திரு.வி.க. தமிழ்க்கொடை 4 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 4 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 19+309=328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை உள்ளொளி திவான்பகதூர் தெய்வசிகாமணியார் மணிவிழாப் பொழிவாக வெளிப்பட்டு, நூலாக்கம் பெற்றது உள்ளொளி. திரு.வி.க.வின் முழுதுறு ஈடுபாடு மட்டும் உள்ளொளிப் பொருள் அன்று. மணிவிழா நாயகரும், மணிமணியான கருத்துகளைக் கூர்ஞ் செவிகளுக்கு விருந்தாகக் கொள்ளத் தேங்கிக் கிடந்த பெருமக்களும் காரணர் ஆவர். இந்நாள் இப்படியொரு பொழிவு மணிவிழா மேடையில் நிகழின், செவிதருவார் ஓரைவர் ஒருபதின்மரேனும் ஒன்றி உளங்கூர்ந்து இருப்பரோ? பெரிய பெரிய ஆய்வரங்குகளில் தானும் இத்தகு செய்தி பொழிவுப் பொருளாய் அமைந்து ஆய்வு வல்லேம் என்பாரும் கேட்கும் நிலையைக் காணவும் இயலுமோ? திரு.வி.க. பேறுபெற்றவர்! ஏழுநாள் பொழிவு ஏற்பாடாம் மணிவிழாவுக்கு. அவ்வேழு நாள் பொழிவுகளில் முப்பொழிவு திரு.வி.க. பொழிவாம். அம்முப்பொழிவுகளும், உள்ளமும் உருவமும், உள்ளுணர்வும் வழிபாடும், உள்ளொளி என்பனவாம்! இம்மூன்று பொருளும் வெவ்வேறல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன; பொருள் வைப்புள்ள இடம் உள்ளொளியே எனத் தோற்றுவாயில் இத்தலைப்புகளின் இயைபை விளக்குகிறார் திரு.வி.க. உள்ளொளியே உயிர்; அதற்குக் கரணம் உள்ளுணர்வும் வழிபாடும்; அதன் உடல் உள்ளமும் உருவமும் என்றும் தெளிவிக் கிறார். உள்ளம் என்பது பலபொருள் ஒருசொல்; இங்கே உள்வதன் மேலது. உள்வது - நினைப்பது. உள்ளம் எது? மனம் என்பது உள்ளம் என்பதன் பொருள் விளக்கம். மனம் எங்கே இருக்கிறது? எனின் நெஞ்சத் தாமரையைக் காட்டுவர். ஆனால் மேல்நாட்டு அகத்திணையர் ஆய்வு, மனம் மூளையில் இருக்கிறது என்கிறது. மூளையில் ஏற்பட்ட கலக்கம் மனத்துக்கும் ஏற்படுகிறது. கவலையால் நரம்புத் தளர்ச்சியுறுவ துண்டு, அது மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பையும் தளர்ச்சியுறச் செய்யும். மூளைக் கோளாறு மனக் கோளாறு ஆகும். ஆகவே மூளை ஒழுங்கும், நரம்பு ஒழுங்கும், மன ஒழுங்கும் வாழ்வுக்கு இன்றியமையாதன என்பதை விளக்குகிறார். மனத்தின் கூறுகளை மேல் - நடு - அடி என்று மூன்றாகவோ, புறம் அகம் என்று இரண்டாகவோ கொள்ளலாம் என்னும் திரு.வி.க. மேல், நடு, அடி மனவியல்புகளைச் சாட்டுகிறார். பொல்லாத புறமனம் குவிந்து குவிந்து நடுமனமாகும். குறும்புச் சேட்டைகளினின்று படிப்படியே விடுதலையடையும். நடுமனம் நல்வழியில் செல்லச் செல்ல அதற்குப் புறத்தாக்குதல் படிப்படியே அற்றுப் போகும். நாளடைவில் அஃது அடிமனமாகும். அடிமனம் அரும்பும்போதே அஃது அறத்தின் உறையு ளாகும். எல்லா நலன்களும் முளையும் இடம் அதுவே. புறமனம் பொறி புலன்களின் கலப்புடையது. அதனால் அது கட்டு உடையதாகிறது. நடுமனமோ பொறி புலன்களின் கலப்பில்லாதது. அதனால் அதை எப்பொறியும் எப்புலனும் கட்டுப்படுத்துவதில்லை. மனவிளக்கம் எல்லார்க்கும் ஒருவித மாக உறுவதில்லை. விளக்கமே உறாத பிறவிகளும் உண்டு என்கிறார். நடுமன எழுச்சியை நல்வழியில் பயன்படுத்தினால் அடிமனம் முகிழ்க்கும்; அகக்கண் திறக்கும்; மானதக் காட்சி கூடும். பேத உணர்வு அருகும்; பொதுமை உணர்வு பெருகும்; பிறர்க்குத் தீங்கு நினைத்தல் அற்றுப் போகும்; உயிர்கட்குப் பயன் கருதாத் தொண்டு செய்வதில் ஊக்கம் பிறக்கும். ஒருவர் ஒரு மொழியில் வல்லவராய் ஒரு நாட்டில் இருப்பர். மற்றொருவர் வேறுமொழியில் வல்லவராய் இன்னொரு நாட்டில் இருப்பர். இருவர் உள்ளத்திலும் ஒரே கருத்துப் படிந்து அவரவர் மொழியில் அது வெளிவரும். காரணம் இருவர் அகக் கண்ணும் திறக்கப் பெற்றமையாகும். அகக் கண்ணர்க்கு மொழி வேற்றுமையுமில்லை. பிற வேற்றுமை களும் இல்லை. அற்புதங்கள் செய்வாரைத் தெய்வீகர் என உலகம் மயங்குவதைச் சுட்டி திரு.வி.க. எச்சரிக்கிறார். அற்புதத்தை மதிக்கும் பேதைமை, உலகை விட்டு அகலுதல் வேண்டும். அற்புதம் சிறந்ததா? போதனை சிறந்ததா? போதனையே சிறந்ததாம். அற்புதங்களைக் கொண்டு பெரி யோர்க்கு உலகம் மதிப்பளித்தலைக் கண்ட பௌராணிகம் அற்புதக் கதைகளைப் பெருக்கிவிட்டது. எனக்குத் தெரிந்த அளவில் பதினொருவர் தம்மை இராமலிங்க சுவாமிகள் என்று கரந்து கரந்து சொல்லித் திரிகின்றனர். அற்புதங்களுக்கு மதிப்பளித்தல் ஆன்ம ஞான முயற்சிக்குக் கேடு சூழ்வதாகும். அடிமனம் மலர மலர, காமன் எரியுண்பான்; காலன் உதையுண்பான்; பொய்யாயின எல்லாம் பொய்யாகும்; மெய்யாயின வெல்லாம் மெய்யாகும். அடங்கிய மனம் வறுக்கப்பட்ட நெல்லைப் போலவும் நஞ்சற்ற பாம்பைப் போலவுமாகும். அந்நிலையில் மனம் நல்லதாய்க் குரு போல உள்ளொளிக்குத் துணையும் செய்வதாகும் என மும்மன ஆய்வை முடிக்கும் திரு.வி.க. எண்ணம் உலகியலில் பாய்கிறது. இப்பொழிவு நிகழ்ந்த காலத்தில் அணுகுண்டு காணப்பட வில்லை என்பது எண்ணத்தக்கது. திரு.வி.க. கூறுகிறார்: தற்கால உலகம் எப்படி இருக்கிறது? அந்தோ! சொல்ல நா எழவில்லை. என்றும் காணாத கொடிய கொலைப் போரை உலகம் காண்கிறது; படாதபாடு படுகிறது; இன்னும் சின்னாளில் நாமெல்லாம் எங்கே இருப்போமோ? உற்றார் உறவினர் எங்கிருப்பரோ? வீடு வாசல்களும் கன்று காலிகளும் எந்நிலை அடையுமோ? எறிகுண்டுக்கலையும் பீரங்கிக் கலையும் நீர்மூழ்கிக் கலையும் அல்லவோ பெருவிவிட்டன? இவைகள் எல்லாம் தீய எண்ணங்களின் பரிணாமம் என்று இரங்குகிறார். அலையும் உள்ளத்திற்கு ஒரு கொழு கொம்பு தேவை. கொழுகொம்பு எது? உருவம்! உருவம்! உருவம்! என்று கூறி உருவ ஆய்வு செய்கிறார். உருவம் என்றதும் சிலர்க்கு எரி உண்டாகும். உருவம், அஞ்ஞானம் துக்கம் என்போர், தமக்குக் கை கால் கண் மூக்கு வாய் உண்டா இல்லையா என்று சிந்திப்பாராக என்று பலபல விளக்கம் தரும் அவர், உருவமற்ற ஒன்றை உணர்வதற்கும் உருவத் துணை தேவை என்கிறார். அறிவு அழகு காதல் முதலியன தன்தன் இருப்பை வெளிப்படுத்த உருவங்களை அவாவுதலைத் தெளியச் சொல்கிறார். உள்ளுணர்வும் வழிபாடும் என்னும் பகுதியே முப்பகுதி களில் விரிவுடையதாகும். உள்ளமும் உருவமும் ஒருநிலையில் மறைந்தொழிவன. அவைகளின் கூட்டுறவால் எழும் உள் ளுணர்வோ அவைகளுடன் மறைந்தொழிவதன்று என உணர்வின் சிறப்பை உரைக்கிறார். உள்ளுணர்வு வெளிப்பாடு வழிபாடு. உள்ளுணர்வு வளர்ச்சிக்கு ஒளி போன்றது வழிபாடு என்கிறார். கடவுள் உருவும் அருவும் அருவுருவும் ஆயது. இம்மூன்றும் உருவமுடையதே. சட உலகங்களை இயக்கும் ஒன்று சடமாக இருத்தல் ஆகாது. அது சடத்துக்கு மாறுபட்ட சித்து (அறிவு) ஆகும். இயற்கை கடவுளின் உடல். அதற்குள் கடவுள் உயிராக நின்று இயக்குகின்றது. உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலுமா? கடவுள் உயிர்; இயற்கை உடல். இயற்கை வழிபாடு நாளடைவில் செயற்கைச் செக்குகள் ஆயின. பொருளற்ற வெறுங்கிரியைகள் இயற்கை வழிபாட்டைச் செயற்கையாக்கின. புறவழிபாடு, அகவழிபாட்டுக்குத் துணையாவது; அகவழிபாட்டில் ஏறும் ஏணி அன்னது. அகவழிபாடே இறையோடு ஒன்றுவிப்பது. ஒன்றல் தனித்த ஒன்றில் நிகழாது. ஒன்றலுக்கு இரண்டு தேவை. ஒன்றுடன் ஒன்றலே ஒன்றல் என்னும் பொருளுடையதாகும். மனம் அடங்க யோகத்தில் தலைப்பட்டார், மூச்சைப் பிடிப்பதால் மனம் அடங்கக் கண்டனரோ? வலிந்து மூச்சைப் பிடித்தல் முதலிய யாவும் மூர்க்கத்தின் பாற்படும். பிராணாயா மத்திற் கென்று தனிமுயற்சி வேண்டுவதில்லை. நறுங்காற்று வீசுமிடத்தில் உலவி வந்தால் போதும்; அமர்ந்தால் போதும்; இயற்கை தன் கடனை முறை முறையே ஆற்றும். மனம் நினையாமல் வாய் மொழியாது; கை கும்பிடாது. மொழிக்கும் மெய்க்கும் அடிப்படை மனம்.