கொழிக்கும் இன்பம் பருகாதார் பன்மார்க்கப் படுகர் வீழ்ந்து பழிபாவம் பரப்புகின்றார் பரமே உன்னைக் கருதாத நெஞ்சினரே கருணை இல்லார் கற்பகமே வெறிமதங்கள் காய்ந்து சாய ஒருநாத உன்மார்க்கம் ஓங்கச் செய்யாய் உயர்நாதங் கடந்தொளிரும் ஒருமைத் தேவே. 8 தனித்தனியில் ஒவ்வொரிதழ் சார்ந்து சார்ந்து தண்மலராய்க் காட்சியளி தன்மை போலத் தனித்தனியே குருநாதன் என்று கூறுந் தனியாட்சி சேர்ந்தக்கால் குருமா ரென்ற இனத்தாட்சி எழுந்ததென இறையில் தேறும் எளிவகையும் இங்குலவ இனிதே செய்தாய் மனித்தருக்குக் குருநாதன் வழியே நல்ல வாழ்வளிக்கும் வானொளியே மாண்புத் தேவே. 9 பொன்வணத்தார் அருள்மனத்தார் பிணிமூப் பில்லார் பொன்றலிலார் அறம்வளர்க்கப் பூண்பர் யாக்கை மன்னியற்கை ஏவல்புரி வரமே பெற்றோர் மலைமறைப்பர் கடல்பிரிப்பர் மற்றுஞ் செய்வர் உன்னரிய ஒலிமறையின் உண்மை சொல்வர் ஒருவர்பல ராவர்பலர் ஒருவ ராவர் பன்னுகுரு மாரென்று பாவி நெஞ்சில் படிவித்தாய் எப்படியோ பரமா வாழி. 10 17. எண்மர் கோதிலறம் வளர்க்கஇங்குக் குருமார் கொண்ட கோலங்கள் தொகைகாணக் கூர்ந்து பார்த்தேன் சோதனையில் தொகையொன்றுந் தோன்ற வில்லை தொடர்ந்துள்ள எண்மர்தொகை தோன்று மாறும் பேதமிலை அவருள்ளென் றுணரு மாறும் பேயுளமின் னொளிபிறங்கச் செய்த தென்ன சோதிநின தருள்போலும் தோற்ற மின்றித் துணைசெய்யும் இயல்புடைய சுடரே போற்றி. 1 1. மகம்மது நபி அரபிய நாட்டிற் றோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த மகம்மது நபியே போற்றி தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி போற்றி 2. இயற்கை அன்னை உருவமிலா இறைவனுக்கும் உடலளித்து நீல்வானக் கருமுடியும் தரையடியும் கடலுடையும் மலையருவி மருவணியும் புனைந்துகதிர் மலர்விழியால் இசைவடிவால் அருளுயிர்க்குப் பொழிஇயற்கை அன்னை திரு வடிபோற்றி. 3. கிறிது உலகம் உய்ய ஒளிவீசி உதித்த தெய்வச் சேய்போற்றி மலையி லெழுந்து மாசில்லா மறையைப் பொழிந்த மழைபோற்றி சிலுவை அறைந்தா ரிடத்தும் அருள் செய்த பொறுமை நிலைபோற்றி அலகில் பாவர் கொழுகொம்பாம் அன்பு கிறிது அடிபோற்றி. 4 4. அருகர் கொல்லும் ஆட்சி குணந்தெறு வேளையில் கொல்லா நல்லறங் கூறி வளர்த்தவன் அல்லல் தீர்த்தருள் ஆதி அருகனே மல்லல் மிக்க மலரடி போற்றியே. 5 5. புத்தர் சீலமெலாம் ஓருருவாய்த் திரண்டெழுந்தா லெனஉதித்த செல்வம்! போற்றி கோலமிகு மனைவிடுத்துக் கொடுங்காட்டில் தவங்கிடந்த குணமே போற்றி மாலரசின் அடியிருந்து மயக்கமற அறமுரைத்த மணியே போற்றி சாலறத்துக் குழுவிளங்கச் சங்கம்வளர் புத்தகுரு! சரணம் போற்றி. 6 6. கண்ணன் போரார்களம் பொலிதேரினில் பொருதப்புகு வீரன் வாரார்சிலை வளையாதவண் மயக்குற்றமை கண்டு நாரார்பயன் கருதாஅற ஞானந்தரு கண்ணா தாரார்மணி வண்ணாஅணி தாண்மாமலர் போற்றி. 7 7. குமரன் ஆற்ற இளமை அழகா குமரா ஏற்ற அயில்வேல் இறைவா முருகா ஊற்று மலையி லுலவுங் குகனே போற்றி அடிதாள் புகலே குருவே. 8 8. மோனமூர்த்தி மூன்று புரமெரித்த முக்கண்ணா கல்லாலின் கான்று மொளியடியில் கைகாட்டி முத்திரையால் சான்ற அறநுட்பம் சாற்றாமல் சாற்றுமொரு தோன்றலாம் மோனகுரு தூயதிருத் தாள்போற்றி. 9 18. வாழ்த்து உருவமில் இறைவன் ஒருவன் என்றே அருளிய மகம்மது பெருநபி வாழி உன்னற் கரிய உருவமில் ஒருவனை உன்னற் குரியனாய் உதவ உடலளி கன்னி இயற்கை அன்னை வாழி நேசி பகைவரை என்று பேசி ஆணி அறைந்த மாணில ரிடத்தும் இரக்கங் காட்டிப் பரக்கச் சிலுவையில் நின்ற கிறிது அன்பு வாழி கொலையர சோங்கிய நிலையில் தோன்றி அஹிம்ஸா பரமோ தர்மா என்றும் தயா மூல தர்மா என்றும் அருளறம் வளர்த்த அருகன் வாழி சீலமே திரண்ட கோலங்கொண்டு போதியி னடியில் சோதனை செய்து ஒருமையில் நின்று தரும முணர்த்திய சத்திய ஞானப் புத்தன் வாழி பாரதப் போரிடைச் சாரதி யாகிப் பயன்கரு தாத வியன்திருப் பணியாம் பாதைகாட்டும் கீதையை ஓதிய கொண்டல் வண்ணக் கண்ணன் வாழி நாதக் கொடியும் போதவிந் தூர்தியும் ஞான வேலும் மான இச்சா சத்தியும் எல்லாச் சித்தியும் உடைய அமரன் அழகுக் குமரன் வாழி காமனைக் காய்ந்து காலனைக் கொன்று முப்புரம் எரித்தே அப்புர முள்ள கல்லா லடியில் சொல்லா மற்சொலும் மோனம் வாழி சாந்தம் வாழிசன் மார்க்கம் வாழி இனிதே. 19. குருமார் ஒருமை உலகெல்லாம் பொலிந்தோங்க உயிர்ப்பளிக்குஞ் செழுங்கதிரே புலனெல்லாம் வென்றவர்க்குப் புத்தமிர்தஞ் சொரிமதியே கலையென்னும் பயிர்தழைக்க அறிவுபொழி கருமுகிலே அலகில்லா ஒளிவண்ண அருட்குருவே அடிபோற்றி. 1 மக்களுயப் பலமதங்கள் மருவஅமைத் தவற்றினிடை மிக்கதொரு சமரசத்தை மிளிரவைத்தாய் உயிரென்னச் சிக்கலதில் உற்றதென்ன? சிற்றுயிர்கள் அறியாமை தக்கவர்க்கு வழியுணர்த்துந் தழல்வண்ண மெய்க்குருவே. 2 எம்மதத்தில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் செம்மையறம் நின்றொழுகின் சீர்பெறுதல் கூடுமென்று மெய்ம்மையுரை பகர்ந்தகுரு மேலவனே பன்மைமத மம்மரழித் தெனையாண்ட மாண்பினையான் மறவேனே. 3 விதங்கண்டு வாதஞ்செய் வீணருடன் உழன்றேற்கு மதங்களெலாம் உன்னடியில் மலர்ந்துநிற்கும் உண்மைநிலை இதம்விளங்க என்னுளத்தில் எம்பெருமான்! செய்தனையே பதங்கடந்த நிலைகுறிக்கும் பரமகுரு வாழியரோ. 4 அறந்தேய்ந்த இடமெல்லாம் அவதரிக்கும் ஓருவஉனைச் சிறந்தார்க்கும் பலபெயரால் செகம்போற்றும் உண்மைநிலை மறந்தார்கள் பன்மையிலே மயங்குகின்றார் வாதத்தில் புறங்காண வாதமெலாம் பொன்னடியை வேண்டுவனே. 5 ஒருவஉனக் குலகளித்த உத்தமப்பேர் பலகொண்டு குருமௌன மூர்த்தியென்றுங் குமரனென்றுங் கண்ணனென்றும் மருவருகன் புத்தனென்றும் மலைக்கிறித்து நபியென்றும் கருவியற்கை கன்னியென்றுங் கருதிநிதம் வாழ்த்துவனே. 6 ஆலமரும் மௌனியென்பேன் அணிகடம்புக் குமரனென்பேன் காலமலர் புன்னைநிழற் கண்ணனென்பேன் கடிப்பிண்டிப் பாலமரும் அருகனென்பேன் பண்பரசுப் புத்தனென்பேன் கீலமரக் கிறித்துவென்பேன் பிறரென்பேன் குருவுனையே. 7 ஆலடியில் அறிவளித்தாய் அசோகடியில் அருளளித்தாய் கோலரசில் அறமளித்தாய் கொலைமரத்தில் அன்பளித்தாய் நீலடியில் இசை அளித்தாய் நிறைகடம்பில் அழகளித்தாய் சீலகுரு உனையடைந்தேன் சிறியேனுக் களிப்பதென்னே. 8 உருஅருவ மில்லாத ஓர்இறையே உண்டென்னும் அருமறைகள் மொழியாலே அருள்ஞானம் அமைவதுண்டோ உருவுடைய குருநாதா உன்காட்சி இறைசேர்க்கும் பொருளுணர்ந்து வந்தடைந்தேன் பொய்கடிந்து மெய்யருளே. 9 காணாத இறையென்றும் காணவல்ல இறையென்றும் மாணான மறையுரைக்கும் மனந்தெளியா தலுத்துழன்றேன் வாணாளை வீணாக்கி வாடிமிக வந்தடைந்தேன் காணாத இறைகாட்டுங் காணிறைநீ குருவென்றே. 10 20. குருநாதன் உருஅருவம் அருவுருவம் ஒன்றுமிலா இறைவிளங்கும் திருவுடைய உளக்கமலத் தெய்வவொளி குருநாத உருவெடுத்த நாள்முதலா உனைநாடி உழைத்திருந்தால் பெருநிலையைப் பெற்றிருப்பேன் பிழைபொறுக்க வேண்டுவனே. 1 பருமையினைப் பயில்கின்றேன் பருமையினைப் பருகுகின்றேன் பருமையெலாங் கடந்தொளிரும் பரம்பொருளை அடைவதெங்ஙன் குருபரநின் திருவடியைக் குறிக்கொண்டு வாழ்ந்திருந்தால் திருவருளைப் பெற்றிருப்பேன் சிறுமையினைப் பொறுத்தருளே 2 குறியில்லா உலகினிலே குறிநெறிகள் பலஉண்டு நெறியெல்லாம் நின்றாலும் நின்கருணைத் திருநோக்கைப் பெறினல்லால் இறைமைநிலை பெறலரிதென் றுணர்ந்துவந்தேன் அறமெல்லாம் அருள்குருவே அடியன்முகம் பாராயோ. 3 உருவாதி இலாஇறையே உயிர்க்கருள உருத்தாங்கிக் குருவாக வருவதெனக் கூறுவதும் மறுப்பதுவும் பருவான உலகியற்கை பாழாய்வில் படிந்தெழுந்து குருநாத உனையடைந்தேன் குணக்குன்றே ஆண்டருளே. 4 ஏடுகளை ஆய்ந்தாலும் எம்மதத்தில் புகுந்தாலும் காடுமலை அடைந்தாலும் கண்டனங்கள் செய்தாலும் பாடுபல பட்டாலும் பயனிலைஎன் றுணர்ந்தின்று வாடுநிலை நீ அறிவாய் வாழஅருள் குருமணியே. 5 சடையினிலும் உடையினிலும் தாடியிலும் மொட்டையிலும் படைபடையாய்ப் பாடலிலும் பஜனையிலும் பூசையிலும் உடையதிரு ஞானம்வளர் உறுதியிலை எனத்தெளிந்தே அடைவெனநின் னடிஅணிந்தேன் அருள்புரியாய் குருமணியே. 6 மண்விடுத்துப் பொன்விடுத்து மங்கையரை விடுத்தொதுங்கிக் கண்ணடைத்துக் காற்றடைத்துக் கல்மரமா யிருப்பதிலும் பண்பிலையென் றுணர்ந்துனது பதமலரில் வண்டாக நண்ணியதை நீஅறிவாய் ஞானமருள் குருமணியே. 7 கந்தனென்றோ கிறித்துவென்றோ கண்ணனென்றோ மற்றுமுள எந்தநிலை கொண்டேனும் எனக்கருள வரல்வேண்டும் சிந்தனையே உனக்காக்கிச் சின்மயமே ஒன்றுகின்றேன் சந்தமறை மொழிந்தருளிச் சகங்காக்குஞ் சற்குருவே. 8 என்மனமே குருவாகி எனைநடத்தும் வழிகாணேன் பொன்மனத்தைக் குரங்காக்கிப் புகுந்துழன்றேன் புரைநெறியில் கன்மனத்துப் பாவியெனக் கைவிடுத்தா லெங்கடைவேன் பன்மரஞ்சூழ் செடியாகிப் படுகின்றேன் அருள்குருவே. 9 உருவாகி அருள்புரிவாய் உணர்வாகி அருள்புரிவாய் கருவாகி அருள்புரிவாய் கருத்தாகி அருள்புரிவாய் பெருமானே எப்படியும் அருள்புரிவாய் என்றென்றே குருவேஉன் னடிஅடைந்தேன் குறைநீக்க அருளுதியே. 10 21. மனம் எல்லாம் வல்ல இறையோனே என்னில் மனத்தை ஏன்படைத்தாய் பொல்லா அதனை வழிபடுத்தப் புனிதா உன்னால் இயலாதோ வல்லா ரதனை ஆய்ந்தாய்ந்து வரைந்த உரைகள் பலகொண்டு கல்லார் கற்றார் மயங்குவதைக் காணாய் கருணைப் பெருங்கடலே. 1 எங்கு முள்ள இறையோனே என்னுள் நீங்கா இனிமையனே அங்க உறுப்பில் மனமொன்றோ அதனில் அடங்கும் எல்லையதோ எங்கும் ஒடி இயங்குவதோ இனிதோ தீதோ ஐயாவே சங்கை அறுத்து நிலைபெறுத்திச் சாந்த வண்ணம் ஆக்காயோ. 2 என்னிலுள்ள மனம் இன்னே எழுந்து கங்கை ஹோயாங்கோ பன்னு வால்கா மெஸோரி பரவு தான்யூப் தேம்மூழ்கி மின்னு மதிசேய் குருஅருக்கன் மிளிரு நிபுலை சென்றுசென்று துன்னும் விரைவின் மாயமென்னோ துகளே இல்லாத் தூயோனே. 3 மலையா ஒங்கும் அணுவாகும் மற்போர் செய்யும் அமைதியுறும் புலியாய்ப் பாயுங் கோவாகும் புயலாய் வீசும் சிறுகாற்றாம் கலையாய் வளரும் கசடாகும் கருணை பெருக்கும் கொலைபுரியும் நிலையா மனஞ்செய் நடமென்னே நினைவுக் கெட்டா மெய்ப்பொருளே. 4 மனமே புலனாய்ப் பொறியாகி வயங்கும் உடலாய் உலகாகி அனலி மதியாய்க் கோளாகி அவைக ளுணர்த்துங் கலையாகி நினைவாய்க் கனவாய் உருவெளியாய் நிகழ்த்தும் மாயம் என்னேயோ சினமே இல்லாச் சிற்பரமே சிந்தைக் கெட்டா மணிவிளக்கே. 5 மனத்தின் விகாரம் யாவுமெனும் மறைவைத் தெளிய அலைந்தொழிந்தேன் வனத்தில் விகாரம் மாயுமெனும் மாற்றம் பொய்யென் றறிந்துணர்ந்தேன் மனத்தின் எல்லை கடந்தொளிரும் மன்னே மின்னே உன்னடியார் இனத்திற் சேர்ந்தால் தெளிவடைவேன் இன்பப் பொருளே அருளாயே. 6 புறத்தே உழலும் மனந்திரும்பிப் புகுந்தால் அகத்தே புலனடங்கும் அறத்தின் கூறு கால்கொள்ளும் அதுவே குருவாய் வழிகாட்டும் பொறுத்தல் வளரும் அருளுற்றுப் பொங்கும் புனித ஞானவெளி திறக்கும் இவைகள் எளிதாமே சித்தே உன்றன் துணைபெறினே. 7 நன்மை தீமை உலகிலுண்டோ நாடும் மனத்தில் அவையுண்டோ நன்மை நிறைந்த மனத்துக்கு நன்மை உலகே புலனாகும் புன்மைத் தீமை மனத்துக்குத் தீமை உலகே புலனாகும் பன்மை யுணர்வு மனஞ்சாகப் பரமே பணிசெய் கின்றேனே. 8 அச்சம் பொய்கோட் புறமனமே அருக அருக அகமனமும் பச்சென்றரும்பி மலர்ந்து நிற்கும் பயனே கருதாப் பணிபெருகும் அச்சம் பொய்கோள் அற்றொழியும் அன்பு வீரம் ஆர்த்தெழும்பும் விச்சே எதற்கும் அருள்வேண்டும் வீணன் முகத்தைப் பாராயோ. 9 குருவென் றெழுந்தால் அகமனமே குறைகள் தீர்ந்து குணமாகும் உருவில் காமன் காலன்செய் உருட்டும் மருட்டும் உதைவாங்கும் தரும மோங்கும் தயைவளரும் தரணி யெல்லாம் சோதரமாம் பெரும! எங்கும் உன்மார்க்கம் பிறங்கும் பிழைகள் பொறுத்தருளே. 10 22. மனக்குரு உடன்பிறந்து பிரியாதே உடன்வளர்ந்து வருமனமே கடந்தவரும் கடுந்தவரும் கற்றவரும் மற்றவரும் தடம்புவியில் உனை இகழ்ந்து சாற்றுவதென் வழிவழியே இடந்தரநின் பாலுள்ள ஏதமென்ன இயம்புதியே. 1 யானடையும் நிலைமைகளை ஆய்ந்துணரும் ஆற்றலிலார் ஈனஉரை பலபகர்ந்தே எனைஇகழ்வர் எனமனமே மானமுடன் உன்நிலையை மதிபதியச் செய்தாயுன் ஊனநிலை கழன்றுவிடின் உண்மைநிலை புலனாமே. 2 மனமேநீ அடைந்துவரும் மாயைநிலை எத்தனையோ நினைவேறிப் பார்க்குங்கால் நெடுங்கடலாய்த் தோன்றிடுமே இனமாகி இயங்குங்கால் எண்மூன்றி லடங்கிவிடல் தினமேவு தியானத்தால் திறப்பாமென் றுணர்த்தினையே. 3 புலன்களிலே உழல்கின்ற புறமனமாய் அவையொடுங்க நலன்களிலே நாட்டங்கொள் நடுமனமாய் ஆங்கிருந்து பலன்களிலே செல்லாத பணிபுரியும் அடிமனமாய் மலங்களிலே புரண்டெழுந்து மாசறுக்கும் மனம்வாழி. 4 புறநோக்கி மனமேநீ புரிகுறும்பால் இழிவுனக்கே. அறநோக்கும் நடுநுழைவில் அற்றுவிடும் இழிவெல்லாம் நெறிநோக்கும் அடிஅணைவில் நீகுருவே ஆகிஇறை நிறைநோக்கை அறிவுறுத்தும் நின்பெருமை புகலரிதே 5 புறமனமாய் நீபுரியும் பொல்லாத வினைபலவே அறமனமாய் நடுஅமைவில் அயல்மனங்கள் நினதாகும் திறமடவை சித்துவரும் செய்யாதே செல்லுவையேல் உறுவையடி நிலைமனமே உயர்குருவாய் எழுவாயே. 6 நீகுருவாய் எழுந்தருளி நிறைவழியைக் காட்டியதும் ஏகஒலி ஓசைஒளி எழும்முறையே எழில்மனமே போகுமிடம் மேலெங்கே புதுவாழ்வை அளித்தொளிக்கும் ஆகமிலாய் கைம்மாறோ ஆற்றும்வகை அறியேனே. 7 உன்புறமோ உப்பாழி உன்நடுவோ உயராவி உன்னடியோ தண்மைமழை ஒத்திருக்கும் வகையுணர நன்மனமே துணைபுரிந்தாய் நானிதற்கென் செலுத்துவனே பொன்மனமே என்றுன்னைப் போற்றிநிதம் வழுத்துவனே. 8 புறமடங்க அழகுருவைப் பொருந்தநினைந் ததிலொன்றில் நிறவுருவம் நடுநீறாய் அடிஒளியாய் நீறாகும் உறைபருமை நீராகி ஒலிகாற்றாய் ஒடுங்கல்போல் முறைமுறையே நிகழ்வதனை முழுமனமே உணர்த்தினையே. 9 பிடுங்குபுறம் வயமாகப் பிணிபுலனில் நுழைமனமே அடங்கநடு புகுந்தடியில் அணைந்துவழி காட்டிமறை தடங்கருணைப் பெருங்குருவே தரணிசொலுங் குருமார்கள் அடங்கலுமே நீயானால் யாரினியர் உனைவிடவே. 10 23. முறையீடு குறையுடையேன் கோதுடையேன் குணமில்லா நடையுடையேன் கறையுடையேன் கரவுடையேன் கருணையில்லாக் கருத்துடையேன் சிறையுடையேன் சினமுடையேன் சீரில்லா நெறியுடையேன் இறையவனே கடையேறும் இனியவழி காட்டாயோ. 1 பத்தியிலேன் பதைத்துருகும் பரிவில்லேன் நெஞ்சினிலே சுத்தமிலேன் வாழ்க்கையிலே சுகமில்லேன் துகளறுக்கும் புத்தியிலேன் சத்தியிலேன் பொறுமையிலேன் உனையன்றிச் சத்தியனே எனைக்காக்குஞ் சார்புடையார் எவரேயோ. 2 இளங்குழவிப் பருவத்தே இழைத்தபிழை யானறியேன் வளங்கொழிக்கும் பருவமெலாம் வளர்த்தபழிக் கென்செய்கேன் களங்கமற அழுகின்றேன் கருத்துநிலை அறிவாயே விளங்கருளைப் புரியாயேல் வேறுவழி எனக்குண்டோ. 3 உன்னருளைப் பெறவேண்டி உடலோம்ப விரையாதே என்னிமித்தம் உடலோம்பி இழிவினைகள் செய்தலுத்தேன் உன்னினைவு மனத்திலுற உயிர்சுற்றுங் கொழுகொம்பாய் மன்னுமுணர் வெழலாச்சு மன்னிப்பெழின் உய்வேனே. 4 பொல்லாத பழிபாவம் புகுந்திடவும் இடந்தந்த கல்லாத மாக்களினுங் கடையாய மனிதன்யான் நில்லாத விளையாட்டை நிலையாக நினைந்தழிந்தேன் நல்லார்தம் மனத்தமுதே நாயகமே பொறுத்தருளே. 5 புறமனத்தின் வழியுழலும் பொறிபுலனின் பொல்லாமை அறவுணர்ந்தே அகமனத்தில் அணைதருணம் ஆண்டவநின் உறவளித்தால் உயந்திடுவேன் ஒடுங்குந்தொல் வினையாவும் அறமலையே அருளருவி ஆனந்த மழையமுதே. 6 மதவெறியால் வாதப்போர் மலியிடங்கள் சென்றுழன்றேன் இதமறியேன் நிந்தனையும் இகல்பகையும் எழுந்தனவால் மதமெல்லாம் நீயொருவன் மருவுகின்ற நிலையுணர்ந்து பதமடைந்தேன் பரம்பரனே பழையவினை கழித்தருளே. 7 செருவார்க்கும் அரசியலில் சேர்ந்தார்ந்த மனந்திரும்பி அருளாக்க அரசியலில் அணைந்துபுக விழைவதனைத் தெருளான்ற அறவடிவோய் திருவுளநன் கறியாதோ இருளாற்செய் பிழைபொறுக்கும் இறையெனவந் தடைந்தேனே. 8 கன்மமெலாம் அநுபவித்தால் கட்டறுமென் றுரைக்கின்றார் கன்மமதில் கன்மமுளை கால்வழிகள் வறள்வதென்றோ கன்மவழி உழல்வதெனில் கருணைவள்ளால் நீஎதற்கோ கன்மவழி உழல்வதெனல் கடவுளுனை மறப்பதன்றோ. 9 கன்மமென்று நடுக்குற்றுக் கருத்துடைதல் எற்றுக்கோ வன்மமிலா அன்பிறைநீ என்றடியில் வணங்கிவினை உன்னிஅழு தழுதுருகின் உண்மையுணர்ந் தருட்பெருக்கால் கன்மமழி கணக்கறிந்தேன் கடவுள் நின தருளாலே. 10 24. முறையீடு பிறப்பிலே சாதி மதத்திலே சாதி பேசிடும் மொழியிலே சாதி நிறத்திலே சாதி நாட்டிலே சாதி நீதியில் நிறையினில் சாதி அறத்திலே சாதி ஆலயஞ் சாதி அழுகிய பிணத்திலுஞ் சாதி புறத்தகஞ் சாதி நாற்றமே எங்கும் புங்கவ அழித்தல்நிற் கரிதோ. 1 சாதியும் மதமும் சம்பிர தாயச் சாத்திரச் சூத்திரச் சழக்கும் சூதுடை வழக்க ஒழுக்கமும் சூழ்ந்து தொல்லருள் நெறியினை மறைத்துச் சோதியே உலகை அரித்துணல் கண்டும் சோதனை என்றுநீ இருந்தால் ஆதியே எளியேம் செய்வதொன் றறியேம் அருணெறி ஒம்புக அரசே. 2 திருநெறி என்னுஞ் செடிவளர் போழ்தில் சீறிய அலகையாய் வீறிப் பெருகிய சாதி முதலவெங் கொடிகள் பிறங்கலாய்ப் பிறங்கலாய் மண்டி அருளொளி படரா தடக்கினால் உலகில் அருநெறி எங்ஙனம் ஓங்கும் உருகிய உளத்தால் உன்னடி போற்றும் உண்மையை உணர்ந்தருள் அரசே. 3 மன்பதை இயங்கி மகிழ்வுற ஆதி மநுவெனும் மன்னவர் வகுத்த பொன்முறை யாலே பொங்கிய தன்பு பொலிந்ததிங் கமைதியே அந்த நன்முறைக் கூறு செய்தனர் பின்னோர் நானிலம் கலக்குற அரசே உன்னிய தென்னோ உலகினைத் திருத்தல் உத்தம ஒருவநின் கடனே. 4 அருணெறி செழிக்க அறத்தினர் தந்த அரசியல் எங்கணுந் தழைக்கத் தெருளறி வோர்கள் செய்தில ரதனால் செகமெலாம் கொலைக்கள னாச்சே மருளிலே வீழ்ந்து மன்பதை மறைந்தால் மன்னநின் னிடம்விடுத் தொருவா கருணைபின் னெவர்க்குக் காட்டுவை இன்பக் கடவுளே என்னுடை அன்பே 5 அன்பினில் வளர்ந்த அரசியல் சாய ஆசையே அரசியற் பேயாய்த் தன்னலத் தாயாய் விளம்பரத் தலையாய்த் தாக்கிடும் தாள்களாய்க் கட்சி வம்புக ளாகி வாதமாந் தேர்வாய் வதைபடைப் புரட்சியாய்க் கொலையாய்த் துன்புசெய் கோரம் சொல்லவும் ஒண்ணா தொலைத்தருள் சுதந்திரத் தேவே. 6 மக்களாய்ப் பிறந்தோர் மாக்களாய் மாற மரபிலா அரசியல் துணைசெய் சிக்குளே வீழ்ந்து செகமெல்லாம் சிதைந்து சிறுகுமிந் நாளினில் யாண்டும் பக்குவ ரில்லை பண்பினால் ஆக்கப் பரமனே நிலைமையை அறிவாய் விக்குளின் நேரம் விழிபுரள் வேளை விமலனே காத்தருள் செய்யே. 7 கைத்தொழில் செய்து கடவுளே என்று கழல்நினைந் தருளினால் வாழ்ந்த வித்தக வாழ்வு வீழ்ந்தது மின்னால் மேய்பொறிப் பேயினால் எழுந்த பித்தமே திரண்ட முதல்தொழில் பிரிவாய் நாடுகள் ஆசையாய் முடுக அத்தனே பழைய தொழில்வள ராட்சி அவனியில் அமைதர அருளே. 8 நாடுகள் ஆசை நாடுதல் செய்யும் நலமிலா ஆட்சியே வேண்டா பாடுக ளெல்லாம் குண்டுக ளாகிப் பாரினை அழித்திடல் தகுமோ ஏடுகள் படித்தோர் ஏழைகள் உழைப்பை எப்படி உணருவ ரந்தோ வாடுநர் குறைதீர் வள்ளல்நீ என்றே வந்தனன் திருவடி நினைந்தே. 9 சாதியும் மதமும் முதல்தொழில் முதலாம் தடைகளும் சாய்த்தன பொதுமை ஆதியே அதனை ஆணவச் செயலால் அமைத்தலின் அருமையை உணர்ந்து நீதியில் நிலவும் நின்னருட் டுணையே நினைந்தநல் வினைபுரி குழுவில் ஒதுதற் கரிய ஒருவனே கூடி உயர்பணி செய்யவேண் டுவனே. 10 25. முறையீடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யனாய்த் திரிதரு பாவி மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்து மெய்யனாய் மேவுதல் என்றோ செய்யனே உன்றன் சித்தமென் மீது திரும்பினால் சீர்பெறல் கூடும் உய்யவே அருளாய் உண்மையே எங்கும் உளமுடை ஒப்பிலா மணியே. 1 கருத்தினால் பாவம் கண்ணினால் பாவம் கைகளால் பாவமே நிகழ்த்திப் பருத்தனன் கொழுத்த பாவியாய் வளர்ந்து படுசுமை பாரினுக் கானேன் கருத்தனே பாவக் கடல்கடந் தேறுங் கவட்டையைக் காண்கிலேன் நிலையை ஒருத்தனே அறிவாய் உதவிடல் வேண்டும் உனைவிடக் களைகணும் உண்டோ. 2 எங்கணும் உள்ளாய் ஈசனே பாவம் எப்படி நுழைந்ததோ அறியேன் இங்கதை ஆய இறங்கினன் நூல்கள் எடுத்தனன் அடுத்தனன் பலரைச் சங்கையே வளரச் சஞ்சலம் பெருகச் சார்ந்தனன் திருவடி இன்று புங்கவா புனிதா பொருந்திய பாவம் பொன்றிடச் செய்தருள் அரசே. 3 புறத்ததோ பாவம் அகத்ததோ என்று புந்தியைச் செலுத்திய புலவோர் புறத்ததே என்றும் அகத்ததே என்றும் புனைந்தனர் பலப்பல நூல்கள் அறத்திலே விளங்கும் ஐயனே அவைகள் அலைத்தலைத் தரிப்பதை அறிவாய் மறத்திலே விழுந்த என்மனம் மாய மாசிலா மணியருள் புரியே. 4 பாவமே நிகழ்த்திப் பாவியேன் வளர்ந்தால் பண்புறு நாளுள வாமோ காவலே செயினுங் கண்முதற் புலன்கள் கட்டுறல் அரிதெனக் கண்டேன் தாவர மென்னச் சலனமில் தவமோ சாருநாள் எந்தநாள் அறியேன் ஆவதென் வாழ்வில் ஐயனே படைத்த அப்பனே அடைக்கலம் அடியே. 5 கண்ணினை மூடக் காற்றினை அடக்கக் கருத்தினை ஒடுக்கிடச் சொல்லும் பண்ணிலா யோகர் படிகளி லுழன்றேன் பாழினிற் கழிந்தது காலம் மண்ணிலே பிறந்த பயனினை இழக்க மனமிலை வழியெனக் கருளாய் விண்ணிலே மிளிரும் விளக்குகட் கொளிசெய் மெய்விளக் கேயரு ளொளியே. 6 சிற்பர நின்றன் திருவருட் குறிப்பைத் தெளிந்துணர் திறமிலாக் காலம் பற்பல துறையில் பணிசெயப் பாவம் படர்தொறும் படர்தொறும் அரசே கற்பனை கடந்த கடவுளே அவ்வக் காலையில் காத்தமை இந்நாள் அற்புத மென்ன விளங்கியும் அருளில் அணைகிலா அறிவிலி யானே. 7 ஐயனே நின்றன் அருள்வழி நிற்க அடியனேன் முயன்றனன் முயன்றும் செய்யஅவ் வழியே செல்லவும் நினது திருவருள் வேண்டுமென் றுணர்ந்து கையனேன் நெஞ்சக் கல்கரைந் துருகிக் கண்புனல் உகுப்பதை அறிவாய் மெய்யனே கருணை வெள்ளமே புலனை வென்றிலேன் வெல்வகை யருளே. 8 இயற்கையின் உயிரே இன்பமே அன்பே ஈசனே என்னையும் படைத்துச் செயற்கையைப் படைத்த திறத்தினை அறியேன் தெய்வமே உயிர்களின் உள்ள முயற்சியின் பயனே முனிவிலா முதலே மூடனேன் நிலையினை அறிவாய் பயிற்சியும் படிப்பும் என்செயும் பண்பே! பாவியென் பிழைபொறுத் தருளே. 9 கற்றவ னென்று கருத்திலே செருக்கிக் காலமே கழித்தனன் வீணில் நற்றவஞ் செய்ய நாளிலை நல்ல ஞானிகள் கூட்டமு மில்லை குற்றமே செய்தேன் குறைபல உடையேன் குணமலை நீயெனத் தெளிந்தேன் பற்றென உன்னைப் பற்றினேன் இன்று பரமனே பார்த்தருள் செய்யே. 10 26. முறையீடு எத்துணைப் பிறப்போ எத்துணை இறப்போ எடுத்தனன் உலகினில் ஏழை அத்துணைப் பிறப்பும் அத்துணை இறப்பும் ஆண்டவ நின்னருட் கொடையே பத்திமை யோங்கப் படைத்தனை இந்தப் பண்புறு பிறவியை அந்தச் சத்திய நெறியில் நின்றிலன் பரம சாந்தமே அருள்புரி வாயோ. 1 நெறியிலே நில்லா நீசனேன் என்று நித்தனே தள்ளிநீ விட்டால் பொறியிலேற் கெந்தப் புகலிட முண்டு பொறுத்தலும் அருளலும் பொருந்தும் அறவியல் புடைய அண்ணலே உன்னை அடைந்தனன் பிழைபொறுத் தாளாய் அறிவிலி அழுத அழுகையை அறிவாய் அடைக்கலம் அடைக்கலம் அரசே. 2 பலதிறத் துறையில் படிந்தனன் பாவி பரமநின் னடியினை மறந்தே சிலதினம் உன்றன் சீரடி நினைக்கச் செய்ததும் அருட்டிற மன்றோ கலதிய ரேனும் பிழைகுறித் தழுது கசிந்துளம் உருகினால் அருளும் சலதியே அமுதே சார்ந்தனன் அடியில் சழக்கனை ஆண்டருள் செய்யே. 3 வீடுகள் கவலை வீதிகள் சவலை விரிபதி ஊர்களுங் குழப்பம் நாடுகள் புரட்சி பாடுகள் அதிகம் நாதனே அமைதியை நாடிக் காடுகள் புகினுங் கட்டுகள் சட்டம் கடித்திடுங் கொடுமைசேர் காலம் வாடுறு மனத்தால் வந்ததை அறிவாய் வள்ளலே வழியருள் செய்யே. 4 அமைதியே வாழ்க்கை நோக்கமென் றறைந்தார் அன்றருட் குரவர்கள் இன்றோ அமைவுறு தொழிலும் வாழ்க்கையும் அரசும் அமைதியை அரித்திடல் வெளியே சமயமும் உரிய கோயிலும் அமைதி சாய்த்திடும் நிலைமைநேர்ந் துளதால் இமயமா நிற்க எண்ணினேன் ஈசா இயலுமோ பரபரப் பிடையே. 5 மலையொடு பொழிலும் நதியொடு கடலும் மங்கையும் குழவியும் மதியும் கலையென நின்றே அமைதியை வழங்குங் காட்சியும் நெஞ்சினைக் கவரா நிலைமையை, உற்ற நிலத்தினை, மாற்றி நிறுத்திட எவர்தமால் இயலும் அலைவிலாச் சாந்த அமுதமே அருளால் அமைவுறா உலகமும் உண்டோ. 6 உலகினிற் பாவம் உறுத்தெழுந் தெரிக்கும் உண்மையை ஒருவனே அறிவாய் அலகிலா தெழுந்தால் அழித்திட வல்லார் ஐயனே யன்றிவே றுளரோ உலகுயி ரளித்துப் பாவமும் அளித்த உத்தம அருள்வணன் நீயே திலகமே உள்ளந் திகழொளி விளக்கே செல்வமே திருவருள் செய்யே. 7 இலக்கியம் பயின்றேன் இலக்கணம் பயின்றேன் எழிற்கலை பலப்பல பயின்றேன் அலக்கழி சரியை கிரியையில் நின்றேன் ஐம்புல யோகினில் நின்றேன் துலக்கஎன் னறிவைத் தோயநின் அன்பில் துகளற வாழ்வினில் ஐயா நலக்குற நோக்கின் நானற லுண்மை நாயக அருள்புரி யாயோ. 8 சீலமே நிற்கச் சிறியனேன் முயன்றேன் சிதைந்ததை இடையிடை அறிவாய் சீலமும் உனது திருவடித் தியானச் சிறப்பினில் விளையுமென் றுணர்ந்தே ஓலமே இட்டேன் குறைமுறை இட்டேன் ஒருமொழி கேட்டிலேன் என்றன் ஆலமே உண்டுன் அமுதினைச் சொரிவாய் ஆனந்த வான்மலை முகிலே. 9 முன்வினை என்றும் நிகழ்வினை என்றும் முகிழ்தரு பின்வினை என்றும் என்னவோ எழுதிச் சென்றனர் உளத்தின் எண்ணமோ அறிகிலேன் எல்லாம் உன்வினை என்னும் உண்மையை உணர்ந்தால் உறுதுயர் எங்ஙனம் பெருகும் பொன்னடி மறவாப் புண்ணிய நெறியே புனிதமே பொலியவைத் தருளே. 10 27. முறையீடு உன்னையே நினைக்க உன்னையே பேச உன்னருட் டொண்டையே ஆற்ற என்னையோ செய்தேன் ஏக்குறு கின்றேன் எப்படி உய்குவன் ஏழை உன்னியே பார்த்தேன் உளமெலாம் நடுக்கம் உறுவதை நீயுநான் அறிவேம் கன்னலே கரும்பே கருணையங் கனியே கடையனேன் பிழைபொறுத் தருளே. 1 கன்னலின் பாகே கட்டியே கரும்பே கருணைசேர் அமுதமே உன்னை முன்னைய வாழ்வில் முன்னிய தில்லை முற்றிலும் மறந்தது மில்லை பின்னைய வாழ்வில் முன்னினேன் பெரிதும் பேயனேன் மறந்ததும் உண்டு அன்னையே என்றும் அப்பனே என்றும் அடைந்தனன் பிழைபொறுத் தருளே 2 கல்வியில் விழ்ந்தேன் கலைகளில் வீழ்ந்தேன் கருணையில் வீழ்ந்திலேன் பாவி செல்வமோ இல்லை சேற்றினில் வீழத் திருவருட் டுணையென மகிழ்ந்தேன் பல்வகைக் களியில் படருறா நெஞ்சம் பரமனே அளித்தனை வாழி தொல்வினை அழிந்தால் நல்லுடல் பெறுவேன் தொடர்ந்தனன் பிழைபொறுத் தருளே. 3 சாதியில் நெளிந்தேன் மதங்களில் உழன்றேன் சாத்திரக் குப்பையில் புரண்டேன் நீதியே நாள்கோள் நினைந்தனன் நாயேன் நித்தியச் சத்தியப் பொருளே ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அநாதியே அனைத்திலும் உள்ள சோதியே தொல்லை வினைஎரி சுடரே சூழ்ந்தனன் பிழைபொறுத் தருளே. 4 நாத்திக நூலில் நாடிய குழுவில் நாட்டமும் வைத்தநா ளுண்டு நாத்திகம் என்னை நண்ணிய தில்லை நாதநின் அருளது போலும் ஆத்திக வேடம் அதிகமே உலவி அழித்தது அருணெறி, உண்மை ஆத்திகஞ் செழிக்க ஆருயிர் தழைக்க அணைந்தனன் பிழைபொறுத் தருளே. 5 செல்வமு மின்றிச் சீர்மனை யின்றிச் சிறக்குநன் மக்களு மின்றிப் பல்வள மின்றிப் பணித்தனை வாழப் பரமனே அதனுளங் காண வல்லமை யுண்டோ வாழ்க்கையை வகுக்கும் வள்ளல்நீ, அதன்படி ஒழுகிச் செல்வதென் கடமை சிறுமையால் இடையில் செய்தவெம் பிழைபொறுத் தருளே. 6 செல்வமோ சிறப்போ சேண்மையில் நின்று திகழ்தரும் போதெலாம் தடைகள் ஒல்லெனத் தோன்றும் உள்ளமும் மாறும் உலகமும் நகைசெயும் அரசே செல்வமுஞ் சிறப்பும் தெய்வமே உன்றன் திருவடி மலரெனக் கொண்டு நல்லவே பொழுது போக்குவன் நடுவில் நண்ணிய பிழைபொறுத் தருளே. 7 அளவிலாச் செல்வம் நினதெனும் ஞானம் அடையவே அடியனை இங்கே அளவுடைச் சிறுமை அமைதரு செல்வம் அடைவதைத் தடுத்தனை போலும் களவுறா இயற்கைக் கருணையாஞ் செல்வம் கண்ணனுங் கிறித்துவும் மற்ற வளவரின் செல்வம் வள்ளலே அளித்தாய் வழியிடைப் பிழைபொறுத் தருளே. 8 பிறந்தனன் இங்கே இறப்பனோ இங்கே பெயர்ந்துயான் எவ்விடஞ் செல்வேன் மறந்தனன் வழியை மயக்கினைப் போக்கும் மருந்துடை மருத்துவன் நீயே திறந்தன எல்லாம் சென்றுசென் றுழன்றேன் சேரிடந் தெரியவே இல்லை சிறந்தது காணத் திருவடி அடைந்தேன் சிறியனேன் பிழைபொறுத் தருளே. 9 பொன்னினிற் பொன்னே மணியினின் மணியே பொலிவினிற் பொலிதரு பொலிவே அன்னையின் அன்பின் அருளுடை அன்பே அழிவிலா இன்பமே அடியார் முன்னிய வண்ணம் முறைமுறை பெற்றார் மூர்க்கனேன் அடியனா வேனோ என்னயான்! ஈசா எப்படி உய்வேன் எளியனேன் பிழைபொறுத் தருளே. 10 28. விண்ணப்பம் எல்லாமாய் அல்லவுமாய் இருக்கும் ஒன்றே இயற்கையுடல் கொண்டருளும் இன்பே உன்னை நல்லாரும் பொல்லாரும் நாடல் என்ன நண்பரொடு பகைவர்களும் நண்ணல் என்ன கல்லாருங் கற்றவருங் கருதல் என்ன கருணையரும் வன்கணருங் கழறல் என்ன எல்லாரும் ஈசனென ஏத்தல் என்ன ஏழையேன் தெளிவுபெற இசைப்பாய் ஐயா. 1 பல்லுலகம் உனைப்போற்றிப் பரவல் உண்மை பரவலிலே பலதிறங்கள் பார்க்க லானேன் நல்லுலகம் பயன்கருதா ஞானப் பாதை நண்ணிஉனைப் பரவுதலை உணரச் செய்தாய் சொல்லுலகம் நடிப்பச்சம் பயனை நாடல் சூழஉனைத் தொழுதுவரல் தோன்றச் செய்தாய் நல்லுலகை நாடஅருள் நாயேன் உய்ய நாதாந்தங் கடந்தொளிரும் ஞானத் தேவே 2 காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக் கதைபேசித் தொழில் புரிந்து காசு தேடி மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ மக்கள்நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும் மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங் காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக் கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத் தேவே. 3 இளமையிருந் தெவ்வழியி லேனும் உன்னை எப்படியோ விதம்விதமாய் எண்ணி வந்தேன் வளமையிலும் எளிமையிலும் வணங்கி வந்தேன் வாதையிலும் மகிழ்வினிலும் வாழ்த்தி வந்தேன் உளஅலைகள் ஒடுக்கமுற உன்னி வந்தேன் உறாமையிலும் மறவாமல் ஓதி வந்தேன் களமொழியக் கட்டறுத்துக் கனவி லேனும் காட்சியினைக் காட்டாயோ கருணைத் தேவே. 4 பாவமனம் வாயுடலம் வகுத்தார் யாரே படைபடையாய்ப் பாவங்கள் படைத்தார் யாரே தேவஉன தகமறியேன் சேயின் கையில் தெறுகொள்ளி கொடுத்துவிடின் சேர்வ தென்னோ பாவமெலாம் பகர்ந்துருகின் மன்னிக் கின்ற பண்புடைமை உனக்குண்மை பிறங்க வைத்தாய் காவலிலே புலன்வைத்துக் கசிந்து நிற்கும் கடையன்நிலை கண்டருளாய் கருணைத் தேவே. 5 மூக்குநுனி நோக்கலொடு மூச்சை ஈர்த்தல் மூலஅன லெழுப்பலொடு பாம்பைத் தூண்டும் தேக்கமுத மலயோகச் சிந்தைவிட்டுத் தியானமெனும் அமலத்தின் தெளிவிற் சேர்ந்தேன் வாக்குமனப் பாவம்அறை வலிமை பெற்றேன் வந்துமுறை யிடுகின்றேன் வள்ளால் முன்னே நோக்கியருள் மன்னிப்பை நுழைவே றில்லை நோய்தீர அழுவதென்றன் நோன்பே ஐயா. 6 என்பாவம் வெளிப்படையாய் இயம்பும் ஆற்றல் எனக்களித்த வீரஇனி எளிய பாவம் என்பாலில் அணுகிவர எண்ணுங் கொல்லோ எண்ணினதைத் தலையெடுக்க ஈசா உன்றன் அன்பீனும் அருள்விடுமோ அரசே என்னை அருமந்த பிள்ளைகளில் ஒருவ னாக்கி இன்பாரச் செய்யஉளம் இசைந்தால் உய்வேன் எங்கெங்கும் வீற்றிருக்கும் இனிமைத் தேவே. 7 பாவமெலாம் எங்கிருந்து பரவிற் றென்று பனுவல்களை ஆய்ந்தாய்ந்து பார்த்துச் செத்தேன் மேவியதென் ஐயமின்றி வேறொன் றில்லை விரிவாய்தல் அருளில்லா வித்தை வேலை தாவியவெம் பாவத்தால் தவிக்கும் நாயேன் தற்பரனே உனையடைந்தேன் தக்க மார்க்கம் ஆவிநலம் உறக்காணும் அறிவு பெற்றேன் அழியாத ஆனந்த அருண்மைத் தேவே. 8 பாவமெனில் நடுங்குமனம் பாவிக் கீந்தாய் பரமநின தருட் பெருக்கைப் பரவல் எங்ஙன் ஆவியெலாம் பரவிடினும் ஆற்றா தன்றே ஆண்டவனே ஆருயிரே அமுதே அன்பின் காவியமே ஓவியமே கலையே தெய்வக் கற்பகமே கற்பகஞ்சேர் கருணைக் காவே காவிலுறு கடிமணமே மணத்தின் சூழ்வே கண்காண உளங்காணக் காட்சி நல்கே. 9 உலகிலுள பாவக்கார் ஓடிஒடி உறுத்துருமி நச்சுமழை உரமாய்ப் பெய்து மலையருவி முதலாகி மண்டி மண்டி மலட்டாறாய் ஊற்றாறாய் வானா றாகி நிலைகளெலாம் நிரப்பிஉயிர்ப் பயிர்கள் வேக நெருப்பாகி எரித்துவரல் நிமலா காணாய் நிலமழிந்தால் நின்னருட்கு வேலை ஏது நிறைபொருளே அமுதமழை நிரம்பப் பெய்யே. 10 29. அருள் வைப்பு பச்சையிளங் குழவியிலே பாவிசெய்த தறியேன் படிப்படியே வளருங்கால் பாவமுடன் வளர நச்சரவக் கூட்டரவை நண்ணவைத்த தென்னோ நல்லிளமைப் பருவத்தே நாதஉனை நினைந்த இச்சையிலும் பழிபாவம் இயங்கவைத்த தென்னோ என்வினையோ உன்னருளோ ஏழைஅறி யேனே எச்சமெலாம் நீறாக்கி எனையாளல் வேண்டும் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய அரசே. 1 இளமையிலே உன்நினைவும் இழிபாவ நினைவும் இரண்டுமொன்றாய் இயங்கவைத்த எண்ணமறி வேனோ முளைகிளரிப் பாவஎண்ணம் முகிழ்த்துமர மாகி மூடாமல் காத்தநுட்பம் மூர்க்கனறி வேனோ தளையுளதென் றறைந்துவிட்டார் தரணியிலே அறிஞர் தளைநினைவின் வேரறுக்குஞ் சக்தியிலை எல்லாம் விளைமுதலே உனைநோக்கி வேண்டுகின்றேன் அருளே வேறுதுணை இலைஎனக்கு வினைகடந்த பொருளே. 2 அயலவரின் மொழியினிலே ஆர்வம்வைத்தே அலைந்தேன் அதிற்பெரிய பட்டம்பெறும் ஆசையிடை வீழ்ந்தேன் மயலொழிய மனமாற மறித்தஅதி சயத்தை மாதேவா என்னசொல்வேன் மடமையறிந் தேனே கையிலெழு துங்கணக்குக் கதியெனவே கொண்டேன் கடிதிலதை விரைந்தொழித்த கருணையென்ன அரசே செயலினிலும் நீகலந்து செய்ததுணை உணராத் தீயன்பிழை பொறுத்தருளாய் திருவருளின் வைப்பே. 3 பள்ளியிலே போதிக்கும் பணியுவந்தே ஏற்றேன் பரமஅதன் பற்றறுத்த பான்மைஅறி யேனே கொள்ளைஎரி அரசியலில் குதித்துநின்றேன் ஐயா கொதிப்படக்கிப் பதைப்பொழித்த குணத்தையறி யேனே தெள்ளுதொழி லியக்கத்தில் சேவைசெய்தேன் பன்னாள் சிந்தனையீ டேறாது செய்ததறி யேனே வள்ளலுன தருட்பெருக்கின் வகையுணரா தொழிந்தேன் மலரடிஎன் தலைமீது வைத்தருளா யின்னே. 4 மனைவியொடு மக்களொடு மகிழ்வுடனே வாழ்ந்தேன் மாளஅவர் உளங்கொண்ட மாண்பையறி யேனே மனைவியென மற்றொருத்தி மனத்தில்மரு வாத வண்ணஞ்செய் வல்லமையின் வகையைஅறி யேனே தனிமையிலே வாழ்ந்துபணி தரணியிலே ஆற்றத் தற்பரநின் தயவென்ற தன்மையறி யேனே பனிமொழியர் காட்சியிலே பரமநின தொளியைப் பார்க்கஅருள் சுரந்தநலம் பாடஅறி யேனே. 5 உணவிலுளம் வைத்துவைத்து வகைவகையில் உண்டேன் உணவுளத்தை வறட்டுவித்த உளவைஅறி யேனே வணவணமாய்ப் பட்டாடை வரிந்துகட்டி வந்தேன் வரிவழக்கம் அறவொழித்த மர்மம்அறி யேனே கணகணமாப் பேச்செழுத்தால் கலக்கிவிட்டேன் நாட்டைக் கலக்கவழி மறைத்தடைத்த கணக்கைஅறி யேனே நிணநிணமே செறிபுரட்சி நினைந்தநெஞ்சை அப்பா நீக்கியற மாக்கியதன் நீர்மையறி யேனே. 6 சாதிமதச் சாக்கடையில் சருக்கியடி வீழ்ந்தேன் சமரசசன் மார்க்கமெனுஞ் சார்பளித்த தெதுவோ ஓதுகலை மயற்கடலில் உளமிருத்திப் படிந்தேன் உயர்இயற்கை கலையென்றே உணர்வித்த தெதுவோ போதனையில் நெடுங்காலம் புந்திவைத்தேன் ஐயா போதனையிற் சாதனையே பொருந்தியதென் றெதுவோ சோதனையில் ஆழ்ந்தாழ்ந்த சோதனைக்கும் எட்டாச் சோதிநின தருளன்றிச் சூழ்வதுவே றுளதோ. 7 உருவவழி பாட்டுறுதி ஒரோவழியிற் செய்தால் உறுதிகுலைந் தொருமைகெடும் என்றுரைத்த தெதுவோ திருவுடைய அகத்திணையின் சேர்க்கைபெற்றா லுருவத் திறம்விளங்கும் என்றுணர்த்தித் தெளிவித்த தெதுவோ உருவமெனக் கல்வணங்கல் உயர்வழிபா டாகா ஓவியமே உளங்கவர்வ தெனத்தெரித்த தெதுவோ உருவருவம் ஒன்றுமின்றி ஓங்குபரம் பொருளே உன்னருளே எனக்கொண்டேன் உண்மையெனக் கருளே. 8 குருமணியின் காட்சியிலே வேட்கைகொண்டேன் அரசே கோதில்குரு நாதனுண்மைக் குணங்குறித்த தெதுவோ பருமையிலே மனஞ்செலுத்திப் பன்மையிலே வீழ்ந்தேன் பருப்பன்மை ஒருமைக்குப் படியென்ற தெதுவோ கருமமறல் ஞானமெனக் கருத்திருத்தி வந்தேன் கைம்மாறெண் ணாக்கருமஞ் செய்யென்ற தெதுவோ பெருமநின தருளன்றிப் பேசுதல்வே றுண்டோ பிழைபொறுக்கும் அருளுடைய பெரியபரம் பொருளே. 9 என்னுடைய வாழ்வினைநீ இயக்கிவரும் நுட்பம் இளமையிலே உணராமல் இறுமாப்பால் கெட்டேன் உன்னுடைய அருளாலே உழலுமொரு பாவி உனைமறந்தேன் உய்வேனோ உண்மையிலே கெட்டேன் என்னிலைமை அறியாமை எங்குமுள அறிவே ஏழைமுகம் பார்த்தருளி இரும்பிழைகள் பொறுப்பாய் கன்னலினும் இனிக்கின்ற கருணைபெரு கமுதே காட்டில்வலைப் பட்டகலை கதியானேன் அரசே. 10 30. குறை களைவு அறியாமை எனுமுதலை அடர்ந்ததெனை என்றோ அதைஅகற்றும் ஆற்றலுயிர்க் கில்லையென அருளால் குறியேதும் இல்லானே குறிஉடலும் உலகும் கொடுத்தறிவை விளக்கியதை மறந்தொழிந்த கொடியேன் வெறியேறி இழைத்தபிழை அத்தனையும் பொறுத்து மேலேற்றப் படிப்படியே மனந்தெளியச் செய்த நெறியோனே நின்மலனே நின்பெருமைத் திறத்தை நேர்மையிலேன் எவ்வாறு நினைந்துபுகழ் வேனே. 1 அருளரசே எனக்களித்த அகத்தினிலே அகந்தை அரக்கனுழைந் தாட்சிசெய விடுத்த அறியாமை மருளுடையேன், அவன்கொடுமை மாதேவா அறிவாய் மறமிக்க அவனைமறி வகையறியேன் வலியோ தெருளுணர்வோ ஒன்றுமிலேன் செய்வதொன்றும் அறியேன் திக்கற்ற பாவிக்குத் துணைஎவரோ சொல்லாய் இருளடைவில் வாடுகின்ற ஏழைமுகம் பாராய் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய இறையே. 2 பொன்மனத்தை எனக்களித்தாய் புண்ணியனே அதுவோ புகுந்தசஞ்ச லத்தாலே புலிகரடி முதலாம் பன்மிருகம் உலவுகின்ற பரற்காடாய்ப் போச்சே பழமலையே புதுப்புனலே பரங்கருணைக் கடலே உன்னையே நினைந்துருகும் உயர்நிலையை இழந்தேன் உலகினிலே ஏன்பிறந்தேன் உத்தமனே சொல்லாய் என்னிலையைப் பண்படுத்த எண்ணுதியேல் உய்வேன் இல்லையெனில் என்செய்கேன் ஏழைமுகம் பாரே. 3 சீற்றமெனுள் ஊற்றெடுத்துச் செறிந்தார்த்த சேட்டை செப்புதற்குஞ் சொல்லுண்டோ சீறுபுலி நாணும் கூற்றுருவாய் முடுக்குங்கால் குருதியெலாங் கொதிக்கும் கூர்நரம்புக் கட்டிளகும் கொல்லுமது ஒடுங்கப் பாற்றியுளத் தமைதியெனும் பரிதியெழ அருளிப் பாவியெனைத் தடுத்தாண்ட பரங்கருணை நிதியே சேற்றிடையில் கமலமெழத் தேன்பிலிற்ற வண்டு தித்திக்கும் பாட்டோதச் செய்யிறைநீ யன்றோ. 4 வன்மஅனல் எரிக்கிரையாய் மாய்ந்துவந்த காலை மனஅமுதாய்த் தண்மைபொழிந் தாண்டவண்மை வாழி கன்மமது கரைகாணாக் கடலென்றே அஞ்சிக் கலங்கியஎன் கலக்கொழித்த கருணைநிலை வாழி பன்மைமயக் குறும்வழியே பகைமைவளர் எனக்குப் பண்பொருமை இன்புணர்த்தும் பான்மையருள் வாழி தன்மமலை யாயிலங்கித் தயைஅருவி சொரியும் தண்மையனே பண்மையனே தனிநீதி வடிவே. 5 ஆசையெனும் அலகைஅன்பை அடக்கிவிலங் கிட்டே ஆளஇடந் தந்தபின்னை ஆளநினைந் தாயோ ஈசஅதை அறத்தொலைத்தால் எவ்வுயிரும் ஆவேன் இன்பநிலை வேறுண்டோ ஏழைஅறி யேனே வீசுவெயில் படர்ந்துவர விலகிவறள் நீர்போல் விரிஆசை நின்னொளியால் விலகிஅற ஐயா வாசமலர் இளமையிலே மனஞ்செலுத்தி வந்தாய் வள்ளலுனக் கெவ்வகையில் வழங்குவன்கைம் மாறே. 6 காமவெறிக் கடல்கடந்து காதற்கரை நண்ணிக் காணாத நெறிகாணக் கண்ணளித்த கண்ணே சேமமுற ஒருத்தியுடன் சிலஆண்டு வாழ்ந்து சேயடைய அன்புபெறச் செம்மைபுரி அறமே தேமொழியர் ஒளியினிலே திகழ்தாய்மை நுட்பம் சிந்தையினில் படியவைத்துச் சிக்கறுத்த பதியே காமமெனப் பெண்ணுலகைக் கருதாத கல்வி காசினியில் பெருகிவரக் கடவுளருள் செய்யே. 7 தனியொருத்தி மணந்தறத்தில் சார்வாழ்க்கை மற்றத் தையலரைத் தாயென்று சால்புறவே கருதும் இனியமனத் திருவளித்தல் என்றுணரச் செய்தாய் இயற்கைமணந் தின்பநல்கும் இறைவநின தருளே கனிமொழியர் மாயையெனக் கடிமணத்தைத் துறந்தோர் காமஎரிக் காளாய கதைகள்பல அறிவாய் தனிமைவழி படைப்புளத்தைத் தகர்ப்பதன்றோ வளரும் தரணியிலே பெண்மைநலம் தழைக்கஅரு ளாயே. 8 மருட்புகழில் என்மனம்போல் விழுந்ததிலை என்று மற்றதனைத் துறக்குமகம் மலரவைத்தாய் போலும் பொருட்பெருக்கு களியாடல் புகுவிக்கு மென்று புன்மையனை எளிமையிலே பொருந்தவைத்தாய் போலும் அருட்சிறப்பால் அல்லலெலாம் அறுத்தலுக்கென் றன்பால் அன்றாட அப்பமெனக் களிக்கின்றாய் போலும் இருட்செறிவே இல்லாத இன்பஒளி விளக்கே எங்கெங்கும் எவ்வுயிரும் இருந்தருளும் இறையே. 9 ஆசைபுகழ் முதலாய அறியாமைச் சேய்கள் அத்தனையும் ஆட்சிசெய எத்தனையோ பிறவி நாசமடைந் தொழிந்திருக்கும் நானறியேன் எச்சம் நாதஇந்தப் பிறவியிலே நல்லருளால் சிதையும் ஓசைசிறி தெழவுணர்வும் உற்றதையா முற்றும் உண்மைவிடு தலையடைய ஒழிந்தபழம் பிறப்பின் வாசமுணர் வகைதெளிய வள்ளல்! வழிகாட்டாய் வாக்குமனங் கடந்தொளிரும் மாசில்லா மணியே. 10 31. வழிபாடு வாக்குமனங் கடந்தவன் நீ வாக்குமன முடையேன்யான் போக்குவர வற்றவன் நீ போக்குவர வுடையேன்யான் யாக்கையிலா மேலவன் நீ யாக்கையுடைக் கீழவன்யான் தேக்கின்ப வழிபாடு செய்வதெங்ஙன் சின்மயனே. 1 உருவுண்டு வாக்குமன ஒலிக்கென்பர் அகத்திணையார் அருவமுரு அன்றென்றல் அறியாமை அஃதுமுரு அருவமுரு எனும்பேதம் அமைநுண்மை பருமையிலே உருஅருவம் ஒன்றுமிலாய் உன்னலெங்ஙன் உண்மையனே. 2 மதியாலே உணர்ந்தாலும் மனத்தாலே நினைந்தாலும் பதியேஎவ் வுருவாதல் படிந்துவிடும் எவ்வண்ணம் துதியேற வழிபடுதல் துணையுருவம் இல்லானே கதியேஉன் னடைக்கலமே காட்டுவழி செம்பொருளே. 3 வாக்குமனங் கடந்தவனே வாழவைத்தாய் வழிபாட்டைத் தூக்கியற்கைக் கோயில்வழி தொன்மைமிகும் அக்கோயில் ஆக்கியநாள் எந்நாளோ ஆண்டவனே நீயறிவாய் பாக்கியமே வழிபாடு பண்பியற்கை வடிவோனே. 4 நீல்வளரும் வான்கோளும் நிலாப்பகலும் பால்வழியும் மால்வரையுங் காடுவயல் மாகடலும் ஆயஉனை நூல்வலவர் ஓவியமா நுண்ணுருவந் தரநினைப்பில் கால்வைத்த வழிபாடு கருத்தில்புக இறையருளே 5 ஒவியநுண் ணுயிர்நிலையை உணராது வழிபாட்டைத் தாவியவர் கல்லுருவே தனிக்கடவு ளெனக்கொண்டார் மேவியஅம் மடமைக்கோள் மேதினிக்கண் மூடியதே ஒவியநுண் பொருளோங்க உடையவனே உளங்கொள்ளே. 6 புறமனத்தின் ஆட்சிவிழும் ஓவியத்தின் வழிபாட்டால் அறமணக்க உள்மனத்தின் ஆட்சியெழும் எனஉணருந் திறமளிக்க வல்லவநின் திருவருளாம் அடிமலரின் நறவருந்தி இன்பமுற நானழிய வேண்டுவனே. 7 ஒன்றலுநெஞ் சோவியத்தில் உயர்அமல யோகமென்றும் தின்றுகொழுத் துயிர்ப்படக்கல் சிறுமைமல யோகமென்றும் நன்றறியச் செய்தமையால் ஞானநெறி விளங்கியது நன்றிபுரி வகையறியேன் நன்றிகரு தாப்பரமே. 8 இயற்கையிலே நீஇருக்கும் இனிமையினை வழிபாட்டுப் பயிற்சிமிகத் தெளிவாக்கும் பண்பமைத்த பெரியோய்அம் முயற்சியிலே நுழையாது மூச்சடக்கல் அறிவாமோ இயற்கைவழி பாடோங்க ïiw!ஆட்சி செலுத்துதியே. 9 வழிபாடே வழிபாட்டை ஒருவுநிலை சேராமுன் வழியதனை விரிமனத்தார் வலிந்துவிடல் கேடன்றோ பழிபாவம் அவராலே பரவிவரும் பாரழியும் வழிபாட்டின் வழிவளர வள்ளலதை ஓம்புகவே. 10 32. வழிபாடும் கோயிலும் வழிபாட்டுக் கென்றறிஞர் வகுத்தெடுத்தார் கோயில்களை இழிபாட்டுக் கவைஇந்நாள் இரையாதல் கண்கூடு கழிபாட்டை என்றழுது கதறுகின்றார் அடியரெலாம் பழிபாட்டைக் களைந்தருளிப் பண்பளிப்பாய் பரம்பொருளே. 1 அமைதியுற அகக்கரணம் அமைந்ததிருக் கோயில்பல அமைதியழி பகைக்களனாய் ஆனவிதம் நீயறிவாய் அமைதிபெற எங்குற்றே அடியவர்கள் வழிபடுவர் அமைதியெனும் மெய்ப்பொருளே ஆண்டவனே பார்த்தருளே. 2 நாடுகளின் இயற்கைநிலை நன்குணர்ந்த பெரியோர்கள் பீடுதிருக் கோயில்களைப் பிறங்கவைத்தார் அங்கங்கே கோடுகளை இடையிடையே கொணர்ந்திட்டார் கொலைக்கூத்தர் கேடுகளை ஒழித்தருளாய் கேடில்லாப் பழம்பொருளே. 3 ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்தபெருங் கோயில்பல சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய் நீதிஅறம் அழித்துவரல் நின்மலனே நீஅறிவாய் கோதுகளை அறுத்தொழித்துக் குணம்பெருகச் செய்யாயோ. 4 எங்குமுளன் இறையொருவன் என்றுணர்ந்த ஞானியரே இங்குயிர்கள் கட்டவிழ இயங்கிஅலை மனம்நிலைக்கப் பொங்குதிருக் கோயில்களைப் பொலியவைத்தார் அவையின்று பங்கமுறல் அழகேயோ பழுதொழிப்பாய் பரம்பரனே. 5 சந்தடியில் விழுந்தமக்கள் சாந்தமுறப் படிப்படியே சிந்தைநிலை பெறுவதற்குத் திருக்கோயில் வழிபாடு முந்தையினர் கோலிவைத்தார் மூலமுறை மாறிவரல் எந்தைஇறை நீஅறிவாய் ஏழையேம் செய்வதென்னே. 6 வணக்காலும் வாழ்த்தாலும் வழிபாடு நிகழ்கோயில் கணக்காடல் சூதாடல் கட்காமக் கொலையாடல் பிணக்காடல் முதலாய பேயாடல் இடமாகிப் பிணக்காடா மாறுவது பெருமானே திருவுளமோ. 7 பொல்லாத மருட்செயல்கள் புகுந்தரிக்கும் கோயில்களில் கல்லாதார் ஆட்சிமிகக் கற்பனையும் கண்மூடும் உல்லாசக் களியாட்டும் உலவிவரின் உளஅலைகள் நில்லாவே நில்லாவே நின்மலனே காத்தருளே. 8 எக்கோயில் கண்டாலும் இறையிடமென் றுளங்கொண்டே அக்கோயில் அடைந்துதொழும் அன்பர்தொகை பெருகிடவும் சிக்கோடு மதப்பிணக்குச் சிதடர்தொகை அருகிடவும் மிக்கோனே வேண்டுகின்றேன் விண்ணப்பங் கேட்டருளே. 9 திருக்கோயில் கெட்டதென்று சீவவழி பாட்டைவிட்டால் செருக்கோட வழியுண்டோ சிற்பரமே தனிஇடத்தே உருக்கோல மிட்டுன்னை உன்னுவதும் வழிபாடே தருக்கோட வழிபாட்டைத் தகுமுறையில் வளர்த்தருளே. 10 33. திருக்கோயில் உருவின்றி அருவின்றி உருஅருவ மின்றி உரையின்றி அசைவின்றி ஒளிபொழியு மொன்றே கருவின்றி முளையின்றிக் காலவளர்ப் பின்றிக் கரையின்றி எங்கெங்கும் கலந்தருளு மொன்றே செருவென்ற புலமுடையார் சிந்தையிலே நின்று தேனமுது சொரிகின்ற தெய்வமெனு மொன்றே திருவொன்றுங் கோயிலுனக் கமைந்தவித மென்னே செகமெங்கும் ஒருமுகமா ஏற்றவித மென்னே. 1 இயற்கையிலே இறையேநீ இருந்தருளும் நுட்பம் இனிதுணர்ந்த ஓவியத்தார் எடுத்தனர்பல் கோயில் பயிற்சியிலே திருக்கோயில் தத்துவத்தின் பான்மை பகுத்தறிந்தோர் வழிபாட்டால் மனக்குறும்பை வெல்வர் செயற்கையிலே விழுந்தவர்அத் தத்துவத்தின் செல்வம் தேறாது மனக்குறும்பால் தேய்வரென்ற தெளிவு முயற்சியிலே விளங்கவைத்த முழுமுதலே! வாழி முத்திநெறி வாழச்செய் முனிவரொளி! வாழி. 2 அலைவழிநல் ஓவியத்தார் அமைத்ததொன்றோ கோயில் ஆண்டவனே உன்கோயில் அளவிலடங் காவே நிலவுலகும் நீருலகும் நின்றன்திருக் கோயில் நெருப்புலகும் வளியுலகும் வெளியுலகுங் கோயில் கலையுலகுங் கவியுலகுங் கதையுலகுங் கோயில் கானமிகு பண்ணுலகும் இசையுலகுங் கோயில் ஒலியுலகும் மறையுலகும் ஒளியுலகுங் கோயில் உலகமெலாங் கோயிலுனக் கோங்குபரம் பொருளே. 3 மண்ணெல்லாங் கல்லெல்லாம் மலையெல்லாங் கோயில் மரமெல்லாம் பொழிலெல்லாம் வனமெல்லாங் கோயில் கண்ணெல்லாம் பயிரெல்லாம் கழனியெலாங் கோயில் கயமெல்லாம் ஆறெல்லாங் கடலெல்லாங் கோயில் விண்ணெல்லாம் ஒளியெல்லாம் விளக்கெல்லாங் கோயில் மின்னெல்லாம் பிழம்பெல்லாம் வித்தெல்லாங் கோயில் எண்ணெல்லாம் எழுத்தெல்லாம் ஏடெல்லாங் கோயில் எல்லாம்உன் கோயில்களே எங்குமுள பொருளே. 4 கரும்பணுகப் புனல்கொழிக்குங் காலருவி கோயில் கரைமணலுங் கலங்காத பூங்காற்றுங் கோயில் அரும்புமலர் காய்கனிகள் அளிஇனிமை கோயில் ஆடுமயில் கூவுகுயில் அறைசுரும்பு கோயில் விரும்புநடை கலைமானும் மெல்லானுங் கோயில் வீரமுகம் காதல்விழி ஈரமனங் கோயில் அரும்பிறவிப் பயனடைந்த அருட்குரவன் கோயில் அகிலமெலாம் நின்கோயில் அருட்சோதி அரசே. 5 கையினிலே புனைந்ததிருக் கோயில்பல இந்நாள் கருத்திழந்து கண்ணிழந்து கைகால்க ளிழந்து மெய்யிழந்து நிற்பதனை வித்தகனே அறிவாய் விடியலிலே நீலமிகு வேலையிலே தோன்றிச் செய்யகதிர் பரப்பிஎழு தினகரனாங் கோயில் சித்தம்வைத் துன்னிவழி பாடுசெய்தால் ஐயா உய்யஅருள் புரியாயோ உலகுயிரைக் கலந்தே ஒளிவழங்கும் அருளொளியாய் ஓங்குபர ஒளியே. 6 தத்துவத்தைக் கொண்டெழுந்த தனிக்கோயி லுள்ளம் சாயஅங்கே பேய்புகுந்து தலைவிரித்தே ஆடிச் சத்தியத்தை அழித்துவரல் தற்பரனே அறிவாய் சாய்ங்கால நீலவெளி தண்மைநில வுமிழ்ந்து முத்துடுக்கள் படைநிலவும் முழுமதியாங் கோயில் முழுமனத்தால் வழிபாடு முன்னிமுன்னிச் செய்தால் பத்திமையிங் கமையாதோ பரங்கருணை வெள்ளம் பாயாதோ எங்கெங்கும் பரிந்தருளும் பதியே. 7 செயற்கையிலே உருக்கொண்ட கோயில்களின் நோக்கம் செத்தொழிந்தால் அவைகளினால் சிறக்கஇட முண்டோ இயற்கைமலை காடுகடல் இறைவநின்றன் கோயில் ஏழிசையும் யாழ்குழலும் எழிற்கலையுங் கோயில் குயிற்குரலும் மயில்நடமும் கிளிமொழியுங் கோயில் கோயில்பல இனிதிருக்கக் குலங்குலமா ஏனோ அயர்ச்சியுற்றுக் கவலையிலே ஆழ்ந்துபடல் வேண்டும் அண்டபிண்டம் அத்தனையும் அளித்தருளும் பதியே. 8 கைக்கோயில் அமைப்பழிந்தால் கடவுளழி வாயோ கண்ணில்லாப் பேச்செல்லாங் காற்றில்விட வேண்டும் கைக்கோலொன் றிழந்துவிடின் கண்டுகொளல் வேறு கைவழக்கே உலகிலுண்டு கவன்றழுவ தில்லை மைக்கோலம் இட்டுலகு மயங்கியது போதும் மதிவளரக் கலைவளரும் வழிபாடும் வளரும் மெய்க்கோலம் பொங்கிளமை மெல்லியபூம் பெண்மை வியப்பழகுக் கோயிலன்றோ வித்தகச்சித் துருவே. 9 எக்கோயில் சாய்ந்தாலும் இறவாத கோயில் ஈசநினக் கொன்றுளதே எஞ்ஞான்று முளதே அக்கோயில் கோயில்ஐயா, அஃதுயிராங் கோயில் அன்பறிவு வழிபாடே அதற்குரிய தன்றோ எக்கோடு மில்லாத இந்தவழி பாடே எங்கெங்கும் பரவிவரின் இகல்பகைகள் எழுமோ இக்கால நிலையறிவாய் எரியடங்க அருளாய் எவ்வுயிரும் எவ்வுலகும் கோயில்கொண்ட இறையே. 10 34. யோகம் பொறிபுலன் கடந்து பொல்லாப் புறமனங் கடந்து மத்தி மறிமனம் கடந்து வேராம் மனத்தினைச் சாந்த மாகும் குறியினில் ஒன்றல் யோகக் குணம்பெறு தொடக்க மென்றே அறிவினில் விளங்கச் செய்த அத்தனே போற்றி போற்றி. 1 காற்றினை மூக்கால் ஈர்த்தல் கனலினை மூலக் காலால் ஏற்றிடல் இறக்கல் மாற்றல் இளமதி ஒளியைக் காண்டல் ஊற்றுள நாடி நிற்றல் உடல்முகஞ் சிவத்தல் எல்லாம் ஏற்றநன் முறைக ளல்ல என்றருள் குருவே போற்றி. 2 காற்றினை அடக்கும் போதும் கனலினை முடுக்கும் போதும் மாற்றுறு நெருக்கி னூடே மன்னுமின் னொளியெ ழும்பும் தேற்றிய உடலின் மின்னில் திகழ்வது சடத்தின் சோதி ஏற்றமன் றென்று சொன்ன எந்தையே போற்றி போற்றி. 3 உடலொளி மின்னல், மேலாம் உயிரொளி மின்ன லன்று சடம்அது இதுசித் தாகும் சடத்தினைச் சித்தாக் கொள்ளும் நடனமும் மரபாய்ப் போச்சு ஞானிகள் உண்மை தேர்வர் மடமையர் மருள்வ ரென்று வாய்மலர் அரசே போற்றி. 4 உடலொளி கண்டு கண்டே உயிரொளி காணச் செல்லார் திடமுறச் சாலங் காட்டிச் சீடரை வலிந்து சேர்ப்பர் அடிபணிந் தேத்தச் செய்வர் அரிவையர் பொருளைக் கொள்வர் கடையவர் இயல்பென் றிங்குக் கருணைசெய் அரசே போற்றி. 5 சித்தொளி கண்டோ ரென்றும் திருவருள் வழியே நிற்பர் செத்தவர் போலச் செல்வர் சித்தெனச் சாலங் காட்டார் சத்தியம் அவரே யாவர் சகமெலாம் சாந்தமாகும் முத்தியும் விழையா ரென்று மொழிந்தமெய்க் குருவே போற்றி. 6 புறமனக் கொடுமை சாய்ந்தால் பொன்மனம் யோகம் நண்ணும் பிறபடி நாட்டம் வேண்டா பிறர்க்கென வாழச் செய்யும் அறமலி பணிக ளாற்றின் அகன்றிடும் அலைம னக்கோள் குறிஅறி வாகு மென்று கூறிய குருவே போற்றி. 7 உடம்பினை முறையே ஓம்பி உயர்ந்தஇல் வாழ்க்கை நின்று கடன்பணி செய்த லென்னுங் கருத்தினில் ஒன்று பட்டுத் திடம்படப் பணிக ளாற்றிச் சென்றிடின் காமி யம்போம் மடம்படும் என்று வாய்மை மலர்ந்தசின் மயமே போற்றி. 8 அடிமனம் ஒன்றில் ஒன்றும் அலைமனம் வீழ்ந்து சாயின் படிவதன் வண்ண மாகும் பன்மைகள் ஒருமை யாகும் சுடரொளி ஒன்றின் ஒன்றில் சுடர்வணம் எல்லா மாகும் செடியறும் என்று சொன்ன சித்தனே போற்றி போற்றி. 9 பன்மையை ஒருமை யாக்கும் படிமனம் உறங்கச் செல்லும் உன்னுதல் ஒதுங்கும் வேளை ஒலிஒளி நடனஞ் செய்யும் சொன்மனம் கடந்து மேலே சூழலைச் சொல்ல லாகா நன்மையென் றுரைத்த நாதா நாண்மலர் போற்றி போற்றி. 10 35. யோகப் பயன் புறமனத்தார் குறும்பெல்லாம் புகலஎளி தாமோ பொய்களவு கட்காமங் கொலைகுழப்பம் புரட்சி மறவினத்துச் சூதுபகை கரவுபுறங் கூறல் வாததர்க்கம் மதவெறிமண் ணாசையுடன் போர்கள் அறமறைக்கும் ஆட்சிமுறை அடக்குமுறை படைகள் ஆகாயம் தரைக்கடலில் ஆருயிரின் வதைகள் பிறவளர்க்கும் பேய்களிடைத் திரிந்தஎனைக் காத்த பெரியவனே நின்கருணை பேசஅறி யேனே. 1 நடுமனத்தார் மயிர்ப்பாலம் நடப்பவரே யாவர் நழுவாது செல்லினடி நன்மனத்தில் அமர்வர் இடைமறிக்கும் மாயவித்தை இறங்கிவிடின் வீழ்வர் இழிவர்நிலை மன்பதையை ஏமாற்றித் திரிவர் சடைவனப்பும் முக்கண்ணும் சங்காழி காட்டித் தணந்திடுதல் முதலாய சாலவித்தை செய்வர் அடியவனை அந்நிலைகள் அடராமற் காத்த ஆண்டவநின் அருட்டிறத்தை அறையஅறி யேனே. 2 அடிமனத்தை அடைந்தவர்கள் ஆனந்த யோக அறிதுயிலில் அமர்ந்திருப்பர் அதையிதையும் துறவார் படியகத்தில் மலைகாடு பண்ணைகடல் மொழிகள் படிப்படியே மறைந்தொலியாய் ஒளியாகிப் பாழாம் உடலகத்தில் உணர்வழியும் மேல்விளையும் உண்மை உன்னஉளம் உரைத்திடநா நோக்கவிழி இல்லை படமழித்துப் பளிங்கினைப்பா ரென்றுரைத்த பதியே பரம்பொருளே அருட்பொழிவைப் பகரஅறி யேனே. 3 அடிமனமே நினைப்புமறப் பழியுமிடம் அதுவே அரியமுத லுடம்பிருக்கும் ஆனந்த பீடம் நடிகமதன் நெடியயமன் நாடகங்க ளில்லை ஞானம்வளர் அறஅருளின் நல்லாட்சி நடக்கும் தடியுடலும் புறமனமும் நடுவுடலும் மனமும் சாடுசெய லொன்றின்றித் தாதழிந்தே கிடக்கும் படிமைநிலை என்றுணர்வில் படியவைத்த பதியே பரமேநின் அருட்பெருக்கைப் பாடஅறி யேனே. 4 பருவுடலில் நுண்ணுடலில் முதலுடலில் முறையே படிந்தபுற மனமுநடு மனமும்அடி மனமும் தருவிலுள தலைநடுவேர் கடுப்பனவே யாகும் தனியோகக் கனல்மூளத் தாங்கிடும்வேர் எரிந்தால் பெருமரமே கிளைகளுடன் பெயர்ந்துவிழும் மீண்டும் பிறங்கியெழத் தலைசுழற்றப் பேறில்லை தளிர்க்கும் கருவழியும் என்றுணரக் கருத்துவைத்த கதியே கற்பகமே நின்கருணை கழறஅறி யேனே. 5 இரேசகமும் பூரகமும் கும்பகமும் இந்நாள் இவ்வுலகில் படும்பாட்டை எழுதலிய லாதே தராதலமீ துழல்காற்றை ஈர்த்திறக்கி இறுக்கல் சார்புமுறை அன்றன்று சாந்தமுறை யுளது புராதனமே மூவுடலில் மும்மனத்தின் புணர்வு புகல்யோகப் படிகளென்று புந்திதெளி வித்த பராபரமே நின்நினைவால் ஐயமெலாம் பறக்கும் பான்மைகண்டேன் அருள்வியக்கும் பண்பையறி யேனே. 6 புறமனத்தை அடங்கவைத்தல் இரேசகமாம் அதனைப் புரிந்தநடு மனத்திறக்கல் பூரகமாம் அதனை அறமணக்கும் மனத்திறுத்தல் கும்பகமாம் என்றும் அடைவான இரேசகமே பூரகமா மாறித் திறமிருக்குங் கும்பகமாய்த் தெளிவுசெயும் என்றும் சிந்தனையில் விளங்கவைத்த சித்தமணி விளக்கே நிறையுளத்தி லருள்விளக்கி நிற்கின்ற பொருளே நின்மலனே அருள்வகையை நிகழ்த்த அறியேனே. 7 மூலஅனல் எழுப்புவதன் மூலமென்ன என்று முன்னிமுன்னிப் பல்காலும் முயன்றுமுயன் றலுத்தேன் மூலனுரை கருவாசல் எருவாசல் இடையே மூளொளியே மூல அனல் என்றுணரச் செய்தாய் மேலொளியும் கீழொளியும் மின்கொடியா யொன்றி மெய்நிறுத்தும் நிலைதெளிந்தால் மெய்யோகம் விளையும் காலமெலாம் தெளிவாகும் என்றறியச் செய்தாய் கடவுளேநின் பெருங்கருணைக் கருத்தைஅறி யேனே. 8 மூலவொளி எழுப்புதற்கு மூர்க்கநெறி வேண்டா முன்னவர்கள் பற்றியது மூர்க்கநெறி அன்று சீலநிறை அறவாழ்விற் சேர்ந்துடலை ஓம்பிச் சிந்தையிலே கொண்டகுறித் தியானத்திற் றிளைத்தால் மூலவொளி மேலையொளி மூண்டெழுந்து நிற்கும் மூலவினை நீறாகும் என்றென்றன் மூளைப் பாலமரச் செய்தனையே பகலிரவைக் கடந்த பரவெளியே நின்னருளின் பான்மையறி யேனே. 9 மேலொளியும் கீழொளியும் மின்னியெழ எழவே மெல்லிதய மலர்விரிந்து தேனமுதம் சொரியும் சீலஉடல் கோயிலெனும் சிறப்புவெளி யாகும் சீவவொளி காலுமெங்கும் செவ்வொளியே பொங்கும் மேலுறுமெய்ஞ் ஞானநிலை மேவுவதைச் சொல்லால் விளம்பலிய லாதென்று விளங்கவைத்த இறையே வாலறிவே யோகியருள் வதிந்தருளும் அன்பே வாழ்வேநின் அருட்டிறத்தை வழுத்தஅறி யேனே. 10 36. யோக உடல் உடல்விளக்கை அருள்புரிந்தாய் உயிரிருளை ஓட்ட உற்றதுணை பயன்படவே யோகநிலை வைத்தாய் உடல்வெறுத்தால் யோகநிலை உயிருறுதல் என்றோ உயிர்இருளை நீக்கிஉயர் ஒளிபெறுதல் என்றோ உடல்விளக்கின் கொடைநோக்கம் உடைந்துவிடு மன்றோ உய்யுநெறி வேறுண்டோ உடையவனே உரையாய் உடல்வெறுக்கும் அறியாமை ஒழிந்துவிடல் நன்றே ஒலிகடந்தும் ஒளிகடந்தும் ஓங்குபரம் பொருளே. 1 உயிரிருளை நீக்கஅதற் குடலமைத்த வகையை உன்னஉன்ன உன்கருணைத் திறம்விளங்கும் ஐயா தயிரிலுறு நெய்யெனவே தனியோகர் உள்ளத் தாமரையில் வீற்றிருந்து தண்ணளிசெய் தேவே மயிருடலம் நெஞ்சுருவாய் நுண்ணுடல்நெஞ் சருவாய் மணக்குமுதல் உடல்நெஞ்சில் மருவகர ஒலியாய் செயிரழிசெவ் வொளியாகிச் சிக்கறுக்கும் அறிவே சித்தருளக் கோயில் கொண்ட சின்மயமே அருளே. 2 புறஉடலம் தோல்நரம்பு புகையுடலம் நுண்மை புல்லரிய முதலுடலம் பொன்னவிரோங் காரம் புறமனமே அலையுமது நடுமனமோ எண்ணம் புந்திநினை வற்றதுவே அடிமனமாம் அதிலே உறவுகொள உறவுகொள ஊனமெலாம் நீங்கும் உண்மைஅருள் இன்பநடம் ஓங்கிவரும் நல்ல அறமருவும் என்றுணர அருள்சுரந்த இறையே அப்பாஎன் றடியடைந்தேன் ஆள்கபெருந் தகையே. 3 ஓங்கார உடலளிக்கும் உடல்நுண்மை மேலும் உருவமுகிழ் பருவுடலை உதவுவதைத் தேர்ந்து பாங்கான புறமிருந்து நடுநுழைந்து அடியிற் படிந்துபடி படியாகப் பயிற்சியினைச் செய்தால் தூங்காத தூக்கமுறும் தொல்லைபல நீங்கும் தொல்பிறவி உணர்வுண்டாம் தூயஅறி வோங்கும் ஆங்காரம் அற்றொழியும் என்றுணரச் செய்த ஆண்டவனே நின்கருணை அற்புதந்தே ரேனே. 4 ஓங்கார உடற்போர்வை உருவருவ உடல்கள் ஓதுமவை வளம்பெறினே ஓங்காரம் உரமாம் நீங்காத தியானமரு நுண்ணுடலை ஓம்பும் நிறையொழுக்கம் பொருந்துணவு பருவுடலை ஒம்பும் ஓங்கார உடலுரமா யோங்கி நின்றபின்னை உருஅருவ உடல்தாக்கும் உறவுமறு மென்று பாங்காக என்னறிவிற் படியவைத்த பதியே பரமதிரு வடியடைந்தேன் பாவங்கழித் தருளே. 5 பருவுடலை ஓம்புமுறை ஒன்றிரண்டோ அப்பா பாரினிலே மலயோகர் பகர்ந்தமுறை பலவே பருவுடலின் அளவினிலே பண்புசெய்யும் மேலே பற்றியிரு உடல்களிடம் எட்டியும்பா ராவே திருஅமல யோகர்முறை சிற்சிலவே உண்டு தெய்விகமே அவைமூன்று தேகமெலாம் ஓம்பும் கருவுடலில் சுடரெழுப்புங் கடந்தநிலை கூட்டும் கலியுலக நாட்டமெங்கே கருணைமழை முகிலே. 6 ஊற்றினிலே காற்றினிலே ஒளியினிலே மூழ்கி ஒளிபொழிற்பூ கண்டுகண்டே உயர்பாக்க ளோதிப் போற்றுமடி சிந்தைவைத்துப் பொருந்தியஊண் அருந்திப் பொய்கடியுந் தொழில்புரிந்து போகம்அள வாகி ஆற்றினிலே நின்றொழுகி ஆசைகளி யாடல் அலைகுடிகள் அழுக்கிறுகல் அளவில்லாப் பேச்சு சீற்றமிகல் புகழ்நாட்டம் செயற்கைகளை விட்டால் தெரிபருமை உடல்வளரும் திருவருளால் இறையே. 7 மலயோகர் ஆசனமும் மற்றவையும் ஆய்ந்தேன் வல்லவரும் மார்புடைந்து மாய்வதனைக் கண்டேன் கலையோக வித்தையிலே கருத்திருத்தி மாய்ந்தேன் கண்மூடும் விளையாட்டுக் கற்பனைஎன் றுணர்ந்தேன் மலையோரஞ் சென்றிருந்து வாசியடல் விழையேன் மாநிலத்தில் எவ்விடத்தும் மருட்டலிலை நெஞ்ச அலையோட அமைதிபெற அன்பமல யோகம் ஆண்டவனே அருள்புரியாய் அடியமர இன்றே. 8 உடையின்றி இருந்தஎனக் குடைமூன்று தந்தாய் ஒன்றிரும்பு வெள்ளியொன்று மற்றதுசெம் பொன்னே அடைவென்றே இரும்புவெள்ளி ஆக்கிவெள்ளி பொன்னா ஆக்கவழி இயற்கையிலே அமையவைத்தாய் அப்பா நடையின்றிக் கெட்டொழிந்தேன் நல்லறிவை நல்காய் நல்லிரும்பை பொன்னாக்கல் ஞானவித்தை யாமோ முடையின்றி வாழ்வறியா மூர்க்கநிலை என்னோ மூவுடலுங் கடந்தொளிரும் முழுமைமுதல் அரசே. 9 நீக்கமற எங்கெங்கும் நிறைந்துள்ள அறிவே நின்படைப்பில் ஓருறுப்பை நினைந்துநினைந் துன்னி நோக்கதுவா யொன்றஒன்ற அதன்மயமாம் எல்லாம் நுவலரிய அம்மயமும் செம்மயமாய்த் திகழும் தேக்குமயம் பொன்றியதும் செப்புதற்கொன் றில்லை தேகமனம் அற்றநிலை சிந்தனையில் லாத ஆக்கமுறல் நன்றென்னும் அறிவுபெற ஐயா அருள்புரிந்த ஆண்டகையே அடியனடைக் கலமே. 10 37. தியானம் இறைவனே உன்றன் இருப்பினில் அடியேற் கெட்டுணை ஐயமு மின்றி தரையினில் இன்மை சாற்றிய சில்லோர் சாகுநாள் உன்னையே நினைந்து முறையிடல் கண்டேன் முத்தெனக் கண்ணீர் முகத்தினில் வடிந்ததைப் பார்த்தேன் அறவனே பலநாள் அரற்றினன் அழுதேன் அகமுணர்ந் தருள்வழி காட்டே. 1 ஈசனே உன்றன் இருப்பினைச் சொல்லி இருப்பதால் எப்பயன் விளையும் பாசமே யுடைய பாவியான் பாசப் பற்றினை எப்படி அறுப்பேன் பூசைகள் செய்தேன் பூமல ரிட்டேன் புண்ணியக் கோயில்கள் சூழ்ந்தேன் நேசமே பெருக்கும் நூல்களை ஆய்ந்தேன் நேர்வழிக் காட்சியை அருளே. 2 எங்கும்நீ உள்ளாய் எங்கும்நான் இல்லை எப்படி உன்னுடன் கலப்பேன் தங்குமஞ் ஞானம் தகைந்தெனைச் சிறுகச் சாடியே வீழ்த்திய தறிவாய் இங்கதைத் தவிர்க்க எத்தனை முயற்சி எண்ணினன் செய்தனன் பயனோ புங்கவா பொருந்திப் புகவிலை இறையும் புகலொரு வழியினை அரசே. 3 தாகமே கொண்டேன் தனிவழி காணத் தயாபர எழுந்தது தியான யோகமே என்று மின்னென ஒருநாள் உற்றதன் வழிதுறை அறியேன் ஏகநா யகனே எந்தையே ஈசா எழிலருட் டுணையென உணர்ந்தேன் வேகமே உந்த விடுத்தன என்னை வெற்றுரை விளம்பர வினையே. 4 புறமன அலைவு பொன்றிட ஒன்றைப் புந்தியில் நினைக்கவென் றகத்தின் துறையுணர் அறிஞர் சொல்லிய படியில் துன்னினால் அதுபிற மனங்கள் உறவினை நல்கும் உன்னுமா றவைகள் உழலுமற் புதங்களும் நிகழ்த்தும் திறவினை அளிக்கும் சடஒளி காட்டும் சிற்பர வேறெது செயுமே. 5 ஒன்றினி லொன்ற லென்றுகொண் டெதிலும் ஒன்றலால் உறுபயன் விளையா தென்றுணர் உள்ளம் என்றனக் களித்த இறைவநீ இயற்கையிற் படிந்தே ஒன்றிய நிலையின் தத்துவநுட்பம் ஒளிருமோ ருருவினை உன்னின் நன்றொளி விளங்கும் என்றுளந் தெளிய நாதனே செய்ததும் அருளே. 6 அலைபுற மனத்தில் அழகுரு ஒன்றே அமைவுறக் கொண்டதை முன்னின் நிலைபெறும் என்றும் நடுமனத் திறங்கி நிறஉரு வடிவெலாங் கலங்கிப் பொலிவுறும் இயற்கைத் தத்துவ மாகும் புகுமது மறுமனத் தடியில் நிலவியே மறையும் நித்தனே மேலும் நிகழ்வது சொலற்கரி தாமே. 7 புறமன அலைவில் புரளுநர் உருவைப் போற்றுதல் விடுத்துருக் கடந்த நிறவடி வில்லா நிலைமையில் உன்னை நினைத்தலும் அரிதரி தாகும் புறமனம் உருவை யன்றிவே றொன்றைப் பொருந்தியல் புடையதோ ஐயா நிறவடி வின்மை அடிமனங் கடந்த நிலைமையில் விளங்குவ தன்றோ. 8 களவுபொய் காமம் கட்கொலை முதலாம் கசடுகள் வளர்புற மனத்தால் அளவெலாங் கடந்த ஆண்டவ உன்றன் அருநிலை தியானமென் பதுவே வெளிறெனும் பாழாம் மேலுமே பாவம் மேவுமே பொங்குமே அப்பா புளுகுபொய் முதலாம் புன்மைகள் முற்றும் பொன்றிடும் அடிமன மன்றோ. 9 உருவமே தியானம் உறஉற அதுவே ஒடுக்கிடும் புறமனக் குறும்பை அருவமாய் நடுவில் அமைதியை அளிக்கும் அடிமன அணைவினில் மறையும் தருமமே வளர்க்கும் தயையினைப் பெருக்கும் சாந்தமே மன்பதைக் கூட்டும் கருமமே மிகுந்த காசினி தியானக் கண்பெறக் கருணைசெய் அரசே. 10 38. தியானம் உடலளித்தாய் உளமளித்தாய் உணர்வளித்தாய் உனைநினைக்கக் கடலளித்தாய் மலையளித்தாய் கதிரளித்தாய் ஐயாவே படமுடியாத் துயரமிங்குப் படையெடுத்து வருத்துவதென் மடமையன்றி வேறென்னை மனந்திரும்ப அருளாயோ. 1 உன்படைப்பை உளங்கொண்டால் உன்நினைவே தோன்றிவரும் என்படைப்பில் உளங்கொண்டால் என்னவரும் இறையோனே பொன்படைத்த மாந்தர்பலர் பொய்படைக்க விரும்புகின்றார் துன்படைத்து வீழ்த்துங்கால் துணைஎவரென் றுணராரோ. 2 பசும்புல்லை மனஞ்செலுத்திப் பார்க்குங்கால் உன்நினைவே விசும்புமலை நோக்குங்கால் விமலாவோ உன்நினைவே கசம்படரும் வண்டிசையே காதுறுங்கால் உன்நினைவே தசும்பரவும் படமசைத்துப் பண்ணொலியில் உன்நினைவே 3 காலையிலே எழும்பரிதிக் கதிரூட்டும் உன்நினைவே மாலையிலே எழும்மதியின் நிலவூட்டும் உன்நினைவே நீலமுமிழ் வான்கோள்கள் நின்றூட்டும் உன்நினைவே சோலைமணக் காற்றூட்டும் தூயவனே உன் நினைவே. 4 பள்ளியிலே நூல்பயின்றும் பலதுறைக ளாய்ந்துழன்றும் வள்ளலுனை உணர்ந்துய்ய மாந்தர்படும் பாடென்னே புள்ளிஉழை மான்நடையில் புந்திவைத்துச் சிந்தித்தே உள்ளவுள்ள உன்நினைவே உறுதிபெற உண்டாமே. 5 மாங்குயிலின் குரல்கோயில் மயில்நடனம் அருட்கோயில் தேங்கு பசும் கிளிமழலை திருக்கோயில் உன்நினைப்பைப் பாங்குபெற ஊட்டிநிற்கப் பாமரர்கள் அங்குமிங்கும் மூங்கையராய்த் திரிவதென்ன முழுமுதன்மை மெய்ப்பொருளே. 6 பசுமைமணிச் சிறகுடைய பறவையொன்று வானிவர்ந்து திசைதிசையே இசைமுழக்கிச் செல்லுவதை நோக்கிநின்றால் அசைவிலருள் மெய்ப்பொருளே அகமுறுமே உன்நினைவே வசைவளர்க்கும் நூலவர்க்கு வழிநன்கு புலனாமோ. 7 வீடுதொறும் பாட்டுருவாய் வீணைகுழல் யாழமுதம், பாடுகளே யின்றிநிதம் பரம்பொருளே உன்நினைவு கூடவழங் கன்பொழுக்கைக் குறியாத மாந்தரிங்குத் காடுகளில் திரிந்துழன்று காற்றடக்குந் தவமென்னே. 8 அருக்கனழல் கடலெரிப்ப ஆவியெழக் காராகிப் பெருக்குமழை மலைபொழியப் பேரருவிக் கணம்பரந்து செருக்கலைகள் வீசாறாய் சென்றுகட லணைகாட்சி இருக்கைநினை வூட்டலன்றோ திருக்கருணைப் பெரும்பேறே. 9 இயற்கையெலாம் உன்நினைவே ஊட்டஉள தென்றுணரும் பயிற்சிபெறும் வாய்ப்பெல்லாம் பரம்பொருளே அருளியுள்ளாய் முயற்சியிலார் கண்மூடி மூர்க்கமெலாம் வளர்த்துவிட்டார் செயற்கைவழிச் சென்றுழன்றால் சிந்தனையின் ஊற்றெழுமோ. 10 39. தியானம் எங்குமுளாய் என்றுன்னை இயம்பிவிடல் எளிதே எழுதிவிடல் பாடிவிடல் எடுத்துரைத்தல் எளிதே எங்குமுள உனையுணரும் வழிஎதுவோ என்றே இரவுபகல் எண்ணிஎண்ணி இவ்வுலகில் வாழ்ந்தால் எங்குமுள உனதுடலம் இயற்கையெனும் உண்மை இயல்பிலுறும் உறுதிபெறும் என்றுமனந் தெளிந்தேன் எங்குமுள இறையவனே எப்படியோ தெளிவை ஏழைமகற் கருள்புரிந்தாய் இரக்கநிதி நீயே. 1 என்னுளமே கோயி லென எங்கெங்கும் பேச்சே எத்தனையோ மறைமொழிகள் எடுத்தடுக்க லாச்சே மின்னொளிருங் கருவிகொடு மெய்யறுத்துப் பார்ப்போர் மேதைநிணம் தசைகுருதி மிகுந்துவர லன்றி மன்னுமிறை கோயிலொன்றும் மருவவில்லை என்றார் மனக்கோயில் எதுவென்றே மயக்குற்றுக் கிடந்தேன் என்னுளத்தே தியானமெனும் எண்ணமுற்ற தென்னோ ஏழைபடும் பாடுணர்ந்த இறைவஉன்றன் அருளோ. 2 பலயோகம் பலவாறு பலருணர்த்தக் கேட்டேன் பற்றிவிட்டேன் சிலவற்றைப் பற்றாமல் விட்டேன் சிலயோகம் உளங்கவரும் சிறப்புடைமை கண்டேன் சிந்தைஅவை கொள்ளவில்லை திருவருளின் செயலோ மலயோகத் துறைகளிலே மயங்கிவிழா வண்ணம் மாதேவா எனைக்காக்க மனங்கொண்டாய் போலும் நலயோகம் தியானமெனும் ஞானவுணர் வென்னை நண்ணியதென் உன்னருளே நாதாந்த அரசே. 3 எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் மொழியை இயம்புவதால் ஒருபயனும் என்றும்விளை யாதே எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் உண்மை இலங்கிவிடின் மனம்அலையா எப்பழியும் அணுகா தங்குபழ வினைகளெலாம் தலைவிரித்தே ஆடிச் சார்பின்றி நீறாகும் சாந்தமுறும் என்று புங்கவனே என்னுளத்தில் புகுந்ததொரு விளக்கம் பொங்கருளே எனக்கொண்டேன் புனிதமெனும் பொருளே. 4 ஓவியத்தி லுன்னைநினைந் தொன்றிஅதில் நின்றால் உன்றனொளி உளத்திறங்கும் உருவமறை வாகும் பாவியலி லுன்னை யுன்னிப் பரிந்ததிலே ஒன்றின் பருவரிகள் கரந்துசெலும் பண்புளத்திற் பதியும் பூவியலி லுன்னைஎண்ணிப் பொருந்தியதில் ஒன்றின் பொன்னிதழ்கள் பொன்றிமுதல் புகுமுளத்தில் உனது மாவியலை நண்ணமன மறியலைகள் ஓய மாண்குறிக்கோள் தேவையென மனங்கொண்டேன் தேவே.5 சொற்கடந்த தியானமிங்குத் தொல்லைமனந் தொலைக்கும் தூயமனம் மலர்விக்கும் துணைபுரியத் தூண்டும் கற்களிலா வழிநடத்தும் கருணைஎளி தாக்கும் கரவுபகை எரிகாமம் களவுகொலை மாய்க்கும் எற்புடலில் உளநோயை இரிந்தோடச் செய்யும் இனியஅமிழ் தூட்டிநரை இழிவொழிக்கும் இந்தப் பொற்புடைமை யானுணர்ந்து புவியிடையே வாழ்ந்து புகலஅருள் மழைசுரந்தாய் பொன்றாத முகிலே. 6 அன்பார்ந்த தியானஉயிர் அமருமுடல் தொண்டாம் அருள்வழியே அதுநிகழின் அமையாத தென்ன துன்மார்க்கப் புறமனத்தைத் தொலைத்தடக்கி நன்மை சூழமனம் உண்டுபணுந் தொன்மைமலி தொண்டு, பன்மார்க்க உணர்வெழுப்பும் பகைமார்க்கம் மாய்த்துப் பத்திவளர் பொதுமார்க்கம் படைக்கவல்ல தொண்டு, கன்மார்க்கம் பெருகிவருங் காலமிது தியானம் காக்கநறுந் தொண்டாற்றக் கருணைபுரி அரசே. 7 தொண்டென்று தொண்டுசெயின் துகளறுக்குந் தியானம் தொடர்ந்துவரும் முனைப்பழியும் தொல்லைமனம் மாறும் சண்டையெலாம் மண்டியிடும் சாத்துவிகம் ஓங்கும் சன்மார்க்கம் நனிவிளங்கும் சாத்திரங்கள் சாற்றும் அண்டபிண்ட அற்புதங்கள் அடுக்கடுக்காய்த் தோன்றும் அனைத்துயிரும் ஒன்றென்னும் அன்புவழி திறக்கும் தொண்டருளம் வீற்றிருந்து தொல்லுலகை நடத்தும் bjh©l!எங்குந் தொண்டுநெறி சூழஅருள் புரியே. 8 உடற்றொண்டும் கலைத்தொண்டும் ஓங்குதொழிற் றொண்டும் உற்றமனத் தொண்டுடனே உதித்தகுடித் தொண்டும் இடத்தொண்டும் நாட்டுரிமைத் தொண்டுஞ் சகத்தொண்டும் இயன்றவரை இயங்கிவரின் இகல்பகைகள் ஒதுங்கும் கடற்புவியில் தியானஅகக் கண்திறக்கும் நன்றே கருணையிலா அமைப்பெல்லாங் காலொடிந்து வீழும் திடத்தொண்டும் தியானமுமே சிறக்கஅரு ளரசே தெய்வஒளிப் புதுஉலகம் திரண்டுதிரண் டெழுமே. 9 மண்ணினைந்தேன் நீர்நினைந்தேன் வன்னிவளி நினைந்தேன் வான்வெளியும் மதிகதிரும் வழிவழியே நினைந்தேன் உண்ணினைக்குந் தியானவகை உணர்வுகொண்டேன் ஐயா உற்றதுணை செய்வாயோ ஒதுங்கிவிடு வாயோ எண்ணமறி ஆற்றலுண்டோ ஏழைமதி யுடையேன் எப்படியோ உன்கருணை எவ்வழியில் செலுமோ அண்ணலெனக் கொருவரமே அளித்துவிடின் உய்வேன் அகந்தொண்டில் ஆரவேண்டும் அருள்புரிவாய் அதுவே. 10 40. கருணைத் திறம் உன்னருளால் இவ்வுலகில் ஒவ்வொன்றும் உற்றுவர என்செயலால் நிகழ்வதென எண்ணிவந்தேன் இறையோனே உன்னருளும் என்செயலும் ஒளிந்தேபோர் செய்தனவோ உன்னருளே வாகையணி உண்மைநிலை உணர்ந்தேனே. 1 ஒருவரிடம் வன்கண்ணும் ஒருவரிடம் மென்கண்ணும் மருவவைத்தல் இயல்பென்று மாநிலத்தார் நினைப்பதுபொய் கருணையினை எல்லார்க்குங் காலுவதே உனதியல்பு பரிதியொளி பரப்புவதில் பால்கொளுமோ இறையோனே. 2 அருளொளியில் மூழ்குவதை அறியாமல் அலையுமனம் அருளினிலே மயங்குவது மனிதரது குறைபாடே தெருளிலிவர் உன்னடியைச் சிந்தையிலே இருத்திவரின் அருளொளியில் மூழ்குவதை அறிகுவர்நன் கிறையோனே. 3 நற்செயலுந் தீச்செயலும் நண்ணுமிடம் உயிருளமே எச்செயலும் இல்லாத இறையோனே உன்மீது பச்சைமுதுப் பழிசுமத்திப் பார்ப்பவருங் கரையேற இச்சைகொளின் வழிகாட்டும் இரக்கஇயல் நினதன்றோ. 4 உன்னியலை உணராமல் உளறிவருங் கயவர்களும் கன்னெஞ்சங் கசிந்துருகிக் கலங்குங்கால் கைப்பிடித்து நன்னெறியிற் செலுத்துமருள் நாயகனே இகலில்லா உன்னருளை நினைப்பதுவே உறுதியென வந்தேனே. 5 தீயவெலாம் உலகிடைஏன் செறிவித்தாய் என்றென்றே ஆயமனஞ் செலுத்திவந்தேன் அநுபவத்தில் அவைகளுமே நேயநெறி விரைவதற்கு நேர்படுத்தும் விதங்கண்டேன் தூயபரம் பொருளேநீ துணைபுரியும் வகைஎன்னே. 6 வெம்மைநெறி நடப்பவர்க்கு விருந்துநிழ லாவதுபோல் செம்மைஅறம் விருந்தாகும் தீமையிலே உழல்வோர்க்கும் அம்மையினுந் தயவுடையாய் அறவழியும் மறவழியும் செம்மலுன தருளியங்குஞ் சீரியலின் சிறப்பென்னே. 7 தீயவரின் கூட்டரவும் தீஇயக்கக் கூட்டரவும் மேயஎழுந் துறுமுங்கால் விரையுமனம் உன்னடியில் தாயினுநல் லருளுடைய தற்பரமே இவ்வுலகில் தீயனவும் உளவாகச் செய்தனைநீ எனலாமே. 8 சாதிமதச் சண்டைகளும் தனிவழக்குச் சண்டைகளும் நீதிகொலுஞ் சண்டைகளும் நிலம்பிடிக்குஞ் சண்டைகளும் மேதினியில் சன்மார்க்கம் மேவஎனை உந்தியதை ஆதிபர நீயறிவாய் யானறிவேன் அருளரசே. 9 மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல், அண்ணலுனை மறந்தஉயிர்க் கருளூட்டுங் கருணைமழை நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுகஎன் றெச்சரிக்கை பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ. 10 41. அருளாட்சி அகிலாண்ட கோடியெலாம் இயங்கஅரு ளரசே அறவோர்க ளன்றளித்த அரசியலைப் பின்னாள் இகலாண்ட மனமுடையார் ஈரங்குலைத் தார்கள் எரிபகையே கொலைபெருகி இன்பமழித் தனவே செகமாண்டு மறைந்துவிடத் திருவுளச்சம் மதமோ சிற்றுயிர்கள் கட்டவிழச் சிந்தைசெய லெங்கே மிகவேண்டி மெய்யடியார் விதிர்விதிர்த்தல் கண்டு மேதினியி லருளாட்சி விழிக்கவிழி நோக்கே 1 குறுமதியர் அறம்மறந்து கோனாட்சி என்றும் குடியாட்சி என்றுங்குடிக் கோனாட்சி என்றும் சிறுமைமிக அரசியலைச் செறியவைத்தா ரிங்கே சிதடரினம் சழக்கரினம் சீறிவிழுங் காட்சி வறுமையுறப் பசிபிடுங்க வந்தபிணி தின்ன மன்னுயிர்கள் வதைந்துறங்கி மடிகின்ற காட்சி வெறுமையெனுஞ் சூநியமோ மெய்யருளை யுடையாய் வியனுலகில் அருளாட்சி விளங்கவிழி நோக்கே. 2 பொல்லாத ஆட்சிகளால் பொதுமைஅறம் நீங்கிப் பொருளொருபால் குவிந்தொருபால் பொன்றுதலை அறிவாய் மல்லாட வழக்கெடுக்கும் மன்றுகளில் நீதி மயக்கடைந்து நெறிபிறழ்ந்து மாய்வதனை அறிவாய் கல்லாத மாந்தரினங் கற்றவரை ஒதுக்கிக் கலையழித்தே ஆட்சிபுரி கொலைவினையை அறிவாய் எல்லாரும் இன்புறவே எங்குமுள இறையே இனியஅரு ளாட்சிஇன்றே எழக்கருணை புரியே. 3 அருளற்ற ஆட்சிகளால் அரக்கரினம் பெருகி அகிலமமர்க் களமாக்கி அன்பழித்தல் அறமோ தெருளற்ற அவர்படைகள் திரண்டெழுந்து பாய்ந்து சீவவதை குண்டுகளால் செய்துவரல் அழகோ மருளற்ற ஓவியமும் காவியமும் மற்ற மாண்கலையும் நடுக்குற்று வதையுறுதல் முறையோ இருளற்ற பேரொளியே எவ்வுயிர்க்கும் பொதுவே இறையவனே அருளாட்சி இங்கரும்பச் செய்யே. 4 ஆண்டவனே வழியடியார் அருளியவை அருளே அருகபுத்தர் உரைத்தஅறம் அன்பீனும் அருளே மாண்சிலுவை கிறிதுவிடம் வழிசெந்நீர் அருளே வள்ளுவனார் தமிழருவி வாய்மைமொழி அருளே காண்டகுநந் தாயுமானார் கருத்தெல்லாம் அருளே கருணைமன இராமலிங்கர் கண்ணீரும் அருளே தீண்டரிய சோதிஅருட் சோதி உயிர்ச் சோதி தீமைஅண்டா அருளாட்சி திகழஉளங் கொள்ளே. 5 அலைநெஞ்சை மென்மேலும் அலைக்குமர சியலால் அவனிபடும் பாடுகளை ஆண்டவஎன் சொல்வேன் கலைநெஞ்சம் காணாத கழகமலி வென்னே காதலின்பம் நுகராத காமவெறி என்னே தொலைநஞ்சு வறுமையுலை வறுமையெழ லென்னே தொகைதொகையாய் மருத்துவமும் மன்றுஞ்சூழ் வென்னே கொலையஞ்சுங் கொலையென்னே குண்டுமழை என்னே குணமலையே அருளாட்சி குறித்தருளா யின்னே. 6 மருளார்க்கும் ஆட்சியெலாம் மறைந்தொடுங்கி உலகில் மன்னுயிர்கள் கவலையின்றி மனநிறைவு கொள்ள அருளாட்சி விதைகாதல் அன்பில்படி வாகி அகக்கருவில் அரும்பிமுளைத் தறக்குடியில் வளர்ந்து தெருளார்க்கும் ஊர்நாட்டில் செழித்தோங்கித் தழைத்துச் சீருலகில் மரமாகிச் செழுங்கனிகள் உதவ இருளாட்சி இல்லாத இன்பஒளி விளக்கே இயற்கையிலே கோயில்கொண்ட இறைவஅருள் புரியே. 7 ஐந்துவிதப் பூதஇயல் ஆழ்ந்தாழ்ந்தே ஆய்வர் ஆழியடி மணலுயிரை ஆராயச் செல்வர் வந்தருகும் இமயமுடி காணவிரைந் தெழுவர் வானவெளி மண்டிலங்கள் வகையறிய முயல்வர் நந்துபனி வடதுருவம் நண்ணமனங் கொள்வர் நானிலமும் தமைவணங்கும் நாட்டமுடன் உழல்வர் சிந்தைநெறி அருளாட்சி தேடுவரோ மாந்தர் சிற்பரமே உன்னருளால் சேரஉளம் பற்றே. 8 நாடுகளைப் பற்றுவதில் நாட்டங்கொள் அரசு நாளுநாள் சட்டத்தால் நடுக்குறச்செய் அரசு காடுகளை அழித்துவருங் கருணையில்லா அரசு கட்டிடத்தில் நூல்காட்டிக் கற்பழிக்கும் அரசு பாடுகளைப் பெருக்குவித்துப் பலஉயிர்கொல் அரசு பலவிதமாய்க் கொலைக்கருவி பரப்புகின்ற அரசு கேடுபுரி இன்னவைகள் கெட்டழிய இறையே கேண்மைமிகு அருளாட்சி கிட்டஅருள் விரைந்தே. 9 அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரைஎண்ணுந் தன்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டலரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே. 10 42. ஆனந்தம் ஆனந்த மயமான ஆனந்த அரசே ஆனந்தம் உள்பொருளோ இல்பொருளோ என்றும் ஆனந்தம் உள்ளஇடம் அறிந்தவர்யார் என்றும் ஆனந்தம் மண்ணுலகோ விண்ணுலகோ என்றும் ஆனந்தம் ஒருமையிலோ பன்மையிலோ என்றும் ஆனந்தம் புறத்தினிலோ அகத்தினிலோ என்றும் ஆனந்த ஆய்வாலே ஆனந்தம் வருமோ. 1 ஆனந்த உருவான ஆனந்த அறிவே ஆனந்தம் யாக்கையிலே எவ்வுறுப்பில் என்றும் ஆனந்தம் பொறிகளிலோ புலன்களிலோ என்றும் ஆனந்தம் நெஞ்சினிலோ அறிவினிலோ என்றும் ஆனந்தம் உன்னிடமோ என்னிடமோ என்றும் ஆனந்த இடங்காட்டும் வழிஎதுவோ என்றும் ஆனந்தம் எளிமையிலே அகப்படுமோ என்றும் ஆனந்தம் ஆராய்ச்சி செய்தாலும் வருமோ. 2 ஆனந்த வாரிதியே ஆனந்த மழையே ஆனந்த அருவிசொரி ஆனந்த மலையே ஆனந்தம் விரும்பாத ஆருயிர்க ளுண்டோ ஆனந்தம் விரும்பினதும் அருகணைய வருமோ ஆனந்தம் உண்பதுவோ தின்பதுவோ அப்பா ஆனந்தம் உழைப்பின்றி வலிந்தடையும் ஒன்றோ ஆனந்த உளவுசொலும் ஆசிரியர் உளரோ ஆனந்தக் கலையுணர்த்தும் அறப்பள்ளி எதுவோ. 3 ஆனந்தப் பசுமைபொழி ஆனந்தப் பொழிலே ஆனந்த ஆராய்ச்சி அல்லலையே செய்யும் ஆனந்தம் ஆராய்ச்சி எல்லைகடந் தோங்கும் ஆனந்தம் அகண்டம்வல் லாராய்ச்சி கண்டம் ஆனந்தம் கண்டத்துள் அடங்கும்இயல் பினிதோ ஆனந்தம் இல்லாத இடமில்லை என்றே ஆனந்த அமுதுண்ட ஆண்டகையர் சொற்றார் ஆனந்தம் எங்குமெனில் ஆராய்ச்சி ஏனோ. 4 ஆனந்தம் வேறென்னும் அறியாமை நீங்கின் ஆனந்தம் நீயென்னும் மெய்யறிவு தேங்கும் ஆனந்தம் நீஎன்னில் ஆனந்தம் எல்லாம் ஆனந்தம் எங்கெங்கும் ஆனந்தம் அப்பா ஆனந்தம் மறைப்பதெது ஆணவமே அதுதான் ஆனந்தம் தான் அந்தம் ஆசிரியர் மொழியே, ஆனந்தம் பொங்கிஎழும் தான்அந்தம் எய்தின் ஆனந்த அடைவினுக்குத் தான்அறுக்க அருளே. 5 ஆனந்த வாழ்வினுக்குத் தானந்த மாக ஆனந்த நின்படைப்பாம் அழகியற்கை துறக்க ஆனந்தப் பெயராலே அறைந்தமொழி எல்லாம் ஆனந்த வழிகாட்டா அடைவிக்கும் அதனை ஆனந்தப் படைப்பினிலோ ஆனந்த மில்லை ஆனந்தப் படைப்பிலொன்றை அகங்கொண்டே ஒன்றின் ஆனந்த ஊற்றெழும்பும் ஆனந்தம் பொங்கும் ஆனந்த அமுதூட்டும் அற்புதமே ஐயா. 6 ஆனந்த இறையவனே ஆனந்தம் அடைய ஆனந்த இல்வாழ்க்கை அதற்குரிய கால்கோள் ஆனந்த முதற்பெண்ணை அலகையென நீத்தால் ஆனந்த ஊற்றழியும் அருந்துயரம் பெருகும் ஆனந்தப் பொங்கலுடன் அன்னைஎமை அளித்தாள் ஆனந்தச் சோதரியார் அன்புளத்தால் வளர்த்தார் ஆனந்தம் அருள்மனைவி அழகமிழ்தம் தந்தாள் ஆனந்தம் வளர்த்துவரும் அன்போபேய் அரசே. 7 ஆனந்தம் பெறவேண்டி அங்குமிங்கும் ஒடல் ஆனந்தம் அச்சமயம் இச்சமயம் என்றே ஆனந்த நோக்குடனே அலைந்துதிரிந் துழலல் ஆனந்தம் என்றுபுறக் கோலங்கள் மாற்றல் ஆனந்தங் கிட்டுமென மலயோகஞ் செய்தல் ஆனந்த யோகரென்றே அவதிகளை நாடல் ஆனந்த ஆண்டவனே இவையெல்லாம் பாழே ஆனந்த உயிர்ப்பணிகள் ஆற்றஅருள் செய்யே. 8 ஆனந்த நீர்நிறைந்த அகலேரி கரையில் ஆனந்தம் தழைதழைக்க ஆகாயம் நோக்கி ஆனந்தக் கரநீட்டி அன்புடனே அழைக்கும் ஆனந்தங் கனிமரத்தின் அடியமர்ந்து பார்த்தால் ஆனந்த நடைநடந்தே அங்குவரும் புட்கள் ஆனந்தக் குரலெடுத்தே ஐயஉனைப் பாடும் ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்த இறையே ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தப் பேறே. 9 ஆனந்தக் கன்றெல்லாம் அங்குமிங்குந் துள்ளி `ஆனந்த மணியோசை ஆக்களுடன் செல்லும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தக் காட்சி ஆனந்தக் கோவலர்கள் அடியெடுத்து வைத்தே ஆனந்தக் குழலூதி நடந்துசெலுங் காட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த இறையே ஆனந்த இயற்கையிலே ஆனந்தம் நுகர ஆனந்த அருளாட்சி அகிலமெலாம் அருளே. 10 43. வேண்டுதல் மெய்ப்பொருளே உன்னடியில் மேவுமனம் வேண்டும் மெய்யோம்பி நிறைபேணல் மீக்கூரல் வேண்டும் எப்பொருளும் உன்னுடைமை என்னும்எண்ணம் வேண்டும் எப்பொழுதும் இயற்கையிலே இசையுமுளம் வேண்டும் தப்புவிளை வினைபுரியாத் தவம்பெருகல் வேண்டும் தவறிழைத்தால் கசிந்துருகுந் தன்மைமிகல் வேண்டும் இப்புவியில் இகல்பகைகள் இயங்காமை வேண்டும் எவ்வுயிரும் பொதுவெனக்கொள் இயல்வேண்டும் அருளே.1 nrhâ!அடி மறவாது தொண்டுசெயல் வேண்டும் சுதந்திரமே எங்கெங்கும் சூழ்ந்தெழுதல் வேண்டும் நீதியழி அடிமைமுறை நிகழாமை வேண்டும் நிறைபிறழும் அரசெல்லாம் நிலவாமை வேண்டும் சாதிவெறி பிறப்புயர்வு சாய்ந்திடலே வேண்டும் சண்டைபுரி வெறிமதங்கள் தளர்ந்தொழிதல் வேண்டும் பேதமிலாச் சமரசமே பெருகிவரல் வேண்டும் பிணியறுக்குஞ் சன்மார்க்கப் பிடிவேண்டும் அருளே. 2 அன்புருவே அடிவணங்கி அருள்பெறுதல் வேண்டும் அணங்குலக அடிமையெங்கும் அற்றழிதல் வேண்டும் இன்பருளுங் காதல்மணம் ஏற்றமுறல்வேண்டும் இன்னாத மணமெல்லாம் இரிந்தோடல் வேண்டும் பன்மனைவி ஒருவன்கொளும் பழியொழிதல் வேண்டும் பரிந்தொருவன் ஒருத்தியுடன் படிந்தொழுகல் வேண்டும் அன்னையரை மாயையெனும் அகம்மடிதல் வேண்டும் ஆணினிடங் கற்பொழுக்க அடிவேண்டும் அருளே. 3 பெரியவனே அடிமறவாப் பேறுபெறல் வேண்டும் பெண்மையொளிர் பெருமையெங்கும் பேசிவரல் வேண்டும் அரிவையரில் தாய்மைதவழ் அன்புணர்தல் வேண்டும் அவ்வையர்பால் இறைமையொளி அசைவறிதல் வேண்டும் கரியகுழல் மாதராட்சி காசினிக்கு வேண்டும் கன்னியர்தம் மனமடைந்துன் கருணைபெறல் வேண்டும் தெரிவையரை இகழ்வோரைச் சேராமை வேண்டும் சிறுமையர்கள் மனந்திரும்பச் செபம்வேண்டும் அருளே. 4 ஆண்டவனே உனைமறவா ஆண்டகைமை வேண்டும் அலையும்புற மனமடங்கி நடுவரும்பல் வேண்டும் மாண்டநடு கடந்தடியின் மனமலரல் வேண்டும் மனந்திரும்பி அழுகின்றேன் மன்னித்தல் வேண்டும் மூண்டபழி பாவமெலாம் முனையாமை வேண்டும் மூள்பாவச் செயல்நிகழ்த்தா மொய்ம்புபெறல் வேண்டும் ஈண்டெதற்கும் உன்னருளின் இருந்துணையே வேண்டும் எழும்பும் நான் பலிஅடிக்கீழ் இடல்வேண்டும் அருளே. 5 இறையவனே எஞ்ஞான்றும் எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிரும் நீஎன்னும் இனிமைபெறல் வேண்டும் மறையருளும் உயிர்த்தொண்டு மடியும்வரை வேண்டும் மறுபடியும் தொடர்ந்ததனை வந்துசெயல் வேண்டும் கறைமலியும் பொய்யுடலம் கடந்தேறல் வேண்டும் கருணைமனம் கண்ணோட்டம் கலந்தஉடல் வேண்டும் நிறையின்ப இடமுண்மை நினையாமை வேண்டும் நித்தியமாய்த் தொண்டுபுரி நிலைவேண்டும் அருளே. 6 உறவேஉன் அருள்மறவா உறுதிநிலை வேண்டும் உலகுயிருன் கோயிலென உணர்கழகம் வேண்டும் சிறியகளி கதைஆட்டம் சிறவாமை வேண்டும் செவிவரைநில் களிகலைகள் செறியாமை வேண்டும் மறிமனத்தின் அலையடக்கும் மாண்கதைகள் வேண்டும் மனங்குவிந்து மதிபெருக்கும் உயிர்க்கலைகள் வேண்டும் பொறியரவுப் புதினவிடம் புகையாமை வேண்டும் புதியஅறி வியல்அறத்திற் புகவேண்டும் அருளே. 7 அழகநின தருங்கலைதோய் ஆனந்தம் வேண்டும் அன்பியற்கைப் பள்ளிபயின் றறிவுபெறல் வேண்டும் எழுகதிரில் மூழ்கிஉயிர்ப் பிறங்குமுடல் வேண்டும் எழிலொழுகும் பொழிலணிந்த இருக்கையிடம் வேண்டும் குழவிபொழி மழலைமொழி கொள்செவிகள் வேண்டும் கோடுமலை இவர்ந்துபொறைக் குணம்பெருக்கல் வேண்டும் பழுவம்அவிர் பசுமைபடிந் திளமையுறல் வேண்டும் பரவைஅலை பாட்டிலெழும் பயன்வேண்டும் அருளே. 8 அறவாஉன் வழியுலகம் அமைவுபெறல் வேண்டும் அதற்குரிய தொழிலெல்லாம் அளவுபடல் வேண்டும் வெறுமேடு படிப்பவர்தந் தொகைசுருங்கல் வேண்டும் விரும்புதொழிற் கல்வியெங்கும் விரிவடைதல் வேண்டும் முறையான தொழிற்கல்வி முதன்மையுறல் வேண்டும் மோனம்வளர் ராட்டைசுற்றல் முதிர்ந்தோங்கல் வேண்டும் உறவாதல் கடிதொழில்கள் ஒடுங்கிடுதல் வேண்டும் ஓவியஞ்செய் தொழில்வளர்ச்சி உறவேண்டும் அருளே. 9 ஒருவஉன தருளாட்சி உலகோங்கல் வேண்டும் ஒறுக்குமரு ளாட்சியெங்கும் ஒடுங்கிடுதல் வேண்டும் இருவரங்கு மாடியிலே உலவாமை வேண்டும் இருவரிங்குக் குடிசையிலே உலராமை வேண்டும் இருவரங்குத் தின்றுகொழுத் துருளாமை வேண்டும் இருவரிங்குப் பட்டினியால் வாடாமை வேண்டும் இருவரங்குப் பட்டாடை அணியாமை வேண்டும் இருவரிங்கு நடுங்காமை உறவேண்டும் அருளே. 10 44. போற்றி உலகெலாங் கடந்து நிற்கும் உலப்பிலா அறிவே போற்றி உலகெலாங் கலந்து வைகும் ஒப்பிலா இறையே போற்றி உலகெலாம் ஒழுங்கில் செல்ல ஒளிபொழி பிழம்பே போற்றி உலகெலாம் வணங்கி ஏத்தும் ஒருவனே போற்றி போற்றி. 1 ஆதவற் கனலை நல்கும் அலகிலாக் கனலே போற்றி சீதனுக் கீரம் ஈயும் சிறையிலா நிலவே போற்றி ஓதருங் கோள்கட் கெல்லாம் ஒளியருள் சுடரே போற்றி பூதமும் அங்கி ஏற்பப் பொலிதருந் தழலே போற்றி. 2 மண்ணிலைந் தப்பில் நான்கு வகுத்தருள் பரனே போற்றி ஒண்ணழல் மூன்று வைத்த உத்தமா போற்றி போற்றி விண்டுவில் இரண்டு சேர்த்த வித்தகா போற்றி போற்றி விண்ணிலே ஒன்று வேய்ந்த விமலனே போற்றி போற்றி. 3 இயற்கையின் உயிரா யெங்கும் எழுந்தருள் இறையே போற்றி செயற்கையின் சிந்தைக் கெட்டாச் செல்வமே போற்றி போற்றி முயற்சியின் விளைவா யோங்கும் முதன்மையே போற்றி போற்றி பயிற்சியில் நிற்போர்க் கென்றும் பண்புசெய் பரனே போற்றி. 4 இறப்பொடு பிறப்பி லாத இன்பமே போற்றி போற்றி வெறுப்பொடு விருப்பி லாத மேன்மையே போற்றி போற்றி ஒறுப்புடன் கறுவி லாத உத்தம அன்பே போற்றி பொறுப்புறும் ஒழுங்கிற் பொங்கும் புனிதமே போற்றி போற்றி. 5 பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி. 6 கூடலைக் குறிஞ்சி, முல்லை இருத்தலைக் குறித்தோய் போற்றி ஊடலை மருதப் பாலில் உதவிய உறவோய் போற்றி சூடனல் பாலைப் பண்பில் பிரிதலைச் சூழ்ந்தோய் போற்றி ஏடமை நெய்த லூடே இரங்கலை இணைத்தோய் போற்றி. 7 மலைமுழ வருவி வைத்த மகிழ்ச்சியே போற்றி போற்றி அலைகடல் பாட வைத்த அமுதமே போற்றி போற்றி கலையினில் காதல் வைத்த கருணையே போற்றி போற்றி சிலையினில் வீரம் வைத்த செம்மலே போற்றி போற்றி. 8 உருவிறந் தோங்கிச் செல்லும் உயர்ச்சியே போற்றி போற்றி அருவினுக் கெட்டா தேகும் அகண்டமே போற்றி போற்றி குருவினுள் கோயில் கொண்டு குணம்புரி சித்தே போற்றி திருவருள் விழைவோ ருள்ளச் சிந்தனை போற்றி போற்றி. 9 நல்லதே பிறவி தந்த நாயக போற்றி போற்றி அல்லவே செய்திந் நாளில் அழுமெனைக் காப்போய் போற்றி தொல்லையை நீக்குந் தொண்டில் துணைசெயுந் தோன்றல் போற்றி பல்வழி உயிர்ச்சன் மார்க்கம் பரவவே அருள்வோய் போற்றி. 10  1. மாசு மனிதம் மாசு மிகுந்த மனிதஇருள் போக்கவந்த ஏசு உனைமறவேன் என்று. 1 கன்னி வழிமலர்ந்த கற்பகமே என்னுயிரே முன்னி உனைஅணைந்தேன் முன் 2 ஆசைக் கடல்விழுங்க ஆளானேன் அப்பாஉன் நேசம் மறித்ததுவே நின்று. 3 பிழைபொறுத்குந் தெய்வம், பெரும! நீ என்றே குழையுளத்தால் நானடைந்தேன் கொள். 4 வன்பேய் முனைப்பழித்த வள்ளல் கிறிதுவே உன்சேயாய் வாழ்வேன் உணர்ந்து. 5 ஆணி அறைந்தவர்க்கும் அன்பான தெய்வமே தோணிஎனக் காவாய் தொடர்ந்து. 6 சிலுவையும் ஆணியும் செந்நீரும் நெஞ்சில் நிலவுந் தவமே நிறை. 7 என்னுள்ளே நீபிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யானிறந்தேன் உற்று. 8 உன்குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா என்குருதி எங்கேயோ ஏது. 9 வெள்ளை உடையும் மலைப்பொழிவும் என்னுள்ளக் கள்ளம் அழிக்குங் கலை. 10 2. அறத்தின் இயல் அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் ஆய்ந்தளந்தேன் திறத்தைத் தெளிகிலேன் சீற்றக் கொலைஞரின் தீச்செயலைப் பொறுத்தருள் செய்த புனிதம் நினைவில் புகப்புகவும் அறத்தன்பு நீயென் றறிந்தேன் கிறிதுவின் ஆருயிரே. 1 ஏசினேன் உன்னை இனிய மொழியை இளமையிலே கூசினே னில்லை குறையினைப் பின்னே குறித்தழுதேன் ஏசுவே! உன்னருள் என்னுளம் எய்திய தெப்படியோ மாசிலா அன்பே! மகனாய் உருக்கொண்ட மாணிக்கமே! 2 மலரைப் பறிக்கிலென் மாலை புனைந்திலென் மந்திரத்தின் ஒலியைப் பெருக்கிலென் ஓவெனப் பாக்களை ஓதிலென்ன! சிலுவையும் ஆணியும் செந்நீரும் சேர்ந்த திருவுருவம் பொலியும் உளத்தினில் பொன்றிடும் பாவப் பொருப்புகளே. 3 வாக்கை அடக்கின் வயிற்றை ஒடுக்கின் மயிர்வளர்த்து மூக்கைப் பிடித்திடின் மூச்சைத் தடுத்திடின் முத்தியின்பம் தேக்குமோ ஐயோ செகத்தீர்! அடைமின் சிலுவை உயிர் போக்கிய ஏசுவின் பொன்னடி இன்பம் புகுந்திடுமே. 4 தத்துவ நூல்களைத் தாங்கித் தருக்கச் சபைகளிலே வித்தகம் பேசி விழுந்தவன் என்று விழுமியஉன் சத்திய வாக்குத் தடுத்தெனை ஆளத் தயாபரனே மொத்திய மூர்க்கம் முறைமுறை சாய்ந்தது முன்னவனே. 5 இறையவன் கோயிலை எண்ணி நுழைந்தாய் இளங்குமரா கறைகளைக் கண்டதுங் கள்ளர் குகையெனக் காய்ந்துவிட்டாய் குறைகளைப் போக்குங் குருமொழி யாயது கோதகற்றித் தறையைத் திருத்துந் தகைமையை என்னென்று சாற்றுவனே. 6 கள்கொலை காமம் களவுபொய் தீய கறைகழித்துத் தள்ளும் வழிகளைச் சாற்றினர் பல்லோர் தரணியிலே பள்ளிப் படிப்பாய்ப் பரவின, வாழ்வில் படிவதற்குக் கொள்ளு மனமே கொலைஞரை மன்னித்த கோவடியே. 7 ஒழுக்கம் விழுப்பம் உயிரினும் ஓம்பென் றுரைத்திருந்தால் கொழிக்குமோ தானே குலவி நடந்து, குவலயத்தீர் ஒழுக்க வடிவாங் கிறிதுவை உன்னி உளத்தழுதால் அழுக்கைக் கழுவும், ஒழுக்கம் அரும்பி அலர்ந்திடுமே. 8 அன்பே! உனைக்காண் பரிதென அன்னை அகந்திரண்டாய், என்புதோல் போர்த்து நடந்தாய், மொழிந்தாய், இருநிலத்தில் மன்பதை நோய்கண் டிரங்கி இரங்கி மரித்தெழுந்தாய், பொன்னுரு வில்லையேல் புந்தியில் என்ன பொலிந்திடுமே. 9 பாவி பிறந்தனன் பாவி வளர்ந்தனன் பாவவினை மேவிய வாழ்வினன் மீக்கூர்ந்து பாவம் விளைந்தது சாவியாய்ப் போகச் சமயப் புறத்தினில் சார்ந்தலுத்தேன் தேவனே! அன்புச் சிலுவையின் நீழலைச் சேர்ந்தனனே. 10 3. அலகிலொளி அலகிலொளி ஐயாவே அகிலமெலாம் உன்கருவில்; உலகிடைநீ ஒருகன்னி உயர்கருவில் உதித்ததென்னை? சிலைநுதலார் உலகினிலே செறிந்தஇழுக் கொழித்தவர்தம் நிலைமையினை வளஞ்செய்ய நினைந்ததுவே நெஞ்சினிலே. 1 எவ்வுயிர்க்குந் தாயான இறையவனே இவ்வுலகில் செவ்வியலி ஒருதாயின் செழுங்கையில் வளர்ந்த தென்னை? எவ்வுயிருந் தாயன்பை எய்திவிடின் இறையுண்மை மெய்ம்மழவில் பொலியுமென்று விளம்புதற்கு வளர்ந்ததுவே. 2 பருவுடலை மறைத்தருளிப் பரமவுடல் அடைந்தக்கால் திருமகளிர் விழிக்கமுதச் செழுங்காட்சி வழங்கியதென்? திருமகண்மை உளமெய்தின் தெய்வவுரு விளங்குமென்று மருவுலகம் உணரகுரு மகிழ்காட்சி வழங்கியதே. 3 நெடுங்காலம் நஞ்சுமிழ்ந்து நிலம்வதைக்க நீளரவக் கொடுங்கோன்மைகொதித்ததென்னை? குமராநீ பிறந்ததுமே கொடுங்கோன்மை விழுத்தவந்த குணக்கோவென் றுனைத்தெரிந்து நடுங்கியதே கொடுங்கோன்மை நலிந்துவரல் கண்கூடே. 4 பேய்மையிலா உலகிருந்து பேயுலகிற் பிறப்பெடுத்துப் பேய்புரிந்த சோதனையும் பெற்றுவெற்றி அடைந்ததென்னை? பேய்நிலத்தில் சோதனையுண் டஞ்சாதே எனஅபயம் பேய்மனத்து மக்களுக்குப் பெரியவனே தெரிப்பதற்கே. 5 மாடிமனை யிடைஏசு மலரடியை வையாமல் காடுமலை கடல்குடிலில் கான்மலரை வைத்ததென்னை? காடுமலை கடல்குடிலுங் கடவுணெறி கூட்டியற்கை வீடமைதி யெனவிளக்க மேவியதே கான்மலரே. 6 முடிசேர்ந்த முள்ளடுக்கும் முகஞ்சேர்ந்த எச்சிலுமே இடிசோரும் உரமுடையாய்! இகலெழுப்ப விலை என்ன? கடியாத பொறுமையன்புக் கலைவளர வேண்டுமென்று நடையாலே நாட்டுதற்கு நல்லுளத்தில் எண்ணியதே. 7 சிலுவையிலே கிறிதுஉனைச் சேர்த்தாணி அறைந்தகொடுங் கொலைஞரையும் பகையாது குழைந்தருளைச் சுரந்ததென்னை? பலியிரத்தம் முழுகிமனம் படிந்துருகி மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கு நினைந்தருளைச் சுரந்தமையே. 8 ஒருகன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னங் காட்டென்றும் கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும் பொருநரையும் நேசியென்றும் போதனையால் சாதனையால் kUtit¤j »¿ÞJ!உன்றன் மலரடியில் அடைக்கலமே. 9 வாளேந்திப் போர்புரிந்த வாகையரும் மாண்டுவிட்டார் வாளேந்தாக் கிறிதுவேநீ மரித்தெழுந்தாய் வீரவள்ளால்! வாளேந்தும் வழியுழன்றேன் வழிகண்டேன் மரித்தெழுவேன் வாளேந்தா நெறிவளர்க்க மலரடியில் அடைக்கலமே. 10 4. உலகமெலாம் உலகமெலாம் பாவஇருள் உமிழ்ந்துநின்ற வேளை ஒடுக்கஅதைக் கன்னிவயிற் றுதித்தபர ஒளியே! இலகுடுக்கள் நீபிறந்த இடங்குறிக்கக் கலைஞர் ஏகிஉன்றன் அடிவணங்க இன்பமருள் சேயே! கலகமன வேந்தாட்சி கலகலத்து வீழக் கடலுலகில் அருளாட்சி கால்கொண்ட அரசே! அலகையினை அதட்டியதன் சோதனையை வென்ற ஆண்டகைமை வீரகுரு! அடியையடைந் தேனே. 1 தொழிலாளி வழிவளர்ந்தாய் தொழுவத்தில் வதிந்தாய் சூழ்வனத்தில் ஆழ்கடலில் தொடர்மலையில் நடந்தாய் விழியாத வலைஞரையும் விரும்பிஅழைத் தாண்டாய் விளையாட்டுக் குழந்தைகளை வெறுத்தவரைக் கடிந்தாய் அழியாத வீடென்றே அவர்மனத்தைக் கொண்டாய் அருவருக்கும் அழுக்கணங்கின் அழுகைக்கருள் சுரந்தாய் பழிநோயர் தொழுநோயர் படர்ந்துவரக் குமரா! பரிந்தவர்தந் துயர்களைந்தாய் பாவிமுகம் பாரே. 2 அன்றாட அப்பமெங்கட் கருள்புரிக என்றும் அடுத்துவரு நாட்கவலை அடையற்க என்றும் என்றேனுஞ் செடிபறவை என்னஉண்போம் உடுப்போம் என்றெண்ணி வதைந்துவதைத் தேங்கினவோ என்றும் நன்றாக இறைஉறுதி எளிமைவழி நவின்றாய் ஞானமென்று கடபடம்நீ நாட்டவில்லை ஐயா! பொன்றாத மொழிக்குரிய பொருந்தெளிமை என்னுள் புகுந்ததுவும் உன்னருளே புரிகைம்மா றிலையே. 3 பன்னிருவ ருள்ளொருவன் காட்டிஎனைக் கொடுப்பன் படிந்தொருவன் சோதனையில் மறுதலித்தே விடுவன் என்றுமுன்னர் வாய்மலர்ந்தாய் ஏசுபெரு மானே! இருநிகழ்ச்சி நடந்தமையை இவ்வுலகம் அறியும் அன்னவரைக் காயாமல் ஆண்டஅருட் கடலே! அடியரையும் சோதனைப்பேய் அலைக்கும்நிலை உணர்ந்தேன் என்னனையர் எளிமையினை எவ்வுரையால் சொல்வேன் எடுத்தணைக்க நீஇலையேல் எங்கள்கதி என்னே. 4 உன்னருளால் உன்னுடனே உறைந்தவரும் பேயின் உறுத்தலினால் உனைமறந்த உண்மையினைத் தேர்ந்தேன் என்மனத்தின் எளிமைகுறித் தேக்கமுற்றேன் ஐயா! ஏசுஎன்றும் கிறிதுஎன்றும் எண்ணியெண்ணிக் கிடந்தேன் மன்னவனே! சிலுவையிலே மரித்தபின்னர் பேயின் மயக்கமில்லை சீடருக்கு மயங்காமை தெளிந்தேன் பொன்னுடலம் பொழிகுருதிப் பெருக்கினிலே ஆழ்ந்தேன் பொல்லாத பேய்க்குறும்பு புகஇடமும் உண்டோ! 5 அன்புநெறி சிறந்ததென அகிலமுணர்ந் துய்ய ஆண்டவனே என்செய்தாய் அதைநினைந்தால் அந்தோ! என்புருகும் உயிருருகும் எண்ணமெலாம் உருகும் எம்மொழியால் இயம்பவல்லேன் ஏழைமகன் அப்பா! மன்னுலகில் அவதரித்தாய் மக்களிடை வதிந்தாய் மறைமொழிந்தாய் அவ்வளவில் மனம்நிறைய இலையோ பொன்னுடலை வதைக்கவிட்டாய் பொலியுயிரை நீத்தாய் பொறையன்பு நீயென்னும் பொருண்மைதெளிந் தேனே. 6 அன்பேநீ ஆதலினால் ஆருயிர்கள் பொருட்டுன் அழகுடலை வதைக்கவிட்டாய் அருளுயிரை நீத்தாய் இந்நிலத்தில் அச்செயலை எக்குரவர் ஏற்றார் இளங்கன்னி வயிற்றுதித்த இறைமைமணி விளக்கே அன்பினிலே குறையிருந்தால் அருஞ்செயலை ஆற்றல் ஆகாதே ஆகாதே அன்புடைய அறவோர் என்பும்பிறர்க் குரியரென எழுந்தமொழிக் குகந்த இலக்கியமா யிலங்கிநிற்கும் ஏசுகுரு நாதா! 7 வான்காணா முழுமதியே வாடாத பொழிலே மருந்தறியா நோய்தீர்க்கும் மாமருந்தே மணியே ஊன்காணா உளத்திரக்கம் ஊற்றெடுத்தே ஓடி ஒளிர்குருதி யாகிஉன்றன் உரங்கால்கை ஒழுகல், நான்காணாக் கண்ணினுக்கு நல்விருந்து செய்தாய் நாயகமே! நினைவிலந்த நற்காட்சி அருளே தேன்காணா இன்சுவையே தெவிட்டாத அமுதே தெய்வமணக் கிறிதுவெனுந் திருக்குமர குருவே. 8 அமைதிமலை மீதமர்ந்தே அறமழையைப் பொழிந்தாய் அன்பாறாய் அருட்கடலாய் அதுபெருக லாச்சே இமையளவில் அதில்திளைத்தால் இகல்பகைகள் போகும் எவ்வுயிருஞ் சோதரமா யிலங்குநிலை கூடும் சமயவழி வகுப்புவழி சாம்ராஜ்ய வழியே சண்டைமிக அன்புவழிச் சார்பழிந்து போச்சு சமதருமம் நிலவினெங்கும் சாந்தமலைப் பொழிவு சகமாகும் அந்நிலையைச் சற்குருவே அருளே. 9 உலகிறங்கிக் குமரன்அன்பை உணர்த்தியபின் மக்காள்! யோகமென்றும் யாகமென்றும் விரதமென்றும் உழலல் கலகமென்று மனைநீத்தல் தாடிசடை வளர்த்தல் கனல்பசியால் வீடுதொறுங் கையேந்தல் முதலாம் பலநெறிகள் படர்தலென்ன? பகுத்தறிமின் அறிமின் பத்திநெறி யொன்றில்நின்று பாவமுறை யிட்டுச் சிலுவையிலே சிந்தைவைத்தால் தீமையெலாம் அகலும் செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல்பெற லாமே. 10 5. பொய்யிலே பொய்யிலே நோக்கம் புகழிலே நாட்டம் பொருந்திய வாழ்க்கையை வெறுத்து, மெய்யிலே உள்ளம் பணியிலே பற்றும் மேவுநல் வாழ்க்கையை விரும்பி, ஐயனே கிறிது அப்பனே என்றுன் அடியினை நாடொறும் நினைந்து கையனேன் உருகிக் கசிந்ததை அறிவாய் காத்தருள் கருணைமா நிதியே. 1 வெகுளியில் முளைத்து வெகுளியில் வளர்ந்து விடக்கனி விளைதலை யுணர்ந்து வெகுகலைப் பயிற்சி துணைசெயு மென்று வீணிலே கழித்தனன் காலம் பகைவரை நேசி என்றுரை பகர்ந்து பண்புறக் காட்டிய ஏசு பகவனே என்று பாதமே அடைந்தேன் பார்த்தருள் கருணைமா கடலே. 2 குற்றமே உடையேன் குறைகளை வளர்த்தேன் குறும்புகள் பலப்பல செய்தேன் கற்றனன் நூல்கள் கழகநின் றறிவால் கடபட உருட்டலைப் புரிந்தேன் பற்றினன் பொல்லாப் பாழ்நெறி நல்ல பண்புறு நெறியினை நாடி இற்றைநாள் உன்றன் எழிலடி அடைந்தேன் ஏசுவே காத்தருள் இறையே. 3 புள்ளமர்ந் தினிய பாக்களை முழங்கும் பொழிலினைக் கண்டனன் புகுந்தேன் உள்ளமே கவரும் உயர்கனி பறிக்க உற்றனன் மரங்களி னிடையே முள்ளினம் மருட்ட மயங்கினன் ஏசு மூர்த்தியே! என்னிலை தெரிந்து முள்ளிலா மரமாய் முதிர்கனி அளித்தாய் முன்னவா! அருட்பெருக் கென்னே. 4 தண்புனல் வேட்கை தாக்கிட அலைந்தேன் தடங்களைத் தேடினன் கண்டேன் நண்ணினன் ஒன்றை நாற்புறங் கள்ளி, நயந்தனன் வேறொரு தடத்தைத் திண்ணிய முதலை திரிந்தது, பிறிதில் தீஅரா, நடந்தனன் சாய்ந்து பண்ணளி தடமாய்ப் பரிந்தனை கிறிது பரமநின் னருட்டிற மென்னே. 5 அலைகடல் அமைதி அடையவே செய்தாய் அப்பனே! மக்களின் மனத்துள் அலையெலாம் ஒடுங்க மலைப்பொழி வளித்தாய் அருட்பெருங் குருபர! எல்லாம் சிலுவையில் செறியச் சிறக்கவே வைத்தாய் சிந்தையிற் சிலுவையின் கலைகள் நிலவநாள் தோறும் ஜெபஞ்செய வேண்டும் நின்னருள் அதற்குமே தேவை. 6 தீயரைச் சேர்தல் தீமையென் றெண்ணிச் சிந்தையில் ஒதுங்கியே நின்றேன் நாயினேன் என்றன் நலன்களை நாடி நயந்தனன் பாவியாய் வளர்ந்தேன் பேயினை யொழித்த பெரியனே! ஜெபத்தில் பித்தினைக் கொண்டபின் ஐயா! தீயரை நண்ணித் திருப்பணி செய்தேன் தீமைகள் அணுகவும் இலையே. 7 என்னிடங் குறைகள் பிறரிடங் குறைகள் எழுவதைக் கண்டபோ தெல்லாம் உன்னடி எண்ணி உருகியே ஜெபத்தில் உளங்கொளும் உணர்வினை அளித்தாய் என்னகைம் மாறு செய்குவன் ஏழை ஏசுவே! எம்பெரு மானே! அன்பினால் உலகை அமைதியில் நிறுவ அவதரித் தருளிய அரசே! 8 பள்ளியில் உன்றன் பான்மொழி பயின்றேன் பரிசிலை உளங்கொடு நாயேன் எள்ளினேன் உன்னை; இன்மொழி பின்னை இரங்கவும் வருந்தவும் செய்யக் கள்ளனேன் அழுதேன் பிழைபொறுத் தாண்டாய் காய்தலும் வன்மமும் இல்லா வள்ளலே! நாளும் ஜெபத்தினில் மனத்தை வைத்திடும் வாழ்வடைந் தேனே. 9 புரிசடை முடியும், பூந்துளி நுதலும், புவியுயிர்க் கிரங்கிய விழியும், வரையினில் நின்று மறைபொழி வாயும், வளர்திருத் தாடியும், குருதி சொரிசெழு மார்பும், சுடுமுளைக் காயம் துலங்குகை கால்களும், சிலுவை மருவிய வடிவும், மனமலர் ஜெபத்தை வழங்கிய வள்ளல்! நீ வாழி. 10 6. உலகெலாம் உலகெலாம் உய்ய வேண்டி உருக்கொடு மண்ணில் வந்தாய் நலமிகு உவமை யாலே ஞானசீ லங்கள் சொற்றாய் கலகமுங் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச் சாய்த்தாய் அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி. 1 தரையினில் உதித்த கோலம் தையல்கை வளர்ந்த கோலம் வரையினில் இவர்ந்த கோலம் வனத்தினில் நடந்த கோலம் திரைகடல் கடந்த கோலம் சிலுவையில் பொலிந்த கோலம் உறைமனம் ஜெபத்தால் பெற்றேன் உத்தம! போற்றி போற்றி. 2 முள்வன முனைப்புச் சாய முடிமலை மிடுக்கு மாயத் தள்ளலைச் சீற்றம் வீயத் தாண்மலர் வைத்து வைத்து மெள்ளவே நடந்த காட்சி வேய்மனம் அமுத மாச்சு வள்ளலே! ஜெபத்தின் பேறு! மலரடி போற்றி போற்றி. 3 அங்கியைத் தொட்ட பெண்ணை அன்பினால் நோக்கி உன்பால் தங்கிய நேசம் உன்நோய் தவிர்த்ததென் றருளிச் செய்தாய் பொங்கிய மொழியில் மூழ்கிப் பொருந்திய ஜெபத்தில் நின்றேன் இங்கென தூனங் கண்டேன் ஏசுவே போற்றி போற்றி. 4 அலையிலா ஆழி யானாய் அருட்புனல் மேக மானாய் நிலைகனி மரமு மானாய் நீங்கலில் ஒளியு மானாய் புலனிலாக் கடவு ளானாய் புலனுடைக் கிறித்து வானாய் நலமிலேற் கன்பே ஆனாய் நாதனே! போற்றி போற்றி. 5 ஜீவநூற் பயிற்சி வேண்டும் ஜீவநீர்ப் படிதல் வேண்டும் ஜீவநன் னீழல் வேண்டும் ஜீவசெஞ் செல்வம் வேண்டும் ஜீவனில் ஜீவன் வேண்டும் செகமிவை பெறுதல் வேண்டும் ஜீவனை ஈந்த தேவே! திருவடி போற்றி போற்றி. 6 வாழ்ந்திட உலகை வைத்தாய் மானுடப் பிறவி வைத்தாய் சூழ்ந்திடச் சபைகள் வைத்தாய் தோத்திரஞ் செய்தே உன்பால் ஆழ்ந்திடச் சிலுவைக் கோலம் அன்புடன் வைத்தாய் வைத்தாய், வீழ்ந்திடல் எற்றுக்கிங்கே, விமலனே! போற்றி 7 பரனரி அணைவா னென்றும் பார்பதம் படியே என்றும் இரவிலும் நினைந்தேன் நெஞ்சம் ஏந்திய காட்சி என்ன! சிரமுடி முள்ளும் மண்ணில் சேவடி நடையும் - ஏசு பரமன்நீ என்று கொண்டேன் பதமலர் போற்றி போற்றி. 8 அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே! போற்றி போற்றி மன்பதை பாவந் தீர்க்க மரித்தவா! போற்றி போற்றி இன்புற உயிர்த்தெ ழுந்த ஈசனே! போற்றி போற்றி என்பிழை பொறுக்கும் ஏசு எந்தையே! போற்றி போற்றி. 9 பராபரக் கடவுள் வாழி பரிசுத்த ஆவி வாழி நிராமயக் குமரன் வாழி நிறையருள் அடியார் வாழி புராதன மொழிகள் வாழி புண்ணியச் சிலுவை வாழி விராவிய குருதி வாழி வியன்சபை வாழி வாழி. 10 7. ஏசு கிறிது ஏசு கிறிது பெருமானே எந்த உயிர்க்கும் அருள்வோனே. 1 கிறிது கிறிது என்போமே கிட்டிய பாவம் பின்போமே. 2 கன்னி வயிற்றில் உதித்தோனே கருணையை உலகில் விதைத்தோனே. 3 உருவம் இல்லா ஆண்டவனே ஒளியாய் என்புடல் பூண்டவனே. 4 அன்பை அளிக்க வந்தோனே ஆருயிர் உலகுயத் தந்தோனே 5 குலைந்தது குலைந்தது கொடுங்கோன்மை குமரா எழுந்ததுன் செங்கோன்மை. 6 தீராப் பிணிகளைத் தீர்த்தோனே தெவ்வரை அன்பாய்ப் பார்த்தோனே. 7 குழந்தை உள்ளம் உணர்ந்தோனே கோதில் வீடென் றுரைத்தோனே. 8 தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்குஞ் செங்கரனே. 9 ஏசுவே என்றதும் நெஞ்சுருகும் எல்லாப் பாவமும் இரிந்தருகும். 10 கண்ணே மணியே கற்பகமே கான்முளை யாகிய அற்புதமே. 11 பெண்ணுக் குரிமை ஆக்கியவா பெருநோய் தொழுநோய் போக்கியவா. 12 ஆணியில் சிந்திய செந்நீரே அகிலம் புரக்கும் நன்னீரே. 13 கிறிதுவின் இரத்தம் பெருமருந்து கேடில் இன்பம் தருவிருந்து. 14 திருமலை பொழிந்தது சொன்மறையே சிலுவை வழிந்தது செயன்முறையே. 15 சிலுவையில் நின்ற செழுங்கோலம் சிந்தையில் படிந்திடின் நறுஞ்சீலம். 16 சிலுவை நுட்பம் உளத்தினிலே சேர்ந்தால் விடுதலை அளித்திடுமே. 17 அமைதி அளிக்கும் அரசாட்சி ஐயன் குமரன் அருளாட்சி. 18 மரித்தும் எழுந்த சத்தியமே மரணம் இன்மையின் தத்துவமே. 19 வாழ்க கிறிது, போதனைகள் வாழ்க சிலுவை, சாதனைகள். 20 I 1. சன்மார்க்கக் கொடி சன்மார்க்க வெண்கொடி சேர்வோம் - அதில் j©lh kiu¥ó jtœtij¤ nj®nth«., வெண்மை தெரிப்பது தூய்மை - அதன் வேராஞ்சன் மார்க்கம் விரிசெழும் பூவே உண்மை உளத்தடந் தேவை - அந்த உளம்பெற வெண்கொடி நீழலைச் சார்வோம். (சன்) 1 சமயங்க ளெல்லாம் இதழ்கள் - அகச் சார்பிதழ் எட்டுஞ் சமரசச் சான்றாய்ச் சமைந்து திரண்டசன் மார்க்கம் - அதன் சாரம் பிலிற்றும் தனிக்கொடி சார்வோம். (சன்) 2 எட்டும் நபி இயல் ஏசு - சினன் புத்தன்கண் ணன்குகன் மோனன் உணர்த்தும் அத்தன் ஒருவன் இயல்பன்(பு) - இரக்கம் அறம்வினை செவ்வி அமைகொடி சார்வோம். (சன்) 3 சாதி மதநிறச் சண்டை - கொடுஞ் சாத்திர கோத்திர நாடுகள் சண்டை வேதனை பல்கிடுஞ் சண்டை - அற வீழப் பறந்துயர் வெல்கொடி சூழ்வோம். (சன்) 4 வகுப்பு மொழிநிறந் தாண்டி - மத வம்புயர் தாழ்வுடன் நாடுகள் தாண்டி தொகுப்புச் சகோதரஞ் சேரத் - துயர் தோன்றாப் புவியளி தொல்கொடி சூழ்வோம். (சன்) 5 கொலைகுறி குண்டு குவிக்குந் - தொழிற் கொடுமையைப் போக்கி விளைவைப் பெருக்கிக் கலையை வளர்த்துக் கருணை - கனி காதலும் வீரமுங் கால்கொடி சூழ்வோம். (சன்) 6 மண்பொன்னை மாதரை நீத்தால் - பெரு வான்வரும் என்ற மடமையைத் தேய்க்கும், மண்பொன்னில் மாதரில் மெய்யன் - உற மன்னல் உணர்த்தும் மணிக்கொடி ஈதே. (சன்) 7 தனிமை அரக்கனைச் சாய்க்கும் - அங்குத் தக்க பொதுமை இறைமை அமைக்கும் இனிமை எவர்க்கும் அருளும் - எங்கும் இன்பங் கொழிக்கும் எழிற்கொடி ஈதே. (சன்) 8 பன்மைப் பழமையைப் பாற்றிச் - செய்ய பசுமை ஒருமைப் பயன்விளை வாக்கி நன்மைப் புதுமையை நல்கி - உயர் ஞானம் வழங்கும் நறுங்கொடி ஈதே. (சன்) 9 எல்லா ருளத்தும் பொதுமை - அறம் எழுக நிலைக்க எனஅறை கூவிப் பொல்லாமை போக்கப் புரட்சி - புரி பூங்கொடி சன்மார்க்கப் பூங்கொடி ஈதே. (சன்) 10 உலகுக் கொருகொடி ஈதே - குலம் ஒன்றே இறைமையும் ஒன்றேஎன் றென்றும் ஒலிக்கும் ஒருகொடி ஈதே - புற உட்பகை கல்லும் ஒருகொடி ஈதே. (சன்) 11 வாழி மலர்கொடி வாழி - என்றும் வாழிசன் மார்க்கம் வளர்கொடி வாழி வாழி வழிக்கொடி நல்லோர் - நன்று வாழிசன் மார்க்கம் மலர்கொடி வாழி. (சன்) 12 II சன்மார்க்க வெண்கொடி அறையப்பா முரசு. சமரச வெண்கொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரசப் பூங்கொடி அறையப்பா முரசு. 1 மனத்துக் கொருகொடி அறையப்பா முரசு மனிதற் கொருகொடி அறையப்பா முரசு மனைக்கும் ஒருகொடி அறையப்பா முரசு மார்க்கம் வளர்கொடி அறையப்பா முரசு 2 ஊருக் கொருகொடி அறையப்பா முரசு ஒருநாட்டுக் கொருகொடி அறையப்பா முரசு பாருக் கொருகொடி அறையப்பா முரசு பரந்த பொதுக்கொடி அறையப்பா முரசு 3 துன்மார்க்கம் வெல்கொடி அறையப்பா முரசு துயரம் தொலைகொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரச வெண்கொடி அறையப்பா முரசு 4 2. பழமையும் புதுமையும் பழமை புதுமை படரு மிடங்கள் பாரி லுளவோ பகுத்துத் தெளிமின் பழமைக் கழிவும் புதுமைப் புகலும் பண்பில் நடையில் படித லிலதே. 1 திக்குத் திசைகள் திகழு மிடங்கள் செகத்தி லுளவோ செயற்கை வழக்கே. ஒக்கும் பழமை புதுமை வழக்கும் உண்மை நிகழ்ச்சி உறுத லிலையே. 2 பழமை புதுமை பரம னடையான் பரமன் கடந்தோன் பழமை புதுமை கழகக் கணக்கில் பொழுதி லிடத்தில் கானற் சலமே கணித்தல் அரிதே. 3 எல்லை உலகம் இனிது நடக்க எழுந்த வழக்கு வரம்பில் அடங்கும் எல்லை கடந்த இறையைப் படுத்தல் எளிய மதியே எளிய மதியே. 4 பழமை புதுமை வழக்கு வழியே பருத்துத் திரண்ட மொழிகள் ஒருங்கே பழமைப் பழையன் புதுமைப் புதியன் பரமன்எனச் சொல் பதியின் இயல்பே. 5 ஒன்றே கடவுள் உரைக்கும் மறைகள் உணர்த்தும் பழைய உலகம் பலவாச் சென்று விளைத்த செயற்கை பலவே சீர்செய் புதுமை செலுத்தும் ஒருமை. 6 மின்னல் ஒருமை மிளிருங் குவிகள் விரிக்கும் நிறங்கள் விளக்கும் வகைகள் பன்மை உணர்வைப் பராவும் பழமை பரந்த புதுமை பராவும் ஒருமை. 7 இரண்டு வகுப்பை இயம்பும் பழமை இயற்கை ஒருமை இசைக்கும் புதுமை சுரண்டல் இடுக்கில் சுழலும் பழமை தொல்லை இடுக்கைத் தொலைக்கும் புதுமை. 8 நஞ்சு மிடற்றன் நடப்பாம் பணையன் ஞானச் சிலுவை நயத்தன் அருகன் பஞ்சப் பரிவாய்ப் பகரும் பழமை பகுப்புப் பிரிவைப் பறிக்கும் புதுமை. 9 ஆலி லிருக்கும் அசோகி லிருக்கும் அரசி லிருக்கும் அமைந்த சிலுவைக் கோலி லிருக்கும் குழலில் குளிரும் கோட்டி லிருக்கும் புதுமை இறையே. 10 நாட்டைத் தனிமைப் படுத்திப் பழமை நடுங்கும் பிணக்கில் நசுங்கும், புதுமை நாட்டை உலக உறுப்பென் றுணர்ந்து நயத்தில் அருளில் ஒருமை புரக்கும் 11 பழைய உலகில் பகைமை மலிவு புதிய உலகில் கருணைப் பொலிவு பழமை அருக புதுமை பெருக பகைமை விழுக கருணை எழுக. 12 3. தெய்வப் புது உலகம் ஆராய்ச்சி என்றலையும் ஆராய்ச்சி உலகீர் ஆய்ந்தாய்ந்தே அலுத்தலுத்துத் தெய்வமெங்கே என்பீர் வேராயப் புகுந்துழைத்தல் வீண்முயற்சி யாகும் வித்தில்லா ஒன்றனது வேர்காண்டல் எங்ஙன்? 1 ஆராய்ச்சி அலைகளெழுந் தார்த்தார்த்து வீறி அங்குமிங்கும் ஓடிமுட்டி அதைஇதையும் உளறும் ஆராய்ச்சி எழுந்தொடுங்கும் அளவுடைய தன்றோ? அகண்டிதத்தை அணுகுவதோ அறிவுகொண்டு தேர்மின். 2 ஆழாக்கால் உழக்களத்தல் அறிவுடைமை யாமோ? அகண்டிதத்தைக் கண்டத்தால் அளக்கும்அறி வென்னே! பாழாகி அளவெல்லாம் பரிதவிப்பே நேரப் பரமில்லை என்றுரைக்கப் பரிகின்றீர் பாவம்! 3 இடவடிவப் பேரின்றி இருப்பதந்தத் தெய்வம் இடவடிவப் பேருடையீர் அதைஅளத்தல் அறிவோ? திடமுடனே இல்லையென்று முடிவடைதல் செருக்கே செருக்கறுந்த விடுதலையில் தெய்வநிலை தெளிவாம். 4 உறுப்பின்றி அறிவாகி ஒளிருமொரு தெய்வ உண்மைநிலை வெற்றாய்வால் உளம்படுதல் அரிதே உறுப்புடனே தாக்கின்றி அறிவாகும் அமைதி உறஉழைத்தால் தெய்வஉண்மை உறுதிபெற லாமே. 5 அறிவான ஒருதெய்வம் அன்பாகி இயற்கை அருட்குரவர் வீரரிடம் அமர்ந்திருத்தல் உணர்மின் குறியாகும் அவரிடத்தில் குறிகொண்மின் செருக்கு, குலைந்துவிடும் குலைந்துவிடும் குணம்பெறலாம் இனிதே 6 திருக்குரானில் விவலியத்தில் சித்தாந்தந் தனிலே திரிபிடகம் கீதைகளில் திருஅமைதித் திறத்தில் கருத்திருத்தி ஒன்றஒன்றக் கட்டழிந்து கடவுள் கருணைநிலை புலனாகுங் காட்சிஇது காண்மின். 7 பெரியவர்கள் உலகினுக்குப் பேசிவிட்டார் மறைகள் பின்னாளில் அவ்வுலகைப் பேய்த்தேரென் றெண்ணும் கரியஇருள் துறவுபுகக் கறைபடர உலகம் கருணைமறை நுட்பமுணர் கண்ணிழக்க லாச்சே. 8 இனியமறை நுட்பமெலாம் இயங்கிநிற்க வேண்டின் இறையுண்மை உணர்வளிக்க இலக்கியமா யிலங்கும் தனியுலகம் பொய்யென்னுஞ் சழக்கறுதல் வேண்டும். சமதர்ம வாழ்க்கைமுறை சார்புபெறல் வேண்டும் 9 தெய்வமெது தெய்வமெங்கே என்றாயும் மக்காள் ! தெய்வநிலை நல்வாழ்க்கைத் தெளிவென்ப தறிமின் வையமெய்யை ஆராய்மின் வகைவகையாஞ் சக்தி வாழ்க்கைவழி காட்டியொரு வகுப்புணர்வை வழங்கும். 10 ஆராய்ச்சிக் கென்றுநிற்கும் அவனிவிடுத் தந்தோ ஆராய்ச்சிக் கெட்டாத அகண்டம்புகல் என்னோ? நேராய வாழ்க்கைஇன்பம் நிகழ்வகைகள் காண்மின் நித்தலும்போர் மூள்வதற்கு நிமித்தமென்ன நினைமின் 11 முன்னாளில் தொழின்முதற்போர் மூண்டதில்லை பின்னாள் மூண்டதது வையமெல்லாம் செந்நீரில் மூழ்கும் இந்நாளில் தெய்வமெங்கே என்றாய்தல் வீணே இம்மையிலே இன்பமின்றி மறுமைஇன்பம் ஏது? 12 சுரண்டரசில் வறுமைபிணி கொலைகளவு பொய்மை சூதுமதம் முதலாய தொல்லைஎரி சூழும் வரண்டநிலை புரண்டெழுந்து வளம்பெறுதற் குரிய மருந்தென்ன வளர்பொதுமை வெள்ளமதே யாகும். 13 இயற்கையினை உன்னஉன்ன முதல்தொழிலாம் இருமை இன்மைநன்கு புலனாகும் இருமையொழிந் தொருமை முயற்சிஎழின் புதுஉலகம் முகிழ்த்தினிது பொலியும் முரண்பகை போர்முதலாய மூர்க்கமெலாம் மறையும். 14 அற்புதங்கள் பேச(ப்)பேச அறியாமை வளரும் அகிலமெலாம் போர்க்கடலில் அழுந்துமிந்த வேளை அற்புதஞ்சொல் சாமியாரின் அற்புதங்கள் எங்கே? ஆண்டவன்றன் அன்புநெறி அற்புதமோ? ஐயோ! 15 வீடென்றும் நரகென்றும் விரிவுரைகள் பகர்வோர் விமலனெங்கும் வீற்றிருக்கும் விழுப்பமுண ராரே நாடுகளில் வீடுமுண்டு நரகுமுண்டு தீய நரகொழிக்க வந்தவர்மார்க் ஞானமுனி வாழி. 16 நரகழிந்த புதுமையிலே நானிலமும் வீடாம் நாத்திகப்போர் ஆத்திகப்போர் நாசமடைந் திறுகும் பரமசுகம் எல்லாரும் பருகிஇன்ப முறுவர் பழமையிலே பலரின்பம் பருகினரோ பகர்மின். 17 ஏசுநபி முதற்பெரியோர் இசைத்தபொது உலகம் இக்கால முறைமையிலே மீண்டும்எழ வேண்டின் நேசமிகு மார்க்முனிவர் நினைந்தபுது உலகம் நிமிர்ந்துநின்று நிகழ்ச்சியிலே நிறைவுபெற உழைமின். 18 வள்ளுவனார் அந்நாளில் வகுத்தபொது உலகம் மார்க்முனிவர் இந்நாளில் வகுத்தபுது உலகம் தெள்ளியவர் ஈருலகுந் திரண்டுருவம் பெற்றால் தெய்வப்புது உலகமிங்குத் திகழ்தல்திண்ண மாமே. 19 மார்க்ஸினுளம் ஆத்திகமா நாத்திகமா என்று வாதமிடல் வீண்அவர்தம் மனஉலகம் மலர்ந்தால் போர்க்குரிய இரண்டுமிரா பொதுஉலகம் மணக்கும் புதுஉலகம் அதுதெய்வப் புதுஉலகம் பொலிக. 20 4. இயற்கைத் தெய்வம் இயற்கை தாண்டி இலங்கிடுந் தெய்வமே ஏழை யேனுனை எப்படி எண்ணுவேன் முயற்சி செய்யினும் மூளை வெடிக்குதே முன்ன வாஉன் முழுநிலை என்னையோ? 1 இயற்கை யாகி இருக்க இரங்கினை ஏழை எண்ணி எளிதில் மகிழவோ முயற்சி யின்றி முனைப்பறல் கூடுதே முன்ன வாஉன் முழுநிலை எற்றுக்கே. 2 இயற்கை, பள்ளியாய் என்றும் நிலவலை ஏழை பின்னே உணர்ந்து தெளிந்தனன் செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச்செலா செழுமை கண்டவர் தீமையில் வீழ்வரோ. 3 மண்ணில் நின்று பொறையைப் பயிலலாம் மரத்தி லேஒப் புரவைப் பயிலலாம் விண்ணை நோக்கி ஒளியைப் பயிலலாம் வேலை சென்றலைப் பாட்டைப் பயிலலாம். 4 மயிலி லேநிகழ் நாடகங் கற்கலாம் வண்டி லேநிமிர் யாழினைக் கற்கலாம் குயிலி லேஉயர் கீதத்தைக் கற்கலாம் கோவி லூருங் குணத்தினைக் கற்கலாம். 5 அன்னை காட்சியில் அன்பைப் படிக்கலாம் அணங்கின் காதலில் வாழ்க்கை தெளியலாம் கன்னி சூழலில் தெய்வம் வழுத்தலாம் காளை ஈட்டத்தில் வீரம் உணரலாம். 6 மலையி லேறி மவுனம் பழகலாம் வான ஞாயிற் றொளியைப் புசிக்கலாம் கலையில் காணாக் கருத்தைத் தெளியலாம் கணக்கில் பன்மை கரைதல் அறியலாம். 7 வேங்கை போந்துதன் வாலைக் குழைக்குமே வேழம் ஒடி விரைந்து வருடுமே பாங்குப் பாம்பு பணமெடுத் தேறுமே பறக்கும் புட்கள் பரிவுடன் சேருமே. 8 ஓதாக் கல்வியென் றோதிடுங் கல்வியென் றுலகஞ் சொல்வதன் உண்மைத் தெளிவெது ஓதாக் கல்வி இருக்கை இயற்கையே ஓதுங் கல்வி உறைவிடம் ஏட்டிலே. 9 ஓதாக் கல்வி பெருக இயற்கையின் உள்ளம் தெய்வமென் றுண்மை அடையலாம் சாகாக் கல்வியின் தன்மை உணரலாம் சாந்த மெய்ம்மையின் சார்பு விளங்குமே. 10 ஏரைப் பூட்டி உழுவோ ருளத்திலும் ஏற்றம் பாடி இறைப்போ ருளத்திலும் நாறு பற்றி நடுவோ ருளத்திலும் நல்லி யற்கை இறையருள் நண்ணுமே. 11 பருத்தி சேர்க்கப் பரிவோ ரிடத்திலும் பாண ராட்டை விடுவோ ரிடத்திலும் பொருத்தி நூலினை நெய்வோ ரிடத்திலும் பொன்னி யற்கை இறையருள் பொங்குமே. 12 சுரங்கம் மூழ்கிக் குளிப்பவர் நெஞ்சிலே சூழ்ந்து கல்லை உடைப்பவர் நெஞ்சிலே இரும்பைக் காய்ச்சி உருக்குவர் நெஞ்சிலே எழிலி யற்கை இறைமை இயங்குமே. 13 சோலை வாழ வளர்ப்பவர் சிந்தையில் தூய பிள்ளை பெறுபவர் சிந்தையில் நூலுஞ் சிற்பமும் யாப்பவர் சிந்தையில் நுண்ணி யற்கை இறைமை நுழையுமே. 14 விளைவு செய்யும் வினைஞ ருலகமே வீறி வேர்விட் டெழுந்து விரிந்திடின் இளமை ஞாலம் இயற்கை இறைமையின் இனிமை யாகி வளமை கொழிக்குமே. 15 5. ஒளி பேரொளி பேரொளி பேரொளி - இன்பாம் - அது பேசாப் பெருவெளி பேரொளி - என்பாம். ஐம்பூதம் திங்கள் அருக்கன் - மற்றும் ஆர்ந்த பெருங்கோள் அனைத்தும் தனித்த செம்மை ஒளிக்கெலாஞ் சீவன் - அளி சீரொளி தெய்வச் சிறப்பொளி ஒன்றே, (பே) 1 காற்றின் துணையின்றி வாழும் - ஒளி கருணை வடிவான மெய்யொளி யாகும் ஊற்றாய் உலகினை ஓம்பும் - அது ஓங்கிச் சுடர்விடுத் தோங்கிடும் ஒன்றே. (பே) 2 மெய்ந்நூல் ஒளியுரை வேட்டு - யானும் மேவினன் வெவ்வே றிடங்களில் பல்கால் பொய்மை கரவு புனைவு - பிற போலிகள் சாமிகள் பூமியில் கண்டேன். (பே) 3 முயற்சி கவலை முடுக்க - ஒளி முன்னி வதைந்தனன் பன்னெடுங் காலம் இயற்கையின் கூறுகள் நெஞ்சில் - இனி எண்ணி இருக்கும் எழிற்கலை கற்றேன். (பே) 4 பசுமை கொழித்துப் பரந்த - மரம் பார்த்துப் பரிந்து படிந்து திளைப்பேன் விசும்பினை நோக்கி வியந்து - விண் மீன்களில் ஒன்றி மிதந்து கிடப்பேன். (பே) 5 அலைகடல் ஓரத் தமர்ந்து - நீல அமைதியில் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன் மலையை அடைந்து மகிழ்ந்து - அதை மனனஞ்செய் மோனத்தில் மாண்டு விடுவேன். (பே) 6 வாச மலரின் நகையில் - மிக வணங்கி அசையும் கிளையின் அழைப்பில் நேசப் பறவை விருந்தில் - சிறு நீல்வண் டிசையினில் நித்தலும் வீழ்வேன். (பே) 7 நுழைந்தருட் பெண்மையை உன்ன - அங்கு நோன்பு மிகுதாய்மை அன்பினில் ஆர்ந்தேன் குழந்தை மழலை பயில - அதில் கோதிலா ஞானங் குழைதலை மாந்தேன். (பே) 8 இயற்கை வழிபாடு மல்க - அது ஈந்தருட் செல்வத்தை என்னென்று சொல்வேன் புயற்புலன் உள்ளில் ஒடுங்கத் - தொடர் போர்நாம ரூபங்கள் பொன்றி ஒடுங்கும். (பே) 9 நாமரூ பங்கள் ஒலியாய் - முதல் நாதமாய் நன்கு நடக்கும் ஒளியாய்ப் போமிவ் வொளிக்கும் உயிர்ப்பாய் - எங்கும் பொங்கித் ததும்பி வழியும் ஒளியே. (பே) 10 காற்றின் துணையின்றி வாழும் - அந்தக் கருணை வடிவான தெய்வ ஒளியைக் காற்றுச் சடஒளி யாகும் - என்று கருதல் தவறு தவறே கருதல். (பே) 11 காற்றுக் கணக்கென்று சில்லோர் - வெறுங் காற்றைப் பிடித்துக் கழிப்பரே காலம் காற்றைப் பிடிக்குங் கணக்கை - மூலன் கழறிய மந்திரக் காற்றினில் காண்மின். (பே) 12 காற்றை வெறுங்காற்றை ஈர்த்து - மூக்கில் ஏற்றி இறக்கினால் எவ்வொளி தோன்றும்? சோற்றுத் துருத்தியை ஓம்பும்; - தூய சோதி உயிரொளி சூழலும் ஆகா. (பே) 13 காலெனில் பாதபக் காலோ - மூலன் காலென்ற துள்ளே கனன்றிடுங் காலே தேற்ற இயற்கை வழியே - நிற்கத் திகழ்ந்திடும் உட்கால் திகழ்ந்திடல் திண்ணம். (பே) 14 சடக்கால் சடவொளி காட்டும் - அதைச் சத்தென்றுஞ் சித்தென்றுஞ் சாற்றுதல் தீமை திடமான உட்கால் சிறக்க - இங்குத் தேவை இயற்கை வழிபாடு தேவை. (பே) 15 விஞ்ஞானி உட்காலை ஏலான் - அவன் விழுமிய தேர்ச்சியின் வேர்சட மாகும் மெய்ஞ்ஞானி அக்காலை ஏற்பன் - அவன் வீர மரபு வழிவழி வாழி. (பே) 16 பரவொளி யானவர் தேகம் - என்றும் பாரில் அழியாதாம் பார்த்தவர் யாவர்? சிரஞ்சீவி என்றவர் தேகம் - இன்று திரியும் இடமெங்கே செய்தியைச் சொல்மின். (பே) 17 அஞ்ஞானி மெய்ஞ்ஞானி எல்லாம் - பரு யாக்கை இழப்பவர் ஐயமே இல்லை மெய்ஞ்ஞானி உள்நிலை மேன்மை - இங்கு மேவுமஞ் ஞானிக்கு எங்ஙன் விளங்கும்? (பே)18 செத்த பிணத்தினை வைக்கும் - இடம் தீயிலா மண்ணிலா என்று திகைக்கும் பித்தம் பிடிப்பது பேய்மை - அந்தப் பிணத்தைஎப் பூதம் புசிப்பதால் என்ன? (பே) 19 சாகா நிலையென்று சாற்றல் - ஒரு சம்பிர தாயம் சகத்தினி லுண்டு சாகா நிலைபிற வாமை - என்றும் சாந்த ஒளியாகித் தற்பர மாதல். (பே) 20 உலகொளி வண்ணமே யாக - அது உரிமை பெறல்வேண்டும் ஊக்கமும் வேண்டும் கலகம், பசிப்பிணி தேக்கும் - பெருங் கருணைப் பொதுமை, கடும்பசி நீக்கும். (பே) 21 அடிமை இருளில் அழுந்திச் - சாகா ஆத்தும ஞானம் அறைகுதல் நன்றோ மிடிபசி தீர்த்தல் முதன்மை - இந்த மேன்மைப் பணிசெய மேவுதிர் மக்காள். (பே) 22 6. வெங்கதிர் நீலக் கடல்விளிம்பில் வெங்கதிரே - நீ நித்தம் விரைந்தெழலென் வெங்கதிரே கோல எழுச்சியிலே வெங்கதிரே - சிறு கூத்தசைவு நேர்வதென்னை வெங்கதிரே. 1 பச்சைப் பசுங்கடலில் வெங்கதிரே - உன் பவளஒளி ஆல்கிறது வெங்கதிரே சித்தநுழை சித்திரமோ வெங்கதிரே - அதைத் தீட்டிவரை வோருளரோ வெங்கதிரே. 2 வானங் கடலிடையே வெங்கதிரே - நீ வழங்கிவருஞ் செங்காட்சி வெங்கதிரே கானக் கலைக்கழகம் வெங்கதிரே - அதைக் காட்டி மறைக்கின்றாய் வெங்கதிரே. 3 வானம் கடலணங்கை வெங்கதிரே - அன்பால் வாரிமுத்தம் ஈவதுண்டோ வெங்கதிரே பானத்தில் மாய்வதுண்டோ வெங்கதிரே - அந்தப் பார்வைவெறுங் கானல்நீரோ வெங்கதிரே. 4 தத்துகடல் தாயைவிட்டு வெங்கதிரே - நீ தாண்டி விண்ணை வேட்பதென்ன வெங்கதிரே உச்சவிண்ணும் நீலமென்றோ வெங்கதிரே - அங்கே உற்றதுநீ ஏமாற்றம் வெங்கதிரே. 5 விண்பரவை நீந்திநீந்தி வெங்கதிரே - மற்ற மீனையெல்லாம் ஒட்டலாமோ வெங்கதிரே தண்பரவை மீண்டும்படல் வெங்கதிரே - நீ தாயினிடங் கொண்ட அன்போ வெங்கதிரே. 6 தோன்றி மறைவதுண்டோ வெங்கதிரே - அந்தச் சூழ்ச்சியினைச் சொல்லுவையோ வெங்கதிரே ஆன்றோர் புனைந்துரையில் வெங்கதிரே - உன் ஆவி குளிர்வதுண்டோ வெங்கதிரே. 7 விஞ்ஞானி சொல்லினிலே வெங்கதிரே - உன் வேட்கை விழவிலையோ வெங்கதிரே மெய்ஞ்ஞானச் சித்தரெலாம் வெங்கதிரே - உன்னை வேறுணர்தல் உள்குவையோ வெங்கதிரே. 8 வேளைவேளை நீநிறத்தில் வெங்கதிரே - ஏன் விதவிதமாய் மாறுகின்றாய் வெங்கதிரே மாலையிலே காலைநிறம் வெங்கதிரே - நீ மறுபடியுங் காட்டுவதென் வெங்கதிரே. 9 காலைமாலை உன்றனருள் வெங்கதிரே - அது காலக்கலை ஆக்குந்துணை வெங்கதிரே வேளைவேளை உன்துணையால் வெங்கதிரே - இங்கு வித்தை வளர்கிறது வெங்கதிரே. 10 எதற்கும் ஒளிவழங்கும் வெங்கதிரே - உன்னை எழிலி மறைப்பதென்ன வெங்கதிரே அதற்குமுன்றன் சார்புண்டு வெங்கதிரே - அதை அறிவதில்லை எல்லோரும் வெங்கதிரே. 11 மலைமலையாய்க் கான்றுயிர்ப்பை வெங்கதிரே - அதை மாநிலத்துக் கூட்டுகின்றாய் வெங்கதிரே நலங்கருத லொன்றுமிலை வெங்கதிரே - அந்த ஞானம் பரவவேண்டும் வெங்கதிரே. 12 சிறுமுளையுங் குஞ்சுகளும் வெங்கதிரே - உன் செவ்வுயிர்ப்புக் கேங்குவதென் வெங்கதிரே மறிஅலையில் மாமலையில் வெங்கதிரே - நின் றாருயிர்ப்புத் தூயதன்றோ வெங்கதிரே. 13 ஓதக் கடலருகே வெங்கதிரே - மிக்க உரம்ஒளியில் மேய்வதென்ன வெங்கதிரே வேகஅலை ஆடிஆடி வெங்கதிரே - சிறு வேளைஒளி மூழ்கிலுரம் வெங்கதிரே. 14 நீயுமிழும் ஒள்ளொளியில் வெங்கதிரே - மக்கள் நேர்முறையில் மூழ்குவரேல் வெங்கதிரே நோயுமில்லை பேயுமில்லை வெங்கதிரே - இதை நுண்ணறிஞர் விள்ளவேண்டும் வெங்கதிரே. 5 புள்விலங்கு போர்வையின்றி வெங்கதிரே - உன் பொன்னொளியில் ஆடலையோ வெங்கதிரே தெள்ளறிவு மக்களென்போர் வெங்கதிரே - இங்குத் தேடுவதென் சட்டைகளை வெங்கதிரே. 16 காலினிலே தோலணிந்து வெங்கதிரே - நீ காலொளியைத் தாக்கலாமோ வெங்கதிரே தோலுயர்வோ உன்னொளியின் வெங்கதிரே -கொடுந் தொல்லையுண்டோ ஏதேனும் வெங்கதிரே. 17 மண்ணிலுள்ள மாசழுக்கு வெங்கதிரே - காலில் மாட்டிநோய் செய்யுமென்பர் - வெங்கதிரே தண்மைநிலப் பேச்சன்றோ வெங்கதிரே - அதைத் தாங்கித் திரிவதென்ன வெங்கதிரே. 18 வெம்மையுயர் நாட்டவர்கள் வெங்கதிரே - வெறும் வீண்நடிப்புப் பூணலாமோ வெங்கதிரே செம்மையொளி வாழ்வளிக்கும் வெங்கதிரே - அதைச் சீறுவது நீதிகொல்லோ வெங்கதிரே. 19 வெள்ளை தலைக்கறைக்கும் வெங்கதிரே- நன்று வேயுழவன் ஞானியன்றோ - வெங்கதிரே பள்ளி(ப்) படிப் பேட்டவர்கள் வெங்கதிரே - உன் பண்பொளியைப் பகைக்கின்றார் வெங்கதிரே. 20 பச்சை மரப்பரப்பில் வெங்கதிரே - நீ பாய்ச்சும் ஒளியமிழ்தம் வெங்கதிரே நச்சி அதைப்பருகின் வெங்கதிரே - நீண்ட நாளிருக்கும் வாழ்வளிக்கும் வெங்கதிரே. 21 ஆலரசு வேம்படியில் வெங்கதிரே - முன்னே ஆர்ந்தொளியில் மூழ்கிவந்தேன் வெங்கதிரே ஆல அரசியலில் வெங்கதிரே - யான் அண்டி அமுதிழந்தேன் வெங்கதிரே. 22 ஆவிக் கொருமருந்து வெங்கதிரே - உன் ஆனந்தச் செம்பிழம்பு வெங்கதிரே பாவனையில் இன்பம்வைத்தாய் வெங்கதிரே - அதைப் பற்றியேனும் மக்களுய்க வெங்கதிரே 23 காலைவெயில் பித்தமென்பர் வெங்கதிரே - அவர் கருத்தினில் பித்தமென்பேன் வெங்கதிரே மாலைகாலைப் பேச்செல்லாம் வெங்கதிரே - கொதி மலச்சிக்கல் என்றுணர்ந்தேன் வெங்கதிரே. 24 பொதுமையிலே உன்னமிழ்தம் வெங்கதிரே - நீ பொழிகின்றாய் என்றென்றும் வெங்கதிரே பொதுமைஅறம் பூமியினில் வெங்கதிரே - நன்கு பொருந்தாமை காரணமென் வெங்கதிரே. 25 உலகுகளை ஈர்த்துநிற்க வெங்கதிரே - உனக் குற்றசக்தி ஓதுவையோ வெங்கதிரே கலகமிலை கோள்செலவில் வெங்கதிரே - நீ காத்துவருங் கருணைஎன்னே வெங்கதிரே. 26 உனக்கொளி ஈவதெது வெங்கதிரே - எனக் குண்மை உரைத்திடுவாய் வெங்கதிரே சினக்குறி காட்டுவையோ வெங்கதிரே - என் சித்தந் தெளியவேண்டும் வெங்கதிரே. 27 என்னிடத்தில் உன்றனொளி வெங்கதிரே - நாளும் இயங்குரிமை பெற்றதுகாண் வெங்கதிரே உன்னருகே யானணுக வெங்கதிரே - பொது உரிமைஇல் லாமைஎன்ன வெங்கதிரே. 28 உரிமையுடன் நீஇருக்க வெங்கதிரே - உன் உறுப்பாம் உலகிடைஏன் வெங்கதிரே உரிமைஒளி வீசவில்லை வெங்கதிரே - தீய ஒதுக்கடிமை ஓட்டுவையோ வெங்கதிரே. 29 உரிமை உரிமைஎன்று வெங்கதிரே - உன் ஒளிமுழக்கஞ் செய்கிறது வெங்கதிரே உரிமைஒளி யாலுலகில் வெங்கதிரே - முழு உரிமையின்மை வெட்கமன்றோ வெங்கதிரே. 30 சாதிமத நாட்டுநிறம் வெங்கதிரே - கொடுஞ் சண்டைமழை தாழடைப்போ வெங்கதிரே நீதிப் பொதுமையொளி வெங்கதிரே - அது நீறாக்கும் ஊறுகளை வெங்கதிரே. 31 இமயத் தவர்முதலில் வெங்கதிரே - உன் எழிலொளி போற்றினவர் வெங்கதிரே தவவொளி நீத்தவர்கள் வெங்கதிரே - இன்று தவிப்பதென்ன காரணமோ வெங்கதிரே. 32 அண்டமன்றி உன்னிருக்கை வெங்கதிரே - பிண்ட அகத்திலும் என்பதென்ன வெங்கதிரே அண்டபிண்ட மாகிநிற்கும் வெங்கதிரே - உன் அருட்பெருக்கை என்னவென்பேன் வெங்கதிரே. 33 என்னைநண்ணி உன்றன்கலை வெங்கதிரே - உள் இயங்குவதோ சற்றுரைப்பாய் வெங்கதிரே சந்திர கலையின்றி வெங்கதிரே - நீ தனியே இயங்குவையோ வெங்கதிரே. 34 இங்கிரண்டில் ஏற்றமெது வெங்கதிரே - அதை ஏவர் எடுத்துரைப்பார் வெங்கதிரே திங்கள்கலை உன்னிடத்தில் வெங்கதிரே - ஒன்றித் தேயுமென்று செப்புவதென் வெங்கதிரே. 35 ஒன்றாய் இயங்குநிலை வெங்கதிரே - காமன் ஓய்ந்தெரியும் பீடமது வெங்கதிரே என்றேனும் உன்னியக்கம் வெங்கதிரே - உள் இயங்கா தொழிந்திடுமோ வெங்கதிரே. 36 உன்னியக்கங் குன்றுமிடம் வெங்கதிரே - காலன் உதையுண்டு வீழுநிலை வெங்கதிரே அந்நிலையில் உன்னுதவி வெங்கதிரே - செம்மை ஆவிக்குத் தேவையிலை வெங்கதிரே. 37 அணுவுக் கணுவினிலும் வெங்கதிரே - உன் அருளொளி ஊடுருவி வெங்கதிரே நணுகி நுணுகிஎன்றும் வெங்கதிரே - செய் நன்றி மறப்பதுண்டோ வெங்கதிரே. 38 உன்றன் உதவியின்றி வெங்கதிரே - உயிர் ஒளிர ஒளியுண்டு வெங்கதிரே நன்றி மறப்பதில்லை வெங்கதிரே - நீ நாளு நாளு நீடுவாழி வெங்கதிரே. 39 கள்ள இருளகற்றி வெங்கதிரே - நீ கருணையினால் காக்கின்றாய் வெங்கதிரே உள்ளொளியுங் காட்டுகின்றாய் வெங்கதிரே - நீ ஓங்கிஓங்கி வாழ்க என்றும் வெங்கதிரே. 40 7. காளம் இயற்கை உலகமென்று ஊதேடா காளம் என்றும் இருப்பதென்று ஊதேடா காளம் முயற்சிக் கடியென்று ஊதேடா காளம் மூடம் அழிப்பதென்று ஊதேடா காளம். 1 உலகம் பொருளென்று ஊதேடா காளம் உயிர்கள் உறவென்று ஊதேடா காளம் கலைவாழ்க்கை இல்லமென்று ஊதேடா காளம் கடவுள் வழியென்று ஊதேடா காளம் 2 பெண்ஆண் உலகமென்று ஊதேடா காளம் பேரின்பக் காதலென்று ஊதேடா காளம் விண்ணிலென்ன பாழென்று ஊதேடா காளம் வியனுலகம் வீடென்று ஊதேடா காளம் 3 சேய்கள் சிறப்பென்று ஊதேடா காளம் செகத்தை வளர்ப்பதென்று ஊதேடா காளம் நோய்கள் ஒழிகவென்று ஊதேடா காளம் நோன்பு மலிகவென்று ஊதேடா காளம். 4 பொருணெறி நல்லதென்று ஊதேடா காளம் பொதுமை பொருத்தமென்று ஊதேடா காளம் அருணெறி ஆக்கமென்று ஊதேடா காளம் அகிலமன் பாகுமென்று ஊதேடா காளம். 5 பாடுகள் பண்பென்று ஊதேடா காளம் படுத்துண்ணல் தீமையென்று ஊதேடா காளம் கேடு விலகஎன்று ஊதேடா காளம் கேள்வி பெருகஎன்று ஊதேடா காளம். 6 கொடுங்கோல் வீழ்கஎன்று ஊதேடா காளம் கூற்றம் உலகிலென்று ஊதேடா காளம் குடிமக்கள் ஆட்சிஎன்று ஊதேடா காளம் குணந்தழைக்கும் ஆட்சிஎன்று ஊதேடா காளம். 7 ஆதி ஒருவனென்று ஊதேடா காளம் அவனிருக்கை எங்குமென்று ஊதேடா காளம் யாதுமே ஊரெ ன்று ஊதேடா காளம் யாவருங் கேளி ரென்று ஊதேடா காளம். 8 8. அறப்புரட்சி புதுஉலகம் புதுஉலகம் புதுஉலகம் காண்மின் புரட்சியிலே புரட்சியிலே பூப்பதந்த உலகம் புதுஉலகப் பூவினிலே பொதுநறவம் பிலிற்றும் பொதுநறவம் மாந்தஅறப் புரட்சிசெய எழுமின். 1 புரட்சிஎரி மலையென்று புகல்வதிந்த உலகம் புரட்சிஎரி புறப்புரட்சி பேய்த்தேரே யாகும் புரட்சிஅகம் உறல்வேண்டும் புதுஉலகம் நிலைக்கும் புரட்சிஅகப் புரட்சியென்று புரட்சிசெய எழுமின். 2 கொலைப்புரட்சி அலைப்புரட்சி கொதிப்புரட்சி வேண்டா குத்துவெட்டுக் கொள்ளைரத்தக் கொடும்புரட்சி வேண்டா புலப்புரட்சி அகப்புரட்சி புதுப்புரட்சி வேண்டும் பொதுமைஅறப் புரட்சிஎங்கும் புகுந்திடுதல் வேண்டும். 3 முப்புரத்தில் எப்புரட்சி மூண்டெழுந்த தன்று முரண்சிலையும் மறக்கணையும் மூர்க்கமெழுப் பினவோ முக்கணனார் புன்முறுவல் மூட்டியது புரட்சி மும்மலத்தை அறுக்கும்அற முதற்புரட்சி அதுவே. 4 இரணியன்முன் பிரகலாதன் எப்புரட்சி செய்தான்? எஃகமெடுத் தெறியமனம் இசையவில்லை இல்லை அரணெனவே பொறைஎதிர்ப்பால் அமைந்ததந்தப் புரட்சி அப்புரட்சி உலகினருக் கறிவுறுத்தல் என்ன? 5 உலகமெலாம் கொலைக்களனாய் உருவெடுத்த வேளை உதித்தஜின உத்தமனார் உளங்கொண்ட தென்னை கலைபுகழும் அஹிம்சையெனும் அறப்புரட்சி யன்றோ கருணைமுதல் அவர்வாழி கால்வழிகள் வாழி. 6 சாதிமத வேற்றுமைகள், தயைகுலைக்கும் வேள்வி, தருமநெறி வீழ்த்தியக்கால் சாக்கியனார் புத்தர் நீதிஅறப் புரட்சிவழி நிறுத்தினரே உலகை நிறைவளர்ந்த வரலாற்றை நினைவினிலே கொண்மின் 7 ஏசுபிரான் வாழ்க்கையிலே எழுபுரட்சி எதுவோ ஏந்தினரோ வாள்கருவி எண்ணினரோ கொலையை நேசமுடன் சிலுவையிலே நின்றுயிரை நீத்தார் நேர்ந்தஅன்பு புரட்சிஅது நெஞ்சில்நிற்றல் வேண்டும். 8 கலைகொலையாய்க் குவியுமிந்தக் காலஎரி நிற்குங் கதியினிலுங் காந்திமகான் கருதினரோ இரத்தம் நிலைகருணைப் புரட்சியன்றோ நின்றதவர் நெஞ்சில் நீதிஅறப் புரட்சிஅது நிறைபுரட்சி அதுவே. 9 புரட்சியிலே புதுஉலகப் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே போரொழிக்கும் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே புரட்சிஅறப் புரட்சியிலே புகுமின் புனிதப்புது உலகமைக்கும் புரட்சியிலே புகுமின். 10 9. திருப்பணி எங்கு முள்ள இறைவனை எங்கும் எண்ணி ஏத்தி இறைஞ்சிட லாமே தங்கு கோயில் தனித்தனி எல்லாச் சார்பு மக்கள் சமைத்தன ரென்னே. 1 அலையு நெஞ்சை அடக்கி ஒடுக்க அமைதி ஓவிய நுட்பம் அறியப் பலருஞ் சேரும் பழக்கம் பெருகப் பண்புக் கோயிலின் பான்மையென் பாரே. 2 செயற்கைக் கோயிலின் சீர்மை குலையும் சீவக் கோயிலின் சீர்மைகுன் றாதே இயற்கைக் கோயில் பணிசெயச் சேரும் இறையின் மூல இருப்பு விளங்கும். 3 புற்கள் கோயில் புழுக்களுங் கோயில் புட்கள் கோயில் விலங்குகள் கோயில் மக்கள் கோயில் மதிகலை கோயில் மனத்துக் கோயில் மருவுதல் வேண்டும். 4 மனத்துக் கோயில் மருவ நினைவு மாற்றங் கோயில் வினைகளுங் கோயில் அனைத்துங் கோயில் அறிவுமே கோயில் அன்புத் தொண்டே அகிலம் நிகழும். 5 நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் செகத்தில் வீழாச் செழுங்கனி கொய்தல் சீவக் கோயில் சிதைப்பதே யாகும். 6 ஆடும் மஞ்ஞை அலற அடித்தல் அலகுக் கோழி கதறத் துணித்தல் பாடு மாங்குயில் பார்த்துச் சுடுதல் பரமன் கோயில் இடிப்பதே யாகும். 7 பிடியின் யானையின் பேச்சிடைக் குண்டு பிணையின் மானின் உலவிடைக் குண்டு கடுவன் மந்தியின் ஆட்டிடைக் குண்டு கடவுள் கோயில் கதியென்ன ஐயோ. 8 ஓட்டுப் பன்றியைக் கட்டி ஒடுக்கி உறுத்துக் குத்த உருமிடுங் கோரம் கேட்கக் காதுகள் காண விழிகள் கேடில் ஆண்டவன் ஏனோ படைத்தான்? 9 ஆடு மாடுகள் பாடுகள் என்னே ஐயோ ஐயோ அலறுதே நெஞ்சம் கோடி கோடி கொலைக்களன் எங்கும் கூற்றின் ஆட்சி குலவுதல் நன்றோ. 10 வேள்வி என்றோ உயிர்க்கொலை செய்தல் வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல் கேள்வி இல்லை கிளர்ச்சியும் இல்லை கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ. 11 வாயில் சீவ வதைக்களன் மல்க வளரும் மக்கள் வதைத்களன் நாளும் நேய ஆட்சியின் நீதி நிறைந்தால் நீசம் அண்ட நினைவு மிராதே. 12 அறிஞர் நெஞ்சைக் கலக்கும் அரசு அமைதி யோரை அலைக்கும் அரசு செறியும் அன்பரைத் தீட்டும் அரசு செம்மைச் சீர்நெறி எங்ஙனம் ஓம்பும். 13 குண்டு கூடம் பெருக்கும் அரசு கொல்லுங் கல்வி வளர்க்கும் அரசு தண்டு சேர்த்துச் சமர்செய் அரசு தயவு மார்க்கத்தை எங்ஙனே ஓம்பும். 14 ஈசன் கோயில் இயற்கையாங் கோயில் இன்பக் கோயில் எதுவுமே கோயில் நாச மாகா வகையில் பணிசெய் ஞானம் ஞானமெய்ஞ் ஞானம தாமே. 15 என்னுள் ஈசன் இருப்பது போல ஏனை உள்ளி லவனிருக் கின்றான் என்னை வேறு பிரித்தலஞ் ஞானம் எல்லாங் கோயிலென் றெண்ணல் அறமே. 16 புறத்துக் கோயிலை மட்டும் வணங்கல் போதா தென்றகக் கோயில் வணங்க அறத்துக் கோயில் அனைத்தும் விளங்கும் அகிலஞ் சோதர அன்பில் திளைக்கும். 17 கொல்லும் ஆட்சி குலைப்பது தொண்டு கொல்லா நோன்பை வளர்ப்பது தொண்டு கல்வி எங்கும் பரப்புதல் தொண்டு கல்லாக் கேட்டைக் களைவது தொண்டே. 18 ஏழ்மை போக்க எழுவது தொண்டு ஏழை கூட்டஞ் சுருக்குதல் தொண்டு வாழ்வை யார்க்கும் வழங்குதல் தொண்டு வளத்தை என்றும் பெருக்குதல் தொண்டே. 19 வகுப்பு வாதங் கடந்தது தொண்டு மார்க்க வாதங் கடந்தது தொண்டு தொகுப்புச் சேர்க்கையில் தோன்றுதல் தொண்டு தோய்ந்த அன்பில் துலங்குதல் தொண்டே. 20 தானே நன்மை பெறப்பணி செய்தல் தரையி லோங்க நரகமே யாகும் தானும் மற்றுயி ரென்னும் பணிகள் தரையி லோங்க விடுதலை யாமே. 21 கோயில் யாக்கை இயற்கை அமைப்பு, கோயில் உள்ளம் கருணை ஒழுக்கம் கோயில் பூசை பணியில் கிடத்தல் கோயில் வாழி குவலயம் வாழி. 22 10. சன்மார்க்க ஆட்சி சன்மார்க்க சன்மார்க்க ஆட்சி - உயர் சாந்த மளிக்குஞ் சமதர்மக் காட்சி (சன்) சத்தெனுஞ் செம்பொரு ளொன்றே - அது சகதல மெங்குங் கலந்துங் கடந்தும் வித்தாகி நிற்கும் விழுப்பம் - மிக்க வேதங்க ளெல்லாம் விளங்க உரைக்கும். (சன்) 1 கடந்த நிலைமனம் எட்டா - அதைக் கட்டி அழுவதால் என்ன பயனோ கலந்த நிலையைக் கருதின் - வையம் காலம் இடங்கள் கருத்தில் அமையும். (சன்) 2 சத்தெனுஞ் செம்பொரு ளொன்று - பல தத்துவ நாமங்கள் தாங்கியே நிற்கும் பித்த வெறிச்சண்டை ஏனோ - சிறு பேதம் விடுத்தால் பொதுமை பிறங்கும். (சன்) 3 கலந்த நிலைஎது? கண்முன் - நிற்கும் காட்சி இயற்கை கருதல் எளிதே புலன்களில் நன்கு படியும் - அதில் புகப்புக ஆனந்தம் பொங்கி வழியும். (சன்) 4 இயற்கை வழியெலாங் காட்டும் - அதை இல்வாழ்க்கை இல்வாழ்க்கை என்றுமே கூட்டும் செயற்கை அரசுகள் வாழ்வைச் - சிதைக்கச் சேர்ந்தன தீமைகள் சீர்செயல் வேண்டும். (சன்) 5 பொல்லா அரசுகள் தந்த - கொடும் போர்மதம் வேண்டா புரோகிதம் வேண்டா எல்லாரும் வாழ இனிக்கும் - பொது இன்ப அறத்தில் இயைந்திடத் தூண்டும். (சன்)6 முதல்தொழில் வேற்றுமை போக்கும் - இந்த முழுமை யுலகைத் தொழில்வண மாக்கும் விதவித உற்பத்தி செய்யும் - வெறும் விதியை விலக்கும் மதியை வளர்க்கும். (சன்) 7 கொள்ளை மனங்கொ டுலகில் - மூர்க்கக் கொலைப்போர் எழுப்புங் கொடுங்கோலை வீழ்த்தும் கள்ளச் சபைகளைச் சாய்க்கும் - கொலைக் கருவி வடித்திடுங் கூடத்தை மாற்றும். (சன்) 8 பொருளில் புலத்தில் அறிவில் - அறம் பொதுமை புகுத்தும் புதுமை படைக்கும் அருட்கலை காவியம் ஆக்கும் - அன்பால் அறப்பணி ஆற்ற அறிவினை உந்தும். (சன்) 9 சாதி அழிக்குஞ்சன் மார்க்கம் - வாதச் சமய வெறியைத் தணிக்குஞ்சன் மார்க்கம் மாதரைக் காக்குஞ்சன் மார்க்கம் - புது மாநில மெங்குஞ்சன் மார்க்கம் மலர்க. (சன்) 10 11. சன்மார்க்கச் சாத்து தாயுந் தந்தையுங் காணுந் தெய்வம் குருவின் உளத்தில் மருவுந் தெய்வம் தெய்வம் உண்டு தேர்தலுக் கெட்டா ஒன்றே தெய்வம் உறுநிலை இரண்டே எல்லாங் கடந்த நிலைஅறி வாகும் எல்லாங் கலந்த நிலைஅன் பாகும் அறிவே தெய்வம் அன்பும் அதுவே அறிவாந் தெய்வம் அன்பா யிரங்கும் அன்பிறை உயிரே அதனுடல் இயற்கை அன்பு நீரால் அறிவை வளர்க்க 10 ஆசையைச் சுருக்கி அன்பைப் பெருக்க காதல் அன்பின் கடந்த படியாம் காதல் வாழ்க்கை, கடவுள் காட்சி கடவுள் வாழ்க காதல் வாழ்க (கல்வி) காதல் கல்வி கடவுள் கல்வி இயற்கைக் கல்வி ஈனுங் காதலை இல்லறக் கல்வி இயற்கைக் கல்வி செயற்கைக் கல்வி சிறிதே தேவை பரீட்சைக் கென்று படித்தல் வீணே பரீட்சைக் கவலை பாலர்க் கேனோ? 20 கவலைப் பள்ளி கழகமா காதே ஏட்டுக் கல்வி எழுத்துக் கல்வி எழுத்து வாழ்வில் பழுத்தல் வேண்டும் கல்வி செயற்படுங் காதல் மணத்தில் ஓதாக் கல்வி உணர்த்துங் காதல் கல்விக் கனிவு காதல் வாழ்வு கல்வி வாழ்க காதல் வாழ்க. (உலகம்) காதற் குலகுடல் கருவி கரணம் உலகம் தீதென் றுள்ளல் இழுக்கே உள்ளத் தீமை உலகத் தீமை 30 உள்ள விரிவே உலகத் தோற்றம் உள்ளம் திருந்தின் உலகம் திருந்தும் அன்பிறை எண்ணம் அகத்துள் அமைதி இல்லறம் உள்ளலை எழுச்சி மறிப்பு, சீலம் சிந்தையின் ஆலம் போக்கி அறக்கோல் அகத்தைத் திருத்தும் ஆட்சி சித்த விகாரம் சிக்கல் வாழ்வு திருந்திய சித்தம் பொருந்திய வாழ்வு விகார மற்ற சித்தம் ஒடுங்கும் ஒடுங்கிய சித்தம் தீமை கடக்கும் 40 உள்ளங் கடந்த ஒருநிலை யுண்டு கடந்த உள்ளம் காட்டும் உள்ளொளி உலக வாழ்க்கை உள்ளொளி யாக்கை காதற் சேர்க்கை உலக வாழ்க்கை (உடல்) அன்புக் காதற் கென்புடல் உறையுள் உடலை வளர்த்தல் உயிரை வளர்த்தல் உடலிறை கோயில் ஓம்பல் திருப்பணி உடல்நலம் மற்றவர்க் குழைக்க ஊக்கும் காலை எழுந்து கடன்களை முடிக்க மலத்துச் சிக்கல் மாதா நோய்க்கு, 50 செயற்கை மருத்துவம் சிக்கல் நீக்கா இயற்கை மருத்துவம் இனிதே இனிதே புனல்காற் றொளியும் பொருந்திய மருத்துவர் இல்லற வாழ்க்கை செல்வ மருத்துவர் இசையும் பாடலும் இன்ப மருத்துவர் உழவும் தொழிலும் பழைய மருத்துவர் உரிமை உணர்ச்சி ஒளிகால் மருத்துவர் தியானம் மருத்துவத் தலைமைப் பீடம் தீம்புன லாடின் போம்பிணி யெல்லாம் காற்றில் உலவி ஊற்றில் படிக 60 மின்னல் அருவி மேவி ஆடுக ஞாயிற் றொளியில் நாடொறும் மூழ்க மலையில் ஏறுக வனத்தில் சேருக பைங்கூழ் பார்க்க பசுங்கடல் நோக்க பசுமைக் காட்சி பறிக்கும் பித்தை அகன்ற பசுமை மூளைக் கமைதி வாரி குளித்தல் ஈரல் காத்தல் இயற்கையோ டியைதல் இறையோ டினித்தல் எழிலார் உடலம் இயற்கையின் கூறு மீறின் இயற்கையை வீறும் பிணியே 70 பிணியுடல் வாழ்வு பேயினுந் தாழ்வே இயற்கை உடலை இயற்கையே ஓம்பும் இயற்கை வழிநின் றெழிலுடல் காக்க (உணவு) உடற்குத் தேவை இனிய உண்டி உடலின் உயிர்ப்பை ஊக்குவ துண்டி உண்ணும் முன்னே உன்னுக இறையை என்றும் இறையை முன்னல் தவமே எல்லாம் இறையென் றெண்ணல் மேன்மை அன்பாம் இறையை அகங்கொளல் நன்மை உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணம் 80 அன்புள் சார்தல் அன்பே ஆதல் அன்புடன் உண்ணும் அன்னமும் அன்பே பொருந்திய உணவைப் புசித்தல் பொலிவு மென்று தின்னல் நன்றே உடற்கு, பானம் உதடுநா படிய அருந்துக பல்லும் நாவும் மெய்காப் பாளர் பல்லின் பளிங்கைப் பாழாக் காதே பல்லின் பளிங்கு பண்பாம் உடற்கு, பல்லின் கறையால் பலநோய் பரவும் ஆலும் வேலும் பல்லுக் குறுதி 90 நாவில் அழுக்கு நண்ண விடாதே நாவைக் காக்கும் ஞானம் பெரிது கால உணவு காக்கும் உடலை அளவறிந் துண்ணல் யாக்கைக் கழகு மீதூண் உடலை வேதனை செய்யும் நொறுவை அடிக்கடி அடைத்தல் நோயே பலப்பல காரம் பலப்பல நோய்கள் குத்திய அரிசியில் சத்தியல் கொழிக்கும் அறவே தீட்டிய அரிசி இழிவே பானைச் சோறு பருகல் சால்வு 100 சட்டிச் சமையல் சத்துவ குணந்தரும் பச்சைக் காய்கறி நச்சல் பண்பு கீரையும் மோரும் ஈரல் காவல் இளநீர் இன்ப இளமை வைப்பு, பாலும் பழமுஞ் சீல உணவு மருந்து நெல்லி கடுக்காய் தான்றி சுக்கும் மிளகும் பக்க மருந்து திப்பிலி யோட்டும் தீய இருமலை நெல்லி அளிக்கும் நீண்ட வயதை, கடுக்கா யொன்று பத்துத் தாய்மார் 110 தூதுளை மூளைத் துகளை அகற்றும் வல்லா ரையால் வளரும் நினைவு வெங்கா யத்தால் விலகும் விடநோய் வெள்ளைப் பூண்டால் வீறும் தாது மிக்க உப்பால் விரியும் ஈரல் அதிகா ரத்தால் அலறும் ஈரல் மதுபா னத்தால் மலரும் ஈரல் ஈரல் நலத்தை என்றும் பேணுக எலுமிச் சையினில் நலமிக உண்டு கடும்புளி உணவால் நடுங்கும் நரம்பு 120 மயக்கப் பொருளில் மனஞ்செலுத் தாதே மரத்துப் பாலை மதுவாக் காதே மற்றப் பொருளையும் மயக்காக் காதே சிரிக்கக் சிரிக்க உண்டது செரிக்கும் உண்டதும் மூளைக் கோய்வு கொடுக்க வண்டி ஏற விரைந்தோ டாதே ஏட்டுக் கணக்கில் மாட்டி விழாதே மூளை கொதிக்க வேலைசெய் யாதே சீறி விழுந்தால் ஏறுங் கொதிப்பு, கெட்ட எண்ணம் கெடுக்கும் உடலை 130 உள்ளே கனலல் உடலை அரித்தல் பொறாமை உடலைப் பொசுக்கும் நெருப்பு, நல்ல குணத்தில் நாளும் படிக, குணத்தை வளர்க்க உணவுந் துணைசெய்யும் உணவொடு குணமும் ஒளியழ கமைக்கும் அழகு தெய்வம், அழகைக் காக்க புனித உணவால் பொருந்தும் அழகுடல் (இசை) இசையும் உடலை இனிது காக்கும் இயற்கை இசையால் இழியுந் தீமைகள் பாடலும் ஆடலும் வாழ்வுச் செல்வம் 140 குயிற்கும் மயிற்கும் கூலி இல்லை வண்டுக் கமைந்த பரிசில் இல்லை அருவி முழவுக் களிப்பே இல்லை பெண்கள் இன்மொழி பண்ணிசை அமுதம் யாழால் மூர்க்க யானையும் வயமாம் குழலொலி மழலைக் குழவி யாக்கும் பல்லியக் கூட்டம் நல்லிசைக் கழகம் நல்லிசை தளர்ந்த நரம்பை எழுப்பும் பண்ணிசை வெறுப்புப் பாவக் கொலையுளம் கூலிப் பண்ணிசை கொலைக்கஞ் சாதே 150 வாழ்க இசையும் பாடலும் ஆடலும் (காதல்) ஆடலும் பாடலும் காதற் காக்கம் காதல் வாழ்க்கை உடலின் காவல் காதல் வளரும் கலந்தஇல் வாழ்வில் இருமை ஒன்றல் பெருமைக் காதல் ஒருத்தியும் ஒருவனும் ஒருமைக் காதல் ஈருடல் ஓருயிர் இன்பக் காதல் சேர்ந்து வாழ்தல் ஜீவ இயல்பு சேர்க்கையில் அன்பு செறியும் விரியும் அன்பொழுக் கத்தால் அகிலஞ் சீர்படும் 160 ஒழுக்கம் விழுப்பம் உயிரினுஞ் சிறந்தது சேர்ந்த வாழ்க்கையில் சிறக்கும் ஒழுக்கம் சேர்தல் வளர்ச்சி கூர்தல் துணையே தனித்து வாழ்தல் இயற்கையைத் தகைதல் தனிமை வாழ்வில் சால்பமை யாதே துறவு மனத்தின் துகளை அகற்றல் துறவு மனத்தில் தொண்டே பொதுளும் உள்ளத் துறவில் உலகே அன்பாம் வேடத் துறவு விடம்மன் பதைக்கு மயிரைச் சிரைத்தால் அயரும் நரம்பு 170 சடையை வளர்த்துச் சாமியா காதே சடையுந் தாடியும் உடற்கென வளர்க்க இளமைப் போகம் வளமை நல்கும் அளவுப் போகம் யாக்கைக் கழகாம் அளவில் போகம் அழகை அழிக்கும் பெண்ணை வெறுத்தல் பேதைமைப் பேதைமை இயற்கையில் ஆண்பெண் இருத்தல் உணர்க பெண்கொடி ஆண்கொடி பின்னலைப் பார்க்க பெண்பனை ஆண்பனை பேசலைக் கேட்க பிணையும் மானும் அணைதலை ஆய்க 180 பிடியும் களிறும் மயங்கலைப் படிக்க மக்களில் இருபால் மகிழ்தலை ஓர்க ஆண்பெண் வாழ்க்கை அன்பு வளர்க்கை பெண்மையில் முன்னும் ஆண்மை அதிகம் பெண்சொற் கேட்டல் பெரிய தவமே பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை காதல் பெருக்கம் தாய்மை அன்பே தாய்மை அன்பே இறைமைக் கருணை வாழ்க பெண்மை வாழ்க காதல் (குழவி) காதல் வடிவம் கால்வழிக் குழவி 190 குழவிச் செல்வம் குவலயச் செல்வம் குழவி ஈனல் குவலயம் வளர்த்தல் குழவிப் பிறப்பில் குறுக்கி டாதே செயற்கை முறைகளைக் கையா ளாதே குழந்தை உள்ளம் தைவிக இல்லம் குழந்தை மூளை கலையின் நிலையம் குழந்தை ஆட்டமும் ஓட்டமுங் கலையே குழந்தை மழலை குழலும் யாழும் குழந்தைப் போக்கில் குறுக்கிடல் தவறு குழந்தைக் கச்ச மூட்டல் கொடுமை 200 குழந்தையை மௌன மாக்கல் கொலையே குழந்தை ஆடுங் குடிலே வீடு குழந்தை இல்லா மாடியும் ஈமம் (இல்லம்) ஒலைக் குடிசை ஒளிகாற் றுலவு பசுங்கொடி படரில் பரமன் கோயில் ஆலர சத்தி வேம்பும் நிலையம் இற்புறம் கீரை காய்கனி இனிமை இல்முன் மலர்பொழி விருத்தல் இனிமை தெருவில் மரநிரை திகழ்தல் இனிமை பூமதி பெண்சேய் புனிதர் இனிமை 210 பதியின் இனிமை பசுமைப் பொங்கல் பசுமைப் பதியே பாட்டின் கோலம் ஊரின் பசுமை உள்ளப் பசுமை உள்ளப் பசுமை உயர்ந்தஇல் வாழ்க்கை வாழ்க்கைப் பசுமை வழங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சியின் எழுச்சியே பாடலும் ஆடலும் மகிழ்ச்சியின் ஊற்று வான்துளி வீழ்ச்சி வான்துளி வீழ்ச்சி மகிழ்ச்சி வெள்ளம் (தொழில்) மழையின் மகிழ்ச்சி உழவா கும்மே உழவு உலக நலத்தின் காப்பு 220 நாற்றுப் பாட்டின் காற்றில் உலவுக ஏற்றம் பாடும் இனிமை என்னே! பசும்பயிர்க் காட்சி பசியைத் துரத்தும் பொன்மணிச் சிறப்பினும் நென்மணி விழுப்பம் பருத்திச் செடியை விருத்தி செய்க பஞ்சைக் கண்டதும் பஞ்சம் பறக்கும் நூற்க நூற்க நெஞ்சங் குவியும் நாஞ்சிலும் இராட்டையும் நாட்டின் ஈரல் வாழ்க்கைக் குரிய தொழின்முறை வளர்க்க சேர்க்கைத் தொழிலில் ஜீவன் உண்டு 230 வாழ்க உழவு வாழ்க நூற்பு (அரசு) கொலைப்படை வடிக்குந் தொழிற்களம் ஒழிக கொலைப்படை வடிப்பது கொடுங்கோ லாட்சி கொலைப்படை ஆட்சியில் அலைப்பே அதிகம் போரை வளர்ப்பது பொல்லா ஆட்சி குணத்தை அழிப்பது கொடுங்கோ லாட்சி வறுமை மரணம் வளர்ப்பது கொடுங்கோல் பிரிவைப் பெருக்கும் பேய்மைக் கொடுங்கோல் தொழிலர சின்மை தொல்லைக் கிடமே அறக்கோ லாட்சி அமைதி நிலவு 240 கோல்குடி மக்கள் வயப்படல் அறமே தனிமை ஆட்சியில் பனிமை உண்டு குடிமை ஆட்சி கொடுமை குலைக்கும் கொல்லா ஆட்சியில் குணங்கள் குலவும் தொழிலர சாட்சியில் தொலையுங் குறைகள் தொழிலர சாட்சியில் தோன்றும் பொதுமை ஐயம் ஏற்றல் அரசின் குற்றம் ஏழ்மை ஒழிந்தால் இரத்தல் மாயும் அகால மரணம் அரசின் கொடுமை பட்டினி இன்மை நாட்டின் தன்மை 250 பட்டினி நாட்டில் பாட்டும் நெருப்பு, பசிபிணி சாவு பாழுக் கறிகுறி ஓருயிர் பட்டினி உலகப் பட்டினி பட்டினி தோன்றா உலகைப் படைக்க பொதுமைத் தொழிலில் பொன்றும் பட்டினி புவனம் பொதுமை பொழிலே யாக பொதுமைப் பொழிவில் புதுமணங் கமழும் புதுமை உலகம் பொங்கிப் பொலிக புதுமை உலகம் புரட்சியில் மலரும் அரசு திருந்தின் அனைத்தும் திருந்தும் 260 அரசியல் உள்ளம் அறத்திய லாக அறத்திய லற்ற அரசியல் நஞ்சே அரசியல் கட்சி அழிக்குங் குணத்தை கட்சி அரசியல் காண்டா மிருகம் தேர்தலும் வாக்கும் தேள்பூ ரான்கள் சட்டம் பெருகின் கெட்டதும் பெருகும் அறவோர் வழியே அரசியல் இயங்க அரசைத் திருத்த அனைவரும் எழுக உரிமை இன்பம் உலவா இன்பம் உரிமை உணர்ச்சி ஒழுக்க மலர்ச்சி 270 உரிமை வரட்சி புரட்சி எழுப்பும் அடிமை நோய்க்குப் புரட்சி மருந்தாம் அறவழிப் புரட்சி அழியா உரிமை கொலைவழிப் புரட்சி கூற்றுரி மைக்கே கொல்லாப் புரட்சி குணம்வளர் அறமாம் உரிமை வாழ்க ஓங்க புரட்சி புரட்சி உரிமையில் புகுந்தொழி லரசு (எளிமை) தொழிலர சாக்கும் எளிமைப் பொதுமை எளிமைப் பொதுமை எவர்க்கும் இனிமை வறுமை நஞ்சாய் வதைக்கும் வாழ்வை 280 கொழுமை அரக்கனாய் விழுங்கும் அன்பை வறுமையும் வேண்டா கொழுமையும் வேண்டா எளிமை வேண்டும் எளிமை வேண்டும் அருகல் பெருகல் எளிமையில் நேரா எளிமை வாழ்வில் இயற்கை உறவாம் எளிமைக் கிலக்கியம் ஏசுவின் வாழ்க்கை எளிமை உள்ளம் பொதுமை உலகாம் எளிமை வித்துப் பொதுமைப் பொதும்பர் எளிமை பொதுமை பொதுமை எளிமை எளிமை ஏற்றுப் பொதுமைக் குழைக்க 290 (பொதுமை) பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க இறையும் இயற்கையும் என்றும் பொதுமை ஞாயிறு திங்கள் நாள்கோள் பொதுமை ஐந்து பூதமும் அவனியும் பொதுமை பிறப்பும் பொதுமை இறப்பும் பொதுமை பொதுமை குலைந்தது புரோகித அரசால் பொதுமை எழுந்தால் புரோகிதம் பொன்றும் பொருளில் நிலத்தில் பொதுமை காண்க அறிவிலும் பொதுமை அடைய முயல்க கலப்புத் திருமணம் காட்டும் பொதுமை 300 குறைகள் குலைந்தால் குலவும் பொதுமை வகுப்பு மதப்போர் மாய்க மாய்க நிறப்போர் மொழிப்போர் நீறா யொழிக நாட்டுப் போர்கள் நாசமே யாக மேலினம் கீழினம் பிறப்பில் இல்லை வெற்றி தோல்வி வீரனுக் கில்லை எந்த உயிரும் இறைவன் கோயில் இறைவன் கோயில் அன்பின் உறைவு மைபொதி நெஞ்சம் மறைக்கும் அன்பை, புறஞ்சொல் வெறுத்தவன் அறத்தில் அன்பன் 310 திட்டை விட்டவன் செம்மை நேயன் திட்டை வளர்ப்பன தீய தாள்கள் தீய தாள்பொய் செருபகை எரிமலை புதினத் தாளால் புனிதம் பொங்கா களிப்புப் புதினம் கயமை விழிப்பு, சிறுகளிக் கதைகள் சிந்தனைச் சிறையே தீக்களி யாடல் சிந்தனைத் தேக்கம் காவிய ஓவியம் கருத்துச் சுரங்கம் காவிய ஓவியம் ஆவிக் குவு கற்பனைச் சுவையுங் கருத்தை வளர்க்கும் 320 அளவில் கற்பனை ஆழங் கெடுக்கும் ஓவிய உள்ளம் காவிய யாக்கை ஓவியத் தழுந்தின் உலகந் தோன்றா காவிய ஆழம் கடலினும் பெரிதே கடல்மலை காடு காவிய ஓவியம் கயிலை ஓவியம் பாற்கடல் காவியம் ஆணும் பெண்ணும் அழகிய ஓவியம் ஆண்பெண் வாழ்க்கை அன்புக் காவியம் காவிய ஓவியம் கடவுள் இருக்கை கலையின் நுட்பம் உயிரெலாஞ் சுற்றம் 330 சுற்றம் உயிரெலாம் தொண்டில் விளங்கும் பொதுமைச் செல்வம் புனிதத் தொண்டு (தொண்டு) தொண்டு நெஞ்சம் தூய்மைக் கோயில் தொண்டுச் செய்கை சுவறும் முனைப்பை முனைப்பை அறுத்தல் முனிவ ராதல் முனிவ ரென்பவர் முழுமைத் தொண்டர் ஆணவ எழுச்சியில் அருகுந் தொண்டே அடக்கம் பொறையும் தொண்டுக் கறிகுறி உண்மை முகிழ்க்கும் உயர்ந்த தொண்டில் தொண்டின் வளர்ச்சி பகைமை வீழ்ச்சி 340 ஊறுசெய் யாமை உண்மைத் தொண்டு நேர்மை ஒழுக்கம் நீர்மைத் தொண்டாம் தொண்டின் உயிர்ப்பு நோன்பின் தூய்மை நோன்பெவ் வுயிர்க்கும் தீங்கெண் ணாமை நோயரை அணைந்து பணிசெயல் நோன்பு வாயிலா உயிர்வதை மறித்தல் நோன்பு தீமையைப் பொறுமையால் எதிர்த்தல் நோன்பு பொல்லாப் பழியைப் பொறுத்தல் நோன்பு வெற்றுரை நோன்பை வீழ்த்துங் கருவி செய்கையில் வருவதைச் செப்பல் நோன்பு 350 பேச்சினுஞ் செய்கை பெரிதே பெரிதே நாளை செய்குவம் என்றெண் ணாதே நன்றே செய்க அன்றே செய்க சூழ்ந்த ஆய்வில் சுரக்குந் தெளிவு தெளிவில் உருக்கொளுஞ் சீர்சால் தொண்டு தொண்டு, பொதுமை அறமீன் குழவி (சோதரம்) தொண்டில் விளங்கும் உயிர்களின் சோதரம் என்னுயிர் இல்லம் என்னுயிர் சுற்றம் என்னுயிர் உலகம் என்னுயிர் எல்லாம் எல்லாம் ஓருயிர் அவ்வுயிர் இறையே 360 இறையின் உறுப்பு, பிறரும் யானும் எல்லாஞ் சோதரம் எதுவுஞ் சோதரம் சோதரம் பிரியும் சுரண்டும் ஆட்சியில் பொதுமை ஆட்சியில் புகுந்திடுஞ் சோதரம் பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க (அறம்) சொக்கப் பொதுமையில் சூழும் அறமே அன்பும் அறிவும் அறத்தின் மலர்கள் அறமே பொதுமை அனைத்துயிர் ஒருமை மாசில் மனமே அறத்தின் கோயில் நன்மை யெல்லாம் அறத்தின் கூறுகள் 370 அறமே முழுநலன் அறமே முழுமுதல் அறமே பொருளென் றரற்றும் மறைகள் தோற்றமும் மரணமும் தொல்லற வளர்ச்சி தோற்ற முண்டேல் மரண முண்டு தோற்றமும் மரணமும் தொல்லை யல்ல தோற்றமுந் தேவை மரணமுந் தேவை தோற்றமும் நன்மை மரணமும் நன்மை தோற்றஞ் சிறக்க மரணந் துணைசெயும் தோற்றமும் மரணமும் தூய்மையைப் புதுக்கும் இறந்தபின் விளைவதை எண்ணல் வீணே 380 ஆவி உலகாய்ந் தல்ல லுறாதே ஆவியை அழைப்பது ஆவியை இழப்பது ஆவிப் பேச்சும் வாணிப மாச்சு வாணிப மோசம் வான்வரைப் போச்சே இருப்பது பொய்யே போவது மெய்யே தீங்கெண் ணாதே தீங்கெண் ணாதே தீமையைத் தீமையால் தீர்க்கஎண் ணாதே தீமையை அன்பால் தீர்க்க விரைக பகைவர் தூற்றலைப் பற்றிவே காதே பகைமை இருளில் அன்பொளி ஏற்றுக 390 கருத்திற் பிறக்கும் வேற்றுமை இயற்கை மற்றவர் கருத்துக் கிடந்தரல் மாண்பு கருத்தை மாற்றிக் கருத்தை வளர்க்க மாற்றக் கருத்தர் மாற்றா ரல்லர் வேறு கருத்தைச் சீறல் சிறுமை கருத்து வேற்றுமை திருத்தும் உலகை வேற்றுமைக் கருத்தை வேட்டல் அறிவு மாறு கருத்தால் மலரும் புதுமை பழிபா வங்கட் கஞ்சி நடக்க எவர்க்கும் நன்றே என்றுஞ் செய்க 400 பிறர்க்கென வாழ்தல் அறத்தின் திறவு மண்ணில் அறவழி வாழ முயல்க பாவம் போகப் பரமனை வேண்டுக (வாழ்த்து) அறவோர் வாழ்க அறவோர் வாழ்க அறத்தொண் டாற்றி அறநெறி வளர்க்க ஆய்ந்தாய்ந் தறத்தை அல்லற் படாதே தொண்டு செய்யின் துலங்கும் அறமே தொண்டு வண்ணம் தொல்லுல காக தொண்டர் படைகள் சூழ்ந்துசூழ்ந் தெழுக தொண்டாய்த் திகழ்ந்த தூயோர் வாழ்க 410 தொண்டரே அறவோர் துறவோர் நோன்பிகள் தொண்டு வளரச் சோதரம் ஓங்கும் தொண்டில் விளங்குஞ் சுத்தசன் மார்க்கம் வாழ்க மகம்மது வாழ்க இயற்கை வாழ்க ஏசு வாழ்க அருகர் வாழ்க புத்தர் வாழ்க கண்ணன் வாழ்க குமரன் வாழ்க மோனன் வள்ளுவர் வாய்மை தெள்ளிய உலகம் தெள்ளிய உலகில் சிறந்து வாழ்க ஔவை மொழியில் அகிலங் காண்க 420 அகிலங் காண அறஞ்செய விரும்பு யாதும் ஊரே யாவருங் கேளிர் ஒன்றே குலம் ஒருவனே தேவனும் வாழ்க சமரசம் வாழ்கசன் மார்க்கம் வாழ்க சான்றோர் வாழ்கதாய் மையே. 425 12. தாய்மைப் பெண் தாய்மைப் பெண்ணினம் வாழ்ந்து தழைக்க தாய்மைப் பெண்ணுயிர் தந்திடல் காட்சி தாய்மைப் பெண்ணெனச் சான்றுகள் வேண்டா தாய்மைப் பெண்ணினம் வென்று தழைக்க. 1 உலக மெல்லாம் உதிப்பிடந் தாய்மை உதித்துத் தங்கி ஒழுகிடந் தாய்மை கலையின் மூலங் கமழிடந் தாய்மை கடவு ளன்பு சுரப்பிடந் தாய்மை. 2 வானை நோக்க வயங்கிடுந் தாய்மை மண்ணை நோக்க விளங்கிடுந் தாய்மை கானம் மாமலைக் காட்டிடுந் தாய்மை கடலும் ஆறும் கருணையின் தாய்மை. 3 கருணைப் பெண்ணைக் கடிவதோ ஆண்மை கடிவோ ரெந்தக் கருவழி வந்தனர்? அருளை அற்றவர் ஆர்த்த மொழிகள் அனலைக் கக்கும் அருநர காகும். 4 பெண்ணைப் பேயெனப் பேசுதல் நன்றோ பெரிய மாயையென் றேசுதல் நன்றோ தண்மை யில்லா வனத்து விலங்கும் தடவிப் பெண்ணலம் தாங்குதல் காண்மின் 5 பாவை தாலி அறுத்திடல் மூர்க்கம் பட்டம் முண்டை என்றீதலும் மூர்க்கம் ஏவு மற்ற இழிவுகள் மூர்க்கம் எல்லாம் வீழ்த்த இளைஞர் எழுமின். 6 ஆணும் பெண்ணும் சமன்சமன் ஐயோ ஆணின் கோல்மிக அன்னை விழுந்தாள். கோணல் நீக்கிடுங் காதல் மணமே கோதில் மார்க்கம் குலவும் இனிதே. 7 1. கடந்த நிலை சிவமென்னும் பொருளேநீ திகழுமிடந் தேடித் திரிந்தலைந்தேன் சிந்தையிலே செப்புதற்கும் எளிதோ நவகலையைப் பழங்கலையை நாகரிகக் கலையை நாடோறும் ஆய்ந்துவந்தேன் நண்ணியதொன் றில்லை தவமுயற்சி உளங்கொண்டேன் சமயவழக் கற்றேன் தாக்குபுலன் மனங்கரணம் தணந்துதணந் தழியப் புவனமெலாம் படிப்படியே பொன்றவெறும் பாழாய்ப் பொலியுமுன்றன் உண்மைநிலைப் புனிதமுணர்ந் தேனே. 1 அருவல்லை உருவல்லை அளவெல்லை யல்லை ஆதியல்லை அந்தமல்லை அகண்டவெறும் பாழ்நீ மருவுமுன்னைப் படைப்பதெது? மாண்புடைய சிவமே மன்னுமுன்றன் பாழ்வெளியில் மாநிலங்க ளெல்லாம் அருவுருவாய் ஆங்காங்கே அமைந்தமைந்து கோட்டில் அசைந்தசைந்தே இயங்கிவரும் அதிசயந்தா னென்னே ஒருபெயரும் ஒன்றுமில்லா உனையுஞ்சிவ மென்றே உரைத்துவிட்டார் புலவரந்நாள் ஓதுகின்றேன் அதையே. 2 வடிவமிலா உன்முன்னே வடிவுலக மெல்லாம் வடிந்துநிற்குந் திறமென்னே! வயங்குமவை இலையேல் திடமுடனே உனதிருப்பைத் தெளியவழி யுண்டோ? செகமுழுதும் உன்பெருமை தெரிவிக்குங் கழகம் கடியதனை என்றுசிலர் காய்கின்றார் அறிவோ? காணதற்கும் உனக்குமுள சார்புரைக்குங் கலைகள் படியுலகம் கழக மென்று பகர்ந்தவரே பெரியோர் பாதமலர் பணிபுரியப் பரசிவமே அருளே. 3 செம்பொருளே பாழென்றால் சிரித்திகழ்வோர் உளரே சிரித்திகழ்வோர் விஞ்ஞானச் சிந்தைபெறல் அழகே ஐம்பொருளை ஆராய்ந்தோர் அவற்றினுக்கும் பாழே ஆதரவென் றறுதியிட்டார் அமையுலகம் வாழ வம்புரைகள் வழக்குரைகள் வசையுரைகள் வேண்டா வளர்விஞ்ஞை வழிப்பாழின் மாண்புணரல் நன்று வெம்புளத்தில் விளங்காத விமலபர சிவமே விஞ்ஞானம் உலகமெங்கும் மிகவளரச் செய்யே. 4 ஒன்றிரண்டாய் மென்மேலும் உயர்ந்துசெலல் மரபே ஒன்றுதிக்கும் இடமெங்கே ஒன்றுமிலாச் சைபர் ஒன்றுடனே அதுசேரச் சேரஒரு பத்தாய் ஒருநூறாய்ப் பெருகுமுறை உள்ளங்கைக் கனியே ஒன்றினுக்கு முன்பின்னே உயிர்ப்பளிக்குஞ் சைபர் உண்மையென்றும் பொருண்மையென்றும் உணர்த்திவிட்டார் கணிதர் நன்றுடைய உன்பாழோ நானறுந்தால் விளங்கும் நாதாந்த ஞானவித்தை நண்ணஅருள் சிவமே. 5 2. கலந்த நிலை மாளாத வெளிப்பாழே மயங்கா தென்றும் வாழ்சிவமே தனித்துமட்டும் வளர்கின் றாயோ கோளான பரிதிமுதற் குலங்க ளெல்லாம் குலவிஒளி பெறக்கலந்து கூடி யென்றும் மீளாமல் அங்கங்கே மேவி மன்னும் மேன்மையினை எம்மொழியால் விளம்ப வல்லேன் வாளாநீ இருப்பதில்லை மலர யாவும் வரையாத அருள்பொழியும் வள்ளல் நீயே. 1 எவ்வுலகுந் தளராமல் இனிது வாழ எங்கெங்கும் நீங்காமல் இருக்கும் ஒன்றே எவ்விதைக்கும் வித்தாகி எழும்பி நோக்கும் எம்முளைக்கும் முளையாகி இயைந்த தேவே எவ்விடத்தும் உனையன்றி என்ன உண்டே எவ்வணுவும் உனையிழந்தால் இயங்குங் கொல்லோ எவ்வுயிர்க்குந் தாயான இறையே உன்னை எவ்வாறு மறந்துய்வேன் ஏழை யேனே. 2 சுடராகி ஒளிகாலுஞ் சோதி நீயே சுருள்முகிலாய் மழைபொழிநீர்ச் சுரங்கம் நீயே அடரோங்க லாய்நிற்கும் அமைதி நீயே அணிவனமாய் அனல்தணிக்கும் அணங்கு நீயே படராகி வயலுமிழும் பசுமை நீயே பாலையாய் வெள்ளிகொழி பான்மை நீயே கடலாகி அலைஒலிக்கும் கவிதை நீயே கலந்தெங்கும் அருள்சிவமே கடவுள் நீயே. 3 மரப்பசுமை தழைதழைத்து வழங்குங் காட்சி மாடுகன்று நிழலினிலே வளருங் காட்சி பரப்புடைய மலர்க்கேணி பார்க்குங் காட்சி பாண்மிழற்றும் வண்டினங்கள் பறக்குங் காட்சி வரப்பினிலே மான்துள்ளி மருளுங் காட்சி மயிலாலக் குயில்கூவி மகிழுங் காட்சி சுரப்புடைய அன்பரினஞ் சூழுங் காட்சி துரியசிவ நின்காட்சி தூய தன்றோ. 4 வெட்டவெளி யாய்க்கிடக்கும் விமலத் தேவே விரிஇயற்கை வடிவாக விளங்கு கின்றாய் கட்டமின்றி வழிபாடு காண லாகும் கண்ணிருந்துங் குழியில்விழுங் கருத்தென் னேயோ கெட்டகலை அரசியலுங் கிளர்ச்சி செய்து கீழினத்தைப் பெருக்குவித்த கேட்டி னாலே வட்டமிடும் அஞ்ஞானம் வறண்டு போக வள்ளலருள் மக்களுய்ந்து வாழ நன்றே. 5 3. திருக்கூத்து செழுமியற்கைக் கசைவில்லை சிவமேநின் வெளிநிலைக்கும் எழுமசைவு சிறிதுமிலை இரண்டுமொன்றாய்க் கலந்துநிற்கும் அழகினிலே அசைவுநிகழ் அதிசயமே அதிசயமாம் தொழுதுய்ய உலகமெலாம் தொல்லசைவு தோன்றியதோ. 1 அசைநுட்பம் தெளிஅறிஞர் ஆனந்தக் கூத்தென்பர் இசைவிரவும் அக்கூத்தோ இறவாத மெய்க்கூத்து, திசையுலகம் எல்லாமும் திகழவைக்குந் திருக்கூத்து, தசையுடலம் இல்லாத தற்பரநின் அருட்கூத்தே. 2 மலைவளர மரம்வளர மாவளர மக்களுடன் கலைவளரக் கடல்வளரக் கதிர்மதியம் தாம்வளர ஒலிவளர உயிர்வளர உண்மைநெறி வளரஎன்றும் அலகிலொளி சிவமேநீ ஆற்றுகின்றாய் அருட்கூத்தே. 3 சிவமேநின் அருட்கூத்து சீவகலை உயிர்க்கூத்து தவமேசெய் உயிரையெலாம் சாந்தவெளி சேர்ப்பிக்கும் பவமேசெய் உயிரையெலாம் படிப்படியே துலக்குவிக்கும் அவமேசெய் மாக்களையும் அகல்வதில்லை திருக்கூத்தே. 4 தார்வினொடு வேறுசிலர் தனிமதியால் கண்டவொரு கூர்தலறம் வளரஉன்றன் கூத்துதவல் அவரறியார் தேர்தலுள வாசகனார் தெரிவித்தார் அந்நாளில் கூர்தலறம் என்செய்யும் கூத்திலையேல் பரசிவமே. 5 4. சிதம்பரம் சிற்பரமே ஆடுமிடம் சிதம்பரமென் றறையும் தெய்வமறை மொழியினிலே சிந்தனைவைத் தாழ்ந்தேன் சொற்பதங்கள் கடந்தவெளி சுத்தசிதம் பரமாய்த் தொல்லுலக மெல்லாமும் இயற்கைசிதம் பரமாய்ப் பொற்புடைய பொழிற்றில்லை சிற்பசிதம் பரமாய்ப் பொலிவகையை யானுணரப் பூத்ததுன்றன் அருளே எற்புடைய பிறவிதந்தாய் இவ்வுணர்வை ஈந்தாய் என்னகைம்மா றியற்றவல்லேன் ஏழைமகன் யானே. 1 மூவிதமாஞ் சிதம்பரத்தில் முன்னையது நெஞ்சில் முன்னுதற்கும் முடியாது மூலஅடை வென்றும் தேவியற்கைச் சிதம்பரமும் தில்லைச்சிதம் பரமும் தியானவழி பாட்டினுக்குச் செம்மையன வென்றும் ghÉkd¡ f£lÉH¥ guk!உளங் கொண்டாய் பாலளித்த தாயினுலும் பரிவுடைய தாயே ஆவியெனுங் கொடிபடர அணிகொழுகொம் பானாய் அருள்நினைக்க அகங்குழைய அருள்வேண்டும் அருளே. 2 தில்லையிலே சிற்பவுருச் சிதம்பரத்தைக் கண்டேன் தெய்வமறை நூலெனவே திகழ்வதனைத் தேர்ந்தேன் கல்லன்று மண்ணன்று கட்டிடமு மன்று காகிதமுங் கறுப்பெழுத்துங் கட்டிடமும் நூலோ நல்லசெம்பொன் பணியானால் நழுகிவிடும் பொன்னே நானிலமும் பொன்மறந்து பணியென்றே நவிலும் புல்லுமுரு முகிழ்த்தவுடன் பொருட்பிண்டம் மறைவே புந்திஇவை பொருந்தஅருள் பொழிந்தசிவம் வாழி. 3 சிதம்பரநூல் சிற்பமறை தில்லையிலே பயின்றேன் திகழ்மூன்று காண்டங்கள் தெளிவுறவே முயன்றேன் பதங்கடந்த வெளிகுறிக்கும் ஞானசபை ஒன்று பற்றியற்கைப் படிவிலெழும் பரம்பரக்கூத் தொன்று சிதம்புரியுங் கருஇயற்கைச் சிவகாமி ஒன்று சிவகாமி அடிபணியத் திருக்கூத்துக் காட்டும் மதங்கலவாத் திருக்கூத்து ஞானவெளி கூட்டும் மனமிவைகள் மருவஅருள் மாதேவா வாழி. 4 தில்லையெனும் பதியிலையேல் சிதம்பரத்தின் நுட்பம் தெரிவிக்குங் கருவியொன்று செகத்தினிலே உண்டோ தில்லையிலே சிதம்பரத்தைத் தியானித்து வந்தால் சித்தமலர்ச் சிதம்பரத்தின் திறமுணர லாகும் தொல்லுலக மெல்லாமும் சிதம்பரமாய்த் தோன்றும் சோதரஅன் பேஎங்கும் சுரந்தெடுக்கும் பெருக்கே எல்லையிலாப் பரசிவமே இடுக்கணுறும் என்னுள் இவைபடிய அருள்புரிந்தாய் எவ்வருளும் நினதே. 5 5. கூத்தன் கூத்தில் வெளியே பரசிவமே கூத்தைக் கொண்டாய் இயற்கையிலே கூத்த னாகி வந்திலையேல் குலவி உலகம் மலருங்கொல் கூத்தின் நிகழ்ச்சி எங்கெங்கும் கூர்தல் ஓம்பும் அறமென்று கூர்த்த மதியர் கூறியசொற் குணத்தை உணர்ந்தேன் அருளாயே. அன்னை இயற்கை யுடன்கலந்தே அப்பா அன்பால் ஆடுகின்றாய் மன்ன உலகை விரிக்கின்றாய் மாண்பை உணர்ந்தோர்க் கின் பூட்டி உன்ன அரிய வெட்டவெளி ஒன்ற உதவி புரிகின்றாய் என்று முழங்கும் மறையுள்ளம் எளியேன் உய்ய அருளாயே. வானக் கோள்கள் வையமெலாம் வட்டமிட்டுச் சுழலஎங்கும் ஞான நடனம் ஆற்றுகின்றாய் நாத உண்மை அதைத்தில்லை ஞான சபைக்குஞ் சிவகாம ஞானத் தாய்க்கும் இடையாடக் கான உருவ ஓவியமாய்க் கண்டோர் எவரோ அவர் வாழி. 3 தில்லைப் புலியூர் அடைந்துநின்றேன் திருக்கூத்தப்பா உருக் கண்டேன் கல்விக் கீரன் அம்மையார் கடந்தான் மூலன் குமரகுரு சொல்லின் மன்னர் பாட்டமிழ்தம் சுரக்கும் உள்ளத் தவனானேன். கல்லிற் கடிய கரணமெலாங் கரைய வெள்ளம் விழுங்கியதே. 4 ஆடு கின்றாய் பெரும்புலியூர் ஆடு கின்றாய் நெஞ்சமலர் ஆடு கின்றாய் கலந்தெங்கும் ஆடு கின்றாய் கரந்தெங்கும் ஆட வில்லை கடந்தநிலை ஆடல் நிலையே அருள் வைப்பு வாடு கின்றேன் நடராச வள்ளல் அருளாய் அருளாயே. 5 6. சிவம் தெய்வம் ஒன்றெனச் செப்பா மறையிலை தெய்வம் ஒன்றெனச் செப்பா உலகிலை தெய்வம் ஒன்று சிவமெனத் தேர்ந்தனர் செய்ய மேனித் திறமுணர்ந் தோர்களே. 1 சிவமே ஒன்று செகம்பல பேரினால் கவலை நீக்க வழிபடல் காட்சியே தவத்தில் நின்றால் சமநிலை கூடியே சிவமு மாதல் தெளிவில் விளங்குமே. 2 சீல நுட்பஞ் செறிந்தவர் சிந்தையில் சீல மேசிவ மென்று தெரித்தனர் சீல மேசிவ மேஎன நோற்பவர் சீல ராகிச் சிவகதி சேர்வரே. 3 செகத்தி லெங்குஞ் சிவப்பெய ராலெயே அகத்திற் பூசை அலர்ந்தது முன்னாள் புகுத்தி விட்டனர் பலபெயர் பின்னாள் செகுப்பின் அப்பெயர் சேர்வ தொருமையே. 4 சிவசிவ என்றிடில் தீமை யொழியும் சிவசிவ என்றிடில் சித்தம் துலங்கும் சிவசிவ என்றிடில் சீலம் பெருகும் சிவசிவ என்றிடில் சேர்க்குஞ் சிவமே. 5 7. உருவம் எப்பொருட்கும் எட்டாமல் இலங்குவதும் அருளே இயற்கையுட லாக்கியெங்கும் இலங்குவதும் அருளே தப்புயிரை நீங்காமல் தாங்குவதும் அருளே தவவீரர் ஒவியத்தில் தங்குவதும் அருளே எப்படியும் நினைந்தாலும் அப்படியே யாகி எழுந்தருள உளங்கொள்ளும் எளியவனே உன்னை இப்படியன் அப்படியன் என்றுரைத்தல் அழகோ எப்படியும் நீவருவாய் இயம்பரிய சிவமே. 1 அருவென்பர் உருவென்பர் அகண்டவறி வென்பர் அத்தனையும் உனக்குள்ள அருள்நிலைகள் அப்பா பெருவுலகில் தத்துவங்கள் பேச்சாகிப் போச்சே பேச்சுலகம் பெரிதாகிப் பேயுலக மாச்சே உருவுருகில் மனமுடையார் உருக்கடந்த நிலையை உன்னுதலும் ஆகாதென் றுருக்கொண்டாய் சிவமே கருவுலகைக் கடப்பதற்குக் கருவிஅது கண்டேன் கருணைமுதல் நீயென்றே காலடைந்தேன் அருளே. 2 இயற்கையுடன் நீஇயங்கும் இயல்பினைஅந் நாளில் இயற்புலவோர் ஓவியமாய்க் காவியமா ஈன்றார் முயற்சியிலே அவ்வுருவை முன்னிவழி பட்டேன் முன்னவனே பொன்னவனே முத்திமுழு முதலே பயிற்சியிலே உனதியற்கைப் பண்பையுணர்ந் தேனே பரம்பொருளே உருவினிடம் படிந்தபரி சென்னே செயற்கையிலே கிடப்பவர்கள் திருவுருவப் பூசை செயவேண்டும் செயவேண்டும் திருவருள்செய் சிவமே. 3 மின்னொன்று குவைநிறங்கள் பலவேய்தல் போல மிளிர்சிவமே ஒன்றேநீ மேவுமுரு பலவாம் நின்னருளைப் பெண்ணென்றார் நீறணிந்த சித்தர் நீலவடி வாக்கியதை நிறுவிவிட்டார் சிற்பர் முன்னுமடி ஒளிகிளரும் முத்தொழிலை முயக்கி மும்மூர்த்தி உருவெடுத்தார் மூதறிவுப் பித்தர் இன்னவழிப் பலமூர்த்தம் இறங்கினவே யாவும் எழிற்கலைகள் இவ்வுணர்வை எழுப்பியதும் அருளே. 4 கலைபிறக்குந் தாயகமுன் கலந்தநிலை இந்தக் கருத்தறிய அருள்சுரந்த கற்பகமும் நீயே கலைவழியைக் கடைப்பிடித்தால் கலந்தநிலை தோன்றும் கலந்தநிலை தோன்றிவிடின் கடந்தநிலை புலனாம் கலைகளெலாம் அந்நிலையில் கற்பனையாய்ப் போகும் கலைவழியே நிற்கநிற்கக் கற்பனைகள் தெரியும் கலைவிடுத்துக் கற்பனையைக் கழறலறி யாமை கடைக்காலாம் கலைவளரக் கருணைபுரி சிவமே. 5 8. கலை உருவம் சடைமுடியின் பொன்னொளியும் தண்மதியின் வெண்ணிலவும் அடைஉதடு விடுகனியும் அணிகண்ட நீல்மணியும் உடற்பவள மணிக்குழம்பும் உமைபசுமை மரகதமும் கடைப்பட்ட நாயனையேன் கண்கருத்தைக் கவர்ந்தனவே. 1 முக்கண்ணும் நாற்கரமும் முரண்திரண்ட எண்டோளும் அக்கிரம முயலகனை அழுத்துமொரு சேவடியும் எக்கணமும் உயிர்க்கருள எடுத்தஉயர் திருவடியும் சிக்கறுத்தென் சிந்தனையைச் சீர்செய்யப் புகுந்தனவே. 2 கங்கையுடன் சினஅரவும் கலைமதியும் அணிமுடியும் பொங்குதிரு நீற்றொளியும் பொலிவுசெறி குண்டலமும் சங்கெலும்பு மாலைகளும் தனித்தமலர் மாலைகளும் மங்குமென துள்ளத்தின் மாலழிக்க வந்தனவே. 3 மருள்மதனை எரிவிழியும் மறைபேசுந் திருவாயும் உருள்யமனை உதைகாலும் ஒருத்தனழ மிதிகாலும் இருள்மலிமுப் புரமழிய எரியுமிழுங் குறுநகையும். பொருள் விளக்கும் அருட்டிறங்கள் புவியுய்யப் பிறந்தனவே. 4 தலையினிலும் உடலினுலும் கையினிலும் காலினிலும் அலைபணத்துப் பாம்பணியும் அடுபுலிதோல் அரையுடுப்பும் கொலையானை உரிப்போர்வும் கொம்பெருது வாகனமும் குலையகத்தை நிலைப்பிக்குங் குணவீரக் குறிப்புகளே. 5 9. உருவப் பயன் செஞ்சடை நோக்க நெஞ்சில் சிந்திடும் அமிர்த தாரை கங்கையின் காட்சி யாலே கரைந்திடுஞ் செருக்கின் மூலம் திங்களை உன்னத் தோன்றும் சித்தினுக் கழிவ தின்மை அங்கண! நுண்மைத் திண்மை அருட்குறி கொண்டாய் போற்றி.1 முக்கணை முன்ன முன்ன மும்மலம் எரிதல் கூடும் பக்கமாய்ச் செவியைப் பார்க்கப் பரிந்தெழும் ஓமென்னோசை செக்கர்வாய் காணக் காணச் செழுமறை முழக்க மாகும் இக்கலை வடிவாய்க் காட்சி ஈந்தருள் ஈசா போற்றி. 2 ஆருயிர்ப் பாவ ஆலம் அன்புடன் கண்டந் தாங்கிப் பேரருள் அமுதம் ஈயும் பெருமையை உணர்த்தும் நீலம் ஏருழை துடிதீ சாய்கை இறுத்தகால் எடுத்த காலும் கூரளி ஐந்து செய்கைக் குறியணி சிவமே போற்றி. 3 உலகெலாம் உன்றன் போர்வை உலகெலாம் ஒலியின் ஈட்டம் ஒலிஎழும் சுழல்பாம் பென்ன உன்னணி ஒலிபாம் பாகும் களிமத யானைப் போர்வை களிப்பினை ஒடுக்கும் பூட்கை புலியுடை கருமச் சாய்வு, பூண்டனை புனிதா போற்றி. 4 வெள்ளெலும் பாரம் எண்ண வீண்பிறப் பிறப்பில் லாத வள்ளல்நீ என்னும் உண்மை மருவிடும் நெஞ்சில் தூய வெள்விடை உள்ள உள்ள விளங்கிடும் அறத்தின் மேன்மை உள்ளுறை கோலங் கொண்ட உத்தமா போற்றி போற்றி. 5 10. புராணக் கலை மறைகளும் மற்று முள்ள மாண்புறு கலைக ளெல்லாம் அறைதரும் ஐயன் மேன்மை அதைப்புர ணங்கள் வேறு முறையினில் மாற்றி மாற்றி முழங்குதல் மடமை யன்று தறையினில் கதைக ளாகத் தத்துவம் தழைத்தல் தீதோ. 1 வெறுங்கதை புராண மன்று விழுப்பொருள் பலவு முண்டு நறுங்கவி மெய்விஞ் ஞானம் நற்றொழில் நாடு செல்வம் அறங்குணம் காதல் வீரம் அருளிறை இயற்கை வாழ்க்கை திறங்களின் காட்சிக் கூடம் தெய்வீக நிலையம் நன்றோ. 2 சத்தொடு சித்தா னந்தம் சாத்திரஞ் சொல்லிப் போகும் சத்தினைத் தலைவ னாகச் சித்தினைத் தலைவி யாக நித்தியா னந்தஞ் சேயா நிகழ்த்திடும் புராண நூல்கள் சத்தியம் உருவ மானால் தரணிக்கு விளக்க மாமே. 3 மும்மலம் அழிக்கும் நுண்மை முப்புரம் எரித்த காதை நம்முயிர் சிவமாந் தன்மை நாடுதல் வள்ளிக் காதை செம்மையில் ஆட்சி வீழ்த்தல் செப்பிடும் இராம காதை தம்முளே எல்லாங் காண்டல் கண்ணனின் காதை யாமே. 4 கதைகளை மட்டுங் கொள்வோர் கருத்தினில் கலகம் தேங்கும் கதைகளை மட்டுங் கேட்போர் கடவுளைக் காண்ப தில்லை கதைகளை மட்டுஞ் சொல்லிக் காலமே கழிக்குங் கூட்டம் துதையுமேல் உலகம் பாழாம் தூய்மையும் பெருகா தன்றே. 5 11. புராணக் கலை சாதியைப் பிறப்பி னாலே சாற்றிடும் புராண காதை ஆதியில் இல்லை அந்த அவதியின் தோற்றம் பின்னே நீதியை அழித்து நல்ல நெறியினைக் குலைத்த தம்மா சோதியே அதனைப் போக்கச் சூழருள் இன்னே இன்னே. 1 பெண்ணினை இழித்துக் கூறும் பேய்க்கதை சாக சாக கண்ணினை விழிக்கச் செய்யாக் கருங்கதை மாய்க மாய்க புண்ணினை வளர்க்குந் தீய புன்கதை போக போக கண்ணுதல் கொண்ட தேவே கருணைசெய் இன்னே இன்னே. 2 ஒழுக்கினை உயிரின் ஓம்பும் உயர்கதை வாழி வாழி வழுக்கினர் திருந்தும் வண்மை வளர்கதை வாழி வாழி பழுத்தவர் நெஞ்சே பாட்டாய்ப் பகர்கதை வாழி வாழி எழுத்தினர்க் கூக்க மூட்டும் எழிற்கதை வாழி வாழி. 3 சீவகன் செல்வந் தந்த தேவனார் வாழ்க வாழ்க காவியக் கண்ணை ஈந்த கம்பனார் வாழ்க வாழ்க தேவியற் பாட்டை வார்த்த சேக்கிழார் வாழ்க வாழ்க பாவியற் றமிழாற் பாடல் பகர்பரஞ் சோதி வாழ்க. 4 முத்தனே முக்கண் மூர்த்தி முதல்வனே முடிவே இல்லாச் சித்தனே தில்லை யாடுந் தேவனே சிவனே நாதப் பித்தனே புராண நூலின் பிராணனை உணருங் கூட்டம் இத்தரை மிடைதல் வேண்டும் ஈசனே அருள்செய் வாயே. 5 12. வழிபாடு ஒன்றாத மனமழிந்து ஒன்றுமனம் பெறவேண்டிக் கன்றாவின் மனம்போலக் கசிந்துருகி உருகிநின்றேன் மன்றாடும் பெருமானே மயிலைநகர்க் கோயிலிலே நன்றாக வழிபட்டேன் நாயகனே இளமையிலே. 1 புண்ணிலவு மனம்போக்கிப் புனிதமனம் பெறவேண்டிக் கண்ணிரண்டும் நீர்பொழியக் கையிரண்டுந் தலையேற மண்ணினிலே உமையம்மை மயிலாகி வழிபட்ட பண்பதியில் பணிசெய்தேன் பரம்பொருளே அறிவாயே. 2 திருக்கோயில் வழிபாடு திருத்தொண்டர் வழிபாடாய் உருக்கோலக் குன்றைமுனி உரைஉதவ அருள்புரிந்தாய் இருக்கோல மிட்டழவும் எட்டாத இறையோனே பெருக்கோடுங் கங்கையொடு பிறையணிந்த பெருமானே. 3 திருத்தொண்டர் வழிபாடு திருநாட்டு வழிபாடாய்க் கருத்தொன்ற அருள்சுரந்த கற்பகநீ எனக்கொண்டேன் பருத்தவுடல் சிறுக்க அந்தப் பணிபுரிந்தேன் துணையாலே எருத்திவருஞ் சடைமுடியாய் எனைநடத்து நின்வழியே. 4 தொழிலாளர் படைதிரட்டுந் தொண்டெனக்கு வாய்த்ததது வழியான பொதுமையென மனஞ்செலுத்தி உழைக்கின்றேன் பழிபாவங் கடந்துநிற்கும் பரம்பொருளே சிவமுதலே வழிபாட்டுத் தொண்டன்றி மற்றெதையும் வேண்டேனே. 5 13 வழிபாடு இவ்வுலகில் திருக்கோயில் வழிபாட்டை இயற்றிவரின் எவ்வுயிருஞ் சிவமேநின் இருக்கையென உணர்ந்ததற்குச் செவ்வியலில் வழிபாட்டுச் செயல்பெருக்க எனத்தெரித்தாய் தெவ்வுலக மில்லாத தொண்டுலகை வேண்டுவனே. 1 மதவகுப்பு நிறநாடு மற்றுமுள பிரிவுகளால் இதமிழந்து மக்களினம் இகல்விளைக்கும் இருட்காலம் பதமுடைய சன்மார்க்கப் பணிவேண்டும் இந்நாளில் இதயமிடை நடம்புரியும் இறையவனே துணைபுரியே. 2 பிரிவற்ற சன்மார்க்கம் பேருலகில் பரவுதற்குப் பரிவற்றுச் சுரண்டரசு பகையரசு விழல்வேண்டும் உரிமையுடன் மக்களினம் உலவுபொது அறம்வேண்டும் கரிமதத்தை அழித்தவனே கருணைமிகு துணைபுரியே. 3 உலகமெலாம் ஒருகுடும்பம் ஆதலுக்குப் பொதுமைஅறம் இலகஇவண் வளர்ந்தோங்க இயங்குவது சன்மார்க்கம் பலகலைகள் பலமதங்கள் பகர்வதந்த நன்மார்க்கம் பொலிகஎன நடம்புரிவாய் பொற்பொதுவில் மணிவிளக்கே. 4 ஓயாது நடம்புரிந்தே உயர்பணியை ஆற்றுகின்றாய் தாயாகி உலகாக்கித் தாங்குகின்ற சங்கரனே மாயாத வீட்டின்ப மயக்கமதை வேண்டுகிலேன் ஓயாமல் பணிசெய்ய உன்னருளை வேண்டுவனே. 5 14. மன அடக்கம் மன அடக்கம் வேண்டுமென்று மதிவாணர் சொற்றார் மற்றவர்கள் கண்டுவிட்ட மார்க்கங்கள் பலவே மனமந்தி எனஉலகில் வழங்குதலும் உண்டு மந்திவழிச் சென்றுழன்றால் மாநிலமே பேயாம் மனம்ஐந்தின் தளையறுந்தால் மந்திஇயல் மாறும் மாறுபட ஓருருவில் மனந்திளைத்தல் வேண்டும் சினமறுத்துச் செருக்கொழிக்குஞ் சிவனுருவை நினைந்தால் தீயமனம் நன்மனமாய்ச் சிறந்தகுரு வாமே. 1 இதுகடந்தோன் அதுகடந்தோன் இறை என்று பேசி இப்படியும் அப்படியும் இயங்கிவந்தால் நெஞ்சில் எதுஅடையும் என்னவரும் இந்நிலையை ஓர்ந்தோ எம்பெருமான் சிவபெருமான் எந்தைநட ராசன் மதிநதியும் பணஅரவும் மருவுசடை முடியும் வரிவிழியும் மணிக்களமும் மலர்க்கரமும் அடியும் பதியஅருள் உருக்கொண்டான் பற்றிஅதை நினைந்தால் பாவமனப் புறம்விழுந்து பரமஅகம் எழுமே. 