திரு.வி.க. தமிழ்க்கொடை 6 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 6 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 10+422=432 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 215/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix முன்னுரை xiii நூல் 10. தொழிலாளர் இயக்கம் 3 11. சமயமும் சன்மார்க்கமும் 104 12. மாதர் 180 13. சீர்திருத்தம் 233 14. தொண்டு 284 15. உடல் 321 16. இறுவாய் 391 சிறப்புப் பெயரகராதி 414 காலக் குறிப்பட்டவணை 421 திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் - 2 (1944) 10. தொழிலாளர் இயக்கம் எனது வாழ்க்கையைப் பெரிதுங் கவர்ந்தது தொழி லாளர் இயக்கம். அவ்வியக்கம் ஊண் உறக்கத்தைக் குலைத்தது; என்னை மெலிவித்தது. அஃது என்னைத் தன்னுள் யோகியாக்கி யது என்று சுருங்கச் சொல்கிறேன். தொழிலாளர் இயக்கத்துடன் யான்கொண்ட தொடர் பின் முதற்கூறு என்னால் இயற்றப்பெற்ற இந்தியாவும் விடுதலையும் என்னும் நூற்கண் திகழ்கிறது. அதை இங்கே தந்து, பிற குறிப்புக்களைப் பின்னே தொடர்ந்து பொறிக்க முயல் கிறேன். அது வருமாறு:- தொழிலியக்கத் தோற்றுவாய் இந்தியத் தொழிலாளர் இயக்க வரலாறு சிலரால் எழுதப் பட்டுள்ளது. அவ்வரலாறுகளில் ஆரம்ப நிகழ்ச்சிகள் சில திரிபாக எழுதப்பட்டுள்ளன; சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகள் சில விடப்பட்டுள்ளன. இடை இடை நேர்ந்த இடர்களும் கார ணங்களும் இன்னும் எவராலும் விளக்கப்படவில்லை. இயக்கத் தோற்றத்திலும் தொடர்ந்தும் ஈடுபட்டவருள் யானும் ஒருவனா தலின் பல உண்மைகள் எனக்குத் தெரியும். அவைகளை எல்லாம் நிரலே கிளந்து கூறச் சமயமும் வாய்ப்பும் என்று கிடைக்குமோ அறிகிலேன். ஒருபோது பொருளாதாரப் பொதுமை ஒரு சிறிது வலியுறுத்தப்பெற்ற காரணத்தால் தொழிலாளர் இயக்கம் பட்டபாட்டை ஈண்டு விளக்குமுகத்தான், அதன் தோற்றுவாயில் இன்றியமையாத சில கூறுபாடுகளைச் சிறிது சொல்ல விரும்புகிறேன். கீர் ஹார்டி 1908ஆம் ஆண்டில் நாட்டில் சுதேச இயக்கத்தால் பெருங்கிளர்ச்சி எழுந்த வேளையில் பார்லிமெண்ட் அங்கத் தவர் சிலர் இந்தியா நோக்கினர். அவருள் தொழிற்கட்சித் தலைவராகிய கீர் ஹார்டியும் ஒருவர். அவர் சென்னையில் சிலநாள் தங்கியபோது தமக்குத் தேவையான சில பொருள் வாங்க பென்ஸர் கம்பெனிக்கு வந்தனர். அப்பொழுது யான் அக்கம்பெனியில் ஒரு சிறு கணிதனாயிருந் தமையால் கீர்ஹார்டியை நேரே நெருங்கிப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர்தம் வரலாறு சுருக்கமாகப் பத்திரிகையில் வெளியாயிற்று. அவ்வரலாறு எனது நெஞ்சில் தொழிலாளர் உலகைப் படிவித்தது. அன்றுதொட்டுச் சமயம் நேரும் போதெல்லாம் தொழிலாளரைப்பற்றிய நூல்கள் ஒரோவழி ஆராய்வது எனது பயிற்சிகளுள் ஒன்றாக இருந்துவந்தது. எனது நெஞ்சில் முதல் முதல் தொழிலாளர் இயக்க விதையை விதைத்தவை கீர் ஹார்டியின் காட்சியும் வரலாறுமாகும். அவ்விதை எனது பலதிற வாழ்விடை எங்கேயோ ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. செல்வபதி சந்திப்பு யான் பின்னே பென்சர் கம்பெனியை விடுத்துச் சென்னை ஆயிரம் விளக்கிலிருந்த வெலியன் முதல்தர மூலாதாரப் பள்ளியிலும், வெலியன் டெக்னிகல் இன்ஸிடி டியூட்டிலும் ஆசிரியனாயிருந்து, பின்னர் சென்னை வெலி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியனாயமர்ந்து, தொண்டு செய்த காலத்தில், ஒருநாள் ஜுனியர் இண்டர்மீடியட் வகுப்பில் தமிழ்ப் பாடம் போதித்து வெளிவந்தபோது, பட்டுக்கரை வேட்டியுடையும், அல்பாகா சட்டையும், சரிகை முத்துப்பூக் கள் பொறித்த கரை திகழ்ந்த வெள்ளிய துணிமாலையும், மாநிறப் பெல்ட்காப்பும், மஞ்சள் சூரணந் தீட்டிய திருமண் தாரணமும் கொண்ட கோலத்துடன், கருமை தவழ்ந்து இளமை கொழித்துப் பணிவுச் செல்வம் பதிந்திருந்த ஓர் உருவம் கைகூப்பிக்கொண்டு என்னெதிரிலே வந்தது. யானும் கைகூப்பி அவ்வுருவுடைய அன்பரை நோக்கி, தாங்கள் யார்? என்ன விசேடம்? என்று கேட்டேன். என் பெயர் செல்வபதி; யான் சூளைப் பட்டாளத்திலுள்ள வேங்கடேச குணாமிர்த வர்ஷணி சபையின் காரியதரிசி. அச்சபையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பேச்சைக் கேட்கச் சபையினர் விரும்புகின்றனர். அழைக்க வந்தேன். என்று திரு. செல்வபதி செட்டியார் பதில் கூறினார். அவர்தம் விருப்பத்துக்கு யான் இணங்கி விடை பெற்று மற்றுமொரு வகுப்பினுள்நுழைந்தேன். எங்கள் இருவர் சந்திப்பில் அவரையும் அறியாமல் - என்னையும் அறியாமல் - தொழிலாளர் இயக்கம் கருக்கொண் டிருக்கும். ஒவ்வொருவர் வாழ்வுக் கூறுகளெல்லாம் அவரவர் கருவிலேயே அமைந்து, அவை ஒவ்வொரு சமயத்தில் ஒவ் வொன்றாகப் படிப்படியே முகிழ்க்கும் போலும்! இருவர் சந்திப்பும், வேங்கடேச குணாமிர்த வர்ஷணி சபையை ஒட்டிய தன்று. அஃதொரு பருமைக் குறிக்கோள்; நுண்மைக் குறிக் கோள் தொழிலாளர் இயக்கமே. அந்நுண்மை எங்களுக்கு அப்பொழுது எப்படி விளங்கும்? இணங்கியபடியே யான் வேங்கடேச குணாமிர்த வர் ஷணி சபையில் எனது கடனையாற்றினேன். கூட்டத்தில் தொழிலாளர் தொகையே பெருகியிருந்தது. பின்னும் சிலமுறை யான் அச்சபை போந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தலானேன். ஒவ்வொருபோதும் தொழிலாளர் கூட்டமே பெருகி வந்தது. 1917ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாந் தேதி வெலி கல்லூரியை விடுத்து, ஏழாந்தேதி தேசபக்தன் ஆசிரியபீடத் தில் அமர்ந்தேன். அவ்வேளையில் ஐரோப்பா யுத்தம் நடை பெற்றது. ருஷ்யச் செய்திகள் என்னுள்ளத்தைக் கவரும். கேசவப் பிள்ளை தலையீடு அக்காலத்தில் சென்னை மாகாணச் சங்கத் தலைவரா யிருந்தவர் திவான்பகதூர் கேசவப் பிள்ளை. அச்சங்கத்தில் எனக்குந் தொடர்பிருந்தமையான் திவான்பகதூர் பிள்ளை குத்தியினின்றும் சென்னை நோக்கியபோதெல்லாம் அவருடன் யான் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அவரால் அடிக்கடி மில் தொழிலாளர் குறைபாடுகள் இந்தியன் பேட்ரியட் என்ற பத்திரிகையில் எழுதப்பட்டு வரும். அவைகளிற் சிற்சில தேசபக்தனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். தொழிலாளர் குறைபாடுகளைத் திரட்டிக் கடிதவாயிலாகவும் நேரிலும் உதவி வந்தோர் கேசவப் பிள்ளையின் மருகர் தோழர் இலட்சுமண முதலியாரும், ஜி. இராமாஞ்சலு நாயுடுவும் உள்ளிட்ட சிலர். நாங்கள் அனைவரும் அடிக்கடி கலந்து கலந்து பேசுவதுண்டு. எங்களிடைத் தொழிலாளர் இயக்கம் கருக் கொள்ளலாயிற்று. முதற் கூட்டம் 1918ஆம் ஆண்டு மார்ச்சுமாதம் 2ஆந் தேதி சனிக்கிழமை ஜங்காராமாயம்மாள் பங்களாவில் வேங்கடேச குணாமிர்த வர்ஷணி சபைச் சார்பில் ஒரு தொழிலாளர் கூட்டம் கூட்டப் பட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் மிடைந்து கூட்டத்தைச் சிறப்பித்தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர்; மரங்களையும் நிரப்பினர். கூட்டத்துக்குத் திரு. சுதர்சன முதலியார் தலைமை வகித்தனர். அன்று என்னுடன் ஜனாப் குலாமி அமீத் என்பவரும் போந்தனர். அவர் அப்பொழுது அரசாங்கக் கூட்டுறவுச் சங்கச் சோதனையாளராக இருந்தனர்; இப்பொழுது ஸைபுல் இலாம் ஆசிரியக்கூடத்திலிருந்து சேவை செய்கின்றனர். ஜனாப் குலாமி அமீத் கூட்டுறவைப்பற்றிப் பேசினர். பின்னே யான் மேல்நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வர லாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத்தையும் விளக்கிப் பேசினேன். தொழிலாளரிடைப் புத்துணர்ச்சி தோன்றித் ததும்பித் ததும்பி வழிந்தது. தலைமை வகித்தவர் ஏதோ சமயப்பேச்சு என்று கருதி வந்தனராம். அவர் அரசாங்க ஊழியராக இருந்தவர். அவர் என் பேச்சை மறுக்கப் புகுந்தார். கடலெனத் திரண்டிருந்த தொழி லாளர் செய்த ஆரவாரத்தால் அவர் மறுப்பு மேடை அளவி லேயே நின்றுவிட்டது. திரு.செல்வபதி செட்டியார் தலைவர் மறுப்பை வெட்டிச் சாய்த்தனர். அன்று போலீஸார் நட வடிக்கை வெறுக்கத்தக்கதாயிருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர். தொழிலாளர் சங்கம் எப்பொழுது அமைக்கப்படும் அமைக்கப்படும் என்ற பேச்சே தொழிலாளரிடை உலவலா யிற்று. அந்நிலையில் திவான்பஹதூர் கேசவப் பிள்ளை சென்னை நண்ணினர். அவரை யான் கண்டு தொழிலாளர் சங்கம் அமைத்தலின் அவசியத்தைத் தெரிவித்தேன். எனக்கு முன்னரே இராமாஞ்சலு நாயுடுவும் செல்வபதி செட்டியா ரும் தம்மைக் கண்டு பேசினரென்று அவர் தெரிவித்தனர். முதற் சங்கம் சங்கம் காணப்பெற்றால் அதற்குத் தலைவராக எவரைத் தெரிந்தெடுப்பது என்ற சிந்தனை எங்களுக்குள் தோன்ற லாயிற்று. கேசவப் பிள்ளையையே தலைவராயிருக்குமாறு யான் கேட்டேன். அவர், யான் சென்னையிலிருப்பவனல்லன், தலைவர் சென்னை வாசியாயிருத்தலே நல்லது என்று கூறினர். பின்னே திரு, வாடியாமீது எண்ணஞ் சென்றது. கேசவப் பிள்ளையும் ஊக்கத்திற் சிறந்த இரண்டு இளைஞரும் வாடியாவைக் கண்டு பேசினர். திரு.வாடியா, கேசவப் பிள்ளை யின் விருப்பத்துக்கு இணங்கினர். சில தொழிலாளர் கூட்டங் கள் மேற்படி பங்களாவிலேயே கூட்டப்பட்டன. அக்கூட்டங் களில் வாடியா ஆங்கிலத்தில் பேசினார். யான் அவர்தம் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்த்தேன். தொழிலாளி களிடை வீர உணர்ச்சி பிறந்தது. 1918ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆந் தேதி சனிக்கிழமை சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு. வாடியா தலைவராகத் தெரிந்தெடுக்கப் பட்டனர். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும் யானும் வேறு சிலரும் உதவித் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அன்று முதல் அங்கும், தொழிலாளருள்ள வேறிடங்களிலும் எங்களால் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. யான் வெளியூர்களுக்குக் காங்கிர சார்பாகப் பிரசாரத்துக்குச் சென்ற போதெல்லாம் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசி, ஆங்காங்கே தொழிற் சங்கங்கள் காணுமாறு வேண்டுதல் செய்வதை ஒரு விரதமாகக் கொள்ள லானேன். சென்னையிலும் வெளியூர்களிலும் பல சங்கங்கள் காணப்பட்டன. அவைகளுள் குறிக்கத்தக்கன: எம்.அண்ட் எ.எம். தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம். மண்ணெண்ணெய்த் தொழி லாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியம் தொழிலாளர் சங்கம். ஐரோப்பிய வீட்டுத் தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், ரிக்ஷா ஓட்டிகள் சங்கம், போலீஸார் சங்கம், தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கம் (நாகை), கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் முதலியன. அந்நாளில் எங்க ளுடன் கலந்தும் சங்கங்களில் ஈடுபட்டும் சேவை செய்தவருள் குறிக்கத்தக்கவர்: தோழர்கள் சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர், என். தண்டபாணி பிள்ளை, ஹரிசர்வோத்தமராவ், இராஜ கோபாலாச்சாரியார், ஆதிநாராயண செட்டியார், எம்.எ. சுப்பிரமணிய ஐயர், வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, எ.எ. ராமுலு, எம்.ஸி.ராஜா, டாக்டர். நடேச முதலியார், கதூரிரங்க ஐயங்கார், வி.பி. பக்கிரிசாமிப் பிள்ளை (நாகை), என்.எ. இராமசாமி ஐயங்கார் (கோவை), ஜார்ஜ் ஜோசப் (மதுரை) முதலியோர். தென்னிந்தியாவில் எழுந்த தொழில் கிளர்ச்சி காட்டுத் தீப்போல் நாடு முழுவதும் பரவலாயிற்று. பம்பாய், கல்கத்தா, கான்பூர், நாகபுரி முதலிய இடங்களிலும் தொழிற் சங்கங்கள் காணப்பட்டன. சென்னையில் தொல்லையின்றிப் பல சங்கங்கள் அமைக் கப்பட்டன. தொல்லையுடன் அமைக்கப்பட்ட சங்கங்கள் சில உண்டு. அவைகளில் சொல்லத்தக்கன, எம். அண்டு எ.எம். ரெயில்வே தொழிலாளர் சங்கமும் போலீ சங்கமுமாம். எம். அண்டு எ. எம். சங்கம் அமைத்தற்கென்று முதல் கூட்டம் பிரம்பூர் சேமாத்தம்மன் கோயிலருகே கூட்டப்பட்டது. அதற்கு இராமாஞ்சலு நாயுடுவும், தண்டபாணி பிள்ளையும், யானும் சென்றிருந்தோம். முதலில் யான் பேசத் தொடங்கிய போது ஆங்கிலோ இந்தியரால் கல்மாரியும் மண்மாரியும் புட்டி ஓட்டுமாரியும் பொழியப்பட்டன. அங்குக் கூடியிருந்த தொழி லாளர் கூடியவரை எங்களைக் காத்து வந்தனர். சிறிது நேரத் திலே மில் தொழிலாளர் பட்டாளம்போலத் திரண்டு வந்து சேர்ந்தனர். அவர் வருகையைக் கண்ட மூர்க்கக் கூட்டம் ஓடி விட்டது. சமயத்தில் மில் தொழிலாளர் வாராதிருப்பரேல் எங் கள் நிலை என்னவாகியிருக்குமோ? போலீ சங்கம் அமைப்பதில் விளைந்த தொல்லை களை இந்நாளில் எழுதலாகாது. பலவிதத் தொல்லைகள் விளைந்தன. அச்சங்கத்துக்குத் தலைவரைத் தெரிந்தெடுப்ப திலும் இடுக்கண் விளைந்தது. செல்வபதியும் யானும் பலரை நினைந்து நினைந்து, இறுதியில் ஹிந்து பத்திரிகாசிரியர் கதூரிரங்க ஐயங்காரை அணுகி, நிலைமையை விளக்கி, அவரைத் தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் இசைந்தனர். அவர் தலைவராக ஒருமுகமாகத் தெரிந் தெடுக்கப்பட்டனர். அக்காலத்தில் பேர்பெற்று விளங்கியவரை எப்படியாவது தொழிற்சங்கங்களில் ஈடுபடுத்திவிடுவது ஒரு விதத் தொழி லாளர் பணி என்று யான் எண்ணினேன். தொழிலாளர் இயக் கம் ஆக்கம்பெற வேண்டுமென்பது எனது வேட்கை. கட்சிகள் தொழிற்சங்கங்களில் ஈடுபட்ட தலைவர்களிற் பெரும் பான்மையோர் காங்கிரகாரர். ஜடி கட்சியார் இரண் டொருவரே இருந்தனர். எவரும் தத்தம் கட்சிப் பிணக்குகளைக் கொணர்ந்து சங்கங்களில் நுழைப்பதில்லை. தொழிற்சங்கச் சேவை தொடக்கத்தில் ஒருவிதச் சமுதாய ஊழியமாகவும், ஜீவகாருண்யத் தொண்டாகவுமே கொள்ளப்பட்டது. சங்கக் கூட்டங்களில் சம்பள உயர்வும், நேரக்குறைவும், இராப் பாட சாலை அமைப்பும், சுகாதாரமும், இன்ன பிறவுமே பெரிதும் பேசப்படுவது வழக்கம். பொருளாதாரச் சமதர்ம நோக்குடை யவர் இரண்டொருவரே இருந்தனர். அவரும் வெளிப்படை யாகச் சங்கங்களில் தமது கொள்கையை எடுத்துப் பேசுவ தில்லை. கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன. ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒரு படலம் என்பது எனது கருத்து. முதலாளியின் அடக்குமுறையும், தொழிலாளர் வேலைநிறுத்தமும் பெருகப் பெருகச் சமதர்ம உணர்வு தானே தொழிலாளரிடைத் தோன்றும் என்பது எனது நம்பிக்கை. எதிர்ப்புக்கள் சமதர்மம் வெளிப்படையாகப் பேசப்படாத அக்காலத்தி லேயே-சென்னைத் தொழிலாளர் சங்கம் பிறந்த சில வாரத் துக்குள் - எதிர்ப்புக்கள் பாணங்களெனப் புறப்பட்டன. அந் நாளில் சென்னைக் கவர்னராயிருந்த லார்ட் பெண்ட்லண்ட் வாடியாவை அழைத்து எச்சரிக்கை செய்தனர். வக்கீல் காயார் தேசிகாச்சாரியார், இராமநாதபுரம் ராஜா உள்ளிட்ட சிலர் மெயில் பத்திரிகையில் இந்தியாவுக்குத் தொழிலாளர் இயக்கம் அநாவசியம் என்னும் கருத்துப் பொதுளப் பல கட்டுரைகள் எழுதினர். அவைகட்கெல்லாம் அவ்வப்போது, நியூ இந்தியாவிலும், தேசபக்தனிலும் மறுப்புக்கள் விடப்பட்டன. கதவடைப்பும் வேலை நிறுத்தமும் இயக்கந் தோன்றிய சில மாதங்களுக்குள்ளாகவே கத வடைப்புக்களும், வேலை நிறுத்தங்களும் பெருமிதமாக வீறிட்டன. அச்சுருங்கிய காலத்துக்குள் அவ்வளவு வீறிட வேண்டுவதில்லை. இயற்கையின் வேகம் தொழிலாளரை வேலை நிறுத்தத்தில் உந்தியது. அந்நாளில் வேலை நிறுத்தத் தில் பேர்பெற்று விளங்கிய சங்கங்கள் நான்கு. அவை சென்னைத் தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம். அந்நான்கும் சென்னையைக் கலக்கி வந்தன. வேலைநிறுத்த விவரங்களும் பிறவும் வாடியா பேச்சுக்களைக் கொண்ட ஒரு நூலில் (“Labour in Madras”) இருக் கின்றன. மத்தியச் சங்கம் எல்லாச்சங்கங்களுக்கும் நடுநாயகமாக ஒரு மத்தியச் சங்கம் இருத்தல் வேண்டுமென்று அன்னி பெஸண்ட் அம்மையார் விரும்பினர். அவர்தம் முயற்சியால் மத்தியச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அச்சங்கம் தியோசாபிகல் சங்க மயமாக விளங்கலாகாதென்று தொழிற்சங்கங்களில் ஈடுபட்ட காங்கிர தலைவர் பலர் கருதினமையால் அஃது ஆக்கம் பெறாதொழிந்தது. 1919ஆம் வருடம் மே மாதம் வாடியா மேல்நாடு நோக்கி னர். அவர் சரோஜினிதேவியாரின் தங்கைமாருள் ஒருவராகிய மிருநாளினி சட்டோபாத்தியாயாவைத் தொழிலாளர் இயக்கத்திலே தொடர்புபடுத்திச் சென்றனர். அவ்வம்மையார் தொடக்கத்தில் புரிந்துவந்த துணை போற்றத்தக்கதாகவே இருந்தது. அவர், மத்தியத் தொழிலாளர் சங்க அமைப் பொன்று (செண்ட்ரல் லேபர் போர்ட்) தேவை என்று அடிக்கடி சொல்வார். முதல் மகாநாடு 1920ஆம் வருடம் மார்ச்சு மாதம் 21ஆம் நாள் சென்னை யில் லாட்கோவிந்த தா பங்களா வெளியில் (தற்போது காங்கிர மண்டபம் உள்ள இடத்தில்) மாகாணத் தொழி லாளர் மகாநாடு முதன் முறையாகக் கூடியது. அதற்குத் தலைமை வகித்தவர் திவான்பகதூர் கேசவப் பிள்ளை. வரவேற்புத் தலைமை ஊழியம் எனக்கு வழங்கப்பட்டது. உள்ளூரினின்றும் வெளியூரினின்றும் தொழிலாளர் பிரதி நிதிகள் திரண்டு காட்டிய ஊக்கம் இன்னும் என்னுள்ளத்தில் ஓவியமெனத் திகழ்கிறது. அம்மகாநாட்டில் 1வரவேற்புத் தலைமையுரையில் மத்தியச் சங்கத்தின் தேவை என்னால் வலியுறுத்தப்பெற்றது. மாகாண மகாநாடு கூடியதன் பயனாகச் சென்னையில் மத்தியத் தொழிலாளர் சங்கம் 1920ஆம் வருடம் ஜூலை மாதம் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. தலைவர் பீடத்துக்குப் பல பெயர்கள் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் வேண்டாம் வேண்டாம் என்ற பாட்டே பாடினர். அப்பாட் டில் யானுஞ் சேர்ந்தவன். எல்லோரும் ஒருமுகமாக என்னையே நெருக்கினர். யான் எழுந்து, இரண்டு பெரிய சங்கங்களின் பொறுப்பு எனக்குண்டு என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் பத்திரிகைப் பொறுப்பும் எனக்கிருக்கிறது. வக்கீல்களும் பாரிடர்களும் பட்டதாரிகளும் சேர்ந்துள்ள இக்கூட்டத்தில் தமிழ் ஆள் எற்றுக்கு என்று மறுத்தேன் தமிழ் ஆள் இருந்தால் கலகமிராது என்ற கூக்குரல் எழுந்தது. சகோதரி மிருநாளினியின் நோக்கு என்மீது படர்ந்தது. அதைக் குறிப் பால் உணர்ந்த சிலர், விரைந்தெழுந்து, கலியாண சுந்தர முதலியாரை நாங்களும் விரும்புகிறோம். பின்னே ஒரு சூழ்ச்சி நடக்கப்போகிறது. இப்பொழுதே அது தெரிகிறது. வாடியா மேல்நாட்டினின்றுந் திரும்பியதும் அவர்பொருட்டு நண்பர் கலியாணசுந்தர முதலியார் தலைவர் பதவியினின்றும் விலகு தல் கூடாது என்ற உறுதி முதலியாரிடமிருந்து இப்பொழுதே பெறல்வேண்டும் என்று உரத்த குரலெடுத்துப் பேசினர். முடிவில் எல்லாராலும் யானே தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டேன். காரியதரிசியாக மிருநாளினி தெரிந்தெடுக்கப் பட்டார். ஒற்றுமை அந்நாளில் ஏறக்குறைய எல்லாச் சங்கங்களும் மத்தியத் தில் அங்கம் பெற்றிருந்தன. தலைவர்களுக்குள்ளும் தொழி லாளர்களுக்குள்ளும் முகிழ்த்திருந்த ஒற்றுமை அளவிடற் பாலதன்று. அவ்வொற்றுமை செயற்க்கருஞ் செயல்களைச் செய்தது. அவைகளுள் ஒன்றை இங்கே சிறப்பாக குறிக்க விரும்புகிறேன். அச்சமயத்தில் லார்ட் வில்லிங்டன் கவர்னர் பதவியில் வீற்றிருந்தார். அவர் முதன்முறை என்னைப் பத்திரிகாசிரியன் என்ற முறையில் அழைத்துப் பேசினர். அப்பேச்சில் ஒருவித எச்சரிக்கை இருந்தது. மற்றுமொரு முறை தொழிலாளர் சார்பில் அழைக்கப்பட்டேன்; சிறிது உறுமலைக் கண்டேன். அந்நாளில் வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கடற்கரையில் மத்தியச் சங்கச் சார்பில் பொதுக் கூட்டங் கூடும். அக்கூட்டத்துக்கு ஒவ்வொரு சங்கத் தொழி லாளரும் தத்தம் சங்க நிலையத்தினின்றும் ஆர்வத்துடன் புறப்படுவர்; தொழிலாளர் அணி அணியாக நின்று கொடி களைத் தாங்கித் தொழில் மந்திரங்களை முழக்கி ஊர்வலம் வந்து கடற்கரை சேர்வதும், தொண்டர்கள் காக்கியுடை அணிந்து தடிகளை யேந்தி ஒழுங்குமுறையைக் காத்து வருவதும் பெருந் திருவிழாக் காட்சியளிக்கும். அக்காட்சி சிலர்க்கு மகிழ்ச்சி ஊட்டும்; சிலர்க்கு எரி ஊட்டும். கூட்டங்களில் சங்கத் தலைவர்களும் பேசுவார்கள்; தொழிலாளர்களும் பேசுவார்கள். அக்காலத் தலைவர்களிடை ஒற்றுமை நிலவி இருந்தது; அது தொழிலாளர்களிடையும் ஒற்றுமையை நிலவச் செய்தது. ஒரு சங்கத்துக்குரிய தொழிற்சாலையில் கதவடைப்போ வேலைநிறுத்தமோ நிகழின், அதில் எல்லாச் சங்கத்தாரும் அநுதாபங் கொண்டுழைப்பர்; பலவித உதவி செய்வர்; ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்வர்; பொது வேலைநிறுத்தஞ் செய்யவுஞ் சித்தமாயிருப்பர்; முதலாளி களையும் அதிகாரிகளையும் அச்சம் வாட்டியே வந்தது. எல்லாவற்றையும் உற்றும் ஊன்றியும் நோக்கிவந்த லார்ட் வில்லிங்டன் தொழிலாளர் சட்டமொன்று செய்யப் புறப் பட்டார். எந்நோக்குடன் சட்டம் என்று பலவிடங்களில் பல வாறு பேசப்பட்டது. அடக்கு - முறைச் சட்டம்என்று சிலர் பேசினர். லார்ட் பெண்ட்லண்ட் எச்சரிக்கை முதல் பாணம்; லார்ட் வில்லிங்டன் எச்சரிக்கை இரண்டாவது பாணம்; சட்ட நடிப்பு மூன்றாவது பாணம். தொழிலாளர் எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும் என்று யான் சொல்லிவந்தேன். லார்ட் வில்லிங்டன் சட்டஞ் செய்வதற்கு முன்னர் ஒரு விசாரணைக் கூட்டம் அமைக்க ஜடி குமாரசாமி சாதிரியாரைத் தலைவராக நியமனஞ் செய்தனர். ஜடி சாதிரியார் பெயரைக் கேட்டதும் அடக்குமுறையே வரும் என்று தொழிலாளர் உலகில் கலக்கம் ஏற்பட்டது. காரணம் என்ன? பஞ்சாப் படுகொலைக்கு மூலகாரணமாக நின்ற ரௌலட் சட்டம் பிறக்க ஏதுவாயிருந்த ரௌலட் விசாரணைக் கூட்டத்தில் ஜடி சாதிரியார் ஒருவராயிருந்தும் எவ்வித மறுப்புரையும் வழங்காது மற்றவருடன் கலந்து அறிக்கையில் அவர் கைச்சாத்திட்டமையேயாகும். ரௌலட் சட்டப் பிர சாரம் எங்கும் எல்லாரிடையும் பரவியிருந்தமையால், ஜடி சாதிரியார் பெயர் தொழிலாளரிடையும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அச் செல்வாக்கு ரௌலட் சாதிரி வேண் டாம் என்ற கூக்குரலை எழுப்பியது. தலைவர்களிடை அவ் வளவு கலக்கம் ஏற்படவில்லை. அப்பொழுது மத்தியச் சங்கம் செய்த வேலையால் சென்னையில் தொழிலாளரியக்கத்துக்கே ஒரு பெரும் மதிப்பு உண்டாயிற்று. பிரம்பூர் பாரக்ஸிலும், ஹைகோர்ட் கடற் கரையிலும், திருவல்லிக்கேணிக் கடற்கரையிலும், பீப்பில் பார்க்கிலும், நேப்பியர் பார்க்கிலும், வேறு சில இடங்களிலும் கண்டனக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. விசாரணைக் கூட்டத் தில் தொழிலாளர் பிரதிநிதிகளும் இருத்தல் வேண்டுமென் றும், தலைவர் தெரிந்தெடுப்பில் மத்தியச் சங்கத்தின் கலப்பும் இருத்தல் வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஊர்வலங்களும், கூட்டங்களும், தீர்மானங்களும், பேச்சுக்களும் லார்ட் வில்லிங்டனை மருளச் செய்தன. நியாயவரம்பு மீறிய செயல்கள் நிகழ்த்தப்படவே இல்லை. அவ்வேளையில் மேல் நாட்டினின்றும் திரு. வாடியா திரும்பினர். மத்தியச் சங்கம் அவருக்கு ஒருபெரும் வரவேற் பளித்தது. அவ்வரவேற்பைக் கண்ட வாடியா, யான் இந்தியா வில் இல்லாத வேளையில் மத்தியச் சங்கம் அமைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இனிப் பெரும் பெருங் காரியஞ் செய்யலாம் என்று பேசித் தொழிலாளர்க்கு ஊக்கமூட்டினர். திரு. வாடியா சென்னை சேர்ந்த சில நாட்களுக்குள் மத்தியச் சங்கத்திலுள்ள தொழிற் சங்கப் பிரதிநிதிகட்கெல்லாம் லார்ட் வில்லிங்டனிடமிருந்து அழைப்பு வந்தது. ஏறக்குறைய எல்லாரும் கவர்னர் வீடு சேர்ந்தனர். லார்ட் வில்லிங்டன் தலைவர்களிடம் பெரிதும் பேசினாரில்லை; தொழிலாளரிடமே நீண்ட நேரம் பேசிப் பார்த்தனர்; சாதிரியார் தலைமையைத் தொழிலாளரே விரும்பவில்லை என்று உணரலாயினர். தலைவர்களுள் ஐரோப்பிய வீட்டுத் தொழிலாளர் சங்கத் தலைவரின் ஆதரவு மட்டும் சாதிரியார் தலைமைக்குக் கிடைத்தது. லார்ட் வில்லிங்டன், நிலைமையை நன்கு ஆய்ந்து தெளிந்து விசாரணைக் கூட்ட அமைப்பு ஆலோசனையையே ஒழித்து விட்டனர். தொழிலாளர் வெற்றி பெற்றனர். வெற்றிக்கு அடிப்படை ஒற்றுமை; ஒற்றுமையே. ஒற்றுமையால் ஆகாத தென்னை? ஒரு விசாரணைக் கூட்டமே உருக்கொள்ளா தொழிந்தது! இது செயற்கருஞ் செய்கையன்றோ? லார்ட் வில்லிங்டன் மனம் கனன்றிருக்கு மென்று சொல்லவும் வேண்டுமோ! அந்நிகழ்ச்சிக்குப் பின்னே மத்தியச் சங்கம் வழக்கம் போல ஒருநாள் கூட்டப்பட்டது. நடைமுறைக்குரிய கூட்டம் மட்டும் சேர்ந்திருந்தது. பலர் வரவில்லை. யான் தலைமைப் பதவியி னின்றும் விலகுதலைத் தெரிவித்துத் திரு.வாடியாவைத் தலைவராகத் தெரிந்தெடுக்கும்படி வேண்டுதல் செய்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியது. அச்செய்தி பத்திரிகையில் மறுநாள் வெளிவந்ததும் மத்தியச் சங்க நிர்வாகிகள் சிலர் என்னிடம் போந்து என்ன இப்படிச் செய்துவிட்டீர்களே! உங்களைத் தலைவராகத் தெரிந்தெடுத்தபோதே உறுதிமொழி கேட்கப்பட்டதை மறந்தீர்கள் போலும். எல்லாம் மிருநாளினி யின் திருவிளையாடல் என்று கூக்குரலிட்டனர். நீங்கள் ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று அவர்களைக் கேட்டேன், அதற்கு அவர்கள் எங்களுக்கு அறிக்கை வரவில்லை; கூட்டங் கூடியதே எங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அறிக்கை பலருக்குச் சேராமையைப் பற்றி விசாரித்தேன். அறிக்கை எல்லாருக்கும் அனுப்பப்பட்டது; கையெழுத்து வாங்கும் வழக்கமில்லாமை யால் என்மீது பழிசுமத்தப்படுகிறது என்று அம்மையார் கூறினர். உண்மை ஆண்டவனுக்கே தெரியும். பெரும்பான்மையோர் விருப்பத்தின்படி மற்றுமொரு கூட்டங் கூட்டப்பட்டது. அக்கூட்டத்துக்குத் திரு. வாடியா போகவில்லை. திருமதி. மிருநாளினியும் வேறு சிலரும் செல்லவில்லை. முன்னைய கூட்டம் செல்லாது என்று முதலில் தீர்மானஞ்செய்யப்பட்டது. பின்னே எனது விலகுதலைப் பற்றிச் சிந்தித்து முடிவுக்கு வருமாறு கேட்கப்பட்டது. யான் எனது நிலையில் உறுதியாயிருந்தது கண்ட தோழர்களால் திரு.சக்கரைச் செட்டியார் தலைவராகத் தெரிந்தெடுக்கப் பட்டனர். அடுத்த நாள் வாடியா என்னைக் கண்டு, மத்தியச் சங்கம் நமக்கு வேண்டாம். இரண்டு பெரிய சங்கங்களின் வேலைகள் நமக்கு இருக்கின்றன என்று சொல்லிச் சென்றனர். எவருக்கும் வாடியாமீது வெறுப்புக் கிடையாது. அன்னி பெஸண்ட் அம்மையார் மீது அக்கால அரசியலார் கொண்ட வெறுப்பு வாடியாமீதுஞ் சென்றது. மத்தியச் சங்கத்தில் நேர்ந்த தலைமை மாற்றத்தால் தலைவர்களுக்குள் எவ்விதக் குழப்பமும் விளையவில்லை; ஒற்றுமையுங் குலையவில்லை. வழக்கு தொழிலாளர் இயக்கத்துக்கே வேராயிருந்து பல விதத் தொல்லைகளை விளைத்து வருவது சென்னைத் தொழிலாளர் சங்கமென்று தொழிலியக்கத்துக்கு மாறுபட்ட கருத்துடைய பலரும் எண்ணலாயினர். அவ்வாறே சிலர் பேசியும் எழுதியும் வந்தனர். தாய்ச் சங்கமாகிய சென்னைத் தொழிலாளர் சங்கத் தின் மீது புதுப்பாணம் ஒன்று தொடுக்கப்பட்டது. அதன் முழு விவரம் இந்நூலில் விரித்துச் சொல்லப்பட வேண்டுவதில்லை. சாரமாகவுள்ள சில குறிப்புக்கள் சாலும். பக்கிங்காம் மில்லில் சிறுசிறு குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன; ஒரு நாள் (20-10-1920) ஓர் ஐரோப்பிய உத்தியோகதர் ரிவால்வருடன் தமது இலாகாவுக்கு வந்தார். அது காரணமாக அங்கே சில கோரப் பேச்சுக்கள் எழுந்தன. ஒரு தொழிலாளர் அந்த ரிவால்வரைப் பிடுங்கி வெளி ஏறினர். அச்செயல் மில்லுக்குள் ஒருவித அதிர்ச்சியை உண்டாக்கியது. மில் (21-10-1920) மூடப்பட்டது. ரிவால்வர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்கிங்காம் மில் மூடப்பட்டமையால் தொழிலாளர் பாதுகாப்புக்கென்று சங்க நிர்வாக சபையிலிருந்து பதின்மர் அடங்கிய ஒரு சிறு கூட்டம் திரட்டப்பட்டது. அக்கூட்டத்தின் மீது பக்கிங்காம் கர்நாட்டிக் மில்களை நடாத்திவரும் பின்னி கம்பெனி சென்னை ஹைகோர்ட்டில் (11-11-1920) வழக்குத் தொடுத்தது. அந்நாளில் தொழிற்சங்கச் சட்டம் இல்லாமை யால் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கின் சாரம், பதின்மர் தூண்டுதலால் வேலைநிறுத்தம் நிகழ்ந்ததென்பதும், அதனால் பெருநஷ்டம் விளைந்ததென்பதும், அந்நஷ்டத்துக்கு ஈடாகப் பதின்மரும் எழுபத்தையாயிரம் ரூபா செலுத்த வேண்டுமென்பதும், வேலைநிறுத்தம் முடியும் வரை அவருள் எவரும் சங்கத்தில் வாய் திறத்தலாகாதென்பதுமாகும். பதின்மர் பெயர் : B.P. வாடியா திரு. வி. (T.V.) கலியாண சுந்தர முதலியார், ஜி. இராமாஞ்சலு நாயுடு, வேதநாதம், எ. நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சைட்ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை. தொழிலாளர் பக்கம் வாதித்த வக்கீல்கள் : ஸர். ஸி.பி. இராமசாமி ஐயர், ஸர். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், எ. துரைசாமி ஐயர், திவான்பகதூர் - சல்லா குருசாமி செட்டியார், திரு. வேங்கடரமண ராவ் நாயுடு முதலியோர். நீதிபதி : ஜடி பிலிப். வேலைநிறுத்தம் முடியும்வரை பதின்மரும் பக்கிங்காம் மில் தொழிலாளர் கூட்டத்தில் பேசுதல் கூடாது என்ற வாய்ப் பூட்டு முதலில் இடப்பட்டது. வழக்கு விசாரணையிலிருந்தது. கூட்டங்கள் தொழிலாளர்களாலேயே நடத்தப்பட்டன. போலி துணைகொண்டு வேறு ஆட்கள் மில்லுக்குள் வர வழைக்கப்பட்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் சென்றபோது தொழிலாளர்கள் கூட்டங் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். ஒருநாள் கற்கள் எறியப்பட்டனவாம். போலிஸார் துப்பாக்கியால் (9-12-1920) கூட்டத்தைச் சுட்டனர். சிலர் காயமடைந்தனர். தொழிலாளர் இயக்கத்துக்கென்று முதல் முதல் பலியானவர் அவ்விருவரே. பாங்கிலிருந்த நிதி, சங்கத் தீர்மானத்தின்படி வாங்கப் பட்டுத் தொழிலாளர்க்கு விநியோகஞ் செய்யப்பட்டது. அச்செயலை வக்கீல் உலகம் பாராட்டியது. இடையில் பல துறையில் பஞ்சாயத்துக்கள் செய்யப் பட்டன. ஒன்றில் மட்டும் சங்கத்தார்க்கும் மில்காரர்க்கும் சமாதானம் உண்டாகவில்லை. பதின்மூன்று பேர் எந்நேரமும் மில்லுக்குள் ஏதேனும் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தன ரென்றும், அவரைத் தவிர மற்றவரெல்லாம் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவரென்றும் சொல்லப்பட்டு வந்தன. அதற்குச் சங்கம் உடன்படவில்லை. அப்பொழுது சென்னை போந்திருந்த கர்னல் வெட்ஜ்வுட்டும் பஞ்சாயத்துச் செய்து பார்த்தார். ஒன்றும் முடியாமற் போய்விட்டது. திடீரென எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. வழக்கம்போல ஒருநாள் வாடியா மோட்டார் வண்டி என் வீட்டின் முன்னே வந்து நின்றது. வண்டியில் வாடியா இல்லை; சகோதரி மிருநாளினி மட்டும் இருந்தனர். ‘thoahî¡F v‹d? என்று கேட்டேன். அவர், வாடியாவுக்கு ஒன்றுமில்லை; பஞ்சாயத்து நடந்தது; நல்ல முடிவு ஏற்பட்டது; வாருங்கள்; பேசிக் கொண்டுபோகலாம் என்றனர். வண்டியில் ஏறினேன். தொழிலாளர் சார்பில் வாடியாவும், கம்பெனியார் சார்பில் ஸர். ஸிம்ஸனும் ஸிம்மண்ட்ஸும், பொதுவில் அன்னி பெஸண்ட் அம்மையாரும் புருஷோத்தம தாஸுமாக (லார்டு வில்லிங்டனின் பம்பாய் நண்பர்) ஐவர் சேர்ந்து பேசி முடிவுக்கு வந்தனர் என்று சகோதரியார் சொல்லி வந்தனர். நியூ இந்தியா நிலையத்தில் எங்களை எதிர்பார்த்து நின்ற வாடியாவும் இராமாஞ்சலு நாயுடுவும் எங்களுடன் கலந்து கொண்டனர். ‘Koî v‹d? என்று வாடியாவைக் கேட்டேன். அவர் நல்ல முடிவு என்றார். வண்டி நேரே பூவிருந்தவல்லி ரோட்டிலுள்ள கோகுல் தா பங்களாவுக்கு ஓடியது. புருஷோத்தமதாஸைக் கண்ட பின்னர் சங்கத்துக்குப் போகலாம் என்று வாடியா எங்களுக்குத் தெரிவித்து இறங்கிப் போய்த் தாஸினிடம் சிறிது நேரம் பேசித் திரும்பினர். எல்லாரும் சங்கம் சேர்ந்தோம். முன்னரே செய்தி தெரிவிக்கப்பட்டமையால் சங்கத்தில் பெருங் கூட்டங் கூடியிருந்தது. வாடியா எழுந்து நிகழ்ந்ததைச் சிறிது நேரம் விளக்கி, நல்ல முடிவு. நீங்களெல்லோரும் நாளை வேலைக்குப் போகவேண்டும். பதின்மூவர் இப்பொழுது சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்; இன்னுஞ் சில வாரங் கடந்து சேர்த்துக் கொள்ளப்படுவர். இரண்டொரு நாளில் யான் மேல்நாடு நோக்குவேன். சங்கம் தற்போதுள்ள அமைப் பின்படியே மில் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். எல்லா வற்றையும் திரு.வி.க. பார்த்துக் கொள்வார் என்று பேசி முடித்து மிக விரைவாக வண்டியிலேறினர். மிருநாளினியும் யானும் உடன் சென்றோம். nfhFš jhÞ g§fshÉš ïuhkhŠrY ehíL Ãgªjidfis¥ gh®¡FkhW vd¡F¢ brhšÈaij cs§bfh©L tÊÆny, ‘Ãgªjidfis¥ gh®¡fyhkh? என்று வாடியாவைக் கேட்டேன். அவர், அவைகள் அன்னி பெஸண்ட் அம்மையாரிடம் இருக்கின்றன என்றார். அவ் வேளையில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் தோன்றவில்லை. வாடியா சங்கத்தில் சொன்ன நிபந்தனைகள் பத்திரிகை யில் வெளியாயின. ஐவர் நிபந்தனைகள் நியூ இந்தியா வில் மட்டும் வெளியாயின. அவைகட்கும் இவைகட்கும் வேற்றுமை காணப்பட்டது. யான் நேரே அடையாறு சென்று வாடியாவை உண்மை கூறுமாறு கேட்டேன். நியூ இந்தியா வில் வந்தது தவறு என்று சொல்லி வாடியா என்னை அனுப்பிவிட்டார். அடுத்த நாள் (27-1-1921) தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றார்கள். மாறுபட்ட செய்திகளைப் பத்திரிகைகளில் கண்டவருள் சிலர் தலைவர் தொழிலாளரிடைக் கிளர்ச்சி செய்யலாயினர். பத்திரிகைகளில் மறுப்புக்கள் மலியலாயின. அவைகளுள் ஒன்று குறிக்கத்தக்கது. அது வி.எல். சாதிரியாரால் வாடியா வுக்கு எழுதப்பெற்ற பகிரங்கக் கடிதம். அதற்கு வாடியாவால் பதில் இறுக்கப்பட்டது. இரண்டிலுமுள்ள சில குறிப்புக்கள் நிலைமையை நன்கு விளங்கச் செய்யும். அக்குறிப்புக்கள் வருமாறு:- பகிரங்கக் கடிதம் ** தங்களைப் (வாடியாவைப்) போன்ற அயலார் ஒருவர் சங்கத்தின் தலைவரா யிருந்திரா விட்டால் இன்னும் கேவலமான நிபந்தனைகளுக்குத் தொழிலாளர்கள் தலைசாய்க்கவேண்டி வருமல்லவா? இம்முடிவினால் அநேக மில் தொழிலாளர்களுக்கு அதிருப்தி எற்பட்டிருக்கிறதென்று நான் தங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அப்படி யிருந்தும் அவர்கள், தங்கள் சொற்படி வேலையைத் துவக்கித் தங்களைத் தலைவரென்று கருதுகிறார்கள். சென்னைத் தொழிலாளர் சங்க அங்கத்தினர் தவறாக நடந்திருந்தால் கதவடைப்புக்குப் பின்னர் பின்னி அண்டு கம்பெனியார் கூப்பிட்டபோதே ஏன் போய்விடக் கூடாது? மில் தொழிலாளர் சரியான வழியில் நடந்திருக்கும் பட்சத்தில், ஏன் பதின்மூன்று பேர் வேலையினின்றும் நீக்கப்படுவதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும்? இவ்விஷயத்தைப்பற்றி அறிந்து கொள்ளப் பொது ஜனங்களும் தொழிலாளர்களும் ஆவலுள்ள வர்களா யிருக்கிறார்கள். ** ** தங்கள் பேரிலும் மற்ற ஒன்பதின்மர் பேரிலும் பின்னி அண்டு கம்பெனியார் தொடர்ந்த வழக்கை அக்கம்பெனியார் வாபீ வாங்கிக்கொள்ள வேண்டுமென்பதைப்பற்றித் தாங்கள் அதிக கவலைப்பட்டதாக நான் கூற வரவில்லை. தாங்கள் கூறியபடியே இச்சச்சரவு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற் பட்டதாகும். ஆனது பற்றி நானும், தாங்களும் அதனால் நேரிடக் கூடிய கஷ்டங்களையும், தொல்லையையும் கவனியாது தியாகம் செய்யச் சித்தமாயிருக்க வேண்டும். ** ** சமீபத்தில் இங்குப் போந்திருந்த பிரபல தொழிற்கட்சி அங்கத்தினரான மிடர் வெட்ஜ்வுட்டின் அபிப்பிராயத்தை விடத் தங்கள் அபிப்பிராயம் உசிதமாகத் தோன்றவில்லை. கர்னல் வெட்ஜ்வுட் தொழிலாளர் சங்கங்களுக்கு அயலாரின் உதவியிருக்க வேண்டுவது அவசியமென்று கூறியிருக்கின்றார். ** தாங்கள் ஐரோப்பாவுக்குச் சுகமே சென்று திரும்பி வர வேண்டுமென்று கோருகிறோம். தாங்கள் இல்லாத சமயத்தில் சங்கத்தை நடத்தத் திரு. கலியாணசுந்தர முதலியாராவது அல்லது வேறு எவராவது தெரிந்தெடுக்கப்பட வேண்டும். பிறருடைய உதவி கூடாதென்று தடுப்பது சுயேச்சாதிபத்யமாகும். தொழிலாளர் நலத்துக்காக இவ்வளவெல்லாம் பாடுபட்டுக் கடைசியாக அரசாங்க அபிப்பிராயத்தையும் முதலாளி அபிப்பிராயத்தையும் ஆதரித்து விட்டதாகத் தெரிகிறது. இது சங்கத்திற்குக் கெடுதியேயாகும். ** பதில் *** யான் (வாடியா) சங்கத்தின் தலைவர் பதவியினின்று விலகிவிடவில்லை. யான் ஐரோப்பாவுக்குச் செல்கிறேன். என்னால் கூடியவரை உலகத் தொழிலாளர் காங்கிரஸில் இந்தியத் தொழிலாளர்களுக்காக மன்றாடுவேன்; கிரேட் பிரிட்டனுக்குச் செல்கையில் என்னால் கூடியவரை அங்குள்ள தொழிற்றலைவர் களுடன் தொழிலாளர் கஷ்டங்களை எடுத்துரைப்பேன். தொழிலாளர் நன்மையைக் கோரி மாத்திரம் நான் ஐரோப்பாவுக்குச் செல்லவில்லை. பிரமஞான சங்க வேலையாய் அநேக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வேன். கிரேட் பிரிட்டனுக்குப் போகையில் இந்தியத் தொழிலாளர்க்காகப் பாடுபட நினைக்கிறேன். திரு. சாதிரி கடிதம் முழுமையிலும், நான் தொழிலாளர்களை முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டதாகக் காணப்படுகிறது. இதை 13,000 தொழிலாளர்களல்லவோ கூற வேண்டும்? ** யான் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட காலத்தில் திரு. சாதிரியைப் போன்றவர்கள் உதவி செய்ய முன் வந்தார் களில்லை. சென்னைத் தொழிலாளர் சங்கம்தான் முதல் முதலில் ஏற்பட்டதாகும். இச்சங்கத்தின் மூலமாகவே இந்தியத் தொழிலாளர் களின் நிலை பிரிட்டிஷ் ஜனங்களுக்குத் தெரிந்தது. ** பலவித மறுப்புக்களிடையே வாடியா மேல்நாடு நோக்க (31-1-21) பம்பாய்க்குப் புறப்பட்டனர். வழிகூட்ட யானும் வேறு சிலரும் சென்றிருந்தோம். அப்பொழுது என்னைப் பார்த்து, நிபந்தனைகள் நாளை உங்களுக்குக் கிடைக்கும். இதோ யான் தொழிலாளர்களிடைப் பேசிய பேச்சுக்களைக் கொண்டநூல். இந்நூலை1 உங்களுக்கு அன்புரிமையாக்கியுள்ளேன். அன்பை ஏற்றுக்கொள்க என்று நூலைக் கொடுத்தார்; கொடுத்தபோது அவர் மனங் கலங்கியது; கண்ணீரும் ததும்பியது. வண்டி புறப்பட்டது. யானும் மன நோயுடன் வீடு திரும்பினேன். பின்னை அன்னிபெஸண்ட் அம்மையாரைக் கண்டேன். அம்மையார் விரும்பியவாறு பின்னி கம்பெனியாருக்குக் கடிதம் எழுதினேன். நியூ இந்தியாவில் வெளிவந்த நிபந்தனைகள் பஞ்சாயத்தாரால் முடிவுசெய்யப்பட்டன என்பதும், அவைகளை யொட்டி வி.எல். சாதிரியார் எழுதிய பகிரங்கக் கடிதம் உண்மைக்கு மாறுபட்டதன்று என்பதும் விளங்கின. எல்லா வற்றையும் உளங்கொண்டு நவசக்தியில் பல ஆசிரியக் கட்டுரைகள் எழுதப்பட்டன. அவைகள் தொழிலாளர்கட்கும் மற்றவர்க்கும் உண்மை நிலைமையை விளங்கச் செய்தன. ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு :- ** பக்கிங்காம் மில் கதவடைப்புக் காரணமாகச் சென்னைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பதின்மர் மீது மில் அதிகாரிகள் வழக்குத் தொடுத்தார்கள். அவ் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது கதவடைப்பு ஒரு வித முடிவுக்கு வந்தது. ஸர். சிம்ஸன், மிடர் சிம்மண்ட, ஸ்ரீமான்கள் வாடியா, புருஷோத்தமதா, ஸ்ரீமதி பெசண்ட் அம்மையார் ஆகிய ஐவர் சேர்ந்து ஒரு முடிவு செய்தனர். அஃது இப்பொழுது இரண்டு பிளவாகப் பிரிந்து நிற்கிறது. வாடியா சொன்னது ஒன்று; நியூ இந்தியா வெளியிட்டது வேறொன்று. எது மெய்? எது பொய்? என்பது புலனாகவில்லை. தொழிலாளர் வாடியா சொன்ன நிபந்தனைகளை நம்பியே வேலைக்குச் செல்ல உடன்பட்டனர். நியூ இந்தியா பத்திரிகையில் வெளிவந்த நிபந்தனைகள் தவறு என்றும் வாடியா பகிரங்கமாகச் சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் பேசினார். நியூ இந்தியா வெளியிட்ட நிபந்தனைகளுக்கும் வாடியா நிபந்தனைகளுக்கும் பல வேற்றுமைகளுண்டு. அவைகளுள் முக்கிய மானது ஒன்று. வாடியா, சங்கம் இப்பொழுதுள்ள அமைப்பின் படியே அங்கீகரிக்கப்பட்டது என்று சொன்னார். நியூ இந்தியா வாடியா இராஜிநாமா செய்துவிட்டு ஐரோப்பா செல்கிறார்; சங்கம் இனித் தொழிலாளர்களாலேயே நடத்தப்படும் என்ற நிபந்தனையை வெளியிட்டிருக்கிறது. முதலாளிகள் நியூ இந்தியாவில் வெளிவந்த நிபந்தனைகளே ஐவராலும் நிறுவப்பட்டவை என்று சொல்கிறார்கள்; அவைகளை ஆதாரமாகக் கொண்டு, வெளியார் சங்கத்தை விட்டு நீங்குகின்றாரா அல்லது கோர்ட்டிலுள்ள வழக்கைத் தொடரலாமா என்று பயமுறுத்துகிறார்கள். முதலாளிகள் வக்கீல்கள் இவ்வாறே தொழிலாளர் வக்கீல்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஐவர் சேர்ந்து செய்த முடிவின் பயனை இப்பொழுதே தொழிலாளர் அநுபவிக்கின்றனர். முதலாளிகள் எப்படியாவது வெளியாரைச் சங்கத்தைவிட்டுத் துரத்த முயல்கிறார்கள். வெளியாரைச் சங்கத்தி னின்றும் விலக்கும் உரிமை தொழிலாளர்க்கே உண்டு; மற்றவர்க் கில்லை. தொழிலாளர் விரும்பினால் வெளியாரைத் தலைவராகச் சங்கத்தில் அமர்த்தலாம்; அவர் விரும்பாவிடின் வெளியாரை விலக்கலாம். வழியில் போகும் மற்றவர் சங்கத்தில் வெளியாரை வேண்டாமென்று சொல்ல எவ்விதத்திலும் உரிமையுடையவராகார். மில் அதிகாரிகள் தொழில் தலைவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தி, சங்கத்தைவிட்டு நீங்குகிறீர்களா? ïšiyah? என்று கேட்கிறார்கள். வாடியா பஞ்சாயத்தில் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ அது கடவுளுக்கே தெரியும். வாடியா, நான் இராஜிநாமா செய்யவில்லை; சங்கத்தின் அக்கிராசனனாகவே ஐரோப்பாவுக்குப் போகிறேன் என்று சங்கத்தில் பேசினார்; பத்திரிகைகளிலும் எழுதினார். இதை நம்புவதா? நியூ இந்தியாவை நம்புவதா? நியூ இந்தியா ஒரு பத்திரிகை. அதற்குஞ் சென்னைத் தொழிலாளர் சங்கத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆதலால் நியூ இந்தியா வெளியிட்ட நிபந்தனைகளைச் சங்கத்தார் அங்கீகரித்தலாகாது. வழக்கில் தலைப்பட்ட வெளியார் மூவர். அவருள் வாடியா வும் ஒருவர். வாடியா தாம் சங்கத்தில் கூறியபடி நடப்பரோ, அல்லது தமது குருவால் நடத்தப்படும் நியூ இந்தியா வைப் பின்பற்றுவரோ என்பது நமக்குத் தெரியாது. மற்றவர் ஒற்றுமையாக நின்று வழக்கை நடாத்தி வெற்றிக்கோ தோல்விக்கோ உட்படல் வேண்டும். இரண்டுபட்ட முடிவு தொழிலாளரைக் கலங்கச் செய்கிறது. இச் சமயத்தில் முதலாளிகள் எப்படியாவது சங்கத்தைக் குலைக்க முயற்சி செய்வதாக அறிகிறோம். வழக்குக்குப் பயந்து வெளியார் விலகி விடுவார் என்று முதலாளிகள் நினைக்கிறார்கள் போலும்! வெளியார் எதற்கும் அஞ்சாதவர் என்பதை முதலாளிகள் உணருங் காலம் நெருங்கியிருக்கிறது. வெளியாரைச் சங்கத்தில் சேர்த்த தொழிலாளர் அவரைப் போகுமாறு செய்யலாம். அவ்வாறு செய்விக்க முதலாளி கள் சூழ்ச்சி புரியினும் புரிவர். அச்சூழ்ச்சிக்குத் தொழிலாளர் எளியராத லாகாது. தொழிலாளர் எவர் சூழ்ச்சிக்கும் எளியராகாது, இனி நாங்களே சங்கத்தை நடத்திக் கொள்வோம். வெளியார் உதவி எங்க ளுக்கு வேண்டாம் என்று மனமாரக் கூறுவாராயின், வெளியார் சங்கத்திலுள்ள தொடர்பை அறுத்துக் கொள்வர். இப்பொழுது முதலாளிகள் செய்யும் ஆரவாரம் தொழிலாளர் இயக்கத்தைச் சிறிது நடுக்குறச் செய்திருக்கிறது. தொழிலாளர் உறுதியாக நின்று முதலாளிகள் மயக்கவலையில் சிக்குறாது. சங்கங்களை வளர்த்து வருவாராயின், அவர்க்கு எல்லா நலங்களும் விளையும். ** (25-3-1921) வாடியா கூட்டத்தில் சொன்னதும், கடிதங்களில் எழுதிய துமே நம்மால் ஏற்றுக்கொள்ளத் தக்கன என்று தொழி லாளர்க்கு அறிவுறுத்தலானேன். தொழிலாளர் சாந்தியடைந்து என்னைத் தலைவனாகவும், சக்கரைச் செட்டியாரை உதவித் தலைவராகவும் தெரிந்தெடுத்துக் காரியங்களை நடாத்தி வந்தனர். யான் கவலைக் கடலை நீந்தலானேன். பின்னே விசாரணையில் தியோசாபிகல் சங்கத்தில் உற்ற சிறு பிணக்கால் வாடியா திடீரெனச் சென்னை விட்டேகும் நெருக்கடி நேர்ந்ததென்பதும், அதனால் ஆயிரக்கணக்கான மக்களை எப்படியாவது உள்ளே நுழைத்துப் போக அவர் உளங்கொண்டாரென்பதும், தொழிலாளரையோ என்னையோ மற்றவரையோ வஞ்சிக்க அவர் எண்ணவில்லை என்பதும் நன்கு விளங்கின. வாடியாவைப்பற்றித் தொழிலாளரிடை உலவி வந்த தப்பெண்ணங்களெல்லாம் மாய்ந்தன. சில மாதங்கடந்து ஒருபெரும் வேலை நிறுத்தத்தி னிடையில் வழக்கு (9-8-1921) முதலாளிகளாலேயே திரும்ப வாங்கப்பட்டது. காரணம் இந்தியா மந்திரி, தொழிற் சங்கச் சட்டம் ஒன்று நிறுவுமாறு இந்திய அரசாங்கத்தைத் தூண்டிய தும், அதற்கு இந்திய அரசாங்கம் ஒருப்பட்டதும் என்று சொல்லப்பட்டது. 1924ஆம் ஆண்டில் சட்டம் நிறுவப்பட்டது. பொருளாதாரப் பேச்சு இவ்வளவு தொல்லைக்கு உட்பட்டும் சங்கம் சாயவில்லை; முன்னிலும் உரம்பெற்றே ஓங்கி வளர்ந்தது; பதின்மூவருக்கும் சம்பளம் கொடுத்து வந்தது. சில மாதங் கடந்ததும் சென்னைத் தொழிலாளர் சங்கத் தின்மீது ஒரு பெரும் புயல் வீசிற்று. அப்புயல் பொருளாதாரப் பேச்சைக் கண்டு எழுந்து வீசியதாகும். அதைச் சிறப்பாகக் குறிக்கவே தொழிலாளர் இயக்க வரலாற்றை இந்நூற்கண் சுருங்கச் சொல்லப் புகுந்தேன். தொழிலாளர்க்குப் பொருளாதார உணர்ச்சியூட்ட வேண்டுமென்பது எனது நீண்டகால வேட்கை. அதற்குரிய வாய்ப்புக் கிட்டாமலே இருந்தது. அது போழ்து எனக்குச் சிறிது வாய்ப்புக் கிடைத்தது. சம்பள உயர்வும் வேலை நேரச் சுருக்க மும் மட்டும் தொழிலாளர்க்கு விடுதலை நல்கா என்றும், பொருளாதாரச் செம்மையே தொழிலாளர்க்கு விடுதலை நல்குவதென்றும், ஏழைக்கு உதவுதல் என்பது ஏழ்மையை வளர்ப்பதென்றும், ஏழ்மையைப் போக்க முயல்வதே சிறந்த ஜீவகாருண்யமென்றும், செல்வம் ஒரு பக்கம் பெருகி மற்றொரு பக்கம் அருகுவதால் விளையும் தீங்குகள் இன்னின்ன என்றும், ரெயில், டிராம், பாங்க், தொழிற்சாலைகள் முதலியன எற்றுக்குத் தனிப்பட்ட மனிதராலோ தனிப்பட்ட கம்பெனியாலோ நடத்தப்படல் வேண்டுமென்றும், அவைகளை ஏன் அரசாங்கம் ஏற்று நடத்தல் கூடாதென்றும் என்னால் விளக்கப்பட்டு வந்தன. தொழிலாளர் உழைத்துச் சம்பளமட்டும் பெறுங் கூலிகளாய்க் காலங் கழித்து வருதலாகாதென்றும், தொழிலாளர் உழைப்புக் கலவாமல் எவ்வித விளைவும் உண்டாவதில்லையென்றும், ஆதலின் தொழிற்சாலைகளில் தொழிலாளர்க்கும் பொருளா தாரத்தில் உரிமையிருத்தல் வேண்டுமென்றும், முதற்படியாகத் தற்போது இலாபத்தில் குறைந்தது ரூபாய்க்கு இரண்டணா வாவது தொழிலாளர்க்கென்று ஒதுக்கப்படல் வேண்டு மென்றும், எவ்வழியிலாதல் தொழிலாளர்க்குத் தாம் வேலை செய்யும் சாலைகளில் தமக்கு உரிமையுண்டு என்னும் உணர்வு பிறக்கு முறையில் சட்டஞ் செய்ய அரசாங்கம் முற்படல் வேண்டு மென்றும் அதுகுறித்து அறக்கிளர்ச்சி செய்ய வேண்டுமென் றும் பேசி வந்தேன். தொழிற் சங்கங்களில் யான் இவ்வாறு பேசி வந்தது சில தலைவர்கட்குப் பிடியாமலே இருந்தது. தொழிற் சங்கங்கள் ஒரு புதிய உலகைக் கண்டன; அதில் நுழையவும் முயன்றன. தடைகள் பல கிடத்தப்பட்டன. அத்தடைகட் கென்று ஒரு தனி நூல் எழுதலாம். முதலாளிகள் நோக்கம் என்மீது படரலாயிற்று. வில்லிங் டன் அரசாங்கத்தின் நோக்கமும் என்னைத் தொடரலாயிற்று. என் பேச்சு, நச்சு விதை என்று சென்னை பூர்ஷ்வாக்களால் கிளப்புகளில் பேசப்பட்டது. அந்நாளில் காங்கிரஸிலும் எனது பணி நடந்து வந்தது. தொழிலாளர் கூட்டங்களில் அந்நாளில் யான் பேசி வந்தது காங்கிர தலைவருள்ளும் சிலர்க்கு வெறுப்பூட்டியது. எல்லாவற்றையும் உணர்ந்தே எனது தொண்டை ஆற்றி வந்தேன். குழப்பத் தொடக்கம் (17, 18, 19-5-1921) திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் மடத்தில் சமயத் தொண்டாற்ற ஜடி சதாசிவ ஐயருடன் சென்றிருந்தேன். கூடலூரில் காங்கிர தொண்டாற்றவும் இரண்டொரு நாள் தங்கலானேன். அப்பொழுது, கர்நாட்டிக் மில்லில் கார்டிங் டிபார்ட்மெண்டில் குழப்பம் என்ற தலைப்புக் கொண்ட ஒரு செய்தி பத்திரிகைகளில் காணப்பட்டது. உடனே கூடலூரை விடுத்துச் சென்னை சேர்ந்தேன். கார்டிங் டிபார்ட் மெண்டில் சம்பளத்தைப் பற்றிய தகராறும், தகராறு காரண மாக இரண்டு ஆதிதிராவிடர் தள்ளப்பட்டதும் வேலை நிறுத்தத்துக்குக் காரணம் என்று அறிவிக்கப்பட்டேன். கார ணத்தைப் பற்றிய ஆராய்ச்சி பின்னை வைத்துக்கொள்வோம். சங்கத்தின் கட்டளையின்றி வேலை நிறுத்தஞ் செய்தது தவறு. எல்லாரும் வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினேன். கார்டிங் டிபார்ட்மெண்டில் வேலை நடந்தாலன்றி மற்ற டிபார்ட்மெண்ட் வேலைகள் நன்கு நடைபெற மாட்டா. அத னால் அதிகாரிகளால் மில் மூடப்பட்டது. எனது விருப்பத்துக் கிணங்கிக் கார்டிங் டிபார்ட்மெண்ட் தொழிலாளர் வேலைக்குச் சென்றனர். அவருடன் மற்றவரும் சென்றனர். எல்லாத் தொழி லாளர் போனஸும் பறிமுதல் செய்யப்பட்டதென்று அறிக்கை செய்யப்பட்டது; அதற்கிணங்கி வேலை செய்யத் தொழிலாளர் மனங்கொண்டால் மில் திறக்கப்படும் என்றுந் தெரிவிக்கப் பட்டது. தொழிலாளரெல்லாம் சங்கம் போந்து நடந்ததை விளக்கினர். ஒரு டிபார்ட்மெண்ட் தொழிலாளர் செய்த தவறுதலுக்காக எல்லாத் தொழிலாளரையும் தண்டித்தல் நியாயமன்று என்றும், மற்றத் தொழிலாளர் தாமே வலிந்து வேலை நிறுத்தஞ் செய்யவில்லை என்றும், மில் மூடப் பட்டமையால் அவர் வெளியே நிற்றல் நேர்ந்தது என்றும், அவர்தம் போனஸைப் பறிமுதல் செய்தது முறையன்று என் றும் சங்கம் நிறைவேற்றிய தீர்மானம் மில் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. லேபர் கமிஷ்னர் மாயருக்கும், அரசாங்கத்தில் தொழில் இலாகா பொறுப்பேற்றிருந்த nf.ஸ்ரீÃthr ஐயங்காருக்கும் விண்ணப்பம் செய்யப்பட்டது. மில் நடைமுறையில் தலையிடும் அதிகாரம் தமக்கில்லை என்றும், அதற்குரிய சட்டமுமில்லை என்றும் அவரால் சொல்லப்பட்டன. யான் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். மில் அதிகாரிகள் பிடிவாதமா யிருக்கிறார்கள்; அரசாங்கமும் தலையிட விரும்பவில்லை. சங்கத்தைச் சாய்க்கவே சூழ்ச்சி செய்யப்படு கிறது. தொழிலாளர் உரிமை காக்கச் சட்டமில்லை. ஏழை மக்கள் நிலை என்னே என்று உன்னி உன்னித் தொழிலாளர்க்கு ஆறுதல் கூறி வந்தேன். (3-6-1921) பக்கிங்காம் மில் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஒரு டிபார்ட்மெண்டின் பொருட்டு முழு மில் தொழிலாளரைத் தண்டித்தது தவறு என்றுங், கர்நாட்டிக் மில் தொழிலாளர்க்கு நியாயஞ் செய்யவேண்டுமென்றும், 31ஆந் தேதிக்குள் பதில் வாராவிடின் தாமும் வேலை நிறுத்தஞ் செய்தல் நேருமென்றும் மில் அதிகாரிகளுக்குச் சங்கத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டனர். குறித்த நாளுக்குள் பதில் கிடைக்கவில்லை. பக்கிங்காம் மில் தொழிலாளர் மீண்டும் 14-ந் தேதி சங்க நிலையத்தில் கூடி, 20ஆந் தேதி அநுதாப முறையில் வேலை நிறுத்தஞ் செய்துவிடுவதென்று உறுதிகொண்டு, தீர்மானம் நிறைவேற்றி, அதை மில் அதிகாரிகட்கும் அரசாங்கத்துக்கும் அறிவித்தனர். 20ஆந் தேதி பக்கிங்காம் மில் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்யமாட்டார்; தொலைந்தது சங்கம் என்றே முதலாளிக் கூட்டம் எதிர் பார்த்தது. 19ஆந் தேதி மாலை கூடிய கூட்டத்தில் யான் நிலைமையை விளக்கி, தொடங்கப் போகும் போராட்டம் மிகப் பெரியது. உறுதி வேண்டும். நாளைக் காலை உங்களுக்குச் சோதனை நிகழப்போகிறது என்று முழக்கஞ் செய்தேன். ஆண்டவன் எனக்களித்த உடல் உரமும் பெருங்குரலும் அன்று நன்கு பயன்பட்டன. வேலை நிறுத்தம் நிகழாதென்றே பலவிடங்களில் எதிர்பார்க்கப்பட்டது. பொழுது விடிந்தது. பக்கிங்காம் மில் தொழிலாளர் மில்லுக்குள் நுழையவில்லை; சங்க நிலையம் நோக்கிப் பட்டாளம்போல் வந்தனர். லேபர் கமிஷனர், போலி கமிஷ னர் முதலியோர் வேடிக்கை பார்த்து நின்றனர். போலி கூட்டம் வெள்ளம்போல் நின்றது. வில்லிங்டன் மனங்கொண் டால் நியாயம் செய்யலாம். அவர் தொழிலாளர் இயக்கத்தை நசுக்க எண்ணங் கொண்டுள்ளார். யான் போராட்டத்துக்கு உறுதி செய்து கொண்டேன். நீங்களும் உறுதியாயிருங்கள். வில்லிங்டனுக்கு நல்ல பாடங் கற்பிக்கலாம் என்று தொழி லாளர்க்கு எடுத்துரைத்தேன். தோழர்கள் சக்கரைச் செட்டியா ரும், இ.எல். ஐயரும் பேசினர். தோழர் சிங்காரவேல் செட்டியா ரும் எங்களுடன் கலந்து கொண்டனர். பொருளாதாரம் பொருளாதாரம் என்று நச்சு விதை விதைக்கப்பட்டது. அதன் பயன் விளைந்து விட்டது என்று பூர்ஷ்வாக்கள் கிளப்புகளிலும் மற்ற விடங்களிலும் கூக்குர லிட்டார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர் தொகை பதின்மூவா யிரம். முன்னைய வேலைநிறுத்தத்தில் பாங்கியிலிருந்த பணம் தொழிலாளர்க்குப் பங்கிடப்பட்டது. சங்கத்தில் நிதி இல்லை. இன்னோரன்ன குறைபாடுகளைக் கண்டே மில் அதிகாரிகளும் மற்றவரும் பிடிவாதத்தில் நின்றார்கள். நிலைமை எங்களுக்குத் தெரியும். நாங்களே வலிந்து போருக்குப் போகவில்லை. வலியவே சண்டைக்கு ஈர்க்கப்பட்டோம். திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை என்று கடனாற்றினோம். போராட்டம் போராட்டம் ஏறக்குறைய ஆறுமாதம் நடைபெற்றது. ஆறுமாதப் போராட்ட நிகழ்ச்சி ஒன்றா? இரண்டா? நூற்றுக் கணக்கிலுண்டு. அவைகளை யெல்லாம் இந்நூலில் எப்படிக் கூறுதல் கூடும்? சுருங்கிய முறையில் சிலவற்றை ஆங்கொன்று ஈங்கொன்றாகக் குறிப்பிட்டுச் சொல்ல எண்ணுகிறேன். முதல் முயற்சி என்ன செய்யப்பட்டது? வகுப்புப் பிணக்குக்கு அடிகோலப்பட்டது. அக்காலத்தில் கிலாபத் இயக்கம் வீறுகொண்டு நின்றமையால் ஹிந்து - முலிம் ஒற்றுமை உரம்பெற்றிருந்தது. அதைக் குலைத்தல் எவராலும் இயலாமற் போயிற்று. ஏழை மக்கள் ஆதிதிராவிடர்கள் பிடிக்கப்பட்டார்கள். மில்லில் ஆதி திராவிடர்களுக்குச் சிறப்பாகப் பலவித நலன்கள் செய்யப்படும்; ஆதிதிராவிடர் களே! வேலைக்குப் போங்கள் என்று பிரசாரஞ் செய்யப்பட்டது. அப்பிரசாரத்துக்குச் சில ஆதிதிராவிடர் செவிசாய்த்தனர்; சிலர் செவி சாய்த்தாரில்லை. MââuhÉl¤ bjhÊyhs® jk¡FŸ r§f¤âny T£l§To, ‘k‰w¢ rnfhju®fSl‹ ehK« fyªnj Éwš nt©L«; bjhÊyhs® ïa¡f¤âš rhâ¥ãz¡F v‰W¡F? என்று சங்க வழியில் நின்று பாடு படவே விரதங்கொண்டனர். அஃது எனக்கு அளவிலா மகிழ்ச்சி யூட்டிற்று. தொடக்கத்தில் மில்வட்டத்தில் போலி பட்டாளம் நிறுத்தப்பட்டது; பின்னே ஐரோப்பிய இராணுவம் நிறுத்தப் பட்டது; போலிஸும் இராணுவமும் அணி அணியாக நின்று காவல் புரிந்தமையால் ஆதி திராவிடர் சிலரும் வேறு சிலரும் மில்லுக்குள் செல்லலாயினர். அவர் மில்லுக்குள் காலை போகும்போதும், மில்லினின்றும் மாலை திரும்பும்போதும் போலிஸும் இராணுவமும் புரிந்த காவல் கோலத்தை வேடிக்கை பார்க்கச் சென்னை வாசிகள் திரண்டு வருவார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மில்லுக்குள் போகாது விரதங் காத்தமையால் வெளியூர்களிலிருந்து ஆட்கள் திரட்டப்பட்டார்கள். அவர்கட்கெனத்தனியிடமும் மில் அதிகாரிகளால் அமைக்கப்பட்டது. நாளுக்குநாள் கருங்காலிகட்கும் (black legs) வேலைநிறுத்தக் காரர்க்கும் பலவிதச் சண்டைகள் நிகழ்ந்தன. கத்தி வெட்டுக் களும் வெடி வீச்சுக்களும், வீடுகளில் தீவைப்பும், பிற மூர்க்கச் செயல்களும் அடிக்கடி நடைபெற்றன. கலகமும் குழப்பமும் பலவிடங்களில் பரவின. தொழி லாளர்மீது வழக்குகளும் வாரண்டுகளும் மலிந்தன. சங்க நிலையத்தை இராணுவம் காவல் பூண்டது. நிலையம் சோதிக்கப்பட்டது. சங்கத்திலே காலையிலும் மாலையிலும் தொழிலாளர்க்கு அஹிம்ஸாதர்ம உபதேசஞ் செய்யப்பட்டு வந்தது. நாடு கடத்தல் யான் அப்பொழுது தொழிலாளர் தொல்லையில் மூழ்கி யிருந்தாலும் காங்கிர தொண்டை விடுத்தேனில்லை. தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகத் தொண்டைச் செய்தே வந்தேன். சில இடங்களில் என்னுடன் வந்த வரக்குமட்டும் 144 வழங்கப்படும்; எனக்கு வழங்கப்படுவதில்லை. அஃது எனக்கும் மற்றவர்க்கும் வியப்பூட்டும் உரிய காரணம் பலவாறு சொல்லப்பட்டது. பலவித வதந்திகள் எழுந்து எழுந்து மறைந்தன. தொழிலாளர் குழப்பங் காரணமாக அரசாங்கம் திரு.வி.க.வை விழுங்கப் போகிறது. அவருக்குப் பெருந் தண்டனை கிடைக்கப் போகிறது. அதனால் அவர் போகுமிடங்களில் 144 வழங்கப்படுவதில்லை என்ற வதந்தி மட்டும் நிலைத்து உலவியது. அதனை வலியுறுத்த லார்ட் வில்லிங்டன் நீலகிரியினின்றும் வரப் போகிறார் வந்ததும் திரு.வி.க. வையும் அவரைச் சார்ந்த சிலரையும் நாடு கடத்தப் போகிறார் என்றொரு வதந்தி தொடர்ந்து பிறந்தது. அது காட்டுத் தீப்போல் சென்னை முழுவதும் பரவிற்று. நண்பர் பலரும் என்னைக் கண்டு கண்டு விசாரித்தவண்ணமிருப்பர். அக்காலத்தில் இரட்டை ஆட்சிப் பதவியில் வீற்றிருந்தவர். ஜடி கட்சியார். லார்ட் வில்லிங்டன் (4-7-1921) நீலகிரியினின்றும் சென்னை சேர்ந்து முதலில் கருங்காலிகளைக் கண்டனர்; பின்னே பல தலைவர்களை வரவழைத்துப் பேசினர். அடுத்தநாள் மாலை 6 மணிக்குக் கவர்னர் வீட்டுக்கு வரு மாறு எனக்கு அழைப்பு வந்தது. அதற்கிணங்கி யான் கவர்னர் மாளிகைக்குச் சென்றேன். எனக்கு முன்னரே தோழர்கள் சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர், ஜலில்கான், அப்துல் ஹகீம் ஆகிய நால்வர் அங்கே போந்திருந்தனர். 6 மணிக்கு மந்திரிமார் வலது பக்கமும் நிர்வாக அங்கத்தவர்கள் இடது பக்கமும் இருப்ப, லார்ட் வில்லிங்டன் நடுவிலே அமர்ந்தார். மேல்நாட்டு முறைப்படி மரியாதைகள் நடந்தன. எங்கள் ஐவரையும் லார்ட் வில்லிங்டன் பார்த்து, தொழிலாளர் வேலை நிறுத்தங் காரணமாகச் சென்னையில் வெட்டுக் குத்துக்களும் வெடிகளும் வீடுகளில் தீவைப்பும் நடந்து வருகின்றன. அவைகட்கெல்லாம் மூலகாரணர் நீங்கள் என்று அறிகிறேன். .’ என்று கூறினர். எங்களில் ஒருவர் நாங்கள் காரணல்லர் என்றனர்; ம ற்றாருவர் நீதி மன்றம் இருக்கிறதே என்றனர்; இன்னொருவர் விசாரணை வேண்டும் என்றனர்; வேறொருவர் தொழிலாளர் சங்கத்துக் கும் எனக்குஞ் சம்பந்தமே இல்லை. யான் தவறாக அழைக்கப் பட்டேன் என்றனர்; யான், எல்லார்க்கும் நியாயத் தீர்ப்பு நாள் இருக்கிறது என்றேன். நியாயத் தீர்ப்பு நாள் என்றது லார்ட் வில்லிங்டனை உறுத்தியதுபோலும்! லார்ட் வில்லிங்டன் ஏற இறங்கப்பார்த்து, பொழுதாகிறது; யான் உங்களை எச்சரிக்கை செய்யவே அழைத்தேன். இனித் தீவைப்பு முதலிய மூர்க்கச் செயல்கள் நடக்குமானால் நீங்கள் நாடு கடத்தப்படுவீர்கள் என்று அழுத்தமாக அறைந்தார். நாங்கள் விடைபெற்று வீடுபோய்ச் சேர்ந்தோம். அன்றிரவு, டாக்டர் நடேச முதலியார் என்னைக் கண்டு லார்ட் வில்லிங்டன் எங்களை நாடு கடத்த உறுதி கொண்டே சென்னை நோக்கினரென்றும், அவர் ஸர். பி. தியாகராய செட்டியாரையும், தலைமை அமைச்சர் பனகல் ராஜாவையும் கலந்து ஆலோசித்தபோது, அவ்விருவரும் நாடு கடத்துஞ் செயலால் தமது கட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாகுமென் றும், ஒத்துழையாமையும் மலையாளக் குழப்பமும் கனன்று கொதித்துவரும் வேளையில் நாடு கடத்தலும் நிகழுமாயின் நகரத்தில் குழுப்பம் பெருகுமென்றும், தாம் (பனகல்) பதவியினின்றும் விலகலும் நேரலாமென்றும் நிலைமையை விளக்கிய பின்னர் எங்களை எச்சரிக்கைசெய்துவிடக் கவர்னர் எண்ணலாயினரென்றும் உரைத்தார். செட்டியாரும் பனகலும் எனக்கு நன்மை செய்யவில்லை; தீமை செய்தனர் என்று சொல்லி டாக்டரை அனுப்பினேன். வழக்குகள் தொழிலாளர்மீது போலிஸாரால் தொடரப்பெற்ற வழக்குகளையெல்லாம் விரித்துக் கூறுதல் அநாவசியம். இரண்டு வழக்குகளில் தீர்ப்புக்கள் (2, 5-8-1921) பத்திரிகைகளில் விரிவாக வெளிவந்தன. அத்தீர்ப்புக்கள் பொதுமக்களின் அநுதாபத்தைத் தொழிலாளர்மீது திருப்பின. அநியாயம் மக்களுக்கு நன்கு விளங்கிற்று. எயிலிங் கூட்ட விசாரணை தீ வைப்பு முதலிய மூர்க்கச் செயல்களை விசாரணை புரிய அரசாங்கத்தால் ஒரு கூட்டம் அமைக்கப்பட்டது. தலைவர் ஜடி எயிலிங்; அங்கத்தவர் இருவர். அவர் ஸர் வேங்கட ரத்தினமும் கர்நூல் வக்கீல் நரசிம்மாச்சாரியருமாவர். விசாரணை (10-8-1921இல்) தொடங்கப்பட்டது. சங்கத் தலைவன் என்ற முறையில் சான்று கூற யான் அழைக்கப்பட்டேன். அவ்வழைப்புக்கு யான் இணங்கினேனில்லை. இணங்கல் இயலாதென்று பதில் விடுத்தேன். அதில் கலக நிகழ்ச்சி பொது மக்களைப் பொறுத்ததென்றும், அதற்கும் சென்னைத் தொழிலாளர் சங்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், பிரதம பிரஸிடென்ஸி மாஜிடிரேட்டால் அளிக்கப் பெற்ற இரண்டு தீர்ப்புக்களால் கலகமூலம் நன்கு விளங்குகிற தென்றும், இன்னும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை யிலிருந்து வருகின்றன என்றும், எயிலிங் கூட்ட விசாரணையில் கலந்துகொள்ளச் சங்கம் விரும்பவில்லை என்றும் குறிக்கப் பெற்றன. 1எயிலிங் கமிட்டியார் தமது அறிக்கையின் தோற்று வாயில் ஒரு சிறு குறிப்புப் பொறித்து எனது கடிதத்தையும் வெளியிட்டனர். துப்பாக்கி முழக்கம் சென்னை அரசாங்கத்தின் ஏவுதற்கிணங்கப் போலி கமிஷனர் ஒரு கட்டளை பிறப்பித்தனர். அது வருமாறு :- ஜி. அல்லது வேப்பேரி போலி டேஷன், எச். போலி டேஷனைச் சேர்ந்த மூலைக்கொத்தளம், வியாசர்பாடி அல்லது வண்ணாரப்பேட்டை போலி டேஷன் ஆகிய இவ்வெல்லைக் குள் அடங்கியிருக்கும் ஜனங்களுக்குத் தெரிவிப்பது என்னவென் றால்:- சமீபத்தில் நடைபெற்ற தீ விபத்துக்களைப் பற்றியும், அமைதி யின்மையைப் பற்றியும், அரசாங்கத்தார் பெரிதும் கவனித்து வரு கின்றனர். அரசாங்கத்தார் இம்மாதிரியான குழப்பங்களெல்லாம் நின்று விடுதற்குரிய காரியங்களையும் செய்துவருகின்றனர். சட்டத்தையும் அமைதியையும் நிலைபெறுத்துதற்காக அரசாங்கத்தார் அவசியமாய்ச் செய்யத் தக்கனவற்றைச் செய்வர். சட்ட விரோதமான எல்லாக் கூட்டங்களும் கலைக்கப்படும். கலகத்தை உண்டாக்க முயல்கிறவர்மீதும், ஆயுதங்கள் வைத் திருக்கிறவர் மீதும். கோபத்தை உண்டாக்கக் கூடிய செய்கைகளைச் செய்கிறவர்மீதும், அரசாங்கத்தார் கடுமையான முறைகளைக் கையாள் வர். அரசாங்கத்தார் தம்மால் கூடியவரை அமைதியாயிருக்கும் ஜனங் களுக்குப் பாதுகாப்பு அளிப்பர். அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்புக் காக அவ்விடத்தில் போலி படை நிறுத்தப்படும். அதன் செலவை அவ்விடத்திலுள்ளவர் கொடுத்தல் வேண்டும். நவசக்தி (8-7-1921) இக்கட்டளையின் உள்ளக் கிடக்கை உள்ளங்கை நெல்லிக் கனியென விளங்குகிறது. உணர்வின்றிப் பட்டினியால் வாட்டமுற்றுக் கிடந்த தொழிலாளர்க்குத் துப்பாக்கி உணவு - குண்டு உணவு - அளிக்கப் பட்டது. (29-8-1921) ஏழைத் தொழிலாளர் மீது துப்பாக்கிப் பிரயோகஞ் செய்யப்பட்டது. எழுவர் இறந்தனர்; நூற்றுக் கணக்கானவர் காயமுற்றனர். இறந்தவருள் ஒருவர் பெண்மணி. துப்பாக்கி வேட்டினிடை அவர் புரிந்த வீரச் செயலுக்குரிய நினைவுக்குறி என்று சென்னை அமைக்குமோ அறிகிலேன். ஏழை மக்கள் தியாகம் மறக்கப்படுகிறது. ஏழு பிணங்களும் சென்னையில் ஊர்வலம் வந்த காட்சியைத் தோழர் சிங்கார வேல் செட்டியார் வருணித்து எழுதிய கட்டுரை சரித்திர உலகுக்குரியது. மேலும் துப்பாக்கிப் பிரயோகங்கள் அக்டோபர் 15இலும், செப்டம்பர் 19இலும் நிகழ்ந்தன. இருவர் மாண்டனர். சிலர் காயமுற்றனர். போலிஸார் சார்பில் உயிர் துறந்தவர் இருவர். ஒருவர் ஹெட்கான்டேபில்; மற்றொருவர் சார்ஜெண்ட். அவ்விரு வரும் தொழிலாளர் எறிகுண்டால் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் அச்செய்தி உறுதிப்படவில்லை. குழப்ப நிகழ்ச்சிகள் பல என்னுள்ளத்தினின்றும் மூண் டெழுந்து வருகின்றன. அவைகட்கென ஒரு தனிநூல் எழுதுதல் வேண்டும். குழப்பத்தைப்பற்றி நகர பரிபாலன சபையிலும் சட்டசபையிலும் விவாதங்கள் நடந்தன. அவைகளில் திரு. ஒ. தணிகாசலம் செட்டியார் பேசிய 1பேச்சுக்களில் பல உண்மை கள் சுருங்கிய முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றன. முடிவு வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர் இராம சாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் ஸர்.