தொடக்கத்தில் மனத்தை நிலைபெறுத்த, வாயும் மெய்யும் தொடர்ந்து வழிபாடு செய்தல் வேண்டும். நாளடைவில் வாயும் மெய்யும் ஓய்வு பெறும். மனம் ஒன்றே வழிபாட்டில் ஈடுபடும். இதுவே தியான யோகம் என்பது. இதற்கு ஒரு குறி வேண்டும். அக்குறி இறையை உணர்த்தும் தத்துவமுடையதாய் இருத்தல் வேண்டும். இதற்கு இயற்கையை அடைவோமாக என விளக்கும் திரு.வி.க. எடுத்துக் காட்டுகள் பலப்பல காட்டுகிறார். வேண்டும் சீர்திருத்தங்களுள் தலையாயது கோயில் சீர்திருத்தம் எனக் கூறும் திரு.வி.க. கோயில் சீர்திருத்தத்தில் இறங்குவோர் அன்பராய்த் தொண்டராய்த் தன்னல மற்றவராய் இருத்தல் வேண்டும் என்கிறார். என்னென்ன சீர்திருத்தம் வேண்டும் என்பதை, உத்தி யோகதரை வரவேற்றுத் தனிச்சிறப்புச் செய்யும் இழிவு, கோயிலினின்றும் அகலப் பெறல் வேண்டும். நான் பலியாகும் இடத்திலாநான் அந்தோ! அந்தோ! கோயிலுள் மரியாதை செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயல்வது பெருந்தொண் டாகும். அர்ச்சனையின் அடியில் என்ன இருத்தல் வேண்டும்? அன்பிருத்தல் வேண்டும்! ஆனால் என்ன இருக்கிறது? பணம்! பணம்! பணம் படமெடுத்து ஆடுகிறது! பணம் கொடுக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொருபோது தனித்தனியே அர்ச்சனை செய்யப்படவேண்டும் என்னும் நியதி யாண்டுள்ளது? எந்த ஆகமத்தில் உள்ளது? ஓவிய உருவைத் துப்புரவு செய்து, மலரணிந்து, குறித்த வேளையில், தூபதீப வழிபாடு மந்திர வழிபாடு முதலியன செய்து, பின்னைப் பட்டர் ஒருபக்கத்தில் அமர்ந்து ஒழுங்கு முறைகளைக் காத்து வர வேண்டுவது அவர்தம் கடமை. அன்பர்கள் மலராலோ பாட்டாலோ மனத்தாலோ எப்படியோ வழிபாடு நிகழ்த்திச் செல்வது முறைமை. இது பண்டைய வழக்கு. இடைநாளில் இவ்வழக்கு வீழ்த்தப்பட்டது. பணப்பேய் நன்முறையை வீழ்த்தியது. அன்பர்கள் நேரே வழிபாடு செய்யும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டால், கோயில் பலவழி யிலும் சீர்பெறும். நிதி நடமாடுமிடத்தில் நீதி நடமாடுதல் அரிது. பொருட் பெருக்கு கோயில்களில் களியாடல்களைப் பெருக்குகிறது. ஊழியர்களைக் கள்ளராக்குகிறது. ஒழுக்க ஈனராக்குகிறது. சொத்துகளை என்ன செய்வது? அவைகள் பறிமுதல் செய்யப்படல் வேண்டும். கோயில் பணிக்கென்று எவரும் பொருள் திரட்ட வேண்டியதில்லை. கோயில் பணிகள் கூலிகளால் செய்யபட லாகாது. அவைகள் அன்பர்களால் செய்யப்படல் வேண்டும். தர்மகர்த்தர்களையும் மடாதிபதிகளையும் மற்றவர் களையும் கெடுப்பது எது? கோயிலா? மடமா? கோயிலுமன்று, மடமுமன்று, அவர்களைக் கெடுப்பது சொத்து. ஏழைகள் நிலைகண்டு, இரக்கம் கொண்டு அவர்கட்கு உணவு உடை இடம் முதலியன அளித்தல் தொண்டாகக் கருதப்பட்டு வந்தது. இனி அக்கருத்து மாற்றமுறுவது நல்லது. தொண்டு என்று ஏழைக்கூட்டத்தைப் பெருக்கலாகாது. ஏழைக் கூட்டத்தைப் பெருக்குவதைப் பார்க்கிலும், ஏழ்மையைப் போக்க முயல்வது சிறந்த தொண்டாகும்; இது காலத்துக்கு ஏற்றதுமாம். உருவ வழிபாடு உயிர்கள் வழிபாடாக விரிவது என்று கூறும் திரு.வி.க. பிறவி தோறும் பயன்கருதாப் பணி செய்யும் பேற்றை யான்பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என இரண்டாம் பொழிவை நிறைவு செய்கிறார். உருவங்களை அடியார்கள் தொட்டு வழிபடும் பழமுறை தென்னகக் கோயில்களில் தந்நலக் கூட்டத்தாரால் ஒழிக்கப் பட்டாலும், வடநாட்டில் அனைவரும் வழிபடும் உரிமை இருப்பதைக் கண்டேனும் கண்ணுடையார் திருந்தமாட்டாரா? * * * * கோயிலுக்கு வரும் செல்வரையும் பணவரையும் பதவியரையும் ஓடிஓடிப் பல்லிழித்து நெளிந்தும் வளைந்தும் அருச்சகரும் அறங்காவலரும் வரவேற்கும் இழிமை - மானக்கேடு - சிறப்பிப்பா? தம் கேடு கெட்ட செயல்களை யெல்லாம் மறைப்பிக்கும் சூழ்ச்சியா? சிந்திப்பார் சிந்திக்க வேண்டாமா? * * * * அமிர்த சரசு பொற்கோயில் துடைப்பார் - கூட்டுவார் - கழுவுவார் எவர்? அவரவரே தம் பொறுப்பில் செய்வதை உணரமுடியாதா? * * * * ஐந்தாண்டு ஆட்சியைப் பற்றி வீற்றிருக்கத் தொண்டா அடிப்படை? தூய்மையா அடிப்படை? அள்ளி அள்ளி இலவயங்களை வழங்குவது எம் கொள்ளையை நடத்த முன்பணம் என்பது புரியவில்லையா? * * * * பசியாற்றல் உயர்வே; ஆனால் அப்பசியை அவரே மாற்றிக் கொள்ளும் வகையில் உழைப்புத் தருதல் உரிய மான முறை என்பதை, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்னும் வள்ளுவம் இந்த மண்ணின் அறவர் கொடை யல்லவா! * * * * திரு.வி.க. வேண்டிய சீர்திருத்தங்கள் அவர்காலத்திலும், இக்காலத்தில் ஒரு நூறுமடங்கு கட்டாயத் தேவையாம் என்க. நிறைவுப்பொழிவு, உள்ளொளி என்பது. உடல் நலம் பெறின் உள்ளம் தூயதாகும். தியான யோகத் துக்குத் தூய உள்ளம் தேவை. தூய உள்ளத்தால் இயற்கைக் கூறுகளையாதல், அவைகளின் நுட்பங்கள் அடங்கிய ஓவிய உருவங்களையாதல் தியானம் செய்யச் செய்யப் பலதிற ஒளிகள் படிப்படியே தோன்றித் தோன்றி, மறைந்து மறைந்து, இறுதியில் வாடாத உள்ளொளி விளங்கப்பெறும். உள்ளொளி நெஞ்ச மலரில் கோயில் கொள்ளும்; எங்கும் கோயில் கொள்வதாகும். மாசற்ற மனம் தீயொழுக்கத்துக்கு இரையாகாது. அது பிறர்குற்றத்தைப் பாராட்டும் நீசத்தைப் போக்கும். தன் குற்றத்தைக் கருதிக் கருதி அழச்செய்யும். அவ்வழுகையே முறையீடு என்பது. முறையீடு தியான யோகத்தின் உயிர்நாடி (தியானம் -உள்ளுகை) பாவஞ்செய்த இரும்பு மனம் - வன்னெஞ்சம் - மாண்டு போயிற்று. புதிய அன்புமனம் - அறநெஞ்சம்-தோன்றியது. பழைய ஆள் மாண்டான்; புதிய ஆள் பிறந்தான். ஒரே இறை ஒரே நெறி என்பது சன்மார்க்கம். ஒவ்வொரு சமயமும் சமரச சன்மார்க்கம் என்பது எனது வாழ்க்கையில் செவ்வனே விளங்கியது என்கிறார் திரு.வி.க. சன்மார்க்கம் வேறு உலகமார்க்கம் வேறு என வாழ்வு நடத்துவது தவறு. சன்மார்க்கத்தில் அனைவரும் சேரவாரும் என்னும் வேண்டுகையுடன் பொழிவை நிறைவிக்கிறார். சித்தம் திருந்தல் புதுப்பிறவி என்பதை விளக்குவது திரு.வி.க.வின், சித்தம் திருந்தல் அல்லது செத்துப்பிறத்தல் என்னும் நூலாம் என்பதை நினைவில் கொள்க. நினைப்பவர் மனம் என்பதும் அவர்தம் நூல்களுள் ஒன்றே. முடியா? காதலா? சீர்திருத்தமா? திரு. வி. க. நூல்களில் இது தனித்தன்மையது. அரசியல் நூலா? காதல் நூலா? சீர்திருத்தநூலா? என்றால் மூன்றும் பொதுளியநூல். அரசியல், காதல், சீர்திருத்தம் ஆகிய மூன்றும் பற்றிய விளக்க நூல்கள் பலப்பல இயற்றியவர் - பொழிந்தவர் - திரு. வி. க. ஆனால், இம்மூன்றையும் இணைத்துக் கண்ட இனியநூல் இந்நூல். அரசியல் வரலாற்று வகையிலும் புதுமை! காதல் வகையிலும் புதுமை! சீர்திருத்த வகையிலும் புதுமை! இந்நூல். மணவிலக்கு, மறுமணம் என்பவை ஆண்பால், பெண்பால் ஆகிய இருபாலுக்கும் பொதுமையுற்றது மேலைநாட்டு வழக்கமும் - சட்டமும்! அம்முறை நம் நாட்டுப்பார்வையில் மதிப்பு இழந்தவை. ஆதலால் நம்மவர் பார்வையில் மேலைநாட்டவர் பார்வை மதிப்புக்குரியதாய் இல்லை. மேலை நாட்டவர் பார்வையில் நம் நாட்டவர் பார்வை இழிமைக்குரியதாய் எண்ணப் படுகின்றது. இதற்குத் தீர்வு என்ன? திரு.