2 கங்கைசெருக் கொடுக்கினவன் கதிரவன்பல் லுதிர்த்தோன் கைக்கரியைக் கடும்புலியைக் கடிந்துறுத்துக் காய்ந்தோன் செங்கரத்தில் மழுமானைச் சேரவைத்த சேயன் சீறியதீ முயலகனைச் சேவடியால் அடர்த்தோன் வெங்களிமுப் புரமெரிய விடுத்தநகைக் கணையன் வேள்மதனை விறல்யமனை வேகஉதை வீரன் மங்கையொரு பங்குடைய மைந்தனருள் மெய்யன் மலரடியை உள்மனத்தை மறக்குறும்பென் செயுமே. 3 ஒடுங்கிவந்த வெள்ளைமதி உறையமுடி ஈந்தோன் ஓடுவிடப் பாம்புகளை ஒப்பனையாய்ப் பூண்டோன் அடங்குபுலத் தவஇளைஞர்க் காயுள்நிறை உய்த்தோன் அடுங்காளி அகமகிழ ஆடல்புரிந் தாண்டோன் நடுங்கியவெவ் வரக்கனழ நல்லருளைக் கூர்ந்தோன் நாரைபன்றி குருவிகளை ஞானமுறச் செய்தோன் பிடுங்குசினப் பேய்க்குலங்கள் பேணஇடந் தந்தோன் பிஞ்ஞகனை அடைந்தமனம் பீடுபெற லரிதோ. 4 சிவனுருவை நினைக்குமனம் சிவன்கோயில், அதனால் சீவகர ணங்களெலாம் சிவகரண மாகும் திவறுமுளை புலன்களெல்லாம் சிவம்விளையும் புலனாம் சிறுமைவளர் உடல்முழுதும் சிவம்ஒளிரும் உடலாம் திவளளவுப் புவனமெலாம் சிவபுவன மாகும் சினஞ்செருக்குப் பிறந்தஇடம் சிவஞ்செறியும் இடமாம் சிவனுருவை நினைக்குமனச் சிறப்பை என்ன சொல்வேன் செல்வமது செல்வமது விழுச்செல்வ மதுவே. 5 15. மன அடக்கம் உருவமற்ற ஒன்றைநீ உன்னலரி தென்றும் உருவமுற்ற ஒன்றைநீ உன்னலெளி தென்றும் உருஇயலை உன்இயலை ஊடுருவி ஆய்ந்தோர் உணர்ந்துவிட்டார் முன்னவர்கள் உணர்ந்த உண்மை இந்நாள் உருவமதில் ஒன்றுவையேல் ஊனுக்கிரை யாகாய் உருவமெனில் மனமேநல் லுருவுகொளல் வேண்டும் உருவமிலாச் சிவபெருமான் உருவெடுத்தான் அருளால் உன்னுதற்கே உரியஉரு உரியஉரு உன்னே. 1 தவனமுடி தவனமுடி சார்ந்தெண்ணு மனமே தண்ணிலவு வெண்மைவரி தவனமுடி மனமே பவளஉரு பவளஉரு படிந்துகிட மனமே பாதிமர கதப்பசுமைப் பவளஉரு மனமே கமலஅடி கமலஅடி கருதியொன்று மனமே கழற்சிலம்புக் கருணையடி கமலஅடி மனமே சிவனுருவை நினைமனமே சிவனுருவை மனமே சிவமாவை சிவமாவை சிவமாவை மனமே. 2 சிவபெருமான் திருவுருவைச் சிந்தனைசெய் மனமே சிந்தனையுள் சிந்தனையைச் செலுத்திஇரு மனமே தவநிலையாம் தவநிலையாம் தவநிலையாம் அதுவே தவநிலையில் கங்கையைப்பார் தருக்கழிவு நேரும் தவளமதி நினைஅறிவின் தனிமையொளி காலும் தழற்கண்டம் நம்பாவம் தணந்திறுகல் காட்டும் நவிரரவக் காட்சியிலே நல்லஅன்பு வழியும் நளினமலர் திருவருளாய் நயத்தல்பொரு ளாமே. 3 சிவத்தையே நினைமனமே சிவத்தைவிடுத் தோடின் தீமைபடை படையாகித் திரண்டடர்க்கும் சீறி அவத்தைவிளை பேராசை அலகைக்கிரை யாவாய் அழுக்காறு பகைமைஇகல் அனலெரியில் வதைவாய் சவத்துமுடை வீசிவீசிச் சார்ந்தழுகிப் போவாய் சாக்கடையாய்ச் சிறைநீராய்ச் சாம்புழுவாய் நெளிவாய் சிவத்தையே நினைமனமே சிவத்தையே மனமே தீமைஅணு காதுன்னைச் செகம்வாழ்த்தும் இனிதே 4 மனமேநீ மனிதரிடம் மலர்ந்தியங்கு கின்றாய் மற்றஉயி ரிடத்தினிலே மயங்கியிருக் கின்றாய் மனமுடையார் மனிதரென மாண்புலவர் கண்டார் மனிதருன்னை மந்தியென வைவதென்ன மாயம் மனமேநீ ஆசையினால் வாளாகி உலகை வதைக்கின்றாய் அதைவிடுத்தால் மனிதஇனம் வாழ்த்தும் கனஆசை அறநினைப்பாய் கண்ணுதலோன் அடியைக் கடியுமுன்றன் இயல்மாறிக் கருணைஎழும் நன்றே. 5 16. உலகம் உலகிலே உன்றன் ஒருபெய ராலே உற்றது பூசனை ஒருகால் பலபெய ரிடையே பரிந்தது சிவமே பரிவினால் இடர்விளை வில்லை கலையிலா மனத்தர் கருதினர் பின்னே கடவுளர் பலர்பல ரென்றே இலகிய பூசைக் கிடுக்குகள் நேர இடிந்தது பழம்பெரும் நிலையே. 1 ஓரிறை பல்பேர் உடுத்ததை உணரார் உறாமைகள் செய்தனர் அதனால் காரிருள் எழுந்து கட்டுகள் விடுத்துக் கண்களை மூடிய தறிவாய் பாரினில் மதப்போர் பரமநின் பேரால் பரப்பினர் பாவிகள் எங்கும் காரியங் கடந்த கண்ணுதற் பெரும கண்விழித் திடநினை யாயோ. 2 சிவசிவ உன்றன் திருப்பெயர் முன்னாள் செகமெலாம் முழங்கிய துண்டு தவமிலாப் பின்னாள் சாய்ந்ததம் முழக்கம் தலையெடுத் ததுகொலை முழக்கம் தவமுள பரத நாட்டினில் இன்றுந் தாண்டவம் புரிவதுன் நாமம் நவமுறும் உலகம் நண்ணுமோ பழமை நாதநின் திருவுளம் என்னோ. 3 பால்திகக் கடலில் பரவுநீல் நதியில் பற்றிய மற்றிடங் களிலும் மால்கழி லிங்கம் மருவுதல் காட்சி மாநிலப் பழமைநின் னெறியே கால்கொடு நமனைக் கடிந்தனை கண்ணால் காமனைக் காய்ந்தனை அன்று தால்கொடுக் குடையார் தருக்கினை இன்று தடிந்திடத் திருவுளம் எழுமோ. 4 சிவசிவ என்று சிந்தனை செய்க செப்புக முழக்குக உலகீர் பவநினைந் தலறிப் பத்தியால் உருகிப் பாடுக திருப்புகழ் நாளும் தவமுறும், பாவம் தழற்களம் ஏற்கும் சடைமுடி அமிழ்தினைச் சொரியும் நவையறுங் கொடிய நானறும் மூப்பு நரைதிரை மரணமும் அறுமே. 5 17. பாரதம் பாரத நாடு பழம்பெரு நாடு பத்தரும் சித்தரும் வாழ்ந்த நேரியல் நாடு நாடென நிமிர்ந்து நினைத்தலும் பேசலும் என்னே காரணி கண்டன் காரிழை பங்கன் கலைகளுங் கோயிலுஞ் செறியுஞ் சீரணி எங்குந் திகழ்ந்திடல் மூலம் சிவத்திரு நாடென ஆடே. 1 கண்ணினைக் கவரும் கருத்தினை ஈர்க்கும் கருணையார் பனிவரைக் கயிலை மண்ணிலே உயர்ந்த மறைபுகழ் தெய்வ மாநதி கங்கைசேர் காசி தண்கடல் அலையால் தமிழ்மறை முழக்கித் தவம்புரி திருவிரா மேசம் கொண்டநம் பரதம் குணவதி பாகன் குலவிய நாடெனப் பாடே. 2 எங்கணுங் கலைகள் எங்கணும் மறைகள் எங்கணும் முனிவரர் ஈட்டம் எங்கணுந் தவங்கள் எங்கணுங் கோயில் எங்கணும் எழுந்தநற் கொள்கை எங்கணும் ஏற்பே எங்கணும் இருத்தல் இனியநம் பாரதப் பெருமை அங்கணன் நெறியில் அரும்பிய பொதுமை அறத்திறம் ஆக்கிய மரபே. 3 கயிலைமால் வரையுங் கங்கையுங் கடலுங் காண்பவர் உளத்தினில் பொதுமை இயலுறும் அதனை இதயதா மரையில் எம்பிரான் இயற்றிடுங் கூத்தின் உயிரினை உணர்ந்தோர் ஓவியக் கோயில் உயர்கலை எடுத்தனர் அந்த வியலினைத் தாங்கும் விழுமிய நாடு வியன்பெரும் பாரத நாடே. 4 அலகிலா ஒளியாய் அருள்புரி அம்மை அப்பனாங் காட்சியை இயற்கை உலகினில் உயர்ந்த ஒருமலை இமய ஒங்கலாய் உதவுதல் எங்கே? மலையர சளித்த மாதிறை மணந்த மாக்கதைப் பிறப்பிடம் எதுவோ? மலைமுடி பரதம் மாதவ வைப்பு மாநில இன்னுயிர் உயிரே. 5 18. சீர்திருத்தம் எங்கெங்கும் நீங்காமல் இருக்கின்ற சிவமே எப்படியோ முனைப்பெழுச்சி இடைநுழைந்த தையோ தங்கியது தாக்குகிற தாக்குகளை அறிவாய் சாய்அதனைத் தக்கனது தலைசாய்த்த தேவே. 1 புலன்களிலே உழன்றுதிரி புறமனத்தைப் போக்கிப் புனிதமளி அகமனத்தைப் பொலிதரச்செய் தருளே கலன்களென்று பாம்புகளைக் கருணையுடன் பூண்ட காபாலி கண்ணுதலே கங்கைமுடி முதலே. 2 சோப்புகளால் சுரண்டிவிட்டால் தூயஉடல் வருமோ சொல்வேந்தர் அங்கமாலை சொல்லியரன் மேனிச் சேப்புருவை நினைந்துவந்தால் செழிக்கும்உடல் இனிக்கும் சிவனுருவை நினைமனமே சிவனுருவை மனமே. 3 திரைநரையைத் தீர்ப்பதற்குத் திரிந்ததையும் இதையும் தின்றுமென்று திரைநரையின் சேர்க்கைபெறல் அழகோ பரைவண்ண மாயிலங்கும் பரஞான நீற்றைப் பரிந்தணிந்து வரஉடலம் பவளவண்ண மாமே. 4 சாகாத பேறென்றும் சாமிகுரு வென்றும் சரிகின்றீர் அங்குமிங்கும் சாகரத்தில் ஆர்த்த ஆகாத நஞ்சுண்டும் அழியாத மெய்யன் ஆலகண்டம் நினைந்துருக அழியாமை உறுமே. 5 19 சீர்திருத்தம் எவ்வுயிரும் நீங்காமல் எழுத்தருளுஞ் சிவமே எவ்வாறு சாதிப்பேய் இடம்பெற்ற தந்நாள் எவ்வுயிரும் சமஉரிமை இனிமைபெற வேண்டும் இசைநாதப் பாம்பணிந்த இறையவனே அருளே. 1 மங்கையொரு பங்குடையாய் மதிகங்கை முடியாய் மாநிலத்தில் பெண்ணடிமை மருவியதென் அறிவோ நங்கையர்கள் ஆட்சிபெற்றால் நல்லுலகம் மலரும் நாதாந்த ஞானவித்து நாயகமே அளியே. 2 சகத்தினிலே சுரண்டுகின்ற சாம்ராஜ்யம் வீழச் சகலரையுங் காக்கவல்ல சமதர்மம் வாழ அகத்தழுக்குக் கழிந்தழிய அருட்புகழைப் பேச ஆசையுரு முயலகனை அடர்அறமே அருளே. 3 ஊனுண்ணா அருள்வளர உலகிடைப்போர் வறள உயிர்க்கொலைக்குச் சாலைஅமை ஊனஅர சோடத் தேனுண்ணும் மொழியணங்கு சிவகாமி மகிழத் தில்லைநடம் புரியரசே திருவுள்ளங் கொள்ளே. 4 குடிவகைகள் புகைவகைகள் குவலயத்துக் கேனோ குணங்கெடுக்குங் கணங்கள், நஞ்சு, கூற்றுருவம் பொன்ற வடிவளிக்கும் பால்பழங்கள் வகைவழிகள் பெருக வரத! அற விடையுடையாய் வரந்தருவாய் இன்றே, 5 20. அன்பு சிவபெருமான் எம்பெருமான் செல்வமிலாச் செல்வன் செல்வமெலாம் உயிர்க்கீந்த தியாகதெய்வம் அன்பே அவனமுடி சடைக்கூடை அணிஅரவம் அலங்கல் அத்தியுடை போர்வைபுலி யானையுரி எல்லாப் புவனமளி பெண்ணைமணம் புரிந்தமுனி உணவு பொதிநஞ்சம் கலனோடு பொதுச்சூழல் பேய்கள் பவனமிடு காடூர்தி பாறல்நட நொண்டி பரமஅன்புத் தத்துவங்கள் பத்தருக்கு விருந்தே. 1 அன்புசிவம் என்றுரைத்தார் ஆன்றோர்கள் முன்னாள் அநுபவத்தில் அதையடைதல் அரிதரிதே அந்நாள் அன்பு,கலை யாகவைத்தார் அநுபவத்தில் வரவே அருட்குன்றை முனிவரதில் அன்புபுல னாகும் கன்மனமுங் கனிந்துருகுங் காளத்தி மலையில் கருந்திண்ணர் ஏறுகின்ற காட்சிஅன்புக் காட்சி அன்புருவாய் இவர்கிறதே ஆனந்தக் காட்சி அன்புகண்ணாய் அப்பனுமாய் அலைகடலு மாச்சே. 2 அன்பேகண் ணப்பரென்றும் அவரேஅன் பென்றும் அங்குக்கண் ணப்பினவர் அரியகலைக் கீரர் கன்னிமொழிக் கல்லாடர் கருணைவழி மூவர் கனிந்தமணி வாசகனார் கால்வழியில் வந்தோர் அன்னவர்பால் ஊற்றெடுத்த அமிழ்தமெலாம் அன்பே அன்பன்றி வேறென்னை அவைதிரண்ட தேக்கம் அன்புருவாய்ச் சேக்கிழவர் அருள்பெரிய நூலே ஆழாழி கரையில்லா அன்பாழி அதுவே. 3 மெய்ப்பொருளை மெய்ம்மையிலான் குத்துகின்ற காட்சி மெய்யன்பு, கொலைஞருக்கும் அருள்சுரக்குங் காட்சி மெய்யுருக்கும் மனமுருக்கும் மேதினியு முருக்கும் வெல்லன்புக் காட்சியது சிவகாட்சி யாகும் ஐயரெறி பத்தர்சினந் தானையடர் கோலம் அரசன்வெகுண் டணிவகுத்தே அங்கடையுங் கோலம் செய்யிருவர் வாளுமன்பாய்ச் சிவமெழும்புங் கோலம் சிந்தனையில் நிலவவைக்குஞ் சிறந்தகலை வாழி. 4 அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவ மென்றே அன்பமைச்சர் எடுத்துவிட்டார் அழகுத்திருக் கோயில் அன்புசிவக் கோயிலதே அளப்பரிய கோயில் அக்கோயில் வழிபாட்டால் அகம்,அன்பு விளக்காம் அன்புவிளக் கங்கங்கே ஆரிருளைச் சீக்கும் அன்புசிவம் அடியவராய் அருள்புரியும் நன்றே அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவம் வாழி அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவம் வாழி 5 21. சிவ நாமம் சிவசிவ நாமத்தைச் சொல்லு - அது தவமுயர் செல்வமும் சாந்தமும் நல்கும் (சிவ) எல்லாங் கடந்தவன் ஈசன் - அவன் எங்கணுந் தங்கும் இயற்கை விநோதன் புல்லாகி நிற்கும் பொலிவை - நினைக்கப் பொங்கும் அவன்திறம் புந்தியில் நன்றே. (சிவ) 1 இயற்கை இறைவன் எடுக்கும் - இன்ப எழிற்பொழி காவிய ஓவியக் கோலம் இயற்கை விழிக்கு விளங்கும் - துன்ப ஏத விழிக்கதன் இன்னுயிர் தோன்றா (சிவ) 2 பவள மணிக்குன்ற மேனி - ஒரு பாதி பசும்பொழில், பான்மதி காணும் தவன முடிநீல கண்டம் - இது சங்கரன் சித்திரம் சாந்தஅ மைப்பே. (சிவ) 3 சிற்பச் சிவத்தின் தியானம் - இனி செழுமை இயற்கைச் சிவத்தினைக் கூட்டும் பொற்புள் இயற்கையைப் போற்றின் - தனிப் புனிதச் சிவமுணர் போதும் உறுமே. (சிவ) 4 கல்லால் மரத்து நிழலில் - ஒரு காட்சி கருணைகை காட்டுதல் காண்பாய் கல்லாக் கலைபயில் பள்ளி - அது காணாத காட்சியாய்க் காட்டுஞ் சிவமே. (சிவ) 5  வாழ்த்து சுதந்திரத் தெய்வம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி. 1 சுதந்திர வாழ்த்து விண்கதிர் நிலவே போலும் விழிமணி யொளியே போலும் பண்ணிசை காதல் போலும் பயில்மனத் தெண்ணம் போலும் தண்ணதி மேக வோட்டம் தமிழ்மொழி பாட்டே போலும் உண்ணிலை யுயிரி னுக்கிங் கொளிர்சுதந் திரமே வாழி. 2 சுதந்திரச் சிறப்பு மீன்கடலே யெழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண்கம்ப மானாலும் ஊன்கொந்திக் கண்டதுண்டம் ஒன்னலர்கள் செய்தாலும் வான்மருவ நேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. 3 பாரத நாடு மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர்சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை இன்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு. கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதியெழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகப்போ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடே. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே. 8 தாயின் காட்சி போரூரன் மலைமீது பொருந்தமைதி நாடிப் புல்செறிந்த பாறையிடம் புங்கமரத் தடியில், பாரூரும் பார்வையெலாம் பையமறைந் தோடப் பாரதத்தாய் நினைவிலுறப் பரிந்தயரும் போதில், காரூரும் பொழிலசைவில் கண்பிடுங்கும் மின்போல் கனகவொளி மண்டபமே காந்தமென ஈர்க்கச் சீரூரும் உள்நுழைந்தேன்; திகழ்ந்ததொரு சபையே செப்பரிய உலகசபை; சிறப்புடைய தென்றார். 1 அரியிருக்கை யேறிமுடி அணிந்துயர்கோல் தாங்கி, ஆண்மையொடு வீற்றிருக்கும் அரசிகளைக் கண்டேன்; தெரியவென்னை ஈன்றவள்தன் திருக்கொலுவைத் தேடிச் சிறுகன்றே யெனவங்குத் திரிந்தலைந்தேன் திகைக்தே கரியநிறத் தென்மீது கண்செலுத்தி னார்கள்; காய்வர்களோ வெனுங்கவலைக் கருத்தொருபால் வாட்ட, அரிவையர்கள் முகநோக்கி யார்யாரென் றுணர; அருகணைந்தேன் தெரிந்தவரும் அருளினரிவ் வாறே. 2 நானாநாற் பத்தாண்டில் நலமுற்ற ஜப்பான் நாயகிநான்; பெருநதிகள் நானிலத்தில் பூண்டே ஆனாத வளமுடைநான் அமெரிக்கா செல்வி; அடுக்கடுக்காய்க் கலைவினைகள் ஆக்குஜெர்மன் யானே; கானாடுங் கனிமொழியும் ஓவியமுங் காதல் கவின்பிரான்ஸு திருமகள்யான்; காண்கவென முறையே தேனாறும் மலர்வாயால் தெரிவித்தார் தம்மைச் சிரித்தொருத்தி முடிவினிலே செப்பியதைக் கேண்மோ. 3 என்னருமை இந்தியனே என்னையறி யாயோ? என்னாட்சி கதிர்மறைதல் எப்பொழுது மில்லை; என்னிலத்தின் என்கடலின் என்வெளியின் பரவல் எவர்க்குண்டோ இவ்வுலகில் எங்குமென தாணை; உன்னலத்தின் பொருட்டாக உன்னையுமே யாளும் ஓரரசி என்னலுமே; உயர்சபையில் அன்னை இன்மை, குடல் முறுக்கியவண் எனைநீக்கக் குமுறி இடியிடிப்ப மழைபொழிய ஈர்ம்பொழிலில் நின்றே. 4 வேறு பொழிலிடையும் ஒளிர்கதிரே! பூவிற் றொன்மைப் புகழ்பரதத் தாயெங்கே? பொங்கி நின்று நிழலருளும் மரஞ்செடிகாள்! நிமல ஞான நிறைவீரக் கொடியெங்கே? நீண்டு வானில் எழுகுடுமி மலைக்குலங்காள்! இனிய வெண்மை இமயமுடி அணங்கெங்கே? எங்கே? அன்பில் அழகுநில வுந்தருவி அலைகாள்! கங்கை ஆறணிந்து கடலுடுத்த அம்மை யெங்கே? 5 ஆடுகின்ற மயிற்குழுக்காள்! ஆடல் நுட்ப அருங்கலையை முதலீன்ற அன்னை யெங்கே? பாடுகின்ற புள்ளினங்காள்! பண்ணின் பண்பைப் பாரினுக்குப் பரிந்தளித்த பாவை யெங்கே? ஓடுகின்ற புயற்றிரள்காள்! உரிமை நீர்மை உலகசகோ தரமென்ற ஒருத்தி யெங்கே? தேடுகின்றேன் தேவியெங்கே? தேவி யெங்கே? திரிகாற்றே நீயாதல் செப்பாய் கொல்லோ? 6 வடமொழியுந் தென்மொழியும் மலர்வா யெங்கே? வகைவகையாய்ச் சித்திரங்கள் வரைகை யெங்கே? திடமளிக்குங் கருணைபொழி செங்கண் ணெங்கே? சேர்ந்தவர்க்கு விருந்தளிக்குஞ் சிந்தை யெங்கே? சுடரொளிபொன் நவமணியுந் துன்ப நீக்குஞ் சுவைமணியுந் துலங்குமுடற் சுரங்க மெங்கே? இடமகன்ற இந்நிலத்தில் என்தா யெங்கே? எங்கேயென் தாயெங்கே எங்கே எங்கே? 7 வேறு எங்கேயென் றொருமனத்தால் ஏக்குற்ற வேளை எழுந்ததொலி விழுந்தகுர லிடத்திருந்தே மைந்தா! இங்கேயென் பழங்கதைகள் இயம்புவதா லென்னே? என்னிலையோ நிர்வாணம்; எச்சபையார் ஏற்பார்? பொங்கார முடிசெங்கோல் பூண்பதென்றோ போச்சு; பொலிவுடலும் பொன்னுடையும் புரியுணவும் போச்சு; கங்காளி; துச்சிலுளேன்; கம்பலையே ஆச்சு; கடும்பசிநோய் முடுக்குகின்ற கர்மமென தாச்சு. 8 வடிவினிலே பெரியள்யான்; வயதினிலே பெரியள்; வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்; கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்; காலினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன் வாழ்வே. 9 அன்புநெறி இறைநெறியை, ஆணவத்தால் மக்கள் அளப்பரிய பகைநெறிக ளாக்கியிழி வுற்றார்; மன்பதையில் பசையிழந்த வற்றல்மர மானார்; மற்றவர்கள் நடையுடையில் மதுமலர்வண் டானார்; என்பழைய சமரசமாம் இன்னமிழ்த முண்ணல் எந்நாளோ! இடைநுழைந்த இகல்சாதிப் பூச்சி, இன்புதரு குருதிகுடித் தீரல்நலம் போக்க, என்புருவாய்க் கிடக்கின்றேன்; எச்சபைக்குச் செல்வேன்? 10 பெண்ணடிமை தீண்டாமை பிறப்புவழிச் சாதி பேய்பிடியா நாளினிலே பெற்றிருந்தேன் மேன்மை; மண்ணினிலே இம்மூன்று மாயைசனி பற்ற வாதிட்டு மடிகின்றார் வகுப்புணர்வால் மைந்தர்; கண்ணினிலே கண்டுதுயர் கடலினிலே மூழ்கிக் கடவுளையே நினைந்துருகிக் கவல்கின்றேன்; மற்றப் பண்மொழியார் சபையிலுளார்; பாவிபடும் பாடோ படமுடியாப் பாடன்றோ பார்க்கமுடி யாதே. 11 என்னாட்சி பரிணமிக்க எழுங்கிளர்ச்சி பலவே ஏரார்சு தேசியத்தில் இருப்பதென்றன் ஆட்சி; தன்னாட்சி அந்நியத்தைத் தாங்குவதி லில்லை; தயையின்றி அந்நியரைத் தாக்கலிலு மில்லை; மன்னாட்சி அறநெறியில் மலர்ந்திடவே வேண்டும்; மாகலைகள் வாழ்விடையே வளர்ந்திடவும் வேண்டும்; நன்னாட்டுத் தொழிலரசு நலம்பெறவே வேண்டும்; நான்சபையில் வீற்றிருக்கும் நாளந்த நாளே 12 வேறு இம்மொழிகள் செவிநுழைய எழுந்தேன்; அன்னை எழிற்சபையி லெழுந்தருள இனிது வேண்டும்; செம்மைவினை யாற்றுதற்குச் சேர வாரும்; தீண்டாமை பெண்ணடிமை சிறுமைச் சாதி வெம்மைதரு நோய்களைய விரைந்து வாரும்; விழுமியசு தேசியத்தை விதைக்க வாரும்; அம்மைசம தர்மவர சாட்சி நாடி அன்பார்ந்த சோதரரே! அணைவீ ரின்னே. 13 தமிழ்நாடு வேங்கடமே தென்குமரி வேலையெல்லை நாடு மென்மைகன்னி இனிமைகனி மேன்மைமொழிநாடு தேங்கமழும் பொதிகைமலை தென்றலுமிழ் நாடு திருமலைகள் தொடர்மலைகள் தெய்வமலை நாடு பாங்குபெறு பாலிபெண்ணை பாவைபொன்னி நாடு பாவளர்ந்த வைகையொடு பழம்பொருநை நாடு தேங்குசுனை பளிங்கருவி தெளிசாரல் நாடு சிற்றோடை கால்பரந்த செய்யதமிழ் நாடே. 1 பொங்குபசுங் காடணிந்து பொழிலுடுத்த நாடு பூங்கொடிபின் செடிவனங்கள் பூண்டுபொலி நாடு தெங்குபனை கன்னலொடு கமுகுசெறி நாடு செவ்வாழை மாபலவின் தேன்சொரியு நாடு தங்கமெனு மூலிகைகள் தாங்கிநிற்கு நாடு தாயனைய கீரைவகை தாதுவளர் நாடு செங்கதிர்நெல் வரகுதினைச் செல்வம்விளை நாடு சீர்பருத்தி நார்மரங்கள் சிறந்ததமிழ் நாடே. 2 மடைகளிலே வாளைபாய மான்மருளு நாடு மழைமுழங்க மயிலாட வண்டிசைக்கு நாடு புடைகூவுங் குயில்கீதம் புசித்தினிக்கு நாடு பூவைபுகல் கிளிமழலை பொருந்தமிழ்த நாடு படைமூங்கில் வெள்வளைகள் பாண்மிழற்று நாடு பரவையலை ஓயாது பாடுகின்ற நாடு நடைவழியே குரங்கேறி மரமேறு நாடு நாகெருமை சேற்றில்மகிழ் நாடுந்தமிழ் நாடே. 3 மயிலிறகு தந்தமொடு மான்மதமீன் நாடு மான்கோடு தேன்கூடு மல்குதிரு நாடு தயிலமரந் தேக்ககிலஞ் சந்தனஞ்சேர் நாடு தண்மலர்கள் காய்கனிகள் சந்தைமிடை நாடு வயலுழவு செய்தொழில்கள் வற்றாத நாடு மயிர்பருத்திப் பாலாவி வண்ணவுடை நாடு வெயில்மணியும் நிலவுமுத்தும் மிளிர்ந்துமலி நாடு விழைபவளம் வெள்ளுப்பு விளங்குதமிழ் நாடே. 4 பாரளிக்குஞ் சித்தர்கணப் பழம்பெரிய நாடு பண்புறுகோல் சேரசோழ பாண்டியர்கள் நாடு வேரிமயக் கல்கொணர்ந்த விறலுடைய நாடு வென்றிமயம் புலிபொறித்த வீரமிகு நாடு நேரியலில் கொலைக்குயிரை நீத்தல்பெறு நாடு நெகிழ்கொடிக்குத் தேரளித்த நிறைந்தவருள் நாடு பேரிடரில் தலைக்கொடைக்கும் வாளீந்த நாடு பீடரசர் புலவர்களைப் பேணுதமிழ் நாடே. 5 புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பு நாடு நிறவெள்ளி வீதியவ்வை நேரெயினி நாடு நிறையொழுக்கக் கண்ணகியின் நீதிநிலை நாடு திறநடன மாதவியின் தெய்வஇசை நாடு சேய்மணிமே கலையறத்துச் செல்வமுற்ற நாடு நறவுமொழிப் புனிதவதி நங்கையாண்டாள் நாடு ஞானமங்கை மங்கம்மாள் நல்லதமிழ் நாடே. 6 மலையமுனி வழிமூன்று தமிழ்வளர்த்த நாடு மார்க்கண்டர் கோதமனார் வான்மீகர் நாடு புலமிகுதொல் காப்பியனார் பொருளுலவு நாடு போற்றுமக இறைகீரன் புலவர்தரு நாடு மலருலகே கொள்மறைசொல் வள்ளுவனார் நாடு வாய்த்தமுன்னோன் அரசுபெறச் சிலம்பில்மகிழ் நாடு விலைமலிந்த கூலமனம் மேகலைசெல் நாடு வெறுத்தவுளஞ் சிந்தாமணி விழைந்ததமிழ் நாடே. 7 வித்துமொழிக் கல்லாடர் வேய்ம்மலையார் நாடு விரிந்தகலைக் கம்பன்கவி விரைசோலை நாடு பத்திபொழி சேக்கிழாரின் பாநிலவு நாடு படர்வில்லிச் சந்தஅலைப் பாட்டருவி நாடு சுத்தபரஞ் சோதிகனிச் சுவையொழுகு நாடு சுற்றிவந்த வீரமுனி சொற்றேன்பாய் நாடு கத்தனருள் ஞானஉமார் கன்னல்சொரி நாடு கச்சியப்பர் விருந்துண்ணுங் கன்னித்தமிழ் நாடே 8 பரமனருள் நால்வராழ்வார் பண்ணொலிக்கு நாடு பழஞ்சித்த மறைபொருளைப் பகர்மூலர் நாடு பரவுபக லிரவற்ற பட்டினத்தார் நாடு பாற்குமரர் பிரகாசர் பாடுதுறை நாடு விரவருண கிரிவண்ண விரைசாரல் நாடு விளங்குகுணங் குடிமதான் வீறுஞான நாடு தரணிபுகழ் தாயுமானார் சன்மார்க்க நாடு சமரசஞ்சொல் லிராமலிங்கர் சாந்தத்தமிழ் நாடே. 9 பேருரையர் அடிநல்லார் பூரணனார் நாடு பேண்வரையர் அழகருடன் பேச்சினியர் நாடு தேரையர் புலிப்பாணி சேர்மருத்து நாடு செகமதிக்குஞ் சங்கரனார் உடையவர்தம் நாடு சீருறுமெய் கண்டமணி சித்தாந்த நாடு சிவஞான முனிக்கல்விச் செல்வநிதி நாடு போருரைக்குஞ் செயங்கொண்ட புலவன்வரு நாடு புகல்நீதி அதிவீரன் புரந்ததமிழ் நாடே. 10 மீனாட்சி சுந்தரக்கார் மேகமெழு நாடு மேவுசந்தத் தண்டபாணி மின்னலொளி நாடு வானாட்ட ஆறுமுக மாகடல்சூழ் நாடு மகிழ்கிருஷ்ணர் கவிராயர் கீர்த்தனங்கொள் நாடு தேநாற்று முத்துதியாகர் சங்கீத நாடு திரிகூடர் குறவஞ்சித் தேன்பிலிற்று நாடு கானார்க்கும் அண்ணாமலை காதல்சிந்து நாடு கவர்வேத நாயகனார் கல்வித்தமிழ் நாடே. 11 கால்ட்வெல்போப் பர்வல்வின்லோ கருத்தில்நின்ற நாடு கனகசபை ஆராய்ச்சிக் கண்ணில்நுழை நாடு நூல்வளர்த்த தாமோதரன் நோன்மைபெற்ற நாடு நுவல் மணீயச் சுந்தரவேள் நுண்மைமதி நாடு மால்பரந்த பாண்டித்துரை வளர்சங்க நாடு மாண்புதினத் தந்தைசுப்ர மண்யன்வரு நாடு சால்பரங்க நாதகணி தழைத்தகலை நாடு தனிக்கணித ராமாநுஜன் தந்ததமிழ் நாடே. 12 கொடைவள்ளல் சடையப்பன் குலவியபொன் னாடு கூடல்திரு மலைநாய்க்கன் கோல்வளர்ந்த நாடு படைவல்ல அரிநாயன் பணிகொழித்த நாடு பாஞ்சாலங் குறிச்சியூமன் பற்றியவாள் நாடு நடைசிறந்த பச்சையப்பன் நறுங்கல்வி நாடு நாயகனாஞ் செங்கல்வ ராயனற நாடு நடுநிலையன் முத்துசாமி நன்னீதி நாடு நவவீர பாரதியின் நடனத்தமிழ் நாடே. 13 பண்பரந்த இயற்கைநெறி பற்றிநின்ற நாடு பற்றியதன் வழியிறையைப் பார்த்தபெரு நாடு தண்ணியற்கை நெறியொன்றே சமயமெனு நாடு சாதிமதப் பன்மைகளைச் சகியாத நாடு மண்பிறப்பில் உயர்தாழ்வு வழங்காத நாடு மக்களெலாஞ் சமமென்னும் மாண்புகண்ட நாடு பெண்மணிகள் உரிமையின்பம் பெற்றிருந்த நாடு பெரும்பொதுமை யுளங்கொண்டு பிறங்குதமிழ்நாடே. 14 யாதும்மூர் எவருங் கேளிர் என்றுணர்ந்த நாடு எவ்வுயிர்க்கும் அன்புசெய்க என்றிசைத்த நாடு ஓது குலந் தெய்வமொன்றே என்றுகொண்ட நாடு ஒக்குமுயிர் பிறப்பென்னும் ஒருமைகண்ட நாடு நாதன் அன்பு நீதிஇன்பு நட் பென்ற நாடு நாமார்க்கும் குடியல்லோம் என்றிருந்த நாடு தீதில்லா மொழி வளர்க்கத் தெளிவுபெற்ற நாடு செந்தண்மை விருந்தளிக்குந் தெய்வத்தமிழ் நாடே. 15 தமிழ்த்தாய் இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ. 1 பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளுந் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ. 2 தமிழென்ற போதினிலே தாலூறல் உண்மையதே அமிழ்தாகி உயிரினுக்கும் யாக்கைநிலை செழிப்புறுமே. 3 சுவைத்துணருந் தமிழினிமை சொல்லாலே சொலுந்தரமோ தவத்துணர்வி லெழுமினிமை தமிழினிமைக் கிணையாமோ. 4 கனியினிமை கரும்பினிமை காதலிலே இனிமைபெருந் தனியரசி லினிமையென்பர் தமிழினிமை யுணராரே. 5 புலிகரடி அரியானை பொல்லாத பறவைகளும் வலிமறந்து மனங்கலக்க வயப்படுத்துந் தமிழொலியே. 6 கடவுளென்றும் உயிரென்றுங் கன்னித்தமிழ் ஒளியினிலே படிந்துபடிந் தோம்பினரால் பழந்தமிழர் கலைப்பயிரே. 7 இந்நாளைத் தமிழுலகம் இயற்கையொளி மூழ்காதே இன்னாத சிறைநீர்போல் இழிவடைதல் நன்றாமோ. 8 தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கும் இல்லைஇந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே. 9 தமிழரெனுந் திருப்பெயரைத் தந்ததுதான் எதுவேயோ கமழ்மணத்தை மலரறியாக் காட்சியது மெய்ம்மைகொலோ. 10 இமிழ்திரைசூழ் உலகினிலே இயற்கைவழி யொழுகினிமை அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமை நுழைந்ததென்னே.11 பல்லாண்டாய் அடிமையிலே பசுந்தமிழ்த்தாய் வீழ்ந்ததெனில் கல்லாத விலங்குகட்குங் காட்டைவிடுங் கருத்தெழுமோ. 12 கண்ணிலையோ காண்பதற்குக் காதிலையோ கேட்பதற்குப் புண்ணினிலே புளியென்னப் பூங்கொடியிற் புகுதுயரே. 13 உன்னஉன்ன உளமுருகும் ஊனுருகும் ஒருதமிழ்த்தாய் இன்னலது நுழையாத இழிநெஞ்சங் கல்லாமே. 14 பழந்தமிழர் வீரவொளி படர்ந்தீண்டில் இந்நாளே இழிந்தோடும் இடர்ப்பனிகள் எழுந்தாயின் தமிழ்நடமே. 15 தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல்நலம் போய்க்கடலில் விழுதல் நலம் பொலிதருமோ உடலுயிரே. 16 உயிரெதுவோ தமிழருக்கென் றுரைத்துணர்தல் வேண்டாவே அயர்வின்றித் தமிழர்களே! ஆர்த்தெழுமின் நிலைதெரிந்தே. 17 குறள்சிலம்பு மேகலையுங் கோதில்சிந் தாமணியும் அருள்சிலம்புந் தமிழினிலே அமைந்ததுவுந் திருவன்றே. 18 பழஞ்சித்த மறையருளப் பரனருளால் திருமூலர் நுழைந்தஇடம் எதுவேயோ நுவலுமது தமிழ்மாண்பே. 19 காவியமும் ஓவியமுங் கடவுளின்போ கடந்தஒன்றோ தாவிநிற்கும் நெஞ்சமதே தமிழ்சுவைக்கும் வாழ்வினிலே. 20 விலங்கியல்பின் வேரறுக்கும் விரலுடைய காவியமே. கலங்குமனத் துயர்போக்குங் கருத்தொன்றும் ஓவியமே. 21 காவியநெஞ் சுடையவர்கள் கருதார்கள் பிரிவுகளே ஓவியத்தில் உளங்கொண்டோர் உறுயோகம் பிரிதுளதோ. 22 சாதிமதச் சண்டையெலாந் தமிழின்ப நுகரார்க்கே ஆதியிலே சண்டையிலை அருந்தமிழை அருந்தினரால். 23 கலைத்தமிழின் கள்ளுண்டால் கலகமன வீறொடுங்கும் புலங்கடந்த அருளின்பம் பொருந்துவதும் எளிதாமே 24 காலத்துக் குரியஅணி கருதாளோ தமிழ்க்கன்னி மேலைச்செங் கலைபெயர்ப்பும் விளங்கிழையாம் புலவீரே. 25 பன்மொழியி லுளகலைகள் பசுந்தமிழி லுருக்கொள்ள நன்முயற்சி யெழவேண்டும் நலமுறுவள் தமிழ்த்தாயே. 26 தனித்தெய்வந் தமிழனுக்குத் தமிழன்றி வேறுண்டோ இனித்தநறுங் கோயில்களோ எழிற்கலைகள் வாழியரோ. 27 சத்தியாக்கிரக விண்ணப்பம் [gŠrh¥ படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் (1921இல்) ghl¥bg‰wJ.] பொறுமைக்கு நிலனாகிப் புனலாகி அளியினுக்குத் தெறலுக்கு நெருப்பாகித் திறலுக்கு வளியாகி 1 வெளியாகிப் பரப்பினுக்கு வெயில்நிலவுக் கிருசுடராய்த் தெளிவினுக்கே உடலுயிராய்த் திகழனையாய்ப் பிறராகி 2 இலகுவழி வழியாக எமையீன்று புரந்துவரும் உலகமெலாங் கலந்துகடந் தொளிர்கின்ற ஒருபொருளே! 3 உலகமெலாங் கடந்துகடந் தொளிர்கின்ற நினதியல்பைக் கலகமிலா உளங்கொண்டு கணித்தவரார் முதன்முறையே. 4 அவ்வியல்பை அளந்தாயும் அறநிலையே உறுதியெனச் செவ்வியறி வுழைப்பெல்லாஞ் செலுத்தாம லிருந்ததுண்டோ? 5 காட்சியொன்றே பொருளென்னுங் கருத்தைவிட்டுப் பொழுதெல்லாம் மாட்சியுடை நினதடியே வழுத்துவதை மறந்ததுண்டோ? 6 எண்ணமெலாம் உனதெணமே எழுத்தெல்லாம் உனதெழுத்தே மண்ணதனைப் பொருளாக மயக்கும்வழி யுழன்றதுண்டோ? 7 எல்லாநின் செயலென்றே இருந்தஒரு குலத்தார்க்குப் பொல்லாங்கு வரும்பொழுது புரப்பதெவர் கடனேயோ? 8 ஆத்திகத்தி லறிவுபழுத் தருளொழுகும் பரதகண்டம் நாத்திகத்துக் கிரையாகி நலிவுறுதல் நலமேயோ? 9 மூர்க்கநெறி யறியாத முனிவரர்கள் வதிந்தபதி பார்ப்பவர்கள் நகையாடும் படுகுழியில் விழுந்ததன்றே. 10 கொலைகளவு குடிகாமம் கொடும்பொய்யே மலியாத கலைநிறைந்த பரதகண்டம் கருதுவதோ அவைகளையே. 11 மலையளித்தாய் நதியளித்தாய் வனமளித்தாய் வளமளித்தாய் நலமளிக்கும் அவையெல்லாம் நழுவினவெம் மிடமிருந்தே. 12 வயிற்றுக்கே வனவாசம் மரணத்துக் களவில்லை கயிற்றுக்கும் பிறநாட்டைக் கைகுவித்துக் கவல்கின்றேம். 13 நாட்டுமுறைத் தொழிலெல்லாம் நசிக்கவிவண் பிறர்புரிந்த கேட்டினைநாம் எவர்க்குரைப்பேம் கிளந்துரைக்குஞ் சரிதமதே.14 பேச்சுரிமை எழுத்துரிமை பிறவுரிமை எமக்குளவோ சீச்சீயென் றிழிமொழியால் சிறுமைசொலும் வெளிநாடே. 15 உள்ளசட்டம் நிறைவிலையென் றுரிமைகொலுங் கருஞ்சட்டம் நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்ததுவே. 16 அழிக்க அதைத் தவமுதல்வர் அரியசத்தி யாக்கிரக ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே. 17 இரவொழித்துப் பகலுமிழும் இளஞாயி றதைமறைக்க விரவுபுயல் பரவியெரி வெடிகுண்டு பொழிந்தனவே. 18 இவ்வாரம் பஞ்சநதம் இரத்தநத மென இலங்கி ஒவ்வாத செயல்கண்டே உடைந்திரிந்த ததன்மனமே. 19 உரிமையெனும் உயர்வேட்கை உளத்தெழுமிக் கிழமையிலே ஒருமைமனத் தொழுகைசெய்தே உனைவேண்டும் வரமருளே.20 குறைகளெலாம் ஒழிந்துரிமை குலமடைய மருந்துண்டு தறையதனில் சுயஆட்சி தகைமைதரு மருந்தாமே. 21 பெறவேண்டும் சுயஆட்சி பெறவேண்டும் இப்பொழுதே அறமுறைகள் பிறவெல்லாம் அழகுபெறத் தழைத்திடுமே. 22 காந்திவழி கடைப்பிடிப்பின் கருத்தாட்சி மலர்ந்துவிடும் சாந்தமிகும் அவர்வழிதான் சத்தியாக் கிரகமதே. 23 சன்மார்க்க நெறியோங்கத் தயைபுரியெம் இறையவனே உன்மார்க்கத் துறைபற்றி உலகமிகச் செழித்திடுமே. 24 திலகர் திலகர் விஜயம் (திலகர் பெருமான் கொழும்பு வழியாக இங்கிலாந்து நோக்க 1918ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10ஆம் நாள் சென்னை நண்ணியவேளையில் பாடப்பெற்றது; அம்முறை கொழும்பில் திலகர் பெருமான் செலவு தகையப்பட்டது) பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் 1 கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் 2 அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! 3 திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திகலரெனு மியற்பெயரால் திறமுறவே நிறுத்தினையே 4 செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே 5 ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஓரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? 6 கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே. 7 இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லாத உரையதனை அகிலமெலாம் பரப்பினையே. 8 உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே. 9 பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? 10 உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே. 11 சிந்தியா உளம்உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் வடிவன்றே 12 தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே. 13 சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. 14 இங்கிலாந்தும் திலகரும் (பின்னே சில மாதங்கடந்து, திலகர் பெருமான் பம்பாய் வாயிலாகச் சென்று, 1918ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இங்கிலாந்து சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்தபோது பாடப்பெற்றது.) எங்கள் மன்னர் இணையடி யேந்தியே பொங்கு பேற்றைப் புனைந்தெமை யாண்டிடுந் தங்கு சீர்த்தி தழைத்தொளி வீசுநல் இங்கி லாந்தெனும் இன்ப அணங்குகேள். 1 தண்மை செம்மை தகைமையுங் கொண்டவோர் வண்ண மாமுனி வந்தனர் நின்னிடை வெண்மை நீலம் விரிந்து பரந்தநின் கண்க ளாலவர் காட்சியைக் காணுமே. 2 கல்வி ஞானங் கருணை நிரம்பிய செல்வ மாமுனி சேர்ந்தனர் நின்னிடைப் பல்வ ளங்களும் பான்மையுங் கொண்டநீ ஒல்லை அன்னார் ஒளிமுகங் காணுமே. 3 மற்ற வர்க்கே மனத்தை நிறுத்தியே உற்ற நேரத் துதவும் அறமுனி பற்றி வந்தனர் பண்புடை நின்னிடைச் செற்ற மில்லவர் சிந்தையை நோக்குமே. 4 பரத மென்னும் பழையவோர் நாடளி விரத மாமுனி வேந்தர் கிழக்குதி பரிதி யென்னப் பரிந்து படர்ந்தனர் கருதி யன்னார் கரத்தினை நோக்குமே. 5 எங்கள் தலைக்கணி எம்பெரு மானடி பங்க யப்பனி மாமலர் பூத்தது துங்க மிக்க சுகமுடை நின்னிடை அங்க ணாலதை அன்பொடு காணுமே. 6 உரிமை வேண்டி உவந்துனை நாடினர் பெரிய மாமுனி பேச அருள்புரி அரிய வாசகம் அன்பி லுதிப்பது தெரிய ஓதுவர் எங்கள் சிறுமையே. 7 அன்ன வர்பெயர் ஆரும் புகழ்பெயர் பின்னை யென்றும் பெயர்வது மின்றியே இந்நி லத்தி லிருப்பது கூறுவல் சென்னி கொள்ளுந் திகல ரெனும்பெயர். 8 இப்பெ யர்ப்பொருள் இந்தியா என்பது செப்பு மித்தகைச் செம்பொருள் சேர்ந்தது அப்பு மிக்க அருணதி பாய்ந்திடும் ஒப்பில் இந்தியா உற்றதை ஒக்குமே. 9 சிந்தை நல்ல திலகர் சொலும்மொழி இந்தி யாவின் இனிமொழி யாகுமால் அந்த ணர்சொலை யார்ந்து செவிகொடு சொந்த மாகச் சுதந்திர நல்குமே. 10 திலகர் வாழ்த்து மறப்பாலும் பிறவாலும் மதிப்பிழந்த எந்தமக்குப் பிறப்புரிமை சுயஆட்சி பெறவேண்டும் எழுமெனவே குறிப்புடைய ஒருமொழியைக் கொடுத்துதவி கிளர்ச்சியதால் சிறப்பருளுந் திலகமுனி திருவடியை வணங்குதுமே. 1 உலகன்னை உயிராகும் ஒருபரத கண்டமதில் உதித்த கோமான் பலகலையின் பயனுணர்ந்து பற்றறுத்து மற்றவர்க்குப் பண்பு செய்வோன் கலகமிலா உளங்கொண்டு கட்டுரையிற் பிறழாது காப்பில் நின்றோன் திலகமுனி எனும்பெயரான் திருவடியை எஞ்ஞான்றுஞ் சிந்திப் பேமால். 2 காந்தி காந்தியம் அல்லது இன்பப்பேறு என்னை அறியா என்னுளங் கொண்ட மயலொடு கலவா இயல்பெனுந் தேவி, எழுந்தொரு பொழுது செழுந்தமிழ்க் குரலால் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென பொறித்தனள் ஒருவினா; கருத்தினில் நின்றது அலைத்தும் ஆட்டியும் குலைத்த தென்னை; உண்மை தெளிய நண்ணினன்; கால்கள் நடந்தன உணரேன்; கடந்தனன் வழிபல அந்தி மாலை சிந்தையிற் றோன்றலும் கடற்கரை கண்டேன்; இடமென இருந்தேன் 10 உருகிய செம்பொன் கருகிய வானும் பளிங்கு நொய்யென இலங்குவெண் மணலும் நீனிறக் கடலும் நீளின அலையும் இறைவன் வடிவா யென்னை ஆண்டன நிறைகாண் போழ்தில் நிலவிழிப் பொழிந்தே உறக்கம் புகுந்தும் உணர்வழி விலையால் அவ்வுணர் வொளியில் செவ்விய மெல்லியல் தும்பை யன்னதோர் தூசணிந் தெதிரே எழுதரும் வடிவோ டெழில்வெண் டாமரை பூத்தது போலப் பொலிந்தன ளன்றே; 20 அன்னவள் அடியை அன்புடன் தொழுதே என்னிலை யுணர்த்த; எழிலணங் கவளும், மைந்த! கேட்டி இந்தமா நிலத்தில் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென வருந்தல் வேண்டா; திருந்து நல்வழி இன்று கூறுவல், நன்று கேட்டி! மக்கள் யாக்கையே மிக்கது மிக்கது அன்னதன் பயனை இன்னதென் றுணர இல்லம் விடுத்துச் செல்லலும் வேண்டா காடுகள் பலவும் ஓடவும் வேண்டா 30 மலைக ளேறி அலையவும் வேண்டா காற்றை யீர்த்து மாற்றவும் வேண்டா மனைவி மணந்தும் மக்களை யீன்றும் இனத்தொடு வாழ்ந்தும் இருந்தொழில் செய்தும் உண்பன உடுப்பன உண்டும் உடுத்தும் நாட்டை விடாது வீட்டி லுறைந்தும் பிறவிப் பயனைப் பெற்று வாழலாம்; இலக்கிய மிதற்கொன் றியம்புவன் கேட்டி, கலக்கமி லுளத்தைக் காளைநீ பெறுக; இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன் 40 கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாய னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் மக்களை யீன்று மிக்கவ னானோன் செயற்கை வெறுத்த செம்மை யாளன் இயற்கை இன்பமே இன்பெனக் கொள்வோன் உண்மை கடைப்பிடித் தொழுகுஞ் சீலன் உண்மைகா ரணமா உயிரையும் விடுவோன் வானந் துளங்கினும் மீனம் படினும் 50 மலைகள் வீழினும் அலைகள் பொங்கினும் தன்னிலை மாறாத் தன்மை யாளன் உலகி லுள்ள அலகிலா உயிர்கள் தன்னுயி ரென்னும் தருமம் பெற்றவன் பிறர்க்குக் கேடு மறந்துஞ் சூழான் அன்புடை யார்பிறர்க் கென்பு முரியர் என்னு மெய்ம்மொழிக்கு இலக்கிய மானோன் உண்மைஅஞ் சாமை ஒண்பே ராயுதம் தாங்கி என்றும் ஈங்கு முரண்படு தேக சக்தியை ஏக சக்தியாம் 60 ஆன்ம சக்தியால் அடக்கும் வீரன் சினத்தை யொழித்த இனத்தவ ருறவோன் யாண்டுத் துன்பம் எவர்க்கு நேரினும் ஆண்டே அவனுடல் அணையு மன்றே; அவனுடல் மற்றவர் உடலே யாகும் அவன்பொருள் மற்றவர் பொருளே யாகும் அவனுயிர் மற்றவர் உயிரே யாகும் தனக்கென வாழாத் தன்மை பெற்றவன் அன்பே வடிவாய் அமர்ந்த அண்ணல் இன்பு பிறர்க்கே உழைத்தல் என்போன் 70 சாந்த மயமெனுங் காந்திப் பெயரான் நற்றவன் அடியைப் பற்றுவை யாயின் ஐய! யாக்கையின் பயனது விளங்கும் நல்லாள் பகர்ந்ததும் பொல்லா விழிப்பால் ஒழிந்தது உறக்கமும் கழிந்தது இரவும் அலையொலி யோடு வலைஞர்கள் ஒலியும் கலைத்தன நிலையை அலைந்த உளத்தொடு வீட்டைச் சேர்ந்து நாட்டினன் சிந்தையைக் காந்தி யடிகளின் காந்தி யடிகளில்; கேடும் ஆக்கமும் ஓடும் செம்பொனும் 80 ஒன்றென மதிக்கும் நன்றுசேர் உண்மையும் பெற்ற யாக்கையால் மற்றவர்க் குழைத்தலில் இன்பப் பயனுண் டென்னுமோர் உண்மையும் கண்டு யானுந் தொண்டுசெய் கின்றேன்; நம்மை யீன்ற அம்மை உரிமையை இழந்து வாடும் இந்நாள் இந்நாள் காந்தி யாணை காந்தி யாணை இன்போ டுழைக்க என்னுடன் சேர வாருஞ் செகத்து ளீரே. 89 காந்தி வாழ்த்து சாந்தமய மென இலங்குந் தனிப்பொருளை உளத்தென்றும் ஏந்தியுயிர் தமக்கெல்லாம் இனிமைசெய உலகிடையே போந்தகுண மலையாகும் புனிதநிறை கடலாகும் காந்தியடி இணைமலரைக் கருத்திருத்தி வழுத்துவமே. 1 எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன் செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க அவ்விரு தொடர்புகண்ட அடிகளார் காந்தி வாழ்க இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க. 2 வைஷ்ணவன் எவன்? (காந்தியடிகள் நாடோறும் பிரார்த்தனையிற் பாடும் ஒரு கூர்ஜரப் பாட்டின் மொழிபெயர்ப்பு) பிறர்துயரைத் தன்துயராப் பேணியவர்க் கேவல்செயுந் திறனதனைப் பாராட்டாத் திறமுடையான் எவனவன். 1 எல்லாரை யும்வணங்கி இகழாதான் ஒருமனையான் சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையாள் அவன்தாயே. 2 சமநோக்கன் தியாகமுளான் தாயென்பான் பிறர்மனையை அமைநாவால் பொய்ம்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான். 3 மோகமொடு மாயைநண்ணான் முழுவைராக் கியமுடையான் ஏகன்பெய ரின்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான். 4 காமவுலோ பஞ்சினமுங் கரவுமிலான் வைணவனே ஏமநல்கு மவன்காட்சி எழுபானோர் தலைமுறையே. 5 சுதந்திர நாமாவளி பாரத நாட்டைப் பாடுவமே பரமா னந்தங் கூடுவமே. 1 முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் மாரதமே 2 பாரத தேசம் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் 3 வந்தே மாதர மந்திரமே வாழ்த்த வாழ்த்தசு தந்திரமே. 4 வந்தே மாதர மென்போமே வாழ்க்கைப் பிணிகள் பின்போமே. 5 காலை சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே. 6 சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை. 7 கங்கை யோடுங் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே. 8 காடும் மலையும் எங்கள்மடம் கவியும் வரைவும் எங்கள்படம். 9 மயிலில் ஆடும் எம்மனமே குயிலில் பாடும் எங்குரலே. 10 பறவை யழகினில் எம்பார்வை பாடுங் கீதம் எம்போர்வை. 11 பெண்ணிற் பொலியுந் திருப்பாட்டே பெருவிருந் தெங்கள் புலன்நாட்டே. 12 பெண்கள் பெருமை பேசுவமே மண்ணில் அடிமை வீசுவமே. 13 அடிமை யழிப்பது பெண்ணொளியே அன்பை வளர்ப்பதும் அவள்வழியே. 14 பெண்ணை வெறுப்பது பேய்க்குணமே பேசும் அவளிடந் தாய்க்குணமே. 15 தாய்மை யுடையவள் பெண்ணன்றோ தயையை வளர்ப்பவள் அவளன்றோ. 16 இறைமை யெழுவது பெண்ணிடமே இன்பம் பொழிவதும் அவ்விடமே. 17 பெண்மை தருவது பேருலகே பீடு தருவதும் அவ்வுலகே. 18 பெண்வழி சேர்ப்பது இறைநெறியே பேய்ந்நெறி யொழிப்பதும் அந்நெறியே. 19 நல்லற மாவது இல்லறமே அல்லாத அறமெலாம் புல்லறமே. 20 சாதிப் பேயை யோட்டுவமே சமநிலை யெங்கும் நாட்டுவமே. 21 சாதி மதங்கள் சச்சரவே சன்மார்க்கம் நீப்பது நிச்சயமே. 22 சமரச மென்பது சன்மார்க்கம் சார்ந்தா லொழிவது துன்மார்க்கம். 23 இயற்கை நெறியே சன்மார்க்கம். இயைந்தா லழிவது துன்மார்க்கம். 24 பாவிகள் சொல்வது பன்மார்க்கம் பக்தர்கள் நிற்பது சன்மார்க்கம் 25 சமரச மொன்றே சத்தியமே சன்மார்க்கஞ் சேர்ப்பது நிச்சயமே. 26 சமயம் ஆவது சன்மார்க்கம் சகத்தி லொன்றே நன்மார்க்கம். 27 எல்லா உயிரும் நம்முயிரே என்றே சொல்லும் மெய்ம்மறையே. 28 தென்மொழி யாவது தேன்மொழியே தெய்வக் கலைகள் சேர்மொழியே. 29 செந்தமி ழின்பந் தேக்குவமே தீராக் கவலை போக்குவமே. 30 வள்ளுவர் வாய்மை தென்மொழியே வளர்ப்போம் அந்த மென்மொழியே. 31 கன்னித் தமிழ்நடஞ் சிலம்பினிலே கண்டே அருந்துவம் புலந்தனிலே. 32 சுதந்திர வாழ்வே சுவைவாழ்வு அல்லாத வாழ்வெல்லாம் அவவாழ்வு 33 உழவுந் தொழிலும் ஓங்குகவே உலகம் வளத்தில் தேங்குகவே. 34 பகையும் எரிவும் பாழ்நிலையே பணிவும் அன்பும் பரநிலையே. 35 பாரும் பாரும் மலர்நகையே பரிந்தே மூழ்கும் மணவகையே. 36 ஒளியில் காற்றில் மூழ்குவமே உடலாங் கோயில் ஓம்புவமே. 37 நீலக் கடலில் நீளலையே நித்தம் விருந்தளி கதிர்வழியே. 38 வானே அமைதி வாழிடமே வாழ்த்தல் பொழியும் மீன்நடமே. 39 குழந்தை மழலை யாழ்குழலே கோதில் அமிழ்தங் குளிர்நிழலே. 40 கண்ணன் குழலிசை கேளுங்கள் கவலை துன்பம் மீளுங்கள். 41 அன்பே சிவமென் றாடுவமே அருளே வழியென் றோடுவமே. 42 வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே. 43 வேண்டுதல் எங்குநிறை அன்பறிவே! எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனிமைசெயல் வேண்டும். பொங்கியற்கை வழிநின்று புவிஇயங்கல் வேண்டும். பொய்சூது பகைசூழ்ச்சி பொருந்தாமை வேண்டும். மங்கையர்கள் உரிமையுடன் வாழ்வுபெறல் வேண்டும். மக்களெலாம் பொதுவென்னும் மதிவளரல் வேண்டும் தங்குமுயர் தாழ்வென்னுந் தளையறுதல் வேண்டும் சமதர்மச் சன்மார்க்கத் தாண்டவம்வேண் டுவனே. 1 கடவுள் நெறி யொன்றென்னுங் கருத்துநிலை வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல் வேண்டும் நடமாடுங் கோயிலுக்கு நலம்புரிதல் வேண்டும் நான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே வேண்டும் கொடியகொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும் கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைந்திறுகல் வேண்டும் இடமொழியுங் கலையுமென்றும் இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும் இனிமையும்வேண் டுவனே. 2 காடுமலை சென்றேறிக் கவியெழுதல் வேண்டும் கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும் பாடுகடல் மணலிருந்து பண்ணிசைத்தல் வேண்டும் பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் நாடிவயல் கதிர்குளித்து நாஞ்சிலுழ வேண்டும் நகையடிமைக் கோலுருட்டல் நண்ணாமை வேண்டும் ஆடுமனம் ஒன்றராட்டை ஆட்டிடுதல் வேண்டும் ஆவிகொலும் இழிதொழில்கள் அடங்கவும்வேண் டுவனே. 3 ஒருவன்பல மனைகொள்ளும் முறையொழிதல் வேண்டும் ஒருவனொரு மகள்கொள்ளும் ஒழுங்குநிலை வேண்டும் தருமமிகக் காதல்மணந் தழைத்தோங்கல் வேண்டும் சாதிமணக் கொடுமைகளின் தடையுடைதல் வேண்டும் பெருமையின்ப இல்லறமே பிறங்குநலம் வேண்டும் பெண்தெய்வம் மாயையெனும் பேயோடல் வேண்டும் உரிமையுற ஆண்கற்பை ஓம்பொழுக்கம் வேண்டும் உத்தமப்பெண் வழியுலகம் ஒளிபெறவேண் டுவனே. 4 ஒருநாடும் ஒருநாடும் உறவுகொளல் வேண்டும் ஒன்றடக்கி ஒன்றாளும் முறையழிதல் வேண்டும் பொருதார்க்கும் படையரசு பொன்றிடலே வேண்டும் புன்சாதி மதவரசு புரியாமை வேண்டும் தருவாதை முதலாக்கம் தளர்ந்தகலல் வேண்டும் தக்கதொழில் தனியாக்கம் தலைதூக்கல் வேண்டும் அருளாரும் ஆட்சிநின்றே அமைதியுறல் வேண்டும் அனைத்துயிரும் இன்பநுகர் ஆட்சியைவேண் டுவனே. 5 முருகன் அருள் வேட்டல் (1932) முன்னுரை ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது திருமூலர் திருவாக்கு. ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரந் - திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ என்பது மாணிக்கவாசகர் திருமொழி. ஒரு பரம்பொருட்கே உலகில் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. புறப்பெயர்களை மட்டுங் கொண்டு உன் தெய்வம்; என் தெய்வம் என்று போரிடுவது அறியாமை. பன்மை உணர்ச்சியால் வாதப்போர் நிகழ்த்த ஒருப்படும் நெஞ்சில் ஒருமை உண்மை விளங்கல் அரிது. ஆகவே, புறப்பெயர்களை விடுத்து அகப்பொருள் ஒருமையில் கருத்துச் செலுத்துவது அறிவுடைமையாகும். ஆண்டவனுக்கு உலகில் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவைகளுள் முருகன் என்பதும் ஒன்று. முருகன் என்பது தமிழ்ப் பெயர். அதன்கண் கடவுள் இயல்கள் யாவும் அடங்கியிருக்கின்றன. அவ்வியல்களை முருகன் அல் லது அழகு என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். தனிப் பரம்பொருளாகிய முருகனுக்கு உடல் இயற்கை, முருகனே அவ்வுடலின் உயிர். உடலாம் இயற்கையைக் கொண்டே உயிராம் முருகனை உணர்தல் கூடும். இயற்கையும் முருகனும் பிரிவின்றி இயைந்து நிற்கும் அழகை என்னென்று கூறுவது? அவ்வழகு எக்கூற்றில் அடங்கும்? அதை வருணிப்ப தில் நிகழும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி; விளையும் இன்பமே இன்பம். இயற்கையழகை அல்லது முருகைக் கவிகள் காவியங்களாகவும், சிற்பர்கள் ஓவியங்களாகவும் உலகிற்கு உதவியுள்ளார்கள். காவியங்களும் ஓவியங்களும் இயற்கை முருகன் படங்கள் என்று கூறுதல் மிகையாகாது. அப்படங்கள் இயற்கை யழகினிடம் நெஞ்சைச் சேர்க்கப் பாலம்போலத் துணை செய்யும் என்க. ஆண்டவனுக்கென ஆங்காங்கே அமைந்துள்ள கோயில் கள், பலதிறத் தத்துவங்களைக் கொண்ட ஓவிய நிலையங்களே யாகும். அவைகளின் உட்பொருளை ஆராய்ந்தால் இயற்கை உடல் என்பதும், முருகன் உயிரென்பதும் நனி விளங்கும். இப்பெற்றி வாய்ந்த கோயில்களை வழிபடுவது இயற்கை முருகனை நினைவூட்டிக் கொள்வதாகும். வாக்கு மனங்கட்கு எட்டாத ஒரு பொருளை நினைப்பதற்கும், வாழ்த்துதற்கும், வணங்குதற்கும் கோயில்கள் துணைக்கருவிகளாக நின்று வருகின்றன. முருகனுக்குரிய வழிபாடுகள் பலதிறத்தன. அவைகளுள் ஒன்று, பாட்டு வழிபாடு. அவ்வழிபாட்டைச் சிறந்த ஒன்று என்றுங் கூறலாம். அர்ச்சனை பாட்டேயாகும் என்றார் சேக்கிழாரும். பாட்டர்ச்சனைகள் முருகனுக்குக் கோடிக் கோடிக் கணக்கில் நிகழ்ந்துள்ளன. இயற்கைச் செல்வர்களின் அர்ச்சனைகளில் முழுகியுள்ள முருகனுக்கு இயற்கை எளியன் அர்ச்சனை எத்தன்மையதா யிருக்குமென்று சொல்ல வேண்டுவ தில்லை. முருகனை யான் இளமை தொட்டு ஒவ்வொரு விதமாக வழிபட்டு வந்திருக்கிறேன். அவ்வவ் வழிபாடுகள் யாவும் ஒன்றி, இயற்கை முருகன் வழிபாட்டில் என்னைச் செலுத்தின. இயற்கை வழிபாடு, முருகன் அருள் வேட்டலை எழுப்பிற்று. அடியனால் யாக்கப்பெற்ற உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்னும் நூல் வெளிவந்த பின்னர், முருகன் அருள்வேட்டுப் பாடல் பாடுதல்வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அவ்வேட்கை இந்நூலிலுள்ள பாக்களாகப் பரிண மித்தது. நூலின் உள்ளுறைக் கேற்ப, நூலுக்கு முருகன் அருள் வேட்டல் என்னும் பெயர் சூட்டப்பட்டது. குற்றங் குறைகளை அன்பர் மன்னிப்பாராக. சென்னை இராயப்பேட்டை 6-4-1932 திருவாரூர்- வி. கலியாணசுந்தரன் வாழ்த்து சுதந்திரத் தெய்வம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி. 1 சுதந்திர வாழ்த்து விண்கதிர் நிலவே போலும் விழிமணி யொளியே போலும் பண்ணிசை காதல் போலும் பயில்மனத் தெண்ணம் போலும் தண்ணதி மேக வோட்டம் தமிழ்மொழி பாட்டே போலும் உண்ணிலை யுயிரி னுக்கிங் கொளிர்சுதந் திரமே வாழி. 2 சுதந்திரச் சிறப்பு மீன்கடலே யெழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண்கம்ப மானாலும் ஊன்கொந்திக் கண்டதுண்டம் ஒன்னலர்கள் செய்தாலும் வான்மருவ நேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. 3 பாரத நாடு மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர்சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை இன்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு. கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதியெழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகப்போ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடே. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே. 8 தாயின் காட்சி போரூரன் மலைமீது பொருந்தமைதி நாடிப் புல்செறிந்த பாறையிடம் புங்கமரத் தடியில், பாரூரும் பார்வையெலாம் பையமறைந் தோடப் பாரதத்தாய் நினைவிலுறப் பரிந்தயரும் போதில், காரூரும் பொழிலசைவில் கண்பிடுங்கும் மின்போல் கனகவொளி மண்டபமே காந்தமென ஈர்க்கச் சீரூரும் உள்நுழைந்தேன்; திகழ்ந்ததொரு சபையே செப்பரிய உலகசபை; சிறப்புடைய தென்றார். 1 அரியிருக்கை யேறிமுடி அணிந்துயர்கோல் தாங்கி, ஆண்மையொடு வீற்றிருக்கும் அரசிகளைக் கண்டேன்; தெரியவென்னை ஈன்றவள்தன் திருக்கொலுவைத் தேடிச் சிறுகன்றே யெனவங்குத் திரிந்தலைந்தேன் திகைக்தே கரியநிறத் தென்மீது கண்செலுத்தி னார்கள்; காய்வர்களோ வெனுங்கவலைக் கருத்தொருபால் வாட்ட, அரிவையர்கள் முகநோக்கி யார்யாரென் றுணர; அருகணைந்தேன் தெரிந்தவரும் அருளினரிவ் வாறே. 2 நானாநாற் பத்தாண்டில் நலமுற்ற ஜப்பான் நாயகிநான்; பெருநதிகள் நானிலத்தில் பூண்டே ஆனாத வளமுடைநான் அமெரிக்கா செல்வி; அடுக்கடுக்காய்க் கலைவினைகள் ஆக்குஜெர்மன் யானே; கானாடுங் கனிமொழியும் ஓவியமுங் காதல் கவின்பிரான்ஸு திருமகள்யான்; காண்கவென முறையே தேனாறும் மலர்வாயால் தெரிவித்தார் தம்மைச் சிரித்தொருத்தி முடிவினிலே செப்பியதைக் கேண்மோ. 3 என்னருமை இந்தியனே என்னையறி யாயோ? என்னாட்சி கதிர்மறைதல் எப்பொழுது மில்லை; என்னிலத்தின் என்கடலின் என்வெளியின் பரவல் எவர்க்குண்டோ இவ்வுலகில் எங்குமென தாணை; உன்னலத்தின் பொருட்டாக உன்னையுமே யாளும் ஓரரசி என்னலுமே; உயர்சபையில் அன்னை இன்மை, குடல் முறுக்கியவண் எனைநீக்கக் குமுறி இடியிடிப்ப மழைபொழிய ஈர்ம்பொழிலில் நின்றே. 4 வேறு பொழிலிடையும் ஒளிர்கதிரே! பூவிற் றொன்மைப் புகழ்பரதத் தாயெங்கே? பொங்கி நின்று நிழலருளும் மரஞ்செடிகாள்! நிமல ஞான நிறைவீரக் கொடியெங்கே? நீண்டு வானில் எழுகுடுமி மலைக்குலங்காள்! இனிய வெண்மை இமயமுடி அணங்கெங்கே? எங்கே? அன்பில் அழகுநில வுந்தருவி அலைகாள்! கங்கை ஆறணிந்து கடலுடுத்த அம்மை யெங்கே? 5 ஆடுகின்ற மயிற்குழுக்காள்! ஆடல் நுட்ப அருங்கலையை முதலீன்ற அன்னை யெங்கே? பாடுகின்ற புள்ளினங்காள்! பண்ணின் பண்பைப் பாரினுக்குப் பரிந்தளித்த பாவை யெங்கே? ஓடுகின்ற புயற்றிரள்காள்! உரிமை நீர்மை உலகசகோ தரமென்ற ஒருத்தி யெங்கே? தேடுகின்றேன் தேவியெங்கே? தேவி யெங்கே? திரிகாற்றே நீயாதல் செப்பாய் கொல்லோ? 6 வடமொழியுந் தென்மொழியும் மலர்வா யெங்கே? வகைவகையாய்ச் சித்திரங்கள் வரைகை யெங்கே? திடமளிக்குங் கருணைபொழி செங்கண் ணெங்கே? சேர்ந்தவர்க்கு விருந்தளிக்குஞ் சிந்தை யெங்கே? சுடரொளிபொன் நவமணியுந் துன்ப நீக்குஞ் சுவைமணியுந் துலங்குமுடற் சுரங்க மெங்கே? இடமகன்ற இந்நிலத்தில் என்தா யெங்கே? எங்கேயென் தாயெங்கே எங்கே எங்கே? 7 வேறு எங்கேயென் றொருமனத்தால் ஏக்குற்ற வேளை எழுந்ததொலி விழுந்தகுர லிடத்திருந்தே மைந்தா! இங்கேயென் பழங்கதைகள் இயம்புவதா லென்னே? என்னிலையோ நிர்வாணம்; எச்சபையார் ஏற்பார்? பொங்கார முடிசெங்கோல் பூண்பதென்றோ போச்சு; பொலிவுடலும் பொன்னுடையும் புரியுணவும் போச்சு; கங்காளி; துச்சிலுளேன்; கம்பலையே ஆச்சு; கடும்பசிநோய் முடுக்குகின்ற கர்மமென தாச்சு. 8 வடிவினிலே பெரியள்யான்; வயதினிலே பெரியள்; வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்; கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்; காலினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன் வாழ்வே. 9 அன்புநெறி இறைநெறியை, ஆணவத்தால் மக்கள் அளப்பரிய பகைநெறிக ளாக்கியிழி வுற்றார்; மன்பதையில் பசையிழந்த வற்றல்மர மானார்; மற்றவர்கள் நடையுடையில் மதுமலர்வண் டானார்; என்பழைய சமரசமாம் இன்னமிழ்த முண்ணல் எந்நாளோ! இடைநுழைந்த இகல்சாதிப் பூச்சி, இன்புதரு குருதிகுடித் தீரல்நலம் போக்க, என்புருவாய்க் கிடக்கின்றேன்; எச்சபைக்குச் செல்வேன்? 10 பெண்ணடிமை தீண்டாமை பிறப்புவழிச் சாதி பேய்பிடியா நாளினிலே பெற்றிருந்தேன் மேன்மை; மண்ணினிலே இம்மூன்று மாயைசனி பற்ற வாதிட்டு மடிகின்றார் வகுப்புணர்வால் மைந்தர்; கண்ணினிலே கண்டுதுயர் கடலினிலே மூழ்கிக் கடவுளையே நினைந்துருகிக் கவல்கின்றேன்; மற்றப் பண்மொழியார் சபையிலுளார்; பாவிபடும் பாடோ படமுடியாப் பாடன்றோ பார்க்கமுடி யாதே. 11 என்னாட்சி பரிணமிக்க எழுங்கிளர்ச்சி பலவே ஏரார்சு தேசியத்தில் இருப்பதென்றன் ஆட்சி; தன்னாட்சி அந்நியத்தைத் தாங்குவதி லில்லை; தயையின்றி அந்நியரைத் தாக்கலிலு மில்லை; மன்னாட்சி அறநெறியில் மலர்ந்திடவே வேண்டும்; மாகலைகள் வாழ்விடையே வளர்ந்திடவும் வேண்டும்; நன்னாட்டுத் தொழிலரசு நலம்பெறவே வேண்டும்; நான்சபையில் வீற்றிருக்கும் நாளந்த நாளே 12 வேறு இம்மொழிகள் செவிநுழைய எழுந்தேன்; அன்னை எழிற்சபையி லெழுந்தருள இனிது வேண்டும்; செம்மைவினை யாற்றுதற்குச் சேர வாரும்; தீண்டாமை பெண்ணடிமை சிறுமைச் சாதி வெம்மைதரு நோய்களைய விரைந்து வாரும்; விழுமியசு தேசியத்தை விதைக்க வாரும்; அம்மைசம தர்மவர சாட்சி நாடி அன்பார்ந்த சோதரரே! அணைவீ ரின்னே. 13 தமிழ்நாடு வேங்கடமே தென்குமரி வேலையெல்லை நாடு மென்மைகன்னி இனிமைகனி மேன்மைமொழிநாடு தேங்கமழும் பொதிகைமலை தென்றலுமிழ் நாடு திருமலைகள் தொடர்மலைகள் தெய்வமலை நாடு பாங்குபெறு பாலிபெண்ணை பாவைபொன்னி நாடு பாவளர்ந்த வைகையொடு பழம்பொருநை நாடு தேங்குசுனை பளிங்கருவி தெளிசாரல் நாடு சிற்றோடை கால்பரந்த செய்யதமிழ் நாடே. 1 பொங்குபசுங் காடணிந்து பொழிலுடுத்த நாடு பூங்கொடிபின் செடிவனங்கள் பூண்டுபொலி நாடு தெங்குபனை கன்னலொடு கமுகுசெறி நாடு செவ்வாழை மாபலவின் தேன்சொரியு நாடு தங்கமெனு மூலிகைகள் தாங்கிநிற்கு நாடு தாயனைய கீரைவகை தாதுவளர் நாடு செங்கதிர்நெல் வரகுதினைச் செல்வம்விளை நாடு சீர்பருத்தி நார்மரங்கள் சிறந்ததமிழ் நாடே. 2 மடைகளிலே வாளைபாய மான்மருளு நாடு மழைமுழங்க மயிலாட வண்டிசைக்கு நாடு புடைகூவுங் குயில்கீதம் புசித்தினிக்கு நாடு பூவைபுகல் கிளிமழலை பொருந்தமிழ்த நாடு படைமூங்கில் வெள்வளைகள் பாண்மிழற்று நாடு பரவையலை ஓயாது பாடுகின்ற நாடு நடைவழியே குரங்கேறி மரமேறு நாடு நாகெருமை சேற்றில்மகிழ் நாடுந்தமிழ் நாடே. 3 மயிலிறகு தந்தமொடு மான்மதமீன் நாடு மான்கோடு தேன்கூடு மல்குதிரு நாடு தயிலமரந் தேக்ககிலஞ் சந்தனஞ்சேர் நாடு தண்மலர்கள் காய்கனிகள் சந்தைமிடை நாடு வயலுழவு செய்தொழில்கள் வற்றாத நாடு மயிர்பருத்திப் பாலாவி வண்ணவுடை நாடு வெயில்மணியும் நிலவுமுத்தும் மிளிர்ந்துமலி நாடு விழைபவளம் வெள்ளுப்பு விளங்குதமிழ் நாடே. 4 பாரளிக்குஞ் சித்தர்கணப் பழம்பெரிய நாடு பண்புறுகோல் சேரசோழ பாண்டியர்கள் நாடு வேரிமயக் கல்கொணர்ந்த விறலுடைய நாடு வென்றிமயம் புலிபொறித்த வீரமிகு நாடு நேரியலில் கொலைக்குயிரை நீத்தல்பெறு நாடு நெகிழ்கொடிக்குத் தேரளித்த நிறைந்தவருள் நாடு பேரிடரில் தலைக்கொடைக்கும் வாளீந்த நாடு பீடரசர் புலவர்களைப் பேணுதமிழ் நாடே. 5 புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பு நாடு நிறவெள்ளி வீதியவ்வை நேரெயினி நாடு நிறையொழுக்கக் கண்ணகியின் நீதிநிலை நாடு திறநடன மாதவியின் தெய்வஇசை நாடு சேய்மணிமே கலையறத்துச் செல்வமுற்ற நாடு நறவுமொழிப் புனிதவதி நங்கையாண்டாள் நாடு ஞானமங்கை மங்கம்மாள் நல்லதமிழ் நாடே. 6 மலையமுனி வழிமூன்று தமிழ்வளர்த்த நாடு மார்க்கண்டர் கோதமனார் வான்மீகர் நாடு புலமிகுதொல் காப்பியனார் பொருளுலவு நாடு போற்றுமக இறைகீரன் புலவர்தரு நாடு மலருலகே கொள்மறைசொல் வள்ளுவனார் நாடு வாய்த்தமுன்னோன் அரசுபெறச் சிலம்பில்மகிழ் நாடு விலைமலிந்த கூலமனம் மேகலைசெல் நாடு வெறுத்தவுளஞ் சிந்தாமணி விழைந்ததமிழ் நாடே. 7 வித்துமொழிக் கல்லாடர் வேய்ம்மலையார் நாடு விரிந்தகலைக் கம்பன்கவி விரைசோலை நாடு பத்திபொழி சேக்கிழாரின் பாநிலவு நாடு படர்வில்லிச் சந்தஅலைப் பாட்டருவி நாடு சுத்தபரஞ் சோதிகனிச் சுவையொழுகு நாடு சுற்றிவந்த வீரமுனி சொற்றேன்பாய் நாடு கத்தனருள் ஞானஉமார் கன்னல்சொரி நாடு கச்சியப்பர் விருந்துண்ணுங் கன்னித்தமிழ் நாடே 8 பரமனருள் நால்வராழ்வார் பண்ணொலிக்கு நாடு பழஞ்சித்த மறைபொருளைப் பகர்மூலர் நாடு பரவுபக லிரவற்ற பட்டினத்தார் நாடு பாற்குமரர் பிரகாசர் பாடுதுறை நாடு விரவருண கிரிவண்ண விரைசாரல் நாடு விளங்குகுணங் குடிமதான் வீறுஞான நாடு தரணிபுகழ் தாயுமானார் சன்மார்க்க நாடு சமரசஞ்சொல் லிராமலிங்கர் சாந்தத்தமிழ் நாடே. 9 பேருரையர் அடிநல்லார் பூரணனார் நாடு பேண்வரையர் அழகருடன் பேச்சினியர் நாடு தேரையர் புலிப்பாணி சேர்மருத்து நாடு செகமதிக்குஞ் சங்கரனார் உடையவர்தம் நாடு சீருறுமெய் கண்டமணி சித்தாந்த நாடு சிவஞான முனிக்கல்விச் செல்வநிதி நாடு போருரைக்குஞ் செயங்கொண்ட புலவன்வரு நாடு புகல்நீதி அதிவீரன் புரந்ததமிழ் நாடே. 10 மீனாட்சி சுந்தரக்கார் மேகமெழு நாடு மேவுசந்தத் தண்டபாணி மின்னலொளி நாடு வானாட்ட ஆறுமுக மாகடல்சூழ் நாடு மகிழ்கிருஷ்ணர் கவிராயர் கீர்த்தனங்கொள் நாடு தேநாற்று முத்துதியாகர் சங்கீத நாடு திரிகூடர் குறவஞ்சித் தேன்பிலிற்று நாடு கானார்க்கும் அண்ணாமலை காதல்சிந்து நாடு கவர்வேத நாயகனார் கல்வித்தமிழ் நாடே. 11 கால்ட்வெல்போப் பர்வல்வின்லோ கருத்தில்நின்ற நாடு கனகசபை ஆராய்ச்சிக் கண்ணில்நுழை நாடு நூல்வளர்த்த தாமோதரன் நோன்மைபெற்ற நாடு நுவல் மணீயச் சுந்தரவேள் நுண்மைமதி நாடு மால்பரந்த பாண்டித்துரை வளர்சங்க நாடு மாண்புதினத் தந்தைசுப்ர மண்யன்வரு நாடு சால்பரங்க நாதகணி தழைத்தகலை நாடு தனிக்கணித ராமாநுஜன் தந்ததமிழ் நாடே. 12 கொடைவள்ளல் சடையப்பன் குலவியபொன் னாடு கூடல்திரு மலைநாய்க்கன் கோல்வளர்ந்த நாடு படைவல்ல அரிநாயன் பணிகொழித்த நாடு பாஞ்சாலங் குறிச்சியூமன் பற்றியவாள் நாடு நடைசிறந்த பச்சையப்பன் நறுங்கல்வி நாடு நாயகனாஞ் செங்கல்வ ராயனற நாடு நடுநிலையன் முத்துசாமி நன்னீதி நாடு நவவீர பாரதியின் நடனத்தமிழ் நாடே. 13 பண்பரந்த இயற்கைநெறி பற்றிநின்ற நாடு பற்றியதன் வழியிறையைப் பார்த்தபெரு நாடு தண்ணியற்கை நெறியொன்றே சமயமெனு நாடு சாதிமதப் பன்மைகளைச் சகியாத நாடு மண்பிறப்பில் உயர்தாழ்வு வழங்காத நாடு மக்களெலாஞ் சமமென்னும் மாண்புகண்ட நாடு பெண்மணிகள் உரிமையின்பம் பெற்றிருந்த நாடு பெரும்பொதுமை யுளங்கொண்டு பிறங்குதமிழ்நாடே. 14 யாதும்மூர் எவருங் கேளிர் என்றுணர்ந்த நாடு எவ்வுயிர்க்கும் அன்புசெய்க என்றிசைத்த நாடு ஓது குலந் தெய்வமொன்றே என்றுகொண்ட நாடு ஒக்குமுயிர் பிறப்பென்னும் ஒருமைகண்ட நாடு நாதன் அன்பு நீதிஇன்பு நட் பென்ற நாடு நாமார்க்கும் குடியல்லோம் என்றிருந்த நாடு தீதில்லா மொழி வளர்க்கத் தெளிவுபெற்ற நாடு செந்தண்மை விருந்தளிக்குந் தெய்வத்தமிழ் நாடே. 15 தமிழ்த்தாய் இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ. 1 பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளுந் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ. 2 தமிழென்ற போதினிலே தாலூறல் உண்மையதே அமிழ்தாகி உயிரினுக்கும் யாக்கைநிலை செழிப்புறுமே. 3 சுவைத்துணருந் தமிழினிமை சொல்லாலே சொலுந்தரமோ தவத்துணர்வி லெழுமினிமை தமிழினிமைக் கிணையாமோ. 4 கனியினிமை கரும்பினிமை காதலிலே இனிமைபெருந் தனியரசி லினிமையென்பர் தமிழினிமை யுணராரே. 5 புலிகரடி அரியானை பொல்லாத பறவைகளும் வலிமறந்து மனங்கலக்க வயப்படுத்துந் தமிழொலியே. 6 கடவுளென்றும் உயிரென்றுங் கன்னித்தமிழ் ஒளியினிலே படிந்துபடிந் தோம்பினரால் பழந்தமிழர் கலைப்பயிரே. 7 இந்நாளைத் தமிழுலகம் இயற்கையொளி மூழ்காதே இன்னாத சிறைநீர்போல் இழிவடைதல் நன்றாமோ. 8 தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கும் இல்லைஇந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே. 9 தமிழரெனுந் திருப்பெயரைத் தந்ததுதான் எதுவேயோ கமழ்மணத்தை மலரறியாக் காட்சியது மெய்ம்மைகொலோ. 10 இமிழ்திரைசூழ் உலகினிலே இயற்கைவழி யொழுகினிமை அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமை நுழைந்ததென்னே.11 பல்லாண்டாய் அடிமையிலே பசுந்தமிழ்த்தாய் வீழ்ந்ததெனில் கல்லாத விலங்குகட்குங் காட்டைவிடுங் கருத்தெழுமோ. 12 கண்ணிலையோ காண்பதற்குக் காதிலையோ கேட்பதற்குப் புண்ணினிலே புளியென்னப் பூங்கொடியிற் புகுதுயரே. 13 உன்னஉன்ன உளமுருகும் ஊனுருகும் ஒருதமிழ்த்தாய் இன்னலது நுழையாத இழிநெஞ்சங் கல்லாமே. 14 பழந்தமிழர் வீரவொளி படர்ந்தீண்டில் இந்நாளே இழிந்தோடும் இடர்ப்பனிகள் எழுந்தாயின் தமிழ்நடமே. 15 தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல்நலம் போய்க்கடலில் விழுதல் நலம் பொலிதருமோ உடலுயிரே. 16 உயிரெதுவோ தமிழருக்கென் றுரைத்துணர்தல் வேண்டாவே அயர்வின்றித் தமிழர்களே! ஆர்த்தெழுமின் நிலைதெரிந்தே. 17 குறள்சிலம்பு மேகலையுங் கோதில்சிந் தாமணியும் அருள்சிலம்புந் தமிழினிலே அமைந்ததுவுந் திருவன்றே. 18 பழஞ்சித்த மறையருளப் பரனருளால் திருமூலர் நுழைந்தஇடம் எதுவேயோ நுவலுமது தமிழ்மாண்பே. 19 காவியமும் ஓவியமுங் கடவுளின்போ கடந்தஒன்றோ தாவிநிற்கும் நெஞ்சமதே தமிழ்சுவைக்கும் வாழ்வினிலே. 20 விலங்கியல்பின் வேரறுக்கும் விரலுடைய காவியமே. கலங்குமனத் துயர்போக்குங் கருத்தொன்றும் ஓவியமே. 21 காவியநெஞ் சுடையவர்கள் கருதார்கள் பிரிவுகளே ஓவியத்தில் உளங்கொண்டோர் உறுயோகம் பிரிதுளதோ. 22 சாதிமதச் சண்டையெலாந் தமிழின்ப நுகரார்க்கே ஆதியிலே சண்டையிலை அருந்தமிழை அருந்தினரால். 23 கலைத்தமிழின் கள்ளுண்டால் கலகமன வீறொடுங்கும் புலங்கடந்த அருளின்பம் பொருந்துவதும் எளிதாமே 24 காலத்துக் குரியஅணி கருதாளோ தமிழ்க்கன்னி மேலைச்செங் கலைபெயர்ப்பும் விளங்கிழையாம் புலவீரே. 25 பன்மொழியி லுளகலைகள் பசுந்தமிழி லுருக்கொள்ள நன்முயற்சி யெழவேண்டும் நலமுறுவள் தமிழ்த்தாயே. 26 தனித்தெய்வந் தமிழனுக்குத் தமிழன்றி வேறுண்டோ இனித்தநறுங் கோயில்களோ எழிற்கலைகள் வாழியரோ. 27 சத்தியாக்கிரக விண்ணப்பம் [gŠrh¥ படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் (1921இல்) ghl¥bg‰wJ.] பொறுமைக்கு நிலனாகிப் புனலாகி அளியினுக்குத் தெறலுக்கு நெருப்பாகித் திறலுக்கு வளியாகி 1 வெளியாகிப் பரப்பினுக்கு வெயில்நிலவுக் கிருசுடராய்த் தெளிவினுக்கே உடலுயிராய்த் திகழனையாய்ப் பிறராகி 2 இலகுவழி வழியாக எமையீன்று புரந்துவரும் உலகமெலாங் கலந்துகடந் தொளிர்கின்ற ஒருபொருளே! 3 உலகமெலாங் கடந்துகடந் தொளிர்கின்ற நினதியல்பைக் கலகமிலா உளங்கொண்டு கணித்தவரார் முதன்முறையே. 4 அவ்வியல்பை அளந்தாயும் அறநிலையே உறுதியெனச் செவ்வியறி வுழைப்பெல்லாஞ் செலுத்தாம லிருந்ததுண்டோ? 5 காட்சியொன்றே பொருளென்னுங் கருத்தைவிட்டுப் பொழுதெல்லாம் மாட்சியுடை நினதடியே வழுத்துவதை மறந்ததுண்டோ? 6 எண்ணமெலாம் உனதெணமே எழுத்தெல்லாம் உனதெழுத்தே மண்ணதனைப் பொருளாக மயக்கும்வழி யுழன்றதுண்டோ? 7 எல்லாநின் செயலென்றே இருந்தஒரு குலத்தார்க்குப் பொல்லாங்கு வரும்பொழுது புரப்பதெவர் கடனேயோ? 8 ஆத்திகத்தி லறிவுபழுத் தருளொழுகும் பரதகண்டம் நாத்திகத்துக் கிரையாகி நலிவுறுதல் நலமேயோ? 9 மூர்க்கநெறி யறியாத முனிவரர்கள் வதிந்தபதி பார்ப்பவர்கள் நகையாடும் படுகுழியில் விழுந்ததன்றே. 10 கொலைகளவு குடிகாமம் கொடும்பொய்யே மலியாத கலைநிறைந்த பரதகண்டம் கருதுவதோ அவைகளையே. 11 மலையளித்தாய் நதியளித்தாய் வனமளித்தாய் வளமளித்தாய் நலமளிக்கும் அவையெல்லாம் நழுவினவெம் மிடமிருந்தே. 12 வயிற்றுக்கே வனவாசம் மரணத்துக் களவில்லை கயிற்றுக்கும் பிறநாட்டைக் கைகுவித்துக் கவல்கின்றேம். 13 நாட்டுமுறைத் தொழிலெல்லாம் நசிக்கவிவண் பிறர்புரிந்த கேட்டினைநாம் எவர்க்குரைப்பேம் கிளந்துரைக்குஞ் சரிதமதே.14 பேச்சுரிமை எழுத்துரிமை பிறவுரிமை எமக்குளவோ சீச்சீயென் றிழிமொழியால் சிறுமைசொலும் வெளிநாடே. 15 உள்ளசட்டம் நிறைவிலையென் றுரிமைகொலுங் கருஞ்சட்டம் நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்ததுவே. 16 அழிக்க அதைத் தவமுதல்வர் அரியசத்தி யாக்கிரக ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே. 17 இரவொழித்துப் பகலுமிழும் இளஞாயி றதைமறைக்க விரவுபுயல் பரவியெரி வெடிகுண்டு பொழிந்தனவே. 18 இவ்வாரம் பஞ்சநதம் இரத்தநத மென இலங்கி ஒவ்வாத செயல்கண்டே உடைந்திரிந்த ததன்மனமே. 19 உரிமையெனும் உயர்வேட்கை உளத்தெழுமிக் கிழமையிலே ஒருமைமனத் தொழுகைசெய்தே உனைவேண்டும் வரமருளே.20 குறைகளெலாம் ஒழிந்துரிமை குலமடைய மருந்துண்டு தறையதனில் சுயஆட்சி தகைமைதரு மருந்தாமே. 21 பெறவேண்டும் சுயஆட்சி பெறவேண்டும் இப்பொழுதே அறமுறைகள் பிறவெல்லாம் அழகுபெறத் தழைத்திடுமே. 22 காந்திவழி கடைப்பிடிப்பின் கருத்தாட்சி மலர்ந்துவிடும் சாந்தமிகும் அவர்வழிதான் சத்தியாக் கிரகமதே. 23 சன்மார்க்க நெறியோங்கத் தயைபுரியெம் இறையவனே உன்மார்க்கத் துறைபற்றி உலகமிகச் செழித்திடுமே. 24 திலகர் திலகர் விஜயம் (திலகர் பெருமான் கொழும்பு வழியாக இங்கிலாந்து நோக்க 1918ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10ஆம் நாள் சென்னை நண்ணியவேளையில் பாடப்பெற்றது; அம்முறை கொழும்பில் திலகர் பெருமான் செலவு தகையப்பட்டது) பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் 1 கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் 2 அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! 3 திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திகலரெனு மியற்பெயரால் திறமுறவே நிறுத்தினையே 4 செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே 5 ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஓரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? 6 கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே. 7 இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லாத உரையதனை அகிலமெலாம் பரப்பினையே. 8 உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே. 9 பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? 10 உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே. 11 சிந்தியா உளம்உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் வடிவன்றே 12 தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே. 13 சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. 14 இங்கிலாந்தும் திலகரும் (பின்னே சில மாதங்கடந்து, திலகர் பெருமான் பம்பாய் வாயிலாகச் சென்று, 1918ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இங்கிலாந்து சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்தபோது பாடப்பெற்றது.) எங்கள் மன்னர் இணையடி யேந்தியே பொங்கு பேற்றைப் புனைந்தெமை யாண்டிடுந் தங்கு சீர்த்தி தழைத்தொளி வீசுநல் இங்கி லாந்தெனும் இன்ப அணங்குகேள். 1 தண்மை செம்மை தகைமையுங் கொண்டவோர் வண்ண மாமுனி வந்தனர் நின்னிடை வெண்மை நீலம் விரிந்து பரந்தநின் கண்க ளாலவர் காட்சியைக் காணுமே. 2 கல்வி ஞானங் கருணை நிரம்பிய செல்வ மாமுனி சேர்ந்தனர் நின்னிடைப் பல்வ ளங்களும் பான்மையுங் கொண்டநீ ஒல்லை அன்னார் ஒளிமுகங் காணுமே. 3 மற்ற வர்க்கே மனத்தை நிறுத்தியே உற்ற நேரத் துதவும் அறமுனி பற்றி வந்தனர் பண்புடை நின்னிடைச் செற்ற மில்லவர் சிந்தையை நோக்குமே. 4 பரத மென்னும் பழையவோர் நாடளி விரத மாமுனி வேந்தர் கிழக்குதி பரிதி யென்னப் பரிந்து படர்ந்தனர் கருதி யன்னார் கரத்தினை நோக்குமே. 5 எங்கள் தலைக்கணி எம்பெரு மானடி பங்க யப்பனி மாமலர் பூத்தது துங்க மிக்க சுகமுடை நின்னிடை அங்க ணாலதை அன்பொடு காணுமே. 6 உரிமை வேண்டி உவந்துனை நாடினர் பெரிய மாமுனி பேச அருள்புரி அரிய வாசகம் அன்பி லுதிப்பது தெரிய ஓதுவர் எங்கள் சிறுமையே. 7 அன்ன வர்பெயர் ஆரும் புகழ்பெயர் பின்னை யென்றும் பெயர்வது மின்றியே இந்நி லத்தி லிருப்பது கூறுவல் சென்னி கொள்ளுந் திகல ரெனும்பெயர். 8 இப்பெ யர்ப்பொருள் இந்தியா என்பது செப்பு மித்தகைச் செம்பொருள் சேர்ந்தது அப்பு மிக்க அருணதி பாய்ந்திடும் ஒப்பில் இந்தியா உற்றதை ஒக்குமே. 9 சிந்தை நல்ல திலகர் சொலும்மொழி இந்தி யாவின் இனிமொழி யாகுமால் அந்த ணர்சொலை யார்ந்து செவிகொடு சொந்த மாகச் சுதந்திர நல்குமே. 10 திலகர் வாழ்த்து மறப்பாலும் பிறவாலும் மதிப்பிழந்த எந்தமக்குப் பிறப்புரிமை சுயஆட்சி பெறவேண்டும் எழுமெனவே குறிப்புடைய ஒருமொழியைக் கொடுத்துதவி கிளர்ச்சியதால் சிறப்பருளுந் திலகமுனி திருவடியை வணங்குதுமே. 1 உலகன்னை உயிராகும் ஒருபரத கண்டமதில் உதித்த கோமான் பலகலையின் பயனுணர்ந்து பற்றறுத்து மற்றவர்க்குப் பண்பு செய்வோன் கலகமிலா உளங்கொண்டு கட்டுரையிற் பிறழாது காப்பில் நின்றோன் திலகமுனி எனும்பெயரான் திருவடியை எஞ்ஞான்றுஞ் சிந்திப் பேமால். 2 காந்தி காந்தியம் அல்லது இன்பப்பேறு என்னை அறியா என்னுளங் கொண்ட மயலொடு கலவா இயல்பெனுந் தேவி, எழுந்தொரு பொழுது செழுந்தமிழ்க் குரலால் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென பொறித்தனள் ஒருவினா; கருத்தினில் நின்றது அலைத்தும் ஆட்டியும் குலைத்த தென்னை; உண்மை தெளிய நண்ணினன்; கால்கள் நடந்தன உணரேன்; கடந்தனன் வழிபல அந்தி மாலை சிந்தையிற் றோன்றலும் கடற்கரை கண்டேன்; இடமென இருந்தேன் 10 உருகிய செம்பொன் கருகிய வானும் பளிங்கு நொய்யென இலங்குவெண் மணலும் நீனிறக் கடலும் நீளின அலையும் இறைவன் வடிவா யென்னை ஆண்டன நிறைகாண் போழ்தில் நிலவிழிப் பொழிந்தே உறக்கம் புகுந்தும் உணர்வழி விலையால் அவ்வுணர் வொளியில் செவ்விய மெல்லியல் தும்பை யன்னதோர் தூசணிந் தெதிரே எழுதரும் வடிவோ டெழில்வெண் டாமரை பூத்தது போலப் பொலிந்தன ளன்றே; 20 அன்னவள் அடியை அன்புடன் தொழுதே என்னிலை யுணர்த்த; எழிலணங் கவளும், மைந்த! கேட்டி இந்தமா நிலத்தில் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென வருந்தல் வேண்டா; திருந்து நல்வழி இன்று கூறுவல், நன்று கேட்டி! மக்கள் யாக்கையே மிக்கது மிக்கது அன்னதன் பயனை இன்னதென் றுணர இல்லம் விடுத்துச் செல்லலும் வேண்டா காடுகள் பலவும் ஓடவும் வேண்டா 30 மலைக ளேறி அலையவும் வேண்டா காற்றை யீர்த்து மாற்றவும் வேண்டா மனைவி மணந்தும் மக்களை யீன்றும் இனத்தொடு வாழ்ந்தும் இருந்தொழில் செய்தும் உண்பன உடுப்பன உண்டும் உடுத்தும் நாட்டை விடாது வீட்டி லுறைந்தும் பிறவிப் பயனைப் பெற்று வாழலாம்; இலக்கிய மிதற்கொன் றியம்புவன் கேட்டி, கலக்கமி லுளத்தைக் காளைநீ பெறுக; இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன் 40 கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாய னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் மக்களை யீன்று மிக்கவ னானோன் செயற்கை வெறுத்த செம்மை யாளன் இயற்கை இன்பமே இன்பெனக் கொள்வோன் உண்மை கடைப்பிடித் தொழுகுஞ் சீலன் உண்மைகா ரணமா உயிரையும் விடுவோன் வானந் துளங்கினும் மீனம் படினும் 50 மலைகள் வீழினும் அலைகள் பொங்கினும் தன்னிலை மாறாத் தன்மை யாளன் உலகி லுள்ள அலகிலா உயிர்கள் தன்னுயி ரென்னும் தருமம் பெற்றவன் பிறர்க்குக் கேடு மறந்துஞ் சூழான் அன்புடை யார்பிறர்க் கென்பு முரியர் என்னு மெய்ம்மொழிக்கு இலக்கிய மானோன் உண்மைஅஞ் சாமை ஒண்பே ராயுதம் தாங்கி என்றும் ஈங்கு முரண்படு தேக சக்தியை ஏக சக்தியாம் 60 ஆன்ம சக்தியால் அடக்கும் வீரன் சினத்தை யொழித்த இனத்தவ ருறவோன் யாண்டுத் துன்பம் எவர்க்கு நேரினும் ஆண்டே அவனுடல் அணையு மன்றே; அவனுடல் மற்றவர் உடலே யாகும் அவன்பொருள் மற்றவர் பொருளே யாகும் அவனுயிர் மற்றவர் உயிரே யாகும் தனக்கென வாழாத் தன்மை பெற்றவன் அன்பே வடிவாய் அமர்ந்த அண்ணல் இன்பு பிறர்க்கே உழைத்தல் என்போன் 70 சாந்த மயமெனுங் காந்திப் பெயரான் நற்றவன் அடியைப் பற்றுவை யாயின் ஐய! யாக்கையின் பயனது விளங்கும் நல்லாள் பகர்ந்ததும் பொல்லா விழிப்பால் ஒழிந்தது உறக்கமும் கழிந்தது இரவும் அலையொலி யோடு வலைஞர்கள் ஒலியும் கலைத்தன நிலையை அலைந்த உளத்தொடு வீட்டைச் சேர்ந்து நாட்டினன் சிந்தையைக் காந்தி யடிகளின் காந்தி யடிகளில்; கேடும் ஆக்கமும் ஓடும் செம்பொனும் 80 ஒன்றென மதிக்கும் நன்றுசேர் உண்மையும் பெற்ற யாக்கையால் மற்றவர்க் குழைத்தலில் இன்பப் பயனுண் டென்னுமோர் உண்மையும் கண்டு யானுந் தொண்டுசெய் கின்றேன்; நம்மை யீன்ற அம்மை உரிமையை இழந்து வாடும் இந்நாள் இந்நாள் காந்தி யாணை காந்தி யாணை இன்போ டுழைக்க என்னுடன் சேர வாருஞ் செகத்து ளீரே. 89 காந்தி வாழ்த்து சாந்தமய மென இலங்குந் தனிப்பொருளை உளத்தென்றும் ஏந்தியுயிர் தமக்கெல்லாம் இனிமைசெய உலகிடையே போந்தகுண மலையாகும் புனிதநிறை கடலாகும் காந்தியடி இணைமலரைக் கருத்திருத்தி வழுத்துவமே. 1 எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன் செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க அவ்விரு தொடர்புகண்ட அடிகளார் காந்தி வாழ்க இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க. 2 வைஷ்ணவன் எவன்? (காந்தியடிகள் நாடோறும் பிரார்த்தனையிற் பாடும் ஒரு கூர்ஜரப் பாட்டின் மொழிபெயர்ப்பு) பிறர்துயரைத் தன்துயராப் பேணியவர்க் கேவல்செயுந் திறனதனைப் பாராட்டாத் திறமுடையான் எவனவன். 1 எல்லாரை யும்வணங்கி இகழாதான் ஒருமனையான் சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையாள் அவன்தாயே. 2 சமநோக்கன் தியாகமுளான் தாயென்பான் பிறர்மனையை அமைநாவால் பொய்ம்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான். 3 மோகமொடு மாயைநண்ணான் முழுவைராக் கியமுடையான் ஏகன்பெய ரின்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான். 4 காமவுலோ பஞ்சினமுங் கரவுமிலான் வைணவனே ஏமநல்கு மவன்காட்சி எழுபானோர் தலைமுறையே. 5 சுதந்திர நாமாவளி பாரத நாட்டைப் பாடுவமே பரமா னந்தங் கூடுவமே. 1 முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் மாரதமே 2 பாரத தேசம் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் 3 வந்தே மாதர மந்திரமே வாழ்த்த வாழ்த்தசு தந்திரமே. 4 வந்தே மாதர மென்போமே வாழ்க்கைப் பிணிகள் பின்போமே. 5 காலை சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே. 6 சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை. 7 கங்கை யோடுங் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே. 8 காடும் மலையும் எங்கள்மடம் கவியும் வரைவும் எங்கள்படம். 9 மயிலில் ஆடும் எம்மனமே குயிலில் பாடும் எங்குரலே. 10 பறவை யழகினில் எம்பார்வை பாடுங் கீதம் எம்போர்வை. 11 பெண்ணிற் பொலியுந் திருப்பாட்டே பெருவிருந் தெங்கள் புலன்நாட்டே. 12 பெண்கள் பெருமை பேசுவமே மண்ணில் அடிமை வீசுவமே. 13 அடிமை யழிப்பது பெண்ணொளியே அன்பை வளர்ப்பதும் அவள்வழியே. 14 பெண்ணை வெறுப்பது பேய்க்குணமே பேசும் அவளிடந் தாய்க்குணமே. 15 தாய்மை யுடையவள் பெண்ணன்றோ தயையை வளர்ப்பவள் அவளன்றோ. 16 இறைமை யெழுவது பெண்ணிடமே இன்பம் பொழிவதும் அவ்விடமே. 17 பெண்மை தருவது பேருலகே பீடு தருவதும் அவ்வுலகே. 18 பெண்வழி சேர்ப்பது இறைநெறியே பேய்ந்நெறி யொழிப்பதும் அந்நெறியே. 19 நல்லற மாவது இல்லறமே அல்லாத அறமெலாம் புல்லறமே. 20 சாதிப் பேயை யோட்டுவமே சமநிலை யெங்கும் நாட்டுவமே. 21 சாதி மதங்கள் சச்சரவே சன்மார்க்கம் நீப்பது நிச்சயமே. 22 சமரச மென்பது சன்மார்க்கம் சார்ந்தா லொழிவது துன்மார்க்கம். 23 இயற்கை நெறியே சன்மார்க்கம். இயைந்தா லழிவது துன்மார்க்கம். 24 பாவிகள் சொல்வது பன்மார்க்கம் பக்தர்கள் நிற்பது சன்மார்க்கம் 25 சமரச மொன்றே சத்தியமே சன்மார்க்கஞ் சேர்ப்பது நிச்சயமே. 26 சமயம் ஆவது சன்மார்க்கம் சகத்தி லொன்றே நன்மார்க்கம். 27 எல்லா உயிரும் நம்முயிரே என்றே சொல்லும் மெய்ம்மறையே. 28 தென்மொழி யாவது தேன்மொழியே தெய்வக் கலைகள் சேர்மொழியே. 29 செந்தமி ழின்பந் தேக்குவமே தீராக் கவலை போக்குவமே. 30 வள்ளுவர் வாய்மை தென்மொழியே வளர்ப்போம் அந்த மென்மொழியே. 31 கன்னித் தமிழ்நடஞ் சிலம்பினிலே கண்டே அருந்துவம் புலந்தனிலே. 32 சுதந்திர வாழ்வே சுவைவாழ்வு அல்லாத வாழ்வெல்லாம் அவவாழ்வு 33 உழவுந் தொழிலும் ஓங்குகவே உலகம் வளத்தில் தேங்குகவே. 34 பகையும் எரிவும் பாழ்நிலையே பணிவும் அன்பும் பரநிலையே. 35 பாரும் பாரும் மலர்நகையே பரிந்தே மூழ்கும் மணவகையே. 36 ஒளியில் காற்றில் மூழ்குவமே உடலாங் கோயில் ஓம்புவமே. 37 நீலக் கடலில் நீளலையே நித்தம் விருந்தளி கதிர்வழியே. 38 வானே அமைதி வாழிடமே வாழ்த்தல் பொழியும் மீன்நடமே. 39 குழந்தை மழலை யாழ்குழலே கோதில் அமிழ்தங் குளிர்நிழலே. 40 கண்ணன் குழலிசை கேளுங்கள் கவலை துன்பம் மீளுங்கள். 41 அன்பே சிவமென் றாடுவமே அருளே வழியென் றோடுவமே. 42 வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே. 43 வேண்டுதல் எங்குநிறை அன்பறிவே! எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனிமைசெயல் வேண்டும். பொங்கியற்கை வழிநின்று புவிஇயங்கல் வேண்டும். பொய்சூது பகைசூழ்ச்சி பொருந்தாமை வேண்டும். மங்கையர்கள் உரிமையுடன் வாழ்வுபெறல் வேண்டும். மக்களெலாம் பொதுவென்னும் மதிவளரல் வேண்டும் தங்குமுயர் தாழ்வென்னுந் தளையறுதல் வேண்டும் சமதர்மச் சன்மார்க்கத் தாண்டவம்வேண் டுவனே. 1 கடவுள் நெறி யொன்றென்னுங் கருத்துநிலை வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல் வேண்டும் நடமாடுங் கோயிலுக்கு நலம்புரிதல் வேண்டும் நான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே வேண்டும் கொடியகொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும் கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைந்திறுகல் வேண்டும் இடமொழியுங் கலையுமென்றும் இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும் இனிமையும்வேண் டுவனே. 2 காடுமலை சென்றேறிக் கவியெழுதல் வேண்டும் கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும் பாடுகடல் மணலிருந்து பண்ணிசைத்தல் வேண்டும் பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் நாடிவயல் கதிர்குளித்து நாஞ்சிலுழ வேண்டும் நகையடிமைக் கோலுருட்டல் நண்ணாமை வேண்டும் ஆடுமனம் ஒன்றராட்டை ஆட்டிடுதல் வேண்டும் ஆவிகொலும் இழிதொழில்கள் அடங்கவும்வேண் டுவனே. 3 ஒருவன்பல மனைகொள்ளும் முறையொழிதல் வேண்டும் ஒருவனொரு மகள்கொள்ளும் ஒழுங்குநிலை வேண்டும் தருமமிகக் காதல்மணந் தழைத்தோங்கல் வேண்டும் சாதிமணக் கொடுமைகளின் தடையுடைதல் வேண்டும் பெருமையின்ப இல்லறமே பிறங்குநலம் வேண்டும் பெண்தெய்வம் மாயையெனும் பேயோடல் வேண்டும் உரிமையுற ஆண்கற்பை ஓம்பொழுக்கம் வேண்டும் உத்தமப்பெண் வழியுலகம் ஒளிபெறவேண் டுவனே. 4 ஒருநாடும் ஒருநாடும் உறவுகொளல் வேண்டும் ஒன்றடக்கி ஒன்றாளும் முறையழிதல் வேண்டும் பொருதார்க்கும் படையரசு பொன்றிடலே வேண்டும் புன்சாதி மதவரசு புரியாமை வேண்டும் தருவாதை முதலாக்கம் தளர்ந்தகலல் வேண்டும் தக்கதொழில் தனியாக்கம் தலைதூக்கல் வேண்டும் அருளாரும் ஆட்சிநின்றே அமைதியுறல் வேண்டும் அனைத்துயிரும் இன்பநுகர் ஆட்சியைவேண் டுவனே. 5 திருச்செந்தூர் செந்திலாண் டவனே! செந்திலாண் டவனே! செந்திலோ நின்னிடம்? சிந்தையோ நின்னிடம்? இங்குமோ இருக்கை? எங்குமோ இருக்கை? போக்கும் வரவும் நீக்கமும் இல்லா நிறைவே! உலகம் இறையென நின்னை உன்னுதல் எங்ஙன்? உணருதல் எங்ஙன்? மண்ணும் புனலும் விண்ணுங் காற்றும் அங்கியும் ஞாயிறுந் திங்களும் உயிரும் உடலா யிலங்குங் கடவுள் நீயெனில் உன்னலுங் கூடும் உணரலுங் கூடும்; 10 செயற்கை கடந்த இயற்கை ஒளியே! உறுப்பிலா அறிவே! குறிப்பிலா மாந்தர் எண்ணவும் ஏத்தவுங் கண்களி கூரவும் மூல ஒலியே கோழிக் கொடியாய், விதவித மாக விரியும் இயற்கை நீல மஞ்ஞை கோல ஊர்தியாய், இச்சை கிரியையே நச்சிரு தேவியாய், மூன்று மலமாம் மூன்று சூர்தடி ஞானமே வேலாய், மானவைம் புலன்கள் மருள்மனம் நீக்கி அருள்மனப் புலஞ்செய, 20 மூவிரு முகங்கொள் மூவா அன்பே! வெண்மணல் வெளியில் தண்கடல் அலைவாய் வீற்றிருந் தருளுஞ் சாற்றருங் கோலம் அஞ்சையுங் கவர்ந்து நெஞ்சையுங் கவர்ந்தே ஒருமையில் நிறுத்தும் பெருமைதான் என்னே! எந்நிலை போதும் அந்நிலை நீங்கா வரமே வேண்டும் உரமே வேண்டும் செந்திற் சிறக்குஞ் சிந்தையே வேண்டும் இருளைச் சீக்கும் அருளது வேண்டும் வருக வருக அருள வருக 30 அய்யா வருக மெய்யா வருக வேலா வருக விமலா வருக சீலா வருக செல்வா வருக அன்பா வருக அழகா வருக இன்பா வருக இளையாய் வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக எந்தாய்! எளியேன் என்னே செய்குவன்! கந்தா! கடம்பா! கதிர்வடி வேலா! கல்வி அறிவால் அல்லலை அழிக்க 40 முயன்று முயன்றே அயர்ந்தயர்ந் தொழிந்தேன் என்றுஞ் செந்நெறி துன்றி நிற்கக் காதல் பெரிதே ஆதல் இல்லை; எங்கும் நின்னருள் தங்குதல் கண்டு துன்ப உலகை இன்பமாக் காணக் குருமொழி வேண்டும் ஒருமொழி வேண்டும் அம்மொழி வேட்டு வெம்மனம் அலைதலை நீயே அறிவாய் சேயே! சிவமே! பெறுதற் கரிய பிறவியை ஈந்தாய்; அவ்வரும் பிறவியின் செவ்வியல் தெளிய, 50 ஏட்டுக் கல்வியில் நாட்டஞ் செலுத்தி, இல்லற மென்னும் நல்லற மேற்றுச், செருக்குச் செல்வமும் உருக்கு வறுமையும் இரண்டு மில்லா எளிமையில் நின்று, வாதச் சமயமும் பேதச் சாதியும் ஆதியி லில்லா நீதியைத் தெரிந்து, பற்பல குரவர் சொற்றன யாவும் ஒன்றென உணர்ந்து, நன்றெனக் கொண்டு, தொண்டின் விழுப்பங் கண்டுகண் டாற்றிச். செயற்கையை வெறுத்தே இயற்கையை விரும்பி 60 அத்தா! நின்னடிப் பித்தே நெஞ்சில் முருகி எழும்பக், கருதிய தருளே; முற்றுமவ் வருளும் பெற்றே னில்லை; மெய்ய! நின் உண்மையில் ஐயமோ இல்லை; முனைப்பறுந் தொதுங்கின் நினைப்புலன் உணரும் நுட்பம் அறிந்து பெட்பில் சிறியேன், உழன்று பன்னெறி உழைத்துழைத் தலுத்தேன்; அறவே முனைப்புள் அறுதல் என்றோ? அழுக்கு வாழ்வில் வழுக்கலோ அதிகம்; குறைபல உடையேன்; முறையிடு கின்றேன்; 70 வேறென் செய்வேன்? வேறெவர்க் குரைப்பேன்? பன்னிரு கண்ண! என்னொரு மனங்காண்; ஆலைக் கரும்பெனப் பாலன் படுதுயர் களைய வருக களைய வருக அழல்படு புழுவெனப் புனல்விடு கயலெனத் துடிக்கும் ஏழையை எடுக்க வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக சிந்தா மணியே! நந்தா விளக்கே! மயிலூர் மணியே! அயிலார் அரசே! 80 பிழைபொறுத் தருள்க; பிழைபொறுத் தருள்க; குன்ற மெறிந்த கன்றே போற்றி சூரனை வென்ற வீரனே போற்றி வள்ளி மணந்த வள்ளலே போற்றி அன்பருக் கருளும் இன்பனே போற்றி போற்றி போற்றி புனிதா போற்றி மக்கள் பலப்பலச் சிக்கலுக் கிரையாய் நலனை இழந்தே அலமரு கின்றார்! சாதியால் சில்லோர் நீதியை யிழந்து, நிறத்தால் சில்லோர் அறத்தைத் துறந்து, 90 மொழியால் சில்லோர் வழுவி வீழ்ந்து, மதத்தால் சில்லோர் வதைத்தொழில் பூண்டு, நின்னை மறந்தே இன்ன லுறுதல் என்னே! என்னே! மன்னே! மணியே! பேரும் ஊரும் பிறவு மில்லா இறைவ! நிற்குத் தறைமொழி பலகொடு அன்பர்கள் சூட்டிய இன்பப் பெயர்கள் எண்ணில எண்ணில; எண்ணில் அவைகளின் பொருளோ ஒன்று; மருளே இல்லை; பன்மைப் புறப்பெயர்ச் சொன்மையில் கருத்தை 100 நாட்டி ஆணவம் பூட்டிப் போரிடும் அறியாமை நீங்க, அறிவை அருள்க; எங்குமோ ருண்மை தங்குதல் கண்டே ஒன்றே தெய்வம் ஒன்றே அருள்நெறி என்னும் உண்மையில் மன்னி நிற்க அருள்க அருள்க தெருளொளி விளக்கே! சிந்தையில் நீங்காச் செந்தமிழ்ச் செந்தி வாழ்வே! செந்தி வாழ்வே! திருப்பரங்குன்றம் மங்கையர்க ளென்ன மலர்சோலைத் தண்ணீழல் தங்கு பரங்குன்றச் சண்முகனே! - இங்கடியேன் அன்னையினும் மிக்க அருளுடையான் நீயென்றே உன்னை அடைந்தேன் உவந்து. 1 மக்களுக்கு முன்பிறந்த மந்தி செறிசோலை மிக்க பரங்குன்ற மேயவனே! - இக்கலியில் உன்னை நினைந்துருக ஊக்கியதும் உன்னருளே இன்னல் களைந்தருள்க இன்பு. 2 சேய்களென மந்திகளுஞ் சேர்ந்தாடும் பூம்பொழில்கள் தோய்ந்த பரங்குன்றத் தோகையனே! - ஆய்ந்தறியின் எங்குநீ எல்லாநீ என்றபே ருண்மையன்றி இங்குமற் றுண்டோ இயம்பு. 3 பச்சைப் பசுங்கிளிகள் பாடுகின்ற பண்ணொலியை நச்சு பரங்குன்ற நாயகனே! - உச்சிமுதல் கால்வரையு நெஞ்சாக் கசிந்துருகல் எக்காலம் வேல்விளங்கு கைம்மனமே வேண்டு. 4 மாங்குயில்கள் கூவ மயிலாலுந் தேம்பொழில்கள் தேங்கு பரங்குன்றத் தெய்வமே! - வாங்கிவேல் குன்றெறிந்த கோமானே! குற்றமுடைச் சாதிநெறி என்றெறிந் தின்பருள்வா யிங்கு. 5 கண்ணாழும் மந்தி கனிகொண்டு பந்தாடும் விண்ணார் பரங்குன்ற வித்தகனே! - புண்ணாடுஞ் சாதி மதங்களெலாஞ் சாய்ந்தொழிந்து சன்மார்க்க நீதி பெருகவருள் நின்று. 6 அன்றிலும் பேடும் அழகா யுலவிவரும் வென்றிப் பரங்குன்ற வேலவனே! - நன்றுடைய நின்பெயரால் தீண்டாமை நின்பெயரால் சாதிநெறி வன்னெஞ்சர் செய்தனரே வம்பு. 7 தெய்வ மணங்கமழுஞ் செந்தமிழின் தேன்பாயுஞ் செய்ய பரங்குன்றச் செல்வமே! - வையமதில் தீண்டாமை எண்ணுநெஞ்சம் தீண்டுமோ நின்னடியைத் தீண்டாமை மன்பதைக்கே தீட்டு. 8 நீலப் புறாக்கள் நிமிர்ந்தாடும் மாடஞ்சேர் கோலப் பரங்குன்றக் கோமளமே! - சீலமளி சன்மார்க்கச் செம்பொருளே! சண்முகனே! பூவினிலே பன்மார்க்க நோய்தவிர்ப்பாய் பார்த்து. 9 வானாருந் தேவர்களும் வந்து தவஞ்செய்யுங் கானார் பரங்குன்றக் கற்பகமே! - ஊனாறும் ஊற்றை யுடல்கொண்டேன் உண்மை யுடலீந்து கூற்றுவனைக் காய்ந்தெனைக்கா கூர்ந்து. 10 பழமுதிர்சோலை கண்ணிலே காண்பன காதிலே கேட்பன கந்தநின்றன் எண்ணமா நெஞ்சில் இயங்கிடும் வாழ்வினை ஈந்தருள்க விண்ணிலே முட்டி விரிநிலம் பாய்ந்து விளங்கிநின்று பண்ணிலே மூழ்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 1 உள்ள மிருக்கும் உனையுணர் காதல் உறுதிகொள்ளாக் கள்ள வினையேன் கசிவிலாப் பாவி கருணைபுரி துள்ளு மறிமான் சுழிப்புன லஞ்சுஞ் சுனையினிலே பள்ளு முழங்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 2 கற்ற கலைகள் களிபெருஞ் செல்வங் கடைவருமோ சற்றும் அழியாக் கலைகளுஞ் செல்வமுந் தந்தருள்வாய் வெற்றி விறலியர் யாழின் விருந்துணு வேழவினம் பற்றெனக் கொண்ட பழமுதிர் சோலைப் பரம்பரனே. 3 வாழ்கநின் வேன்மயில் வாழ்கவென் றேதினம் வாழ்த்துமன்பர்க் கூழ்வலி யின்மை உறுதியென் றுண்மை யுணர்ந்து கொண்டேன் ஏழ்கதிர் மூழ்கி இழிபுன லாட இயற்கைநல்கிப் பாழ்தரு நோய்தீர் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 4 ஆறு முகமும் அருட்டாயர் நோக்கும் அயில்மயிலின் வீறுங் கொடியும் விழிமுன் விளங்கின் வினையுமுண்டோ தேறு பழம்பொழி சாறிழிந் தோடத் திரளருவி பாறும் இடர்கள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 5 மண்புனல் தீவளி வான்சுடர் யாவுநின் வாழியுடல் திண்ணுயிர் நீயெனில் உண்மையில் ஐயந் திகழலென்னே வண்டுகள் யாழ்செய் மலரணி வல்லி வனப்பொழுகும் பண்புடை ஞானப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 6 மலைபொழில் பூக்கள் மதிகடல் சேய்கள் மயிலனையார் அலைவழி பாடல் அழகுநின் எண்ணம் அறிவுறுத்தும் சிலைநுதல் வேடச் சிறுமியர் சேர்த்த செழியதந்தம் பலகுவ டாகும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 7 ஆண்டவ நின்றன் அறிகுறி யாகிய ஆலயத்துள் தீண்டல் தீண்டாமை சிறத்தலால் அன்பர்கள் செல்வதெங்கே வேண்டல்வேண் டாமை கடந்தவர் வாழ்வும் விரதமுஞ்சூழ் பாண்டிய நாட்டுப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 8 சாதிநோய் பேய்மதம் சார்தரு கோயிலுள் சண்முகநின் சோதி விளங்குமோ சூர்தடிந் தாண்ட சுடர்மணியே நீதியே என்று நினையடி யார்கள் நிறைந்துநின்று பாதமே போற்றும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 9 எல்லாரும் ஓருயிர் அவ்வுயிர் நீயென்ற ஆண்டவனே பொல்லாத சாதி புகுந்திவண் செய்யிடர் போக்கியருள் சொல்லாத மோனச் சுவையிலே தேக்குஞ் சுகர்களிலே பல்லோர்க ளுட்கொள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 10 பழனி எண்ணமெலாம் பழனியிலே எழுத்தெல்லாம் பழனியிலே கண்ணெல்லாம் பழனியிலே கருத்தெல்லாம் பழனியிலே மண்ணெல்லாம் பழனியிலே விண்ணெல்லாம் பழனியிலே பண்ணெல்லாம் பழனியிலே பகர்மனமே பழனியையே. 1 சொல்லெல்லாம் பழனிமலை சுகமெல்லாம் பழனிமலை இல்லெல்லாம் பழனிமலை இயற்கையெலாம் பழனிமலை கல்வியெலாம் பழனிமலை கலைகளெலாம் பழனிமலை செல்வமெலாம் பழனிமலை சிந்திப்பாய் பழனியையே. 2 தேடாயோ பழனிமலை திரியாயோ பழனிமலை நாடாயோ பழனிமலை நண்ணாயோ பழனிமலை ஆடாயோ பழனிமலை அணையாயோ பழனிமலை பாடாயோ பழனிமலை பாழ்மனமே பாழ்மனமே. 3 பழனிமலை என்னுயிரே பழனிமலை என்னூனே பழனிமலை என்னுடலே பழனிமலை என்பொருளே பழனிமலை என்னுறவே பழனிமலை என்னூரே பழனிமலை என்னுலகே பழனிமலை பணிமனமே. 4 சித்தரெலாம் பழனிமலை சிவயோகர் பழனிமலை பித்தரெலாம் பழனிமலை பெரியோர்கள் பழனிமலை புத்தரெலாம் பழனிமலை புனிதரெலாம் பழனிமலை பத்தரெலாம் பழனிமலை பழனிமலை பணிமனமே. 5 அன்பெல்லாம் பழனிமலை அறிவெல்லாம் பழனிமலை இன்பெல்லாம் பழனிமலை இரக்கமெலாம் பழனிமலை துன்பறுக்கும் பழனிமலை துரியநிலை பழனிமலை என்புருகப் பழனிமலை எண்ணாயோ பாழ்மனமே 6 ஓங்கார மூலமலை உள்ளெழுந்த பாம்புமலை நீங்காத சோதிமலை நிறையமிர்த தாரைமலை தூங்காமல் தூங்குமலை துரியசிவ யோகமலை வாங்காத ஞானமலை வளர்பழனி மலைமனமே. 7 ஆறாறு தத்துவத்தில் அடங்காத ஆண்டிமலை கூறாத மொழியினிலே கூர்ந்துநிற்கும் வானமலை மாறாத அழகினிமை மணம்வழங்கும் மகிழ்ச்சிமலை சீறாத சிந்தையிலே திகழ்பழனி மலைமனமே. 8 உலகமெலாந் தொழுதேத்தும் உயர்பழனி மலையினிலே அலகில்லா உயிர்க்குயிராய் அமர்ந்துநிற்கும் பெருமானே! கலகமிடு மனமுடையேன் கருணைபெற வந்தடைந்தேன் இலகுமொரு மொழிபகர எழிற்குருவா யெழுந்தருளே. 9 பிறந்துபிறந் துழன்றலுத்தேன் பெரும்பிழைக ளிழைத்தலுத்தேன் இறந்திருந்து களைத்தலுத்தேன் இறையவனே! உனைமறந்தே திறந்தவெளிப் பழனிமலை திறமுணரிப் பிறவியிலே சிறந்தவொரு மொழியருளத் திருவுளங்கொள்சிவகுருவே. 10 திருவேரகம் அன்னையே அப்பா என்றே அடைந்தனன் அருளை நாடி உன்னையே உள்கு முள்ளம் உதவியோ வேறு காணேன் பொன்னியே என்ன இன்பம் பொங்கருள் பொழிக இங்கே இந்நில மதிக்குஞ் செல்வ ஏரகத் தியற்கைக் கோவே. 1 உடலருங் கோயி லாக உன்னிடங் கூடுங் காதல் விடுவது மில்லை அந்தோ வெற்றியும் பெறுவ தில்லை கடலதைக் கையால் நீந்தக் கருதிய கதைபோ லாமோ இடரிலா வயல்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 2 நீலவான் குவிந்து நிற்க நிலவுகால் மணலில் சீப்பப் பாலதாய்ப் பொன்னி நீத்தம் பளிங்கென வெள்ளஞ் சிந்துங் கோலமே உள்ள மேவிக் கூட்டுநல் அமைதி வேளை ஏலவார் குழலி யானேன் ஏரகத் தியற்கைக் கோவே. 3 சிந்தையைக் கொள்ளை கொண்ட செல்வமே! கோயில் நின்றால் வெந்தழல் கதிரில் மூழ்கி விளைபசுங் கடலி லாடி முந்துகா விரிநீர் தோய்ந்து முற்றுநின் ஒளியி லாழ்ந்தே. இந்துவின் குழவி ஆனேன் ஏரகத் தியற்கைக் கோவே. 4 பொன்னொளி மேனிச் செல்வ! புலங்கவர் மேனி தன்னைக் கன்னியர் அழகே என்கோ காளையர் வீர மென்கோ பொன்னியின் பொலிவே என்கோ புலம்பயிர்ப் பசுமை என்கோ என்னென உரைப்பன் ஏழை ஏரகத் தியற்கைக் கோவே. 5 சாதியும் மதமும் வாதத் தர்க்கமும் வேண்டேன் வேண்டேன் ஆதியே அலைந்து போனேன் அடிமலர் வண்டே யானேன் மேதிகள் சேற்றி லாழ்ந்து மிகமகிழ் பழன மாந்தர்க் கீதலே போல ஓங்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 6 ஆதியில் ஆல யத்துள் அருளிலாச் சாதி யுண்டோ நீதியில் கூட்டத் தாலே நிறைந்தது சாதி நாற்றம் மாதுயர் இடும்பை போக்கி மாநிலம் உய்யச் செய்வாய் ஏதமில் மருதங் கேட்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 7 பெண்ணினை நீத்தல் ஞானப் பேறெனப் புகல்வோர் உள்ளார் கண்ணினில் ஒளியை வேண்டாக் கருத்தினர் அவரே யாவர் மண்ணிலக் கொடுமை தேய்ப்பாய் மங்கையர் வடிவே! செய்யில் எண்ணிலா ஏர்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 8 பிறப்பினைத் தந்து தந்து பேயனை மகனாய்ச் செய்த அறத்தொழில் நினதே யன்றோ? அன்னையின் அன்பே கண்டேன் புறப்பசுங் கடலை நீந்திப் புலன்விழிப் பசுமை போர்க்க இரக்கமாம் பசுமை மேனி ஏரகத் தியற்கைக் கோவே. 9 ஓமொலி கோழி கூவ உலகமே மயிலா நிற்கத் தேமொழி வள்ளி இச்சை தெய்வப் பெண் கிரியை யாக நாமற ஞானம் வேலாய் மனப்புலன் முகங்க ளாறாய் ஏமுறக் கோலங் காட்டாய் ஏரகத் தியற்கைக் கோவே. 10 குன்றுதோறாடல் எண்ணி எண்ணி இணையடி சேர்ந்தனன் கண்ணு நெஞ்சுங் கருதுங் கருணையே விண்ணுங் காடும் விரிகடல் காட்சிசெய் குண்டு கல்செறி குன்றுதோ றாடியே. 1 ஆர வாரம் அவனியில் வேண்டுமோ தீர ஆய்ந்து திருவடி பற்றினன் பாரும் வானும் பரவி வரம்பெறக் கூர நின்றிடுங் குன்றுதோ றாடியே. 2 வெற்றுப் பேச்சால் விளைவது தீவினை கற்ற கல்வி கழலடி கூட்டுமோ செற்ற நீத்துச் சிவம்விளை சிந்தையர் குற்ற மில்லவர் குன்றுதோ றாடியே. 3 நெஞ்சி லுன்னை நினைந்து வழிபடின் அஞ்ச லில்லை அடிமையு மில்லையே செஞ்சொல் வேடச் சிறுமியர் கிள்ளைகள் கொஞ்சிப் பேசிடுங் குன்றுதோ றாடியே. 4 மக்கள் வாழ்வு மலர்ந்த இடமெது துக்க நீக்கிச் சுகஞ்செய் இடமெது பக்கஞ் செங்கதிர் பான்மதி நேரிடம் கொக்கி போற்றொடர் குன்றுதோ றாடியே. 5 உலக வாழ்வை உனக்கு வழங்கிய திலகன் யாரெனச் சிந்தைசெய் நெஞ்சமே மலியு மாபலா வாழையை மந்திகள் குலவி யுண்டிடுங் குன்றுதோ றாடியே. 6 தேனும் பாலுந் திரண்ட அமுதென வானும் மண்ணும் வளரத் துணைபுரி மானும் வேங்கையும் மாவும் விலங்கினக் கோனும் வாழ்திருக் குன்றுதோ றாடியே. 7 காலை வேளைக் கழல்பணி வின்றெனில் மாலை வேளை மறலி வருவனே நீல மங்கையர் நீள்குரல் ஓப்பிடுங் கோலங் கொள்ளிருங் குன்றுதோ றாடியே. 8 செயற்கைக் கோயிலைச் செற்றிடும் மாந்தரே இயற்கைக் கோயி லிருப்பிடம் நோக்குமின் மயிற்கு லங்கள் மகிழ்நட மாடவுங் குயிற்கு ரற்பெறுங் குன்றுதோ றாடியே. 9 காற்றும் வெய்யொளி கான்றிக் கலத்தலால் ஆற்ற லாயுள் அதிகம தாகுமே தேற்றஞ் சாந்தஞ் சிவமணஞ் சேரவெங் கூற்றைக் கொன்றருள் குன்றுதோ றாடியே 10 கதிர்காமம் கலியுகத்துங் கண்கண்ட கற்பகமே! கருத்தினிக்குங் கரும்பே! தேனே! வலியிழந்து பிணியடைந்தேன் மலரடியே துணையென்று மருந்து கண்டேன் நலிவழித்துப் பொன்னுடலம் நல்கியருள் நாயகனே! ஞான நாதா! கலிகடலில் மலரிலங்கைக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 1 தீராத பிணியெல்லாந் தீர்த்தருளும் மருந்தாகித் திகழுஞ் சேயே! பாராத நாளெல்லாம் பாழ்நாளே யென்றுணர்ந்தேன் பரமா! நின்னைச் சேராத பிழைபொறுத்துத் திருவடிக்கே அன்புசெயுஞ் சிந்தை நல்காய் காராலுங் கானமர்ந்த கதிரைவேற் பெருமானே கருணைத் தேவே. 2 விழியில்லார் விழிபெற்றார் செவியில்லார் செவிபெற்றார் விளம்பும் வாயில் மொழியில்லார் மொழிபெற்றார் முருக! நின தருளாலே, மூட நாயேன் வழியில்லா வழிநின்று வளர்த்தவினை வேரறுப்பாய் வரதா! மூங்கில் கழிவில்லார் களியாடுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 3 ஆண்டவனே! உடலளித்தாய் அதைநின்றன் ஆலயமா யாக்கா திங்கு மூண்டசின விலங்குலவுங் காடாக்கும் முயற்சியிலே முனைந்து நின்றேன் தீண்டரிய சிவசோதி! செய்ந்நன்றி கொன்றபெருஞ் சிதட னானேன் காண்டகுநித் திலங்கொழிக்குங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 4 பகலெல்லாம் நின்நினைவே இரவெல்லாம் நின்கனவே பாவி யேற்குச் செகமெல்லாம் நினைக்காணச் சிவகுருவே யெழுந்தருளச் சிந்தை கொள்க குகவென்றால் பிடியுடனே கொல்யானை ஒதுங்கிநிற்குங் குணமே மல்கக் ககனவழிச் சித்தர்தொழுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 5 மண்பொன்னை மங்கையரை மாயையென மறைந்தொழுகல் மதியா குங்கொல் மண்பொன்னில் மங்கையரில் மாதேவ நீயிலையோ மயக்க மேனோ பண்ணிசைபோல் எங்குநிற்கும் பரமநினை மறுத்தொழுகல் பாவ மன்றோ கண்கவரும் மணியருவிக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 6 நீலமயக் கடலினிலே நீண்டெழுந்த பவளமலை! நின்னை நாடிச் சீலமுடன் இருங்காட்டில் செல்வோரைக் கரிகரடி சிறுத்தை வேங்கை பாலணுகிப் பாயாது பத்தியிலே மூழ்கிநிற்கும் பான்மை யென்னே காலமிடங் கடந்தொளிருங் கதிரைவேற் பெருமானே! கருணைத்தேவே. 7 கடலெல்லாங் கதிரையென்று கைநீட்டி வழிகாட்டக் கரிய காட்டின் முடியெல்லாங் கதிரையென்று முழங்கியன்பால் வரவேற்ப மூள்வி லங்கு கடவின்றிக் கதிரையென்று புறமேகப் புட்களெலாங் கதிரை யென்றே கடிதணைந்தே உடன்தொடருங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 8 சாதிமதப் பிணக்கின்றிச் சமரசமா யெல்லோருஞ் சார்ந்து சென்றே ஆதியந்த மில்லாத அறுமுகனே யென்றுன்னை அரற்று கின்றார் சோதி! நின தருளவர்க்குத் துணைபுரிதல் இயல்பன்றோ சொல்ல வொண்ணாக் காதலன்பு கரைகடந்த கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 9 தண்ணமருங் கடலெழுந்த தரைக்காட்டில் தமிழ்க்கோயிற் றனிமை கண்டால் மண்ணருவி முழவதிர மயிலாடக் குயில்கூவ வண்டு பாடும் பண்மயத்திற் புலனுழைந்து பகரரிய அமைதியுறும்; பண்பு கூடும்; கண்மணியே! கருத்தொளியே! கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 10 கழுகுமலை கந்தா குமரா கதிர்வேலா கருணை பெருகு காங்கேயா சிந்தா மணியே சிவகுருவே சித்தந் தெளியத் திருவருளை நந்தா ஒளியே நல்காயோ நானென் முனைப்பால் கெட்டேனே எந்தாய் வள்ளி மணவாளா எழிலார் கழுகு மலையானே. 1 குற்ற நீக்கிக் குணஞ்செய்யக் கொடுத்த பிறவி பலபலவே உற்ற இந்தப் பிறவியிலே உன்னை யுணரும் வாய்ப்புண்டு கற்றல் கேட்டல் கண்திறவா கண்ணைத் திறக்கக் குருவாக வெற்றி வேலா எழுந்தருளாய் விமலா கழுகு மலையானே. 2 உலகம் பொல்லாதென்கின்றார் உளமே பொல்லாதென் றுணர்ந்தேன் கலக உளத்தைக் கடந்துநின்றால் கருணை வடிவேஉலகமெலாம் இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கேகுற்றம் இறையோனே அலகில் அழகே அன்பருளே அறிவே கழுகு மலையானே 3 பொல்லா ஊனைப் புசியாத புனித அறமே உலகமெலாம் நல்லாய் பெருக வேண்டுகின்றேன் நாதா அருளாய் அருளாயே எல்லா உலகும் எவ்வுயிரும் இருக்கும் பெரிய பெருமானே கல்லார் கற்றார் கைகூப்புங் கருணைக் கழுகு மலையானே. 4 வேண்டேன் செல்வம் பேறெல்லாம் வேண்டேன் புகழும் பெருமையுமே வேண்டேன் பதவி விருப்பமெலாம் வேண்டேன் அரசும் விண்ணுலகும் வேண்டும் இரங்கும் நெஞ்சமென்றும் விளங்கும் மற்ற அறமெல்லாம் ஈண்டி யடியார் பணிசெய்யும் ஈசா! கழுகு மலையானே. 5 எல்லா உயிரும் என்னுயிரே என்னும் ஞானம் உளத்தென்றும், நில்லா தொழியின் வாழ்வேனோ நிமல யோகர் கண்ணொளியே! சொல்லாய்ப் பொருளாய்ச் சுகமளிக்குஞ் சுகமே! சுகத்தில் வரும்பயனே! செல்லார் பொழில்கள் பழனங்கள் சேர்ந்த கழுகு மலையானே. 6 மரமாய் நிழலாய் நறுங்காற்றாய் வாச மலராய் மணித்தடமாய்ப் பரவு திங்கள் நிலவாகிப் படர்ந்து புலன்கள் விருந்தளிக்கும் பரனே! பத்தர் பழவினைகள் பரிதி முன்னே பனிபோல இரிய அருளின் ஒளியுமிழும் இனிய கழுகு மலையானே. 7 எந்தச் சமயம் நுழைந்தாலும் இறுதி இன்பம் ஒன்றன்றோ இந்த உலகம் பலபெயரால் இசைக்கும் ஒருவ! பன்னிறங்கள் சிந்தும் ஆக்கள் பொழிபாலில் திகழும் நிறங்கள் பலவேயோ சந்தத் தமிழில் பண்பாடுஞ் சங்கக் கழுகு மலையானே. 8 வாது சமய வழியினிலும் வகுப்புச் சமய நெறியினிலும் சாதிச் சமயச் சார்பினிலும் சார்ந்து நில்லா வாழ்வளித்த கோதி லமுதே! குணக்குன்றே! குறைவில் நிறைவே! அருட்கடலே! சோதிப் பொருளே! நீவாழி! தூய கழுகு மலையானே! 9 மண்ணாய் நீராய் அனலாகி வளியாய் வெளியாய் ஒளியாகிக் கண்ணாய் மணியாய் உயிராகிக் காக்குங் கருணைக் கடவுளுனை எண்ணா வாழ்வு இருள்நரகம் எண்ணும்வாழ்வே அருளின்பம் அண்ணா! அருண கிரிக்கருளி ஆண்ட கழுகு மலையானே. 10 குன்றாக்குடி மண்ணோர்களும் விண்ணோர்களும் மகிழத்திரு மலைமேல் அண்ணா! அறு முகவா! எழுந் தருளுந்திருக் கோயில் கண்ணாரவும் நெஞ்சாரவுங் கண்டே தொழ வந்தேன் தண்ணார்பொழில் குன்றாக்குடித் தமிழா! எனக் கருளே. 1 கதிரோன்பொழி ஒளிமேய்ந்திடுங் கருணைப்பெரு மலைமேல் நிதியாளரும் மதியாளரும் நிறையுந் திருக் கோயில் gâna!பர மேட்டி! உனைப் பரிவாய்த்தொழ வந்தேன் கதியேயெனக் குன்றாக்குடிக் கண்ணே! எனக் கருளே. 2 நீலந்தரு வானில்மதி நிலவுந்திய மலைமேல் சீலந்திரு மயின்மங்கையர் சேர்ந்தேபணி கோயில் காலன்வினை தொடராவழி காணப்புகுந் தேனால் கோலம்பெறு குன்றாக்குடிக் குணமே! எனக் கருளே. 3 புறச்சோலையும் அறச்சாலையும் பொலியுந்தெரு மலைமேல் kw¢rh®ãid mW¡F§FU kÂna!திருக் கோயில் உறச்சேர்ந்தனன் உளங்கொண்டனன் ஒளிபெற்றிட முருகா! Ãw¢nršÉÊ¡ F‹wh¡Fo Ãkyh!எனக் கருளே. 4 முன்னம்வினை பலவேசெய மூர்க்கன்முனைந் திட்டேன் இன்னம்வினை செயவோமனம் எழவேயிலை ஈசா! ò‹bdŠád‹; KUfh!நினைப் புகலேயெனப் புக்கேன் Ä‹d‰bfho¡ F‹wh¡Fo ntyh!எனக் கருளே. 5 மலைநோக்கினன் மலையேறினன் மலையாகவே நிற்கச் சிலைவேடரைச் செற்றுக்கொடிச் சிவவள்ளியைக் கொண்ட இலைவேலவ! முயன்றேவரும் ஏழைக்கருள் செய்யாய் miyntbraš F‹wh¡Fo m‹gh!நினக் கழகோ. 6 கல்லாதவன் பொல்லாதவன் கருணைப்பொருள் வேண்டி நில்லாதவன் என்றேஎனை நீக்கிப்பெரு மொழியைச் சொல்லாதிவண் நீத்தாலினிச் சூழப்புக லுண்டோ bršyhUa® F‹wh¡Fo¢ átnk!இது வழகோ. 7 அறுமாமுகந் தோளாறிரண் டழகுத்திரு மார்பும் உறுகோழியும் மயில்வேலுடன் ஓதும்பிடி மானும் நறுமாணடி மலரும்விழி நாடற்றெரிந் தருளாய் òwnkÉlš F‹wh¡Fo¥ bghUns!நினக் கழகோ. 8 சாதிப்பிரி வாலேயுயர் சன்மார்க்கமுந் தளர நீதித்துறை வழுவுங்கொடு நிலைநேர்ந்துள நேரம் nrhâ¥bgU khnd!துணை சூழாதிவ ணிருத்தல் ஆதிப்பொருள்! F‹wh¡Fo munr!நினக் கழகோ. 9 kÆšnkbyhË® kÂna!உயர் மலைமேல்திகழ் மருந்தே! cÆ®nfhÆÈ bdhËna!உணர்ந் தோதற்கரும் பொருளே! துயில்கூரிருட் டுன்பங்கெடத் தொடுவேலவ! வாழி FÆšTîe‰ F‹wh¡Fo¡ nfhnd!சிவ குருவே. 10 சென்னி மலை பொன்மயி லரசே! புண்ணிய முதலே! புனிதனே! பூதநா யகனே! என்பெலாம் உருக எண்ணியே இருக்க எத்தனை நாட்களோ முயன்றேன் துன்பமே சூழ்ந்திங் கிடையிடை வீழ்த்தத் துயருறு கின்றனன் ஐயா! இன்பமே! சென்னி இறைவனே! ஈசா! இணையடித் துணையரு ளின்றே. 1 என்பிழை பொறுத்தே என்றனுக் கருள எத்தனை உடலமோ ஈந்தாய் அன்புநீ ஐயா! அன்பிலாப் பேய்நான் அளப்பருங் குறைகளே உடையேன் மின்னொளி வேலா! நின்னரு ளின்றி விடுதலை யில்லையென் றுணர்ந்தேன் கன்னியர் சூழுஞ் சென்னிமா மலைவாழ் கடவுளே! ஆண்டருள் செய்யே. 2 நானெனும் முனைப்புள் நாயினேன் சிக்கி நான்படுந் துயரமென் சொல்வேன் கானவர் வலையில் கலையெனக் கலங்குங் கடையனேன் கருத்தினை அறிவாய் வானவர் பொருட்டு வட்டவே லேந்தும் வள்ளலே! முனைப்பற வேண்டித் தேனமர் சென்னி மாமலை சேர்ந்தேன் சிறியனை ஆண்டருள் செய்யே. 3 நின்வழி நின்று நிகழ்த்திடுந் தொண்டே நேரிய தாய்நலம் பயக்கும் என்வழி நின்றே இயற்றிடுந் தொண்டால் எரிபகை எழுதலுங் கண்டேன் மன்னுயிர்த் தொண்டாம் மலரடித் தொண்டே மகிழ்வுடன் ஆற்றுதல் வேண்டும் பன்மணி கொழிக்குஞ் சென்னிவாழ் பரமா! பாவியேன் வேண்டுதல் கேளே. 4 என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன் எழிலுடல் ஓம்பலும் வேண்டேன் மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் மலரடி வழிபெறல் வேண்டும் துன்பமே உலகாய்த் தோன்றுதல் மாறிச் சுதந்திர உணர்வுட னெங்கும் இன்பமே ஓங்க இளமையே! சென்னி ஏந்தலே! என்றனுக் கருளே. 5 சாதியில் அடிமை மதத்தினில் அடிமை தங்கிடும் வீதியில் அடிமை நீதியில் அடிமை நிறத்தினில் அடிமை நிலவுல கெங்கணும் அடிமை ஆதியே! அடிமை நோயினை அகற்ற அருளொளி ஆண்மையே வேண்டும் கோதிலாச் சென்னிக் குணமலை யரசே! குவலயத் திடர்களை யாயே. 6 உலகினை யளித்தாய் உயிரெலாம் வாழ்ந்தே உன்னொளி காணுதற் பொருட்டே கலகமே செய்து காலமே கழித்துக் கடவுளே! உன்னையும் மறுத்தே அலகையாய் உயிர்கள் அழிநிலை நோக்கி அடியனேன் படுதுயர் அறிவாய் திலகமாய்ப் பொலியுஞ் சென்னிவாழ் சிவமே! தீமையைக் களைந்தருள் செய்யே. 7 அரசியற் பெயரால் ஆருயிர்க் கொலைகள் அவனியில் நாளுநாள் பெருகிப் பரவுதல் கண்டுங் கேட்டபோ தெல்லாம் படுதுயர் பரமனே! அறிவாய் கரவுள நெஞ்சம் எங்கணும் மலிந்தால் காசினி எந்நிலை யுறுமோ திருவெலாம் பொலியுஞ் சென்னிமா மலைவாழ் சித்தனே! திருவருள் செய்யே! 8 ஆறுமா முகனே! அண்ணலே! உயிர்கள் அகத்துறு நோய்களை நீக்கித் தேறுதல் செய்யுந் தெய்வமே என்று திருவடி அடைக்கலம் புகுந்தேன் ஈறிலா இளமை எழில்கொழி முருகா! இயைந்திடும் மணமலி இறையே! மாறிலாச் சென்னி மலையமர் வாழ்வே வளர்வினை தேய்த்தருள் செய்யே. 9 குமரனே என்று கூவியே உள்ளக் குகையிலே ஒளியினைக் கண்டோர் அமரரும் போற்றும் அடிகளே யாவர் அருவினைக் கோள்களுஞ் சூழா எமபய மில்லை இன்பமே யென்றும் ïiwt!நின் பெருமைதான் என்னே சமரிலே சூரைத் தடிந்தருள் சென்னிச் சண்முகா! அடைந்தனன் கழலே. 10 திருச்செங்கோடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே தோய்ந்தவெம் பாவி மெய்யிலே நிற்க விழைந்தனன் விழைந்து மேவிய நெறிகளும் பலவே அய்யனே! இயலா தலமரு கின்றேன் அருளொளி வேண்டுமென் றுணர்ந்தேன் மெய்யனே! திருச்செங் கோட்டினில் மேவும் மேலவா! எழுந்தருள் செய்யே. 1 பொய்யிலா நெஞ்சில் புகுந்தருள் விளக்கே! புனிதனே! புண்ணிய முதலே! பொய்யினைக் கழிக்கப் பொய்யனேன் நொந்து புலம்பிய புலம்பலை அறிவாய் மெய்யிலே விளங்கும் மெய்யனே! ஏழை மெலிந்தனன் நலிந்தனன் அம்மா! செய்யனே! திருச்செங் கோட்டினிற் றிகழுந் தெய்வமே! திருவருள் செய்யே. 2 மண்ணிலே பிறந்த மனிதனே அடியேன் மனத்தினாற் பொய்முதற் பாவம் நண்ணவும் அஞ்சி நடுங்குவ தறிவாய் நடுங்கினுந் தொலைவதோ இல்லை தண்ணரு ளொளியே! சண்முகா! பாவச் சார்பிருள் முற்றிலுஞ் சாய்க்கும் விண்ணெழு திருச்செங் கோட்டினில் விளங்கும் வேலவா! அருள்புரி யாயே. 3 எண்ணிலா உடலம் தந்துதந் திந்த எழிலுடல் தந்ததும் அருளே மண்ணிலே பாவ இருளிலே மயங்க வைப்பதும் அருளினுக் கழகோ பண்மொழி இருவர் பங்கனே! கமலப் பன்னிரு கண்ணனே! வேலின் அண்ணலே! திருச்செங் கோட்டினி லமர்ந்த அப்பனே! ஆண்டருள் செய்யே. 4 பாவமே முற்றும் பற்றிடா திருக்கப் பற்றினேன் பலதுறை முயற்சி சேவலங் கொடியாய்! சிறுமகன் முயற்சி திறத்துள எல்லையுங் கண்டேன் ஆவதொன் றில்லை யாதுயான் செய்கேன் அடர்பழி என்றனை யுறுமோ தேவனே! திருச்செங் கோட்டினிற் சிறக்குஞ் செல்வனே! காத்தருள் செய்யே. 5 திருவடி யொன்றே துணையெனக் கொண்டு தெளிந்தனன் வழியினை அமுதே! குருவென வந்து குறிக்கொளின் கொள்க குறிக்கொளா திருப்பினும் இருக்க கருமமே யுடையேன் கனன்றிட மாட்டேன் கழலிணை மறக்கவும் மாட்டேன் தருமனே! திருச்செங் கோட்டினி லெழுந்த சண்முகா! தயைநிறை கடலே. 6 முற்றிய பாவ மூலத்தை யறுக்க முறையிலா வழிகளி லுழலேன் சுற்றிய உயிரைத் தொண்டினைத் துறவேன் துறவெனக் காட்டினுக் கோடேன் பற்றியே மூக்கை மூச்சினை அடக்கேன் பாரினைப் பாழெனக் கொள்ளேன் உற்றசெங் கோட! உருகியே உயிர்கள் உயர்பணி செய்யவேண் டுவனே. 7 உருகியே அருளால் முனைப்பினை யொடுக்கி உயிர்வழி நின்பணி உஞற்றக் கருதிய கருத்தைக் கடவுளே! அறிவாய் கருத்தது கூடிட அருள்வாய் முருகிய வேட்கை மூண்டெழல் காணாய் மூடனேன் பிறநெறி செல்லேன் முருகனே ! திருச்செங் கோட்டினி லமர்ந்த மூர்த்தியே அன்புவேண் டுவனே. 8 ஆறுமா முகமும் ஆறிரு தோளும் அணிகடம் பாரமும் அன்பின் கூறெலாங் கூடித் திரண்டிரு புறமுங் குலவிய தாய்மையின் பொலிவும் வீறிடு வேலும் வீரமா மயிலும் விரைமலர்த் தாள்களுஞ் செம்மை மாறிலாத் திருச்செங் கோட்டினிற் கண்டு மனிதனாம் பணியைவேண் டுவனே. 9 நாத்திகப் பணியை நாடிலேன் அடியேன் நாடுவன் ஆத்திகப் பணியே நாத்திகம் எனல்நான் ஆத்திகம் அறல்நான் நான்எனும் பணிகளே உலகில் ஆத்திரம் ஊட்டும்; நான்அறும் பணிகள் ஆருயிர் அன்பினை யோம்பும்; பாத்திரத் திருச்செங் கோடனே அருள்செய் பணியெனும் ஆத்திகப் பணியே. 10 வேளூர் என்னையேன் பிறப்பித்தாய் இறையவனே! இங்கே ஏன்வளரச் செய்வித்தாய் இடர்க்கடலில் விழவோ g‹Dfiy gƉWɤjhŒ guk!நின துண்மை பகுத்தறிவால் உணர்ந்துமனம் பார்க்கவெழ லாச்சே மன்னுவெறுங் கல்லாக மண்ணாகத் தோன்றின் மாதுயரில் அழுந்தாது மகிழ்ச்சியுடன் வாழ்வேன் உன்னடியைக் காட்டாயேல் உயிர்தரியா திங்கே ஒளிமுத்துக் குமரகுரு உயர்வேளுர் மணியே. 1 உன்னுண்மை யுணர்ந்தமையால் உன்னொளியைக் காண உளமுருக ஊனுருக உடலுருக அழுதே உன்னுகின்றேன் இரவுபகல் ஓயாதே அந்தோ! உடைந்துமனம் வாடுகின்றேன் உடையவனே! அறிவாய் பன்னிரண்டு கண்ணுடையாய்! பாவிபடுந் துயரைப் பார்க்கமன மெழவிலையோ பரங்கருணைக் கடலே! மின்னுசுடர் வேலேந்தி மேதினியைக் காக்க விளங்குமுத்துக் குமரகுரு வேளூர்வா ழரசே! 2 ஆணவத்தால் பலவினைகள் ஆற்றிவிட்டேன் ஐயா! அவைநினைந்தே அழுகின்றேன் அருள்புரிதல் வேண்டும் வீணுரைகள் மிகப்பேசி வெறுப்பனவே செய்தேன் வேலவனே! அவைபொறுத்து விழைந்தேற்றல் வேண்டும் தோணிபுய லெழுகடலின் சுழியுழன்றா லென்னச் சுழலுகின்ற மனமுடையேன் துணைபுரிதல் வேண்டும் தாணுவென உனையடைந்தேன் சண்முகனே! காவாய் தவம்வளரும் வேளூரில் தமிழ்க்குமர குருவே. 3 எண்ணாத எண்ணமெலாம் எவ்வளவோ எண்ணி ஏழைமனம் புண்ணாகி இளைக்கின்றேன் நாளும் பண்ணாத வடிவழகா! பாவிபடுந் துயரைப் பாராயோ பசுங்கொடிசூழ் பவளமலை யண்ணா! கண்ணார உனைக்கண்டால் கவலையெலாம் மாயும் கலியுகத்து வரதனெனக் காரணப்பே ருடையாய்! விண்ணாரும் பொழிலுடுத்து வேதனைகள் தீர்க்கும் வேளூரில் வீற்றிருக்கும் வேற்குமர குருவே. 4 எழுதரிய வடிவழகை ஏழைவிழி காண எழும்வேட்கை நீயறிவாய் எவரறிவார் ஐயா! அழுதழுதே அயர்கின்றேன் அருளுடைய அரசே! m¥gh!நீ கைவிடுத்தால் அணைப்பவர்தாம் யாரே பழுதுடையேன் பிழையுடையேன் பாவமிக வுடையேன் பற்றுதற்கோ வேறில்லை பரம்பரனே! பாராய் விழுதுடைய ஆல்வேலும் வேம்பரசுஞ் சூழ்ந்த வேளூரில் குருவடிவாய் வீற்றிருக்குந் தேவே. 5 ஞானவடி வேலேந்தி நலஞ்செயவே கொண்ட நல்லபெருங் கோயில்பல நண்ணிநின்ற போது ஊனமிகு சாதிப்பேய் உலவுதலைக் கண்டே உளமுடைந்தே ஓடிவந்த உண்மைநிலை யறிவாய் வானவனே ஏழைதுயர் வருத்தமெலாங் களைய வல்லவர்யார் இவ்வுலகில் வள்ளலுனை யன்றித் தேனமரும் பொழில்சூழ்ந்து தெய்வமணங் கமழும் திருவீதி வேளூரில் திகழ்குமர குருவே. 6 வெள்ளையுடை அணிவித்து விழுப்பொருளும் ஈந்து வீட்டிலிரு என்றுசென்றாய் வீதிவழிப் போந்தேன் தள்ளரிய துகளெழுந்து தாக்கிவிழி பொத்தத் தக்கவுடை கறைபடியத் தவிக்கின்ற வேளை கள்ளரணி கலன்கவர்ந்து காற்றெனவே பறந்தார் கண்விழித்தே அழுகின்றேன் காக்கவெழுந் தருளாய் வள்ளியினைப் பிரியாத வடிவழகு முதலே! வயற்சாலி சூழ்வேளூர் வள்ளல்குரு மணியே. 7 சூரனொடு சிங்கமுகன் தாரகனுஞ் சூழ்ந்தே துளைக்கின்றார் என்னுயிரைத் துயர்க்கொடுமை அறிவாய் கீரனுக்குக் கருணைபுரி கேண்மைமிகு தேவே! கிளரந்த அரக்கர்துயர் கெடுக்கவல்லார் யாரே வீரநெடு வேதாந்த வேலெழுந்த ஞான்றே வீழ்ந்துபடும் அரக்கர்குலம் வீறுகரங் காணச் சீரிணையை வேண்டுகின்றேன் சிவனடியார் நேயா! செல்வமுத்துக் குமரகுரு செவ்வேளூர் அரசே. 8 அறுபொறியாய் வெளிவந்தே அசைகாற்றும் அனலும் அணைத்தேந்திச் சரவணத்தில் அன்புடனே சேர்க்கச் சிறுகுழவி யாகியங்கே செகமதிலே ஏறித் தீங்குவிளை சூரர்களைச் செவ்வேலால் சாய்த்து நறியகுழல் யானையொடு நங்கைவள்ளி மணந்த ஞானநிலை யுணர்ந்துன்னை நண்ணுகின்றேன் ஐயா! நறவமடு வண்டிசைக்கும் நகைமலர்பூண் சோலை நற்றவத்து வேளூரில் நாதசிவ குருவே. 9 ஐந்துபெரும் பூதமுறை ஆண்டவன்நீ யென்றும் ஆருயிரின் தீமையழி அருள்வேள்நீ யென்றும் உந்திச்சை கிரியைசத்தி உடையவன்நீ யென்றும் உபநிடதம் உரையுண்மை ஓர்ந்துன்னை யடைந்தேன் கந்தசிவ சண்முகனே! கண்புருவ நடுவில் கற்பூர விளக்கெனவே காட்சியளி சோதி! சந்தவிசைப் பண்ணினிலே தாண்டவஞ்செய் பொருளே! தமிழ்முத்துக் குமரகுரு தவவேளூர் அரசே. 10 திருமயிலம் மண்ணெழுந்து விண்காட்டு மலையாய் வெங்கால் வாங்கிநில வாக்குநிழல் வண்மைக் காடாய் தண்ணமரும் பசுமைகொழி வயலாய் நீலச் சாந்தநிறக் கடலாகித் தாங்குந் தாயே! உண்மையிலே ஒளிர்கின்ற ஒளியே! என்றும் உளக்கோயில் கொண்டவர்தம் உயிரே! நாயேன் வண்ணமயில் திருக்கோல வனப்புள் மூழ்க வந்தடைந்தேன் மயிலமலை வாழுந் தேவே. 1 பசுங்கடலில் மிதக்கின்ற படவே போன்று பயிர்சூழ ஒங்கிநிற்கும் பரிவுக் கோயில் விசும்புள்ளார் பாதலத்தார் விரும்பி யேத்த வீற்றிருக்கும் பெருமானே! விமலா! பாசம் நசுங்குவழி காணாது நாயேன் பன்னாள் நாயகனே! கழித்துவிட்டேன் ஞானம் இன்றுன் வசம்பெறவே வந்தடைந்தேன் வள்ளால்! பார்த்து மருள்நீக்கி அருள்செய்க மயில வாழ்வே. 2 வித்தாகி முளையாகி வேர்கள் வீழ்த்தி விண்ணோங்கு செடியாகி விரிந்து நீண்டு சத்தாகிக் கவடாகித் தாங்குங் கோடாய் தளிரிலைகள் தழைத்துநிற்குந் தருவே! நீழல் பித்தாகி ஓடிவந்தேன் பாலைக் கள்ளிப் பெருங்கழுகு எதிர்க்கஎனைப் பின்னிட் டேனால் அத்தா! என் வேட்கையுணர்ந் தச்சம் நீக்காய் அமரர்தொழும் மயிலமலை அன்புத் தேவே. 3 மண்ணாகி மணலாகி வளர்கல் லாகி மகிழ்குன்றாய் மனங்கவரும் மலையே! நின்பால் கண்ணாகிக் கல்லாலிற் கதிருள் மூழ்கி கறையில்லா உயிர்ப்பருந்திக் கருத்திற் சாந்தம் உண்ணாடி வழியடைய உவந்து வந்தேன் ஒருபுலியின் பார்வைவிழ உடைந்து வீழ்ந்தே m©zh!நான் நடுநடுங்கி அகன்றேன்; அச்சம் அழித்தருள்செய் மயிலமலை அழகுத் தேவே. 4 மழையாகிக் கால்நீராய் வனப்பா றாகி வாய்பாய்ந்து புனற்காடாய் வாரி போல விழியாலுங் கரைகாணா விண்சாய் ஏரி! வெம்மைகொள வேட்கையெழ விரைந்தே யோடி வழியாலே நடந்திழிந்து வந்த வேளை மகரங்கள் குழுகுழுவாய் வளைந்து பாய்ந்து சுழியாடல் கண்டஞ்சித் தூரஞ் சென்றேன் துயர்களையாய் மயிலமலைத் தூய்மைத் தேவே. 5 எங்கெங்கு நீங்காம லிருக்குந் தேவே! எங்கிருந்து துன்பஇருள் எழுந்த தையோ தங்குமிடந் தெரியவிலை தமியேன் நாளும் தாங்குதுயர்க் கெல்லையிலை தாயே யாகி இங்கடியார்க் கருள்புரிய எழுந்த ஈசா! ஏழைமுகம் பாராம லிருப்ப தென்னே திங்கள்பொழி நிலவாடத் தென்றல் வீசத் திருக்குளஞ்சூழ் மயிலமலைச் செல்வத் தேவே. 6 அத்தநின துண்மையினை அறிந்துஞ் செய்த அடாதசெயல் அத்தனையும் அழிதல் என்றோ? சித்தரெலாந் தொழுந்தலைமைச் சித்த ரேறே! சிந்தைகொண்டால் தீப்பஞ்சாய்த் தீந்து போகும் பத்தருளக் கோயில்கொளும் பரமா! செம்பில் படுகளிம்பைப் பாற்றுவித்துப் பசும்பொன் னாக்குஞ் சுத்தசெழு மூலிகைகள் சூழ்ந்து நிற்கும் தொன்மயில மலைமருந்தே! துணைசெய் யாயே. 7 சாதியிலே மதங்களிலே சார்பு விட்டேன் சண்முகனே! திருவடியின் சார்பு கொண்டேன் வீதியிலே விளையாடித் திரிந்த காலை வேலவனே! நின்தொண்டு விளங்க வில்லை நீதியிலே நின்றுயிர்க்கு நிகழ்த்துந் தொண்டே நின்தொண்டாம் என்றுணர்ந்தேன் நிமலா! பின்னாள் வாதமிலா இடத்தொளிரும் வள்ளி நாதா! மயிலமலைச் சிவகுருவே வருவா யின்றே. 8 விண்ணுறுநீல் பந்தரிட மிளிருங் கோள்கள் மின்விளங்கு நிரைவழங்க விரிந்த திங்கள் வெண்ணிலவு விருந்தூட்ட விசிறச் சோலை மெல்லியகால் பன்மலரின் விரையைத் தூவத் தண்ணருவி முழவதிர்ப்பச் சங்கம் ஆர்ப்பத் தமிழ்வண்டு பாண்மிழற்றத் தனியே நின்றேன் கண்ணுலவு நாயகனே! கந்தா! வந்து கருணைபுரி மயிலமலைக் கரும்பே தேனே. 9 மண்ணொடுங்கி நீர்வறண்டு வன்னி மாய்ந்து வளியடங்கி வெளிகலங்கி மடிவுற் றாலும் கண்மயிலில் ஏறிவிளை யாடுங் கந்தா! கடையின்றிக் கேடின்றிக் கலக்க மின்றிப் பண்ணடியார்க் கருள்புரியும் பரமன் நீயே பாழ்பிறவி வேரறுக்கப் பாவி நாளும் தண்ணருளை நாடியலை கின்றேன் அந்தோ! தயைபுரிவாய் மயிலமலைச் சாந்தத் தேவே. 10 திருப்போரூர் என்னுயிரே! என்னுடலே! எனையீன்ற தாயே! என்தந்தை! என்னுறவே! எனக்கினிய கலையே! இந்நிலமும் எந்நிலமும் இயங்கவருட் செங்கோல் ஏந்துமிறை நீயென்றே இளமைமுதல் கொண்டேன் பொன்னவிருந் திருமேனிப் பொங்கொளியைக் காணப் புந்தியிலே எழும்வேட்கை புண்ணியனே! அறிவாய் என்விழிக்கு விருந்தளிக்க எழுந்தருளல் என்றோ ஏருழவர் பாவொலிக்கும் எழிற்போரிச் சிவமே. 1 உலகளித்தாய் உடலளித்தாய் உயர்பிறவி யுள்ளம் உவந்தளித்தாய் அப்பிறவி உறுபயனைக் காண அலைகின்றேன் அலைவெல்லாம் ஆண்டவனே! அறிவாய் அலைந்தொழிந்தே அகங்குழைய அழுதுகிடக் கின்றேன் பலகலைகள் கற்றாலும் பன்னெறிசேர்ந் தாலும் g‰Wbe¿ TlÉšiy guk!நின தருளே நிலையளிக்கும் என்றடைந்தேன் நீயுமெனை விட்டால் நிலைப்பதெங்கே திருப்போரூர் நீலமயி லரசே. 2 படவேறிக் கழியுழுது பக்கமெலாம் பசுமைப் படர்சோலை தொடர்ந்துவரப் பரவையெழு காற்றும் உடலேற உளங்குளிர உன்றன்திருப் போரூர் ஒருமுறையோ இருமுறையோ உவந்துவந்த தந்தோ நடமேறும் மயில்கண்டு நறுங்குளத்தில் மூழ்கி நல்லதிருக் கோயில்மலை நண்ணிவலம் வந்து விடமேறும் வாழ்விலேநின் விருந்தமுதம் ஏற விழைந்தழுத தெத்தனையோ முறைமுருக வேளே. 3 மலையடியில் மரஞ்சூழ்ந்த மண்டபத்தில் நின்று மயிலேறும் பெருமானே! மலரடியை யுன்னிக் கலையுலவுங் காட்டின்வழிக் கருணைகுரு வாகிக் காட்சியளிப் பாயென்று காத்திருந்தேன் நாளும் jiyt!நினைக் காணாது தளர்ந்தழுத அழுகை சண்முகனே! நீயறிவாய் தமியனென்ன செய்வேன் சிலையுழவர் கிளிவளர்க்குந் திருப்போரூர் முருகா! சிதம்பரனார்க் கருள்சுரந்த தெய்வசிகா மணியே. 4 மலையேறி மீதமர்ந்தேன் மனவமைதி கண்டேன் மாதேவா! நின்வடிவோ மால்கடலா யொருபால் தலையாலும் பசுங்கடலாய்த் தழைதழைப்ப வொருபால் தாரகைகள் மிளிர்நீலத் தனிவானாய் மேற்பால் நிலையாக இறைபோது நிறைவினிலே நின்றேன் நிலைக்கவது நீகுருவாய் அருள்புரிதல் வேண்டும் கலையாலுங் காணவொண்ணாக் கற்பூர விளக்கே! கானமயில் திருப்போரூர் கருணைபொழி தேவே. 5 என்னுடலம் நின்கோயில் என்னுயிரோ நீயே எளியனைநீ மறந்தாலும் இறைவநினை மறவேன் சின்னபரு வத்திருந்தே சிந்தைகொளச் செய்தாய் சிற்பவுரு காட்டுவித்தாய் திகழியற்கை யூடே மன்னழகு காட்டுகின்றாய் மாதேவ! குருவாய் மகிழுருவங் காட்டாயோ மனங்குவியா துன்னை உன்னுவதா லென்னபயன் உறுத்துவினை யுயரும் உம்பர்தொழுந் திருப்போரூர் உண்மைவடி வரசே. 6 சாதிமத நெறிப்பேய்கள் தலையெடுத்தே யாடித் தயைநெறியாந் தெய்வநெறி சாய்த்துவரல் காணாய் நீதியிறை நின்பெயரால் நித்தலுமே சூது நிகழ்ச்சிபல முகமாக நீண்டுவரல் காணாய் ஆதிநெறி சாதிமத அழுக்கில்லா நெறியே அவனியெங்கும் பரவவருள் ஆண்டவனே! செய்வாய் nrhâ!நின தருணெறிக்குத் தொண்டு செயல்வேண்டும் துணையருள்வாய் திருப்போரூர் தூயமணி விளக்கே. 7 போரூரா! நின்மலைமேல் போந்திருந்தால் விளையும் புத்தமிர்த போகமது புகலவுமொண் ணாதே காரூரும் வான்கண்கள் கதிர்மதியின் பொழிவு, கடல்நீலம் கான்பசுமை கலந்துவருங்காட்சி, ஏரூரும் எருதுகன்றா ஈண்டிவருங் கோலம், ஏரிநிறை பறவையெல்லாம் எழும்புகின்ற ஓசை, சீருருந் தென்றல்தெளி, செல்வவிருந் தாகும் தெய்வபசும் மயில்திகழுஞ் செம்பவளக் குன்றே. 8 நால்வருணம் பிறப்புவழி நாட்டியநாள் தொட்டு நாவலந்தீ வழிந்தொழிந்து நாசமுற லாச்சே தோல்வருணஞ் செய்கொடுமை சூதுநிறை சூழ்ச்சி சொல்லாலே சொல்லுதற்குச் சொற்களிலை யந்தோ! மேல்வருணங் கீழ்வருண வேற்றுமைகள் வீழ்ந்தால் ntyt!நின் மெய்ம்மைநெறி விளங்கும்வழி வழியே பால்வழங்கும் பசுவனையார் பத்திவிளை யமுதே! பனைசூழுந் திருப்போரூர் பச்சைமயி லரசே. 9 சாதியென்றும் மதமென்றுஞ் சாத்திரங்கள் காட்டிச் சந்தைகடை விற்பவர்கள் சார்பறுத்துக் கொண்டேன் ஓதுநெறி யொன்றிறைவன் நீயொருவன் என்றே உணர்ந்தறிந்தேன் உத்தமனே! உயர்பொருளே! என்னைச் சோதனையிற் படுத்தாதே சூர்தடிந்த வேலா! சோதியுருக் காட்டியருள் சூழ்வினைகள் ஓடப் பாதையிலே சோலைநிழல் பசுநிரைகள் தேங்கும் பழம்பெரிய திருப்போரூர் பான்மைமற வேனே. 10 இளையனார் வேலூர் செழுங்கொண்டை திரைத்தசையச் சீக்குங்கால் கோழிகளே! உழும்பழனம் பலசூழ்ந்தே உமிழ்பசுமை ஒளியிடையே விழும்புனல்சேர் இளையனார் வேலூர்க்கிவ் வழிதானோ கெழும்பயலை நோய்தீரக் கிளர்ந்தெழுந்து கூவீரே. 1 இளங்குழவி கையிலுள இடியப்பங் கவர்ந்துண்ண உளங்கொண்டு குறிபார்க்கும் ஒத்தகருங் காகங்காள்! வளங்கொழிக்கும் வயல்சூழ்ந்து வளர்வேலூர் எதுவென்றென் களம்பயலை பிணிதீரக் கருணையுடன் கரையீரே. 2 வட்டணையில் சுழன்றாடும் வகைநீலப் புறவினங்காள்! மட்டொழுகும் மலர்ப்பொழிலில் மதிநிலவில் மங்கையரும் கட்டழகுக் காளையருங் கவிபாடி யின்பநுகர் எட்டுடைய இறைவேலூர் எங்கென்று முழங்கீரே. 3 மேயெருமை முதுகிடத்து மேவுகருங் குருவிகளே! வேயிசைக்கும் இறையனார் வேலூரில் மயங்குகின்றேன் சேயனிள அழகுமணத் திருமேனிச் செல்வன்திருக் கோயிலுள இடமெங்கே கூரலகால் குறியீரே. 4 காலையிலும் மாலையிலுங் கண்களிக்கப் பறக்கின்ற வாலிறகுத் தும்பிகளே! வளர்திங்கள் நிலவினிலே பாலிமணற் கரைசேர்ந்தேன் பண்மொழியார் வேலூரில் நீலமயில் வீரனுக்கென் நிகழ்ச்சியினை யுரையீரே. 5 செங்கமல வாவியிலே தேன்மடுக்கும் வண்டுகளே! தொங்குகுலை வாழைசெறி தொல்பதியான் வேலூரான் தங்குவொளி வண்ணத்தான் தமிழ்முருகன் கடம்பணிந்தோன் பொங்கழகற் கென்வரவைப் போய்மிழற்றிப் புகலீரே. 6 பேடையுடன் பிரியாத பெட்புடைய அன்றில்காள்! கோடையிலும் வற்றாத குணமுடைய ஈராற்றின் ஓடைகளின் ஓதநிறைந் தோங்குதனி வேலூரில் மேடையிலே வாழிறைக்கென் வேட்கைதனை விளம்பீரே. 7 விண்ணேறு மரத்தழையில் விளங்குமிடந் தெரியாமல் பண்ணேறு குரற்குயிலே! பாலாறுஞ் சேயாறுந் தண்ணேறு பழனஞ்சூழ் தமிழிளைய வேலூரான் எண்ணேறு மாண்புகழை இங்கிதமாய்க் கூவாயே. 8 மணியென்ன மரகதத்தில் மரம்படருங் கொடிக்கொவ்வை அணிகனிக ளுண்பவள அழகலகுப் பசுங்கிளிகாள்! தணிபொழிலும் பைங்கூழும் தழைதழைக்கும் வேலூரான் கணியறியா மெய்க்கீர்த்தி காதினிக்க மொழியீரே. 9 புற்பூச்சை வாய்க்கொண்டு புரிபேடைக் கீயும்வழி அற்பூட்டும் பூவைகளே! அணியிளைய னார்வேலூர் பொற்பூருஞ் சோலையிலே பூமணக்கும் நேரமிது சிற்பரன்றன் திருநாமஞ் செவிகேட்கச் செப்பீரே. 10 குமரகோட்டம் உன்னுவதும் உரைப்பதுவும் உஞற்றுவதும் உன்வழியே மன்னவொரு வழிவேண்டி மலரடியைப் பற்றிநிற்குஞ் சின்னவுயி ரெனையாளாய் திருக்குமர கோட்டத்தில் மின்னுவடி வேலேந்தி மேவுசிவ வேட்குருவே. 1 அழுகின்றேன் பிழைநினைந்தே அநுதினமும் அறுமுகனே! தொழுகின்றேன் திருவடியைத் துகளறுத்துத் தூய்மைபெற உழுகின்ற வயற்காஞ்சி உயர்குமர கோட்டத்தில் எழுகின்ற ஒளிவேலா! இறையவனே! ஆண்டருளே. 2 எத்தனையோ பிழைசெய்தேன் இறையவனே! அறியாமல் அத்தனையும் பொறுத்தாள அவனிதனில் பிறருண்டோ? வித்தைமிகு காஞ்சியிலே விறற்குமர கோட்டத்துச் சத்தியனே! சங்கரனே! சண்முகனே! எனக்கருளே. 3 பத்திநெறி அறியாமல் பாழ்நெறிகள் வீழ்ந்துழன்றேன் சித்திநெறிப் பெரியோர்கள் சேவிக்கும் பெருமானே முத்திநெறிக் காஞ்சியிலே முகிழ்குமர கோட்டத்து வித்தகனே! மயிலேறி வேட்குருவே! ஆண்டருளே. 4 பிறவாத இறவாத பெருநெறியை யான்விழைய மறவாது திருவடியை மனங்கொள்ள வரந்தருவாய் நறவாரும் மலர்க்காஞ்சி நற்குமர கோட்டத்தில் திறவாக உயிர்கட்குத் திகழ்கின்ற சிவக்கொழுந்தே. 5 மஞ்சுதவழ் சோலைகளும் வண்டிசைக்கும் வாவிகளும் அஞ்சுவழி ஒளிகாலும் அகல்விளக்கு வரிசைகளும் பஞ்சடியார் யாழேந்திப் பண்ணிசைக்கும் மாடிகளும் துஞ்சுதிருக் காஞ்சியிலே சுடர்கோட்டக் குருவருளே. 6 தென்மொழியும் வடமொழியுஞ் செறிபுலவர் வாழ்ந்தபதி தொன்மைமிகப் பதிந்தபதி தொழில்பலவும் விளங்குபதி பன்மையிலே உலவொருமை பண்புறவே காணும்பதி கன்மமறு காஞ்சியொளிர் கண்மணியே எனக்கருளே. 7 சிவனாகிச் சைவருக்குத் திருமாலாய் வைணவர்க்குத் தவவமண பௌத்தருக்குத் தனியருகன் புத்தனாய் புவிநெறிகள் பிறவற்றும் புகுந்துபுகுந் தருள்குருவே etFku nfh£l¤J ehaf!என் குறைதீரே. 8 கண்ணினிலே காண்கின்ற கதிரொளியை யுள்ளமெனுங் கண்ணினிலே காண்பதற்குக் கற்பூர மணிவிளக்கே! எண்ணியெண்ணி நாடோறும் ஏக்குறுதல் நீயறிவாய் É©Fku nfh£l¤J ntyh!என் குறைதீரே. 9 ஆறுமுகம் அருள்விழிகள் அழகுபுயம் அணிமார்பும் வீறுமயில் வேற்கரமும் விளங்கிவிட்டால் என்மனத்தே மாறுபுவி வாழ்வினிலே மயங்குதற்கு வாய்ப்புண்டோ தேறுமொழி எனக்கருளாய் திகழ்காஞ்சிச் சிவகுருவே. 10 திருத்தணிகை ஆன்ற கல்வியுங் கேள்வியும் ஆய்தலும் ஆதி யந்த மளவி லடங்குமே தோன்றி நின்றழி யாத பொருட்கவை துணைசெய் யாவெனச் சோதித் தறிந்தனன் ஊன்று நெஞ்சுங் கடந்தொளிர் சோதியே! உன்னை என்னறி வெங்ஙன் உணருமே கான்ற பச்சைக் கவின்கொடி வள்ளியைக் காதல் செய்தணி காசலத் தெய்வமே. 1 எங்கு நீங்கா திருந்திடும் ஈசனே! இங்கு நின்னிடம் என்ற மகிழ்ச்சியால் தங்கல் நல்லறி வோவறி யாமையோ தாயுந் தந்தையு மாகிய சேயனே! பொங்கும் மின்னொளி யாண்டும் நிலவினும் பொறியி லாவிடம் பூத்தொளி காட்டுமோ தங்க மேனியர் தாழ்ந்து பணிசெயும் தணிகை மாமலைச் சண்முகத் தெய்வமே. 2 எங்கு நீயெனில் என்னிடம் ஆணவம் எங்கி ருந்து பிறந்தது சண்முகா! தங்குமிவ் வையம் சாத்திரம் போக்குமோ தர்க்க வாதச் சமயமும் நீக்குமோ சங்க ராசிவ என்று திருப்பணி சாரச் சாரத் தயைநிலை கூடவும் துங்க சற்குரு வாகித் தெரித்தருள் தோகை யூர்தணி காசலத் தெய்வமே. 3 நூலும் வேண்டிலன் தர்க்கமும் வேண்டிலன் நுவலும் பன்னெறி நோய்களும் வேண்டிலன் காலும் வேலுங் கடுநர கெய்தினுங் காக்கு மென்று கருத்தி லிருத்தினன் சீலம் மண்ணிற் சிறக்கவே வள்ளியின் தேனும் பாலுந் திரளமு துண்டருள் கோலங் கொண்ட குருவே! அடைக்கலம் கோதி லாத்தணி காசலத் தெய்வமே. 4 எங்கு நின்றிடு நின்னிலை ஏழையேன் எவ்வு ளத்தினில் எண்ணவும் வல்லனே பொங்கு சங்கர! புண்ணிய மூர்த்தியே! புவனம் உய்யப் பொருந்திய தேசிகா! நங்கை வள்ளிமுன் நாட்டிய கோலமே நாடி வந்தனன் ஞான மொழிபெறக் கங்கை யாற்றிற் கருணை பொழிந்தருள் கட்டி லாத்தணி காசலத் தெய்வமே. 5 சாந்தம் சாந்தம் சிவமெனுந் தண்மொழித் தன்மை காணத் திரிந்தனன் பல்லிடம் சாந்த முன்னித் தணிகைப் பதிவரச் சாந்தம் சாந்தம் தரைவழிச் சோலையில் சாந்தம் பொய்கைச் சரவண நீத்தமே சாந்தம் சாந்தம் தணிகை மலையெலாம் சாந்தம் நீலத் தமிழ்மயில் வள்ளியில் சாந்தம் சாந்தச் சரணருள் சாந்தமே 6 தணிகை மாமலை யுன்னி வலம்வரின் சார்ந்த ஊன்தழல் உள்ளத் தழலொடு பிணியு யிர்த்தழல் பின்னுந் தழல்களும் பிறவும் மாறிப் பிறங்கும் அமைதியுள் பணிகை நெஞ்சப் பயிற்சியில் லாமலே பாவி யுற்ற படுதுயர் போதுமே கணிகை மேவுங் கடவுள் குறமகள் கணவன் கந்தன் கடம்பணி கத்தனே. 7 பொன்னைப் பெண்ணைப் புவியை வெறுத்துடல் பொன்றக் கானம் புகுந்து கிடப்பது மன்னி யற்கை மறுக்கு நெறியது மகிழும் இல்லிருந் தன்பு பணிசெயின் உன்னைக் காண்டல் உறுதி உயர்படைப் பொன்றை நீத்தலும் உன்னை வெறுத்தலாம் கன்னி வள்ளிமுன் காதல் நிகழ்த்திய fªj nd!தணி காசலத் தெய்வமே. 8 தெய்வ மொன்றெனச் செப்ப மறையெலாம் செகத்தில் வாதஞ் சிறப்பது மென்கொலோ mŒa nd!உனக்கெப் பெயர் சூட்டினும் அப்பெ யர்ப்பொரு ளாவது நீயென bkŒa nd!இள மைப்பரு வத்திலே மேவச் செய்ததும் வேலவ! நின்னருள், செய்ய நன்றி சமரசஞ் சேர்த்தது திகழுஞ் சீர்த்தணி காசலத் தெய்வமே. 9 சாதி யென்னும் படுகுழி நாட்டினில் சார்ந்து தோன்றினன் சண்முக! அப்பெருங் கோதை நீக்கிக் குணஞ்செய வேண்டுவல் குமர தேவ! Ff!அருள் தேசிகா! நாத விந்து நடந்து கடந்துமே நட்ட மாடி நகைமுக வள்ளியின் காத லுண்ட கருணைக் கடவுளே! fªj nd!தணி காசலத் தெய்வமே. 10 கந்தமாதனம் கட்டில்லா அறிவாகிக் கணக்கில்லா அகண்டிதமாய் முட்டுண்ட அறிவறியா முழுமுதலா யிலங்குமொன்றே! கட்டுடைய உயிர்ப்பொருட்டுக் கருணைபொழி குருவாகி வட்டகந்த மாதனத்தில் வருகுமர! அடிபோற்றி. 1 குமரகுரு பரமணியே! குவலயத்தில் பலபெயர்கள் அமையநிற்கும் பெருமானே! அநாதியிறை முதலென்றும் அமரருளின் குருவென்றும் அடியர்சொலும் அழகுநுட்பம் சமயவழக் கொழித்தடியில் தனிநின்றால் விளங்கிடுமே. 2 தென்முகத்த னெனச்சொல்வேன் திகழருக னெனப் புகல்வேன், பொன்முகத்துக் குமரனென்பேன் புகழ்கண்ணன் புத்தனென்பேன் நன்மொழிசொல் கிறித்துவென்பேன் ஞானசம் பந்தனென்பேன் இன்னுமுரை குருவென்பேன் எழிலழகுக் குருவுனையே. 3 நின்னொளியால் உலகமெலாம் நிகழ்கின்ற நிலையுணர்ந்தால் பொன்னுருவை யருந்தாது புகன்மொழியைப் பருகாது சின்மயத்தை நினைப்பதுவுஞ் சிரிப்பாகுஞ் சிவகுருவே! மன்னுகந்த மாதனத்து மணிவிளக்கே! அருள்வாயே. 4 அழகிளமை மணந்தெய்வ அருள்கமழும் திருவுருவைப் பழகவிவண் திருக்கோயில் பரக்கவைத்தார் சிற்பவழி அழுகுகின்ற தவ்வழியும் அருமையிழந் திதுபோழ்தே அழுகின்றேன் விழுகின்றேன் அருள்கந்த மாதனனே. 5 கோயிலெலாம் வருணமுடை குடிகொண்டால் அருளுருவ நாயகனே! அழகொளியை ஞாலத்தார் பெறுவதெங்ஙன் தாயிழந்த கன்றெனவே தவிக்கின்றேன் சிவகுருவே! மாயிருளை யொழித்தருளாய் மகிழ்கந்த மாதனனே. 6 வாயாலே அத்துவித வளமெல்லாம் மிகப்பேசி ஓயாதே உழன்றலுத்தேன் ஒளியடியைக் கொழுக்கொம்பா தாயானே! பிடித்துள்ளேன் தயைபுரிவாய் தனிமுதலே மாயாதே உயர்கந்த மாதனத்தில் மகிழ்குருவே. 7 எங்குமுள அழகெல்லாம் எழுமூற்றா யிலங்குகின்ற மங்கலிலாத் திருமேனி மலரழகைப் புலனுகர இங்குபடுந் துயரறிவாய் இளையோனே! அருள்புரிவாய் பொங்குகந்த மாதனத்தில் பொலிந்தமயி லயிலரசே. 8 சினமுதலாம் அரக்கருளம் தெறுகின்றார் தெளிஞானம் எனும்அயிலால் சிதைக்கவிரி இயற்கைமயில் இவர்ந்துவரின் நினக்கினிய கொடியாகும் நிலைகூடும் குமரகுரு! மனவமைதி வளர்கந்த மாதனத்துப் பெருமானே. 9 அத்துவித முத்தியையும் அருட்குருவே! யான் வேண்டேன் மற்றுமுள பதம்வேண்டேன் மகிழ்கந்த மாதனத்தில் சுத்தபசும் மயிலழகில் துலங்கிளமை யழகலையில் பத்தியெழ முழுகிநிற்கும் பரவசத்தை வேண்டுவனே. 10 பொது எங்குநிறை செம்பொருளே! ஏழைமுக நோக்கி இடர்களைய விழியிலையோ எண்ணந்தா னிலையோ பொங்குமிடர்க் களவிலையே; பொறுக்கமுடி யாதே; போகுமிடம் வேறுண்டோ புண்ணியனே! கூறாய் சங்கையறக் குருவாகித் தரையினிலே அருளின் சாந்தநிலை பெற்றிடுவேன்; தழல்களெலாந் தணியும்; தங்கவொளித் திருமேனி தாங்கிவரல் என்றோ தவிக்கின்றேன் சண்முகனே! தமிழியற்கை யரசே. 1 ஊனுடலம் பெற்றுணர்ச்சி யுற்றநாள் முதலா உறுதுயரஞ் சொல்லுதற்கும் உரைகளுண்டோ ஐயா! கானுமிழும் எரியிடையே கடையன்தவிக் கின்றேன் காண்பதற்குக் கண்ணிலையோ கருத்திலையோ அருளத் தேனுகரும் வள்ளியுடைத் தெய்வமென உலகம் செப்புகின்ற திறமென்னே? திருவருளைப் பொழியாய் வானுலகும் மண்ணுலகும் வாழ்த்துபெருந் தேவே! வளரியற்கைக் கோயில்கொண்ட வள்ளல்சிவ குருவே. 2 ஆரஎண்ணி எண்ணியகம் அனலாச்சே ஐயா! அழுதழுது விழியெல்லாம் அழலாச்சே நோய்தான் தீரவழி யுண்டோசொல் செல்வவள்ளி நாதா! செய்துவிட்டேன் பிழைபலவும் சிறியஅறி வாலே வீரவடி வேலேந்தி வினையறுக்க எழுவாய் வேறுபுகல் இல்லையென வேதனைசெய் யாதே சேரவருஞ் சேய்கடிதல் சிறந்ததந்தைக் கழகோ செழுமியற்கைக் கோயில்கொண்ட தெய்வமயி லரசே. 3 பொருளில்லார்க் கிவ்வுலகும் அருளில்லார்க் கந்தப் புவியுமிலை என்றுரைத்தார் பொய்யாமொழி யாளர் தெருளிரண்டில் ஒன்றுமின்றித் திரிகின்றேன் இங்கே திருவெல்லாம் விளங்குகின்ற தெய்வமுரு கையா! இருளிருந்து கூவுகின்றேன் எடுத்தணைப்பா ரில்லை ïu§FªjhŒ jªijba‹nw ïiwt!நினை அடைந்தேன் மருளிருக்கு மதியனென்று வாளாநீ இருந்தால் வாழ்வதெங்ஙன் இயற்கையிலே வாழும்பெருந் துரையே. 4 பொருண்முடையும் அருண்முடையும் புகுந்தலைத்தல் அறிவாய் பொருள்அருளை அடியவர்க்குப் பூக்கின்ற தருவே! அருண்முடையை யொழித்தென்னை ஆண்டுவிட்டால் போதும் அல்லலெலாம் தொலைந்தகலும் ஆறுமுக வேலா! சுருண்முகிழுந் தார்கடம்ப! சுத்தபரம் பொருளே! சுந்தரனே! வள்ளிமகிழ் தோகைமயி லரசே! தெருண்மனத்தில் திகழ்சிவமே! திருமாலே! என்றுஞ் செறிஇயற்கைக் கோயிலுறை செல்வப்பெரு மாளே. 5 கவலையெலாந் திரண்டுருண்டு கருத்தினிலே நின்றால் கானமயில் வீர! நின்றன் கருணைபெறல் எங்ஙன்? சவலையுற்று வாடுகின்றேன் சந்ததமும் இங்கே சவலையற்றுக் கவலையிற்றுச் சாந்தமுற்று வாழப் புவியினிலே மூச்சடக்கும் புன்னெறியில் செல்லேன் போரூரா வேன்முருகா பொன்வண்ணா என்றும் சிவமுதலே சண்முகனே சின்மயனே என்றும் சேரவரும் எனையாள்வாய் திகழியற்கை மணியே. 6 bt§fâUª j©kâí« ntyt!நின் கோயில் வேலைமலை காடுவயல் வெண்மணல்நின் கோயில் பொங்கருவி ஓடைகளும் பூக்களுநின் கோயில் பொன்வண்டு பொலிபறவை ஆன்மான்நின் கோயில் மங்கையருங் குழவிகளும் மகிழ்தருநின் கோயில் மாண்கலைகள் ஓவியமும் மறைகளுநின் கோயில் இங்கடியன் உளங்கோயில் கொள்ளஇசை யாயோ ஏழைமகன் உய்யவருள் இயற்கையிறை யோனே. 7 இயற்கையிலே நீயிருக்கும் இனிமைகண்ட ஆன்றோர் எழிலழகை ஒவியத்தில் இறக்கிவைத்த காட்சி, செயற்கையிலே கோயில்களாய்த் திகழ்ந்திருந்த தந்நாள் சிற்பநுட்பத் தத்துவத்தில் சிறந்துநின்றார் மக்கள் பயிற்சிகுறை வருணப்பேய் பற்றியநாள் தொட்டுப் பாழுங்கல் செம்பாகப் பாவிக்க லாச்சே அயிற்கரத்து வேலவனே! அருமைத்திருக் கோயில் அழகியற்கை மூலமெனும் அறிவுவிளக் கேற்றே. 8 உடலியற்கை உயிர்நீயென் றுண்மைநிலை காட்டும் உயர்கோயில் உட்பொருளும் உறங்கிவிட்ட தம்மா மடவருணச் சடங்கிடமாய் வேசையர்தம் வீடாய் மடைப்பள்ளி பொருட்போர்கள் மலிகளனாய்க் கண்டு படமுடியாத் துயரமதிற் படுகின்றார் பத்தர் பத்தருளங் கோயில்கொண்ட பன்னிரண்டு கண்ணா! நடனமெங்கு மிடுகின்ற நாயகனே! ஞானம் நல்வழியில் வளர்ந்தோங்க நானிலத்தில் செய்யே. 9 எக்கோயில் கெட்டாலும் எழிலிறையே! நின்றன் `இயற்கைவளக் கோயிலென்றும் இருப்பதன்றோ? எவரும் புக்கோடி ஆடிநின்று பொருந்திவழி படலாம் புன்குறும்புச் சேட்டையிலை; பொலிவமைதி கூடும்; சிக்கோதும் நெறிகளெல்லாஞ் சிதற அருள் வேலா! செங்கதிருங் கடலுமெனச் சிகியிலுறுஞ் சேயே! இக்கோலம் இந்நிலையென் றெண்ணாமல் யார்க்கும் இன்புசொரி கருணைமழை! எளியன்குறை தீரே. 10 காத்தல் கத்தனே! உயிரைக் காக்க கந்தனே! அறிவைக் காக்க சித்தனே! மனத்தைக் காக்க திகழ்புலன் ஐந்தைக் காக்க அத்தனே! உறுப்பை யெல்லாம் அழகுறக் காக்க காக்க சித்தனே! உடலைக் காக்க பன்னிரு கரத்துச் சேயே. 1 பொய்பகை பொறாமை லோபம் புகுந்துறா வாறு காக்க வெய்சினம் காழ்ப்பு வெஃகல் விரவிடா வாறு காக்க நொய்பிணி கேடு வஞ்சம் நுழைந்திறா வாறு காக்க செய்பணி சிறக்கக் காக்க சிவகுரு! தெய்வச் சேயே. 3 கொலைபுலை நீக்கி யெங்குங் குணஞ்செயல் அறிவைக் காக்க அலைமன அவதி போக்கி அமைதியைக் காக்க காக்க உலகெலாம் ஒன்றி நிற்க உயரறங் காக்க காக்க கலைவளர் மதியந் தோயுங் கடிவரைச் செம்மைத் தேவே. 4 வாழ்த்து அருள்பொழியும் முகம்வாழி அழகுதிருத் தோள்வழி உருள்கடம்பத் தார்வாழி ஒலிகோழி மயில்வாழி இருள்கடியும் வேல்வாழி எழில்வள்ளி பிடிவாழி சுருள்படிந்த தணிகைமுதல் தொல்பதிகள் வாழியரோ. திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனாரால் பாடப்பெற்ற முருகன் அருள் வேட்டல் முற்றிற்று.  1. தென்திருப்பேரை பேரை அரைசே! பேரை அரைசே! பெரிதுநின் னரசே பெரிதுநின் னரசே நின்னா ராட்சி மன்னா இடமிலை விண்ணெலாம் ஆட்சி மண்ணெலாம் ஆட்சி கடலெலாம் ஆட்சி காற்றெலாம் ஆட்சி ஒளியெலாம் ஆட்சி ஒலியெலாம் ஆட்சி சிறியதிற் சிறிதிலும் பெரியதிற் பெரிதிலும் ஆட்சி நினதே ஆட்சி நினதே எங்கும் ஆட்சி தங்கும் மாட்சியால் கூர்த லாங்காங் கூர்தல்நின் னருளே 10 மீனமாய் ஆமையாய் ஏனமாய்ச் சிங்கமாய்க் குறளனாய் மழுவனாய் அறவில் வீரனாய்க் கலப்பை ஆளியாய் உலப்பில் குழலனாய் உலகை ஓம்பும் அலகிலா ஆட்சி அங்கிங் கெனாமல் எங்கும் அறிவாய்ச் செறியும் இறைவ! சிறிது நெஞ்சில் நின்னை எங்ஙன் உன்னுவல் அம்ம! என்றன் பொருட்டோ தென்திருப் பேரையில் பொருநைக் கரையில் கருணை பொழிய மணியொளிர் முடியும் அணிகிளர் மாலையும் 20 தண்மரைக் கண்ணும் கண்மலர் நோக்கும் பவள வாயும் தவள நகையும் நீல மேனியும் கோல மாவும் ஆழி வளையும் வாழிசெங் கையும் மின்னொளி உடையும் பொன்னருள் அடியும் கொண்டது கொல்லோ அண்டர் நாயக! அழகிய வடிவம்! அழகிய வடிவம்! நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் பாழு நெஞ்சே! வாழ நினையாய் வேடமும் கோலமும் நாடவும் வேண்டாம் 30 நீட்டலும் மழித்தலும் காட்டலும் வேண்டாம் துறத்தலும் உலகை ஒறுத்தலும் உடலை வேண்டாம் வேண்டாம் பூண்தா ரணிந்து மண்ணை வெறாது பெண்ணுடன் வாழ்ந்து பொருளை ஈட்டியும் அருளை நீட்டியும் நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் முனைப்பற நினைவாய் வினைப்பற் றறுப்பாய் அழக னிருக்கப் பழகு நெஞ்சே! வேண்டுவன் இதுவே ஆண்டகைப் பொருளே! வருக வருக அருள வருக 40 அண்ணா வருக வண்ணா வருக அய்யா வருக மெய்யா வருக இறையே வருக மறையே வருக ஆலிலே துயிலும் மூலமே வருக கரியினுக் கருளிய அரியே வருக சேயினைக் காத்த தாயே வருக குன்றை எடுத்த கன்றே வருக சாதி இல்லா நீதி வருக மதப்போர்க் கெட்டா இதமே வருக நிறத்திமிர் காணா அறமே வருக 50 அறிதுயில் புரியும் அறிவே வருக அன்பில் விளங்கும் இன்பே வருக அத்த! நின்னருள் மொய்த்த நெஞ்சம் உருகும் உருகும் அருகும் போர்கள் பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள் பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம் ஒன்றே அன்றோ நன்றே தெளியின் ஒருவ நிற்கே மருவிய பெயர்கள் பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி எப்பெயர் நின்பெயர் எப்பதி நின்பதி 60 எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி பேரெலாம் நீயே பேரிலான் நீயே பதியெலாம் நீயே பதியிலான் நீயே உருவெலாம் நீயே உருவிலான் நீயே மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே எல்லாம் நீயே எல்லாம் நின்னில் பேரையில் பொலியும் பெருமை அழகு தத்துவ நுட்பச் சத்தியம் விளக்கும் போதம் அழிந்த நாத முடிவிலே பணிசெயும் நெஞ்சம் அணிசெய அரசே! 70 வருக வருக அருள வருக வருக வருக குருவாய் வருக தென்தமிழ் கமழும் தென்திருப் பேரை அரைசே! பேரை அரைசே! 2. ஆழ்வார் திருநகர் பன்னிறத்து மீன்களெலாம் பார்த்தனுப்புந் தண்பொருநை பொன்மணியும் பூவும் பொருதாழ்வார் - நன்னகரில் வீற்றிருக்கும் பெம்மானே வேண்டுகின்றேன் சேவடியை ஏற்றருள்செய் இன்றே இசைந்து. 1 தாழ்குழலா ரெல்லாந் தமிழ்பொருநை நீராடி ஆழ்வார் மொழியோதும் அன்புநகர் - வாழ்வாய் இறவாத இன்புபெற ஏழையேன் வந்தேன் அறவாழி காட்டி அருள். 2 பூம்பழன மெங்கும் பொலியுங் குருகூரில் தேம்பொழி லென்னத் திகழ்பொருளே - பாம்பணையில் எம்மானே வந்தடைந்தேன் ஏழை எனக்கிரங்கிச் செம்மாலே செந்நெறியிற் சேர். 3 ஆறாய்ப் பொழிலாய் அழகுவிளை அன்புருவே தேறாதார் தேறத் திருக்குருகூர்ப் - பேறாய் எழுந்து நிலவுபொழி இன்பமே வெம்மை விழுந்தேன் எடுத்தாள் விரைந்து. 4 எங்கு நிறைபொருளே எவ்வுருவும் நீயென்றால் பொங்கு குருகூர்ப் பொலிவோனே - தங்கத் தனியிடங்கள் கொண்டதென்ன? தத்துவமே என்று பனிமலர்த்தாள் வந்தணைந்தேன் பார். 5 பார்தனிலே பத்துருவம் பண்டெடுத்தாய் என்னுஞ்சொல் கூர்தல் அறத்தைக் குறிப்பதென - ஓர்ந்துணர்ந்தோர் ஆரமுதே ஆழ்வார் அருள்நகரில் ஆண்டவனே சீரருளில் சேர்த்தெனையாள் தேர்ந்து. 6 பத்துப் பிறப்பையொட்டிப் பாவலர்கள் செய்தகதைத் தத்துவத்தை யோர்ந்து சரணடைந்தேன் - பத்திமிகு நல்லோர் உளமுறையு நாதனே தென்குருகூர்ச் செல்வா எனக்குவழி செப்பு. 7 பத்துப் பிறப்பைப் பகுத்துணர்ந்தால் இவ்வுலகில் செத்துப் பிறவாத் திறம்விளங்கும் - சித்தரெலாம் பார்க்க அறிதுயில்செய் பாம்பணையாய் தென்குருகூர்ச் சேர்க்கை அருளாயோ செப்பு. 8 மலையாய்க் கடலாய் மகிழ்வூட்டும் மாண்பே கலையாய்க் குருகூரில் கண்டேன் - அலையா மனம்வேண்டி வந்தேன் மலரடியை என்னுள் புனைந்தாள்வாய் இன்றே புரிந்து. 9 விண்ணீல மென்ன விளங்குந் திருமேனி உண்ணீடின் வெம்மை ஒழியுமால் - தண்ணீர்மை ஆழ்வார் திருநகரில் ஆண்டவனே நின்னருளால் வாழ்வா ருடன்சேர்த்து வை. 10 3. திருமாலிருஞ்சோலை தென்பாண்டிச் செல்வம் திருமா லிருஞ்சோலை அன்பால் தொழுதுய்ய ஆர்த்தெழுவாய் நன்னெஞ்சே. 1 விண்ணவரும் மண்ணவரும் வேட்குந் திருச்சோலைத் தண்மையிலே மூழ்கித் தயைபெறுவாய் நன்னெஞ்சே. 2 செல்வமெலாம் பூக்குந் திருமா லிருஞ்சோலை செல்ல நினைந்தாலும் செம்மையுறும் நன்னெஞ்சே. 3 காணாத காட்சியெலாம் காட்டும் பெருஞ்சோலை வாணாள் வழுத்திநின்றால் வாழ்வுவரும் நன்னெஞ்சே. 4 வண்டினங்கள் பண்பாடி வாழுந் திருச்சோலை கண்டு பணிந்தால் கருணைவரும் நன்னெஞ்சே. 5 சாதிமதக் கட்டெல்லாந் தாண்டின் பழச்சோலை நீதியிலே நிற்கும் நினைப்புறுவாய் நன்னெஞ்சே. 6 உள்ள சமயமெலாம் ஓலமிடும் பூஞ்சோலைக் கள்ளருந்துங் கல்வி கதிகாட்டும் நன்னெஞ்சே. 7 எல்லா உயிரும் இருக்க இடமருளும் வில்லார் இருஞ்சோலை வேண்டுதல்செய் நன்னெஞ்சே. 8 எவ்வுயிர்க்கும் இன்பநல்கும் ஏமத் திருச்சோலைச் செவ்வியிலே தோயாது செல்லுவதோ நன்னெஞ்சே 9 உலகெலாந் தோன்ற உயிராகும் பூஞ்சோலை பலகலையாய் நின்றருளும் பண்புணர்வாய் நன்னெஞ்சே. 10 சொல்லுக் கடங்காச் சுகச்சோலை ஞானநல்கும் கல்வியாய் நிற்குங் கருத்துணர்வாய் நன்னெஞ்சே. 11 ஏழிசையாய் நிற்கும் இருஞ்சோலை எண்ணிஎண்ணித் தாழிசையாற் பாடித் தழுவுவாய் நன்னெஞ்சே. 12 பழமைப் பழமைக்கும் பண்பாம் பழஞ்சோலைக் கிழமைக் குறிநின்றால் கேட்குமொலி நன்னெஞ்சே. 13 புதுமைப் புதுமைக்கும் புத்துயிராம் பூஞ்சோலைப் பதுமையாய் நின்றுன்னப் பாயுந்தேன் நன்னெஞ்சே 14 சித்தர்தம் உள்ளத்தில் தேனொழுக்குஞ் செஞ்சோலைப் பித்தங்கொண் டானந்தப் பேறுறுவாய் நன்னெஞ்சே. 15 இயற்கைத் திருமா லிருஞ்சோலை இங்கிருப்பச் செயற்கை அலகையிடஞ் செல்லுவதென் நன்னெஞ்சே. 16 செம்மைவழித் தண்மைபொழி செஞ்சோலை சேராதே வெம்மையிலே வீழ்ந்தால் விரதம்போம் நன்னெஞ்சே. 17 பத்தருக் கெஞ்ஞான்றும் பண்பாந் திருச்சோலை முத்திக் கரையென்றே முன்னுவாய் நன்னெஞ்சே. 18 பச்சைப் பசுஞ்சோலைப் பள்ளியினைப் பாராதே நச்சுமிழும் வெம்மையிலே நண்ணுவதென் நன்னெஞ்சே. 19 அருணெறியை ஓம்புநருக் கன்பாந் திருச்சோலைப் பொருளுணர்ந்து போற்றிப் புகக்கற்பாய் நன்னெஞ்சே. 20 பறவையெலாந் தங்கும் பழச்சோலை இங்கிருப்பத் துறவையுன்னி ஓடுதலும் சூதாகும் நன்னெஞ்சே 21 அரும்புமலர் காய்கனிகள் ஆர்ந்த திருச்சோலை விரும்பின் அறங்கூடும் வேருணர்வாய் நன்னெஞ்சே. 22 உண்ணஉண்ணத் தித்திக்கும் ஓங்கு கனிச்சோலை கண்ணினாற் கண்டாலும் காப்புவரும் நன்னெஞ்சே. 23 என்று மழியா தினிக்கும் பெருஞ்சோலை ஒன்றே உளதென் றுணர்ந்திடுவாய் நன்னெஞ்சே. 24 வினையும் விதியும் விளைநோயும் பொற்சோலை நினையாத மாக்களுக்கே நேர்தலறி நன்னெஞ்சே. 25 செய்த பிழைக்கிரங்கிச் சிந்தித்தால் செஞ்சோலை உய்யு நிலைகூட்டும் உண்மையுணர் நன்னெஞ்சே. 26 தமிழாய்த் தழைத்துநிற்குந் தண்மை இருஞ்சோலை அமிழ்துண்ட அன்பருக் கன்பாவாய் நன்னெஞ்சே. 27 ஆழ்வார்கள் சூழ்ந்துநிற்கும் ஆனந்தத் தேன்சோலை பாழ்பிறவி போக்கப் பணிசெய்வாய் நன்னெஞ்சே. 28 ஆண்டா ளெனுங்கொடிசூழ் அன்புத் திருச்சோலை வேண்டாதே சென்றால் விறலிழப்பாய் நன்னெஞ்சே. 29 ஆழ்வார் தமிழ்ப்பாட்டாய் ஆர்ந்த இருஞ்சோலை வாழ்வே உரியதென்று வாழ்த்துவாய் நன்னெஞ்சே. 30 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஓசை ஒலியாய் உலகமெலாம் ஓங்கும் பொருளே உனையடையும் ஆசை கொள்ளா தயர்ந்தொழிந்தேன் ஆவி சாவி யாகாமல் பாசை படரா மனமருளாய் பரமா வில்லி புத்தூரா வாச மலர்கள் சூட்டியநல் வாழ்வாம் ஆண்டாள் பெருமாளே. 1 உலகை உடலை உவந்தளித்த ஒருவன் நீயென் றுணராத கலதி இனத்தில் நாணாளுங் கலந்தே கெட்டேன் கெட்டேனே அலகில் பிழைகள் பொறுத்தாளும் அருளே வில்லி புத்தூரில் இலகு பெரிய பெருமாளே இனிய ஆண்டாள் இறையோனே. 2 நல்ல பிறவி எனக்களித்தாய் ஞானம் பெற்றே உயவேண்டி அல்ல நிகழ்த்தி அடிமறந்தேன் அருளுக் குரிய னாவேனோ கல்லை மண்ணைச் சோறாக்கிக் களிக்கும் பிள்ளை எனவாழ்ந்தேன் வில்லி புத்தூர் வாழ்மணியே வெற்றி ஆண்டாள் பெருமானே. 3 எல்லாப் பொருளும் நீயென்றே இசைக்குங் கலைகள் பலகற்றேன் வல்லாய் வாழ்வில் அவ்வுண்மை மலர்ந்தால் உய்வேன் உய்வேனே நல்லாய் அருள நீயன்றி ஞாலந் தன்னில் பிறருளரோ சொல்லாய் வில்லி புத்தூரா தூய ஆண்டாள் துணையோனே. 4 எங்கும் எல்லாம் நீயென்றே எளிதில் இசைக்கும் நிலைவேண்டேன் தங்கி வாழ்வில் நிறையுறவே தாளை வழிபட் டுய்யநினைந் திங்கு வந்தேன் அருள்புரியாய் ஈசா வில்லி புத்தூரில் செங்கை ஆழி வளையேந்துஞ் செல்வா ஆண்டாள் சேகரனே. 5 சாதி சமய நினைவெல்லாம் தடையே நின்றன் நினைவினுக்கு நீதிப் பொருளே அக்கடலை நீந்தி நீந்தி அடிசேர்ந்தேன் ஆதி அந்த மில்லாத அகண்டா காரப் பேரறிவே சோதி வில்லி புத்தூரா துணைசெய் ஆண்டாள் துணையோனே. 6 ஆலவெம்மை ஆற்றாமல் அடியேன் வந்தேன் ஐயாநின் நீலமேனி நிலவினிலே நின்று மூழ்கித் தண்மையுறக் கோலங் காட்டி எனையாளாய் கோதில் வில்லி புத்தூரா சீல மில்லேன் சிறுநாயேன் தெய்வ ஆண்டாள் பெருமாளே. 7 பொன்னார் முடியும் பூவடியும் பூத்த விழியும் செவ்வாயும் மின்னார் மார்பும் மலர்க்கையும் மிளிரு நீல உருக்கோலம் என்னே! நெஞ்சில் நிலைக்கவினை இரியும் வில்லி புத்தூர்வாழ் மன்னே மணியே மாமருந்தே மறைசொல் ஆண்டாள் மனத்தோனே. 8 உன்றன் நீல மேனியிலே ஒன்றி ஊன்றி உளம்வைத்தால் என்றன் கரண வெம்மையெலாம் இனிமைத் தண்மை பெறலுறுதி அன்றி லகன்றி லுடனாடும் அடவி வில்லி புத்தூரில் நன்று செய்யு நலநலமே நங்கை ஆண்டாள் பெருமாளே 9 உருவோ பேரோ ஒன்றுமிலாய் உனக்கோ உலகம் உரைத்துள்ள உருவோ பேரோ பலபலவே உண்மை யொன்றே எனத்தெளிந்தேன் உருவோ டுறவு கொளவருளாய் ஓங்கு வில்லி புத்தூரில் உருவே கருவே உயர்வான ஒளியே ஆண்டாள் பெருமாளே. 10 5. திருவரங்கம் இருளிலே கிடந்த என்றனுக் கிரங்கி ஈந்தனை உலகமும் உடலும் அருளிலே பெற்ற நன்றியை மறந்தேன் அகந்தையால் எனதெனக் கொண்டேன் மருளிலே வீழ்ந்தேன் மறவினை புரிந்தேன் மாயனே பிழைபொறுத் தாளாய் தெருளிலே இனிக்குந் தெள்ளிய அமுதே தெய்வமே அரங்கநா யகனே. 1 துன்பிலே அழுந்தித் துயருறு கின்றேன் தூயனே ஞானவா ரிதியே அன்பிலே மூழ்கி அழுகிலேன் பலவா றலைந்தலைந் தயர்ந்தனன் நாளும் என்பெலாம் உருக எண்ணிலேன் பாவி எங்ஙனம் உய்குவன் அந்தோ இன்பமே என்னை ஏன்றுகொ ளருளால் ஈசனே அரங்கநா யகனே. 2 வாக்கினை யொடுக்கேன் வனங்களி லுழலேன் வட்டணை ஆசன மிட்டு மூக்கினைப் பிடியேன் மூச்சினை யடக்கேன் முன்னிலை நின்றழு கின்றேன் பாக்கியப் பயனே பாவியை ஆளாய் பாரதம் நடத்திய பரனே தேக்கிய இன்பத் திருவெலா முடைய தேவனே அரங்கநா யகனே. 3 தத்துவக் கலையைச் சந்ததம் பயின்று தர்க்கமே புரிகுழு சார்ந்து பித்தனாய்க் கெட்டேன் பிழைபல செய்தேன் பேச்சிலே வாழ்வினைக் கழித்தேன் அத்தனென் றுன்னை அடைந்தனன் இன்றே ஆதரித் தருள்புரி வாயே முத்தனே முதல்வா மூவுல களந்த மூர்த்தியே அரங்கநா யகனே. 4 காவிரி நங்கை கொள்ளிட மங்கை கைகளால் தைவர என்றும் பூவிரி கோலப் பொழினிழல் செய்யப் பொன்சிறை வண்டுக ளார்ப்ப மாவறி துயில்செய் மரகத மலையே மனத்தமு தொழுக்குநன் மதியே பாவியேன் வந்தேன் பணிந்திட அறியேன் பார்த்தருள் அரங்கநா யகனே. 5 ஆடினேன் அலைந்தேன் அகந்தையால் கொடுமை ஆற்றினேன் அஞ்சினேன் பின்னை நாடினேன் ஞானம் நயந்தனன் பலரை நண்ணிய தொன்றிலை ஐயா வாடியே வந்தேன் மலரடி வணங்க வழிவகை அறிந்திலேன் பாவி காடியில் விழுந்த பல்லியாய்ச் சாய்ந்தேன் காத்தருள் அரங்கநா யகனே. 6 உலகெலாம் ஆக்கி உயிரெலாம் புகுத்தி உணர்வினை எழுப்பினை இடையில் கலகமால் நுழைந்து கலக்குவ தென்ன காரணம் பலபல சொல்வர் அலகிலா ஒளியே அறிதுயில் நுட்பம் அறிந்திடில் கலகமோ பாழாம் இலகுமந் நுட்பம் எளியனுக் கருள எண்ணமோ அரங்கநா யகனே. 7 அறிதுயில் நுட்பம் அடியனேன் உணர அலைந்தலைந் தழுததை அறிவாய் வெறிகொடு திரிந்தேன் வித்துவ மக்கள் வீடுதோ றுழன்றனன் விதியால் பொறிபுலன் ஒடுக்கும் புரையிலும் புகுந்தேன் புலையனேன் பெற்றதொன் றில்லை நெறிபட வந்தேன் நின்மல அருள நினைவையோ அரங்கநா யகனே. 8 சோலைகள் கண்டேன் சூழ்நதி கண்டேன் சுந்தர வீதிகள் கண்டேன் மாலைகள் கண்டேன் மங்கலங் கண்டேன் வணங்குநல் லடியரைக் கண்டேன் வேலையிற் பாம்பின் மீதுறங் கண்ணல்! விளங்கொளி விழியினாற் காணக் காலையே நோக்கிக் கைதொழு கின்றேன் கருணைசெய் அரங்கநா யகனே. 9 அன்றொரு வேழம் ஆதியே என்ன அருளிய மூலமே முதலே இன்றுனை யடைந்தேன் ஏழையேற் கிரங்காய் இருநதி நடுவினிற் றங்கும் குன்றமே நிறைவே குறைவிலாக் குணமே கோதிலா அமுதமே கோலம் நன்றுடை யானே ஞானமா நிதியே நாதனே அரங்கநா யகனே. 10 6. திருவரங்கம் எங்கிருந்தேன் இங்குவந்தேன் எப்படியென் றாய்ந்தேன் இவ்வுடலும் இவ்வுலகும் எவ்வழியென் றோர்ந்தேன் சங்கைதெளி யாதயர்ந்தேன் சாத்திரங்கள் பார்த்தேன் சாதனங்கள் செய்துழன்றேன் சற்றுமொளிர் வில்லை பொங்கிவழி காவிரியில் புகுந்துகுடைந் தெழுந்தேன் பூவிரிந்த பொழிற்பசுமை புலன்கவர ஆழி சங்குடையாய் நின்னருளால் சார்ந்தகதை தெளிந்தேன் சந்நிதியில் வந்தடைந்தேன் தமிழரங்க மணியே. 1 இருண்மயமாய்க் கிடந்தவெனக் கிவ்வுடலந் தந்தாய் இவ்வுலக வாழ்வினிலே இனிமைபெறச் செய்தாய் அருண்மறந்தேன் அகந்தையினால் ஆற்றிவிட்டேன் பிழைகள் அத்தனையும் பொறுத்தருளும் ஆண்டவன்நீ யென்றே மருண்மனத்தன் வந்தடைந்தேன் மலர்மருவு மார்பா மாயவனே அறிதுயிலில் மாதவனே உறங்கும் பொருண்மையெனக் கருள்புரிந்தால் பொன்றும்வினை யெல்லாம் போதாந்தச் செல்வர்தொழும் பொன்னரங்கப் பொருளே. 2 புற்செடியே மீன்புழுவே புள்விலங்கே முதலாம் புன்னுடலந் தந்துதந்து புங்கவநின் னுணர்வுக் கற்பமைந்த கரணம்விரி கனகவுடல் தந்தாய் கருணைநினைந் தொழுகுமனங் கருணைசெய விலையே அற்புடைய நெறிவிடுத்தேன் அலைந்துடலைக் கெடுத்தேன் அறியாமைச் செயல்நினைக்கும் அறிவுபெற்றே னின்றே பொற்பொளிசெய் அடியணைந்தேன் புரிந்தபிழை அப்பா பொறுத்தருளாய் புண்ணியனே புகழரங்கப் பொலிவே. 3 பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பூவுலகும் வேண்டேன் புகழ்வேண்டேன் நூல்வேண்டேன் புலமையெலாம் வேண்டேன் மன்வேண்டேன் வான்வேண்டேன் வாழ்வுமகிழ் வேண்டேன் மழைமுகிலே நீன்மலையே வானதியே ஏழை என்வேண்டி வந்தனனோ எழின்மருவு மார்பா எங்குமுள இறையோனே எண்ணமறி யாயோ சொன்மேவு கவிகடந்து துயிலுகின்ற இன்பஞ் சுரக்கவெனக் கருளாயோ தொல்லரங்கக் குருவே. 4 பாற்கடலில் பாம்பணையில் பள்ளியுணர் வென்றோ பரநாத விந்துநிலை பார்த்துநிற்ப தென்றோ மேற்கருமை இருளெல்லாங் கீழ்ச்சாய்த லென்றோ மென்மேலும் பொங்கமிழ்தம் மேவுவது மென்றோ காற்கடிமை ஏழையுயிர் கண்பெறுவ தென்றோ கல்லாத கல்வியெலாங் கற்றறிவ தென்றோ மாற்குலமா யுலகமெலாம் மன்னுவது மென்றோ மாயையறத் தெளிவருள்வாய் மனத்தரங்க வமுதே. 5 கடல்கடந்தேன் மலைகடந்தேன் காடுகளைக் கடந்தேன் கானாறு கழிகடந்து கடந்து வந்தேன் ஐயா உடல்கடந்தே உளங்கடந்தே உணர்வுகடந் துன்னை உன்னியுன்னி ஒன்றும்வழி உணராதே கெட்டேன் குடல்குடைய மனமுருகக் குமுறியழும் அழுகை கோவிந்தா நீயறிவாய் கோதிலறி துயிலைப் படல்கடிய அறிவுறுத்திப் பாவிதுயர் களையாய் பரங்கருணைத் தடங்கடலே பதியரங்க மலையே. 6 மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய் மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய் அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய் அமைதியளி திங்கள்பொழி ஆனந்த நிலவாய் பணிகொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய் பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின் பெற்றியருள் செய்யாயோ பேரரங்க வேந்தே. 7 அறிதுயிலின் வேட்கைகொண்டே அணையவந்தேன் அப்பா அம்மயக்கந் தலையேற அவதிபடு கின்றேன் சிறிதருளத் திருவுள்ளஞ் செய்யநினை யாயோ திருமகள்தன் கேள்வனெனுஞ் சிறப்புடைய அரசே பொறிபுலனைச் சிதைக்கும்வழிப் போகமன மில்லை பொன்னடியே பொருளென்று புந்திகொண்ட தின்று வெறிமலரில் வண்டிசையால் விருந்தளிக்கும் பழனம் மேவிவளம் பெருகுசெல்வம் மிளிரரங்க ஒளியே. 8 காலெழுப்பிக் கனலெழுப்பிக் கல்லெனவே நின்று காலில்லாப் பாம்பெழுப்பிக் ககனவட்ட நோக்கி மேலெழும்பு நெறிமயக்க வெறிவிழுந்தேன் பாவி விடுதலைபெற் றின்றுவந்தேன் வென்றிவளர் மார்பா தோலெலும்பா யுடல்வறண்டேன் தொல்லைபடு கின்றேன் சூதுவழி அரசியலில் தொலைத்துவிட்டேன் காலம் மாலெனும்பே ருடையவனே மாதவனே துயிலின் மாண்புணர்ந்தால் உய்ந்திடுவேன் மலரரங்கத் தேனே. 9 பொன்முடியும் மலர்விழியும் பூம்பவள வாயும் பொலிதோளுந் திருமார்பும் போராழி வளையும் மின்னவிலுஞ் செவ்வடியும் மிளிர்நீலக் கோலம் மேவுமனம் பெற்றவரே மேனெறியிற் சென்றார் என்மனமும் ஈரமுற அந்நெறியே விழைதல் எங்குமுள இறையோனே எம்பெருமான் அறிவாய் சொன்மறந்த வாழ்த்தறியாச் சூழலிடை வீழ்ந்தேன் தொல்லையறுத் தருள்புரியாய் தொல்லரங்க முனியே. 10 7. திருவரங்கம் திருவரங்கம் என்னுயிரே திருவரங்கம் என்னுடலே திருவரங்கம் என்னுணர்வே திருவரங்கம் என்னுறவே திருவரங்கம் என்பொருளே திருவரங்கம் என்பதியே திருவரங்கம் என்னுலகே திருவரங்கம் எல்லாமே. 1 திருவரங்கந் தெய்வமெலாம் திருவரங்கம் உயிரெல்லாம் திருவரங்கம் உணர்வெல்லாம் திருவரங்கம் உலகெல்லாம் திருவரங்கங் கலையெல்லாம் திருவரங்கஞ் சமயமெலாம் திருவரங்கம் நலமெல்லாம் திருவரங்கம் எல்லாமே. 2 புனலெல்லாந் திருவரங்கம் புவியெல்லாந் திருவரங்கம் கனலெல்லாந் திருவரங்கம் காற்றெல்லாந் திருவரங்கம் கனமெல்லாந் திருவரங்கம் கதிரெல்லாந் திருவரங்கம் இனமெல்லாந் திருவரங்கம் எண்ணாயோ மடநெஞ்சே. 3 எண்ணெல்லாந் திருவரங்கம் எழுத்தெல்லாந் திருவரங்கம் பண்ணெல்லாந் திருவரங்கம் பாட்டெல்லாந் திருவரங்கம் தண்ணெல்லாந் திருவரங்கம் தமிழெல்லாந் திருவரங்கம் கண்ணெல்லாந் திருவரங்கம் கருதாயோ மடநெங்சே. 4 உன்னாயோ திருவரங்கம் உணராயோ திருவரங்கம் பன்னாயோ திருவரங்கம் பணியாயோ திருவரங்கம் துன்னாயோ திருவரங்கம் தொடராயோ திருவரங்கம் மன்னாயோ திருவரங்கம் மகிழாயோ பாழ்மனமே. 5 சொல்லாயோ திருவரங்கம் துதியாயோ திருவரங்கம் கல்லாயோ திருவரங்கம் கருதாயோ திருவரங்கம் நில்லாயோ திருவரங்கம் நினையாயோ திருவரங்கம் புல்லாயோ திருவரங்கம் புகழாயோ பாழ்மனமே. 6 நாடாயோ திருவரங்கம் நண்ணாயோ திருவரங்கம் பாடாயோ திருவரங்கம் பரவாயோ திருவரங்கம் கூடாயோ திருவரங்கம் கூப்பாயோ திருவரங்கம் ஓடாயோ திருவரங்கம் ஒடுங்காயோ பாழ்மனமே. 7 ஊனாகுந் திருவரங்கம் உயிராகுந் திருவரங்கம் வானாகுந் திருவரங்கம் வழியாகுந் திருவரங்கம் தானாகுந் திருவரங்கம் சார்பாகுந் திருவரங்கம் தேனாகுந் திருவரங்கம் தெவிட்டாது பாழ்மனமே. 8 எங்கெங்குஞ் சங்கொலியே எங்கெங்குஞ் சக்கரமே எங்கெங்குந் தண்டுளவம் எங்கெங்குந் திருமலரே எங்கெங்கும் அரியணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 9 எங்கெங்கும் பாற்கடலே எங்கெங்கும் பாம்பணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குங் கோயில்களே எங்கெங்கும் அடியவரே எங்கெங்குந் திருப்பணியே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 10 8. திருவரங்கம் வாக்குமனங் கடந்தொளிரும் வாழ்த்தரிய தெய்வம் வழிஇயற்கை வடிவாகி வாழ்த்தேற்குந் தெய்வம் பாக்குலமாய்க் கலைகளெல்லாம் படர்ந்தமருந் தெய்வம் பண்ணிசையாய் எங்கெங்கும் பரந்துநிற்குந் தெய்வம் ஆக்கமெலாம் உடையதிரு அணங்ககலாத் தெய்வம் அனைத்துயிர்க்கும் அருள்புரியும் ஆனந்தத் தெய்வம் தேக்கமிர்த போதநுகர் செல்வர்தெளி தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 1 பரநாத விந்துவிலே படிந்திருக்குந் தெய்வம் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொள்ளுந் தெய்வம் உரமான நான்முகனை உந்தியளி தெய்வம் உலகுயிர்கள் அத்தனைக்கும் உறைவிடமாந் தெய்வம் வரமாகி வரமளிக்கும் வண்மையுடைத் தெய்வம் மதங்கடொறும் விளையாடி மதங்கடந்த தெய்வம் சிரமாரும் அமிர்துண்ணுஞ் சித்தருணர் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 2 நீராகி உலகீன்று நிறுத்துகின்ற தெய்வம் நித்தியமா யெங்கெங்கும் நிலவுகின்ற தெய்வம் காராகி மழைசொரிந்து காக்கின்ற தெய்வம் கதிர்க்கெல்லாம் ஒளிவழங்குங் கருநீலத் தெய்வம் நேராகி அரவெழுப்பி நிற்பவருள் தெய்வம் நிலவுபொழி அமிழ்துண்போர் நினைவிலுறை தெய்வம் சீராகி உயிர்வாழச் சிந்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 3 பத்துருவாய் கூர்ந்துநின்று பாரளிக்குந் தெய்வம் பத்தருளப் பாசமறப் பாவைகொண்ட தெய்வம் புத்தமிர்த போகமெலாம் புணர்விக்குந் தெய்வம் பூந்துளப மாலையசை புயந்திரண்ட தெய்வம் சத்தியமாய்ச் சின்மயமாய்ச் சாந்தமளி தெய்வம் சார்ந்தவர்தம் நெஞ்சினிலே தலைசாய்க்குந் தெய்வம் சித்தருளத் தேனெனவே தித்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 4 மண்ணார்ந்த கோசலத்தில் மருவிவந்த தெய்வம் மரகதக்குன் றெனவளர்ந்து மனங்கவர்ந்த தெய்வம் பண்ணார்ந்த சீதைமொழி பருகியநற் றெய்வம் பற்றறுத்த முனிவரெலாம் பணிந்துமகிழ் தெய்வம் கண்ணார்ந்த தனிமுடியைக் கணந்துறந்த தெய்வம் கானவனைத் தம்பியெனக் கருணைசெய்த தெய்வம் திண்ணார்ந்த தோள்வலிக்குத் தெவ்வர்தொழுந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 5 மலையெல்லாம் வனமெல்லாம் மலர்ந்தஅடித் தெய்வம் மாரீச மான்மாயம் மாய்த்தொழித்த தெய்வம் கலைவல்ல மாருதிக்குக் காலளித்த தெய்வம் கருணைதந்தை யெனஅவர்பால் கருத்துவைத்த தெய்வம் அலைகடலைத் தாண்டியன்றே அறம்வளர்த்த தெய்வம் அரக்கர்குல வேரறுத்த ஆண்டகைமைத் தெய்வம் சிலையெல்லாம் வணங்குமுயர் சிலைதாங்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 6 மன்பதையின் துயரொழிக்க மதுரைவந்த தெய்வம் மதலையாய்த் தவழ்ந்துலகை மலர்வித்த தெய்வம் அன்புநவ நீதமளி ஆயர்தவத் தெய்வம் அழகுதிரள் கருமேனி அமிர்தொழுகுந் தெய்வம் மென்புலத்திற் கோக்களொடு விளையாடுந் தெய்வம் வேதாந்த முடியினிலே விளங்குமொரு தெய்வம் தென்புலவர் பாட்டினிலே திகழ்கின்ற தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 7 சீதமலர் புன்னைநின்று செகம்விரிக்குந் தெய்வம் செவ்வாயிற் குழலூதிச் செகநிறுத்துந் தெய்வம் மாதவரே மங்கையராய் மகிழ்ந்துண்ணுந் தெய்வம் மற்றவரும் பெண்ணாக மனங்கொள்ளுந் தெய்வம் கீதையினைத் தேரிருந்து கிளர்ந்துரைக்குந் தெய்வம் கேட்டவர்க்குங் கற்றவர்க்குங் கேடழிக்குந் தெய்வம் தீதறுக்கப் பாரதப்போர் செய்வித்த தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 8 களியானை இடரழித்துக் காத்தளித்த தெய்வம் கான்முளைக்கு நலம்புரியக் கம்பம்வந்த தெய்வம் அளியாலுந் திருமகளால் அழகுவிரி தெய்வம் அகங்காரக் கொடுங்கிழங்கை அறுத்தருளுந் தெய்வம் வளையாழி வில்கதையும் வாளேந்துந் தெய்வம் மலரடியில் வண்டெனவாழ் மாண்புடையார் தெய்வம் தெளிவான மலருளத்தில் தெரிதுயில்செய் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 9 காவிரியாய்க் கொள்ளிடமாய்க் கருணைபொழி தெய்வம் கருநீல மலையாகிக் கண்கவருந் தெய்வம் பூவிரியும் பொழிலாகிப் பொங்கிவருந் தெய்வம் பொன்மாத ரொளியினிலே பொலிவு செய்யுந் தெய்வம் பாவிரித்த ஆழ்வார்கள் பத்திவிளை தெய்வம் பற்றிநின்றோர் பற்றறுக்கும் பற்றில்லாத் தெய்வம் தேவிரியும் மதில்சூழ்ந்த திருக்கோயில் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 10 9. சீர்காழி கோசலம் எழுந்து நீலக் குளிர்பொழி கதிரே என்றும் மாசில ருளத்தில் நிற்கும் மரகத ஒளியே செல்வக் கேசவ மணியே ஆளாய் கிளரடி வணங்க வந்தேன் வாசனை கமழுந் தெய்வ வண்டமிழ்க் காழி வேந்தே. 1 சிலையெலாம் பணியுஞ் செம்மை சிலையினை ஏந்தும் ஏந்தால் கலையெலாம் பூத்த அன்னைக் கலையினில் மூழ்குந் தோளா அலைவெலாந் தீர்க்க வேண்டி அணைந்தனன் அடியில் வீழ்ந்தேன் விலையிலா மணியே ஆளாய் விரிபொழில் காழி வேந்தே. 2 சின்னவள் சொன்ன மாற்றஞ் செவியினில் நுழைந்த போழ்தே பொன்முடி வாழ்வை நீத்துப் புங்கவர் வாழ்வைக் கொள்ள இந்நிலந் துணிந்தார் யாரே எத்தகைத் தியாகம் அந்தோ அன்னது வேட்டு வந்தேன் அருள்புரி காழி வேந்தே. 3 மன்னவர் வாழ்வை நீத்து மகிழ்ச்சியே பொங்கக் கானம் பொன்னடி வைத்த செல்வா புந்தியில் அந்தத் தாளே துன்னினால் மலரு நெஞ்சம் தூயனே கருணை செய்யாய் நன்னயப் புலவர் பாடும் நாதனே காழி வேந்தே. 4 அன்பெனும் ஆற்றி னூடே அகமெனுந் தோணி பற்றி இன்புற நின்ற வேடற் கீந்தசெம் பசுமைக் காட்சி என்றுகொல் பெறுவேன் ஏழை என்புநெக் குருகு நேய நன்மையில் புலைய னானேன் ஞானமார் காழி வேந்தே. 5 வேட்டுவர் அரக்கர் புட்கள் விலங்குகள் குரக்கி னங்கள் பாட்டவிர் மேனி கண்டு பகைமைநீத் தன்பால் வாழக் காட்டினில் நடந்த காலென் கருத்தினில் நடக்குங் கொல்லோ கோட்டமில் உளத்தார் சொல்லுங் குருமணி காழி வேந்தே. 6 அரக்கனை அன்று கொன்றாய் அணங்கினைக் காக்க வேண்டி இரக்கமே உருவாக் கொண்ட இராகவா ஏழை யேனைப் புரக்கவும் நினைப்ப தென்றோ புண்ணிய மூர்த்தி பொய்கை சுரக்குநன் செய்கள் சூழ்ந்த சுந்தரக் காழி வேந்தே. 7 ஆவியாம் அணங்கு தன்னை ஐம்புல அரக்கர் கோமான் மேவியே பற்றிக் கொண்டான் மேலவ அவனைக் கொன்று பாவியை மீட்ப துண்டோ பரமனே இராம நாதா காவிய மயில்களாடுங் கழனிசூழ் காழி வேந்தே. 8 வில்லினைத் தாங்குங் கோலம் விளங்கிழை தொடருங் கோலம் நல்லியற் பின்னோன் கோலம் நடந்தருள் கோலங் கண்டால் வல்வினை இரிந்து போகும் மனமலர் கோயி லாகும் கல்வியாய் நிறைந்த சோலைக் கற்பகக் காழி வேந்தே. 9 நங்கையின் உரிமை நாடி நாமநீர் கடந்த வீரா பங்கயம் பற்றி நாயேன் பாவையர் உரிமை நாட்டச் சிங்கமே பணிசெய் கின்றேன் திருவுள வைப்பு வேண்டும் பைந்துணர் வாகை பூண்ட பரமனே காழி வேந்தே. 10 10. தில்லை ஆண்டவனே அறமில்லா அரசியலில் விழுந்தொழிந்தேன் பாண்டவரின் வழிவளர்த்த பரமசுக அரசியலே மீண்டுமுயிர் பெறஅருளாய் மேதினியிற் கோவிந்தா நீண்டவுல களந்துறங்கும் நிழற்றில்லைப் பெருமாளே. 1 பாழான அரசியலே பார்மீது பரவிவந்தால் வாழாமல் உயிர்மடியும் வல்லிதிரு மகிழ்மார்பா சூழாமல் தகர்த்தருளாய் சுந்தரகோ விந்தாஇங் கேழான இசைவளரும் எழிற்றில்லைப் பெருமாளே. 2 கற்றவர்க ளெனும்பெயரால் காசினியி லரசியலார் செற்றமிகு புலிகரடி சிங்கமெனத் திரிகின்றார் உற்றுவருந் துயரவரால் உரைகளுக்கு மெட்டாதே சிற்றுயிருக் கிரங்கியருள் தில்லையமர் பெருமாளே. 3 கல்லூரி என்றென்றே கட்டுகின்றார் பழிபாவம் மல்லூரு நூல்களிலே மதிவளர்ச்சி பெறுகின்றார் அல்லூரு நெறியொழிக்க ஆணையென்று பிறந்திடுமோ செல்லூரும் பொழிலுடுத்த சீர்தில்லைப் பெருமாளே. 4 கொள்ளையிலுங் கொலையினிலும் கொடும்புரட்சி வெறியினிலும் உள்ளமுறும் அரசியலால் உலகுபடும் பாடென்னே தெள்ளுதமிழ்த் திருமாலே தேய்த்தருளாய் சிறுநெறியைக் கள்ளவிழு மலர்ச்சோலைக் கடிதில்லைப் பெருமாளே. 5 தேர்தலெனும் ஓரரக்கன் செகமனைத்தும் வயப்படுத்தி ஆர்கலியில் அழுத்துகின்றான் அலறுகிறார் அறிஞரெலாம் தேர்தனிலே கீதை சொன்ன திருவருளைச் செலுத்தாயோ பார்தனிலே அருள்கொழிக்கும் பழந்தில்லைப் பெருமாளே. 6 கல்வியெலாம் போருக்கே கருத்தெல்லாம் போருக்கே செல்வமெலாம் போருக்கே செய்கையெலாம் போருக்கே பல்லுலகும் போருக்கே பாழாகுங் காலமிது தொல்லையழித் தமைதியருள் துலங்குதில்லைப் பெருமாளே.7 ஒருயிரே எல்லாமென் றுரைத்தமொழி வாழ்வினிலே சீருறவே செயுங்கல்வி செவ்வரசு தொழின்மலர ஆருயிரே அருள்புரியாய் அய்யாவே கோவிந்தா ஓருருவே உண்மையொளி ஓங்குதில்லைப் பெருமாளே. 8 கல்வியிலும் வாழ்க்கையிலுங் கடைப்பட்ட தன்னலமே மல்குநெறி பரவிவரின் மாநிலமே கொலைக்களமாம் தொல்புவியைக் காத்தருளுந் தொழிலுடையாய் அருள்பொழியாய் புல்குபர நலம்வளரப் பொழிற்றில்லைப் பெருமாளே. 9 கொலையேவும் அரசியலைக் குலைத்தருளி எங்கெங்கும் நலமேவும் அரசியலே நண்ணஅருள் செய்யாயோ புலமேவு புள்ளினங்கள் புண்டரீகா எனப்புகன்றே அலையேறும் புனல்மூழ்கும் அணிதில்லைப் பெருமாளே. 10 11. திருக்கோவலூர் வெம்மையில் விழுந்த வாழ்வு விடுதலை பெறுமோ என்றே இம்மையில் ஏங்கி நின்றேன் எய்ப்பினில் வைப்பே என்னச் செம்மலே அடியில் சிந்தை சென்றது சேர வந்தேன் பொய்ம்மையில் புலவர் சூழ்ந்த புண்ணியக் கோவல் வாழ்வே. 1 உலகினை அளந்த மாலென் றுன்னிய போதே ஐயா கலகமுள் நெஞ்சம் மாறுங் காட்சியை என்னே சொல்வேன் திலகமே நெஞ்சி லென்றுஞ் சேவடி நின்றால் வெம்மை விலகியே பொன்று மன்றோ வித்தகக் கோவல் வாழ்வே. 2 விண்ணொளிப் பசுமை ஓங்கி விரிபொழிற் பசுமை நல்ல கண்ணமைப் பசுமை எங்குங் கடற்பயிர்ப் பசுமை யாழின் பண்ணளிப் பசுமை யெல்லாம் பாவியின் வெம்மை சாய்க்கும் தண்ணளிப் பசுமை யென்றே சார்ந்தனன் கோவல் வாழ்வே. 3 பச்சையே எண்ணி எண்ணிப் பாவியேன் பரிந்து வந்தேன் இச்சையுள் வேறொன் றில்லை ஈசனே அறிவா யுண்மை உச்சியிற் காலை வைத்தே ஒருமொழி உரையாய் கொல்லோ செக்கைக ளாலுஞ் சோலைச் செல்வமே கோவல் வாழ்வே. 4 வான்விடு நீலஞ் சூழ மதிவிடு நிலவு வீழ மீன்விடு நகைக ளுந்த மென்விடு தென்றல் வீசத் தேன்விடு பாண்மு ழங்கத் திரைவிடு முத்தஞ் சிந்த ஊன்விடு நிலையி லுள்ளேன் உரைவிடு கோவல் வாழ்வே. 5 எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவாய் நன்று புண்ணினிற் கோலிட் டாற்போல் புந்தியுள் நொந்து வந்தேன் கண்ணினிற் காணா யேனுங் கருத்தினில் நினைய லாமே பெண்ணையின் அலைகள் பாடும் பெருந்துறைக் கோவல் வாழ்வே. 6 பண்ணிய பாவ மெல்லாம் பரமனே அறிவாய் நன்று எண்ணியே உருகு கின்றேன் இதயமும் நைந்த தையா பெண்ணையின் வெள்ளங் கண்டேன் பேரருள் வெள்ளங் காணேன் புண்ணியந் திரண்ட செல்வப் புனிதனே கோவல் வாழ்வே. 7 உலகெலாம் நின்னில் ஒன்றும் உண்மையை உணர்த்த வேண்டி உலகெலாம் அளந்த மாயா உன்னையார் அளக்க வல்லார் அலகிலாப் பாவ நெஞ்சை அருளினால் அளந்தால் உய்வேன் சிலைசெறி பெண்ணை சூழுந் தெய்வமே கோவல் வாழ்வே. 8 கண்ணென வாழ்ந்த நண்பர் கடிமணம் பூண்டி நின்று விண்ணுயர் சிகரங் கண்டு வித்தகா விமலா என்றே எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவா யன்றே தண்ணருள் செய்யாய் இன்று தமிழ்வளர் கோவல் வாழ்வே. 9 குற்றமே செய்து செய்து குறைபல உடைய னானேன் செற்றமே சிறிது மில்லாத் தெய்வமே பொறையே அன்பே உற்றனன் அடியில் வீழ்ந்தேன் உறுபிழை பொறுத்தே யாளாய் நற்றவர் நெஞ்சில் வாழும் நாதனே கோவல் வாழ்வே. 10 12. திருக்காஞ்சி பந்தாடக் குழுமிவரும் பள்ளியிளம் பிள்ளைகளே! பைந்தாரன் திருமார்பன் பவமறுக்கும் ஒருவீரன் வந்தார்க்கு வரமளிக்கும் வரதனெழுந் தருள்காஞ்சி நந்தாத மணிக்கோயில் நண்ணும்வழி சொல்லீரே. 1 குடமேந்திக் குலவிவருங் கோதில்பிணாப் பிள்ளைகளே! தடமேந்து மலர்க்கினியன் தண்டுளவம் அசைமார்பன் வடமேந்துங் காஞ்சியிலே வரதனெழுந் தருள்கோயில் இடமேந்தும் வழியுணர்த்த எழின்முத்தஞ் சிந்தீரே. 2 மட்டவிழு மலர்பறிக்க மரத்தடியிற் செறிந்தீண்டி வட்டமிடும் வளைக்கரத்து மதிநல்லீர்! வளர்காஞ்சிக் கட்டழகன் பொலமுடியன் கருணைபுரி கரிவரதன் எட்டுடையன் திருக்கோயில் ஏகும்வழி இதுவேயோ. 3 ஆலரசு வேம்பினங்காள்! அழகுதிருக் காஞ்சியிலே சீலருளும் வரதனிடம் செல்வழியோ இதுவென்று கோலமவிர் கரநீட்டிக் குறிப்பிடவே குலவுகின்றீர் பாலிமண லெனப்பொலிந்து பல்லாண்டு வாழ்வீரே. 4 புற்றரவப் பெரியீரே! புன்மையனைக் கண்டவுடன் செற்றமறு பணம்விரித்துச் செல்கின்றீர் விரைந்துமுனே கற்றவரெண் காஞ்சியிலே கரிவரதன் கோயில்வழி பற்றிநட எனவுணர்த்தும் பான்மைதனை மறவேனே. 5 செங்கமலத் தேனருந்திச் சிறுமீன்கள் விளையாடும் பொங்குமடுக் காட்சிவிட்டீர் புரிவுடனே பறக்கின்றீர் சங்குடைய வரதனமர் தனிக்கோயில் வழியிதுவென் றிங்குணர்த்தும் புள்ளரசீர்! இருங்கருணைத் திறமென்னே. 6 மணியொலிக்கப் புல்மேய்ந்து மகிழ்பசுவின் நிரைதோன்றித் தணிவளிக்கக் கோபாலா வெனத்தாழச் சிலகன்று கணமருண்டு துள்ளிவழிக் கனைத்தோடக் கவர்கண்ணில் அணிமையென வரதனுள அருட்கோயில் பூத்ததுவே. 7 செங்கொண்டை சாய்ந்தசையச் சீக்கின்ற சேவல்களே! பைங்குஞ்சு புடைசூழப் பார்க்கின்ற கோழிகளே! அங்கண்ணன் வரதனென்றே அகங்குளிரக் கூவீரே இங்குள்ளங் கவர்வரதன் என்றென்றே கூவிரே. 8 மயிலனங்காள்! ஆடீரே மால்வரத னென்றென்றே குயிலினங்காள்! கூவீரே குருவரத னென்றென்றே பயிலளிசெவ் வாய்க்கிளிகாள்! பாடீரே வரதனென்றே உயிரளிக்க வருவானோ உயர்காஞ்சிப் பதியானே. 9 திருக்குளமெல் லலையெடுப்பச் சிறுதென்றற் காற்றெறிப்பத் தருக்கணிரை நிழல்பரப்பத் தனிமைநிலை உடன்கூட அருக்கனொளி மறைந்ததுவே அகல்நிலவும் எழுந்ததுவே பெருக்கமுத வரதாவோ பேயனையாள் வரதாவோ! 10 13. திருவல்லிக்கேணி அறங்குலை நாளில் அவதரித் துலகுக் கருள்புரி ஐயனீ என்றே நிறங்கிளர் மேனி நிலவிலே மூழ்கும் நினைவொடு வந்தனன் அடியேன் மறங்கிளை மனத்தை மாற்றியே ஆளாய் மாநிலத் தேர்விடு கோலத் திறங்குல வல்லிக் கேணியிற் சிறக்குஞ் செல்வமே கல்விநா யகனே. 1 மதுரையில் முளைத்த மரகத மலையே மன்னுயிர் மகிழ்நிழல் வனமே விதுரனுக் கருள்செய் வெள்ளமே வயிற்றில் மேதினி தாங்கிய விசும்பே குதிரைகள் புனைதேர்க் குலவிய கோலக் குறியுணர் திருவெனக் கருளாய் சதுரனே அல்லிக் கேணியிற் சான்ற தந்தையே சிந்தைநா யகனே. 2 தொன்மையில் மிகுந்த துவரையை யாண்ட சோதியே சுடர்விளக் கொளியே பன்மையில் மயங்கும் பாரினில் ஒருமைப் பார்வையே பெறுநிலை விழைந்தேன் நன்மையே புரிய நாதமாந் தேரை நடத்திய வள்ளலே அருளாய் மென்மையு ளல்லிக் கேணியில் மேவும் மேலவா சீலநா யகனே. 