பி. தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற் பெருக்கில் மூழ்கித் தொழிலாளர் பலர் வேலைக்குத் திரும்பினர். ஸர்.பி. செட்டியார், மாதங்கள் ஆறாயின. இனிப் பிடிவாதம் வேண்டாம். உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புது ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலி காவலையும், இராணுவக் காவலையுங் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒருவழி யில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்களெல்லாரும் வேலைக்குச் செல்ல உறுதிகொண்டால் அவர்கள் வீட்டுக்கனுப்பப் படுவார் கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள். நன்மையே விளையும். சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று. ஸர்.பி. செட்டியார் ஜோசியம் பெரிதும் பலித்தது. தொழிலாளர் இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியச் செய்யப்பெற்ற சூழ்ச்சிகளுள் சிறந்தனவாக உள்ள இரண்டு இங்குக் குறிக்கப்பெற்றன. ஒன்று வழக்கு; மற்றொன்று நாடு கடத்தும் எச்சரிக்கை. பின்னையதின் அடிப்படை இலாபத்தில் மிகச் சிறு உரிமை தொழிலாளர்க்கு வேண்டுமென்று பேசப் பட்டமை; முயன்றமை அன்று. வெறும் பேச்சுக்கு எத்துணை எத்துணை எதிர்ப்பு ! எதிர்ப்பால் விதை பட்டுப் போய்விட் டதோ? விதை முளைவிட்டு வளர்ந்தே வருகிறது. அதற்குரிய ஒளியும் காற்றும் நீரும் படர்ந்து, வீசி, பாய்ந்தே வருகின்றன. அவ்வொளியையும் காற்றையும், நீரையும் வற்றச் செய்யும் ஆற்றல் எதற்குமில்லை; எவர்க்குமில்லை ** ** ஆங்கொன்று ஈங்கொன்று உலகில் பலவிதக் கதவடைப்புக்களும், வேலை நிறுத்தங் களும் நிகழ்ந்துள்ளன. அவைகளில் பெரியது அமெரிக்காவில் நடந்த எஃகுத் தொழிலாளர் வேலைநிறுத்த மென்று சொல்லப் படுகிறது. அதனுடன் ஒத்துப் பக்கத்தில் நிற்பது சென்னை நெசவுத் தொழிலாளர் கதவடைப்பும் வேலை நிறுத்தமும் கொண்ட ஒன்று (1921). அதில் ஏறக் குறைய ஆறுமாத காலம் யான் தோய்ந்தவன். அப்பழைய நிகழ்ச்சிகளும் பிறவும் இங்கே நினைவுக்கு வருகின்றன. அவைகளிலே சில மேலே போந் துள்ளன. எஞ்சிய சிலவற்றையும் இந்நூலில் விரித்துக்கூறல் இயலாது. இது குறிப்பைக் கொள்ளும் நூல். ஆதலின் இன்றியமையாதனவற்றுள் மிகச் சிலவற்றை ஆங்கொன்று ஈங்கொன்றாகக் குறித்துச் செல்கிறேன். லார்ட் வில்லிங்டன் அந்நாளில் கவர்னராயிருந்தவர் லார்ட் வில்லிங்டன். அவர் தொழிலாளர் தோழரல்லர் என்பதும், முதலாளி சார்பினர் என்பதும் அவர்தம் நடக்கையால் செவ்வனே விளங்கின. அவர் எங்களை அழைத்துப் பேசியபோதெல்லாம் அவரிடம் வன்மம் குடிக்கொண்டிருந்தமை எங்கட்குப் புலனாகும். லார்ட் வில்லிங்டன் கருங்காலிகளைப் போய்ப் பார்ப்பர். அது கருங்காலிகட்கு ஊக்கமூட்டும். அவ்வூக்கம் தொழி லாளர்க்குத் தொல்லை விளைக்கும். தொழிலாளர் நிலையம் லார்ட் வில்லிங்டனைக் கண்டதே இல்லை. போலிஸும் இராணுவமும் உள்ளூர் போலி காப்புப் போதாதென்று வெளியூர் போலி அழைக்கப்பட்டது; ஐரோப்பிய இராணுவம் நிறுத்தப் பட்டது. அவ்வளவு பாதுகாப்பு அவசியமில்லை என்று யான் நினைப்பதுண்டு. உள்ளூர் போலிஸார் பலர் எங்களால் அமைக்கப்பெற்ற சங்கத்தில் அங்கத்தவராயிருந்தமை லார்ட் வில்லிங்டனுக்கு ஐயமூட்டியிருக்குமென்றும், அவ்வையம் வெளியூர் போலிஸை அழைத்திருக்குமென்றும் ஐரோப்பிய இராணுவத்தை நிறுத்தியிருக்குமென்றும் பலவிடங்களில் பேசப்பட்டன. உண்மை என்னவோ? அஞ்சாமை ஒருநாள் லார்ட் வில்லிங்டன் பாய்னட் படை சூழக் கருங்காலிகளைக் கண்டு தொழிலாளர் சங்க நிலையத்தின் வழியே திரும்பினர். அது கண்ட யான் தொழிலாளர் சங்க வாயி லில் நின்று சங்கத்திருந்த தொழிலாளரின் முகங்களை நோக்கி னேன். அவரிடம் அச்சங் கண்டேனில்லை. வகுப்புப் பூசல் வகுப்புப்பூசல் மூட்டப்பட்டது. அதற்கு எல்லா ஆதி திராவிடரும் இரையானாரில்லை. சங்கச் சார்பிலுஞ் சிலர் நின்றனர். கருங்காலிகள் பக்கம் நின்ற தலைவர் எம்.ஸி.ராஜா. அவரும் யானும் வெலி கல்லூரியில் ஆசிரியரா யிருந்தவர்; நண்பர். பூசல் எங்கள் நட்புக்குக் கேடு நிகழ்த்தவில்லை. வீடுகளில் தீ ஏழை மக்கள் வீடுகள் தீக்கிரையாகும். காரணம் இன்னும் தெரியவில்லை. அரசாங்கத்தாரால் அமைக்கப் பெற்ற விசா ரணைக் கூட்டத்தாலும் உண்மை காண்டல் இயலாமற் போயிற்று, எரிந்த வீடுகள் முன்னே பெட்டி சட்டி கூடை முறம் முதலியன காணப்படும். அவைகளை மட்டும் அணுகத் தீக்கடவுள் அஞ் சியதுபோலும்! வேலையற்ற தொழிலாளர்கள் வயிற்றெரிச்ச லால் வீடுகட்குத் தீ வைத்தார்களென்று அரசாங்கம் இரங்கித் தங்கட்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்குமென்று எண்ணித் தங்கள் வீடுகளில் தாங்களே ஏழைமக்கள் தீ வைத்துக்கொண் டார்களென்றும் பேசப்பட்டது. கத்தியும் வெடியும் சிற்சில இடங்களில் சிற்சில சமயம் கருங்காலிகட்கும் தொழிலாளர்கட்கும் சண்டை மூளும். ஒருபக்கம் கத்திகள் வீசப்படும்; இன்னொரு பக்கம் வெங்காய வெடிகள் எறியப் படும். ஒவ்வொருபோது கருங்காலிகளிற் சிலர் என் கண்ணிற் படுவர். தகட்டுக் கத்திகளை ஏன் தாங்கி நிற்கிறீர்கள் என்றும், அக்கத்திகள் உங்கட்கு எப்படிக் கிடைத்தன என்றுங் கேட்பேன். அவர்கள் விழிப்பார்கள். அவ்விழிப்புப் பல உண்மைகளை உணர்த்தும். குறும்புகள் யான் காங்கிரகாரன்; ஒத்துழையாமையில் ஈடுபட்ட வன். ஒத்துழையா உளங்கொண்டு தொழிலாளரை வேலை நிறுத்தஞ் செய்யுமாறு தூண்டுவிடுகிறேன் என்ற எண்ணம் அந்நாளில் இரட்டையாட்சிப் பதவியில் வீற்றிருந்த ஜடி கட்சியாரிடை உலவியது. அஃது அவர் தம் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் தெரிந்தது. அக்கட்சித் தலைவருள் ஒருவராகிய டாக்டர் நடேச முதலியாரின் உறவினர் வியாசர் பாடியிலே வதிந்தனர். அவர்தம் வீடுகளிலே கருங்காலிகளிற் சிலர் நுழைந்து குறும்புகள் செய்தனர். அச்செய்தி நகரில் பரவியது. அது ஜடி கட்சியார் கண்களைத் திறந்தது. ஒருநாள் ஸர்.பி. தியாகராய செட்டியார், ஒ. தணிகாசலஞ் செட்டியார், எ. வி. இராமசாமி முதலியார், டாக்டர் நடேச முதலியார் உள்ளிட்ட சிலர் சூளைப்பட்டாளம் போந்து நிலைமையை ஆராய முயன்றனர். அவ்வேளையில் பழைய இராணுவ மைதானத்தில் கருங்காலிகட்கும் தொழிலாளர் கட்கும் சண்டை நடந்தது. அதைக் கண்ணாரக் கண்ட தலைவர்கள் வெவ்வேறிடஞ் சென்று, விசாரணை செய்து திரும்பினர். அவர்கள் வண்டியும் என் வண்டியும் வழியில் சந்தித்தன. என்னைக் கண்டதும் தியாகராய செட்டியார் கண்கள் கலங்கின; தணிகாசலஞ் செட்டியார் கண்கள் நீர் உகுத்தன; மற்றவர் முகங்கள் சுருங்கின. தியாகராய செட்டியார், பெருங் குழப்பம்! தாங்கொணச் சுமை உமது தலைமீதிருக்கிறது! அதை எப்படித் தாங்குகிறீர்? கடவுள் உதவி உமக்கு இருக்கிறது என்றார். தணிகாசலஞ் செட்டியார், நகரசபையிலும் சட்ட சபையிலும் வெளுக்கப் போகிறேன் என்றார். உண்மை கண்ட பின்னர் கடமையைச் செய்தல் வேண்டுமன்றோ? என்றனர் மற்றவர். யான் விடைபெற்றுச் சங்க நிலையம் நோக்கினேன். பல வீட்டுக் கூரைகளில் ஓடுகளைக் காணோம். எல்லாம் பறந்தன. அக்காட்சி அன்று என்னைப் பேசவும் விடவில்லை. உதவி தொழிலாளர்க்கென்று உண்டிகள் கொடுக்கப்பட்டன. தொழிலாளர் பலர் அவைகளைப் பெற்றுச் செல்ல விரும்பினாரில்லை. சிலரே உண்டிகளைத் தாங்கி நகரின் நானா பக்கஞ் செல்வர். வடசென்னைப் பக்கம் நோக்குவோர் தியாகராயசெட்டியார் வீட்டுக்குப் போவர். சிற்சில சமயம் செட்டியார் தொழிலாளர்க்கு உணவளிப்பாராம்; ஆனால் காசு தருவதில்லையாம்; காசு உங்களைச் சோதிக்கும்; உங்களை ஹிம்ஸையில் இறங்கச் செய்யும் என்று சொல்வாராம். வேறு வழியில் செட்டியார் உதவி கிடைத்தது. அவர் சென்னை மண்டிக்காரரை அணுகி, நாடோறும் அரிசி பருப்பு புளி மிளகாய் உப்பு முதலியவற்றைச் சூளைப் பட்டாளத்துக்கு அனுப்புமாறு கருணை புரிந்தார். கொத்தவால் சாவடி யிலிருந்து காய்கறிகள் வரும். கட்டைகளும் குவியும். திக்கற்ற தொழிலாளர் தாமே சமையல் செய்து பசியாற்றிக் கொள்வர். தொழிலாளர் பட்டினியைப் போக்கப் பலப்பல வழியில் உதவி நல்கியவர் எ. ஸ்ரீநிவாச ஐயங்கார், வ.வே.சு. ஐயர் முனிவரைப் போலத் தொழிலாளருடன் ஏகித் திருவல்லிக் கேணியில் அரிசி தண்டியதை இங்கே குறியாமற்போக மன மெழவில்லை. சகோதரி பாலம்மாள் புரிந்த உதவியும் மறக்கற் பாலதன்று. நியூ இந்தியாவும் ஹிந்துவும் தொழிலாளர் இயக்கத்தோற்றத்துக்குப் பெருந்துணை புரிந்த நியூ இந்தியா எங்களைத் தாக்கத் தொடங்கியது. ஹிந்து எங்களை ஆதரிக்கப் புகுந்தது. ஹிந்து ஆசிரியர் கதூரிரங்க ஐயங்கார் என் ஊக்கத்துக்கு ஆக்கந்தேடியே வந்தனர். ஊர்வலம் போலிஸாரால் சுட்டு வீழ்த்தப் பெற்றவரின் சவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அவ்வூர்வலத்தில் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் சேர்ந்தனர்; சென்னைவாசி களும் ஆயிரக்கணக்கில் கலந்தனர். ஊர்வலம் ஒரு பெரிய வெள்ளக்காட்சியை வழங்கியது. சிந்தாதிரிப்பேட்டை வாரா வதி இறக்கத்தில் கலகம் மூண்டது. கருங்காலிகட்குத் துணை போவோராலும், அவரைச் சார்ந்தவராலும் கற்களும் புட்டி களும் பிறவும் வீசப்பட்டன. ஊர்வல வெள்ளம் தேங்கியது. கைகலந்த பெருஞ் சண்டை நிகழ்ந்தது. ஊர்வலத்தின் முன்னே சென்ற சிங்காரவேற் செட்டியார் போரிடைச் சிக்கிக் கொண்டார். ஊர்வலத்தின் பின்னே சென்ற யான் வெள் ளத்தைக் கடக்க முயன்றேன்; முடியவில்லை; வேறு வழியாகப் புகுந்து செட்டியாரை அணைந்தேன். அவ்வேளையில் டெபுடி கமிஷ்னர் வந்தனர். கலகம் அடங்கிற்று. சிலர் தூண்டுதல் ஏழை மக்களைப் பிணங்கச் செய்தது. அதனால் கொள்ளை, தீ மூட்டல் முதலியன நடக்கின்றன. முதலாளி - தொழிலாளி வேற்றுமையுள்ளவரை இக்கொடுமைகள் நிகழும் போலும் என்று பலவற்றை எண்ணி எண்ணி, ஊர்வலத்தை நடத்திச் சென்றேன். திருவல்லிக்கேணிச் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப் பட்டன. சுடுகாட்டில் யான் என்னை மறந்து பேசினேன். அன்றைய ஊர்வலம் சென்னையைத் தன் வயப்படுத்தியது. விண்ணப்பம் போலிஸார் சுட்டதைக் குறித்து வழக்குத் தொடுக்கப் பிரசிடென்ஸி மாஜிடிரேட்டிடம் விண்ணப்பஞ் செய்யப் பட்டது. அப்பொழுது மாஜிடிரேட்டா யிருந்தவர் லோபோ என்பவர். அவர் இந்தியக் கிறிதுவர். விசாரணை அவர் முன் வரவில்லை. அவர் மாற்றப்பட்டார். காமியேட் என்ற ஐரோப்பியர் மாஜிடிரேட் பதவி ஏற்றார். விண்ணப்பந் தள்ளப்பட்டது. ஈரல் சவலை வெண் குதிரை பூட்டிய வண்டியொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டது. அதிலே போவேன்; வருவேன். காலையில் வீட்டைவிட்டுப் புறப்படுவேன்; மாலை திரும்புவேன்; நள்ளிரவிலுந் திரும்புதல் நேரும். என் ஈரல் சவலையுற்றது. எனது கல்லுடலுங் கரையத் தொடங்கியது. வெண் குதிரையின் மணியொலி கேட்கும்வரை இராயப்பேட்டை கவலையில் கிடக்கும்; தெருத் திண்ணைகளில் கூட்டமிருக்கும்; வீடு விழித்திருக்கும். என்னை ஈன்ற அருமை அன்னையார் தெரு வாயிற்படியிலே முகவாய்க் கட்டையிலே கையைவைத்து ஏக்கத்துடன் என் வருகையை நோக்கிய வண்ணம் அமர்ந் திருக்குங் காட்சி என் உள்ளத்தை உருக்கும். வண்டி மறியல் இராயப்பேட்டைக்கும் சூளைப்பட்டாளத்துக்கும் பல வழிகளுண்டு. யான் ஒரு வழியே போவதுமில்லை; வருவது மில்லை. பலவழியாகப் போவேன்; வருவேன். ஒருநாள் இரவு பிரம்பூர் பக்கஞ் சென்று வியாசர்பாடி வழியே திரும்பியபோது, இடையில் ஒரு கூட்டம் வண்டியை மறித்தது. என்னுள் பலவித ஐயப்பாடுகள் தோன்றின. வண்டியை விட்டிறங்கி முகத்தைக் காட்டுவது நல்லது என்று நினைந்து கீழே இறங்கினேன். என்னைக் கண்ட கூட்டம் ஐயா! தனியே வரலாமா? இரவில் வரலாமா என்று கூச்சலிட்டது. வந்தாலென்ன? உங்கள் எண்ணம் நிறைவேறினால் என் உயிர் பரலோகஞ் சேரும் என்றேன். இப்படிச் சொல்லலாமா? உங்களையும் வாடியா வையும் நாங்கள் மறப்போமா? எல்லாம் உங்களுக்குத் தெரியும். எங்கள் நிலைமை இப்படியாகிவிட்டது. மறுபடியும் நாங்கள் சங்கத்தில் சேருங்காலம் வரும் என்று இரைந்தனர். யான் போய் வருகிறேன் என்று வண்டியில் ஏறினேன். உங்களைத் தனியாக அனுப்ப மனமெழவில்லை. எங்களில் சிலர் உங்க ளுடன் ஜெனரல் ஆபிடல் வரை வந்து திரும்பினாலன்றி எங்கள் மனம் திருப்தியடையாது என்று நெருக்கினர். அவர்தம் மனோநிலை எனக்குப் புலனாயிற்று. மூவர் என்னுடன் வரலாம் என்றேன். மூவர் என்னுடன் ஜெனரல் ஆபிடல் வரை போந்து திரும்பினர். இதை எம்.ஸி. ராஜாவினிடம் தெரிவித்தேன். அவர், எங்கள் மக்கள் பழந்தமிழர்கள். அவர் கள் நன்றியறிதலுடையவர்கள் என்று மகிழ்வெய்தினர். ஐயம் இன்னொருநாள் வண்டி கோட்டை வழியாக விடப் பட்டது. மன்றோ உருவச்சிலையின் பக்கத்திலுள்ள ஒரு மரத் தடியினின்றும் ஒரு கூட்டம் ஓடிவந்தது; வண்டியைத் தொடர்ந் தது. எனக்கும் என்னுடனிருந்த நடேச நாயகர்க்கும் ஐயம் உண்டாயிற்று. நாயகர் தடியுங் கையுமானார். பி.ஆர். அண்ட் சன் வரை ஐயம் எங்களை விட்டகலவில்லை. பின்னர் அக்கூட்டம் விளையாட்டாக ஓடிவந்ததென்று தெரிந்தது. போலிஸில் வண்டி வெள்ளைக் குதிரை நோய்வாய்ப்பட்டது. அதனால் வேறொரு வண்டியில் ஒருநாள் சென்றேன். அன்று தொழி லாளர் கூட்டம் குயப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசி முடித்து வண்டியை அணுகினேன்; நின்றேன்; நின்றேன்; நெடுநேரம் நின்றேன். வண்டிக்காரன் வந்தானில்லை. என் மனம் என்னென்னவோ நினைந்தது. வண்டியைப் போலிஸாரிடம் ஒப்புவித்து யான் வீடேகினேன். வண்டிக்காரன் குடிமயக்கால் அடுத்த தெருவிலே ஒரு திண்ணையிலே உறங்கினான் என்று பின்னே கேள்வியுற்றேன். ஒருவன் வஞ்சகம் கட்டளையின்றிப் போலிஸார் சங்க நிலையத்துள் நுழைதலாகாதென்ற நியதி அந்நாளிலிருந்தது. ஆனால் எங்கள் பேச்சுக்கள் எப்படியோ தக்க இடங்களில் பதிவாகும். அவை களை எந்தக் காற்றுத் தாங்கிச் செல்லுமோ அறிகிலேம். சங்கத்தில் ஒருநாள் ஷாபி மகம்மத் பேசியதும் முடிவுரை கூற யான் எழுந்தேன். விளக்கைச் சூழ்ந்திருந்த கூட்டத்திடை, எழுதுகிறான்; எழுதுகிறான் என்ற கூக்குரல் கேட்டது. அவன்மீது கூட்டம் பாய்ந்தது; அவனை அழுத்தியது. அந்த ஆளை மீட்க ஷாபியும் யானும் பட்டபாடு ஆண்டவனுக்கே தெரியும்! பின்னே அவன் ஒரு தொழிலாளரின் உறவினன் என்றும், அவர் வீட்டில் தங்கியிருப்பதாக நடித்துப் பெரிய பெரிய திருவிளையாடல்கள் புரிந்தான் என்றும் கேள்விப் பட்டோம். சூழலும் நீழலும் போலி சூழலும் நீழலும் என்னைத் தொடராதிருக் குமோ? தொடர்ந்த கதைகள் பலப்பல. யான் உணரும் முறையில் நீழல் செய்த சூழல்களும் உண்டு; உணராமுறையில் நீழல்செய்த சூழல்களும் இருக்கும். பலவற்றை ஈண்டு விரிக்கிள் அவை பெருகும். ஒரு குறிப்பு ஈண்டைக்குப் போதும். வைதிகர் ஏமாற்றம் ஒரு நாள் ஒரு முதிய வைதிகர் என்னிடம் வந்தார். அவர் தோற்றம் கம்பீரமாயிருந்தது. அவர் வான்மீகியைப் பற்றிச் சில கருத்துக்களை வெளியிட்டனர். யான் கம்பரைக் குறித்து சில கூறினேன். அவர் அடிக்கடி போந்து உரையாடுவது வழக்க மாகியது. வீட்டுப் பூசைக்கென்று நாடோறும் பூக்கொணருந் தொண்டையும் அம்முதியோர் ஏற்றனர். ஒருநாள் கடலோரத் தில் யான் நண்பர் குழாத்திடை இருந்தபோது, கிழவர் வடிவம் தூரத்தில் காணப்பட்டது. அதோ வரும் வைதிகர் இராமா யணத்தில் வல்லவர். அவரை அழைத்து வருகிறேன். என்று சொல்லிக்கொண்டே எழுந்தேன். அங்கிருந்த தேசபக்தர் திருமலாச்சாரியார், அவனா? அவன் போலி ஒற்றன் என் றார். யான் பேசாமல் அமர்ந்தேன். வைதிகர் நேரே போய் விட்டார். யான் வீடு சேர்ந்து மறுநாளை எதிர் நோக்கி நின் றேன். வைதிகர் வந்தார்; பூவைத் தந்தார். ah‹, ‘ï¥óit M©lt‹ V‰ghdh? என்றேன். என்ன என்றார் வைதிகர். ‘ne‰W v‹id¥ g‰¿¥ nghÈ[&¡F v‹d vG⤠jªÔ®? என்று கேட்டேன். வைதிகருக்கு உதடு நடுக்குற்றது. மேலும் கீழும் பார்த்தார். வெளிப்படையாக உங்கள் தொழிலைச் சொல்லிப் பிழைக்கலாமே. fuî v‰W¡F? என்று எள்ளினேன். வைதிகர் வயிற்றைக் காட்டி வெளிச் சென்றார். இன்னும் எவ்வெவ் வழியில் சூழலும் நீழலும் தொடர்ந்தனவோ? எனக்கு என்ன தெரியும்? கேடு சூழல் அரசாங்கம் தன் கடனை ஆற்றியது. முதலாளிக் கூட்டம் தன் வழியே நின்று ஒழுகியது. புரசை, வேப்பேரி, பட்டாளம், பிரம்பூர் முதலிய வட்ட வாசிகள் தங்களால் இயன்ற அளவில் தொழிலாளர்க்குத் துணைபுரிந்தார்கள். சிற்சிலரால் சிற்சில தொழிலாள இளைஞர்க்கு முறை சோறிடப்பட்டது. பட்டம் பதவி வேடர்களில் சிலர் வாளாகிடந்தனர்; சிலர் தொழி லியக்கத்துக்குக் கேடு சூழ முயன்றனர்; எங்களைப் பிடித்துக் கொடுக்கவுஞ் சூழ்ச்சி செய்தனர். அவருள் ஒருவர் கதையை மட்டும் சில சொற்களால் குறிப்பிடுதல் நல்லதென்று தோன்று கிறது. அவ்வொருவர் தொழிலாளர் சங்கம் போந்து போந்து தொழிலாளர் தோழராயினர், அவர்தம் தோழமை வெறும் நடிப்பே. அந்நடிப்பு வெளியாயிற்று. அவரால் ஒருநாள் இரு வித ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்று தொழிலாளர் சிலர் இரவு 11 மணிக்கு அவரிடம் போந்து அவரிடத்துள்ள வெங்காய வெடிகளை எடுத்துச் சென்று தற்காப்புக்குப் பயன்படுத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று தொழிலாளர் வெடிகளை ஏந்தித் திரும்புங்கால் அவரைக் கைது செய்தல்வேண்டுமென்பது. இச்சூழ்ச்சி ஒரு குருவியால் எங்களிற் சிலர்க்கு அறிவிக்கப் பட்டது. தொழிலாளர் குறித்த வேளையில் வஞ்சகர் வீட்டுக்குச் செல்லாதவாறு தடுக்கப்பட்டனர். பட்டம் பதவி வேடர்க்குக் கடவுளுண்மையில் உறுதியில்லை போலும்! பட்டம் பதவி களைப் பெருக்கிக்கொள்ளக், காரணமின்றிப் பிறர்க்குக் கேடுசூழ இறங்குவது மனிதத் தன்மையாகுமா? வீரத் தொண்டர்கள் குழப்பக் காலத்தில் தொழிலாளரிடம் ஒழுங்கையும் அமைதியையும் காப்பதற்கென்று அமைந்த தொண்டர் படையை நன்முறையில் நடாத்திய வீரர் சிலர். அவருள் வேதநாயகம், எ. நடேச முதலியார், கோ. ம. நடேச நாயகர், பொன்னுரங்க முதலியார் முதலியோர் புரிந்த வீரச் செயல்கள் சுயராஜ்யக் காலத்தில் நூலாக எழுதப்படலாம். புயல் தாய்ச்சங்கமாகிய சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் மீது பெரும்புயல் வீசிற்று. அப்புயல் சங்கத்தை வீழ்த்தி விடு மென்று சிலவிடங்களில் கருதப்பட்டது. சங்கம் சாயவில்லை. இலைகள் உதிர்ந்தன. பல கவடு கோடுகள் முறிந்தன. மரம் கழன்று சுழன்றே நின்றது. சோர்வு தாய்ச் சங்கத்தின் சுழற்சி மற்ற சங்கங்களைத் தாக்காமற் போகவில்லை. ஆறுமாத காலம் என் கருத்துப் பெரிதும் நெசவுத் தொழிலாளரிடமே படிந்து கிடந்தமையால் யான் பல சங்கங்களில் தலைகாட்டலும் அரிதாயிற்று. சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர் முதலிய தோழர்களும் என்னுடன் நீர் நிழல்போலிருந்தார்கள். பக்கத்துள்ள எம்.அண்ட். எ. எம். தொழிலாளர் சங்கத்துக்குமட்டும் சிற்சிலபோது சென்று வருவோம். சங்கங்கள் ஒருவாறு வேலை செய்யலாயின. பொது வாக இயக்கம் சோர்வுற்ற தென்றே சொல்வேன். எல்லாச் சங்கங்களையுந் தாங்கி நின்ற மத்தியச் சங்கம் மறைந்தே போயிற்று. ஓய்வு எனது உடல் நலம் குன்றியது. ஓய்வு தேவை என்று மருத்துவர் கூறினர். அவ்வேளையில் காங்கிரக்குள் பிளவு நேர்ந்தது. அப்பிளவு தமிழ் நாட்டைக் குடைந்து குடைந்து துன்புறுத்தியது. போதிய வேலையின்றித் தொழிலாளர் சங்கத்தில் வெறுந் தலைமை வகித்தலை என் மனம் விரும்ப வில்லை. சங்கத் தலைமையை ஒரு தொழிலாளர்க்கு வழங்கிச் சிலநாள் ஓய்வுபெற்றுக் காங்கிர தொண்டில் பெரும்பொழுது போக்கலாமென்று எண்ணிணேன். எட்வர்ட் பார்க்கில் (20-9-1923) ஒரு கூட்டங் கூட்டி எண்ணியவாறே செய்தேன். கோ.ம.நடேச நாயகர் என்னுந் தொழிலாளர் தலைவராயினர். சங்கத்தின் தொடர்பை யான் அறவே அறுத்துக் கொள்ளத் தொழிலாளர் மனங்கொண்டாரில்லை. அதனால் நிருவாக சபையில் ஒருவனாக இருக்க இணங்கினேன். மற்றுமொரு பெருஞ் சங்கமாகிய எம்.எ.எம். ரெயில்வே தொழிலாளர்சங்கத்தில் வாடியா தலைவராகவும். யான் உதவித் தலைவனாகவுமிருந்து பணி செய்து வந்தோம். வாடியா மேல்நாட்டுக்குச் சென்ற பின்னர் சென்னையில் வீசிய பெரும்புயலில் அகப்பட்ட யான் எம்.எ.எம். தொழிலாளர் சங்கத் தொண்டில் பெரிதும் ஈடுபட்டுழைத்தல் இயலாமற் போயிற்று. ஒரு தொழிலாளரைத் தலைவராகத் தெரிந்தெடுக்கு மாறு அச் சங்கத்துக்கும் உணர்த்தினேன். அவ்வாறே அச்சங்கம் பஞ்சாட்சர ஆச்சாரி என்ற ஒரு தொழிலாளரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தது. சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் நடேச நாயகருக்குப் பின்னே அருண்டேல் தலைவரானார்; இவரைத் தொடர்ந்து தலைவராக வந்தவர் சிவராவ். எம்.எ.எம். ரெயில்வே தொழிலாளர் சங்கம் எங்கெங்கேயோ ஓடி ஓடி, வி.வி.கிரி தலைமையில் நின்றது. மகாநாடு சென்னை மாகாணத் தொழிலாளர் இரண்டாவது மகா நாடு டாக்டர் வரதராஜலு தலைமையில் (16-2-1924) கூடியது. வரவேற்புத் தலைவரா யமர்ந்தவர் கோ.ம.நடேச நாயகர். அம்மகாநாட்டில் யான் நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தி னேன். அதைக் கேட்ட தொழிலாளர் சோர்வு ஒருவாறு நீங் கிற்று. தொழிலாளர் பலர் என்னை வளைந்துகொண்டு, நீங்கள் மீண்டும் தலைமையேற்பது நல்லது என்று வலியுறுத்தினர். நிருவாகத் தலைவனாக வருவதில் மட்டும் பயன் விளையாது. பழைய ஊக்கம் எழுதல் வேண்டும். அஃதே எனக்குத் தேவை. சேனை திரண்டால் தலைவன் தானே ஏற்படுவன். எல்லாருஞ் சங்கத்தில் சேருங்கள். யான் எப்பொழுதும் உங்கள் தொண்டன் ***, என்று கூறி விடைபெற்றேன். சின்னாள் ஓய்வு யான் மிகச் சில நாளே ஓய்வு பெற்றேன். நவசக்தி தொண்டளவில் மனம் நிற்கவில்லை. அது வேறு வேறு தொண்டையும் வேட்டது. பொதுவாகப் பல தொண்டுகளில் ஈடுபட்டேன்; சிறப்பாகக் காங்கிர தொண்டில் (1924, 25, 26) மூழ்கினேன். அந்நிலையிலும் யான் தொழிலாளர் உலகை மறப்பதில்லை. ஓய்ந்த நேரத்தில் பட்டாளம் போவேன்; சமயம் நேர்ந்தால் கூட்டத்தில் பேசுவேன். தளிர் அரும்பல் அகில இந்தியத் தொழிலாளர் காங்கிர சென்னையில் 1926ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கூடியது. அது பொதுவாகச் சென்னைத் தொழிலாளர்க்கு ஊக்கமூட்டிற்று. அதன் சார்பிலே எட்வர்ட் பார்க்கிலே ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் நெசவுத் தொழிலாளரே பெரும் பான்மையோராகச் செறிந்தனர். யானும் பேசினேன். அப் பேச்சு, சென்னைத் தொழிலாளர் சங்கத்துக்கு ஆக்கந் தேடியது. சங்கத்தின் தளிர்கள் அரும்பின; கவடு கோடுகள் வளர்ந்தன. சக்லத்வாலா தோழர் சாபூர்ஜி சக்லத்வாலா என்பவர் ஓர் இந்தியர். அவர் ஓர் ஆங்கில அணங்கினை மணந்து இங்கிலாந்தை உறைவிடமாகக் கொண்டவர்; பொது உடைமைக் கொள்கை யினர்; பார்லிமெண்ட் உறுப்பினர். தாய்நாட்டின் அரசியல் நிலையை உணர்தல் வேண்டுமென்ற விருப்பம் அவர்க்கு உண்டாயிற்று. அவ்விருப்பம் அவரை இந்தியா நண்ணச் செய்தது. சக்லத்வாலாவுக்குக் காந்தியம் நஞ்சாகத் தோன்றிற்று. அஹிம்ஸையும் கதரும் அவரால் தாக்கப்பட்டன. தோழர் சென்னை சேர்ந்தபோது சென்னைத் தொழிலாளர் சங்கம் (25-2-1927) அவரை அழைத்தது. கூட்டத்துக்கு யானுஞ் சென் றேன். சக்லத்வாலா இடி இடியென முழங்கினர். அவர் சொற்பொழிவின் முதற்பகுதி சிங்காரவேல் செட்டியாரால் மொழிபெயர்க்கப்பட்டது; பிற்பகுதி என்னால் பெயர்க்கப் பட்டது; அவர் பேச்சின் சுருக்கமும், இடையில் யான் கிளத்திய தடையும் நவசக்தியில் (2-3-1927) வெளிவந்தன. அவைகளி னின்றும் சிலவற்றை அகழ்ந்து தருகிறேன். * * * சென்னைக்கு வந்ததும் முதன் முதலில் தொழிலாளர் முன்பு பேசும் பேறு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த பார்லிமெண்டு அங்கத்தவர் இன்னும் சிலர் முன்னமே உங்களிடை வந்து பேசிப் போயிருக்கிறா ரென்று தலைவர் சொன்னார். நானும் தொழிற்கட்சியைச் சேர்ந்தவன் தான். ஆனால் அதைவிடத் தீவிர கொள்கை களையுடைய பொது உடைமைக் கட்சியையும் யான் சேர்ந்தவன். நிலம், சொத்து, தொழில் முதலியவை பணக்காரர்களுக்கு லாபந் தருவதற்காகவே ஏற்பட்டன வல்லவென்பது எங்கள் கொள்கை. உடம்பை உழைத்து வேலை செய்யும் தொழிலாளரின் நல்வாழ்வுக்காகவே அவை இருக்க வேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். தொழிலாளர் படியாதவர் களாயும், அறியாமை யுள்ளவர்களாயுமிருப்பதால் அவர்கள் கல்வியறிவு பெறும்வரை தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்க வேண்டுமென்று சிலர் சொல்கிறார். நாங்கள் அதற்கு மாறான நம்பிக்கையுடையவர்கள். முதலில் உரிமைகளை யளித்தால் கல்வியறிவும், முன்னேற்றமும் தாமே ஏற்படுமென்பது எங்கள் கொள்கை. பிரிட்டிஷ் தொழிலாளரும் ஒரு காலத்தில் அறியாமையில் மூழ்கியே யிருந்தார்கள். 1868இல் அவர்கள் தொழிற்சங்க உரிமையும், அரசியல் உரிமையும் பெற்றார்கள். நான்கு வருஷத்துக்கெல்லாம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் கல்வி தரும் கடமை அரசாங்கத் துக்கு ஏற்பட்டது. ருஷியாவில் ஸார் ஆட்சியின் கீழ் 100-க்கு 6 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர். 1917இல் அங்கே தொழிலாளர் அரசியல் உரிமை பெற்றனர். பின்னர் ஆறு வருஷத்திற்குள் அங்கே கல்வி அதி விரைவாகப் பரவியது. இப்போது 100-க்கு 86 பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருக்கிறார். ஆகையினால்தான், இந்தியர் கல்வி பெறும்வரை, உரிமைபெற முடியாதென்று சொல்வோரின் கூற்று தவறு என்று பொது உடைமைக் கட்சியிற் சேர்ந்த நாங்கள் சொல் கிறோம். சுயநலக்காரர்களும் பணக்காரர்களும் உங்களுக்குத் தாங்களாகக் கல்வியும் தரமாட்டார்கள்; உரிமையும் கொடுக்க மாட்டார்கள். முதலில் நீங்கள் பெறவேண்டுவது உரிமை. அப்போது சுயநலக்காரர்கள் உங்களுக்கு அளிக்கக்கூடிய கல்வியைவிடச் சிறந்த கல்வியை நீங்களே வெகு எளிதில் பெறக்கூடும். தொழிலாளரும் மகாத்மாவும் படித்த வகுப்பார் என்று கூறப்படுவோர் உங்களைப் பயமுறுத்துவர்; உங்கள் காரியங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதென்று சொல்வர். இது தவறான சுயநலமுள்ள கொள்கை. தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் மட்டும் கொடுத்தால் அவர் களால் தங்கள் காரியங்களை மட்டுமன்றித் தொழிற்சாலைகளையுங் கூட அதிக திறமையாக நடத்திக்கொள்ளல் முடியும். தற்போதுள்ள சமுதாய நிலைமையின்கீழ், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஓயாத - ஒழியாத யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்த யுத்தம் துப்பாக்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும்நடக்கவில்லை; ஏழைகளைப் பட்டினிபோடும் ஆயுதத்தைக்கொண்டு நடத்தப்படு கிறது. மனிதனை ஐந்து நிமிஷத்தில் கொன்றுவிடும் சாதாரண யுத்தத்தைவிட இது கொடுமையானதென்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் ஐரோப்பிய தேசங்களில் உள்ளதுபோல் இந்தியாவில் இந்த யுத்தம் அவ்வளவு கொடுமையாயிராதென்று காந்தி உள்பட இந்திய அரசியல்வாதிகள் பெரும்பாலோர் கூறுகிறார். (தூரத்திருந்த ஒருவர் :- மகாத்மா காந்தி என்று சொல்லுங்கள்.) இவர்கள் நிலைமையைச் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை யென்றும் இவர்கள் பணக்காரர் கட்சியில் மயங்கியிருக்கிறார் களென்றும் நாங்கள் சொல் கிறோம். திரு.வி.கலியாணசுந்தர முதலியார் :- மகாத்மாகாந்தி நீங்கலாகச் சொல்லுங்கள். சக்லத்வாலா : - காந்தியும் உள்படத்தான். இன்னும் சிலர் : - ஒருநாளுமில்லை. நீங்கள் சொல்வது முற்றுந் தவறு. திரு. வி. க. : - மகாத்மா காந்தி பாரமார்த்திகப் பொது உடைமைக் கட்சியினர். அவரது உள்ளக்கிடக்கையை நீங்கள் இன்னும் நன்கு உணரவில்லை. தொழிலாளரின் பரிதாப நிலை சக்லத்வாலா :- இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்ததில், இந்தியாவிலுள்ள ஏழைகட்கு இழைக்கப்படும் கொடுமையானது ஐரோப்பாவிலுள்ளதைவிட நூறு மடங்கு கேவலமாயிருக்கிறதென்னும் முடிவுக்கு நாங்கள் வந்திருக்கி றோம். இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். இந்தியத் தொழிலாளர்களாகிய நீங்கள் நெருக்கமான குடிசைகளில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு வைத்திய வசதிகள் இல்லை; வீட்டில் சாமான்கள் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு ஒருவித சௌகரியமுமில்லை. இப்போது முதலாளிகளின் வாழ்வு முறையைப் பாருங்கள். அவர்கள் அரண்மனைகளில் வசிக்கி றார்கள்; மோட்டார் ஊர்திகளில் செல்கிறார்கள்; சுகபோகங் களில் புரளுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் பணக்காரர்கள் வாழ்வுக்கும், ஏழைகள் வாழ்வுக்கும் இவ்வளவு பெரிய வேற்றுமை கிடையாது. அந்நாடுகளில் தொழிலாளிக்குக் குறைந்த சம்பளம் தினம் ஒன்றுக்கு 5 ரூபாயாகும். சிலர் நாள் ஒன்றுக்கு 15 ரூபாயும் 20 ரூபாயுங்கூட சம்பளம் பெறுகிறார். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனி வீடு உண்டு; வைத்திய வசதி உண்டு. குழந்தைகளுக்குக் கல்வியுண்டு. தொழிலாளிக்கு வேலை அகப்படாதபோது அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுக் கிறது. அவ்வுபகாரச் சம்பளம் நீங்கள் பெறும் கூலியைவிட அதிகமானது. எனவே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் நடக்கும் யுத்தம் ஐரோப்பாவை விட இந்தியாவில் கொடுமை யான தன்றோ? இன்னோர் உதாரணம் சொல்கிறேன்; ஐரோப்பாவில் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் 1000-க்கு 60 வீதம் குழந்தைகள் இறந்துபோகின்றன. தொழிலாளர் குழந்தைகளோ 1000-க்கு 100 வீதம் இறந்து போகின்றன. அனால் இந்தியாவி லுள்ள வேற்றுமை இதைவிட மகா கொடியது. இங்கே முதலாளிகளின் குழந்தைகள் 1000-க்கு 86வீதம் மரணமடைகையில், தொழிலாளர் குழந்தைகள் பம்பாயில் 1000-க்கு 800 வீதம் சாகின்றன. இந்தச் சொல்லமுடியாத கொடுமையை நிறுத்த முடியா விட்டால் உண்மையுள்ள அரசியல்வாதிகள் ஆலைகளையெல்லாம் மூடிவிடும்படி சொல்லவேண்டும். இந்திய அரசியல்கட்சியினர் தொழிலாளர் பக்கம் நின்று, தொழிலாளர் ஆதரவையும் பெற்றால் வலிமையுள்ள கட்சியினராவர். ஏகாதிபத்திய இராணுவ பலத்தை எதிர்ப்பதற்கு வெறும் அரசியல் கட்சியால்மட்டும் ஆகாதென்பதும், அமைப்புப் பெற்ற தொழிலாளர் இயக்கபலம் அவசியமென்பதும் ருஷியா, துருக்கி, மெக்ஸிக்கோ, சீனம் இவ்விடங்களில் விளங்கியிருக் கின்றன. இராட்டை இயக்கமும் பயன்படும்! தொழிலாளர் தமக்குப் பலம் தேடிக்கொள்ள வேண்டு மானால் தொழிற் சங்கங்களில் சேரவேண்டும்; மத விஷயங் களைப் பார்க்கிலும் சங்க விஷயங்களில் அதிக உண்மையுடன் இருக்க வேண்டும். உங்களில் சங்கங்களைச் சேராதவர்கள் எல்லாத் தொழிலாளருக்கும் தீமை செய்கிறார்கள். அவர்கள் மனைவி மக்களின் துன்பமெல்லாம் சங்கங்களைச் சேராதவர்களின் தலையிலேயே சேரும். நீங்கள் சங்கங்களில் சேர்வது மட்டும் போதாது. கிராமங்களுக்குச் சென்று அங்குள்ளோருக்கு, முதலில் தொழிற்சங்கத்தில் சேராமல் தொழிற்சாலையில் வேலைக்குப் போகக்கூடாதென்று சொல்லிக் கட்டுப்பாடு செய்ய வேண்டும். உங்கள் எஜமானர்கள் உங்களை ஆலைகளிலிருந்து துரத்தும்போது நீங்கள் கிராமங்களுக்கே போக வேண்டியிருக்கும். கிராமத்து நண்பர்கள் உங்களை மாதக்கணக்காக ஆதரிக்கும்படி நேரிடும். அத்தகைய பெரிய போராட்டம் எழும்போது, காந்தியின் கைராட்டின இயக்கம் உங்களுக்குப் பாதுகாப்பாயிருக்கும் என்று நான் ஒப்புக்கொள் கிறேன்:- (இச்சமயத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த திரு.வி.க. KjÈah®, ‘Ãu«g rªnjhõ«, ÄÞl® r¡y¤thyh! என்று கூறிக் கைகுலுக்கினார். கரகோஷம்.) சக்லத்வாலா :- இவ்வாறு செய்து நீங்கள் உங்கள் சங்கங்களைப் பலப்படுத்தினால் மூன்று, நான்கு ஆண்டுகளில் உங்களுடைய சம்பளம் உயரும். வறுமையும் நோயும் உங்களை விட்டகலும். வெறும் அரசியல் கட்சிகளைவிட அப்போது நீங்கள் அதிக அரசியல் வலிமை படைத்தவர்களாயிருப்பீர்கள். நீங்கள் அரசியல் தலைவர்களின் பகைவர்களாயிருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தொழிற் சங்கமானது நேராக அரசியலில் ஈடு படாவிட்டாலும், தொழிற்சங்க அங்கத்தவருக்கு அவ்வுரிமை உண்டு. இந்தியாவிலுள்ள தொழிலாளர் எல்லாரும் ஒரேயடியாகத் தொழிற் சங்கங்களைச் சேர்ந்து, பின்னர் அரசியலில் காங்கிர கட்சியைப் பகிரங்கமாகவும் தைரியமாகவும் ஆதரிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். காங்கிர தலைவர்களும், தொழிலாளர்களாகிய உங்களுக்குப் பண உதவி செய்வதும், உங்களுடைய நன்மையை நாடும் சட்டங்களைச் செய்வதும், மற்ற வழிகளில் உங்களைப் பாதுகாப்பதும் தங்கள் கடமையென்பதை உணரவேண்டும். ஐரோப்பாவிலும் கிரேட் பிரிட்டனிலுமுள்ள தொழிலாளரின் கோரிக்கைகள் அங்குள்ள முதலாளிகளுக்குப் பிடியாத படியால், அவர்கள் அடுத்த 3,4, வருஷங்களில் இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலைகளை ஏற்படுத்த விரும்பக் கூடும். அத்தகைய அபாயம் ஏற்படுவதற்கு முன் இப்போதே ஏகாதிபத்திய வர்க்கத்தையும் முதலாளி வர்க்கத்தையும் எதிர்க்கும் ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கும்படி எல்லாத் தலைவர்களையும் யான் வேண்டிக் கொள்கிறேன். உங்களைத் தொழிற்சங்கங்களில் சேரும்படியும், உங்களுடைய சங்கத்தின் மூலமாகவன்றித் தொழிற்சாலைக்கு யாரும் வரக்கூடாதென்று கிராமங்களில் பிரசாரம் செய்யும்படியும் கடைசியாக ஒருமுறை கேட்டுக் கொண்டு முடிக்கிறேன். (கரகோஷம்.) நன்றி கூறல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் வந்தனங் கூறுகையில் சக்லத்வாலாவின் கொள்கையில் தமக்குக் கருத்து வேற்றுமையில்லை என்றும், ஆனால் அவர் காந்தியடிகள் கொள்கையைத் தவறாக உணர்ந்து கூறுகிறா ரென்றும், பொது உடைமைக் கட்சியின் அடிப் படையான கொள்கையை மகாத்மா காந்தியின் கதர் இயக்கம் அனுஷ்டானத்தில் கொண்டு வருவதாகுமென்றும், மகாத்மாவைப் பற்றி அவர் கூறிய கருத்தை ஒப்புக்கொள்ள முடியாதென்றும், மகாத்மாவின் கொள்கைகளையும், வாழ்க்கை நெறியையும் அவர் நன்கு தெரிந்துகொள்ளவில்லை யென்றும், மகாத்மா காந்தி ஏழைகளின் நண்பராயிருப்பதுடன், ஏழையிலும் ஏழையின் வாழ்வு நடாத்துகிறாரென்றும், சத்தியாக்கிரக ஆசிரமத்துக்குப் போய்ப் பார்த்திருந்தால் தோழருக்கு இது புலனாகியிருக்கு மென்றும், மகாத்மாவும் சக்லத்வாலாவும் சேர்ந்து வேலைசெய்தால் இந்தியாவின் விடுதலை நெருங்கி விடுமென்றும் குறிப்பிட்டார். மன்னிப்பு சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் ஓர் ஆண்டுவிழா வில் (31-4-1927) தலைமை வகிக்கத் திவான்பகதூர் கேசவப் பிள்ளை இசைந்தனர். ஆனால் அவர் வருகை எப்படியோ தடைபட்டது. ஆண்டுவிழாக் கூட்டம் என்னைத் தலைமை தாங்கச் செய்தது. அன்று யான் நிகழ்த்திய முன்னுரை தொழிலாளர்க்குள் கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று; பழைய கருங்காலிகட்கும் நல்லுணர்வு பிறப்பித்தது. கூட்டம் முடிந்த தும் அவரெல்லாரும் என்னைச் சூழ்ந்து, எங்களை மன்னிக்க வேண்டும் என்று முறையிட்டனர். மன்னிப்பா? போனது போச்சு; இனியாவது நீங்கள் சங்கத்தில் சேர்ந்து நலம் பெறுங்கள் என்று அறிவுறுத்தினேன். காங்கிரஸும் தொழிலாளரும் 1927ஆம் ஆண்டு ஆகடில் நகரசபைத் தேர்தல் நடந்தது. பிரம்பூர் வட்டத்துக்குக் காங்கிர சார்பிலே பக்தவத்சலு நாயுடு நிறுத்தப்பட்டார்; தொழிலாளர் சார்பிலே செல்வபதி செட்டியார் நிறுத்தப்பட்டார். எனது நிலை இரங்கத்தக்க தாகியது. இப்படிப் பார்த்தால் காங்கிர - அப்படிப் பார்த்தால் தொழிலாளர். என் செய்வேன்! இரு தலைக்கொள்ளி எறும் பானேன். அப்பொழுது யான் தமிழ் நாட்டுக் காங்கிர நிருவாகத்தினின்றும் விலகிநின்ற காலமாதலால், என்மீது சிலர்க்கு ஐயம் பிறந்தது. என்னைக் கலவாமலே தொழிலாளர் சங்கக் காரியக் கூட்டம் செட்டியாரை நிறுத்தியது. காங்கிர எளிதாக விட்டுக்கொடுத்திருக்கலாம். ஸ்ரீநிவாச ஐயங்காரும் யானும் சமாதானங்காண எவ்வளவோ முயன்றோம். காங்கிர சார்பில் பிடிவாதம் வலுத்தது. காங்கிரகாரர் சிலர் தொழிலாளரை இழிவாகவும் பேசினர். காங்கிர தோல்வி யுறுமென்று பக்தவத்சலு நாயுடுவுக்கு எவ்வளவோ விளக்கி விளக்கிக் காட்டினேன். அவர் என் உரைக்குச் செவிசாய்த் தாரில்லை. செல்வபதியை ஆதரிப்பது எனது கடனாகியது. வெற்றி தொழிலாளர்க்கே கிடைத்தது. அவ்வெற்றி அவ் வட்டத்தில் பலவிதப் பிளவையும் பிரிவையும் பிணக்கையும் படிப்படியே ஈன்று வரலாயிற்று. அங்கீகாரம் 1926ஆம் ஆண்டு நிறைவேறிய தொழிற் சட்டப்படி சென்னைத் தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதையொட்டி 1932ஆம் ஆண்டில் சங்கம் முதலாளிகளால் அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகாரத்தைக் குறித்துப் பேசப் பின்னி கம்பெனியில் அப்பொழுது தலைமை வகித்திருந்த கே. துரையையும் என்னையும் வாவல்லா வேங்கடேசுவர சாதிரிலு சந்திக்கச் செய்தனர். அங்கீகாரத்தைப்பற்றி என் கருத்தைத் தெரிந்து கொள்ளவே கே. துரை விரும்பினர். இப்பொழுது யான் தலைவனாக இல்லை. நிருவாகக் கூட்டத்தில் என் பெயர் மட்டுங் கிடந்து வருகிறது. சமயம் நேரும்போதெல்லாம் சங்கம் போந்து எனது கடனை யாற்றிவருகிறேன். காரியக்கூட்டத்தில் யான் பெரிதுங் கலந்துகொள்வதில்லை. என் கருத்து அநா வசியம் என்று சொன்னேன். கே. துரை. எவர் தலைவராக வந்தாலும் போனாலும் வாடியாவுக்கும் உமக்கும் ஒருவித செல்வாக்குத் தொழிலாளரிடை இருத்தல் உண்மை. யான் சங்கத்தை அங்கீகரித்த பின்னை, அங்கீகாரத்தால் நலன் விளையாது என்று பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசினால் தொழிலாளர் அங்கீகாரத்தை உடைக்க முயலினும் முயல்வர். ஆதலின் உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். அங்கீகாரத்தால் நலன் விளையாதென்பது எனது ஊகம். அங்கீகாரத்துக்கென்று இப்பொழுதுள்ள காரியக் கூட்டஞ்செய்துள்ள பகீரத முயற்சியை யான் அறிவேன். அம்முயற்சிக்குக் கேடு சூழமாட்டேன். அதற்கொரு வாய்ப் பளித்துப் பார்க்க வேண்டுமென்பது என் கருத்து என்று உரைத்தேன். இவ்வாரத்தில் பொதுக்கூட்டம் கூடும் அதில் உங்கள் கருத்தை வெளியிடுவீர்களென்று நம்புகிறேன். என்றார் கே.துரை. யான் விடைபெற்றுத் திரும்பினேன். காரியக் கூட்டத்தினின்றும் அழைப்பு வந்தது. பொதுக் கூட்டத்தில் என் கருத்தை வெளியிட்டேன். காரியக் கூட்டத்துக்கு மகிழ்ச்சி பிறந்தது. பின்னே அநுபவத்தில் நன்மை விளைந்ததென்று தெரியவில்லை. அன்பும் நிலையமும் 1931ஆம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்கம் தனக்கென்று ஒரு கட்டிடம் எழுப்பியது, அதற்குக் கால்கோள் விழா என்னால் செய்யப்பட்டது; திறப்பு விழா திவான்பகதூர் கேசவப் பிள்ளையால் நிகழ்த்தப்பட்டது. பெயர் செல்வபதி-இராமாநுஜ நிலையம். உச்சியில் வாடியாவின் முகவுருவப் பொலிவு. இவ்வாறு சங்கங் கண்ட ஐவர் மீதுள்ள அன்பைத் தொழிலாளர் புலப்படுத்தினர். புது வரவு புதுப்புதுத் தலைவர் தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந் தனர். அவருள் குறிக்கத்தக்கவர் வி.எம்.இராமசாமி முதலியார், பாசுதேவ், மணி கோடீசுர முதலியார், டி. எம்.பார்த்தசாரதி முதலியோர். பழைமை புதுமையுடன் நன்கு ஒட்டவில்லை. அதனால் தலைவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகவில்லை; சங்கங்களின் ஒருமைப்பாடும் ஆக்கம் பெறவில்லை. சில இடங்களில் தலைவர்கள் பூசலும் சங்கங்கள் பிணக்கும் வலுத்தன. பல சங்கங்கள் வெறும் பெயருக்கே கடனாற்றி வந்தன. மீண்டும் மத்தியச் சங்கம் ஒருநாள் பழந் தலைவர் சிலரும் புதுத் தலைவர் சிலரும் என்னைக் கண்டனர். கண்டு நிலைமையை விளக்கினர்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்ற மத்தியச் சங்கத்தில் தலைமை ஏற்றல் வேண்டுமென்று என்னை வலியுறுத்தினர். தலைமைப் பொறுப்பு எற்றுக்கு என்று யான் ஆழச் சிந்தித்து மறுத்து வந்தேன். பின்னே வலியுறுத்தல் அதிகமாயிற்று. இசைய லானேன். 1931ஆம் ஆண்டில் யான் தலைவனாகத் தெரிந் தெடுக்கப்பட்டேன். புதுச்சங்கம் பழைய சங்கம் போல மதர்த் தெழவில்லை. தலைவர்கள் உடலளவில் ஒற்றுமை காட்டி னார்கள். சங்கங்களும் அப்படியே. மன ஒற்றுமை ஏற்பட வில்லை. இதை யான் நன்கு உணர்ந்தேன். வேற்றுமைக்குக் காரணமென்ன? நகரசபைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், ஜினிவா செல்கை முதலியவற்றையொட்டிய போட்டியும் போராட்டமுமாகும். போட்டியும் போராட்டமும் தலைவர் களைப் பிரித்தன; சங்கங்களைப் பிளந்தன. விட்டுக்கொடுக்கும் அறத்தை யான் எத்தனையோ முறை அறிவுறுத்திப் பார்த்தேன். பயன் விளைவதுபோல் தோன்றும்; பின்னே உருவெளியாகும். சுத்த சுயராஜ்யம் வரும் வரை எத் தேர்தலிலும் ஈடுபடலாகாது என்னும் எனது கொள்கையை விளக்கி வந்தேன், தேர்தலுக் கென்று சங்கங்களில் சேரும் மனமுடையார்க்கு என் விளக்கம் என் செய்யும்? சிறுகல் மத்திய சங்கத்தில் யான் ஓராண்டே தலைமை ஏற்று நின்றேன். மறு ஆண்டு தலைமை ஏற்க யான் ஒருப்படவில்லை. ஆர்.சபாபதி என்னும் தொழிலாளர் தலைவராகத் தெரிந் தெடுக்கப்பட்டார். ஒற்றுமைக்கு அவர் பெருமுயற்சி செய்தார். பயன் விளையவில்லை. மத்தியச் சங்கம் படிப்படியே சிறுக லாயிற்று. தொண்டு நிகழ்ச்சி பல வேலைகளிடையும் தொழிலாளர் சங்கங்களின் அழைப்புக்கு மட்டும் யான் இணங்கியே தீர்வன். தொழிலாளர் சங்கங்கள் என் தலைமையையோ திறப்பையோ கொடி யேற்றலையோ விரும்பும். அவ்விருப்பம் நிறைவேற்றப்படும். நாகை தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் சங்கம், சுதேசமித்திரன் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், பிரம்பூர் ஒர்க்ஷாப் சங்கம் முதலிய வற்றின் ஆண்டு விழாக்களில் என் தொண்டு நிகழ்ந்தது. வேலூரில் நெருக்கடியான நேரத்தில் வடஆர்க்காட்டுத் தொழி லாளர் மகாநாடு வி.எம். இராமசாமி முதலியார், எ.குப்புசாமி, வி.எம். உபயுதுல்லா முதலியோர் முயற்சியால் (10-9-1933) வேலூர் டவுன் ஹாலில் கூட்டப்பட்டது. அம்மகாநாடு என் தலைமையில் நடைபெற்றது. அதைத் திறந்து வைத்தவர் வி.வி.கிரி. மகாநாட்டைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டவர் கே. பாஷ்யம், சத்தியமூர்த்தி முதலியோர். அந்நாளில் வி.டி. அரங்கசாமி ஐயங்காரைத் தலைவராகக் கொண்ட 1வேலூர் நகரசபை எங்கள் நால்வர்க்கும் தனித் தனியே நன்மொழி பகர்ந்தது. நவாப் அப்துல் ஹக்கீமின் தலைமை பூண்ட 2வட ஆர்க்காடு ஜில்லா போர்டு கிரிக்கும் எனக்கும் நன்மொழி நவின்றது. மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. அவைகளுள் ஒன்று மாமண்டூர் உழவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியது. உழவர் வேலை நிறுத்தம் அவ்வேலை நிறுத்தம் நாட்டுக்குப் புதியது. உழவர் ஒருமைப்பாடு நிலக் கிழவரைத் திணறச் செய்தது. செல்வர் சிலரது அட்டூழியம் வரம்பு கடந்து ஓடியது. அவ்வேலை நிறுத்தம் ஜில்லாவையே குலுக்கியது. நிலைமையை ஆராய்ந்து உண்மை கண்டு முடிவுசெய்யும் பொறுப்பை மகாநாடு வி.எம். இராமசாமி முதலியார்க்கும், வி.வி.கிரிக்கும் எனக்கும் வழங்கியது. சோற்றுக் கட்சி நாங்கள் சிலநாட் கழித்து (19-9-1933) மாமண்டூர் போந்தோம்; நிலைமையை ஆராய்ந்தோம். பகல் உணவு நேரம் வந்தது. உணவு இரு சார்பிலும் சித்தஞ் செய்யப்பட்டது. எங்களை அவரும் அழைத்தனர்; இவரும் அழைத்தனர். நாங்கள் என் செய்வோம்! இரு சார்பினர் உணவும் நாங்கள் தங்கிய இடத்துக்கு வருதல் நல்லது என்ற முடிவுக்கு வந்தோம். அப்படியே உணவுகள் வந்தன. இரண்டையுங் கலந்து நாங்கள் சாப்பிட்டோம். உணவுக் கட்சியும் மாமண்டூரில் காட்சி யளித்தது. சில காலம் கடந்து பின்னை அவ்வூர் சமாதானங் கண்டது. மீண்டுந் தலைமை சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் உதவித் தலைவ னாகவும் தலைவனாகவுமிருந்து பணி செய்தேன்; பின்னே நிருவாகக் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ஒரோ வழியில் தொண்டுசெய்து வந்தேன். மீண்டும் என்னைத் தலைவனாக்கு தல் வேண்டுமென்ற விருப்பம் அடிக்கடி தொழிலாளரிடைத் தோன்றும். அதற்கு யான் இணங்குவதில்லை. 1அந்நிலையில் யான் மீண்டும் 1935 ஆம் ஆண்டில் தலைவனாகும் நெருக்கு ஏற்பட்டது. நெருக்கு என்னை மீண்டும் தலைவனாக்கியது. வகுப்பு அப்பொழுது பலதிறத் தொண்டுகள் என்னைச் சூழ்ந்து நிற்கவில்லை, பெரும்பொழுதைச் சங்கத்துக்கென்று போக்கும் வாய்ப்புங் கிடைத்தன. யான் அடிக்கடி சங்கம் போந்து பேசிப் பேசித் தொழிலாளர்க்கு ஊக்கமூட்டினேன். தொழிலாளர்க் குள் எழுச்சி பிறந்தது. இம்முறை யான் ஆக்க வேலைகளில் பெரிதுங் கருத்துச் செலுத்தினேன். அவைகளில் ஒன்று வகுப் பமைப்பு, வகுப்பில் உலகில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்த விதங்கள் விளக்கப்பட்டன. லெனின் வரலாறும் போதனையும், ருஷ்யப் புரட்சியும் போதிக்கப்பட்டன; காரல் மார்க் சரித்தரம் தொடங்கப்பட்டது. தேர்தலும் பிறவும் அவ்வேளையில் நகரசபைத் தேர்தல் வந்தது. அத்தேர்தல் தொழிலாளர்க்குள் பிளவை உண்டுபண்ணிற்று. அப்பிளவு தொழிலாளர்க்குள் சில கட்சிகளைத் தோற்றுவித்தது. அவை களுள் இங்கே குறிக்கத்தக்கன இரண்டு. ஒன்று சமதர்மத்தை ஆதரிப்பது; மற்றொன்று அதை அநாதரவு செய்வது. கட்சிகள் தொழிலாளர்க்குள்ளே உலவி நிற்கும். அவை என்னை அணுகுவ தில்லை; காரியதரிசிகளை அணுகி அணுகித் திருவிளையாடல் புரியும். யான் பயின்ற இராஜ தந்திர வித்தை என்னளவிலேயே நின்றிருந்தது. அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதே இல்லை. இப்பொழுது அவ்வித்தை பயன்படும் நிலைமை ஏற்பட்டது. இல்லையேல் காரியதரிசிகளும் கட்சிக் காரர்களும் வெளிப்படையாகப் பிணங்கிப் போர் புரிந்திருப் பார்கள். போர் வெளிப்படையாக நிகழாதவாறு எனது இராஜ தந்திரங்காத்தே வந்தது. கதவடைப்பும் வேலை நிறுத்தமும் உயிர்த்தெழல் 1921ஆம் ஆண்டுக்குப் பின்னே ஒடுக்கமுற்றிருந்த கத வடைப்புக்களும் வேலை நிறுத்தங்களும் மீண்டும் உயிர்த் தெழுந்தன; உயிர்த்தெழுந்து நடக்கலாயின; நடந்து நடந்து பழகலாயின. அவைகளுள் இரண்டொன்றைக் குறித்தல் சாலும். காங்கிர ஆட்சியில் 1937ஆம் ஆண்டில் மாகாணத்தில் காங்கிர ஆட்சி மலர்ந்தது. அம்மலரில் காங்கிர அமைச்ச வண்டுகள் பாண் மிழற்றின. முதல் வண்டு சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார்; தொழில் வண்டு வி.வி.கிரி. காங்கிர ஆட்சியின் தொடக்கத்தில் பக்கிங்காம் - கர்நாட்டிக் மில்லில் ஒரு பகுதியில் நேர்ந்த கதவடைப்பு வேலைநிறுத்தமாகப் பெருகிற்று. சூளைப் பட்டாளத்தில் கூட்டங்கள் கூடாதவாறு தடை கிடத்தப்பட்டது. அதனால் சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பார்க்கில் கூட்டங்கள் கூடும். முதல் கூட்டத்தில் யான், 1921 ஆம் ஆண்டு என் நினைவுக்கு வருகிறது. உங்கட்கும் அது நினைவிலுறும். 1921ஆம் ஆண்டுக்குப் பின்னே தொழி லாளர் இயக்கம் சோர்ந்துவிட்டது என்று சில விடங்களில் பேசப்பட்டது. இனி அப்பேச்சுக்கு இடம் உண்டா? லார்ட் வில்லிங்டன் தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்க எவ்வெவ் வழியில் முயன்றார்? இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார்? யான் மீண்டும் உங்களிடைத் தலைமை பூண்டு நிற்கிறேன். சங்கத்தை நிர்மூலப்படுத்துதற்கென்று தோன்றிய போட்டிச் சங்கங்கள் எங்கே? அவைகள் என்ன செய்கின்றன? தொழிலாளர் சக்தியை ஒடுக்கவல்ல வேறொரு சக்தி இவ்வுலகில் இல்லை. உங்கள் சக்தியை நீங்கள் உணராமலிருக்கிறீர்கள். நீங்கள் அதை நன்கு உணர்ந்து நடக்கும் நாளே உலக விடுதலை நாளாகும். 1921 ஆம் ஆண்டில் நமக்கு வெற்றி விளையவில்லை என்று புற உலகங் கூறும். ஆனால் நுண்மையுலகில் வெற்றியே விளைந்தது. தொழில் சட்டம் தோன்றியதையும், சங்கத்தை அங்கீகரிக்க முதலாளி இணங்கியதையும் நினைந்து பாருங்கள். நீங்கள் முன்னே எவ்வளவு சம்பளம் பெற்றீர்கள்? எவ்வளவு நேரம் வேலை செய்தீர்கள்? இப்பொழுது எவ்வளவு சம்பளம் பெறுகிறீர்கள்? எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? நினையுங்கள்; கூர்ந்து நினையுங்கள். தொழிலாளர் உலகில் தோல்வியே கிடையாது. தோல்வியென்பது வெறும் கானற்சலம். தோல்வியிலே வெற்றி மறைந்து நிற்பதை நீங்கள் தெளிந்து கொள்வீர்களாக. 1921ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் நேருமோ என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். அக்காலத்தில் நடைபெற்றது வில்லிங்டன் ஆட்சி. இக்காலத்தில் நடைபெறுவது காங்கிர ஆட்சி. காங்கிர ஆட்சி என்று நாம் தலைவிரித்து ஆடலாகாது. காங்கிர இன்னும் முற்றும் தொழிலாளர் வயப்படவில்லை. அது முதலாளியினின்றும் இன்னும் விடுதலை பெறவில்லை. காங்கிர ஆட்சி தொழிலாளர் மீது பாயப்புகினும் புகும். எதற்கும் நாம் சித்தமாயிருத்தல் வேண்டும். உங்கட்கு வெற்றி விளைக்கவல்லது உங்கள் ஒருமைப்பாடு. ஒற்றுமையாயிருங்கள். உங்கட்கு வெற்றி உண்டாகும் என்ற கருத்துக்களை வாரி வாரி இறைத்துத் தொழிலாளர்க்கு ஊக்கம் ஊட்டினேன். முடிவில் தொழிலாளர் சார்பில் வெற்றியே விளைந்தது. அவ்வேலை நிறுத்த நிகழ்ச்சிகளுள் ஒன்றை இங்கே பொறிக்க மனம் விரும்புகிறது. அஃது எது? ஒரு நிகழ்ச்சி வி.வி.கிரி தொழிலாளர் தோழர். அவர்தந் தோழமையே அவரை அமைச்சராக்கியது. வேலை நிறுத்த வேளையில் அவரை அடிக்கடி கண்டேவந்தோம். அவர் அன்புடன் எங்களிடம் பேசுவார். ஒரு நாள் என்ன நினைந்தோ தொழி லாளர் தம்மைப் பார்க்குமாறு காரியதரிசிகள் வாயிலாகத் தோழர் கிரி சொல்லியனுப்பினர். அஃது எனக்குத் தெரியாது. யான் அன்று கூட்டத்தில் பேச நேப்பியர் பார்க் நோக்கினேன். வழியில் கூட்டங் கூட்டமாகத் தொழிலாளர் நடந்து செல்வதைப் பார்த்தேன்; விசாரணை செய்தேன்; உண்மை உணர்ந்தேன். கூட்டத்துடன் தொடரவும் மனம் எழவில்லை. அந்நேரத்தில் என் நெஞ்சம், கிரி தொழிலாளர் தோழர். அவர் ஒருவர். மோட்டாரில் போந்து தொழிலாளரைக் கண்டு பேசிச் செல்ல லாம். ஏழைமக்களை எற்றுக்கு வெயிலில் வீட்டுக்கு அழைத்தல் வேண்டும்? பதவியின் வீறு போலும் என்று நினைந்தது. என் எண்ணம் கிரிமீது நடந்ததில்லை; அவர் பதவிமீதே நடந்தது. முதல் அமைச்சர் பிடிவாதம் 1921ஆம் ஆண்டு வேலை நிறுத்த வீழ்ச்சியை ஓர் ஏதுவாகக் கொண்டு சங்கம் மீண்டும் உயிர்த் தெழாதவாறு தடுக்கத் தொழிலாளர் நலம் நாடுங் குழு என்றோர் அமைப்பு மில்லுக்குள் காணப்பட்டது. அதன் தலைவர் மில் மானேஜிங் டைரெக்டர். இது குறித்து இங்கே விரிவுரை வேண்டுவதில்லை. அக்குழுவின் முதலாண்டு விழா லார்ட் வில்லிங்டன் தலைமை யில் நடைபெற்றது. ஒவ்வோராண்டும் விழா பிற்போக்கர் ஒவ்வொருவர் தலைமையில் நடக்கும். காங்கிரகாரர் ஒரு வரையாவது அக்குழு அழைத்ததில்லை. ஆனால் காங்கிர மந்திரி சபை அமைந்த ஆண்டிலே முதலமைச்சர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அக்குழுவின் விழாவில் தலைமை வகிக்க இசைந்தனரென்ற செய்தி பத்திரிகைகளில் வெளி யாயிற்று. அச்செய்தி இந்தியத் தொழில் உலகையே திடுக்கிடச் செய்தது. இராஜகோபாலாச்சாரியார் விழாவுக்குச் செல்ல லாகாதென்று சென்னைத் தொழிலாளர் சங்கங் கேட்டுக் கொண்டது. ஆச்சாரியார் சங்கத்தின் வேண்டுதலைப் புறக் கணித்தார்; பிடிவாதத்தில் இறங்கினார். முதலமைச்சர் பிடிவாதத்துக்கு மருந்துண்டோ? தொழிலாளர் ஒற்றுமை திடீரெனப் பக்கிங்காங் மில்லில் பின்னிங் டிபார்ட் மெண்டில் குழப்பம் உண்டாயிற்று. இளம் பிள்ளைகள் ஓர் ஐரோப்பிய அதிகாரியையும் வேறு சிலரையும் தாக்கினர் என்று சொல்லப்பட்டது. அது காரணமாகப் பக்கிங்காம் மில் அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னிங்கில் எழு நூறு இளைஞர் வேலையினின்றும் நீக்கப்பட்டனர் என்றோர் அறிக்கை தலை காட்டிற்று. அதைக் கண்டதும் போராட்டத்தில் உறுதி கொண்டேன். ஐரோப்பியரைத் தாக்கியது தவறென்று பேசுவதில் யான் பின்னிட்டேனில்லை. அதே காலத்தில் விசாரணையின்றி ஒரே சமயத்தில் எழு நூறு பேர் நீக்கப் பட்டதும் அநியாயம் என்று வலியுறுத்துவதில் முனைந்து நின்றேன். நியாயம் பிறவாவிடின் போராட்டம் பெரிதாகும் என்று அறையலானேன். கர்நாட்டிக் மில் வேலை நிறுத்தஞ் செய்யச் சித்தமாயிருத்தல் வேண்டுமென்று அறிவுறுத்தினேன். அம் மில் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்ய விரைந்தனர். கூட்டத்தளவில் நில்லாது ஊர்வலமும் ஏற்பாடு செய்யப் பட்டது. முதல் ஊர்வலம் நேப்பியர் பார்க்கினின்றும் புறப் பட்டுச் சட்டசபைக்கு எதிரிலேயுள்ள (அப்போதைய சட்டசபை செனட் மண்டபத்தில்) கடற்கரை வரை சென்றது. அவ்வூர்வலம் சட்டசபையினரையும் மற்றவரையும் ஏக்குறச் செய்தது. கடற் கரையில் சென்னைத் தொழில் உலகே திரண்டது. பலர் பேசினர். யானும் பேசினேன். கூட்டமும் ஊர்வலமும் தொழிலாளர்க்குள் உணர்ச்சியூட்டின. ஆண்டு விழாவிற்கு முதலமைச்சர் செல்வாராயின் சத்தியாக்கிரகஞ் செய்வதென்று தொழிலாளர் தீர்மானித்தனர். போருக்குத் தொழிலாளர் ஒருமைப்பட்டனர். அவரிடை ஊர்ந்த கட்சி வேற்றுமைகள் மறைந்தன. அவரனைவரும் ஒருவராயினர் என்று கூறல் மிகையாகாது. ஒற்றுமை என்ன செய்யாது! தொழிலாளர் ஒருமைப்பாடு. முதலமைச்சர் ஆண்டு விழாவுக்கு வருதலைத் தகைந்தது; ஆண்டு விழாவையே நிறுத்தியது; வேலை நிறுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. எப்படி? முடிவு ஆராய்ச்சியில் ஐரோப்பியரை அடித்தவர் முப்பது பேரென்று தெரியவருகிறதென்றும், அவரை விசாரணை செய்தல் வேண்டுமென்றும், முப்பதுபேரும் விசாரணையில் நிரபராதிகள் என்று உறுதிப்பட்டால் அவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவரென்றும் முதலமைச்சர் கூறுகிறா ரென்று தக்கவர் வாயிலாகக் கேள்வியுற்றேன். முதலமைச்சர் கூற்றில் எனக்கு நம்பிக்கை உண்டாகியது. அவர் கருத்து நன்றாயிருக்கிறதென்று கூட்டத்தில் பேசினேன். வெளியார் ஒருவர் முதலமைச்சர் ஏற்பாட்டை எதிர்த்தனர். தொழி லாளரிடைப் பிளவு நேரும்போல் தோன்றியது. யான் கூட்டத் தில் நிலைமையைத் தெளிவு செய்தேன். மில் திறக்கப்பட்டது. உள் செல்வதில் தொழிலாளர்க்குள் பிளவு உண்டாகவே இல்லை. பின்னே விசாரணை நடந்தது. இருபத்தைந்து பேர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஐவர் எடுத்துக் கொள்ளப்படாமைக்குக் காரணம் அவர்தம் வாய் மொழியே. அவர், வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சிலர் மீது குற்றஞ் சுமத்தினர். அக்குற்றம் ஆராய்ச்சியில் பொய்யாயிற்று. அவர் நிலை, யானை தன்மீது மண்ணைவாரிப் பெய்து கொண்ட கதையாக முடிந்தது. சூளை மில் சூளையிலே ஒரு மில் உண்டு. அதன் தலைமை நிலையம் பம்பாயிலே இருந்தது. தகராறுகள் நேருங்கால் அவைகள் பெரிதும் மில் மானேஜராலேயே தீர்த்துவைக்கப்படும். அவ்வழக்கம் நாளடைவில் வீழ்ந்துபட்டது. 1937ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூளை மில் தொழிலாளர் பொறுமை இழந்து கிளர்ச்சியில் தலைப்பட்டனர். அக்கிளர்ச்சியை முன்னிட்டுச் சங்கம் அரசாங்கத்துக்கு விண்ணப்பஞ் செய்தது. அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. விசாரணை நன் முறையில் நடைபெறவில்லை. தொழிலாளர் ஏமாற்றமே அடைந்தனர். சங்கம் மேலும் மேலும் தொடர்ந்து கிளர்ச்சி செய்தது. இடையீடில்லாக் கிளர்ச்சியைக் கண்ட அரசாங்கம் மில் கணக்குகளைச் சோதிக்குமாறு லேபர் கமிஷ்னரை ஏவியது. கமிஷ்னர் மில் கணக்கு வகைகளைச் சோதித்தனர்; முடிவை அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தினர். அதை வெளியிட அரசாங்கம் முற்படவில்லை. அஃது அரசாங்கத்தினிடமே அடைபட்டது. முடிவை வெளியிடுமாறு லேபர் கமிஷன ரிடத்தும் அமைச்சரிடத்தும் யான் பன்முறை பேசிப் பார்த்தேன். பயன் விளையவில்லை. மில் கணக்கு வகைகளைச் சோதிக்கும் உரிமை சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு வழங்குமாறு அமைச்சரைக் கேட்டுப் பார்த்தேன். அது செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக முடிந்தது. நஷ்டம். ஒன்றுஞ் செய்தல் முடியாது என்ற பாடம் மட்டும் படிக்கப்பட்டே வந்தது. தொழிலாளர் என் செய்தனர்? உள் வேலைநிறுத்தம் தொழிலாளர்க்குள் கவலையும் சோர்வும் வெறுப்பும் பெருகின. அவர் ஒரு நாள் மில்லுக்குள்ளாகவே வேலை நிறுத்தஞ் செய்தனர். தொழில் அமைச்சர் வி.வி.