வி. க. ஓர் அருமையான - முறையான - தீர்வு காண் கிறார். அவ்வந்நாட்டவர் வழக்கம், சட்டம் ஆகியவற்றைக் கொண்டே, அவ்வந்நாட்டவர் வாழ்வு நெறியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது அது. அளவை வகைகள் எத்தனை? அளக்கப்படும் பொருள் சார்ந்ததல்லவோ அளவைக் கருவி? ஆகவே அளவைக் கருவி ஈதெனக் கொண்டு, முறையான முறைமன்ற நடுவர் பார்வையில் ஆய்ந்து முடிவுரைக்கும் நூலாக அமைந்துள்ளது இந்நூல். நூலின் தோற்றுவாயில், 1936 ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் ஒரு பெரும் நிகழ்ச்சி உற்றது. அஃதென்னை? ஒரு பெரிய சாம்ராஜ்யத்துக்குத் தலைமை பூண்டிருந்த ஒருவர், அத்தலைமைப் பதவியை நொடிப் பொழுதில் துறந்தமையாகும் என்கிறார். ஒரு பெரிய சாம்ராச்சியம் என்பது பிரிட்டிசுப் பேரரசு. தலைமை பூண்டிருந்தவர் எட்டாம் எட்வர்ட்டு. தலைமைப் பதவியை இழந்ததன் காரணம், அவர் காதலித்த பெண்ணை மணந்தால் அவர்க்கு அரசுரிமை இல்லை என்னும் தடை. காதலிக்கப்பட்டவர் எவர்? வின்சர் கோமகளார்! தடுக்கப்பட்டது ஏன்? அவர் இருவரை மணந்து விலகியவர் என்பது தடை. மணம் என்பது அவரவர் விருப்பத்தினின்றும் எழுவது. எட்வர்ட்டு மன்னர் தம் மனம் பற்றிய ஒரு மங்கையை மணக்க விரும்பினார். அதைத் தடுக்கும் உரிமை எவர்க்கு உண்டு? இறைவனுக்கும் அவ்வுரிமை இல்லை. இறைவன் இயற்கைவழி கடனாற்றுவோன். இயற்கைக்கு மாறுபட்டு இறைவனும் நடப்பதில்லை. சட்டம் எல்லார்க்கும் பொதுவாக செய்யப்படுகிறது. அதை ஒருவர்க்கு ஒருவிதமாகவும், மற்றொருவர்க்கு இன்னொரு விதமாகவும் பயன்படுத்தலாகாது. மேல்நாட்டு மணவிலக்கும் மறுமணமும் அந்நாட்டு வழக்க ஒழுக்கங்களின்றும் அமைந்தவை. அவ்வழக்க ஒழுக்க சட்ட திட்டச் சூழலிடைப் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஒருவர் மனம் எம்மயமாகும்? அம்மணக்கண் கொண்டே அவரது நடைமுறையை நோக்குதல் வேண்டும். வின்ஸர் கோமகளார் மேல்நாட்டு நாகரிகம் என்னும் தடத்தில் பூத்த ஓர் அழகிய மலர். அம்மலரில் எம்மணம் கமழும்? அவர்தம் நாட்டு வழக்க ஒழுக்க மணமே கமழும். - என்கிறார் திரு.வி. க. மணவிலக்கு, மறுமணம் என்பவை மேலைநாட்டு முறைப்படி முறையானவை ஆதலால் அதனைக் காட்டி அரசுரிமையைப் பறித்தல் ஆகாது என்கிறார். சிம்சன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் என்பதும், அமெரிக்கப் பெண்மணி என்பதும் எட்வர்ட் கோமகனார் மணத்தடையாகவும், முடிசூடல் தடையாகவும் உள்ளமையைப் பொருளற்ற பொறுப்பற்ற உரையென விளக்குகிறார். அவர்கள் வின்சர் கோமகனார், வின்சர் கோமகளார் இருவர் சால்பு களையும் அவர்கள் காதற் சிறப்பையும், எட்வர்ட் முடிதுறப்பை யும் விரித்துரைக்கும் திரு.வி.க: சகோதரர்களே! உலகை நோக்குங்கள். பதவி இன்பத்தைச் சிந்தியுங்கள்! ஒரு பெரும் சாம்ராஜ்யத் தலைவருக்குத் தாம் விரும்பிய நங்கையை மணம் செய்து கொள்ளும் உரிமை இல்லை! இவ்வுரிமை காட்டில் விலங்கொடு வாழும் மலைவாணனுக்கும் உண்டு . ஒரு பெரும் மன்னர் மன்னருக்கு அவ்வுரிமை இல்லை! என்னே உலகம்! இங்கிலாந்து உரிமை நாடாம்! என ஏங்குகிறார். மக்கள் எதையும் பறி கொடுக்கலாம். ஆனால் உரிமையை மட்டும் பறி கொடுத்தலாகாது. உரிமையில் சிறந்த உரிமை காதல் உரிமை என்று கூறும் திரு.வி. க. உலக சரித்திரத்தில் எட்வர்டின் தியாகத்தைப் போன்றதொரு தியாகம் இல்லை என்கிறார். முடியா? காதலா? சீர்திருத்தமா? என்பதில் நடுவணதாய்ச் சிங்க நோக்காய் நிற்பது காதல். அஃது ஒருநோக்கால் முடியை வீழ்த்தியது. மற்றொரு நோக்கால் சீர்த்திருத்த உலகை எழுப்பியது. இவ்விரண்டனுள் சிறந்தது, சீர்திருத்த உலகை எழுப்பியது ஆகும் என நூல் தலைப்பு விளக்கம் தருகிறார். உரிமை வேட்கை உள்ளம், உலகக்குரல் உள்ளம் என்பதன் சான்று திரு.வி. க. வரைந்த இந்நூல்! திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! அன்புடன் இரா. இளங்குமரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் உள்ளொளி முன்னுரை 3 தோற்றுவாய் 8 1. உள்ளமும் உருவமும் 9 2. உள்ளுணர்வும் வழிபாடும் 61 3. உள்ளொளி 167 இறுவாய் 199 முடியா? காதலா? சீர்திருத்தமா? 1. தோற்றுவாய் 207 2. நாகரிகமும் உரிமையும் 212 3. வின்ஸர் கோமகளார் 217 4. வின்ஸர் கோமகனார் 232 5. காதற் காரணம் 238 6. காதற் கனிவு 246 7. சூழ்ச்சி 254 8. துறவு 261 9. சோதனை 265 10. தியாகம் 279 11. பணியும் பதவியும் 287 12. திருமணம் 290 13. சீர்திருத்தம் 295 14. இறுவாய் 301 உள்ளொளி முன்னுரை வாழ்க்கை மாண்புடையதென்று சொல்லப்படுகிறது. எப் பொழுது அது மாண்புடையதாகும்? வாழ்க்கை உள்ளொளியைக் குறிக்கொண்டு அமைந்ததொன்றாயின், அப்பொழுதே அது மாண்புடையதாகும். மற்றையது மாண்புடைய தாகாது. வாழ்க்கையின் குறிக்கோள் உள்ளொளிப் பேறாயிருத்தல் வேண்டும். உள்ளொளி உண்மையில் எனக்குச் சிறிதும் ஐயம் தோன்றுவதில்லை. எனது ஐயப்பாட்டைக் கல்வி கேள்வி ஆராய்ச்சி மட்டுங் களையவில்லை. எனது வாழ்க்கையும் தொண்டும் அடைவும் ஐயப்பாட்டைக் களைந்தன. அத்தகைய உள்ளொளியைப் பற்றி ஒரு பெரியார் மணிவிழாவை முன்னிட்டு, ஒரு நூல் இயற்றும் வாய்ப்பு, எனது வாழ்வில் கிடைத்தமை குறித்துத் திருவருளுக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். மணிவிழா எது? அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மணிவிழா என்று வழங்கப்படுகிறது. மணிவிழா ஒரு நாட்டில் மட்டுங் கொண்டாடப்படவில்லை. அது பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலகப் பொதுமைகளில் மணிவிழாவும் ஒன்றாயிருக்கிறது. இதனால் அவ்விழாவில் ஏதோ ஒருவிதச் சிறப்புள்ளதென்று தெரிகிறது. மணிவிழா என்று தோன்றியது? அது தோன்றியதற்குக் காரணமென்னை? அதன் உள்ளக்கிடக்கை யாது? அஃது எற்றுக்குக் கொண்டாடப்பெறல் வேண்டும்? இன்னோரன்ன வினாக்கட்கு அளிக்கப்படும் விடைகள் பலப்பல; பலதிறத்தன. அப் பலபட்டடையில் ஈண்டு நுழைய வேண்டுவதில்லை. உலகில் பலதிறப் பிறவிகள் காணப்படுகின்றன. அவை களுள் விழுமியது எது? மனிதப் பிறவி என்று எவருஞ் சொல்வர்; ஆத்திகருஞ் சொல்வர்; நாத்திகருஞ் சொல்வர். மனிதப் பிறவி யின் விழுப்பத்துக்கு அடிப்படையான காரணம், அப்பிறவியில் அறத்தொண்டு நிகழ்ச்சிக்கு இடம் உண்மையே யாகும். அறத் தொண்டு இருவிதம். ஒன்று கட்டுப்பட்டது; இன்னொன்று கட்டுப்படாதது. கட்டுப்பட்ட அறத்தொண்டு உற்றார் உறவினர் அளவில் நிகழ்வது. எல்லாரிடத்திலும் நிகழ்வது கட்டுப்படாத அறத்தொண்டு. இது தெய்வத் தொண்டு என்பது. இத்தொண்டு ஒவ்வொருவர்பால் ஒவ்வொரு வயதில் அரும்பும். பொதுவாக இதற்கொரு காலவரை கோலவேண்டுமென்று ஆன்றோர் சிலர் முயன்றிருப்பர். அவர்தம் முயற்சியில் சிற்சில ஆண்டு திரண்டு திரண்டு இறுதியில் அறுபதாம் ஆண்டு நிறைவு நிலைத்து நின்றிருக்கும். அறுபதாண்டு கடக்கப்பெற்ற மக்கள் கட்டுப்படாத அறத்தொண்டில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை நலமுடைய தாய்ப் பிறவி நோக்கத்தையும் நிறைவேற்றுவதாகுமென்று