3 அலைகடற் றுயிலும் அற்புதக் காட்சி ஆனிரை சூழ்தரு காட்சி மலைகுடை பிடிக்கும் மாண்புறு காட்சி மரத்தினிற் குழலிசை காட்சி சிலைகளி னிடையே தேர்விடுங் காட்சி சிறியனேற் கருள்செய மனமோ கலைவள ரல்லிக் கேணியி லமர்ந்த கண்ணனே வண்ணநா யகனே. 4 அம்புகள் பொழியும் அமரிடைத் தேரில் அருச்சுனற் கருளினை உண்மை அம்புவி யதனில் அகத்தினைச் செலுத்த அமைதியே எங்கணும் ஓங்க ஐம்புலன் அடங்க ஆருயிர் மகிழ அருள்புரி ஆண்டகை அரசே வம்புறை அல்லிக் கேணியில் வாழும் வள்ளலே உள்ளநா யகனே. 5 பண்டைநாள் நிகழ்ந்த பாரதப் போரே பாவியேன் மனத்தினில் நிகழக் கண்டவா றென்னே கண்ணநின் கீதை காதிலே கேட்டவா றென்னே தொண்டனேன் நெஞ்சிற் றுணையடி கிளந்து தோன்றுமா றுளதுகொல் அறியேன் அண்டனே அல்லிக் கேணியி லமர்ந்த ஆதியே சோதிநா யகனே. 6 புன்னையில் நின்று புங்கவா இசைத்த புல்குழல் ஓசையை மடுத்த மன்னுயிர் வகைகள் மரமென நின்று மகிழ்ச்சியில் மலர்ந்தன வன்றே சின்னவ னந்தச் செவ்வொலி பருகச் சிந்தைகொண் டணைந்தனன் அருளே நன்னய அல்லிக் கேணியில் நண்ணும் நாதனே ஆதிநா யகனே. 7 உலகெலாம் நீயாய் ஓங்கிய உருவை ஓதியோ காணுதல் இயலும்! பலகலை விடுத்துப் பார்த்தசா ரதியாய்ப் படிந்தநின் வடிவினிற் படிந்தால் இலகிடும் அருளென் றெண்ணியே வந்தேன் ஈசனே அடியனை யாளாய் திலகமே அல்லிக் கேணியிற் றிகழும் தெய்வமே மெய்ம்மைநா யகனே. 8 செயற்கையில் விழுந்த சிந்தையர்க் கெட்டாச் செல்வமே உன்னடி அடைந்தேன் இயற்கையின் உயிரே ஏழிசை அமுதே எந்தையே எளியனை ஆளாய் பயிற்சியில் மிகுந்தோர் பாவனை அறியேன் பாவியேன் பார்த்தசா ரதியே அயர்ச்சியி லல்லிக் கேணியி லமர்ந்த அத்தனே பத்திநா யகனே. 9 தேரினி லிருந்த தெய்வமே கீதை செப்பிய தேசிகா உன்னை நேரினிற் காணும் நிலைமையு முண்டோ நீசனேற் கருள்செய லுண்டோ பாரினில் வேறு களைகணு மில்லேன் பார்த்தருள் பார்த்தசா ரதியே சீரிய வல்லிக் கேணியிற் சிறக்குஞ் சித்தனே முத்திநா யகனே. 10 14. திருவல்லிக்கேணி பள்ளியிலே யான்படித்த பருவமதி லுன்றன் பசுங்கோயில் வலம்வருவேன் பத்திவிளை வாலே தெள்ளறிவோ தீவினையோ சிதைந்ததந்தப் பத்தி திறமறியேன் சிறுமதியேன் செய்வதொன்று மறியேன் உள்ளநிலை பண்படவோ ஒருவழியுங் காணேன் உன்னடியி லுடும்பாகி உருகியழு கின்றேன் கள்ளவிழு மலர்த்தருவே கரியமணிக் குன்றே கருணையல்லிக் கேணிமகிழ் கடவுளருள் புரிவே. 1 கடலாடி வலம்வந்து கைதொழுவேன் கோயில் கமலமுகங் கண்டுகண்டு கசிந்துருகி நிற்பேன் படலாடும் அரசியலால் பத்திமனம் போச்சே பரமநின்றன் அரசியலைப் பரப்பமனங் கொண்டேன் உடலாடும் வேளையுறின் உளமாடு மன்றோ உளமாடி வாழஇங்கே ஒருகணமுந் தரியேன் மடலாடும் பாவையர்தம் மனம்பெறினோ உய்வேன் மலரல்லிக் கேணிமகிழ் மணவாளா அருளே. 2 கோலமிகு கோயில்வலங் கொண்டுவந்த போது கோதிலுரு நின்றுநின்று குவிந்தமனப் பண்பால் காலையிலே விழித்தவுடன் கண்ணிலுறு மன்றோ காயாம்பூ மேனியனே கமலவிழி மணியே சோலையிலே விளையாடிச் சோர்ந்தமரும் வேளை தூயவுரு எதிருலவுந் தோற்றமுறு மன்றோ வேலையொலி வேதவொலி விரவுமல்லிக் கேணி வித்தகனே அந்நிலையும் வீழ்ந்ததருள் செய்யே. 3 அந்நாளில் கோயில்புகுந் தகங்கொண்ட உருவம் ஆழ்வார்க ளந்தமிழில் அமர்ந்திருக்கும் அழகு பின்னாளில் புலனாகும் பேறுபெற்றே னருளால் பிரியாம லியற்கையிலே பின்னிநிற்கும் பெற்றி இந்நாளில் இசையரசே இனிதுணரச் செய்தாய் எல்லாநின் னருட்செயலே ஏழைஎன்ன அறிவேன் எந்நாளி லொளிகாண்பேன் ஏகாந்தம் பெறுவேன் எழிலல்லிக் கேணிவளர் எந்தைபெரு மானே. 4 வான்பொழியு நீலமதில் வளர்ந்துநிற்கு நெஞ்சம் மழைபொழியுங் கருமையிலே மகிழ்ந்துநிற்கு நெஞ்சம் கான்பொழியும் பசுமையிலே கலந்துநிற்கு நெஞ்சம் கடல்பொழியும் வண்ணமதில் களித்துநிற்கு நெஞ்சம் தேன்பொழியு மேனியென்றே திருமருவு மார்பா தெளிந்தொன்றின் சாந்தமெனுந் தெய்வநிலை யுறுமே ஊன்பொழியும் உடலுளமும் ஒளியமுதம் பெறுமே ஓங்கல்லிக் கேணியமர் உத்தமச்சின் மயமே. 5 கண்கவரும் புன்னைநிழல் காலடிவைத் துலவிக் கனிவாயிற் குழல்பொருத்திக் கானஞ்செய் கருணை எண்கவர ஏங்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் இசையமுதம் உண்டவர்கள் இனியஅணங் கானார் புண்கவரு மனமுடையேன் புந்திநினை யாயோ போரிடைத்தேர் விடுத்தன்று புனிதமறை சொன்னாய் விண்கவரு மாடஞ்சூழ் வீதிமலி செல்வம் மேவுமல்லிக் கேணிவளர் வேதாந்தப் பொருளே. 6 கரும்போர்வை அணிகழற்றிக் கறையில்லாப் போர்வை கருணையினா லெனக்களித்தாய் கறைப்படுத்தி விட்டேன் இரும்போடு மனக்குறும்பால் இழைத்தகறை போக்கி எழில்வெண்மை யாக்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் அரும்போடும் இளம்பருவம் அருளிஎன்னை ஆளாய் அருச்சுனற்குக் கீதைசொன்ன அறவாழி அரசே சுரும்போது மலர்ப்புன்னைச் சோலைநிழல் செய்யும் தூயஅல்லிக் கேணிமகிழ் சுந்தரநா யகனே. 7 அழுக்ககற்றி வெள்ளையுடை அணிந்துகொண்டேன் ஐயா அன்புளத்தால் மாலையிட்டால் அருள்வழிநின் றுய்வேன் வழுக்கிவிழும் வழிமறையும் வாழ்வுபெற லாகும் மதங்களெலாம் மறைகளெலாம் வழுத்துகின்ற மணியே இழுக்குடைய நெறிசெலுத்த எந்தைதிரு வுளமோ எழிலுடையுங் கறைப்பட்டால் ஏழைஎன்ன செய்வேன் செழிக்குமலர்ப் புன்னைநிழல் சீரடிவைத் துலவும் திருவல்லிக் கேணியமர் செல்வப் பெருமாளே. 8 புன்னையிலே கனிவாயிற் பூங்குழல்வைத் தூதப் புங்கவரும் மங்கையராய்ப் புத்தமிர்தம் உண்டார் அன்னையினுந் தயையுடையாய் ஆணுருவில் யானும் அணங்குமனம் பெற்றுவந்தேன் அரிமாலை யணிந்தால் மன்னருளில் திளைத்துநிற்பேன் மயக்கநெறி வீழேன் மதங்கடொறும் ஒளிசெய்யும் மாதவனே என்றுங் கன்னிமொழித் தமிழ்க்கவியில் கருத்துடைய அரைசே கருணையல்லிக் கேணியமர் கரியபெரு மாளே. 9 எண்ணாத எண்ணமெலாம் எண்ணியெண்ணி ஏங்கி ஏழைபடுந் துன்பமெலாம் எந்தையறி வாயே பெண்ணாகி முனிவரெல்லாம் பெற்றுவிட்டார் பேறு பெண்ணினத்தி லெனைச்சேர்த்தால் பேறெல்லாம் பெறுவேன் கண்ணாரக் காணவுனைக் கருத்தார நினைத்துக் கங்குல்பக லுருகுகின்றேன் கமலமுகக் கண்ணா விண்ணாடும் மண்ணாடும் வேதமொழி யாலே விளம்புமல்லிக் கேணியுள வித்தகமெய்ப் பொருளே. 10 15. திருவல்லிக்கேணி உலக மெல்லா மொருமையிலே ஒன்றின் துயருக் கிடனுண்டோ கலகப் பன்மை மனம்வீழ்ந்தால் கருணை யுலகொன் றேவிளங்கும் அலகில் ஒளியே அன்புருவே அந்த நிலையை அருள்புரியாய் இலகும் அல்லிக் கேணியமர் எந்தை பார்த்த சாரதியே 1 சாதி மதங்கள் தலையெடுத்தே தரணி யழிக்கும் நிலையறிவாய் நீதி நெறிகள் குன்றிவரல் நிமலா அறிவாய் இடர்களையாய் ஆதி யந்த மில்லாத அரசே அன்பே ஆண்டகையே சோதி அல்லிக் கேணிமகிழ் சுகமே பார்த்த சாரதியே. 2 பெண்க ளுரிமை பாழாச்சே பேயா யுலகம் அலைவாச்சே கண்க ளிரண்டி லொன்றற்றால் கருமம் நன்கு நடைபெறுமோ மண்கண் கூர வந்தவனே மகளிர் வாழ்வு தந்தவனே பண்ணின் மொழியார் துயர்களையாய் பழமைக் கேணிப் பெருவாழ்வே. 3 மண்ணைப் பொன்னை மங்கையரை மாயை யென்றே சிலர்கூடிக் கண்ணில் நூல்கள் எழுதிவைத்தார் கருணை யற்ற மனத்தாலே மண்ணில் பொன்னில் மங்கையரில் மாயா நின்றன் ஒளியிலையோ பண்ணில் நெறிகள் அழியஅருள் பரமா அல்லிக் கேணியனே. 4 உலக வாழ்வு உனையுணர்த்தும் உயர்ந்த கருவி யெனுமுண்மை இலகிப் பரவ வேண்டுகின்றேன் இனிய கருணை நெறிவாழ அலகி லழகு மருமார்பா அன்பை வளர்க்கும் அருள்மனமே திலக மென்னத் திகழ்சோதி தெய்வ அல்லிக் கேணியனே. 5 உலகம் நீயென் றுயிர்நீயென் றுவந்த வாழ்வில் தலைப்பட்டால் கலக மெல்லாம் பாழாகிக் கனிவே எங்குங் கால்கொள்ளும் விலகுந் துறவுக் கிடனுண்டோ வேந்தே இயற்கை நெறியோம்பாய் நிலவுங் கதிருங் கரங்கொண்ட நிமலா அல்லிக் கேணியனே. 6 வாழ்வை நின்றன் வழிநிறுத்தின் வலிய மாயை என்செய்யும் பாழ்பட் டொழியும் படராதே பழைய வினையும் நில்லாதே தாழ்வும் உயர்வும் அற்றழியும் சமமே எங்கும் இனிதோங்கும் காழ்வில் பொருளே அருள்புரிவாய் கருணை அல்லிக் கேணியனே. 7 சின்ன வயதில் நினைத்தவெலாம் சிறக்க அளித்தாய் பெரியோனே பின்னே அந்தப் பேறிழந்தேன் பேயேன் பிழையை யுன்னியுன்னி முன்னே நின்று முறையிட்டு முதல்வா என்றே அழுகின்றேன் என்னே செய்வேன் எனைஆளாய் எழிலா ரல்லிக் கேணியனே. 8 அரவில் துயிலும் அன்புடைமை அறிந்தே அணைந்தேன் திருவடியைக் கரவு மலிந்த அரசியலில் கலந்தே கெட்டேன் ஐயாவே இரவும் பகலு மில்லாத இடத்தில் நின்றுன் அரசியலைப் பரவச் செய்ய அருள்புரிவாய் பரமா அல்லிக் கேணியனே. 9 வெண்மை மதியில் இளஞ்சேயில் விரிந்த மலரில் நறும்பாட்டில் பெண்மை அமிழ்தில் அறவோரில் பெருமை பிறங்க வைத்தனையோ நண்ணும் பொழுதே நின்னினைவு நயமா யெழுத லென்னேயோ கண்ணே மணியே கமலமலர்க் கண்ணா அல்லிக் கேணியனே. 10 16. திருமலை வாழி ஏழு மலையென்றும் வாழி ஏழு மேகங்கள் வாழி ஏழு நிறவழகு வாழி ஏழு நாள்முறையே வாழி ஏழு இசைவகையே வாழி ஏழு மூலங்கள் வாழி ஏழு முனிவரர்கள் வாழி ஏழு மலைவாழி. 1 வெல்க ஏழு மலையொளியே வெல்க ஏழு மலைநாதம் வெல்க ஏழு மலைக்கொடியே வெல்க ஏழு மலைவாகை வெல்க ஏழு மலைவீரம் வெல்க ஏழு மலைநேயம் வெல்க ஏழு மலைவளமே வெல்க ஏழு மாமலையே. 2 போற்றி ஏழு மலையடிகள் போற்றி ஏழு மலைமார்பம் போற்றி ஏழு மலைத்தோள்கள் போற்றி ஏழு மலைவிழிகள் போற்றி ஏழு மலைவளையே போற்றி ஏழு மலையாழி போற்றி ஏழு மலைவில்லும் போற்றி ஏழு மலைப்புகழே. 3 சேரும் ஏழு மலைகாணச் சேரும் ஏழு மலைநண்ணச் சேரும் ஏழு மலைவணங்கச் சேரும் ஏழு மலைவாழ்த்தச் சேரும் ஏழு மலைஎண்ணச் சேரும் ஏழு மலைசுற்றச் சேரும் ஏழு மலைவாழச் சேரும் ஏழு செகத்தீரே. 4 ஊனும் உயிரும் ஏழுமலை உணவுஞ் சார்பும் ஏழுமலை கானும் மலையும் ஏழுமலை கடலும் வயலும் ஏழுமலை வானும் வளியும் ஏழுமலை மதியுங் கதிரும் ஏழுமலை கோனுங் குடியும் ஏழுமலை கூறாய் ஏழு மலையென்றே. 5 எண்ணும் எழுத்தும் ஏழுமலை எல்லாக் கலையும் ஏழுமலை பண்ணும் இசையும் ஏழுமலை பாட்டும் பொருளும் ஏழுமலை கண்ணும் மணியும் ஏழுமலை கருத்தும் ஒளியும் ஏழுமலை நண்ணும் நண்ணும் ஏழுமலை நாதன் ஏழு மலையென்றே. 6 மண்ணும் பரலுங் கூர்ங்குண்டும் வலிய அறையும் வளருமலை தண்மைப் புல்லும் செடிகொடியும் தழைக்குங் காவும் வளருமலை நுண்மைப் புழுவும் நந்தரவும் நுழையும் உடும்பும் வளருமலை வண்டும் புறவும் மயில்குயிலும் வளரும் ஏழு மலைதானே. 7 ஏனங் கரடி புலியானை எருதா குரங்கும் வளருமலை ஊனர் தேனர் உரவோர்கள் உறவோர் உம்பர் வளருமலை கானர் சித்தர் பத்தரொடு காணர் புத்தர் வளருமலை மான யோகர் ஞானியர்கள் வளரும் ஏழு மலைதானே. 8 மூல ஒலியாய் முழங்குமலை முதலின் எழுத்தாய் முகிழ்க்குமலை காலிற் பாம்பாய் எழும்புமலை கனக ஒளியாய் எரியுமலை நீல நிறங்கால் நிமலமலை நெஞ்சில் அமுதம் பொழியுமலை சீல உருவாய்த் திகழுமலை சிந்தை செய்யாய் திருமலையே. 9 சிரமே வணங்காய் ஏழுமலை செந்நா வழுத்தாய் ஏழுமலை கரமே கூப்பாய் ஏழுமலை கண்ணே பாராய் ஏழுமலை உரமே சூழாய் ஏழுமலை உணர்வே ஒன்றாய் ஏழுமலை வரமே நல்கும் ஏழுமலை வாழாய் ஏழு மலையென்றே. 10 17. திருமலை பனிவரையை முடிகொண்ட பரதமெனுந் திருநாட்டில் கனிமொழியின் எல்லையிலே காவல்புரி கற்பகமே இனிமைவிருந் துணவிழைந்தேன் எழுமுயற்சிக் கிடனிலையே சனிநகர வாழ்வதற்குத் தடைபுரிதல் கண்டருளே. 1 என்னபாவஞ் செய்தேனோ எவ்வுயிரை ஒறுத்தேனோ தொன்மலையில் வீற்றிருக்குந் துளவமணி பெருமாளே உன்னருளைப் பெறவேண்டி உழைக்கஎழும் முயற்சியெலாம் சின்னநகர் தகைந்திடுதல் திருவுள்ளம் அறியாதோ. 2 அருவிநிறை வேங்கடத்தில் அமர்ந்தருளும் பெருமாளே திருவடியே நினைந்திருந்தால் சிந்தனையில் சாந்தமுறும் கருவினிலே உயிரழிக்குங் கருணையிலா யமபடர்சூழ் பெருமையிலா நகர்வாழ்வைப் பெயர்த்தருள வேண்டுவனே. 3 சாக்கடையும் மலஅறையும் தார்ததும்பும் பாதைகளும் மாக்கிளரும் பொழிலணியா மாளிகையும் பிணிப்படையும் பாக்களிலே உனையுணரும் பகுத்தறிவை ஓம்பாவே தேக்கமுத முனிவர்தொழுந் திருமலையின் மெய்ப்பயனே. 4 சிற்றறையில் பலமாந்தர் சேர்ந்துறங்கிச் சாகின்றார் கற்றலிலா நகர்வாழ்வைக் கண்டுமனம் நொந்துடைந்தேன் செற்றமெழுப் பவ்வாழ்வைச் சிதைத்தருள வேண்டுகின்றேன் உற்றதுயர் களைஇறையே ஓங்குமலைப் பெருவாழ்வே. 5 அருகனொளி படராத அறைநிறைந்த மாடிகளில் உருக்களென எலும்புலவும் உயிர்ப்பில்லா நகரங்கள் திருக்குலவு மணிமார்பா திருவடியைச் சிந்திக்கும் பெருக்களிக்கும் வாழ்வழித்துப் பேயாக்கல் நலமேயோ. 6 மின்சார விளக்கொளியில் மின்னுகின்ற பாவையர்கள் பொன்சார மிழந்திருமும் புகைமாடி நிறைநகரில் உன்சாரம் படிவதெங்ஙன் உயிர்ப்பருளும் மலைக்கரசே தென்சாரம் படிசோலைத் திருநகர வாழ்வருளே. 7 மெய்யழிக்கும் பள்ளிகளும் மின்விளக்கு நாடகமும் பொய்வளர்க்கும் மன்றுகளும் பொருந்தாத உணவிலமும் வெய்யமலச் சிக்களித்து வேதனைசெய் நகரிடையே ஐயஉனைச் சிந்திக்கும் அமைதிநிலை கூடிடுமோ. 8 அன்பழிக்குஞ் சட்டதிட்டம் அலைக்கின்ற நகரங்கள் துன்பளிக்கும் எரிநரகாய்த் துயருழற்று மிந்நாளில் இன்பநெறி கடைப்பிடித்தல் எளியவருக் கியலுங்கொல் மன்பதையைக் காத்தருள மலைகொண்ட பெருமாளே. 9 ஏழுமலை பணிதலையும் ஏழுமலை சொலும்வாயும் ஏழுமலை நினைமனமும் எழும்வாழ்வைத் தகைந்துநிற்கும் பாழுநகர் படவருளாய் பார்த்தனுக்குக் கீதைசொன்ன தோழனென உனையடைந்தேன் தூயதிரு மலைக்கொழுந்தே.10 18. திருமலை ஏழுமலை ஏழுமலை என்றெண்ணி வந்தேன் ஏழுமலை ஏழுமலை என்றடியார் முழங்கும் ஏழுமலை ஒலியினிலே ஈடுபட்டு நின்றேன் ஏழுமலை அதிசயத்தை என்னவென்று சொல்வேன் ஏழுமலை கழகமென எனையாண்ட தம்மா இளமையிலே அக்கழகம் எளியன்பயின் றிருந்தால் ஏழுமலை வடிவான எந்தைபெரு மானே இப்பிறவிப் பேறுபெற்றே ஏழையுயிர் உயுமே. 1 ஏழுமலை ஏழுமலை என்றுகதிர் பொழிய ஏழுமலை ஏழுமலை என்றுவிசும் பார்ப்ப ஏழுமலை ஏழுமலை என்றுவளி உலவ ஏழுமலை ஏழுமலை என்றுகனல் மூள ஏழுமலை ஏழுமலை என்றுபுனல் விம்ம ஏழுமலை ஏழுமலை என்றுநிலந் தாங்க ஏழுமலை ஏழுமலை என்றுயிர்கள் வாழ ஏழுமலை அருள்புரியும் இனிமையுணர் வேனோ. 2 ஏழுமலை ஏழுமலை எனப்பணியாய் தலையே ஏழுமலை ஏழுமலை எனநோக்காய் விழியே ஏழுமலை ஏழுமலை எனமுரலாய் மூக்கே ஏழுமலை ஏழுமலை எனஇசையாய் நாவே ஏழுமலை ஏழுமலை எனக்கேளாய் செவியே ஏழுமலை ஏழுமலை எனநினையாய் நெஞ்சே ஏழுமலை ஏழுமலை எனக்கூப்பாய் கையே ஏழுமலை ஏழுமலை எனச்சூழாய் காலே. 3 பரிதிமதி ஒளிபொழியப் படர்காற்று வீசப் பளிங்கருவி முழவொலிக்கப் பாம்புமயி லாடக் கரிகரடி புலிமான்கள் காட்டாக்கள் சூழ்ந்து கலந்துகலந் தொன்றிமனங் கசிந்துகசிந் துருக வரிசிறைகள் யாழ்முழக்க வான்பறவை பாட மரக்கரங்கள் மலர்தூவ மாந்தர்தொழ அருளும் அரிதிருமால் நாரணனே அணங்குவளர் மார்பா அடியடைந்தேன் களைகணிலை ஆண்டருளாய் அரைசே. 4 வான்பசுமை தவழ்பொழிலின் வளர்பசுமை போர்த்த மலைமுடியில் பசுமைவிரி மணிக்கொழுந்தே அமுதே கோன்பசுமை நாணாளுங் குலைந்துகுலைந் திறுகக் குடிப்பசுமை வழிவழியே குன்றிவிட்ட தந்தோ ஊன்பசுமை உளப்பசுமை உயிர்களிழந் தாலோ உலகிலுன்றன் இயற்கைநெறி ஓங்கஇட முண்டோ தேன்பசுமைத் துளவமணி தெய்வத்திரு மார்பா சீவருய்யப் பசுமையருள் செல்வப்பெரு மாளே. 5 மரத்தடியில் வீற்றிருந்தாய் மதிலெடுத்துச் சில்லோர் மாளிகைகள் கோபுரங்கள் மடங்கள்பல வகுத்தார் சிரத்தையுடன் அன்பர்குழு சேர்ந்தஇட மெல்லாம் சிறுமைமுழை ஆயினவே செயற்கைவெம்மை என்னே வரத்தையருள் இயற்கைநெறி வளர்வதெங்ஙன் ஐயா மந்திவிளை யாடிமகிழ் மரஞ்செறிந்த மலையில் கரத்தினிலே ஆழிகொண்டு காக்கின்ற அரசே காசினியோர் உய்யும்வழி கருணைபுரி யாயோ. 6 சாதியிலாச் சந்நிதியில் சாதிநுழை வாச்சே சட்டமிலா முன்னிலையில் சட்டம்புக லாச்சே நீதிநிலை திருமுன்னே நீதிவிழ லாச்சே நிறைசிறந்த இடமெல்லாம் நிறைசிதைய லாச்சே ஆதிநெறி மீண்டுமிங்கே ஆக்கம்பெற லுண்டோ ஆழ்வார்தம் தமிழ்மறையை ஆலயமாக் கொண்ட சோதிமலை முடியரசே சுதந்திரமே நிலவும் தூயவெளி ஒளியினிலே சூழஅருள் செய்யே. 7 இயற்கையிறை நீயென்னும் எண்ணமிலார் சூழ்ந்தே எத்தனையோ செயற்கைவினை இயற்றுகிறா ரந்தோ பயிற்சியிலார் புன்பொருளைப் பரப்புகின்றார் முன்னே பாராதி அண்டமெலாம் பரமநின தலவோ முயற்சியுள முனிவர்வழி முன்னாளில் வளர்ந்த முத்திநெறி வளம்பெறவே முதற்பொருளே அருளாய் குயிற்குரலும் மயில்நடமும் குரங்குவிளை யாட்டும் கோபாலா எனுமுழக்குங் குலவுமலைக் கொழுந்தே. 8 ஏழுமலை மீதிருக்கும் ஏழிசையின் பயனே ஏழைமுகம் பாராயோ எத்தனைநாட் செல்லும் வாழுமலை என்றுவந்தேன் வாழ்வுபெற வேண்டி வழியறியேன் துறையறியேன் வாழ்த்தும்வகை யறியேன் ஆழநினைந் தழவறியேன் அவனியிலேன் பிறந்தேன் ஆண்டகையே என்னசெய்வேன் ஆதரிப்பா ரிலையே வேழவினக் களிகண்டு வெருவுகின்றேன் ஐயா விசயனுக்குக் கீதைசொன்ன வேதாந்தப் பொருளே. 9 நற்பிறவி எனக்களித்தாய் நல்லுடலுந் தந்தாய் நானிலத்தில் வாழ்ந்துனது நளினமலர் மேவச் சிற்பரம வீணுரையால் சிதைத்துவிட்டேன் உடலைச் சீருடலை மீண்டும்பெறச் சித்தநெறி அறியேன் எற்புருகத் தவங்கிடக்க என்னுடலந் தாங்கா எங்குமுள இறையோனே என்றனிலை யுணர்வாய் வெற்பினிலே மங்கைமகிழ் வேந்தனென வந்தேன் வேதனைகள் தீர்ந்துய்ய வேங்கடவா அருளே. 10 19. நாமாவளி நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 1 நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 2 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 3 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 4 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 5 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 6 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 7 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 8 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 9 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 10 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 11 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 12 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 13 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 14 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 15 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 16 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 17 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 18 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 19 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 20 மனத்துக் கெட்டா மாதவனே மரணந் தவிர்ப்பாய் கேசவனே 21 எங்கு முள்ள இறையோனே என்னை ஆளாய் மறையோனே 22 உருவா யருவா யுளபொருளே உவந்தே குருவாய் வந்தருளே 23 எதற்கும் எதற்கும் காரணனே அதற்கும் அதற்கும் பூரணனே 24 வைகுந்த வாசா வாவா வண்மைத் திருவொடு வாவா 25 கமலத் திருவொடு வாவா கருடக் கொடியொடு வாவா 26 அடியவர் சூழ வாவா அணைந்தருள் புரிய வாவா. 27 பொன்னொளி மின்னும் முடியோனே பொருளென வந்தேன் அடியேனே 28 கமலக் கண்ணால் கருணைபொழி களைத்தே வந்தேன் இருளையொழி. 29 மலர்மகள் மார்பா வந்தேனே மனத்திற் பொழியாய் செந்தேனே. 30 சக்கரம் நோயை அழிப்பதுவே சங்கொலி சாவை ஒழிப்பதுவே. 31 நீலமேனி நிலவினிலே நித்தம் மூழ்கு நலமினியே. 32 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 33 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 34 ஒளியுறு திருவடி உருகாயோ ஒழுகுந் தேனைப் பருகாயோ 35 செந்தேன் பொழியுந் திருவடியே சிந்தையிற் சேர்ந்தால் போமிடியே 36 திருவடி சேர நினையாயோ செகத்தில் வாழ்வை வனையாயோ 37 கோசலம் வந்த கோமானே கோதண்ட மேந்திய பூமானே 38 நங்கை யுரிமை காத்தவனே நான்மறை போற்றும் மூத்தவனே 39 சோதர நேயப் பிறப்பிடமே சுந்தர மேனி அறப்படமே 40 மதுரையி லெழுந்த வான்மணியே மாதவர்க் கருளிய மேன்மணியே 41 தேரிடைப் பொலிந்த திருக்காட்சி தெய்வ மறைசொல் அருட்காட்சி 42 ஆக்க ளிடையே நின்றனையே ஆளாய் ஆளாய் என்றனையே 43 புன்னை முழங்குங் குழலோசை புந்தியி லுணர எனக்காசை. 44 கீதை குழலாய்க் கேட்ட லென்றோ கீழோன் வினைகள் வீட்ட லென்றோ 45 இனியகுழலைக் கேட்பதுவே இரவும் பகலும் வேட்பதுவே 46 பிழையைப் பொறுக்கும் பெரியோனே பிழைபல செய்தேன் சிறியேனே 47 கண்ணன் திருப்புகழ் பாடுவமே காதல் இன்பம் ஆடுவமே 48 கண்ணன் திருவடி சூடுவமே கருணை மழையில் ஆடுவமே. 49 கடலை மலையைப் பாருங்கள் கண்ணன் காட்சி ஓருங்கள் 50 கரிய மேகங் காணுங்கள் கண்ணன் வடிவம் பேணுங்கள். 51 சோலைக் கலையைச் சூழுங்கள் சோதி அலையில் வீழுங்கள் 52 எல்லாம் கண்ணன் திருக்கோலம் என்றுணர் அன்பே உருக்கோலும். 53 ஆழ்வார் தமிழில் ஆழ்வோமே அன்பில் என்றும் வாழ்வோமே. 54 20. வாழ்த்து திருமகள் வாழ்க வாழ்க தெய்வஐம் படைகள் வாழ்க தெருளளி துளவம் வாழ்க செழுங்கொடி வாழ்க வாழ்க கருநிறம் வாழ்க வாழ்க கருணைசேர் அடியார் வாழ்க திருமலை முதலா வுள்ள திருப்பதி பலவும் வாழ்க. திரு.வி.கலியாண சுந்தரனார் பாடிய திருமால் அருள் வேட்டல் முற்றிற்று  முன்னுரை இக்கால உலகம் எப்படி இருக்கிறது? எங்கணும் என்ன பேச்சு? விளக்கம் வேண்டுகொல்! வீடுகளில் வேற்றுமை - ஊர்களிற் பிரிவு - நாடுகளிற் பிணக்கு - யாண்டும் உறுமல் - கறுவல்! இவையெல்லாம் உருண்டு திரண்டு உலகைப் போர்க்களமாக்கிவிட்டன. ஐந்து கண்டமும் போரிலே மூழ்கியுள்ளன. இந்நிலைமை எப்பொழு தேனும் நேர்ந்ததுண்டோ? விலங்குச் சண்டையிலாதல் அறக்கடவுளுக்கு இடமிருக் கும். இக்கால மனிதச் சண்டையில் அறக்கடவுளுக்கு இட முண்டோ? உலகம் விரிந்தது; பரந்தது; பெரியது; மிகப் பெரி யது. பெரிய உலகில் அறக்கடவுள் தலைசாய்ப்பதற்கு ஒரு சிறு இடமுமில்லை! மன்பதை அலமருகிறது; நடுக்குறுகிறது; குண்டு குண்டு என்று கூக்குரலிடுகிறது; அங்கும் இங்கும் ஓடுகிறது; அலை கிறது; மடிகிறது. இந்நிலையில் புது உலகம் அறிஞரால் பேசப் படுகிறது. மன்பதை கேடுற்று அழிவதற்குக் காரணம் என்னை? ஒவ்வோர் உலகினர் ஒவ்வொன்று கூறுவர். அவற்றைத் திரட்டிப் பார்த்தால், அவை யாவும் ஒன்றில் அடங்குதல் காணலாம். அவ்வொன்று, மக்கள் கூட்டம் இயற்கை இறையை மறந்து, தன்னலம் என்னுஞ் செயற்கைப் பேய்க்கு இரையா யினமை என்று சுருங்கச் சொல்லலாம். மக்கள் கூட்டம் இயற்கை இறைவழி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்படி ஒழுகுகிறதா? ஒழுகியிருப்பின், உலகில் சாம்ராஜ்யமே முளைத்திராது; பொதுமை அறமே முகிழ்த் திருக்கும். சாம்ராஜ்ய முறை மாறவேண்டுமானால் மனிதரிடத் துள்ள குறைபாடுகள் நீங்குதல் வேண்டும்; சில குறைபாடுகளா தல் நீங்குதல் வேண்டும். இங்கே, சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அது, தன்னலத்துக்கு முதலாக உள்ள ஆசைப்பேய். ஆசைப்பேய் இப்பொழுது என்ன செய்கிறது? உயிர்களை அலைக்கிறது; உலகைப் பெரும் போர்க் களமாக்கி யிருக்கிறது; அரக்கரும் அஞ்சும் நிணக்களமாக்கி யிருக்கிறது. இப்போர், முடிவில் ஆசைப்பேயை ஓரளவிலாதல் அடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆசைப் பேய் அடங்க அடங்க ஒருவிதப் புது உலகம் அவ்வவ்வளவில் அரும்பிக்கொண்டே போகும். புதுமை உலகம் யாண்டிருந்து பிறக்கும்? வெறும் பாழிலிருந்தா பிறக்கும்? பழமைத் தாயினிடமிருந்து புதுமைச் சேய் பிறக்கும்? பழமை எது? இயற்கை இறைவழி. இவ்வழியி னின்றும் இக்கால உலகம் வழுக்கி வீழ்ந்துள்ளது. வீழ்ச்சியைப் போக்கவே இயற்கை இறை விரைந்து நிற்கிறது. இஃது அருளுடைய இயற்கை இறையின் கடமை. ஆதலின், இயற்கை இறையின் அருளால் ஒருவிதச் செம்மைப் புது உலகம் அரும்பியே தீரும். இறை ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே. இறை நெறியே சத் மார்க்கம் என்பது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - இறை; அதை அடைதற்குறிய மார்க்கம் இயற்கை. இயற்கைவழி இறையை உணரல் வேண்டுமாதலின், அவ்வழி இயற்கை - இறைவழி என்று சொல்லப்படுகிறது. இயற்கை - இறை வழியாவது சத்மார்க்கம் - சன்மார்க்கம். சன்மார்க்கம் உலகில் பல பெயர் பெற்றிருக்கிறது. பெயர்ப்பன்மையை நீக்கிப் பொருளை நோக்கினால் ஒருமையே புலனாகும். பெயர்ப் பன்மையில் மக்கள் மயக்குற்றமையால், அவர்கட்குப் பொதுமைப்பொருள் புலனாகாதொழிந்தது. அதனால் போராட்டம் மக்களிடைப் புகலாயிற்று. பொதுமையே சமரசம் என்பது. சமரசமே சன்மார்க்கம். எங்கே சமரசம் உண்டோ அங்கே சன்மார்க்கம் உண்டு. எங்கே சன்மார்க்கம் இருக்குமோ அங்கே சமரசம் இருக்கும். இரண் டுக்கும் தொடர்புண்மையால் சமரசம் சன்மார்க்கம் என்றும், சன்மார்க்கம் சமரசம் என்றும் இரண்டும் பொதுளச் சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றன. சுருங்கிய முறையில் சமரச சன்மார்க்கத்தை மார்க்கமென்றுங் கூறலாம். மார்க்கம் என்பதும், சன்மார்க்கம் என்பதும், சமரசம் என்பதும், சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே. சன்மார்க்கம் என்ன அறிவுறுத்துகிறது? ஈண்டைக்கு விரிவுரை வேண்டுவதில்லை. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டும் உள்ளது. அதை அடைய, மார்க்கம் என்னும் இயற்கையுடன் இயைந்து வாழ்தல் வேண்டும் என்று சன் மார்க்க போதமும் திறவும் என்றொரு நூல் என்னால் யாக்கப் பட்டுள்ளது. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டுமுள்ளது என்னுங் கொள்கை, மன்பதையில் ஆக்கம் பெறப்பெற, அதன்கண் சகோதரநேயம் ஓங்கி வளர்தல் ஒருதலை. சகோதர நேயத்தின் முன் ஆசைப்பேய் இடம் பெறுமோ? இடம் பெறுதல் அரிது. சன்மார்க்கம் ஆசைப் பேயை அடக்கவல்லது என்று சொல்வது மிகையாகாதென்க. சன்மார்க்கம் இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. சத் என்னுஞ் செம்பொருள் உணர்வை மக்கள் என்று பெற்றார்களோ அன்றோ சன்மார்க்கமும் அவர்களிடை விளங்கியிருக்கும். சத் அநாதி; சன்மார்க்கமும் அநாதி. யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற திருமொழி புற நானூற்றில் ஒரு மூலையில் ஒளிர்வது. இத்திருமொழியி லுள்ள பொதுமைச் செல்வம், முதல்முதல் என் உள்ளத்தை கவர்ந்தது. இப்பொதுமை, உலகின் நானாபக்கங்களிலும் அவ்வப்போது தோன்றிய பெரியோர் வாயிலாகப் பல மொழியில் வெளிவந்த பொது மறைகளிலெல்லாம் மிளர்தலை எனக்கு விளங்கச் செய்தது. வேறு சில கூட்டுறவுகளும் பொதுமை உணர்வை என்பால் வளர்த்தன. பொதுமை என்னுஞ் சமரசம் - சன்மார்க்கம் - உலகில் பல பெயர்களாக வழங்கப்படுகிறது. அவை: ஜைனம், பௌத்தம், சைவம், வைணவம், வேதாந்தம், கிறிதுவம், இலாம் முதலி யன. இந்நாளில் பொது நெறியை மாடம் பிளவட்கி என்ற சமரச சன்மார்க்க ஞானியார் தியோசபி என்றனர். மக்கள் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி விழும்போ தெல்லாம், பெரியோர் - தீர்க்க தரிசிகள் - நபிமார் - தோன்றிக் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற முறையில் சன்மார்க்கத்தை அறிவுறுத்திச் செல்வது வழக்கம். அதனால் அடையும் மாறு தலைப் புது உலகமலர்ச்சி என்று மக்கள் கொள்வதும் வழக்கம். மெய்யறிவு பெற்றவர்களுக்குப் பழமையும் புதுமையும் ஒன் றாகவே விளங்கும். இந்நாளில் புது உலக மலர்ச்சி பேசப்படுகிறது. அப்புது உலகம் சமரச சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதா யிருத்தல் வேண்டும். சமரச சன்மார்க்கமே புது உலக ஆக்கத் துக்குரிய அவதாரமென்று யான் கருதுகிறேன். இவ்வேளையில் சமரச சன்மார்க்கத்தொண்டு ஆங்காங்கே நிகழப்பெறுதல் சிறப்பு. பல துறையில் உழன்று பலவிதப் பணிசெய்த எளியேனுக்கு இற்றை ஞான்று சன்மார்க்கப் பணியிலே வேட்கை மீக்கூர்ந்து செல்கிறது. இதை ஆண்டவன் அருள் என்றே யான் கொள் கிறேன். சன்மார்க்கத் தொண்டுகள் பலதிறத்தன. அவற்றுள் ஒன்று நூற்றொண்டு. இத்தொண்டிலும் என்னைத் திருவருள் உந்தியது. என்னால் இயற்றப்பெற்ற நூல்களிற் பெரும்பான்மை யன சமரச சன்மார்க்கக் கொள்கைக்கு அரண் செய்வனவாம். பாட்டுத் தொண்டில் யான் பெரும் பொழுது போக்குவ தில்லை. ஓய்ந்த நேரங்களில் மிகச் சிறு பொழுது யான் பாட்டுத் தோண்டில் தலைப்படுவதுண்டு. பொதுமைப் பாடல்கள் சில என்னால் யாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப, பொதுமை வேட்டல் என்னுந் தலைப்பு அணியப்பட்டது. தலைப்பு நூலின் உள்ளுரையை நன்கு விளங்கச் செய்யும். விளக்கம் வேண்டுவதில்லை. பொதுமை வேட்டல் புது உலக மலர்ச்சிக்கு வேண்டற் பாலது. இப் பொதுமை வேட்டல் அப்புது உலக ஆக்கத்துக்கு ஒரு மூலையிலாதல் ஓரளவிலாதல் துணை செய்யுமென்று நம்புகிறேன். மலர்க புது உலகம்; மலர்க பொதுவுலகம்; மலர்க அற உலகம்; வாழ்க மார்க்கம்; வாழ்க சங்கம்; வாழ்க தொண்டு. இந்நூல், உலகப் போரிடை - போர் முழக்கம் சென்னை நகரைப் பலவழியிலும் கலங்கச்செய்த வேளையில் - காகிதப் பஞ்சம் நெருக்கிய நேரத்தில் வெளிவந்தது. பிழை பொறுக்க. இராயப்பேட்டை 10-1-1942 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் 1. தெய்வ நிச்சயம் தெய்வமெனும் ஒருமொழியைச் செப்பக் கேட்டேன் செறிகலையில் மொழிப்பொருளைச் சேரக் கற்றேன் மெய்யெனவே அதையுணர மேலுஞ் சென்றேன் மேதினியில் பலதுறைகள் மேவிப் பார்த்தேன் பொய்யென்ற முடிவினுக்குப் போகுங் காலைப் புத்தமிர்தப் பெரியர்சிலர் போதங் கண்டேன் உய்யுநெறி உழைப்பாலே உறுமென் றெண்ணி உனையுணரும் பணியேற்றேன் ஒருமைத் தேவே. 1 அண்டமெலாம் இயங்கருமை ஆய்ந்து நோக்கின் அத்த! நின துண்மையிலே ஐயந் தோன்றா எண்டிசையுங் கடந்திலங்கும் இறைவ! உன்னை எல்லையுற்ற பொருளளவில் எடுத்தல் நன்றோ கண்டநிலை கொண்டுநின தகண்டந் தேர்ந்தேன் கண்ணுக்குப் புலனாகாக் கருத்துந் தேர்ந்தேன் தொண்டினிலே ஈடுபட்டுத் தோயத் தோயத் துணைவருமென் றறிந்துவந்தேன் தூய ஒன்றே. 2 தத்துவமெல் லாங்கடந்த தனித்த ஒன்றே தடைஎல்லைக் கட்டில்லாத் தனிமைத் தேவே தத்துவத்துள் உழன்றுழன்று தடவிப் பார்த்தும் தடைஎல்லைக் கட்டுள்ளே தடவிப் பார்த்தும் சத்தியனே உனக்கின்மை சாற்ற லாமோ தடைகடக்கும் வழிநாடல் சால்பே யாகும் பித்தருக்குங் குருடருக்கும் பிறங்கா எல்லாம் பேருலகில் இல்லையெனப் பேசல் நன்றோ. 3 வாக்குமனங் கடந்துநிற்கும் வள்ளால் உன்னை வாக்குடையேன் மனமுடையேன் வாழ்த்தல் எங்ஙன் போக்குவர வில்லாத பொருளே உன்னைப் போக்குடையேன் வரவுடையேன் போற்றல் எங்ஙன் யாக்கையிலே புகுந்துள்ள யானென் செய்வேன் யாதொன்று பற்றினதன் இயல்பாய் நிற்பேன் தாக்குடையேன் கரணத்தால் சார வந்தேன் தக்கவழி காட்டாயோ தனிமைத் தேவே. 4 என்னறிவுக் கெட்டாத இறையே உன்னை ஏத்துநெறி காணாமல் எண்ணி எண்ணிக் கன்னெஞ்சும் புண்ணாகிக் கரையுங் காலை, கவலற்க; இயற்கையுடல் கடவுட் குண்டு நின்றொழுக என்னுமொலி நெஞ்சிற் றோன்றி நிறைமகிழ்ச்சி யூட்டியதும் நின்றன் அன்பே நன்றுடையாய் இருநிலையாய் ஞான மூர்த்தி நாயகனே அருட்பெருக்கு நவிலற் பாற்றோ. 5 எட்டாத ஒருநிலையை எண்ண வேண்டேன் எனக்கினிய இயற்கைநிலை ஏன்று கொண்டேன் முட்டாத வழிகண்டேன் முதல்வா வெய்ய மூர்க்கநெறி இனியுழலேன் முன்னி முன்னிக் கட்டாத வீட்டினிலே கருத்து வைத்தேன் காணாத காட்சியெலாங் காண்பேன் சொல்ல ஒட்டாத நிலையெல்லாம் உணர்வேன் எல்லாம் உன்னருளே எனைஆளும் உண்மைத் தேவே. 6 இறையவனே இயற்கையுடல் என்றே கொண்டாய் என்றோநீ அன்றியற்கை இரண்டும் ஒன்றே முறைமுறையே பிரித்தெடுத்தல் முடியா தப்பா மூத்தவரும் இம்முடிவே முழங்கிச் சென்றார் நிறைவாகி இயற்கையிலே நிலவுங் கோலம் நெஞ்சினிலே பதிவாகி நிலைக்க, நோயும் நறைமூப்பும் சாக்காடும் நாச மாக, நலியாத இளமைநலம் நண்ணச் செய்யே. 7 இயற்கைவழி நின்றொழுக இன்பந் தோன்ற எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இரக்கங் கூடச் செயற்கையிலே கருத்திருத்துஞ் சித்தஞ் சாகச் சீவவதை நினையாத சிந்தை சேர முயற்சியுயிர் ஈடேற மூல மாகி முந்துதுணை புரிந்தருளும் முதல்வா நல்ல பயிற்சி மிகவழிகாட்டிப் பண்பு செய்வாய் பரங்கருணைப் பெருங்கடலே பான்மைத் தேவே 8 ஒன்றான இறையேஉன் இயற்கைக் கோலம் ஓவியமாய்க் காவியமாய் உதவ வேண்டி நன்றாகச் செய்தமைத்தார் ஞானச் செல்வர் ஞாலத்தில் அந்நுட்பம் நாளும் நாளும் பொன்றாது பொலிந்திவரின் புகழே யோங்கும் பொன்றிவரின் சிற்பமெலாம் பொறியாம் கல்லாம் கொன்றாடும் விலங்காகிக் குலைவர் மக்கள் குறித்தருளாய் கலைவளரக் கோதில் கோவே. 9 மலையாகிக் காடாகி வயலாய் ஆறாய் மணல்வெளியாய்க் கடலாகி மதியாய் எல்லாய்க் கலையாகி எஞ்ஞான்றுங் காட்சி நல்கும் கருணையிலே நாடோறுங் கலந்து வாழ்ந்தும் சலியாத உனக்கின்மை சாற்றல் நன்றோ தரைநடந்தும் அதைமறப்போர் தலத்தி லுண்டு தலையான வான்பொருளே தண்மை நீங்காச் சத்தியமே நித்தியமே சாந்தத் தேவே. 10 2. தெய்வ முழக்கம் உலகமெலாங் கடந்துகடந் தொளிருமொரு தெய்வம் உலகுதொறுங் கலந்துகலந் தோங்குவிக்குந் தெய்வம் இலகுசரா சரமெல்லாம் இயக்கி நிற்குந் தெய்வம் இன்பறிவாய் அன்பருளாய் என்றுமுள தெய்வம் அலகிலொளி ஒலியாகி அகிலஞ்செய் தெய்வம் அருங்கலையில் நடம்புரியும் ஆனந்தத் தெய்வம் பலசமய ஒருமையிலே பயன்விளைக்குந் தெய்வம் பழம்பொருட்கும் பழம்பொருளாம் பழந்தெய்வம் பாரே. 1 அங்கிங்கென் னாதபடி எங்குமுள தெய்வம் அளவைகளுக் கெட்டாத அகண்டிதமாந் தெய்வம் பொங்கியற்கை உடற்குயிராய்ப் பொலிகின்ற தெய்வம் பொழிந்தருளை உயிர்களுக்குப் புகலாகுந் தெய்வம் தங்கியற்கை நெறியினிலே தாண்டவஞ்செய் தெய்வம் சாகாத வரமளிக்குஞ் சால்புடைய தெய்வம் புங்கவர்தம் நெஞ்சினிலே புகுந்திருக்குந் தெய்வம் புதுப்பொருட்கும் புதுப்பொருளாம் புதுத்தெய்வம் போற்றே. 2 மண்புனல்தீ வளிவெளியாய் மன்னிநிற்குந் தெய்வம் மதிகதிராய் மன்னுயிராய் மகிழ்விக்குந் தெய்வம் கண்முதலாம் உறுப்புயிர்க்குக் கதிக்கின்ற தெய்வம் கருத்தினிலே கோயில்கொண்டு காக்கின்ற தெய்வம் எண்ணெழுத்தாய் ஏழிசையாய் இசைப்பயனாந் தெய்வம் எம்மறையுங் குருவழியே இயம்புகின்ற தெய்வம் உண்மைஅறி வானந்த உருவான தெய்வம் ஒருநெறியாம் பொதுமையிலே ஓங்குதெய்வம் ஒன்றே. 3 விண்ணாடு நீலஒளி விரிக்கின்ற தெய்வம் வெண்கோளாய்ப் பிறகோளாய் மின்னுகின்ற தெய்வம் தண்ணாரும் மதியாகி நிலவுபொழி தெய்வம் தனிச்சுடராய் வெயிலுமிழும் சத்துடைய தெய்வம் மண்ணாகி மலையாகி மனங்கவருந் தெய்வம் மரமாகிக் காடாகி வளர்பசுமைத் தெய்வம் பண்ணாத பாட்டாறாய்ப் படர்ந்தோடுந் தெய்வம் பரவையாய் அலைகொழிக்கும் பரதெய்வம் பாடே. 4 நீரருந்து மானிறத்தில் நிலவுகின்ற தெய்வம் நிறைஅமைதி ஆனினத்தில் நிறுத்தியுள்ள தெய்வம் காரமருங் குயில்குரலில் கலந்தினிக்குந் தெய்வம் கானமயில் நடத்தினிலே காட்சியளி தெய்வம் வாரமிகு பைங்கிளியாய் வாய்மலருந் தெய்வம் வானப்புள் பாட்டொலியாய் வாழுகின்ற தெய்வம் நாரலரில் வண்டிசையாய் நாதஞ்செய் தெய்வம் நல்லரவாய்ப் படமெடுத்து நண்ணுதெய்வம் நாடே. 5 இயற்கை அன்னை தனைக்கலந்தே இன்பளிக்குந் தெய்வம் ஏகாந்த இனிமையிலே இயங்குகின்ற தெய்வம் செயற்கையெலாம் ஓடுங்கிடத்தில் திகழுகின்ற தெய்வம் சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தனையாந் தெய்வம் உயிர்க்கெல்லாம் உயிர்ப்பாகி ஊக்கம்விளை தெய்வம் ஒழுக்கத்தில் உயர்ந்தோருக் கொழுங்கான தெய்வம் பயிற்சியினால் மனங்குவிந்தால் பார்வையளி தெய்வம் பாராதி அண்டமெலாம் பரவுதெய்வம் பாரே. 6 ஆதியின்றி அந்தமின்றி அறுதியற்ற தெய்வம் அகலமொடு நீளமற்ற அளப்பரிய தெய்வம் சாதிமதக் கட்டுகளில் சாராத தெய்வம் சமயப்போர்ச் சாத்திரத்தின் சார்பில்லாத் தெய்வம் நீதியிலே விளங்குகின்ற நின்மலமாந் தெய்வம் நித்தியமாய்ச் சத்தியமாய் நிறைந்துள்ள தெய்வம் சோதியெலாம் விளங்கும்அருட் சோதியெனுந் தெய்வம் சுதந்திரத்தின் சுதந்திரமாஞ் சுத்ததெய்வம் சூழே. 7 அறிவினிலே உணர்வோருக் கறிவாகுந் தெய்வம் அன்பினிலே தெளிவோருக் கன்பாகுந் தெய்வம் அறியாமைச் செயற்கழுதால் அணைந்திரங்குந் தெய்வம் அன்பிலர்க்கும் அன்பூட்ட ஆர்வங்கொள் தெய்வம் செறிஉயிர்க்கு நலஞ்செயவே சீவிக்குந் தெய்வம் சிந்தனையில் தேனெனவே தித்திக்குந் தெய்வம் வெறிமலர்வாய்ப் பெண்ணொளியில் விளங்குகின்ற தெய்வம் விண்ணுலகும் மண்ணுலகும் விளம்புதெய்வம் மேவே. 8 அண்டமெலாம் அடுக்கடுக்கா அமையவைத்த தெய்வம் அவைஇயங்க ஓயாமல் ஆற்றலளி தெய்வம் பிண்டமெலாம் ஒழுங்குபெறப் பிறப்பிக்குந் தெய்வம் பிறக்கும்உயிர் அத்தனைக்கும் பேரருள்செய் தெய்வம் தண்டனையே அறியாத தயையுடைய தெய்வம் தாயினிலும் பரிவுடைய தனிக்கருணைத் தெய்வம் தொண்டர்படை உயிர்ப்பாகச் சூழுகின்ற தெய்வம் சூதுபகை கொலையற்ற தூயதெய்வம் சொல்லே. 9 கருவினிலே பிறவாது கருவளிக்குந் தெய்வம் கரணமின்றி உயிர்களுக்குக் கரணம்அமை தெய்வம் கருதுமன மின்றியெலாங் கருதுகின்ற தெய்வம் கண்களின்றி எதையெதையுங் காண்கின்ற தெய்வம் உருவின்றி எங்கெங்கும் உலவுகின்ற தெய்வம் ஓதலின்றி மறையெல்லாம் ஓதுவிக்குந் தெய்வம் குருவினுளத் திலங்கியுண்மை குறித்தருளுந் தெய்வம் குறைவில்லா நிறைவான கோதில்தெய்வங் கூறே. 10 3. தனிமைத் தெய்வம் மண்கடந்து புனல் கடந்து தீக்கடந்து வளிகடந்து விண்கடந்து மதிகடந்து வெயில்கடந்து மற்றுமுள ஒண்சுடரெல் லாங்கடந்தே ஒளிவழங்கும் பெரும்பிழம்பின் கண்கடந்து நிற்குமொன்றே கருதுவதெவ் வாறுனையே. 1 அண்டபகி ரண்டமெலாம் அடுக்கடுக்கா ஆய்ந்தாலும் அண்டஒணா தகன்றகன்றே அப்பாலுக் கப்பாலாய்த் துண்டஅணு வுக்கணுவாய்ச் சூழணுவுக் கிப்பாலாய் மண்டியொளி ரகண்டிதமே வாழ்த்தலுனை எப்படியோ. 2 பெரிதுக்கும் பெரிதாகிச் சிறிதுக்குஞ் சிறிதாகும் பெரியவனே சிறியவனே எனப்பேச்சும் பேச்செல்லாம் அரியஉனை அறியும்வழி அறிவுறுத்துங் கருவிகளோ தெரிவழியும் உண்டுகொலோ சிற்பரமே மெய்ப்பொருளே. 3 விழிகளுக்கு மெட்டவிலை செவிகளுக்கு மெட்டவிலை மொழிகளுக்கு மெட்டவிலை முனைமனத்துக் கெட்டவிலை செழிஉயிர்ப்புக் கெட்டவிலை சிற்பரனே உனைநினைந்து தொழுகைக்கு வழியறியேன் தொழும்பனென்ன செய்வேனே. 4 அளவையெலாம் உனையரற்றும் அவையுன்னை அறிந்ததுண்டோ உளமறைகள் உனைஉரைக்கும் உன்னைஅவை உணர்ந்ததுண்டோ தெளிகலைகள் செப்புமுனைத் தெரிந்தனவோ உன்னிருக்கை முளைசிறியேன் உனைக்கண்டு முன்னலெங்ஙன் முன்னவனே. 5 உலகமெலாம் தோன்றி நின்றே ஒடுங்குதற்கு நிலைக்களனாய்க் கலைகளுமே பிறந்தொடுங்குங் கருவாகி நின்றநிகழ் ஒலிகடந்தும் ஆதார ஒளிகடந்தும் மேலோங்கி இலகுமிறை உனைஏழை எவ்வண்ணம் இறைஞ்சுவனே. 6 அறிவேநீ என்றுன்னை அகிலமறை முழங்கஎன்றன் அறிவாலே ஆய்ந்தலைந்தேன் அணுகிஎட்ட இயலவில்லை அறிவாலும் உனையுணரல் அரிதாதல் விளங்கியதே அறிவரிய மெய்ப்பொருளே அடையும்வழி உண்டுகொலோ. 7 குறிகாணின் கும்பிடுவன் குணம்விளங்கின் நினைந்திடுவன் நெறிதோன்றின் நடந்திடுவன் நிலம்பெற்றால் உழுதிடுவன் உறைவடைந்தால் குடிபுகுவன் ஊற்றெழுந்தால் குளித்திடுவன் பொறிவாயி லில்லாத பொருளேஎன் செய்குவனே. 8 எப்பொருளும் நீயென்றும் எங்கெங்கும் நீயென்றும் செப்புமொழி கலப்புநிலை சிறப்புறுநின் தனிமைநிலை எப்படியில் முயன்றாலும் எந்நிலைக்கும் எட்டவிலை ஒப்பரிய மெய்யறிவே ஒருவழியுங் காணேனே. 9 தனிமைநிலை அடைவாகும் தனிமுயற்சி தேவையிலை எனவெழுந்த மெய்க்குரவர் ஈரமொழி பற்றிநின்று பனிமழையீர் வான்மலையீர் பசும்பொழிலீர் கனைகடலீர் இனிகுயிலீர் நடமயிலீர் ஏழையுமை அடைந்தேனே. 10 4. இயற்கைத் தெய்வம் எப்பொருட்கும் எட்டாத இயல்புடைய ஐயா ஏழைஉயிர்க் கருள்புரிய இயற்கையுடல் கொண்டாய் அப்பநின தருளுடைமை அளவெவரே உடையார் அழகியற்கை வழியொன்றே அருள்வழியென் றுணர்ந்தேன் தப்பறுக்க அவ்வழியே சாரவந்தேன் என்றும் தயையுடையாய் பிழைபொறுத்துத் தண்மைவழங் காயோ ஒப்புரவே உள்ளொளியே உண்மைநிலைப் பேறே ஓதுகலை உணர்வினருக் குணர்வரிய ஒன்றே. 1 உடலியற்கை உயிர்நீயாய் உதவுகின்ற அருளை உன்னிஉன்னி உருகிநிற்க உளமொன்று போமோ கடலுலகில் சாதிமதக் கட்டழிந்தால் நின்றன் காட்சியளி இயற்கைநெறிக் கண்பெறலாம் நன்றே கடபடமென் றுருட்டுவெறிக் கடுவாதத் தர்க்கம் கருத்தற்ற கிரியைகளும் கட்சிகளும் போரும் நடனமிடும் நெஞ்சறியா நாயகனே என்றும் நாதாந்த மோனநிலை நண்பருணர் பொருளே. 2 மண்ணுலகும் விண்ணுலகும் மற்றுலகுங் கோயில் மதிகதிருங் கோளெல்லாம் மண்டிலமுங் கோயில் கண்கவரும் கான்மலையுங் கடல்வயலுங் கோயில் கருத்தொலியும் எழுத்துடனே கலைகளுமே கோயில் எண்ணரிய எவ்வுடலும் எவ்வுயிருங் கோயில் எந்தைநின்றன் கோயிலில்லா இடமுமுண்டோ ஐயா தண்மைபெற என்னுளத்தைக் கோயில்செய்யத் தமியேன் தவறிவிட்டேன் வான்சுடரே தயைபுரிவாய் இன்றே. 3 எங்குநிறை அகண்டிதமே எல்லையற்ற ஒன்றே ஏழைமனம் எவ்வழியில் எண்ணுவதென் றிரங்கி இங்கியற்கை உடல்கொண்டாய் எழிற்கருணைத் திறத்தை எவ்வுளத்தால் எவ்வுரையால் எங்ஙன்நான் புகழ்வேன் பொங்கியற்கைக் கூறுகளில் புந்திசெலல் வேண்டும் புன்செயற்கை நெறியுழலும் புந்திகெடல் வேண்டும் தங்குபிணி அறுக்கஎன்றுஞ் சாகாமை வேண்டும் தண்டனையே புரியாத தயைநிறைந்த அரசே. 4 ஓருருவும் ஒருபெயரும் ஒன்றுமிலா ஒன்றே உனைநினைக்கும் வழியறியேன் ஊனஉளம் உடையேன் சீருருவ இயற்கையிலே சேர்ந்தினிக்கும் நிலையைச் சிந்திக்க என்றுரைத்தார் செந்நெறியில் நின்றோர் பாருருவம் முதலாய பகருருவம் நினைந்தேன் படியுருவம் அவையெல்லாம் பாட்டொலியாய் நேர்ந்தால் ஏரொளியை உணர்ந்திடுவேன் எண்ணாமை தெளிவேன் எதற்கும்நின தருள்வேண்டும் இறங்கிஅருள் செய்யே. 5 மலையினிலே சென்றிருந்தால் மாதேவ நின்றன் மாணியற்கைக் கூறெல்லாம் மனஅமைதி செய்யும் நிலையதனை என்னென்பேன் நேர்மைஅக விளக்கே நிலமடியாய் வான்முடியாய் நீல்கடலுங் கானும் பொலிவுடையாய்ப் போர்வையுமாய்ப் பொற்கதிர்கள் விழியாய்ப் பொங்குருவத் தோற்றமெலாம் புந்திவிருந் தாகும் கலையுரைக்குங் கற்பனையில் கண்மூடி வழக்கில் கருத்திருத்திச் சாவோர்க்குக் கடவுளருள் செய்யே. 6 மலையிவர்ந்து பசுங்குடைக்கீழ் மனமொன்றி நோக்கின் வனம்பெருக்கும் பசுமைவெள்ளம் வந்திழியுங் காட்சி பலநதிகள் பாட்டணியாய்ப் பரந்தோடுங் காட்சி பச்சைமணிக் குழைவெனவே பயிர்பரப்புங் காட்சி நிலைமணல்கால் வெண்ணிலவு நிறைவழங்குங் காட்சி நீள்கடலில் கட்டுவண்ண நீலநிறக் காட்சி கலவையுற எய்தொருமைக் கவின்வனப்பு நினதாம் கருணையமு துண்பதற்குக் கடவுளருள் செய்யே. 7 மணியருவி முழவொலியாய் வண்டிசைக்கும் பாட்டாய் மயில் நடமாய் குயில்குரலாய் மலர்மணமாய் வந்தே அணைமந்த மாருதமாய் ஐம்புலனில் ஒன்றி அகஅமுதாய்ச் சுவைத்தினிக்கும் ஆனந்த மயமே பிணிபுனலில் பொய்யிசையில் பேய்நடவெங் குரலில் பெயர்மணத்தில் பொறிகாற்றில் பெற்றியிழந் தெரிந்து திணியுலகம் நரகாச்சே தெளிவுபெற இறையே தெய்வநிலை இயற்கைவழித் திருவருள்செய் இன்றே. 8 காலையிலே கடல்முளைக்கும் கனலுருண்டைப் பிழம்பே கதிர்மூழ்கி உயிர்ப்புண்டு கவலைபிணி போக மாலையிலே கிளர்ந்தெழும்பும் மணிக்கலச அமுதே வழிந்துபொழி நிலவுமழை வளமைவிளை வாகச் சோலைமல ரெனவானில் சூழ்விளக்கு நிரையே துலங்குநகை மகிழ்வாலே தொடர்புலன்க ளொன்ற ஓலமிடும் என்னிருளை ஒழித்தருளாய் ஒளியே ஒளிக்கெல்லாம் ஒளிவழங்கும் ஒளிவண்ண மலையே. 9 மங்கையர்கள் சூழலிலே மருவுகின்ற மதியே வளர்தெய்வ மனக்குழவி மழலையொழு கமுதே பொங்கிவரும் வேனிலிடைப் புகுந்தளிக்கும் விருந்தே பூந்துணர்கள் ஏந்துகரப் பொழில்பொழியு மணமே பங்கயத்துப் பாணரினம் பரிந்தனுப்பும் பண்ணே பரநாதப் பாக்கலையில் பள்ளிகொண்ட அறிவே புங்கவருண் மலர்பிலிற்றும் புதியசுவைத் தேனே பொலிவியற்கை வடிவிறையே புந்திஎழுந் தருளே. 10 5. இயற்கை நெறி இயற்கையின் னெறியே இறைவநின் னெறியென் றிசைத்தனர் குரவர்க ளெல்லாம் பயிற்சியி லதுவே பண்பென விளங்கும் பான்மையைத் தெளிந்தனன் அரசே செயற்கையின் நெறியால் தீமையே விளைதல் தெரிந்தனன் தெரிந்ததைத் தடுக்கும் முயற்சியி லிறங்க முனைந்தனன் முதலே முழுத்துணை அருளுதி விரைந்தே. 1 இயற்கையே கோயில் இயற்கையே வாழ்வு இயற்கையே யாவுமென் றறிந்தே இயற்கைநன் னெறியில் இயைந்துநின் றொழுக ஏந்தலே கொண்டனன் உறுதி செயற்கைவெந் நகரச் சிக்குறு வாழ்வு சிதைப்பதைத் தெய்வமே உணர்வாய் அயர்ச்சியில் அழுந்தும் அடியனென் செய்வேன் ஆதரித் தாண்டருள் செய்யே. 2 பசுந்தலை யாட்டி மலர்க்கர நீட்டிப் பரிவுடன் அழைமர மின்றி விசும்புயர் கோப்பு வெளிறுகள் நின்றென் விண்புடை விரிபொழில் போர்த்துத் தசும்பொளி காலுந் தழைக்குடில் வீடாம் சாந்தமே வேண்டுவன் இயற்கை வசம்பொலிந் துயிர்க்கு வளஞ்செயு மழகு வள்ளலே அருள்பொழி மழையே. 3 உலகினி லிருந்தே உடலினை யோம்பி உத்தமப் பெண்ணுடன் வாழப் பலகலை இயற்கைப் பண்புகள் விளங்கப் பரவருள் நிலைதெளி வாக அலகிலா ஒளியே அவைகளைத் துறத்தல் அன்பிலாச் செய்கையென் றுணரத் திலகமே இயற்கைச் செல்வமே செய்த திருவருட் டுணைமற வேனே. 4 நாடெலாம் வளர நல்குர வொழிய ஞானமா நெறியெலாந் தழைக்க ஆடவர் மகளிர் அன்பினில் திளைக்கும் அறநெறி ஓங்குதல் வேண்டும் வீடென ஒருவர் ஒருவரை விடுத்து வெறுப்பது வேதனை வேண்டா தேடரும் பொருளே தெய்வமே இயற்கைச் செல்வமே திருவருள் செய்யே. 5 இந்தநல் லுலகம் இயந்திரப் பேயால் இனிமையை எரிப்பதால் மைந்தர் சுந்தர மிழந்தார் தொல்லையில் படிந்தார் துயர்விளை நோயினை மணந்தார் சிந்தனை யற்றார் செயற்கையில் வீழ்ந்தார் தெய்வமே செய்வதொன் றறியார் எந்தநாள் உய்வர் எந்தையே இயற்கை எழினெறி காப்பதுன் கடனே. 6 பிறவியில் வாழ்வில் பேற்றினில் பொருளில் பெட்புறு சமத்துவம் நிறைந்தால் தறையினிற் பிணக்கும் சண்டையுஞ் சாய்ந்து சாந்தமே நிலவுமென் றறிந்து முறைமுறை தொண்டு முன்னியே ஆற்ற மூர்த்தியே முடிவிலா முதலே கறையிலா இயற்கைக் காட்சியே அன்பால் கடையனுக் குதவிய தருளே 7 காலையி லெழுந்து கடன்களை முடித்துக் காற்றிலுங் கதிரிலுங் குளித்துச் சோலையி லுலவிச் சுரக்குநீ ராடித் தொழுதுனைச் சிந்தனை செய்து சீலமும் நலமும் சேருண வருந்திச் சீர்தொழில் பிறர்க்கென ஆற்ற மேலவர் கொண்ட வேர்நெறி யோங்க வேண்டுவன் கருணைசெய் இறையே. 8 மலைகடல் போந்து மகிழ்ச்சியில் திளைத்து மனத்தமு துண்ணலும் நல்ல கலைகளில் நுழைந்தக் காட்சியைக் கண்டு கருத்தினி லுண்ணலும் என்றும் அலைதரு புலன்கள் அமைதியிற் படிவித் தருணெறிக் கரண்செயல் தெளியத் தலையடி யில்லாத் தனிமுதற் பொருளே தற்பரா நிகழ்த்திய தருளே. 9 மலைகடல் காடு மதிகதிர் முதலா மன்னிய இயற்கையின் கூறு பலபல வாறு நலங்கரு தாது பரிந்துயிர்க் குதவுதல் காட்டி உலகினில் ஒருவர் மற்றவர்க் குதவ உறைவதே இயற்கையென் றுணர்த்த இலகொளி விளக்கே இழிநெறி யுழலும் ஏழையை எடுத்தருள் இறையே. 10 6. இயற்கை வாழ்வு ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் அமர்ந்துறை செந்நெறி வாழ வீணிலே ஒருவர் ஒருவரை விலக்கி வெறுத்தழி வெந்நெறி வீழத் தாணுவே இயற்கைத் தாயுடன் பிரியாத் தந்தையே உயிரொளி பெற்று மாணுற உலக வாழ்வினை வைத்த மன்னனே அருள்புரி இன்னே. 1 அன்புநீ யன்றோ அன்பினை யடைய அன்புசேர் நெறியதே வேண்டும் கன்னியை மணந்து கான்முளை ஈன்றால் கடலெனப் பெருகுநல் லன்பே அன்னவள் தன்னை அகன்றுநீத் துறைந்தால் அடைத்திடும் அன்பெனும் ஊற்றே அன்பழி துறவு அழிதலே வேண்டும் அன்பினில் விளைந்தஆ ரமுதே. 2 பொழிலெனப் பொலியும் பொன்னொளிப் பெண்ணைப் பொறுமையை அன்னையை அன்பை இழிவெனக் கருதி ஏசுவோ ரிங்கே எங்கிருந் துதித்தனர் அந்தோ! பழியினைச் சுமக்கும் பாவரே யாவர் பகுத்தறி வவர்பெறச் செய்யே வழிவழி இயற்கை வாணியை மணந்து மாநிலம் வளர்த்தருள் பதியே. 3 மண்ணினைப் பொன்னை மங்கையைத் துறந்தால் மாநெறி கூடுமென் றுரைத்தல் கண்ணிலார் கூற்றாங் கடவுளே எங்கும் கலந்தநீ மூவிடங் கரவோ எண்ணமே மாயை இயற்கையின் உயிரே ஈசனே வெறுப்புறு துறவாம் புண்ணெறி எரிவால் புகுந்தநோய் போதும் போலியை ஒழித்தருள் செய்யே. 4 தாய்மையின் ஒளியே தனிமுத லெங்கும் தங்குறு நின்னொளி யுணர்த்தும் தூய்மையாந் திறவு துணைபுரி தாயைத் தூற்றலும் பழித்தலும் அறமோ பேய்மனச் சிறியர் பேச்செலாம் ஒழிக்கப் பெரியனே திருவுளங் கொள்க வாய்மையே வளர வள்ளலே கருணை வருவழி வேண்டுவன் முறையே 5 மங்கையை மாயா மலமெனச் சில்லோர் மருட்சியால் சொற்றனர், மாயை எங்குள தென்றே எண்ணின ராயின் ஏங்குவர் தம்முள மென்றே தங்கிடந் தேர்ந்து சாய்த்திடின் மங்கை தற்பர நின்னொளி யாடும் பொங்கிட மென்று போற்றுவர் தெளிந்த புந்தியிற் பொலிதரு பொருளே. 6 எங்கணு முள்ள இறைவனே உன்னை எப்படிக் காணுத லென்று சங்கையே கொண்டு சாதனஞ் செய்தும் சார்நிலை பெறுவதோ இல்லை நங்கையை மணந்து நன்னெறி நின்றால் ஞானமும் தியாகமும் அன்பும் துங்கமும் தோன்றித் தொடர்வழி காட்டும் தூயனே துணைபுரி யாயே. 7 தேமொழிப் பெண்கள் சேரிடச் சூழல் தெய்விகப் பூம்பொழிற் காட்சி ஏமுற வழங்கும் இனிமையை, மாயை என்றெண எம்மனம் எழுமே தோமுள மனத்தர் சொல்லிய உரையால் தொல்லையே விளைந்தது போதும் சேமுறும் இயற்கைச் செந்நெறி வளரச் செல்வமே திருவருள் செய்யே. 8 முத்தியென் றெண்ணி முகமெலாஞ் சிவக்க மூச்சினை அடக்கியே வந்தோர் சத்திழந் தீரல் சவலையுற் றிறந்த சரித்திரம் பலபல என்னே பத்தியை வளர்க்கும் பாவையை மணந்து பரநலம் பேணியே வாழும் சத்திய மார்க்கந் தழைத்தினி தோங்கத் தற்பர தயைபுரிந் தருளே. 9 மாசிலா வீணை மாலையின் மதியம் மலர்மணஞ் சொரிபொழில் நன்று வீசிடு தென்றல் வீங்கிள வேனில் வெறிமலர் வண்டறை பொய்கைத் தேசெலாம் பொலியுந் தெய்விகப் பெண்ணோ சிற்பர தற்பர மாயை நேசமே! இயற்கை நெறியினைத் தூர்க்கும் நீசத்தைக் களைந்தருள் செய்யே. 10 7. பெண்மை தாய்மையுறை பெண்ணுலகம் தயவுடைய பெண்ணுலகம் வாய்மைவளர் பெண்ணுலகம் வண்மைமலர் பெண்ணுலகம் தூய்மைவழிச் சிறந்தோங்கத் தொல்லியற்கை வடிவான ஆய்பொருளே அருள்புரியாய் அகிலமெலாம் ஒளிபெறவே. 1 பெண்ணிலவு பொழிந்தெங்கும் பெருநலங்கள் புரிந்துவரும் வண்மைநிலை அறியாதார் வரைந்துவிட்டார் சிறுமொழிகள் உண்மையிலா மொழியெல்லாம் ஒடுங்க அருள் செய்யாயோ தண்ணியற்கைத் தாய்வடிவாய்த் தனிக்கருணை பொழிமுகிலே 2 பெண்ணொளியால் நலம்பெற்றும் பேசுவதோ சிறுமைமொழி கண்ணொளியை இழித்துரைத்தல் கயமையன்றிப் பிறிதென்னே பெண்பெருமை உலகமெலாம் பிறங்கி நின்றால் உளங்குளிரும் மண்முதலாம் வடிவாகி மகிழியற்கைப் பெருமானே 3 சிறுபுல்லில் பெண்ணாண்மை செடிகொடியில் பெண்ணாண்மை பிறவுலகில் பெண்ணாண்மை பிறங்கவைத்த பரம்பொருளே துறவென்னும் ஒருகவடு தோன்றியதும் அறமேயோ கறவையிலா மலட்டாவால் கலக்கமின்றிப் பிறிதென்னே. 4 வெம்மையென்றுந் தண்மையென்றும் மிளிரவைத்தாய் இயற்கையிலே வெம்மையின்றித் தண்மையுண்டோ தண்மையின்றி வெம்மையுண்டோ வெம்மையிலே தனித்துநின்றால் விளையன்பு நீறாமே வெம்மையொடு தண்மையுமாய் விளங்குமொரு பரம்பொருளே. 5 வெங்கதிருந் தண்மதியும் விளங்கவைத்தாய் அண்டமதில் இங்குலகில் வலமிடத்தில் இருகலைகள் விளங்கவைத்தாய் பொங்காண்மை பெண்மையுடன் பொலிஅறமே வளர்ந்தோங்கப் புங்கமெனத் தனித்துறைதல் பொருந்தறமோ பெருமானே. 6 பெண்மையெனுந் தண்மைபொழி பெரும்பசுமைக் கொடிசூழ்ந்தால் வண்மையருள் அன்புகனி வளராண்மை மரமாகும் உண்மையறம் உலகமெலாம் உயரஅருள் புரியாயோ பெண்மையுடன் ஆண்மையுமாய்ப் பிறங்கியற்கைப் பெருமானே 7 நங்கையிடம் பெருமானே நடம்புரியும் அழகொளியை இங்கருந்தின் எங்குநினை எளிதிலுணர் நிலைகூடும் மங்கையினை மாயையென்று மதிசுருங்கத் தனித்துறைந்தால் எங்குமுள நினதுண்மை எவ்வாறு விளங்குவதே. 8 புற்பூண்டு செடிகொடிகள் புழுப்பறவை விலங்கினங்கள் அற்புடனே கலந்துகலந் தவனிவளர் நெறியோம்பச் சிற்பரனே மனிதரிடைச் சிறுதுறவு புகுந்தியற்கை பொற்புநெறி அழிப்பதென்னே பொலிவிலதை ஒழித்தருளே. 9 தனியுறைவால் மனக்கோளும் தன்னலமும் பெருகலுமாம் பனிமொழியா ருடன்வாழ்ந்தால் பரிவன்பும் பரநலமாம் மனிதவுயிர் கலப்பாலே மலரஉல கருளினையால் கனியுடையாய் திருநோக்குக் கலையாமற் காத்தருளே. 10 8. மனிதப் பிறவி எங்கிருந் திங்கு வந்தேன் எப்படி என்றென் றெண்ணிச் சங்கையில் மூழ்கி நின்றேன் சத்திய ஞான நூலும் புங்கவர் கூட்டுங் கூற்றும் புந்தியில் தெளிவு நல்கப் பொங்கொளி! அருள்சு ரந்தாய் பொன்னடி போற்றி போற்றி. 1 செறிவறி யாமை யாலே சிந்தனை இழந்த ஆவிக் கறிவினை விளக்கி யாள யாக்கைகள் பலவுந் தந்தாய் குறியினை உணரா தந்தோ குணப்பெருங் குன்றே கெட்டேன் பொறியிலேன் அருளல் வேண்டும் பொன்னடி போற்றி போற்றி. 2 புல்லினில் புழுவில் நிற்கப் புள்ளினில் விலங்கில் நிற்கச் சொல்லரும் மனுவில் நிற்கத் தூயனே கருணை செய்தாய் நல்லருள் மறந்து கெட்டேன் நானெனுஞ் செருக்கில் வீழ்ந்தேன் செல்வமே பொறுத்தல் வேண்டும் சேவடி போற்றி போற்றி. 3 மானுடப் பிறவி தந்த மாண்பினைத் தேறா திங்குக் கானுறை விலங்காய்க் கெட்டேன் கழிந்தது காலம் வீணில் ஊனுடை சுருங்கும் வேளை உதிருமே உரங்க ளெல்லாம் தேனுறு மலர்வண் டாக்கத் தெய்வமே உளங்கொள் ளாயோ. 4 பொறிபுலன் நன்கு பூத்த பொன்னுடல் எனக்குத் தந்தாய் அறிவிலேன் அதனைத் தேய்த்தேன் ஆணவச் செயல்க ளாலே நெறியிலே நின்றே னில்லை நித்தனே முதுமை நேரம் சிறியனேன் தளர்ந்து வந்தேன் சிந்தனை சிறிது கொள்ளே 5 கோடையின் அலகை என்னக் கொக்கரித் தலறிக் கூவி மேடையிற் பேசிப் பேசி மெலிந்ததை அறிவா யன்றே ஒடையும் வற்றிப் போச்சே ஒருவரும் வருவ தில்லை வாடையில் வீழா வண்ணம் வானுடல் அருள்வாய் ஐயா. 6 பிணியுடை யாக்கை வேண்டேன் பிறந்திறந் துழலல் வேண்டேன் அணிபெறப் புதுக்கும் ஆற்றல் அடியனேற் குண்டு கொல்லோ பணிக்கென உடலை வேண்டும் பான்மையை உணர்வாய் நீயே மணியொளி மேனி நல்காய் மதமெலாம் போற்றுந் தேவே. 7 மூக்கினைப் பிடிக்குங் கூட்டம் மூச்சினை ஈர்க்குங் கூட்டம் தேக்கிய இடங்க ளெல்லாம் சென்றுசென் றலுத்தேன் எந்தாய் யாக்கையை ஓம்ப வல்ல அமிழ்தம்நின் அருளே என்ற வாக்கியம் தெளிந்து வந்தேன் வள்ளலே கருணை செய்யே. 8 பரிதியின் ஒளிகாற் றாகிப் படர்புனல் கீரை யாகிப் புரிகனி மணிபாட் டுன்னல் போதமாம் அமிழ்தம் உண்டால் நரைதிரை மூப்பு நீங்கி நல்லுடல் பெறுதல் கூடும் அரிதினை எளிமை யாக்கும் அத்தனே அருள்செய் வாயே. 9 உடம்பினைக் கோயில் கொண்ட உத்தமன் நீயே என்று திடம்பெறத் தெளியச் செய்த திருவருள் மறவேன் எங்கும் நடம்புரி கருணை எண்ணி நண்ணினேன் பணிகள் ஆற்ற உடம்பினை ஓம்பி வாழ உன்துணை வேண்டும் வேந்தே. 10 9. மானுடம் என்னுயிரைப் பொன்னாக்க எவ்வெவ்வுடல் தந்தனையோ அன்னையினுந் தயவுடைய ஐயாவே யானறியேன் நன்மையுற மனிதவுடல் நல்கியருள் புரிந்துள்ளாய் துன்னுபயன் அடைவதற்குன் துணைவேண்டும் அருளரசே. 1 எச்சிலையாய்க் கிடந்தேனோ எம்மலையாய் நின்றேனோ எச்செடியாய் வளர்ந்தேனோ எப்புழுவாய் ஊர்ந்தேனோ எச்சரபம் ஆனேனோ எப்புள்ளாய்ப் பறந்தேனோ எச்சுதையாய்ப் பாய்ந்தேனோ இறைவஒன் றும் அறியேனே. 2 எடுத்தவுடல் எத்தனையோ அத்தனையும் உளஉணரேன் உடுத்தவுடல் இந்நாளில் உயர்ந்ததெனப் பெரியோர்கள் விடுத்தமொழி பலபலவே விழித்தவழி நடவாது மடுத்துவரின் வெறுமொழியை வள்ளாலென் விளைபயனே. 3 மானுடமே வந்ததென்று மகிழ்ந்துவிட லறியாமை வானுடலோ ஊனுடலம் மயிர்ப்பாலம் தம்பி எனத் தேனுடலர் எச்சரிக்கை செய்துள்ள திறமுணர்ந்து மானமுடன் வந்தடைந்தேன் மறைபொருளே அருளுதியே. 4 மக்களிடை மாண்புமுறும் மாசுமுறும் நிலையுண்டு சிக்கலுறுங் காரணமோ சிறுவிளக்கப் பகுத்தறிவே புக்கபகுத் தறிவாலே புண்ணியநின் னடிபற்றித் தக்கவழி காணவந்தேன் தமியேனைக் காத்தருளே. 5 பகுத்தறிவு விளங்காத பிறவியினும், வழிநடக்கும் பகுத்தறிவுப் பிறவிக்கே பாடுகளுண் டென்றறிஞர் உகுத்தஉரை உளங்கொண்டே உனதடியில் குறிவைத்தேன் புகுந்தபிழை எவ்வளவோ பொறுத்தருளாய் புண்ணியனே. 6 மக்களுளம் பகைசீற்றம் பேய்மைகணம் ஒருபாலே தக்கஅரு ளன்பழகு தெய்வகணம் ஒருபாலே நெக்குறுவெந் நிலையுணர்ந்து தெய்வகண மயமாக்கப் புக்கவருள் எனைச் சேர்த்தால் புனித! நலம் பெறுவேனே. 7 மானுடத்தின் பயன்நாடி மனத்துறுபேய்க் கணஞ்சாய்க்கத் தானொடுக்கத் தெய்வகணங் கால்கொள்ளப் பணிபுரிய வானிடத்தும் மண்ணிடத்தும் மற்றிடத்தும் அருளாட்சிக் கோனடத்தும் பெருமானே கோதிலடி வேண்டுவனே. 8 மன்பதைநின் னருணெறியில் மனஞ்செலுத்தின் வளர்ச்சியுறும் கன்மவிதி முதலாய கண்மூடி வழக்குகளை உன்னிவரின் எவ்வண்ணம் உண்மைவழி வளர்ச்சியுறும் அன்பரசே இன்புருவே அருளுலகை அளியாயோ. 9 பிறவிநலம் பிறவுலகப் பேறென்று சொல்வருளர் அறநிலயந் துறவாமல் ஆருயிர்க ளிடைவாழ்ந்து திறமையுடன் பணிசெய்தல் செல்வமெனத் தெளிவடைய இறையவனே உளங்கொண்டாய் ஏதமெலாம் பொறுத்தருளே 10 10. மனிதம் எத்தனையோ உடலளித்தே இம்மனித உடலை ஈந்துள்ளாய் ஈடேற இறையவனே இதுவே உத்தமமாம் என்றறவோர் உரைத்தமொழி பலவே உரைஓதும் அளவினின்றால் உறுபயனோ விளையா பத்திமைநன் னெறிநடக்கை பண்புசெயும் வாழ்வைப் பாழ்நடக்கை வாழ்வழித்துப் படுகுழியில் தள்ளும் இத்தனையும் நின்னியதி மானுடத்தின் நிலைமை ஏந்துமயிர்ப் பாலமென ஏழைதெளிந் தேனே. 1 மக்களுடல் தாங்குவதால் மட்டுநலன் விளையா மயிர்ப்பாலம் நடக்கையிலே மதிவிழிப்பு வேண்டும் மிக்க விழிப்புடன் நடந்தால் விழுமியதே மனிதம் விழிப்பின்றி நடந்துவிடின் வீழ்ச்சியதே என்று பக்குவரெல் லாருமிகப் பரிந்துரைத்தும் நல்ல பகுத்தறிவு மலர்பிறப்பின் பண்புகெட லென்னே புக்கபகுத் தறிவாலே புனிதமொடு புரையும் புரிஉரிமை உண்மையினால் பொறுப்புணர்த்தாய் அரசே. 2 மக்களின உடலமைப்பில் மருவவைத்த நுண்மை மற்றஇன உடலமைப்பில் மருவவைத்தா யில்லை ஒக்கஅது திகழுமிடம் உள்ளமல ருள்ளே ஒளிர்நுண்மை விளக்கமுற உழைப்பெடுத்தல் வேண்டும் புக்கதென உழைப்பிலையேல் பொலிந்துமிளி ராது பொலியாத படிவிடுப்பின் புகழ்பிறவி விலங்காம் எக்கணமும் அமைதியிலே இருமுயற்சி செய்வோர் ஈசநின தொளி காண்பர் எங்குமுள இறையே 3 எங்குமுளன் இறைவனென இயம்புவதா லென்ன இந்நூலை அந்நூலை எடுப்பதனா லென்ன அங்கெனவும் இங்கெனவும் அலைவதனா லென்ன அசத்துலகை அசத்தாகக் காண்பதனா லென்ன தங்குலகைச் சத்தாகக் காண்பதுவே அறிவு தகுந்தவழி காண்முயற்சி தலைப்படுத லறிவு பொங்குமுள மலருளதைப் பொறியாக்கிப் பார்த்தால் பொலிதருமே ஒளிஇறையே புனிதமுற அருளே. 4 உள்ளமல ருள்ள நுண்மை ஊடுருவிப் பாயும் ஒளிக்கருவிக் கதிராலும் உணரலிய லாதே உள்ளொளியர் யோகியர்கள் உரைத்தவெலாங் கூடம் உலகவற்றைப் பலவழியில் உருத்திரித்த தையா கள்ளர்பலர் இடைநுழைந்து கரவுகளைக் காட்டிக் கடையவரை ஏமாற்றிக் காசுபறிக் கின்றார் கொள்ளுநெறி இயற்கைஎன்று குருவாயில் சொற்ற குணவழியே நிற்கஅருள் குறைவில்லா நிறைவே. 5 அன்பியற்கை நெறிக்குரிய அறத்துறைகள் பலவே அச்சாணி அகவொழுக்கம் அதன்விளைவாம் எல்லாம் துன்பினிற்சென் றுழல்புலன்கள் இயற்கையிலே தோய்ந்தால் தொல்லைஅலை மனம்விரைந்து சூழும்உரு ஒன்றை என்புருக்கு முறையிலெண்ணி எண்ணியொன்றின் ஒடுங்கும் எப்பயனுங் கருதாது பணிசெயவும் தூண்டும் மன்மலர்நுண் பொலிவுமெங்கும் நின்மயமே தோன்றும் மானுடத்தின் மாண்பென்னே வள்ளால்நின் கொடையே. 6 நெஞ்சமல ருள்திகழும் நிதிகாண நீங்கா நீதிவளர் நிட்காமம் நிறைந்தபணி வேண்டும் நஞ்சனைய காமியமோ நான்நானே பெருக்கும் நானானால் எங்கெங்கும் ஞானநிலை என்னாம் வெஞ்சினமும் வஞ்சனையும் வேர்விடுத்து வளர்ந்து வெடிகுண்டாய் அமர்க்களமாய் வெறும்பிணமாய் அழுகும் துஞ்சிடவோ மானுடத்தைத் தோற்றுவித்தாய் இறையே தொண்டர்படை சூழ்ந்துலகைத் தூய்மைசெய அருளே. 7 கண்மூக்கு சாண்வயிறு கைகாலோ மனிதம் கட்டுநரம் பெலும்புநிணம் தோலுடுப்போ மனிதம் வெண்வாக்கு வீண்நினைக்கும் வெறுமனமோ மனிதம் வேடிக்கை தாள்படிப்பு விளம்பரமோ மனிதம் மண்ணோக்கிக் களியாட்டில் மயங்குவதோ மனிதம் வனவிலங்காய் உண்டுறங்கி வாழ்வதுவோ மனிதம் உண்ணோக்கிப் பணிபுரிந்தே ஒளிபெறுதல் மனிதம் உனையுணர்த்தும் மனிதமதை ஓம்பஅருள் அரசே. 8 உலகுடலம் புறக்கரணம் உட்கரணம் ஏனோ ஓங்குமலை காடுவயல் ஓதவெளி ஏனோ கலைகளுடன் ஓவியங்கள் காவியங்கள் ஏனோ கதைநடனம் இசையரங்கம் காட்சிநிலை ஏனோ பலமதமும் கோயில்களும் பள்ளிகளும் ஏனோ பரஞானம் சத்தியமும் பத்திமையும் ஏனோ கலகமிடும் விலங்காகிக் கழிவதற்கோ மக்கள் கருணைகொழி தண்கடலே காசினிபார்த் தருளே. 9 அரிதாய பிறவியெனக் கருளரசே ஈந்தாய் அதைநெறியிற் பயன்படுத்தா அறியாமை எனதே உரிதாய அகமலருள் உன்னைஉண ராதே உற்றபிறப் பரும்பயனின் உறுதிஇழந் தேனே கரிதாய செயல்புரிந்தேன் கடவுளுனை மறந்தேன் கடையவரிற் கடையவனாய்க் கழிவுபட லானேன் பெரிதாய பிழைபுரிந்தேன் பொறுத்தருளல் வேண்டும் பிள்ளைகுறை கண்டுதள்ளும் பெற்றவளும் உண்டோ. 10 11. சன்மார்க்கம் சன்மார்க்கம் தோன்றியநாள் சாற்றுதற்கோ இல்லை சான்றுகளும் கருவிகளும் சாத்திரமும் இல்லை பன்மார்க்கக் காலமெலாம் பகர்கின்றார் புலவோர் பார்த்தறியார் அவைபிறந்த பதமறியார் ஐயா சன்மார்க்க வேரினின்றுந் தழைத்தவகை தெளிந்தால் தனித்தோற்றம் இல்லைஎன்பர் சரித்திரத்துக் கெட்டா உன்மார்க்கம் சன்மார்க்கம் உனக்குண்டோ தோற்றம் ஒடுக்கமொடு தொடக்கமிலா உண்மையெனும் பொருளே. 1 மாறாத சத்தாகி மருவுகின்ற அறிவே மார்க்கமெலாஞ் சன்மார்க்க மலரென்று தேர்ந்தோர் சீறாத சிந்தையிலே தெளிதேறல் இன்பே சித்தர்வழிச் சன்மார்க்கம் செறியவைத்த இறையே வேறான கருத்துடையார் வேரறியா வெறியர் விதவிதமா மார்க்கமென்று வீண்வாதஞ் செய்வர் தேறாத அவர்வினையால் செகங்கெடுத லாச்சே தீமைஎரி பரவிவரல் திருவருளுக் கழகோ. 2 காண்கின்ற பலதீவு கால்கொளிடம் ஒன்றே காராவும் வெண்ணாவும் கறக்கும்பால் ஒன்றே பாண்மொழிகள் பலஒலிக்கப் படியும்பொருள் ஒன்றே பன்னிறத்து விளக்குநிரை படருமின்னல் ஒன்றே பூண்தொடையல் புகுந்தகயி றொன்றேஆ மாறு புகல்மதங்கள் உயிராகப் பொலியுஞ்சன் மார்க்கம் மாண்புறும்அம் மார்க்கமென்றன் மனம்பதியச் செய்தாய் மதக்கழுது விடுத்ததென்னை மாதேவா அருளே. 3 மதங்களெலாஞ் சன்மார்க்க அடிகொண்டே மலரும் மாண்புணர அருள்புரிந்த மன்னவனே வாழி மதங்களென்றே அடியிலுள மார்க்கம்மறந் தாலோ வாதப்பேய் தலைவிரிக்கும் மக்கள்நிலை திரியும் இதஞ்செய்யும் அடிமார்க்கம் இழந்தமதம் நஞ்சாய் எஞ்ஞான்றும் இகல்பெருக்கும் இன்னாமை விளைக்கும் அதஞ்செய்யும் துன்மார்க்க அலகையெலாம் அழிய அன்புவிளை சன்மார்க்கம் ஆக்கமுற அருளே. 4 சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மைஅறம் அன்பழிக்குந் துயர்மதங்கள் தொலைய ஆதிமுடி வில்லாத அருட்சோதி தேவே அகிலமெலாஞ் சன்மார்க்கம் ஆர்த்தெழச்செய் யரசே. 5 இறையவனே சன்மார்க்கம் உன்னருளால் வளர்த்தோர் எழில்மௌனி சனத்குமரன் இளங்கண்ணன் அருகன் அறமுரைத்த புத்தனுயர் ஆப்பிரகாம் மோசே அன்பேசு வள்ளுவனார் நபிநால்வர் ஆழ்வார் மறைமூலர் தாயுமானார் மாதுபிள வட்கி மதிஇராம கிருஷ்ணருடன் இராமலிங்கர் முதலோர் நிறைநின்ற திருக்கூட்டம் நீங்காத ஒளியே நின்மலனே சன்மார்க்க நிதிவளரச் செய்யே. 6 மொழியாலும் நிறத்தாலும் நாட்டாலும் மற்ற முறையாலும் பிரிஉலகை முழுஒருமைப் படுத்தும் வழியாதென் றறிஞர்பலர் வகைவகையே ஆய்ந்து வகுத்தனர்பல் சட்டதிட்டம் வாழ்வுபெற வில்லை பழியேதும் அறியாத சன்மார்க்கம் ஒன்றே பாழ்பிரிவு நினைவறுத்துப் பரிந்தொருமை கூட்டும் அழியாத அன்புடைய அப்பாஅம் மார்க்கம் அவனியெலாம் பரவிநிற்க அருள்புரிவா யின்னே. 7 இறையென்றும் இயற்கையென்றுஞ் சிலஅறிஞர் பிரித்தே இயற்கையினைத் துறந்துதனி இறைவஉனைப் பற்றல் அறமொன்றும் ஆத்திகமென் றறிவுறுத்த லழகோ அறிவேஉன் திருவுடலம் அழகியற்கை யன்றோ உறவொல்லும் இயற்கைவிடல் உன்னைவிட லன்றோ ஒளிஇயற்கை உன்னிருக்கை என்றுதெளி வடைதல் சிறையில்லாச் சன்மார்க்கச் சேர்க்கையென உணரச் செய்தஉன்றன் அருள்மறவேன் சித்தருள விளக்கே. 8 பாரினிலே கலையென்று கொலைக்கலையே இந்நாள் பரவிநஞ்சம் உமிழ்ந்துவரல் பரம்பொருளே அறிவாய் போரினிலே விஞ்ஞானம் புரிகின்ற ஆடல் புலைமறமே அச்சோவென் றலமரலை அறிவாய் வேரிழந்த அரக்கர்கலை மீண்டுமெழல் நன்றோ வீரமென ஈரமிலா வினைபெருக்க லழகோ சீரிழந்த உலகுய்யச் சிற்பர! சன்மார்க்கச் bršt!அருள் மழைபொழியாய் சிறுபிழைகள் பொறுத்தே. 9 மண்ணெல்லாஞ் சன்மார்க்க மலராட்சி வேண்டும் மார்க்கமெலாஞ் சன்மார்க்க மணங்கமழல் வேண்டும் கண்ணெல்லாஞ் சன்மார்க்கக் காட்சியுறல் வேண்டும் காதெல்லாஞ் சன்மார்க்கச் கேள்விநுழை வேண்டும் பெண்ணெல்லாஞ் சன்மார்ககப் பிள்ளைபெறல் வேண்டும் பேச்செல்லாஞ் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும் பண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும் பரம்பொருளே சன்மார்க்கப் பணிசெய வேண்டுவனே. 10 12 சன்மார்க்கம் பிள்ளைவிளை யாட்டினிலும் பின்னைவிளை யாட்டினிலும் பள்ளிவிளை யாட்டினிலும் படிந்துழன்ற சிந்தையிலே கள்ளமழி சன்மார்க்கம் கருவிழுந்த தறியேன்யான் வள்ளலுன தருட்பெருக்கை வகுத்துரைப்ப தெவ்வாறே. 1 சாதிமதக் குழிநரகச் சாக்கடையில் விழுந்தேற்கும் ஆதிநெறிச் சன்மார்க்க அருட்கரையை உணர்வித்த நீதிஇறை! நின்கருணை நிறைதெளிய வல்லேனோ சோதிமுடி அடியில்லாச் சொலற்கரிய சுகப்பொருளே. 2 பன்மார்க்க அடியாகிப் பண்புவளர் சன்மார்க்கம் உன்மார்க்கம் ஒருமார்க்கம் உயர்மார்க்கம் வேறில்லை தொன்மார்க்கம் என்னுளத்தில் துலங்கவைத்த மெய்ப்பொருளே துன்மார்க்கம் சாயஇங்குத் துணைசெய்ய அருள்பொழியே. 3 சன்மார்க்க மரந்தாங்கும் பன்மார்க்கக் கிளைகளிலே நன்கார்ந்தே எம்மார்க்கம் நடந்தாலுஞ் சன்மார்க்கம், என்மார்க்கம் உன்மார்க்கம் என்றுசமர் விளைப்பவரே துன்மார்க்கர் தாய்மறந்த துகளரவர்க் கருளிறையே. 4 மார்க்கமெலாம் ஊடுருவி மருவிநிற்குஞ் சன்மார்க்கம் பார்க்கமுடி யாதவரே பலசமய அமர்விளைப்பர் சேர்க்கையினால் நஞ்சுலகில் தேக்கிவரல் நீஅறிவாய் ஆர்க்கஅவர்க் கருள்பதியே அதுவுமுன்றன் கடனன்றோ. 5 சன்மார்க்கம் கல்வியிலே சன்மார்க்கம் காதலிலே சன்மார்க்கம் வாழ்க்கையிலே சன்மார்க்கம் பொருளினிலே சன்மார்க்கம் ஊரினிலே தழைத்துவரின் உலகமெலாம் சன்மார்க்க மயமாகும் சார்பரசேன் தனிப்பொருளே. 6 சிக்கோடு மதவாதச் சேற்றிருந்த எனைஎடுத்தே எக்கோயில் கண்டாலும் இறைநிலையம் என்றுதொழப் புக்கோடு நெஞ்சளித்துப் புதுப்பித்த பெருந்தகையே தக்கோனே சன்மார்க்கம் தழைக்கஎங்கும் அருள்புரியே. 7 அவனியிலே கிறித்துவரி லாமியரும் பௌத்தர்களும் சைவர்களும் வைணவரும் ஜைனர்களும் சார்புடைய எவரெவரும் பலபெயரால் ஏத்துமிறை ஒருநீயே தவறணைதல் ஆணவத்தால், சன்மார்கக ஒளிகாலே. 8 மண்ணீறு தாடிசடை மழிமொட்டை பட்டைஇடை வெண்ணீளம் காவி அங்கி வேடங்கள் பொருளானால் கண்ணீள மில்லாதார் காழ்ப்பிகலில் பயன்படுத்திப் புண்ணீள மாக்கிடுவர் சன்மார்ககம் புகுத்திறையே. 9 சாதிமத நிறநாட்டின் சண்டையெலாம் ஒழிந்தழிய மேதினியில் காலநிலை மேவுவணம் சான்றோர்கள் ஓதியபன் முறையுண்டே உயிர்அவற்றுள் சன்மார்க்கக் காதலிவர் மணநிகழ்ச்சி கடவுளதை ஓம்புகவே. 10 13. சமரசம் சாதியும் மரபுங் கொண்ட சந்ததி வழியே வந்தேன் சாதியும் மரபுந் தேய்க்குஞ் சமரசக் கருவி யானேன் நீதியே நெஞ்சில் மாற்றம் நிகழ்ந்தமை என்னே என்னே ஆதிநின் அருளின் ஆடல் அற்புதம் அறிவார் யாரே. 1 சத்தியம் சைவ மென்னுஞ் சால்புறு மரபில் வந்தேன் நித்தியச் சமய மெல்லாம் நிறைசம ரசமாக் கண்டேன் உத்தம அருள்செய் மாற்றம் உணர்வினுக் கெட்ட வில்லை அத்தனே இரும்பைப் பொன்னா ஆக்கிய பெருமை என்னே. 2 வாதமே தூண்டும் நூல்கள் வகைவகை பயின்றேன் ஆய்ந்தேன் பேதமே படிய வில்லை பெருஞ்சம ரசமே நாளும் போதமா ஓங்கப் பெற்றேன் பொன்னருள் செய்யும் வேலை நீதனேன் அறிவேன் கொல்லோ நித்தனே வாழி வாழி. 3 அரசியல் நிலையை ஆய்ந்தேன் அத்துறை படிந்தும் பார்த்தேன் கரவினைக் கண்டு கொள்ளக் கடவுளே கருணை செய்தாய் கரவர சிருளைப் போக்கச் சமரச பானு தேவை பரமனே உலகைக் காக்கப் பரிந்தருள் அதனை இன்றே. 4 செல்வனே சிறந்து வாழச் சிறுமையில் ஏழை வீழப் புல்கர சாட்சி மாறப் புனிதமாஞ் சமர சத்தை நல்கவே வேண்டு மென்று ஞாலமே கேட்டல் காணாய் பல்கவே உயிர்க ளெங்கும் பரமனே அருள்செய் யாயோ. 5 சமரசம் பொருளி லுற்றால் சாந்தமே ஆட்சி செய்யும் அமரரும் மண்ணில் வாழ ஆசைகொண் டலைவ ரையா சமரினைத் தூண்டும் ஆட்சி சாய்த்தது போதும் போதும் சமரச மார்க்கம் ஓங்கச் சத்தனே சிந்தை செய்யே 6 சமரச மார்க்கம் பல்கின் தரைபிடி அமர்கள் நேரா அமரெழுப் பாசை மாயும் அரும்பசி பிணிநோய் நீங்கும் குமரரின் வாழ்க்கை இன்பாம் குணம்வளர் கலைகள் பொங்கும் அமைஅரு ளாட்சி ஓங்கும் அப்பனே கடைக்கண் நோக்கே. 7 அண்டையன் பசியால் வாட அணங்கொடு மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று மன்னிடும் ஆட்சிக் குற்றம் தண்டனைக் கர்மம் என்னல் தயைவிலார் கூற்றே அப்பா எண்டிசை சமர சத்தை இன்புடன் நுகரச் செய்யே. 8 உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை, அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே. 9 சாதியும் மதமுஞ் சாய சண்டையும் மிடியும் மாய நீதியும் நிறையும் மல்க நித்தமும் வழிபா டோங்க ஆதியே காதல் மன்றல், ஆட்சியில் பொதுமை தேவை சோதியே சமர சத்தால் சூழ்தரும் கடைக்கண் நோக்கே. 10 14. சமரச சன்மார்க்கம் மார்க்கம் ஒன்றே சன்மார்க்கம் மலரச் செய்யும் சமரசமே யார்க்கும் உரிய அதுவளர்ந்தால் ஆக்கம் உறுமே உலகியல்கள் மூர்க்கம் அழியும் பன்மார்க்க மூடக் குறும்பு மாண்டொழியும் பார்க்கப் பொதுமைச் சன்மார்க்கம் பரமா அருளாய் அருளாயே. 1 சாதி ஆசை மதஆசை தரையின் ஆசை படிநெஞ்சம் நீதி ஆசை நின்னாசை நினையும் நிலையில் இல்லையே ஆதி சோதி அருட்சோதி அறிவுக் கறிவாம் மெய்ச்சோதி ஓதி ஒழுகின் சன்மார்க்கம் உறலாம் நல்ல நினைவினையே. 2 காத லொழுங்கில் சமரசமே கண்டால் உறலாம் சன்மார்க்கம் ஓதல் உணவில் சமரசமே உற்றால் பெறலாம் சன்மார்க்கம் வீதி உலவில் சமரசமே விளங்கின் இலகுஞ் சன்மார்க்கம் ஆதி எங்குஞ் சன்மார்க்கம் அடைய அருளாய் அருளாயே. 3 சாதி மதத்தில் சமரசமே சார்ந்தால் சேரும் சன்மார்க்கம் நீதி அரசில் சமரசமே நிறைந்தால் நிலவும் சன்மார்க்கம் வாதப் பொருளில் சமரசமே வாய்ந்தால் வளரும் சன்மார்க்கம் சோதி! எங்குஞ் சன்மார்க்கம் சூழ அருளாய் அருளாயே. 4 ஒளியுங் காற்றும் மலையாறும் ஓங்கு மரமும் நீல்கடலும் தளிமக் கலையும் சன்மார்க்கம் தழைக்கத் துணையாய்த் திகழ்நுட்பம் தெளியும் உள்ளம் நின்கோயில் செறியும் இயற்கை வடிவான வெளியே அளியே சன்மார்க்கம் விரிந்து பரவ அருளுதியே. 5 பரிதி எழுந்து மறையொழுங்கும் மதியம் தேய்ந்து வளரொழுங்கும் பருவம் மாறி வருமொழுங்கும் பார்த்துப் பார்த்துப் பழகிநிதம் கருவில் நெஞ்சில் உணவுறக்கில் காக்கின் ஒழுங்கு சன்மார்க்கம் மருவும் வாழ்வி லொழுங்குபெற மருந்தே தேவை உன்துணையே. 6 நெஞ்சி லெண்ணம் ஒழுங்கானால் நிரலே எல்லாம் ஒழுங்காகும் அஞ்சு மடங்கி ஒழுங்காகும் அங்கம் கரணம் ஒழுங்காகும் விஞ்சு ஒழுங்கில் சன்மார்க்கம் விளங்கி நிலவும் ஒழுங்கினிலே தஞ்ச மாகத் தற்பரமே தயவே வேண்டும் தனித்துணையே. 7 மலையில் பிறந்த சன்மார்க்கம் வனத்தில் வளர்ந்த சன்மார்க்கம் கலையில் அமைந்த சன்மார்க்கம் காணோம் காணோம் நாடுகளில் கொலையைக் கலையாக் குறிக்கொண்டு குண்டு தாங்கும் நாடுகளில் நிலவுங் கொல்லோ சன்மார்க்கம் நிலைமை எண்ணாய் இறையோனே. 8 எங்கும் உள்ள இறையோனே எல்லா உயிருள் இருப்போனே பொங்கும் அன்பு மக்களிடைப் பொருந்தா திகல்போர் எழுவதென்னை தங்குஞ் சுத்த சன்மார்க்கம் தழுவா தொழியின் அன்பெழுமோ துங்க உலகம் பரிணமிக்கத் துணைசெய் அரசே மெய்ப்பொருளே. 9 புல்லாங் குழலில் இசைமுழக்கிப் போதி நிழலில் தவங்கிடந்து கல்லா லடியில் பேசாது கல்லாம் மலையில் மறைபேசி எல்லா ருங்கொள் சமரசசன் மார்க்க மிசைத்தே உரிமையளி செல்வா சிறியர் பிழைபொறுக்குந் தேவா வாழி அருள்வாழி. 10 15. சன்மார்க்க வாழ்வு சமரசசன் மார்க்கமென்று தரைவெறுக்கும் வாழ்வு சார்ந்ததிடை நாளினிலே சனிபிடித்த தன்றே அமைஉலகம் ஆண்டவநின் அருட்பெருக்கின் கொடையே அதைவெறுத்தல் அறமாமோ ஆணைவழி யாமோ சுமையெனநின் கொடைவெறுப்போர் சோம்பரவர் பிறர்க்குச் சுமையாகி இடர்விளைக்குந் தொல்லையரே யாவர் சமரசன் மார்க்கஉண்மை தரணியிலே விளங்கித் தழைத்தோங்க அருள்புரியாய் தயையுடைய அரசே. 1 நிலநான்கு வகைபிரிய நிரனிரலே உரிய நெடுமரம்புள் விலங்குமக்கள் நின்றுகிளர் அன்பில் உலமான்ற குறிஞ்சிமுல்லை மருதநெய்தல் ஒன்றி ஒழுக்கமுறக் காதலெழு உடையவஏன் செய்தாய் நலமூன்றுஞ் சன்மார்க்க நாட்டமிக அன்றோ நண்ணியற்கை வாழ்வொறுத்தல் ஞானமெனல் நன்றோ புலநோன்பு கெட்டொழியும் பொறிகளலை சாடும் புனிதம்வளர் காதல்நெறி புவிபெருக அருளே. 2 பெண்பனையும் ஆண்பனையும் பேசிநிற்குங் காட்சி பெண்கொடியும் ஆண்கொடியும் பின்னிவளை காட்சி வண்டுளறச் சுரும்பிசைத்து மயங்கிவருங் காட்சி வாரணஞ்செம் பேடையிடம் மனஞ்செலுத்துங் காட்சி திண்ணெருமை நாகுடனே சேர்ந்துதிரி காட்சி செவ்வெருது பசுவருகே சிரித்தணையுங் காட்சி பண்மொழியின் அமிழ்துண்டு பத்தன்செலுங் காட்சி பண்பளிக்குஞ் சன்மார்க்கக் காட்சியன்றோ பரமே. 3 சன்மார்க்கம் இயற்கைஇறை! நின்னெறியென் றறியார் தவழிளமை வளமையினைத் தழற்கனலில் தீப்போர் துன்மார்க்க வினையியற்றித் தொலைவரவர் சொன்ன துகளுரைகள் துறைகளெல்லாம் தொல்லுலகை அரித்துப் பன்மார்க்கப் பகைவிளைத்துப் பாழ்செயலை அறிவாய் பாரெல்லாம் பாவஎரி பரவிவரல் அழகோ சன்மார்க்கம் நல்லியற்கை வாழ்வென்னும் உண்மை தரணியிலே வேரூன்றத் தயைபுரியாய் ஐயா. 4 இயற்கையிலே நீஇருந்தே இன்பளிக்கும் அன்பை இனிதுணர்ந்தால் காதல்நெறி இயல்விளங்கும் அப்பா செயற்கையிலே புலன்கெடுத்துச் சிந்தைகொலை புரிந்தால் சிற்பரனே உன்னருளின் சிறப்பையுறல் எங்ஙன் பயிற்சியிலே சன்மார்க்கம் இயற்கையர ணென்னும் பாடம்பெற லாமென்று பயின்றவரே சொற்றார் முயற்சியிலை மன்பதையில் மூர்க்கமெழ லாச்சு முழுஇயற்கை வாழ்க்கையெழ முன்னவனே முன்னே. 5 காதலுணர் வோங்கிநின்றால் கறைகள்படி யாவே காசினியே அன்பாகிக் கருணையொளி வீசும் காதலினைக் காமமெனல் கண்ணில்லா மடமை காதலொரு மகனொருத்தி ஓருயிராய் ஒன்றல், நீதியிழந் தொருவன்பல மனைகொள்ளல் காமம், நீசமிகு காமத்தால் நிலமெல்லாம் தீயாம் காதலிலே காதல்கொளல் சன்மார்க்க மென்னும் கருத்தளித்த இறையவனே காலடிகள் போற்றி. 6 ஆடல்நெறி பாடல்நெறி அன்பறிவு நெறிகள் அனைத்துமுள நெறிகளெலாம் அறிவுறுத்துங் காதல் நாடகமும் காவியமும் ஒவியமும் மற்றும் ஞானம்வளர் கலைகளெலாம் நன்குபுகழ் காதல் பீடுறுசன் மார்க்கநின்ற பெரியருக்கும் ஞானப் பித்தருக்கும் பத்தருக்கும் பேறளித்த காதல் ஈடிலருள் மாதருள்நின் இறைமையளி காதல் எவ்வீடும் எழுஅருளாய் இயற்கைஇன்ப இறையே. 7 காதலுறு இடம்நினது கருணைபொலி வீடாம் காதலுறா இடம்நினது கருணையற்ற நரகாம் காதனெறி சன்மார்க்கம் காட்டுவித்தல் கண்டே கலைவரைந்தார் அறிஞரெலாம் காட்டாக ஐயா காதலருள் மாதருள்நின் காட்சிபெறல் ஞானம் காணாது மாயையென்று கருதல்அவ ஞானம் காதலினைக் காமமென்று கருத்தழிக்கும் அமைப்பின் கால்சாய்ந்தால் உலகுய்யும் கடவுளருள் செய்யே. 8 மகனொருவன் மகளொருத்தி மணக்குமுறை உலகில் வளர்ந்துவரின் சன்மார்க்க வாழ்வினுக்குத் துணையாம் அகமடங்கி ஒருமைஎய்த ஐயஉனை நினைக்கும் அன்புவழி எளிதாகும் அறவொழுக்கம் இயல்பாம் இகலமைந்த கரணங்கள் இனியனவாய் மாறும் எவ்வுயிர்க்குந் தண்மைசெயும் இரக்கநிலை கூடும் தகவுடைய நடுநிலைமை சாருமென்று விளங்கத் தயைபுரிந்த அப்பாவே தாளிணைகள் வாழி. 9 எங்குமுள உனைக்காண எவ்வளவோ முயற்சி இவ்வுலகில் நிகழ்வதனை எவ்வுரையால் சொல்வேன் நங்கையரில் உன்னொளிகாண் ஞானம்வரல் போதும் நாதஉனை எங்குங்காண் ஞானமெளி தாகும் சங்கையிலாச் சன்மார்க்க வாழ்வுபெறலாகும் தன்னலத்தை அழிபணிசெய் சார்புவரு மென்றே இங்குளத்தில் தெளிவெழுந்த தெப்படியோ அறியேன் எல்லாமுன் னருளென்றே ஏழையடைந்தேனே. 10 16. குருமார் அளவுகடந் தோங்கண்ட அறிவே நீங்கா அழகியற்கைக் கோயிலமர் அன்பே ஞான ஒளியுடைய குருமாரின் உளத்தே மற்றும் ஒருகோயில் கொண்டருளும் ஒன்றே நல்ல வளமடைய உயிர்கட்கு மார்க்கங் கண்ட வான்கருணை வள்ளால் நீ வாழி வாழி தெளிவுபெற வழிபாட்டிற் சிந்தை வைத்த திருக்கூட்டம் நாடோறுஞ் செழிக்கச் செய்யே. 1 கண்ணாவுங் கைகாலுங் கருது நெஞ்சம் கரணவுறுப் பொன்றில்லாக் கடவு ளேநீ கண்ணாதி உறுப்புடைய குருமா ருள்ளக் கமலத்துள் விற்றிருக்குங் கருணை என்னே மண்ணார விண்ணார வயங்கி மேலும் மருவுகின்ற மணிவிளக்கே மக்கள் கூட்டம் கண்காண நாவாழ்த்தக் கைகள் போற்றக் கருத்தொன்ற வழங்குமருட் காட்சி வாழி. 2 எங்கெங்கும் நீங்காமல் இருந்தே எல்லாம் இயக்கிறையே எங்கெங்கும் பால்நெய் போலும் தங்கவுடல் குருமாருள் தயிர்நெய் போலும் தங்கும்வகை உணரவுநின் தயவு வேண்டும் அங்கமிலா ஆண்டவனே அங்கந் தாங்கும் அருட்குருமார் உளத்தொளியாய் அமர்ந்தும் அன்பு பொங்குவழி பாட்டேற்கும் புனிதத் தேவே பொன்னடிஎன் மனம்பூக்கப் பொருந்தச் செய்யே. 3 கோதிலவர் வழிபாட்டைக் கொள்வோர் யாவர் குருமாரோ அவருளத்திற் குலவும் நீயோ சோதனையும் வேண்டுங்கொல் சோதி நீயே தொல்லுலகில் முறைபற்றிக் குருமார் நீயென் றோதுநரும் உளரானார் உறவால் ஐயா ஒருகுணமுங் குறிதொழிலும் ஊரும் பேரும் ஆதிநடு முடிவுமிலா அறிவே அன்பர் ஆழநினை பொருளாகி அருளுந் தேவே. 4 பளிங்கனைய குருமாரைப் பலரென் றெண்ணாப் பண்புணரச் செய்தபரம் பரமே அன்னார் உளங்கனிய வீற்றிருக்கும் ஒளியே ஒன்றே ஒன்றேநீ இரண்டல்ல என்னும் உண்மை விளங்கியபின் பலருணர்வு விளைவ தெங்கே விதம்விதமே குருமாரென் றுணர்தல் விட்டுக் களங்கமிலாக் குருநாதன் என்று கொள்ளுங் கருத்தளித்த கற்பகமே கருணைத் தேவே. 5 குருநாதன் வரலாற்றுக் குறிப்பே இல்லான் குறிபருமை யல்லாத கோதில் நுண்ணி பருஞாலம் நெறிதவறும் பருவ மெல்லாம் பரிந்தெடுத்த கோலங்கள் பலவே நல்ல ஒருநாதன் பலமாராய் ஓதப் பட்டான் ஊர்பலவும் மொழிபலவும் உறைந்து பேசித் திருஞான நெறிவிளங்கச் செய்தான் என்று சிறுமனத்தைத் தெளிவித்த சித்தே வாழி. 6 குருநாதன் இறைநீயோ தனியோ என்றென் குறுமதியும் ஆய்ந்தாய்ந்து குலைந்த பின்னை ஒருநாளும் ஆய்வாலே உண்மை தேறல் உறாதென்றும் குருஅடியில் ஒன்றின் உண்மை ஒருவாத சிந்தனையில் ஒளிரும் என்றும் உறுதியிலா என்னுளத்தும் உணர்த்தி னாய்கொல் கருவாதை தீர்ப்பதென்ற கருணை போலும் கற்பனையெல் லாங்கடந்த கற்புத் தேவே. 7 குருமாரிவ் வுலகணைந்து குறித்த மார்க்கம் குவலயத்தில் பலமதமாய்க் கொழிக்கும் இன்பம் பருகாதார் பன்மார்க்கப் படுகர் வீழ்ந்து பழிபாவம் பரப்புகின்றார் பரமே உன்னைக் கருதாத நெஞ்சினரே கருணை இல்லார் கற்பகமே வெறிமதங்கள் காய்ந்து சாய ஒருநாத உன்மார்க்கம் ஓங்கச் செய்யாய் உயர்நாதங் கடந்தொளிரும் ஒருமைத் தேவே. 8 தனித்தனியில் ஒவ்வொரிதழ் சார்ந்து சார்ந்து தண்மலராய்க் காட்சியளி தன்மை போலத் தனித்தனியே குருநாதன் என்று கூறுந் தனியாட்சி சேர்ந்தக்கால் குருமா ரென்ற இனத்தாட்சி எழுந்ததென இறையில் தேறும் எளிவகையும் இங்குலவ இனிதே செய்தாய் மனித்தருக்குக் குருநாதன் வழியே நல்ல வாழ்வளிக்கும் வானொளியே மாண்புத் தேவே. 9 பொன்வணத்தார் அருள்மனத்தார் பிணிமூப் பில்லார் பொன்றலிலார் அறம்வளர்க்கப் பூண்பர் யாக்கை மன்னியற்கை ஏவல்புரி வரமே பெற்றோர் மலைமறைப்பர் கடல்பிரிப்பர் மற்றுஞ் செய்வர் உன்னரிய ஒலிமறையின் உண்மை சொல்வர் ஒருவர்பல ராவர்பலர் ஒருவ ராவர் பன்னுகுரு மாரென்று பாவி நெஞ்சில் படிவித்தாய் எப்படியோ பரமா வாழி. 10 17. எண்மர் கோதிலறம் வளர்க்கஇங்குக் குருமார் கொண்ட கோலங்கள் தொகைகாணக் கூர்ந்து பார்த்தேன் சோதனையில் தொகையொன்றுந் தோன்ற வில்லை தொடர்ந்துள்ள எண்மர்தொகை தோன்று மாறும் பேதமிலை அவருள்ளென் றுணரு மாறும் பேயுளமின் னொளிபிறங்கச் செய்த தென்ன சோதிநின தருள்போலும் தோற்ற மின்றித் துணைசெய்யும் இயல்புடைய சுடரே போற்றி. 1 1. மகம்மது நபி அரபிய நாட்டிற் றோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த மகம்மது நபியே போற்றி தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி போற்றி 2. இயற்கை அன்னை உருவமிலா இறைவனுக்கும் உடலளித்து நீல்வானக் கருமுடியும் தரையடியும் கடலுடையும் மலையருவி மருவணியும் புனைந்துகதிர் மலர்விழியால் இசைவடிவால் அருளுயிர்க்குப் பொழிஇயற்கை அன்னை திரு வடிபோற்றி. 3. கிறிது உலகம் உய்ய ஒளிவீசி உதித்த தெய்வச் சேய்போற்றி மலையி லெழுந்து மாசில்லா மறையைப் பொழிந்த மழைபோற்றி சிலுவை அறைந்தா ரிடத்தும் அருள் செய்த பொறுமை நிலைபோற்றி அலகில் பாவர் கொழுகொம்பாம் அன்பு கிறிது அடிபோற்றி. 4 4. அருகர் கொல்லும் ஆட்சி குணந்தெறு வேளையில் கொல்லா நல்லறங் கூறி வளர்த்தவன் அல்லல் தீர்த்தருள் ஆதி அருகனே மல்லல் மிக்க மலரடி போற்றியே. 5 5. புத்தர் சீலமெலாம் ஓருருவாய்த் திரண்டெழுந்தா லெனஉதித்த செல்வம்! போற்றி கோலமிகு மனைவிடுத்துக் கொடுங்காட்டில் தவங்கிடந்த குணமே போற்றி மாலரசின் அடியிருந்து மயக்கமற அறமுரைத்த மணியே போற்றி சாலறத்துக் குழுவிளங்கச் சங்கம்வளர் புத்தகுரு! சரணம் போற்றி. 6 6. கண்ணன் போரார்களம் பொலிதேரினில் பொருதப்புகு வீரன் வாரார்சிலை வளையாதவண் மயக்குற்றமை கண்டு நாரார்பயன் கருதாஅற ஞானந்தரு கண்ணா தாரார்மணி வண்ணாஅணி தாண்மாமலர் போற்றி. 7 7. குமரன் ஆற்ற இளமை அழகா குமரா ஏற்ற அயில்வேல் இறைவா முருகா ஊற்று மலையி லுலவுங் குகனே போற்றி அடிதாள் புகலே குருவே. 8 8. மோனமூர்த்தி மூன்று புரமெரித்த முக்கண்ணா கல்லாலின் கான்று மொளியடியில் கைகாட்டி முத்திரையால் சான்ற அறநுட்பம் சாற்றாமல் சாற்றுமொரு தோன்றலாம் மோனகுரு தூயதிருத் தாள்போற்றி. 9 18. வாழ்த்து உருவமில் இறைவன் ஒருவன் என்றே அருளிய மகம்மது பெருநபி வாழி உன்னற் கரிய உருவமில் ஒருவனை உன்னற் குரியனாய் உதவ உடலளி கன்னி இயற்கை அன்னை வாழி நேசி பகைவரை என்று பேசி ஆணி அறைந்த மாணில ரிடத்தும் இரக்கங் காட்டிப் பரக்கச் சிலுவையில் நின்ற கிறிது அன்பு வாழி கொலையர சோங்கிய நிலையில் தோன்றி அஹிம்ஸா பரமோ தர்மா என்றும் தயா மூல தர்மா என்றும் அருளறம் வளர்த்த அருகன் வாழி சீலமே திரண்ட கோலங்கொண்டு போதியி னடியில் சோதனை செய்து ஒருமையில் நின்று தரும முணர்த்திய சத்திய ஞானப் புத்தன் வாழி பாரதப் போரிடைச் சாரதி யாகிப் பயன்கரு தாத வியன்திருப் பணியாம் பாதைகாட்டும் கீதையை ஓதிய கொண்டல் வண்ணக் கண்ணன் வாழி நாதக் கொடியும் போதவிந் தூர்தியும் ஞான வேலும் மான இச்சா சத்தியும் எல்லாச் சித்தியும் உடைய அமரன் அழகுக் குமரன் வாழி காமனைக் காய்ந்து காலனைக் கொன்று முப்புரம் எரித்தே அப்புர முள்ள கல்லா லடியில் சொல்லா மற்சொலும் மோனம் வாழி சாந்தம் வாழிசன் மார்க்கம் வாழி இனிதே. 19. குருமார் ஒருமை உலகெல்லாம் பொலிந்தோங்க உயிர்ப்பளிக்குஞ் செழுங்கதிரே புலனெல்லாம் வென்றவர்க்குப் புத்தமிர்தஞ் சொரிமதியே கலையென்னும் பயிர்தழைக்க அறிவுபொழி கருமுகிலே அலகில்லா ஒளிவண்ண அருட்குருவே அடிபோற்றி. 1 மக்களுயப் பலமதங்கள் மருவஅமைத் தவற்றினிடை மிக்கதொரு சமரசத்தை மிளிரவைத்தாய் உயிரென்னச் சிக்கலதில் உற்றதென்ன? சிற்றுயிர்கள் அறியாமை தக்கவர்க்கு வழியுணர்த்துந் தழல்வண்ண மெய்க்குருவே. 2 எம்மதத்தில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் செம்மையறம் நின்றொழுகின் சீர்பெறுதல் கூடுமென்று மெய்ம்மையுரை பகர்ந்தகுரு மேலவனே பன்மைமத மம்மரழித் தெனையாண்ட மாண்பினையான் மறவேனே. 3 விதங்கண்டு வாதஞ்செய் வீணருடன் உழன்றேற்கு மதங்களெலாம் உன்னடியில் மலர்ந்துநிற்கும் உண்மைநிலை இதம்விளங்க என்னுளத்தில் எம்பெருமான்! செய்தனையே பதங்கடந்த நிலைகுறிக்கும் பரமகுரு வாழியரோ. 4 அறந்தேய்ந்த இடமெல்லாம் அவதரிக்கும் ஓருவஉனைச் சிறந்தார்க்கும் பலபெயரால் செகம்போற்றும் உண்மைநிலை மறந்தார்கள் பன்மையிலே மயங்குகின்றார் வாதத்தில் புறங்காண வாதமெலாம் பொன்னடியை வேண்டுவனே. 5 ஒருவஉனக் குலகளித்த உத்தமப்பேர் பலகொண்டு குருமௌன மூர்த்தியென்றுங் குமரனென்றுங் கண்ணனென்றும் மருவருகன் புத்தனென்றும் மலைக்கிறித்து நபியென்றும் கருவியற்கை கன்னியென்றுங் கருதிநிதம் வாழ்த்துவனே. 6 ஆலமரும் மௌனியென்பேன் அணிகடம்புக் குமரனென்பேன் காலமலர் புன்னைநிழற் கண்ணனென்பேன் கடிப்பிண்டிப் பாலமரும் அருகனென்பேன் பண்பரசுப் புத்தனென்பேன் கீலமரக் கிறித்துவென்பேன் பிறரென்பேன் குருவுனையே. 7 ஆலடியில் அறிவளித்தாய் அசோகடியில் அருளளித்தாய் கோலரசில் அறமளித்தாய் கொலைமரத்தில் அன்பளித்தாய் நீலடியில் இசை அளித்தாய் நிறைகடம்பில் அழகளித்தாய் சீலகுரு உனையடைந்தேன் சிறியேனுக் களிப்பதென்னே. 8 உருஅருவ மில்லாத ஓர்இறையே உண்டென்னும் அருமறைகள் மொழியாலே அருள்ஞானம் அமைவதுண்டோ உருவுடைய குருநாதா உன்காட்சி இறைசேர்க்கும் பொருளுணர்ந்து வந்தடைந்தேன் பொய்கடிந்து மெய்யருளே. 9 காணாத இறையென்றும் காணவல்ல இறையென்றும் மாணான மறையுரைக்கும் மனந்தெளியா தலுத்துழன்றேன் வாணாளை வீணாக்கி வாடிமிக வந்தடைந்தேன் காணாத இறைகாட்டுங் காணிறைநீ குருவென்றே. 10 20. குருநாதன் உருஅருவம் அருவுருவம் ஒன்றுமிலா இறைவிளங்கும் திருவுடைய உளக்கமலத் தெய்வவொளி குருநாத உருவெடுத்த நாள்முதலா உனைநாடி உழைத்திருந்தால் பெருநிலையைப் பெற்றிருப்பேன் பிழைபொறுக்க வேண்டுவனே. 1 பருமையினைப் பயில்கின்றேன் பருமையினைப் பருகுகின்றேன் பருமையெலாங் கடந்தொளிரும் பரம்பொருளை அடைவதெங்ஙன் குருபரநின் திருவடியைக் குறிக்கொண்டு வாழ்ந்திருந்தால் திருவருளைப் பெற்றிருப்பேன் சிறுமையினைப் பொறுத்தருளே 2 குறியில்லா உலகினிலே குறிநெறிகள் பலஉண்டு நெறியெல்லாம் நின்றாலும் நின்கருணைத் திருநோக்கைப் பெறினல்லால் இறைமைநிலை பெறலரிதென் றுணர்ந்துவந்தேன் அறமெல்லாம் அருள்குருவே அடியன்முகம் பாராயோ. 3 உருவாதி இலாஇறையே உயிர்க்கருள உருத்தாங்கிக் குருவாக வருவதெனக் கூறுவதும் மறுப்பதுவும் பருவான உலகியற்கை பாழாய்வில் படிந்தெழுந்து குருநாத உனையடைந்தேன் குணக்குன்றே ஆண்டருளே. 4 ஏடுகளை ஆய்ந்தாலும் எம்மதத்தில் புகுந்தாலும் காடுமலை அடைந்தாலும் கண்டனங்கள் செய்தாலும் பாடுபல பட்டாலும் பயனிலைஎன் றுணர்ந்தின்று வாடுநிலை நீ அறிவாய் வாழஅருள் குருமணியே. 5 சடையினிலும் உடையினிலும் தாடியிலும் மொட்டையிலும் படைபடையாய்ப் பாடலிலும் பஜனையிலும் பூசையிலும் உடையதிரு ஞானம்வளர் உறுதியிலை எனத்தெளிந்தே அடைவெனநின் னடிஅணிந்தேன் அருள்புரியாய் குருமணியே. 6 மண்விடுத்துப் பொன்விடுத்து மங்கையரை விடுத்தொதுங்கிக் கண்ணடைத்துக் காற்றடைத்துக் கல்மரமா யிருப்பதிலும் பண்பிலையென் றுணர்ந்துனது பதமலரில் வண்டாக நண்ணியதை நீஅறிவாய் ஞானமருள் குருமணியே. 7 கந்தனென்றோ கிறித்துவென்றோ கண்ணனென்றோ மற்றுமுள எந்தநிலை கொண்டேனும் எனக்கருள வரல்வேண்டும் சிந்தனையே உனக்காக்கிச் சின்மயமே ஒன்றுகின்றேன் சந்தமறை மொழிந்தருளிச் சகங்காக்குஞ் சற்குருவே. 8 என்மனமே குருவாகி எனைநடத்தும் வழிகாணேன் பொன்மனத்தைக் குரங்காக்கிப் புகுந்துழன்றேன் புரைநெறியில் கன்மனத்துப் பாவியெனக் கைவிடுத்தா லெங்கடைவேன் பன்மரஞ்சூழ் செடியாகிப் படுகின்றேன் அருள்குருவே. 9 உருவாகி அருள்புரிவாய் உணர்வாகி அருள்புரிவாய் கருவாகி அருள்புரிவாய் கருத்தாகி அருள்புரிவாய் பெருமானே எப்படியும் அருள்புரிவாய் என்றென்றே குருவேஉன் னடிஅடைந்தேன் குறைநீக்க அருளுதியே. 10 21. மனம் எல்லாம் வல்ல இறையோனே என்னில் மனத்தை ஏன்படைத்தாய் பொல்லா அதனை வழிபடுத்தப் புனிதா உன்னால் இயலாதோ வல்லா ரதனை ஆய்ந்தாய்ந்து வரைந்த உரைகள் பலகொண்டு கல்லார் கற்றார் மயங்குவதைக் காணாய் கருணைப் பெருங்கடலே. 1 எங்கு முள்ள இறையோனே என்னுள் நீங்கா இனிமையனே அங்க உறுப்பில் மனமொன்றோ அதனில் அடங்கும் எல்லையதோ எங்கும் ஒடி இயங்குவதோ இனிதோ தீதோ ஐயாவே சங்கை அறுத்து நிலைபெறுத்திச் சாந்த வண்ணம் ஆக்காயோ. 2 என்னிலுள்ள மனம் இன்னே எழுந்து கங்கை ஹோயாங்கோ பன்னு வால்கா மெஸோரி பரவு தான்யூப் தேம்மூழ்கி மின்னு மதிசேய் குருஅருக்கன் மிளிரு நிபுலை சென்றுசென்று துன்னும் விரைவின் மாயமென்னோ துகளே இல்லாத் தூயோனே. 3 மலையா ஒங்கும் அணுவாகும் மற்போர் செய்யும் அமைதியுறும் புலியாய்ப் பாயுங் கோவாகும் புயலாய் வீசும் சிறுகாற்றாம் கலையாய் வளரும் கசடாகும் கருணை பெருக்கும் கொலைபுரியும் நிலையா மனஞ்செய் நடமென்னே நினைவுக் கெட்டா மெய்ப்பொருளே. 4 மனமே புலனாய்ப் பொறியாகி வயங்கும் உடலாய் உலகாகி அனலி மதியாய்க் கோளாகி அவைக ளுணர்த்துங் கலையாகி நினைவாய்க் கனவாய் உருவெளியாய் நிகழ்த்தும் மாயம் என்னேயோ சினமே இல்லாச் சிற்பரமே சிந்தைக் கெட்டா மணிவிளக்கே. 5 மனத்தின் விகாரம் யாவுமெனும் மறைவைத் தெளிய அலைந்தொழிந்தேன் வனத்தில் விகாரம் மாயுமெனும் மாற்றம் பொய்யென் றறிந்துணர்ந்தேன் மனத்தின் எல்லை கடந்தொளிரும் மன்னே மின்னே உன்னடியார் இனத்திற் சேர்ந்தால் தெளிவடைவேன் இன்பப் பொருளே அருளாயே. 6 புறத்தே உழலும் மனந்திரும்பிப் புகுந்தால் அகத்தே புலனடங்கும் அறத்தின் கூறு கால்கொள்ளும் அதுவே குருவாய் வழிகாட்டும் பொறுத்தல் வளரும் அருளுற்றுப் பொங்கும் புனித ஞானவெளி திறக்கும் இவைகள் எளிதாமே சித்தே உன்றன் துணைபெறினே. 7 நன்மை தீமை உலகிலுண்டோ நாடும் மனத்தில் அவையுண்டோ நன்மை நிறைந்த மனத்துக்கு நன்மை உலகே புலனாகும் புன்மைத் தீமை மனத்துக்குத் தீமை உலகே புலனாகும் பன்மை யுணர்வு மனஞ்சாகப் பரமே பணிசெய் கின்றேனே. 8 அச்சம் பொய்கோட் புறமனமே அருக அருக அகமனமும் பச்சென்றரும்பி மலர்ந்து நிற்கும் பயனே கருதாப் பணிபெருகும் அச்சம் பொய்கோள் அற்றொழியும் அன்பு வீரம் ஆர்த்தெழும்பும் விச்சே எதற்கும் அருள்வேண்டும் வீணன் முகத்தைப் பாராயோ. 9 குருவென் றெழுந்தால் அகமனமே குறைகள் தீர்ந்து குணமாகும் உருவில் காமன் காலன்செய் உருட்டும் மருட்டும் உதைவாங்கும் தரும மோங்கும் தயைவளரும் தரணி யெல்லாம் சோதரமாம் பெரும! எங்கும் உன்மார்க்கம் பிறங்கும் பிழைகள் பொறுத்தருளே. 10 22. மனக்குரு உடன்பிறந்து பிரியாதே உடன்வளர்ந்து வருமனமே கடந்தவரும் கடுந்தவரும் கற்றவரும் மற்றவரும் தடம்புவியில் உனை இகழ்ந்து சாற்றுவதென் வழிவழியே இடந்தரநின் பாலுள்ள ஏதமென்ன இயம்புதியே. 1 யானடையும் நிலைமைகளை ஆய்ந்துணரும் ஆற்றலிலார் ஈனஉரை பலபகர்ந்தே எனைஇகழ்வர் எனமனமே மானமுடன் உன்நிலையை மதிபதியச் செய்தாயுன் ஊனநிலை கழன்றுவிடின் உண்மைநிலை புலனாமே. 2 மனமேநீ அடைந்துவரும் மாயைநிலை எத்தனையோ நினைவேறிப் பார்க்குங்கால் நெடுங்கடலாய்த் தோன்றிடுமே இனமாகி இயங்குங்கால் எண்மூன்றி லடங்கிவிடல் தினமேவு தியானத்தால் திறப்பாமென் றுணர்த்தினையே. 3 புலன்களிலே உழல்கின்ற புறமனமாய் அவையொடுங்க நலன்களிலே நாட்டங்கொள் நடுமனமாய் ஆங்கிருந்து பலன்களிலே செல்லாத பணிபுரியும் அடிமனமாய் மலங்களிலே புரண்டெழுந்து மாசறுக்கும் மனம்வாழி. 4 புறநோக்கி மனமேநீ புரிகுறும்பால் இழிவுனக்கே. அறநோக்கும் நடுநுழைவில் அற்றுவிடும் இழிவெல்லாம் நெறிநோக்கும் அடிஅணைவில் நீகுருவே ஆகிஇறை நிறைநோக்கை அறிவுறுத்தும் நின்பெருமை புகலரிதே 5 புறமனமாய் நீபுரியும் பொல்லாத வினைபலவே அறமனமாய் நடுஅமைவில் அயல்மனங்கள் நினதாகும் திறமடவை சித்துவரும் செய்யாதே செல்லுவையேல் உறுவையடி நிலைமனமே உயர்குருவாய் எழுவாயே. 6 நீகுருவாய் எழுந்தருளி நிறைவழியைக் காட்டியதும் ஏகஒலி ஓசைஒளி எழும்முறையே எழில்மனமே போகுமிடம் மேலெங்கே புதுவாழ்வை அளித்தொளிக்கும் ஆகமிலாய் கைம்மாறோ ஆற்றும்வகை அறியேனே. 7 உன்புறமோ உப்பாழி உன்நடுவோ உயராவி உன்னடியோ தண்மைமழை ஒத்திருக்கும் வகையுணர நன்மனமே துணைபுரிந்தாய் நானிதற்கென் செலுத்துவனே பொன்மனமே என்றுன்னைப் போற்றிநிதம் வழுத்துவனே. 8 புறமடங்க அழகுருவைப் பொருந்தநினைந் ததிலொன்றில் நிறவுருவம் நடுநீறாய் அடிஒளியாய் நீறாகும் உறைபருமை நீராகி ஒலிகாற்றாய் ஒடுங்கல்போல் முறைமுறையே நிகழ்வதனை முழுமனமே உணர்த்தினையே. 9 பிடுங்குபுறம் வயமாகப் பிணிபுலனில் நுழைமனமே அடங்கநடு புகுந்தடியில் அணைந்துவழி காட்டிமறை தடங்கருணைப் பெருங்குருவே தரணிசொலுங் குருமார்கள் அடங்கலுமே நீயானால் யாரினியர் உனைவிடவே. 10 23. முறையீடு குறையுடையேன் கோதுடையேன் குணமில்லா நடையுடையேன் கறையுடையேன் கரவுடையேன் கருணையில்லாக் கருத்துடையேன் சிறையுடையேன் சினமுடையேன் சீரில்லா நெறியுடையேன் இறையவனே கடையேறும் இனியவழி காட்டாயோ. 1 பத்தியிலேன் பதைத்துருகும் பரிவில்லேன் நெஞ்சினிலே சுத்தமிலேன் வாழ்க்கையிலே சுகமில்லேன் துகளறுக்கும் புத்தியிலேன் சத்தியிலேன் பொறுமையிலேன் உனையன்றிச் சத்தியனே எனைக்காக்குஞ் சார்புடையார் எவரேயோ. 2 இளங்குழவிப் பருவத்தே இழைத்தபிழை யானறியேன் வளங்கொழிக்கும் பருவமெலாம் வளர்த்தபழிக் கென்செய்கேன் களங்கமற அழுகின்றேன் கருத்துநிலை அறிவாயே விளங்கருளைப் புரியாயேல் வேறுவழி எனக்குண்டோ. 3 உன்னருளைப் பெறவேண்டி உடலோம்ப விரையாதே என்னிமித்தம் உடலோம்பி இழிவினைகள் செய்தலுத்தேன் உன்னினைவு மனத்திலுற உயிர்சுற்றுங் கொழுகொம்பாய் மன்னுமுணர் வெழலாச்சு மன்னிப்பெழின் உய்வேனே. 4 பொல்லாத பழிபாவம் புகுந்திடவும் இடந்தந்த கல்லாத மாக்களினுங் கடையாய மனிதன்யான் நில்லாத விளையாட்டை நிலையாக நினைந்தழிந்தேன் நல்லார்தம் மனத்தமுதே நாயகமே பொறுத்தருளே. 5 புறமனத்தின் வழியுழலும் பொறிபுலனின் பொல்லாமை அறவுணர்ந்தே அகமனத்தில் அணைதருணம் ஆண்டவநின் உறவளித்தால் உயந்திடுவேன் ஒடுங்குந்தொல் வினையாவும் அறமலையே அருளருவி ஆனந்த மழையமுதே. 6 மதவெறியால் வாதப்போர் மலியிடங்கள் சென்றுழன்றேன் இதமறியேன் நிந்தனையும் இகல்பகையும் எழுந்தனவால் மதமெல்லாம் நீயொருவன் மருவுகின்ற நிலையுணர்ந்து பதமடைந்தேன் பரம்பரனே பழையவினை கழித்தருளே. 7 செருவார்க்கும் அரசியலில் சேர்ந்தார்ந்த மனந்திரும்பி அருளாக்க அரசியலில் அணைந்துபுக விழைவதனைத் தெருளான்ற அறவடிவோய் திருவுளநன் கறியாதோ இருளாற்செய் பிழைபொறுக்கும் இறையெனவந் தடைந்தேனே. 8 கன்மமெலாம் அநுபவித்தால் கட்டறுமென் றுரைக்கின்றார் கன்மமதில் கன்மமுளை கால்வழிகள் வறள்வதென்றோ கன்மவழி உழல்வதெனில் கருணைவள்ளால் நீஎதற்கோ கன்மவழி உழல்வதெனல் கடவுளுனை மறப்பதன்றோ. 9 கன்மமென்று நடுக்குற்றுக் கருத்துடைதல் எற்றுக்கோ வன்மமிலா அன்பிறைநீ என்றடியில் வணங்கிவினை உன்னிஅழு தழுதுருகின் உண்மையுணர்ந் தருட்பெருக்கால் கன்மமழி கணக்கறிந்தேன் கடவுள் நின தருளாலே. 10 24. முறையீடு பிறப்பிலே சாதி மதத்திலே சாதி பேசிடும் மொழியிலே சாதி நிறத்திலே சாதி நாட்டிலே சாதி நீதியில் நிறையினில் சாதி அறத்திலே சாதி ஆலயஞ் சாதி அழுகிய பிணத்திலுஞ் சாதி புறத்தகஞ் சாதி நாற்றமே எங்கும் புங்கவ அழித்தல்நிற் கரிதோ. 1 சாதியும் மதமும் சம்பிர தாயச் சாத்திரச் சூத்திரச் சழக்கும் சூதுடை வழக்க ஒழுக்கமும் சூழ்ந்து தொல்லருள் நெறியினை மறைத்துச் சோதியே உலகை அரித்துணல் கண்டும் சோதனை என்றுநீ இருந்தால் ஆதியே எளியேம் செய்வதொன் றறியேம் அருணெறி ஒம்புக அரசே. 2 திருநெறி என்னுஞ் செடிவளர் போழ்தில் சீறிய அலகையாய் வீறிப் பெருகிய சாதி முதலவெங் கொடிகள் பிறங்கலாய்ப் பிறங்கலாய் மண்டி அருளொளி படரா தடக்கினால் உலகில் அருநெறி எங்ஙனம் ஓங்கும் உருகிய உளத்தால் உன்னடி போற்றும் உண்மையை உணர்ந்தருள் அரசே. 3 மன்பதை இயங்கி மகிழ்வுற ஆதி மநுவெனும் மன்னவர் வகுத்த பொன்முறை யாலே பொங்கிய தன்பு பொலிந்ததிங் கமைதியே அந்த நன்முறைக் கூறு செய்தனர் பின்னோர் நானிலம் கலக்குற அரசே உன்னிய தென்னோ உலகினைத் திருத்தல் உத்தம ஒருவநின் கடனே. 4 அருணெறி செழிக்க அறத்தினர் தந்த அரசியல் எங்கணுந் தழைக்கத் தெருளறி வோர்கள் செய்தில ரதனால் செகமெலாம் கொலைக்கள னாச்சே மருளிலே வீழ்ந்து மன்பதை மறைந்தால் மன்னநின் னிடம்விடுத் தொருவா கருணைபின் னெவர்க்குக் காட்டுவை இன்பக் கடவுளே என்னுடை அன்பே 5 அன்பினில் வளர்ந்த அரசியல் சாய ஆசையே அரசியற் பேயாய்த் தன்னலத் தாயாய் விளம்பரத் தலையாய்த் தாக்கிடும் தாள்களாய்க் கட்சி வம்புக ளாகி வாதமாந் தேர்வாய் வதைபடைப் புரட்சியாய்க் கொலையாய்த் துன்புசெய் கோரம் சொல்லவும் ஒண்ணா தொலைத்தருள் சுதந்திரத் தேவே. 6 மக்களாய்ப் பிறந்தோர் மாக்களாய் மாற மரபிலா அரசியல் துணைசெய் சிக்குளே வீழ்ந்து செகமெல்லாம் சிதைந்து சிறுகுமிந் நாளினில் யாண்டும் பக்குவ ரில்லை பண்பினால் ஆக்கப் பரமனே நிலைமையை அறிவாய் விக்குளின் நேரம் விழிபுரள் வேளை விமலனே காத்தருள் செய்யே. 7 கைத்தொழில் செய்து கடவுளே என்று கழல்நினைந் தருளினால் வாழ்ந்த வித்தக வாழ்வு வீழ்ந்தது மின்னால் மேய்பொறிப் பேயினால் எழுந்த பித்தமே திரண்ட முதல்தொழில் பிரிவாய் நாடுகள் ஆசையாய் முடுக அத்தனே பழைய தொழில்வள ராட்சி அவனியில் அமைதர அருளே. 8 நாடுகள் ஆசை நாடுதல் செய்யும் நலமிலா ஆட்சியே வேண்டா பாடுக ளெல்லாம் குண்டுக ளாகிப் பாரினை அழித்திடல் தகுமோ ஏடுகள் படித்தோர் ஏழைகள் உழைப்பை எப்படி உணருவ ரந்தோ வாடுநர் குறைதீர் வள்ளல்நீ என்றே வந்தனன் திருவடி நினைந்தே. 9 சாதியும் மதமும் முதல்தொழில் முதலாம் தடைகளும் சாய்த்தன பொதுமை ஆதியே அதனை ஆணவச் செயலால் அமைத்தலின் அருமையை உணர்ந்து நீதியில் நிலவும் நின்னருட் டுணையே நினைந்தநல் வினைபுரி குழுவில் ஒதுதற் கரிய ஒருவனே கூடி உயர்பணி செய்யவேண் டுவனே. 10 25. முறையீடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யனாய்த் திரிதரு பாவி மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்து மெய்யனாய் மேவுதல் என்றோ செய்யனே உன்றன் சித்தமென் மீது திரும்பினால் சீர்பெறல் கூடும் உய்யவே அருளாய் உண்மையே எங்கும் உளமுடை ஒப்பிலா மணியே. 1 கருத்தினால் பாவம் கண்ணினால் பாவம் கைகளால் பாவமே நிகழ்த்திப் பருத்தனன் கொழுத்த பாவியாய் வளர்ந்து படுசுமை பாரினுக் கானேன் கருத்தனே பாவக் கடல்கடந் தேறுங் கவட்டையைக் காண்கிலேன் நிலையை ஒருத்தனே அறிவாய் உதவிடல் வேண்டும் உனைவிடக் களைகணும் உண்டோ. 2 எங்கணும் உள்ளாய் ஈசனே பாவம் எப்படி நுழைந்ததோ அறியேன் இங்கதை ஆய இறங்கினன் நூல்கள் எடுத்தனன் அடுத்தனன் பலரைச் சங்கையே வளரச் சஞ்சலம் பெருகச் சார்ந்தனன் திருவடி இன்று புங்கவா புனிதா பொருந்திய பாவம் பொன்றிடச் செய்தருள் அரசே. 3 புறத்ததோ பாவம் அகத்ததோ என்று புந்தியைச் செலுத்திய புலவோர் புறத்ததே என்றும் அகத்ததே என்றும் புனைந்தனர் பலப்பல நூல்கள் அறத்திலே விளங்கும் ஐயனே அவைகள் அலைத்தலைத் தரிப்பதை அறிவாய் மறத்திலே விழுந்த என்மனம் மாய மாசிலா மணியருள் புரியே. 4 பாவமே நிகழ்த்திப் பாவியேன் வளர்ந்தால் பண்புறு நாளுள வாமோ காவலே செயினுங் கண்முதற் புலன்கள் கட்டுறல் அரிதெனக் கண்டேன் தாவர மென்னச் சலனமில் தவமோ சாருநாள் எந்தநாள் அறியேன் ஆவதென் வாழ்வில் ஐயனே படைத்த அப்பனே அடைக்கலம் அடியே. 5 கண்ணினை மூடக் காற்றினை அடக்கக் கருத்தினை ஒடுக்கிடச் சொல்லும் பண்ணிலா யோகர் படிகளி லுழன்றேன் பாழினிற் கழிந்தது காலம் மண்ணிலே பிறந்த பயனினை இழக்க மனமிலை வழியெனக் கருளாய் விண்ணிலே மிளிரும் விளக்குகட் கொளிசெய் மெய்விளக் கேயரு ளொளியே. 6 சிற்பர நின்றன் திருவருட் குறிப்பைத் தெளிந்துணர் திறமிலாக் காலம் பற்பல துறையில் பணிசெயப் பாவம் படர்தொறும் படர்தொறும் அரசே கற்பனை கடந்த கடவுளே அவ்வக் காலையில் காத்தமை இந்நாள் அற்புத மென்ன விளங்கியும் அருளில் அணைகிலா அறிவிலி யானே. 7 ஐயனே நின்றன் அருள்வழி நிற்க அடியனேன் முயன்றனன் முயன்றும் செய்யஅவ் வழியே செல்லவும் நினது திருவருள் வேண்டுமென் றுணர்ந்து கையனேன் நெஞ்சக் கல்கரைந் துருகிக் கண்புனல் உகுப்பதை அறிவாய் மெய்யனே கருணை வெள்ளமே புலனை வென்றிலேன் வெல்வகை யருளே. 8 இயற்கையின் உயிரே இன்பமே அன்பே ஈசனே என்னையும் படைத்துச் செயற்கையைப் படைத்த திறத்தினை அறியேன் தெய்வமே உயிர்களின் உள்ள முயற்சியின் பயனே முனிவிலா முதலே மூடனேன் நிலையினை அறிவாய் பயிற்சியும் படிப்பும் என்செயும் பண்பே! பாவியென் பிழைபொறுத் தருளே. 9 கற்றவ னென்று கருத்திலே செருக்கிக் காலமே கழித்தனன் வீணில் நற்றவஞ் செய்ய நாளிலை நல்ல ஞானிகள் கூட்டமு மில்லை குற்றமே செய்தேன் குறைபல உடையேன் குணமலை நீயெனத் தெளிந்தேன் பற்றென உன்னைப் பற்றினேன் இன்று பரமனே பார்த்தருள் செய்யே. 10 26. முறையீடு எத்துணைப் பிறப்போ எத்துணை இறப்போ எடுத்தனன் உலகினில் ஏழை அத்துணைப் பிறப்பும் அத்துணை இறப்பும் ஆண்டவ நின்னருட் கொடையே பத்திமை யோங்கப் படைத்தனை இந்தப் பண்புறு பிறவியை அந்தச் சத்திய நெறியில் நின்றிலன் பரம சாந்தமே அருள்புரி வாயோ. 1 நெறியிலே நில்லா நீசனேன் என்று நித்தனே தள்ளிநீ விட்டால் பொறியிலேற் கெந்தப் புகலிட முண்டு பொறுத்தலும் அருளலும் பொருந்தும் அறவியல் புடைய அண்ணலே உன்னை அடைந்தனன் பிழைபொறுத் தாளாய் அறிவிலி அழுத அழுகையை அறிவாய் அடைக்கலம் அடைக்கலம் அரசே. 2 பலதிறத் துறையில் படிந்தனன் பாவி பரமநின் னடியினை மறந்தே சிலதினம் உன்றன் சீரடி நினைக்கச் செய்ததும் அருட்டிற மன்றோ கலதிய ரேனும் பிழைகுறித் தழுது கசிந்துளம் உருகினால் அருளும் சலதியே அமுதே சார்ந்தனன் அடியில் சழக்கனை ஆண்டருள் செய்யே. 3 வீடுகள் கவலை வீதிகள் சவலை விரிபதி ஊர்களுங் குழப்பம் நாடுகள் புரட்சி பாடுகள் அதிகம் நாதனே அமைதியை நாடிக் காடுகள் புகினுங் கட்டுகள் சட்டம் கடித்திடுங் கொடுமைசேர் காலம் வாடுறு மனத்தால் வந்ததை அறிவாய் வள்ளலே வழியருள் செய்யே. 4 அமைதியே வாழ்க்கை நோக்கமென் றறைந்தார் அன்றருட் குரவர்கள் இன்றோ அமைவுறு தொழிலும் வாழ்க்கையும் அரசும் அமைதியை அரித்திடல் வெளியே சமயமும் உரிய கோயிலும் அமைதி சாய்த்திடும் நிலைமைநேர்ந் துளதால் இமயமா நிற்க எண்ணினேன் ஈசா இயலுமோ பரபரப் பிடையே. 5 மலையொடு பொழிலும் நதியொடு கடலும் மங்கையும் குழவியும் மதியும் கலையென நின்றே அமைதியை வழங்குங் காட்சியும் நெஞ்சினைக் கவரா நிலைமையை, உற்ற நிலத்தினை, மாற்றி நிறுத்திட எவர்தமால் இயலும் அலைவிலாச் சாந்த அமுதமே அருளால் அமைவுறா உலகமும் உண்டோ. 6 உலகினிற் பாவம் உறுத்தெழுந் தெரிக்கும் உண்மையை ஒருவனே அறிவாய் அலகிலா தெழுந்தால் அழித்திட வல்லார் ஐயனே யன்றிவே றுளரோ உலகுயி ரளித்துப் பாவமும் அளித்த உத்தம அருள்வணன் நீயே திலகமே உள்ளந் திகழொளி விளக்கே செல்வமே திருவருள் செய்யே. 7 இலக்கியம் பயின்றேன் இலக்கணம் பயின்றேன் எழிற்கலை பலப்பல பயின்றேன் அலக்கழி சரியை கிரியையில் நின்றேன் ஐம்புல யோகினில் நின்றேன் துலக்கஎன் னறிவைத் தோயநின் அன்பில் துகளற வாழ்வினில் ஐயா நலக்குற நோக்கின் நானற லுண்மை நாயக அருள்புரி யாயோ. 8 சீலமே நிற்கச் சிறியனேன் முயன்றேன் சிதைந்ததை இடையிடை அறிவாய் சீலமும் உனது திருவடித் தியானச் சிறப்பினில் விளையுமென் றுணர்ந்தே ஓலமே இட்டேன் குறைமுறை இட்டேன் ஒருமொழி கேட்டிலேன் என்றன் ஆலமே உண்டுன் அமுதினைச் சொரிவாய் ஆனந்த வான்மலை முகிலே. 9 முன்வினை என்றும் நிகழ்வினை என்றும் முகிழ்தரு பின்வினை என்றும் என்னவோ எழுதிச் சென்றனர் உளத்தின் எண்ணமோ அறிகிலேன் எல்லாம் உன்வினை என்னும் உண்மையை உணர்ந்தால் உறுதுயர் எங்ஙனம் பெருகும் பொன்னடி மறவாப் புண்ணிய நெறியே புனிதமே பொலியவைத் தருளே. 10 27. முறையீடு உன்னையே நினைக்க உன்னையே பேச உன்னருட் டொண்டையே ஆற்ற என்னையோ செய்தேன் ஏக்குறு கின்றேன் எப்படி உய்குவன் ஏழை உன்னியே பார்த்தேன் உளமெலாம் நடுக்கம் உறுவதை நீயுநான் அறிவேம் கன்னலே கரும்பே கருணையங் கனியே கடையனேன் பிழைபொறுத் தருளே. 1 கன்னலின் பாகே கட்டியே கரும்பே கருணைசேர் அமுதமே உன்னை முன்னைய வாழ்வில் முன்னிய தில்லை முற்றிலும் மறந்தது மில்லை பின்னைய வாழ்வில் முன்னினேன் பெரிதும் பேயனேன் மறந்ததும் உண்டு அன்னையே என்றும் அப்பனே என்றும் அடைந்தனன் பிழைபொறுத் தருளே 2 கல்வியில் விழ்ந்தேன் கலைகளில் வீழ்ந்தேன் கருணையில் வீழ்ந்திலேன் பாவி செல்வமோ இல்லை சேற்றினில் வீழத் திருவருட் டுணையென மகிழ்ந்தேன் பல்வகைக் களியில் படருறா நெஞ்சம் பரமனே அளித்தனை வாழி தொல்வினை அழிந்தால் நல்லுடல் பெறுவேன் தொடர்ந்தனன் பிழைபொறுத் தருளே. 3 சாதியில் நெளிந்தேன் மதங்களில் உழன்றேன் சாத்திரக் குப்பையில் புரண்டேன் நீதியே நாள்கோள் நினைந்தனன் நாயேன் நித்தியச் சத்தியப் பொருளே ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அநாதியே அனைத்திலும் உள்ள சோதியே தொல்லை வினைஎரி சுடரே சூழ்ந்தனன் பிழைபொறுத் தருளே. 4 நாத்திக நூலில் நாடிய குழுவில் நாட்டமும் வைத்தநா ளுண்டு நாத்திகம் என்னை நண்ணிய தில்லை நாதநின் அருளது போலும் ஆத்திக வேடம் அதிகமே உலவி அழித்தது அருணெறி, உண்மை ஆத்திகஞ் செழிக்க ஆருயிர் தழைக்க அணைந்தனன் பிழைபொறுத் தருளே. 5 செல்வமு மின்றிச் சீர்மனை யின்றிச் சிறக்குநன் மக்களு மின்றிப் பல்வள மின்றிப் பணித்தனை வாழப் பரமனே அதனுளங் காண வல்லமை யுண்டோ வாழ்க்கையை வகுக்கும் வள்ளல்நீ, அதன்படி ஒழுகிச் செல்வதென் கடமை சிறுமையால் இடையில் செய்தவெம் பிழைபொறுத் தருளே. 6 செல்வமோ சிறப்போ சேண்மையில் நின்று திகழ்தரும் போதெலாம் தடைகள் ஒல்லெனத் தோன்றும் உள்ளமும் மாறும் உலகமும் நகைசெயும் அரசே செல்வமுஞ் சிறப்பும் தெய்வமே உன்றன் திருவடி மலரெனக் கொண்டு நல்லவே பொழுது போக்குவன் நடுவில் நண்ணிய பிழைபொறுத் தருளே. 7 அளவிலாச் செல்வம் நினதெனும் ஞானம் அடையவே அடியனை இங்கே அளவுடைச் சிறுமை அமைதரு செல்வம் அடைவதைத் தடுத்தனை போலும் களவுறா இயற்கைக் கருணையாஞ் செல்வம் கண்ணனுங் கிறித்துவும் மற்ற வளவரின் செல்வம் வள்ளலே அளித்தாய் வழியிடைப் பிழைபொறுத் தருளே. 8 பிறந்தனன் இங்கே இறப்பனோ இங்கே பெயர்ந்துயான் எவ்விடஞ் செல்வேன் மறந்தனன் வழியை மயக்கினைப் போக்கும் மருந்துடை மருத்துவன் நீயே திறந்தன எல்லாம் சென்றுசென் றுழன்றேன் சேரிடந் தெரியவே இல்லை சிறந்தது காணத் திருவடி அடைந்தேன் சிறியனேன் பிழைபொறுத் தருளே. 9 பொன்னினிற் பொன்னே மணியினின் மணியே பொலிவினிற் பொலிதரு பொலிவே அன்னையின் அன்பின் அருளுடை அன்பே அழிவிலா இன்பமே அடியார் முன்னிய வண்ணம் முறைமுறை பெற்றார் மூர்க்கனேன் அடியனா வேனோ என்னயான்! ஈசா எப்படி உய்வேன் எளியனேன் பிழைபொறுத் தருளே. 10 28. விண்ணப்பம் எல்லாமாய் அல்லவுமாய் இருக்கும் ஒன்றே இயற்கையுடல் கொண்டருளும் இன்பே உன்னை நல்லாரும் பொல்லாரும் நாடல் என்ன நண்பரொடு பகைவர்களும் நண்ணல் என்ன கல்லாருங் கற்றவருங் கருதல் என்ன கருணையரும் வன்கணருங் கழறல் என்ன எல்லாரும் ஈசனென ஏத்தல் என்ன ஏழையேன் தெளிவுபெற இசைப்பாய் ஐயா. 1 பல்லுலகம் உனைப்போற்றிப் பரவல் உண்மை பரவலிலே பலதிறங்கள் பார்க்க லானேன் நல்லுலகம் பயன்கருதா ஞானப் பாதை நண்ணிஉனைப் பரவுதலை உணரச் செய்தாய் சொல்லுலகம் நடிப்பச்சம் பயனை நாடல் சூழஉனைத் தொழுதுவரல் தோன்றச் செய்தாய் நல்லுலகை நாடஅருள் நாயேன் உய்ய நாதாந்தங் கடந்தொளிரும் ஞானத் தேவே 2 காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக் கதைபேசித் தொழில் புரிந்து காசு தேடி மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ மக்கள்நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும் மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங் காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக் கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத் தேவே. 3 இளமையிருந் தெவ்வழியி லேனும் உன்னை எப்படியோ விதம்விதமாய் எண்ணி வந்தேன் வளமையிலும் எளிமையிலும் வணங்கி வந்தேன் வாதையிலும் மகிழ்வினிலும் வாழ்த்தி வந்தேன் உளஅலைகள் ஒடுக்கமுற உன்னி வந்தேன் உறாமையிலும் மறவாமல் ஓதி வந்தேன் களமொழியக் கட்டறுத்துக் கனவி லேனும் காட்சியினைக் காட்டாயோ கருணைத் தேவே. 4 பாவமனம் வாயுடலம் வகுத்தார் யாரே படைபடையாய்ப் பாவங்கள் படைத்தார் யாரே தேவஉன தகமறியேன் சேயின் கையில் தெறுகொள்ளி கொடுத்துவிடின் சேர்வ தென்னோ பாவமெலாம் பகர்ந்துருகின் மன்னிக் கின்ற பண்புடைமை உனக்குண்மை பிறங்க வைத்தாய் காவலிலே புலன்வைத்துக் கசிந்து நிற்கும் கடையன்நிலை கண்டருளாய் கருணைத் தேவே. 5 மூக்குநுனி நோக்கலொடு மூச்சை ஈர்த்தல் மூலஅன லெழுப்பலொடு பாம்பைத் தூண்டும் தேக்கமுத மலயோகச் சிந்தைவிட்டுத் தியானமெனும் அமலத்தின் தெளிவிற் சேர்ந்தேன் வாக்குமனப் பாவம்அறை வலிமை பெற்றேன் வந்துமுறை யிடுகின்றேன் வள்ளால் முன்னே நோக்கியருள் மன்னிப்பை நுழைவே றில்லை நோய்தீர அழுவதென்றன் நோன்பே ஐயா. 6 என்பாவம் வெளிப்படையாய் இயம்பும் ஆற்றல் எனக்களித்த வீரஇனி எளிய பாவம் என்பாலில் அணுகிவர எண்ணுங் கொல்லோ எண்ணினதைத் தலையெடுக்க ஈசா உன்றன் அன்பீனும் அருள்விடுமோ அரசே என்னை அருமந்த பிள்ளைகளில் ஒருவ னாக்கி இன்பாரச் செய்யஉளம் இசைந்தால் உய்வேன் எங்கெங்கும் வீற்றிருக்கும் இனிமைத் தேவே. 7 பாவமெலாம் எங்கிருந்து பரவிற் றென்று பனுவல்களை ஆய்ந்தாய்ந்து பார்த்துச் செத்தேன் மேவியதென் ஐயமின்றி வேறொன் றில்லை விரிவாய்தல் அருளில்லா வித்தை வேலை தாவியவெம் பாவத்தால் தவிக்கும் நாயேன் தற்பரனே உனையடைந்தேன் தக்க மார்க்கம் ஆவிநலம் உறக்காணும் அறிவு பெற்றேன் அழியாத ஆனந்த அருண்மைத் தேவே. 8 பாவமெனில் நடுங்குமனம் பாவிக் கீந்தாய் பரமநின தருட் பெருக்கைப் பரவல் எங்ஙன் ஆவியெலாம் பரவிடினும் ஆற்றா தன்றே ஆண்டவனே ஆருயிரே அமுதே அன்பின் காவியமே ஓவியமே கலையே தெய்வக் கற்பகமே கற்பகஞ்சேர் கருணைக் காவே காவிலுறு கடிமணமே மணத்தின் சூழ்வே கண்காண உளங்காணக் காட்சி நல்கே. 9 உலகிலுள பாவக்கார் ஓடிஒடி உறுத்துருமி நச்சுமழை உரமாய்ப் பெய்து மலையருவி முதலாகி மண்டி மண்டி மலட்டாறாய் ஊற்றாறாய் வானா றாகி நிலைகளெலாம் நிரப்பிஉயிர்ப் பயிர்கள் வேக நெருப்பாகி எரித்துவரல் நிமலா காணாய் நிலமழிந்தால் நின்னருட்கு வேலை ஏது நிறைபொருளே அமுதமழை நிரம்பப் பெய்யே. 10 29. அருள் வைப்பு பச்சையிளங் குழவியிலே பாவிசெய்த தறியேன் படிப்படியே வளருங்கால் பாவமுடன் வளர நச்சரவக் கூட்டரவை நண்ணவைத்த தென்னோ நல்லிளமைப் பருவத்தே நாதஉனை நினைந்த இச்சையிலும் பழிபாவம் இயங்கவைத்த தென்னோ என்வினையோ உன்னருளோ ஏழைஅறி யேனே எச்சமெலாம் நீறாக்கி எனையாளல் வேண்டும் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய அரசே. 1 இளமையிலே உன்நினைவும் இழிபாவ நினைவும் இரண்டுமொன்றாய் இயங்கவைத்த எண்ணமறி வேனோ முளைகிளரிப் பாவஎண்ணம் முகிழ்த்துமர மாகி மூடாமல் காத்தநுட்பம் மூர்க்கனறி வேனோ தளையுளதென் றறைந்துவிட்டார் தரணியிலே அறிஞர் தளைநினைவின் வேரறுக்குஞ் சக்தியிலை எல்லாம் விளைமுதலே உனைநோக்கி வேண்டுகின்றேன் அருளே வேறுதுணை இலைஎனக்கு வினைகடந்த பொருளே. 2 அயலவரின் மொழியினிலே ஆர்வம்வைத்தே அலைந்தேன் அதிற்பெரிய பட்டம்பெறும் ஆசையிடை வீழ்ந்தேன் மயலொழிய மனமாற மறித்தஅதி சயத்தை மாதேவா என்னசொல்வேன் மடமையறிந் தேனே கையிலெழு துங்கணக்குக் கதியெனவே கொண்டேன் கடிதிலதை விரைந்தொழித்த கருணையென்ன அரசே செயலினிலும் நீகலந்து செய்ததுணை உணராத் தீயன்பிழை பொறுத்தருளாய் திருவருளின் வைப்பே. 3 பள்ளியிலே போதிக்கும் பணியுவந்தே ஏற்றேன் பரமஅதன் பற்றறுத்த பான்மைஅறி யேனே கொள்ளைஎரி அரசியலில் குதித்துநின்றேன் ஐயா கொதிப்படக்கிப் பதைப்பொழித்த குணத்தையறி யேனே தெள்ளுதொழி லியக்கத்தில் சேவைசெய்தேன் பன்னாள் சிந்தனையீ டேறாது செய்ததறி யேனே வள்ளலுன தருட்பெருக்கின் வகையுணரா தொழிந்தேன் மலரடிஎன் தலைமீது வைத்தருளா யின்னே. 4 மனைவியொடு மக்களொடு மகிழ்வுடனே வாழ்ந்தேன் மாளஅவர் உளங்கொண்ட மாண்பையறி யேனே மனைவியென மற்றொருத்தி மனத்தில்மரு வாத வண்ணஞ்செய் வல்லமையின் வகையைஅறி யேனே தனிமையிலே வாழ்ந்துபணி தரணியிலே ஆற்றத் தற்பரநின் தயவென்ற தன்மையறி யேனே பனிமொழியர் காட்சியிலே பரமநின தொளியைப் பார்க்கஅருள் சுரந்தநலம் பாடஅறி யேனே. 5 உணவிலுளம் வைத்துவைத்து வகைவகையில் உண்டேன் உணவுளத்தை வறட்டுவித்த உளவைஅறி யேனே வணவணமாய்ப் பட்டாடை வரிந்துகட்டி வந்தேன் வரிவழக்கம் அறவொழித்த மர்மம்அறி யேனே கணகணமாப் பேச்செழுத்தால் கலக்கிவிட்டேன் நாட்டைக் கலக்கவழி மறைத்தடைத்த கணக்கைஅறி யேனே நிணநிணமே செறிபுரட்சி நினைந்தநெஞ்சை அப்பா நீக்கியற மாக்கியதன் நீர்மையறி யேனே. 6 சாதிமதச் சாக்கடையில் சருக்கியடி வீழ்ந்தேன் சமரசசன் மார்க்கமெனுஞ் சார்பளித்த தெதுவோ ஓதுகலை மயற்கடலில் உளமிருத்திப் படிந்தேன் உயர்இயற்கை கலையென்றே உணர்வித்த தெதுவோ போதனையில் நெடுங்காலம் புந்திவைத்தேன் ஐயா போதனையிற் சாதனையே பொருந்தியதென் றெதுவோ சோதனையில் ஆழ்ந்தாழ்ந்த சோதனைக்கும் எட்டாச் சோதிநின தருளன்றிச் சூழ்வதுவே றுளதோ. 7 உருவவழி பாட்டுறுதி ஒரோவழியிற் செய்தால் உறுதிகுலைந் தொருமைகெடும் என்றுரைத்த தெதுவோ திருவுடைய அகத்திணையின் சேர்க்கைபெற்றா லுருவத் திறம்விளங்கும் என்றுணர்த்தித் தெளிவித்த தெதுவோ உருவமெனக் கல்வணங்கல் உயர்வழிபா டாகா ஓவியமே உளங்கவர்வ தெனத்தெரித்த தெதுவோ உருவருவம் ஒன்றுமின்றி ஓங்குபரம் பொருளே உன்னருளே எனக்கொண்டேன் உண்மையெனக் கருளே. 8 குருமணியின் காட்சியிலே வேட்கைகொண்டேன் அரசே கோதில்குரு நாதனுண்மைக் குணங்குறித்த தெதுவோ பருமையிலே மனஞ்செலுத்திப் பன்மையிலே வீழ்ந்தேன் பருப்பன்மை ஒருமைக்குப் படியென்ற தெதுவோ கருமமறல் ஞானமெனக் கருத்திருத்தி வந்தேன் கைம்மாறெண் ணாக்கருமஞ் செய்யென்ற தெதுவோ பெருமநின தருளன்றிப் பேசுதல்வே றுண்டோ பிழைபொறுக்கும் அருளுடைய பெரியபரம் பொருளே. 9 என்னுடைய வாழ்வினைநீ இயக்கிவரும் நுட்பம் இளமையிலே உணராமல் இறுமாப்பால் கெட்டேன் உன்னுடைய அருளாலே உழலுமொரு பாவி உனைமறந்தேன் உய்வேனோ உண்மையிலே கெட்டேன் என்னிலைமை அறியாமை எங்குமுள அறிவே ஏழைமுகம் பார்த்தருளி இரும்பிழைகள் பொறுப்பாய் கன்னலினும் இனிக்கின்ற கருணைபெரு கமுதே காட்டில்வலைப் பட்டகலை கதியானேன் அரசே. 10 30. குறை களைவு அறியாமை எனுமுதலை அடர்ந்ததெனை என்றோ அதைஅகற்றும் ஆற்றலுயிர்க் கில்லையென அருளால் குறியேதும் இல்லானே குறிஉடலும் உலகும் கொடுத்தறிவை விளக்கியதை மறந்தொழிந்த கொடியேன் வெறியேறி இழைத்தபிழை அத்தனையும் பொறுத்து மேலேற்றப் படிப்படியே மனந்தெளியச் செய்த நெறியோனே நின்மலனே நின்பெருமைத் திறத்தை நேர்மையிலேன் எவ்வாறு நினைந்துபுகழ் வேனே. 1 அருளரசே எனக்களித்த அகத்தினிலே அகந்தை அரக்கனுழைந் தாட்சிசெய விடுத்த அறியாமை மருளுடையேன், அவன்கொடுமை மாதேவா அறிவாய் மறமிக்க அவனைமறி வகையறியேன் வலியோ தெருளுணர்வோ ஒன்றுமிலேன் செய்வதொன்றும் அறியேன் திக்கற்ற பாவிக்குத் துணைஎவரோ சொல்லாய் இருளடைவில் வாடுகின்ற ஏழைமுகம் பாராய் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய இறையே. 2 பொன்மனத்தை எனக்களித்தாய் புண்ணியனே அதுவோ புகுந்தசஞ்ச லத்தாலே புலிகரடி முதலாம் பன்மிருகம் உலவுகின்ற பரற்காடாய்ப் போச்சே பழமலையே புதுப்புனலே பரங்கருணைக் கடலே உன்னையே நினைந்துருகும் உயர்நிலையை இழந்தேன் உலகினிலே ஏன்பிறந்தேன் உத்தமனே சொல்லாய் என்னிலையைப் பண்படுத்த எண்ணுதியேல் உய்வேன் இல்லையெனில் என்செய்கேன் ஏழைமுகம் பாரே. 3 சீற்றமெனுள் ஊற்றெடுத்துச் செறிந்தார்த்த சேட்டை செப்புதற்குஞ் சொல்லுண்டோ சீறுபுலி நாணும் கூற்றுருவாய் முடுக்குங்கால் குருதியெலாங் கொதிக்கும் கூர்நரம்புக் கட்டிளகும் கொல்லுமது ஒடுங்கப் பாற்றியுளத் தமைதியெனும் பரிதியெழ அருளிப் பாவியெனைத் தடுத்தாண்ட பரங்கருணை நிதியே சேற்றிடையில் கமலமெழத் தேன்பிலிற்ற வண்டு தித்திக்கும் பாட்டோதச் செய்யிறைநீ யன்றோ. 4 வன்மஅனல் எரிக்கிரையாய் மாய்ந்துவந்த காலை மனஅமுதாய்த் தண்மைபொழிந் தாண்டவண்மை வாழி கன்மமது கரைகாணாக் கடலென்றே அஞ்சிக் கலங்கியஎன் கலக்கொழித்த கருணைநிலை வாழி பன்மைமயக் குறும்வழியே பகைமைவளர் எனக்குப் பண்பொருமை இன்புணர்த்தும் பான்மையருள் வாழி தன்மமலை யாயிலங்கித் தயைஅருவி சொரியும் தண்மையனே பண்மையனே தனிநீதி வடிவே. 5 ஆசையெனும் அலகைஅன்பை அடக்கிவிலங் கிட்டே ஆளஇடந் தந்தபின்னை ஆளநினைந் தாயோ ஈசஅதை அறத்தொலைத்தால் எவ்வுயிரும் ஆவேன் இன்பநிலை வேறுண்டோ ஏழைஅறி யேனே வீசுவெயில் படர்ந்துவர விலகிவறள் நீர்போல் விரிஆசை நின்னொளியால் விலகிஅற ஐயா வாசமலர் இளமையிலே மனஞ்செலுத்தி வந்தாய் வள்ளலுனக் கெவ்வகையில் வழங்குவன்கைம் மாறே. 6 காமவெறிக் கடல்கடந்து காதற்கரை நண்ணிக் காணாத நெறிகாணக் கண்ணளித்த கண்ணே சேமமுற ஒருத்தியுடன் சிலஆண்டு வாழ்ந்து சேயடைய அன்புபெறச் செம்மைபுரி அறமே தேமொழியர் ஒளியினிலே திகழ்தாய்மை நுட்பம் சிந்தையினில் படியவைத்துச் சிக்கறுத்த பதியே காமமெனப் பெண்ணுலகைக் கருதாத கல்வி காசினியில் பெருகிவரக் கடவுளருள் செய்யே. 7 தனியொருத்தி மணந்தறத்தில் சார்வாழ்க்கை மற்றத் தையலரைத் தாயென்று சால்புறவே கருதும் இனியமனத் திருவளித்தல் என்றுணரச் செய்தாய் இயற்கைமணந் தின்பநல்கும் இறைவநின தருளே கனிமொழியர் மாயையெனக் கடிமணத்தைத் துறந்தோர் காமஎரிக் காளாய கதைகள்பல அறிவாய் தனிமைவழி படைப்புளத்தைத் தகர்ப்பதன்றோ வளரும் தரணியிலே பெண்மைநலம் தழைக்கஅரு ளாயே. 8 மருட்புகழில் என்மனம்போல் விழுந்ததிலை என்று மற்றதனைத் துறக்குமகம் மலரவைத்தாய் போலும் பொருட்பெருக்கு களியாடல் புகுவிக்கு மென்று புன்மையனை எளிமையிலே பொருந்தவைத்தாய் போலும் அருட்சிறப்பால் அல்லலெலாம் அறுத்தலுக்கென் றன்பால் அன்றாட அப்பமெனக் களிக்கின்றாய் போலும் இருட்செறிவே இல்லாத இன்பஒளி விளக்கே எங்கெங்கும் எவ்வுயிரும் இருந்தருளும் இறையே. 9 ஆசைபுகழ் முதலாய அறியாமைச் சேய்கள் அத்தனையும் ஆட்சிசெய எத்தனையோ பிறவி நாசமடைந் தொழிந்திருக்கும் நானறியேன் எச்சம் நாதஇந்தப் பிறவியிலே நல்லருளால் சிதையும் ஓசைசிறி தெழவுணர்வும் உற்றதையா முற்றும் உண்மைவிடு தலையடைய ஒழிந்தபழம் பிறப்பின் வாசமுணர் வகைதெளிய வள்ளல்! வழிகாட்டாய் வாக்குமனங் கடந்தொளிரும் மாசில்லா மணியே. 10 31. வழிபாடு வாக்குமனங் கடந்தவன் நீ வாக்குமன முடையேன்யான் போக்குவர வற்றவன் நீ போக்குவர வுடையேன்யான் யாக்கையிலா மேலவன் நீ யாக்கையுடைக் கீழவன்யான் தேக்கின்ப வழிபாடு செய்வதெங்ஙன் சின்மயனே. 1 உருவுண்டு வாக்குமன ஒலிக்கென்பர் அகத்திணையார் அருவமுரு அன்றென்றல் அறியாமை அஃதுமுரு அருவமுரு எனும்பேதம் அமைநுண்மை பருமையிலே உருஅருவம் ஒன்றுமிலாய் உன்னலெங்ஙன் உண்மையனே. 2 மதியாலே உணர்ந்தாலும் மனத்தாலே நினைந்தாலும் பதியேஎவ் வுருவாதல் படிந்துவிடும் எவ்வண்ணம் துதியேற வழிபடுதல் துணையுருவம் இல்லானே கதியேஉன் னடைக்கலமே காட்டுவழி செம்பொருளே. 3 வாக்குமனங் கடந்தவனே வாழவைத்தாய் வழிபாட்டைத் தூக்கியற்கைக் கோயில்வழி தொன்மைமிகும் அக்கோயில் ஆக்கியநாள் எந்நாளோ ஆண்டவனே நீயறிவாய் பாக்கியமே வழிபாடு பண்பியற்கை வடிவோனே. 4 நீல்வளரும் வான்கோளும் நிலாப்பகலும் பால்வழியும் மால்வரையுங் காடுவயல் மாகடலும் ஆயஉனை நூல்வலவர் ஓவியமா நுண்ணுருவந் தரநினைப்பில் கால்வைத்த வழிபாடு கருத்தில்புக இறையருளே 5 ஒவியநுண் ணுயிர்நிலையை உணராது வழிபாட்டைத் தாவியவர் கல்லுருவே தனிக்கடவு ளெனக்கொண்டார் மேவியஅம் மடமைக்கோள் மேதினிக்கண் மூடியதே ஒவியநுண் பொருளோங்க உடையவனே உளங்கொள்ளே. 6 புறமனத்தின் ஆட்சிவிழும் ஓவியத்தின் வழிபாட்டால் அறமணக்க உள்மனத்தின் ஆட்சியெழும் எனஉணருந் திறமளிக்க வல்லவநின் திருவருளாம் அடிமலரின் நறவருந்தி இன்பமுற நானழிய வேண்டுவனே. 7 ஒன்றலுநெஞ் சோவியத்தில் உயர்அமல யோகமென்றும் தின்றுகொழுத் துயிர்ப்படக்கல் சிறுமைமல யோகமென்றும் நன்றறியச் செய்தமையால் ஞானநெறி விளங்கியது நன்றிபுரி வகையறியேன் நன்றிகரு தாப்பரமே. 8 இயற்கையிலே நீஇருக்கும் இனிமையினை வழிபாட்டுப் பயிற்சிமிகத் தெளிவாக்கும் பண்பமைத்த பெரியோய்அம் முயற்சியிலே நுழையாது மூச்சடக்கல் அறிவாமோ இயற்கைவழி பாடோங்க ïiw!ஆட்சி செலுத்துதியே. 9 வழிபாடே வழிபாட்டை ஒருவுநிலை சேராமுன் வழியதனை விரிமனத்தார் வலிந்துவிடல் கேடன்றோ பழிபாவம் அவராலே பரவிவரும் பாரழியும் வழிபாட்டின் வழிவளர வள்ளலதை ஓம்புகவே. 10 32. வழிபாடும் கோயிலும் வழிபாட்டுக் கென்றறிஞர் வகுத்தெடுத்தார் கோயில்களை இழிபாட்டுக் கவைஇந்நாள் இரையாதல் கண்கூடு கழிபாட்டை என்றழுது கதறுகின்றார் அடியரெலாம் பழிபாட்டைக் களைந்தருளிப் பண்பளிப்பாய் பரம்பொருளே. 1 அமைதியுற அகக்கரணம் அமைந்ததிருக் கோயில்பல அமைதியழி பகைக்களனாய் ஆனவிதம் நீயறிவாய் அமைதிபெற எங்குற்றே அடியவர்கள் வழிபடுவர் அமைதியெனும் மெய்ப்பொருளே ஆண்டவனே பார்த்தருளே. 2 நாடுகளின் இயற்கைநிலை நன்குணர்ந்த பெரியோர்கள் பீடுதிருக் கோயில்களைப் பிறங்கவைத்தார் அங்கங்கே கோடுகளை இடையிடையே கொணர்ந்திட்டார் கொலைக்கூத்தர் கேடுகளை ஒழித்தருளாய் கேடில்லாப் பழம்பொருளே. 3 ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்தபெருங் கோயில்பல சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய் நீதிஅறம் அழித்துவரல் நின்மலனே நீஅறிவாய் கோதுகளை அறுத்தொழித்துக் குணம்பெருகச் செய்யாயோ. 4 எங்குமுளன் இறையொருவன் என்றுணர்ந்த ஞானியரே இங்குயிர்கள் கட்டவிழ இயங்கிஅலை மனம்நிலைக்கப் பொங்குதிருக் கோயில்களைப் பொலியவைத்தார் அவையின்று பங்கமுறல் அழகேயோ பழுதொழிப்பாய் பரம்பரனே. 5 சந்தடியில் விழுந்தமக்கள் சாந்தமுறப் படிப்படியே சிந்தைநிலை பெறுவதற்குத் திருக்கோயில் வழிபாடு முந்தையினர் கோலிவைத்தார் மூலமுறை மாறிவரல் எந்தைஇறை நீஅறிவாய் ஏழையேம் செய்வதென்னே. 6 வணக்காலும் வாழ்த்தாலும் வழிபாடு நிகழ்கோயில் கணக்காடல் சூதாடல் கட்காமக் கொலையாடல் பிணக்காடல் முதலாய பேயாடல் இடமாகிப் பிணக்காடா மாறுவது பெருமானே திருவுளமோ. 7 பொல்லாத மருட்செயல்கள் புகுந்தரிக்கும் கோயில்களில் கல்லாதார் ஆட்சிமிகக் கற்பனையும் கண்மூடும் உல்லாசக் களியாட்டும் உலவிவரின் உளஅலைகள் நில்லாவே நில்லாவே நின்மலனே காத்தருளே. 8 எக்கோயில் கண்டாலும் இறையிடமென் றுளங்கொண்டே அக்கோயில் அடைந்துதொழும் அன்பர்தொகை பெருகிடவும் சிக்கோடு மதப்பிணக்குச் சிதடர்தொகை அருகிடவும் மிக்கோனே வேண்டுகின்றேன் விண்ணப்பங் கேட்டருளே. 9 திருக்கோயில் கெட்டதென்று சீவவழி பாட்டைவிட்டால் செருக்கோட வழியுண்டோ சிற்பரமே தனிஇடத்தே உருக்கோல மிட்டுன்னை உன்னுவதும் வழிபாடே தருக்கோட வழிபாட்டைத் தகுமுறையில் வளர்த்தருளே. 10 33. திருக்கோயில் உருவின்றி அருவின்றி உருஅருவ மின்றி உரையின்றி அசைவின்றி ஒளிபொழியு மொன்றே கருவின்றி முளையின்றிக் காலவளர்ப் பின்றிக் கரையின்றி எங்கெங்கும் கலந்தருளு மொன்றே செருவென்ற புலமுடையார் சிந்தையிலே நின்று தேனமுது சொரிகின்ற தெய்வமெனு மொன்றே திருவொன்றுங் கோயிலுனக் கமைந்தவித மென்னே செகமெங்கும் ஒருமுகமா ஏற்றவித மென்னே. 1 இயற்கையிலே இறையேநீ இருந்தருளும் நுட்பம் இனிதுணர்ந்த ஓவியத்தார் எடுத்தனர்பல் கோயில் பயிற்சியிலே திருக்கோயில் தத்துவத்தின் பான்மை பகுத்தறிந்தோர் வழிபாட்டால் மனக்குறும்பை வெல்வர் செயற்கையிலே விழுந்தவர்அத் தத்துவத்தின் செல்வம் தேறாது மனக்குறும்பால் தேய்வரென்ற தெளிவு முயற்சியிலே விளங்கவைத்த முழுமுதலே! வாழி முத்திநெறி வாழச்செய் முனிவரொளி! வாழி. 2 அலைவழிநல் ஓவியத்தார் அமைத்ததொன்றோ கோயில் ஆண்டவனே உன்கோயில் அளவிலடங் காவே நிலவுலகும் நீருலகும் நின்றன்திருக் கோயில் நெருப்புலகும் வளியுலகும் வெளியுலகுங் கோயில் கலையுலகுங் கவியுலகுங் கதையுலகுங் கோயில் கானமிகு பண்ணுலகும் இசையுலகுங் கோயில் ஒலியுலகும் மறையுலகும் ஒளியுலகுங் கோயில் உலகமெலாங் கோயிலுனக் கோங்குபரம் பொருளே. 3 மண்ணெல்லாங் கல்லெல்லாம் மலையெல்லாங் கோயில் மரமெல்லாம் பொழிலெல்லாம் வனமெல்லாங் கோயில் கண்ணெல்லாம் பயிரெல்லாம் கழனியெலாங் கோயில் கயமெல்லாம் ஆறெல்லாங் கடலெல்லாங் கோயில் விண்ணெல்லாம் ஒளியெல்லாம் விளக்கெல்லாங் கோயில் மின்னெல்லாம் பிழம்பெல்லாம் வித்தெல்லாங் கோயில் எண்ணெல்லாம் எழுத்தெல்லாம் ஏடெல்லாங் கோயில் எல்லாம்உன் கோயில்களே எங்குமுள பொருளே. 4 கரும்பணுகப் புனல்கொழிக்குங் காலருவி கோயில் கரைமணலுங் கலங்காத பூங்காற்றுங் கோயில் அரும்புமலர் காய்கனிகள் அளிஇனிமை கோயில் ஆடுமயில் கூவுகுயில் அறைசுரும்பு கோயில் விரும்புநடை கலைமானும் மெல்லானுங் கோயில் வீரமுகம் காதல்விழி ஈரமனங் கோயில் அரும்பிறவிப் பயனடைந்த அருட்குரவன் கோயில் அகிலமெலாம் நின்கோயில் அருட்சோதி அரசே. 5 கையினிலே புனைந்ததிருக் கோயில்பல இந்நாள் கருத்திழந்து கண்ணிழந்து கைகால்க ளிழந்து மெய்யிழந்து நிற்பதனை வித்தகனே அறிவாய் விடியலிலே நீலமிகு வேலையிலே தோன்றிச் செய்யகதிர் பரப்பிஎழு தினகரனாங் கோயில் சித்தம்வைத் துன்னிவழி பாடுசெய்தால் ஐயா உய்யஅருள் புரியாயோ உலகுயிரைக் கலந்தே ஒளிவழங்கும் அருளொளியாய் ஓங்குபர ஒளியே. 6 தத்துவத்தைக் கொண்டெழுந்த தனிக்கோயி லுள்ளம் சாயஅங்கே பேய்புகுந்து தலைவிரித்தே ஆடிச் சத்தியத்தை அழித்துவரல் தற்பரனே அறிவாய் சாய்ங்கால நீலவெளி தண்மைநில வுமிழ்ந்து முத்துடுக்கள் படைநிலவும் முழுமதியாங் கோயில் முழுமனத்தால் வழிபாடு முன்னிமுன்னிச் செய்தால் பத்திமையிங் கமையாதோ பரங்கருணை வெள்ளம் பாயாதோ எங்கெங்கும் பரிந்தருளும் பதியே. 7 செயற்கையிலே உருக்கொண்ட கோயில்களின் நோக்கம் செத்தொழிந்தால் அவைகளினால் சிறக்கஇட முண்டோ இயற்கைமலை காடுகடல் இறைவநின்றன் கோயில் ஏழிசையும் யாழ்குழலும் எழிற்கலையுங் கோயில் குயிற்குரலும் மயில்நடமும் கிளிமொழியுங் கோயில் கோயில்பல இனிதிருக்கக் குலங்குலமா ஏனோ அயர்ச்சியுற்றுக் கவலையிலே ஆழ்ந்துபடல் வேண்டும் அண்டபிண்டம் அத்தனையும் அளித்தருளும் பதியே. 8 கைக்கோயில் அமைப்பழிந்தால் கடவுளழி வாயோ கண்ணில்லாப் பேச்செல்லாங் காற்றில்விட வேண்டும் கைக்கோலொன் றிழந்துவிடின் கண்டுகொளல் வேறு கைவழக்கே உலகிலுண்டு கவன்றழுவ தில்லை மைக்கோலம் இட்டுலகு மயங்கியது போதும் மதிவளரக் கலைவளரும் வழிபாடும் வளரும் மெய்க்கோலம் பொங்கிளமை மெல்லியபூம் பெண்மை வியப்பழகுக் கோயிலன்றோ வித்தகச்சித் துருவே. 9 எக்கோயில் சாய்ந்தாலும் இறவாத கோயில் ஈசநினக் கொன்றுளதே எஞ்ஞான்று முளதே அக்கோயில் கோயில்ஐயா, அஃதுயிராங் கோயில் அன்பறிவு வழிபாடே அதற்குரிய தன்றோ எக்கோடு மில்லாத இந்தவழி பாடே எங்கெங்கும் பரவிவரின் இகல்பகைகள் எழுமோ இக்கால நிலையறிவாய் எரியடங்க அருளாய் எவ்வுயிரும் எவ்வுலகும் கோயில்கொண்ட இறையே. 10 34. யோகம் பொறிபுலன் கடந்து பொல்லாப் புறமனங் கடந்து மத்தி மறிமனம் கடந்து வேராம் மனத்தினைச் சாந்த மாகும் குறியினில் ஒன்றல் யோகக் குணம்பெறு தொடக்க மென்றே அறிவினில் விளங்கச் செய்த அத்தனே போற்றி போற்றி. 1 காற்றினை மூக்கால் ஈர்த்தல் கனலினை மூலக் காலால் ஏற்றிடல் இறக்கல் மாற்றல் இளமதி ஒளியைக் காண்டல் ஊற்றுள நாடி நிற்றல் உடல்முகஞ் சிவத்தல் எல்லாம் ஏற்றநன் முறைக ளல்ல என்றருள் குருவே போற்றி. 2 காற்றினை அடக்கும் போதும் கனலினை முடுக்கும் போதும் மாற்றுறு நெருக்கி னூடே மன்னுமின் னொளியெ ழும்பும் தேற்றிய உடலின் மின்னில் திகழ்வது சடத்தின் சோதி ஏற்றமன் றென்று சொன்ன எந்தையே போற்றி போற்றி. 3 உடலொளி மின்னல், மேலாம் உயிரொளி மின்ன லன்று சடம்அது இதுசித் தாகும் சடத்தினைச் சித்தாக் கொள்ளும் நடனமும் மரபாய்ப் போச்சு ஞானிகள் உண்மை தேர்வர் மடமையர் மருள்வ ரென்று வாய்மலர் அரசே போற்றி. 4 உடலொளி கண்டு கண்டே உயிரொளி காணச் செல்லார் திடமுறச் சாலங் காட்டிச் சீடரை வலிந்து சேர்ப்பர் அடிபணிந் தேத்தச் செய்வர் அரிவையர் பொருளைக் கொள்வர் கடையவர் இயல்பென் றிங்குக் கருணைசெய் அரசே போற்றி. 5 சித்தொளி கண்டோ ரென்றும் திருவருள் வழியே நிற்பர் செத்தவர் போலச் செல்வர் சித்தெனச் சாலங் காட்டார் சத்தியம் அவரே யாவர் சகமெலாம் சாந்தமாகும் முத்தியும் விழையா ரென்று மொழிந்தமெய்க் குருவே போற்றி. 6 புறமனக் கொடுமை சாய்ந்தால் பொன்மனம் யோகம் நண்ணும் பிறபடி நாட்டம் வேண்டா பிறர்க்கென வாழச் செய்யும் அறமலி பணிக ளாற்றின் அகன்றிடும் அலைம னக்கோள் குறிஅறி வாகு மென்று கூறிய குருவே போற்றி. 7 உடம்பினை முறையே ஓம்பி உயர்ந்தஇல் வாழ்க்கை நின்று கடன்பணி செய்த லென்னுங் கருத்தினில் ஒன்று பட்டுத் திடம்படப் பணிக ளாற்றிச் சென்றிடின் காமி யம்போம் மடம்படும் என்று வாய்மை மலர்ந்தசின் மயமே போற்றி. 8 அடிமனம் ஒன்றில் ஒன்றும் அலைமனம் வீழ்ந்து சாயின் படிவதன் வண்ண மாகும் பன்மைகள் ஒருமை யாகும் சுடரொளி ஒன்றின் ஒன்றில் சுடர்வணம் எல்லா மாகும் செடியறும் என்று சொன்ன சித்தனே போற்றி போற்றி. 9 பன்மையை ஒருமை யாக்கும் படிமனம் உறங்கச் செல்லும் உன்னுதல் ஒதுங்கும் வேளை ஒலிஒளி நடனஞ் செய்யும் சொன்மனம் கடந்து மேலே சூழலைச் சொல்ல லாகா நன்மையென் றுரைத்த நாதா நாண்மலர் போற்றி போற்றி. 10 35. யோகப் பயன் புறமனத்தார் குறும்பெல்லாம் புகலஎளி தாமோ பொய்களவு கட்காமங் கொலைகுழப்பம் புரட்சி மறவினத்துச் சூதுபகை கரவுபுறங் கூறல் வாததர்க்கம் மதவெறிமண் ணாசையுடன் போர்கள் அறமறைக்கும் ஆட்சிமுறை அடக்குமுறை படைகள் ஆகாயம் தரைக்கடலில் ஆருயிரின் வதைகள் பிறவளர்க்கும் பேய்களிடைத் திரிந்தஎனைக் காத்த பெரியவனே நின்கருணை பேசஅறி யேனே. 1 நடுமனத்தார் மயிர்ப்பாலம் நடப்பவரே யாவர் நழுவாது செல்லினடி நன்மனத்தில் அமர்வர் இடைமறிக்கும் மாயவித்தை இறங்கிவிடின் வீழ்வர் இழிவர்நிலை மன்பதையை ஏமாற்றித் திரிவர் சடைவனப்பும் முக்கண்ணும் சங்காழி காட்டித் தணந்திடுதல் முதலாய சாலவித்தை செய்வர் அடியவனை அந்நிலைகள் அடராமற் காத்த ஆண்டவநின் அருட்டிறத்தை அறையஅறி யேனே. 2 அடிமனத்தை அடைந்தவர்கள் ஆனந்த யோக அறிதுயிலில் அமர்ந்திருப்பர் அதையிதையும் துறவார் படியகத்தில் மலைகாடு பண்ணைகடல் மொழிகள் படிப்படியே மறைந்தொலியாய் ஒளியாகிப் பாழாம் உடலகத்தில் உணர்வழியும் மேல்விளையும் உண்மை உன்னஉளம் உரைத்திடநா நோக்கவிழி இல்லை படமழித்துப் பளிங்கினைப்பா ரென்றுரைத்த பதியே பரம்பொருளே அருட்பொழிவைப் பகரஅறி யேனே. 3 அடிமனமே நினைப்புமறப் பழியுமிடம் அதுவே அரியமுத லுடம்பிருக்கும் ஆனந்த பீடம் நடிகமதன் நெடியயமன் நாடகங்க ளில்லை ஞானம்வளர் அறஅருளின் நல்லாட்சி நடக்கும் தடியுடலும் புறமனமும் நடுவுடலும் மனமும் சாடுசெய லொன்றின்றித் தாதழிந்தே கிடக்கும் படிமைநிலை என்றுணர்வில் படியவைத்த பதியே பரமேநின் அருட்பெருக்கைப் பாடஅறி யேனே. 4 பருவுடலில் நுண்ணுடலில் முதலுடலில் முறையே படிந்தபுற மனமுநடு மனமும்அடி மனமும் தருவிலுள தலைநடுவேர் கடுப்பனவே யாகும் தனியோகக் கனல்மூளத் தாங்கிடும்வேர் எரிந்தால் பெருமரமே கிளைகளுடன் பெயர்ந்துவிழும் மீண்டும் பிறங்கியெழத் தலைசுழற்றப் பேறில்லை தளிர்க்கும் கருவழியும் என்றுணரக் கருத்துவைத்த கதியே கற்பகமே நின்கருணை கழறஅறி யேனே. 5 இரேசகமும் பூரகமும் கும்பகமும் இந்நாள் இவ்வுலகில் படும்பாட்டை எழுதலிய லாதே தராதலமீ துழல்காற்றை ஈர்த்திறக்கி இறுக்கல் சார்புமுறை அன்றன்று சாந்தமுறை யுளது புராதனமே மூவுடலில் மும்மனத்தின் புணர்வு புகல்யோகப் படிகளென்று புந்திதெளி வித்த பராபரமே நின்நினைவால் ஐயமெலாம் பறக்கும் பான்மைகண்டேன் அருள்வியக்கும் பண்பையறி யேனே. 6 புறமனத்தை அடங்கவைத்தல் இரேசகமாம் அதனைப் புரிந்தநடு மனத்திறக்கல் பூரகமாம் அதனை அறமணக்கும் மனத்திறுத்தல் கும்பகமாம் என்றும் அடைவான இரேசகமே பூரகமா மாறித் திறமிருக்குங் கும்பகமாய்த் தெளிவுசெயும் என்றும் சிந்தனையில் விளங்கவைத்த சித்தமணி விளக்கே நிறையுளத்தி லருள்விளக்கி நிற்கின்ற பொருளே நின்மலனே அருள்வகையை நிகழ்த்த அறியேனே. 7 மூலஅனல் எழுப்புவதன் மூலமென்ன என்று முன்னிமுன்னிப் பல்காலும் முயன்றுமுயன் றலுத்தேன் மூலனுரை கருவாசல் எருவாசல் இடையே மூளொளியே மூல அனல் என்றுணரச் செய்தாய் மேலொளியும் கீழொளியும் மின்கொடியா யொன்றி மெய்நிறுத்தும் நிலைதெளிந்தால் மெய்யோகம் விளையும் காலமெலாம் தெளிவாகும் என்றறியச் செய்தாய் கடவுளேநின் பெருங்கருணைக் கருத்தைஅறி யேனே. 8 மூலவொளி எழுப்புதற்கு மூர்க்கநெறி வேண்டா முன்னவர்கள் பற்றியது மூர்க்கநெறி அன்று சீலநிறை அறவாழ்விற் சேர்ந்துடலை ஓம்பிச் சிந்தையிலே கொண்டகுறித் தியானத்திற் றிளைத்தால் மூலவொளி மேலையொளி மூண்டெழுந்து நிற்கும் மூலவினை நீறாகும் என்றென்றன் மூளைப் பாலமரச் செய்தனையே பகலிரவைக் கடந்த பரவெளியே நின்னருளின் பான்மையறி யேனே. 9 மேலொளியும் கீழொளியும் மின்னியெழ எழவே மெல்லிதய மலர்விரிந்து தேனமுதம் சொரியும் சீலஉடல் கோயிலெனும் சிறப்புவெளி யாகும் சீவவொளி காலுமெங்கும் செவ்வொளியே பொங்கும் மேலுறுமெய்ஞ் ஞானநிலை மேவுவதைச் சொல்லால் விளம்பலிய லாதென்று விளங்கவைத்த இறையே வாலறிவே யோகியருள் வதிந்தருளும் அன்பே வாழ்வேநின் அருட்டிறத்தை வழுத்தஅறி யேனே. 10 36. யோக உடல் உடல்விளக்கை அருள்புரிந்தாய் உயிரிருளை ஓட்ட உற்றதுணை பயன்படவே யோகநிலை வைத்தாய் உடல்வெறுத்தால் யோகநிலை உயிருறுதல் என்றோ உயிர்இருளை நீக்கிஉயர் ஒளிபெறுதல் என்றோ உடல்விளக்கின் கொடைநோக்கம் உடைந்துவிடு மன்றோ உய்யுநெறி வேறுண்டோ உடையவனே உரையாய் உடல்வெறுக்கும் அறியாமை ஒழிந்துவிடல் நன்றே ஒலிகடந்தும் ஒளிகடந்தும் ஓங்குபரம் பொருளே. 1 உயிரிருளை நீக்கஅதற் குடலமைத்த வகையை உன்னஉன்ன உன்கருணைத் திறம்விளங்கும் ஐயா தயிரிலுறு நெய்யெனவே தனியோகர் உள்ளத் தாமரையில் வீற்றிருந்து தண்ணளிசெய் தேவே மயிருடலம் நெஞ்சுருவாய் நுண்ணுடல்நெஞ் சருவாய் மணக்குமுதல் உடல்நெஞ்சில் மருவகர ஒலியாய் செயிரழிசெவ் வொளியாகிச் சிக்கறுக்கும் அறிவே சித்தருளக் கோயில் கொண்ட சின்மயமே அருளே. 2 புறஉடலம் தோல்நரம்பு புகையுடலம் நுண்மை புல்லரிய முதலுடலம் பொன்னவிரோங் காரம் புறமனமே அலையுமது நடுமனமோ எண்ணம் புந்திநினை வற்றதுவே அடிமனமாம் அதிலே உறவுகொள உறவுகொள ஊனமெலாம் நீங்கும் உண்மைஅருள் இன்பநடம் ஓங்கிவரும் நல்ல அறமருவும் என்றுணர அருள்சுரந்த இறையே அப்பாஎன் றடியடைந்தேன் ஆள்கபெருந் தகையே. 3 ஓங்கார உடலளிக்கும் உடல்நுண்மை மேலும் உருவமுகிழ் பருவுடலை உதவுவதைத் தேர்ந்து பாங்கான புறமிருந்து நடுநுழைந்து அடியிற் படிந்துபடி படியாகப் பயிற்சியினைச் செய்தால் தூங்காத தூக்கமுறும் தொல்லைபல நீங்கும் தொல்பிறவி உணர்வுண்டாம் தூயஅறி வோங்கும் ஆங்காரம் அற்றொழியும் என்றுணரச் செய்த ஆண்டவனே நின்கருணை அற்புதந்தே ரேனே. 4 ஓங்கார உடற்போர்வை உருவருவ உடல்கள் ஓதுமவை வளம்பெறினே ஓங்காரம் உரமாம் நீங்காத தியானமரு நுண்ணுடலை ஓம்பும் நிறையொழுக்கம் பொருந்துணவு பருவுடலை ஒம்பும் ஓங்கார உடலுரமா யோங்கி நின்றபின்னை உருஅருவ உடல்தாக்கும் உறவுமறு மென்று பாங்காக என்னறிவிற் படியவைத்த பதியே பரமதிரு வடியடைந்தேன் பாவங்கழித் தருளே. 5 பருவுடலை ஓம்புமுறை ஒன்றிரண்டோ அப்பா பாரினிலே மலயோகர் பகர்ந்தமுறை பலவே பருவுடலின் அளவினிலே பண்புசெய்யும் மேலே பற்றியிரு உடல்களிடம் எட்டியும்பா ராவே திருஅமல யோகர்முறை சிற்சிலவே உண்டு தெய்விகமே அவைமூன்று தேகமெலாம் ஓம்பும் கருவுடலில் சுடரெழுப்புங் கடந்தநிலை கூட்டும் கலியுலக நாட்டமெங்கே கருணைமழை முகிலே. 6 ஊற்றினிலே காற்றினிலே ஒளியினிலே மூழ்கி ஒளிபொழிற்பூ கண்டுகண்டே உயர்பாக்க ளோதிப் போற்றுமடி சிந்தைவைத்துப் பொருந்தியஊண் அருந்திப் பொய்கடியுந் தொழில்புரிந்து போகம்அள வாகி ஆற்றினிலே நின்றொழுகி ஆசைகளி யாடல் அலைகுடிகள் அழுக்கிறுகல் அளவில்லாப் பேச்சு சீற்றமிகல் புகழ்நாட்டம் செயற்கைகளை விட்டால் தெரிபருமை உடல்வளரும் திருவருளால் இறையே. 7 மலயோகர் ஆசனமும் மற்றவையும் ஆய்ந்தேன் வல்லவரும் மார்புடைந்து மாய்வதனைக் கண்டேன் கலையோக வித்தையிலே கருத்திருத்தி மாய்ந்தேன் கண்மூடும் விளையாட்டுக் கற்பனைஎன் றுணர்ந்தேன் மலையோரஞ் சென்றிருந்து வாசியடல் விழையேன் மாநிலத்தில் எவ்விடத்தும் மருட்டலிலை நெஞ்ச அலையோட அமைதிபெற அன்பமல யோகம் ஆண்டவனே அருள்புரியாய் அடியமர இன்றே. 8 உடையின்றி இருந்தஎனக் குடைமூன்று தந்தாய் ஒன்றிரும்பு வெள்ளியொன்று மற்றதுசெம் பொன்னே அடைவென்றே இரும்புவெள்ளி ஆக்கிவெள்ளி பொன்னா ஆக்கவழி இயற்கையிலே அமையவைத்தாய் அப்பா நடையின்றிக் கெட்டொழிந்தேன் நல்லறிவை நல்காய் நல்லிரும்பை பொன்னாக்கல் ஞானவித்தை யாமோ முடையின்றி வாழ்வறியா மூர்க்கநிலை என்னோ மூவுடலுங் கடந்தொளிரும் முழுமைமுதல் அரசே. 9 நீக்கமற எங்கெங்கும் நிறைந்துள்ள அறிவே நின்படைப்பில் ஓருறுப்பை நினைந்துநினைந் துன்னி நோக்கதுவா யொன்றஒன்ற அதன்மயமாம் எல்லாம் நுவலரிய அம்மயமும் செம்மயமாய்த் திகழும் தேக்குமயம் பொன்றியதும் செப்புதற்கொன் றில்லை தேகமனம் அற்றநிலை சிந்தனையில் லாத ஆக்கமுறல் நன்றென்னும் அறிவுபெற ஐயா அருள்புரிந்த ஆண்டகையே அடியனடைக் கலமே. 10 37. தியானம் இறைவனே உன்றன் இருப்பினில் அடியேற் கெட்டுணை ஐயமு மின்றி தரையினில் இன்மை சாற்றிய சில்லோர் சாகுநாள் உன்னையே நினைந்து முறையிடல் கண்டேன் முத்தெனக் கண்ணீர் முகத்தினில் வடிந்ததைப் பார்த்தேன் அறவனே பலநாள் அரற்றினன் அழுதேன் அகமுணர்ந் தருள்வழி காட்டே. 1 ஈசனே உன்றன் இருப்பினைச் சொல்லி இருப்பதால் எப்பயன் விளையும் பாசமே யுடைய பாவியான் பாசப் பற்றினை எப்படி அறுப்பேன் பூசைகள் செய்தேன் பூமல ரிட்டேன் புண்ணியக் கோயில்கள் சூழ்ந்தேன் நேசமே பெருக்கும் நூல்களை ஆய்ந்தேன் நேர்வழிக் காட்சியை அருளே. 2 எங்கும்நீ உள்ளாய் எங்கும்நான் இல்லை எப்படி உன்னுடன் கலப்பேன் தங்குமஞ் ஞானம் தகைந்தெனைச் சிறுகச் சாடியே வீழ்த்திய தறிவாய் இங்கதைத் தவிர்க்க எத்தனை முயற்சி எண்ணினன் செய்தனன் பயனோ புங்கவா பொருந்திப் புகவிலை இறையும் புகலொரு வழியினை அரசே. 3 தாகமே கொண்டேன் தனிவழி காணத் தயாபர எழுந்தது தியான யோகமே என்று மின்னென ஒருநாள் உற்றதன் வழிதுறை அறியேன் ஏகநா யகனே எந்தையே ஈசா எழிலருட் டுணையென உணர்ந்தேன் வேகமே உந்த விடுத்தன என்னை வெற்றுரை விளம்பர வினையே. 4 புறமன அலைவு பொன்றிட ஒன்றைப் புந்தியில் நினைக்கவென் றகத்தின் துறையுணர் அறிஞர் சொல்லிய படியில் துன்னினால் அதுபிற மனங்கள் உறவினை நல்கும் உன்னுமா றவைகள் உழலுமற் புதங்களும் நிகழ்த்தும் திறவினை அளிக்கும் சடஒளி காட்டும் சிற்பர வேறெது செயுமே. 5 ஒன்றினி லொன்ற லென்றுகொண் டெதிலும் ஒன்றலால் உறுபயன் விளையா தென்றுணர் உள்ளம் என்றனக் களித்த இறைவநீ இயற்கையிற் படிந்தே ஒன்றிய நிலையின் தத்துவநுட்பம் ஒளிருமோ ருருவினை உன்னின் நன்றொளி விளங்கும் என்றுளந் தெளிய நாதனே செய்ததும் அருளே. 6 அலைபுற மனத்தில் அழகுரு ஒன்றே அமைவுறக் கொண்டதை முன்னின் நிலைபெறும் என்றும் நடுமனத் திறங்கி நிறஉரு வடிவெலாங் கலங்கிப் பொலிவுறும் இயற்கைத் தத்துவ மாகும் புகுமது மறுமனத் தடியில் நிலவியே மறையும் நித்தனே மேலும் நிகழ்வது சொலற்கரி தாமே. 7 புறமன அலைவில் புரளுநர் உருவைப் போற்றுதல் விடுத்துருக் கடந்த நிறவடி வில்லா நிலைமையில் உன்னை நினைத்தலும் அரிதரி தாகும் புறமனம் உருவை யன்றிவே றொன்றைப் பொருந்தியல் புடையதோ ஐயா நிறவடி வின்மை அடிமனங் கடந்த நிலைமையில் விளங்குவ தன்றோ. 8 களவுபொய் காமம் கட்கொலை முதலாம் கசடுகள் வளர்புற மனத்தால் அளவெலாங் கடந்த ஆண்டவ உன்றன் அருநிலை தியானமென் பதுவே வெளிறெனும் பாழாம் மேலுமே பாவம் மேவுமே பொங்குமே அப்பா புளுகுபொய் முதலாம் புன்மைகள் முற்றும் பொன்றிடும் அடிமன மன்றோ. 9 உருவமே தியானம் உறஉற அதுவே ஒடுக்கிடும் புறமனக் குறும்பை அருவமாய் நடுவில் அமைதியை அளிக்கும் அடிமன அணைவினில் மறையும் தருமமே வளர்க்கும் தயையினைப் பெருக்கும் சாந்தமே மன்பதைக் கூட்டும் கருமமே மிகுந்த காசினி தியானக் கண்பெறக் கருணைசெய் அரசே. 10 38. தியானம் உடலளித்தாய் உளமளித்தாய் உணர்வளித்தாய் உனைநினைக்கக் கடலளித்தாய் மலையளித்தாய் கதிரளித்தாய் ஐயாவே படமுடியாத் துயரமிங்குப் படையெடுத்து வருத்துவதென் மடமையன்றி வேறென்னை மனந்திரும்ப அருளாயோ. 1 உன்படைப்பை உளங்கொண்டால் உன்நினைவே தோன்றிவரும் என்படைப்பில் உளங்கொண்டால் என்னவரும் இறையோனே பொன்படைத்த மாந்தர்பலர் பொய்படைக்க விரும்புகின்றார் துன்படைத்து வீழ்த்துங்கால் துணைஎவரென் றுணராரோ. 2 பசும்புல்லை மனஞ்செலுத்திப் பார்க்குங்கால் உன்நினைவே விசும்புமலை நோக்குங்கால் விமலாவோ உன்நினைவே கசம்படரும் வண்டிசையே காதுறுங்கால் உன்நினைவே தசும்பரவும் படமசைத்துப் பண்ணொலியில் உன்நினைவே 3 காலையிலே எழும்பரிதிக் கதிரூட்டும் உன்நினைவே மாலையிலே எழும்மதியின் நிலவூட்டும் உன்நினைவே நீலமுமிழ் வான்கோள்கள் நின்றூட்டும் உன்நினைவே சோலைமணக் காற்றூட்டும் தூயவனே உன் நினைவே. 4 பள்ளியிலே நூல்பயின்றும் பலதுறைக ளாய்ந்துழன்றும் வள்ளலுனை உணர்ந்துய்ய மாந்தர்படும் பாடென்னே புள்ளிஉழை மான்நடையில் புந்திவைத்துச் சிந்தித்தே உள்ளவுள்ள உன்நினைவே உறுதிபெற உண்டாமே. 5 மாங்குயிலின் குரல்கோயில் மயில்நடனம் அருட்கோயில் தேங்கு பசும் கிளிமழலை திருக்கோயில் உன்நினைப்பைப் பாங்குபெற ஊட்டிநிற்கப் பாமரர்கள் அங்குமிங்கும் மூங்கையராய்த் திரிவதென்ன முழுமுதன்மை மெய்ப்பொருளே. 6 பசுமைமணிச் சிறகுடைய பறவையொன்று வானிவர்ந்து திசைதிசையே இசைமுழக்கிச் செல்லுவதை நோக்கிநின்றால் அசைவிலருள் மெய்ப்பொருளே அகமுறுமே உன்நினைவே வசைவளர்க்கும் நூலவர்க்கு வழிநன்கு புலனாமோ. 7 வீடுதொறும் பாட்டுருவாய் வீணைகுழல் யாழமுதம், பாடுகளே யின்றிநிதம் பரம்பொருளே உன்நினைவு கூடவழங் கன்பொழுக்கைக் குறியாத மாந்தரிங்குத் காடுகளில் திரிந்துழன்று காற்றடக்குந் தவமென்னே. 8 அருக்கனழல் கடலெரிப்ப ஆவியெழக் காராகிப் பெருக்குமழை மலைபொழியப் பேரருவிக் கணம்பரந்து செருக்கலைகள் வீசாறாய் சென்றுகட லணைகாட்சி இருக்கைநினை வூட்டலன்றோ திருக்கருணைப் பெரும்பேறே. 9 இயற்கையெலாம் உன்நினைவே ஊட்டஉள தென்றுணரும் பயிற்சிபெறும் வாய்ப்பெல்லாம் பரம்பொருளே அருளியுள்ளாய் முயற்சியிலார் கண்மூடி மூர்க்கமெலாம் வளர்த்துவிட்டார் செயற்கைவழிச் சென்றுழன்றால் சிந்தனையின் ஊற்றெழுமோ. 10 39. தியானம் எங்குமுளாய் என்றுன்னை இயம்பிவிடல் எளிதே எழுதிவிடல் பாடிவிடல் எடுத்துரைத்தல் எளிதே எங்குமுள உனையுணரும் வழிஎதுவோ என்றே இரவுபகல் எண்ணிஎண்ணி இவ்வுலகில் வாழ்ந்தால் எங்குமுள உனதுடலம் இயற்கையெனும் உண்மை இயல்பிலுறும் உறுதிபெறும் என்றுமனந் தெளிந்தேன் எங்குமுள இறையவனே எப்படியோ தெளிவை ஏழைமகற் கருள்புரிந்தாய் இரக்கநிதி நீயே. 1 என்னுளமே கோயி லென எங்கெங்கும் பேச்சே எத்தனையோ மறைமொழிகள் எடுத்தடுக்க லாச்சே மின்னொளிருங் கருவிகொடு மெய்யறுத்துப் பார்ப்போர் மேதைநிணம் தசைகுருதி மிகுந்துவர லன்றி மன்னுமிறை கோயிலொன்றும் மருவவில்லை என்றார் மனக்கோயில் எதுவென்றே மயக்குற்றுக் கிடந்தேன் என்னுளத்தே தியானமெனும் எண்ணமுற்ற தென்னோ ஏழைபடும் பாடுணர்ந்த இறைவஉன்றன் அருளோ. 2 பலயோகம் பலவாறு பலருணர்த்தக் கேட்டேன் பற்றிவிட்டேன் சிலவற்றைப் பற்றாமல் விட்டேன் சிலயோகம் உளங்கவரும் சிறப்புடைமை கண்டேன் சிந்தைஅவை கொள்ளவில்லை திருவருளின் செயலோ மலயோகத் துறைகளிலே மயங்கிவிழா வண்ணம் மாதேவா எனைக்காக்க மனங்கொண்டாய் போலும் நலயோகம் தியானமெனும் ஞானவுணர் வென்னை நண்ணியதென் உன்னருளே நாதாந்த அரசே. 3 எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் மொழியை இயம்புவதால் ஒருபயனும் என்றும்விளை யாதே எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் உண்மை இலங்கிவிடின் மனம்அலையா எப்பழியும் அணுகா தங்குபழ வினைகளெலாம் தலைவிரித்தே ஆடிச் சார்பின்றி நீறாகும் சாந்தமுறும் என்று புங்கவனே என்னுளத்தில் புகுந்ததொரு விளக்கம் பொங்கருளே எனக்கொண்டேன் புனிதமெனும் பொருளே. 4 ஓவியத்தி லுன்னைநினைந் தொன்றிஅதில் நின்றால் உன்றனொளி உளத்திறங்கும் உருவமறை வாகும் பாவியலி லுன்னை யுன்னிப் பரிந்ததிலே ஒன்றின் பருவரிகள் கரந்துசெலும் பண்புளத்திற் பதியும் பூவியலி லுன்னைஎண்ணிப் பொருந்தியதில் ஒன்றின் பொன்னிதழ்கள் பொன்றிமுதல் புகுமுளத்தில் உனது மாவியலை நண்ணமன மறியலைகள் ஓய மாண்குறிக்கோள் தேவையென மனங்கொண்டேன் தேவே.5 சொற்கடந்த தியானமிங்குத் தொல்லைமனந் தொலைக்கும் தூயமனம் மலர்விக்கும் துணைபுரியத் தூண்டும் கற்களிலா வழிநடத்தும் கருணைஎளி தாக்கும் கரவுபகை எரிகாமம் களவுகொலை மாய்க்கும் எற்புடலில் உளநோயை இரிந்தோடச் செய்யும் இனியஅமிழ் தூட்டிநரை இழிவொழிக்கும் இந்தப் பொற்புடைமை யானுணர்ந்து புவியிடையே வாழ்ந்து புகலஅருள் மழைசுரந்தாய் பொன்றாத முகிலே. 6 அன்பார்ந்த தியானஉயிர் அமருமுடல் தொண்டாம் அருள்வழியே அதுநிகழின் அமையாத தென்ன துன்மார்க்கப் புறமனத்தைத் தொலைத்தடக்கி நன்மை சூழமனம் உண்டுபணுந் தொன்மைமலி தொண்டு, பன்மார்க்க உணர்வெழுப்பும் பகைமார்க்கம் மாய்த்துப் பத்திவளர் பொதுமார்க்கம் படைக்கவல்ல தொண்டு, கன்மார்க்கம் பெருகிவருங் காலமிது தியானம் காக்கநறுந் தொண்டாற்றக் கருணைபுரி அரசே. 7 தொண்டென்று தொண்டுசெயின் துகளறுக்குந் தியானம் தொடர்ந்துவரும் முனைப்பழியும் தொல்லைமனம் மாறும் சண்டையெலாம் மண்டியிடும் சாத்துவிகம் ஓங்கும் சன்மார்க்கம் நனிவிளங்கும் சாத்திரங்கள் சாற்றும் அண்டபிண்ட அற்புதங்கள் அடுக்கடுக்காய்த் தோன்றும் அனைத்துயிரும் ஒன்றென்னும் அன்புவழி திறக்கும் தொண்டருளம் வீற்றிருந்து தொல்லுலகை நடத்தும் bjh©l!எங்குந் தொண்டுநெறி சூழஅருள் புரியே. 8 உடற்றொண்டும் கலைத்தொண்டும் ஓங்குதொழிற் றொண்டும் உற்றமனத் தொண்டுடனே உதித்தகுடித் தொண்டும் இடத்தொண்டும் நாட்டுரிமைத் தொண்டுஞ் சகத்தொண்டும் இயன்றவரை இயங்கிவரின் இகல்பகைகள் ஒதுங்கும் கடற்புவியில் தியானஅகக் கண்திறக்கும் நன்றே கருணையிலா அமைப்பெல்லாங் காலொடிந்து வீழும் திடத்தொண்டும் தியானமுமே சிறக்கஅரு ளரசே தெய்வஒளிப் புதுஉலகம் திரண்டுதிரண் டெழுமே. 9 மண்ணினைந்தேன் நீர்நினைந்தேன் வன்னிவளி நினைந்தேன் வான்வெளியும் மதிகதிரும் வழிவழியே நினைந்தேன் உண்ணினைக்குந் தியானவகை உணர்வுகொண்டேன் ஐயா உற்றதுணை செய்வாயோ ஒதுங்கிவிடு வாயோ எண்ணமறி ஆற்றலுண்டோ ஏழைமதி யுடையேன் எப்படியோ உன்கருணை எவ்வழியில் செலுமோ அண்ணலெனக் கொருவரமே அளித்துவிடின் உய்வேன் அகந்தொண்டில் ஆரவேண்டும் அருள்புரிவாய் அதுவே. 10 40. கருணைத் திறம் உன்னருளால் இவ்வுலகில் ஒவ்வொன்றும் உற்றுவர என்செயலால் நிகழ்வதென எண்ணிவந்தேன் இறையோனே உன்னருளும் என்செயலும் ஒளிந்தேபோர் செய்தனவோ உன்னருளே வாகையணி உண்மைநிலை உணர்ந்தேனே. 1 ஒருவரிடம் வன்கண்ணும் ஒருவரிடம் மென்கண்ணும் மருவவைத்தல் இயல்பென்று மாநிலத்தார் நினைப்பதுபொய் கருணையினை எல்லார்க்குங் காலுவதே உனதியல்பு பரிதியொளி பரப்புவதில் பால்கொளுமோ இறையோனே. 2 அருளொளியில் மூழ்குவதை அறியாமல் அலையுமனம் அருளினிலே மயங்குவது மனிதரது குறைபாடே தெருளிலிவர் உன்னடியைச் சிந்தையிலே இருத்திவரின் அருளொளியில் மூழ்குவதை அறிகுவர்நன் கிறையோனே. 3 நற்செயலுந் தீச்செயலும் நண்ணுமிடம் உயிருளமே எச்செயலும் இல்லாத இறையோனே உன்மீது பச்சைமுதுப் பழிசுமத்திப் பார்ப்பவருங் கரையேற இச்சைகொளின் வழிகாட்டும் இரக்கஇயல் நினதன்றோ. 4 உன்னியலை உணராமல் உளறிவருங் கயவர்களும் கன்னெஞ்சங் கசிந்துருகிக் கலங்குங்கால் கைப்பிடித்து நன்னெறியிற் செலுத்துமருள் நாயகனே இகலில்லா உன்னருளை நினைப்பதுவே உறுதியென வந்தேனே. 5 தீயவெலாம் உலகிடைஏன் செறிவித்தாய் என்றென்றே ஆயமனஞ் செலுத்திவந்தேன் அநுபவத்தில் அவைகளுமே நேயநெறி விரைவதற்கு நேர்படுத்தும் விதங்கண்டேன் தூயபரம் பொருளேநீ துணைபுரியும் வகைஎன்னே. 6 வெம்மைநெறி நடப்பவர்க்கு விருந்துநிழ லாவதுபோல் செம்மைஅறம் விருந்தாகும் தீமையிலே உழல்வோர்க்கும் அம்மையினுந் தயவுடையாய் அறவழியும் மறவழியும் செம்மலுன தருளியங்குஞ் சீரியலின் சிறப்பென்னே. 7 தீயவரின் கூட்டரவும் தீஇயக்கக் கூட்டரவும் மேயஎழுந் துறுமுங்கால் விரையுமனம் உன்னடியில் தாயினுநல் லருளுடைய தற்பரமே இவ்வுலகில் தீயனவும் உளவாகச் செய்தனைநீ எனலாமே. 8 சாதிமதச் சண்டைகளும் தனிவழக்குச் சண்டைகளும் நீதிகொலுஞ் சண்டைகளும் நிலம்பிடிக்குஞ் சண்டைகளும் மேதினியில் சன்மார்க்கம் மேவஎனை உந்தியதை ஆதிபர நீயறிவாய் யானறிவேன் அருளரசே. 9 மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல், அண்ணலுனை மறந்தஉயிர்க் கருளூட்டுங் கருணைமழை நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுகஎன் றெச்சரிக்கை பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ. 10 41. அருளாட்சி அகிலாண்ட கோடியெலாம் இயங்கஅரு ளரசே அறவோர்க ளன்றளித்த அரசியலைப் பின்னாள் இகலாண்ட மனமுடையார் ஈரங்குலைத் தார்கள் எரிபகையே கொலைபெருகி இன்பமழித் தனவே செகமாண்டு மறைந்துவிடத் திருவுளச்சம் மதமோ சிற்றுயிர்கள் கட்டவிழச் சிந்தைசெய லெங்கே மிகவேண்டி மெய்யடியார் விதிர்விதிர்த்தல் கண்டு மேதினியி லருளாட்சி விழிக்கவிழி நோக்கே 1 குறுமதியர் அறம்மறந்து கோனாட்சி என்றும் குடியாட்சி என்றுங்குடிக் கோனாட்சி என்றும் சிறுமைமிக அரசியலைச் செறியவைத்தா ரிங்கே சிதடரினம் சழக்கரினம் சீறிவிழுங் காட்சி வறுமையுறப் பசிபிடுங்க வந்தபிணி தின்ன மன்னுயிர்கள் வதைந்துறங்கி மடிகின்ற காட்சி வெறுமையெனுஞ் சூநியமோ மெய்யருளை யுடையாய் வியனுலகில் அருளாட்சி விளங்கவிழி நோக்கே. 2 பொல்லாத ஆட்சிகளால் பொதுமைஅறம் நீங்கிப் பொருளொருபால் குவிந்தொருபால் பொன்றுதலை அறிவாய் மல்லாட வழக்கெடுக்கும் மன்றுகளில் நீதி மயக்கடைந்து நெறிபிறழ்ந்து மாய்வதனை அறிவாய் கல்லாத மாந்தரினங் கற்றவரை ஒதுக்கிக் கலையழித்தே ஆட்சிபுரி கொலைவினையை அறிவாய் எல்லாரும் இன்புறவே எங்குமுள இறையே இனியஅரு ளாட்சிஇன்றே எழக்கருணை புரியே. 3 அருளற்ற ஆட்சிகளால் அரக்கரினம் பெருகி அகிலமமர்க் களமாக்கி அன்பழித்தல் அறமோ தெருளற்ற அவர்படைகள் திரண்டெழுந்து பாய்ந்து சீவவதை குண்டுகளால் செய்துவரல் அழகோ மருளற்ற ஓவியமும் காவியமும் மற்ற மாண்கலையும் நடுக்குற்று வதையுறுதல் முறையோ இருளற்ற பேரொளியே எவ்வுயிர்க்கும் பொதுவே இறையவனே அருளாட்சி இங்கரும்பச் செய்யே. 4 ஆண்டவனே வழியடியார் அருளியவை அருளே அருகபுத்தர் உரைத்தஅறம் அன்பீனும் அருளே மாண்சிலுவை கிறிதுவிடம் வழிசெந்நீர் அருளே வள்ளுவனார் தமிழருவி வாய்மைமொழி அருளே காண்டகுநந் தாயுமானார் கருத்தெல்லாம் அருளே கருணைமன இராமலிங்கர் கண்ணீரும் அருளே தீண்டரிய சோதிஅருட் சோதி உயிர்ச் சோதி தீமைஅண்டா அருளாட்சி திகழஉளங் கொள்ளே. 5 அலைநெஞ்சை மென்மேலும் அலைக்குமர சியலால் அவனிபடும் பாடுகளை ஆண்டவஎன் சொல்வேன் கலைநெஞ்சம் காணாத கழகமலி வென்னே காதலின்பம் நுகராத காமவெறி என்னே தொலைநஞ்சு வறுமையுலை வறுமையெழ லென்னே தொகைதொகையாய் மருத்துவமும் மன்றுஞ்சூழ் வென்னே கொலையஞ்சுங் கொலையென்னே குண்டுமழை என்னே குணமலையே அருளாட்சி குறித்தருளா யின்னே. 6 மருளார்க்கும் ஆட்சியெலாம் மறைந்தொடுங்கி உலகில் மன்னுயிர்கள் கவலையின்றி மனநிறைவு கொள்ள அருளாட்சி விதைகாதல் அன்பில்படி வாகி அகக்கருவில் அரும்பிமுளைத் தறக்குடியில் வளர்ந்து தெருளார்க்கும் ஊர்நாட்டில் செழித்தோங்கித் தழைத்துச் சீருலகில் மரமாகிச் செழுங்கனிகள் உதவ இருளாட்சி இல்லாத இன்பஒளி விளக்கே இயற்கையிலே கோயில்கொண்ட இறைவஅருள் புரியே. 7 ஐந்துவிதப் பூதஇயல் ஆழ்ந்தாழ்ந்தே ஆய்வர் ஆழியடி மணலுயிரை ஆராயச் செல்வர் வந்தருகும் இமயமுடி காணவிரைந் தெழுவர் வானவெளி மண்டிலங்கள் வகையறிய முயல்வர் நந்துபனி வடதுருவம் நண்ணமனங் கொள்வர் நானிலமும் தமைவணங்கும் நாட்டமுடன் உழல்வர் சிந்தைநெறி அருளாட்சி தேடுவரோ மாந்தர் சிற்பரமே உன்னருளால் சேரஉளம் பற்றே. 8 நாடுகளைப் பற்றுவதில் நாட்டங்கொள் அரசு நாளுநாள் சட்டத்தால் நடுக்குறச்செய் அரசு காடுகளை அழித்துவருங் கருணையில்லா அரசு கட்டிடத்தில் நூல்காட்டிக் கற்பழிக்கும் அரசு பாடுகளைப் பெருக்குவித்துப் பலஉயிர்கொல் அரசு பலவிதமாய்க் கொலைக்கருவி பரப்புகின்ற அரசு கேடுபுரி இன்னவைகள் கெட்டழிய இறையே கேண்மைமிகு அருளாட்சி கிட்டஅருள் விரைந்தே. 9 அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரைஎண்ணுந் தன்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டலரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே. 10 42. ஆனந்தம் ஆனந்த மயமான ஆனந்த அரசே ஆனந்தம் உள்பொருளோ இல்பொருளோ என்றும் ஆனந்தம் உள்ளஇடம் அறிந்தவர்யார் என்றும் ஆனந்தம் மண்ணுலகோ விண்ணுலகோ என்றும் ஆனந்தம் ஒருமையிலோ பன்மையிலோ என்றும் ஆனந்தம் புறத்தினிலோ அகத்தினிலோ என்றும் ஆனந்த ஆய்வாலே ஆனந்தம் வருமோ. 1 ஆனந்த உருவான ஆனந்த அறிவே ஆனந்தம் யாக்கையிலே எவ்வுறுப்பில் என்றும் ஆனந்தம் பொறிகளிலோ புலன்களிலோ என்றும் ஆனந்தம் நெஞ்சினிலோ அறிவினிலோ என்றும் ஆனந்தம் உன்னிடமோ என்னிடமோ என்றும் ஆனந்த இடங்காட்டும் வழிஎதுவோ என்றும் ஆனந்தம் எளிமையிலே அகப்படுமோ என்றும் ஆனந்தம் ஆராய்ச்சி செய்தாலும் வருமோ. 2 ஆனந்த வாரிதியே ஆனந்த மழையே ஆனந்த அருவிசொரி ஆனந்த மலையே ஆனந்தம் விரும்பாத ஆருயிர்க ளுண்டோ ஆனந்தம் விரும்பினதும் அருகணைய வருமோ ஆனந்தம் உண்பதுவோ தின்பதுவோ அப்பா ஆனந்தம் உழைப்பின்றி வலிந்தடையும் ஒன்றோ ஆனந்த உளவுசொலும் ஆசிரியர் உளரோ ஆனந்தக் கலையுணர்த்தும் அறப்பள்ளி எதுவோ. 3 ஆனந்தப் பசுமைபொழி ஆனந்தப் பொழிலே ஆனந்த ஆராய்ச்சி அல்லலையே செய்யும் ஆனந்தம் ஆராய்ச்சி எல்லைகடந் தோங்கும் ஆனந்தம் அகண்டம்வல் லாராய்ச்சி கண்டம் ஆனந்தம் கண்டத்துள் அடங்கும்இயல் பினிதோ ஆனந்தம் இல்லாத இடமில்லை என்றே ஆனந்த அமுதுண்ட ஆண்டகையர் சொற்றார் ஆனந்தம் எங்குமெனில் ஆராய்ச்சி ஏனோ. 4 ஆனந்தம் வேறென்னும் அறியாமை நீங்கின் ஆனந்தம் நீயென்னும் மெய்யறிவு தேங்கும் ஆனந்தம் நீஎன்னில் ஆனந்தம் எல்லாம் ஆனந்தம் எங்கெங்கும் ஆனந்தம் அப்பா ஆனந்தம் மறைப்பதெது ஆணவமே அதுதான் ஆனந்தம் தான் அந்தம் ஆசிரியர் மொழியே, ஆனந்தம் பொங்கிஎழும் தான்அந்தம் எய்தின் ஆனந்த அடைவினுக்குத் தான்அறுக்க அருளே. 5 ஆனந்த வாழ்வினுக்குத் தானந்த மாக ஆனந்த நின்படைப்பாம் அழகியற்கை துறக்க ஆனந்தப் பெயராலே அறைந்தமொழி எல்லாம் ஆனந்த வழிகாட்டா அடைவிக்கும் அதனை ஆனந்தப் படைப்பினிலோ ஆனந்த மில்லை ஆனந்தப் படைப்பிலொன்றை அகங்கொண்டே ஒன்றின் ஆனந்த ஊற்றெழும்பும் ஆனந்தம் பொங்கும் ஆனந்த அமுதூட்டும் அற்புதமே ஐயா. 6 ஆனந்த இறையவனே ஆனந்தம் அடைய ஆனந்த இல்வாழ்க்கை அதற்குரிய கால்கோள் ஆனந்த முதற்பெண்ணை அலகையென நீத்தால் ஆனந்த ஊற்றழியும் அருந்துயரம் பெருகும் ஆனந்தப் பொங்கலுடன் அன்னைஎமை அளித்தாள் ஆனந்தச் சோதரியார் அன்புளத்தால் வளர்த்தார் ஆனந்தம் அருள்மனைவி அழகமிழ்தம் தந்தாள் ஆனந்தம் வளர்த்துவரும் அன்போபேய் அரசே. 7 ஆனந்தம் பெறவேண்டி அங்குமிங்கும் ஒடல் ஆனந்தம் அச்சமயம் இச்சமயம் என்றே ஆனந்த நோக்குடனே அலைந்துதிரிந் துழலல் ஆனந்தம் என்றுபுறக் கோலங்கள் மாற்றல் ஆனந்தங் கிட்டுமென மலயோகஞ் செய்தல் ஆனந்த யோகரென்றே அவதிகளை நாடல் ஆனந்த ஆண்டவனே இவையெல்லாம் பாழே ஆனந்த உயிர்ப்பணிகள் ஆற்றஅருள் செய்யே. 8 ஆனந்த நீர்நிறைந்த அகலேரி கரையில் ஆனந்தம் தழைதழைக்க ஆகாயம் நோக்கி ஆனந்தக் கரநீட்டி அன்புடனே அழைக்கும் ஆனந்தங் கனிமரத்தின் அடியமர்ந்து பார்த்தால் ஆனந்த நடைநடந்தே அங்குவரும் புட்கள் ஆனந்தக் குரலெடுத்தே ஐயஉனைப் பாடும் ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்த இறையே ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தப் பேறே. 9 ஆனந்தக் கன்றெல்லாம் அங்குமிங்குந் துள்ளி `ஆனந்த மணியோசை ஆக்களுடன் செல்லும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தக் காட்சி ஆனந்தக் கோவலர்கள் அடியெடுத்து வைத்தே ஆனந்தக் குழலூதி நடந்துசெலுங் காட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த இறையே ஆனந்த இயற்கையிலே ஆனந்தம் நுகர ஆனந்த அருளாட்சி அகிலமெலாம் அருளே. 10 43. வேண்டுதல் மெய்ப்பொருளே உன்னடியில் மேவுமனம் வேண்டும் மெய்யோம்பி நிறைபேணல் மீக்கூரல் வேண்டும் எப்பொருளும் உன்னுடைமை என்னும்எண்ணம் வேண்டும் எப்பொழுதும் இயற்கையிலே இசையுமுளம் வேண்டும் தப்புவிளை வினைபுரியாத் தவம்பெருகல் வேண்டும் தவறிழைத்தால் கசிந்துருகுந் தன்மைமிகல் வேண்டும் இப்புவியில் இகல்பகைகள் இயங்காமை வேண்டும் எவ்வுயிரும் பொதுவெனக்கொள் இயல்வேண்டும் அருளே.1 nrhâ!அடி மறவாது தொண்டுசெயல் வேண்டும் சுதந்திரமே எங்கெங்கும் சூழ்ந்தெழுதல் வேண்டும் நீதியழி அடிமைமுறை நிகழாமை வேண்டும் நிறைபிறழும் அரசெல்லாம் நிலவாமை வேண்டும் சாதிவெறி பிறப்புயர்வு சாய்ந்திடலே வேண்டும் சண்டைபுரி வெறிமதங்கள் தளர்ந்தொழிதல் வேண்டும் பேதமிலாச் சமரசமே பெருகிவரல் வேண்டும் பிணியறுக்குஞ் சன்மார்க்கப் பிடிவேண்டும் அருளே. 2 அன்புருவே அடிவணங்கி அருள்பெறுதல் வேண்டும் அணங்குலக அடிமையெங்கும் அற்றழிதல் வேண்டும் இன்பருளுங் காதல்மணம் ஏற்றமுறல்வேண்டும் இன்னாத மணமெல்லாம் இரிந்தோடல் வேண்டும் பன்மனைவி ஒருவன்கொளும் பழியொழிதல் வேண்டும் பரிந்தொருவன் ஒருத்தியுடன் படிந்தொழுகல் வேண்டும் அன்னையரை மாயையெனும் அகம்மடிதல் வேண்டும் ஆணினிடங் கற்பொழுக்க அடிவேண்டும் அருளே. 3 பெரியவனே அடிமறவாப் பேறுபெறல் வேண்டும் பெண்மையொளிர் பெருமையெங்கும் பேசிவரல் வேண்டும் அரிவையரில் தாய்மைதவழ் அன்புணர்தல் வேண்டும் அவ்வையர்பால் இறைமையொளி அசைவறிதல் வேண்டும் கரியகுழல் மாதராட்சி காசினிக்கு வேண்டும் கன்னியர்தம் மனமடைந்துன் கருணைபெறல் வேண்டும் தெரிவையரை இகழ்வோரைச் சேராமை வேண்டும் சிறுமையர்கள் மனந்திரும்பச் செபம்வேண்டும் அருளே. 4 ஆண்டவனே உனைமறவா ஆண்டகைமை வேண்டும் அலையும்புற மனமடங்கி நடுவரும்பல் வேண்டும் மாண்டநடு கடந்தடியின் மனமலரல் வேண்டும் மனந்திரும்பி அழுகின்றேன் மன்னித்தல் வேண்டும் மூண்டபழி பாவமெலாம் முனையாமை வேண்டும் மூள்பாவச் செயல்நிகழ்த்தா மொய்ம்புபெறல் வேண்டும் ஈண்டெதற்கும் உன்னருளின் இருந்துணையே வேண்டும் எழும்பும் நான் பலிஅடிக்கீழ் இடல்வேண்டும் அருளே. 5 இறையவனே எஞ்ஞான்றும் எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிரும் நீஎன்னும் இனிமைபெறல் வேண்டும் மறையருளும் உயிர்த்தொண்டு மடியும்வரை வேண்டும் மறுபடியும் தொடர்ந்ததனை வந்துசெயல் வேண்டும் கறைமலியும் பொய்யுடலம் கடந்தேறல் வேண்டும் கருணைமனம் கண்ணோட்டம் கலந்தஉடல் வேண்டும் நிறையின்ப இடமுண்மை நினையாமை வேண்டும் நித்தியமாய்த் தொண்டுபுரி நிலைவேண்டும் அருளே. 6 உறவேஉன் அருள்மறவா உறுதிநிலை வேண்டும் உலகுயிருன் கோயிலென உணர்கழகம் வேண்டும் சிறியகளி கதைஆட்டம் சிறவாமை வேண்டும் செவிவரைநில் களிகலைகள் செறியாமை வேண்டும் மறிமனத்தின் அலையடக்கும் மாண்கதைகள் வேண்டும் மனங்குவிந்து மதிபெருக்கும் உயிர்க்கலைகள் வேண்டும் பொறியரவுப் புதினவிடம் புகையாமை வேண்டும் புதியஅறி வியல்அறத்திற் புகவேண்டும் அருளே. 7 அழகநின தருங்கலைதோய் ஆனந்தம் வேண்டும் அன்பியற்கைப் பள்ளிபயின் றறிவுபெறல் வேண்டும் எழுகதிரில் மூழ்கிஉயிர்ப் பிறங்குமுடல் வேண்டும் எழிலொழுகும் பொழிலணிந்த இருக்கையிடம் வேண்டும் குழவிபொழி மழலைமொழி கொள்செவிகள் வேண்டும் கோடுமலை இவர்ந்துபொறைக் குணம்பெருக்கல் வேண்டும் பழுவம்அவிர் பசுமைபடிந் திளமையுறல் வேண்டும் பரவைஅலை பாட்டிலெழும் பயன்வேண்டும் அருளே. 8 அறவாஉன் வழியுலகம் அமைவுபெறல் வேண்டும் அதற்குரிய தொழிலெல்லாம் அளவுபடல் வேண்டும் வெறுமேடு படிப்பவர்தந் தொகைசுருங்கல் வேண்டும் விரும்புதொழிற் கல்வியெங்கும் விரிவடைதல் வேண்டும் முறையான தொழிற்கல்வி முதன்மையுறல் வேண்டும் மோனம்வளர் ராட்டைசுற்றல் முதிர்ந்தோங்கல் வேண்டும் உறவாதல் கடிதொழில்கள் ஒடுங்கிடுதல் வேண்டும் ஓவியஞ்செய் தொழில்வளர்ச்சி உறவேண்டும் அருளே. 9 ஒருவஉன தருளாட்சி உலகோங்கல் வேண்டும் ஒறுக்குமரு ளாட்சியெங்கும் ஒடுங்கிடுதல் வேண்டும் இருவரங்கு மாடியிலே உலவாமை வேண்டும் இருவரிங்குக் குடிசையிலே உலராமை வேண்டும் இருவரங்குத் தின்றுகொழுத் துருளாமை வேண்டும் இருவரிங்குப் பட்டினியால் வாடாமை வேண்டும் இருவரங்குப் பட்டாடை அணியாமை வேண்டும் இருவரிங்கு நடுங்காமை உறவேண்டும் அருளே. 10 44. போற்றி உலகெலாங் கடந்து நிற்கும் உலப்பிலா அறிவே போற்றி உலகெலாங் கலந்து வைகும் ஒப்பிலா இறையே போற்றி உலகெலாம் ஒழுங்கில் செல்ல ஒளிபொழி பிழம்பே போற்றி உலகெலாம் வணங்கி ஏத்தும் ஒருவனே போற்றி போற்றி. 1 ஆதவற் கனலை நல்கும் அலகிலாக் கனலே போற்றி சீதனுக் கீரம் ஈயும் சிறையிலா நிலவே போற்றி ஓதருங் கோள்கட் கெல்லாம் ஒளியருள் சுடரே போற்றி பூதமும் அங்கி ஏற்பப் பொலிதருந் தழலே போற்றி. 2 மண்ணிலைந் தப்பில் நான்கு வகுத்தருள் பரனே போற்றி ஒண்ணழல் மூன்று வைத்த உத்தமா போற்றி போற்றி விண்டுவில் இரண்டு சேர்த்த வித்தகா போற்றி போற்றி விண்ணிலே ஒன்று வேய்ந்த விமலனே போற்றி போற்றி. 3 இயற்கையின் உயிரா யெங்கும் எழுந்தருள் இறையே போற்றி செயற்கையின் சிந்தைக் கெட்டாச் செல்வமே போற்றி போற்றி முயற்சியின் விளைவா யோங்கும் முதன்மையே போற்றி போற்றி பயிற்சியில் நிற்போர்க் கென்றும் பண்புசெய் பரனே போற்றி. 4 இறப்பொடு பிறப்பி லாத இன்பமே போற்றி போற்றி வெறுப்பொடு விருப்பி லாத மேன்மையே போற்றி போற்றி ஒறுப்புடன் கறுவி லாத உத்தம அன்பே போற்றி பொறுப்புறும் ஒழுங்கிற் பொங்கும் புனிதமே போற்றி போற்றி. 5 பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி. 6 கூடலைக் குறிஞ்சி, முல்லை இருத்தலைக் குறித்தோய் போற்றி ஊடலை மருதப் பாலில் உதவிய உறவோய் போற்றி சூடனல் பாலைப் பண்பில் பிரிதலைச் சூழ்ந்தோய் போற்றி ஏடமை நெய்த லூடே இரங்கலை இணைத்தோய் போற்றி. 7 மலைமுழ வருவி வைத்த மகிழ்ச்சியே போற்றி போற்றி அலைகடல் பாட வைத்த அமுதமே போற்றி போற்றி கலையினில் காதல் வைத்த கருணையே போற்றி போற்றி சிலையினில் வீரம் வைத்த செம்மலே போற்றி போற்றி. 8 உருவிறந் தோங்கிச் செல்லும் உயர்ச்சியே போற்றி போற்றி அருவினுக் கெட்டா தேகும் அகண்டமே போற்றி போற்றி குருவினுள் கோயில் கொண்டு குணம்புரி சித்தே போற்றி திருவருள் விழைவோ ருள்ளச் சிந்தனை போற்றி போற்றி. 9 நல்லதே பிறவி தந்த நாயக போற்றி போற்றி அல்லவே செய்திந் நாளில் அழுமெனைக் காப்போய் போற்றி தொல்லையை நீக்குந் தொண்டில் துணைசெயுந் தோன்றல் போற்றி பல்வழி உயிர்ச்சன் மார்க்கம் பரவவே அருள்வோய் போற்றி. 10  1. மாசு மனிதம் மாசு மிகுந்த மனிதஇருள் போக்கவந்த ஏசு உனைமறவேன் என்று. 1 கன்னி வழிமலர்ந்த கற்பகமே என்னுயிரே முன்னி உனைஅணைந்தேன் முன் 2 ஆசைக் கடல்விழுங்க ஆளானேன் அப்பாஉன் நேசம் மறித்ததுவே நின்று. 3 பிழைபொறுத்குந் தெய்வம், பெரும! நீ என்றே குழையுளத்தால் நானடைந்தேன் கொள். 4 வன்பேய் முனைப்பழித்த வள்ளல் கிறிதுவே உன்சேயாய் வாழ்வேன் உணர்ந்து. 5 ஆணி அறைந்தவர்க்கும் அன்பான தெய்வமே தோணிஎனக் காவாய் தொடர்ந்து. 6 சிலுவையும் ஆணியும் செந்நீரும் நெஞ்சில் நிலவுந் தவமே நிறை. 7 என்னுள்ளே நீபிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யானிறந்தேன் உற்று. 8 உன்குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா என்குருதி எங்கேயோ ஏது. 9 வெள்ளை உடையும் மலைப்பொழிவும் என்னுள்ளக் கள்ளம் அழிக்குங் கலை. 10 2. அறத்தின் இயல் அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் ஆய்ந்தளந்தேன் திறத்தைத் தெளிகிலேன் சீற்றக் கொலைஞரின் தீச்செயலைப் பொறுத்தருள் செய்த புனிதம் நினைவில் புகப்புகவும் அறத்தன்பு நீயென் றறிந்தேன் கிறிதுவின் ஆருயிரே. 1 ஏசினேன் உன்னை இனிய மொழியை இளமையிலே கூசினே னில்லை குறையினைப் பின்னே குறித்தழுதேன் ஏசுவே! உன்னருள் என்னுளம் எய்திய தெப்படியோ மாசிலா அன்பே! மகனாய் உருக்கொண்ட மாணிக்கமே! 2 மலரைப் பறிக்கிலென் மாலை புனைந்திலென் மந்திரத்தின் ஒலியைப் பெருக்கிலென் ஓவெனப் பாக்களை ஓதிலென்ன! சிலுவையும் ஆணியும் செந்நீரும் சேர்ந்த திருவுருவம் பொலியும் உளத்தினில் பொன்றிடும் பாவப் பொருப்புகளே. 3 வாக்கை அடக்கின் வயிற்றை ஒடுக்கின் மயிர்வளர்த்து மூக்கைப் பிடித்திடின் மூச்சைத் தடுத்திடின் முத்தியின்பம் தேக்குமோ ஐயோ செகத்தீர்! அடைமின் சிலுவை உயிர் போக்கிய ஏசுவின் பொன்னடி இன்பம் புகுந்திடுமே. 4 தத்துவ நூல்களைத் தாங்கித் தருக்கச் சபைகளிலே வித்தகம் பேசி விழுந்தவன் என்று விழுமியஉன் சத்திய வாக்குத் தடுத்தெனை ஆளத் தயாபரனே மொத்திய மூர்க்கம் முறைமுறை சாய்ந்தது முன்னவனே. 5 இறையவன் கோயிலை எண்ணி நுழைந்தாய் இளங்குமரா கறைகளைக் கண்டதுங் கள்ளர் குகையெனக் காய்ந்துவிட்டாய் குறைகளைப் போக்குங் குருமொழி யாயது கோதகற்றித் தறையைத் திருத்துந் தகைமையை என்னென்று சாற்றுவனே. 6 கள்கொலை காமம் களவுபொய் தீய கறைகழித்துத் தள்ளும் வழிகளைச் சாற்றினர் பல்லோர் தரணியிலே பள்ளிப் படிப்பாய்ப் பரவின, வாழ்வில் படிவதற்குக் கொள்ளு மனமே கொலைஞரை மன்னித்த கோவடியே. 7 ஒழுக்கம் விழுப்பம் உயிரினும் ஓம்பென் றுரைத்திருந்தால் கொழிக்குமோ தானே குலவி நடந்து, குவலயத்தீர் ஒழுக்க வடிவாங் கிறிதுவை உன்னி உளத்தழுதால் அழுக்கைக் கழுவும், ஒழுக்கம் அரும்பி அலர்ந்திடுமே. 8 அன்பே! உனைக்காண் பரிதென அன்னை அகந்திரண்டாய், என்புதோல் போர்த்து நடந்தாய், மொழிந்தாய், இருநிலத்தில் மன்பதை நோய்கண் டிரங்கி இரங்கி மரித்தெழுந்தாய், பொன்னுரு வில்லையேல் புந்தியில் என்ன பொலிந்திடுமே. 9 பாவி பிறந்தனன் பாவி வளர்ந்தனன் பாவவினை மேவிய வாழ்வினன் மீக்கூர்ந்து பாவம் விளைந்தது சாவியாய்ப் போகச் சமயப் புறத்தினில் சார்ந்தலுத்தேன் தேவனே! அன்புச் சிலுவையின் நீழலைச் சேர்ந்தனனே. 10 3. அலகிலொளி அலகிலொளி ஐயாவே அகிலமெலாம் உன்கருவில்; உலகிடைநீ ஒருகன்னி உயர்கருவில் உதித்ததென்னை? சிலைநுதலார் உலகினிலே செறிந்தஇழுக் கொழித்தவர்தம் நிலைமையினை வளஞ்செய்ய நினைந்ததுவே நெஞ்சினிலே. 1 எவ்வுயிர்க்குந் தாயான இறையவனே இவ்வுலகில் செவ்வியலி ஒருதாயின் செழுங்கையில் வளர்ந்த தென்னை? எவ்வுயிருந் தாயன்பை எய்திவிடின் இறையுண்மை மெய்ம்மழவில் பொலியுமென்று விளம்புதற்கு வளர்ந்ததுவே. 2 பருவுடலை மறைத்தருளிப் பரமவுடல் அடைந்தக்கால் திருமகளிர் விழிக்கமுதச் செழுங்காட்சி வழங்கியதென்? திருமகண்மை உளமெய்தின் தெய்வவுரு விளங்குமென்று மருவுலகம் உணரகுரு மகிழ்காட்சி வழங்கியதே. 3 நெடுங்காலம் நஞ்சுமிழ்ந்து நிலம்வதைக்க நீளரவக் கொடுங்கோன்மைகொதித்ததென்னை? குமராநீ பிறந்ததுமே கொடுங்கோன்மை விழுத்தவந்த குணக்கோவென் றுனைத்தெரிந்து நடுங்கியதே கொடுங்கோன்மை நலிந்துவரல் கண்கூடே. 4 பேய்மையிலா உலகிருந்து பேயுலகிற் பிறப்பெடுத்துப் பேய்புரிந்த சோதனையும் பெற்றுவெற்றி அடைந்ததென்னை? பேய்நிலத்தில் சோதனையுண் டஞ்சாதே எனஅபயம் பேய்மனத்து மக்களுக்குப் பெரியவனே தெரிப்பதற்கே. 5 மாடிமனை யிடைஏசு மலரடியை வையாமல் காடுமலை கடல்குடிலில் கான்மலரை வைத்ததென்னை? காடுமலை கடல்குடிலுங் கடவுணெறி கூட்டியற்கை வீடமைதி யெனவிளக்க மேவியதே கான்மலரே. 6 முடிசேர்ந்த முள்ளடுக்கும் முகஞ்சேர்ந்த எச்சிலுமே இடிசோரும் உரமுடையாய்! இகலெழுப்ப விலை என்ன? கடியாத பொறுமையன்புக் கலைவளர வேண்டுமென்று நடையாலே நாட்டுதற்கு நல்லுளத்தில் எண்ணியதே. 7 சிலுவையிலே கிறிதுஉனைச் சேர்த்தாணி அறைந்தகொடுங் கொலைஞரையும் பகையாது குழைந்தருளைச் சுரந்ததென்னை? பலியிரத்தம் முழுகிமனம் படிந்துருகி மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கு நினைந்தருளைச் சுரந்தமையே. 8 ஒருகன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னங் காட்டென்றும் கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும் பொருநரையும் நேசியென்றும் போதனையால் சாதனையால் kUtit¤j »¿ÞJ!உன்றன் மலரடியில் அடைக்கலமே. 9 வாளேந்திப் போர்புரிந்த வாகையரும் மாண்டுவிட்டார் வாளேந்தாக் கிறிதுவேநீ மரித்தெழுந்தாய் வீரவள்ளால்! வாளேந்தும் வழியுழன்றேன் வழிகண்டேன் மரித்தெழுவேன் வாளேந்தா நெறிவளர்க்க மலரடியில் அடைக்கலமே. 10 4. உலகமெலாம் உலகமெலாம் பாவஇருள் உமிழ்ந்துநின்ற வேளை ஒடுக்கஅதைக் கன்னிவயிற் றுதித்தபர ஒளியே! இலகுடுக்கள் நீபிறந்த இடங்குறிக்கக் கலைஞர் ஏகிஉன்றன் அடிவணங்க இன்பமருள் சேயே! கலகமன வேந்தாட்சி கலகலத்து வீழக் கடலுலகில் அருளாட்சி கால்கொண்ட அரசே! அலகையினை அதட்டியதன் சோதனையை வென்ற ஆண்டகைமை வீரகுரு! அடியையடைந் தேனே. 1 தொழிலாளி வழிவளர்ந்தாய் தொழுவத்தில் வதிந்தாய் சூழ்வனத்தில் ஆழ்கடலில் தொடர்மலையில் நடந்தாய் விழியாத வலைஞரையும் விரும்பிஅழைத் தாண்டாய் விளையாட்டுக் குழந்தைகளை வெறுத்தவரைக் கடிந்தாய் அழியாத வீடென்றே அவர்மனத்தைக் கொண்டாய் அருவருக்கும் அழுக்கணங்கின் அழுகைக்கருள் சுரந்தாய் பழிநோயர் தொழுநோயர் படர்ந்துவரக் குமரா! பரிந்தவர்தந் துயர்களைந்தாய் பாவிமுகம் பாரே. 2 அன்றாட அப்பமெங்கட் கருள்புரிக என்றும் அடுத்துவரு நாட்கவலை அடையற்க என்றும் என்றேனுஞ் செடிபறவை என்னஉண்போம் உடுப்போம் என்றெண்ணி வதைந்துவதைத் தேங்கினவோ என்றும் நன்றாக இறைஉறுதி எளிமைவழி நவின்றாய் ஞானமென்று கடபடம்நீ நாட்டவில்லை ஐயா! பொன்றாத மொழிக்குரிய பொருந்தெளிமை என்னுள் புகுந்ததுவும் உன்னருளே புரிகைம்மா றிலையே. 3 பன்னிருவ ருள்ளொருவன் காட்டிஎனைக் கொடுப்பன் படிந்தொருவன் சோதனையில் மறுதலித்தே விடுவன் என்றுமுன்னர் வாய்மலர்ந்தாய் ஏசுபெரு மானே! இருநிகழ்ச்சி நடந்தமையை இவ்வுலகம் அறியும் அன்னவரைக் காயாமல் ஆண்டஅருட் கடலே! அடியரையும் சோதனைப்பேய் அலைக்கும்நிலை உணர்ந்தேன் என்னனையர் எளிமையினை எவ்வுரையால் சொல்வேன் எடுத்தணைக்க நீஇலையேல் எங்கள்கதி என்னே. 