கிரி அழைக்கப் பட்டார். அமைச்சர் மேடையிலா நின்றார்? தொழிலாளரின் எரியிடை நின்றார். m§nf åáa bt«ik miy mtiu ‘c§fŸ FiwfŸ v‹d? என்று கேட்கச் செய்தது. குறைகளிற் சில சொல்லப்பட்டன. இவைகளெல்லாம் எனக்குத் தெரி யாவே என்று அமைச்சர் சொற்றனராம்; குறைகளைத் திரட்டி அனுப்புங்கள் என்று கூறி விடைபெற்றுச் சென்றனராம். குறைகள் பலமுறை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டதும், விசாரணையில் முறையிடப்பட்டதும் தொழிலாளர்க்குத் தெரியும். தொழிலாளரிடை ஒருவிதக் கலக்கம் உண்டாயிற்று. பழி! காரியதரிசி செல்வபதி செட்டியாருடன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டவர் பலர் ஒருங்கு திரண்டனர். அவர், காரியதரிசிகள் நல்லவேலை செய்யவில்லை. அமைச்சரிடம் குறைபாடுகளை நன்முறையில் வெளியிடவில்லை என்று பிரசாரஞ் செய்தனர். அவர்தம் பிரசாரத்துக்கு மந்திரியின் கூற்று எய்ப்பாக நின்றது. தொழிலாளரிடைப் பலதிறக் கருத்துக்கள் உருண்டன. குழப்பமும் தலைகாட்டிற்று. சங்கம் பழியில் நின்றது! திரிபு அமைச்சர் கூற்றை ஆராய்தற்கென்று ஒரு பெருங்கூட்டம் கேசவபிள்ளை பார்க்கில் கூடியது. அக்கூட்டத்தில் குறைபாடுகள் அரசாங்கத்துக்குப் பலமுறை அறிவிக்கப் பட்டதையும் விசாரணையில் அவைகள் முறையிடப்பட்டதை யும், தொழிலாளருள் இன்னார் இன்னார் சான்று கூறினர் என்பதையும் முறைமுறையே விளக்கி, அமைச்சர் சொன்னதை நீங்கள் தவறாக உணர்ந்தீர்கள் போலும் என்றேன். குறை பாடுகள் எனக்குத் தெரியா என்று கிரிசொன்னது உண்மை என்ற கூக்குரல் நானாபக்கமும் எழுந்தது. ‘FiwghLfŸ murh§f¤J¡F m¿É¡f¥g£lJ«, Érhuiz elªjJ« c§f£F¤ bjÇínk, bjǪjij Ú§fŸ V‹ mik¢rÇl§ TwÉšiy? என்று கேட்டேன். அதற்குப் பதில் எழவில்லை. அமைச்சர் கூறியதைக் கேட்டவர் சிலர் மேடை மீது வரலாம் என்று அறை கூவினேன். சிலர் வந்தனர். அவரைச் செல்வபதி யுடன் கூட்டி அமைச்சர் கிரியிடம் அனுப்பினேன். கிரி என்ன பகர்ந்தார்? குறைகள் எனக்குத் தெரியா என்று யான் சொல்ல வில்லை. யான் சொல்லியதைத் தவறாகத் தொழிலாளர் உணர்ந்தனர் போலும்! அதைக் குறும்பர்கள் திரிபுசெய்து விட்டார்களென்று தெரிகிறது என்று புகன்று தோழர்களைத் திருப்பினர். மறுநாள் கூடிய கூட்டத்தில் தோழர்களால் கிரியின் மறுப்பு வெளியிடப்பட்டது. தொழிலாளர் பலவாறு பேசினர். வேலை நிறுத்தக் கிளர்ச்சி ஒடுங்கவில்லை. வேலை நிறுத்தம் வேலை நிறுத்தத்துக்கென்று (22-2-1939) ஒரு பெருங் கூட்டங் கூடியது. அதில் காலநிலை உலக நிலை முதலியவற்றை விளக்கி, வேலை நிறத்தத்தைப்பற்றி ஆழச் சிந்தித்து முடிவுக்கு வருமாறு அறிவுறுத்தினேன். அடுத்த நாள் என் பெரிய தகப்பனார் மருமக்களுள் ஒருவர் மரண மடைந்தனர். அதனால் அன்று கூடிய கூட்டத்துக்குச் சிறிது காலந் தாழ்த்துச் சென் றேன். அதற்குள் உதவித் தலைவர் சக்கரைச் செட்டியார் தலைமையில் வேலை நிறுத்தத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் உடனே மில் மானேஜருக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பப்பட்டது. சுருங்கிய நேரத்தில் பெருங் காரியம் நிகழ்த்தப்பட்டது. மேடையில் வீரப்பேச்சுகள் முழங்கின. அந்நிலையில் விரிவுரை அவசியமாக எனக்குத் தோன்றவில்லை. ஒற்றுமையாயிருக்குமாறு தொழிலாளர்க்கு அறிவுறுத்தித் திரும்பினேன். முறிவு மானேஜரிடத்திருந்து பொருந்திய பதில் கிடைக்க வில்லை. வேலை நிறுத்தம் துவங்கியது. தொழிலாளர் ஆர வாரம் சொல்லமுடியாது. கூட்டங்கள் கூடின; ஊர்வலங்கள் சென்றன; மறியல்கள் வீறின. ஏறக்குறைய நூறு தொழிலாளர் சிறைக்கோட்டம் நண்ணினர், வேலை நிறுத்தத்தால் வெற்றி விளையும் விளையும் என்று ஏழைமக்கள் அங்காந்திருந்தார்கள். பெரிய வெற்றி விளைந்தது! என்ன வெற்றி? சூளை மில் முறிவடைந்த வெற்றி! அவ்வெற்றிச் செய்தி கிடைத்தது. தொழிலாளர் இடி கேட்ட சர்ப்பமாயினர்; ஏக்குற்றனர்; பீடிழந்தனர். இளைஞர் முகங்கள் வாடின. முறிவு, வேலை நிறுத்தத்துக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதென்பதும், வேலை நிறுத்தங் காரணமாக மில் குலையவில்லை என்பதும் பின்னே தெரிய வந்தன. வீண் பழிக்குத் தொழிலாளர் ஆளா யினர்! மூவாயிரம் தொழிலாளரும் அவரைச் சார்ந்தவரும் துன்பக்கடலில் வீழ்ந்தனர். மில்லை வாங்கி நடத்துமாறு காங்கிர அரசாங்கத்தைக் கேட்டேன். பயன் விளையவில்லை. வேறு வேறு உதவிக்கும் ஒல்லும் வகை செய்யப்பட்டன. தொழிலாளர்க்கு உண்டிகள் கொடுக்கப்பட்டன. சின்னாட் களுக்குள் யுத்தம் தோன்றியது. பக்கிங்காம் - கர்நாட்டிக் மில் களில் வேலை பெருகியது. அம்மில்கள் சூளை மில் தொழி லாளர் பலர்க்கு நுழைவாயிலாயின. தொழிலாளர் துன்பம் ஒருவாறு அருகியது. கட்சிப் பேயின் கோரம்! சூளை மில் வேலை நிறுத்தத்தின்போது மூவாயிரம் தொழிலாளர்க்கும், அவரைச் சார்ந்தவர்க்கும் என்ன செய்யலா மென்று என் நெஞ்சம் நினைக்கும்; உருகும். அவ்வேளையில் என் கண்கள் என்ன கண்டன? கட்சிப் பிணக்கின் ஆபாச எழுச்சியைக் கண்டன. கட்சிப் பேய் ஜீவகாருண்யத்தை மறக்கச் செய்தது; இகலை ஏவியது. வஞ்சகமும் வன்மமும் எரியும் பகையும் கோர நர்த்தனம் புரிந்தன. அவைகளை என் பாழுங் கண்கள் கண்டன. செல்வபதியின் எதிரிகள் எழுந்தார்கள்; திரண்டார்கள்; கூட்டங்கூடினார்கள்; தொழிலாளர் துன்பத் துக்குக் காரியதரிசி செல்வபதியின் செயலே காரணம் என்று முழங்கினார்கள். சத்திய மூர்த்தி போன்றவர்களின் கலப்பு எனக்கு வியப்பூட்டியது. r¤âa_®¤âia¡ f©L, ‘v› ntisÆš f©ld¡ T£l§ T£LtJ? என்று கேட்டேன். செல்வபதியைப் பற்றி உங்கட்கு ஒன்றுந் தெரியாது என்ற பதிலே பெற்றேன். கார்பரேஷன் கட்சிச் சண்டைகளெல்லாம் ஏழைத் தொழிலாளர் அடி வயிற்றில் தீயாக மூண்டனபோலும் என்று யான் எண்ணி எண்ணி வருந்துவேன். மக்களிடத்துள்ள விலங்கியல்புகள் என்னே! என்னே! அவைகளைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பையும் என் வாழ்க்கை பெற்றது. முதலமைச்சர் தலைமை! சூளை மில் வேலை நிறுத்த வேளையில் பக்கிங்காம் - கர்நாட்டிக் மில்களில் முன்னே நிறுத்தப்பெற்ற ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை பூண்டவர் முதல் அமைச்சரே. தொழிலாளர் வயிறெரிந்தது. அதை வெளிப்படையாகப் புலப்படுத்தும் நிலையில் அவர் அப்பொழுதில்லை. வீட்டுக்கா? கடலுக்கா? 1938ஆம் ஆண்டு நவம்பரில் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்யும் உரிமையைக் கல்ல வல்ல ஒரு சட்டம் நிறுவப் பம்பாய்க் காங்கிர அரசாங்கம் முற்பட்டது. அதை மறுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் கண்டனக் கூட்டங்கள் கூட வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸின் காரியக் கூட்டம் கட்டளையிட்டது. அதன்படி சென்னையிலுங் கண்டனக் கூட்டங் கூட்டத் தோழர் எ.எ.கே. ஐயங்கார் முயன்றனர். அவர் தம் முயற்சிக்கு யானுந் துணை போனேன். சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரிலே கடற்கரையிலே (11-11-1938) சக்கரைச் செட்டியார் தலைமையில் பெருங் கூட்டங் கூடியது. அங்கே பலவகைத் தொழிலாளர் ஈண்டியதும், பல சங்கப் பிரதிநிதிகள் போந்ததும் எனக்குக் கழிபேருவகை யூட்டின. போலி அணி அணியாக ஒரு பக்கத்தில் நின்றது; குதிரைப் படைகளும் நின்றன. சங்கப் பிரதிநிதிகள் ஒவ்வொருவராகப் பேசி வந்தனர். செல்வபதி மிக மென்மையாகக் காங்கிரஸைத் தாக்கினர்; பாசுதேவ் மென்மையைச் சிறிது வன்மையாக்கினர்; ஆல்பர்ட் ஜேதா அதை மிக உரமாக்கினர். காங்கிரஸைத் தாக்குதல் கூடாது என்றொரு குரல் எழுந்தது. காங்கிர ஒழிக என்று வேறு ஒரு குரலுந் தொடர்ந்தது. பற்பல பிரதிநிதிகளுக்குள் பிணக்குத் தோன்றியது. அது கூட்டத்திடைக் குழப்பம் விளைத்தது. போலி அதிகாரிகள் சிலர் கூட்டத்தை நெருங்கினர். பின்னே என்ன விளையும் என்று யான் ஊகித்து எழுந்தேன்; மேடையில் நின்றேன்; பக்கத்திருந்த ஒரு சகோதரியைப் பாட்டுப் பாடுமாறு கேட்டேன் அவர் பாடியதும். தோழர்களே! யான் ஒரு பழைய ஆள். தொழிலியக்கம் தோன்றிய நாள்தொட்டு உங்கள் பணிசெய்து வருபவருள் ஒருவன். இங்கே எத்தனையோ கூட்டங்களை கண்டனக் கூட்டங்களை - யான் பார்த்திருக்கிறேன். அவைகளில் போலிஸார் தலையிட்டதை யான் பார்த்ததே இல்லை. இன்று அப்பொல்லாக் காட்சியைக் காண்கிறேன். உள்ளந் துடிக்கிறது; ஊன் உருகுகிறது; உடல் நடுக்குறுகிறது. காங்கிர எவர் உடைமை? அது பொதுவானது; இந்தியருடையது. யான் இப்பொழுது நான் கணா சந்தாவும் செலுத்துவதில்லை. அதனால் யான் காங்கிரகாரன் ஆகேனோ? என் உயிர் காங்கிர; என் உள்ளங் காங்கிர; என் உடல் காங்கிர; என் பேச்சு காங்கிர; என் எழுத்து காங்கிர; என் பணிகளெல்லாம் காங்கிர; என் வாழ்க்கையே காங்கிர. யான் காங்கிரகாரன்; என் நாடி நரம்புகளிலெல்லாம் காங்கிர ரத்தமே ஓடுகிறது. காங்கிரஸார் சிலர் தவறு செய்யலாம். அதைக் காங்கிர மீது சுமத்துவது அறி வுடைமையாகாது. தற்போது காங்கிர பெயரால் மந்திரி பதவி யிலுள்ளவர் தவறு செய்தால், அவரை நீக்கி மற்றவரை அப்பதவியில் அமர்த்தும் உரிமை நமக்குண்டு. அவ்வுரிமையைப் புலப்படுத்தவே நாம் இங்கே கூடியிருக்கிறோம். காங்கிரஸைக் கண்டிக்க நாம் இங்கே சேரவில்லை; காங்கிரஸுக்கு ஆக்கந்தேடவே நாம் இங்கே சேர்ந்திருக்கிறோம். தொழிலாளர்களே! தோழர்களே! என் ஆருயிர்களே! நீங்கள் நல்லவர்கள். உங்கள் தலைவர்களின் கட்சிப் பிணக்கு உங்களைப் பிணங்கச் செய்கிறது. நாம் நெருக்கடியான நேரத்தில் - மிக நெருக்கடியான நேரத்தில் இங்கே குழுமி யிருக்கிறோம். இங்கேயா பிணக்கு - பிளவு - பிரிவு! வெட்கம் ! வெட்கம்! தலைவர்களை மறந்து விடுங்கள்; உங்களை நினையுங்கள்; நீங்கள் தோழர்களாக விளங்குவீர்கள். அத்தோழமை வேண்டும்; ஒருமைப்பாடு வேண்டும். உங்களை நோக்கியே விண்ணப்பஞ் செய்கிறேன். கூட்டத்தை அமைதியாக நடத்தப் போகிறீர்களா? குழப்பத்தில் முடிக்கப் போகிறீர்களா? கூட்டம் அமைதியாக நடந்தால் யான் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவேன்; இல்லையேல் இக்கடலில் பாய்ந்து உயிர் துறப்பேன். என் செய்யப் போகிறீர்கள்? என்னை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? flY¡F mD¥g¥ ngh»Ö®fsh? என்று பெருங் குரலெடுத்துப் பேசிக் கேட்டேன். கூட்டத்திலே எழுந்த குழப்ப அரக்கன் மாய்ந்தான்; அமைதித்தெய்வம் எழுந்தது. அத்தெய்வக்கொலுவைக் கண்டேன். போலிஸார் கூட்டத்தினின்றும் அகன்றார். கூட்டம் செவ்வனே நடை பெற்றது. கண்டனத் தீர்மானம் ஆரவாரத்துடன் நிறைவேறியது. தொழிலாளர்க்கு ஜே என்ற முழக்கம் வானைப் பிளந்தது. கட்சிப் பிணக்கு தொழில் இயக்கம் வலுக்க வலுக்க அது பலதிற அரசியல் கட்சிகளின் உள்ளத்தில் புகுந்தது. அரசியல் கட்சிகள் வாளா கிடக்குமோ? அவைகள் தொழில் இயக்கத்தை அலைக்கலா யின. தொழிற் கூட்டம் பலவாறு சிதறுண்ணும் நிலையையும் அடைந்தது. காரணம் தொழிலியக்கத் தத்துவம் தொழிலுலகில் ஆக்கம் பெறாமையாகும். தொழிலியக்கத் தத்துவம் தொழி லாளரிடைப் பரவினால் அஃது எக்கட்சிக்கும் இரையாகாது. கட்சிப் பிணக்குக்கு இரையாகி அதையும் கடந்து தெளிவு பெறும் நிலையைத் தொழிலியக்கம் அடைவது நல்லதென் றிருந்தேன். அநுபவத்தினுஞ் சிறந்த ஆசிரியருண்டோ? கட்சியும் தொண்டும் தொழில் இயக்கத்தை ஆட்சிபுரியப் புறப்பட்ட அரசியல் கட்சிகள் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை மட்டும் தாய்ச் சங்கமென்று விட்டு ஒதுங்குமோ? தாயகத்திலும் கட்சிகள் புகுந்து குடைந்தன. அக்குடைவால் விளைந்ததென்னை? சங்கக் கலப்பற்ற வேலை நிறுத்தங்கள் பெருகின. அடிக்கடி உள் வேலை நிறுத்தங்கள் நிகழும். அவைகளில் சில வெளிவேலை நிறுத்தங்களாக மாறும். வேலைக்குத் திரும்புமாறு யான் தொழிலாளர்க்குச் சொல்வேன். தொழிலாளர் திரும்புவார். யான் கட்சிப் பிணக்குகளைக் கடந்து உயிர்த் தொண்டு என்ற முறையில் பணி செய்து வந்தமையால், என் முன்னே கட்சிப் பிணக்குகளெல்லாம் சூந்யமாகும். என் பேச்சைக் கேட்கக் கேட்கத் தொழிலாளர் கட்சிகளை மறந்து தோழர்களாவர். கட்சிப் பிணக்குகள் தொண்டின் முன்னே சரண்புகுதலை யான் அனுபவத்தில் கண்டேன். ஒற்றுமை இன்மையும் பயனும் கட்சிகளால் சிதறுண்டு ஒற்றுமையிழக்கும் நிலையை யடைந்த தொழிலுலகின் விருப்பங்களை நிறைவேற்ற முத லுலகம் தானே வலிந்து முற்படுமோ? முதல் உலகம் தன் கருமத்தில் கண்ணாயிருக்கத் தொடங்கியது. அதனால் உள்வேலை நிறுத்தமும் கதவடைப்பும் பெருகலாயின. இங்கே இரண்டு நிகழ்ச்சிகளைக் குறித்தல் சாலும். துப்பாக்கி யுத்தங் காரணமாக (1941) வெளியேற்றம் நேர்ந்தது. வெளியேற்றத்துக்கென்று பற்பல சாலைகளில் பொருளுதவி நல்கப்பட்டது. பக்கிங்காம் - கர்நாட்டிக் மில்களும் அவ்வுதவி நல்க இசைந்தன. அது குறித்து விதிக்கப்பெற்ற நிபந்தனைகள் தொழிலாளர்க்கு வெறுப்பூட்டின. நிபந்தனைகளைத் தளர்த்து மாறு சங்கங் கேட்டது. அதற்கு மில் அதிகாரிகள் இணங்க வில்லை. அவ்விணங்காமையும், வேறு சில நிகழ்ச்சிகளும் ஒன்றி, கர்நாட்டிக் மில் - பின்னிங் டிபார்ட்மெண்டில் சிறு குழப்ப மாயின. குழப்பத்தை முன்னிலைப்படுத்தி அதிகாரிகள் மில்லையே மூடிவிட்டார்கள். சங்கச் சார்பில் ஈட்டப்பெற்ற கூட்டத்தில் சங்கக் கட்டளையின்றித் தொழிலாளர் ஒன்றுஞ் செய்தலாகாதென்றும், நியாய வரம்பு கடந்த செயல்களைச் சங்கம் ஆதரியா தென்றும், சங்கு ஊதினால் வேலைக்குத் திரும்புமாறும் தோழர்கட்கு அறிவுறுத்தினேன். சங்கு ஊதப்பட்டது. தொழிலாளர் வேலைக்குச் சென்றனர். பலவித நிபந்தனைகள் அடங்கிய துண்டு வெளியீடுகள் மில் அதி காரிகளால் பரப்பட்டன. நிபந்தனைத் தாள்களில் கைச்சாத்திடு மாறு பின்னிங் இளைஞர்கள் வலியுறுத்தப்பட்டார்களாம். இளைஞர்கள் மறுத்தார்களாம். அதிகாரிகள் சிலர்க்கும் இளைஞர்க்கும் வாக்குவாதம் பலமாக நடந்ததாம். வாக்கு வாதம் அந்த இலாகாவில் உள் வேலை நிறுத்தமாக முடிந்தது. இளைஞர்கள் பிடிவாதத்தில் நின்றார்கள். அதிகாரிகளும் அவ்வாதத்தில் நின்றார்கள். அதிகாரிகள் அன்புமுறையில் நிலைமையை ஒழுங்கு செய்திருக்கலாம்: அல்லது சங்கத்துக்குத் தெரியப்படுத்தி இருக்கலாம். இங்கே விரிவுரை வேண்டுவ தில்லை. ஆயுதபாணிகளாய்க் காத்திருந்த போலி படை மில்லுக்குள் நுழைந்தது. இளைஞர் பிடிவாதத்தினின்றும் இறங்கினாரில்லை. வீறி எழுந்தன துப்பாக்கி வேட்டுகள் (11-3-1942); மாண்டனர் எழுவர். வேட்டுகள் மில்லுக்கு வெளியிலும் பறந்தன. இருவர் மாண்டனர். அங்கும் இங்கும் காயமடைந்தவர் பலர். சங்கம் நோக்கி வந்த யான் துப்பாக்கியின் வெளிப் பிரயோகத்தினிடத்தில் சிக்கிக்கொண்டேன். ஒருவர் வீழ்ச்சியை யான் நேரிற் கண்டேன். m§»Uªj nghÈÞ mâfhÇ xUt® ‘Ú§fŸ V‹ ï§nf ɻ֮fŸ? என்று கேட்டார். என் ஈர மனம் துப்பாக்கியை நாடுகிறது என்று என் வாய் உளறியது. தொழிலாளர் என்னை செல்வபதி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை ஓலம் அன்றைய நிகழ்ச்சிகள் எந்தத் தினப்பதிப்பிலும் வெளிவர வில்லை; இரண்டு நாள் கடந்தே வெளிவந்தன. விசாரணை நடத்துமாறு பத்திரிகை உலகமும் ஓலமிட்டது; மற்ற உலகங் களும் ஓலமீட்டன. சங்கச் சார்பில் சக்கரைச் செட்டியாரும் (அப்பொழுது அவர் மேயர்), காரியதரிசிகளும், யானும் அட்வைஸரைக் கண்டு பேசினோம்; விசாரணை நடாத்தி உண்மை காணுமாறும், உயிர் துறந்தவர் குடும்பங்கட்கு உதவி புரியுமாறுங் கேட்டோம். அரசாங்கம் விசாரணை புரிதற்கும் ஒருப்படவில்லை; உயிர் துறந்த குடும்பங்கட்கு உதவி புரியவும் முன்வரவில்லை; ஆனால் கூட்டங்கள் கூடுதலாகா தென்ற கட்டளையை மட்டும் பிறப் பித்தது. சங்க நிருவாக அங்கத்தவருள் ஒருவராகிய அர்ச்சுனன் என்னும் தொழிலாளர் ஒருவர் விசாரணையின்றிக் காவலில் வைக்கப்பட்டார். ஏறக்குறைய ஒரு மாதங் கடந்து மில்கள் திறக்கப்படு மென்று தெரிய வந்தது. காரியக்கூட்டங் கூட்டி ஆலோசித் தேன். தொழிலாளர் மனோநிலையை உணர்ந்த காரியக்கூட்டம் மில் தொழிலாளர் வேலைக்குத் திரும்புதல் வேண்டுமென்றும், பின்னே ஒழுங்குமுறையில் செயலாற்றல் வேண்டுமென்றும் தீர்மானித்தது. மில்கள் திறக்கப்பட்டன. தொழிலாளரும் நுழைந்தனர். மீண்டும் தொல்லை இருபத்தொன்பது நாள் கதவடைப்பு! பொருந்திய காரணமொன்றுமில்லை. கதவடைப்பு நாட்களுக்குரிய சம்பளத்தைச் சட்டப்படி செலுத்தல் வேண்டுமென்று மில் மானேஜிங் டைரெக்டரைச் சங்கங் கேட்டது. அதற்கு நியாய மான பதில் கிடைக்கவில்லை. சங்கம் (18-8-1942) லேபர் கமிஷ்னர் முன்னிலையில் வழக்குத் தொடர்ந்தது. அச்சமயத்தில் மானேஜிங் டைரெக்டர் தொழிலாளர் அமைதியாக வேலை செய்து வருவதால் அவர்க்கு ஒரு வாரச் சம்பளம் பரிசிலாக அளிக்கத் தாம் விரும்பியிருப்பதை அறிவித்தார். m¤âO® m¿¡if bjhÊyhs®¡F Ia_£o‰W ‘r§f« tH¡F¤ bjhL¤JŸs ntisÆš ï¤jif m¿¡if V‹ ãw¤jšnt©L«? என்று தோழர்கள் எண்ணி எண்ணி ஐயுற்றார்கள். ஐயம் வளர்ந்து வளர்ந்து உள் வேலை நிறுத்தமாக உருக்கொண்டது, உள் வேலை நிறுத்தம் கதவடைப்பாக முடிந்தது. மீண்டும் தொல்லை சூழ்ந்தது! அவ்வேளையில் காங்கிர பெயரால் பள்ளி வேலை நிறுத்தங்களும், மற்றும் பல செயல்களும் நிகழ்ந்த வண்ண மிருந்தன. காங்கிரகாரர் ஏவுதலால் உள் வேலை நிறுத்தம் நிகழ்ந்தது என்றும் சொல்லப்பட்டது. பின்னே ஆராய்ச்சியில் காங்கிர செல்வாக்கே ஓரளவில் பயன்பட்டது உண்மை என்பதும் விளங்கின. தொழிலாளர்க்குள் இருவிதக் கருத்துக் கள் உலவின. ஒன்று உடனே வேலைக்குப் போதல் கூடா தென்பது; மற்றொன்று உடனே வேலைக்குப் போதல் வேண்டு மென்பது. முன்னையது காங்கிர சார்பினது; பின்னையது சமதர்மக் கட்சியின் சார்பினது. இவ்விரண்டிலுஞ் சார்பு கொள்ளாத தொழிலாளர் தொகையே பெரியது. வாக்கு முதல் நாள் கூட்டத்தில் இரண்டு கட்சிக்குமுள்ள வேற்றுமை யுணர்வு எனக்குப் புலனாகியது. யான் அதைக் கருத்திலிருத்தாமலே கடனாற்றி வந்தேன். ஒவ்வொரு நாளுங் கூட்டங்கூடும். யான் ஒருவனே பேசுவேன். ஒரு நாள் தொழி லாளரை நோக்கி. இன்று உங்கள் கருத்தை யுணர முயற்சி செய்யப் போகிறேன். நீங்கள் உண்மை வெளியிடுதல் வேண்டும். உங்கள் கருத்தை யுணர்ந்த பின்னரே மேல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் வேண்டும். உள்ளொன்றை வைத்துப் புற மொன்றை வெளியிடாதேயுங்கள். இக்கூட்டத்தை ஒரு தெய்வ சபையாகவே கொள்கிறேன் என்று பேசி, நீங்கள் குறை பாடுகளை முன்னிட்டு உள் வேலை நிறுத்தம் செய்தீர்களா? அல்லது காங்கிர தூண்டுதலால் அதைச் செய்தீர்களா? வாக்குக் கொடுங்கள் என்று கேட்டேன். முதலதற்கே எல் லாரும் வாக்களித்தனர். இரண்டாவதற்கு வாக்கே காணோம். யானுங் காங்கிரகாரனென்றும், காங்கிரஸின் செயலை மறைக்க வாக்கெடுத்தேன் என்றுஞ் சில இடங்களில் பேசப் பட்டன. அப்பேச்சை யான் பொருட்படுத்தவில்லை. வேலை நிறுத்தக் காலங்களில் நூற்றுக்கணக்கில் வதந்திகள் எழும். வதந்திகளில் பழகிய யான் எவ்விதப் புரளியைப் பற்றியுங் கவல்வதில்லை. கடனாற்றல் யுத்த காலம்-மில்களில் யுத்த வேலை-இந்தியப் பாது காப்புச் சட்டம்-எல்லாம் எனக்குத் தெரியும். இந்தியப் பாது காப்புச் சட்டம் படமெடுத்து என் முன்னே ஆடியது; நெருங்கி நெருங்கியும் வந்தது. யான் மயிர்ப் பாலத்தில் நடந்தே கடனாற்றினேன். இம்முறை இந்தியப் பாதுகாப்புச் சட்டத் துக்கு இரையாவேன் என்று அறிஞர் பலர் எண்ணியதை யான் உணர்ந்தேன். என் மனம் பகவத்கீதை யாகியது. முறைப்படி எவரெவரைப் பார்த்தல் வேண்டுமோ அவரவரைச் சங்கச் சார்பாகக் காரியதரிசிகளும், நிர்வாகிகளும், யானும் பார்த்தே வந்தோம். பயன் விளையாதென்பது எனக்கு நன்கு தெரியும். தெரிந்தும் கடனாற்றுவதில் யான் வழுவ வில்லை. தெய்வக் காட்சி அடிக்கடி உள் வேலை நிறுத்தம் நிகழ்வதை ஒழித்தே தீரல் வேண்டுமென்று மில் அதிகாரிகள் உறுதி கொண்டார்கள்; டிபார்ட்மெண்ட் டிபார்ட்மெண்டாகக் கலகக் காரரைப் பொறுக்கினார்கள். பொறுக்கப்பட்டவர் ஆயிரம் பேர் என்றும் ஐந்நூறு பேர் என்றும் வதந்திகள் உலவின. வதந்திகளை யான் எளிதில் நம்புவனோ? திடீரென மில் சார்பில் ஒரு பெரும் அறிக்கை பிறந்தது. அவ்வறிக்கையில் ஐம்பத்தொருவர் நீக்கப்படுவரென்று விவரம் விளங்கியது. (21-9-1942)இல் மில் திறக்கப்படுமென்ற குறிப்பும் அறிக்கையில் திகழ்ந்தது. அறிக்கை தொழிலாளரிடை நன்கு பரவியது. தொழிலாளரே கூட்டங் கூட்டமாகக் கலந்து பேசினர். ஐம்பத்தொருவருள் பலர் என்னைக் கண்டனர். அவருட் சிலர் இனி மில்லுக்குள் போகவே மாட்டோம் என்றும் உறுதி கூறினர். 20ஆந் தேதி ஒரு பெருங் கூட்டங் கூடியது. ஏறக்குறைய பதினாயிரம் பேர் கூடினர். யான் மில் அறிக்கையை எடுத்து வரி வரியாகப் படித்துக் காட்டிக் மறுக்கத்தக்கனவற்றை மறுத்தேன். பின்னே தொடர்ந்து, நீங்கள் சங்கச் சார்பில் நின்று சங்கத்தின் கட்டளை பெற்றுப் பதினான்கு நாட்களுக்கு முன்னரே அறிக்கை வழங்கி வேலை நிறுத்தஞ் செய்திருந்தால் நிலைமை வேறுவிதமாக முடிந்திருக்கும். eh§fŸ v§nf nghdhY«, ‘c§fis¡ nfshkny âO®âObud¤ bjhÊyhs® cŸ ntiy ÃW¤jŠ brŒtij Ú§fŸ Mnkhâ¡»Ö®fsh? என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் என்ன பதில் சொல்வோம்; விழிக்கிறோம்; நாணமுறுகிறம். உங்கள் பக்கம் நியாயமுண்டு. பொறுமை யின்மையால் நியாயத்துக்குக் கேடு சூழ்ந்து விடுகிறீர்கள். போனது போக. இனிக் கழிவிரக்கங் கொள்வதால் என்ன பயன் விளையப் போகிறது? நீங்கள் எல்லாரும் மில் அறிக்கையின் உட்பொருளை உணர்ந் திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். நாளை வேலைக்குப் போவதா? இல்லையா? என்ற முடிவு செய்தல் வேண்டும். வாக்கெடுப்பது நலமென்று தோன்றுகிறது என்று சொன்னதும், ஐம்பத் தொருவரில் ஒருவர் எழுந்து, நாம் எத்தனையோ போராட்டங் களை நடத்தி இருக்கிறோம்; எத்தனையோவிதத் துன்பங் களை ஏற்றிருக்கிறோம், இப்பொழுது தலைகாட்டியுள்ள துன்பம் பெரியதன்று. இது திரணம். எங்கள் பொருட்டுப் பதினாயிரம் பேரும், அவரைச் சார்ந்த முப்பதினாயிரம் பேரும் இக்கஷ்ட காலத்தில் துன்புறுதலாகாது. நாளைத் தோழர்கள் வேலைக்குப்போவதே நல்லது என்று வீர உரை பகர்ந்தார். மற்ற ஐம்பதின்மரும் வாளா இருந்தனர். யான் வாக்கெடுக்கப் புகுந் தேன். தொழிலாளர் அனைவரும் வேலைக்குப் போவதென்றே வாக்களித்தனர். அந்நிலையில் தொழிலாளர் கூட்டம் அளித்த காட்சியை என்னென்று கூறுவேன்! அத்தகைய காட்சியை யான் எப்பொழுதுந் தொழிலாளர் கூட்டத்தில் கண்டதே இல்லை. அஃது ஒரு பெருந் தெய்வக் காட்சியாகவே தோன்றியது. தொழிலாளர் அனைவரும் அமைதியில் நின்றனர்; ஒருவராகக் காணப்பட்டனர். உண்மை கடைப்பிடித்து ஒழுகுங்கள். உங் கட்குத் தெய்வத்துணை கிடைக்கும். சமீபத்தில் இங்கே கூட்டங் கூடும். எல்லோரும் வாருங்கள். அதில் சில கருத்துக்களை வெளியிட எண்ணியிருக்கிறேன் என்று சொல்லி விடைபெற் றேன். அடுத்தநாள் கதவடைப்பு நீங்கியது. தோழரெல்லாம் மில்லுக்குள் நுழைந்து வேலை துவங்கினர். சனி சிலநாள் கடந்து பெருங்கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் யுத்தத்தைப்பற்றிச் சில உரை பகர்ந்து, உங்கட்குக் குறைபாடுகள் பல உண்டு. அவைகளைத் தீர்க்கச் சங்க வாயிலாகவே முயலல் வேண்டும். சங்கத் தலைவன் என்ற முறையில் இங்கே நின்று மில் அதிகாரிகட்கு எச்சரிக்கை செய்கிறேன். இன்னும் இரண்டு வாரத்துக்குள் உங்கள் குறைபாடுகளைக் களைய அதிகாரிகள் முற்படல் வேண்டும். இல்லையேல் பதினான்குநாள் அறிவிப்பு வழங்கி வேலை நிறுத்தஞ் செய்யச் சங்கம் உங்களைக் கேட்கும். நீங்கள் இடையில் சங்கக் கட்டளையின்றி ஒன்றுஞ் செய்யாதே யுங்கள். இனிப் பெரும் பெருங் கூட்டங்கூடும்; ஊர்வலங்கள் செல்லும்; நியாயவரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சிகள் செய்யப் படும். கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் நீங்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு மிடைதல் வேண்டும். அவைகள் வாயிலாகப் பொது மக்கட்கு உண்மை நிலையை உணர்த்தல் கூடும் என்று பேசிக் கூட்டத்தைக் கலைத்தேன். தொடர்ந்து விரைந்து பிறந்தது ஓர் அரசாங்க அறிக்கை. அதில் போலி கமிஷ்னர் கட்டளையின்றிச் சென்னையில் கூட்டங் கூடுதலோ ஊர்வலம் போதலோ கூடாதென்று குறிக்கப்பட்டிருந்தது. வேறு சில கட்டுப்பாடுகளும் அதில் செறிந்திருந்தன. அவ்வறிக்கை என் பேச்சுக்குப் பதில் போன்றிருந்தது. சனி சென்னைக்கே பிடித்தது. வெள்ளி விழா சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் வெள்ளி விழா (14-4-1943) அருண்டேல் தலைமையில் பீப்பில் பார்க்கில் நடைபெற்றது; மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா முடிவில், சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் ஐவர். அவருள் திவான்பகதூர் - கேசவ பிள்ளை ஒருவரே பருவுடல் நீத்துள்ளனர். மற்ற நால்வராகிய வாடியாவும், செல்வபதியும், இராமாஞ்சலு நாயுடுவும், யானும் உயிருடனிருக்கிறோம். முதல் தலைவராகிய வாடியாவே இவ்விழாவில் தலைமை பூண ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்தம் உடல்நிலை அவரது வருகையைத் தகைந்தது. ஐவருள் சங்கத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டவர் நாங்கள் மூவர். செல்வபதியும் இராமாஞ்சலுவும் இருபத்தைந்தாண்டு காரியதரிசிகளாகவே பணி செய்தனர். யானோ சில காலம் நிருவாகியாகவும் சில காலம் உதவித் தலைவனாகவும் சில காலம் தலைவனாகவும் இருபத்தைந்தாண்டு தொண்டு செய்யும் பேறுபெற்றேன். முதல் முதல் தோன்றிய சங்கம் நம்முடையதே. அது தோன்றியிராவிட்டால் இந்தியாவில் தொழில் இயக்கமே ஆக்கம் பெற்றிராது. தொழிற் சங்கச் சட்டம் இல்லாத வேளையில் சங்கச் சார்புடைய பதின்மர்மீது முதலாளிகளால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கை தொழிற்சங்கச் சட்டத் தோற்றத்துக்கு மூலமாக நின்றது. தொழில் இயக்க நலனுக்கென்று நம் சங்கம் உற்ற தியாகத்துக்கோரளவில்லை. சென்னைத் தொழிலாளர் சங்கம் நடாத்திய போராட்டம் ஒன்றா? இரண்டா? பலப்பல. நமது இருபத்தைந்தாண்டு வாழ்வை நினைந்து பார்ப்போம். நமது வாழ்வு வெற்றியுடையதாயிற்றா? வெள்ளிவிழா அறிக்கையில் நாம் பெற்ற நலன்கள் பல குறிக்கப்பட்டுள்ளன. அவைகளெல்லாம் உண்மையே. முழுவெற்றி விளையவில்லை என்பதே எனது உட்கிடக்கை. முழு வெற்றிக்குரிய விதையாவது விதைக்கப்பட்டதா? அவ்விதை 1921ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. அதை வில்லிங்டன் ஆட்சி கல்லி வெந்நீர்விட்டது. மீண்டும் அவ்விதை விதைக்க எவ்வளவோ முயன்றோம். விதைத்தல் இயலாமற்போயிற்று. அவ்விதை எது? இலாபத்தில் பங்கு பெறுவது. முதலாளியின் பொருளும் உங்கள் உழைப்புஞ் சேர்ந்தே விளைவு உண்டாகிறது. இலாபம் மட்டும் ஒருசாரார்க்குச் செல்வது அறமாகாது. உங்கட்கும் பங்கிருத்தல் வேண்டும்; தற்போது பெரும் பங்கு வேண்டுவதில்லை. சிறிதிருந்தாலும் போதும். விதை பின்னே முளையாகிச் செடியாகி மரமாகும். இப்பொழுது வேண்டற்பாலது விதையே. தொகையைப் பற்றிய கவலை இச்சமயம் வேண்டுவதில்லை; பங்குரிமையைப் பற்றிய கவலையே வேண்டும். அதற்குரிய கிளர்ச்சி எழுதல் வேண்டும். நிலம் பொருள் உழைப்பு ஆகியவை பொதுமையாதல் வேண்டும். இந்நோக்குடன் யான் இருபத்தைந்தாண்டு உங்களிடை யில் தொண்டு செய்தேன். அத்தொண்டுக்குரிய ஆக்கந் தேடி வெற்றிக்கொடி நாட்டவேண்டுவது உங்கள் கடன். உங்கள் முன்னே பெருங்கடமை நிற்கிறது. அதை நிறைவேற்ற நீங்கள் பாடுபட்டே தீரல் வேண்டும். யுத்த முடிவில் புது உலகம் தோன்றப் போகிறது. என்று உலகம் பேசுகிறது. அப்புது உலகில் நிலம் பொருள் உழைப்பு ஆகியன பொதுவாகும். இல்லையேல் மீண்டும் மீண்டும் கோர யுத்தங்கள் தோன்றும். கோர யுத்தங்கள் தோன்றாதவாறு உலகைக் காக்கும் பொறுப்பு யாருடையது? தொழிலாளருடையது; உலகத் தொழிலாளருடையது. ஆகவே, தோழர்களே! ஒன்றுபட எழுங்கள்; எழுங்கள்; புது உலகங்காண எழுங்கள்! எழுங்கள். இதுவே இவ்வெள்ளி விழாவில் யான் உங்களுக்கு விடுக்குஞ் செய்தி என்று பேசி எல்லார்க்கும் நன்றி செலுத்தினேன்; வாழ்த்துக் கூறினேன். விவசாயச் சங்கமும் காங்கிரஸூம் தொழிற்சாலைகளை ஒட்டியே சங்கங்களை நிறுவும் அளவில் நிற்றல் கூடாது. நமது நாட்டின் முதுகெலும்பாயிருப் பவர் விவசாயிகள். அவர்கள் கூட்டுறவின்றித் தொழிலாளர் இயக்கம் ஆக்கம் பெறாது என்று யான் அடிக்கடி எண்ணுவேன். அவ்வெண்ணம் முழுமைச் செயலாகிப் பருமையடையவில்லை. சிறுமுயற்சி செய்யும் அளவிலேயேயான் நிற்கலானேன். பெருமுயற்சிக்கு இடம் ஏற்படவே இல்லை. இது குறித்து இந்தியாவும் விடுதலையும் என்னும் நூலில் எனது உட்கிடக்கையை வெளியிட்டுள்ளேன். விவசாயச் சங்கம் பெருக்கெடாமைக்குப் பல காரணம் கூறுதல் கூடும். தலையாய காரணம் ஒன்றுள்ளது. அது காங்கிர இரண்டு பெயரால் பிரிந்து நிற்பது. இவ்வாறு யான் அடிக்கடி நினைப்பதுண்டு. இப்பொழுது நமது நாட்டில் தேசியக் காங்கிர என்றும், தொழிற் காங்கிர என்றும் இரண்டு உள்ளன. இரண்டமைப்பும் தம்மை முறையே முதலாளி - தொழிலாளி என்று கருதச் செய்கின்றன. தொழிற் காங்கிர தேசிய காங்கிரஸைத் தன் மயமாக்கி ஒருமையாதல் வேண்டுமென்று யான் பேசியுமிருக்கிறேன்; எழுதியுமிருக்கி றேன். இப்பேச்சும் எழுத்தும் தேசியக் காங்கிரஸார் பலர்க்குக் கனலெனத் தோன்றும். அவர் என் கருத்தை மறுப்பதுண்டு. விலகல் யுத்தகாலம்! சட்டங்கள் நடமாடுங் காலம்! வேலை யொன்றுமில்லை. வீண் தலைமை எற்றுக்கு? இவ்வேளையில் சன்மார்க்க சமாஜத்துக்கு ஆக்கந் தேடுதற்குரிய வாய்ப்பு நேர்ந்துள்ளது என்று எண்ணலானேன். இத்தகைய எண் ணம் முன்னுமொருமுறையும் (1923) தோன்றியதன்றோ? அவ்வாறே இப்பொழுதும் (1943) தோன்றியது. யான் விலகு தலைச் சென்னைத் தொழிலாளர் சங்கத்துக்குத் தெரிவித் தேன். சங்கம் என்னை எளிதில் விடுமா? வலியுறுத்தினேன். சர்க்கரைச் செட்டியார் நீண்ட காலம் உதவித் தலைவராக இருந்து வருகிறார். அவரைத் தலைவராகத் தெரிந்தெடுங் கள்; இல்லையேல் ஒரு தொழிலாளரைத் தலைவராகக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறினேன். செல்வபதி செட்டியாரும் தமது காரியதரிசி பதவியினின்றும் விலக உறுதிகொண்டனர். இரண்டு பதவி விலகல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எங்கள் தொடர்பு அறுந்ததோ? இல்லை. நாங்கள் எங்கள் தொடர்பை அறுத்துக் கொள்ளச் சங்கம் இசையவில்லை. எங்கள் இருவர் பெயரும் நிர்வாகச் சங்கத்தில் திகழ்ந்தே வருகின்றன. சக்கரைச் செட்டியார் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். ஜீனராஜ் என்னுந் தொழிலாளர் காரியதரிசியாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். உருவப்படம் எனது மணிவிழா பலவிடங்களில் கொண்டாடப்பட்டது. எம்.எ.எம். தொழிலாளர் சங்கமும், சென்னைத் தொழிலாளர் சங்கமும் (25,26-8-1943) முறையே கொண்டாடின. விவரம் மணிவிழா மலரில் வெளிவரும் இரண்டு சங்கங்களும் எனது உருவப்படம் வைத்தன. ஒன்று இப்போதைய உருவமுடையது; மற்றொன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் கண்ட கால உருவமுடையது. குப்புசாமி நாயகர் முதுமையை விரும்பினர்; செல்வபதி செட்டியார் இளமையை விரும்பினர். இரண்டும் எவ்வுருவுடன் தொழிலாளர் இயக்கத்தில் புகுந்தேன் என் பதையும், இப்பொழுது அவ்வுருவம் எப்படி மெலிவுற்றுள்ளது என்பதையும் உணர்த்தும். பீமன் பிருங்கியான கதை கிடையாது. அக்கதை என்னில் பிறந்தது. அதற்கு இரண்டு படங்களும் இந்நாளில் இலக்கியங்களாக நிற்கின்றன. தோழர்கள் தொழில் இயக்கத்தில் ஈடுபட்டவரும், அதற்கு உதவி னோரும் பலர். அவருள் இங்கே சிலரைச் சிறப்பாக நினை வூட்டிக் கொள்கிறேன். வாடியா பி.பி. வாடியாவைத் தியோசாபிகல் சங்கத்தில் யான் காண்பதுண்டு. அந்நாளில் அவருடன் யான் நெருங்கிப் பழ குதற்குரிய வாய்ப்பொன்றும் நேரவில்லை. சுய ஆட்சிக் கிளர்ச்சியின்போது அவர் கோகலே மண்டபத்தில் அடிக்கடி பேசுவர். அப்பேச்சுக்கள் என் காதில் விழும். 1917ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தமிழ் மொழியைப்பற்றி ஒரு சொற்பொழி வாற்ற யான் காஞ்சி நோக்கினேன். காலையில் என் கடன் முற்றுப் பெற்றது. மாலையில் அங்கே வாடியா பேசப் போகிறாரென்று கேள்வியுற்றேன். அவர்தம் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் பெயர்க்கும் பணி எனக்குக் கிடைத்தது. காஞ்சியில் ஏற்பட்ட மொழி பெயர்ப்புத் தொடர்பு, பின்னே தொழிலாளர் சங்கங்களில் விரிந்த முறையில் உரம் பெற்றது. வாடியாவும் யானுஞ் சேர்ந்து தொழிலியக்க விதை விதைத்தோம். அதைப்பற்றிய குறிப்புக்கள் மேலே போந்துள் ளன. அவைகளை இங்கே விரித்துக் கூற வேண்டுவதில்லை. 1918ஆம் ஆண்டிலே பல கதவடைப்புக்கள் நடந்தேறின. அவைகளில் ஒரு கூட்டத்தில் வாடியா பேசிய பேச்சில் மானக் கேடு புகுந்ததென்று பின்னி கம்பெனியார் வழக்குத் தொடுக்கும் நோக்குடன் அறிக்கை விடுத்தனர். தொழிலாளரிடத்தில் பின்னி கம்பெனியாரை விட நாங்கள் நியூ இந்தியாவில் நன்முறையில் நடந்துகொள்கிறோம் என்ற கருத்துப்பட வாடியா பேசியதில் மானக்கேடிருந்ததென்று கம்பெனியா ரால் எண்ணப்பட்டது. வாடியாவின் பேச்சில் மானக்கேடு மறைந்து விளங்குதல் உண்மையென்றும், மன்னிப்புத் தெரி வித்தல் பெருங்தகைமையென்றும் டாக்டர் ஐயர் உணர்த்தினர். அவ்வேளையில் என் கருத்து எப்படி இருந்தது? மானம் போக்கும் நோக்குடன் ஒன்றும் பேசப்படவில்லை. இப் பொழுது சட்டப்படி மானக்கேடு தெரிகிறது. தொழிலாளர் இயக்கம் முளைவிட்டுள்ளது. இச்சமயத்தில்விட்டுக் கொடுப்ப தால் நமது மானம் போகாது,*** என்று என்மனம் கருதியது. அதை வாடியாவினிடம் அறிவிக்க யான் தயங்கவில்லை. வாடியா நேரிய வழியே நடந்தார். தொழிலாளர் இயக்கத்தை நடாத்தும் முறையில் வாடியா வின் நோக்கத்துக்கும், என் நோக்கத்துக்கும் அடிப்படையில் வேற்றுமையுண்டு. ஆனால் அதை யான் புறத்தே காட்டுவ தில்லை. தொழிலாளர் இயக்கம் குழந்தையாயுள்ளபோது வேற்றுமையை வெளியிடுதல் நற்பயன் ஒன்றும் விளையா தென்பது எனது கருத்து. வாடியா இயக்கத்தை விடுத்து விலகும் வரை எனது கருத்து வேற்றுமை வெளிவந்ததே இல்லை. தொழிற் சங்கச் சட்டம் பிறவாத காலத்தில் நிகழ்ந்த ஒரு கதவடைப்பின்போது பாதுகாப்புக் குழுவொன்று அமைக்கப் பட்டது. அதில் என் பெயரையும் வாடியா சேர்த்தனர். அப் பொழுது யான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். குழுவில் என் பெயர் சேர்க்கப்பட்டதை யான் அறியேன். குழுவின் மீது நஷ்ட ஈடு வழக்கு முதலாளிகளால் தொடுக்கப்பட்டது. வழக்கின் நடைமுறையில் யான் கலந்து கொண்டேன். தலைவர் செய லுக்கு உதவித் தலைவன் துணை போதல் வேண்டுமென்பது என் கொள்கை. வாடியா மேல்நாடு சென்று திரும்பியபோது, சென்னைத் தொழிலாளர் உலகம் அவருக்கு ஒரு பெரும் வரவேற்பளித்தது. அவ்வரவேற்புக்குப் பெருந்தொகை செலவழித்தலாகாதென்று அருண்டேல் உள்ளிட்டவர் கருதினர். தொழிலாளர் எழுச்சி அருண்டேல் முதலியவர் கருத்தையுங்கடந்து ததும்பியது. தொழிலாளர் மனம் நிறைவு கொள்ளும் வழியில் யான் வரவேற்பு முறைகளை ஒழுங்கு செய்தேன். ஓர் இரட்டைக் குதிரை வண்டி ஒரு வெள்ளிப் பல்லக்காகி வழங்கிய காட்சி தொழிலாளர் உலகையே கவர்ந்தது. ஊர்வலத்துக்குச் சில தடைகள் குறுக்கிட்டன. அவை களைக் களையப் போலி கமிஷனரிடம் நியாய வாதம் புரிந்து உரிமை பெறலானேன். ஊர்வலம் முற்றுப் பெற்ற பின்னர் தொழிலாளர் அமைதி குறித்துக் கமிஷனர் மகிழ்ச்சி தெரி வித்தனர். வாடியா வருகையை முன்னிட்டுச் சென்னைத் தொழி லாளர் சங்கத் தோழர் பலர்க்கு விருந்தளித்தது. விருந்து வேளையில் அன்னைபெஸண்ட் அம்மையார் பாயசம் அருந்த முயன்றனர். சூடு அம்மையாரின் கண்ணைக் கலக்கியது. அது கண்ட என் கண்ணுங் கலங்கியது. வாடியாவும் யானும் அரக்கோண வரவேற்புக்குச் சென்றோம். எங்களுடன் சகோதரி மிருநாளினியும் போந்தனர். காஞ்சிக்கும் அரக்கோணத்துக்கும் இடையில் ஓரிடத்தில் வாடியாவின் கார் சேற்றில் சிக்குண்டது. என்ன செய்வோம்! எங்கள் நிலை கண்ட உழவர்கள் புரிந்த துணை மறக்கற்பால தன்று. திரும்பியபோது அவ்விடத்திலுள்ள ஒரு கற்பாறைமீது வாடியா ஏறி நின்றார். வாடியாவின் தோற்றம் கைகாட்டி மரம்போல் காணப்பட்டது. வண்டி வேறு வழியாக ஊர்ந்தது. ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி வெண்ணிலவிலே உணவு கொண்டோம். அப்பொழுது நாங்கள் என்னென்னவோ பேசினோம்; மனக்கோட்டை கட்டினோம். நாங்கள் மனிதர்! வண்டி புறப்பட்டதும், தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ் சந்தையிற் கூட்டம் இதிலோ சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை சதுரங்க சேனை யுடனே வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ வாஞ்சனையி லாத கனவே எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே இரவுபக லில்லா விடத் தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே யானென்ப தறவு மூழ்கிச் சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ தேடரிய சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந் தமே. என வரூஉம் தாயுமானார் பாட்டு என் மனத்தில் உற்றுக் கொண்டேயிருந்தது. காரணம் என்ன? சகோதரி மிருநாளினி, நியோ பேபியன் என்ற பெயரால் ஒரு கழகம் நடாத்தினர். அதன் உறுப்பினர் தொகை சுருக்கம். அதில் யானும் ஓர் உறுப்பினன். ஒவ்வொரு பௌர்ணமி யின்போது ஒவ்வோர் உறுப்பினர் விருந்து வைப்பது வழக்கம், முதன்முறை சகோதரியார் விருந்தளித்தனர். விருந்துக்கு அழைக்க வந்த சகோதரியாரைப் பார்த்து யான், விருந்தில் சைவ மணங் கமழ்தல் வேண்டும் என்றேன். சைவமணங் கமழும் விருந்தும் இருக்கும். ஆனால் அஃதும் ஆதிதிராவிடரால் சமைக்கப்படும், என்றார். சாதியைப்பற்றிய கவலை எனக்குக் கிடையாது. யான் சாதி கடந்தவன் என்றேன். தோழர் வாடியா சைவப் பகுதியில் என்னுடன் உணவருந்தினர். அவர் இலையில் கோழிமுட்டை காணப்பட்டது. அதைப்பற்றி அவரும் யானும் உரையாடினோம். அவர் வெங்காயப் பச்சடியைத் தடுத்தார். யான் அதை ஏற்றேன். கோழி முட்டையை விட வெங்காயம் தாமத உணவாச்சே, கோழி முட்டையை வெறுக்கின்ற நீங்கள் வெங்காயத்தை எப்படி உண்ணலாம்? என்று வாடியா வினவி னர். எங்கள் உரையாடல் முழுவதும் பொதுவாக உணவைப் பற்றியதாய், சிறப்பாகக் கோழி முட்டை - வெங்காயத்தைப் பற்றியதாய் வளர்ந்தது. இராயப்பேட்டையில் சகோதர சங்கச் சார்பில் வாடியா தலைமையில் கஸன் என்பவர் தாகூரைப் பற்றிப் பேசினர். முடிவுரையில் வாடியா, தாகூர் நற்செய்திகளெல்லாம் இந்தியருக்குப் பழையன; மேல் நாட்டவருக்குப் புதியன என்று குறிப்பிட்டார். பழைமைக்குப் புதிய உடையணிந்துள்ளார் தாகூர் என்று யான் விளம்பினேன். வாடியா தொழிற்சங்கத் தொடர்பை அறுத்துக் கொண்ட பின்னரும் அவரை யான் மறப்பதில்லை. தொழிலாளர் சங்க நிலையத்துக்கு யான் கால்கொண்டேன். கேசவப்பிள்ளை அதைத் திறந்தார். செல்வபதி-ராமாநுஜப்பெயரை நிலையம் தாங்கியது. mªÃiyÆš ‘eh§fŸ It®; xUt® v§nf? என்று என் நெஞ்சம் அலமந்தது. நிலையத்தின் தலைப்பில் வாடியாவின் முகவுருவம் அமைந்த பின்னரே என் நெஞ்சம் நிலைத்தது. செல்வபதி - இராமாஞ்சலு இவ்விருவரையும் ஒருங்கு சேர்த்துச் சொல்லவே என் மனம் விரும்புகிறது. இருவரும் எனக்குப் பரத லட்சுமண ராகவே காணப்படுகின்றனர். இருவரும் யானுங் கலந்தே உழைத்து வருகிறோம். கலந்த உழைப்பு எத்துணை நாள்! இருபத்தைந்து ஆண்டுக்கு மேல் ! செல்வபதி செட்டியாரையும் இராமாஞ்சலு நாயுடுவையும் ஏன் என் உடன் பிறந்தவர் என்று சொல்லலாகாது? பரத லட்சுமணர் என்று பகரலாகாது? இருவரும் சென்னைத் தொழிலாளர் சங்கத் தொண்டனாகிய என்னிரண்டு நுரையீரல்களாய்த் திகழ்தலை என் மனம் அறியும். சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் எத்தனையோ பேர் வந்தனர்; போயினர். நாங்கள் மூவரும் சங்கம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை சங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். குறுக்கிட்ட வெள்ளங்கள் எத்தனை! பள்ளங்கள் எத்தனை! அதிர்ச்சிகள் எத்தனை! அந்தோ! இடிகள் எத்துணை! வெடிகள் எத்துணை ! ஒருமைப்பாட்டுடன் அவைகளில் மூழ்கினோம்; அவைகளினின்றும் எழுந்தோம்; அவைகளைக் கடந்தோம். எங்களுக்குள் வேலைப்பங்கீடு உண்டு. பொதுவாக யான் சங்கக் காரியங்களைக் கவனிப்பேன்; சிறு சிறு விவரங்களில் யான் கருத்துச் செலுத்துவதில்லை; கதவடைப்புக் காலங் களிலும், வேலை நிறுத்த வேளைகளிலும், மற்றத் தொல்லை நேரங்களிலும் யான் சர்வாதிகாரியாவேன். செல்வபதியும், இராமாஞ்சலுவும், மற்றவரும் என்வழியே நிற்பர். அவர் எக்காரணம் பற்றியும் குறுக்கிட்டுத் தொல்லை விளைப்ப தில்லை. அவ்வேளைகளில் யான் இட்டது சட்டமாகும். இராமாஞ்சலு நாயுடு அன்றாடக் காரியங்களில் கருத்துச் செலுத்தி வருவர். காரிய நிருவாகம் அவர் வயம் என்று சுருங்கச் சொல்கிறேன். நகரசபை, சட்டசபை, ஜினிவா முதலியவற்றிற்குச் செல்லும் பொறுப்பும், இன்ன பிறவும் செல்வபதியினுடையன வாயின. செல்வபதி செட்டியார் பதவி வகிப்பது சிலர்க்குப் பிடிப்ப தில்லை. அன்னார் என்னை அணுகி என்னென்னவோ கூறுவர். mt®¡bfšyh« ah‹ »¿ÞJÉ‹ kiy¥ bghÊit¥ go¤J¡ fh£Lnt‹’ ã‹dt‹ bg‰w bršt« ah‹ bg‰w brštk‹nwh? என்னும் கம்பரின் பொன்மொழியை எடுத்துக் காட்டுவேன். குப்புசாமி நாயகர் சென்னைத் தொழிலாளர் சங்கமும், எம்.அண்ட் எ.எம். தொழிலாளர் சங்கமும் என் இரண்டு கண்கள். முன்னைய சங்கத்தில் இருவரைக் குறித்தேன். பின்னையதில் எவரைக் குறிப்பேன்? இச்சங்கத்தில் முன்னாளில் என் உள்ளம் கவர்ந்த இளைய முகங்கள் சில உண்டு. அவைகளுள் ஒன்று உருத்திர குப்புசாமி நாயகர் முகம். குப்புசாமி நாயகர் அன்பர்; இன் மொழியர்; அமைதியில் நின்று பெரும்பெருங் காரியங்களை ஆற்றும் திறம் வாய்ந்தவர். யான் சங்கத் தொடர்பை அறுத்துக்கொண்ட பின்னரும் உருத்திர குப்புசாமி நாயகர் என்னிடம் வருவர்; சங்க நிகழ்ச்சி களைச் சொல்வர். இன்றியமையாத நிகழ்ச்சிகளில் அவர் என்னை மறப்பதில்லை. இவ்வாண்டுத் தொடக்கத்திலும் பிரம்பூரில் கூடிய மகாநாட்டை யான் திறந்துவைக்க வேண்டு மென்ற முயற்சி உருத்திர நாயகராலேயே செய்யப்பட்டது. குப்புசாமி நாயகரிடத்தில் பல நல்லியல்புகளுண்டு. அவை களுள் ஒன்று தனி மனிதர் செயல்மீது கருத்துச் செலுத்தாது, சங்க வளர்ச்சிமீது கருத்துச் செலுத்துவது. இவ்வியல்பை யான் பாராட்டுவது வழக்கம். இவ்வியல்பு அவரைச் சங்கத்தின் உயிர்நாடி யாக்கியது. குப்புசாமி நாயகரின் சமயப்பற்றும் என் உள்ளத்தை ஈர்ப்பதுண்டு. சோமசுந்தர நாயகரால் காணப்பெற்ற வேதாகமோக்த சைவசித்தாந்த சபை இடையில் உறங்கியது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க உருத்திர குப்புசாமி நாயகர் பெருமுயற்சி செய்தனர். அச்சபை உயிர்த்தெழுந்த பின்னர் நிகழ்ந்த முதலாண்டு விழா என் தலைமையில் நடைபெறக் குப்புசாமி நாயகர் விரைந்தெழுந்ததை யான் அறிவேன். சக்கரைச் செட்டியார் சக்கரைச் செட்டியார் ஒரு சிறந்த கலைஞானியர். அவரது கலைஞானம் அவரை உரிமை யுணர்வினராக்கியது. உரிமை யுணர்வு அவரை என்ன செய்தது? வக்கீல் தொழிலைச் செய்ய வொண்ணாதவாறு தகைந்தது. செட்டியார் நல்ல ஆங்கிலம் பேசுவர்; எழுதுவர். அவர் பேச்சை யான் முதல் முதல் (1908) சென்னைக் கடற்கரையில் கேட்டேன். அதில் தேசபக்தியும் சுயராஜ்ய வேட்கையும் வீறிட்டன. சக்கரைச் செட்டியாரையும் என்னையும் தொடர்பு படுத்தியது (1916) சென்னை மாகாணச் சங்கம். அத்தொடர்பை வலுப்படுத்தியது (1918) தொழிலாளர் இயக்கம். சென்னை மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கத்தைக் கண்டவருள் சக்கரையும் ஒருவர். அச்சங்கத்தின் முதல் தலை வரும் அவரே. தொடக்கத்தில் பலவிதத் தொல்லைகளில் மூழ்கிய சங்கங்களுள் மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கமும் ஒன்று. அச்சங்கத்தின் முதல் வேலை நிறுத்தத்தில் குதிரைப் போலி தலைகால் தெரியாமல் திருவிளையாடல் புரிந்தது. அத்திருவிளையாடல் சில தொழிலாளர் கால்களில் காயமுறச் செய்தது. இரத்தக் காட்சி கண்ட யான் கூட்டத்தில் போலி நடைமுறையை மிக உரமாக மறுத்தேன். அம்மறுப்பைக் கேட்ட டெபுடி கமிஷனர் பராங்குச நாயுடு என்னிடம் என்னவோ பேசவந்தார். அவரைப் பார்த்ததும் போலி பொதுஜன ஊழியத்துக்கென்று ஏற்பட்டதை இக்காலப் போலி உணராமலிருக்கிறது. சுய ஆட்சிக் காலத்தில் அது தன் கடமையைச் செவ்வனே உணர்வதாகும் என்ற கருத்துப்படச் சில உரைகளை விரைந்து வழங்கினேன். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம் என்று சொல்லி நாயுடு சென்றார். சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் ஆறுமாத வேலை நிறுத்தத்தில் என்னுடன் இரவு பகல் பணியாற்றியவருள் சக்கரைச் செட்டியாரும் ஒருவர். செட்டியார் வீரப்பேச்சும் செயலும் எனக்கு ஊக்கமூட்டியே வந்தன. 1924ஆம் ஆண்டில் காங்கிர சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் சூளை வட்டத்துக்கு நகரசபைத் தேர்தலில் சக்கரைச் செட்டியார் நிறுத்தப்பட்டனர். அவரை எதிர்த்தவர் பெருஞ் செல்வர். செல்வத்துக்கும் தொண்டுக்கும் பெரும் போர் நடந்தது. யான் தொழிலாளரைக் கூட்டங் கூட்டமாக வலம் வரச் செய்வேன்; கூட்டங்களில் பேசுவேன். வெற்றி காங்கிர - தொழிலாளருடையதாயிற்று. அம்முறை வெற்றி பெற்றவருள் நகரசபைத் தலைவர் பதவிக்குப் பல வழியிலுந் தகுதி வாய்ந்தவர் சக்கரைச் செட்டியாராகவே இருந்தனர். காங்கிர தலைவர் ஸ்ரீநிவாச ஐயங்கார் கருத்தும் சக்கரை மீதே படிந்து கிடந்தது. காங்கிர செல்வர்கள், ஏழைத் தொழிலாளர் தலைவர் ஒருவர் நகரசபைத் தலைவராதல் கூடாது என்று மண்ணையும் விண்ணையுஞ் சுழற்றினார்கள். அதன் பயனாகக் காங்கிர கூட்டத்தில் சாமி வேங்கடாசலம் தெரிந்தெடுக்கப்பட்டனர். அச்செயல் சக்கரைச் செட்டியார் மனத்தை உடைத்தது. சென்னை நகரசபைத் தலைவர் பதவியில் வகுப்புரிமை நுழைக்கப்பட்டது. கிறிதுவர் முறையுற்றது. அப்பொழுதும் காங்கிர செல்வ இனம் சக்கரைச் செட்டியாரை ஆதரியாது லேடன் என்ற ஐரோப்பியக் கிறிதுவரை ஆதரித்தது. 1941ஆம் ஆண்டு நவம்பரில் கிறிதுவர் முறை மீண்டும் வந்தது. இம்முறையாதல் சக்கரைச் செட்டியார் மேயராதல் வேண்டுமென்று விரும்பினவருள் யானும் ஒருவன். வேறோர் இந்தியக் கிறிதுவரும் மேயராக முயன்றனர். இவரை ஐரோப்பிய அங்கத்தவர் ஆதரிப்பதாகக் கேள்வியுற்றேன். ஐரோப்பியத் தலைவர் ஒருவரை யான் கண்டு சக்கரையின் தகுதியை விளக்கிக் காட்டினேன். அவர் இணங்கினர். அவரது இணக்கம் சக்கரைச் செட்டியாரை எதிர்ப்பின்றி மேயராக்கியது. தொழிலாளர் உலகம் மகிழ்வெய்தியது. என்னுள்ளங் குளிர்ந்தது. சக்கரைச் செட்டியார் கிறிதுவம் வெறுங் கோயில் மதமன்று. அது கிறிதுவினிடம் தொடர்பு கொண்டது. செட்டியார் கிறிதுவம் எனது கொள்கையுடன் இயைபு கொண்டது. ஓர் இளைஞன் கிறிதுவம் தழுவமுயன்றான். அதைப்பற்றிச் செட்டியாரிடத்தில் அறிக்கை செய்தேன். அப்பொழுது செட்டியாரின் உண்மைக் கிறிதுவம் வெளி யாயிற்று. பெண்மை, பதவி முதலியவற்றை உளங்கொண்டு கிறிதுவம் தழுவலாகாது. உள்ள உறுதி கொண்டு கிறிது வின் அன்பராதலே அறம் என்று செட்டியார் சொற்றனர். சக்கரைச் செட்டியாரைப் போன்ற கிறிதுவருடன் சேர்ந்து தொண்டு செய்யும் பேற்றையும் என் வாழ்க்கை பெற்றது. இ.எல்.ஐயர் இ.எல்.ஐயர் பாரிடர். அவரை முதல் முதல் (1918) சென்னைத் தொழிலாளர் சங்கத்துக்கு அழைத்து வந்தவர் வாடியா. இ.எல்.ஐயரின் உடையும் நடையும் அவரைத் தமிழில் பேச விடுமா என்று ஐயுற்றேன். ஐயர் தமிழிலேயே பேசினர். அப்பேச்சு அவரையும் என்னையும் தோழராக்கிற்று. யான் நாகை நோக்கியிருந்தபோது சென்னையில் டிராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் முதன்முறையாக நிகழ்ந்தது. அதற்குக் காரணம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் எழுச்சியேயாகும். யான் சென்னை சேர்ந்ததும் டிராம்வே தொழிலாளரை நாடிச் சென்றேன்; அவரை எங்கே கண்டேன்? இ.எல்.ஐயர் வீட்டில் கண்டேன்; அத்தொழிலாளர் கூட்டத்தில் பேசினேன். அப்பேச்சில் இந்தியாவின் சராசரி வருவாய், வயது முதலியவற்றை மற்ற மற்ற நாடுகளின் சராசரி வருவாய், வயது முதலியவற்றுடன் ஒப்பிட்டு, இந்தியாவின் சிறுமையை எடுத்துக் காட்டி, அச்சிறுமையைப் போக்கவல்லது தொழிலாளர் இயக்கமென்று விளக்கினேன். அது குறித்துப் போலி கமிஷனர் என்னை வரவழைத்துப் புள்ளி விவரங் களைத் தொழிலாளரிடை விளக்குதல் நல்லதன்று என்று எச்சரிக்கை செய்தார். ஏன்? தொழிலாளர் மனிதரல்லரோ என்று கேட்டுத் திரும்பினேன். இ.எல்.ஐயர் முயற்சியால் டிராம்வே தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. ஒருநாள் தொழிலாளர் பட்டினியால் வாடி யதைக் கண்ட ஐயர் பொன் கெடியாரத்தையுஞ் சங்கிலியையுந் தந்ததை யான் கண்ணாரக் கண்டேன். சென்னையில் தொழிலாளரின் ஆறுமாத கால வேலை நிறுத்தத்தில் இ.எல்.ஐயரும் எனக்குப் பக்கத்துணையாயிருந்து தொல்லைகளில் தோய்ந்தமை என்றும் மறக்கற் பாலதன்று. அச்சமயத்தில் இ.எல்.ஐயர் ஒரு விரதங் கொண்டார். அஃதென்னை? இ.எல்.ஐயர் சிகரெட் பிடிப்பவர். அதற்கென்று மாதந் தோறுஞ் செலவாகுந் தொகை அறுபது ரூபா. வேலை நிறுத்தம் முடியும் வரை சிகரெட் பிடிப்பதை நிறுத்தி அதற்குச் செல வாகுந் தொகையைத் தொழிலாளர்க்குக் கொடுத்தல் வேண் டும் என்னும் நோன்பை ஐயர் ஏற்றனர். பழக்கம் கொடிய தன்றோ? சிகரெட் பழக்கம் ஐயரை விட்டகல்வது அரிதாயிற்று. குறிப்பிட்ட தொகைமட்டும் ஐயரால் சிலகாலம் செலுத்தப் பட்டே வந்தது. காங்கிர சார்பில் எழுந்த ஒத்துழையாமையில் (1921) இ.எல்.ஐயர் மனமாரக் கலந்து தொழிலை விடுத்தனர். அத னால் அவர்க்கு விளைந்த தொல்லை பெரிதாயிற்று. அக் காலத்திலும் அவர் டிராம்வே தொழிலாளர் சேவையை விடுத்தாரில்லை. அத்தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு ஐயரும் யானும் ஒருநாள் இராயபுரம் செல்லுதல் நேர்ந்தது. எங்கள் இருவரிடமிருந்த காசு செலவாயிற்று. பசிநோய் பெருகியது. உம்மிடத்தில் எவ்வளவு சில்லறை இருக்கிறது? c«Äl¤âš v›tsî ášyiw ïU¡»wJ? என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டோம். எவ்வள விருந்தது? வண்டிச்செலவுக்குமட்டுஞ் சில்லறைக்காசு இருந் தது. அதை வண்டிக்குச் செலவழித்துப் பட்டினி கிடப்பதா? அல்லது உணவுக்குச் செலவிட்டு நடந்து போவதா? என்று எண்ணலானோம். ஐயர் சாப்பிட்டு விட்டு நடந்து செல்வதே நல்லது என்று முடிவு செய்தனர். ஐயர் பசி தாங்காமையை யுணர்ந்து அவரது முடிவுக்கு யானும் இணங்கினேன். இருவரும் உணவுகொண்டு நடந்தோம். லோபோ லோபோ ஓர் இந்தியக் கிறிதுவர். அவரை யான் முன்பின் அறியேன். தொழிலாளர் தொல்லையின்போது (1921) அவர் பிரஸிடென்ஸி மாஜிடிரேட்டாக அமரும் நிலைமை நேர்ந்தது. அவர் நீதி வடிவம் என்பதைப் பல வழியில் யான் உணர்ந்தேன். லோபோ காலத்தில் போலி கமிஷனராயிருந்தவர் பெல்லி என்ற ஐரோப்பியர். மில் தொழிலாளர் வேலை நிறுத்த நிகழ்ச்சிகளில் இருவரும் ஒரு மனமுடையவராய்க் கட னாற்றல் இயலாமற் போயிற்று. இஃது எயிலிங் கமிட்டி விசாரணையில் இருவருங் கூறிய சான்றுகளால் நன்கு விளங் கியது. தொழிலாளர் சுடப்பட்டதை யொட்டி அவர் தம் உறவினர் வழக்குத் தொடுக்க விண்ணப்பஞ் செய்த வேளையில் வில்லிங்டன் அரசாங்கம் லோபோவை வேறோர் இடத்துக்கு மாற்றியது. இதுபற்றிய குறிப்பு முன்னரும் உள்ளது. போலிசார் தொழிலாளர்மீது பலவகை வழக்குத் தொடர்ந்தனர். அவைகளால் லோபோவின் நீதிநிலை வெளி யாயிற்று. அவரளித்த தீர்ப்புக்கள் இரண்டிலுள்ள சில குறிப்புக் களை இங்கே எடுத்துக் காட்டுகிறேன். அவை உண்மையை உணர்த்துவனவாகும். I இராகவரெட்டி, அரங்கநாதம், துரைசாமி என்ற மூன்று தொழிலாளரும் சென்ற மாதம் 16ஆந் தேதி பகல் 10 மணி சுமாருக்கு வியாசர்பாடிச் சேரியில் ஆதிதிராவிடர்களின் குடிசைகளுக்குத் தீமூட்ட முயன்றனர் என்றும், அவரிடம் நன்னடக்கை ஜாமீன் வாங்கவேண்டுமென்றும் கி.பு.கோ. 110ஆவது செக்ஷன்படி வேப்பேரி போலிசாரால் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்ட வழக்கில் 2-8-21இல் சென்னைப் பிரதம மாஜிட்ரேட் மிடர் லோபோவால் தீர்ப்புச் சொல்லப்பட்டது. அடியில் கண்ட மொழிகள் மாஜிரேட் தீர்ப்பில் மிக முக்கிய மானவைகளாகக் காணப்படுகின்றன:- முதல் எதிரி முக்கால் மைல் தூரம் வரை துரத்திச் செல்லப் பட்டாரென்பதும், அவர் ஓடிய இடம்பெரும்பாகம் வேளாளர் தெருவாயிருந்தும், ஒரு வேளாளராவது சாட்சியாக விசாரிக்கப் படாததும் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. பின்னும் வழக்கை முதலில் நடத்திய சப்இன்பெக்டர் அன்றைய தினம் (16-7-21) எவ்வளவோ முயன்றும் முதல் குற்றவாளி கையில் கிரோசினாயில் எண்ணெய் புட்டியும், இரண்டு தீவர்த்திகளும் இருந்ததாக ஆதிதிராவிடர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை வேறு ஆதரிக்க யாரும் வரவில்லையென்று சொன்னார். தங்களைத் துரத்தியும், இவர்கள் தங்களிடமிருந்த புட்டிகளையும் தீவர்த்தி களையும் எறிந்துவிடாமல் ஆதிதிராவிடர் குடிசைகளுக்குத் தீவைக்கும் நோக்கத்துடன் அவைகளைக் கையிலேயே வைத்துக் கொண்டு தெருக்களின் வழியாகவும் வயல்களின் வழியாகவும் ஓடிக் கடைசியில் ஆதிதிராவிடர்களின் குடிசைகளுக்குச் சமீபத்தில் எறிந்திருந்தார்களென்று கூறுவது நம்பத்தக்க விஷயமன்று. ஆபத்திரியில் முதல் எதிரிக்குக் கொடுத்த சர்டிபிகேட்டில் அவ்வெதிரிமீது எண்ணெய் வாசனை இல்லையென்று கொடுக்கப் பட்டிருக்கிறது. இம்மாதிரியான விஷயங்களை கவனியாமல் வாக்கு மூலத்தைக் கவனித்தாலும் அதுவும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் படாமல் இருக்கிறது. இவ்வழக்கில் முதல் முதலில் நடந்த விருத்தாந்தங்களைப்பற்றிக் கூறும் சாட்சி ஒரு பெண்பிள்ளை யாவாள். அவள் திருடினதற்காக இரண்டுமுறை தண்டனை யடைந்திருக்கிறாள். அவள் இரண்டு வருடகாலமாக வேலை செய்யாமல் தன்னுடைய அவமானத் தொழிலை மறைத்து யாரோ ஒருவனுடைய வைப்பாட்டியென்று சொல்லிக் காலங் கழித்து வருகிறாள். இவளுடைய சாட்சியம் நம்பத்தகுந்ததன்று. பின்னும் இவ்வழக்கில் தகுந்த சாட்சியம் எது என்று யோசிக்கப்போனால், சார்ஜண்ட் ப்ரௌனிங்கினுடையதேயாகும். அதிலும் முக்கிய அம்சங்களில் வேண்டுமென்று பொய் சாட்சியம் கலக்கப் பட்டிருக்கிறது. பின்னும் இச்சாட்சியங்களில் இன்னும் இரண்டு சங்கதிகளைப் பற்றித்தான் யோசித்தல் வேண்டும். எதிரிகள் டேஷனுக்குச் சென்று பிரயாது செய்தது ஒன்று; இரண்டாவது அவர்களைத் துரத்தியபோது அவர்களின் நடத்தையைப்பற்றி ஏற்பட்ட வாக்கு மூலம். மிடர் ஆப்பெல் அவர்களும் டாக்டர் காமத் அவர்களும் கொடுத்த வாக்குமூலத்தினின்று ஜி.3 வியாசர்பாடி போலிசாரிடம் வேலை நிறுத்தம் செய்திருக்கும் தொழி லாளிகளுக்கு நம்பிக்கையேயில்லையென்று தெரிகிறது. இதை நிரூபிக்க 5 பேர்கள் தாங்கள் துரத்தப்பட்டபோது. சமீபமாகக் காவலிலிருந்த போலிசாரிடம் போய்ச் சொல்லாமல் இருந்ததேயாகும். எதிரிகளின் குற்றச்சாட்டை இன்பெக்டர் குற்றச் சாட்டுப் புத்தகத்தில் பதிப்பியாதது தப்பிதமாகும். முதல் எதிரியும் மூன்றாம் எதிரியும் 16ஆந் தேதியிலிருந்து 20ஆந் தேதி வரை போலி பாதுகாப்பில் இருந்தது வருத்தப்படக்கூடிய விஷயமாகும். எதிரிகள் கைது செய்யப்படுவதற்கு நியாயம் இல்லை. இக்காரணங்களினால் எல்லா எதிரிகளும் விடுதலை செய்யப்படுகிறார்கள். பிராசிகியூஷன் வழக்கைப் பத்மநாப நாயுடுவும் ஜகதீச அய்யரும் நடத்தினார்கள். எதிரிகளுக்காகக் குப்புராவ் ஆஜரானார் - நவசக்தி (5-8-1921) II சமீபத்தில் வியாசர்பாடியில் நடைபெற்ற குழப்பங்களுக்குக் காரணர்களெனக் கருதப்பட்ட கஜேந்திரன், தங்கவேல், எதிராஜ், பார்த்தசாரதி, கதிர்வேல், பெருமாள், துரைசாமி ஆகிய இவ்வேழு தொழிலாளர்மீதும் ஜாமின் வழக்குத் தொடுக்க வேண்டுமென்று வேப்பேரி போலீசார் சென்னைப் பிரதம மாஜிடிரேட் மிடர் லோபோ முன்னிலையில் கொண்டுவந்த வழக்கில் 5-8-21 தீர்ப்புச் சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட எழுவரில் அறுவர் விடுதலையடைந்தார். 