ஆன்றோர் கருதியிருக்கலாம். மக்கட்கு உரிய நூற்றிருபது வயதில் ஒரு பகுதி கட்டுப்பட்ட அறத்தொண்டுக்கும், மற்றொரு பகுதி கட்டுப்படாத அறத்தொண்டுக்கும் பயன்படுதல் வேண்டு மென்றும் அவர் எண்ணியிருக்கலாம். அறுபதுக்குமேல் வாழ்க்கையில் ஒருவித மாறுதல் உறுவது இயற்கை. அம்மாறுதல் கட்டுப்பட்ட தொண்டைக் கட்டுப் படாத தொண்டாக்குவதென்று ஊகித்து உணரலாம். இயற்கைப் போக்குக்கு அரணாக வாழ்க்கையை நடாத்துவது அறம். அதற்கு மாறுபட்டு வாழ்க்கையை நடாத்துவது அறமாகாது. கட்டுப்படாத அறத் தொண்டுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்தக் கால்கொள்ளும் ஒருநாள் திருநாளாகக் கொண்டாடப்படுகிற தென்று யான் கருதுகிறேன். அக் கொண்டாட்டத்தை மணி விழா என்று உலகம் தொன்று தொட்டு வழங்கி வருகிறது போலும். கூட்டுறவு உலகில் பேர்பெற்று விளங்கும் கீழைகிழார் - திவான்பகதூர் - தெய்வசிகாமணி முதலியார் மணிவிழா, சென்ற விக்ஷு ஆண்டு தைப்பூச நன்னாள் (10-2-1941) முதல் இருபது நாள் கொண்டாடப்பெற்றது. அவ்விழா, ஆண்டவன் வழிபாடு, ஏழை மக்கட்குச் சோறு கூறை அளித்தல், சொற்பொழிவு நிகழ்த்தல் ஆகிய அளவில் நடைபெற்றது. பழைய முறைகள் பல விடப் பட்டன. திரு.தெய்வசிகாமணி முதலியார் வாழ்க்கையில் அறியத் தக்க நுட்பங்கள் பல உண்டு. அவைகள் மற்றவர் வாழ்க்கைக்குப் பல வழியிலுந் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. திரு. முதலியார் தமது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தாமே எழுதி உதவுவாராயின், அவர் நாட்டுக்கு ஒருவித நற்பணி செய்தவராவர். தொண்டை நாட்டிலே மூவரால் பாடப்பெற்ற திருப்பதிகள் முப்பத்திரண்டு. அவைகளுள் ஒன்று திருவிற்கோலம். இத் திருப்பதி கூவம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிற்கோல வட்டத்திலே பல சிற்றூர்கள் சூழ்ந்துள்ளன. அவைகளுள் சிறப்பாகக் கறிக்கத்தக்கது கீழைச்சேரி. கீழைச்சேரி கூட்டுறவு இயக்கத்துக்குத் தாயகம். அவ்வூர், தெய்வசிகாமணி முதலியார் குடும்பத்தால் இந்நாளிலே பேர்பெற்று விளங்குகிறது. கீழைச்சேரியிலே, வழிவழி வளர்ந்துவரும் வேளாண் மரபிலே, விக்கிரம ஆண்டு மாசித் திங்கள் உச-ம் நாள் (5-3-1881) பிறந்தவர் தெய்வசிகாமணி முதலியார். அவர்தம் தந்தையார் குப்புசாமி முதலியார்; தாயார் காவேரி அம்மையார். தெய்வசிகாமணியாரின் கூர்த்தமதி அவர்தஞ் சிறிய தகப்பனார் - ஜில்லா ரிஜிதரார் - ராவ்சாஹப் - மாரியப்ப முதலியார் நெஞ்சைக் கவர்ந்தது. அக்கவர்ச்சி தெய்வசிகாமணியைக் கல்விச் செல்வராக்கும் முயற்சியாகப் பரிணமித்தது. தெய்வசிகாமணி முதலியார் பச்சையப்பனில் படித்தவர். அவர்தம் பள்ளி வாழ்வு வெற்றியுடையதாகவே அமைந்தது. மாணாக்கருள் முதன்மணியா யிலங்கினவர் தெய்வ சிகாமணியார். அவர் மெற்றிகுலேஷன் பரீட்சையில் தேறி, எப்.ஏ. வகுப்பில் பயின்று வந்தபோது அவரை வேலை வலிந்து ஈர்த்தது. கீழைகிழார், கூட்டுறவு இலாகாவில் சேர்ந்தனர். அவர்தம் நுண்மதியும் நல்லொழுக்கமும் இலாகாவின் அடியினின்றும் முடிவரை அவரை இவரச் செய்தன. அவர் ஜாயிண்ட் ரிஜிதரார் பதவியில் வீற்றிருந்து, கூட்டுறவு இயக்கத்தை நடாத்திய திறத்தைச் சென்னை மாகாணம் நன்கறியும். கூட்டுறவு உலகில் திவான் பகதூர் - தெய்வசிகாமணி முதலியார் ஒரு ஞாயிறென மிளிர்ந்தார் என்று கூறல் மிகையாகாது. இந் நாளிலும் அவர்தம் கூட்டுறவுத் தேர்ச்சியும் அடைவும் நாட்டின் பல பாகங்களில் பயன்பட்டே வருகின்றன. தெய்வ சிகாமணியாரின் இயற்கை அறிவு எந்த இலாகாவையும் திறம்பட நடாத்தும் தன்மை வாய்ந்திருத்தல் குறிக்கற்பாலது. திரு.தெய்வசிகாமணி முதலியாரது வாழ்க்கை நலத்துக்குத் துணைவராய் வாய்ந்தவர் திரு.பாலகுஜாம்பாள் என்பவர். இருவரும் ஈருடல் ஓருயிர் என்ன வாழ்ந்து நல்லறத்தை ஓம்பி வருகின்றனர். அவர்தம் இல்லம் முருகனருள். முருகனருளில் அவருடைய வாழ்க்கை மணம்பெற்று வளம்பெற்று வழிவழி வளர்ந்து வருகிறது. கீழைகிழாரிடத்தில் விளங்கும் நல்லியல்புகள் பல. அவைகளுள் குறிக்கத்தக்கன பொய்ம்மைக்கஞ்சல், காய்தல் உவத்தல் அகற்றி நடுநின்று கடனாற்றல், நீதிவழுவாமை முதலியன. இவ்வியல்புகள் அவரைப் பெரியவராக்கின. ஓய்வு பெற்றுள்ள இந்நாளில் தாம் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் ஒருவிதப் பணி செய்தல் வேண்டும் என்ற எண்ணம் திரு.முதலியாரின் பிடரைப் பிடித்து உந்திக் கொண்டிருந்தது. இப்பொழுது அதற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. சென்னைத் தமிழ்ச் சங்கம் என்றொரு நல்லமைப்பு அணித்தே காணப்பட்டது. அதில் தலைமை வகித்துத் தொண்டாற்றும் பேறு திரு. முதலியார்க்கு வாய்த்துள்ளது. அன்பர் தெய்வசிகாமணி முதலியார் மணிவிழாவை முன்னிட்டுச் சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் இருபது நாட்களில் இருபத்திரண்டு சொற்பொழிவுகள் நடைபெற்றன. அவைகளுள் முதல் மூன்று (10, 15, 16-2-1941) என்னால் நிகழ்த்தப்பட்டன. முறையே பேசப்பட்ட பொருள்கள், உள்ளமும் உருவமும், உள்ளுணர்வும் வழிபாடும், உள்ளொளி என்பன. அப்பேச்சுக்களை நூலாக்குமாறு மணி விழாத் தலைவர் உள்ளிட்ட நண்பர் பலர் என்னிடங் கூறுவர்; பன்முறை வலியுறுத்தியவர் உயர்திரு. ஷண்முகானந்த அடிகள். நூலெழுத யான் முயன்றபோதெல்லாம் ஒவ்வொருவிதத் தடை குறுக்கிட்டே வந்தது. அடிக்கடிக் கதவடைப்பு, வேலை நிறுத்தம் என்ற பெயர்களால் தொழிலாளர் தொல்லைகள் மூண்டன. சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் அத்தொல்லைகளில் மூழ்கல் நேர்ந்தது. திருப் போரூரில் அமைதியில் நின்று நூலை எழுதலாமென்று சென்றேன். அங்கு ஈண்டிய நண்பர் குழாம் எனது விருப்பத்தை நிறைவேற விடவில்லை. எப்படியே பல திங்கள் கடந்தன. கடந்த ஜூலை தொடக்கத்தில் எனது வலதுகால் கடை விரலில் ஒரு குறுங்கட்டி எழுந்தது. அதனால் சிறிது ஓய்வு கிடைத்தது. அவ்வேளையில் மணிவிழாப் பேச்சுக்களை நூலாக்கும் முயற்சியில் தலைப்பட்டேன். முயற்சி ஒருவாறு முற்றுப்பெற்றது. நூல் அச்சாகி வந்தபோது ஆகட் இறுதியில் ஒரு பெருந் தொழிலாளர் தொல்லை விளைந்தது. சண்டைக் காலத்தில் - இந்தியப் பாதுகாப்புச் சட்டம் வீறிடும் வேளையில்- அச்சட்டத்தின் மயிர்ப்பாலத்தில் நடந்து தொல்லை என்னும் தீயிடை நின்று தொண்டு செய்தல் நேர்ந்தது. விவரம் இங்கே வேண்டுவதில்லை. ஒரு பக்கம் உள்ளொளி - இன்னொரு பக்கம் உலகொளி என்று யான் எண்ணுவதுண்டு. இரண்டுங் கலந்த ஒன்றில் தொண்டு நிகழ்த்த வேண்டுமென்பது எனது வேட்கை. அவ்வேட்கை தொழிலாளர் தொண்டாக நிறைவேறுகிறது போலும். எல்லாம் ஆண்டவன் செயல். பலதிற இன்னலிடை உள்ளொளித் தொண்டும் செய்யப்பட்டது. யான் பேசிய மூன்று பொருட்களில் உயிர்போன்றது உள்ளொளி. மற்ற இரண்டும் அதன் அரண்போன்றன. ஆகவே, நூலுக்கு. உள்ளொளி என்னுந் தலைப்பே அணியப் பட்டது. இந்நூல் - உள்ளப்பாகுபாடுகள், உருவ அருவ அருவுருவ இயல்கள், உள்ள உருவத் தொடர்பு, இரண்டுங் கடந்த நிலை, உள்ள உருவத் தொடர்பால் விளங்கும் உள்ளுணர்வு, உள்ளுணர்வு உள்ளொளியாதற்குரிய வழிபாடு, கடவுளின் இருநிலை, இயற்கை நுட்பம், காதல் வீரம் அழகு அறிவு நீதி முதலிய தெய்வக் கூறுகள், அவைகளின் வழிபாட்டுத் திறங்கள், பெண்ணின் பெருமை, குழந்தை மேன்மை, நாகரிக