4 உன்னருளால் உன்னுடனே உறைந்தவரும் பேயின் உறுத்தலினால் உனைமறந்த உண்மையினைத் தேர்ந்தேன் என்மனத்தின் எளிமைகுறித் தேக்கமுற்றேன் ஐயா! ஏசுஎன்றும் கிறிதுஎன்றும் எண்ணியெண்ணிக் கிடந்தேன் மன்னவனே! சிலுவையிலே மரித்தபின்னர் பேயின் மயக்கமில்லை சீடருக்கு மயங்காமை தெளிந்தேன் பொன்னுடலம் பொழிகுருதிப் பெருக்கினிலே ஆழ்ந்தேன் பொல்லாத பேய்க்குறும்பு புகஇடமும் உண்டோ! 5 அன்புநெறி சிறந்ததென அகிலமுணர்ந் துய்ய ஆண்டவனே என்செய்தாய் அதைநினைந்தால் அந்தோ! என்புருகும் உயிருருகும் எண்ணமெலாம் உருகும் எம்மொழியால் இயம்பவல்லேன் ஏழைமகன் அப்பா! மன்னுலகில் அவதரித்தாய் மக்களிடை வதிந்தாய் மறைமொழிந்தாய் அவ்வளவில் மனம்நிறைய இலையோ பொன்னுடலை வதைக்கவிட்டாய் பொலியுயிரை நீத்தாய் பொறையன்பு நீயென்னும் பொருண்மைதெளிந் தேனே. 6 அன்பேநீ ஆதலினால் ஆருயிர்கள் பொருட்டுன் அழகுடலை வதைக்கவிட்டாய் அருளுயிரை நீத்தாய் இந்நிலத்தில் அச்செயலை எக்குரவர் ஏற்றார் இளங்கன்னி வயிற்றுதித்த இறைமைமணி விளக்கே அன்பினிலே குறையிருந்தால் அருஞ்செயலை ஆற்றல் ஆகாதே ஆகாதே அன்புடைய அறவோர் என்பும்பிறர்க் குரியரென எழுந்தமொழிக் குகந்த இலக்கியமா யிலங்கிநிற்கும் ஏசுகுரு நாதா! 7 வான்காணா முழுமதியே வாடாத பொழிலே மருந்தறியா நோய்தீர்க்கும் மாமருந்தே மணியே ஊன்காணா உளத்திரக்கம் ஊற்றெடுத்தே ஓடி ஒளிர்குருதி யாகிஉன்றன் உரங்கால்கை ஒழுகல், நான்காணாக் கண்ணினுக்கு நல்விருந்து செய்தாய் நாயகமே! நினைவிலந்த நற்காட்சி அருளே தேன்காணா இன்சுவையே தெவிட்டாத அமுதே தெய்வமணக் கிறிதுவெனுந் திருக்குமர குருவே. 8 அமைதிமலை மீதமர்ந்தே அறமழையைப் பொழிந்தாய் அன்பாறாய் அருட்கடலாய் அதுபெருக லாச்சே இமையளவில் அதில்திளைத்தால் இகல்பகைகள் போகும் எவ்வுயிருஞ் சோதரமா யிலங்குநிலை கூடும் சமயவழி வகுப்புவழி சாம்ராஜ்ய வழியே சண்டைமிக அன்புவழிச் சார்பழிந்து போச்சு சமதருமம் நிலவினெங்கும் சாந்தமலைப் பொழிவு சகமாகும் அந்நிலையைச் சற்குருவே அருளே. 9 உலகிறங்கிக் குமரன்அன்பை உணர்த்தியபின் மக்காள்! யோகமென்றும் யாகமென்றும் விரதமென்றும் உழலல் கலகமென்று மனைநீத்தல் தாடிசடை வளர்த்தல் கனல்பசியால் வீடுதொறுங் கையேந்தல் முதலாம் பலநெறிகள் படர்தலென்ன? பகுத்தறிமின் அறிமின் பத்திநெறி யொன்றில்நின்று பாவமுறை யிட்டுச் சிலுவையிலே சிந்தைவைத்தால் தீமையெலாம் அகலும் செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல்பெற லாமே. 10 5. பொய்யிலே பொய்யிலே நோக்கம் புகழிலே நாட்டம் பொருந்திய வாழ்க்கையை வெறுத்து, மெய்யிலே உள்ளம் பணியிலே பற்றும் மேவுநல் வாழ்க்கையை விரும்பி, ஐயனே கிறிது அப்பனே என்றுன் அடியினை நாடொறும் நினைந்து கையனேன் உருகிக் கசிந்ததை அறிவாய் காத்தருள் கருணைமா நிதியே. 1 வெகுளியில் முளைத்து வெகுளியில் வளர்ந்து விடக்கனி விளைதலை யுணர்ந்து வெகுகலைப் பயிற்சி துணைசெயு மென்று வீணிலே கழித்தனன் காலம் பகைவரை நேசி என்றுரை பகர்ந்து பண்புறக் காட்டிய ஏசு பகவனே என்று பாதமே அடைந்தேன் பார்த்தருள் கருணைமா கடலே. 2 குற்றமே உடையேன் குறைகளை வளர்த்தேன் குறும்புகள் பலப்பல செய்தேன் கற்றனன் நூல்கள் கழகநின் றறிவால் கடபட உருட்டலைப் புரிந்தேன் பற்றினன் பொல்லாப் பாழ்நெறி நல்ல பண்புறு நெறியினை நாடி இற்றைநாள் உன்றன் எழிலடி அடைந்தேன் ஏசுவே காத்தருள் இறையே. 3 புள்ளமர்ந் தினிய பாக்களை முழங்கும் பொழிலினைக் கண்டனன் புகுந்தேன் உள்ளமே கவரும் உயர்கனி பறிக்க உற்றனன் மரங்களி னிடையே முள்ளினம் மருட்ட மயங்கினன் ஏசு மூர்த்தியே! என்னிலை தெரிந்து முள்ளிலா மரமாய் முதிர்கனி அளித்தாய் முன்னவா! அருட்பெருக் கென்னே. 4 தண்புனல் வேட்கை தாக்கிட அலைந்தேன் தடங்களைத் தேடினன் கண்டேன் நண்ணினன் ஒன்றை நாற்புறங் கள்ளி, நயந்தனன் வேறொரு தடத்தைத் திண்ணிய முதலை திரிந்தது, பிறிதில் தீஅரா, நடந்தனன் சாய்ந்து பண்ணளி தடமாய்ப் பரிந்தனை கிறிது பரமநின் னருட்டிற மென்னே. 5 அலைகடல் அமைதி அடையவே செய்தாய் அப்பனே! மக்களின் மனத்துள் அலையெலாம் ஒடுங்க மலைப்பொழி வளித்தாய் அருட்பெருங் குருபர! எல்லாம் சிலுவையில் செறியச் சிறக்கவே வைத்தாய் சிந்தையிற் சிலுவையின் கலைகள் நிலவநாள் தோறும் ஜெபஞ்செய வேண்டும் நின்னருள் அதற்குமே தேவை. 6 தீயரைச் சேர்தல் தீமையென் றெண்ணிச் சிந்தையில் ஒதுங்கியே நின்றேன் நாயினேன் என்றன் நலன்களை நாடி நயந்தனன் பாவியாய் வளர்ந்தேன் பேயினை யொழித்த பெரியனே! ஜெபத்தில் பித்தினைக் கொண்டபின் ஐயா! தீயரை நண்ணித் திருப்பணி செய்தேன் தீமைகள் அணுகவும் இலையே. 7 என்னிடங் குறைகள் பிறரிடங் குறைகள் எழுவதைக் கண்டபோ தெல்லாம் உன்னடி எண்ணி உருகியே ஜெபத்தில் உளங்கொளும் உணர்வினை அளித்தாய் என்னகைம் மாறு செய்குவன் ஏழை ஏசுவே! எம்பெரு மானே! அன்பினால் உலகை அமைதியில் நிறுவ அவதரித் தருளிய அரசே! 8 பள்ளியில் உன்றன் பான்மொழி பயின்றேன் பரிசிலை உளங்கொடு நாயேன் எள்ளினேன் உன்னை; இன்மொழி பின்னை இரங்கவும் வருந்தவும் செய்யக் கள்ளனேன் அழுதேன் பிழைபொறுத் தாண்டாய் காய்தலும் வன்மமும் இல்லா வள்ளலே! நாளும் ஜெபத்தினில் மனத்தை வைத்திடும் வாழ்வடைந் தேனே. 9 புரிசடை முடியும், பூந்துளி நுதலும், புவியுயிர்க் கிரங்கிய விழியும், வரையினில் நின்று மறைபொழி வாயும், வளர்திருத் தாடியும், குருதி சொரிசெழு மார்பும், சுடுமுளைக் காயம் துலங்குகை கால்களும், சிலுவை மருவிய வடிவும், மனமலர் ஜெபத்தை வழங்கிய வள்ளல்! நீ வாழி. 10 6. உலகெலாம் உலகெலாம் உய்ய வேண்டி உருக்கொடு மண்ணில் வந்தாய் நலமிகு உவமை யாலே ஞானசீ லங்கள் சொற்றாய் கலகமுங் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச் சாய்த்தாய் அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி. 1 தரையினில் உதித்த கோலம் தையல்கை வளர்ந்த கோலம் வரையினில் இவர்ந்த கோலம் வனத்தினில் நடந்த கோலம் திரைகடல் கடந்த கோலம் சிலுவையில் பொலிந்த கோலம் உறைமனம் ஜெபத்தால் பெற்றேன் உத்தம! போற்றி போற்றி. 2 முள்வன முனைப்புச் சாய முடிமலை மிடுக்கு மாயத் தள்ளலைச் சீற்றம் வீயத் தாண்மலர் வைத்து வைத்து மெள்ளவே நடந்த காட்சி வேய்மனம் அமுத மாச்சு வள்ளலே! ஜெபத்தின் பேறு! மலரடி போற்றி போற்றி. 3 அங்கியைத் தொட்ட பெண்ணை அன்பினால் நோக்கி உன்பால் தங்கிய நேசம் உன்நோய் தவிர்த்ததென் றருளிச் செய்தாய் பொங்கிய மொழியில் மூழ்கிப் பொருந்திய ஜெபத்தில் நின்றேன் இங்கென தூனங் கண்டேன் ஏசுவே போற்றி போற்றி. 4 அலையிலா ஆழி யானாய் அருட்புனல் மேக மானாய் நிலைகனி மரமு மானாய் நீங்கலில் ஒளியு மானாய் புலனிலாக் கடவு ளானாய் புலனுடைக் கிறித்து வானாய் நலமிலேற் கன்பே ஆனாய் நாதனே! போற்றி போற்றி. 5 ஜீவநூற் பயிற்சி வேண்டும் ஜீவநீர்ப் படிதல் வேண்டும் ஜீவநன் னீழல் வேண்டும் ஜீவசெஞ் செல்வம் வேண்டும் ஜீவனில் ஜீவன் வேண்டும் செகமிவை பெறுதல் வேண்டும் ஜீவனை ஈந்த தேவே! திருவடி போற்றி போற்றி. 6 வாழ்ந்திட உலகை வைத்தாய் மானுடப் பிறவி வைத்தாய் சூழ்ந்திடச் சபைகள் வைத்தாய் தோத்திரஞ் செய்தே உன்பால் ஆழ்ந்திடச் சிலுவைக் கோலம் அன்புடன் வைத்தாய் வைத்தாய், வீழ்ந்திடல் எற்றுக்கிங்கே, விமலனே! போற்றி 7 பரனரி அணைவா னென்றும் பார்பதம் படியே என்றும் இரவிலும் நினைந்தேன் நெஞ்சம் ஏந்திய காட்சி என்ன! சிரமுடி முள்ளும் மண்ணில் சேவடி நடையும் - ஏசு பரமன்நீ என்று கொண்டேன் பதமலர் போற்றி போற்றி. 8 அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே! போற்றி போற்றி மன்பதை பாவந் தீர்க்க மரித்தவா! போற்றி போற்றி இன்புற உயிர்த்தெ ழுந்த ஈசனே! போற்றி போற்றி என்பிழை பொறுக்கும் ஏசு எந்தையே! போற்றி போற்றி. 9 பராபரக் கடவுள் வாழி பரிசுத்த ஆவி வாழி நிராமயக் குமரன் வாழி நிறையருள் அடியார் வாழி புராதன மொழிகள் வாழி புண்ணியச் சிலுவை வாழி விராவிய குருதி வாழி வியன்சபை வாழி வாழி. 10 7. ஏசு கிறிது ஏசு கிறிது பெருமானே எந்த உயிர்க்கும் அருள்வோனே. 1 கிறிது கிறிது என்போமே கிட்டிய பாவம் பின்போமே. 2 கன்னி வயிற்றில் உதித்தோனே கருணையை உலகில் விதைத்தோனே. 3 உருவம் இல்லா ஆண்டவனே ஒளியாய் என்புடல் பூண்டவனே. 4 அன்பை அளிக்க வந்தோனே ஆருயிர் உலகுயத் தந்தோனே 5 குலைந்தது குலைந்தது கொடுங்கோன்மை குமரா எழுந்ததுன் செங்கோன்மை. 6 தீராப் பிணிகளைத் தீர்த்தோனே தெவ்வரை அன்பாய்ப் பார்த்தோனே. 7 குழந்தை உள்ளம் உணர்ந்தோனே கோதில் வீடென் றுரைத்தோனே. 8 தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்குஞ் செங்கரனே. 9 ஏசுவே என்றதும் நெஞ்சுருகும் எல்லாப் பாவமும் இரிந்தருகும். 10 கண்ணே மணியே கற்பகமே கான்முளை யாகிய அற்புதமே. 11 பெண்ணுக் குரிமை ஆக்கியவா பெருநோய் தொழுநோய் போக்கியவா. 12 ஆணியில் சிந்திய செந்நீரே அகிலம் புரக்கும் நன்னீரே. 13 கிறிதுவின் இரத்தம் பெருமருந்து கேடில் இன்பம் தருவிருந்து. 14 திருமலை பொழிந்தது சொன்மறையே சிலுவை வழிந்தது செயன்முறையே. 15 சிலுவையில் நின்ற செழுங்கோலம் சிந்தையில் படிந்திடின் நறுஞ்சீலம். 16 சிலுவை நுட்பம் உளத்தினிலே சேர்ந்தால் விடுதலை அளித்திடுமே. 17 அமைதி அளிக்கும் அரசாட்சி ஐயன் குமரன் அருளாட்சி. 18 மரித்தும் எழுந்த சத்தியமே மரணம் இன்மையின் தத்துவமே. 19 வாழ்க கிறிது, போதனைகள் வாழ்க சிலுவை, சாதனைகள். 20 புதுமை வேட்டல் (1945) அணிந்துரை இயற்கையினிடத்துப் பலதிறச் சக்திகள் அமைந்துள்ளன. அவைகளிற் சிற்சில அவ்வப்போது அறிஞரால் காணப்படு கின்றன. அவை புதுமைகள் என்று சொல்லப்படுகின்றன. இயற்கையில் பழமையாயுள்ள சக்திகள் அறிஞரால் காணப்படுங்கால், அவை புதுமைகள் என்று போற்றப்படுதல் கருதற்பாலது. இதனால் பழமையின் சேயே புதுமை என்பது விளங்குகிறது. ஆகவே, புதுமையின் தாய் பழமை என்க. உலகம் என்றால் என்ன? மாறுதல் என்று சொல்லலாம். இதுகாறும் உலகம் அடைந்த மாறுதல் பலப்பல. அவற்றைக் கணக்கிட்டு கூறல் இயலாது. இதுபோழ்து உலகில் பெரும் மாறுதல் ஒன்று நிகழ்ந்து வருகிறது. அதற்குக் கால்கொண்டவர் காரல் மார்க். அறிஞர் மார்க் கண்டது. இக்காலப் புது வுலகம் என்று வழங்கப்படுகிறது. இப்புதுமை பழமையி னின்றும் பிறந்தது. காரல் மார்க் கண்ட புது உலகம் முழுமையதன்று. அதனுடன் சத் என்னுஞ் செம்பொருள் சேர்தல் வேண்டும். அப்பொழுது மார்க் மார்க்கம், சம மார்க்கம் (சன்மார்க்கம்) ஆகும். மார்க் மார்க்கம் உடல்; சத் உயிர். சன்மார்க்கப் புது உலகம் மலர வேண்டுமென்று தவங் கிடப்போர் பலர். அவருள் யானும் ஒருவன். சன்மார்க்க சமாஜம் என்றொன்றை அமைத்து என்னால் இயன்றவரை தொண்டாற்றி வருகிறேன். அத்தொண்டின் பரிணாமங்கள் சில. அவற்றுள் இந்நூலும் ஒன்று. நூலின் உள்ளுறைக் கேற்பப் புதுமை வேட்டல் என்னுந் தலைப்பு அணியப்பட்டது. முன்னே பொதுமை வேட்டல் என்றொரு நூல் என்னால் யாக்கப்பட்டது. அதற்குத் துணை போவது இப் புதுமை வேட்டல். குற்றங் குறைகளை அறிஞர் பொறுத்தருள்வாராக. இராயப்பேட்டை சென்னை 8-8-1945 திருவாரூர்- வி. கலியாணசுந்தரன் வாழ்த்து சுதந்திரத் தெய்வம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி. 1 சுதந்திர வாழ்த்து விண்கதிர் நிலவே போலும் விழிமணி யொளியே போலும் பண்ணிசை காதல் போலும் பயில்மனத் தெண்ணம் போலும் தண்ணதி மேக வோட்டம் தமிழ்மொழி பாட்டே போலும் உண்ணிலை யுயிரி னுக்கிங் கொளிர்சுதந் திரமே வாழி. 2 சுதந்திரச் சிறப்பு மீன்கடலே யெழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண்கம்ப மானாலும் ஊன்கொந்திக் கண்டதுண்டம் ஒன்னலர்கள் செய்தாலும் வான்மருவ நேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. 3 பாரத நாடு மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர்சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை இன்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு. கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதியெழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகப்போ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடே. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே. 8 தாயின் காட்சி போரூரன் மலைமீது பொருந்தமைதி நாடிப் புல்செறிந்த பாறையிடம் புங்கமரத் தடியில், பாரூரும் பார்வையெலாம் பையமறைந் தோடப் பாரதத்தாய் நினைவிலுறப் பரிந்தயரும் போதில், காரூரும் பொழிலசைவில் கண்பிடுங்கும் மின்போல் கனகவொளி மண்டபமே காந்தமென ஈர்க்கச் சீரூரும் உள்நுழைந்தேன்; திகழ்ந்ததொரு சபையே செப்பரிய உலகசபை; சிறப்புடைய தென்றார். 1 அரியிருக்கை யேறிமுடி அணிந்துயர்கோல் தாங்கி, ஆண்மையொடு வீற்றிருக்கும் அரசிகளைக் கண்டேன்; தெரியவென்னை ஈன்றவள்தன் திருக்கொலுவைத் தேடிச் சிறுகன்றே யெனவங்குத் திரிந்தலைந்தேன் திகைக்தே கரியநிறத் தென்மீது கண்செலுத்தி னார்கள்; காய்வர்களோ வெனுங்கவலைக் கருத்தொருபால் வாட்ட, அரிவையர்கள் முகநோக்கி யார்யாரென் றுணர; அருகணைந்தேன் தெரிந்தவரும் அருளினரிவ் வாறே. 2 நானாநாற் பத்தாண்டில் நலமுற்ற ஜப்பான் நாயகிநான்; பெருநதிகள் நானிலத்தில் பூண்டே ஆனாத வளமுடைநான் அமெரிக்கா செல்வி; அடுக்கடுக்காய்க் கலைவினைகள் ஆக்குஜெர்மன் யானே; கானாடுங் கனிமொழியும் ஓவியமுங் காதல் கவின்பிரான்ஸு திருமகள்யான்; காண்கவென முறையே தேனாறும் மலர்வாயால் தெரிவித்தார் தம்மைச் சிரித்தொருத்தி முடிவினிலே செப்பியதைக் கேண்மோ. 3 என்னருமை இந்தியனே என்னையறி யாயோ? என்னாட்சி கதிர்மறைதல் எப்பொழுது மில்லை; என்னிலத்தின் என்கடலின் என்வெளியின் பரவல் எவர்க்குண்டோ இவ்வுலகில் எங்குமென தாணை; உன்னலத்தின் பொருட்டாக உன்னையுமே யாளும் ஓரரசி என்னலுமே; உயர்சபையில் அன்னை இன்மை, குடல் முறுக்கியவண் எனைநீக்கக் குமுறி இடியிடிப்ப மழைபொழிய ஈர்ம்பொழிலில் நின்றே. 4 வேறு பொழிலிடையும் ஒளிர்கதிரே! பூவிற் றொன்மைப் புகழ்பரதத் தாயெங்கே? பொங்கி நின்று நிழலருளும் மரஞ்செடிகாள்! நிமல ஞான நிறைவீரக் கொடியெங்கே? நீண்டு வானில் எழுகுடுமி மலைக்குலங்காள்! இனிய வெண்மை இமயமுடி அணங்கெங்கே? எங்கே? அன்பில் அழகுநில வுந்தருவி அலைகாள்! கங்கை ஆறணிந்து கடலுடுத்த அம்மை யெங்கே? 5 ஆடுகின்ற மயிற்குழுக்காள்! ஆடல் நுட்ப அருங்கலையை முதலீன்ற அன்னை யெங்கே? பாடுகின்ற புள்ளினங்காள்! பண்ணின் பண்பைப் பாரினுக்குப் பரிந்தளித்த பாவை யெங்கே? ஓடுகின்ற புயற்றிரள்காள்! உரிமை நீர்மை உலகசகோ தரமென்ற ஒருத்தி யெங்கே? தேடுகின்றேன் தேவியெங்கே? தேவி யெங்கே? திரிகாற்றே நீயாதல் செப்பாய் கொல்லோ? 6 வடமொழியுந் தென்மொழியும் மலர்வா யெங்கே? வகைவகையாய்ச் சித்திரங்கள் வரைகை யெங்கே? திடமளிக்குங் கருணைபொழி செங்கண் ணெங்கே? சேர்ந்தவர்க்கு விருந்தளிக்குஞ் சிந்தை யெங்கே? சுடரொளிபொன் நவமணியுந் துன்ப நீக்குஞ் சுவைமணியுந் துலங்குமுடற் சுரங்க மெங்கே? இடமகன்ற இந்நிலத்தில் என்தா யெங்கே? எங்கேயென் தாயெங்கே எங்கே எங்கே? 7 வேறு எங்கேயென் றொருமனத்தால் ஏக்குற்ற வேளை எழுந்ததொலி விழுந்தகுர லிடத்திருந்தே மைந்தா! இங்கேயென் பழங்கதைகள் இயம்புவதா லென்னே? என்னிலையோ நிர்வாணம்; எச்சபையார் ஏற்பார்? பொங்கார முடிசெங்கோல் பூண்பதென்றோ போச்சு; பொலிவுடலும் பொன்னுடையும் புரியுணவும் போச்சு; கங்காளி; துச்சிலுளேன்; கம்பலையே ஆச்சு; கடும்பசிநோய் முடுக்குகின்ற கர்மமென தாச்சு. 8 வடிவினிலே பெரியள்யான்; வயதினிலே பெரியள்; வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்; கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்; காலினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன் வாழ்வே. 9 அன்புநெறி இறைநெறியை, ஆணவத்தால் மக்கள் அளப்பரிய பகைநெறிக ளாக்கியிழி வுற்றார்; மன்பதையில் பசையிழந்த வற்றல்மர மானார்; மற்றவர்கள் நடையுடையில் மதுமலர்வண் டானார்; என்பழைய சமரசமாம் இன்னமிழ்த முண்ணல் எந்நாளோ! இடைநுழைந்த இகல்சாதிப் பூச்சி, இன்புதரு குருதிகுடித் தீரல்நலம் போக்க, என்புருவாய்க் கிடக்கின்றேன்; எச்சபைக்குச் செல்வேன்? 10 பெண்ணடிமை தீண்டாமை பிறப்புவழிச் சாதி பேய்பிடியா நாளினிலே பெற்றிருந்தேன் மேன்மை; மண்ணினிலே இம்மூன்று மாயைசனி பற்ற வாதிட்டு மடிகின்றார் வகுப்புணர்வால் மைந்தர்; கண்ணினிலே கண்டுதுயர் கடலினிலே மூழ்கிக் கடவுளையே நினைந்துருகிக் கவல்கின்றேன்; மற்றப் பண்மொழியார் சபையிலுளார்; பாவிபடும் பாடோ படமுடியாப் பாடன்றோ பார்க்கமுடி யாதே. 11 என்னாட்சி பரிணமிக்க எழுங்கிளர்ச்சி பலவே ஏரார்சு தேசியத்தில் இருப்பதென்றன் ஆட்சி; தன்னாட்சி அந்நியத்தைத் தாங்குவதி லில்லை; தயையின்றி அந்நியரைத் தாக்கலிலு மில்லை; மன்னாட்சி அறநெறியில் மலர்ந்திடவே வேண்டும்; மாகலைகள் வாழ்விடையே வளர்ந்திடவும் வேண்டும்; நன்னாட்டுத் தொழிலரசு நலம்பெறவே வேண்டும்; நான்சபையில் வீற்றிருக்கும் நாளந்த நாளே 12 வேறு இம்மொழிகள் செவிநுழைய எழுந்தேன்; அன்னை எழிற்சபையி லெழுந்தருள இனிது வேண்டும்; செம்மைவினை யாற்றுதற்குச் சேர வாரும்; தீண்டாமை பெண்ணடிமை சிறுமைச் சாதி வெம்மைதரு நோய்களைய விரைந்து வாரும்; விழுமியசு தேசியத்தை விதைக்க வாரும்; அம்மைசம தர்மவர சாட்சி நாடி அன்பார்ந்த சோதரரே! அணைவீ ரின்னே. 13 தமிழ்நாடு வேங்கடமே தென்குமரி வேலையெல்லை நாடு மென்மைகன்னி இனிமைகனி மேன்மைமொழிநாடு தேங்கமழும் பொதிகைமலை தென்றலுமிழ் நாடு திருமலைகள் தொடர்மலைகள் தெய்வமலை நாடு பாங்குபெறு பாலிபெண்ணை பாவைபொன்னி நாடு பாவளர்ந்த வைகையொடு பழம்பொருநை நாடு தேங்குசுனை பளிங்கருவி தெளிசாரல் நாடு சிற்றோடை கால்பரந்த செய்யதமிழ் நாடே. 1 பொங்குபசுங் காடணிந்து பொழிலுடுத்த நாடு பூங்கொடிபின் செடிவனங்கள் பூண்டுபொலி நாடு தெங்குபனை கன்னலொடு கமுகுசெறி நாடு செவ்வாழை மாபலவின் தேன்சொரியு நாடு தங்கமெனு மூலிகைகள் தாங்கிநிற்கு நாடு தாயனைய கீரைவகை தாதுவளர் நாடு செங்கதிர்நெல் வரகுதினைச் செல்வம்விளை நாடு சீர்பருத்தி நார்மரங்கள் சிறந்ததமிழ் நாடே. 2 மடைகளிலே வாளைபாய மான்மருளு நாடு மழைமுழங்க மயிலாட வண்டிசைக்கு நாடு புடைகூவுங் குயில்கீதம் புசித்தினிக்கு நாடு பூவைபுகல் கிளிமழலை பொருந்தமிழ்த நாடு படைமூங்கில் வெள்வளைகள் பாண்மிழற்று நாடு பரவையலை ஓயாது பாடுகின்ற நாடு நடைவழியே குரங்கேறி மரமேறு நாடு நாகெருமை சேற்றில்மகிழ் நாடுந்தமிழ் நாடே. 3 மயிலிறகு தந்தமொடு மான்மதமீன் நாடு மான்கோடு தேன்கூடு மல்குதிரு நாடு தயிலமரந் தேக்ககிலஞ் சந்தனஞ்சேர் நாடு தண்மலர்கள் காய்கனிகள் சந்தைமிடை நாடு வயலுழவு செய்தொழில்கள் வற்றாத நாடு மயிர்பருத்திப் பாலாவி வண்ணவுடை நாடு வெயில்மணியும் நிலவுமுத்தும் மிளிர்ந்துமலி நாடு விழைபவளம் வெள்ளுப்பு விளங்குதமிழ் நாடே. 4 பாரளிக்குஞ் சித்தர்கணப் பழம்பெரிய நாடு பண்புறுகோல் சேரசோழ பாண்டியர்கள் நாடு வேரிமயக் கல்கொணர்ந்த விறலுடைய நாடு வென்றிமயம் புலிபொறித்த வீரமிகு நாடு நேரியலில் கொலைக்குயிரை நீத்தல்பெறு நாடு நெகிழ்கொடிக்குத் தேரளித்த நிறைந்தவருள் நாடு பேரிடரில் தலைக்கொடைக்கும் வாளீந்த நாடு பீடரசர் புலவர்களைப் பேணுதமிழ் நாடே. 5 புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பு நாடு நிறவெள்ளி வீதியவ்வை நேரெயினி நாடு நிறையொழுக்கக் கண்ணகியின் நீதிநிலை நாடு திறநடன மாதவியின் தெய்வஇசை நாடு சேய்மணிமே கலையறத்துச் செல்வமுற்ற நாடு நறவுமொழிப் புனிதவதி நங்கையாண்டாள் நாடு ஞானமங்கை மங்கம்மாள் நல்லதமிழ் நாடே. 6 மலையமுனி வழிமூன்று தமிழ்வளர்த்த நாடு மார்க்கண்டர் கோதமனார் வான்மீகர் நாடு புலமிகுதொல் காப்பியனார் பொருளுலவு நாடு போற்றுமக இறைகீரன் புலவர்தரு நாடு மலருலகே கொள்மறைசொல் வள்ளுவனார் நாடு வாய்த்தமுன்னோன் அரசுபெறச் சிலம்பில்மகிழ் நாடு விலைமலிந்த கூலமனம் மேகலைசெல் நாடு வெறுத்தவுளஞ் சிந்தாமணி விழைந்ததமிழ் நாடே. 7 வித்துமொழிக் கல்லாடர் வேய்ம்மலையார் நாடு விரிந்தகலைக் கம்பன்கவி விரைசோலை நாடு பத்திபொழி சேக்கிழாரின் பாநிலவு நாடு படர்வில்லிச் சந்தஅலைப் பாட்டருவி நாடு சுத்தபரஞ் சோதிகனிச் சுவையொழுகு நாடு சுற்றிவந்த வீரமுனி சொற்றேன்பாய் நாடு கத்தனருள் ஞானஉமார் கன்னல்சொரி நாடு கச்சியப்பர் விருந்துண்ணுங் கன்னித்தமிழ் நாடே 8 பரமனருள் நால்வராழ்வார் பண்ணொலிக்கு நாடு பழஞ்சித்த மறைபொருளைப் பகர்மூலர் நாடு பரவுபக லிரவற்ற பட்டினத்தார் நாடு பாற்குமரர் பிரகாசர் பாடுதுறை நாடு விரவருண கிரிவண்ண விரைசாரல் நாடு விளங்குகுணங் குடிமதான் வீறுஞான நாடு தரணிபுகழ் தாயுமானார் சன்மார்க்க நாடு சமரசஞ்சொல் லிராமலிங்கர் சாந்தத்தமிழ் நாடே. 9 பேருரையர் அடிநல்லார் பூரணனார் நாடு பேண்வரையர் அழகருடன் பேச்சினியர் நாடு தேரையர் புலிப்பாணி சேர்மருத்து நாடு செகமதிக்குஞ் சங்கரனார் உடையவர்தம் நாடு சீருறுமெய் கண்டமணி சித்தாந்த நாடு சிவஞான முனிக்கல்விச் செல்வநிதி நாடு போருரைக்குஞ் செயங்கொண்ட புலவன்வரு நாடு புகல்நீதி அதிவீரன் புரந்ததமிழ் நாடே. 10 மீனாட்சி சுந்தரக்கார் மேகமெழு நாடு மேவுசந்தத் தண்டபாணி மின்னலொளி நாடு வானாட்ட ஆறுமுக மாகடல்சூழ் நாடு மகிழ்கிருஷ்ணர் கவிராயர் கீர்த்தனங்கொள் நாடு தேநாற்று முத்துதியாகர் சங்கீத நாடு திரிகூடர் குறவஞ்சித் தேன்பிலிற்று நாடு கானார்க்கும் அண்ணாமலை காதல்சிந்து நாடு கவர்வேத நாயகனார் கல்வித்தமிழ் நாடே. 11 கால்ட்வெல்போப் பர்வல்வின்லோ கருத்தில்நின்ற நாடு கனகசபை ஆராய்ச்சிக் கண்ணில்நுழை நாடு நூல்வளர்த்த தாமோதரன் நோன்மைபெற்ற நாடு நுவல் மணீயச் சுந்தரவேள் நுண்மைமதி நாடு மால்பரந்த பாண்டித்துரை வளர்சங்க நாடு மாண்புதினத் தந்தைசுப்ர மண்யன்வரு நாடு சால்பரங்க நாதகணி தழைத்தகலை நாடு தனிக்கணித ராமாநுஜன் தந்ததமிழ் நாடே. 12 கொடைவள்ளல் சடையப்பன் குலவியபொன் னாடு கூடல்திரு மலைநாய்க்கன் கோல்வளர்ந்த நாடு படைவல்ல அரிநாயன் பணிகொழித்த நாடு பாஞ்சாலங் குறிச்சியூமன் பற்றியவாள் நாடு நடைசிறந்த பச்சையப்பன் நறுங்கல்வி நாடு நாயகனாஞ் செங்கல்வ ராயனற நாடு நடுநிலையன் முத்துசாமி நன்னீதி நாடு நவவீர பாரதியின் நடனத்தமிழ் நாடே. 13 பண்பரந்த இயற்கைநெறி பற்றிநின்ற நாடு பற்றியதன் வழியிறையைப் பார்த்தபெரு நாடு தண்ணியற்கை நெறியொன்றே சமயமெனு நாடு சாதிமதப் பன்மைகளைச் சகியாத நாடு மண்பிறப்பில் உயர்தாழ்வு வழங்காத நாடு மக்களெலாஞ் சமமென்னும் மாண்புகண்ட நாடு பெண்மணிகள் உரிமையின்பம் பெற்றிருந்த நாடு பெரும்பொதுமை யுளங்கொண்டு பிறங்குதமிழ்நாடே. 14 யாதும்மூர் எவருங் கேளிர் என்றுணர்ந்த நாடு எவ்வுயிர்க்கும் அன்புசெய்க என்றிசைத்த நாடு ஓது குலந் தெய்வமொன்றே என்றுகொண்ட நாடு ஒக்குமுயிர் பிறப்பென்னும் ஒருமைகண்ட நாடு நாதன் அன்பு நீதிஇன்பு நட் பென்ற நாடு நாமார்க்கும் குடியல்லோம் என்றிருந்த நாடு தீதில்லா மொழி வளர்க்கத் தெளிவுபெற்ற நாடு செந்தண்மை விருந்தளிக்குந் தெய்வத்தமிழ் நாடே. 15 தமிழ்த்தாய் இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ. 1 பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளுந் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ. 2 தமிழென்ற போதினிலே தாலூறல் உண்மையதே அமிழ்தாகி உயிரினுக்கும் யாக்கைநிலை செழிப்புறுமே. 3 சுவைத்துணருந் தமிழினிமை சொல்லாலே சொலுந்தரமோ தவத்துணர்வி லெழுமினிமை தமிழினிமைக் கிணையாமோ. 4 கனியினிமை கரும்பினிமை காதலிலே இனிமைபெருந் தனியரசி லினிமையென்பர் தமிழினிமை யுணராரே. 5 புலிகரடி அரியானை பொல்லாத பறவைகளும் வலிமறந்து மனங்கலக்க வயப்படுத்துந் தமிழொலியே. 6 கடவுளென்றும் உயிரென்றுங் கன்னித்தமிழ் ஒளியினிலே படிந்துபடிந் தோம்பினரால் பழந்தமிழர் கலைப்பயிரே. 7 இந்நாளைத் தமிழுலகம் இயற்கையொளி மூழ்காதே இன்னாத சிறைநீர்போல் இழிவடைதல் நன்றாமோ. 8 தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கும் இல்லைஇந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே. 9 தமிழரெனுந் திருப்பெயரைத் தந்ததுதான் எதுவேயோ கமழ்மணத்தை மலரறியாக் காட்சியது மெய்ம்மைகொலோ. 10 இமிழ்திரைசூழ் உலகினிலே இயற்கைவழி யொழுகினிமை அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமை நுழைந்ததென்னே.11 பல்லாண்டாய் அடிமையிலே பசுந்தமிழ்த்தாய் வீழ்ந்ததெனில் கல்லாத விலங்குகட்குங் காட்டைவிடுங் கருத்தெழுமோ. 12 கண்ணிலையோ காண்பதற்குக் காதிலையோ கேட்பதற்குப் புண்ணினிலே புளியென்னப் பூங்கொடியிற் புகுதுயரே. 13 உன்னஉன்ன உளமுருகும் ஊனுருகும் ஒருதமிழ்த்தாய் இன்னலது நுழையாத இழிநெஞ்சங் கல்லாமே. 14 பழந்தமிழர் வீரவொளி படர்ந்தீண்டில் இந்நாளே இழிந்தோடும் இடர்ப்பனிகள் எழுந்தாயின் தமிழ்நடமே. 15 தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல்நலம் போய்க்கடலில் விழுதல் நலம் பொலிதருமோ உடலுயிரே. 16 உயிரெதுவோ தமிழருக்கென் றுரைத்துணர்தல் வேண்டாவே அயர்வின்றித் தமிழர்களே! ஆர்த்தெழுமின் நிலைதெரிந்தே. 17 குறள்சிலம்பு மேகலையுங் கோதில்சிந் தாமணியும் அருள்சிலம்புந் தமிழினிலே அமைந்ததுவுந் திருவன்றே. 18 பழஞ்சித்த மறையருளப் பரனருளால் திருமூலர் நுழைந்தஇடம் எதுவேயோ நுவலுமது தமிழ்மாண்பே. 19 காவியமும் ஓவியமுங் கடவுளின்போ கடந்தஒன்றோ தாவிநிற்கும் நெஞ்சமதே தமிழ்சுவைக்கும் வாழ்வினிலே. 20 விலங்கியல்பின் வேரறுக்கும் விரலுடைய காவியமே. கலங்குமனத் துயர்போக்குங் கருத்தொன்றும் ஓவியமே. 21 காவியநெஞ் சுடையவர்கள் கருதார்கள் பிரிவுகளே ஓவியத்தில் உளங்கொண்டோர் உறுயோகம் பிரிதுளதோ. 22 சாதிமதச் சண்டையெலாந் தமிழின்ப நுகரார்க்கே ஆதியிலே சண்டையிலை அருந்தமிழை அருந்தினரால். 23 கலைத்தமிழின் கள்ளுண்டால் கலகமன வீறொடுங்கும் புலங்கடந்த அருளின்பம் பொருந்துவதும் எளிதாமே 24 காலத்துக் குரியஅணி கருதாளோ தமிழ்க்கன்னி மேலைச்செங் கலைபெயர்ப்பும் விளங்கிழையாம் புலவீரே. 25 பன்மொழியி லுளகலைகள் பசுந்தமிழி லுருக்கொள்ள நன்முயற்சி யெழவேண்டும் நலமுறுவள் தமிழ்த்தாயே. 26 தனித்தெய்வந் தமிழனுக்குத் தமிழன்றி வேறுண்டோ இனித்தநறுங் கோயில்களோ எழிற்கலைகள் வாழியரோ. 27 சத்தியாக்கிரக விண்ணப்பம் [gŠrh¥ படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் (1921இல்) ghl¥bg‰wJ.] பொறுமைக்கு நிலனாகிப் புனலாகி அளியினுக்குத் தெறலுக்கு நெருப்பாகித் திறலுக்கு வளியாகி 1 வெளியாகிப் பரப்பினுக்கு வெயில்நிலவுக் கிருசுடராய்த் தெளிவினுக்கே உடலுயிராய்த் திகழனையாய்ப் பிறராகி 2 இலகுவழி வழியாக எமையீன்று புரந்துவரும் உலகமெலாங் கலந்துகடந் தொளிர்கின்ற ஒருபொருளே! 3 உலகமெலாங் கடந்துகடந் தொளிர்கின்ற நினதியல்பைக் கலகமிலா உளங்கொண்டு கணித்தவரார் முதன்முறையே. 4 அவ்வியல்பை அளந்தாயும் அறநிலையே உறுதியெனச் செவ்வியறி வுழைப்பெல்லாஞ் செலுத்தாம லிருந்ததுண்டோ? 5 காட்சியொன்றே பொருளென்னுங் கருத்தைவிட்டுப் பொழுதெல்லாம் மாட்சியுடை நினதடியே வழுத்துவதை மறந்ததுண்டோ? 6 எண்ணமெலாம் உனதெணமே எழுத்தெல்லாம் உனதெழுத்தே மண்ணதனைப் பொருளாக மயக்கும்வழி யுழன்றதுண்டோ? 7 எல்லாநின் செயலென்றே இருந்தஒரு குலத்தார்க்குப் பொல்லாங்கு வரும்பொழுது புரப்பதெவர் கடனேயோ? 8 ஆத்திகத்தி லறிவுபழுத் தருளொழுகும் பரதகண்டம் நாத்திகத்துக் கிரையாகி நலிவுறுதல் நலமேயோ? 9 மூர்க்கநெறி யறியாத முனிவரர்கள் வதிந்தபதி பார்ப்பவர்கள் நகையாடும் படுகுழியில் விழுந்ததன்றே. 10 கொலைகளவு குடிகாமம் கொடும்பொய்யே மலியாத கலைநிறைந்த பரதகண்டம் கருதுவதோ அவைகளையே. 11 மலையளித்தாய் நதியளித்தாய் வனமளித்தாய் வளமளித்தாய் நலமளிக்கும் அவையெல்லாம் நழுவினவெம் மிடமிருந்தே. 12 வயிற்றுக்கே வனவாசம் மரணத்துக் களவில்லை கயிற்றுக்கும் பிறநாட்டைக் கைகுவித்துக் கவல்கின்றேம். 13 நாட்டுமுறைத் தொழிலெல்லாம் நசிக்கவிவண் பிறர்புரிந்த கேட்டினைநாம் எவர்க்குரைப்பேம் கிளந்துரைக்குஞ் சரிதமதே.14 பேச்சுரிமை எழுத்துரிமை பிறவுரிமை எமக்குளவோ சீச்சீயென் றிழிமொழியால் சிறுமைசொலும் வெளிநாடே. 15 உள்ளசட்டம் நிறைவிலையென் றுரிமைகொலுங் கருஞ்சட்டம் நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்ததுவே. 16 அழிக்க அதைத் தவமுதல்வர் அரியசத்தி யாக்கிரக ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே. 17 இரவொழித்துப் பகலுமிழும் இளஞாயி றதைமறைக்க விரவுபுயல் பரவியெரி வெடிகுண்டு பொழிந்தனவே. 18 இவ்வாரம் பஞ்சநதம் இரத்தநத மென இலங்கி ஒவ்வாத செயல்கண்டே உடைந்திரிந்த ததன்மனமே. 19 உரிமையெனும் உயர்வேட்கை உளத்தெழுமிக் கிழமையிலே ஒருமைமனத் தொழுகைசெய்தே உனைவேண்டும் வரமருளே.20 குறைகளெலாம் ஒழிந்துரிமை குலமடைய மருந்துண்டு தறையதனில் சுயஆட்சி தகைமைதரு மருந்தாமே. 21 பெறவேண்டும் சுயஆட்சி பெறவேண்டும் இப்பொழுதே அறமுறைகள் பிறவெல்லாம் அழகுபெறத் தழைத்திடுமே. 22 காந்திவழி கடைப்பிடிப்பின் கருத்தாட்சி மலர்ந்துவிடும் சாந்தமிகும் அவர்வழிதான் சத்தியாக் கிரகமதே. 23 சன்மார்க்க நெறியோங்கத் தயைபுரியெம் இறையவனே உன்மார்க்கத் துறைபற்றி உலகமிகச் செழித்திடுமே. 24 திலகர் திலகர் விஜயம் (திலகர் பெருமான் கொழும்பு வழியாக இங்கிலாந்து நோக்க 1918ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10ஆம் நாள் சென்னை நண்ணியவேளையில் பாடப்பெற்றது; அம்முறை கொழும்பில் திலகர் பெருமான் செலவு தகையப்பட்டது) பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் 1 கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் 2 அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! 3 திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திகலரெனு மியற்பெயரால் திறமுறவே நிறுத்தினையே 4 செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே 5 ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஓரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? 6 கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே. 7 இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லாத உரையதனை அகிலமெலாம் பரப்பினையே. 8 உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே. 9 பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? 10 உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே. 11 சிந்தியா உளம்உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் வடிவன்றே 12 தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே. 13 சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. 14 இங்கிலாந்தும் திலகரும் (பின்னே சில மாதங்கடந்து, திலகர் பெருமான் பம்பாய் வாயிலாகச் சென்று, 1918ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இங்கிலாந்து சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்தபோது பாடப்பெற்றது.) எங்கள் மன்னர் இணையடி யேந்தியே பொங்கு பேற்றைப் புனைந்தெமை யாண்டிடுந் தங்கு சீர்த்தி தழைத்தொளி வீசுநல் இங்கி லாந்தெனும் இன்ப அணங்குகேள். 1 தண்மை செம்மை தகைமையுங் கொண்டவோர் வண்ண மாமுனி வந்தனர் நின்னிடை வெண்மை நீலம் விரிந்து பரந்தநின் கண்க ளாலவர் காட்சியைக் காணுமே. 2 கல்வி ஞானங் கருணை நிரம்பிய செல்வ மாமுனி சேர்ந்தனர் நின்னிடைப் பல்வ ளங்களும் பான்மையுங் கொண்டநீ ஒல்லை அன்னார் ஒளிமுகங் காணுமே. 3 மற்ற வர்க்கே மனத்தை நிறுத்தியே உற்ற நேரத் துதவும் அறமுனி பற்றி வந்தனர் பண்புடை நின்னிடைச் செற்ற மில்லவர் சிந்தையை நோக்குமே. 4 பரத மென்னும் பழையவோர் நாடளி விரத மாமுனி வேந்தர் கிழக்குதி பரிதி யென்னப் பரிந்து படர்ந்தனர் கருதி யன்னார் கரத்தினை நோக்குமே. 5 எங்கள் தலைக்கணி எம்பெரு மானடி பங்க யப்பனி மாமலர் பூத்தது துங்க மிக்க சுகமுடை நின்னிடை அங்க ணாலதை அன்பொடு காணுமே. 6 உரிமை வேண்டி உவந்துனை நாடினர் பெரிய மாமுனி பேச அருள்புரி அரிய வாசகம் அன்பி லுதிப்பது தெரிய ஓதுவர் எங்கள் சிறுமையே. 7 அன்ன வர்பெயர் ஆரும் புகழ்பெயர் பின்னை யென்றும் பெயர்வது மின்றியே இந்நி லத்தி லிருப்பது கூறுவல் சென்னி கொள்ளுந் திகல ரெனும்பெயர். 8 இப்பெ யர்ப்பொருள் இந்தியா என்பது செப்பு மித்தகைச் செம்பொருள் சேர்ந்தது அப்பு மிக்க அருணதி பாய்ந்திடும் ஒப்பில் இந்தியா உற்றதை ஒக்குமே. 9 சிந்தை நல்ல திலகர் சொலும்மொழி இந்தி யாவின் இனிமொழி யாகுமால் அந்த ணர்சொலை யார்ந்து செவிகொடு சொந்த மாகச் சுதந்திர நல்குமே. 10 திலகர் வாழ்த்து மறப்பாலும் பிறவாலும் மதிப்பிழந்த எந்தமக்குப் பிறப்புரிமை சுயஆட்சி பெறவேண்டும் எழுமெனவே குறிப்புடைய ஒருமொழியைக் கொடுத்துதவி கிளர்ச்சியதால் சிறப்பருளுந் திலகமுனி திருவடியை வணங்குதுமே. 1 உலகன்னை உயிராகும் ஒருபரத கண்டமதில் உதித்த கோமான் பலகலையின் பயனுணர்ந்து பற்றறுத்து மற்றவர்க்குப் பண்பு செய்வோன் கலகமிலா உளங்கொண்டு கட்டுரையிற் பிறழாது காப்பில் நின்றோன் திலகமுனி எனும்பெயரான் திருவடியை எஞ்ஞான்றுஞ் சிந்திப் பேமால். 2 காந்தி காந்தியம் அல்லது இன்பப்பேறு என்னை அறியா என்னுளங் கொண்ட மயலொடு கலவா இயல்பெனுந் தேவி, எழுந்தொரு பொழுது செழுந்தமிழ்க் குரலால் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென பொறித்தனள் ஒருவினா; கருத்தினில் நின்றது அலைத்தும் ஆட்டியும் குலைத்த தென்னை; உண்மை தெளிய நண்ணினன்; கால்கள் நடந்தன உணரேன்; கடந்தனன் வழிபல அந்தி மாலை சிந்தையிற் றோன்றலும் கடற்கரை கண்டேன்; இடமென இருந்தேன் 10 உருகிய செம்பொன் கருகிய வானும் பளிங்கு நொய்யென இலங்குவெண் மணலும் நீனிறக் கடலும் நீளின அலையும் இறைவன் வடிவா யென்னை ஆண்டன நிறைகாண் போழ்தில் நிலவிழிப் பொழிந்தே உறக்கம் புகுந்தும் உணர்வழி விலையால் அவ்வுணர் வொளியில் செவ்விய மெல்லியல் தும்பை யன்னதோர் தூசணிந் தெதிரே எழுதரும் வடிவோ டெழில்வெண் டாமரை பூத்தது போலப் பொலிந்தன ளன்றே; 20 அன்னவள் அடியை அன்புடன் தொழுதே என்னிலை யுணர்த்த; எழிலணங் கவளும், மைந்த! கேட்டி இந்தமா நிலத்தில் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென வருந்தல் வேண்டா; திருந்து நல்வழி இன்று கூறுவல், நன்று கேட்டி! மக்கள் யாக்கையே மிக்கது மிக்கது அன்னதன் பயனை இன்னதென் றுணர இல்லம் விடுத்துச் செல்லலும் வேண்டா காடுகள் பலவும் ஓடவும் வேண்டா 30 மலைக ளேறி அலையவும் வேண்டா காற்றை யீர்த்து மாற்றவும் வேண்டா மனைவி மணந்தும் மக்களை யீன்றும் இனத்தொடு வாழ்ந்தும் இருந்தொழில் செய்தும் உண்பன உடுப்பன உண்டும் உடுத்தும் நாட்டை விடாது வீட்டி லுறைந்தும் பிறவிப் பயனைப் பெற்று வாழலாம்; இலக்கிய மிதற்கொன் றியம்புவன் கேட்டி, கலக்கமி லுளத்தைக் காளைநீ பெறுக; இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன் 40 கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாய னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் மக்களை யீன்று மிக்கவ னானோன் செயற்கை வெறுத்த செம்மை யாளன் இயற்கை இன்பமே இன்பெனக் கொள்வோன் உண்மை கடைப்பிடித் தொழுகுஞ் சீலன் உண்மைகா ரணமா உயிரையும் விடுவோன் வானந் துளங்கினும் மீனம் படினும் 50 மலைகள் வீழினும் அலைகள் பொங்கினும் தன்னிலை மாறாத் தன்மை யாளன் உலகி லுள்ள அலகிலா உயிர்கள் தன்னுயி ரென்னும் தருமம் பெற்றவன் பிறர்க்குக் கேடு மறந்துஞ் சூழான் அன்புடை யார்பிறர்க் கென்பு முரியர் என்னு மெய்ம்மொழிக்கு இலக்கிய மானோன் உண்மைஅஞ் சாமை ஒண்பே ராயுதம் தாங்கி என்றும் ஈங்கு முரண்படு தேக சக்தியை ஏக சக்தியாம் 60 ஆன்ம சக்தியால் அடக்கும் வீரன் சினத்தை யொழித்த இனத்தவ ருறவோன் யாண்டுத் துன்பம் எவர்க்கு நேரினும் ஆண்டே அவனுடல் அணையு மன்றே; அவனுடல் மற்றவர் உடலே யாகும் அவன்பொருள் மற்றவர் பொருளே யாகும் அவனுயிர் மற்றவர் உயிரே யாகும் தனக்கென வாழாத் தன்மை பெற்றவன் அன்பே வடிவாய் அமர்ந்த அண்ணல் இன்பு பிறர்க்கே உழைத்தல் என்போன் 70 சாந்த மயமெனுங் காந்திப் பெயரான் நற்றவன் அடியைப் பற்றுவை யாயின் ஐய! யாக்கையின் பயனது விளங்கும் நல்லாள் பகர்ந்ததும் பொல்லா விழிப்பால் ஒழிந்தது உறக்கமும் கழிந்தது இரவும் அலையொலி யோடு வலைஞர்கள் ஒலியும் கலைத்தன நிலையை அலைந்த உளத்தொடு வீட்டைச் சேர்ந்து நாட்டினன் சிந்தையைக் காந்தி யடிகளின் காந்தி யடிகளில்; கேடும் ஆக்கமும் ஓடும் செம்பொனும் 80 ஒன்றென மதிக்கும் நன்றுசேர் உண்மையும் பெற்ற யாக்கையால் மற்றவர்க் குழைத்தலில் இன்பப் பயனுண் டென்னுமோர் உண்மையும் கண்டு யானுந் தொண்டுசெய் கின்றேன்; நம்மை யீன்ற அம்மை உரிமையை இழந்து வாடும் இந்நாள் இந்நாள் காந்தி யாணை காந்தி யாணை இன்போ டுழைக்க என்னுடன் சேர வாருஞ் செகத்து ளீரே. 89 காந்தி வாழ்த்து சாந்தமய மென இலங்குந் தனிப்பொருளை உளத்தென்றும் ஏந்தியுயிர் தமக்கெல்லாம் இனிமைசெய உலகிடையே போந்தகுண மலையாகும் புனிதநிறை கடலாகும் காந்தியடி இணைமலரைக் கருத்திருத்தி வழுத்துவமே. 1 எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன் செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க அவ்விரு தொடர்புகண்ட அடிகளார் காந்தி வாழ்க இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க. 2 வைஷ்ணவன் எவன்? (காந்தியடிகள் நாடோறும் பிரார்த்தனையிற் பாடும் ஒரு கூர்ஜரப் பாட்டின் மொழிபெயர்ப்பு) பிறர்துயரைத் தன்துயராப் பேணியவர்க் கேவல்செயுந் திறனதனைப் பாராட்டாத் திறமுடையான் எவனவன். 1 எல்லாரை யும்வணங்கி இகழாதான் ஒருமனையான் சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையாள் அவன்தாயே. 2 சமநோக்கன் தியாகமுளான் தாயென்பான் பிறர்மனையை அமைநாவால் பொய்ம்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான். 3 மோகமொடு மாயைநண்ணான் முழுவைராக் கியமுடையான் ஏகன்பெய ரின்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான். 4 காமவுலோ பஞ்சினமுங் கரவுமிலான் வைணவனே ஏமநல்கு மவன்காட்சி எழுபானோர் தலைமுறையே. 5 சுதந்திர நாமாவளி பாரத நாட்டைப் பாடுவமே பரமா னந்தங் கூடுவமே. 1 முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் மாரதமே 2 பாரத தேசம் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் 3 வந்தே மாதர மந்திரமே வாழ்த்த வாழ்த்தசு தந்திரமே. 4 வந்தே மாதர மென்போமே வாழ்க்கைப் பிணிகள் பின்போமே. 5 காலை சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே. 6 சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை. 7 கங்கை யோடுங் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே. 8 காடும் மலையும் எங்கள்மடம் கவியும் வரைவும் எங்கள்படம். 9 மயிலில் ஆடும் எம்மனமே குயிலில் பாடும் எங்குரலே. 10 பறவை யழகினில் எம்பார்வை பாடுங் கீதம் எம்போர்வை. 11 பெண்ணிற் பொலியுந் திருப்பாட்டே பெருவிருந் தெங்கள் புலன்நாட்டே. 12 பெண்கள் பெருமை பேசுவமே மண்ணில் அடிமை வீசுவமே. 13 அடிமை யழிப்பது பெண்ணொளியே அன்பை வளர்ப்பதும் அவள்வழியே. 14 பெண்ணை வெறுப்பது பேய்க்குணமே பேசும் அவளிடந் தாய்க்குணமே. 15 தாய்மை யுடையவள் பெண்ணன்றோ தயையை வளர்ப்பவள் அவளன்றோ. 16 இறைமை யெழுவது பெண்ணிடமே இன்பம் பொழிவதும் அவ்விடமே. 17 பெண்மை தருவது பேருலகே பீடு தருவதும் அவ்வுலகே. 18 பெண்வழி சேர்ப்பது இறைநெறியே பேய்ந்நெறி யொழிப்பதும் அந்நெறியே. 19 நல்லற மாவது இல்லறமே அல்லாத அறமெலாம் புல்லறமே. 20 சாதிப் பேயை யோட்டுவமே சமநிலை யெங்கும் நாட்டுவமே. 21 சாதி மதங்கள் சச்சரவே சன்மார்க்கம் நீப்பது நிச்சயமே. 22 சமரச மென்பது சன்மார்க்கம் சார்ந்தா லொழிவது துன்மார்க்கம். 23 இயற்கை நெறியே சன்மார்க்கம். இயைந்தா லழிவது துன்மார்க்கம். 24 பாவிகள் சொல்வது பன்மார்க்கம் பக்தர்கள் நிற்பது சன்மார்க்கம் 25 சமரச மொன்றே சத்தியமே சன்மார்க்கஞ் சேர்ப்பது நிச்சயமே. 26 சமயம் ஆவது சன்மார்க்கம் சகத்தி லொன்றே நன்மார்க்கம். 27 எல்லா உயிரும் நம்முயிரே என்றே சொல்லும் மெய்ம்மறையே. 28 தென்மொழி யாவது தேன்மொழியே தெய்வக் கலைகள் சேர்மொழியே. 29 செந்தமி ழின்பந் தேக்குவமே தீராக் கவலை போக்குவமே. 30 வள்ளுவர் வாய்மை தென்மொழியே வளர்ப்போம் அந்த மென்மொழியே. 31 கன்னித் தமிழ்நடஞ் சிலம்பினிலே கண்டே அருந்துவம் புலந்தனிலே. 32 சுதந்திர வாழ்வே சுவைவாழ்வு அல்லாத வாழ்வெல்லாம் அவவாழ்வு 33 உழவுந் தொழிலும் ஓங்குகவே உலகம் வளத்தில் தேங்குகவே. 34 பகையும் எரிவும் பாழ்நிலையே பணிவும் அன்பும் பரநிலையே. 35 பாரும் பாரும் மலர்நகையே பரிந்தே மூழ்கும் மணவகையே. 36 ஒளியில் காற்றில் மூழ்குவமே உடலாங் கோயில் ஓம்புவமே. 37 நீலக் கடலில் நீளலையே நித்தம் விருந்தளி கதிர்வழியே. 38 வானே அமைதி வாழிடமே வாழ்த்தல் பொழியும் மீன்நடமே. 39 குழந்தை மழலை யாழ்குழலே கோதில் அமிழ்தங் குளிர்நிழலே. 40 கண்ணன் குழலிசை கேளுங்கள் கவலை துன்பம் மீளுங்கள். 41 அன்பே சிவமென் றாடுவமே அருளே வழியென் றோடுவமே. 42 வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே. 43 வேண்டுதல் எங்குநிறை அன்பறிவே! எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனிமைசெயல் வேண்டும். பொங்கியற்கை வழிநின்று புவிஇயங்கல் வேண்டும். பொய்சூது பகைசூழ்ச்சி பொருந்தாமை வேண்டும். மங்கையர்கள் உரிமையுடன் வாழ்வுபெறல் வேண்டும். மக்களெலாம் பொதுவென்னும் மதிவளரல் வேண்டும் தங்குமுயர் தாழ்வென்னுந் தளையறுதல் வேண்டும் சமதர்மச் சன்மார்க்கத் தாண்டவம்வேண் டுவனே. 1 கடவுள் நெறி யொன்றென்னுங் கருத்துநிலை வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல் வேண்டும் நடமாடுங் கோயிலுக்கு நலம்புரிதல் வேண்டும் நான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே வேண்டும் கொடியகொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும் கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைந்திறுகல் வேண்டும் இடமொழியுங் கலையுமென்றும் இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும் இனிமையும்வேண் டுவனே. 2 காடுமலை சென்றேறிக் கவியெழுதல் வேண்டும் கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும் பாடுகடல் மணலிருந்து பண்ணிசைத்தல் வேண்டும் பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் நாடிவயல் கதிர்குளித்து நாஞ்சிலுழ வேண்டும் நகையடிமைக் கோலுருட்டல் நண்ணாமை வேண்டும் ஆடுமனம் ஒன்றராட்டை ஆட்டிடுதல் வேண்டும் ஆவிகொலும் இழிதொழில்கள் அடங்கவும்வேண் டுவனே. 3 ஒருவன்பல மனைகொள்ளும் முறையொழிதல் வேண்டும் ஒருவனொரு மகள்கொள்ளும் ஒழுங்குநிலை வேண்டும் தருமமிகக் காதல்மணந் தழைத்தோங்கல் வேண்டும் சாதிமணக் கொடுமைகளின் தடையுடைதல் வேண்டும் பெருமையின்ப இல்லறமே பிறங்குநலம் வேண்டும் பெண்தெய்வம் மாயையெனும் பேயோடல் வேண்டும் உரிமையுற ஆண்கற்பை ஓம்பொழுக்கம் வேண்டும் உத்தமப்பெண் வழியுலகம் ஒளிபெறவேண் டுவனே. 4 ஒருநாடும் ஒருநாடும் உறவுகொளல் வேண்டும் ஒன்றடக்கி ஒன்றாளும் முறையழிதல் வேண்டும் பொருதார்க்கும் படையரசு பொன்றிடலே வேண்டும் புன்சாதி மதவரசு புரியாமை வேண்டும் தருவாதை முதலாக்கம் தளர்ந்தகலல் வேண்டும் தக்கதொழில் தனியாக்கம் தலைதூக்கல் வேண்டும் அருளாரும் ஆட்சிநின்றே அமைதியுறல் வேண்டும் அனைத்துயிரும் இன்பநுகர் ஆட்சியைவேண் டுவனே. 5 திருச்செந்தூர் செந்திலாண் டவனே! செந்திலாண் டவனே! செந்திலோ நின்னிடம்? சிந்தையோ நின்னிடம்? இங்குமோ இருக்கை? எங்குமோ இருக்கை? போக்கும் வரவும் நீக்கமும் இல்லா நிறைவே! உலகம் இறையென நின்னை உன்னுதல் எங்ஙன்? உணருதல் எங்ஙன்? மண்ணும் புனலும் விண்ணுங் காற்றும் அங்கியும் ஞாயிறுந் திங்களும் உயிரும் உடலா யிலங்குங் கடவுள் நீயெனில் உன்னலுங் கூடும் உணரலுங் கூடும்; 10 செயற்கை கடந்த இயற்கை ஒளியே! உறுப்பிலா அறிவே! குறிப்பிலா மாந்தர் எண்ணவும் ஏத்தவுங் கண்களி கூரவும் மூல ஒலியே கோழிக் கொடியாய், விதவித மாக விரியும் இயற்கை நீல மஞ்ஞை கோல ஊர்தியாய், இச்சை கிரியையே நச்சிரு தேவியாய், மூன்று மலமாம் மூன்று சூர்தடி ஞானமே வேலாய், மானவைம் புலன்கள் மருள்மனம் நீக்கி அருள்மனப் புலஞ்செய, 20 மூவிரு முகங்கொள் மூவா அன்பே! வெண்மணல் வெளியில் தண்கடல் அலைவாய் வீற்றிருந் தருளுஞ் சாற்றருங் கோலம் அஞ்சையுங் கவர்ந்து நெஞ்சையுங் கவர்ந்தே ஒருமையில் நிறுத்தும் பெருமைதான் என்னே! எந்நிலை போதும் அந்நிலை நீங்கா வரமே வேண்டும் உரமே வேண்டும் செந்திற் சிறக்குஞ் சிந்தையே வேண்டும் இருளைச் சீக்கும் அருளது வேண்டும் வருக வருக அருள வருக 30 அய்யா வருக மெய்யா வருக வேலா வருக விமலா வருக சீலா வருக செல்வா வருக அன்பா வருக அழகா வருக இன்பா வருக இளையாய் வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக எந்தாய்! எளியேன் என்னே செய்குவன்! கந்தா! கடம்பா! கதிர்வடி வேலா! கல்வி அறிவால் அல்லலை அழிக்க 40 முயன்று முயன்றே அயர்ந்தயர்ந் தொழிந்தேன் என்றுஞ் செந்நெறி துன்றி நிற்கக் காதல் பெரிதே ஆதல் இல்லை; எங்கும் நின்னருள் தங்குதல் கண்டு துன்ப உலகை இன்பமாக் காணக் குருமொழி வேண்டும் ஒருமொழி வேண்டும் அம்மொழி வேட்டு வெம்மனம் அலைதலை நீயே அறிவாய் சேயே! சிவமே! பெறுதற் கரிய பிறவியை ஈந்தாய்; அவ்வரும் பிறவியின் செவ்வியல் தெளிய, 50 ஏட்டுக் கல்வியில் நாட்டஞ் செலுத்தி, இல்லற மென்னும் நல்லற மேற்றுச், செருக்குச் செல்வமும் உருக்கு வறுமையும் இரண்டு மில்லா எளிமையில் நின்று, வாதச் சமயமும் பேதச் சாதியும் ஆதியி லில்லா நீதியைத் தெரிந்து, பற்பல குரவர் சொற்றன யாவும் ஒன்றென உணர்ந்து, நன்றெனக் கொண்டு, தொண்டின் விழுப்பங் கண்டுகண் டாற்றிச். செயற்கையை வெறுத்தே இயற்கையை விரும்பி 60 அத்தா! நின்னடிப் பித்தே நெஞ்சில் முருகி எழும்பக், கருதிய தருளே; முற்றுமவ் வருளும் பெற்றே னில்லை; மெய்ய! நின் உண்மையில் ஐயமோ இல்லை; முனைப்பறுந் தொதுங்கின் நினைப்புலன் உணரும் நுட்பம் அறிந்து பெட்பில் சிறியேன், உழன்று பன்னெறி உழைத்துழைத் தலுத்தேன்; அறவே முனைப்புள் அறுதல் என்றோ? அழுக்கு வாழ்வில் வழுக்கலோ அதிகம்; குறைபல உடையேன்; முறையிடு கின்றேன்; 70 வேறென் செய்வேன்? வேறெவர்க் குரைப்பேன்? பன்னிரு கண்ண! என்னொரு மனங்காண்; ஆலைக் கரும்பெனப் பாலன் படுதுயர் களைய வருக களைய வருக அழல்படு புழுவெனப் புனல்விடு கயலெனத் துடிக்கும் ஏழையை எடுக்க வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக சிந்தா மணியே! நந்தா விளக்கே! மயிலூர் மணியே! அயிலார் அரசே! 80 பிழைபொறுத் தருள்க; பிழைபொறுத் தருள்க; குன்ற மெறிந்த கன்றே போற்றி சூரனை வென்ற வீரனே போற்றி வள்ளி மணந்த வள்ளலே போற்றி அன்பருக் கருளும் இன்பனே போற்றி போற்றி போற்றி புனிதா போற்றி மக்கள் பலப்பலச் சிக்கலுக் கிரையாய் நலனை இழந்தே அலமரு கின்றார்! சாதியால் சில்லோர் நீதியை யிழந்து, நிறத்தால் சில்லோர் அறத்தைத் துறந்து, 90 மொழியால் சில்லோர் வழுவி வீழ்ந்து, மதத்தால் சில்லோர் வதைத்தொழில் பூண்டு, நின்னை மறந்தே இன்ன லுறுதல் என்னே! என்னே! மன்னே! மணியே! பேரும் ஊரும் பிறவு மில்லா இறைவ! நிற்குத் தறைமொழி பலகொடு அன்பர்கள் சூட்டிய இன்பப் பெயர்கள் எண்ணில எண்ணில; எண்ணில் அவைகளின் பொருளோ ஒன்று; மருளே இல்லை; பன்மைப் புறப்பெயர்ச் சொன்மையில் கருத்தை 100 நாட்டி ஆணவம் பூட்டிப் போரிடும் அறியாமை நீங்க, அறிவை அருள்க; எங்குமோ ருண்மை தங்குதல் கண்டே ஒன்றே தெய்வம் ஒன்றே அருள்நெறி என்னும் உண்மையில் மன்னி நிற்க அருள்க அருள்க தெருளொளி விளக்கே! சிந்தையில் நீங்காச் செந்தமிழ்ச் செந்தி வாழ்வே! செந்தி வாழ்வே! திருப்பரங்குன்றம் மங்கையர்க ளென்ன மலர்சோலைத் தண்ணீழல் தங்கு பரங்குன்றச் சண்முகனே! - இங்கடியேன் அன்னையினும் மிக்க அருளுடையான் நீயென்றே உன்னை அடைந்தேன் உவந்து. 1 மக்களுக்கு முன்பிறந்த மந்தி செறிசோலை மிக்க பரங்குன்ற மேயவனே! - இக்கலியில் உன்னை நினைந்துருக ஊக்கியதும் உன்னருளே இன்னல் களைந்தருள்க இன்பு. 2 சேய்களென மந்திகளுஞ் சேர்ந்தாடும் பூம்பொழில்கள் தோய்ந்த பரங்குன்றத் தோகையனே! - ஆய்ந்தறியின் எங்குநீ எல்லாநீ என்றபே ருண்மையன்றி இங்குமற் றுண்டோ இயம்பு. 3 பச்சைப் பசுங்கிளிகள் பாடுகின்ற பண்ணொலியை நச்சு பரங்குன்ற நாயகனே! - உச்சிமுதல் கால்வரையு நெஞ்சாக் கசிந்துருகல் எக்காலம் வேல்விளங்கு கைம்மனமே வேண்டு. 4 மாங்குயில்கள் கூவ மயிலாலுந் தேம்பொழில்கள் தேங்கு பரங்குன்றத் தெய்வமே! - வாங்கிவேல் குன்றெறிந்த கோமானே! குற்றமுடைச் சாதிநெறி என்றெறிந் தின்பருள்வா யிங்கு. 5 கண்ணாழும் மந்தி கனிகொண்டு பந்தாடும் விண்ணார் பரங்குன்ற வித்தகனே! - புண்ணாடுஞ் சாதி மதங்களெலாஞ் சாய்ந்தொழிந்து சன்மார்க்க நீதி பெருகவருள் நின்று. 6 அன்றிலும் பேடும் அழகா யுலவிவரும் வென்றிப் பரங்குன்ற வேலவனே! - நன்றுடைய நின்பெயரால் தீண்டாமை நின்பெயரால் சாதிநெறி வன்னெஞ்சர் செய்தனரே வம்பு. 7 தெய்வ மணங்கமழுஞ் செந்தமிழின் தேன்பாயுஞ் செய்ய பரங்குன்றச் செல்வமே! - வையமதில் தீண்டாமை எண்ணுநெஞ்சம் தீண்டுமோ நின்னடியைத் தீண்டாமை மன்பதைக்கே தீட்டு. 8 நீலப் புறாக்கள் நிமிர்ந்தாடும் மாடஞ்சேர் கோலப் பரங்குன்றக் கோமளமே! - சீலமளி சன்மார்க்கச் செம்பொருளே! சண்முகனே! பூவினிலே பன்மார்க்க நோய்தவிர்ப்பாய் பார்த்து. 9 வானாருந் தேவர்களும் வந்து தவஞ்செய்யுங் கானார் பரங்குன்றக் கற்பகமே! - ஊனாறும் ஊற்றை யுடல்கொண்டேன் உண்மை யுடலீந்து கூற்றுவனைக் காய்ந்தெனைக்கா கூர்ந்து. 10 பழமுதிர்சோலை கண்ணிலே காண்பன காதிலே கேட்பன கந்தநின்றன் எண்ணமா நெஞ்சில் இயங்கிடும் வாழ்வினை ஈந்தருள்க விண்ணிலே முட்டி விரிநிலம் பாய்ந்து விளங்கிநின்று பண்ணிலே மூழ்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 1 உள்ள மிருக்கும் உனையுணர் காதல் உறுதிகொள்ளாக் கள்ள வினையேன் கசிவிலாப் பாவி கருணைபுரி துள்ளு மறிமான் சுழிப்புன லஞ்சுஞ் சுனையினிலே பள்ளு முழங்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 2 கற்ற கலைகள் களிபெருஞ் செல்வங் கடைவருமோ சற்றும் அழியாக் கலைகளுஞ் செல்வமுந் தந்தருள்வாய் வெற்றி விறலியர் யாழின் விருந்துணு வேழவினம் பற்றெனக் கொண்ட பழமுதிர் சோலைப் பரம்பரனே. 3 வாழ்கநின் வேன்மயில் வாழ்கவென் றேதினம் வாழ்த்துமன்பர்க் கூழ்வலி யின்மை உறுதியென் றுண்மை யுணர்ந்து கொண்டேன் ஏழ்கதிர் மூழ்கி இழிபுன லாட இயற்கைநல்கிப் பாழ்தரு நோய்தீர் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 4 ஆறு முகமும் அருட்டாயர் நோக்கும் அயில்மயிலின் வீறுங் கொடியும் விழிமுன் விளங்கின் வினையுமுண்டோ தேறு பழம்பொழி சாறிழிந் தோடத் திரளருவி பாறும் இடர்கள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 5 மண்புனல் தீவளி வான்சுடர் யாவுநின் வாழியுடல் திண்ணுயிர் நீயெனில் உண்மையில் ஐயந் திகழலென்னே வண்டுகள் யாழ்செய் மலரணி வல்லி வனப்பொழுகும் பண்புடை ஞானப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 6 மலைபொழில் பூக்கள் மதிகடல் சேய்கள் மயிலனையார் அலைவழி பாடல் அழகுநின் எண்ணம் அறிவுறுத்தும் சிலைநுதல் வேடச் சிறுமியர் சேர்த்த செழியதந்தம் பலகுவ டாகும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 7 ஆண்டவ நின்றன் அறிகுறி யாகிய ஆலயத்துள் தீண்டல் தீண்டாமை சிறத்தலால் அன்பர்கள் செல்வதெங்கே வேண்டல்வேண் டாமை கடந்தவர் வாழ்வும் விரதமுஞ்சூழ் பாண்டிய நாட்டுப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 8 சாதிநோய் பேய்மதம் சார்தரு கோயிலுள் சண்முகநின் சோதி விளங்குமோ சூர்தடிந் தாண்ட சுடர்மணியே நீதியே என்று நினையடி யார்கள் நிறைந்துநின்று பாதமே போற்றும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 9 எல்லாரும் ஓருயிர் அவ்வுயிர் நீயென்ற ஆண்டவனே பொல்லாத சாதி புகுந்திவண் செய்யிடர் போக்கியருள் சொல்லாத மோனச் சுவையிலே தேக்குஞ் சுகர்களிலே பல்லோர்க ளுட்கொள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 10 பழனி எண்ணமெலாம் பழனியிலே எழுத்தெல்லாம் பழனியிலே கண்ணெல்லாம் பழனியிலே கருத்தெல்லாம் பழனியிலே மண்ணெல்லாம் பழனியிலே விண்ணெல்லாம் பழனியிலே பண்ணெல்லாம் பழனியிலே பகர்மனமே பழனியையே. 1 சொல்லெல்லாம் பழனிமலை சுகமெல்லாம் பழனிமலை இல்லெல்லாம் பழனிமலை இயற்கையெலாம் பழனிமலை கல்வியெலாம் பழனிமலை கலைகளெலாம் பழனிமலை செல்வமெலாம் பழனிமலை சிந்திப்பாய் பழனியையே. 2 தேடாயோ பழனிமலை திரியாயோ பழனிமலை நாடாயோ பழனிமலை நண்ணாயோ பழனிமலை ஆடாயோ பழனிமலை அணையாயோ பழனிமலை பாடாயோ பழனிமலை பாழ்மனமே பாழ்மனமே. 3 பழனிமலை என்னுயிரே பழனிமலை என்னூனே பழனிமலை என்னுடலே பழனிமலை என்பொருளே பழனிமலை என்னுறவே பழனிமலை என்னூரே பழனிமலை என்னுலகே பழனிமலை பணிமனமே. 4 சித்தரெலாம் பழனிமலை சிவயோகர் பழனிமலை பித்தரெலாம் பழனிமலை பெரியோர்கள் பழனிமலை புத்தரெலாம் பழனிமலை புனிதரெலாம் பழனிமலை பத்தரெலாம் பழனிமலை பழனிமலை பணிமனமே. 5 அன்பெல்லாம் பழனிமலை அறிவெல்லாம் பழனிமலை இன்பெல்லாம் பழனிமலை இரக்கமெலாம் பழனிமலை துன்பறுக்கும் பழனிமலை துரியநிலை பழனிமலை என்புருகப் பழனிமலை எண்ணாயோ பாழ்மனமே 6 ஓங்கார மூலமலை உள்ளெழுந்த பாம்புமலை நீங்காத சோதிமலை நிறையமிர்த தாரைமலை தூங்காமல் தூங்குமலை துரியசிவ யோகமலை வாங்காத ஞானமலை வளர்பழனி மலைமனமே. 7 ஆறாறு தத்துவத்தில் அடங்காத ஆண்டிமலை கூறாத மொழியினிலே கூர்ந்துநிற்கும் வானமலை மாறாத அழகினிமை மணம்வழங்கும் மகிழ்ச்சிமலை சீறாத சிந்தையிலே திகழ்பழனி மலைமனமே. 8 உலகமெலாந் தொழுதேத்தும் உயர்பழனி மலையினிலே அலகில்லா உயிர்க்குயிராய் அமர்ந்துநிற்கும் பெருமானே! கலகமிடு மனமுடையேன் கருணைபெற வந்தடைந்தேன் இலகுமொரு மொழிபகர எழிற்குருவா யெழுந்தருளே. 9 பிறந்துபிறந் துழன்றலுத்தேன் பெரும்பிழைக ளிழைத்தலுத்தேன் இறந்திருந்து களைத்தலுத்தேன் இறையவனே! உனைமறந்தே திறந்தவெளிப் பழனிமலை திறமுணரிப் பிறவியிலே சிறந்தவொரு மொழியருளத் திருவுளங்கொள்சிவகுருவே. 10 திருவேரகம் அன்னையே அப்பா என்றே அடைந்தனன் அருளை நாடி உன்னையே உள்கு முள்ளம் உதவியோ வேறு காணேன் பொன்னியே என்ன இன்பம் பொங்கருள் பொழிக இங்கே இந்நில மதிக்குஞ் செல்வ ஏரகத் தியற்கைக் கோவே. 1 உடலருங் கோயி லாக உன்னிடங் கூடுங் காதல் விடுவது மில்லை அந்தோ வெற்றியும் பெறுவ தில்லை கடலதைக் கையால் நீந்தக் கருதிய கதைபோ லாமோ இடரிலா வயல்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 2 நீலவான் குவிந்து நிற்க நிலவுகால் மணலில் சீப்பப் பாலதாய்ப் பொன்னி நீத்தம் பளிங்கென வெள்ளஞ் சிந்துங் கோலமே உள்ள மேவிக் கூட்டுநல் அமைதி வேளை ஏலவார் குழலி யானேன் ஏரகத் தியற்கைக் கோவே. 3 சிந்தையைக் கொள்ளை கொண்ட செல்வமே! கோயில் நின்றால் வெந்தழல் கதிரில் மூழ்கி விளைபசுங் கடலி லாடி முந்துகா விரிநீர் தோய்ந்து முற்றுநின் ஒளியி லாழ்ந்தே. இந்துவின் குழவி ஆனேன் ஏரகத் தியற்கைக் கோவே. 4 பொன்னொளி மேனிச் செல்வ! புலங்கவர் மேனி தன்னைக் கன்னியர் அழகே என்கோ காளையர் வீர மென்கோ பொன்னியின் பொலிவே என்கோ புலம்பயிர்ப் பசுமை என்கோ என்னென உரைப்பன் ஏழை ஏரகத் தியற்கைக் கோவே. 5 சாதியும் மதமும் வாதத் தர்க்கமும் வேண்டேன் வேண்டேன் ஆதியே அலைந்து போனேன் அடிமலர் வண்டே யானேன் மேதிகள் சேற்றி லாழ்ந்து மிகமகிழ் பழன மாந்தர்க் கீதலே போல ஓங்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 6 ஆதியில் ஆல யத்துள் அருளிலாச் சாதி யுண்டோ நீதியில் கூட்டத் தாலே நிறைந்தது சாதி நாற்றம் மாதுயர் இடும்பை போக்கி மாநிலம் உய்யச் செய்வாய் ஏதமில் மருதங் கேட்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 7 பெண்ணினை நீத்தல் ஞானப் பேறெனப் புகல்வோர் உள்ளார் கண்ணினில் ஒளியை வேண்டாக் கருத்தினர் அவரே யாவர் மண்ணிலக் கொடுமை தேய்ப்பாய் மங்கையர் வடிவே! செய்யில் எண்ணிலா ஏர்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 8 பிறப்பினைத் தந்து தந்து பேயனை மகனாய்ச் செய்த அறத்தொழில் நினதே யன்றோ? அன்னையின் அன்பே கண்டேன் புறப்பசுங் கடலை நீந்திப் புலன்விழிப் பசுமை போர்க்க இரக்கமாம் பசுமை மேனி ஏரகத் தியற்கைக் கோவே. 9 ஓமொலி கோழி கூவ உலகமே மயிலா நிற்கத் தேமொழி வள்ளி இச்சை தெய்வப் பெண் கிரியை யாக நாமற ஞானம் வேலாய் மனப்புலன் முகங்க ளாறாய் ஏமுறக் கோலங் காட்டாய் ஏரகத் தியற்கைக் கோவே. 10 குன்றுதோறாடல் எண்ணி எண்ணி இணையடி சேர்ந்தனன் கண்ணு நெஞ்சுங் கருதுங் கருணையே விண்ணுங் காடும் விரிகடல் காட்சிசெய் குண்டு கல்செறி குன்றுதோ றாடியே. 1 ஆர வாரம் அவனியில் வேண்டுமோ தீர ஆய்ந்து திருவடி பற்றினன் பாரும் வானும் பரவி வரம்பெறக் கூர நின்றிடுங் குன்றுதோ றாடியே. 2 வெற்றுப் பேச்சால் விளைவது தீவினை கற்ற கல்வி கழலடி கூட்டுமோ செற்ற நீத்துச் சிவம்விளை சிந்தையர் குற்ற மில்லவர் குன்றுதோ றாடியே. 3 நெஞ்சி லுன்னை நினைந்து வழிபடின் அஞ்ச லில்லை அடிமையு மில்லையே செஞ்சொல் வேடச் சிறுமியர் கிள்ளைகள் கொஞ்சிப் பேசிடுங் குன்றுதோ றாடியே. 4 மக்கள் வாழ்வு மலர்ந்த இடமெது துக்க நீக்கிச் சுகஞ்செய் இடமெது பக்கஞ் செங்கதிர் பான்மதி நேரிடம் கொக்கி போற்றொடர் குன்றுதோ றாடியே. 5 உலக வாழ்வை உனக்கு வழங்கிய திலகன் யாரெனச் சிந்தைசெய் நெஞ்சமே மலியு மாபலா வாழையை மந்திகள் குலவி யுண்டிடுங் குன்றுதோ றாடியே. 6 தேனும் பாலுந் திரண்ட அமுதென வானும் மண்ணும் வளரத் துணைபுரி மானும் வேங்கையும் மாவும் விலங்கினக் கோனும் வாழ்திருக் குன்றுதோ றாடியே. 7 காலை வேளைக் கழல்பணி வின்றெனில் மாலை வேளை மறலி வருவனே நீல மங்கையர் நீள்குரல் ஓப்பிடுங் கோலங் கொள்ளிருங் குன்றுதோ றாடியே. 8 செயற்கைக் கோயிலைச் செற்றிடும் மாந்தரே இயற்கைக் கோயி லிருப்பிடம் நோக்குமின் மயிற்கு லங்கள் மகிழ்நட மாடவுங் குயிற்கு ரற்பெறுங் குன்றுதோ றாடியே. 9 காற்றும் வெய்யொளி கான்றிக் கலத்தலால் ஆற்ற லாயுள் அதிகம தாகுமே தேற்றஞ் சாந்தஞ் சிவமணஞ் சேரவெங் கூற்றைக் கொன்றருள் குன்றுதோ றாடியே 10 கதிர்காமம் கலியுகத்துங் கண்கண்ட கற்பகமே! கருத்தினிக்குங் கரும்பே! தேனே! வலியிழந்து பிணியடைந்தேன் மலரடியே துணையென்று மருந்து கண்டேன் நலிவழித்துப் பொன்னுடலம் நல்கியருள் நாயகனே! ஞான நாதா! கலிகடலில் மலரிலங்கைக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 1 தீராத பிணியெல்லாந் தீர்த்தருளும் மருந்தாகித் திகழுஞ் சேயே! பாராத நாளெல்லாம் பாழ்நாளே யென்றுணர்ந்தேன் பரமா! நின்னைச் சேராத பிழைபொறுத்துத் திருவடிக்கே அன்புசெயுஞ் சிந்தை நல்காய் காராலுங் கானமர்ந்த கதிரைவேற் பெருமானே கருணைத் தேவே. 2 விழியில்லார் விழிபெற்றார் செவியில்லார் செவிபெற்றார் விளம்பும் வாயில் மொழியில்லார் மொழிபெற்றார் முருக! நின தருளாலே, மூட நாயேன் வழியில்லா வழிநின்று வளர்த்தவினை வேரறுப்பாய் வரதா! மூங்கில் கழிவில்லார் களியாடுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 3 ஆண்டவனே! உடலளித்தாய் அதைநின்றன் ஆலயமா யாக்கா திங்கு மூண்டசின விலங்குலவுங் காடாக்கும் முயற்சியிலே முனைந்து நின்றேன் தீண்டரிய சிவசோதி! செய்ந்நன்றி கொன்றபெருஞ் சிதட னானேன் காண்டகுநித் திலங்கொழிக்குங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 4 பகலெல்லாம் நின்நினைவே இரவெல்லாம் நின்கனவே பாவி யேற்குச் செகமெல்லாம் நினைக்காணச் சிவகுருவே யெழுந்தருளச் சிந்தை கொள்க குகவென்றால் பிடியுடனே கொல்யானை ஒதுங்கிநிற்குங் குணமே மல்கக் ககனவழிச் சித்தர்தொழுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 5 மண்பொன்னை மங்கையரை மாயையென மறைந்தொழுகல் மதியா குங்கொல் மண்பொன்னில் மங்கையரில் மாதேவ நீயிலையோ மயக்க மேனோ பண்ணிசைபோல் எங்குநிற்கும் பரமநினை மறுத்தொழுகல் பாவ மன்றோ கண்கவரும் மணியருவிக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 6 நீலமயக் கடலினிலே நீண்டெழுந்த பவளமலை! நின்னை நாடிச் சீலமுடன் இருங்காட்டில் செல்வோரைக் கரிகரடி சிறுத்தை வேங்கை பாலணுகிப் பாயாது பத்தியிலே மூழ்கிநிற்கும் பான்மை யென்னே காலமிடங் கடந்தொளிருங் கதிரைவேற் பெருமானே! கருணைத்தேவே. 7 கடலெல்லாங் கதிரையென்று கைநீட்டி வழிகாட்டக் கரிய காட்டின் முடியெல்லாங் கதிரையென்று முழங்கியன்பால் வரவேற்ப மூள்வி லங்கு கடவின்றிக் கதிரையென்று புறமேகப் புட்களெலாங் கதிரை யென்றே கடிதணைந்தே உடன்தொடருங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 8 சாதிமதப் பிணக்கின்றிச் சமரசமா யெல்லோருஞ் சார்ந்து சென்றே ஆதியந்த மில்லாத அறுமுகனே யென்றுன்னை அரற்று கின்றார் சோதி! நின தருளவர்க்குத் துணைபுரிதல் இயல்பன்றோ சொல்ல வொண்ணாக் காதலன்பு கரைகடந்த கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 9 தண்ணமருங் கடலெழுந்த தரைக்காட்டில் தமிழ்க்கோயிற் றனிமை கண்டால் மண்ணருவி முழவதிர மயிலாடக் குயில்கூவ வண்டு பாடும் பண்மயத்திற் புலனுழைந்து பகரரிய அமைதியுறும்; பண்பு கூடும்; கண்மணியே! கருத்தொளியே! கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 10 கழுகுமலை கந்தா குமரா கதிர்வேலா கருணை பெருகு காங்கேயா சிந்தா மணியே சிவகுருவே சித்தந் தெளியத் திருவருளை நந்தா ஒளியே நல்காயோ நானென் முனைப்பால் கெட்டேனே எந்தாய் வள்ளி மணவாளா எழிலார் கழுகு மலையானே. 1 குற்ற நீக்கிக் குணஞ்செய்யக் கொடுத்த பிறவி பலபலவே உற்ற இந்தப் பிறவியிலே உன்னை யுணரும் வாய்ப்புண்டு கற்றல் கேட்டல் கண்திறவா கண்ணைத் திறக்கக் குருவாக வெற்றி வேலா எழுந்தருளாய் விமலா கழுகு மலையானே. 2 உலகம் பொல்லாதென்கின்றார் உளமே பொல்லாதென் றுணர்ந்தேன் கலக உளத்தைக் கடந்துநின்றால் கருணை வடிவேஉலகமெலாம் இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கேகுற்றம் இறையோனே அலகில் அழகே அன்பருளே அறிவே கழுகு மலையானே 3 பொல்லா ஊனைப் புசியாத புனித அறமே உலகமெலாம் நல்லாய் பெருக வேண்டுகின்றேன் நாதா அருளாய் அருளாயே எல்லா உலகும் எவ்வுயிரும் இருக்கும் பெரிய பெருமானே கல்லார் கற்றார் கைகூப்புங் கருணைக் கழுகு மலையானே. 4 வேண்டேன் செல்வம் பேறெல்லாம் வேண்டேன் புகழும் பெருமையுமே வேண்டேன் பதவி விருப்பமெலாம் வேண்டேன் அரசும் விண்ணுலகும் வேண்டும் இரங்கும் நெஞ்சமென்றும் விளங்கும் மற்ற அறமெல்லாம் ஈண்டி யடியார் பணிசெய்யும் ஈசா! கழுகு மலையானே. 5 எல்லா உயிரும் என்னுயிரே என்னும் ஞானம் உளத்தென்றும், நில்லா தொழியின் வாழ்வேனோ நிமல யோகர் கண்ணொளியே! சொல்லாய்ப் பொருளாய்ச் சுகமளிக்குஞ் சுகமே! சுகத்தில் வரும்பயனே! செல்லார் பொழில்கள் பழனங்கள் சேர்ந்த கழுகு மலையானே. 6 மரமாய் நிழலாய் நறுங்காற்றாய் வாச மலராய் மணித்தடமாய்ப் பரவு திங்கள் நிலவாகிப் படர்ந்து புலன்கள் விருந்தளிக்கும் பரனே! பத்தர் பழவினைகள் பரிதி முன்னே பனிபோல இரிய அருளின் ஒளியுமிழும் இனிய கழுகு மலையானே. 7 எந்தச் சமயம் நுழைந்தாலும் இறுதி இன்பம் ஒன்றன்றோ இந்த உலகம் பலபெயரால் இசைக்கும் ஒருவ! பன்னிறங்கள் சிந்தும் ஆக்கள் பொழிபாலில் திகழும் நிறங்கள் பலவேயோ சந்தத் தமிழில் பண்பாடுஞ் சங்கக் கழுகு மலையானே. 8 வாது சமய வழியினிலும் வகுப்புச் சமய நெறியினிலும் சாதிச் சமயச் சார்பினிலும் சார்ந்து நில்லா வாழ்வளித்த கோதி லமுதே! குணக்குன்றே! குறைவில் நிறைவே! அருட்கடலே! சோதிப் பொருளே! நீவாழி! தூய கழுகு மலையானே! 9 மண்ணாய் நீராய் அனலாகி வளியாய் வெளியாய் ஒளியாகிக் கண்ணாய் மணியாய் உயிராகிக் காக்குங் கருணைக் கடவுளுனை எண்ணா வாழ்வு இருள்நரகம் எண்ணும்வாழ்வே அருளின்பம் அண்ணா! அருண கிரிக்கருளி ஆண்ட கழுகு மலையானே. 10 குன்றாக்குடி மண்ணோர்களும் விண்ணோர்களும் மகிழத்திரு மலைமேல் அண்ணா! அறு முகவா! எழுந் தருளுந்திருக் கோயில் கண்ணாரவும் நெஞ்சாரவுங் கண்டே தொழ வந்தேன் தண்ணார்பொழில் குன்றாக்குடித் தமிழா! எனக் கருளே. 1 கதிரோன்பொழி ஒளிமேய்ந்திடுங் கருணைப்பெரு மலைமேல் நிதியாளரும் மதியாளரும் நிறையுந் திருக் கோயில் gâna!பர மேட்டி! உனைப் பரிவாய்த்தொழ வந்தேன் கதியேயெனக் குன்றாக்குடிக் கண்ணே! எனக் கருளே. 2 நீலந்தரு வானில்மதி நிலவுந்திய மலைமேல் சீலந்திரு மயின்மங்கையர் சேர்ந்தேபணி கோயில் காலன்வினை தொடராவழி காணப்புகுந் தேனால் கோலம்பெறு குன்றாக்குடிக் குணமே! எனக் கருளே. 3 புறச்சோலையும் அறச்சாலையும் பொலியுந்தெரு மலைமேல் kw¢rh®ãid mW¡F§FU kÂna!திருக் கோயில் உறச்சேர்ந்தனன் உளங்கொண்டனன் ஒளிபெற்றிட முருகா! Ãw¢nršÉÊ¡ F‹wh¡Fo Ãkyh!எனக் கருளே. 4 முன்னம்வினை பலவேசெய மூர்க்கன்முனைந் திட்டேன் இன்னம்வினை செயவோமனம் எழவேயிலை ஈசா! ò‹bdŠád‹; KUfh!நினைப் புகலேயெனப் புக்கேன் Ä‹d‰bfho¡ F‹wh¡Fo ntyh!எனக் கருளே. 5 மலைநோக்கினன் மலையேறினன் மலையாகவே நிற்கச் சிலைவேடரைச் செற்றுக்கொடிச் சிவவள்ளியைக் கொண்ட இலைவேலவ! முயன்றேவரும் ஏழைக்கருள் செய்யாய் miyntbraš F‹wh¡Fo m‹gh!நினக் கழகோ. 6 கல்லாதவன் பொல்லாதவன் கருணைப்பொருள் வேண்டி நில்லாதவன் என்றேஎனை நீக்கிப்பெரு மொழியைச் சொல்லாதிவண் நீத்தாலினிச் சூழப்புக லுண்டோ bršyhUa® F‹wh¡Fo¢ átnk!இது வழகோ. 7 அறுமாமுகந் தோளாறிரண் டழகுத்திரு மார்பும் உறுகோழியும் மயில்வேலுடன் ஓதும்பிடி மானும் நறுமாணடி மலரும்விழி நாடற்றெரிந் தருளாய் òwnkÉlš F‹wh¡Fo¥ bghUns!நினக் கழகோ. 8 சாதிப்பிரி வாலேயுயர் சன்மார்க்கமுந் தளர நீதித்துறை வழுவுங்கொடு நிலைநேர்ந்துள நேரம் nrhâ¥bgU khnd!துணை சூழாதிவ ணிருத்தல் ஆதிப்பொருள்! F‹wh¡Fo munr!நினக் கழகோ. 9 kÆšnkbyhË® kÂna!உயர் மலைமேல்திகழ் மருந்தே! cÆ®nfhÆÈ bdhËna!உணர்ந் தோதற்கரும் பொருளே! துயில்கூரிருட் டுன்பங்கெடத் தொடுவேலவ! வாழி FÆšTîe‰ F‹wh¡Fo¡ nfhnd!சிவ குருவே. 10 சென்னி மலை பொன்மயி லரசே! புண்ணிய முதலே! புனிதனே! பூதநா யகனே! என்பெலாம் உருக எண்ணியே இருக்க எத்தனை நாட்களோ முயன்றேன் துன்பமே சூழ்ந்திங் கிடையிடை வீழ்த்தத் துயருறு கின்றனன் ஐயா! இன்பமே! சென்னி இறைவனே! ஈசா! இணையடித் துணையரு ளின்றே. 1 என்பிழை பொறுத்தே என்றனுக் கருள எத்தனை உடலமோ ஈந்தாய் அன்புநீ ஐயா! அன்பிலாப் பேய்நான் அளப்பருங் குறைகளே உடையேன் மின்னொளி வேலா! நின்னரு ளின்றி விடுதலை யில்லையென் றுணர்ந்தேன் கன்னியர் சூழுஞ் சென்னிமா மலைவாழ் கடவுளே! ஆண்டருள் செய்யே. 2 நானெனும் முனைப்புள் நாயினேன் சிக்கி நான்படுந் துயரமென் சொல்வேன் கானவர் வலையில் கலையெனக் கலங்குங் கடையனேன் கருத்தினை அறிவாய் வானவர் பொருட்டு வட்டவே லேந்தும் வள்ளலே! முனைப்பற வேண்டித் தேனமர் சென்னி மாமலை சேர்ந்தேன் சிறியனை ஆண்டருள் செய்யே. 3 நின்வழி நின்று நிகழ்த்திடுந் தொண்டே நேரிய தாய்நலம் பயக்கும் என்வழி நின்றே இயற்றிடுந் தொண்டால் எரிபகை எழுதலுங் கண்டேன் மன்னுயிர்த் தொண்டாம் மலரடித் தொண்டே மகிழ்வுடன் ஆற்றுதல் வேண்டும் பன்மணி கொழிக்குஞ் சென்னிவாழ் பரமா! பாவியேன் வேண்டுதல் கேளே. 4 என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன் எழிலுடல் ஓம்பலும் வேண்டேன் மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் மலரடி வழிபெறல் வேண்டும் துன்பமே உலகாய்த் தோன்றுதல் மாறிச் சுதந்திர உணர்வுட னெங்கும் இன்பமே ஓங்க இளமையே! சென்னி ஏந்தலே! என்றனுக் கருளே. 5 சாதியில் அடிமை மதத்தினில் அடிமை தங்கிடும் வீதியில் அடிமை நீதியில் அடிமை நிறத்தினில் அடிமை நிலவுல கெங்கணும் அடிமை ஆதியே! அடிமை நோயினை அகற்ற அருளொளி ஆண்மையே வேண்டும் கோதிலாச் சென்னிக் குணமலை யரசே! குவலயத் திடர்களை யாயே. 6 உலகினை யளித்தாய் உயிரெலாம் வாழ்ந்தே உன்னொளி காணுதற் பொருட்டே கலகமே செய்து காலமே கழித்துக் கடவுளே! உன்னையும் மறுத்தே அலகையாய் உயிர்கள் அழிநிலை நோக்கி அடியனேன் படுதுயர் அறிவாய் திலகமாய்ப் பொலியுஞ் சென்னிவாழ் சிவமே! தீமையைக் களைந்தருள் செய்யே. 7 அரசியற் பெயரால் ஆருயிர்க் கொலைகள் அவனியில் நாளுநாள் பெருகிப் பரவுதல் கண்டுங் கேட்டபோ தெல்லாம் படுதுயர் பரமனே! அறிவாய் கரவுள நெஞ்சம் எங்கணும் மலிந்தால் காசினி எந்நிலை யுறுமோ திருவெலாம் பொலியுஞ் சென்னிமா மலைவாழ் சித்தனே! திருவருள் செய்யே! 8 ஆறுமா முகனே! அண்ணலே! உயிர்கள் அகத்துறு நோய்களை நீக்கித் தேறுதல் செய்யுந் தெய்வமே என்று திருவடி அடைக்கலம் புகுந்தேன் ஈறிலா இளமை எழில்கொழி முருகா! இயைந்திடும் மணமலி இறையே! மாறிலாச் சென்னி மலையமர் வாழ்வே வளர்வினை தேய்த்தருள் செய்யே. 9 குமரனே என்று கூவியே உள்ளக் குகையிலே ஒளியினைக் கண்டோர் அமரரும் போற்றும் அடிகளே யாவர் அருவினைக் கோள்களுஞ் சூழா எமபய மில்லை இன்பமே யென்றும் ïiwt!நின் பெருமைதான் என்னே சமரிலே சூரைத் தடிந்தருள் சென்னிச் சண்முகா! அடைந்தனன் கழலே. 10 திருச்செங்கோடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே தோய்ந்தவெம் பாவி மெய்யிலே நிற்க விழைந்தனன் விழைந்து மேவிய நெறிகளும் பலவே அய்யனே! இயலா தலமரு கின்றேன் அருளொளி வேண்டுமென் றுணர்ந்தேன் மெய்யனே! திருச்செங் கோட்டினில் மேவும் மேலவா! எழுந்தருள் செய்யே. 1 பொய்யிலா நெஞ்சில் புகுந்தருள் விளக்கே! புனிதனே! புண்ணிய முதலே! பொய்யினைக் கழிக்கப் பொய்யனேன் நொந்து புலம்பிய புலம்பலை அறிவாய் மெய்யிலே விளங்கும் மெய்யனே! ஏழை மெலிந்தனன் நலிந்தனன் அம்மா! செய்யனே! திருச்செங் கோட்டினிற் றிகழுந் தெய்வமே! திருவருள் செய்யே. 2 மண்ணிலே பிறந்த மனிதனே அடியேன் மனத்தினாற் பொய்முதற் பாவம் நண்ணவும் அஞ்சி நடுங்குவ தறிவாய் நடுங்கினுந் தொலைவதோ இல்லை தண்ணரு ளொளியே! சண்முகா! பாவச் சார்பிருள் முற்றிலுஞ் சாய்க்கும் விண்ணெழு திருச்செங் கோட்டினில் விளங்கும் வேலவா! அருள்புரி யாயே. 3 எண்ணிலா உடலம் தந்துதந் திந்த எழிலுடல் தந்ததும் அருளே மண்ணிலே பாவ இருளிலே மயங்க வைப்பதும் அருளினுக் கழகோ பண்மொழி இருவர் பங்கனே! கமலப் பன்னிரு கண்ணனே! வேலின் அண்ணலே! திருச்செங் கோட்டினி லமர்ந்த அப்பனே! ஆண்டருள் செய்யே. 4 பாவமே முற்றும் பற்றிடா திருக்கப் பற்றினேன் பலதுறை முயற்சி சேவலங் கொடியாய்! சிறுமகன் முயற்சி திறத்துள எல்லையுங் கண்டேன் ஆவதொன் றில்லை யாதுயான் செய்கேன் அடர்பழி என்றனை யுறுமோ தேவனே! திருச்செங் கோட்டினிற் சிறக்குஞ் செல்வனே! காத்தருள் செய்யே. 5 திருவடி யொன்றே துணையெனக் கொண்டு தெளிந்தனன் வழியினை அமுதே! குருவென வந்து குறிக்கொளின் கொள்க குறிக்கொளா திருப்பினும் இருக்க கருமமே யுடையேன் கனன்றிட மாட்டேன் கழலிணை மறக்கவும் மாட்டேன் தருமனே! திருச்செங் கோட்டினி லெழுந்த சண்முகா! தயைநிறை கடலே. 6 முற்றிய பாவ மூலத்தை யறுக்க முறையிலா வழிகளி லுழலேன் சுற்றிய உயிரைத் தொண்டினைத் துறவேன் துறவெனக் காட்டினுக் கோடேன் பற்றியே மூக்கை மூச்சினை அடக்கேன் பாரினைப் பாழெனக் கொள்ளேன் உற்றசெங் கோட! உருகியே உயிர்கள் உயர்பணி செய்யவேண் டுவனே. 7 உருகியே அருளால் முனைப்பினை யொடுக்கி உயிர்வழி நின்பணி உஞற்றக் கருதிய கருத்தைக் கடவுளே! அறிவாய் கருத்தது கூடிட அருள்வாய் முருகிய வேட்கை மூண்டெழல் காணாய் மூடனேன் பிறநெறி செல்லேன் முருகனே ! திருச்செங் கோட்டினி லமர்ந்த மூர்த்தியே அன்புவேண் டுவனே. 8 ஆறுமா முகமும் ஆறிரு தோளும் அணிகடம் பாரமும் அன்பின் கூறெலாங் கூடித் திரண்டிரு புறமுங் குலவிய தாய்மையின் பொலிவும் வீறிடு வேலும் வீரமா மயிலும் விரைமலர்த் தாள்களுஞ் செம்மை மாறிலாத் திருச்செங் கோட்டினிற் கண்டு மனிதனாம் பணியைவேண் டுவனே. 9 நாத்திகப் பணியை நாடிலேன் அடியேன் நாடுவன் ஆத்திகப் பணியே நாத்திகம் எனல்நான் ஆத்திகம் அறல்நான் நான்எனும் பணிகளே உலகில் ஆத்திரம் ஊட்டும்; நான்அறும் பணிகள் ஆருயிர் அன்பினை யோம்பும்; பாத்திரத் திருச்செங் கோடனே அருள்செய் பணியெனும் ஆத்திகப் பணியே. 10 வேளூர் என்னையேன் பிறப்பித்தாய் இறையவனே! இங்கே ஏன்வளரச் செய்வித்தாய் இடர்க்கடலில் விழவோ g‹Dfiy gƉWɤjhŒ guk!நின துண்மை பகுத்தறிவால் உணர்ந்துமனம் பார்க்கவெழ லாச்சே மன்னுவெறுங் கல்லாக மண்ணாகத் தோன்றின் மாதுயரில் அழுந்தாது மகிழ்ச்சியுடன் வாழ்வேன் உன்னடியைக் காட்டாயேல் உயிர்தரியா திங்கே ஒளிமுத்துக் குமரகுரு உயர்வேளுர் மணியே. 1 உன்னுண்மை யுணர்ந்தமையால் உன்னொளியைக் காண உளமுருக ஊனுருக உடலுருக அழுதே உன்னுகின்றேன் இரவுபகல் ஓயாதே அந்தோ! உடைந்துமனம் வாடுகின்றேன் உடையவனே! அறிவாய் பன்னிரண்டு கண்ணுடையாய்! பாவிபடுந் துயரைப் பார்க்கமன மெழவிலையோ பரங்கருணைக் கடலே! மின்னுசுடர் வேலேந்தி மேதினியைக் காக்க விளங்குமுத்துக் குமரகுரு வேளூர்வா ழரசே! 2 ஆணவத்தால் பலவினைகள் ஆற்றிவிட்டேன் ஐயா! அவைநினைந்தே அழுகின்றேன் அருள்புரிதல் வேண்டும் வீணுரைகள் மிகப்பேசி வெறுப்பனவே செய்தேன் வேலவனே! அவைபொறுத்து விழைந்தேற்றல் வேண்டும் தோணிபுய லெழுகடலின் சுழியுழன்றா லென்னச் சுழலுகின்ற மனமுடையேன் துணைபுரிதல் வேண்டும் தாணுவென உனையடைந்தேன் சண்முகனே! காவாய் தவம்வளரும் வேளூரில் தமிழ்க்குமர குருவே. 3 எண்ணாத எண்ணமெலாம் எவ்வளவோ எண்ணி ஏழைமனம் புண்ணாகி இளைக்கின்றேன் நாளும் பண்ணாத வடிவழகா! பாவிபடுந் துயரைப் பாராயோ பசுங்கொடிசூழ் பவளமலை யண்ணா! கண்ணார உனைக்கண்டால் கவலையெலாம் மாயும் கலியுகத்து வரதனெனக் காரணப்பே ருடையாய்! விண்ணாரும் பொழிலுடுத்து வேதனைகள் தீர்க்கும் வேளூரில் வீற்றிருக்கும் வேற்குமர குருவே. 4 எழுதரிய வடிவழகை ஏழைவிழி காண எழும்வேட்கை நீயறிவாய் எவரறிவார் ஐயா! அழுதழுதே அயர்கின்றேன் அருளுடைய அரசே! m¥gh!நீ கைவிடுத்தால் அணைப்பவர்தாம் யாரே பழுதுடையேன் பிழையுடையேன் பாவமிக வுடையேன் பற்றுதற்கோ வேறில்லை பரம்பரனே! பாராய் விழுதுடைய ஆல்வேலும் வேம்பரசுஞ் சூழ்ந்த வேளூரில் குருவடிவாய் வீற்றிருக்குந் தேவே. 5 ஞானவடி வேலேந்தி நலஞ்செயவே கொண்ட நல்லபெருங் கோயில்பல நண்ணிநின்ற போது ஊனமிகு சாதிப்பேய் உலவுதலைக் கண்டே உளமுடைந்தே ஓடிவந்த உண்மைநிலை யறிவாய் வானவனே ஏழைதுயர் வருத்தமெலாங் களைய வல்லவர்யார் இவ்வுலகில் வள்ளலுனை யன்றித் தேனமரும் பொழில்சூழ்ந்து தெய்வமணங் கமழும் திருவீதி வேளூரில் திகழ்குமர குருவே. 6 வெள்ளையுடை அணிவித்து விழுப்பொருளும் ஈந்து வீட்டிலிரு என்றுசென்றாய் வீதிவழிப் போந்தேன் தள்ளரிய துகளெழுந்து தாக்கிவிழி பொத்தத் தக்கவுடை கறைபடியத் தவிக்கின்ற வேளை கள்ளரணி கலன்கவர்ந்து காற்றெனவே பறந்தார் கண்விழித்தே அழுகின்றேன் காக்கவெழுந் தருளாய் வள்ளியினைப் பிரியாத வடிவழகு முதலே! வயற்சாலி சூழ்வேளூர் வள்ளல்குரு மணியே. 7 சூரனொடு சிங்கமுகன் தாரகனுஞ் சூழ்ந்தே துளைக்கின்றார் என்னுயிரைத் துயர்க்கொடுமை அறிவாய் கீரனுக்குக் கருணைபுரி கேண்மைமிகு தேவே! கிளரந்த அரக்கர்துயர் கெடுக்கவல்லார் யாரே வீரநெடு வேதாந்த வேலெழுந்த ஞான்றே வீழ்ந்துபடும் அரக்கர்குலம் வீறுகரங் காணச் சீரிணையை வேண்டுகின்றேன் சிவனடியார் நேயா! செல்வமுத்துக் குமரகுரு செவ்வேளூர் அரசே. 8 அறுபொறியாய் வெளிவந்தே அசைகாற்றும் அனலும் அணைத்தேந்திச் சரவணத்தில் அன்புடனே சேர்க்கச் சிறுகுழவி யாகியங்கே செகமதிலே ஏறித் தீங்குவிளை சூரர்களைச் செவ்வேலால் சாய்த்து நறியகுழல் யானையொடு நங்கைவள்ளி மணந்த ஞானநிலை யுணர்ந்துன்னை நண்ணுகின்றேன் ஐயா! நறவமடு வண்டிசைக்கும் நகைமலர்பூண் சோலை நற்றவத்து வேளூரில் நாதசிவ குருவே. 9 ஐந்துபெரும் பூதமுறை ஆண்டவன்நீ யென்றும் ஆருயிரின் தீமையழி அருள்வேள்நீ யென்றும் உந்திச்சை கிரியைசத்தி உடையவன்நீ யென்றும் உபநிடதம் உரையுண்மை ஓர்ந்துன்னை யடைந்தேன் கந்தசிவ சண்முகனே! கண்புருவ நடுவில் கற்பூர விளக்கெனவே காட்சியளி சோதி! சந்தவிசைப் பண்ணினிலே தாண்டவஞ்செய் பொருளே! தமிழ்முத்துக் குமரகுரு தவவேளூர் அரசே. 10 திருமயிலம் மண்ணெழுந்து விண்காட்டு மலையாய் வெங்கால் வாங்கிநில வாக்குநிழல் வண்மைக் காடாய் தண்ணமரும் பசுமைகொழி வயலாய் நீலச் சாந்தநிறக் கடலாகித் தாங்குந் தாயே! உண்மையிலே ஒளிர்கின்ற ஒளியே! என்றும் உளக்கோயில் கொண்டவர்தம் உயிரே! நாயேன் வண்ணமயில் திருக்கோல வனப்புள் மூழ்க வந்தடைந்தேன் மயிலமலை வாழுந் தேவே. 1 பசுங்கடலில் மிதக்கின்ற படவே போன்று பயிர்சூழ ஒங்கிநிற்கும் பரிவுக் கோயில் விசும்புள்ளார் பாதலத்தார் விரும்பி யேத்த வீற்றிருக்கும் பெருமானே! விமலா! பாசம் நசுங்குவழி காணாது நாயேன் பன்னாள் நாயகனே! கழித்துவிட்டேன் ஞானம் இன்றுன் வசம்பெறவே வந்தடைந்தேன் வள்ளால்! பார்த்து மருள்நீக்கி அருள்செய்க மயில வாழ்வே. 2 வித்தாகி முளையாகி வேர்கள் வீழ்த்தி விண்ணோங்கு செடியாகி விரிந்து நீண்டு சத்தாகிக் கவடாகித் தாங்குங் கோடாய் தளிரிலைகள் தழைத்துநிற்குந் தருவே! நீழல் பித்தாகி ஓடிவந்தேன் பாலைக் கள்ளிப் பெருங்கழுகு எதிர்க்கஎனைப் பின்னிட் டேனால் அத்தா! என் வேட்கையுணர்ந் தச்சம் நீக்காய் அமரர்தொழும் மயிலமலை அன்புத் தேவே. 3 மண்ணாகி மணலாகி வளர்கல் லாகி மகிழ்குன்றாய் மனங்கவரும் மலையே! நின்பால் கண்ணாகிக் கல்லாலிற் கதிருள் மூழ்கி கறையில்லா உயிர்ப்பருந்திக் கருத்திற் சாந்தம் உண்ணாடி வழியடைய உவந்து வந்தேன் ஒருபுலியின் பார்வைவிழ உடைந்து வீழ்ந்தே m©zh!நான் நடுநடுங்கி அகன்றேன்; அச்சம் அழித்தருள்செய் மயிலமலை அழகுத் தேவே. 4 மழையாகிக் கால்நீராய் வனப்பா றாகி வாய்பாய்ந்து புனற்காடாய் வாரி போல விழியாலுங் கரைகாணா விண்சாய் ஏரி! வெம்மைகொள வேட்கையெழ விரைந்தே யோடி வழியாலே நடந்திழிந்து வந்த வேளை மகரங்கள் குழுகுழுவாய் வளைந்து பாய்ந்து சுழியாடல் கண்டஞ்சித் தூரஞ் சென்றேன் துயர்களையாய் மயிலமலைத் தூய்மைத் தேவே. 5 எங்கெங்கு நீங்காம லிருக்குந் தேவே! எங்கிருந்து துன்பஇருள் எழுந்த தையோ தங்குமிடந் தெரியவிலை தமியேன் நாளும் தாங்குதுயர்க் கெல்லையிலை தாயே யாகி இங்கடியார்க் கருள்புரிய எழுந்த ஈசா! ஏழைமுகம் பாராம லிருப்ப தென்னே திங்கள்பொழி நிலவாடத் தென்றல் வீசத் திருக்குளஞ்சூழ் மயிலமலைச் செல்வத் தேவே. 6 அத்தநின துண்மையினை அறிந்துஞ் செய்த அடாதசெயல் அத்தனையும் அழிதல் என்றோ? சித்தரெலாந் தொழுந்தலைமைச் சித்த ரேறே! சிந்தைகொண்டால் தீப்பஞ்சாய்த் தீந்து போகும் பத்தருளக் கோயில்கொளும் பரமா! செம்பில் படுகளிம்பைப் பாற்றுவித்துப் பசும்பொன் னாக்குஞ் சுத்தசெழு மூலிகைகள் சூழ்ந்து நிற்கும் தொன்மயில மலைமருந்தே! துணைசெய் யாயே. 7 சாதியிலே மதங்களிலே சார்பு விட்டேன் சண்முகனே! திருவடியின் சார்பு கொண்டேன் வீதியிலே விளையாடித் திரிந்த காலை வேலவனே! நின்தொண்டு விளங்க வில்லை நீதியிலே நின்றுயிர்க்கு நிகழ்த்துந் தொண்டே நின்தொண்டாம் என்றுணர்ந்தேன் நிமலா! பின்னாள் வாதமிலா இடத்தொளிரும் வள்ளி நாதா! மயிலமலைச் சிவகுருவே வருவா யின்றே. 8 விண்ணுறுநீல் பந்தரிட மிளிருங் கோள்கள் மின்விளங்கு நிரைவழங்க விரிந்த திங்கள் வெண்ணிலவு விருந்தூட்ட விசிறச் சோலை மெல்லியகால் பன்மலரின் விரையைத் தூவத் தண்ணருவி முழவதிர்ப்பச் சங்கம் ஆர்ப்பத் தமிழ்வண்டு பாண்மிழற்றத் தனியே நின்றேன் கண்ணுலவு நாயகனே! கந்தா! வந்து கருணைபுரி மயிலமலைக் கரும்பே தேனே. 9 மண்ணொடுங்கி நீர்வறண்டு வன்னி மாய்ந்து வளியடங்கி வெளிகலங்கி மடிவுற் றாலும் கண்மயிலில் ஏறிவிளை யாடுங் கந்தா! கடையின்றிக் கேடின்றிக் கலக்க மின்றிப் பண்ணடியார்க் கருள்புரியும் பரமன் நீயே பாழ்பிறவி வேரறுக்கப் பாவி நாளும் தண்ணருளை நாடியலை கின்றேன் அந்தோ! தயைபுரிவாய் மயிலமலைச் சாந்தத் தேவே. 10 திருப்போரூர் என்னுயிரே! என்னுடலே! எனையீன்ற தாயே! என்தந்தை! என்னுறவே! எனக்கினிய கலையே! இந்நிலமும் எந்நிலமும் இயங்கவருட் செங்கோல் ஏந்துமிறை நீயென்றே இளமைமுதல் கொண்டேன் பொன்னவிருந் திருமேனிப் பொங்கொளியைக் காணப் புந்தியிலே எழும்வேட்கை புண்ணியனே! அறிவாய் என்விழிக்கு விருந்தளிக்க எழுந்தருளல் என்றோ ஏருழவர் பாவொலிக்கும் எழிற்போரிச் சிவமே. 1 உலகளித்தாய் உடலளித்தாய் உயர்பிறவி யுள்ளம் உவந்தளித்தாய் அப்பிறவி உறுபயனைக் காண அலைகின்றேன் அலைவெல்லாம் ஆண்டவனே! அறிவாய் அலைந்தொழிந்தே அகங்குழைய அழுதுகிடக் கின்றேன் பலகலைகள் கற்றாலும் பன்னெறிசேர்ந் தாலும் g‰Wbe¿ TlÉšiy guk!நின தருளே நிலையளிக்கும் என்றடைந்தேன் நீயுமெனை விட்டால் நிலைப்பதெங்கே திருப்போரூர் நீலமயி லரசே. 2 படவேறிக் கழியுழுது பக்கமெலாம் பசுமைப் படர்சோலை தொடர்ந்துவரப் பரவையெழு காற்றும் உடலேற உளங்குளிர உன்றன்திருப் போரூர் ஒருமுறையோ இருமுறையோ உவந்துவந்த தந்தோ நடமேறும் மயில்கண்டு நறுங்குளத்தில் மூழ்கி நல்லதிருக் கோயில்மலை நண்ணிவலம் வந்து விடமேறும் வாழ்விலேநின் விருந்தமுதம் ஏற விழைந்தழுத தெத்தனையோ முறைமுருக வேளே. 3 மலையடியில் மரஞ்சூழ்ந்த மண்டபத்தில் நின்று மயிலேறும் பெருமானே! மலரடியை யுன்னிக் கலையுலவுங் காட்டின்வழிக் கருணைகுரு வாகிக் காட்சியளிப் பாயென்று காத்திருந்தேன் நாளும் jiyt!நினைக் காணாது தளர்ந்தழுத அழுகை சண்முகனே! நீயறிவாய் தமியனென்ன செய்வேன் சிலையுழவர் கிளிவளர்க்குந் திருப்போரூர் முருகா! சிதம்பரனார்க் கருள்சுரந்த தெய்வசிகா மணியே. 4 மலையேறி மீதமர்ந்தேன் மனவமைதி கண்டேன் மாதேவா! நின்வடிவோ மால்கடலா யொருபால் தலையாலும் பசுங்கடலாய்த் தழைதழைப்ப வொருபால் தாரகைகள் மிளிர்நீலத் தனிவானாய் மேற்பால் நிலையாக இறைபோது நிறைவினிலே நின்றேன் நிலைக்கவது நீகுருவாய் அருள்புரிதல் வேண்டும் கலையாலுங் காணவொண்ணாக் கற்பூர விளக்கே! கானமயில் திருப்போரூர் கருணைபொழி தேவே. 5 என்னுடலம் நின்கோயில் என்னுயிரோ நீயே எளியனைநீ மறந்தாலும் இறைவநினை மறவேன் சின்னபரு வத்திருந்தே சிந்தைகொளச் செய்தாய் சிற்பவுரு காட்டுவித்தாய் திகழியற்கை யூடே மன்னழகு காட்டுகின்றாய் மாதேவ! குருவாய் மகிழுருவங் காட்டாயோ மனங்குவியா துன்னை உன்னுவதா லென்னபயன் உறுத்துவினை யுயரும் உம்பர்தொழுந் திருப்போரூர் உண்மைவடி வரசே. 6 சாதிமத நெறிப்பேய்கள் தலையெடுத்தே யாடித் தயைநெறியாந் தெய்வநெறி சாய்த்துவரல் காணாய் நீதியிறை நின்பெயரால் நித்தலுமே சூது நிகழ்ச்சிபல முகமாக நீண்டுவரல் காணாய் ஆதிநெறி சாதிமத அழுக்கில்லா நெறியே அவனியெங்கும் பரவவருள் ஆண்டவனே! செய்வாய் nrhâ!நின தருணெறிக்குத் தொண்டு செயல்வேண்டும் துணையருள்வாய் திருப்போரூர் தூயமணி விளக்கே. 7 போரூரா! நின்மலைமேல் போந்திருந்தால் விளையும் புத்தமிர்த போகமது புகலவுமொண் ணாதே காரூரும் வான்கண்கள் கதிர்மதியின் பொழிவு, கடல்நீலம் கான்பசுமை கலந்துவருங்காட்சி, ஏரூரும் எருதுகன்றா ஈண்டிவருங் கோலம், ஏரிநிறை பறவையெல்லாம் எழும்புகின்ற ஓசை, சீருருந் தென்றல்தெளி, செல்வவிருந் தாகும் தெய்வபசும் மயில்திகழுஞ் செம்பவளக் குன்றே. 8 நால்வருணம் பிறப்புவழி நாட்டியநாள் தொட்டு நாவலந்தீ வழிந்தொழிந்து நாசமுற லாச்சே தோல்வருணஞ் செய்கொடுமை சூதுநிறை சூழ்ச்சி சொல்லாலே சொல்லுதற்குச் சொற்களிலை யந்தோ! மேல்வருணங் கீழ்வருண வேற்றுமைகள் வீழ்ந்தால் ntyt!நின் மெய்ம்மைநெறி விளங்கும்வழி வழியே பால்வழங்கும் பசுவனையார் பத்திவிளை யமுதே! பனைசூழுந் திருப்போரூர் பச்சைமயி லரசே. 9 சாதியென்றும் மதமென்றுஞ் சாத்திரங்கள் காட்டிச் சந்தைகடை விற்பவர்கள் சார்பறுத்துக் கொண்டேன் ஓதுநெறி யொன்றிறைவன் நீயொருவன் என்றே உணர்ந்தறிந்தேன் உத்தமனே! உயர்பொருளே! என்னைச் சோதனையிற் படுத்தாதே சூர்தடிந்த வேலா! சோதியுருக் காட்டியருள் சூழ்வினைகள் ஓடப் பாதையிலே சோலைநிழல் பசுநிரைகள் தேங்கும் பழம்பெரிய திருப்போரூர் பான்மைமற வேனே. 10 இளையனார் வேலூர் செழுங்கொண்டை திரைத்தசையச் சீக்குங்கால் கோழிகளே! உழும்பழனம் பலசூழ்ந்தே உமிழ்பசுமை ஒளியிடையே விழும்புனல்சேர் இளையனார் வேலூர்க்கிவ் வழிதானோ கெழும்பயலை நோய்தீரக் கிளர்ந்தெழுந்து கூவீரே. 1 இளங்குழவி கையிலுள இடியப்பங் கவர்ந்துண்ண உளங்கொண்டு குறிபார்க்கும் ஒத்தகருங் காகங்காள்! வளங்கொழிக்கும் வயல்சூழ்ந்து வளர்வேலூர் எதுவென்றென் களம்பயலை பிணிதீரக் கருணையுடன் கரையீரே. 2 வட்டணையில் சுழன்றாடும் வகைநீலப் புறவினங்காள்! மட்டொழுகும் மலர்ப்பொழிலில் மதிநிலவில் மங்கையரும் கட்டழகுக் காளையருங் கவிபாடி யின்பநுகர் எட்டுடைய இறைவேலூர் எங்கென்று முழங்கீரே. 3 மேயெருமை முதுகிடத்து மேவுகருங் குருவிகளே! வேயிசைக்கும் இறையனார் வேலூரில் மயங்குகின்றேன் சேயனிள அழகுமணத் திருமேனிச் செல்வன்திருக் கோயிலுள இடமெங்கே கூரலகால் குறியீரே. 4 காலையிலும் மாலையிலுங் கண்களிக்கப் பறக்கின்ற வாலிறகுத் தும்பிகளே! வளர்திங்கள் நிலவினிலே பாலிமணற் கரைசேர்ந்தேன் பண்மொழியார் வேலூரில் நீலமயில் வீரனுக்கென் நிகழ்ச்சியினை யுரையீரே. 5 செங்கமல வாவியிலே தேன்மடுக்கும் வண்டுகளே! தொங்குகுலை வாழைசெறி தொல்பதியான் வேலூரான் தங்குவொளி வண்ணத்தான் தமிழ்முருகன் கடம்பணிந்தோன் பொங்கழகற் கென்வரவைப் போய்மிழற்றிப் புகலீரே. 6 பேடையுடன் பிரியாத பெட்புடைய அன்றில்காள்! கோடையிலும் வற்றாத குணமுடைய ஈராற்றின் ஓடைகளின் ஓதநிறைந் தோங்குதனி வேலூரில் மேடையிலே வாழிறைக்கென் வேட்கைதனை விளம்பீரே. 7 விண்ணேறு மரத்தழையில் விளங்குமிடந் தெரியாமல் பண்ணேறு குரற்குயிலே! பாலாறுஞ் சேயாறுந் தண்ணேறு பழனஞ்சூழ் தமிழிளைய வேலூரான் எண்ணேறு மாண்புகழை இங்கிதமாய்க் கூவாயே. 8 மணியென்ன மரகதத்தில் மரம்படருங் கொடிக்கொவ்வை அணிகனிக ளுண்பவள அழகலகுப் பசுங்கிளிகாள்! தணிபொழிலும் பைங்கூழும் தழைதழைக்கும் வேலூரான் கணியறியா மெய்க்கீர்த்தி காதினிக்க மொழியீரே. 9 புற்பூச்சை வாய்க்கொண்டு புரிபேடைக் கீயும்வழி அற்பூட்டும் பூவைகளே! அணியிளைய னார்வேலூர் பொற்பூருஞ் சோலையிலே பூமணக்கும் நேரமிது சிற்பரன்றன் திருநாமஞ் செவிகேட்கச் செப்பீரே. 10 குமரகோட்டம் உன்னுவதும் உரைப்பதுவும் உஞற்றுவதும் உன்வழியே மன்னவொரு வழிவேண்டி மலரடியைப் பற்றிநிற்குஞ் சின்னவுயி ரெனையாளாய் திருக்குமர கோட்டத்தில் மின்னுவடி வேலேந்தி மேவுசிவ வேட்குருவே. 1 அழுகின்றேன் பிழைநினைந்தே அநுதினமும் அறுமுகனே! தொழுகின்றேன் திருவடியைத் துகளறுத்துத் தூய்மைபெற உழுகின்ற வயற்காஞ்சி உயர்குமர கோட்டத்தில் எழுகின்ற ஒளிவேலா! இறையவனே! ஆண்டருளே. 2 எத்தனையோ பிழைசெய்தேன் இறையவனே! அறியாமல் அத்தனையும் பொறுத்தாள அவனிதனில் பிறருண்டோ? வித்தைமிகு காஞ்சியிலே விறற்குமர கோட்டத்துச் சத்தியனே! சங்கரனே! சண்முகனே! எனக்கருளே. 3 பத்திநெறி அறியாமல் பாழ்நெறிகள் வீழ்ந்துழன்றேன் சித்திநெறிப் பெரியோர்கள் சேவிக்கும் பெருமானே முத்திநெறிக் காஞ்சியிலே முகிழ்குமர கோட்டத்து வித்தகனே! மயிலேறி வேட்குருவே! ஆண்டருளே. 4 பிறவாத இறவாத பெருநெறியை யான்விழைய மறவாது திருவடியை மனங்கொள்ள வரந்தருவாய் நறவாரும் மலர்க்காஞ்சி நற்குமர கோட்டத்தில் திறவாக உயிர்கட்குத் திகழ்கின்ற சிவக்கொழுந்தே. 5 மஞ்சுதவழ் சோலைகளும் வண்டிசைக்கும் வாவிகளும் அஞ்சுவழி ஒளிகாலும் அகல்விளக்கு வரிசைகளும் பஞ்சடியார் யாழேந்திப் பண்ணிசைக்கும் மாடிகளும் துஞ்சுதிருக் காஞ்சியிலே சுடர்கோட்டக் குருவருளே. 6 தென்மொழியும் வடமொழியுஞ் செறிபுலவர் வாழ்ந்தபதி தொன்மைமிகப் பதிந்தபதி தொழில்பலவும் விளங்குபதி பன்மையிலே உலவொருமை பண்புறவே காணும்பதி கன்மமறு காஞ்சியொளிர் கண்மணியே எனக்கருளே. 7 சிவனாகிச் சைவருக்குத் திருமாலாய் வைணவர்க்குத் தவவமண பௌத்தருக்குத் தனியருகன் புத்தனாய் புவிநெறிகள் பிறவற்றும் புகுந்துபுகுந் தருள்குருவே etFku nfh£l¤J ehaf!என் குறைதீரே. 8 கண்ணினிலே காண்கின்ற கதிரொளியை யுள்ளமெனுங் கண்ணினிலே காண்பதற்குக் கற்பூர மணிவிளக்கே! எண்ணியெண்ணி நாடோறும் ஏக்குறுதல் நீயறிவாய் É©Fku nfh£l¤J ntyh!என் குறைதீரே. 9 ஆறுமுகம் அருள்விழிகள் அழகுபுயம் அணிமார்பும் வீறுமயில் வேற்கரமும் விளங்கிவிட்டால் என்மனத்தே மாறுபுவி வாழ்வினிலே மயங்குதற்கு வாய்ப்புண்டோ தேறுமொழி எனக்கருளாய் திகழ்காஞ்சிச் சிவகுருவே. 10 திருத்தணிகை ஆன்ற கல்வியுங் கேள்வியும் ஆய்தலும் ஆதி யந்த மளவி லடங்குமே தோன்றி நின்றழி யாத பொருட்கவை துணைசெய் யாவெனச் சோதித் தறிந்தனன் ஊன்று நெஞ்சுங் கடந்தொளிர் சோதியே! உன்னை என்னறி வெங்ஙன் உணருமே கான்ற பச்சைக் கவின்கொடி வள்ளியைக் காதல் செய்தணி காசலத் தெய்வமே. 1 எங்கு நீங்கா திருந்திடும் ஈசனே! இங்கு நின்னிடம் என்ற மகிழ்ச்சியால் தங்கல் நல்லறி வோவறி யாமையோ தாயுந் தந்தையு மாகிய சேயனே! பொங்கும் மின்னொளி யாண்டும் நிலவினும் பொறியி லாவிடம் பூத்தொளி காட்டுமோ தங்க மேனியர் தாழ்ந்து பணிசெயும் தணிகை மாமலைச் சண்முகத் தெய்வமே. 2 எங்கு நீயெனில் என்னிடம் ஆணவம் எங்கி ருந்து பிறந்தது சண்முகா! தங்குமிவ் வையம் சாத்திரம் போக்குமோ தர்க்க வாதச் சமயமும் நீக்குமோ சங்க ராசிவ என்று திருப்பணி சாரச் சாரத் தயைநிலை கூடவும் துங்க சற்குரு வாகித் தெரித்தருள் தோகை யூர்தணி காசலத் தெய்வமே. 3 நூலும் வேண்டிலன் தர்க்கமும் வேண்டிலன் நுவலும் பன்னெறி நோய்களும் வேண்டிலன் காலும் வேலுங் கடுநர கெய்தினுங் காக்கு மென்று கருத்தி லிருத்தினன் சீலம் மண்ணிற் சிறக்கவே வள்ளியின் தேனும் பாலுந் திரளமு துண்டருள் கோலங் கொண்ட குருவே! அடைக்கலம் கோதி லாத்தணி காசலத் தெய்வமே. 4 எங்கு நின்றிடு நின்னிலை ஏழையேன் எவ்வு ளத்தினில் எண்ணவும் வல்லனே பொங்கு சங்கர! புண்ணிய மூர்த்தியே! புவனம் உய்யப் பொருந்திய தேசிகா! நங்கை வள்ளிமுன் நாட்டிய கோலமே நாடி வந்தனன் ஞான மொழிபெறக் கங்கை யாற்றிற் கருணை பொழிந்தருள் கட்டி லாத்தணி காசலத் தெய்வமே. 5 சாந்தம் சாந்தம் சிவமெனுந் தண்மொழித் தன்மை காணத் திரிந்தனன் பல்லிடம் சாந்த முன்னித் தணிகைப் பதிவரச் சாந்தம் சாந்தம் தரைவழிச் சோலையில் சாந்தம் பொய்கைச் சரவண நீத்தமே சாந்தம் சாந்தம் தணிகை மலையெலாம் சாந்தம் நீலத் தமிழ்மயில் வள்ளியில் சாந்தம் சாந்தச் சரணருள் சாந்தமே 6 தணிகை மாமலை யுன்னி வலம்வரின் சார்ந்த ஊன்தழல் உள்ளத் தழலொடு பிணியு யிர்த்தழல் பின்னுந் தழல்களும் பிறவும் மாறிப் பிறங்கும் அமைதியுள் பணிகை நெஞ்சப் பயிற்சியில் லாமலே பாவி யுற்ற படுதுயர் போதுமே கணிகை மேவுங் கடவுள் குறமகள் கணவன் கந்தன் கடம்பணி கத்தனே. 7 பொன்னைப் பெண்ணைப் புவியை வெறுத்துடல் பொன்றக் கானம் புகுந்து கிடப்பது மன்னி யற்கை மறுக்கு நெறியது மகிழும் இல்லிருந் தன்பு பணிசெயின் உன்னைக் காண்டல் உறுதி உயர்படைப் பொன்றை நீத்தலும் உன்னை வெறுத்தலாம் கன்னி வள்ளிமுன் காதல் நிகழ்த்திய fªj nd!தணி காசலத் தெய்வமே. 8 தெய்வ மொன்றெனச் செப்ப மறையெலாம் செகத்தில் வாதஞ் சிறப்பது மென்கொலோ mŒa nd!உனக்கெப் பெயர் சூட்டினும் அப்பெ யர்ப்பொரு ளாவது நீயென bkŒa nd!இள மைப்பரு வத்திலே மேவச் செய்ததும் வேலவ! நின்னருள், செய்ய நன்றி சமரசஞ் சேர்த்தது திகழுஞ் சீர்த்தணி காசலத் தெய்வமே. 9 சாதி யென்னும் படுகுழி நாட்டினில் சார்ந்து தோன்றினன் சண்முக! அப்பெருங் கோதை நீக்கிக் குணஞ்செய வேண்டுவல் குமர தேவ! Ff!அருள் தேசிகா! நாத விந்து நடந்து கடந்துமே நட்ட மாடி நகைமுக வள்ளியின் காத லுண்ட கருணைக் கடவுளே! fªj nd!தணி காசலத் தெய்வமே. 10 கந்தமாதனம் கட்டில்லா அறிவாகிக் கணக்கில்லா அகண்டிதமாய் முட்டுண்ட அறிவறியா முழுமுதலா யிலங்குமொன்றே! கட்டுடைய உயிர்ப்பொருட்டுக் கருணைபொழி குருவாகி வட்டகந்த மாதனத்தில் வருகுமர! அடிபோற்றி. 1 குமரகுரு பரமணியே! குவலயத்தில் பலபெயர்கள் அமையநிற்கும் பெருமானே! அநாதியிறை முதலென்றும் அமரருளின் குருவென்றும் அடியர்சொலும் அழகுநுட்பம் சமயவழக் கொழித்தடியில் தனிநின்றால் விளங்கிடுமே. 2 தென்முகத்த னெனச்சொல்வேன் திகழருக னெனப் புகல்வேன், பொன்முகத்துக் குமரனென்பேன் புகழ்கண்ணன் புத்தனென்பேன் நன்மொழிசொல் கிறித்துவென்பேன் ஞானசம் பந்தனென்பேன் இன்னுமுரை குருவென்பேன் எழிலழகுக் குருவுனையே. 3 நின்னொளியால் உலகமெலாம் நிகழ்கின்ற நிலையுணர்ந்தால் பொன்னுருவை யருந்தாது புகன்மொழியைப் பருகாது சின்மயத்தை நினைப்பதுவுஞ் சிரிப்பாகுஞ் சிவகுருவே! மன்னுகந்த மாதனத்து மணிவிளக்கே! அருள்வாயே. 4 அழகிளமை மணந்தெய்வ அருள்கமழும் திருவுருவைப் பழகவிவண் திருக்கோயில் பரக்கவைத்தார் சிற்பவழி அழுகுகின்ற தவ்வழியும் அருமையிழந் திதுபோழ்தே அழுகின்றேன் விழுகின்றேன் அருள்கந்த மாதனனே. 5 கோயிலெலாம் வருணமுடை குடிகொண்டால் அருளுருவ நாயகனே! அழகொளியை ஞாலத்தார் பெறுவதெங்ஙன் தாயிழந்த கன்றெனவே தவிக்கின்றேன் சிவகுருவே! மாயிருளை யொழித்தருளாய் மகிழ்கந்த மாதனனே. 6 வாயாலே அத்துவித வளமெல்லாம் மிகப்பேசி ஓயாதே உழன்றலுத்தேன் ஒளியடியைக் கொழுக்கொம்பா தாயானே! பிடித்துள்ளேன் தயைபுரிவாய் தனிமுதலே மாயாதே உயர்கந்த மாதனத்தில் மகிழ்குருவே. 7 எங்குமுள அழகெல்லாம் எழுமூற்றா யிலங்குகின்ற மங்கலிலாத் திருமேனி மலரழகைப் புலனுகர இங்குபடுந் துயரறிவாய் இளையோனே! அருள்புரிவாய் பொங்குகந்த மாதனத்தில் பொலிந்தமயி லயிலரசே. 8 சினமுதலாம் அரக்கருளம் தெறுகின்றார் தெளிஞானம் எனும்அயிலால் சிதைக்கவிரி இயற்கைமயில் இவர்ந்துவரின் நினக்கினிய கொடியாகும் நிலைகூடும் குமரகுரு! மனவமைதி வளர்கந்த மாதனத்துப் பெருமானே. 9 அத்துவித முத்தியையும் அருட்குருவே! யான் வேண்டேன் மற்றுமுள பதம்வேண்டேன் மகிழ்கந்த மாதனத்தில் சுத்தபசும் மயிலழகில் துலங்கிளமை யழகலையில் பத்தியெழ முழுகிநிற்கும் பரவசத்தை வேண்டுவனே. 10 பொது எங்குநிறை செம்பொருளே! ஏழைமுக நோக்கி இடர்களைய விழியிலையோ எண்ணந்தா னிலையோ பொங்குமிடர்க் களவிலையே; பொறுக்கமுடி யாதே; போகுமிடம் வேறுண்டோ புண்ணியனே! கூறாய் சங்கையறக் குருவாகித் தரையினிலே அருளின் சாந்தநிலை பெற்றிடுவேன்; தழல்களெலாந் தணியும்; தங்கவொளித் திருமேனி தாங்கிவரல் என்றோ தவிக்கின்றேன் சண்முகனே! தமிழியற்கை யரசே. 1 ஊனுடலம் பெற்றுணர்ச்சி யுற்றநாள் முதலா உறுதுயரஞ் சொல்லுதற்கும் உரைகளுண்டோ ஐயா! கானுமிழும் எரியிடையே கடையன்தவிக் கின்றேன் காண்பதற்குக் கண்ணிலையோ கருத்திலையோ அருளத் தேனுகரும் வள்ளியுடைத் தெய்வமென உலகம் செப்புகின்ற திறமென்னே? திருவருளைப் பொழியாய் வானுலகும் மண்ணுலகும் வாழ்த்துபெருந் தேவே! வளரியற்கைக் கோயில்கொண்ட வள்ளல்சிவ குருவே. 2 ஆரஎண்ணி எண்ணியகம் அனலாச்சே ஐயா! அழுதழுது விழியெல்லாம் அழலாச்சே நோய்தான் தீரவழி யுண்டோசொல் செல்வவள்ளி நாதா! செய்துவிட்டேன் பிழைபலவும் சிறியஅறி வாலே வீரவடி வேலேந்தி வினையறுக்க எழுவாய் வேறுபுகல் இல்லையென வேதனைசெய் யாதே சேரவருஞ் சேய்கடிதல் சிறந்ததந்தைக் கழகோ செழுமியற்கைக் கோயில்கொண்ட தெய்வமயி லரசே. 3 பொருளில்லார்க் கிவ்வுலகும் அருளில்லார்க் கந்தப் புவியுமிலை என்றுரைத்தார் பொய்யாமொழி யாளர் தெருளிரண்டில் ஒன்றுமின்றித் திரிகின்றேன் இங்கே திருவெல்லாம் விளங்குகின்ற தெய்வமுரு கையா! இருளிருந்து கூவுகின்றேன் எடுத்தணைப்பா ரில்லை ïu§FªjhŒ jªijba‹nw ïiwt!நினை அடைந்தேன் மருளிருக்கு மதியனென்று வாளாநீ இருந்தால் வாழ்வதெங்ஙன் இயற்கையிலே வாழும்பெருந் துரையே. 4 பொருண்முடையும் அருண்முடையும் புகுந்தலைத்தல் அறிவாய் பொருள்அருளை அடியவர்க்குப் பூக்கின்ற தருவே! அருண்முடையை யொழித்தென்னை ஆண்டுவிட்டால் போதும் அல்லலெலாம் தொலைந்தகலும் ஆறுமுக வேலா! சுருண்முகிழுந் தார்கடம்ப! சுத்தபரம் பொருளே! சுந்தரனே! வள்ளிமகிழ் தோகைமயி லரசே! தெருண்மனத்தில் திகழ்சிவமே! திருமாலே! என்றுஞ் செறிஇயற்கைக் கோயிலுறை செல்வப்பெரு மாளே. 5 கவலையெலாந் திரண்டுருண்டு கருத்தினிலே நின்றால் கானமயில் வீர! நின்றன் கருணைபெறல் எங்ஙன்? சவலையுற்று வாடுகின்றேன் சந்ததமும் இங்கே சவலையற்றுக் கவலையிற்றுச் சாந்தமுற்று வாழப் புவியினிலே மூச்சடக்கும் புன்னெறியில் செல்லேன் போரூரா வேன்முருகா பொன்வண்ணா என்றும் சிவமுதலே சண்முகனே சின்மயனே என்றும் சேரவரும் எனையாள்வாய் திகழியற்கை மணியே. 6 bt§fâUª j©kâí« ntyt!நின் கோயில் வேலைமலை காடுவயல் வெண்மணல்நின் கோயில் பொங்கருவி ஓடைகளும் பூக்களுநின் கோயில் பொன்வண்டு பொலிபறவை ஆன்மான்நின் கோயில் மங்கையருங் குழவிகளும் மகிழ்தருநின் கோயில் மாண்கலைகள் ஓவியமும் மறைகளுநின் கோயில் இங்கடியன் உளங்கோயில் கொள்ளஇசை யாயோ ஏழைமகன் உய்யவருள் இயற்கையிறை யோனே. 7 இயற்கையிலே நீயிருக்கும் இனிமைகண்ட ஆன்றோர் எழிலழகை ஒவியத்தில் இறக்கிவைத்த காட்சி, செயற்கையிலே கோயில்களாய்த் திகழ்ந்திருந்த தந்நாள் சிற்பநுட்பத் தத்துவத்தில் சிறந்துநின்றார் மக்கள் பயிற்சிகுறை வருணப்பேய் பற்றியநாள் தொட்டுப் பாழுங்கல் செம்பாகப் பாவிக்க லாச்சே அயிற்கரத்து வேலவனே! அருமைத்திருக் கோயில் அழகியற்கை மூலமெனும் அறிவுவிளக் கேற்றே. 8 உடலியற்கை உயிர்நீயென் றுண்மைநிலை காட்டும் உயர்கோயில் உட்பொருளும் உறங்கிவிட்ட தம்மா மடவருணச் சடங்கிடமாய் வேசையர்தம் வீடாய் மடைப்பள்ளி பொருட்போர்கள் மலிகளனாய்க் கண்டு படமுடியாத் துயரமதிற் படுகின்றார் பத்தர் பத்தருளங் கோயில்கொண்ட பன்னிரண்டு கண்ணா! நடனமெங்கு மிடுகின்ற நாயகனே! ஞானம் நல்வழியில் வளர்ந்தோங்க நானிலத்தில் செய்யே. 9 எக்கோயில் கெட்டாலும் எழிலிறையே! நின்றன் `இயற்கைவளக் கோயிலென்றும் இருப்பதன்றோ? எவரும் புக்கோடி ஆடிநின்று பொருந்திவழி படலாம் புன்குறும்புச் சேட்டையிலை; பொலிவமைதி கூடும்; சிக்கோதும் நெறிகளெல்லாஞ் சிதற அருள் வேலா! செங்கதிருங் கடலுமெனச் சிகியிலுறுஞ் சேயே! இக்கோலம் இந்நிலையென் றெண்ணாமல் யார்க்கும் இன்புசொரி கருணைமழை! எளியன்குறை தீரே. 10 காத்தல் கத்தனே! உயிரைக் காக்க கந்தனே! அறிவைக் காக்க சித்தனே! மனத்தைக் காக்க திகழ்புலன் ஐந்தைக் காக்க அத்தனே! உறுப்பை யெல்லாம் அழகுறக் காக்க காக்க சித்தனே! உடலைக் காக்க பன்னிரு கரத்துச் சேயே. 1 பொய்பகை பொறாமை லோபம் புகுந்துறா வாறு காக்க வெய்சினம் காழ்ப்பு வெஃகல் விரவிடா வாறு காக்க நொய்பிணி கேடு வஞ்சம் நுழைந்திறா வாறு காக்க செய்பணி சிறக்கக் காக்க சிவகுரு! தெய்வச் சேயே. 3 கொலைபுலை நீக்கி யெங்குங் குணஞ்செயல் அறிவைக் காக்க அலைமன அவதி போக்கி அமைதியைக் காக்க காக்க உலகெலாம் ஒன்றி நிற்க உயரறங் காக்க காக்க கலைவளர் மதியந் தோயுங் கடிவரைச் செம்மைத் தேவே. 4 வாழ்த்து அருள்பொழியும் முகம்வாழி அழகுதிருத் தோள்வழி உருள்கடம்பத் தார்வாழி ஒலிகோழி மயில்வாழி இருள்கடியும் வேல்வாழி எழில்வள்ளி பிடிவாழி சுருள்படிந்த தணிகைமுதல் தொல்பதிகள் வாழியரோ. திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனாரால் பாடப்பெற்ற முருகன் அருள் வேட்டல் முற்றிற்று.  1. தென்திருப்பேரை பேரை அரைசே! பேரை அரைசே! பெரிதுநின் னரசே பெரிதுநின் னரசே நின்னா ராட்சி மன்னா இடமிலை விண்ணெலாம் ஆட்சி மண்ணெலாம் ஆட்சி கடலெலாம் ஆட்சி காற்றெலாம் ஆட்சி ஒளியெலாம் ஆட்சி ஒலியெலாம் ஆட்சி சிறியதிற் சிறிதிலும் பெரியதிற் பெரிதிலும் ஆட்சி நினதே ஆட்சி நினதே எங்கும் ஆட்சி தங்கும் மாட்சியால் கூர்த லாங்காங் கூர்தல்நின் னருளே 10 மீனமாய் ஆமையாய் ஏனமாய்ச் சிங்கமாய்க் குறளனாய் மழுவனாய் அறவில் வீரனாய்க் கலப்பை ஆளியாய் உலப்பில் குழலனாய் உலகை ஓம்பும் அலகிலா ஆட்சி அங்கிங் கெனாமல் எங்கும் அறிவாய்ச் செறியும் இறைவ! சிறிது நெஞ்சில் நின்னை எங்ஙன் உன்னுவல் அம்ம! என்றன் பொருட்டோ தென்திருப் பேரையில் பொருநைக் கரையில் கருணை பொழிய மணியொளிர் முடியும் அணிகிளர் மாலையும் 20 தண்மரைக் கண்ணும் கண்மலர் நோக்கும் பவள வாயும் தவள நகையும் நீல மேனியும் கோல மாவும் ஆழி வளையும் வாழிசெங் கையும் மின்னொளி உடையும் பொன்னருள் அடியும் கொண்டது கொல்லோ அண்டர் நாயக! அழகிய வடிவம்! அழகிய வடிவம்! நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் பாழு நெஞ்சே! வாழ நினையாய் வேடமும் கோலமும் நாடவும் வேண்டாம் 30 நீட்டலும் மழித்தலும் காட்டலும் வேண்டாம் துறத்தலும் உலகை ஒறுத்தலும் உடலை வேண்டாம் வேண்டாம் பூண்தா ரணிந்து மண்ணை வெறாது பெண்ணுடன் வாழ்ந்து பொருளை ஈட்டியும் அருளை நீட்டியும் நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் முனைப்பற நினைவாய் வினைப்பற் றறுப்பாய் அழக னிருக்கப் பழகு நெஞ்சே! வேண்டுவன் இதுவே ஆண்டகைப் பொருளே! வருக வருக அருள வருக 40 அண்ணா வருக வண்ணா வருக அய்யா வருக மெய்யா வருக இறையே வருக மறையே வருக ஆலிலே துயிலும் மூலமே வருக கரியினுக் கருளிய அரியே வருக சேயினைக் காத்த தாயே வருக குன்றை எடுத்த கன்றே வருக சாதி இல்லா நீதி வருக மதப்போர்க் கெட்டா இதமே வருக நிறத்திமிர் காணா அறமே வருக 50 அறிதுயில் புரியும் அறிவே வருக அன்பில் விளங்கும் இன்பே வருக அத்த! நின்னருள் மொய்த்த நெஞ்சம் உருகும் உருகும் அருகும் போர்கள் பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள் பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம் ஒன்றே அன்றோ நன்றே தெளியின் ஒருவ நிற்கே மருவிய பெயர்கள் பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி எப்பெயர் நின்பெயர் எப்பதி நின்பதி 60 எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி பேரெலாம் நீயே பேரிலான் நீயே பதியெலாம் நீயே பதியிலான் நீயே உருவெலாம் நீயே உருவிலான் நீயே மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே எல்லாம் நீயே எல்லாம் நின்னில் பேரையில் பொலியும் பெருமை அழகு தத்துவ நுட்பச் சத்தியம் விளக்கும் போதம் அழிந்த நாத முடிவிலே பணிசெயும் நெஞ்சம் அணிசெய அரசே! 70 வருக வருக அருள வருக வருக வருக குருவாய் வருக தென்தமிழ் கமழும் தென்திருப் பேரை அரைசே! பேரை அரைசே! 2. ஆழ்வார் திருநகர் பன்னிறத்து மீன்களெலாம் பார்த்தனுப்புந் தண்பொருநை பொன்மணியும் பூவும் பொருதாழ்வார் - நன்னகரில் வீற்றிருக்கும் பெம்மானே வேண்டுகின்றேன் சேவடியை ஏற்றருள்செய் இன்றே இசைந்து. 1 தாழ்குழலா ரெல்லாந் தமிழ்பொருநை நீராடி ஆழ்வார் மொழியோதும் அன்புநகர் - வாழ்வாய் இறவாத இன்புபெற ஏழையேன் வந்தேன் அறவாழி காட்டி அருள். 2 பூம்பழன மெங்கும் பொலியுங் குருகூரில் தேம்பொழி லென்னத் திகழ்பொருளே - பாம்பணையில் எம்மானே வந்தடைந்தேன் ஏழை எனக்கிரங்கிச் செம்மாலே செந்நெறியிற் சேர். 3 ஆறாய்ப் பொழிலாய் அழகுவிளை அன்புருவே தேறாதார் தேறத் திருக்குருகூர்ப் - பேறாய் எழுந்து நிலவுபொழி இன்பமே வெம்மை விழுந்தேன் எடுத்தாள் விரைந்து. 4 எங்கு நிறைபொருளே எவ்வுருவும் நீயென்றால் பொங்கு குருகூர்ப் பொலிவோனே - தங்கத் தனியிடங்கள் கொண்டதென்ன? தத்துவமே என்று பனிமலர்த்தாள் வந்தணைந்தேன் பார். 5 பார்தனிலே பத்துருவம் பண்டெடுத்தாய் என்னுஞ்சொல் கூர்தல் அறத்தைக் குறிப்பதென - ஓர்ந்துணர்ந்தோர் ஆரமுதே ஆழ்வார் அருள்நகரில் ஆண்டவனே சீரருளில் சேர்த்தெனையாள் தேர்ந்து. 6 பத்துப் பிறப்பையொட்டிப் பாவலர்கள் செய்தகதைத் தத்துவத்தை யோர்ந்து சரணடைந்தேன் - பத்திமிகு நல்லோர் உளமுறையு நாதனே தென்குருகூர்ச் செல்வா எனக்குவழி செப்பு. 7 பத்துப் பிறப்பைப் பகுத்துணர்ந்தால் இவ்வுலகில் செத்துப் பிறவாத் திறம்விளங்கும் - சித்தரெலாம் பார்க்க அறிதுயில்செய் பாம்பணையாய் தென்குருகூர்ச் சேர்க்கை அருளாயோ செப்பு. 8 மலையாய்க் கடலாய் மகிழ்வூட்டும் மாண்பே கலையாய்க் குருகூரில் கண்டேன் - அலையா மனம்வேண்டி வந்தேன் மலரடியை என்னுள் புனைந்தாள்வாய் இன்றே புரிந்து. 9 விண்ணீல மென்ன விளங்குந் திருமேனி உண்ணீடின் வெம்மை ஒழியுமால் - தண்ணீர்மை ஆழ்வார் திருநகரில் ஆண்டவனே நின்னருளால் வாழ்வா ருடன்சேர்த்து வை. 10 3. திருமாலிருஞ்சோலை தென்பாண்டிச் செல்வம் திருமா லிருஞ்சோலை அன்பால் தொழுதுய்ய ஆர்த்தெழுவாய் நன்னெஞ்சே. 1 விண்ணவரும் மண்ணவரும் வேட்குந் திருச்சோலைத் தண்மையிலே மூழ்கித் தயைபெறுவாய் நன்னெஞ்சே. 2 செல்வமெலாம் பூக்குந் திருமா லிருஞ்சோலை செல்ல நினைந்தாலும் செம்மையுறும் நன்னெஞ்சே. 3 காணாத காட்சியெலாம் காட்டும் பெருஞ்சோலை வாணாள் வழுத்திநின்றால் வாழ்வுவரும் நன்னெஞ்சே. 4 வண்டினங்கள் பண்பாடி வாழுந் திருச்சோலை கண்டு பணிந்தால் கருணைவரும் நன்னெஞ்சே. 5 சாதிமதக் கட்டெல்லாந் தாண்டின் பழச்சோலை நீதியிலே நிற்கும் நினைப்புறுவாய் நன்னெஞ்சே. 6 உள்ள சமயமெலாம் ஓலமிடும் பூஞ்சோலைக் கள்ளருந்துங் கல்வி கதிகாட்டும் நன்னெஞ்சே. 7 எல்லா உயிரும் இருக்க இடமருளும் வில்லார் இருஞ்சோலை வேண்டுதல்செய் நன்னெஞ்சே. 8 எவ்வுயிர்க்கும் இன்பநல்கும் ஏமத் திருச்சோலைச் செவ்வியிலே தோயாது செல்லுவதோ நன்னெஞ்சே 9 உலகெலாந் தோன்ற உயிராகும் பூஞ்சோலை பலகலையாய் நின்றருளும் பண்புணர்வாய் நன்னெஞ்சே. 10 சொல்லுக் கடங்காச் சுகச்சோலை ஞானநல்கும் கல்வியாய் நிற்குங் கருத்துணர்வாய் நன்னெஞ்சே. 11 ஏழிசையாய் நிற்கும் இருஞ்சோலை எண்ணிஎண்ணித் தாழிசையாற் பாடித் தழுவுவாய் நன்னெஞ்சே. 12 பழமைப் பழமைக்கும் பண்பாம் பழஞ்சோலைக் கிழமைக் குறிநின்றால் கேட்குமொலி நன்னெஞ்சே. 13 புதுமைப் புதுமைக்கும் புத்துயிராம் பூஞ்சோலைப் பதுமையாய் நின்றுன்னப் பாயுந்தேன் நன்னெஞ்சே 14 சித்தர்தம் உள்ளத்தில் தேனொழுக்குஞ் செஞ்சோலைப் பித்தங்கொண் டானந்தப் பேறுறுவாய் நன்னெஞ்சே. 15 இயற்கைத் திருமா லிருஞ்சோலை இங்கிருப்பச் செயற்கை அலகையிடஞ் செல்லுவதென் நன்னெஞ்சே. 16 செம்மைவழித் தண்மைபொழி செஞ்சோலை சேராதே வெம்மையிலே வீழ்ந்தால் விரதம்போம் நன்னெஞ்சே. 17 பத்தருக் கெஞ்ஞான்றும் பண்பாந் திருச்சோலை முத்திக் கரையென்றே முன்னுவாய் நன்னெஞ்சே. 18 பச்சைப் பசுஞ்சோலைப் பள்ளியினைப் பாராதே நச்சுமிழும் வெம்மையிலே நண்ணுவதென் நன்னெஞ்சே. 19 அருணெறியை ஓம்புநருக் கன்பாந் திருச்சோலைப் பொருளுணர்ந்து போற்றிப் புகக்கற்பாய் நன்னெஞ்சே. 20 பறவையெலாந் தங்கும் பழச்சோலை இங்கிருப்பத் துறவையுன்னி ஓடுதலும் சூதாகும் நன்னெஞ்சே 21 அரும்புமலர் காய்கனிகள் ஆர்ந்த திருச்சோலை விரும்பின் அறங்கூடும் வேருணர்வாய் நன்னெஞ்சே. 22 உண்ணஉண்ணத் தித்திக்கும் ஓங்கு கனிச்சோலை கண்ணினாற் கண்டாலும் காப்புவரும் நன்னெஞ்சே. 23 என்று மழியா தினிக்கும் பெருஞ்சோலை ஒன்றே உளதென் றுணர்ந்திடுவாய் நன்னெஞ்சே. 24 வினையும் விதியும் விளைநோயும் பொற்சோலை நினையாத மாக்களுக்கே நேர்தலறி நன்னெஞ்சே. 25 செய்த பிழைக்கிரங்கிச் சிந்தித்தால் செஞ்சோலை உய்யு நிலைகூட்டும் உண்மையுணர் நன்னெஞ்சே. 26 தமிழாய்த் தழைத்துநிற்குந் தண்மை இருஞ்சோலை அமிழ்துண்ட அன்பருக் கன்பாவாய் நன்னெஞ்சே. 27 ஆழ்வார்கள் சூழ்ந்துநிற்கும் ஆனந்தத் தேன்சோலை பாழ்பிறவி போக்கப் பணிசெய்வாய் நன்னெஞ்சே. 28 ஆண்டா ளெனுங்கொடிசூழ் அன்புத் திருச்சோலை வேண்டாதே சென்றால் விறலிழப்பாய் நன்னெஞ்சே. 29 ஆழ்வார் தமிழ்ப்பாட்டாய் ஆர்ந்த இருஞ்சோலை வாழ்வே உரியதென்று வாழ்த்துவாய் நன்னெஞ்சே. 30 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஓசை ஒலியாய் உலகமெலாம் ஓங்கும் பொருளே உனையடையும் ஆசை கொள்ளா தயர்ந்தொழிந்தேன் ஆவி சாவி யாகாமல் பாசை படரா மனமருளாய் பரமா வில்லி புத்தூரா வாச மலர்கள் சூட்டியநல் வாழ்வாம் ஆண்டாள் பெருமாளே. 1 உலகை உடலை உவந்தளித்த ஒருவன் நீயென் றுணராத கலதி இனத்தில் நாணாளுங் கலந்தே கெட்டேன் கெட்டேனே அலகில் பிழைகள் பொறுத்தாளும் அருளே வில்லி புத்தூரில் இலகு பெரிய பெருமாளே இனிய ஆண்டாள் இறையோனே. 2 நல்ல பிறவி எனக்களித்தாய் ஞானம் பெற்றே உயவேண்டி அல்ல நிகழ்த்தி அடிமறந்தேன் அருளுக் குரிய னாவேனோ கல்லை மண்ணைச் சோறாக்கிக் களிக்கும் பிள்ளை எனவாழ்ந்தேன் வில்லி புத்தூர் வாழ்மணியே வெற்றி ஆண்டாள் பெருமானே. 3 எல்லாப் பொருளும் நீயென்றே இசைக்குங் கலைகள் பலகற்றேன் வல்லாய் வாழ்வில் அவ்வுண்மை மலர்ந்தால் உய்வேன் உய்வேனே நல்லாய் அருள நீயன்றி ஞாலந் தன்னில் பிறருளரோ சொல்லாய் வில்லி புத்தூரா தூய ஆண்டாள் துணையோனே. 4 எங்கும் எல்லாம் நீயென்றே எளிதில் இசைக்கும் நிலைவேண்டேன் தங்கி வாழ்வில் நிறையுறவே தாளை வழிபட் டுய்யநினைந் திங்கு வந்தேன் அருள்புரியாய் ஈசா வில்லி புத்தூரில் செங்கை ஆழி வளையேந்துஞ் செல்வா ஆண்டாள் சேகரனே. 5 சாதி சமய நினைவெல்லாம் தடையே நின்றன் நினைவினுக்கு நீதிப் பொருளே அக்கடலை நீந்தி நீந்தி அடிசேர்ந்தேன் ஆதி அந்த மில்லாத அகண்டா காரப் பேரறிவே சோதி வில்லி புத்தூரா துணைசெய் ஆண்டாள் துணையோனே. 6 ஆலவெம்மை ஆற்றாமல் அடியேன் வந்தேன் ஐயாநின் நீலமேனி நிலவினிலே நின்று மூழ்கித் தண்மையுறக் கோலங் காட்டி எனையாளாய் கோதில் வில்லி புத்தூரா சீல மில்லேன் சிறுநாயேன் தெய்வ ஆண்டாள் பெருமாளே. 7 பொன்னார் முடியும் பூவடியும் பூத்த விழியும் செவ்வாயும் மின்னார் மார்பும் மலர்க்கையும் மிளிரு நீல உருக்கோலம் என்னே! நெஞ்சில் நிலைக்கவினை இரியும் வில்லி புத்தூர்வாழ் மன்னே மணியே மாமருந்தே மறைசொல் ஆண்டாள் மனத்தோனே. 8 உன்றன் நீல மேனியிலே ஒன்றி ஊன்றி உளம்வைத்தால் என்றன் கரண வெம்மையெலாம் இனிமைத் தண்மை பெறலுறுதி அன்றி லகன்றி லுடனாடும் அடவி வில்லி புத்தூரில் நன்று செய்யு நலநலமே நங்கை ஆண்டாள் பெருமாளே 9 உருவோ பேரோ ஒன்றுமிலாய் உனக்கோ உலகம் உரைத்துள்ள உருவோ பேரோ பலபலவே உண்மை யொன்றே எனத்தெளிந்தேன் உருவோ டுறவு கொளவருளாய் ஓங்கு வில்லி புத்தூரில் உருவே கருவே உயர்வான ஒளியே ஆண்டாள் பெருமாளே. 10 5. திருவரங்கம் இருளிலே கிடந்த என்றனுக் கிரங்கி ஈந்தனை உலகமும் உடலும் அருளிலே பெற்ற நன்றியை மறந்தேன் அகந்தையால் எனதெனக் கொண்டேன் மருளிலே வீழ்ந்தேன் மறவினை புரிந்தேன் மாயனே பிழைபொறுத் தாளாய் தெருளிலே இனிக்குந் தெள்ளிய அமுதே தெய்வமே அரங்கநா யகனே. 1 துன்பிலே அழுந்தித் துயருறு கின்றேன் தூயனே ஞானவா ரிதியே அன்பிலே மூழ்கி அழுகிலேன் பலவா றலைந்தலைந் தயர்ந்தனன் நாளும் என்பெலாம் உருக எண்ணிலேன் பாவி எங்ஙனம் உய்குவன் அந்தோ இன்பமே என்னை ஏன்றுகொ ளருளால் ஈசனே அரங்கநா யகனே. 2 வாக்கினை யொடுக்கேன் வனங்களி லுழலேன் வட்டணை ஆசன மிட்டு மூக்கினைப் பிடியேன் மூச்சினை யடக்கேன் முன்னிலை நின்றழு கின்றேன் பாக்கியப் பயனே பாவியை ஆளாய் பாரதம் நடத்திய பரனே தேக்கிய இன்பத் திருவெலா முடைய தேவனே அரங்கநா யகனே. 3 தத்துவக் கலையைச் சந்ததம் பயின்று தர்க்கமே புரிகுழு சார்ந்து பித்தனாய்க் கெட்டேன் பிழைபல செய்தேன் பேச்சிலே வாழ்வினைக் கழித்தேன் அத்தனென் றுன்னை அடைந்தனன் இன்றே ஆதரித் தருள்புரி வாயே முத்தனே முதல்வா மூவுல களந்த மூர்த்தியே அரங்கநா யகனே. 4 காவிரி நங்கை கொள்ளிட மங்கை கைகளால் தைவர என்றும் பூவிரி கோலப் பொழினிழல் செய்யப் பொன்சிறை வண்டுக ளார்ப்ப மாவறி துயில்செய் மரகத மலையே மனத்தமு தொழுக்குநன் மதியே பாவியேன் வந்தேன் பணிந்திட அறியேன் பார்த்தருள் அரங்கநா யகனே. 5 ஆடினேன் அலைந்தேன் அகந்தையால் கொடுமை ஆற்றினேன் அஞ்சினேன் பின்னை நாடினேன் ஞானம் நயந்தனன் பலரை நண்ணிய தொன்றிலை ஐயா வாடியே வந்தேன் மலரடி வணங்க வழிவகை அறிந்திலேன் பாவி காடியில் விழுந்த பல்லியாய்ச் சாய்ந்தேன் காத்தருள் அரங்கநா யகனே. 6 உலகெலாம் ஆக்கி உயிரெலாம் புகுத்தி உணர்வினை எழுப்பினை இடையில் கலகமால் நுழைந்து கலக்குவ தென்ன காரணம் பலபல சொல்வர் அலகிலா ஒளியே அறிதுயில் நுட்பம் அறிந்திடில் கலகமோ பாழாம் இலகுமந் நுட்பம் எளியனுக் கருள எண்ணமோ அரங்கநா யகனே. 7 அறிதுயில் நுட்பம் அடியனேன் உணர அலைந்தலைந் தழுததை அறிவாய் வெறிகொடு திரிந்தேன் வித்துவ மக்கள் வீடுதோ றுழன்றனன் விதியால் பொறிபுலன் ஒடுக்கும் புரையிலும் புகுந்தேன் புலையனேன் பெற்றதொன் றில்லை நெறிபட வந்தேன் நின்மல அருள நினைவையோ அரங்கநா யகனே. 8 சோலைகள் கண்டேன் சூழ்நதி கண்டேன் சுந்தர வீதிகள் கண்டேன் மாலைகள் கண்டேன் மங்கலங் கண்டேன் வணங்குநல் லடியரைக் கண்டேன் வேலையிற் பாம்பின் மீதுறங் கண்ணல்! விளங்கொளி விழியினாற் காணக் காலையே நோக்கிக் கைதொழு கின்றேன் கருணைசெய் அரங்கநா யகனே. 9 அன்றொரு வேழம் ஆதியே என்ன அருளிய மூலமே முதலே இன்றுனை யடைந்தேன் ஏழையேற் கிரங்காய் இருநதி நடுவினிற் றங்கும் குன்றமே நிறைவே குறைவிலாக் குணமே கோதிலா அமுதமே கோலம் நன்றுடை யானே ஞானமா நிதியே நாதனே அரங்கநா யகனே. 10 6. திருவரங்கம் எங்கிருந்தேன் இங்குவந்தேன் எப்படியென் றாய்ந்தேன் இவ்வுடலும் இவ்வுலகும் எவ்வழியென் றோர்ந்தேன் சங்கைதெளி யாதயர்ந்தேன் சாத்திரங்கள் பார்த்தேன் சாதனங்கள் செய்துழன்றேன் சற்றுமொளிர் வில்லை பொங்கிவழி காவிரியில் புகுந்துகுடைந் தெழுந்தேன் பூவிரிந்த பொழிற்பசுமை புலன்கவர ஆழி சங்குடையாய் நின்னருளால் சார்ந்தகதை தெளிந்தேன் சந்நிதியில் வந்தடைந்தேன் தமிழரங்க மணியே. 1 இருண்மயமாய்க் கிடந்தவெனக் கிவ்வுடலந் தந்தாய் இவ்வுலக வாழ்வினிலே இனிமைபெறச் செய்தாய் அருண்மறந்தேன் அகந்தையினால் ஆற்றிவிட்டேன் பிழைகள் அத்தனையும் பொறுத்தருளும் ஆண்டவன்நீ யென்றே மருண்மனத்தன் வந்தடைந்தேன் மலர்மருவு மார்பா மாயவனே அறிதுயிலில் மாதவனே உறங்கும் பொருண்மையெனக் கருள்புரிந்தால் பொன்றும்வினை யெல்லாம் போதாந்தச் செல்வர்தொழும் பொன்னரங்கப் பொருளே. 2 புற்செடியே மீன்புழுவே புள்விலங்கே முதலாம் புன்னுடலந் தந்துதந்து புங்கவநின் னுணர்வுக் கற்பமைந்த கரணம்விரி கனகவுடல் தந்தாய் கருணைநினைந் தொழுகுமனங் கருணைசெய விலையே அற்புடைய நெறிவிடுத்தேன் அலைந்துடலைக் கெடுத்தேன் அறியாமைச் செயல்நினைக்கும் அறிவுபெற்றே னின்றே பொற்பொளிசெய் அடியணைந்தேன் புரிந்தபிழை அப்பா பொறுத்தருளாய் புண்ணியனே புகழரங்கப் பொலிவே. 3 பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பூவுலகும் வேண்டேன் புகழ்வேண்டேன் நூல்வேண்டேன் புலமையெலாம் வேண்டேன் மன்வேண்டேன் வான்வேண்டேன் வாழ்வுமகிழ் வேண்டேன் மழைமுகிலே நீன்மலையே வானதியே ஏழை என்வேண்டி வந்தனனோ எழின்மருவு மார்பா எங்குமுள இறையோனே எண்ணமறி யாயோ சொன்மேவு கவிகடந்து துயிலுகின்ற இன்பஞ் சுரக்கவெனக் கருளாயோ தொல்லரங்கக் குருவே. 4 பாற்கடலில் பாம்பணையில் பள்ளியுணர் வென்றோ பரநாத விந்துநிலை பார்த்துநிற்ப தென்றோ மேற்கருமை இருளெல்லாங் கீழ்ச்சாய்த லென்றோ மென்மேலும் பொங்கமிழ்தம் மேவுவது மென்றோ காற்கடிமை ஏழையுயிர் கண்பெறுவ தென்றோ கல்லாத கல்வியெலாங் கற்றறிவ தென்றோ மாற்குலமா யுலகமெலாம் மன்னுவது மென்றோ மாயையறத் தெளிவருள்வாய் மனத்தரங்க வமுதே. 5 கடல்கடந்தேன் மலைகடந்தேன் காடுகளைக் கடந்தேன் கானாறு கழிகடந்து கடந்து வந்தேன் ஐயா உடல்கடந்தே உளங்கடந்தே உணர்வுகடந் துன்னை உன்னியுன்னி ஒன்றும்வழி உணராதே கெட்டேன் குடல்குடைய மனமுருகக் குமுறியழும் அழுகை கோவிந்தா நீயறிவாய் கோதிலறி துயிலைப் படல்கடிய அறிவுறுத்திப் பாவிதுயர் களையாய் பரங்கருணைத் தடங்கடலே பதியரங்க மலையே. 6 மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய் மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய் அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய் அமைதியளி திங்கள்பொழி ஆனந்த நிலவாய் பணிகொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய் பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின் பெற்றியருள் செய்யாயோ பேரரங்க வேந்தே. 7 அறிதுயிலின் வேட்கைகொண்டே அணையவந்தேன் அப்பா அம்மயக்கந் தலையேற அவதிபடு கின்றேன் சிறிதருளத் திருவுள்ளஞ் செய்யநினை யாயோ திருமகள்தன் கேள்வனெனுஞ் சிறப்புடைய அரசே பொறிபுலனைச் சிதைக்கும்வழிப் போகமன மில்லை பொன்னடியே பொருளென்று புந்திகொண்ட தின்று வெறிமலரில் வண்டிசையால் விருந்தளிக்கும் பழனம் மேவிவளம் பெருகுசெல்வம் மிளிரரங்க ஒளியே. 8 காலெழுப்பிக் கனலெழுப்பிக் கல்லெனவே நின்று காலில்லாப் பாம்பெழுப்பிக் ககனவட்ட நோக்கி மேலெழும்பு நெறிமயக்க வெறிவிழுந்தேன் பாவி விடுதலைபெற் றின்றுவந்தேன் வென்றிவளர் மார்பா தோலெலும்பா யுடல்வறண்டேன் தொல்லைபடு கின்றேன் சூதுவழி அரசியலில் தொலைத்துவிட்டேன் காலம் மாலெனும்பே ருடையவனே மாதவனே துயிலின் மாண்புணர்ந்தால் உய்ந்திடுவேன் மலரரங்கத் தேனே. 9 பொன்முடியும் மலர்விழியும் பூம்பவள வாயும் பொலிதோளுந் திருமார்பும் போராழி வளையும் மின்னவிலுஞ் செவ்வடியும் மிளிர்நீலக் கோலம் மேவுமனம் பெற்றவரே மேனெறியிற் சென்றார் என்மனமும் ஈரமுற அந்நெறியே விழைதல் எங்குமுள இறையோனே எம்பெருமான் அறிவாய் சொன்மறந்த வாழ்த்தறியாச் சூழலிடை வீழ்ந்தேன் தொல்லையறுத் தருள்புரியாய் தொல்லரங்க முனியே. 10 7. திருவரங்கம் திருவரங்கம் என்னுயிரே திருவரங்கம் என்னுடலே திருவரங்கம் என்னுணர்வே திருவரங்கம் என்னுறவே திருவரங்கம் என்பொருளே திருவரங்கம் என்பதியே திருவரங்கம் என்னுலகே திருவரங்கம் எல்லாமே. 1 திருவரங்கந் தெய்வமெலாம் திருவரங்கம் உயிரெல்லாம் திருவரங்கம் உணர்வெல்லாம் திருவரங்கம் உலகெல்லாம் திருவரங்கங் கலையெல்லாம் திருவரங்கஞ் சமயமெலாம் திருவரங்கம் நலமெல்லாம் திருவரங்கம் எல்லாமே. 2 புனலெல்லாந் திருவரங்கம் புவியெல்லாந் திருவரங்கம் கனலெல்லாந் திருவரங்கம் காற்றெல்லாந் திருவரங்கம் கனமெல்லாந் திருவரங்கம் கதிரெல்லாந் திருவரங்கம் இனமெல்லாந் திருவரங்கம் எண்ணாயோ மடநெஞ்சே. 3 எண்ணெல்லாந் திருவரங்கம் எழுத்தெல்லாந் திருவரங்கம் பண்ணெல்லாந் திருவரங்கம் பாட்டெல்லாந் திருவரங்கம் தண்ணெல்லாந் திருவரங்கம் தமிழெல்லாந் திருவரங்கம் கண்ணெல்லாந் திருவரங்கம் கருதாயோ மடநெங்சே. 4 உன்னாயோ திருவரங்கம் உணராயோ திருவரங்கம் பன்னாயோ திருவரங்கம் பணியாயோ திருவரங்கம் துன்னாயோ திருவரங்கம் தொடராயோ திருவரங்கம் மன்னாயோ திருவரங்கம் மகிழாயோ பாழ்மனமே. 5 சொல்லாயோ திருவரங்கம் துதியாயோ திருவரங்கம் கல்லாயோ திருவரங்கம் கருதாயோ திருவரங்கம் நில்லாயோ திருவரங்கம் நினையாயோ திருவரங்கம் புல்லாயோ திருவரங்கம் புகழாயோ பாழ்மனமே. 6 நாடாயோ திருவரங்கம் நண்ணாயோ திருவரங்கம் பாடாயோ திருவரங்கம் பரவாயோ திருவரங்கம் கூடாயோ திருவரங்கம் கூப்பாயோ திருவரங்கம் ஓடாயோ திருவரங்கம் ஒடுங்காயோ பாழ்மனமே. 7 ஊனாகுந் திருவரங்கம் உயிராகுந் திருவரங்கம் வானாகுந் திருவரங்கம் வழியாகுந் திருவரங்கம் தானாகுந் திருவரங்கம் சார்பாகுந் திருவரங்கம் தேனாகுந் திருவரங்கம் தெவிட்டாது பாழ்மனமே. 8 எங்கெங்குஞ் சங்கொலியே எங்கெங்குஞ் சக்கரமே எங்கெங்குந் தண்டுளவம் எங்கெங்குந் திருமலரே எங்கெங்கும் அரியணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 9 எங்கெங்கும் பாற்கடலே எங்கெங்கும் பாம்பணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குங் கோயில்களே எங்கெங்கும் அடியவரே எங்கெங்குந் திருப்பணியே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 10 8. திருவரங்கம் வாக்குமனங் கடந்தொளிரும் வாழ்த்தரிய தெய்வம் வழிஇயற்கை வடிவாகி வாழ்த்தேற்குந் தெய்வம் பாக்குலமாய்க் கலைகளெல்லாம் படர்ந்தமருந் தெய்வம் பண்ணிசையாய் எங்கெங்கும் பரந்துநிற்குந் தெய்வம் ஆக்கமெலாம் உடையதிரு அணங்ககலாத் தெய்வம் அனைத்துயிர்க்கும் அருள்புரியும் ஆனந்தத் தெய்வம் தேக்கமிர்த போதநுகர் செல்வர்தெளி தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 1 பரநாத விந்துவிலே படிந்திருக்குந் தெய்வம் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொள்ளுந் தெய்வம் உரமான நான்முகனை உந்தியளி தெய்வம் உலகுயிர்கள் அத்தனைக்கும் உறைவிடமாந் தெய்வம் வரமாகி வரமளிக்கும் வண்மையுடைத் தெய்வம் மதங்கடொறும் விளையாடி மதங்கடந்த தெய்வம் சிரமாரும் அமிர்துண்ணுஞ் சித்தருணர் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 2 நீராகி உலகீன்று நிறுத்துகின்ற தெய்வம் நித்தியமா யெங்கெங்கும் நிலவுகின்ற தெய்வம் காராகி மழைசொரிந்து காக்கின்ற தெய்வம் கதிர்க்கெல்லாம் ஒளிவழங்குங் கருநீலத் தெய்வம் நேராகி அரவெழுப்பி நிற்பவருள் தெய்வம் நிலவுபொழி அமிழ்துண்போர் நினைவிலுறை தெய்வம் சீராகி உயிர்வாழச் சிந்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 3 பத்துருவாய் கூர்ந்துநின்று பாரளிக்குந் தெய்வம் பத்தருளப் பாசமறப் பாவைகொண்ட தெய்வம் புத்தமிர்த போகமெலாம் புணர்விக்குந் தெய்வம் பூந்துளப மாலையசை புயந்திரண்ட தெய்வம் சத்தியமாய்ச் சின்மயமாய்ச் சாந்தமளி தெய்வம் சார்ந்தவர்தம் நெஞ்சினிலே தலைசாய்க்குந் தெய்வம் சித்தருளத் தேனெனவே தித்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 4 மண்ணார்ந்த கோசலத்தில் மருவிவந்த தெய்வம் மரகதக்குன் றெனவளர்ந்து மனங்கவர்ந்த தெய்வம் பண்ணார்ந்த சீதைமொழி பருகியநற் றெய்வம் பற்றறுத்த முனிவரெலாம் பணிந்துமகிழ் தெய்வம் கண்ணார்ந்த தனிமுடியைக் கணந்துறந்த தெய்வம் கானவனைத் தம்பியெனக் கருணைசெய்த தெய்வம் திண்ணார்ந்த தோள்வலிக்குத் தெவ்வர்தொழுந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 5 மலையெல்லாம் வனமெல்லாம் மலர்ந்தஅடித் தெய்வம் மாரீச மான்மாயம் மாய்த்தொழித்த தெய்வம் கலைவல்ல மாருதிக்குக் காலளித்த தெய்வம் கருணைதந்தை யெனஅவர்பால் கருத்துவைத்த தெய்வம் அலைகடலைத் தாண்டியன்றே அறம்வளர்த்த தெய்வம் அரக்கர்குல வேரறுத்த ஆண்டகைமைத் தெய்வம் சிலையெல்லாம் வணங்குமுயர் சிலைதாங்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 6 மன்பதையின் துயரொழிக்க மதுரைவந்த தெய்வம் மதலையாய்த் தவழ்ந்துலகை மலர்வித்த தெய்வம் அன்புநவ நீதமளி ஆயர்தவத் தெய்வம் அழகுதிரள் கருமேனி அமிர்தொழுகுந் தெய்வம் மென்புலத்திற் கோக்களொடு விளையாடுந் தெய்வம் வேதாந்த முடியினிலே விளங்குமொரு தெய்வம் தென்புலவர் பாட்டினிலே திகழ்கின்ற தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 7 சீதமலர் புன்னைநின்று செகம்விரிக்குந் தெய்வம் செவ்வாயிற் குழலூதிச் செகநிறுத்துந் தெய்வம் மாதவரே மங்கையராய் மகிழ்ந்துண்ணுந் தெய்வம் மற்றவரும் பெண்ணாக மனங்கொள்ளுந் தெய்வம் கீதையினைத் தேரிருந்து கிளர்ந்துரைக்குந் தெய்வம் கேட்டவர்க்குங் கற்றவர்க்குங் கேடழிக்குந் தெய்வம் தீதறுக்கப் பாரதப்போர் செய்வித்த தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 8 களியானை இடரழித்துக் காத்தளித்த தெய்வம் கான்முளைக்கு நலம்புரியக் கம்பம்வந்த தெய்வம் அளியாலுந் திருமகளால் அழகுவிரி தெய்வம் அகங்காரக் கொடுங்கிழங்கை அறுத்தருளுந் தெய்வம் வளையாழி வில்கதையும் வாளேந்துந் தெய்வம் மலரடியில் வண்டெனவாழ் மாண்புடையார் தெய்வம் தெளிவான மலருளத்தில் தெரிதுயில்செய் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 9 காவிரியாய்க் கொள்ளிடமாய்க் கருணைபொழி தெய்வம் கருநீல மலையாகிக் கண்கவருந் தெய்வம் பூவிரியும் பொழிலாகிப் பொங்கிவருந் தெய்வம் பொன்மாத ரொளியினிலே பொலிவு செய்யுந் தெய்வம் பாவிரித்த ஆழ்வார்கள் பத்திவிளை தெய்வம் பற்றிநின்றோர் பற்றறுக்கும் பற்றில்லாத் தெய்வம் தேவிரியும் மதில்சூழ்ந்த திருக்கோயில் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 10 9. சீர்காழி கோசலம் எழுந்து நீலக் குளிர்பொழி கதிரே என்றும் மாசில ருளத்தில் நிற்கும் மரகத ஒளியே செல்வக் கேசவ மணியே ஆளாய் கிளரடி வணங்க வந்தேன் வாசனை கமழுந் தெய்வ வண்டமிழ்க் காழி வேந்தே. 1 சிலையெலாம் பணியுஞ் செம்மை சிலையினை ஏந்தும் ஏந்தால் கலையெலாம் பூத்த அன்னைக் கலையினில் மூழ்குந் தோளா அலைவெலாந் தீர்க்க வேண்டி அணைந்தனன் அடியில் வீழ்ந்தேன் விலையிலா மணியே ஆளாய் விரிபொழில் காழி வேந்தே. 2 சின்னவள் சொன்ன மாற்றஞ் செவியினில் நுழைந்த போழ்தே பொன்முடி வாழ்வை நீத்துப் புங்கவர் வாழ்வைக் கொள்ள இந்நிலந் துணிந்தார் யாரே எத்தகைத் தியாகம் அந்தோ அன்னது வேட்டு வந்தேன் அருள்புரி காழி வேந்தே. 3 மன்னவர் வாழ்வை நீத்து மகிழ்ச்சியே பொங்கக் கானம் பொன்னடி வைத்த செல்வா புந்தியில் அந்தத் தாளே துன்னினால் மலரு நெஞ்சம் தூயனே கருணை செய்யாய் நன்னயப் புலவர் பாடும் நாதனே காழி வேந்தே. 4 அன்பெனும் ஆற்றி னூடே அகமெனுந் தோணி பற்றி இன்புற நின்ற வேடற் கீந்தசெம் பசுமைக் காட்சி என்றுகொல் பெறுவேன் ஏழை என்புநெக் குருகு நேய நன்மையில் புலைய னானேன் ஞானமார் காழி வேந்தே. 5 வேட்டுவர் அரக்கர் புட்கள் விலங்குகள் குரக்கி னங்கள் பாட்டவிர் மேனி கண்டு பகைமைநீத் தன்பால் வாழக் காட்டினில் நடந்த காலென் கருத்தினில் நடக்குங் கொல்லோ கோட்டமில் உளத்தார் சொல்லுங் குருமணி காழி வேந்தே. 6 அரக்கனை அன்று கொன்றாய் அணங்கினைக் காக்க வேண்டி இரக்கமே உருவாக் கொண்ட இராகவா ஏழை யேனைப் புரக்கவும் நினைப்ப தென்றோ புண்ணிய மூர்த்தி பொய்கை சுரக்குநன் செய்கள் சூழ்ந்த சுந்தரக் காழி வேந்தே. 7 ஆவியாம் அணங்கு தன்னை ஐம்புல அரக்கர் கோமான் மேவியே பற்றிக் கொண்டான் மேலவ அவனைக் கொன்று பாவியை மீட்ப துண்டோ பரமனே இராம நாதா காவிய மயில்களாடுங் கழனிசூழ் காழி வேந்தே. 8 வில்லினைத் தாங்குங் கோலம் விளங்கிழை தொடருங் கோலம் நல்லியற் பின்னோன் கோலம் நடந்தருள் கோலங் கண்டால் வல்வினை இரிந்து போகும் மனமலர் கோயி லாகும் கல்வியாய் நிறைந்த சோலைக் கற்பகக் காழி வேந்தே. 9 நங்கையின் உரிமை நாடி நாமநீர் கடந்த வீரா பங்கயம் பற்றி நாயேன் பாவையர் உரிமை நாட்டச் சிங்கமே பணிசெய் கின்றேன் திருவுள வைப்பு வேண்டும் பைந்துணர் வாகை பூண்ட பரமனே காழி வேந்தே. 10 10. தில்லை ஆண்டவனே அறமில்லா அரசியலில் விழுந்தொழிந்தேன் பாண்டவரின் வழிவளர்த்த பரமசுக அரசியலே மீண்டுமுயிர் பெறஅருளாய் மேதினியிற் கோவிந்தா நீண்டவுல களந்துறங்கும் நிழற்றில்லைப் பெருமாளே. 1 பாழான அரசியலே பார்மீது பரவிவந்தால் வாழாமல் உயிர்மடியும் வல்லிதிரு மகிழ்மார்பா சூழாமல் தகர்த்தருளாய் சுந்தரகோ விந்தாஇங் கேழான இசைவளரும் எழிற்றில்லைப் பெருமாளே. 2 கற்றவர்க ளெனும்பெயரால் காசினியி லரசியலார் செற்றமிகு புலிகரடி சிங்கமெனத் திரிகின்றார் உற்றுவருந் துயரவரால் உரைகளுக்கு மெட்டாதே சிற்றுயிருக் கிரங்கியருள் தில்லையமர் பெருமாளே. 3 கல்லூரி என்றென்றே கட்டுகின்றார் பழிபாவம் மல்லூரு நூல்களிலே மதிவளர்ச்சி பெறுகின்றார் அல்லூரு நெறியொழிக்க ஆணையென்று பிறந்திடுமோ செல்லூரும் பொழிலுடுத்த சீர்தில்லைப் பெருமாளே. 4 கொள்ளையிலுங் கொலையினிலும் கொடும்புரட்சி வெறியினிலும் உள்ளமுறும் அரசியலால் உலகுபடும் பாடென்னே தெள்ளுதமிழ்த் திருமாலே தேய்த்தருளாய் சிறுநெறியைக் கள்ளவிழு மலர்ச்சோலைக் கடிதில்லைப் பெருமாளே. 5 தேர்தலெனும் ஓரரக்கன் செகமனைத்தும் வயப்படுத்தி ஆர்கலியில் அழுத்துகின்றான் அலறுகிறார் அறிஞரெலாம் தேர்தனிலே கீதை சொன்ன திருவருளைச் செலுத்தாயோ பார்தனிலே அருள்கொழிக்கும் பழந்தில்லைப் பெருமாளே. 6 கல்வியெலாம் போருக்கே கருத்தெல்லாம் போருக்கே செல்வமெலாம் போருக்கே செய்கையெலாம் போருக்கே பல்லுலகும் போருக்கே பாழாகுங் காலமிது தொல்லையழித் தமைதியருள் துலங்குதில்லைப் பெருமாளே.7 ஒருயிரே எல்லாமென் றுரைத்தமொழி வாழ்வினிலே சீருறவே செயுங்கல்வி செவ்வரசு தொழின்மலர ஆருயிரே அருள்புரியாய் அய்யாவே கோவிந்தா ஓருருவே உண்மையொளி ஓங்குதில்லைப் பெருமாளே. 8 கல்வியிலும் வாழ்க்கையிலுங் கடைப்பட்ட தன்னலமே மல்குநெறி பரவிவரின் மாநிலமே கொலைக்களமாம் தொல்புவியைக் காத்தருளுந் தொழிலுடையாய் அருள்பொழியாய் புல்குபர நலம்வளரப் பொழிற்றில்லைப் பெருமாளே. 9 கொலையேவும் அரசியலைக் குலைத்தருளி எங்கெங்கும் நலமேவும் அரசியலே நண்ணஅருள் செய்யாயோ புலமேவு புள்ளினங்கள் புண்டரீகா எனப்புகன்றே அலையேறும் புனல்மூழ்கும் அணிதில்லைப் பெருமாளே. 10 11. திருக்கோவலூர் வெம்மையில் விழுந்த வாழ்வு விடுதலை பெறுமோ என்றே இம்மையில் ஏங்கி நின்றேன் எய்ப்பினில் வைப்பே என்னச் செம்மலே அடியில் சிந்தை சென்றது சேர வந்தேன் பொய்ம்மையில் புலவர் சூழ்ந்த புண்ணியக் கோவல் வாழ்வே. 1 உலகினை அளந்த மாலென் றுன்னிய போதே ஐயா கலகமுள் நெஞ்சம் மாறுங் காட்சியை என்னே சொல்வேன் திலகமே நெஞ்சி லென்றுஞ் சேவடி நின்றால் வெம்மை விலகியே பொன்று மன்றோ வித்தகக் கோவல் வாழ்வே. 2 விண்ணொளிப் பசுமை ஓங்கி விரிபொழிற் பசுமை நல்ல கண்ணமைப் பசுமை எங்குங் கடற்பயிர்ப் பசுமை யாழின் பண்ணளிப் பசுமை யெல்லாம் பாவியின் வெம்மை சாய்க்கும் தண்ணளிப் பசுமை யென்றே சார்ந்தனன் கோவல் வாழ்வே. 3 பச்சையே எண்ணி எண்ணிப் பாவியேன் பரிந்து வந்தேன் இச்சையுள் வேறொன் றில்லை ஈசனே அறிவா யுண்மை உச்சியிற் காலை வைத்தே ஒருமொழி உரையாய் கொல்லோ செக்கைக ளாலுஞ் சோலைச் செல்வமே கோவல் வாழ்வே. 4 வான்விடு நீலஞ் சூழ மதிவிடு நிலவு வீழ மீன்விடு நகைக ளுந்த மென்விடு தென்றல் வீசத் தேன்விடு பாண்மு ழங்கத் திரைவிடு முத்தஞ் சிந்த ஊன்விடு நிலையி லுள்ளேன் உரைவிடு கோவல் வாழ்வே. 5 எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவாய் நன்று புண்ணினிற் கோலிட் டாற்போல் புந்தியுள் நொந்து வந்தேன் கண்ணினிற் காணா யேனுங் கருத்தினில் நினைய லாமே பெண்ணையின் அலைகள் பாடும் பெருந்துறைக் கோவல் வாழ்வே. 6 பண்ணிய பாவ மெல்லாம் பரமனே அறிவாய் நன்று எண்ணியே உருகு கின்றேன் இதயமும் நைந்த தையா பெண்ணையின் வெள்ளங் கண்டேன் பேரருள் வெள்ளங் காணேன் புண்ணியந் திரண்ட செல்வப் புனிதனே கோவல் வாழ்வே. 7 உலகெலாம் நின்னில் ஒன்றும் உண்மையை உணர்த்த வேண்டி உலகெலாம் அளந்த மாயா உன்னையார் அளக்க வல்லார் அலகிலாப் பாவ நெஞ்சை அருளினால் அளந்தால் உய்வேன் சிலைசெறி பெண்ணை சூழுந் தெய்வமே கோவல் வாழ்வே. 8 கண்ணென வாழ்ந்த நண்பர் கடிமணம் பூண்டி நின்று விண்ணுயர் சிகரங் கண்டு வித்தகா விமலா என்றே எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவா யன்றே தண்ணருள் செய்யாய் இன்று தமிழ்வளர் கோவல் வாழ்வே. 9 குற்றமே செய்து செய்து குறைபல உடைய னானேன் செற்றமே சிறிது மில்லாத் தெய்வமே பொறையே அன்பே உற்றனன் அடியில் வீழ்ந்தேன் உறுபிழை பொறுத்தே யாளாய் நற்றவர் நெஞ்சில் வாழும் நாதனே கோவல் வாழ்வே. 10 12. திருக்காஞ்சி பந்தாடக் குழுமிவரும் பள்ளியிளம் பிள்ளைகளே! பைந்தாரன் திருமார்பன் பவமறுக்கும் ஒருவீரன் வந்தார்க்கு வரமளிக்கும் வரதனெழுந் தருள்காஞ்சி நந்தாத மணிக்கோயில் நண்ணும்வழி சொல்லீரே. 1 குடமேந்திக் குலவிவருங் கோதில்பிணாப் பிள்ளைகளே! தடமேந்து மலர்க்கினியன் தண்டுளவம் அசைமார்பன் வடமேந்துங் காஞ்சியிலே வரதனெழுந் தருள்கோயில் இடமேந்தும் வழியுணர்த்த எழின்முத்தஞ் சிந்தீரே. 2 மட்டவிழு மலர்பறிக்க மரத்தடியிற் செறிந்தீண்டி வட்டமிடும் வளைக்கரத்து மதிநல்லீர்! வளர்காஞ்சிக் கட்டழகன் பொலமுடியன் கருணைபுரி கரிவரதன் எட்டுடையன் திருக்கோயில் ஏகும்வழி இதுவேயோ. 3 ஆலரசு வேம்பினங்காள்! அழகுதிருக் காஞ்சியிலே சீலருளும் வரதனிடம் செல்வழியோ இதுவென்று கோலமவிர் கரநீட்டிக் குறிப்பிடவே குலவுகின்றீர் பாலிமண லெனப்பொலிந்து பல்லாண்டு வாழ்வீரே. 4 புற்றரவப் பெரியீரே! புன்மையனைக் கண்டவுடன் செற்றமறு பணம்விரித்துச் செல்கின்றீர் விரைந்துமுனே கற்றவரெண் காஞ்சியிலே கரிவரதன் கோயில்வழி பற்றிநட எனவுணர்த்தும் பான்மைதனை மறவேனே. 5 செங்கமலத் தேனருந்திச் சிறுமீன்கள் விளையாடும் பொங்குமடுக் காட்சிவிட்டீர் புரிவுடனே பறக்கின்றீர் சங்குடைய வரதனமர் தனிக்கோயில் வழியிதுவென் றிங்குணர்த்தும் புள்ளரசீர்! இருங்கருணைத் திறமென்னே. 6 மணியொலிக்கப் புல்மேய்ந்து மகிழ்பசுவின் நிரைதோன்றித் தணிவளிக்கக் கோபாலா வெனத்தாழச் சிலகன்று கணமருண்டு துள்ளிவழிக் கனைத்தோடக் கவர்கண்ணில் அணிமையென வரதனுள அருட்கோயில் பூத்ததுவே. 7 செங்கொண்டை சாய்ந்தசையச் சீக்கின்ற சேவல்களே! பைங்குஞ்சு புடைசூழப் பார்க்கின்ற கோழிகளே! அங்கண்ணன் வரதனென்றே அகங்குளிரக் கூவீரே இங்குள்ளங் கவர்வரதன் என்றென்றே கூவிரே. 8 மயிலனங்காள்! ஆடீரே மால்வரத னென்றென்றே குயிலினங்காள்! கூவீரே குருவரத னென்றென்றே பயிலளிசெவ் வாய்க்கிளிகாள்! பாடீரே வரதனென்றே உயிரளிக்க வருவானோ உயர்காஞ்சிப் பதியானே. 9 திருக்குளமெல் லலையெடுப்பச் சிறுதென்றற் காற்றெறிப்பத் தருக்கணிரை நிழல்பரப்பத் தனிமைநிலை உடன்கூட அருக்கனொளி மறைந்ததுவே அகல்நிலவும் எழுந்ததுவே பெருக்கமுத வரதாவோ பேயனையாள் வரதாவோ! 10 13. திருவல்லிக்கேணி அறங்குலை நாளில் அவதரித் துலகுக் கருள்புரி ஐயனீ என்றே நிறங்கிளர் மேனி நிலவிலே மூழ்கும் நினைவொடு வந்தனன் அடியேன் மறங்கிளை மனத்தை மாற்றியே ஆளாய் மாநிலத் தேர்விடு கோலத் திறங்குல வல்லிக் கேணியிற் சிறக்குஞ் செல்வமே கல்விநா யகனே. 1 மதுரையில் முளைத்த மரகத மலையே மன்னுயிர் மகிழ்நிழல் வனமே விதுரனுக் கருள்செய் வெள்ளமே வயிற்றில் மேதினி தாங்கிய விசும்பே குதிரைகள் புனைதேர்க் குலவிய கோலக் குறியுணர் திருவெனக் கருளாய் சதுரனே அல்லிக் கேணியிற் சான்ற தந்தையே சிந்தைநா யகனே. 2 தொன்மையில் மிகுந்த துவரையை யாண்ட சோதியே சுடர்விளக் கொளியே பன்மையில் மயங்கும் பாரினில் ஒருமைப் பார்வையே பெறுநிலை விழைந்தேன் நன்மையே புரிய நாதமாந் தேரை நடத்திய வள்ளலே அருளாய் மென்மையு ளல்லிக் கேணியில் மேவும் மேலவா சீலநா யகனே. 3 அலைகடற் றுயிலும் அற்புதக் காட்சி ஆனிரை சூழ்தரு காட்சி மலைகுடை பிடிக்கும் மாண்புறு காட்சி மரத்தினிற் குழலிசை காட்சி சிலைகளி னிடையே தேர்விடுங் காட்சி சிறியனேற் கருள்செய மனமோ கலைவள ரல்லிக் கேணியி லமர்ந்த கண்ணனே வண்ணநா யகனே. 4 அம்புகள் பொழியும் அமரிடைத் தேரில் அருச்சுனற் கருளினை உண்மை அம்புவி யதனில் அகத்தினைச் செலுத்த அமைதியே எங்கணும் ஓங்க ஐம்புலன் அடங்க ஆருயிர் மகிழ அருள்புரி ஆண்டகை அரசே வம்புறை அல்லிக் கேணியில் வாழும் வள்ளலே உள்ளநா யகனே. 5 பண்டைநாள் நிகழ்ந்த பாரதப் போரே பாவியேன் மனத்தினில் நிகழக் கண்டவா றென்னே கண்ணநின் கீதை காதிலே கேட்டவா றென்னே தொண்டனேன் நெஞ்சிற் றுணையடி கிளந்து தோன்றுமா றுளதுகொல் அறியேன் அண்டனே அல்லிக் கேணியி லமர்ந்த ஆதியே சோதிநா யகனே. 6 புன்னையில் நின்று புங்கவா இசைத்த புல்குழல் ஓசையை மடுத்த மன்னுயிர் வகைகள் மரமென நின்று மகிழ்ச்சியில் மலர்ந்தன வன்றே சின்னவ னந்தச் செவ்வொலி பருகச் சிந்தைகொண் டணைந்தனன் அருளே நன்னய அல்லிக் கேணியில் நண்ணும் நாதனே ஆதிநா யகனே. 7 உலகெலாம் நீயாய் ஓங்கிய உருவை ஓதியோ காணுதல் இயலும்! பலகலை விடுத்துப் பார்த்தசா ரதியாய்ப் படிந்தநின் வடிவினிற் படிந்தால் இலகிடும் அருளென் றெண்ணியே வந்தேன் ஈசனே அடியனை யாளாய் திலகமே அல்லிக் கேணியிற் றிகழும் தெய்வமே மெய்ம்மைநா யகனே. 8 செயற்கையில் விழுந்த சிந்தையர்க் கெட்டாச் செல்வமே உன்னடி அடைந்தேன் இயற்கையின் உயிரே ஏழிசை அமுதே எந்தையே எளியனை ஆளாய் பயிற்சியில் மிகுந்தோர் பாவனை அறியேன் பாவியேன் பார்த்தசா ரதியே அயர்ச்சியி லல்லிக் கேணியி லமர்ந்த அத்தனே பத்திநா யகனே. 9 தேரினி லிருந்த தெய்வமே கீதை செப்பிய தேசிகா உன்னை நேரினிற் காணும் நிலைமையு முண்டோ நீசனேற் கருள்செய லுண்டோ பாரினில் வேறு களைகணு மில்லேன் பார்த்தருள் பார்த்தசா ரதியே சீரிய வல்லிக் கேணியிற் சிறக்குஞ் சித்தனே முத்திநா யகனே. 10 14. திருவல்லிக்கேணி பள்ளியிலே யான்படித்த பருவமதி லுன்றன் பசுங்கோயில் வலம்வருவேன் பத்திவிளை வாலே தெள்ளறிவோ தீவினையோ சிதைந்ததந்தப் பத்தி திறமறியேன் சிறுமதியேன் செய்வதொன்று மறியேன் உள்ளநிலை பண்படவோ ஒருவழியுங் காணேன் உன்னடியி லுடும்பாகி உருகியழு கின்றேன் கள்ளவிழு மலர்த்தருவே கரியமணிக் குன்றே கருணையல்லிக் கேணிமகிழ் கடவுளருள் புரிவே. 1 கடலாடி வலம்வந்து கைதொழுவேன் கோயில் கமலமுகங் கண்டுகண்டு கசிந்துருகி நிற்பேன் படலாடும் அரசியலால் பத்திமனம் போச்சே பரமநின்றன் அரசியலைப் பரப்பமனங் கொண்டேன் உடலாடும் வேளையுறின் உளமாடு மன்றோ உளமாடி வாழஇங்கே ஒருகணமுந் தரியேன் மடலாடும் பாவையர்தம் மனம்பெறினோ உய்வேன் மலரல்லிக் கேணிமகிழ் மணவாளா அருளே. 2 கோலமிகு கோயில்வலங் கொண்டுவந்த போது கோதிலுரு நின்றுநின்று குவிந்தமனப் பண்பால் காலையிலே விழித்தவுடன் கண்ணிலுறு மன்றோ காயாம்பூ மேனியனே கமலவிழி மணியே சோலையிலே விளையாடிச் சோர்ந்தமரும் வேளை தூயவுரு எதிருலவுந் தோற்றமுறு மன்றோ வேலையொலி வேதவொலி விரவுமல்லிக் கேணி வித்தகனே அந்நிலையும் வீழ்ந்ததருள் செய்யே. 3 அந்நாளில் கோயில்புகுந் தகங்கொண்ட உருவம் ஆழ்வார்க ளந்தமிழில் அமர்ந்திருக்கும் அழகு பின்னாளில் புலனாகும் பேறுபெற்றே னருளால் பிரியாம லியற்கையிலே பின்னிநிற்கும் பெற்றி இந்நாளில் இசையரசே இனிதுணரச் செய்தாய் எல்லாநின் னருட்செயலே ஏழைஎன்ன அறிவேன் எந்நாளி லொளிகாண்பேன் ஏகாந்தம் பெறுவேன் எழிலல்லிக் கேணிவளர் எந்தைபெரு மானே. 4 வான்பொழியு நீலமதில் வளர்ந்துநிற்கு நெஞ்சம் மழைபொழியுங் கருமையிலே மகிழ்ந்துநிற்கு நெஞ்சம் கான்பொழியும் பசுமையிலே கலந்துநிற்கு நெஞ்சம் கடல்பொழியும் வண்ணமதில் களித்துநிற்கு நெஞ்சம் தேன்பொழியு மேனியென்றே திருமருவு மார்பா தெளிந்தொன்றின் சாந்தமெனுந் தெய்வநிலை யுறுமே ஊன்பொழியும் உடலுளமும் ஒளியமுதம் பெறுமே ஓங்கல்லிக் கேணியமர் உத்தமச்சின் மயமே. 5 கண்கவரும் புன்னைநிழல் காலடிவைத் துலவிக் கனிவாயிற் குழல்பொருத்திக் கானஞ்செய் கருணை எண்கவர ஏங்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் இசையமுதம் உண்டவர்கள் இனியஅணங் கானார் புண்கவரு மனமுடையேன் புந்திநினை யாயோ போரிடைத்தேர் விடுத்தன்று புனிதமறை சொன்னாய் விண்கவரு மாடஞ்சூழ் வீதிமலி செல்வம் மேவுமல்லிக் கேணிவளர் வேதாந்தப் பொருளே. 6 கரும்போர்வை அணிகழற்றிக் கறையில்லாப் போர்வை கருணையினா லெனக்களித்தாய் கறைப்படுத்தி விட்டேன் இரும்போடு மனக்குறும்பால் இழைத்தகறை போக்கி எழில்வெண்மை யாக்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் அரும்போடும் இளம்பருவம் அருளிஎன்னை ஆளாய் அருச்சுனற்குக் கீதைசொன்ன அறவாழி அரசே சுரும்போது மலர்ப்புன்னைச் சோலைநிழல் செய்யும் தூயஅல்லிக் கேணிமகிழ் சுந்தரநா யகனே. 7 அழுக்ககற்றி வெள்ளையுடை அணிந்துகொண்டேன் ஐயா அன்புளத்தால் மாலையிட்டால் அருள்வழிநின் றுய்வேன் வழுக்கிவிழும் வழிமறையும் வாழ்வுபெற லாகும் மதங்களெலாம் மறைகளெலாம் வழுத்துகின்ற மணியே இழுக்குடைய நெறிசெலுத்த எந்தைதிரு வுளமோ எழிலுடையுங் கறைப்பட்டால் ஏழைஎன்ன செய்வேன் செழிக்குமலர்ப் புன்னைநிழல் சீரடிவைத் துலவும் திருவல்லிக் கேணியமர் செல்வப் பெருமாளே. 8 புன்னையிலே கனிவாயிற் பூங்குழல்வைத் தூதப் புங்கவரும் மங்கையராய்ப் புத்தமிர்தம் உண்டார் அன்னையினுந் தயையுடையாய் ஆணுருவில் யானும் அணங்குமனம் பெற்றுவந்தேன் அரிமாலை யணிந்தால் மன்னருளில் திளைத்துநிற்பேன் மயக்கநெறி வீழேன் மதங்கடொறும் ஒளிசெய்யும் மாதவனே என்றுங் கன்னிமொழித் தமிழ்க்கவியில் கருத்துடைய அரைசே கருணையல்லிக் கேணியமர் கரியபெரு மாளே. 9 எண்ணாத எண்ணமெலாம் எண்ணியெண்ணி ஏங்கி ஏழைபடுந் துன்பமெலாம் எந்தையறி வாயே பெண்ணாகி முனிவரெல்லாம் பெற்றுவிட்டார் பேறு பெண்ணினத்தி லெனைச்சேர்த்தால் பேறெல்லாம் பெறுவேன் கண்ணாரக் காணவுனைக் கருத்தார நினைத்துக் கங்குல்பக லுருகுகின்றேன் கமலமுகக் கண்ணா விண்ணாடும் மண்ணாடும் வேதமொழி யாலே விளம்புமல்லிக் கேணியுள வித்தகமெய்ப் பொருளே. 10 15. திருவல்லிக்கேணி உலக மெல்லா மொருமையிலே ஒன்றின் துயருக் கிடனுண்டோ கலகப் பன்மை மனம்வீழ்ந்தால் கருணை யுலகொன் றேவிளங்கும் அலகில் ஒளியே அன்புருவே அந்த நிலையை அருள்புரியாய் இலகும் அல்லிக் கேணியமர் எந்தை பார்த்த சாரதியே 1 சாதி மதங்கள் தலையெடுத்தே தரணி யழிக்கும் நிலையறிவாய் நீதி நெறிகள் குன்றிவரல் நிமலா அறிவாய் இடர்களையாய் ஆதி யந்த மில்லாத அரசே அன்பே ஆண்டகையே சோதி அல்லிக் கேணிமகிழ் சுகமே பார்த்த சாரதியே. 2 பெண்க ளுரிமை பாழாச்சே பேயா யுலகம் அலைவாச்சே கண்க ளிரண்டி லொன்றற்றால் கருமம் நன்கு நடைபெறுமோ மண்கண் கூர வந்தவனே மகளிர் வாழ்வு தந்தவனே பண்ணின் மொழியார் துயர்களையாய் பழமைக் கேணிப் பெருவாழ்வே. 3 மண்ணைப் பொன்னை மங்கையரை மாயை யென்றே சிலர்கூடிக் கண்ணில் நூல்கள் எழுதிவைத்தார் கருணை யற்ற மனத்தாலே மண்ணில் பொன்னில் மங்கையரில் மாயா நின்றன் ஒளியிலையோ பண்ணில் நெறிகள் அழியஅருள் பரமா அல்லிக் கேணியனே. 4 உலக வாழ்வு உனையுணர்த்தும் உயர்ந்த கருவி யெனுமுண்மை இலகிப் பரவ வேண்டுகின்றேன் இனிய கருணை நெறிவாழ அலகி லழகு மருமார்பா அன்பை வளர்க்கும் அருள்மனமே திலக மென்னத் திகழ்சோதி தெய்வ அல்லிக் கேணியனே. 5 உலகம் நீயென் றுயிர்நீயென் றுவந்த வாழ்வில் தலைப்பட்டால் கலக மெல்லாம் பாழாகிக் கனிவே எங்குங் கால்கொள்ளும் விலகுந் துறவுக் கிடனுண்டோ வேந்தே இயற்கை நெறியோம்பாய் நிலவுங் கதிருங் கரங்கொண்ட நிமலா அல்லிக் கேணியனே. 6 வாழ்வை நின்றன் வழிநிறுத்தின் வலிய மாயை என்செய்யும் பாழ்பட் டொழியும் படராதே பழைய வினையும் நில்லாதே தாழ்வும் உயர்வும் அற்றழியும் சமமே எங்கும் இனிதோங்கும் காழ்வில் பொருளே அருள்புரிவாய் கருணை அல்லிக் கேணியனே. 7 சின்ன வயதில் நினைத்தவெலாம் சிறக்க அளித்தாய் பெரியோனே பின்னே அந்தப் பேறிழந்தேன் பேயேன் பிழையை யுன்னியுன்னி முன்னே நின்று முறையிட்டு முதல்வா என்றே அழுகின்றேன் என்னே செய்வேன் எனைஆளாய் எழிலா ரல்லிக் கேணியனே. 8 அரவில் துயிலும் அன்புடைமை அறிந்தே அணைந்தேன் திருவடியைக் கரவு மலிந்த அரசியலில் கலந்தே கெட்டேன் ஐயாவே இரவும் பகலு மில்லாத இடத்தில் நின்றுன் அரசியலைப் பரவச் செய்ய அருள்புரிவாய் பரமா அல்லிக் கேணியனே. 9 வெண்மை மதியில் இளஞ்சேயில் விரிந்த மலரில் நறும்பாட்டில் பெண்மை அமிழ்தில் அறவோரில் பெருமை பிறங்க வைத்தனையோ நண்ணும் பொழுதே நின்னினைவு நயமா யெழுத லென்னேயோ கண்ணே மணியே கமலமலர்க் கண்ணா அல்லிக் கேணியனே. 10 16. திருமலை வாழி ஏழு மலையென்றும் வாழி ஏழு மேகங்கள் வாழி ஏழு நிறவழகு வாழி ஏழு நாள்முறையே வாழி ஏழு இசைவகையே வாழி ஏழு மூலங்கள் வாழி ஏழு முனிவரர்கள் வாழி ஏழு மலைவாழி. 1 வெல்க ஏழு மலையொளியே வெல்க ஏழு மலைநாதம் வெல்க ஏழு மலைக்கொடியே வெல்க ஏழு மலைவாகை வெல்க ஏழு மலைவீரம் வெல்க ஏழு மலைநேயம் வெல்க ஏழு மலைவளமே வெல்க ஏழு மாமலையே. 2 போற்றி ஏழு மலையடிகள் போற்றி ஏழு மலைமார்பம் போற்றி ஏழு மலைத்தோள்கள் போற்றி ஏழு மலைவிழிகள் போற்றி ஏழு மலைவளையே போற்றி ஏழு மலையாழி போற்றி ஏழு மலைவில்லும் போற்றி ஏழு மலைப்புகழே. 3 சேரும் ஏழு மலைகாணச் சேரும் ஏழு மலைநண்ணச் சேரும் ஏழு மலைவணங்கச் சேரும் ஏழு மலைவாழ்த்தச் சேரும் ஏழு மலைஎண்ணச் சேரும் ஏழு மலைசுற்றச் சேரும் ஏழு மலைவாழச் சேரும் ஏழு செகத்தீரே. 4 ஊனும் உயிரும் ஏழுமலை உணவுஞ் சார்பும் ஏழுமலை கானும் மலையும் ஏழுமலை கடலும் வயலும் ஏழுமலை வானும் வளியும் ஏழுமலை மதியுங் கதிரும் ஏழுமலை கோனுங் குடியும் ஏழுமலை கூறாய் ஏழு மலையென்றே. 5 எண்ணும் எழுத்தும் ஏழுமலை எல்லாக் கலையும் ஏழுமலை பண்ணும் இசையும் ஏழுமலை பாட்டும் பொருளும் ஏழுமலை கண்ணும் மணியும் ஏழுமலை கருத்தும் ஒளியும் ஏழுமலை நண்ணும் நண்ணும் ஏழுமலை நாதன் ஏழு மலையென்றே. 6 மண்ணும் பரலுங் கூர்ங்குண்டும் வலிய அறையும் வளருமலை தண்மைப் புல்லும் செடிகொடியும் தழைக்குங் காவும் வளருமலை நுண்மைப் புழுவும் நந்தரவும் நுழையும் உடும்பும் வளருமலை வண்டும் புறவும் மயில்குயிலும் வளரும் ஏழு மலைதானே. 7 ஏனங் கரடி புலியானை எருதா குரங்கும் வளருமலை ஊனர் தேனர் உரவோர்கள் உறவோர் உம்பர் வளருமலை கானர் சித்தர் பத்தரொடு காணர் புத்தர் வளருமலை மான யோகர் ஞானியர்கள் வளரும் ஏழு மலைதானே. 8 மூல ஒலியாய் முழங்குமலை முதலின் எழுத்தாய் முகிழ்க்குமலை காலிற் பாம்பாய் எழும்புமலை கனக ஒளியாய் எரியுமலை நீல நிறங்கால் நிமலமலை நெஞ்சில் அமுதம் பொழியுமலை சீல உருவாய்த் திகழுமலை சிந்தை செய்யாய் திருமலையே. 9 சிரமே வணங்காய் ஏழுமலை செந்நா வழுத்தாய் ஏழுமலை கரமே கூப்பாய் ஏழுமலை கண்ணே பாராய் ஏழுமலை உரமே சூழாய் ஏழுமலை உணர்வே ஒன்றாய் ஏழுமலை வரமே நல்கும் ஏழுமலை வாழாய் ஏழு மலையென்றே. 10 17. திருமலை பனிவரையை முடிகொண்ட பரதமெனுந் திருநாட்டில் கனிமொழியின் எல்லையிலே காவல்புரி கற்பகமே இனிமைவிருந் துணவிழைந்தேன் எழுமுயற்சிக் கிடனிலையே சனிநகர வாழ்வதற்குத் தடைபுரிதல் கண்டருளே. 1 என்னபாவஞ் செய்தேனோ எவ்வுயிரை ஒறுத்தேனோ தொன்மலையில் வீற்றிருக்குந் துளவமணி பெருமாளே உன்னருளைப் பெறவேண்டி உழைக்கஎழும் முயற்சியெலாம் சின்னநகர் தகைந்திடுதல் திருவுள்ளம் அறியாதோ. 2 அருவிநிறை வேங்கடத்தில் அமர்ந்தருளும் பெருமாளே திருவடியே நினைந்திருந்தால் சிந்தனையில் சாந்தமுறும் கருவினிலே உயிரழிக்குங் கருணையிலா யமபடர்சூழ் பெருமையிலா நகர்வாழ்வைப் பெயர்த்தருள வேண்டுவனே. 3 சாக்கடையும் மலஅறையும் தார்ததும்பும் பாதைகளும் மாக்கிளரும் பொழிலணியா மாளிகையும் பிணிப்படையும் பாக்களிலே உனையுணரும் பகுத்தறிவை ஓம்பாவே தேக்கமுத முனிவர்தொழுந் திருமலையின் மெய்ப்பயனே. 4 சிற்றறையில் பலமாந்தர் சேர்ந்துறங்கிச் சாகின்றார் கற்றலிலா நகர்வாழ்வைக் கண்டுமனம் நொந்துடைந்தேன் செற்றமெழுப் பவ்வாழ்வைச் சிதைத்தருள வேண்டுகின்றேன் உற்றதுயர் களைஇறையே ஓங்குமலைப் பெருவாழ்வே. 5 அருகனொளி படராத அறைநிறைந்த மாடிகளில் உருக்களென எலும்புலவும் உயிர்ப்பில்லா நகரங்கள் திருக்குலவு மணிமார்பா திருவடியைச் சிந்திக்கும் பெருக்களிக்கும் வாழ்வழித்துப் பேயாக்கல் நலமேயோ. 6 மின்சார விளக்கொளியில் மின்னுகின்ற பாவையர்கள் பொன்சார மிழந்திருமும் புகைமாடி நிறைநகரில் உன்சாரம் படிவதெங்ஙன் உயிர்ப்பருளும் மலைக்கரசே தென்சாரம் படிசோலைத் திருநகர வாழ்வருளே. 7 மெய்யழிக்கும் பள்ளிகளும் மின்விளக்கு நாடகமும் பொய்வளர்க்கும் மன்றுகளும் பொருந்தாத உணவிலமும் வெய்யமலச் சிக்களித்து வேதனைசெய் நகரிடையே ஐயஉனைச் சிந்திக்கும் அமைதிநிலை கூடிடுமோ. 8 அன்பழிக்குஞ் சட்டதிட்டம் அலைக்கின்ற நகரங்கள் துன்பளிக்கும் எரிநரகாய்த் துயருழற்று மிந்நாளில் இன்பநெறி கடைப்பிடித்தல் எளியவருக் கியலுங்கொல் மன்பதையைக் காத்தருள மலைகொண்ட பெருமாளே. 9 ஏழுமலை பணிதலையும் ஏழுமலை சொலும்வாயும் ஏழுமலை நினைமனமும் எழும்வாழ்வைத் தகைந்துநிற்கும் பாழுநகர் படவருளாய் பார்த்தனுக்குக் கீதைசொன்ன தோழனென உனையடைந்தேன் தூயதிரு மலைக்கொழுந்தே.10 18. திருமலை ஏழுமலை ஏழுமலை என்றெண்ணி வந்தேன் ஏழுமலை ஏழுமலை என்றடியார் முழங்கும் ஏழுமலை ஒலியினிலே ஈடுபட்டு நின்றேன் ஏழுமலை அதிசயத்தை என்னவென்று சொல்வேன் ஏழுமலை கழகமென எனையாண்ட தம்மா இளமையிலே அக்கழகம் எளியன்பயின் றிருந்தால் ஏழுமலை வடிவான எந்தைபெரு மானே இப்பிறவிப் பேறுபெற்றே ஏழையுயிர் உயுமே. 1 ஏழுமலை ஏழுமலை என்றுகதிர் பொழிய ஏழுமலை ஏழுமலை என்றுவிசும் பார்ப்ப ஏழுமலை ஏழுமலை என்றுவளி உலவ ஏழுமலை ஏழுமலை என்றுகனல் மூள ஏழுமலை ஏழுமலை என்றுபுனல் விம்ம ஏழுமலை ஏழுமலை என்றுநிலந் தாங்க ஏழுமலை ஏழுமலை என்றுயிர்கள் வாழ ஏழுமலை அருள்புரியும் இனிமையுணர் வேனோ. 2 ஏழுமலை ஏழுமலை எனப்பணியாய் தலையே ஏழுமலை ஏழுமலை எனநோக்காய் விழியே ஏழுமலை ஏழுமலை எனமுரலாய் மூக்கே ஏழுமலை ஏழுமலை எனஇசையாய் நாவே ஏழுமலை ஏழுமலை எனக்கேளாய் செவியே ஏழுமலை ஏழுமலை எனநினையாய் நெஞ்சே ஏழுமலை ஏழுமலை எனக்கூப்பாய் கையே ஏழுமலை ஏழுமலை எனச்சூழாய் காலே. 3 பரிதிமதி ஒளிபொழியப் படர்காற்று வீசப் பளிங்கருவி முழவொலிக்கப் பாம்புமயி லாடக் கரிகரடி புலிமான்கள் காட்டாக்கள் சூழ்ந்து கலந்துகலந் தொன்றிமனங் கசிந்துகசிந் துருக வரிசிறைகள் யாழ்முழக்க வான்பறவை பாட மரக்கரங்கள் மலர்தூவ மாந்தர்தொழ அருளும் அரிதிருமால் நாரணனே அணங்குவளர் மார்பா அடியடைந்தேன் களைகணிலை ஆண்டருளாய் அரைசே. 4 வான்பசுமை தவழ்பொழிலின் வளர்பசுமை போர்த்த மலைமுடியில் பசுமைவிரி மணிக்கொழுந்தே அமுதே கோன்பசுமை நாணாளுங் குலைந்துகுலைந் திறுகக் குடிப்பசுமை வழிவழியே குன்றிவிட்ட தந்தோ ஊன்பசுமை உளப்பசுமை உயிர்களிழந் தாலோ உலகிலுன்றன் இயற்கைநெறி ஓங்கஇட முண்டோ தேன்பசுமைத் துளவமணி தெய்வத்திரு மார்பா சீவருய்யப் பசுமையருள் செல்வப்பெரு மாளே. 5 மரத்தடியில் வீற்றிருந்தாய் மதிலெடுத்துச் சில்லோர் மாளிகைகள் கோபுரங்கள் மடங்கள்பல வகுத்தார் சிரத்தையுடன் அன்பர்குழு சேர்ந்தஇட மெல்லாம் சிறுமைமுழை ஆயினவே செயற்கைவெம்மை என்னே வரத்தையருள் இயற்கைநெறி வளர்வதெங்ஙன் ஐயா மந்திவிளை யாடிமகிழ் மரஞ்செறிந்த மலையில் கரத்தினிலே ஆழிகொண்டு காக்கின்ற அரசே காசினியோர் உய்யும்வழி கருணைபுரி யாயோ. 6 சாதியிலாச் சந்நிதியில் சாதிநுழை வாச்சே சட்டமிலா முன்னிலையில் சட்டம்புக லாச்சே நீதிநிலை திருமுன்னே நீதிவிழ லாச்சே நிறைசிறந்த இடமெல்லாம் நிறைசிதைய லாச்சே ஆதிநெறி மீண்டுமிங்கே ஆக்கம்பெற லுண்டோ ஆழ்வார்தம் தமிழ்மறையை ஆலயமாக் கொண்ட சோதிமலை முடியரசே சுதந்திரமே நிலவும் தூயவெளி ஒளியினிலே சூழஅருள் செய்யே. 7 இயற்கையிறை நீயென்னும் எண்ணமிலார் சூழ்ந்தே எத்தனையோ செயற்கைவினை இயற்றுகிறா ரந்தோ பயிற்சியிலார் புன்பொருளைப் பரப்புகின்றார் முன்னே பாராதி அண்டமெலாம் பரமநின தலவோ முயற்சியுள முனிவர்வழி முன்னாளில் வளர்ந்த முத்திநெறி வளம்பெறவே முதற்பொருளே அருளாய் குயிற்குரலும் மயில்நடமும் குரங்குவிளை யாட்டும் கோபாலா எனுமுழக்குங் குலவுமலைக் கொழுந்தே. 8 ஏழுமலை மீதிருக்கும் ஏழிசையின் பயனே ஏழைமுகம் பாராயோ எத்தனைநாட் செல்லும் வாழுமலை என்றுவந்தேன் வாழ்வுபெற வேண்டி வழியறியேன் துறையறியேன் வாழ்த்தும்வகை யறியேன் ஆழநினைந் தழவறியேன் அவனியிலேன் பிறந்தேன் ஆண்டகையே என்னசெய்வேன் ஆதரிப்பா ரிலையே வேழவினக் களிகண்டு வெருவுகின்றேன் ஐயா விசயனுக்குக் கீதைசொன்ன வேதாந்தப் பொருளே. 9 நற்பிறவி எனக்களித்தாய் நல்லுடலுந் தந்தாய் நானிலத்தில் வாழ்ந்துனது நளினமலர் மேவச் சிற்பரம வீணுரையால் சிதைத்துவிட்டேன் உடலைச் சீருடலை மீண்டும்பெறச் சித்தநெறி அறியேன் எற்புருகத் தவங்கிடக்க என்னுடலந் தாங்கா எங்குமுள இறையோனே என்றனிலை யுணர்வாய் வெற்பினிலே மங்கைமகிழ் வேந்தனென வந்தேன் வேதனைகள் தீர்ந்துய்ய வேங்கடவா அருளே. 10 19. நாமாவளி நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 1 நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 2 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 3 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 4 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 5 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 6 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 7 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 8 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 9 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 10 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 11 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 12 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 13 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 14 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 15 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 16 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 17 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 18 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 19 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 20 மனத்துக் கெட்டா மாதவனே மரணந் தவிர்ப்பாய் கேசவனே 21 எங்கு முள்ள இறையோனே என்னை ஆளாய் மறையோனே 22 உருவா யருவா யுளபொருளே உவந்தே குருவாய் வந்தருளே 23 எதற்கும் எதற்கும் காரணனே அதற்கும் அதற்கும் பூரணனே 24 வைகுந்த வாசா வாவா வண்மைத் திருவொடு வாவா 25 கமலத் திருவொடு வாவா கருடக் கொடியொடு வாவா 26 அடியவர் சூழ வாவா அணைந்தருள் புரிய வாவா. 27 பொன்னொளி மின்னும் முடியோனே பொருளென வந்தேன் அடியேனே 28 கமலக் கண்ணால் கருணைபொழி களைத்தே வந்தேன் இருளையொழி. 29 மலர்மகள் மார்பா வந்தேனே மனத்திற் பொழியாய் செந்தேனே. 30 சக்கரம் நோயை அழிப்பதுவே சங்கொலி சாவை ஒழிப்பதுவே. 31 நீலமேனி நிலவினிலே நித்தம் மூழ்கு நலமினியே. 32 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 33 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 34 ஒளியுறு திருவடி உருகாயோ ஒழுகுந் தேனைப் பருகாயோ 35 செந்தேன் பொழியுந் திருவடியே சிந்தையிற் சேர்ந்தால் போமிடியே 36 திருவடி சேர நினையாயோ செகத்தில் வாழ்வை வனையாயோ 37 கோசலம் வந்த கோமானே கோதண்ட மேந்திய பூமானே 38 நங்கை யுரிமை காத்தவனே நான்மறை போற்றும் மூத்தவனே 39 சோதர நேயப் பிறப்பிடமே சுந்தர மேனி அறப்படமே 40 மதுரையி லெழுந்த வான்மணியே மாதவர்க் கருளிய மேன்மணியே 41 தேரிடைப் பொலிந்த திருக்காட்சி தெய்வ மறைசொல் அருட்காட்சி 42 ஆக்க ளிடையே நின்றனையே ஆளாய் ஆளாய் என்றனையே 43 புன்னை முழங்குங் குழலோசை புந்தியி லுணர எனக்காசை. 44 கீதை குழலாய்க் கேட்ட லென்றோ கீழோன் வினைகள் வீட்ட லென்றோ 45 இனியகுழலைக் கேட்பதுவே இரவும் பகலும் வேட்பதுவே 46 பிழையைப் பொறுக்கும் பெரியோனே பிழைபல செய்தேன் சிறியேனே 47 கண்ணன் திருப்புகழ் பாடுவமே காதல் இன்பம் ஆடுவமே 48 கண்ணன் திருவடி சூடுவமே கருணை மழையில் ஆடுவமே. 49 கடலை மலையைப் பாருங்கள் கண்ணன் காட்சி ஓருங்கள் 50 கரிய மேகங் காணுங்கள் கண்ணன் வடிவம் பேணுங்கள். 51 சோலைக் கலையைச் சூழுங்கள் சோதி அலையில் வீழுங்கள் 52 எல்லாம் கண்ணன் திருக்கோலம் என்றுணர் அன்பே உருக்கோலும். 53 ஆழ்வார் தமிழில் ஆழ்வோமே அன்பில் என்றும் வாழ்வோமே. 54 20. வாழ்த்து திருமகள் வாழ்க வாழ்க தெய்வஐம் படைகள் வாழ்க தெருளளி துளவம் வாழ்க செழுங்கொடி வாழ்க வாழ்க கருநிறம் வாழ்க வாழ்க கருணைசேர் அடியார் வாழ்க திருமலை முதலா வுள்ள திருப்பதி பலவும் வாழ்க. திரு.வி.கலியாண சுந்தரனார் பாடிய திருமால் அருள் வேட்டல் முற்றிற்று  முன்னுரை இக்கால உலகம் எப்படி இருக்கிறது? எங்கணும் என்ன பேச்சு? விளக்கம் வேண்டுகொல்! வீடுகளில் வேற்றுமை - ஊர்களிற் பிரிவு - நாடுகளிற் பிணக்கு - யாண்டும் உறுமல் - கறுவல்! இவையெல்லாம் உருண்டு திரண்டு உலகைப் போர்க்களமாக்கிவிட்டன. ஐந்து கண்டமும் போரிலே மூழ்கியுள்ளன. இந்நிலைமை எப்பொழு தேனும் நேர்ந்ததுண்டோ? விலங்குச் சண்டையிலாதல் அறக்கடவுளுக்கு இடமிருக் கும். இக்கால மனிதச் சண்டையில் அறக்கடவுளுக்கு இட முண்டோ? உலகம் விரிந்தது; பரந்தது; பெரியது; மிகப் பெரி யது. பெரிய உலகில் அறக்கடவுள் தலைசாய்ப்பதற்கு ஒரு சிறு இடமுமில்லை! மன்பதை அலமருகிறது; நடுக்குறுகிறது; குண்டு குண்டு என்று கூக்குரலிடுகிறது; அங்கும் இங்கும் ஓடுகிறது; அலை கிறது; மடிகிறது. இந்நிலையில் புது உலகம் அறிஞரால் பேசப் படுகிறது. மன்பதை கேடுற்று அழிவதற்குக் காரணம் என்னை? ஒவ்வோர் உலகினர் ஒவ்வொன்று கூறுவர். அவற்றைத் திரட்டிப் பார்த்தால், அவை யாவும் ஒன்றில் அடங்குதல் காணலாம். அவ்வொன்று, மக்கள் கூட்டம் இயற்கை இறையை மறந்து, தன்னலம் என்னுஞ் செயற்கைப் பேய்க்கு இரையா யினமை என்று சுருங்கச் சொல்லலாம். மக்கள் கூட்டம் இயற்கை இறைவழி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்படி ஒழுகுகிறதா? ஒழுகியிருப்பின், உலகில் சாம்ராஜ்யமே முளைத்திராது; பொதுமை அறமே முகிழ்த் திருக்கும். சாம்ராஜ்ய முறை மாறவேண்டுமானால் மனிதரிடத் துள்ள குறைபாடுகள் நீங்குதல் வேண்டும்; சில குறைபாடுகளா தல் நீங்குதல் வேண்டும். இங்கே, சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அது, தன்னலத்துக்கு முதலாக உள்ள ஆசைப்பேய். ஆசைப்பேய் இப்பொழுது என்ன செய்கிறது? உயிர்களை அலைக்கிறது; உலகைப் பெரும் போர்க் களமாக்கி யிருக்கிறது; அரக்கரும் அஞ்சும் நிணக்களமாக்கி யிருக்கிறது. இப்போர், முடிவில் ஆசைப்பேயை ஓரளவிலாதல் அடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆசைப் பேய் அடங்க அடங்க ஒருவிதப் புது உலகம் அவ்வவ்வளவில் அரும்பிக்கொண்டே போகும். புதுமை உலகம் யாண்டிருந்து பிறக்கும்? வெறும் பாழிலிருந்தா பிறக்கும்? பழமைத் தாயினிடமிருந்து புதுமைச் சேய் பிறக்கும்? பழமை எது? இயற்கை இறைவழி. இவ்வழியி னின்றும் இக்கால உலகம் வழுக்கி வீழ்ந்துள்ளது. வீழ்ச்சியைப் போக்கவே இயற்கை இறை விரைந்து நிற்கிறது. இஃது அருளுடைய இயற்கை இறையின் கடமை. ஆதலின், இயற்கை இறையின் அருளால் ஒருவிதச் செம்மைப் புது உலகம் அரும்பியே தீரும். இறை ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே. இறை நெறியே சத் மார்க்கம் என்பது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - இறை; அதை அடைதற்குறிய மார்க்கம் இயற்கை. இயற்கைவழி இறையை உணரல் வேண்டுமாதலின், அவ்வழி இயற்கை - இறைவழி என்று சொல்லப்படுகிறது. இயற்கை - இறை வழியாவது சத்மார்க்கம் - சன்மார்க்கம். சன்மார்க்கம் உலகில் பல பெயர் பெற்றிருக்கிறது. பெயர்ப்பன்மையை நீக்கிப் பொருளை நோக்கினால் ஒருமையே புலனாகும். பெயர்ப் பன்மையில் மக்கள் மயக்குற்றமையால், அவர்கட்குப் பொதுமைப்பொருள் புலனாகாதொழிந்தது. அதனால் போராட்டம் மக்களிடைப் புகலாயிற்று. பொதுமையே சமரசம் என்பது. சமரசமே சன்மார்க்கம். எங்கே சமரசம் உண்டோ அங்கே சன்மார்க்கம் உண்டு. எங்கே சன்மார்க்கம் இருக்குமோ அங்கே சமரசம் இருக்கும். இரண் டுக்கும் தொடர்புண்மையால் சமரசம் சன்மார்க்கம் என்றும், சன்மார்க்கம் சமரசம் என்றும் இரண்டும் பொதுளச் சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றன. சுருங்கிய முறையில் சமரச சன்மார்க்கத்தை மார்க்கமென்றுங் கூறலாம். மார்க்கம் என்பதும், சன்மார்க்கம் என்பதும், சமரசம் என்பதும், சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே. சன்மார்க்கம் என்ன அறிவுறுத்துகிறது? ஈண்டைக்கு விரிவுரை வேண்டுவதில்லை. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டும் உள்ளது. அதை அடைய, மார்க்கம் என்னும் இயற்கையுடன் இயைந்து வாழ்தல் வேண்டும் என்று சன் மார்க்க போதமும் திறவும் என்றொரு நூல் என்னால் யாக்கப் பட்டுள்ளது. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டுமுள்ளது என்னுங் கொள்கை, மன்பதையில் ஆக்கம் பெறப்பெற, அதன்கண் சகோதரநேயம் ஓங்கி வளர்தல் ஒருதலை. சகோதர நேயத்தின் முன் ஆசைப்பேய் இடம் பெறுமோ? இடம் பெறுதல் அரிது. சன்மார்க்கம் ஆசைப் பேயை அடக்கவல்லது என்று சொல்வது மிகையாகாதென்க. சன்மார்க்கம் இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. சத் என்னுஞ் செம்பொருள் உணர்வை மக்கள் என்று பெற்றார்களோ அன்றோ சன்மார்க்கமும் அவர்களிடை விளங்கியிருக்கும். சத் அநாதி; சன்மார்க்கமும் அநாதி. யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற திருமொழி புற நானூற்றில் ஒரு மூலையில் ஒளிர்வது. இத்திருமொழியி லுள்ள பொதுமைச் செல்வம், முதல்முதல் என் உள்ளத்தை கவர்ந்தது. இப்பொதுமை, உலகின் நானாபக்கங்களிலும் அவ்வப்போது தோன்றிய பெரியோர் வாயிலாகப் பல மொழியில் வெளிவந்த பொது மறைகளிலெல்லாம் மிளர்தலை எனக்கு விளங்கச் செய்தது. வேறு சில கூட்டுறவுகளும் பொதுமை உணர்வை என்பால் வளர்த்தன. பொதுமை என்னுஞ் சமரசம் - சன்மார்க்கம் - உலகில் பல பெயர்களாக வழங்கப்படுகிறது. அவை: ஜைனம், பௌத்தம், சைவம், வைணவம், வேதாந்தம், கிறிதுவம், இலாம் முதலி யன. இந்நாளில் பொது நெறியை மாடம் பிளவட்கி என்ற சமரச சன்மார்க்க ஞானியார் தியோசபி என்றனர். மக்கள் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி விழும்போ தெல்லாம், பெரியோர் - தீர்க்க தரிசிகள் - நபிமார் - தோன்றிக் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற முறையில் சன்மார்க்கத்தை அறிவுறுத்திச் செல்வது வழக்கம். அதனால் அடையும் மாறு தலைப் புது உலகமலர்ச்சி என்று மக்கள் கொள்வதும் வழக்கம். மெய்யறிவு பெற்றவர்களுக்குப் பழமையும் புதுமையும் ஒன் றாகவே விளங்கும். இந்நாளில் புது உலக மலர்ச்சி பேசப்படுகிறது. அப்புது உலகம் சமரச சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதா யிருத்தல் வேண்டும். சமரச சன்மார்க்கமே புது உலக ஆக்கத் துக்குரிய அவதாரமென்று யான் கருதுகிறேன். இவ்வேளையில் சமரச சன்மார்க்கத்தொண்டு ஆங்காங்கே நிகழப்பெறுதல் சிறப்பு. பல துறையில் உழன்று பலவிதப் பணிசெய்த எளியேனுக்கு இற்றை ஞான்று சன்மார்க்கப் பணியிலே வேட்கை மீக்கூர்ந்து செல்கிறது. இதை ஆண்டவன் அருள் என்றே யான் கொள் கிறேன். சன்மார்க்கத் தொண்டுகள் பலதிறத்தன. அவற்றுள் ஒன்று நூற்றொண்டு. இத்தொண்டிலும் என்னைத் திருவருள் உந்தியது. என்னால் இயற்றப்பெற்ற நூல்களிற் பெரும்பான்மை யன சமரச சன்மார்க்கக் கொள்கைக்கு அரண் செய்வனவாம். பாட்டுத் தொண்டில் யான் பெரும் பொழுது போக்குவ தில்லை. ஓய்ந்த நேரங்களில் மிகச் சிறு பொழுது யான் பாட்டுத் தோண்டில் தலைப்படுவதுண்டு. பொதுமைப் பாடல்கள் சில என்னால் யாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப, பொதுமை வேட்டல் என்னுந் தலைப்பு அணியப்பட்டது. தலைப்பு நூலின் உள்ளுரையை நன்கு விளங்கச் செய்யும். விளக்கம் வேண்டுவதில்லை. பொதுமை வேட்டல் புது உலக மலர்ச்சிக்கு வேண்டற் பாலது. இப் பொதுமை வேட்டல் அப்புது உலக ஆக்கத்துக்கு ஒரு மூலையிலாதல் ஓரளவிலாதல் துணை செய்யுமென்று நம்புகிறேன். மலர்க புது உலகம்; மலர்க பொதுவுலகம்; மலர்க அற உலகம்; வாழ்க மார்க்கம்; வாழ்க சங்கம்; வாழ்க தொண்டு. இந்நூல், உலகப் போரிடை - போர் முழக்கம் சென்னை நகரைப் பலவழியிலும் கலங்கச்செய்த வேளையில் - காகிதப் பஞ்சம் நெருக்கிய நேரத்தில் வெளிவந்தது. பிழை பொறுக்க. இராயப்பேட்டை 10-1-1942 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் 1. தெய்வ நிச்சயம் தெய்வமெனும் ஒருமொழியைச் செப்பக் கேட்டேன் செறிகலையில் மொழிப்பொருளைச் சேரக் கற்றேன் மெய்யெனவே அதையுணர மேலுஞ் சென்றேன் மேதினியில் பலதுறைகள் மேவிப் பார்த்தேன் பொய்யென்ற முடிவினுக்குப் போகுங் காலைப் புத்தமிர்தப் பெரியர்சிலர் போதங் கண்டேன் உய்யுநெறி உழைப்பாலே உறுமென் றெண்ணி உனையுணரும் பணியேற்றேன் ஒருமைத் தேவே. 1 அண்டமெலாம் இயங்கருமை ஆய்ந்து நோக்கின் அத்த! நின துண்மையிலே ஐயந் தோன்றா எண்டிசையுங் கடந்திலங்கும் இறைவ! உன்னை எல்லையுற்ற பொருளளவில் எடுத்தல் நன்றோ கண்டநிலை கொண்டுநின தகண்டந் தேர்ந்தேன் கண்ணுக்குப் புலனாகாக் கருத்துந் தேர்ந்தேன் தொண்டினிலே ஈடுபட்டுத் தோயத் தோயத் துணைவருமென் றறிந்துவந்தேன் தூய ஒன்றே. 2 தத்துவமெல் லாங்கடந்த தனித்த ஒன்றே தடைஎல்லைக் கட்டில்லாத் தனிமைத் தேவே தத்துவத்துள் உழன்றுழன்று தடவிப் பார்த்தும் தடைஎல்லைக் கட்டுள்ளே தடவிப் பார்த்தும் சத்தியனே உனக்கின்மை சாற்ற லாமோ தடைகடக்கும் வழிநாடல் சால்பே யாகும் பித்தருக்குங் குருடருக்கும் பிறங்கா எல்லாம் பேருலகில் இல்லையெனப் பேசல் நன்றோ. 3 வாக்குமனங் கடந்துநிற்கும் வள்ளால் உன்னை வாக்குடையேன் மனமுடையேன் வாழ்த்தல் எங்ஙன் போக்குவர வில்லாத பொருளே உன்னைப் போக்குடையேன் வரவுடையேன் போற்றல் எங்ஙன் யாக்கையிலே புகுந்துள்ள யானென் செய்வேன் யாதொன்று பற்றினதன் இயல்பாய் நிற்பேன் தாக்குடையேன் கரணத்தால் சார வந்தேன் தக்கவழி காட்டாயோ தனிமைத் தேவே. 4 என்னறிவுக் கெட்டாத இறையே உன்னை ஏத்துநெறி காணாமல் எண்ணி எண்ணிக் கன்னெஞ்சும் புண்ணாகிக் கரையுங் காலை, கவலற்க; இயற்கையுடல் கடவுட் குண்டு நின்றொழுக என்னுமொலி நெஞ்சிற் றோன்றி நிறைமகிழ்ச்சி யூட்டியதும் நின்றன் அன்பே நன்றுடையாய் இருநிலையாய் ஞான மூர்த்தி நாயகனே அருட்பெருக்கு நவிலற் பாற்றோ. 5 எட்டாத ஒருநிலையை எண்ண வேண்டேன் எனக்கினிய இயற்கைநிலை ஏன்று கொண்டேன் முட்டாத வழிகண்டேன் முதல்வா வெய்ய மூர்க்கநெறி இனியுழலேன் முன்னி முன்னிக் கட்டாத வீட்டினிலே கருத்து வைத்தேன் காணாத காட்சியெலாங் காண்பேன் சொல்ல ஒட்டாத நிலையெல்லாம் உணர்வேன் எல்லாம் உன்னருளே எனைஆளும் உண்மைத் தேவே. 6 இறையவனே இயற்கையுடல் என்றே கொண்டாய் என்றோநீ அன்றியற்கை இரண்டும் ஒன்றே முறைமுறையே பிரித்தெடுத்தல் முடியா தப்பா மூத்தவரும் இம்முடிவே முழங்கிச் சென்றார் நிறைவாகி இயற்கையிலே நிலவுங் கோலம் நெஞ்சினிலே பதிவாகி நிலைக்க, நோயும் நறைமூப்பும் சாக்காடும் நாச மாக, நலியாத இளமைநலம் நண்ணச் செய்யே. 7 இயற்கைவழி நின்றொழுக இன்பந் தோன்ற எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இரக்கங் கூடச் செயற்கையிலே கருத்திருத்துஞ் சித்தஞ் சாகச் சீவவதை நினையாத சிந்தை சேர முயற்சியுயிர் ஈடேற மூல மாகி முந்துதுணை புரிந்தருளும் முதல்வா நல்ல பயிற்சி மிகவழிகாட்டிப் பண்பு செய்வாய் பரங்கருணைப் பெருங்கடலே பான்மைத் தேவே 8 ஒன்றான இறையேஉன் இயற்கைக் கோலம் ஓவியமாய்க் காவியமாய் உதவ வேண்டி நன்றாகச் செய்தமைத்தார் ஞானச் செல்வர் ஞாலத்தில் அந்நுட்பம் நாளும் நாளும் பொன்றாது பொலிந்திவரின் புகழே யோங்கும் பொன்றிவரின் சிற்பமெலாம் பொறியாம் கல்லாம் கொன்றாடும் விலங்காகிக் குலைவர் மக்கள் குறித்தருளாய் கலைவளரக் கோதில் கோவே. 9 மலையாகிக் காடாகி வயலாய் ஆறாய் மணல்வெளியாய்க் கடலாகி மதியாய் எல்லாய்க் கலையாகி எஞ்ஞான்றுங் காட்சி நல்கும் கருணையிலே நாடோறுங் கலந்து வாழ்ந்தும் சலியாத உனக்கின்மை சாற்றல் நன்றோ தரைநடந்தும் அதைமறப்போர் தலத்தி லுண்டு தலையான வான்பொருளே தண்மை நீங்காச் சத்தியமே நித்தியமே சாந்தத் தேவே. 10 2. தெய்வ முழக்கம் உலகமெலாங் கடந்துகடந் தொளிருமொரு தெய்வம் உலகுதொறுங் கலந்துகலந் தோங்குவிக்குந் தெய்வம் இலகுசரா சரமெல்லாம் இயக்கி நிற்குந் தெய்வம் இன்பறிவாய் அன்பருளாய் என்றுமுள தெய்வம் அலகிலொளி ஒலியாகி அகிலஞ்செய் தெய்வம் அருங்கலையில் நடம்புரியும் ஆனந்தத் தெய்வம் பலசமய ஒருமையிலே பயன்விளைக்குந் தெய்வம் பழம்பொருட்கும் பழம்பொருளாம் பழந்தெய்வம் பாரே. 1 அங்கிங்கென் னாதபடி எங்குமுள தெய்வம் அளவைகளுக் கெட்டாத அகண்டிதமாந் தெய்வம் பொங்கியற்கை உடற்குயிராய்ப் பொலிகின்ற தெய்வம் பொழிந்தருளை உயிர்களுக்குப் புகலாகுந் தெய்வம் தங்கியற்கை நெறியினிலே தாண்டவஞ்செய் தெய்வம் சாகாத வரமளிக்குஞ் சால்புடைய தெய்வம் புங்கவர்தம் நெஞ்சினிலே புகுந்திருக்குந் தெய்வம் புதுப்பொருட்கும் புதுப்பொருளாம் புதுத்தெய்வம் போற்றே. 2 மண்புனல்தீ வளிவெளியாய் மன்னிநிற்குந் தெய்வம் மதிகதிராய் மன்னுயிராய் மகிழ்விக்குந் தெய்வம் கண்முதலாம் உறுப்புயிர்க்குக் கதிக்கின்ற தெய்வம் கருத்தினிலே கோயில்கொண்டு காக்கின்ற தெய்வம் எண்ணெழுத்தாய் ஏழிசையாய் இசைப்பயனாந் தெய்வம் எம்மறையுங் குருவழியே இயம்புகின்ற தெய்வம் உண்மைஅறி வானந்த உருவான தெய்வம் ஒருநெறியாம் பொதுமையிலே ஓங்குதெய்வம் ஒன்றே. 3 விண்ணாடு நீலஒளி விரிக்கின்ற தெய்வம் வெண்கோளாய்ப் பிறகோளாய் மின்னுகின்ற தெய்வம் தண்ணாரும் மதியாகி நிலவுபொழி தெய்வம் தனிச்சுடராய் வெயிலுமிழும் சத்துடைய தெய்வம் மண்ணாகி மலையாகி மனங்கவருந் தெய்வம் மரமாகிக் காடாகி வளர்பசுமைத் தெய்வம் பண்ணாத பாட்டாறாய்ப் படர்ந்தோடுந் தெய்வம் பரவையாய் அலைகொழிக்கும் பரதெய்வம் பாடே. 4 நீரருந்து மானிறத்தில் நிலவுகின்ற தெய்வம் நிறைஅமைதி ஆனினத்தில் நிறுத்தியுள்ள தெய்வம் காரமருங் குயில்குரலில் கலந்தினிக்குந் தெய்வம் கானமயில் நடத்தினிலே காட்சியளி தெய்வம் வாரமிகு பைங்கிளியாய் வாய்மலருந் தெய்வம் வானப்புள் பாட்டொலியாய் வாழுகின்ற தெய்வம் நாரலரில் வண்டிசையாய் நாதஞ்செய் தெய்வம் நல்லரவாய்ப் படமெடுத்து நண்ணுதெய்வம் நாடே. 5 இயற்கை அன்னை தனைக்கலந்தே இன்பளிக்குந் தெய்வம் ஏகாந்த இனிமையிலே இயங்குகின்ற தெய்வம் செயற்கையெலாம் ஓடுங்கிடத்தில் திகழுகின்ற தெய்வம் சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தனையாந் தெய்வம் உயிர்க்கெல்லாம் உயிர்ப்பாகி ஊக்கம்விளை தெய்வம் ஒழுக்கத்தில் உயர்ந்தோருக் கொழுங்கான தெய்வம் பயிற்சியினால் மனங்குவிந்தால் பார்வையளி தெய்வம் பாராதி அண்டமெலாம் பரவுதெய்வம் பாரே. 6 ஆதியின்றி அந்தமின்றி அறுதியற்ற தெய்வம் அகலமொடு நீளமற்ற அளப்பரிய தெய்வம் சாதிமதக் கட்டுகளில் சாராத தெய்வம் சமயப்போர்ச் சாத்திரத்தின் சார்பில்லாத் தெய்வம் நீதியிலே விளங்குகின்ற நின்மலமாந் தெய்வம் நித்தியமாய்ச் சத்தியமாய் நிறைந்துள்ள தெய்வம் சோதியெலாம் விளங்கும்அருட் சோதியெனுந் தெய்வம் சுதந்திரத்தின் சுதந்திரமாஞ் சுத்ததெய்வம் சூழே. 7 அறிவினிலே உணர்வோருக் கறிவாகுந் தெய்வம் அன்பினிலே தெளிவோருக் கன்பாகுந் தெய்வம் அறியாமைச் செயற்கழுதால் அணைந்திரங்குந் தெய்வம் அன்பிலர்க்கும் அன்பூட்ட ஆர்வங்கொள் தெய்வம் செறிஉயிர்க்கு நலஞ்செயவே சீவிக்குந் தெய்வம் சிந்தனையில் தேனெனவே தித்திக்குந் தெய்வம் வெறிமலர்வாய்ப் பெண்ணொளியில் விளங்குகின்ற தெய்வம் விண்ணுலகும் மண்ணுலகும் விளம்புதெய்வம் மேவே. 