7ஆவது எதிரி 6 மாத நன்னடக்கைக்காக 250ரூ. நபர் ஜாமினும், அதே தொகைக்கு வேறு இரு ஜாமீன்களும் கொடுக்கக் கட்டளையிடப்பட்டார். மாஜிடிரேட் தீர்ப்பில் பின்வரும் விஷயங்கள் முக்கியமானவை:- ஜூன் 28ஆந் தேதி இரவு 10-30 மணிக்கு முருகேசன் வீட்டு மேற்கூரையில் வெடிசப்தம் கேட்டதென்றும், குற்றஞ் சாட்டப் பட்டிருக்கும் எதிரிகளில் ஆறாவது எதிரியும் வேறு அறுபதுபேரும் ஆதிதிராவிடர்களின் மீது கற்களையும் சோடா புட்டிகளையும் எறிந்து கொண்டிருந்தார்களென்றும் சொல்லப்படுகின்றன. பிராசிகியூஷன் தரப்பில் சாட்சியங் கொடுத்த 9ஆவது சாட்சி வெடி விபத்து உண்டான பாகத்தில் அப்போது வசித்துக் கொண்டிருந்தார். ஆறாவது எதிரிக்கு விரோதமாகச் சாட்சியங் கொடுத்தவர்கள் பிராசிகியூஷன் தரப்பில் விசாரிக்கப்பட்ட 2,3,5,7, சாட்சிகள். பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி கொடுத்த வாக்குமூலம் பொது டைரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. பிராசிகியூஷன் சாட்சிகளான 2 முதற்கொண்டு ஏழுவரையிலும் உள்ள சாட்சிகளும், 9வது சாட்சியும், வேறு ஏழுபேரும் மில்களில் காலை 10 மணிக்கு, சப் இன்பெக்டர் வெய்லியினிடம் கொடுத்த வாக்குமூலமும் எக்ஸிபிட் எப் ஆகப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சப்இன்பெக்டர் தமக்குக் கிடைத்த விஷயங்களைக் கோர்ட்டில் சொல்வது போதுமென்று எண்ணி விட்டார் போலும்! பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகளாக 2 முதல் 8ஆவது சாட்சிவரை கொடுத்தவாக்கு மூலங்களினால் முதலில் கற்கள் யாராலேயோ எறியப்பட்டன என்றும், பின்னர் பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி போலி டேஷனுக்கு அனுப்பப் பட்டாரென்றும், ஐந்து நிமிடங்கள் வரை கற்கள் எறியப்பட்டன என்றும் பின்னர் முருகேசன் வீட்டு மேற்கூரையில் வெடிசப்தம் ஏற்பட்டதென்றும், அப்போது ஒரு சிறிய விளக்கின் வெளிச்சம் தென்பட்டதென்றும், அப்பொழுது ஆறாவது எதிரி தம் கையில் புட்டியொன்றை வைத்துக் கொண்டு ஓடினார் என்றும் தெரியவருகின்றன. மறுநாள் காலை 8 அல்லது 9 மணிக்கு, சப் இன்பெக்டர் வெய்லி வெடிகுண்டு போடப்பட்ட வீட்டைப் போய்ப் பார்வையிட்டதாகவும், வெடிகுண்டு விழுந்த இடத்தில் 3 அங்குலம் சுற்றளவுடன் கூடிய ஒரு சந்து இருந்ததாகவும், அவ்விடத்தைச் சுற்றிலுமிருந்த ஓடுகள் உடைந்து போயிருக்கக் கண்டதாகவும், அவ்விடங்களில் கந்தகம் இருந்ததாகவும் கூறுகிறார். ஆகையால் பதினொருமணிக்கு முன்னர் இம்மாதிரி நடைபெற்றிராதென்று நான் கருதுகிறேன். இரவு 10 மணிக்குக் கற்கள் எறியப்பட்டதாகப் பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி கூறியிருப்பது, பொது டைரியில் இரவு 10-30 மணிக்குப் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. கற்கள் விழுந்த பிறகு எட்டாவது பிராசிகியூஷன் சாட்சியும் வேறு பலரும் வெளியில் வந்து பார்த்தார்களென்றும், கற்களை எறிந்தவர்கள் யாரென்று அறியக்கூட வில்லை யாகையால் சுற்றிப் பார்ப்பவர்களை அனுப்பினார்க ளென்றும் பொது டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி கொடுத்த அறிக்கையில் வெடி விபத்தைப் பற்றி ஒன்றும் கூறப்படாமல் இருக்கிறது. வெடி விபத்து ஏற்படுவதற்கு முன் பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி சேரியை விட்டுச் சென்றுவிட்டாரென்று கூறுவது பொருத்தமானதன்று. பிராசிகியூஷன் ஆறாவது சாட்சிதாம் ஆறாவது எதிரியையும் பிறரையும் சேரிக்கு வெளியிலுள்ள சாலையில் கண்டதாகவும் பின்னர் சேரிக்குள் நுழைந்து பார்க்கையில் பிராசிகியூஷன் எட்டாவது சாட்சியும் வேறு சாட்சியும் அல்லது 8 போலிகாரர்களும் ஓர் ஆதிதிராவிடக் கூட்டமும் வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். முருகேசன் வீட்டுக்கு ஏழு அல்லது எட்டு வீடுகள் வரையும் தம்முடன் 4 அல்லது 5 போலிகாரர்கள் வந்தார்களென்றும், பின்னர் ஒருவரும் அகப்படாமல் போகவே அவர்கள் திரும்பிப் போய்விட்டார்களென்றும், தாம் உடனே முருகேசன் வீட்டிற்குச் சென்று பார்வையிடுகையில் அங்கே அறுபது ஆண்களும் பெண்களும் நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தார்களென்றும் பிராசிகியூஷன் எட்டாவது சாட்சி கூறியிருக்கிறார். ஒரு தலைமை கான்டேபில் 4 அல்லது 8 கான்டேபில்களுடன் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டிற்கு அல்லது அதற்கு ஏழு அல்லது எட்டு வீடுகளுக்கு அப்பால் இருக்கும் இடத்திற்குச் சென்றும் அதைப்பற்றிப் பொது டைரியில் ஒன்றும் எழுதப்படாமல் இருப்பது நம்பக்கூடிய தன்று. தலைமைக் கான்டேபிலை விசாரணை செய்யாததும், பொது டைரியில் வெடிவிபத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாததும் இரவு 11 மணிவரை வெடிவிபத்து ஏற்படவில்லையென்பதை உறுதிப் படுத்துகின்றன. சாட்சிகள் கூறும் காலத்தில் வெடிவிபத்து ஏற்படவில்லையென்பது மேற்கூறிய காரணங்களால் தெரிய வருகிறது. - நவசக்தி (12.8.1921) தணிகாசலஞ் செட்டியார் ஒ. தணிகாசலஞ் செட்டியார் ஜடி கட்சித் தலை வருள் ஒருவர். மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் தொடக்கத்தில் (1921) செட்டியார் என்னையுஞ் சங்கத்தையுங் குறைகூறிக் கொண்டிருந்தார். பின்னே வேலைநிறுத்த வேகம் பொங்கிச் சென்னையைக் கலக்கியபோது உண்மை காண அவர் முயன்றார். அவர்தம் முயற்சி பலவித ஆராய்ச்சிகளில் தலைப் பட்டது. அவர்க்கு உண்மை விளங்கியது. தணிகாசலஞ் செட்டியார் நகரசபையிலும் சட்டசபையிலும் நேரிய முறையில் கடனாற்றினார். செட்டியாரின் சட்டசபைப் பேச்சு பல நுட்பங் களை விளக்குவதாதலின் அதை மட்டும் ஈண்டு வெளியிடு கிறேன். சென்னைச் சட்டசபையின் கூட்டம் அக்டோபர் மாதம் 12ஆந் தேதி காலை 11 மணிக்குச் செயின்ட் ஜார்ஜ் கோட்டையி லுள்ள மண்டபத்தில் கூடியது. அப்போது தணிகாசலம் செட்டியார், புளியந்தோப்புக் கலவரங்களைப்பற்றி வாதிப்பதற்காக மற்ற விஷயங்களை ஒத்திப்போட வேண்டுமென்று ஒரு பிரரேபணை கொண்டுவந்தார். இப்பிரரேபணையை யாரும் எதிர்க்கவில்லை யாதலால், தலைவர் இவ்விஷயம் 4 மணிக்கு வாதிக்கவிடப் படுமென்று கூறினார். மாலை 4 மணிக்கு வாதம் ஆரம்பமாயிற்று. அக்காலையில் தணிகாசலம் செட்டியார் பேசியது வருமாறு : - மற்ற விஷயங்களை ஒத்திப் போட்டதற்குரிய காரணங் களாவன: (1) மில் பிரதேசத்தைச் சுற்றியுள்ள இடங்களிலிருக்கும் ஜனங்களின் உயிருக்கும் பொருளுக்கும் அதிக ஆபத்து நேரிட்டிருப்பது. (2) நிலையை போலி கமிஷனரும், தொழிற் கமிஷனரும், நிர்வாக அதிகாரிகளும் எம்மாதிரியாய்க் கவனித்தார்கள் என்பதைப் பற்றி ஆராய்தல் வேண்டும். (3) மேற்கூறிய இலாகாக்கள் அனைத்தும் தங்கள் கடமை களைச் சரிவரச் செய்தனவா என்பதைப்பற்றி ஆராய்தல் வேண்டும். மே மாதம் 4ஆம் வாரத்தில் மில்லில் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. வேலை நிறுத்தத்தின் பயனாகச் சுமார் பதினோராயிரம் பேர் வேலையில்லாமல் இருக்க வேண்டியதாயிற்று. இவர்களை அடுத்து இருப்பவர்களையும் சேர்த்தால் மொத்தம் 50 ஆயிரத்துக்கு மேல் ஆகின்றது. இம்மாதிரியிருந்தால் குழப்பங்கள் ஏற்பட்டே தீரும். தொழில் இலாகா எல்லாத் தொழிலாளர்களின் நன்மையைக் கருதி எல்லாரையும் மில்லுக்குள் சேர்க்கும் வழியைத் தேடியிருத்தல் வேண்டும். தொழிற் கமிஷனர், தாழ்த்தப்பட்டவர்களின் இரட்சகர் என்ற முறையில் ஆதிதிராவிடர்கள், ஜாதி இந்துக்கள் - முகம்மதியர்கள் ஆகிய தொழிலாளர்களினின்றும் வேறு பிரிந்து தினந்தோறும் மில்லுக்குள் போகத் துணை நின்றார். ஜூன் மாதம் வரை மில்லில் வேலை செய்யும் ஆதிதிராவிடர்களும், இந்துக்களும், முகம்மதியர்களும் தொழிலாளர் சங்கத்து அங்கத்தவர்கள் என்ற முறையில் ஒன்றுகூடி ஒற்றுமையாய் இருந்து வந்தார்கள். ஜாதி வித்தியாசங்களை வேலை நிறுத்தத்தில் புகவிட்டு வேலை நிறுத்தத்தை ஒழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு ஜாதியார் மாத்திரம் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தமையால், மற்றவர்களுக்குத் தப்பெண்ணங்களும் குரோதமும் ஏற்பட்டன. இத்தியாதி காரணங்களால்தான் அமைதியின்மையும் குழப்பங்களும் ஏற்பட்டன. இக்குழப்பங்களின் பயனாய் அநேக குடிசைகள் கொளுத்தப்பட்டுப் போயின. மில்லில் சம்பந்தப் பட்டவர்களையும், சம்பந்தப்படாதவர்களையும் தாக்குவதற்காக விநோதமாய்ச் செய்யப்பட்ட கத்திகள் இருதிறத்தினராலும் உபயோகிக்கப்பட்டு வந்தன. பகற் காலங்களிலும் இராக்காலங் களிலும் - போலிசார் இருக்கும்போதும் இல்லாதபோதும் - போலிசார் எங்கே காவல் புரிந்து கொண்டிருந்தனரோ அவ்விடங்களிலும் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இம் மாதிரியாக ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் 5ஆந் தேதி வரை நடைபெற்று இருக்கிறது. இப்படியிருந்தும் போலி இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. ஜூன் மாதம் 30ஆந் தேதியிலிருந்து கத்திகள் உப யோகிக்கப்பட்டு வருகின்றன என்று அரசாங்க அறிக்கையி லேயே கூறப்பட்டிருக்கிறது. கத்திகளைத் தாங்கி ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டதற்காகக் குயப்பேட்டை யில் அக்டோபர் மாதம் 5ஆந் தேதியில் 15 பேர் சுடப்பட்டனர். ஜூன் மாதம் 30ஆந் தேதியிலேயே கத்திகள் நடமாடுகின்றன என்று தெரிந்திருந்தும் அவைகள் எங்கே செய்யப்படுகின்றன என்பதைப் போலிசார் இதுவரை ஏன் கண்டு பிடியாமல் இருக்கின்றனர்? தொழிலாளர் சங்கக் கட்டிடமும், இந்துக்கள் முகம்மதியர்கள் வீடுகளும் பரிசோதிக்கப்பட்டன; ஆனால் அவைகளினின்று ஒன்றும் எடுக்கப்படவில்லை. பஞ்சு மூட்டைகளை அல்லது பருத்தித் துணிகளைக் கட்டும் மூட்டை களுக்கு உபயோகப்படுத்தும் உலோகத்தினின்று ஆச்சரிய மான கத்திகள் செய்யப்படுகின்றன. இக்கத்திகள் மில்லில் அகப்படும் சாமான்களைக் கொண்டு தயாரிக்கக் கூடும் என்று ஊகிக்கலாம். கத்திகள் மில்லில் செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்டு தெளியப் போலிசார் மில்லைப் பரிசோதனை செய்தனரா? கத்திகளை ஆதிதிராவிடர்கள் வைத்துக் கொண் டிருக்கிறார்களென்பதை அறியப் போலிசார், அவர்களின் வீடுகளைப் பரிசோதிக்க வில்லை. கத்திகள் வானத்திலிருந்து வருவதில்லை. கத்திகள் மனிதர்கள்தான் செய்திருத்தல் வேண் டும். அவைகள் யாரால்-எங்கே செய்யப்படுகின்றன என்பதைப் பற்றி ஆராய்தல் வேண்டும். சென்னைப் போலிசாரும், ரிசர்வ் போலிசாரும், கூட்டுப் போலிசாரும், தண்டப் போலிசாரும் கத்திகள் எங்கே செய்யப்படுகின்றன என்பதைப் பற்றிக் கவனியாமல் இருக்கின்றனர். போலிசார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனைக்கு உட்படுத்தாமல் இருக்கின்றமை யால் போலிசாரின் திறமைக் குறைவு வெளியாகின்றது. சென்ற செப்டம்பரில் சென்னைச் சட்டசபை கூடியதற்குப் பின்னர் ஓர் இந்து பொடி வியாபாரி அநியாயமாய்க் கொல்லப்பட்டு அவன் தேகம் லாடர் கேட்டுக்குச் சமீபத்தில் - சேரிக்கு அருகில் எறியப்பட்டுக் கிடந்தது. இச்சம்பவம் நிகழ்ந்தேறி ஒருமாத காலமாகியும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. சென்ற சட்டசபைக் கூட்டத்திற்குப் பின்னர் அநேக இந்துக் களின் குடிசைகளும், முகம்மதியர்களின் குடிசைகளும் தீக் கிரையாக்கப்பட்டன. இதன் பயனாகக் குடிசை யொன்றிலிருந்த முகம்மதியரொருவர் வெந்து இறந்துபோனார். குடிசை களுக்குத் தீ வைத்தவர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. இக்காரியங்களெல்லாம் போலிசாரின் திறமைக் குறைவைக் காட்டவில்லையா? போலிசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், குற்றம் நிகழாமல் பார்த்துக் கொள்வதிலும் தமது கடமையைச் சரிவர செய்யாமல் இருந்து வருகின்றனர் அல்லவா? முதலில் கொளுத்தப்பட்ட குடிசைகள், வீடுகள் தவிர, மற்ற சமயங்களில் கொளுத்தப்பட்டனவற்றில் குடிசை களுக்கும் பொருளுக்கும் ஒருவிதமான நஷ்டமும் ஏற்படவில்லை. சாமான்களெல்லாம் அப்புறப் படுத்தப்பட்டன. ஆகடு 5ஆந் தேதியில் குடிசைகள் கொளுத்தப்பட்டுப் போனவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க 4 லட்ச ரூபா செலவழிக்கப் படலாமென்று ஆலோசனை செய்யப்பட்டது. கமிட்டியார் இரண்டு லட்ச ரூபா தான் ஒதுக்கிவைக்க விரும்பினர் - குடிசைகளைக் கொளுத்திவிட்டால் அரசாங்கத்தார் நல்ல கட்டிடங்களைக் கட்டிக் கொடுப்பர் என்ற எண்ணங் கொண்டு மக்கள் குடிசை களைத் தாங்களாகவே கொளுத்தி விடுகிறார்கள் என்றுஞ் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த மூன்றுமாத காலங்களில் போலிசார் கூட்டங் களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றனர். குழப்பம் காரணமாகவே போலிசார் சுடவேண்டிய அவசியம் ஏற்பட்டதென்று சொல்லப்படுகிறது. போலிசார் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இரையானவர்கள் அனைவரும் ஜாதி இந்துக் களாயிருப்பது ஆச்சரியத்தையே விளைவிக்கின்றது. போலிசார் துப்பாக்கிப் பிரயோகத்தின் பயனாய் வேறு ஒருவருக்காவது காயமும் ஏற்படவில்லை; உயிர்ச் சேதமும் நிகழவில்லை. சர் வில்லியம் எயிலிங் கமிட்டிக்கு முன்னர் நடைபெற்ற விஷயங்களை யான் எடுத்துச் சொல்லப் போவதில்லை. ஆகட் 29ஆந் தேதியில் போலிசார் ஜனங்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதன் பயனாய் 30 பேர் காயமடைந்தும் ஒரு பெண்மணி உட்பட எழுவர் இறந்தும் போயினர். காயமடைந்தவரும் இறந்த வரும் ஜாதி இந்துக்களே யாவர். அக்டோபர் 5ஆந் தேதியில் குயப்பேட்டையில் போலிசார் செய்த துப்பாக்கிப் பிரயோகத்தின் பயனாய் 15 பேர் காயமடைந்தும் ஒருவரோ இருவரோ இறந்தும் போய்விட்டனர். இவ்விடத்திலும் காயமடைந்தவரும் இறந்தவரும் ஜாதி இந்துக்களேயாவர். செப்டம்பர் 19ஆந் தேதியில் புரசையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இராஜரத்தின முதலியார் மோவாய்க் கட்டையின் மீது குண்டு விழுந்தது. இவையெல்லாம் போலிசாரின் திறமைக் குறைவைக் காட்டவில்லையா? இவைகளெல்லாம் போலிசார் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் சரியாய்க் காரியங் களைச் செய்யவில்லை என்பதைப் புலப்படுத்தவில்லையா? ஆதிதிராவிடர்கள் மீது ஜாதி இந்துக்கள் சுமத்திய குற்றச் சாட்டைப் போலிசார் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற விஷயமும் எயிலிங் கமிட்டி முன்னிலையில் சொல்லப்பட் டிருக்கிறது. குடிசைகளுக்குத் தீ வைத்தவர் யார் என்பதைப் போலிசார் இன்னும் கண்டுபிடியாமல் இருக்கின்றமையால் ஜனங்கள், போலிசார் ஆதிதிராவிடர் பக்கம் இருக்கின்றனர் என்று கருதுவதல்லாமல் அவர் செய்யும் குற்றங்களும் விட்டு விடப்படுகின்றன என்றும் கருதுகிறார்கள். மில் பிரதேசத்தில் இருக்கும் போலி உத்தியோகதர் மாதமொன்றுக்கு இருநூறு முந்நூறு ரூபா சம்பளம் வாங்கும் இன்பெக்டராய் இருக்கிறார். இவரை அடிக்கடி 2,500 ரூபா சம்பளம் வாங்கும் தொழிற் கமிஷனரும், அறுநூறு ரூபா சம்பளம் வாங்கும் அவரது கூட்டாளியும் கண்டு போகின்றனராம். ஆதிதிராவிடர் களுக்குச் சாதகமாக இவர் இன்பெக்டரிடம் பேசுகின்ற னராம். போலி இன்பெக்டர், தொழிற் கமிஷ்னர் - தாழ்ந்த வகுப்பினரின் இரட்சகர் - கட்டளைகளைக் கொண்டு நடக்க வேண்டியவரா யிருக்கிறார்! (தணிகாசலம் செட்டியார் மாயர் (லேபர் கமிஷ்னர்) மீது துவேஷங் காட்டிப் பேசுகிறார். ஆனதுபற்றி அவர் பேசுவதைக் கண்டிக்க வேண்டுமென்று கனம் ஹோம் மெம்பர் இச்சமயத்தில் கூறினார்.) ஹோம் மெம்பர் கடைசியில் பதில் இறுக்கலாம் என்று கூறிவிட்டுத் தணிகாசலம் செட்டியார் பின்னும் பேசியதாவது:- ஜாதி இந்துக்களும், முகம்மதியர்களும் தொழிற் கமிஷ்னரின் உதவியை நாட இஷ்டப்படவில்லை. இன்னும் அவரது யோசனையையும் கேட்க இஷ்டப்படவில்லை. மாயர் தொழிலாளர்களின் கமிஷனராகவும் ஆதிதிராவிடர்களின் இரட்சகராகவும் இருந்து வருகிறார் என்று ஜனங்கள் கருதுகின்றனர். வேலைக்குப் போகாமல் சாலையோரங்களில் நின்று கொண்டிருக்கும் ஜாதி இந்துக்களின் மீது வேலைக்குப் போகும் கருங்காலிகள் ஏதாவது குறும்பு செய்தால் போலி இன்பெக்டர் அவர்களைக் கண்டிக்கப் பிரியப்படுவரா? ஆகட் 29ஆந் தேதியிலும் அக்டோபர் 5ஆந் தேதியிலும் போலிசார் ஜனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த விஷயமாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது சாட்சியங் கொடுத்தவர்கள் இவ்விரு சமயங்களிலும் தொழிற் கமிஷ்னரான மாயர் போலி இன்பெக்டருடன் இருந்தா ரென்று சொல்லப்படுகிறது: போலிசார் அமைதியைக் காக்க ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்படியிருக்கக் குழப்பம் நடைபெறும் இடங்களில் மாயருக்கு என்ன வேலையிருக்கிறது? அவர் இருப்பதனால் போலிசார் பட்சபாதமின்றிக் காரியங் களைச் செய்ய இயலாமலும் போகலாம். மாயரின் எதிரிலேயே போலி இன்பெக்டர் கருங்காலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வரா? துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்குக் கட்டளை கொடுப்பவர் எந்த உத்தியோகதர் என்பதைப்பற்றிக் கவனிக்கவேண்டும். குழப்பங்கள் நடைபெறும்போது பிரதம மாஜிட்ரேட்டாகிலும் வேறு எந்த மாஜிட்ரேட்டாகிலும் (குழப்பம் நடைபெறும்) இடத்திற்கு அழைக்கப்பட்டனரா? மாயருக்குச் சங்கதி தெரியப்படுத்தியதைப் போலப் பிரஸி டென்ஸி மாஜிட்ரேட்டுகளுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களும் வந்திருக்க மாட்டார்களா? அம்மாதிரி செய்யப் பட்டதா? இல்லையானால் ஏன்? சில விஷயங்களில் போலி கமிஷ்னர் மாஜிட்ரேட்டாய் இருந்தாலும், அன்னார் பிரஸிடென்ஸி மாஜிட்ரேட்டுக்குக் கீழ்ப்பட்டவராயிருக் கிறார். துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்குமுன் உயர்தர மாஜிட்ரேட்டின் கட்டளையைப் பெறவேண்டும். இம் மாதிரியாகக் கட்டளை வாங்கப்பட்டதா? துப்பாக்கிப் பிர யோகம் செய்வதற்குமுன் உயர்தர மாஜிட் ரேட்டின் கட்டளையைப் பெற வேண்டும். இம்மாதிரியாகக் கட்டளை வாங்கப்பட்டதா? துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டபோது போலி கமிஷ்னரேனும் வந்திருந்தனரா? அக்டோபர் 5ஆந் தேதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது மிகவும் வெறுக்கத் தக்க செயலாகும். அக்டோபர் 4ஆந் தேதி வெளியான பத்திரிகைகளில் ஹான் கின்சன் மாற்றப்படப்போகிறாரென்று காணப்பட்டது. 5ஆந் தேதியில் 15 பேர் சுடப்பட்டனர்! ஒருவர் அல்லது இருவர் இறந்தனர். மாயர் ஒரு மோட்டார் லாரியில் போலி கான் டேபில்களுடனும் இன்பெக்டர்களுடனும் சார்ஜண்டு களுடனும் வந்தாரென்று துப்பாக்கிப் பிரயோகத்தைப் பற்றிய விசாரணையின்போது கூறப்பட்டது. மாயர் வந்த பிறகு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. (மாயர் வந்த பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதென்பதற்கு அத்தாட்சி காட்ட முடியுமா என்று கனம் ஹோம் மெம்பர் கேட்டார். இம்மாதிரி கேட்பது சரியன்று என்று சட்டசபைத் தலைவர் கூறி விட்டார்.) மேலும் தணிகாசலம் செட்டியார் கூறியதாவது:- மாயர், சுடுவதற்கு யாரும் கட்டளையிட்டதாகத் தமக்குத் தெரியவில்லையென்று அறிவிக்கிறார். கான்டேபில்கள் மிடர் ஹான்கின்சனும் சார்ஜண்டுகளும் சுடுவதற்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார்கள். மிடர் ஹான்கின்சன் தாம் சுடச்சொல்லவில்லை யென்று கூறுகிறார். ஒரு கான் டேபில் மிடர் ஹான்கின்சனும் மிடர் மாயரும் சுடுவதற்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார். ஜனங்கள் சுடப்பட்டும் கொல்லப்பட்டும் போன விஷயம் யாரால் செய்யப்பட்ட தென்பது இன்னமும் சரியாய்த் தெரியாமலே யிருக்கிறது. இவையெல்லாம் தண்டப் போலி ஏற்பட்ட பின்னர் நடந் தேறிய சம்பவங்களாகும். நிர்வாக அரசாங்கத்தார், போலி இலாகாவும் தொழில் இலாகாவும் தத்தம் கடமைகளைச் சரிவர செய்யாதிருப்பதைக் கண்டு ஏன் வீணாய் இருக்கின்றனர்? அரசாங்கத்தார் தம் கீழ் இருக்கும் டிபார்டுமெண்டுகளில் திறமைக் குறைவை யறிந்து அவைகளைச் சரிப்படுத்த வேண்டாமா? சமீபத்தில் நடந்தேறிய விஷயங்கள் கவர்னர் களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கவில்லையா? இங்கிலாந்தின் மாஜி நீதிபதியும் தற்போது இந்தியாவின் இராஜப் பிரதி நிதியாயுமிருக்கும் லார்டு ரெடிங் தம் சகாக்களில் ஒருவரான சர் தாம ஹாலண்டு தம் கடமையினின்று ஒரு சிறிது பிறழ்ந்து விட்டதற்காக அவரை வேலையினின்று நீங்கிவிட வற்புறுத்த வில்லையா? அதைப் போலவே மாகாண கவர்னர்களும் தங்கள் சகாக்கள் விஷயமாக நடந்து கொள்ள வேண்டும். (தணிகாசலம் செட்டியார் கவர்னர் மீது குறை கூற வில்லையா? அதைத் தடுக்க வேண்டாமா? என்று ஹோம் மெம்பர் கேட்டார். தலைவர் அம்மாதிரி யொன்று மில்லை யென்று பதிலிறுத்தார். சர் தாம ஹாலண்டு வற்புறுத்தப் பட்டு வேலையினின்று நீங்கும்படியாய்ச் செய்யப் பட்டா ரென்று தணிகாசலம் செட்டியார் கூறினார் என்று ஹோம் மெம்பர் சொன்னார்.) ஹோம் மெம்பர் கடைசியில் பதிலிறுக்கலாம் என்று கூறித் தொடர்ந்து தணிகாசலம் செட்டியார் பேசியதாவது:- கடந்த நூறு தினங்களாகச் சென்னையின் நிலை கவலைக் கிடமாகவே யிருந்து வருகிறது. கூடிய சீக்கிரத்தில் ஒருவித முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதைப் பற்றியும், அம்மாதிரி செய்தது நியாயந் தானா என்பதைப் பற்றியும், எல்லாக் குற்றவாளிகளும் சரி சமமாகக் கருதப்பட்டனரா என்பதைப் பற்றியும், தொழில் இலாக அதிகாரி போலி இலாகாவுடன் கலந்து காரியங் களைச் செய்ததனால் போலி இலாகாவின் திறமை குறைந்து போகவில்லையா என்பதைப் பற்றியும் ஆராய ஒரு பகிரங்க விசாரணை நடைபெறல் வேண்டும். (கனம் டேவிட்ஸன்) (புளியந்தோப்புக் கலவரங்களைப்பற்றிப் பேசும் போது அரசாங்கத்தார் நகரில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அங்கத்தினர் தக்க யோசனை கூறுவரென்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கத் தினர் கமிட்டி ஒன்று நியமிக்கப்படவேண்டுமென்று சிபார்சு செய்திருக்கின்றனர். கமிட்டிக்கு அங்கத்தினரைத் தேடுவது பெருத்த கஷ்டமாய் இருந்து வருகிறது. இரண்டாவதாக மில்லை மூடிவிட வேண்டுமென்று அங்கத்தினர் கூறுகிறார். மில்லை மூடிவிட்டால் அநேகம் பேர் வேலையில்லாமல் கஷ்டப்படவேண்டியதா யிருக்கும். அரசாங்கத்தார் மில்லை மூடும்படி சொல்லமாட்டார். கடந்த ஐந்து தினங்களில் ஏதாவது கலவரம் நடை பெற்றதா என்று சர்.பி. தியாகராய செட்டியார் கேட்டார். சென்ற புதன்கிழமை பிற்பகலிலிருந்து ஒருவிதமான குழப்பமும் நடைபெறவில்லையென்று கனம் டேவிட்சன் கூறினார். குழப்பம் அடங்கியிருப்பது அவ்விடத்திலிருந்த உத்தி யோகதர் மாற்றப்பட்டமையா காரணம் என்று சர். தியாகராய செட்டியார் கேட்டார். கனம் மெம்பர் இன்பெக்டர் ஹான்கின்சனைப்பற்றிக் கூறுவதாயிருந்தால் அவர் கூறும் விஷயம் தப்பானதாகு மென்றும், இன்பெக்டர் கலவரம் நடைபெறாத போதும் அவ்விடத்திலேதான் இருந்தாரென்றும் ஹோம் மெம்பர் கூறினார். இப்போது கலவரப் பிரதேசத்தில் இருக்கும் இன் பெக்டர், ஜனங்கள் கூட்டங் கூட்டமாய் இருக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கின்றனரா என்று சர்.தியாகராய செட்டி யார் கேட்டார். கலவரப் பிரதேசத்தில் இருக்கும் இன்பெக்டர் எம்மாதிரியான ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது தமக்குத் தெரியாதென்றும், மூன்றாவதாக உத்தியோகதர்கள் மாற்றப்பட வேண்டுமென்று சிபார்சு செய்யப்பட்டிருப்ப தாகவும், அரசாங்கத்தார் குறிப்பிட்ட உத்தியோகதர் மீது குற்றஞ் சாட்டப்பட்டால் விசாரிக்கச் சித்தமாயிருக்கின்றனர் என்றும், மாயர் கலவரப் பிரதேசத்தில் இருந்தமையால் அதிகமான நன்மை ஏற்பட்டதென்றும் கனம் டேவிட்சன் கூறினார். * * * தணிகாசலம் செட்டியார் பேசி முடித்ததும் சில அங்கத்தினர் ஓட் எடுக்கவேண்டுமென்று கூறினர். nf.ஸ்ரீÃthr ஐயங்காரும் இன்னும் சிலரும் 6-30 மணி ஆக இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது என்று கூறினர். தலைவர் மணி என்ன வென்று காரியதரிசியைக் கேட்க அவர் 6-30 என்று சொன்ன வுடன் தம் பீடத்தை விட்டு விலகினார்) - நவசக்தி (21-10-1921) மதுரைப் பிள்ளை ராவ்பஹதூர் மதுரைப் பிள்ளை ஓர் ஆதிதிராவிடத் தலைவர்; செல்வர்; (1921) வேலைநிறுத்தத் தொடக்கத்தில் ஆதிதிராவிடர்க்கும் மற்றவர்க்கும் பலவழியிலும் உதவி புரிந்தவர் - வேலைநிறுத்த உண்மை விளங்கிய பின்னர் அவரிடத்துப் பிறந்த கருத்தை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும். தென்னேரி அகரத்தில் (1-10-1922) கூடிய செங்கற்பட்டு ஜில்லா முதல் ஆதிதிராவிட மகாநாட்டில் அக்கிராசனம் வகித்த மதுரைப் பிள்ளையின் பிரசங்கத்தில் புளியந்தோப்புச் சச்சரவுகளைப்பற்றிக் காணப்படும் முக்கிய விஷயங்கள் வருமாறு :- புளியந்தோப்பில் சமீபத்தில் ஏற்பட்ட சச்சரவுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் கேட்டாகிலும் பத்திரிகைகள் மூலமாய்த் தெரிந்து கொண்டாகிலு மிருக்கின்றீர்கள். பக்கிங்ஹாம் கர்னாடிக் மில்களில் எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த சுமார் பதினோராயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இத்தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குறைகளை நிவர்த்தித்துக் கொண்டு நன்மையடைவதற்காகச் சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை என்பது ஆப்த மொழியாகும். இம் மாதிரி இவர்கள் சேர்ந்து வாழ்ந்து நாளுக்கு நாள் தங்கள் எஜமானர்களிடமிருந்து அதிக சம்பளமும் குறைந்த வேலை நேரமும் இதர சௌகரியங்களும் பெறலானார்கள். இச்சௌகரியங்களை யெல்லாம் அவர்கள் வெகு சுலபமாய்ப் பெற்றுவிட முடியவில்லை. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் அநேக முறைகளில் சச்சரவுகள் நிகழ்ந்தேறி வந்திருக்கின்றன. இதன் பயனாய் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். சில சமயங்களில் கதவடைப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சச்சரவுகளில் சில, அநேகமாதகாலம் வரையும் நீடித்திருந்திருக்கின்றன. இப்படியிருந்தும் தொழிலாளர்கள் தங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படும் வரை முதலாளிகளுக்கு விட்டுக் கொடாமலே இருந்து வந்தார்கள். வேலை நிறுத்தங்களும் கதவடைப்புக்களும் ஏற்பட்ட நாட்களிலெல்லாம் சங்கத்தின் அங்கத்தினர்களாய் இருந்து வந்த ஆதிதிராவிடத் தொழிலாளர்கள், ஜாதி இந்து சகோதரர்களுடன் சேர்ந்தே அவர்கள் முதலாளிகளிடமிருந்து நன்மைகளையும் உரிமைகளையும் பெற்றுள்ளார்கள். தொழிலாளர் சங்கத்தில் ஐக்கியம் பலப்பட்டு இருந்திருக்க, சென்ற வருடத்தில் ஏற்பட்ட மில் குழப்பத்தில் சம்பந்தப்பட்டு, ஜாதி இந்து சகோதரர்களுடன் சேர்ந்திருந்த ஆதிதிராவிட சகோதரர்களைச் சங்கத்தினின்று பிரிந்து வேலைக்குப் போகும்படி ஆலோசனை கூற, எம்.சி.ராஜாவுக்கு என்ன அவசியம் நேரிட்டது என்பதை அறிய விரும்புகிறோம். சென்ற வருட சச்சரவானது தொழிலாளர்க்கும் முதலாளிகளுக்கும் ஏற்பட்டதேயாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற சச்சரவுகளின் போது ஒரு முடிவை உண்டாக்கிக் கொண்டவர்கள் இப்போதும் உண்டாக்கிக் கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள். வேலைக்குத் தூண்டப்பட்டதன் மேல் சென்ற நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடத் தொழிலாளர்கள் செய்த வேலையைச் செய்ய முடிந்திருக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆதி திராவிடர்களை ஜாதி இந்து தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கான தேர்ச்சியடைந்த ஜாதி இந்து தொழிலாளர்களிடமிருந்து பிரித்தது ஒரு தந்திரமேயாகும். சுலபமாய்க் கண்ணியமும் பெயரும் சம்பாதித்து விட வேண்டுமென்ற கருத்துக் கொண்ட சில பொறுப்பற்றவர்கள் தங்கள் ஜாதியினரை வேலை நிறுத்தத்தினின்று பிரித்துச் சென்னை இராஜதானியிலுள்ள பிரபலமான தொழிற்சங்கத்தில் உண்டான வேலை நிறுத்தத்தை உடைத்தெறிந்து விட்டோம் என்ற பெயரையும் இறுதியில் பெற்று விடுவதற்காக இம்மாதிரியான காரியங்களைச் செய்தார்களோ என்னவோ தெரியவில்லை. இன்னும் வேறெந்த நோக்கங்களைக் கொண்டு அவர்கள் காரியங்களைச் செய்தார்களென்பது அவர்களுக்குத்தான் தெரியும்! இதுவரை ஒன்றுபட்டுழைத்த சங்கத்தில் பிளவு ஏற்பட்டதனால் நிகழ்ந்தவை எல்லாருக்கும் தெரிந்ததே யாகும். இத்தகைய பிளவு ஏற்படாதிருக்கும் பட்சத்தில் வருந்தத்தக்க புளியந்தோப்பு சம்பவம் சென்னைச் சரித்திரத்தில் நிகழ்ந்திராது. தொழிலாளர்களுக்குள் பிளவை உண்டாக்கியதனால் குழப்பங்களும் கொலைகளும் தீவிபத்துக்களும் கொள்ளைகளும் ஜாதிச்சண்டைகளும் நிகழ்ந்தேறின. இத்தகைய சம்பவங் களுக்கிடையில் கண்ணியமும் சிறப்பும் அடைவதெப்படி? உதவி யற்றவர்களும் ஒன்றும் அறியாதவர்களுமான ஆதிதிராவிடர்களைத் தன்னந்தனியராய்க் கஷ்டமான நிலைக்கு உள்ளாக்கிவிட்டவர்கள் சச்சரவின் மத்தியினின்று விலகி எங்கேயோ போய்விட்டார்கள்! இதனால் ஆதிதிராவிடர்கள் தங்களைத் தாங்களாகவே கவனித்துக் கொள்ள வேண்டியவர்களானார்கள். புளியந்தோப்புச் சச்சரவுகளைப் பற்றி இன்னும் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டு போகலாம். ஆனால் காலத்தை உத்தேசித்து இவ்வளவில் நிறுத்துகிறேன். - நவசக்தி (13-10-1922) எம்.சி.ராஜா உலகில் பெறுதற்கரியது எது? நட்பு. செயற்கரிய யாவுள நட்பின் என்றார் திருவள்ளுவரும். நட்பு என்னும் பொருளுக்கு உரியவர் சிலராகவே இருப்பர். நண்பர் சிலர் உறவை என் வாழ்க்கை பெற்றது. அந் நண்பருள் ஒருவர் திவான்பகதூர் எம்.சி.ராஜா. எம்.சி.ராஜா வுக்கும் எனக்கும் உற்ற நட்பு, அரசியல் உலகில் எங்களுக்குள் நேர்ந்த வேற்றுமை எங்களைத் துப்பாக்கி குண்டுகளிடை நடமாடச் செய்த காலத்தும், குலையாதிருந்தமை இங்கே குறிக்கத் தக்கது. எம்.சி. ராஜாவும் யானும் இராயப்பேட்டையில் வதிந் தோம்; வெலி கல்லூரி மாணாக்கரானோம்; வெவ்வேறு வகுப்பில் படித்தோம். பின்னே கிறிதுவக் கல்லூரி அவரை விரும்பியது. ராஜா கிரிக்கெட் ஆட்டத்தில் வல்லவர். அவரது கிரிக்கெட் திறம் என் உள்ளங் கவரும்; நண்பகல் வெயிலையுங் கருதச் செய்யாது. பின்னாளில் எம்.சி. ராஜாவும் யானும் வெலி கல்லூரியில் தொண்டு செய்யும் பேறு பெற்றோம். அவர் முதல் வகுப்பு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளரானார்; யான் தமிழ்ப் பேராசிரியனானேன். 1916 ஆம் ஆண்டில் முளைத்தது ஜடி கட்சி. எம்.சி. ராஜாவின் மனம் அக்கட்சியில் ஈடுபட்டது. என் நெஞ்சம் அதில் ஈடுபடவில்லை. எங்களுக்குள் சொற்போர் நடைபெறும். சொற்போர் தன்னளவிலேயே நிற்கும். அஃது எங்கள் நட்பை அரிக்கும் ஆற்றல் பெறவில்லை. தேசபக்தன் ஆசிரியப் பதவி ஏற்கக் கல்லூரியை விடுத்து விலக வேண்டுமென்று யான் கொண்ட உறுதியை மறிக்க ராஜாவின் மனம் எழுந்தது. அவ்வெழுச்சி செயலாகத் திரண்டு என்னைத் தாக்கவில்லை. 1921ஆம் ஆண்டு நினைவுக்கு வருகிறது. புளியந்தோப்புக் குழப்பமும் பிறவும் என் எண்ணத்தில் படிப்படியே உறுகின்றன. எம்.சி. ராஜா ஒரு சார்பிலும், யான் மற்றொரு சார்பிலும் நின்ற காட்சி புலனாகிறது. அமர்க்களம் தோன்றுகிறது. அப்பெரும் போரிலும் எங்கள் நட்புக்குச் சோதனை நிகழவில்லை. போர்த் துவக்கத்தில் ராஜா என்னை அடிக்கடி சந்திப்பர். பிடிவாதம் வேண்டாம். வில்லிங்டன் ஆட்சி உம்மைத் தொல்லைப்படுத்தும் என்பர். நீங்கள் தொழிலாளர் சங்கத் தலைமைப்பதவியை ஏற்றுப்பாருங்கள். உண்மை விளங்கும் என்பேன். எனது சமூகம் மிகத் தாழ்ந்த நிலைமையிலிருக்கிறது. mij K‹nd‰w murh§f¤ Jiz njitahÆU¡ »wJ.***’ என்று உரைத்தனர். அதற்கு யான் என்ன பதி லிறுத்தேன்? ஆதிதிராவிடர் தொழிலாளர் இனத்தில் சிறந்து விளங்குவோர்; அவரைப் புரட்சியாளராக்குதல் வேண்டும் என்னும் நோக்குடனும் யான் தொழிலியக்கத்தில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியும். தொழில் இயக்கத்தில் சாதிப்பிணக்கைக் கொணர்ந்து நுழைப்பது நல்லதன்று என்ற சொன்னேன். அதற்கு, நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பயனை மேல்சாதியாரே அநுபவிப்பர். அதனால் நீங்கள் மூட்டுந் தீயைத் தணிக்கவேண்டுவது எனது கடன் என்று உணர்கிறேன் என்று கருத்து ராஜாவினிடமிருந்து பிறந்தது. தொழிலாளர் இயக்கம் சாதி மதங்களைக் கடந்தது. அவ்வியக்கம் ஆக்கம் பெறப் பெறச் சாதி மதக் கட்டுகள் தாமே இரிந்தொழியும். பிணக்குக்கு நீங்கள் மூலராக நில்லாதேயுங்கள் என்றேன். நீங்கள் அகப்பொருள் படித்தவர். கூடலுக்கு ஊடல் வேண்டுமன்றோ? யான் ஊடலை உண்டுபண்ண உழைக்கி றேன். அது பின்னே கூடலுக்கு ஆக்கந் தேடுவதாகும் என்று விளையாட்டாகப் பேசி நண்பர் அகன்றார். குழப்பம் பெருகித் ததும்பி வழிந்த வேளையில் ஒருநாள் இரவு ராஜா என்னைச் சந்தித்தார்; என்ன சொன்னார்? எனக்குப் போலி துணை, இராணுவத்துணை, கார்துணை முதலியன உண்டு. என் கையில் ரிவால்வர் இருக்கிறது பாருங்கள். உங்களுக்கு ஒரு துணையுமில்லை. குழப்பத்திடை நடமாடுகிறீர். ***நேற்றிரவு இவ்வெண்ணம் தோன்றி என்னை வாட்டியது என்று பகர்ந்தார். அதுபோழ்து நட்புத்திறம் எனக்கு நன்றாய் விளங்கியது. என் செய்வது! எனக்கு ஆண்டவன் தொழிலாளர் இயக்கமாகித் துணை செய்கிறான். தொழிலாளர் சேனை என் பக்கம் நிற்கிறது. உங்கள் பக்கமுள்ள ஆதிதிராவிடரின் மனத்துணையும், எனக்கு உண்டு என்று உரைத்துச் சில நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டினேன். (முன்னே பார்க்க) தொழிலாளர் குழப்பக் காலத்தில் நண்பர் எம்.சி. ராஜா இராயப்பேட்டையை விடுத்து ஆலந்தூரை அடைந்தார். அதனால் அவரை அடிக்கடி காண்டல் இயலாமற்போயிற்று. ஒருநாள் காலை ராஜாவின் வண்டி வீட்டெதிரிலே திடீரென வந்து நின்றது. ராஜாவின் கண்களில் நீர் தேங்கிய காட்சி கண்டேன்; என்ன என்று கேட்டேன். உங்களுக்குத் தொல்லை நெருங்கியிருக்கிறது என்று அவர் வாய்மொழிந்தது. நாடு கடத்தும் தொல்லைதானே. இந்நிலையில் என் செய்வது! நிகழ்வது நிகழ்க என்று சொல்லி அவருக்கு விடை கொடுத் தேன். (இதைப்பற்றிய குறிப்புக்கள் மேலே போந்துள்ளன.) குழப்பம் முற்றுப் பெற்றது. எங்கள் நட்புக் குலைந்ததோ? இல்லை. நாங்கள் நண்பராகவே காலங்கழித்தோம். இராயப் பேட்டையிலே பல சிக்கல்கள் நேரும். அவைகளை ஒழிக்க யான் முயல்வேன். அம்முயற்சிக்கு ராஜாவின் துணை கிடைத்துக் கொண்டே இருக்கும். எம்.சி. ராஜா இங்கிலாந்து நோக்கிய போதும் எனக்கு முடங்கல் தீட்டிய வண்ணமிருப்பர்; மந்திரியாய போதும் என்னை மறந்தாரில்லை; அப்பொழுதும் நண்பராகவே விளங்கினார். இரட்டைமலை ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பெரும் ஆதிதிராவிடத் தலைவர். அவருக்கு எண்பத்தோராம் ஆண்டு விழா, சென்னை விக்டோரியா மண்டபத்தில் கொண்டாடப் பட்டது. அவ்விழாவில் தலைமை பூணும்பேறு சிறியேனுக்கு வழங்கப்பட்டது. அவ்வேளையில் என்னைப்பற்றி ராஜா பேசுதல் நேர்ந்தது. அப்பேச்சிடை, ***திரு. வி.க. அவர்கள் நம்மிடைப் பதினெட்டாம் வயதிலிருந்து சேவை செய்து வருகிறார். அச்சேவை அவரை இப்பெரியார் ஆண்டு விழாக் கூட்டத்திலே தலைமை வகிக்கச் செய்திருக்கிறது. இவர் சாதி கடந்து நமது சமூகத்துக்கு ஆற்றிய விளம்பரமற்ற தொண்டு நமக்குத் தெரியும் ***என்று குறித்தனர். கூட்டம் முற்றுப்பெற்றது. ராஜாவும் யானும் வேறு சிலரும் சிறிது நேரம் தனித்து அளவளாவினோம். அப்பொழுது ஒருவர், 1921 ஆம் ஆண்டுக் குழப்பத்தை நினைவூட்டி விட்டார். நண்பர் ராஜா அவரை நோக்கி, குழப்பக் காலத்திலும் திரு.வி.கவும் யானும் பிணங்கிய தில்லை. கருத்து வேற்றுமைக்கும் நட்புக்கும் தொடர்பில்லை. கருத்து வேற்றுமை காரணமாகப் பிணங்குவது நட்பாகாது. 1921 ஆம் ஆண்டில் யான் என்ன தவறு செய்தேன்? காலநிலை சமூகநிலை முதலியவற்றை உளங்கொண்டே யான் கட னாற்றினேன். சமீபத்திலே ஒரு பெரிய வேலை நிறுத்தம் நேர்ந்தது. அதிலே யான் தலையிட்டேனா? இல்லை. ஏன்? ஆதிதிராவிடரும் சாதி திராவிடரும் மற்றவரும் மிக ஒற்றுமை யாயிருத்தல் கண்டேன். அவ்வொற்றுமையை உண்டாக்கியவர் யார்? திரு.வி.க. மட்டுமல்ல; யானும் என்று சொல்வேன். இயக்கத்திலே அவர் இணங்கிய முறையில் உழைத்தார்; யான் பிணங்கிய முறையல் (1921) உழைத்தேன். அப்பிணக்கம் இப்பொழுது என்னாலும் எவராலும் பிரிக்க இயலாத இணக்கமாய்ப் பரிணமித்துள்ளது. நட்பு இணக்கமாகவும் பிணக்கமாகவும் தொண்டு செய்தது*** என்று கூறினர். எல்லாரும் நகைத்தனர். குழப்பக் காலத்தில் எம்.சி. ராஜாவுக்குப் பக்கத் துணை வராயிருந்தவர் சிலர். அவருள் தேசிகானந்தரும் ஒருவர். அவரும் இப்பொழுது தொழிலாளர் தோழராயினர். பின்னே நிகழ்ந்த ஒரு பெரிய வேலை நிறுத்தக்காலத்தில் அப்பெரியார் சென்னைத் தொழிலாளர் சங்க மேடையில் பேசி முதலாளிகள் பிடிவாதத்தை மறுத்தனர். தேசிகானந்தரும் யானும் ஒன்று பட்டுச் சமயம் நேரும்போதெல்லாம் சமயத் தொண்டும் ஆற்றி வருகிறோம். என் வாழ்க்கையில் நட்புக்கு இலக்கியமாக யான் கண்டவருள் ஒருவராகிய எம்.சி. ராஜா எனது மணி விழாக் குழுவிலும் ஒருவராய் விளங்கினர். மணி விழாவில் அவர் தம் பருவுடல் கலந்து கொள்ளவில்லை; அவர்தம் நுண்ணுடலே கலந்துகொண்டது. நுண்ணுடல் தாங்கியுள்ள ராஜா இன்னும் என் நண்பரே. அந்நட்புக்கு அழிவு கிடையாது. பக்கிரிசாமி பிள்ளை நாகை நாயகம் பக்கிரிசாமி பிள்ளை செல்வர்; நல்லவர். அவரை யான் முதல் முதல் சென்னை மாகாணச் சங்கச் சார்பில் தஞ்சையில் கண்டேன். அப்பொழுது அவர் அச்சங்கத்தின் உதவித்தலைவருள் ஒருவராயிருந்தார். 1919ஆம் ஆண்டு யான் காங்கிர பிரசாரத்தை முன்னிட்டு நாகை சென்றேன். நாகை அந்நாளில் தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் கோட்டையா யிருந்தது. டாக்டர் வரதராஜலு அங்கே சென்று சென்று தொழிலாளரிடைக் காங்கிர பக்தியைப் பெருக்கி வந்தனர். எனது காங்கிர பேச்சு டாக்டர் மூட்டிய தேசபக்திக் கனலில் சுயராஜ்ய வேட்கைநெய் விடுவது போன்றிருந்ததை யான் உணர்ந்தேன். அப்பொழுது அங்கே நாட்டுக் கல்வி வாரக் கொண்டாட்டக் கூட்டம் ஈட்டப்பட்டது. தலைமை பூண்டவர் பக்கிரிசாமி பிள்ளை. என் பேச்சில் தொழிலாளர் இயக்கத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தினேன். அப்பேச்சு, தொழி லாளர் சார்பில் ஒரு தனிக் கூட்டங் கூட்டத்தோழர்களைத் தூண்டியது. தொழிலாளர்க்கென்று ஒரு தனிக் கூட்டங் கூடியது. பக்கிரிசாமி பிள்ளையே தலைமை வகித்தார். யான் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் தொழிலியக்கத்தைப் பற்றிப் பேசினேன். தொழிலாளரிடைக் கிளர்ச்சி மூண்டது. தலைவர் நாகையில் தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர்க்கென்று ஒரு சங்கங் காண முயல்வதாக உறுதி கூறினர். அவர் முயற்சியால் சங்கங் காணப்பட்டது. யான் தஞ்சை நோக்கும்போதெல்லாம் பெரிதும் நாகைக்குச் செல்வதை ஒரு விரதமாகக் கொண்டேன். பக்கிரிசாமி பிள்ளை ஜடி கட்சியில் சேர்ந்த பின்னரும் அவர் தொழிலாளர் சங்கத்தில் தொண்டாற்றியே வந்தார். அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் வகுப்பு வாதம் பேசுவர். நல்லவர் கெட்டவர் எல்லா வகுப்பிலும் உளர். பிறப்பில் உயர்வு தாழ்வு எப்படியோ நமது நாட்டில் நுழைந்துவிட்டது. அதைப் போக்க முயலவேண்டுவது அறிஞர் கடமை. கலப்பு மணம் பெருகினால் பிறப்பு வேற்றுமை ஒழியும் என்று சொல்வேன். பக்கிரிசாமி பிள்ளை உலக வாழ்வை நீத்த பின்னர் நாகைச் சங்கம் பாரிடர் சுப்பிரமணியஞ் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. அச்சமயத்தில் ஏழாம் ஆண்டு விழா என் தலைமையில் கொண்டாடப்பட்டது. எனக்குக் கூறிய 1நன்மொழியில், மற்றவர் சேவையும் பாராட்டப்பட்டது. குறிப்பு எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பலசமய ஆராய்ச்சிப் பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப்படையாயுள்ள பொதுமை சமரசம் - ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்; சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவ தில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கஞ் செய்தது. அவ்விளக்கம், பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்த வல்லது காரல் மார்க் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம்பெறச் செய்தது. காந்தியடிகளின் அஹிம்ஸா தர்மத்தில் என் மனம் சென்றது. அஹிம்ஸை நல்லதே. mJ btW« j¤Jt cy »Y«, fÉ cy»Y« ÃyÉ¡bfh©oU¡F«; thœ¡if cy»š x‹¿ Ãyîkh? என்று ஐயுறுவேன். சிலவேளை ஐயம் முனைந்தெழுந்து என் நெஞ்சைத் துளைக்கும். துளைப்பு, சிற்சில சமயம் மனநோயையும் உண்டுபண்ணும். அந்நோயைப் போக்க மார்க் மருத்துவராய் என் மானத உலகில் தோன்றுவர். மார்க் அருளியுள்ள கொள்கை உலகில் பரவினால் வாழ்க்கை அஹிம்ஸையில் ஒன்றுவதாகும் என்னும் நுட்பம் எனக்குச் செவ்வனே விளங்கியது. ஒரே வயிற்றிற் பிறந்தவர் பொருளைக் குறித்துப் போரிடுவதும், மன்றம் ஏறுவதும் என் உள்ளத்தைப் புண் படுத்தும். உடன்பிறந்தவரிடத்தில் போர் மூட்டாத - அவரை மன்றம் ஏற்றாத - ஆட்சிமுறை அமையுமா என்று ஏக்குறுவேன். மார்க் நினைவு அவ்வேக்கத்தைப் போக்கும். அமைதி நினைவு தோன்றும்போதெல்லாம் மார்க் நினைவும் உடன் தோன்றுவது வழக்கமாகியது. மார்க் கொள்கைக்கு ஆக்கந்தேடும் அமைப்பு தொழி லாளர் இயக்கம். அவ்வியக்கத்தில் இறங்கித் தொண்டு புரியக் கீர் ஹார்டியின் காட்சியும், வேங்கடேச குணாமிர்த வருஷணி சபையின் அழைப்பும் துணைநின்றன. வாழ்க்கையில் என் னென்னவோ மாறுதலும் வளர்ச்சியும் நிகழ்கின்றன! அவ் விசித்திரத்தை யான் என்ன என்று விளம்புவேன்? ‘kh®¡Ìa« bghU£ bghJikia m¿îW¤J« eh¤âfk‹nwh? என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. மார்க்ஸியம் என்று சிலர் நாத்திகப் பிரசாரஞ் செய்வதும் எனக்குத் தெரியும். என் மனத்துக்கு மார்க்ஸியம் நாத்திகமாகத் தோன்றவில்லை. எப்படி? மகம்மதுவின் தெய்வ ஒருமையும், கிறிதுவின் அன்பும், புத்தர் தர்மமும், அருகர் அஹிம்ஸையும், கிருஷ்ணன் நிஷ் காமியமும், குமரன் அழகும், தட்சணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை. அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை? சில தடைகள் மறிக்கின்றன. அவைகள் யா? சாம்ராஜ்யங்கள், மடங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடு கள், கண்மூடி வழக்கவொழுக்கங்கள் முதலியன. இவைகளைப் படைத்து வளர்ப்பது எது? முதலாளி - தொழிலாளி வேற்றுமை. இவ்வேற்றுமையை ஒழிக்கவல்லது பொருட் பொதுமை. பொருட்பொதுமை, மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிதுவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால்கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது. அதனால் மார்க்ஸியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. உலகம் போராட்டத்துக்கு இரையாதல் கண்கூடு. மூலம் என்ன? இது குறித்துத் தனித்தனி ஆராய்ச்சி செய்தவர் பலர். அவருள் சிறந்தவர் காரல் மார்க். உலகப் போராட்டத்துக்கு மூலமாக நிற்பது முதலாளி - தொழிலாளி என்னும் வேற்றுமை உணர்வென்பது மார்க் கண்ட உண்மை. இது நடுநிலைமையில் நின்று போர் மூலத்தை ஆராயும் ஒவ்வோர் அறிஞர்க்கும் எளிதில் புலனாகும். பண்டை நாளில் சாம்ராஜ்யங்கள் பெருகவில்லை. அதனால் முதலாளி-தொழிலாளி உணர்வு வளராமற் கிடந்தது. இந்நாளில் சாம்ராஜ்யங்கள் பெருகியுள்ளன. அப்பெருக்கம் முதலாளி-தொழிலாளி வேற்றுமை உணர்வை வளர்ப்ப தாயிற்று. அவ்வளர்ச்சி வாழ்க்கையில் போராட்டத்தைப் புகுத் தியது. போராட்டத்தை ஒழிக்கும் மருந்து காரல் மார்க்ஸுக்குக் கிடைத்தது. அது, பொதுமை அறத்தை நிலைபெறுத்தவல்ல பொருளாதார சமரசம். மார்க் கண்ட பொருட் பொதுமை உலகில் புற அமைதியை நிலவச் செய்யும் மாண்புடையது. அக அமைதியை மகம்மது கிறிது அருகர் புத்தர் கண்ணபிரான் குமரன் தட்சிணாமூர்த்தி முதலியோர் கொள்கை நிலை பெறச் செய்யும். அக அமைதிக்குப் புற அமைதி வேண்டற்பாலது. புற அமை தியை உலகில் நிலவச் செய்யும் வல்லமை வாய்ந்த மார்க்ஸி யத்தை நாத்திகம் என்று எப்படித் தள்ளுவது? மார்க்ஸியத்தைத் தள்ளுவது சான்றோரின் அமைதிச் செல்வத்தைத் தள்ளுவ தாகும்; போராட்டத்தை அழைப்பதாகும். சான்றோர் அருளிய பொதுமை அறத்துக்கு ஆக்கந் தேடவே யான் மார்க்ஸின் பொருட் பொதுமைக் கொள் கையைத் தழுவுகிறேன். மார்க்ஸியத்தைச் சான்றோரின் மூலக் கொள்கைக்கு மாறாகப் பயன்படுத்தும் இயக்கங்களில் என்மனம் ஈடுபடுவதில்லை. மார்க்ஸியம் முழுமையதா? குறையுடையதா? எதிலுங் குறையுண்டு, மார்க்ஸியத்திலுஞ் சிறு குறையுண்டு, என்ன குறை? அதன்கண் சத் என்னுஞ் செம்பொருள் வெளிப்படை யாகக் காணப்படாமை. மார்க்ஸியத்தில் சத் என்னுஞ் செம் பொருள் சேர்ந்தால் அது நிறைவுடையதாகும். மார்க்ஸியம் சமதர்மத்தை அறிவுறுத்துவது, சமதர்மத் தில் சத் தானே சேரும். சத் தைக்கொண்ட சமதர்மமே சன்மார்க்கமென்பது. சன்மார்க்கம் எது? மார்க்ஸியமும், மகம்மது கிறிது புத்தர் அருகர் கண்ணபிரான் குமரன் தட்சணாமூர்த்தி முதலியோர் கொள்கையுஞ் சேர்ந்த ஒன்று சன்மார்க்கம். இஃது எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவங் களினின்றும் கனிந்த உண்மை. முதலாளி-தொழிலாளி வேற்றுமை உணர்வு சன்மார்க் கத்தை வளரவிடாது. சன்மார்க்க வளர்ச்சிக்கு முதலாளி-தொழி லாளி வேற்றுமை உணர்வு பொன்றியே தீர்தல் வேண்டும். வேற்றுமை உணர்வு எப்படிப்பொன்றும்? இதற்குப் புரட்சி தேவை. புரட்சிக்கு உரியது தொழிலாளர் இயக்கம் என்று சொல்லவேண்டுவதில்லை. ஆதலின் யான் புரட்சி மனப் பான்மையுடன் தொழிலாளர் இயக்கத்தில் இறங்கினேன். புரட்சி இருவகை. ஒன்று அறவழியில் நிகழ்வது; மற் றொன்று மறவழியில் நிகழ்வது. அஃது அறப் புரட்சி; இது மறப் புரட்சி. உலகைக் சீர்செய்ய அறப் புரட்சி இடம் பெறாத வேளையில் மறப்புரட்சி அவ்விடத்தில் தானே நுழையும். இரண்டாலும் விளையும் பயன் ஒன்றாகுமா? ஒல்லும்வகை அறப்புரட்சிக்கு இடந்தருவதே அறிவுடைமை; இல்லையேல் மறப் புரட்சி எழும். எனது மனத்துக்கு இயைந்தது அறப் புரட்சியே. அறப்புரட்சி வாயிலாகச் சன்மார்க்கத்தை ஓம்பவே யான் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டேன். இந்நாட்டில் தொழிலாளர் இயக்கந் தோன்றி இருபத் தைந்து ஆண்டுகளாகின்றன. இருபத்தைந்து ஆண்டு அநுபவம் எனக்குண்டு. புரட்சி நிகழ்ந்ததோ? இல்லை என்றே சொல்வேன். ஒரோவழி நிகழ்ந்ததென்று சொல்லுதல் கூடும். புரட்சி ஏன் உச்சநிலையை அடையவில்லை? சாதிமத வெறி, சம்பிரதாயக் கட்டு, மூட வழக்கவொழுக்கம், மூர்க்கப் பிடிவாதம், முதலாளி அமைப்புக்களில் மோகம், தலைமைப் போராட்டம், விட்டுக் கொடுத்தல் இன்மை முதலிய தளைகள் புரட்சியைத் தகைந்து நிற்கின்றன என்று எனது அநுபவம் சொல்கிறது. இத்தளை களை உடைத்தெறியத் தோன்றிய இயக்கங்கள் பலப்பல. அவைகளுள் சிறந்தது தொழிலாளர் இயக்கம். இது தொழி லாளர் இயக்கத்தில் ஈடுபட்டவர்க்கு வியப்பாகத் தோன்றாது. புரட்சி புறத்தே முற்றும் நிகழவில்லை. ஒரோவழி நிகழ்ந்தது; ஆனால் என் அகத்தே நிரம்ப நிகழ்ந்தது. யானும் மனிதன். என்னிடத்தும் கரடு முரடு மூர்க்கம் முதலிய விலங் கியல்புகள் உண்டு. அவைகளை எப்படிப் புரட்டித் தள்ளுவது? அப்புரட்சிக்கு நூலாராய்ச்சி மட்டும் போதாதென்பதை எனது வாழ்க்கை நன்கு உணர்ந்தது. எனது அகத்தில் புரட்சியை ஓரளவில் புரிந்தது இல்வாழ்க்கை; மற்றோரளவில் ஆற்றியவை மற்ற மற்ற இயக்கங்கள்; பெரிதும் நிகழ்த்தியது தொழிலாளர் இயக்கம். இவ்வியக்கம் எனது அகத்தில் அறப் புரட்சியைப் பெரிதும் நிகழ்த்தியதென்று உலகுக்குத் தெரிவிக்கிறேன். தொழிலாளர் பல திறத்தினர். அவரொடு நெருங்கிப் பழகப் பழக விலங்கியல்புகள் ஒதுங்குகின்றன. அவை ஒதுங்க ஒதுங்கப் பொறுமையும் அமைதியும் படிந்து கொண்டே போகும். பொறு மையும் அமைதியும் படியப் பெறாதார் இயக்கத்தை விடுத்து நீங்குவது நல்லது. தொழிலாளரின் உள்நிலையைத் தெரிந்து கொள்வதற்கு வேலை நிறுத்தம் ஒரு கருவி. வேலை நிறுத்தத் தால் வெற்றி விளைந்தால், தொழிலாளர் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கும்; தோல்வி விளைந்தால், அவர் உள்ளங் கனன்று கொதிக்கும். அக்கொதிப்புப் புலியெனப் பாயும்; சிங்கமென உரு மும்; புயலென வீசும். இவைகளைப் பொறுமையாலும் அமைதி யாலும் வெல்லுதல் வேண்டும். இதற்குத் திருவள்ளுவர் நூலும், கிறிதுவின் மலைப்பொழிவும், இன்ன பிறவும் செய்யுந் துணையை எழுத்தால் எழுதல் இயலவில்லை. இருபத்தைந்தாண்டில் எத்தனையோ கதவடைப்புக்களும் வேலை நிறுத்தங்களும் நேர்ந்தன. அவைகளால் நன்மையும் தீமையும் முறை முறையே நிகழ்ந்தன. தீமை நேருங்கால் தொழி லாளரின் பாய்ச்சலிலும் உருமலிலும் வீசுதலிலும் யான் மூழ்கு வேன்; எழுவேன். மூழ்கி எழ எழப் பொறுமையும் அமைதியும் எனது உயிரணி ஆகும். வேலை நிறுத்த வேளைகளில் தொழிலாளர் கூட்டத்தில் குழப்பமிருக்கும்; மேடையில் கலக்கமிருக்கும். யான் கூட்டத்துள் நுழைவேன்; மேடைமீது ஏறி நிற்பேன். பாதிகுழப்பங் குறையும். வாய் திறப்பேன். மற்றொரு பாதியும் அடங்கும். உண்மை கூறி, வேலைக்குப் போங்கள் என்பேன். எல்லாரும் போவர். என் னுள்ளத்தில் படிந்துள்ள பொறுமையும் அமைதியும் தொழி லாளரை இணங்கச் செய்யும். பொறுமையும் அமைதியும் அந்தணச் செல்வமல்லவோ? அச்செல்வத்தைத் தொழிலாளர் இயக்கம் வளரச் செய்ததை எனது வாழ்க்கை கண்டது. என் அகத்திருந்த கரடு முரடு மூர்க் கம் முதலிய விலங்கியல்புகளைப் பெரிதும் புரட்டித் தள்ளியது தொழிலாளர் இயக்கம். என்னுள் புரட்சி செய்த அவ்வியக்கம் வாழி; அதில் எனது வாழ்க்கையை நிறுத்திய ஆண்டவன் அருள் வாழி. தொழிலாளர் இயக்கத்தில் என்னையும் வாடியாவையும் சேர்த்தது எது? பெரும் போராட்டக் காலத்தில் நீதிவடிவான ஒருவரை மாஜிடிரேட்டாகச் சென்னைக்குப் பெறுவித்தது எது? அப்போராட்டத்தில் எதிர்க்கட்சி யாரையுஞ் சாதக மாக்கியது எது? இயற்கை இறைவனைக் கேட்கும் அளவில் நின்று மேற்செல்கிறேன். 11. சமயமும் சன்மார்க்கமும் சமயம் எது? இது சிக்கலான கேள்வி. இதற்குப் பிறந்த விடைகள் கடலினும் பரந்தும் ஆழ்ந்துங் கிடக்கின்றன. சமயம் அவ்வளவு பெரியதா? பெரியதெனில் பெரியதிற் பெரியதே; சிறியதெனில் சிறியதிற் சிறியதே. அப்படியே அதை அரிய தெனில் அஃது அரியதினும் அரியதேயாகும்; எளியதெனில் எளியதினும் எளியதே யாகும். சமயம் ஆராய்ச்சிக்கு எட்டுவது போல் தோன்றும்; ஆனால் எட்டாதது. ஆராய்ச்சி அவரவர் கல்வி அறிவு அநுபவம் முதலிய வற்றிற்கேற்ற அளவில் நிகழ்வது; அப்படியும் இப்படியும் ஓடி ஓடி உழல்வது; எங்கேனும் ஓரிடத்திற்போய் முட்டி முட்டிச் சுழல்வது. முட்டுக்குமேலும் விளங்கிச் செல்வது சமயம். அஃது ஆராய்ச்சியில் அகப்படுவதன்று; ஆராய்ச்சி கடந்தது. கடந்த தாயினும் சமயம் மனிதனை விட்டகல்வதில்லை. மனிதன் விலங்கை விடுத்து வெளிவந்த நாள்தொட்டு அவனைச் சமயம் பற்றியே நிற்கிறது. ஆனால் மனிதன் அதை மறந்து மறந்து வேகிறான்; மீண்டும் மீண்டும் அதன் நீழலை அடைகிறான்; போகிறான்; வருகிறான். என் வாழ்வில் சமயம் எப்படி இயங்குகிறது? அது தனித்து நின்று தனதிருப்பை உணர்த்துவதாயில்லை. அஃது என்னிடத் தில் இயங்குவதை யான் உணர்கிறேன். அவ்வுணர்வுடன் யான் வளர்கிறேன். சமயம் என்னுடன் வளர்கிறதா? இல்லையா? இங்குச் சில வாழ்க்கை குறிப்புக்களைப் பொறிக்கிறேன். அவைகளால் பதில் விளங்கும். சைவம் என் தந்தையார் சைவர்; யானுஞ்சைவன். அவர் திரு நீறிட்டார்; யானுந் திருநீறிட்டேன். அவர் கோயிலுக்குப் போனார்; யானுங் கோயிலுக்குப் போனேன். சைவப் பாடல் களும் கதைகளும் என் தந்தையாரால் பாடப்படும்; சொல்லப் படும் அவைகளை யான் கேட்பேன். முதல் முதல் என் காதுக்கு எட்டிய சைவப் பிரசங்கம் வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயக ருடையது. அவர் இராயப்பேட்டை சுந்தரேசர் கோயிலில் பிரசங்க மாரி பொழிவர். அக்கோயில் எதிரிலேயுள்ள ஒரு சிறு திடலிலே நாங்கள் விளையாடுவோம். நாயகர் பிரசங்கம் நாயகர் பிரசங்கம் என்று எங்கள் விளையாட்டு நிறுத்தப்படும். நண்பர்களும் யானும் கோயிலுட்சென்று பிரசங்கம் கேட்போம்; வெளிவருவோம்; உள்ளே போவோம்; வருவோம். எங்களுக்குப் பிரசங்கத்தின் பொருள் தெரியுமோ? அதுவும் எங்களுக்கு விளையாட்டே. ஒருமுறை சோமசுந்தர நாயகர், அரசனிங் கில்லை கொல்லோ ஆன்றவரில்லை கொல்லோ என்று பாடினார். யானும் அதைப் பாடிக்கொண்டே ஓடினேன். சிலர் என்னைத் துரத்தி வந்தனர். அன்று முதல் சோமசுந்தர நாயகர் பிரசங்கத்துக்கு யான் போவதில்லை. 1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லோயர் செக்கெண்டரி பரீட்சை முடிந்தது. விடுமுறை. ஒருநாள் என் தந்தையாருடன் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். யானும் அப்பேச்சிலே மயங்கி நின்றேன். அப்பொழுது இராயப்பேட்டைத் தமிழ்ப் பண்டிதர் வல்லி - ப.தெய்வநாயக முதலியார் அங்கே போந்து, யாழ்ப் பாணத்திலிருந்து கதிரைவேற்பிள்ளை என்பவர் வந்திருக்கிறார். அவர் நாயகரை விட நன்றாகப் பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்கவேண்டாமா என்றார். கதிரைவேற் பிள்ளையின் பேச்சைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் திரண்டது. அக் கூட்டத்திலே யானுங் கலந்து கொண்டேன். புரசையிலே, சுந்தரப் பிள்ளை தெருவிலே, ஒரு வீர சைவர் வீட்டிலே பெருங் கூட்டம் ஈண்டியிருந்தது. அக்கூட்டத்திடைக் காளமேகம் ஓருருக்கொண்டு நெற்றியில் நீறணிந்து, கழுத்தில் அக்கமாலை பூண்டு, இடுப்பில் பீதாம்பரம் புனைந்து, சொன் மழை பொழிந் ததைக் கண்டோம். அம்மழை வெள்ளத்தில் இலக்கியமும் இலக்கணமும் தர்க்கமும் சாத்திரமும், பொன்னும் மணியும் அகிலுந் தேக்குமென உருண்டு மிதந்தன. காளமேகமெனக் காட்சி தந்த கதிரைவேற்பிள்ளையின் கோலமும் பேச்சும் என்னை ஆண்டன. அன்றுமுதல் அவர்தம் பேச்சு மேடைகள் என்னைக் காந்தமென ஈர்த்தன. அந்நாளில் சுந்தரம்பிள்ளை, வடிவேற்பிள்ளை முதலியோரது புராண பிரசங்கங்களிலும் என் மனஞ் செல்லும். 1902ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கதிரைவேற் பிள்ளை வெலி கல்லூரியில் தமிழாசிரியராக வந்தமையால் அவருடன் நெருங்கிப் பழகலானேன்; அவரிடம் தமிழ் நூல்கள் சில பயின்றேன்; பள்ளியை விடுத்த பின்னர் சபாபதி நாவலர், சோமசுந்தர நாயகர், ஆறுமுக நாவலர் முதலியோர் நூல்களைப் படித்தேன்; மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடத் தில் சைவ சாத்திரங்களைக் கற்றேன்; பாம்பன் குமரகுருதாச சுவாமிகளை அணுகி உபநிடதக் கருத்துக்களைக் கேட்டேன்; மருவூர் கணேச சாதிரியார் உபந்நியாசங்களில் உளங் கொண்டேன். இக்கற்றலுங் கேட்டலும் எனது சைவப் பேச் சுக்குப் பெருந்துணையாயின. பாலசுப்பிரமணிய பக்தஜன சபை நான்காம் பாரத்தை அடைந்ததும், ஆங்கிலத்தில் நன் றாகப் பேசுதல் வேண்டும் எழுதுதல் வேண்டும் என்னும் பித்து மாணக்கரைப் பீடிப்பது வழக்கம். இராயப்பேட்டை மாணாக்க ராகிய நாங்களும் அப்பித்துக்கு எளியரானோம். துரைசாமியும், பார்த்தசாரதியும், ஏகாம்பரமும், யானும் செய்த முயற்சியால் இராயப்பேட்டை இளைஞர் கல்விக் கழகம் என்றொரு கழகம் அம்மன் கோயில் தெருவில் (இப்போது ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி தெரு) கந்தசாமி முதலியார் வீட்டில் அமைந்தது. பின்னே அது முத்து முதலி தெருவிலுள்ள சங்கர விலாசத்தில் வளர்ந்தது. ஆங்கில நாவன்மையால் உலகையே கவரச்செய்தல் வேண்டுமென்ற பேராசைப் பேய் என்னைப் பிடித்து அலைத் தது. அப்பேய் என்னைத் தனக்கு இரையாக்கவில்லை. கதிரை வேற் பிள்ளையின் கூட்டரவு அப்பேயை ஓட்டிற்று. கதிரைவேற் பிள்ளையின் சேர்க்கையும், அக்கால இராயப் பேட்டையின் நிலைமையும் ஒரு சைவ சபை காணுமாறு என்னை யும் சிவசங்கர முதலியாரையும் மற்ற நண்பரையுந் தூண்டின. அத்தூண்டுதல் 1903ஆம் ஆண்டில் கதிரை வேற்பிள்ளையைக் கொண்டு இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபையை அமைக்கச் செய்தது. கதிரைவேற் பிள்ளை தலைவராக வும், என் தமையனார் அமைச்சராகவும் தெரிந்தெடுக்கப் பட்டனர். இராயப்பேட்டை இளைஞர் கல்விக் கழகம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபையாக மாறியது. ஆங்கில முழக்கமெல்லாம் தமிழ் முழக்கமாயின. ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை முதல் முதல் முத்து முதலி தெரு, குத்தம்பாக்கம் அப்பாசாமி முதலியார் வீட்டிலே, ஓர் அறையிலே அமைக்கப்பட்டது. அவ்வறைக்குத் தெருப் பக்கம் பலகணி இல்லாமலிருந்தது. அதை அமைக்க மாணாக்க ராகிய நாங்களே முயன்றோம். இளமைக் கொழுமை என்ன செய்யாது! சிவசங்கரமும், இரத்தினசபாபதியும், யானும் கட்டபாறை கொண்டு சுவரை இடித்தோம்; கல் சுமந்தோம்; மண் சுமந்தோம்; சுண்ணமுஞ் சுமந்தோம். அந்த அறையில் பழைய அடுப்பொன்று இருந்தது. அதை இடித்தோம்; அடியில் புரை கண்டோம்; அதை எப்படி அடைப்பது என்று பேசிப்பேசி நாங்கள் உறங்கினோம். விடியற்காலையில் அறையிலே ஒரு சிறு சிமிட்டிக் குவியல் கண்ணிற்பட்டது. அஃது எப்படி வந்தது? நண்பர் ஏகாம்பரத்தின் உடலில் சிமிட்டிக் கறைகள் காணப் பட்டன. அவரை யான் எழுப்பிக் கறைகளைப் பற்றிக் கேட் டேன். சிமிட்டி வந்த வரலாற்றை அவர் கூறினார். இந்த வேலை தகாது என்று சிறிது நேரம் சும்மா இருந்தேன். மற்றவர் எனக்கு ஆறுதல் கூறினர். அந்தச் சிமிட்டியில் மண்ணையுங் கல்லையுஞ் சேர்த்துப் புரையைத் தூர்த்தோம். தொடக்கத்தில் ஸ்ரீ பால சுப்பிரமணிய பக்தஜன சபை மாணாக்கரது பணி பலவற்றை ஏற்றது. 1904ஆம் ஆண்டு யான் மெற்றிகுலேஷன் வகுப்பு மாணாக்கனாயதும், யான் பரீட்சைக்குச் செல்லாதவாறு தடை நேர்ந்ததும் முன்னே சொல்லப்பட்டன. அவ்வாண்டின் இறுதி யில் எனது பள்ளி வாழ்வு முற்றுப் பெற்றது. பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை வாழ்வே எனக்குப் பெரிதாயிற்று. சபை அத் தெருவிலேயே கந்தசாமி முதலியார் வீட்டுக்கு மாற்றப்பட்டது; காலை வழிபாடு என்னால் செய்யப்படும் - மாலையில் நால்வர் நான்மணி மாலை, சோணசைல மாலை முதலிய நூல்களைப் பலர்க்குப் பாடஞ் சொல்லி வந்தேன்; சிலருக்கு ஆங்கிலமும் போதித்து வந்தேன். இராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவிலே அத்துவித வேதாந்த சபை என்றொன்று இருந்தது. அதில் வாரந்தோறும் சுப்பராய செட்டியாரால் வேதாந்த நூல்கள் பாடஞ் சொல்லப்படும். சில சமயம் நாராயணசாமி தேசிகர், வடிவேற் செட்டியார் முதலியோர் அங்கே போந்து பேசுவர். அவர் கதிரைவேற் பிள்ளையையும் சைவசமய நூல்களையும் தாக்குவர். அவரெல்லாம் பெரும்பெரும் பீரங்கிகள். நாங்கள் அப்பெரும் பீரங்கிகளைத் தாக்கப் புறப்பட்டோம். ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபைச் சார்பில் சுந்தரேசர் கோயிலில் கூட்டங் கூடும், அக்கூட்டத்தில் யான் பெரும் பீரங்கிகளைத் தாக்கிப் பேசுவேன். துரைசாமி, சிவசங்கரம், சச்சிதானந்தம் முதலியோரும் பேசுவர். கதிரைவேற்பிள்ளை எங்களைத் தூசிப் படை என்பர்; பெரும் பீரங்கிளை எதிர்க்கும் ஆற்றல் பெறுதற் பொருட்டு யான் பல நூல்களை ஆய்வதில் பெரும்பொழுது போக்குவேன்; ஞாயிற்றுக்கிழமை சில மணி நேரம் பேசுவதற்கு ஏறக்குறைய வார முழுவதும் நூல்களைப் படித்தவண்ண மிருப்பேன். வாதம், பலதிறக் கல்வி கேள்வி கட்குத் துணைபுரிவதாயிற்று. முதல் மூன்று ஆண்டுவிழாக்கள் கதிரைவேற் பிள்ளை யின் தலைமையிலேயே நடைபெற்றன; மிகச் சிறப்பாக நடை பெற்றன. காரணம் ஊரவர் கூட்டுறவே. ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை உயிராயிற்று; ஊர் உடலாயிற்று. என்ன குறை? ஆண்டு விழாவுக்கு ஒரு திங்கள் முன்னரே வேலைகள் துவங்கப்படும். வேலைகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுக்குந் தொண்டு என்னுடையதாகும். இளைஞர் ஒத்துழைப்பும் குறைவற நிகழும். மண்டி முனிசாமி முதலியார், அண்ணாசாமி முதலியார், பச்சையப்பநாயகர், பொன்னுசாமி முதலியார், குத்தம்பாக்கம் கந்தசாமி முதலியார், மாசிலாமணி முதலியார், குத்தம்பாக்கம் அப்பாசாமி முதலியார், வையாபுரி முதலியார், பொன்னுசாமி நாயகர் முதலியவர் இராயப்பேட்டையில் பெரியவரெனப் போற்றப்பட்டவர். அவர் வழியே இராயப் பேட்டை இயங்கும். அந்நாளில் சபையின் இரண்டு கண்களென விளங்கியவர் நூம்பல் முனிசாமி முதலியாரும் மாங்காடு ஆரிமுத்து முதலியாருமாவர். இப்பெரியோரின் மனமார்ந்த கூட்டுறவைப் பெற்ற சபை தன் ஆண்டுவிழாக்களைச் சிறப்புற நடாத்திக்கொள்ளுமன்றோ? இராயப்பேட்டைப் பெரியவரும், நம் ஊர் பிள்ளைகள் நல்ல காரியஞ் செய்கிறார்கள். அவர் கட்குத் துணைபுரிய வேண்டுவது நம் கடமை. அவர்கட்கு ஒரு குறை நேர்ந்தால் அது நமக்கு நேர்ந்ததாகும் என்று பேசுவர். அப்பேச்சு என் காதை குளிரச் செய்யும்; ஊக்கத்தையும் பெருக்கும். ஆண்டு விழா முன்னாள் இரவெல்லாம் இராயப்பேட்டை உறங்காது. அன்றிரவு சிவராத்திரியே. பொழுது விடிவதற்குள் இராயப்பேட்டை சிவலோகமாகும். தெரு வெல்லாம் தண்ணீர்; அடிக்கு அடி மகர தோரணம்; ஆங்காங்கே பூம்பந்தர்; வீடு களில் வாழையுங் கமுகும் தெங்கும்; வாயில்களில் கோலம்; நீர் மோரும், பானகமும் பழமும் கற்கண்டும் சர்க்கரையும் எங்கும் எங்கும்; காலையில் சுந்தரேசர் திருக்கோயிலினின்று முருகப் பெருமான் பல்லியத்துடன் திருவீதி உலா; பின்னே அணி அணியாகத் தேவாரக் கூட்டம்; உலாவினிடைக் கதிரைவேற் பிள்ளையின் சிவப்பொலிவு; நம: பார்வதி பதயே - அரகர மகாதேவா என்று கோஷம். இக்காட்சி சிவலோக மன்றோ? திருவிழா முடிந்ததும் மாகேசுர பூசை நடைபெறும், ஓராண்டு எதிர்பார்த்ததைவிடத் திருக்கூட்டம் பெருகி யிருந்தமை கண்டேன்; மாகேசுர பூசு ஏற்பாட்டையும் பார்த்தேன். எனது மனம் சோர்ந்தது. நிலைமையத் தமையனா ரிடம் கூறினேன். பக்கத்திருந்து அதைக் கேட்ட பொன்னுசாமி முதலியார் நூறு பொன்னுசாமி முதலியாரானார்; அங்கும் இங்கும் பறந்தார். அரிசியும் பருப்பும் பிறவும் வந்து விழுந்தன. பெண் மக்கள் விரைந்து விரைந்து வந்தார்கள்; அதை எடுத்தார்கள்; இதை எடுத்தார்கள். எல்லாஞ் சித்தமாயின. மாகேசுர பூசை சிறப்பாகவே நடைபெற்றது. பிற்பகல் சொற்பொழிவுக் கூட்டங்கூடும். அக்கூட்டம் பாற்கடலெனத் திகழும். தலைவர் கதிரைவேற் பிள்ளை தமிழ் அமிழ்தம் பொழிவர். அன்பர்குழாம் அவ்வமிழ் தம் பருகி இன்பத்தில் திளைக்கும். கதிரைவேற் பிள்ளை கந்தனடி சேர்ந்த பின்னர் (1907) திருப்பாதிரிப்புலியூர் - வண்டிபாளையம் - இராசப்பமுதலி யார் சபையின் தலைவரானார். அவர் காலத்தில் சபை படிப்படியே பூசை மடமாயிற்று. சபை வேறு வழியில் திரும்பு வது எனக்கு வெறுப்பூட்டியே வந்தது. ஆனால் தலைவர் விருப்பத்துக்கு மாறாகச் சபையை நடாத்த மனமெழுவதில்லை. பெரியோரது உண்மையும் சீலமும் அன்பும் என்னையும் வேறு சிலரையும் அடக்கிவிடும். இங்கே ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக்காட்டுவது சாலும் என்று எண்ணுகிறேன். இராசப்ப முதலியார் கந்தசஷ்டி விழாவைச் சபையிலே மிகச் சீலமாக நடத்துவது வழக்கம். ஒருமுறை ஒரு நாள் பூசைக்குரிய முன்னணி வேளையில் தலைவர் முதலியார் கருத்துச் செலுத்தியிருந்தார். யானும் உடனிருந்து உதவி செய் தேன். அவ்வேளையில் ஒருவர் ஹிந்து பத்திரிகையைக் கொணர்ந்து என்னிடம் தந்தார். இங்கிலீஷ் பேப்பரா என்று சீறித் தலைவர் என்மீது பாய்ந்தார். பத்திரிகையுடன் வெளியே ஓடினேன்; எதிர் வீட்டு நடை விளக்கில் திலகர் தண்டனை எத்துணை ஆண்டு என்பதை மட்டும் பார்த்தேன்; மீண்டும் சபையை நண்ணினேன். இக்குறிப்பு முதலியார் மனோநிலையை நன்கு புலப்படுத்தும். சபைக்கென்று சொந்த நிலையமொன்று மௌபிரி ரோட்டில் அமைந்தது. அதன் பெயர் குகானந்த நிலையம். அந் நிலையத்தில் நக்கீரர் கழகம் என்றொன்று கண்டு தமிழ் வகுப்பு நடாத்தலானேன். அதற்குப் பலதிற வகுப்பினர் வந்தனர். சிலர் வருகை சபை நிருவாகர் சிலர்க்கு எரியூட்டிற்று. அது கண்ட யான் வகுப்பை வேறிடத்துக்கு மாற்றினேன். ஜடி சதாசிவ ஐயர் நட்பை யானும் பெற்றேன்; சபையும் பெற்றது. ஒருபோது சதாசிவ ஐயரும் யானும் என்னென்னவோ பேசினோம். அப்பேச்சிடை, எல்லார்க்கும் பொதுவாய்ப் பயன்படுமுறையில் ஒரு மண்டபங் கட்ட விரும்புகிறேன். cÇa ïl« ïU¡»wjh? என்று கேட்டார். யான் சபையிலுள்ள நிலையம் மிகச் சிறியது. நிலப் பரப்புப் பெரியது; இதில் மண்டபம் எழுப்பலாமே, என்றேன். அணித்தே நிகழ்ந்த ஓர் ஆண்டு விழாவில், தலைமை வகித்த சதாசிவ ஐயர் முடிவுரையில் மண்டபத்தைப்பற்றி அவரும் யானும் பேசியதை வெளியிட்டார். கூட்டம் முழுவதும் மகிழ்ச்சியடைந்தது. நிர் வாகக் கூட்டங் கூடி உறுதி செய்தற்கு முன்னர்ப் பலவித வதந்தி கள் கிளம்பின; உலவின, சிலர், பாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் நிலத்தையும் நிலையத்தையும் தியோசாபிகல் சங்கத்தில் சேர்க்கத் திரு.வி.க. முயல்கிறார் என்றும், வேறு சிலர், பெரிய மண்டபம் எற்றுக்கு? அது சதாசிவ ஐயர் கலியாண சுந்தரம் போன்றவர்க்கே பயன்படும். நம் போன்றார் அதில் சேர்க்கப்படமாட்டார் என்றும், மற்றுஞ் சிலர், பாலசுப்பிர மணிய பக்தஜன சபை சைவத்தை இழந்து சமரசம் பெறப் போகிறது என்றும் பேசினர். இவைகளை ஐயருக்குத் தெரியப் படுத்தினேன். மண்டப முயற்சி கைவிடப்பட்டது. வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளுவதா என்று யான் கருதிக் கருதி ஏக்குற்றேன். சபையைச் சீர்திருத்த, முறையில் நடத்த முயன்று பார்த்தேன். என் முயற்சி வெற்றியளிக்கவில்லை. பெரும் பான்மை சிறுபான்மை தெரிந்துகொள்ள யான் விரும்புவதே இல்லை. உயிர்நாடியாயுள்ள சிலர் கருத்தை யான் உணர்ந்து கொள்வேன். என் முறைகளை வலியுறுத்த யான் முனைவ தில்லை. சபையை யான் வெறுப்பதில்லை. என் கொள்கைகளை வலியுறுத்துவதுமில்லை. சபைக்குப் போவேன்; வருவேன்; சமயம் நேர்ந்துழிச் சொற்பொழிவு நிகழ்த்துவேன். எனக்குப் பத்திரிகை வேலை, அரசியற் பணி, தொழிலாளர் தொண்டு முதலியன அதிகமாயின. சபையில் தலை காட்டலும் அருமை யாயிற்று. பல ஆண்டு சிவசங்கர முதலியார், நடேச முதலியார், நமசிவாய முதலியார், வேதாசல செட்டியார், தியாகராய முதலியார் முதலியோர் பார்வையில் சபை நடைபெற்று வந்தது. 