வகைகள், இசை காவியம் ஓவியம் ஆகியவை வழிபாட்டுக்குத் துணை செய்யும் முறைகள், தெய்வ உருவங்களின் தத்துவங்கள், உருவ வழிபாட்டின் சிறப்பு, வழிபாடு கடந்த நிலை, யோக விதங்கள், தியான யோகம், முறையீடு, தொண்டு, சமரச சன்மார்க்கம், பொது அறம், அநுபூதி, உள்ளொளி விளக்கம் முதலிய நறும் பொருள்களை உள்ளுறையாக் கொண்டது. அகப்புற வாழ்க்கைக்கு இன்றியமையாத பல பொருள்கள் இந்நூற் கண் திகழ்கின்றன. இதை ஒரு சமரச சன்மார்க்கப் பொருட்காட்சி என்று கூறலாம். உலகத் தொல்லையிடை எழுந்த உள்ளொளி, உள்ளிருளில் உள்ளொளி எழுப்பி, உள் தொல்லையைப் போக்குமென்று நம்புகிறேன். இந்நூலிடைச் சிலவிடங்களில் மாயா காரியங்கள், தத்துவங்கள், சிறப்பாக விந்து நாத தத்துவங்கள், கடவுள் தத்துவங் கடந்ததென்பது, கடவுளின் இருநிலை, இறையுடல் இயற்கை என்பது முதலிய சில பொருள்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகள் அநுவாதம்பற்றி அவ்வாறு சொல்லப்பட்டன என்று நேயர்கட்குத் தெரிவித்துக் கொள்கிறேன். யான் கூட்டத்தில் பேசியதைப் போலவே நூலை எழுதி யுள்ளேன். இதை ஒரு பேச்சுநடை நூலாகக் கொள்க. குற்றங் குறைகளைப் பொறுத்தருள்க. சென்னை, இராயப்பேட்டை, 30-9-1942. திரு.வி.க. தோற்றுவாய் தோழர்களே! நாம் அனைவரும் இங்கே ஏன் கூடியிருக் கிறோம்? திவான்பகதூர் - கீ. தெய்வசிகாமணி முதலியாரின் மணிவிழா நம்மை இங்கே கூட்டி யிருக்கிறது. நமது நாட்டில் மணிவிழாக்கள் எப்படிக் கொண்டாடப்படுகின்றன? முறைகள் உங்களுக்குத் தெரியும். இம் மணிவிழாவில் அம் முறைகளைப் பெரிதுங் காண்டல் அருமை. இதற்கு ஒருவிதத் தனிச்சிறப்புண்டு. அஃதென்னை? மணிவிழா, சொற்பொழிவு விழாவாக மாற்றப் பட்டதாகும். அறிவு விருந்து போற்றற் குரியதன்றோ.? மணிவிழாத் தலைவர் வாழ்க! அவர்தங் குடும்பம் வாழ்க! இன்று முதல் இங்கே பலதிறச் சொற்பொழிவுகள் நடை பெறும். பல துறையில் வல்லவர் பல பொருள்பற்றிப் பேசுவர். முதல் மூன்று சொற்பொழிவு நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இன்று (10-2-1941) உள்ளமும் உருவமும் என்பது பற்றியும், பின்னே (15-2-1941) உள்ளுணர்வும் வழிபாடும் என்பது பற்றியும் இதைத் தொடர்ந்து (16-2-1941) உள்ளொளி என்பது பற்றியும் பேசும் பணி எனக்கு நல்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று பொருளும் வெவ்வேறல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பொருள் வைப்புள்ள இடம் உள்ளொளியே யாகும். உள்ளொளி உயிர்போன்றது. அதற்குக் கரணம் போன்றது இரண்டாவது சொற்பொழிவு. இன்றையது உடல் போன்றது. ஆகவே இன்று, உள்ளொளிக்கு உடல் அமைக்க முயல்வேன். உள்ளமும் உருவமும்என்னும் பொருளில் பல நுட்பங் களுண்டு. அவைகளை யெல்லாம் நிரலே கிளந்து கூறுதற்கு யான் அருகனல்லன். ஒல்லும் வகையாதல் எனது கருத்தை முற்றும் வெளியிடுதலும் பொருந்தாது. உள்ளமும் உருவமும் என்பது தனிப்பட்ட ஒரு சொற்பொழிவாக எனக்குக் கொடுக்கப் படவில்லை. உள்ளொளிக்கு உடல் அமைக்கும் வகையில் அப்பொருளைப் பற்றிப் பேசவேண்டுவது எனது கடனென உணர்கிறேன். இரண்டாவது சொற்பொழிவும் உள்ளொளிக்குக் கரணம் அமைக்கும் முறையிலேயே நிகழும் என்பதை இன்றே தெரிவித்துக்கொள்கிறேன். 1. உள்ளமும் உருவமும் உள்ளமும் உருவமும் என்பது பொருள். முதலாவது உள்ளத்தைப் பற்றியும், பின்னே உருவத்தைப் பற்றியும் அதற்குப் பின்னே இரண்டுக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் பேசலாம் என்று எண்ணுகிறேன். முதலாவது உள்ளத்தின் மீது கருத்துச் செலுத்துகிறேன். உள்ளம் ஆராய்ச்சி உள்ளத்தைப்பற்றிய ஆராய்ச்சி, உலகிலே முற்றுப் பெற்றதா? இன்னும் முற்றுப்பெறவில்லையா? கீழ்நாட்டில் உள்ளத்தைப் பற்றிய ஆராய்ச்சி முற்றுப்பெற்றதென்று அறுதி யிட்டுக் கூறலாம். மேல்நாட்டில் அவ் வாராய்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தியங்காது முழங்கலாம். என்னை? கீழ்நாட்டின் ஆராய்ச்சி, அநுபவத்தை அடிப்படையாக் கொண்டு நிகழ்ந்தது. அதனால் உண்மை விளங்க லாயிற்று. இதற்குக் கீழ்நாட்டுத் தத்துவ நூல்கள் உள்ளத்தைப் பற்றிப் பெரிதும் ஒருவிதக் கருத்தை வெளியிட்டிருத்தலைச் சான்றாகக் கொள்ளலாம். மேல் நாட்டின் ஆராய்ச்சி, ஊகத்தை அடிப் படையாக்கொண்டு நிகழ்வது. அதனால் உண்மை ஒரோ வழியில் காட்சியளித்து மேலும் மேலும் ஓங்கி ஓங்கி உயர்ந்தே போகிறது. இந்நாட்டவர் ஆராய்ச்சி பெரிதும் புறநோக்கில் நிகழ்ந்துவருதலால், புறத்துக்கு அப்பாலுள்ள பல நுட்பங்கள் இவர்க்கு விளங்காமற் கிடக்கின்றன. பலபட்ட உள்ளப் படிகளில் மேல் நாட்டார் சிலவற்றைக் கடந்து வந்துள்ளனர்; இன்னுஞ் சின்னாளில் வேறு பல படிகளையுங் கடக்கும் பேறு பெறுவர். இவர்தம் ஆராய்ச்சி முற்றுப்பெற்றால் பல சிக்கல்கள் அறுந்துபோகும்; கீழ்நாட்டவர் கண்ட பல நுட்பங்கள் எளிதில் விளங்கும்பேறு பெறும். இப்பொழுது கீழ்நாட்டவர் அநுபவமும், மேல் நாட்டவர் ஆராய்ச்சியும் வேண்டற் பாலனவே. எதையுந் தள்ளுதல் கூடாது. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்) பொருள் உள்ளம் என்பது பல பொருள் ஒருசொல்; இங்கே உள்வதன் மேலது. உள்வது - நினைப்பது. உள்வது எது? 1மனம். உள்ளதா? இல்லதா? 2உள்ளம் பொருளா அன்றா என்பதைச் சிறிது தொடுத்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது. உள்ளத்தைப் பொருளென்போரும் உளர்; பொருளன்று என்போரும் உளர். உள்ளத்தைப் பொருளன்று என்று கொள்வோரும் அது விவகாரத்தில் பொருளாகவே விளங்குகிறதென்றும், பாரமார்த்திகத்தில் பாழாய் (சூந்யமாய்)ப் போகிறதென்றும் கூறுவர். விவகாரத்தில் கட்சி இல்லை. பாரமார்த்திகத்திலுங் கட்சி இல்லை என்று சொல்லலாம். பாரமார்த்திகத்தில் உள்ளம் மறைவதை இருசாராரும் ஒப்புக்கொள்கின்றனர்.. மறைவு நிலையைக் குறித்து விவகார உலகில் வாதப்போர் நிகழ்கிறது. எப்படி? பாரமார்த்திகத்தில் மறைவுறும் மனம் பாழாவதில்லை என்றும், அது பொருளாகவே கிடக்கிற தென்றும், ஞாயிற்றின் ஒளி முன்னர்த் திங்களின் ஒளியும் உடுக்களின் ஒளியும் இருந்தும் விளங்கித் தோன்றாமலிருப்பது போலப் பாரமார்த்திகத்தில் மனம் இருந்தும் விளங்கித் தோன்றுவதில்லை என்றும் ஒருசாரார் கூறுப. மற்றொருசாரார் பாரமார்த்திகத்தில் மனம் பாழே ஆகும் என்று கூறுப. மறைவைப்பற்றிய விவாதம் விவகாரத்தில் எற்றுக்கு என்பது எனது கேள்வி. பூனை கண்ணை மூடிக்கொண்டால் அதற்கு அந்நிலையில் உலகம் புலனாவதில்லை. அதற்கு உலகம் இருந்து புலனாக வில்லையா, இல்லாமலே போகிறதா? என்று விழிப்பினர் போரிடுவதால் விளையும் பயன் என்ன? யான் விவகார உலகில் வாழ்பவன். எனக்கு மனம் பொருளாகவே தோன்றுகிறது. விவகார உலகம் கட்சியற்ற தென்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பாரமார்த்திகத்தில் விளைவது விளைக. அதைப்பற்றி விவகார உலகம் எற்றுக்குக் கவலைகொள்ளுதல் வேண்டும்? சடமா? சித்தா? 