8 அண்டமெலாம் அடுக்கடுக்கா அமையவைத்த தெய்வம் அவைஇயங்க ஓயாமல் ஆற்றலளி தெய்வம் பிண்டமெலாம் ஒழுங்குபெறப் பிறப்பிக்குந் தெய்வம் பிறக்கும்உயிர் அத்தனைக்கும் பேரருள்செய் தெய்வம் தண்டனையே அறியாத தயையுடைய தெய்வம் தாயினிலும் பரிவுடைய தனிக்கருணைத் தெய்வம் தொண்டர்படை உயிர்ப்பாகச் சூழுகின்ற தெய்வம் சூதுபகை கொலையற்ற தூயதெய்வம் சொல்லே. 9 கருவினிலே பிறவாது கருவளிக்குந் தெய்வம் கரணமின்றி உயிர்களுக்குக் கரணம்அமை தெய்வம் கருதுமன மின்றியெலாங் கருதுகின்ற தெய்வம் கண்களின்றி எதையெதையுங் காண்கின்ற தெய்வம் உருவின்றி எங்கெங்கும் உலவுகின்ற தெய்வம் ஓதலின்றி மறையெல்லாம் ஓதுவிக்குந் தெய்வம் குருவினுளத் திலங்கியுண்மை குறித்தருளுந் தெய்வம் குறைவில்லா நிறைவான கோதில்தெய்வங் கூறே. 10 3. தனிமைத் தெய்வம் மண்கடந்து புனல் கடந்து தீக்கடந்து வளிகடந்து விண்கடந்து மதிகடந்து வெயில்கடந்து மற்றுமுள ஒண்சுடரெல் லாங்கடந்தே ஒளிவழங்கும் பெரும்பிழம்பின் கண்கடந்து நிற்குமொன்றே கருதுவதெவ் வாறுனையே. 1 அண்டபகி ரண்டமெலாம் அடுக்கடுக்கா ஆய்ந்தாலும் அண்டஒணா தகன்றகன்றே அப்பாலுக் கப்பாலாய்த் துண்டஅணு வுக்கணுவாய்ச் சூழணுவுக் கிப்பாலாய் மண்டியொளி ரகண்டிதமே வாழ்த்தலுனை எப்படியோ. 2 பெரிதுக்கும் பெரிதாகிச் சிறிதுக்குஞ் சிறிதாகும் பெரியவனே சிறியவனே எனப்பேச்சும் பேச்செல்லாம் அரியஉனை அறியும்வழி அறிவுறுத்துங் கருவிகளோ தெரிவழியும் உண்டுகொலோ சிற்பரமே மெய்ப்பொருளே. 3 விழிகளுக்கு மெட்டவிலை செவிகளுக்கு மெட்டவிலை மொழிகளுக்கு மெட்டவிலை முனைமனத்துக் கெட்டவிலை செழிஉயிர்ப்புக் கெட்டவிலை சிற்பரனே உனைநினைந்து தொழுகைக்கு வழியறியேன் தொழும்பனென்ன செய்வேனே. 4 அளவையெலாம் உனையரற்றும் அவையுன்னை அறிந்ததுண்டோ உளமறைகள் உனைஉரைக்கும் உன்னைஅவை உணர்ந்ததுண்டோ தெளிகலைகள் செப்புமுனைத் தெரிந்தனவோ உன்னிருக்கை முளைசிறியேன் உனைக்கண்டு முன்னலெங்ஙன் முன்னவனே. 5 உலகமெலாம் தோன்றி நின்றே ஒடுங்குதற்கு நிலைக்களனாய்க் கலைகளுமே பிறந்தொடுங்குங் கருவாகி நின்றநிகழ் ஒலிகடந்தும் ஆதார ஒளிகடந்தும் மேலோங்கி இலகுமிறை உனைஏழை எவ்வண்ணம் இறைஞ்சுவனே. 6 அறிவேநீ என்றுன்னை அகிலமறை முழங்கஎன்றன் அறிவாலே ஆய்ந்தலைந்தேன் அணுகிஎட்ட இயலவில்லை அறிவாலும் உனையுணரல் அரிதாதல் விளங்கியதே அறிவரிய மெய்ப்பொருளே அடையும்வழி உண்டுகொலோ. 7 குறிகாணின் கும்பிடுவன் குணம்விளங்கின் நினைந்திடுவன் நெறிதோன்றின் நடந்திடுவன் நிலம்பெற்றால் உழுதிடுவன் உறைவடைந்தால் குடிபுகுவன் ஊற்றெழுந்தால் குளித்திடுவன் பொறிவாயி லில்லாத பொருளேஎன் செய்குவனே. 8 எப்பொருளும் நீயென்றும் எங்கெங்கும் நீயென்றும் செப்புமொழி கலப்புநிலை சிறப்புறுநின் தனிமைநிலை எப்படியில் முயன்றாலும் எந்நிலைக்கும் எட்டவிலை ஒப்பரிய மெய்யறிவே ஒருவழியுங் காணேனே. 9 தனிமைநிலை அடைவாகும் தனிமுயற்சி தேவையிலை எனவெழுந்த மெய்க்குரவர் ஈரமொழி பற்றிநின்று பனிமழையீர் வான்மலையீர் பசும்பொழிலீர் கனைகடலீர் இனிகுயிலீர் நடமயிலீர் ஏழையுமை அடைந்தேனே. 10 4. இயற்கைத் தெய்வம் எப்பொருட்கும் எட்டாத இயல்புடைய ஐயா ஏழைஉயிர்க் கருள்புரிய இயற்கையுடல் கொண்டாய் அப்பநின தருளுடைமை அளவெவரே உடையார் அழகியற்கை வழியொன்றே அருள்வழியென் றுணர்ந்தேன் தப்பறுக்க அவ்வழியே சாரவந்தேன் என்றும் தயையுடையாய் பிழைபொறுத்துத் தண்மைவழங் காயோ ஒப்புரவே உள்ளொளியே உண்மைநிலைப் பேறே ஓதுகலை உணர்வினருக் குணர்வரிய ஒன்றே. 1 உடலியற்கை உயிர்நீயாய் உதவுகின்ற அருளை உன்னிஉன்னி உருகிநிற்க உளமொன்று போமோ கடலுலகில் சாதிமதக் கட்டழிந்தால் நின்றன் காட்சியளி இயற்கைநெறிக் கண்பெறலாம் நன்றே கடபடமென் றுருட்டுவெறிக் கடுவாதத் தர்க்கம் கருத்தற்ற கிரியைகளும் கட்சிகளும் போரும் நடனமிடும் நெஞ்சறியா நாயகனே என்றும் நாதாந்த மோனநிலை நண்பருணர் பொருளே. 2 மண்ணுலகும் விண்ணுலகும் மற்றுலகுங் கோயில் மதிகதிருங் கோளெல்லாம் மண்டிலமுங் கோயில் கண்கவரும் கான்மலையுங் கடல்வயலுங் கோயில் கருத்தொலியும் எழுத்துடனே கலைகளுமே கோயில் எண்ணரிய எவ்வுடலும் எவ்வுயிருங் கோயில் எந்தைநின்றன் கோயிலில்லா இடமுமுண்டோ ஐயா தண்மைபெற என்னுளத்தைக் கோயில்செய்யத் தமியேன் தவறிவிட்டேன் வான்சுடரே தயைபுரிவாய் இன்றே. 3 எங்குநிறை அகண்டிதமே எல்லையற்ற ஒன்றே ஏழைமனம் எவ்வழியில் எண்ணுவதென் றிரங்கி இங்கியற்கை உடல்கொண்டாய் எழிற்கருணைத் திறத்தை எவ்வுளத்தால் எவ்வுரையால் எங்ஙன்நான் புகழ்வேன் பொங்கியற்கைக் கூறுகளில் புந்திசெலல் வேண்டும் புன்செயற்கை நெறியுழலும் புந்திகெடல் வேண்டும் தங்குபிணி அறுக்கஎன்றுஞ் சாகாமை வேண்டும் தண்டனையே புரியாத தயைநிறைந்த அரசே. 4 ஓருருவும் ஒருபெயரும் ஒன்றுமிலா ஒன்றே உனைநினைக்கும் வழியறியேன் ஊனஉளம் உடையேன் சீருருவ இயற்கையிலே சேர்ந்தினிக்கும் நிலையைச் சிந்திக்க என்றுரைத்தார் செந்நெறியில் நின்றோர் பாருருவம் முதலாய பகருருவம் நினைந்தேன் படியுருவம் அவையெல்லாம் பாட்டொலியாய் நேர்ந்தால் ஏரொளியை உணர்ந்திடுவேன் எண்ணாமை தெளிவேன் எதற்கும்நின தருள்வேண்டும் இறங்கிஅருள் செய்யே. 5 மலையினிலே சென்றிருந்தால் மாதேவ நின்றன் மாணியற்கைக் கூறெல்லாம் மனஅமைதி செய்யும் நிலையதனை என்னென்பேன் நேர்மைஅக விளக்கே நிலமடியாய் வான்முடியாய் நீல்கடலுங் கானும் பொலிவுடையாய்ப் போர்வையுமாய்ப் பொற்கதிர்கள் விழியாய்ப் பொங்குருவத் தோற்றமெலாம் புந்திவிருந் தாகும் கலையுரைக்குங் கற்பனையில் கண்மூடி வழக்கில் கருத்திருத்திச் சாவோர்க்குக் கடவுளருள் செய்யே. 6 மலையிவர்ந்து பசுங்குடைக்கீழ் மனமொன்றி நோக்கின் வனம்பெருக்கும் பசுமைவெள்ளம் வந்திழியுங் காட்சி பலநதிகள் பாட்டணியாய்ப் பரந்தோடுங் காட்சி பச்சைமணிக் குழைவெனவே பயிர்பரப்புங் காட்சி நிலைமணல்கால் வெண்ணிலவு நிறைவழங்குங் காட்சி நீள்கடலில் கட்டுவண்ண நீலநிறக் காட்சி கலவையுற எய்தொருமைக் கவின்வனப்பு நினதாம் கருணையமு துண்பதற்குக் கடவுளருள் செய்யே. 7 மணியருவி முழவொலியாய் வண்டிசைக்கும் பாட்டாய் மயில் நடமாய் குயில்குரலாய் மலர்மணமாய் வந்தே அணைமந்த மாருதமாய் ஐம்புலனில் ஒன்றி அகஅமுதாய்ச் சுவைத்தினிக்கும் ஆனந்த மயமே பிணிபுனலில் பொய்யிசையில் பேய்நடவெங் குரலில் பெயர்மணத்தில் பொறிகாற்றில் பெற்றியிழந் தெரிந்து திணியுலகம் நரகாச்சே தெளிவுபெற இறையே தெய்வநிலை இயற்கைவழித் திருவருள்செய் இன்றே. 8 காலையிலே கடல்முளைக்கும் கனலுருண்டைப் பிழம்பே கதிர்மூழ்கி உயிர்ப்புண்டு கவலைபிணி போக மாலையிலே கிளர்ந்தெழும்பும் மணிக்கலச அமுதே வழிந்துபொழி நிலவுமழை வளமைவிளை வாகச் சோலைமல ரெனவானில் சூழ்விளக்கு நிரையே துலங்குநகை மகிழ்வாலே தொடர்புலன்க ளொன்ற ஓலமிடும் என்னிருளை ஒழித்தருளாய் ஒளியே ஒளிக்கெல்லாம் ஒளிவழங்கும் ஒளிவண்ண மலையே. 9 மங்கையர்கள் சூழலிலே மருவுகின்ற மதியே வளர்தெய்வ மனக்குழவி மழலையொழு கமுதே பொங்கிவரும் வேனிலிடைப் புகுந்தளிக்கும் விருந்தே பூந்துணர்கள் ஏந்துகரப் பொழில்பொழியு மணமே பங்கயத்துப் பாணரினம் பரிந்தனுப்பும் பண்ணே பரநாதப் பாக்கலையில் பள்ளிகொண்ட அறிவே புங்கவருண் மலர்பிலிற்றும் புதியசுவைத் தேனே பொலிவியற்கை வடிவிறையே புந்திஎழுந் தருளே. 10 5. இயற்கை நெறி இயற்கையின் னெறியே இறைவநின் னெறியென் றிசைத்தனர் குரவர்க ளெல்லாம் பயிற்சியி லதுவே பண்பென விளங்கும் பான்மையைத் தெளிந்தனன் அரசே செயற்கையின் நெறியால் தீமையே விளைதல் தெரிந்தனன் தெரிந்ததைத் தடுக்கும் முயற்சியி லிறங்க முனைந்தனன் முதலே முழுத்துணை அருளுதி விரைந்தே. 1 இயற்கையே கோயில் இயற்கையே வாழ்வு இயற்கையே யாவுமென் றறிந்தே இயற்கைநன் னெறியில் இயைந்துநின் றொழுக ஏந்தலே கொண்டனன் உறுதி செயற்கைவெந் நகரச் சிக்குறு வாழ்வு சிதைப்பதைத் தெய்வமே உணர்வாய் அயர்ச்சியில் அழுந்தும் அடியனென் செய்வேன் ஆதரித் தாண்டருள் செய்யே. 2 பசுந்தலை யாட்டி மலர்க்கர நீட்டிப் பரிவுடன் அழைமர மின்றி விசும்புயர் கோப்பு வெளிறுகள் நின்றென் விண்புடை விரிபொழில் போர்த்துத் தசும்பொளி காலுந் தழைக்குடில் வீடாம் சாந்தமே வேண்டுவன் இயற்கை வசம்பொலிந் துயிர்க்கு வளஞ்செயு மழகு வள்ளலே அருள்பொழி மழையே. 3 உலகினி லிருந்தே உடலினை யோம்பி உத்தமப் பெண்ணுடன் வாழப் பலகலை இயற்கைப் பண்புகள் விளங்கப் பரவருள் நிலைதெளி வாக அலகிலா ஒளியே அவைகளைத் துறத்தல் அன்பிலாச் செய்கையென் றுணரத் திலகமே இயற்கைச் செல்வமே செய்த திருவருட் டுணைமற வேனே. 4 நாடெலாம் வளர நல்குர வொழிய ஞானமா நெறியெலாந் தழைக்க ஆடவர் மகளிர் அன்பினில் திளைக்கும் அறநெறி ஓங்குதல் வேண்டும் வீடென ஒருவர் ஒருவரை விடுத்து வெறுப்பது வேதனை வேண்டா தேடரும் பொருளே தெய்வமே இயற்கைச் செல்வமே திருவருள் செய்யே. 5 இந்தநல் லுலகம் இயந்திரப் பேயால் இனிமையை எரிப்பதால் மைந்தர் சுந்தர மிழந்தார் தொல்லையில் படிந்தார் துயர்விளை நோயினை மணந்தார் சிந்தனை யற்றார் செயற்கையில் வீழ்ந்தார் தெய்வமே செய்வதொன் றறியார் எந்தநாள் உய்வர் எந்தையே இயற்கை எழினெறி காப்பதுன் கடனே. 6 பிறவியில் வாழ்வில் பேற்றினில் பொருளில் பெட்புறு சமத்துவம் நிறைந்தால் தறையினிற் பிணக்கும் சண்டையுஞ் சாய்ந்து சாந்தமே நிலவுமென் றறிந்து முறைமுறை தொண்டு முன்னியே ஆற்ற மூர்த்தியே முடிவிலா முதலே கறையிலா இயற்கைக் காட்சியே அன்பால் கடையனுக் குதவிய தருளே 7 காலையி லெழுந்து கடன்களை முடித்துக் காற்றிலுங் கதிரிலுங் குளித்துச் சோலையி லுலவிச் சுரக்குநீ ராடித் தொழுதுனைச் சிந்தனை செய்து சீலமும் நலமும் சேருண வருந்திச் சீர்தொழில் பிறர்க்கென ஆற்ற மேலவர் கொண்ட வேர்நெறி யோங்க வேண்டுவன் கருணைசெய் இறையே. 8 மலைகடல் போந்து மகிழ்ச்சியில் திளைத்து மனத்தமு துண்ணலும் நல்ல கலைகளில் நுழைந்தக் காட்சியைக் கண்டு கருத்தினி லுண்ணலும் என்றும் அலைதரு புலன்கள் அமைதியிற் படிவித் தருணெறிக் கரண்செயல் தெளியத் தலையடி யில்லாத் தனிமுதற் பொருளே தற்பரா நிகழ்த்திய தருளே. 9 மலைகடல் காடு மதிகதிர் முதலா மன்னிய இயற்கையின் கூறு பலபல வாறு நலங்கரு தாது பரிந்துயிர்க் குதவுதல் காட்டி உலகினில் ஒருவர் மற்றவர்க் குதவ உறைவதே இயற்கையென் றுணர்த்த இலகொளி விளக்கே இழிநெறி யுழலும் ஏழையை எடுத்தருள் இறையே. 10 6. இயற்கை வாழ்வு ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் அமர்ந்துறை செந்நெறி வாழ வீணிலே ஒருவர் ஒருவரை விலக்கி வெறுத்தழி வெந்நெறி வீழத் தாணுவே இயற்கைத் தாயுடன் பிரியாத் தந்தையே உயிரொளி பெற்று மாணுற உலக வாழ்வினை வைத்த மன்னனே அருள்புரி இன்னே. 1 அன்புநீ யன்றோ அன்பினை யடைய அன்புசேர் நெறியதே வேண்டும் கன்னியை மணந்து கான்முளை ஈன்றால் கடலெனப் பெருகுநல் லன்பே அன்னவள் தன்னை அகன்றுநீத் துறைந்தால் அடைத்திடும் அன்பெனும் ஊற்றே அன்பழி துறவு அழிதலே வேண்டும் அன்பினில் விளைந்தஆ ரமுதே. 2 பொழிலெனப் பொலியும் பொன்னொளிப் பெண்ணைப் பொறுமையை அன்னையை அன்பை இழிவெனக் கருதி ஏசுவோ ரிங்கே எங்கிருந் துதித்தனர் அந்தோ! பழியினைச் சுமக்கும் பாவரே யாவர் பகுத்தறி வவர்பெறச் செய்யே வழிவழி இயற்கை வாணியை மணந்து மாநிலம் வளர்த்தருள் பதியே. 3 மண்ணினைப் பொன்னை மங்கையைத் துறந்தால் மாநெறி கூடுமென் றுரைத்தல் கண்ணிலார் கூற்றாங் கடவுளே எங்கும் கலந்தநீ மூவிடங் கரவோ எண்ணமே மாயை இயற்கையின் உயிரே ஈசனே வெறுப்புறு துறவாம் புண்ணெறி எரிவால் புகுந்தநோய் போதும் போலியை ஒழித்தருள் செய்யே. 4 தாய்மையின் ஒளியே தனிமுத லெங்கும் தங்குறு நின்னொளி யுணர்த்தும் தூய்மையாந் திறவு துணைபுரி தாயைத் தூற்றலும் பழித்தலும் அறமோ பேய்மனச் சிறியர் பேச்செலாம் ஒழிக்கப் பெரியனே திருவுளங் கொள்க வாய்மையே வளர வள்ளலே கருணை வருவழி வேண்டுவன் முறையே 5 மங்கையை மாயா மலமெனச் சில்லோர் மருட்சியால் சொற்றனர், மாயை எங்குள தென்றே எண்ணின ராயின் ஏங்குவர் தம்முள மென்றே தங்கிடந் தேர்ந்து சாய்த்திடின் மங்கை தற்பர நின்னொளி யாடும் பொங்கிட மென்று போற்றுவர் தெளிந்த புந்தியிற் பொலிதரு பொருளே. 6 எங்கணு முள்ள இறைவனே உன்னை எப்படிக் காணுத லென்று சங்கையே கொண்டு சாதனஞ் செய்தும் சார்நிலை பெறுவதோ இல்லை நங்கையை மணந்து நன்னெறி நின்றால் ஞானமும் தியாகமும் அன்பும் துங்கமும் தோன்றித் தொடர்வழி காட்டும் தூயனே துணைபுரி யாயே. 7 தேமொழிப் பெண்கள் சேரிடச் சூழல் தெய்விகப் பூம்பொழிற் காட்சி ஏமுற வழங்கும் இனிமையை, மாயை என்றெண எம்மனம் எழுமே தோமுள மனத்தர் சொல்லிய உரையால் தொல்லையே விளைந்தது போதும் சேமுறும் இயற்கைச் செந்நெறி வளரச் செல்வமே திருவருள் செய்யே. 8 முத்தியென் றெண்ணி முகமெலாஞ் சிவக்க மூச்சினை அடக்கியே வந்தோர் சத்திழந் தீரல் சவலையுற் றிறந்த சரித்திரம் பலபல என்னே பத்தியை வளர்க்கும் பாவையை மணந்து பரநலம் பேணியே வாழும் சத்திய மார்க்கந் தழைத்தினி தோங்கத் தற்பர தயைபுரிந் தருளே. 9 மாசிலா வீணை மாலையின் மதியம் மலர்மணஞ் சொரிபொழில் நன்று வீசிடு தென்றல் வீங்கிள வேனில் வெறிமலர் வண்டறை பொய்கைத் தேசெலாம் பொலியுந் தெய்விகப் பெண்ணோ சிற்பர தற்பர மாயை நேசமே! இயற்கை நெறியினைத் தூர்க்கும் நீசத்தைக் களைந்தருள் செய்யே. 10 7. பெண்மை தாய்மையுறை பெண்ணுலகம் தயவுடைய பெண்ணுலகம் வாய்மைவளர் பெண்ணுலகம் வண்மைமலர் பெண்ணுலகம் தூய்மைவழிச் சிறந்தோங்கத் தொல்லியற்கை வடிவான ஆய்பொருளே அருள்புரியாய் அகிலமெலாம் ஒளிபெறவே. 1 பெண்ணிலவு பொழிந்தெங்கும் பெருநலங்கள் புரிந்துவரும் வண்மைநிலை அறியாதார் வரைந்துவிட்டார் சிறுமொழிகள் உண்மையிலா மொழியெல்லாம் ஒடுங்க அருள் செய்யாயோ தண்ணியற்கைத் தாய்வடிவாய்த் தனிக்கருணை பொழிமுகிலே 2 பெண்ணொளியால் நலம்பெற்றும் பேசுவதோ சிறுமைமொழி கண்ணொளியை இழித்துரைத்தல் கயமையன்றிப் பிறிதென்னே பெண்பெருமை உலகமெலாம் பிறங்கி நின்றால் உளங்குளிரும் மண்முதலாம் வடிவாகி மகிழியற்கைப் பெருமானே 3 சிறுபுல்லில் பெண்ணாண்மை செடிகொடியில் பெண்ணாண்மை பிறவுலகில் பெண்ணாண்மை பிறங்கவைத்த பரம்பொருளே துறவென்னும் ஒருகவடு தோன்றியதும் அறமேயோ கறவையிலா மலட்டாவால் கலக்கமின்றிப் பிறிதென்னே. 4 வெம்மையென்றுந் தண்மையென்றும் மிளிரவைத்தாய் இயற்கையிலே வெம்மையின்றித் தண்மையுண்டோ தண்மையின்றி வெம்மையுண்டோ வெம்மையிலே தனித்துநின்றால் விளையன்பு நீறாமே வெம்மையொடு தண்மையுமாய் விளங்குமொரு பரம்பொருளே. 5 வெங்கதிருந் தண்மதியும் விளங்கவைத்தாய் அண்டமதில் இங்குலகில் வலமிடத்தில் இருகலைகள் விளங்கவைத்தாய் பொங்காண்மை பெண்மையுடன் பொலிஅறமே வளர்ந்தோங்கப் புங்கமெனத் தனித்துறைதல் பொருந்தறமோ பெருமானே. 6 பெண்மையெனுந் தண்மைபொழி பெரும்பசுமைக் கொடிசூழ்ந்தால் வண்மையருள் அன்புகனி வளராண்மை மரமாகும் உண்மையறம் உலகமெலாம் உயரஅருள் புரியாயோ பெண்மையுடன் ஆண்மையுமாய்ப் பிறங்கியற்கைப் பெருமானே 7 நங்கையிடம் பெருமானே நடம்புரியும் அழகொளியை இங்கருந்தின் எங்குநினை எளிதிலுணர் நிலைகூடும் மங்கையினை மாயையென்று மதிசுருங்கத் தனித்துறைந்தால் எங்குமுள நினதுண்மை எவ்வாறு விளங்குவதே. 8 புற்பூண்டு செடிகொடிகள் புழுப்பறவை விலங்கினங்கள் அற்புடனே கலந்துகலந் தவனிவளர் நெறியோம்பச் சிற்பரனே மனிதரிடைச் சிறுதுறவு புகுந்தியற்கை பொற்புநெறி அழிப்பதென்னே பொலிவிலதை ஒழித்தருளே. 9 தனியுறைவால் மனக்கோளும் தன்னலமும் பெருகலுமாம் பனிமொழியா ருடன்வாழ்ந்தால் பரிவன்பும் பரநலமாம் மனிதவுயிர் கலப்பாலே மலரஉல கருளினையால் கனியுடையாய் திருநோக்குக் கலையாமற் காத்தருளே. 10 8. மனிதப் பிறவி எங்கிருந் திங்கு வந்தேன் எப்படி என்றென் றெண்ணிச் சங்கையில் மூழ்கி நின்றேன் சத்திய ஞான நூலும் புங்கவர் கூட்டுங் கூற்றும் புந்தியில் தெளிவு நல்கப் பொங்கொளி! அருள்சு ரந்தாய் பொன்னடி போற்றி போற்றி. 1 செறிவறி யாமை யாலே சிந்தனை இழந்த ஆவிக் கறிவினை விளக்கி யாள யாக்கைகள் பலவுந் தந்தாய் குறியினை உணரா தந்தோ குணப்பெருங் குன்றே கெட்டேன் பொறியிலேன் அருளல் வேண்டும் பொன்னடி போற்றி போற்றி. 2 புல்லினில் புழுவில் நிற்கப் புள்ளினில் விலங்கில் நிற்கச் சொல்லரும் மனுவில் நிற்கத் தூயனே கருணை செய்தாய் நல்லருள் மறந்து கெட்டேன் நானெனுஞ் செருக்கில் வீழ்ந்தேன் செல்வமே பொறுத்தல் வேண்டும் சேவடி போற்றி போற்றி. 3 மானுடப் பிறவி தந்த மாண்பினைத் தேறா திங்குக் கானுறை விலங்காய்க் கெட்டேன் கழிந்தது காலம் வீணில் ஊனுடை சுருங்கும் வேளை உதிருமே உரங்க ளெல்லாம் தேனுறு மலர்வண் டாக்கத் தெய்வமே உளங்கொள் ளாயோ. 4 பொறிபுலன் நன்கு பூத்த பொன்னுடல் எனக்குத் தந்தாய் அறிவிலேன் அதனைத் தேய்த்தேன் ஆணவச் செயல்க ளாலே நெறியிலே நின்றே னில்லை நித்தனே முதுமை நேரம் சிறியனேன் தளர்ந்து வந்தேன் சிந்தனை சிறிது கொள்ளே 5 கோடையின் அலகை என்னக் கொக்கரித் தலறிக் கூவி மேடையிற் பேசிப் பேசி மெலிந்ததை அறிவா யன்றே ஒடையும் வற்றிப் போச்சே ஒருவரும் வருவ தில்லை வாடையில் வீழா வண்ணம் வானுடல் அருள்வாய் ஐயா. 6 பிணியுடை யாக்கை வேண்டேன் பிறந்திறந் துழலல் வேண்டேன் அணிபெறப் புதுக்கும் ஆற்றல் அடியனேற் குண்டு கொல்லோ பணிக்கென உடலை வேண்டும் பான்மையை உணர்வாய் நீயே மணியொளி மேனி நல்காய் மதமெலாம் போற்றுந் தேவே. 7 மூக்கினைப் பிடிக்குங் கூட்டம் மூச்சினை ஈர்க்குங் கூட்டம் தேக்கிய இடங்க ளெல்லாம் சென்றுசென் றலுத்தேன் எந்தாய் யாக்கையை ஓம்ப வல்ல அமிழ்தம்நின் அருளே என்ற வாக்கியம் தெளிந்து வந்தேன் வள்ளலே கருணை செய்யே. 8 பரிதியின் ஒளிகாற் றாகிப் படர்புனல் கீரை யாகிப் புரிகனி மணிபாட் டுன்னல் போதமாம் அமிழ்தம் உண்டால் நரைதிரை மூப்பு நீங்கி நல்லுடல் பெறுதல் கூடும் அரிதினை எளிமை யாக்கும் அத்தனே அருள்செய் வாயே. 9 உடம்பினைக் கோயில் கொண்ட உத்தமன் நீயே என்று திடம்பெறத் தெளியச் செய்த திருவருள் மறவேன் எங்கும் நடம்புரி கருணை எண்ணி நண்ணினேன் பணிகள் ஆற்ற உடம்பினை ஓம்பி வாழ உன்துணை வேண்டும் வேந்தே. 10 9. மானுடம் என்னுயிரைப் பொன்னாக்க எவ்வெவ்வுடல் தந்தனையோ அன்னையினுந் தயவுடைய ஐயாவே யானறியேன் நன்மையுற மனிதவுடல் நல்கியருள் புரிந்துள்ளாய் துன்னுபயன் அடைவதற்குன் துணைவேண்டும் அருளரசே. 1 எச்சிலையாய்க் கிடந்தேனோ எம்மலையாய் நின்றேனோ எச்செடியாய் வளர்ந்தேனோ எப்புழுவாய் ஊர்ந்தேனோ எச்சரபம் ஆனேனோ எப்புள்ளாய்ப் பறந்தேனோ எச்சுதையாய்ப் பாய்ந்தேனோ இறைவஒன் றும் அறியேனே. 2 எடுத்தவுடல் எத்தனையோ அத்தனையும் உளஉணரேன் உடுத்தவுடல் இந்நாளில் உயர்ந்ததெனப் பெரியோர்கள் விடுத்தமொழி பலபலவே விழித்தவழி நடவாது மடுத்துவரின் வெறுமொழியை வள்ளாலென் விளைபயனே. 3 மானுடமே வந்ததென்று மகிழ்ந்துவிட லறியாமை வானுடலோ ஊனுடலம் மயிர்ப்பாலம் தம்பி எனத் தேனுடலர் எச்சரிக்கை செய்துள்ள திறமுணர்ந்து மானமுடன் வந்தடைந்தேன் மறைபொருளே அருளுதியே. 4 மக்களிடை மாண்புமுறும் மாசுமுறும் நிலையுண்டு சிக்கலுறுங் காரணமோ சிறுவிளக்கப் பகுத்தறிவே புக்கபகுத் தறிவாலே புண்ணியநின் னடிபற்றித் தக்கவழி காணவந்தேன் தமியேனைக் காத்தருளே. 5 பகுத்தறிவு விளங்காத பிறவியினும், வழிநடக்கும் பகுத்தறிவுப் பிறவிக்கே பாடுகளுண் டென்றறிஞர் உகுத்தஉரை உளங்கொண்டே உனதடியில் குறிவைத்தேன் புகுந்தபிழை எவ்வளவோ பொறுத்தருளாய் புண்ணியனே. 6 மக்களுளம் பகைசீற்றம் பேய்மைகணம் ஒருபாலே தக்கஅரு ளன்பழகு தெய்வகணம் ஒருபாலே நெக்குறுவெந் நிலையுணர்ந்து தெய்வகண மயமாக்கப் புக்கவருள் எனைச் சேர்த்தால் புனித! நலம் பெறுவேனே. 7 மானுடத்தின் பயன்நாடி மனத்துறுபேய்க் கணஞ்சாய்க்கத் தானொடுக்கத் தெய்வகணங் கால்கொள்ளப் பணிபுரிய வானிடத்தும் மண்ணிடத்தும் மற்றிடத்தும் அருளாட்சிக் கோனடத்தும் பெருமானே கோதிலடி வேண்டுவனே. 8 மன்பதைநின் னருணெறியில் மனஞ்செலுத்தின் வளர்ச்சியுறும் கன்மவிதி முதலாய கண்மூடி வழக்குகளை உன்னிவரின் எவ்வண்ணம் உண்மைவழி வளர்ச்சியுறும் அன்பரசே இன்புருவே அருளுலகை அளியாயோ. 9 பிறவிநலம் பிறவுலகப் பேறென்று சொல்வருளர் அறநிலயந் துறவாமல் ஆருயிர்க ளிடைவாழ்ந்து திறமையுடன் பணிசெய்தல் செல்வமெனத் தெளிவடைய இறையவனே உளங்கொண்டாய் ஏதமெலாம் பொறுத்தருளே 10 10. மனிதம் எத்தனையோ உடலளித்தே இம்மனித உடலை ஈந்துள்ளாய் ஈடேற இறையவனே இதுவே உத்தமமாம் என்றறவோர் உரைத்தமொழி பலவே உரைஓதும் அளவினின்றால் உறுபயனோ விளையா பத்திமைநன் னெறிநடக்கை பண்புசெயும் வாழ்வைப் பாழ்நடக்கை வாழ்வழித்துப் படுகுழியில் தள்ளும் இத்தனையும் நின்னியதி மானுடத்தின் நிலைமை ஏந்துமயிர்ப் பாலமென ஏழைதெளிந் தேனே. 1 மக்களுடல் தாங்குவதால் மட்டுநலன் விளையா மயிர்ப்பாலம் நடக்கையிலே மதிவிழிப்பு வேண்டும் மிக்க விழிப்புடன் நடந்தால் விழுமியதே மனிதம் விழிப்பின்றி நடந்துவிடின் வீழ்ச்சியதே என்று பக்குவரெல் லாருமிகப் பரிந்துரைத்தும் நல்ல பகுத்தறிவு மலர்பிறப்பின் பண்புகெட லென்னே புக்கபகுத் தறிவாலே புனிதமொடு புரையும் புரிஉரிமை உண்மையினால் பொறுப்புணர்த்தாய் அரசே. 2 மக்களின உடலமைப்பில் மருவவைத்த நுண்மை மற்றஇன உடலமைப்பில் மருவவைத்தா யில்லை ஒக்கஅது திகழுமிடம் உள்ளமல ருள்ளே ஒளிர்நுண்மை விளக்கமுற உழைப்பெடுத்தல் வேண்டும் புக்கதென உழைப்பிலையேல் பொலிந்துமிளி ராது பொலியாத படிவிடுப்பின் புகழ்பிறவி விலங்காம் எக்கணமும் அமைதியிலே இருமுயற்சி செய்வோர் ஈசநின தொளி காண்பர் எங்குமுள இறையே 3 எங்குமுளன் இறைவனென இயம்புவதா லென்ன இந்நூலை அந்நூலை எடுப்பதனா லென்ன அங்கெனவும் இங்கெனவும் அலைவதனா லென்ன அசத்துலகை அசத்தாகக் காண்பதனா லென்ன தங்குலகைச் சத்தாகக் காண்பதுவே அறிவு தகுந்தவழி காண்முயற்சி தலைப்படுத லறிவு பொங்குமுள மலருளதைப் பொறியாக்கிப் பார்த்தால் பொலிதருமே ஒளிஇறையே புனிதமுற அருளே. 4 உள்ளமல ருள்ள நுண்மை ஊடுருவிப் பாயும் ஒளிக்கருவிக் கதிராலும் உணரலிய லாதே உள்ளொளியர் யோகியர்கள் உரைத்தவெலாங் கூடம் உலகவற்றைப் பலவழியில் உருத்திரித்த தையா கள்ளர்பலர் இடைநுழைந்து கரவுகளைக் காட்டிக் கடையவரை ஏமாற்றிக் காசுபறிக் கின்றார் கொள்ளுநெறி இயற்கைஎன்று குருவாயில் சொற்ற குணவழியே நிற்கஅருள் குறைவில்லா நிறைவே. 5 அன்பியற்கை நெறிக்குரிய அறத்துறைகள் பலவே அச்சாணி அகவொழுக்கம் அதன்விளைவாம் எல்லாம் துன்பினிற்சென் றுழல்புலன்கள் இயற்கையிலே தோய்ந்தால் தொல்லைஅலை மனம்விரைந்து சூழும்உரு ஒன்றை என்புருக்கு முறையிலெண்ணி எண்ணியொன்றின் ஒடுங்கும் எப்பயனுங் கருதாது பணிசெயவும் தூண்டும் மன்மலர்நுண் பொலிவுமெங்கும் நின்மயமே தோன்றும் மானுடத்தின் மாண்பென்னே வள்ளால்நின் கொடையே. 6 நெஞ்சமல ருள்திகழும் நிதிகாண நீங்கா நீதிவளர் நிட்காமம் நிறைந்தபணி வேண்டும் நஞ்சனைய காமியமோ நான்நானே பெருக்கும் நானானால் எங்கெங்கும் ஞானநிலை என்னாம் வெஞ்சினமும் வஞ்சனையும் வேர்விடுத்து வளர்ந்து வெடிகுண்டாய் அமர்க்களமாய் வெறும்பிணமாய் அழுகும் துஞ்சிடவோ மானுடத்தைத் தோற்றுவித்தாய் இறையே தொண்டர்படை சூழ்ந்துலகைத் தூய்மைசெய அருளே. 7 கண்மூக்கு சாண்வயிறு கைகாலோ மனிதம் கட்டுநரம் பெலும்புநிணம் தோலுடுப்போ மனிதம் வெண்வாக்கு வீண்நினைக்கும் வெறுமனமோ மனிதம் வேடிக்கை தாள்படிப்பு விளம்பரமோ மனிதம் மண்ணோக்கிக் களியாட்டில் மயங்குவதோ மனிதம் வனவிலங்காய் உண்டுறங்கி வாழ்வதுவோ மனிதம் உண்ணோக்கிப் பணிபுரிந்தே ஒளிபெறுதல் மனிதம் உனையுணர்த்தும் மனிதமதை ஓம்பஅருள் அரசே. 8 உலகுடலம் புறக்கரணம் உட்கரணம் ஏனோ ஓங்குமலை காடுவயல் ஓதவெளி ஏனோ கலைகளுடன் ஓவியங்கள் காவியங்கள் ஏனோ கதைநடனம் இசையரங்கம் காட்சிநிலை ஏனோ பலமதமும் கோயில்களும் பள்ளிகளும் ஏனோ பரஞானம் சத்தியமும் பத்திமையும் ஏனோ கலகமிடும் விலங்காகிக் கழிவதற்கோ மக்கள் கருணைகொழி தண்கடலே காசினிபார்த் தருளே. 9 அரிதாய பிறவியெனக் கருளரசே ஈந்தாய் அதைநெறியிற் பயன்படுத்தா அறியாமை எனதே உரிதாய அகமலருள் உன்னைஉண ராதே உற்றபிறப் பரும்பயனின் உறுதிஇழந் தேனே கரிதாய செயல்புரிந்தேன் கடவுளுனை மறந்தேன் கடையவரிற் கடையவனாய்க் கழிவுபட லானேன் பெரிதாய பிழைபுரிந்தேன் பொறுத்தருளல் வேண்டும் பிள்ளைகுறை கண்டுதள்ளும் பெற்றவளும் உண்டோ. 10 11. சன்மார்க்கம் சன்மார்க்கம் தோன்றியநாள் சாற்றுதற்கோ இல்லை சான்றுகளும் கருவிகளும் சாத்திரமும் இல்லை பன்மார்க்கக் காலமெலாம் பகர்கின்றார் புலவோர் பார்த்தறியார் அவைபிறந்த பதமறியார் ஐயா சன்மார்க்க வேரினின்றுந் தழைத்தவகை தெளிந்தால் தனித்தோற்றம் இல்லைஎன்பர் சரித்திரத்துக் கெட்டா உன்மார்க்கம் சன்மார்க்கம் உனக்குண்டோ தோற்றம் ஒடுக்கமொடு தொடக்கமிலா உண்மையெனும் பொருளே. 1 மாறாத சத்தாகி மருவுகின்ற அறிவே மார்க்கமெலாஞ் சன்மார்க்க மலரென்று தேர்ந்தோர் சீறாத சிந்தையிலே தெளிதேறல் இன்பே சித்தர்வழிச் சன்மார்க்கம் செறியவைத்த இறையே வேறான கருத்துடையார் வேரறியா வெறியர் விதவிதமா மார்க்கமென்று வீண்வாதஞ் செய்வர் தேறாத அவர்வினையால் செகங்கெடுத லாச்சே தீமைஎரி பரவிவரல் திருவருளுக் கழகோ. 2 காண்கின்ற பலதீவு கால்கொளிடம் ஒன்றே காராவும் வெண்ணாவும் கறக்கும்பால் ஒன்றே பாண்மொழிகள் பலஒலிக்கப் படியும்பொருள் ஒன்றே பன்னிறத்து விளக்குநிரை படருமின்னல் ஒன்றே பூண்தொடையல் புகுந்தகயி றொன்றேஆ மாறு புகல்மதங்கள் உயிராகப் பொலியுஞ்சன் மார்க்கம் மாண்புறும்அம் மார்க்கமென்றன் மனம்பதியச் செய்தாய் மதக்கழுது விடுத்ததென்னை மாதேவா அருளே. 3 மதங்களெலாஞ் சன்மார்க்க அடிகொண்டே மலரும் மாண்புணர அருள்புரிந்த மன்னவனே வாழி மதங்களென்றே அடியிலுள மார்க்கம்மறந் தாலோ வாதப்பேய் தலைவிரிக்கும் மக்கள்நிலை திரியும் இதஞ்செய்யும் அடிமார்க்கம் இழந்தமதம் நஞ்சாய் எஞ்ஞான்றும் இகல்பெருக்கும் இன்னாமை விளைக்கும் அதஞ்செய்யும் துன்மார்க்க அலகையெலாம் அழிய அன்புவிளை சன்மார்க்கம் ஆக்கமுற அருளே. 4 சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மைஅறம் அன்பழிக்குந் துயர்மதங்கள் தொலைய ஆதிமுடி வில்லாத அருட்சோதி தேவே அகிலமெலாஞ் சன்மார்க்கம் ஆர்த்தெழச்செய் யரசே. 5 இறையவனே சன்மார்க்கம் உன்னருளால் வளர்த்தோர் எழில்மௌனி சனத்குமரன் இளங்கண்ணன் அருகன் அறமுரைத்த புத்தனுயர் ஆப்பிரகாம் மோசே அன்பேசு வள்ளுவனார் நபிநால்வர் ஆழ்வார் மறைமூலர் தாயுமானார் மாதுபிள வட்கி மதிஇராம கிருஷ்ணருடன் இராமலிங்கர் முதலோர் நிறைநின்ற திருக்கூட்டம் நீங்காத ஒளியே நின்மலனே சன்மார்க்க நிதிவளரச் செய்யே. 6 மொழியாலும் நிறத்தாலும் நாட்டாலும் மற்ற முறையாலும் பிரிஉலகை முழுஒருமைப் படுத்தும் வழியாதென் றறிஞர்பலர் வகைவகையே ஆய்ந்து வகுத்தனர்பல் சட்டதிட்டம் வாழ்வுபெற வில்லை பழியேதும் அறியாத சன்மார்க்கம் ஒன்றே பாழ்பிரிவு நினைவறுத்துப் பரிந்தொருமை கூட்டும் அழியாத அன்புடைய அப்பாஅம் மார்க்கம் அவனியெலாம் பரவிநிற்க அருள்புரிவா யின்னே. 7 இறையென்றும் இயற்கையென்றுஞ் சிலஅறிஞர் பிரித்தே இயற்கையினைத் துறந்துதனி இறைவஉனைப் பற்றல் அறமொன்றும் ஆத்திகமென் றறிவுறுத்த லழகோ அறிவேஉன் திருவுடலம் அழகியற்கை யன்றோ உறவொல்லும் இயற்கைவிடல் உன்னைவிட லன்றோ ஒளிஇயற்கை உன்னிருக்கை என்றுதெளி வடைதல் சிறையில்லாச் சன்மார்க்கச் சேர்க்கையென உணரச் செய்தஉன்றன் அருள்மறவேன் சித்தருள விளக்கே. 8 பாரினிலே கலையென்று கொலைக்கலையே இந்நாள் பரவிநஞ்சம் உமிழ்ந்துவரல் பரம்பொருளே அறிவாய் போரினிலே விஞ்ஞானம் புரிகின்ற ஆடல் புலைமறமே அச்சோவென் றலமரலை அறிவாய் வேரிழந்த அரக்கர்கலை மீண்டுமெழல் நன்றோ வீரமென ஈரமிலா வினைபெருக்க லழகோ சீரிழந்த உலகுய்யச் சிற்பர! சன்மார்க்கச் bršt!அருள் மழைபொழியாய் சிறுபிழைகள் பொறுத்தே. 9 மண்ணெல்லாஞ் சன்மார்க்க மலராட்சி வேண்டும் மார்க்கமெலாஞ் சன்மார்க்க மணங்கமழல் வேண்டும் கண்ணெல்லாஞ் சன்மார்க்கக் காட்சியுறல் வேண்டும் காதெல்லாஞ் சன்மார்க்கச் கேள்விநுழை வேண்டும் பெண்ணெல்லாஞ் சன்மார்ககப் பிள்ளைபெறல் வேண்டும் பேச்செல்லாஞ் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும் பண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும் பரம்பொருளே சன்மார்க்கப் பணிசெய வேண்டுவனே. 10 12 சன்மார்க்கம் பிள்ளைவிளை யாட்டினிலும் பின்னைவிளை யாட்டினிலும் பள்ளிவிளை யாட்டினிலும் படிந்துழன்ற சிந்தையிலே கள்ளமழி சன்மார்க்கம் கருவிழுந்த தறியேன்யான் வள்ளலுன தருட்பெருக்கை வகுத்துரைப்ப தெவ்வாறே. 1 சாதிமதக் குழிநரகச் சாக்கடையில் விழுந்தேற்கும் ஆதிநெறிச் சன்மார்க்க அருட்கரையை உணர்வித்த நீதிஇறை! நின்கருணை நிறைதெளிய வல்லேனோ சோதிமுடி அடியில்லாச் சொலற்கரிய சுகப்பொருளே. 2 பன்மார்க்க அடியாகிப் பண்புவளர் சன்மார்க்கம் உன்மார்க்கம் ஒருமார்க்கம் உயர்மார்க்கம் வேறில்லை தொன்மார்க்கம் என்னுளத்தில் துலங்கவைத்த மெய்ப்பொருளே துன்மார்க்கம் சாயஇங்குத் துணைசெய்ய அருள்பொழியே. 3 சன்மார்க்க மரந்தாங்கும் பன்மார்க்கக் கிளைகளிலே நன்கார்ந்தே எம்மார்க்கம் நடந்தாலுஞ் சன்மார்க்கம், என்மார்க்கம் உன்மார்க்கம் என்றுசமர் விளைப்பவரே துன்மார்க்கர் தாய்மறந்த துகளரவர்க் கருளிறையே. 4 மார்க்கமெலாம் ஊடுருவி மருவிநிற்குஞ் சன்மார்க்கம் பார்க்கமுடி யாதவரே பலசமய அமர்விளைப்பர் சேர்க்கையினால் நஞ்சுலகில் தேக்கிவரல் நீஅறிவாய் ஆர்க்கஅவர்க் கருள்பதியே அதுவுமுன்றன் கடனன்றோ. 5 சன்மார்க்கம் கல்வியிலே சன்மார்க்கம் காதலிலே சன்மார்க்கம் வாழ்க்கையிலே சன்மார்க்கம் பொருளினிலே சன்மார்க்கம் ஊரினிலே தழைத்துவரின் உலகமெலாம் சன்மார்க்க மயமாகும் சார்பரசேன் தனிப்பொருளே. 6 சிக்கோடு மதவாதச் சேற்றிருந்த எனைஎடுத்தே எக்கோயில் கண்டாலும் இறைநிலையம் என்றுதொழப் புக்கோடு நெஞ்சளித்துப் புதுப்பித்த பெருந்தகையே தக்கோனே சன்மார்க்கம் தழைக்கஎங்கும் அருள்புரியே. 7 அவனியிலே கிறித்துவரி லாமியரும் பௌத்தர்களும் சைவர்களும் வைணவரும் ஜைனர்களும் சார்புடைய எவரெவரும் பலபெயரால் ஏத்துமிறை ஒருநீயே தவறணைதல் ஆணவத்தால், சன்மார்கக ஒளிகாலே. 8 மண்ணீறு தாடிசடை மழிமொட்டை பட்டைஇடை வெண்ணீளம் காவி அங்கி வேடங்கள் பொருளானால் கண்ணீள மில்லாதார் காழ்ப்பிகலில் பயன்படுத்திப் புண்ணீள மாக்கிடுவர் சன்மார்ககம் புகுத்திறையே. 9 சாதிமத நிறநாட்டின் சண்டையெலாம் ஒழிந்தழிய மேதினியில் காலநிலை மேவுவணம் சான்றோர்கள் ஓதியபன் முறையுண்டே உயிர்அவற்றுள் சன்மார்க்கக் காதலிவர் மணநிகழ்ச்சி கடவுளதை ஓம்புகவே. 10 13. சமரசம் சாதியும் மரபுங் கொண்ட சந்ததி வழியே வந்தேன் சாதியும் மரபுந் தேய்க்குஞ் சமரசக் கருவி யானேன் நீதியே நெஞ்சில் மாற்றம் நிகழ்ந்தமை என்னே என்னே ஆதிநின் அருளின் ஆடல் அற்புதம் அறிவார் யாரே. 1 சத்தியம் சைவ மென்னுஞ் சால்புறு மரபில் வந்தேன் நித்தியச் சமய மெல்லாம் நிறைசம ரசமாக் கண்டேன் உத்தம அருள்செய் மாற்றம் உணர்வினுக் கெட்ட வில்லை அத்தனே இரும்பைப் பொன்னா ஆக்கிய பெருமை என்னே. 2 வாதமே தூண்டும் நூல்கள் வகைவகை பயின்றேன் ஆய்ந்தேன் பேதமே படிய வில்லை பெருஞ்சம ரசமே நாளும் போதமா ஓங்கப் பெற்றேன் பொன்னருள் செய்யும் வேலை நீதனேன் அறிவேன் கொல்லோ நித்தனே வாழி வாழி. 3 அரசியல் நிலையை ஆய்ந்தேன் அத்துறை படிந்தும் பார்த்தேன் கரவினைக் கண்டு கொள்ளக் கடவுளே கருணை செய்தாய் கரவர சிருளைப் போக்கச் சமரச பானு தேவை பரமனே உலகைக் காக்கப் பரிந்தருள் அதனை இன்றே. 4 செல்வனே சிறந்து வாழச் சிறுமையில் ஏழை வீழப் புல்கர சாட்சி மாறப் புனிதமாஞ் சமர சத்தை நல்கவே வேண்டு மென்று ஞாலமே கேட்டல் காணாய் பல்கவே உயிர்க ளெங்கும் பரமனே அருள்செய் யாயோ. 5 சமரசம் பொருளி லுற்றால் சாந்தமே ஆட்சி செய்யும் அமரரும் மண்ணில் வாழ ஆசைகொண் டலைவ ரையா சமரினைத் தூண்டும் ஆட்சி சாய்த்தது போதும் போதும் சமரச மார்க்கம் ஓங்கச் சத்தனே சிந்தை செய்யே 6 சமரச மார்க்கம் பல்கின் தரைபிடி அமர்கள் நேரா அமரெழுப் பாசை மாயும் அரும்பசி பிணிநோய் நீங்கும் குமரரின் வாழ்க்கை இன்பாம் குணம்வளர் கலைகள் பொங்கும் அமைஅரு ளாட்சி ஓங்கும் அப்பனே கடைக்கண் நோக்கே. 7 அண்டையன் பசியால் வாட அணங்கொடு மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று மன்னிடும் ஆட்சிக் குற்றம் தண்டனைக் கர்மம் என்னல் தயைவிலார் கூற்றே அப்பா எண்டிசை சமர சத்தை இன்புடன் நுகரச் செய்யே. 8 உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை, அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே. 9 சாதியும் மதமுஞ் சாய சண்டையும் மிடியும் மாய நீதியும் நிறையும் மல்க நித்தமும் வழிபா டோங்க ஆதியே காதல் மன்றல், ஆட்சியில் பொதுமை தேவை சோதியே சமர சத்தால் சூழ்தரும் கடைக்கண் நோக்கே. 10 14. சமரச சன்மார்க்கம் மார்க்கம் ஒன்றே சன்மார்க்கம் மலரச் செய்யும் சமரசமே யார்க்கும் உரிய அதுவளர்ந்தால் ஆக்கம் உறுமே உலகியல்கள் மூர்க்கம் அழியும் பன்மார்க்க மூடக் குறும்பு மாண்டொழியும் பார்க்கப் பொதுமைச் சன்மார்க்கம் பரமா அருளாய் அருளாயே. 1 சாதி ஆசை மதஆசை தரையின் ஆசை படிநெஞ்சம் நீதி ஆசை நின்னாசை நினையும் நிலையில் இல்லையே ஆதி சோதி அருட்சோதி அறிவுக் கறிவாம் மெய்ச்சோதி ஓதி ஒழுகின் சன்மார்க்கம் உறலாம் நல்ல நினைவினையே. 2 காத லொழுங்கில் சமரசமே கண்டால் உறலாம் சன்மார்க்கம் ஓதல் உணவில் சமரசமே உற்றால் பெறலாம் சன்மார்க்கம் வீதி உலவில் சமரசமே விளங்கின் இலகுஞ் சன்மார்க்கம் ஆதி எங்குஞ் சன்மார்க்கம் அடைய அருளாய் அருளாயே. 3 சாதி மதத்தில் சமரசமே சார்ந்தால் சேரும் சன்மார்க்கம் நீதி அரசில் சமரசமே நிறைந்தால் நிலவும் சன்மார்க்கம் வாதப் பொருளில் சமரசமே வாய்ந்தால் வளரும் சன்மார்க்கம் சோதி! எங்குஞ் சன்மார்க்கம் சூழ அருளாய் அருளாயே. 4 ஒளியுங் காற்றும் மலையாறும் ஓங்கு மரமும் நீல்கடலும் தளிமக் கலையும் சன்மார்க்கம் தழைக்கத் துணையாய்த் திகழ்நுட்பம் தெளியும் உள்ளம் நின்கோயில் செறியும் இயற்கை வடிவான வெளியே அளியே சன்மார்க்கம் விரிந்து பரவ அருளுதியே. 5 பரிதி எழுந்து மறையொழுங்கும் மதியம் தேய்ந்து வளரொழுங்கும் பருவம் மாறி வருமொழுங்கும் பார்த்துப் பார்த்துப் பழகிநிதம் கருவில் நெஞ்சில் உணவுறக்கில் காக்கின் ஒழுங்கு சன்மார்க்கம் மருவும் வாழ்வி லொழுங்குபெற மருந்தே தேவை உன்துணையே. 6 நெஞ்சி லெண்ணம் ஒழுங்கானால் நிரலே எல்லாம் ஒழுங்காகும் அஞ்சு மடங்கி ஒழுங்காகும் அங்கம் கரணம் ஒழுங்காகும் விஞ்சு ஒழுங்கில் சன்மார்க்கம் விளங்கி நிலவும் ஒழுங்கினிலே தஞ்ச மாகத் தற்பரமே தயவே வேண்டும் தனித்துணையே. 7 மலையில் பிறந்த சன்மார்க்கம் வனத்தில் வளர்ந்த சன்மார்க்கம் கலையில் அமைந்த சன்மார்க்கம் காணோம் காணோம் நாடுகளில் கொலையைக் கலையாக் குறிக்கொண்டு குண்டு தாங்கும் நாடுகளில் நிலவுங் கொல்லோ சன்மார்க்கம் நிலைமை எண்ணாய் இறையோனே. 8 எங்கும் உள்ள இறையோனே எல்லா உயிருள் இருப்போனே பொங்கும் அன்பு மக்களிடைப் பொருந்தா திகல்போர் எழுவதென்னை தங்குஞ் சுத்த சன்மார்க்கம் தழுவா தொழியின் அன்பெழுமோ துங்க உலகம் பரிணமிக்கத் துணைசெய் அரசே மெய்ப்பொருளே. 9 புல்லாங் குழலில் இசைமுழக்கிப் போதி நிழலில் தவங்கிடந்து கல்லா லடியில் பேசாது கல்லாம் மலையில் மறைபேசி எல்லா ருங்கொள் சமரசசன் மார்க்க மிசைத்தே உரிமையளி செல்வா சிறியர் பிழைபொறுக்குந் தேவா வாழி அருள்வாழி. 10 15. சன்மார்க்க வாழ்வு சமரசசன் மார்க்கமென்று தரைவெறுக்கும் வாழ்வு சார்ந்ததிடை நாளினிலே சனிபிடித்த தன்றே அமைஉலகம் ஆண்டவநின் அருட்பெருக்கின் கொடையே அதைவெறுத்தல் அறமாமோ ஆணைவழி யாமோ சுமையெனநின் கொடைவெறுப்போர் சோம்பரவர் பிறர்க்குச் சுமையாகி இடர்விளைக்குந் தொல்லையரே யாவர் சமரசன் மார்க்கஉண்மை தரணியிலே விளங்கித் தழைத்தோங்க அருள்புரியாய் தயையுடைய அரசே. 1 நிலநான்கு வகைபிரிய நிரனிரலே உரிய நெடுமரம்புள் விலங்குமக்கள் நின்றுகிளர் அன்பில் உலமான்ற குறிஞ்சிமுல்லை மருதநெய்தல் ஒன்றி ஒழுக்கமுறக் காதலெழு உடையவஏன் செய்தாய் நலமூன்றுஞ் சன்மார்க்க நாட்டமிக அன்றோ நண்ணியற்கை வாழ்வொறுத்தல் ஞானமெனல் நன்றோ புலநோன்பு கெட்டொழியும் பொறிகளலை சாடும் புனிதம்வளர் காதல்நெறி புவிபெருக அருளே. 2 பெண்பனையும் ஆண்பனையும் பேசிநிற்குங் காட்சி பெண்கொடியும் ஆண்கொடியும் பின்னிவளை காட்சி வண்டுளறச் சுரும்பிசைத்து மயங்கிவருங் காட்சி வாரணஞ்செம் பேடையிடம் மனஞ்செலுத்துங் காட்சி திண்ணெருமை நாகுடனே சேர்ந்துதிரி காட்சி செவ்வெருது பசுவருகே சிரித்தணையுங் காட்சி பண்மொழியின் அமிழ்துண்டு பத்தன்செலுங் காட்சி பண்பளிக்குஞ் சன்மார்க்கக் காட்சியன்றோ பரமே. 3 சன்மார்க்கம் இயற்கைஇறை! நின்னெறியென் றறியார் தவழிளமை வளமையினைத் தழற்கனலில் தீப்போர் துன்மார்க்க வினையியற்றித் தொலைவரவர் சொன்ன துகளுரைகள் துறைகளெல்லாம் தொல்லுலகை அரித்துப் பன்மார்க்கப் பகைவிளைத்துப் பாழ்செயலை அறிவாய் பாரெல்லாம் பாவஎரி பரவிவரல் அழகோ சன்மார்க்கம் நல்லியற்கை வாழ்வென்னும் உண்மை தரணியிலே வேரூன்றத் தயைபுரியாய் ஐயா. 4 இயற்கையிலே நீஇருந்தே இன்பளிக்கும் அன்பை இனிதுணர்ந்தால் காதல்நெறி இயல்விளங்கும் அப்பா செயற்கையிலே புலன்கெடுத்துச் சிந்தைகொலை புரிந்தால் சிற்பரனே உன்னருளின் சிறப்பையுறல் எங்ஙன் பயிற்சியிலே சன்மார்க்கம் இயற்கையர ணென்னும் பாடம்பெற லாமென்று பயின்றவரே சொற்றார் முயற்சியிலை மன்பதையில் மூர்க்கமெழ லாச்சு முழுஇயற்கை வாழ்க்கையெழ முன்னவனே முன்னே. 5 காதலுணர் வோங்கிநின்றால் கறைகள்படி யாவே காசினியே அன்பாகிக் கருணையொளி வீசும் காதலினைக் காமமெனல் கண்ணில்லா மடமை காதலொரு மகனொருத்தி ஓருயிராய் ஒன்றல், நீதியிழந் தொருவன்பல மனைகொள்ளல் காமம், நீசமிகு காமத்தால் நிலமெல்லாம் தீயாம் காதலிலே காதல்கொளல் சன்மார்க்க மென்னும் கருத்தளித்த இறையவனே காலடிகள் போற்றி. 6 ஆடல்நெறி பாடல்நெறி அன்பறிவு நெறிகள் அனைத்துமுள நெறிகளெலாம் அறிவுறுத்துங் காதல் நாடகமும் காவியமும் ஒவியமும் மற்றும் ஞானம்வளர் கலைகளெலாம் நன்குபுகழ் காதல் பீடுறுசன் மார்க்கநின்ற பெரியருக்கும் ஞானப் பித்தருக்கும் பத்தருக்கும் பேறளித்த காதல் ஈடிலருள் மாதருள்நின் இறைமையளி காதல் எவ்வீடும் எழுஅருளாய் இயற்கைஇன்ப இறையே. 7 காதலுறு இடம்நினது கருணைபொலி வீடாம் காதலுறா இடம்நினது கருணையற்ற நரகாம் காதனெறி சன்மார்க்கம் காட்டுவித்தல் கண்டே கலைவரைந்தார் அறிஞரெலாம் காட்டாக ஐயா காதலருள் மாதருள்நின் காட்சிபெறல் ஞானம் காணாது மாயையென்று கருதல்அவ ஞானம் காதலினைக் காமமென்று கருத்தழிக்கும் அமைப்பின் கால்சாய்ந்தால் உலகுய்யும் கடவுளருள் செய்யே. 8 மகனொருவன் மகளொருத்தி மணக்குமுறை உலகில் வளர்ந்துவரின் சன்மார்க்க வாழ்வினுக்குத் துணையாம் அகமடங்கி ஒருமைஎய்த ஐயஉனை நினைக்கும் அன்புவழி எளிதாகும் அறவொழுக்கம் இயல்பாம் இகலமைந்த கரணங்கள் இனியனவாய் மாறும் எவ்வுயிர்க்குந் தண்மைசெயும் இரக்கநிலை கூடும் தகவுடைய நடுநிலைமை சாருமென்று விளங்கத் தயைபுரிந்த அப்பாவே தாளிணைகள் வாழி. 9 எங்குமுள உனைக்காண எவ்வளவோ முயற்சி இவ்வுலகில் நிகழ்வதனை எவ்வுரையால் சொல்வேன் நங்கையரில் உன்னொளிகாண் ஞானம்வரல் போதும் நாதஉனை எங்குங்காண் ஞானமெளி தாகும் சங்கையிலாச் சன்மார்க்க வாழ்வுபெறலாகும் தன்னலத்தை அழிபணிசெய் சார்புவரு மென்றே இங்குளத்தில் தெளிவெழுந்த தெப்படியோ அறியேன் எல்லாமுன் னருளென்றே ஏழையடைந்தேனே. 10 16. குருமார் அளவுகடந் தோங்கண்ட அறிவே நீங்கா அழகியற்கைக் கோயிலமர் அன்பே ஞான ஒளியுடைய குருமாரின் உளத்தே மற்றும் ஒருகோயில் கொண்டருளும் ஒன்றே நல்ல வளமடைய உயிர்கட்கு மார்க்கங் கண்ட வான்கருணை வள்ளால் நீ வாழி வாழி தெளிவுபெற வழிபாட்டிற் சிந்தை வைத்த திருக்கூட்டம் நாடோறுஞ் செழிக்கச் செய்யே. 1 கண்ணாவுங் கைகாலுங் கருது நெஞ்சம் கரணவுறுப் பொன்றில்லாக் கடவு ளேநீ கண்ணாதி உறுப்புடைய குருமா ருள்ளக் கமலத்துள் விற்றிருக்குங் கருணை என்னே மண்ணார விண்ணார வயங்கி மேலும் மருவுகின்ற மணிவிளக்கே மக்கள் கூட்டம் கண்காண நாவாழ்த்தக் கைகள் போற்றக் கருத்தொன்ற வழங்குமருட் காட்சி வாழி. 2 எங்கெங்கும் நீங்காமல் இருந்தே எல்லாம் இயக்கிறையே எங்கெங்கும் பால்நெய் போலும் தங்கவுடல் குருமாருள் தயிர்நெய் போலும் தங்கும்வகை உணரவுநின் தயவு வேண்டும் அங்கமிலா ஆண்டவனே அங்கந் தாங்கும் அருட்குருமார் உளத்தொளியாய் அமர்ந்தும் அன்பு பொங்குவழி பாட்டேற்கும் புனிதத் தேவே பொன்னடிஎன் மனம்பூக்கப் பொருந்தச் செய்யே. 3 கோதிலவர் வழிபாட்டைக் கொள்வோர் யாவர் குருமாரோ அவருளத்திற் குலவும் நீயோ சோதனையும் வேண்டுங்கொல் சோதி நீயே தொல்லுலகில் முறைபற்றிக் குருமார் நீயென் றோதுநரும் உளரானார் உறவால் ஐயா ஒருகுணமுங் குறிதொழிலும் ஊரும் பேரும் ஆதிநடு முடிவுமிலா அறிவே அன்பர் ஆழநினை பொருளாகி அருளுந் தேவே. 4 பளிங்கனைய குருமாரைப் பலரென் றெண்ணாப் பண்புணரச் செய்தபரம் பரமே அன்னார் உளங்கனிய வீற்றிருக்கும் ஒளியே ஒன்றே ஒன்றேநீ இரண்டல்ல என்னும் உண்மை விளங்கியபின் பலருணர்வு விளைவ தெங்கே விதம்விதமே குருமாரென் றுணர்தல் விட்டுக் களங்கமிலாக் குருநாதன் என்று கொள்ளுங் கருத்தளித்த கற்பகமே கருணைத் தேவே. 5 குருநாதன் வரலாற்றுக் குறிப்பே இல்லான் குறிபருமை யல்லாத கோதில் நுண்ணி பருஞாலம் நெறிதவறும் பருவ மெல்லாம் பரிந்தெடுத்த கோலங்கள் பலவே நல்ல ஒருநாதன் பலமாராய் ஓதப் பட்டான் ஊர்பலவும் மொழிபலவும் உறைந்து பேசித் திருஞான நெறிவிளங்கச் செய்தான் என்று சிறுமனத்தைத் தெளிவித்த சித்தே வாழி. 6 குருநாதன் இறைநீயோ தனியோ என்றென் குறுமதியும் ஆய்ந்தாய்ந்து குலைந்த பின்னை ஒருநாளும் ஆய்வாலே உண்மை தேறல் உறாதென்றும் குருஅடியில் ஒன்றின் உண்மை ஒருவாத சிந்தனையில் ஒளிரும் என்றும் உறுதியிலா என்னுளத்தும் உணர்த்தி னாய்கொல் கருவாதை தீர்ப்பதென்ற கருணை போலும் கற்பனையெல் லாங்கடந்த கற்புத் தேவே. 7 குருமாரிவ் வுலகணைந்து குறித்த மார்க்கம் குவலயத்தில் பலமதமாய்க் கொழிக்கும் இன்பம் பருகாதார் பன்மார்க்கப் படுகர் வீழ்ந்து பழிபாவம் பரப்புகின்றார் பரமே உன்னைக் கருதாத நெஞ்சினரே கருணை இல்லார் கற்பகமே வெறிமதங்கள் காய்ந்து சாய ஒருநாத உன்மார்க்கம் ஓங்கச் செய்யாய் உயர்நாதங் கடந்தொளிரும் ஒருமைத் தேவே. 8 தனித்தனியில் ஒவ்வொரிதழ் சார்ந்து சார்ந்து தண்மலராய்க் காட்சியளி தன்மை போலத் தனித்தனியே குருநாதன் என்று கூறுந் தனியாட்சி சேர்ந்தக்கால் குருமா ரென்ற இனத்தாட்சி எழுந்ததென இறையில் தேறும் எளிவகையும் இங்குலவ இனிதே செய்தாய் மனித்தருக்குக் குருநாதன் வழியே நல்ல வாழ்வளிக்கும் வானொளியே மாண்புத் தேவே. 9 பொன்வணத்தார் அருள்மனத்தார் பிணிமூப் பில்லார் பொன்றலிலார் அறம்வளர்க்கப் பூண்பர் யாக்கை மன்னியற்கை ஏவல்புரி வரமே பெற்றோர் மலைமறைப்பர் கடல்பிரிப்பர் மற்றுஞ் செய்வர் உன்னரிய ஒலிமறையின் உண்மை சொல்வர் ஒருவர்பல ராவர்பலர் ஒருவ ராவர் பன்னுகுரு மாரென்று பாவி நெஞ்சில் படிவித்தாய் எப்படியோ பரமா வாழி. 10 17. எண்மர் கோதிலறம் வளர்க்கஇங்குக் குருமார் கொண்ட கோலங்கள் தொகைகாணக் கூர்ந்து பார்த்தேன் சோதனையில் தொகையொன்றுந் தோன்ற வில்லை தொடர்ந்துள்ள எண்மர்தொகை தோன்று மாறும் பேதமிலை அவருள்ளென் றுணரு மாறும் பேயுளமின் னொளிபிறங்கச் செய்த தென்ன சோதிநின தருள்போலும் தோற்ற மின்றித் துணைசெய்யும் இயல்புடைய சுடரே போற்றி. 1 1. மகம்மது நபி அரபிய நாட்டிற் றோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த மகம்மது நபியே போற்றி தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி போற்றி 2. இயற்கை அன்னை உருவமிலா இறைவனுக்கும் உடலளித்து நீல்வானக் கருமுடியும் தரையடியும் கடலுடையும் மலையருவி மருவணியும் புனைந்துகதிர் மலர்விழியால் இசைவடிவால் அருளுயிர்க்குப் பொழிஇயற்கை அன்னை திரு வடிபோற்றி. 3. கிறிது உலகம் உய்ய ஒளிவீசி உதித்த தெய்வச் சேய்போற்றி மலையி லெழுந்து மாசில்லா மறையைப் பொழிந்த மழைபோற்றி சிலுவை அறைந்தா ரிடத்தும் அருள் செய்த பொறுமை நிலைபோற்றி அலகில் பாவர் கொழுகொம்பாம் அன்பு கிறிது அடிபோற்றி. 4 4. அருகர் கொல்லும் ஆட்சி குணந்தெறு வேளையில் கொல்லா நல்லறங் கூறி வளர்த்தவன் அல்லல் தீர்த்தருள் ஆதி அருகனே மல்லல் மிக்க மலரடி போற்றியே. 5 5. புத்தர் சீலமெலாம் ஓருருவாய்த் திரண்டெழுந்தா லெனஉதித்த செல்வம்! போற்றி கோலமிகு மனைவிடுத்துக் கொடுங்காட்டில் தவங்கிடந்த குணமே போற்றி மாலரசின் அடியிருந்து மயக்கமற அறமுரைத்த மணியே போற்றி சாலறத்துக் குழுவிளங்கச் சங்கம்வளர் புத்தகுரு! சரணம் போற்றி. 6 6. கண்ணன் போரார்களம் பொலிதேரினில் பொருதப்புகு வீரன் வாரார்சிலை வளையாதவண் மயக்குற்றமை கண்டு நாரார்பயன் கருதாஅற ஞானந்தரு கண்ணா தாரார்மணி வண்ணாஅணி தாண்மாமலர் போற்றி. 7 7. குமரன் ஆற்ற இளமை அழகா குமரா ஏற்ற அயில்வேல் இறைவா முருகா ஊற்று மலையி லுலவுங் குகனே போற்றி அடிதாள் புகலே குருவே. 8 8. மோனமூர்த்தி மூன்று புரமெரித்த முக்கண்ணா கல்லாலின் கான்று மொளியடியில் கைகாட்டி முத்திரையால் சான்ற அறநுட்பம் சாற்றாமல் சாற்றுமொரு தோன்றலாம் மோனகுரு தூயதிருத் தாள்போற்றி. 9 18. வாழ்த்து உருவமில் இறைவன் ஒருவன் என்றே அருளிய மகம்மது பெருநபி வாழி உன்னற் கரிய உருவமில் ஒருவனை உன்னற் குரியனாய் உதவ உடலளி கன்னி இயற்கை அன்னை வாழி நேசி பகைவரை என்று பேசி ஆணி அறைந்த மாணில ரிடத்தும் இரக்கங் காட்டிப் பரக்கச் சிலுவையில் நின்ற கிறிது அன்பு வாழி கொலையர சோங்கிய நிலையில் தோன்றி அஹிம்ஸா பரமோ தர்மா என்றும் தயா மூல தர்மா என்றும் அருளறம் வளர்த்த அருகன் வாழி சீலமே திரண்ட கோலங்கொண்டு போதியி னடியில் சோதனை செய்து ஒருமையில் நின்று தரும முணர்த்திய சத்திய ஞானப் புத்தன் வாழி பாரதப் போரிடைச் சாரதி யாகிப் பயன்கரு தாத வியன்திருப் பணியாம் பாதைகாட்டும் கீதையை ஓதிய கொண்டல் வண்ணக் கண்ணன் வாழி நாதக் கொடியும் போதவிந் தூர்தியும் ஞான வேலும் மான இச்சா சத்தியும் எல்லாச் சித்தியும் உடைய அமரன் அழகுக் குமரன் வாழி காமனைக் காய்ந்து காலனைக் கொன்று முப்புரம் எரித்தே அப்புர முள்ள கல்லா லடியில் சொல்லா மற்சொலும் மோனம் வாழி சாந்தம் வாழிசன் மார்க்கம் வாழி இனிதே. 19. குருமார் ஒருமை உலகெல்லாம் பொலிந்தோங்க உயிர்ப்பளிக்குஞ் செழுங்கதிரே புலனெல்லாம் வென்றவர்க்குப் புத்தமிர்தஞ் சொரிமதியே கலையென்னும் பயிர்தழைக்க அறிவுபொழி கருமுகிலே அலகில்லா ஒளிவண்ண அருட்குருவே அடிபோற்றி. 1 மக்களுயப் பலமதங்கள் மருவஅமைத் தவற்றினிடை மிக்கதொரு சமரசத்தை மிளிரவைத்தாய் உயிரென்னச் சிக்கலதில் உற்றதென்ன? சிற்றுயிர்கள் அறியாமை தக்கவர்க்கு வழியுணர்த்துந் தழல்வண்ண மெய்க்குருவே. 2 எம்மதத்தில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் செம்மையறம் நின்றொழுகின் சீர்பெறுதல் கூடுமென்று மெய்ம்மையுரை பகர்ந்தகுரு மேலவனே பன்மைமத மம்மரழித் தெனையாண்ட மாண்பினையான் மறவேனே. 3 விதங்கண்டு வாதஞ்செய் வீணருடன் உழன்றேற்கு மதங்களெலாம் உன்னடியில் மலர்ந்துநிற்கும் உண்மைநிலை இதம்விளங்க என்னுளத்தில் எம்பெருமான்! செய்தனையே பதங்கடந்த நிலைகுறிக்கும் பரமகுரு வாழியரோ. 4 அறந்தேய்ந்த இடமெல்லாம் அவதரிக்கும் ஓருவஉனைச் சிறந்தார்க்கும் பலபெயரால் செகம்போற்றும் உண்மைநிலை மறந்தார்கள் பன்மையிலே மயங்குகின்றார் வாதத்தில் புறங்காண வாதமெலாம் பொன்னடியை வேண்டுவனே. 5 ஒருவஉனக் குலகளித்த உத்தமப்பேர் பலகொண்டு குருமௌன மூர்த்தியென்றுங் குமரனென்றுங் கண்ணனென்றும் மருவருகன் புத்தனென்றும் மலைக்கிறித்து நபியென்றும் கருவியற்கை கன்னியென்றுங் கருதிநிதம் வாழ்த்துவனே. 6 ஆலமரும் மௌனியென்பேன் அணிகடம்புக் குமரனென்பேன் காலமலர் புன்னைநிழற் கண்ணனென்பேன் கடிப்பிண்டிப் பாலமரும் அருகனென்பேன் பண்பரசுப் புத்தனென்பேன் கீலமரக் கிறித்துவென்பேன் பிறரென்பேன் குருவுனையே. 7 ஆலடியில் அறிவளித்தாய் அசோகடியில் அருளளித்தாய் கோலரசில் அறமளித்தாய் கொலைமரத்தில் அன்பளித்தாய் நீலடியில் இசை அளித்தாய் நிறைகடம்பில் அழகளித்தாய் சீலகுரு உனையடைந்தேன் சிறியேனுக் களிப்பதென்னே. 8 உருஅருவ மில்லாத ஓர்இறையே உண்டென்னும் அருமறைகள் மொழியாலே அருள்ஞானம் அமைவதுண்டோ உருவுடைய குருநாதா உன்காட்சி இறைசேர்க்கும் பொருளுணர்ந்து வந்தடைந்தேன் பொய்கடிந்து மெய்யருளே. 9 காணாத இறையென்றும் காணவல்ல இறையென்றும் மாணான மறையுரைக்கும் மனந்தெளியா தலுத்துழன்றேன் வாணாளை வீணாக்கி வாடிமிக வந்தடைந்தேன் காணாத இறைகாட்டுங் காணிறைநீ குருவென்றே. 10 20. குருநாதன் உருஅருவம் அருவுருவம் ஒன்றுமிலா இறைவிளங்கும் திருவுடைய உளக்கமலத் தெய்வவொளி குருநாத உருவெடுத்த நாள்முதலா உனைநாடி உழைத்திருந்தால் பெருநிலையைப் பெற்றிருப்பேன் பிழைபொறுக்க வேண்டுவனே. 1 பருமையினைப் பயில்கின்றேன் பருமையினைப் பருகுகின்றேன் பருமையெலாங் கடந்தொளிரும் பரம்பொருளை அடைவதெங்ஙன் குருபரநின் திருவடியைக் குறிக்கொண்டு வாழ்ந்திருந்தால் திருவருளைப் பெற்றிருப்பேன் சிறுமையினைப் பொறுத்தருளே 2 குறியில்லா உலகினிலே குறிநெறிகள் பலஉண்டு நெறியெல்லாம் நின்றாலும் நின்கருணைத் திருநோக்கைப் பெறினல்லால் இறைமைநிலை பெறலரிதென் றுணர்ந்துவந்தேன் அறமெல்லாம் அருள்குருவே அடியன்முகம் பாராயோ. 3 உருவாதி இலாஇறையே உயிர்க்கருள உருத்தாங்கிக் குருவாக வருவதெனக் கூறுவதும் மறுப்பதுவும் பருவான உலகியற்கை பாழாய்வில் படிந்தெழுந்து குருநாத உனையடைந்தேன் குணக்குன்றே ஆண்டருளே. 4 ஏடுகளை ஆய்ந்தாலும் எம்மதத்தில் புகுந்தாலும் காடுமலை அடைந்தாலும் கண்டனங்கள் செய்தாலும் பாடுபல பட்டாலும் பயனிலைஎன் றுணர்ந்தின்று வாடுநிலை நீ அறிவாய் வாழஅருள் குருமணியே. 5 சடையினிலும் உடையினிலும் தாடியிலும் மொட்டையிலும் படைபடையாய்ப் பாடலிலும் பஜனையிலும் பூசையிலும் உடையதிரு ஞானம்வளர் உறுதியிலை எனத்தெளிந்தே அடைவெனநின் னடிஅணிந்தேன் அருள்புரியாய் குருமணியே. 6 மண்விடுத்துப் பொன்விடுத்து மங்கையரை விடுத்தொதுங்கிக் கண்ணடைத்துக் காற்றடைத்துக் கல்மரமா யிருப்பதிலும் பண்பிலையென் றுணர்ந்துனது பதமலரில் வண்டாக நண்ணியதை நீஅறிவாய் ஞானமருள் குருமணியே. 7 கந்தனென்றோ கிறித்துவென்றோ கண்ணனென்றோ மற்றுமுள எந்தநிலை கொண்டேனும் எனக்கருள வரல்வேண்டும் சிந்தனையே உனக்காக்கிச் சின்மயமே ஒன்றுகின்றேன் சந்தமறை மொழிந்தருளிச் சகங்காக்குஞ் சற்குருவே. 8 என்மனமே குருவாகி எனைநடத்தும் வழிகாணேன் பொன்மனத்தைக் குரங்காக்கிப் புகுந்துழன்றேன் புரைநெறியில் கன்மனத்துப் பாவியெனக் கைவிடுத்தா லெங்கடைவேன் பன்மரஞ்சூழ் செடியாகிப் படுகின்றேன் அருள்குருவே. 9 உருவாகி அருள்புரிவாய் உணர்வாகி அருள்புரிவாய் கருவாகி அருள்புரிவாய் கருத்தாகி அருள்புரிவாய் பெருமானே எப்படியும் அருள்புரிவாய் என்றென்றே குருவேஉன் னடிஅடைந்தேன் குறைநீக்க அருளுதியே. 10 21. மனம் எல்லாம் வல்ல இறையோனே என்னில் மனத்தை ஏன்படைத்தாய் பொல்லா அதனை வழிபடுத்தப் புனிதா உன்னால் இயலாதோ வல்லா ரதனை ஆய்ந்தாய்ந்து வரைந்த உரைகள் பலகொண்டு கல்லார் கற்றார் மயங்குவதைக் காணாய் கருணைப் பெருங்கடலே. 1 எங்கு முள்ள இறையோனே என்னுள் நீங்கா இனிமையனே அங்க உறுப்பில் மனமொன்றோ அதனில் அடங்கும் எல்லையதோ எங்கும் ஒடி இயங்குவதோ இனிதோ தீதோ ஐயாவே சங்கை அறுத்து நிலைபெறுத்திச் சாந்த வண்ணம் ஆக்காயோ. 2 என்னிலுள்ள மனம் இன்னே எழுந்து கங்கை ஹோயாங்கோ பன்னு வால்கா மெஸோரி பரவு தான்யூப் தேம்மூழ்கி மின்னு மதிசேய் குருஅருக்கன் மிளிரு நிபுலை சென்றுசென்று துன்னும் விரைவின் மாயமென்னோ துகளே இல்லாத் தூயோனே. 3 மலையா ஒங்கும் அணுவாகும் மற்போர் செய்யும் அமைதியுறும் புலியாய்ப் பாயுங் கோவாகும் புயலாய் வீசும் சிறுகாற்றாம் கலையாய் வளரும் கசடாகும் கருணை பெருக்கும் கொலைபுரியும் நிலையா மனஞ்செய் நடமென்னே நினைவுக் கெட்டா மெய்ப்பொருளே. 4 மனமே புலனாய்ப் பொறியாகி வயங்கும் உடலாய் உலகாகி அனலி மதியாய்க் கோளாகி அவைக ளுணர்த்துங் கலையாகி நினைவாய்க் கனவாய் உருவெளியாய் நிகழ்த்தும் மாயம் என்னேயோ சினமே இல்லாச் சிற்பரமே சிந்தைக் கெட்டா மணிவிளக்கே. 5 மனத்தின் விகாரம் யாவுமெனும் மறைவைத் தெளிய அலைந்தொழிந்தேன் வனத்தில் விகாரம் மாயுமெனும் மாற்றம் பொய்யென் றறிந்துணர்ந்தேன் மனத்தின் எல்லை கடந்தொளிரும் மன்னே மின்னே உன்னடியார் இனத்திற் சேர்ந்தால் தெளிவடைவேன் இன்பப் பொருளே அருளாயே. 6 புறத்தே உழலும் மனந்திரும்பிப் புகுந்தால் அகத்தே புலனடங்கும் அறத்தின் கூறு கால்கொள்ளும் அதுவே குருவாய் வழிகாட்டும் பொறுத்தல் வளரும் அருளுற்றுப் பொங்கும் புனித ஞானவெளி திறக்கும் இவைகள் எளிதாமே சித்தே உன்றன் துணைபெறினே. 7 நன்மை தீமை உலகிலுண்டோ நாடும் மனத்தில் அவையுண்டோ நன்மை நிறைந்த மனத்துக்கு நன்மை உலகே புலனாகும் புன்மைத் தீமை மனத்துக்குத் தீமை உலகே புலனாகும் பன்மை யுணர்வு மனஞ்சாகப் பரமே பணிசெய் கின்றேனே. 8 அச்சம் பொய்கோட் புறமனமே அருக அருக அகமனமும் பச்சென்றரும்பி மலர்ந்து நிற்கும் பயனே கருதாப் பணிபெருகும் அச்சம் பொய்கோள் அற்றொழியும் அன்பு வீரம் ஆர்த்தெழும்பும் விச்சே எதற்கும் அருள்வேண்டும் வீணன் முகத்தைப் பாராயோ. 9 குருவென் றெழுந்தால் அகமனமே குறைகள் தீர்ந்து குணமாகும் உருவில் காமன் காலன்செய் உருட்டும் மருட்டும் உதைவாங்கும் தரும மோங்கும் தயைவளரும் தரணி யெல்லாம் சோதரமாம் பெரும! எங்கும் உன்மார்க்கம் பிறங்கும் பிழைகள் பொறுத்தருளே. 10 22. மனக்குரு உடன்பிறந்து பிரியாதே உடன்வளர்ந்து வருமனமே கடந்தவரும் கடுந்தவரும் கற்றவரும் மற்றவரும் தடம்புவியில் உனை இகழ்ந்து சாற்றுவதென் வழிவழியே இடந்தரநின் பாலுள்ள ஏதமென்ன இயம்புதியே. 1 யானடையும் நிலைமைகளை ஆய்ந்துணரும் ஆற்றலிலார் ஈனஉரை பலபகர்ந்தே எனைஇகழ்வர் எனமனமே மானமுடன் உன்நிலையை மதிபதியச் செய்தாயுன் ஊனநிலை கழன்றுவிடின் உண்மைநிலை புலனாமே. 2 மனமேநீ அடைந்துவரும் மாயைநிலை எத்தனையோ நினைவேறிப் பார்க்குங்கால் நெடுங்கடலாய்த் தோன்றிடுமே இனமாகி இயங்குங்கால் எண்மூன்றி லடங்கிவிடல் தினமேவு தியானத்தால் திறப்பாமென் றுணர்த்தினையே. 3 புலன்களிலே உழல்கின்ற புறமனமாய் அவையொடுங்க நலன்களிலே நாட்டங்கொள் நடுமனமாய் ஆங்கிருந்து பலன்களிலே செல்லாத பணிபுரியும் அடிமனமாய் மலங்களிலே புரண்டெழுந்து மாசறுக்கும் மனம்வாழி. 4 புறநோக்கி மனமேநீ புரிகுறும்பால் இழிவுனக்கே. அறநோக்கும் நடுநுழைவில் அற்றுவிடும் இழிவெல்லாம் நெறிநோக்கும் அடிஅணைவில் நீகுருவே ஆகிஇறை நிறைநோக்கை அறிவுறுத்தும் நின்பெருமை புகலரிதே 5 புறமனமாய் நீபுரியும் பொல்லாத வினைபலவே அறமனமாய் நடுஅமைவில் அயல்மனங்கள் நினதாகும் திறமடவை சித்துவரும் செய்யாதே செல்லுவையேல் உறுவையடி நிலைமனமே உயர்குருவாய் எழுவாயே. 6 நீகுருவாய் எழுந்தருளி நிறைவழியைக் காட்டியதும் ஏகஒலி ஓசைஒளி எழும்முறையே எழில்மனமே போகுமிடம் மேலெங்கே புதுவாழ்வை அளித்தொளிக்கும் ஆகமிலாய் கைம்மாறோ ஆற்றும்வகை அறியேனே. 7 உன்புறமோ உப்பாழி உன்நடுவோ உயராவி உன்னடியோ தண்மைமழை ஒத்திருக்கும் வகையுணர நன்மனமே துணைபுரிந்தாய் நானிதற்கென் செலுத்துவனே பொன்மனமே என்றுன்னைப் போற்றிநிதம் வழுத்துவனே. 8 புறமடங்க அழகுருவைப் பொருந்தநினைந் ததிலொன்றில் நிறவுருவம் நடுநீறாய் அடிஒளியாய் நீறாகும் உறைபருமை நீராகி ஒலிகாற்றாய் ஒடுங்கல்போல் முறைமுறையே நிகழ்வதனை முழுமனமே உணர்த்தினையே. 9 பிடுங்குபுறம் வயமாகப் பிணிபுலனில் நுழைமனமே அடங்கநடு புகுந்தடியில் அணைந்துவழி காட்டிமறை தடங்கருணைப் பெருங்குருவே தரணிசொலுங் குருமார்கள் அடங்கலுமே நீயானால் யாரினியர் உனைவிடவே. 10 23. முறையீடு குறையுடையேன் கோதுடையேன் குணமில்லா நடையுடையேன் கறையுடையேன் கரவுடையேன் கருணையில்லாக் கருத்துடையேன் சிறையுடையேன் சினமுடையேன் சீரில்லா நெறியுடையேன் இறையவனே கடையேறும் இனியவழி காட்டாயோ. 1 பத்தியிலேன் பதைத்துருகும் பரிவில்லேன் நெஞ்சினிலே சுத்தமிலேன் வாழ்க்கையிலே சுகமில்லேன் துகளறுக்கும் புத்தியிலேன் சத்தியிலேன் பொறுமையிலேன் உனையன்றிச் சத்தியனே எனைக்காக்குஞ் சார்புடையார் எவரேயோ. 2 இளங்குழவிப் பருவத்தே இழைத்தபிழை யானறியேன் வளங்கொழிக்கும் பருவமெலாம் வளர்த்தபழிக் கென்செய்கேன் களங்கமற அழுகின்றேன் கருத்துநிலை அறிவாயே விளங்கருளைப் புரியாயேல் வேறுவழி எனக்குண்டோ. 3 உன்னருளைப் பெறவேண்டி உடலோம்ப விரையாதே என்னிமித்தம் உடலோம்பி இழிவினைகள் செய்தலுத்தேன் உன்னினைவு மனத்திலுற உயிர்சுற்றுங் கொழுகொம்பாய் மன்னுமுணர் வெழலாச்சு மன்னிப்பெழின் உய்வேனே. 4 பொல்லாத பழிபாவம் புகுந்திடவும் இடந்தந்த கல்லாத மாக்களினுங் கடையாய மனிதன்யான் நில்லாத விளையாட்டை நிலையாக நினைந்தழிந்தேன் நல்லார்தம் மனத்தமுதே நாயகமே பொறுத்தருளே. 5 புறமனத்தின் வழியுழலும் பொறிபுலனின் பொல்லாமை அறவுணர்ந்தே அகமனத்தில் அணைதருணம் ஆண்டவநின் உறவளித்தால் உயந்திடுவேன் ஒடுங்குந்தொல் வினையாவும் அறமலையே அருளருவி ஆனந்த மழையமுதே. 6 மதவெறியால் வாதப்போர் மலியிடங்கள் சென்றுழன்றேன் இதமறியேன் நிந்தனையும் இகல்பகையும் எழுந்தனவால் மதமெல்லாம் நீயொருவன் மருவுகின்ற நிலையுணர்ந்து பதமடைந்தேன் பரம்பரனே பழையவினை கழித்தருளே. 7 செருவார்க்கும் அரசியலில் சேர்ந்தார்ந்த மனந்திரும்பி அருளாக்க அரசியலில் அணைந்துபுக விழைவதனைத் தெருளான்ற அறவடிவோய் திருவுளநன் கறியாதோ இருளாற்செய் பிழைபொறுக்கும் இறையெனவந் தடைந்தேனே. 8 கன்மமெலாம் அநுபவித்தால் கட்டறுமென் றுரைக்கின்றார் கன்மமதில் கன்மமுளை கால்வழிகள் வறள்வதென்றோ கன்மவழி உழல்வதெனில் கருணைவள்ளால் நீஎதற்கோ கன்மவழி உழல்வதெனல் கடவுளுனை மறப்பதன்றோ. 9 கன்மமென்று நடுக்குற்றுக் கருத்துடைதல் எற்றுக்கோ வன்மமிலா அன்பிறைநீ என்றடியில் வணங்கிவினை உன்னிஅழு தழுதுருகின் உண்மையுணர்ந் தருட்பெருக்கால் கன்மமழி கணக்கறிந்தேன் கடவுள் நின தருளாலே. 10 24. முறையீடு பிறப்பிலே சாதி மதத்திலே சாதி பேசிடும் மொழியிலே சாதி நிறத்திலே சாதி நாட்டிலே சாதி நீதியில் நிறையினில் சாதி அறத்திலே சாதி ஆலயஞ் சாதி அழுகிய பிணத்திலுஞ் சாதி புறத்தகஞ் சாதி நாற்றமே எங்கும் புங்கவ அழித்தல்நிற் கரிதோ. 1 சாதியும் மதமும் சம்பிர தாயச் சாத்திரச் சூத்திரச் சழக்கும் சூதுடை வழக்க ஒழுக்கமும் சூழ்ந்து தொல்லருள் நெறியினை மறைத்துச் சோதியே உலகை அரித்துணல் கண்டும் சோதனை என்றுநீ இருந்தால் ஆதியே எளியேம் செய்வதொன் றறியேம் அருணெறி ஒம்புக அரசே. 2 திருநெறி என்னுஞ் செடிவளர் போழ்தில் சீறிய அலகையாய் வீறிப் பெருகிய சாதி முதலவெங் கொடிகள் பிறங்கலாய்ப் பிறங்கலாய் மண்டி அருளொளி படரா தடக்கினால் உலகில் அருநெறி எங்ஙனம் ஓங்கும் உருகிய உளத்தால் உன்னடி போற்றும் உண்மையை உணர்ந்தருள் அரசே. 3 மன்பதை இயங்கி மகிழ்வுற ஆதி மநுவெனும் மன்னவர் வகுத்த பொன்முறை யாலே பொங்கிய தன்பு பொலிந்ததிங் கமைதியே அந்த நன்முறைக் கூறு செய்தனர் பின்னோர் நானிலம் கலக்குற அரசே உன்னிய தென்னோ உலகினைத் திருத்தல் உத்தம ஒருவநின் கடனே. 4 அருணெறி செழிக்க அறத்தினர் தந்த அரசியல் எங்கணுந் தழைக்கத் தெருளறி வோர்கள் செய்தில ரதனால் செகமெலாம் கொலைக்கள னாச்சே மருளிலே வீழ்ந்து மன்பதை மறைந்தால் மன்னநின் னிடம்விடுத் தொருவா கருணைபின் னெவர்க்குக் காட்டுவை இன்பக் கடவுளே என்னுடை அன்பே 5 அன்பினில் வளர்ந்த அரசியல் சாய ஆசையே அரசியற் பேயாய்த் தன்னலத் தாயாய் விளம்பரத் தலையாய்த் தாக்கிடும் தாள்களாய்க் கட்சி வம்புக ளாகி வாதமாந் தேர்வாய் வதைபடைப் புரட்சியாய்க் கொலையாய்த் துன்புசெய் கோரம் சொல்லவும் ஒண்ணா தொலைத்தருள் சுதந்திரத் தேவே. 6 மக்களாய்ப் பிறந்தோர் மாக்களாய் மாற மரபிலா அரசியல் துணைசெய் சிக்குளே வீழ்ந்து செகமெல்லாம் சிதைந்து சிறுகுமிந் நாளினில் யாண்டும் பக்குவ ரில்லை பண்பினால் ஆக்கப் பரமனே நிலைமையை அறிவாய் விக்குளின் நேரம் விழிபுரள் வேளை விமலனே காத்தருள் செய்யே. 7 கைத்தொழில் செய்து கடவுளே என்று கழல்நினைந் தருளினால் வாழ்ந்த வித்தக வாழ்வு வீழ்ந்தது மின்னால் மேய்பொறிப் பேயினால் எழுந்த பித்தமே திரண்ட முதல்தொழில் பிரிவாய் நாடுகள் ஆசையாய் முடுக அத்தனே பழைய தொழில்வள ராட்சி அவனியில் அமைதர அருளே. 8 நாடுகள் ஆசை நாடுதல் செய்யும் நலமிலா ஆட்சியே வேண்டா பாடுக ளெல்லாம் குண்டுக ளாகிப் பாரினை அழித்திடல் தகுமோ ஏடுகள் படித்தோர் ஏழைகள் உழைப்பை எப்படி உணருவ ரந்தோ வாடுநர் குறைதீர் வள்ளல்நீ என்றே வந்தனன் திருவடி நினைந்தே. 9 சாதியும் மதமும் முதல்தொழில் முதலாம் தடைகளும் சாய்த்தன பொதுமை ஆதியே அதனை ஆணவச் செயலால் அமைத்தலின் அருமையை உணர்ந்து நீதியில் நிலவும் நின்னருட் டுணையே நினைந்தநல் வினைபுரி குழுவில் ஒதுதற் கரிய ஒருவனே கூடி உயர்பணி செய்யவேண் டுவனே. 10 25. முறையீடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யனாய்த் திரிதரு பாவி மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்து மெய்யனாய் மேவுதல் என்றோ செய்யனே உன்றன் சித்தமென் மீது திரும்பினால் சீர்பெறல் கூடும் உய்யவே அருளாய் உண்மையே எங்கும் உளமுடை ஒப்பிலா மணியே. 1 கருத்தினால் பாவம் கண்ணினால் பாவம் கைகளால் பாவமே நிகழ்த்திப் பருத்தனன் கொழுத்த பாவியாய் வளர்ந்து படுசுமை பாரினுக் கானேன் கருத்தனே பாவக் கடல்கடந் தேறுங் கவட்டையைக் காண்கிலேன் நிலையை ஒருத்தனே அறிவாய் உதவிடல் வேண்டும் உனைவிடக் களைகணும் உண்டோ. 2 எங்கணும் உள்ளாய் ஈசனே பாவம் எப்படி நுழைந்ததோ அறியேன் இங்கதை ஆய இறங்கினன் நூல்கள் எடுத்தனன் அடுத்தனன் பலரைச் சங்கையே வளரச் சஞ்சலம் பெருகச் சார்ந்தனன் திருவடி இன்று புங்கவா புனிதா பொருந்திய பாவம் பொன்றிடச் செய்தருள் அரசே. 3 புறத்ததோ பாவம் அகத்ததோ என்று புந்தியைச் செலுத்திய புலவோர் புறத்ததே என்றும் அகத்ததே என்றும் புனைந்தனர் பலப்பல நூல்கள் அறத்திலே விளங்கும் ஐயனே அவைகள் அலைத்தலைத் தரிப்பதை அறிவாய் மறத்திலே விழுந்த என்மனம் மாய மாசிலா மணியருள் புரியே. 4 பாவமே நிகழ்த்திப் பாவியேன் வளர்ந்தால் பண்புறு நாளுள வாமோ காவலே செயினுங் கண்முதற் புலன்கள் கட்டுறல் அரிதெனக் கண்டேன் தாவர மென்னச் சலனமில் தவமோ சாருநாள் எந்தநாள் அறியேன் ஆவதென் வாழ்வில் ஐயனே படைத்த அப்பனே அடைக்கலம் அடியே. 5 கண்ணினை மூடக் காற்றினை அடக்கக் கருத்தினை ஒடுக்கிடச் சொல்லும் பண்ணிலா யோகர் படிகளி லுழன்றேன் பாழினிற் கழிந்தது காலம் மண்ணிலே பிறந்த பயனினை இழக்க மனமிலை வழியெனக் கருளாய் விண்ணிலே மிளிரும் விளக்குகட் கொளிசெய் மெய்விளக் கேயரு ளொளியே. 6 சிற்பர நின்றன் திருவருட் குறிப்பைத் தெளிந்துணர் திறமிலாக் காலம் பற்பல துறையில் பணிசெயப் பாவம் படர்தொறும் படர்தொறும் அரசே கற்பனை கடந்த கடவுளே அவ்வக் காலையில் காத்தமை இந்நாள் அற்புத மென்ன விளங்கியும் அருளில் அணைகிலா அறிவிலி யானே. 7 ஐயனே நின்றன் அருள்வழி நிற்க அடியனேன் முயன்றனன் முயன்றும் செய்யஅவ் வழியே செல்லவும் நினது திருவருள் வேண்டுமென் றுணர்ந்து கையனேன் நெஞ்சக் கல்கரைந் துருகிக் கண்புனல் உகுப்பதை அறிவாய் மெய்யனே கருணை வெள்ளமே புலனை வென்றிலேன் வெல்வகை யருளே. 8 இயற்கையின் உயிரே இன்பமே அன்பே ஈசனே என்னையும் படைத்துச் செயற்கையைப் படைத்த திறத்தினை அறியேன் தெய்வமே உயிர்களின் உள்ள முயற்சியின் பயனே முனிவிலா முதலே மூடனேன் நிலையினை அறிவாய் பயிற்சியும் படிப்பும் என்செயும் பண்பே! பாவியென் பிழைபொறுத் தருளே. 9 கற்றவ னென்று கருத்திலே செருக்கிக் காலமே கழித்தனன் வீணில் நற்றவஞ் செய்ய நாளிலை நல்ல ஞானிகள் கூட்டமு மில்லை குற்றமே செய்தேன் குறைபல உடையேன் குணமலை நீயெனத் தெளிந்தேன் பற்றென உன்னைப் பற்றினேன் இன்று பரமனே பார்த்தருள் செய்யே. 10 26. முறையீடு எத்துணைப் பிறப்போ எத்துணை இறப்போ எடுத்தனன் உலகினில் ஏழை அத்துணைப் பிறப்பும் அத்துணை இறப்பும் ஆண்டவ நின்னருட் கொடையே பத்திமை யோங்கப் படைத்தனை இந்தப் பண்புறு பிறவியை அந்தச் சத்திய நெறியில் நின்றிலன் பரம சாந்தமே அருள்புரி வாயோ. 1 நெறியிலே நில்லா நீசனேன் என்று நித்தனே தள்ளிநீ விட்டால் பொறியிலேற் கெந்தப் புகலிட முண்டு பொறுத்தலும் அருளலும் பொருந்தும் அறவியல் புடைய அண்ணலே உன்னை அடைந்தனன் பிழைபொறுத் தாளாய் அறிவிலி அழுத அழுகையை அறிவாய் அடைக்கலம் அடைக்கலம் அரசே. 2 பலதிறத் துறையில் படிந்தனன் பாவி பரமநின் னடியினை மறந்தே சிலதினம் உன்றன் சீரடி நினைக்கச் செய்ததும் அருட்டிற மன்றோ கலதிய ரேனும் பிழைகுறித் தழுது கசிந்துளம் உருகினால் அருளும் சலதியே அமுதே சார்ந்தனன் அடியில் சழக்கனை ஆண்டருள் செய்யே. 3 வீடுகள் கவலை வீதிகள் சவலை விரிபதி ஊர்களுங் குழப்பம் நாடுகள் புரட்சி பாடுகள் அதிகம் நாதனே அமைதியை நாடிக் காடுகள் புகினுங் கட்டுகள் சட்டம் கடித்திடுங் கொடுமைசேர் காலம் வாடுறு மனத்தால் வந்ததை அறிவாய் வள்ளலே வழியருள் செய்யே. 4 அமைதியே வாழ்க்கை நோக்கமென் றறைந்தார் அன்றருட் குரவர்கள் இன்றோ அமைவுறு தொழிலும் வாழ்க்கையும் அரசும் அமைதியை அரித்திடல் வெளியே சமயமும் உரிய கோயிலும் அமைதி சாய்த்திடும் நிலைமைநேர்ந் துளதால் இமயமா நிற்க எண்ணினேன் ஈசா இயலுமோ பரபரப் பிடையே. 5 மலையொடு பொழிலும் நதியொடு கடலும் மங்கையும் குழவியும் மதியும் கலையென நின்றே அமைதியை வழங்குங் காட்சியும் நெஞ்சினைக் கவரா நிலைமையை, உற்ற நிலத்தினை, மாற்றி நிறுத்திட எவர்தமால் இயலும் அலைவிலாச் சாந்த அமுதமே அருளால் அமைவுறா உலகமும் உண்டோ. 6 உலகினிற் பாவம் உறுத்தெழுந் தெரிக்கும் உண்மையை ஒருவனே அறிவாய் அலகிலா தெழுந்தால் அழித்திட வல்லார் ஐயனே யன்றிவே றுளரோ உலகுயி ரளித்துப் பாவமும் அளித்த உத்தம அருள்வணன் நீயே திலகமே உள்ளந் திகழொளி விளக்கே செல்வமே திருவருள் செய்யே. 7 இலக்கியம் பயின்றேன் இலக்கணம் பயின்றேன் எழிற்கலை பலப்பல பயின்றேன் அலக்கழி சரியை கிரியையில் நின்றேன் ஐம்புல யோகினில் நின்றேன் துலக்கஎன் னறிவைத் தோயநின் அன்பில் துகளற வாழ்வினில் ஐயா நலக்குற நோக்கின் நானற லுண்மை நாயக அருள்புரி யாயோ. 8 சீலமே நிற்கச் சிறியனேன் முயன்றேன் சிதைந்ததை இடையிடை அறிவாய் சீலமும் உனது திருவடித் தியானச் சிறப்பினில் விளையுமென் றுணர்ந்தே ஓலமே இட்டேன் குறைமுறை இட்டேன் ஒருமொழி கேட்டிலேன் என்றன் ஆலமே உண்டுன் அமுதினைச் சொரிவாய் ஆனந்த வான்மலை முகிலே. 9 முன்வினை என்றும் நிகழ்வினை என்றும் முகிழ்தரு பின்வினை என்றும் என்னவோ எழுதிச் சென்றனர் உளத்தின் எண்ணமோ அறிகிலேன் எல்லாம் உன்வினை என்னும் உண்மையை உணர்ந்தால் உறுதுயர் எங்ஙனம் பெருகும் பொன்னடி மறவாப் புண்ணிய நெறியே புனிதமே பொலியவைத் தருளே. 10 27. முறையீடு உன்னையே நினைக்க உன்னையே பேச உன்னருட் டொண்டையே ஆற்ற என்னையோ செய்தேன் ஏக்குறு கின்றேன் எப்படி உய்குவன் ஏழை உன்னியே பார்த்தேன் உளமெலாம் நடுக்கம் உறுவதை நீயுநான் அறிவேம் கன்னலே கரும்பே கருணையங் கனியே கடையனேன் பிழைபொறுத் தருளே. 1 கன்னலின் பாகே கட்டியே கரும்பே கருணைசேர் அமுதமே உன்னை முன்னைய வாழ்வில் முன்னிய தில்லை முற்றிலும் மறந்தது மில்லை பின்னைய வாழ்வில் முன்னினேன் பெரிதும் பேயனேன் மறந்ததும் உண்டு அன்னையே என்றும் அப்பனே என்றும் அடைந்தனன் பிழைபொறுத் தருளே 2 கல்வியில் விழ்ந்தேன் கலைகளில் வீழ்ந்தேன் கருணையில் வீழ்ந்திலேன் பாவி செல்வமோ இல்லை சேற்றினில் வீழத் திருவருட் டுணையென மகிழ்ந்தேன் பல்வகைக் களியில் படருறா நெஞ்சம் பரமனே அளித்தனை வாழி தொல்வினை அழிந்தால் நல்லுடல் பெறுவேன் தொடர்ந்தனன் பிழைபொறுத் தருளே. 3 சாதியில் நெளிந்தேன் மதங்களில் உழன்றேன் சாத்திரக் குப்பையில் புரண்டேன் நீதியே நாள்கோள் நினைந்தனன் நாயேன் நித்தியச் சத்தியப் பொருளே ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அநாதியே அனைத்திலும் உள்ள சோதியே தொல்லை வினைஎரி சுடரே சூழ்ந்தனன் பிழைபொறுத் தருளே. 4 நாத்திக நூலில் நாடிய குழுவில் நாட்டமும் வைத்தநா ளுண்டு நாத்திகம் என்னை நண்ணிய தில்லை நாதநின் அருளது போலும் ஆத்திக வேடம் அதிகமே உலவி அழித்தது அருணெறி, உண்மை ஆத்திகஞ் செழிக்க ஆருயிர் தழைக்க அணைந்தனன் பிழைபொறுத் தருளே. 5 செல்வமு மின்றிச் சீர்மனை யின்றிச் சிறக்குநன் மக்களு மின்றிப் பல்வள மின்றிப் பணித்தனை வாழப் பரமனே அதனுளங் காண வல்லமை யுண்டோ வாழ்க்கையை வகுக்கும் வள்ளல்நீ, அதன்படி ஒழுகிச் செல்வதென் கடமை சிறுமையால் இடையில் செய்தவெம் பிழைபொறுத் தருளே. 6 செல்வமோ சிறப்போ சேண்மையில் நின்று திகழ்தரும் போதெலாம் தடைகள் ஒல்லெனத் தோன்றும் உள்ளமும் மாறும் உலகமும் நகைசெயும் அரசே செல்வமுஞ் சிறப்பும் தெய்வமே உன்றன் திருவடி மலரெனக் கொண்டு நல்லவே பொழுது போக்குவன் நடுவில் நண்ணிய பிழைபொறுத் தருளே. 7 அளவிலாச் செல்வம் நினதெனும் ஞானம் அடையவே அடியனை இங்கே அளவுடைச் சிறுமை அமைதரு செல்வம் அடைவதைத் தடுத்தனை போலும் களவுறா இயற்கைக் கருணையாஞ் செல்வம் கண்ணனுங் கிறித்துவும் மற்ற வளவரின் செல்வம் வள்ளலே அளித்தாய் வழியிடைப் பிழைபொறுத் தருளே. 8 பிறந்தனன் இங்கே இறப்பனோ இங்கே பெயர்ந்துயான் எவ்விடஞ் செல்வேன் மறந்தனன் வழியை மயக்கினைப் போக்கும் மருந்துடை மருத்துவன் நீயே திறந்தன எல்லாம் சென்றுசென் றுழன்றேன் சேரிடந் தெரியவே இல்லை சிறந்தது காணத் திருவடி அடைந்தேன் சிறியனேன் பிழைபொறுத் தருளே. 9 பொன்னினிற் பொன்னே மணியினின் மணியே பொலிவினிற் பொலிதரு பொலிவே அன்னையின் அன்பின் அருளுடை அன்பே அழிவிலா இன்பமே அடியார் முன்னிய வண்ணம் முறைமுறை பெற்றார் மூர்க்கனேன் அடியனா வேனோ என்னயான்! ஈசா எப்படி உய்வேன் எளியனேன் பிழைபொறுத் தருளே. 10 28. விண்ணப்பம் எல்லாமாய் அல்லவுமாய் இருக்கும் ஒன்றே இயற்கையுடல் கொண்டருளும் இன்பே உன்னை நல்லாரும் பொல்லாரும் நாடல் என்ன நண்பரொடு பகைவர்களும் நண்ணல் என்ன கல்லாருங் கற்றவருங் கருதல் என்ன கருணையரும் வன்கணருங் கழறல் என்ன எல்லாரும் ஈசனென ஏத்தல் என்ன ஏழையேன் தெளிவுபெற இசைப்பாய் ஐயா. 1 பல்லுலகம் உனைப்போற்றிப் பரவல் உண்மை பரவலிலே பலதிறங்கள் பார்க்க லானேன் நல்லுலகம் பயன்கருதா ஞானப் பாதை நண்ணிஉனைப் பரவுதலை உணரச் செய்தாய் சொல்லுலகம் நடிப்பச்சம் பயனை நாடல் சூழஉனைத் தொழுதுவரல் தோன்றச் செய்தாய் நல்லுலகை நாடஅருள் நாயேன் உய்ய நாதாந்தங் கடந்தொளிரும் ஞானத் தேவே 2 காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக் கதைபேசித் தொழில் புரிந்து காசு தேடி மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ மக்கள்நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும் மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங் காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக் கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத் தேவே. 3 இளமையிருந் தெவ்வழியி லேனும் உன்னை எப்படியோ விதம்விதமாய் எண்ணி வந்தேன் வளமையிலும் எளிமையிலும் வணங்கி வந்தேன் வாதையிலும் மகிழ்வினிலும் வாழ்த்தி வந்தேன் உளஅலைகள் ஒடுக்கமுற உன்னி வந்தேன் உறாமையிலும் மறவாமல் ஓதி வந்தேன் களமொழியக் கட்டறுத்துக் கனவி லேனும் காட்சியினைக் காட்டாயோ கருணைத் தேவே. 4 பாவமனம் வாயுடலம் வகுத்தார் யாரே படைபடையாய்ப் பாவங்கள் படைத்தார் யாரே தேவஉன தகமறியேன் சேயின் கையில் தெறுகொள்ளி கொடுத்துவிடின் சேர்வ தென்னோ பாவமெலாம் பகர்ந்துருகின் மன்னிக் கின்ற பண்புடைமை உனக்குண்மை பிறங்க வைத்தாய் காவலிலே புலன்வைத்துக் கசிந்து நிற்கும் கடையன்நிலை கண்டருளாய் கருணைத் தேவே. 5 மூக்குநுனி நோக்கலொடு மூச்சை ஈர்த்தல் மூலஅன லெழுப்பலொடு பாம்பைத் தூண்டும் தேக்கமுத மலயோகச் சிந்தைவிட்டுத் தியானமெனும் அமலத்தின் தெளிவிற் சேர்ந்தேன் வாக்குமனப் பாவம்அறை வலிமை பெற்றேன் வந்துமுறை யிடுகின்றேன் வள்ளால் முன்னே நோக்கியருள் மன்னிப்பை நுழைவே றில்லை நோய்தீர அழுவதென்றன் நோன்பே ஐயா. 6 என்பாவம் வெளிப்படையாய் இயம்பும் ஆற்றல் எனக்களித்த வீரஇனி எளிய பாவம் என்பாலில் அணுகிவர எண்ணுங் கொல்லோ எண்ணினதைத் தலையெடுக்க ஈசா உன்றன் அன்பீனும் அருள்விடுமோ அரசே என்னை அருமந்த பிள்ளைகளில் ஒருவ னாக்கி இன்பாரச் செய்யஉளம் இசைந்தால் உய்வேன் எங்கெங்கும் வீற்றிருக்கும் இனிமைத் தேவே. 7 பாவமெலாம் எங்கிருந்து பரவிற் றென்று பனுவல்களை ஆய்ந்தாய்ந்து பார்த்துச் செத்தேன் மேவியதென் ஐயமின்றி வேறொன் றில்லை விரிவாய்தல் அருளில்லா வித்தை வேலை தாவியவெம் பாவத்தால் தவிக்கும் நாயேன் தற்பரனே உனையடைந்தேன் தக்க மார்க்கம் ஆவிநலம் உறக்காணும் அறிவு பெற்றேன் அழியாத ஆனந்த அருண்மைத் தேவே. 8 பாவமெனில் நடுங்குமனம் பாவிக் கீந்தாய் பரமநின தருட் பெருக்கைப் பரவல் எங்ஙன் ஆவியெலாம் பரவிடினும் ஆற்றா தன்றே ஆண்டவனே ஆருயிரே அமுதே அன்பின் காவியமே ஓவியமே கலையே தெய்வக் கற்பகமே கற்பகஞ்சேர் கருணைக் காவே காவிலுறு கடிமணமே மணத்தின் சூழ்வே கண்காண உளங்காணக் காட்சி நல்கே. 9 உலகிலுள பாவக்கார் ஓடிஒடி உறுத்துருமி நச்சுமழை உரமாய்ப் பெய்து மலையருவி முதலாகி மண்டி மண்டி மலட்டாறாய் ஊற்றாறாய் வானா றாகி நிலைகளெலாம் நிரப்பிஉயிர்ப் பயிர்கள் வேக நெருப்பாகி எரித்துவரல் நிமலா காணாய் நிலமழிந்தால் நின்னருட்கு வேலை ஏது நிறைபொருளே அமுதமழை நிரம்பப் பெய்யே. 10 29. அருள் வைப்பு பச்சையிளங் குழவியிலே பாவிசெய்த தறியேன் படிப்படியே வளருங்கால் பாவமுடன் வளர நச்சரவக் கூட்டரவை நண்ணவைத்த தென்னோ நல்லிளமைப் பருவத்தே நாதஉனை நினைந்த இச்சையிலும் பழிபாவம் இயங்கவைத்த தென்னோ என்வினையோ உன்னருளோ ஏழைஅறி யேனே எச்சமெலாம் நீறாக்கி எனையாளல் வேண்டும் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய அரசே. 1 இளமையிலே உன்நினைவும் இழிபாவ நினைவும் இரண்டுமொன்றாய் இயங்கவைத்த எண்ணமறி வேனோ முளைகிளரிப் பாவஎண்ணம் முகிழ்த்துமர மாகி மூடாமல் காத்தநுட்பம் மூர்க்கனறி வேனோ தளையுளதென் றறைந்துவிட்டார் தரணியிலே அறிஞர் தளைநினைவின் வேரறுக்குஞ் சக்தியிலை எல்லாம் விளைமுதலே உனைநோக்கி வேண்டுகின்றேன் அருளே வேறுதுணை இலைஎனக்கு வினைகடந்த பொருளே. 2 அயலவரின் மொழியினிலே ஆர்வம்வைத்தே அலைந்தேன் அதிற்பெரிய பட்டம்பெறும் ஆசையிடை வீழ்ந்தேன் மயலொழிய மனமாற மறித்தஅதி சயத்தை மாதேவா என்னசொல்வேன் மடமையறிந் தேனே கையிலெழு துங்கணக்குக் கதியெனவே கொண்டேன் கடிதிலதை விரைந்தொழித்த கருணையென்ன அரசே செயலினிலும் நீகலந்து செய்ததுணை உணராத் தீயன்பிழை பொறுத்தருளாய் திருவருளின் வைப்பே. 3 பள்ளியிலே போதிக்கும் பணியுவந்தே ஏற்றேன் பரமஅதன் பற்றறுத்த பான்மைஅறி யேனே கொள்ளைஎரி அரசியலில் குதித்துநின்றேன் ஐயா கொதிப்படக்கிப் பதைப்பொழித்த குணத்தையறி யேனே தெள்ளுதொழி லியக்கத்தில் சேவைசெய்தேன் பன்னாள் சிந்தனையீ டேறாது செய்ததறி யேனே வள்ளலுன தருட்பெருக்கின் வகையுணரா தொழிந்தேன் மலரடிஎன் தலைமீது வைத்தருளா யின்னே. 4 மனைவியொடு மக்களொடு மகிழ்வுடனே வாழ்ந்தேன் மாளஅவர் உளங்கொண்ட மாண்பையறி யேனே மனைவியென மற்றொருத்தி மனத்தில்மரு வாத வண்ணஞ்செய் வல்லமையின் வகையைஅறி யேனே தனிமையிலே வாழ்ந்துபணி தரணியிலே ஆற்றத் தற்பரநின் தயவென்ற தன்மையறி யேனே பனிமொழியர் காட்சியிலே பரமநின தொளியைப் பார்க்கஅருள் சுரந்தநலம் பாடஅறி யேனே. 5 உணவிலுளம் வைத்துவைத்து வகைவகையில் உண்டேன் உணவுளத்தை வறட்டுவித்த உளவைஅறி யேனே வணவணமாய்ப் பட்டாடை வரிந்துகட்டி வந்தேன் வரிவழக்கம் அறவொழித்த மர்மம்அறி யேனே கணகணமாப் பேச்செழுத்தால் கலக்கிவிட்டேன் நாட்டைக் கலக்கவழி மறைத்தடைத்த கணக்கைஅறி யேனே நிணநிணமே செறிபுரட்சி நினைந்தநெஞ்சை அப்பா நீக்கியற மாக்கியதன் நீர்மையறி யேனே. 6 சாதிமதச் சாக்கடையில் சருக்கியடி வீழ்ந்தேன் சமரசசன் மார்க்கமெனுஞ் சார்பளித்த தெதுவோ ஓதுகலை மயற்கடலில் உளமிருத்திப் படிந்தேன் உயர்இயற்கை கலையென்றே உணர்வித்த தெதுவோ போதனையில் நெடுங்காலம் புந்திவைத்தேன் ஐயா போதனையிற் சாதனையே பொருந்தியதென் றெதுவோ சோதனையில் ஆழ்ந்தாழ்ந்த சோதனைக்கும் எட்டாச் சோதிநின தருளன்றிச் சூழ்வதுவே றுளதோ. 7 உருவவழி பாட்டுறுதி ஒரோவழியிற் செய்தால் உறுதிகுலைந் தொருமைகெடும் என்றுரைத்த தெதுவோ திருவுடைய அகத்திணையின் சேர்க்கைபெற்றா லுருவத் திறம்விளங்கும் என்றுணர்த்தித் தெளிவித்த தெதுவோ உருவமெனக் கல்வணங்கல் உயர்வழிபா டாகா ஓவியமே உளங்கவர்வ தெனத்தெரித்த தெதுவோ உருவருவம் ஒன்றுமின்றி ஓங்குபரம் பொருளே உன்னருளே எனக்கொண்டேன் உண்மையெனக் கருளே. 8 குருமணியின் காட்சியிலே வேட்கைகொண்டேன் அரசே கோதில்குரு நாதனுண்மைக் குணங்குறித்த தெதுவோ பருமையிலே மனஞ்செலுத்திப் பன்மையிலே வீழ்ந்தேன் பருப்பன்மை ஒருமைக்குப் படியென்ற தெதுவோ கருமமறல் ஞானமெனக் கருத்திருத்தி வந்தேன் கைம்மாறெண் ணாக்கருமஞ் செய்யென்ற தெதுவோ பெருமநின தருளன்றிப் பேசுதல்வே றுண்டோ பிழைபொறுக்கும் அருளுடைய பெரியபரம் பொருளே. 9 என்னுடைய வாழ்வினைநீ இயக்கிவரும் நுட்பம் இளமையிலே உணராமல் இறுமாப்பால் கெட்டேன் உன்னுடைய அருளாலே உழலுமொரு பாவி உனைமறந்தேன் உய்வேனோ உண்மையிலே கெட்டேன் என்னிலைமை அறியாமை எங்குமுள அறிவே ஏழைமுகம் பார்த்தருளி இரும்பிழைகள் பொறுப்பாய் கன்னலினும் இனிக்கின்ற கருணைபெரு கமுதே காட்டில்வலைப் பட்டகலை கதியானேன் அரசே. 10 30. குறை களைவு அறியாமை எனுமுதலை அடர்ந்ததெனை என்றோ அதைஅகற்றும் ஆற்றலுயிர்க் கில்லையென அருளால் குறியேதும் இல்லானே குறிஉடலும் உலகும் கொடுத்தறிவை விளக்கியதை மறந்தொழிந்த கொடியேன் வெறியேறி இழைத்தபிழை அத்தனையும் பொறுத்து மேலேற்றப் படிப்படியே மனந்தெளியச் செய்த நெறியோனே நின்மலனே நின்பெருமைத் திறத்தை நேர்மையிலேன் எவ்வாறு நினைந்துபுகழ் வேனே. 1 அருளரசே எனக்களித்த அகத்தினிலே அகந்தை அரக்கனுழைந் தாட்சிசெய விடுத்த அறியாமை மருளுடையேன், அவன்கொடுமை மாதேவா அறிவாய் மறமிக்க அவனைமறி வகையறியேன் வலியோ தெருளுணர்வோ ஒன்றுமிலேன் செய்வதொன்றும் அறியேன் திக்கற்ற பாவிக்குத் துணைஎவரோ சொல்லாய் இருளடைவில் வாடுகின்ற ஏழைமுகம் பாராய் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய இறையே. 2 பொன்மனத்தை எனக்களித்தாய் புண்ணியனே அதுவோ புகுந்தசஞ்ச லத்தாலே புலிகரடி முதலாம் பன்மிருகம் உலவுகின்ற பரற்காடாய்ப் போச்சே பழமலையே புதுப்புனலே பரங்கருணைக் கடலே உன்னையே நினைந்துருகும் உயர்நிலையை இழந்தேன் உலகினிலே ஏன்பிறந்தேன் உத்தமனே சொல்லாய் என்னிலையைப் பண்படுத்த எண்ணுதியேல் உய்வேன் இல்லையெனில் என்செய்கேன் ஏழைமுகம் பாரே. 3 சீற்றமெனுள் ஊற்றெடுத்துச் செறிந்தார்த்த சேட்டை செப்புதற்குஞ் சொல்லுண்டோ சீறுபுலி நாணும் கூற்றுருவாய் முடுக்குங்கால் குருதியெலாங் கொதிக்கும் கூர்நரம்புக் கட்டிளகும் கொல்லுமது ஒடுங்கப் பாற்றியுளத் தமைதியெனும் பரிதியெழ அருளிப் பாவியெனைத் தடுத்தாண்ட பரங்கருணை நிதியே சேற்றிடையில் கமலமெழத் தேன்பிலிற்ற வண்டு தித்திக்கும் பாட்டோதச் செய்யிறைநீ யன்றோ. 4 வன்மஅனல் எரிக்கிரையாய் மாய்ந்துவந்த காலை மனஅமுதாய்த் தண்மைபொழிந் தாண்டவண்மை வாழி கன்மமது கரைகாணாக் கடலென்றே அஞ்சிக் கலங்கியஎன் கலக்கொழித்த கருணைநிலை வாழி பன்மைமயக் குறும்வழியே பகைமைவளர் எனக்குப் பண்பொருமை இன்புணர்த்தும் பான்மையருள் வாழி தன்மமலை யாயிலங்கித் தயைஅருவி சொரியும் தண்மையனே பண்மையனே தனிநீதி வடிவே. 5 ஆசையெனும் அலகைஅன்பை அடக்கிவிலங் கிட்டே ஆளஇடந் தந்தபின்னை ஆளநினைந் தாயோ ஈசஅதை அறத்தொலைத்தால் எவ்வுயிரும் ஆவேன் இன்பநிலை வேறுண்டோ ஏழைஅறி யேனே வீசுவெயில் படர்ந்துவர விலகிவறள் நீர்போல் விரிஆசை நின்னொளியால் விலகிஅற ஐயா வாசமலர் இளமையிலே மனஞ்செலுத்தி வந்தாய் வள்ளலுனக் கெவ்வகையில் வழங்குவன்கைம் மாறே. 6 காமவெறிக் கடல்கடந்து காதற்கரை நண்ணிக் காணாத நெறிகாணக் கண்ணளித்த கண்ணே சேமமுற ஒருத்தியுடன் சிலஆண்டு வாழ்ந்து சேயடைய அன்புபெறச் செம்மைபுரி அறமே தேமொழியர் ஒளியினிலே திகழ்தாய்மை நுட்பம் சிந்தையினில் படியவைத்துச் சிக்கறுத்த பதியே காமமெனப் பெண்ணுலகைக் கருதாத கல்வி காசினியில் பெருகிவரக் கடவுளருள் செய்யே. 7 தனியொருத்தி மணந்தறத்தில் சார்வாழ்க்கை மற்றத் தையலரைத் தாயென்று சால்புறவே கருதும் இனியமனத் திருவளித்தல் என்றுணரச் செய்தாய் இயற்கைமணந் தின்பநல்கும் இறைவநின தருளே கனிமொழியர் மாயையெனக் கடிமணத்தைத் துறந்தோர் காமஎரிக் காளாய கதைகள்பல அறிவாய் தனிமைவழி படைப்புளத்தைத் தகர்ப்பதன்றோ வளரும் தரணியிலே பெண்மைநலம் தழைக்கஅரு ளாயே. 8 மருட்புகழில் என்மனம்போல் விழுந்ததிலை என்று மற்றதனைத் துறக்குமகம் மலரவைத்தாய் போலும் பொருட்பெருக்கு களியாடல் புகுவிக்கு மென்று புன்மையனை எளிமையிலே பொருந்தவைத்தாய் போலும் அருட்சிறப்பால் அல்லலெலாம் அறுத்தலுக்கென் றன்பால் அன்றாட அப்பமெனக் களிக்கின்றாய் போலும் இருட்செறிவே இல்லாத இன்பஒளி விளக்கே எங்கெங்கும் எவ்வுயிரும் இருந்தருளும் இறையே. 9 ஆசைபுகழ் முதலாய அறியாமைச் சேய்கள் அத்தனையும் ஆட்சிசெய எத்தனையோ பிறவி நாசமடைந் தொழிந்திருக்கும் நானறியேன் எச்சம் நாதஇந்தப் பிறவியிலே நல்லருளால் சிதையும் ஓசைசிறி தெழவுணர்வும் உற்றதையா முற்றும் உண்மைவிடு தலையடைய ஒழிந்தபழம் பிறப்பின் வாசமுணர் வகைதெளிய வள்ளல்! வழிகாட்டாய் வாக்குமனங் கடந்தொளிரும் மாசில்லா மணியே. 10 31. வழிபாடு வாக்குமனங் கடந்தவன் நீ வாக்குமன முடையேன்யான் போக்குவர வற்றவன் நீ போக்குவர வுடையேன்யான் யாக்கையிலா மேலவன் நீ யாக்கையுடைக் கீழவன்யான் தேக்கின்ப வழிபாடு செய்வதெங்ஙன் சின்மயனே. 1 உருவுண்டு வாக்குமன ஒலிக்கென்பர் அகத்திணையார் அருவமுரு அன்றென்றல் அறியாமை அஃதுமுரு அருவமுரு எனும்பேதம் அமைநுண்மை பருமையிலே உருஅருவம் ஒன்றுமிலாய் உன்னலெங்ஙன் உண்மையனே. 2 மதியாலே உணர்ந்தாலும் மனத்தாலே நினைந்தாலும் பதியேஎவ் வுருவாதல் படிந்துவிடும் எவ்வண்ணம் துதியேற வழிபடுதல் துணையுருவம் இல்லானே கதியேஉன் னடைக்கலமே காட்டுவழி செம்பொருளே. 3 வாக்குமனங் கடந்தவனே வாழவைத்தாய் வழிபாட்டைத் தூக்கியற்கைக் கோயில்வழி தொன்மைமிகும் அக்கோயில் ஆக்கியநாள் எந்நாளோ ஆண்டவனே நீயறிவாய் பாக்கியமே வழிபாடு பண்பியற்கை வடிவோனே. 4 நீல்வளரும் வான்கோளும் நிலாப்பகலும் பால்வழியும் மால்வரையுங் காடுவயல் மாகடலும் ஆயஉனை நூல்வலவர் ஓவியமா நுண்ணுருவந் தரநினைப்பில் கால்வைத்த வழிபாடு கருத்தில்புக இறையருளே 5 ஒவியநுண் ணுயிர்நிலையை உணராது வழிபாட்டைத் தாவியவர் கல்லுருவே தனிக்கடவு ளெனக்கொண்டார் மேவியஅம் மடமைக்கோள் மேதினிக்கண் மூடியதே ஒவியநுண் பொருளோங்க உடையவனே உளங்கொள்ளே. 6 புறமனத்தின் ஆட்சிவிழும் ஓவியத்தின் வழிபாட்டால் அறமணக்க உள்மனத்தின் ஆட்சியெழும் எனஉணருந் திறமளிக்க வல்லவநின் திருவருளாம் அடிமலரின் நறவருந்தி இன்பமுற நானழிய வேண்டுவனே. 7 ஒன்றலுநெஞ் சோவியத்தில் உயர்அமல யோகமென்றும் தின்றுகொழுத் துயிர்ப்படக்கல் சிறுமைமல யோகமென்றும் நன்றறியச் செய்தமையால் ஞானநெறி விளங்கியது நன்றிபுரி வகையறியேன் நன்றிகரு தாப்பரமே. 8 இயற்கையிலே நீஇருக்கும் இனிமையினை வழிபாட்டுப் பயிற்சிமிகத் தெளிவாக்கும் பண்பமைத்த பெரியோய்அம் முயற்சியிலே நுழையாது மூச்சடக்கல் அறிவாமோ இயற்கைவழி பாடோங்க ïiw!ஆட்சி செலுத்துதியே. 9 வழிபாடே வழிபாட்டை ஒருவுநிலை சேராமுன் வழியதனை விரிமனத்தார் வலிந்துவிடல் கேடன்றோ பழிபாவம் அவராலே பரவிவரும் பாரழியும் வழிபாட்டின் வழிவளர வள்ளலதை ஓம்புகவே. 10 32. வழிபாடும் கோயிலும் வழிபாட்டுக் கென்றறிஞர் வகுத்தெடுத்தார் கோயில்களை இழிபாட்டுக் கவைஇந்நாள் இரையாதல் கண்கூடு கழிபாட்டை என்றழுது கதறுகின்றார் அடியரெலாம் பழிபாட்டைக் களைந்தருளிப் பண்பளிப்பாய் பரம்பொருளே. 1 அமைதியுற அகக்கரணம் அமைந்ததிருக் கோயில்பல அமைதியழி பகைக்களனாய் ஆனவிதம் நீயறிவாய் அமைதிபெற எங்குற்றே அடியவர்கள் வழிபடுவர் அமைதியெனும் மெய்ப்பொருளே ஆண்டவனே பார்த்தருளே. 2 நாடுகளின் இயற்கைநிலை நன்குணர்ந்த பெரியோர்கள் பீடுதிருக் கோயில்களைப் பிறங்கவைத்தார் அங்கங்கே கோடுகளை இடையிடையே கொணர்ந்திட்டார் கொலைக்கூத்தர் கேடுகளை ஒழித்தருளாய் கேடில்லாப் பழம்பொருளே. 3 ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்தபெருங் கோயில்பல சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய் நீதிஅறம் அழித்துவரல் நின்மலனே நீஅறிவாய் கோதுகளை அறுத்தொழித்துக் குணம்பெருகச் செய்யாயோ. 4 எங்குமுளன் இறையொருவன் என்றுணர்ந்த ஞானியரே இங்குயிர்கள் கட்டவிழ இயங்கிஅலை மனம்நிலைக்கப் பொங்குதிருக் கோயில்களைப் பொலியவைத்தார் அவையின்று பங்கமுறல் அழகேயோ பழுதொழிப்பாய் பரம்பரனே. 5 சந்தடியில் விழுந்தமக்கள் சாந்தமுறப் படிப்படியே சிந்தைநிலை பெறுவதற்குத் திருக்கோயில் வழிபாடு முந்தையினர் கோலிவைத்தார் மூலமுறை மாறிவரல் எந்தைஇறை நீஅறிவாய் ஏழையேம் செய்வதென்னே. 6 வணக்காலும் வாழ்த்தாலும் வழிபாடு நிகழ்கோயில் கணக்காடல் சூதாடல் கட்காமக் கொலையாடல் பிணக்காடல் முதலாய பேயாடல் இடமாகிப் பிணக்காடா மாறுவது பெருமானே திருவுளமோ. 7 பொல்லாத மருட்செயல்கள் புகுந்தரிக்கும் கோயில்களில் கல்லாதார் ஆட்சிமிகக் கற்பனையும் கண்மூடும் உல்லாசக் களியாட்டும் உலவிவரின் உளஅலைகள் நில்லாவே நில்லாவே நின்மலனே காத்தருளே. 8 எக்கோயில் கண்டாலும் இறையிடமென் றுளங்கொண்டே அக்கோயில் அடைந்துதொழும் அன்பர்தொகை பெருகிடவும் சிக்கோடு மதப்பிணக்குச் சிதடர்தொகை அருகிடவும் மிக்கோனே வேண்டுகின்றேன் விண்ணப்பங் கேட்டருளே. 9 திருக்கோயில் கெட்டதென்று சீவவழி பாட்டைவிட்டால் செருக்கோட வழியுண்டோ சிற்பரமே தனிஇடத்தே உருக்கோல மிட்டுன்னை உன்னுவதும் வழிபாடே தருக்கோட வழிபாட்டைத் தகுமுறையில் வளர்த்தருளே. 10 33. திருக்கோயில் உருவின்றி அருவின்றி உருஅருவ மின்றி உரையின்றி அசைவின்றி ஒளிபொழியு மொன்றே கருவின்றி முளையின்றிக் காலவளர்ப் பின்றிக் கரையின்றி எங்கெங்கும் கலந்தருளு மொன்றே செருவென்ற புலமுடையார் சிந்தையிலே நின்று தேனமுது சொரிகின்ற தெய்வமெனு மொன்றே திருவொன்றுங் கோயிலுனக் கமைந்தவித மென்னே செகமெங்கும் ஒருமுகமா ஏற்றவித மென்னே. 1 இயற்கையிலே இறையேநீ இருந்தருளும் நுட்பம் இனிதுணர்ந்த ஓவியத்தார் எடுத்தனர்பல் கோயில் பயிற்சியிலே திருக்கோயில் தத்துவத்தின் பான்மை பகுத்தறிந்தோர் வழிபாட்டால் மனக்குறும்பை வெல்வர் செயற்கையிலே விழுந்தவர்அத் தத்துவத்தின் செல்வம் தேறாது மனக்குறும்பால் தேய்வரென்ற தெளிவு முயற்சியிலே விளங்கவைத்த முழுமுதலே! வாழி முத்திநெறி வாழச்செய் முனிவரொளி! வாழி. 2 அலைவழிநல் ஓவியத்தார் அமைத்ததொன்றோ கோயில் ஆண்டவனே உன்கோயில் அளவிலடங் காவே நிலவுலகும் நீருலகும் நின்றன்திருக் கோயில் நெருப்புலகும் வளியுலகும் வெளியுலகுங் கோயில் கலையுலகுங் கவியுலகுங் கதையுலகுங் கோயில் கானமிகு பண்ணுலகும் இசையுலகுங் கோயில் ஒலியுலகும் மறையுலகும் ஒளியுலகுங் கோயில் உலகமெலாங் கோயிலுனக் கோங்குபரம் பொருளே. 3 மண்ணெல்லாங் கல்லெல்லாம் மலையெல்லாங் கோயில் மரமெல்லாம் பொழிலெல்லாம் வனமெல்லாங் கோயில் கண்ணெல்லாம் பயிரெல்லாம் கழனியெலாங் கோயில் கயமெல்லாம் ஆறெல்லாங் கடலெல்லாங் கோயில் விண்ணெல்லாம் ஒளியெல்லாம் விளக்கெல்லாங் கோயில் மின்னெல்லாம் பிழம்பெல்லாம் வித்தெல்லாங் கோயில் எண்ணெல்லாம் எழுத்தெல்லாம் ஏடெல்லாங் கோயில் எல்லாம்உன் கோயில்களே எங்குமுள பொருளே. 4 கரும்பணுகப் புனல்கொழிக்குங் காலருவி கோயில் கரைமணலுங் கலங்காத பூங்காற்றுங் கோயில் அரும்புமலர் காய்கனிகள் அளிஇனிமை கோயில் ஆடுமயில் கூவுகுயில் அறைசுரும்பு கோயில் விரும்புநடை கலைமானும் மெல்லானுங் கோயில் வீரமுகம் காதல்விழி ஈரமனங் கோயில் அரும்பிறவிப் பயனடைந்த அருட்குரவன் கோயில் அகிலமெலாம் நின்கோயில் அருட்சோதி அரசே. 5 கையினிலே புனைந்ததிருக் கோயில்பல இந்நாள் கருத்திழந்து கண்ணிழந்து கைகால்க ளிழந்து மெய்யிழந்து நிற்பதனை வித்தகனே அறிவாய் விடியலிலே நீலமிகு வேலையிலே தோன்றிச் செய்யகதிர் பரப்பிஎழு தினகரனாங் கோயில் சித்தம்வைத் துன்னிவழி பாடுசெய்தால் ஐயா உய்யஅருள் புரியாயோ உலகுயிரைக் கலந்தே ஒளிவழங்கும் அருளொளியாய் ஓங்குபர ஒளியே. 6 தத்துவத்தைக் கொண்டெழுந்த தனிக்கோயி லுள்ளம் சாயஅங்கே பேய்புகுந்து தலைவிரித்தே ஆடிச் சத்தியத்தை அழித்துவரல் தற்பரனே அறிவாய் சாய்ங்கால நீலவெளி தண்மைநில வுமிழ்ந்து முத்துடுக்கள் படைநிலவும் முழுமதியாங் கோயில் முழுமனத்தால் வழிபாடு முன்னிமுன்னிச் செய்தால் பத்திமையிங் கமையாதோ பரங்கருணை வெள்ளம் பாயாதோ எங்கெங்கும் பரிந்தருளும் பதியே. 7 செயற்கையிலே உருக்கொண்ட கோயில்களின் நோக்கம் செத்தொழிந்தால் அவைகளினால் சிறக்கஇட முண்டோ இயற்கைமலை காடுகடல் இறைவநின்றன் கோயில் ஏழிசையும் யாழ்குழலும் எழிற்கலையுங் கோயில் குயிற்குரலும் மயில்நடமும் கிளிமொழியுங் கோயில் கோயில்பல இனிதிருக்கக் குலங்குலமா ஏனோ அயர்ச்சியுற்றுக் கவலையிலே ஆழ்ந்துபடல் வேண்டும் அண்டபிண்டம் அத்தனையும் அளித்தருளும் பதியே. 8 கைக்கோயில் அமைப்பழிந்தால் கடவுளழி வாயோ கண்ணில்லாப் பேச்செல்லாங் காற்றில்விட வேண்டும் கைக்கோலொன் றிழந்துவிடின் கண்டுகொளல் வேறு கைவழக்கே உலகிலுண்டு கவன்றழுவ தில்லை மைக்கோலம் இட்டுலகு மயங்கியது போதும் மதிவளரக் கலைவளரும் வழிபாடும் வளரும் மெய்க்கோலம் பொங்கிளமை மெல்லியபூம் பெண்மை வியப்பழகுக் கோயிலன்றோ வித்தகச்சித் துருவே. 9 எக்கோயில் சாய்ந்தாலும் இறவாத கோயில் ஈசநினக் கொன்றுளதே எஞ்ஞான்று முளதே அக்கோயில் கோயில்ஐயா, அஃதுயிராங் கோயில் அன்பறிவு வழிபாடே அதற்குரிய தன்றோ எக்கோடு மில்லாத இந்தவழி பாடே எங்கெங்கும் பரவிவரின் இகல்பகைகள் எழுமோ இக்கால நிலையறிவாய் எரியடங்க அருளாய் எவ்வுயிரும் எவ்வுலகும் கோயில்கொண்ட இறையே. 10 34. யோகம் பொறிபுலன் கடந்து பொல்லாப் புறமனங் கடந்து மத்தி மறிமனம் கடந்து வேராம் மனத்தினைச் சாந்த மாகும் குறியினில் ஒன்றல் யோகக் குணம்பெறு தொடக்க மென்றே அறிவினில் விளங்கச் செய்த அத்தனே போற்றி போற்றி. 1 காற்றினை மூக்கால் ஈர்த்தல் கனலினை மூலக் காலால் ஏற்றிடல் இறக்கல் மாற்றல் இளமதி ஒளியைக் காண்டல் ஊற்றுள நாடி நிற்றல் உடல்முகஞ் சிவத்தல் எல்லாம் ஏற்றநன் முறைக ளல்ல என்றருள் குருவே போற்றி. 2 காற்றினை அடக்கும் போதும் கனலினை முடுக்கும் போதும் மாற்றுறு நெருக்கி னூடே மன்னுமின் னொளியெ ழும்பும் தேற்றிய உடலின் மின்னில் திகழ்வது சடத்தின் சோதி ஏற்றமன் றென்று சொன்ன எந்தையே போற்றி போற்றி. 3 உடலொளி மின்னல், மேலாம் உயிரொளி மின்ன லன்று சடம்அது இதுசித் தாகும் சடத்தினைச் சித்தாக் கொள்ளும் நடனமும் மரபாய்ப் போச்சு ஞானிகள் உண்மை தேர்வர் மடமையர் மருள்வ ரென்று வாய்மலர் அரசே போற்றி. 4 உடலொளி கண்டு கண்டே உயிரொளி காணச் செல்லார் திடமுறச் சாலங் காட்டிச் சீடரை வலிந்து சேர்ப்பர் அடிபணிந் தேத்தச் செய்வர் அரிவையர் பொருளைக் கொள்வர் கடையவர் இயல்பென் றிங்குக் கருணைசெய் அரசே போற்றி. 5 சித்தொளி கண்டோ ரென்றும் திருவருள் வழியே நிற்பர் செத்தவர் போலச் செல்வர் சித்தெனச் சாலங் காட்டார் சத்தியம் அவரே யாவர் சகமெலாம் சாந்தமாகும் முத்தியும் விழையா ரென்று மொழிந்தமெய்க் குருவே போற்றி. 6 புறமனக் கொடுமை சாய்ந்தால் பொன்மனம் யோகம் நண்ணும் பிறபடி நாட்டம் வேண்டா பிறர்க்கென வாழச் செய்யும் அறமலி பணிக ளாற்றின் அகன்றிடும் அலைம னக்கோள் குறிஅறி வாகு மென்று கூறிய குருவே போற்றி. 7 உடம்பினை முறையே ஓம்பி உயர்ந்தஇல் வாழ்க்கை நின்று கடன்பணி செய்த லென்னுங் கருத்தினில் ஒன்று பட்டுத் திடம்படப் பணிக ளாற்றிச் சென்றிடின் காமி யம்போம் மடம்படும் என்று வாய்மை மலர்ந்தசின் மயமே போற்றி. 8 அடிமனம் ஒன்றில் ஒன்றும் அலைமனம் வீழ்ந்து சாயின் படிவதன் வண்ண மாகும் பன்மைகள் ஒருமை யாகும் சுடரொளி ஒன்றின் ஒன்றில் சுடர்வணம் எல்லா மாகும் செடியறும் என்று சொன்ன சித்தனே போற்றி போற்றி. 9 பன்மையை ஒருமை யாக்கும் படிமனம் உறங்கச் செல்லும் உன்னுதல் ஒதுங்கும் வேளை ஒலிஒளி நடனஞ் செய்யும் சொன்மனம் கடந்து மேலே சூழலைச் சொல்ல லாகா நன்மையென் றுரைத்த நாதா நாண்மலர் போற்றி போற்றி. 10 35. யோகப் பயன் புறமனத்தார் குறும்பெல்லாம் புகலஎளி தாமோ பொய்களவு கட்காமங் கொலைகுழப்பம் புரட்சி மறவினத்துச் சூதுபகை கரவுபுறங் கூறல் வாததர்க்கம் மதவெறிமண் ணாசையுடன் போர்கள் அறமறைக்கும் ஆட்சிமுறை அடக்குமுறை படைகள் ஆகாயம் தரைக்கடலில் ஆருயிரின் வதைகள் பிறவளர்க்கும் பேய்களிடைத் திரிந்தஎனைக் காத்த பெரியவனே நின்கருணை பேசஅறி யேனே. 1 நடுமனத்தார் மயிர்ப்பாலம் நடப்பவரே யாவர் நழுவாது செல்லினடி நன்மனத்தில் அமர்வர் இடைமறிக்கும் மாயவித்தை இறங்கிவிடின் வீழ்வர் இழிவர்நிலை மன்பதையை ஏமாற்றித் திரிவர் சடைவனப்பும் முக்கண்ணும் சங்காழி காட்டித் தணந்திடுதல் முதலாய சாலவித்தை செய்வர் அடியவனை அந்நிலைகள் அடராமற் காத்த ஆண்டவநின் அருட்டிறத்தை அறையஅறி யேனே. 2 அடிமனத்தை அடைந்தவர்கள் ஆனந்த யோக அறிதுயிலில் அமர்ந்திருப்பர் அதையிதையும் துறவார் படியகத்தில் மலைகாடு பண்ணைகடல் மொழிகள் படிப்படியே மறைந்தொலியாய் ஒளியாகிப் பாழாம் உடலகத்தில் உணர்வழியும் மேல்விளையும் உண்மை உன்னஉளம் உரைத்திடநா நோக்கவிழி இல்லை படமழித்துப் பளிங்கினைப்பா ரென்றுரைத்த பதியே பரம்பொருளே அருட்பொழிவைப் பகரஅறி யேனே. 3 அடிமனமே நினைப்புமறப் பழியுமிடம் அதுவே அரியமுத லுடம்பிருக்கும் ஆனந்த பீடம் நடிகமதன் நெடியயமன் நாடகங்க ளில்லை ஞானம்வளர் அறஅருளின் நல்லாட்சி நடக்கும் தடியுடலும் புறமனமும் நடுவுடலும் மனமும் சாடுசெய லொன்றின்றித் தாதழிந்தே கிடக்கும் படிமைநிலை என்றுணர்வில் படியவைத்த பதியே பரமேநின் அருட்பெருக்கைப் பாடஅறி யேனே. 4 பருவுடலில் நுண்ணுடலில் முதலுடலில் முறையே படிந்தபுற மனமுநடு மனமும்அடி மனமும் தருவிலுள தலைநடுவேர் கடுப்பனவே யாகும் தனியோகக் கனல்மூளத் தாங்கிடும்வேர் எரிந்தால் பெருமரமே கிளைகளுடன் பெயர்ந்துவிழும் மீண்டும் பிறங்கியெழத் தலைசுழற்றப் பேறில்லை தளிர்க்கும் கருவழியும் என்றுணரக் கருத்துவைத்த கதியே கற்பகமே நின்கருணை கழறஅறி யேனே. 5 இரேசகமும் பூரகமும் கும்பகமும் இந்நாள் இவ்வுலகில் படும்பாட்டை எழுதலிய லாதே தராதலமீ துழல்காற்றை ஈர்த்திறக்கி இறுக்கல் சார்புமுறை அன்றன்று சாந்தமுறை யுளது புராதனமே மூவுடலில் மும்மனத்தின் புணர்வு புகல்யோகப் படிகளென்று புந்திதெளி வித்த பராபரமே நின்நினைவால் ஐயமெலாம் பறக்கும் பான்மைகண்டேன் அருள்வியக்கும் பண்பையறி யேனே. 6 புறமனத்தை அடங்கவைத்தல் இரேசகமாம் அதனைப் புரிந்தநடு மனத்திறக்கல் பூரகமாம் அதனை அறமணக்கும் மனத்திறுத்தல் கும்பகமாம் என்றும் அடைவான இரேசகமே பூரகமா மாறித் திறமிருக்குங் கும்பகமாய்த் தெளிவுசெயும் என்றும் சிந்தனையில் விளங்கவைத்த சித்தமணி விளக்கே நிறையுளத்தி லருள்விளக்கி நிற்கின்ற பொருளே நின்மலனே அருள்வகையை நிகழ்த்த அறியேனே. 7 மூலஅனல் எழுப்புவதன் மூலமென்ன என்று முன்னிமுன்னிப் பல்காலும் முயன்றுமுயன் றலுத்தேன் மூலனுரை கருவாசல் எருவாசல் இடையே மூளொளியே மூல அனல் என்றுணரச் செய்தாய் மேலொளியும் கீழொளியும் மின்கொடியா யொன்றி மெய்நிறுத்தும் நிலைதெளிந்தால் மெய்யோகம் விளையும் காலமெலாம் தெளிவாகும் என்றறியச் செய்தாய் கடவுளேநின் பெருங்கருணைக் கருத்தைஅறி யேனே. 8 மூலவொளி எழுப்புதற்கு மூர்க்கநெறி வேண்டா முன்னவர்கள் பற்றியது மூர்க்கநெறி அன்று சீலநிறை அறவாழ்விற் சேர்ந்துடலை ஓம்பிச் சிந்தையிலே கொண்டகுறித் தியானத்திற் றிளைத்தால் மூலவொளி மேலையொளி மூண்டெழுந்து நிற்கும் மூலவினை நீறாகும் என்றென்றன் மூளைப் பாலமரச் செய்தனையே பகலிரவைக் கடந்த பரவெளியே நின்னருளின் பான்மையறி யேனே. 9 மேலொளியும் கீழொளியும் மின்னியெழ எழவே மெல்லிதய மலர்விரிந்து தேனமுதம் சொரியும் சீலஉடல் கோயிலெனும் சிறப்புவெளி யாகும் சீவவொளி காலுமெங்கும் செவ்வொளியே பொங்கும் மேலுறுமெய்ஞ் ஞானநிலை மேவுவதைச் சொல்லால் விளம்பலிய லாதென்று விளங்கவைத்த இறையே வாலறிவே யோகியருள் வதிந்தருளும் அன்பே வாழ்வேநின் அருட்டிறத்தை வழுத்தஅறி யேனே. 10 36. யோக உடல் உடல்விளக்கை அருள்புரிந்தாய் உயிரிருளை ஓட்ட உற்றதுணை பயன்படவே யோகநிலை வைத்தாய் உடல்வெறுத்தால் யோகநிலை உயிருறுதல் என்றோ உயிர்இருளை நீக்கிஉயர் ஒளிபெறுதல் என்றோ உடல்விளக்கின் கொடைநோக்கம் உடைந்துவிடு மன்றோ உய்யுநெறி வேறுண்டோ உடையவனே உரையாய் உடல்வெறுக்கும் அறியாமை ஒழிந்துவிடல் நன்றே ஒலிகடந்தும் ஒளிகடந்தும் ஓங்குபரம் பொருளே. 1 உயிரிருளை நீக்கஅதற் குடலமைத்த வகையை உன்னஉன்ன உன்கருணைத் திறம்விளங்கும் ஐயா தயிரிலுறு நெய்யெனவே தனியோகர் உள்ளத் தாமரையில் வீற்றிருந்து தண்ணளிசெய் தேவே மயிருடலம் நெஞ்சுருவாய் நுண்ணுடல்நெஞ் சருவாய் மணக்குமுதல் உடல்நெஞ்சில் மருவகர ஒலியாய் செயிரழிசெவ் வொளியாகிச் சிக்கறுக்கும் அறிவே சித்தருளக் கோயில் கொண்ட சின்மயமே அருளே. 2 புறஉடலம் தோல்நரம்பு புகையுடலம் நுண்மை புல்லரிய முதலுடலம் பொன்னவிரோங் காரம் புறமனமே அலையுமது நடுமனமோ எண்ணம் புந்திநினை வற்றதுவே அடிமனமாம் அதிலே உறவுகொள உறவுகொள ஊனமெலாம் நீங்கும் உண்மைஅருள் இன்பநடம் ஓங்கிவரும் நல்ல அறமருவும் என்றுணர அருள்சுரந்த இறையே அப்பாஎன் றடியடைந்தேன் ஆள்கபெருந் தகையே. 3 ஓங்கார உடலளிக்கும் உடல்நுண்மை மேலும் உருவமுகிழ் பருவுடலை உதவுவதைத் தேர்ந்து பாங்கான புறமிருந்து நடுநுழைந்து அடியிற் படிந்துபடி படியாகப் பயிற்சியினைச் செய்தால் தூங்காத தூக்கமுறும் தொல்லைபல நீங்கும் தொல்பிறவி உணர்வுண்டாம் தூயஅறி வோங்கும் ஆங்காரம் அற்றொழியும் என்றுணரச் செய்த ஆண்டவனே நின்கருணை அற்புதந்தே ரேனே. 4 ஓங்கார உடற்போர்வை உருவருவ உடல்கள் ஓதுமவை வளம்பெறினே ஓங்காரம் உரமாம் நீங்காத தியானமரு நுண்ணுடலை ஓம்பும் நிறையொழுக்கம் பொருந்துணவு பருவுடலை ஒம்பும் ஓங்கார உடலுரமா யோங்கி நின்றபின்னை உருஅருவ உடல்தாக்கும் உறவுமறு மென்று பாங்காக என்னறிவிற் படியவைத்த பதியே பரமதிரு வடியடைந்தேன் பாவங்கழித் தருளே. 5 பருவுடலை ஓம்புமுறை ஒன்றிரண்டோ அப்பா பாரினிலே மலயோகர் பகர்ந்தமுறை பலவே பருவுடலின் அளவினிலே பண்புசெய்யும் மேலே பற்றியிரு உடல்களிடம் எட்டியும்பா ராவே திருஅமல யோகர்முறை சிற்சிலவே உண்டு தெய்விகமே அவைமூன்று தேகமெலாம் ஓம்பும் கருவுடலில் சுடரெழுப்புங் கடந்தநிலை கூட்டும் கலியுலக நாட்டமெங்கே கருணைமழை முகிலே. 6 ஊற்றினிலே காற்றினிலே ஒளியினிலே மூழ்கி ஒளிபொழிற்பூ கண்டுகண்டே உயர்பாக்க ளோதிப் போற்றுமடி சிந்தைவைத்துப் பொருந்தியஊண் அருந்திப் பொய்கடியுந் தொழில்புரிந்து போகம்அள வாகி ஆற்றினிலே நின்றொழுகி ஆசைகளி யாடல் அலைகுடிகள் அழுக்கிறுகல் அளவில்லாப் பேச்சு சீற்றமிகல் புகழ்நாட்டம் செயற்கைகளை விட்டால் தெரிபருமை உடல்வளரும் திருவருளால் இறையே. 7 மலயோகர் ஆசனமும் மற்றவையும் ஆய்ந்தேன் வல்லவரும் மார்புடைந்து மாய்வதனைக் கண்டேன் கலையோக வித்தையிலே கருத்திருத்தி மாய்ந்தேன் கண்மூடும் விளையாட்டுக் கற்பனைஎன் றுணர்ந்தேன் மலையோரஞ் சென்றிருந்து வாசியடல் விழையேன் மாநிலத்தில் எவ்விடத்தும் மருட்டலிலை நெஞ்ச அலையோட அமைதிபெற அன்பமல யோகம் ஆண்டவனே அருள்புரியாய் அடியமர இன்றே. 8 உடையின்றி இருந்தஎனக் குடைமூன்று தந்தாய் ஒன்றிரும்பு வெள்ளியொன்று மற்றதுசெம் பொன்னே அடைவென்றே இரும்புவெள்ளி ஆக்கிவெள்ளி பொன்னா ஆக்கவழி இயற்கையிலே அமையவைத்தாய் அப்பா நடையின்றிக் கெட்டொழிந்தேன் நல்லறிவை நல்காய் நல்லிரும்பை பொன்னாக்கல் ஞானவித்தை யாமோ முடையின்றி வாழ்வறியா மூர்க்கநிலை என்னோ மூவுடலுங் கடந்தொளிரும் முழுமைமுதல் அரசே. 9 நீக்கமற எங்கெங்கும் நிறைந்துள்ள அறிவே நின்படைப்பில் ஓருறுப்பை நினைந்துநினைந் துன்னி நோக்கதுவா யொன்றஒன்ற அதன்மயமாம் எல்லாம் நுவலரிய அம்மயமும் செம்மயமாய்த் திகழும் தேக்குமயம் பொன்றியதும் செப்புதற்கொன் றில்லை தேகமனம் அற்றநிலை சிந்தனையில் லாத ஆக்கமுறல் நன்றென்னும் அறிவுபெற ஐயா அருள்புரிந்த ஆண்டகையே அடியனடைக் கலமே. 10 37. தியானம் இறைவனே உன்றன் இருப்பினில் அடியேற் கெட்டுணை ஐயமு மின்றி தரையினில் இன்மை சாற்றிய சில்லோர் சாகுநாள் உன்னையே நினைந்து முறையிடல் கண்டேன் முத்தெனக் கண்ணீர் முகத்தினில் வடிந்ததைப் பார்த்தேன் அறவனே பலநாள் அரற்றினன் அழுதேன் அகமுணர்ந் தருள்வழி காட்டே. 1 ஈசனே உன்றன் இருப்பினைச் சொல்லி இருப்பதால் எப்பயன் விளையும் பாசமே யுடைய பாவியான் பாசப் பற்றினை எப்படி அறுப்பேன் பூசைகள் செய்தேன் பூமல ரிட்டேன் புண்ணியக் கோயில்கள் சூழ்ந்தேன் நேசமே பெருக்கும் நூல்களை ஆய்ந்தேன் நேர்வழிக் காட்சியை அருளே. 2 எங்கும்நீ உள்ளாய் எங்கும்நான் இல்லை எப்படி உன்னுடன் கலப்பேன் தங்குமஞ் ஞானம் தகைந்தெனைச் சிறுகச் சாடியே வீழ்த்திய தறிவாய் இங்கதைத் தவிர்க்க எத்தனை முயற்சி எண்ணினன் செய்தனன் பயனோ புங்கவா பொருந்திப் புகவிலை இறையும் புகலொரு வழியினை அரசே. 3 தாகமே கொண்டேன் தனிவழி காணத் தயாபர எழுந்தது தியான யோகமே என்று மின்னென ஒருநாள் உற்றதன் வழிதுறை அறியேன் ஏகநா யகனே எந்தையே ஈசா எழிலருட் டுணையென உணர்ந்தேன் வேகமே உந்த விடுத்தன என்னை வெற்றுரை விளம்பர வினையே. 4 புறமன அலைவு பொன்றிட ஒன்றைப் புந்தியில் நினைக்கவென் றகத்தின் துறையுணர் அறிஞர் சொல்லிய படியில் துன்னினால் அதுபிற மனங்கள் உறவினை நல்கும் உன்னுமா றவைகள் உழலுமற் புதங்களும் நிகழ்த்தும் திறவினை அளிக்கும் சடஒளி காட்டும் சிற்பர வேறெது செயுமே. 5 ஒன்றினி லொன்ற லென்றுகொண் டெதிலும் ஒன்றலால் உறுபயன் விளையா தென்றுணர் உள்ளம் என்றனக் களித்த இறைவநீ இயற்கையிற் படிந்தே ஒன்றிய நிலையின் தத்துவநுட்பம் ஒளிருமோ ருருவினை உன்னின் நன்றொளி விளங்கும் என்றுளந் தெளிய நாதனே செய்ததும் அருளே. 6 அலைபுற மனத்தில் அழகுரு ஒன்றே அமைவுறக் கொண்டதை முன்னின் நிலைபெறும் என்றும் நடுமனத் திறங்கி நிறஉரு வடிவெலாங் கலங்கிப் பொலிவுறும் இயற்கைத் தத்துவ மாகும் புகுமது மறுமனத் தடியில் நிலவியே மறையும் நித்தனே மேலும் நிகழ்வது சொலற்கரி தாமே. 7 புறமன அலைவில் புரளுநர் உருவைப் போற்றுதல் விடுத்துருக் கடந்த நிறவடி வில்லா நிலைமையில் உன்னை நினைத்தலும் அரிதரி தாகும் புறமனம் உருவை யன்றிவே றொன்றைப் பொருந்தியல் புடையதோ ஐயா நிறவடி வின்மை அடிமனங் கடந்த நிலைமையில் விளங்குவ தன்றோ. 8 களவுபொய் காமம் கட்கொலை முதலாம் கசடுகள் வளர்புற மனத்தால் அளவெலாங் கடந்த ஆண்டவ உன்றன் அருநிலை தியானமென் பதுவே வெளிறெனும் பாழாம் மேலுமே பாவம் மேவுமே பொங்குமே அப்பா புளுகுபொய் முதலாம் புன்மைகள் முற்றும் பொன்றிடும் அடிமன மன்றோ. 9 உருவமே தியானம் உறஉற அதுவே ஒடுக்கிடும் புறமனக் குறும்பை அருவமாய் நடுவில் அமைதியை அளிக்கும் அடிமன அணைவினில் மறையும் தருமமே வளர்க்கும் தயையினைப் பெருக்கும் சாந்தமே மன்பதைக் கூட்டும் கருமமே மிகுந்த காசினி தியானக் கண்பெறக் கருணைசெய் அரசே. 10 38. தியானம் உடலளித்தாய் உளமளித்தாய் உணர்வளித்தாய் உனைநினைக்கக் கடலளித்தாய் மலையளித்தாய் கதிரளித்தாய் ஐயாவே படமுடியாத் துயரமிங்குப் படையெடுத்து வருத்துவதென் மடமையன்றி வேறென்னை மனந்திரும்ப அருளாயோ. 1 உன்படைப்பை உளங்கொண்டால் உன்நினைவே தோன்றிவரும் என்படைப்பில் உளங்கொண்டால் என்னவரும் இறையோனே பொன்படைத்த மாந்தர்பலர் பொய்படைக்க விரும்புகின்றார் துன்படைத்து வீழ்த்துங்கால் துணைஎவரென் றுணராரோ. 2 பசும்புல்லை மனஞ்செலுத்திப் பார்க்குங்கால் உன்நினைவே விசும்புமலை நோக்குங்கால் விமலாவோ உன்நினைவே கசம்படரும் வண்டிசையே காதுறுங்கால் உன்நினைவே தசும்பரவும் படமசைத்துப் பண்ணொலியில் உன்நினைவே 3 காலையிலே எழும்பரிதிக் கதிரூட்டும் உன்நினைவே மாலையிலே எழும்மதியின் நிலவூட்டும் உன்நினைவே நீலமுமிழ் வான்கோள்கள் நின்றூட்டும் உன்நினைவே சோலைமணக் காற்றூட்டும் தூயவனே உன் நினைவே. 4 பள்ளியிலே நூல்பயின்றும் பலதுறைக ளாய்ந்துழன்றும் வள்ளலுனை உணர்ந்துய்ய மாந்தர்படும் பாடென்னே புள்ளிஉழை மான்நடையில் புந்திவைத்துச் சிந்தித்தே உள்ளவுள்ள உன்நினைவே உறுதிபெற உண்டாமே. 5 மாங்குயிலின் குரல்கோயில் மயில்நடனம் அருட்கோயில் தேங்கு பசும் கிளிமழலை திருக்கோயில் உன்நினைப்பைப் பாங்குபெற ஊட்டிநிற்கப் பாமரர்கள் அங்குமிங்கும் மூங்கையராய்த் திரிவதென்ன முழுமுதன்மை மெய்ப்பொருளே. 6 பசுமைமணிச் சிறகுடைய பறவையொன்று வானிவர்ந்து திசைதிசையே இசைமுழக்கிச் செல்லுவதை நோக்கிநின்றால் அசைவிலருள் மெய்ப்பொருளே அகமுறுமே உன்நினைவே வசைவளர்க்கும் நூலவர்க்கு வழிநன்கு புலனாமோ. 7 வீடுதொறும் பாட்டுருவாய் வீணைகுழல் யாழமுதம், பாடுகளே யின்றிநிதம் பரம்பொருளே உன்நினைவு கூடவழங் கன்பொழுக்கைக் குறியாத மாந்தரிங்குத் காடுகளில் திரிந்துழன்று காற்றடக்குந் தவமென்னே. 8 அருக்கனழல் கடலெரிப்ப ஆவியெழக் காராகிப் பெருக்குமழை மலைபொழியப் பேரருவிக் கணம்பரந்து செருக்கலைகள் வீசாறாய் சென்றுகட லணைகாட்சி இருக்கைநினை வூட்டலன்றோ திருக்கருணைப் பெரும்பேறே. 9 இயற்கையெலாம் உன்நினைவே ஊட்டஉள தென்றுணரும் பயிற்சிபெறும் வாய்ப்பெல்லாம் பரம்பொருளே அருளியுள்ளாய் முயற்சியிலார் கண்மூடி மூர்க்கமெலாம் வளர்த்துவிட்டார் செயற்கைவழிச் சென்றுழன்றால் சிந்தனையின் ஊற்றெழுமோ. 10 39. தியானம் எங்குமுளாய் என்றுன்னை இயம்பிவிடல் எளிதே எழுதிவிடல் பாடிவிடல் எடுத்துரைத்தல் எளிதே எங்குமுள உனையுணரும் வழிஎதுவோ என்றே இரவுபகல் எண்ணிஎண்ணி இவ்வுலகில் வாழ்ந்தால் எங்குமுள உனதுடலம் இயற்கையெனும் உண்மை இயல்பிலுறும் உறுதிபெறும் என்றுமனந் தெளிந்தேன் எங்குமுள இறையவனே எப்படியோ தெளிவை ஏழைமகற் கருள்புரிந்தாய் இரக்கநிதி நீயே. 1 என்னுளமே கோயி லென எங்கெங்கும் பேச்சே எத்தனையோ மறைமொழிகள் எடுத்தடுக்க லாச்சே மின்னொளிருங் கருவிகொடு மெய்யறுத்துப் பார்ப்போர் மேதைநிணம் தசைகுருதி மிகுந்துவர லன்றி மன்னுமிறை கோயிலொன்றும் மருவவில்லை என்றார் மனக்கோயில் எதுவென்றே மயக்குற்றுக் கிடந்தேன் என்னுளத்தே தியானமெனும் எண்ணமுற்ற தென்னோ ஏழைபடும் பாடுணர்ந்த இறைவஉன்றன் அருளோ. 2 பலயோகம் பலவாறு பலருணர்த்தக் கேட்டேன் பற்றிவிட்டேன் சிலவற்றைப் பற்றாமல் விட்டேன் சிலயோகம் உளங்கவரும் சிறப்புடைமை கண்டேன் சிந்தைஅவை கொள்ளவில்லை திருவருளின் செயலோ மலயோகத் துறைகளிலே மயங்கிவிழா வண்ணம் மாதேவா எனைக்காக்க மனங்கொண்டாய் போலும் நலயோகம் தியானமெனும் ஞானவுணர் வென்னை நண்ணியதென் உன்னருளே நாதாந்த அரசே. 3 எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் மொழியை இயம்புவதால் ஒருபயனும் என்றும்விளை யாதே எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் உண்மை இலங்கிவிடின் மனம்அலையா எப்பழியும் அணுகா தங்குபழ வினைகளெலாம் தலைவிரித்தே ஆடிச் சார்பின்றி நீறாகும் சாந்தமுறும் என்று புங்கவனே என்னுளத்தில் புகுந்ததொரு விளக்கம் பொங்கருளே எனக்கொண்டேன் புனிதமெனும் பொருளே. 4 ஓவியத்தி லுன்னைநினைந் தொன்றிஅதில் நின்றால் உன்றனொளி உளத்திறங்கும் உருவமறை வாகும் பாவியலி லுன்னை யுன்னிப் பரிந்ததிலே ஒன்றின் பருவரிகள் கரந்துசெலும் பண்புளத்திற் பதியும் பூவியலி லுன்னைஎண்ணிப் பொருந்தியதில் ஒன்றின் பொன்னிதழ்கள் பொன்றிமுதல் புகுமுளத்தில் உனது மாவியலை நண்ணமன மறியலைகள் ஓய மாண்குறிக்கோள் தேவையென மனங்கொண்டேன் தேவே.5 சொற்கடந்த தியானமிங்குத் தொல்லைமனந் தொலைக்கும் தூயமனம் மலர்விக்கும் துணைபுரியத் தூண்டும் கற்களிலா வழிநடத்தும் கருணைஎளி தாக்கும் கரவுபகை எரிகாமம் களவுகொலை மாய்க்கும் எற்புடலில் உளநோயை இரிந்தோடச் செய்யும் இனியஅமிழ் தூட்டிநரை இழிவொழிக்கும் இந்தப் பொற்புடைமை யானுணர்ந்து புவியிடையே வாழ்ந்து புகலஅருள் மழைசுரந்தாய் பொன்றாத முகிலே. 6 அன்பார்ந்த தியானஉயிர் அமருமுடல் தொண்டாம் அருள்வழியே அதுநிகழின் அமையாத தென்ன துன்மார்க்கப் புறமனத்தைத் தொலைத்தடக்கி நன்மை சூழமனம் உண்டுபணுந் தொன்மைமலி தொண்டு, பன்மார்க்க உணர்வெழுப்பும் பகைமார்க்கம் மாய்த்துப் பத்திவளர் பொதுமார்க்கம் படைக்கவல்ல தொண்டு, கன்மார்க்கம் பெருகிவருங் காலமிது தியானம் காக்கநறுந் தொண்டாற்றக் கருணைபுரி அரசே. 7 தொண்டென்று தொண்டுசெயின் துகளறுக்குந் தியானம் தொடர்ந்துவரும் முனைப்பழியும் தொல்லைமனம் மாறும் சண்டையெலாம் மண்டியிடும் சாத்துவிகம் ஓங்கும் சன்மார்க்கம் நனிவிளங்கும் சாத்திரங்கள் சாற்றும் அண்டபிண்ட அற்புதங்கள் அடுக்கடுக்காய்த் தோன்றும் அனைத்துயிரும் ஒன்றென்னும் அன்புவழி திறக்கும் தொண்டருளம் வீற்றிருந்து தொல்லுலகை நடத்தும் bjh©l!எங்குந் தொண்டுநெறி சூழஅருள் புரியே. 8 உடற்றொண்டும் கலைத்தொண்டும் ஓங்குதொழிற் றொண்டும் உற்றமனத் தொண்டுடனே உதித்தகுடித் தொண்டும் இடத்தொண்டும் நாட்டுரிமைத் தொண்டுஞ் சகத்தொண்டும் இயன்றவரை இயங்கிவரின் இகல்பகைகள் ஒதுங்கும் கடற்புவியில் தியானஅகக் கண்திறக்கும் நன்றே கருணையிலா அமைப்பெல்லாங் காலொடிந்து வீழும் திடத்தொண்டும் தியானமுமே சிறக்கஅரு ளரசே தெய்வஒளிப் புதுஉலகம் திரண்டுதிரண் டெழுமே. 9 மண்ணினைந்தேன் நீர்நினைந்தேன் வன்னிவளி நினைந்தேன் வான்வெளியும் மதிகதிரும் வழிவழியே நினைந்தேன் உண்ணினைக்குந் தியானவகை உணர்வுகொண்டேன் ஐயா உற்றதுணை செய்வாயோ ஒதுங்கிவிடு வாயோ எண்ணமறி ஆற்றலுண்டோ ஏழைமதி யுடையேன் எப்படியோ உன்கருணை எவ்வழியில் செலுமோ அண்ணலெனக் கொருவரமே அளித்துவிடின் உய்வேன் அகந்தொண்டில் ஆரவேண்டும் அருள்புரிவாய் அதுவே. 10 40. கருணைத் திறம் உன்னருளால் இவ்வுலகில் ஒவ்வொன்றும் உற்றுவர என்செயலால் நிகழ்வதென எண்ணிவந்தேன் இறையோனே உன்னருளும் என்செயலும் ஒளிந்தேபோர் செய்தனவோ உன்னருளே வாகையணி உண்மைநிலை உணர்ந்தேனே. 1 ஒருவரிடம் வன்கண்ணும் ஒருவரிடம் மென்கண்ணும் மருவவைத்தல் இயல்பென்று மாநிலத்தார் நினைப்பதுபொய் கருணையினை எல்லார்க்குங் காலுவதே உனதியல்பு பரிதியொளி பரப்புவதில் பால்கொளுமோ இறையோனே. 2 அருளொளியில் மூழ்குவதை அறியாமல் அலையுமனம் அருளினிலே மயங்குவது மனிதரது குறைபாடே தெருளிலிவர் உன்னடியைச் சிந்தையிலே இருத்திவரின் அருளொளியில் மூழ்குவதை அறிகுவர்நன் கிறையோனே. 3 நற்செயலுந் தீச்செயலும் நண்ணுமிடம் உயிருளமே எச்செயலும் இல்லாத இறையோனே உன்மீது பச்சைமுதுப் பழிசுமத்திப் பார்ப்பவருங் கரையேற இச்சைகொளின் வழிகாட்டும் இரக்கஇயல் நினதன்றோ. 4 உன்னியலை உணராமல் உளறிவருங் கயவர்களும் கன்னெஞ்சங் கசிந்துருகிக் கலங்குங்கால் கைப்பிடித்து நன்னெறியிற் செலுத்துமருள் நாயகனே இகலில்லா உன்னருளை நினைப்பதுவே உறுதியென வந்தேனே. 5 தீயவெலாம் உலகிடைஏன் செறிவித்தாய் என்றென்றே ஆயமனஞ் செலுத்திவந்தேன் அநுபவத்தில் அவைகளுமே நேயநெறி விரைவதற்கு நேர்படுத்தும் விதங்கண்டேன் தூயபரம் பொருளேநீ துணைபுரியும் வகைஎன்னே. 6 வெம்மைநெறி நடப்பவர்க்கு விருந்துநிழ லாவதுபோல் செம்மைஅறம் விருந்தாகும் தீமையிலே உழல்வோர்க்கும் அம்மையினுந் தயவுடையாய் அறவழியும் மறவழியும் செம்மலுன தருளியங்குஞ் சீரியலின் சிறப்பென்னே. 7 தீயவரின் கூட்டரவும் தீஇயக்கக் கூட்டரவும் மேயஎழுந் துறுமுங்கால் விரையுமனம் உன்னடியில் தாயினுநல் லருளுடைய தற்பரமே இவ்வுலகில் தீயனவும் உளவாகச் செய்தனைநீ எனலாமே. 8 சாதிமதச் சண்டைகளும் தனிவழக்குச் சண்டைகளும் நீதிகொலுஞ் சண்டைகளும் நிலம்பிடிக்குஞ் சண்டைகளும் மேதினியில் சன்மார்க்கம் மேவஎனை உந்தியதை ஆதிபர நீயறிவாய் யானறிவேன் அருளரசே. 9 மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல், அண்ணலுனை மறந்தஉயிர்க் கருளூட்டுங் கருணைமழை நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுகஎன் றெச்சரிக்கை பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ. 10 41. அருளாட்சி அகிலாண்ட கோடியெலாம் இயங்கஅரு ளரசே அறவோர்க ளன்றளித்த அரசியலைப் பின்னாள் இகலாண்ட மனமுடையார் ஈரங்குலைத் தார்கள் எரிபகையே கொலைபெருகி இன்பமழித் தனவே செகமாண்டு மறைந்துவிடத் திருவுளச்சம் மதமோ சிற்றுயிர்கள் கட்டவிழச் சிந்தைசெய லெங்கே மிகவேண்டி மெய்யடியார் விதிர்விதிர்த்தல் கண்டு மேதினியி லருளாட்சி விழிக்கவிழி நோக்கே 1 குறுமதியர் அறம்மறந்து கோனாட்சி என்றும் குடியாட்சி என்றுங்குடிக் கோனாட்சி என்றும் சிறுமைமிக அரசியலைச் செறியவைத்தா ரிங்கே சிதடரினம் சழக்கரினம் சீறிவிழுங் காட்சி வறுமையுறப் பசிபிடுங்க வந்தபிணி தின்ன மன்னுயிர்கள் வதைந்துறங்கி மடிகின்ற காட்சி வெறுமையெனுஞ் சூநியமோ மெய்யருளை யுடையாய் வியனுலகில் அருளாட்சி விளங்கவிழி நோக்கே. 2 பொல்லாத ஆட்சிகளால் பொதுமைஅறம் நீங்கிப் பொருளொருபால் குவிந்தொருபால் பொன்றுதலை அறிவாய் மல்லாட வழக்கெடுக்கும் மன்றுகளில் நீதி மயக்கடைந்து நெறிபிறழ்ந்து மாய்வதனை அறிவாய் கல்லாத மாந்தரினங் கற்றவரை ஒதுக்கிக் கலையழித்தே ஆட்சிபுரி கொலைவினையை அறிவாய் எல்லாரும் இன்புறவே எங்குமுள இறையே இனியஅரு ளாட்சிஇன்றே எழக்கருணை புரியே. 3 அருளற்ற ஆட்சிகளால் அரக்கரினம் பெருகி அகிலமமர்க் களமாக்கி அன்பழித்தல் அறமோ தெருளற்ற அவர்படைகள் திரண்டெழுந்து பாய்ந்து சீவவதை குண்டுகளால் செய்துவரல் அழகோ மருளற்ற ஓவியமும் காவியமும் மற்ற மாண்கலையும் நடுக்குற்று வதையுறுதல் முறையோ இருளற்ற பேரொளியே எவ்வுயிர்க்கும் பொதுவே இறையவனே அருளாட்சி இங்கரும்பச் செய்யே. 4 ஆண்டவனே வழியடியார் அருளியவை அருளே அருகபுத்தர் உரைத்தஅறம் அன்பீனும் அருளே மாண்சிலுவை கிறிதுவிடம் வழிசெந்நீர் அருளே வள்ளுவனார் தமிழருவி வாய்மைமொழி அருளே காண்டகுநந் தாயுமானார் கருத்தெல்லாம் அருளே கருணைமன இராமலிங்கர் கண்ணீரும் அருளே தீண்டரிய சோதிஅருட் சோதி உயிர்ச் சோதி தீமைஅண்டா அருளாட்சி திகழஉளங் கொள்ளே. 5 அலைநெஞ்சை மென்மேலும் அலைக்குமர சியலால் அவனிபடும் பாடுகளை ஆண்டவஎன் சொல்வேன் கலைநெஞ்சம் காணாத கழகமலி வென்னே காதலின்பம் நுகராத காமவெறி என்னே தொலைநஞ்சு வறுமையுலை வறுமையெழ லென்னே தொகைதொகையாய் மருத்துவமும் மன்றுஞ்சூழ் வென்னே கொலையஞ்சுங் கொலையென்னே குண்டுமழை என்னே குணமலையே அருளாட்சி குறித்தருளா யின்னே. 6 மருளார்க்கும் ஆட்சியெலாம் மறைந்தொடுங்கி உலகில் மன்னுயிர்கள் கவலையின்றி மனநிறைவு கொள்ள அருளாட்சி விதைகாதல் அன்பில்படி வாகி அகக்கருவில் அரும்பிமுளைத் தறக்குடியில் வளர்ந்து தெருளார்க்கும் ஊர்நாட்டில் செழித்தோங்கித் தழைத்துச் சீருலகில் மரமாகிச் செழுங்கனிகள் உதவ இருளாட்சி இல்லாத இன்பஒளி விளக்கே இயற்கையிலே கோயில்கொண்ட இறைவஅருள் புரியே. 7 ஐந்துவிதப் பூதஇயல் ஆழ்ந்தாழ்ந்தே ஆய்வர் ஆழியடி மணலுயிரை ஆராயச் செல்வர் வந்தருகும் இமயமுடி காணவிரைந் தெழுவர் வானவெளி மண்டிலங்கள் வகையறிய முயல்வர் நந்துபனி வடதுருவம் நண்ணமனங் கொள்வர் நானிலமும் தமைவணங்கும் நாட்டமுடன் உழல்வர் சிந்தைநெறி அருளாட்சி தேடுவரோ மாந்தர் சிற்பரமே உன்னருளால் சேரஉளம் பற்றே. 8 நாடுகளைப் பற்றுவதில் நாட்டங்கொள் அரசு நாளுநாள் சட்டத்தால் நடுக்குறச்செய் அரசு காடுகளை அழித்துவருங் கருணையில்லா அரசு கட்டிடத்தில் நூல்காட்டிக் கற்பழிக்கும் அரசு பாடுகளைப் பெருக்குவித்துப் பலஉயிர்கொல் அரசு பலவிதமாய்க் கொலைக்கருவி பரப்புகின்ற அரசு கேடுபுரி இன்னவைகள் கெட்டழிய இறையே கேண்மைமிகு அருளாட்சி கிட்டஅருள் விரைந்தே. 9 அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரைஎண்ணுந் தன்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டலரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே. 10 42. ஆனந்தம் ஆனந்த மயமான ஆனந்த அரசே ஆனந்தம் உள்பொருளோ இல்பொருளோ என்றும் ஆனந்தம் உள்ளஇடம் அறிந்தவர்யார் என்றும் ஆனந்தம் மண்ணுலகோ விண்ணுலகோ என்றும் ஆனந்தம் ஒருமையிலோ பன்மையிலோ என்றும் ஆனந்தம் புறத்தினிலோ அகத்தினிலோ என்றும் ஆனந்த ஆய்வாலே ஆனந்தம் வருமோ. 1 ஆனந்த உருவான ஆனந்த அறிவே ஆனந்தம் யாக்கையிலே எவ்வுறுப்பில் என்றும் ஆனந்தம் பொறிகளிலோ புலன்களிலோ என்றும் ஆனந்தம் நெஞ்சினிலோ அறிவினிலோ என்றும் ஆனந்தம் உன்னிடமோ என்னிடமோ என்றும் ஆனந்த இடங்காட்டும் வழிஎதுவோ என்றும் ஆனந்தம் எளிமையிலே அகப்படுமோ என்றும் ஆனந்தம் ஆராய்ச்சி செய்தாலும் வருமோ. 2 ஆனந்த வாரிதியே ஆனந்த மழையே ஆனந்த அருவிசொரி ஆனந்த மலையே ஆனந்தம் விரும்பாத ஆருயிர்க ளுண்டோ ஆனந்தம் விரும்பினதும் அருகணைய வருமோ ஆனந்தம் உண்பதுவோ தின்பதுவோ அப்பா ஆனந்தம் உழைப்பின்றி வலிந்தடையும் ஒன்றோ ஆனந்த உளவுசொலும் ஆசிரியர் உளரோ ஆனந்தக் கலையுணர்த்தும் அறப்பள்ளி எதுவோ. 3 ஆனந்தப் பசுமைபொழி ஆனந்தப் பொழிலே ஆனந்த ஆராய்ச்சி அல்லலையே செய்யும் ஆனந்தம் ஆராய்ச்சி எல்லைகடந் தோங்கும் ஆனந்தம் அகண்டம்வல் லாராய்ச்சி கண்டம் ஆனந்தம் கண்டத்துள் அடங்கும்இயல் பினிதோ ஆனந்தம் இல்லாத இடமில்லை என்றே ஆனந்த அமுதுண்ட ஆண்டகையர் சொற்றார் ஆனந்தம் எங்குமெனில் ஆராய்ச்சி ஏனோ. 4 ஆனந்தம் வேறென்னும் அறியாமை நீங்கின் ஆனந்தம் நீயென்னும் மெய்யறிவு தேங்கும் ஆனந்தம் நீஎன்னில் ஆனந்தம் எல்லாம் ஆனந்தம் எங்கெங்கும் ஆனந்தம் அப்பா ஆனந்தம் மறைப்பதெது ஆணவமே அதுதான் ஆனந்தம் தான் அந்தம் ஆசிரியர் மொழியே, ஆனந்தம் பொங்கிஎழும் தான்அந்தம் எய்தின் ஆனந்த அடைவினுக்குத் தான்அறுக்க அருளே. 5 ஆனந்த வாழ்வினுக்குத் தானந்த மாக ஆனந்த நின்படைப்பாம் அழகியற்கை துறக்க ஆனந்தப் பெயராலே அறைந்தமொழி எல்லாம் ஆனந்த வழிகாட்டா அடைவிக்கும் அதனை ஆனந்தப் படைப்பினிலோ ஆனந்த மில்லை ஆனந்தப் படைப்பிலொன்றை அகங்கொண்டே ஒன்றின் ஆனந்த ஊற்றெழும்பும் ஆனந்தம் பொங்கும் ஆனந்த அமுதூட்டும் அற்புதமே ஐயா. 6 ஆனந்த இறையவனே ஆனந்தம் அடைய ஆனந்த இல்வாழ்க்கை அதற்குரிய கால்கோள் ஆனந்த முதற்பெண்ணை அலகையென நீத்தால் ஆனந்த ஊற்றழியும் அருந்துயரம் பெருகும் ஆனந்தப் பொங்கலுடன் அன்னைஎமை அளித்தாள் ஆனந்தச் சோதரியார் அன்புளத்தால் வளர்த்தார் ஆனந்தம் அருள்மனைவி அழகமிழ்தம் தந்தாள் ஆனந்தம் வளர்த்துவரும் அன்போபேய் அரசே. 7 ஆனந்தம் பெறவேண்டி அங்குமிங்கும் ஒடல் ஆனந்தம் அச்சமயம் இச்சமயம் என்றே ஆனந்த நோக்குடனே அலைந்துதிரிந் துழலல் ஆனந்தம் என்றுபுறக் கோலங்கள் மாற்றல் ஆனந்தங் கிட்டுமென மலயோகஞ் செய்தல் ஆனந்த யோகரென்றே அவதிகளை நாடல் ஆனந்த ஆண்டவனே இவையெல்லாம் பாழே ஆனந்த உயிர்ப்பணிகள் ஆற்றஅருள் செய்யே. 8 ஆனந்த நீர்நிறைந்த அகலேரி கரையில் ஆனந்தம் தழைதழைக்க ஆகாயம் நோக்கி ஆனந்தக் கரநீட்டி அன்புடனே அழைக்கும் ஆனந்தங் கனிமரத்தின் அடியமர்ந்து பார்த்தால் ஆனந்த நடைநடந்தே அங்குவரும் புட்கள் ஆனந்தக் குரலெடுத்தே ஐயஉனைப் பாடும் ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்த இறையே ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தப் பேறே. 9 ஆனந்தக் கன்றெல்லாம் அங்குமிங்குந் துள்ளி `ஆனந்த மணியோசை ஆக்களுடன் செல்லும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தக் காட்சி ஆனந்தக் கோவலர்கள் அடியெடுத்து வைத்தே ஆனந்தக் குழலூதி நடந்துசெலுங் காட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த இறையே ஆனந்த இயற்கையிலே ஆனந்தம் நுகர ஆனந்த அருளாட்சி அகிலமெலாம் அருளே. 10 43. வேண்டுதல் மெய்ப்பொருளே உன்னடியில் மேவுமனம் வேண்டும் மெய்யோம்பி நிறைபேணல் மீக்கூரல் வேண்டும் எப்பொருளும் உன்னுடைமை என்னும்எண்ணம் வேண்டும் எப்பொழுதும் இயற்கையிலே இசையுமுளம் வேண்டும் தப்புவிளை வினைபுரியாத் தவம்பெருகல் வேண்டும் தவறிழைத்தால் கசிந்துருகுந் தன்மைமிகல் வேண்டும் இப்புவியில் இகல்பகைகள் இயங்காமை வேண்டும் எவ்வுயிரும் பொதுவெனக்கொள் இயல்வேண்டும் அருளே.1 nrhâ!அடி மறவாது தொண்டுசெயல் வேண்டும் சுதந்திரமே எங்கெங்கும் சூழ்ந்தெழுதல் வேண்டும் நீதியழி அடிமைமுறை நிகழாமை வேண்டும் நிறைபிறழும் அரசெல்லாம் நிலவாமை வேண்டும் சாதிவெறி பிறப்புயர்வு சாய்ந்திடலே வேண்டும் சண்டைபுரி வெறிமதங்கள் தளர்ந்தொழிதல் வேண்டும் பேதமிலாச் சமரசமே பெருகிவரல் வேண்டும் பிணியறுக்குஞ் சன்மார்க்கப் பிடிவேண்டும் அருளே. 2 அன்புருவே அடிவணங்கி அருள்பெறுதல் வேண்டும் அணங்குலக அடிமையெங்கும் அற்றழிதல் வேண்டும் இன்பருளுங் காதல்மணம் ஏற்றமுறல்வேண்டும் இன்னாத மணமெல்லாம் இரிந்தோடல் வேண்டும் பன்மனைவி ஒருவன்கொளும் பழியொழிதல் வேண்டும் பரிந்தொருவன் ஒருத்தியுடன் படிந்தொழுகல் வேண்டும் அன்னையரை மாயையெனும் அகம்மடிதல் வேண்டும் ஆணினிடங் கற்பொழுக்க அடிவேண்டும் அருளே. 3 பெரியவனே அடிமறவாப் பேறுபெறல் வேண்டும் பெண்மையொளிர் பெருமையெங்கும் பேசிவரல் வேண்டும் அரிவையரில் தாய்மைதவழ் அன்புணர்தல் வேண்டும் அவ்வையர்பால் இறைமையொளி அசைவறிதல் வேண்டும் கரியகுழல் மாதராட்சி காசினிக்கு வேண்டும் கன்னியர்தம் மனமடைந்துன் கருணைபெறல் வேண்டும் தெரிவையரை இகழ்வோரைச் சேராமை வேண்டும் சிறுமையர்கள் மனந்திரும்பச் செபம்வேண்டும் அருளே. 4 ஆண்டவனே உனைமறவா ஆண்டகைமை வேண்டும் அலையும்புற மனமடங்கி நடுவரும்பல் வேண்டும் மாண்டநடு கடந்தடியின் மனமலரல் வேண்டும் மனந்திரும்பி அழுகின்றேன் மன்னித்தல் வேண்டும் மூண்டபழி பாவமெலாம் முனையாமை வேண்டும் மூள்பாவச் செயல்நிகழ்த்தா மொய்ம்புபெறல் வேண்டும் ஈண்டெதற்கும் உன்னருளின் இருந்துணையே வேண்டும் எழும்பும் நான் பலிஅடிக்கீழ் இடல்வேண்டும் அருளே. 5 இறையவனே எஞ்ஞான்றும் எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிரும் நீஎன்னும் இனிமைபெறல் வேண்டும் மறையருளும் உயிர்த்தொண்டு மடியும்வரை வேண்டும் மறுபடியும் தொடர்ந்ததனை வந்துசெயல் வேண்டும் கறைமலியும் பொய்யுடலம் கடந்தேறல் வேண்டும் கருணைமனம் கண்ணோட்டம் கலந்தஉடல் வேண்டும் நிறையின்ப இடமுண்மை நினையாமை வேண்டும் நித்தியமாய்த் தொண்டுபுரி நிலைவேண்டும் அருளே. 6 உறவேஉன் அருள்மறவா உறுதிநிலை வேண்டும் உலகுயிருன் கோயிலென உணர்கழகம் வேண்டும் சிறியகளி கதைஆட்டம் சிறவாமை வேண்டும் செவிவரைநில் களிகலைகள் செறியாமை வேண்டும் மறிமனத்தின் அலையடக்கும் மாண்கதைகள் வேண்டும் மனங்குவிந்து மதிபெருக்கும் உயிர்க்கலைகள் வேண்டும் பொறியரவுப் புதினவிடம் புகையாமை வேண்டும் புதியஅறி வியல்அறத்திற் புகவேண்டும் அருளே. 7 அழகநின தருங்கலைதோய் ஆனந்தம் வேண்டும் அன்பியற்கைப் பள்ளிபயின் றறிவுபெறல் வேண்டும் எழுகதிரில் மூழ்கிஉயிர்ப் பிறங்குமுடல் வேண்டும் எழிலொழுகும் பொழிலணிந்த இருக்கையிடம் வேண்டும் குழவிபொழி மழலைமொழி கொள்செவிகள் வேண்டும் கோடுமலை இவர்ந்துபொறைக் குணம்பெருக்கல் வேண்டும் பழுவம்அவிர் பசுமைபடிந் திளமையுறல் வேண்டும் பரவைஅலை பாட்டிலெழும் பயன்வேண்டும் அருளே. 8 அறவாஉன் வழியுலகம் அமைவுபெறல் வேண்டும் அதற்குரிய தொழிலெல்லாம் அளவுபடல் வேண்டும் வெறுமேடு படிப்பவர்தந் தொகைசுருங்கல் வேண்டும் விரும்புதொழிற் கல்வியெங்கும் விரிவடைதல் வேண்டும் முறையான தொழிற்கல்வி முதன்மையுறல் வேண்டும் மோனம்வளர் ராட்டைசுற்றல் முதிர்ந்தோங்கல் வேண்டும் உறவாதல் கடிதொழில்கள் ஒடுங்கிடுதல் வேண்டும் ஓவியஞ்செய் தொழில்வளர்ச்சி உறவேண்டும் அருளே. 9 ஒருவஉன தருளாட்சி உலகோங்கல் வேண்டும் ஒறுக்குமரு ளாட்சியெங்கும் ஒடுங்கிடுதல் வேண்டும் இருவரங்கு மாடியிலே உலவாமை வேண்டும் இருவரிங்குக் குடிசையிலே உலராமை வேண்டும் இருவரங்குத் தின்றுகொழுத் துருளாமை வேண்டும் இருவரிங்குப் பட்டினியால் வாடாமை வேண்டும் இருவரங்குப் பட்டாடை அணியாமை வேண்டும் இருவரிங்கு நடுங்காமை உறவேண்டும் அருளே. 10 44. போற்றி உலகெலாங் கடந்து நிற்கும் உலப்பிலா அறிவே போற்றி உலகெலாங் கலந்து வைகும் ஒப்பிலா இறையே போற்றி உலகெலாம் ஒழுங்கில் செல்ல ஒளிபொழி பிழம்பே போற்றி உலகெலாம் வணங்கி ஏத்தும் ஒருவனே போற்றி போற்றி. 1 ஆதவற் கனலை நல்கும் அலகிலாக் கனலே போற்றி சீதனுக் கீரம் ஈயும் சிறையிலா நிலவே போற்றி ஓதருங் கோள்கட் கெல்லாம் ஒளியருள் சுடரே போற்றி பூதமும் அங்கி ஏற்பப் பொலிதருந் தழலே போற்றி. 2 மண்ணிலைந் தப்பில் நான்கு வகுத்தருள் பரனே போற்றி ஒண்ணழல் மூன்று வைத்த உத்தமா போற்றி போற்றி விண்டுவில் இரண்டு சேர்த்த வித்தகா போற்றி போற்றி விண்ணிலே ஒன்று வேய்ந்த விமலனே போற்றி போற்றி. 3 இயற்கையின் உயிரா யெங்கும் எழுந்தருள் இறையே போற்றி செயற்கையின் சிந்தைக் கெட்டாச் செல்வமே போற்றி போற்றி முயற்சியின் விளைவா யோங்கும் முதன்மையே போற்றி போற்றி பயிற்சியில் நிற்போர்க் கென்றும் பண்புசெய் பரனே போற்றி. 4 இறப்பொடு பிறப்பி லாத இன்பமே போற்றி போற்றி வெறுப்பொடு விருப்பி லாத மேன்மையே போற்றி போற்றி ஒறுப்புடன் கறுவி லாத உத்தம அன்பே போற்றி பொறுப்புறும் ஒழுங்கிற் பொங்கும் புனிதமே போற்றி போற்றி. 5 பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி. 6 கூடலைக் குறிஞ்சி, முல்லை இருத்தலைக் குறித்தோய் போற்றி ஊடலை மருதப் பாலில் உதவிய உறவோய் போற்றி சூடனல் பாலைப் பண்பில் பிரிதலைச் சூழ்ந்தோய் போற்றி ஏடமை நெய்த லூடே இரங்கலை இணைத்தோய் போற்றி. 7 மலைமுழ வருவி வைத்த மகிழ்ச்சியே போற்றி போற்றி அலைகடல் பாட வைத்த அமுதமே போற்றி போற்றி கலையினில் காதல் வைத்த கருணையே போற்றி போற்றி சிலையினில் வீரம் வைத்த செம்மலே போற்றி போற்றி. 8 உருவிறந் தோங்கிச் செல்லும் உயர்ச்சியே போற்றி போற்றி அருவினுக் கெட்டா தேகும் அகண்டமே போற்றி போற்றி குருவினுள் கோயில் கொண்டு குணம்புரி சித்தே போற்றி திருவருள் விழைவோ ருள்ளச் சிந்தனை போற்றி போற்றி. 9 நல்லதே பிறவி தந்த நாயக போற்றி போற்றி அல்லவே செய்திந் நாளில் அழுமெனைக் காப்போய் போற்றி தொல்லையை நீக்குந் தொண்டில் துணைசெயுந் தோன்றல் போற்றி பல்வழி உயிர்ச்சன் மார்க்கம் பரவவே அருள்வோய் போற்றி. 10  1. மாசு மனிதம் மாசு மிகுந்த மனிதஇருள் போக்கவந்த ஏசு உனைமறவேன் என்று. 1 கன்னி வழிமலர்ந்த கற்பகமே என்னுயிரே முன்னி உனைஅணைந்தேன் முன் 2 ஆசைக் கடல்விழுங்க ஆளானேன் அப்பாஉன் நேசம் மறித்ததுவே நின்று. 3 பிழைபொறுத்குந் தெய்வம், பெரும! நீ என்றே குழையுளத்தால் நானடைந்தேன் கொள். 4 வன்பேய் முனைப்பழித்த வள்ளல் கிறிதுவே உன்சேயாய் வாழ்வேன் உணர்ந்து. 5 ஆணி அறைந்தவர்க்கும் அன்பான தெய்வமே தோணிஎனக் காவாய் தொடர்ந்து. 6 சிலுவையும் ஆணியும் செந்நீரும் நெஞ்சில் நிலவுந் தவமே நிறை. 7 என்னுள்ளே நீபிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யானிறந்தேன் உற்று. 8 உன்குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா என்குருதி எங்கேயோ ஏது. 9 வெள்ளை உடையும் மலைப்பொழிவும் என்னுள்ளக் கள்ளம் அழிக்குங் கலை. 10 2. அறத்தின் இயல் அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் ஆய்ந்தளந்தேன் திறத்தைத் தெளிகிலேன் சீற்றக் கொலைஞரின் தீச்செயலைப் பொறுத்தருள் செய்த புனிதம் நினைவில் புகப்புகவும் அறத்தன்பு நீயென் றறிந்தேன் கிறிதுவின் ஆருயிரே. 1 ஏசினேன் உன்னை இனிய மொழியை இளமையிலே கூசினே னில்லை குறையினைப் பின்னே குறித்தழுதேன் ஏசுவே! உன்னருள் என்னுளம் எய்திய தெப்படியோ மாசிலா அன்பே! மகனாய் உருக்கொண்ட மாணிக்கமே! 2 மலரைப் பறிக்கிலென் மாலை புனைந்திலென் மந்திரத்தின் ஒலியைப் பெருக்கிலென் ஓவெனப் பாக்களை ஓதிலென்ன! சிலுவையும் ஆணியும் செந்நீரும் சேர்ந்த திருவுருவம் பொலியும் உளத்தினில் பொன்றிடும் பாவப் பொருப்புகளே. 3 வாக்கை அடக்கின் வயிற்றை ஒடுக்கின் மயிர்வளர்த்து மூக்கைப் பிடித்திடின் மூச்சைத் தடுத்திடின் முத்தியின்பம் தேக்குமோ ஐயோ செகத்தீர்! அடைமின் சிலுவை உயிர் போக்கிய ஏசுவின் பொன்னடி இன்பம் புகுந்திடுமே. 4 தத்துவ நூல்களைத் தாங்கித் தருக்கச் சபைகளிலே வித்தகம் பேசி விழுந்தவன் என்று விழுமியஉன் சத்திய வாக்குத் தடுத்தெனை ஆளத் தயாபரனே மொத்திய மூர்க்கம் முறைமுறை சாய்ந்தது முன்னவனே. 5 இறையவன் கோயிலை எண்ணி நுழைந்தாய் இளங்குமரா கறைகளைக் கண்டதுங் கள்ளர் குகையெனக் காய்ந்துவிட்டாய் குறைகளைப் போக்குங் குருமொழி யாயது கோதகற்றித் தறையைத் திருத்துந் தகைமையை என்னென்று சாற்றுவனே. 6 கள்கொலை காமம் களவுபொய் தீய கறைகழித்துத் தள்ளும் வழிகளைச் சாற்றினர் பல்லோர் தரணியிலே பள்ளிப் படிப்பாய்ப் பரவின, வாழ்வில் படிவதற்குக் கொள்ளு மனமே கொலைஞரை மன்னித்த கோவடியே. 7 ஒழுக்கம் விழுப்பம் உயிரினும் ஓம்பென் றுரைத்திருந்தால் கொழிக்குமோ தானே குலவி நடந்து, குவலயத்தீர் ஒழுக்க வடிவாங் கிறிதுவை உன்னி உளத்தழுதால் அழுக்கைக் கழுவும், ஒழுக்கம் அரும்பி அலர்ந்திடுமே. 8 அன்பே! உனைக்காண் பரிதென அன்னை அகந்திரண்டாய், என்புதோல் போர்த்து நடந்தாய், மொழிந்தாய், இருநிலத்தில் மன்பதை நோய்கண் டிரங்கி இரங்கி மரித்தெழுந்தாய், பொன்னுரு வில்லையேல் புந்தியில் என்ன பொலிந்திடுமே. 9 பாவி பிறந்தனன் பாவி வளர்ந்தனன் பாவவினை மேவிய வாழ்வினன் மீக்கூர்ந்து பாவம் விளைந்தது சாவியாய்ப் போகச் சமயப் புறத்தினில் சார்ந்தலுத்தேன் தேவனே! அன்புச் சிலுவையின் நீழலைச் சேர்ந்தனனே. 10 3. அலகிலொளி அலகிலொளி ஐயாவே அகிலமெலாம் உன்கருவில்; உலகிடைநீ ஒருகன்னி உயர்கருவில் உதித்ததென்னை? சிலைநுதலார் உலகினிலே செறிந்தஇழுக் கொழித்தவர்தம் நிலைமையினை வளஞ்செய்ய நினைந்ததுவே நெஞ்சினிலே. 1 எவ்வுயிர்க்குந் தாயான இறையவனே இவ்வுலகில் செவ்வியலி ஒருதாயின் செழுங்கையில் வளர்ந்த தென்னை? எவ்வுயிருந் தாயன்பை எய்திவிடின் இறையுண்மை மெய்ம்மழவில் பொலியுமென்று விளம்புதற்கு வளர்ந்ததுவே. 2 பருவுடலை மறைத்தருளிப் பரமவுடல் அடைந்தக்கால் திருமகளிர் விழிக்கமுதச் செழுங்காட்சி வழங்கியதென்? திருமகண்மை உளமெய்தின் தெய்வவுரு விளங்குமென்று மருவுலகம் உணரகுரு மகிழ்காட்சி வழங்கியதே. 3 நெடுங்காலம் நஞ்சுமிழ்ந்து நிலம்வதைக்க நீளரவக் கொடுங்கோன்மைகொதித்ததென்னை? குமராநீ பிறந்ததுமே கொடுங்கோன்மை விழுத்தவந்த குணக்கோவென் றுனைத்தெரிந்து நடுங்கியதே கொடுங்கோன்மை நலிந்துவரல் கண்கூடே. 4 பேய்மையிலா உலகிருந்து பேயுலகிற் பிறப்பெடுத்துப் பேய்புரிந்த சோதனையும் பெற்றுவெற்றி அடைந்ததென்னை? பேய்நிலத்தில் சோதனையுண் டஞ்சாதே எனஅபயம் பேய்மனத்து மக்களுக்குப் பெரியவனே தெரிப்பதற்கே. 5 மாடிமனை யிடைஏசு மலரடியை வையாமல் காடுமலை கடல்குடிலில் கான்மலரை வைத்ததென்னை? காடுமலை கடல்குடிலுங் கடவுணெறி கூட்டியற்கை வீடமைதி யெனவிளக்க மேவியதே கான்மலரே. 6 முடிசேர்ந்த முள்ளடுக்கும் முகஞ்சேர்ந்த எச்சிலுமே இடிசோரும் உரமுடையாய்! இகலெழுப்ப விலை என்ன? கடியாத பொறுமையன்புக் கலைவளர வேண்டுமென்று நடையாலே நாட்டுதற்கு நல்லுளத்தில் எண்ணியதே. 7 சிலுவையிலே கிறிதுஉனைச் சேர்த்தாணி அறைந்தகொடுங் கொலைஞரையும் பகையாது குழைந்தருளைச் சுரந்ததென்னை? பலியிரத்தம் முழுகிமனம் படிந்துருகி மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கு நினைந்தருளைச் சுரந்தமையே. 8 ஒருகன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னங் காட்டென்றும் கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும் பொருநரையும் நேசியென்றும் போதனையால் சாதனையால் kUtit¤j »¿ÞJ!உன்றன் மலரடியில் அடைக்கலமே. 9 வாளேந்திப் போர்புரிந்த வாகையரும் மாண்டுவிட்டார் வாளேந்தாக் கிறிதுவேநீ மரித்தெழுந்தாய் வீரவள்ளால்! வாளேந்தும் வழியுழன்றேன் வழிகண்டேன் மரித்தெழுவேன் வாளேந்தா நெறிவளர்க்க மலரடியில் அடைக்கலமே. 10 4. உலகமெலாம் உலகமெலாம் பாவஇருள் உமிழ்ந்துநின்ற வேளை ஒடுக்கஅதைக் கன்னிவயிற் றுதித்தபர ஒளியே! இலகுடுக்கள் நீபிறந்த இடங்குறிக்கக் கலைஞர் ஏகிஉன்றன் அடிவணங்க இன்பமருள் சேயே! கலகமன வேந்தாட்சி கலகலத்து வீழக் கடலுலகில் அருளாட்சி கால்கொண்ட அரசே! அலகையினை அதட்டியதன் சோதனையை வென்ற ஆண்டகைமை வீரகுரு! அடியையடைந் தேனே. 1 தொழிலாளி வழிவளர்ந்தாய் தொழுவத்தில் வதிந்தாய் சூழ்வனத்தில் ஆழ்கடலில் தொடர்மலையில் நடந்தாய் விழியாத வலைஞரையும் விரும்பிஅழைத் தாண்டாய் விளையாட்டுக் குழந்தைகளை வெறுத்தவரைக் கடிந்தாய் அழியாத வீடென்றே அவர்மனத்தைக் கொண்டாய் அருவருக்கும் அழுக்கணங்கின் அழுகைக்கருள் சுரந்தாய் பழிநோயர் தொழுநோயர் படர்ந்துவரக் குமரா! பரிந்தவர்தந் துயர்களைந்தாய் பாவிமுகம் பாரே. 2 அன்றாட அப்பமெங்கட் கருள்புரிக என்றும் அடுத்துவரு நாட்கவலை அடையற்க என்றும் என்றேனுஞ் செடிபறவை என்னஉண்போம் உடுப்போம் என்றெண்ணி வதைந்துவதைத் தேங்கினவோ என்றும் நன்றாக இறைஉறுதி எளிமைவழி நவின்றாய் ஞானமென்று கடபடம்நீ நாட்டவில்லை ஐயா! பொன்றாத மொழிக்குரிய பொருந்தெளிமை என்னுள் புகுந்ததுவும் உன்னருளே புரிகைம்மா றிலையே. 3 பன்னிருவ ருள்ளொருவன் காட்டிஎனைக் கொடுப்பன் படிந்தொருவன் சோதனையில் மறுதலித்தே விடுவன் என்றுமுன்னர் வாய்மலர்ந்தாய் ஏசுபெரு மானே! இருநிகழ்ச்சி நடந்தமையை இவ்வுலகம் அறியும் அன்னவரைக் காயாமல் ஆண்டஅருட் கடலே! அடியரையும் சோதனைப்பேய் அலைக்கும்நிலை உணர்ந்தேன் என்னனையர் எளிமையினை எவ்வுரையால் சொல்வேன் எடுத்தணைக்க நீஇலையேல் எங்கள்கதி என்னே. 4 உன்னருளால் உன்னுடனே உறைந்தவரும் பேயின் உறுத்தலினால் உனைமறந்த உண்மையினைத் தேர்ந்தேன் என்மனத்தின் எளிமைகுறித் தேக்கமுற்றேன் ஐயா! ஏசுஎன்றும் கிறிதுஎன்றும் எண்ணியெண்ணிக் கிடந்தேன் மன்னவனே! சிலுவையிலே மரித்தபின்னர் பேயின் மயக்கமில்லை சீடருக்கு மயங்காமை தெளிந்தேன் பொன்னுடலம் பொழிகுருதிப் பெருக்கினிலே ஆழ்ந்தேன் பொல்லாத பேய்க்குறும்பு புகஇடமும் உண்டோ! 5 அன்புநெறி சிறந்ததென அகிலமுணர்ந் துய்ய ஆண்டவனே என்செய்தாய் அதைநினைந்தால் அந்தோ! என்புருகும் உயிருருகும் எண்ணமெலாம் உருகும் எம்மொழியால் இயம்பவல்லேன் ஏழைமகன் அப்பா! மன்னுலகில் அவதரித்தாய் மக்களிடை வதிந்தாய் மறைமொழிந்தாய் அவ்வளவில் மனம்நிறைய இலையோ பொன்னுடலை வதைக்கவிட்டாய் பொலியுயிரை நீத்தாய் பொறையன்பு நீயென்னும் பொருண்மைதெளிந் தேனே. 6 அன்பேநீ ஆதலினால் ஆருயிர்கள் பொருட்டுன் அழகுடலை வதைக்கவிட்டாய் அருளுயிரை நீத்தாய் இந்நிலத்தில் அச்செயலை எக்குரவர் ஏற்றார் இளங்கன்னி வயிற்றுதித்த இறைமைமணி விளக்கே அன்பினிலே குறையிருந்தால் அருஞ்செயலை ஆற்றல் ஆகாதே ஆகாதே அன்புடைய அறவோர் என்பும்பிறர்க் குரியரென எழுந்தமொழிக் குகந்த இலக்கியமா யிலங்கிநிற்கும் ஏசுகுரு நாதா! 7 வான்காணா முழுமதியே வாடாத பொழிலே மருந்தறியா நோய்தீர்க்கும் மாமருந்தே மணியே ஊன்காணா உளத்திரக்கம் ஊற்றெடுத்தே ஓடி ஒளிர்குருதி யாகிஉன்றன் உரங்கால்கை ஒழுகல், நான்காணாக் கண்ணினுக்கு நல்விருந்து செய்தாய் நாயகமே! நினைவிலந்த நற்காட்சி அருளே தேன்காணா இன்சுவையே தெவிட்டாத அமுதே தெய்வமணக் கிறிதுவெனுந் திருக்குமர குருவே. 8 அமைதிமலை மீதமர்ந்தே அறமழையைப் பொழிந்தாய் அன்பாறாய் அருட்கடலாய் அதுபெருக லாச்சே இமையளவில் அதில்திளைத்தால் இகல்பகைகள் போகும் எவ்வுயிருஞ் சோதரமா யிலங்குநிலை கூடும் சமயவழி வகுப்புவழி சாம்ராஜ்ய வழியே சண்டைமிக அன்புவழிச் சார்பழிந்து போச்சு சமதருமம் நிலவினெங்கும் சாந்தமலைப் பொழிவு சகமாகும் அந்நிலையைச் சற்குருவே அருளே. 9 உலகிறங்கிக் குமரன்அன்பை உணர்த்தியபின் மக்காள்! யோகமென்றும் யாகமென்றும் விரதமென்றும் உழலல் கலகமென்று மனைநீத்தல் தாடிசடை வளர்த்தல் கனல்பசியால் வீடுதொறுங் கையேந்தல் முதலாம் பலநெறிகள் படர்தலென்ன? பகுத்தறிமின் அறிமின் பத்திநெறி யொன்றில்நின்று பாவமுறை யிட்டுச் சிலுவையிலே சிந்தைவைத்தால் தீமையெலாம் அகலும் செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல்பெற லாமே. 10 5. பொய்யிலே பொய்யிலே நோக்கம் புகழிலே நாட்டம் பொருந்திய வாழ்க்கையை வெறுத்து, மெய்யிலே உள்ளம் பணியிலே பற்றும் மேவுநல் வாழ்க்கையை விரும்பி, ஐயனே கிறிது அப்பனே என்றுன் அடியினை நாடொறும் நினைந்து கையனேன் உருகிக் கசிந்ததை அறிவாய் காத்தருள் கருணைமா நிதியே. 1 வெகுளியில் முளைத்து வெகுளியில் வளர்ந்து விடக்கனி விளைதலை யுணர்ந்து வெகுகலைப் பயிற்சி துணைசெயு மென்று வீணிலே கழித்தனன் காலம் பகைவரை நேசி என்றுரை பகர்ந்து பண்புறக் காட்டிய ஏசு பகவனே என்று பாதமே அடைந்தேன் பார்த்தருள் கருணைமா கடலே. 2 குற்றமே உடையேன் குறைகளை வளர்த்தேன் குறும்புகள் பலப்பல செய்தேன் கற்றனன் நூல்கள் கழகநின் றறிவால் கடபட உருட்டலைப் புரிந்தேன் பற்றினன் பொல்லாப் பாழ்நெறி நல்ல பண்புறு நெறியினை நாடி இற்றைநாள் உன்றன் எழிலடி அடைந்தேன் ஏசுவே காத்தருள் இறையே. 3 புள்ளமர்ந் தினிய பாக்களை முழங்கும் பொழிலினைக் கண்டனன் புகுந்தேன் உள்ளமே கவரும் உயர்கனி பறிக்க உற்றனன் மரங்களி னிடையே முள்ளினம் மருட்ட மயங்கினன் ஏசு மூர்த்தியே! என்னிலை தெரிந்து முள்ளிலா மரமாய் முதிர்கனி அளித்தாய் முன்னவா! அருட்பெருக் கென்னே. 4 தண்புனல் வேட்கை தாக்கிட அலைந்தேன் தடங்களைத் தேடினன் கண்டேன் நண்ணினன் ஒன்றை நாற்புறங் கள்ளி, நயந்தனன் வேறொரு தடத்தைத் திண்ணிய முதலை திரிந்தது, பிறிதில் தீஅரா, நடந்தனன் சாய்ந்து பண்ணளி தடமாய்ப் பரிந்தனை கிறிது பரமநின் னருட்டிற மென்னே. 5 அலைகடல் அமைதி அடையவே செய்தாய் அப்பனே! மக்களின் மனத்துள் அலையெலாம் ஒடுங்க மலைப்பொழி வளித்தாய் அருட்பெருங் குருபர! எல்லாம் சிலுவையில் செறியச் சிறக்கவே வைத்தாய் சிந்தையிற் சிலுவையின் கலைகள் நிலவநாள் தோறும் ஜெபஞ்செய வேண்டும் நின்னருள் அதற்குமே தேவை. 6 தீயரைச் சேர்தல் தீமையென் றெண்ணிச் சிந்தையில் ஒதுங்கியே நின்றேன் நாயினேன் என்றன் நலன்களை நாடி நயந்தனன் பாவியாய் வளர்ந்தேன் பேயினை யொழித்த பெரியனே! ஜெபத்தில் பித்தினைக் கொண்டபின் ஐயா! தீயரை நண்ணித் திருப்பணி செய்தேன் தீமைகள் அணுகவும் இலையே. 7 என்னிடங் குறைகள் பிறரிடங் குறைகள் எழுவதைக் கண்டபோ தெல்லாம் உன்னடி எண்ணி உருகியே ஜெபத்தில் உளங்கொளும் உணர்வினை அளித்தாய் என்னகைம் மாறு செய்குவன் ஏழை ஏசுவே! எம்பெரு மானே! அன்பினால் உலகை அமைதியில் நிறுவ அவதரித் தருளிய அரசே! 8 பள்ளியில் உன்றன் பான்மொழி பயின்றேன் பரிசிலை உளங்கொடு நாயேன் எள்ளினேன் உன்னை; இன்மொழி பின்னை இரங்கவும் வருந்தவும் செய்யக் கள்ளனேன் அழுதேன் பிழைபொறுத் தாண்டாய் காய்தலும் வன்மமும் இல்லா வள்ளலே! நாளும் ஜெபத்தினில் மனத்தை வைத்திடும் வாழ்வடைந் தேனே. 9 புரிசடை முடியும், பூந்துளி நுதலும், புவியுயிர்க் கிரங்கிய விழியும், வரையினில் நின்று மறைபொழி வாயும், வளர்திருத் தாடியும், குருதி சொரிசெழு மார்பும், சுடுமுளைக் காயம் துலங்குகை கால்களும், சிலுவை மருவிய வடிவும், மனமலர் ஜெபத்தை வழங்கிய வள்ளல்! நீ வாழி. 10 6. உலகெலாம் உலகெலாம் உய்ய வேண்டி உருக்கொடு மண்ணில் வந்தாய் நலமிகு உவமை யாலே ஞானசீ லங்கள் சொற்றாய் கலகமுங் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச் சாய்த்தாய் அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி. 1 தரையினில் உதித்த கோலம் தையல்கை வளர்ந்த கோலம் வரையினில் இவர்ந்த கோலம் வனத்தினில் நடந்த கோலம் திரைகடல் கடந்த கோலம் சிலுவையில் பொலிந்த கோலம் உறைமனம் ஜெபத்தால் பெற்றேன் உத்தம! போற்றி போற்றி. 2 முள்வன முனைப்புச் சாய முடிமலை மிடுக்கு மாயத் தள்ளலைச் சீற்றம் வீயத் தாண்மலர் வைத்து வைத்து மெள்ளவே நடந்த காட்சி வேய்மனம் அமுத மாச்சு வள்ளலே! ஜெபத்தின் பேறு! மலரடி போற்றி போற்றி. 3 அங்கியைத் தொட்ட பெண்ணை அன்பினால் நோக்கி உன்பால் தங்கிய நேசம் உன்நோய் தவிர்த்ததென் றருளிச் செய்தாய் பொங்கிய மொழியில் மூழ்கிப் பொருந்திய ஜெபத்தில் நின்றேன் இங்கென தூனங் கண்டேன் ஏசுவே போற்றி போற்றி. 4 அலையிலா ஆழி யானாய் அருட்புனல் மேக மானாய் நிலைகனி மரமு மானாய் நீங்கலில் ஒளியு மானாய் புலனிலாக் கடவு ளானாய் புலனுடைக் கிறித்து வானாய் நலமிலேற் கன்பே ஆனாய் நாதனே! போற்றி போற்றி. 5 ஜீவநூற் பயிற்சி வேண்டும் ஜீவநீர்ப் படிதல் வேண்டும் ஜீவநன் னீழல் வேண்டும் ஜீவசெஞ் செல்வம் வேண்டும் ஜீவனில் ஜீவன் வேண்டும் செகமிவை பெறுதல் வேண்டும் ஜீவனை ஈந்த தேவே! திருவடி போற்றி போற்றி. 6 வாழ்ந்திட உலகை வைத்தாய் மானுடப் பிறவி வைத்தாய் சூழ்ந்திடச் சபைகள் வைத்தாய் தோத்திரஞ் செய்தே உன்பால் ஆழ்ந்திடச் சிலுவைக் கோலம் அன்புடன் வைத்தாய் வைத்தாய், வீழ்ந்திடல் எற்றுக்கிங்கே, விமலனே! போற்றி 7 பரனரி அணைவா னென்றும் பார்பதம் படியே என்றும் இரவிலும் நினைந்தேன் நெஞ்சம் ஏந்திய காட்சி என்ன! சிரமுடி முள்ளும் மண்ணில் சேவடி நடையும் - ஏசு பரமன்நீ என்று கொண்டேன் பதமலர் போற்றி போற்றி. 8 அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே! போற்றி போற்றி மன்பதை பாவந் தீர்க்க மரித்தவா! போற்றி போற்றி இன்புற உயிர்த்தெ ழுந்த ஈசனே! போற்றி போற்றி என்பிழை பொறுக்கும் ஏசு எந்தையே! போற்றி போற்றி. 9 பராபரக் கடவுள் வாழி பரிசுத்த ஆவி வாழி நிராமயக் குமரன் வாழி நிறையருள் அடியார் வாழி புராதன மொழிகள் வாழி புண்ணியச் சிலுவை வாழி விராவிய குருதி வாழி வியன்சபை வாழி வாழி. 10 7. ஏசு கிறிது ஏசு கிறிது பெருமானே எந்த உயிர்க்கும் அருள்வோனே. 1 கிறிது கிறிது என்போமே கிட்டிய பாவம் பின்போமே. 2 கன்னி வயிற்றில் உதித்தோனே கருணையை உலகில் விதைத்தோனே. 3 உருவம் இல்லா ஆண்டவனே ஒளியாய் என்புடல் பூண்டவனே. 4 அன்பை அளிக்க வந்தோனே ஆருயிர் உலகுயத் தந்தோனே 5 குலைந்தது குலைந்தது கொடுங்கோன்மை குமரா எழுந்ததுன் செங்கோன்மை. 6 தீராப் பிணிகளைத் தீர்த்தோனே தெவ்வரை அன்பாய்ப் பார்த்தோனே. 7 குழந்தை உள்ளம் உணர்ந்தோனே கோதில் வீடென் றுரைத்தோனே. 8 தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்குஞ் செங்கரனே. 9 ஏசுவே என்றதும் நெஞ்சுருகும் எல்லாப் பாவமும் இரிந்தருகும். 10 கண்ணே மணியே கற்பகமே கான்முளை யாகிய அற்புதமே. 11 பெண்ணுக் குரிமை ஆக்கியவா பெருநோய் தொழுநோய் போக்கியவா. 12 ஆணியில் சிந்திய செந்நீரே அகிலம் புரக்கும் நன்னீரே. 13 கிறிதுவின் இரத்தம் பெருமருந்து கேடில் இன்பம் தருவிருந்து. 14 திருமலை பொழிந்தது சொன்மறையே சிலுவை வழிந்தது செயன்முறையே. 15 சிலுவையில் நின்ற செழுங்கோலம் சிந்தையில் படிந்திடின் நறுஞ்சீலம். 16 சிலுவை நுட்பம் உளத்தினிலே சேர்ந்தால் விடுதலை அளித்திடுமே. 17 அமைதி அளிக்கும் அரசாட்சி ஐயன் குமரன் அருளாட்சி. 18 மரித்தும் எழுந்த சத்தியமே மரணம் இன்மையின் தத்துவமே. 19 வாழ்க கிறிது, போதனைகள் வாழ்க சிலுவை, சாதனைகள். 20 I 1. சன்மார்க்கக் கொடி சன்மார்க்க வெண்கொடி சேர்வோம் - அதில் j©lh kiu¥ó jtœtij¤ nj®nth«., வெண்மை தெரிப்பது தூய்மை - அதன் வேராஞ்சன் மார்க்கம் விரிசெழும் பூவே உண்மை உளத்தடந் தேவை - அந்த உளம்பெற வெண்கொடி நீழலைச் சார்வோம். (சன்) 1 சமயங்க ளெல்லாம் இதழ்கள் - அகச் சார்பிதழ் எட்டுஞ் சமரசச் சான்றாய்ச் சமைந்து திரண்டசன் மார்க்கம் - அதன் சாரம் பிலிற்றும் தனிக்கொடி சார்வோம். (சன்) 2 எட்டும் நபி இயல் ஏசு - சினன் புத்தன்கண் ணன்குகன் மோனன் உணர்த்தும் அத்தன் ஒருவன் இயல்பன்(பு) - இரக்கம் அறம்வினை செவ்வி அமைகொடி சார்வோம். (சன்) 3 சாதி மதநிறச் சண்டை - கொடுஞ் சாத்திர கோத்திர நாடுகள் சண்டை வேதனை பல்கிடுஞ் சண்டை - அற வீழப் பறந்துயர் வெல்கொடி சூழ்வோம். (சன்) 4 வகுப்பு மொழிநிறந் தாண்டி - மத வம்புயர் தாழ்வுடன் நாடுகள் தாண்டி தொகுப்புச் சகோதரஞ் சேரத் - துயர் தோன்றாப் புவியளி தொல்கொடி சூழ்வோம். (சன்) 5 கொலைகுறி குண்டு குவிக்குந் - தொழிற் கொடுமையைப் போக்கி விளைவைப் பெருக்கிக் கலையை வளர்த்துக் கருணை - கனி காதலும் வீரமுங் கால்கொடி சூழ்வோம். (சன்) 6 மண்பொன்னை மாதரை நீத்தால் - பெரு வான்வரும் என்ற மடமையைத் தேய்க்கும், மண்பொன்னில் மாதரில் மெய்யன் - உற மன்னல் உணர்த்தும் மணிக்கொடி ஈதே. (சன்) 7 தனிமை அரக்கனைச் சாய்க்கும் - அங்குத் தக்க பொதுமை இறைமை அமைக்கும் இனிமை எவர்க்கும் அருளும் - எங்கும் இன்பங் கொழிக்கும் எழிற்கொடி ஈதே. (சன்) 8 பன்மைப் பழமையைப் பாற்றிச் - செய்ய பசுமை ஒருமைப் பயன்விளை வாக்கி நன்மைப் புதுமையை நல்கி - உயர் ஞானம் வழங்கும் நறுங்கொடி ஈதே. (சன்) 9 எல்லா ருளத்தும் பொதுமை - அறம் எழுக நிலைக்க எனஅறை கூவிப் பொல்லாமை போக்கப் புரட்சி - புரி பூங்கொடி சன்மார்க்கப் பூங்கொடி ஈதே. (சன்) 10 உலகுக் கொருகொடி ஈதே - குலம் ஒன்றே இறைமையும் ஒன்றேஎன் றென்றும் ஒலிக்கும் ஒருகொடி ஈதே - புற உட்பகை கல்லும் ஒருகொடி ஈதே. (சன்) 11 வாழி மலர்கொடி வாழி - என்றும் வாழிசன் மார்க்கம் வளர்கொடி வாழி வாழி வழிக்கொடி நல்லோர் - நன்று வாழிசன் மார்க்கம் மலர்கொடி வாழி. (சன்) 12 II சன்மார்க்க வெண்கொடி அறையப்பா முரசு. சமரச வெண்கொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரசப் பூங்கொடி அறையப்பா முரசு. 1 மனத்துக் கொருகொடி அறையப்பா முரசு மனிதற் கொருகொடி அறையப்பா முரசு மனைக்கும் ஒருகொடி அறையப்பா முரசு மார்க்கம் வளர்கொடி அறையப்பா முரசு 2 ஊருக் கொருகொடி அறையப்பா முரசு ஒருநாட்டுக் கொருகொடி அறையப்பா முரசு பாருக் கொருகொடி அறையப்பா முரசு பரந்த பொதுக்கொடி அறையப்பா முரசு 3 துன்மார்க்கம் வெல்கொடி அறையப்பா முரசு துயரம் தொலைகொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரச வெண்கொடி அறையப்பா முரசு 4 2. பழமையும் புதுமையும் பழமை புதுமை படரு மிடங்கள் பாரி லுளவோ பகுத்துத் தெளிமின் பழமைக் கழிவும் புதுமைப் புகலும் பண்பில் நடையில் படித லிலதே. 1 திக்குத் திசைகள் திகழு மிடங்கள் செகத்தி லுளவோ செயற்கை வழக்கே. ஒக்கும் பழமை புதுமை வழக்கும் உண்மை நிகழ்ச்சி உறுத லிலையே. 2 பழமை புதுமை பரம னடையான் பரமன் கடந்தோன் பழமை புதுமை கழகக் கணக்கில் பொழுதி லிடத்தில் கானற் சலமே கணித்தல் அரிதே. 3 எல்லை உலகம் இனிது நடக்க எழுந்த வழக்கு வரம்பில் அடங்கும் எல்லை கடந்த இறையைப் படுத்தல் எளிய மதியே எளிய மதியே. 4 பழமை புதுமை வழக்கு வழியே பருத்துத் திரண்ட மொழிகள் ஒருங்கே பழமைப் பழையன் புதுமைப் புதியன் பரமன்எனச் சொல் பதியின் இயல்பே. 5 ஒன்றே கடவுள் உரைக்கும் மறைகள் உணர்த்தும் பழைய உலகம் பலவாச் சென்று விளைத்த செயற்கை பலவே சீர்செய் புதுமை செலுத்தும் ஒருமை. 6 மின்னல் ஒருமை மிளிருங் குவிகள் விரிக்கும் நிறங்கள் விளக்கும் வகைகள் பன்மை உணர்வைப் பராவும் பழமை பரந்த புதுமை பராவும் ஒருமை. 7 இரண்டு வகுப்பை இயம்பும் பழமை இயற்கை ஒருமை இசைக்கும் புதுமை சுரண்டல் இடுக்கில் சுழலும் பழமை தொல்லை இடுக்கைத் தொலைக்கும் புதுமை. 8 நஞ்சு மிடற்றன் நடப்பாம் பணையன் ஞானச் சிலுவை நயத்தன் அருகன் பஞ்சப் பரிவாய்ப் பகரும் பழமை பகுப்புப் பிரிவைப் பறிக்கும் புதுமை. 9 ஆலி லிருக்கும் அசோகி லிருக்கும் அரசி லிருக்கும் அமைந்த சிலுவைக் கோலி லிருக்கும் குழலில் குளிரும் கோட்டி லிருக்கும் புதுமை இறையே. 10 நாட்டைத் தனிமைப் படுத்திப் பழமை நடுங்கும் பிணக்கில் நசுங்கும், புதுமை நாட்டை உலக உறுப்பென் றுணர்ந்து நயத்தில் அருளில் ஒருமை புரக்கும் 11 பழைய உலகில் பகைமை மலிவு புதிய உலகில் கருணைப் பொலிவு பழமை அருக புதுமை பெருக பகைமை விழுக கருணை எழுக. 12 3. தெய்வப் புது உலகம் ஆராய்ச்சி என்றலையும் ஆராய்ச்சி உலகீர் ஆய்ந்தாய்ந்தே அலுத்தலுத்துத் தெய்வமெங்கே என்பீர் வேராயப் புகுந்துழைத்தல் வீண்முயற்சி யாகும் வித்தில்லா ஒன்றனது வேர்காண்டல் எங்ஙன்? 1 ஆராய்ச்சி அலைகளெழுந் தார்த்தார்த்து வீறி அங்குமிங்கும் ஓடிமுட்டி அதைஇதையும் உளறும் ஆராய்ச்சி எழுந்தொடுங்கும் அளவுடைய தன்றோ? அகண்டிதத்தை அணுகுவதோ அறிவுகொண்டு தேர்மின். 2 ஆழாக்கால் உழக்களத்தல் அறிவுடைமை யாமோ? அகண்டிதத்தைக் கண்டத்தால் அளக்கும்அறி வென்னே! பாழாகி அளவெல்லாம் பரிதவிப்பே நேரப் பரமில்லை என்றுரைக்கப் பரிகின்றீர் பாவம்! 3 இடவடிவப் பேரின்றி இருப்பதந்தத் தெய்வம் இடவடிவப் பேருடையீர் அதைஅளத்தல் அறிவோ? திடமுடனே இல்லையென்று முடிவடைதல் செருக்கே செருக்கறுந்த விடுதலையில் தெய்வநிலை தெளிவாம். 4 உறுப்பின்றி அறிவாகி ஒளிருமொரு தெய்வ உண்மைநிலை வெற்றாய்வால் உளம்படுதல் அரிதே உறுப்புடனே தாக்கின்றி அறிவாகும் அமைதி உறஉழைத்தால் தெய்வஉண்மை உறுதிபெற லாமே. 5 அறிவான ஒருதெய்வம் அன்பாகி இயற்கை அருட்குரவர் வீரரிடம் அமர்ந்திருத்தல் உணர்மின் குறியாகும் அவரிடத்தில் குறிகொண்மின் செருக்கு, குலைந்துவிடும் குலைந்துவிடும் குணம்பெறலாம் இனிதே 6 திருக்குரானில் விவலியத்தில் சித்தாந்தந் தனிலே திரிபிடகம் கீதைகளில் திருஅமைதித் திறத்தில் கருத்திருத்தி ஒன்றஒன்றக் கட்டழிந்து கடவுள் கருணைநிலை புலனாகுங் காட்சிஇது காண்மின். 7 பெரியவர்கள் உலகினுக்குப் பேசிவிட்டார் மறைகள் பின்னாளில் அவ்வுலகைப் பேய்த்தேரென் றெண்ணும் கரியஇருள் துறவுபுகக் கறைபடர உலகம் கருணைமறை நுட்பமுணர் கண்ணிழக்க லாச்சே. 8 இனியமறை நுட்பமெலாம் இயங்கிநிற்க வேண்டின் இறையுண்மை உணர்வளிக்க இலக்கியமா யிலங்கும் தனியுலகம் பொய்யென்னுஞ் சழக்கறுதல் வேண்டும். சமதர்ம வாழ்க்கைமுறை சார்புபெறல் வேண்டும் 9 தெய்வமெது தெய்வமெங்கே என்றாயும் மக்காள் ! தெய்வநிலை நல்வாழ்க்கைத் தெளிவென்ப தறிமின் வையமெய்யை ஆராய்மின் வகைவகையாஞ் சக்தி வாழ்க்கைவழி காட்டியொரு வகுப்புணர்வை வழங்கும். 10 ஆராய்ச்சிக் கென்றுநிற்கும் அவனிவிடுத் தந்தோ ஆராய்ச்சிக் கெட்டாத அகண்டம்புகல் என்னோ? நேராய வாழ்க்கைஇன்பம் நிகழ்வகைகள் காண்மின் நித்தலும்போர் மூள்வதற்கு நிமித்தமென்ன நினைமின் 11 முன்னாளில் தொழின்முதற்போர் மூண்டதில்லை பின்னாள் மூண்டதது வையமெல்லாம் செந்நீரில் மூழ்கும் இந்நாளில் தெய்வமெங்கே என்றாய்தல் வீணே இம்மையிலே இன்பமின்றி மறுமைஇன்பம் ஏது? 12 சுரண்டரசில் வறுமைபிணி கொலைகளவு பொய்மை சூதுமதம் முதலாய தொல்லைஎரி சூழும் வரண்டநிலை புரண்டெழுந்து வளம்பெறுதற் குரிய மருந்தென்ன வளர்பொதுமை வெள்ளமதே யாகும். 13 இயற்கையினை உன்னஉன்ன முதல்தொழிலாம் இருமை இன்மைநன்கு புலனாகும் இருமையொழிந் தொருமை முயற்சிஎழின் புதுஉலகம் முகிழ்த்தினிது பொலியும் முரண்பகை போர்முதலாய மூர்க்கமெலாம் மறையும். 14 அற்புதங்கள் பேச(ப்)பேச அறியாமை வளரும் அகிலமெலாம் போர்க்கடலில் அழுந்துமிந்த வேளை அற்புதஞ்சொல் சாமியாரின் அற்புதங்கள் எங்கே? ஆண்டவன்றன் அன்புநெறி அற்புதமோ? ஐயோ! 15 வீடென்றும் நரகென்றும் விரிவுரைகள் பகர்வோர் விமலனெங்கும் வீற்றிருக்கும் விழுப்பமுண ராரே நாடுகளில் வீடுமுண்டு நரகுமுண்டு தீய நரகொழிக்க வந்தவர்மார்க் ஞானமுனி வாழி. 16 நரகழிந்த புதுமையிலே நானிலமும் வீடாம் நாத்திகப்போர் ஆத்திகப்போர் நாசமடைந் திறுகும் பரமசுகம் எல்லாரும் பருகிஇன்ப முறுவர் பழமையிலே பலரின்பம் பருகினரோ பகர்மின். 17 ஏசுநபி முதற்பெரியோர் இசைத்தபொது உலகம் இக்கால முறைமையிலே மீண்டும்எழ வேண்டின் நேசமிகு மார்க்முனிவர் நினைந்தபுது உலகம் நிமிர்ந்துநின்று நிகழ்ச்சியிலே நிறைவுபெற உழைமின். 18 வள்ளுவனார் அந்நாளில் வகுத்தபொது உலகம் மார்க்முனிவர் இந்நாளில் வகுத்தபுது உலகம் தெள்ளியவர் ஈருலகுந் திரண்டுருவம் பெற்றால் தெய்வப்புது உலகமிங்குத் திகழ்தல்திண்ண மாமே. 19 மார்க்ஸினுளம் ஆத்திகமா நாத்திகமா என்று வாதமிடல் வீண்அவர்தம் மனஉலகம் மலர்ந்தால் போர்க்குரிய இரண்டுமிரா பொதுஉலகம் மணக்கும் புதுஉலகம் அதுதெய்வப் புதுஉலகம் பொலிக. 20 4. இயற்கைத் தெய்வம் இயற்கை தாண்டி இலங்கிடுந் தெய்வமே ஏழை யேனுனை எப்படி எண்ணுவேன் முயற்சி செய்யினும் மூளை வெடிக்குதே முன்ன வாஉன் முழுநிலை என்னையோ? 1 இயற்கை யாகி இருக்க இரங்கினை ஏழை எண்ணி எளிதில் மகிழவோ முயற்சி யின்றி முனைப்பறல் கூடுதே முன்ன வாஉன் முழுநிலை எற்றுக்கே. 2 இயற்கை, பள்ளியாய் என்றும் நிலவலை ஏழை பின்னே உணர்ந்து தெளிந்தனன் செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச்செலா செழுமை கண்டவர் தீமையில் வீழ்வரோ. 3 மண்ணில் நின்று பொறையைப் பயிலலாம் மரத்தி லேஒப் புரவைப் பயிலலாம் விண்ணை நோக்கி ஒளியைப் பயிலலாம் வேலை சென்றலைப் பாட்டைப் பயிலலாம். 4 மயிலி லேநிகழ் நாடகங் கற்கலாம் வண்டி லேநிமிர் யாழினைக் கற்கலாம் குயிலி லேஉயர் கீதத்தைக் கற்கலாம் கோவி லூருங் குணத்தினைக் கற்கலாம். 5 அன்னை காட்சியில் அன்பைப் படிக்கலாம் அணங்கின் காதலில் வாழ்க்கை தெளியலாம் கன்னி சூழலில் தெய்வம் வழுத்தலாம் காளை ஈட்டத்தில் வீரம் உணரலாம். 6 மலையி லேறி மவுனம் பழகலாம் வான ஞாயிற் றொளியைப் புசிக்கலாம் கலையில் காணாக் கருத்தைத் தெளியலாம் கணக்கில் பன்மை கரைதல் அறியலாம். 7 வேங்கை போந்துதன் வாலைக் குழைக்குமே வேழம் ஒடி விரைந்து வருடுமே பாங்குப் பாம்பு பணமெடுத் தேறுமே பறக்கும் புட்கள் பரிவுடன் சேருமே. 8 ஓதாக் கல்வியென் றோதிடுங் கல்வியென் றுலகஞ் சொல்வதன் உண்மைத் தெளிவெது ஓதாக் கல்வி இருக்கை இயற்கையே ஓதுங் கல்வி உறைவிடம் ஏட்டிலே. 9 ஓதாக் கல்வி பெருக இயற்கையின் உள்ளம் தெய்வமென் றுண்மை அடையலாம் சாகாக் கல்வியின் தன்மை உணரலாம் சாந்த மெய்ம்மையின் சார்பு விளங்குமே. 10 ஏரைப் பூட்டி உழுவோ ருளத்திலும் ஏற்றம் பாடி இறைப்போ ருளத்திலும் நாறு பற்றி நடுவோ ருளத்திலும் நல்லி யற்கை இறையருள் நண்ணுமே. 11 பருத்தி சேர்க்கப் பரிவோ ரிடத்திலும் பாண ராட்டை விடுவோ ரிடத்திலும் பொருத்தி நூலினை நெய்வோ ரிடத்திலும் பொன்னி யற்கை இறையருள் பொங்குமே. 12 சுரங்கம் மூழ்கிக் குளிப்பவர் நெஞ்சிலே சூழ்ந்து கல்லை உடைப்பவர் நெஞ்சிலே இரும்பைக் காய்ச்சி உருக்குவர் நெஞ்சிலே எழிலி யற்கை இறைமை இயங்குமே. 13 சோலை வாழ வளர்ப்பவர் சிந்தையில் தூய பிள்ளை பெறுபவர் சிந்தையில் நூலுஞ் சிற்பமும் யாப்பவர் சிந்தையில் நுண்ணி யற்கை இறைமை நுழையுமே. 14 விளைவு செய்யும் வினைஞ ருலகமே வீறி வேர்விட் டெழுந்து விரிந்திடின் இளமை ஞாலம் இயற்கை இறைமையின் இனிமை யாகி வளமை கொழிக்குமே. 15 5. ஒளி பேரொளி பேரொளி பேரொளி - இன்பாம் - அது பேசாப் பெருவெளி பேரொளி - என்பாம். ஐம்பூதம் திங்கள் அருக்கன் - மற்றும் ஆர்ந்த பெருங்கோள் அனைத்தும் தனித்த செம்மை ஒளிக்கெலாஞ் சீவன் - அளி சீரொளி தெய்வச் சிறப்பொளி ஒன்றே, (பே) 1 காற்றின் துணையின்றி வாழும் - ஒளி கருணை வடிவான மெய்யொளி யாகும் ஊற்றாய் உலகினை ஓம்பும் - அது ஓங்கிச் சுடர்விடுத் தோங்கிடும் ஒன்றே. (பே) 2 மெய்ந்நூல் ஒளியுரை வேட்டு - யானும் மேவினன் வெவ்வே றிடங்களில் பல்கால் பொய்மை கரவு புனைவு - பிற போலிகள் சாமிகள் பூமியில் கண்டேன். (பே) 3 முயற்சி கவலை முடுக்க - ஒளி முன்னி வதைந்தனன் பன்னெடுங் காலம் இயற்கையின் கூறுகள் நெஞ்சில் - இனி எண்ணி இருக்கும் எழிற்கலை கற்றேன். (பே) 4 பசுமை கொழித்துப் பரந்த - மரம் பார்த்துப் பரிந்து படிந்து திளைப்பேன் விசும்பினை நோக்கி வியந்து - விண் மீன்களில் ஒன்றி மிதந்து கிடப்பேன். (பே) 5 அலைகடல் ஓரத் தமர்ந்து - நீல அமைதியில் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன் மலையை அடைந்து மகிழ்ந்து - அதை மனனஞ்செய் மோனத்தில் மாண்டு விடுவேன். (பே) 6 வாச மலரின் நகையில் - மிக வணங்கி அசையும் கிளையின் அழைப்பில் நேசப் பறவை விருந்தில் - சிறு நீல்வண் டிசையினில் நித்தலும் வீழ்வேன். (பே) 7 நுழைந்தருட் பெண்மையை உன்ன - அங்கு நோன்பு மிகுதாய்மை அன்பினில் ஆர்ந்தேன் குழந்தை மழலை பயில - அதில் கோதிலா ஞானங் குழைதலை மாந்தேன். (பே) 8 இயற்கை வழிபாடு மல்க - அது ஈந்தருட் செல்வத்தை என்னென்று சொல்வேன் புயற்புலன் உள்ளில் ஒடுங்கத் - தொடர் போர்நாம ரூபங்கள் பொன்றி ஒடுங்கும். (பே) 9 நாமரூ பங்கள் ஒலியாய் - முதல் நாதமாய் நன்கு நடக்கும் ஒளியாய்ப் போமிவ் வொளிக்கும் உயிர்ப்பாய் - எங்கும் பொங்கித் ததும்பி வழியும் ஒளியே. (பே) 10 காற்றின் துணையின்றி வாழும் - அந்தக் கருணை வடிவான தெய்வ ஒளியைக் காற்றுச் சடஒளி யாகும் - என்று கருதல் தவறு தவறே கருதல். (பே) 11 காற்றுக் கணக்கென்று சில்லோர் - வெறுங் காற்றைப் பிடித்துக் கழிப்பரே காலம் காற்றைப் பிடிக்குங் கணக்கை - மூலன் கழறிய மந்திரக் காற்றினில் காண்மின். (பே) 12 காற்றை வெறுங்காற்றை ஈர்த்து - மூக்கில் ஏற்றி இறக்கினால் எவ்வொளி தோன்றும்? சோற்றுத் துருத்தியை ஓம்பும்; - தூய சோதி உயிரொளி சூழலும் ஆகா. (பே) 13 காலெனில் பாதபக் காலோ - மூலன் காலென்ற துள்ளே கனன்றிடுங் காலே தேற்ற இயற்கை வழியே - நிற்கத் திகழ்ந்திடும் உட்கால் திகழ்ந்திடல் திண்ணம். (பே) 14 சடக்கால் சடவொளி காட்டும் - அதைச் சத்தென்றுஞ் சித்தென்றுஞ் சாற்றுதல் தீமை திடமான உட்கால் சிறக்க - இங்குத் தேவை இயற்கை வழிபாடு தேவை. (பே) 15 விஞ்ஞானி உட்காலை ஏலான் - அவன் விழுமிய தேர்ச்சியின் வேர்சட மாகும் மெய்ஞ்ஞானி அக்காலை ஏற்பன் - அவன் வீர மரபு வழிவழி வாழி. (பே) 16 பரவொளி யானவர் தேகம் - என்றும் பாரில் அழியாதாம் பார்த்தவர் யாவர்? சிரஞ்சீவி என்றவர் தேகம் - இன்று திரியும் இடமெங்கே செய்தியைச் சொல்மின். (பே) 17 அஞ்ஞானி மெய்ஞ்ஞானி எல்லாம் - பரு யாக்கை இழப்பவர் ஐயமே இல்லை மெய்ஞ்ஞானி உள்நிலை மேன்மை - இங்கு மேவுமஞ் ஞானிக்கு எங்ஙன் விளங்கும்? (பே)18 செத்த பிணத்தினை வைக்கும் - இடம் தீயிலா மண்ணிலா என்று திகைக்கும் பித்தம் பிடிப்பது பேய்மை - அந்தப் பிணத்தைஎப் பூதம் புசிப்பதால் என்ன? (பே) 19 சாகா நிலையென்று சாற்றல் - ஒரு சம்பிர தாயம் சகத்தினி லுண்டு சாகா நிலைபிற வாமை - என்றும் சாந்த ஒளியாகித் தற்பர மாதல். (பே) 20 உலகொளி வண்ணமே யாக - அது உரிமை பெறல்வேண்டும் ஊக்கமும் வேண்டும் கலகம், பசிப்பிணி தேக்கும் - பெருங் கருணைப் பொதுமை, கடும்பசி நீக்கும். (பே) 21 அடிமை இருளில் அழுந்திச் - சாகா ஆத்தும ஞானம் அறைகுதல் நன்றோ மிடிபசி தீர்த்தல் முதன்மை - இந்த மேன்மைப் பணிசெய மேவுதிர் மக்காள். (பே) 22 6. வெங்கதிர் நீலக் கடல்விளிம்பில் வெங்கதிரே - நீ நித்தம் விரைந்தெழலென் வெங்கதிரே கோல எழுச்சியிலே வெங்கதிரே - சிறு கூத்தசைவு நேர்வதென்னை வெங்கதிரே. 1 பச்சைப் பசுங்கடலில் வெங்கதிரே - உன் பவளஒளி ஆல்கிறது வெங்கதிரே சித்தநுழை சித்திரமோ வெங்கதிரே - அதைத் தீட்டிவரை வோருளரோ வெங்கதிரே. 2 வானங் கடலிடையே வெங்கதிரே - நீ வழங்கிவருஞ் செங்காட்சி வெங்கதிரே கானக் கலைக்கழகம் வெங்கதிரே - அதைக் காட்டி மறைக்கின்றாய் வெங்கதிரே. 3 வானம் கடலணங்கை வெங்கதிரே - அன்பால் வாரிமுத்தம் ஈவதுண்டோ வெங்கதிரே பானத்தில் மாய்வதுண்டோ வெங்கதிரே - அந்தப் பார்வைவெறுங் கானல்நீரோ வெங்கதிரே. 4 தத்துகடல் தாயைவிட்டு வெங்கதிரே - நீ தாண்டி விண்ணை வேட்பதென்ன வெங்கதிரே உச்சவிண்ணும் நீலமென்றோ வெங்கதிரே - அங்கே உற்றதுநீ ஏமாற்றம் வெங்கதிரே. 5 விண்பரவை நீந்திநீந்தி வெங்கதிரே - மற்ற மீனையெல்லாம் ஒட்டலாமோ வெங்கதிரே தண்பரவை மீண்டும்படல் வெங்கதிரே - நீ தாயினிடங் கொண்ட அன்போ வெங்கதிரே. 6 தோன்றி மறைவதுண்டோ வெங்கதிரே - அந்தச் சூழ்ச்சியினைச் சொல்லுவையோ வெங்கதிரே ஆன்றோர் புனைந்துரையில் வெங்கதிரே - உன் ஆவி குளிர்வதுண்டோ வெங்கதிரே. 7 விஞ்ஞானி சொல்லினிலே வெங்கதிரே - உன் வேட்கை விழவிலையோ வெங்கதிரே மெய்ஞ்ஞானச் சித்தரெலாம் வெங்கதிரே - உன்னை வேறுணர்தல் உள்குவையோ வெங்கதிரே. 8 வேளைவேளை நீநிறத்தில் வெங்கதிரே - ஏன் விதவிதமாய் மாறுகின்றாய் வெங்கதிரே மாலையிலே காலைநிறம் வெங்கதிரே - நீ மறுபடியுங் காட்டுவதென் வெங்கதிரே. 9 காலைமாலை உன்றனருள் வெங்கதிரே - அது காலக்கலை ஆக்குந்துணை வெங்கதிரே வேளைவேளை உன்துணையால் வெங்கதிரே - இங்கு வித்தை வளர்கிறது வெங்கதிரே. 10 எதற்கும் ஒளிவழங்கும் வெங்கதிரே - உன்னை எழிலி மறைப்பதென்ன வெங்கதிரே அதற்குமுன்றன் சார்புண்டு வெங்கதிரே - அதை அறிவதில்லை எல்லோரும் வெங்கதிரே. 11 மலைமலையாய்க் கான்றுயிர்ப்பை வெங்கதிரே - அதை மாநிலத்துக் கூட்டுகின்றாய் வெங்கதிரே நலங்கருத லொன்றுமிலை வெங்கதிரே - அந்த ஞானம் பரவவேண்டும் வெங்கதிரே. 12 சிறுமுளையுங் குஞ்சுகளும் வெங்கதிரே - உன் செவ்வுயிர்ப்புக் கேங்குவதென் வெங்கதிரே மறிஅலையில் மாமலையில் வெங்கதிரே - நின் றாருயிர்ப்புத் தூயதன்றோ வெங்கதிரே. 13 ஓதக் கடலருகே வெங்கதிரே - மிக்க உரம்ஒளியில் மேய்வதென்ன வெங்கதிரே வேகஅலை ஆடிஆடி வெங்கதிரே - சிறு வேளைஒளி மூழ்கிலுரம் வெங்கதிரே. 14 நீயுமிழும் ஒள்ளொளியில் வெங்கதிரே - மக்கள் நேர்முறையில் மூழ்குவரேல் வெங்கதிரே நோயுமில்லை பேயுமில்லை வெங்கதிரே - இதை நுண்ணறிஞர் விள்ளவேண்டும் வெங்கதிரே. 5 புள்விலங்கு போர்வையின்றி வெங்கதிரே - உன் பொன்னொளியில் ஆடலையோ வெங்கதிரே தெள்ளறிவு மக்களென்போர் வெங்கதிரே - இங்குத் தேடுவதென் சட்டைகளை வெங்கதிரே. 16 காலினிலே தோலணிந்து வெங்கதிரே - நீ காலொளியைத் தாக்கலாமோ வெங்கதிரே தோலுயர்வோ உன்னொளியின் வெங்கதிரே -கொடுந் தொல்லையுண்டோ ஏதேனும் வெங்கதிரே. 17 மண்ணிலுள்ள மாசழுக்கு வெங்கதிரே - காலில் மாட்டிநோய் செய்யுமென்பர் - வெங்கதிரே தண்மைநிலப் பேச்சன்றோ வெங்கதிரே - அதைத் தாங்கித் திரிவதென்ன வெங்கதிரே. 18 வெம்மையுயர் நாட்டவர்கள் வெங்கதிரே - வெறும் வீண்நடிப்புப் பூணலாமோ வெங்கதிரே செம்மையொளி வாழ்வளிக்கும் வெங்கதிரே - அதைச் சீறுவது நீதிகொல்லோ வெங்கதிரே. 19 வெள்ளை தலைக்கறைக்கும் வெங்கதிரே- நன்று வேயுழவன் ஞானியன்றோ - வெங்கதிரே பள்ளி(ப்) படிப் பேட்டவர்கள் வெங்கதிரே - உன் பண்பொளியைப் பகைக்கின்றார் வெங்கதிரே. 20 பச்சை மரப்பரப்பில் வெங்கதிரே - நீ பாய்ச்சும் ஒளியமிழ்தம் வெங்கதிரே நச்சி அதைப்பருகின் வெங்கதிரே - நீண்ட நாளிருக்கும் வாழ்வளிக்கும் வெங்கதிரே. 21 ஆலரசு வேம்படியில் வெங்கதிரே - முன்னே ஆர்ந்தொளியில் மூழ்கிவந்தேன் வெங்கதிரே ஆல அரசியலில் வெங்கதிரே - யான் அண்டி அமுதிழந்தேன் வெங்கதிரே. 22 ஆவிக் கொருமருந்து வெங்கதிரே - உன் ஆனந்தச் செம்பிழம்பு வெங்கதிரே பாவனையில் இன்பம்வைத்தாய் வெங்கதிரே - அதைப் பற்றியேனும் மக்களுய்க வெங்கதிரே 23 காலைவெயில் பித்தமென்பர் வெங்கதிரே - அவர் கருத்தினில் பித்தமென்பேன் வெங்கதிரே மாலைகாலைப் பேச்செல்லாம் வெங்கதிரே - கொதி மலச்சிக்கல் என்றுணர்ந்தேன் வெங்கதிரே. 24 பொதுமையிலே உன்னமிழ்தம் வெங்கதிரே - நீ பொழிகின்றாய் என்றென்றும் வெங்கதிரே பொதுமைஅறம் பூமியினில் வெங்கதிரே - நன்கு பொருந்தாமை காரணமென் வெங்கதிரே. 25 உலகுகளை ஈர்த்துநிற்க வெங்கதிரே - உனக் குற்றசக்தி ஓதுவையோ வெங்கதிரே கலகமிலை கோள்செலவில் வெங்கதிரே - நீ காத்துவருங் கருணைஎன்னே வெங்கதிரே. 26 உனக்கொளி ஈவதெது வெங்கதிரே - எனக் குண்மை உரைத்திடுவாய் வெங்கதிரே சினக்குறி காட்டுவையோ வெங்கதிரே - என் சித்தந் தெளியவேண்டும் வெங்கதிரே. 27 என்னிடத்தில் உன்றனொளி வெங்கதிரே - நாளும் இயங்குரிமை பெற்றதுகாண் வெங்கதிரே உன்னருகே யானணுக வெங்கதிரே - பொது உரிமைஇல் லாமைஎன்ன வெங்கதிரே. 28 உரிமையுடன் நீஇருக்க வெங்கதிரே - உன் உறுப்பாம் உலகிடைஏன் வெங்கதிரே உரிமைஒளி வீசவில்லை வெங்கதிரே - தீய ஒதுக்கடிமை ஓட்டுவையோ வெங்கதிரே. 29 உரிமை உரிமைஎன்று வெங்கதிரே - உன் ஒளிமுழக்கஞ் செய்கிறது வெங்கதிரே உரிமைஒளி யாலுலகில் வெங்கதிரே - முழு உரிமையின்மை வெட்கமன்றோ வெங்கதிரே. 30 சாதிமத நாட்டுநிறம் வெங்கதிரே - கொடுஞ் சண்டைமழை தாழடைப்போ வெங்கதிரே நீதிப் பொதுமையொளி வெங்கதிரே - அது நீறாக்கும் ஊறுகளை வெங்கதிரே. 31 இமயத் தவர்முதலில் வெங்கதிரே - உன் எழிலொளி போற்றினவர் வெங்கதிரே தவவொளி நீத்தவர்கள் வெங்கதிரே - இன்று தவிப்பதென்ன காரணமோ வெங்கதிரே. 32 அண்டமன்றி உன்னிருக்கை வெங்கதிரே - பிண்ட அகத்திலும் என்பதென்ன வெங்கதிரே அண்டபிண்ட மாகிநிற்கும் வெங்கதிரே - உன் அருட்பெருக்கை என்னவென்பேன் வெங்கதிரே. 33 என்னைநண்ணி உன்றன்கலை வெங்கதிரே - உள் இயங்குவதோ சற்றுரைப்பாய் வெங்கதிரே சந்திர கலையின்றி வெங்கதிரே - நீ தனியே இயங்குவையோ வெங்கதிரே. 34 இங்கிரண்டில் ஏற்றமெது வெங்கதிரே - அதை ஏவர் எடுத்துரைப்பார் வெங்கதிரே திங்கள்கலை உன்னிடத்தில் வெங்கதிரே - ஒன்றித் தேயுமென்று செப்புவதென் வெங்கதிரே. 35 ஒன்றாய் இயங்குநிலை வெங்கதிரே - காமன் ஓய்ந்தெரியும் பீடமது வெங்கதிரே என்றேனும் உன்னியக்கம் வெங்கதிரே - உள் இயங்கா தொழிந்திடுமோ வெங்கதிரே. 36 உன்னியக்கங் குன்றுமிடம் வெங்கதிரே - காலன் உதையுண்டு வீழுநிலை வெங்கதிரே அந்நிலையில் உன்னுதவி வெங்கதிரே - செம்மை ஆவிக்குத் தேவையிலை வெங்கதிரே. 37 அணுவுக் கணுவினிலும் வெங்கதிரே - உன் அருளொளி ஊடுருவி வெங்கதிரே நணுகி நுணுகிஎன்றும் வெங்கதிரே - செய் நன்றி மறப்பதுண்டோ வெங்கதிரே. 38 உன்றன் உதவியின்றி வெங்கதிரே - உயிர் ஒளிர ஒளியுண்டு வெங்கதிரே நன்றி மறப்பதில்லை வெங்கதிரே - நீ நாளு நாளு நீடுவாழி வெங்கதிரே. 39 கள்ள இருளகற்றி வெங்கதிரே - நீ கருணையினால் காக்கின்றாய் வெங்கதிரே உள்ளொளியுங் காட்டுகின்றாய் வெங்கதிரே - நீ ஓங்கிஓங்கி வாழ்க என்றும் வெங்கதிரே. 40 7. காளம் இயற்கை உலகமென்று ஊதேடா காளம் என்றும் இருப்பதென்று ஊதேடா காளம் முயற்சிக் கடியென்று ஊதேடா காளம் மூடம் அழிப்பதென்று ஊதேடா காளம். 1 உலகம் பொருளென்று ஊதேடா காளம் உயிர்கள் உறவென்று ஊதேடா காளம் கலைவாழ்க்கை இல்லமென்று ஊதேடா காளம் கடவுள் வழியென்று ஊதேடா காளம் 2 பெண்ஆண் உலகமென்று ஊதேடா காளம் பேரின்பக் காதலென்று ஊதேடா காளம் விண்ணிலென்ன பாழென்று ஊதேடா காளம் வியனுலகம் வீடென்று ஊதேடா காளம் 3 சேய்கள் சிறப்பென்று ஊதேடா காளம் செகத்தை வளர்ப்பதென்று ஊதேடா காளம் நோய்கள் ஒழிகவென்று ஊதேடா காளம் நோன்பு மலிகவென்று ஊதேடா காளம். 4 பொருணெறி நல்லதென்று ஊதேடா காளம் பொதுமை பொருத்தமென்று ஊதேடா காளம் அருணெறி ஆக்கமென்று ஊதேடா காளம் அகிலமன் பாகுமென்று ஊதேடா காளம். 5 பாடுகள் பண்பென்று ஊதேடா காளம் படுத்துண்ணல் தீமையென்று ஊதேடா காளம் கேடு விலகஎன்று ஊதேடா காளம் கேள்வி பெருகஎன்று ஊதேடா காளம். 6 கொடுங்கோல் வீழ்கஎன்று ஊதேடா காளம் கூற்றம் உலகிலென்று ஊதேடா காளம் குடிமக்கள் ஆட்சிஎன்று ஊதேடா காளம் குணந்தழைக்கும் ஆட்சிஎன்று ஊதேடா காளம். 7 ஆதி ஒருவனென்று ஊதேடா காளம் அவனிருக்கை எங்குமென்று ஊதேடா காளம் யாதுமே ஊரெ ன்று ஊதேடா காளம் யாவருங் கேளி ரென்று ஊதேடா காளம். 8 8. அறப்புரட்சி புதுஉலகம் புதுஉலகம் புதுஉலகம் காண்மின் புரட்சியிலே புரட்சியிலே பூப்பதந்த உலகம் புதுஉலகப் பூவினிலே பொதுநறவம் பிலிற்றும் பொதுநறவம் மாந்தஅறப் புரட்சிசெய எழுமின். 1 புரட்சிஎரி மலையென்று புகல்வதிந்த உலகம் புரட்சிஎரி புறப்புரட்சி பேய்த்தேரே யாகும் புரட்சிஅகம் உறல்வேண்டும் புதுஉலகம் நிலைக்கும் புரட்சிஅகப் புரட்சியென்று புரட்சிசெய எழுமின். 2 கொலைப்புரட்சி அலைப்புரட்சி கொதிப்புரட்சி வேண்டா குத்துவெட்டுக் கொள்ளைரத்தக் கொடும்புரட்சி வேண்டா புலப்புரட்சி அகப்புரட்சி புதுப்புரட்சி வேண்டும் பொதுமைஅறப் புரட்சிஎங்கும் புகுந்திடுதல் வேண்டும். 3 முப்புரத்தில் எப்புரட்சி மூண்டெழுந்த தன்று முரண்சிலையும் மறக்கணையும் மூர்க்கமெழுப் பினவோ முக்கணனார் புன்முறுவல் மூட்டியது புரட்சி மும்மலத்தை அறுக்கும்அற முதற்புரட்சி அதுவே. 4 இரணியன்முன் பிரகலாதன் எப்புரட்சி செய்தான்? எஃகமெடுத் தெறியமனம் இசையவில்லை இல்லை அரணெனவே பொறைஎதிர்ப்பால் அமைந்ததந்தப் புரட்சி அப்புரட்சி உலகினருக் கறிவுறுத்தல் என்ன? 5 உலகமெலாம் கொலைக்களனாய் உருவெடுத்த வேளை உதித்தஜின உத்தமனார் உளங்கொண்ட தென்னை கலைபுகழும் அஹிம்சையெனும் அறப்புரட்சி யன்றோ கருணைமுதல் அவர்வாழி கால்வழிகள் வாழி. 6 சாதிமத வேற்றுமைகள், தயைகுலைக்கும் வேள்வி, தருமநெறி வீழ்த்தியக்கால் சாக்கியனார் புத்தர் நீதிஅறப் புரட்சிவழி நிறுத்தினரே உலகை நிறைவளர்ந்த வரலாற்றை நினைவினிலே கொண்மின் 7 ஏசுபிரான் வாழ்க்கையிலே எழுபுரட்சி எதுவோ ஏந்தினரோ வாள்கருவி எண்ணினரோ கொலையை நேசமுடன் சிலுவையிலே நின்றுயிரை நீத்தார் நேர்ந்தஅன்பு புரட்சிஅது நெஞ்சில்நிற்றல் வேண்டும். 8 கலைகொலையாய்க் குவியுமிந்தக் காலஎரி நிற்குங் கதியினிலுங் காந்திமகான் கருதினரோ இரத்தம் நிலைகருணைப் புரட்சியன்றோ நின்றதவர் நெஞ்சில் நீதிஅறப் புரட்சிஅது நிறைபுரட்சி அதுவே. 9 புரட்சியிலே புதுஉலகப் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே போரொழிக்கும் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே புரட்சிஅறப் புரட்சியிலே புகுமின் புனிதப்புது உலகமைக்கும் புரட்சியிலே புகுமின். 10 9. திருப்பணி எங்கு முள்ள இறைவனை எங்கும் எண்ணி ஏத்தி இறைஞ்சிட லாமே தங்கு கோயில் தனித்தனி எல்லாச் சார்பு மக்கள் சமைத்தன ரென்னே. 1 அலையு நெஞ்சை அடக்கி ஒடுக்க அமைதி ஓவிய நுட்பம் அறியப் பலருஞ் சேரும் பழக்கம் பெருகப் பண்புக் கோயிலின் பான்மையென் பாரே. 