1934ஆம் ஆண்டில் ஞானியார் சுவாமிகள் சென்னை நோக்கியபோது சபையின் ஆண்டு விழா நெருங்கியது. சுவாமி களின் வருகை சபைத் தோழர்கட்கு ஊக்கமூட்டிற்று. ஞானியார் தலைமையில் ஆண்டு விழாவை நிகழ்த்தச் சபையார் விழைந் தனர். அச்சமயம் சபை நன்னிலையிலில்லை. சச்சிதானந்தம் பிள்ளை உள்ளிட்ட பழைய தோழர் சிலர் என்னைக் கண்டனர்; சபையின் நிலைமையை விளக்கினர்; சபையைப் பழைய நிலைக்குக் கொண்டுவரல் வேண்டும் என்று கூறினர். பொதுக் கூட்டம் கூட்டி நிலைமையை ஆராய்வது நல்லது என்று யான் சொன்னேன். தோழர்கள் பெருமுயற்சி செய்து பொதுக்கூட்டங் கூட்டினார்கள். அக்கட்டத்தில் பற்பல பேசப்பட்டன. முடிவில் எனக்கு முழு உரிமைத் தலைமை வழங்கப்பட்டது. சர்வாதி காரம் பெறாமலே முன்னே யான் சபைக்குத் தொண்டாற்ற வில்லையா? ï¥bghGJ k£L« Rik v‰W¡F? என்று மறுத்தேன். பின்னே வலியுறுத்தல் மிகுந்தது. பழைய நினைவுகளெல்லாம் என் மனத்தில் உற்றன. அவை மறுப்புரை கூற விடவில்லை. காலவரை நாலாண்டு என்று குறிக்கச் சொன் னேன். சபையார் அதற்கு இணங்கினர். ஆண்டு விழா ஞானி யார் சுவாமிகள் தலைமையில் சிறப்புற நடந்தது. யான் சர்வாதி காரத்தை எப்படிப் பயன்படுத்தினேன்? ஆண்டவன் பணியில் அதிகாரம் ஏது? சபையின் வீழ்ச்சிக்குக் காரணம் தேர்தல் முறை என்று செவ்வனே விளங்கியது. தேர்தல் முறையை யொழித்துக் காரியக்கூட்டத்தை யானே நியமனஞ் செய்தேன். ஒருவர் தலைமையில் அக்கூட்டம் நடக்குமாறு திட்டங் கோலினேன். நான்காண்டு எல்லையில் தலைவராக வந்தவர் சச்சிதானந்தம் பிள்ளையும் மீனாட்சி சுந்தரனாரும். யான் தலையிடத்தக்க அவசியம் ஒரு போதும் உண்டாகவே இல்லை. சர்வாதிகாரம் என்ன செய்தது? என் மனத்தில் அதிகாரம் நிலவவில்லை. ஆண்டவன் பணியே நின்றது. சபை நன்றாக நடைபெற்றது. நான்காண்டு கடந்தன. மீண்டும் யான் அப் பதவியை விரும்பி னேனில்லை. இப்பொழுது அப்பதவி மீனாட்சி சுந்தரனாரால் வகிக்கப்பட்டு வருகிறது. யான் ஆண்டவன் பணி ஏற்றதும் சபையின் நிலையத்தில் தீய எண்ணங்களின் சுழலல் என்னுள்ளத்திற்பட்டது. அவைகள் அம்புகள் போலவும் தோன்றின. ஆண்டு விழா முடிந்ததும், அதை ஞானியார் சுவாமிகளிடம் முறையிட்டேன். சுவாமிகள் ஒரு மண்டலம் சபையில் திருமுருகாற்றுப்படையையும் கந்தரநு பூதியையும் ஓதுமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தோம். நாற்பது நாள் நாடோறும் மாலை வேளையில் அன்பர் பலர் கூடி இரண்டு நூலையும் ஓதுவர். யான் கொஞ்சங் கொஞ்சமாக உரை சொல்வேன். தீய எண்ணங்களின் சுழல் அகன்றுவிட்டதாக எனக்குப் புலப்பட்டது. திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டம் திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டம் என்றொரு சைவ சபை 1908ஆம் ஆண்டில் காணப்பட்டது. அத்திருக்கூட் டம் பெரிதும் திருவல்லிக்கேணி வாணிபர் பார்வையில் நடந்தது. அதன் முதல் தலைவன் யான். செயலாளர் ஆரிமுத்துச் செட்டியார். கோவிந்தசாமி செட்டியார், சுப்பராய நாயகர், வேங்கடாசல ஆச்சாரியார், மோகாம்பர அப்பா, துரைசாமி செட்டியார் முதலியோர் திருக்கூட்டத்தின் தூண்கள். யான் தலைவன் என்ற முறையில் அத் திருக்கூட்டத்தின் சார்பில் ஏறக்குறைய ஏழாண்டு ஞாயிறுதோறும் பெரியபுராணப் பிரசங்கஞ் செய்தேன். அப்பிரசங்கத்துக்குச் சென்னையின் பல பாகங்களினின்றும் அன்பர் குழாம் திரண்டு திரண்டு அணை யும். யான் பெரிய புராணப் பிரசங்கஞ் செய்தேனோ! பெரிய புராண வகுப்பு நடத்தினேனோ! ஒவ்வொரு பாட்டுக்கும் விரிந்த முறையில் விளக்கவுரை சொல்வேன்! சாத்திரக் கருத்துக்களை எளிய நடையில் தெளிவு செய்வேன். அம்முறை அன்பர்கட்கு மகிழ்ச்சியூட்டும். ஏழாண்டில் ஒரு காண்டமே முற்றுப் பெற்றது. பிரசங்கம் திருவல்லிக்கேணியிலே சுப்பராய நாயகர் வீட்டு மாடியிலே நடக்கும். சுப்பராய நாயகர் சோமசுந்தர நாயகரின் சொல்லமிழ்துண்டு சிவம் பழுத்த மனமுடையவர். அவரும் அன்பு; அவர்தம் வீடும் அன்பு. ஞாயிற்றுக்கிழமை உற்றதும் நாயகரும் அவர்தம் அருமை மனைவியாரும் எனக்கு நல்லாவின்பால் தேடுவதிலும், அதைப் பதஞ் செய்வதிலும் பெருங்கவலை செலுத்துவர். யான் சுமார் மூன்றரை மணி நேரம் பேசுவேன்; அடிக்கடி பால் அருந்துவேன். அது பாலா? அன்பா? அன்பு; தெவிட்டாத அன்பு. கிருஷ்ணாம்பேட்டை கோவிந்தசாமி முதலியாரால் கையேடு படிக்கப்படும். அவர் இசை ஞானியர்; யான் இசை ஞானமில்லாததவன். அவர் பாட்டைப் படிக்கும்போது சபை ஆனாயர் குழலோசை கேட்ட கன்றாகும். அவர்தம் இசை எனது பிரசங்கத்துக்குப் பெருந்துணை செய்யும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழா விழாக்களுக்கோர் எடுத்துக்காட்டாயிலங்கும். பேர்பெற்ற திருவல்லிக்கேணி வாணிபரால் என்ன செய்தல் இயலாது? மாகேசுர பூஜையின் சிறப்பை என்னென்று சொல்வேன்? அத்தகைய மாகேசுர பூசையை இனிச் சென்னை காணுமோ? சாதிச் சைவர் தொல்லையன்றி வேறு தொல்லையை மாகேசுர பூசை அநுபவித்ததில்லை. ஆயிரக்கணக்கான அடியவரைக் கவனிப்பதா? ஒரு சில சாதிச் சைவரைத் தனித்தனியே கவனிப் பதா? மாகேசுர பூசையில் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு என்று யான் அறைவேன். சாதிக்குறும்பர், இளமைத் தலைமை என்று இறுமாந்து நடப்பர். ஓர் ஆண்டு விழாவிலே யான் வழக்கம் போல நன்றி செலுத்துகையில். மாகேசுர பூசையில் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் கூடாது. சாதி வேற்றுமையைத் தொலைக்கவும், அன்பு நெறியை யோம்பவுமே மாகேசுர பூசை ஏற்பட்டது. அதிலே சாதி வேற்றுமை பாராட்டுவது சாத்திர விரோதம். சாதியர் மாகேசுர பூசையில் கலந்து கொள்ளாதிருப் பது நல்லது என்று முழங்கினேன். அதனால் நற்பயனே விளைந்தது. பெரிய புராணம் ஒரு சீர்திருத்த நூல் என்று சொல்வேன்; தக்க சான்றுகள் காட்டுவேன். சாதிச் சைவர் என்னைச் சீறிச் சீறி நோக்குவர். அந்நோக்கால் யான் நீறாகவில்லை. சாதிச் சைவத்தை வளர்ப்பதற்கென்று சில புலவர் புறப்பட்டனர். அவ ரால் பெரியபுராணப் பிரசங்கங்கள் ஆங்காங்கே செய்யப்பட் டன. அவைகளில் பொறாமைக் கனல் தழல்விட்டெரியும். புராணப் பிரசங்கத்தை எனது வாழ்க்கைக்குரிய தொண் டாகக் கொண்டேனில்லை. யான் பள்ளி ஆசிரியத் தொழில் புரிந்து ஊதியம்பெற்று வந்தேன். புராணப் பிரசங்கத்தைப் பொழுது போக்காகவும் தொண்டாகவுமே யான் கொண்டேன். அதையே தொழிலாக் கொண்டவர் சிலர் என்னைக் கண்டதும் காய்வர். அவர்க்குப் பல வழியிலுஞ் சமாதானஞ் சொல்வேன். பெரிய புராணப் பிரசங்கத்திலே பரவையார் திருமணப் பகுதி உற்றது. அது பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவிலே பொன்னும் மணியும் வேய்ந்த கௌரி சங்கம் எனக்கு அன்பால் அணியப்பட்டது. அது நீண்ட நாள் என் கழுத்தில் ஒளிரவில்லை. அஃது ஒரு மாத காலமே என் கழுத்தில் ஒளிருமாறு ஆண்டவன் அருள் சுரந்தான். திருக்கூட்ட அன்பர் ஒருவர் வேங்கடாசல ஆச்சாரியார் என்பவர் திருத்தணிகையில் ஒரு சத்திரங் கட்டினர். திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு திருக்கூட்டத்தினரும் யானும் அழைக்கப்பட்டோம். குளக்கரையிலே எனது கௌரி சங் கத்தைப் புராணிகர் சோமசுந்தர முதலியாரிடத்தில் சேர்த்துத் தண்ணீரில் இறங்கினேன். அவர் இன்னொருவரிடத்தில் அதைக் கொடுத்து வெளியே போனார். எப்படியோ கௌரி சங்கம் களவு போயிற்று. திருக்கூட்டத்தவர் முகங்களெல்லாம் வாட்டமுற்றன. ஆரிமுத்துச்செட்டியார் பட்டபாடு இன்னும் என் முன்னே காட்சியளிக்கிறது. அடியவர் வாட்டமே என்னை வருத்தியது. அவர்கட்கெல்லாம் ஆறுதல் கூறினேன். உருத்தி ராட்ச மாலை பொன்னும் மணியும் அற்றதாயின் களவு போயிருக்குமோ? என்னுடைய திருமணத்தின்போது மீண்டும் திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்தவரால் முன்னையதைப் போன்றதொரு கௌரி சங்கம் வழங்கப்பட்டது. அது நீண்டகாலம் என்னிடத்திருந்தது. யான் பல துறைகளில் தொண்டாற்றப் புகுந்தமையால் அவ்வக்கமணி பெரிதும் பயன்படாமலே கிடந்தது. சும்மா கிடந்த அஃது ஒரு நண்பருக்கு அன்பளிப்பாயிற்று. பின்னே யான் ஏற்ற பலவகைத் தொண்டுகள் ஞாயிறு தோறும் திருவல்லிக்கேணிக்கு என்னை விடுவதில்லை. அதனால் ஒரு காண்டத்துடன் பெரிய புராணப் பிரசங்கம் 1915 ஆம் ஆண்டில் முற்றுப்பெற்றது. சிவசுப்பிரமணிய பக்தஜன சபை புதுப்பாக்கத்திலே ஸ்ரீ சிவசுப்பிரமணிய பக்தஜன சபை என்றொரு சபை 1915ஆம் ஆண்டில் காணப்பட்டது. அதன் முதல் தலைவனும் யானே. அச்சபையில் ஜடி கட்சி வாடை வீசியதை யான் உணர்ந்தேன். ஒரு சபையில் பலதிற அரசியல் கட்சியினர் இருக்கலாம். தவறில்லை. கட்சியைப் பாராட்டிப் பிணக்குறுவது அறியாமை. நமது நாட்டில் அரசியல் கட்சிகள் பிணக்கை வளர்க்கும் நிலையையே அடைந் துள்ளன. சிவசுப்பிரமணிய பக்தஜன சபையில் செல்வாக் குடையவர் ஜடி கட்சியினர். அன்னார் வெளிப்படையாக ஒன்றுஞ் செய்ததில்லை. ஐயம் எனக்குள் புகுந்தது. யானே வலிந்து தலைமைப் பதவியினின்றும் விலகினேன். உட் காரணத்தை விளக்கிக் கூறினேனில்லை. சமயம் நேரும் போதெல்லாம் சபைக்குச் செல்வேன்; பேசுவேன்; ஆண்டு விழாக்களில் தலைமை வகிப்பேன். அச்சபையின் (1940) வெள்ளி விழா நடைபெற்றது. முதல் தலைவன் என்ற முறையில் அவ் விழாவில் தலைமை தாங்கும்பேறு எனக்கே நல்கப்பட்டது. சைவ சித்தாந்த மகா சமாஜம் 1911ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை விக்டோரியா மண்டபத்தில் ஜெ. எம். நல்லசாமி பிள்ளை தலைமையில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாக் கூட்டத்தில் முதல் முதல் பேச இடம் பெற்றேன். அக்கூட்டத்தில் யான் பேசிய பொருள் சைவன் எவன் என்பது. சைவம் குறிப்பிட்ட ஒரு சமயம் அன்று என்றும், அது பொதுமையது என்றும், முனைப்பற்ற தொண்டிலே விளங்கும் அன்பு நிலையே சைவம் என்றும், அந்நிலை சாதிமதங் கடந்தது என்றும், இன்னோரன்ன இயல்புகளையுடைய ஒருவனே சைவன் ஆவன் என்றும் என்னால் விளக்கப்பட்டன. என் பேச்சு சாதிச் சைவர் முகத்தைக் கறுகச் செய்தது. 1912ஆம் ஆண்டுக்கு அமைச்சராகச் சச்சிதானந்தம் பிள்ளை தெரிந்தெடுக்கப்பட்டார். அத்தெரிவு ஜெ.என். இராமநாதனுக்கும் எனக்கும் ஊக்கமூட்டிற்று. நாங்கள் மூவரும் பாதிரிமாரைப்போல வேலை செய்யத் தொடங்கினோம்; ஆதிதிராவிடச் சகோதரர்கள் உறையும் இடங்கட்குச் செல்ல உறுதிகொண்டோம். முதல் முதல் நுங்கம்பாக்கம் எங்கள் கருத்தில் படிந்தது. சிவ நேயர் பழனிசாமி பிள்ளையின் நட்பு எனக்கு அப்பொழுதே கிடைத்தது. பலப்பல இடங்கட்கு வலிந்து வலிந்து சென்று சைவப் பிரசாரம் செய்வோம்; சென்னையின் நானா பக்கங்களிலும் உழல்வோம். பிள்ளையார் கோயில் மண்டபங்களெல்லாம் எங்கள் பிரசார மேடை களாயின. திருவொற்றியூர், திருமயிலை, திருவான்மியூர், திருமுல்லைவாயல் முதலிய திருப்பதிகளின் திருவிழாக்களிலே எங்களைக் காணலாம். சைவசித்தாந்த மகா சமாஜத்தின் ஆக்கத்துக்குப் பாடுபட்டோம்; பட்டோம்; பெரும்பாடு பட்டோம். ஆண்டுக் கூட்டம் காஞ்சியில் பொன்னம்பலம் பிள்ளை தலைமையிற் கூடிற்று. யான் அப்பர் கொள்கை என்ற பொருள் பற்றிப் பேசினேன். அப்பேச்சைச் சென்னையினின்றும் திருத் தணிகைப் புறப்பட்ட ஒரு சாதி சைவப் புலவரும், ஒரு கிறிதுவப் பாதிரியாரும் உரையாடிய முறையில் நிகழ்த்திக் காட்டினேன். கடவுளைப் பற்றியும், சமயத்தைப்பற்றியும், சீர்திருத்தத்தைப் பற்றியும், பிறவற்றைப்பற்றியும், அப்பர் அருளியுள்ளனவற்றைச் சுருங்கிய முறையில் சைவப்புலவர் பாதிரியார்க்கு விளக்கினர். அவ்விளக்கம் பாதிரியார் நெஞ்சை அப்பர் கொள்கையில் படிவித்தது. இருவருந் திருத்தணிகை அடைந்தனர். பாதிரியார் சைவப் புலவரைப் பார்த்து, யானும் உம்முடன் கோயிலுக்கு வருகிறேன் என்றார். சைவப்பழம் விழித்தது, ஏற இறங்கப் பார்த்தது. இவ்வளவு தானா உமது ஏட்டுச் சைவம்! அப்பர் கொள்கைப்படி நடக்க உமது சமூகம் இடங்கொடுக்கவில்லையே! சமூகச் சீர்திருத்தஞ் செய்ய முற்படுங்கள். சைவசித்தாந்த சமாஜம் சீர்திருத்தத்தில் ஏன் தலையிடலாகாது? V£L¢irt¤jhš v‹d ga‹ Éis í«? என்று கேட்டார் பாதிரியார். இவ்வாறு முழங்கிப் பேச்சை முடித்தேன். தலைவர் என் கருத்தை முற்றுந் தழுவியே பேசினர். சாதிச்சைவர் உள்ளம் கொதித்தது. அவர் என் செய்தல் கூடும்! காலக் கடவுள் என் பக்கம்! 1913ஆம் ஆண்டிலே சமாஜ ஆண்டு விழா வேலூரில் நடை பெற்றது. தலைமை வகித்தவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளென்னும் ஞானியார் சுவாமிகள். சுவாமிகளை யான் முன்னே நேரிற்கண்டதில்லை. முதல்காட்சி வேலூரிலேயே. அடிகளின் தோற்றம் மரகதமலையில் முளைத்த ஞாயிறே போன்றிருந்தது. யான் பேச எடுத்த பொருள் சிவ ஞானபோத நுட்பம். சிவஞானபோத வரலாற்றிலே நந்தியெம் பெருமானுக்குச் சீகண்டர் இருபத்தெட்டு ஆகமங்களை அறிவுறுத்தினரென்றும், அதனால் அவர் ஞானம் பெறவில்லை யென்றும், பின்னே ரௌரவ ஆகமத்திலே பாசவிமோசனப் படலத்திலேயுள்ள சிவஞான போதச் சூத்திரம் பன்னிரண்டை யும் மெய்க்குரவர் அறிவுறுத்தினரென்றும், நந்தியெம்பெருமான் ஞானம் பெற்றனரென்றும் சொல்லப்பட்டிருப்பதை அலசி, ரௌரவ ஆகமம் இருபத்தெட்டில் ஒன்றுதானே. mâYŸs átPhdnghj¥ gFâia¢ Óf©l® kwªJÉ£lhuh mšyJ m~J m¿îW¤j¥bg‰wnghJ eªâba«bgUkh‹ cw§»dhuh? என்றதும், மேடை அதிர்ந்தது; வீறிட்டது. நல்லசாமி பிள்ளை தப்பு-தப்பு என்று சீறினார்; யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம், நிறுத்தும்-நிறுத்தும் என்று உறுத் தார். குழப்பத்தை அடக்கக் குரலை உயர்த்தி வேகத்தில் இறங்கி னேன். சபை அமைதியடைந்தது. மேலுந் தொடர்ந்து பேசி, சிவஞான போதத்தின் மூலமொழியென்ன? வடமொழியா? bj‹bkhÊah? என்று கேட்டு, சிவஞான போதம் மொழி கடந்த ஒன்று என்று தெளிவு செய்கையில், நல்லசாமி பிள்ளை தப்பு - தப்பு என்று மீண்டுங் கூக்குரலிட்டார். என் பேச்சு முற்றுப்பெற்றது. நல்லசாமி பிள்ளை பேச எழுந்தார்; சபா ரத்தினம் பேச எழுந்தார். இஃது ஒழுங்கு முறையா என்று தலைவர் காதைக்கடித்தேன். இருவரும் என் கூற்றை மறுத்தனர். விடைகூற விரைந்தேன். பெருந்தலைமை என்விரைவை அடக் கியது. mofŸ KoîiuÆš v‹ ng¢ir¥ g‰¿¤ j§fU¤ij btËÆ£lnghJ, ‘FHªij ifÆš f¤âí« gHK§ bfhL¡f¥g£lhš mJ ifiaí« mW¤J¡ bfhŸS k‹nwh? என்று குறிப்பிட்டார். கூட்டங் கலைந்தது. பலர் பலவாறு பேசிச் சென்றனர். நல்லசாமி பிள்ளையும் சபாரத்தின மும் முறை தவறியே நடந்தனரென்றும், தலைவர் அவ்விருவரை யும் இடையில் பேசவிட்டது ஒழுங்குமுறையாகாதென்றும், காரணங் கூறாமல் அடிகள் குழந்தை - கத்தி என்றதும் தவ றென்றும் சி.டி. பார்த்தசாரதி முதலியார் வெளிப்படையாகப் பலர் கேட்க விளம்பினார். நடுநிலையர் எங்கும் உள்ளனர் என்று சொல்லிக்கொண்டு யான் இரத்தினவேல் முதலியார் வீட்டுக்குச் சென்றேன். அவ்வீடு ஒரு சொற்போர்க் களமாயிற்று. அடுத்தநாள் காலையிலே ஞானியார் சுவாமிகளிடத்திருந்து அழைப்பு வந்தது. யான் அடிகளைக் கண்டேன். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அடிகள் என்னிடம் உரையாடினர். முன்னாள் நிகழ்ச்சியை அவருந் தொடவில்லை; யானுந் தொடவில்லை. அந்நிகழ்ச்சி என்னை உறுத்தவே இல்லை. அடிகளின் அறிவும் அன்பும் என்னை ஆண்டன. அவர்தம் தொண்டர் குழாத்திலே யானும் ஒருவனானேன். 1914ஆம் ஆண்டில் விழா கூடலூரில் நடந்தது. தலைவர் ஞானியார் சுவாமிகளே. அதில் யான் முப்பொருளுண்மை யைப் பற்றிப் பேசினேன். முன்னே பேசிய பலர் கால வரம்பை மீறிய காரணத்தால் காலநெருக்கடி ஏற்பட்டது. மணம்பூண்டி குமாரசாமி பிள்ளையும், மணிமங்கலம் திருநாவுக்கரசு முதலியாரும், சச்சிதானந்தம் பிள்ளையும், யானும் சுருங்கிய நேரத்தில் பேசுவதென்று உறுதி செய்தோம். யான் பாசத்தைப் பற்றி ஐந்து நிமிடமும், பசுவைப் பற்றி ஐந்து நிமிடமும், பதியைப்பற்றி ஐந்து நிமிடமும் பேசினேன். பின்னே சமாஜம் மேலும் மேலும் இவரவில்லை; இழிந்தே போயிற்று. காரணம் சமாஜத்தில் அழுக்கு மூட்டைகள் நிரம்பினமையும், சீர்திருத்தக்காரர் ஒதுங்கினமையும். யான் பலதிற வேலைச் சூழலிடை மூழ்கலானேன். அதனால் சமாஜ நினைவு எனக்கு அடிக்கடி தோன்றுவதுமில்லை. சமாஜம் மறையுமோ என்று ஐயுறத்தக்க நிலைமையும் உற்றது. 1924ஆம் ஆண்டில் ஞானியார் சுவாமிகள் முயற்சியால் சமாஜம் மீண்டும் உயிர்த்தெழுந்தது. விட்டும் தொட்டும் சமாஜக் கூட்டங்களுக்கு யான் போவதுண்டு. சைவசித்தாந்த மகா சமாஜத்தின் வெள்ளி விழா, கிழக்கு மருதூரில் பெருநிலக் கிழவர் நாராயணசாமி நாயுடுவின் திருமணத்தின்போது (1930) அவர் முயற்சியால் நடந்தேறியது. முதல் நாள் விழா என் தலைமையில் கொண்டாடப்பட்டது. அத்தலைமையுரை நினைப்பவர் மனம் என்னும் நூலாக வெளிவந்துள்ளது. 1934ஆம் ஆண்டுக் கூட்டம் திருவதிகையில் ஈண்டியது. அதற்குத் தலைமை வகிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. திறப்பு விழா ஞானியார் சுவாமிகளால் நிகழ்த்தப் பெற்றது. மகா நாட்டைச் சிறப்பிக்கப் பலதிறக் கூட்டங்கள் செறிந்தன. வர வேற்புக் குழு எவ்வகையிலும் இடுக்கணுறவில்லை; எல்லா வற்றையும் தாங்கும் முறையிலேயே அக்குழு அமைந்தது. பண்ருட்டி இராஜகோபால் செட்டியார், மருதூர் நாராயண சாமி நாயுடு, திருவெண்ணெய்நல்லூர் சின்னசாமி ரெட்டியார் முதலியவரின் அன்புத் தொண்டுகள் என்றும் மறக்கற்பாலன வல்ல. என் தலைமையுரையில் ஜைநத்துக்கும் சைவத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தேன். அது சைவ நூல்களை மட்டும் ஆராய்ந்தவர்க்கு ஒருவிதக் கலக்கத்தை உண்டாக்கியது. அக்கலக்கம் கலகமாக மூளவில்லை. ஞானியார் சுவாமிகள் பண்டிதமணி கதிரேசச் செட்டியார், வேங்கடசாமி நாட்டார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை முதலியோர் எனது தலைமையுரையைப்பற்றிக் கூடிக்கூடிப் பேசினரென்று சில இளைஞர் வாயிலாகக் கேள்வியுற்றேன். இவ்வாண்டு மதுரையில் கூடப்போகும் சமாஜ விழாக் கூட்டத்துக்கு யான் மீண்டும் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். காலநிலை சமாஜப் போக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கிறேன். தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபை தூத்துக்குடியில் ஒரு சைவசித்தாந்த சபை இருக்கிறது. மறைமலை அடிகளுடன் அச்சபைக்கு யான் இரண்டு முறை (19-12-1913) சொற்பொழிவாளனாகச் சென்றேன். பின்னே இரண்டு முறை 1924ஆம் ஆண்டிலும், 1928ஆம் ஆண்டிலும் தலைவனாகச் சென்று பணியாற்றினேன். முதல் தலைமையுரை சைவத்தின் சமரசம் என்னுந் தலைப்புடனும் இரண்டாந் தலைமையுரை சைவத் திறவு என்னுந் தலைப்புடனும் நூல்களாகி வெளிவந்து உலவுகின்றன. பூவாளூர் சைவசித்தாந்த சபை பூவாளூரிலோ ஒரு சைவசித்தாந்த சபை உண்டு. அதிலும் யான் இரண்டு ஆண்டுவிழாக்களில் தலைமை வகித்தேன். முதலாவது இராமசாமி நாயக்கரும், யானும் காங்கிர தொண்டுசெய்த காலத்தில் (1924) நிகழ்ந்தது. இரண்டாவது அவரும் யானும் அரசியற் கொள்கையில் மாறுபட்ட காலத்தில் (1929) நிகழ்ந்தது. இம்முறை முதல்நாள் நாயக்கர் கூட்டத்தாரால் சில கேள்விகள் கேட்கப்பட்டன. இரண்டாம் நாள் காலையில் ஏரியின் ஒரு கரையில் சுயமரியாதையரும், மற்றொரு கரையில் சபையைச் சார்ந்த வரும் நீராடினர். அப்பொழுது அவர்கள், நேற்றுத் திரு.வி.க. எப்படியோ ஏமாற்றிவிட்டார். இன்று தொல்லை விளைத்தே தீரல் வேண்டும் என்று பேசினார்களாம். அதை மற்றவர் கேட்டனராம். இச்செய்தி என் செவிக்கு எட்டியது. யான் நம்பவில்லை. சுயமரியாதை வீரர் ஒருவரை அழைத்து, என்ன ஏரியில் பேசினீர்கள்; தொல்லை விளக்கம் பேசினீர்களாமே என்று கேட்டேன். முழுப் பொய் என்று சொல்லி அவர் போனார். சிலர் முயற்சியால் சுற்றுப் பக்கத்தி லுள்ள கிராமத்தார் கூட்டங்கள் திரண்டு திரண்டு வந்தன. எனக்கு ஐயம் உண்டாயிற்று. சுயமரியாதையரால் தொல்லை விளையாதென்று யான் நம்புகிறேன். மற்றவரால் அவர்க்கு எவ்விதத் தொல்லையும் விளைதலாகாது என்று நண்பர் குமாரசாமி பிள்ளையினிடஞ் சொல்லிவிட்டேன். இரண்டாம் நாள் கூட்டத்திலே சுயமரியாதையர் தொகை சுருங்கியிருந்தது; மற்றவர் தொகை பெருகியிருந்தது. சில கேள்விகள் பொறிக்கப் பெற்ற துண்டு வெளியீடுகள் வழங்கப்பட்டன. அது போழ்து சிறு குழப்பம் எழும்போல் தோன்றியது. குழப்பம் வலுக்க வில்லை. பொருந்திய வினாக்கட்கு வேங்கடசாமி நாட்டார் பேச்சிலே விடைகள் பிறந்தன. முடிவுரையில் சைவத்தின் சமரசம் முதலியன விளக்கப்பட்டன. விழா இனிது முற்றுப் பெற்றது. சைவ சபைகள் தென்னாட்டிலுள்ள சைவ சபைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு என் பேச்சைக் கேட்டிருக்கும். என்னை அழைக்க இசையாத சில சைவ சபைகளிருந்தன. அவைகளும் இராமசாமி நாயகருடைய சுயமரியாதை பிரசாரத்தால் என்னை அழைக்க லாயின. தீட்சை யான் சிவ தீட்சை பெறாமலே இருந்தேன். அதிலே எனக்கு உறுதி உண்டாகவில்லை. புறதீட்சை அவசியமா என்று ஒரு முறை யான் கதிரைவேற் பிள்ளையைக் கேட்டேன். அவர் புற உலகம் ஒன்றிருக்கிறது. அதன் உறவு நமக்கு உண்டு. அதனுடன் ஒத்து உழைப்பதால் தீமை விளையாது என்று கூறினர். ஆனால் அவர், தீட்சை செய்துகொள்ளுமாறு என்னை வலியுறுத்தி னாரில்லை. தீட்சை செய்துகொள்ளுமாறு என்னைப் பெரிதும் வலியுறுத்தியவர் வண்டிபாளையம் இராசப்ப முதலியார். அவ ரது நல்ல குணம் அவர்வழி என்னை நடக்க உந்தும்; சில சமயம் நடிக்கவும் உந்தும். அவர் சிதம்பரம் முத்துக்கற்பக தேசிகரைக் கொண்டு எனக்குத் தீட்சைகள் செய்வித்தனர். சமயம் விசேடம் என்ற இரண்டு தீட்சைகள் எனக்குச் செய்யப்பட்டன. வேளைக்கு வேளை முறைப்படி யான் அனுஷ்டானம் நிகழ்த்தியே வந்தேன். என் மனம்மட்டும் அனுஷ்டானத்தில் ஆழ்ந்ததே இல்லை. அஃது எனக்கு இயந்திர வேலைபோல் தோன்றிற்று. ஆனால் யான் இயந்திரத்தை இயக்காமலில்லை; இயக்கியே வந்தேன். முதல்முறை யான் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபைக்குச் சென்றிருந்த போது, அங்கே ஒருவர் அனுஷ்டானஞ் செய்வதை இன்னொருவர் குறைகூறுவதையும், இவர் செய்வதை அவர் இழித்துக் கூறுவதையுங் கண்டேன்; கேட்டேன். புறத்துக்கு மக்கள் எவ்வளவு அடிமையாயிருக்கிறார்கள் என்று மனம் நினைந்தது. அந்நினைவு எனது அனுஷ்டானத்தை நிறுத்தியது. மேலே நிர்வாண தீட்சை செய்தல் கூடாதென்றும் உறுதி கொண்டேன். தீட்சை என்னிடம் வேர்கொள்ளாமலே கிடந்தது. வேர் கொள்ளாத ஒன்று என்றாதல் வெம்பி விழுமன்றோ? வழிபாடு திருக்கோயில் வழிபாடு செய்வதில் எனக்கு ஊக்கம் அதிகம். வெள்ளிக் கிழமைதோறும் திருமயிலைக் கபாலீச்சுரத் துக்குப் போவதை நியதியாகக் கொண்டேன். சிற்சில சமயம் திருவொற்றியூர், திருப்போரூர் முதலிய திருப்பதி கட்குஞ் செல் வேன். எனக்கு வழிபடு தெய்வம் முருகனே ஆயினன். காரணம் யான் பிறந்த மரபும், கதிரைவேற்பிள்ளையின் சேர்க்கையும், இராசப்ப முதலியார் பாம்பன் சுவாமிகள் முதலியோர் கூட்டுறவுமாம். பொதுமை நூலாராய்ச்சியாலும், பிரசாரத்தாலும், வழிபாட்டாலும், பிறவாற்றாலும் சைவம் என்னை எப்படி வளர்த்தது? தொடக் கத்தில் உலகில் பல சமயங்கள் உண்டென்றும், அவைகளுள் சைவ சமயம் ஒன்றே மெய்ம்மையுடையதென்றும், அது வீடு பேற்றிற்குரியதென்றும் நம்பினேன். பின்னே அந்நம்பிக்கை படிப்படியே மறைந்தது. சோமசுந்தர நாயகர் எழுதிய நூல்கள் சிலவற்றில் யானை கண்ட குருடர் கதையைக் கண்ணுற்றேன். பின்னே அதைப் பல நூல்களில் காணலானேன். அக்கதை என்னுள் சைவசமயத்தின் சமரசத்தை விதைத்தது. சிவஞான சித்தியாரிலுள்ள ஒரு பாட்டும் அவ்விதையை முளைக்கச் செய்தது. அது வருமாறு: ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள் யாதுசம யம்பொருள் நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும்பிணக்க தின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருணூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே அடங்கியிடும் அவை இரண்டும் அரனடிக்கீழ் அடங்கும் மேலும், வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே எனவும், விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும் எனவும் வரும் அப்பர் திருவாக்கும், உரைசேரும் எண்பத்து நான்கு நூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உளுயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் எனவும், எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்துபாடல்.... எனவும் வரும் ஞானசம்பந்தர் திருவாக்கும், இன்னோரன்ன திருவாக்குகள் பலவும் சைவம் பொதுமை என்பதை உறுதிப் படுத்தின. வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மையோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது..... என்னும் மணிமொழி சிவஞானசித்தியாரில் மிளிர்வது. தாழ்வெனுந் தன்மையாவது முனைப்பற்ற நிலை. இதனால் யான் என்ன உணர்ந்தேன்? யான் என்னும் ஜீவபோதம் அற்ற விடத்தில் விளங்குவது சைவம் என்று உணர்ந்தேன். ஜீவபோதம் உள்ளவரை, சாதி மதம் மொழி நிறம் நாடு முதலிய கட்டுக்கள், பொதுமை அறத்துக்குக் கேடு விளைத்தே வரும். அப்போதம் அற்றதும் கேடு விளைக்கும் கட்டுக்களும் அறுந்துபோகும். முனைப்பற்ற இடத்தில் விளங்குவது சைவம் என்றால், அஃது எப்படி ஒரு கூட்டத்தார்க்குமட்டும் உரியதாகும்? முனைப்பற்ற விடத்தில் ஒளிருஞ் சைவ சமரசத்தைச் சைவ சமயநெறி, எவ்வுயிரும் நீங்காது உறையும் இறைசிவனென்று - எவ் வுயிர்க்கும் அன்பாய் இரு என்று அறிவுறுத்துகிறது. எவ்வுயிர்க் கும் அன்புடன் பணி செய்வது சைவம் என்பது எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாயிற்று. இவ்வுணர்வை என்மாட்டுத் திருமூலரும், தாயுமானாரும், இராமலிங்க சுவாமிகளும் நிலைபெறுத்தினர். எனது சைவம், சமரச சன்மார்க்கமாயிற்று. வைணவம் திருநீறிடுவது சைவம் திருமண்ணிடுவது வைணவம் என்று எண்ணிய காலமுமுண்டு. இராயப்பேட்டையிலே சில அரி பஜனைகளிருந்தன. ஒவ்வொருபோது ஒவ்வொன்றுக்குச் செல்வேன்; பாட்டுக்களைக் கேட்பேன்; பிரசாதம் பெற்றுத் திரும்புவேன். முத்து முதலி தெருவிலே சில காலம் வசன இராமாயணமும், சில காலம் வசன பாரதமும் படிக்கப்படும். அக்கதைகளும் என் காதில் மேயும். அங்கும் இங்கும் மதவாதக் காலங்களில் சைவர் கதிரைவேற் பிள்ளையின் கூட்டத்துக் கேகுவர்; வைணவர் ஏகாங்கி சுவாமிகளின் கூட்டத்துக் கேகுவர். யான் அங்கும் போவேன்; இங்கும் போவேன். கண்டனப் பேச்சுக்களிடையும் ஏகாங்கி சுவாமிகள் வைணவ சம்பிரதாய நுட்பங்களைக் கூறுவார்கள். அவைகள் எனக்கு இன்பூட்டும். பெருமாள் சேவை யான் நண்பருடன் கடலோரஞ் சென்று திரும்புங் காலை வழியிலே பார்த்தசாரதி பெருமாளைத் தொழுது வருவேன். சனிக்கிழமை தோறும் பார்த்தசாரதியை வழிபடுவது எனது நியதி ஆயிற்று. பெருமழை பெய்யும் போதும் என் நியதியி னின்றும் யான் வழுக்கி வீழ்வதில்லை. ஒருபோது ஒரு சனிக் கிழமை திருவொற்றியூர்க்குச் சென்று திரும்பினேன். வண் ணாரப்பேட்டை நண்ணியதும் (அங்கே டிராம் இல்லாத காலம்) திருவல்லிக்கேணிப் பெருமாள் திருக்கதவு அடைக்கப்படுமோ என்ற ஐயம் எழுந்தது. நடந்தேன்; வேகமாக நடந்தேன்; ஓடினேன்; விரைந்து ஓடினேன்; ஓடியோடிப் பெருமாளை வணங்கினேன். உள்ளங் குளிர்ந்தது. யான்பெறும் நலங்க ளெல்லாம் பார்த்தசாரதியின் அருளாலேயே கிடைக்கின்றன என்று எண்ணினேன்; ஒவ்வொரு வகுப்பிலும் யான் முதற் பரிசில் பெறுதற்கும் அப்பெருமாள் அருளே துணை செய்ததென்று நம்பினேன்; உறுதியாக நம்பினேன். இந்நம்பிக்கையை மாற்றச் சிலர் முயன்றனர். எவர் முயற்சியாலும் பயன் விளையவில்லை. சோமசுந்தரநாயகர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முதலி யோர் எழுதிய வைணவக் கண்டன நூல்களைப் பயின்றேன்; கதிரைவேற் பிள்ளையின் கண்டனப் பேச்சுக்களை நேரே கேட் டேன். அக்கண்டனங்களும் எனது நிலையை மாற்றவில்லை. சில வீர சைவர் என்னை எள்ளி எள்ளி நகையாடுவர். அவ்வெள்ள லும் நகையும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை. திருமால் வழிபாட்டை யானே வலிந்து செய்யப் புகுந்தேனில்லை. அஃது எப்படியோ என் வாழ்வில் கலந்தது; அஃது இயற்கையாயிற்று. பாட்டு நீக்கம் யான் கதிரைவேற் பிள்ளை சரித்திரம் எழுதினேன். அதிலே கடவுள் வாழ்த்தில் 1திருமாலையும் போற்றினேன். அந்நூலை வெளியிட்ட சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார் திருமால் வாழ்த்தை நீக்கினர். அரங்கேற்ற மேடையிலேயே அஃது எனக்குத் தெரிய வந்தது. அந்நிலையில் ஒன்றுஞ் சொல்லுதலும் இயலவில்லை; செய் தலும் இயலவில்லை. அப்பாட்டை யான் விட்டு விடவில்லை. அதைப் புராணப் பிரசங்கத்திலே கடவுள் வாழ்த்தில் சேர்த்துச் சொல்லியே வந்தேன். சில ஆண்டு கடந்து அந்த வேதா கமோக்த சைவ சித்தாந்த சபையிலேயே யான் வாதவூரடிகள் புராணம் சொல்லுதல் நேர்ந்தது. திருமால் வாழ்த்தையும் புகன்று யான் புராணந் துவங்கினேன். அதைச் சபைத் தலை வரும் மற்றவரும் விரும்பவில்லை. திருமால் வாழ்த்துச் செப்பு தல் கூடாது என்று அச்சபை யார் கூறினர். அதற்கு யான் இணங்கவில்லை. பிரசங்கம் ஒருநாள் அளவில் நின்று போயிற்று. ஈரத்தமிழ் முத்து முதலி தெருவிலே திருவேங்கடநாயகர் என்ற பாகவதர் ஒருவர் இருந்தனர். அவர் வைணவ நூல்களை ஆராய்ந்த வண்ணமிருப்பவர். அவ்வாராய்ச்சிலே யானுங் கலந்து கொள்வேன். வைணவ சம்பிரதாயங்கள் அவரால் சொல்லப்படும். அவைகளைக் கேட்பதில் எனக்குச் சோர்வு உண்டாவதில்லை. திருவேங்கட நாயகர் கூட்டுறவால் எனக்கு ஒருபெரும் நலன் விளைந்தது. அஃதென்னை? நாலாயிரப் பிரபந்தத்தில் எனக்கு வேட்கை எழுந்தமை. நாயகர் பழைய வியாக்கியானங்களிலுள்ள நுட்பங்களை எடுத்தெடுத்துக் காட்டுவர். ஆழ்வார் மொழியிலும் நாயன்மார் மொழியிலும் எனக்கு எவ்வித வேற்றுமையும் தோன்றுவதில்லை. ஆழ்வார் ஈரத்தமிழ் எனது உள்ளத்தை எவ்வெவ்வழியில் குளிர்வித்த தென்பதை யான் அறிவேன். திருவாய்மொழியில் யான் மூழ்கி னேன். அதனால் தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்னும் நூல் என்னிடத்திருந்து பிறந்தது. கண்ணன் என் தலைவனானான். யான் தலைவியானேன். எனது காதல் திருமால் அருள் வேட்டலைப் பாடுவித்தது. விஷ்ணு எனக்கு வைஷ்ணவம் எப்படி விளங்கியது? சுருங்கச் சொல்கிறேன். விஷ்ணு சம்பந்தம் வைஷ்ணவம். விஷ்ணு என்னுஞ் சொல் வியாபகம் என்னும் பொருளுடையது. சர்வ வியாபகமுடைய ஒன்று விஷ்ணு. விஷ்ணுவுக்குத் தமிழ்ப் பெயர் இறை என்பது. எங்கும் இறுத்தலையுடையது இறை. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பொருளை வடமொழியர் விஷ்ணு என்றனர்; தென்மொழியர் இறை என்றனர்; பிற மொழியர் பிற பிற கூறினர். பொருள் ஒன்றே. கடவுளுக்கும் பல இயல்புகளுண்டு. அவைகளுள் ஒன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்குந் தன்மை. இத்தன்மையுடையது விஷ்ணு. எங்குமுள்ள ஒன்று எப்படி ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியதாகும்? அஃது எங்குமுள்ள எல்லார்க்கும் உரியதன்றோ? ஆகவே, வைஷ்ணவம் சமரசமுடையதென்று தெளிந்தேன். ஈசன் எங்குமுள்ளவன் என்னுங் கொள்கையுடையவர் எவ்வுயிர்க்காதல் தீங்கு செய்ய ஒருப்படுவரோ? படார். இதனால் வைஷ்ணவம் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத கொள்கையுடையதென்று உணரலானேன். வைஷ்ணவம், ஸ்ரீ வைஷ்ணவம் என்னும் ஆட்சியையும் உடையது. பொருள் என்னை? உலகம் பலவாறு கூறும். எனக்கு ஸ்ரீ என்பது கருணையை உணர்த்துவதென்று தோன்றியது. எவ்வுயிர்க்குங் கருணை புரிவது ஸ்ரீ வைஷ்ணவம் என்று எனக்கு விளங்கியது. இதைச் சமரச சன்மார்க்கம் என்றால் என்ன? வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் என்று யான் சொல்வது சில கூட்டத்தார்க்குப் பிடிப்பதில்லை. அவர் என்னைப் பிரசாரத்துக்கு அழைப்பதில்லை. மற்றவர் என்னை அழைப்பர். தொழிலாளரிடத்தில் வேற்றுமை உணர்ச்சி கிடையாது. அவரால் காணப்பெற்ற வைணவக் கழகங்கள் பல உள்ளன. அவைகளில் எனது வைஷ்ணவப் பிரசாரம் நடைபெறும். சென்னைச் சூளைப்பட்டாளத்திலுள்ள வேங்கடேசகுணாமிர்த வர்ஷணி சபைக்கு யான் பன்முறை சென்று பேசியதும், தொழிலாளர் இயக்கம் சென்னையில் தோற்ற முறுதற்குக் காரணமாக அச்சபை நின்றதும் ஈண்டுக் குறிக்கற்பாலன. ஜைநம் இராயப்பேட்டையிலே, புதுப்பேட்டைத் தோட்டத் தெருவிலே ஜைநர் உறைவிடங்கள் சில உண்டு. அவர் இரவில் சாப்பிடுவதில்லை. அதனால் இரவில் சாப்பிடாதவர் ஜைநர் என்று யான் பிள்ளைமையில் எண்ணினேன். விளக்கம் பின்னே சைவ நூல்களில் ஜைநங் கண்டேன். எனக்கு ஒருவித ஜைநம் விளங்கிற்று. இலக்கிய முறையில் ஜைநத் தமிழ் நூல்களைப் பயின்றேன். அப்பயிற்சி ஜைநத்தை நன்கு தெரிந்து கொள்ளல் வேண்டுமென்ற அவாவை எழுப்பிற்று. அவ் வவாவைத் தீர்க்க இருவர் நேர்ந்தனர். ஒருவர் பார்சுநாத நயினார்; மற்றொருவர் அ. r¡fut®¤â eÆdh®, v«.V., ஐ.இ.எ. இவ்விருவரும் புதுப்பேட்டைத் தோட்டத் தெருவில் வதிபவரே. ஜைநா கெஜட்டும், வேறு சில ஆங்கில நூல்களும் எனக்குப் பெருந்துணை செய்தன. ஜைந நுட்பங்கள் பல எனக்குப் படிப்படியே புலப்பட்டன. ஜைநமும் சைவமும் வேறாக எனக்குப் புலப்படவில்லை. இடைக் காலத்திலேயே இரண்டும் பிரிவுற்றிருத்தல் வேண்டும் என்பது எனது ஊகம். இரண்டும் தத்துவத்தில் ஒற்றுமையுடையன என்பதும் எனக்குப் புலனாயிற்று. ஜைநமும் சைவமும் ஜைநத்துக்கும் சைவத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான் பேசியும் எழுதியும் வருகிறேன். அவ்வொருமைப் பாட்டைக் காஞ்சிபுரம் தி. அனந்தநாத நயினார் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும் என்னும் நூலுக்கு யான் சூட்டிய அணிந்துரையில் சிறிது விளக்கியுள்ளேன்; சைவ சித்தாந்த மகா சமாஜச் சார்பில் திருவதிகையில் 1934ஆம் ஆண்டில் கூடிய மகாநாட்டுத் தலைமை யுரையிலும் விரித்தோதியுள்ளேன். அத்தலைமையுரை சித்த மார்க்கம் என்னும் நூலாகத் தமிழ் நாட்டில் உலவி வருகிறது. திருஞானசம்பந்தர் ஜைந சமயத்தை அறவே தொலைக்க முயன்றார் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதைப் புராண உலகம் ஏற்கும்; ஆராய்ச்சி உலகம் ஏற்றல் அரிது. உண்மை காணத் திருஞானசம்பந்தர் திருவாக்குகளைக் கொண்டே ஆராயப் புகுந்தேன். ஆராய்ச்சியால் திருஞான சம்பந்தர் ஜைநத்தின் வேரைக் கல்ல முயன்றார் என்பது பெறப்படவில்லை; அவர் திகம்பர ஜைநத்தை மறுத்துச் சுவே தாம்பர ஜைநத்துக்கு ஆக்கந்தேடினார் என்பது பெறப்படு கின்றது; இதனுடன் வைதிகத்தையுங் கலக்க வைத்தார் என்பதும் புலனாகிறது. (வைதிகம் - வேதசம்பந்தம்). கலப்பு சமரச நோக்கைக் கொண்டதா யிருக்கலாம். முன்னைநாளில் ஜைநம் ஒன்றாகவே இருந்தது. பின்னே அஃது இரண்டாகப் பிரிந்தது. அவை திகம்பரம் சுவேதாம்பரம் என்பன. பெண் பிறவிக்கு வீடுபேறில்லை என்றும், பெண் தவங்கிடந்து ஆண் பிறவி தாங்கிய பின்னரே வீடுபேறெய்தல் கூடும் என்றும், இயற்கையின்பத்தைத் துறத்தல் வேண்டும் என்றும் சொல்வது திகம்பரம். இதற்கு உடன்படாதது சுவே தாம்பரம். திகம்பரம் தென்னாட்டில் பரவியது. அது திருஞான சம்பந்தரால் மறுக்கப்பட்டது. சம்பந்தர் பத்தாம் பாட்டு தோறும் வழங்கியுள்ள மறுப்புக்களைத் திரட்டி ஒழுங்குசெய்து ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்கினால், அவை பெரிதும் சுவேதாம்பர ஜைநத்துக்கு ஆக்கந் தேடுவனபோல் தோன்றும். வடநாட்டில் சுவேதாம்பர ஜைநமென்று சொல்லப்படுவது தென்னாட்டில் சைவம் என்று வழங்கப்படுகிறதென்று தெரி கிறது. இதுபற்றிப் பல குறிப்புரைகள் பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணத்தில் பொறித்துள்ளேன். என் வாழ்க்கையில் ஜைநமும் சைவமும் சைவமும் ஒன்றென விளங்கினமை குறித்து மகிழ்வெய்துகிறேன். கழுவேறிய படலம் - என்றும் கழுவேற்றிய படலம் என் றும் வழங்கப்படுவனவெல்லாம் பின்னாளில் புனையப்பட்டவை என்பது என் கருத்து. புனைந்துரைகளைச் சரித்திரமென்று கொண்டு, திருவிழாக்கள் செய்வது தவறு என்று யான் மறுப்பதுண்டு. சிவம் சைவ நூல்களில் சிவமெனுஞ் செம்பொருளைக் காண் பதுபோல ஜைந நூல்களிலும் அதைக் காணலானேன். 1சிவம் சைவராலும் போற்றப்படுகிறது; ஜைநராலும் போற்றப்படுகிறது. அதன் சகரநாமங்களிலும் சிவம் திகழ்கிறது; இதன் சகரநாமங்களிலும் சிவம் பொலிகிறது. ஒரு சிவத்தை வழுத் தும் ஒரு சமயம் எப்படியோ இரண்டாகப் பிரிந்தது. இரண்டை யும் ஒருமைப்படுத்த யான் முயன்று வருகிறேன். அஹிம்ஸை - தயை ஜைநத்தின் அடிப்படையான கொள்கை என்ன? அஹிம்ஸா பரமோ தர்மா என்பது; 2தயா மூலதர்மம் என்பது. அஹிம்ஸை என்னும் தயையைப் புறக்கணிக்கும் சமயம் உண்டோ? உளதாயின் அது சமயம் என்னும் பொருளுக்கு உரியதாகாது. தயையுடையா ரெல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே என்றார் இராமலிங்க சுவாமிகள். அஹிம்ஸை என்னும் தயையை அறிவுறுத்தும் ஜைநம் சமரசமுடைய சன்மார்க்கமாகாதா? பௌத்தம் யான் மாணாக்கனா யிருந்தபோது கடலோரத்தில் விளையாடச் செல்வது வழக்கம். ஐ அவுஸுக்குப் பக்கத்திலே யுள்ள ஒரு கட்டிடத்திலே, மகா போதி சங்கம் என்று தீட்டப் பெற்ற ஒரு நீண்ட பலகையைக் காண்பன். ஒருநாள் அங்கே கூட்டங் கூடியிருந்ததைப் பார்த்தேன். அக்கூட்டம் என்னை ஈர்த்தது. ஒருவர் புத்தர் பிறப்பைப்பற்றிப் பேசினர். இன் னொருவர் நன்றி கூறினர். அவர் இலட்சுமி நரசு நாயுடு என் றும், இவர் சிங்காரவேல் செட்டியார் என்றும் தெரிய லானேன். தொல்லை விளைத்தல் இராயப்பேட்டையிலே ஒரு பௌத்த சங்கம் அமைந்தி ருந்தது. அஃது என் கருத்தில் நுழைந்ததில்லை. அச்சங்கத்தில் நாத்திகம் போதிக்கப்படுகிறதென்றும், ஆழ்வார் நாயன்மார் கிறிது முதலியோர் நிந்திக்கப்படுகிறாரென்றுங் கேள்வி யுற்றேன். அச்சங்கத்தின் நடைமுறை பலவிடங்களில் பேசப் பட்டது. அந்நிலையில் கதிரைவேற்பிள்ளை புத்த மதத்தை மறுக்கப் புறப்பட்டார்: முதல் முதல் மயிலாப்பூரிலே மறுப்புக் கூட்டங் கூடியது. புத்த மத கண்டனம் என்றொரு நூலும் கதிரைவேற் பிள்ளையால் இயற்றப்பட்டது. மறுப்புக் கூட்டங்கள் பல இடங்களில் கூடின; இராயப்பேட்டையிலுங் கூடிற்று. அக்கூட்டங்கள் எனக்கு வெறியூட்டின. வெறிக் கொண்டு சில மாணாக்கரைச் சேர்த்து ஒருநாள் பௌத்த சங்கக் கூட்டத்துள் நுழைந்தேன். அப்பொழுது சிங்காரவேல் செட்டியார், பைபில் சரித்திர சம்பந்தமான நூலாகாது என்று பேசி முடித்தார். மறுவாரம் யான் பெருங் கூட்டம் திரட்டிச் சென்றேன். அயோத்திதா பண்டிதர் அருங்கலச் செப்பி னின்றும் இரண்டொரு பாட்டை எடுத்துக்காட்டி உரை கூறினர். இலட்சுமி நரசு நாயுடு, ஸ்ரீரங்கம் பௌத்தக் கோயி லென்று பேசினர். சிங்காரவேல் செட்டியார் திருஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய சரித்திரத்தை மறுத்து வந்தார். யான் குறுக்கிட்டேன். ஒரே கூக்குரல் எழுந்தது. எவரோ ஒருவர் வானரங்கள் என்றார். மாணாக்கர் சும்மா இருப்பரோ? பெருங் குழப்பம் விளைந்தது. அன்றுதொட்டுப் பௌத்த சங்கச் சொற்பொழிவுகளுக்குத் தொல்லை விளைத்தே வந்தோம். டார்வின் கோமளீசுரன்பேட்டைப் புதுப்பேட்டையிலே ஒரு பௌத்த சங்கம் கூடிற்று. அதிலே இலட்சுமி நரசு நாயுடு, சிங்காரவேல் செட்டியார் முதலியோர் பேசுகின்றனர் என்று கேள்வியுற்றேன்: யான் கூட்டத்துடன் அங்குஞ் சென்றேன். அங்குக் குழுமியிருந்த சிலர் என்னை உறுத்து உறுத்து நோக்கினர். எனக்கு அச்சமுண்டாயிற்று. யான் பேசாமல் அமர்ந்தேன். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினர். என் உள்ளம் அதில் ஈடுபட்டது. கலகஞ் செய்யப் போந்த யான் டார்வின் வகுப்பு மாணாக்கனானேன். செட்டி யார் ஆசிரியரானார். டார்வின் கொள்கை எனது பின்னைய சமய ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று. மணிமேகலை யான் தமிழ் இலக்கிய உலகுடன் உறவுகொண்ட போது மணிமேகலையைக் கண்டேன். அக்காட்சியை என்னென்று கூறுவேன்! அது தமிழ் அமிழ்தமா? அற ஆழியா? சீல இம யமா? பௌத்த நிதியா? எல்லாஞ் சேர்ந்த ஒன்றா? அச் செல்வ நூலை யாத்த ஆசிரியரை - தமிழ்ப்பெருமானை - என்போன்றார் உய்யும் பொருட்டுப் பௌத்த தர்ம சாரத்தைத் தமிழில் இறக்கி உதவிய வள்ளலை - அறவோரை - எம்மொழியால் வழுத்த வல்லேன்! பிக்ஷு பௌத்தத்தைப்பற்றிய ஆங்கில நூல்களிற் சிலவற்றைப் படித்தேன். தர்மபாலர், கர்னல் ஆல்காட், ஜீனராஜதாஸர் முதலியோர் பேச்சும் எழுத்தும் எனக்குக் கொழு கொம்பாயின. இராயப்பேட்டைச் சாக்கிய பௌத்த சங்கத்திலே எழுந்தருளி யிருந்த ஒரு பிக்ஷுவின் திரிபிடக போதனை எனது ஆவிக்கு அமுதமாயிற்று. ஈமம்வரை இராயப்பேட்டைச் சாக்கிய பௌத்த சங்கத் தலைவர் அயோத்திதா பண்டிதர் இவ்வுலக வாழ்வை நீத்தபோது யான் ஈமம்வரை சென்று திரும்பினேன். அயோத்திதாஸர் என் குடும்ப மருத்துவர். அவர் தஞ் சங்கம் எனது மதவெறியைத் தீர்க் கும் மருந்தாயிற்று. அவரது பிரிவு எனக்குத் துன்பம் விளைத்தது. ஓர் இரங்கற்பாவும் என்னால் யாக்கப்பட்டது. பிரசாரம் பொதுவாகப் பல சங்கங்களிலும் சிறப்பாக பௌத்த சங்கங்களிலும் பௌத்தம், தர்மம், சங்கம் முதலிய பொருள் களைப் பற்றிப் பேசும் பேறு எனக்குக் கிடைப்பதுண்டு. மணி மேகலையைப் பற்றி யான் நிகழ்த்திய சொற்பொழிவுகள் பலப்பல. இங்கே ஒரு பௌத்த சங்க ஆண்டு விழா நினைவுக்கு வருகிறது. அவ்விழாவின் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் (6-4-1928) நடந்தது. இலட்சுமி நரசு நாயுடு தலைமை வகித்தார். தமிழ் நூல்களில் பௌத்தம் என்ற பொருள் பற்றி யான் பேசினேன். அப்பேச்சு ஒரு சிறு நூலாக வெளிவந்துள்ளது. பிறப்பு இறப்பு யான் மனிதன்; எண்ணமுடையவன்; எண்ணங்களே யானாகி வருபவன். ஓர் எண்ணம் எழுகிறது; மீண்டும் அது வீழ்கிறது. தொடர்ந்து மற்றுமோர் எண்ணம் எழுகிறது; அது வும் வீழ்கிறது. இவ்வாறு வாழ்வில் எண்ணம் எழுதலும் வீழ் தலும் நிகழ்ந்த வண்ணமிருத்தல் வெள்ளிடைமலை. ஒன்றைப் பற்றி யான் ஒருவிதக் கருத்துடைய வனாகிறேன்; பல காரணத் தால் மீண்டும் அக்கருத்து மாறப் பெறுகிறேன். ஒரு கருத்தில் யான் நிற்கும்போது ஒருவித மனிதனாகிறேன்; அதை விடுத்து யான் வேறு கருத்துக்குச் செல்லுங்கால் யான் வேறு ஒருவித மனிதனாகிறேன். இவ்வாறு பலவிதமனிதன் ஆகி ஆகிவளர் கிறேன். இம்மாற்றமே பிறப்பிறப்பென்பது. ஒவ்வொரு கருத்தெழுவது ஒவ்வொரு பிறப்பெடுப்பதாகும். அவ்வக் கருத்து வீழ்வது அவ்வப்போது இறப்பதாகும். இப்பொழுது எனக்கு வயது அறுபது. இவ்வயதிலே எத்தனை முறை பிறந்திருப்பேன்; எத்தனை முறை இறந்திருப்பேன்; யான் எத்தனை எத்தனை மனிதனாகி மனிதனாகி வளர்ந்திருப்பேன். ஆனால் உலகம் என்னை ஒரே கலியாணசுந்தரம் என்று நினைந்து கொண்டிருக் கிறது. எனக்குள் பிறப்பிறப்பு நிகழ்வதை எனக்கு முதல்முதல் உணர்த்தியது பௌத்தமே. அவ்வப்போது உறும் பிறப்பிறப்பு நிகழ்ச்சியாலும் உணர்வாலும் என்ன பெறுதல் கூடுமென்று ஆய்ந்தேன்; நூல்களாலும் ஆய்ந்தேன்; சிந்தனையாலும் ஆய்ந்தேன்; பிறப்பிறப்பே அறும் நிலை கூடுமென்று அறிந் தேன்; இதைச் செயலில் அடைவதற்கு அடிப்படையாயிருப்பது சீலம் என்றுந் தெளிந்தேன். பௌத்தத்தின் போதனைகளுள் உயிர்போன்றது சீலம். சீலத்தைச் சீறும் சமயம் ஏதேனும் உண்டோ? எல்லாச் சமயங்களினூடும் புகுந்து நிற்பது சீலம். சீலமுள்ள இடங்களி லெல்லாம் பௌத்தமும் இருக்குமென்று விளக்க வேண்டுவ தில்லை. பௌத்தத்தின் சமரசம் எனக்குச் செவ்வனே விளங்கி யது. பௌத்தமும் சமரச சன்மார்க்க மென்பது தேற்றம். இலாம் இலாத்தைப்பற்றிய பல திறக்கருத்துக்கள் என்னுள் படிந்து கிடந்தன. யான் ஆயிரம் விளக்குப் பள்ளியில் ஆசிரியத் தொண்டாற்றியபோது, யான் ஒரு முலிம் நண்பரை அடைந் தேன். அவர் திருக்குரான் உள்ளக்கிடக்கையை ஒல்லும்வகை விளக்கிக் காட்டுபவர். யான் வெலி கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியனாகிய வேளையில் ஓய்ந்த நேரங்களில் அரபி பண்டிதரிடம் திருக்குரானைப்பற்றி உரையாடுவேன். அவரால் பல நுட்பங்கள் அறியலானேன். மகம்மத் அலியின் ஆங்கில மொழிபெயர்ப்பும், சில தமிழ் பெயர்ப்பும் எனக்கு நற்றுணை புரிந்தன. திருநாள் நபிநாயகம் பிறந்த திருநாட் கொண்டாட்டத்தில் சென்னையிலே பலவிடங்களில் யான் பேசுவது வழக்கம். மாய வரத்தில் கூடிய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பொறுப்பு (19-6-1936) ஒரு முறை எனக்குக் கிடைத்தது. மற்றுமொருமுறை அப்பொறுப்பு (27-5-1937) தென்காசியில் கிடைத்தது. முன்னைய தன் தலைமையுரை (26-6-1936) நவசக்தியில் வெளிவந்தது. போதனை இலாம் ஒரே கடவுள் உண்மையை அறிவுறுத்துவது; சகோதர நேயத்தைச் சாற்றுவது; உலகில் நானா பக்கங்களிலுந் தோன்றிய நபிமார்களையெல்லாம் ஏற்கும் பெருந்தகைமை வாய்ந்தது. இவையெல்லாம் சன்மார்க்கத்துக்கு உரியன என்பது எனக்குத் தெளிவாயிற்று. கிறிதுவம் முன்னாளில் இரட்சண்ய சேனையின் கிளைகள் சென்னை யிலே பலவிடங்களில் அமைந்திருந்தன. இராயப்பேட்டையும் ஒரு கிளையைப் பெற்றிருந்தது. சேனையர் பொதுவிடங்களில் பேசுவர். யான் அந்நாளில் பிள்ளைமை விளையாட்டில் மூழ்கிக் கிடந்தேன். பெரிதும் யான் விளையாட்டினின்றும் திரும்புங் கால் இரட்சண்ய சேனைக் கூட்டம் என் கண்ணிற்படும். யான் அக்கூட்டத்தை அடைவேன் சில ஆங்கிலேயர் தமிழில் பேசு வர். அது வேடிக்கையாயிருக்கும். கிறிதுவின் பெயர் என் காதில் படும். இராயப்பேட்டைப் போக்கிலிகள் சிற்சில சமயம் சேனையர் மீது கல்லெறிவார்கள். சாணக்குடம் எறிவார்கள்; மலக்குடம் எறிவார்கள். மலக்குழம்பிலே கிடந்த தவளைகள் திருவிளையாடல் புரியும். இவ்விழி செயல்கள் சேனையர்க்குச் சினமூட்டுவதில்லை. அவர் தமது கடமையைச் செய்து கொண்டே போவர். அக்காலத்தில் அவையெல்லாம் விளை யாடல்களாகவே எனக்குத் தோன்றின. பின்னே அவை, வாழ்வுப்படிகளைக் கடந்து செல்வதற்கு எனக்குரிய ஊன்று கோலாயின. பரிசில் பொருட்டு யான் வெலி கல்லூரியில் படிக்கப் போந்த நாள் முதல் எனக்குப் பைபிலுடன் தொடர்பு உண்டாகியது. வகுப்பில் அதையும் ஒரு பாடமாகப் படித்து வந்தேன்; ஞாயிறு வகுப்பில் அதன் போதனை கேட்பேன்; கோயிலுக்குப் போவேன்; அங்கே பாதிரியார் பேச்சுக்குச் செவி சாய்ப்பேன். அந்நாளில் யான் பைபிலை எற்றுக்குப் படித்தேன்? கேட்டேன்? பரிசில் பொருட்டே அதைப் படித்தேன்; கேட்டேன். யான் பைபில் எழுத்துக்களையே பயின்றேன். அதன் பொருளில் என் மனம் படிந்ததில்லை. முப்புரம் பள்ளி வகுப்புப்படிகளை ஏறஏற எனக்குச் சைவசமயப் பற்றும் உடன் உடன் வளர்ந்து வந்தது. அப்பற்று என்னை மதவெறியனாக்கிற்று. பைபில் ஆசிரியன்மாரிடத்தில் யான் வெளிப்படையாக வாதம் புரிவேன். பைபில் வகுப்பு வாத சபையாகும். ஐந்தாம்பார ஆசிரியர் கிருஷ்ணராவ் நல்லவர். அவர் பைபில் வகுப்பில் வாதத்துக்கு இடந்தருவர். அவர்க்கும் எனக்கும் வாதம் மூளும். மாணாக்கர் பலரும் வேடிக்கை பார்ப்பர். பைபில் வகுப்பை மாணாக்கர் எதிர்பார்த்த வண்ண மிருப்பர். அச்சமயம் கதிரைவேற் பிள்ளையை வெலி கல்லூரி தமிழாசிரியராகப் பெற்றிருந்தது. கிருஷ்ணராவ் விடுக்குஞ் சிக்கலான கேள்விகளுக்குப் பதில் யான் கதிரைவேற் பிள்ளை யினிடமிருந்தே பெற்று வருவேன். இங்கே பல கூறவேண்டுவ தில்லை. ஒன்றை மட்டுங் குறித்துச் சொல்ல விரும்புகிறேன். அது முப்புரம் எரிந்ததைப் பற்றியது. ‘átbgUkh‹ óÄiana nj®¤j£lhf¡ bfh©lhbuÅš, m¤nj® vªj¥ óÄÆ‹ ÛJ cU©L br‹wJ? என்று கிருஷ்ணராவ் கேட்டார். மாணாக்கர் நகைத்தனர். விடை நாளை சொல்வேன் என் றேன். அடுத்த நாள் பைபில் வகுப்பு நேரம் எப்பொழுது வரப் போகிறது வரப்போகிறது என்று மாணாக்கர் பலர் துடித்துக் கொண்டிருந்தனர். நேரம் உற்றது. ஆசிரியர் என்னைப் பார்த்துப் பதில் உண்டா? என்று வினவினர். உண்டு என்று, அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புர மெய்துவ தாரறி வாரே என்னுந் திருமந்திரப் பாட்டைப் படித்துத் தெளிவாகப் பொருள் கூறினேன். ‘ïij cd¡F¢ brhšÈ¡bfhL¤jt® ah®? என்று ஆசிரியர் வினவினர். தமிழாசிரியர் கதிரைவேற் பிள்ளை என்றேன். அன்று சாயங்காலம் கிருஷ்ணராவ் கதிரைவேற் பிள்ளையைக் கண்டு பேசினர்; அவரைப் பாராட்டினர்; புராணக் கதைகள் பலவற்றிற்கும் உட்பொருள்களை எழுதி வெளியிட்டால் நன்றாயிருக்குமே என்றுங் கூறினர். பாவ மன்னிப்பு கிறிதுவப் பாதிரிமார் பேசுங் கூட்டங்கட்கு யான் அடிக்கடி போவேன். பாதிரிமாருட் சிலர் சுபக்கம் பற்றிக் கிறிதுவத்தின் மாண்பை மட்டும் பேசுவர்; சிலர் பரபக்கம் பற்றிய பிற சமயங்களை நிந்தித்துக் கிறிதுவங் கூறுவர். இவரை யான் எளிதில் விடுவதில்லை. இவருடன் வாதம் புரிவேன். பாதிரிமார்க்கும் எனக்கும் நிகழ்ந்த வாதங்கள் பல; பல திறத்தின. அவைகளுள் பெரும்பான்மையன பாவத்தைப்பற்றி யனவா யிருக்கும். பாவம் ஆதியா அநாதியா என்ற கேள்வியை யான் பலரைக் கேட்டேன். பலவகை விடைகளை யான் பெற்றதுண்டு. அந்நாளில் ஒன்றேனும் எனக்குப் பொருந்திய தாகத் தோன்றவில்லை. ஒருமுறை ரெவரெண்ட் எட்டி என் பவர், பாவம் ஆதியாயினுமாக; அநாதியாயினுமாக. அதைப் பற்றிய கவலை எங்களுக்குக் கிடையாது. மனிதன் பாவஞ் செய்கிறான்; அவன் பாவத்தினின்றும் விடுதலையடைய விரும்பு கிறான்; அலைகிறான். அலையும் அவன், கிறிதுவை நினைந்து, தான் நிகழ்த்திய பாவத்தை உண்மையாக முறையிட்டு அழுவா னாயின், அவன் பாவமன்னிப்பைப் பெறுவோனாவன். தன் பாவத்தை முறையிட்டு அழுவோனுக்கு மன்னிப்பு வழங்கி, அவனை ஆட்கொள்ளவே கிறிது உலகில் பிறந்தார். பாவத்தை மன்னிக்கக் கிறிது ஒருவர் இருக்கிறார் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. இந்நம்பிக்கையைப் பரப்புவது எங்கள் பணி. நாங்கள் தர்க்க வாதத்துக்கு வர வில்லை என்றார். இப்பதிலை யான் பலரிடத்திருந்து பெற்றுள்ளேன். எனக்கு அது பழையது; மிகப் பழையது. ஆனாலும் எட்டியினிடத்திருந்து அது வெளிவந்தபோது என்னுள்ளம் சிறிது நெகிழ்ந்தது. மதமாற்றம் சுவிசேஷத்தைப் பிரசாரஞ் செய்யுங்கள். மனமாற்ற மடைவோர் அடைக. kj kh‰w¤J¡F V‹ Kaš»Ö®? என்று யான் பல பெரிய பெரிய பாதிரிமாரையும் நோக்கி வினவுவன். மத மாற்றம் அவசியம் என்று அவர் விடை இறுப்பர். அவ் விடை எனது உள்ளத்தை நிறைவு செய்வதில்லை. கிறிதுவ மதத்தைப் பரப்புதல் வேண்டுமென்னும் ஒரு குறிக்கோளை உளங்கொண்டு, பாதிரிமாரும் மற்றவரும் செய்யுந் தொண்டுகள் என்னுள்ளத்தைக் கவரும். பள்ளிக்கூடம், மருத்துவச் சாலை முதலியன அமைத்து அவர் புரியுஞ் சேவைகளில் என் நெஞ்சம் ஈடுபடும். அவர் தங் கல்வி அறிவு, நம்பிக்கை, அன்றாட ஜெபம், பணி ஒருமைப்பாடு முதலியன அவருடன் என்னை நெருங்கி நெருங்கிப் பழகச் செய்தன. இராயப்பேட்டையிலும், அதைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் வாழ்ந்த கிறிதுவரில் நூற்றுக்குத் தொண்னூற்றைந்து பேர் எனக்குக் கேளிராயினர். அவர்தங் கேண்மையால் சகோதர நேயம் வளர்ந்தது. அந்நேயத்துக்கு இடையூறாக நின்ற பல கட்டுக்களினின்றும் யான் விடுதலை யடைந்தேன். நேயர் கிறிதுவ நேயர் பலர் என் முன்னே தோன்றுகின்றனர். சிலர் முகங்கள் என்னுள் நிலைத்து நிற்கின்றன. அச்சிலர் ஜான் ரத்தினம், எக்பர்ட் ரத்தினம், அழகுசுந்தர மென்னும் கிங்பரி முதலியோர். ஜான் ரத்தினம் ஆயிரம் விளக்கு வெலியன் பள்ளித் தலைமை ஆசிரியராயிருந்தவர்; யான் அப்பள்ளியில் ஓர் ஆசிரியனாயிருந்தவன்; ஜான் ரத்தினத்தின் நட்புத் திறத்தைப் பற்றி யான் முன்னருங் கூறியுள்ளேன். அவர் தம் வாழ்க்கையில் யான் கண்ட உயிர்த்தொண்டு. பிறர் குற்றம் பாராட்டாமை, மூர்க்கரை மனமார நேசித்துப் பண்படுத்தல், அன்பார்ந்த ஜெபம் முதலியன என்னுள்ளத்திருந்த பலவிதக் கரடுமுரடுகளை ஒருவாறு போக்கி வந்தன என்று அறிக்கை செய்கிறேன். யான் பள்ளிக்கூடத்தில் பரிசிலின் பொருட்டுப் பயின்ற பைபில் மொழிகளின் நுட்பங்கள் ஜான் ரத்தினத்தின் கூட்டரவால் பையப்பைய விளங்கலாயின. யான் ஆயிரம் விளக்குப் பள்ளி யில் சேர்ந்தபோது அவருக்கும் எனக்கும் நிகழ்ந்த வாதங்கள் பல. கர்மத்தைப்பற்றி அவரும் யானும் நீண்டகாலம் போரிட்டு வந்தோம். ‘xUt® brŒj f®k¤ij ï‹bdhUt® v¥go V‰wš TL«? என்பது எனது வாதம். ஜான் ரத்தினம், செய்த கர்மத்தைப் போக்க வழியில்லையெனில், கர்மத்தையே கடவு ளாகக் கொள்ளும் நிலை ஏற்படும். தனித்த கடவுள் வேண்டுவ தில்லை. கடவுளை அருளாளன் - கருணை வள்ளல் - கிருபா சமுத்திரம் என்று ஏன் போற்றுதல் வேண்டும்? கர்மத்தைப் போக்கும் ஆற்றலில்லாத கடவுளிடம் ஏன் அருளிருத்தல் வேண்டும்? m›tUS¡F v‹d ntiy? என்று சொல்லிச் சொல்லி, முறையீடு, அழுகை, பாவ மன்னிப்பு முதலியவற்றை விளக்குவர். உங்கள் விளக்கம் தருக்கத்துக்குப் பொருந்தி வரவில்லை என்று யான் உரைப்பேன். நாட்கள் பல கழிந்தன. காட்சி எனது இடது தோளில் ஓர் இரத்தக்கட்டி உறுத்து எழுந்து பருத்தது. சொல்லொணா வேதனை சூழ்ந்தது; குடைந் தது. அதைத்தாங்கல் இயலவில்லை. அத்தறுவாயில் ஒரு பெரிய மண்டபத்திலே ஒரு தெய்வ சபை காட்சியளித்தது. ஒவ்வொரு தேவரையும் அடைந்தேன். ஒருவர் மந்திர மோதினர்; மற்றொரு வர் மருந்திட்டனர்; வேறொருவர் ஊதினர்; இன்னொருவர் கட்டியைப் பிசைந்தனர்; ஒவ்வொருவரும் ஒவ்வொருவித சிகிச்சை செய்தனர். வேதனை நீங்கவில்லை. கடைசியில் நின்ற கிறிதுவை அணுகினேன். அவர் என் தலைமீது கை வைத்தார்; வைத்ததும் கட்டி மறைந்தது; வேதனையும் தீர்ந்தது. இது கனவு உலகில் நிகழ்ந்தது; நினைவு உலகில் நிகழ்ந்ததன்று. இக்கனவை அடுத்த நாள் ஜான் இரத்தினத்துக்குத் தெரிவித்தேன். அவர் நல்ல காட்சி என்றார். யான் கனவில் கண்ட காட்சி நினை விலும் தோற்றமுற்றால் எனக்கு உறுதி உண்டாகும் என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை; வாளா இருந்தார். விளக்கம் அக்கனவுக் காட்சி என் உள்ளத்தினின்றும் அகலவில்லை. ஒரு நாள் அக்காட்சியையே நினைத்து நினைத்து பள்ளி நோக்கி நடந்தேன். பீட்டர் ரோட்டை விடுத்து யான் ஆல்தோட்டம் புகுந்ததும், முறையீடு-அழுகை-பாவமன்னிப்பு - ஆகியவற்றின் நுட்பங்கள் திடீரென என்னுள் முகிழ்த்தன. காரணம் புலனாக வில்லை. தத்துவ ஆராய்ச்சிகளும் தர்க்க வாதங்களும், சம்பிர தாயக் குறியீடுகளும், யோக மூட்டைகளும், மற்ற மருட்டல்களும் எனக்குச் சுமைகளாயின. அவைகளைத் தள்ளினேன். முறை யீடும் அழுகையும் மன்னிப்பும் மலிந்த மாணிக்கவாசகர் மொழி கள் ஒன்றன்பின் ஒன்றாக நெஞ்சில் உற்றன. மாணிக்கவாசகரின் திருவாசகமும் கிறிதுவின் சுவிசேஷமும் கருத்தில் ஒன்றாகவே விளங்கின. சங்கம் எக்பர்ட் ரத்தினம் எனது பள்ளித் தோழர். அவர் மேல் வகுப்பில் படித்து வந்தவர். எக்பர்ட் பள்ளி விடுத்ததும் பிஷப் நிலையத்தில் கணிதரானார்; பின்னே தலைமைக் கணிதரானார். பாதிரி மதமென்னும் கோயில் மதத்தில் அவருக்கு ஒருவித வெறுப்பு உண்டாயிற்று. அதை அடிக்கடி என்னிடத்திலும் வேறு சிலரிடத்திலுஞ் சொல்வர். அவர் ஞாயிற்றுக்கிழமை களில் கோயிலுக்குப் போவதை நிறுத்தினர்; வீட்டிலேயே ஜெபஞ் செய்தனர். அவரால் இராயப்பேட்டையிலே கிறி துவ சகோதர சங்கம் என்ற ஒன்று காணப்பட்டது. அச்சங்கமே அவர்க்குக் கோயிலாயிற்று. அச்சங்கத்தில் கிறிதுவரல்லா தாருஞ் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர் அங்கத்தவராக ஏற்கப்படுவதில்லை; அநுதாபிகளாகவே ஏற்கப்படுவர்; யான் ஓர் அநுதாபியாகவே அச்சங்கத்தில் இருந்து வந்தேன். இவ் வேற்றுமை கிறிதுவுக்கு ஏலாத ஒன்று என்று யான் எக்பர்ட் முதலியவரிடஞ் சொல்லி வருவேன். ஜெபத்தில் முறையீடு கிறிதுவ சகோதர சங்கத்தார் அமைதியான இடங் கட்குச் சென்று ஜெபஞ் செய்வர். யானும் அவருடன் செல் வேன். ஜெப முடிவில் அவர் கலியாணசுந்தரம் எங்களுடன் வருகிறார் போகிறார் வெளிப்படையாகக் கிறிதுவந் தழுவ மனங்கொள்கிறாரில்லைஅவர்மனத்தைமாற்றியருளும்... எ‹W மனமுருக முறையிடுவர். அந்த ஜெபம் என்னைச் சிறிதும் அசைப்பதில்லை. என்னைக் கன்னெஞ்சனென்றும் வன்னெஞ்ச னென்றும் சங்கத்தார் சிலர் சொல்வர். உங்கள் மனம் இன்னுங் கிறிதுவை அணுகவில்லை என்று யான் புகல்வேன். ஆவியுலகம் சங்கத்தார் சிலர் ஆவியுலக ஆராய்ச்சியில் தலைப்பட்ட னர். ஆவியுலக முயற்சி ஹிப்னாடிஸமாக முடிந்தது. இதைப் பற்றி உள்ளொளி என்னும் நூலில் ஒரு நிகழ்ச்சியைக் குறித் துள்ளேன். கிறிதுவ மதப் பிரச்சாரத்துக்கு ஆவியுலக ஆராய்ச்சி பயன்பட்டது. அதனால் சங்கத்தின் ஆக்கங் குன்றியது. பெந்தகொதே சங்கம் அச் சமயத்தில் பெந்தகொதே சங்கத்தைச் சார்ந்த சில அமெரிக்கர் சென்னையை அடைந்தனர். எக்பர்ட் ரத்தினம் அவருடன் சேர்ந்தனர். முதல் முதல் இராயப்பேட்டை அம்மை யப்ப முதலி தெருவிலே ஒரு சிறு சங்கம் துவங்கப்பட்டது. பெந்தகொதே சங்க நேயர்கள் கோயிலில் பாதிரிமார் செய்யும் ஞான நானம் பொருந்தியதன்று என்றும், முறையீட்டாலும் அழுகையாலும் தம்மைப் பண்படுத்திக் கொள்வோர்க்குப் பரிசுத்த ஆவியின் ஞான நானம் நேரே நுண்மையாய் வாய்க்கும் என்றும், அந்த ஞான நானம் பெற்றவர் தம் பாவச் செயல்களைப்பித்தரைப் போலப் பிதற்றிப்பிதற்றி வெளியிடுவர் என்றும் அறிவுறுத்தினார்கள். அவர்தம் அறிவுறுத்தல் என் மனத்தைத் தன்வயப் படுத்தியது. எக்பர்ட் ரத்தினம் பெந்த கொதே சங்கத்தில் சேர்ந்து உழைக்கலாயினர். பிஷப் நிலையம் அவருக்கு எச்சரிக்கை வழங்கியது. கிறிதுவ நேயர் எக்பர்ட் தமது வேலையைப் பொருட்படுத்தாது அதனின்றும் விலகினர்; உண்மைக் கிறிதுவத் தொண்டில் இறங்கினர். அவர் வாழ்க்கை ஆண்டவனருளால் நடக்கலாயிற்று. நண்பர் எக்பர்ட் ரத்தினம் உணவு உடை முதலியவற்றிற்குக் கவலைப் பட்டதே இல்லை. அவர் தம் நெஞ்சம் ஜெபத்திலே ஒன்றிக் கிடக்கும். அன்பர் வாயிலாக அவருக்கு உணவு, உடை முதலிய வற்றை ஆண்டவன் அளித்தே வந்தான். எக்பர்ட் நோய்க்கு மருந்துண்பதில்லை. ஜெபத்தால் அவர் தமது நோயையும் போக்குவர்; பிறர் நோயையும் போக்குவர். தமது வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆண்டவனரு ளால் பெற்று வந்ததைப்போலவே எக்பர்ட்டும் பெற்று வந்தார் என்று கூறல் மிகையாகாது. என் வாழ்வில் மிகச் சில உண்மைக் கிறிதுவர்களைக் கண்டேன். அவருள் ஒருவர் அன்பர் எக்பர்ட் ரத்தினம். கிறிது அழகு சுந்தர மென்னுங் கிங்பெரி தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை முதல் முதல் வெளியிட்ட பெருமை வாய்ந்த தாமோதரம் பிள்ளையின் அருமைப் புதல்வர். அவர் இளமையில் கிறிதுவம் தழுவினர். அதற்குக் காரணம், நான் ஏன் கிறிதுவன் ஆனேன் என்று அவரால் எழுதப் பெற்ற நூற்கண் குறிக்கப்பட்டுள்ளது. அந்நூலை யான் படித்துப் பார்த்தேன். அழகு சுந்தரத்தால் குறிக்கப்பெற்ற காரணம் பொருந்தியதென்று எனக்குத் தோன்றவில்லை. ரெவரெண்ட் கிங்பெரி மெஸபெட்டோமியா யுத்தகளஞ் சென்று திரும்பியதும் என் அன்புக்குரிய நண்பராயினர். முதல் முதல் அவருடன் யான் பேசியபோது கோயில் கிறிதுவமென்னும் பாதிரிக் கிறிதுவத்தை அவர் விரும்பவில்லை என்பது நன்கு விளங்கிற்று. திருவாசகத்தையும் சுவிசேஷத்தையும் ஒருமைப் படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கிங்பெரி கிறிது தெய்வத்தினின் றும் இறங்கிய மகன் அல்லன் என்றும் அவர் மனிதராயிருந்தே தெய்வநிலை அடைந்தவர் என்றும் பேசியும் வந்தார்; எழுதியும் வந்தார். அப்பேச்சும் எழுத்தும் பாதிரிக் கிறிதுவருக்கு வெறுப்பூட்டின. கிங்பெரி திருச்சபையினின்றும் விலக்கப் பட்டார். சுவிசேஷ சாரம் பாதிரிக் கிறிதுவம் எக்பர்ட் ரத்தினத்தை வேலையினின் றும் விலகச் செய்தது; கிங்பெரியைத் திருச்சபையி னின்றும் நீக்கியது; எட்டாம் எட்வர்டை அரியாசனத்தினின்று அகற்றியதும் ஈண்டு நினைவுக்கு வருகிறது. இச்செயல்கள் உண்மைக் கிறிதுவமாகுமா? பகைவரையும் நேசிப்பதன்றோ கிறிதுவம்? எட்டாம் எட்வர்ட் அரியாசனத்தினின்றும் விலகி யதை முன்னிட்டு முடியா? காதலா? Ó®âU¤jkh? என்றொரு நூல் என்னால் யாக்கப்பட்டது. அதன்கண் கிறிதுவத்தை யான் உணர்ந்த முறையில் செறியவைத்துள்ளேன். அந்நூலிலே சுவிசேஷசாரம் தேங்குவதை நேயர்கள் காணலாம். ஆசிரமம் வடஆர்க்காடு ஜில்லாவிலே திருப்பத்தூரிலே கிறிதுவ குல ஆசிரமம் என்றோர் அறச்சாலை நிறுவப்பட்டுள்ளது. அது டாக்டர் பேடன் என்பவராலும், டாக்டர் ஏசுதா என்பவராலும் புரக்கப்பட்டு வருகிறது. முன்னவர் ஐரோப்பியர்; பின்னவர் இந்தியர். கிறிதுவம் அவ்விருவரையும் சகோதர ராக்கியது. இருவரும் ஈருடல் ஓருயிராய்த் தொண்டு செய்கிறார். யான் மடவாளஞ் சென்று திரும்பியபோது திருப்பத்தூர் கிறிதுவகுல ஆசிரமத்தில் ஓரிரவும், காலையில் சிறிது நேரமும் தங்கும் பேறு பெற்றேன். அங்கே கிறிது அறம் தாண்டவம் புரிவது கண்டேன். அவ்வாசிரமத்தில் மதமாற்றம் வலியுறுத்தப் படாமை எனக்கு மகிழ்ச்சி யூட்டிற்று. ஆசிரம நூல்களில் மாணிக்கவாசகர் திருவாக்கும், மற்றவர் திருவாக்குகளும் கிறிதுவம் பெற்று விளங்குவது ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத் தக்கது. சைவம் - கிறிதுவம் யான் யாழ்ப்பாண மாணாக்கர் காங்கிரஸில் (1929) தலைமை வகித்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள சைவர் கிறிதுவராதல் வேண்டுமென்றும், கிறிதுவர் சைவராதல் வேண்டுமென்றுங் கூறினேன். அக்கூற்றுச் செயல்பெற்று விளங்கியதைத் திருப்பத்தூர் ஆசிரமத்தில் பார்த்து உவகை யுற்றேன். திருப்பத்தூர் ஆசிரமம் போன்ற அறநிலையங்கள் நாட்டில் பெருகினால் உண்மைக் கிறிதுவம் ஆக்கம் பெறும். அதனால் பல நன்மைகள் மன்பதைக்கு விளையும். சோதனை யான் இளமையில் கிறிதுவக் கூட்டத்துடன் மிகவும் நெருங்கிப் பழகினமையால் கிறிதுவ மதம் புகும்சோதனை எனக்கு உண்டாயிற்றா? இல்லையா? சோதனை உண்டாகாம லிருக்குமா? உண்டாயிற்று. ஆனால் செயலில் ஒன்றும் நிகழ வில்லை. சைவம் அஞ்ஞானம்; கிறிதுவம் மெய்ஞ்ஞானம் என்னும் உணர்வால் எனக்குச் சோதனை உண்டாகவில்லை. வேறு சில காரணங்கள் என்னைச் சோதனைக்கு உட்படுத்தின, அவைகளை ஈண்டுச் சுருங்கச் சொல்கிறேன். யான் மாணாக்கனாயிருந்த வேளையில் ஓராண்டு பரிசில் வழங்க அட்மினிடிரேட்டர் ஜெனரல் சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். அவர் கிறிதுவம் ஏற்றமையால் இங்கி லாந்து சென்று பாரிடராய்ப் பெரும் பதவியிலும் வீற்றிருக் கிறார் என்று பேசப்பட்டது. அப்பேச்சு எனக்குச் சோதனை உண்டாக்கியது. நாமும் கிறிதுவம் தழுவினால் சுப்பிர மணியம் போலாகலாம், என்று எண்ணினேன். தாய் தந்தையர் மீது யான் கொண்ட அன்பு எனது எண்ணத்தை நிறைவேற்ற விடவில்லை. ஹிந்துமதத்திலுள்ள சாதி சமயக் கட்டுக்களும், மூட நம்பிக்கைகளும், கண்மூடி வழக்க வொழுக்கங்களும், சம்பிர தாயங்களும், இன்னபிறவும் கிறிதுவம் நண்ண என்னைத் தூண்டும். கிறிதவர்களுடன் கலந்து உறவாட உறவாட அவர்களிடத்திலும் கட்டுப்பாடுகளும், சம்பிரதாயங்களும், இன்னபிறவும் இருத்தலை யுணர்ந்தேன். அவ்வுணர்வால் தூண்டுதல் ஒடுங்கிப்போயிற்று. பீட்டர் ரோட்டிலே பெரிதுங் கிறிதுவப் பெண் மக்களைக் கொண்ட மாதர் சங்கத்திலே யான் பேசுவதுண்டு. ஒருநாள் யான் கிறிதுவும் சிலுவையும் என்னும் பொருள் பற்றிப் பேச இணங்கினேன்; இணங்கியபடியே பேசினேன்; இடையில் நல்ல தமிழில் கிறிதுவின் சிலுவைக்கோலத்தை வருணித்தேன். அவ்வருணனையில் மயங்கிய ஒரு பெண்மணி என்னைக் கிறிதுவனாக்கி மணஞ்செய்ய முயன்றாள். அவள் தாய்தந்தையரும் அவள் முயற்சிக்குத் துணைநின்றனர். கிறிதுவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு. ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை என்று யான் இறுத்து வந்த பதில் பெண்மணியின் முயற்சியை வீணாக்கிற்று. நேர்ந்த சோதனை களுள் பெரியது இதுவே. கலப்பு எனது திருமணத்தில் கிறிதுவ மணங் கமழ்ந்தது. (விவரம் பின்னர்) எனது மணிவிழாவிலும் அம்மணம் கமழாமலில்லை. மணிவிழா நாட்களில் ஒருநாள் (30-8-43) சென்னை பிஷப் - ரெவரெண்ட் மைகேல் ஹாலி ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தியது குறிக்கத்தக்கது. என் வாழ்க்கை கிறிதுவத்தி னிடையும் வளரலாயிற்று. மலைப்பொழிவு கிறிதுவைப்பற்றியும், அவர்தம் போதனையைப் பற்றியும் பிறந்த எதிர்ப்புக்களும் எழுந்த மறுப்புக்களும் ஒன்றல்ல; இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் பிறந்தன; எழுந்தன. அவைகளிற் சிலவற்றை யான் படித்தும் இருக்கிறேன்; கேட்டும் இருக்கிறேன். அவைகளால் என்மனம் கிறிதுவை விடவோ அவர் தம் போதனையை ஒதுக்கவோ எண்ணியதில்லை. கிறிது என்ற ஒருவர் தோன்றியதில்லை. என்றும் அவரைப் பற்றிய கதைகளெல்லாம் பின்னே புனையப்பட்டன என்றும் சொல்வோரும், கிறிது அரசியலார் என்றும் தாம் நினைத்த வண்ணம் புரட்சி நிகழாமையால் தீர்க்கதரிசியாக அவர் நடித்தார் என்றும் கூறுவோரும், கிறிது தெய்வத்தினிட மிருந்து இறங்கிய பிள்ளை அல்ல என்றும் அவர் மனிதரா யிருந்தே தெய்வத்தன்மை யடைந்த ஒருவர் என்றும் அவர் நபிமாருள் ஒருவர் என்றும் உரைப்போரும், கிறிது ஆண்டவன் அருளால் அபிடேகஞ் செய்யப்பெற்ற ஒரு சீவன் முக்தர் என்றும் அந்நிலையை அடையும் உரிமை எவர்க்கும் உண்டென்றும் ஒருவரையே கிறிது என்று கொள்ளுதல் தவறு என்றும் புகல்வோரும், கிறிது கொல்லப்படவில்லை என்றும் அவர் மீண்டும் உயிர்த்தெழவில்லை என்றும் பகர் வோரும், கிறிதுவின் போதனைகள் அவர் காலத்தில் எழுதப் படவில்லை என்றும் பின்னே எழுதப்பட்டன என்றும் அவை களில் கூட்டல் குறைத்தல் நேர்ந்திருக்கும் என்றும் நவில்வோரும் உளர். இன்னும் பலவாறு ஓதுவோரும் இருக்கிறார். இவைகள் யாவும் ஆராய்ச்சி என்னும் மயக்க அறிவினின்றும் பிறந்தவை. கிறிதுவையும், அவர் தம் போதனையையும் குறை கூறிவந்த வருள் சிலர் பின்னே அவர் அடியவராய், அவர் வாய் மொழி யின் வழிநின்று ஒழுகுவோராயதை யான் நன்கு அறிவேன். எவர் என்ன கூறினுங் கூறுக. யான் கவலையுறேன். கிறிது பெருமான் அன்பு வடிவை நினைக்க நினைக்க, அவர்தம் மெய்ம்மை, அமைதிமுதலிய நறுங்குணங்கள் படிதல் உண்மை என்பதும், பகைவரையும் நேசிக்கும் பான்மை - அந்தண்மை - பிறத்தல் உண்மை என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனியென விளங்கு வது பெறலாம்; கிறிது பெருமான் மலைப்பொழிவில் ஈடுபடப்பட அஃது அறுபகையைக் களைந்து அன்பு விளைத்தல் வெள்ளிடைமலையெனக் காணலாம். அப்பொழிவில் ஈடு பட்டவர்க்கே உண்மை தெரியும். மலைப்பொழிவில் என்ன இல்லை? உலகிலுள்ள சமயங்களில் சாரமெல்லாம் திரண்டு அதன் கண் தேங்கி நிற்கின்றன. அத்தகைப் பொழிவு சமரச சன்மார்க்கமுடையதென்று என் வாழ்வில் தெளிவாயிற்று. வேதாந்தம் கோமளீசுரன்பேட்டைப் புதுப்பேட்டையிலே வதிந்த ஜீவரத்தின முதலியார் இராயப்பேட்டை அம்மையப்ப முதலி யார் தெருவிலே குடியேறினர். அவர் புதல்வர் இரத்தினசபா பதியும் யானும் ஒரு சாலை மாணாக்கர். யான் கதிரைவேற் பிள்ளையினிடம் பழகுவதை ஜீவரத்தினமுதலியார் விரும்புவ தில்லை. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம், கதிரை வேலுடன் சேராதே; படிப்புப் பாழாகும். பள்ளி வாழ்வு கெடும் என்று எச்சரிக்கை செய்வர்; அதற்கு யான் செவி சாய்ப்பதில்லை. ஜீவரத்தின முதலியார் கதிரைவேற் பிள்ளையை வெறுத் தமைக்கு என்ன காரணம்? கதிரைவேற் பிள்ளை வேதாந்தக் கொள்கையை மாயாவாதமென்று மறுத்து வந்தமையே காரணம். அந்நாளில் வேதாந்த சித்தாந்த சண்டை அதிகம். வாதம் ஜீவரத்தின முதலியாரால் ஒருவேதாந்த சபை காணப் பட்டது. அச்சபையில் சுப்பராய செட்டியார் வேதாந்த நூல்கள் போதித்து வந்தார். இடையிடை வடிவேற்செட்டியார். நாராயணசாமி நாயகர் முதலியோரும் அழைக்கப்படுவர். ஒருமுறை கதிரைவேற் பிள்ளையின் வருகையையும் இராயப் பேட்டை வேதாந்த சபை பெற்றது. அன்று கதிரைவேற் பிள்ளைக்கும் வடிவேற் செட்டியார் உள்ளிட்டவர்க்கும் காலத்தைப்பற்றிய பெருத்த வாதம் நிகழ்ந்தது. இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று காலம் மூன்றே என்பது கதிரைவேற் பிள்ளையின் வாதம்: அம்மூன்றுடன் எக்காலம் என்றொன்று சேர்க்கப்படல் வேண்டுமென்பது வடிவேற் செட்டியார் உள்ளிட்டவர் வாதம். போர் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நடந்தது. அப்போர் இராயப்பேட்டையை இரண்டு பிளவாக்கியது. இராயப்பேட்டையில் வேதாந்த சித்தாந்தப் பூசல் பெருகியது. அம்மையப்ப முதலி தெருவிலே வேதாந்த சபையின் சார்பிலே கூட்டங் கூடும். முத்து முதலி தெருவிலே ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் சார்பிலே சுந்தரரேசர் கோயிலிலே சித்தாந்த சபை கூடும். அதிலே பேசுவோர் வடிவேற் செட்டியார் முதலியோர். இதிலே பேசுவோர் இளங்காளை கள். அவர்கள் பெரிய பெரிய பீரங்கிகள். அப்பீரங்கிகளைச் சிறு சிறு கைத்துப்பாக்கிகள் எதிர்த்தது வியப்பே. இளங்கன்று கள் பயமறியுமோ? வாதப் பேச்சுக்கென்று யான் சோமசுந்தர நாயகர் முதலியோர் எழுதிய கண்டன நூல்களை இரவும் பகலும் படித்தவண்ணமிருப்பன்; சில நுட்பங்களைக் கதிரைவேற் பிள்ளையினிடங் கேட்டும் வருவன். சிந்தாதிரிப்பேட்டை சூளை முதலிய இடங்களிலும் போய்க்கண்டனக் கூட்டங்களில் பேசுவன். இவ்வாறு கண்டனத்தில் கருத்துச் செலுத்தி வந்த எனக்கு வேதாந்த மூல நூல்களை ஆயும் வாய்ப்பும் ஏற்பட்டது. நூலாராய்ச்சி சிவப்பிரகாச சுவாமிகள் சேர்க்கை எனக்குக் கிடைத்தது (விவரம் முன்னர்). அச்சேர்க்கை கைவல்யம், ஞானவாசிஷ்டம் முதலிய நூல்களை ஆராயத் தூண்டியது; விவேகானந்தத்தில் ஆழச் செலுத்தியது. சென்னையிலுள்ள சில வேதாந்த சபைகள் எனக்கு இடந்தந்தன. சங்கரபாஷ்யத்தில் எனக்கு வேட்கை எழுந்தது. அப் பாஷ்ய வகுப்புக்களுக்குச் சென்று வருவேன். ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துப் பார்ப்பேன். கடலங்குடி நடேச சாதிரியார் தமிழ் மொழிபெயர்ப்புச் சஞ்சிகை சஞ்சிகையாக வெளிவந்தது. அஃது எனது தவம். அம்மொழிபெயர்ப்பு எனது வேட்கையைத் தணிவித்தது. அதற்கு விரிந்த மதிப்புரை யொன்று வரையும் பேறும் பெற்றேன். கடலங்குடியாரது வேறு பல வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்புக்களும் எனக்குப் பெருந்துணை செய்தன. சபைகள் வடிவேல்செட்டியார் அன்புக்கு யான் உரியவனானேன். அவர் செல்லும் வேதாந்த சபைகளினின்றும் எனக்கும் அழைப்பு வரும். யானுஞ் செல்வேன். அவர் ஒன்றரை நாள் தலைமை வகிப்பார்; யான் ஒன்றரை நாள் தலைமை வகிப்பேன். நாங்க ளிருவரும் பங்காளிகளானோம். இராணிப்பேட்டை, வெட்டு வாணம், வங்கனூர், அம்மையார் குப்பம், வளை குளம், குரு ராஜப்பேட்டை முதலிய இடங்களிலுள்ள சபைகளின் ஆண்டு விழாக்களில் எனது தலைமைத் தொண்டு நிகழ்வது வழக்க மாகியது. சென்னை வேதாந்த சங்கத்தின் ஆண்டு விழா என்னை மறப்பதில்லை. அதன் சார்பில் 1942ஆம் ஆண்டு டிசம்பரில் கூடிய கைவல்ய மகாநாடும் என் தலைமையிலேயே நடை பெற்றது. வேதாந்த உலகில் உலவும் பேறும் எனக்குக் கிடைத்தது. வேதாந்தம் எது? வேதாந்தம் ஒரு மதமன்று. அஃது ஒரு பெருங்கடல். வேதாந்தமென்னும் உபநிஷத்தில் அடங்காத மதங்கள் உலகில் இல்லை. எல்லா மதங்களாயும் மதாதீதமாயும் விளங்குவது வேதாந்தம். வேதாந்தம் சமரச சன்மார்க்கம் என்பது என் உள்ளத்தில் படிந்தது. பாரசீயம் முதலியன பாரசீயம், சூபியம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம், முதலியவற்றைப்பற்றி நூல்களையும் சமயம் நேர்ந்த போதெல்லாம் யான் ஆராய்வது வழக்கம். ஆரிய சமாஜக் கூட்டத்தில் சில சமயமும், பிரம சமாஜக் கூட்டங்களில் பல சமயமும் யான் பேசியுள்ளேன். இவைகளின் கொள்கைகளெல் லாம் சன்மார்க்கத்தின் கூறுகளாகவே எனக்குத் தோன்றுகின்றன. தியோசபி முன்னாளில் கிறிதும காலத்தில் அன்னிபெஸண்ட் அம்மையார் காசியினின்றும் அடையாறு போந்து தியோ சாபிகல் சங்கச் சார்பில் சொற்பொழிவாற்றுவர். அம்மையார் சொல்லமிழ்தைப் பருகப் பெருங் கூட்டம் திரளும்; மாணாக்கர் கூட்டமும் செறியும்; யானுஞ் செல்வேன். காலை ஆறு மணிக்கு அன்னிபெஸண்ட் அம்மையார் ஆலமரத்தடியில் காட்சி யளிப்பர். அக்காட்சி கலைமகளெனப் பொலிவுதரும். ஒரு மணி நேரம் அம்மையார் சொன்மாரி பொழிவர். அந்நாளில் பெரிதும் அம்மையாரின் ஆங்கில இனிமை நுகர்ந்து யான் திரும்புவேன். சமரச ஆக்கம் பின்னே ஜடி சதாசிவ ஐயரின் நண்பனானேன். அவர் தம் நட்பு தியோசாபிகல் சங்க அறிஞரைக் காணவும், அவர் தம் மொழிகளைக் கேட்கவும், நூல்களைப் பயிலவும் பெருந்துணை புரிந்தது. 1917ஆம் ஆண்டு முதல் சில ஆண்டு பெஸண்ட் அம்மையார் தலைமையில் அரசியல் தொண்டு செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அருண்டேல், வாடியா முதலியோர் எனக்குத் தோழராயினர். வாடியாவும் யானுஞ் சேர்ந்து தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்துப் பணி செய்யலானோம். லெட்பீட்டர் எழுத்து என்னைச் சமரசத்தில் அழுத்தும். தியோசாபிகல் சங்கப் பெரியோர்க்கும் எனக்கும் நேர்ந்த உறவு பல வழியிலும் பெருகியது. அதனால் சமரச சன்மார்க்க உணர்வு என்பால் பேராக்கம் பெற்றது. தியோசாபிகல் சங்கத்தைத் தொடக்கத்தில் எவரோ பிரமஞான சங்கம் என்று அழைத்துவிட்டனர். அதைச் சன்மார்க்க சங்கமென்று திருத்தல் வேண்டும். தியோசபியும் சமரச சன்மார்க்கமும் ஒன்றே. சன்மார்க்கம். பல சமயத்தவர் கூட்டுறவைப் பெறவும், பல சமய நூல்களை ஆராயவும் எனது வாழ்க்கையை இயக்கிய ஆண்ட வன் அருளுக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். ஒவ் வொரு சமயமும் எனக்குச் சன்மார்க்கமாகவே தோன்றுகிறது. சன்மார்க்க மற்ற சமயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மதவெறி எனது இளமை சில காலம் மதவெறிக்கு இரையாகியது. பின்னே விரைவில் அவ்வெறி மாறியது. இளமையில் சில காலம் மதவெறிகொண்டு, சமய வாதங்களில் உழன்று புரண்டமையால் நலனே விளைந்தது; இல்லையேல் சன்மார்க்க ஒளி எனக்குப் புலனாகியிருக்குமோ என்று ஐயுறுகிறேன். ஒருவர் தாம் நம்பும் சமயத்தில் நின்றொழுகலாம். ஆனால் பிற சமயங்களை அவர் நிந்தித்தல் கூடாது. நிந்தனை சமய ஒழுக்கம் ஆகாது. அது மதவெறியை எழுப்பும். மதவெறி அன்பை அழிக்கும்; விலங்கியல்பை எழுப்பும்; பெருக்கும். அவ்வெறி கொடியது; மிகக் கொடியது; அதனினுங் கொடிய தொன்றில்லை. அக்கொடுமையை யான் அநுபவத்தில் உணர்ந்தவன். சமய ஒழுக்கம் எவர்க்கு எச்சமயத்தில் மனம் செல்கிறதோ அவர் அச் சமயத்தில் நின்று ஒழுக ஒழுக அது தன்பாலுள்ள சமரசத்தைப் படிப்படியே புலப்படுத்தும். சமயத்தில்நின்று ஒழுகாதார்க்குச் சமரசம் விளங்குதல் அரிது. எனது சமய வாழ்க்கை சைவத்தில் தொடங்கியது. அச்சமயத்தில் யான் ஒல்லும்வகை நின்று ஒழுகினேன். அஃது எனக்குச் சமரசத்தை விளக்கியது; மற்றச் சமயங்களிலுள்ள சமரசத்தையும் தெளிவித்தது. என்னுடைய சமயம் ஒன்றே. அது சன்மார்க்கம். மார்க்கம் ஒன்று சன்மார்க்கத்தில் சமரசம் திகழ்தலால் அது சமரச சன்மார்க்கம் என்னும் ஆட்சியைப் பெற்றது. சன்மார்க்கத்தைச் சமரசமென்றோ சமரச சன்மார்க்கமென்றோ வழங்கலாம். சுருங்கிய முறையில் அதை மார்க்கமென்றுங் கொள்ளலாம். மார்க்கம் ஒன்று, அதற்கு உலகம் சூட்டிய பெயர்கள் பல. காலம் சன்மார்க்கம் எப்பொழுது தோன்றியது? இதைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டுவதில்லை என்பது என் கருத்து. சத் என்னுஞ் செம்பொருள் உணர்வு மக்களிடம் என்று எழுந்ததோ அன்று தோன்றியது சன்மார்க்கம் என்ற முடிவுக்கு யான் வந்தேன். கண்டவர் சன்மார்க்கம் முதல் முதல் எவரால் காணப்பட்டது? இதைப்பற்றி யான் சிந்தித்ததுண்டு. என் சிந்தனையில் விளக்கம் உண்டாகவில்லை. முன்னாளில் சன்மார்க்கத்தை ஓம்பியவர் தட்சணாமூர்த்தி, குமரன், கண்ணபிரான், விருஷபதேவர், புத்தர், கிறிது, மகம்மது முதலியோர் என்பது மட்டும் எனக்குத் தெளிவாயிற்று. இவர்தம் உள்ளத்தில் ஒளிரும் பரம்பொருள் ஒன்றே ஆதலால் இவரனைவரும் ஒருவராகவே சன்மார்க்கக் கண்ணுக்குப் புலப்படுவர் என்பதும், இவருள் ஒருவரைப் பற்றுவது மற்றவரையும் பற்றுவதாகும் என்பதும் எனக்கு விளங்கின. ஒருவரே யான் முதல் முதல் குமரனை வழிபட்டேன். அவ்வழிபாடு கண்ணன் கிறிது புத்தர் முதலியவரையுங் குமரனாகவே உணர்த்திற்று. இப்பொழுது குமரன் கண்ணன் கிறிது முதலியவரெல்லாம் எனக்கு ஒருவராகவே மிளிர்கிறார். அவர்தம் போதனைகளிலுள்ள ஒருமைப்பாடும் எனக்குச் செவ்வனே புலனாகிறது. இவ்வொருமைப்பாட்டைப் பல சமய நூலாராய்ச்சியும், பெரியோர் கூட்டுறவும் பெறச் செய்வதை அநுபவத்தில் உணரலாம். இயற்கை சத் + மார்க்கம் = சன்மார்க்கம், சத் - உண்மை; மார்க்கம் - வழி. உண்மை வழியே சத்மார்க்கம் - சன்மார்க்கம். உண்மை எது? மாறுதலில்லாது என்றும் ஒரே தன்மைய தாயுள்ளது உண்மை. அதுவே கடவுள். சத் என்னுங் கடவுளுக்குரிய நிலைகள் இரண்டு. ஒன்று எல்லாவற்றையுங் கடந்து நிற்பது; மற்றொன்று எல்லாவற்றிலுங் கலந்து நிற்பது. முன்னையது வழிபாட்டுக்கு எட்டாதது; பின்னையதே வழிபாட்டுக்கு உரியது. எல்லாவற்றிலுங் கலந்து நிற்பது, கடவுள் இயற்கையை உடலாக்கொண்ட நிலை. உடலாகிய இயற்கையைப் பற்றினால் அஃது உயிராகிய கடவுளை உணர்த்தும். ஆகவே சத் என்னுஞ் செம்பொருளை அடைதற்குரிய மார்க்கம் இயற்கை என்பது தேற்றம். இயற்கையாகிய மார்க்கம் சில கவட்டைகளாகப் பிரிந்து நிற்கிறது. அவைகளுள் சிறந்தன இரண்டு. ஒன்று குருவழி; மற்றொன்று வீரர் வழி. இருவர் உள்ளத்திலும் ஒளிர்வது இறையொளி. குருவாயிலாகவும் வீரர் வாயிலாகவும் இறையை அடைதல் கூடும். ஆகவே சத்தை அடைதற்குரிய மார்க்கம் இயற்கை என்பது வெள்ளிடைமலை. சன்மார்க்கத்தை இம் முறையில் எனக்குத் தெளிவித்த நூல்கள் வாழ்க; பெரியோர்கள் வாழ்க. மூவர் ஒவ்வொருபோது உலகம், வேராக உள்ள சன்மார்க்கத்தை மறந்து சமயங்களின் பன்மைமீது மட்டுங் கருத்தைச் செலுத்தித் தடுமாற்றமுறும். அவ்வப்போது பெரியோர் தோன்றி ஒருமைச் சன்மார்க்கத்தை அறிவுறுத்துவது மரபாக இருந்து வருகிறது. அப்பெரியோர் பலர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி யவர் சிலர். அவருள் குறிக்கத்தக்கவர் மாது பிளவட்கி, இராம கிருஷ்ணர், இராமலிங்க சுவாமிகள். இவர்கள் போதனைகள் எனக்குச் சன்மார்க்க விருந்தளித்தன. சண்டையின் ஓய்வு சன்மார்க்க விதை எப்படியோ என்னுள் விழுந்தது. அஃது உள்ளே முளைத்து வளர்ந்து வந்தது; வளர வளரச் சன்மார்க்க நாட்டமும் சேவையும் பெருகின. சமரச சன்மார்க்கப் பணிக்கு எனக்குக் கொழுகொம்பாகக் கிடைத்தவர் ஸர்.டி.சதாசிவ ஐயர். ஐயரும் யானும் சென்னையிலும் பிற விடங்களிலும் சமரசப் பிரசாரஞ் செய்தோம். அதனால் சைவ வைஷ்ணவச் சண்டை, திருநீறு திருமண்சண்டை, வேதாந்த சித்தாந்தச் சண்டை முதலியன ஓரளவில் ஓய்வு பெற்றன. பிரசாரம் ஒல்லும் வகை யான் சன்மார்க்கப் பிரசாரம் செய்து வருகிறேன். நவசக்தி வாயிலாகவும் என்னால் பிரசாரம் செய்யப்பட்டது. கட்டுரைகள் பல வரையப்பட்டன. சன்மார்க்க சங்க அமைப்பைச் சுருங்கிய முறையிலாதல் வெளியிடல் வேண்டுமென்று கருதினேன்; ஒரு தீபாவலி வாரத்தில் (5-11-1926) அக்கருத்தை ஒருவாறு நிறைவேற்றினேன். சன்மார்க்கக் கட்டுரைகள் சிலவும், சங்க அமைப்பு முறையும் தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு என்னும் நூலில் வெளிவந்துள்ளன. மயூர மென்னும் மாயவரத்திலும் (17-5-1927), வடலூரிலும் (26-1-1929) சன்மார்க்க மகாநாடுகள் என் தலைமையில் கூடின. முன்னையதன் தலைமையுரையைக் கொண்டது சமரச தீபம் என்னும் நூல்; பின்னையதன் தலைமையுரையாலாகியது இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்னும் நூல். சமரச தீபத்தின் முகவுரையில் முதல் மகாநாட்டின் வரலாறும் பிறவும் சுருங்கச் சொல்லப்பட்டுள்ளன. சங்கங்கள் சன்மார்க்க சங்கங்கள் நாளுக்குநாள் பெருகியே வரு கின்றன. பல சங்கங்களின் ஆண்டுவிழாக்கள் என் தலைமை யிலே நடைபெறுதல் வழக்கமாகிவிட்டது. சன்மார்க்க சங்கங் கள் தொகையில் பெருகுவதால் என்ன பயன்? வெறுந்தொகைப் பெருக்கத்தால் பெரும் பயன் விளையாது. பாராயணமும், ஏழைகட்கு அன்னமிடலும் மட்டும் சன்மார்க்கம் ஆகா. ஏழ்மையை ஒழிக்க முயலல் வேண்டும். இது சன்மார்க்கத்தின் அடிப்படை. இதை யான் கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறேன். நூல் சன்மார்க்க மணங் கமழும் முறையிலேயே யான் நூல்கள் எழுதுவது வழக்கம். ஏறக்குறைய என் நூல்களிலெல்லாம் சன்மார்க்கம் விரவியே நிற்கும். எம்மூலையிலாவது சன்மார்க்க விளக்கை ஏற்றி வைப்பேன். சன்மார்க்கத்தைப் பற்றிச் சிறப்பு முறையில் இரண்டு நூல்கள் இயற்றியுள்ளேன். ஒன்று சமரச சன்மார்க்க போதம். மற்றொன்று சமரச சன்மார்க்கத் திறவு சத்தும் மார்க்கமும் சத்-கடவுள்; மார்க்கம் - இயற்கை (உலகு). கடவுளையும் இயற்கையையுஞ் சேரக் கொள்வது சன்மார்க்கம். ஒன்றை விடுத்து ஒன்றைக் கொள்வது தவறு. அது நல்வாழ்க்கையு மாகாது. இயற்கை வாயிலாகவே கடவுளை உணர்தல் வேண் டும். கடவுளை உணர்த்துங் கருவி இயற்கை. அத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமை. பண்டை மூதறிஞர் கடவுளையும் இயற்கையையும் பொரு ளாக் கருதி, இரண்டையும் ஒருசேரக்கொண்டு, சன்மார்க்க வாழ்க்கை நடாத்தினர். அதனால் அவர் காலத்தில் சிறந்த கலைகள் பிறந்தன. இடை நாளில் சத்தையும் இயற்கையையும் ஒருசேரக் கருதுங் கொள்கை குலைந்தது. அதனால் சன்மார்க்கம் பலவாறு சிதறுண்டது. சத்தைப்பற்றிய தனி நூல்களும், மார்க்கத்தைப் பற்றிய தனி நூல்களும் வெளி வரலாயின. தனித்த இறையைப்பற்றி எப்படி நூல் எழுதல் கூடும்? தனித்த இறைநிலை எல்லாவற்றையுங் கடந்தது; வாக்கு மனத் துக்கு எட்டாதது. அதை எப்படி நினைத்தல் கூடும்? நினைத் தற்கே அரிதாயுள்ள ஒன்று எவ்வாறு எழுத்தில் அடங்கும்? அதை நினைத்தல் என்பதும் எழுதுதல் என்பதும் வெறும் போலியேயாகும். போலியால் மெய்ம்மை குன்றியது; பொதுமை அறம் வீழந்தது; மன்பதையின் நல்வாழ்க்கைக்குக் கேடு விளைந்தது. சமதர்மம் இயற்கை உலகில் பொருள் நிலையில் பொதுமை கண்டால் மன்பதை நிறைவெய்துமென்ற எண்ணங்கள் ஆங் காங்குள்ள சிற்சில அறிஞரிடைப் பிறந்தன. அவ்வெண்ணங்கள் பற்பல இடங்களில் தனித்தனியே சமதர்ம இயக்கங்களாகப் பரிணமித்தன. காரல் மார்க் அவைகளையெல்லாம் திரட்டி ஒழுங்குபடுத்தி விஞ்ஞான முறையில் அவைகட்கு ஒரு நல் லுருவம் தந்தனர். அதுவே இப்பொழுது சமதர்மம் என்று வழங்கி வருகிறது. மார்க் கண்ட சமதர்மம் நிரம்பியதன்று. அதில் ஒரு சிறு குறையுண்டு. அஃது எது? அது சத்தெனும் செம்பொருளின்மை. மார்க் சமதர்மத்தில் சத்துஞ் சேர்ந்தால் அது சன்மார்க்கமாகும். இதுபற்றி முன்னருங் கூறியுள்ளேன். முயற்சி இக்கால உலகம் (சத் என்னும்) கடவுளையும் (மார்க்கம் என்னும்) இயற்கையையும் ஒருசேரக்கொண்ட சன்மார்க்கத்தை விரும்புகிறது. அவ்விருப்பம் சீர்திருத்த நாட்டத்தை எழுப்பி யுள்ளது. சீர்திருத்தத்தில் தலைப்பட்ட முன்னோர் கருத்துக் களைத் தழுவி, என் கல்வி கேள்வி ஆராயச்சி அநுபவம் முதலியவற்றைக் கொண்டும். ஆண்டவன் அருளை முன்னிட் டும், காலதேசவர்த்தமானத்துக்கு ஏற்ற முறையில் அக்கருத்துக் களை ஒழுங்குசெய்ய முயன்றேன். அம்முயற்சி, சமரச சன்மார்க்க போதமாக வும் சமரசசன்மார்க்கத்திற வாகவும் விளைந்தது. பிறவி கடவுளின் இரண்டு நிலைகளில் எல்லாவற்றையும் கடந்த அதன் நிலை மீது என் கருத்துச் செல்வதில்லை; எல்லாவற்றிலுங் கலந்த அதன் நிலைமீதே என் கருத்துச் செல்கிறது. கடந்த நிலையைக் கூட்டவல்லது கலந்த நிலை என்பது எனக்குத் தெரிகிறது; அக்கடந்ததை யான் விழைகின்றேனில்லை. ஏன்? அந்நிலை பிறவி வேரை அறுப்பது. பிறவி வேர் அறுந்தால் தொண்டுக்கு இடமில்லாமற்போகும். எனக்குத் தொண்டு சன்மார்க்கத் தொண்டு - தேவை. அதற்கென்று பல பிறவி எடுத் தாலும் எனது வேட்கை தணியாது. ஆதலின் யான் கடவுள் எல்லாவற்றிலுங் கலந்த சன்மார்க்கத்தைப் பேசியும் வருகிறேன்; எழுதியும் வருகிறேன். பழந் தமிழ்நாடு பழந்தமிழ் நாட்டில் சன்மார்க்கம் உண்டா என்று சிலர் என்னைக் கேட்பர். அக்கேள்விக்கு உண்டு என்றேயான் அறுதி யிட்டுக் கூறுவேன். பழந்தமிழ் நூல்கள் அறிவுறுத்துஞ் சிறப்புப் பொருள்கள் மூன்று. அவை அறம் பொருள் இன்பம் என்பன. அறம் தனித்தும், பொருளிலும் இன்பத்திலுங் கலந்தும் நிற்குந் தன்மையது. அறமாவது பொதுமை. பொதுமையை உளங் கொண்டது சன்மார்க்கம். புறநானூற்றிலே பூங்குன்றனார் என்ற புலவர், யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று அருளி யுள்ளனர். அப்பொதுமை அறமொழியில் சன்மார்க்கம் உறை தல் கண் கூடு. இன்னோரன்னவற்றை யான் எடுத்துக் காட்டுவ துடன் சன்மார்க்கத்தைத் திருவள்ளுவர் நல்லாறு என்றதையும், திருஞானசம்பந்தர் திருநெறி என்றதையும் யான் விளக்கிக் காட்டுவதுண்டு. பழந்தமிழர் வழிவழி வந்த திருமூலர் சன்மார்க்கத்தைச் சன்மார்க்கமென்றே அருளினர். 1சிதம்பர சுவாமிகள் அவி ரோத உந்தியார் முதலிய நூல்களின் விரிவுரைக்கண் சன் மார்க்கப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர். தாயுமானார் திருப்பாட்டில் சன்மார்க்கம் கலங்கரை விளக்கமெனக் காட்சியளிக்கிறது. இராமலிங்க சுவாமிகளின் தமிழ்க்காவில் சன்மார்க்க மலர்ச் செறிவின்றி வேறென்ன இருக்கின்றன? இவைகளையெல்லாம் எடுத்துக் காட்டிச் சன்மார்க்கம் தமிழ் நாட்டுக்குப் புதியதன்று என்று ஒல்லும் வகை விளக்குவன். விஞ்ஞானம் மேல்நாட்டிலும் முன்னாளில் சோக்ரதர் போன்ற சன்மார்க்கர் ஒரு சிலர் பிறந்தனர். பின்னாளில் சுவீடன்பர்க், தால்தாய், ஒலிவர் லாட்ஜ், ரோமன் ரொலாண்ட், இன்டன் முதலியோர் தோன்றினர். ஒலிவர் லாட்ஜ், சடம் சித்தை விடுத்துத் தனித்து நிற்ப தில்லை என்றும், இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்றும் சன்மார்க்கத்தை விளக்கிச் சென்றார். அவர்தம் அறிவுறுத்த லால் விஞ்ஞான உலகமும் சன்மார்க்கக் கண்பெற்று வருகிறது. அரசுகள் சண்டைக்கென்று விஞ்ஞான உலகைப் பயன்படுத்து கின்றன. சமதர்ம ஆட்சி உலகில் பெருகினால் விஞ்ஞானம் சன்மார்க்க ஆக்கத்துக்குப் பயன்படும். எண்ணம் உலகம், சாதிமதம் மொழி நிறம் நாடு முதலிய வேற்றுமை களில் கருத்திருத்திச் சகோதர நேயமிழந்து இடர்ப்படுகிறது. இவ்விடரைப் போக்கவல்லது சன்மார்க்க மொன்றே. சன் மார்க்கம் சாதி மதம் மொழி நிறம் நாடு முதலி வேற்றுமைகளைக் கடந்து உலக சகோதரநேயத்தை வளர்ப்பது. அம்மார்க்கம் யாண்டும் பரவவேண்டுமென்பது எனது வேட்கை. யான் தமிழுலக அளவில் தொண்டு செய்கிறேன், என் எண்ணமோ மற்ற உலக முழுவதும் பரவி நிற்கிறது. என்றாதல் என் எண்ணம் ஈடேறாமற் போகாது. வெறி விடுதலைக்கு அரசியல் இயக்கம், தொழில் இயக்கம் முதலியவற்றில் சேர்ந்து உழைத்தேன். அவ்வுழைப்பால் யான் கண்டதென்னை? விடுதலைக்குத் தடையாயிருப்பன சாதி வெறி, மத வெறி, மொழி வெறி, நிற வெறி, நாட்டு வெறி, சாம்ராஜ்ய வெறி முதலியன என்று கண்டேன். உழைப்பும் அநுபவமும் சன்மார்க்க இயக்கத்தின் இன்றியமையாமையை உணர்த்தின. சன்மார்க்க இயக்கத்தில் அரசியலும், தொழிலியலும், இன்ன பிறவும் அடங்கும். வழிபாடு சமய உணர்வுடன் யான் நின்றேனில்லை; வழிபாடும் நிகழ்த்தி வந்தேன். துள்ளத்தில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் கண்ணன் கோயில் ஒன்றுண்டு. சாமி சாமி என்று அக் கோயிலைச் சிலர் சூழ்வர். யானும் வேடிக்கை பார்த்து நிற்பேன். சிற்சில சமயம் அங்கே பொங்கல் கொடுக்கப்படும். சில வேளைகளில் பொங்கல் எங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும். கண்ணன் கோயில் எனக்குப் பொங்கலாகத் தோன்றிற்று. இராயப்பேட்டை நண்ணிய பின்னர் சுந்தரேசர் கோயிலுக்குச் செல்வேன்; பஜனைக் கூட்டங் கட்குஞ் செல்வேன். எல்லாரும் அரகரா என்றும் கோவிந்தா என்றுங் கைகூப்புவர்; யானும் அவ்வாறு முழங்கிக் கைகூப்புவேன்; பிரசாதம் பெற்று வரு வேன். நாளடைவில் கோயிலினுள்ளே இருக்கும் உருவம் சாமி என்று தெளியலானேன். வெலியன் பள்ளி மாணாக்கனாய போது யான் வெள்ளிக்கிழமை தோறும் திருமயிலைக் கபாலீச்சுரத்துக்கும், சனிக்கிழமை தோறும் திருவல்லிக்கேணிப் பெருமாள் கோயிலுக்கும் செல்வதை நியதியாகக் கொண்டேன்; ஞாயிறு வகுப்பு முடிந்ததும் வெலியன் கோயிலுக்குள்ளும் நுழைவேன். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பெற் றோர் திருப்போரூர் நோக்குவர். யானும் அவருடன் போவேன். குடும்பப் பழக்கத்தாலும், கதிரைவேற் பிள்ளை, இராசப்ப முதலியார், பாம்பன் சுவாமிகள் முதலியோர் கூட்டுறவாலும் யான் முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டேன். அப் பொழுதும் என் மனம் பார்த்தசாரதியை மறப்பதில்லை. காலை யில் கண்ணை விழித்ததும் முருகன் உருவமும், பார்த்தசாரதி உருவமும் தொடர்ந்து தோன்றி நிற்கும். இவ்விரண்டையும் நினைந்தே எழுவேன். கோயில் சைவ சமய நூலாராய்ச்சி பெருகப் பெருகக் கோயில் களின் நுட்பங்கள் எனக்கு விளங்கி வந்தன. கோயில்களிலுள்ள உருவங்களெல்லாம் ஓவியங்கள் என்பதும், அவைகள் தத்துவங் களை அறிவிக்கும் ஒருவகை நூல்கள் என்பதும், அவைகளில் ஆழ்ந்த நுண்ணிய பொருள்கள் செறிந்து கிடக்கின்றன என்பதும், ஒரே பரம்பொருளின் பலதிற இயல்கள் பலதிற ஓவியங்களாக வடிக்கப்பட்டன என்பதும், இன்ன பிறவும் நன்கு புலனாயின. எல்லாவற்றையுங் கடந்துள்ள கடவுள்நிலை ஓவியத் துக்கு எட்டாதது. அதனால் எல்லாவற்றிலும் அஃதாவது இயற்கையினூடே கலந்துள்ள கடவுள் நிலை, தியானத்தின் பொருட்டு ஓவியங்களாக எடுக்கப்படுகிறது. அவ்வோவியங் களில் எதையேனும் ஒன்றை உன்ன உன்ன அது தன் முதலாகிய இயற்கைக் கடவுளின் உறவினை உண்டுபண்ணும். உன்னல் மட்டும் ஆழமுடையதா யிருத்தல்வேண்டும். இதுவும் சிறந்த யோகமாகும். அர்ச்சாவதாரம் ஒருவர் தமக்கினிய ஓவிய உருவில் ஈடுபடுகிறார்; மற் றொருவர் இன்னொன்றில் ஈடுபடுகிறார். வேறொருவர் பிறி தொன்றில் ஈடுபடுகிறார். எல்லாருடைய அடைவும் ஒன்றே யாகும். பலதிற உருவங்களுடைய பனிக்கட்டிகள் உடைந்தால் ஒரேவித நீர்மயமாதலை நாம் காண்கிறோம். அதேபோலப் பலதிற ஓவிய வழிபாடுகளின் அடைவும் ஒன்றேயாகும். பலதிற ஓவியங்களில் என் மனம் ஈடுபட்டுப்பட்டு முடிவில் ஒன்றையே அடைதலை யான் அநுபவத்தில் உணர்ந்தேன். மனம் புலன்களால் பிணிக்கப்பட்டு உழலும் புறமனம் எல்லாக் குறும்புகட்கும் அடிப்படை. அம்மனம் பிணிப்பினின்றும் அறுந்து வீழ்ந்தாலன்றி மனிதனிடத்துள்ள விலங்கியல்பு மாறாது. கொடிய புறமனம் புலன்களின் பிணிப்பினின்றும் அறுந்து வீழ்ந்து ஒடுங்குதற்கு உருவ வழிபாடு தேவையாகிறது. உருவற்ற ஒன்றை மனம் நினைத்தல் இயலாது. மனிதனிடத் துள்ள விலங்கியல்பைப் போக்கவல்ல உருவ வழிபாட்டைக் கண்ட முன்னோர் கூர்த்த மதியையான் வியந்து வியந்து பாராட்டுவதுண்டு. உருவத் திறத்தைப்பற்றியும், அதன் வழி பாட்டைப்பற்றியும், அதனால் விளையும் நலங்களைப்பற்றியும், மனநிலைகளைப்பற்றியும் உள்ளொளி என்னும் நூலில் ஒல்லும் வகை விளக்கியுள்ளேன். அவைகளையொட்டிய எனது வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவற்றையும் அந்நூற்கண் பார்க்கலாம். ஆடம்பரம் கோயில்களிலுள்ள நல்லோவிய உருவங்களின் பொருள் செறிந்த கூறுகளை மறைக்கும் முறையில் அவைகட்கு அணிகளும் ஆரங்களும் பிறவும் புனையப்படுதலும், பொரு ளற்ற அர்ச்சனைகள் செய்யப்படுதலும், வேறு பொல்லாக் காட்சிகளும் எனக்குப் பிடிப்பதில்லை. அவைகள் வழிபாட்டுக் கும் ஊறு விளைத்து வருகின்றன. கோயில் சீர்திருத்தங் குறித்து யான் பேசிய பேச்சுக்கள் பல. எழுதிய எழுத்துக்கள் பல. அப் பேச்சும் எழுத்தும் பௌராணிக சைவர் சிலரது சினத்துக்கு என்னை ஆளாக்கின. நண்பருடன் கோயிலுக்குப் போகும் நெருக்குச் சிற்சில சமயம் நேரும். அச்சமயங்களில் யான் மிக விரைந்து கோயிலை வலம் வந்து ஓரிடத்தில் அமர்ந்து நண்பரின் வருகையை எதிர்நோக்கியிருப்பன். ஆடம்பரமற்ற ஏழைக் கோயில்கள் என் உள்ளங் கொள்ளும். இயற்கை பழைய கோயில்களில் பெரும்பான்மையான இயற்கை வளஞ் செறிந்த இடங்களிலேயே அமைந்துள்ளன. அவை கட்குச் செல்வேன். என் பொழுது ஓவிய வழிபாட்டில் சிறிதே கழியும்; பெரிதும் ஓவிய முதலாகவுள்ள இயற்கை வழிபாட்டில் கழியும். யான் அடிக்கடி திருப்போரூர் நோக்குவேன். ஓவிய முருகனைக் கண்டு தொழுது ஆங்குள்ள சிறு குன்றில் இவர்ந்து அமர்வேன். ஒரு பக்கம் கடலும், மற்றொரு பக்கம் காடும், இன்னொரு பக்கம் ஏரிகளும், வேறொரு பக்கம் வயல்களும் காட்சியளிக்கும். காலையில் எழும் செஞ்ஞாயிற்றிலும், மாலையில் அமரும் செஞ்ஞாயிற்றிலும் என் மனம் மூழ்கும். இரவில் நீலவானத்தை உழுது செல்லும் திங்களிலும் என் அகம் படியும். பறவைகளின் இனிய குரலிலும் ஆநிரைகளின் அசைந்த நடையிலும் என் நெஞ்சம் திளைக்கும். திடீரென மயில்கள் போந்து நடம்புரியும். அதிலும் என் உள்ளம் ஒன்றும். இவ்வாறு இயற்கை முருகனை வழிபட்டுத் திரும்புவேன். குற்றாலம் முதலிய இடங்களில் என் சிந்தை இயற்கை இனிமையில் தோய்ந்து சாந்தமுறும். இயற்கை வழிபாட்டால் யான் பெற்ற இன்பத்தை முருகன் அல்லது அழகு, தமிழ்நாடும் நம்மாழ் வாரும் முதலிய உரைச்செய்யுள் நூல்களிலும், முருகன் அருள்வேட்டல், திருமால் அருள் வேட்டல், நாட்டுப் பாடல், பொதுமை வேட்டல் முதலிய பாச்செய்யுள் நூல் களிலும் பெய்துள்ளேன். உயிர் ஓவிய வழிபாடு இயற்கை வழிபாட்டில் நாட்டஞ் செலுத்தியது; இயற்கை வழிபாடே உயிர் வழிபாட்டை உணர்த்தியது. உயிர் வழிபாட்டை யான் பலவாறு செய்துள்ளேன். இல்வாழ்க்கையில் அவ்வழிபாடு கால்கொள்வதை யான் அறிந்தேன். தொழிலாளரிடைத் தொண்டு செய்யும் பேறு இப்பிறவியில் எனக்கு வாய்த்தது. என் வாழ்வில் நிகழ்ந்த பெரிய வழிபாடு அதுவே. பாட்டு இறைவனுக்குக் கோயில் எது? என் வாழ்க்கை என்ன தெரிவித்தது? இறைவனுக்கு ஓவியங் கோயில் - இயற்கை கோயில் - உயிர் கோயில் - எல்லாங் கோயில் - என்று என் வாழ்க்கை படிப்படியே தெரிவித்தது. இக்கோயில்களெல்லா வற்றையும் ஒரு தனிக் கோயிலில் காண என் வாழ்க்கை இடந் தந்தது. அக்கோயில் எது? அது பாட்டுக் கோயில். எல்லாக் கோயில்களையும் பாட்டுக் கோயிலாக்கிய பெருமை கலைஞ ருடையது. எனக்கு ஓவியமும் பாட்டு; இயற்கையும் பாட்டு; உயிரும் பாட்டு; எல்லாமுடைய இறையும் பாட்டே. ஞான சம்பந்தர் ஷெல்லி முதலியோர் அமைத்த பாட்டுக் கோயில் களிலும் என் வழிபாடு நிகழ்வதுண்டு. நாமரூபம் பலதிற வழிபாடு மிக மிகப் படிப்படியே தியானங்கூடும் அமைதியான இடத்தில் கூடும் தியான முதிர்ச்சியில் நாம ரூபங்கள் மறைதல் தொடங்கும். நாமரூபங்கள் மறைய மறைய அவை ஒலியாய் ஓசையாகும்; அஃதாவது நாதமாகும். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்னும் 1ஆன்றோர் மொழியின் உண்மை விளங்கும். நாதத்தின் திண்மையாகப் பருத்துள்ள நாமரூபங்கள் அந்தோ! எத்துணைப் போராட்டங்களை விளைக்கின்றன? சாதிமதச் சண்டைகள் எத்தனை! நாடு நிற மொழிச் சண்டைகள் எத்தனை! மற்ற மற்றச் சண்டைகள் எத்தனை! நாம ரூபங்கள் ஒடுங்கி நாதமாகும்போது அங்கே சாதிமத முண்டோ? நாடு நிறமொழிகளுண்டோ? மற்ற மற்ற வேற்றுமைகளுண்டோ? நாமரூபங்களாகிய சாதி மதம் மொழி நிறம் நாடு முதலியவெல்லாம் ஒன்றன் பரிணாமம் என்னும் உணர்வு தோன்றினால் பூசலுக்கு இடம் உண்டாகுமோ? இவ்வுணர்வுக்கு வழிபாடு தேவை. ஒருமை வழிபாட்டுக்குச் சமரச சன்மார்க்கந் தேவை. சமரச சன்மார்க்க ஆக்கத்துக்குச் சமதர்ம ஆட்சி தேவை. இவ்வாறு என் வாழ்க்கையில் யான் பெற்ற அடைவு மற்றவர்க்குச் சொல்லச் செய்கிறது. நாதம் நாதத்துக்குமேல் யான் கருத்தைச் செலுத்துவதில்லை, அது கருத்துக்கும் எட்டாதது. அதனுடன் கலந்தால் பிரிந்துவ ரல் இயலாதாம். 2கலந்த பின் பிரிவதில்லை என்பது சான்றோர் மொழி. தொண்டுக்குப் பிறவி தாங்குதல் வேண்டுமென்று, எண்ணும் நெஞ்சம் உடையவன் யான். கலந்த பின் பிரியாத நிலை எனக்கு எற்றுக்கு? அந்நிலையின் இருப்பில் எனக்கு ஐயப்பாடு கிடையாது. பாடல் கல்வி யறிவால் மட்டும் யான் சமரச சன்மார்க்க உணர்ச் சியைப் பெற்றேனில்லை; வழிபாட்டாலும் அவ்வுணர்ச்சியைப் பெற்றேன். உணர்ச்சி வேட்கையாகியது. அவ்வேட்கை என்னை, மண்ணெல்லாஞ் சன்மார்க்க மலராட்சி வேண்டும். மார்க்கமெலாஞ் சன்மார்க்க மணங்கமழல் வேண்டும் கண்ணெல்லாஞ் சன்மார்க்கக் காட்சியுறல் வேண்டும் காதெல்லாஞ் சன்மார்க்கக் கேள்விநுழை வேண்டும் பெண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பிள்ளைபெறல் வேண்டும் பேச்செல்லாஞ் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும் பண்ணெல்லாஞ் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும் பரம்பொருளே சன்மார்க்கப் பணிசெயவேண் டுவனே. என்று பிதற்றச் செய்தது. என்னுள் நிலவும் சமரசம், 1உலகினில் துன்பம் நீங்க உண்டனை நஞ்சை, அன்பே சிலுவையில் நின்று செந்நீர் சிந்தினை, அரசை நீத்து விலகினை, மாடு மேய்க்க விரும்பினை, அடியும் தாங்கி இலகினை, சமர சத்தை எண்ணினால் துயரம் போமே. புல்லாங் குழலில் இசைமுழக்கிப் போதி நிழலில் தவங்கிடந்து கால்லா லடியில் பேசாது கல்லாம் மலையில் மறைபேசி எல்லா ருங்கொள் சமரசசன் மார்க்க மிசைத்தே உரிமையளி செல்வா சிறியர் பிழைபொறுக்குந் தேவா வாழி அருள்வாழி. முதலிய பாக்களாகப் பொங்கியது. பயன் சமரச சன்மார்க்க உணர்வாலும் வழிபாட்டாலும் யான் அடைந்த பயன் என்ன? வீடுபேறா? வீடுபேற்றில் என் நாட்டம் செல்வதில்லை. பின்னை யான் அடைந்த தென்னை? தொண்டு செய்யும் பேற்றை அடைந்தேன். சமரச சன்மார்க்கம் படிப் படியே யான் என்னும் ஆணவத்தை - தலைமை அரக்கனை - சாய்த்துச் சாய்த்து என்னை ஓரளவில் தொண்டனாக்கியது. தொண்டே எனது அந்தணச் செல்வம். சன்மார்க்கத்தைப் பற்றி அரசியலிலும், தொழிலியக் கத்திலுஞ் சில கூறியுள்ளேன். பின்னுஞ் சில கூறுவன். சமயத்தவர் என் வாழ்க்கை பலதிறச் சமயத்தவர் கூட்டுறவைப் பெற்றது. அவருள் சில கெழுதகையரை முன்னர் நினைவூட்டிக் கொண்டேன்; இங்கே சிலரை நினைவூட்டிக் கொள்கிறேன். 1. காக் கிறிதுவ நண்பர் சிலரைப்பற்றி மேலே சொல்லி விட்டேன். இங்கே எனக்கினிய காக் துரை நினைவு எழுகிறது. யான் பள்ளியில் படித்தபோது பிரின்ஸிபாலாகப் பலர் மாறிமாறி வருவர். அவருள் ஒருவர் ரெவரெண்ட் ஜி.ஜி. காக் என்பவர். காக் வை பிரின்ஸிபாலாக இருந்தபோதே அவருடன் நெருங்கிப் பேசும் வாய்ப்பை எனக்கு ஞாயிறு வகுப்புக் கூட்டியது. ஞாயிறு வகுப்பில் காக் துரை கிறிது வின் எளிமையைப்பற்றி அறிவுறுத்துவர்; மலையில் கிறிது பெருமான் செய்த ஜெபத்தில் எல்லாம் உண்டு என்று அடிக்கடி சொல்வர். அவர் அன்புக்கு யான் எளிமையானேன். அவர் எனக்கு நல்ல பேனா பென்சில் கொடுப்பர். யான் நான்காம் பார மாணாக்கனாயிருந்தபோது ஒருநாள் கல்லூரியின் ஒரு மூலையில் அமர்ந்து ரெயினால்ட நாவல்களுள் ஒன்றை ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அன்பார்ந்த காக் துரை பின்னே வந்து நின்று, என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். புத்தகத்தை நீட்டினேன். நாவலில் எனக்கு விருப்புக் கிடையாது என்றார். அவர் தந் திருவாக்கு. வெறுங் களிக்கதை உலகுக்கு என் வாழ்க்கையை இரையாக்காமல் காத்து வந்தது போலும்! காக் துரையின் கூற்று அந்நாளில் எனக்கு நன்கு விளங்கவில்லை; பின்னே ஒருவாறு விளங்கியது. நாவலில் புறமனம் ஈடுபடும். ஈடுண்ட அம்மனம் புலன் களின் தொடக்கினின்றும் விடுதலை யடைவதாகாது. விடு தலைக்கு ஆழ்ந்த பொருள்களைக்கொண்டே அரிய நூல்களில் நெஞ்சம் படிதல் வேண்டும். அப்படிவு, புறமனத்தைப் புலன் களின் தொடக்கினின்றும் விடுவித்து அகமனத்தை விளங்கச் செய்யும். ஒழுக்கம் கால்கொள்ளுமிடம் அகமனமே. இந்நுட்பம் உணர்ந்தே சான்றோர் காவிய ஓவியங்களைத் தந்தனர்போலும். இங்கே விரிவுரை வேண்டுவதில்லை. 2. வாசுதேவாச்சாரியார் இக்காலத் தமிழ் நாடு பெற்ற பெரியவருள் வாசுதே வாச்சாரியாரும் ஒருவர். அவர் வாழ்க்கைக்கோர் இலக்கியம்; ஒழுக்கத்துக்கோர் உறையுள்; கடமைக்கோர் வைப்பு. வாசு தேவாச்சாரியார் வைஷ்ணவர். வைஷ்ணவத்தின் உட்கிடக்கை என்னை? கைங்கர்யம். ஆச்சாரியாரின் உள்ளங்கைங்கர்யம்; உரை கைங்கர்யம்; செயல் கைங்கர்யம். அவரது வாழ்க்கையே கைங்கர்யம். ஆச்சாரியார் ஏறக்குறைய நாற்பதாண்டு வெலி கல்லூரியில் தலைமையாசிரியராகவும் பேராசிரியராகவும் தொண்டாற்றியவர். வெலி உயிருக்கு வாசுதேவர் உடலாக நின்று அரண் செய்தார் என்று கூறல் மிகையாகாது. அவர் இப்பொழுதும் தள்ளாத வயதில் தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணர் பாடசாலைகளின் மேற்பார்வையாளராக இருந்து வருதல் குறிக்கத்தக்கது. இந்நாளில் தலைமை ஆசிரியர் வாசுதேவாச்சாரியரால் ஆங்கில இலக்கணமும் விஞ்ஞானமும் நான்காம் ஐந்தாம் ஆறாம் பாரங்கட்கும் போதிக்கப்படும். யான் மூன்றாண்டு ஆச்சாரியார் போதனையைக்கேட்ட மாணாக்கன். இப்பொழு தும் சிற்சிலபோது அவர் நினைவு திங்கட்கிழமை விடியற் காலையில் தோன்றுகிறது. யான் வெலி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியனாதற்கு உதவி புரிந்தவருள் வாசுதேவரும் ஒருவர். அப்பதவியை விடுத்துத் தேசத் தொண்டில் யான் புகுந்த போதும் அவர்தம் ஆசி எனக்குத் துணை நின்றது. இந்நாளிலும் என்னிடத்திருந்து தகுதித்தாள் பெற்றுச் செல்வோர் மீது அவர் கருத்துப் படியாமலில்லை. கடலங்குடி நடேச சாதிரியார் மணிவிழாவுக்குச் சச்சி தானந்தம்பிள்ளையும் யானும் சென்றோம். விழா மண்டபத்தில் ஒரு பீடத்தமர்ந்திருந்த சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார் என்னைக் கூப்பிட்டார். அச்சமயத்தில் சச்சிதானந்தம் வாசுதேவாச்சாரியர் இருப்பிடத்தைக் கண்ணாற் காட்டினார். யான் எங்கே போனேன்? எங்களுடைய ஆசிரியப் பெருந்தகை யார் வாசுதேவ முனிவரிடமே போனேன். எனது மணிவிழா தியாகராய நகர் இராமகிருஷ்ணர் பள்ளிப் பெரிய மண்டபத்தில் தமிழ்ப் பண்ணைச் சார்பில் நடைபெற்றபோதும் வாசுதேவ முனிவர் ஆசி எனக்குக் கிடைத்தது. வாசுதேவரிடத்திலே பயின்ற பாடங்கள் பல. அவை களுள் வழிகாட்டும் வான்பொருளாயிருப்பன நேர்மையும் ஒழுங்கும் கடமையுமாகும். இவை திரண்ட ஒன்றே கைங்கர்யம். 3. பூவை கலியாணசுந்தர முதலியார் அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் சைவப் பெரும்புலவர்; சித்தாந்த சரபம்; பெயருக்கேற்ற வடிவமுங் கோலமும் உடையவர்; மணிவிழாவுக்குப் பின்னர் யதீந்திரரானவர். அவர் நெஞ்சம் பளிங்கு. மாசுகள் அதைக் கறைப்படுத்துவதில்லை. பொருட்பேய் அவரை அலைத்த தில்லை. அப்பெரியார் ஒருசிவஞானிபோல உலகில் வாழ்ந்தார். அஷ்டாவதானம் முதலியாரிடம் படித்தவர் தொகை அதிகம். எவர்க்கும் எளிமையாவது முதலியார் இயல்பு. அவர் காலத்தில் அவரது சாற்றுகவி பெறாத நன்னூல்களைக் காண்டல் அரிது. தாயுமானார்க்குப் பூவை முதலியார் வரைந்த விரிவுரை அவருடைய சித்தாந்தப் புலமைக்குச் சான்று கூறும். கதிரைவேற் பிள்ளை காலத்தில் அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியாருடன் யான் நெருங்கிப் பழகினே னில்லை; பின்னரே நெருங்கிப் பழகினேன். முதலியார் ஒரு குழந்தை என்பது எனக்குப் புலனாயிற்று. பெத்துநாயக்கன்பேட்டை நோக்கும்போ தெல்லாம், யான் பெரிதும் பூவை முதலியார் நிலையம் போந்தே திரும்புவேன். அவர் பெண்மணிகட்குப் பாடஞ் சொல்லுங்கால், யான் போவேனானால், நடையிலேயே அவரை எட்டிப் பார்த்து ஒதுங்குவேன். முதலியார் எழுந்து ஓடிவருவார்; கையைப்பற்றி ஈர்த்துச் செல்வார். மேடையில் சிங்க ஏறுபோல் கர்ச்சிக் கின்றீரே; இங்கே ஏன் நாணம்? நாணத்தை உதறுக என்று சொல்வார். எனது நாணத்தைப் போக்க முயன்றவருள் அஷ்டாவதானம் முதலியாரும் ஒருவர். சித்தாந்த சரபம் இடைவேளை உணவு கொள்ளும். எப்படி? அம்மையார் பகல் குழம்புச் சோற்றை உருண்டையாக்கி ஐயர் கையிலிடுவர். ஐயர் உண்பர். இதை யான் கேள்வியுற்ற துண்டு. ஒருநாள் யான் இக்காட்சி கண்டு காலைப் பின்னே வைத்தேன். எச்சிற்கையுடன் முதலியார் ஓடிவந்து வாரும் வாரும் என்று அழைத்தார்; அருகே இருக்கச் செய்தார்; சாப்பிடச் சொன்னார். இவ்வேளையில் யான் ஒன்றும் உண்ப தில்லை என்று கூறினேன். யான் இடைவேளையில் பலகாரம் காப்பி சாப்பிடுவதில்லை. யான் பழைய ஆள்; கைச்சோறு உண்பது வழக்கம் என்றார். காலத்தில் உணவு கொள்வது பூவையார் வழக்கம். சில விடங்களில் காலத்தில் விருந்து முடிவதில்லை. முதலியார் விருந்துணவுக்கென்று காத்திரார்; தாராளமாகச் சமையல் அறைக்குள் புகுவார்; ஆனதை உண்டு மகிழ்வார். இதை யான் இரண்டு இடங்களில் கண்டேன். இவ்வெளிமை பலர்க்குப் பாடமாகும். சென்னை அருணாசல ஈசுரர் கோயிலில் கலியாணசுந்தர முதலியார் தலைமையில் ஒருநாள் யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதரும் யானும் பேசினோம். பண்டிதர் தமது பேச்சில் சைவத்துக்குச் சாதி உண்டு என்று வலியுறுத்தினர். என் பேச்சில் சைவத்துக்கு இழி பிறவிச் சாதி உண்டு என்பது உறுதிப்பட்டால் யான் சைவத்தைவிட்டு நீங்குவேன். ஆனால் எனது ஆராய்ச்சியில் சைவம் சாதியற்றதென்றே தெரிகிறது. சைவம் அன்பு வண்ணம். m‹ò¡F¢ rhâ VJ? என்ற கருத்தை வெளியிட்டேன். முடிவுரையில் சித்தாந்த சரபம் சில கூறி, யான் தென்னாட்டு மடங்களில் நன்கு பழகினவன்; எத்தனையோ சொற்பொழிவுகள் மடங்களில் நிகழ்த்தினவன்; எனக்குக் காவியளிக்க ஒரு பெரிய சைவ மடாதிபதியைக் கேட்டேன். அவர் மறுத்தார். கயிலாயக் கதவு தென்னாட்டுச் சைவ வேளாளர்க்கு மட்டும் திறக்குமோ? மற்றவர்க்குத் திறவாதோ என்று கடாவித் திரும்பினேன். சாதி மடங்கள் சைவத்துக்குத் கேடுசூழ்ந்து வருகின்றன. சாதிக் கோட்டையை உடைத்தா லன்றிச் சைவம் வளராது என்று பேசி, என்னைப் பார்த்து, தம்பி நீர் இளைஞர்; சாதிக் கோட்டையைத் தகர்க்க முயல்க; என் ஆயுள் உள்ளவரை உமது முயற்சிக்குத் துணை நிற்பேன் என்று எனக்கு ஊக்கமூட்டியது. இத்தகைய ஊக்கம் சரபத்தால் எனக்குப் பலமுறை ஊட்டப்பட்டது. 4. ஆலாலசுந்தரம் பிள்ளை ஆலாலசுந்தரம் பிள்ளை சைவ உலகில் பேர்பெற்று விளங்கியவர்; சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அரை குறையாக விடுத்துச் சென்ற காஞ்சிப் புராண உரை, திருப் போரூர் சந்நிதிமுறை உரை முதலியவற்றைத் திறம்பட முற்று வித்தவர். ஆலாலசுந்தரம் பிள்ளை தலைமையில்யான் பல முறை பேசியுள்ளேன். எனது சீர்திருத்தம், சமரசம் அவர்க்கு வெறுப்பூட்டும். சில சமயம் அவைகளை அவர் மறுத்துங் கூறுவர். பின்னே என் பேச்சில் அவருக்கு வெறுப்புத் தோன்றா தொழிந்தது; விருப்பே தோன்றியது. அவர்க்கு முதுமையில் ஒரு புது விழி முளைத்தது. அவ்விழி கொண்டு அவர் நிகழ்த்திய சைவ சித்தாந்தத் தொண்டு நாட்டில் வேரூன்றினால் சைவ உலகம் நலம் பெறுவதாகும். ஆலாலசுந்தரம் பிள்ளை பெரிய புராணத்துக்குக் கண்டு வந்த விரிவுரை முற்றுப்பெறுதற்குள் தில்லைக் கூத்தன் அவரை எற்றுக்கோ அழைத்தான்? 5. பானுகவி பானுகவி என்ற மகாவித்வான் சென்னையில் வாழ்ந்த போது அவர்தம் பேச்சைக் கேட்பதிலும், எழுத்தை நோக்குவ திலும் எனக்கு ஆர்வம் அதிகம். அக்கவி தமது பெயருக்கேற்ற வாழ்வையும் உள்ளத்தையும் உணர்வையும் பெற்றிருந்தார் என்பது எனது கருத்து. சுப்பராய நாயகர் விடுத்துச் சென்ற கந்த புராணத்தின் சில பகுதிக்குப் பானுவால் ஒரு நல்லுரை காணப்பட்டது. கதிரைவேற் பிள்ளை நிகழ்த்திய வாதப்போர் பல வற்றுக்குப் பக்கத் துணைவராயிருந்தவருள் பானுகவியும் ஒருவர். வடலூர் சபை முதன்முறை கட்டப்பட்டபோது அதன் மீது இடிவிழுந்ததென்ற செய்தியைச் சிந்தாதிரிப்பேட்டையிற் கூடிய வாத சபையில் முதன்முதல் வெளியிட்டவர் பானுகவியே. இடையில் தணிகைப் புராணப் பிரசங்கத்திலே வசவாசி எனும் ஒரு சொல்லைப்பற்றிக் கதிரை வேற் பிள்ளைக்கும் பானு கவிக்கும் வாதம் நடந்தது. அவ்வாதம் பானுவின் மனத்தை மாற்றியது: மருட்பா மறுப்புக்கு மறுப்பு அவரை வரையச் செய்தது. கதிரைவேற் பிள்ளை மரணமடைந்த செய்தியைச் சிவ சங்கர முதலியாரும் யானும் பானுகவிக்கு அறிவித்தோம். அவர் கண்கலங்கிச் சில பாட்டுக்கள் எழுதிக் கொடுத்தார் அவைகளில் இரண்டு வருமாறு: ஏருறுநற் கதிரைவேற் பிள்ளை யென்னும் எழிலுறுபே ருடனிலங்கி யிருந்தோ யென்றுஞ் சீருறுநற் புலவரெலாம் உள்ளிற் போற்றுந் திறமுறுத லுளதென்ப தந்தோ இந்நாள் பேருறுவாழ் வதுநீங்கிக் கைலை யென்னும் பேருலகி லிறையருளாற் பெயர்ந்தா யேனும் பாருறுவோ ரழுதிறமே பகரு நின்னைப் பாரினீத் துறவிழையார் பாவ லோரே. மண்ணழுநீர் தீயழுங்கால் வானழுமேழ் கிரியழுமவ் வானோர் தங்கள் எண்ணமுமற் றுள்ளனவா மெப்பொருளும் அழும்புலவ ரிறந்தா லென்னும் வண்ணவுரைக் கிலக்கியநீ வானவர்சூ ளாமணிபால் வயங்கு நிற்கென் கண்ணழுத நீருமொரு கடலாகும் வேனிலதைக் கறுத்த தந்தோ. இப்பாக்களால் பானுகவியின் உண்மை நிலை எனக்கு விளங்கியது. பின்னே பானுகவி கல்லாடை புனைந்து திருவோத்தூரிலே வதிந்து, பல மாணாக்கரைத் தமிழ்ப் புலவராக்கினார். அவருள் ஒருவர் சைவத் தமிழ் மணி புரிசை முருகேச முதலியார். 6. சதாசிவ ஐயர் பழைய நூல்களில் ஜனகர் இருக்கிறார். ஜனகரைப் போல வாழ்க்கை நடாத்தல் இயலுமா? அவர் வரலாறு புலவ ரின் புனைந்துரை என்று சிலர் ஐயுறுவதுண்டு. ஜனகரைப் போலவும் உலகில் வாழ்தல் கூடும் என்ற உறுதி என் வாழ்க்கை யில் ஏற்பட்டது. எப்படி? ஒரு ஜனகரை என் வாழ்க்கை கண்டது. அதனால் உறுதி ஏற்பட்டது. யான் கண்ட ஜனகர் ஜடி சதா சிவ ஐயர். ஐயர் ஜனகராதற்கு வாழ்க்கைத் துணையாக அமைந்த வர் மங்களம்மாள் என்ற பெருமாட்டியார். இற்றைக்குச் சுமார் முப்பத்துமூன்று ஆண்டுகட்கு முன்னர் சென்னை மெய்கண்டார் சபையின் ஓராண்டு விழா சதாசிவ ஐயர் தலைமையில் நடந்தேறியது. அவ்விழா என்பேச்சுக்கும் இடம் தந்தது. அன்றைய பேச்சு ஐயரையும் என்னையுங் கூட்டுறவுப்படுத்தியது. கூட்டுறவு நட்பாயிற்று. நட்பு என்னை ஐயர் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவனாக்கிற்று. ஐயர் வீட்டில் யான் காற்றென நுழைவேன். ஸர்.டி.சதாசிவ ஐயர் ஹைகோர்ட் ஜட்ஜ். உலகியற் கண்கொண்டு அப்பீடத்தை எண்ணினால் அஃதொரு பெரும் பதவியாகவே தோன்றும். ஐயருக்கு அப்பதவி பெரியதாகத் தோன்றியதில்லை. உலகில் எத்தனையோவிதக் கடமைகள் இருக்கின்றன. அவைகளுள் ஒன்று ஹைகோர்ட் ஜட்ஜ் பதவியும் என்பது ஐயர் கருத்து. மற்ற மனிதரைப் போலத் தாமும் ஒருவர் என்று எண்ணியே ஜடி சதாசிவ ஐயர் வாழ்ந்து வந்தார். சதாசிவ ஐயரும் யானும் கோயிலுக்குப் போவோம். சில இடங்களில் அர்ச்சகரும் மற்றவரும் அங்கங்கே சூழ்ந்துள்ள அன்பரைப் பிடித்துத் தள்ளி ஐயரை வரவேற்பர். அதைக் காணும் ஐயர், இறைவன் மாசிலாமணி; யான் மாசுடையவன்; என் மாசினைப் போக்க இங்கே வந்தேன். என்னினும் அன் புடைய பெரியோரைத் தள்ளித் தள்ளி என்னை ஏற்பது தவறு; பாவம். அச்செயல் எனது மாசுடன் அதிக மாசைச் சேர்ப்ப தாகும். இவ்வடாத செயல்களைச் செய்யாதேயுங்கள் என்று எச்சரிக்கை செய்வர். இவ்வெச்சரிக்கையை யான் பலமுறை பார்த்திருக்கிறேன். சதாசிவ ஐயர் வாழ்க்கை அவர் இல்லத்தளவில் கட்டுப் பட்டு நின்றதில்லை. அது சமூகத்தில் சென்றது; நாட்டிலுஞ் சென்றது. தொண்டர்கட்கு வீடு ஒரு குடும்பம்; சமூகம் ஒரு குடும்பம்; நாடும் ஒரு குடும்பம். அறிஞர் ஐயர் தியோசாபிகல் சங்கத்தில் சேர்ந்தவர். அச்சங்கம் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாது; அதற்குத் தீண்டாமையே தெரியாது. ஐயர் வாழ்க்கையும் பிறப்பில் உயர்வு தாழ்வையோ, தீண்டாமையையோ, இன்னபிறவற்றையோ அறியாது. தியோசாபிகல் சங்க ஆண்டு விழா முடிந்ததும் ஐயரால் பொதுமை விருந்தொன்று நடத்தப்படும். எல்லார்க் கும் ஒரேவித வழிபாடு நடக்கும். இவ்வழிபாட்டில் எனக்குங் கலப்புண்டு. சிதம்பரம் சகஜானந்தரை நந்தனார் பள்ளி வாயிலாக நாடறியச் செய்தது ஐயரின் அன்பேயாகும். மதுராந்தகப் புகைவண்டி நிலையத்தின் அருகே ஓர் ஈசுரன் கோயில் இருக்கிறது. ஒருபோது கட்டையாம்பந்தல் சபாபதி முதலியார் அக்கோவில் தருமகர்த்தராக இருந்தார். அவர், திருவிழாவில் சதாசிவஐயர் தலைமையிலே சச்சிதானந்தம் பிள்ளையின் சொற்பொழிவும், என் வாய்த் தொண்டும் நிகழ்தல் வேண்டுமென்று விரும்பினர். அவர் விருப்பத்துக்கு நாங்கள் மூவரும் இணங்கினோம். சச்சிதானந்தமும் யானும் முன்னரே மதுராந்தகம் சேர்ந்தோம்; ஐயர் வருகையை எதிர்பார்த்து நின்றோம். அதுபோழ்து ஒருவர் ஓடிவந்து, சபாபதி முதலி யாரை நோக்கி, சதாசிவ ஐயர் சாதிமதமில்லாதவராமே. அவர் தங்குதற்கு வீடுவிட்டால் வைதிகர் தொல்லை எனக்கு நேரும் போல் தெரிகிறது. வேறிடம் ஏற்பாடு செய்யுங்கள் என்றார். யான் திடுக்கிட்டேன். சச்சிதானந்தம் பிள்ளையின் கண்கள் சுழன்றன. சபாபதி முதலியார் உதடுகள் துடித்தன. சிலர் நா வைதிகரை ஏசியது. வண்டி வந்தது. ஐயர் இறங்கினர். அவரை அழைத்துச் சத்திரமடைந்தோம். சிறிது நேரங் கடந்ததும், யான் ஐயரை அணுகி, தனியிடம் போகலாமா என்று கேட்டேன். அவர் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று வினவினர். இந்தச் சத்திரத்திலேயே என்றேன். vd¡F k£L« jÅÆl« v‰W¡F? என்று ஐயர் சிரித்தார்; சத்திரத்திலேயே தங்கினோம். அக்காலத்தில் தாய்மொழி அவமதிப்புப் பல்கியிருந்தது. ஆங்கிலம் பயின்ற அறிஞர் பலரும் கூட்டங்களில் தாய்மொழி யில் பேசுவதில்லை. அவர் வாய் ஆங்கிலமே பொழியும். ஹைகோர்ட் ஜட்ஜ் ஸர். சதாசிவ ஐயர் அப்பஞ்ச காலத்தில் கூட்டங்களில் தாய்மொழியில் பேசுவதை ஒரு நோன்பாகக் கொண்டார். தமிழ் தெரியாத கூட்டங்களிலேயே ஐயர் நா ஆங்கிலத்தைத் தொடும். அவர் நோன்பு என் தமிழ்த் தொண் டுக்குப் பெருந்துணை புரிந்தது. ஐயரும் யானும் மொழியுலகில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்த்தினோம் என்று சொல்லுமளவில் நின்று விடுகிறேன். அன்பர் ஐயரின் எளிமை எச்சபை அழைப்புக்கும் இணங்கச் செய்யும். சிறுசிறு பஜனை கூடங்களும் ஐயர் பேச்சை விரும்பும். அந்நாளில் பல இடங்களில் சாக்கடை திறந்தே கிடக்கும். சாக்கடை ஓரங்களில் பாண்டுரங்க பஜனை முழங்கும். ஒருமுறை ஒரு பஐனையின் ஆண்டு விழா ஐயர் தலைமையை நாடியது; என் வாயை விழைந்தது. பாதையில் மக்கள் கூட்டம். மேடை எங்கே? பலகையிட்ட சாக்கடைமீது. சாக்கடை நீர், அருவி யென ஓடுகிறது. அம்மேடையில் ஐயர் தலைமை! அவர் முகத்தில் சுளிப்புச் சூழ்ந்ததோ? ஹைகோர்ட் ஜட்ஜின் பணி மாடியிலும் நிகழும்; தாழ்வாரத்திலும் நிகழும்; சாக்கடையிலும் நிகழும். ஜனகர் வாழ்க்கைக்கு இடவேற்றுமை தோன்றுமோ? அத்தகைய ஒருவர் வாழ்க்கை, அவருடன் நண்பு பூண்ட என் வாழ்க்கைக்கு எவ்வளவு ஊக்கமூட்டியிருக்கும்! (மற்றுஞ் சில விவரம் முன்னரும் பின்னரும்). 7. நடேச சாதிரியார் கடலங்குடி நடேச சாதிரியார் கலைஞர்; பெருங் கலைஞர். அவர்தம் கலை ஞானம் அவரளவில் பயன்பட்டு நின்றதில்லை; தமிழ் உலகுக்குப் பெரிதும் பயன்பட்டது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் தேசபக்தர் சுப்பிரமணிய சிவா, பாரதி திருநாள் கொண்டாட்டத்துக்கென்று கிருஷ்ணாம் பேட்டையிலே ஒரு கூட்டங் கூட்டினர். அக்கூட்டம் கடலங்குடி நடேச சாதிரியார் தலைமையில் நடைபெற்றது. அதில் என்னுடைய பேச்சுத் தொண்டும் நிகழ்ந்தது. அன்றுதொட்டு அறிஞர் சாதிரியாரும் யானும் நண்பராகிப் பழகி வர லானோம். சாதிரியார் வடமொழியும், எனது நவசக்தி தமி ழும் ஒன்றி எங்கள் நட்பைக் கெழுதகைமையதாக்கின. கடலங் குடி சாதிரியார் வடமொழியினின்றுந் தமிழில் பெயர்த்த நூல்கள் எனது வாழ்க்கைக்குப் பெருந்துணைபுரிந்தன என்று சொல்வேன்; சாதிரியாரின் தமிழ்ச் சங்கர பாஷ்யம் எனது ஆவிக்கே துணைபுரிந்ததென்று சொல்வேன். இது குறித்து முன்னரும் மொழிந்துள்ளேன். சாதிரியார் அறுபதாம் ஆண்டு விழாவில் எனது நன்றியறிதலை யான் தமிழில் தெரிவித்துக் கொண்டேன். அவர் வடமொழியில் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார். நடேச சாதிரியார் போன்ற ஒரு கலைஞரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க. 8. ஆதிமுல முதலியார் இருக்கம் ஆதிமூல முதலியார் சிவபக்தர்; திருத்தொண் டர். அவர் வாழ்க்கை சைவ உலகுக்கே பெரிதும் அர்ப்பணமா கியது. சைவ நலங்கருதி அவர் உழைத்த உழைப்பை யான் அறிவேன். சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தைக் கண்டவர் ஆதிமூல முதலியார். அத்திருக்கூட்டத்தை வளர்த்தவரும் அவரே, முதலியார் தலைமையில் சிவனடியார் திருக்கூட்டம் திருப்பதிகட்கு யாத்திரை செல்லும். அவ் யாத்திரையால் சைவ உலகம் அந்நாளில் புத்துயிர் பெற்றெழுந்ததென்றே கூறலாம். அந்த யாத்திரைக் காட்சியை என்னென்று சொல்வேன்! ஒரு கூட்டம் திருமுறை தாங்கும்; இன்னொரு கூட்டம் நால்வர் திருவுருவப் படமேந்தும்; வேறொரு கூட்டம் தமிழ்மறை ஓதும்; அடியவர் கூட்டம் ஆயிரக்கணக்கில் சூழும். இவ்வாறு யாத்திரை நகரும். திருநீற்றொளியும், கண்டிகை மாலையும், அரகர ஒலியும் கயிலைக் கணங்களின் நினைவூட்டும். சில யாத்திரைகளை யான் கண்டிருக்கிறேன். இளமையில் அக் காட்சி என் கண்ணையுங் கவரும்; கருத்தையுங் கவரும். ஆதிமூல முதலியார் பின்னாளில் பள்ளி அமைத்தல், நூல் நிலையம் வைத்தல் முதலியவற்றின்மீது கருத்துச் செலுத்தி னர். என்னைக் காணும்போதெல்லாம் பாதிரிமாரைப் போலத் தொண்டு செய்தல் வேண்டாமா என்று கூத்தாடுவர். யான் வீண் கனவு காண்டல் வேண்டாம் என்பேன். அவர் வருந்துவர். பழையபடி யாத்திரையைத் துவங்குங்கள் என்று சொல்வேன். காலநிலை மாறிவிட்டதே; என் செய்வேன் என்று அவர் பார்க்கும் பார்வை உள்ளத்தை உருக்கும். 9. சதாசிவ செட்டியார் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் வைதிக சைவர்; திருமுறை ஆராய்ச்சியில் பேர் பெற்றவர். இளமையில் அவரை யான் அடிக்கடி காண்பன்; காணும்போதெல்லாம் தேவார நுட்பங்களை எனக்கு எளிதில் விளக்கிக்காட்டுவதை அவர் ஒரு தொண்டாகவே கொண்டார். அவருக்கு என் சீர்திருத்தம் பிடிப்பதில்லை. யான் அரசியற்றுறை நண்ணியதையும் அவர் விரும்பவில்லை. சதாசிவ செட்டியாரிடஞ் சைவம் பயின்றவர் சிலர். அவருள் சிறந்து விளங்கும் அன்பர் ரா.சண்முகசுந்தரஞ் செட்டியார். ஆசிரியரைப் போலவே இவரும் சைவத் தொண்டு செய்வதை யான் போற்றுவதுண்டு. 10. குப்புசாமி முதலியார் கி.குப்புசாமி முதலியாரை யான் பள்ளி மாணாக்கனா யிருந்த நாள்தொட்டு அறிவேன். அவர் ஆனூர் சிங்காரவேல் முதலியாரிடம் தமிழ் பயின்றவர்; நேர்மையாளர்; ஆட்களின் உள்நிலையை அளந்து கூறுவதில் வல்லவர்; பழைமையில் பெரும்பற்றுடையவர்; சீர்திருத்த முறைகளைக் காய்பவர். 1914ஆம் ஆண்டு முதல் பல ஆண்டு சைவசித்தாந்த மகா சமாஜம் அவரைச் செயலாளராக ஏற்றது. குப்புசாமி முதலியார்க்கு என்னைக் குழந்தை என்று அழைப்பதில் விருப்பம் அதிகம். அவ்விருப்பங் கண்டு யானும் மகிழ்ச்சி யடைவேன். எனது பெண்ணுரிமைப் பேச்சும் எழுத்தும் அவருக்கு இனிப் பூட்டுவதில்லை. யான் இயற்றிய பெண் ணின் பெருமை என்னும் நூலை அவர் கலியாணன் நூல் - கலி யுக நூல் என்று சொல்வர். 1934ஆம் ஆண்டில் திருவதிகையில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழா என் தலைமையில் நடைபெற்றது. குப்புசாமி முதலியார் பேச எடுத்த பொருள் திருவெம்பாவை. அவர் இடையிடை எனது பெண்மைக் கொள்கையைத் தாக்கி வந்தனர். முடிவுரையில் திருவெம்பாவை பெண்மையையே அடிப்படையாகக் கொண்ட தென்றும், அதன்கண் பெண்ண லம், உற்ற வயதடைந்த இளம் பெண்கள் வெளிவரல், வீதிவலம் போதல், திருக்குளத்தில் நீராடல், தக்க கணவரை அருளுமாறு ஆண்டவனை வேண்டல் முதலிய உரிமைகள் செறிந்து கிடக் கின்றன என்றும் விளக்கிக் காட்டினேன். அவ்விளக்கம் குப்பு சாமியார் கண்களில் தீப்பொறி பறக்கச் செய்தது. அடுத்த நாள் அவர் சென்னைக்குச் செல்ல முயன்ற போது அவரை யான் கண்டேன். கலியாண! கோயில்களிலுள்ள அம்மன் சிலைகளை நீக்கி அவ்விடங்களில் இளம் பெண்களைக் கொண்டுவந்து நிறுத்தப்பா*** என்றார். அக்காலம் சேய்மையி லில்லை என்றேன். குழந்தைப் பேச்சுக்குப் பொருளுண்டோ என்று அவர் விடை பெற்றார். 11. சக்கரவர்த்தி நயினார் சீவக சிந்தாமணி என்னுங் காவியத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் வீடூர் அப்பாசாமி நயினார். அவ்வறிஞரின் வழித் தோன்றல் சக்கரவர்த்தி நயினார். சக்கரவர்த்தியின் உறைவிடம் இராயப்பேட்டைப் புதுப்பேட்டை. வெலி கல்லூரியில் அவரும் மாணாக்கர். யானும் மாணாக்கன். அவரது இருக்கை மேல் வகுப்பு. எனது இருக்கை கீழ் வகுப்பு. வெலி ஈன்ற மணி கள் பலப்பல. அவைகளுள் சக்கரவர்த்தி மணியும் ஒன்று. பின்னே நயினார் அரசாங்கக் கல்லூரியில் தத்துவப் பேராசிரிய ரானார். இராயப்பேட்டை மாணாக்கர் உலகம் இளைஞர் கல்விக் கழகம் என்றோர் அமைப்பை நிறுவியது. அவ்வுலகில் யானும் ஓர் உறுப்பு. அம்மாணாக்கர் உலகம் எவரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தது? பேராசிரியர் சக்கரவர்த்தியைத் தெரிந்தெடுத் தது. யான் திடீரெனப் பள்ளிப் படிப்பை விடுத்தது சக்கர வர்த்திக்கு வெறுப்பே ஊட்டியது. பின்னே யான் வெலியில் தமிழ்ப் பேராசிரியனாகியது அவருக்கு விருப்பூட்டிற்று. யான் அப்பதவியினின்று விலகித் தேசபக்தன் ஆசிரிய பீடத் தமர்ந்ததை நயினார் போற்றினாரில்லை. யான் தேசபக்தன் ஆசிரியனாயிருந்தபோது பிரஸி டென்ஸி கல்லூரியில் தமிழாசிரியர் வேலை காலியாயிற்று. அதில் என்னை நுழைக்க முயன்றவருள் சக்கரவர்த்தியும் ஒருவர். அம்முயற்சிக்குத் துணைபோக என்மனம் எழுவில்லை. ஒருநாள் மீனாட்சிசுந்தரனாரும் யானும் பேராசிரியரைப் பார்க்கச் சென்றோம்; சீவக சிந்தாமணிக்கு உரைகாண்டலைப் பற்றிப் பேசினோம். பேச்சினிடையில் சக்கரவர்த்தி, நீங்கள் தமிழ் பயின்றது எற்றுக்கு? கலியாண சுந்தரம் அந்நாளில் பிரஸி டென்ஸி கல்லூரி புக மனங்கொள்ளவில்லை. நீர் இந்நாளில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அடைய உளங்கொள்ள வில்லை. கலியாணசுந்தரத்தின் வாழ்வு வேறு விதமாகியது. அவரைப்பற்றிய பேச்சு வேண்டுவதில்லை. நீர் இளைஞர். thœ¡ifia V‹ åš fÊ¡»Ö®? என்று கடாவினர். அப்பொழுதே மீனாட்சி சுந்தரனார்க்கும் பிரஸிடென்ஸி கல்லூரிச் செய்தி தெரியவந்தது. யான் நவசக்தி ஆசிரியனாகியபோது, சக்கரவர்த்தி நயினார் சாது அச்சகத்தில் மேருமந்திர புராணத்தைப் பதிப்பிக்க முயன்றார். அம்முயற்சிக்கு எனது இலக்கணக் குறிப்புக்கள் சில துணை போயின. நூல் முகவுரையில் பேராசிரியரின் நன்றியுரைகளில் என் பெயரும் விளங்கியது. அது கல்வி இலாகாவில் சிறு தென்றல் வீசச் செய்தது என்று கேள்வியுற்றேன். நயினார் வெளியிட்ட நீலகேசி என் பார்வைக்கு வந்தது. அதற்கு நவசக்தியில் நன்முறையில் மதிப்புரை வரைந்தேன். சைவ நூல்களிலும், வேறு நூல்களிலும் ஜைநத்தைப் பற்றி மல்கியுள்ள கருத்துக்கள் எனக்கு விளக்கம் வழங்கவில்லை. என் உள்ளம் இருண்டே கிடந்தது. அதில் ஜைந விளக்கேற்றியவருள் சக்கரவர்த்தியும் ஒருவர். ஜைநத்தைப் பற்றிய நுட்பங்கள் பல அவரால் விளக்கப்பட்டன. சிலநாள் இராமாயணத்தைப்பற்றி இருவருமே பேசி னோம். ஜைந இராமாயணம் சுருங்கிய முறையில் பெரியவரால் சொல்லப்பட்டது. அந்த இராமாயணத்தின் கதைப்போக்கே வேறு விதமாயிருத்தல் கண்டேன். ஜைந இராமாயணத்தின் இராவணன் அரக்கனாயில்லை; அவன் அதில் வித்தியா தரனாகப் பொலிகிறான். சைவத்தைக் குறித்தும் ஜைநத்தைக் குறித்தும் நாங்கள் அடிக்கடி உரையாடுவோம். சைவமும் ஜைநமும் ஒன்றே என்னும் முடிவுக்கு யான் வந்தேன். சக்கரவர்த்தி நயினார் ஆராய்ச்சி ஒருபோது தேவாரத்தில் புகுந்தது. ஆராய்ச்சி முற்றுப்பெற்றது. ‘j§fŸ kd¤âš v¤ jif¡ fU¤J¤ âu©lJ? என்று பெரியவரைக் கேட்டேன். அவர், சம்பந்தர் போக்குக்கும் அப்பர் போக்குக்கும் வேற்றுமை காணப்படுகிறது என்றார். என் நெஞ்சம் திடுக்கிட்டது; விளக் கம் தேவை என்றேன். சில கூறினர். இங்கே ஒன்றைமட்டுங் காட்டுகிறேன். சிவபிரான் கையிலுள்ள மண்டையோட்டை இருவரும் வருணிக்கின்றனர். சம்பந்தர் மொழியில் ஊன் மலி கிறது; அப்பர் மொழியில் அம்மலிவு காணோம். அப்பர் ஜைநக் கலையுணர்ந்தவர். அதனால் அவர் ஊனை வெறுத்தார். என்ற கருத்து அறிஞரிடத்திலிருந்து வெளிவந்தது. சீவக சிந்தாமணியின் ஆக்கத்தைக் குலைக்கவேண்டிச் சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினார் என்றொரு கதை தமிழ்நாட்டில் உலவி வருகிறது. அதைப்பற்றியும் நாங்கள் உரை யாடுவதுண்டு. அக்கதை பின்னே எவராலோ புனையப்பட்ட தென்றும், அதற்குச் சேக்கிழார் மொழியில் சான்றில்லை என்றும் யான் கண்ட முடிவை எனது பெரிய புராண இரண்டாம் பதிப்பில் குறித்தேன். ஞானசம்பந்தர் தேவாரத்தில் கழுக்கையர் என்றொரு சொற்றொடர் போந்துள்ளது. அதற்குச் சைவப் புலவர் சிலர் கூறும் பொருள் பொருத்தமுடையதாக எனக்குத் தோன்ற வில்லை. அது குறித்துச் சக்கரவர்த்தி நயினாரைக் கேட்டேன். நயினார் நவின்ற பொருள் பொருத்தமுடையதாகக் காணப் பட்டது. ஜைந முனிவர் மயிலிறகையும் கழுவையும் கையில் தாங்கிக் கொண்டிருப்பர் என்பதும், அவர் சைவப் பெரியாரைக் காணல் நேர்ந்தால் தங் கையிலுள்ள கழுவைத் தரையில் நாட்டி, அதில் ஏறி உயிர்நீப்பர் என்பதும் சைவப் புலவர் கூற்று. ஜைந முனிவர் கையில் மயிலிறகைத் தாங்குதல் கண்ட வேடர் வாணிபத்தின்பொருட்டு மயில்களை வதைக்கலாயின ரென்பதும், அது கேட்ட ஜைந முனிவர் சிலர் மயிலிறகை நீக்கிக் கழுகிறகைக் கொண்டனரென்பதும், கழுகு தன் இறகுகளைத் தானே கழிக்கும் இயல்புடையதென்பதும் சக்கரவர்த்தி கூறிய பொருள். ஒரு சுலோகமும் அவரால் எடுத்துக் காட்டப்பட்டது. (கழுகு+குன்றம்= கழுக்குன்றம்; கழுகு+கையர்=கழுக்கையர்.) குயின்மேரி கல்லூரி விஞ்ஞானப் பேராசிரியர் இராஜே வரி அம்மையார் சக்கரவர்த்தியைக் கண்டு ஜைநத்தைப்பற்றி உரையாட ஒருநாள் விரும்பினர். யான் மணியைப் பார்த்தேன். மணி பதினொன்று. சக்கரவர்த்தி பத்து மணிக்குச் சாப்பிடுவது வழக்கம். சாப்பாட்டு நேரங் கழிந்தது என்று அம்மையாரை அழைத்துச் சென்றேன்; அறிமுகஞ் செய்வித்தேன், இருவரும் பேசத் தொடங்கினர். பேச்சு நீண்டது. ஒன்றரை மணியாயிற்று. ஒருவர் கதவு வாயிலாக எட்டி எட்டிப் பார்த்தவண்ண மிருந் தனர். mij¡ f©l ah‹, bgÇatiu, neh¡», ‘rh¥gh lh¢nrh? என்று கேட்டேன். அவர் சிரித்தார். அம்மையாரும் யானும் விடைபெற்றுத் திரும்பினோம். 