1மனம் சடமா? சித்தா? என்னும் விசாரணையும் இவ் வுலகில் நிகழ்ந்தே வருகிறது. இங்கே, சடத்தினின்றும் சித் பிறக்கிறதா? சித்தினின்றும் சடம் பிறக்கிறதா? சடமும் சித்தும் தனித்தனி இருப்புடையனவா? இரண்டும் வேறு வேறாகப் பிரிந்து நிற்பனவா? கலப்புடையனவா? என்று பலபட்ட ஐயப் பாடுகள் எழுதற்கு இடமுண்டு. இவைகளில் கருத்துச் செலுத்தினால், இச்சொற்பொழிவு இன்றே முடிவுபெறுதல் அருமையாகும். ஆதலின் ஐயப்பாடுகளாம் அருஞ்சுரங்களில் யான் புகாமற் செல்கிறேன். உலகம் உள்ளவரை ஒவ்வொன்றைப் பற்றி ஒவ்வொருவித ஐயம் திரிபு மயக்கம் எழுந்தவண்ண மிருக்கும். அவரவர் ஆராய்ச்சி அநுபவங்கட்கேற்றவாறு உண்மை விளங்கிக் கொண்டே போகும். யான் இளமையில் சடத்தைப்பற்றியும் சித்தைப்பற்றியும் அறிவுறுத்தும் தத்துவநூல் பல பயின்றேன்; அவைகளில் பன்னெடுநாள் உழன்றேன் என்றுஞ் சொல்வேன். இடையில், அறிஞர் ஹெக்கலும், ஸர் ஒலிவர் லாட்ஜும் முறை முறை ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அன்னிபெஸண்ட் அம்மையார், தியோஸொபிட் என்னுஞ் சஞ்சிகையில் சடமும் சித்தும் என்னுந் தலைப்பீந்து எழுதிவந்த கட்டுரைகளைப் படித்தல் நேர்ந்தது. அவைகள் பலதிற ஐயப் பாடுகளை நீக்கின. அறிஞர் ஹெக்கல், எல்லாம் சடமயம் என்றும், சித்தென்னுந் தனிப்பொருள் ஒன்றில்லை என்றும், சித்தென்பது சடத்தினின்றும் தோன்றி நின்று ஒடுங்கும் ஓர் இயல்பு என்றும் தமது ஆராய்ச்சிக்கு முடிவு கட்டினர். இது ஸர் ஒலிவர் லாட்ஜால் மறுக்கப்பட்டது. சடமுமுண்டு சித்துமுண்டு என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. சடத்தினின்றுஞ் சித் தோன்றுவதென்பதும், சித்தினின்றுஞ் சடம் தோன்றுவதென்பதும் கொள்ளற்பாலன வல்ல. நெல் கமுகாய் நீளாது. உள்ளது போகாது; இல்லது வாராது. சடத்தினின்றுஞ் சடமே பிறக்கும்; சித்தினின்றுஞ் சித்தே பிறக்கும். அதிலிருந்து இதுவும் இதிலிருந்து அதுவும் பிறத்தல் அரிது. சடமும் சித்தும் தனித்தனி இருப்பிலுள்ளன. ஆனால் இரண்டும் வேறுவேறாகப் பிரிந்து நிற்பனவல்ல; கலந்தே நிற்பன. சடம் சித்தை விடுத்து நிலவாது; இயங்காது. சடமுள்ள இடங்களிலெல்லாம் சித்துமிருக்கும்; சடத்துக்கு மேலுங் கடந்து சித் ஓங்கித் தனித்தும் நிற்கும். அதுவாகும் பாரமார்த்திக நிலையைப்பற்றிய பேச்சே ஈண்டு வேண்டுவ தில்லை. சடமும் சித்தும் பிரிவற்ற இரண்டு. சித்தின் துணை யின்றிச் சடம் ஒன்றுஞ் செய்வதாகாது. இதுவே ஸர் ஒலிவர் லாட்ஜ் கண்ட முடிவு. இங்கே மனம் சடமா சித்தா என்னும் கேள்விக்கு என்ன பதிலிறுப்பது? மனம், தோற்ற நிலை இறுதி என்னும் மாறுத லுடையது. இம்மாறுதல் சித்துக்குக் கிடையாது. ஆதலின், மனம் சடம் என்று பதிலிறுக்க. 1அது மாயா(சடத்தின்) காரியங் களிலொன்று; சித்தின் கலப்பாலும் துணையாலும் இயங் குவது. இடமும் தோற்றமும் இனி, மனம் எங்கே இருக்கிறது? அதன் தோற்றம் எப்படி? என்று சிறிது ஆராய்வோம். மனம் உள்ள இடத்தைப்பற்றி வெளிவந்துள்ள கருத்துக்கள் பல; பலதிறம். மேல்நாட்டு அகத்திணையர் (மனோ தத்துவர் - Psychologists) ஒருவிதமாகவும், கீழ்நாட்டுப் பண்டை அகத்திணையர் சிற்சில கருத்துக்களில் வேறுவித மாகவும் கூறியுள்ளனர். நம்மிடம் காண்டல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உணர்தல், எண்ணல், விரும்பல், வெறுத்தல், ஆராய்தல் முதலியன நிகழ்தல் வெளிப்படை. இவைகட்கு ஊற்று எது? காண்பன கேட்பன முதலியன எண்ணங்களாதலை அறிகிறோம். அவ்வெண்ணங்கள் எங்கே தங்குகின்றன? எங்கிருந்து பேச்சாகவும் செயலாகவும் வெளியாகின்றன? ஒருவன் பல பாடல்களை நெட்டுருச் செய்கிறான். சமயம் நேரும்போதெல் லாம் அவைகளை அவன் பாடுகிறான்; பலமுறை பாடுகிறான்; பாடல்கள் எவ்வடிவில் எங்கே படிகின்றன? எப்படி வெளிப் படுகின்றன? ஓர் அறிஞன் ஒருபோது சூரியனைப் பற்றியும், மற்றொருபோது அழகைப்பற்றியும், இன்னொரு போது மின்சாரத்தைப்பற்றியும், வேறொரு போது ஒழுக்கத்தைப் பற்றியும் பேசுகிறான். பேச்செல்லாம் ஒருவனிடத்திருந்தே பிறக்கின்றன. மீண்டும் பலவிடங்களில் அவைகளைப்பற்றி அவனே பேசுகிறான். கருத்தும் பேச்சும் ஒவ்வொருபோதும் இடையீடின்றி அவ்வொருவனிடத்திருந்தே சுரந்து வருகின்றன. இவையெல்லாம் ஒருவனிடத்தில் எங்கே மண்டிக் கிடக்கின்றன? இன்னோரன்ன கேள்விகள் பல எழுப்பிப் பார்ப்போம்; சிந்தித்துப் பாப்போம்; பொதுவாக உலகம் என்ன கூறுகிறது? உள்ளம் - மனம் - என்று கூறுகிறது. ஒன்றும் அறியாத ஒருவன் - கல்வி அறிவில்லாத ஒருவன் - ஆராய்ச்சி மூலையுந் தெரியாத ஒருவன் - மனம் என்று முடிவு சொல்கிறான். ஆனால் படித்தவர் பல கூறுவர். சாதாரண உலகம் காரணங் காணாது சொல்லி வந்தனவற்றுள் எவ்வளவோ விஞ்ஞான உலகால் காரணத் துடன் உறுதி செய்யப் பெற்றமை உலகுக்குத் தெரியும். மனம் எங்கே இருக்கிறது? சாதாரண மனிதன் இங்கே இருக்கிறது என்று நெஞ்சத்தாமரையில் கை வைப்பன். அகத்திணையர் - மேல்நாட்டு அகத்திணையர் - கீழ்நாட்டு அகத்திணையர் - என்ன சொல்கிறார்? பார்ப்போம். மூளையும் மனமும் - மேல்நாட்டார் கருத்து மேல்நாட்டார் பொதுவாக மனம் மூளையிலிருக்கிறது என்கிறார். அவர், மூளை மற்ற உறுப்புக்களுடன் தொடர்பு பெற் றிருத்தலையும், அத்தொடர்பு நரம்புகளால் ஆக்கப்பட் டிருத்தலையும், மூளை நரம்புத் தொடைகளால் வேயப் பட்டிருத்தலையும், அத்தொடைகளை வேறு பல மெல்லிய நரம்புக் கோப்புக்கள் காத்து வருதலையும், அக்கோப்புக்களைக் காக்க மிக மெல்லிய மூல நரம்புகளிருத்தலையும், அவை களினூடே மிக மிக நுண்ணிய அறைகள் செறிந்திருத்தலை யும் முறை முறையே விளக்கி, அவ்வறைகளின் செறிவில் ஒருமைப்பாடிருக்கிறதென்றும், அவ்வொருமைப்பாட்டினின் றும் உருக்கொள்வது மனம் என்றும் நிறுவிக் காட்டுகிறார். மனத்தை அவருட் சிலர் பண்பு என்கிறார்; சிலர் விளைவு என் கிறார்; சிலர் பொருள் என்கிறார். மேல்நாட்டு அகத்திணைய ரிடையுஞ் சிற்சில கருத்து வேற்றுமைகளுண்டு. தொடர்பு மூளைக்கும், நரம்புத் தொடைகட்கும், மனத்துக்கும், தொடர்பிருப்பின், அவைகட்கு ஊறு நேருங்கால், இதற்கும் ஊறு நேர்தல் வேண்டுமன்றோ? அப்பொழுது ஒவ்வொன்றற் கும் தொடர்பிருத்தல் உறுதிப்படும். வண்டியில் போன இராமன்மீது கோவிந்தன் கல்லெறிந் தான். அவன் தலையில் பலத்த காயம் பட்டது. இராமன் மயங்கி விழுந்தான். சிகிச்சை செய்யப்பட்டது. அவன் கண் விழித்தான்; வாய் குழறினான். அவனுக்குத் தனது தம்பி பெயர்நினைவுக்கு வரவில்லை. காரணம் என்ன? மூளையில் ஏற்பட்ட கலக்கம் மனத்துக்கும் ஏற்பட்டமையாகும். ஒருவன் நள்ளிருளில் முத்திநெறி அறியாத என்று பாடி வழியே சென்றான். வேகமாக ஓடிவந்த ஒரு மோட்டார் வண்டி அவனை மோதிற்று. அவன் கீழே விழுந்தான்; மருத்துவச் சாலைக்கு எடுத்துச் செல்லப்பெற்றான். மருத்துவர் சிகிச்சை செய்தனர். கனவு உணர்வு சிறிது பிறந்தது. பிறந்ததும் அவன் வாய் மூர்க்கரொடு முயல்வேனை என்று பாடிற்று. சூழ்ந்திருந்த வர்க்கு ஒன்றும் விளங்கவில்லை. பொழுது புலர்ந்தது. சூழ நின்றவருட் சிலர் அவனை நோக்கி, என்ன அப்பா! இரவு சிறிது உணர்வு பிறந்ததும், மூர்க்கரொடு முயல்வேனை என்று பாடினையே என்று கேட்டனர். யான், முத்திநெறி அறியாத என்று பாடத் தொடங்கிய வேளையில் மோட்டாரால் மோதப்பெற்றேன். பின்னே விளைந்தது ஒன்றுந் தெரியாது. என் வாய், மூர்க்கரொடு முயல் வேனை என்று பாடியதும் எனக்குத் தெரியாது என்றான். பலர்க்கு வியப்பூட்டிற்று. மூளை ஆராய்ச்சியில் வல்லவர் ஒருவர் அங்கே போந்தனர். அவரிடம் நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டன. முத்திநெறி