2 செயற்கைக் கோயிலின் சீர்மை குலையும் சீவக் கோயிலின் சீர்மைகுன் றாதே இயற்கைக் கோயில் பணிசெயச் சேரும் இறையின் மூல இருப்பு விளங்கும். 3 புற்கள் கோயில் புழுக்களுங் கோயில் புட்கள் கோயில் விலங்குகள் கோயில் மக்கள் கோயில் மதிகலை கோயில் மனத்துக் கோயில் மருவுதல் வேண்டும். 4 மனத்துக் கோயில் மருவ நினைவு மாற்றங் கோயில் வினைகளுங் கோயில் அனைத்துங் கோயில் அறிவுமே கோயில் அன்புத் தொண்டே அகிலம் நிகழும். 5 நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் செகத்தில் வீழாச் செழுங்கனி கொய்தல் சீவக் கோயில் சிதைப்பதே யாகும். 6 ஆடும் மஞ்ஞை அலற அடித்தல் அலகுக் கோழி கதறத் துணித்தல் பாடு மாங்குயில் பார்த்துச் சுடுதல் பரமன் கோயில் இடிப்பதே யாகும். 7 பிடியின் யானையின் பேச்சிடைக் குண்டு பிணையின் மானின் உலவிடைக் குண்டு கடுவன் மந்தியின் ஆட்டிடைக் குண்டு கடவுள் கோயில் கதியென்ன ஐயோ. 8 ஓட்டுப் பன்றியைக் கட்டி ஒடுக்கி உறுத்துக் குத்த உருமிடுங் கோரம் கேட்கக் காதுகள் காண விழிகள் கேடில் ஆண்டவன் ஏனோ படைத்தான்? 9 ஆடு மாடுகள் பாடுகள் என்னே ஐயோ ஐயோ அலறுதே நெஞ்சம் கோடி கோடி கொலைக்களன் எங்கும் கூற்றின் ஆட்சி குலவுதல் நன்றோ. 10 வேள்வி என்றோ உயிர்க்கொலை செய்தல் வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல் கேள்வி இல்லை கிளர்ச்சியும் இல்லை கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ. 11 வாயில் சீவ வதைக்களன் மல்க வளரும் மக்கள் வதைத்களன் நாளும் நேய ஆட்சியின் நீதி நிறைந்தால் நீசம் அண்ட நினைவு மிராதே. 12 அறிஞர் நெஞ்சைக் கலக்கும் அரசு அமைதி யோரை அலைக்கும் அரசு செறியும் அன்பரைத் தீட்டும் அரசு செம்மைச் சீர்நெறி எங்ஙனம் ஓம்பும். 13 குண்டு கூடம் பெருக்கும் அரசு கொல்லுங் கல்வி வளர்க்கும் அரசு தண்டு சேர்த்துச் சமர்செய் அரசு தயவு மார்க்கத்தை எங்ஙனே ஓம்பும். 14 ஈசன் கோயில் இயற்கையாங் கோயில் இன்பக் கோயில் எதுவுமே கோயில் நாச மாகா வகையில் பணிசெய் ஞானம் ஞானமெய்ஞ் ஞானம தாமே. 15 என்னுள் ஈசன் இருப்பது போல ஏனை உள்ளி லவனிருக் கின்றான் என்னை வேறு பிரித்தலஞ் ஞானம் எல்லாங் கோயிலென் றெண்ணல் அறமே. 16 புறத்துக் கோயிலை மட்டும் வணங்கல் போதா தென்றகக் கோயில் வணங்க அறத்துக் கோயில் அனைத்தும் விளங்கும் அகிலஞ் சோதர அன்பில் திளைக்கும். 17 கொல்லும் ஆட்சி குலைப்பது தொண்டு கொல்லா நோன்பை வளர்ப்பது தொண்டு கல்வி எங்கும் பரப்புதல் தொண்டு கல்லாக் கேட்டைக் களைவது தொண்டே. 18 ஏழ்மை போக்க எழுவது தொண்டு ஏழை கூட்டஞ் சுருக்குதல் தொண்டு வாழ்வை யார்க்கும் வழங்குதல் தொண்டு வளத்தை என்றும் பெருக்குதல் தொண்டே. 19 வகுப்பு வாதங் கடந்தது தொண்டு மார்க்க வாதங் கடந்தது தொண்டு தொகுப்புச் சேர்க்கையில் தோன்றுதல் தொண்டு தோய்ந்த அன்பில் துலங்குதல் தொண்டே. 20 தானே நன்மை பெறப்பணி செய்தல் தரையி லோங்க நரகமே யாகும் தானும் மற்றுயி ரென்னும் பணிகள் தரையி லோங்க விடுதலை யாமே. 21 கோயில் யாக்கை இயற்கை அமைப்பு, கோயில் உள்ளம் கருணை ஒழுக்கம் கோயில் பூசை பணியில் கிடத்தல் கோயில் வாழி குவலயம் வாழி. 22 10. சன்மார்க்க ஆட்சி சன்மார்க்க சன்மார்க்க ஆட்சி - உயர் சாந்த மளிக்குஞ் சமதர்மக் காட்சி (சன்) சத்தெனுஞ் செம்பொரு ளொன்றே - அது சகதல மெங்குங் கலந்துங் கடந்தும் வித்தாகி நிற்கும் விழுப்பம் - மிக்க வேதங்க ளெல்லாம் விளங்க உரைக்கும். (சன்) 1 கடந்த நிலைமனம் எட்டா - அதைக் கட்டி அழுவதால் என்ன பயனோ கலந்த நிலையைக் கருதின் - வையம் காலம் இடங்கள் கருத்தில் அமையும். (சன்) 2 சத்தெனுஞ் செம்பொரு ளொன்று - பல தத்துவ நாமங்கள் தாங்கியே நிற்கும் பித்த வெறிச்சண்டை ஏனோ - சிறு பேதம் விடுத்தால் பொதுமை பிறங்கும். (சன்) 3 கலந்த நிலைஎது? கண்முன் - நிற்கும் காட்சி இயற்கை கருதல் எளிதே புலன்களில் நன்கு படியும் - அதில் புகப்புக ஆனந்தம் பொங்கி வழியும். (சன்) 4 இயற்கை வழியெலாங் காட்டும் - அதை இல்வாழ்க்கை இல்வாழ்க்கை என்றுமே கூட்டும் செயற்கை அரசுகள் வாழ்வைச் - சிதைக்கச் சேர்ந்தன தீமைகள் சீர்செயல் வேண்டும். (சன்) 5 பொல்லா அரசுகள் தந்த - கொடும் போர்மதம் வேண்டா புரோகிதம் வேண்டா எல்லாரும் வாழ இனிக்கும் - பொது இன்ப அறத்தில் இயைந்திடத் தூண்டும். (சன்)6 முதல்தொழில் வேற்றுமை போக்கும் - இந்த முழுமை யுலகைத் தொழில்வண மாக்கும் விதவித உற்பத்தி செய்யும் - வெறும் விதியை விலக்கும் மதியை வளர்க்கும். (சன்) 7 கொள்ளை மனங்கொ டுலகில் - மூர்க்கக் கொலைப்போர் எழுப்புங் கொடுங்கோலை வீழ்த்தும் கள்ளச் சபைகளைச் சாய்க்கும் - கொலைக் கருவி வடித்திடுங் கூடத்தை மாற்றும். (சன்) 8 பொருளில் புலத்தில் அறிவில் - அறம் பொதுமை புகுத்தும் புதுமை படைக்கும் அருட்கலை காவியம் ஆக்கும் - அன்பால் அறப்பணி ஆற்ற அறிவினை உந்தும். (சன்) 9 சாதி அழிக்குஞ்சன் மார்க்கம் - வாதச் சமய வெறியைத் தணிக்குஞ்சன் மார்க்கம் மாதரைக் காக்குஞ்சன் மார்க்கம் - புது மாநில மெங்குஞ்சன் மார்க்கம் மலர்க. (சன்) 10 11. சன்மார்க்கச் சாத்து தாயுந் தந்தையுங் காணுந் தெய்வம் குருவின் உளத்தில் மருவுந் தெய்வம் தெய்வம் உண்டு தேர்தலுக் கெட்டா ஒன்றே தெய்வம் உறுநிலை இரண்டே எல்லாங் கடந்த நிலைஅறி வாகும் எல்லாங் கலந்த நிலைஅன் பாகும் அறிவே தெய்வம் அன்பும் அதுவே அறிவாந் தெய்வம் அன்பா யிரங்கும் அன்பிறை உயிரே அதனுடல் இயற்கை அன்பு நீரால் அறிவை வளர்க்க 10 ஆசையைச் சுருக்கி அன்பைப் பெருக்க காதல் அன்பின் கடந்த படியாம் காதல் வாழ்க்கை, கடவுள் காட்சி கடவுள் வாழ்க காதல் வாழ்க (கல்வி) காதல் கல்வி கடவுள் கல்வி இயற்கைக் கல்வி ஈனுங் காதலை இல்லறக் கல்வி இயற்கைக் கல்வி செயற்கைக் கல்வி சிறிதே தேவை பரீட்சைக் கென்று படித்தல் வீணே பரீட்சைக் கவலை பாலர்க் கேனோ? 20 கவலைப் பள்ளி கழகமா காதே ஏட்டுக் கல்வி எழுத்துக் கல்வி எழுத்து வாழ்வில் பழுத்தல் வேண்டும் கல்வி செயற்படுங் காதல் மணத்தில் ஓதாக் கல்வி உணர்த்துங் காதல் கல்விக் கனிவு காதல் வாழ்வு கல்வி வாழ்க காதல் வாழ்க. (உலகம்) காதற் குலகுடல் கருவி கரணம் உலகம் தீதென் றுள்ளல் இழுக்கே உள்ளத் தீமை உலகத் தீமை 30 உள்ள விரிவே உலகத் தோற்றம் உள்ளம் திருந்தின் உலகம் திருந்தும் அன்பிறை எண்ணம் அகத்துள் அமைதி இல்லறம் உள்ளலை எழுச்சி மறிப்பு, சீலம் சிந்தையின் ஆலம் போக்கி அறக்கோல் அகத்தைத் திருத்தும் ஆட்சி சித்த விகாரம் சிக்கல் வாழ்வு திருந்திய சித்தம் பொருந்திய வாழ்வு விகார மற்ற சித்தம் ஒடுங்கும் ஒடுங்கிய சித்தம் தீமை கடக்கும் 40 உள்ளங் கடந்த ஒருநிலை யுண்டு கடந்த உள்ளம் காட்டும் உள்ளொளி உலக வாழ்க்கை உள்ளொளி யாக்கை காதற் சேர்க்கை உலக வாழ்க்கை (உடல்) அன்புக் காதற் கென்புடல் உறையுள் உடலை வளர்த்தல் உயிரை வளர்த்தல் உடலிறை கோயில் ஓம்பல் திருப்பணி உடல்நலம் மற்றவர்க் குழைக்க ஊக்கும் காலை எழுந்து கடன்களை முடிக்க மலத்துச் சிக்கல் மாதா நோய்க்கு, 50 செயற்கை மருத்துவம் சிக்கல் நீக்கா இயற்கை மருத்துவம் இனிதே இனிதே புனல்காற் றொளியும் பொருந்திய மருத்துவர் இல்லற வாழ்க்கை செல்வ மருத்துவர் இசையும் பாடலும் இன்ப மருத்துவர் உழவும் தொழிலும் பழைய மருத்துவர் உரிமை உணர்ச்சி ஒளிகால் மருத்துவர் தியானம் மருத்துவத் தலைமைப் பீடம் தீம்புன லாடின் போம்பிணி யெல்லாம் காற்றில் உலவி ஊற்றில் படிக 60 மின்னல் அருவி மேவி ஆடுக ஞாயிற் றொளியில் நாடொறும் மூழ்க மலையில் ஏறுக வனத்தில் சேருக பைங்கூழ் பார்க்க பசுங்கடல் நோக்க பசுமைக் காட்சி பறிக்கும் பித்தை அகன்ற பசுமை மூளைக் கமைதி வாரி குளித்தல் ஈரல் காத்தல் இயற்கையோ டியைதல் இறையோ டினித்தல் எழிலார் உடலம் இயற்கையின் கூறு மீறின் இயற்கையை வீறும் பிணியே 70 பிணியுடல் வாழ்வு பேயினுந் தாழ்வே இயற்கை உடலை இயற்கையே ஓம்பும் இயற்கை வழிநின் றெழிலுடல் காக்க (உணவு) உடற்குத் தேவை இனிய உண்டி உடலின் உயிர்ப்பை ஊக்குவ துண்டி உண்ணும் முன்னே உன்னுக இறையை என்றும் இறையை முன்னல் தவமே எல்லாம் இறையென் றெண்ணல் மேன்மை அன்பாம் இறையை அகங்கொளல் நன்மை உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணம் 80 அன்புள் சார்தல் அன்பே ஆதல் அன்புடன் உண்ணும் அன்னமும் அன்பே பொருந்திய உணவைப் புசித்தல் பொலிவு மென்று தின்னல் நன்றே உடற்கு, பானம் உதடுநா படிய அருந்துக பல்லும் நாவும் மெய்காப் பாளர் பல்லின் பளிங்கைப் பாழாக் காதே பல்லின் பளிங்கு பண்பாம் உடற்கு, பல்லின் கறையால் பலநோய் பரவும் ஆலும் வேலும் பல்லுக் குறுதி 90 நாவில் அழுக்கு நண்ண விடாதே நாவைக் காக்கும் ஞானம் பெரிது கால உணவு காக்கும் உடலை அளவறிந் துண்ணல் யாக்கைக் கழகு மீதூண் உடலை வேதனை செய்யும் நொறுவை அடிக்கடி அடைத்தல் நோயே பலப்பல காரம் பலப்பல நோய்கள் குத்திய அரிசியில் சத்தியல் கொழிக்கும் அறவே தீட்டிய அரிசி இழிவே பானைச் சோறு பருகல் சால்வு 100 சட்டிச் சமையல் சத்துவ குணந்தரும் பச்சைக் காய்கறி நச்சல் பண்பு கீரையும் மோரும் ஈரல் காவல் இளநீர் இன்ப இளமை வைப்பு, பாலும் பழமுஞ் சீல உணவு மருந்து நெல்லி கடுக்காய் தான்றி சுக்கும் மிளகும் பக்க மருந்து திப்பிலி யோட்டும் தீய இருமலை நெல்லி அளிக்கும் நீண்ட வயதை, கடுக்கா யொன்று பத்துத் தாய்மார் 110 தூதுளை மூளைத் துகளை அகற்றும் வல்லா ரையால் வளரும் நினைவு வெங்கா யத்தால் விலகும் விடநோய் வெள்ளைப் பூண்டால் வீறும் தாது மிக்க உப்பால் விரியும் ஈரல் அதிகா ரத்தால் அலறும் ஈரல் மதுபா னத்தால் மலரும் ஈரல் ஈரல் நலத்தை என்றும் பேணுக எலுமிச் சையினில் நலமிக உண்டு கடும்புளி உணவால் நடுங்கும் நரம்பு 120 மயக்கப் பொருளில் மனஞ்செலுத் தாதே மரத்துப் பாலை மதுவாக் காதே மற்றப் பொருளையும் மயக்காக் காதே சிரிக்கக் சிரிக்க உண்டது செரிக்கும் உண்டதும் மூளைக் கோய்வு கொடுக்க வண்டி ஏற விரைந்தோ டாதே ஏட்டுக் கணக்கில் மாட்டி விழாதே மூளை கொதிக்க வேலைசெய் யாதே சீறி விழுந்தால் ஏறுங் கொதிப்பு, கெட்ட எண்ணம் கெடுக்கும் உடலை 130 உள்ளே கனலல் உடலை அரித்தல் பொறாமை உடலைப் பொசுக்கும் நெருப்பு, நல்ல குணத்தில் நாளும் படிக, குணத்தை வளர்க்க உணவுந் துணைசெய்யும் உணவொடு குணமும் ஒளியழ கமைக்கும் அழகு தெய்வம், அழகைக் காக்க புனித உணவால் பொருந்தும் அழகுடல் (இசை) இசையும் உடலை இனிது காக்கும் இயற்கை இசையால் இழியுந் தீமைகள் பாடலும் ஆடலும் வாழ்வுச் செல்வம் 140 குயிற்கும் மயிற்கும் கூலி இல்லை வண்டுக் கமைந்த பரிசில் இல்லை அருவி முழவுக் களிப்பே இல்லை பெண்கள் இன்மொழி பண்ணிசை அமுதம் யாழால் மூர்க்க யானையும் வயமாம் குழலொலி மழலைக் குழவி யாக்கும் பல்லியக் கூட்டம் நல்லிசைக் கழகம் நல்லிசை தளர்ந்த நரம்பை எழுப்பும் பண்ணிசை வெறுப்புப் பாவக் கொலையுளம் கூலிப் பண்ணிசை கொலைக்கஞ் சாதே 150 வாழ்க இசையும் பாடலும் ஆடலும் (காதல்) ஆடலும் பாடலும் காதற் காக்கம் காதல் வாழ்க்கை உடலின் காவல் காதல் வளரும் கலந்தஇல் வாழ்வில் இருமை ஒன்றல் பெருமைக் காதல் ஒருத்தியும் ஒருவனும் ஒருமைக் காதல் ஈருடல் ஓருயிர் இன்பக் காதல் சேர்ந்து வாழ்தல் ஜீவ இயல்பு சேர்க்கையில் அன்பு செறியும் விரியும் அன்பொழுக் கத்தால் அகிலஞ் சீர்படும் 160 ஒழுக்கம் விழுப்பம் உயிரினுஞ் சிறந்தது சேர்ந்த வாழ்க்கையில் சிறக்கும் ஒழுக்கம் சேர்தல் வளர்ச்சி கூர்தல் துணையே தனித்து வாழ்தல் இயற்கையைத் தகைதல் தனிமை வாழ்வில் சால்பமை யாதே துறவு மனத்தின் துகளை அகற்றல் துறவு மனத்தில் தொண்டே பொதுளும் உள்ளத் துறவில் உலகே அன்பாம் வேடத் துறவு விடம்மன் பதைக்கு மயிரைச் சிரைத்தால் அயரும் நரம்பு 170 சடையை வளர்த்துச் சாமியா காதே சடையுந் தாடியும் உடற்கென வளர்க்க இளமைப் போகம் வளமை நல்கும் அளவுப் போகம் யாக்கைக் கழகாம் அளவில் போகம் அழகை அழிக்கும் பெண்ணை வெறுத்தல் பேதைமைப் பேதைமை இயற்கையில் ஆண்பெண் இருத்தல் உணர்க பெண்கொடி ஆண்கொடி பின்னலைப் பார்க்க பெண்பனை ஆண்பனை பேசலைக் கேட்க பிணையும் மானும் அணைதலை ஆய்க 180 பிடியும் களிறும் மயங்கலைப் படிக்க மக்களில் இருபால் மகிழ்தலை ஓர்க ஆண்பெண் வாழ்க்கை அன்பு வளர்க்கை பெண்மையில் முன்னும் ஆண்மை அதிகம் பெண்சொற் கேட்டல் பெரிய தவமே பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை காதல் பெருக்கம் தாய்மை அன்பே தாய்மை அன்பே இறைமைக் கருணை வாழ்க பெண்மை வாழ்க காதல் (குழவி) காதல் வடிவம் கால்வழிக் குழவி 190 குழவிச் செல்வம் குவலயச் செல்வம் குழவி ஈனல் குவலயம் வளர்த்தல் குழவிப் பிறப்பில் குறுக்கி டாதே செயற்கை முறைகளைக் கையா ளாதே குழந்தை உள்ளம் தைவிக இல்லம் குழந்தை மூளை கலையின் நிலையம் குழந்தை ஆட்டமும் ஓட்டமுங் கலையே குழந்தை மழலை குழலும் யாழும் குழந்தைப் போக்கில் குறுக்கிடல் தவறு குழந்தைக் கச்ச மூட்டல் கொடுமை 200 குழந்தையை மௌன மாக்கல் கொலையே குழந்தை ஆடுங் குடிலே வீடு குழந்தை இல்லா மாடியும் ஈமம் (இல்லம்) ஒலைக் குடிசை ஒளிகாற் றுலவு பசுங்கொடி படரில் பரமன் கோயில் ஆலர சத்தி வேம்பும் நிலையம் இற்புறம் கீரை காய்கனி இனிமை இல்முன் மலர்பொழி விருத்தல் இனிமை தெருவில் மரநிரை திகழ்தல் இனிமை பூமதி பெண்சேய் புனிதர் இனிமை 210 பதியின் இனிமை பசுமைப் பொங்கல் பசுமைப் பதியே பாட்டின் கோலம் ஊரின் பசுமை உள்ளப் பசுமை உள்ளப் பசுமை உயர்ந்தஇல் வாழ்க்கை வாழ்க்கைப் பசுமை வழங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சியின் எழுச்சியே பாடலும் ஆடலும் மகிழ்ச்சியின் ஊற்று வான்துளி வீழ்ச்சி வான்துளி வீழ்ச்சி மகிழ்ச்சி வெள்ளம் (தொழில்) மழையின் மகிழ்ச்சி உழவா கும்மே உழவு உலக நலத்தின் காப்பு 220 நாற்றுப் பாட்டின் காற்றில் உலவுக ஏற்றம் பாடும் இனிமை என்னே! பசும்பயிர்க் காட்சி பசியைத் துரத்தும் பொன்மணிச் சிறப்பினும் நென்மணி விழுப்பம் பருத்திச் செடியை விருத்தி செய்க பஞ்சைக் கண்டதும் பஞ்சம் பறக்கும் நூற்க நூற்க நெஞ்சங் குவியும் நாஞ்சிலும் இராட்டையும் நாட்டின் ஈரல் வாழ்க்கைக் குரிய தொழின்முறை வளர்க்க சேர்க்கைத் தொழிலில் ஜீவன் உண்டு 230 வாழ்க உழவு வாழ்க நூற்பு (அரசு) கொலைப்படை வடிக்குந் தொழிற்களம் ஒழிக கொலைப்படை வடிப்பது கொடுங்கோ லாட்சி கொலைப்படை ஆட்சியில் அலைப்பே அதிகம் போரை வளர்ப்பது பொல்லா ஆட்சி குணத்தை அழிப்பது கொடுங்கோ லாட்சி வறுமை மரணம் வளர்ப்பது கொடுங்கோல் பிரிவைப் பெருக்கும் பேய்மைக் கொடுங்கோல் தொழிலர சின்மை தொல்லைக் கிடமே அறக்கோ லாட்சி அமைதி நிலவு 240 கோல்குடி மக்கள் வயப்படல் அறமே தனிமை ஆட்சியில் பனிமை உண்டு குடிமை ஆட்சி கொடுமை குலைக்கும் கொல்லா ஆட்சியில் குணங்கள் குலவும் தொழிலர சாட்சியில் தொலையுங் குறைகள் தொழிலர சாட்சியில் தோன்றும் பொதுமை ஐயம் ஏற்றல் அரசின் குற்றம் ஏழ்மை ஒழிந்தால் இரத்தல் மாயும் அகால மரணம் அரசின் கொடுமை பட்டினி இன்மை நாட்டின் தன்மை 250 பட்டினி நாட்டில் பாட்டும் நெருப்பு, பசிபிணி சாவு பாழுக் கறிகுறி ஓருயிர் பட்டினி உலகப் பட்டினி பட்டினி தோன்றா உலகைப் படைக்க பொதுமைத் தொழிலில் பொன்றும் பட்டினி புவனம் பொதுமை பொழிலே யாக பொதுமைப் பொழிவில் புதுமணங் கமழும் புதுமை உலகம் பொங்கிப் பொலிக புதுமை உலகம் புரட்சியில் மலரும் அரசு திருந்தின் அனைத்தும் திருந்தும் 260 அரசியல் உள்ளம் அறத்திய லாக அறத்திய லற்ற அரசியல் நஞ்சே அரசியல் கட்சி அழிக்குங் குணத்தை கட்சி அரசியல் காண்டா மிருகம் தேர்தலும் வாக்கும் தேள்பூ ரான்கள் சட்டம் பெருகின் கெட்டதும் பெருகும் அறவோர் வழியே அரசியல் இயங்க அரசைத் திருத்த அனைவரும் எழுக உரிமை இன்பம் உலவா இன்பம் உரிமை உணர்ச்சி ஒழுக்க மலர்ச்சி 270 உரிமை வரட்சி புரட்சி எழுப்பும் அடிமை நோய்க்குப் புரட்சி மருந்தாம் அறவழிப் புரட்சி அழியா உரிமை கொலைவழிப் புரட்சி கூற்றுரி மைக்கே கொல்லாப் புரட்சி குணம்வளர் அறமாம் உரிமை வாழ்க ஓங்க புரட்சி புரட்சி உரிமையில் புகுந்தொழி லரசு (எளிமை) தொழிலர சாக்கும் எளிமைப் பொதுமை எளிமைப் பொதுமை எவர்க்கும் இனிமை வறுமை நஞ்சாய் வதைக்கும் வாழ்வை 280 கொழுமை அரக்கனாய் விழுங்கும் அன்பை வறுமையும் வேண்டா கொழுமையும் வேண்டா எளிமை வேண்டும் எளிமை வேண்டும் அருகல் பெருகல் எளிமையில் நேரா எளிமை வாழ்வில் இயற்கை உறவாம் எளிமைக் கிலக்கியம் ஏசுவின் வாழ்க்கை எளிமை உள்ளம் பொதுமை உலகாம் எளிமை வித்துப் பொதுமைப் பொதும்பர் எளிமை பொதுமை பொதுமை எளிமை எளிமை ஏற்றுப் பொதுமைக் குழைக்க 290 (பொதுமை) பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க இறையும் இயற்கையும் என்றும் பொதுமை ஞாயிறு திங்கள் நாள்கோள் பொதுமை ஐந்து பூதமும் அவனியும் பொதுமை பிறப்பும் பொதுமை இறப்பும் பொதுமை பொதுமை குலைந்தது புரோகித அரசால் பொதுமை எழுந்தால் புரோகிதம் பொன்றும் பொருளில் நிலத்தில் பொதுமை காண்க அறிவிலும் பொதுமை அடைய முயல்க கலப்புத் திருமணம் காட்டும் பொதுமை 300 குறைகள் குலைந்தால் குலவும் பொதுமை வகுப்பு மதப்போர் மாய்க மாய்க நிறப்போர் மொழிப்போர் நீறா யொழிக நாட்டுப் போர்கள் நாசமே யாக மேலினம் கீழினம் பிறப்பில் இல்லை வெற்றி தோல்வி வீரனுக் கில்லை எந்த உயிரும் இறைவன் கோயில் இறைவன் கோயில் அன்பின் உறைவு மைபொதி நெஞ்சம் மறைக்கும் அன்பை, புறஞ்சொல் வெறுத்தவன் அறத்தில் அன்பன் 310 திட்டை விட்டவன் செம்மை நேயன் திட்டை வளர்ப்பன தீய தாள்கள் தீய தாள்பொய் செருபகை எரிமலை புதினத் தாளால் புனிதம் பொங்கா களிப்புப் புதினம் கயமை விழிப்பு, சிறுகளிக் கதைகள் சிந்தனைச் சிறையே தீக்களி யாடல் சிந்தனைத் தேக்கம் காவிய ஓவியம் கருத்துச் சுரங்கம் காவிய ஓவியம் ஆவிக் குவு கற்பனைச் சுவையுங் கருத்தை வளர்க்கும் 320 அளவில் கற்பனை ஆழங் கெடுக்கும் ஓவிய உள்ளம் காவிய யாக்கை ஓவியத் தழுந்தின் உலகந் தோன்றா காவிய ஆழம் கடலினும் பெரிதே கடல்மலை காடு காவிய ஓவியம் கயிலை ஓவியம் பாற்கடல் காவியம் ஆணும் பெண்ணும் அழகிய ஓவியம் ஆண்பெண் வாழ்க்கை அன்புக் காவியம் காவிய ஓவியம் கடவுள் இருக்கை கலையின் நுட்பம் உயிரெலாஞ் சுற்றம் 330 சுற்றம் உயிரெலாம் தொண்டில் விளங்கும் பொதுமைச் செல்வம் புனிதத் தொண்டு (தொண்டு) தொண்டு நெஞ்சம் தூய்மைக் கோயில் தொண்டுச் செய்கை சுவறும் முனைப்பை முனைப்பை அறுத்தல் முனிவ ராதல் முனிவ ரென்பவர் முழுமைத் தொண்டர் ஆணவ எழுச்சியில் அருகுந் தொண்டே அடக்கம் பொறையும் தொண்டுக் கறிகுறி உண்மை முகிழ்க்கும் உயர்ந்த தொண்டில் தொண்டின் வளர்ச்சி பகைமை வீழ்ச்சி 340 ஊறுசெய் யாமை உண்மைத் தொண்டு நேர்மை ஒழுக்கம் நீர்மைத் தொண்டாம் தொண்டின் உயிர்ப்பு நோன்பின் தூய்மை நோன்பெவ் வுயிர்க்கும் தீங்கெண் ணாமை நோயரை அணைந்து பணிசெயல் நோன்பு வாயிலா உயிர்வதை மறித்தல் நோன்பு தீமையைப் பொறுமையால் எதிர்த்தல் நோன்பு பொல்லாப் பழியைப் பொறுத்தல் நோன்பு வெற்றுரை நோன்பை வீழ்த்துங் கருவி செய்கையில் வருவதைச் செப்பல் நோன்பு 350 பேச்சினுஞ் செய்கை பெரிதே பெரிதே நாளை செய்குவம் என்றெண் ணாதே நன்றே செய்க அன்றே செய்க சூழ்ந்த ஆய்வில் சுரக்குந் தெளிவு தெளிவில் உருக்கொளுஞ் சீர்சால் தொண்டு தொண்டு, பொதுமை அறமீன் குழவி (சோதரம்) தொண்டில் விளங்கும் உயிர்களின் சோதரம் என்னுயிர் இல்லம் என்னுயிர் சுற்றம் என்னுயிர் உலகம் என்னுயிர் எல்லாம் எல்லாம் ஓருயிர் அவ்வுயிர் இறையே 360 இறையின் உறுப்பு, பிறரும் யானும் எல்லாஞ் சோதரம் எதுவுஞ் சோதரம் சோதரம் பிரியும் சுரண்டும் ஆட்சியில் பொதுமை ஆட்சியில் புகுந்திடுஞ் சோதரம் பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க (அறம்) சொக்கப் பொதுமையில் சூழும் அறமே அன்பும் அறிவும் அறத்தின் மலர்கள் அறமே பொதுமை அனைத்துயிர் ஒருமை மாசில் மனமே அறத்தின் கோயில் நன்மை யெல்லாம் அறத்தின் கூறுகள் 370 அறமே முழுநலன் அறமே முழுமுதல் அறமே பொருளென் றரற்றும் மறைகள் தோற்றமும் மரணமும் தொல்லற வளர்ச்சி தோற்ற முண்டேல் மரண முண்டு தோற்றமும் மரணமும் தொல்லை யல்ல தோற்றமுந் தேவை மரணமுந் தேவை தோற்றமும் நன்மை மரணமும் நன்மை தோற்றஞ் சிறக்க மரணந் துணைசெயும் தோற்றமும் மரணமும் தூய்மையைப் புதுக்கும் இறந்தபின் விளைவதை எண்ணல் வீணே 380 ஆவி உலகாய்ந் தல்ல லுறாதே ஆவியை அழைப்பது ஆவியை இழப்பது ஆவிப் பேச்சும் வாணிப மாச்சு வாணிப மோசம் வான்வரைப் போச்சே இருப்பது பொய்யே போவது மெய்யே தீங்கெண் ணாதே தீங்கெண் ணாதே தீமையைத் தீமையால் தீர்க்கஎண் ணாதே தீமையை அன்பால் தீர்க்க விரைக பகைவர் தூற்றலைப் பற்றிவே காதே பகைமை இருளில் அன்பொளி ஏற்றுக 390 கருத்திற் பிறக்கும் வேற்றுமை இயற்கை மற்றவர் கருத்துக் கிடந்தரல் மாண்பு கருத்தை மாற்றிக் கருத்தை வளர்க்க மாற்றக் கருத்தர் மாற்றா ரல்லர் வேறு கருத்தைச் சீறல் சிறுமை கருத்து வேற்றுமை திருத்தும் உலகை வேற்றுமைக் கருத்தை வேட்டல் அறிவு மாறு கருத்தால் மலரும் புதுமை பழிபா வங்கட் கஞ்சி நடக்க எவர்க்கும் நன்றே என்றுஞ் செய்க 400 பிறர்க்கென வாழ்தல் அறத்தின் திறவு மண்ணில் அறவழி வாழ முயல்க பாவம் போகப் பரமனை வேண்டுக (வாழ்த்து) அறவோர் வாழ்க அறவோர் வாழ்க அறத்தொண் டாற்றி அறநெறி வளர்க்க ஆய்ந்தாய்ந் தறத்தை அல்லற் படாதே தொண்டு செய்யின் துலங்கும் அறமே தொண்டு வண்ணம் தொல்லுல காக தொண்டர் படைகள் சூழ்ந்துசூழ்ந் தெழுக தொண்டாய்த் திகழ்ந்த தூயோர் வாழ்க 410 தொண்டரே அறவோர் துறவோர் நோன்பிகள் தொண்டு வளரச் சோதரம் ஓங்கும் தொண்டில் விளங்குஞ் சுத்தசன் மார்க்கம் வாழ்க மகம்மது வாழ்க இயற்கை வாழ்க ஏசு வாழ்க அருகர் வாழ்க புத்தர் வாழ்க கண்ணன் வாழ்க குமரன் வாழ்க மோனன் வள்ளுவர் வாய்மை தெள்ளிய உலகம் தெள்ளிய உலகில் சிறந்து வாழ்க ஔவை மொழியில் அகிலங் காண்க 420 அகிலங் காண அறஞ்செய விரும்பு யாதும் ஊரே யாவருங் கேளிர் ஒன்றே குலம் ஒருவனே தேவனும் வாழ்க சமரசம் வாழ்கசன் மார்க்கம் வாழ்க சான்றோர் வாழ்கதாய் மையே. 425 12. தாய்மைப் பெண் தாய்மைப் பெண்ணினம் வாழ்ந்து தழைக்க தாய்மைப் பெண்ணுயிர் தந்திடல் காட்சி தாய்மைப் பெண்ணெனச் சான்றுகள் வேண்டா தாய்மைப் பெண்ணினம் வென்று தழைக்க. 1 உலக மெல்லாம் உதிப்பிடந் தாய்மை உதித்துத் தங்கி ஒழுகிடந் தாய்மை கலையின் மூலங் கமழிடந் தாய்மை கடவு ளன்பு சுரப்பிடந் தாய்மை. 2 வானை நோக்க வயங்கிடுந் தாய்மை மண்ணை நோக்க விளங்கிடுந் தாய்மை கானம் மாமலைக் காட்டிடுந் தாய்மை கடலும் ஆறும் கருணையின் தாய்மை. 3 கருணைப் பெண்ணைக் கடிவதோ ஆண்மை கடிவோ ரெந்தக் கருவழி வந்தனர்? அருளை அற்றவர் ஆர்த்த மொழிகள் அனலைக் கக்கும் அருநர காகும். 4 பெண்ணைப் பேயெனப் பேசுதல் நன்றோ பெரிய மாயையென் றேசுதல் நன்றோ தண்மை யில்லா வனத்து விலங்கும் தடவிப் பெண்ணலம் தாங்குதல் காண்மின் 5 பாவை தாலி அறுத்திடல் மூர்க்கம் பட்டம் முண்டை என்றீதலும் மூர்க்கம் ஏவு மற்ற இழிவுகள் மூர்க்கம் எல்லாம் வீழ்த்த இளைஞர் எழுமின். 6 ஆணும் பெண்ணும் சமன்சமன் ஐயோ ஆணின் கோல்மிக அன்னை விழுந்தாள். கோணல் நீக்கிடுங் காதல் மணமே கோதில் மார்க்கம் குலவும் இனிதே. 7 சிவனருள் வேட்டல் (1947) அணிந்துரை எனது வாழ்க்கை பலதிற ஆராய்ச்சிகளைக் கண்டது; இப்பொழுதுஞ் சில ஆராய்ச்சிகளைக் கண்டுவருகிறது. இவற்றுள் ஒன்று பாழைப் பற்றியது. யான் இளமையில் சிவநூல்களைப் பயின்றேன். அப் போதே சிவம் பாழ் என்ற உணர்ச்சி என்பால் அரும்பியது. அவ்வுணர்ச்சி, பலதிற இயக்கங்களில் ஈடுபட்ட என் மனத்தில் வளர்ந்தே வந்தது. இப்பொழுது அது கூர்ந்து விளங்குகிறது. விளக்கத்துக்குப் பாழ் ஆராய்ச்சி துணைநின்றது. பாழைக் குறித்து ஈண்டுப் பேராராய்ச்சி நிகழ்த்த வேண்டுவதில்லை. அதுபற்றி இந்நூல் முதற் பாட்டில் ஒரு சிறு குறிப்பு மிகச் சுருங்கிய முறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிவம் என்னும் பாழ் தன்னளவில் நிற்கவில்லை. அஃது இயற்கைக் கூறுகளாக இயங்கியுள்ளது. இயற்கைக் கூறுகளி னின்றும் காவிய ஓவியங்கள் வடிகின்றன. இம் மூன்று நிலை களையும் இந்நூற்கண் காணலாம். பாழ் ஆராய்ச்சி சிவத்திற் சென்றது. சிவம் தன்னைப் பாட என்னைத் தூண்டிது. பாடல் எப்படி அமைந்தது? தத்துவப் பாடலாக அமைந்தது; பாட்டுப் பாடலாக அமையவில்லை. தத்துவப் பாடலுக்கும் ஒருவித மரபு உண்டு. அம் மரபை யொட்டியாதல் இந்நூல் அமைந்ததோ? பிழை பொறுக்க. இராயப்பேட்டை சென்னை 5-1-1947 திருவாரூர்- வி. கலியாணசுந்தரன் வாழ்த்து சுதந்திரத் தெய்வம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி. 1 சுதந்திர வாழ்த்து விண்கதிர் நிலவே போலும் விழிமணி யொளியே போலும் பண்ணிசை காதல் போலும் பயில்மனத் தெண்ணம் போலும் தண்ணதி மேக வோட்டம் தமிழ்மொழி பாட்டே போலும் உண்ணிலை யுயிரி னுக்கிங் கொளிர்சுதந் திரமே வாழி. 2 சுதந்திரச் சிறப்பு மீன்கடலே யெழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண்கம்ப மானாலும் ஊன்கொந்திக் கண்டதுண்டம் ஒன்னலர்கள் செய்தாலும் வான்மருவ நேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. 3 பாரத நாடு மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு பழமைமிகு புகழ்பெருகு பாரநன் னாடே. 1 உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி நாடு கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு பகைவர்களுந் தொழுதேத்தும் பாரதநன் னாடே. 2 வான்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு நான் மறந்த சுகர்முதலோர் ஞானமொளிர் நாடு நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதண் ணாடு மேன்மையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு வேதாந்த ராமகிருஷ்ணர் விளங்கியசெந் நாடு பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு பத்தரொடு ஞானிகள்வாழ் பாரதநன் னாடே. 3 சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு இந்திரர்சொல் கண்ணகியின் எழில்நிறைகொள் நாடு எங்களவ்வை இன்மொழியே எங்குமொளிர் நாடு அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு பந்தமிலா விக்டொரியா பரிந்தாண்ட நாடு பாவையர்தம் வடிவான பாரதநன் னாடே. 4 சித்துணரப் பிளவட்கி சிந்தைகொண்ட நாடு திரண்டகலை அன்னிபெஸண்ட் சித்தம்வைத்த நாடு பத்திமிகு ராமாபாய் பணிவளரு நாடு பான்மையலி சோதரர்தாய் பண்புநிறை நாடு. கத்தனடிக் காந்திகமழ் கதூரி நாடு கவின்மதர்த்த சரளதேவி கனகமயில் நாடு சித்திரக்கண் சரோஜினி செல்வக்குயில் நாடு சிற்பமய மாயமைந்த சீர்பரத நாடே. 5 தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு தத்தரொடு கோகுலர்தஞ் சரிதநிகழ் நாடு நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன் னாடே. 6 பிரமசபை ராஜாராம் மோஹனராய் நாடு பிரமசரி தயானந்தர் பிறந்ததவ நாடு பரவுவிவே கானந்தப் பரிதியெழு நாடு பரனியற்கைக் கவிதாகூர் பான்மதியூர் நாடு விரவுமுயிர் மரங்கண்ட வித்தகப்போ நாடு விரிந்தமன சந்திரரே விஞ்ஞான நாடு வரகணித ராமாநுஜ வாழ்வுபெற்ற நாடு வண்மைகல்வி ஒப்புரவு வளர்பரத நாடே. 7 ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே. 8 தாயின் காட்சி போரூரன் மலைமீது பொருந்தமைதி நாடிப் புல்செறிந்த பாறையிடம் புங்கமரத் தடியில், பாரூரும் பார்வையெலாம் பையமறைந் தோடப் பாரதத்தாய் நினைவிலுறப் பரிந்தயரும் போதில், காரூரும் பொழிலசைவில் கண்பிடுங்கும் மின்போல் கனகவொளி மண்டபமே காந்தமென ஈர்க்கச் சீரூரும் உள்நுழைந்தேன்; திகழ்ந்ததொரு சபையே செப்பரிய உலகசபை; சிறப்புடைய தென்றார். 1 அரியிருக்கை யேறிமுடி அணிந்துயர்கோல் தாங்கி, ஆண்மையொடு வீற்றிருக்கும் அரசிகளைக் கண்டேன்; தெரியவென்னை ஈன்றவள்தன் திருக்கொலுவைத் தேடிச் சிறுகன்றே யெனவங்குத் திரிந்தலைந்தேன் திகைக்தே கரியநிறத் தென்மீது கண்செலுத்தி னார்கள்; காய்வர்களோ வெனுங்கவலைக் கருத்தொருபால் வாட்ட, அரிவையர்கள் முகநோக்கி யார்யாரென் றுணர; அருகணைந்தேன் தெரிந்தவரும் அருளினரிவ் வாறே. 2 நானாநாற் பத்தாண்டில் நலமுற்ற ஜப்பான் நாயகிநான்; பெருநதிகள் நானிலத்தில் பூண்டே ஆனாத வளமுடைநான் அமெரிக்கா செல்வி; அடுக்கடுக்காய்க் கலைவினைகள் ஆக்குஜெர்மன் யானே; கானாடுங் கனிமொழியும் ஓவியமுங் காதல் கவின்பிரான்ஸு திருமகள்யான்; காண்கவென முறையே தேனாறும் மலர்வாயால் தெரிவித்தார் தம்மைச் சிரித்தொருத்தி முடிவினிலே செப்பியதைக் கேண்மோ. 3 என்னருமை இந்தியனே என்னையறி யாயோ? என்னாட்சி கதிர்மறைதல் எப்பொழுது மில்லை; என்னிலத்தின் என்கடலின் என்வெளியின் பரவல் எவர்க்குண்டோ இவ்வுலகில் எங்குமென தாணை; உன்னலத்தின் பொருட்டாக உன்னையுமே யாளும் ஓரரசி என்னலுமே; உயர்சபையில் அன்னை இன்மை, குடல் முறுக்கியவண் எனைநீக்கக் குமுறி இடியிடிப்ப மழைபொழிய ஈர்ம்பொழிலில் நின்றே. 4 வேறு பொழிலிடையும் ஒளிர்கதிரே! பூவிற் றொன்மைப் புகழ்பரதத் தாயெங்கே? பொங்கி நின்று நிழலருளும் மரஞ்செடிகாள்! நிமல ஞான நிறைவீரக் கொடியெங்கே? நீண்டு வானில் எழுகுடுமி மலைக்குலங்காள்! இனிய வெண்மை இமயமுடி அணங்கெங்கே? எங்கே? அன்பில் அழகுநில வுந்தருவி அலைகாள்! கங்கை ஆறணிந்து கடலுடுத்த அம்மை யெங்கே? 5 ஆடுகின்ற மயிற்குழுக்காள்! ஆடல் நுட்ப அருங்கலையை முதலீன்ற அன்னை யெங்கே? பாடுகின்ற புள்ளினங்காள்! பண்ணின் பண்பைப் பாரினுக்குப் பரிந்தளித்த பாவை யெங்கே? ஓடுகின்ற புயற்றிரள்காள்! உரிமை நீர்மை உலகசகோ தரமென்ற ஒருத்தி யெங்கே? தேடுகின்றேன் தேவியெங்கே? தேவி யெங்கே? திரிகாற்றே நீயாதல் செப்பாய் கொல்லோ? 6 வடமொழியுந் தென்மொழியும் மலர்வா யெங்கே? வகைவகையாய்ச் சித்திரங்கள் வரைகை யெங்கே? திடமளிக்குங் கருணைபொழி செங்கண் ணெங்கே? சேர்ந்தவர்க்கு விருந்தளிக்குஞ் சிந்தை யெங்கே? சுடரொளிபொன் நவமணியுந் துன்ப நீக்குஞ் சுவைமணியுந் துலங்குமுடற் சுரங்க மெங்கே? இடமகன்ற இந்நிலத்தில் என்தா யெங்கே? எங்கேயென் தாயெங்கே எங்கே எங்கே? 7 வேறு எங்கேயென் றொருமனத்தால் ஏக்குற்ற வேளை எழுந்ததொலி விழுந்தகுர லிடத்திருந்தே மைந்தா! இங்கேயென் பழங்கதைகள் இயம்புவதா லென்னே? என்னிலையோ நிர்வாணம்; எச்சபையார் ஏற்பார்? பொங்கார முடிசெங்கோல் பூண்பதென்றோ போச்சு; பொலிவுடலும் பொன்னுடையும் புரியுணவும் போச்சு; கங்காளி; துச்சிலுளேன்; கம்பலையே ஆச்சு; கடும்பசிநோய் முடுக்குகின்ற கர்மமென தாச்சு. 8 வடிவினிலே பெரியள்யான்; வயதினிலே பெரியள்; வளத்தினிலும் வண்மையிலும் மக்களிலும் பெரியள்; கடியரணில் மலையரணில் கடலரணில் பெரியள்; காலினிலே தளைவந்த காரணந்தா னென்னே? படியினிலே இல்லாத பாழான சாதி பகுப்புடனே, தீண்டாமை, பாவையர்தம் அடிமை கொடியஇவை குடிகொண்டு கொடிகொடியாய்ப் படர்ந்தே கொல்லவுடன் பிறப்பன்பைக் குலைத்ததென்றன் வாழ்வே. 9 அன்புநெறி இறைநெறியை, ஆணவத்தால் மக்கள் அளப்பரிய பகைநெறிக ளாக்கியிழி வுற்றார்; மன்பதையில் பசையிழந்த வற்றல்மர மானார்; மற்றவர்கள் நடையுடையில் மதுமலர்வண் டானார்; என்பழைய சமரசமாம் இன்னமிழ்த முண்ணல் எந்நாளோ! இடைநுழைந்த இகல்சாதிப் பூச்சி, இன்புதரு குருதிகுடித் தீரல்நலம் போக்க, என்புருவாய்க் கிடக்கின்றேன்; எச்சபைக்குச் செல்வேன்? 10 பெண்ணடிமை தீண்டாமை பிறப்புவழிச் சாதி பேய்பிடியா நாளினிலே பெற்றிருந்தேன் மேன்மை; மண்ணினிலே இம்மூன்று மாயைசனி பற்ற வாதிட்டு மடிகின்றார் வகுப்புணர்வால் மைந்தர்; கண்ணினிலே கண்டுதுயர் கடலினிலே மூழ்கிக் கடவுளையே நினைந்துருகிக் கவல்கின்றேன்; மற்றப் பண்மொழியார் சபையிலுளார்; பாவிபடும் பாடோ படமுடியாப் பாடன்றோ பார்க்கமுடி யாதே. 11 என்னாட்சி பரிணமிக்க எழுங்கிளர்ச்சி பலவே ஏரார்சு தேசியத்தில் இருப்பதென்றன் ஆட்சி; தன்னாட்சி அந்நியத்தைத் தாங்குவதி லில்லை; தயையின்றி அந்நியரைத் தாக்கலிலு மில்லை; மன்னாட்சி அறநெறியில் மலர்ந்திடவே வேண்டும்; மாகலைகள் வாழ்விடையே வளர்ந்திடவும் வேண்டும்; நன்னாட்டுத் தொழிலரசு நலம்பெறவே வேண்டும்; நான்சபையில் வீற்றிருக்கும் நாளந்த நாளே 12 வேறு இம்மொழிகள் செவிநுழைய எழுந்தேன்; அன்னை எழிற்சபையி லெழுந்தருள இனிது வேண்டும்; செம்மைவினை யாற்றுதற்குச் சேர வாரும்; தீண்டாமை பெண்ணடிமை சிறுமைச் சாதி வெம்மைதரு நோய்களைய விரைந்து வாரும்; விழுமியசு தேசியத்தை விதைக்க வாரும்; அம்மைசம தர்மவர சாட்சி நாடி அன்பார்ந்த சோதரரே! அணைவீ ரின்னே. 13 தமிழ்நாடு வேங்கடமே தென்குமரி வேலையெல்லை நாடு மென்மைகன்னி இனிமைகனி மேன்மைமொழிநாடு தேங்கமழும் பொதிகைமலை தென்றலுமிழ் நாடு திருமலைகள் தொடர்மலைகள் தெய்வமலை நாடு பாங்குபெறு பாலிபெண்ணை பாவைபொன்னி நாடு பாவளர்ந்த வைகையொடு பழம்பொருநை நாடு தேங்குசுனை பளிங்கருவி தெளிசாரல் நாடு சிற்றோடை கால்பரந்த செய்யதமிழ் நாடே. 1 பொங்குபசுங் காடணிந்து பொழிலுடுத்த நாடு பூங்கொடிபின் செடிவனங்கள் பூண்டுபொலி நாடு தெங்குபனை கன்னலொடு கமுகுசெறி நாடு செவ்வாழை மாபலவின் தேன்சொரியு நாடு தங்கமெனு மூலிகைகள் தாங்கிநிற்கு நாடு தாயனைய கீரைவகை தாதுவளர் நாடு செங்கதிர்நெல் வரகுதினைச் செல்வம்விளை நாடு சீர்பருத்தி நார்மரங்கள் சிறந்ததமிழ் நாடே. 2 மடைகளிலே வாளைபாய மான்மருளு நாடு மழைமுழங்க மயிலாட வண்டிசைக்கு நாடு புடைகூவுங் குயில்கீதம் புசித்தினிக்கு நாடு பூவைபுகல் கிளிமழலை பொருந்தமிழ்த நாடு படைமூங்கில் வெள்வளைகள் பாண்மிழற்று நாடு பரவையலை ஓயாது பாடுகின்ற நாடு நடைவழியே குரங்கேறி மரமேறு நாடு நாகெருமை சேற்றில்மகிழ் நாடுந்தமிழ் நாடே. 3 மயிலிறகு தந்தமொடு மான்மதமீன் நாடு மான்கோடு தேன்கூடு மல்குதிரு நாடு தயிலமரந் தேக்ககிலஞ் சந்தனஞ்சேர் நாடு தண்மலர்கள் காய்கனிகள் சந்தைமிடை நாடு வயலுழவு செய்தொழில்கள் வற்றாத நாடு மயிர்பருத்திப் பாலாவி வண்ணவுடை நாடு வெயில்மணியும் நிலவுமுத்தும் மிளிர்ந்துமலி நாடு விழைபவளம் வெள்ளுப்பு விளங்குதமிழ் நாடே. 4 பாரளிக்குஞ் சித்தர்கணப் பழம்பெரிய நாடு பண்புறுகோல் சேரசோழ பாண்டியர்கள் நாடு வேரிமயக் கல்கொணர்ந்த விறலுடைய நாடு வென்றிமயம் புலிபொறித்த வீரமிகு நாடு நேரியலில் கொலைக்குயிரை நீத்தல்பெறு நாடு நெகிழ்கொடிக்குத் தேரளித்த நிறைந்தவருள் நாடு பேரிடரில் தலைக்கொடைக்கும் வாளீந்த நாடு பீடரசர் புலவர்களைப் பேணுதமிழ் நாடே. 5 புறமுதுகை முதியவளும் போற்றாத நாடு புதல்வனைத்தாய் மகிழ்வுடனே போர்க்கனுப்பு நாடு நிறவெள்ளி வீதியவ்வை நேரெயினி நாடு நிறையொழுக்கக் கண்ணகியின் நீதிநிலை நாடு திறநடன மாதவியின் தெய்வஇசை நாடு சேய்மணிமே கலையறத்துச் செல்வமுற்ற நாடு நறவுமொழிப் புனிதவதி நங்கையாண்டாள் நாடு ஞானமங்கை மங்கம்மாள் நல்லதமிழ் நாடே. 6 மலையமுனி வழிமூன்று தமிழ்வளர்த்த நாடு மார்க்கண்டர் கோதமனார் வான்மீகர் நாடு புலமிகுதொல் காப்பியனார் பொருளுலவு நாடு போற்றுமக இறைகீரன் புலவர்தரு நாடு மலருலகே கொள்மறைசொல் வள்ளுவனார் நாடு வாய்த்தமுன்னோன் அரசுபெறச் சிலம்பில்மகிழ் நாடு விலைமலிந்த கூலமனம் மேகலைசெல் நாடு வெறுத்தவுளஞ் சிந்தாமணி விழைந்ததமிழ் நாடே. 7 வித்துமொழிக் கல்லாடர் வேய்ம்மலையார் நாடு விரிந்தகலைக் கம்பன்கவி விரைசோலை நாடு பத்திபொழி சேக்கிழாரின் பாநிலவு நாடு படர்வில்லிச் சந்தஅலைப் பாட்டருவி நாடு சுத்தபரஞ் சோதிகனிச் சுவையொழுகு நாடு சுற்றிவந்த வீரமுனி சொற்றேன்பாய் நாடு கத்தனருள் ஞானஉமார் கன்னல்சொரி நாடு கச்சியப்பர் விருந்துண்ணுங் கன்னித்தமிழ் நாடே 8 பரமனருள் நால்வராழ்வார் பண்ணொலிக்கு நாடு பழஞ்சித்த மறைபொருளைப் பகர்மூலர் நாடு பரவுபக லிரவற்ற பட்டினத்தார் நாடு பாற்குமரர் பிரகாசர் பாடுதுறை நாடு விரவருண கிரிவண்ண விரைசாரல் நாடு விளங்குகுணங் குடிமதான் வீறுஞான நாடு தரணிபுகழ் தாயுமானார் சன்மார்க்க நாடு சமரசஞ்சொல் லிராமலிங்கர் சாந்தத்தமிழ் நாடே. 9 பேருரையர் அடிநல்லார் பூரணனார் நாடு பேண்வரையர் அழகருடன் பேச்சினியர் நாடு தேரையர் புலிப்பாணி சேர்மருத்து நாடு செகமதிக்குஞ் சங்கரனார் உடையவர்தம் நாடு சீருறுமெய் கண்டமணி சித்தாந்த நாடு சிவஞான முனிக்கல்விச் செல்வநிதி நாடு போருரைக்குஞ் செயங்கொண்ட புலவன்வரு நாடு புகல்நீதி அதிவீரன் புரந்ததமிழ் நாடே. 10 மீனாட்சி சுந்தரக்கார் மேகமெழு நாடு மேவுசந்தத் தண்டபாணி மின்னலொளி நாடு வானாட்ட ஆறுமுக மாகடல்சூழ் நாடு மகிழ்கிருஷ்ணர் கவிராயர் கீர்த்தனங்கொள் நாடு தேநாற்று முத்துதியாகர் சங்கீத நாடு திரிகூடர் குறவஞ்சித் தேன்பிலிற்று நாடு கானார்க்கும் அண்ணாமலை காதல்சிந்து நாடு கவர்வேத நாயகனார் கல்வித்தமிழ் நாடே. 11 கால்ட்வெல்போப் பர்வல்வின்லோ கருத்தில்நின்ற நாடு கனகசபை ஆராய்ச்சிக் கண்ணில்நுழை நாடு நூல்வளர்த்த தாமோதரன் நோன்மைபெற்ற நாடு நுவல் மணீயச் சுந்தரவேள் நுண்மைமதி நாடு மால்பரந்த பாண்டித்துரை வளர்சங்க நாடு மாண்புதினத் தந்தைசுப்ர மண்யன்வரு நாடு சால்பரங்க நாதகணி தழைத்தகலை நாடு தனிக்கணித ராமாநுஜன் தந்ததமிழ் நாடே. 12 கொடைவள்ளல் சடையப்பன் குலவியபொன் னாடு கூடல்திரு மலைநாய்க்கன் கோல்வளர்ந்த நாடு படைவல்ல அரிநாயன் பணிகொழித்த நாடு பாஞ்சாலங் குறிச்சியூமன் பற்றியவாள் நாடு நடைசிறந்த பச்சையப்பன் நறுங்கல்வி நாடு நாயகனாஞ் செங்கல்வ ராயனற நாடு நடுநிலையன் முத்துசாமி நன்னீதி நாடு நவவீர பாரதியின் நடனத்தமிழ் நாடே. 13 பண்பரந்த இயற்கைநெறி பற்றிநின்ற நாடு பற்றியதன் வழியிறையைப் பார்த்தபெரு நாடு தண்ணியற்கை நெறியொன்றே சமயமெனு நாடு சாதிமதப் பன்மைகளைச் சகியாத நாடு மண்பிறப்பில் உயர்தாழ்வு வழங்காத நாடு மக்களெலாஞ் சமமென்னும் மாண்புகண்ட நாடு பெண்மணிகள் உரிமையின்பம் பெற்றிருந்த நாடு பெரும்பொதுமை யுளங்கொண்டு பிறங்குதமிழ்நாடே. 14 யாதும்மூர் எவருங் கேளிர் என்றுணர்ந்த நாடு எவ்வுயிர்க்கும் அன்புசெய்க என்றிசைத்த நாடு ஓது குலந் தெய்வமொன்றே என்றுகொண்ட நாடு ஒக்குமுயிர் பிறப்பென்னும் ஒருமைகண்ட நாடு நாதன் அன்பு நீதிஇன்பு நட் பென்ற நாடு நாமார்க்கும் குடியல்லோம் என்றிருந்த நாடு தீதில்லா மொழி வளர்க்கத் தெளிவுபெற்ற நாடு செந்தண்மை விருந்தளிக்குந் தெய்வத்தமிழ் நாடே. 15 தமிழ்த்தாய் இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கைகடந் தியலிசையில் செய்நடமே வாழியரோ. 1 பயிற்சிநிலப் பயிர்களெலாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப்பருளுந் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ. 2 தமிழென்ற போதினிலே தாலூறல் உண்மையதே அமிழ்தாகி உயிரினுக்கும் யாக்கைநிலை செழிப்புறுமே. 3 சுவைத்துணருந் தமிழினிமை சொல்லாலே சொலுந்தரமோ தவத்துணர்வி லெழுமினிமை தமிழினிமைக் கிணையாமோ. 4 கனியினிமை கரும்பினிமை காதலிலே இனிமைபெருந் தனியரசி லினிமையென்பர் தமிழினிமை யுணராரே. 5 புலிகரடி அரியானை பொல்லாத பறவைகளும் வலிமறந்து மனங்கலக்க வயப்படுத்துந் தமிழொலியே. 6 கடவுளென்றும் உயிரென்றுங் கன்னித்தமிழ் ஒளியினிலே படிந்துபடிந் தோம்பினரால் பழந்தமிழர் கலைப்பயிரே. 7 இந்நாளைத் தமிழுலகம் இயற்கையொளி மூழ்காதே இன்னாத சிறைநீர்போல் இழிவடைதல் நன்றாமோ. 8 தமிழினைப்போல் இனிமைமொழி சாற்றுதற்கும் இல்லைஇந்நாள் தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே. 9 தமிழரெனுந் திருப்பெயரைத் தந்ததுதான் எதுவேயோ கமழ்மணத்தை மலரறியாக் காட்சியது மெய்ம்மைகொலோ. 10 இமிழ்திரைசூழ் உலகினிலே இயற்கைவழி யொழுகினிமை அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமை நுழைந்ததென்னே.11 பல்லாண்டாய் அடிமையிலே பசுந்தமிழ்த்தாய் வீழ்ந்ததெனில் கல்லாத விலங்குகட்குங் காட்டைவிடுங் கருத்தெழுமோ. 12 கண்ணிலையோ காண்பதற்குக் காதிலையோ கேட்பதற்குப் புண்ணினிலே புளியென்னப் பூங்கொடியிற் புகுதுயரே. 13 உன்னஉன்ன உளமுருகும் ஊனுருகும் ஒருதமிழ்த்தாய் இன்னலது நுழையாத இழிநெஞ்சங் கல்லாமே. 14 பழந்தமிழர் வீரவொளி படர்ந்தீண்டில் இந்நாளே இழிந்தோடும் இடர்ப்பனிகள் எழுந்தாயின் தமிழ்நடமே. 15 தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல்நலம் போய்க்கடலில் விழுதல் நலம் பொலிதருமோ உடலுயிரே. 16 உயிரெதுவோ தமிழருக்கென் றுரைத்துணர்தல் வேண்டாவே அயர்வின்றித் தமிழர்களே! ஆர்த்தெழுமின் நிலைதெரிந்தே. 17 குறள்சிலம்பு மேகலையுங் கோதில்சிந் தாமணியும் அருள்சிலம்புந் தமிழினிலே அமைந்ததுவுந் திருவன்றே. 18 பழஞ்சித்த மறையருளப் பரனருளால் திருமூலர் நுழைந்தஇடம் எதுவேயோ நுவலுமது தமிழ்மாண்பே. 19 காவியமும் ஓவியமுங் கடவுளின்போ கடந்தஒன்றோ தாவிநிற்கும் நெஞ்சமதே தமிழ்சுவைக்கும் வாழ்வினிலே. 20 விலங்கியல்பின் வேரறுக்கும் விரலுடைய காவியமே. கலங்குமனத் துயர்போக்குங் கருத்தொன்றும் ஓவியமே. 21 காவியநெஞ் சுடையவர்கள் கருதார்கள் பிரிவுகளே ஓவியத்தில் உளங்கொண்டோர் உறுயோகம் பிரிதுளதோ. 22 சாதிமதச் சண்டையெலாந் தமிழின்ப நுகரார்க்கே ஆதியிலே சண்டையிலை அருந்தமிழை அருந்தினரால். 23 கலைத்தமிழின் கள்ளுண்டால் கலகமன வீறொடுங்கும் புலங்கடந்த அருளின்பம் பொருந்துவதும் எளிதாமே 24 காலத்துக் குரியஅணி கருதாளோ தமிழ்க்கன்னி மேலைச்செங் கலைபெயர்ப்பும் விளங்கிழையாம் புலவீரே. 25 பன்மொழியி லுளகலைகள் பசுந்தமிழி லுருக்கொள்ள நன்முயற்சி யெழவேண்டும் நலமுறுவள் தமிழ்த்தாயே. 26 தனித்தெய்வந் தமிழனுக்குத் தமிழன்றி வேறுண்டோ இனித்தநறுங் கோயில்களோ எழிற்கலைகள் வாழியரோ. 27 சத்தியாக்கிரக விண்ணப்பம் [gŠrh¥ படுகொலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் (1921இல்) ghl¥bg‰wJ.] பொறுமைக்கு நிலனாகிப் புனலாகி அளியினுக்குத் தெறலுக்கு நெருப்பாகித் திறலுக்கு வளியாகி 1 வெளியாகிப் பரப்பினுக்கு வெயில்நிலவுக் கிருசுடராய்த் தெளிவினுக்கே உடலுயிராய்த் திகழனையாய்ப் பிறராகி 2 இலகுவழி வழியாக எமையீன்று புரந்துவரும் உலகமெலாங் கலந்துகடந் தொளிர்கின்ற ஒருபொருளே! 3 உலகமெலாங் கடந்துகடந் தொளிர்கின்ற நினதியல்பைக் கலகமிலா உளங்கொண்டு கணித்தவரார் முதன்முறையே. 4 அவ்வியல்பை அளந்தாயும் அறநிலையே உறுதியெனச் செவ்வியறி வுழைப்பெல்லாஞ் செலுத்தாம லிருந்ததுண்டோ? 5 காட்சியொன்றே பொருளென்னுங் கருத்தைவிட்டுப் பொழுதெல்லாம் மாட்சியுடை நினதடியே வழுத்துவதை மறந்ததுண்டோ? 6 எண்ணமெலாம் உனதெணமே எழுத்தெல்லாம் உனதெழுத்தே மண்ணதனைப் பொருளாக மயக்கும்வழி யுழன்றதுண்டோ? 7 எல்லாநின் செயலென்றே இருந்தஒரு குலத்தார்க்குப் பொல்லாங்கு வரும்பொழுது புரப்பதெவர் கடனேயோ? 8 ஆத்திகத்தி லறிவுபழுத் தருளொழுகும் பரதகண்டம் நாத்திகத்துக் கிரையாகி நலிவுறுதல் நலமேயோ? 9 மூர்க்கநெறி யறியாத முனிவரர்கள் வதிந்தபதி பார்ப்பவர்கள் நகையாடும் படுகுழியில் விழுந்ததன்றே. 10 கொலைகளவு குடிகாமம் கொடும்பொய்யே மலியாத கலைநிறைந்த பரதகண்டம் கருதுவதோ அவைகளையே. 11 மலையளித்தாய் நதியளித்தாய் வனமளித்தாய் வளமளித்தாய் நலமளிக்கும் அவையெல்லாம் நழுவினவெம் மிடமிருந்தே. 12 வயிற்றுக்கே வனவாசம் மரணத்துக் களவில்லை கயிற்றுக்கும் பிறநாட்டைக் கைகுவித்துக் கவல்கின்றேம். 13 நாட்டுமுறைத் தொழிலெல்லாம் நசிக்கவிவண் பிறர்புரிந்த கேட்டினைநாம் எவர்க்குரைப்பேம் கிளந்துரைக்குஞ் சரிதமதே.14 பேச்சுரிமை எழுத்துரிமை பிறவுரிமை எமக்குளவோ சீச்சீயென் றிழிமொழியால் சிறுமைசொலும் வெளிநாடே. 15 உள்ளசட்டம் நிறைவிலையென் றுரிமைகொலுங் கருஞ்சட்டம் நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்ததுவே. 16 அழிக்க அதைத் தவமுதல்வர் அரியசத்தி யாக்கிரக ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே. 17 இரவொழித்துப் பகலுமிழும் இளஞாயி றதைமறைக்க விரவுபுயல் பரவியெரி வெடிகுண்டு பொழிந்தனவே. 18 இவ்வாரம் பஞ்சநதம் இரத்தநத மென இலங்கி ஒவ்வாத செயல்கண்டே உடைந்திரிந்த ததன்மனமே. 19 உரிமையெனும் உயர்வேட்கை உளத்தெழுமிக் கிழமையிலே ஒருமைமனத் தொழுகைசெய்தே உனைவேண்டும் வரமருளே.20 குறைகளெலாம் ஒழிந்துரிமை குலமடைய மருந்துண்டு தறையதனில் சுயஆட்சி தகைமைதரு மருந்தாமே. 21 பெறவேண்டும் சுயஆட்சி பெறவேண்டும் இப்பொழுதே அறமுறைகள் பிறவெல்லாம் அழகுபெறத் தழைத்திடுமே. 22 காந்திவழி கடைப்பிடிப்பின் கருத்தாட்சி மலர்ந்துவிடும் சாந்தமிகும் அவர்வழிதான் சத்தியாக் கிரகமதே. 23 சன்மார்க்க நெறியோங்கத் தயைபுரியெம் இறையவனே உன்மார்க்கத் துறைபற்றி உலகமிகச் செழித்திடுமே. 24 திலகர் திலகர் விஜயம் (திலகர் பெருமான் கொழும்பு வழியாக இங்கிலாந்து நோக்க 1918ஆம் வருடம் மார்ச்சு மாதம் 10ஆம் நாள் சென்னை நண்ணியவேளையில் பாடப்பெற்றது; அம்முறை கொழும்பில் திலகர் பெருமான் செலவு தகையப்பட்டது) பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் 1 கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் 2 அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! 3 திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திகலரெனு மியற்பெயரால் திறமுறவே நிறுத்தினையே 4 செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே 5 ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஓரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? 6 கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே. 7 இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லாத உரையதனை அகிலமெலாம் பரப்பினையே. 8 உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே. 9 பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? 10 உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே. 11 சிந்தியா உளம்உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் வடிவன்றே 12 தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே. 13 சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. 14 இங்கிலாந்தும் திலகரும் (பின்னே சில மாதங்கடந்து, திலகர் பெருமான் பம்பாய் வாயிலாகச் சென்று, 1918ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இங்கிலாந்து சேர்ந்தார் என்ற செய்தி கிடைத்தபோது பாடப்பெற்றது.) எங்கள் மன்னர் இணையடி யேந்தியே பொங்கு பேற்றைப் புனைந்தெமை யாண்டிடுந் தங்கு சீர்த்தி தழைத்தொளி வீசுநல் இங்கி லாந்தெனும் இன்ப அணங்குகேள். 1 தண்மை செம்மை தகைமையுங் கொண்டவோர் வண்ண மாமுனி வந்தனர் நின்னிடை வெண்மை நீலம் விரிந்து பரந்தநின் கண்க ளாலவர் காட்சியைக் காணுமே. 2 கல்வி ஞானங் கருணை நிரம்பிய செல்வ மாமுனி சேர்ந்தனர் நின்னிடைப் பல்வ ளங்களும் பான்மையுங் கொண்டநீ ஒல்லை அன்னார் ஒளிமுகங் காணுமே. 3 மற்ற வர்க்கே மனத்தை நிறுத்தியே உற்ற நேரத் துதவும் அறமுனி பற்றி வந்தனர் பண்புடை நின்னிடைச் செற்ற மில்லவர் சிந்தையை நோக்குமே. 4 பரத மென்னும் பழையவோர் நாடளி விரத மாமுனி வேந்தர் கிழக்குதி பரிதி யென்னப் பரிந்து படர்ந்தனர் கருதி யன்னார் கரத்தினை நோக்குமே. 5 எங்கள் தலைக்கணி எம்பெரு மானடி பங்க யப்பனி மாமலர் பூத்தது துங்க மிக்க சுகமுடை நின்னிடை அங்க ணாலதை அன்பொடு காணுமே. 6 உரிமை வேண்டி உவந்துனை நாடினர் பெரிய மாமுனி பேச அருள்புரி அரிய வாசகம் அன்பி லுதிப்பது தெரிய ஓதுவர் எங்கள் சிறுமையே. 7 அன்ன வர்பெயர் ஆரும் புகழ்பெயர் பின்னை யென்றும் பெயர்வது மின்றியே இந்நி லத்தி லிருப்பது கூறுவல் சென்னி கொள்ளுந் திகல ரெனும்பெயர். 8 இப்பெ யர்ப்பொருள் இந்தியா என்பது செப்பு மித்தகைச் செம்பொருள் சேர்ந்தது அப்பு மிக்க அருணதி பாய்ந்திடும் ஒப்பில் இந்தியா உற்றதை ஒக்குமே. 9 சிந்தை நல்ல திலகர் சொலும்மொழி இந்தி யாவின் இனிமொழி யாகுமால் அந்த ணர்சொலை யார்ந்து செவிகொடு சொந்த மாகச் சுதந்திர நல்குமே. 10 திலகர் வாழ்த்து மறப்பாலும் பிறவாலும் மதிப்பிழந்த எந்தமக்குப் பிறப்புரிமை சுயஆட்சி பெறவேண்டும் எழுமெனவே குறிப்புடைய ஒருமொழியைக் கொடுத்துதவி கிளர்ச்சியதால் சிறப்பருளுந் திலகமுனி திருவடியை வணங்குதுமே. 1 உலகன்னை உயிராகும் ஒருபரத கண்டமதில் உதித்த கோமான் பலகலையின் பயனுணர்ந்து பற்றறுத்து மற்றவர்க்குப் பண்பு செய்வோன் கலகமிலா உளங்கொண்டு கட்டுரையிற் பிறழாது காப்பில் நின்றோன் திலகமுனி எனும்பெயரான் திருவடியை எஞ்ஞான்றுஞ் சிந்திப் பேமால். 2 காந்தி காந்தியம் அல்லது இன்பப்பேறு என்னை அறியா என்னுளங் கொண்ட மயலொடு கலவா இயல்பெனுந் தேவி, எழுந்தொரு பொழுது செழுந்தமிழ்க் குரலால் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென பொறித்தனள் ஒருவினா; கருத்தினில் நின்றது அலைத்தும் ஆட்டியும் குலைத்த தென்னை; உண்மை தெளிய நண்ணினன்; கால்கள் நடந்தன உணரேன்; கடந்தனன் வழிபல அந்தி மாலை சிந்தையிற் றோன்றலும் கடற்கரை கண்டேன்; இடமென இருந்தேன் 10 உருகிய செம்பொன் கருகிய வானும் பளிங்கு நொய்யென இலங்குவெண் மணலும் நீனிறக் கடலும் நீளின அலையும் இறைவன் வடிவா யென்னை ஆண்டன நிறைகாண் போழ்தில் நிலவிழிப் பொழிந்தே உறக்கம் புகுந்தும் உணர்வழி விலையால் அவ்வுணர் வொளியில் செவ்விய மெல்லியல் தும்பை யன்னதோர் தூசணிந் தெதிரே எழுதரும் வடிவோ டெழில்வெண் டாமரை பூத்தது போலப் பொலிந்தன ளன்றே; 20 அன்னவள் அடியை அன்புடன் தொழுதே என்னிலை யுணர்த்த; எழிலணங் கவளும், மைந்த! கேட்டி இந்தமா நிலத்தில் உற்ற யாக்கையின் உறுபயன் யாதென வருந்தல் வேண்டா; திருந்து நல்வழி இன்று கூறுவல், நன்று கேட்டி! மக்கள் யாக்கையே மிக்கது மிக்கது அன்னதன் பயனை இன்னதென் றுணர இல்லம் விடுத்துச் செல்லலும் வேண்டா காடுகள் பலவும் ஓடவும் வேண்டா 30 மலைக ளேறி அலையவும் வேண்டா காற்றை யீர்த்து மாற்றவும் வேண்டா மனைவி மணந்தும் மக்களை யீன்றும் இனத்தொடு வாழ்ந்தும் இருந்தொழில் செய்தும் உண்பன உடுப்பன உண்டும் உடுத்தும் நாட்டை விடாது வீட்டி லுறைந்தும் பிறவிப் பயனைப் பெற்று வாழலாம்; இலக்கிய மிதற்கொன் றியம்புவன் கேட்டி, கலக்கமி லுளத்தைக் காளைநீ பெறுக; இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன் 40 கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாய னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் மக்களை யீன்று மிக்கவ னானோன் செயற்கை வெறுத்த செம்மை யாளன் இயற்கை இன்பமே இன்பெனக் கொள்வோன் உண்மை கடைப்பிடித் தொழுகுஞ் சீலன் உண்மைகா ரணமா உயிரையும் விடுவோன் வானந் துளங்கினும் மீனம் படினும் 50 மலைகள் வீழினும் அலைகள் பொங்கினும் தன்னிலை மாறாத் தன்மை யாளன் உலகி லுள்ள அலகிலா உயிர்கள் தன்னுயி ரென்னும் தருமம் பெற்றவன் பிறர்க்குக் கேடு மறந்துஞ் சூழான் அன்புடை யார்பிறர்க் கென்பு முரியர் என்னு மெய்ம்மொழிக்கு இலக்கிய மானோன் உண்மைஅஞ் சாமை ஒண்பே ராயுதம் தாங்கி என்றும் ஈங்கு முரண்படு தேக சக்தியை ஏக சக்தியாம் 60 ஆன்ம சக்தியால் அடக்கும் வீரன் சினத்தை யொழித்த இனத்தவ ருறவோன் யாண்டுத் துன்பம் எவர்க்கு நேரினும் ஆண்டே அவனுடல் அணையு மன்றே; அவனுடல் மற்றவர் உடலே யாகும் அவன்பொருள் மற்றவர் பொருளே யாகும் அவனுயிர் மற்றவர் உயிரே யாகும் தனக்கென வாழாத் தன்மை பெற்றவன் அன்பே வடிவாய் அமர்ந்த அண்ணல் இன்பு பிறர்க்கே உழைத்தல் என்போன் 70 சாந்த மயமெனுங் காந்திப் பெயரான் நற்றவன் அடியைப் பற்றுவை யாயின் ஐய! யாக்கையின் பயனது விளங்கும் நல்லாள் பகர்ந்ததும் பொல்லா விழிப்பால் ஒழிந்தது உறக்கமும் கழிந்தது இரவும் அலையொலி யோடு வலைஞர்கள் ஒலியும் கலைத்தன நிலையை அலைந்த உளத்தொடு வீட்டைச் சேர்ந்து நாட்டினன் சிந்தையைக் காந்தி யடிகளின் காந்தி யடிகளில்; கேடும் ஆக்கமும் ஓடும் செம்பொனும் 80 ஒன்றென மதிக்கும் நன்றுசேர் உண்மையும் பெற்ற யாக்கையால் மற்றவர்க் குழைத்தலில் இன்பப் பயனுண் டென்னுமோர் உண்மையும் கண்டு யானுந் தொண்டுசெய் கின்றேன்; நம்மை யீன்ற அம்மை உரிமையை இழந்து வாடும் இந்நாள் இந்நாள் காந்தி யாணை காந்தி யாணை இன்போ டுழைக்க என்னுடன் சேர வாருஞ் செகத்து ளீரே. 89 காந்தி வாழ்த்து சாந்தமய மென இலங்குந் தனிப்பொருளை உளத்தென்றும் ஏந்தியுயிர் தமக்கெல்லாம் இனிமைசெய உலகிடையே போந்தகுண மலையாகும் புனிதநிறை கடலாகும் காந்தியடி இணைமலரைக் கருத்திருத்தி வழுத்துவமே. 1 எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன் செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க அவ்விரு தொடர்புகண்ட அடிகளார் காந்தி வாழ்க இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க. 2 வைஷ்ணவன் எவன்? (காந்தியடிகள் நாடோறும் பிரார்த்தனையிற் பாடும் ஒரு கூர்ஜரப் பாட்டின் மொழிபெயர்ப்பு) பிறர்துயரைத் தன்துயராப் பேணியவர்க் கேவல்செயுந் திறனதனைப் பாராட்டாத் திறமுடையான் எவனவன். 1 எல்லாரை யும்வணங்கி இகழாதான் ஒருமனையான் சொல்லாரும் மனந்தூயான் தொழுந்தகையாள் அவன்தாயே. 2 சமநோக்கன் தியாகமுளான் தாயென்பான் பிறர்மனையை அமைநாவால் பொய்ம்மொழியான் அந்நியர்தம் பொருள் தீண்டான். 3 மோகமொடு மாயைநண்ணான் முழுவைராக் கியமுடையான் ஏகன்பெய ரின்பந்தோய்ந் திருந்தீர்த்தம் உடலாவான். 4 காமவுலோ பஞ்சினமுங் கரவுமிலான் வைணவனே ஏமநல்கு மவன்காட்சி எழுபானோர் தலைமுறையே. 5 சுதந்திர நாமாவளி பாரத நாட்டைப் பாடுவமே பரமா னந்தங் கூடுவமே. 1 முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் மாரதமே 2 பாரத தேசம் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் 3 வந்தே மாதர மந்திரமே வாழ்த்த வாழ்த்தசு தந்திரமே. 4 வந்தே மாதர மென்போமே வாழ்க்கைப் பிணிகள் பின்போமே. 5 காலை சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே. 6 சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை. 7 கங்கை யோடுங் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே. 8 காடும் மலையும் எங்கள்மடம் கவியும் வரைவும் எங்கள்படம். 9 மயிலில் ஆடும் எம்மனமே குயிலில் பாடும் எங்குரலே. 10 பறவை யழகினில் எம்பார்வை பாடுங் கீதம் எம்போர்வை. 11 பெண்ணிற் பொலியுந் திருப்பாட்டே பெருவிருந் தெங்கள் புலன்நாட்டே. 12 பெண்கள் பெருமை பேசுவமே மண்ணில் அடிமை வீசுவமே. 13 அடிமை யழிப்பது பெண்ணொளியே அன்பை வளர்ப்பதும் அவள்வழியே. 14 பெண்ணை வெறுப்பது பேய்க்குணமே பேசும் அவளிடந் தாய்க்குணமே. 15 தாய்மை யுடையவள் பெண்ணன்றோ தயையை வளர்ப்பவள் அவளன்றோ. 16 இறைமை யெழுவது பெண்ணிடமே இன்பம் பொழிவதும் அவ்விடமே. 17 பெண்மை தருவது பேருலகே பீடு தருவதும் அவ்வுலகே. 18 பெண்வழி சேர்ப்பது இறைநெறியே பேய்ந்நெறி யொழிப்பதும் அந்நெறியே. 19 நல்லற மாவது இல்லறமே அல்லாத அறமெலாம் புல்லறமே. 20 சாதிப் பேயை யோட்டுவமே சமநிலை யெங்கும் நாட்டுவமே. 21 சாதி மதங்கள் சச்சரவே சன்மார்க்கம் நீப்பது நிச்சயமே. 22 சமரச மென்பது சன்மார்க்கம் சார்ந்தா லொழிவது துன்மார்க்கம். 23 இயற்கை நெறியே சன்மார்க்கம். இயைந்தா லழிவது துன்மார்க்கம். 24 பாவிகள் சொல்வது பன்மார்க்கம் பக்தர்கள் நிற்பது சன்மார்க்கம் 25 சமரச மொன்றே சத்தியமே சன்மார்க்கஞ் சேர்ப்பது நிச்சயமே. 26 சமயம் ஆவது சன்மார்க்கம் சகத்தி லொன்றே நன்மார்க்கம். 27 எல்லா உயிரும் நம்முயிரே என்றே சொல்லும் மெய்ம்மறையே. 28 தென்மொழி யாவது தேன்மொழியே தெய்வக் கலைகள் சேர்மொழியே. 29 செந்தமி ழின்பந் தேக்குவமே தீராக் கவலை போக்குவமே. 30 வள்ளுவர் வாய்மை தென்மொழியே வளர்ப்போம் அந்த மென்மொழியே. 31 கன்னித் தமிழ்நடஞ் சிலம்பினிலே கண்டே அருந்துவம் புலந்தனிலே. 32 சுதந்திர வாழ்வே சுவைவாழ்வு அல்லாத வாழ்வெல்லாம் அவவாழ்வு 33 உழவுந் தொழிலும் ஓங்குகவே உலகம் வளத்தில் தேங்குகவே. 34 பகையும் எரிவும் பாழ்நிலையே பணிவும் அன்பும் பரநிலையே. 35 பாரும் பாரும் மலர்நகையே பரிந்தே மூழ்கும் மணவகையே. 36 ஒளியில் காற்றில் மூழ்குவமே உடலாங் கோயில் ஓம்புவமே. 37 நீலக் கடலில் நீளலையே நித்தம் விருந்தளி கதிர்வழியே. 38 வானே அமைதி வாழிடமே வாழ்த்தல் பொழியும் மீன்நடமே. 39 குழந்தை மழலை யாழ்குழலே கோதில் அமிழ்தங் குளிர்நிழலே. 40 கண்ணன் குழலிசை கேளுங்கள் கவலை துன்பம் மீளுங்கள். 41 அன்பே சிவமென் றாடுவமே அருளே வழியென் றோடுவமே. 42 வாழ்க உலகம் அன்பினிலே வளர்க என்றும் இன்பினிலே. 43 வேண்டுதல் எங்குநிறை அன்பறிவே! எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிர்க்கும் எஞ்ஞான்றும் இனிமைசெயல் வேண்டும். பொங்கியற்கை வழிநின்று புவிஇயங்கல் வேண்டும். பொய்சூது பகைசூழ்ச்சி பொருந்தாமை வேண்டும். மங்கையர்கள் உரிமையுடன் வாழ்வுபெறல் வேண்டும். மக்களெலாம் பொதுவென்னும் மதிவளரல் வேண்டும் தங்குமுயர் தாழ்வென்னுந் தளையறுதல் வேண்டும் சமதர்மச் சன்மார்க்கத் தாண்டவம்வேண் டுவனே. 1 கடவுள் நெறி யொன்றென்னுங் கருத்துநிலை வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல் வேண்டும் நடமாடுங் கோயிலுக்கு நலம்புரிதல் வேண்டும் நான் அழிந்து தொண்டுசெயும் ஞானமதே வேண்டும் கொடியகொலை புலைதவிர்க்குங் குணம்பெருகல் வேண்டும் கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைந்திறுகல் வேண்டும் இடமொழியுங் கலையுமென்றும் இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும் இனிமையும்வேண் டுவனே. 2 காடுமலை சென்றேறிக் கவியெழுதல் வேண்டும் கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும் பாடுகடல் மணலிருந்து பண்ணிசைத்தல் வேண்டும் பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் நாடிவயல் கதிர்குளித்து நாஞ்சிலுழ வேண்டும் நகையடிமைக் கோலுருட்டல் நண்ணாமை வேண்டும் ஆடுமனம் ஒன்றராட்டை ஆட்டிடுதல் வேண்டும் ஆவிகொலும் இழிதொழில்கள் அடங்கவும்வேண் டுவனே. 3 ஒருவன்பல மனைகொள்ளும் முறையொழிதல் வேண்டும் ஒருவனொரு மகள்கொள்ளும் ஒழுங்குநிலை வேண்டும் தருமமிகக் காதல்மணந் தழைத்தோங்கல் வேண்டும் சாதிமணக் கொடுமைகளின் தடையுடைதல் வேண்டும் பெருமையின்ப இல்லறமே பிறங்குநலம் வேண்டும் பெண்தெய்வம் மாயையெனும் பேயோடல் வேண்டும் உரிமையுற ஆண்கற்பை ஓம்பொழுக்கம் வேண்டும் உத்தமப்பெண் வழியுலகம் ஒளிபெறவேண் டுவனே. 4 ஒருநாடும் ஒருநாடும் உறவுகொளல் வேண்டும் ஒன்றடக்கி ஒன்றாளும் முறையழிதல் வேண்டும் பொருதார்க்கும் படையரசு பொன்றிடலே வேண்டும் புன்சாதி மதவரசு புரியாமை வேண்டும் தருவாதை முதலாக்கம் தளர்ந்தகலல் வேண்டும் தக்கதொழில் தனியாக்கம் தலைதூக்கல் வேண்டும் அருளாரும் ஆட்சிநின்றே அமைதியுறல் வேண்டும் அனைத்துயிரும் இன்பநுகர் ஆட்சியைவேண் டுவனே. 5 திருச்செந்தூர் செந்திலாண் டவனே! செந்திலாண் டவனே! செந்திலோ நின்னிடம்? சிந்தையோ நின்னிடம்? இங்குமோ இருக்கை? எங்குமோ இருக்கை? போக்கும் வரவும் நீக்கமும் இல்லா நிறைவே! உலகம் இறையென நின்னை உன்னுதல் எங்ஙன்? உணருதல் எங்ஙன்? மண்ணும் புனலும் விண்ணுங் காற்றும் அங்கியும் ஞாயிறுந் திங்களும் உயிரும் உடலா யிலங்குங் கடவுள் நீயெனில் உன்னலுங் கூடும் உணரலுங் கூடும்; 10 செயற்கை கடந்த இயற்கை ஒளியே! உறுப்பிலா அறிவே! குறிப்பிலா மாந்தர் எண்ணவும் ஏத்தவுங் கண்களி கூரவும் மூல ஒலியே கோழிக் கொடியாய், விதவித மாக விரியும் இயற்கை நீல மஞ்ஞை கோல ஊர்தியாய், இச்சை கிரியையே நச்சிரு தேவியாய், மூன்று மலமாம் மூன்று சூர்தடி ஞானமே வேலாய், மானவைம் புலன்கள் மருள்மனம் நீக்கி அருள்மனப் புலஞ்செய, 20 மூவிரு முகங்கொள் மூவா அன்பே! வெண்மணல் வெளியில் தண்கடல் அலைவாய் வீற்றிருந் தருளுஞ் சாற்றருங் கோலம் அஞ்சையுங் கவர்ந்து நெஞ்சையுங் கவர்ந்தே ஒருமையில் நிறுத்தும் பெருமைதான் என்னே! எந்நிலை போதும் அந்நிலை நீங்கா வரமே வேண்டும் உரமே வேண்டும் செந்திற் சிறக்குஞ் சிந்தையே வேண்டும் இருளைச் சீக்கும் அருளது வேண்டும் வருக வருக அருள வருக 30 அய்யா வருக மெய்யா வருக வேலா வருக விமலா வருக சீலா வருக செல்வா வருக அன்பா வருக அழகா வருக இன்பா வருக இளையாய் வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக எந்தாய்! எளியேன் என்னே செய்குவன்! கந்தா! கடம்பா! கதிர்வடி வேலா! கல்வி அறிவால் அல்லலை அழிக்க 40 முயன்று முயன்றே அயர்ந்தயர்ந் தொழிந்தேன் என்றுஞ் செந்நெறி துன்றி நிற்கக் காதல் பெரிதே ஆதல் இல்லை; எங்கும் நின்னருள் தங்குதல் கண்டு துன்ப உலகை இன்பமாக் காணக் குருமொழி வேண்டும் ஒருமொழி வேண்டும் அம்மொழி வேட்டு வெம்மனம் அலைதலை நீயே அறிவாய் சேயே! சிவமே! பெறுதற் கரிய பிறவியை ஈந்தாய்; அவ்வரும் பிறவியின் செவ்வியல் தெளிய, 50 ஏட்டுக் கல்வியில் நாட்டஞ் செலுத்தி, இல்லற மென்னும் நல்லற மேற்றுச், செருக்குச் செல்வமும் உருக்கு வறுமையும் இரண்டு மில்லா எளிமையில் நின்று, வாதச் சமயமும் பேதச் சாதியும் ஆதியி லில்லா நீதியைத் தெரிந்து, பற்பல குரவர் சொற்றன யாவும் ஒன்றென உணர்ந்து, நன்றெனக் கொண்டு, தொண்டின் விழுப்பங் கண்டுகண் டாற்றிச். செயற்கையை வெறுத்தே இயற்கையை விரும்பி 60 அத்தா! நின்னடிப் பித்தே நெஞ்சில் முருகி எழும்பக், கருதிய தருளே; முற்றுமவ் வருளும் பெற்றே னில்லை; மெய்ய! நின் உண்மையில் ஐயமோ இல்லை; முனைப்பறுந் தொதுங்கின் நினைப்புலன் உணரும் நுட்பம் அறிந்து பெட்பில் சிறியேன், உழன்று பன்னெறி உழைத்துழைத் தலுத்தேன்; அறவே முனைப்புள் அறுதல் என்றோ? அழுக்கு வாழ்வில் வழுக்கலோ அதிகம்; குறைபல உடையேன்; முறையிடு கின்றேன்; 70 வேறென் செய்வேன்? வேறெவர்க் குரைப்பேன்? பன்னிரு கண்ண! என்னொரு மனங்காண்; ஆலைக் கரும்பெனப் பாலன் படுதுயர் களைய வருக களைய வருக அழல்படு புழுவெனப் புனல்விடு கயலெனத் துடிக்கும் ஏழையை எடுக்க வருக வருக வருக முருகா வருக குருவாய் வருக குகனே வருக சிந்தா மணியே! நந்தா விளக்கே! மயிலூர் மணியே! அயிலார் அரசே! 80 பிழைபொறுத் தருள்க; பிழைபொறுத் தருள்க; குன்ற மெறிந்த கன்றே போற்றி சூரனை வென்ற வீரனே போற்றி வள்ளி மணந்த வள்ளலே போற்றி அன்பருக் கருளும் இன்பனே போற்றி போற்றி போற்றி புனிதா போற்றி மக்கள் பலப்பலச் சிக்கலுக் கிரையாய் நலனை இழந்தே அலமரு கின்றார்! சாதியால் சில்லோர் நீதியை யிழந்து, நிறத்தால் சில்லோர் அறத்தைத் துறந்து, 90 மொழியால் சில்லோர் வழுவி வீழ்ந்து, மதத்தால் சில்லோர் வதைத்தொழில் பூண்டு, நின்னை மறந்தே இன்ன லுறுதல் என்னே! என்னே! மன்னே! மணியே! பேரும் ஊரும் பிறவு மில்லா இறைவ! நிற்குத் தறைமொழி பலகொடு அன்பர்கள் சூட்டிய இன்பப் பெயர்கள் எண்ணில எண்ணில; எண்ணில் அவைகளின் பொருளோ ஒன்று; மருளே இல்லை; பன்மைப் புறப்பெயர்ச் சொன்மையில் கருத்தை 100 நாட்டி ஆணவம் பூட்டிப் போரிடும் அறியாமை நீங்க, அறிவை அருள்க; எங்குமோ ருண்மை தங்குதல் கண்டே ஒன்றே தெய்வம் ஒன்றே அருள்நெறி என்னும் உண்மையில் மன்னி நிற்க அருள்க அருள்க தெருளொளி விளக்கே! சிந்தையில் நீங்காச் செந்தமிழ்ச் செந்தி வாழ்வே! செந்தி வாழ்வே! திருப்பரங்குன்றம் மங்கையர்க ளென்ன மலர்சோலைத் தண்ணீழல் தங்கு பரங்குன்றச் சண்முகனே! - இங்கடியேன் அன்னையினும் மிக்க அருளுடையான் நீயென்றே உன்னை அடைந்தேன் உவந்து. 1 மக்களுக்கு முன்பிறந்த மந்தி செறிசோலை மிக்க பரங்குன்ற மேயவனே! - இக்கலியில் உன்னை நினைந்துருக ஊக்கியதும் உன்னருளே இன்னல் களைந்தருள்க இன்பு. 2 சேய்களென மந்திகளுஞ் சேர்ந்தாடும் பூம்பொழில்கள் தோய்ந்த பரங்குன்றத் தோகையனே! - ஆய்ந்தறியின் எங்குநீ எல்லாநீ என்றபே ருண்மையன்றி இங்குமற் றுண்டோ இயம்பு. 3 பச்சைப் பசுங்கிளிகள் பாடுகின்ற பண்ணொலியை நச்சு பரங்குன்ற நாயகனே! - உச்சிமுதல் கால்வரையு நெஞ்சாக் கசிந்துருகல் எக்காலம் வேல்விளங்கு கைம்மனமே வேண்டு. 4 மாங்குயில்கள் கூவ மயிலாலுந் தேம்பொழில்கள் தேங்கு பரங்குன்றத் தெய்வமே! - வாங்கிவேல் குன்றெறிந்த கோமானே! குற்றமுடைச் சாதிநெறி என்றெறிந் தின்பருள்வா யிங்கு. 5 கண்ணாழும் மந்தி கனிகொண்டு பந்தாடும் விண்ணார் பரங்குன்ற வித்தகனே! - புண்ணாடுஞ் சாதி மதங்களெலாஞ் சாய்ந்தொழிந்து சன்மார்க்க நீதி பெருகவருள் நின்று. 6 அன்றிலும் பேடும் அழகா யுலவிவரும் வென்றிப் பரங்குன்ற வேலவனே! - நன்றுடைய நின்பெயரால் தீண்டாமை நின்பெயரால் சாதிநெறி வன்னெஞ்சர் செய்தனரே வம்பு. 7 தெய்வ மணங்கமழுஞ் செந்தமிழின் தேன்பாயுஞ் செய்ய பரங்குன்றச் செல்வமே! - வையமதில் தீண்டாமை எண்ணுநெஞ்சம் தீண்டுமோ நின்னடியைத் தீண்டாமை மன்பதைக்கே தீட்டு. 8 நீலப் புறாக்கள் நிமிர்ந்தாடும் மாடஞ்சேர் கோலப் பரங்குன்றக் கோமளமே! - சீலமளி சன்மார்க்கச் செம்பொருளே! சண்முகனே! பூவினிலே பன்மார்க்க நோய்தவிர்ப்பாய் பார்த்து. 9 வானாருந் தேவர்களும் வந்து தவஞ்செய்யுங் கானார் பரங்குன்றக் கற்பகமே! - ஊனாறும் ஊற்றை யுடல்கொண்டேன் உண்மை யுடலீந்து கூற்றுவனைக் காய்ந்தெனைக்கா கூர்ந்து. 10 பழமுதிர்சோலை கண்ணிலே காண்பன காதிலே கேட்பன கந்தநின்றன் எண்ணமா நெஞ்சில் இயங்கிடும் வாழ்வினை ஈந்தருள்க விண்ணிலே முட்டி விரிநிலம் பாய்ந்து விளங்கிநின்று பண்ணிலே மூழ்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 1 உள்ள மிருக்கும் உனையுணர் காதல் உறுதிகொள்ளாக் கள்ள வினையேன் கசிவிலாப் பாவி கருணைபுரி துள்ளு மறிமான் சுழிப்புன லஞ்சுஞ் சுனையினிலே பள்ளு முழங்கும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 2 கற்ற கலைகள் களிபெருஞ் செல்வங் கடைவருமோ சற்றும் அழியாக் கலைகளுஞ் செல்வமுந் தந்தருள்வாய் வெற்றி விறலியர் யாழின் விருந்துணு வேழவினம் பற்றெனக் கொண்ட பழமுதிர் சோலைப் பரம்பரனே. 3 வாழ்கநின் வேன்மயில் வாழ்கவென் றேதினம் வாழ்த்துமன்பர்க் கூழ்வலி யின்மை உறுதியென் றுண்மை யுணர்ந்து கொண்டேன் ஏழ்கதிர் மூழ்கி இழிபுன லாட இயற்கைநல்கிப் பாழ்தரு நோய்தீர் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 4 ஆறு முகமும் அருட்டாயர் நோக்கும் அயில்மயிலின் வீறுங் கொடியும் விழிமுன் விளங்கின் வினையுமுண்டோ தேறு பழம்பொழி சாறிழிந் தோடத் திரளருவி பாறும் இடர்கள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 5 மண்புனல் தீவளி வான்சுடர் யாவுநின் வாழியுடல் திண்ணுயிர் நீயெனில் உண்மையில் ஐயந் திகழலென்னே வண்டுகள் யாழ்செய் மலரணி வல்லி வனப்பொழுகும் பண்புடை ஞானப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 6 மலைபொழில் பூக்கள் மதிகடல் சேய்கள் மயிலனையார் அலைவழி பாடல் அழகுநின் எண்ணம் அறிவுறுத்தும் சிலைநுதல் வேடச் சிறுமியர் சேர்த்த செழியதந்தம் பலகுவ டாகும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 7 ஆண்டவ நின்றன் அறிகுறி யாகிய ஆலயத்துள் தீண்டல் தீண்டாமை சிறத்தலால் அன்பர்கள் செல்வதெங்கே வேண்டல்வேண் டாமை கடந்தவர் வாழ்வும் விரதமுஞ்சூழ் பாண்டிய நாட்டுப் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 8 சாதிநோய் பேய்மதம் சார்தரு கோயிலுள் சண்முகநின் சோதி விளங்குமோ சூர்தடிந் தாண்ட சுடர்மணியே நீதியே என்று நினையடி யார்கள் நிறைந்துநின்று பாதமே போற்றும் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 9 எல்லாரும் ஓருயிர் அவ்வுயிர் நீயென்ற ஆண்டவனே பொல்லாத சாதி புகுந்திவண் செய்யிடர் போக்கியருள் சொல்லாத மோனச் சுவையிலே தேக்குஞ் சுகர்களிலே பல்லோர்க ளுட்கொள் பழமுதிர் சோலைப் பரம்பரனே. 10 பழனி எண்ணமெலாம் பழனியிலே எழுத்தெல்லாம் பழனியிலே கண்ணெல்லாம் பழனியிலே கருத்தெல்லாம் பழனியிலே மண்ணெல்லாம் பழனியிலே விண்ணெல்லாம் பழனியிலே பண்ணெல்லாம் பழனியிலே பகர்மனமே பழனியையே. 1 சொல்லெல்லாம் பழனிமலை சுகமெல்லாம் பழனிமலை இல்லெல்லாம் பழனிமலை இயற்கையெலாம் பழனிமலை கல்வியெலாம் பழனிமலை கலைகளெலாம் பழனிமலை செல்வமெலாம் பழனிமலை சிந்திப்பாய் பழனியையே. 2 தேடாயோ பழனிமலை திரியாயோ பழனிமலை நாடாயோ பழனிமலை நண்ணாயோ பழனிமலை ஆடாயோ பழனிமலை அணையாயோ பழனிமலை பாடாயோ பழனிமலை பாழ்மனமே பாழ்மனமே. 3 பழனிமலை என்னுயிரே பழனிமலை என்னூனே பழனிமலை என்னுடலே பழனிமலை என்பொருளே பழனிமலை என்னுறவே பழனிமலை என்னூரே பழனிமலை என்னுலகே பழனிமலை பணிமனமே. 4 சித்தரெலாம் பழனிமலை சிவயோகர் பழனிமலை பித்தரெலாம் பழனிமலை பெரியோர்கள் பழனிமலை புத்தரெலாம் பழனிமலை புனிதரெலாம் பழனிமலை பத்தரெலாம் பழனிமலை பழனிமலை பணிமனமே. 5 அன்பெல்லாம் பழனிமலை அறிவெல்லாம் பழனிமலை இன்பெல்லாம் பழனிமலை இரக்கமெலாம் பழனிமலை துன்பறுக்கும் பழனிமலை துரியநிலை பழனிமலை என்புருகப் பழனிமலை எண்ணாயோ பாழ்மனமே 6 ஓங்கார மூலமலை உள்ளெழுந்த பாம்புமலை நீங்காத சோதிமலை நிறையமிர்த தாரைமலை தூங்காமல் தூங்குமலை துரியசிவ யோகமலை வாங்காத ஞானமலை வளர்பழனி மலைமனமே. 7 ஆறாறு தத்துவத்தில் அடங்காத ஆண்டிமலை கூறாத மொழியினிலே கூர்ந்துநிற்கும் வானமலை மாறாத அழகினிமை மணம்வழங்கும் மகிழ்ச்சிமலை சீறாத சிந்தையிலே திகழ்பழனி மலைமனமே. 8 உலகமெலாந் தொழுதேத்தும் உயர்பழனி மலையினிலே அலகில்லா உயிர்க்குயிராய் அமர்ந்துநிற்கும் பெருமானே! கலகமிடு மனமுடையேன் கருணைபெற வந்தடைந்தேன் இலகுமொரு மொழிபகர எழிற்குருவா யெழுந்தருளே. 9 பிறந்துபிறந் துழன்றலுத்தேன் பெரும்பிழைக ளிழைத்தலுத்தேன் இறந்திருந்து களைத்தலுத்தேன் இறையவனே! உனைமறந்தே திறந்தவெளிப் பழனிமலை திறமுணரிப் பிறவியிலே சிறந்தவொரு மொழியருளத் திருவுளங்கொள்சிவகுருவே. 10 திருவேரகம் அன்னையே அப்பா என்றே அடைந்தனன் அருளை நாடி உன்னையே உள்கு முள்ளம் உதவியோ வேறு காணேன் பொன்னியே என்ன இன்பம் பொங்கருள் பொழிக இங்கே இந்நில மதிக்குஞ் செல்வ ஏரகத் தியற்கைக் கோவே. 1 உடலருங் கோயி லாக உன்னிடங் கூடுங் காதல் விடுவது மில்லை அந்தோ வெற்றியும் பெறுவ தில்லை கடலதைக் கையால் நீந்தக் கருதிய கதைபோ லாமோ இடரிலா வயல்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 2 நீலவான் குவிந்து நிற்க நிலவுகால் மணலில் சீப்பப் பாலதாய்ப் பொன்னி நீத்தம் பளிங்கென வெள்ளஞ் சிந்துங் கோலமே உள்ள மேவிக் கூட்டுநல் அமைதி வேளை ஏலவார் குழலி யானேன் ஏரகத் தியற்கைக் கோவே. 3 சிந்தையைக் கொள்ளை கொண்ட செல்வமே! கோயில் நின்றால் வெந்தழல் கதிரில் மூழ்கி விளைபசுங் கடலி லாடி முந்துகா விரிநீர் தோய்ந்து முற்றுநின் ஒளியி லாழ்ந்தே. இந்துவின் குழவி ஆனேன் ஏரகத் தியற்கைக் கோவே. 4 பொன்னொளி மேனிச் செல்வ! புலங்கவர் மேனி தன்னைக் கன்னியர் அழகே என்கோ காளையர் வீர மென்கோ பொன்னியின் பொலிவே என்கோ புலம்பயிர்ப் பசுமை என்கோ என்னென உரைப்பன் ஏழை ஏரகத் தியற்கைக் கோவே. 5 சாதியும் மதமும் வாதத் தர்க்கமும் வேண்டேன் வேண்டேன் ஆதியே அலைந்து போனேன் அடிமலர் வண்டே யானேன் மேதிகள் சேற்றி லாழ்ந்து மிகமகிழ் பழன மாந்தர்க் கீதலே போல ஓங்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 6 ஆதியில் ஆல யத்துள் அருளிலாச் சாதி யுண்டோ நீதியில் கூட்டத் தாலே நிறைந்தது சாதி நாற்றம் மாதுயர் இடும்பை போக்கி மாநிலம் உய்யச் செய்வாய் ஏதமில் மருதங் கேட்கும் ஏரகத் தியற்கைக் கோவே. 7 பெண்ணினை நீத்தல் ஞானப் பேறெனப் புகல்வோர் உள்ளார் கண்ணினில் ஒளியை வேண்டாக் கருத்தினர் அவரே யாவர் மண்ணிலக் கொடுமை தேய்ப்பாய் மங்கையர் வடிவே! செய்யில் எண்ணிலா ஏர்கள் சூழ்ந்த ஏரகத் தியற்கைக் கோவே. 8 பிறப்பினைத் தந்து தந்து பேயனை மகனாய்ச் செய்த அறத்தொழில் நினதே யன்றோ? அன்னையின் அன்பே கண்டேன் புறப்பசுங் கடலை நீந்திப் புலன்விழிப் பசுமை போர்க்க இரக்கமாம் பசுமை மேனி ஏரகத் தியற்கைக் கோவே. 9 ஓமொலி கோழி கூவ உலகமே மயிலா நிற்கத் தேமொழி வள்ளி இச்சை தெய்வப் பெண் கிரியை யாக நாமற ஞானம் வேலாய் மனப்புலன் முகங்க ளாறாய் ஏமுறக் கோலங் காட்டாய் ஏரகத் தியற்கைக் கோவே. 10 குன்றுதோறாடல் எண்ணி எண்ணி இணையடி சேர்ந்தனன் கண்ணு நெஞ்சுங் கருதுங் கருணையே விண்ணுங் காடும் விரிகடல் காட்சிசெய் குண்டு கல்செறி குன்றுதோ றாடியே. 1 ஆர வாரம் அவனியில் வேண்டுமோ தீர ஆய்ந்து திருவடி பற்றினன் பாரும் வானும் பரவி வரம்பெறக் கூர நின்றிடுங் குன்றுதோ றாடியே. 2 வெற்றுப் பேச்சால் விளைவது தீவினை கற்ற கல்வி கழலடி கூட்டுமோ செற்ற நீத்துச் சிவம்விளை சிந்தையர் குற்ற மில்லவர் குன்றுதோ றாடியே. 3 நெஞ்சி லுன்னை நினைந்து வழிபடின் அஞ்ச லில்லை அடிமையு மில்லையே செஞ்சொல் வேடச் சிறுமியர் கிள்ளைகள் கொஞ்சிப் பேசிடுங் குன்றுதோ றாடியே. 4 மக்கள் வாழ்வு மலர்ந்த இடமெது துக்க நீக்கிச் சுகஞ்செய் இடமெது பக்கஞ் செங்கதிர் பான்மதி நேரிடம் கொக்கி போற்றொடர் குன்றுதோ றாடியே. 5 உலக வாழ்வை உனக்கு வழங்கிய திலகன் யாரெனச் சிந்தைசெய் நெஞ்சமே மலியு மாபலா வாழையை மந்திகள் குலவி யுண்டிடுங் குன்றுதோ றாடியே. 6 தேனும் பாலுந் திரண்ட அமுதென வானும் மண்ணும் வளரத் துணைபுரி மானும் வேங்கையும் மாவும் விலங்கினக் கோனும் வாழ்திருக் குன்றுதோ றாடியே. 7 காலை வேளைக் கழல்பணி வின்றெனில் மாலை வேளை மறலி வருவனே நீல மங்கையர் நீள்குரல் ஓப்பிடுங் கோலங் கொள்ளிருங் குன்றுதோ றாடியே. 8 செயற்கைக் கோயிலைச் செற்றிடும் மாந்தரே இயற்கைக் கோயி லிருப்பிடம் நோக்குமின் மயிற்கு லங்கள் மகிழ்நட மாடவுங் குயிற்கு ரற்பெறுங் குன்றுதோ றாடியே. 9 காற்றும் வெய்யொளி கான்றிக் கலத்தலால் ஆற்ற லாயுள் அதிகம தாகுமே தேற்றஞ் சாந்தஞ் சிவமணஞ் சேரவெங் கூற்றைக் கொன்றருள் குன்றுதோ றாடியே 10 கதிர்காமம் கலியுகத்துங் கண்கண்ட கற்பகமே! கருத்தினிக்குங் கரும்பே! தேனே! வலியிழந்து பிணியடைந்தேன் மலரடியே துணையென்று மருந்து கண்டேன் நலிவழித்துப் பொன்னுடலம் நல்கியருள் நாயகனே! ஞான நாதா! கலிகடலில் மலரிலங்கைக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 1 தீராத பிணியெல்லாந் தீர்த்தருளும் மருந்தாகித் திகழுஞ் சேயே! பாராத நாளெல்லாம் பாழ்நாளே யென்றுணர்ந்தேன் பரமா! நின்னைச் சேராத பிழைபொறுத்துத் திருவடிக்கே அன்புசெயுஞ் சிந்தை நல்காய் காராலுங் கானமர்ந்த கதிரைவேற் பெருமானே கருணைத் தேவே. 2 விழியில்லார் விழிபெற்றார் செவியில்லார் செவிபெற்றார் விளம்பும் வாயில் மொழியில்லார் மொழிபெற்றார் முருக! நின தருளாலே, மூட நாயேன் வழியில்லா வழிநின்று வளர்த்தவினை வேரறுப்பாய் வரதா! மூங்கில் கழிவில்லார் களியாடுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 3 ஆண்டவனே! உடலளித்தாய் அதைநின்றன் ஆலயமா யாக்கா திங்கு மூண்டசின விலங்குலவுங் காடாக்கும் முயற்சியிலே முனைந்து நின்றேன் தீண்டரிய சிவசோதி! செய்ந்நன்றி கொன்றபெருஞ் சிதட னானேன் காண்டகுநித் திலங்கொழிக்குங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 4 பகலெல்லாம் நின்நினைவே இரவெல்லாம் நின்கனவே பாவி யேற்குச் செகமெல்லாம் நினைக்காணச் சிவகுருவே யெழுந்தருளச் சிந்தை கொள்க குகவென்றால் பிடியுடனே கொல்யானை ஒதுங்கிநிற்குங் குணமே மல்கக் ககனவழிச் சித்தர்தொழுங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 5 மண்பொன்னை மங்கையரை மாயையென மறைந்தொழுகல் மதியா குங்கொல் மண்பொன்னில் மங்கையரில் மாதேவ நீயிலையோ மயக்க மேனோ பண்ணிசைபோல் எங்குநிற்கும் பரமநினை மறுத்தொழுகல் பாவ மன்றோ கண்கவரும் மணியருவிக் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 6 நீலமயக் கடலினிலே நீண்டெழுந்த பவளமலை! நின்னை நாடிச் சீலமுடன் இருங்காட்டில் செல்வோரைக் கரிகரடி சிறுத்தை வேங்கை பாலணுகிப் பாயாது பத்தியிலே மூழ்கிநிற்கும் பான்மை யென்னே காலமிடங் கடந்தொளிருங் கதிரைவேற் பெருமானே! கருணைத்தேவே. 7 கடலெல்லாங் கதிரையென்று கைநீட்டி வழிகாட்டக் கரிய காட்டின் முடியெல்லாங் கதிரையென்று முழங்கியன்பால் வரவேற்ப மூள்வி லங்கு கடவின்றிக் கதிரையென்று புறமேகப் புட்களெலாங் கதிரை யென்றே கடிதணைந்தே உடன்தொடருங் கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 8 சாதிமதப் பிணக்கின்றிச் சமரசமா யெல்லோருஞ் சார்ந்து சென்றே ஆதியந்த மில்லாத அறுமுகனே யென்றுன்னை அரற்று கின்றார் சோதி! நின தருளவர்க்குத் துணைபுரிதல் இயல்பன்றோ சொல்ல வொண்ணாக் காதலன்பு கரைகடந்த கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 9 தண்ணமருங் கடலெழுந்த தரைக்காட்டில் தமிழ்க்கோயிற் றனிமை கண்டால் மண்ணருவி முழவதிர மயிலாடக் குயில்கூவ வண்டு பாடும் பண்மயத்திற் புலனுழைந்து பகரரிய அமைதியுறும்; பண்பு கூடும்; கண்மணியே! கருத்தொளியே! கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே. 10 கழுகுமலை கந்தா குமரா கதிர்வேலா கருணை பெருகு காங்கேயா சிந்தா மணியே சிவகுருவே சித்தந் தெளியத் திருவருளை நந்தா ஒளியே நல்காயோ நானென் முனைப்பால் கெட்டேனே எந்தாய் வள்ளி மணவாளா எழிலார் கழுகு மலையானே. 1 குற்ற நீக்கிக் குணஞ்செய்யக் கொடுத்த பிறவி பலபலவே உற்ற இந்தப் பிறவியிலே உன்னை யுணரும் வாய்ப்புண்டு கற்றல் கேட்டல் கண்திறவா கண்ணைத் திறக்கக் குருவாக வெற்றி வேலா எழுந்தருளாய் விமலா கழுகு மலையானே. 2 உலகம் பொல்லாதென்கின்றார் உளமே பொல்லாதென் றுணர்ந்தேன் கலக உளத்தைக் கடந்துநின்றால் கருணை வடிவேஉலகமெலாம் இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கேகுற்றம் இறையோனே அலகில் அழகே அன்பருளே அறிவே கழுகு மலையானே 3 பொல்லா ஊனைப் புசியாத புனித அறமே உலகமெலாம் நல்லாய் பெருக வேண்டுகின்றேன் நாதா அருளாய் அருளாயே எல்லா உலகும் எவ்வுயிரும் இருக்கும் பெரிய பெருமானே கல்லார் கற்றார் கைகூப்புங் கருணைக் கழுகு மலையானே. 4 வேண்டேன் செல்வம் பேறெல்லாம் வேண்டேன் புகழும் பெருமையுமே வேண்டேன் பதவி விருப்பமெலாம் வேண்டேன் அரசும் விண்ணுலகும் வேண்டும் இரங்கும் நெஞ்சமென்றும் விளங்கும் மற்ற அறமெல்லாம் ஈண்டி யடியார் பணிசெய்யும் ஈசா! கழுகு மலையானே. 5 எல்லா உயிரும் என்னுயிரே என்னும் ஞானம் உளத்தென்றும், நில்லா தொழியின் வாழ்வேனோ நிமல யோகர் கண்ணொளியே! சொல்லாய்ப் பொருளாய்ச் சுகமளிக்குஞ் சுகமே! சுகத்தில் வரும்பயனே! செல்லார் பொழில்கள் பழனங்கள் சேர்ந்த கழுகு மலையானே. 6 மரமாய் நிழலாய் நறுங்காற்றாய் வாச மலராய் மணித்தடமாய்ப் பரவு திங்கள் நிலவாகிப் படர்ந்து புலன்கள் விருந்தளிக்கும் பரனே! பத்தர் பழவினைகள் பரிதி முன்னே பனிபோல இரிய அருளின் ஒளியுமிழும் இனிய கழுகு மலையானே. 7 எந்தச் சமயம் நுழைந்தாலும் இறுதி இன்பம் ஒன்றன்றோ இந்த உலகம் பலபெயரால் இசைக்கும் ஒருவ! பன்னிறங்கள் சிந்தும் ஆக்கள் பொழிபாலில் திகழும் நிறங்கள் பலவேயோ சந்தத் தமிழில் பண்பாடுஞ் சங்கக் கழுகு மலையானே. 8 வாது சமய வழியினிலும் வகுப்புச் சமய நெறியினிலும் சாதிச் சமயச் சார்பினிலும் சார்ந்து நில்லா வாழ்வளித்த கோதி லமுதே! குணக்குன்றே! குறைவில் நிறைவே! அருட்கடலே! சோதிப் பொருளே! நீவாழி! தூய கழுகு மலையானே! 9 மண்ணாய் நீராய் அனலாகி வளியாய் வெளியாய் ஒளியாகிக் கண்ணாய் மணியாய் உயிராகிக் காக்குங் கருணைக் கடவுளுனை எண்ணா வாழ்வு இருள்நரகம் எண்ணும்வாழ்வே அருளின்பம் அண்ணா! அருண கிரிக்கருளி ஆண்ட கழுகு மலையானே. 10 குன்றாக்குடி மண்ணோர்களும் விண்ணோர்களும் மகிழத்திரு மலைமேல் அண்ணா! அறு முகவா! எழுந் தருளுந்திருக் கோயில் கண்ணாரவும் நெஞ்சாரவுங் கண்டே தொழ வந்தேன் தண்ணார்பொழில் குன்றாக்குடித் தமிழா! எனக் கருளே. 1 கதிரோன்பொழி ஒளிமேய்ந்திடுங் கருணைப்பெரு மலைமேல் நிதியாளரும் மதியாளரும் நிறையுந் திருக் கோயில் gâna!பர மேட்டி! உனைப் பரிவாய்த்தொழ வந்தேன் கதியேயெனக் குன்றாக்குடிக் கண்ணே! எனக் கருளே. 2 நீலந்தரு வானில்மதி நிலவுந்திய மலைமேல் சீலந்திரு மயின்மங்கையர் சேர்ந்தேபணி கோயில் காலன்வினை தொடராவழி காணப்புகுந் தேனால் கோலம்பெறு குன்றாக்குடிக் குணமே! எனக் கருளே. 3 புறச்சோலையும் அறச்சாலையும் பொலியுந்தெரு மலைமேல் kw¢rh®ãid mW¡F§FU kÂna!திருக் கோயில் உறச்சேர்ந்தனன் உளங்கொண்டனன் ஒளிபெற்றிட முருகா! Ãw¢nršÉÊ¡ F‹wh¡Fo Ãkyh!எனக் கருளே. 4 முன்னம்வினை பலவேசெய மூர்க்கன்முனைந் திட்டேன் இன்னம்வினை செயவோமனம் எழவேயிலை ஈசா! ò‹bdŠád‹; KUfh!நினைப் புகலேயெனப் புக்கேன் Ä‹d‰bfho¡ F‹wh¡Fo ntyh!எனக் கருளே. 5 மலைநோக்கினன் மலையேறினன் மலையாகவே நிற்கச் சிலைவேடரைச் செற்றுக்கொடிச் சிவவள்ளியைக் கொண்ட இலைவேலவ! முயன்றேவரும் ஏழைக்கருள் செய்யாய் miyntbraš F‹wh¡Fo m‹gh!நினக் கழகோ. 6 கல்லாதவன் பொல்லாதவன் கருணைப்பொருள் வேண்டி நில்லாதவன் என்றேஎனை நீக்கிப்பெரு மொழியைச் சொல்லாதிவண் நீத்தாலினிச் சூழப்புக லுண்டோ bršyhUa® F‹wh¡Fo¢ átnk!இது வழகோ. 7 அறுமாமுகந் தோளாறிரண் டழகுத்திரு மார்பும் உறுகோழியும் மயில்வேலுடன் ஓதும்பிடி மானும் நறுமாணடி மலரும்விழி நாடற்றெரிந் தருளாய் òwnkÉlš F‹wh¡Fo¥ bghUns!நினக் கழகோ. 8 சாதிப்பிரி வாலேயுயர் சன்மார்க்கமுந் தளர நீதித்துறை வழுவுங்கொடு நிலைநேர்ந்துள நேரம் nrhâ¥bgU khnd!துணை சூழாதிவ ணிருத்தல் ஆதிப்பொருள்! F‹wh¡Fo munr!நினக் கழகோ. 9 kÆšnkbyhË® kÂna!உயர் மலைமேல்திகழ் மருந்தே! cÆ®nfhÆÈ bdhËna!உணர்ந் தோதற்கரும் பொருளே! துயில்கூரிருட் டுன்பங்கெடத் தொடுவேலவ! வாழி FÆšTîe‰ F‹wh¡Fo¡ nfhnd!சிவ குருவே. 10 சென்னி மலை பொன்மயி லரசே! புண்ணிய முதலே! புனிதனே! பூதநா யகனே! என்பெலாம் உருக எண்ணியே இருக்க எத்தனை நாட்களோ முயன்றேன் துன்பமே சூழ்ந்திங் கிடையிடை வீழ்த்தத் துயருறு கின்றனன் ஐயா! இன்பமே! சென்னி இறைவனே! ஈசா! இணையடித் துணையரு ளின்றே. 1 என்பிழை பொறுத்தே என்றனுக் கருள எத்தனை உடலமோ ஈந்தாய் அன்புநீ ஐயா! அன்பிலாப் பேய்நான் அளப்பருங் குறைகளே உடையேன் மின்னொளி வேலா! நின்னரு ளின்றி விடுதலை யில்லையென் றுணர்ந்தேன் கன்னியர் சூழுஞ் சென்னிமா மலைவாழ் கடவுளே! ஆண்டருள் செய்யே. 2 நானெனும் முனைப்புள் நாயினேன் சிக்கி நான்படுந் துயரமென் சொல்வேன் கானவர் வலையில் கலையெனக் கலங்குங் கடையனேன் கருத்தினை அறிவாய் வானவர் பொருட்டு வட்டவே லேந்தும் வள்ளலே! முனைப்பற வேண்டித் தேனமர் சென்னி மாமலை சேர்ந்தேன் சிறியனை ஆண்டருள் செய்யே. 3 நின்வழி நின்று நிகழ்த்திடுந் தொண்டே நேரிய தாய்நலம் பயக்கும் என்வழி நின்றே இயற்றிடுந் தொண்டால் எரிபகை எழுதலுங் கண்டேன் மன்னுயிர்த் தொண்டாம் மலரடித் தொண்டே மகிழ்வுடன் ஆற்றுதல் வேண்டும் பன்மணி கொழிக்குஞ் சென்னிவாழ் பரமா! பாவியேன் வேண்டுதல் கேளே. 4 என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன் எழிலுடல் ஓம்பலும் வேண்டேன் மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் மலரடி வழிபெறல் வேண்டும் துன்பமே உலகாய்த் தோன்றுதல் மாறிச் சுதந்திர உணர்வுட னெங்கும் இன்பமே ஓங்க இளமையே! சென்னி ஏந்தலே! என்றனுக் கருளே. 5 சாதியில் அடிமை மதத்தினில் அடிமை தங்கிடும் வீதியில் அடிமை நீதியில் அடிமை நிறத்தினில் அடிமை நிலவுல கெங்கணும் அடிமை ஆதியே! அடிமை நோயினை அகற்ற அருளொளி ஆண்மையே வேண்டும் கோதிலாச் சென்னிக் குணமலை யரசே! குவலயத் திடர்களை யாயே. 6 உலகினை யளித்தாய் உயிரெலாம் வாழ்ந்தே உன்னொளி காணுதற் பொருட்டே கலகமே செய்து காலமே கழித்துக் கடவுளே! உன்னையும் மறுத்தே அலகையாய் உயிர்கள் அழிநிலை நோக்கி அடியனேன் படுதுயர் அறிவாய் திலகமாய்ப் பொலியுஞ் சென்னிவாழ் சிவமே! தீமையைக் களைந்தருள் செய்யே. 7 அரசியற் பெயரால் ஆருயிர்க் கொலைகள் அவனியில் நாளுநாள் பெருகிப் பரவுதல் கண்டுங் கேட்டபோ தெல்லாம் படுதுயர் பரமனே! அறிவாய் கரவுள நெஞ்சம் எங்கணும் மலிந்தால் காசினி எந்நிலை யுறுமோ திருவெலாம் பொலியுஞ் சென்னிமா மலைவாழ் சித்தனே! திருவருள் செய்யே! 8 ஆறுமா முகனே! அண்ணலே! உயிர்கள் அகத்துறு நோய்களை நீக்கித் தேறுதல் செய்யுந் தெய்வமே என்று திருவடி அடைக்கலம் புகுந்தேன் ஈறிலா இளமை எழில்கொழி முருகா! இயைந்திடும் மணமலி இறையே! மாறிலாச் சென்னி மலையமர் வாழ்வே வளர்வினை தேய்த்தருள் செய்யே. 9 குமரனே என்று கூவியே உள்ளக் குகையிலே ஒளியினைக் கண்டோர் அமரரும் போற்றும் அடிகளே யாவர் அருவினைக் கோள்களுஞ் சூழா எமபய மில்லை இன்பமே யென்றும் ïiwt!நின் பெருமைதான் என்னே சமரிலே சூரைத் தடிந்தருள் சென்னிச் சண்முகா! அடைந்தனன் கழலே. 10 திருச்செங்கோடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே தோய்ந்தவெம் பாவி மெய்யிலே நிற்க விழைந்தனன் விழைந்து மேவிய நெறிகளும் பலவே அய்யனே! இயலா தலமரு கின்றேன் அருளொளி வேண்டுமென் றுணர்ந்தேன் மெய்யனே! திருச்செங் கோட்டினில் மேவும் மேலவா! எழுந்தருள் செய்யே. 1 பொய்யிலா நெஞ்சில் புகுந்தருள் விளக்கே! புனிதனே! புண்ணிய முதலே! பொய்யினைக் கழிக்கப் பொய்யனேன் நொந்து புலம்பிய புலம்பலை அறிவாய் மெய்யிலே விளங்கும் மெய்யனே! ஏழை மெலிந்தனன் நலிந்தனன் அம்மா! செய்யனே! திருச்செங் கோட்டினிற் றிகழுந் தெய்வமே! திருவருள் செய்யே. 2 மண்ணிலே பிறந்த மனிதனே அடியேன் மனத்தினாற் பொய்முதற் பாவம் நண்ணவும் அஞ்சி நடுங்குவ தறிவாய் நடுங்கினுந் தொலைவதோ இல்லை தண்ணரு ளொளியே! சண்முகா! பாவச் சார்பிருள் முற்றிலுஞ் சாய்க்கும் விண்ணெழு திருச்செங் கோட்டினில் விளங்கும் வேலவா! அருள்புரி யாயே. 3 எண்ணிலா உடலம் தந்துதந் திந்த எழிலுடல் தந்ததும் அருளே மண்ணிலே பாவ இருளிலே மயங்க வைப்பதும் அருளினுக் கழகோ பண்மொழி இருவர் பங்கனே! கமலப் பன்னிரு கண்ணனே! வேலின் அண்ணலே! திருச்செங் கோட்டினி லமர்ந்த அப்பனே! ஆண்டருள் செய்யே. 4 பாவமே முற்றும் பற்றிடா திருக்கப் பற்றினேன் பலதுறை முயற்சி சேவலங் கொடியாய்! சிறுமகன் முயற்சி திறத்துள எல்லையுங் கண்டேன் ஆவதொன் றில்லை யாதுயான் செய்கேன் அடர்பழி என்றனை யுறுமோ தேவனே! திருச்செங் கோட்டினிற் சிறக்குஞ் செல்வனே! காத்தருள் செய்யே. 5 திருவடி யொன்றே துணையெனக் கொண்டு தெளிந்தனன் வழியினை அமுதே! குருவென வந்து குறிக்கொளின் கொள்க குறிக்கொளா திருப்பினும் இருக்க கருமமே யுடையேன் கனன்றிட மாட்டேன் கழலிணை மறக்கவும் மாட்டேன் தருமனே! திருச்செங் கோட்டினி லெழுந்த சண்முகா! தயைநிறை கடலே. 6 முற்றிய பாவ மூலத்தை யறுக்க முறையிலா வழிகளி லுழலேன் சுற்றிய உயிரைத் தொண்டினைத் துறவேன் துறவெனக் காட்டினுக் கோடேன் பற்றியே மூக்கை மூச்சினை அடக்கேன் பாரினைப் பாழெனக் கொள்ளேன் உற்றசெங் கோட! உருகியே உயிர்கள் உயர்பணி செய்யவேண் டுவனே. 7 உருகியே அருளால் முனைப்பினை யொடுக்கி உயிர்வழி நின்பணி உஞற்றக் கருதிய கருத்தைக் கடவுளே! அறிவாய் கருத்தது கூடிட அருள்வாய் முருகிய வேட்கை மூண்டெழல் காணாய் மூடனேன் பிறநெறி செல்லேன் முருகனே ! திருச்செங் கோட்டினி லமர்ந்த மூர்த்தியே அன்புவேண் டுவனே. 8 ஆறுமா முகமும் ஆறிரு தோளும் அணிகடம் பாரமும் அன்பின் கூறெலாங் கூடித் திரண்டிரு புறமுங் குலவிய தாய்மையின் பொலிவும் வீறிடு வேலும் வீரமா மயிலும் விரைமலர்த் தாள்களுஞ் செம்மை மாறிலாத் திருச்செங் கோட்டினிற் கண்டு மனிதனாம் பணியைவேண் டுவனே. 9 நாத்திகப் பணியை நாடிலேன் அடியேன் நாடுவன் ஆத்திகப் பணியே நாத்திகம் எனல்நான் ஆத்திகம் அறல்நான் நான்எனும் பணிகளே உலகில் ஆத்திரம் ஊட்டும்; நான்அறும் பணிகள் ஆருயிர் அன்பினை யோம்பும்; பாத்திரத் திருச்செங் கோடனே அருள்செய் பணியெனும் ஆத்திகப் பணியே. 10 வேளூர் என்னையேன் பிறப்பித்தாய் இறையவனே! இங்கே ஏன்வளரச் செய்வித்தாய் இடர்க்கடலில் விழவோ g‹Dfiy gƉWɤjhŒ guk!நின துண்மை பகுத்தறிவால் உணர்ந்துமனம் பார்க்கவெழ லாச்சே மன்னுவெறுங் கல்லாக மண்ணாகத் தோன்றின் மாதுயரில் அழுந்தாது மகிழ்ச்சியுடன் வாழ்வேன் உன்னடியைக் காட்டாயேல் உயிர்தரியா திங்கே ஒளிமுத்துக் குமரகுரு உயர்வேளுர் மணியே. 1 உன்னுண்மை யுணர்ந்தமையால் உன்னொளியைக் காண உளமுருக ஊனுருக உடலுருக அழுதே உன்னுகின்றேன் இரவுபகல் ஓயாதே அந்தோ! உடைந்துமனம் வாடுகின்றேன் உடையவனே! அறிவாய் பன்னிரண்டு கண்ணுடையாய்! பாவிபடுந் துயரைப் பார்க்கமன மெழவிலையோ பரங்கருணைக் கடலே! மின்னுசுடர் வேலேந்தி மேதினியைக் காக்க விளங்குமுத்துக் குமரகுரு வேளூர்வா ழரசே! 2 ஆணவத்தால் பலவினைகள் ஆற்றிவிட்டேன் ஐயா! அவைநினைந்தே அழுகின்றேன் அருள்புரிதல் வேண்டும் வீணுரைகள் மிகப்பேசி வெறுப்பனவே செய்தேன் வேலவனே! அவைபொறுத்து விழைந்தேற்றல் வேண்டும் தோணிபுய லெழுகடலின் சுழியுழன்றா லென்னச் சுழலுகின்ற மனமுடையேன் துணைபுரிதல் வேண்டும் தாணுவென உனையடைந்தேன் சண்முகனே! காவாய் தவம்வளரும் வேளூரில் தமிழ்க்குமர குருவே. 3 எண்ணாத எண்ணமெலாம் எவ்வளவோ எண்ணி ஏழைமனம் புண்ணாகி இளைக்கின்றேன் நாளும் பண்ணாத வடிவழகா! பாவிபடுந் துயரைப் பாராயோ பசுங்கொடிசூழ் பவளமலை யண்ணா! கண்ணார உனைக்கண்டால் கவலையெலாம் மாயும் கலியுகத்து வரதனெனக் காரணப்பே ருடையாய்! விண்ணாரும் பொழிலுடுத்து வேதனைகள் தீர்க்கும் வேளூரில் வீற்றிருக்கும் வேற்குமர குருவே. 4 எழுதரிய வடிவழகை ஏழைவிழி காண எழும்வேட்கை நீயறிவாய் எவரறிவார் ஐயா! அழுதழுதே அயர்கின்றேன் அருளுடைய அரசே! m¥gh!நீ கைவிடுத்தால் அணைப்பவர்தாம் யாரே பழுதுடையேன் பிழையுடையேன் பாவமிக வுடையேன் பற்றுதற்கோ வேறில்லை பரம்பரனே! பாராய் விழுதுடைய ஆல்வேலும் வேம்பரசுஞ் சூழ்ந்த வேளூரில் குருவடிவாய் வீற்றிருக்குந் தேவே. 5 ஞானவடி வேலேந்தி நலஞ்செயவே கொண்ட நல்லபெருங் கோயில்பல நண்ணிநின்ற போது ஊனமிகு சாதிப்பேய் உலவுதலைக் கண்டே உளமுடைந்தே ஓடிவந்த உண்மைநிலை யறிவாய் வானவனே ஏழைதுயர் வருத்தமெலாங் களைய வல்லவர்யார் இவ்வுலகில் வள்ளலுனை யன்றித் தேனமரும் பொழில்சூழ்ந்து தெய்வமணங் கமழும் திருவீதி வேளூரில் திகழ்குமர குருவே. 6 வெள்ளையுடை அணிவித்து விழுப்பொருளும் ஈந்து வீட்டிலிரு என்றுசென்றாய் வீதிவழிப் போந்தேன் தள்ளரிய துகளெழுந்து தாக்கிவிழி பொத்தத் தக்கவுடை கறைபடியத் தவிக்கின்ற வேளை கள்ளரணி கலன்கவர்ந்து காற்றெனவே பறந்தார் கண்விழித்தே அழுகின்றேன் காக்கவெழுந் தருளாய் வள்ளியினைப் பிரியாத வடிவழகு முதலே! வயற்சாலி சூழ்வேளூர் வள்ளல்குரு மணியே. 7 சூரனொடு சிங்கமுகன் தாரகனுஞ் சூழ்ந்தே துளைக்கின்றார் என்னுயிரைத் துயர்க்கொடுமை அறிவாய் கீரனுக்குக் கருணைபுரி கேண்மைமிகு தேவே! கிளரந்த அரக்கர்துயர் கெடுக்கவல்லார் யாரே வீரநெடு வேதாந்த வேலெழுந்த ஞான்றே வீழ்ந்துபடும் அரக்கர்குலம் வீறுகரங் காணச் சீரிணையை வேண்டுகின்றேன் சிவனடியார் நேயா! செல்வமுத்துக் குமரகுரு செவ்வேளூர் அரசே. 8 அறுபொறியாய் வெளிவந்தே அசைகாற்றும் அனலும் அணைத்தேந்திச் சரவணத்தில் அன்புடனே சேர்க்கச் சிறுகுழவி யாகியங்கே செகமதிலே ஏறித் தீங்குவிளை சூரர்களைச் செவ்வேலால் சாய்த்து நறியகுழல் யானையொடு நங்கைவள்ளி மணந்த ஞானநிலை யுணர்ந்துன்னை நண்ணுகின்றேன் ஐயா! நறவமடு வண்டிசைக்கும் நகைமலர்பூண் சோலை நற்றவத்து வேளூரில் நாதசிவ குருவே. 9 ஐந்துபெரும் பூதமுறை ஆண்டவன்நீ யென்றும் ஆருயிரின் தீமையழி அருள்வேள்நீ யென்றும் உந்திச்சை கிரியைசத்தி உடையவன்நீ யென்றும் உபநிடதம் உரையுண்மை ஓர்ந்துன்னை யடைந்தேன் கந்தசிவ சண்முகனே! கண்புருவ நடுவில் கற்பூர விளக்கெனவே காட்சியளி சோதி! சந்தவிசைப் பண்ணினிலே தாண்டவஞ்செய் பொருளே! தமிழ்முத்துக் குமரகுரு தவவேளூர் அரசே. 10 திருமயிலம் மண்ணெழுந்து விண்காட்டு மலையாய் வெங்கால் வாங்கிநில வாக்குநிழல் வண்மைக் காடாய் தண்ணமரும் பசுமைகொழி வயலாய் நீலச் சாந்தநிறக் கடலாகித் தாங்குந் தாயே! உண்மையிலே ஒளிர்கின்ற ஒளியே! என்றும் உளக்கோயில் கொண்டவர்தம் உயிரே! நாயேன் வண்ணமயில் திருக்கோல வனப்புள் மூழ்க வந்தடைந்தேன் மயிலமலை வாழுந் தேவே. 1 பசுங்கடலில் மிதக்கின்ற படவே போன்று பயிர்சூழ ஒங்கிநிற்கும் பரிவுக் கோயில் விசும்புள்ளார் பாதலத்தார் விரும்பி யேத்த வீற்றிருக்கும் பெருமானே! விமலா! பாசம் நசுங்குவழி காணாது நாயேன் பன்னாள் நாயகனே! கழித்துவிட்டேன் ஞானம் இன்றுன் வசம்பெறவே வந்தடைந்தேன் வள்ளால்! பார்த்து மருள்நீக்கி அருள்செய்க மயில வாழ்வே. 2 வித்தாகி முளையாகி வேர்கள் வீழ்த்தி விண்ணோங்கு செடியாகி விரிந்து நீண்டு சத்தாகிக் கவடாகித் தாங்குங் கோடாய் தளிரிலைகள் தழைத்துநிற்குந் தருவே! நீழல் பித்தாகி ஓடிவந்தேன் பாலைக் கள்ளிப் பெருங்கழுகு எதிர்க்கஎனைப் பின்னிட் டேனால் அத்தா! என் வேட்கையுணர்ந் தச்சம் நீக்காய் அமரர்தொழும் மயிலமலை அன்புத் தேவே. 3 மண்ணாகி மணலாகி வளர்கல் லாகி மகிழ்குன்றாய் மனங்கவரும் மலையே! நின்பால் கண்ணாகிக் கல்லாலிற் கதிருள் மூழ்கி கறையில்லா உயிர்ப்பருந்திக் கருத்திற் சாந்தம் உண்ணாடி வழியடைய உவந்து வந்தேன் ஒருபுலியின் பார்வைவிழ உடைந்து வீழ்ந்தே m©zh!நான் நடுநடுங்கி அகன்றேன்; அச்சம் அழித்தருள்செய் மயிலமலை அழகுத் தேவே. 4 மழையாகிக் கால்நீராய் வனப்பா றாகி வாய்பாய்ந்து புனற்காடாய் வாரி போல விழியாலுங் கரைகாணா விண்சாய் ஏரி! வெம்மைகொள வேட்கையெழ விரைந்தே யோடி வழியாலே நடந்திழிந்து வந்த வேளை மகரங்கள் குழுகுழுவாய் வளைந்து பாய்ந்து சுழியாடல் கண்டஞ்சித் தூரஞ் சென்றேன் துயர்களையாய் மயிலமலைத் தூய்மைத் தேவே. 5 எங்கெங்கு நீங்காம லிருக்குந் தேவே! எங்கிருந்து துன்பஇருள் எழுந்த தையோ தங்குமிடந் தெரியவிலை தமியேன் நாளும் தாங்குதுயர்க் கெல்லையிலை தாயே யாகி இங்கடியார்க் கருள்புரிய எழுந்த ஈசா! ஏழைமுகம் பாராம லிருப்ப தென்னே திங்கள்பொழி நிலவாடத் தென்றல் வீசத் திருக்குளஞ்சூழ் மயிலமலைச் செல்வத் தேவே. 6 அத்தநின துண்மையினை அறிந்துஞ் செய்த அடாதசெயல் அத்தனையும் அழிதல் என்றோ? சித்தரெலாந் தொழுந்தலைமைச் சித்த ரேறே! சிந்தைகொண்டால் தீப்பஞ்சாய்த் தீந்து போகும் பத்தருளக் கோயில்கொளும் பரமா! செம்பில் படுகளிம்பைப் பாற்றுவித்துப் பசும்பொன் னாக்குஞ் சுத்தசெழு மூலிகைகள் சூழ்ந்து நிற்கும் தொன்மயில மலைமருந்தே! துணைசெய் யாயே. 7 சாதியிலே மதங்களிலே சார்பு விட்டேன் சண்முகனே! திருவடியின் சார்பு கொண்டேன் வீதியிலே விளையாடித் திரிந்த காலை வேலவனே! நின்தொண்டு விளங்க வில்லை நீதியிலே நின்றுயிர்க்கு நிகழ்த்துந் தொண்டே நின்தொண்டாம் என்றுணர்ந்தேன் நிமலா! பின்னாள் வாதமிலா இடத்தொளிரும் வள்ளி நாதா! மயிலமலைச் சிவகுருவே வருவா யின்றே. 8 விண்ணுறுநீல் பந்தரிட மிளிருங் கோள்கள் மின்விளங்கு நிரைவழங்க விரிந்த திங்கள் வெண்ணிலவு விருந்தூட்ட விசிறச் சோலை மெல்லியகால் பன்மலரின் விரையைத் தூவத் தண்ணருவி முழவதிர்ப்பச் சங்கம் ஆர்ப்பத் தமிழ்வண்டு பாண்மிழற்றத் தனியே நின்றேன் கண்ணுலவு நாயகனே! கந்தா! வந்து கருணைபுரி மயிலமலைக் கரும்பே தேனே. 9 மண்ணொடுங்கி நீர்வறண்டு வன்னி மாய்ந்து வளியடங்கி வெளிகலங்கி மடிவுற் றாலும் கண்மயிலில் ஏறிவிளை யாடுங் கந்தா! கடையின்றிக் கேடின்றிக் கலக்க மின்றிப் பண்ணடியார்க் கருள்புரியும் பரமன் நீயே பாழ்பிறவி வேரறுக்கப் பாவி நாளும் தண்ணருளை நாடியலை கின்றேன் அந்தோ! தயைபுரிவாய் மயிலமலைச் சாந்தத் தேவே. 10 திருப்போரூர் என்னுயிரே! என்னுடலே! எனையீன்ற தாயே! என்தந்தை! என்னுறவே! எனக்கினிய கலையே! இந்நிலமும் எந்நிலமும் இயங்கவருட் செங்கோல் ஏந்துமிறை நீயென்றே இளமைமுதல் கொண்டேன் பொன்னவிருந் திருமேனிப் பொங்கொளியைக் காணப் புந்தியிலே எழும்வேட்கை புண்ணியனே! அறிவாய் என்விழிக்கு விருந்தளிக்க எழுந்தருளல் என்றோ ஏருழவர் பாவொலிக்கும் எழிற்போரிச் சிவமே. 1 உலகளித்தாய் உடலளித்தாய் உயர்பிறவி யுள்ளம் உவந்தளித்தாய் அப்பிறவி உறுபயனைக் காண அலைகின்றேன் அலைவெல்லாம் ஆண்டவனே! அறிவாய் அலைந்தொழிந்தே அகங்குழைய அழுதுகிடக் கின்றேன் பலகலைகள் கற்றாலும் பன்னெறிசேர்ந் தாலும் g‰Wbe¿ TlÉšiy guk!நின தருளே நிலையளிக்கும் என்றடைந்தேன் நீயுமெனை விட்டால் நிலைப்பதெங்கே திருப்போரூர் நீலமயி லரசே. 2 படவேறிக் கழியுழுது பக்கமெலாம் பசுமைப் படர்சோலை தொடர்ந்துவரப் பரவையெழு காற்றும் உடலேற உளங்குளிர உன்றன்திருப் போரூர் ஒருமுறையோ இருமுறையோ உவந்துவந்த தந்தோ நடமேறும் மயில்கண்டு நறுங்குளத்தில் மூழ்கி நல்லதிருக் கோயில்மலை நண்ணிவலம் வந்து விடமேறும் வாழ்விலேநின் விருந்தமுதம் ஏற விழைந்தழுத தெத்தனையோ முறைமுருக வேளே. 3 மலையடியில் மரஞ்சூழ்ந்த மண்டபத்தில் நின்று மயிலேறும் பெருமானே! மலரடியை யுன்னிக் கலையுலவுங் காட்டின்வழிக் கருணைகுரு வாகிக் காட்சியளிப் பாயென்று காத்திருந்தேன் நாளும் jiyt!நினைக் காணாது தளர்ந்தழுத அழுகை சண்முகனே! நீயறிவாய் தமியனென்ன செய்வேன் சிலையுழவர் கிளிவளர்க்குந் திருப்போரூர் முருகா! சிதம்பரனார்க் கருள்சுரந்த தெய்வசிகா மணியே. 4 மலையேறி மீதமர்ந்தேன் மனவமைதி கண்டேன் மாதேவா! நின்வடிவோ மால்கடலா யொருபால் தலையாலும் பசுங்கடலாய்த் தழைதழைப்ப வொருபால் தாரகைகள் மிளிர்நீலத் தனிவானாய் மேற்பால் நிலையாக இறைபோது நிறைவினிலே நின்றேன் நிலைக்கவது நீகுருவாய் அருள்புரிதல் வேண்டும் கலையாலுங் காணவொண்ணாக் கற்பூர விளக்கே! கானமயில் திருப்போரூர் கருணைபொழி தேவே. 5 என்னுடலம் நின்கோயில் என்னுயிரோ நீயே எளியனைநீ மறந்தாலும் இறைவநினை மறவேன் சின்னபரு வத்திருந்தே சிந்தைகொளச் செய்தாய் சிற்பவுரு காட்டுவித்தாய் திகழியற்கை யூடே மன்னழகு காட்டுகின்றாய் மாதேவ! குருவாய் மகிழுருவங் காட்டாயோ மனங்குவியா துன்னை உன்னுவதா லென்னபயன் உறுத்துவினை யுயரும் உம்பர்தொழுந் திருப்போரூர் உண்மைவடி வரசே. 6 சாதிமத நெறிப்பேய்கள் தலையெடுத்தே யாடித் தயைநெறியாந் தெய்வநெறி சாய்த்துவரல் காணாய் நீதியிறை நின்பெயரால் நித்தலுமே சூது நிகழ்ச்சிபல முகமாக நீண்டுவரல் காணாய் ஆதிநெறி சாதிமத அழுக்கில்லா நெறியே அவனியெங்கும் பரவவருள் ஆண்டவனே! செய்வாய் nrhâ!நின தருணெறிக்குத் தொண்டு செயல்வேண்டும் துணையருள்வாய் திருப்போரூர் தூயமணி விளக்கே. 7 போரூரா! நின்மலைமேல் போந்திருந்தால் விளையும் புத்தமிர்த போகமது புகலவுமொண் ணாதே காரூரும் வான்கண்கள் கதிர்மதியின் பொழிவு, கடல்நீலம் கான்பசுமை கலந்துவருங்காட்சி, ஏரூரும் எருதுகன்றா ஈண்டிவருங் கோலம், ஏரிநிறை பறவையெல்லாம் எழும்புகின்ற ஓசை, சீருருந் தென்றல்தெளி, செல்வவிருந் தாகும் தெய்வபசும் மயில்திகழுஞ் செம்பவளக் குன்றே. 8 நால்வருணம் பிறப்புவழி நாட்டியநாள் தொட்டு நாவலந்தீ வழிந்தொழிந்து நாசமுற லாச்சே தோல்வருணஞ் செய்கொடுமை சூதுநிறை சூழ்ச்சி சொல்லாலே சொல்லுதற்குச் சொற்களிலை யந்தோ! மேல்வருணங் கீழ்வருண வேற்றுமைகள் வீழ்ந்தால் ntyt!நின் மெய்ம்மைநெறி விளங்கும்வழி வழியே பால்வழங்கும் பசுவனையார் பத்திவிளை யமுதே! பனைசூழுந் திருப்போரூர் பச்சைமயி லரசே. 9 சாதியென்றும் மதமென்றுஞ் சாத்திரங்கள் காட்டிச் சந்தைகடை விற்பவர்கள் சார்பறுத்துக் கொண்டேன் ஓதுநெறி யொன்றிறைவன் நீயொருவன் என்றே உணர்ந்தறிந்தேன் உத்தமனே! உயர்பொருளே! என்னைச் சோதனையிற் படுத்தாதே சூர்தடிந்த வேலா! சோதியுருக் காட்டியருள் சூழ்வினைகள் ஓடப் பாதையிலே சோலைநிழல் பசுநிரைகள் தேங்கும் பழம்பெரிய திருப்போரூர் பான்மைமற வேனே. 10 இளையனார் வேலூர் செழுங்கொண்டை திரைத்தசையச் சீக்குங்கால் கோழிகளே! உழும்பழனம் பலசூழ்ந்தே உமிழ்பசுமை ஒளியிடையே விழும்புனல்சேர் இளையனார் வேலூர்க்கிவ் வழிதானோ கெழும்பயலை நோய்தீரக் கிளர்ந்தெழுந்து கூவீரே. 1 இளங்குழவி கையிலுள இடியப்பங் கவர்ந்துண்ண உளங்கொண்டு குறிபார்க்கும் ஒத்தகருங் காகங்காள்! வளங்கொழிக்கும் வயல்சூழ்ந்து வளர்வேலூர் எதுவென்றென் களம்பயலை பிணிதீரக் கருணையுடன் கரையீரே. 2 வட்டணையில் சுழன்றாடும் வகைநீலப் புறவினங்காள்! மட்டொழுகும் மலர்ப்பொழிலில் மதிநிலவில் மங்கையரும் கட்டழகுக் காளையருங் கவிபாடி யின்பநுகர் எட்டுடைய இறைவேலூர் எங்கென்று முழங்கீரே. 3 மேயெருமை முதுகிடத்து மேவுகருங் குருவிகளே! வேயிசைக்கும் இறையனார் வேலூரில் மயங்குகின்றேன் சேயனிள அழகுமணத் திருமேனிச் செல்வன்திருக் கோயிலுள இடமெங்கே கூரலகால் குறியீரே. 4 காலையிலும் மாலையிலுங் கண்களிக்கப் பறக்கின்ற வாலிறகுத் தும்பிகளே! வளர்திங்கள் நிலவினிலே பாலிமணற் கரைசேர்ந்தேன் பண்மொழியார் வேலூரில் நீலமயில் வீரனுக்கென் நிகழ்ச்சியினை யுரையீரே. 5 செங்கமல வாவியிலே தேன்மடுக்கும் வண்டுகளே! தொங்குகுலை வாழைசெறி தொல்பதியான் வேலூரான் தங்குவொளி வண்ணத்தான் தமிழ்முருகன் கடம்பணிந்தோன் பொங்கழகற் கென்வரவைப் போய்மிழற்றிப் புகலீரே. 6 பேடையுடன் பிரியாத பெட்புடைய அன்றில்காள்! கோடையிலும் வற்றாத குணமுடைய ஈராற்றின் ஓடைகளின் ஓதநிறைந் தோங்குதனி வேலூரில் மேடையிலே வாழிறைக்கென் வேட்கைதனை விளம்பீரே. 7 விண்ணேறு மரத்தழையில் விளங்குமிடந் தெரியாமல் பண்ணேறு குரற்குயிலே! பாலாறுஞ் சேயாறுந் தண்ணேறு பழனஞ்சூழ் தமிழிளைய வேலூரான் எண்ணேறு மாண்புகழை இங்கிதமாய்க் கூவாயே. 8 மணியென்ன மரகதத்தில் மரம்படருங் கொடிக்கொவ்வை அணிகனிக ளுண்பவள அழகலகுப் பசுங்கிளிகாள்! தணிபொழிலும் பைங்கூழும் தழைதழைக்கும் வேலூரான் கணியறியா மெய்க்கீர்த்தி காதினிக்க மொழியீரே. 9 புற்பூச்சை வாய்க்கொண்டு புரிபேடைக் கீயும்வழி அற்பூட்டும் பூவைகளே! அணியிளைய னார்வேலூர் பொற்பூருஞ் சோலையிலே பூமணக்கும் நேரமிது சிற்பரன்றன் திருநாமஞ் செவிகேட்கச் செப்பீரே. 10 குமரகோட்டம் உன்னுவதும் உரைப்பதுவும் உஞற்றுவதும் உன்வழியே மன்னவொரு வழிவேண்டி மலரடியைப் பற்றிநிற்குஞ் சின்னவுயி ரெனையாளாய் திருக்குமர கோட்டத்தில் மின்னுவடி வேலேந்தி மேவுசிவ வேட்குருவே. 1 அழுகின்றேன் பிழைநினைந்தே அநுதினமும் அறுமுகனே! தொழுகின்றேன் திருவடியைத் துகளறுத்துத் தூய்மைபெற உழுகின்ற வயற்காஞ்சி உயர்குமர கோட்டத்தில் எழுகின்ற ஒளிவேலா! இறையவனே! ஆண்டருளே. 2 எத்தனையோ பிழைசெய்தேன் இறையவனே! அறியாமல் அத்தனையும் பொறுத்தாள அவனிதனில் பிறருண்டோ? வித்தைமிகு காஞ்சியிலே விறற்குமர கோட்டத்துச் சத்தியனே! சங்கரனே! சண்முகனே! எனக்கருளே. 3 பத்திநெறி அறியாமல் பாழ்நெறிகள் வீழ்ந்துழன்றேன் சித்திநெறிப் பெரியோர்கள் சேவிக்கும் பெருமானே முத்திநெறிக் காஞ்சியிலே முகிழ்குமர கோட்டத்து வித்தகனே! மயிலேறி வேட்குருவே! ஆண்டருளே. 4 பிறவாத இறவாத பெருநெறியை யான்விழைய மறவாது திருவடியை மனங்கொள்ள வரந்தருவாய் நறவாரும் மலர்க்காஞ்சி நற்குமர கோட்டத்தில் திறவாக உயிர்கட்குத் திகழ்கின்ற சிவக்கொழுந்தே. 5 மஞ்சுதவழ் சோலைகளும் வண்டிசைக்கும் வாவிகளும் அஞ்சுவழி ஒளிகாலும் அகல்விளக்கு வரிசைகளும் பஞ்சடியார் யாழேந்திப் பண்ணிசைக்கும் மாடிகளும் துஞ்சுதிருக் காஞ்சியிலே சுடர்கோட்டக் குருவருளே. 6 தென்மொழியும் வடமொழியுஞ் செறிபுலவர் வாழ்ந்தபதி தொன்மைமிகப் பதிந்தபதி தொழில்பலவும் விளங்குபதி பன்மையிலே உலவொருமை பண்புறவே காணும்பதி கன்மமறு காஞ்சியொளிர் கண்மணியே எனக்கருளே. 7 சிவனாகிச் சைவருக்குத் திருமாலாய் வைணவர்க்குத் தவவமண பௌத்தருக்குத் தனியருகன் புத்தனாய் புவிநெறிகள் பிறவற்றும் புகுந்துபுகுந் தருள்குருவே etFku nfh£l¤J ehaf!என் குறைதீரே. 8 கண்ணினிலே காண்கின்ற கதிரொளியை யுள்ளமெனுங் கண்ணினிலே காண்பதற்குக் கற்பூர மணிவிளக்கே! எண்ணியெண்ணி நாடோறும் ஏக்குறுதல் நீயறிவாய் É©Fku nfh£l¤J ntyh!என் குறைதீரே. 9 ஆறுமுகம் அருள்விழிகள் அழகுபுயம் அணிமார்பும் வீறுமயில் வேற்கரமும் விளங்கிவிட்டால் என்மனத்தே மாறுபுவி வாழ்வினிலே மயங்குதற்கு வாய்ப்புண்டோ தேறுமொழி எனக்கருளாய் திகழ்காஞ்சிச் சிவகுருவே. 10 திருத்தணிகை ஆன்ற கல்வியுங் கேள்வியும் ஆய்தலும் ஆதி யந்த மளவி லடங்குமே தோன்றி நின்றழி யாத பொருட்கவை துணைசெய் யாவெனச் சோதித் தறிந்தனன் ஊன்று நெஞ்சுங் கடந்தொளிர் சோதியே! உன்னை என்னறி வெங்ஙன் உணருமே கான்ற பச்சைக் கவின்கொடி வள்ளியைக் காதல் செய்தணி காசலத் தெய்வமே. 1 எங்கு நீங்கா திருந்திடும் ஈசனே! இங்கு நின்னிடம் என்ற மகிழ்ச்சியால் தங்கல் நல்லறி வோவறி யாமையோ தாயுந் தந்தையு மாகிய சேயனே! பொங்கும் மின்னொளி யாண்டும் நிலவினும் பொறியி லாவிடம் பூத்தொளி காட்டுமோ தங்க மேனியர் தாழ்ந்து பணிசெயும் தணிகை மாமலைச் சண்முகத் தெய்வமே. 2 எங்கு நீயெனில் என்னிடம் ஆணவம் எங்கி ருந்து பிறந்தது சண்முகா! தங்குமிவ் வையம் சாத்திரம் போக்குமோ தர்க்க வாதச் சமயமும் நீக்குமோ சங்க ராசிவ என்று திருப்பணி சாரச் சாரத் தயைநிலை கூடவும் துங்க சற்குரு வாகித் தெரித்தருள் தோகை யூர்தணி காசலத் தெய்வமே. 3 நூலும் வேண்டிலன் தர்க்கமும் வேண்டிலன் நுவலும் பன்னெறி நோய்களும் வேண்டிலன் காலும் வேலுங் கடுநர கெய்தினுங் காக்கு மென்று கருத்தி லிருத்தினன் சீலம் மண்ணிற் சிறக்கவே வள்ளியின் தேனும் பாலுந் திரளமு துண்டருள் கோலங் கொண்ட குருவே! அடைக்கலம் கோதி லாத்தணி காசலத் தெய்வமே. 4 எங்கு நின்றிடு நின்னிலை ஏழையேன் எவ்வு ளத்தினில் எண்ணவும் வல்லனே பொங்கு சங்கர! புண்ணிய மூர்த்தியே! புவனம் உய்யப் பொருந்திய தேசிகா! நங்கை வள்ளிமுன் நாட்டிய கோலமே நாடி வந்தனன் ஞான மொழிபெறக் கங்கை யாற்றிற் கருணை பொழிந்தருள் கட்டி லாத்தணி காசலத் தெய்வமே. 5 சாந்தம் சாந்தம் சிவமெனுந் தண்மொழித் தன்மை காணத் திரிந்தனன் பல்லிடம் சாந்த முன்னித் தணிகைப் பதிவரச் சாந்தம் சாந்தம் தரைவழிச் சோலையில் சாந்தம் பொய்கைச் சரவண நீத்தமே சாந்தம் சாந்தம் தணிகை மலையெலாம் சாந்தம் நீலத் தமிழ்மயில் வள்ளியில் சாந்தம் சாந்தச் சரணருள் சாந்தமே 6 தணிகை மாமலை யுன்னி வலம்வரின் சார்ந்த ஊன்தழல் உள்ளத் தழலொடு பிணியு யிர்த்தழல் பின்னுந் தழல்களும் பிறவும் மாறிப் பிறங்கும் அமைதியுள் பணிகை நெஞ்சப் பயிற்சியில் லாமலே பாவி யுற்ற படுதுயர் போதுமே கணிகை மேவுங் கடவுள் குறமகள் கணவன் கந்தன் கடம்பணி கத்தனே. 7 பொன்னைப் பெண்ணைப் புவியை வெறுத்துடல் பொன்றக் கானம் புகுந்து கிடப்பது மன்னி யற்கை மறுக்கு நெறியது மகிழும் இல்லிருந் தன்பு பணிசெயின் உன்னைக் காண்டல் உறுதி உயர்படைப் பொன்றை நீத்தலும் உன்னை வெறுத்தலாம் கன்னி வள்ளிமுன் காதல் நிகழ்த்திய fªj nd!தணி காசலத் தெய்வமே. 8 தெய்வ மொன்றெனச் செப்ப மறையெலாம் செகத்தில் வாதஞ் சிறப்பது மென்கொலோ mŒa nd!உனக்கெப் பெயர் சூட்டினும் அப்பெ யர்ப்பொரு ளாவது நீயென bkŒa nd!இள மைப்பரு வத்திலே மேவச் செய்ததும் வேலவ! நின்னருள், செய்ய நன்றி சமரசஞ் சேர்த்தது திகழுஞ் சீர்த்தணி காசலத் தெய்வமே. 9 சாதி யென்னும் படுகுழி நாட்டினில் சார்ந்து தோன்றினன் சண்முக! அப்பெருங் கோதை நீக்கிக் குணஞ்செய வேண்டுவல் குமர தேவ! Ff!அருள் தேசிகா! நாத விந்து நடந்து கடந்துமே நட்ட மாடி நகைமுக வள்ளியின் காத லுண்ட கருணைக் கடவுளே! fªj nd!தணி காசலத் தெய்வமே. 10 கந்தமாதனம் கட்டில்லா அறிவாகிக் கணக்கில்லா அகண்டிதமாய் முட்டுண்ட அறிவறியா முழுமுதலா யிலங்குமொன்றே! கட்டுடைய உயிர்ப்பொருட்டுக் கருணைபொழி குருவாகி வட்டகந்த மாதனத்தில் வருகுமர! அடிபோற்றி. 1 குமரகுரு பரமணியே! குவலயத்தில் பலபெயர்கள் அமையநிற்கும் பெருமானே! அநாதியிறை முதலென்றும் அமரருளின் குருவென்றும் அடியர்சொலும் அழகுநுட்பம் சமயவழக் கொழித்தடியில் தனிநின்றால் விளங்கிடுமே. 2 தென்முகத்த னெனச்சொல்வேன் திகழருக னெனப் புகல்வேன், பொன்முகத்துக் குமரனென்பேன் புகழ்கண்ணன் புத்தனென்பேன் நன்மொழிசொல் கிறித்துவென்பேன் ஞானசம் பந்தனென்பேன் இன்னுமுரை குருவென்பேன் எழிலழகுக் குருவுனையே. 3 நின்னொளியால் உலகமெலாம் நிகழ்கின்ற நிலையுணர்ந்தால் பொன்னுருவை யருந்தாது புகன்மொழியைப் பருகாது சின்மயத்தை நினைப்பதுவுஞ் சிரிப்பாகுஞ் சிவகுருவே! மன்னுகந்த மாதனத்து மணிவிளக்கே! அருள்வாயே. 4 அழகிளமை மணந்தெய்வ அருள்கமழும் திருவுருவைப் பழகவிவண் திருக்கோயில் பரக்கவைத்தார் சிற்பவழி அழுகுகின்ற தவ்வழியும் அருமையிழந் திதுபோழ்தே அழுகின்றேன் விழுகின்றேன் அருள்கந்த மாதனனே. 5 கோயிலெலாம் வருணமுடை குடிகொண்டால் அருளுருவ நாயகனே! அழகொளியை ஞாலத்தார் பெறுவதெங்ஙன் தாயிழந்த கன்றெனவே தவிக்கின்றேன் சிவகுருவே! மாயிருளை யொழித்தருளாய் மகிழ்கந்த மாதனனே. 6 வாயாலே அத்துவித வளமெல்லாம் மிகப்பேசி ஓயாதே உழன்றலுத்தேன் ஒளியடியைக் கொழுக்கொம்பா தாயானே! பிடித்துள்ளேன் தயைபுரிவாய் தனிமுதலே மாயாதே உயர்கந்த மாதனத்தில் மகிழ்குருவே. 7 எங்குமுள அழகெல்லாம் எழுமூற்றா யிலங்குகின்ற மங்கலிலாத் திருமேனி மலரழகைப் புலனுகர இங்குபடுந் துயரறிவாய் இளையோனே! அருள்புரிவாய் பொங்குகந்த மாதனத்தில் பொலிந்தமயி லயிலரசே. 8 சினமுதலாம் அரக்கருளம் தெறுகின்றார் தெளிஞானம் எனும்அயிலால் சிதைக்கவிரி இயற்கைமயில் இவர்ந்துவரின் நினக்கினிய கொடியாகும் நிலைகூடும் குமரகுரு! மனவமைதி வளர்கந்த மாதனத்துப் பெருமானே. 9 அத்துவித முத்தியையும் அருட்குருவே! யான் வேண்டேன் மற்றுமுள பதம்வேண்டேன் மகிழ்கந்த மாதனத்தில் சுத்தபசும் மயிலழகில் துலங்கிளமை யழகலையில் பத்தியெழ முழுகிநிற்கும் பரவசத்தை வேண்டுவனே. 10 பொது எங்குநிறை செம்பொருளே! ஏழைமுக நோக்கி இடர்களைய விழியிலையோ எண்ணந்தா னிலையோ பொங்குமிடர்க் களவிலையே; பொறுக்கமுடி யாதே; போகுமிடம் வேறுண்டோ புண்ணியனே! கூறாய் சங்கையறக் குருவாகித் தரையினிலே அருளின் சாந்தநிலை பெற்றிடுவேன்; தழல்களெலாந் தணியும்; தங்கவொளித் திருமேனி தாங்கிவரல் என்றோ தவிக்கின்றேன் சண்முகனே! தமிழியற்கை யரசே. 1 ஊனுடலம் பெற்றுணர்ச்சி யுற்றநாள் முதலா உறுதுயரஞ் சொல்லுதற்கும் உரைகளுண்டோ ஐயா! கானுமிழும் எரியிடையே கடையன்தவிக் கின்றேன் காண்பதற்குக் கண்ணிலையோ கருத்திலையோ அருளத் தேனுகரும் வள்ளியுடைத் தெய்வமென உலகம் செப்புகின்ற திறமென்னே? திருவருளைப் பொழியாய் வானுலகும் மண்ணுலகும் வாழ்த்துபெருந் தேவே! வளரியற்கைக் கோயில்கொண்ட வள்ளல்சிவ குருவே. 2 ஆரஎண்ணி எண்ணியகம் அனலாச்சே ஐயா! அழுதழுது விழியெல்லாம் அழலாச்சே நோய்தான் தீரவழி யுண்டோசொல் செல்வவள்ளி நாதா! செய்துவிட்டேன் பிழைபலவும் சிறியஅறி வாலே வீரவடி வேலேந்தி வினையறுக்க எழுவாய் வேறுபுகல் இல்லையென வேதனைசெய் யாதே சேரவருஞ் சேய்கடிதல் சிறந்ததந்தைக் கழகோ செழுமியற்கைக் கோயில்கொண்ட தெய்வமயி லரசே. 3 பொருளில்லார்க் கிவ்வுலகும் அருளில்லார்க் கந்தப் புவியுமிலை என்றுரைத்தார் பொய்யாமொழி யாளர் தெருளிரண்டில் ஒன்றுமின்றித் திரிகின்றேன் இங்கே திருவெல்லாம் விளங்குகின்ற தெய்வமுரு கையா! இருளிருந்து கூவுகின்றேன் எடுத்தணைப்பா ரில்லை ïu§FªjhŒ jªijba‹nw ïiwt!நினை அடைந்தேன் மருளிருக்கு மதியனென்று வாளாநீ இருந்தால் வாழ்வதெங்ஙன் இயற்கையிலே வாழும்பெருந் துரையே. 4 பொருண்முடையும் அருண்முடையும் புகுந்தலைத்தல் அறிவாய் பொருள்அருளை அடியவர்க்குப் பூக்கின்ற தருவே! அருண்முடையை யொழித்தென்னை ஆண்டுவிட்டால் போதும் அல்லலெலாம் தொலைந்தகலும் ஆறுமுக வேலா! சுருண்முகிழுந் தார்கடம்ப! சுத்தபரம் பொருளே! சுந்தரனே! வள்ளிமகிழ் தோகைமயி லரசே! தெருண்மனத்தில் திகழ்சிவமே! திருமாலே! என்றுஞ் செறிஇயற்கைக் கோயிலுறை செல்வப்பெரு மாளே. 5 கவலையெலாந் திரண்டுருண்டு கருத்தினிலே நின்றால் கானமயில் வீர! நின்றன் கருணைபெறல் எங்ஙன்? சவலையுற்று வாடுகின்றேன் சந்ததமும் இங்கே சவலையற்றுக் கவலையிற்றுச் சாந்தமுற்று வாழப் புவியினிலே மூச்சடக்கும் புன்னெறியில் செல்லேன் போரூரா வேன்முருகா பொன்வண்ணா என்றும் சிவமுதலே சண்முகனே சின்மயனே என்றும் சேரவரும் எனையாள்வாய் திகழியற்கை மணியே. 6 bt§fâUª j©kâí« ntyt!நின் கோயில் வேலைமலை காடுவயல் வெண்மணல்நின் கோயில் பொங்கருவி ஓடைகளும் பூக்களுநின் கோயில் பொன்வண்டு பொலிபறவை ஆன்மான்நின் கோயில் மங்கையருங் குழவிகளும் மகிழ்தருநின் கோயில் மாண்கலைகள் ஓவியமும் மறைகளுநின் கோயில் இங்கடியன் உளங்கோயில் கொள்ளஇசை யாயோ ஏழைமகன் உய்யவருள் இயற்கையிறை யோனே. 7 இயற்கையிலே நீயிருக்கும் இனிமைகண்ட ஆன்றோர் எழிலழகை ஒவியத்தில் இறக்கிவைத்த காட்சி, செயற்கையிலே கோயில்களாய்த் திகழ்ந்திருந்த தந்நாள் சிற்பநுட்பத் தத்துவத்தில் சிறந்துநின்றார் மக்கள் பயிற்சிகுறை வருணப்பேய் பற்றியநாள் தொட்டுப் பாழுங்கல் செம்பாகப் பாவிக்க லாச்சே அயிற்கரத்து வேலவனே! அருமைத்திருக் கோயில் அழகியற்கை மூலமெனும் அறிவுவிளக் கேற்றே. 8 உடலியற்கை உயிர்நீயென் றுண்மைநிலை காட்டும் உயர்கோயில் உட்பொருளும் உறங்கிவிட்ட தம்மா மடவருணச் சடங்கிடமாய் வேசையர்தம் வீடாய் மடைப்பள்ளி பொருட்போர்கள் மலிகளனாய்க் கண்டு படமுடியாத் துயரமதிற் படுகின்றார் பத்தர் பத்தருளங் கோயில்கொண்ட பன்னிரண்டு கண்ணா! நடனமெங்கு மிடுகின்ற நாயகனே! ஞானம் நல்வழியில் வளர்ந்தோங்க நானிலத்தில் செய்யே. 9 எக்கோயில் கெட்டாலும் எழிலிறையே! நின்றன் `இயற்கைவளக் கோயிலென்றும் இருப்பதன்றோ? எவரும் புக்கோடி ஆடிநின்று பொருந்திவழி படலாம் புன்குறும்புச் சேட்டையிலை; பொலிவமைதி கூடும்; சிக்கோதும் நெறிகளெல்லாஞ் சிதற அருள் வேலா! செங்கதிருங் கடலுமெனச் சிகியிலுறுஞ் சேயே! இக்கோலம் இந்நிலையென் றெண்ணாமல் யார்க்கும் இன்புசொரி கருணைமழை! எளியன்குறை தீரே. 10 காத்தல் கத்தனே! உயிரைக் காக்க கந்தனே! அறிவைக் காக்க சித்தனே! மனத்தைக் காக்க திகழ்புலன் ஐந்தைக் காக்க அத்தனே! உறுப்பை யெல்லாம் அழகுறக் காக்க காக்க சித்தனே! உடலைக் காக்க பன்னிரு கரத்துச் சேயே. 1 பொய்பகை பொறாமை லோபம் புகுந்துறா வாறு காக்க வெய்சினம் காழ்ப்பு வெஃகல் விரவிடா வாறு காக்க நொய்பிணி கேடு வஞ்சம் நுழைந்திறா வாறு காக்க செய்பணி சிறக்கக் காக்க சிவகுரு! தெய்வச் சேயே. 3 கொலைபுலை நீக்கி யெங்குங் குணஞ்செயல் அறிவைக் காக்க அலைமன அவதி போக்கி அமைதியைக் காக்க காக்க உலகெலாம் ஒன்றி நிற்க உயரறங் காக்க காக்க கலைவளர் மதியந் தோயுங் கடிவரைச் செம்மைத் தேவே. 4 வாழ்த்து அருள்பொழியும் முகம்வாழி அழகுதிருத் தோள்வழி உருள்கடம்பத் தார்வாழி ஒலிகோழி மயில்வாழி இருள்கடியும் வேல்வாழி எழில்வள்ளி பிடிவாழி சுருள்படிந்த தணிகைமுதல் தொல்பதிகள் வாழியரோ. திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனாரால் பாடப்பெற்ற முருகன் அருள் வேட்டல் முற்றிற்று.  1. தென்திருப்பேரை பேரை அரைசே! பேரை அரைசே! பெரிதுநின் னரசே பெரிதுநின் னரசே நின்னா ராட்சி மன்னா இடமிலை விண்ணெலாம் ஆட்சி மண்ணெலாம் ஆட்சி கடலெலாம் ஆட்சி காற்றெலாம் ஆட்சி ஒளியெலாம் ஆட்சி ஒலியெலாம் ஆட்சி சிறியதிற் சிறிதிலும் பெரியதிற் பெரிதிலும் ஆட்சி நினதே ஆட்சி நினதே எங்கும் ஆட்சி தங்கும் மாட்சியால் கூர்த லாங்காங் கூர்தல்நின் னருளே 10 மீனமாய் ஆமையாய் ஏனமாய்ச் சிங்கமாய்க் குறளனாய் மழுவனாய் அறவில் வீரனாய்க் கலப்பை ஆளியாய் உலப்பில் குழலனாய் உலகை ஓம்பும் அலகிலா ஆட்சி அங்கிங் கெனாமல் எங்கும் அறிவாய்ச் செறியும் இறைவ! சிறிது நெஞ்சில் நின்னை எங்ஙன் உன்னுவல் அம்ம! என்றன் பொருட்டோ தென்திருப் பேரையில் பொருநைக் கரையில் கருணை பொழிய மணியொளிர் முடியும் அணிகிளர் மாலையும் 20 தண்மரைக் கண்ணும் கண்மலர் நோக்கும் பவள வாயும் தவள நகையும் நீல மேனியும் கோல மாவும் ஆழி வளையும் வாழிசெங் கையும் மின்னொளி உடையும் பொன்னருள் அடியும் கொண்டது கொல்லோ அண்டர் நாயக! அழகிய வடிவம்! அழகிய வடிவம்! நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் பாழு நெஞ்சே! வாழ நினையாய் வேடமும் கோலமும் நாடவும் வேண்டாம் 30 நீட்டலும் மழித்தலும் காட்டலும் வேண்டாம் துறத்தலும் உலகை ஒறுத்தலும் உடலை வேண்டாம் வேண்டாம் பூண்தா ரணிந்து மண்ணை வெறாது பெண்ணுடன் வாழ்ந்து பொருளை ஈட்டியும் அருளை நீட்டியும் நெஞ்சே! நினையாய் நெஞ்சே! நினையாய் முனைப்பற நினைவாய் வினைப்பற் றறுப்பாய் அழக னிருக்கப் பழகு நெஞ்சே! வேண்டுவன் இதுவே ஆண்டகைப் பொருளே! வருக வருக அருள வருக 40 அண்ணா வருக வண்ணா வருக அய்யா வருக மெய்யா வருக இறையே வருக மறையே வருக ஆலிலே துயிலும் மூலமே வருக கரியினுக் கருளிய அரியே வருக சேயினைக் காத்த தாயே வருக குன்றை எடுத்த கன்றே வருக சாதி இல்லா நீதி வருக மதப்போர்க் கெட்டா இதமே வருக நிறத்திமிர் காணா அறமே வருக 50 அறிதுயில் புரியும் அறிவே வருக அன்பில் விளங்கும் இன்பே வருக அத்த! நின்னருள் மொய்த்த நெஞ்சம் உருகும் உருகும் அருகும் போர்கள் பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள் பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம் ஒன்றே அன்றோ நன்றே தெளியின் ஒருவ நிற்கே மருவிய பெயர்கள் பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி எப்பெயர் நின்பெயர் எப்பதி நின்பதி 60 எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி பேரெலாம் நீயே பேரிலான் நீயே பதியெலாம் நீயே பதியிலான் நீயே உருவெலாம் நீயே உருவிலான் நீயே மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே எல்லாம் நீயே எல்லாம் நின்னில் பேரையில் பொலியும் பெருமை அழகு தத்துவ நுட்பச் சத்தியம் விளக்கும் போதம் அழிந்த நாத முடிவிலே பணிசெயும் நெஞ்சம் அணிசெய அரசே! 70 வருக வருக அருள வருக வருக வருக குருவாய் வருக தென்தமிழ் கமழும் தென்திருப் பேரை அரைசே! பேரை அரைசே! 2. ஆழ்வார் திருநகர் பன்னிறத்து மீன்களெலாம் பார்த்தனுப்புந் தண்பொருநை பொன்மணியும் பூவும் பொருதாழ்வார் - நன்னகரில் வீற்றிருக்கும் பெம்மானே வேண்டுகின்றேன் சேவடியை ஏற்றருள்செய் இன்றே இசைந்து. 1 தாழ்குழலா ரெல்லாந் தமிழ்பொருநை நீராடி ஆழ்வார் மொழியோதும் அன்புநகர் - வாழ்வாய் இறவாத இன்புபெற ஏழையேன் வந்தேன் அறவாழி காட்டி அருள். 2 பூம்பழன மெங்கும் பொலியுங் குருகூரில் தேம்பொழி லென்னத் திகழ்பொருளே - பாம்பணையில் எம்மானே வந்தடைந்தேன் ஏழை எனக்கிரங்கிச் செம்மாலே செந்நெறியிற் சேர். 3 ஆறாய்ப் பொழிலாய் அழகுவிளை அன்புருவே தேறாதார் தேறத் திருக்குருகூர்ப் - பேறாய் எழுந்து நிலவுபொழி இன்பமே வெம்மை விழுந்தேன் எடுத்தாள் விரைந்து. 4 எங்கு நிறைபொருளே எவ்வுருவும் நீயென்றால் பொங்கு குருகூர்ப் பொலிவோனே - தங்கத் தனியிடங்கள் கொண்டதென்ன? தத்துவமே என்று பனிமலர்த்தாள் வந்தணைந்தேன் பார். 5 பார்தனிலே பத்துருவம் பண்டெடுத்தாய் என்னுஞ்சொல் கூர்தல் அறத்தைக் குறிப்பதென - ஓர்ந்துணர்ந்தோர் ஆரமுதே ஆழ்வார் அருள்நகரில் ஆண்டவனே சீரருளில் சேர்த்தெனையாள் தேர்ந்து. 6 பத்துப் பிறப்பையொட்டிப் பாவலர்கள் செய்தகதைத் தத்துவத்தை யோர்ந்து சரணடைந்தேன் - பத்திமிகு நல்லோர் உளமுறையு நாதனே தென்குருகூர்ச் செல்வா எனக்குவழி செப்பு. 7 பத்துப் பிறப்பைப் பகுத்துணர்ந்தால் இவ்வுலகில் செத்துப் பிறவாத் திறம்விளங்கும் - சித்தரெலாம் பார்க்க அறிதுயில்செய் பாம்பணையாய் தென்குருகூர்ச் சேர்க்கை அருளாயோ செப்பு. 8 மலையாய்க் கடலாய் மகிழ்வூட்டும் மாண்பே கலையாய்க் குருகூரில் கண்டேன் - அலையா மனம்வேண்டி வந்தேன் மலரடியை என்னுள் புனைந்தாள்வாய் இன்றே புரிந்து. 9 விண்ணீல மென்ன விளங்குந் திருமேனி உண்ணீடின் வெம்மை ஒழியுமால் - தண்ணீர்மை ஆழ்வார் திருநகரில் ஆண்டவனே நின்னருளால் வாழ்வா ருடன்சேர்த்து வை. 10 3. திருமாலிருஞ்சோலை தென்பாண்டிச் செல்வம் திருமா லிருஞ்சோலை அன்பால் தொழுதுய்ய ஆர்த்தெழுவாய் நன்னெஞ்சே. 1 விண்ணவரும் மண்ணவரும் வேட்குந் திருச்சோலைத் தண்மையிலே மூழ்கித் தயைபெறுவாய் நன்னெஞ்சே. 2 செல்வமெலாம் பூக்குந் திருமா லிருஞ்சோலை செல்ல நினைந்தாலும் செம்மையுறும் நன்னெஞ்சே. 3 காணாத காட்சியெலாம் காட்டும் பெருஞ்சோலை வாணாள் வழுத்திநின்றால் வாழ்வுவரும் நன்னெஞ்சே. 4 வண்டினங்கள் பண்பாடி வாழுந் திருச்சோலை கண்டு பணிந்தால் கருணைவரும் நன்னெஞ்சே. 5 சாதிமதக் கட்டெல்லாந் தாண்டின் பழச்சோலை நீதியிலே நிற்கும் நினைப்புறுவாய் நன்னெஞ்சே. 6 உள்ள சமயமெலாம் ஓலமிடும் பூஞ்சோலைக் கள்ளருந்துங் கல்வி கதிகாட்டும் நன்னெஞ்சே. 7 எல்லா உயிரும் இருக்க இடமருளும் வில்லார் இருஞ்சோலை வேண்டுதல்செய் நன்னெஞ்சே. 8 எவ்வுயிர்க்கும் இன்பநல்கும் ஏமத் திருச்சோலைச் செவ்வியிலே தோயாது செல்லுவதோ நன்னெஞ்சே 9 உலகெலாந் தோன்ற உயிராகும் பூஞ்சோலை பலகலையாய் நின்றருளும் பண்புணர்வாய் நன்னெஞ்சே. 10 சொல்லுக் கடங்காச் சுகச்சோலை ஞானநல்கும் கல்வியாய் நிற்குங் கருத்துணர்வாய் நன்னெஞ்சே. 11 ஏழிசையாய் நிற்கும் இருஞ்சோலை எண்ணிஎண்ணித் தாழிசையாற் பாடித் தழுவுவாய் நன்னெஞ்சே. 12 பழமைப் பழமைக்கும் பண்பாம் பழஞ்சோலைக் கிழமைக் குறிநின்றால் கேட்குமொலி நன்னெஞ்சே. 13 புதுமைப் புதுமைக்கும் புத்துயிராம் பூஞ்சோலைப் பதுமையாய் நின்றுன்னப் பாயுந்தேன் நன்னெஞ்சே 14 சித்தர்தம் உள்ளத்தில் தேனொழுக்குஞ் செஞ்சோலைப் பித்தங்கொண் டானந்தப் பேறுறுவாய் நன்னெஞ்சே. 15 இயற்கைத் திருமா லிருஞ்சோலை இங்கிருப்பச் செயற்கை அலகையிடஞ் செல்லுவதென் நன்னெஞ்சே. 16 செம்மைவழித் தண்மைபொழி செஞ்சோலை சேராதே வெம்மையிலே வீழ்ந்தால் விரதம்போம் நன்னெஞ்சே. 17 பத்தருக் கெஞ்ஞான்றும் பண்பாந் திருச்சோலை முத்திக் கரையென்றே முன்னுவாய் நன்னெஞ்சே. 18 பச்சைப் பசுஞ்சோலைப் பள்ளியினைப் பாராதே நச்சுமிழும் வெம்மையிலே நண்ணுவதென் நன்னெஞ்சே. 19 அருணெறியை ஓம்புநருக் கன்பாந் திருச்சோலைப் பொருளுணர்ந்து போற்றிப் புகக்கற்பாய் நன்னெஞ்சே. 20 பறவையெலாந் தங்கும் பழச்சோலை இங்கிருப்பத் துறவையுன்னி ஓடுதலும் சூதாகும் நன்னெஞ்சே 21 அரும்புமலர் காய்கனிகள் ஆர்ந்த திருச்சோலை விரும்பின் அறங்கூடும் வேருணர்வாய் நன்னெஞ்சே. 22 உண்ணஉண்ணத் தித்திக்கும் ஓங்கு கனிச்சோலை கண்ணினாற் கண்டாலும் காப்புவரும் நன்னெஞ்சே. 23 என்று மழியா தினிக்கும் பெருஞ்சோலை ஒன்றே உளதென் றுணர்ந்திடுவாய் நன்னெஞ்சே. 24 வினையும் விதியும் விளைநோயும் பொற்சோலை நினையாத மாக்களுக்கே நேர்தலறி நன்னெஞ்சே. 25 செய்த பிழைக்கிரங்கிச் சிந்தித்தால் செஞ்சோலை உய்யு நிலைகூட்டும் உண்மையுணர் நன்னெஞ்சே. 26 தமிழாய்த் தழைத்துநிற்குந் தண்மை இருஞ்சோலை அமிழ்துண்ட அன்பருக் கன்பாவாய் நன்னெஞ்சே. 27 ஆழ்வார்கள் சூழ்ந்துநிற்கும் ஆனந்தத் தேன்சோலை பாழ்பிறவி போக்கப் பணிசெய்வாய் நன்னெஞ்சே. 28 ஆண்டா ளெனுங்கொடிசூழ் அன்புத் திருச்சோலை வேண்டாதே சென்றால் விறலிழப்பாய் நன்னெஞ்சே. 29 ஆழ்வார் தமிழ்ப்பாட்டாய் ஆர்ந்த இருஞ்சோலை வாழ்வே உரியதென்று வாழ்த்துவாய் நன்னெஞ்சே. 30 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஓசை ஒலியாய் உலகமெலாம் ஓங்கும் பொருளே உனையடையும் ஆசை கொள்ளா தயர்ந்தொழிந்தேன் ஆவி சாவி யாகாமல் பாசை படரா மனமருளாய் பரமா வில்லி புத்தூரா வாச மலர்கள் சூட்டியநல் வாழ்வாம் ஆண்டாள் பெருமாளே. 1 உலகை உடலை உவந்தளித்த ஒருவன் நீயென் றுணராத கலதி இனத்தில் நாணாளுங் கலந்தே கெட்டேன் கெட்டேனே அலகில் பிழைகள் பொறுத்தாளும் அருளே வில்லி புத்தூரில் இலகு பெரிய பெருமாளே இனிய ஆண்டாள் இறையோனே. 2 நல்ல பிறவி எனக்களித்தாய் ஞானம் பெற்றே உயவேண்டி அல்ல நிகழ்த்தி அடிமறந்தேன் அருளுக் குரிய னாவேனோ கல்லை மண்ணைச் சோறாக்கிக் களிக்கும் பிள்ளை எனவாழ்ந்தேன் வில்லி புத்தூர் வாழ்மணியே வெற்றி ஆண்டாள் பெருமானே. 3 எல்லாப் பொருளும் நீயென்றே இசைக்குங் கலைகள் பலகற்றேன் வல்லாய் வாழ்வில் அவ்வுண்மை மலர்ந்தால் உய்வேன் உய்வேனே நல்லாய் அருள நீயன்றி ஞாலந் தன்னில் பிறருளரோ சொல்லாய் வில்லி புத்தூரா தூய ஆண்டாள் துணையோனே. 4 எங்கும் எல்லாம் நீயென்றே எளிதில் இசைக்கும் நிலைவேண்டேன் தங்கி வாழ்வில் நிறையுறவே தாளை வழிபட் டுய்யநினைந் திங்கு வந்தேன் அருள்புரியாய் ஈசா வில்லி புத்தூரில் செங்கை ஆழி வளையேந்துஞ் செல்வா ஆண்டாள் சேகரனே. 5 சாதி சமய நினைவெல்லாம் தடையே நின்றன் நினைவினுக்கு நீதிப் பொருளே அக்கடலை நீந்தி நீந்தி அடிசேர்ந்தேன் ஆதி அந்த மில்லாத அகண்டா காரப் பேரறிவே சோதி வில்லி புத்தூரா துணைசெய் ஆண்டாள் துணையோனே. 6 ஆலவெம்மை ஆற்றாமல் அடியேன் வந்தேன் ஐயாநின் நீலமேனி நிலவினிலே நின்று மூழ்கித் தண்மையுறக் கோலங் காட்டி எனையாளாய் கோதில் வில்லி புத்தூரா சீல மில்லேன் சிறுநாயேன் தெய்வ ஆண்டாள் பெருமாளே. 7 பொன்னார் முடியும் பூவடியும் பூத்த விழியும் செவ்வாயும் மின்னார் மார்பும் மலர்க்கையும் மிளிரு நீல உருக்கோலம் என்னே! நெஞ்சில் நிலைக்கவினை இரியும் வில்லி புத்தூர்வாழ் மன்னே மணியே மாமருந்தே மறைசொல் ஆண்டாள் மனத்தோனே. 8 உன்றன் நீல மேனியிலே ஒன்றி ஊன்றி உளம்வைத்தால் என்றன் கரண வெம்மையெலாம் இனிமைத் தண்மை பெறலுறுதி அன்றி லகன்றி லுடனாடும் அடவி வில்லி புத்தூரில் நன்று செய்யு நலநலமே நங்கை ஆண்டாள் பெருமாளே 9 உருவோ பேரோ ஒன்றுமிலாய் உனக்கோ உலகம் உரைத்துள்ள உருவோ பேரோ பலபலவே உண்மை யொன்றே எனத்தெளிந்தேன் உருவோ டுறவு கொளவருளாய் ஓங்கு வில்லி புத்தூரில் உருவே கருவே உயர்வான ஒளியே ஆண்டாள் பெருமாளே. 10 5. திருவரங்கம் இருளிலே கிடந்த என்றனுக் கிரங்கி ஈந்தனை உலகமும் உடலும் அருளிலே பெற்ற நன்றியை மறந்தேன் அகந்தையால் எனதெனக் கொண்டேன் மருளிலே வீழ்ந்தேன் மறவினை புரிந்தேன் மாயனே பிழைபொறுத் தாளாய் தெருளிலே இனிக்குந் தெள்ளிய அமுதே தெய்வமே அரங்கநா யகனே. 1 துன்பிலே அழுந்தித் துயருறு கின்றேன் தூயனே ஞானவா ரிதியே அன்பிலே மூழ்கி அழுகிலேன் பலவா றலைந்தலைந் தயர்ந்தனன் நாளும் என்பெலாம் உருக எண்ணிலேன் பாவி எங்ஙனம் உய்குவன் அந்தோ இன்பமே என்னை ஏன்றுகொ ளருளால் ஈசனே அரங்கநா யகனே. 2 வாக்கினை யொடுக்கேன் வனங்களி லுழலேன் வட்டணை ஆசன மிட்டு மூக்கினைப் பிடியேன் மூச்சினை யடக்கேன் முன்னிலை நின்றழு கின்றேன் பாக்கியப் பயனே பாவியை ஆளாய் பாரதம் நடத்திய பரனே தேக்கிய இன்பத் திருவெலா முடைய தேவனே அரங்கநா யகனே. 3 தத்துவக் கலையைச் சந்ததம் பயின்று தர்க்கமே புரிகுழு சார்ந்து பித்தனாய்க் கெட்டேன் பிழைபல செய்தேன் பேச்சிலே வாழ்வினைக் கழித்தேன் அத்தனென் றுன்னை அடைந்தனன் இன்றே ஆதரித் தருள்புரி வாயே முத்தனே முதல்வா மூவுல களந்த மூர்த்தியே அரங்கநா யகனே. 4 காவிரி நங்கை கொள்ளிட மங்கை கைகளால் தைவர என்றும் பூவிரி கோலப் பொழினிழல் செய்யப் பொன்சிறை வண்டுக ளார்ப்ப மாவறி துயில்செய் மரகத மலையே மனத்தமு தொழுக்குநன் மதியே பாவியேன் வந்தேன் பணிந்திட அறியேன் பார்த்தருள் அரங்கநா யகனே. 5 ஆடினேன் அலைந்தேன் அகந்தையால் கொடுமை ஆற்றினேன் அஞ்சினேன் பின்னை நாடினேன் ஞானம் நயந்தனன் பலரை நண்ணிய தொன்றிலை ஐயா வாடியே வந்தேன் மலரடி வணங்க வழிவகை அறிந்திலேன் பாவி காடியில் விழுந்த பல்லியாய்ச் சாய்ந்தேன் காத்தருள் அரங்கநா யகனே. 6 உலகெலாம் ஆக்கி உயிரெலாம் புகுத்தி உணர்வினை எழுப்பினை இடையில் கலகமால் நுழைந்து கலக்குவ தென்ன காரணம் பலபல சொல்வர் அலகிலா ஒளியே அறிதுயில் நுட்பம் அறிந்திடில் கலகமோ பாழாம் இலகுமந் நுட்பம் எளியனுக் கருள எண்ணமோ அரங்கநா யகனே. 7 அறிதுயில் நுட்பம் அடியனேன் உணர அலைந்தலைந் தழுததை அறிவாய் வெறிகொடு திரிந்தேன் வித்துவ மக்கள் வீடுதோ றுழன்றனன் விதியால் பொறிபுலன் ஒடுக்கும் புரையிலும் புகுந்தேன் புலையனேன் பெற்றதொன் றில்லை நெறிபட வந்தேன் நின்மல அருள நினைவையோ அரங்கநா யகனே. 8 சோலைகள் கண்டேன் சூழ்நதி கண்டேன் சுந்தர வீதிகள் கண்டேன் மாலைகள் கண்டேன் மங்கலங் கண்டேன் வணங்குநல் லடியரைக் கண்டேன் வேலையிற் பாம்பின் மீதுறங் கண்ணல்! விளங்கொளி விழியினாற் காணக் காலையே நோக்கிக் கைதொழு கின்றேன் கருணைசெய் அரங்கநா யகனே. 9 அன்றொரு வேழம் ஆதியே என்ன அருளிய மூலமே முதலே இன்றுனை யடைந்தேன் ஏழையேற் கிரங்காய் இருநதி நடுவினிற் றங்கும் குன்றமே நிறைவே குறைவிலாக் குணமே கோதிலா அமுதமே கோலம் நன்றுடை யானே ஞானமா நிதியே நாதனே அரங்கநா யகனே. 10 6. திருவரங்கம் எங்கிருந்தேன் இங்குவந்தேன் எப்படியென் றாய்ந்தேன் இவ்வுடலும் இவ்வுலகும் எவ்வழியென் றோர்ந்தேன் சங்கைதெளி யாதயர்ந்தேன் சாத்திரங்கள் பார்த்தேன் சாதனங்கள் செய்துழன்றேன் சற்றுமொளிர் வில்லை பொங்கிவழி காவிரியில் புகுந்துகுடைந் தெழுந்தேன் பூவிரிந்த பொழிற்பசுமை புலன்கவர ஆழி சங்குடையாய் நின்னருளால் சார்ந்தகதை தெளிந்தேன் சந்நிதியில் வந்தடைந்தேன் தமிழரங்க மணியே. 1 இருண்மயமாய்க் கிடந்தவெனக் கிவ்வுடலந் தந்தாய் இவ்வுலக வாழ்வினிலே இனிமைபெறச் செய்தாய் அருண்மறந்தேன் அகந்தையினால் ஆற்றிவிட்டேன் பிழைகள் அத்தனையும் பொறுத்தருளும் ஆண்டவன்நீ யென்றே மருண்மனத்தன் வந்தடைந்தேன் மலர்மருவு மார்பா மாயவனே அறிதுயிலில் மாதவனே உறங்கும் பொருண்மையெனக் கருள்புரிந்தால் பொன்றும்வினை யெல்லாம் போதாந்தச் செல்வர்தொழும் பொன்னரங்கப் பொருளே. 2 புற்செடியே மீன்புழுவே புள்விலங்கே முதலாம் புன்னுடலந் தந்துதந்து புங்கவநின் னுணர்வுக் கற்பமைந்த கரணம்விரி கனகவுடல் தந்தாய் கருணைநினைந் தொழுகுமனங் கருணைசெய விலையே அற்புடைய நெறிவிடுத்தேன் அலைந்துடலைக் கெடுத்தேன் அறியாமைச் செயல்நினைக்கும் அறிவுபெற்றே னின்றே பொற்பொளிசெய் அடியணைந்தேன் புரிந்தபிழை அப்பா பொறுத்தருளாய் புண்ணியனே புகழரங்கப் பொலிவே. 3 பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பூவுலகும் வேண்டேன் புகழ்வேண்டேன் நூல்வேண்டேன் புலமையெலாம் வேண்டேன் மன்வேண்டேன் வான்வேண்டேன் வாழ்வுமகிழ் வேண்டேன் மழைமுகிலே நீன்மலையே வானதியே ஏழை என்வேண்டி வந்தனனோ எழின்மருவு மார்பா எங்குமுள இறையோனே எண்ணமறி யாயோ சொன்மேவு கவிகடந்து துயிலுகின்ற இன்பஞ் சுரக்கவெனக் கருளாயோ தொல்லரங்கக் குருவே. 4 பாற்கடலில் பாம்பணையில் பள்ளியுணர் வென்றோ பரநாத விந்துநிலை பார்த்துநிற்ப தென்றோ மேற்கருமை இருளெல்லாங் கீழ்ச்சாய்த லென்றோ மென்மேலும் பொங்கமிழ்தம் மேவுவது மென்றோ காற்கடிமை ஏழையுயிர் கண்பெறுவ தென்றோ கல்லாத கல்வியெலாங் கற்றறிவ தென்றோ மாற்குலமா யுலகமெலாம் மன்னுவது மென்றோ மாயையறத் தெளிவருள்வாய் மனத்தரங்க வமுதே. 5 கடல்கடந்தேன் மலைகடந்தேன் காடுகளைக் கடந்தேன் கானாறு கழிகடந்து கடந்து வந்தேன் ஐயா உடல்கடந்தே உளங்கடந்தே உணர்வுகடந் துன்னை உன்னியுன்னி ஒன்றும்வழி உணராதே கெட்டேன் குடல்குடைய மனமுருகக் குமுறியழும் அழுகை கோவிந்தா நீயறிவாய் கோதிலறி துயிலைப் படல்கடிய அறிவுறுத்திப் பாவிதுயர் களையாய் பரங்கருணைத் தடங்கடலே பதியரங்க மலையே. 6 மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய் மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய் அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய் அமைதியளி திங்கள்பொழி ஆனந்த நிலவாய் பணிகொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய் பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின் பெற்றியருள் செய்யாயோ பேரரங்க வேந்தே. 7 அறிதுயிலின் வேட்கைகொண்டே அணையவந்தேன் அப்பா அம்மயக்கந் தலையேற அவதிபடு கின்றேன் சிறிதருளத் திருவுள்ளஞ் செய்யநினை யாயோ திருமகள்தன் கேள்வனெனுஞ் சிறப்புடைய அரசே பொறிபுலனைச் சிதைக்கும்வழிப் போகமன மில்லை பொன்னடியே பொருளென்று புந்திகொண்ட தின்று வெறிமலரில் வண்டிசையால் விருந்தளிக்கும் பழனம் மேவிவளம் பெருகுசெல்வம் மிளிரரங்க ஒளியே. 8 காலெழுப்பிக் கனலெழுப்பிக் கல்லெனவே நின்று காலில்லாப் பாம்பெழுப்பிக் ககனவட்ட நோக்கி மேலெழும்பு நெறிமயக்க வெறிவிழுந்தேன் பாவி விடுதலைபெற் றின்றுவந்தேன் வென்றிவளர் மார்பா தோலெலும்பா யுடல்வறண்டேன் தொல்லைபடு கின்றேன் சூதுவழி அரசியலில் தொலைத்துவிட்டேன் காலம் மாலெனும்பே ருடையவனே மாதவனே துயிலின் மாண்புணர்ந்தால் உய்ந்திடுவேன் மலரரங்கத் தேனே. 9 பொன்முடியும் மலர்விழியும் பூம்பவள வாயும் பொலிதோளுந் திருமார்பும் போராழி வளையும் மின்னவிலுஞ் செவ்வடியும் மிளிர்நீலக் கோலம் மேவுமனம் பெற்றவரே மேனெறியிற் சென்றார் என்மனமும் ஈரமுற அந்நெறியே விழைதல் எங்குமுள இறையோனே எம்பெருமான் அறிவாய் சொன்மறந்த வாழ்த்தறியாச் சூழலிடை வீழ்ந்தேன் தொல்லையறுத் தருள்புரியாய் தொல்லரங்க முனியே. 10 7. திருவரங்கம் திருவரங்கம் என்னுயிரே திருவரங்கம் என்னுடலே திருவரங்கம் என்னுணர்வே திருவரங்கம் என்னுறவே திருவரங்கம் என்பொருளே திருவரங்கம் என்பதியே திருவரங்கம் என்னுலகே திருவரங்கம் எல்லாமே. 1 திருவரங்கந் தெய்வமெலாம் திருவரங்கம் உயிரெல்லாம் திருவரங்கம் உணர்வெல்லாம் திருவரங்கம் உலகெல்லாம் திருவரங்கங் கலையெல்லாம் திருவரங்கஞ் சமயமெலாம் திருவரங்கம் நலமெல்லாம் திருவரங்கம் எல்லாமே. 2 புனலெல்லாந் திருவரங்கம் புவியெல்லாந் திருவரங்கம் கனலெல்லாந் திருவரங்கம் காற்றெல்லாந் திருவரங்கம் கனமெல்லாந் திருவரங்கம் கதிரெல்லாந் திருவரங்கம் இனமெல்லாந் திருவரங்கம் எண்ணாயோ மடநெஞ்சே. 3 எண்ணெல்லாந் திருவரங்கம் எழுத்தெல்லாந் திருவரங்கம் பண்ணெல்லாந் திருவரங்கம் பாட்டெல்லாந் திருவரங்கம் தண்ணெல்லாந் திருவரங்கம் தமிழெல்லாந் திருவரங்கம் கண்ணெல்லாந் திருவரங்கம் கருதாயோ மடநெங்சே. 4 உன்னாயோ திருவரங்கம் உணராயோ திருவரங்கம் பன்னாயோ திருவரங்கம் பணியாயோ திருவரங்கம் துன்னாயோ திருவரங்கம் தொடராயோ திருவரங்கம் மன்னாயோ திருவரங்கம் மகிழாயோ பாழ்மனமே. 5 சொல்லாயோ திருவரங்கம் துதியாயோ திருவரங்கம் கல்லாயோ திருவரங்கம் கருதாயோ திருவரங்கம் நில்லாயோ திருவரங்கம் நினையாயோ திருவரங்கம் புல்லாயோ திருவரங்கம் புகழாயோ பாழ்மனமே. 6 நாடாயோ திருவரங்கம் நண்ணாயோ திருவரங்கம் பாடாயோ திருவரங்கம் பரவாயோ திருவரங்கம் கூடாயோ திருவரங்கம் கூப்பாயோ திருவரங்கம் ஓடாயோ திருவரங்கம் ஒடுங்காயோ பாழ்மனமே. 7 ஊனாகுந் திருவரங்கம் உயிராகுந் திருவரங்கம் வானாகுந் திருவரங்கம் வழியாகுந் திருவரங்கம் தானாகுந் திருவரங்கம் சார்பாகுந் திருவரங்கம் தேனாகுந் திருவரங்கம் தெவிட்டாது பாழ்மனமே. 8 எங்கெங்குஞ் சங்கொலியே எங்கெங்குஞ் சக்கரமே எங்கெங்குந் தண்டுளவம் எங்கெங்குந் திருமலரே எங்கெங்கும் அரியணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 9 எங்கெங்கும் பாற்கடலே எங்கெங்கும் பாம்பணையே எங்கெங்கும் அறிதுயிலே எங்கெங்குங் கோயில்களே எங்கெங்கும் அடியவரே எங்கெங்குந் திருப்பணியே எங்கெங்குந் திருவரங்கம் எங்கெங்குந் தொழநினையே. 10 8. திருவரங்கம் வாக்குமனங் கடந்தொளிரும் வாழ்த்தரிய தெய்வம் வழிஇயற்கை வடிவாகி வாழ்த்தேற்குந் தெய்வம் பாக்குலமாய்க் கலைகளெல்லாம் படர்ந்தமருந் தெய்வம் பண்ணிசையாய் எங்கெங்கும் பரந்துநிற்குந் தெய்வம் ஆக்கமெலாம் உடையதிரு அணங்ககலாத் தெய்வம் அனைத்துயிர்க்கும் அருள்புரியும் ஆனந்தத் தெய்வம் தேக்கமிர்த போதநுகர் செல்வர்தெளி தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 1 பரநாத விந்துவிலே படிந்திருக்குந் தெய்வம் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொள்ளுந் தெய்வம் உரமான நான்முகனை உந்தியளி தெய்வம் உலகுயிர்கள் அத்தனைக்கும் உறைவிடமாந் தெய்வம் வரமாகி வரமளிக்கும் வண்மையுடைத் தெய்வம் மதங்கடொறும் விளையாடி மதங்கடந்த தெய்வம் சிரமாரும் அமிர்துண்ணுஞ் சித்தருணர் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 2 நீராகி உலகீன்று நிறுத்துகின்ற தெய்வம் நித்தியமா யெங்கெங்கும் நிலவுகின்ற தெய்வம் காராகி மழைசொரிந்து காக்கின்ற தெய்வம் கதிர்க்கெல்லாம் ஒளிவழங்குங் கருநீலத் தெய்வம் நேராகி அரவெழுப்பி நிற்பவருள் தெய்வம் நிலவுபொழி அமிழ்துண்போர் நினைவிலுறை தெய்வம் சீராகி உயிர்வாழச் சிந்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 3 பத்துருவாய் கூர்ந்துநின்று பாரளிக்குந் தெய்வம் பத்தருளப் பாசமறப் பாவைகொண்ட தெய்வம் புத்தமிர்த போகமெலாம் புணர்விக்குந் தெய்வம் பூந்துளப மாலையசை புயந்திரண்ட தெய்வம் சத்தியமாய்ச் சின்மயமாய்ச் சாந்தமளி தெய்வம் சார்ந்தவர்தம் நெஞ்சினிலே தலைசாய்க்குந் தெய்வம் சித்தருளத் தேனெனவே தித்திக்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 4 மண்ணார்ந்த கோசலத்தில் மருவிவந்த தெய்வம் மரகதக்குன் றெனவளர்ந்து மனங்கவர்ந்த தெய்வம் பண்ணார்ந்த சீதைமொழி பருகியநற் றெய்வம் பற்றறுத்த முனிவரெலாம் பணிந்துமகிழ் தெய்வம் கண்ணார்ந்த தனிமுடியைக் கணந்துறந்த தெய்வம் கானவனைத் தம்பியெனக் கருணைசெய்த தெய்வம் திண்ணார்ந்த தோள்வலிக்குத் தெவ்வர்தொழுந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 5 மலையெல்லாம் வனமெல்லாம் மலர்ந்தஅடித் தெய்வம் மாரீச மான்மாயம் மாய்த்தொழித்த தெய்வம் கலைவல்ல மாருதிக்குக் காலளித்த தெய்வம் கருணைதந்தை யெனஅவர்பால் கருத்துவைத்த தெய்வம் அலைகடலைத் தாண்டியன்றே அறம்வளர்த்த தெய்வம் அரக்கர்குல வேரறுத்த ஆண்டகைமைத் தெய்வம் சிலையெல்லாம் வணங்குமுயர் சிலைதாங்குந் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 6 மன்பதையின் துயரொழிக்க மதுரைவந்த தெய்வம் மதலையாய்த் தவழ்ந்துலகை மலர்வித்த தெய்வம் அன்புநவ நீதமளி ஆயர்தவத் தெய்வம் அழகுதிரள் கருமேனி அமிர்தொழுகுந் தெய்வம் மென்புலத்திற் கோக்களொடு விளையாடுந் தெய்வம் வேதாந்த முடியினிலே விளங்குமொரு தெய்வம் தென்புலவர் பாட்டினிலே திகழ்கின்ற தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 7 சீதமலர் புன்னைநின்று செகம்விரிக்குந் தெய்வம் செவ்வாயிற் குழலூதிச் செகநிறுத்துந் தெய்வம் மாதவரே மங்கையராய் மகிழ்ந்துண்ணுந் தெய்வம் மற்றவரும் பெண்ணாக மனங்கொள்ளுந் தெய்வம் கீதையினைத் தேரிருந்து கிளர்ந்துரைக்குந் தெய்வம் கேட்டவர்க்குங் கற்றவர்க்குங் கேடழிக்குந் தெய்வம் தீதறுக்கப் பாரதப்போர் செய்வித்த தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 8 களியானை இடரழித்துக் காத்தளித்த தெய்வம் கான்முளைக்கு நலம்புரியக் கம்பம்வந்த தெய்வம் அளியாலுந் திருமகளால் அழகுவிரி தெய்வம் அகங்காரக் கொடுங்கிழங்கை அறுத்தருளுந் தெய்வம் வளையாழி வில்கதையும் வாளேந்துந் தெய்வம் மலரடியில் வண்டெனவாழ் மாண்புடையார் தெய்வம் தெளிவான மலருளத்தில் தெரிதுயில்செய் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 9 காவிரியாய்க் கொள்ளிடமாய்க் கருணைபொழி தெய்வம் கருநீல மலையாகிக் கண்கவருந் தெய்வம் பூவிரியும் பொழிலாகிப் பொங்கிவருந் தெய்வம் பொன்மாத ரொளியினிலே பொலிவு செய்யுந் தெய்வம் பாவிரித்த ஆழ்வார்கள் பத்திவிளை தெய்வம் பற்றிநின்றோர் பற்றறுக்கும் பற்றில்லாத் தெய்வம் தேவிரியும் மதில்சூழ்ந்த திருக்கோயில் தெய்வம் திருவரங்கத் தெய்வமென்று சென்றுதொழு மனமே. 10 9. சீர்காழி கோசலம் எழுந்து நீலக் குளிர்பொழி கதிரே என்றும் மாசில ருளத்தில் நிற்கும் மரகத ஒளியே செல்வக் கேசவ மணியே ஆளாய் கிளரடி வணங்க வந்தேன் வாசனை கமழுந் தெய்வ வண்டமிழ்க் காழி வேந்தே. 1 சிலையெலாம் பணியுஞ் செம்மை சிலையினை ஏந்தும் ஏந்தால் கலையெலாம் பூத்த அன்னைக் கலையினில் மூழ்குந் தோளா அலைவெலாந் தீர்க்க வேண்டி அணைந்தனன் அடியில் வீழ்ந்தேன் விலையிலா மணியே ஆளாய் விரிபொழில் காழி வேந்தே. 2 சின்னவள் சொன்ன மாற்றஞ் செவியினில் நுழைந்த போழ்தே பொன்முடி வாழ்வை நீத்துப் புங்கவர் வாழ்வைக் கொள்ள இந்நிலந் துணிந்தார் யாரே எத்தகைத் தியாகம் அந்தோ அன்னது வேட்டு வந்தேன் அருள்புரி காழி வேந்தே. 3 மன்னவர் வாழ்வை நீத்து மகிழ்ச்சியே பொங்கக் கானம் பொன்னடி வைத்த செல்வா புந்தியில் அந்தத் தாளே துன்னினால் மலரு நெஞ்சம் தூயனே கருணை செய்யாய் நன்னயப் புலவர் பாடும் நாதனே காழி வேந்தே. 4 அன்பெனும் ஆற்றி னூடே அகமெனுந் தோணி பற்றி இன்புற நின்ற வேடற் கீந்தசெம் பசுமைக் காட்சி என்றுகொல் பெறுவேன் ஏழை என்புநெக் குருகு நேய நன்மையில் புலைய னானேன் ஞானமார் காழி வேந்தே. 5 வேட்டுவர் அரக்கர் புட்கள் விலங்குகள் குரக்கி னங்கள் பாட்டவிர் மேனி கண்டு பகைமைநீத் தன்பால் வாழக் காட்டினில் நடந்த காலென் கருத்தினில் நடக்குங் கொல்லோ கோட்டமில் உளத்தார் சொல்லுங் குருமணி காழி வேந்தே. 6 அரக்கனை அன்று கொன்றாய் அணங்கினைக் காக்க வேண்டி இரக்கமே உருவாக் கொண்ட இராகவா ஏழை யேனைப் புரக்கவும் நினைப்ப தென்றோ புண்ணிய மூர்த்தி பொய்கை சுரக்குநன் செய்கள் சூழ்ந்த சுந்தரக் காழி வேந்தே. 7 ஆவியாம் அணங்கு தன்னை ஐம்புல அரக்கர் கோமான் மேவியே பற்றிக் கொண்டான் மேலவ அவனைக் கொன்று பாவியை மீட்ப துண்டோ பரமனே இராம நாதா காவிய மயில்களாடுங் கழனிசூழ் காழி வேந்தே. 8 வில்லினைத் தாங்குங் கோலம் விளங்கிழை தொடருங் கோலம் நல்லியற் பின்னோன் கோலம் நடந்தருள் கோலங் கண்டால் வல்வினை இரிந்து போகும் மனமலர் கோயி லாகும் கல்வியாய் நிறைந்த சோலைக் கற்பகக் காழி வேந்தே. 9 நங்கையின் உரிமை நாடி நாமநீர் கடந்த வீரா பங்கயம் பற்றி நாயேன் பாவையர் உரிமை நாட்டச் சிங்கமே பணிசெய் கின்றேன் திருவுள வைப்பு வேண்டும் பைந்துணர் வாகை பூண்ட பரமனே காழி வேந்தே. 10 10. தில்லை ஆண்டவனே அறமில்லா அரசியலில் விழுந்தொழிந்தேன் பாண்டவரின் வழிவளர்த்த பரமசுக அரசியலே மீண்டுமுயிர் பெறஅருளாய் மேதினியிற் கோவிந்தா நீண்டவுல களந்துறங்கும் நிழற்றில்லைப் பெருமாளே. 1 பாழான அரசியலே பார்மீது பரவிவந்தால் வாழாமல் உயிர்மடியும் வல்லிதிரு மகிழ்மார்பா சூழாமல் தகர்த்தருளாய் சுந்தரகோ விந்தாஇங் கேழான இசைவளரும் எழிற்றில்லைப் பெருமாளே. 2 கற்றவர்க ளெனும்பெயரால் காசினியி லரசியலார் செற்றமிகு புலிகரடி சிங்கமெனத் திரிகின்றார் உற்றுவருந் துயரவரால் உரைகளுக்கு மெட்டாதே சிற்றுயிருக் கிரங்கியருள் தில்லையமர் பெருமாளே. 3 கல்லூரி என்றென்றே கட்டுகின்றார் பழிபாவம் மல்லூரு நூல்களிலே மதிவளர்ச்சி பெறுகின்றார் அல்லூரு நெறியொழிக்க ஆணையென்று பிறந்திடுமோ செல்லூரும் பொழிலுடுத்த சீர்தில்லைப் பெருமாளே. 4 கொள்ளையிலுங் கொலையினிலும் கொடும்புரட்சி வெறியினிலும் உள்ளமுறும் அரசியலால் உலகுபடும் பாடென்னே தெள்ளுதமிழ்த் திருமாலே தேய்த்தருளாய் சிறுநெறியைக் கள்ளவிழு மலர்ச்சோலைக் கடிதில்லைப் பெருமாளே. 5 தேர்தலெனும் ஓரரக்கன் செகமனைத்தும் வயப்படுத்தி ஆர்கலியில் அழுத்துகின்றான் அலறுகிறார் அறிஞரெலாம் தேர்தனிலே கீதை சொன்ன திருவருளைச் செலுத்தாயோ பார்தனிலே அருள்கொழிக்கும் பழந்தில்லைப் பெருமாளே. 6 கல்வியெலாம் போருக்கே கருத்தெல்லாம் போருக்கே செல்வமெலாம் போருக்கே செய்கையெலாம் போருக்கே பல்லுலகும் போருக்கே பாழாகுங் காலமிது தொல்லையழித் தமைதியருள் துலங்குதில்லைப் பெருமாளே.7 ஒருயிரே எல்லாமென் றுரைத்தமொழி வாழ்வினிலே சீருறவே செயுங்கல்வி செவ்வரசு தொழின்மலர ஆருயிரே அருள்புரியாய் அய்யாவே கோவிந்தா ஓருருவே உண்மையொளி ஓங்குதில்லைப் பெருமாளே. 8 கல்வியிலும் வாழ்க்கையிலுங் கடைப்பட்ட தன்னலமே மல்குநெறி பரவிவரின் மாநிலமே கொலைக்களமாம் தொல்புவியைக் காத்தருளுந் தொழிலுடையாய் அருள்பொழியாய் புல்குபர நலம்வளரப் பொழிற்றில்லைப் பெருமாளே. 9 கொலையேவும் அரசியலைக் குலைத்தருளி எங்கெங்கும் நலமேவும் அரசியலே நண்ணஅருள் செய்யாயோ புலமேவு புள்ளினங்கள் புண்டரீகா எனப்புகன்றே அலையேறும் புனல்மூழ்கும் அணிதில்லைப் பெருமாளே. 10 11. திருக்கோவலூர் வெம்மையில் விழுந்த வாழ்வு விடுதலை பெறுமோ என்றே இம்மையில் ஏங்கி நின்றேன் எய்ப்பினில் வைப்பே என்னச் செம்மலே அடியில் சிந்தை சென்றது சேர வந்தேன் பொய்ம்மையில் புலவர் சூழ்ந்த புண்ணியக் கோவல் வாழ்வே. 1 உலகினை அளந்த மாலென் றுன்னிய போதே ஐயா கலகமுள் நெஞ்சம் மாறுங் காட்சியை என்னே சொல்வேன் திலகமே நெஞ்சி லென்றுஞ் சேவடி நின்றால் வெம்மை விலகியே பொன்று மன்றோ வித்தகக் கோவல் வாழ்வே. 2 விண்ணொளிப் பசுமை ஓங்கி விரிபொழிற் பசுமை நல்ல கண்ணமைப் பசுமை எங்குங் கடற்பயிர்ப் பசுமை யாழின் பண்ணளிப் பசுமை யெல்லாம் பாவியின் வெம்மை சாய்க்கும் தண்ணளிப் பசுமை யென்றே சார்ந்தனன் கோவல் வாழ்வே. 3 பச்சையே எண்ணி எண்ணிப் பாவியேன் பரிந்து வந்தேன் இச்சையுள் வேறொன் றில்லை ஈசனே அறிவா யுண்மை உச்சியிற் காலை வைத்தே ஒருமொழி உரையாய் கொல்லோ செக்கைக ளாலுஞ் சோலைச் செல்வமே கோவல் வாழ்வே. 4 வான்விடு நீலஞ் சூழ மதிவிடு நிலவு வீழ மீன்விடு நகைக ளுந்த மென்விடு தென்றல் வீசத் தேன்விடு பாண்மு ழங்கத் திரைவிடு முத்தஞ் சிந்த ஊன்விடு நிலையி லுள்ளேன் உரைவிடு கோவல் வாழ்வே. 5 எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவாய் நன்று புண்ணினிற் கோலிட் டாற்போல் புந்தியுள் நொந்து வந்தேன் கண்ணினிற் காணா யேனுங் கருத்தினில் நினைய லாமே பெண்ணையின் அலைகள் பாடும் பெருந்துறைக் கோவல் வாழ்வே. 6 பண்ணிய பாவ மெல்லாம் பரமனே அறிவாய் நன்று எண்ணியே உருகு கின்றேன் இதயமும் நைந்த தையா பெண்ணையின் வெள்ளங் கண்டேன் பேரருள் வெள்ளங் காணேன் புண்ணியந் திரண்ட செல்வப் புனிதனே கோவல் வாழ்வே. 7 உலகெலாம் நின்னில் ஒன்றும் உண்மையை உணர்த்த வேண்டி உலகெலாம் அளந்த மாயா உன்னையார் அளக்க வல்லார் அலகிலாப் பாவ நெஞ்சை அருளினால் அளந்தால் உய்வேன் சிலைசெறி பெண்ணை சூழுந் தெய்வமே கோவல் வாழ்வே. 8 கண்ணென வாழ்ந்த நண்பர் கடிமணம் பூண்டி நின்று விண்ணுயர் சிகரங் கண்டு வித்தகா விமலா என்றே எண்ணிய எண்ண மெல்லாம் இறைவனே அறிவா யன்றே தண்ணருள் செய்யாய் இன்று தமிழ்வளர் கோவல் வாழ்வே. 9 குற்றமே செய்து செய்து குறைபல உடைய னானேன் செற்றமே சிறிது மில்லாத் தெய்வமே பொறையே அன்பே உற்றனன் அடியில் வீழ்ந்தேன் உறுபிழை பொறுத்தே யாளாய் நற்றவர் நெஞ்சில் வாழும் நாதனே கோவல் வாழ்வே. 10 12. திருக்காஞ்சி பந்தாடக் குழுமிவரும் பள்ளியிளம் பிள்ளைகளே! பைந்தாரன் திருமார்பன் பவமறுக்கும் ஒருவீரன் வந்தார்க்கு வரமளிக்கும் வரதனெழுந் தருள்காஞ்சி நந்தாத மணிக்கோயில் நண்ணும்வழி சொல்லீரே. 1 குடமேந்திக் குலவிவருங் கோதில்பிணாப் பிள்ளைகளே! தடமேந்து மலர்க்கினியன் தண்டுளவம் அசைமார்பன் வடமேந்துங் காஞ்சியிலே வரதனெழுந் தருள்கோயில் இடமேந்தும் வழியுணர்த்த எழின்முத்தஞ் சிந்தீரே. 2 மட்டவிழு மலர்பறிக்க மரத்தடியிற் செறிந்தீண்டி வட்டமிடும் வளைக்கரத்து மதிநல்லீர்! வளர்காஞ்சிக் கட்டழகன் பொலமுடியன் கருணைபுரி கரிவரதன் எட்டுடையன் திருக்கோயில் ஏகும்வழி இதுவேயோ. 3 ஆலரசு வேம்பினங்காள்! அழகுதிருக் காஞ்சியிலே சீலருளும் வரதனிடம் செல்வழியோ இதுவென்று கோலமவிர் கரநீட்டிக் குறிப்பிடவே குலவுகின்றீர் பாலிமண லெனப்பொலிந்து பல்லாண்டு வாழ்வீரே. 4 புற்றரவப் பெரியீரே! புன்மையனைக் கண்டவுடன் செற்றமறு பணம்விரித்துச் செல்கின்றீர் விரைந்துமுனே கற்றவரெண் காஞ்சியிலே கரிவரதன் கோயில்வழி பற்றிநட எனவுணர்த்தும் பான்மைதனை மறவேனே. 5 செங்கமலத் தேனருந்திச் சிறுமீன்கள் விளையாடும் பொங்குமடுக் காட்சிவிட்டீர் புரிவுடனே பறக்கின்றீர் சங்குடைய வரதனமர் தனிக்கோயில் வழியிதுவென் றிங்குணர்த்தும் புள்ளரசீர்! இருங்கருணைத் திறமென்னே. 6 மணியொலிக்கப் புல்மேய்ந்து மகிழ்பசுவின் நிரைதோன்றித் தணிவளிக்கக் கோபாலா வெனத்தாழச் சிலகன்று கணமருண்டு துள்ளிவழிக் கனைத்தோடக் கவர்கண்ணில் அணிமையென வரதனுள அருட்கோயில் பூத்ததுவே. 7 செங்கொண்டை சாய்ந்தசையச் சீக்கின்ற சேவல்களே! பைங்குஞ்சு புடைசூழப் பார்க்கின்ற கோழிகளே! அங்கண்ணன் வரதனென்றே அகங்குளிரக் கூவீரே இங்குள்ளங் கவர்வரதன் என்றென்றே கூவிரே. 8 மயிலனங்காள்! ஆடீரே மால்வரத னென்றென்றே குயிலினங்காள்! கூவீரே குருவரத னென்றென்றே பயிலளிசெவ் வாய்க்கிளிகாள்! பாடீரே வரதனென்றே உயிரளிக்க வருவானோ உயர்காஞ்சிப் பதியானே. 9 திருக்குளமெல் லலையெடுப்பச் சிறுதென்றற் காற்றெறிப்பத் தருக்கணிரை நிழல்பரப்பத் தனிமைநிலை உடன்கூட அருக்கனொளி மறைந்ததுவே அகல்நிலவும் எழுந்ததுவே பெருக்கமுத வரதாவோ பேயனையாள் வரதாவோ! 10 13. திருவல்லிக்கேணி அறங்குலை நாளில் அவதரித் துலகுக் கருள்புரி ஐயனீ என்றே நிறங்கிளர் மேனி நிலவிலே மூழ்கும் நினைவொடு வந்தனன் அடியேன் மறங்கிளை மனத்தை மாற்றியே ஆளாய் மாநிலத் தேர்விடு கோலத் திறங்குல வல்லிக் கேணியிற் சிறக்குஞ் செல்வமே கல்விநா யகனே. 1 மதுரையில் முளைத்த மரகத மலையே மன்னுயிர் மகிழ்நிழல் வனமே விதுரனுக் கருள்செய் வெள்ளமே வயிற்றில் மேதினி தாங்கிய விசும்பே குதிரைகள் புனைதேர்க் குலவிய கோலக் குறியுணர் திருவெனக் கருளாய் சதுரனே அல்லிக் கேணியிற் சான்ற தந்தையே சிந்தைநா யகனே. 2 தொன்மையில் மிகுந்த துவரையை யாண்ட சோதியே சுடர்விளக் கொளியே பன்மையில் மயங்கும் பாரினில் ஒருமைப் பார்வையே பெறுநிலை விழைந்தேன் நன்மையே புரிய நாதமாந் தேரை நடத்திய வள்ளலே அருளாய் மென்மையு ளல்லிக் கேணியில் மேவும் மேலவா சீலநா யகனே. 3 அலைகடற் றுயிலும் அற்புதக் காட்சி ஆனிரை சூழ்தரு காட்சி மலைகுடை பிடிக்கும் மாண்புறு காட்சி மரத்தினிற் குழலிசை காட்சி சிலைகளி னிடையே தேர்விடுங் காட்சி சிறியனேற் கருள்செய மனமோ கலைவள ரல்லிக் கேணியி லமர்ந்த கண்ணனே வண்ணநா யகனே. 4 அம்புகள் பொழியும் அமரிடைத் தேரில் அருச்சுனற் கருளினை உண்மை அம்புவி யதனில் அகத்தினைச் செலுத்த அமைதியே எங்கணும் ஓங்க ஐம்புலன் அடங்க ஆருயிர் மகிழ அருள்புரி ஆண்டகை அரசே வம்புறை அல்லிக் கேணியில் வாழும் வள்ளலே உள்ளநா யகனே. 5 பண்டைநாள் நிகழ்ந்த பாரதப் போரே பாவியேன் மனத்தினில் நிகழக் கண்டவா றென்னே கண்ணநின் கீதை காதிலே கேட்டவா றென்னே தொண்டனேன் நெஞ்சிற் றுணையடி கிளந்து தோன்றுமா றுளதுகொல் அறியேன் அண்டனே அல்லிக் கேணியி லமர்ந்த ஆதியே சோதிநா யகனே. 6 புன்னையில் நின்று புங்கவா இசைத்த புல்குழல் ஓசையை மடுத்த மன்னுயிர் வகைகள் மரமென நின்று மகிழ்ச்சியில் மலர்ந்தன வன்றே சின்னவ னந்தச் செவ்வொலி பருகச் சிந்தைகொண் டணைந்தனன் அருளே நன்னய அல்லிக் கேணியில் நண்ணும் நாதனே ஆதிநா யகனே. 7 உலகெலாம் நீயாய் ஓங்கிய உருவை ஓதியோ காணுதல் இயலும்! பலகலை விடுத்துப் பார்த்தசா ரதியாய்ப் படிந்தநின் வடிவினிற் படிந்தால் இலகிடும் அருளென் றெண்ணியே வந்தேன் ஈசனே அடியனை யாளாய் திலகமே அல்லிக் கேணியிற் றிகழும் தெய்வமே மெய்ம்மைநா யகனே. 8 செயற்கையில் விழுந்த சிந்தையர்க் கெட்டாச் செல்வமே உன்னடி அடைந்தேன் இயற்கையின் உயிரே ஏழிசை அமுதே எந்தையே எளியனை ஆளாய் பயிற்சியில் மிகுந்தோர் பாவனை அறியேன் பாவியேன் பார்த்தசா ரதியே அயர்ச்சியி லல்லிக் கேணியி லமர்ந்த அத்தனே பத்திநா யகனே. 9 தேரினி லிருந்த தெய்வமே கீதை செப்பிய தேசிகா உன்னை நேரினிற் காணும் நிலைமையு முண்டோ நீசனேற் கருள்செய லுண்டோ பாரினில் வேறு களைகணு மில்லேன் பார்த்தருள் பார்த்தசா ரதியே சீரிய வல்லிக் கேணியிற் சிறக்குஞ் சித்தனே முத்திநா யகனே. 10 14. திருவல்லிக்கேணி பள்ளியிலே யான்படித்த பருவமதி லுன்றன் பசுங்கோயில் வலம்வருவேன் பத்திவிளை வாலே தெள்ளறிவோ தீவினையோ சிதைந்ததந்தப் பத்தி திறமறியேன் சிறுமதியேன் செய்வதொன்று மறியேன் உள்ளநிலை பண்படவோ ஒருவழியுங் காணேன் உன்னடியி லுடும்பாகி உருகியழு கின்றேன் கள்ளவிழு மலர்த்தருவே கரியமணிக் குன்றே கருணையல்லிக் கேணிமகிழ் கடவுளருள் புரிவே. 1 கடலாடி வலம்வந்து கைதொழுவேன் கோயில் கமலமுகங் கண்டுகண்டு கசிந்துருகி நிற்பேன் படலாடும் அரசியலால் பத்திமனம் போச்சே பரமநின்றன் அரசியலைப் பரப்பமனங் கொண்டேன் உடலாடும் வேளையுறின் உளமாடு மன்றோ உளமாடி வாழஇங்கே ஒருகணமுந் தரியேன் மடலாடும் பாவையர்தம் மனம்பெறினோ உய்வேன் மலரல்லிக் கேணிமகிழ் மணவாளா அருளே. 2 கோலமிகு கோயில்வலங் கொண்டுவந்த போது கோதிலுரு நின்றுநின்று குவிந்தமனப் பண்பால் காலையிலே விழித்தவுடன் கண்ணிலுறு மன்றோ காயாம்பூ மேனியனே கமலவிழி மணியே சோலையிலே விளையாடிச் சோர்ந்தமரும் வேளை தூயவுரு எதிருலவுந் தோற்றமுறு மன்றோ வேலையொலி வேதவொலி விரவுமல்லிக் கேணி வித்தகனே அந்நிலையும் வீழ்ந்ததருள் செய்யே. 3 அந்நாளில் கோயில்புகுந் தகங்கொண்ட உருவம் ஆழ்வார்க ளந்தமிழில் அமர்ந்திருக்கும் அழகு பின்னாளில் புலனாகும் பேறுபெற்றே னருளால் பிரியாம லியற்கையிலே பின்னிநிற்கும் பெற்றி இந்நாளில் இசையரசே இனிதுணரச் செய்தாய் எல்லாநின் னருட்செயலே ஏழைஎன்ன அறிவேன் எந்நாளி லொளிகாண்பேன் ஏகாந்தம் பெறுவேன் எழிலல்லிக் கேணிவளர் எந்தைபெரு மானே. 4 வான்பொழியு நீலமதில் வளர்ந்துநிற்கு நெஞ்சம் மழைபொழியுங் கருமையிலே மகிழ்ந்துநிற்கு நெஞ்சம் கான்பொழியும் பசுமையிலே கலந்துநிற்கு நெஞ்சம் கடல்பொழியும் வண்ணமதில் களித்துநிற்கு நெஞ்சம் தேன்பொழியு மேனியென்றே திருமருவு மார்பா தெளிந்தொன்றின் சாந்தமெனுந் தெய்வநிலை யுறுமே ஊன்பொழியும் உடலுளமும் ஒளியமுதம் பெறுமே ஓங்கல்லிக் கேணியமர் உத்தமச்சின் மயமே. 5 கண்கவரும் புன்னைநிழல் காலடிவைத் துலவிக் கனிவாயிற் குழல்பொருத்திக் கானஞ்செய் கருணை எண்கவர ஏங்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் இசையமுதம் உண்டவர்கள் இனியஅணங் கானார் புண்கவரு மனமுடையேன் புந்திநினை யாயோ போரிடைத்தேர் விடுத்தன்று புனிதமறை சொன்னாய் விண்கவரு மாடஞ்சூழ் வீதிமலி செல்வம் மேவுமல்லிக் கேணிவளர் வேதாந்தப் பொருளே. 6 கரும்போர்வை அணிகழற்றிக் கறையில்லாப் போர்வை கருணையினா லெனக்களித்தாய் கறைப்படுத்தி விட்டேன் இரும்போடு மனக்குறும்பால் இழைத்தகறை போக்கி எழில்வெண்மை யாக்கிநிற்கும் ஏழைமுகம் பாராய் அரும்போடும் இளம்பருவம் அருளிஎன்னை ஆளாய் அருச்சுனற்குக் கீதைசொன்ன அறவாழி அரசே சுரும்போது மலர்ப்புன்னைச் சோலைநிழல் செய்யும் தூயஅல்லிக் கேணிமகிழ் சுந்தரநா யகனே. 7 அழுக்ககற்றி வெள்ளையுடை அணிந்துகொண்டேன் ஐயா அன்புளத்தால் மாலையிட்டால் அருள்வழிநின் றுய்வேன் வழுக்கிவிழும் வழிமறையும் வாழ்வுபெற லாகும் மதங்களெலாம் மறைகளெலாம் வழுத்துகின்ற மணியே இழுக்குடைய நெறிசெலுத்த எந்தைதிரு வுளமோ எழிலுடையுங் கறைப்பட்டால் ஏழைஎன்ன செய்வேன் செழிக்குமலர்ப் புன்னைநிழல் சீரடிவைத் துலவும் திருவல்லிக் கேணியமர் செல்வப் பெருமாளே. 8 புன்னையிலே கனிவாயிற் பூங்குழல்வைத் தூதப் புங்கவரும் மங்கையராய்ப் புத்தமிர்தம் உண்டார் அன்னையினுந் தயையுடையாய் ஆணுருவில் யானும் அணங்குமனம் பெற்றுவந்தேன் அரிமாலை யணிந்தால் மன்னருளில் திளைத்துநிற்பேன் மயக்கநெறி வீழேன் மதங்கடொறும் ஒளிசெய்யும் மாதவனே என்றுங் கன்னிமொழித் தமிழ்க்கவியில் கருத்துடைய அரைசே கருணையல்லிக் கேணியமர் கரியபெரு மாளே. 9 எண்ணாத எண்ணமெலாம் எண்ணியெண்ணி ஏங்கி ஏழைபடுந் துன்பமெலாம் எந்தையறி வாயே பெண்ணாகி முனிவரெல்லாம் பெற்றுவிட்டார் பேறு பெண்ணினத்தி லெனைச்சேர்த்தால் பேறெல்லாம் பெறுவேன் கண்ணாரக் காணவுனைக் கருத்தார நினைத்துக் கங்குல்பக லுருகுகின்றேன் கமலமுகக் கண்ணா விண்ணாடும் மண்ணாடும் வேதமொழி யாலே விளம்புமல்லிக் கேணியுள வித்தகமெய்ப் பொருளே. 10 15. திருவல்லிக்கேணி உலக மெல்லா மொருமையிலே ஒன்றின் துயருக் கிடனுண்டோ கலகப் பன்மை மனம்வீழ்ந்தால் கருணை யுலகொன் றேவிளங்கும் அலகில் ஒளியே அன்புருவே அந்த நிலையை அருள்புரியாய் இலகும் அல்லிக் கேணியமர் எந்தை பார்த்த சாரதியே 1 சாதி மதங்கள் தலையெடுத்தே தரணி யழிக்கும் நிலையறிவாய் நீதி நெறிகள் குன்றிவரல் நிமலா அறிவாய் இடர்களையாய் ஆதி யந்த மில்லாத அரசே அன்பே ஆண்டகையே சோதி அல்லிக் கேணிமகிழ் சுகமே பார்த்த சாரதியே. 2 பெண்க ளுரிமை பாழாச்சே பேயா யுலகம் அலைவாச்சே கண்க ளிரண்டி லொன்றற்றால் கருமம் நன்கு நடைபெறுமோ மண்கண் கூர வந்தவனே மகளிர் வாழ்வு தந்தவனே பண்ணின் மொழியார் துயர்களையாய் பழமைக் கேணிப் பெருவாழ்வே. 3 மண்ணைப் பொன்னை மங்கையரை மாயை யென்றே சிலர்கூடிக் கண்ணில் நூல்கள் எழுதிவைத்தார் கருணை யற்ற மனத்தாலே மண்ணில் பொன்னில் மங்கையரில் மாயா நின்றன் ஒளியிலையோ பண்ணில் நெறிகள் அழியஅருள் பரமா அல்லிக் கேணியனே. 4 உலக வாழ்வு உனையுணர்த்தும் உயர்ந்த கருவி யெனுமுண்மை இலகிப் பரவ வேண்டுகின்றேன் இனிய கருணை நெறிவாழ அலகி லழகு மருமார்பா அன்பை வளர்க்கும் அருள்மனமே திலக மென்னத் திகழ்சோதி தெய்வ அல்லிக் கேணியனே. 5 உலகம் நீயென் றுயிர்நீயென் றுவந்த வாழ்வில் தலைப்பட்டால் கலக மெல்லாம் பாழாகிக் கனிவே எங்குங் கால்கொள்ளும் விலகுந் துறவுக் கிடனுண்டோ வேந்தே இயற்கை நெறியோம்பாய் நிலவுங் கதிருங் கரங்கொண்ட நிமலா அல்லிக் கேணியனே. 6 வாழ்வை நின்றன் வழிநிறுத்தின் வலிய மாயை என்செய்யும் பாழ்பட் டொழியும் படராதே பழைய வினையும் நில்லாதே தாழ்வும் உயர்வும் அற்றழியும் சமமே எங்கும் இனிதோங்கும் காழ்வில் பொருளே அருள்புரிவாய் கருணை அல்லிக் கேணியனே. 7 சின்ன வயதில் நினைத்தவெலாம் சிறக்க அளித்தாய் பெரியோனே பின்னே அந்தப் பேறிழந்தேன் பேயேன் பிழையை யுன்னியுன்னி முன்னே நின்று முறையிட்டு முதல்வா என்றே அழுகின்றேன் என்னே செய்வேன் எனைஆளாய் எழிலா ரல்லிக் கேணியனே. 8 அரவில் துயிலும் அன்புடைமை அறிந்தே அணைந்தேன் திருவடியைக் கரவு மலிந்த அரசியலில் கலந்தே கெட்டேன் ஐயாவே இரவும் பகலு மில்லாத இடத்தில் நின்றுன் அரசியலைப் பரவச் செய்ய அருள்புரிவாய் பரமா அல்லிக் கேணியனே. 9 வெண்மை மதியில் இளஞ்சேயில் விரிந்த மலரில் நறும்பாட்டில் பெண்மை அமிழ்தில் அறவோரில் பெருமை பிறங்க வைத்தனையோ நண்ணும் பொழுதே நின்னினைவு நயமா யெழுத லென்னேயோ கண்ணே மணியே கமலமலர்க் கண்ணா அல்லிக் கேணியனே. 10 16. திருமலை வாழி ஏழு மலையென்றும் வாழி ஏழு மேகங்கள் வாழி ஏழு நிறவழகு வாழி ஏழு நாள்முறையே வாழி ஏழு இசைவகையே வாழி ஏழு மூலங்கள் வாழி ஏழு முனிவரர்கள் வாழி ஏழு மலைவாழி. 1 வெல்க ஏழு மலையொளியே வெல்க ஏழு மலைநாதம் வெல்க ஏழு மலைக்கொடியே வெல்க ஏழு மலைவாகை வெல்க ஏழு மலைவீரம் வெல்க ஏழு மலைநேயம் வெல்க ஏழு மலைவளமே வெல்க ஏழு மாமலையே. 2 போற்றி ஏழு மலையடிகள் போற்றி ஏழு மலைமார்பம் போற்றி ஏழு மலைத்தோள்கள் போற்றி ஏழு மலைவிழிகள் போற்றி ஏழு மலைவளையே போற்றி ஏழு மலையாழி போற்றி ஏழு மலைவில்லும் போற்றி ஏழு மலைப்புகழே. 3 சேரும் ஏழு மலைகாணச் சேரும் ஏழு மலைநண்ணச் சேரும் ஏழு மலைவணங்கச் சேரும் ஏழு மலைவாழ்த்தச் சேரும் ஏழு மலைஎண்ணச் சேரும் ஏழு மலைசுற்றச் சேரும் ஏழு மலைவாழச் சேரும் ஏழு செகத்தீரே. 4 ஊனும் உயிரும் ஏழுமலை உணவுஞ் சார்பும் ஏழுமலை கானும் மலையும் ஏழுமலை கடலும் வயலும் ஏழுமலை வானும் வளியும் ஏழுமலை மதியுங் கதிரும் ஏழுமலை கோனுங் குடியும் ஏழுமலை கூறாய் ஏழு மலையென்றே. 5 எண்ணும் எழுத்தும் ஏழுமலை எல்லாக் கலையும் ஏழுமலை பண்ணும் இசையும் ஏழுமலை பாட்டும் பொருளும் ஏழுமலை கண்ணும் மணியும் ஏழுமலை கருத்தும் ஒளியும் ஏழுமலை நண்ணும் நண்ணும் ஏழுமலை நாதன் ஏழு மலையென்றே. 6 மண்ணும் பரலுங் கூர்ங்குண்டும் வலிய அறையும் வளருமலை தண்மைப் புல்லும் செடிகொடியும் தழைக்குங் காவும் வளருமலை நுண்மைப் புழுவும் நந்தரவும் நுழையும் உடும்பும் வளருமலை வண்டும் புறவும் மயில்குயிலும் வளரும் ஏழு மலைதானே. 7 ஏனங் கரடி புலியானை எருதா குரங்கும் வளருமலை ஊனர் தேனர் உரவோர்கள் உறவோர் உம்பர் வளருமலை கானர் சித்தர் பத்தரொடு காணர் புத்தர் வளருமலை மான யோகர் ஞானியர்கள் வளரும் ஏழு மலைதானே. 8 மூல ஒலியாய் முழங்குமலை முதலின் எழுத்தாய் முகிழ்க்குமலை காலிற் பாம்பாய் எழும்புமலை கனக ஒளியாய் எரியுமலை நீல நிறங்கால் நிமலமலை நெஞ்சில் அமுதம் பொழியுமலை சீல உருவாய்த் திகழுமலை சிந்தை செய்யாய் திருமலையே. 9 சிரமே வணங்காய் ஏழுமலை செந்நா வழுத்தாய் ஏழுமலை கரமே கூப்பாய் ஏழுமலை கண்ணே பாராய் ஏழுமலை உரமே சூழாய் ஏழுமலை உணர்வே ஒன்றாய் ஏழுமலை வரமே நல்கும் ஏழுமலை வாழாய் ஏழு மலையென்றே. 10 17. திருமலை பனிவரையை முடிகொண்ட பரதமெனுந் திருநாட்டில் கனிமொழியின் எல்லையிலே காவல்புரி கற்பகமே இனிமைவிருந் துணவிழைந்தேன் எழுமுயற்சிக் கிடனிலையே சனிநகர வாழ்வதற்குத் தடைபுரிதல் கண்டருளே. 1 என்னபாவஞ் செய்தேனோ எவ்வுயிரை ஒறுத்தேனோ தொன்மலையில் வீற்றிருக்குந் துளவமணி பெருமாளே உன்னருளைப் பெறவேண்டி உழைக்கஎழும் முயற்சியெலாம் சின்னநகர் தகைந்திடுதல் திருவுள்ளம் அறியாதோ. 2 அருவிநிறை வேங்கடத்தில் அமர்ந்தருளும் பெருமாளே திருவடியே நினைந்திருந்தால் சிந்தனையில் சாந்தமுறும் கருவினிலே உயிரழிக்குங் கருணையிலா யமபடர்சூழ் பெருமையிலா நகர்வாழ்வைப் பெயர்த்தருள வேண்டுவனே. 3 சாக்கடையும் மலஅறையும் தார்ததும்பும் பாதைகளும் மாக்கிளரும் பொழிலணியா மாளிகையும் பிணிப்படையும் பாக்களிலே உனையுணரும் பகுத்தறிவை ஓம்பாவே தேக்கமுத முனிவர்தொழுந் திருமலையின் மெய்ப்பயனே. 4 சிற்றறையில் பலமாந்தர் சேர்ந்துறங்கிச் சாகின்றார் கற்றலிலா நகர்வாழ்வைக் கண்டுமனம் நொந்துடைந்தேன் செற்றமெழுப் பவ்வாழ்வைச் சிதைத்தருள வேண்டுகின்றேன் உற்றதுயர் களைஇறையே ஓங்குமலைப் பெருவாழ்வே. 5 அருகனொளி படராத அறைநிறைந்த மாடிகளில் உருக்களென எலும்புலவும் உயிர்ப்பில்லா நகரங்கள் திருக்குலவு மணிமார்பா திருவடியைச் சிந்திக்கும் பெருக்களிக்கும் வாழ்வழித்துப் பேயாக்கல் நலமேயோ. 6 மின்சார விளக்கொளியில் மின்னுகின்ற பாவையர்கள் பொன்சார மிழந்திருமும் புகைமாடி நிறைநகரில் உன்சாரம் படிவதெங்ஙன் உயிர்ப்பருளும் மலைக்கரசே தென்சாரம் படிசோலைத் திருநகர வாழ்வருளே. 7 மெய்யழிக்கும் பள்ளிகளும் மின்விளக்கு நாடகமும் பொய்வளர்க்கும் மன்றுகளும் பொருந்தாத உணவிலமும் வெய்யமலச் சிக்களித்து வேதனைசெய் நகரிடையே ஐயஉனைச் சிந்திக்கும் அமைதிநிலை கூடிடுமோ. 8 அன்பழிக்குஞ் சட்டதிட்டம் அலைக்கின்ற நகரங்கள் துன்பளிக்கும் எரிநரகாய்த் துயருழற்று மிந்நாளில் இன்பநெறி கடைப்பிடித்தல் எளியவருக் கியலுங்கொல் மன்பதையைக் காத்தருள மலைகொண்ட பெருமாளே. 9 ஏழுமலை பணிதலையும் ஏழுமலை சொலும்வாயும் ஏழுமலை நினைமனமும் எழும்வாழ்வைத் தகைந்துநிற்கும் பாழுநகர் படவருளாய் பார்த்தனுக்குக் கீதைசொன்ன தோழனென உனையடைந்தேன் தூயதிரு மலைக்கொழுந்தே.10 18. திருமலை ஏழுமலை ஏழுமலை என்றெண்ணி வந்தேன் ஏழுமலை ஏழுமலை என்றடியார் முழங்கும் ஏழுமலை ஒலியினிலே ஈடுபட்டு நின்றேன் ஏழுமலை அதிசயத்தை என்னவென்று சொல்வேன் ஏழுமலை கழகமென எனையாண்ட தம்மா இளமையிலே அக்கழகம் எளியன்பயின் றிருந்தால் ஏழுமலை வடிவான எந்தைபெரு மானே இப்பிறவிப் பேறுபெற்றே ஏழையுயிர் உயுமே. 1 ஏழுமலை ஏழுமலை என்றுகதிர் பொழிய ஏழுமலை ஏழுமலை என்றுவிசும் பார்ப்ப ஏழுமலை ஏழுமலை என்றுவளி உலவ ஏழுமலை ஏழுமலை என்றுகனல் மூள ஏழுமலை ஏழுமலை என்றுபுனல் விம்ம ஏழுமலை ஏழுமலை என்றுநிலந் தாங்க ஏழுமலை ஏழுமலை என்றுயிர்கள் வாழ ஏழுமலை அருள்புரியும் இனிமையுணர் வேனோ. 2 ஏழுமலை ஏழுமலை எனப்பணியாய் தலையே ஏழுமலை ஏழுமலை எனநோக்காய் விழியே ஏழுமலை ஏழுமலை எனமுரலாய் மூக்கே ஏழுமலை ஏழுமலை எனஇசையாய் நாவே ஏழுமலை ஏழுமலை எனக்கேளாய் செவியே ஏழுமலை ஏழுமலை எனநினையாய் நெஞ்சே ஏழுமலை ஏழுமலை எனக்கூப்பாய் கையே ஏழுமலை ஏழுமலை எனச்சூழாய் காலே. 3 பரிதிமதி ஒளிபொழியப் படர்காற்று வீசப் பளிங்கருவி முழவொலிக்கப் பாம்புமயி லாடக் கரிகரடி புலிமான்கள் காட்டாக்கள் சூழ்ந்து கலந்துகலந் தொன்றிமனங் கசிந்துகசிந் துருக வரிசிறைகள் யாழ்முழக்க வான்பறவை பாட மரக்கரங்கள் மலர்தூவ மாந்தர்தொழ அருளும் அரிதிருமால் நாரணனே அணங்குவளர் மார்பா அடியடைந்தேன் களைகணிலை ஆண்டருளாய் அரைசே. 4 வான்பசுமை தவழ்பொழிலின் வளர்பசுமை போர்த்த மலைமுடியில் பசுமைவிரி மணிக்கொழுந்தே அமுதே கோன்பசுமை நாணாளுங் குலைந்துகுலைந் திறுகக் குடிப்பசுமை வழிவழியே குன்றிவிட்ட தந்தோ ஊன்பசுமை உளப்பசுமை உயிர்களிழந் தாலோ உலகிலுன்றன் இயற்கைநெறி ஓங்கஇட முண்டோ தேன்பசுமைத் துளவமணி தெய்வத்திரு மார்பா சீவருய்யப் பசுமையருள் செல்வப்பெரு மாளே. 5 மரத்தடியில் வீற்றிருந்தாய் மதிலெடுத்துச் சில்லோர் மாளிகைகள் கோபுரங்கள் மடங்கள்பல வகுத்தார் சிரத்தையுடன் அன்பர்குழு சேர்ந்தஇட மெல்லாம் சிறுமைமுழை ஆயினவே செயற்கைவெம்மை என்னே வரத்தையருள் இயற்கைநெறி வளர்வதெங்ஙன் ஐயா மந்திவிளை யாடிமகிழ் மரஞ்செறிந்த மலையில் கரத்தினிலே ஆழிகொண்டு காக்கின்ற அரசே காசினியோர் உய்யும்வழி கருணைபுரி யாயோ. 6 சாதியிலாச் சந்நிதியில் சாதிநுழை வாச்சே சட்டமிலா முன்னிலையில் சட்டம்புக லாச்சே நீதிநிலை திருமுன்னே நீதிவிழ லாச்சே நிறைசிறந்த இடமெல்லாம் நிறைசிதைய லாச்சே ஆதிநெறி மீண்டுமிங்கே ஆக்கம்பெற லுண்டோ ஆழ்வார்தம் தமிழ்மறையை ஆலயமாக் கொண்ட சோதிமலை முடியரசே சுதந்திரமே நிலவும் தூயவெளி ஒளியினிலே சூழஅருள் செய்யே. 7 இயற்கையிறை நீயென்னும் எண்ணமிலார் சூழ்ந்தே எத்தனையோ செயற்கைவினை இயற்றுகிறா ரந்தோ பயிற்சியிலார் புன்பொருளைப் பரப்புகின்றார் முன்னே பாராதி அண்டமெலாம் பரமநின தலவோ முயற்சியுள முனிவர்வழி முன்னாளில் வளர்ந்த முத்திநெறி வளம்பெறவே முதற்பொருளே அருளாய் குயிற்குரலும் மயில்நடமும் குரங்குவிளை யாட்டும் கோபாலா எனுமுழக்குங் குலவுமலைக் கொழுந்தே. 8 ஏழுமலை மீதிருக்கும் ஏழிசையின் பயனே ஏழைமுகம் பாராயோ எத்தனைநாட் செல்லும் வாழுமலை என்றுவந்தேன் வாழ்வுபெற வேண்டி வழியறியேன் துறையறியேன் வாழ்த்தும்வகை யறியேன் ஆழநினைந் தழவறியேன் அவனியிலேன் பிறந்தேன் ஆண்டகையே என்னசெய்வேன் ஆதரிப்பா ரிலையே வேழவினக் களிகண்டு வெருவுகின்றேன் ஐயா விசயனுக்குக் கீதைசொன்ன வேதாந்தப் பொருளே. 9 நற்பிறவி எனக்களித்தாய் நல்லுடலுந் தந்தாய் நானிலத்தில் வாழ்ந்துனது நளினமலர் மேவச் சிற்பரம வீணுரையால் சிதைத்துவிட்டேன் உடலைச் சீருடலை மீண்டும்பெறச் சித்தநெறி அறியேன் எற்புருகத் தவங்கிடக்க என்னுடலந் தாங்கா எங்குமுள இறையோனே என்றனிலை யுணர்வாய் வெற்பினிலே மங்கைமகிழ் வேந்தனென வந்தேன் வேதனைகள் தீர்ந்துய்ய வேங்கடவா அருளே. 10 19. நாமாவளி நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 1 நாரண நாரண நாரணனே நாரண நாரண நாரணனே 2 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 3 நாரண நாரண கோவிந்தா நாரண நாரண கோவிந்தா 4 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 5 நாரண கோவிந்த கோவிந்தா நாரண கோவிந்த கோவிந்தா 6 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 7 கோவிந்த கோவிந்த கோவிந்தா கோவிந்த கோவிந்த கோவிந்தா 8 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 9 கோவிந்த கோவிந்த கோபாலா கோவிந்த கோவிந்த கோபாலா 10 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 11 கோவிந்த கோபால கோபாலா கோவிந்த கோபால கோபாலா 12 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 13 கோபால கோபால கோபாலா கோபால கோபால கோபாலா 14 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 15 கோபால கோபால கோவிந்தா கோபால கோபால கோவிந்தா 16 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 17 கோபால கோவிந்த கோவிந்தா கோபால கோவிந்த கோவிந்தா 18 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 19 கோபால கோவிந்த நாரணனே கோபால கோவிந்த நாரணனே 20 மனத்துக் கெட்டா மாதவனே மரணந் தவிர்ப்பாய் கேசவனே 21 எங்கு முள்ள இறையோனே என்னை ஆளாய் மறையோனே 22 உருவா யருவா யுளபொருளே உவந்தே குருவாய் வந்தருளே 23 எதற்கும் எதற்கும் காரணனே அதற்கும் அதற்கும் பூரணனே 24 வைகுந்த வாசா வாவா வண்மைத் திருவொடு வாவா 25 கமலத் திருவொடு வாவா கருடக் கொடியொடு வாவா 26 அடியவர் சூழ வாவா அணைந்தருள் புரிய வாவா. 27 பொன்னொளி மின்னும் முடியோனே பொருளென வந்தேன் அடியேனே 28 கமலக் கண்ணால் கருணைபொழி களைத்தே வந்தேன் இருளையொழி. 29 மலர்மகள் மார்பா வந்தேனே மனத்திற் பொழியாய் செந்தேனே. 30 சக்கரம் நோயை அழிப்பதுவே சங்கொலி சாவை ஒழிப்பதுவே. 31 நீலமேனி நிலவினிலே நித்தம் மூழ்கு நலமினியே. 32 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 33 திருவடி திருவடி ஆனந்தம் திருவடி திருவடி ஆனந்தம் 34 ஒளியுறு திருவடி உருகாயோ ஒழுகுந் தேனைப் பருகாயோ 35 செந்தேன் பொழியுந் திருவடியே சிந்தையிற் சேர்ந்தால் போமிடியே 36 திருவடி சேர நினையாயோ செகத்தில் வாழ்வை வனையாயோ 37 கோசலம் வந்த கோமானே கோதண்ட மேந்திய பூமானே 38 நங்கை யுரிமை காத்தவனே நான்மறை போற்றும் மூத்தவனே 39 சோதர நேயப் பிறப்பிடமே சுந்தர மேனி அறப்படமே 40 மதுரையி லெழுந்த வான்மணியே மாதவர்க் கருளிய மேன்மணியே 41 தேரிடைப் பொலிந்த திருக்காட்சி தெய்வ மறைசொல் அருட்காட்சி 42 ஆக்க ளிடையே நின்றனையே ஆளாய் ஆளாய் என்றனையே 43 புன்னை முழங்குங் குழலோசை புந்தியி லுணர எனக்காசை. 44 கீதை குழலாய்க் கேட்ட லென்றோ கீழோன் வினைகள் வீட்ட லென்றோ 45 இனியகுழலைக் கேட்பதுவே இரவும் பகலும் வேட்பதுவே 46 பிழையைப் பொறுக்கும் பெரியோனே பிழைபல செய்தேன் சிறியேனே 47 கண்ணன் திருப்புகழ் பாடுவமே காதல் இன்பம் ஆடுவமே 48 கண்ணன் திருவடி சூடுவமே கருணை மழையில் ஆடுவமே. 49 கடலை மலையைப் பாருங்கள் கண்ணன் காட்சி ஓருங்கள் 50 கரிய மேகங் காணுங்கள் கண்ணன் வடிவம் பேணுங்கள். 51 சோலைக் கலையைச் சூழுங்கள் சோதி அலையில் வீழுங்கள் 52 எல்லாம் கண்ணன் திருக்கோலம் என்றுணர் அன்பே உருக்கோலும். 53 ஆழ்வார் தமிழில் ஆழ்வோமே அன்பில் என்றும் வாழ்வோமே. 54 20. வாழ்த்து திருமகள் வாழ்க வாழ்க தெய்வஐம் படைகள் வாழ்க தெருளளி துளவம் வாழ்க செழுங்கொடி வாழ்க வாழ்க கருநிறம் வாழ்க வாழ்க கருணைசேர் அடியார் வாழ்க திருமலை முதலா வுள்ள திருப்பதி பலவும் வாழ்க. திரு.வி.