12. சண்முகசுந்தர முதலியார் செந்தமிழ் ரத்னாகரம் வல்லை சண்முகசுந்தர முதலியார் அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தரமுதலியாரின் முதல் மாணாக்கர்; சிலம்பப் பயிற்சியில் பேர் பெற்றவர்; மருத்துவ மணி. மூன்று துறையிலும் அவருக்கு மாணாக்கருளர். சண்முகசுந்தர முதலியாரிடத்து யான் கலந்து பேசும் வாய்ப்புப் பலமுறை உற்றது. அவ்வேளைகளிலெல்லாம் எனக்கு அவரது கருணை நோக்கும் அஞ்சா நெஞ்சும் விருந்தாகும். கல்விக் கழகு கசடற மொழிதல் என்று அதிவீரராம பாண்டி யர் அன்று அருளினர். சண்முகசுந்தர முதலியார்பால் யான் பழகிய பின்னர், கல்விக் கழகு கருணையஞ் சாமை என்று கூறுதல் பொருத்தமென்று எண்ணலானேன். செந்தமிழ் ரத்னாகரத்தின் கலை ஞானம் வழி வழி வளர்ந்து வருதல் கழிபேருவகை யூட்டுகிறது. அவரது அருமைப் புதல்வர் பாலசுப்பிரமணியம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்; தமிழில் புலவர்; ஆராய்ச்சியாளர். அவர் தங் கட்டுரைகளில் தமிழ் மணங் கமழும். பாலசுப்பிரமணியத்தின் ஆருயிர் மனைவியார் தாமரைக்கண்ணி அம்மையார். அவர் இசை ஞானியர்; நல்ல தமிழ் எழுத்தாளர்; விரிவுரையாளர். மருத்துவமணியின் மருகருள் ஒருவர் சமரபுரி முதலியார். அவர் சைவப் புலவர். சைவம் வளர்ப்பதிலேயே அவர் தம் வாழ் நாள் கழிந்து வருகிறது. சண்முகசுந்தர முதலியாரின் தவப் புதல்வியார் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பார்வதி அம்மையார் என்பது. முதலி யாரது அஞ்சாமை பார்வதி அம்மையாராகப் பிறந்தது என்று கூறல் மிகையாகாது. அம்மையார் இசையில் வல்லவர்; சமரச நோக்கர்; நல்ல பேச்சாளர். வல்லையார் பேரப் பிள்ளைகளிலும் கலைஞர் இருக்கின் றனர். அவர்தங் கான் முளைகளும் சண்முகசுந்தரர்களாகலாம். சண்முகசுந்தர முதலியார் பெண்ணுலகுக்குப் புரிந்த உதவி ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கற்பாலது, அஃதென்னை? கிருஷ்ண வேணி அம்மையாரையும், அவர்தம் அருமைத் தங்கையார் பத்மாவதி அம்மையாரையும் பண்டிதைமாராக்கினமை. பண்டிதை கிருஷ்ணவேணி அம்மையாரால் தமிழுலகமும் சமய உலகமும் அடைந்துவரும் நலனை யான் அறிவேன். நன்கு அறிவேன். கலை ஞானம் வழி வழி வளர்ந்து வரத் துணைபுரிந்த ஒரு பெரியவரின் அன்புக்குச் சிறியேன் வாழ்க்கை உரியதாயிற்று. 13. கண்ணப்ப முதலியார் சென்னைச் சிவடினயார் திருக்கூட்டம் ஒருபோது ஒரு கவட்டை விடுத்தது. அது பால சைவ சபை என்பது. அந் நாளில் அச்சபை இளைஞர் கல்விப்பயிற்சிக்கு ஒரு நிலைக் களனாய்ப் பிறங்கியது. அது சிலரைப் பண்படுத்தியது. அச் சிலருள் ஒருவர் அறிஞர் பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார். அவரது இளமைப் பேச்சும் எழுத்தும் என்னுள் இடம் பெற்றன. பின்னே கண்ணப்ப முதலியார் பன்னூல் பயின்று பெரும் புலவரானார். புலமையுடன் ஒழுக்கமும் அவருடன் ஒளிவிட்டு ஓங்கி வளர்ந்தது. பாரிப்பாக்க முதலியாரின் தமிழ்ப் புலமை காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி முதலியாரையும், சித்தாந்தப் புலமை சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் கலியாண சுந்தர முதலியாரையும் நினைவூட்டுகின்றன என்று கூறினால் என்னுள்ளம் நிறைவெய்தும். இந்நாளில் சம்பிரதாயப்படி மெய்கண்ட சாத்திரத்தைப் பாடஞ் சொல்வோர் மிகச் சிலர். அவருள் ஒருவர் கண்ணப்ப முதலியார். சில ஆண்டுகட்கு முன்னர் சென்னைச் சித்தாந்த பிரகாச சபையிலே கண்ணப்பரால் சிவஞான சித்தியார் வகுப்புத் திறம்பட நடாத்தப்பட்டது. முடிவுக் கூட்டம் என் தலைமையில் நடைபெற்றது. அவ்வேளையில் கண்ணப்பரின் சைவத் தொண்டு நன்கு புலனாயிற்று. பாரிப்பாக்க முதலியார் என் தலைமையில் பல இடங்களில் பலதிறச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். அவை யாவும் புலமை நிரம்பியனவாய், அளவைக்கு அரண்செய்வனவாய், பொருள் பொதிந்தனவாயிருக்கும். இவ்வாறு பேசுவோர் இந்நாளில் எத்துணைப் பேருளார் என்று யான் எண்ணுவேன். ஒருநாள் யான் தொழிலாளர் தொல்லையில் அழுந்திக் களைப்பும் இளைப்பும் என்னை அரிக்க அரிக்க வீடு சேர்ந்தேன்; சேர்ந்ததும் கண்ணப்ப முதலியார் அமைதியுடன் அமர்ந் திருத்தலைக் கண்டேன்; அவருடன் யான் சிறிது நேரம் பேசவே உளங்கொண்டேன். பேச்சு எப்படியோ நீண்டு வளர்ந்தது. களைப்பும் இளைப்பும் என்னவாயின? அவை ஊக்கமும் உணர்ச்சியுமாயின. உள்ளங் கிளர்ந்தது. காரணம் என்னை? நாங்கள் அவப் பேச்சுப் பேசாது சிவப்பேச்சுப் பேசியதே. 14. பாலசுப்பிரமணிய முதலியார் கருவில் திருவுடையார் என்பது புலவர் மொழி. அம் மொழிக்கு இலக்கியர் மயிலை பாலசுப்பிரமணிய முதலியார். அவரையும் என்னையுந் தொடர்புபடுத்தியது சைவ சித்தாந்த மகா சமாஜம். பாலசுப்பிரமணிய முதலியார் வாழ்க்கையில் பல நலங்கள் வாய்க்கப் பெற்றவர். அவருக்குக் கல்விச் செல்வம் உண்டு; பொருட் செல்வம் உண்டு; சொற் செல்வம் உண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக, செல்வன் கழலேத்துஞ் செல்வம் அவரிடம் பொருந்தியுள்ளது. கருத்து வேற்றுமைகளை உளங்கொள்ளாது சிக்கல்களையும் அருஞ் செயல்களையும் தள்ளி முடிக்கும் வல்லமை முதலியாரிடத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. பாலசுப்பிரமணிய முதலியார் சட்ட நிபுணர். சிறந்த வழக்கறிஞர்; அட்வகேட் ஜெனரல் ஸர் அல்லாடி கிருஷ்ண சாமி ஐயருக்குப் பக்கத்துணையா யிருந்தவர். முதலியார் நெஞ்சைப் பெரிதும் வக்கீல் தொழில் கவரவில்லை. சிவத் தொண்டே கவர்ந்தது. 1921ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜம் பால சுப்பிரமணிய முதலியாரைச் செயலாளராகப் பெற்றது. அன்று முதல் இன்றுவரை சமாஜம் அவரைச் செயலாளராகவே கொண்டு கடனாற்றி வருகிறது. முதலியார் காலத்தில் சமாஜம் ஆற்றிய தொண்டுகளிற் குறிக்கத்தக்கன சில உண்டு. அவை களுள் தலையாயதும் எனக்கு மகிழ்ச்சியூட்டக் கூடியதுமாக நிற்பது ஒன்று. அது நூல் வெளியீடு. பன்னிருதிருமுறை, பதி னான்கு சாத்திரம், திருப்புகழ், சங்க இலக்கியம், சீவகசிந்தாமணி முதலிய நூல்கள் அடக்க விலையில் வெளியாயின. நாலாயிரமும் அடக்க விலையில் வெளி வருதல் நல்லது என்று யான் சொல்லிக்கொண்டே யிருந்தேன். அது பால சுப்பிரமணிய முதலியார் வாயிலாகவே நிறைவேறியது. பாலசுப்பிரமணிய முதலியார்க்கும் எனக்கும் சிற்சில துறைகளில் கருத்து வேற்றுமையுண்டு. அது காரணமாக நாங்கள் பிணங்கிப் பூசல் விளைத்துக் கொள்வதில்லை. பிணக்கு நேரினும், அது நீர் கிழிய எய்த வடுப்போல மாறிவிடும். இரண்டு கோயிலின் அறத்தலைமைப் பொறுப்பு முதலி யாரைப் பற்றி நிற்கிறது. இரண்டு கோயில் எவை? ஒன்று கோவூர்க் கோயில்; மற்றொன்று திருவிடவெந்தைக் கோயில். அது சிவபிரானுடையது; இது திருமாலுடையது. நண்பருடன் இரண்டிடங்கட்கும் யான் போந்துள்ளேன். கோவூர்க் கோயில் எனக்கு ஜமீன்தார் உறைவிடம் போல் தோன்றும்; திருவிட வெந்தை அப்படித் தோன்றுவதில்லை. திருவிடவெந்தையின் கோயில் அமைவும், பழைமையும், ஊர் அமைதியும், திருமங்கை யாழ்வார் தமிழும், பிறவும் என் உள்ளத்தைக் கோயிலாக்கின. திருவிடவெந்தையைத் தங்குமிடமாகக் கொள்ளலாமா என்றும் யான் எண்ணுவதுண்டு. திருவிடவெந்தை நிகழ்ச்சி யொன்று இங்கே நினைவுக்கு வருகிறது. தைத்திங்கள் மூன்றாம் நாளில் திருவிடவெந்தைப் பெருமாள் ஏறக்குறைய பன்னிரண்டு கல் தொலைவு திருவுலா வருவது வழக்கம். பெருமாள் ஆதிதிராவிடர் உறைவிடத்தின் வழியே போந்து, சாதி திராவிடர் வழியே திரும்புவது நீண்ட கால மரபாயிருந்து வருகிறது. ஓராண்டு அம்மரபு மாற்றப் பட்டது. அதனால் பிறந்த விண்ணப்பத்தை யொட்டிப் போலி கூட்டம் சூழ்ந்து மிடைந்தது. எங்களுடன் போந்த ஓர் அறத் தலைவர் முத்தையா பிள்ளை போலி குழுவை நோக்கி ஓடினர். பெருமாள் பழையபடி ஆதிதிராவிடர் உறைவிடத் தையே நாடிச் சென்றனர். அவ்வேளையில் சாதி திராவிடர் கைகளில் குண்டாந் தடிகள் காட்சி யளித்தன. தருமகர்த்தர்கள் எங்கே எங்கே என்ற கூக்குரல் எழுந்தது. சில வண்டிகள் தடுக்கப்பட்டன. பாலசுப்பிரமணிய முதலியாரும், மீனாட்சி சுந்தரனாரும், சோமசுந்தரஞ் செட்டியாரும் யானும் ஒரு வண்டியிலிருந்தோம். வெகுண்ட கூட்டத்துக்கு நல்லுரை பகரலாமென்று வண்டியை விடுத்திறங்க முயன்றேன். அம் முயற்சி பாலசுப்பிரமணிய முதலியாரால் தகையுண்டது. வண்டி நகர்ந்து நகர்ந்து ஆதிதிராவிடரிடத்துள் நுழைந்தது. ஆதி திராவிட சகோதரர்கள் தருமகர்த்தர்கள் எங்களைக் கைவிட் டாலும் பெருமாள் எங்களைக் கைவிடுவரோ? என்று பேசி னார்கள். அவர்களைப் பார்த்து, எங்களுக்குத் துன்பம் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எங்கள் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்போம் என்று சகோதரர்கள் வீறிட்டார்கள். வீறிட்ட கூட்டம் எனக்கு லெனின் பட்டாளம்போல் தோன்றியது. ஆதிதிரா விடர்க்கென்று கோயில்கள் திறக்கப்படும் இக்காலத்தில் ஆதிதிராவிடர் ஊர்வழியே பெருமாள் முதலில் போதல் கூடாது என்று சாதி திராவிடர் கருதுகின்றனரே! என்ன கொடுமை என்று என் நெஞ்சம் எண்ணி எண்ணி அலமந்தது. கழி கடந்ததும் என் மனம் ஆழ்வார் பாட்டிலே படிந்தது. ஊழியில் பெரிதால் நாழிகை யென்னு மொண்சுடர் துயின்றதா லென்னும் ஆழியும் புலம்பு மன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம் தோழியோ வென்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கே னென்னும் ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தா யிடவெந்தை யெந்தை பிரானே. ஓதிலு முன்பே ரன்றிமற் றோதா ளுருகும்நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள் பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல் ஏதலர் முன்னா வென்னினைந் திருந்தா யிடவெந்தை யெந்தைபி ரானே. இப்பாடல்கள் நெஞ்சை நிலைபெறுத்தின. பாலசுப்பிரமணிய முதலியாரும் யானும் கந்தசஷ்டியை முன்னிட்டு இரண்டுமுறை திருப்போரூருக்குச் சென்றோம். முதன்முறை 1940ஆம் ஆண்டு; இரண்டாம் முறை 1943ஆம் ஆண்டு. கோயில் வழிபாடு முதலியாரால் முறையாக நிகழ்த்தப் படும்; அர்ச்சனை முதலியனவும் அவரால் செய்யப்படும். என் வழிபாடோ விரைந்து - மிக விரைந்து நிகழும். ஓவியமூர்த் தியைக் கண்டு தொழுது யான் நொடியில் திரும்புவேன். பால சுப்பிரமணிய முதலியார் கோயில் வழிபாட்டை முடித்துத் திரும்பியதும் திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தரநுபூதி முதலிய தெய்வத் தமிழ் நூல்களைப் பொருள் விளங்க ஓதுவர். அதில் என் நெஞ்சம் நிலைக்கும். கந்தர் கலிவெண்பாவில், *** வெவ்விட முந் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம்வந் தெம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்திற் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈராறு அருள்விழியு மாமுகங்கள் ஆறும் - விரிகிரணஞ் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து**** என்னும் பகுதி வருங்கால் என் கருவிகரணங்கள் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகும். xUehŸ KjÈah®, ‘ï¥bghWik, c§fS¡F¤ âU¡nfhÆš tÊgh£oš V‹ ïšiy? என்று என்னைக் கேட்டனர். இப்பாடல்களிலும் அம்மூர்த்திதானே வீற்றிருக்கிறார் என்று கூறினேன். மாலையில் நண்பர் பெரிதும் புராணப் பிரசங்கத்துக்குச் செல்வர். யான் காடு மலை புகுவேன்; மலைமீதிவர்வேன்; நால்வகை நிலமாகவும், ஞாயிறாகவும், நீலவானமாகவும் முருகன் அளிக்குங் காட்சி கண்டு இன்புறுவேன். இயற்கை முருகன் வழிபாட்டில் எத்துணைப் பொழுது கழியினும் எனக்குச் சலிப்பு உண்டாவதில்லை. எனது உடல்நிலைக்கேற்றவண்ணம் முதலியார் உண வளிப்பர். ஒரு வார வழிபாடும் உணவும் இறைப் பேச்சும் எனது உடலுக்கு எவ்வளவோ நலஞ்செய்யும். 15. ஸ்ரீ பால் கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்குஞ் சொல்லுவது என்இச்சை பராபரமே. என்பது தாயுமானார் திருமொழி. இம்மொழிக்கு இலக்கியரைக் காண்டல் அருமை. யான் எளிதில் சிலரைக் கண்டேன். அவருள் ஒருவர் ஸ்ரீ பால். ஜைந அறவோர் ஒருவர் பூஜ்யபாத முனிவர் ஸ்ரீகம்பீர விஜய மகராஜ் என்பவர் (9-12-1926) சென்னைக்கு எழுந்தருளிய போது அவர் அறிவுறுத்தலின் பயனாக ஜீவரட்சாசபை என் றோர் அறநிலையம் உருக்கொண்டது. அச்சபையின் அடிப் படையான நோக்கம் அஹிம்சா தர்மத்தை வளர்ப்பது. அச்சீரிய நோக்கத்தை நிறைவேற்றுதற்கென்று ஜீவரட்சா சபை பலி நிறுத்தப் பிரசாரஞ் செய்து வருகிறது; தென்னாட்டு ஏழை உயிர்களின் தவம், சென்னை ஜீவரட்சா சபையாகப் பரிண மித்ததோ என்று யான் எண்ணுவதுண்டு. அச்சபைச் சார்பில் என் சிறு தொண்டும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. ஜீவரட்சா சபையின் பிரசாரகருள் தலைசிறந்து விளங்கு வோர் ஸ்ரீ பால். ஸ்ரீ பால் இளைஞர். அவர் தம் இளமை வாழ்க்கை ஜீவகாருண்யத் தொண்டுக்குப் பயன்பட்டு வருவது எனக்குத் தெரியும். ஸ்ரீ பாலின் தவமே தவம்! அவர் பிறவியே பிறவி! மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என வரூஉம் அப்பர் மொழியின் உண்மையை யான் உணர்கிறேன். சில இடங்களுக்கு யான் ஸ்ரீ பாலுடன் சென்றிருக்கிறேன். என் தலைமையிலும் அவர் சில இடங்களில் பேசியுள்ளார். ஸ்ரீ பால் கூட்டமாவர்; கூட்டம் அவராகும். அவர் பேச்சில் உணர்ச்சி ததும்பி வழியும். ஸ்ரீ பால் பிரசாரத்தால் பலி நின்று வருவதை யான் அறிவேன். பலி ஓரிடத்திலா நின்றது? நூற்றுக்கணக்கான இடங்களில் நின்றது. சில இடங்களில் ஸ்ரீ பாலின் பெயர் நினைவுக் குறிப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பாலுக்கு ஜீவபந்து என்னும் பட்டம் சூட்டப்பட்டது. பாராட்டுக் கூட்டம் என் தலைமையில் பிரம சமாஜ மண்டபத் தில் நடைபெற்றது. ஸ்ரீ பால் என்பது. கருணையைக் காப்பது என்னும் பொருளுடையது. ஜீவபந்து என்பதும் அக்கருத் துடையதே. ஸ்ரீ பால் சூத்திரம்; ஜீவபந்து பாஷ்யம் என்று விளக்கஞ்செய்து ஜீவகாருண்யத் தொண்டரை வாழ்த்தினேன். காந்தியடிகள் அறிவுறுத்தும் விழுமிய அறத்தைச் செயலில் ஓம்பி வருவோர் ஸ்ரீ பால் என்று கூற யான் தயங்கேன்; சிறிதும் தயங்கேன். ஸ்ரீ பால் வாழ்க என்றும், அவர் வாழ்நாள் பெருக என்றும் ஆதிபகவன் அடிமலரை இறைஞ்சுகிறேன். 16. ஆழ்வார் நாயகி அம்மையார் கண்ணகி என்னுங் கற்புத்தெய்வத்தை யான் காவியத்தில் பார்த்தேன். அத்தெய்வம் என்னுள்ளத்தில் கோயில் கொண் டது. கண்ணகி என்றால் என்ன? அஞ்சாமையும் வீரமும் ஒன்றிய ஒரு படிவம். இந்நாளில் ஒரு கண்ணகியை என் கண்கள் கண்டன. பெயர்மட்டும் வேறு. இயல்பு ஒன்றே. ஆழ்வார் நாயகியாரின் இயல்பு எனக்குக் கண்ணகியாய்க் காட்சியளிக்கிறது. ஆழ்வார் நாயகியார் சிறுவரா யிருந்தபோதே கடல் மடைதிறந்தாற்போல் வைணவப் பிரசாரஞ் செய்தார் என்று கேள்வியுற்றேன். அந்நாளில் அம்மையார் பேச்சை யான் நேரிற் கேட்டதில்லை. சில ஆண்டுகட்கு முன்னர் முதல் முதல் வெட்டு வாணத் தில் ஆழ்வார்நாயகியாரைக் கண்டேன். அம்மையார் மணி மேகலையைப்பற்றிப் பேசினர். பொருள் மணிமேகலை விளைவு கண்ணகியே. அவர் நாவில் சொல்லும் பொருளும் சுழன்றன. அச்சுழற்சியை மெஸொரி-மெஸபியின் வீழ்ச்சியோ என்றும் எண்ணினேன். மீண்டும் ஆழ்வார் நாயகியாரைப் பெங்களூரில் கண் டேன். ஓர் அறவோர் நிலையம் போந்து திரும்பியபோது அம்மையார் தமது வரலாற்றைச் சுருங்கச் சொல்லி யான் முதலில் திருமணத்தை வெறுத்தேன். பின்னே அந்த நாட்டங் கொண்டு இவ்வெளியவரை மணந்தேன். இதனால் வைணவ உலகில் ஒரு பகுதி என்னைக் காய்கிறது*** என்று சொன்னார். ஆண் மகனோ பெண் மகளோ திருமணஞ் செய்யாது காலங் கழித்தலாகாதென்பது என் கருத்து. நீங்கள் திருமணஞ் செய்து கொண்டதே நல்லது. உங்கள் தொண்டுக்கு இல்வாழ்க்கை இன்றியமையாதது. இவர் உமக்குக் கணவராக மட்டும் விளங்கு கிறாரில்லை; அன்பராகவும், தொண்டராகவும் விளங்குகிறார். உங்கள் இல்வாழ்க்கை வைகுந்தம் போன்றிருக்கிறது. காய்தலும் உவத்தலும் உலக இயற்கை*** என்று இருவரையும் வாழ்த்தி னேன். நீங்கள் தந்தைபோல் வாழ்த்துகிறீர் என்று அம்மையார் மொழிந்தார். தென்காசி, ஆலந்தூர், பாண்டேசுரம் முதலிய இடங்களில் என் தலைமையில் ஆழ்வார்நாயகியாரின் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. சொற்பொழிவு நேரத்தில் அம்மையார் ஆழ்வார் களின் ஆழியில் மூழ்குவர்; மூழ்கி மூழ்கிப் பலதிற முத்துக்களை எடுப்பர்; உதவுவர். ஆழ்வார் உட்கிடக்கைகளைக் காண்பதில் அம்மையார் நாயகம். ஆதலால் அவர் ஆழ்வார் நாயகியாரே என்று எண்ணுவன்; சொல்வன்; மகிழ்வன். அம்மையார் நினைவுத்திறத்தை யான் பலரிடத்தில் கண்டதில்லை. நாலா யிரமும் ஆழ்வார் நாயகியார்க்கு மனப்பாடம். பாண்டேசுரத்தில் யான் கண்ட காட்சியை ஈண்டுச் சுருங்கச் சொல்கிறேன். பாண்டேசுரத்தில் ஒரு சபை இருக்கிறது. அச்சபையின் பல ஆண்டு விழாக்கள் என் தலைமையில் நடைபெற்றன. ஒரு விழாவில் ஆழ்வார் நாயகியார் அழைக்கப்பட்டார். அம்மை யார் முதல்நாள் நம்மாழ்வாரைப்பற்றியும் இரண்டாம் நாள் ஆண்டாளைப்பற்றியும் பேசினார். ஒரு சாமியார் தமது சொற் பொழிவில் சில புராணக் கதைகளைக் குறைகூறி, ஆழ்வார் நாயகியார் வெளியிட்ட கருத்துக்கள் சிலவற்றின்மீது பாய்ந் தார். அப்பாய்வு படையெடுப்புப் போல் காணப்பட்டது. அச்சமயம், என்னைப் பேச விடுங்கள்; பேச விடுங்கள் என்ற குரல் பலகணி வழியே கேட்டது. யான் திரும்பிப் பார்த் தேன். யார்? ஆழ்வார் நாயகியார்! எவ்வண்ணம் நின்றார்? சிவந்த கண் - அலைந்த கூந்தல் - வீரநோக்கு - அஞ்சா நெஞ்சு - கண்ணகித் தோற்றம்; இவ்வண்ணம் ஆழ்வார் நாயகியார் நின்றார்! அந்நிலையில் அவரைப் பேசவிட்டிருந்தால் மேடை மதுரையாகி யிருக்கும் அம்மா! பொறும்: உங்கள் பொருட்டு யான் பேசுகிறேன்; பொறுப்பு என்னுடையது என்றேன். அம்மையார் என்னிடங் கொண்டுள்ள அன்போ மதிப்போ மரியாதையோ எதுவோ அவரை அடக்கியது. இரண்டாண்டுகட்கு முன்னர் மறுபடியும் வெட்டுவாணத் தில் என் தலைமையில் ஆழ்வார் நாயகியார் பேசினார். பின்னர் எல்லாரும் தங்கியிருந்த இடத்தில் பலவித உரையாடல்கள் நிகழ்ந்தன. நண்பர் சச்சிதானந்தம் பிள்ளை அம்மையாரைப் பார்த்து, கண்ணன்-கோபிகள் கதை என்ன? அதற்கு ஏதேனும் உள்ளுறை உண்டா என்று கேட்டார். அம்மையார், ஒருத்தி குளத்தில் இறங்கினால் தண்ணீர் அவளை எல்லா இடங்களிலும் தீண்டுமா? குறிப்பிட்ட உறுப்புக்களில் மட்டும் தீண்டுமா? அவ்வாறே அவன் காற்றில் மூழ்கும்போதும் காற்று அவள் உறுப்புக்கள் சிலவற்றில் நுழைந்தும் சிலவற்றில் நுழையாம லுமா கிடக்கும்? ஆண்டவன் தண்ணீரினும் காற்றினும் வியா பகன்; அவன் இங்கிருப்பான் அங்கிரான் என்று கொள்வது தவறு. கண்ணபிரானது சர்வ வியாபகத்தை உணர்த்துவது கோபிகளின் கதை. கண்ணபிரான் உறவினர் சிலரும் கோபி களின் கூட்டத்திலிருந்ததும் கருதத் தக்கது*** என்று பதி லிறுத்தார். இன்னும் விளக்கம் வேண்டும் என்றார் சச்சிதானந் தம் பிள்ளை. ***உங்கள் மனம் என்விளக்கத்தை என்றும் ஏலாது*** என்றார் அம்மையார். இறுதிக் கூற்று அங்கிருந்த பலரையும் வெருவச் செய்தது. ஆழ்வார் நாயகியார் சென்னைப் பெத்துநாயக்கன் பேட்டையில் சிலநாள் தங்கினர். அவரைக் காண யான் இரண்டுமுறை சென்றேன். எனது செலவுமகள் வீட்டுக்குத் தந்தை ஏகியது போன்றிருந்தது. அம்மையாரும் அவர் தங் கொழுநரும் ஒருமனமுடையராய் நிகழ்த்திய உபசரிப்பு மறக்கற்பாலதன்று. பாலும் வாதுமையும் பெரும் பாடு பட்டன. கொழுமை உணவு எனது மெலிந்த உடலுக்குப் பொருந்தாதே என்று அவரை வேண்டினேன். எனது உடல் நிலை கண்டு அம்மையார் இரங்குவர்; எனது நிலை குறித்துச் சோதிடமுங் கேட்பர். யான் இரவு பகல் கனவு காணும் சன்மார்க்க இயக்கத்துக்குத் தூண்கள் என்று சிலரை என் மனம் நினைந்திருக்கிறது. அவருள் ஆழ்வார் நாயகியும் ஒருவர். கண்ணபிரான் கருணை தேவை. குறிப்பு முதலில் பெற்றோர் கடைப்பிடித்த சைவத்தில் நின்றேன். அஃது என்னுள் கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் சிறிது விளக்கம் பெற்றது; தணிகாசல முதலியார் பாம்பன் சுவாமிகள் முதலியோர் அறிவுறுத்தலால் பெரிதும் விளக்கம்பெற்றது; ஆராய்ச்சியால் நல்ல விளக்கம் பெற்றது. இடையில் என்பால் மதவெறிக் காளான் பூத்தது. அஃது என்னைச் சிறிது அலைத்தது. மதவெறி எனது இயற்கையன்று. அஃது எப்படியோ செயற்கையாய் எழுந்து மறைந்தது. இறுதியில் சைவம் எனக்குச் சமரச சன்மார்க்கமாகவே விளங்கியது. மாறுதல் எங்கே? சைவத்திலா? மனத்திலா? மனத்தில் என்று சொல்ல வேண்டுவ தில்லை. சைவம் அளித்த சமரசக் கண்ணுக்கு மற்றச் சமயங்களும் சமரச சன்மார்க்கமாகவே புலப்படும். சமரச சன்மார்க்கம் ஒன்றே பல சமயங்களாகியது. மாவு ஒன்றே பலவகை அப்பங் களாகிறதன்றோ? வளர்ச்சி எங்கே? சமயத்திலா? மனத்திலா? சமயம் வளர்வதில்லை. அஃது என்றும் ஒருபெற்றிய தாயிருக்கிறது. மனம் அதைப் பற்றிப் பற்றி வளர்கிறது. சமய வளர்ச்சி என்பது உபசாரம். சன்மார்க்க உணர்வு மட்டும் போதாது. உணர்வு வாழ்க்கையாதற்கு வழிபாடு தேவை. என் வாழ்க்கையில் பலதிற வழிபாடுகள் நிகழ்ந்துள்ளன. உயிர் வழிபாடு மனத்திலுள்ள கரடுமுரடுகளைப் புரட்டித் தள்ளுவதையான் அநுபவத்தில் கண்டேன். உயிர் வழிபாடு பெருகப் பெருகப் பகைமையொழி தலைச் சிறப்பாக ஈண்டுக் குறிக்கிறேன்; வலியுறுத்துகிறேன். பகைமையற்ற ஒன்றே அந்தண்மை. 12. மாதர் யான் ஒரு மாதர் வயிற்றில் பிறந்தேன். என்னுடன் உதித்த மாதரார் நால்வர். அவருள் ஒருவரை யான் அறியேன். அவர் எனக்கு முன்னே தோன்றியவருள் ஒருவர். அவர் யான் பிறப்பதற்கு முன்னரே மறைந்தார். மற்ற மூவருடன் யான் வளர்ந்தேன். எனக்கு முதல் முதல் பாலூட்டியவர் என்னை ஈன்ற தாயார். பின்னே எனக்குப் பாலூட்டிய தாய்மார் பலர். துள்ளத்துப் பெண்மணிகள் துள்ளத்தில் யான் குழந்தையாயிருந்தபோது என்னுடன் விளையாடிய பெண்குழந்தைகள் வள்ளி, சாவித்திரி, முனி யம்மை, அம்மாகண், மாணிக்கம், கௌரி முதலியோர். என் தந்தையார் இராயப்பேட்டையிலே குடிபுகுந்து வாழ்ந்துவந்த காலத்தும் சிற்சில சமயம் துள்ளம் நோக்குவர். ஒவ்வொரு போது என்னையும் உடன் அழைத்துச் செல்வர். துள்ளம் நண்ணியதும் யான் என்ன செய்வேன்? என்னுடன் விளை யாடிய பெண்மணிகள் வீடுகள் புகுவேன்; அவர்களைத் திரட்டுவேன்; திரிவேன்; இராயப்பேட்டைக் கதைகளைச் சொல்வேன்; அளவளாவுவேன். துள்ளத்தின் செல்வம் எனக்கு அவர்களாகவே தோன்றும். பெண்மணிகள் உற்ற வயதடைந்தபோது ஒருமுறை யான் என் அன்னையாருடன் துள்ளத்துக்கேகினேன்; பழைய நண்பர் பலரைக் கண்டேன். அவருட் சிலர் பசிய பூங்கொடிகளாகக் காணப்பட்டனர். தாய்மைச் செல்வம் பெற்றிருந்த சிலர் தத்தம் குழந்தைகளை நீட்டினர். அவைகளை எடுத்து அணைத்து அணைத்து மகிழ்வெய்தினேன். ஒரு சிலர் வேற்றூர்களில் மணஞ் செய்து கொண்டார் என்று கேள்வியுற்றேன். அவரைக் காணாமை பெருங் குறையாகவே தோன்றிற்று. அவர்தம் பெற்றோரைக் கண்டு அவர் நலங்களை விசாரித்துத் திரும்பினேன். என் தந்தையார் மரணமடைந்த பின்னர் எங்களில் எவரும் துள்ளம் போவதில்லை. நீண்ட காலங் கழிந்தது. ஒருநாள் (1928) பிறந்த ஊர் நினைவு எழுந்தது. என் அவாவை அன்னையாரிடம் வெளியிட்டேன். ‘ï¥bghGJ m§nf ek¡F v‹d ïU¡ »wJ? என்றார். யான் மட்டுந் தனியே சென்றேன். பழைய ஊரைக் கண்டேனில்லை. மனத்தில் நின்ற சில வீடுகளைக் காணோம்; பல மரங்களைக் காணோம்; முதியவர் ஒருவரு மில்லை. தோழர் பலர் இளமை கடந்து நிற்பதைப் பார்த்தேன். சில குடும்பம் மறைந்தே போயின. பெண்மணிகளுள் மிகச் சிலரே என்னைக் காண வந்தனர். அவர் தலைமையிலும் வெண்மை ஏறி இருந்தது. மற்றவர் எங்கே என்று கேட்டேன். கிடைத்த பதில் மனத்தை உடைத்தது. அவர்தம் பிள்ளை களையும் பேரர்களையுங் கண்டு ஆறுதலடைந்தேன். குழந்தைப் பெண்மையின் நேயம் என்னே! ஓவியர் தை.ஆ. கனகசபாபதி முதலியார் எனது வர லாற்றைச் சுருங்கிய முறையில் எழுத முயன்றனர். அம்முயற்சி யான் பிறந்த ஊரைப் பார்த்தல்வேண்டுமென்னும் வேட்கையை அவர்பால் எழுப்பிற்று. அவரும் யானும் துள்ளம் (1938) போந் தோம்; என்னுடன் குழந்தைமையில் விளையாடிய ஆடவரில் ஒருவராகிய அப்பா துரைப்பிள்ளையைக் கண்டோம். சிறிது நேரம் பேச்சில் கழிந்தது. பின்னே யான் பிறந்த இடத்தை ஓவிய ருக்குக் காட்டினேன். ஊர் ஓவியம் அவர் உள்ளத்தில் அமைந் தது. அவ்வேளையில் மழைக் குறி தோன்றிற்று. விரைந்து திரும்பினோம். இம்முறை பழைய பெண் நண்பர் ஒருவரையும் பார்த்தேனில்லை. ஏரிக்கரையில் மழை எங்களை அலைத்தது. துள்ளத்தில் மூன்று நாழிகை என்னுந் தலைப்புக்கொண்ட ஒரு கட்டுரை கனகசபாபதி முதலியாரால் வரையப்பட்டது. அஃது அவரெழுதிய எனது வரலாற்றுச் சுருக்கத்தில் ஒரு மணியெனத் திகழ்கிறது. வரவர நமது உடல் மெலிகிறது. பிறந்த இடத்தில் ஒரு சிறு குடில் அமைத்து அதில் காலங் கழிக்கலாமே என்ற எண்ணம் என்னுள் உதித்தது. அதைத் தமையனார்க்குத் தெரி வித்தேன். துள்ளம் எங்களை (1940) ஈர்த்தது; அப்பாதுரை வீட்டை அடைந்ததும் அவர் மரணச் செய்தி காதில் விழுந்தது; ஏங்கி நின்றோம். அவ்வேளையில் தெருக் குறட்டில் ஓரம்மையார் நெல்லைக் குவித்துக்கொண்டிருந்தனர். அவர் எங்களைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டார், தமையனார்க்கு அவர் இன்னாரென்று தெரியவில்லை. யான் புன்னகை புரிந்துகொண்டே, உமது பெயர் முனியம்மாள் அல்லவா? c«Kl‹ ãwªj rhɤâÇ v¥goÆU¡»wh®? என்று வினவினேன். அவர் நெல் குவிப்பதை விடுத்து, என்னை ஏற இறங்கப் பார்த்தார். எனக்கு நகை பொங்கிற்று. யான் தெரிய வில்லையா? குழந்தைமையில் யான் உம்முடன் விளையாடி னவன். நாங்கள் இருவரும் விருத்தாசல முதலியார் புதல்வர். பெரியசாமி - சின்னசாமி என்று சொன்னதும், முனியம்மாள் முகம் மலர்ந்தது; சின்னசாமி, நலமா யிருக்கிறாயா என்று மொழி வழிந்தது. பழைய நினைவு ஊட்டிய மகிழ்ச்சியை என்னென்று சொல்வேன்! பின்னே, வந்த காரணத்தை வெளி யிட்டேன். ஊர் நிலை நன்றாயில்லையே என்று சகோதரியார் கூறினார். ‘mªj¥ bgÇa Myku¤â‹ »isfŸ j¿¡f¥ g£oU¡»‹wdnt, v‹d? என்று கேட்டேன். ஊரில் முதிய வர் பலர் இறந்துபோயினர். மொட்டைகள் சேஷ்டை. ïªj CU¡fh Ú§fŸ tu¥ ngh»Ö®fŸ? என்றார். மனமுடைந்தது. வேறு சிலரை விசாரித்துத் திரும்பினோம். இராயப்பேட்டைப் பெண்மணிகள் இராயப்பேட்டையிலே யான் ஆரியன் பிரைமெரி பாடசாலையில் படித்து வந்தபோது, முத்துமுதலி வீதியிலுள்ள பெண் கொழுந்துகளுடன் விளையாடுவதுண்டு. குப்பம்மாள், பார்ப்பாத்தி, ராஜம், செங்கமலம், விருத்தாம்பாள், பூங்காவனம், சொர்ணம் முதலிய பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. சிறுமியர் பல திறத்தனர். பலர் வேடிக்கையே பார்ப்பர்; ஆட்டத் தில் கலந்து கொள்வதில்லை. சிலர் ஒருவித ஆட்டமே ஆட விரும்புவர். அவர் வேறுவித ஆட்டங்களை ஆடுவதில்லை. ஆட்டங்கள் நாங்கள் ஏதேனும் ஒரு வீட்டு நடைத் திண்ணையைப் பற்றிக் கொள்வோம். ஏழாங்காயோ, தாயமோ, கண்மூடியோ ஆடுவோம். ஏழாங்காயில் யான் வல்லவனானேன். அதில் எவ ரும் என்னைத் தோல்வியுறச் செய்வது அரிதாயிற்று. சில சமயங் களில் சிறுவர் சிறுமியரெல்லாருங் கலந்து தெருவாட்டங்கள் ஆடுவோம். ஒவ்வொருபோது எங்களுக்குள் சண்டை மூளும். ஒருவரையொருவர் திட்டிக்கொள்வோம்; பிணங்கிப் பிரிவோம். எங்கள் பிணக்கு நீடிப்பதில்லை. மறுநாள் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். மறக்கச் செய்வது எது? ஆட்டத்தின்மீதுள்ள ஆர்வம். பளிங்கு மனம் ஆடும்போதோ சண்டையிடும்போதோ எங்களுக்குள் பெண் ஆண் வேற்றுமை தோன்றுவதில்லை. அம்மனத்தை - பளிங்கு மனத்தை - என்னென்று சொல்வேன்! அதைத் தெய்வீக மனமென்றே சொல்லுதல் வேண்டும். அப்பளிங்கு மனம் இடையில் பாழ்படுகிறது. அதில் மாசுகள் படிகின்றன. மக்கள் விலங்காகிறார்கள். மீண்டும் மக்கள் குழந்தை மனம் பெறுதல் வேண்டும். இல்லையேல் விடுதலை கிடையாது குழந்தை மனமே ஞான நிலையை அல்லது சீவன்முத்த நிலையைக் கூட்டவல்லது. விலங்கு மனம் அந்நிலையைக் கூட்டவே கூட்டாது. குழந்தைமை இயற்கை இறையின் படைப்பில் என் குழந்தைமை அமைந்திருக்கிறது? அதை நினைக்க நினைக்க உண்மை விளங்காமற் போகாது. உற்ற வயதடைந்த ஒருவரும் விலங்கியல் பால் மோதுண்டு பாழ்படுங்கால், அந்தோ! நம் மனம் குழந்தைமையில் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது? mij Û©L« bgw tÊí©nlh? என்று நினைந்து நினைந்து நல்லறிவு பெறுதற்பொருட்டுக் குழந்தைமை இயற்கை இறையின் படைப்பில் அமைந்திருக்கிறது. குழந்தை மனத்தின் விழுப்பம் மக்கட்கு எப்பொழுது புலனாகிறது? அவ்விழுப்பம் உற்ற வயதில் விலங்கு நீர்மையால் தாக்குறுங்கால் புலனாகிறது. இரண்டையும் அநுபவத்தில் மக்கள் உணர இயற்கை இறை அருள் சுரக்கிறது. குழந்தைமை இயற்கையில் இல்லையானால் உற்ற வயதில் அதன் விழுப்பம் எளிதில் புல னாகுமோ? ஆகாது. ஆதலின் இயற்கை இறையின் படைப்பில் குழந்தைமை அமைந்திருக்கிறதென்க. பருவங் கடத்தல் நாங்கள் பெண் ஆண் வேற்றுமை விளங்காமல் விளை யாடினோம். அப்பருவமே எங்கட்கு நிலைபேறாக நின்றிருந் தால், எங்கள் மனம் பளிங்காகவே பொலிந்திருக்கும். அப்பருவங் கடக்கும் பண்பு இயற்கையின் ஏன் படிந்திருக்கிறது? உலக வளர்ச்சியின் பொருட்டுப்போலும்! இயற்கையில் கூர்தல்-உள்ளது சிறந்து வளரும் தன்மை படிந்திருக்கிறது. வளரும் பண்பில்லையேல் குழந்தைமையின் விழுப்பமே புலனாகா தொழியும். ஆகையால் இயற்கையில் எவ்விதத் தவறுதலும் இல்லையென்பது விளங்குகிறது. அன்னபூரணி நாங்கள் முத்துமுதலி வீதியில் முதல் முதல் குடியிருந்த வீடு பெரியது; விசாலமானது. அதில் ஒரு பக்கத்தில் குமாரசாமி நாயுடு என்ற அன்பர் வதிந்தனர். அவர் தம் மனைவியார் அன்ன பூரணி அம்மையார் என்பவர். அவர் பெரிதும் உடுத்துவது வெள்ளைக்கலை. அத்தூய கலையுடன் அம்மையார் எனக்கும் பாடஞ் சொல்வர். அவர்தம் போதனை பள்ளி ஆசிரிய ருடையதைப்பார்க்கிலும் தெளிவாயிருக்கும். அவர்தம் அமைதி வடிவும், அருள் நோக்கும் இனிய மொழியும் என் அறிவைத் துலக்கும். அக்கலைமகளின் ஆருயிர் இப்பொழுது யாண் டுளதோ? அதற்கு எனது வணக்கம் உரியதாகுக. இலக்கணப் பயிற்சி யான் வெலி கல்லூரியில் படித்தபோது கிறிதுவ ஆசிரியன்மார் பலர்க்கு இராயப்பேட்டை உறைவிடமா யிருந்தது. நண்பர் சிலரும் யானும் அவர்தம் வீட்டுக்குச் செல்வோம். வீட்டுப் பெண்மணிகளிற் பெரும்பான்மையோர் ஆசிரியன்மாராகவே இருப்பர். நாங்கள் குழந்தைகளைப் போல விளையாடுவோம். தாய்மார் ஒவ்வொருபோது எங்களுக்கு நற்போதனை செய்வர். எனக்கும் போப்பையர்க்கும் இலக்கணம் முதல் முதல் அறிவுறுத்தியவர் ஓர் அம்மை யாரே. அக்கடைக் கால் எனது பின்னைய இலக்கணப் பயிற்சிக்குப் பெருந்துணை யாய் நின்றது. குறும்பும் வாழ்த்தும் ஞாயிறு வகுப்புக்குச் செல்வோருள் யானும் ஒருவ னல்லனோ? கோயில் மணியொலி கேட்டதும் தலைவர் வகுப்பு முடித்துவிடுவர். அச்சமயத்தில் வெலியன் மிஷன் உயர் நிலைப் பெண்பாடசாலை மாணாக்கர் கோயிலுக்குப் போக எங்கள் கல்லூரி மைதானத்தின் வழியே அணியணியாக வருவர். அவரைக் குறும்பு செய்வதற்கென்று சில மாணாக்கர் ஞாயிறு வகுப்பு வேடந் தாங்குவதுண்டு. குறும்புச் செயல்களை மனமார வெறுத்த மாணாக்கருமிருந்தனர். ஒரு ஞாயிறன்று வகுப்பு முடிந்ததும், ஒரு சில மாணாக்கர் பெண்மக்களின் அணியைப் பிளக்க முயன்றனர். பெண் கூட்டம் அப்படியும் இப்படியும் அலைந்து அலைந்து ஓடியது; ஓடிஓடிக் கோயிலுக்குள் புகுந்தது. அம்மாணாக்கர் ஐந்தாம் பாரத்தில் படிப்பவர்; அப்பொழுது யான் மூன்றாம்பார மாணாக்கன். விசாரணை நடந்தது. யான் பெண்மணிகள் சார்பாகவே சான்று கூறினேன். அது காரண மாக மாணாக்கர்க்குள் பெரும் போராட்டம் எழுந்தது. பெண் பள்ளி முழுவதும் என்னை வாழ்த்தியது. நட்பும் அறையும் எங்கள் குடுகுடு கூட்டத்தில் சேர்ந்தவர் ஒருவர், அவர் ஆட்டத்தில் வல்லவர்; ஆனால் பிஞ்சிலே பழுத்தவர். அவருக்குப் பிஞ்சு என்பது ஒரு பட்டமாகியது. யான் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருவிழாக் காலங்களில் நண்பர் குழாத்துடன் செல்வேன். அச்சமயங்களில் பிஞ்சு நண்பர் பெண் குழுவைக் கண்டதும் ஆடுவர்; பாடுவர்; மறைமுகமாக ஏழைக் குறும்புகளுஞ் செய்வர். ஒருநாள் தெப்பத் திருவிழாவில், எங்களைச் சேர்ந்த சிலரைப் பிடித்து அங்கிருந்த ஒரு பெண் கூட்டத்தின்மீது குறும்பர் தள்ளினர். உடனே அவர் முதுகில் பளீர் பளீர் என அறைகள் விழுந்தன. அறை கொடுக்கப் பெண் கூட்டத்தைச் சார்ந்தவர் முந்து முன்னரே யான் முந்திக்கொண்டேன். பெண்ணினத்தார் என்னைப் பாராட்டி னர். பாராட்டலுக்கென்று யான் நண்பரை அறைந்தேனில்லை. மற்றவரால் அவர் உதைபடாமலிருக்கவே யான் முந்தினேன். யான் முந்தியிராவிடில் பிஞ்சுவின் எலும்பு நொறுங்கியிருக்கும். என் அறைகள் அவருக்கு நலமே செய்தன. அறைவாங்கிய தோழர் என்மீது பாய்ந்திருப்பர்; நிலைமையையுணர்ந்து வாளா இருந்தனர். சிலநாள் அவர்முகம் என்னைக் கண்டதும் தானே சாய்ந்துகொள்ளும். பின்னே வழக்கம்போலப் பேசலானோம். அவருக்கு யானும் வேறு சிலரும் எவ்வளவோ நன்மொழிகள் சொல்வோம். அவையெல்லாம் விழலுக்கிறைத்த நீரேயாகும். ஒருநாள் அவருக்கு நல்லறிவு பிறந்தது. எப்படி? நல்ல பாடம் தேனாம்பேட்டையிலுள்ள அரசாங்கத் தாவரத்தோட்டத் தில் ஆண்டுதோறும் பூக்காட்சி நடைபெறும். அந்நாளில் மாணாக்கர்க்குக் கட்டணங் கிடையாது. பள்ளித் தலைவரின் கைச்சாத்தே கட்டணமாகக் கருதப்படும். யான் வழக்கம்போல் ஓராண்டு நண்பருடன் பூக்காட்சிக்குச் சென்றேன். நாங்கள் பல இடம் சுற்றிச் சுற்றி ஒரு வட்டத்தில் அமரப்போந்தோம். அங்கே அழகிய மலர்க்கொடிகள் ஓங்கிப் படர்ந்திருந்தன. அவைகளின் அழகுக்கு அழகு செய்வதுபோல ஒரு பூங்கொடி நின்றாள். அப்பொழுது எங்களில் ஒருவர், பிஞ்சு, இவள் உனக்கு ஏற்றவள் என்றார். பிஞ்சு அப்பெண்மணியை நோக்கி விரைந்து நடந்தார். அச்சமும் நடுக்கமும் எங்களைக் குடைந்தன; வதைத்தன. யானும் இன்னொருவரும் பிஞ்சுவைத் தொடர்ந் தோம். பிஞ்சு எம்மைப் பார்த்து, இவர் என் சகோதரியாருள் ஒருவர்; என் பெரிய தந்தையார் மகள் என்றார். கிலி ஒழிந்தது. இருவரும் திரும்பி மற்றவருடன் கலந்து உண்மையை விளக்கி னோம். எல்லார்க்குங் கவலை தீர்ந்தது. பிஞ்சு சிறிது நேரம் சகோதரியாருடன் பேசி எங்களிடஞ் சேர்ந்தார். சேர்ந்ததும், இவள் உனக்கு ஏற்றவள், என்று சொன்னவரை மனம் போன வாறு வைதார். மற்றவர், உம் சகோதரியைப்போல மற்றவரை ஏன் நீர் நினைப்பதில்லை? நீர் குறும்பு செய்யும் சிலரும், சிலர் சகோதரிமாராகவே இருப்பரல்லவோ? இன்று உமக்கு ஆண்டவன் நல்லபாடங் கற்பித்தான் என்று அவர் வாயை அடக்கினர். அவர் மனந்திரும்பி நல்லறிவு பெற்றார். சிறுமைக் காசும் தற்கொலையும் ஒருநாள் யான் வீட்டுக் குறட்டிலே உலவி உலவிச் சரித்திரம் படித்தேன். அப்பொழுது ஒரு பெண்மணி இரண் டொரு வீடு நுழைந்து நுழைந்து வந்தனர். அவர் எதிர் வீட்டில் நுழைந்தார். நுழைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் கிணற்றில் விழுந்தார் என்ற செய்தி செவிக் கெட்டியது. பலர் ஓடினர்; யானும் ஓடினேன். கூட்டங் கூடியது. கிணற்றினின்றும் பெண்மணி எடுக்கப்பட்டார்; கிடத்தப்பட்டார். வாழைக் குருத்துக் கண் வளர்தல் போலிருந்தது. நீர் ததும்பாத கண்ணில்லை. அவ்விளம் பெண்மணியின் மரணத்துக்குக் காரணம் என்னை? வெட்கம்! வெட்கம்! அப்பெண்மணியின் கணவர் தோட்டவேலை செய்வோர். அவர் பெட்டிமீது வைத்த சில்லரைக்காசு காணாமற்போனது. அவர் எல்லாரையும் விசாரித்தார்; மனைவியையும் விசாரித்தார். காசு போனவிடந் தெரியவில்லை; அழைத்து வந்தார் கிழவியை. அக்கிழவி செம்பு வித்தையில் உண்மை காண்பவராம். பரப்பிய நெல்லிடை, நீர் நிறைந்த செம்பொன்றை வைத்து, ஒவ்வொருவரையும் அச் செம்பைத் தூக்கச் செய்யுங்கால், எவர் அதைத் தூக்க இயலாமல் வருந்துகிறாரோ அவரே திருடரென்று உறுதி செய்வது அவ்வித்தை. கிழவி சோதனையில் ஒருவர் அகப்பட்டார். அவரே கிணற்றில் விழுந்து உயிர் துறந்த பெண்மணி. அவர் சோதனையில் சிக்கியதும் அவரைக் கணவர் நன்றாகப் புடைத்தார். அப்பெண்மணி மானத்திற் சிறந்தவர்; வீரத் தாயர். அவரது மானமும் வீரமும் பிள்ளைமை விளையாட்டில் பொங்கித்ததும்பியதை யான் பன்முறை கண்டுள்ளேன். சிறுமைக் காசை உண்மையாகத் திருடினவர் யாவர்? பூமிதேவி. அடுத்தநாள் பெட்டியின் கீழே துடைப்பத்தை விடுத்துப் பெருக்கியவர் கண்ணில் சிறுமைக்காசு பட்டது. கண்மூடி வழக்கம் ஓர் ஆருயிரைக் கொன்றது. அதை உணர்ந்த எங்கள் இளமைக் கூட்டம் குறி, குறிமேடை முதலியவற்றின் புன்மை களை ஆராய்ந்து வெளியிடுந் தொண்டில் தலைப்பட்டது. குறி முதலியவற்றின் ஏமாற்றங்களிற் சிலவற்றை உள்ளொளி என்னும் நூலில் எடுத்துக் காட்டியுள்ளேன். அவைகளை மீண்டும் ஈண்டுக் காட்டவேண்டுவதில்லை. உள்ளொளியில் என் இளமைச் செயல்கள் சில பொறிக்கப்பட்டுள்ளன. பொல்லாத கணவரிடம் வாழ்க்கைப்பட்டு, அவர்தங் கொடுமை தாங்க முடியாமல் கிணற்றில் வீழ்ந்தும், நஞ்சுண்டும், தீயிடை எரிந்தும், தூக்கிட்டும் உயிர் துறந்த பெண்மணிகள் எத்தனைபேர்? பெண்ணுலகம் உரிமையுடன் வாழுநாள் எந் நாள்? மாதர்க்குத் தீங்கு விளைக்கும் மடமைகளை மாய்க்க வேண்டுவது அறிஞர் கடைமையன்றோ? தந்தையார் கனவும் துறவும் எங்கள் குடும்பத்தில் யான் ஆங்கிலத்தில் பெரிய படிப் பாளியாய்ப் பட்டம் பெற்றுப் பெரும் பதவியில் வீற்றிருப்பேன் என்ற கனாக் கண்டவர் பலர். அவருள் முதன்மையர் என் தந்தை யார். அவரது கனவு, யான் மாணாக்கனாயிருந்தபோதே எனது மனத்தைப்பற்றி அவரை நினைக்கச் செய்யும். உறவினருள் நல்ல பெண்ணுள்ள இடம் எங்கே எங்கே என்று அவர் ஆராய்வர் 1901ஆம் ஆண்டு யான் மூன்றாம் பார மாணாக்கனாயிருந்த ஞான்று என் தமையனார்க்குத் திருமணம் நடந்தது. அம் மணத்தில் விளக்கெடுத்த ஒரு சிறு பெண்மீது என் தந்தையார் குறிவைத்தும், இன்னுமோரிடத்தை அவர் கருதியதும் எனக்குத் தெரியும். அவ்வவ் வீட்டினரும் என் பள்ளிவாழ்வை அவ்வப் போது விசாரித்து வந்ததையும் யான் அறிவேன். அவர்தம் மனக்கோட்டைகளெல்லாம் ஊமன் கண்ட கனவாயின. யான் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் போகாமை அவர்தம் எண்ணங் களை மாற்றியது. என்மீது கவலை கொண்டிருந்த தந்தையாரும் இவ்வுலக வாழ்வை நீத்தனர். என் மனம் மணத்தில் செல்ல வில்லை. ஆரம்பச் சமயக் கல்வியும், பிறவும் என்னுள் துறவைப் புகுத்தின. துறவு என்னுள் புகுந்தாலும் அஃது என்னில் இயற்கை யாகவில்லை; செயற்கையாகவே கிடந்தது. துறவில் வெறுப்பு வைராக்கிய சதகமும், வைராக்கிய தீபமும், மகாராஜா துறவும், பின்னைப் பட்டினத்தார் பாடலும் என்னை விட்டகல்வ தில்லை. நித்திய பூசையிலும், கோயில் வழிபாட்டிலும் ஆர்வம் பொங்கியது. சாமியார் உள்ள இடங்களெல்லாம் என்னைக் கூப்பிடும். பல இடங்களில் உழன்றேன், சுழன்றேன். சாமியார் உலகம் எனக்கு வெட்டவெளிச்சமாயிற்று. யோகிகளென்றும், ஞானிகளென்றும், அவதூதரென்றும், துறவோரென்றும், ஆச்சாரியரென்றும், மடாதிபதிகளென்றுந் திரிவோருள் பலர் அந்தரங்கத்தில் பெண்களுடன் கலப்புக்கொண்டிருந்ததைச் சில நாளில் உணருமாறு ஆண்டவன் அருள் எனக்குத் துணை புரிந்தது. ‘ïªj¥ ghÉfŸ btË¥gilahf¥ bg©fSl‹ thœjyhfhjh? என்று எனது நெஞ்சம் எண்ணும். உள்ளும் புறமும் ஒத்த உண்மை அறவோர் சிலரையும் என்கண் கண்டது; அவர்தம் நிலையை என் மனம் உணர்ந்தது. அப்பெரியோர் பெண்ணுலகை இழித்தோ வெறுத்தோ பேசுவதில்லை. இல் வாழ்க்கை ஏற்குமாறு எனக்கு அவர் அறிவு கொளுத்துவர். துறவு என்று வழங்குவது வெறும் உருவெளி என்பது எனக்கு நன்கு விளங்கியது. பின்னே ஆயிரம் விளக்குப் பள்ளி வாழ்க்கையும், ஜடி சதாசிவ ஐயர் போன்றோர் நட்பும், தியோசாபிகல் சங்க அறிஞர் போதனையும், பிறவும் எனது மனோநிலையை மாற்றின. சாமியார்! முத்துமுதலி வீதி நண்பர் பலரும் யான் சாமியாராய் விடுவேன் என்று நம்பினர். என் மனம் சாமியாருலகில் வீழ்ந்து எழுந்ததை அவர் அறிந்தாரில்லை. ஒருவர் மனோநிலை புற உலகுக்கு எங்ஙனம் புலனாகும்? யான் காலையில் அரைமுண்டு உடுத்திக் கையில் செம்பு தாங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபைப் பெருமானைப் பூசிக்கத் தெருவழியே செல்வேன்; அந்நிலையில் என்னைக் காணும் (என்னுடன் விளையாடிய) பழைய நண்பர் நெஞ்சம் இரங்கும்; வருந்தும். அவர் நிலையை யான் உணர்வேன்; பித்த உலகம் என்று யான் கருதுவேன். வீட்டு நடையிலே பெண்கள் காலை நீட்டியும் மடக்கியும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆடவர் எவரேனும் அங்கு வரின் பெண்கொடிகள் வாரிக்கட்டி எழுந்து ஓடுவார்கள்; என்னைக் கண்டால் வழிமட்டும் விடுவார்கள். காரணம் அவர்கள் என்னைச் சாமியார் என்று எண்ணியதே. திருமணப் பேச்சு யான் திருமணத்தை வெறுத்தே விட்டேன் என்று என் அன்னையார் ஏக்குற்றனர். அவர்தம் ஏக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தே போயது. வருவார் போவாரை விடுத்தும் எனது மனத்தை மாற்றுமாறு அவர் ஏவுவர். தாயன்பு எவ்வெவ் வழி யிலோ செல்லுந் தன்மையதன்றோ? என்னை மணஞ் செய்து கொள்ளுமாறு தேவப்பிரசாதம் பண்டிதர் சொல்வர்; ஜான் ரத்தினம் பிள்ளை அறிவுறுத்துவர்; வேறு சிலரும் வலியுறுத்து வர். இங்கே ஒரு தொண்டு கிழவியின் நினைவு தோன்றுகிறது. அக்கிழவி என்னைப் பார்க்கும்போதெல்லாம், அப்பா! கலியாணஞ் செய்து கொள். நீ நல்லவனாயிருக்கிறாய். உலகம் உன்னை நல்லவனாயிருக்கவிடாது....v‹W மொழிவர். அம் மொழி ஔவையினுடையதுபோல எனக்குத் தோன்றும். அஃது என் மனத்தை உறுத்தும். இராயப்பேட்டையில் எங்கே போனாலும் என் திருமணப் பேச்சே பேசப்படும். இப்பேச்சு இப்பொழுது பெரிதும் பேசப்படுதற்குக் காரணம் என்ன என்று யான் எண்ணுவேன். காரணம் வயது என்று தெளிந்தேன். இளமை கொடியதா? இளமை இளமை கொடியதன்று. யான் இளமையைக் கண்டவன்; அதை அநுபவித்தவன்; இப்பொழுது அதை கடந்து நிற்பவன். இளமை கொடியதென்று கடிய என்மனம் துணியவில்லை. இளமை கொடியதாயின் அஃது இயற்கையில் அமையாது. அஃது இயற்கையில் அமைந்துள்ளது. அஃது எப்படிக் கொடியதாகும்? இயற்கை அவ்வப்போது தன்கடனை ஆற்றிக் கொண்டே போகும். அதன் நோக்குக்கும் போக்குக்கும் இயைந்து நடக்க வேண்டுவது உயிர்களின் கடமை; இன்றியமையாக் கடமை. புல்லும் பாம்பும் புள்ளும் விலங்கும் இயற்கை வழி நின்று இன்பம் நுகர்கின்றன. அவ்வாறே மக்களும் இயற்கைவழி நின்று இன்பம் நுகர்தல் வேண்டும். ஆறறிவுடைய மக்களுக்கு மட்டும் ஏதேனும் புறனடையுண்டா? இல்லை. இன்று இயற்கையை விடுத்து விலகுவோர் நாளை இயற்கையால் ஒறுக்கப்படுதல் ஒருதலை. அதனால், வாழ்க்கையைப் பலவித இடுக்கண்கள் இறுக்கும். இடுக்கண்களைத் தடுக்க இயற்கையோடியைந்து வாழ்வதே நேர்மை; ஒழுங்கு. இளமையில் சோதனை எழுவானேன்? அஃது இயற்கை யின் ஏவல்; செயற்கை யன்று. உற்ற வயதில் மக்களை நல்வழியில் நடத்த இயற்கை அன்னை அருள் சுரக்கிறாள். அவள் அருள்வழி நடக்க மக்கள் ஒருப்படுதல் வேண்டும். இல்லையேல் ஒறுப்பு உறுத்தெழல் திண்ணம். இளமைச் சோதனை ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றுபடுத்த எழுகிறது. அவ்வொன்றலினின்றும் அரும்புவது வாழ்க்கை. தனிமையில் வாழ்க்கை விதைகூட வீழாது. வாழ்க்கையைக் குறிக்கொண்டது திருமணம். அத் திருமணத்தை இழப்பது வாழ்க்கைச் செல்வங்களையெல்லாம் இழப்பதாகும். வாழ்க்கையின் நோக்கங்களையெல்லாம் நிறைவேற்றும் ஆற்றல் வாய்ந்தது திருமணம் என்று சுருங்கச் சொல்லலாம். வாழ்க்கையை உண்டுபண்ணி அதை வளர்க்கும் ஆற்றல் வாய்ந்த திருமணத்துக்குரிய இளமையா கொடியதாகும்? ஆகாது. அதைக் கடிவது வாழ்க்கையையே கடிவதாகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இளமையை என்னவென்று சொல்வது? தெய்வத் தன்மையின் முகிழ்ப்பு இளமை என்று சொல்வது முறைமையாகும். பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச் சிறையிலா நகரம் போலுஞ் சேயிலாச் செல்வ மன்றே. இது வளையாபதிப் பாட்டு; அநுபவம் நிறைந்தது. வாழ்க்கைக்கு வழிகாட்டுவது. விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய் காமரங் கற்றும் இல்லேன் தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பம் எய்த இளையனும் அல்லேன் எந்தாய் என்செய்வான் தோன்றி னேனே இப்பாடலை அருளியவர் அப்பர். இதனை நோக்கு வோம்; இதில் புகுவோம். என்ன கிடைக்கிறது? இளமைச் செம்பொருள் கிடைக்கிறது. அப்பர் முதுமையிலும் இளமை இனிமையை மறந்தாரில்லை. இளமையின் மாண்பு என்னே! இளமையை உளங்கொண்டு புலவர்கள் பாடிய பாக்கள் ஒன்றா? இரண்டா? ஆயிரம்! ஆயிரம்! இங்கே விரிவுரை வேண்டுவதில்லை. இளமை நிலையாமையை ஓத வந்த அறிஞர் பலரும் அதை இனிய மொழியால் வருணித்து வருணித்து இன்புறுவது கருதற்பாலது. *** உயர்தரு ஞான குருவுப தேச முந்தமி ழின்கலை யுங்க ரைகண்டு வளர்பி றையென்று பலரும் விளம்ப வாழ்பதி னாறுபி ராயமும் வந்து- மயிர்முடி கோதி யறுபத நீல வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து மணிபொ னிலங்கு பணிக ளணிந்து மாகதர் போகதர் கூடிவ ணங்க- மதன சொரூப னிவனென மோக மங்கையர் கண்டும ருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய வெறிந்து மாமயில் போலவர் போவது கண்டு மனதுபொ றாம லவர்பிற கோடி மங்கல செங்கல சந்தி கழ்கொங்கை மருவ மயங்கி யிதழ முதுண்டு தேடிய மாமுதல் சேரவ ழங்கி- ஒருமுத லாகி முதுபொரு ளாயி ருந்தத னங்களும் வம்பி லிழந்து மதன சுகந்த விதன மிதென்று வாலிப கோலமும் வேறுபி ரிந்து- வளமையு மாறி யிளமையு மாறி*** இப்பாட்டு முற்றத்துறந்த பின்னைப் பட்டினத்தார் உள்ளத்தினின்றும் பொங்கி வழிந்தது. சோதனைகள் இளமையின் ஒரு நிலையில் திருமணத்தை வெறுத்தேன். இன்னொரு நிலையில் அதை யான் வெறுக்கவுமில்லை; விரும்பவுமில்லை; அது நடந்தால் நடக்கட்டும் என்றிருந்தேன். அச்சமயத்தில் சோதனைகள் எழுந்தன. அவைகட்கு யான் எளியனானேனா? இல்லையா? என்ன பதில்? ஒரு திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்வதாயிற்று எனவருங் கிறிது பெருமான் திருமொழி என்னைத் துளைக் கும். இதுவே பதில். சோதனைகள் எவ்வாறு எழுந்தன? சிலர் வாயிலாக எழுந்தன. அவர் வெற்றிபெற்றனரா? தோல்வியுற்றனரா? அவர் ஒருவரேனும் உள்ள நிறைவு கொண்டாரில்லை. பாவம்! சோதனைகள் என்னை என்ன செய்தன? திருமணஞ் செய்து கொள்ளுமாறு உந்தின. முயற்சி என் தமையனார் பெண்பார்க்க முயன்றார். எனக்கேற்ற பெண் எளிதில் கிடைப்பளோ? பல இடங்கள் என்னால் மறுக்கப்பட்டன. தென்னாட்டுப் பழைய உறவில் ஒரு பெண்ணைக் கொள்ளச் சிலர் முயன்றனர். அப்பெண்ணின் அன்னையார் வேறு காரணத்தை முன்னிட்டுச் சென்னை போந்தனர்; எங்கள் வீட்டுக்குப் புதியவரல்லர்; பழையவர். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசிப் பார்த்தனர். தாயைப் பார்த்துப் பெண்ணை கொள் என்பது பழமொழி. அவ்வம்மையார் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. பேச்சில் படாடோபங் காணப் பட்டது. யான் ஏழை; ஏழ்மையை விரும்பும் பெண்ணே எனக்கு மனைவியாதற்கு உரியவள் என்று யான் முடிவுரை பகர்ந்தேன். அம்மையார் பேசாமடந்தையரானார். எவர் வரினும் எனது எளிமையை எவ்வழியிலாவது தெரியப்படுத்தி விடுவேன். திருமண உறுதி கடைசியில் ஓரிடம் பிடித்தது. யானும் பலரைக் கொண்டு அவ்விடத்தை விசாரித்தேன். அஷ்டாவதானம் கலியாணசுந்தர முதலியார், பெண்ணின் வீட்டைப் பற்றியும் வளர்ப்பைப் பற்றியும் நன்றாகச் சொன்னார். என் மனதுக்குப் பிடிப்பு ஏற்பட்டது. நிச்சயத்துக்கு நாளுங் குறிக்கப்பட்டது. நாள் நெருங்க நெருங்கத் திருமணம் அவசியமா என்ற எண்ணம் எழுந்தது. நிச்சய நாளுக்கு முன்னாள் ஏற்பாட்டைக் குலைத்துவிடுமாறு தமையனாரிடங் கூறினேன்; அதைப் பெண் வீட்டுக்குத் தெரியப்படுத்தப் போட் கார்ட் வாங்கிவரும்படி இளைஞர் வே. தியாகராயரை அனுப்பினேன். அவர் கடைக்குச் செல்லாமல் நேரே தேவப்பிரசாதம் பண்டிதர் வீட்டுக்குப் போய் எனது மனநிலையை வெளியிட்டனர். பண்டிதர் ஓய்வெடுத்து என் வீட்டுக்கு ஓடிவந்தார். பிடித்தார் சண்டை. யானும் அன்று பள்ளிக்குப் போகவில்லை. அரைநாள் வாதத்தில் கழிந்தது. பண்டிதர் திருமண உறுதியை என்னிடம் பெற்றனர். தியாகராயர் மனங் குளிர்ந்தது; மற்றவர் மனமும் குளிர்ந்தது. மறுநாள் முறைப்படி நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் உறுதியாயிற்று. கமலாம்பிகை மணமகள் பெயர் கமலாம்பிகை, அவள் திருச்சி கிருஷ்ண சாமி முதலியாரின் புதல்வி. கிருஷ்ணசாமி முதலியார் கார்டன் உட்டிராப்பில் தலைமைக் கணிதாராயிருந்தவர். அவர் சகோதரச் செல்வம் பெற்றவர். அவர்க்குப் பிறந்த மக்கள் மூவர். மூவருள் ஆண்மக்கள் இருவர்; பெண்மகள் ஒருத்தி. அவளே கமலாம்பிகை. கமலம் குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையாரை இழந்தனள். அவள் பெரிய தந்தையார் பாலசுந்தர முதலியாரால் வளர்க்கப்பட்டவள். பாலசுந்தர முதலியார் வயிற்றில் பிறந்த புதல்வியார் ஒருவரே. அவர்க்கு மணவினை முடிந்தது. முதலியார் வீட்டில் குழந்தையில்லை. கமலம் குழந்தையாய் வளர்ந்தாள். பாலசுந்தர முதலியார் கமலத்தை கல்விச் செல்வம் பெற அன்புடன் வளர்த்தார்; அவளுக்கு ஒரு பெரிய வீடுங் கொடுக்கத் தீர்மானித்தார். இவ்வாறு வளர்க்கப் பெற்ற கமலாம்பிகை எனக்கு வாய்த்தாள். திருமணம் திருமணம் (13-9-1912) இருளப்பன் தெருவிலே, மணமகளின் நல்லம்மாள் பூ.மு.முருகேச முதலியார் வீட்டிலே நடந்தது; தேவாரம் முழங்கியது. கிறிது ஜெபமும் நிகழ்ந்தது; அங்கே பலதிறத்தினர் கூடியிருந்தனர். சிறப்பு முதல் முதல் அடியவர்க்கே அளிக்கப்பட்டது. உறவினர்க்கும் மற்றவர்க்கும் பின்னரே. இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையின் அன்பு, நூல்களாகப் பரிணமித்தது; திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் அன்பு, பொன்வேய்ந்த கௌரி சங்கமாகவும் பீதாம்பரமாகவும் உருக்கொண்டது. ஆயிரம் விளக்குப் பள்ளித் தலைமை ஆசிரியரும் என்னுயிர் நேயருமாகிய ஜான் ரத்தினம் எழுந்தார்; வெள்ளிச் செம்பொன்று கொடுத் தார்; கிறிதுவக் குழுவின் சார்பில் வாழ்த்து மலர் பொழிந் தார்; அத் தமிழ் மலர் மணத்தை யான் நுகர்ந்து கொண்டே பக்கத்திருந்த மணமகளை நோக்காமல் நோக்கினேன். அவள் பூரிப்புப் புலனாயிற்று. ஜான் ரத்தினம் இறுதியில் நிகழ்த்திய ஜெபம் அமிழ்தமாகியது. அஷ்டாவதானம் கலியாண சுந்தர முதலியார் உள்ளிட்ட சைவப் பெரும் புலவர்களும் அவ் வமிழ்தைப் பருகினார்கள்; மற்றக் கூட்டமும் பருகியது. மற்றவர் ஆசிகளும் நடந்தேறின. அன்று மாலைக் கூட்டத்தில் பரத நாட்டியம் நடை பெற்றது. அவ்வேளையில் அன்பர் எக்பர்ட் ரத்தினம் தமது திருக்கூட்டத்துடன் வந்தனர். அவரது திருக்கூட்டக்காட்சி பரத நாட்டியத்தையும் நிறுத்தியது. திருக்கூட்டம் பாடியது. எக்பர்ட் ஜெபஞ் செய்தார்; அவர் வாழ்த்துக் கூறினார். அவரது ஜெபமும் வாழ்த்தும் பரதநாட்டியத்தையுங் கைக்கச்செய்தன; திருக்கூட்டச் சார்பாக எனக்கொரு தட்டுக் கொடுக்கப்பட்டது. விளக்கொளியில் அது பொன் வண்ணமாகக் காணப்பட்டது. பெண் கூட்டம் அதைப் பொன் என்றே கருதியது. எக்பர்ட் எனக்குக் கொடுத்தது தட்டா? அவர் தம் மனம் பொழியும் அன்பு தட்டாகி என் கையில் பொலிந்தது. சைவமும் கிறிது வமும் கலந்த முறையில் என் திருமணம் நடைப் பெற்றது. யானும் கமலாம்பிகையும் இராயப்பேட்டை சேர்ந்தோம். சேர்ந்த அன்றைய மாலையில் ஏதேனும் திருமணப் படலம் ஒன்று எவரைக்கொண்டேனும் சொல்லுவித்தல் வேண்டும் என்று எண்ணினேன். பௌராணிகர் பலர் என் நண்பர். ஆனாலும் அன்பர் சச்சிதானந்தம் பிள்ளையைத் தவிர வேறு ஒருவரும் அன்று என் மனதில் தோன்றவில்லை. சச்சிதானந்தம் பிள்ளை என் வேண்டுதலுக்கு இணங்கி வள்ளித் திருமணஞ் சொன்னார். இடையிடையே தெய்வ பக்தி, அறத்திறன், இல்வாழ்க்கையின் மாண்பு ஒழுக்கத்தின் விழுப்பம் முதலியன அவரால் விளக்கப்பட்டன. இல்வாழ்கை எங்கள் இல்வாழ்க்கை தொடங்கியது. அவ்வாழ்க்கை நீண்ட காலம் நிலவவில்லை; ஆறே ஆண்டு நடைப் பெற்றது. ஆறாண்டு நிகழ்ச்சிகளைப் படலம் படலமாக வரைதல் கூடும். விரிவுக்கு அஞ்சுகிறேன். கல்வி கமலாம்பிகை முதல் முதல் செய்துகொண்ட விண்ணப்பம் கல்வியைப் பற்றியது. இளமையில் பொன் புடைவைகளை யல்லவோ கேட்டல் வேண்டும்? நீ வேறு எதையோ கேட்கின் றாயே என்பன். எனக்கு நகைகளிருக்கின்றன. என் அன்னையா ரின் விலையுயர்ந்த புடைவைகள் பல இருக்கின்றன. யான் என்ன கேட்டாலும் வாங்கித் தரப் பெரிய தந்தையார் இருக்கிறார். ஆதலின், உங்களிடம் யான் விரும்புவது கல்வியே என்று பதிலிறுப்பள். அவள் விழைந்தவாறு தமிழ் நூல் கற்பிக்க முயன் றேன். அதை என் அன்னையார் விரும்பவில்லை. அன்னையார் நல்லவர்; ஆனால் கர்நாடகம்; காலப்போக்கை அறியாதவர். என் செய்வது! அவர் என்னை ஈன்ற அன்னையார்! கமலத்துக்கு இரவில் போதனை செய்யலானேன். முதலில் ஔவை நூல் களைத் தொடங்கினேன்; பெரிய புராணக் கதைகளையுஞ் சொல்வேன். உரையாடலில் கமலம் இயற்கை யறிவுடையவள் என்பது நன்கு விளங்கியது. திருக்குறள் யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக் குணங்கள் துதைந்திருந்தன. வெறுந் திருக்குறள் படிப்புத் தீக்குணங்களை அறவே களைய வில்லை. கமலாம்பிகையின் சேர்க்கை அக்குணங்களைப் படிப்படியே ஒடுக்கியது. அவள் திருக்குறள் படித்தவளல்லள். எனக்கு அவளே திருக்குறளாக விளங்கினாள். மனைவாழ்க் கையில் ஈடுபடப்படத் திருக்குறள் நுட்பம் விளங்குவதாகிறது. திருவள்ளுவர் உள்ளத்தை உணர்தற்கு மனைவாழ்க்கை இன்றியமையாததென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாயிற்று. யான் பின்னாளில் எழுதிய திருக்குறள் விரிவுரைக்கு இல் வாழ்க்கையின் அநுபவம் பெருந்துணையாய் நின்றது. பொறுமை கமலாம்பிகைக்குச் சகிப்புத் தன்மை அதிகம். அதை யான் பன்முறை காணும் வாய்ப்புக்களை வாழ்க்கையில் பெற்றேன். சகிப்புக்கு மூலம் பொறுமை. பொறுமை என் மனைவியிட்ம் எப்படி இளமையிலேயே அமைந்தது என்று யான் நினைப்ப துண்டு. பிறவிக் கூறு என்ற முடிவுக்கு வந்தேன். சின்ன வயதில் எனக்குப் பொறுமை பெரிதுங் கிடையாது. திருமணத்துக்குப் பின்னர் யான் பொறுமையாளன் என்று பலரால் போற்றப் பட்டேன். என்பால் பொறுமை பொலிவது உண்மையானால். அஃது எனது இயற்கையினின்றும் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்றும் என்பால் இறங்கிக் கால்கொண்ட தென்று யான் சொல்வேன். என் அன்பார்ந்த அன்னையாரது கர்நாடகத் தன்மை சில சமயம் கமலத்தைக் கடியும். அக்கடிதல் என்னை வருத்தும். கமலத்தின் பொறுமை மாமியார் கடிதலையும் தாங்கும். என் வருத்தத்தையும் தணிக்கும். விருந்தோம்பல் முதலியன வீட்டு வேலைகளைக் கமலம் ஊக்கத்துடன் செய்வாள். அஃது என் அன்னையார்க்கு மகிழ்ச்சியூட்டும். மாமியார் மனங் கோணாதவாறு நடப்பதில் கமலம் நல்ல தேர்ச்சி பெற்றாள். என்அண்ணியார்க்கும் கமலத்துக்கும் ஏதேனும் ஏறுமாறு உண்டாகுமோ? உண்டாவதில்லை. இருவரும் உடன்பிறந்தவர் போலாயினர். ஓரகத்தியர்க்குள் எப்படியேனும் சண்டை மூளுமென்றும்,அஃதியல்பென்றும் உலகஞ் சொல்வது வழக்கம்; கமலாம்பிகையின் பொறுமை வாழ்க்கை அவ்வழக்கைப் பொய்மைப்படுத்தியது. ஒரு நாளேனும் ஒரு மணியேனும் ஒரு நொடியேனும் என் அண்ணியார்க்கும் என் மனைவிக்கும் பிணக்கு நேர்ந்ததே இல்லை. அவர்கள் சரித்திரத்தில் பிணக்குப் படலம் இடம் பெறவில்லை. இப்பெருமையை இராயப் பேட்டையே பேசும். என் தமக்கைமார் தங்கை முதலியவரைக் கண்டதும் கமலத்தின் முகம் மலரும். சுற்றந் தழுவலில் கமலம் பேர் பெற்றாள். விருந்தோம்பலில் கமலத்தின் மனம் சலிப்புறுவ தில்லை. எந்த நேரமானாலும் உலை வைக்கக் கமலக்கைகள் சித்தமாயிருக்கும். கமலாம்பிக்கையின் சகிப்பு, பொறுமை, விட்டுக் கொடுக்குந் தன்மை முதலியன குடும்பத்தின் ஒருமைப் பாட்டைக் காத்து வந்தன. கோள் மாமியார் வீட்டுக் குறைகளைத் தாய் வீட்டுக்கு ஏற்றுமதி செய்வது பெண்கள் வழக்கமாம். கோள் சிறியதாயிருக்கும். அதனால் விளையும் அல்லல் பெரியதாகும். எங்கள் வீட்டுக் குறைகளைக் கமலம் தாய் வீட்டுக்குச் சொல்லியதாகவோ சொல்லிவிட்டதாகவோ யான் கேள்விப்பட்டதில்லை. ஒரு நாள் பௌர்ணமி வெளிச்சத்தில் கமலமும் அவள் தாய் வீட்டு மக்களும், யானும் அமர்ந்து என்னென்னவோ பேசிக்கொண் டிருந்தோம். பேச்சிடைக் கமலத்தின் அக்காள், என்னைப் பார்த்து, உங்கள் வீட்டில் குறைபாடே இல்லையா? உங்கள் வீட்டாரெல்லாம் தேவரா? இந்த அம்மாள் ஒன்றுஞ் சொல்வ தில்லையே என்று கேட்டனர். கமலா ஏதோத மூச்சுவிட் டிருக்கிறாள் போலும், ஏதேனும் இருந்தால் அதை என்னிடம் வெளிப்படுத்துங்கள். முளையிலேயே எதையுங் கிள்ளிவிடுவது நல்லது என்றேன். வீண் பேச்சு என்றாள் கமலம். என்னை ஐயம் பீடித்தது. பின்னை விசாரணையில் ஒன்றுமில்லை என்று தெரிந்தது. கமலம் கோள் மூட்டுபவளாயிருந்தால் எங்கள் வீட்டின், ஒற்றுமையே குலைந்திருக்கும். குழந்தைகள் தமையனார் குழந்தைகளாகிய பாலசுப்பிரமணியனையும், மங்கையர்க்கரசியையும், புனிதவதியையும், எங்கள் வீட்டில் வளர்ந்துவந்த ஒரு தமக்கையாரின் மகன் சண்முக சுந்தரத்தையும் நன்முறையில் வளர்க்கக் கமலாம்பிகை முயல்வாள். அவர்கட்கு வேளையில் செய்யத்தக்க கடமைகளை அவள் வழாது செய் வாள். கமலம் குழந்தைகளைச் சீறியதையோ திட்டியதையோ தடிந்ததையோ யான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. குழந்தைகள் அவள் முன்னும் பின்னும் பூனைக்குட்டிகளைப் போலச் சூழ்ந்து செல்வதை யான் பன்முறை கண்டு கண்டு இன்புற்றதுண்டு. சிக்கனமும் சோப்பும் என் அன்னையார் சிக்கனத்தில் வல்லவர். கமலாம்பிகை யின் சிக்கனம் மாமியாருடையதையும் வெல்லும். அதில் என் அன்னையார்க்கு அளவில்லாத மகிழ்ச்சி. சோப்புக் கட்டியில் மட்டும் கமலாவின் செட்டுச் செல்வதில்லை. தாய் வீட்டி னின்றும் கமலம் கொண்டுவரும் பொருள்களில் சோப்புக் கட்டியே பெருமிதமா யிருக்கும். எங்கள் வீட்டில் சோப்பைப் புகவைத்தவள் கமலாம்பிகையே. நகைப்பித்து பொதுவாக இந்தியப் பெண்களுக்கு நகைப்பித்து உண்டு. என் மனைவி நகைகளை ஒழுங்கு செய்வதிலும் அணிவதி லும் கருத்துடையவளே. அவளுக்கு நகைப்பித்து உண்டா இல்லையா என்பது தெரியாமலிருந்தது. அவள் உள்ளத்தைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. ஒரு நாள் பூக்காரி போந்து திருகுபில்லையை இரவல் கேட்டாள். அதைக் கொடுக்குமாறு கமலத்தினிடஞ் சொன்னேன். அது கொடுக்கப் பட்டது. மீண்டும் அது வரவே இல்லை. அதைப்பற்றி என் ஆருயிர் மனைவி கவலையடையவில்லை. ஒருநாள் குழந்தை மங்கையர்க்கரசியினிடம் கமலாவின் ஒரு கால்கொலுசு சிக்கியது. குழந்தை அதை எடுத்து விளை யாடிக் கொண்டே தெருவுக்குச் சென்றது. கொலுசு எங்கேயோ போயது. என் அன்னையார் குழந்தையைக் கடிந்தார். போனால் போகிறது என்று குழந்தையை யான் எடுத்துக் கொண்டேன். கொலுசைப் பற்றிக் கமலம் கலக்கமுறாமையை யான் உணர்ந்தேன். கமலத்துக்கு நகைப் பித்தில்லை என்று தெளிந்தேன். கடிதல் என் மனைவியின் மனம் அனிச்சம். சிறிது கடிந்தால் போதும். அவள் முகம் வாடும். வாடிய முகத்தைக் காண என் மனம் பொறாது. எங்கள் வாழ்வில் அடிக்கடி கடிதலோ தடிதலோ நேர்வதில்லை. நேர்தற்கு இடமுங் கிடையாது. இரண்டொரு நிகழ்ச்சிகளை இங்கே குறிக்கிறேன். ஒரு வேனிற்கால ஓய்வில் ஜான் ரத்தினம் பிள்ளையை மிறைக்கவியால் வாழ்த்தினேன். அக்கவி இரதபந்தத்தாலா கியது. வெள்ளைத் துணியில் பலநிற நூல்களால் தேரெடுத்து எழுத்துக்களைப் பொறிக்குமாறு கமலாம்பிகையினிடஞ் சொன்னேன். அப்பணியை அவள் விருப்புடன் ஏற்றாள். அது குறித்த நேரத்தில் முற்றுப் பெறவில்லை. யான் சில சொல் லம்புகளை விடுத்துத் தோட்டத்துக் கேகினேன். மனம் மனைவியினிடமே சென்றது. திரும்பினேன். பின்னால் வேலை விரைவாக நடக்கிறது. ஆனால் கமலத்தின் முகத்தில் மலர்ச்சி யில்லை. அவளிடம் அதையும் இதையும் பேசி, நன்மொழிகூறி எப்படியோ சிரிக்க வைத்து, வாட்டந் தீர்த்து மீண்டும் தோட்டம் நோக்கினேன். யான் திரும்பி வாராது நேரே போயிருப்பனேல் என் மனம் நரகத்தில் நெளிந்திருக்கும். ஒருநாள் யான் சாப்பிட்டுவிட்டு ஜவுளிக் கடைக்குச் சென்று, நண்பருடன் பேசி, இரவு பத்து மணிக்கு வீடு சேர்ந் தேன். வீடு மிக அமைதியா யிருந்தது. ஒருவரோ டொருவர் பேசாமிலிருந்தனர். என்னவோ நடந்திருக்கிறது என்று ஊகித்தேன். என்ன நடந்தது என்று மனைவியைக் கேட்டேன். ஒன்றுமில்லை என்றாள். மறித்து மறித்துக் கேட்டேன். ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை என்ற பதிலே கிடைத்தது. யான் உறங்கினேன். விடியற்காலை வீட்டு வேலைக்கு எழுந்த என் நாயகி, இரவு நடந்தது தமக்கை - தமையர் சண்டை; அதை அப்பொழுதே உங்களிடஞ் சொல்லக்கூடாது என்று எண்ணினேன்; இப்பொழுது சொல்கிறேன் என்று என்னிடங் கூறினள். அப்பொழுதே சொன்னாலென்ன? போ என்று அதட்டினேன். அவள் மெல்லப் போய்விட்டாள். பின்னர் அவளை அதட்டியது தவறு என்று உணர்ந்தேன். என் மனம் அலைந்தது. காலைக் கடன் முடித்துக் குளிப்பதற்குச் சென்றேன். வழக்கம்போலத் தண்ணீர்விடக் கமலம் வந்தாள். முகவாட்டங் கண்டேன். அதைப் போக்கவேண்டி யான் அதட்டியது தவறு, உனக்கு முன்மதி; எனக்குப்பின்மதி என்று உரைத்து, யான் பார்த்த பார்வை கமலத்தை, மலரச் செய்தது. அம்மலர்ச்சியி னின்றும் முன்மதி; பின்மதி என்று சொல்லாதேயுங்கள்; என்ற தேன் பிலிற்றியது. அவளது அனிச்ச மனமும், எனது இரக்க மனமும் எங்கள் வாழ்க்கையில் ஒருமைப்பாட்டை ஓம்பி வந்தன. தனிக் குடித்தனம் கமலத்தின் கூர்த்த மதி நாளுக்கு நாள் என் நெஞ்சைக் கவர்ந்தது. அவளுக்குப் பெருங் காவியங்களைப் போதித்தல் வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அதற்கு வீடு இடந் தராதென்பது எனக்குத் தெரியும். தனிக் குடித்தனம் செய்தால் எண்ணம் நிறைவேறுமென்று கருதி அதற்குரிய முயற்சியில் இறங்கினேன். அதற்கு என் அருமை மனைவி உடன்படவே யில்லை. தாய் வீட்டாரை விடுத்தும் எனக்குச் சொல்வித்தாள். குடும்பத்தினின்றும் நாமே வலிந்து பிரிவது நமது வாழ்க்கைக்கு இழிவு தேடுவதாகும். கல்வியினும் குடும்ப ஒற்றுமையே பெரிது. இப்பொழுது இரவிலே கொஞ்சங் கொஞ்சமாக யான் படித்து வருவது போதும். என் பொருட்டு நீங்கள் பிரிவு நாடுவது தர்மமாகாது என்று பன்முறை அறிவுறுத்தினாள். என் மனம் உவகைக் கடலாடியது. மனைவியின் விருப்பத்துக்கு மாறாக நடக்க என் மனம் எழவில்லை. குளக்கரைப் பேச்சு மயிலாப்பூர் கபாலீச்சுரர் கோயிலுக்கும், திருவல்லிக் கேணிப் பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்கும் யான் போவதுண்டு. சிற்சில சமயம் மனைவியுடன் செல்வேன். கோயில் வழிபாடு முடிந்ததும் நாங்கள் நேரே வீடுநோக்குவ தில்லை; குளக்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசுவோம். குளக்கரைப் பேச்சில் கமலத்துக்கு விருப்பம் இருத்தலை யான் விளங்கிக்கொண்டேன். அவ்விளக்கம், வாரந்தோறும் சனி ஞாயிறுகளிலும், மற்ற ஓய்வு நாட்களிலும் வண்ணாரப் பேட்டைக்குப் போய், அங்கிருந்து திருவொற்றியூர்க்குச் சென்று திரும்புவது நல்லது என்று நினைக்கத் தூண்டியது. அதை என் அன்னையாருக்கு வேறு வழியாகத் தெரிவித்தேன். கமலாவின் பெரிய தந்தையார் வயதானவர். அவர் வண்ணாரப்பேட்டை யிலிருந்து இராயப்பேட்டைக்கு வந்து போக வருந்துகிறார். நாங்களே சனி ஞாயிறுகளிலும் மற்ற ஓய்வு நாட்களிலும் வண்ணாரப்பேட்டைக்குப் போய் வருவது நல்லது என்று தோன்றுகிறது என்று கூறினேன். அன்னையார், பிள்ளை இல் லாத ஒருவரைத் தள்ளாத காலத்தில் போய் பார்த்து வந்தா லென்ன? போகலாம் என்று நன்மொழி பகர்ந்தார். இதை கமலாவுக்கு அறிவித்தேன். அவள், உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம் என்று நகைத்தாள். உன் நகைப்பின் பொருள் எனக்குத் தெரியாதா? தெரியும் என்றேன். திருவொற்றியூர் நாங்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலையே பெரும் பாலும் புறப்படுவோம்; வண்ணாரப்பேட்டையில் தங்குவோம்; சனிக்கிழமை பகல் திருவொற்றியூர் நோக்குவோம்; அரைநாள் அங்கே கழிப்போம்; சில சமயம் ஞாயிறு காலையும் அங்கே தங்குவோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்மட்டும், என்னை எங்கேயும் தங்கவிடாது. ஏன்? அந்நேரத்தில் திருவல்லிக்கேணிச் சபையில் யான் பெரிய புராணப் பிரசங்கஞ் செய்தல் வேண்டு மன்றோ? சனி ஞாயிறல்லாத ஓய்வு நாட்களில் திருவொற்றி யூரிலே பெரும்பொழுது போக்குவோம். எங்கள் வருகையும் செல்கையும் பாலசுந்தர முதலியார்க்கு அளவில்லாத மகிழ்ச்சி யூட்டும். அஃது எனக்கு நன்கு புலனாகும். வழிச் செலவை எவ்வெவ் வழியிலோ வடிவிலோ அவர் கமலத்தினிடத் சேர்த்து விடுவர். அதனால் வழிச் செலவுத் தொல்லை எங்களைச் சார்வதில்லை. சில வேளைகளில் பாலசுந்தர முதலியாரும், அவர் மனைவியாரும்,பெரிய மகளும் எங்களுடன் போதருவர். கடற்கரை யானும் மனைவியும் திருவொற்றியூர்க் கடற்கரையில் பொழுது போக்க விரும்புவோம்; கடலோரத்தில் உலவுவோம்; நிற்போம்; மணல் மேடுகளில் அமர்வோம். கமலம் இராமலிங்க சுவாமிகள் அருளிய எழுத்தறியும் பெருமான் மாலை, வடிவுடை மாணிக்கப் பாடல் முதலியவற்றைப் பாடுவள். கமலாம்பிகையின் பாட்டை எங்கள் வீடு கேட்டதே யில்லை; அவள் பாடுவா ளென்று வீட்டவர் ஒருவருக்குந் தெரியாது. கமலத்தின் பாட்டைக் கேட்டது திருவொற்றியூர்க் கடற்கரை. யான் இயற்கைப் பாடல்களைச் சொல்லி நுட்பங்களை விளக்குவேன்; சிலப்பதிகாரக் காதைகளைச் சொல்வேன். அவைகளில் என் மனைவியின் மனம் படியும்; குவியும். திருவொற்றியூர்த் தேவாரங் களிலும் நாங்கள் கருத்துச் செலுத்துவோம். பட்டினத்தார் கோயில் எங்களைப் பார்க்கும். அங்குஞ் சென்று அடிகளை வணங்குவோம். திருவொற்றியூர் அம்மையையும் அப்பனையும் எங்கள் மனம் மறக்குமோ? அவரையும் தொழுது திரும்புவோம். பாலசுந்தர முதலியார் உயிருடன் வாழ்ந்தவரை திருவொற்றியூர் எங்கள் ஊராயிருந்தது. சேய்ச் செல்வம் எங்கள் இருவர் அன்பு வாழ்க்கையில் முகிழ்த்த அமிழ்த முளைகள் இரண்டு; ஒன்று ஆண்; மற்றொன்று பெண். ஆண் குழவி பிறந்த வாரத்திலேயே மறைந்தது. பெண் குழவி திலகவதி கண்காட்டி, முகங்காட்டி, கை காட்டி, கால்காட்டி சுமார் ஓராண்டு வளர்ந்தது. பின்னே இன்னுயிர் நீத்தது. சேய்ச் செல்வம் பெற்றோம். இழந்தோம். நோய் தேசபக்தன் தொண்டிலும், தொழிலாளர் சேவையிலும் யான் ஆர்வத்துடன் ஆழ்ந்தவேளையில் கமலாம்பிகை நோய் வாய்ப்பட்டாள். அவளை எலும்புருக்கி அடர்ந்தது. அது பரம்பரை நோய்; அந்நோய் என் மாமியாரை விழுங்கியதென்று கேள்வியுற்றேன்; மைத்துனர் ஒருவரை உண்டதை யான் நேரிற் கண்டேன். என் வாழ்க்கைத் துணையின் பொன்னுடல் மெல்ல மெல்லக் கரைந்தது. அதைக் காணக்காண என் உள்ளமும் கரையும். தேசபக்தன் தாளும், தொழிலாளர் இயக்கமும் தோன்றாதிருக்குமாயின், என் நிலை என்ன ஆகியிருக்குமோ? ஆண்டவன் திருவிளையாடல் நுட்பம் எவர்க்குத் தெரியும்? கமலம் அப்படியும் இப்படியும் போவாள். வருவாள்; உலவுவாள்; பிறர் பணி ஏற்கும் நிலையை அடையாமலிருந்தாள். இவ்வாறு ஏறக்குறைய மூன்று திங்கள் கழிந்தன. இயன்ற சிகிச்சை செய்தோம். பயன் விளையவில்லை. கமலத்துக்குப் படுக்கை இடமாகியது. ஒருவாரம் அவள் படுக்கையில் கிடந் தாள். அவ்வேளையில் என் அன்னையாரும்,தமக்கை யாரும், அண்ணியாரும், மற்றவரும் செய்த தொண்டுகள் போற்றற் குரியன. அன்னையார் கர்நாடகம்; ஆனால் உற்றவேளையில் உதவும் அன்பின் கூறு; தொண்டின் வடிவம். பலவிதப் பணிகள் அவரால் செய்யப்பட்டன. பெண்மை-தாய்மை-இறைமை கமலம் படுக்கையில் கிடந்தபோதும் அவள் தன் உணர்ச்சி குன்றவில்லை, நன்றாகப் பேசுவாள். அப்பொழுது அவள் என்னிடம் பேசியது வெறும் பேச்சன்று; அஃது உபதேசம். ஒருபோது திடீரெனச் சோளங்கிபுரம் போகலாமா என்றாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உடல் நலமுற்றதும் போக லாம் என்று பதிலளித்தேன். அவள் முகத்தில் ஒளி தவழ்ந்தது. கமலத்தின் பெண்மையில் இன்பங் கண்டேன்; தாய்மையில் அன்பு கண்டேன்; இப்பொழுது ஒளி காண்கிறேன். இதுவோ பெண்ணின் இறைமை நிலை! ஆவி சோரல் என் தந்தையார் காலமான திங்களில்-கோளில்-கமலம் ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகும் நிலையடைந்தாள். துன்பமேகஞ் சூழ்ந்தது; மின்னல் என் தலையில் விழுந்து, உடலிற் பாய்ந்து கால் வழியே ஓடியது; மண்ணும் விண்ணும் ஓரே சூழல்; கண்களில் தாரை தாரை. கமலத்தின் ஆவி சோர்ந்தது; என் அம்பிகையின் ஆவி சோர்ந்தது; என் ஆருயிர் கமலாம்பிகையின் ஆவி சோர்ந்தது; ஓருயிர் ஈருடலென வாழ்ந்தோம். ஓருடல் போயிற்று; அமிழ்தஞ் சுவையென இருந்தோம்; அமிழ்தம் போயிற்று - (18-9-1918) மறப்பு? சகோதர சங்கத்தார் கமலத்தைப் படம் பிடிக்க வந்தனர். அந்தோ! எந்நிலையில்! அவள் உயிருடன் வாழ்ந்த போது படம் நினைவே எங்கள் மனத்தில் எழவில்லை. கமலாவின் உடல் படமெடுக்கப்பட்டது. ஊரெலாங்கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. இது திருமூலர் திருவாக்கு. யான் நீரில் மூழ்கினேன். என் மனைவி நினைவு ஒழியவில்லை; அந்நினைவு இன்றும் ஒழியவில்லை. எப்பிறவிலும் அஃது ஒழியுந் தன்மையதன்று. திருமூலர் திருவாக்குப்பொதுமையது; நிலையாமையை அறிவுறுத்த எழுந்தது. மனைவிக்கு அப்பாட்டைப் புறனடை யாகக் கொள்க. மனைவி வாழ்க்கைத் துணை. அத்துணை வெறும் எலும்பா? தோலா? உடம்பா? பொறியா? அன்று; அன்று. அத்துணைக்கு ஒப்பானதும் ஒன்றில்லை; உயர்வானதும் ஒன்றில்லை. எதை இழந்தாலும் எளிதில் பெறலாம்; காதலியை இழந்தால் அரிதிலும் பெறுதல் இயலாதே. காதலி பெறுதற்கு அரியவள்; அவளை இழந்தால் மீண்டும் அவளை எப்படிப் பெறுதல் கூடும்? உலகெலாஞ் சேர்ந்தாலும் அவை காதலிக்கு ஈடாகா? இத்தகைய காதலியை எப்படி மறத்தல் இயலும்? திருக்குறள் இளமையில் யான் திருக்குறள் பயின்றேன்; என்ன பயின்றேன்? எழுத்துக்களைப் பயின்றேன். பின்னே திருக்குறள் இயற்கையாய்க் கமலாம்பிகையாய் வாழ்க்கைக் கழகமாகியது. அதில் யான் ஆறாண்டு பயின்றேன். என் வாழ்க்கை பல வழி யினும் பண்பட்டது. யான் திருக்குறளாகி வருகிறேன். சோதனை திருமணத்துக்கு முன்னர்ச் சில சோதனைகள் எழுந்தன வல்லவோ? அவைகள் திருமணம் புரியுமாறு உந்தினவல்லவோ? இப்பொழுது அச்சோதனைகள் எழுமா? எழுந்தாலும் மீண்டும் மணம்புரிய உந்துமா? உந்தா. ஒருத்தி காதலியாகிறாள். காதல் அவ்வொருத்தியினிடமே செல்லுந்தகையது. மற்றவரிடம் அக்காதல் எப்படிச் செல்லும்? சென்றால் அது காதலாகாது. காதல் காதல் இயற்கை. அவ்வியற்கையுடன் இயைந்து வாழ்வ தற்கென்று ஒருத்தியென்றும் ஒருவனென்றும் மன்பதை படைக்கப்படுகிறது. ஒருத்தியையும் ஒருவனையும் காதலால் ஒருமைப்படுத்துவது இல்வாழ்கை. இல்வாழ்கை ஒரு கழகம். அக்கழகம், காதற்குரியவர் ஒருத்தியும் ஒருவனும்-ஒருவனும் ஒருத்தியுமே என்பதையும், ஓரிடத்திற் செல்லுங்காதல் மற்றவரைத் தாய் தந்தையராகவோ உடன் பிறந்தவராகவோ கருதல் என்பதையும் அறிவுறுத்துவது; மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம் எனவும், அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்-செந்தண்மை பூண்டொழுக லான் எனவும் வரும் வள்ளுவர் வாக்கின் நுட்பங்களை வாழ்க்கையில் ஒன்றுவிப்பது. மறுமணப் பேச்சு மனைவி இறந்து இரண்டு மாதங்களாயின. அதற்குள் புறப்பட்டது சுற்றம்; மறுமணப்பேச்சுத் தொடங்கியது. யான் அப்பொழுது தேசபக்தனல்லனோ? நாடறிந்தவனானேன். செல்வர் பலர் பெண் கொடுக்கப் போட்டியிட்டனர். அவருள் ஒருவர் புதுவையர். அவர் இலட்சாதிபதி. அவர் சார்பில் பேச வந்த உறவினர் ஒருவர், பெருஞ்செல்வம்; ஒரே பெண்; தேசபக்தனைப் போலப் பத்துத் தேசப்பக்தனைச் சொந்தத் தில் நடத்தலாம் என்றெல்லாம் இயம்பிப் பார்த்தனர். வீட்டார் மனம் புதுவைப் பெண் மீது நடந்தது. யான் இணங்கினே னில்லை. மனைவி ஒருத்தியே கமலாம்பிகையின் பருவுடல் மறைந்தது. அவள் நுண்மை அன்பு கூடவா மறைந்துபோகும்? அவ்வன்பு என் ஊனில்-உள்ளத்தில்-உயிரில் ஊடுருவி இரண்டற ஒன்றி நிற்பது. அதனுள் இன்னொன்று எப்படிப் புகும்? அதற்கு இடம் ஏது? இஃது எவர்க்குத் தெரியும்? எனக்கன்றோ தெரியும்? எனக்கு மனைவி ஒருத்திதானே; இன்னொரு பெண்மணி எனக்கு எப்படி மனைவியாவள்? அவள் சகோதரியாவள். கேவலம் பணத்துக் காகவா அன்புக்குத் துரோகஞ் செய்வது? எக்காரணம் பற்றியும் மறுமணஞ் செய்து கொள்ள என் மனம் ஒருப்படவில்லை. மறுமணஞ் செய்தல் கூடாது என்று உறுதி கொண்டேன். தேவப் பிரசாதம் பண்டிதர், ஜான் ரத்தினம் முதலிய அறிஞர் என்னை வலியுறுத்தவில்லை. அவர் வலியுறுத்தினாலும் யான் மறுப்புரையே வழங்கியிருப்பேன். பல காரணங் கூறல் இராயப்பேட்டையில் சில கர்நாடக க் கிழவர் இருந் தனர்; அவர் நல்லவர்; எப்பொழுதும் எங்கள் குடும்ப நலத்தை நாடுவோர். அவர் மறுமணத்தைப்பற்றி என்னிடம் பேசுவர். அவரிடை மறுமண நடமாட்டம் இயற்கை. அவர்க்கு என் உள்ளக்கிடக்கை ஏற்குமோ? அவரவர்க்குத் தக்க முறையில் பதில் கூறி அவரவரை அனுப்புவேன். சிலரிடம் என் வயது முப்பத் தைந்து, இந்த வயதில் ஓர் இளம் பெண்ணை மணஞ் செய்வது அறமா? என்று கூறுவேன்; வேறு சிலரிடம், தேசபக்தன் கட்டுரைகளை யொட்டி எனக்குச் சிறை வாழ்வு கிடைக்கப் போகிறதென்று ஊர் பேசுவது உங்கட்குத் தெரிந்திருக்கலாம். இந்நிலையில் மறுமணமா? என்று புகல்வேன்; மற்றுஞ் சில ரிடம் மறுமண உரிமை இருபாலார்க்கும் இருத்தல் வேண்டும்? இல்லையேல் இருபாலார்க்கும் அவ்வுரிமை இருத்தல் கூடாது. அவ்வுரிமை ஒரு பாலார்க்கு மட்டும் இருத்தலும்,இன்னொரு பாலார்க்கு இல்லாமையும் நியாயமாகுமா? என்று அறைவேன். என் உயிர்த்தோழர் சிலர்-என் நலனை உண்மையாக நாடுவோர்-என்னிடம் வருவர்; வாதஞ் செய்வர். அவர், இப்பொழுது வைராக்கியமிருக்கலாம். நாளடைவில் அது கலையலாமன்றோ? உலகம் பொல்லாது என்றும் ஓதுவர். அவர்க்கு யான், என் மனோநிலை எனக்குத் தெரியும். என் மனோநிலை மாறுமென்று யான் நினைக்கவில்லை. ஒரு வேளை அது மாறுமாயின்,யான் பறைசாற்றி வெளிப்படையாக மறுமணஞ் செய்துகொள்வேன். யான் சீர்திருத்தக்காரன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இளமையிலாதல் சீர்திருத்த மணத்துக்கு என்னுள் சிறிது அச்சந் தோன்றும். இப்பொழுது அவ்வச்சமே கிடையாது. எவ்வித மணமும் யான் செய்து கொள்ளலாம். என்னைத் தடுப்பாரில்லை. உலகம் பலவிதம். அதற்கஞ்சி மனச்சான்றை விற்றலாகாது. அங்ஙனம் மனச் சான்றை விற்று இடர்ப்பட்டோர் கதைகள் உங்களுக்குந் தெரியும்; எனக்குந் தெரியும். ஒருவர் மனோநிலையை அறிபவன் ஆண்டவன் ஒருவனே. அவன் மனத்தை விடுத்துச் சேய்மையில் நிற்பவனல்லன். அவனுக்கு அஞ்சி நடப்பதே அறிவுடைமை என்று உங்களுக்கு விளக்கவேண்டுவதில்லை என்று பதி லிறுப்பேன். இவ்வாறு பலரிடம் பேசிப்பேசி மறுமணத்தை விலக்கலானேன். நாளேற நாளேற மறுமணப் பேச்சே ஒழிந்தது. நீத்தல் திரு.வி.க. மனைவியை இழந்தார்; மறுமணத்தையும் மறுத்தார். இனி எல்லாவற்றையும் கட்டிச்சுருட்டி வீசி எறிந்து எங்கேனும் போய்விடுவார் என்ற பேச்சுஞ் சில இடங்களில் எழுந்தது. எதை விடுவது! எங்கே ஓடுவது! என்ன செய்வது! தனுகரண புவன போகங்கள் எனக்கு எப்படிக் கிடைத் தன? அவைகளை யான் முயன்றா பெற்றேன்? அவை இயற்கை இறையின் கொடை. அக்கொடையின் நோக்கம் என்ன? அதைப் பயன்படுத்த வேண்டுமென்பதா? உதறித் தள்ளிவிட வேண்டு மென்பதா? உதறித் தள்ளுவதாயின் அஃது உயிரை அடைய வேண்டுவதில்லை. அஃது உயிரை அடைந்துள்ளது. ஏன்? பயன்படவே. இயற்கை இறையின் கொடையை நல்வழியில் பயன்படுத்தினால் மன மாசகலும். அதற்கென்று இல்வாழ்க்கை இயற்கையில் அமைந்துள்ளது. இயற்கை இறை எங்குமுள்ளது. எங்குமுள்ள ஒன்றுடன் நாமிருக்கிறோம். அதை எப்படி விடுவது? எங்கே போவது? தனித்து நிற்க இயற்கை இறை இல்லாத இடம் உண்டா? பின்னைத் துறவு என்பது எது? துறவென்பது இயற்கையை வெறுப்பதன்று; மனத்திலுள்ள மாசை அகற்றுவது. மனமாசை அகற்றி மனத்தைப் பண்படுத்துங் கருவி இல்வாழ்க்கை. கலைகள், இயற்கை இறை எங்கும் உள்ளதை உணர்த்து கின்றன. அவ்வுணர்வு இல்வாழ்க்கையில் ஆக்கம் பெறுகிறது. அவ்வாழ்க்கையில் ஈடுபட்டுப் பண்பட்டவர் எதை விடுதல் கூடும்? எங்குப் போதல் கூடும்? விடுவதும் இயற்கை இறை; ஒன்றைப் பற்றுவதும் இயற்கை இறை; எங்குப் போனாலும் அங்கும் இயற்கை இறை. எதை விடுவது? எங்குப் போவது? ஒன்றை விடுவது என்பதும் ஓரிடம் போவது என்பதும் வெறும் பேச்சு; வீண் பேச்சு. தொண்டு எங்குமுள்ள இயற்கை இறையின் நோக்கும், அதன் கொடையாகிய தனுகரண புவன போகங்களின் நோக்கும் கற்றல், கேட்டல், நல்லாரிணக்கம், வழிபாடு முதலிய வாற்றான் ஒரு வாறு விளங்கும்; இல்வாழ்க்கையில் நன்கு விளங்கும். இல் வாழ்க்கை, தொண்டை இன்னதென விளக்கும். தொண்டு இருவகை. ஒன்று பயன் கருதுவது; மற்றொன்று பயன் கருதாதது. முன்னையது இல்வாழ்க்கையில் தலைப்படு தற்கு முன்னர் நிகழ்வது; பின்னையது அவ் வாழ்க்கையில் தலைப்பட்ட பின்னர்ப் படிப்படியே நிகழ்வது. இஃது அநுபவம். பயன் கருதாத் தொண்டை அறிவுறுத்தும் நூல்கள் பல. அவைகளுள் நம் நாட்டு நூல்கள் இரண்டு. அவை பகவத் கீதையும் திருக்குறளும். இரண்டும் இல்வாழ்க்கையினரால் அருளப்பட்டவை. கீதையைக் கேட்ட ஒருவரும் இல்வாழ்க்கை யினரே. எல்லாவற்றிற்கும் அடிப்படை இல்வாழ்க்கை. அத்தகை வாழ்க்கைத் துணையை எளிதில் மறத்தல் இயலுமோ? என் மனைவி இறந்து படுவாளென்று எவர்க்குத் தெரியும்? அவளுக்குந் தெரியாது; எனக்குந் தெரியாது; ஒருவனுக்குத் தெரியும். உலகத்தை இயக்குவோன் அவன். எது எந்த எந்தக் காலத்தில் நிகழ்தல் வேண்டுமோ அது அது அந்த அந்தக் காலத் தில் நிகழுமாறு அருள் செய்வோன் அவன். அவனே பரன். மனைவியின் மரணத்துக்கு முன்னரே யான் பல தொண்டு களில் - பலதிறத் தொண்டுகளில் - ஈடுபடும் வாய்ப்புக்கள் நேர்ந்தன. அத்தொண்டுகள் இமயமாயின. இமயத் தொண்டை யான் தாங்குங் காலத்தில் அருமை மனைவி இவ்வுலக வாழ்வை நீத்தாள். இமயத்தைத் தாங்குவதில் கருத்துச் செல்லாதிருக்கு மாயின் என் நெஞ்சம் என்ன ஆகியிருக்குமோ? என்னுடல் என்ன ஆகியிருக்குமோ? மனைவியின் மரணத் தறுவாயில் இமயத் தொண்டைக் கூட்டியது பரமன் அருளன்றோ? பெண்ணுலகத் தொண்டு என் ஆருயிர் அமுதம் கமலாம்பிகை என்னுடன் வாழ்ந்து, என் மனத்தைப் பலவழியிலும் பண்படுத்திப் பெண்ணின் பெருமை முதலிய செல்வங்களை எனக்கு வழங்கி மறைந்தனள். என் வாழ்க்கைத் துணைக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன். ஏழை என்ன நன்றி செலுத்த வல்லேன்? பெண்ணின் பெருமை விளங்க-இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபட உறுதிகொண்டேன்; அதற்கென்று என் வாழ்வை அர்ப்பணஞ் செய்துள்ளேன். எனது இயற்கை உணர்வு பெண்ணை வெறுப்பதன்று. யான் பள்ளியை விடுத்ததும் அவ்வுணர்வுக்குச் சிறிது அசைவு உண்டாயிற்று. அது செயற்கை. எனது இல்வாழ்க்கை அச் செயற்கைப் பேயை ஓட்டிற்று. அவ்வாழ்க்கை எனது பொதுமைப் பெண்ணுலகத் தொண்டைச் சிறப்பாக்கியது. பலதிறத் தொண்டுகளுடன் பெண்ணுலகத் தொண்டைச் சிறப்பு முறை யில் நிகழ்த்த இப்பிறவியைத் தந்த இயற்கை இறையையும், அதற்குத் துணை நின்ற என் மனைவியையும் வாழ்த்துகிறேன். பெண் குழந்தைகள் என் வீடு நரம்பற்ற வீணையாயிற்று; கமலமற்ற பொய்கை யாயிற்று. அந்நிலையில் தமையனாரின் குழந்தைகள் மங்கையர்க் கரசியும் புனிதவதியும் குழல்களாயின. மங்கையர்க்கரசி பள்ளிக்கூடப் பாடல்களைப் பாடும்; ஆடும். அரசியின் சிங்கப் பாட்டை யான் அடிக்கடி கேட்பேன்; வீறுடன் பாடும். புனிதவதி மழலை மிழற்றும்; அஃது அமிழ்தமாகும். எங்கள் வீட்டுக்குத் தமையனார் மாமனார் மாமியார், எங்கள் பெரிய தமக்கையார் முதலியோர் அடிக்கடி வருவர். மங்கையர்க்கரசி அவருடன் செல்வதில்லை. புனிதவதியோ ஓடும்; அவர்கள் துணிகளை உடும்பெனப் பிடித்துக் கொள்ளும். அப்பிடியை எளிதில் நீக்க முடிவதில்லை. யான் அதட்டியுங் கடிந்தும் எப்படியாகிலும் பிடிப்பைத் தளர்த்தி விலக்குவேன். புனிதவதிக்கு வெகுளி தோன்றும், புனிதம் சீறும்; எவரிடமும் பேசாது; சோறுண்ணாது. அதன் மனத்தை மாற்ற யான் முயல்வேன்; இராஜதந்திரத்தைப் பயன்படுத்துவேன்; குழந் தையை என்னை அடிக்கச் சொல்வேன்; உதைக்கச் சொல்வேன்; கிள்ளச் சொல்வேன். புனிதம் திடீரெனப் பாயும்; என் மயிரைப் பிடித்து ஈர்க்கும்; என்னை அடிக்கும்; உதைக்கும்; தன் வஞ்சமெல்லாந் தீர்க்கும்; நாளேற நாளேற அபராதம் விதிக்கத் துவங்கியது; என்ன அபராதம் என்றால் ஒரு சமயம் ஒரு ரூபா என்னும்; இன்னொரு சமயம் பத்து என்னும் வேறு ஒரு சமயம் இருபது என்னும்; ஒருமுறை எழுபத்தைந்து விதித்தது. தொகையை எண்ணி எண்ணிக் கொடுப்பேன். சிற்சில சமயம் மீண்டும் தொகையைப் பக்குவமாகத் திரும்பப் பெற்றுவிடுவேன். இருவரும் வளர்ந்து சிறுமியராயினர்; தெருவில் போகும் பொருள்களில் சிலவற்றை வாங்க விரும்புவர். அப்பழக்கம் கெட்டது என்று தமையனார் கண்டிப்பர். அவைகளை நான் வாங்கிக் கொடுத்துவிடுவேன். பணம் தானே தமையனாரிட மிருந்து வந்துவிடும். குழந்தைகள் மனங்கோணாதவாறு வளர வேண்டுமென்பது என் கருத்து. அந் நிலையில் பெண் செல்வங் களின் தமையன் பாலசுப்பிரமணியனது பருவுடல் மறைந்தது. எங்கள் வீடு திங்களற்ற வானமாயிற்று. துன்பத்துக்கு மருந்து பாலசுப்பிரமணியன் எங்கள் குடும்பத்துக்கு ஒரே மைந்தன். அவன் பிரிவு எங்கள் வீட்டைத் துன்பக்கடலாக்கிற்று. அக் கடலில் எல்லாரும் அழுந்துவர். பெண்குழந்தைகள் அழுந்தல் இரங்கத்தக்கதா யிருக்கும். மங்கையர்க்கரசியும் புனிதவதியும் தம் முன்பிறந்தவனைத் தமது செல்வமென்றே கருதினர். உடன் பிறப்பு நேயம் உறுத்தியது. துன்ப நீக்கத்துக்கு என்ன மருந்து என்று எண்ணினேன். கவலை நீக்கத்துக்கு மருந்து இசை என்று படித்தோம். அதைச் சோதனை செய்து பார்ப்போம் என்று உறுதிகொண்டேன். இசையில் வல்ல ஒரு சகோதரியார்க்கு நிலைமை உணர்த்தப்பட்டது. அச்சகோதரி யார் ஒல்லும் வகை முயன்றார். அவர்தம் முயற்சி பெரிதும் வெற்றியே பெற்றது. துன்பத்துக்கு மருந்து இசை என்பது நன்கு விளங்கியது. பெண் குழந்தைகள் இருவரும் இசையுடன் வளர்ந்தனர். திருமணம் இருண்ட வானத்தில் திருமண வெள்ளி முளைத்தது. பெண்கள் திருமணத்தில் தமையனார் கருத்துச் சென்றது. மருகர் இருவரும் நம் வீட்டில் தங்குவதற்கு இசைபவரா யிருத்தல் வேண்டும். இதுவே என் நிபந்தனை என்று தமைய னார்க்குச் சொல்லிவிட்டேன். திருமணம் முதலில் மங்கையர்க் கரசிக்கு நடந்தது; பின்னே புனிதவதிக்கு நடந்தது. மங்கையர்க் கரசியின் கொழுநர் தோட்டாளம் அருணாசல முதலியார் புதல்வர் துரைசாமி முதலியார். புனிதவதியின் கணவர் வேலூர் யோகசிகாமணி முதலியார் புதல்வர் கண்ணபிரான் முதலியார். குழந்தைகள் மங்கையர்க்கரசியின் வழியே ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன:- கற்பகவல்லி, சிவயோகவல்லி, வசந்தகுமாரி (கண்மணி), இளம்பூரணன்,உலகநாயகி. புனிதவதி வழியே மூன்று குழவிகள் உதித்துள்ளன:- வனஜாட்சி: பொற்கொடி, சங்கரநாரயணன். ஆக எட்டுக் குழந்தைகள் வீட்டில் ஆடு கின்றன; பாடுகின்றன; ஓடுகின்றன; சிறுதேர் உருட்டுகின்றன; சப்பாணி கொட்டுகின்றன; தவழ்கின்றன; சிறுகைகளை நீட்டு கின்றன; என்னென்னவோ செய்கின்றன. என் தமையனார்க்குச் சந்தடி கூடாது. அவர் சந்தடியை வெறுப்பவர். வீட்டில் கூச்சல் எழுந்தால் தமையனாரைக் கண்டதும் அக்கூச்சல் அடங்கிவிடும். இப்பொழுதோ கூச்சல் அதிகம்; போடா பெச்சி தாத்தா; வாடா பெச்சி தாத்தா; மொட்டை மண்டை முதலிய முழக்கங்கள் அதிகம். பிள்ளை களை அடக்கிவிடலாம்; பேரரை அடக்கல் முடியுமா? எப்படிப் பட்ட மலையும் நகரல் வேண்டும். அப்பொழுது அவர் தந்தை யார்; இப்பொழுது பாட்டனார்; என் செய்வார்! பாவம்! அவர் உருட்டல் மருட்டல் ஒன்றுஞ் செல்வதில்லை. பேரக்குழந்தை களின் திட்டு அமிழ்தம்; அவைகளின் அடி ஆனந்தம்; உதை பேரானந்தம். எங்கள் வீட்டில் வீணையுங் குழலும் பெருகின. யான் படுத்துக்கொண்டு குழந்தைகளை ஆடச்சொல் வேன்; பாடச் சொல்வேன்; ஓடச் சொல்வேன்; கூவச் சொல்வேன்; ஒரே கூச்சல் எழும்பும். கற்பகவல்லியின் பாட்டும், சிவயோகவல்லியின் கூர்த்தமதியும், கண்மணியின் நடமும், இளம்பூரணன் சிங்கநோக்கும், உலகநாயகியின் தலையாட்டும் கைலாயமாகும்; வனஜாட்சியின் கிளிப்பேச்சும், பொற்கொடி யின் மழலையும், சங்கரநாராயணன் கைவீச்சும் வைகுந்தமாகும்; தெருவிலுள்ள குழந்தைகளும் கலந்து விளையாடும்; அக்காட்சி கந்தமாதனமாகும். பெண் மயம் tUnth® nghnth® ‘bg©Â‹ bgUik! என்பர். ஏன்? எங்கள் வீடு பெண் மயம். யான் இப்பொழுது குழந்தை களுடன் விளையாடுகிறேன்; யான் குழந்தையாகிறேன்; எனக்கு வயது அறுபது; யான் ஆறு வயது குழந்தையாகிறேன். பவானி இராயப்பேட்டைச் சகோதர சங்கத்தின் சார்பில் பல பள்ளிக்கூடங்கள் நடந்தன. அவைகளுள் ஒன்று பவானி பாலிகா பாடசாலை. அது தொடங்கப்பட்டபோது யான் ஆயிரம் விளக்குப் பள்ளியிலிருந்தேன்; பின்னே வெலி கல்லூரியில் சேர்ந்தேன். அதனால் தொடக்கத்தில் பவானி பாலிகா பாடசாலையிலே நேர்தொடர்பு கொள்ளல் இயலாமற் போயிற்று. யான் தேச பக்தன் ஆசிரியனானதும் பாடசாலை எனது நேர்பார்வையில் வந்தது. அதைப் பல வழியிலும் யான் புதுக்கினேன். பள்ளிக்கூடம் என் பார்வையில் வந்ததும் பழைய ஆசிரியன்மார் பலர் தாமே விலகினர். கும்பகோணத்தினின்றும் ஓர் அம்மையார் தலைமையாசிரியராக வரவழைக்கப்பட்டார். அவர்க்குப் பின்னே ஒரு கிறிதுவப் பெண்மணி தலைமை யாசிரியரானார். உடற் பயிற்சி ஆசிரியப் பதவிக்கு ஓர் ஆங்கிலோ இந்தியர் கிடைத்தார். உதவி ஆசிரியர் பலரும் பேராற்றல் வாய்ந்தவர். பொது நோக்குடையரால் ஆசிரியக் கூடம் அமைந்தது என்று சுருங்கச் சொல்கிறேன். ஒரு பேய் யான் வெளியூர்க் கேகியிருந்த வேளையில் சகோதர சங்க நிலையத்திலுள்ள இராயப்பேட்டை பாங்கின் கணிதர் ஒருவர் எப்படியோ சுப்பராய காமத்தை ஏமாற்றி ஒரு பேயைக் கொண்டு வந்து பள்ளியில் நுழைத்தனர். அப்பேயர் தலைமை யாசிரியர் உள்ளிட்ட பலரையும் மதிப்பதில்லை. அவர், யான் காரியதரிசியால் அமர்த்தப்பட்டவள் என்று ஆசிரியன்மாரை அச்சுறுத்தலாயினர். அவர் நடைமுறை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர்க்கு நன்முறையில் எச்சரிக்கை வழங்கி னேன். யான் காரியதரிசியால் அமர்த்தப்பட்டவள் என்றார். உடனே அவரை விலக்கினேன். அவர் காமத்தினிடஞ் சென்று முறையிட்டார். ஒன்றும் பலிக்கவில்லை. பின்னர் என்னிடத்தில் முறையிட்டார்; தமது வரலாற்றைக் கூறினார். அவர் தம் நிலை இரங்கத்தக்கதாகவே இருந்தது. பள்ளிக்கூடத்தின் நலனை நாட வேண்டுவது என் கடமை. நன்மதி கூறி அவரை வேறு வேலைக்கு அனுப்பினேன். நாட்டு மணம் பள்ளியை நாட்டு முறையில் நடாத்தி வந்தேன்; சென்னைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அப்பள்ளி விளங்குதல் வேண்டுமென்ற கருத்துடன் உழைத்து வந்தேன். ஈச பக்தியும் தேச பக்தியும் ஊட்டத் தக்க முறைகள் கோலப்பட்டன; திட்டங்கள் வகுக்கப்பட்டன. பாடல்களும் ஆடல்களும் நாட்டுப் பண்பை உயிர்ப்பிப்பனவாயிருக்கும். அங்கு ஒழுக்கக் கதைகளே நடமாடும். நாட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாத சுகாதார முறைகள் போதிக்கப்படும். நாட்டுப் பொருள்களில் பிள்ளை களின் நாட்டஞ் செல்லுமாறு நாட்டுப்பற்று அறிவுறுத்தப்படும். பள்ளியில் நாட்டு மணமே கமழும். சோதனையாளர் தொடக்கத்தில் பள்ளி, அரசாங்க உதவியை நாடவே இல்லை. காமத் நியூ இந்தியா தொடர்பை அறுத்துக் கொண்ட பின்னர்ப் பள்ளி அரசாங்க உதவியை நாடுவதாயிற்று. இதைப்பற்றிக் காமத்துக்கும் எனக்கும் கருத்து வேற்றுமையும் உண்டாயிற்று. கடைசியில் அரசாங்க உதவியை நாடுவதென்ற முடிவுக்கு வந்தோம். அதற்கெனச் செய்யப்பெற்ற விண்ணப் பத்தை முன்னிட்டுச் சோதனையாளர் போந்தனர். பள்ளி, அன்னிபெஸண்ட் அம்மையார் தொடர்புடையதென்றும், அரசியலார் சார்புடையதென்றும் நினைந்து அவர் செயலாற்று வது தெரியவந்தது. அரை நாள் பள்ளி அதமாயிற்று. ஆசிரியன் மார் கலக்கமெய்தினர். பகற்பொழுது யான் சென்றேன்; நிலைமையை உணர்ந்தேன். சோதனையாளரை அணுகி மெதுவாகப் பள்ளி சகோதர சங்கத்தின் சார்பினது என்றும், சங்கத் தலைவர் ஜடி சதாசிவ ஐயர் என்றும் சொல்லி மேலுஞ் சில கூற முயன்றேன். mj‰FŸ mt® ïu©L FHªij fis miH¤J, mt®fŸ ÉušfËYŸs mG¡Ffis¡ fh£o, ïij c§fŸ ‘rnfhju r§f« ftŤjjh? என்றார். யான் அயர்ந்து நின்றேன்; சுற்றுமுற்றும் பார்த்தேன். கரும்பலகையில் சோதனையாளர் கையால் வரைந்த கணக் கொன்று என் கண்ணிற்பட்டது. அதில் கருத்துச் செலுத்தி அதை ஊன்றி ஊன்றி நோக்கித் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தேன். சோதனையாளர் என்னைத் தொடர்ந்து வந்தனர்; அந்தக் கணக்கை ஏன் அவ்வளவு நேரம் உற்று உற்றுப் பார்த்தீர்? என்று கேட்டனர். யான் சிரித்தேன். சோதனை யாளர், எனக்குத் தமிழ் அறிவு குறைவு என்றார். கணக்கில் எழுத்துப் பிழைகளும், வேறு சில பிழைகளுமிருக்கின்றன என்றேன். அவர்தம் முகம் சுருங்கியது. எங்கள் பேச்சுத் தமிழைப் பற்றியதாயது. பெரும் உரையாடலாய் வளர்ந்தது. இருவரும் தமிழரானோம். சோதனை முற்றுப்பெற்றது. சோதனையாளர் ஆசிரியன் மாரைக் கூட்டிச் செய்யத்தக்க சில சீர்திருத்தங்களை விளக்கிக் கட்டிடத்தை மாற்றுமாறு என்னிடங் கூறினர். யான் அவர்க்கு நன்றி கூறி அவரை அனுப்பினேன். தலைமை ஆசிரியர், நீங்கள் என்னவோ மந்திரஞ் செய்துவிட்டீர். சோதனையாளர் மனம் எப்படியோ மாறியது? அவர் பசுவாயினரே என்று வியப் படைந்தனர். எல்லாம் தமிழ் மந்திரம் என்று சொல்லித் திரும்பினேன். பள்ளி நன்முறையில்அங்கீகரிப்பட்டது. ஆண்டுவிழா அப்பள்ளியின் ஆண்டு விழாக்கள் இராயப்பேட்டை யையே வளைக்கும். அஃது இராயப்பேட்டைக்கு உயிரெனத் திகழ்ந்தது. சகோதர சங்கங் குலைந்தது. பவானியும் மறைந்தாள். காரைக்குடி அப்பள்ளி நினைவு என்னை விட்ட கல்வதில்லை. பெண் மக்களுக்கென்று ஒரு பெருங் கல்லூரி தமிழ்நாட்டில் அமைதல் வேண்டும் என்று யான் எண்ணுவேன். யான் யாழ்ப்பாணஞ் சென்று இராமநாதன் பள்ளியைக் கண்டபோது அவ்வெண் ணம் வளர்ந்தது. அதற்குரிய முயற்சியுங் காரைக்குடி நண்பரிடங் கருக்கொண்டது. ஆனால் அஃது உருக்கொள்ளவில்லை. பலவகை இயக்கங்கள் தோன்றிக் காரையைச் சூறையாடின. மாதர் சங்கம் ஆயிரம் விளக்கினின்றும் வீடுநோக்கி வருங்கால் பீட்டர் ரோட் நல்ல காட்சி வழங்கும். சுற்றுப் பக்கங்களி லுள்ள பள்ளி ஆசிரியன்மார் பலர் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் நடப்பர்; இடையிடையே நின்று பேசுவர்; அப் பேச்சு, கூட்டத்தைச் சேர்க்கும். கூட்டத்தைத் தேக்குவதில் மார்த்தா என்ற அம்மையார் வல்லவர். அவர் தம் பேச்சு இனிமையா யிருக்கும். பாதைப் பேச்சுக் குளக்கரைப் பேச்சாக முதிர்ந்தது. குளக்கரை, ஆசிரியன்மாரை ஈர்க்கும். MáÇa‹ kh® gy® m§nf rha§fhy ntisÆš TLt®; Vnjnjh ngRt®; fiyt®; “ï¡T£l« V‹ xU r§fkhjš TlhJ? என்று ஒரு நாள் சொன்னேன். அது மார்த்தாவின் மனத்திலும், அவர் தம் துணைவர் மனத்திலும் நின்றது; ஒரு சங்கமாகியது. சங்கம் அவர் தம் வீட்டிலேயே அமைக்கப்பட்டது. சங்கத்தின் பெயர் இராயப்பேட்டை மாதர் சங்கம் என்பது. சங்க அங்கத்தவர் பெரும்பான்மையோர் கிறிதுவர். ஆடவர் சொற் பொழிவுக்கு மட்டும் அழைக்கப்படுவர். எனது சொற்பொழிவு அடிக்கடி நிகழும். யான் ஒருமுறை கிறிதுவும் பெண்மையும் என்ற பொருள்பற்றிப் பேசினேன். அது கிறிதுவ உலகைக் கலக்கியது. என் பேச்சைக் கேள்வியுற்ற பாதிரியார் ஒருவர் வேறு ஒரு கூட்டத்தில் என் கருத்துக்களைத் தலை கீழாக்கி மறுத் தாராம். மறுப்பு வரம்பு கடந்து சென்றது என்று சங்கத்தார் பலர் கருதினர். கிறிதுவும் பெண்மையும் என்பதைத் தெளிவு செய்யுமாறு சங்கத்தார் என்னைக் கேட்டனர். அக்கூட்டத் துக்குப் பல பாதிரிமார் வரவழைக்கப்பட்டனர்; ஐரோப்பியக் கிறிதுவப் பெண்மணிகளுங் குழுமினர். அதில் யான் பெண்மை என்று சொல்லியது. குணத்தைக் குறிப்பது என்றும், பருமை வடிவத்தைக் குறிப்பதன்று என்றும் விளக்கிக் கிறிது பெண்மை நிலை எய்தினவர் என்பதை வலியுறுத்தினேன். அவர் பெண்மை நிலை எய்தாவிடின் பகைவர் அவரை ஏசியபோதும், அவரைச் சிலுவையில் அறைந்த போதும் அவர் சீற்ற முற்றிருப்பரென்றும், பெருமான் பெண்மை நிலை எய்தினமை யான் சீற்றமுறாது கொலைஞரையும் மன்னிக்குமாறு ஆண்டவனை நோக்கி வேண்டுதல் செய்தனரென்றும் விரித்துப் பேசிச் சுவிசேஷத்திலிருந்து பல மொழிகள் எடுத்துக் காட்டி னேன். பரிசுத்த ஆவியென்பது அருள் என்னும் பெண்மை என்பதை விளக்கினேன். கிறிது மணவாளன் என்பதற்கும், யான் கூறும் பெண்மைக்கும் தொடர்பில்லை என்று தெளிவு செய்தேன். பெண்மக்கள் ஏறக்குறைய அனைவரும், ஆடவர் பலரும் என் கொள்கையை ஏற்றனர். மறுப்பறைந்த பாதிரியார் மனமாற்றம் அடைந்தாரில்லை. யான் பின்னே அரசியல் துறையில் இறங்கியதை அச்சங்கம் விரும்பவில்லை. யானும் அச்சங்கஞ் செல்லா தொழிந்தேன். கைம்பெண் ஜடி சதாசிவ ஐயரிடம் பலவகை உதவி பெறப் பல திறத்தினர் வருவர். எளிய கைம்பெண்களும் வருவார்கள். இவர்கட்கென்று ஏதேனும் ஓர் அமைப்பிருந்தால் அது நிலைபேறான உதவியளிப்பதாகும் என்று அடிக்கடி ஐயர் சொல்வர். அச்சொல் வீணாகவில்லை; சிறு முயற்சியாகியது. சிறு முயற்சி சௌந்தர்ய மஹாலில் (1920) ஒரு கூட்டமாய்த் திரண்டது. அக்கூட்டத்தில் தலைமை பூண்டவர் ஸர்.வேங்கட ரத்தினம். லேடி சதாசிவ ஐயரும் யானும் பேசினோம். என் பேச்சினிடை ஓர் அம்மையார் எழுந்து, பெண்களுக்குரியதைப் பெண்களே பேசி முடிவு காண்டல் நல்லது. Ú§fŸ V‹ áuk¥gL»Ö®fŸ? என்று கடாவினர். தலைவர், ஆண்கள் தலையிடலாமா? தலையிடலாகாதா? என்று பெண்களை மட் டும் வாக்களிக்குமாறு கேட்டனர். கேள்வி விடுத்த அம்மையார் தவிர மற்றவரெல்லாம், ஆண்களுந் தலையிடலாம் என்றே தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பேசத் தொடங்கினேன். மீண்டும் அம்மையார் கிளம்பினார். ‘kidÉia ïHªj Ú§fŸ xU if«bg©iz kzŠbrŒJ eh£L¡F eštÊ fh£l V‹ K‰glyhfhJ? என்று வினவினர். தலைவர் ஆணை பெற்று, இக்கூட்டம் விதவை மணத்தை மட்டுங் குறிக்கொண்டதன்று; விதவைகளின் வேறு பல நலன்களையுங் குறிக்கொண்டது. உங்கள் மனம் மணத்தின் மீது மட்டுஞ் செல்கிறது. விதவை மணமே கூடாது என்னுங் கட்சியில் யான் சேர்ந்தவனல்லன்; கைம்மை மணத்துக்கே பயன்படல் வேண்டும் என்னும் எண்ணமுடையவனுமல்லன். மணம் அவரவர் விருப்பத்தை யொட்டி நிகழ்வதாதல் வேண்டும். அதுவே கட்டாயம் என்று வலியுறுத்தல் கூடாது. மனைவியை இழந்த யான், என் மனம் விரும்பினால் கைம்பெண்ணையோ, வேறு எவரையோ மணஞ்செய்து கொள்வேன். அஃது என் மனோ நிலையைப் பொறுத்தது. உங்கள் மனம் பொதுமையிலே கிடந்திருக்கும். ஆனால் உங்கள் கேள்வி தனி மனிதரை யொட்டி எழுந்தது. யான் அதைப் பொதுமையாகவே கொள்ளலானேன். தனி மனிதன் உங்கள் உள்ளத்தில் நிலவவில்லை என்றே நினைக்கி றேன் என்ற கருத்துப் பொதுள விடையிறுத்தேன். பின்னே கூட்டம் செவ்வனே நடைபெற்றது. ஒரு சிறு அமைப்புங் காணப்பட்டது. அது வட நாட்டுக் கிளையொன்றுடன் ஒன்றியது. தாசிகள் வடநாட்டிலேயே பெண்களுக்கென்று (1919) ஒரு மகாநாடு கூடியது. அதில் தாசிகள் சேர்க்கப்படவில்லையாம். அதை மறுத்து அற்புதானந்த சுவாமிகள் தேச பக்த னுக்கு ஒரு கட்டுரை வரைந்து விடுத்தார். ஆசிரியக் கட்டுரை ஒன்றும் எழுதப்பட்டது. திருநெல்வேலியினின்றுஞ் சில கட்டுரைகள் வந்தன. அங்கே ஒரு மகாநாடுங் கூட இருந்தது. சாதிவெறியால் அது குலைக்கப்பட்டதென்று கேள்வியுற்றேன். தாசி யார்? தேவடியாள் யார்? பொருள் வெளிப்படை. இரண்டும் நல்ல பொருளுடையன. பின்னே அவை வேறு பொருள் பெறலாயின. அச்சகோதரிகளை வழுக்கி வீழ்ந்தவர் (Fallen Sisters)’ என்று காந்தியடிகள் சொல்வது வழக்கம். அவ் வாட்சியை யானுங் கொள்ளலானேன். பெண்ணுலகில் வழுக்கி வீழ்தல் நேர்தலுக்கு ஆணுலகிலுள்ள விலங்கு நீர்மையே மூலம் என்று அடிகள் பேசுவர்; எழுதுவர். அப்பேச்சும் எழுத்தும் நாட்டில் நல்லுணர்ச்சியை எழுப்பின. அவை எனது முயற் சிக்குத் துணையாயின. கபாலீச்சுரத்தில் நீறணிந்து சிவப் பொலிவுடன் தாசிகள் வருவார்கள். அந்நிலையிலும் அவர்களைச் சிலர் விலங்குணர் வுடன் நோக்குவர். இச்சகோதரிகள் ஏன் பொட்டுக் கட்டிப் பதியிலார் என்னும் பெயரைத் தாங்குதல் வேண்டும்? பதியிலார் என்னும் பெயரே இவர்களைப் பாழ்படுத்துகிறது. இவர்கள் மணவாழ்க்கை ஏற்பது நலம். இவர்களை மணக்க ஆடவர்க்கு அஞ்சாநெஞ்சம் வேண்டும். இவர்களை மணக்க வெளி வருவோரே சிறந்த சீர்திருத்தக்காரராவர்; நாட்டுக்கு நலஞ் செய்வோராவர் என்றெல்லாம் எண்ணுவேன். அவ்வெண்ணம் பின்னாளில் தேசபக்தனில் ஒரோ வழி எழுத்தாய்ப் பரிணமித்தது. மாயவரம் மாயவரத்திலே நாக பாசத்தார் சங்கம் என்றொன்று காணப்பட்டது. அது பின்னே இசை வேளாளர் சங்கம் என்று மாற்றப்பட்டது. அச்சங்கத்துக்குத் தூண்போன்றவாரயிருந்தவர் மூவலூர் இராமாமிர்த அம்மையார். அவ்வம்மையாரை யான் முதல் முதல் நவசக்தி நேயராகவே கண்டேன். நாளடைவில் அவர் தாம் போகும் இடங்களிலெல்லாம் நவசக்தி யைப் பரப்பாமலிரார்; அதை முதல் தொண்டாகவுங் கருதினார். தஞ்சையிலே மாயவர வட்டம் ஒரு சிறந்த காங்கிர கோட்டையாயிற்று. அக்கோட்டையைக் காத்து வந்த வீரர் சிலர். அவருள் இராமாமிர்தமும் ஒருவர். அந்நாளில் அவர்க்குக் காந்தியம் இனித்ததுபோல் வேறொன்றும் இனித் திராது. நூல் நூற்பதில் இராமாமிர்தம் பேர்பெற்றவரானார். தஞ்சை ஜில்லாவில் காங்கிர தொண்டாற்ற யான் செல்லுமிடங்களி லெல்லாம் அம்மையாரைக் காணாமலிருத்தல் அரிது. மகாநாடு இராமாமிர்தம் முன்னணி வேலை செய்வதில் வல்லவர்; திறமை வாய்ந்தவர். அவர் எங்கே சென்றாலும் வழுக்கி வீழ்ந்த சகோதரிமார் கூட்டம் அவரைச் சூழும். அச்சூழல் வாயிலாகக் குறைகள் வெளியாகும். குறைகள் அம்மையாரால் திரட்டப் படும். பெண்ணுலகில் நேர்ந்த வழுக்களைப் போக்கவந்த கற்பகம் இராமாமிர்தம் என்றே யான் நினைத்தேன். அக்கற்பகம் மாயவரத்தில் (1925) ஒரு மகாநாடு கூட்ட முயன்றது. இசை வேளாளர் மகாநாடு கூட்டுதல் எளிதன்று. அதன் அருமைப்பாட்டை யான் நன்கு உணர்ந்தவன். இராமாமிர் தத்தின் முயற்சி அருமையை எளிமையாக்கிற்று. மயூரமணி சின்னையா பிள்ளை, எ.இராமநாதன் முதலிய காங்கிர காரர் சகோதரியார் முயற்சிக்குத் துணை நின்றனர். முதலில் எனது தலைமை விரும்பட்டதென்று தெரியவந்தது. இசை வேளாளருள் ஒருவர் தலைமை பூண்பேத சிறப்பு. மகா நாட்டை உடனிருந்து யான் நடத்துவேன்; நவசக்தியில் முழு ஆதரவு தருவேன் என்று மொழிந்து விடுத்தேன். வழுக்கி வீழ்ந்தவர் முன்னேற்றத்துக்கென்று, யுவதி சரணாலயம் என்ற ஒரு பள்ளி அமைத்து, அதை நன்முறையில் நடாத்திவந்த யாமுன பூரண திலகம்மா என்னும் ஓர் ஆந்திர அம்மையார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரையும் தண்டபாணி பிள்ளை யையும் எழும்பூரில் சந்தித்தேன். எல்லோரும் மாயவரஞ் சேர்ந்தோம். இராமசாமி நாயக்கரும் எங்களுடன் கலந்தனர். எங்களை வரவேற்க இசை வேளாளர் குழு திரண்டிருந்தது. அவர் முகங்களில் நிலவு பொழிந்தது. இராமாமிர்தத்துக்கு ஆனந்தம். நம்முடைய எண்ணம் ஈடேறிற்று. தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் பிறந்தது என்று யான் இறுமாப்படைந்தேன். எல்லாரும் கூறை நாட்டுக்குப் போந்தோம். மகா நாடு காலையில் முறைப்படி நடந்தது. பிற்பகல் மகாநாடு பேச்சுக்கென்று கூடியது. யான் முதலில் பேசினேன். நீண்ட காலம் என்னுள் அடங்கிக் கிடந்த ஆர்வம் பொங்கியது. பலநாள் எண்ணிய எண்ணங்களெல்லாம் மிடைந்து குமுறிக் குமுறி வெளிவந்தன. யான் ஒருபோழ்து எரிமலையானேன்; இன்னொருபோழ்து அருவியானேன். மற்றொருபோழ்து பொய்கையானேன்; முடிவில் தென்றலானேன்; வழுக்கி வீழ்ந்தவரின் உலக வரலாற்றைச் சுருங்கச் சொன்னேன்; நமது நாட்டில் அவர்தம் வரலாறு பிறந்த விதத்தை ஒருவாறு விளக்கினேன்; அவர் கோயில் புக நேர்ந்தமையைக் கூறினேன்; அவர் கண்ட இசையும் நாட்டியமும் வளர்ந்த திறத்தை எடுத்துக் காட்டினேன்; அவர் தம் நிலை குலைந்தமைக்கு ஏதுக்களாக நின்றவைகளை வெளியிட்டேன்; இந்நாளில் கண்மூடி வழக்கங்களை யெல்லாம் மண்மூடச் செய்தல் வேண்டுமென்றும், பொட்டுக் கட்டலை அறவே தொலைக்க முற்படல் வேண்டுமென்றும், யாவரும் மணவாழ்க்கையில் தலைப்பட உறுதிகொள்ளல் வேண்டு மென்றும்அறிவுறுத்தினேன்; முடிவில் சகோதரிமாரை விளித்து, நீங்கள் யார்? உங்கள் பெருமை என்ன? நீங்கள் கலைமகளின் கூறுகள்; இசைக்கலையின் நிலைக்களன்கள்; உறைவிடங்கள்; அது சுரக்குமிடம் நீங்கள். இறைவன் எங்கே இருக்கிறான்? அவன் பொதுவாக எங்கும் இருக்கிறான்; சிறப்பாகக் கலைகளில் இருக்கிறான்; இசைக் கலையில் இருக்கிறான்? இறைவன் ஏழிசையாய் இசைப்பயனாயிருக்கிறான் என்று பரவையார் கேள்வர் அருளியதை நினைந்து பாருங்கள். உங்கள் உள்ளம் கோயில்-இசைக் கோயில். அதில் மாசு படர்தலாகாது. இவ்வேளையில் உங்கள் உள்ளம் எப்படி இருக்கிறது? உங்களில் அழகுக் கடவுளின் ஒளி கால்கிறது. அவ்வொளியை யான் காண்கிறேன். அதை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். நீங்கள் என்றுங் கலைக் கோயிலாக விளங்குவீர்களாக. வணக்கம்; வணக்கம் என்றேன். மகாநாடு பூம்பொழிலாயிற்று. சகோதரி மார் சித்திரப் பதுமையாயினர். இன்னும் யானே அந்நிலையை வருணித்தல் கூடாது. எனது சொற்பொழிவு இரண்டேகால் மணி நேரம் நிகழ்ந்தது. அஃது இரண்டேகால் நிமிடமென ஓடியது. பின்னே இராமசாமி நாயக்கர் எழுந்தார்; என் நண்பர் கலைஞர்; அநுபவமில்லாதவர். யான் அநுபவமுடையவன் என்று தோற்றுவாய் செய்து பச்சைப் பச்சையாகப் பேசினர். தலைவர் முகம் கூம்பிற்று; மற்றவர் முகங்களுஞ் சூம்பின. கூட்டத்தில் மலர்ச்சி மறைந்தது. தலைவர்க்கும் சகோதரிமார் சிலர்க்கும் கடிதப் போக்கு வரவு நடந்தது. நாயக்கர், என் பேச்சை நீங்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது என்று உரைத்துக் கதர் பிரசாரஞ் செய்தனர். அவரைத் தொடர்ந் தெழுந்த தண்டபாணி பிள்ளை கிறிதுவ இரட்சண்ய சேனையில் சிலர் சான்று கூறுவதுபோல நாயக்கர் பேச்சுக் கெல்லாம் சான்று கூறினர். நகைச்சுவை அவர் பேச்சில் வழக்கம்போலப் பொதுளியது. அறிக்கைகள் அன்று மாலை அறிக்கைகள் திரட்டப்பட்டன. அவைகள் வெளிவரவில்லை. நினைவிலுள்ள சிலவற்றையும் இங்கே எப்படிக் கூறுதல் கூடும்? பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது வழக்கமன்றோ? இங்கே மூன்று சோற்றைப் பதத்துக்குக் காட்டுகிறேன். ஒரு பெரும் நிலக் கிழவர். அவர் தம் வைப்பாட்டி ஓர் இசை வேளாளப் பெண் மகள். அவள் கருவுற்றனள். கருவைச் சிதைக்கக் கிழவர் முயன்றார். முயற்சி வெற்றி பெறவில்லை. குழந்தை பிறந்தது. கிழவர் ஆணையும் உடன் பிறந்தது. என்ன ஆணை! தாயைப் பார்த்து, இக்குழவியைக் காவேரியில் எறிந்துவிட்டு மறுவேலை பார் என்றார் கிழவர். ஈன்ற தாய் என்ன செய்தாள்? குழவியை ஓரிடத்தில் சேமித்து வைத்துக் கிழவர் ஆணைப்படி நடந்ததாகப் பொய் கூறினாள். இஃதோர் அறிக்கையின் சுருக்கம். இசை வேளாளர் சங்கத் தொண்டின் பயனாக ஒரு சகோதரி மனந் திரும்பினள். அவள் ஆசிரியத் தொழில் மீது நாட்டங்கொண்டாள். அதை உணர்ந்த மிராசு தாரர் ஒருவரது வெறி அவளது அழகிய முகத்தைக் கீறிக் கீறிக் கேடு செய்தது. இஃதோர் அறிக்கையின் சாரம். ஓரிளம் பெண்மணி. அவள் முகத்தில் அறிவு ஒழுகுகிறது. அவளைக் கண்டதும் அம்மா! நீர் பள்ளியிற் சேர்ந்து படிக்கின்றீரா என்று கேட்டேன். படிப்பா என்று கண்ணீர் உகுத்தாள். யான் தேறுதல் கூறி மேலுங் கேட்டேன். யான் உயர்தரப் படிப்பை நினைத்தல் முடியுமா? வெளியூர்க் கேகல் முடியுமா? தலை போய்விடும். இப்பொழுதும் காவல் தெரு விலுண்டு என்றாள். உன் தலையை வாங்குவோர் எவர்? என்று வினவினேன். பக்கத்திலிருந்த மற்றொரு சகோதரி, ஒரு பெயரைச் சொல்லி, இம்மடாதிபதி என்றாள். என் பேனா கீழே விழுந்தது. இஃதோர் அறிக்கையின் கருத்து. அறிக்கைகள் பலரால் எடுக்கப்பட்டன. அவைகள் வெளி வந்தால் பல உண்மைகளைச் சீர்திருத்த உலகம் அறிந்து தக்க முறையில் கழுவாய் தேடப்புகும். மறுநாள் காலை சீர்திருத்தப் பேச்சுக்கள் பேசப்பட்டன. சில தீர்மானங்கள் நிறைவேறின. மகாநாட்டு நடைமுறைகள் வழுக்கி வீழ்ந்தோர்க்கு ஒருவிதப் புத்துணர்ச்சியை உண்டு பண்ணின. காஞ்சி மாயவர இசைவேளாளர் மகாநாட்டை அடுத்துக் காஞ்சியில் எனது தலைமையில் தமிழ்நாட்டுக் காங்கிர (மாகாண அரசியல் மகாநாடு) கூடியது. அம்மகாநாட்டுக்கும் இராமமிர்தம் போந்து, காங்கிர தொண்டுடன் தஞ் சகோதரிமார் நலத்துக்குரிய பணியுஞ் செய்தனர். மூவலூர் 1926ஆம் ஆண்டில் என் பெரும்பொழுது காங்கர தேர்தல் பிரசாரத்தில் கழிந்தது. 1927ஆம் ஆண்டு மாயவரத்தில் ஈண்டிய ஜடி மகாநாட்டுக் கொட்டகையில் எனது தலைமையில் சன்மார்க்க மகாநாடுங் கூடிற்று. அதிலும் என் தலைமை யுரையில் வழுக்கி வீழ்ந்த சகோதரிமாரைப் பற்றிக் குறிக்கலானேன். அவர் நலத்தை மேம்படுத்தவல்ல தீர்மானங் கள் சிலவும் நிறைவேறின. அச் சன்மார்க்க மகாநாட்டுக்குப் பின்னர் நாயக்கரது பரபரப்பு இயக்கம் தோற்றமுற்றது. தொடக்கத்தில் அவ்வியக்கத்தின் மூளையாக எ. இராமநாத னும், நுரையீரலாக மயூரி மணி சின்னையா பிள்ளையும் விளங்கினர். மாயவரத்து மூளையும் ஈரலும் மூவலூரை ஈர்த்தன. ஆகாயவிமானம் - ஆமை மூவலூர் இராமாமிர்த அம்மையார்க்கு நாயக்கர் இயக்கம் ஆகாய விமானம் பறப்பதுபோல் தோன்றியிருக்கும்; எனது இயக்கம் ஆமை நகர்வது போல் தோன்றியிருக்கலாம். ஆளைப் பற்றிய கவலை எனக்குக் கிடையாது. வழுக்கி வீழ்ந்த சகோதரிமார் நலம்பெறுதல் வேண்டுமென்பது எனது உட்கிடக்கை. அந்நலம் எவர் வாயிலாகப் பிறந்தால் என்ன? பரபரப்பு? பரபரப்புக் கூடாதென்பது எனது கருத்தன்று. பரபரப்புத் தேவை. எப்பொழுது? எவைகட்கு? சிற்சில சமயம் அரசியல் தொழிலாளர் இயக்கங்கள் போன்றவற்றிற்குப் பரபரப்புத் தேவையே. சமூக சீர்திருத்தம் போன்றவற்றிற்க்குப் பரபரப்புத் தேவை என்று எனக்குத் தோன்றவில்லை. சமூக சீர்திருத்தத்துள் பெண்ணுலகைப் பற்றியதற்கும், அதினும் வழுக்கி வீழ்ந்த உலகைப் பற்றியதற்கும் பரபரப்புத் தேவை இல்லை என்பதும், அதை அமைதி வழியே இயக்கலாம் என்பதும் எனது கருத்து. யான் என் வழியே சீர்திருத்த இயக்கத்தை எளிய முறையில் நடாத்தலானேன். சில முயற்சி எளிய சகோதரிமார் நலங்கருதி யாமுன பூரணதிலகம் மாளால் நடத்தப்பட்ட யுவதி சரணாலயம் ஆக்கம் பெறல் வேண்டுமென்று முயன்றேன்; நவசக்தி வாயிலாக விண்ணப் பஞ் செய்தேன்; சீர்திருத்த மணங்களுக்கு ஊக்க மூட்டினேன்; கலப்பு மணத்தை வலியுறுத்தி வந்தேன். மனைவி உயிரா யிருக்கும்போது இன்னொருத்தியை மணக்க வருவோர்க்கு யான் ஆதரவு நல்குவதில்லை. இதனால் சிலர் வெறுப்புக்கும் யான் ஆளானேன். ஒரே குடும்பத்தில் பெண் கொள்ளல் கொடுத்த லும் எனக்குப் பிடிப்பதில்லை. மசோதாக்கள் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சென்னைச் சட்டசபையில் ஒரு மசோதா கொண்டுவந்தார். அது வழுக்கி வீழ்ந்தவரின் முன்னேற்றத்தைக் குறிக்கொண்டது; அச்சகோதரி மார் கோயில் பொட்டுக் கட்டுதலை நிறுத்தி மணவாழ்க்கைய ராதற்கு வழிகோலத் துணைபுரிவது. அம்மசோதாவுக்கு எதிர்ப்புக்கள் பிறந்தன; எங்கெங்கிருந்து பிறந்தன? குருட்டு நம்பிக்கையுடையவரிடத் திருந்துமட்டும் பிறக்கவில்லை; தேசீயப் பத்திரிகைகளிடமிருந்து பிறந்தன; தேசியவாதிகளிடமிருந்து பிறந்தன; சீர்திருத்தக்காரரென்று தம்மைப் பறைசாற்றிய வரிடத்திருந்தும் பிறந்தன. இங்கே அருண்டேல் - ருக்மணி திருமணம் நினைவுக்கு வருகிறது. சீர்திருத்த மேடைகளிலும் தியோசாபிகல் சங்கக் கூட்டங்களிலும் கலப்பு மணத்தைப் போற்றிப் பேசியவரும் அருண்டேல்-ருக்மணி திருமணத்தைத் தூற்றியதை யான் அறிவேன். அப்பொழுது யான் தேசபக்தன் ஆசிரியனாயிருந்தேன். யான் அருண்டேல்-ருக்மணி கலி யாணத்தை ஆதரித்தேன்; மணமக்களைச் சென்னைத் தொழி லாளர் சங்கத்துக்கு அழைத்துச் சென்று வாழ்த்துக் கூறி அனுப்பினேன். அப்பொழுது என் செயலும் சில தேசிய வாதிகளால் மறுக்கப்பட்டது. நம் நாட்டில் சீர்திருத்தம் உதட்டளவில் பேசப்படுகிறது. வழுக்கி வீழ்ந்த சகோதரிமாரின் முன்னேற்றங் கருதிய ஒரு மசோதாவுக்கும் எதிர்ப்பு எழுந்த தெனில் - அதுவும் தேசிய மணிகளிடத்திருந்தும் சீர்திருத்தச் செல்வங்களிடத்திருந்தும் எழுந்ததெனில்- நாட்டின் நிலையை என்னென்று கூறுவது? சமூகத்துக்கு வழுக்கி வீழ்ந்தோர் தேவையென்றும், அவர் கோயில் பணிக்கென்று படைக்கப் பட்டவரென்றும், அது சாத்திரச் சம்மதமென்றும் பத்திரிகை களில் எழுதப்பட்டன; கூட்டங்களில் பேசப்பட்டன. யான் நவசக்தி வாயிலாக முத்துலட்சுமி அம்மையார் மசோதாவுக்கு வரவேற்புக் கூறினேன்; கூட்டங்களிலும் என் கருத்தை வெளி யிட்டேன். இளமை மணத்தையொழிக்க எழுந்த சாரதா மசோதா வுக்கும் வழக்கம்போல மறுப்புக்கள் வீறிட்டன. அம் மசோதா என்னளவில் எவ்வளவு ஆக்கம் பெறவேண்டுமோ அவ்வளவும் பெற்றது. சட்டம் பெண்ணுலகில் படிந்துள்ள மாசுகளைக் களையச் சமூகமே முற்படுதல் நல்லது; சட்டங்கள் செய்வது விரும்பத்தக்க தன்று. ஆனால் சமூகம் முற்படாத நிலையில் சட்டங்களா லாதல் தீமையைக் களைதல் வேண்டும். சட்டங்களில் கருத்திருத்தல் இரண்டாந்தரமே யாகும். நேரிய இயக்கம் எழும்வரை சட்டத்தின் துணை கோடல் தவறாகாது. தொண்டும் பத்திரிகையும் நமது நாட்டில் சமய அமைப்புகளும் பிற அமைப்புக்களுஞ் செறிந்துள்ளன. அவைகளின் நாட்டங்கள் பெண்ணுலகத்தின் மீது செல்கின்றனவா? அவைகளால் தீமை விளையாதிருந்தால் போதும் என்று சொல்லும் நிலையில் நாடிருக்கிறது. இந் நிலையுடைய நாட்டில் ஆங்காங்குள்ள தொண்டர்கள் சங்கங் கள் கண்டு, அவைகளின் வாயிலாகக் கிளர்ச்சி எழுப்புதல் வேண்டுமென்று எழுதியுமிருக்கிறேன். பேசியுமிருக்கிறேன். அக்கிளர்ச்சிகளெல்லாம் ஒன்றுபட்டு அறப்புரட்சி நிகழ்த்து மென்பதும், சமூகத்தில் மறப்புரட்சி நுழைதல் கூடாதென்பதும், பெண்ணுலத்துக்கு அறப்புரட்சியே பொருந்தியதென்பதும் என் கருத்துக்கள். யான் சில தொண்டரைக் கண்டேன். இங்கே ஒருவர் நினைவு சிறப்பாகத் தோன்றுகிறது. அவர் உலகறிந்தவரல்லர்; நாடறிந்தவரல்லர்; ஆங்கிலமே தெரியாதவர்; தாய் மொழி யிலும் புலமை பெறாதவர். அவர் யார்? வாணியம்பாடி - பெரியபேட்டையில் வாழ்ந்த சண்முக முதலியார். அவரை 1919ஆம் ஆண்டில் அம்பலூரில் முதல் முதல் சந்தித்தேன். அப்பெரியார் வாணியம்பாடி - ஆம்பூர் வட்டத்தில் மாதருல குக்கு நல்ல சேவை செய்தவர். அவரால் பெரியபேட்டையில் பெண் பள்ளியொன்று நடத்தப்பட்டது; சில மாதர் சங்கங்கள் காணப்பட்டன. அவ்வட்டத்தில் யான் சென்றபோதெல்லாம் என்னை மாதர் சங்கங்களில் பேசச் செய்வர். பெண் மக்களின் சொத்துரிமைக் கிளர்ச்சி முதல் முதல் வாணியம்பாடி அன்பர் சண்முக முதலியாரிடத்திலேயே கருக்கொண்டது. பின்னே அஃது உருக்கொண்டு நாடு முழுவதும் நடம் புரிந்தது. ஆனால் அந்நடம் பிறந்த இடம் நாட்டுக்கே தெரியாது. மூலம் சண்முக முதலியாரின் விளம்பரமற்ற உழைப்பே யாகும். சண்முக முதலியாரின் மூளையில் அடங்கியிருந்த சீர்திருத்தங்கள், பஞ்சாப் கங்காராம் மூளையிலும், பூனா கார் மூளையிலும் அமைந்திரா என்று கூறுதல் மிகையாகாது. சண்முக முத லியாரைப்போல ஆங்காங்குள்ள அறிஞர் தொண்டாற்றப் புகுவரேல் பெண்ணுலகஞ் செம்மை யுறுதல் ஒரு தலை. தொண்டர் பத்திரிகை யுலகைப் பொருட்படுத்தலாகாது. பத்திரிகை விளம்பரங் கருதுவோர் சிறந்த தொண்டராதல் அரிது; சிறந்த சீர்திருத்தக்காரராதலும் அரிது. இழிவு போக்கல் பெண்மணிக்கு இழிவு நேருமாயின் அதைப் போக்க ஆண்மகன் விரைதல் வேண்டும்; இல்லையேல் அவன் ஆண் பிறவி எய்தியவனாகான். பெண் இழிவு காண என் மனம் பொறாது. இக்குணம் என்னிடத்தில் எப்படி அமைந்தது? மூலம் நூலராய்ச்சியோ? வீரர் சேர்க்கையோ? பிறவிக் கூறோ? எல்லாமுமோ? தெரியவில்லை. எப்படியோ அவ்வியல்பு என் னிடத்தில் அமைந்திருக்கிறது. அவ்வளவே யான் சொல்லுதல் கூடும். என் வாழ்வில் உற்ற நிகழ்ச்சிகள் பலப்பல. சிலவற்றை-மிகச் சிலவற்றைக் கூறுகிறேன். நியாயமோ? அநியாயமோ? நேயர்கள் ஆராய்வார்களாக. அறை என் பள்ளியாசிரியருள் ஒருவராகிய கிருஷ்ணராவுடன் யான் பாதை வழியே ஒருநாள் சென்று கொண்டிருந்தேன். அவ்வேளையில் ஒரு குதிரை வண்டிக்காரன் பெண்டாட்டியைச் சாட்டையால் அடித்தான். அவள் கதறினாள். கேட்பாரில்லை. கூட்டம் இல்லையா? கூட்டம் வேடிக்கை பார்த்தது. உணர்ச் சியே இல்லை. ஆசிரியர் வண்டிக்காரனைப் பார்த்து, அடே அடியாதே என்று அதட்டினார். அவன், நீ யார்? போம் என் றான். கொடுத்தார் அறை. மாணாக்கர் சூழ்ந்து கொண்டனர். போலிகாரனை அழைத்து வாருங்கள் என்றார் கிருஷ்ண ராவ். வண்டிக்காரன் பணிந்தான். அவனுக்கு நன்மதி கூறி, ஆசிரியப் பெருந்தகையார் அவ்விடம் விடுத்து நடந்தார். அக்காட்சி கண்டது என் கண். தத்தாரிகள் பெண்மணிகள் சிலர் தெருவில் நின்று பேசுவதுண்டு. வழியே தத்தாரிகளும் போவார்களல்லவோ? ஒருநாள் அவர்கள் இழிந்த பாட்டுகள் பாடினார்கள். அவைகளைத் தெருவில் பாடுதல் கூடாது என்று யான் தடை செய்தேன். அவர்கட்கும் எனக்கும் வாய்ப்போர் நடந்தது. அப்போது, இராயப்பேட்டை மல்லர் வடிவேல் முதலியார் தோய்த்த துணியைத் தலையில் முக்காடிட்டு உலர்த்தி வந்தார்; நிலை மையைத் தெரிந்து கொண்டார்; தத்தாரிகளைத் துரத்தித் துரத்தி அடித்தார்; நாய்கள் ஓடின. பின்னே அக்கூட்டம் தெருவில் பாடிச் செல்வதை ஒழித்தது. கல்லடி ஒரு கிழவர். அவர் அடியவர்; பூவெடுப்பர்; பூசை செய்வர்; கோயில் சுற்றுவர்; இளமையில் பெண் வேட்டையாடி பழுத்தவர்; முதுமையிலும் அக்குணம் அவரைவிட்டகல வில்லை. செயலுக்கு வயது இடந்தரவில்லை. அவர் பூவெடுக்குமிடத்திலும் கோயிலிலும் பிறவிடங்களிலும் பெண் பிள்ளைகளிடத்தில் களியாட்டுப் பேச்சுப் பேசுவர். வெளிப் படையாக எவரும் அவர் பேச்சை மறுப்பதில்லை. அவர் இரவில் குளிப்பர்; எப்படி? அரை நிர்வாணமாகக் குளிப்பர்; நடுவாசலில் நின்று குளிப்பர். அவ்வீட்டுப் பெண்மணிகளிற் சிலர் கிழவரைப் பொருட்படுத்தாது ஒதுங்கி ஒதுங்கி அப்படியும் இப்படியும் உழல்வர்; சிலர் நாணத்துடன் தெரு வாயிலில் தேங்குவர். இச்செயல் தெரு முழுவதும் பேசப்படும். என்ன செய்யலாமென்று நண்பரும் மல்லருமாகிய ஆரிமுத்து முதலியாருடன் கலந்து ஆலோசித்தேன். அவர் ஒரு நாள் இருட்டில் பெண்கள் தெருவில் தேங்காத சமயம் பார்த்துக், கிழவர் குளித்தபோது, கற்களை வாரி வீசினர். கிழவர் அலறினர். அங்கே இங்கே இருந்தவர் பலரும் உள்ளே ஓடினர். ஆரிமுத்து முதலியாரும் யானும் வீட்டினுள் நுழைந்தோம்; கிழவரை விசாரித்தோம். அன்று முதல் கிழவரது அட்டூழியம் ஒழிய லாயிற்று. மூர்க்கனும் பெண்டாட்டியும் ஒருநாள் நவசக்தி நிலையத்தின் எதிரிலே நடுத்தெருவிலே ஒரு மூர்க்கன் ஒருத்தியைக் கீழே தள்ளி உதைத்தான். பெண் குரல் கேட்டது. யான் தியாகராய முதலியாருடன் ஓடிப் பார்த்தேன். தியாகராயர் நிறுத்து, மீண்டும் அடி பார்ப்போம்; உதைப்படுவாய்; எச்சரிக்கை என்றார். என் பெண்டாட்டி என்று மூர்க்கன் அவள் மயிரைப் பற்றினான். தியாகராயர் அவனது ஒரு கையைப் பிடித்தார்; யான் மற்றொரு கையைப் பிடித்தேன். கூட்டம் பெருகியது. ஒருவரும் துணைக்கு வர வில்லை. ‘òUõ‹ bg©rhâ r©il; ït®fŸ V‹ jiy Ælš nt©L«? என்று எவரோ பேசியதுங் காதில் விழுந்தது. அந்நிலையில் சென்னை அரசாங்க மகம்மதியக் கல்லூரியின் உருது ஆசிரியரும், தோழருமாகிய சையத் அப்துல் காதர் உசேனி சாஹெப், எம்.ஏ.துணைக்கு வந்தார். பெண்மகள் விடுதலையடைந்தாள். மாமியும் மருகியும் அம்மன் கோயில் தெருவிலே ஒரு வீடு; அஃது என் நண்பருடையது. அவ்வீட்டுப் பின் புறத்தில் ஒரு சிலர் குடி யிருந்தனர். மாமி ஒருத்தி; பொல்லாதவள். அவள் மருகியைத் தொந்தரவு செய்பவள். ஒருபோது அவள் மருகியை சூடும் இட்டாள் என்று சொல்லப்பட்டது. ஒருநாள் மாமி மருகியை நன்றாகப் புடைத்தாள். மருகியின் தலையிலும் முகத்திலும் காயங்கள். இரத்த வெள்ளம். ஒரே கூக்குரல். கூட்டம் நுழைந்தது. அவ்வேளையில் நண்பரைப் பார்க்க அங்கே போனேன். இரத்தக் காட்சி என் மனத்தை உருக்கியது. யான் நேரே போலி நிலையம் சென்று நிலைமையை வெளி யிட்டேன். சப்இன்பெக்டர் என்னுடன் வந்தார். போலிஸார் வருகை எப்படியோ மாமிக்கு அறிவிக்கப்பட்டது. காயமுண்ட பெண்ணுக்கு என்னென்னவோ போதிக்கப்பட்டன. சப் இன்பெக்டர் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. இன்பெக்டர் பெண்ணை அழைத்து விசாரித்தார். அவள், பரண் கீழே யான் குப்பை கூட்டியபோது விறகுகள் சரிந்து என்மீது வீழ்ந்தன; காயங்கள் பட்டன என்றாள். இன்பெக்டர் நகைத்து மாமிக்கு எச்சரிக்கை வழங்கித் திரும்பினர். மருகிக்கு நாடோறும் நிகழ்ந்து வந்த அபிஷேகம் நின்றது. சந்நியாசியின் துணை முத்துமுதலி தெருவில் நண்பர் கோவிந்தராஜ முதலியார் வீட்டுக்கு எதிர் வரிசையிலேயுள்ள ஒரு வீட்டிலே அர்ச்சகன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டு நடையில் ஒரு மாது புதி தாகக் காணப்பட்டாள். புதுப் பெண்ணின் வருகை தெருவி லுள்ள சில பெண்களுக்கு விநோதமாகத் தோன்றுமன்றோ? அப்பெண் வரலாறு இப்பெண்கள் வாயிலாக எப்படியோ புகைந்தது. அப்பெண் ஒரு கிராமத்தான் மனைவியாம். அவள் ஓர் அர்ச்சகனை நம்பி வந்தவளாம். இச்செய்தி நண்பர் கோவிந்தராஜருக்குத் தெரிய வந்தது. அவரைக் காண யான் வழக்கம்போலச் சென்றேன். அவர் புதுப்பெண்ணின் நிலை மையை என்னிடங் கூறினர். அப்பொழுது ஒரு சங்கம சந்நியாசி சாதகம் பார்க்கிறது-ரேகை பார்க்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்தான். அவனை அழைத்தோம். அவனுக்குப் புதுப் பெண் வரலாற்றை அறிவித்தோம்; அப் பெண் தங்கியுள்ள வீட்டையுஞ் சுட்டிக் காட்டினோம்; அர்ச்சகர் இருவரும் வீட்டில் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம்; சாமர்த்தியமாக வேலை செய் என்று சந்நியாசியை விடுத் தோம். mt‹, ‘Û‹FŠR¡fh Ú¢R¡ f‰W¡ bfhL¤jš nt©L«? என்று சொல்லிக் கொண்டே போனான்; அவ்வீட்டில் நுழைந்தான். அவன் வித்தையைக் காட்டிப் பெண்ணிடம் இரண்டணா பெற்றுவந்து, இன்றிரவு அவள் ஊருக்குப் போய்விடுவாள் என்று எங்களுக்கு அறிவித்து ஏகினான். இரவு கடந்தது; பொழுது விடிந்தது. அர்ச்சகர் அங்கும் இங்கும் அலைந்தார். பெண்ணைக் காணோம். கிறிதுவம் புகல் ஒரு நண்பர். அவர் தம் முதல் மனைவி இறந்த பின்னர் மறுமணஞ் செய்தனர். முதல்மனைவியின் வயிற்றிற் பிறந்த ஓரே பெண் கைம்மை எய்தினள். அப்பெண் மாற்றாந் தாயால் சித்திரவதை செய்யப்பட்டாள். அவ்வதை தந்தையின் நெஞ்சைக் கொந்தும். மனைவியின் உள்ளத்தை மாற்ற அவர் எவ்வெவ் வழியிலோ முயன்றனர். பயன் விளையவில்லை. இப்படிப் பார்த்தால் மனைவி! அப்படிப் பார்த்தால் மகள்! என் செய்வார் பாவம்! அவர் தம் உடல் மெலிந்தது. அவரை ஒரு முறை கண்ட போது, ஏன் உடல் மெலிகிறது என்று கேட்டேன். அவர் வீட்டு நிலைமையைக் கூறி வருந்தினர்; மகள் வெளித் தாண்டுவளோ? j‰bfhiy brŒJ bfhŸtnsh? என்று ஐயுற்றனர். ‘kfŸ ÉU¥g¥go elªjhš ck¡F v‹d? என்று வினவினேன். கண்டவாறு கெடுவாளே என்று நண்பர் கலங்கி னர். அவர் கலக்கம் என்னையும் கலக்கியது. அவரது நோய்க்கு மருந்து காண எண்ணலானேன். ஒருநாள் நண்பரைப் பார்த்து என் கருத்திற் பட்டதைச் சொல்கிறேன்; அதைச் சிந்தனை செய்க; பெண் துன்பம் நீங்குதல் வேண்டும்; உமது கவலை தீர்தல் வேண்டும்; மகட்கு மறுமணஞ் செய்விக்க முயல்வது நல்லது என்றேன். mj‰F mt®, ‘r_f« ïlªjhuhnj’ v‹wh®; ‘ïlª jUŠ r_f¤J¡F¥ bg©iz mD¥g Ú® J åuh? என்று கடாவினேன். எனக்கு எவ்விதத் தடையுமில்லை. பெண்ணின் மனத்தைத் தெரிந்துக்கொள்ளல் வேண்டும் என்றார் நண்பர். அப்படியே செய்க என்று யான் சொன்னேன். நண்பர் கோழை. அவர் பெண் மனதைத் தெரிந்துக்கொள்ள விரும்பினரோ, அஞ்சினரோ, நாணினரோ தெரியவில்லை. பெண்ணின் மனத்தை உணர்தல் இயலவில்லை என்று எனக்கு அறிவித்தார். அவர் தங் கோழைமை எனக்குப் புலனாயிற்று. உமக்கு அஞ்சாமை இல்லை. ஜனானா போதனையைப் பற்றி நீர் கேள்வியுற்றிருக்கலாம். நம்முடைய பழைய நண்பர்... தமக்கையார் அந்த வேலை செய்பவருள் ஒருவர். உம் மகளுக்கு அவரைக் கொண்டு போதனை செய்விப்பது நல்லது என்று ஒரு வழி காட்டினேன். அதற்கு நண்பர் இணங்கித் தக்க ஏற்பாடு செய்தனர். ஒரு திங்கள் கழிந்த பின்னர் ஜனானா ஆசிரியரை யான் சந்தித்தேன்; பெண்ணின் அகம் பைபில் போதனையில் படிகிறதா? »¿ÞJt r§f¤âš nru m›tf«