அறியாத என்று அவன் பாடியவரை அவனது மூளைக்கும் மனத்துக்கும் இடையி லுள்ள தந்தி நரம்புகள் நன்னிலையிலிருந்தன என்றும், மோட் டார் அவனை மோதியபோது அந்த நரம்புகட்குக் கலக்கம் நேர்ந்தது என்றும், பாட்டின் தொடர்ச்சி அப்படியே அவன் மனத்தில் படிந்து கிடந்தது என்றும், கனவு உணர்ச்சி உற்றபோது மூளை நரம்புகட்கும் மனத்துக்கும் ஏற்பட்ட தளர்ச்சி ஓரளவில் நீங்கியது என்றும், மனத்தில் முன்னரே படிந்துகிடந்த பாட்டின் மற்றப் பகுதியை அவனை அறியாமலே அவன் வாய் விரைந்து வெளியிட்டது என்றும் விளக்கஞ் செய்தனர். சேந்தன்பேட்டையில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் பாக்களை ஆயிரக் கணக்கிற் பாடஞ் செய்தவர்; தங்கு தடையின்றி அப் பாக்களைப் பாடவல்லவர். குடும்பத்தால் அவர்க்குக் கவலை நேர்ந்தது. தங்கு தடையின்றிப் பாடும் வல்லமை அவரை விடுத்து அகன்றது. ஓரடி பாடுவார்; மற்றோரடி நினைவுக்கு வருவதில்லை. அவரே காந்தன் பேட்டைக்குச் சென்று சிலநாள் தங்கினார்; நன்றாக உண்டு உறங்கினார். அவரிடம் பாடல் எழும்பும்; பாட்டுக்கள் பழைய படி தங்கு தடையின்றி வரும். காரணம் என்னை? காந்தன் பேட்டையில் கவலை பண்டிதரை விட்டு நீங்கி நின்றமை என்க. கவலையால் நரம்புத் தளர்ச்சியுறுவதுண்டு. அது மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பையும் தளர்ச்சியுறச் செய்யும். கவலையால் பீடிக்கப்பட்ட ஒருவனுக்குப் பகலில் அவன் றன் நண்பரின் பெயர்கூட நினைவுக்கு வருவதில்லை. அவன் இரவு உறங்கி எழும்போது நண்பர் பெயர் தானே நினைவுக்கு வரும். காரணம் உறக்கத்தில் கவலை சிறிது ஒதுங்கி நிற்றலாகும். ஒருவன் இயற்கை இன்பத்தில் மூழ்கி வாழ்ந்து வந்தான். எப்படியோ அவன் வெம்மை நோயால் பீடிக்கப்பட்டான். மூளையில் கொதிப்பு ஏறிற்று. அவனுக்கு இளஞாயிற்றின் ஒளியும், திங்களின் நிலவும், வானின் நீலமும், சோலையின் பசுமையும், பறவையின் பாட்டும், பெண்ணின் வனப்பும், குழந்தையின் மழலையும், வீணையின் முழக்கும், இன்ன பிறவும் இன்பூட்டுவதில்லை. எங்கே மாறுதல்? மூளையில் மாறுதல். மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பை ஓர்க. இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறலாம். மூளை நன்னிலையிலிருத்தல் வேண்டும். அப்பொழுதே மனமும் நன்னிலையிலிருக்கும். மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பு பெரிது. அத்தகைய மூளையைக் காத்து வர வேண்டுவது மக்கள் கடமை. கஞ்சா, அபினி, கள், சாராயம் முதலியவற்றின் மயக்கம் உறாதவாறும், வெம்மை, பித்து, நச்சுநீர் முதலியன தேங்காதவாறும், தீயொழுக்கம் முதலியவாற்றான் நரம்புத் தளர்ச்சி உறாதவாறும், வேறு எவ்வகையிலும் கேடு புகாதவாறும் மூளை காக்கப்படல்வேண்டும். மூளையின் நரம்புத் தொடைகள் பழுதுற்றபின் பொறி என் செய்யும்? புலன் என் செய்யும்? பிற உறுப்புக்கள் என் செய்யும்? இவைகள் கலக்கமுற்றுக் கேடு செய்யவும் புகும். எக்காரணம் பற்றியும் மூளையில் கோளாறு உறுதலாகாது. மூளைக்கோளாறு மனக்கோளாறாகும். ஆகவே, மூளை ஒழுங்கும், நரம்பு ஒழுங்கும், மன ஒழுங்கும் வாழ்வுக்கு இன்றியமையாதன என்று தெளிக. இவ்வொழுங்குகள் உள்ளொளி விளக்கத்துக்குத் துணை செய்யும் என்பதும் உணரற்பாற்று. கீழ்நாட்டார் கருத்து கீழ்நாட்டவர் தியான யோகம் முதலியவாற்றால் மனத்தின் பரிய இயல்களையும், நுண்ணிய இயல்களையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்ந்திருக்கின்றனர். அவைகளிற் பல, வெறும் புற ஆராய்ச்சியாளர்க்கு விளங்குவதில்லை. மேல் நாட்டவர் இதுகாறும் ஆராய்ச்சியாற் கண்ட பல உண்மைகள், கீழ்நாட்டவர் அனுபவத்திற் கண்ட நுட்பங்களையெல்லாம் தெளிவு செய்தற்குப் பெரிதும் துணைபுரியும் நிலையை இன்னும் அடையவில்லை என்று கூறுதல் மிகையாகாது. கீழ்நாட்டு அகத்திணையர், மனம், விழிப்பில் பெரு மூளையில் நிலவுகிறதென்றும், கனவில் சிறு மூளையில் இறங்குகிறதென்றும், உறக்கத்தில் இதயம் நண்ணுகிற தென்றும், ஞானயோகியர் மனத்தைத் தம் வயப்படுத்தி அதை ஆட்டவல்லவரென்றும், இவர் மனத்தை உடலுள் எவ்விடத்தும் நிகழச்செய்வரென்றும் கூறுப. கீழ்நாட்டவர் கண்ட நுட்பங்கள் பேச்சையும் எழுத்தையும் கடந்து செல்வன; அநுபவத்தில் விளங்குவன. எதற்கும் சொந்த அநுபவம் தேவை. அதுவே பெரிது. மனமுள்ள இடத்தைக் காண ஆழ்ந்த ஆராய்ச்சியில் புகவேண்டுவதில்லை. நாம் 1காண்பன கேட்பன எண்ணுவன உணர்வன முதலியன ஓரிடத்தினின்றும் தோன்றி நின்று ஒடுங்குதல் உண்மை. அவ்விடம் ஒரு நுண்ணிய கருவியாகவே இருத்தல் வேண்டும். அஃது எது என்று எண்ணி எண்ணி அதனூடே ஆழ்ந்து செல்லச் செல்ல அதன் இடம் இயல் முதலியன விளங்கும். கீழ்நாட்டவர் வெளியிட்டுள்ள கருத்துக்களிற் சிலவற்றைத் தொகுத்துக் கூற விரும்புகிறேன். இந்நாட்டவர் ஆராய்ச்சி, தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர் மனத்தை ஒரு தத்துவமாகக் கொண்டனர். தத்துவம் என்றதும் மருட்சி யடையவேண்டுவதில்லை; தலைக் குத்தல் என்று கருத வேண்டுவதில்லை. உழைப்புத் தேவை. உழைப்பில் வாரா உறுதிகளில்லை. மாயை வகை தத்துவம் என்பது மாயாகாரியம். 1மாயை சடம்; இயற்கை என்றுஞ் சொல்லப்படும். மாயை மூன்றுவிதம். அவை, சுத்தம் அசுத்தம் பிரகிருதி என்பன. சுத்த மாயை மிக நுண்மை வாய்ந்தது. அதன் பருமை அசுத்த மாயை. அசுத்த மாயையின் திண்மை பிரகிருதி மாயை. சுத்தம் ஆவிபோன்றது. அசுத்தம் நீர் போன்றது. பிரகிருதி கட்டி போன்றது. சுத்தத்தின் காரியம் 2ஐந்து. அசுத்தத்தின் காரியம் 3ஏழு. பிரகிருதியின் காரியம் 4இருபத்து நான்கு. ஆக முப்பத்தாறு காண்க. இம் முப்பத்தாறுந் தொகை. இவற்றின் வகை தொண்ணூற்றாறு. தொண் ணூற்றாறு தத்துவங்களின் காரியங்களே தனு கரண புவன போகங்கள். கலாதத்துவம் 5உயிரின் அறியாமையை நீக்கித் தன்னைப்போல் அறிவாக்க இறைவன் அதற்கு மாயா காரியங்களாகிய தத்துவங்களைத் தனு கரண புவன போகங்களாகச் சேர்க்கிறான். அவைகளால் உயிர் சிற்றறிவும் சிறுதொழிலும் பெற்று விளக்கம் அடைகிறது. பொதுவாக எல்லாத் தத்துவங்களாலும் உயிர் விளக்கம் பெற்றாலும், சிறப்பாக ஒன்றினால் அஃது அதிக விளக்கம் பெறுவதாகிறது. அஃது எது? அது கலா தத்துவம். உயிர், விளக்கத்தின்பொருட்டுப் பல தத்துவங்களைப் படிப்படியே இறைவன் அருட்டுணையால் பெற்று வருங்கால், அது 6கலை நியதி காலம் வித்தை அராகம் என்னும் ஐந்தில் படியும்போது புருடன் ஆகிறது. இவ்வைந்தும் பஞ்ச கஞ்சுகம் எனப்படும். இவைகளை உயிர் பெறும் போது சிறிது விளக்கம் பெறுகிறது. உயிர் தன்னைச் சீவன் - புருடன் - என்று உணர்வ தாகிறது. இவ்வுணர்வாகிய விளக்கத்தை நல்குவது கலா தத்துவம். மனம் இக்கலையாலும் அதன் இனத்தாலும் பிறக்கும் புருடன், காண்டல் கேட்டல் முதலியவற்றைத் தானே நிகழ்த்தல் அரிது. புருடனுக்குத் துணை தேவையாகிறது. அத் துணை மனம் என்பது. பரு உடலில் ஐம்பொறிகள் மலர்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புலன் உள்ளது. புலன் வாயிலாக மனம் காண்டல் கேட்டல் முதலியவற்றை நிகழ்த்துகிறது. மனமின்றிப் பொறி புலன்களே காண்டல் கேட்டல் முதலிய வற்றை நிகழ்த்தல் அருமை. ஒருவன் கண் ஓர் அழகுப் பொருளில் ஈடுபட்டு