கலியாண சுந்தரனார் பாடிய திருமால் அருள் வேட்டல் முற்றிற்று  முன்னுரை இக்கால உலகம் எப்படி இருக்கிறது? எங்கணும் என்ன பேச்சு? விளக்கம் வேண்டுகொல்! வீடுகளில் வேற்றுமை - ஊர்களிற் பிரிவு - நாடுகளிற் பிணக்கு - யாண்டும் உறுமல் - கறுவல்! இவையெல்லாம் உருண்டு திரண்டு உலகைப் போர்க்களமாக்கிவிட்டன. ஐந்து கண்டமும் போரிலே மூழ்கியுள்ளன. இந்நிலைமை எப்பொழு தேனும் நேர்ந்ததுண்டோ? விலங்குச் சண்டையிலாதல் அறக்கடவுளுக்கு இடமிருக் கும். இக்கால மனிதச் சண்டையில் அறக்கடவுளுக்கு இட முண்டோ? உலகம் விரிந்தது; பரந்தது; பெரியது; மிகப் பெரி யது. பெரிய உலகில் அறக்கடவுள் தலைசாய்ப்பதற்கு ஒரு சிறு இடமுமில்லை! மன்பதை அலமருகிறது; நடுக்குறுகிறது; குண்டு குண்டு என்று கூக்குரலிடுகிறது; அங்கும் இங்கும் ஓடுகிறது; அலை கிறது; மடிகிறது. இந்நிலையில் புது உலகம் அறிஞரால் பேசப் படுகிறது. மன்பதை கேடுற்று அழிவதற்குக் காரணம் என்னை? ஒவ்வோர் உலகினர் ஒவ்வொன்று கூறுவர். அவற்றைத் திரட்டிப் பார்த்தால், அவை யாவும் ஒன்றில் அடங்குதல் காணலாம். அவ்வொன்று, மக்கள் கூட்டம் இயற்கை இறையை மறந்து, தன்னலம் என்னுஞ் செயற்கைப் பேய்க்கு இரையா யினமை என்று சுருங்கச் சொல்லலாம். மக்கள் கூட்டம் இயற்கை இறைவழி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்படி ஒழுகுகிறதா? ஒழுகியிருப்பின், உலகில் சாம்ராஜ்யமே முளைத்திராது; பொதுமை அறமே முகிழ்த் திருக்கும். சாம்ராஜ்ய முறை மாறவேண்டுமானால் மனிதரிடத் துள்ள குறைபாடுகள் நீங்குதல் வேண்டும்; சில குறைபாடுகளா தல் நீங்குதல் வேண்டும். இங்கே, சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அது, தன்னலத்துக்கு முதலாக உள்ள ஆசைப்பேய். ஆசைப்பேய் இப்பொழுது என்ன செய்கிறது? உயிர்களை அலைக்கிறது; உலகைப் பெரும் போர்க் களமாக்கி யிருக்கிறது; அரக்கரும் அஞ்சும் நிணக்களமாக்கி யிருக்கிறது. இப்போர், முடிவில் ஆசைப்பேயை ஓரளவிலாதல் அடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆசைப் பேய் அடங்க அடங்க ஒருவிதப் புது உலகம் அவ்வவ்வளவில் அரும்பிக்கொண்டே போகும். புதுமை உலகம் யாண்டிருந்து பிறக்கும்? வெறும் பாழிலிருந்தா பிறக்கும்? பழமைத் தாயினிடமிருந்து புதுமைச் சேய் பிறக்கும்? பழமை எது? இயற்கை இறைவழி. இவ்வழியி னின்றும் இக்கால உலகம் வழுக்கி வீழ்ந்துள்ளது. வீழ்ச்சியைப் போக்கவே இயற்கை இறை விரைந்து நிற்கிறது. இஃது அருளுடைய இயற்கை இறையின் கடமை. ஆதலின், இயற்கை இறையின் அருளால் ஒருவிதச் செம்மைப் புது உலகம் அரும்பியே தீரும். இறை ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே. இறை நெறியே சத் மார்க்கம் என்பது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - இறை; அதை அடைதற்குறிய மார்க்கம் இயற்கை. இயற்கைவழி இறையை உணரல் வேண்டுமாதலின், அவ்வழி இயற்கை - இறைவழி என்று சொல்லப்படுகிறது. இயற்கை - இறை வழியாவது சத்மார்க்கம் - சன்மார்க்கம். சன்மார்க்கம் உலகில் பல பெயர் பெற்றிருக்கிறது. பெயர்ப்பன்மையை நீக்கிப் பொருளை நோக்கினால் ஒருமையே புலனாகும். பெயர்ப் பன்மையில் மக்கள் மயக்குற்றமையால், அவர்கட்குப் பொதுமைப்பொருள் புலனாகாதொழிந்தது. அதனால் போராட்டம் மக்களிடைப் புகலாயிற்று. பொதுமையே சமரசம் என்பது. சமரசமே சன்மார்க்கம். எங்கே சமரசம் உண்டோ அங்கே சன்மார்க்கம் உண்டு. எங்கே சன்மார்க்கம் இருக்குமோ அங்கே சமரசம் இருக்கும். இரண் டுக்கும் தொடர்புண்மையால் சமரசம் சன்மார்க்கம் என்றும், சன்மார்க்கம் சமரசம் என்றும் இரண்டும் பொதுளச் சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றன. சுருங்கிய முறையில் சமரச சன்மார்க்கத்தை மார்க்கமென்றுங் கூறலாம். மார்க்கம் என்பதும், சன்மார்க்கம் என்பதும், சமரசம் என்பதும், சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே. சன்மார்க்கம் என்ன அறிவுறுத்துகிறது? ஈண்டைக்கு விரிவுரை வேண்டுவதில்லை. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டும் உள்ளது. அதை அடைய, மார்க்கம் என்னும் இயற்கையுடன் இயைந்து வாழ்தல் வேண்டும் என்று சன் மார்க்க போதமும் திறவும் என்றொரு நூல் என்னால் யாக்கப் பட்டுள்ளது. சத் என்னுஞ் செம்பொருள் யாண்டுமுள்ளது என்னுங் கொள்கை, மன்பதையில் ஆக்கம் பெறப்பெற, அதன்கண் சகோதரநேயம் ஓங்கி வளர்தல் ஒருதலை. சகோதர நேயத்தின் முன் ஆசைப்பேய் இடம் பெறுமோ? இடம் பெறுதல் அரிது. சன்மார்க்கம் ஆசைப் பேயை அடக்கவல்லது என்று சொல்வது மிகையாகாதென்க. சன்மார்க்கம் இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. சத் என்னுஞ் செம்பொருள் உணர்வை மக்கள் என்று பெற்றார்களோ அன்றோ சன்மார்க்கமும் அவர்களிடை விளங்கியிருக்கும். சத் அநாதி; சன்மார்க்கமும் அநாதி. யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற திருமொழி புற நானூற்றில் ஒரு மூலையில் ஒளிர்வது. இத்திருமொழியி லுள்ள பொதுமைச் செல்வம், முதல்முதல் என் உள்ளத்தை கவர்ந்தது. இப்பொதுமை, உலகின் நானாபக்கங்களிலும் அவ்வப்போது தோன்றிய பெரியோர் வாயிலாகப் பல மொழியில் வெளிவந்த பொது மறைகளிலெல்லாம் மிளர்தலை எனக்கு விளங்கச் செய்தது. வேறு சில கூட்டுறவுகளும் பொதுமை உணர்வை என்பால் வளர்த்தன. பொதுமை என்னுஞ் சமரசம் - சன்மார்க்கம் - உலகில் பல பெயர்களாக வழங்கப்படுகிறது. அவை: ஜைனம், பௌத்தம், சைவம், வைணவம், வேதாந்தம், கிறிதுவம், இலாம் முதலி யன. இந்நாளில் பொது நெறியை மாடம் பிளவட்கி என்ற சமரச சன்மார்க்க ஞானியார் தியோசபி என்றனர். மக்கள் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி விழும்போ தெல்லாம், பெரியோர் - தீர்க்க தரிசிகள் - நபிமார் - தோன்றிக் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற முறையில் சன்மார்க்கத்தை அறிவுறுத்திச் செல்வது வழக்கம். அதனால் அடையும் மாறு தலைப் புது உலகமலர்ச்சி என்று மக்கள் கொள்வதும் வழக்கம். மெய்யறிவு பெற்றவர்களுக்குப் பழமையும் புதுமையும் ஒன் றாகவே விளங்கும். இந்நாளில் புது உலக மலர்ச்சி பேசப்படுகிறது. அப்புது உலகம் சமரச சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதா யிருத்தல் வேண்டும். சமரச சன்மார்க்கமே புது உலக ஆக்கத் துக்குரிய அவதாரமென்று யான் கருதுகிறேன். இவ்வேளையில் சமரச சன்மார்க்கத்தொண்டு ஆங்காங்கே நிகழப்பெறுதல் சிறப்பு. பல துறையில் உழன்று பலவிதப் பணிசெய்த எளியேனுக்கு இற்றை ஞான்று சன்மார்க்கப் பணியிலே வேட்கை மீக்கூர்ந்து செல்கிறது. இதை ஆண்டவன் அருள் என்றே யான் கொள் கிறேன். சன்மார்க்கத் தொண்டுகள் பலதிறத்தன. அவற்றுள் ஒன்று நூற்றொண்டு. இத்தொண்டிலும் என்னைத் திருவருள் உந்தியது. என்னால் இயற்றப்பெற்ற நூல்களிற் பெரும்பான்மை யன சமரச சன்மார்க்கக் கொள்கைக்கு அரண் செய்வனவாம். பாட்டுத் தொண்டில் யான் பெரும் பொழுது போக்குவ தில்லை. ஓய்ந்த நேரங்களில் மிகச் சிறு பொழுது யான் பாட்டுத் தோண்டில் தலைப்படுவதுண்டு. பொதுமைப் பாடல்கள் சில என்னால் யாக்கப்பட்டன. அவற்றைக் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப, பொதுமை வேட்டல் என்னுந் தலைப்பு அணியப்பட்டது. தலைப்பு நூலின் உள்ளுரையை நன்கு விளங்கச் செய்யும். விளக்கம் வேண்டுவதில்லை. பொதுமை வேட்டல் புது உலக மலர்ச்சிக்கு வேண்டற் பாலது. இப் பொதுமை வேட்டல் அப்புது உலக ஆக்கத்துக்கு ஒரு மூலையிலாதல் ஓரளவிலாதல் துணை செய்யுமென்று நம்புகிறேன். மலர்க புது உலகம்; மலர்க பொதுவுலகம்; மலர்க அற உலகம்; வாழ்க மார்க்கம்; வாழ்க சங்கம்; வாழ்க தொண்டு. இந்நூல், உலகப் போரிடை - போர் முழக்கம் சென்னை நகரைப் பலவழியிலும் கலங்கச்செய்த வேளையில் - காகிதப் பஞ்சம் நெருக்கிய நேரத்தில் வெளிவந்தது. பிழை பொறுக்க. இராயப்பேட்டை 10-1-1942 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் 1. தெய்வ நிச்சயம் தெய்வமெனும் ஒருமொழியைச் செப்பக் கேட்டேன் செறிகலையில் மொழிப்பொருளைச் சேரக் கற்றேன் மெய்யெனவே அதையுணர மேலுஞ் சென்றேன் மேதினியில் பலதுறைகள் மேவிப் பார்த்தேன் பொய்யென்ற முடிவினுக்குப் போகுங் காலைப் புத்தமிர்தப் பெரியர்சிலர் போதங் கண்டேன் உய்யுநெறி உழைப்பாலே உறுமென் றெண்ணி உனையுணரும் பணியேற்றேன் ஒருமைத் தேவே. 1 அண்டமெலாம் இயங்கருமை ஆய்ந்து நோக்கின் அத்த! நின துண்மையிலே ஐயந் தோன்றா எண்டிசையுங் கடந்திலங்கும் இறைவ! உன்னை எல்லையுற்ற பொருளளவில் எடுத்தல் நன்றோ கண்டநிலை கொண்டுநின தகண்டந் தேர்ந்தேன் கண்ணுக்குப் புலனாகாக் கருத்துந் தேர்ந்தேன் தொண்டினிலே ஈடுபட்டுத் தோயத் தோயத் துணைவருமென் றறிந்துவந்தேன் தூய ஒன்றே. 2 தத்துவமெல் லாங்கடந்த தனித்த ஒன்றே தடைஎல்லைக் கட்டில்லாத் தனிமைத் தேவே தத்துவத்துள் உழன்றுழன்று தடவிப் பார்த்தும் தடைஎல்லைக் கட்டுள்ளே தடவிப் பார்த்தும் சத்தியனே உனக்கின்மை சாற்ற லாமோ தடைகடக்கும் வழிநாடல் சால்பே யாகும் பித்தருக்குங் குருடருக்கும் பிறங்கா எல்லாம் பேருலகில் இல்லையெனப் பேசல் நன்றோ. 3 வாக்குமனங் கடந்துநிற்கும் வள்ளால் உன்னை வாக்குடையேன் மனமுடையேன் வாழ்த்தல் எங்ஙன் போக்குவர வில்லாத பொருளே உன்னைப் போக்குடையேன் வரவுடையேன் போற்றல் எங்ஙன் யாக்கையிலே புகுந்துள்ள யானென் செய்வேன் யாதொன்று பற்றினதன் இயல்பாய் நிற்பேன் தாக்குடையேன் கரணத்தால் சார வந்தேன் தக்கவழி காட்டாயோ தனிமைத் தேவே. 4 என்னறிவுக் கெட்டாத இறையே உன்னை ஏத்துநெறி காணாமல் எண்ணி எண்ணிக் கன்னெஞ்சும் புண்ணாகிக் கரையுங் காலை, கவலற்க; இயற்கையுடல் கடவுட் குண்டு நின்றொழுக என்னுமொலி நெஞ்சிற் றோன்றி நிறைமகிழ்ச்சி யூட்டியதும் நின்றன் அன்பே நன்றுடையாய் இருநிலையாய் ஞான மூர்த்தி நாயகனே அருட்பெருக்கு நவிலற் பாற்றோ. 5 எட்டாத ஒருநிலையை எண்ண வேண்டேன் எனக்கினிய இயற்கைநிலை ஏன்று கொண்டேன் முட்டாத வழிகண்டேன் முதல்வா வெய்ய மூர்க்கநெறி இனியுழலேன் முன்னி முன்னிக் கட்டாத வீட்டினிலே கருத்து வைத்தேன் காணாத காட்சியெலாங் காண்பேன் சொல்ல ஒட்டாத நிலையெல்லாம் உணர்வேன் எல்லாம் உன்னருளே எனைஆளும் உண்மைத் தேவே. 6 இறையவனே இயற்கையுடல் என்றே கொண்டாய் என்றோநீ அன்றியற்கை இரண்டும் ஒன்றே முறைமுறையே பிரித்தெடுத்தல் முடியா தப்பா மூத்தவரும் இம்முடிவே முழங்கிச் சென்றார் நிறைவாகி இயற்கையிலே நிலவுங் கோலம் நெஞ்சினிலே பதிவாகி நிலைக்க, நோயும் நறைமூப்பும் சாக்காடும் நாச மாக, நலியாத இளமைநலம் நண்ணச் செய்யே. 7 இயற்கைவழி நின்றொழுக இன்பந் தோன்ற எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இரக்கங் கூடச் செயற்கையிலே கருத்திருத்துஞ் சித்தஞ் சாகச் சீவவதை நினையாத சிந்தை சேர முயற்சியுயிர் ஈடேற மூல மாகி முந்துதுணை புரிந்தருளும் முதல்வா நல்ல பயிற்சி மிகவழிகாட்டிப் பண்பு செய்வாய் பரங்கருணைப் பெருங்கடலே பான்மைத் தேவே 8 ஒன்றான இறையேஉன் இயற்கைக் கோலம் ஓவியமாய்க் காவியமாய் உதவ வேண்டி நன்றாகச் செய்தமைத்தார் ஞானச் செல்வர் ஞாலத்தில் அந்நுட்பம் நாளும் நாளும் பொன்றாது பொலிந்திவரின் புகழே யோங்கும் பொன்றிவரின் சிற்பமெலாம் பொறியாம் கல்லாம் கொன்றாடும் விலங்காகிக் குலைவர் மக்கள் குறித்தருளாய் கலைவளரக் கோதில் கோவே. 9 மலையாகிக் காடாகி வயலாய் ஆறாய் மணல்வெளியாய்க் கடலாகி மதியாய் எல்லாய்க் கலையாகி எஞ்ஞான்றுங் காட்சி நல்கும் கருணையிலே நாடோறுங் கலந்து வாழ்ந்தும் சலியாத உனக்கின்மை சாற்றல் நன்றோ தரைநடந்தும் அதைமறப்போர் தலத்தி லுண்டு தலையான வான்பொருளே தண்மை நீங்காச் சத்தியமே நித்தியமே சாந்தத் தேவே. 10 2. தெய்வ முழக்கம் உலகமெலாங் கடந்துகடந் தொளிருமொரு தெய்வம் உலகுதொறுங் கலந்துகலந் தோங்குவிக்குந் தெய்வம் இலகுசரா சரமெல்லாம் இயக்கி நிற்குந் தெய்வம் இன்பறிவாய் அன்பருளாய் என்றுமுள தெய்வம் அலகிலொளி ஒலியாகி அகிலஞ்செய் தெய்வம் அருங்கலையில் நடம்புரியும் ஆனந்தத் தெய்வம் பலசமய ஒருமையிலே பயன்விளைக்குந் தெய்வம் பழம்பொருட்கும் பழம்பொருளாம் பழந்தெய்வம் பாரே. 1 அங்கிங்கென் னாதபடி எங்குமுள தெய்வம் அளவைகளுக் கெட்டாத அகண்டிதமாந் தெய்வம் பொங்கியற்கை உடற்குயிராய்ப் பொலிகின்ற தெய்வம் பொழிந்தருளை உயிர்களுக்குப் புகலாகுந் தெய்வம் தங்கியற்கை நெறியினிலே தாண்டவஞ்செய் தெய்வம் சாகாத வரமளிக்குஞ் சால்புடைய தெய்வம் புங்கவர்தம் நெஞ்சினிலே புகுந்திருக்குந் தெய்வம் புதுப்பொருட்கும் புதுப்பொருளாம் புதுத்தெய்வம் போற்றே. 2 மண்புனல்தீ வளிவெளியாய் மன்னிநிற்குந் தெய்வம் மதிகதிராய் மன்னுயிராய் மகிழ்விக்குந் தெய்வம் கண்முதலாம் உறுப்புயிர்க்குக் கதிக்கின்ற தெய்வம் கருத்தினிலே கோயில்கொண்டு காக்கின்ற தெய்வம் எண்ணெழுத்தாய் ஏழிசையாய் இசைப்பயனாந் தெய்வம் எம்மறையுங் குருவழியே இயம்புகின்ற தெய்வம் உண்மைஅறி வானந்த உருவான தெய்வம் ஒருநெறியாம் பொதுமையிலே ஓங்குதெய்வம் ஒன்றே. 3 விண்ணாடு நீலஒளி விரிக்கின்ற தெய்வம் வெண்கோளாய்ப் பிறகோளாய் மின்னுகின்ற தெய்வம் தண்ணாரும் மதியாகி நிலவுபொழி தெய்வம் தனிச்சுடராய் வெயிலுமிழும் சத்துடைய தெய்வம் மண்ணாகி மலையாகி மனங்கவருந் தெய்வம் மரமாகிக் காடாகி வளர்பசுமைத் தெய்வம் பண்ணாத பாட்டாறாய்ப் படர்ந்தோடுந் தெய்வம் பரவையாய் அலைகொழிக்கும் பரதெய்வம் பாடே. 4 நீரருந்து மானிறத்தில் நிலவுகின்ற தெய்வம் நிறைஅமைதி ஆனினத்தில் நிறுத்தியுள்ள தெய்வம் காரமருங் குயில்குரலில் கலந்தினிக்குந் தெய்வம் கானமயில் நடத்தினிலே காட்சியளி தெய்வம் வாரமிகு பைங்கிளியாய் வாய்மலருந் தெய்வம் வானப்புள் பாட்டொலியாய் வாழுகின்ற தெய்வம் நாரலரில் வண்டிசையாய் நாதஞ்செய் தெய்வம் நல்லரவாய்ப் படமெடுத்து நண்ணுதெய்வம் நாடே. 5 இயற்கை அன்னை தனைக்கலந்தே இன்பளிக்குந் தெய்வம் ஏகாந்த இனிமையிலே இயங்குகின்ற தெய்வம் செயற்கையெலாம் ஓடுங்கிடத்தில் திகழுகின்ற தெய்வம் சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தனையாந் தெய்வம் உயிர்க்கெல்லாம் உயிர்ப்பாகி ஊக்கம்விளை தெய்வம் ஒழுக்கத்தில் உயர்ந்தோருக் கொழுங்கான தெய்வம் பயிற்சியினால் மனங்குவிந்தால் பார்வையளி தெய்வம் பாராதி அண்டமெலாம் பரவுதெய்வம் பாரே. 6 ஆதியின்றி அந்தமின்றி அறுதியற்ற தெய்வம் அகலமொடு நீளமற்ற அளப்பரிய தெய்வம் சாதிமதக் கட்டுகளில் சாராத தெய்வம் சமயப்போர்ச் சாத்திரத்தின் சார்பில்லாத் தெய்வம் நீதியிலே விளங்குகின்ற நின்மலமாந் தெய்வம் நித்தியமாய்ச் சத்தியமாய் நிறைந்துள்ள தெய்வம் சோதியெலாம் விளங்கும்அருட் சோதியெனுந் தெய்வம் சுதந்திரத்தின் சுதந்திரமாஞ் சுத்ததெய்வம் சூழே. 7 அறிவினிலே உணர்வோருக் கறிவாகுந் தெய்வம் அன்பினிலே தெளிவோருக் கன்பாகுந் தெய்வம் அறியாமைச் செயற்கழுதால் அணைந்திரங்குந் தெய்வம் அன்பிலர்க்கும் அன்பூட்ட ஆர்வங்கொள் தெய்வம் செறிஉயிர்க்கு நலஞ்செயவே சீவிக்குந் தெய்வம் சிந்தனையில் தேனெனவே தித்திக்குந் தெய்வம் வெறிமலர்வாய்ப் பெண்ணொளியில் விளங்குகின்ற தெய்வம் விண்ணுலகும் மண்ணுலகும் விளம்புதெய்வம் மேவே. 8 அண்டமெலாம் அடுக்கடுக்கா அமையவைத்த தெய்வம் அவைஇயங்க ஓயாமல் ஆற்றலளி தெய்வம் பிண்டமெலாம் ஒழுங்குபெறப் பிறப்பிக்குந் தெய்வம் பிறக்கும்உயிர் அத்தனைக்கும் பேரருள்செய் தெய்வம் தண்டனையே அறியாத தயையுடைய தெய்வம் தாயினிலும் பரிவுடைய தனிக்கருணைத் தெய்வம் தொண்டர்படை உயிர்ப்பாகச் சூழுகின்ற தெய்வம் சூதுபகை கொலையற்ற தூயதெய்வம் சொல்லே. 9 கருவினிலே பிறவாது கருவளிக்குந் தெய்வம் கரணமின்றி உயிர்களுக்குக் கரணம்அமை தெய்வம் கருதுமன மின்றியெலாங் கருதுகின்ற தெய்வம் கண்களின்றி எதையெதையுங் காண்கின்ற தெய்வம் உருவின்றி எங்கெங்கும் உலவுகின்ற தெய்வம் ஓதலின்றி மறையெல்லாம் ஓதுவிக்குந் தெய்வம் குருவினுளத் திலங்கியுண்மை குறித்தருளுந் தெய்வம் குறைவில்லா நிறைவான கோதில்தெய்வங் கூறே. 10 3. தனிமைத் தெய்வம் மண்கடந்து புனல் கடந்து தீக்கடந்து வளிகடந்து விண்கடந்து மதிகடந்து வெயில்கடந்து மற்றுமுள ஒண்சுடரெல் லாங்கடந்தே ஒளிவழங்கும் பெரும்பிழம்பின் கண்கடந்து நிற்குமொன்றே கருதுவதெவ் வாறுனையே. 1 அண்டபகி ரண்டமெலாம் அடுக்கடுக்கா ஆய்ந்தாலும் அண்டஒணா தகன்றகன்றே அப்பாலுக் கப்பாலாய்த் துண்டஅணு வுக்கணுவாய்ச் சூழணுவுக் கிப்பாலாய் மண்டியொளி ரகண்டிதமே வாழ்த்தலுனை எப்படியோ. 2 பெரிதுக்கும் பெரிதாகிச் சிறிதுக்குஞ் சிறிதாகும் பெரியவனே சிறியவனே எனப்பேச்சும் பேச்செல்லாம் அரியஉனை அறியும்வழி அறிவுறுத்துங் கருவிகளோ தெரிவழியும் உண்டுகொலோ சிற்பரமே மெய்ப்பொருளே. 3 விழிகளுக்கு மெட்டவிலை செவிகளுக்கு மெட்டவிலை மொழிகளுக்கு மெட்டவிலை முனைமனத்துக் கெட்டவிலை செழிஉயிர்ப்புக் கெட்டவிலை சிற்பரனே உனைநினைந்து தொழுகைக்கு வழியறியேன் தொழும்பனென்ன செய்வேனே. 4 அளவையெலாம் உனையரற்றும் அவையுன்னை அறிந்ததுண்டோ உளமறைகள் உனைஉரைக்கும் உன்னைஅவை உணர்ந்ததுண்டோ தெளிகலைகள் செப்புமுனைத் தெரிந்தனவோ உன்னிருக்கை முளைசிறியேன் உனைக்கண்டு முன்னலெங்ஙன் முன்னவனே. 5 உலகமெலாம் தோன்றி நின்றே ஒடுங்குதற்கு நிலைக்களனாய்க் கலைகளுமே பிறந்தொடுங்குங் கருவாகி நின்றநிகழ் ஒலிகடந்தும் ஆதார ஒளிகடந்தும் மேலோங்கி இலகுமிறை உனைஏழை எவ்வண்ணம் இறைஞ்சுவனே. 6 அறிவேநீ என்றுன்னை அகிலமறை முழங்கஎன்றன் அறிவாலே ஆய்ந்தலைந்தேன் அணுகிஎட்ட இயலவில்லை அறிவாலும் உனையுணரல் அரிதாதல் விளங்கியதே அறிவரிய மெய்ப்பொருளே அடையும்வழி உண்டுகொலோ. 7 குறிகாணின் கும்பிடுவன் குணம்விளங்கின் நினைந்திடுவன் நெறிதோன்றின் நடந்திடுவன் நிலம்பெற்றால் உழுதிடுவன் உறைவடைந்தால் குடிபுகுவன் ஊற்றெழுந்தால் குளித்திடுவன் பொறிவாயி லில்லாத பொருளேஎன் செய்குவனே. 8 எப்பொருளும் நீயென்றும் எங்கெங்கும் நீயென்றும் செப்புமொழி கலப்புநிலை சிறப்புறுநின் தனிமைநிலை எப்படியில் முயன்றாலும் எந்நிலைக்கும் எட்டவிலை ஒப்பரிய மெய்யறிவே ஒருவழியுங் காணேனே. 9 தனிமைநிலை அடைவாகும் தனிமுயற்சி தேவையிலை எனவெழுந்த மெய்க்குரவர் ஈரமொழி பற்றிநின்று பனிமழையீர் வான்மலையீர் பசும்பொழிலீர் கனைகடலீர் இனிகுயிலீர் நடமயிலீர் ஏழையுமை அடைந்தேனே. 10 4. இயற்கைத் தெய்வம் எப்பொருட்கும் எட்டாத இயல்புடைய ஐயா ஏழைஉயிர்க் கருள்புரிய இயற்கையுடல் கொண்டாய் அப்பநின தருளுடைமை அளவெவரே உடையார் அழகியற்கை வழியொன்றே அருள்வழியென் றுணர்ந்தேன் தப்பறுக்க அவ்வழியே சாரவந்தேன் என்றும் தயையுடையாய் பிழைபொறுத்துத் தண்மைவழங் காயோ ஒப்புரவே உள்ளொளியே உண்மைநிலைப் பேறே ஓதுகலை உணர்வினருக் குணர்வரிய ஒன்றே. 1 உடலியற்கை உயிர்நீயாய் உதவுகின்ற அருளை உன்னிஉன்னி உருகிநிற்க உளமொன்று போமோ கடலுலகில் சாதிமதக் கட்டழிந்தால் நின்றன் காட்சியளி இயற்கைநெறிக் கண்பெறலாம் நன்றே கடபடமென் றுருட்டுவெறிக் கடுவாதத் தர்க்கம் கருத்தற்ற கிரியைகளும் கட்சிகளும் போரும் நடனமிடும் நெஞ்சறியா நாயகனே என்றும் நாதாந்த மோனநிலை நண்பருணர் பொருளே. 2 மண்ணுலகும் விண்ணுலகும் மற்றுலகுங் கோயில் மதிகதிருங் கோளெல்லாம் மண்டிலமுங் கோயில் கண்கவரும் கான்மலையுங் கடல்வயலுங் கோயில் கருத்தொலியும் எழுத்துடனே கலைகளுமே கோயில் எண்ணரிய எவ்வுடலும் எவ்வுயிருங் கோயில் எந்தைநின்றன் கோயிலில்லா இடமுமுண்டோ ஐயா தண்மைபெற என்னுளத்தைக் கோயில்செய்யத் தமியேன் தவறிவிட்டேன் வான்சுடரே தயைபுரிவாய் இன்றே. 3 எங்குநிறை அகண்டிதமே எல்லையற்ற ஒன்றே ஏழைமனம் எவ்வழியில் எண்ணுவதென் றிரங்கி இங்கியற்கை உடல்கொண்டாய் எழிற்கருணைத் திறத்தை எவ்வுளத்தால் எவ்வுரையால் எங்ஙன்நான் புகழ்வேன் பொங்கியற்கைக் கூறுகளில் புந்திசெலல் வேண்டும் புன்செயற்கை நெறியுழலும் புந்திகெடல் வேண்டும் தங்குபிணி அறுக்கஎன்றுஞ் சாகாமை வேண்டும் தண்டனையே புரியாத தயைநிறைந்த அரசே. 4 ஓருருவும் ஒருபெயரும் ஒன்றுமிலா ஒன்றே உனைநினைக்கும் வழியறியேன் ஊனஉளம் உடையேன் சீருருவ இயற்கையிலே சேர்ந்தினிக்கும் நிலையைச் சிந்திக்க என்றுரைத்தார் செந்நெறியில் நின்றோர் பாருருவம் முதலாய பகருருவம் நினைந்தேன் படியுருவம் அவையெல்லாம் பாட்டொலியாய் நேர்ந்தால் ஏரொளியை உணர்ந்திடுவேன் எண்ணாமை தெளிவேன் எதற்கும்நின தருள்வேண்டும் இறங்கிஅருள் செய்யே. 5 மலையினிலே சென்றிருந்தால் மாதேவ நின்றன் மாணியற்கைக் கூறெல்லாம் மனஅமைதி செய்யும் நிலையதனை என்னென்பேன் நேர்மைஅக விளக்கே நிலமடியாய் வான்முடியாய் நீல்கடலுங் கானும் பொலிவுடையாய்ப் போர்வையுமாய்ப் பொற்கதிர்கள் விழியாய்ப் பொங்குருவத் தோற்றமெலாம் புந்திவிருந் தாகும் கலையுரைக்குங் கற்பனையில் கண்மூடி வழக்கில் கருத்திருத்திச் சாவோர்க்குக் கடவுளருள் செய்யே. 6 மலையிவர்ந்து பசுங்குடைக்கீழ் மனமொன்றி நோக்கின் வனம்பெருக்கும் பசுமைவெள்ளம் வந்திழியுங் காட்சி பலநதிகள் பாட்டணியாய்ப் பரந்தோடுங் காட்சி பச்சைமணிக் குழைவெனவே பயிர்பரப்புங் காட்சி நிலைமணல்கால் வெண்ணிலவு நிறைவழங்குங் காட்சி நீள்கடலில் கட்டுவண்ண நீலநிறக் காட்சி கலவையுற எய்தொருமைக் கவின்வனப்பு நினதாம் கருணையமு துண்பதற்குக் கடவுளருள் செய்யே. 7 மணியருவி முழவொலியாய் வண்டிசைக்கும் பாட்டாய் மயில் நடமாய் குயில்குரலாய் மலர்மணமாய் வந்தே அணைமந்த மாருதமாய் ஐம்புலனில் ஒன்றி அகஅமுதாய்ச் சுவைத்தினிக்கும் ஆனந்த மயமே பிணிபுனலில் பொய்யிசையில் பேய்நடவெங் குரலில் பெயர்மணத்தில் பொறிகாற்றில் பெற்றியிழந் தெரிந்து திணியுலகம் நரகாச்சே தெளிவுபெற இறையே தெய்வநிலை இயற்கைவழித் திருவருள்செய் இன்றே. 8 காலையிலே கடல்முளைக்கும் கனலுருண்டைப் பிழம்பே கதிர்மூழ்கி உயிர்ப்புண்டு கவலைபிணி போக மாலையிலே கிளர்ந்தெழும்பும் மணிக்கலச அமுதே வழிந்துபொழி நிலவுமழை வளமைவிளை வாகச் சோலைமல ரெனவானில் சூழ்விளக்கு நிரையே துலங்குநகை மகிழ்வாலே தொடர்புலன்க ளொன்ற ஓலமிடும் என்னிருளை ஒழித்தருளாய் ஒளியே ஒளிக்கெல்லாம் ஒளிவழங்கும் ஒளிவண்ண மலையே. 9 மங்கையர்கள் சூழலிலே மருவுகின்ற மதியே வளர்தெய்வ மனக்குழவி மழலையொழு கமுதே பொங்கிவரும் வேனிலிடைப் புகுந்தளிக்கும் விருந்தே பூந்துணர்கள் ஏந்துகரப் பொழில்பொழியு மணமே பங்கயத்துப் பாணரினம் பரிந்தனுப்பும் பண்ணே பரநாதப் பாக்கலையில் பள்ளிகொண்ட அறிவே புங்கவருண் மலர்பிலிற்றும் புதியசுவைத் தேனே பொலிவியற்கை வடிவிறையே புந்திஎழுந் தருளே. 10 5. இயற்கை நெறி இயற்கையின் னெறியே இறைவநின் னெறியென் றிசைத்தனர் குரவர்க ளெல்லாம் பயிற்சியி லதுவே பண்பென விளங்கும் பான்மையைத் தெளிந்தனன் அரசே செயற்கையின் நெறியால் தீமையே விளைதல் தெரிந்தனன் தெரிந்ததைத் தடுக்கும் முயற்சியி லிறங்க முனைந்தனன் முதலே முழுத்துணை அருளுதி விரைந்தே. 1 இயற்கையே கோயில் இயற்கையே வாழ்வு இயற்கையே யாவுமென் றறிந்தே இயற்கைநன் னெறியில் இயைந்துநின் றொழுக ஏந்தலே கொண்டனன் உறுதி செயற்கைவெந் நகரச் சிக்குறு வாழ்வு சிதைப்பதைத் தெய்வமே உணர்வாய் அயர்ச்சியில் அழுந்தும் அடியனென் செய்வேன் ஆதரித் தாண்டருள் செய்யே. 2 பசுந்தலை யாட்டி மலர்க்கர நீட்டிப் பரிவுடன் அழைமர மின்றி விசும்புயர் கோப்பு வெளிறுகள் நின்றென் விண்புடை விரிபொழில் போர்த்துத் தசும்பொளி காலுந் தழைக்குடில் வீடாம் சாந்தமே வேண்டுவன் இயற்கை வசம்பொலிந் துயிர்க்கு வளஞ்செயு மழகு வள்ளலே அருள்பொழி மழையே. 3 உலகினி லிருந்தே உடலினை யோம்பி உத்தமப் பெண்ணுடன் வாழப் பலகலை இயற்கைப் பண்புகள் விளங்கப் பரவருள் நிலைதெளி வாக அலகிலா ஒளியே அவைகளைத் துறத்தல் அன்பிலாச் செய்கையென் றுணரத் திலகமே இயற்கைச் செல்வமே செய்த திருவருட் டுணைமற வேனே. 4 நாடெலாம் வளர நல்குர வொழிய ஞானமா நெறியெலாந் தழைக்க ஆடவர் மகளிர் அன்பினில் திளைக்கும் அறநெறி ஓங்குதல் வேண்டும் வீடென ஒருவர் ஒருவரை விடுத்து வெறுப்பது வேதனை வேண்டா தேடரும் பொருளே தெய்வமே இயற்கைச் செல்வமே திருவருள் செய்யே. 5 இந்தநல் லுலகம் இயந்திரப் பேயால் இனிமையை எரிப்பதால் மைந்தர் சுந்தர மிழந்தார் தொல்லையில் படிந்தார் துயர்விளை நோயினை மணந்தார் சிந்தனை யற்றார் செயற்கையில் வீழ்ந்தார் தெய்வமே செய்வதொன் றறியார் எந்தநாள் உய்வர் எந்தையே இயற்கை எழினெறி காப்பதுன் கடனே. 6 பிறவியில் வாழ்வில் பேற்றினில் பொருளில் பெட்புறு சமத்துவம் நிறைந்தால் தறையினிற் பிணக்கும் சண்டையுஞ் சாய்ந்து சாந்தமே நிலவுமென் றறிந்து முறைமுறை தொண்டு முன்னியே ஆற்ற மூர்த்தியே முடிவிலா முதலே கறையிலா இயற்கைக் காட்சியே அன்பால் கடையனுக் குதவிய தருளே 7 காலையி லெழுந்து கடன்களை முடித்துக் காற்றிலுங் கதிரிலுங் குளித்துச் சோலையி லுலவிச் சுரக்குநீ ராடித் தொழுதுனைச் சிந்தனை செய்து சீலமும் நலமும் சேருண வருந்திச் சீர்தொழில் பிறர்க்கென ஆற்ற மேலவர் கொண்ட வேர்நெறி யோங்க வேண்டுவன் கருணைசெய் இறையே. 8 மலைகடல் போந்து மகிழ்ச்சியில் திளைத்து மனத்தமு துண்ணலும் நல்ல கலைகளில் நுழைந்தக் காட்சியைக் கண்டு கருத்தினி லுண்ணலும் என்றும் அலைதரு புலன்கள் அமைதியிற் படிவித் தருணெறிக் கரண்செயல் தெளியத் தலையடி யில்லாத் தனிமுதற் பொருளே தற்பரா நிகழ்த்திய தருளே. 9 மலைகடல் காடு மதிகதிர் முதலா மன்னிய இயற்கையின் கூறு பலபல வாறு நலங்கரு தாது பரிந்துயிர்க் குதவுதல் காட்டி உலகினில் ஒருவர் மற்றவர்க் குதவ உறைவதே இயற்கையென் றுணர்த்த இலகொளி விளக்கே இழிநெறி யுழலும் ஏழையை எடுத்தருள் இறையே. 10 6. இயற்கை வாழ்வு ஆணுடன் பெண்ணும் பெண்ணுடன் ஆணும் அமர்ந்துறை செந்நெறி வாழ வீணிலே ஒருவர் ஒருவரை விலக்கி வெறுத்தழி வெந்நெறி வீழத் தாணுவே இயற்கைத் தாயுடன் பிரியாத் தந்தையே உயிரொளி பெற்று மாணுற உலக வாழ்வினை வைத்த மன்னனே அருள்புரி இன்னே. 1 அன்புநீ யன்றோ அன்பினை யடைய அன்புசேர் நெறியதே வேண்டும் கன்னியை மணந்து கான்முளை ஈன்றால் கடலெனப் பெருகுநல் லன்பே அன்னவள் தன்னை அகன்றுநீத் துறைந்தால் அடைத்திடும் அன்பெனும் ஊற்றே அன்பழி துறவு அழிதலே வேண்டும் அன்பினில் விளைந்தஆ ரமுதே. 2 பொழிலெனப் பொலியும் பொன்னொளிப் பெண்ணைப் பொறுமையை அன்னையை அன்பை இழிவெனக் கருதி ஏசுவோ ரிங்கே எங்கிருந் துதித்தனர் அந்தோ! பழியினைச் சுமக்கும் பாவரே யாவர் பகுத்தறி வவர்பெறச் செய்யே வழிவழி இயற்கை வாணியை மணந்து மாநிலம் வளர்த்தருள் பதியே. 3 மண்ணினைப் பொன்னை மங்கையைத் துறந்தால் மாநெறி கூடுமென் றுரைத்தல் கண்ணிலார் கூற்றாங் கடவுளே எங்கும் கலந்தநீ மூவிடங் கரவோ எண்ணமே மாயை இயற்கையின் உயிரே ஈசனே வெறுப்புறு துறவாம் புண்ணெறி எரிவால் புகுந்தநோய் போதும் போலியை ஒழித்தருள் செய்யே. 4 தாய்மையின் ஒளியே தனிமுத லெங்கும் தங்குறு நின்னொளி யுணர்த்தும் தூய்மையாந் திறவு துணைபுரி தாயைத் தூற்றலும் பழித்தலும் அறமோ பேய்மனச் சிறியர் பேச்செலாம் ஒழிக்கப் பெரியனே திருவுளங் கொள்க வாய்மையே வளர வள்ளலே கருணை வருவழி வேண்டுவன் முறையே 5 மங்கையை மாயா மலமெனச் சில்லோர் மருட்சியால் சொற்றனர், மாயை எங்குள தென்றே எண்ணின ராயின் ஏங்குவர் தம்முள மென்றே தங்கிடந் தேர்ந்து சாய்த்திடின் மங்கை தற்பர நின்னொளி யாடும் பொங்கிட மென்று போற்றுவர் தெளிந்த புந்தியிற் பொலிதரு பொருளே. 6 எங்கணு முள்ள இறைவனே உன்னை எப்படிக் காணுத லென்று சங்கையே கொண்டு சாதனஞ் செய்தும் சார்நிலை பெறுவதோ இல்லை நங்கையை மணந்து நன்னெறி நின்றால் ஞானமும் தியாகமும் அன்பும் துங்கமும் தோன்றித் தொடர்வழி காட்டும் தூயனே துணைபுரி யாயே. 7 தேமொழிப் பெண்கள் சேரிடச் சூழல் தெய்விகப் பூம்பொழிற் காட்சி ஏமுற வழங்கும் இனிமையை, மாயை என்றெண எம்மனம் எழுமே தோமுள மனத்தர் சொல்லிய உரையால் தொல்லையே விளைந்தது போதும் சேமுறும் இயற்கைச் செந்நெறி வளரச் செல்வமே திருவருள் செய்யே. 8 முத்தியென் றெண்ணி முகமெலாஞ் சிவக்க மூச்சினை அடக்கியே வந்தோர் சத்திழந் தீரல் சவலையுற் றிறந்த சரித்திரம் பலபல என்னே பத்தியை வளர்க்கும் பாவையை மணந்து பரநலம் பேணியே வாழும் சத்திய மார்க்கந் தழைத்தினி தோங்கத் தற்பர தயைபுரிந் தருளே. 9 மாசிலா வீணை மாலையின் மதியம் மலர்மணஞ் சொரிபொழில் நன்று வீசிடு தென்றல் வீங்கிள வேனில் வெறிமலர் வண்டறை பொய்கைத் தேசெலாம் பொலியுந் தெய்விகப் பெண்ணோ சிற்பர தற்பர மாயை நேசமே! இயற்கை நெறியினைத் தூர்க்கும் நீசத்தைக் களைந்தருள் செய்யே. 10 7. பெண்மை தாய்மையுறை பெண்ணுலகம் தயவுடைய பெண்ணுலகம் வாய்மைவளர் பெண்ணுலகம் வண்மைமலர் பெண்ணுலகம் தூய்மைவழிச் சிறந்தோங்கத் தொல்லியற்கை வடிவான ஆய்பொருளே அருள்புரியாய் அகிலமெலாம் ஒளிபெறவே. 1 பெண்ணிலவு பொழிந்தெங்கும் பெருநலங்கள் புரிந்துவரும் வண்மைநிலை அறியாதார் வரைந்துவிட்டார் சிறுமொழிகள் உண்மையிலா மொழியெல்லாம் ஒடுங்க அருள் செய்யாயோ தண்ணியற்கைத் தாய்வடிவாய்த் தனிக்கருணை பொழிமுகிலே 2 பெண்ணொளியால் நலம்பெற்றும் பேசுவதோ சிறுமைமொழி கண்ணொளியை இழித்துரைத்தல் கயமையன்றிப் பிறிதென்னே பெண்பெருமை உலகமெலாம் பிறங்கி நின்றால் உளங்குளிரும் மண்முதலாம் வடிவாகி மகிழியற்கைப் பெருமானே 3 சிறுபுல்லில் பெண்ணாண்மை செடிகொடியில் பெண்ணாண்மை பிறவுலகில் பெண்ணாண்மை பிறங்கவைத்த பரம்பொருளே துறவென்னும் ஒருகவடு தோன்றியதும் அறமேயோ கறவையிலா மலட்டாவால் கலக்கமின்றிப் பிறிதென்னே. 4 வெம்மையென்றுந் தண்மையென்றும் மிளிரவைத்தாய் இயற்கையிலே வெம்மையின்றித் தண்மையுண்டோ தண்மையின்றி வெம்மையுண்டோ வெம்மையிலே தனித்துநின்றால் விளையன்பு நீறாமே வெம்மையொடு தண்மையுமாய் விளங்குமொரு பரம்பொருளே. 5 வெங்கதிருந் தண்மதியும் விளங்கவைத்தாய் அண்டமதில் இங்குலகில் வலமிடத்தில் இருகலைகள் விளங்கவைத்தாய் பொங்காண்மை பெண்மையுடன் பொலிஅறமே வளர்ந்தோங்கப் புங்கமெனத் தனித்துறைதல் பொருந்தறமோ பெருமானே. 6 பெண்மையெனுந் தண்மைபொழி பெரும்பசுமைக் கொடிசூழ்ந்தால் வண்மையருள் அன்புகனி வளராண்மை மரமாகும் உண்மையறம் உலகமெலாம் உயரஅருள் புரியாயோ பெண்மையுடன் ஆண்மையுமாய்ப் பிறங்கியற்கைப் பெருமானே 7 நங்கையிடம் பெருமானே நடம்புரியும் அழகொளியை இங்கருந்தின் எங்குநினை எளிதிலுணர் நிலைகூடும் மங்கையினை மாயையென்று மதிசுருங்கத் தனித்துறைந்தால் எங்குமுள நினதுண்மை எவ்வாறு விளங்குவதே. 8 புற்பூண்டு செடிகொடிகள் புழுப்பறவை விலங்கினங்கள் அற்புடனே கலந்துகலந் தவனிவளர் நெறியோம்பச் சிற்பரனே மனிதரிடைச் சிறுதுறவு புகுந்தியற்கை பொற்புநெறி அழிப்பதென்னே பொலிவிலதை ஒழித்தருளே. 9 தனியுறைவால் மனக்கோளும் தன்னலமும் பெருகலுமாம் பனிமொழியா ருடன்வாழ்ந்தால் பரிவன்பும் பரநலமாம் மனிதவுயிர் கலப்பாலே மலரஉல கருளினையால் கனியுடையாய் திருநோக்குக் கலையாமற் காத்தருளே. 10 8. மனிதப் பிறவி எங்கிருந் திங்கு வந்தேன் எப்படி என்றென் றெண்ணிச் சங்கையில் மூழ்கி நின்றேன் சத்திய ஞான நூலும் புங்கவர் கூட்டுங் கூற்றும் புந்தியில் தெளிவு நல்கப் பொங்கொளி! அருள்சு ரந்தாய் பொன்னடி போற்றி போற்றி. 1 செறிவறி யாமை யாலே சிந்தனை இழந்த ஆவிக் கறிவினை விளக்கி யாள யாக்கைகள் பலவுந் தந்தாய் குறியினை உணரா தந்தோ குணப்பெருங் குன்றே கெட்டேன் பொறியிலேன் அருளல் வேண்டும் பொன்னடி போற்றி போற்றி. 2 புல்லினில் புழுவில் நிற்கப் புள்ளினில் விலங்கில் நிற்கச் சொல்லரும் மனுவில் நிற்கத் தூயனே கருணை செய்தாய் நல்லருள் மறந்து கெட்டேன் நானெனுஞ் செருக்கில் வீழ்ந்தேன் செல்வமே பொறுத்தல் வேண்டும் சேவடி போற்றி போற்றி. 3 மானுடப் பிறவி தந்த மாண்பினைத் தேறா திங்குக் கானுறை விலங்காய்க் கெட்டேன் கழிந்தது காலம் வீணில் ஊனுடை சுருங்கும் வேளை உதிருமே உரங்க ளெல்லாம் தேனுறு மலர்வண் டாக்கத் தெய்வமே உளங்கொள் ளாயோ. 4 பொறிபுலன் நன்கு பூத்த பொன்னுடல் எனக்குத் தந்தாய் அறிவிலேன் அதனைத் தேய்த்தேன் ஆணவச் செயல்க ளாலே நெறியிலே நின்றே னில்லை நித்தனே முதுமை நேரம் சிறியனேன் தளர்ந்து வந்தேன் சிந்தனை சிறிது கொள்ளே 5 கோடையின் அலகை என்னக் கொக்கரித் தலறிக் கூவி மேடையிற் பேசிப் பேசி மெலிந்ததை அறிவா யன்றே ஒடையும் வற்றிப் போச்சே ஒருவரும் வருவ தில்லை வாடையில் வீழா வண்ணம் வானுடல் அருள்வாய் ஐயா. 6 பிணியுடை யாக்கை வேண்டேன் பிறந்திறந் துழலல் வேண்டேன் அணிபெறப் புதுக்கும் ஆற்றல் அடியனேற் குண்டு கொல்லோ பணிக்கென உடலை வேண்டும் பான்மையை உணர்வாய் நீயே மணியொளி மேனி நல்காய் மதமெலாம் போற்றுந் தேவே. 7 மூக்கினைப் பிடிக்குங் கூட்டம் மூச்சினை ஈர்க்குங் கூட்டம் தேக்கிய இடங்க ளெல்லாம் சென்றுசென் றலுத்தேன் எந்தாய் யாக்கையை ஓம்ப வல்ல அமிழ்தம்நின் அருளே என்ற வாக்கியம் தெளிந்து வந்தேன் வள்ளலே கருணை செய்யே. 8 பரிதியின் ஒளிகாற் றாகிப் படர்புனல் கீரை யாகிப் புரிகனி மணிபாட் டுன்னல் போதமாம் அமிழ்தம் உண்டால் நரைதிரை மூப்பு நீங்கி நல்லுடல் பெறுதல் கூடும் அரிதினை எளிமை யாக்கும் அத்தனே அருள்செய் வாயே. 9 உடம்பினைக் கோயில் கொண்ட உத்தமன் நீயே என்று திடம்பெறத் தெளியச் செய்த திருவருள் மறவேன் எங்கும் நடம்புரி கருணை எண்ணி நண்ணினேன் பணிகள் ஆற்ற உடம்பினை ஓம்பி வாழ உன்துணை வேண்டும் வேந்தே. 10 9. மானுடம் என்னுயிரைப் பொன்னாக்க எவ்வெவ்வுடல் தந்தனையோ அன்னையினுந் தயவுடைய ஐயாவே யானறியேன் நன்மையுற மனிதவுடல் நல்கியருள் புரிந்துள்ளாய் துன்னுபயன் அடைவதற்குன் துணைவேண்டும் அருளரசே. 1 எச்சிலையாய்க் கிடந்தேனோ எம்மலையாய் நின்றேனோ எச்செடியாய் வளர்ந்தேனோ எப்புழுவாய் ஊர்ந்தேனோ எச்சரபம் ஆனேனோ எப்புள்ளாய்ப் பறந்தேனோ எச்சுதையாய்ப் பாய்ந்தேனோ இறைவஒன் றும் அறியேனே. 2 எடுத்தவுடல் எத்தனையோ அத்தனையும் உளஉணரேன் உடுத்தவுடல் இந்நாளில் உயர்ந்ததெனப் பெரியோர்கள் விடுத்தமொழி பலபலவே விழித்தவழி நடவாது மடுத்துவரின் வெறுமொழியை வள்ளாலென் விளைபயனே. 3 மானுடமே வந்ததென்று மகிழ்ந்துவிட லறியாமை வானுடலோ ஊனுடலம் மயிர்ப்பாலம் தம்பி எனத் தேனுடலர் எச்சரிக்கை செய்துள்ள திறமுணர்ந்து மானமுடன் வந்தடைந்தேன் மறைபொருளே அருளுதியே. 4 மக்களிடை மாண்புமுறும் மாசுமுறும் நிலையுண்டு சிக்கலுறுங் காரணமோ சிறுவிளக்கப் பகுத்தறிவே புக்கபகுத் தறிவாலே புண்ணியநின் னடிபற்றித் தக்கவழி காணவந்தேன் தமியேனைக் காத்தருளே. 5 பகுத்தறிவு விளங்காத பிறவியினும், வழிநடக்கும் பகுத்தறிவுப் பிறவிக்கே பாடுகளுண் டென்றறிஞர் உகுத்தஉரை உளங்கொண்டே உனதடியில் குறிவைத்தேன் புகுந்தபிழை எவ்வளவோ பொறுத்தருளாய் புண்ணியனே. 6 மக்களுளம் பகைசீற்றம் பேய்மைகணம் ஒருபாலே தக்கஅரு ளன்பழகு தெய்வகணம் ஒருபாலே நெக்குறுவெந் நிலையுணர்ந்து தெய்வகண மயமாக்கப் புக்கவருள் எனைச் சேர்த்தால் புனித! நலம் பெறுவேனே. 7 மானுடத்தின் பயன்நாடி மனத்துறுபேய்க் கணஞ்சாய்க்கத் தானொடுக்கத் தெய்வகணங் கால்கொள்ளப் பணிபுரிய வானிடத்தும் மண்ணிடத்தும் மற்றிடத்தும் அருளாட்சிக் கோனடத்தும் பெருமானே கோதிலடி வேண்டுவனே. 8 மன்பதைநின் னருணெறியில் மனஞ்செலுத்தின் வளர்ச்சியுறும் கன்மவிதி முதலாய கண்மூடி வழக்குகளை உன்னிவரின் எவ்வண்ணம் உண்மைவழி வளர்ச்சியுறும் அன்பரசே இன்புருவே அருளுலகை அளியாயோ. 9 பிறவிநலம் பிறவுலகப் பேறென்று சொல்வருளர் அறநிலயந் துறவாமல் ஆருயிர்க ளிடைவாழ்ந்து திறமையுடன் பணிசெய்தல் செல்வமெனத் தெளிவடைய இறையவனே உளங்கொண்டாய் ஏதமெலாம் பொறுத்தருளே 10 10. மனிதம் எத்தனையோ உடலளித்தே இம்மனித உடலை ஈந்துள்ளாய் ஈடேற இறையவனே இதுவே உத்தமமாம் என்றறவோர் உரைத்தமொழி பலவே உரைஓதும் அளவினின்றால் உறுபயனோ விளையா பத்திமைநன் னெறிநடக்கை பண்புசெயும் வாழ்வைப் பாழ்நடக்கை வாழ்வழித்துப் படுகுழியில் தள்ளும் இத்தனையும் நின்னியதி மானுடத்தின் நிலைமை ஏந்துமயிர்ப் பாலமென ஏழைதெளிந் தேனே. 1 மக்களுடல் தாங்குவதால் மட்டுநலன் விளையா மயிர்ப்பாலம் நடக்கையிலே மதிவிழிப்பு வேண்டும் மிக்க விழிப்புடன் நடந்தால் விழுமியதே மனிதம் விழிப்பின்றி நடந்துவிடின் வீழ்ச்சியதே என்று பக்குவரெல் லாருமிகப் பரிந்துரைத்தும் நல்ல பகுத்தறிவு மலர்பிறப்பின் பண்புகெட லென்னே புக்கபகுத் தறிவாலே புனிதமொடு புரையும் புரிஉரிமை உண்மையினால் பொறுப்புணர்த்தாய் அரசே. 2 மக்களின உடலமைப்பில் மருவவைத்த நுண்மை மற்றஇன உடலமைப்பில் மருவவைத்தா யில்லை ஒக்கஅது திகழுமிடம் உள்ளமல ருள்ளே ஒளிர்நுண்மை விளக்கமுற உழைப்பெடுத்தல் வேண்டும் புக்கதென உழைப்பிலையேல் பொலிந்துமிளி ராது பொலியாத படிவிடுப்பின் புகழ்பிறவி விலங்காம் எக்கணமும் அமைதியிலே இருமுயற்சி செய்வோர் ஈசநின தொளி காண்பர் எங்குமுள இறையே 3 எங்குமுளன் இறைவனென இயம்புவதா லென்ன இந்நூலை அந்நூலை எடுப்பதனா லென்ன அங்கெனவும் இங்கெனவும் அலைவதனா லென்ன அசத்துலகை அசத்தாகக் காண்பதனா லென்ன தங்குலகைச் சத்தாகக் காண்பதுவே அறிவு தகுந்தவழி காண்முயற்சி தலைப்படுத லறிவு பொங்குமுள மலருளதைப் பொறியாக்கிப் பார்த்தால் பொலிதருமே ஒளிஇறையே புனிதமுற அருளே. 4 உள்ளமல ருள்ள நுண்மை ஊடுருவிப் பாயும் ஒளிக்கருவிக் கதிராலும் உணரலிய லாதே உள்ளொளியர் யோகியர்கள் உரைத்தவெலாங் கூடம் உலகவற்றைப் பலவழியில் உருத்திரித்த தையா கள்ளர்பலர் இடைநுழைந்து கரவுகளைக் காட்டிக் கடையவரை ஏமாற்றிக் காசுபறிக் கின்றார் கொள்ளுநெறி இயற்கைஎன்று குருவாயில் சொற்ற குணவழியே நிற்கஅருள் குறைவில்லா நிறைவே. 5 அன்பியற்கை நெறிக்குரிய அறத்துறைகள் பலவே அச்சாணி அகவொழுக்கம் அதன்விளைவாம் எல்லாம் துன்பினிற்சென் றுழல்புலன்கள் இயற்கையிலே தோய்ந்தால் தொல்லைஅலை மனம்விரைந்து சூழும்உரு ஒன்றை என்புருக்கு முறையிலெண்ணி எண்ணியொன்றின் ஒடுங்கும் எப்பயனுங் கருதாது பணிசெயவும் தூண்டும் மன்மலர்நுண் பொலிவுமெங்கும் நின்மயமே தோன்றும் மானுடத்தின் மாண்பென்னே வள்ளால்நின் கொடையே. 6 நெஞ்சமல ருள்திகழும் நிதிகாண நீங்கா நீதிவளர் நிட்காமம் நிறைந்தபணி வேண்டும் நஞ்சனைய காமியமோ நான்நானே பெருக்கும் நானானால் எங்கெங்கும் ஞானநிலை என்னாம் வெஞ்சினமும் வஞ்சனையும் வேர்விடுத்து வளர்ந்து வெடிகுண்டாய் அமர்க்களமாய் வெறும்பிணமாய் அழுகும் துஞ்சிடவோ மானுடத்தைத் தோற்றுவித்தாய் இறையே தொண்டர்படை சூழ்ந்துலகைத் தூய்மைசெய அருளே. 7 கண்மூக்கு சாண்வயிறு கைகாலோ மனிதம் கட்டுநரம் பெலும்புநிணம் தோலுடுப்போ மனிதம் வெண்வாக்கு வீண்நினைக்கும் வெறுமனமோ மனிதம் வேடிக்கை தாள்படிப்பு விளம்பரமோ மனிதம் மண்ணோக்கிக் களியாட்டில் மயங்குவதோ மனிதம் வனவிலங்காய் உண்டுறங்கி வாழ்வதுவோ மனிதம் உண்ணோக்கிப் பணிபுரிந்தே ஒளிபெறுதல் மனிதம் உனையுணர்த்தும் மனிதமதை ஓம்பஅருள் அரசே. 8 உலகுடலம் புறக்கரணம் உட்கரணம் ஏனோ ஓங்குமலை காடுவயல் ஓதவெளி ஏனோ கலைகளுடன் ஓவியங்கள் காவியங்கள் ஏனோ கதைநடனம் இசையரங்கம் காட்சிநிலை ஏனோ பலமதமும் கோயில்களும் பள்ளிகளும் ஏனோ பரஞானம் சத்தியமும் பத்திமையும் ஏனோ கலகமிடும் விலங்காகிக் கழிவதற்கோ மக்கள் கருணைகொழி தண்கடலே காசினிபார்த் தருளே. 9 அரிதாய பிறவியெனக் கருளரசே ஈந்தாய் அதைநெறியிற் பயன்படுத்தா அறியாமை எனதே உரிதாய அகமலருள் உன்னைஉண ராதே உற்றபிறப் பரும்பயனின் உறுதிஇழந் தேனே கரிதாய செயல்புரிந்தேன் கடவுளுனை மறந்தேன் கடையவரிற் கடையவனாய்க் கழிவுபட லானேன் பெரிதாய பிழைபுரிந்தேன் பொறுத்தருளல் வேண்டும் பிள்ளைகுறை கண்டுதள்ளும் பெற்றவளும் உண்டோ. 10 11. சன்மார்க்கம் சன்மார்க்கம் தோன்றியநாள் சாற்றுதற்கோ இல்லை சான்றுகளும் கருவிகளும் சாத்திரமும் இல்லை பன்மார்க்கக் காலமெலாம் பகர்கின்றார் புலவோர் பார்த்தறியார் அவைபிறந்த பதமறியார் ஐயா சன்மார்க்க வேரினின்றுந் தழைத்தவகை தெளிந்தால் தனித்தோற்றம் இல்லைஎன்பர் சரித்திரத்துக் கெட்டா உன்மார்க்கம் சன்மார்க்கம் உனக்குண்டோ தோற்றம் ஒடுக்கமொடு தொடக்கமிலா உண்மையெனும் பொருளே. 1 மாறாத சத்தாகி மருவுகின்ற அறிவே மார்க்கமெலாஞ் சன்மார்க்க மலரென்று தேர்ந்தோர் சீறாத சிந்தையிலே தெளிதேறல் இன்பே சித்தர்வழிச் சன்மார்க்கம் செறியவைத்த இறையே வேறான கருத்துடையார் வேரறியா வெறியர் விதவிதமா மார்க்கமென்று வீண்வாதஞ் செய்வர் தேறாத அவர்வினையால் செகங்கெடுத லாச்சே தீமைஎரி பரவிவரல் திருவருளுக் கழகோ. 2 காண்கின்ற பலதீவு கால்கொளிடம் ஒன்றே காராவும் வெண்ணாவும் கறக்கும்பால் ஒன்றே பாண்மொழிகள் பலஒலிக்கப் படியும்பொருள் ஒன்றே பன்னிறத்து விளக்குநிரை படருமின்னல் ஒன்றே பூண்தொடையல் புகுந்தகயி றொன்றேஆ மாறு புகல்மதங்கள் உயிராகப் பொலியுஞ்சன் மார்க்கம் மாண்புறும்அம் மார்க்கமென்றன் மனம்பதியச் செய்தாய் மதக்கழுது விடுத்ததென்னை மாதேவா அருளே. 3 மதங்களெலாஞ் சன்மார்க்க அடிகொண்டே மலரும் மாண்புணர அருள்புரிந்த மன்னவனே வாழி மதங்களென்றே அடியிலுள மார்க்கம்மறந் தாலோ வாதப்பேய் தலைவிரிக்கும் மக்கள்நிலை திரியும் இதஞ்செய்யும் அடிமார்க்கம் இழந்தமதம் நஞ்சாய் எஞ்ஞான்றும் இகல்பெருக்கும் இன்னாமை விளைக்கும் அதஞ்செய்யும் துன்மார்க்க அலகையெலாம் அழிய அன்புவிளை சன்மார்க்கம் ஆக்கமுற அருளே. 4 சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மைஅறம் அன்பழிக்குந் துயர்மதங்கள் தொலைய ஆதிமுடி வில்லாத அருட்சோதி தேவே அகிலமெலாஞ் சன்மார்க்கம் ஆர்த்தெழச்செய் யரசே. 5 இறையவனே சன்மார்க்கம் உன்னருளால் வளர்த்தோர் எழில்மௌனி சனத்குமரன் இளங்கண்ணன் அருகன் அறமுரைத்த புத்தனுயர் ஆப்பிரகாம் மோசே அன்பேசு வள்ளுவனார் நபிநால்வர் ஆழ்வார் மறைமூலர் தாயுமானார் மாதுபிள வட்கி மதிஇராம கிருஷ்ணருடன் இராமலிங்கர் முதலோர் நிறைநின்ற திருக்கூட்டம் நீங்காத ஒளியே நின்மலனே சன்மார்க்க நிதிவளரச் செய்யே. 6 மொழியாலும் நிறத்தாலும் நாட்டாலும் மற்ற முறையாலும் பிரிஉலகை முழுஒருமைப் படுத்தும் வழியாதென் றறிஞர்பலர் வகைவகையே ஆய்ந்து வகுத்தனர்பல் சட்டதிட்டம் வாழ்வுபெற வில்லை பழியேதும் அறியாத சன்மார்க்கம் ஒன்றே பாழ்பிரிவு நினைவறுத்துப் பரிந்தொருமை கூட்டும் அழியாத அன்புடைய அப்பாஅம் மார்க்கம் அவனியெலாம் பரவிநிற்க அருள்புரிவா யின்னே. 7 இறையென்றும் இயற்கையென்றுஞ் சிலஅறிஞர் பிரித்தே இயற்கையினைத் துறந்துதனி இறைவஉனைப் பற்றல் அறமொன்றும் ஆத்திகமென் றறிவுறுத்த லழகோ அறிவேஉன் திருவுடலம் அழகியற்கை யன்றோ உறவொல்லும் இயற்கைவிடல் உன்னைவிட லன்றோ ஒளிஇயற்கை உன்னிருக்கை என்றுதெளி வடைதல் சிறையில்லாச் சன்மார்க்கச் சேர்க்கையென உணரச் செய்தஉன்றன் அருள்மறவேன் சித்தருள விளக்கே. 8 பாரினிலே கலையென்று கொலைக்கலையே இந்நாள் பரவிநஞ்சம் உமிழ்ந்துவரல் பரம்பொருளே அறிவாய் போரினிலே விஞ்ஞானம் புரிகின்ற ஆடல் புலைமறமே அச்சோவென் றலமரலை அறிவாய் வேரிழந்த அரக்கர்கலை மீண்டுமெழல் நன்றோ வீரமென ஈரமிலா வினைபெருக்க லழகோ சீரிழந்த உலகுய்யச் சிற்பர! சன்மார்க்கச் bršt!அருள் மழைபொழியாய் சிறுபிழைகள் பொறுத்தே. 9 மண்ணெல்லாஞ் சன்மார்க்க மலராட்சி வேண்டும் மார்க்கமெலாஞ் சன்மார்க்க மணங்கமழல் வேண்டும் கண்ணெல்லாஞ் சன்மார்க்கக் காட்சியுறல் வேண்டும் காதெல்லாஞ் சன்மார்க்கச் கேள்விநுழை வேண்டும் பெண்ணெல்லாஞ் சன்மார்ககப் பிள்ளைபெறல் வேண்டும் பேச்செல்லாஞ் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும் பண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும் பரம்பொருளே சன்மார்க்கப் பணிசெய வேண்டுவனே. 10 12 சன்மார்க்கம் பிள்ளைவிளை யாட்டினிலும் பின்னைவிளை யாட்டினிலும் பள்ளிவிளை யாட்டினிலும் படிந்துழன்ற சிந்தையிலே கள்ளமழி சன்மார்க்கம் கருவிழுந்த தறியேன்யான் வள்ளலுன தருட்பெருக்கை வகுத்துரைப்ப தெவ்வாறே. 1 சாதிமதக் குழிநரகச் சாக்கடையில் விழுந்தேற்கும் ஆதிநெறிச் சன்மார்க்க அருட்கரையை உணர்வித்த நீதிஇறை! நின்கருணை நிறைதெளிய வல்லேனோ சோதிமுடி அடியில்லாச் சொலற்கரிய சுகப்பொருளே. 2 பன்மார்க்க அடியாகிப் பண்புவளர் சன்மார்க்கம் உன்மார்க்கம் ஒருமார்க்கம் உயர்மார்க்கம் வேறில்லை தொன்மார்க்கம் என்னுளத்தில் துலங்கவைத்த மெய்ப்பொருளே துன்மார்க்கம் சாயஇங்குத் துணைசெய்ய அருள்பொழியே. 3 சன்மார்க்க மரந்தாங்கும் பன்மார்க்கக் கிளைகளிலே நன்கார்ந்தே எம்மார்க்கம் நடந்தாலுஞ் சன்மார்க்கம், என்மார்க்கம் உன்மார்க்கம் என்றுசமர் விளைப்பவரே துன்மார்க்கர் தாய்மறந்த துகளரவர்க் கருளிறையே. 4 மார்க்கமெலாம் ஊடுருவி மருவிநிற்குஞ் சன்மார்க்கம் பார்க்கமுடி யாதவரே பலசமய அமர்விளைப்பர் சேர்க்கையினால் நஞ்சுலகில் தேக்கிவரல் நீஅறிவாய் ஆர்க்கஅவர்க் கருள்பதியே அதுவுமுன்றன் கடனன்றோ. 5 சன்மார்க்கம் கல்வியிலே சன்மார்க்கம் காதலிலே சன்மார்க்கம் வாழ்க்கையிலே சன்மார்க்கம் பொருளினிலே சன்மார்க்கம் ஊரினிலே தழைத்துவரின் உலகமெலாம் சன்மார்க்க மயமாகும் சார்பரசேன் தனிப்பொருளே. 6 சிக்கோடு மதவாதச் சேற்றிருந்த எனைஎடுத்தே எக்கோயில் கண்டாலும் இறைநிலையம் என்றுதொழப் புக்கோடு நெஞ்சளித்துப் புதுப்பித்த பெருந்தகையே தக்கோனே சன்மார்க்கம் தழைக்கஎங்கும் அருள்புரியே. 7 அவனியிலே கிறித்துவரி லாமியரும் பௌத்தர்களும் சைவர்களும் வைணவரும் ஜைனர்களும் சார்புடைய எவரெவரும் பலபெயரால் ஏத்துமிறை ஒருநீயே தவறணைதல் ஆணவத்தால், சன்மார்கக ஒளிகாலே. 8 மண்ணீறு தாடிசடை மழிமொட்டை பட்டைஇடை வெண்ணீளம் காவி அங்கி வேடங்கள் பொருளானால் கண்ணீள மில்லாதார் காழ்ப்பிகலில் பயன்படுத்திப் புண்ணீள மாக்கிடுவர் சன்மார்ககம் புகுத்திறையே. 9 சாதிமத நிறநாட்டின் சண்டையெலாம் ஒழிந்தழிய மேதினியில் காலநிலை மேவுவணம் சான்றோர்கள் ஓதியபன் முறையுண்டே உயிர்அவற்றுள் சன்மார்க்கக் காதலிவர் மணநிகழ்ச்சி கடவுளதை ஓம்புகவே. 10 13. சமரசம் சாதியும் மரபுங் கொண்ட சந்ததி வழியே வந்தேன் சாதியும் மரபுந் தேய்க்குஞ் சமரசக் கருவி யானேன் நீதியே நெஞ்சில் மாற்றம் நிகழ்ந்தமை என்னே என்னே ஆதிநின் அருளின் ஆடல் அற்புதம் அறிவார் யாரே. 1 சத்தியம் சைவ மென்னுஞ் சால்புறு மரபில் வந்தேன் நித்தியச் சமய மெல்லாம் நிறைசம ரசமாக் கண்டேன் உத்தம அருள்செய் மாற்றம் உணர்வினுக் கெட்ட வில்லை அத்தனே இரும்பைப் பொன்னா ஆக்கிய பெருமை என்னே. 2 வாதமே தூண்டும் நூல்கள் வகைவகை பயின்றேன் ஆய்ந்தேன் பேதமே படிய வில்லை பெருஞ்சம ரசமே நாளும் போதமா ஓங்கப் பெற்றேன் பொன்னருள் செய்யும் வேலை நீதனேன் அறிவேன் கொல்லோ நித்தனே வாழி வாழி. 3 அரசியல் நிலையை ஆய்ந்தேன் அத்துறை படிந்தும் பார்த்தேன் கரவினைக் கண்டு கொள்ளக் கடவுளே கருணை செய்தாய் கரவர சிருளைப் போக்கச் சமரச பானு தேவை பரமனே உலகைக் காக்கப் பரிந்தருள் அதனை இன்றே. 4 செல்வனே சிறந்து வாழச் சிறுமையில் ஏழை வீழப் புல்கர சாட்சி மாறப் புனிதமாஞ் சமர சத்தை நல்கவே வேண்டு மென்று ஞாலமே கேட்டல் காணாய் பல்கவே உயிர்க ளெங்கும் பரமனே அருள்செய் யாயோ. 5 சமரசம் பொருளி லுற்றால் சாந்தமே ஆட்சி செய்யும் அமரரும் மண்ணில் வாழ ஆசைகொண் டலைவ ரையா சமரினைத் தூண்டும் ஆட்சி சாய்த்தது போதும் போதும் சமரச மார்க்கம் ஓங்கச் சத்தனே சிந்தை செய்யே 6 சமரச மார்க்கம் பல்கின் தரைபிடி அமர்கள் நேரா அமரெழுப் பாசை மாயும் அரும்பசி பிணிநோய் நீங்கும் குமரரின் வாழ்க்கை இன்பாம் குணம்வளர் கலைகள் பொங்கும் அமைஅரு ளாட்சி ஓங்கும் அப்பனே கடைக்கண் நோக்கே. 7 அண்டையன் பசியால் வாட அணங்கொடு மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று மன்னிடும் ஆட்சிக் குற்றம் தண்டனைக் கர்மம் என்னல் தயைவிலார் கூற்றே அப்பா எண்டிசை சமர சத்தை இன்புடன் நுகரச் செய்யே. 8 உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை, அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே. 9 சாதியும் மதமுஞ் சாய சண்டையும் மிடியும் மாய நீதியும் நிறையும் மல்க நித்தமும் வழிபா டோங்க ஆதியே காதல் மன்றல், ஆட்சியில் பொதுமை தேவை சோதியே சமர சத்தால் சூழ்தரும் கடைக்கண் நோக்கே. 10 14. சமரச சன்மார்க்கம் மார்க்கம் ஒன்றே சன்மார்க்கம் மலரச் செய்யும் சமரசமே யார்க்கும் உரிய அதுவளர்ந்தால் ஆக்கம் உறுமே உலகியல்கள் மூர்க்கம் அழியும் பன்மார்க்க மூடக் குறும்பு மாண்டொழியும் பார்க்கப் பொதுமைச் சன்மார்க்கம் பரமா அருளாய் அருளாயே. 1 சாதி ஆசை மதஆசை தரையின் ஆசை படிநெஞ்சம் நீதி ஆசை நின்னாசை நினையும் நிலையில் இல்லையே ஆதி சோதி அருட்சோதி அறிவுக் கறிவாம் மெய்ச்சோதி ஓதி ஒழுகின் சன்மார்க்கம் உறலாம் நல்ல நினைவினையே. 2 காத லொழுங்கில் சமரசமே கண்டால் உறலாம் சன்மார்க்கம் ஓதல் உணவில் சமரசமே உற்றால் பெறலாம் சன்மார்க்கம் வீதி உலவில் சமரசமே விளங்கின் இலகுஞ் சன்மார்க்கம் ஆதி எங்குஞ் சன்மார்க்கம் அடைய அருளாய் அருளாயே. 3 சாதி மதத்தில் சமரசமே சார்ந்தால் சேரும் சன்மார்க்கம் நீதி அரசில் சமரசமே நிறைந்தால் நிலவும் சன்மார்க்கம் வாதப் பொருளில் சமரசமே வாய்ந்தால் வளரும் சன்மார்க்கம் சோதி! எங்குஞ் சன்மார்க்கம் சூழ அருளாய் அருளாயே. 4 ஒளியுங் காற்றும் மலையாறும் ஓங்கு மரமும் நீல்கடலும் தளிமக் கலையும் சன்மார்க்கம் தழைக்கத் துணையாய்த் திகழ்நுட்பம் தெளியும் உள்ளம் நின்கோயில் செறியும் இயற்கை வடிவான வெளியே அளியே சன்மார்க்கம் விரிந்து பரவ அருளுதியே. 5 பரிதி எழுந்து மறையொழுங்கும் மதியம் தேய்ந்து வளரொழுங்கும் பருவம் மாறி வருமொழுங்கும் பார்த்துப் பார்த்துப் பழகிநிதம் கருவில் நெஞ்சில் உணவுறக்கில் காக்கின் ஒழுங்கு சன்மார்க்கம் மருவும் வாழ்வி லொழுங்குபெற மருந்தே தேவை உன்துணையே. 6 நெஞ்சி லெண்ணம் ஒழுங்கானால் நிரலே எல்லாம் ஒழுங்காகும் அஞ்சு மடங்கி ஒழுங்காகும் அங்கம் கரணம் ஒழுங்காகும் விஞ்சு ஒழுங்கில் சன்மார்க்கம் விளங்கி நிலவும் ஒழுங்கினிலே தஞ்ச மாகத் தற்பரமே தயவே வேண்டும் தனித்துணையே. 7 மலையில் பிறந்த சன்மார்க்கம் வனத்தில் வளர்ந்த சன்மார்க்கம் கலையில் அமைந்த சன்மார்க்கம் காணோம் காணோம் நாடுகளில் கொலையைக் கலையாக் குறிக்கொண்டு குண்டு தாங்கும் நாடுகளில் நிலவுங் கொல்லோ சன்மார்க்கம் நிலைமை எண்ணாய் இறையோனே. 8 எங்கும் உள்ள இறையோனே எல்லா உயிருள் இருப்போனே பொங்கும் அன்பு மக்களிடைப் பொருந்தா திகல்போர் எழுவதென்னை தங்குஞ் சுத்த சன்மார்க்கம் தழுவா தொழியின் அன்பெழுமோ துங்க உலகம் பரிணமிக்கத் துணைசெய் அரசே மெய்ப்பொருளே. 9 புல்லாங் குழலில் இசைமுழக்கிப் போதி நிழலில் தவங்கிடந்து கல்லா லடியில் பேசாது கல்லாம் மலையில் மறைபேசி எல்லா ருங்கொள் சமரசசன் மார்க்க மிசைத்தே உரிமையளி செல்வா சிறியர் பிழைபொறுக்குந் தேவா வாழி அருள்வாழி. 10 15. சன்மார்க்க வாழ்வு சமரசசன் மார்க்கமென்று தரைவெறுக்கும் வாழ்வு சார்ந்ததிடை நாளினிலே சனிபிடித்த தன்றே அமைஉலகம் ஆண்டவநின் அருட்பெருக்கின் கொடையே அதைவெறுத்தல் அறமாமோ ஆணைவழி யாமோ சுமையெனநின் கொடைவெறுப்போர் சோம்பரவர் பிறர்க்குச் சுமையாகி இடர்விளைக்குந் தொல்லையரே யாவர் சமரசன் மார்க்கஉண்மை தரணியிலே விளங்கித் தழைத்தோங்க அருள்புரியாய் தயையுடைய அரசே. 1 நிலநான்கு வகைபிரிய நிரனிரலே உரிய நெடுமரம்புள் விலங்குமக்கள் நின்றுகிளர் அன்பில் உலமான்ற குறிஞ்சிமுல்லை மருதநெய்தல் ஒன்றி ஒழுக்கமுறக் காதலெழு உடையவஏன் செய்தாய் நலமூன்றுஞ் சன்மார்க்க நாட்டமிக அன்றோ நண்ணியற்கை வாழ்வொறுத்தல் ஞானமெனல் நன்றோ புலநோன்பு கெட்டொழியும் பொறிகளலை சாடும் புனிதம்வளர் காதல்நெறி புவிபெருக அருளே. 2 பெண்பனையும் ஆண்பனையும் பேசிநிற்குங் காட்சி பெண்கொடியும் ஆண்கொடியும் பின்னிவளை காட்சி வண்டுளறச் சுரும்பிசைத்து மயங்கிவருங் காட்சி வாரணஞ்செம் பேடையிடம் மனஞ்செலுத்துங் காட்சி திண்ணெருமை நாகுடனே சேர்ந்துதிரி காட்சி செவ்வெருது பசுவருகே சிரித்தணையுங் காட்சி பண்மொழியின் அமிழ்துண்டு பத்தன்செலுங் காட்சி பண்பளிக்குஞ் சன்மார்க்கக் காட்சியன்றோ பரமே. 3 சன்மார்க்கம் இயற்கைஇறை! நின்னெறியென் றறியார் தவழிளமை வளமையினைத் தழற்கனலில் தீப்போர் துன்மார்க்க வினையியற்றித் தொலைவரவர் சொன்ன துகளுரைகள் துறைகளெல்லாம் தொல்லுலகை அரித்துப் பன்மார்க்கப் பகைவிளைத்துப் பாழ்செயலை அறிவாய் பாரெல்லாம் பாவஎரி பரவிவரல் அழகோ சன்மார்க்கம் நல்லியற்கை வாழ்வென்னும் உண்மை தரணியிலே வேரூன்றத் தயைபுரியாய் ஐயா. 4 இயற்கையிலே நீஇருந்தே இன்பளிக்கும் அன்பை இனிதுணர்ந்தால் காதல்நெறி இயல்விளங்கும் அப்பா செயற்கையிலே புலன்கெடுத்துச் சிந்தைகொலை புரிந்தால் சிற்பரனே உன்னருளின் சிறப்பையுறல் எங்ஙன் பயிற்சியிலே சன்மார்க்கம் இயற்கையர ணென்னும் பாடம்பெற லாமென்று பயின்றவரே சொற்றார் முயற்சியிலை மன்பதையில் மூர்க்கமெழ லாச்சு முழுஇயற்கை வாழ்க்கையெழ முன்னவனே முன்னே. 5 காதலுணர் வோங்கிநின்றால் கறைகள்படி யாவே காசினியே அன்பாகிக் கருணையொளி வீசும் காதலினைக் காமமெனல் கண்ணில்லா மடமை காதலொரு மகனொருத்தி ஓருயிராய் ஒன்றல், நீதியிழந் தொருவன்பல மனைகொள்ளல் காமம், நீசமிகு காமத்தால் நிலமெல்லாம் தீயாம் காதலிலே காதல்கொளல் சன்மார்க்க மென்னும் கருத்தளித்த இறையவனே காலடிகள் போற்றி. 6 ஆடல்நெறி பாடல்நெறி அன்பறிவு நெறிகள் அனைத்துமுள நெறிகளெலாம் அறிவுறுத்துங் காதல் நாடகமும் காவியமும் ஒவியமும் மற்றும் ஞானம்வளர் கலைகளெலாம் நன்குபுகழ் காதல் பீடுறுசன் மார்க்கநின்ற பெரியருக்கும் ஞானப் பித்தருக்கும் பத்தருக்கும் பேறளித்த காதல் ஈடிலருள் மாதருள்நின் இறைமையளி காதல் எவ்வீடும் எழுஅருளாய் இயற்கைஇன்ப இறையே. 7 காதலுறு இடம்நினது கருணைபொலி வீடாம் காதலுறா இடம்நினது கருணையற்ற நரகாம் காதனெறி சன்மார்க்கம் காட்டுவித்தல் கண்டே கலைவரைந்தார் அறிஞரெலாம் காட்டாக ஐயா காதலருள் மாதருள்நின் காட்சிபெறல் ஞானம் காணாது மாயையென்று கருதல்அவ ஞானம் காதலினைக் காமமென்று கருத்தழிக்கும் அமைப்பின் கால்சாய்ந்தால் உலகுய்யும் கடவுளருள் செய்யே. 8 மகனொருவன் மகளொருத்தி மணக்குமுறை உலகில் வளர்ந்துவரின் சன்மார்க்க வாழ்வினுக்குத் துணையாம் அகமடங்கி ஒருமைஎய்த ஐயஉனை நினைக்கும் அன்புவழி எளிதாகும் அறவொழுக்கம் இயல்பாம் இகலமைந்த கரணங்கள் இனியனவாய் மாறும் எவ்வுயிர்க்குந் தண்மைசெயும் இரக்கநிலை கூடும் தகவுடைய நடுநிலைமை சாருமென்று விளங்கத் தயைபுரிந்த அப்பாவே தாளிணைகள் வாழி. 9 எங்குமுள உனைக்காண எவ்வளவோ முயற்சி இவ்வுலகில் நிகழ்வதனை எவ்வுரையால் சொல்வேன் நங்கையரில் உன்னொளிகாண் ஞானம்வரல் போதும் நாதஉனை எங்குங்காண் ஞானமெளி தாகும் சங்கையிலாச் சன்மார்க்க வாழ்வுபெறலாகும் தன்னலத்தை அழிபணிசெய் சார்புவரு மென்றே இங்குளத்தில் தெளிவெழுந்த தெப்படியோ அறியேன் எல்லாமுன் னருளென்றே ஏழையடைந்தேனே. 10 16. குருமார் அளவுகடந் தோங்கண்ட அறிவே நீங்கா அழகியற்கைக் கோயிலமர் அன்பே ஞான ஒளியுடைய குருமாரின் உளத்தே மற்றும் ஒருகோயில் கொண்டருளும் ஒன்றே நல்ல வளமடைய உயிர்கட்கு மார்க்கங் கண்ட வான்கருணை வள்ளால் நீ வாழி வாழி தெளிவுபெற வழிபாட்டிற் சிந்தை வைத்த திருக்கூட்டம் நாடோறுஞ் செழிக்கச் செய்யே. 1 கண்ணாவுங் கைகாலுங் கருது நெஞ்சம் கரணவுறுப் பொன்றில்லாக் கடவு ளேநீ கண்ணாதி உறுப்புடைய குருமா ருள்ளக் கமலத்துள் விற்றிருக்குங் கருணை என்னே மண்ணார விண்ணார வயங்கி மேலும் மருவுகின்ற மணிவிளக்கே மக்கள் கூட்டம் கண்காண நாவாழ்த்தக் கைகள் போற்றக் கருத்தொன்ற வழங்குமருட் காட்சி வாழி. 2 எங்கெங்கும் நீங்காமல் இருந்தே எல்லாம் இயக்கிறையே எங்கெங்கும் பால்நெய் போலும் தங்கவுடல் குருமாருள் தயிர்நெய் போலும் தங்கும்வகை உணரவுநின் தயவு வேண்டும் அங்கமிலா ஆண்டவனே அங்கந் தாங்கும் அருட்குருமார் உளத்தொளியாய் அமர்ந்தும் அன்பு பொங்குவழி பாட்டேற்கும் புனிதத் தேவே பொன்னடிஎன் மனம்பூக்கப் பொருந்தச் செய்யே. 3 கோதிலவர் வழிபாட்டைக் கொள்வோர் யாவர் குருமாரோ அவருளத்திற் குலவும் நீயோ சோதனையும் வேண்டுங்கொல் சோதி நீயே தொல்லுலகில் முறைபற்றிக் குருமார் நீயென் றோதுநரும் உளரானார் உறவால் ஐயா ஒருகுணமுங் குறிதொழிலும் ஊரும் பேரும் ஆதிநடு முடிவுமிலா அறிவே அன்பர் ஆழநினை பொருளாகி அருளுந் தேவே. 4 பளிங்கனைய குருமாரைப் பலரென் றெண்ணாப் பண்புணரச் செய்தபரம் பரமே அன்னார் உளங்கனிய வீற்றிருக்கும் ஒளியே ஒன்றே ஒன்றேநீ இரண்டல்ல என்னும் உண்மை விளங்கியபின் பலருணர்வு விளைவ தெங்கே விதம்விதமே குருமாரென் றுணர்தல் விட்டுக் களங்கமிலாக் குருநாதன் என்று கொள்ளுங் கருத்தளித்த கற்பகமே கருணைத் தேவே. 5 குருநாதன் வரலாற்றுக் குறிப்பே இல்லான் குறிபருமை யல்லாத கோதில் நுண்ணி பருஞாலம் நெறிதவறும் பருவ மெல்லாம் பரிந்தெடுத்த கோலங்கள் பலவே நல்ல ஒருநாதன் பலமாராய் ஓதப் பட்டான் ஊர்பலவும் மொழிபலவும் உறைந்து பேசித் திருஞான நெறிவிளங்கச் செய்தான் என்று சிறுமனத்தைத் தெளிவித்த சித்தே வாழி. 6 குருநாதன் இறைநீயோ தனியோ என்றென் குறுமதியும் ஆய்ந்தாய்ந்து குலைந்த பின்னை ஒருநாளும் ஆய்வாலே உண்மை தேறல் உறாதென்றும் குருஅடியில் ஒன்றின் உண்மை ஒருவாத சிந்தனையில் ஒளிரும் என்றும் உறுதியிலா என்னுளத்தும் உணர்த்தி னாய்கொல் கருவாதை தீர்ப்பதென்ற கருணை போலும் கற்பனையெல் லாங்கடந்த கற்புத் தேவே. 7 குருமாரிவ் வுலகணைந்து குறித்த மார்க்கம் குவலயத்தில் பலமதமாய்க் கொழிக்கும் இன்பம் பருகாதார் பன்மார்க்கப் படுகர் வீழ்ந்து பழிபாவம் பரப்புகின்றார் பரமே உன்னைக் கருதாத நெஞ்சினரே கருணை இல்லார் கற்பகமே வெறிமதங்கள் காய்ந்து சாய ஒருநாத உன்மார்க்கம் ஓங்கச் செய்யாய் உயர்நாதங் கடந்தொளிரும் ஒருமைத் தேவே. 8 தனித்தனியில் ஒவ்வொரிதழ் சார்ந்து சார்ந்து தண்மலராய்க் காட்சியளி தன்மை போலத் தனித்தனியே குருநாதன் என்று கூறுந் தனியாட்சி சேர்ந்தக்கால் குருமா ரென்ற இனத்தாட்சி எழுந்ததென இறையில் தேறும் எளிவகையும் இங்குலவ இனிதே செய்தாய் மனித்தருக்குக் குருநாதன் வழியே நல்ல வாழ்வளிக்கும் வானொளியே மாண்புத் தேவே. 9 பொன்வணத்தார் அருள்மனத்தார் பிணிமூப் பில்லார் பொன்றலிலார் அறம்வளர்க்கப் பூண்பர் யாக்கை மன்னியற்கை ஏவல்புரி வரமே பெற்றோர் மலைமறைப்பர் கடல்பிரிப்பர் மற்றுஞ் செய்வர் உன்னரிய ஒலிமறையின் உண்மை சொல்வர் ஒருவர்பல ராவர்பலர் ஒருவ ராவர் பன்னுகுரு மாரென்று பாவி நெஞ்சில் படிவித்தாய் எப்படியோ பரமா வாழி. 10 17. எண்மர் கோதிலறம் வளர்க்கஇங்குக் குருமார் கொண்ட கோலங்கள் தொகைகாணக் கூர்ந்து பார்த்தேன் சோதனையில் தொகையொன்றுந் தோன்ற வில்லை தொடர்ந்துள்ள எண்மர்தொகை தோன்று மாறும் பேதமிலை அவருள்ளென் றுணரு மாறும் பேயுளமின் னொளிபிறங்கச் செய்த தென்ன சோதிநின தருள்போலும் தோற்ற மின்றித் துணைசெய்யும் இயல்புடைய சுடரே போற்றி. 1 1. மகம்மது நபி அரபிய நாட்டிற் றோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த மகம்மது நபியே போற்றி தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி போற்றி 2. இயற்கை அன்னை உருவமிலா இறைவனுக்கும் உடலளித்து நீல்வானக் கருமுடியும் தரையடியும் கடலுடையும் மலையருவி மருவணியும் புனைந்துகதிர் மலர்விழியால் இசைவடிவால் அருளுயிர்க்குப் பொழிஇயற்கை அன்னை திரு வடிபோற்றி. 3. கிறிது உலகம் உய்ய ஒளிவீசி உதித்த தெய்வச் சேய்போற்றி மலையி லெழுந்து மாசில்லா மறையைப் பொழிந்த மழைபோற்றி சிலுவை அறைந்தா ரிடத்தும் அருள் செய்த பொறுமை நிலைபோற்றி அலகில் பாவர் கொழுகொம்பாம் அன்பு கிறிது அடிபோற்றி. 4 4. அருகர் கொல்லும் ஆட்சி குணந்தெறு வேளையில் கொல்லா நல்லறங் கூறி வளர்த்தவன் அல்லல் தீர்த்தருள் ஆதி அருகனே மல்லல் மிக்க மலரடி போற்றியே. 5 5. புத்தர் சீலமெலாம் ஓருருவாய்த் திரண்டெழுந்தா லெனஉதித்த செல்வம்! போற்றி கோலமிகு மனைவிடுத்துக் கொடுங்காட்டில் தவங்கிடந்த குணமே போற்றி மாலரசின் அடியிருந்து மயக்கமற அறமுரைத்த மணியே போற்றி சாலறத்துக் குழுவிளங்கச் சங்கம்வளர் புத்தகுரு! சரணம் போற்றி. 6 6. கண்ணன் போரார்களம் பொலிதேரினில் பொருதப்புகு வீரன் வாரார்சிலை வளையாதவண் மயக்குற்றமை கண்டு நாரார்பயன் கருதாஅற ஞானந்தரு கண்ணா தாரார்மணி வண்ணாஅணி தாண்மாமலர் போற்றி. 7 7. குமரன் ஆற்ற இளமை அழகா குமரா ஏற்ற அயில்வேல் இறைவா முருகா ஊற்று மலையி லுலவுங் குகனே போற்றி அடிதாள் புகலே குருவே. 8 8. மோனமூர்த்தி மூன்று புரமெரித்த முக்கண்ணா கல்லாலின் கான்று மொளியடியில் கைகாட்டி முத்திரையால் சான்ற அறநுட்பம் சாற்றாமல் சாற்றுமொரு தோன்றலாம் மோனகுரு தூயதிருத் தாள்போற்றி. 9 18. வாழ்த்து உருவமில் இறைவன் ஒருவன் என்றே அருளிய மகம்மது பெருநபி வாழி உன்னற் கரிய உருவமில் ஒருவனை உன்னற் குரியனாய் உதவ உடலளி கன்னி இயற்கை அன்னை வாழி நேசி பகைவரை என்று பேசி ஆணி அறைந்த மாணில ரிடத்தும் இரக்கங் காட்டிப் பரக்கச் சிலுவையில் நின்ற கிறிது அன்பு வாழி கொலையர சோங்கிய நிலையில் தோன்றி அஹிம்ஸா பரமோ தர்மா என்றும் தயா மூல தர்மா என்றும் அருளறம் வளர்த்த அருகன் வாழி சீலமே திரண்ட கோலங்கொண்டு போதியி னடியில் சோதனை செய்து ஒருமையில் நின்று தரும முணர்த்திய சத்திய ஞானப் புத்தன் வாழி பாரதப் போரிடைச் சாரதி யாகிப் பயன்கரு தாத வியன்திருப் பணியாம் பாதைகாட்டும் கீதையை ஓதிய கொண்டல் வண்ணக் கண்ணன் வாழி நாதக் கொடியும் போதவிந் தூர்தியும் ஞான வேலும் மான இச்சா சத்தியும் எல்லாச் சித்தியும் உடைய அமரன் அழகுக் குமரன் வாழி காமனைக் காய்ந்து காலனைக் கொன்று முப்புரம் எரித்தே அப்புர முள்ள கல்லா லடியில் சொல்லா மற்சொலும் மோனம் வாழி சாந்தம் வாழிசன் மார்க்கம் வாழி இனிதே. 19. குருமார் ஒருமை உலகெல்லாம் பொலிந்தோங்க உயிர்ப்பளிக்குஞ் செழுங்கதிரே புலனெல்லாம் வென்றவர்க்குப் புத்தமிர்தஞ் சொரிமதியே கலையென்னும் பயிர்தழைக்க அறிவுபொழி கருமுகிலே அலகில்லா ஒளிவண்ண அருட்குருவே அடிபோற்றி. 1 மக்களுயப் பலமதங்கள் மருவஅமைத் தவற்றினிடை மிக்கதொரு சமரசத்தை மிளிரவைத்தாய் உயிரென்னச் சிக்கலதில் உற்றதென்ன? சிற்றுயிர்கள் அறியாமை தக்கவர்க்கு வழியுணர்த்துந் தழல்வண்ண மெய்க்குருவே. 2 எம்மதத்தில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் செம்மையறம் நின்றொழுகின் சீர்பெறுதல் கூடுமென்று மெய்ம்மையுரை பகர்ந்தகுரு மேலவனே பன்மைமத மம்மரழித் தெனையாண்ட மாண்பினையான் மறவேனே. 3 விதங்கண்டு வாதஞ்செய் வீணருடன் உழன்றேற்கு மதங்களெலாம் உன்னடியில் மலர்ந்துநிற்கும் உண்மைநிலை இதம்விளங்க என்னுளத்தில் எம்பெருமான்! செய்தனையே பதங்கடந்த நிலைகுறிக்கும் பரமகுரு வாழியரோ. 4 அறந்தேய்ந்த இடமெல்லாம் அவதரிக்கும் ஓருவஉனைச் சிறந்தார்க்கும் பலபெயரால் செகம்போற்றும் உண்மைநிலை மறந்தார்கள் பன்மையிலே மயங்குகின்றார் வாதத்தில் புறங்காண வாதமெலாம் பொன்னடியை வேண்டுவனே. 5 ஒருவஉனக் குலகளித்த உத்தமப்பேர் பலகொண்டு குருமௌன மூர்த்தியென்றுங் குமரனென்றுங் கண்ணனென்றும் மருவருகன் புத்தனென்றும் மலைக்கிறித்து நபியென்றும் கருவியற்கை கன்னியென்றுங் கருதிநிதம் வாழ்த்துவனே. 6 ஆலமரும் மௌனியென்பேன் அணிகடம்புக் குமரனென்பேன் காலமலர் புன்னைநிழற் கண்ணனென்பேன் கடிப்பிண்டிப் பாலமரும் அருகனென்பேன் பண்பரசுப் புத்தனென்பேன் கீலமரக் கிறித்துவென்பேன் பிறரென்பேன் குருவுனையே. 7 ஆலடியில் அறிவளித்தாய் அசோகடியில் அருளளித்தாய் கோலரசில் அறமளித்தாய் கொலைமரத்தில் அன்பளித்தாய் நீலடியில் இசை அளித்தாய் நிறைகடம்பில் அழகளித்தாய் சீலகுரு உனையடைந்தேன் சிறியேனுக் களிப்பதென்னே. 8 உருஅருவ மில்லாத ஓர்இறையே உண்டென்னும் அருமறைகள் மொழியாலே அருள்ஞானம் அமைவதுண்டோ உருவுடைய குருநாதா உன்காட்சி இறைசேர்க்கும் பொருளுணர்ந்து வந்தடைந்தேன் பொய்கடிந்து மெய்யருளே. 9 காணாத இறையென்றும் காணவல்ல இறையென்றும் மாணான மறையுரைக்கும் மனந்தெளியா தலுத்துழன்றேன் வாணாளை வீணாக்கி வாடிமிக வந்தடைந்தேன் காணாத இறைகாட்டுங் காணிறைநீ குருவென்றே. 10 20. குருநாதன் உருஅருவம் அருவுருவம் ஒன்றுமிலா இறைவிளங்கும் திருவுடைய உளக்கமலத் தெய்வவொளி குருநாத உருவெடுத்த நாள்முதலா உனைநாடி உழைத்திருந்தால் பெருநிலையைப் பெற்றிருப்பேன் பிழைபொறுக்க வேண்டுவனே. 1 பருமையினைப் பயில்கின்றேன் பருமையினைப் பருகுகின்றேன் பருமையெலாங் கடந்தொளிரும் பரம்பொருளை அடைவதெங்ஙன் குருபரநின் திருவடியைக் குறிக்கொண்டு வாழ்ந்திருந்தால் திருவருளைப் பெற்றிருப்பேன் சிறுமையினைப் பொறுத்தருளே 2 குறியில்லா உலகினிலே குறிநெறிகள் பலஉண்டு நெறியெல்லாம் நின்றாலும் நின்கருணைத் திருநோக்கைப் பெறினல்லால் இறைமைநிலை பெறலரிதென் றுணர்ந்துவந்தேன் அறமெல்லாம் அருள்குருவே அடியன்முகம் பாராயோ. 3 உருவாதி இலாஇறையே உயிர்க்கருள உருத்தாங்கிக் குருவாக வருவதெனக் கூறுவதும் மறுப்பதுவும் பருவான உலகியற்கை பாழாய்வில் படிந்தெழுந்து குருநாத உனையடைந்தேன் குணக்குன்றே ஆண்டருளே. 4 ஏடுகளை ஆய்ந்தாலும் எம்மதத்தில் புகுந்தாலும் காடுமலை அடைந்தாலும் கண்டனங்கள் செய்தாலும் பாடுபல பட்டாலும் பயனிலைஎன் றுணர்ந்தின்று வாடுநிலை நீ அறிவாய் வாழஅருள் குருமணியே. 5 சடையினிலும் உடையினிலும் தாடியிலும் மொட்டையிலும் படைபடையாய்ப் பாடலிலும் பஜனையிலும் பூசையிலும் உடையதிரு ஞானம்வளர் உறுதியிலை எனத்தெளிந்தே அடைவெனநின் னடிஅணிந்தேன் அருள்புரியாய் குருமணியே. 6 மண்விடுத்துப் பொன்விடுத்து மங்கையரை விடுத்தொதுங்கிக் கண்ணடைத்துக் காற்றடைத்துக் கல்மரமா யிருப்பதிலும் பண்பிலையென் றுணர்ந்துனது பதமலரில் வண்டாக நண்ணியதை நீஅறிவாய் ஞானமருள் குருமணியே. 7 கந்தனென்றோ கிறித்துவென்றோ கண்ணனென்றோ மற்றுமுள எந்தநிலை கொண்டேனும் எனக்கருள வரல்வேண்டும் சிந்தனையே உனக்காக்கிச் சின்மயமே ஒன்றுகின்றேன் சந்தமறை மொழிந்தருளிச் சகங்காக்குஞ் சற்குருவே. 8 என்மனமே குருவாகி எனைநடத்தும் வழிகாணேன் பொன்மனத்தைக் குரங்காக்கிப் புகுந்துழன்றேன் புரைநெறியில் கன்மனத்துப் பாவியெனக் கைவிடுத்தா லெங்கடைவேன் பன்மரஞ்சூழ் செடியாகிப் படுகின்றேன் அருள்குருவே. 9 உருவாகி அருள்புரிவாய் உணர்வாகி அருள்புரிவாய் கருவாகி அருள்புரிவாய் கருத்தாகி அருள்புரிவாய் பெருமானே எப்படியும் அருள்புரிவாய் என்றென்றே குருவேஉன் னடிஅடைந்தேன் குறைநீக்க அருளுதியே. 10 21. மனம் எல்லாம் வல்ல இறையோனே என்னில் மனத்தை ஏன்படைத்தாய் பொல்லா அதனை வழிபடுத்தப் புனிதா உன்னால் இயலாதோ வல்லா ரதனை ஆய்ந்தாய்ந்து வரைந்த உரைகள் பலகொண்டு கல்லார் கற்றார் மயங்குவதைக் காணாய் கருணைப் பெருங்கடலே. 1 எங்கு முள்ள இறையோனே என்னுள் நீங்கா இனிமையனே அங்க உறுப்பில் மனமொன்றோ அதனில் அடங்கும் எல்லையதோ எங்கும் ஒடி இயங்குவதோ இனிதோ தீதோ ஐயாவே சங்கை அறுத்து நிலைபெறுத்திச் சாந்த வண்ணம் ஆக்காயோ. 2 என்னிலுள்ள மனம் இன்னே எழுந்து கங்கை ஹோயாங்கோ பன்னு வால்கா மெஸோரி பரவு தான்யூப் தேம்மூழ்கி மின்னு மதிசேய் குருஅருக்கன் மிளிரு நிபுலை சென்றுசென்று துன்னும் விரைவின் மாயமென்னோ துகளே இல்லாத் தூயோனே. 3 மலையா ஒங்கும் அணுவாகும் மற்போர் செய்யும் அமைதியுறும் புலியாய்ப் பாயுங் கோவாகும் புயலாய் வீசும் சிறுகாற்றாம் கலையாய் வளரும் கசடாகும் கருணை பெருக்கும் கொலைபுரியும் நிலையா மனஞ்செய் நடமென்னே நினைவுக் கெட்டா மெய்ப்பொருளே. 4 மனமே புலனாய்ப் பொறியாகி வயங்கும் உடலாய் உலகாகி அனலி மதியாய்க் கோளாகி அவைக ளுணர்த்துங் கலையாகி நினைவாய்க் கனவாய் உருவெளியாய் நிகழ்த்தும் மாயம் என்னேயோ சினமே இல்லாச் சிற்பரமே சிந்தைக் கெட்டா மணிவிளக்கே. 5 மனத்தின் விகாரம் யாவுமெனும் மறைவைத் தெளிய அலைந்தொழிந்தேன் வனத்தில் விகாரம் மாயுமெனும் மாற்றம் பொய்யென் றறிந்துணர்ந்தேன் மனத்தின் எல்லை கடந்தொளிரும் மன்னே மின்னே உன்னடியார் இனத்திற் சேர்ந்தால் தெளிவடைவேன் இன்பப் பொருளே அருளாயே. 6 புறத்தே உழலும் மனந்திரும்பிப் புகுந்தால் அகத்தே புலனடங்கும் அறத்தின் கூறு கால்கொள்ளும் அதுவே குருவாய் வழிகாட்டும் பொறுத்தல் வளரும் அருளுற்றுப் பொங்கும் புனித ஞானவெளி திறக்கும் இவைகள் எளிதாமே சித்தே உன்றன் துணைபெறினே. 7 நன்மை தீமை உலகிலுண்டோ நாடும் மனத்தில் அவையுண்டோ நன்மை நிறைந்த மனத்துக்கு நன்மை உலகே புலனாகும் புன்மைத் தீமை மனத்துக்குத் தீமை உலகே புலனாகும் பன்மை யுணர்வு மனஞ்சாகப் பரமே பணிசெய் கின்றேனே. 8 அச்சம் பொய்கோட் புறமனமே அருக அருக அகமனமும் பச்சென்றரும்பி மலர்ந்து நிற்கும் பயனே கருதாப் பணிபெருகும் அச்சம் பொய்கோள் அற்றொழியும் அன்பு வீரம் ஆர்த்தெழும்பும் விச்சே எதற்கும் அருள்வேண்டும் வீணன் முகத்தைப் பாராயோ. 9 குருவென் றெழுந்தால் அகமனமே குறைகள் தீர்ந்து குணமாகும் உருவில் காமன் காலன்செய் உருட்டும் மருட்டும் உதைவாங்கும் தரும மோங்கும் தயைவளரும் தரணி யெல்லாம் சோதரமாம் பெரும! எங்கும் உன்மார்க்கம் பிறங்கும் பிழைகள் பொறுத்தருளே. 10 22. மனக்குரு உடன்பிறந்து பிரியாதே உடன்வளர்ந்து வருமனமே கடந்தவரும் கடுந்தவரும் கற்றவரும் மற்றவரும் தடம்புவியில் உனை இகழ்ந்து சாற்றுவதென் வழிவழியே இடந்தரநின் பாலுள்ள ஏதமென்ன இயம்புதியே. 1 யானடையும் நிலைமைகளை ஆய்ந்துணரும் ஆற்றலிலார் ஈனஉரை பலபகர்ந்தே எனைஇகழ்வர் எனமனமே மானமுடன் உன்நிலையை மதிபதியச் செய்தாயுன் ஊனநிலை கழன்றுவிடின் உண்மைநிலை புலனாமே. 2 மனமேநீ அடைந்துவரும் மாயைநிலை எத்தனையோ நினைவேறிப் பார்க்குங்கால் நெடுங்கடலாய்த் தோன்றிடுமே இனமாகி இயங்குங்கால் எண்மூன்றி லடங்கிவிடல் தினமேவு தியானத்தால் திறப்பாமென் றுணர்த்தினையே. 3 புலன்களிலே உழல்கின்ற புறமனமாய் அவையொடுங்க நலன்களிலே நாட்டங்கொள் நடுமனமாய் ஆங்கிருந்து பலன்களிலே செல்லாத பணிபுரியும் அடிமனமாய் மலங்களிலே புரண்டெழுந்து மாசறுக்கும் மனம்வாழி. 4 புறநோக்கி மனமேநீ புரிகுறும்பால் இழிவுனக்கே. அறநோக்கும் நடுநுழைவில் அற்றுவிடும் இழிவெல்லாம் நெறிநோக்கும் அடிஅணைவில் நீகுருவே ஆகிஇறை நிறைநோக்கை அறிவுறுத்தும் நின்பெருமை புகலரிதே 5 புறமனமாய் நீபுரியும் பொல்லாத வினைபலவே அறமனமாய் நடுஅமைவில் அயல்மனங்கள் நினதாகும் திறமடவை சித்துவரும் செய்யாதே செல்லுவையேல் உறுவையடி நிலைமனமே உயர்குருவாய் எழுவாயே. 6 நீகுருவாய் எழுந்தருளி நிறைவழியைக் காட்டியதும் ஏகஒலி ஓசைஒளி எழும்முறையே எழில்மனமே போகுமிடம் மேலெங்கே புதுவாழ்வை அளித்தொளிக்கும் ஆகமிலாய் கைம்மாறோ ஆற்றும்வகை அறியேனே. 7 உன்புறமோ உப்பாழி உன்நடுவோ உயராவி உன்னடியோ தண்மைமழை ஒத்திருக்கும் வகையுணர நன்மனமே துணைபுரிந்தாய் நானிதற்கென் செலுத்துவனே பொன்மனமே என்றுன்னைப் போற்றிநிதம் வழுத்துவனே. 8 புறமடங்க அழகுருவைப் பொருந்தநினைந் ததிலொன்றில் நிறவுருவம் நடுநீறாய் அடிஒளியாய் நீறாகும் உறைபருமை நீராகி ஒலிகாற்றாய் ஒடுங்கல்போல் முறைமுறையே நிகழ்வதனை முழுமனமே உணர்த்தினையே. 9 பிடுங்குபுறம் வயமாகப் பிணிபுலனில் நுழைமனமே அடங்கநடு புகுந்தடியில் அணைந்துவழி காட்டிமறை தடங்கருணைப் பெருங்குருவே தரணிசொலுங் குருமார்கள் அடங்கலுமே நீயானால் யாரினியர் உனைவிடவே. 10 23. முறையீடு குறையுடையேன் கோதுடையேன் குணமில்லா நடையுடையேன் கறையுடையேன் கரவுடையேன் கருணையில்லாக் கருத்துடையேன் சிறையுடையேன் சினமுடையேன் சீரில்லா நெறியுடையேன் இறையவனே கடையேறும் இனியவழி காட்டாயோ. 1 பத்தியிலேன் பதைத்துருகும் பரிவில்லேன் நெஞ்சினிலே சுத்தமிலேன் வாழ்க்கையிலே சுகமில்லேன் துகளறுக்கும் புத்தியிலேன் சத்தியிலேன் பொறுமையிலேன் உனையன்றிச் சத்தியனே எனைக்காக்குஞ் சார்புடையார் எவரேயோ. 2 இளங்குழவிப் பருவத்தே இழைத்தபிழை யானறியேன் வளங்கொழிக்கும் பருவமெலாம் வளர்த்தபழிக் கென்செய்கேன் களங்கமற அழுகின்றேன் கருத்துநிலை அறிவாயே விளங்கருளைப் புரியாயேல் வேறுவழி எனக்குண்டோ. 3 உன்னருளைப் பெறவேண்டி உடலோம்ப விரையாதே என்னிமித்தம் உடலோம்பி இழிவினைகள் செய்தலுத்தேன் உன்னினைவு மனத்திலுற உயிர்சுற்றுங் கொழுகொம்பாய் மன்னுமுணர் வெழலாச்சு மன்னிப்பெழின் உய்வேனே. 4 பொல்லாத பழிபாவம் புகுந்திடவும் இடந்தந்த கல்லாத மாக்களினுங் கடையாய மனிதன்யான் நில்லாத விளையாட்டை நிலையாக நினைந்தழிந்தேன் நல்லார்தம் மனத்தமுதே நாயகமே பொறுத்தருளே. 5 புறமனத்தின் வழியுழலும் பொறிபுலனின் பொல்லாமை அறவுணர்ந்தே அகமனத்தில் அணைதருணம் ஆண்டவநின் உறவளித்தால் உயந்திடுவேன் ஒடுங்குந்தொல் வினையாவும் அறமலையே அருளருவி ஆனந்த மழையமுதே. 6 மதவெறியால் வாதப்போர் மலியிடங்கள் சென்றுழன்றேன் இதமறியேன் நிந்தனையும் இகல்பகையும் எழுந்தனவால் மதமெல்லாம் நீயொருவன் மருவுகின்ற நிலையுணர்ந்து பதமடைந்தேன் பரம்பரனே பழையவினை கழித்தருளே. 7 செருவார்க்கும் அரசியலில் சேர்ந்தார்ந்த மனந்திரும்பி அருளாக்க அரசியலில் அணைந்துபுக விழைவதனைத் தெருளான்ற அறவடிவோய் திருவுளநன் கறியாதோ இருளாற்செய் பிழைபொறுக்கும் இறையெனவந் தடைந்தேனே. 8 கன்மமெலாம் அநுபவித்தால் கட்டறுமென் றுரைக்கின்றார் கன்மமதில் கன்மமுளை கால்வழிகள் வறள்வதென்றோ கன்மவழி உழல்வதெனில் கருணைவள்ளால் நீஎதற்கோ கன்மவழி உழல்வதெனல் கடவுளுனை மறப்பதன்றோ. 9 கன்மமென்று நடுக்குற்றுக் கருத்துடைதல் எற்றுக்கோ வன்மமிலா அன்பிறைநீ என்றடியில் வணங்கிவினை உன்னிஅழு தழுதுருகின் உண்மையுணர்ந் தருட்பெருக்கால் கன்மமழி கணக்கறிந்தேன் கடவுள் நின தருளாலே. 10 24. முறையீடு பிறப்பிலே சாதி மதத்திலே சாதி பேசிடும் மொழியிலே சாதி நிறத்திலே சாதி நாட்டிலே சாதி நீதியில் நிறையினில் சாதி அறத்திலே சாதி ஆலயஞ் சாதி அழுகிய பிணத்திலுஞ் சாதி புறத்தகஞ் சாதி நாற்றமே எங்கும் புங்கவ அழித்தல்நிற் கரிதோ. 1 சாதியும் மதமும் சம்பிர தாயச் சாத்திரச் சூத்திரச் சழக்கும் சூதுடை வழக்க ஒழுக்கமும் சூழ்ந்து தொல்லருள் நெறியினை மறைத்துச் சோதியே உலகை அரித்துணல் கண்டும் சோதனை என்றுநீ இருந்தால் ஆதியே எளியேம் செய்வதொன் றறியேம் அருணெறி ஒம்புக அரசே. 2 திருநெறி என்னுஞ் செடிவளர் போழ்தில் சீறிய அலகையாய் வீறிப் பெருகிய சாதி முதலவெங் கொடிகள் பிறங்கலாய்ப் பிறங்கலாய் மண்டி அருளொளி படரா தடக்கினால் உலகில் அருநெறி எங்ஙனம் ஓங்கும் உருகிய உளத்தால் உன்னடி போற்றும் உண்மையை உணர்ந்தருள் அரசே. 3 மன்பதை இயங்கி மகிழ்வுற ஆதி மநுவெனும் மன்னவர் வகுத்த பொன்முறை யாலே பொங்கிய தன்பு பொலிந்ததிங் கமைதியே அந்த நன்முறைக் கூறு செய்தனர் பின்னோர் நானிலம் கலக்குற அரசே உன்னிய தென்னோ உலகினைத் திருத்தல் உத்தம ஒருவநின் கடனே. 4 அருணெறி செழிக்க அறத்தினர் தந்த அரசியல் எங்கணுந் தழைக்கத் தெருளறி வோர்கள் செய்தில ரதனால் செகமெலாம் கொலைக்கள னாச்சே மருளிலே வீழ்ந்து மன்பதை மறைந்தால் மன்னநின் னிடம்விடுத் தொருவா கருணைபின் னெவர்க்குக் காட்டுவை இன்பக் கடவுளே என்னுடை அன்பே 5 அன்பினில் வளர்ந்த அரசியல் சாய ஆசையே அரசியற் பேயாய்த் தன்னலத் தாயாய் விளம்பரத் தலையாய்த் தாக்கிடும் தாள்களாய்க் கட்சி வம்புக ளாகி வாதமாந் தேர்வாய் வதைபடைப் புரட்சியாய்க் கொலையாய்த் துன்புசெய் கோரம் சொல்லவும் ஒண்ணா தொலைத்தருள் சுதந்திரத் தேவே. 6 மக்களாய்ப் பிறந்தோர் மாக்களாய் மாற மரபிலா அரசியல் துணைசெய் சிக்குளே வீழ்ந்து செகமெல்லாம் சிதைந்து சிறுகுமிந் நாளினில் யாண்டும் பக்குவ ரில்லை பண்பினால் ஆக்கப் பரமனே நிலைமையை அறிவாய் விக்குளின் நேரம் விழிபுரள் வேளை விமலனே காத்தருள் செய்யே. 7 கைத்தொழில் செய்து கடவுளே என்று கழல்நினைந் தருளினால் வாழ்ந்த வித்தக வாழ்வு வீழ்ந்தது மின்னால் மேய்பொறிப் பேயினால் எழுந்த பித்தமே திரண்ட முதல்தொழில் பிரிவாய் நாடுகள் ஆசையாய் முடுக அத்தனே பழைய தொழில்வள ராட்சி அவனியில் அமைதர அருளே. 8 நாடுகள் ஆசை நாடுதல் செய்யும் நலமிலா ஆட்சியே வேண்டா பாடுக ளெல்லாம் குண்டுக ளாகிப் பாரினை அழித்திடல் தகுமோ ஏடுகள் படித்தோர் ஏழைகள் உழைப்பை எப்படி உணருவ ரந்தோ வாடுநர் குறைதீர் வள்ளல்நீ என்றே வந்தனன் திருவடி நினைந்தே. 9 சாதியும் மதமும் முதல்தொழில் முதலாம் தடைகளும் சாய்த்தன பொதுமை ஆதியே அதனை ஆணவச் செயலால் அமைத்தலின் அருமையை உணர்ந்து நீதியில் நிலவும் நின்னருட் டுணையே நினைந்தநல் வினைபுரி குழுவில் ஒதுதற் கரிய ஒருவனே கூடி உயர்பணி செய்யவேண் டுவனே. 10 25. முறையீடு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யனாய்த் திரிதரு பாவி மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்து மெய்யனாய் மேவுதல் என்றோ செய்யனே உன்றன் சித்தமென் மீது திரும்பினால் சீர்பெறல் கூடும் உய்யவே அருளாய் உண்மையே எங்கும் உளமுடை ஒப்பிலா மணியே. 1 கருத்தினால் பாவம் கண்ணினால் பாவம் கைகளால் பாவமே நிகழ்த்திப் பருத்தனன் கொழுத்த பாவியாய் வளர்ந்து படுசுமை பாரினுக் கானேன் கருத்தனே பாவக் கடல்கடந் தேறுங் கவட்டையைக் காண்கிலேன் நிலையை ஒருத்தனே அறிவாய் உதவிடல் வேண்டும் உனைவிடக் களைகணும் உண்டோ. 2 எங்கணும் உள்ளாய் ஈசனே பாவம் எப்படி நுழைந்ததோ அறியேன் இங்கதை ஆய இறங்கினன் நூல்கள் எடுத்தனன் அடுத்தனன் பலரைச் சங்கையே வளரச் சஞ்சலம் பெருகச் சார்ந்தனன் திருவடி இன்று புங்கவா புனிதா பொருந்திய பாவம் பொன்றிடச் செய்தருள் அரசே. 3 புறத்ததோ பாவம் அகத்ததோ என்று புந்தியைச் செலுத்திய புலவோர் புறத்ததே என்றும் அகத்ததே என்றும் புனைந்தனர் பலப்பல நூல்கள் அறத்திலே விளங்கும் ஐயனே அவைகள் அலைத்தலைத் தரிப்பதை அறிவாய் மறத்திலே விழுந்த என்மனம் மாய மாசிலா மணியருள் புரியே. 4 பாவமே நிகழ்த்திப் பாவியேன் வளர்ந்தால் பண்புறு நாளுள வாமோ காவலே செயினுங் கண்முதற் புலன்கள் கட்டுறல் அரிதெனக் கண்டேன் தாவர மென்னச் சலனமில் தவமோ சாருநாள் எந்தநாள் அறியேன் ஆவதென் வாழ்வில் ஐயனே படைத்த அப்பனே அடைக்கலம் அடியே. 5 கண்ணினை மூடக் காற்றினை அடக்கக் கருத்தினை ஒடுக்கிடச் சொல்லும் பண்ணிலா யோகர் படிகளி லுழன்றேன் பாழினிற் கழிந்தது காலம் மண்ணிலே பிறந்த பயனினை இழக்க மனமிலை வழியெனக் கருளாய் விண்ணிலே மிளிரும் விளக்குகட் கொளிசெய் மெய்விளக் கேயரு ளொளியே. 6 சிற்பர நின்றன் திருவருட் குறிப்பைத் தெளிந்துணர் திறமிலாக் காலம் பற்பல துறையில் பணிசெயப் பாவம் படர்தொறும் படர்தொறும் அரசே கற்பனை கடந்த கடவுளே அவ்வக் காலையில் காத்தமை இந்நாள் அற்புத மென்ன விளங்கியும் அருளில் அணைகிலா அறிவிலி யானே. 7 ஐயனே நின்றன் அருள்வழி நிற்க அடியனேன் முயன்றனன் முயன்றும் செய்யஅவ் வழியே செல்லவும் நினது திருவருள் வேண்டுமென் றுணர்ந்து கையனேன் நெஞ்சக் கல்கரைந் துருகிக் கண்புனல் உகுப்பதை அறிவாய் மெய்யனே கருணை வெள்ளமே புலனை வென்றிலேன் வெல்வகை யருளே. 8 இயற்கையின் உயிரே இன்பமே அன்பே ஈசனே என்னையும் படைத்துச் செயற்கையைப் படைத்த திறத்தினை அறியேன் தெய்வமே உயிர்களின் உள்ள முயற்சியின் பயனே முனிவிலா முதலே மூடனேன் நிலையினை அறிவாய் பயிற்சியும் படிப்பும் என்செயும் பண்பே! பாவியென் பிழைபொறுத் தருளே. 9 கற்றவ னென்று கருத்திலே செருக்கிக் காலமே கழித்தனன் வீணில் நற்றவஞ் செய்ய நாளிலை நல்ல ஞானிகள் கூட்டமு மில்லை குற்றமே செய்தேன் குறைபல உடையேன் குணமலை நீயெனத் தெளிந்தேன் பற்றென உன்னைப் பற்றினேன் இன்று பரமனே பார்த்தருள் செய்யே. 10 26. முறையீடு எத்துணைப் பிறப்போ எத்துணை இறப்போ எடுத்தனன் உலகினில் ஏழை அத்துணைப் பிறப்பும் அத்துணை இறப்பும் ஆண்டவ நின்னருட் கொடையே பத்திமை யோங்கப் படைத்தனை இந்தப் பண்புறு பிறவியை அந்தச் சத்திய நெறியில் நின்றிலன் பரம சாந்தமே அருள்புரி வாயோ. 1 நெறியிலே நில்லா நீசனேன் என்று நித்தனே தள்ளிநீ விட்டால் பொறியிலேற் கெந்தப் புகலிட முண்டு பொறுத்தலும் அருளலும் பொருந்தும் அறவியல் புடைய அண்ணலே உன்னை அடைந்தனன் பிழைபொறுத் தாளாய் அறிவிலி அழுத அழுகையை அறிவாய் அடைக்கலம் அடைக்கலம் அரசே. 2 பலதிறத் துறையில் படிந்தனன் பாவி பரமநின் னடியினை மறந்தே சிலதினம் உன்றன் சீரடி நினைக்கச் செய்ததும் அருட்டிற மன்றோ கலதிய ரேனும் பிழைகுறித் தழுது கசிந்துளம் உருகினால் அருளும் சலதியே அமுதே சார்ந்தனன் அடியில் சழக்கனை ஆண்டருள் செய்யே. 3 வீடுகள் கவலை வீதிகள் சவலை விரிபதி ஊர்களுங் குழப்பம் நாடுகள் புரட்சி பாடுகள் அதிகம் நாதனே அமைதியை நாடிக் காடுகள் புகினுங் கட்டுகள் சட்டம் கடித்திடுங் கொடுமைசேர் காலம் வாடுறு மனத்தால் வந்ததை அறிவாய் வள்ளலே வழியருள் செய்யே. 4 அமைதியே வாழ்க்கை நோக்கமென் றறைந்தார் அன்றருட் குரவர்கள் இன்றோ அமைவுறு தொழிலும் வாழ்க்கையும் அரசும் அமைதியை அரித்திடல் வெளியே சமயமும் உரிய கோயிலும் அமைதி சாய்த்திடும் நிலைமைநேர்ந் துளதால் இமயமா நிற்க எண்ணினேன் ஈசா இயலுமோ பரபரப் பிடையே. 5 மலையொடு பொழிலும் நதியொடு கடலும் மங்கையும் குழவியும் மதியும் கலையென நின்றே அமைதியை வழங்குங் காட்சியும் நெஞ்சினைக் கவரா நிலைமையை, உற்ற நிலத்தினை, மாற்றி நிறுத்திட எவர்தமால் இயலும் அலைவிலாச் சாந்த அமுதமே அருளால் அமைவுறா உலகமும் உண்டோ. 6 உலகினிற் பாவம் உறுத்தெழுந் தெரிக்கும் உண்மையை ஒருவனே அறிவாய் அலகிலா தெழுந்தால் அழித்திட வல்லார் ஐயனே யன்றிவே றுளரோ உலகுயி ரளித்துப் பாவமும் அளித்த உத்தம அருள்வணன் நீயே திலகமே உள்ளந் திகழொளி விளக்கே செல்வமே திருவருள் செய்யே. 7 இலக்கியம் பயின்றேன் இலக்கணம் பயின்றேன் எழிற்கலை பலப்பல பயின்றேன் அலக்கழி சரியை கிரியையில் நின்றேன் ஐம்புல யோகினில் நின்றேன் துலக்கஎன் னறிவைத் தோயநின் அன்பில் துகளற வாழ்வினில் ஐயா நலக்குற நோக்கின் நானற லுண்மை நாயக அருள்புரி யாயோ. 8 சீலமே நிற்கச் சிறியனேன் முயன்றேன் சிதைந்ததை இடையிடை அறிவாய் சீலமும் உனது திருவடித் தியானச் சிறப்பினில் விளையுமென் றுணர்ந்தே ஓலமே இட்டேன் குறைமுறை இட்டேன் ஒருமொழி கேட்டிலேன் என்றன் ஆலமே உண்டுன் அமுதினைச் சொரிவாய் ஆனந்த வான்மலை முகிலே. 9 முன்வினை என்றும் நிகழ்வினை என்றும் முகிழ்தரு பின்வினை என்றும் என்னவோ எழுதிச் சென்றனர் உளத்தின் எண்ணமோ அறிகிலேன் எல்லாம் உன்வினை என்னும் உண்மையை உணர்ந்தால் உறுதுயர் எங்ஙனம் பெருகும் பொன்னடி மறவாப் புண்ணிய நெறியே புனிதமே பொலியவைத் தருளே. 10 27. முறையீடு உன்னையே நினைக்க உன்னையே பேச உன்னருட் டொண்டையே ஆற்ற என்னையோ செய்தேன் ஏக்குறு கின்றேன் எப்படி உய்குவன் ஏழை உன்னியே பார்த்தேன் உளமெலாம் நடுக்கம் உறுவதை நீயுநான் அறிவேம் கன்னலே கரும்பே கருணையங் கனியே கடையனேன் பிழைபொறுத் தருளே. 1 கன்னலின் பாகே கட்டியே கரும்பே கருணைசேர் அமுதமே உன்னை முன்னைய வாழ்வில் முன்னிய தில்லை முற்றிலும் மறந்தது மில்லை பின்னைய வாழ்வில் முன்னினேன் பெரிதும் பேயனேன் மறந்ததும் உண்டு அன்னையே என்றும் அப்பனே என்றும் அடைந்தனன் பிழைபொறுத் தருளே 2 கல்வியில் விழ்ந்தேன் கலைகளில் வீழ்ந்தேன் கருணையில் வீழ்ந்திலேன் பாவி செல்வமோ இல்லை சேற்றினில் வீழத் திருவருட் டுணையென மகிழ்ந்தேன் பல்வகைக் களியில் படருறா நெஞ்சம் பரமனே அளித்தனை வாழி தொல்வினை அழிந்தால் நல்லுடல் பெறுவேன் தொடர்ந்தனன் பிழைபொறுத் தருளே. 3 சாதியில் நெளிந்தேன் மதங்களில் உழன்றேன் சாத்திரக் குப்பையில் புரண்டேன் நீதியே நாள்கோள் நினைந்தனன் நாயேன் நித்தியச் சத்தியப் பொருளே ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அநாதியே அனைத்திலும் உள்ள சோதியே தொல்லை வினைஎரி சுடரே சூழ்ந்தனன் பிழைபொறுத் தருளே. 4 நாத்திக நூலில் நாடிய குழுவில் நாட்டமும் வைத்தநா ளுண்டு நாத்திகம் என்னை நண்ணிய தில்லை நாதநின் அருளது போலும் ஆத்திக வேடம் அதிகமே உலவி அழித்தது அருணெறி, உண்மை ஆத்திகஞ் செழிக்க ஆருயிர் தழைக்க அணைந்தனன் பிழைபொறுத் தருளே. 5 செல்வமு மின்றிச் சீர்மனை யின்றிச் சிறக்குநன் மக்களு மின்றிப் பல்வள மின்றிப் பணித்தனை வாழப் பரமனே அதனுளங் காண வல்லமை யுண்டோ வாழ்க்கையை வகுக்கும் வள்ளல்நீ, அதன்படி ஒழுகிச் செல்வதென் கடமை சிறுமையால் இடையில் செய்தவெம் பிழைபொறுத் தருளே. 6 செல்வமோ சிறப்போ சேண்மையில் நின்று திகழ்தரும் போதெலாம் தடைகள் ஒல்லெனத் தோன்றும் உள்ளமும் மாறும் உலகமும் நகைசெயும் அரசே செல்வமுஞ் சிறப்பும் தெய்வமே உன்றன் திருவடி மலரெனக் கொண்டு நல்லவே பொழுது போக்குவன் நடுவில் நண்ணிய பிழைபொறுத் தருளே. 7 அளவிலாச் செல்வம் நினதெனும் ஞானம் அடையவே அடியனை இங்கே அளவுடைச் சிறுமை அமைதரு செல்வம் அடைவதைத் தடுத்தனை போலும் களவுறா இயற்கைக் கருணையாஞ் செல்வம் கண்ணனுங் கிறித்துவும் மற்ற வளவரின் செல்வம் வள்ளலே அளித்தாய் வழியிடைப் பிழைபொறுத் தருளே. 8 பிறந்தனன் இங்கே இறப்பனோ இங்கே பெயர்ந்துயான் எவ்விடஞ் செல்வேன் மறந்தனன் வழியை மயக்கினைப் போக்கும் மருந்துடை மருத்துவன் நீயே திறந்தன எல்லாம் சென்றுசென் றுழன்றேன் சேரிடந் தெரியவே இல்லை சிறந்தது காணத் திருவடி அடைந்தேன் சிறியனேன் பிழைபொறுத் தருளே. 9 பொன்னினிற் பொன்னே மணியினின் மணியே பொலிவினிற் பொலிதரு பொலிவே அன்னையின் அன்பின் அருளுடை அன்பே அழிவிலா இன்பமே அடியார் முன்னிய வண்ணம் முறைமுறை பெற்றார் மூர்க்கனேன் அடியனா வேனோ என்னயான்! ஈசா எப்படி உய்வேன் எளியனேன் பிழைபொறுத் தருளே. 10 28. விண்ணப்பம் எல்லாமாய் அல்லவுமாய் இருக்கும் ஒன்றே இயற்கையுடல் கொண்டருளும் இன்பே உன்னை நல்லாரும் பொல்லாரும் நாடல் என்ன நண்பரொடு பகைவர்களும் நண்ணல் என்ன கல்லாருங் கற்றவருங் கருதல் என்ன கருணையரும் வன்கணருங் கழறல் என்ன எல்லாரும் ஈசனென ஏத்தல் என்ன ஏழையேன் தெளிவுபெற இசைப்பாய் ஐயா. 1 பல்லுலகம் உனைப்போற்றிப் பரவல் உண்மை பரவலிலே பலதிறங்கள் பார்க்க லானேன் நல்லுலகம் பயன்கருதா ஞானப் பாதை நண்ணிஉனைப் பரவுதலை உணரச் செய்தாய் சொல்லுலகம் நடிப்பச்சம் பயனை நாடல் சூழஉனைத் தொழுதுவரல் தோன்றச் செய்தாய் நல்லுலகை நாடஅருள் நாயேன் உய்ய நாதாந்தங் கடந்தொளிரும் ஞானத் தேவே 2 காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக் கதைபேசித் தொழில் புரிந்து காசு தேடி மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ மக்கள்நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும் மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங் காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக் கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத் தேவே. 3 இளமையிருந் தெவ்வழியி லேனும் உன்னை எப்படியோ விதம்விதமாய் எண்ணி வந்தேன் வளமையிலும் எளிமையிலும் வணங்கி வந்தேன் வாதையிலும் மகிழ்வினிலும் வாழ்த்தி வந்தேன் உளஅலைகள் ஒடுக்கமுற உன்னி வந்தேன் உறாமையிலும் மறவாமல் ஓதி வந்தேன் களமொழியக் கட்டறுத்துக் கனவி லேனும் காட்சியினைக் காட்டாயோ கருணைத் தேவே. 4 பாவமனம் வாயுடலம் வகுத்தார் யாரே படைபடையாய்ப் பாவங்கள் படைத்தார் யாரே தேவஉன தகமறியேன் சேயின் கையில் தெறுகொள்ளி கொடுத்துவிடின் சேர்வ தென்னோ பாவமெலாம் பகர்ந்துருகின் மன்னிக் கின்ற பண்புடைமை உனக்குண்மை பிறங்க வைத்தாய் காவலிலே புலன்வைத்துக் கசிந்து நிற்கும் கடையன்நிலை கண்டருளாய் கருணைத் தேவே. 5 மூக்குநுனி நோக்கலொடு மூச்சை ஈர்த்தல் மூலஅன லெழுப்பலொடு பாம்பைத் தூண்டும் தேக்கமுத மலயோகச் சிந்தைவிட்டுத் தியானமெனும் அமலத்தின் தெளிவிற் சேர்ந்தேன் வாக்குமனப் பாவம்அறை வலிமை பெற்றேன் வந்துமுறை யிடுகின்றேன் வள்ளால் முன்னே நோக்கியருள் மன்னிப்பை நுழைவே றில்லை நோய்தீர அழுவதென்றன் நோன்பே ஐயா. 6 என்பாவம் வெளிப்படையாய் இயம்பும் ஆற்றல் எனக்களித்த வீரஇனி எளிய பாவம் என்பாலில் அணுகிவர எண்ணுங் கொல்லோ எண்ணினதைத் தலையெடுக்க ஈசா உன்றன் அன்பீனும் அருள்விடுமோ அரசே என்னை அருமந்த பிள்ளைகளில் ஒருவ னாக்கி இன்பாரச் செய்யஉளம் இசைந்தால் உய்வேன் எங்கெங்கும் வீற்றிருக்கும் இனிமைத் தேவே. 7 பாவமெலாம் எங்கிருந்து பரவிற் றென்று பனுவல்களை ஆய்ந்தாய்ந்து பார்த்துச் செத்தேன் மேவியதென் ஐயமின்றி வேறொன் றில்லை விரிவாய்தல் அருளில்லா வித்தை வேலை தாவியவெம் பாவத்தால் தவிக்கும் நாயேன் தற்பரனே உனையடைந்தேன் தக்க மார்க்கம் ஆவிநலம் உறக்காணும் அறிவு பெற்றேன் அழியாத ஆனந்த அருண்மைத் தேவே. 8 பாவமெனில் நடுங்குமனம் பாவிக் கீந்தாய் பரமநின தருட் பெருக்கைப் பரவல் எங்ஙன் ஆவியெலாம் பரவிடினும் ஆற்றா தன்றே ஆண்டவனே ஆருயிரே அமுதே அன்பின் காவியமே ஓவியமே கலையே தெய்வக் கற்பகமே கற்பகஞ்சேர் கருணைக் காவே காவிலுறு கடிமணமே மணத்தின் சூழ்வே கண்காண உளங்காணக் காட்சி நல்கே. 9 உலகிலுள பாவக்கார் ஓடிஒடி உறுத்துருமி நச்சுமழை உரமாய்ப் பெய்து மலையருவி முதலாகி மண்டி மண்டி மலட்டாறாய் ஊற்றாறாய் வானா றாகி நிலைகளெலாம் நிரப்பிஉயிர்ப் பயிர்கள் வேக நெருப்பாகி எரித்துவரல் நிமலா காணாய் நிலமழிந்தால் நின்னருட்கு வேலை ஏது நிறைபொருளே அமுதமழை நிரம்பப் பெய்யே. 10 29. அருள் வைப்பு பச்சையிளங் குழவியிலே பாவிசெய்த தறியேன் படிப்படியே வளருங்கால் பாவமுடன் வளர நச்சரவக் கூட்டரவை நண்ணவைத்த தென்னோ நல்லிளமைப் பருவத்தே நாதஉனை நினைந்த இச்சையிலும் பழிபாவம் இயங்கவைத்த தென்னோ என்வினையோ உன்னருளோ ஏழைஅறி யேனே எச்சமெலாம் நீறாக்கி எனையாளல் வேண்டும் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய அரசே. 1 இளமையிலே உன்நினைவும் இழிபாவ நினைவும் இரண்டுமொன்றாய் இயங்கவைத்த எண்ணமறி வேனோ முளைகிளரிப் பாவஎண்ணம் முகிழ்த்துமர மாகி மூடாமல் காத்தநுட்பம் மூர்க்கனறி வேனோ தளையுளதென் றறைந்துவிட்டார் தரணியிலே அறிஞர் தளைநினைவின் வேரறுக்குஞ் சக்தியிலை எல்லாம் விளைமுதலே உனைநோக்கி வேண்டுகின்றேன் அருளே வேறுதுணை இலைஎனக்கு வினைகடந்த பொருளே. 2 அயலவரின் மொழியினிலே ஆர்வம்வைத்தே அலைந்தேன் அதிற்பெரிய பட்டம்பெறும் ஆசையிடை வீழ்ந்தேன் மயலொழிய மனமாற மறித்தஅதி சயத்தை மாதேவா என்னசொல்வேன் மடமையறிந் தேனே கையிலெழு துங்கணக்குக் கதியெனவே கொண்டேன் கடிதிலதை விரைந்தொழித்த கருணையென்ன அரசே செயலினிலும் நீகலந்து செய்ததுணை உணராத் தீயன்பிழை பொறுத்தருளாய் திருவருளின் வைப்பே. 3 பள்ளியிலே போதிக்கும் பணியுவந்தே ஏற்றேன் பரமஅதன் பற்றறுத்த பான்மைஅறி யேனே கொள்ளைஎரி அரசியலில் குதித்துநின்றேன் ஐயா கொதிப்படக்கிப் பதைப்பொழித்த குணத்தையறி யேனே தெள்ளுதொழி லியக்கத்தில் சேவைசெய்தேன் பன்னாள் சிந்தனையீ டேறாது செய்ததறி யேனே வள்ளலுன தருட்பெருக்கின் வகையுணரா தொழிந்தேன் மலரடிஎன் தலைமீது வைத்தருளா யின்னே. 4 மனைவியொடு மக்களொடு மகிழ்வுடனே வாழ்ந்தேன் மாளஅவர் உளங்கொண்ட மாண்பையறி யேனே மனைவியென மற்றொருத்தி மனத்தில்மரு வாத வண்ணஞ்செய் வல்லமையின் வகையைஅறி யேனே தனிமையிலே வாழ்ந்துபணி தரணியிலே ஆற்றத் தற்பரநின் தயவென்ற தன்மையறி யேனே பனிமொழியர் காட்சியிலே பரமநின தொளியைப் பார்க்கஅருள் சுரந்தநலம் பாடஅறி யேனே. 5 உணவிலுளம் வைத்துவைத்து வகைவகையில் உண்டேன் உணவுளத்தை வறட்டுவித்த உளவைஅறி யேனே வணவணமாய்ப் பட்டாடை வரிந்துகட்டி வந்தேன் வரிவழக்கம் அறவொழித்த மர்மம்அறி யேனே கணகணமாப் பேச்செழுத்தால் கலக்கிவிட்டேன் நாட்டைக் கலக்கவழி மறைத்தடைத்த கணக்கைஅறி யேனே நிணநிணமே செறிபுரட்சி நினைந்தநெஞ்சை அப்பா நீக்கியற மாக்கியதன் நீர்மையறி யேனே. 6 சாதிமதச் சாக்கடையில் சருக்கியடி வீழ்ந்தேன் சமரசசன் மார்க்கமெனுஞ் சார்பளித்த தெதுவோ ஓதுகலை மயற்கடலில் உளமிருத்திப் படிந்தேன் உயர்இயற்கை கலையென்றே உணர்வித்த தெதுவோ போதனையில் நெடுங்காலம் புந்திவைத்தேன் ஐயா போதனையிற் சாதனையே பொருந்தியதென் றெதுவோ சோதனையில் ஆழ்ந்தாழ்ந்த சோதனைக்கும் எட்டாச் சோதிநின தருளன்றிச் சூழ்வதுவே றுளதோ. 7 உருவவழி பாட்டுறுதி ஒரோவழியிற் செய்தால் உறுதிகுலைந் தொருமைகெடும் என்றுரைத்த தெதுவோ திருவுடைய அகத்திணையின் சேர்க்கைபெற்றா லுருவத் திறம்விளங்கும் என்றுணர்த்தித் தெளிவித்த தெதுவோ உருவமெனக் கல்வணங்கல் உயர்வழிபா டாகா ஓவியமே உளங்கவர்வ தெனத்தெரித்த தெதுவோ உருவருவம் ஒன்றுமின்றி ஓங்குபரம் பொருளே உன்னருளே எனக்கொண்டேன் உண்மையெனக் கருளே. 8 குருமணியின் காட்சியிலே வேட்கைகொண்டேன் அரசே கோதில்குரு நாதனுண்மைக் குணங்குறித்த தெதுவோ பருமையிலே மனஞ்செலுத்திப் பன்மையிலே வீழ்ந்தேன் பருப்பன்மை ஒருமைக்குப் படியென்ற தெதுவோ கருமமறல் ஞானமெனக் கருத்திருத்தி வந்தேன் கைம்மாறெண் ணாக்கருமஞ் செய்யென்ற தெதுவோ பெருமநின தருளன்றிப் பேசுதல்வே றுண்டோ பிழைபொறுக்கும் அருளுடைய பெரியபரம் பொருளே. 9 என்னுடைய வாழ்வினைநீ இயக்கிவரும் நுட்பம் இளமையிலே உணராமல் இறுமாப்பால் கெட்டேன் உன்னுடைய அருளாலே உழலுமொரு பாவி உனைமறந்தேன் உய்வேனோ உண்மையிலே கெட்டேன் என்னிலைமை அறியாமை எங்குமுள அறிவே ஏழைமுகம் பார்த்தருளி இரும்பிழைகள் பொறுப்பாய் கன்னலினும் இனிக்கின்ற கருணைபெரு கமுதே காட்டில்வலைப் பட்டகலை கதியானேன் அரசே. 10 30. குறை களைவு அறியாமை எனுமுதலை அடர்ந்ததெனை என்றோ அதைஅகற்றும் ஆற்றலுயிர்க் கில்லையென அருளால் குறியேதும் இல்லானே குறிஉடலும் உலகும் கொடுத்தறிவை விளக்கியதை மறந்தொழிந்த கொடியேன் வெறியேறி இழைத்தபிழை அத்தனையும் பொறுத்து மேலேற்றப் படிப்படியே மனந்தெளியச் செய்த நெறியோனே நின்மலனே நின்பெருமைத் திறத்தை நேர்மையிலேன் எவ்வாறு நினைந்துபுகழ் வேனே. 1 அருளரசே எனக்களித்த அகத்தினிலே அகந்தை அரக்கனுழைந் தாட்சிசெய விடுத்த அறியாமை மருளுடையேன், அவன்கொடுமை மாதேவா அறிவாய் மறமிக்க அவனைமறி வகையறியேன் வலியோ தெருளுணர்வோ ஒன்றுமிலேன் செய்வதொன்றும் அறியேன் திக்கற்ற பாவிக்குத் துணைஎவரோ சொல்லாய் இருளடைவில் வாடுகின்ற ஏழைமுகம் பாராய் எப்பிழையும் பொறுத்தருளும் இயல்புடைய இறையே. 2 பொன்மனத்தை எனக்களித்தாய் புண்ணியனே அதுவோ புகுந்தசஞ்ச லத்தாலே புலிகரடி முதலாம் பன்மிருகம் உலவுகின்ற பரற்காடாய்ப் போச்சே பழமலையே புதுப்புனலே பரங்கருணைக் கடலே உன்னையே நினைந்துருகும் உயர்நிலையை இழந்தேன் உலகினிலே ஏன்பிறந்தேன் உத்தமனே சொல்லாய் என்னிலையைப் பண்படுத்த எண்ணுதியேல் உய்வேன் இல்லையெனில் என்செய்கேன் ஏழைமுகம் பாரே. 3 சீற்றமெனுள் ஊற்றெடுத்துச் செறிந்தார்த்த சேட்டை செப்புதற்குஞ் சொல்லுண்டோ சீறுபுலி நாணும் கூற்றுருவாய் முடுக்குங்கால் குருதியெலாங் கொதிக்கும் கூர்நரம்புக் கட்டிளகும் கொல்லுமது ஒடுங்கப் பாற்றியுளத் தமைதியெனும் பரிதியெழ அருளிப் பாவியெனைத் தடுத்தாண்ட பரங்கருணை நிதியே சேற்றிடையில் கமலமெழத் தேன்பிலிற்ற வண்டு தித்திக்கும் பாட்டோதச் செய்யிறைநீ யன்றோ. 4 வன்மஅனல் எரிக்கிரையாய் மாய்ந்துவந்த காலை மனஅமுதாய்த் தண்மைபொழிந் தாண்டவண்மை வாழி கன்மமது கரைகாணாக் கடலென்றே அஞ்சிக் கலங்கியஎன் கலக்கொழித்த கருணைநிலை வாழி பன்மைமயக் குறும்வழியே பகைமைவளர் எனக்குப் பண்பொருமை இன்புணர்த்தும் பான்மையருள் வாழி தன்மமலை யாயிலங்கித் தயைஅருவி சொரியும் தண்மையனே பண்மையனே தனிநீதி வடிவே. 5 ஆசையெனும் அலகைஅன்பை அடக்கிவிலங் கிட்டே ஆளஇடந் தந்தபின்னை ஆளநினைந் தாயோ ஈசஅதை அறத்தொலைத்தால் எவ்வுயிரும் ஆவேன் இன்பநிலை வேறுண்டோ ஏழைஅறி யேனே வீசுவெயில் படர்ந்துவர விலகிவறள் நீர்போல் விரிஆசை நின்னொளியால் விலகிஅற ஐயா வாசமலர் இளமையிலே மனஞ்செலுத்தி வந்தாய் வள்ளலுனக் கெவ்வகையில் வழங்குவன்கைம் மாறே. 6 காமவெறிக் கடல்கடந்து காதற்கரை நண்ணிக் காணாத நெறிகாணக் கண்ணளித்த கண்ணே சேமமுற ஒருத்தியுடன் சிலஆண்டு வாழ்ந்து சேயடைய அன்புபெறச் செம்மைபுரி அறமே தேமொழியர் ஒளியினிலே திகழ்தாய்மை நுட்பம் சிந்தையினில் படியவைத்துச் சிக்கறுத்த பதியே காமமெனப் பெண்ணுலகைக் கருதாத கல்வி காசினியில் பெருகிவரக் கடவுளருள் செய்யே. 7 தனியொருத்தி மணந்தறத்தில் சார்வாழ்க்கை மற்றத் தையலரைத் தாயென்று சால்புறவே கருதும் இனியமனத் திருவளித்தல் என்றுணரச் செய்தாய் இயற்கைமணந் தின்பநல்கும் இறைவநின தருளே கனிமொழியர் மாயையெனக் கடிமணத்தைத் துறந்தோர் காமஎரிக் காளாய கதைகள்பல அறிவாய் தனிமைவழி படைப்புளத்தைத் தகர்ப்பதன்றோ வளரும் தரணியிலே பெண்மைநலம் தழைக்கஅரு ளாயே. 8 மருட்புகழில் என்மனம்போல் விழுந்ததிலை என்று மற்றதனைத் துறக்குமகம் மலரவைத்தாய் போலும் பொருட்பெருக்கு களியாடல் புகுவிக்கு மென்று புன்மையனை எளிமையிலே பொருந்தவைத்தாய் போலும் அருட்சிறப்பால் அல்லலெலாம் அறுத்தலுக்கென் றன்பால் அன்றாட அப்பமெனக் களிக்கின்றாய் போலும் இருட்செறிவே இல்லாத இன்பஒளி விளக்கே எங்கெங்கும் எவ்வுயிரும் இருந்தருளும் இறையே. 9 ஆசைபுகழ் முதலாய அறியாமைச் சேய்கள் அத்தனையும் ஆட்சிசெய எத்தனையோ பிறவி நாசமடைந் தொழிந்திருக்கும் நானறியேன் எச்சம் நாதஇந்தப் பிறவியிலே நல்லருளால் சிதையும் ஓசைசிறி தெழவுணர்வும் உற்றதையா முற்றும் உண்மைவிடு தலையடைய ஒழிந்தபழம் பிறப்பின் வாசமுணர் வகைதெளிய வள்ளல்! வழிகாட்டாய் வாக்குமனங் கடந்தொளிரும் மாசில்லா மணியே. 10 31. வழிபாடு வாக்குமனங் கடந்தவன் நீ வாக்குமன முடையேன்யான் போக்குவர வற்றவன் நீ போக்குவர வுடையேன்யான் யாக்கையிலா மேலவன் நீ யாக்கையுடைக் கீழவன்யான் தேக்கின்ப வழிபாடு செய்வதெங்ஙன் சின்மயனே. 1 உருவுண்டு வாக்குமன ஒலிக்கென்பர் அகத்திணையார் அருவமுரு அன்றென்றல் அறியாமை அஃதுமுரு அருவமுரு எனும்பேதம் அமைநுண்மை பருமையிலே உருஅருவம் ஒன்றுமிலாய் உன்னலெங்ஙன் உண்மையனே. 2 மதியாலே உணர்ந்தாலும் மனத்தாலே நினைந்தாலும் பதியேஎவ் வுருவாதல் படிந்துவிடும் எவ்வண்ணம் துதியேற வழிபடுதல் துணையுருவம் இல்லானே கதியேஉன் னடைக்கலமே காட்டுவழி செம்பொருளே. 3 வாக்குமனங் கடந்தவனே வாழவைத்தாய் வழிபாட்டைத் தூக்கியற்கைக் கோயில்வழி தொன்மைமிகும் அக்கோயில் ஆக்கியநாள் எந்நாளோ ஆண்டவனே நீயறிவாய் பாக்கியமே வழிபாடு பண்பியற்கை வடிவோனே. 4 நீல்வளரும் வான்கோளும் நிலாப்பகலும் பால்வழியும் மால்வரையுங் காடுவயல் மாகடலும் ஆயஉனை நூல்வலவர் ஓவியமா நுண்ணுருவந் தரநினைப்பில் கால்வைத்த வழிபாடு கருத்தில்புக இறையருளே 5 ஒவியநுண் ணுயிர்நிலையை உணராது வழிபாட்டைத் தாவியவர் கல்லுருவே தனிக்கடவு ளெனக்கொண்டார் மேவியஅம் மடமைக்கோள் மேதினிக்கண் மூடியதே ஒவியநுண் பொருளோங்க உடையவனே உளங்கொள்ளே. 6 புறமனத்தின் ஆட்சிவிழும் ஓவியத்தின் வழிபாட்டால் அறமணக்க உள்மனத்தின் ஆட்சியெழும் எனஉணருந் திறமளிக்க வல்லவநின் திருவருளாம் அடிமலரின் நறவருந்தி இன்பமுற நானழிய வேண்டுவனே. 7 ஒன்றலுநெஞ் சோவியத்தில் உயர்அமல யோகமென்றும் தின்றுகொழுத் துயிர்ப்படக்கல் சிறுமைமல யோகமென்றும் நன்றறியச் செய்தமையால் ஞானநெறி விளங்கியது நன்றிபுரி வகையறியேன் நன்றிகரு தாப்பரமே. 8 இயற்கையிலே நீஇருக்கும் இனிமையினை வழிபாட்டுப் பயிற்சிமிகத் தெளிவாக்கும் பண்பமைத்த பெரியோய்அம் முயற்சியிலே நுழையாது மூச்சடக்கல் அறிவாமோ இயற்கைவழி பாடோங்க ïiw!ஆட்சி செலுத்துதியே. 9 வழிபாடே வழிபாட்டை ஒருவுநிலை சேராமுன் வழியதனை விரிமனத்தார் வலிந்துவிடல் கேடன்றோ பழிபாவம் அவராலே பரவிவரும் பாரழியும் வழிபாட்டின் வழிவளர வள்ளலதை ஓம்புகவே. 10 32. வழிபாடும் கோயிலும் வழிபாட்டுக் கென்றறிஞர் வகுத்தெடுத்தார் கோயில்களை இழிபாட்டுக் கவைஇந்நாள் இரையாதல் கண்கூடு கழிபாட்டை என்றழுது கதறுகின்றார் அடியரெலாம் பழிபாட்டைக் களைந்தருளிப் பண்பளிப்பாய் பரம்பொருளே. 1 அமைதியுற அகக்கரணம் அமைந்ததிருக் கோயில்பல அமைதியழி பகைக்களனாய் ஆனவிதம் நீயறிவாய் அமைதிபெற எங்குற்றே அடியவர்கள் வழிபடுவர் அமைதியெனும் மெய்ப்பொருளே ஆண்டவனே பார்த்தருளே. 2 நாடுகளின் இயற்கைநிலை நன்குணர்ந்த பெரியோர்கள் பீடுதிருக் கோயில்களைப் பிறங்கவைத்தார் அங்கங்கே கோடுகளை இடையிடையே கொணர்ந்திட்டார் கொலைக்கூத்தர் கேடுகளை ஒழித்தருளாய் கேடில்லாப் பழம்பொருளே. 3 ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்தபெருங் கோயில்பல சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய் நீதிஅறம் அழித்துவரல் நின்மலனே நீஅறிவாய் கோதுகளை அறுத்தொழித்துக் குணம்பெருகச் செய்யாயோ. 4 எங்குமுளன் இறையொருவன் என்றுணர்ந்த ஞானியரே இங்குயிர்கள் கட்டவிழ இயங்கிஅலை மனம்நிலைக்கப் பொங்குதிருக் கோயில்களைப் பொலியவைத்தார் அவையின்று பங்கமுறல் அழகேயோ பழுதொழிப்பாய் பரம்பரனே. 5 சந்தடியில் விழுந்தமக்கள் சாந்தமுறப் படிப்படியே சிந்தைநிலை பெறுவதற்குத் திருக்கோயில் வழிபாடு முந்தையினர் கோலிவைத்தார் மூலமுறை மாறிவரல் எந்தைஇறை நீஅறிவாய் ஏழையேம் செய்வதென்னே. 6 வணக்காலும் வாழ்த்தாலும் வழிபாடு நிகழ்கோயில் கணக்காடல் சூதாடல் கட்காமக் கொலையாடல் பிணக்காடல் முதலாய பேயாடல் இடமாகிப் பிணக்காடா மாறுவது பெருமானே திருவுளமோ. 7 பொல்லாத மருட்செயல்கள் புகுந்தரிக்கும் கோயில்களில் கல்லாதார் ஆட்சிமிகக் கற்பனையும் கண்மூடும் உல்லாசக் களியாட்டும் உலவிவரின் உளஅலைகள் நில்லாவே நில்லாவே நின்மலனே காத்தருளே. 8 எக்கோயில் கண்டாலும் இறையிடமென் றுளங்கொண்டே அக்கோயில் அடைந்துதொழும் அன்பர்தொகை பெருகிடவும் சிக்கோடு மதப்பிணக்குச் சிதடர்தொகை அருகிடவும் மிக்கோனே வேண்டுகின்றேன் விண்ணப்பங் கேட்டருளே. 9 திருக்கோயில் கெட்டதென்று சீவவழி பாட்டைவிட்டால் செருக்கோட வழியுண்டோ சிற்பரமே தனிஇடத்தே உருக்கோல மிட்டுன்னை உன்னுவதும் வழிபாடே தருக்கோட வழிபாட்டைத் தகுமுறையில் வளர்த்தருளே. 10 33. திருக்கோயில் உருவின்றி அருவின்றி உருஅருவ மின்றி உரையின்றி அசைவின்றி ஒளிபொழியு மொன்றே கருவின்றி முளையின்றிக் காலவளர்ப் பின்றிக் கரையின்றி எங்கெங்கும் கலந்தருளு மொன்றே செருவென்ற புலமுடையார் சிந்தையிலே நின்று தேனமுது சொரிகின்ற தெய்வமெனு மொன்றே திருவொன்றுங் கோயிலுனக் கமைந்தவித மென்னே செகமெங்கும் ஒருமுகமா ஏற்றவித மென்னே. 1 இயற்கையிலே இறையேநீ இருந்தருளும் நுட்பம் இனிதுணர்ந்த ஓவியத்தார் எடுத்தனர்பல் கோயில் பயிற்சியிலே திருக்கோயில் தத்துவத்தின் பான்மை பகுத்தறிந்தோர் வழிபாட்டால் மனக்குறும்பை வெல்வர் செயற்கையிலே விழுந்தவர்அத் தத்துவத்தின் செல்வம் தேறாது மனக்குறும்பால் தேய்வரென்ற தெளிவு முயற்சியிலே விளங்கவைத்த முழுமுதலே! வாழி முத்திநெறி வாழச்செய் முனிவரொளி! வாழி. 2 அலைவழிநல் ஓவியத்தார் அமைத்ததொன்றோ கோயில் ஆண்டவனே உன்கோயில் அளவிலடங் காவே நிலவுலகும் நீருலகும் நின்றன்திருக் கோயில் நெருப்புலகும் வளியுலகும் வெளியுலகுங் கோயில் கலையுலகுங் கவியுலகுங் கதையுலகுங் கோயில் கானமிகு பண்ணுலகும் இசையுலகுங் கோயில் ஒலியுலகும் மறையுலகும் ஒளியுலகுங் கோயில் உலகமெலாங் கோயிலுனக் கோங்குபரம் பொருளே. 3 மண்ணெல்லாங் கல்லெல்லாம் மலையெல்லாங் கோயில் மரமெல்லாம் பொழிலெல்லாம் வனமெல்லாங் கோயில் கண்ணெல்லாம் பயிரெல்லாம் கழனியெலாங் கோயில் கயமெல்லாம் ஆறெல்லாங் கடலெல்லாங் கோயில் விண்ணெல்லாம் ஒளியெல்லாம் விளக்கெல்லாங் கோயில் மின்னெல்லாம் பிழம்பெல்லாம் வித்தெல்லாங் கோயில் எண்ணெல்லாம் எழுத்தெல்லாம் ஏடெல்லாங் கோயில் எல்லாம்உன் கோயில்களே எங்குமுள பொருளே. 4 கரும்பணுகப் புனல்கொழிக்குங் காலருவி கோயில் கரைமணலுங் கலங்காத பூங்காற்றுங் கோயில் அரும்புமலர் காய்கனிகள் அளிஇனிமை கோயில் ஆடுமயில் கூவுகுயில் அறைசுரும்பு கோயில் விரும்புநடை கலைமானும் மெல்லானுங் கோயில் வீரமுகம் காதல்விழி ஈரமனங் கோயில் அரும்பிறவிப் பயனடைந்த அருட்குரவன் கோயில் அகிலமெலாம் நின்கோயில் அருட்சோதி அரசே. 5 கையினிலே புனைந்ததிருக் கோயில்பல இந்நாள் கருத்திழந்து கண்ணிழந்து கைகால்க ளிழந்து மெய்யிழந்து நிற்பதனை வித்தகனே அறிவாய் விடியலிலே நீலமிகு வேலையிலே தோன்றிச் செய்யகதிர் பரப்பிஎழு தினகரனாங் கோயில் சித்தம்வைத் துன்னிவழி பாடுசெய்தால் ஐயா உய்யஅருள் புரியாயோ உலகுயிரைக் கலந்தே ஒளிவழங்கும் அருளொளியாய் ஓங்குபர ஒளியே. 6 தத்துவத்தைக் கொண்டெழுந்த தனிக்கோயி லுள்ளம் சாயஅங்கே பேய்புகுந்து தலைவிரித்தே ஆடிச் சத்தியத்தை அழித்துவரல் தற்பரனே அறிவாய் சாய்ங்கால நீலவெளி தண்மைநில வுமிழ்ந்து முத்துடுக்கள் படைநிலவும் முழுமதியாங் கோயில் முழுமனத்தால் வழிபாடு முன்னிமுன்னிச் செய்தால் பத்திமையிங் கமையாதோ பரங்கருணை வெள்ளம் பாயாதோ எங்கெங்கும் பரிந்தருளும் பதியே. 7 செயற்கையிலே உருக்கொண்ட கோயில்களின் நோக்கம் செத்தொழிந்தால் அவைகளினால் சிறக்கஇட முண்டோ இயற்கைமலை காடுகடல் இறைவநின்றன் கோயில் ஏழிசையும் யாழ்குழலும் எழிற்கலையுங் கோயில் குயிற்குரலும் மயில்நடமும் கிளிமொழியுங் கோயில் கோயில்பல இனிதிருக்கக் குலங்குலமா ஏனோ அயர்ச்சியுற்றுக் கவலையிலே ஆழ்ந்துபடல் வேண்டும் அண்டபிண்டம் அத்தனையும் அளித்தருளும் பதியே. 8 கைக்கோயில் அமைப்பழிந்தால் கடவுளழி வாயோ கண்ணில்லாப் பேச்செல்லாங் காற்றில்விட வேண்டும் கைக்கோலொன் றிழந்துவிடின் கண்டுகொளல் வேறு கைவழக்கே உலகிலுண்டு கவன்றழுவ தில்லை மைக்கோலம் இட்டுலகு மயங்கியது போதும் மதிவளரக் கலைவளரும் வழிபாடும் வளரும் மெய்க்கோலம் பொங்கிளமை மெல்லியபூம் பெண்மை வியப்பழகுக் கோயிலன்றோ வித்தகச்சித் துருவே. 9 எக்கோயில் சாய்ந்தாலும் இறவாத கோயில் ஈசநினக் கொன்றுளதே எஞ்ஞான்று முளதே அக்கோயில் கோயில்ஐயா, அஃதுயிராங் கோயில் அன்பறிவு வழிபாடே அதற்குரிய தன்றோ எக்கோடு மில்லாத இந்தவழி பாடே எங்கெங்கும் பரவிவரின் இகல்பகைகள் எழுமோ இக்கால நிலையறிவாய் எரியடங்க அருளாய் எவ்வுயிரும் எவ்வுலகும் கோயில்கொண்ட இறையே. 10 34. யோகம் பொறிபுலன் கடந்து பொல்லாப் புறமனங் கடந்து மத்தி மறிமனம் கடந்து வேராம் மனத்தினைச் சாந்த மாகும் குறியினில் ஒன்றல் யோகக் குணம்பெறு தொடக்க மென்றே அறிவினில் விளங்கச் செய்த அத்தனே போற்றி போற்றி. 1 காற்றினை மூக்கால் ஈர்த்தல் கனலினை மூலக் காலால் ஏற்றிடல் இறக்கல் மாற்றல் இளமதி ஒளியைக் காண்டல் ஊற்றுள நாடி நிற்றல் உடல்முகஞ் சிவத்தல் எல்லாம் ஏற்றநன் முறைக ளல்ல என்றருள் குருவே போற்றி. 2 காற்றினை அடக்கும் போதும் கனலினை முடுக்கும் போதும் மாற்றுறு நெருக்கி னூடே மன்னுமின் னொளியெ ழும்பும் தேற்றிய உடலின் மின்னில் திகழ்வது சடத்தின் சோதி ஏற்றமன் றென்று சொன்ன எந்தையே போற்றி போற்றி. 3 உடலொளி மின்னல், மேலாம் உயிரொளி மின்ன லன்று சடம்அது இதுசித் தாகும் சடத்தினைச் சித்தாக் கொள்ளும் நடனமும் மரபாய்ப் போச்சு ஞானிகள் உண்மை தேர்வர் மடமையர் மருள்வ ரென்று வாய்மலர் அரசே போற்றி. 4 உடலொளி கண்டு கண்டே உயிரொளி காணச் செல்லார் திடமுறச் சாலங் காட்டிச் சீடரை வலிந்து சேர்ப்பர் அடிபணிந் தேத்தச் செய்வர் அரிவையர் பொருளைக் கொள்வர் கடையவர் இயல்பென் றிங்குக் கருணைசெய் அரசே போற்றி. 5 சித்தொளி கண்டோ ரென்றும் திருவருள் வழியே நிற்பர் செத்தவர் போலச் செல்வர் சித்தெனச் சாலங் காட்டார் சத்தியம் அவரே யாவர் சகமெலாம் சாந்தமாகும் முத்தியும் விழையா ரென்று மொழிந்தமெய்க் குருவே போற்றி. 6 புறமனக் கொடுமை சாய்ந்தால் பொன்மனம் யோகம் நண்ணும் பிறபடி நாட்டம் வேண்டா பிறர்க்கென வாழச் செய்யும் அறமலி பணிக ளாற்றின் அகன்றிடும் அலைம னக்கோள் குறிஅறி வாகு மென்று கூறிய குருவே போற்றி. 7 உடம்பினை முறையே ஓம்பி உயர்ந்தஇல் வாழ்க்கை நின்று கடன்பணி செய்த லென்னுங் கருத்தினில் ஒன்று பட்டுத் திடம்படப் பணிக ளாற்றிச் சென்றிடின் காமி யம்போம் மடம்படும் என்று வாய்மை மலர்ந்தசின் மயமே போற்றி. 8 அடிமனம் ஒன்றில் ஒன்றும் அலைமனம் வீழ்ந்து சாயின் படிவதன் வண்ண மாகும் பன்மைகள் ஒருமை யாகும் சுடரொளி ஒன்றின் ஒன்றில் சுடர்வணம் எல்லா மாகும் செடியறும் என்று சொன்ன சித்தனே போற்றி போற்றி. 9 பன்மையை ஒருமை யாக்கும் படிமனம் உறங்கச் செல்லும் உன்னுதல் ஒதுங்கும் வேளை ஒலிஒளி நடனஞ் செய்யும் சொன்மனம் கடந்து மேலே சூழலைச் சொல்ல லாகா நன்மையென் றுரைத்த நாதா நாண்மலர் போற்றி போற்றி. 10 35. யோகப் பயன் புறமனத்தார் குறும்பெல்லாம் புகலஎளி தாமோ பொய்களவு கட்காமங் கொலைகுழப்பம் புரட்சி மறவினத்துச் சூதுபகை கரவுபுறங் கூறல் வாததர்க்கம் மதவெறிமண் ணாசையுடன் போர்கள் அறமறைக்கும் ஆட்சிமுறை அடக்குமுறை படைகள் ஆகாயம் தரைக்கடலில் ஆருயிரின் வதைகள் பிறவளர்க்கும் பேய்களிடைத் திரிந்தஎனைக் காத்த பெரியவனே நின்கருணை பேசஅறி யேனே. 1 நடுமனத்தார் மயிர்ப்பாலம் நடப்பவரே யாவர் நழுவாது செல்லினடி நன்மனத்தில் அமர்வர் இடைமறிக்கும் மாயவித்தை இறங்கிவிடின் வீழ்வர் இழிவர்நிலை மன்பதையை ஏமாற்றித் திரிவர் சடைவனப்பும் முக்கண்ணும் சங்காழி காட்டித் தணந்திடுதல் முதலாய சாலவித்தை செய்வர் அடியவனை அந்நிலைகள் அடராமற் காத்த ஆண்டவநின் அருட்டிறத்தை அறையஅறி யேனே. 2 அடிமனத்தை அடைந்தவர்கள் ஆனந்த யோக அறிதுயிலில் அமர்ந்திருப்பர் அதையிதையும் துறவார் படியகத்தில் மலைகாடு பண்ணைகடல் மொழிகள் படிப்படியே மறைந்தொலியாய் ஒளியாகிப் பாழாம் உடலகத்தில் உணர்வழியும் மேல்விளையும் உண்மை உன்னஉளம் உரைத்திடநா நோக்கவிழி இல்லை படமழித்துப் பளிங்கினைப்பா ரென்றுரைத்த பதியே பரம்பொருளே அருட்பொழிவைப் பகரஅறி யேனே. 3 அடிமனமே நினைப்புமறப் பழியுமிடம் அதுவே அரியமுத லுடம்பிருக்கும் ஆனந்த பீடம் நடிகமதன் நெடியயமன் நாடகங்க ளில்லை ஞானம்வளர் அறஅருளின் நல்லாட்சி நடக்கும் தடியுடலும் புறமனமும் நடுவுடலும் மனமும் சாடுசெய லொன்றின்றித் தாதழிந்தே கிடக்கும் படிமைநிலை என்றுணர்வில் படியவைத்த பதியே பரமேநின் அருட்பெருக்கைப் பாடஅறி யேனே. 4 பருவுடலில் நுண்ணுடலில் முதலுடலில் முறையே படிந்தபுற மனமுநடு மனமும்அடி மனமும் தருவிலுள தலைநடுவேர் கடுப்பனவே யாகும் தனியோகக் கனல்மூளத் தாங்கிடும்வேர் எரிந்தால் பெருமரமே கிளைகளுடன் பெயர்ந்துவிழும் மீண்டும் பிறங்கியெழத் தலைசுழற்றப் பேறில்லை தளிர்க்கும் கருவழியும் என்றுணரக் கருத்துவைத்த கதியே கற்பகமே நின்கருணை கழறஅறி யேனே. 5 இரேசகமும் பூரகமும் கும்பகமும் இந்நாள் இவ்வுலகில் படும்பாட்டை எழுதலிய லாதே தராதலமீ துழல்காற்றை ஈர்த்திறக்கி இறுக்கல் சார்புமுறை அன்றன்று சாந்தமுறை யுளது புராதனமே மூவுடலில் மும்மனத்தின் புணர்வு புகல்யோகப் படிகளென்று புந்திதெளி வித்த பராபரமே நின்நினைவால் ஐயமெலாம் பறக்கும் பான்மைகண்டேன் அருள்வியக்கும் பண்பையறி யேனே. 6 புறமனத்தை அடங்கவைத்தல் இரேசகமாம் அதனைப் புரிந்தநடு மனத்திறக்கல் பூரகமாம் அதனை அறமணக்கும் மனத்திறுத்தல் கும்பகமாம் என்றும் அடைவான இரேசகமே பூரகமா மாறித் திறமிருக்குங் கும்பகமாய்த் தெளிவுசெயும் என்றும் சிந்தனையில் விளங்கவைத்த சித்தமணி விளக்கே நிறையுளத்தி லருள்விளக்கி நிற்கின்ற பொருளே நின்மலனே அருள்வகையை நிகழ்த்த அறியேனே. 7 மூலஅனல் எழுப்புவதன் மூலமென்ன என்று முன்னிமுன்னிப் பல்காலும் முயன்றுமுயன் றலுத்தேன் மூலனுரை கருவாசல் எருவாசல் இடையே மூளொளியே மூல அனல் என்றுணரச் செய்தாய் மேலொளியும் கீழொளியும் மின்கொடியா யொன்றி மெய்நிறுத்தும் நிலைதெளிந்தால் மெய்யோகம் விளையும் காலமெலாம் தெளிவாகும் என்றறியச் செய்தாய் கடவுளேநின் பெருங்கருணைக் கருத்தைஅறி யேனே. 8 மூலவொளி எழுப்புதற்கு மூர்க்கநெறி வேண்டா முன்னவர்கள் பற்றியது மூர்க்கநெறி அன்று சீலநிறை அறவாழ்விற் சேர்ந்துடலை ஓம்பிச் சிந்தையிலே கொண்டகுறித் தியானத்திற் றிளைத்தால் மூலவொளி மேலையொளி மூண்டெழுந்து நிற்கும் மூலவினை நீறாகும் என்றென்றன் மூளைப் பாலமரச் செய்தனையே பகலிரவைக் கடந்த பரவெளியே நின்னருளின் பான்மையறி யேனே. 9 மேலொளியும் கீழொளியும் மின்னியெழ எழவே மெல்லிதய மலர்விரிந்து தேனமுதம் சொரியும் சீலஉடல் கோயிலெனும் சிறப்புவெளி யாகும் சீவவொளி காலுமெங்கும் செவ்வொளியே பொங்கும் மேலுறுமெய்ஞ் ஞானநிலை மேவுவதைச் சொல்லால் விளம்பலிய லாதென்று விளங்கவைத்த இறையே வாலறிவே யோகியருள் வதிந்தருளும் அன்பே வாழ்வேநின் அருட்டிறத்தை வழுத்தஅறி யேனே. 10 36. யோக உடல் உடல்விளக்கை அருள்புரிந்தாய் உயிரிருளை ஓட்ட உற்றதுணை பயன்படவே யோகநிலை வைத்தாய் உடல்வெறுத்தால் யோகநிலை உயிருறுதல் என்றோ உயிர்இருளை நீக்கிஉயர் ஒளிபெறுதல் என்றோ உடல்விளக்கின் கொடைநோக்கம் உடைந்துவிடு மன்றோ உய்யுநெறி வேறுண்டோ உடையவனே உரையாய் உடல்வெறுக்கும் அறியாமை ஒழிந்துவிடல் நன்றே ஒலிகடந்தும் ஒளிகடந்தும் ஓங்குபரம் பொருளே. 1 உயிரிருளை நீக்கஅதற் குடலமைத்த வகையை உன்னஉன்ன உன்கருணைத் திறம்விளங்கும் ஐயா தயிரிலுறு நெய்யெனவே தனியோகர் உள்ளத் தாமரையில் வீற்றிருந்து தண்ணளிசெய் தேவே மயிருடலம் நெஞ்சுருவாய் நுண்ணுடல்நெஞ் சருவாய் மணக்குமுதல் உடல்நெஞ்சில் மருவகர ஒலியாய் செயிரழிசெவ் வொளியாகிச் சிக்கறுக்கும் அறிவே சித்தருளக் கோயில் கொண்ட சின்மயமே அருளே. 2 புறஉடலம் தோல்நரம்பு புகையுடலம் நுண்மை புல்லரிய முதலுடலம் பொன்னவிரோங் காரம் புறமனமே அலையுமது நடுமனமோ எண்ணம் புந்திநினை வற்றதுவே அடிமனமாம் அதிலே உறவுகொள உறவுகொள ஊனமெலாம் நீங்கும் உண்மைஅருள் இன்பநடம் ஓங்கிவரும் நல்ல அறமருவும் என்றுணர அருள்சுரந்த இறையே அப்பாஎன் றடியடைந்தேன் ஆள்கபெருந் தகையே. 3 ஓங்கார உடலளிக்கும் உடல்நுண்மை மேலும் உருவமுகிழ் பருவுடலை உதவுவதைத் தேர்ந்து பாங்கான புறமிருந்து நடுநுழைந்து அடியிற் படிந்துபடி படியாகப் பயிற்சியினைச் செய்தால் தூங்காத தூக்கமுறும் தொல்லைபல நீங்கும் தொல்பிறவி உணர்வுண்டாம் தூயஅறி வோங்கும் ஆங்காரம் அற்றொழியும் என்றுணரச் செய்த ஆண்டவனே நின்கருணை அற்புதந்தே ரேனே. 4 ஓங்கார உடற்போர்வை உருவருவ உடல்கள் ஓதுமவை வளம்பெறினே ஓங்காரம் உரமாம் நீங்காத தியானமரு நுண்ணுடலை ஓம்பும் நிறையொழுக்கம் பொருந்துணவு பருவுடலை ஒம்பும் ஓங்கார உடலுரமா யோங்கி நின்றபின்னை உருஅருவ உடல்தாக்கும் உறவுமறு மென்று பாங்காக என்னறிவிற் படியவைத்த பதியே பரமதிரு வடியடைந்தேன் பாவங்கழித் தருளே. 5 பருவுடலை ஓம்புமுறை ஒன்றிரண்டோ அப்பா பாரினிலே மலயோகர் பகர்ந்தமுறை பலவே பருவுடலின் அளவினிலே பண்புசெய்யும் மேலே பற்றியிரு உடல்களிடம் எட்டியும்பா ராவே திருஅமல யோகர்முறை சிற்சிலவே உண்டு தெய்விகமே அவைமூன்று தேகமெலாம் ஓம்பும் கருவுடலில் சுடரெழுப்புங் கடந்தநிலை கூட்டும் கலியுலக நாட்டமெங்கே கருணைமழை முகிலே. 6 ஊற்றினிலே காற்றினிலே ஒளியினிலே மூழ்கி ஒளிபொழிற்பூ கண்டுகண்டே உயர்பாக்க ளோதிப் போற்றுமடி சிந்தைவைத்துப் பொருந்தியஊண் அருந்திப் பொய்கடியுந் தொழில்புரிந்து போகம்அள வாகி ஆற்றினிலே நின்றொழுகி ஆசைகளி யாடல் அலைகுடிகள் அழுக்கிறுகல் அளவில்லாப் பேச்சு சீற்றமிகல் புகழ்நாட்டம் செயற்கைகளை விட்டால் தெரிபருமை உடல்வளரும் திருவருளால் இறையே. 7 மலயோகர் ஆசனமும் மற்றவையும் ஆய்ந்தேன் வல்லவரும் மார்புடைந்து மாய்வதனைக் கண்டேன் கலையோக வித்தையிலே கருத்திருத்தி மாய்ந்தேன் கண்மூடும் விளையாட்டுக் கற்பனைஎன் றுணர்ந்தேன் மலையோரஞ் சென்றிருந்து வாசியடல் விழையேன் மாநிலத்தில் எவ்விடத்தும் மருட்டலிலை நெஞ்ச அலையோட அமைதிபெற அன்பமல யோகம் ஆண்டவனே அருள்புரியாய் அடியமர இன்றே. 8 உடையின்றி இருந்தஎனக் குடைமூன்று தந்தாய் ஒன்றிரும்பு வெள்ளியொன்று மற்றதுசெம் பொன்னே அடைவென்றே இரும்புவெள்ளி ஆக்கிவெள்ளி பொன்னா ஆக்கவழி இயற்கையிலே அமையவைத்தாய் அப்பா நடையின்றிக் கெட்டொழிந்தேன் நல்லறிவை நல்காய் நல்லிரும்பை பொன்னாக்கல் ஞானவித்தை யாமோ முடையின்றி வாழ்வறியா மூர்க்கநிலை என்னோ மூவுடலுங் கடந்தொளிரும் முழுமைமுதல் அரசே. 9 நீக்கமற எங்கெங்கும் நிறைந்துள்ள அறிவே நின்படைப்பில் ஓருறுப்பை நினைந்துநினைந் துன்னி நோக்கதுவா யொன்றஒன்ற அதன்மயமாம் எல்லாம் நுவலரிய அம்மயமும் செம்மயமாய்த் திகழும் தேக்குமயம் பொன்றியதும் செப்புதற்கொன் றில்லை தேகமனம் அற்றநிலை சிந்தனையில் லாத ஆக்கமுறல் நன்றென்னும் அறிவுபெற ஐயா அருள்புரிந்த ஆண்டகையே அடியனடைக் கலமே. 10 37. தியானம் இறைவனே உன்றன் இருப்பினில் அடியேற் கெட்டுணை ஐயமு மின்றி தரையினில் இன்மை சாற்றிய சில்லோர் சாகுநாள் உன்னையே நினைந்து முறையிடல் கண்டேன் முத்தெனக் கண்ணீர் முகத்தினில் வடிந்ததைப் பார்த்தேன் அறவனே பலநாள் அரற்றினன் அழுதேன் அகமுணர்ந் தருள்வழி காட்டே. 1 ஈசனே உன்றன் இருப்பினைச் சொல்லி இருப்பதால் எப்பயன் விளையும் பாசமே யுடைய பாவியான் பாசப் பற்றினை எப்படி அறுப்பேன் பூசைகள் செய்தேன் பூமல ரிட்டேன் புண்ணியக் கோயில்கள் சூழ்ந்தேன் நேசமே பெருக்கும் நூல்களை ஆய்ந்தேன் நேர்வழிக் காட்சியை அருளே. 2 எங்கும்நீ உள்ளாய் எங்கும்நான் இல்லை எப்படி உன்னுடன் கலப்பேன் தங்குமஞ் ஞானம் தகைந்தெனைச் சிறுகச் சாடியே வீழ்த்திய தறிவாய் இங்கதைத் தவிர்க்க எத்தனை முயற்சி எண்ணினன் செய்தனன் பயனோ புங்கவா பொருந்திப் புகவிலை இறையும் புகலொரு வழியினை அரசே. 3 தாகமே கொண்டேன் தனிவழி காணத் தயாபர எழுந்தது தியான யோகமே என்று மின்னென ஒருநாள் உற்றதன் வழிதுறை அறியேன் ஏகநா யகனே எந்தையே ஈசா எழிலருட் டுணையென உணர்ந்தேன் வேகமே உந்த விடுத்தன என்னை வெற்றுரை விளம்பர வினையே. 4 புறமன அலைவு பொன்றிட ஒன்றைப் புந்தியில் நினைக்கவென் றகத்தின் துறையுணர் அறிஞர் சொல்லிய படியில் துன்னினால் அதுபிற மனங்கள் உறவினை நல்கும் உன்னுமா றவைகள் உழலுமற் புதங்களும் நிகழ்த்தும் திறவினை அளிக்கும் சடஒளி காட்டும் சிற்பர வேறெது செயுமே. 5 ஒன்றினி லொன்ற லென்றுகொண் டெதிலும் ஒன்றலால் உறுபயன் விளையா தென்றுணர் உள்ளம் என்றனக் களித்த இறைவநீ இயற்கையிற் படிந்தே ஒன்றிய நிலையின் தத்துவநுட்பம் ஒளிருமோ ருருவினை உன்னின் நன்றொளி விளங்கும் என்றுளந் தெளிய நாதனே செய்ததும் அருளே. 6 அலைபுற மனத்தில் அழகுரு ஒன்றே அமைவுறக் கொண்டதை முன்னின் நிலைபெறும் என்றும் நடுமனத் திறங்கி நிறஉரு வடிவெலாங் கலங்கிப் பொலிவுறும் இயற்கைத் தத்துவ மாகும் புகுமது மறுமனத் தடியில் நிலவியே மறையும் நித்தனே மேலும் நிகழ்வது சொலற்கரி தாமே. 7 புறமன அலைவில் புரளுநர் உருவைப் போற்றுதல் விடுத்துருக் கடந்த நிறவடி வில்லா நிலைமையில் உன்னை நினைத்தலும் அரிதரி தாகும் புறமனம் உருவை யன்றிவே றொன்றைப் பொருந்தியல் புடையதோ ஐயா நிறவடி வின்மை அடிமனங் கடந்த நிலைமையில் விளங்குவ தன்றோ. 8 களவுபொய் காமம் கட்கொலை முதலாம் கசடுகள் வளர்புற மனத்தால் அளவெலாங் கடந்த ஆண்டவ உன்றன் அருநிலை தியானமென் பதுவே வெளிறெனும் பாழாம் மேலுமே பாவம் மேவுமே பொங்குமே அப்பா புளுகுபொய் முதலாம் புன்மைகள் முற்றும் பொன்றிடும் அடிமன மன்றோ. 9 உருவமே தியானம் உறஉற அதுவே ஒடுக்கிடும் புறமனக் குறும்பை அருவமாய் நடுவில் அமைதியை அளிக்கும் அடிமன அணைவினில் மறையும் தருமமே வளர்க்கும் தயையினைப் பெருக்கும் சாந்தமே மன்பதைக் கூட்டும் கருமமே மிகுந்த காசினி தியானக் கண்பெறக் கருணைசெய் அரசே. 10 38. தியானம் உடலளித்தாய் உளமளித்தாய் உணர்வளித்தாய் உனைநினைக்கக் கடலளித்தாய் மலையளித்தாய் கதிரளித்தாய் ஐயாவே படமுடியாத் துயரமிங்குப் படையெடுத்து வருத்துவதென் மடமையன்றி வேறென்னை மனந்திரும்ப அருளாயோ. 1 உன்படைப்பை உளங்கொண்டால் உன்நினைவே தோன்றிவரும் என்படைப்பில் உளங்கொண்டால் என்னவரும் இறையோனே பொன்படைத்த மாந்தர்பலர் பொய்படைக்க விரும்புகின்றார் துன்படைத்து வீழ்த்துங்கால் துணைஎவரென் றுணராரோ. 2 பசும்புல்லை மனஞ்செலுத்திப் பார்க்குங்கால் உன்நினைவே விசும்புமலை நோக்குங்கால் விமலாவோ உன்நினைவே கசம்படரும் வண்டிசையே காதுறுங்கால் உன்நினைவே தசும்பரவும் படமசைத்துப் பண்ணொலியில் உன்நினைவே 3 காலையிலே எழும்பரிதிக் கதிரூட்டும் உன்நினைவே மாலையிலே எழும்மதியின் நிலவூட்டும் உன்நினைவே நீலமுமிழ் வான்கோள்கள் நின்றூட்டும் உன்நினைவே சோலைமணக் காற்றூட்டும் தூயவனே உன் நினைவே. 4 பள்ளியிலே நூல்பயின்றும் பலதுறைக ளாய்ந்துழன்றும் வள்ளலுனை உணர்ந்துய்ய மாந்தர்படும் பாடென்னே புள்ளிஉழை மான்நடையில் புந்திவைத்துச் சிந்தித்தே உள்ளவுள்ள உன்நினைவே உறுதிபெற உண்டாமே. 5 மாங்குயிலின் குரல்கோயில் மயில்நடனம் அருட்கோயில் தேங்கு பசும் கிளிமழலை திருக்கோயில் உன்நினைப்பைப் பாங்குபெற ஊட்டிநிற்கப் பாமரர்கள் அங்குமிங்கும் மூங்கையராய்த் திரிவதென்ன முழுமுதன்மை மெய்ப்பொருளே. 6 பசுமைமணிச் சிறகுடைய பறவையொன்று வானிவர்ந்து திசைதிசையே இசைமுழக்கிச் செல்லுவதை நோக்கிநின்றால் அசைவிலருள் மெய்ப்பொருளே அகமுறுமே உன்நினைவே வசைவளர்க்கும் நூலவர்க்கு வழிநன்கு புலனாமோ. 7 வீடுதொறும் பாட்டுருவாய் வீணைகுழல் யாழமுதம், பாடுகளே யின்றிநிதம் பரம்பொருளே உன்நினைவு கூடவழங் கன்பொழுக்கைக் குறியாத மாந்தரிங்குத் காடுகளில் திரிந்துழன்று காற்றடக்குந் தவமென்னே. 8 அருக்கனழல் கடலெரிப்ப ஆவியெழக் காராகிப் பெருக்குமழை மலைபொழியப் பேரருவிக் கணம்பரந்து செருக்கலைகள் வீசாறாய் சென்றுகட லணைகாட்சி இருக்கைநினை வூட்டலன்றோ திருக்கருணைப் பெரும்பேறே. 9 இயற்கையெலாம் உன்நினைவே ஊட்டஉள தென்றுணரும் பயிற்சிபெறும் வாய்ப்பெல்லாம் பரம்பொருளே அருளியுள்ளாய் முயற்சியிலார் கண்மூடி மூர்க்கமெலாம் வளர்த்துவிட்டார் செயற்கைவழிச் சென்றுழன்றால் சிந்தனையின் ஊற்றெழுமோ. 10 39. தியானம் எங்குமுளாய் என்றுன்னை இயம்பிவிடல் எளிதே எழுதிவிடல் பாடிவிடல் எடுத்துரைத்தல் எளிதே எங்குமுள உனையுணரும் வழிஎதுவோ என்றே இரவுபகல் எண்ணிஎண்ணி இவ்வுலகில் வாழ்ந்தால் எங்குமுள உனதுடலம் இயற்கையெனும் உண்மை இயல்பிலுறும் உறுதிபெறும் என்றுமனந் தெளிந்தேன் எங்குமுள இறையவனே எப்படியோ தெளிவை ஏழைமகற் கருள்புரிந்தாய் இரக்கநிதி நீயே. 1 என்னுளமே கோயி லென எங்கெங்கும் பேச்சே எத்தனையோ மறைமொழிகள் எடுத்தடுக்க லாச்சே மின்னொளிருங் கருவிகொடு மெய்யறுத்துப் பார்ப்போர் மேதைநிணம் தசைகுருதி மிகுந்துவர லன்றி மன்னுமிறை கோயிலொன்றும் மருவவில்லை என்றார் மனக்கோயில் எதுவென்றே மயக்குற்றுக் கிடந்தேன் என்னுளத்தே தியானமெனும் எண்ணமுற்ற தென்னோ ஏழைபடும் பாடுணர்ந்த இறைவஉன்றன் அருளோ. 2 பலயோகம் பலவாறு பலருணர்த்தக் கேட்டேன் பற்றிவிட்டேன் சிலவற்றைப் பற்றாமல் விட்டேன் சிலயோகம் உளங்கவரும் சிறப்புடைமை கண்டேன் சிந்தைஅவை கொள்ளவில்லை திருவருளின் செயலோ மலயோகத் துறைகளிலே மயங்கிவிழா வண்ணம் மாதேவா எனைக்காக்க மனங்கொண்டாய் போலும் நலயோகம் தியானமெனும் ஞானவுணர் வென்னை நண்ணியதென் உன்னருளே நாதாந்த அரசே. 3 எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் மொழியை இயம்புவதால் ஒருபயனும் என்றும்விளை யாதே எங்குமுளன் என்னிலுளன் இறைஎன்னும் உண்மை இலங்கிவிடின் மனம்அலையா எப்பழியும் அணுகா தங்குபழ வினைகளெலாம் தலைவிரித்தே ஆடிச் சார்பின்றி நீறாகும் சாந்தமுறும் என்று புங்கவனே என்னுளத்தில் புகுந்ததொரு விளக்கம் பொங்கருளே எனக்கொண்டேன் புனிதமெனும் பொருளே. 4 ஓவியத்தி லுன்னைநினைந் தொன்றிஅதில் நின்றால் உன்றனொளி உளத்திறங்கும் உருவமறை வாகும் பாவியலி லுன்னை யுன்னிப் பரிந்ததிலே ஒன்றின் பருவரிகள் கரந்துசெலும் பண்புளத்திற் பதியும் பூவியலி லுன்னைஎண்ணிப் பொருந்தியதில் ஒன்றின் பொன்னிதழ்கள் பொன்றிமுதல் புகுமுளத்தில் உனது மாவியலை நண்ணமன மறியலைகள் ஓய மாண்குறிக்கோள் தேவையென மனங்கொண்டேன் தேவே.5 சொற்கடந்த தியானமிங்குத் தொல்லைமனந் தொலைக்கும் தூயமனம் மலர்விக்கும் துணைபுரியத் தூண்டும் கற்களிலா வழிநடத்தும் கருணைஎளி தாக்கும் கரவுபகை எரிகாமம் களவுகொலை மாய்க்கும் எற்புடலில் உளநோயை இரிந்தோடச் செய்யும் இனியஅமிழ் தூட்டிநரை இழிவொழிக்கும் இந்தப் பொற்புடைமை யானுணர்ந்து புவியிடையே வாழ்ந்து புகலஅருள் மழைசுரந்தாய் பொன்றாத முகிலே. 6 அன்பார்ந்த தியானஉயிர் அமருமுடல் தொண்டாம் அருள்வழியே அதுநிகழின் அமையாத தென்ன துன்மார்க்கப் புறமனத்தைத் தொலைத்தடக்கி நன்மை சூழமனம் உண்டுபணுந் தொன்மைமலி தொண்டு, பன்மார்க்க உணர்வெழுப்பும் பகைமார்க்கம் மாய்த்துப் பத்திவளர் பொதுமார்க்கம் படைக்கவல்ல தொண்டு, கன்மார்க்கம் பெருகிவருங் காலமிது தியானம் காக்கநறுந் தொண்டாற்றக் கருணைபுரி அரசே. 7 தொண்டென்று தொண்டுசெயின் துகளறுக்குந் தியானம் தொடர்ந்துவரும் முனைப்பழியும் தொல்லைமனம் மாறும் சண்டையெலாம் மண்டியிடும் சாத்துவிகம் ஓங்கும் சன்மார்க்கம் நனிவிளங்கும் சாத்திரங்கள் சாற்றும் அண்டபிண்ட அற்புதங்கள் அடுக்கடுக்காய்த் தோன்றும் அனைத்துயிரும் ஒன்றென்னும் அன்புவழி திறக்கும் தொண்டருளம் வீற்றிருந்து தொல்லுலகை நடத்தும் bjh©l!எங்குந் தொண்டுநெறி சூழஅருள் புரியே. 8 உடற்றொண்டும் கலைத்தொண்டும் ஓங்குதொழிற் றொண்டும் உற்றமனத் தொண்டுடனே உதித்தகுடித் தொண்டும் இடத்தொண்டும் நாட்டுரிமைத் தொண்டுஞ் சகத்தொண்டும் இயன்றவரை இயங்கிவரின் இகல்பகைகள் ஒதுங்கும் கடற்புவியில் தியானஅகக் கண்திறக்கும் நன்றே கருணையிலா அமைப்பெல்லாங் காலொடிந்து வீழும் திடத்தொண்டும் தியானமுமே சிறக்கஅரு ளரசே தெய்வஒளிப் புதுஉலகம் திரண்டுதிரண் டெழுமே. 9 மண்ணினைந்தேன் நீர்நினைந்தேன் வன்னிவளி நினைந்தேன் வான்வெளியும் மதிகதிரும் வழிவழியே நினைந்தேன் உண்ணினைக்குந் தியானவகை உணர்வுகொண்டேன் ஐயா உற்றதுணை செய்வாயோ ஒதுங்கிவிடு வாயோ எண்ணமறி ஆற்றலுண்டோ ஏழைமதி யுடையேன் எப்படியோ உன்கருணை எவ்வழியில் செலுமோ அண்ணலெனக் கொருவரமே அளித்துவிடின் உய்வேன் அகந்தொண்டில் ஆரவேண்டும் அருள்புரிவாய் அதுவே. 10 40. கருணைத் திறம் உன்னருளால் இவ்வுலகில் ஒவ்வொன்றும் உற்றுவர என்செயலால் நிகழ்வதென எண்ணிவந்தேன் இறையோனே உன்னருளும் என்செயலும் ஒளிந்தேபோர் செய்தனவோ உன்னருளே வாகையணி உண்மைநிலை உணர்ந்தேனே. 1 ஒருவரிடம் வன்கண்ணும் ஒருவரிடம் மென்கண்ணும் மருவவைத்தல் இயல்பென்று மாநிலத்தார் நினைப்பதுபொய் கருணையினை எல்லார்க்குங் காலுவதே உனதியல்பு பரிதியொளி பரப்புவதில் பால்கொளுமோ இறையோனே. 2 அருளொளியில் மூழ்குவதை அறியாமல் அலையுமனம் அருளினிலே மயங்குவது மனிதரது குறைபாடே தெருளிலிவர் உன்னடியைச் சிந்தையிலே இருத்திவரின் அருளொளியில் மூழ்குவதை அறிகுவர்நன் கிறையோனே. 3 நற்செயலுந் தீச்செயலும் நண்ணுமிடம் உயிருளமே எச்செயலும் இல்லாத இறையோனே உன்மீது பச்சைமுதுப் பழிசுமத்திப் பார்ப்பவருங் கரையேற இச்சைகொளின் வழிகாட்டும் இரக்கஇயல் நினதன்றோ. 4 உன்னியலை உணராமல் உளறிவருங் கயவர்களும் கன்னெஞ்சங் கசிந்துருகிக் கலங்குங்கால் கைப்பிடித்து நன்னெறியிற் செலுத்துமருள் நாயகனே இகலில்லா உன்னருளை நினைப்பதுவே உறுதியென வந்தேனே. 5 தீயவெலாம் உலகிடைஏன் செறிவித்தாய் என்றென்றே ஆயமனஞ் செலுத்திவந்தேன் அநுபவத்தில் அவைகளுமே நேயநெறி விரைவதற்கு நேர்படுத்தும் விதங்கண்டேன் தூயபரம் பொருளேநீ துணைபுரியும் வகைஎன்னே. 6 வெம்மைநெறி நடப்பவர்க்கு விருந்துநிழ லாவதுபோல் செம்மைஅறம் விருந்தாகும் தீமையிலே உழல்வோர்க்கும் அம்மையினுந் தயவுடையாய் அறவழியும் மறவழியும் செம்மலுன தருளியங்குஞ் சீரியலின் சிறப்பென்னே. 7 தீயவரின் கூட்டரவும் தீஇயக்கக் கூட்டரவும் மேயஎழுந் துறுமுங்கால் விரையுமனம் உன்னடியில் தாயினுநல் லருளுடைய தற்பரமே இவ்வுலகில் தீயனவும் உளவாகச் செய்தனைநீ எனலாமே. 8 சாதிமதச் சண்டைகளும் தனிவழக்குச் சண்டைகளும் நீதிகொலுஞ் சண்டைகளும் நிலம்பிடிக்குஞ் சண்டைகளும் மேதினியில் சன்மார்க்கம் மேவஎனை உந்தியதை ஆதிபர நீயறிவாய் யானறிவேன் அருளரசே. 9 மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல், அண்ணலுனை மறந்தஉயிர்க் கருளூட்டுங் கருணைமழை நண்ணுகவே சன்மார்க்கம் நண்ணுகஎன் றெச்சரிக்கை பண்ணுவதுன் அருட்டிறத்தின் பண்புணர்த்த வல்லேனோ. 10 41. அருளாட்சி அகிலாண்ட கோடியெலாம் இயங்கஅரு ளரசே அறவோர்க ளன்றளித்த அரசியலைப் பின்னாள் இகலாண்ட மனமுடையார் ஈரங்குலைத் தார்கள் எரிபகையே கொலைபெருகி இன்பமழித் தனவே செகமாண்டு மறைந்துவிடத் திருவுளச்சம் மதமோ சிற்றுயிர்கள் கட்டவிழச் சிந்தைசெய லெங்கே மிகவேண்டி மெய்யடியார் விதிர்விதிர்த்தல் கண்டு மேதினியி லருளாட்சி விழிக்கவிழி நோக்கே 1 குறுமதியர் அறம்மறந்து கோனாட்சி என்றும் குடியாட்சி என்றுங்குடிக் கோனாட்சி என்றும் சிறுமைமிக அரசியலைச் செறியவைத்தா ரிங்கே சிதடரினம் சழக்கரினம் சீறிவிழுங் காட்சி வறுமையுறப் பசிபிடுங்க வந்தபிணி தின்ன மன்னுயிர்கள் வதைந்துறங்கி மடிகின்ற காட்சி வெறுமையெனுஞ் சூநியமோ மெய்யருளை யுடையாய் வியனுலகில் அருளாட்சி விளங்கவிழி நோக்கே. 2 பொல்லாத ஆட்சிகளால் பொதுமைஅறம் நீங்கிப் பொருளொருபால் குவிந்தொருபால் பொன்றுதலை அறிவாய் மல்லாட வழக்கெடுக்கும் மன்றுகளில் நீதி மயக்கடைந்து நெறிபிறழ்ந்து மாய்வதனை அறிவாய் கல்லாத மாந்தரினங் கற்றவரை ஒதுக்கிக் கலையழித்தே ஆட்சிபுரி கொலைவினையை அறிவாய் எல்லாரும் இன்புறவே எங்குமுள இறையே இனியஅரு ளாட்சிஇன்றே எழக்கருணை புரியே. 3 அருளற்ற ஆட்சிகளால் அரக்கரினம் பெருகி அகிலமமர்க் களமாக்கி அன்பழித்தல் அறமோ தெருளற்ற அவர்படைகள் திரண்டெழுந்து பாய்ந்து சீவவதை குண்டுகளால் செய்துவரல் அழகோ மருளற்ற ஓவியமும் காவியமும் மற்ற மாண்கலையும் நடுக்குற்று வதையுறுதல் முறையோ இருளற்ற பேரொளியே எவ்வுயிர்க்கும் பொதுவே இறையவனே அருளாட்சி இங்கரும்பச் செய்யே. 4 ஆண்டவனே வழியடியார் அருளியவை அருளே அருகபுத்தர் உரைத்தஅறம் அன்பீனும் அருளே மாண்சிலுவை கிறிதுவிடம் வழிசெந்நீர் அருளே வள்ளுவனார் தமிழருவி வாய்மைமொழி அருளே காண்டகுநந் தாயுமானார் கருத்தெல்லாம் அருளே கருணைமன இராமலிங்கர் கண்ணீரும் அருளே தீண்டரிய சோதிஅருட் சோதி உயிர்ச் சோதி தீமைஅண்டா அருளாட்சி திகழஉளங் கொள்ளே. 5 அலைநெஞ்சை மென்மேலும் அலைக்குமர சியலால் அவனிபடும் பாடுகளை ஆண்டவஎன் சொல்வேன் கலைநெஞ்சம் காணாத கழகமலி வென்னே காதலின்பம் நுகராத காமவெறி என்னே தொலைநஞ்சு வறுமையுலை வறுமையெழ லென்னே தொகைதொகையாய் மருத்துவமும் மன்றுஞ்சூழ் வென்னே கொலையஞ்சுங் கொலையென்னே குண்டுமழை என்னே குணமலையே அருளாட்சி குறித்தருளா யின்னே. 6 மருளார்க்கும் ஆட்சியெலாம் மறைந்தொடுங்கி உலகில் மன்னுயிர்கள் கவலையின்றி மனநிறைவு கொள்ள அருளாட்சி விதைகாதல் அன்பில்படி வாகி அகக்கருவில் அரும்பிமுளைத் தறக்குடியில் வளர்ந்து தெருளார்க்கும் ஊர்நாட்டில் செழித்தோங்கித் தழைத்துச் சீருலகில் மரமாகிச் செழுங்கனிகள் உதவ இருளாட்சி இல்லாத இன்பஒளி விளக்கே இயற்கையிலே கோயில்கொண்ட இறைவஅருள் புரியே. 7 ஐந்துவிதப் பூதஇயல் ஆழ்ந்தாழ்ந்தே ஆய்வர் ஆழியடி மணலுயிரை ஆராயச் செல்வர் வந்தருகும் இமயமுடி காணவிரைந் தெழுவர் வானவெளி மண்டிலங்கள் வகையறிய முயல்வர் நந்துபனி வடதுருவம் நண்ணமனங் கொள்வர் நானிலமும் தமைவணங்கும் நாட்டமுடன் உழல்வர் சிந்தைநெறி அருளாட்சி தேடுவரோ மாந்தர் சிற்பரமே உன்னருளால் சேரஉளம் பற்றே. 8 நாடுகளைப் பற்றுவதில் நாட்டங்கொள் அரசு நாளுநாள் சட்டத்தால் நடுக்குறச்செய் அரசு காடுகளை அழித்துவருங் கருணையில்லா அரசு கட்டிடத்தில் நூல்காட்டிக் கற்பழிக்கும் அரசு பாடுகளைப் பெருக்குவித்துப் பலஉயிர்கொல் அரசு பலவிதமாய்க் கொலைக்கருவி பரப்புகின்ற அரசு கேடுபுரி இன்னவைகள் கெட்டழிய இறையே கேண்மைமிகு அருளாட்சி கிட்டஅருள் விரைந்தே. 9 அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரைஎண்ணுந் தன்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டலரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே. 10 42. ஆனந்தம் ஆனந்த மயமான ஆனந்த அரசே ஆனந்தம் உள்பொருளோ இல்பொருளோ என்றும் ஆனந்தம் உள்ளஇடம் அறிந்தவர்யார் என்றும் ஆனந்தம் மண்ணுலகோ விண்ணுலகோ என்றும் ஆனந்தம் ஒருமையிலோ பன்மையிலோ என்றும் ஆனந்தம் புறத்தினிலோ அகத்தினிலோ என்றும் ஆனந்த ஆய்வாலே ஆனந்தம் வருமோ. 1 ஆனந்த உருவான ஆனந்த அறிவே ஆனந்தம் யாக்கையிலே எவ்வுறுப்பில் என்றும் ஆனந்தம் பொறிகளிலோ புலன்களிலோ என்றும் ஆனந்தம் நெஞ்சினிலோ அறிவினிலோ என்றும் ஆனந்தம் உன்னிடமோ என்னிடமோ என்றும் ஆனந்த இடங்காட்டும் வழிஎதுவோ என்றும் ஆனந்தம் எளிமையிலே அகப்படுமோ என்றும் ஆனந்தம் ஆராய்ச்சி செய்தாலும் வருமோ. 2 ஆனந்த வாரிதியே ஆனந்த மழையே ஆனந்த அருவிசொரி ஆனந்த மலையே ஆனந்தம் விரும்பாத ஆருயிர்க ளுண்டோ ஆனந்தம் விரும்பினதும் அருகணைய வருமோ ஆனந்தம் உண்பதுவோ தின்பதுவோ அப்பா ஆனந்தம் உழைப்பின்றி வலிந்தடையும் ஒன்றோ ஆனந்த உளவுசொலும் ஆசிரியர் உளரோ ஆனந்தக் கலையுணர்த்தும் அறப்பள்ளி எதுவோ. 3 ஆனந்தப் பசுமைபொழி ஆனந்தப் பொழிலே ஆனந்த ஆராய்ச்சி அல்லலையே செய்யும் ஆனந்தம் ஆராய்ச்சி எல்லைகடந் தோங்கும் ஆனந்தம் அகண்டம்வல் லாராய்ச்சி கண்டம் ஆனந்தம் கண்டத்துள் அடங்கும்இயல் பினிதோ ஆனந்தம் இல்லாத இடமில்லை என்றே ஆனந்த அமுதுண்ட ஆண்டகையர் சொற்றார் ஆனந்தம் எங்குமெனில் ஆராய்ச்சி ஏனோ. 4 ஆனந்தம் வேறென்னும் அறியாமை நீங்கின் ஆனந்தம் நீயென்னும் மெய்யறிவு தேங்கும் ஆனந்தம் நீஎன்னில் ஆனந்தம் எல்லாம் ஆனந்தம் எங்கெங்கும் ஆனந்தம் அப்பா ஆனந்தம் மறைப்பதெது ஆணவமே அதுதான் ஆனந்தம் தான் அந்தம் ஆசிரியர் மொழியே, ஆனந்தம் பொங்கிஎழும் தான்அந்தம் எய்தின் ஆனந்த அடைவினுக்குத் தான்அறுக்க அருளே. 5 ஆனந்த வாழ்வினுக்குத் தானந்த மாக ஆனந்த நின்படைப்பாம் அழகியற்கை துறக்க ஆனந்தப் பெயராலே அறைந்தமொழி எல்லாம் ஆனந்த வழிகாட்டா அடைவிக்கும் அதனை ஆனந்தப் படைப்பினிலோ ஆனந்த மில்லை ஆனந்தப் படைப்பிலொன்றை அகங்கொண்டே ஒன்றின் ஆனந்த ஊற்றெழும்பும் ஆனந்தம் பொங்கும் ஆனந்த அமுதூட்டும் அற்புதமே ஐயா. 6 ஆனந்த இறையவனே ஆனந்தம் அடைய ஆனந்த இல்வாழ்க்கை அதற்குரிய கால்கோள் ஆனந்த முதற்பெண்ணை அலகையென நீத்தால் ஆனந்த ஊற்றழியும் அருந்துயரம் பெருகும் ஆனந்தப் பொங்கலுடன் அன்னைஎமை அளித்தாள் ஆனந்தச் சோதரியார் அன்புளத்தால் வளர்த்தார் ஆனந்தம் அருள்மனைவி அழகமிழ்தம் தந்தாள் ஆனந்தம் வளர்த்துவரும் அன்போபேய் அரசே. 7 ஆனந்தம் பெறவேண்டி அங்குமிங்கும் ஒடல் ஆனந்தம் அச்சமயம் இச்சமயம் என்றே ஆனந்த நோக்குடனே அலைந்துதிரிந் துழலல் ஆனந்தம் என்றுபுறக் கோலங்கள் மாற்றல் ஆனந்தங் கிட்டுமென மலயோகஞ் செய்தல் ஆனந்த யோகரென்றே அவதிகளை நாடல் ஆனந்த ஆண்டவனே இவையெல்லாம் பாழே ஆனந்த உயிர்ப்பணிகள் ஆற்றஅருள் செய்யே. 8 ஆனந்த நீர்நிறைந்த அகலேரி கரையில் ஆனந்தம் தழைதழைக்க ஆகாயம் நோக்கி ஆனந்தக் கரநீட்டி அன்புடனே அழைக்கும் ஆனந்தங் கனிமரத்தின் அடியமர்ந்து பார்த்தால் ஆனந்த நடைநடந்தே அங்குவரும் புட்கள் ஆனந்தக் குரலெடுத்தே ஐயஉனைப் பாடும் ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்த இறையே ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தப் பேறே. 9 ஆனந்தக் கன்றெல்லாம் அங்குமிங்குந் துள்ளி `ஆனந்த மணியோசை ஆக்களுடன் செல்லும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தக் காட்சி ஆனந்தக் கோவலர்கள் அடியெடுத்து வைத்தே ஆனந்தக் குழலூதி நடந்துசெலுங் காட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த இறையே ஆனந்த இயற்கையிலே ஆனந்தம் நுகர ஆனந்த அருளாட்சி அகிலமெலாம் அருளே. 10 43. வேண்டுதல் மெய்ப்பொருளே உன்னடியில் மேவுமனம் வேண்டும் மெய்யோம்பி நிறைபேணல் மீக்கூரல் வேண்டும் எப்பொருளும் உன்னுடைமை என்னும்எண்ணம் வேண்டும் எப்பொழுதும் இயற்கையிலே இசையுமுளம் வேண்டும் தப்புவிளை வினைபுரியாத் தவம்பெருகல் வேண்டும் தவறிழைத்தால் கசிந்துருகுந் தன்மைமிகல் வேண்டும் இப்புவியில் இகல்பகைகள் இயங்காமை வேண்டும் எவ்வுயிரும் பொதுவெனக்கொள் இயல்வேண்டும் அருளே.1 nrhâ!அடி மறவாது தொண்டுசெயல் வேண்டும் சுதந்திரமே எங்கெங்கும் சூழ்ந்தெழுதல் வேண்டும் நீதியழி அடிமைமுறை நிகழாமை வேண்டும் நிறைபிறழும் அரசெல்லாம் நிலவாமை வேண்டும் சாதிவெறி பிறப்புயர்வு சாய்ந்திடலே வேண்டும் சண்டைபுரி வெறிமதங்கள் தளர்ந்தொழிதல் வேண்டும் பேதமிலாச் சமரசமே பெருகிவரல் வேண்டும் பிணியறுக்குஞ் சன்மார்க்கப் பிடிவேண்டும் அருளே. 2 அன்புருவே அடிவணங்கி அருள்பெறுதல் வேண்டும் அணங்குலக அடிமையெங்கும் அற்றழிதல் வேண்டும் இன்பருளுங் காதல்மணம் ஏற்றமுறல்வேண்டும் இன்னாத மணமெல்லாம் இரிந்தோடல் வேண்டும் பன்மனைவி ஒருவன்கொளும் பழியொழிதல் வேண்டும் பரிந்தொருவன் ஒருத்தியுடன் படிந்தொழுகல் வேண்டும் அன்னையரை மாயையெனும் அகம்மடிதல் வேண்டும் ஆணினிடங் கற்பொழுக்க அடிவேண்டும் அருளே. 3 பெரியவனே அடிமறவாப் பேறுபெறல் வேண்டும் பெண்மையொளிர் பெருமையெங்கும் பேசிவரல் வேண்டும் அரிவையரில் தாய்மைதவழ் அன்புணர்தல் வேண்டும் அவ்வையர்பால் இறைமையொளி அசைவறிதல் வேண்டும் கரியகுழல் மாதராட்சி காசினிக்கு வேண்டும் கன்னியர்தம் மனமடைந்துன் கருணைபெறல் வேண்டும் தெரிவையரை இகழ்வோரைச் சேராமை வேண்டும் சிறுமையர்கள் மனந்திரும்பச் செபம்வேண்டும் அருளே. 4 ஆண்டவனே உனைமறவா ஆண்டகைமை வேண்டும் அலையும்புற மனமடங்கி நடுவரும்பல் வேண்டும் மாண்டநடு கடந்தடியின் மனமலரல் வேண்டும் மனந்திரும்பி அழுகின்றேன் மன்னித்தல் வேண்டும் மூண்டபழி பாவமெலாம் முனையாமை வேண்டும் மூள்பாவச் செயல்நிகழ்த்தா மொய்ம்புபெறல் வேண்டும் ஈண்டெதற்கும் உன்னருளின் இருந்துணையே வேண்டும் எழும்பும் நான் பலிஅடிக்கீழ் இடல்வேண்டும் அருளே. 5 இறையவனே எஞ்ஞான்றும் எண்ணுமனம் வேண்டும் எவ்வுயிரும் நீஎன்னும் இனிமைபெறல் வேண்டும் மறையருளும் உயிர்த்தொண்டு மடியும்வரை வேண்டும் மறுபடியும் தொடர்ந்ததனை வந்துசெயல் வேண்டும் கறைமலியும் பொய்யுடலம் கடந்தேறல் வேண்டும் கருணைமனம் கண்ணோட்டம் கலந்தஉடல் வேண்டும் நிறையின்ப இடமுண்மை நினையாமை வேண்டும் நித்தியமாய்த் தொண்டுபுரி நிலைவேண்டும் அருளே. 6 உறவேஉன் அருள்மறவா உறுதிநிலை வேண்டும் உலகுயிருன் கோயிலென உணர்கழகம் வேண்டும் சிறியகளி கதைஆட்டம் சிறவாமை வேண்டும் செவிவரைநில் களிகலைகள் செறியாமை வேண்டும் மறிமனத்தின் அலையடக்கும் மாண்கதைகள் வேண்டும் மனங்குவிந்து மதிபெருக்கும் உயிர்க்கலைகள் வேண்டும் பொறியரவுப் புதினவிடம் புகையாமை வேண்டும் புதியஅறி வியல்அறத்திற் புகவேண்டும் அருளே. 7 அழகநின தருங்கலைதோய் ஆனந்தம் வேண்டும் அன்பியற்கைப் பள்ளிபயின் றறிவுபெறல் வேண்டும் எழுகதிரில் மூழ்கிஉயிர்ப் பிறங்குமுடல் வேண்டும் எழிலொழுகும் பொழிலணிந்த இருக்கையிடம் வேண்டும் குழவிபொழி மழலைமொழி கொள்செவிகள் வேண்டும் கோடுமலை இவர்ந்துபொறைக் குணம்பெருக்கல் வேண்டும் பழுவம்அவிர் பசுமைபடிந் திளமையுறல் வேண்டும் பரவைஅலை பாட்டிலெழும் பயன்வேண்டும் அருளே. 8 அறவாஉன் வழியுலகம் அமைவுபெறல் வேண்டும் அதற்குரிய தொழிலெல்லாம் அளவுபடல் வேண்டும் வெறுமேடு படிப்பவர்தந் தொகைசுருங்கல் வேண்டும் விரும்புதொழிற் கல்வியெங்கும் விரிவடைதல் வேண்டும் முறையான தொழிற்கல்வி முதன்மையுறல் வேண்டும் மோனம்வளர் ராட்டைசுற்றல் முதிர்ந்தோங்கல் வேண்டும் உறவாதல் கடிதொழில்கள் ஒடுங்கிடுதல் வேண்டும் ஓவியஞ்செய் தொழில்வளர்ச்சி உறவேண்டும் அருளே. 9 ஒருவஉன தருளாட்சி உலகோங்கல் வேண்டும் ஒறுக்குமரு ளாட்சியெங்கும் ஒடுங்கிடுதல் வேண்டும் இருவரங்கு மாடியிலே உலவாமை வேண்டும் இருவரிங்குக் குடிசையிலே உலராமை வேண்டும் இருவரங்குத் தின்றுகொழுத் துருளாமை வேண்டும் இருவரிங்குப் பட்டினியால் வாடாமை வேண்டும் இருவரங்குப் பட்டாடை அணியாமை வேண்டும் இருவரிங்கு நடுங்காமை உறவேண்டும் அருளே. 10 44. போற்றி உலகெலாங் கடந்து நிற்கும் உலப்பிலா அறிவே போற்றி உலகெலாங் கலந்து வைகும் ஒப்பிலா இறையே போற்றி உலகெலாம் ஒழுங்கில் செல்ல ஒளிபொழி பிழம்பே போற்றி உலகெலாம் வணங்கி ஏத்தும் ஒருவனே போற்றி போற்றி. 1 ஆதவற் கனலை நல்கும் அலகிலாக் கனலே போற்றி சீதனுக் கீரம் ஈயும் சிறையிலா நிலவே போற்றி ஓதருங் கோள்கட் கெல்லாம் ஒளியருள் சுடரே போற்றி பூதமும் அங்கி ஏற்பப் பொலிதருந் தழலே போற்றி. 2 மண்ணிலைந் தப்பில் நான்கு வகுத்தருள் பரனே போற்றி ஒண்ணழல் மூன்று வைத்த உத்தமா போற்றி போற்றி விண்டுவில் இரண்டு சேர்த்த வித்தகா போற்றி போற்றி விண்ணிலே ஒன்று வேய்ந்த விமலனே போற்றி போற்றி. 3 இயற்கையின் உயிரா யெங்கும் எழுந்தருள் இறையே போற்றி செயற்கையின் சிந்தைக் கெட்டாச் செல்வமே போற்றி போற்றி முயற்சியின் விளைவா யோங்கும் முதன்மையே போற்றி போற்றி பயிற்சியில் நிற்போர்க் கென்றும் பண்புசெய் பரனே போற்றி. 4 இறப்பொடு பிறப்பி லாத இன்பமே போற்றி போற்றி வெறுப்பொடு விருப்பி லாத மேன்மையே போற்றி போற்றி ஒறுப்புடன் கறுவி லாத உத்தம அன்பே போற்றி பொறுப்புறும் ஒழுங்கிற் பொங்கும் புனிதமே போற்றி போற்றி. 5 பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி. 6 கூடலைக் குறிஞ்சி, முல்லை இருத்தலைக் குறித்தோய் போற்றி ஊடலை மருதப் பாலில் உதவிய உறவோய் போற்றி சூடனல் பாலைப் பண்பில் பிரிதலைச் சூழ்ந்தோய் போற்றி ஏடமை நெய்த லூடே இரங்கலை இணைத்தோய் போற்றி. 7 மலைமுழ வருவி வைத்த மகிழ்ச்சியே போற்றி போற்றி அலைகடல் பாட வைத்த அமுதமே போற்றி போற்றி கலையினில் காதல் வைத்த கருணையே போற்றி போற்றி சிலையினில் வீரம் வைத்த செம்மலே போற்றி போற்றி. 8 உருவிறந் தோங்கிச் செல்லும் உயர்ச்சியே போற்றி போற்றி அருவினுக் கெட்டா தேகும் அகண்டமே போற்றி போற்றி குருவினுள் கோயில் கொண்டு குணம்புரி சித்தே போற்றி திருவருள் விழைவோ ருள்ளச் சிந்தனை போற்றி போற்றி. 9 நல்லதே பிறவி தந்த நாயக போற்றி போற்றி அல்லவே செய்திந் நாளில் அழுமெனைக் காப்போய் போற்றி தொல்லையை நீக்குந் தொண்டில் துணைசெயுந் தோன்றல் போற்றி பல்வழி உயிர்ச்சன் மார்க்கம் பரவவே அருள்வோய் போற்றி. 10  1. மாசு மனிதம் மாசு மிகுந்த மனிதஇருள் போக்கவந்த ஏசு உனைமறவேன் என்று. 1 கன்னி வழிமலர்ந்த கற்பகமே என்னுயிரே முன்னி உனைஅணைந்தேன் முன் 2 ஆசைக் கடல்விழுங்க ஆளானேன் அப்பாஉன் நேசம் மறித்ததுவே நின்று. 3 பிழைபொறுத்குந் தெய்வம், பெரும! நீ என்றே குழையுளத்தால் நானடைந்தேன் கொள். 4 வன்பேய் முனைப்பழித்த வள்ளல் கிறிதுவே உன்சேயாய் வாழ்வேன் உணர்ந்து. 5 ஆணி அறைந்தவர்க்கும் அன்பான தெய்வமே தோணிஎனக் காவாய் தொடர்ந்து. 6 சிலுவையும் ஆணியும் செந்நீரும் நெஞ்சில் நிலவுந் தவமே நிறை. 7 என்னுள்ளே நீபிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யானிறந்தேன் உற்று. 8 உன்குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா என்குருதி எங்கேயோ ஏது. 9 வெள்ளை உடையும் மலைப்பொழிவும் என்னுள்ளக் கள்ளம் அழிக்குங் கலை. 10 2. அறத்தின் இயல் அறத்தின் இயலையும் அன்பின் இயலையும் ஆய்ந்தளந்தேன் திறத்தைத் தெளிகிலேன் சீற்றக் கொலைஞரின் தீச்செயலைப் பொறுத்தருள் செய்த புனிதம் நினைவில் புகப்புகவும் அறத்தன்பு நீயென் றறிந்தேன் கிறிதுவின் ஆருயிரே. 1 ஏசினேன் உன்னை இனிய மொழியை இளமையிலே கூசினே னில்லை குறையினைப் பின்னே குறித்தழுதேன் ஏசுவே! உன்னருள் என்னுளம் எய்திய தெப்படியோ மாசிலா அன்பே! மகனாய் உருக்கொண்ட மாணிக்கமே! 2 மலரைப் பறிக்கிலென் மாலை புனைந்திலென் மந்திரத்தின் ஒலியைப் பெருக்கிலென் ஓவெனப் பாக்களை ஓதிலென்ன! சிலுவையும் ஆணியும் செந்நீரும் சேர்ந்த திருவுருவம் பொலியும் உளத்தினில் பொன்றிடும் பாவப் பொருப்புகளே. 3 வாக்கை அடக்கின் வயிற்றை ஒடுக்கின் மயிர்வளர்த்து மூக்கைப் பிடித்திடின் மூச்சைத் தடுத்திடின் முத்தியின்பம் தேக்குமோ ஐயோ செகத்தீர்! அடைமின் சிலுவை உயிர் போக்கிய ஏசுவின் பொன்னடி இன்பம் புகுந்திடுமே. 4 தத்துவ நூல்களைத் தாங்கித் தருக்கச் சபைகளிலே வித்தகம் பேசி விழுந்தவன் என்று விழுமியஉன் சத்திய வாக்குத் தடுத்தெனை ஆளத் தயாபரனே மொத்திய மூர்க்கம் முறைமுறை சாய்ந்தது முன்னவனே. 5 இறையவன் கோயிலை எண்ணி நுழைந்தாய் இளங்குமரா கறைகளைக் கண்டதுங் கள்ளர் குகையெனக் காய்ந்துவிட்டாய் குறைகளைப் போக்குங் குருமொழி யாயது கோதகற்றித் தறையைத் திருத்துந் தகைமையை என்னென்று சாற்றுவனே. 6 கள்கொலை காமம் களவுபொய் தீய கறைகழித்துத் தள்ளும் வழிகளைச் சாற்றினர் பல்லோர் தரணியிலே பள்ளிப் படிப்பாய்ப் பரவின, வாழ்வில் படிவதற்குக் கொள்ளு மனமே கொலைஞரை மன்னித்த கோவடியே. 7 ஒழுக்கம் விழுப்பம் உயிரினும் ஓம்பென் றுரைத்திருந்தால் கொழிக்குமோ தானே குலவி நடந்து, குவலயத்தீர் ஒழுக்க வடிவாங் கிறிதுவை உன்னி உளத்தழுதால் அழுக்கைக் கழுவும், ஒழுக்கம் அரும்பி அலர்ந்திடுமே. 8 அன்பே! உனைக்காண் பரிதென அன்னை அகந்திரண்டாய், என்புதோல் போர்த்து நடந்தாய், மொழிந்தாய், இருநிலத்தில் மன்பதை நோய்கண் டிரங்கி இரங்கி மரித்தெழுந்தாய், பொன்னுரு வில்லையேல் புந்தியில் என்ன பொலிந்திடுமே. 9 பாவி பிறந்தனன் பாவி வளர்ந்தனன் பாவவினை மேவிய வாழ்வினன் மீக்கூர்ந்து பாவம் விளைந்தது சாவியாய்ப் போகச் சமயப் புறத்தினில் சார்ந்தலுத்தேன் தேவனே! அன்புச் சிலுவையின் நீழலைச் சேர்ந்தனனே. 10 3. அலகிலொளி அலகிலொளி ஐயாவே அகிலமெலாம் உன்கருவில்; உலகிடைநீ ஒருகன்னி உயர்கருவில் உதித்ததென்னை? சிலைநுதலார் உலகினிலே செறிந்தஇழுக் கொழித்தவர்தம் நிலைமையினை வளஞ்செய்ய நினைந்ததுவே நெஞ்சினிலே. 1 எவ்வுயிர்க்குந் தாயான இறையவனே இவ்வுலகில் செவ்வியலி ஒருதாயின் செழுங்கையில் வளர்ந்த தென்னை? எவ்வுயிருந் தாயன்பை எய்திவிடின் இறையுண்மை மெய்ம்மழவில் பொலியுமென்று விளம்புதற்கு வளர்ந்ததுவே. 2 பருவுடலை மறைத்தருளிப் பரமவுடல் அடைந்தக்கால் திருமகளிர் விழிக்கமுதச் செழுங்காட்சி வழங்கியதென்? திருமகண்மை உளமெய்தின் தெய்வவுரு விளங்குமென்று மருவுலகம் உணரகுரு மகிழ்காட்சி வழங்கியதே. 3 நெடுங்காலம் நஞ்சுமிழ்ந்து நிலம்வதைக்க நீளரவக் கொடுங்கோன்மைகொதித்ததென்னை? குமராநீ பிறந்ததுமே கொடுங்கோன்மை விழுத்தவந்த குணக்கோவென் றுனைத்தெரிந்து நடுங்கியதே கொடுங்கோன்மை நலிந்துவரல் கண்கூடே. 4 பேய்மையிலா உலகிருந்து பேயுலகிற் பிறப்பெடுத்துப் பேய்புரிந்த சோதனையும் பெற்றுவெற்றி அடைந்ததென்னை? பேய்நிலத்தில் சோதனையுண் டஞ்சாதே எனஅபயம் பேய்மனத்து மக்களுக்குப் பெரியவனே தெரிப்பதற்கே. 5 மாடிமனை யிடைஏசு மலரடியை வையாமல் காடுமலை கடல்குடிலில் கான்மலரை வைத்ததென்னை? காடுமலை கடல்குடிலுங் கடவுணெறி கூட்டியற்கை வீடமைதி யெனவிளக்க மேவியதே கான்மலரே. 6 முடிசேர்ந்த முள்ளடுக்கும் முகஞ்சேர்ந்த எச்சிலுமே இடிசோரும் உரமுடையாய்! இகலெழுப்ப விலை என்ன? கடியாத பொறுமையன்புக் கலைவளர வேண்டுமென்று நடையாலே நாட்டுதற்கு நல்லுளத்தில் எண்ணியதே. 7 சிலுவையிலே கிறிதுஉனைச் சேர்த்தாணி அறைந்தகொடுங் கொலைஞரையும் பகையாது குழைந்தருளைச் சுரந்ததென்னை? பலியிரத்தம் முழுகிமனம் படிந்துருகி மன்னிக்கும் நிலவுலகம் படைப்பதற்கு நினைந்தருளைச் சுரந்தமையே. 8 ஒருகன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னங் காட்டென்றும் கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும் பொருநரையும் நேசியென்றும் போதனையால் சாதனையால் kUtit¤j »¿ÞJ!உன்றன் மலரடியில் அடைக்கலமே. 9 வாளேந்திப் போர்புரிந்த வாகையரும் மாண்டுவிட்டார் வாளேந்தாக் கிறிதுவேநீ மரித்தெழுந்தாய் வீரவள்ளால்! வாளேந்தும் வழியுழன்றேன் வழிகண்டேன் மரித்தெழுவேன் வாளேந்தா நெறிவளர்க்க மலரடியில் அடைக்கலமே. 10 4. உலகமெலாம் உலகமெலாம் பாவஇருள் உமிழ்ந்துநின்ற வேளை ஒடுக்கஅதைக் கன்னிவயிற் றுதித்தபர ஒளியே! இலகுடுக்கள் நீபிறந்த இடங்குறிக்கக் கலைஞர் ஏகிஉன்றன் அடிவணங்க இன்பமருள் சேயே! கலகமன வேந்தாட்சி கலகலத்து வீழக் கடலுலகில் அருளாட்சி கால்கொண்ட அரசே! அலகையினை அதட்டியதன் சோதனையை வென்ற ஆண்டகைமை வீரகுரு! அடியையடைந் தேனே. 1 தொழிலாளி வழிவளர்ந்தாய் தொழுவத்தில் வதிந்தாய் சூழ்வனத்தில் ஆழ்கடலில் தொடர்மலையில் நடந்தாய் விழியாத வலைஞரையும் விரும்பிஅழைத் தாண்டாய் விளையாட்டுக் குழந்தைகளை வெறுத்தவரைக் கடிந்தாய் அழியாத வீடென்றே அவர்மனத்தைக் கொண்டாய் அருவருக்கும் அழுக்கணங்கின் அழுகைக்கருள் சுரந்தாய் பழிநோயர் தொழுநோயர் படர்ந்துவரக் குமரா! பரிந்தவர்தந் துயர்களைந்தாய் பாவிமுகம் பாரே. 2 அன்றாட அப்பமெங்கட் கருள்புரிக என்றும் அடுத்துவரு நாட்கவலை அடையற்க என்றும் என்றேனுஞ் செடிபறவை என்னஉண்போம் உடுப்போம் என்றெண்ணி வதைந்துவதைத் தேங்கினவோ என்றும் நன்றாக இறைஉறுதி எளிமைவழி நவின்றாய் ஞானமென்று கடபடம்நீ நாட்டவில்லை ஐயா! பொன்றாத மொழிக்குரிய பொருந்தெளிமை என்னுள் புகுந்ததுவும் உன்னருளே புரிகைம்மா றிலையே. 3 பன்னிருவ ருள்ளொருவன் காட்டிஎனைக் கொடுப்பன் படிந்தொருவன் சோதனையில் மறுதலித்தே விடுவன் என்றுமுன்னர் வாய்மலர்ந்தாய் ஏசுபெரு மானே! இருநிகழ்ச்சி நடந்தமையை இவ்வுலகம் அறியும் அன்னவரைக் காயாமல் ஆண்டஅருட் கடலே! அடியரையும் சோதனைப்பேய் அலைக்கும்நிலை உணர்ந்தேன் என்னனையர் எளிமையினை எவ்வுரையால் சொல்வேன் எடுத்தணைக்க நீஇலையேல் எங்கள்கதி என்னே. 4 உன்னருளால் உன்னுடனே உறைந்தவரும் பேயின் உறுத்தலினால் உனைமறந்த உண்மையினைத் தேர்ந்தேன் என்மனத்தின் எளிமைகுறித் தேக்கமுற்றேன் ஐயா! ஏசுஎன்றும் கிறிதுஎன்றும் எண்ணியெண்ணிக் கிடந்தேன் மன்னவனே! சிலுவையிலே மரித்தபின்னர் பேயின் மயக்கமில்லை சீடருக்கு மயங்காமை தெளிந்தேன் பொன்னுடலம் பொழிகுருதிப் பெருக்கினிலே ஆழ்ந்தேன் பொல்லாத பேய்க்குறும்பு புகஇடமும் உண்டோ! 5 அன்புநெறி சிறந்ததென அகிலமுணர்ந் துய்ய ஆண்டவனே என்செய்தாய் அதைநினைந்தால் அந்தோ! என்புருகும் உயிருருகும் எண்ணமெலாம் உருகும் எம்மொழியால் இயம்பவல்லேன் ஏழைமகன் அப்பா! மன்னுலகில் அவதரித்தாய் மக்களிடை வதிந்தாய் மறைமொழிந்தாய் அவ்வளவில் மனம்நிறைய இலையோ பொன்னுடலை வதைக்கவிட்டாய் பொலியுயிரை நீத்தாய் பொறையன்பு நீயென்னும் பொருண்மைதெளிந் தேனே. 6 அன்பேநீ ஆதலினால் ஆருயிர்கள் பொருட்டுன் அழகுடலை வதைக்கவிட்டாய் அருளுயிரை நீத்தாய் இந்நிலத்தில் அச்செயலை எக்குரவர் ஏற்றார் இளங்கன்னி வயிற்றுதித்த இறைமைமணி விளக்கே அன்பினிலே குறையிருந்தால் அருஞ்செயலை ஆற்றல் ஆகாதே ஆகாதே அன்புடைய அறவோர் என்பும்பிறர்க் குரியரென எழுந்தமொழிக் குகந்த இலக்கியமா யிலங்கிநிற்கும் ஏசுகுரு நாதா! 7 வான்காணா முழுமதியே வாடாத பொழிலே மருந்தறியா நோய்தீர்க்கும் மாமருந்தே மணியே ஊன்காணா உளத்திரக்கம் ஊற்றெடுத்தே ஓடி ஒளிர்குருதி யாகிஉன்றன் உரங்கால்கை ஒழுகல், நான்காணாக் கண்ணினுக்கு நல்விருந்து செய்தாய் நாயகமே! நினைவிலந்த நற்காட்சி அருளே தேன்காணா இன்சுவையே தெவிட்டாத அமுதே தெய்வமணக் கிறிதுவெனுந் திருக்குமர குருவே. 8 அமைதிமலை மீதமர்ந்தே அறமழையைப் பொழிந்தாய் அன்பாறாய் அருட்கடலாய் அதுபெருக லாச்சே இமையளவில் அதில்திளைத்தால் இகல்பகைகள் போகும் எவ்வுயிருஞ் சோதரமா யிலங்குநிலை கூடும் சமயவழி வகுப்புவழி சாம்ராஜ்ய வழியே சண்டைமிக அன்புவழிச் சார்பழிந்து போச்சு சமதருமம் நிலவினெங்கும் சாந்தமலைப் பொழிவு சகமாகும் அந்நிலையைச் சற்குருவே அருளே. 9 உலகிறங்கிக் குமரன்அன்பை உணர்த்தியபின் மக்காள்! யோகமென்றும் யாகமென்றும் விரதமென்றும் உழலல் கலகமென்று மனைநீத்தல் தாடிசடை வளர்த்தல் கனல்பசியால் வீடுதொறுங் கையேந்தல் முதலாம் பலநெறிகள் படர்தலென்ன? பகுத்தறிமின் அறிமின் பத்திநெறி யொன்றில்நின்று பாவமுறை யிட்டுச் சிலுவையிலே சிந்தைவைத்தால் தீமையெலாம் அகலும் செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல்பெற லாமே. 10 5. பொய்யிலே பொய்யிலே நோக்கம் புகழிலே நாட்டம் பொருந்திய வாழ்க்கையை வெறுத்து, மெய்யிலே உள்ளம் பணியிலே பற்றும் மேவுநல் வாழ்க்கையை விரும்பி, ஐயனே கிறிது அப்பனே என்றுன் அடியினை நாடொறும் நினைந்து கையனேன் உருகிக் கசிந்ததை அறிவாய் காத்தருள் கருணைமா நிதியே. 1 வெகுளியில் முளைத்து வெகுளியில் வளர்ந்து விடக்கனி விளைதலை யுணர்ந்து வெகுகலைப் பயிற்சி துணைசெயு மென்று வீணிலே கழித்தனன் காலம் பகைவரை நேசி என்றுரை பகர்ந்து பண்புறக் காட்டிய ஏசு பகவனே என்று பாதமே அடைந்தேன் பார்த்தருள் கருணைமா கடலே. 2 குற்றமே உடையேன் குறைகளை வளர்த்தேன் குறும்புகள் பலப்பல செய்தேன் கற்றனன் நூல்கள் கழகநின் றறிவால் கடபட உருட்டலைப் புரிந்தேன் பற்றினன் பொல்லாப் பாழ்நெறி நல்ல பண்புறு நெறியினை நாடி இற்றைநாள் உன்றன் எழிலடி அடைந்தேன் ஏசுவே காத்தருள் இறையே. 3 புள்ளமர்ந் தினிய பாக்களை முழங்கும் பொழிலினைக் கண்டனன் புகுந்தேன் உள்ளமே கவரும் உயர்கனி பறிக்க உற்றனன் மரங்களி னிடையே முள்ளினம் மருட்ட மயங்கினன் ஏசு மூர்த்தியே! என்னிலை தெரிந்து முள்ளிலா மரமாய் முதிர்கனி அளித்தாய் முன்னவா! அருட்பெருக் கென்னே. 4 தண்புனல் வேட்கை தாக்கிட அலைந்தேன் தடங்களைத் தேடினன் கண்டேன் நண்ணினன் ஒன்றை நாற்புறங் கள்ளி, நயந்தனன் வேறொரு தடத்தைத் திண்ணிய முதலை திரிந்தது, பிறிதில் தீஅரா, நடந்தனன் சாய்ந்து பண்ணளி தடமாய்ப் பரிந்தனை கிறிது பரமநின் னருட்டிற மென்னே. 5 அலைகடல் அமைதி அடையவே செய்தாய் அப்பனே! மக்களின் மனத்துள் அலையெலாம் ஒடுங்க மலைப்பொழி வளித்தாய் அருட்பெருங் குருபர! எல்லாம் சிலுவையில் செறியச் சிறக்கவே வைத்தாய் சிந்தையிற் சிலுவையின் கலைகள் நிலவநாள் தோறும் ஜெபஞ்செய வேண்டும் நின்னருள் அதற்குமே தேவை. 6 தீயரைச் சேர்தல் தீமையென் றெண்ணிச் சிந்தையில் ஒதுங்கியே நின்றேன் நாயினேன் என்றன் நலன்களை நாடி நயந்தனன் பாவியாய் வளர்ந்தேன் பேயினை யொழித்த பெரியனே! ஜெபத்தில் பித்தினைக் கொண்டபின் ஐயா! தீயரை நண்ணித் திருப்பணி செய்தேன் தீமைகள் அணுகவும் இலையே. 7 என்னிடங் குறைகள் பிறரிடங் குறைகள் எழுவதைக் கண்டபோ தெல்லாம் உன்னடி எண்ணி உருகியே ஜெபத்தில் உளங்கொளும் உணர்வினை அளித்தாய் என்னகைம் மாறு செய்குவன் ஏழை ஏசுவே! எம்பெரு மானே! அன்பினால் உலகை அமைதியில் நிறுவ அவதரித் தருளிய அரசே! 8 பள்ளியில் உன்றன் பான்மொழி பயின்றேன் பரிசிலை உளங்கொடு நாயேன் எள்ளினேன் உன்னை; இன்மொழி பின்னை இரங்கவும் வருந்தவும் செய்யக் கள்ளனேன் அழுதேன் பிழைபொறுத் தாண்டாய் காய்தலும் வன்மமும் இல்லா வள்ளலே! நாளும் ஜெபத்தினில் மனத்தை வைத்திடும் வாழ்வடைந் தேனே. 9 புரிசடை முடியும், பூந்துளி நுதலும், புவியுயிர்க் கிரங்கிய விழியும், வரையினில் நின்று மறைபொழி வாயும், வளர்திருத் தாடியும், குருதி சொரிசெழு மார்பும், சுடுமுளைக் காயம் துலங்குகை கால்களும், சிலுவை மருவிய வடிவும், மனமலர் ஜெபத்தை வழங்கிய வள்ளல்! நீ வாழி. 10 6. உலகெலாம் உலகெலாம் உய்ய வேண்டி உருக்கொடு மண்ணில் வந்தாய் நலமிகு உவமை யாலே ஞானசீ லங்கள் சொற்றாய் கலகமுங் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச் சாய்த்தாய் அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி. 1 தரையினில் உதித்த கோலம் தையல்கை வளர்ந்த கோலம் வரையினில் இவர்ந்த கோலம் வனத்தினில் நடந்த கோலம் திரைகடல் கடந்த கோலம் சிலுவையில் பொலிந்த கோலம் உறைமனம் ஜெபத்தால் பெற்றேன் உத்தம! போற்றி போற்றி. 2 முள்வன முனைப்புச் சாய முடிமலை மிடுக்கு மாயத் தள்ளலைச் சீற்றம் வீயத் தாண்மலர் வைத்து வைத்து மெள்ளவே நடந்த காட்சி வேய்மனம் அமுத மாச்சு வள்ளலே! ஜெபத்தின் பேறு! மலரடி போற்றி போற்றி. 3 அங்கியைத் தொட்ட பெண்ணை அன்பினால் நோக்கி உன்பால் தங்கிய நேசம் உன்நோய் தவிர்த்ததென் றருளிச் செய்தாய் பொங்கிய மொழியில் மூழ்கிப் பொருந்திய ஜெபத்தில் நின்றேன் இங்கென தூனங் கண்டேன் ஏசுவே போற்றி போற்றி. 4 அலையிலா ஆழி யானாய் அருட்புனல் மேக மானாய் நிலைகனி மரமு மானாய் நீங்கலில் ஒளியு மானாய் புலனிலாக் கடவு ளானாய் புலனுடைக் கிறித்து வானாய் நலமிலேற் கன்பே ஆனாய் நாதனே! போற்றி போற்றி. 5 ஜீவநூற் பயிற்சி வேண்டும் ஜீவநீர்ப் படிதல் வேண்டும் ஜீவநன் னீழல் வேண்டும் ஜீவசெஞ் செல்வம் வேண்டும் ஜீவனில் ஜீவன் வேண்டும் செகமிவை பெறுதல் வேண்டும் ஜீவனை ஈந்த தேவே! திருவடி போற்றி போற்றி. 6 வாழ்ந்திட உலகை வைத்தாய் மானுடப் பிறவி வைத்தாய் சூழ்ந்திடச் சபைகள் வைத்தாய் தோத்திரஞ் செய்தே உன்பால் ஆழ்ந்திடச் சிலுவைக் கோலம் அன்புடன் வைத்தாய் வைத்தாய், வீழ்ந்திடல் எற்றுக்கிங்கே, விமலனே! போற்றி 7 பரனரி அணைவா னென்றும் பார்பதம் படியே என்றும் இரவிலும் நினைந்தேன் நெஞ்சம் ஏந்திய காட்சி என்ன! சிரமுடி முள்ளும் மண்ணில் சேவடி நடையும் - ஏசு பரமன்நீ என்று கொண்டேன் பதமலர் போற்றி போற்றி. 8 அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே! போற்றி போற்றி மன்பதை பாவந் தீர்க்க மரித்தவா! போற்றி போற்றி இன்புற உயிர்த்தெ ழுந்த ஈசனே! போற்றி போற்றி என்பிழை பொறுக்கும் ஏசு எந்தையே! போற்றி போற்றி. 9 பராபரக் கடவுள் வாழி பரிசுத்த ஆவி வாழி நிராமயக் குமரன் வாழி நிறையருள் அடியார் வாழி புராதன மொழிகள் வாழி புண்ணியச் சிலுவை வாழி விராவிய குருதி வாழி வியன்சபை வாழி வாழி. 10 7. ஏசு கிறிது ஏசு கிறிது பெருமானே எந்த உயிர்க்கும் அருள்வோனே. 1 கிறிது கிறிது என்போமே கிட்டிய பாவம் பின்போமே. 2 கன்னி வயிற்றில் உதித்தோனே கருணையை உலகில் விதைத்தோனே. 3 உருவம் இல்லா ஆண்டவனே ஒளியாய் என்புடல் பூண்டவனே. 4 அன்பை அளிக்க வந்தோனே ஆருயிர் உலகுயத் தந்தோனே 5 குலைந்தது குலைந்தது கொடுங்கோன்மை குமரா எழுந்ததுன் செங்கோன்மை. 6 தீராப் பிணிகளைத் தீர்த்தோனே தெவ்வரை அன்பாய்ப் பார்த்தோனே. 7 குழந்தை உள்ளம் உணர்ந்தோனே கோதில் வீடென் றுரைத்தோனே. 8 தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்குஞ் செங்கரனே. 9 ஏசுவே என்றதும் நெஞ்சுருகும் எல்லாப் பாவமும் இரிந்தருகும். 10 கண்ணே மணியே கற்பகமே கான்முளை யாகிய அற்புதமே. 11 பெண்ணுக் குரிமை ஆக்கியவா பெருநோய் தொழுநோய் போக்கியவா. 12 ஆணியில் சிந்திய செந்நீரே அகிலம் புரக்கும் நன்னீரே. 13 கிறிதுவின் இரத்தம் பெருமருந்து கேடில் இன்பம் தருவிருந்து. 14 திருமலை பொழிந்தது சொன்மறையே சிலுவை வழிந்தது செயன்முறையே. 15 சிலுவையில் நின்ற செழுங்கோலம் சிந்தையில் படிந்திடின் நறுஞ்சீலம். 16 சிலுவை நுட்பம் உளத்தினிலே சேர்ந்தால் விடுதலை அளித்திடுமே. 17 அமைதி அளிக்கும் அரசாட்சி ஐயன் குமரன் அருளாட்சி. 18 மரித்தும் எழுந்த சத்தியமே மரணம் இன்மையின் தத்துவமே. 19 வாழ்க கிறிது, போதனைகள் வாழ்க சிலுவை, சாதனைகள். 20 I 1. சன்மார்க்கக் கொடி சன்மார்க்க வெண்கொடி சேர்வோம் - அதில் j©lh kiu¥ó jtœtij¤ nj®nth«., வெண்மை தெரிப்பது தூய்மை - அதன் வேராஞ்சன் மார்க்கம் விரிசெழும் பூவே உண்மை உளத்தடந் தேவை - அந்த உளம்பெற வெண்கொடி நீழலைச் சார்வோம். (சன்) 1 சமயங்க ளெல்லாம் இதழ்கள் - அகச் சார்பிதழ் எட்டுஞ் சமரசச் சான்றாய்ச் சமைந்து திரண்டசன் மார்க்கம் - அதன் சாரம் பிலிற்றும் தனிக்கொடி சார்வோம். (சன்) 2 எட்டும் நபி இயல் ஏசு - சினன் புத்தன்கண் ணன்குகன் மோனன் உணர்த்தும் அத்தன் ஒருவன் இயல்பன்(பு) - இரக்கம் அறம்வினை செவ்வி அமைகொடி சார்வோம். (சன்) 3 சாதி மதநிறச் சண்டை - கொடுஞ் சாத்திர கோத்திர நாடுகள் சண்டை வேதனை பல்கிடுஞ் சண்டை - அற வீழப் பறந்துயர் வெல்கொடி சூழ்வோம். (சன்) 4 வகுப்பு மொழிநிறந் தாண்டி - மத வம்புயர் தாழ்வுடன் நாடுகள் தாண்டி தொகுப்புச் சகோதரஞ் சேரத் - துயர் தோன்றாப் புவியளி தொல்கொடி சூழ்வோம். (சன்) 5 கொலைகுறி குண்டு குவிக்குந் - தொழிற் கொடுமையைப் போக்கி விளைவைப் பெருக்கிக் கலையை வளர்த்துக் கருணை - கனி காதலும் வீரமுங் கால்கொடி சூழ்வோம். (சன்) 6 மண்பொன்னை மாதரை நீத்தால் - பெரு வான்வரும் என்ற மடமையைத் தேய்க்கும், மண்பொன்னில் மாதரில் மெய்யன் - உற மன்னல் உணர்த்தும் மணிக்கொடி ஈதே. (சன்) 7 தனிமை அரக்கனைச் சாய்க்கும் - அங்குத் தக்க பொதுமை இறைமை அமைக்கும் இனிமை எவர்க்கும் அருளும் - எங்கும் இன்பங் கொழிக்கும் எழிற்கொடி ஈதே. (சன்) 8 பன்மைப் பழமையைப் பாற்றிச் - செய்ய பசுமை ஒருமைப் பயன்விளை வாக்கி நன்மைப் புதுமையை நல்கி - உயர் ஞானம் வழங்கும் நறுங்கொடி ஈதே. (சன்) 9 எல்லா ருளத்தும் பொதுமை - அறம் எழுக நிலைக்க எனஅறை கூவிப் பொல்லாமை போக்கப் புரட்சி - புரி பூங்கொடி சன்மார்க்கப் பூங்கொடி ஈதே. (சன்) 10 உலகுக் கொருகொடி ஈதே - குலம் ஒன்றே இறைமையும் ஒன்றேஎன் றென்றும் ஒலிக்கும் ஒருகொடி ஈதே - புற உட்பகை கல்லும் ஒருகொடி ஈதே. (சன்) 11 வாழி மலர்கொடி வாழி - என்றும் வாழிசன் மார்க்கம் வளர்கொடி வாழி வாழி வழிக்கொடி நல்லோர் - நன்று வாழிசன் மார்க்கம் மலர்கொடி வாழி. (சன்) 12 II சன்மார்க்க வெண்கொடி அறையப்பா முரசு. சமரச வெண்கொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரசப் பூங்கொடி அறையப்பா முரசு. 1 மனத்துக் கொருகொடி அறையப்பா முரசு மனிதற் கொருகொடி அறையப்பா முரசு மனைக்கும் ஒருகொடி அறையப்பா முரசு மார்க்கம் வளர்கொடி அறையப்பா முரசு 2 ஊருக் கொருகொடி அறையப்பா முரசு ஒருநாட்டுக் கொருகொடி அறையப்பா முரசு பாருக் கொருகொடி அறையப்பா முரசு பரந்த பொதுக்கொடி அறையப்பா முரசு 3 துன்மார்க்கம் வெல்கொடி அறையப்பா முரசு துயரம் தொலைகொடி அறையப்பா முரசு சன்மார்க்கப் பூங்கொடி அறையப்பா முரசு சமரச வெண்கொடி அறையப்பா முரசு 4 2. பழமையும் புதுமையும் பழமை புதுமை படரு மிடங்கள் பாரி லுளவோ பகுத்துத் தெளிமின் பழமைக் கழிவும் புதுமைப் புகலும் பண்பில் நடையில் படித லிலதே. 1 திக்குத் திசைகள் திகழு மிடங்கள் செகத்தி லுளவோ செயற்கை வழக்கே. ஒக்கும் பழமை புதுமை வழக்கும் உண்மை நிகழ்ச்சி உறுத லிலையே. 2 பழமை புதுமை பரம னடையான் பரமன் கடந்தோன் பழமை புதுமை கழகக் கணக்கில் பொழுதி லிடத்தில் கானற் சலமே கணித்தல் அரிதே. 3 எல்லை உலகம் இனிது நடக்க எழுந்த வழக்கு வரம்பில் அடங்கும் எல்லை கடந்த இறையைப் படுத்தல் எளிய மதியே எளிய மதியே. 4 பழமை புதுமை வழக்கு வழியே பருத்துத் திரண்ட மொழிகள் ஒருங்கே பழமைப் பழையன் புதுமைப் புதியன் பரமன்எனச் சொல் பதியின் இயல்பே. 5 ஒன்றே கடவுள் உரைக்கும் மறைகள் உணர்த்தும் பழைய உலகம் பலவாச் சென்று விளைத்த செயற்கை பலவே சீர்செய் புதுமை செலுத்தும் ஒருமை. 6 மின்னல் ஒருமை மிளிருங் குவிகள் விரிக்கும் நிறங்கள் விளக்கும் வகைகள் பன்மை உணர்வைப் பராவும் பழமை பரந்த புதுமை பராவும் ஒருமை. 7 இரண்டு வகுப்பை இயம்பும் பழமை இயற்கை ஒருமை இசைக்கும் புதுமை சுரண்டல் இடுக்கில் சுழலும் பழமை தொல்லை இடுக்கைத் தொலைக்கும் புதுமை. 8 நஞ்சு மிடற்றன் நடப்பாம் பணையன் ஞானச் சிலுவை நயத்தன் அருகன் பஞ்சப் பரிவாய்ப் பகரும் பழமை பகுப்புப் பிரிவைப் பறிக்கும் புதுமை. 9 ஆலி லிருக்கும் அசோகி லிருக்கும் அரசி லிருக்கும் அமைந்த சிலுவைக் கோலி லிருக்கும் குழலில் குளிரும் கோட்டி லிருக்கும் புதுமை இறையே. 10 நாட்டைத் தனிமைப் படுத்திப் பழமை நடுங்கும் பிணக்கில் நசுங்கும், புதுமை நாட்டை உலக உறுப்பென் றுணர்ந்து நயத்தில் அருளில் ஒருமை புரக்கும் 11 பழைய உலகில் பகைமை மலிவு புதிய உலகில் கருணைப் பொலிவு பழமை அருக புதுமை பெருக பகைமை விழுக கருணை எழுக. 12 3. தெய்வப் புது உலகம் ஆராய்ச்சி என்றலையும் ஆராய்ச்சி உலகீர் ஆய்ந்தாய்ந்தே அலுத்தலுத்துத் தெய்வமெங்கே என்பீர் வேராயப் புகுந்துழைத்தல் வீண்முயற்சி யாகும் வித்தில்லா ஒன்றனது வேர்காண்டல் எங்ஙன்? 1 ஆராய்ச்சி அலைகளெழுந் தார்த்தார்த்து வீறி அங்குமிங்கும் ஓடிமுட்டி அதைஇதையும் உளறும் ஆராய்ச்சி எழுந்தொடுங்கும் அளவுடைய தன்றோ? அகண்டிதத்தை அணுகுவதோ அறிவுகொண்டு தேர்மின். 2 ஆழாக்கால் உழக்களத்தல் அறிவுடைமை யாமோ? அகண்டிதத்தைக் கண்டத்தால் அளக்கும்அறி வென்னே! பாழாகி அளவெல்லாம் பரிதவிப்பே நேரப் பரமில்லை என்றுரைக்கப் பரிகின்றீர் பாவம்! 3 இடவடிவப் பேரின்றி இருப்பதந்தத் தெய்வம் இடவடிவப் பேருடையீர் அதைஅளத்தல் அறிவோ? திடமுடனே இல்லையென்று முடிவடைதல் செருக்கே செருக்கறுந்த விடுதலையில் தெய்வநிலை தெளிவாம். 4 உறுப்பின்றி அறிவாகி ஒளிருமொரு தெய்வ உண்மைநிலை வெற்றாய்வால் உளம்படுதல் அரிதே உறுப்புடனே தாக்கின்றி அறிவாகும் அமைதி உறஉழைத்தால் தெய்வஉண்மை உறுதிபெற லாமே. 5 அறிவான ஒருதெய்வம் அன்பாகி இயற்கை அருட்குரவர் வீரரிடம் அமர்ந்திருத்தல் உணர்மின் குறியாகும் அவரிடத்தில் குறிகொண்மின் செருக்கு, குலைந்துவிடும் குலைந்துவிடும் குணம்பெறலாம் இனிதே 6 திருக்குரானில் விவலியத்தில் சித்தாந்தந் தனிலே திரிபிடகம் கீதைகளில் திருஅமைதித் திறத்தில் கருத்திருத்தி ஒன்றஒன்றக் கட்டழிந்து கடவுள் கருணைநிலை புலனாகுங் காட்சிஇது காண்மின். 7 பெரியவர்கள் உலகினுக்குப் பேசிவிட்டார் மறைகள் பின்னாளில் அவ்வுலகைப் பேய்த்தேரென் றெண்ணும் கரியஇருள் துறவுபுகக் கறைபடர உலகம் கருணைமறை நுட்பமுணர் கண்ணிழக்க லாச்சே. 8 இனியமறை நுட்பமெலாம் இயங்கிநிற்க வேண்டின் இறையுண்மை உணர்வளிக்க இலக்கியமா யிலங்கும் தனியுலகம் பொய்யென்னுஞ் சழக்கறுதல் வேண்டும். சமதர்ம வாழ்க்கைமுறை சார்புபெறல் வேண்டும் 9 தெய்வமெது தெய்வமெங்கே என்றாயும் மக்காள் ! தெய்வநிலை நல்வாழ்க்கைத் தெளிவென்ப தறிமின் வையமெய்யை ஆராய்மின் வகைவகையாஞ் சக்தி வாழ்க்கைவழி காட்டியொரு வகுப்புணர்வை வழங்கும். 10 ஆராய்ச்சிக் கென்றுநிற்கும் அவனிவிடுத் தந்தோ ஆராய்ச்சிக் கெட்டாத அகண்டம்புகல் என்னோ? நேராய வாழ்க்கைஇன்பம் நிகழ்வகைகள் காண்மின் நித்தலும்போர் மூள்வதற்கு நிமித்தமென்ன நினைமின் 11 முன்னாளில் தொழின்முதற்போர் மூண்டதில்லை பின்னாள் மூண்டதது வையமெல்லாம் செந்நீரில் மூழ்கும் இந்நாளில் தெய்வமெங்கே என்றாய்தல் வீணே இம்மையிலே இன்பமின்றி மறுமைஇன்பம் ஏது? 12 சுரண்டரசில் வறுமைபிணி கொலைகளவு பொய்மை சூதுமதம் முதலாய தொல்லைஎரி சூழும் வரண்டநிலை புரண்டெழுந்து வளம்பெறுதற் குரிய மருந்தென்ன வளர்பொதுமை வெள்ளமதே யாகும். 13 இயற்கையினை உன்னஉன்ன முதல்தொழிலாம் இருமை இன்மைநன்கு புலனாகும் இருமையொழிந் தொருமை முயற்சிஎழின் புதுஉலகம் முகிழ்த்தினிது பொலியும் முரண்பகை போர்முதலாய மூர்க்கமெலாம் மறையும். 14 அற்புதங்கள் பேச(ப்)பேச அறியாமை வளரும் அகிலமெலாம் போர்க்கடலில் அழுந்துமிந்த வேளை அற்புதஞ்சொல் சாமியாரின் அற்புதங்கள் எங்கே? ஆண்டவன்றன் அன்புநெறி அற்புதமோ? ஐயோ! 15 வீடென்றும் நரகென்றும் விரிவுரைகள் பகர்வோர் விமலனெங்கும் வீற்றிருக்கும் விழுப்பமுண ராரே நாடுகளில் வீடுமுண்டு நரகுமுண்டு தீய நரகொழிக்க வந்தவர்மார்க் ஞானமுனி வாழி. 16 நரகழிந்த புதுமையிலே நானிலமும் வீடாம் நாத்திகப்போர் ஆத்திகப்போர் நாசமடைந் திறுகும் பரமசுகம் எல்லாரும் பருகிஇன்ப முறுவர் பழமையிலே பலரின்பம் பருகினரோ பகர்மின். 17 ஏசுநபி முதற்பெரியோர் இசைத்தபொது உலகம் இக்கால முறைமையிலே மீண்டும்எழ வேண்டின் நேசமிகு மார்க்முனிவர் நினைந்தபுது உலகம் நிமிர்ந்துநின்று நிகழ்ச்சியிலே நிறைவுபெற உழைமின். 18 வள்ளுவனார் அந்நாளில் வகுத்தபொது உலகம் மார்க்முனிவர் இந்நாளில் வகுத்தபுது உலகம் தெள்ளியவர் ஈருலகுந் திரண்டுருவம் பெற்றால் தெய்வப்புது உலகமிங்குத் திகழ்தல்திண்ண மாமே. 19 மார்க்ஸினுளம் ஆத்திகமா நாத்திகமா என்று வாதமிடல் வீண்அவர்தம் மனஉலகம் மலர்ந்தால் போர்க்குரிய இரண்டுமிரா பொதுஉலகம் மணக்கும் புதுஉலகம் அதுதெய்வப் புதுஉலகம் பொலிக. 20 4. இயற்கைத் தெய்வம் இயற்கை தாண்டி இலங்கிடுந் தெய்வமே ஏழை யேனுனை எப்படி எண்ணுவேன் முயற்சி செய்யினும் மூளை வெடிக்குதே முன்ன வாஉன் முழுநிலை என்னையோ? 1 இயற்கை யாகி இருக்க இரங்கினை ஏழை எண்ணி எளிதில் மகிழவோ முயற்சி யின்றி முனைப்பறல் கூடுதே முன்ன வாஉன் முழுநிலை எற்றுக்கே. 2 இயற்கை, பள்ளியாய் என்றும் நிலவலை ஏழை பின்னே உணர்ந்து தெளிந்தனன் செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச்செலா செழுமை கண்டவர் தீமையில் வீழ்வரோ. 3 மண்ணில் நின்று பொறையைப் பயிலலாம் மரத்தி லேஒப் புரவைப் பயிலலாம் விண்ணை நோக்கி ஒளியைப் பயிலலாம் வேலை சென்றலைப் பாட்டைப் பயிலலாம். 4 மயிலி லேநிகழ் நாடகங் கற்கலாம் வண்டி லேநிமிர் யாழினைக் கற்கலாம் குயிலி லேஉயர் கீதத்தைக் கற்கலாம் கோவி லூருங் குணத்தினைக் கற்கலாம். 5 அன்னை காட்சியில் அன்பைப் படிக்கலாம் அணங்கின் காதலில் வாழ்க்கை தெளியலாம் கன்னி சூழலில் தெய்வம் வழுத்தலாம் காளை ஈட்டத்தில் வீரம் உணரலாம். 6 மலையி லேறி மவுனம் பழகலாம் வான ஞாயிற் றொளியைப் புசிக்கலாம் கலையில் காணாக் கருத்தைத் தெளியலாம் கணக்கில் பன்மை கரைதல் அறியலாம். 7 வேங்கை போந்துதன் வாலைக் குழைக்குமே வேழம் ஒடி விரைந்து வருடுமே பாங்குப் பாம்பு பணமெடுத் தேறுமே பறக்கும் புட்கள் பரிவுடன் சேருமே. 8 ஓதாக் கல்வியென் றோதிடுங் கல்வியென் றுலகஞ் சொல்வதன் உண்மைத் தெளிவெது ஓதாக் கல்வி இருக்கை இயற்கையே ஓதுங் கல்வி உறைவிடம் ஏட்டிலே. 9 ஓதாக் கல்வி பெருக இயற்கையின் உள்ளம் தெய்வமென் றுண்மை அடையலாம் சாகாக் கல்வியின் தன்மை உணரலாம் சாந்த மெய்ம்மையின் சார்பு விளங்குமே. 10 ஏரைப் பூட்டி உழுவோ ருளத்திலும் ஏற்றம் பாடி இறைப்போ ருளத்திலும் நாறு பற்றி நடுவோ ருளத்திலும் நல்லி யற்கை இறையருள் நண்ணுமே. 11 பருத்தி சேர்க்கப் பரிவோ ரிடத்திலும் பாண ராட்டை விடுவோ ரிடத்திலும் பொருத்தி நூலினை நெய்வோ ரிடத்திலும் பொன்னி யற்கை இறையருள் பொங்குமே. 12 சுரங்கம் மூழ்கிக் குளிப்பவர் நெஞ்சிலே சூழ்ந்து கல்லை உடைப்பவர் நெஞ்சிலே இரும்பைக் காய்ச்சி உருக்குவர் நெஞ்சிலே எழிலி யற்கை இறைமை இயங்குமே. 13 சோலை வாழ வளர்ப்பவர் சிந்தையில் தூய பிள்ளை பெறுபவர் சிந்தையில் நூலுஞ் சிற்பமும் யாப்பவர் சிந்தையில் நுண்ணி யற்கை இறைமை நுழையுமே. 14 விளைவு செய்யும் வினைஞ ருலகமே வீறி வேர்விட் டெழுந்து விரிந்திடின் இளமை ஞாலம் இயற்கை இறைமையின் இனிமை யாகி வளமை கொழிக்குமே. 15 5. ஒளி பேரொளி பேரொளி பேரொளி - இன்பாம் - அது பேசாப் பெருவெளி பேரொளி - என்பாம். ஐம்பூதம் திங்கள் அருக்கன் - மற்றும் ஆர்ந்த பெருங்கோள் அனைத்தும் தனித்த செம்மை ஒளிக்கெலாஞ் சீவன் - அளி சீரொளி தெய்வச் சிறப்பொளி ஒன்றே, (பே) 1 காற்றின் துணையின்றி வாழும் - ஒளி கருணை வடிவான மெய்யொளி யாகும் ஊற்றாய் உலகினை ஓம்பும் - அது ஓங்கிச் சுடர்விடுத் தோங்கிடும் ஒன்றே. (பே) 2 மெய்ந்நூல் ஒளியுரை வேட்டு - யானும் மேவினன் வெவ்வே றிடங்களில் பல்கால் பொய்மை கரவு புனைவு - பிற போலிகள் சாமிகள் பூமியில் கண்டேன். (பே) 3 முயற்சி கவலை முடுக்க - ஒளி முன்னி வதைந்தனன் பன்னெடுங் காலம் இயற்கையின் கூறுகள் நெஞ்சில் - இனி எண்ணி இருக்கும் எழிற்கலை கற்றேன். (பே) 4 பசுமை கொழித்துப் பரந்த - மரம் பார்த்துப் பரிந்து படிந்து திளைப்பேன் விசும்பினை நோக்கி வியந்து - விண் மீன்களில் ஒன்றி மிதந்து கிடப்பேன். (பே) 5 அலைகடல் ஓரத் தமர்ந்து - நீல அமைதியில் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன் மலையை அடைந்து மகிழ்ந்து - அதை மனனஞ்செய் மோனத்தில் மாண்டு விடுவேன். (பே) 6 வாச மலரின் நகையில் - மிக வணங்கி அசையும் கிளையின் அழைப்பில் நேசப் பறவை விருந்தில் - சிறு நீல்வண் டிசையினில் நித்தலும் வீழ்வேன். (பே) 7 நுழைந்தருட் பெண்மையை உன்ன - அங்கு நோன்பு மிகுதாய்மை அன்பினில் ஆர்ந்தேன் குழந்தை மழலை பயில - அதில் கோதிலா ஞானங் குழைதலை மாந்தேன். (பே) 8 இயற்கை வழிபாடு மல்க - அது ஈந்தருட் செல்வத்தை என்னென்று சொல்வேன் புயற்புலன் உள்ளில் ஒடுங்கத் - தொடர் போர்நாம ரூபங்கள் பொன்றி ஒடுங்கும். (பே) 9 நாமரூ பங்கள் ஒலியாய் - முதல் நாதமாய் நன்கு நடக்கும் ஒளியாய்ப் போமிவ் வொளிக்கும் உயிர்ப்பாய் - எங்கும் பொங்கித் ததும்பி வழியும் ஒளியே. (பே) 10 காற்றின் துணையின்றி வாழும் - அந்தக் கருணை வடிவான தெய்வ ஒளியைக் காற்றுச் சடஒளி யாகும் - என்று கருதல் தவறு தவறே கருதல். (பே) 11 காற்றுக் கணக்கென்று சில்லோர் - வெறுங் காற்றைப் பிடித்துக் கழிப்பரே காலம் காற்றைப் பிடிக்குங் கணக்கை - மூலன் கழறிய மந்திரக் காற்றினில் காண்மின். (பே) 12 காற்றை வெறுங்காற்றை ஈர்த்து - மூக்கில் ஏற்றி இறக்கினால் எவ்வொளி தோன்றும்? சோற்றுத் துருத்தியை ஓம்பும்; - தூய சோதி உயிரொளி சூழலும் ஆகா. (பே) 13 காலெனில் பாதபக் காலோ - மூலன் காலென்ற துள்ளே கனன்றிடுங் காலே தேற்ற இயற்கை வழியே - நிற்கத் திகழ்ந்திடும் உட்கால் திகழ்ந்திடல் திண்ணம். (பே) 14 சடக்கால் சடவொளி காட்டும் - அதைச் சத்தென்றுஞ் சித்தென்றுஞ் சாற்றுதல் தீமை திடமான உட்கால் சிறக்க - இங்குத் தேவை இயற்கை வழிபாடு தேவை. (பே) 15 விஞ்ஞானி உட்காலை ஏலான் - அவன் விழுமிய தேர்ச்சியின் வேர்சட மாகும் மெய்ஞ்ஞானி அக்காலை ஏற்பன் - அவன் வீர மரபு வழிவழி வாழி. (பே) 16 பரவொளி யானவர் தேகம் - என்றும் பாரில் அழியாதாம் பார்த்தவர் யாவர்? சிரஞ்சீவி என்றவர் தேகம் - இன்று திரியும் இடமெங்கே செய்தியைச் சொல்மின். (பே) 17 அஞ்ஞானி மெய்ஞ்ஞானி எல்லாம் - பரு யாக்கை இழப்பவர் ஐயமே இல்லை மெய்ஞ்ஞானி உள்நிலை மேன்மை - இங்கு மேவுமஞ் ஞானிக்கு எங்ஙன் விளங்கும்? (பே)18 செத்த பிணத்தினை வைக்கும் - இடம் தீயிலா மண்ணிலா என்று திகைக்கும் பித்தம் பிடிப்பது பேய்மை - அந்தப் பிணத்தைஎப் பூதம் புசிப்பதால் என்ன? (பே) 19 சாகா நிலையென்று சாற்றல் - ஒரு சம்பிர தாயம் சகத்தினி லுண்டு சாகா நிலைபிற வாமை - என்றும் சாந்த ஒளியாகித் தற்பர மாதல். (பே) 20 உலகொளி வண்ணமே யாக - அது உரிமை பெறல்வேண்டும் ஊக்கமும் வேண்டும் கலகம், பசிப்பிணி தேக்கும் - பெருங் கருணைப் பொதுமை, கடும்பசி நீக்கும். (பே) 21 அடிமை இருளில் அழுந்திச் - சாகா ஆத்தும ஞானம் அறைகுதல் நன்றோ மிடிபசி தீர்த்தல் முதன்மை - இந்த மேன்மைப் பணிசெய மேவுதிர் மக்காள். (பே) 22 6. வெங்கதிர் நீலக் கடல்விளிம்பில் வெங்கதிரே - நீ நித்தம் விரைந்தெழலென் வெங்கதிரே கோல எழுச்சியிலே வெங்கதிரே - சிறு கூத்தசைவு நேர்வதென்னை வெங்கதிரே. 1 பச்சைப் பசுங்கடலில் வெங்கதிரே - உன் பவளஒளி ஆல்கிறது வெங்கதிரே சித்தநுழை சித்திரமோ வெங்கதிரே - அதைத் தீட்டிவரை வோருளரோ வெங்கதிரே. 2 வானங் கடலிடையே வெங்கதிரே - நீ வழங்கிவருஞ் செங்காட்சி வெங்கதிரே கானக் கலைக்கழகம் வெங்கதிரே - அதைக் காட்டி மறைக்கின்றாய் வெங்கதிரே. 3 வானம் கடலணங்கை வெங்கதிரே - அன்பால் வாரிமுத்தம் ஈவதுண்டோ வெங்கதிரே பானத்தில் மாய்வதுண்டோ வெங்கதிரே - அந்தப் பார்வைவெறுங் கானல்நீரோ வெங்கதிரே. 4 தத்துகடல் தாயைவிட்டு வெங்கதிரே - நீ தாண்டி விண்ணை வேட்பதென்ன வெங்கதிரே உச்சவிண்ணும் நீலமென்றோ வெங்கதிரே - அங்கே உற்றதுநீ ஏமாற்றம் வெங்கதிரே. 5 விண்பரவை நீந்திநீந்தி வெங்கதிரே - மற்ற மீனையெல்லாம் ஒட்டலாமோ வெங்கதிரே தண்பரவை மீண்டும்படல் வெங்கதிரே - நீ தாயினிடங் கொண்ட அன்போ வெங்கதிரே. 6 தோன்றி மறைவதுண்டோ வெங்கதிரே - அந்தச் சூழ்ச்சியினைச் சொல்லுவையோ வெங்கதிரே ஆன்றோர் புனைந்துரையில் வெங்கதிரே - உன் ஆவி குளிர்வதுண்டோ வெங்கதிரே. 7 விஞ்ஞானி சொல்லினிலே வெங்கதிரே - உன் வேட்கை விழவிலையோ வெங்கதிரே மெய்ஞ்ஞானச் சித்தரெலாம் வெங்கதிரே - உன்னை வேறுணர்தல் உள்குவையோ வெங்கதிரே. 8 வேளைவேளை நீநிறத்தில் வெங்கதிரே - ஏன் விதவிதமாய் மாறுகின்றாய் வெங்கதிரே மாலையிலே காலைநிறம் வெங்கதிரே - நீ மறுபடியுங் காட்டுவதென் வெங்கதிரே. 9 காலைமாலை உன்றனருள் வெங்கதிரே - அது காலக்கலை ஆக்குந்துணை வெங்கதிரே வேளைவேளை உன்துணையால் வெங்கதிரே - இங்கு வித்தை வளர்கிறது வெங்கதிரே. 10 எதற்கும் ஒளிவழங்கும் வெங்கதிரே - உன்னை எழிலி மறைப்பதென்ன வெங்கதிரே அதற்குமுன்றன் சார்புண்டு வெங்கதிரே - அதை அறிவதில்லை எல்லோரும் வெங்கதிரே. 11 மலைமலையாய்க் கான்றுயிர்ப்பை வெங்கதிரே - அதை மாநிலத்துக் கூட்டுகின்றாய் வெங்கதிரே நலங்கருத லொன்றுமிலை வெங்கதிரே - அந்த ஞானம் பரவவேண்டும் வெங்கதிரே. 12 சிறுமுளையுங் குஞ்சுகளும் வெங்கதிரே - உன் செவ்வுயிர்ப்புக் கேங்குவதென் வெங்கதிரே மறிஅலையில் மாமலையில் வெங்கதிரே - நின் றாருயிர்ப்புத் தூயதன்றோ வெங்கதிரே. 13 ஓதக் கடலருகே வெங்கதிரே - மிக்க உரம்ஒளியில் மேய்வதென்ன வெங்கதிரே வேகஅலை ஆடிஆடி வெங்கதிரே - சிறு வேளைஒளி மூழ்கிலுரம் வெங்கதிரே. 14 நீயுமிழும் ஒள்ளொளியில் வெங்கதிரே - மக்கள் நேர்முறையில் மூழ்குவரேல் வெங்கதிரே நோயுமில்லை பேயுமில்லை வெங்கதிரே - இதை நுண்ணறிஞர் விள்ளவேண்டும் வெங்கதிரே. 5 புள்விலங்கு போர்வையின்றி வெங்கதிரே - உன் பொன்னொளியில் ஆடலையோ வெங்கதிரே தெள்ளறிவு மக்களென்போர் வெங்கதிரே - இங்குத் தேடுவதென் சட்டைகளை வெங்கதிரே. 16 காலினிலே தோலணிந்து வெங்கதிரே - நீ காலொளியைத் தாக்கலாமோ வெங்கதிரே தோலுயர்வோ உன்னொளியின் வெங்கதிரே -கொடுந் தொல்லையுண்டோ ஏதேனும் வெங்கதிரே. 17 மண்ணிலுள்ள மாசழுக்கு வெங்கதிரே - காலில் மாட்டிநோய் செய்யுமென்பர் - வெங்கதிரே தண்மைநிலப் பேச்சன்றோ வெங்கதிரே - அதைத் தாங்கித் திரிவதென்ன வெங்கதிரே. 18 வெம்மையுயர் நாட்டவர்கள் வெங்கதிரே - வெறும் வீண்நடிப்புப் பூணலாமோ வெங்கதிரே செம்மையொளி வாழ்வளிக்கும் வெங்கதிரே - அதைச் சீறுவது நீதிகொல்லோ வெங்கதிரே. 19 வெள்ளை தலைக்கறைக்கும் வெங்கதிரே- நன்று வேயுழவன் ஞானியன்றோ - வெங்கதிரே பள்ளி(ப்) படிப் பேட்டவர்கள் வெங்கதிரே - உன் பண்பொளியைப் பகைக்கின்றார் வெங்கதிரே. 20 பச்சை மரப்பரப்பில் வெங்கதிரே - நீ பாய்ச்சும் ஒளியமிழ்தம் வெங்கதிரே நச்சி அதைப்பருகின் வெங்கதிரே - நீண்ட நாளிருக்கும் வாழ்வளிக்கும் வெங்கதிரே. 21 ஆலரசு வேம்படியில் வெங்கதிரே - முன்னே ஆர்ந்தொளியில் மூழ்கிவந்தேன் வெங்கதிரே ஆல அரசியலில் வெங்கதிரே - யான் அண்டி அமுதிழந்தேன் வெங்கதிரே. 22 ஆவிக் கொருமருந்து வெங்கதிரே - உன் ஆனந்தச் செம்பிழம்பு வெங்கதிரே பாவனையில் இன்பம்வைத்தாய் வெங்கதிரே - அதைப் பற்றியேனும் மக்களுய்க வெங்கதிரே 23 காலைவெயில் பித்தமென்பர் வெங்கதிரே - அவர் கருத்தினில் பித்தமென்பேன் வெங்கதிரே மாலைகாலைப் பேச்செல்லாம் வெங்கதிரே - கொதி மலச்சிக்கல் என்றுணர்ந்தேன் வெங்கதிரே. 24 பொதுமையிலே உன்னமிழ்தம் வெங்கதிரே - நீ பொழிகின்றாய் என்றென்றும் வெங்கதிரே பொதுமைஅறம் பூமியினில் வெங்கதிரே - நன்கு பொருந்தாமை காரணமென் வெங்கதிரே. 25 உலகுகளை ஈர்த்துநிற்க வெங்கதிரே - உனக் குற்றசக்தி ஓதுவையோ வெங்கதிரே கலகமிலை கோள்செலவில் வெங்கதிரே - நீ காத்துவருங் கருணைஎன்னே வெங்கதிரே. 26 உனக்கொளி ஈவதெது வெங்கதிரே - எனக் குண்மை உரைத்திடுவாய் வெங்கதிரே சினக்குறி காட்டுவையோ வெங்கதிரே - என் சித்தந் தெளியவேண்டும் வெங்கதிரே. 27 என்னிடத்தில் உன்றனொளி வெங்கதிரே - நாளும் இயங்குரிமை பெற்றதுகாண் வெங்கதிரே உன்னருகே யானணுக வெங்கதிரே - பொது உரிமைஇல் லாமைஎன்ன வெங்கதிரே. 28 உரிமையுடன் நீஇருக்க வெங்கதிரே - உன் உறுப்பாம் உலகிடைஏன் வெங்கதிரே உரிமைஒளி வீசவில்லை வெங்கதிரே - தீய ஒதுக்கடிமை ஓட்டுவையோ வெங்கதிரே. 29 உரிமை உரிமைஎன்று வெங்கதிரே - உன் ஒளிமுழக்கஞ் செய்கிறது வெங்கதிரே உரிமைஒளி யாலுலகில் வெங்கதிரே - முழு உரிமையின்மை வெட்கமன்றோ வெங்கதிரே. 30 சாதிமத நாட்டுநிறம் வெங்கதிரே - கொடுஞ் சண்டைமழை தாழடைப்போ வெங்கதிரே நீதிப் பொதுமையொளி வெங்கதிரே - அது நீறாக்கும் ஊறுகளை வெங்கதிரே. 31 இமயத் தவர்முதலில் வெங்கதிரே - உன் எழிலொளி போற்றினவர் வெங்கதிரே தவவொளி நீத்தவர்கள் வெங்கதிரே - இன்று தவிப்பதென்ன காரணமோ வெங்கதிரே. 32 அண்டமன்றி உன்னிருக்கை வெங்கதிரே - பிண்ட அகத்திலும் என்பதென்ன வெங்கதிரே அண்டபிண்ட மாகிநிற்கும் வெங்கதிரே - உன் அருட்பெருக்கை என்னவென்பேன் வெங்கதிரே. 33 என்னைநண்ணி உன்றன்கலை வெங்கதிரே - உள் இயங்குவதோ சற்றுரைப்பாய் வெங்கதிரே சந்திர கலையின்றி வெங்கதிரே - நீ தனியே இயங்குவையோ வெங்கதிரே. 34 இங்கிரண்டில் ஏற்றமெது வெங்கதிரே - அதை ஏவர் எடுத்துரைப்பார் வெங்கதிரே திங்கள்கலை உன்னிடத்தில் வெங்கதிரே - ஒன்றித் தேயுமென்று செப்புவதென் வெங்கதிரே. 35 ஒன்றாய் இயங்குநிலை வெங்கதிரே - காமன் ஓய்ந்தெரியும் பீடமது வெங்கதிரே என்றேனும் உன்னியக்கம் வெங்கதிரே - உள் இயங்கா தொழிந்திடுமோ வெங்கதிரே. 36 உன்னியக்கங் குன்றுமிடம் வெங்கதிரே - காலன் உதையுண்டு வீழுநிலை வெங்கதிரே அந்நிலையில் உன்னுதவி வெங்கதிரே - செம்மை ஆவிக்குத் தேவையிலை வெங்கதிரே. 37 அணுவுக் கணுவினிலும் வெங்கதிரே - உன் அருளொளி ஊடுருவி வெங்கதிரே நணுகி நுணுகிஎன்றும் வெங்கதிரே - செய் நன்றி மறப்பதுண்டோ வெங்கதிரே. 38 உன்றன் உதவியின்றி வெங்கதிரே - உயிர் ஒளிர ஒளியுண்டு வெங்கதிரே நன்றி மறப்பதில்லை வெங்கதிரே - நீ நாளு நாளு நீடுவாழி வெங்கதிரே. 39 கள்ள இருளகற்றி வெங்கதிரே - நீ கருணையினால் காக்கின்றாய் வெங்கதிரே உள்ளொளியுங் காட்டுகின்றாய் வெங்கதிரே - நீ ஓங்கிஓங்கி வாழ்க என்றும் வெங்கதிரே. 40 7. காளம் இயற்கை உலகமென்று ஊதேடா காளம் என்றும் இருப்பதென்று ஊதேடா காளம் முயற்சிக் கடியென்று ஊதேடா காளம் மூடம் அழிப்பதென்று ஊதேடா காளம். 1 உலகம் பொருளென்று ஊதேடா காளம் உயிர்கள் உறவென்று ஊதேடா காளம் கலைவாழ்க்கை இல்லமென்று ஊதேடா காளம் கடவுள் வழியென்று ஊதேடா காளம் 2 பெண்ஆண் உலகமென்று ஊதேடா காளம் பேரின்பக் காதலென்று ஊதேடா காளம் விண்ணிலென்ன பாழென்று ஊதேடா காளம் வியனுலகம் வீடென்று ஊதேடா காளம் 3 சேய்கள் சிறப்பென்று ஊதேடா காளம் செகத்தை வளர்ப்பதென்று ஊதேடா காளம் நோய்கள் ஒழிகவென்று ஊதேடா காளம் நோன்பு மலிகவென்று ஊதேடா காளம். 4 பொருணெறி நல்லதென்று ஊதேடா காளம் பொதுமை பொருத்தமென்று ஊதேடா காளம் அருணெறி ஆக்கமென்று ஊதேடா காளம் அகிலமன் பாகுமென்று ஊதேடா காளம். 5 பாடுகள் பண்பென்று ஊதேடா காளம் படுத்துண்ணல் தீமையென்று ஊதேடா காளம் கேடு விலகஎன்று ஊதேடா காளம் கேள்வி பெருகஎன்று ஊதேடா காளம். 6 கொடுங்கோல் வீழ்கஎன்று ஊதேடா காளம் கூற்றம் உலகிலென்று ஊதேடா காளம் குடிமக்கள் ஆட்சிஎன்று ஊதேடா காளம் குணந்தழைக்கும் ஆட்சிஎன்று ஊதேடா காளம். 7 ஆதி ஒருவனென்று ஊதேடா காளம் அவனிருக்கை எங்குமென்று ஊதேடா காளம் யாதுமே ஊரெ ன்று ஊதேடா காளம் யாவருங் கேளி ரென்று ஊதேடா காளம். 8 8. அறப்புரட்சி புதுஉலகம் புதுஉலகம் புதுஉலகம் காண்மின் புரட்சியிலே புரட்சியிலே பூப்பதந்த உலகம் புதுஉலகப் பூவினிலே பொதுநறவம் பிலிற்றும் பொதுநறவம் மாந்தஅறப் புரட்சிசெய எழுமின். 1 புரட்சிஎரி மலையென்று புகல்வதிந்த உலகம் புரட்சிஎரி புறப்புரட்சி பேய்த்தேரே யாகும் புரட்சிஅகம் உறல்வேண்டும் புதுஉலகம் நிலைக்கும் புரட்சிஅகப் புரட்சியென்று புரட்சிசெய எழுமின். 2 கொலைப்புரட்சி அலைப்புரட்சி கொதிப்புரட்சி வேண்டா குத்துவெட்டுக் கொள்ளைரத்தக் கொடும்புரட்சி வேண்டா புலப்புரட்சி அகப்புரட்சி புதுப்புரட்சி வேண்டும் பொதுமைஅறப் புரட்சிஎங்கும் புகுந்திடுதல் வேண்டும். 3 முப்புரத்தில் எப்புரட்சி மூண்டெழுந்த தன்று முரண்சிலையும் மறக்கணையும் மூர்க்கமெழுப் பினவோ முக்கணனார் புன்முறுவல் மூட்டியது புரட்சி மும்மலத்தை அறுக்கும்அற முதற்புரட்சி அதுவே. 4 இரணியன்முன் பிரகலாதன் எப்புரட்சி செய்தான்? எஃகமெடுத் தெறியமனம் இசையவில்லை இல்லை அரணெனவே பொறைஎதிர்ப்பால் அமைந்ததந்தப் புரட்சி அப்புரட்சி உலகினருக் கறிவுறுத்தல் என்ன? 5 உலகமெலாம் கொலைக்களனாய் உருவெடுத்த வேளை உதித்தஜின உத்தமனார் உளங்கொண்ட தென்னை கலைபுகழும் அஹிம்சையெனும் அறப்புரட்சி யன்றோ கருணைமுதல் அவர்வாழி கால்வழிகள் வாழி. 6 சாதிமத வேற்றுமைகள், தயைகுலைக்கும் வேள்வி, தருமநெறி வீழ்த்தியக்கால் சாக்கியனார் புத்தர் நீதிஅறப் புரட்சிவழி நிறுத்தினரே உலகை நிறைவளர்ந்த வரலாற்றை நினைவினிலே கொண்மின் 7 ஏசுபிரான் வாழ்க்கையிலே எழுபுரட்சி எதுவோ ஏந்தினரோ வாள்கருவி எண்ணினரோ கொலையை நேசமுடன் சிலுவையிலே நின்றுயிரை நீத்தார் நேர்ந்தஅன்பு புரட்சிஅது நெஞ்சில்நிற்றல் வேண்டும். 8 கலைகொலையாய்க் குவியுமிந்தக் காலஎரி நிற்குங் கதியினிலுங் காந்திமகான் கருதினரோ இரத்தம் நிலைகருணைப் புரட்சியன்றோ நின்றதவர் நெஞ்சில் நீதிஅறப் புரட்சிஅது நிறைபுரட்சி அதுவே. 9 புரட்சியிலே புதுஉலகப் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே போரொழிக்கும் புரட்சியிலே புகுமின் புரட்சியிலே புரட்சிஅறப் புரட்சியிலே புகுமின் புனிதப்புது உலகமைக்கும் புரட்சியிலே புகுமின். 10 9. திருப்பணி எங்கு முள்ள இறைவனை எங்கும் எண்ணி ஏத்தி இறைஞ்சிட லாமே தங்கு கோயில் தனித்தனி எல்லாச் சார்பு மக்கள் சமைத்தன ரென்னே. 1 அலையு நெஞ்சை அடக்கி ஒடுக்க அமைதி ஓவிய நுட்பம் அறியப் பலருஞ் சேரும் பழக்கம் பெருகப் பண்புக் கோயிலின் பான்மையென் பாரே. 2 செயற்கைக் கோயிலின் சீர்மை குலையும் சீவக் கோயிலின் சீர்மைகுன் றாதே இயற்கைக் கோயில் பணிசெயச் சேரும் இறையின் மூல இருப்பு விளங்கும். 3 புற்கள் கோயில் புழுக்களுங் கோயில் புட்கள் கோயில் விலங்குகள் கோயில் மக்கள் கோயில் மதிகலை கோயில் மனத்துக் கோயில் மருவுதல் வேண்டும். 4 மனத்துக் கோயில் மருவ நினைவு மாற்றங் கோயில் வினைகளுங் கோயில் அனைத்துங் கோயில் அறிவுமே கோயில் அன்புத் தொண்டே அகிலம் நிகழும். 5 நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் செகத்தில் வீழாச் செழுங்கனி கொய்தல் சீவக் கோயில் சிதைப்பதே யாகும். 6 ஆடும் மஞ்ஞை அலற அடித்தல் அலகுக் கோழி கதறத் துணித்தல் பாடு மாங்குயில் பார்த்துச் சுடுதல் பரமன் கோயில் இடிப்பதே யாகும். 7 பிடியின் யானையின் பேச்சிடைக் குண்டு பிணையின் மானின் உலவிடைக் குண்டு கடுவன் மந்தியின் ஆட்டிடைக் குண்டு கடவுள் கோயில் கதியென்ன ஐயோ. 8 ஓட்டுப் பன்றியைக் கட்டி ஒடுக்கி உறுத்துக் குத்த உருமிடுங் கோரம் கேட்கக் காதுகள் காண விழிகள் கேடில் ஆண்டவன் ஏனோ படைத்தான்? 9 ஆடு மாடுகள் பாடுகள் என்னே ஐயோ ஐயோ அலறுதே நெஞ்சம் கோடி கோடி கொலைக்களன் எங்கும் கூற்றின் ஆட்சி குலவுதல் நன்றோ. 10 வேள்வி என்றோ உயிர்க்கொலை செய்தல் வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல் கேள்வி இல்லை கிளர்ச்சியும் இல்லை கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ. 11 வாயில் சீவ வதைக்களன் மல்க வளரும் மக்கள் வதைத்களன் நாளும் நேய ஆட்சியின் நீதி நிறைந்தால் நீசம் அண்ட நினைவு மிராதே. 12 அறிஞர் நெஞ்சைக் கலக்கும் அரசு அமைதி யோரை அலைக்கும் அரசு செறியும் அன்பரைத் தீட்டும் அரசு செம்மைச் சீர்நெறி எங்ஙனம் ஓம்பும். 13 குண்டு கூடம் பெருக்கும் அரசு கொல்லுங் கல்வி வளர்க்கும் அரசு தண்டு சேர்த்துச் சமர்செய் அரசு தயவு மார்க்கத்தை எங்ஙனே ஓம்பும். 14 ஈசன் கோயில் இயற்கையாங் கோயில் இன்பக் கோயில் எதுவுமே கோயில் நாச மாகா வகையில் பணிசெய் ஞானம் ஞானமெய்ஞ் ஞானம தாமே. 15 என்னுள் ஈசன் இருப்பது போல ஏனை உள்ளி லவனிருக் கின்றான் என்னை வேறு பிரித்தலஞ் ஞானம் எல்லாங் கோயிலென் றெண்ணல் அறமே. 16 புறத்துக் கோயிலை மட்டும் வணங்கல் போதா தென்றகக் கோயில் வணங்க அறத்துக் கோயில் அனைத்தும் விளங்கும் அகிலஞ் சோதர அன்பில் திளைக்கும். 17 கொல்லும் ஆட்சி குலைப்பது தொண்டு கொல்லா நோன்பை வளர்ப்பது தொண்டு கல்வி எங்கும் பரப்புதல் தொண்டு கல்லாக் கேட்டைக் களைவது தொண்டே. 18 ஏழ்மை போக்க எழுவது தொண்டு ஏழை கூட்டஞ் சுருக்குதல் தொண்டு வாழ்வை யார்க்கும் வழங்குதல் தொண்டு வளத்தை என்றும் பெருக்குதல் தொண்டே. 19 வகுப்பு வாதங் கடந்தது தொண்டு மார்க்க வாதங் கடந்தது தொண்டு தொகுப்புச் சேர்க்கையில் தோன்றுதல் தொண்டு தோய்ந்த அன்பில் துலங்குதல் தொண்டே. 20 தானே நன்மை பெறப்பணி செய்தல் தரையி லோங்க நரகமே யாகும் தானும் மற்றுயி ரென்னும் பணிகள் தரையி லோங்க விடுதலை யாமே. 21 கோயில் யாக்கை இயற்கை அமைப்பு, கோயில் உள்ளம் கருணை ஒழுக்கம் கோயில் பூசை பணியில் கிடத்தல் கோயில் வாழி குவலயம் வாழி. 22 10. சன்மார்க்க ஆட்சி சன்மார்க்க சன்மார்க்க ஆட்சி - உயர் சாந்த மளிக்குஞ் சமதர்மக் காட்சி (சன்) சத்தெனுஞ் செம்பொரு ளொன்றே - அது சகதல மெங்குங் கலந்துங் கடந்தும் வித்தாகி நிற்கும் விழுப்பம் - மிக்க வேதங்க ளெல்லாம் விளங்க உரைக்கும். (சன்) 1 கடந்த நிலைமனம் எட்டா - அதைக் கட்டி அழுவதால் என்ன பயனோ கலந்த நிலையைக் கருதின் - வையம் காலம் இடங்கள் கருத்தில் அமையும். (சன்) 2 சத்தெனுஞ் செம்பொரு ளொன்று - பல தத்துவ நாமங்கள் தாங்கியே நிற்கும் பித்த வெறிச்சண்டை ஏனோ - சிறு பேதம் விடுத்தால் பொதுமை பிறங்கும். (சன்) 3 கலந்த நிலைஎது? கண்முன் - நிற்கும் காட்சி இயற்கை கருதல் எளிதே புலன்களில் நன்கு படியும் - அதில் புகப்புக ஆனந்தம் பொங்கி வழியும். (சன்) 4 இயற்கை வழியெலாங் காட்டும் - அதை இல்வாழ்க்கை இல்வாழ்க்கை என்றுமே கூட்டும் செயற்கை அரசுகள் வாழ்வைச் - சிதைக்கச் சேர்ந்தன தீமைகள் சீர்செயல் வேண்டும். (சன்) 5 பொல்லா அரசுகள் தந்த - கொடும் போர்மதம் வேண்டா புரோகிதம் வேண்டா எல்லாரும் வாழ இனிக்கும் - பொது இன்ப அறத்தில் இயைந்திடத் தூண்டும். (சன்)6 முதல்தொழில் வேற்றுமை போக்கும் - இந்த முழுமை யுலகைத் தொழில்வண மாக்கும் விதவித உற்பத்தி செய்யும் - வெறும் விதியை விலக்கும் மதியை வளர்க்கும். (சன்) 7 கொள்ளை மனங்கொ டுலகில் - மூர்க்கக் கொலைப்போர் எழுப்புங் கொடுங்கோலை வீழ்த்தும் கள்ளச் சபைகளைச் சாய்க்கும் - கொலைக் கருவி வடித்திடுங் கூடத்தை மாற்றும். (சன்) 8 பொருளில் புலத்தில் அறிவில் - அறம் பொதுமை புகுத்தும் புதுமை படைக்கும் அருட்கலை காவியம் ஆக்கும் - அன்பால் அறப்பணி ஆற்ற அறிவினை உந்தும். (சன்) 9 சாதி அழிக்குஞ்சன் மார்க்கம் - வாதச் சமய வெறியைத் தணிக்குஞ்சன் மார்க்கம் மாதரைக் காக்குஞ்சன் மார்க்கம் - புது மாநில மெங்குஞ்சன் மார்க்கம் மலர்க. (சன்) 10 11. சன்மார்க்கச் சாத்து தாயுந் தந்தையுங் காணுந் தெய்வம் குருவின் உளத்தில் மருவுந் தெய்வம் தெய்வம் உண்டு தேர்தலுக் கெட்டா ஒன்றே தெய்வம் உறுநிலை இரண்டே எல்லாங் கடந்த நிலைஅறி வாகும் எல்லாங் கலந்த நிலைஅன் பாகும் அறிவே தெய்வம் அன்பும் அதுவே அறிவாந் தெய்வம் அன்பா யிரங்கும் அன்பிறை உயிரே அதனுடல் இயற்கை அன்பு நீரால் அறிவை வளர்க்க 10 ஆசையைச் சுருக்கி அன்பைப் பெருக்க காதல் அன்பின் கடந்த படியாம் காதல் வாழ்க்கை, கடவுள் காட்சி கடவுள் வாழ்க காதல் வாழ்க (கல்வி) காதல் கல்வி கடவுள் கல்வி இயற்கைக் கல்வி ஈனுங் காதலை இல்லறக் கல்வி இயற்கைக் கல்வி செயற்கைக் கல்வி சிறிதே தேவை பரீட்சைக் கென்று படித்தல் வீணே பரீட்சைக் கவலை பாலர்க் கேனோ? 20 கவலைப் பள்ளி கழகமா காதே ஏட்டுக் கல்வி எழுத்துக் கல்வி எழுத்து வாழ்வில் பழுத்தல் வேண்டும் கல்வி செயற்படுங் காதல் மணத்தில் ஓதாக் கல்வி உணர்த்துங் காதல் கல்விக் கனிவு காதல் வாழ்வு கல்வி வாழ்க காதல் வாழ்க. (உலகம்) காதற் குலகுடல் கருவி கரணம் உலகம் தீதென் றுள்ளல் இழுக்கே உள்ளத் தீமை உலகத் தீமை 30 உள்ள விரிவே உலகத் தோற்றம் உள்ளம் திருந்தின் உலகம் திருந்தும் அன்பிறை எண்ணம் அகத்துள் அமைதி இல்லறம் உள்ளலை எழுச்சி மறிப்பு, சீலம் சிந்தையின் ஆலம் போக்கி அறக்கோல் அகத்தைத் திருத்தும் ஆட்சி சித்த விகாரம் சிக்கல் வாழ்வு திருந்திய சித்தம் பொருந்திய வாழ்வு விகார மற்ற சித்தம் ஒடுங்கும் ஒடுங்கிய சித்தம் தீமை கடக்கும் 40 உள்ளங் கடந்த ஒருநிலை யுண்டு கடந்த உள்ளம் காட்டும் உள்ளொளி உலக வாழ்க்கை உள்ளொளி யாக்கை காதற் சேர்க்கை உலக வாழ்க்கை (உடல்) அன்புக் காதற் கென்புடல் உறையுள் உடலை வளர்த்தல் உயிரை வளர்த்தல் உடலிறை கோயில் ஓம்பல் திருப்பணி உடல்நலம் மற்றவர்க் குழைக்க ஊக்கும் காலை எழுந்து கடன்களை முடிக்க மலத்துச் சிக்கல் மாதா நோய்க்கு, 50 செயற்கை மருத்துவம் சிக்கல் நீக்கா இயற்கை மருத்துவம் இனிதே இனிதே புனல்காற் றொளியும் பொருந்திய மருத்துவர் இல்லற வாழ்க்கை செல்வ மருத்துவர் இசையும் பாடலும் இன்ப மருத்துவர் உழவும் தொழிலும் பழைய மருத்துவர் உரிமை உணர்ச்சி ஒளிகால் மருத்துவர் தியானம் மருத்துவத் தலைமைப் பீடம் தீம்புன லாடின் போம்பிணி யெல்லாம் காற்றில் உலவி ஊற்றில் படிக 60 மின்னல் அருவி மேவி ஆடுக ஞாயிற் றொளியில் நாடொறும் மூழ்க மலையில் ஏறுக வனத்தில் சேருக பைங்கூழ் பார்க்க பசுங்கடல் நோக்க பசுமைக் காட்சி பறிக்கும் பித்தை அகன்ற பசுமை மூளைக் கமைதி வாரி குளித்தல் ஈரல் காத்தல் இயற்கையோ டியைதல் இறையோ டினித்தல் எழிலார் உடலம் இயற்கையின் கூறு மீறின் இயற்கையை வீறும் பிணியே 70 பிணியுடல் வாழ்வு பேயினுந் தாழ்வே இயற்கை உடலை இயற்கையே ஓம்பும் இயற்கை வழிநின் றெழிலுடல் காக்க (உணவு) உடற்குத் தேவை இனிய உண்டி உடலின் உயிர்ப்பை ஊக்குவ துண்டி உண்ணும் முன்னே உன்னுக இறையை என்றும் இறையை முன்னல் தவமே எல்லாம் இறையென் றெண்ணல் மேன்மை அன்பாம் இறையை அகங்கொளல் நன்மை உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணம் 80 அன்புள் சார்தல் அன்பே ஆதல் அன்புடன் உண்ணும் அன்னமும் அன்பே பொருந்திய உணவைப் புசித்தல் பொலிவு மென்று தின்னல் நன்றே உடற்கு, பானம் உதடுநா படிய அருந்துக பல்லும் நாவும் மெய்காப் பாளர் பல்லின் பளிங்கைப் பாழாக் காதே பல்லின் பளிங்கு பண்பாம் உடற்கு, பல்லின் கறையால் பலநோய் பரவும் ஆலும் வேலும் பல்லுக் குறுதி 90 நாவில் அழுக்கு நண்ண விடாதே நாவைக் காக்கும் ஞானம் பெரிது கால உணவு காக்கும் உடலை அளவறிந் துண்ணல் யாக்கைக் கழகு மீதூண் உடலை வேதனை செய்யும் நொறுவை அடிக்கடி அடைத்தல் நோயே பலப்பல காரம் பலப்பல நோய்கள் குத்திய அரிசியில் சத்தியல் கொழிக்கும் அறவே தீட்டிய அரிசி இழிவே பானைச் சோறு பருகல் சால்வு 100 சட்டிச் சமையல் சத்துவ குணந்தரும் பச்சைக் காய்கறி நச்சல் பண்பு கீரையும் மோரும் ஈரல் காவல் இளநீர் இன்ப இளமை வைப்பு, பாலும் பழமுஞ் சீல உணவு மருந்து நெல்லி கடுக்காய் தான்றி சுக்கும் மிளகும் பக்க மருந்து திப்பிலி யோட்டும் தீய இருமலை நெல்லி அளிக்கும் நீண்ட வயதை, கடுக்கா யொன்று பத்துத் தாய்மார் 110 தூதுளை மூளைத் துகளை அகற்றும் வல்லா ரையால் வளரும் நினைவு வெங்கா யத்தால் விலகும் விடநோய் வெள்ளைப் பூண்டால் வீறும் தாது மிக்க உப்பால் விரியும் ஈரல் அதிகா ரத்தால் அலறும் ஈரல் மதுபா னத்தால் மலரும் ஈரல் ஈரல் நலத்தை என்றும் பேணுக எலுமிச் சையினில் நலமிக உண்டு கடும்புளி உணவால் நடுங்கும் நரம்பு 120 மயக்கப் பொருளில் மனஞ்செலுத் தாதே மரத்துப் பாலை மதுவாக் காதே மற்றப் பொருளையும் மயக்காக் காதே சிரிக்கக் சிரிக்க உண்டது செரிக்கும் உண்டதும் மூளைக் கோய்வு கொடுக்க வண்டி ஏற விரைந்தோ டாதே ஏட்டுக் கணக்கில் மாட்டி விழாதே மூளை கொதிக்க வேலைசெய் யாதே சீறி விழுந்தால் ஏறுங் கொதிப்பு, கெட்ட எண்ணம் கெடுக்கும் உடலை 130 உள்ளே கனலல் உடலை அரித்தல் பொறாமை உடலைப் பொசுக்கும் நெருப்பு, நல்ல குணத்தில் நாளும் படிக, குணத்தை வளர்க்க உணவுந் துணைசெய்யும் உணவொடு குணமும் ஒளியழ கமைக்கும் அழகு தெய்வம், அழகைக் காக்க புனித உணவால் பொருந்தும் அழகுடல் (இசை) இசையும் உடலை இனிது காக்கும் இயற்கை இசையால் இழியுந் தீமைகள் பாடலும் ஆடலும் வாழ்வுச் செல்வம் 140 குயிற்கும் மயிற்கும் கூலி இல்லை வண்டுக் கமைந்த பரிசில் இல்லை அருவி முழவுக் களிப்பே இல்லை பெண்கள் இன்மொழி பண்ணிசை அமுதம் யாழால் மூர்க்க யானையும் வயமாம் குழலொலி மழலைக் குழவி யாக்கும் பல்லியக் கூட்டம் நல்லிசைக் கழகம் நல்லிசை தளர்ந்த நரம்பை எழுப்பும் பண்ணிசை வெறுப்புப் பாவக் கொலையுளம் கூலிப் பண்ணிசை கொலைக்கஞ் சாதே 150 வாழ்க இசையும் பாடலும் ஆடலும் (காதல்) ஆடலும் பாடலும் காதற் காக்கம் காதல் வாழ்க்கை உடலின் காவல் காதல் வளரும் கலந்தஇல் வாழ்வில் இருமை ஒன்றல் பெருமைக் காதல் ஒருத்தியும் ஒருவனும் ஒருமைக் காதல் ஈருடல் ஓருயிர் இன்பக் காதல் சேர்ந்து வாழ்தல் ஜீவ இயல்பு சேர்க்கையில் அன்பு செறியும் விரியும் அன்பொழுக் கத்தால் அகிலஞ் சீர்படும் 160 ஒழுக்கம் விழுப்பம் உயிரினுஞ் சிறந்தது சேர்ந்த வாழ்க்கையில் சிறக்கும் ஒழுக்கம் சேர்தல் வளர்ச்சி கூர்தல் துணையே தனித்து வாழ்தல் இயற்கையைத் தகைதல் தனிமை வாழ்வில் சால்பமை யாதே துறவு மனத்தின் துகளை அகற்றல் துறவு மனத்தில் தொண்டே பொதுளும் உள்ளத் துறவில் உலகே அன்பாம் வேடத் துறவு விடம்மன் பதைக்கு மயிரைச் சிரைத்தால் அயரும் நரம்பு 170 சடையை வளர்த்துச் சாமியா காதே சடையுந் தாடியும் உடற்கென வளர்க்க இளமைப் போகம் வளமை நல்கும் அளவுப் போகம் யாக்கைக் கழகாம் அளவில் போகம் அழகை அழிக்கும் பெண்ணை வெறுத்தல் பேதைமைப் பேதைமை இயற்கையில் ஆண்பெண் இருத்தல் உணர்க பெண்கொடி ஆண்கொடி பின்னலைப் பார்க்க பெண்பனை ஆண்பனை பேசலைக் கேட்க பிணையும் மானும் அணைதலை ஆய்க 180 பிடியும் களிறும் மயங்கலைப் படிக்க மக்களில் இருபால் மகிழ்தலை ஓர்க ஆண்பெண் வாழ்க்கை அன்பு வளர்க்கை பெண்மையில் முன்னும் ஆண்மை அதிகம் பெண்சொற் கேட்டல் பெரிய தவமே பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை காதல் பெருக்கம் தாய்மை அன்பே தாய்மை அன்பே இறைமைக் கருணை வாழ்க பெண்மை வாழ்க காதல் (குழவி) காதல் வடிவம் கால்வழிக் குழவி 190 குழவிச் செல்வம் குவலயச் செல்வம் குழவி ஈனல் குவலயம் வளர்த்தல் குழவிப் பிறப்பில் குறுக்கி டாதே செயற்கை முறைகளைக் கையா ளாதே குழந்தை உள்ளம் தைவிக இல்லம் குழந்தை மூளை கலையின் நிலையம் குழந்தை ஆட்டமும் ஓட்டமுங் கலையே குழந்தை மழலை குழலும் யாழும் குழந்தைப் போக்கில் குறுக்கிடல் தவறு குழந்தைக் கச்ச மூட்டல் கொடுமை 200 குழந்தையை மௌன மாக்கல் கொலையே குழந்தை ஆடுங் குடிலே வீடு குழந்தை இல்லா மாடியும் ஈமம் (இல்லம்) ஒலைக் குடிசை ஒளிகாற் றுலவு பசுங்கொடி படரில் பரமன் கோயில் ஆலர சத்தி வேம்பும் நிலையம் இற்புறம் கீரை காய்கனி இனிமை இல்முன் மலர்பொழி விருத்தல் இனிமை தெருவில் மரநிரை திகழ்தல் இனிமை பூமதி பெண்சேய் புனிதர் இனிமை 210 பதியின் இனிமை பசுமைப் பொங்கல் பசுமைப் பதியே பாட்டின் கோலம் ஊரின் பசுமை உள்ளப் பசுமை உள்ளப் பசுமை உயர்ந்தஇல் வாழ்க்கை வாழ்க்கைப் பசுமை வழங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சியின் எழுச்சியே பாடலும் ஆடலும் மகிழ்ச்சியின் ஊற்று வான்துளி வீழ்ச்சி வான்துளி வீழ்ச்சி மகிழ்ச்சி வெள்ளம் (தொழில்) மழையின் மகிழ்ச்சி உழவா கும்மே உழவு உலக நலத்தின் காப்பு 220 நாற்றுப் பாட்டின் காற்றில் உலவுக ஏற்றம் பாடும் இனிமை என்னே! பசும்பயிர்க் காட்சி பசியைத் துரத்தும் பொன்மணிச் சிறப்பினும் நென்மணி விழுப்பம் பருத்திச் செடியை விருத்தி செய்க பஞ்சைக் கண்டதும் பஞ்சம் பறக்கும் நூற்க நூற்க நெஞ்சங் குவியும் நாஞ்சிலும் இராட்டையும் நாட்டின் ஈரல் வாழ்க்கைக் குரிய தொழின்முறை வளர்க்க சேர்க்கைத் தொழிலில் ஜீவன் உண்டு 230 வாழ்க உழவு வாழ்க நூற்பு (அரசு) கொலைப்படை வடிக்குந் தொழிற்களம் ஒழிக கொலைப்படை வடிப்பது கொடுங்கோ லாட்சி கொலைப்படை ஆட்சியில் அலைப்பே அதிகம் போரை வளர்ப்பது பொல்லா ஆட்சி குணத்தை அழிப்பது கொடுங்கோ லாட்சி வறுமை மரணம் வளர்ப்பது கொடுங்கோல் பிரிவைப் பெருக்கும் பேய்மைக் கொடுங்கோல் தொழிலர சின்மை தொல்லைக் கிடமே அறக்கோ லாட்சி அமைதி நிலவு 240 கோல்குடி மக்கள் வயப்படல் அறமே தனிமை ஆட்சியில் பனிமை உண்டு குடிமை ஆட்சி கொடுமை குலைக்கும் கொல்லா ஆட்சியில் குணங்கள் குலவும் தொழிலர சாட்சியில் தொலையுங் குறைகள் தொழிலர சாட்சியில் தோன்றும் பொதுமை ஐயம் ஏற்றல் அரசின் குற்றம் ஏழ்மை ஒழிந்தால் இரத்தல் மாயும் அகால மரணம் அரசின் கொடுமை பட்டினி இன்மை நாட்டின் தன்மை 250 பட்டினி நாட்டில் பாட்டும் நெருப்பு, பசிபிணி சாவு பாழுக் கறிகுறி ஓருயிர் பட்டினி உலகப் பட்டினி பட்டினி தோன்றா உலகைப் படைக்க பொதுமைத் தொழிலில் பொன்றும் பட்டினி புவனம் பொதுமை பொழிலே யாக பொதுமைப் பொழிவில் புதுமணங் கமழும் புதுமை உலகம் பொங்கிப் பொலிக புதுமை உலகம் புரட்சியில் மலரும் அரசு திருந்தின் அனைத்தும் திருந்தும் 260 அரசியல் உள்ளம் அறத்திய லாக அறத்திய லற்ற அரசியல் நஞ்சே அரசியல் கட்சி அழிக்குங் குணத்தை கட்சி அரசியல் காண்டா மிருகம் தேர்தலும் வாக்கும் தேள்பூ ரான்கள் சட்டம் பெருகின் கெட்டதும் பெருகும் அறவோர் வழியே அரசியல் இயங்க அரசைத் திருத்த அனைவரும் எழுக உரிமை இன்பம் உலவா இன்பம் உரிமை உணர்ச்சி ஒழுக்க மலர்ச்சி 270 உரிமை வரட்சி புரட்சி எழுப்பும் அடிமை நோய்க்குப் புரட்சி மருந்தாம் அறவழிப் புரட்சி அழியா உரிமை கொலைவழிப் புரட்சி கூற்றுரி மைக்கே கொல்லாப் புரட்சி குணம்வளர் அறமாம் உரிமை வாழ்க ஓங்க புரட்சி புரட்சி உரிமையில் புகுந்தொழி லரசு (எளிமை) தொழிலர சாக்கும் எளிமைப் பொதுமை எளிமைப் பொதுமை எவர்க்கும் இனிமை வறுமை நஞ்சாய் வதைக்கும் வாழ்வை 280 கொழுமை அரக்கனாய் விழுங்கும் அன்பை வறுமையும் வேண்டா கொழுமையும் வேண்டா எளிமை வேண்டும் எளிமை வேண்டும் அருகல் பெருகல் எளிமையில் நேரா எளிமை வாழ்வில் இயற்கை உறவாம் எளிமைக் கிலக்கியம் ஏசுவின் வாழ்க்கை எளிமை உள்ளம் பொதுமை உலகாம் எளிமை வித்துப் பொதுமைப் பொதும்பர் எளிமை பொதுமை பொதுமை எளிமை எளிமை ஏற்றுப் பொதுமைக் குழைக்க 290 (பொதுமை) பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க இறையும் இயற்கையும் என்றும் பொதுமை ஞாயிறு திங்கள் நாள்கோள் பொதுமை ஐந்து பூதமும் அவனியும் பொதுமை பிறப்பும் பொதுமை இறப்பும் பொதுமை பொதுமை குலைந்தது புரோகித அரசால் பொதுமை எழுந்தால் புரோகிதம் பொன்றும் பொருளில் நிலத்தில் பொதுமை காண்க அறிவிலும் பொதுமை அடைய முயல்க கலப்புத் திருமணம் காட்டும் பொதுமை 300 குறைகள் குலைந்தால் குலவும் பொதுமை வகுப்பு மதப்போர் மாய்க மாய்க நிறப்போர் மொழிப்போர் நீறா யொழிக நாட்டுப் போர்கள் நாசமே யாக மேலினம் கீழினம் பிறப்பில் இல்லை வெற்றி தோல்வி வீரனுக் கில்லை எந்த உயிரும் இறைவன் கோயில் இறைவன் கோயில் அன்பின் உறைவு மைபொதி நெஞ்சம் மறைக்கும் அன்பை, புறஞ்சொல் வெறுத்தவன் அறத்தில் அன்பன் 310 திட்டை விட்டவன் செம்மை நேயன் திட்டை வளர்ப்பன தீய தாள்கள் தீய தாள்பொய் செருபகை எரிமலை புதினத் தாளால் புனிதம் பொங்கா களிப்புப் புதினம் கயமை விழிப்பு, சிறுகளிக் கதைகள் சிந்தனைச் சிறையே தீக்களி யாடல் சிந்தனைத் தேக்கம் காவிய ஓவியம் கருத்துச் சுரங்கம் காவிய ஓவியம் ஆவிக் குவு கற்பனைச் சுவையுங் கருத்தை வளர்க்கும் 320 அளவில் கற்பனை ஆழங் கெடுக்கும் ஓவிய உள்ளம் காவிய யாக்கை ஓவியத் தழுந்தின் உலகந் தோன்றா காவிய ஆழம் கடலினும் பெரிதே கடல்மலை காடு காவிய ஓவியம் கயிலை ஓவியம் பாற்கடல் காவியம் ஆணும் பெண்ணும் அழகிய ஓவியம் ஆண்பெண் வாழ்க்கை அன்புக் காவியம் காவிய ஓவியம் கடவுள் இருக்கை கலையின் நுட்பம் உயிரெலாஞ் சுற்றம் 330 சுற்றம் உயிரெலாம் தொண்டில் விளங்கும் பொதுமைச் செல்வம் புனிதத் தொண்டு (தொண்டு) தொண்டு நெஞ்சம் தூய்மைக் கோயில் தொண்டுச் செய்கை சுவறும் முனைப்பை முனைப்பை அறுத்தல் முனிவ ராதல் முனிவ ரென்பவர் முழுமைத் தொண்டர் ஆணவ எழுச்சியில் அருகுந் தொண்டே அடக்கம் பொறையும் தொண்டுக் கறிகுறி உண்மை முகிழ்க்கும் உயர்ந்த தொண்டில் தொண்டின் வளர்ச்சி பகைமை வீழ்ச்சி 340 ஊறுசெய் யாமை உண்மைத் தொண்டு நேர்மை ஒழுக்கம் நீர்மைத் தொண்டாம் தொண்டின் உயிர்ப்பு நோன்பின் தூய்மை நோன்பெவ் வுயிர்க்கும் தீங்கெண் ணாமை நோயரை அணைந்து பணிசெயல் நோன்பு வாயிலா உயிர்வதை மறித்தல் நோன்பு தீமையைப் பொறுமையால் எதிர்த்தல் நோன்பு பொல்லாப் பழியைப் பொறுத்தல் நோன்பு வெற்றுரை நோன்பை வீழ்த்துங் கருவி செய்கையில் வருவதைச் செப்பல் நோன்பு 350 பேச்சினுஞ் செய்கை பெரிதே பெரிதே நாளை செய்குவம் என்றெண் ணாதே நன்றே செய்க அன்றே செய்க சூழ்ந்த ஆய்வில் சுரக்குந் தெளிவு தெளிவில் உருக்கொளுஞ் சீர்சால் தொண்டு தொண்டு, பொதுமை அறமீன் குழவி (சோதரம்) தொண்டில் விளங்கும் உயிர்களின் சோதரம் என்னுயிர் இல்லம் என்னுயிர் சுற்றம் என்னுயிர் உலகம் என்னுயிர் எல்லாம் எல்லாம் ஓருயிர் அவ்வுயிர் இறையே 360 இறையின் உறுப்பு, பிறரும் யானும் எல்லாஞ் சோதரம் எதுவுஞ் சோதரம் சோதரம் பிரியும் சுரண்டும் ஆட்சியில் பொதுமை ஆட்சியில் புகுந்திடுஞ் சோதரம் பொதுமைக் குழைக்க பொதுமைக் குழைக்க (அறம்) சொக்கப் பொதுமையில் சூழும் அறமே அன்பும் அறிவும் அறத்தின் மலர்கள் அறமே பொதுமை அனைத்துயிர் ஒருமை மாசில் மனமே அறத்தின் கோயில் நன்மை யெல்லாம் அறத்தின் கூறுகள் 370 அறமே முழுநலன் அறமே முழுமுதல் அறமே பொருளென் றரற்றும் மறைகள் தோற்றமும் மரணமும் தொல்லற வளர்ச்சி தோற்ற முண்டேல் மரண முண்டு தோற்றமும் மரணமும் தொல்லை யல்ல தோற்றமுந் தேவை மரணமுந் தேவை தோற்றமும் நன்மை மரணமும் நன்மை தோற்றஞ் சிறக்க மரணந் துணைசெயும் தோற்றமும் மரணமும் தூய்மையைப் புதுக்கும் இறந்தபின் விளைவதை எண்ணல் வீணே 380 ஆவி உலகாய்ந் தல்ல லுறாதே ஆவியை அழைப்பது ஆவியை இழப்பது ஆவிப் பேச்சும் வாணிப மாச்சு வாணிப மோசம் வான்வரைப் போச்சே இருப்பது பொய்யே போவது மெய்யே தீங்கெண் ணாதே தீங்கெண் ணாதே தீமையைத் தீமையால் தீர்க்கஎண் ணாதே தீமையை அன்பால் தீர்க்க விரைக பகைவர் தூற்றலைப் பற்றிவே காதே பகைமை இருளில் அன்பொளி ஏற்றுக 390 கருத்திற் பிறக்கும் வேற்றுமை இயற்கை மற்றவர் கருத்துக் கிடந்தரல் மாண்பு கருத்தை மாற்றிக் கருத்தை வளர்க்க மாற்றக் கருத்தர் மாற்றா ரல்லர் வேறு கருத்தைச் சீறல் சிறுமை கருத்து வேற்றுமை திருத்தும் உலகை வேற்றுமைக் கருத்தை வேட்டல் அறிவு மாறு கருத்தால் மலரும் புதுமை பழிபா வங்கட் கஞ்சி நடக்க எவர்க்கும் நன்றே என்றுஞ் செய்க 400 பிறர்க்கென வாழ்தல் அறத்தின் திறவு மண்ணில் அறவழி வாழ முயல்க பாவம் போகப் பரமனை வேண்டுக (வாழ்த்து) அறவோர் வாழ்க அறவோர் வாழ்க அறத்தொண் டாற்றி அறநெறி வளர்க்க ஆய்ந்தாய்ந் தறத்தை அல்லற் படாதே தொண்டு செய்யின் துலங்கும் அறமே தொண்டு வண்ணம் தொல்லுல காக தொண்டர் படைகள் சூழ்ந்துசூழ்ந் தெழுக தொண்டாய்த் திகழ்ந்த தூயோர் வாழ்க 410 தொண்டரே அறவோர் துறவோர் நோன்பிகள் தொண்டு வளரச் சோதரம் ஓங்கும் தொண்டில் விளங்குஞ் சுத்தசன் மார்க்கம் வாழ்க மகம்மது வாழ்க இயற்கை வாழ்க ஏசு வாழ்க அருகர் வாழ்க புத்தர் வாழ்க கண்ணன் வாழ்க குமரன் வாழ்க மோனன் வள்ளுவர் வாய்மை தெள்ளிய உலகம் தெள்ளிய உலகில் சிறந்து வாழ்க ஔவை மொழியில் அகிலங் காண்க 420 அகிலங் காண அறஞ்செய விரும்பு யாதும் ஊரே யாவருங் கேளிர் ஒன்றே குலம் ஒருவனே தேவனும் வாழ்க சமரசம் வாழ்கசன் மார்க்கம் வாழ்க சான்றோர் வாழ்கதாய் மையே. 425 12. தாய்மைப் பெண் தாய்மைப் பெண்ணினம் வாழ்ந்து தழைக்க தாய்மைப் பெண்ணுயிர் தந்திடல் காட்சி தாய்மைப் பெண்ணெனச் சான்றுகள் வேண்டா தாய்மைப் பெண்ணினம் வென்று தழைக்க. 1 உலக மெல்லாம் உதிப்பிடந் தாய்மை உதித்துத் தங்கி ஒழுகிடந் தாய்மை கலையின் மூலங் கமழிடந் தாய்மை கடவு ளன்பு சுரப்பிடந் தாய்மை. 2 வானை நோக்க வயங்கிடுந் தாய்மை மண்ணை நோக்க விளங்கிடுந் தாய்மை கானம் மாமலைக் காட்டிடுந் தாய்மை கடலும் ஆறும் கருணையின் தாய்மை. 3 கருணைப் பெண்ணைக் கடிவதோ ஆண்மை கடிவோ ரெந்தக் கருவழி வந்தனர்? அருளை அற்றவர் ஆர்த்த மொழிகள் அனலைக் கக்கும் அருநர காகும். 4 பெண்ணைப் பேயெனப் பேசுதல் நன்றோ பெரிய மாயையென் றேசுதல் நன்றோ தண்மை யில்லா வனத்து விலங்கும் தடவிப் பெண்ணலம் தாங்குதல் காண்மின் 5 பாவை தாலி அறுத்திடல் மூர்க்கம் பட்டம் முண்டை என்றீதலும் மூர்க்கம் ஏவு மற்ற இழிவுகள் மூர்க்கம் எல்லாம் வீழ்த்த இளைஞர் எழுமின். 6 ஆணும் பெண்ணும் சமன்சமன் ஐயோ ஆணின் கோல்மிக அன்னை விழுந்தாள். கோணல் நீக்கிடுங் காதல் மணமே கோதில் மார்க்கம் குலவும் இனிதே. 7 1. கடந்த நிலை சிவமென்னும் பொருளேநீ திகழுமிடந் தேடித் திரிந்தலைந்தேன் சிந்தையிலே செப்புதற்கும் எளிதோ நவகலையைப் பழங்கலையை நாகரிகக் கலையை நாடோறும் ஆய்ந்துவந்தேன் நண்ணியதொன் றில்லை தவமுயற்சி உளங்கொண்டேன் சமயவழக் கற்றேன் தாக்குபுலன் மனங்கரணம் தணந்துதணந் தழியப் புவனமெலாம் படிப்படியே பொன்றவெறும் பாழாய்ப் பொலியுமுன்றன் உண்மைநிலைப் புனிதமுணர்ந் தேனே. 1 அருவல்லை உருவல்லை அளவெல்லை யல்லை ஆதியல்லை அந்தமல்லை அகண்டவெறும் பாழ்நீ மருவுமுன்னைப் படைப்பதெது? மாண்புடைய சிவமே மன்னுமுன்றன் பாழ்வெளியில் மாநிலங்க ளெல்லாம் அருவுருவாய் ஆங்காங்கே அமைந்தமைந்து கோட்டில் அசைந்தசைந்தே இயங்கிவரும் அதிசயந்தா னென்னே ஒருபெயரும் ஒன்றுமில்லா உனையுஞ்சிவ மென்றே உரைத்துவிட்டார் புலவரந்நாள் ஓதுகின்றேன் அதையே. 2 வடிவமிலா உன்முன்னே வடிவுலக மெல்லாம் வடிந்துநிற்குந் திறமென்னே! வயங்குமவை இலையேல் திடமுடனே உனதிருப்பைத் தெளியவழி யுண்டோ? செகமுழுதும் உன்பெருமை தெரிவிக்குங் கழகம் கடியதனை என்றுசிலர் காய்கின்றார் அறிவோ? காணதற்கும் உனக்குமுள சார்புரைக்குங் கலைகள் படியுலகம் கழக மென்று பகர்ந்தவரே பெரியோர் பாதமலர் பணிபுரியப் பரசிவமே அருளே. 3 செம்பொருளே பாழென்றால் சிரித்திகழ்வோர் உளரே சிரித்திகழ்வோர் விஞ்ஞானச் சிந்தைபெறல் அழகே ஐம்பொருளை ஆராய்ந்தோர் அவற்றினுக்கும் பாழே ஆதரவென் றறுதியிட்டார் அமையுலகம் வாழ வம்புரைகள் வழக்குரைகள் வசையுரைகள் வேண்டா வளர்விஞ்ஞை வழிப்பாழின் மாண்புணரல் நன்று வெம்புளத்தில் விளங்காத விமலபர சிவமே விஞ்ஞானம் உலகமெங்கும் மிகவளரச் செய்யே. 4 ஒன்றிரண்டாய் மென்மேலும் உயர்ந்துசெலல் மரபே ஒன்றுதிக்கும் இடமெங்கே ஒன்றுமிலாச் சைபர் ஒன்றுடனே அதுசேரச் சேரஒரு பத்தாய் ஒருநூறாய்ப் பெருகுமுறை உள்ளங்கைக் கனியே ஒன்றினுக்கு முன்பின்னே உயிர்ப்பளிக்குஞ் சைபர் உண்மையென்றும் பொருண்மையென்றும் உணர்த்திவிட்டார் கணிதர் நன்றுடைய உன்பாழோ நானறுந்தால் விளங்கும் நாதாந்த ஞானவித்தை நண்ணஅருள் சிவமே. 5 2. கலந்த நிலை மாளாத வெளிப்பாழே மயங்கா தென்றும் வாழ்சிவமே தனித்துமட்டும் வளர்கின் றாயோ கோளான பரிதிமுதற் குலங்க ளெல்லாம் குலவிஒளி பெறக்கலந்து கூடி யென்றும் மீளாமல் அங்கங்கே மேவி மன்னும் மேன்மையினை எம்மொழியால் விளம்ப வல்லேன் வாளாநீ இருப்பதில்லை மலர யாவும் வரையாத அருள்பொழியும் வள்ளல் நீயே. 1 எவ்வுலகுந் தளராமல் இனிது வாழ எங்கெங்கும் நீங்காமல் இருக்கும் ஒன்றே எவ்விதைக்கும் வித்தாகி எழும்பி நோக்கும் எம்முளைக்கும் முளையாகி இயைந்த தேவே எவ்விடத்தும் உனையன்றி என்ன உண்டே எவ்வணுவும் உனையிழந்தால் இயங்குங் கொல்லோ எவ்வுயிர்க்குந் தாயான இறையே உன்னை எவ்வாறு மறந்துய்வேன் ஏழை யேனே. 2 சுடராகி ஒளிகாலுஞ் சோதி நீயே சுருள்முகிலாய் மழைபொழிநீர்ச் சுரங்கம் நீயே அடரோங்க லாய்நிற்கும் அமைதி நீயே அணிவனமாய் அனல்தணிக்கும் அணங்கு நீயே படராகி வயலுமிழும் பசுமை நீயே பாலையாய் வெள்ளிகொழி பான்மை நீயே கடலாகி அலைஒலிக்கும் கவிதை நீயே கலந்தெங்கும் அருள்சிவமே கடவுள் நீயே. 3 மரப்பசுமை தழைதழைத்து வழங்குங் காட்சி மாடுகன்று நிழலினிலே வளருங் காட்சி பரப்புடைய மலர்க்கேணி பார்க்குங் காட்சி பாண்மிழற்றும் வண்டினங்கள் பறக்குங் காட்சி வரப்பினிலே மான்துள்ளி மருளுங் காட்சி மயிலாலக் குயில்கூவி மகிழுங் காட்சி சுரப்புடைய அன்பரினஞ் சூழுங் காட்சி துரியசிவ நின்காட்சி தூய தன்றோ. 4 வெட்டவெளி யாய்க்கிடக்கும் விமலத் தேவே விரிஇயற்கை வடிவாக விளங்கு கின்றாய் கட்டமின்றி வழிபாடு காண லாகும் கண்ணிருந்துங் குழியில்விழுங் கருத்தென் னேயோ கெட்டகலை அரசியலுங் கிளர்ச்சி செய்து கீழினத்தைப் பெருக்குவித்த கேட்டி னாலே வட்டமிடும் அஞ்ஞானம் வறண்டு போக வள்ளலருள் மக்களுய்ந்து வாழ நன்றே. 5 3. திருக்கூத்து செழுமியற்கைக் கசைவில்லை சிவமேநின் வெளிநிலைக்கும் எழுமசைவு சிறிதுமிலை இரண்டுமொன்றாய்க் கலந்துநிற்கும் அழகினிலே அசைவுநிகழ் அதிசயமே அதிசயமாம் தொழுதுய்ய உலகமெலாம் தொல்லசைவு தோன்றியதோ. 1 அசைநுட்பம் தெளிஅறிஞர் ஆனந்தக் கூத்தென்பர் இசைவிரவும் அக்கூத்தோ இறவாத மெய்க்கூத்து, திசையுலகம் எல்லாமும் திகழவைக்குந் திருக்கூத்து, தசையுடலம் இல்லாத தற்பரநின் அருட்கூத்தே. 2 மலைவளர மரம்வளர மாவளர மக்களுடன் கலைவளரக் கடல்வளரக் கதிர்மதியம் தாம்வளர ஒலிவளர உயிர்வளர உண்மைநெறி வளரஎன்றும் அலகிலொளி சிவமேநீ ஆற்றுகின்றாய் அருட்கூத்தே. 3 சிவமேநின் அருட்கூத்து சீவகலை உயிர்க்கூத்து தவமேசெய் உயிரையெலாம் சாந்தவெளி சேர்ப்பிக்கும் பவமேசெய் உயிரையெலாம் படிப்படியே துலக்குவிக்கும் அவமேசெய் மாக்களையும் அகல்வதில்லை திருக்கூத்தே. 4 தார்வினொடு வேறுசிலர் தனிமதியால் கண்டவொரு கூர்தலறம் வளரஉன்றன் கூத்துதவல் அவரறியார் தேர்தலுள வாசகனார் தெரிவித்தார் அந்நாளில் கூர்தலறம் என்செய்யும் கூத்திலையேல் பரசிவமே. 5 4. சிதம்பரம் சிற்பரமே ஆடுமிடம் சிதம்பரமென் றறையும் தெய்வமறை மொழியினிலே சிந்தனைவைத் தாழ்ந்தேன் சொற்பதங்கள் கடந்தவெளி சுத்தசிதம் பரமாய்த் தொல்லுலக மெல்லாமும் இயற்கைசிதம் பரமாய்ப் பொற்புடைய பொழிற்றில்லை சிற்பசிதம் பரமாய்ப் பொலிவகையை யானுணரப் பூத்ததுன்றன் அருளே எற்புடைய பிறவிதந்தாய் இவ்வுணர்வை ஈந்தாய் என்னகைம்மா றியற்றவல்லேன் ஏழைமகன் யானே. 1 மூவிதமாஞ் சிதம்பரத்தில் முன்னையது நெஞ்சில் முன்னுதற்கும் முடியாது மூலஅடை வென்றும் தேவியற்கைச் சிதம்பரமும் தில்லைச்சிதம் பரமும் தியானவழி பாட்டினுக்குச் செம்மையன வென்றும் ghÉkd¡ f£lÉH¥ guk!உளங் கொண்டாய் பாலளித்த தாயினுலும் பரிவுடைய தாயே ஆவியெனுங் கொடிபடர அணிகொழுகொம் பானாய் அருள்நினைக்க அகங்குழைய அருள்வேண்டும் அருளே. 2 தில்லையிலே சிற்பவுருச் சிதம்பரத்தைக் கண்டேன் தெய்வமறை நூலெனவே திகழ்வதனைத் தேர்ந்தேன் கல்லன்று மண்ணன்று கட்டிடமு மன்று காகிதமுங் கறுப்பெழுத்துங் கட்டிடமும் நூலோ நல்லசெம்பொன் பணியானால் நழுகிவிடும் பொன்னே நானிலமும் பொன்மறந்து பணியென்றே நவிலும் புல்லுமுரு முகிழ்த்தவுடன் பொருட்பிண்டம் மறைவே புந்திஇவை பொருந்தஅருள் பொழிந்தசிவம் வாழி. 3 சிதம்பரநூல் சிற்பமறை தில்லையிலே பயின்றேன் திகழ்மூன்று காண்டங்கள் தெளிவுறவே முயன்றேன் பதங்கடந்த வெளிகுறிக்கும் ஞானசபை ஒன்று பற்றியற்கைப் படிவிலெழும் பரம்பரக்கூத் தொன்று சிதம்புரியுங் கருஇயற்கைச் சிவகாமி ஒன்று சிவகாமி அடிபணியத் திருக்கூத்துக் காட்டும் மதங்கலவாத் திருக்கூத்து ஞானவெளி கூட்டும் மனமிவைகள் மருவஅருள் மாதேவா வாழி. 4 தில்லையெனும் பதியிலையேல் சிதம்பரத்தின் நுட்பம் தெரிவிக்குங் கருவியொன்று செகத்தினிலே உண்டோ தில்லையிலே சிதம்பரத்தைத் தியானித்து வந்தால் சித்தமலர்ச் சிதம்பரத்தின் திறமுணர லாகும் தொல்லுலக மெல்லாமும் சிதம்பரமாய்த் தோன்றும் சோதரஅன் பேஎங்கும் சுரந்தெடுக்கும் பெருக்கே எல்லையிலாப் பரசிவமே இடுக்கணுறும் என்னுள் இவைபடிய அருள்புரிந்தாய் எவ்வருளும் நினதே. 5 5. கூத்தன் கூத்தில் வெளியே பரசிவமே கூத்தைக் கொண்டாய் இயற்கையிலே கூத்த னாகி வந்திலையேல் குலவி உலகம் மலருங்கொல் கூத்தின் நிகழ்ச்சி எங்கெங்கும் கூர்தல் ஓம்பும் அறமென்று கூர்த்த மதியர் கூறியசொற் குணத்தை உணர்ந்தேன் அருளாயே. அன்னை இயற்கை யுடன்கலந்தே அப்பா அன்பால் ஆடுகின்றாய் மன்ன உலகை விரிக்கின்றாய் மாண்பை உணர்ந்தோர்க் கின் பூட்டி உன்ன அரிய வெட்டவெளி ஒன்ற உதவி புரிகின்றாய் என்று முழங்கும் மறையுள்ளம் எளியேன் உய்ய அருளாயே. வானக் கோள்கள் வையமெலாம் வட்டமிட்டுச் சுழலஎங்கும் ஞான நடனம் ஆற்றுகின்றாய் நாத உண்மை அதைத்தில்லை ஞான சபைக்குஞ் சிவகாம ஞானத் தாய்க்கும் இடையாடக் கான உருவ ஓவியமாய்க் கண்டோர் எவரோ அவர் வாழி. 3 தில்லைப் புலியூர் அடைந்துநின்றேன் திருக்கூத்தப்பா உருக் கண்டேன் கல்விக் கீரன் அம்மையார் கடந்தான் மூலன் குமரகுரு சொல்லின் மன்னர் பாட்டமிழ்தம் சுரக்கும் உள்ளத் தவனானேன். கல்லிற் கடிய கரணமெலாங் கரைய வெள்ளம் விழுங்கியதே. 4 ஆடு கின்றாய் பெரும்புலியூர் ஆடு கின்றாய் நெஞ்சமலர் ஆடு கின்றாய் கலந்தெங்கும் ஆடு கின்றாய் கரந்தெங்கும் ஆட வில்லை கடந்தநிலை ஆடல் நிலையே அருள் வைப்பு வாடு கின்றேன் நடராச வள்ளல் அருளாய் அருளாயே. 5 6. சிவம் தெய்வம் ஒன்றெனச் செப்பா மறையிலை தெய்வம் ஒன்றெனச் செப்பா உலகிலை தெய்வம் ஒன்று சிவமெனத் தேர்ந்தனர் செய்ய மேனித் திறமுணர்ந் தோர்களே. 1 சிவமே ஒன்று செகம்பல பேரினால் கவலை நீக்க வழிபடல் காட்சியே தவத்தில் நின்றால் சமநிலை கூடியே சிவமு மாதல் தெளிவில் விளங்குமே. 2 சீல நுட்பஞ் செறிந்தவர் சிந்தையில் சீல மேசிவ மென்று தெரித்தனர் சீல மேசிவ மேஎன நோற்பவர் சீல ராகிச் சிவகதி சேர்வரே. 3 செகத்தி லெங்குஞ் சிவப்பெய ராலெயே அகத்திற் பூசை அலர்ந்தது முன்னாள் புகுத்தி விட்டனர் பலபெயர் பின்னாள் செகுப்பின் அப்பெயர் சேர்வ தொருமையே. 4 சிவசிவ என்றிடில் தீமை யொழியும் சிவசிவ என்றிடில் சித்தம் துலங்கும் சிவசிவ என்றிடில் சீலம் பெருகும் சிவசிவ என்றிடில் சேர்க்குஞ் சிவமே. 5 7. உருவம் எப்பொருட்கும் எட்டாமல் இலங்குவதும் அருளே இயற்கையுட லாக்கியெங்கும் இலங்குவதும் அருளே தப்புயிரை நீங்காமல் தாங்குவதும் அருளே தவவீரர் ஒவியத்தில் தங்குவதும் அருளே எப்படியும் நினைந்தாலும் அப்படியே யாகி எழுந்தருள உளங்கொள்ளும் எளியவனே உன்னை இப்படியன் அப்படியன் என்றுரைத்தல் அழகோ எப்படியும் நீவருவாய் இயம்பரிய சிவமே. 1 அருவென்பர் உருவென்பர் அகண்டவறி வென்பர் அத்தனையும் உனக்குள்ள அருள்நிலைகள் அப்பா பெருவுலகில் தத்துவங்கள் பேச்சாகிப் போச்சே பேச்சுலகம் பெரிதாகிப் பேயுலக மாச்சே உருவுருகில் மனமுடையார் உருக்கடந்த நிலையை உன்னுதலும் ஆகாதென் றுருக்கொண்டாய் சிவமே கருவுலகைக் கடப்பதற்குக் கருவிஅது கண்டேன் கருணைமுதல் நீயென்றே காலடைந்தேன் அருளே. 2 இயற்கையுடன் நீஇயங்கும் இயல்பினைஅந் நாளில் இயற்புலவோர் ஓவியமாய்க் காவியமா ஈன்றார் முயற்சியிலே அவ்வுருவை முன்னிவழி பட்டேன் முன்னவனே பொன்னவனே முத்திமுழு முதலே பயிற்சியிலே உனதியற்கைப் பண்பையுணர்ந் தேனே பரம்பொருளே உருவினிடம் படிந்தபரி சென்னே செயற்கையிலே கிடப்பவர்கள் திருவுருவப் பூசை செயவேண்டும் செயவேண்டும் திருவருள்செய் சிவமே. 3 மின்னொன்று குவைநிறங்கள் பலவேய்தல் போல மிளிர்சிவமே ஒன்றேநீ மேவுமுரு பலவாம் நின்னருளைப் பெண்ணென்றார் நீறணிந்த சித்தர் நீலவடி வாக்கியதை நிறுவிவிட்டார் சிற்பர் முன்னுமடி ஒளிகிளரும் முத்தொழிலை முயக்கி மும்மூர்த்தி உருவெடுத்தார் மூதறிவுப் பித்தர் இன்னவழிப் பலமூர்த்தம் இறங்கினவே யாவும் எழிற்கலைகள் இவ்வுணர்வை எழுப்பியதும் அருளே. 4 கலைபிறக்குந் தாயகமுன் கலந்தநிலை இந்தக் கருத்தறிய அருள்சுரந்த கற்பகமும் நீயே கலைவழியைக் கடைப்பிடித்தால் கலந்தநிலை தோன்றும் கலந்தநிலை தோன்றிவிடின் கடந்தநிலை புலனாம் கலைகளெலாம் அந்நிலையில் கற்பனையாய்ப் போகும் கலைவழியே நிற்கநிற்கக் கற்பனைகள் தெரியும் கலைவிடுத்துக் கற்பனையைக் கழறலறி யாமை கடைக்காலாம் கலைவளரக் கருணைபுரி சிவமே. 5 8. கலை உருவம் சடைமுடியின் பொன்னொளியும் தண்மதியின் வெண்ணிலவும் அடைஉதடு விடுகனியும் அணிகண்ட நீல்மணியும் உடற்பவள மணிக்குழம்பும் உமைபசுமை மரகதமும் கடைப்பட்ட நாயனையேன் கண்கருத்தைக் கவர்ந்தனவே. 1 முக்கண்ணும் நாற்கரமும் முரண்திரண்ட எண்டோளும் அக்கிரம முயலகனை அழுத்துமொரு சேவடியும் எக்கணமும் உயிர்க்கருள எடுத்தஉயர் திருவடியும் சிக்கறுத்தென் சிந்தனையைச் சீர்செய்யப் புகுந்தனவே. 2 கங்கையுடன் சினஅரவும் கலைமதியும் அணிமுடியும் பொங்குதிரு நீற்றொளியும் பொலிவுசெறி குண்டலமும் சங்கெலும்பு மாலைகளும் தனித்தமலர் மாலைகளும் மங்குமென துள்ளத்தின் மாலழிக்க வந்தனவே. 3 மருள்மதனை எரிவிழியும் மறைபேசுந் திருவாயும் உருள்யமனை உதைகாலும் ஒருத்தனழ மிதிகாலும் இருள்மலிமுப் புரமழிய எரியுமிழுங் குறுநகையும். பொருள் விளக்கும் அருட்டிறங்கள் புவியுய்யப் பிறந்தனவே. 4 தலையினிலும் உடலினுலும் கையினிலும் காலினிலும் அலைபணத்துப் பாம்பணியும் அடுபுலிதோல் அரையுடுப்பும் கொலையானை உரிப்போர்வும் கொம்பெருது வாகனமும் குலையகத்தை நிலைப்பிக்குங் குணவீரக் குறிப்புகளே. 5 9. உருவப் பயன் செஞ்சடை நோக்க நெஞ்சில் சிந்திடும் அமிர்த தாரை கங்கையின் காட்சி யாலே கரைந்திடுஞ் செருக்கின் மூலம் திங்களை உன்னத் தோன்றும் சித்தினுக் கழிவ தின்மை அங்கண! நுண்மைத் திண்மை அருட்குறி கொண்டாய் போற்றி.1 முக்கணை முன்ன முன்ன மும்மலம் எரிதல் கூடும் பக்கமாய்ச் செவியைப் பார்க்கப் பரிந்தெழும் ஓமென்னோசை செக்கர்வாய் காணக் காணச் செழுமறை முழக்க மாகும் இக்கலை வடிவாய்க் காட்சி ஈந்தருள் ஈசா போற்றி. 2 ஆருயிர்ப் பாவ ஆலம் அன்புடன் கண்டந் தாங்கிப் பேரருள் அமுதம் ஈயும் பெருமையை உணர்த்தும் நீலம் ஏருழை துடிதீ சாய்கை இறுத்தகால் எடுத்த காலும் கூரளி ஐந்து செய்கைக் குறியணி சிவமே போற்றி. 3 உலகெலாம் உன்றன் போர்வை உலகெலாம் ஒலியின் ஈட்டம் ஒலிஎழும் சுழல்பாம் பென்ன உன்னணி ஒலிபாம் பாகும் களிமத யானைப் போர்வை களிப்பினை ஒடுக்கும் பூட்கை புலியுடை கருமச் சாய்வு, பூண்டனை புனிதா போற்றி. 4 வெள்ளெலும் பாரம் எண்ண வீண்பிறப் பிறப்பில் லாத வள்ளல்நீ என்னும் உண்மை மருவிடும் நெஞ்சில் தூய வெள்விடை உள்ள உள்ள விளங்கிடும் அறத்தின் மேன்மை உள்ளுறை கோலங் கொண்ட உத்தமா போற்றி போற்றி. 5 10. புராணக் கலை மறைகளும் மற்று முள்ள மாண்புறு கலைக ளெல்லாம் அறைதரும் ஐயன் மேன்மை அதைப்புர ணங்கள் வேறு முறையினில் மாற்றி மாற்றி முழங்குதல் மடமை யன்று தறையினில் கதைக ளாகத் தத்துவம் தழைத்தல் தீதோ. 1 வெறுங்கதை புராண மன்று விழுப்பொருள் பலவு முண்டு நறுங்கவி மெய்விஞ் ஞானம் நற்றொழில் நாடு செல்வம் அறங்குணம் காதல் வீரம் அருளிறை இயற்கை வாழ்க்கை திறங்களின் காட்சிக் கூடம் தெய்வீக நிலையம் நன்றோ. 2 சத்தொடு சித்தா னந்தம் சாத்திரஞ் சொல்லிப் போகும் சத்தினைத் தலைவ னாகச் சித்தினைத் தலைவி யாக நித்தியா னந்தஞ் சேயா நிகழ்த்திடும் புராண நூல்கள் சத்தியம் உருவ மானால் தரணிக்கு விளக்க மாமே. 3 மும்மலம் அழிக்கும் நுண்மை முப்புரம் எரித்த காதை நம்முயிர் சிவமாந் தன்மை நாடுதல் வள்ளிக் காதை செம்மையில் ஆட்சி வீழ்த்தல் செப்பிடும் இராம காதை தம்முளே எல்லாங் காண்டல் கண்ணனின் காதை யாமே. 4 கதைகளை மட்டுங் கொள்வோர் கருத்தினில் கலகம் தேங்கும் கதைகளை மட்டுங் கேட்போர் கடவுளைக் காண்ப தில்லை கதைகளை மட்டுஞ் சொல்லிக் காலமே கழிக்குங் கூட்டம் துதையுமேல் உலகம் பாழாம் தூய்மையும் பெருகா தன்றே. 5 11. புராணக் கலை சாதியைப் பிறப்பி னாலே சாற்றிடும் புராண காதை ஆதியில் இல்லை அந்த அவதியின் தோற்றம் பின்னே நீதியை அழித்து நல்ல நெறியினைக் குலைத்த தம்மா சோதியே அதனைப் போக்கச் சூழருள் இன்னே இன்னே. 1 பெண்ணினை இழித்துக் கூறும் பேய்க்கதை சாக சாக கண்ணினை விழிக்கச் செய்யாக் கருங்கதை மாய்க மாய்க புண்ணினை வளர்க்குந் தீய புன்கதை போக போக கண்ணுதல் கொண்ட தேவே கருணைசெய் இன்னே இன்னே. 2 ஒழுக்கினை உயிரின் ஓம்பும் உயர்கதை வாழி வாழி வழுக்கினர் திருந்தும் வண்மை வளர்கதை வாழி வாழி பழுத்தவர் நெஞ்சே பாட்டாய்ப் பகர்கதை வாழி வாழி எழுத்தினர்க் கூக்க மூட்டும் எழிற்கதை வாழி வாழி. 3 சீவகன் செல்வந் தந்த தேவனார் வாழ்க வாழ்க காவியக் கண்ணை ஈந்த கம்பனார் வாழ்க வாழ்க தேவியற் பாட்டை வார்த்த சேக்கிழார் வாழ்க வாழ்க பாவியற் றமிழாற் பாடல் பகர்பரஞ் சோதி வாழ்க. 4 முத்தனே முக்கண் மூர்த்தி முதல்வனே முடிவே இல்லாச் சித்தனே தில்லை யாடுந் தேவனே சிவனே நாதப் பித்தனே புராண நூலின் பிராணனை உணருங் கூட்டம் இத்தரை மிடைதல் வேண்டும் ஈசனே அருள்செய் வாயே. 5 12. வழிபாடு ஒன்றாத மனமழிந்து ஒன்றுமனம் பெறவேண்டிக் கன்றாவின் மனம்போலக் கசிந்துருகி உருகிநின்றேன் மன்றாடும் பெருமானே மயிலைநகர்க் கோயிலிலே நன்றாக வழிபட்டேன் நாயகனே இளமையிலே. 1 புண்ணிலவு மனம்போக்கிப் புனிதமனம் பெறவேண்டிக் கண்ணிரண்டும் நீர்பொழியக் கையிரண்டுந் தலையேற மண்ணினிலே உமையம்மை மயிலாகி வழிபட்ட பண்பதியில் பணிசெய்தேன் பரம்பொருளே அறிவாயே. 2 திருக்கோயில் வழிபாடு திருத்தொண்டர் வழிபாடாய் உருக்கோலக் குன்றைமுனி உரைஉதவ அருள்புரிந்தாய் இருக்கோல மிட்டழவும் எட்டாத இறையோனே பெருக்கோடுங் கங்கையொடு பிறையணிந்த பெருமானே. 3 திருத்தொண்டர் வழிபாடு திருநாட்டு வழிபாடாய்க் கருத்தொன்ற அருள்சுரந்த கற்பகநீ எனக்கொண்டேன் பருத்தவுடல் சிறுக்க அந்தப் பணிபுரிந்தேன் துணையாலே எருத்திவருஞ் சடைமுடியாய் எனைநடத்து நின்வழியே. 4 தொழிலாளர் படைதிரட்டுந் தொண்டெனக்கு வாய்த்ததது வழியான பொதுமையென மனஞ்செலுத்தி உழைக்கின்றேன் பழிபாவங் கடந்துநிற்கும் பரம்பொருளே சிவமுதலே வழிபாட்டுத் தொண்டன்றி மற்றெதையும் வேண்டேனே. 5 13 வழிபாடு இவ்வுலகில் திருக்கோயில் வழிபாட்டை இயற்றிவரின் எவ்வுயிருஞ் சிவமேநின் இருக்கையென உணர்ந்ததற்குச் செவ்வியலில் வழிபாட்டுச் செயல்பெருக்க எனத்தெரித்தாய் தெவ்வுலக மில்லாத தொண்டுலகை வேண்டுவனே. 1 மதவகுப்பு நிறநாடு மற்றுமுள பிரிவுகளால் இதமிழந்து மக்களினம் இகல்விளைக்கும் இருட்காலம் பதமுடைய சன்மார்க்கப் பணிவேண்டும் இந்நாளில் இதயமிடை நடம்புரியும் இறையவனே துணைபுரியே. 2 பிரிவற்ற சன்மார்க்கம் பேருலகில் பரவுதற்குப் பரிவற்றுச் சுரண்டரசு பகையரசு விழல்வேண்டும் உரிமையுடன் மக்களினம் உலவுபொது அறம்வேண்டும் கரிமதத்தை அழித்தவனே கருணைமிகு துணைபுரியே. 3 உலகமெலாம் ஒருகுடும்பம் ஆதலுக்குப் பொதுமைஅறம் இலகஇவண் வளர்ந்தோங்க இயங்குவது சன்மார்க்கம் பலகலைகள் பலமதங்கள் பகர்வதந்த நன்மார்க்கம் பொலிகஎன நடம்புரிவாய் பொற்பொதுவில் மணிவிளக்கே. 4 ஓயாது நடம்புரிந்தே உயர்பணியை ஆற்றுகின்றாய் தாயாகி உலகாக்கித் தாங்குகின்ற சங்கரனே மாயாத வீட்டின்ப மயக்கமதை வேண்டுகிலேன் ஓயாமல் பணிசெய்ய உன்னருளை வேண்டுவனே. 5 14. மன அடக்கம் மன அடக்கம் வேண்டுமென்று மதிவாணர் சொற்றார் மற்றவர்கள் கண்டுவிட்ட மார்க்கங்கள் பலவே மனமந்தி எனஉலகில் வழங்குதலும் உண்டு மந்திவழிச் சென்றுழன்றால் மாநிலமே பேயாம் மனம்ஐந்தின் தளையறுந்தால் மந்திஇயல் மாறும் மாறுபட ஓருருவில் மனந்திளைத்தல் வேண்டும் சினமறுத்துச் செருக்கொழிக்குஞ் சிவனுருவை நினைந்தால் தீயமனம் நன்மனமாய்ச் சிறந்தகுரு வாமே. 1 இதுகடந்தோன் அதுகடந்தோன் இறை என்று பேசி இப்படியும் அப்படியும் இயங்கிவந்தால் நெஞ்சில் எதுஅடையும் என்னவரும் இந்நிலையை ஓர்ந்தோ எம்பெருமான் சிவபெருமான் எந்தைநட ராசன் மதிநதியும் பணஅரவும் மருவுசடை முடியும் வரிவிழியும் மணிக்களமும் மலர்க்கரமும் அடியும் பதியஅருள் உருக்கொண்டான் பற்றிஅதை நினைந்தால் பாவமனப் புறம்விழுந்து பரமஅகம் எழுமே. 2 கங்கைசெருக் கொடுக்கினவன் கதிரவன்பல் லுதிர்த்தோன் கைக்கரியைக் கடும்புலியைக் கடிந்துறுத்துக் காய்ந்தோன் செங்கரத்தில் மழுமானைச் சேரவைத்த சேயன் சீறியதீ முயலகனைச் சேவடியால் அடர்த்தோன் வெங்களிமுப் புரமெரிய விடுத்தநகைக் கணையன் வேள்மதனை விறல்யமனை வேகஉதை வீரன் மங்கையொரு பங்குடைய மைந்தனருள் மெய்யன் மலரடியை உள்மனத்தை மறக்குறும்பென் செயுமே. 3 ஒடுங்கிவந்த வெள்ளைமதி உறையமுடி ஈந்தோன் ஓடுவிடப் பாம்புகளை ஒப்பனையாய்ப் பூண்டோன் அடங்குபுலத் தவஇளைஞர்க் காயுள்நிறை உய்த்தோன் அடுங்காளி அகமகிழ ஆடல்புரிந் தாண்டோன் நடுங்கியவெவ் வரக்கனழ நல்லருளைக் கூர்ந்தோன் நாரைபன்றி குருவிகளை ஞானமுறச் செய்தோன் பிடுங்குசினப் பேய்க்குலங்கள் பேணஇடந் தந்தோன் பிஞ்ஞகனை அடைந்தமனம் பீடுபெற லரிதோ. 4 சிவனுருவை நினைக்குமனம் சிவன்கோயில், அதனால் சீவகர ணங்களெலாம் சிவகரண மாகும் திவறுமுளை புலன்களெல்லாம் சிவம்விளையும் புலனாம் சிறுமைவளர் உடல்முழுதும் சிவம்ஒளிரும் உடலாம் திவளளவுப் புவனமெலாம் சிவபுவன மாகும் சினஞ்செருக்குப் பிறந்தஇடம் சிவஞ்செறியும் இடமாம் சிவனுருவை நினைக்குமனச் சிறப்பை என்ன சொல்வேன் செல்வமது செல்வமது விழுச்செல்வ மதுவே. 5 15. மன அடக்கம் உருவமற்ற ஒன்றைநீ உன்னலரி தென்றும் உருவமுற்ற ஒன்றைநீ உன்னலெளி தென்றும் உருஇயலை உன்இயலை ஊடுருவி ஆய்ந்தோர் உணர்ந்துவிட்டார் முன்னவர்கள் உணர்ந்த உண்மை இந்நாள் உருவமதில் ஒன்றுவையேல் ஊனுக்கிரை யாகாய் உருவமெனில் மனமேநல் லுருவுகொளல் வேண்டும் உருவமிலாச் சிவபெருமான் உருவெடுத்தான் அருளால் உன்னுதற்கே உரியஉரு உரியஉரு உன்னே. 1 தவனமுடி தவனமுடி சார்ந்தெண்ணு மனமே தண்ணிலவு வெண்மைவரி தவனமுடி மனமே பவளஉரு பவளஉரு படிந்துகிட மனமே பாதிமர கதப்பசுமைப் பவளஉரு மனமே கமலஅடி கமலஅடி கருதியொன்று மனமே கழற்சிலம்புக் கருணையடி கமலஅடி மனமே சிவனுருவை நினைமனமே சிவனுருவை மனமே சிவமாவை சிவமாவை சிவமாவை மனமே. 2 சிவபெருமான் திருவுருவைச் சிந்தனைசெய் மனமே சிந்தனையுள் சிந்தனையைச் செலுத்திஇரு மனமே தவநிலையாம் தவநிலையாம் தவநிலையாம் அதுவே தவநிலையில் கங்கையைப்பார் தருக்கழிவு நேரும் தவளமதி நினைஅறிவின் தனிமையொளி காலும் தழற்கண்டம் நம்பாவம் தணந்திறுகல் காட்டும் நவிரரவக் காட்சியிலே நல்லஅன்பு வழியும் நளினமலர் திருவருளாய் நயத்தல்பொரு ளாமே. 3 சிவத்தையே நினைமனமே சிவத்தைவிடுத் தோடின் தீமைபடை படையாகித் திரண்டடர்க்கும் சீறி அவத்தைவிளை பேராசை அலகைக்கிரை யாவாய் அழுக்காறு பகைமைஇகல் அனலெரியில் வதைவாய் சவத்துமுடை வீசிவீசிச் சார்ந்தழுகிப் போவாய் சாக்கடையாய்ச் சிறைநீராய்ச் சாம்புழுவாய் நெளிவாய் சிவத்தையே நினைமனமே சிவத்தையே மனமே தீமைஅணு காதுன்னைச் செகம்வாழ்த்தும் இனிதே 4 மனமேநீ மனிதரிடம் மலர்ந்தியங்கு கின்றாய் மற்றஉயி ரிடத்தினிலே மயங்கியிருக் கின்றாய் மனமுடையார் மனிதரென மாண்புலவர் கண்டார் மனிதருன்னை மந்தியென வைவதென்ன மாயம் மனமேநீ ஆசையினால் வாளாகி உலகை வதைக்கின்றாய் அதைவிடுத்தால் மனிதஇனம் வாழ்த்தும் கனஆசை அறநினைப்பாய் கண்ணுதலோன் அடியைக் கடியுமுன்றன் இயல்மாறிக் கருணைஎழும் நன்றே. 5 16. உலகம் உலகிலே உன்றன் ஒருபெய ராலே உற்றது பூசனை ஒருகால் பலபெய ரிடையே பரிந்தது சிவமே பரிவினால் இடர்விளை வில்லை கலையிலா மனத்தர் கருதினர் பின்னே கடவுளர் பலர்பல ரென்றே இலகிய பூசைக் கிடுக்குகள் நேர இடிந்தது பழம்பெரும் நிலையே. 1 ஓரிறை பல்பேர் உடுத்ததை உணரார் உறாமைகள் செய்தனர் அதனால் காரிருள் எழுந்து கட்டுகள் விடுத்துக் கண்களை மூடிய தறிவாய் பாரினில் மதப்போர் பரமநின் பேரால் பரப்பினர் பாவிகள் எங்கும் காரியங் கடந்த கண்ணுதற் பெரும கண்விழித் திடநினை யாயோ. 2 சிவசிவ உன்றன் திருப்பெயர் முன்னாள் செகமெலாம் முழங்கிய துண்டு தவமிலாப் பின்னாள் சாய்ந்ததம் முழக்கம் தலையெடுத் ததுகொலை முழக்கம் தவமுள பரத நாட்டினில் இன்றுந் தாண்டவம் புரிவதுன் நாமம் நவமுறும் உலகம் நண்ணுமோ பழமை நாதநின் திருவுளம் என்னோ. 3 பால்திகக் கடலில் பரவுநீல் நதியில் பற்றிய மற்றிடங் களிலும் மால்கழி லிங்கம் மருவுதல் காட்சி மாநிலப் பழமைநின் னெறியே கால்கொடு நமனைக் கடிந்தனை கண்ணால் காமனைக் காய்ந்தனை அன்று தால்கொடுக் குடையார் தருக்கினை இன்று தடிந்திடத் திருவுளம் எழுமோ. 4 சிவசிவ என்று சிந்தனை செய்க செப்புக முழக்குக உலகீர் பவநினைந் தலறிப் பத்தியால் உருகிப் பாடுக திருப்புகழ் நாளும் தவமுறும், பாவம் தழற்களம் ஏற்கும் சடைமுடி அமிழ்தினைச் சொரியும் நவையறுங் கொடிய நானறும் மூப்பு நரைதிரை மரணமும் அறுமே. 5 17. பாரதம் பாரத நாடு பழம்பெரு நாடு பத்தரும் சித்தரும் வாழ்ந்த நேரியல் நாடு நாடென நிமிர்ந்து நினைத்தலும் பேசலும் என்னே காரணி கண்டன் காரிழை பங்கன் கலைகளுங் கோயிலுஞ் செறியுஞ் சீரணி எங்குந் திகழ்ந்திடல் மூலம் சிவத்திரு நாடென ஆடே. 1 கண்ணினைக் கவரும் கருத்தினை ஈர்க்கும் கருணையார் பனிவரைக் கயிலை மண்ணிலே உயர்ந்த மறைபுகழ் தெய்வ மாநதி கங்கைசேர் காசி தண்கடல் அலையால் தமிழ்மறை முழக்கித் தவம்புரி திருவிரா மேசம் கொண்டநம் பரதம் குணவதி பாகன் குலவிய நாடெனப் பாடே. 2 எங்கணுங் கலைகள் எங்கணும் மறைகள் எங்கணும் முனிவரர் ஈட்டம் எங்கணுந் தவங்கள் எங்கணுங் கோயில் எங்கணும் எழுந்தநற் கொள்கை எங்கணும் ஏற்பே எங்கணும் இருத்தல் இனியநம் பாரதப் பெருமை அங்கணன் நெறியில் அரும்பிய பொதுமை அறத்திறம் ஆக்கிய மரபே. 3 கயிலைமால் வரையுங் கங்கையுங் கடலுங் காண்பவர் உளத்தினில் பொதுமை இயலுறும் அதனை இதயதா மரையில் எம்பிரான் இயற்றிடுங் கூத்தின் உயிரினை உணர்ந்தோர் ஓவியக் கோயில் உயர்கலை எடுத்தனர் அந்த வியலினைத் தாங்கும் விழுமிய நாடு வியன்பெரும் பாரத நாடே. 4 அலகிலா ஒளியாய் அருள்புரி அம்மை அப்பனாங் காட்சியை இயற்கை உலகினில் உயர்ந்த ஒருமலை இமய ஒங்கலாய் உதவுதல் எங்கே? மலையர சளித்த மாதிறை மணந்த மாக்கதைப் பிறப்பிடம் எதுவோ? மலைமுடி பரதம் மாதவ வைப்பு மாநில இன்னுயிர் உயிரே. 5 18. சீர்திருத்தம் எங்கெங்கும் நீங்காமல் இருக்கின்ற சிவமே எப்படியோ முனைப்பெழுச்சி இடைநுழைந்த தையோ தங்கியது தாக்குகிற தாக்குகளை அறிவாய் சாய்அதனைத் தக்கனது தலைசாய்த்த தேவே. 1 புலன்களிலே உழன்றுதிரி புறமனத்தைப் போக்கிப் புனிதமளி அகமனத்தைப் பொலிதரச்செய் தருளே கலன்களென்று பாம்புகளைக் கருணையுடன் பூண்ட காபாலி கண்ணுதலே கங்கைமுடி முதலே. 2 சோப்புகளால் சுரண்டிவிட்டால் தூயஉடல் வருமோ சொல்வேந்தர் அங்கமாலை சொல்லியரன் மேனிச் சேப்புருவை நினைந்துவந்தால் செழிக்கும்உடல் இனிக்கும் சிவனுருவை நினைமனமே சிவனுருவை மனமே. 3 திரைநரையைத் தீர்ப்பதற்குத் திரிந்ததையும் இதையும் தின்றுமென்று திரைநரையின் சேர்க்கைபெறல் அழகோ பரைவண்ண மாயிலங்கும் பரஞான நீற்றைப் பரிந்தணிந்து வரஉடலம் பவளவண்ண மாமே. 4 சாகாத பேறென்றும் சாமிகுரு வென்றும் சரிகின்றீர் அங்குமிங்கும் சாகரத்தில் ஆர்த்த ஆகாத நஞ்சுண்டும் அழியாத மெய்யன் ஆலகண்டம் நினைந்துருக அழியாமை உறுமே. 5 19 சீர்திருத்தம் எவ்வுயிரும் நீங்காமல் எழுத்தருளுஞ் சிவமே எவ்வாறு சாதிப்பேய் இடம்பெற்ற தந்நாள் எவ்வுயிரும் சமஉரிமை இனிமைபெற வேண்டும் இசைநாதப் பாம்பணிந்த இறையவனே அருளே. 1 மங்கையொரு பங்குடையாய் மதிகங்கை முடியாய் மாநிலத்தில் பெண்ணடிமை மருவியதென் அறிவோ நங்கையர்கள் ஆட்சிபெற்றால் நல்லுலகம் மலரும் நாதாந்த ஞானவித்து நாயகமே அளியே. 2 சகத்தினிலே சுரண்டுகின்ற சாம்ராஜ்யம் வீழச் சகலரையுங் காக்கவல்ல சமதர்மம் வாழ அகத்தழுக்குக் கழிந்தழிய அருட்புகழைப் பேச ஆசையுரு முயலகனை அடர்அறமே அருளே. 3 ஊனுண்ணா அருள்வளர உலகிடைப்போர் வறள உயிர்க்கொலைக்குச் சாலைஅமை ஊனஅர சோடத் தேனுண்ணும் மொழியணங்கு சிவகாமி மகிழத் தில்லைநடம் புரியரசே திருவுள்ளங் கொள்ளே. 4 குடிவகைகள் புகைவகைகள் குவலயத்துக் கேனோ குணங்கெடுக்குங் கணங்கள், நஞ்சு, கூற்றுருவம் பொன்ற வடிவளிக்கும் பால்பழங்கள் வகைவழிகள் பெருக வரத! அற விடையுடையாய் வரந்தருவாய் இன்றே, 5 20. அன்பு சிவபெருமான் எம்பெருமான் செல்வமிலாச் செல்வன் செல்வமெலாம் உயிர்க்கீந்த தியாகதெய்வம் அன்பே அவனமுடி சடைக்கூடை அணிஅரவம் அலங்கல் அத்தியுடை போர்வைபுலி யானையுரி எல்லாப் புவனமளி பெண்ணைமணம் புரிந்தமுனி உணவு பொதிநஞ்சம் கலனோடு பொதுச்சூழல் பேய்கள் பவனமிடு காடூர்தி பாறல்நட நொண்டி பரமஅன்புத் தத்துவங்கள் பத்தருக்கு விருந்தே. 1 அன்புசிவம் என்றுரைத்தார் ஆன்றோர்கள் முன்னாள் அநுபவத்தில் அதையடைதல் அரிதரிதே அந்நாள் அன்பு,கலை யாகவைத்தார் அநுபவத்தில் வரவே அருட்குன்றை முனிவரதில் அன்புபுல னாகும் கன்மனமுங் கனிந்துருகுங் காளத்தி மலையில் கருந்திண்ணர் ஏறுகின்ற காட்சிஅன்புக் காட்சி அன்புருவாய் இவர்கிறதே ஆனந்தக் காட்சி அன்புகண்ணாய் அப்பனுமாய் அலைகடலு மாச்சே. 2 அன்பேகண் ணப்பரென்றும் அவரேஅன் பென்றும் அங்குக்கண் ணப்பினவர் அரியகலைக் கீரர் கன்னிமொழிக் கல்லாடர் கருணைவழி மூவர் கனிந்தமணி வாசகனார் கால்வழியில் வந்தோர் அன்னவர்பால் ஊற்றெடுத்த அமிழ்தமெலாம் அன்பே அன்பன்றி வேறென்னை அவைதிரண்ட தேக்கம் அன்புருவாய்ச் சேக்கிழவர் அருள்பெரிய நூலே ஆழாழி கரையில்லா அன்பாழி அதுவே. 3 மெய்ப்பொருளை மெய்ம்மையிலான் குத்துகின்ற காட்சி மெய்யன்பு, கொலைஞருக்கும் அருள்சுரக்குங் காட்சி மெய்யுருக்கும் மனமுருக்கும் மேதினியு முருக்கும் வெல்லன்புக் காட்சியது சிவகாட்சி யாகும் ஐயரெறி பத்தர்சினந் தானையடர் கோலம் அரசன்வெகுண் டணிவகுத்தே அங்கடையுங் கோலம் செய்யிருவர் வாளுமன்பாய்ச் சிவமெழும்புங் கோலம் சிந்தனையில் நிலவவைக்குஞ் சிறந்தகலை வாழி. 4 அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவ மென்றே அன்பமைச்சர் எடுத்துவிட்டார் அழகுத்திருக் கோயில் அன்புசிவக் கோயிலதே அளப்பரிய கோயில் அக்கோயில் வழிபாட்டால் அகம்,அன்பு விளக்காம் அன்புவிளக் கங்கங்கே ஆரிருளைச் சீக்கும் அன்புசிவம் அடியவராய் அருள்புரியும் நன்றே அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவம் வாழி அன்புசிவம் அன்புசிவம் அன்புசிவம் வாழி 5 21. சிவ நாமம் சிவசிவ நாமத்தைச் சொல்லு - அது தவமுயர் செல்வமும் சாந்தமும் நல்கும் (சிவ) எல்லாங் கடந்தவன் ஈசன் - அவன் எங்கணுந் தங்கும் இயற்கை விநோதன் புல்லாகி நிற்கும் பொலிவை - நினைக்கப் பொங்கும் அவன்திறம் புந்தியில் நன்றே. (சிவ) 1 இயற்கை இறைவன் எடுக்கும் - இன்ப எழிற்பொழி காவிய ஓவியக் கோலம் இயற்கை விழிக்கு விளங்கும் - துன்ப ஏத விழிக்கதன் இன்னுயிர் தோன்றா (சிவ) 2 பவள மணிக்குன்ற மேனி - ஒரு பாதி பசும்பொழில், பான்மதி காணும் தவன முடிநீல கண்டம் - இது சங்கரன் சித்திரம் சாந்தஅ மைப்பே. (சிவ) 3 சிற்பச் சிவத்தின் தியானம் - இனி செழுமை இயற்கைச் சிவத்தினைக் கூட்டும் பொற்புள் இயற்கையைப் போற்றின் - தனிப் புனிதச் சிவமுணர் போதும் உறுமே. (சிவ) 4 கல்லால் மரத்து நிழலில் - ஒரு காட்சி கருணைகை காட்டுதல் காண்பாய் கல்லாக் கலைபயில் பள்ளி - அது காணாத காட்சியாய்க் காட்டுஞ் சிவமே. (சிவ) 5  காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சமரச சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______ திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 1883 பிறப்பு (ஆகடு 26) 1891 சென்னை இராயப்பேட்டையில் தொடக்கப் பள்ளியில் சேர்தல் 1894 வெலி பள்ளியில் சேர்தல். நோயால் கல்வி தடைப்படுதல். நான்கு ஆண்டுகள் பள்ளிக் கல்வி இல்லை. 1898 - 1904 மீண்டும் வெலி பள்ளியில் சேர்தல். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால் இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார். 1901-1906 யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயிலுதல் 1907 கதிரைவேலர் மறைவு. 1907-1908 பென்சர் கம்பெனியில் பணி 1908 கதிரைவேலர் வரலாறு (முதல் நூல்) எழுதுதல். 1908-1910 மயிலைப் பெரும்புலவர் தணிகாசல முதலியா ரிடம் தமிழும் சைவ சாத்திரங்களும் பயிலுதல். பெரியபுராணத்தைக் குறிப்புரையுடன் சிற்றிதழ் களாக வெளியிடத் தொடங்குதல். 1908 நீதிபதி சதாசிவ ஐயர் தொடர்பு 1910 அன்னி பெசண்ட் அம்மையாரைச் சந்தித்தல். (அம்மா என்றே திரு.வி.க. இவரைக் குறிப்பது வழக்கம்) 1910 - 1916 வெலி பள்ளியில் ஆசிரியப் பணி 1912(செப் 13) திருமணம் - மனைவியார்: கமலாம்பிகை 1914 சுப்பராய காமத், எ.சீனிவாச ஐயங்கார் தொடர்பு 1915 பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தோற்றம். 1916 - 1917 வெலி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர். 1917 தொ.ச. தலைவர் பி.பி.வாடியா தொடர்பு: இத் தொடர்பே திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடக் காரணமாயிற்று. 1917 கல்லூரிப் பணியை விடுத்தல், திசம்பர் 7-ல் தேசபக்தன் ஆசிரியர் ஆதல். 1918 (ஏப்ரல் 27) இந்தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் (சென்னைத் தொழிலாளர் சங்கம்) தோன்று தல். திரு.வி.க. துணைத் தலைவர். செப்டெம்பர் முதல் நாள் மனைவியார் கமலாம்பிகை மறைவு 1919 (மார்ச் 18) காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தல். (அக் 11) பெரியார் ஈ.வே.ரா.வின் நட்பைப் பெறுதல். (டிச. 17) லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ. சிதம்பர னாருடன் சென்று காணுதல். 1920 மத்தியத் தொழிலாளர் சங்கத் தோற்றம். சூலை இறுதியில் தேசபக்தன் நிலையத்தை விடுத்து நீங்குதல். அக்டோபர் 22இல் நவசக்தி தொடங் குதல். 1921 சூலை மாதம் ஆளுநர் வில்லிங்டன் அழைத்துக் கடுமையாக எச்சரித்தல். நாடு கடத்தப்படுவார் என்ற நிலையில் சர்.தியாகராய செட்டியார் தலையிட்டால் அத்தண்டனை நிறுத்தப்படுதல். 1925 (நவம்பர் 21, 22) தமிழ்நாடு காங்கிர வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சீபுரத்தில். தலைவர் திரு.வி.க. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டிலிருந்து வெளியேறுதல். இதன் விளைவாகத் தமிழக அரசியலில் பெருமாறுதலுக் கான திருப்பம் ஏற்பட்டது. 1939 காங்கிர ஆட்சியிலும் பக்கிங்ஹாம் ஆலை வேலைநிறுத்தம். 1943 அறுபதாண்டு நிறைவு மணிவிழா 1944 திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவருதல் 1947 சூன் 9 முதல் திசம்பர் 7 வரை காங்கிர ஆட்சி யில் திரு.வி.க.வுக்கு வீட்டுச் சிறைவாசம். 1949-50 ஒரு கண் பார்வை முதலில் மறைந்து, பின் இரு கண்களுமே பார்வை இழத்தல். 1953 செப்டெம்பர் 17-ல் மறைவு. நன்றி : சாகித்திய அக்காதெமி  குறிப்புகள் 1. சமய வெறி - சமயநெறி என்னுஞ் சன்மார்க்கத்தைக் கெடுத்து மக்களை விலங்காக்குவது. 2. கதிர் - ஞாயிற்றின் கதிர். நிலவு - திங்கள் நிலவு. பண்ணிசை (போலும்) காதல்போலும். தண்ணதி (போலும்) மேகவோட்டம் (போலும்) தமிழ்மொழி பாட்டேபோலும். இப்பாட்டிற் போந்துள்ள உவமப் பொருள்கள் யாவும் சுதந்திரத்துக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டவை. 3. மால் மலைகள் - பெரிய மலைகள். மண்கம்பம் - பூகம்பம். ஒன்னலர்கள் - பகைவர்கள். வான்மருவ - விண்ணேக; இறக்க. 1. மலைகளிலே உயர்மலை - இமயமலை. மாநதியுள் வான்நதி - கங்கை. மறைமுடி - உபநிடதம்; வேதாந்தம். 2. கன்னன்- கர்ணன். பஞ்சவர்கள் - பஞ்சபாண்டவர்கள். பரித்த - காத்த; தாங்கிய. 3. வாகடம் - வைத்தியம். 4. அந்தம் - அழகு; தெய்வத் திருவருட் பொலிவு. 5. ராமாபாய் - பண்டிதை ராமாபாய். இவ்வம்மையார் கிறிதுவின் திருவருளால் பலதிறப் பணிகள் செய்தவர். அலிசோதரர் தாய் - அலி சகோதரர்கள் என்று வழங்கப்படும் ஷாக்குத் அலி மகம்மத் அலி இவர்களின் அன்னையார்; இவ்வம்மையார், 1921-1922ம் ஆண்டுகளில் வீறிட்டெழுந் தியங்கிய ஒத்துழையாமையில், தமது முதுமையைச் சிறிதுங் கருதாது, அதிதீவிர நெறி நின்று, அறப்போர் புரிந்த வீரத் தாயார். கத்தன் - கர்த்தன். கதூரி - கதூரிபாய். இவர், காந்தியடிகள் மனைவியார். கவின் மதர்த்த - அழகு செழித்த. சரள தேவி - சாரளாதேவி சவுத்ராணி. கனகமயில் - பொன் மயில். சித்திரக்கண் - பாட்டோவியத்திற் கண்ணுடைய; இயற்கைச்சித்திரக் கண்ணமைப்பும் சரோஜினி தேவியார்க்கு உண்டு. 6. தத்தர் - இராமேச சந்திர தத்தர். கோகுலர் - கோபால கிருஷ்ண கோகலே. 7. பிரமசபை - பிரம சமாஜம். பரிதி - சூரியன். பரன் இயற்கை - பரனுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பு உயிர் உடல் போன்றதென்க. பரனை உயிராகவும் இயற்கையை உடலாகவுங் கொள்க; இயற்கைவழி இறைவனைக் காண்டலே அறிவுடைமை; ரவீந்திரநாத் தாகூர் பாடல்கள் இயற்கைவழி இறைவனைப் புலப்படுத்துவனவா யமைந்திருக்கின்றன. பான்மதி - பால்மதி. மதி - சந்திரன். 8. போ - ஜகதீச சந்திரபோ; இவர் தாவரத்தில் உயிருண்மை கண்டவர். சந்திரரே - பிரபுல சந்திரரே; இவர் ஒரு பெரும் விஞ்ஞானக் கலைஞர். ராமாநுஜர் - கும்பகோணம் இராமாநுஜாச்சாரியார்; இவர் கணிதஞானத்தில் வரம் பெற்றவர். 1. போரூரன் மலை - திருப்போரூர் முருகன் மலை. பார் ஊரும் பார்வை - உலகப் புறப்பொருள் தோற்றம். பைய - மெல்ல. கார் ஊரும் - மேகம் தவழும். கனகம் - பொன். 2. அரிஇருக்கை - சிம்மாசனம். என்னை ஈன்றவள் தன் - என்னைப் பெற்ற பாரதத் தாயின். காய்வர்களோ - கோபித்துச் சீறி விழுவார்களோ. அரிவையர்கள் - அரிவைப் பருவப் பெண்கள். 3. பெருநதிகள் - மெஸோரி, மெஸபி நதிகள். ஆனாத - நீங்காத; கெடாத. தேனாறும் - தேன் நாறும். 4. என்னாட்சி கதிர்மறைதல் இல்லை - இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சூரியன் மறைவதில்லை என்பதை குறிப்பது (The Sun never sets in the British Empire) கதிர் - சூரியன். என்னிலத்தின் . . . . . - நிலப்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும், ஆகாயப்பரப்பிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஒப்பாகவோ அதிகமாகவோ பிறிதொன்றில்லை என்று இறுமாந்து கூறியவாறு. அன்னை இன்மை - பாரதத்தாய் அச்சபையில் இல்லாமை. அவண்- அவ்விடத்திருந்து. குமுறி - உள்ளங் குமுறி. மழை - கண்மழை. ஈர்ம்பொழில் - குளிர்ச்சி பொருந்திய சோலை. 5. பூவில் - பூமியில். தொன்மை - பழமை. நிறை - ஒழுக்கம். கொடி - கொடி போன்ற பாரதத்தாய். குடுமி - கோடு; உச்சி. அணங்கு - பெண் (பாரதத்தாய்). அன்பில் - அன்புபோல். உந்து - செல்லும்; தள்ளும். அம்மை (பாரதத்தாய்) 6. குழு - கூட்டம். ஆடல் ... அன்னை - நடன நுட்பங்களின் அரிய கலைகளை முதல் முதல் உலகிற்கு அளித்த பாரதத்தாய். புள் - பறவை. பண்ணின்... பாவை - இசை இயலை உலகிற்கு (முதல் முதல்) அன்புடன் தந்த பாரதத்தாய். புயல் திரள்காள் - மேகக்கூட்டங்களே! மேகக்கூட்டங்களின் ஓட்டம் உரிமைக்கு அறிகுறியென்க. உரிமை ... ஒருத்தி - சுதந்திரத்தின் இயல் உலகிலுள்ள எல்லா உயிர்களையும் உடன் பிறப்பாகக் கொண்டு அன்பு பாராட்டல் (Universal Brotherhood) என்று அறிவுறுத்திய ஒப்பற்ற பாரதத்தாய். (ஒரு நாட்டார் ஒரு நாட்டாரைப் பற்றியாளுதல் உரிமைக்கு அதாவது உலக சகோதர நேயத்துக்கு ஊறு செய்வதாகும் என்பது. பாரதநாடு அறிவுறுத்தும் உரிமைத் தருமம் உலக சகோதர நேயமென்று குறித்தவாறாம்.) 7. வரை - எழுதும். சுவைமணி - நெல் கம்பு கேழ்வரகு முதலியன. பாரத பூமியினின்றும் பொன்னும் நவமணியும் பிற மணிகளும் சுரத்தலால், பாரதத்தாயின் உடலைச் சுரங்கமென்றது காண்க. 8. ஒருமனம் - ஒருமைமனம். ஏக்கு - ஏக்கம். புரி - விரும்பும். கங்காளி - தசைவற்றிய எலும்புடல் உடையவள். துச்சில் - ஒதுக்கிடம். கம்பலை - நடுக்கம். 9. வண்மை - வரையாது வழங்கும் குணம். கடிஅரண் - பகைவர்களைக் காய்ந்து தேசத்தைக் காக்கும் கோட்டை முதலியன. தளை - விலங்கு; கட்டு. படியினிலே - உலகிலே. பாவையர்தம் அடிமை - பெண்ணடிமை. உடன்பிறப்பு அன்பை கொல்ல - சகோதர நேயத்தை அழிக்க. குலைந்தது - சிதைந்தது. 10. மன்பதையில் - மக்கட் பரப்பில்; உலகில். குருதி - இரத்தம். ஈரல் - இராஜ உறுப்புக்களில் ஒன்று; இது நன்றாயிருத்தல் வேண்டும்; இதன்கண் சவலையோ குலைவோ உறுதல் ஆகாது; உறின் உடல்நலங் கெடும். 11. மைந்தர் - என் பிள்ளைகள் ( பாரத புதல்வர்கள்). கவல்கின்றேன் - துக்கிக்கின்றேன்; வருந்துகின்றேன். மற்றப் பண்மொழியார் - மற்றப் பெண்ணரசிகள் (மற்ற நாடுகள்.) 12. என்னாட்சி - எனக்குரிய ஆட்சி. அதாவது சுயஆட்சி. தன்னாட்சி - சுயஆட்சி. சுய ஆட்சிக்குச் சுதேசியம் இன்றியமையாததாகலின், அந்நியத்தில் தாங்குவதிலில்லை என்றபடி. அயல்நாட்டு மக்களுங் கடவுள் படைப்புக்கு உட்பட்ட சகோதரர்களாதலினாலும், அவர்களைத் தாக்குவது உரிமைக்குரிய அன்புநெறி யாகாதாகலானும் அந்நியரைத் தாக்கலிலும் இல்லை என்றபடி (அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்துச் சுதேசியத்தை மட்டும் ஒம்பல் வேண்டு மென்பது). மன்னாட்சி - நிலைபேறான சுய ஆட்சி. 13. எழில் - அழகு. விழுமிய - சிறந்த; மேலான. 1. வேலை - கடல். தேங்கமழும் - தேன்கமழும்; பாலி - பாலாறு. பொன்னி - காவிரி. பொருநை - தாம்பிரபரணி. 2. பின் - பின்னும். கன்னல் - கரும்பு. கமுகு - பாக்குமரம். 3. பூவை - நாகணவாய்ப் பறவை. பொருந்து அமிழ்த நாடு. வெள்வளை - வெண்சங்கு. பாண் - இசைப்பாட்டு. பரவை - கடல். 4. மான்மதம் - கதூரி. மான்கோடு - மான்கொம்பு. மிடை - நெருங்கு. மயிர் பருத்தி முதலியவற்றால் ஆடைகளும், பாலாவி போன்ற நூல்களால் அழகிய உடைகளும் பண்டைநாளில் நெய்யப்பட்டன; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் - கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் - சிலப்பதிகாரம். ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் - பெரும்பாணாற்றுப்படை. (பாலாவியை யொத்த, விளங்குகின்ற நூலாற்செய்த துகில்களை - நச்சினார்க்கினியம்). (பாம்பினது தோலையொத்த துகில்களும், மூங்கில் ஆடையை யுரித்தாலொத்த உடைகளும் பழந்தமிழர்களால் நெய்யப்பட்டு வந்தன. அரவுரியன்ன அறுவை நல்கி - பொருநராற்றுப்படை. காம்பு சொலித் தன்ன மாசில் அறுவை உடீஇ - சிறுபாணாற்றுப்படை). 5. இமய வேர் - இமய அடி; இமயச் சாரல். கண்ணகிக்குக் கோயில் அமைக்க இமயத்திலிருந்து கல்கொணர்ந்தவன் சேரன் செங்குட்டுவன். இமயம் வென்று புலிக்கொடி நாட்டியவன் கரிகாலன். முன்னே அறியாமையால் கோவலனைக் கொல்வித்துப் பின்னேதான் புரிந்தது நேர்மை இயல் இல்லாத கொலை என்று கண்ணகியால் உணரப்பெற்றதும் உயிர் துறந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். நெகிழ் கொடிக்குத் தேரளித்தவன் பாரிவள்ளல். பேரிடரில் தன் தலையையுங் கொடைசெய்ய வாளெடுத்தவன் குமணன். தமிழ் மன்னர்கள் புலவர்களைப் போற்றியதைச் சங்க நூல்களிற் காண்க. 6. முதியவள் - இவள், நரம்பு தோல் வற்றிய நிலையில், தன் புதல்வன் போரில் புறமுதுகிட்டான் என்று கேள்வியுற்றதும், அவனுக்குப் பாலூட்டிய மார்பை யறுப்பேன் என்று வீராவேசத்துடன் வாள் தாங்கிப் போர்க்களம் புகுந்து, சோதித்தபோது, புதல்வன் மார்பில் காயமுற்று இறந்தமை கண்டு, அவனை ஈன்றபொழுதினும் பெரிதும் உவந்தவள். புதல்வனைப் போர்க்கனுப்பிய தாய் - இவள், கணவன் போரில் மாண்ட மறுநாளே, மாற்றார் செருப்பறையொலி கேட்டுப் புதல்வன் தலைமயிர் நீவி, அணிசெய்து, அவனைப் போருக்கனுப்பியவள். வெள்ளி வீதியார், அவ்வையார், எயினியார் - இவர்கள் சங்க காலப் பெண் புலவர்கள். நறவு - தேன். புனிதவதி - காரைக்காலம்மையார், நங்கை ஆண்டாள் - மகளிருட் சிறந்த ஆண்டாள். ஞான மங்கை - மங்கையர்க்கரசி. மங்கம்மாள் - மதுரை நாயக்கர்கள் வழிவந்த பெண்ணரசி; மதுரையில் இவ்வம்மையார் அறநிலையங்களுண்டு. 7. மலையமுனி - அகத்தியர். மூன்று தமிழ் - இயல் இசை நாடகத் தமிழ். மார்க்கண்டனார் கோதமனார் வான்மீகனார் - இவர்கள் தலைச் சங்கத்துப் புலவர்களென்றும் தமிழ் ஓத்துக்கள் தந்தார்களென்றும் நச்சினார்க்கினியர் கூறுப. அகம் இறை - அகப்பொருள் அல்லது களவியல் அருளிய இறையனார். கீரன் - நக்கீரன். சிலம்பில் மகிழ்ந்தவர் - இளங்கோ அடிகள்; இவர் அண்ணன் சேரன் செங்குட்டுவன்; இவர்கள் தந்தைபால் ஒரு சோதிடன் போந்து, நின்னரசு இளையவனுக்குச் செல்லும் என்றதைக் கேட்ட இளங்கோ அரசு அண்ணனுக்கே செல்க என்று துறவு பூண்டு அடிகளாயினர்; அரசையுந் துறந்த மனம் சிலம்பில் படிந்து சிலப்பதிகாரம் என்னுங் காவியம் பாடி மகிழலாயிற்று; இது தமிழின் பெருமை. மேகலையில் செல்மனத்தர் - சீத்தலைச் சாத்தனார்; இவர் கூலவாணிபர்; கூலம் - தானியம்; பலசரக்கு; எண்வகைக் கூலமாவன:- நெல்லுப் புல்லு வரகு தினை சாமை யிறுங்கு தோரை கழைவிளை நெல்லே என இவை. இனிக் கூலம் பதினெண் வகைத்தென்பர் கூத்த நூலார். என்னை? பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக என்றாராகலின்: பலசரக்கென்பாருமுளர் - அடியார்க்கு நல்லார். கூலவாணிபர் மனம் எங்கே படிந்து கிடக்கும்? விலை மலிந்த வாணிபத்தி லன்றோ? அவ்வாணிப மனத்தையும் மணிமேகலை ஈர்த்துவிட்டது; இது தமிழின் பெருமை. சிந்தாமணி விழைந்தவர் - திருத்தக்கதேவர். இவர் முற்றத் துறந்த முனிவர்; இத்துறவு மனமும் இன்பச் சுவை மலியச் சீவகன் கதையைப் பாட விழைந்தது. இதுவுந் தமிழின் பெருமை. 8. கல்லாடம் மலையாக நிற்கிறது. கம்பர் கவி சோலையாகப் பொலிகிறது. சேக்கிழார் பாடற் றிங்கள் நிலவு கால்கிறது. வில்லியின் பாட்டு, சந்த அலை வீசி அருவியாக ஓடுகிறது. பரஞ்சோதி ( திருவிளையாடல்) கனிச்சுவை யொழுகுகிறது. வீரமாமுனிவர் (தேம்பாவணி) தேன் பாய்கிறது. உமார் புலவரின்(சீராப்புராணம்) கன்னல் (கரும்புச்) சாறு சொரிகிறது. எல்லாவற்றையுஞ் சேர்த்துக் கச்சியப்ப முனிவர் விருந்து செய்கிறார்; சுற்றி வந்த - மேல்நாட்டினின்றுஞ் சுற்றிவந்த. 9. மூலர் - திருமூலர்; சித்தமறை யென்று வழங்குந் திருமந்திரஞ் செய்தவர்; பால்குமரர் - பால்மணமறாத இளங் குமரகுருபரர். பிரகாசர் -துறைமங்கலம் சிவப்பிரகாசர். அருணகிரி - அருவிச்சாரல் போல வண்ணப்பாக்களைப் பொழிந்தவர். 10. பேருரையர் - பேராசிரியர். அடிநல்லார் - அடியார்க்கு நல்லார். பூரணனார் - இளம்பூரணர். வரையர் -சேனாவரையர். அழகர் - பரிமேலழகர். இனியர் - நச்சினார்க்கினியர். சங்கரனார் - ஆதிசங்கராச்சாரியார். உடையவர் - இராமாநுஜாச்சாரியார். 11. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - கார்மேகம் போலக் கவிகளைப் பொழிந்தவர்; சுப்பராய செட்டியார், தியாகேசஞ் செட்டியார், சாமிநாதையர் முதலிய பெரும் புலவர்கள், பிள்ளையவர்களுடைய மாணாக்கர்கள். திருவாமாத்தூர் தண்டபாணி சுவாமிகள் பல்லாயிரக்கணக்கில் சந்தப்பாக்கள் பாடியவர். ஆறுமுக நாவலர் கல்வி அறிவு ஒழுக்கத்தில் கடல்போன்றவர். 11. கிருஷ்ணர் - நந்தனார் கீர்த்தனை பாடிய கோபால கிருஷ்ணையர். கவிராயர் - இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர். தேநாற்று - தெய்வமணம் வீசும். முத்து - முத்துத் தாண்டவராயர். தியாகர் - தியாகையர்; இவர் தெலுங்கு மொழியில் கீர்த்தனம் பாடியவர்; திருவையாற்றில் வதிந்தவர். சிந்து - காவடிச் சிந்து. வேதநாயகனார் - வேதநாயகம் பிள்ளை. 12. கால்ட்வெல் - இவர் தமிழாய்ந்து தமிழ் வரலாறு தந்தவர். போப் - இவர் திருவாசகம் திருக்குறள் முதலிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். பர்வல், வின்லோ - இவ்விருவரும் அகராதியால் தமிழ் வளர்த்தவர். கனகசபை - இவர் ‘The Tamils, Eighteen hundred years ago’ என்னும் ஆராய்ச்சி நூல் செய்தவர். (கண்கள் மூன்று. அவை கல்விக்கண், ஆராய்ச்சிக்கண், ஞானக்கண் என்பன. கல்விக்கண்ணி னின்றும் மலர்வது ஆராய்ச்சிக் கண்.) தாமோதரன் - இவர் சங்கநூல் பலவற்றை அச்சி லேற்றி உபகரித்தவர்; நோன்பிற் சிறந்தவர். மணீயச் சுந்தரவேள் - மனோன்மணீயம் என்னும் நாடக நூலை எழுதிய அறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள். மால் - பெருமை. பாண்டித்துரை - மதுரையிலுள்ள தற்போதைய தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். மாண் புதினத் தந்தை சுப்ரமண்யன் - தமிழ்நாட்டில் முதல் முதல் பத்திரிகை வெளியிட்ட ஜி. சுப்பிரமணிய ஐயர். சால்பு அரங்கநாத கணி தழைத்த கலை - பூண்டி அரங்கநாத முதலியார்; இவர் கணிதத்தில் பேரறிஞராக விளங்கியவர்; கணிதக் கலையோடு வேறு கலைகளின் புலமையுந் தழைக்கப்பெற்றவர்; கச்சிக் கலம்பகம் முதலிய நூல்களை யாத்தவர். தனிக்கணித ராமாநுஜன் - கும்பகோணம் இராமாநுஜாச்சாரியார்; இவர் கணிதத்தில் தனிப்பெரும் புலமை பெற்றிருந்தவர்; இவர் தங் கூர்த்தமதி கண்டு சென்னைச் சர்வகலாசாலையார் இவரை இங்கிலாந்துக் கனுப்பினர். இவரது கணித ஞானம் ஞாயிறுபோல் ஒளிவீசத் தொடங்கியபோது, இவர் இறைவன் சேவடி சேரலானார். 13. கூடல் - மதுரை. அரிநாயன் - அரியநாயக முதலியார்; இவர் சேனாதிபதியாயிருந்தவர். ஊமன் - ஊமையன். 13. பச்சையப்ப முதலியாரும் செங்கல்வராய நாயகரும் தங்களுக்குள்ள பொருள் களெல்லாவற்றையும் கல்விக்கென வழங்கிய வள்ளல்கள். முத்துசாமி - நடுநிலை நின்று நீதி வழங்குவதில் பேர்பெற்றவர்; சென்னை ஹைகோர்ட்டில் முதல் முதல் அமர்ந்த இந்திய நீதிபதி இவரே. பாரதி- சுப்பிரமணிய பாரதி; இவர் வீர ரசஞ்சொரிய நவமுறையில் சுதேச கீதங்கள் பாடியவர்; இவர் தம் பாட்டில் தமிழ் வீர நடனமுண்டு. 15. யாதும் மூரே யாவருங் கேளீர் - புறநானூறு. எவ்வுயிர்க்கும் அன்பு செய்க (எவ் வுயிர்க்கும் அன்பாயிரு) - சைவசமய நெறி. குலந்தெய்வ மொன்றே (ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்) - திருமூலர் திருமந்திரம். ஒக்கு முயிர் பிறப்பு (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) - திருவள்ளுவர் திருக்குறள். நாதன் அன்பு (அன்பே சிவம்) - திருமூலர்; நீதி - (இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது நீதி பலவும் - தன்ன வுருவா மென மிகுத்ததவன்) - திருஞானசம்பந்தர்; இன்பு (ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை யன்பே) - மாணிக்க வாசகர்; நட்பு - ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்) - சுந்தரமூர்த்தி, நாமார்க்குங் குடியல்லோம் - அப்பர். தீதில்லா மொழி (அவையல் கிளவி முதலியன - தொல்காப்பியம்) செந்தண்மை -(அந்தண ரென்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் - செந்தண்மை பூண்டொழுக லான்) - திருவள்ளுவர். 2. உயிர்ப்பு - பிராணன். (என்னுளே யுயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு - அப்பர்) 3. தால் - நா. 6. அரி - சிங்கம். வலி- வல்லமை. 8. இன்னாத - இனிமையில்லாத; கொடிய; தீமைபொருந்திய. சிறைநீர் - கட்டுப்பட்ட நீர் (Stagnant Water) 10. மலர், மணத்தை யறியாது என்பது பழமொழி. 11. இமிழ் - ஒலிக்கின்ற. திரை - அலை; கடல். 12. வீழ்ந்தது எனில் - வீழ்ந்தமை காரணம் என்றால். (அமிழ்தொதுக்கி நஞ்சுண்ணும் அறியாமைக்குக் காரணம், பசுந் தமிழ்த் தாய் பல்லாண்டாய் அடிமையிலே வீழ்ந்தது எனில்). 13. புண்ணிற் புளிபெய்தாற் போல என்றபடி. 15. ஈண்டில் - ஒன்றுபடின். இடர்ப்பனிகள் - இடராகிய பனிக் கூட்டங்கள். ஒளி (சூரியன்) முன் பனியோடும் என்க. 16. தாய்ம்மொழியின் வாழ்விழந்த உடலுயிர் பொலிவிழந்து சவலையுறும் என்றபடி. 17. தமிழருக்கு உயிர் எது? தமிழ். 18. சிலம்பு - சிலப்பதிகாரம். மேகலை - மணிமேகலை. சிலம்பும் - ஒலிக்கும். 25. மேலை - மேல்நாட்டு. இழை ஆம் - அணி (ஆபரணம்) ஆகும். 1. புனல் - நீர். அளியினுக்கு - குளிர்ச்சியினுக்கு (அன்பினுக்கு).தெறலுக்கு- அழிவுக்கு (வெம்மைக்கு). திறலுக்கு - வலிமைக்கு (போருக்கு) வளி - காற்று. 2. வெளி - ஆகாயம். இருசுடர் - சூரிய சந்திரர்கள். வெயில் - சூரியஒளி; வெம்மை. நிலவு - சந்திர ஒளி; தண்மை. உடலும் உயிரும் ஒன்றியபோதே அறிவு விளக்கம் உறுதலான் தெளிவினுக்கே உடலுயிராய் என்றபடி. திகழனையாய் - திகழ் அன்னையாய். பிறராகி - மற்ற மற்ற உறவினர் முதலியவராகி. 3. எமை - உயிர்களாகிய எம்மை, ஈன்று புரந்துவரும் - பெற்றுக் காத்துவரும். 4. கலகமிலா உளங்கொண்டு எங்குங் கலந்துங் கடந்தும் நிற்கும் பரம்பொருளை முதல் முதல் கண்டவர்கள் பாரத புதல்வர்கள் என்றபடி. 5. ஆயும் - ஆராய்ந்து தெளியும். செவ்வி - காலத்துக்குரிய; அழகெனினுமாம். 8. ஒரு குலத்தார்க்கு - இந்தியர்க்கு. புரப்பது - காப்பது. 14. இவண் - இவ்விடத்தில். 16. கருஞ்சட்டம் - ரௌலட் சட்டம். நள்ளிரவு - நடுராத்திரி(ரௌலட் சட்டம் பிறந்தது நள்ளிரவில்). கரிய வரை நாகம் என - கரிய மலைப்பாம்பு போல. 17. தவமுதல்வர் - காந்தியடிகளின். உவணன் - கருடன். 18. இளஞாயிறதை - இளஞ்சூரியன் போன்ற சத்தியாக்கிரகத்தை. வெடிகுண்டு - வெடிகுண்டுகள் முதலியன. 19. பஞ்சநதம் - பஞ்சாப். இரத்த நதம் - இரத்த ஆறு. நதம் - மேற்குத் திக்கு நோக்கிப் பாயும் ஆறு. இரிந்தது - சிதறுண்டது. 21. குலம் - இந்தியக் குலம் (Indian Nation) 5. அந்தணன் - அந்தணரென்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் - செந்தண்மை பூண்டொழுக லான் - திருவள்ளுவர். 48. உண்மை கடைப்பிடித்தல் - சத்தியாக்கிரகம். 79. காந்தியடிகளில் - ஒளி பொருந்திய பாதங்களில். 7. சாந்தம் சாந்தம் இமயமலை - இமயமலை அல்லது தியானம் என்னும் நூலிற் காண்க. 9. வரைவும் - ஓவியமும் (சித்திர வரைவும்). 22. சாதி மதச் சச்சரவுகள் சன்மார்க்கத்தை நீக்குமென்க. சன்மார்க்கம் - சத்மார்க்கம்; கடவுள் நெறி. 31. மென்மொழி - மென்மைமொழி; வன்மையில்லாத மொழி. 32. சிலம்பு - சிலப்பதிகாரம். 39. முன் - நஷத்திரங்கள். 1. தளை - கட்டு; விலங்கு. 2. இடமொழி - அவ்வவ்விடத்தில் தோன்றிய அவ்வம்மொழி. (ஒரு மொழியை மற்றொரு மொழியார் கொல்லுதல் இயற்கைக்கு மாறுபடுவது என்றபடி). 3. கதிர்குளித்து - சூரிய ஒளியில் நானஞ் செய்துகொண்டு. நாஞ்சில் - கலப்பை. நாஞ்சில் உழ - ஏர் உழ. நகை - சிரிக்கும்; எள்ளும். அடிமைக்கோல் உருட்டல் - அடிமைக்குரிய எழுதுகோலை (பேனாவை) உருட்டல்; (இயந்திரம்போல ஒரே இடத்திலிருந்து கணக்கெழுதல் முதலியன உரிமையுணர்வையே கெடுக்கின்றன; சின்னாளில் அக்கட்டுப்பட்ட தொழில், கற்ற கல்வியையும் மறக்கச் செய்கிறது. இவ்வடிமைத் தொழிலுக்கெனவே தற்போது கல்வி என்பது வழங்கப்படுகிறது. இவ்வடிமைத் தொழிலினும் உழவுத் தொழில் சிறந்தது; உரிமையுடையது). ஒன்ற - ஒருமைப்பட. 5. பொருது ஆர்க்கும் - போர்செய்து ஆரவாரிக்கும். முதல் - முதலாளி (Capital). தொழில் - தொழிலாளி. (Labour) 7- 8. மண் . . . . உயிரும் - இவை எட்டும் ஆண்டவன் உடல்; அட்டமூர்த்த மெனப்படும். 14. மூலஒலி - பிரணவம். 15-17. இயற்கையே முருகன் ஏறும் நீலமயில் என்க. முருகன் இயற்கையை இயக்குவோன் என்பது உட்பொருள். 17. இச்சை - இச்சா சக்தி; வள்ளி. கிரியை - கிரியா சக்தி; தெய்வயானை. தத்துவ நுட்பங்களை உருவகப்படுத்திக் கூறல் மரபு. 18. மூன்று மலம் - ஆணவம், கன்மம், மாயை, மூன்று சூர் - சூரன், சிங்கமுகன், தாரகன். மும்மலங்களை மூன்று சூரர்களாகச் சொல்வது பௌராணிகம். இக்குறிப்பு வேறிடத்திலும் வருதல் காண்க. 20-21. புலன்கட்கும் மனத்திற்குமுள்ள தொடர்பு வெளிப்படை. புலன்கள் மருள்வழியில் உழலும்போது மனமும் அவ்வழி யுழல்வதும், புலன்கள் அருள்வழி நிலவும்போது மனமும் அவ்வழி நிலவுவதும் இயல்பு. அருள்வழி நிலவும் புலன்கள், மனத்தை மருள் வழியுழலச் செய்யாது, அருள்வழியில் நிறுத்தலான், இங்கே மான வைம்புலன்கள் மருள் மனம் நீக்கி அருள் மனம் புலஞ்செய என்று சொல்லப்பட்டது. புலன்கள் ஐந்து; மனம் ஒன்று; ஆக ஆறு. இவ்வாறும் ஆறு முகங்களாகும். முக்குற்றத்தினின்றும் நீங்கி, வாய்மையில் நின்று ஞானத் தெளிவு பெறுவோர் அருள்வழியில் ஆறறிவுடன் விளங்குவரென்க. அஞ்சு முகந் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என வரூஉந் திருவாக்கின் உட்பொருளை ஓர்க. 27. அந்நிலை - ஒருமை நிலை. 47. அம்மொழி வேட்டு - அவ்வொரு மொழி விரும்பி. 57. குரவர் - குருமார். (சமயாசாரியர் பலர் கூற்றுக்கள் சொல்லால் வேறுபட்டிருப்பினும், கருத்தால் அவை யாவும் ஒருமைப்பாடுடையன என்றபடி) 59. சமய வாதங்களில் கருத்திருத்தாது, சமயங்கள் யாவும் ஒருமுகமாக அறிவுறுத்துந் தொண்டில் கருத்தைச் செலுத்தல் வேண்டுமென்பது. 60. இயற்கை வழிநிற்றல் இறைவன் திருவடியை வழிபடுதலாகும். 62. கருதியது அருளே - திருவுளங்கொண்டதும் நின்னருளே. அவனருளாலே அவன்றாள் வணங்கி - திருவாசகம். 65. முனைப்பு -ஜீவபோதம்; ஆணவம். 75. புனல்விடு கயல் என - நீரைவிட்ட மீன்போல. 80. மயில் நீலம்; மணி சிவப்பு; இரண்டன் சேர்க்கையிலுள்ள வனப்பை உன்னுக. 88. அலமருகின்றார் - வருந்துகிறார் ( அலமரல் - நெஞ்சஞ் சுழலல்) 92. மத வெறியர் வதைத்தொழில் பூண்டதைச் சரித்திரங்களிற் காண்க. மதவெறியும் வதைத் தொழிலும் முறையே கடவுள் நெறியும் கடவுள் வழிபாடுமாகா. 96. தறைமொழி - உலகில் பேசப்படும் பாஷைகள். 2. குரங்கினின்றும் மனிதன் தோன்றினான் என்னுங் கொள்கை இங்கே குறிக்கப்பட்டது. 10. கூற்றுவனைக் காய்தலாவது மரணமிலாப் பெரு வாழ்வை நல்குவது. 2. பள்ளு - பள்ளுப்பாட்டு 3. விறலியர் - பாணர். பாணரின் யாழிசை கேட்கும் யானைக் கூட்டங்கள், தங்களை மறந்து அவ்விசையில் மயங்கி நிற்பது வழக்கம். அஃது இங்கே விறலியர் யாழின் விருந்துணும் வேழஇனம் என்று சொல்லப்பட்டது. காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் யாழ்வரைத் தங்கி - கலித்தொகை. 4. ஏழ்கதிர் - சூரியனுடைய ஏழ்கதிர். இழிபுனல் - இறங்கும் அருவி நீர். 5. இடர்கள் பாறும் - துன்பங்கள் நீங்கும் 6. சுடர் - சூரியசந்திரர். உண்மையில் - உன் இருப்பில். 7. அலைவு அழி பாடல். குவடு - சிறுகுன்று. 10. சுகர்கள் என்றது சுகர் போன்றவர்களை என்க. 5. புத்தர் - அஞ்ஞான உறக்கத்தினின்றும் எழுந்து ஞான விழிப்புப் பெற்றவர். 7. பாம்பு - குண்டலினி 8. முப்பத்தாறு தத்துவக் கட்டில்லாதவன் ஆண்டி. கூறாத மொழி - சொல்லாத வார்த்தை. சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி - தாயுமானார். சீறாத - கோபியாத. சினத்தை நிந்தனைசெயு முனிவரர் தொழ - அருணகிரிநாதர். 7-8. பழனி மலையின் உட்பொருள் இங்கே சுருங்கச் சொல்லப்பட்டது. 1. பொன்னி - காவிரி. பொன்னி திருவேரகத்தின் பாங்கர் ஓடுதலால் அதனைக் குறிப்பிட்டது காண்க. 3. ஆண்டவன் இயற்கை வடிவம் அமைதி கூட்டுதல் இயல்பு. அவ்வேளையில் உயிர்கள் எரி பகை கிளர்ச்சி முதலியவற்றினின்றும் விடுதலையடைந்து அமைதியுறுவதை ஏலவார் குழலி யானேன் என்று கூறியவாறு காண்க. அமைதி நிலையைப் பெண்ணிலையெனக் கூறுதல் மரபு. 4. விளைபசுங்கடல் - செழுமையாய் விளைந்த பயிர்களாகிய பசிய கடல். 5.6.8. புலம் - பழனம் - செய் - வயல். 7. மருதம் - மருதப் பண். 9. பசுங்கடல் - பசிய பயிர்ப் பெருக்கு. புலன்விழி - புலன்கள் ஒன்றும் விழி. ஐந்து பேர் அறிவுங் கண்களே கொள்ள - சேக்கிழார். ஆண்டவனுக்கு மேனி, அருள் அல்லது இரக்கம். அவ்வருளைச் சக்தியென்று கூறுவது மரபு. அருளது சத்தியாகும் என்றார் அருணந்தி சிவனார். சக்தி பெண் கூறாதலின், அதனைப் பசுமை என்று பாவலர் பாடுவதுண்டு. காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால் எனவும், சத்திதன் வடிவே தென்னில், தடையிலா ஞான மாகும் எனவும் வரூஉம் அருணந்தி சிவனார் திருவாக்கை நோக்குக. முருகனுக்குச் சக்தி வள்ளி; அவள் நிறம் பசுமை. இயற்கையின் பசுமையும் வள்ளியின் பசுமையும் செம்மேனி முருகனைப் பசுமேனியனாகக் காட்டுகின்றன என்றவாறு. 10. இப்பாட்டிற் போந்துள்ள கருத்துக்கள் முதற்கணுள்ள திருச்செந்தூர்ப் பாட்டிலும் போந்திருத்தல் காண்க. முருகன் திருவுருவம் தத்துவ நுட்பங்களின் பொருளாயுள்ள தென்க. தெய்வப் பெண் - தெய்வயானை. 1. காட்சிசெய்குன்று. 5. அந்தி வேளையில் ஒரு பக்கஞ் சூரியக் காட்சியும், மற்றொரு பக்கஞ் சந்திரக் காட்சியும் நேருமாறு செய்வது குன்று. 7. மா - யானை விலங்கினக்கோன் - சிங்கம் 8. காலைவேளை - இளமை. மாலை வேளை - முதுமை. நீல மங்கையர்கள் - கரியவேடப் பெண்கள். 10. வெய்யொளி - சூரிய ஒளி. தேற்றம் - தெளிவு. கூற்றைக் கொல்வது - மரணமிலாப் பெருவாழ்வை நல்குவது. 2. கார் ஆலும் கான் - மேகம் தவழுங் காடு. 5. ககன வழி - ஆகாய வழி 8. கடவு இன்றி - பாய்தலின்றி 6. நிமலயோகர் - அமல யோகிகள் (முயன்று மூச்சைப் பிடித்தல் முதலியன மலயோகத் தின்பாற்பட்டன.) அமலயோகம் குருவருளால் கூடுவது. செல்ஆர் - மேகம் பொருந்திய. 1. கண்ணிலும் நெஞ்சிலும் ஏறிய புண் ஆறவும் என்றபடி. 4. தெருவிலுள்ள மலைமேல் என்க. சேல்விழி - சேல்விழி மாதர்கள். 6. செயல் - செய்தல் சிலைவேடர் என்றது காம குரோத முதலிய தீக்குணங்களை. சிவவள்ளி என்றது சிவமயமான உயிரை. தீக்குணங்களை யொழிப்பது ஆண்டவன் அருள் ஞானமாதலின், வேலவ என்றது காண்க. வேல் ஞானக்குறி. 7. பெருமொழி - ஒருமொழி அதாவது சொல்லாத வார்த்தை. 8. பிடி - தெய்வயானை, மான் - வள்ளி , விடல் - விடுதல். 3. கலை - கலைமான் 10. சமர் என்றது மனப்போரை; சூரை என்றது ஆணவத்தை. 9. முருகப்பெருமான் இரண்டு தேவிமாரைக் கொண்டதன் நுட்பம், தாய்மை அன்பை ஒருபக்கம் காட்டாது, இருபக்கமுங் காட்டுவதை அறிவிப்பதாகும். ஆறுமுகம் முதலியவற்றின் தத்துவங்கள், முன்னே திருச்செந்தூர்ப் பாட்டிலும் பிறவற்றிலும் குறிப்பிட்டிருத்தல் காண்க. 8. சூரன் சிங்கமுகன் தாரகன் இவர்கள் மும்மலத்துக்கு அறிகுறி. இவைகளின் சேட்டைகளை மூன்று சூரரின் போர்களாகக் கூறுதல் புராண மரபு. 9. அறுபொறியாய் . . . இங்கே குறிக்கப்பெற்ற புராணக் கதை ஞானார்த்தமுடையது. அதனை முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். 1. வெங்கால் வாங்கி நிலவாக்கல் - அடர்ந்த நிழலால் வெயிலை நிலவாக்கல். 3,4,5, fGF., புலி, மகரம் - இவை ஆணவத்தின் நிலைமையைக் குறிப்பன. 4. மரங்களிற் சிறந்த கல்லாலின் இலைவழிச் சூரிய ஒளியில் மூழ்குவது, உடல் நலமும் உயிர் நலமும் உண்டாக்கலால், ஈண்டுக் கல்லாலிற் கதிருள் மூழ்கி என்றது காண்க. உயிர்ப்பு - சுத்த பிராணன் (Ozone) கல்லாலின் கீழ்த் தக்ஷிணாமூர்த்தி வீற்றிருத்தல் ஈண்டுக் கருதற்பாலது. 5. விண்சாய் - வானத்தைத் தொடுவதுபோன்ற காட்சி (Horizon) எ.தீ. தீமை. 4. சிலையுழவர் - வேடர் 5. தலையாலும் பசுங்கடல் - தலையசைக்கும் பசியசோலை. இறைபோது - க்ஷணநேரம். நிறைவினில் - அமைதிப் பூரணத்தில். 6. தேவரீரைச் சிற்பர் செய்த உருவ வாயிலாகவும், இயற்கை அழகு வாயிலாகவும் காணும் பேறு பெற்றேனாயினும், குருவாகக் காணுதல் வேண்டும் என்றபடி. குரு தரிசனத்திற்குப் பின்னரே மனங்குவிதல் நிகழும் என்றவாறு. 8. வான்கண்களாகிய கதிரும் மதியும். 9. நாவலந்தீவு - ஜம்புத் தீபம். நமது நாடு, பரதகண்டம் என்னும் பெயர் பெறுதற்கு முன்னர் நாவலந்தீவு என்னும் பெயர் பெற்றிருந்தது. 1. பயலை - பசலை; பசப்பேறல்; காதல் நோய் 9. கணி - கணிதன்; சோதிடன். 6. அஞ்சு - ஐம்புலன்கள். முனிவர்களின் அகவிளக்கு. தன்னொளியை ஐம்புலன் வாயிலாக வீசுதல் ஈண்டுக் குறிக்கப்பட்டது. 7. பலவற்றிலும் ஊடுருவிப் பாய்ந்து நிற்பது ஒருமைச் சித்துப்பொருள் என்க. 8. அமணருக்கு (சமணருக்கு) அருகன்; பௌத்தருக்குப் புத்தன். கந்தமாதனம் இரண்டாம் பாட்டுக் குறிப்புரையையும், மூன்றாம் பாட்டையும் பார்க்க. 1. கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியன, முதல் முடிவு என்னும் எல்லைக்குள் அடங்குவன வாகலான், அக்கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவாற்றான் முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் அடங்காது என்க. இதுவோ பொருள் இதுவோ பொருள் என்று நெஞ்சை ஊன்றி ஊன்றி ஆராய்ந்தாலும், அவ்வாராய்ச்சியைக் கடந்தொளிருஞ் சோதியே கடவுள் என்பது. 2. கடவுள், தாய் தந்தை சேயனாயிருத்தலாவது, சத் சித் ஆனந்தமாயிருத்தல் என்க. மின்சாரம் எங்கும் நிலவியிருப்பினும், அதன் விளக்கம் பெறவேண்டின், இயந்திரம் அமைத்துத் தொழிற்படுத்தல் வேண்டும். அப்போதே அதன் விளக்கந் தோன்றும். கடவுளும் அத்தன்மைத்தே. கடவுள் யாண்டும் நீக்கமற நிறைந்திருப்பினும், அன்பு செய்யும் ஓரிடத்திலேயே அது விளங்கித் தோன்றுதல் இயல்பு. ஆகவே, கடவுளை நினைந்து வழிபடுவதற்கு ஒரு தனியிடம் வேண்டற்பாலதென்க. தங்கமேனியர் - சித்தர்,. 4. கடுநரகெய்தினும் காலும் வேலுங் காக்கும். வள்ளி யென்றது, ஆன்மாவை. ஆன்மா இச்சா சத்தியின் கூறு. வள்ளி இச்சா சத்தி என்பது தத்துவம். 6. சாந்தம் சாந்தம் சிவம் என்பது உபநிடத மொழி. 7. கையால் பணியும் பயிற்சி; நெஞ்சால் நினைக்கும் பயிற்சி. கணிகை - தணிகைக்கு ஒருபெயர். விளக்கம் தணிகைப் புராணத்திற் காண்க. 1. கந்தமாதனம் என்பது முருகன் குருமூர்த்தியாய் எழுந்தருளியுள்ள ஒரு சிறந்த இடம். 2. இங்கே முருகனை இறைமுதல் என்றும் குருவென்றும் சொல்லப்பட்டிருத்தல் கவனிக்கத் தக்கது. முருகன் இறைமுதலா அல்லது குருவா என்னும் ஐயப்பாடும், இறைமுதலும் குருவும் ஒன்றா வேறா என்னும் ஐயப்பாடும், இன்னோரன்ன ஐயப்பாடுகள் பலவும் பலர்க்கும் பலவாறு தோன்றுதல் இயல்பே. சமய வழக்கில் உழன்றுகொண்டிருக்குமட்டும் இவ்வையப் பாடுகள் நீங்குதல் அரிது. இதுபற்றியே, சமயவழக் கொழித்தடியில் தனிநின்றால் விளங்கிடுமே என்றவாறு காண்க. உலகுய்யத் தோன்றிய பெரியோருட் சிலர், கடவுளும் குருவும் ஒன்று என்றும், சிலர் கடவுளும் குருவும் வேறு என்றுங் கூறிச் சென்றனர். இவர்தங் கூற்றுகட்குப் பலதிற விரிவுரைகள் அறிஞர்களாற் பின்னே காணப்பட்டன. எங்குமுள்ள கடவுள் மாசற்ற மனமுடைய குருவின் உள்ளத்தில் சிறப்பாக விளங்கலானும், அக்குருவின் கரணங்கள் யாவும் கடவுள் வழியே இயங்கலானும், அவர்தஞ் செயல்களைக் கடவுள் செயலாக்கொண்டு, கடவுளையும் குருவையும் ஒன்றெனக் கொள்ளுதல் ஒரு வித மரபு. இதனால் கடவுள் இயலுக்கு இழுக்கு நேர்தலான், கடவுள் வேறு குரு வேறு என்று வலியுறுத்தல் வேறுவித மரபு. இவ்விரு மரபின் நுட்பம் ஏட்டுச் சமயவாதங்களைக் கடந்து இறைபணியில் நிற்குங்கால் இனிது விளங்கும் என்க. 9. கொடி - பெண் கொடி. 1. தமிழ் - இனிமை 2. வள்ளி என்றது அருளிச்சையை. 4. பொய்யாமொழியாளர் - திருவள்ளுவர். 6. குருநாதன் அறிவுறுத்தலின்றிச் சோதி தரிசன வேட்கை கொண்டு, மூச்சைப்பிடித்தல் தவறு. அதனால் விபரீதம் விளைதலும் உண்டு. அமைதியெனும் பெண்ணுடன் வாழ்ந்து, காம குரோதங்களை நாளடைவில் ஒடுக்கி, உயிர்களிடத்தில் அன்பு பூண்டு, தொண்டு செய்யச் செய்யப் பயன் கருதாமை (நிஷ்காமிய கருமம்) ஓங்கிநிற்கும். அதனால் வாய்மைநிலைக்கும். அவ்வாய்மை ஆண்டவன் உண்மையில் உயிரை நிலைபெறுத்தும். அவ்வுண்மைநிலை குரு நாதனைக் கூட்டும். குருமொழியால் அமல யோகங் கூடும். அமலயோகமே பெரியோர் கூறியது. மல யோகம் உடல்நலன் கருதிச் செய்யப்படுவது. அதனையும் முறைப்படி செய்தல் வேண்டும். 7. மறைகள் - உலகிலுள்ள எல்லாச் சமய வேதங்கள். 1. வருணம் - பிறப்பிலேற்பட்ட வருணாச்சிரமம். 3. ஆர் - நிறைந்த 10. கூர்தல் - உள்ளது சிறத்தல் (Evolution) ஊர்தல் - நடத்தல்; நிகழ்தல். 11. ஏனமாய் - பன்றியாய். 12. குறளனாய் - குள்ளனாய்; வாமனனாய். மழுவனாய் - பரசுராமனாய். அறவில் வீரனாய் - கோதண்டராமனாய். 13. கலப்பை ஆளியாய் - பலராமனாய். உலப்பில் குழலனாய் - நீங்காத குழலுடைய கண்ணனாய். குழல் - நாதத்துக்கு அறிகுறி; நாதம் இறைவனை விடுத்து நீங்காத (அழியாத) ஒன்று. 10-13. கூர்தல் அறத்தின் நிகழ்ச்சி பத்து அவதாரத்தின் வாயிலாக உணர்த்தப்படுகிறது. பத்து அவதாரத்திலுள்ள வளர்ச்சியைக் கூர்ந்து உன்னுக. 14. ஓம்பும் - காக்கும். அலகிலா - அளவில்லாத. 16. செறியும் - நீக்கமற நிறைந்துள்ள. 17. உன்னுவல் - நினைப்பேன் 19. பொருநை - தாமிரபரணி. 20. கிளர் - எழும்; விளங்கும். 21. மரை - தாமரை. மலர் நோக்கு; வினைத்தொகை 22. தவளம் - வெண்மை 23. மாவும் - திருவும் 24. ஆழிவளையும் - சக்கரமும் சங்கும். சங்கு, ஒலிக்கு அறிகுறி. ஒலி தடித்துத் தடித்து நானாவித உலகமாகிறது. ஆகவே, சங்கு தோற்றத்தை உணர்த்துவதென்க. சக்கரம் அறத்துக்கு அறிகுறி. சங்கால் தோன்றும் உலகைச் சக்கரத்தால் அறவழியில் காத்து ஆள்வதென்க. இவ்விரண்டும் அநாதியே நடப்பனவாதலால் வாழி என்னப்பட்டது. வாழி நிலைபேற்றை உணர்த்துவது. 31. நீட்டல் - சடைவளர்த்தல். மழித்தல் - மொட்டையடித்தல். 32. உடலை ஒறுத்தல் - உடலைப் பல வழியிலும் வருத்தல்; ஒறுத்தல் - தண்டித்தல். 33. பூண்தார் - அணி மாலை முதலியவற்றை. 37. முனைப்பு - ஜீவபோதம். 38. நெஞ்சே! நின்னிடத்தில் அழகன் (திருமால்) இருக்கப்பழகு. 45. கரியினுக்கு - யானைக்கு; கஜேந்திரனுக்கு 46. சேயினை - குழந்தையை; பிரகலாதனை 47. குன்றை - மலையை; கோவர்த்தனகிரியை 51. அறிதுயில் விளக்கம் - திருவரங்கப் பாக்களிற் பார்க்க. 69. நாதமுடிவிலே - பிரணவத்தின் எல்லையிலே. 1. தாமிரபரணி மலையினின்றும் அருவிகளாக ஓடிவந்து ஆறாகப் பெருகுமிடம் பாபநாசம். அங்கே பலதிற மீன்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவைகள் பார்த்து அனுப்பும் பொருநை (தாமிரபரணி) என்றபடி. பொன்னும் மணியும் பூவும் நீர்ப்பெருக்கிடை மிதந்தும் ஆழ்ந்தும் வருதல் இயல்பு. அவை முன்னும் பின்னும் ஓடியும் கூடியும் வருங்காட்சி ஒன்றோடொன்று போரிடுதல் போலத் தோன்றும். அதனால் பொருது என்னப்பட்டது. பொருதல் - போர் செய்தல். 2. அறஆழி - தர்ம சக்கரம் 3. பழனம் - வயல்கள். குருகூர் - ஆழ்வார் திருநகர். தேம் பொழில் - இனிய சோலை 4. தேறாதார் - உண்மை தெளியாதார். 5. ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் தங்குதற் கென்று தனித்தனி இடங்களில் கோயில் கொண்டதென்ன? அந்நுட்பத்தை ஆராய்ந்தால் அது தத்துவமாக 5. விளங்கும் என்றபடி, பால், பசுவின் உடலில் எங்குமிருப்பினும் அது வெளியாகிப் பயன்படுமிடம் மடியேயாகும். மின்னொளி யாண்டுமிருப்பினும், அது பொறிவாயிலாகத் தொழிற்படும் இடத்திலேயே விளக்காகத் தோன்றித் துணைசெய்கிறது. 6. கூர்தல் அறம் - தென்திருப்பேரை அகவற்குறிப்பைப் பார்க்க. 7. கதைத் தத்துவத்தை - புராணங்களின் உட்பொருளை. 8. திருமாலின் பத்துப் பிறப்பு, கூர்தல் அறத்தை விளக்குவது. அதை ஞானயோகத்தால் தெளிந்தால், மரணம் பிறப்பு என்னும் மயக்கம் அறும். அம்மயக்கம் நீங்கப் பெற்றவர் சித்தர். அவர்க்கு அறிதுயில் நுட்பம் புலனாகும். திருவரங்கப் பாக்களைப் பார்க்க. 9. இறைஉயிர்; இயற்கை உடல். இறை, இயற்கையை உடலாகக் கொண்டுள்ளதைப் புலவர் காவிய ஓவியக் கலைகளில் இறக்கியுள்ளார். இங்கே சிறப்பாக ஓவியக்கலையைக் கொள்க. அக்கலையில் மூழ்கிச் சிந்திக்கச் சிந்திக்க இறை, இயற்கையை உடலாக் கொண்டுள்ளது விளங்கும்; எல்லாம் இறைமயமாகத் தோன்றும். 10. நீடின் - நிலைத்திருப்பின். மனவெம்மையைத் திருமேனி நீலம் போக்கவல்லது. அந்நீலத்தை உள்ளத்தில் நிலைக்கச் செய்தல் வேண்டும். அதற்கு இடையறாத தியானம் வேண்டும். வெம்மை போக்கும் ஆற்றல் நீலத்துக்கு உண்டு. மூளை வறட்சியுடையார் பசுமையைப் பார்த்துப் பார்த்துத் தண்மை பெறுவது இயல்பு. 1. ஆர்த்து - மகிழ்ச்சியால் ஆரவாரித்து. 4. வாணாளில் - வாழ்நாளில் 8. வில் ஆர் - ஒளி நிறைந்த. 9. ஏமம் - இன்பமுடைய. செவ்வியிலே - அழகிலே; மணத்திலே, புதுமையிலே எனினுமாம். 12. தாழிசை - புலன்களுக்கும் மனத்துக்கும் இன்பமூட்டும் பாவினம். 14. பதுமையாய் நிற்றல் - ஞானயோகத்தில் அசைவற உறைந்து நிற்றல். 16. அலகை - பேய். 18. முன்னுதல் - ஆழச் சிந்தித்தல் 21. தன்னல மேலீட்டான் தனித்து வாழ விரும்பும் போலித் துறவை. 22. ஆர்ந்த - நிறைந்த 1. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே - அப்பர் 2. கலதி இனம் - தீய இனம்; மூதேவி இனம் 3. அல்ல - தீயன; இருள் சேர்க்கும் வினைகள்; பயனில்லாதன 5. இறைவன் எங்கும் இருக்கிறான்; வழிபாடு எற்றுக்கு என்னும் வாசா கைங்கரியம் வேண்டுவதில்லை. இறைவன் எங்கு மிருத்தலை யுணர்தற்கு வழிபாடு வேண்டும் என்றபடி. 8. இரியும் - கெடும்; ஓடும். 9. அன்றில் அகன்றில் - பெண்ணாண்; இணைப்பிரியாப் பறவைகள். அடவி - அடர்ந்த இன்பச் சோலை சூழ்ந்த. 1. இருளிலே - முழு அஞ்ஞானத்திலே. தெருளிலே - ஞானயோகத் தெளிவிலே 2. வாரிதியே - கடலே 4. குழு - கூட்டம் 5. தைவர - தடவ; வருட 7. மால் - மயக்கம் 8. புரையிலும் - குற்றத்திலும் ; வலிந்து செய்யும் தவறான காரியத்திலும். 9. வேலையில் - பாற்கடலில் 10. வேழம் - யானை; கஜேந்திரன் 1. ஒளிர்வு - விளக்கம் 2. மலர் - திரு (ஆகுபெயர்) போதாந்தம் - ஷடாந்தங்களுள் ஒன்று; இதுபற்றி இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்னும் நூலில் சிறிது விளக்கஞ் செய்துள்ளேன். 3. உணர்வாகிய கற்பு. நின்னுணர்வுக் . . . .உடல் - மனித உடல்; மனிதப்பிறவியிலேயே கடவுளை யுணரும் ஆறாவதறிவு விளங்குதற்குரிய கருவி கரணங்கள் அமைகின்றன. கனகம்-பொன். அன்புடைய நெறி. பொற்பு - அழகு. 4. எழில் - அழகு; திரு(ஆகுபெயர்). கவி இருவகை. ஒன்று செயற்கைக் கவி; மற்றொன்று இயற்கைக் கவி. செயற்கைக் கவி ஈண்டுச் சொன்மேவு கவி என்று சொல்லப்பட்டது. அக்கவி கடந்து, இயற்கைக் கவியில் துயில்கின்ற இன்பம் என்றபடி. 5. மாற்குலமாய் - திருமால் குலமாய்; திருமால் அடியவராய். பாற்கடல் வெண்ணிற ஒளியா யிருப்பது. அது விந்து தத்துவத்துக்கு அறிகுறி. நாத தத்துவம் ஒலி. ஒலி எப்பொழுதும் பாம்புபோல் சுழன்று சுழன்று எழுந்து தொழிற் படுவது இயல்பு. அதுபற்றி நாதத்தைப் பாம்பாகச் சொல்வது மரபு. நாதமும் விந்துவும் முடிந்த தத்துவங்கள். அவைகளினின்றுமே பிற தத்துவங்கள் தோன்றும். நாத விந்துவைக் கடந்ததும் கடவுள் காட்சி பெறலாம். அவ் விரண்டுக்குமேல் விளங்குவது பரம்பொருள். அங்கே பரம்பொருள் சாந்த மயமாயிருக்கும். அச்சாந்தம் சொல்லற்கரியது. பாற்கடல் - விந்து; பாம்பணை - நாதம்; பள்ளி - அறிதுயில். சாந்தம். இந்நுட்பங்கள் குருநாதன் வாயிலாகக் கேட்டுத் தெளியத்தக்கன. குருநாதன் அருளால் ஞான யோகத்தில் அமரும் பேறு பெற்றால் அஞ்ஞான இருளெல்லாம் கீழே சென்று சென்று மறையும்; ஞானாமிர்தம் மேலும் மேலும் பொங்கியெழும்; அகக்கண் திறக்கும்; உலகிற்கல்லாத - பேச்சற்ற - கல்வியெல்லாம் கற்றல் கூடும். அக்கல்வி பெறுவோரே திருமாலடியவராவர். அவரது நெஞ்சம் திருவரங்கமாகும். 6. கடல், மலை, காடு, கானாறு, கழி, உடல், உளம் யாவும் மாயாகாரியங்களைக்குறிப்பன. உணர்வு - மாயா காரியங்களின் கூட்டால் அமையும் பொய்யுணர்வு. படல் கடிய - அறியாமைத் திரை நீங்க. 8. அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார், அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை, அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆகுமென்றிட்டு, அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே. - திருமந்திரம். 9. கால் - காற்று. ககனம் - ஆகாயம். நெறி - மலயோக நெறி வென்றி - திரு. (ஆகுபெயர்) 10. எம்பெருமானே அறிவாய் சொல் மறந்த வாழ்த்து - சொல்லாமற் சொல்லி நினையாமல் நினைத்தல்; நினைப்பும் மறப்பும் அற்றநிலை. அதை அறியாத கூட்டத்திடை வீழ்ந்து கெட்டேன் என்றபடி. 3. கனம் - ஆகாயம் 6. புல்லாயோ - தழுவாயோ 1. ஆக்கம் - செல்வம். திரு அணங்கு அகலம் - இலட்சுமியை மார்பிலுடைய . செல்வர் - அமலயோகச் செல்வர் 2. திருவரங்கம் பாட்டு -6 குறிப்பு -5 பார்க்க. படைப்பு, நாதத்தினின்றும் தொடங்குவது. அஃது இங்கே நான்முகனை உந்தியளிப்பது என்று குறிக்கப்பட்டது. சிரமாரும் - துவாத சாந்தத்தில் நிறைந்துள்ள. 3. கதிர்க்கெல்லாம் - சூரிய, சந்திர நட்சத்திரங்கட்கெல்லாம். அரவு - பாம்பு; குண்டலினி. அரவெழுப்பி நிற்கும் அமலயோகர் மதி அமிழ்தம் பொழியும் (அமிர்த கலசம்). 4. பாவை - திரு. புத்தமிர்தம் - புதிய அமிழ்தம். சித்மயம் - அறிவுமயம். 5. கானவனை - வேடனை; குகனை. தெவ்வர் - பகைவரும். 6. மாருதிக்கு - அநுமானுக்கு. கால் - காற்று. மாருதி, வாயு புத்திரர்; நல்லயோகி, அவருக்குக் காற்றையருளல் என்பது இறைவன் காற்றுக்குக் காற்றாயிருப்பதைக் குறிப்பது. காலளித்தல் என்பதிலுள்ள வேறு பொருள் வெளிப்படை. 7. அன்பு நவநீதம்; அன்பாகிய வெண்ணெய். தென்புலவர் - தமிழ்ப் புலவர்; இங்கே ஆழ்வார். 8. கண்ணபிரான் எங்குமிருப்பவர். அவரது அருணாதக் குழலிசை எங்கும் முழங்கிய வண்ண மாயிருக்கிறது. அதைக் கேட்கும் பேறு பெற்றவர் முனைப்பு நீங்கிப் பெண்மை எய்துவர். எல்லாரும் அந்நிலை எய்தல் வேண்டும் என்னும் அருள் நோக்குக் கண்ணபிரானுக்கு உண்டு. இவையாவும் புன்னையடியில் கண்ணபிரான் குழலூதல், அவரைச் சூழ்ந்து மங்கையர் நிற்றல் முதலியவற்றில் விளங்குதல் காண்க. இவைகளைப் பற்றித் தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்னும் நூலில் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். 9. கான்முளைக்கு -- பிரகலாதனுக்கு. அளிஆலும் - கருணை தேங்கும். மலருளத்தில் - நெஞ்சத்தாமரையில்; ஹிருதய புண்டரிகத்தில். மாமிசமயமாயுள்ள ஹிருதயத்தைப் பொன்மலர் மயமாக அதாவது திருவரங்கமாகச் செய்து கொள்ளல் வேண்டும். அங்ஙனஞ் செய்து கொண்டோர் நெஞ்சில் அறிதுயில் செய்யுந் தெய்வம் என்றபடி. 1. கிளர் அடி - அமல யோகர் நெஞ்சில் வளருந் திருவடி. 2. சிலையெலாம் வணங்குஞ் சிலையை ஏந்துவோனே கலையெலாம் பூத்த அன்னையின் கலையில் மூழ்க வல்லான். உயிர்களின் அலைவுகளை யெல்லாம் தீர்ப்பவன் அவனே என்றபடி. 5. மனமெனுந் தோணி பற்றி . . . . . - அப்பர் 6. இராமாணயத்தை ஆராய்ந்து பார்த்தால் ஸ்ரீராமபிரான் அஃறிணை உயர்திணையாகிய எல்லா உயிர்களிடத்தும் சகோதர நேயம் பாராட்டியது நன்கு விளங்கும். நெஞ்சிற் பகைமையில்லாரைப் பார்க்கும் உயிர்களும் பகைமை நீங்கும் என்பது கருத்து. 7. இரக்கம் அணங்கினிடத்து மட்டுங் காட்டப்படவில்லை; அரக்கனிடத்துங் காட்டப்பட்டது. ஸ்ரீராமபிரான் இகல் கொண்டு அரக்கனிடம் போர் புரிந்தாரில்லை; இரக்கங் கொண்டே அவனிடம் போர் புரிந்தார். இது மறக்கருணை என்று சொல்லப்படும். அரக்கன் ஆயுதங்களெல்லா மிழந்து நின்றபோது ஸ்ரீராமபிரான் அவன் மீது அம்பு சொரிந்து அவனைக் கொல்லக் கருதினாரில்லை. இஃது இகலின்மையைக் காட்டுவதன்றோ? விரிவு இராமாயணத்திற் பார்க்க. 8. இராமாயணத்தின் தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. 9. விளங்கிழை - சீதை. பின்னோன் - இலக்குமணன். 10. நாம நீர் - அச்சமூட்டுங் கடல். பைந்துணர் வாகை - பசிய பூங்கொத்தாலாகிய வெற்றி மாலை. 4. செல் ஊரும் பொழில் - மேகந் தவழுஞ்சோலை. 5. கடி - மணம்; சோலையின் மணங்கமழுந் தில்லை. 1. எய்ப்பினில் - இளைப்பில்; வறுமையில், வைப்பு - சேமநிதி. 3. கண் அமை - கணுக்களையுடைய மூங்கிலின். கடற்பயிர் - கடலெனப் பரந்துள்ள பயிர்களின். யாழின் பண் அளி- யாழ்ப் பண்ணை முழக்கும் வண்டுகளின். பசுமைகளெல்லாம் கோவல் வாழ்வின் குளிர்ந்த அருளுடைய பசுமை என்றே. 4. செச்சைகள் ஆலும் - மயில்களாடும். 5. மீன் - நட்சத்திரங்கள். தேன் - வண்டுகள், பாண் - பாட்டு. திரை - அலை 8. சிலைசெறி - பாறைகள் நிறைந்த. 9. நண்பர் - மா. ரா. குமாரசாமிப்பிள்ளை. மணம்பூண்டி - குமார சாமிபிள்ளை வாழ்ந்த ஊர். அது திருக்கோவலூருக்கு எதிரிலுள்ளது; இடையில் பெண்ணையாறு. 1. குழுமி - சேர்ந்து; கூடி. பைந்தாரன் - பசிய மாலையணிந்தவன். பவம் - பிறவி நோயை. நந்தாத - அழியாத. 2. பிணா - பெண். 3. மட்டு - தேன்; வாசனையுமாம். செறிந்து ஈண்டி - அதிகமாக நெருங்கிக் கூடி. பொலம் - பொன். எட்டுடையன் - அஷ்டாட்சரமுடையவன்; அஷ்ட மூர்த்தி எனினுமாம். 4. உளும் - உள்ளும்; நினைக்கும். 5. செற்றம் அறு பணம் - கோபமில்லாத படம்; சீறாது அன்புடனே என்றபடி. 6. புள்ளரசு - கருடன். புள்ளரசீர் - கருடப் பறவைகளே; பருந்துகளே. 7. நிரை - கூட்டம் கணம் - கூட்டம் 10. தருக்கள் நிரை - மரச்செறிவு. அருக்கன் - சூரியன் 3. சோதியே சுடரே சூழொளி விளக்கே - திருவாசகம் 4. சிலைகளிடையே - விற்களினிடையிலே 5. வம்பு - வாசனை 6. மனம் ; குருஷேத்திரம். கெட்ட எண்ணங்கள்; நூறுபேர். நல்ல எண்ணங்கள். ஐவர். இவ்விரு கூட்டத்துக்கும் நடைபெறுவது பாரதப் போர். போரிடை எழுவது கண்ணபிரான் கீதை. நாடோறும் மனத்தில் பாரதப்போர் நிகழ்ந்த வண்ணமாயிருக்கிறது. அப்போரிடைக் கீதை நாதம் கேட்ட வண்ணமிருக்கிறது. ஞான யோகத்தின் முதற்படியிலேயே இந்நுட்பம் விளங்கும். 10. களைகண் - பற்றுக்கோடு; துணை 2. படல் - இருள் திரை; அஞ்ஞான மயக்கம். மடல் - பூவிதழ். 5. சித்மயம் - ஞானமயம் 6. எண் - எண்ணம். அணங்கானார் - பெண்ணானார்கள். கண்ணன் இசையமுதம் உண்டால் ஜீவ போதம் நீங்கிப் பெண்மை கூடுதல் இங்கே சொல்லப்பட்டது. 9. அரிமாலை - பொன்னரிமாலை; வாடாமாலை. 3. கூர - உள்ளது சிறக்க. 4. பண்ணில் - இசையில்லாத; தகுதியில்லாத 5. அழகுமரு - திருவிளங்கும். 6. விலகுந் துறவுக்கு - உலகை இறையாகக் கொள்ளாது, அதை மாயையாக் கொண்டு அஞ்சி, உலக வாழ்வினின்றும் விலகும் போலித்துறவுக்கு. நிலவும் கதிரும் - சங்குஞ் சக்கரமும், நிலவுபோன்றது சங்கு; கதிர் (சூரியன்) போன்றது சக்கரம். 7. காழ்வு - காழ்ப்பு. வைரம், வன்மம். 9. அரவு - நஞ்சுடையது. அதாவது பகைமையுடையது; அதையும் நேசித்து அதன்மீது துயில்கின்றாய்; நின் அன்பு என்னே என்றபடி. அன்புக்கு முன்னே பகைமை பட்டொழியும் என்பது கருத்து. 10. இளஞ்சேயில் - இளங் குழந்தையில். நின்பெருமை பிறங்க (விளங்க). அவைகளை (வெண்மை மதி முதலியவற்றை) நண்ணும் பொழுதே. 1. ஏழுமலை - திருமலை; திருப்பதி ஏழு மேகங்கள் - சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரியத்தம், துரோணம், காளமுகி, நீலவருணம். இவை முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ என்னு மழைகளைப் பெய்வன. ஏழு நிறம் - சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், இந்திர நீலம் ,ஊதா, கோமேதகம். ஏழு நாள் - ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. ஏழு இசை - சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் (ச-ரி-க-ம-ப-த-நி) ஏழு மூலங்கள் - சத்ததாது; இரசம், இரத்தம், சுக்கிலம், மூளை, சதை, எலும்பு, தோல். ஏழு முனிவரர்கள் - அகத்தியன், ஆங்கீரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன். (மாறுபட்ட முறைமையு முண்டு) 2. ஒளி - விந்து. வாகை - வெற்றிமாலை 3. வளை - சங்கு. ஆழி - சக்கரம். 4. மலையில் வாழ. 7. பரல்- பருக்கைக் கல். கூர்ங் குண்டு - கூரிய குண்டுக்கல். அறை - பாறை. கா - சோலை. நந்து - நத்தை. நுழை - ஒருவகை நரி. புறவு - புறா. 8. ஏனம் - பன்றி. எருது ஆ. ஊனர் - ஊன் வேடர். தேனர் - தேன் குறவர். உரவோர்கள் - வலியர்கள், உறவோர் - அன்பர். உம்பர் - தேவர். கானர் - இசைஞர். காணர் - ஞானநோக்கர். மான - பெருமை பொருந்திய. 9. மூலஒலி - பிரணவம். முதலின் எழுத்து - அகரம். காலில் - காற்றில். பாம்பு - குண்டலினி. கனகம் - பொன். 10. உரம் - மார்பு. 1. கனிமொழியின் எல்லையிலே - தமிழ்நாட்டின் எல்லையிலே (வேங்கடம் தமிழ்நாட்டின் வடஎல்லை). சனியை யொத்த நகரம் 2. ஒறுத்தேனோ - தண்டித்தேனோ. தகைந்திடுதல் - தடுத்தல். 4. தார் - Tar. மா - திரு. அழகு. பிணிபடை - நோயாகிய பட்டாளம். ஒம்பாவே - வளர்க்காவே. 6. அருக்கன் - சூரியன். பெருக்கு - செல்வம் 7. பொன்சாரம் - உடலிலுள்ள பொன் சத்தை. உன்சாரம் - உன்னருட்சாரம். உயிர்ப்பு - சுத்த பிராணன் (Ozone) 8. மன்றுகள் - நீதி தலங்கள். உணவு இல்லம் - ஹோட்டல்கள். மலச்சிக்கலே எல்லா நோய்கட்கும் பிறப்பிடம். 9. மன்பதையை - மக்கள் கூட்டத்தை; (பிற உயிரினங்களையுங் சேர்த்துக் கொள்க) 10. பட - ஒழிய. 2. ஆர்ப்ப - ஒலிக்க. வளி - காற்று . விம்ம - பொங்க 4. பரிதிமதி - சூரிய சந்திரர். முழவு - மத்தளம். கரி - யானை. காட்டாக்கள் - காட்டுப்பசுக்கள். சிறைகள் - வண்டுகள். வான்பறவை - வானம்பாடி 5. கோன் பசுமை - அரச தருமம். குடிப்பசுமை - குடிவளம் 6. முழை - குகை (கள்ளர் குகை என்று கிறிதுவுங் கூறினர்) 7. நிறை - கற்பு; ஒழுக்கம் 9. வேழ இனம் - யானைக்கூட்டத்தின். களிகண்டு - மத முழக்கங் கண்டு. வெருவு கின்றேன் - நடுங்குகின்றேன். 10. நளின மலர் - திருவடித்தாமரை. சித் - ஞானம். எற்பு - எலும்பு. வெற்பினிலே - திருமலையிலே. மங்கை - அலர்மேல் மங்கை அம்மையார். 37. திருவடி சேர்தற்குரிய வாழ்வைச் செகத்தில் செய்து கொள்ளாயோ? 40. சோதரம் - சகோதரம் 45. கீழோனாகிய எனது. வீட்டல் - அழித்தல் 50. ஓருங்கள் - ஒன்றி உன்னுங்கள். 53. கோலும் - செய்யும்; படைக்கும். 1. கலையிலுள்ள மொழியின் பொருளை. 5. இருநிலை : எல்லாங் கடந்தநிலை ஒன்று; இயற்கையை உடலாக் கொண்ட நிலை மற்றொன்று. 6. ஏன்று - ஏற்று. 8. பான்மை - குணமுடைய. 9. பொலிந்து இவரின் (இவர்தல் - உயர்தல்). பொன்றிவரின் - அழிந்து வந்தால். பொறியாம் - வெறும் வரியாகும். வெறுங் கீறலாகும். 10. எல்லாய் - சூரியனாய். 3. வளி - காற்று, வெளி - ஆகாசம். 4. கோள் - கிரகம்; கோள்களில் வெண்ணிறமுடையனவும், பிற நிறங்களுடையனவும் உண்டு. 5. வாரம் - அன்பு. இசை - பாட்டு. வானப்புள் - வானம்பாடி. 6. உயிர்ப்பு - பிராணன். 7. அறுதி - எல்லை. 1. சுடர்கட்கெல்லாம் ஒளி வழங்குவது நிபுலை (Nebula). நிபுலைக்கும் ஒளிவழங்கும் பிழம்பு உண்டு. அதுவே பெரும் பிழம்பு என்னப்பட்டது. 5. முன்னல் - தியானித்தல். 8. உறைவு அடைந்தால் (உறைவு - தங்குதல்; தங்குமிடம்) 3. கருத்தும் ஒலியும் என்றபடி. 5. உருவம் ஒலியின் பரிணாமம். ஒலிகடந்தது ஒளி. பலவகை உருவமெலாம் ஒலியாயின் ஒளியை உணர்தல் கூடும். ஒளி கடந்தது எல்லாம் வல்ல இறை. ஒலி - நாதம்; நாதம் இசைவண்ணமாதலின் பாட்டொலியாய் என்னப்பட்டது. 6. பொற்கதிர்கள் - சந்திர சூரியர். 7. இவர்ந்து - ஏறி. 7. கால் - உமிழும்; கக்கும்; பொழியும். மணல் காலும் வெண்ணிலவு (நிலவு - தண்மைஒளி) 8. பிணிபுனல் - பிணிப்பட்ட நீர்; குழாய் ஜலம். பொய் இசை - இயந்திரம் பாடும் இசை; இயற்கை இன்பம் அற்றது. பேய்நட வெங்குரல் - ரேடியோ. பெயர்மணம் - செயற்கை வாசனை; மணம் என்னும் பெயருடையது; மணம் என்னும் இயற்கைப் பொருளற்றது.. சென்ட் முதலியன. பொறிகாற்று - செயற்கை விசிறிக் காற்று; மின்சார விசிறிக்காற்று. 9. கனல் உருண்டைப் பிழம்பு - சூரியன். உயிர்ப்பு - பிராணன் (ஓஜோன்) மணிக்கலசம் - சந்திரன். 10. வேனிலிடை புகுந்து அளிக்கும் விருந்து - தென்றற் காற்று. துணர்கள் - கொத்துக்கள். பங்கயத்துப் பாணர் இனம் - வண்டுக்கூட்டம். நாதம் இருவகை: ஒன்று மாயாநாதம்; மற்றொன்று அதுகடந்த தூய பரநாதம். பிலிற்றும் - சொரியும். கொப்பளிக்கும். 3. வெளிறுகள் - வெறுங் கட்டடங்கள்; பயனில்லாதன. 5. இறையொளி உணர்த்துதற்குத் தனிமுதலாயிருப்பதும் திறவாயிருப்பதும் தாய்மையின் ஒளியேயாகும். 6. மாயையுள்ள இடம் மனம். மாயை தங்குமிடம் மனம் என்று தேர்ந்து, அதனைத் தங்காவாறு சாய்த்தால், மங்கையினிடம் தெய்வ ஒளி வீசும் என்றபடி 8. தேன் + மொழி = தேமொழி. 10. மாசில் வீணையும் மாலை மதியமும், வீசுதென்றலும் வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை இணையடி நீழலே. - அப்பர். 4. கவடு - கிளை 6. இரு கலைகள் - சூரிய கலை, சந்திரக்கலை. அண்டத்தில் சூரிய சந்திரர் இருப்பதுபோலப் பிண்டத்திலும் சூரியசந்திரர் உண்டு என்றபடி. 10. மனக்கோள் - மனத்தில் தோன்றும் தீமைகள்; பாவங்கள். 1. புங்கவர் சேர்க்கையும் அவர்தம் மொழிகளும் என்றபடி. 3. மனுவில் - மனிதப் பிறவியில். 9. மணி - நெல் முதலிய தானிய மணிகள். உன்னல் -தியானம். 2. சிலை - கல். சுதை - குணமில்லாப் பசு; உதைகாற் பசு. 4. தேனுடலர் - சித்தர்; . . . . நாயுடலகத்தே - குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய . . . . கருணை வான் தேன் கலக்க . . . . மணிவாசகர் (திருவண்டப்பகுதி) 6. உகுத்த உரை - அருளிய மொழிகள். 7. புக்கவருள் - புகுந்தவருள்; அடியவருள். 10. அறநிலையம் - தர்மம் வளருமிடம்; இல்வாழ்க்கை. 2. பகுத்தறிவு மலர் பிறப்பு- மனிதப் பிறவி. புரை - குற்றம்; தீமை. மனிதப் பிறவியில் பகுத்தறிவிருத்தலால், அது நன்மையுடன் தீமையும் புரியும் உரிமையுடையதாகிறது. நன்மையே புரியும் பொறுப்புக்குத் திருவருள் துணையும் வேண்டும் என்றபடி. 3. அது - நுண்மை. உள்ள மலர் உள்ளே - இதய கமலத்தினுள்ளே. 4. பொறி - ஞானப்பொறி; சிதாகாச இயந்திரம் 5. ஒளிக்கருவிக் கதிர் - எக்ரே. கூடம் - இரகசியம் 6. நுண் - நுண்மை 8. வெண் வாக்கு - வெற்றுரை. வேடிக்கையும் பத்திரிகைப் படிப்பும் விளம்பரமுமோ. 9. ஒதம் - கடல். 10. கரிதாய - பாவமான. 1. பதம் - இடம். 2. சித்தர் - சித்தை உணர்ந்து தெளிந்து சித்தாக விளங்குவோர். 3. உலகில் பலவேறு மொழிகள் பேசப்படினும், மனத்தில் படியும் அவற்றின் பொருள் ஒன்றே. புனல், தீர்த்தம், பானி, வாட்டர் இவை பல மொழிகள். இவற்றின் பொருள் ஒன்றே. ஒரு மின்னொளி, பலநிறக் கண்ணாடி மூடுகளில் பலவித நிறமாகத் தோன்றுகிறது. தொடையல் - மாலை. கழுது - பேய் 6. மௌனி - தட்சணாமூர்த்தி 8. உறவு ஒல்லும் - அன்பு பொருந்தும். 9. விஞ்ஞானம் - சையன் 4. துகளர் - அற்பர்; குற்றமுடையோர் 9. இடைபட்டை - இடையில் அணியும் பட்டை. வெண்நீளம் - வெள்ளிய நீண்ட அங்கி. வேடங்களே பொருளானால். கண்ணீளம் இல்லாதார் - பரந்த நோக்கில்லாதவர். வேடங்கள் புறக்கோலம். அவை அறிகுறிகளே; முதன்மைப் பொருளல்ல. பொருளல்லாத அவற்றையே முதன்மையாகக் கொள்வோர் பரந்த நோக்கிழந்து, அவற்றை (புறவேடங்களை) வைஷம்மியத்துக்கும் பகைமைக்கும் பயன்படுத்துவர் என்றபடி. 10. காதல் இவர் - காதல் வளரும்; காதல் ஓங்கும். 5. புல்கு - மருவும்; அணையும்; நடைபெறும். பல்கவே - பெருகவே - மிகவே. 9. நஞ்சை உண்டவனும், சிலுவையில் நின்றவனும், அரசை நீத்து விலகினவனும், மாடுமேய்த்தவனும், அடி தாங்கினவனும் ஒருவனே. ஒருவனே எல்லாம் என்னுஞ் சமரசத்தை எண்ணினால் துயரம்போம் என்றபடி. 10. நிறை - ஒழுக்கம். காதல் மன்றமும் (மணமும்), ஆட்சியில் பொதுமையும் தேவை.. 4. நீதியிலும் அரசிலும். 5. தளிமம் - அழகு. 7. அஞ்சும் - ஐந்து புலனும் 10. கல்லாம் மலையில் மறைபேசினவர் கிறிது. 2. உலம் ஆன்ற - திரட்சி அமைந்த. நலம் ஊன்றும் - (இயற்கை வாழ்வை ஒறுத்தால்) புலநோன்பு கெட்டொழியும்; பொறிகளில் அலைசாடும். 3. பண்மொழி - பண்மொழியுடைய பத்தினி; காதலி. 1. இறைவனுக்கு இயற்கை முதலிய கோயில்களுண்டு. அவற்றுள் ஒன்று குருமாரின் உள்ளமெனுங் கோயில். இதனால் மற்றும் ஒருகோயில் என்னப்பட்டது. 4. கோதிலவர் - குற்றமற்றவர்; அன்பர். அடியவர். 8. படுகர் - பள்ளம். கூ. இறையில் - எளிதில். 10. மறை, வரிவடிவங் கடந்து நாத மயமாயிருத்தலான், அஃது ஒலிமறை என்னப்பட்டது. நாதமயமாயுள்ள மறை, பலமொழிகளில் குருநாதன் வாயிலாக இறங்கி வரிவடிவம் பெறும். 3. கதிர் - சூரிய சந்திரர்; இயற்கை அன்னையின் இரண்டு விழிகள். 5. தெறு -அழிக்கும். கொல்லா நல்அறம் - அஹிம்ஸா தர்மம். 7. வீரன் - அர்ச்சுனன். அவண் - அங்கு. பயன்கருதா அறம் - நிஷ்காமிய கருமம். நாதக்கொடி - கோழிக்கொடி; கோழி நாத தத்துவத்துக்கு அறிகுறி. விந்து ஊர்தி - மயில்வாகனம்; மயில் விந்து தத்துவத்துக்கு அறிகுறி. 7. கீலம் - ஆணி. கீலமரம் - ஆணியடிக்கப் பெற்ற மரம்; சிலுவை. 8. கொலைமரம் - சிலுவை. நீலடியில் - புன்னை அடியில். 3. நிபுலை - (Nebula) 5. அனலி - சூரியன். 6. மாற்றம் - வார்த்தை; வாக்கு. 9. விச்சே - வித்தே 3. மனத்தின் மாயா நிலைகள் பல. அவை கடல் போன்றன. அவற்றைத் தொகுத்தால் மூன்றின மாகும். மூன்றின உண்மை, தியான யோகப் பயிற்சியில் வெளிப்படையாக விளங்கும் என்றபடி. 4. மூவித மனம்; புறமனம், நடுமனம், அடிமனம். புறமனம் புலன்களில் உழல்வது; நடுமனம் நலன்களில் நாட்டங் கொள்வது; அடிமனம் நிஷ்காமிய கர்மம் நிகழ்த்துவது. 6. அறம் விளங்கும் நடு மனத்தில், பிற மனங்கள் நினைப்பன எல்லாம் நுழைந்து பதியும். அதனால் நடுஅமைவில் அயல்மனங்கள் நினதாகும் என்னப்பட்டது. நடுமன விளக்கத்தில் சித்தும் விளையும். அச்சித்தில் அவாக் கொள்ளாமல் சென்றால் அடிமனம் விளக்கமுறும். அங்கு மனமே குருவாகும் நிலை உண்டாகும். 7. ஆகம் - உடல். 8. புறமனம் உப்புக்கடல் போன்றது. நடுமனம் நீராவி போன்றது. அடிமனம் மழை போன்றது. 9. புறமனம் அடங்க அழகு உரு ஒன்றை நினைந்து அதில் ஒன்றல்வேண்டும். அதனால் நடுமனம் விளக்கமுறும். நடுமன விளக்கத்தில் உருவம் நீர் மயமாகும். அடிமனநிலையில் நீர் மயம் ஒலிமயமாகி மறையும். பனிக்கட்டி நீராகிக் காற்றாகி நுண்மையாய் ஒடுங்குவது போல என்க. 8. மின்னால் மேய் பொறிப் பேயினால் - மின்சார இயந்திரத்தால். முதலாளி தொழிலாளி என்ற பிரிவாய். 10. பொதுமையைச் சாய்த்தன. பொதுமையை ஆணவச் செயலால் அமைத்தலால் விளையுங் கஷ்டத்தை உணர்ந்து. 2. கவட்டையை - கிளையை; துணையை என்றபடி. 5. இமயமா நிற்க - தியானத்தில் சாந்த இமயம் போல் நிற்க. 10. பாவக் கார்மேகம். நீர் நிலைகளை யெல்லாம் நிரப்பி. உயிராகிய பயிர்கள். 1. கூட்டரவை - சேர்க்கையை; கூட்டுறவை. எச்சமெலாம் - சேடங்களை யெல்லாம்; எஞ்சியுள்ள வினைகளை யெல்லாம். 2. கிளரி - எழுந்து, தளை - பாசம்; கட்டு. 3. எனது மடமையை அறிந்தேனே. ஒரு கம்பெனியில் கணக்கனா யிருந்தமை. 6. நிண நிணமே - மாமிச மாமிசமாக; இரத்தஞ் சிந்தும் புரட்சி என்றபடி. 8. ஒரோ வழியில் - ஏகதேசத்தில். அகத்திணையின் மனோதத்துவத்தின் 8. மணந்து அறத்தில் சார்தல் வாழ்க்கை. அவ்வாழ்க்கையே மற்றத் தையலரை . . . திருவளித்தல். 5. பால்வழி - Milky path. 10. ஒருவும் - நீங்கும். 1. இழிபாட்டுக்கு - இழிவு உண்டாதலுக்கு; இழிந்த நிலைமைக்கு. பாட்டை கழி - வருத்தத்தைக் கழிப்பாயாக. பழிபாட்டை - பழிக்குரிய கேடுகளை. 3. பீடு - பெருமை உடைய. கோடுகளை - கோணல்களை; கொடுமைகளை. 10. உயிரான வழிபாட்டை 3. அலைவு அழி. ஒலி மறைக்குக் காரணம். ஒலி காரணம்; மறை காரியம். 4. கண் - பீசம்; மூலம்; விதை. வித்து - பிழம்புகட்கெல்லாம் வித்து. 6. வேலையிலே - கடலிலே. 7. உடுக்கள் - நட்சத்திரங்கள். 1. மத்தி மறி மனம் - தீமைகளைத் தடுக்கும் நடுமனம். வேராம் மனத்தினை - அடிமனத்தை. 2. காலால் - காற்றால். எல்லாவற்றிற்கும் ஊற்றாயுள்ள நாடிகளை நிற்க வைத்தல். 7. பிற படிகளின். மனம் நிலைக்கத் தியானத்துக் கென்று கொள்ளப்பெற்ற குறி குலைந்து போகும். அஃதும் அறிவாகும். 8. காமியம் - பயன் கருதுவது. 9. செடி - பாவம் 10. அடி மனத்தின் இயல்பு பன்மையை ஒருமையாக்குவது. அம்மனம் மறையுங்கால் தியானம் அற்றுப்போகும்; ஒலியும் ஒளியும் முறையே பொருளாகும். பின்னே அவையும் மறையும். அந்நிலை வாக்கு மனங் கடந்தது; சொல்லொணாதது. அதுவே அழியா நன்மை பயப்பது. 2. இடையிலே தடைசெய்யும் மாய வித்தையில் இறங்கிவிட்டால் வீழ்வர்; நிலை இழிவர். தணந்திடுதல் - மறைதல். 4. நடு உடலும் நடு மனமும். படிமைநிலை - யோகப் பயனால் விளையுஞ் சிறந்த நிலை; தவநிலை; படிமம் போன்ற நிலை. 5. மரத்திலுள்ள தலை நடு வேர் ஆகிய மூன்றையும் ஒத்தனவே யாகும். 8. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே, கருவிடும் வாசற் கிருவிரற் கீழே, உருவிடுஞ் சோதியை உள்கவல்லார்க்குக், கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே - திருமூலர் மெய்நிறுத்தும் - உடலை நிறுத்தும். 1. உன் கொடை நோக்கம். 2. முதல் உடல் - காரண சரீரம். மூன்று உடலுக்கும் மூவகை நெஞ்சம் உண்டு. அவை முறையே உரு அரு ஒலி வண்ணம் இருப்பன. ஒலி கடந்தது ஒளிநிலை. ஒளி நிலையில் எல்லாவிதச் சிக்குகளும் ஒழியும்; சொல்லொணாத நிலை பின்னே எய்தும் 3. நுண்ணுடலம் புகைபோன்றது; தோல் நரம்பு எலும்பு அற்றது. 4. ஒங்கார உடல் - முதலுடல்; காரண சரீரம். ஒங்கார முதலுடலினின்றும் நுண்ணுடல் தோன்றும். மேலும் பருவுடல் பரிணமிக்கும். ஓங்கார உடல் நுண்ணுடலையும் பருவுடலையும் அளிப்பது என்றபடி. 5. ஓங்கார உடலுக்கு இரண்டு போர்வை உண்டு. ஒன்று உருவமென்னும் பருவுடலம்; மற்றொன்று அருவமென்னும் நுண்ணுடலம். இவ்விரண்டுடலின் வளத்தை யொட்டியே ஓங்கார உடலின் உரம் அமையும். ஆகவே நுண்ணுடலையும் பருவுடலையும் ஓம்புதல் வேண்டுமென்க. நுண்ணுடலை ஓம்புவது தியானம். பருவுடலை ஓம்புவன நிறை யொழுக்கமும் பொருந்திய உணவுமாகும். இவற்றால் ஓங்கார உடலம் உரம்பெறும். ஓங்கார உடல் உரம்பெற்ற பின்னை உரு அரு (பருமை - நுண்மை) உடல்களின் தாக்குதல் அற்றுப்போகும். 6. கரு உடல் - காரண சரீரம். கலியுலக நாட்டமெங்கே? கருவுடலிலா? பருவுடலிலா? 7. அடி - உன் திருவடி. ஆற்றினிலே - நன்னெறியினிலே. அழுக்கு இறுகல் - மலச்சிக்கல். ஆசை . . . புகழ் நாட்டம் முதலாய செயற்கைகளை. 8. வல்லவரும் - வலிமையுடையவரும், கலை - இடைகலை; பிங்கலை. வாசி அடல் - மூச்சடக்கல். 9. இரும்பு ; பருவுடல்; வெள்ளி : நுண்ணுடல்; பொன்: முதலுடல். இரும்பை - உலோக இரும்பை. 5. அகத்தின் துறைஉணர் அறிஞர் - மனோதத்துவ சாதிரிகள். 6. இறைவனும் இயற்கையும் ஒன்றியுள்ள நிலையை ஓவியத்தார் உருவத்தில் அமைக் கின்றனர். அவ்வுருவில் இயற்கை இறையின் தத்துவ நுட்பம் பொருந்துகிறது. இத்தத்துவ நுட்பம் ஒளிரும் உருவைத் தியானிப்பதால் பயன் விளையும் என்றபடி. 7. அழகு உரு ஒன்றையே நினைக்கும் பயிற்சி பெறுதல்வேண்டும். அது புற மனத்தில் நன்கு நிலைபெறும். அதனால் புற மனமும் நிலைபெறும். உருவம், நடுமனத்தில் இறங்கி நிலவும் போது கலங்கிவிடும்; பின்னே அடி மனத்தில் உறுங்கால் மறைந்து போகும். 2. உளக்கோயில் பெரிதும் பேசப்படுகிறது. மருத்துவர் உறுப்புக்களைச் சத்திரஞ்செய்து பார்க்கிறார். அவர் உள்ளத்தில் ஒரு கோயிலுமில்லையே என்கிறார். மனக்கோயில் எது? அது தியானத்தால் அமையும் என்றபடி. 7. தியானம் உயிர் போன்றது; தொண்டு உடல் போன்றது. 9. இடத்தொண்டு - தாம் வாழும் ஊர்த்தொண்டு. 1. வாகை - வெற்றிமாலை 2. சூரியன் தன் ஒளி பரப்புவதில் பால் கொள்ளல் (பட்சபாதம்) உண்டோ? 10. குண்டெறிதல் . . . கருணை மழை . . .பண்ணுவது. உன் அருட்டிறத்தின் . . . 5. செந்நீர் - இரத்தம் 6. வறுமை உலை வறுமை - வறுமையும் அஞ்சுங் கொடிய வறுமை. 8. வந்து - காற்று; நந்து - கொல்லும் 9. கட்டிடத்தில் நூல் காட்டி - பள்ளி யென்னும் பெயரால் வெறுங் கட்டிடத்தில் நூல் என்னும் பெயரால் ஏடுகளிலுள்ள எழுத்துக்களைச் சொல்லி என்றபடி. கற்பு - கல்வி; கலை; ஒழுக்கமுமாம். 10. இல்வாழ்க்கைவழி. ஆங்காங்குத் தோன்றியுள்ள இயற்கை மொழிகள் அழியாதவாறு அவற்றைக் காப்பது. 5. ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர், ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர், ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின், தானந்தம் அற்றிடம் ஆனந்த மாமே - திருமூலர் 6. அதனை (ஆனந்த வழியை) அடைவிக்கும். 7. அழகு அமிழ்தம் - குழந்தை. 1. உடலை ஓம்பி ஒழுக்கத்தைக் காப்பது அதிகப் படுதல் வேண்டும். 7. புதினம் - பத்திரிகை. அறிவியல் - சைன் 8. உயிர்ப்பு - பிராணசக்தி. பழுவம்-காடு; பொழில். 9. உறவு ஆதல் - அன்பு ஆதலை; விளைதலை. 2. ஆதவற்கு - சூரியனுக்கு. சீதனுக்கு - சந்திரனுக்கு 3. மண்ணில் ஐந்து : சுவை (ரசம்), ஒளி (ரூபம்). ஊறு (பரிசம்), ஓசை (சப்தம்) நாற்றம் (கந்தம்) விண்டு வில் - காற்றில். 6. உண்மையில் உன் இருக்கை. 7. ஏடு - பெருமை. 8. மலை முழவு அருவி. 1. ஏசு என்று உனை மறவேன் - ஏசு ஏசு என்று நினைந்தும் சொல்லியும் உன்னை மறவேன். 2. முன்னி - ஆழ நினைந்து. 3. மறித்ததுவே - தடுத்ததுவே. 4. பெரும - பெருமானே. 5. முனைப்பு - செருக்கு; திமிர்; அகங்காரம். சேயாய் - பிள்ளையாய். 7. செந்நீரும் - இரத்தமும், நிறை - நிறைவு; பூரணம்; ஒழுக்கம் எனினுமாம். 9. குருதி - இரத்தம். 1. கிறிது - கிறிதுவே. 2. உன்னையும் உன்றன் இனிய மொழியையும் ஏசினேன். 3. பொன்றிடும் - அழிந்துபடும். பொருப்புகள் - மலைகள்; மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்களெல்லாம் அழிந்துபடும் என்றபடி. 4. பொன்னடி அடைமின். 5. விழுமிய - சிறந்த; மேலான. 6. கறைகளை - மாசுகளை. கோது - குற்றம். 7. (வழிகள்) பள்ளிப் படிப்பாய்ப் பரவின. கோ - இறைவனது; ஏசுவின். 8. ஒழுக்கம் விழுப்பந் தரலால் ஒழுக்கம் - உயிரினும் ஓம்பப் படும் - திருவள்ளுவர். இருந்தால் - சும்மா கிடந்தால். ஒழுக்கம் தானே. குலவி நடந்து கொழிக்குமோ. குவலயத்தீர் - உலகீர். (அவ்வழுவை) அழுக்கைக் கழுவும். 9. காண்பு- காண்டல். மன்பதை - மக்கள் கூட்டம். புந்தியில் - மனத்தில். பொன்னுரு - கிறிதுவின் பொன்னுரு. 10. மீக்கூர்ந்து - மேலும் மேலும் அதிகரித்து. (கூர்தல் - உள்ளது சிறத்தல்). விளைந்தது அது; (அது -அப்பாவம்) சமய அகம் சன்மார்க்கம்; சாந்த மளிப்பது. சமயப்புறம் சாந்தத்தை அளித்தல் அரிது; அஃது அலுப்பைப் பெருக்குவது. 1. அலகு இல் - அளவில்லாத. சிலை - ஒளி; வில்லுமாம். நுதலார் - நெற்றியுடையவர்; (ஒளி விளங்கும் அல்லது வில்லைப் போன்ற நெற்றியுடைய பெண்மக்களின்) பெண்ணுலகில், ஆணுலகால் சேர்ந்த இழுக்குகளைப் போக்கி, அவ்வுலகிற்கு நலஞ்செய்து அதை மேம்படுத்த என்றபடி. 2. செவ்வியலி - செம்மை இயல்புடையவள்; (நற்குணமுடையவளாகிய ஒரு தாயின்) இறை உண்மை - கடவுளிருப்பு; தெய்வ நிச்சயம். மழவில் - குழந்தைமையில்; (கிறிது பெருமான் குழந்தைமையின் தெய்விகத்தைப் பற்றி அருளிய மொழிகளைச் சிந்திக்க.) 3. மகண்மை - பெண்மை. மருவு உலகம் - காணப்படும் உலகம்; விளங்கும் உலகம்; கலப்பு உலகமுமாம். 6. நீளரவை (பாம்பை) யொத்த கொடுங்கோன்மை. கொடுங்கோன்மை அன்று நடுங்கியது. அன்றுதொட்டுக் கொடுங்கோன்மை படிப்படியே நலிந்துவரல் கண்கூடு. குடிலில் - குடிசையில். 7. உரம் - பலம். இகல் - பகைமை; போர். பொறுமை அன்பு, கண்டித்தல் - அழித்தல் - முதலியன இல்லாததாகலின், அது கடியாத பொறுமை அன்பு என்னப்பட்டது. 8. நீ பலியாக அதனின்றும் சிந்திய இரத்தத்திலே, மன்னிக்கும் அன்பு உலகை. 9. கடி - விலக்கு; நீக்கு; வாளேந்தலை ஒழி என்றபடி. பகைவரிடத்தும் அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடி என்றவாறு. பொருநரையும் - பகைவரையும். 10. வாகையரும் - வெற்றிமாலை அணிந்தவரும். இப்பொழுது உன் அருளால் வழி கண்டேன் என்றபடி. 1. உடுக்கள் - நட்சத்திரங்கள். கலைஞர் - சாதிரிகள். சேயே - குழந்தையே. அலகையினை - பேயினை. 2. அப்பொழுது சிறு பிள்ளைகளை அவர் தொடும்படி அவரிடங் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர் அதட்டினார்கள். இயேசுவோ அதைக்கண்டு விசனப்பட்டு; சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; கடவுளின் ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது மார்க்கு - 10 -13-5 தொழுநோயர் - குஷ்டரோகிகள். 3. அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்றும் எங்கட்குத் தாரும் - மத்தேயு 6:11. நாளைய தினத்திற்காகக் கவலைப்படாதிருங்கள் மத்தேயு 6 :34. எதை உண்போம் எதைக் குடிப்போமென்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்போமென்று உங்கள் உடலுக் காகவும் கவலைப்படா திருங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் முக்கியமல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவை களைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகின்றனவென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோனே தன் சர்வ மகிமையிலும் இவைகளில் ஒன்றைப்போல் உடுத்தியிருந்ததில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லைக் கடவுள் இவ்விதமாய் உடுத்தினாரானால், அற்ப விசுவாசிகளே, உங்களை உடுத்துவது அதிக நிச்சயமல்லவா? ஆதலால், எதை உண்போம் எதைக் குடிப்போம் எதை உடுப்போமென்று கவலைப்பட வேண்டாம் மத்தேயு: 6: 25 - 31. அழியாத உன் மொழிக்கு உரித்தாய்ப் பொருந்தும். 4. ஒருவன் - யூதாகாரியோத். ஒருவன் - பேதுரு. 5. உறைந்தவரும் - வாழ்ந்தசீடரும். உறுத்தலினால் - தாக்குதலால். 6. பொறை - பொறுமை. 7. எக்குரவர் - எக்குரு. அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு - திருவள்ளுவர். 8. முழுமதியே - பூரண சந்திரனே. பொழிலே - சோலையே. மணிமந்திர ஔஷதம் என்பது வழக்கு. ஊன் உளத்தில் இரக்க மெழா தாகலின், ஊன்காணா உளத்திரக்கம் என்றபடி. உரம் - மார்பு. ஒழுகலை . . செய்தாய். 9. திளைத்தால் - மூழ்கினால். இகல் - போர். 10. சோதரமாய் - சகோதரமாய். 1. கையனேன் - வஞ்சகன். 2. வெகுளி - கோபம். விடக்கனி - விஷமாகிய கனி. 3. கழகம் - சபை; வாதசபை. 4. புள் - பறவை. முள்ளினம் - முட்களையுடைய மர இனங்கள். 5. தண்புனல் வேட்கை - தண்ணீர் தாகம். தடங்களை - நீர் நிலைகளை; குளங்களை. நயந்தனன்- விரும்பினன்; விரும்பி நண்ணினன். பிறிதில் தீஅரா - மற்றத் தடத்தில் தீய நச்சுப்பாம்பு. பரிந்தனை - பரிந்து தோன்றினை. (பரிவு - அன்பு) அன்புடன் விரைந்து தோன்றினை; பரிந்து வந்தனை என்றபடி. 9. பான்மை மொழி. பரிசிலை - சம்மானத்தை. உன்றன் இன்மொழி. 10. வரையினில் - மலையினில். மனத்தில் மலரும்படியான ஜெபத்தை. 2. இவர்ந்த - ஏறிய. உறை - தங்கும். 3. தள். . . வீய - தள்ளும் கடல் அலைகளின் கோபம் ஒடுங்க. வேய் - அணியும்; சூடும். 4. ஜெபஞ் செய்யச் செய்ய என் ஊனங்கள் - குறைபாடுகள் நன்கு விளங்கின என்றபடி. 5. ஆழி - கடல். 4. (பாவத்தில்) வீழ்ந்திடல். 8. பரன் அரிஅணை வான் - பரமனுடைய சிம்மாசனம் விண். பார்பதம்படியே - மண்ணுலகம் அவனது பாதப்படியே. உருவின்றி ஆவியாய் விளங்கும் பாரபரத்தை நினைந்தேன். அஃது என்னுள் நிலைக்கவில்லை. நிலைத்தது எது? தலையில் முண்முடியும், மண்ணில் அடிவைத்து நடந்த நடையும் உடைய ஏசுவின் வடிவம் என்னுள் நிலைத்தது. ஆதலின் பாரபரம் ஏசு என்றபடி. 9. (உயிர்கள்) இன்புற. 10. விராவிய - கலந்த; பொருந்திய. சிலுவையில் கலந்த - பொருந்திய - ஏசுவின் இரத்தம் வாழி என்றபடி. 7. தெவ்வரை - பகைவரை. 15. திருமலையில் சொல் (மலைப்பொழிவு); சிலுவையில் செயல்; அச்சொல் இச்செயலாயிற்று. கிறிது பெருமான் போதித்தவழி சாதித்துங் காட்டினரென்க. 20. வாழ்க சிலுவையும், சாதனைகளும். தேர்வோம் - ஆராய்ந்து சிந்தித்துத் தெளிவோம் 1. உள்ளமாகிய தடம். தடம் - குளம், சன்மார்க்கத்துக்குச் சத்தியம் அடிப்படை என்றபடி. 2. பிலிற்றும் - சிந்தும்; குருமார் பலர்; அவர்தம் போதனைகளும் பல. அவைகளுள் எட்டு, சன்மார்க்க சமாஜத்துக்கெனக் கொள்ளப்பட்டன. எட்டுள் எல்லாம் அடங்கும். 3. குருமார் பலருள் எண்மர்; 1. மகம்மது நபி, 2. இயற்கை அன்னை, 3. ஏசுகிறிது, 4. ஜினர், 5. புத்தர், 6. கண்ணன், 7. குமரன், 8. தக்ஷிணா மூர்த்தி. இவரனைவரும் உணர்வில் ஒருவரே. இவருள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. இவ்வெண்மர் போதனைகள் வருமாறு; 1. தெய்வம் ஒன்று, 2. (தெய்வ) உடல் இயற்கை, 3. அன்பு, 4. அஹிம்சை, 5. தர்மம், 6. நிஷ்காமியம், 7. அழகு, 8. மோனம். இப்போதனைகளெல்லாம் ஒரே உணர்வி னின்றும் பிறந்தன. ஒன்றுள்ள இடத்தில் மற்றவையுமிருக்கும். விளக்கம், சன்மார்க்க போதமும் திறவும், பொதுமை வேட்டல் என்னும் நூல்களிற் பார்க்க. நபி- மகம்மது நபி. இயல் - இயற்கை அன்னை, சினன் - ஜினன்; அருகன். குகன் - குமரன், மோனன் - தக்ஷிணாமூர்த்தி. அத்தன் - ஆண்டவன். இயல்பு - இயற்கை. இரக்கம் - அஹிம்சை. வினை - கர்மம்; நிஷ்காமிய கர்மம். செவ்வி - அழகு. அமை - அமைதி; மோனம். தெய்வம் ஒன்று, தெய்வ உடல் இயற்கை, தெய்வம் அன்பு, தெய்வம் அஹிம்சை, தெய்வம் தர்மம், தெய்வம் நிஷ்காமியம், தெய்வம் மோனம் அல்லது அமைதி ஆகியன பொருந்திய கொடி. 4. பல்கிடும் - பெருகிடும். அற - முற்றும். 5. சகோதரம் - சகோதரநேயம் (Universal Brother hood) துயர் தோன்றாத உலகை (அன்புலகை)ப் படைக்கும் பழமை வாய்ந்த கொடி. சகோதர நேயத்துக்குரிய சமதர்மம் மிகப் பழைய காலத்து மக்களிடை நிலவியது. அத்தர்மம் இடைக்காலத்தில் வீழ்ந்தது. அதை மீண்டும் புதுக்குங் கொடி என்றபடி. 6. விளைவை - உற்பத்தியை. கால் - உமிழும்; வீசும். 7. உற மன்னல் - பொருந்த நிலைபெற்றிருத்தல். 8. தனிமை அரக்கன் என்றது சர்வாதிகாரத்தை. 9. பாற்றி - அழித்து; இடைக் காலத்தில் புகுந்த பலவகைக் குறைகளை அழித்து என்றபடி. 11. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர். புற உட்பகை கல்லும் - புறப்பகையையும் அகப்பகையையும் அழிக்கும். 1. பழமை புதுமை என்பன நடைமுறையில் இல்லை என்றபடி. 2. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்பன இயற்கையல்ல. அவை உலக நடை முறைக்கென்று செயற்கை ஆட்சியிலிருப்பன. அவை போன்றன பழமை புதுமை என்பன. 3. பழமை புதுமை என்பன நடைமுறைக்கு ஏற்பட்டவை. அவை கணக்கிலோ காலத்திலோ இடத்திலோ அடங்கிவாரா. அவை கானற்சலம் போன்றவை. 4. இறையைப் பழைமை புதுமைகளில் அடக்கல் எளிய மதி என்றபடி. 5. பழமை புதுமை என்னும் உலக வழக்குவழி நின்றெழுந்த மொழிகளும் பதியின் இயல்பைப் பழமைக்குப் பழையன் என்றும், புதுமைக்குப் புதியன் என்றும் சொல்கின்றன. முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே - திருவாசகம்; திருவெம் 9. 6. உலக வழக்கில் தோன்றிய பழைய உலகம் ஒரு கடவுளைப் பலவகையாகக் கூறும்; புது உலகம், தெய்வம் ஒன்றென்பதைச் செய்கையில் தெளியும். 7. குவிகள் - பல்புகள். பலநிற மின்னல் விளக்குகள் ஒருவித ஒளியைப் பலவிதமாக உணர்த்தும். இது பழைய முறை. புதியது நிறத் தோற்றங்களைக் கடந்து ஒருமை ஒளியை உணர்த்தும் என்றபடி. 8. முதலாளி தொழிலாளி என்னும் இரண்டு வகுப்பு. 9. நஞ்சு மிடற்றன் - சிவன். நட பாம்பு அணையன் - திருமால், ஞானச் சிலுவை நயத்தன் - ஏசு கிறிது. அருகன் - ஜினன். 10. குழலில் குளிரும் கோட்டில் - புன்னையில். புதுமை இறை, ஆலில் (தக்ஷிணாமூர்த்தியாய்), அசோகில் (அருகனாய்), அரசில் (புத்தனாய்), சிலுவையில் (கிறிதுவாய்), புன்னையில் (கண்ணனாய்) இருக்கும். 11. புரக்கும் - காக்கும். 2. ஆராய்ச்சி எல்லையுடையது; அது கண்டத்தை யொட்டி நிகழ்வது; அஃது அகண்டத்தை அணுகாதது என்றபடி. ஆர்த்து - ஒலித்து. தேர்மின் - தெளிவடையுங்கள். 3. பரிகின்றீர் - வருத்த மேலீட்டான் விரைந்து கதறுகின்றீர். 7. விவலியம் - பைபில். சித்தாந்தம் - பரமாகமம் என்னும் ஜைனாகமம். திரிபிடகம் பகவத்கீதை என்னும் நூல்களில். திரு - அழகில், அமைதி - மோனத்தில். 8. பேய்த்தேர் - கானற் சலம். கருணைமறை - திருக்குரான் முதலிய வேதங்கள். 9. உலகைக் கொண்டே இறையுண்மை நிறுவவேண்டுமாதலின், அவ்வுலகைப் பொய்யென்று துறத்தல் கூடாது என்றபடி. 10. வைய மெய்யை - இயற்கை யுலகின் உண்மையினை (நுட்பத்தை). சக்தி - இயற்கையிலுள்ள பலதிறச் சக்திகள், ஒரு வகுப்பு - சாதி மதம் நிறம் மொழி நாடு முதல் தொழில் முதலியவற்றைப் பற்றிய பலவகை வகுப்புகள் மாய்ந்து மக்கள் கூட்டம் ஒன்றே என்னும் ஒரு வகுப்பு. இயற்கை உலகை ஆராய ஆராய அதன்கண் செறிந்து கிடக்கும் பலதிறச் சக்திகள் புலனாகும். அவை வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அவ்வப்போது உதவிப் பொருந்திய சமதர்ம வழியைக் காட்டி மக்களினம் ஒரே வகுப்பு என்னும் உணர்வை வழங்கும். 12. செந்நீரில் - இரத்தத்தில் 14. முகிழ்த்து - மலர்ந்து. 1. முழு நிலை - பூரணம்; சொரூபம்; நிர்க்குணம். 2. முனைப்பு அறல் - அகங்காரம் நீங்குதல். 4. பொறையை - பொறுமையை. ஒப்புரவை - உபகாரத்தை. வேலை - கடல். 5. கோ - பசு. பசுவின் குணம் சாந்தம். 6. அணங்கின் - தெய்வப் பெண்ணின். 7. கணக்குஇல். இயற்கைக் காட்சி வழங்குங் கணக்கில்லாத பன்மைத் தோற்றங்கள் கரைந்து ஒருமையாதல் அறியலாம். 8. வேழம் - யானை. வருடும் - தடவும். பணம் - படம். புட்கள் - பறவைகள். 15. வினைஞர் - தொழிலாளர். 1. திங்கள் - சந்திரன். அருக்கன் - சூரியன். ஆர்ந்த பெருங்கோள் - பொருந்திய பெரிய கிரகங்கள். 3. உண்மை நூல்கள் ஒளியைப்பற்றிச் சொல்லும் மொழிகளை உளங்கொண்டு விரும்பி. 4. ஒளியைக் காண்டல் வேண்டுமென்னும் உறுதியினின்றும் எழுந்த முயற்சியும், அதை யொட்டிய கவலையும் முடுக்க. முன்னி - இடையறாது நினைந்து. 8. ஆர்ந்தேன் - மூழ்கினேன். மாந்தேன் - பருகினேன். 9. புயற் புலன் - புயல் போன்ற புலன்கள். 12. மூலன் - திருமூலர், ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்குங்காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை - காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் - கூற்றை உதைக்குங் குறியது வாமே - திருமந்திரம். 14. கால் - காற்று. பாதபம் - மரம். புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை - நெறிப்பட உள்ளே நின்மல மாக்கின் - உறுப்புஞ் சிவக்கும் உரோமங் கறுக்கும் - புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே - திருமூலர். தேற்ற - தெளிவான. உட்கால் - உட்காற்று; அகக்காற்று. 15. சடக்கால் - சடக் காற்று; பூதங்களில் ஒன்றாகிய காற்று. சடஒளி - பூத ஒளி. 16. விஞ்ஞான உள்ளொளிக் காற்றை ஏற்பதில்லை. காரணம் என்னை? அவன் ஆராய்ச்சிக்கு வேராய் - மூலமாய் - இருப்பது சடமாகலின் என்க. 18. பரு யாக்கை - பரு உடல்; தூல சரீரம். 19. செத்த பிணத்தை மண்ணோ தீயோ எப்பூதம் உண்டால் என்ன? 22. மிடி - வறுமை. வெம் - வெம்மை; விருப்பம் பழைய ஆட்சி. 1. விளிம்பில் - ஓரத்தில். 2. ஆல்கிறது - அசைகிறது. 3. வானமுங் கடலுமாகிய இரண்டினிடையே. கானக் கலைக் கழகம் - இசைக் கலைக்கூடம். 4. பானத்தில் - அதர பானத்தில் ( அதர பானம் - மகளிர் இதழ் சுவைத்தல்) 5. விண்ணை நெருங்க நெருங்க நீலம் என்பது ஏமாற்றமாக முடியும். 6. மீனை - உடுக்களை; நட்சத்திரங்களை. பரவை - கடல். 8. உள்குவையோ - சிந்திப்பையோ. 11. எழிலி - மேகம். 12. உயிர்ப்பை கான்று - தூய பிராணனை உமிழ்ந்து. 13. அலையில் - கடலில், நின்று ஆர் உயிர்ப்பு. ஆர் - நிறைந்த. 14. கடலோரத்தில் உன் ஒளியில் மிக்க ஆற்றல் நடமாடுவதென்ன? கடலில் ஆடி ஆடி (Sea bath) சிறிது நேரம் உன் ஒளியில் மூழ்கினால். (Sun bath.) 17. கால் - உமிழும்; கக்கும். உன்னொளியைப் பார்க்கிலும் தோல் உயர்ந்ததோ? 18. தண்மை நிலம் - குளிர் நாட்டின். குளிர் நாட்டுப் பேச்சை வெம்மை நாட்டினர் ஏன் ஏற்று நடித்தல் வேண்டும் என்றபடி. 20. வெள்ளை - வெண் துகிலை. வேய் - அணியும். பள்ளிப் படிப்பில்லாத உழவோர் தம் தலையிலும் அறையிலும் வெண்துகில் அணிந்து ஞாயிற்றொளியில் மூழ்குகின்றனர். ஞாயிற்றொளியின் நுட்பங்களைப் போதிக்கும் பள்ளிப் படிப்பாளிகள் பலதிறச் சட்டைகளால் உடலை மூடி ஒளியைப் பகைக்கின்றனர். இருவருள் எவர் மெய்ம்மை விஞ்ஞானி என்றபடி. 22. ஆலம் - நஞ்சையுடைய. அரசியலில் தலைப்பட்ட நாள்தொட்டு மரத்தடியில் அமர்ந்து ஒளியில் மூழ்கி, உயிர்ப்பு என்னும் அமிழ்தைப் பருகுதல் இழந்தேன் என்றபடி. 24. கோள் செலவில் - கிரகங்கள் சுற்றி வருதலில். 29. பூமி சூரியனிடத்தினின்றும் விழுந்த ஒரு துண்டம் ஆதலின், உறுப்பாம் உலகிடை என்னப்பட்டது. 31. தாழ் - தாழ்ப்பாள். 32. இமயத்தவர் - இந்தியர். 34. உன்றன் கலை என்றது சூரிய கலையை. கலை இரண்டு. ஒன்று சூரிய கலை; மற்றொன்று சந்திர கலை. 35. திங்கள் கலை - சந்திர கலை. 36. சூரிய கலையில் சரித்திர கலை ஒன்றி இரண்டும் ஒன்றாய் இயங்கும் நிலையில் காமன் எரிந்து சாம்பராவன் என்றபடி. 37. சூரிய கலையும் ஒடுங்கும் நிலை மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவதாகும். அந்நிலையில் சூரிய கலையின் உதவியும் நீங்கும். எல்லாவற்றிற்கும் முதன்மையாயுள்ள ஒரு பெரும் உள்ளொளியின் துணை கிடைக்கும். 39. உயிர் ஒளிர வேறோர் ஒளியுண்டு. ஆனாலும் உன் நன்றியை மறப்பதில்லை. 40. கள்ள இருள் - புற இருள். புற இருளை அகற்றுவதுடன் நில்லாது, அக இருளை ஓட்டும் உள்ளொளியையும் உணர்த்தி ஒதுங்கும் இயல்பு சூரியன் மாட்டிருத்தலால், அச்சூரியன் வாழ்க என்றவாறு. 1. முயற்சிக்கு அடி - முயற்சிக்கு அடிப்படையா யிருப்பது (இயற்கை). 4. சேய்கள் - குழந்தைகள். 6. பாடுகள் - படும் பாடுகள்; தொழில்கள். 8. கேளிர் - உறவினர். 1. நறவம் பிலிற்றும்- தேன் சிந்தும். மாந்த - பருக. 2. பேய்த் தேரே - கானற் சலமே. 3. புலம் - புலன்கள். 4. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் - முப்புரம் எரித்தனன் என்பர்கள். மூடர்கள் - முப்புரமாவது மும்மல காரியம் - அப்புர மெய்தமை யாரறிவாரே - திருமூலர். 5. எஃகம் - ஆயுதம். 6. ஜின உத்தமனார் - விருஷப தேவர்; அருகர். 7. நிறை - ஒழுக்கம்; சீலம். 1. எல்லாச் சார்பு மக்களும். 4. மதி - அறிவு. எல்லாவிதக் கோயில்களும் மனத்தினிடத்தில் கோயில் கொள்ளுதல் வேண்டும். 5. மாற்றம் - வாக்கு. வினை - செயல். நினைவும் மாற்றமும் வினையும் முறையே மனத்தையும் வாக்கையும் காயத்தையுங் குறிப்பன. எண்ணமும் மொழியும் செயலும் கோயிலாயின், எல்லாம் கோயிலாகியே தீரும். எல்லாவற்றிற்கும் உறைவிடமாகிய அறிவுங் கோயிலாகும். அந்நிலையில் எங்கணும் அன்புத் தொண்டு நிகழ்வது இயல்பாகும். 7. மஞ்ஞை - மயிலை. அலகு - கூரிய மூக்கையுடைய. 8. பிடி - பெண் யானை. பிணை - பெண்மான். கடுவன் - ஆண் குரங்கு. ஆட்டிடை - விளையாட்டிடை. 9. ஒட்டு - ஒடுதலையுடைய. 10. கூற்றின் ஆட்சி - யமனுடைய ஆட்சி. குலவுதல் - மகிழ்ச்சியோடு நடைபெறுதல். 11. வேள்வி - யாகம். வேண்டல் - பிராத்தனை. கிளைத்தல் - பெருகுதல். 12. நீசம் - (சீவ வதை என்னும்) இழிவு; கொடுமை; சண்டாளம். 13. தீட்டும் - வதைக்கும். 14. குண்டு கூடம் - குண்டுகள் செய்யுந் தொழிற் சாலைகளை. 18. கொல்லும் ஆட்சியை அழிப்பது. 9. புலத்தில் - காணி பூமிகளில். 2. மருவும் - பொருந்தும். 3. தேர்தலுக்கு - ஆராய்ச்சிக்கு. 28. கருவி - ஐம்பொறி; இங்கே உடல். கரணம் - அந்தக் கரணம்; இங்கே உள்ளம். காதலுக்கு உடல் உலகம்; உள்ளம் உடல் என்றபடி. 29. உள்ளல் - நினைத்தல். 33. அன்பாகிய இறை. 45. உறையுள் - இருப்பிடம். 57. கால் - வீசும். 61. மின்னல் அருவி- மின்னல் பாயும் அருவி. 64. பைங்கூழ் - பசும்பயிர். 67. வாரி - கடலில். 68. சத் இயல். 106. கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் இம்மூனறுந் திரிபலா எனப்படும். 107-8 . சுக்கு மிளகு திப்பிலி இம்மூன்றும் திரிகடுகம் எனப்படும். 110. கடுக்காய்க்குத் தசமாதா என்றொரு பெயருண்டு. 111. துகளை - மாசை. 114. அதிக காரத்தால். 147. பல் இயம் - பல கீத வாத்தியங்கள். 163. ஒருவனும் ஒருத்தியுஞ் சேர்ந்து வாழ்தலால் உலகம் வளர்ச்சியுறுகிறது. அவ்வளர்ச்சி உள்ளதுசிறத்தல் என்னுங் கூர்தல் அறத்துக்கு (Evolution)¤ துணை போகிறது என்றபடி. 167. சால்பு - மனஅமைதி. 169. மன்பதைக்கு - மக்கள் கூட்டத்துக்கு. 184. முன்னும் - ஆழ நினைக்கும். 203. ஈமம் - சுடுகாடு. 215. படர்இல் - படரும் வீடு. 210. மதி - சந்திரன். சேய் - குழந்தை. 242. பனிமை - நடுக்கம்; வருத்தம். 269. உலவா - வரளாத. 288. பொதும்பர் - மரஞ்செறிந்த இடம். 296. புரோகித அரசு என்பது ஏகாதிபத்தியத்தைத் தோற்றுவிப்பது; அதற்குத் துணைபோவது. 312. தீய தாள்கள் - தீமையை வளர்க்கும் பத்திரிகைகள். 366. சொக்கப் பொதுமை - சுத்த பொதுமை; சுத்த பொதுமையில் முழு அறநிலை விளங்கும் என்றபடி. பொதுமையில் அறம் பொலிதலால் பொதுமையை அறமென்றும், அறத்தைப் பொதுமை யென்றுங் கொள்ளலாம். 1. உயிர் தந்திடல் - பிள்ளை பெறுதல். காட்சி - கண்கூடு; பிரத்தியட்சம். 2. ஒழுகு இடம் - இயங்கும் இடம். 3. வயங்கிடும் - ஒளிசெய்யும்; விளங்கும். கானம் - காடு. 4. ஆர்த்த - ஒலித்த; கர்ச்சித்த. 7. கோது இல் மார்க்கம் - குற்றமற்ற மார்க்கம்; சன்மார்க்கம். 1. நவகலையை - புதுக்கலையை. நண்ணியது - கிட்டியது; அடைந்தது. தணந்து தணந்து - நீங்கி நீங்கி; பிரிந்து பிரிந்து. பொன்ற - அழிய; மறைய. பாழ் என்னுஞ் சொல் ஆராய்ச்சிக்கு உரியது. அதற்கு வெறுமை, இன்மை, ஒன்றுமற்றது, சூந்யம் என்று பொருள் கூறிவிடலாம். இவை அகராதிப் பொருள்கள். பாழ் ஆழ்ந்த பொரு ளுடையது. அது தத்துவ உலகில் பதிந்து கிடக்கும் ஒன்று; காலத்துக்கேற்ற பொருள்விளக் கத்தை வழங்குந்தன்மை வாய்ந்தது. இத்தகைய ஒன்று ஆராய்ச்சிக்கு உரிய தன்றோ? பாழ் உள்ளதா? இல்லதா? என்பது சிந்திக்கற்பாலது. பாழ் உள்ளது; ஆனால் நாமரூபமற்று ஒன்றுமில்லாமற் கிடப்பது என்று கூறுவோரும் உளர். பாழ் உள்ளதே அன்று; ஒன்றும் அற்றதே என்று கூறுவோரும் உளர். விஞ்ஞான உலகில் பாழ் (சைபர்) பல பொருள் பெற்றுள்ளது. ஈண்டைக்கு விரிவு வேண்டுவதில்லை. ஈண்டு ஒன்று குறித்தல் சாலும். அஃது ஒரு நிலையில் உள்ளதாய் மற்றொரு நிலையில் இல்லதாய் இருப்பது பாழ் என்பது. பாழ் உள்ளதாய் இல்லதாய் இருப்பது என்று இக்கால விஞ்ஞான உலகங் கருதுகிறது. பாழ் பொருண்மை உடையது; பொருண்மை யற்றதன்று. அது நாமரூபங் கடந்ததாய், ஒன்றுக்கும் மேற்பட்டதாய் இருப்பது. இங்கே பாழ் என்பது கடவுளின் நாமரூப மற்ற நிலையைக் குறிப்ப தென்க. இது நமது நாட்டுப் பண்டை மூதறிஞரால் சொரூப மென்றும், நிர்க்குணமென்றும் வழங்கப்பட்டது. பாழ் இந்நூற்கண் பலவிடங்களில் வரும். பாழ் கடவுளின் உண்மைநிலை என்றபடி. 2. பாழ் அளவு கடந்தது; எல்லை கடந்தது (Infinite) மருவும் - (உணர்வில்) தோன்றும். மன்னும் - நிலைத்திருக்கும். அருவுருவாய் - அருவும் உருவுமாகி. கோட்டில் - நியதியில். 3. வயங்கும் - விளங்கும். உலகம் இல்லையாயின் உனது இருப்பை உணரல் இயலாது என்றபடி. உலகின் இன்றியமையாமையைக் கூறியவாறாம். காண் அதற்கும் - காணக்கூடியதாயுள்ள உலகமென்னுங் கழகத்துக்கும், உலகைக் கடி என்றவரைப் பார்க்கினும், அதைப் படி என்று சொன்னவர் பெரியோர் என்க. 4. செம்பொருளே - சிவமே. ஐம்பொருள் - பஞ்சபூதம். அறுதியிட்டார் - முடிவு செய்தனர்; உறுதிப்படுத்தினர். விஞ்ஞை - விஞ்ஞான வித்தையின். 5. ஒன்று இரண்டு மூன்று நான்கு.... பத்து... நூறு.... ஆயிரம் என்று உயர்ந்து செல்லுதல். சைபர் - பாழ். சைபர். ஒன்றுக்கு முன்னும் பின்னும் நின்று அதைப் பொருளாக்குவது என்றபடி. பொருண்மை - பொருளுடையது. நான் - முனைப்பு; அகங்காரம். 1. பரிதி - சூரியன். குலவி - மகிழ்ச்சியொடு விளங்கி. வாளா - சும்மா. வரையாத - வரம்பில்லாத; எல்லையில்லாத. 2. காலும் - உமிழும்; கக்கும். அடர் ஓங்கலாய் - அடர்ந்த மலையாய். அணங்கு - தெய்வம் (வன அணங்கு - வனதேவதை). 3. படர் - படர்தல் 4. வளரும் - தங்கும். மகிழும்; உறங்கும் என்னலுமாம் பாண்மிழற்றும் - பாட்டிசைக்கும். ஆல - ஆட. 5. கஷ்டமில்லாமல் வழிபாடு செய்யலாமே என்றபடி. 1. இயற்கை சடம் (Matter). சடத்துக்கு இயல்பாகவே அசைவு - இயக்கம் (motion) கிடையாது. சிவத்தின் கடந்த நிலையில் இயக்கங் கிடையாது. இயக்கம் எப்பொழுது ஏற்படுகிறது? சட சிவ (அறிவு) கலப்பில் இயக்கம் ஏற்படுகிறது. இக்கலப்புத் தோன்றியது எப்பொழுதோ தெரியவில்லை. தொல் - பழமை. அசைவு தோன்றிய காலம் தெரியாமையால், தொல் அசைவு என்னப்பட்டது. 2. விரவும் - கலக்கும். 3. மா - பறவை விலங்கு முதலியன. அலகு இல் - அளவில்லாத. 5. தார்வின் - டார்வின். கூர்தல் அறம் - உள்ளது சிறப்பது (Evolution.) 1. சிற்பரமே நீ ஆடுமிடம். எற்பு - என்பு. 2. முன்னுதற்கும் - நினைப்பதற்கும். மூல அடைவு - எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள இறுதிகதி; சிவகதி. தே இயற்கை - தெய்வத் தன்மை வாய்ந்த இயற்கை. 3. பணி - ஆபரணம். புல்லும் - சேரும்; பொருந்தும். ஒன்று பிண்டமாகக் கிடக்கிறது. பின்னே அதில் ஏதோ ஒன்று பொறிக்கப்படுகிறது. பொறி எழுந்ததும் மக்கள் கருத்துப் பிண்டத்தின்மீது செல்வதில்லை; பொறிமீதே செல்லும். அவர்தங் கருத்தில் பிண்டம் இல்லை என்றவாறு. 4. இயற்கைப் படிவில் - இயற்கைக் கலப்பில்; சேர்க்கையில். பரம்பரக் கூத்து - மென்மேலும் வளர்ந்து செல்லுதலையுடைய நடனம்; முத்திக்கு ஏதுவான நடனம் எனினுமாம். சிதம் - ஞானம். 5. சோதரம் - சகோதரம். 1. கூத்துஇல் - கூத்தில்லாத; அசைவில்லாத; இயக்கமற்ற. 2. வெட்டவெளி ஒன்ற - வெட்டவெளியாகிய பாழில் ஒன்றுபட. 3. கோள்கள் - கிரகங்கள். வையம் எல்லாமும் - இவ்வுலகம் முதலிய எல்லா உலகங்களும், கானம் - இசை. கான. . . . கண்டோர் . . . .இசைவடிவச் சித்திரமாய்ச் செய்தவர். அதை . . இடை ஆகும்படி . . . கண்டோர். 4. தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில், தாளொன்றால் அண்டங் கடந்துருவித் - தோளென்றால், திக்கனைத்தும் போக்குந் திறற்காளி காளத்தி, நக்கனைத்தான் கண்டநடம் - நக்கீரர். அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள், முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம், மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும், அறிந்தாடும் ஆற்றா தரங்கு -காரைக்காலம்மையார். தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய், ஊன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு - மனவாசகங்கடந்தார். அம்பல மாவது அகில சராசரம், அம்பல மாவது ஆதிப்பிரானடி, அம்பல மாவது அப்புத்தீ மண்டலம், அம்பல மாவது அஞ்செழுத் தாமே - திருமூலர் பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும், நாமநீர் வரைப்பினானில வளாகமும், ஏனைய புவனமும் எண்ணீங் குயிருந், தானே வகுத்ததுன் தமருகக் கரமே. தனித்தனி வகுத்த சராசரப் பகுதி, அனைத்தையும் காப்பதுன் அமைந்தகைத் தலமே, தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும், மாற்றுவ தாரழல் அமைத்ததோர் கரமே, ஈட்டிய வினைப்பயன் எவற்றையு மறைத்துநின், றூட்டுவ தாகுநின் ஊன்றிய பதமே, அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம், கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே - குமரகுருபரர். குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணீறும், இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே - திருநாவுக்கரசர். கல்லின் - கல்லினும்; கல்லைப் பார்க்கிலும். 4. செகுப்பின் - (நீக்கி) ஒழித்தால். 2. கருவி உருவம் என்றபடி. 4. மின் - மின்னல்; மின்சாரம். குவை - மூடி; பல்பு. முன்னு . . . முயக்கி (அன்பர்கள்) நினைக்கும் உன் திருவடி ஒளியினின்றும் எழும் (படைத்தல் - காத்தல் - அழித்தல் என்னும்) மூன்று தொழிலைத் தொடர்புபடுத்தி. 1.. அடை - பொருந்தும். உதடு கொவ்வைக்கனி போன்றதென்க. 3. மால் - மயக்கத்தை; இருளை. 4. மதனை - காமனை. ஒருத்தன் - இராவணன். 5. பணத்து - படத்தையுடைய. 1. சித்தினுக்கு - அறிவினுக்கு (அழிவது சடம்) நுண்மைத் திண்மை - சூட்சுமத்தின் தூலம். நுண்ணிய தத்துவங்கள் திண்ணிய உருவங்களாகின்றன என்றபடி. 3. ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே - திருவாசகம். உழை - மான். துடி - உடுக்கை. சாய்கை - சாய்ந்த கை; அபய கரம். முயலகனை இறுத்த கால். கூர் - உள்ளது சிறத்தலை ஐந்து செய்கை - படைத்தல், காத்தல். அழித்தல், மறைத்தல், அருளல். 4. இறைவன் அணிந்துள்ள பாம்பு உலகத்தின் மூல காரணமாக உள்ள நாதம் - ஒலி - vன்றபடி. களிப்பு - மதம். பூட்கை - கொள்கை. 5. உள்ளுறை - தத்துவ இரகசியங்கள். 2. விழு - சிறந்த. 3. சத் சித் ஆனந்தம் - சச்சிதானந்தம் (சத் - உண்மை) சித் அறிவு; ஆனந்தம் - இன்பம்). சேய் - குமரன். சோமாகந்த மூர்த்தத்தைக் குறித்தவாறாம். இதுபற்றி முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விளக்கஞ் செய்துள்ளேன். 4. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன், முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள்,முப்புரமாவது மும்மலகாரியம், அப்புறம் எய்தமை யாரறி வாரே - திருமூலர். 5. துதையுமேல் - பெருகி நெருக்குமாயின். 2. கருங்கதை - இருட்கதை; அஞ்ஞானத்தைத் தருங்கதை. 3. உயிரின் - உயிரினும்; உயிரைப் பார்க்கினும். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - திருக்குறள். 5. மிடைதல் - மலிந்து நிறைதல். 1. ஒன்றாத - (ஒன்றினும்) பொருந்தாத. மயிலை - மயிலாப்பூர்; உமையம்மை மயிலாகி இறைவனை வழிபட்ட திருப்பதி; சென்னையிலுள்ளது. 3. திருத்தொண்டர் வழிபாடாக உருவெடுக்கக் குன்றை முனியாகிய சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணமென்னும் பெரியபுராணம் துணைபுரிய என்றபடி. இருக்கு - இருக்குவேதம். 4. எருத்து இவரும் - எருதேறும். 1. தெவ் - பகை. 3. கரி - யானையின். 1. மந்தி - குரங்கு. ஐந்தின் - ஐம்புலனின். தளை - கட்டு விலங்கு. திளைத்தல் - மூழ்கல். தீயமனம் - புறமனம்; புலன்கள் வழி உழல்வது. நன்மனம் -(புலன்களாகிய கட்டை அறுத்த) அகமனம். 2. மணிக்களம் - நீலகண்டம். மலர்க்கரமும் அடியும் - மலர்க்கையும் மலரடியும். அதை - அவ்வுருவை. பாவமனம் - புறமனம். பரம அகம் - மேலான அகமனம். 3. கை கரியை - துதிக்கையுடைய யானையை. வெங்களி - கொடிய மயக்கமுடைய. நகை கணையன் புன்சிரிப்பாகிய அம்பையுடையவன். காமனை வேகுமாறும் யமனை உதைத்தும் வீழ்த்திய வீரன். 4. ஒப்பனையாய் - அணியாக; அலங்காரமாக. இளைஞர்க்கு - மார்க்கண்டேயருக்கு. உய்த்தோன்- கொடுத்தவன். அரக்கன் - இராவணன். கூர்ந்தோன் - சிறக்கச் செய்தோன். நாகை பன்றி குருவிகளுக்குப் பேறளித்ததைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க. பீடு - பெருமை. 5. திவறு - தவறு; அழிவு. திவள் - அசையும். புவனமெல்லாம் எல்லையுடையனவாகலின், அளவுப்புவமையெல்லாம் என்னப்பட்டது. 2. தவனம் - (நெருப்பு) செம்மை. தவனச் சடைமுடித் தாமரை யானே - திருமூலர். 3. தவளமதி - வெண்பிறை. பிறைமதி தூய அறிவுக்கு அறிகுறியாதலின், அறிவின் தனிமை ஒளி என்னப்பட்டது. காலும் - உமிழும். தணந்து இறுகல் - மறைந் தொழிதல். பாவங் குறித்து முறையிடும் உயிரின் பாவத்தைத் தான் ஏற்று அருள்புரிபவன் இறைவன். இதற்கு அடையாளமாக விளங்குவது தழற்கண்டம் - நீலகண்டம் என்க. நவிர் - வாள். விடப்பாம்பையும் நேசிக்கும் இறைவன் என்றபடி. நளின மலர் - தாமரை மலரை யொத்த திருவடி. திருவடி திருவருளுக்கு அறிகுறி என்க. நயத்தல் - இனிமை செய்தல்; பயன்படுதல் எனினுமாம். 4. அலகைக்கு - பேய்க்கு. சவத்துமுடை - பணநாற்றம். வீசிவிசி - வீசி விம்மி. 2. உறாமைகள் - உதாசினங்கள். காரியம் - மாயா காரியம். (காரியப்படுவது மாயை; இறையன்று) 4. பால்திகக் கடல் - பால்டிக் கடல் (Baltic Sea); ஐரோப்பாவிலுள்ள ஒரு கடல். நீலநதி எகிப்தில் இருப்பது. தால் - நா; நாக்கு. 5. தழற்களம் - நஞ்சணிந்த நீலகண்டம். நவை - குற்றம். 2. பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப், பன்னு நீள்பனி மால்வரைப் பாலது, தன்னை யார்க்கும் அறவரியா னென்றும், மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை - சேக்கிழார். 3. ஈட்டம் - கூட்டம். ஏற்பே - வரவேற்பே. இந்த மரபினால் பரதகண்டம் பெருமை பெற்றதென்க. 4. வியலினை - பெருமையினை. விழுமிய - சிறந்த. வியன் - அகன்ற. 5. மாது இறை - உமாதேவியைச் சிவபெருமான். 2. கலன்கள் - அணிகள்; ஆபரணங்கள். 3. சொல்வேந்தர் - திருநாவுக்கரசர். அங்கமாலை என்பது தலையே நீவணங்காய் என்னும் பதிகம். 4. பராவண மாவது நீறு - ஞானசம்பந்தர். 5. சரிகின்றீர் - சஞ்சரிக்கின்றீர். சாகரத்தில் ஆர்த்த - கடலில் ஆரவாரித்து எழுந்த. 3. அறமே - தர்ம சொரூபமே; சிவமே. 1. அவன - அவனது; அவனதாள் என்றார் சம்பந்தரும். அலங்கல் - மாலை. அத்தி - அதி; எலும்பு. உடையும் போர்வையும் முறையே புலித்தோலும் யானைத்தோலும். உரி - தோல். புலி யானை உரி - புலி உரியும் யானை உரியும். கலன்- உண்கலன். பவனம் - இல்லம்; வாழிடம். இடுகாடு - மயானம். ஊர்தி பாறல் - வாகனம் எருது. 2. குன்றை முனிவர் - குன்றத்தூர் முனிவராகிய சேக்கிழார். அதில் - அந்தக்கலையில் (பெரியபுராணத்தில்). திண்ணர் - கண்ணப்பரின் இயற்பெயர். இவர்கிறதே- ஏறுகிறதே. 3. கீரர் - நக்கீரர். நக்கீரரும் கல்லாடரும் கண்ணப்பர் திருமறம் பாடியவர். மூவர் - அப்பர் சம்பந்தர் சுந்தரர்; (இவர்தம் பாடல்களில் கண்ணப்பரைக் காணலாம்) கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை) என்று கண்ணப்பர் அன்பைச் சிறப்பித்தவர் மாணிக்கவாசகர். பெரிய நூல் - பெரிய புராணம். 4. மெய்ப்பொருள் - மெய்ப்பொருள் நாயனாரை. மெய்ம்மையிலான் - முத்தநாதன். வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் - சுந்தரர். செய்- சிவப்பு; கோபக் குறி. கோபத்தால் சிவந்த இருவர் என்க. கோபத்தால் கொலை விளைக்கவல்ல வாள் அன்பாக மாறியதைப் புராணத்திற் காண்க. 5. அமைச்சர் - மந்திரி சேக்கிழார். திருக்கோயில் இங்கே பெரியபுராணத்தைக் குறிப்பது. 4. இனி -இனிய. பொற்புஉள் - அழகு உள்ள. 3. தவனமுடி - சிவந்த சடைமுடி.