அதன் வயப்பட்டது. அவ்வேளையில் ஒருவன் குழல் வாசிக்கிறான். அக்குழலோசை, அழகுக் காட்சியில் ஈடு பட்டவனுடைய செவியில் நுழைவதில்லை. ஏன்? மனம் கட்புலனில் ஒன்றி நின்றமையால் என்க. மற்றொருவன் செவி நல்லிசையில் ஈடுபட்டு அதன் வயமாகியது. அந்நேரத்தில் அழகே வடிவுகொண்டாலென ஓர் உருவம் அவன் முன்னே உலவுகிறது. மைந்தன் கண்ணில் அழகு உருவம் தோன்றவே இல்லை. ஏன்? மனம் செவிப் புலனில் ஒன்றுபட்டு நின்றமையால் என்க. இவைகளால் காண்டல் கேட்டல் முதலியவற்றை நிகழ்த்துவன கண் செவி முதலியன அல்ல என்பதும், அவை களை மெய்ம்மையில் நிகழ்த்துவது மனமே என்பதும் விளங்குகின்றன. புருடன், காண்டல் கேட்டல் முதலியவற்றை ஆற்ற மனத்துணை தேவை. மனம், பொறி புலன்கள் வாயிலாகத் தன் கடனைச் செய்கிறது. எனவே, மனம் புருட தத்துவத்துக்கு முன்னும், பொறி புலன்கட்குப் பின்னும் நின்று இயங்குவ தென்று சொல்லலாம். மனம், புருடனுக்கும் புலன்களுக்கும் இடையே உழலும் தூது என்று கொள்க. தைசச அகங்காரமும் சாத்துவிகமும் கூடியவிடத்துக் காரியப்படுவது மனம் என்று தத்துவர் கூறுவர். பொதுமை நோக்கிப் புருடனுக்கும் மனத்துக்கும் இடையேயுள்ள சில கருவி கரணங்கள் இங்கே சொல்லாமல் விடப்பட்டன. வேறு முறை இன்னும் ஒரு முறையால் மனத்தைக் காண முயல்வோம். உடல் நிலைகளைக் கொண்டும் மனத்தின் இருப்பை உணர்தல் கூடும். உடல் வகை எத்தனை? மூன்று. ஒன்று பருமை; மற்றொன்று நுண்மை; இன்னொன்று முதன்மை. இவை முறையே தூலம், சூக்குமம், காரணம் எனப்படும். பருஉடலின் (தூல சரீரத்தின்) உறுப்புக்களின் செயல்கட்கெல்லாம் மூலமாயிருப்பது நுண்ணுடல் (சூக்கும சரீரம்). நுண்மை, பருமைக்கு ஆதாரமாக நின்று அதை இயக்குவதென்பது இயற்கை விதி. பொறி புலன் முதலிய கருவிகள் வாயிலாகப் பருவுடலைப் புருடன் உதவியால் இயக்குவது மனம் என்றுஞ் சொல்லப்படுகிறது. பருவுடலை இயக்குஞ் சூத்திரதாரி எது? நுண்ணுடலா? அல்லது மனமா? இரண்டுமா? பருவுடலை இயக்குவது ஒன்றே. அது நுண்ணுடல் என்றுஞ் சொல்லப்படு கிறது; மனம் என்றுஞ் சொல்லப்படுகிறது. இதனால் அறியக் கிடப்பதென்னை? நுண்ணுடலும் மனமும் ஒன்றென்பது. நுண்ணுடலே மனமென்றும், மனமே நுண்ணுட லென்றும் கொள்ளல் தவறு என்றும், மனம் நுண்ணுடலின் ஒரு கூறு என்றும் சொல்வோரும் உளர். தத்துவ உலகில் நுழைந்துள்ள சிறு சிறு கருத்து வேற்றுமைகளை ஈண்டு நுணுகி ஆராயப் புகுவது அநாவசியம். அநுபவமில்லாதார் கூற்றுக்களும் இடைக்காலத்தில் தத்துவ உலகில் புகுந்தன. தத்துவ உலகம் சாற்றும் புல்லிய வேற்றுமைகள் அநுபவத்தில் தோன்றுவ தில்லை. மனத்தின் நிலைகள் இனிச் சிறிதுநேரம் மனத்தின் நிலைகள் மீது எண்ணஞ் செலுத்துவோம். மனத்தின் நிலைகள் பலபடப் பேசப் பட்டுள்ளன. அவைகள் மூன்றாகவும் இரண்டாகவும் தொகுக் கப்படலாம். மனத்தின் மூன்று நிலைகள் மேல் (புறம்) - நடு - அடி - என்பன. இம்மூன்றும் புறம் அகம் என்னும் இரண்டில் அடங்கும். புறமனம் அகமனம் (அடிமனம்) என்னும் ஆட்சியே பெரிதும் வழக்கிலிருப்பது. நடுமனம் என்பது புறத்தின் கடையிலும் அகத்தின் விளிம்பிலும் இருப்பது. புறத்தையும் அகத்தையும் தொடர்புபடுத்தி இருப்பது நடு. நடுவைப் புறத்திலோ அகத்திலோ சேர்த்து, அதை விடுத்துப் புறத்தையும் அகத்தையுங் கொள்வதும் மரபே. ஆகவே, மனத்தின் கூறுகளை மேல் -நடு - அடி என்று மூன்றாகவோ, புறம் அகம் என்று இரண்டாகவோ கொள்ளலாம். கருத்துக்களை நன்கு வெளி யிடுதற்பொருட்டு இங்கே மனநிலைகளை மூன்றாகவே கொள்கிறேன். ஒவ்வொன்றையும் சுருங்கச்சொல்லும் கடமை ஏற்பட் டிருக்கிறது. அதனால் பலதிற ஐயப்பாடுகட்கு இடம் உண்டாகலாம். என்செய்வேன்! இங்கே பேசப்பட்ட மேல் மனம் நடுமனம் அடிமனம் என்பன வெவ்வேறாகப் பிரிந்து இடைவிட்டு நிற்பன அல்ல. விவகாரத்தின்பொருட்டு நிலை, இங்கே மனம் மனம் என்று பேசப்படுகிறது. மனம் ஒன்றே. அது மூன்று நிலைகளை எய்துகிறது. மேல்மனமென்னும் புறமனமே ஒரு நிலையில் நடுமனமாகும்; மற்றொரு நிலையில் அடி மனமாகவும், இன்னொரு நிலையில் ஒன்றுமில்லாததாகவும் மாறும். பொருளின் நிலைகளை விளக்கத்தின் பொருட்டுத் தனித்தனி வேறுபடுத்திப் பேசுவதும் ஒருவித மரபு. காட்டினின்றும் புதிதாகக் கொணரப்பெற்ற ஒரு குதிரை மருளாது வழியே விரைந்து ஓடுமோ? அது புரியும் தொல்லைக் கோர் அளவுமுண்டோ? அது பண்படப் பண்பட அதன் மூர்க்கம் சிறிது நீங்கும்; ஒரோவழியில் (ஏகதேசத்தில்) மருண்டு மருண்டு ஓடுவதாகும். முற்றும் பண்பட்டு மூர்க்கம் அறவே ஒழிந்தால், அக்குதிரை தன்னை ஓட்டுவோன் உறங்கினும் தானே வழிபற்றி ஏகுவதாகும். குதிரை போன்றது மனம். ஒரே குதிரை மூன்று நிலை எய்துகிறது. ஒரே மனம் மூன்று நிலை அடைவ தாகிறது. நிலைமைகளில் விளையும் மாறுபாட்டால் மன இயல்புகளும் மாறுபடும். மனத்தின் மூன்று நிலையும் நாடோறும் நமது அநுபவத்தில் ஒருவாறு விளங்கியே வருகின்றன. இதை எளிதில் உணரலாகும். சிந்தனா சக்தியால் உண்மை தெளிதல்கூடும். நமது வாழ்க்கையில் விழிப்பு, கனவு, உறக்கம் உற்று வருகின்றன. விழிப்பில் உழல்வது புறமனம். இதனை வலியுறுத்த ஏதுக்கள் எதுவும் வேண்டுவதில்லை. அநுபவமே சாலும். கனவில் புறமன ஆட்டம் இருக்கிறதா? இல்லை. பின்னை எது அங்கே இயங்குகிறது? நடுமனம். புறமனத்தின் குவியலே நடுமனம் . புறமனம் புலன்களுடன் கலந்து விழிப்பில் உழல்கிறது. கனவில் அது புலன்களின் கலப்பை இழந்து நடுமனமாகிறது. கனவு கடந்த உறக்கத்தில் நடுமனம் அடியிற் செல்கிறது. அதனால் அஃது அடிமனம் என்று அழைக்கப்படுகிறது. அடிமனம் படிப்படியே தனதிருப்பைக் குலைத்துக் குலைத்து ஒடுக்க முறுவதாகும். (உறக்கத்தில் மனம் வெளி வந்து உலவுகிறது என்று சில யோகியர் கூறுப. அப்பொழுது உயிரைக் காத்து நிற்பது பிராணன். விழிப்புறுங்கால் பிராணன் மிகவிரைந்து மனத்துக்குச் செய்தி அனுப்பும். மனம் தன்னிடம் புகுந்து கடனாற்றும்) விழிப்பிலும் கனவிலும் உறக்கத்திலும் மனம் உறும் நிலைகள் தியானயோகப் பெருக்கில் நன்கு விளங்கும். புறமனம் அலைவதென்பதும், நடுமனம் மருளுக்கு (ஹிப்னொடி நிலைக்கு) உரியதென்பதும், அடிமனம் தியான யோகத்துக்கு உரியதென்பதும் ஈண்டுக் குறிக்கற்பாலன. இக்குறிப்பு, பின்னே மனத்தைப்பற்றி வருவனவற்றிற்குத் துணை செய்வதாகும். புறமனம் மேல்மனமென்னும் புறமனம் பொறி புலன் முதலிய கருவிகளுடன் கூடி வினைகளை ஆற்றுகிறது. இம்மனம் குறும்புகள் பலவற்றிற்கும் மூலமாக நிற்பது என்று சொல்லப் படுகிறது. இதைப் 1பேயென்றும் குரங்கென்றும் ஆன்றோர் இழித்துக் கூறியுள்ளனர். இப்பொல்லா மனத்தை அடக்கி வயப்படுத்துவதன் 2அருமைப்பாட்டை அநுபூதிமான்களும் அருளியுள்ளார்கள். பொல்லாத புறமனம் குவிந்து குவிந்து நடுமனமாகித் தன் குறும்புச் சேட்டைகளினின்றும் படிப்படியே விடுதலை யடையும் இயல்பும் உடையது. நடுமனம் விளக்கமுறுந்தறு வாயில் அது புறமனக் காலால் உதையுண்ணும். அவ்வேளையில் அதை மிக எச்சரிக்கையாக நடத்தல் வேண்டும். நடுமனத்தை நல்வழியில் நடத்தும் பயிற்சி இன்றியமையாதது. நடுமனம் நல்வழியில் செல்லச் செல்ல அதற்குப் புறத்தாக்குதல் படிப் படியே அற்றுப்போகும். அது பலவித அருஞ்செயல்கள் நிகழ்த்துவதாகும். நாளடைவில் அஃது அடிமனமாகும். அடிமனம் அரும்பும்போதே அஃது அறத்தின் உறையுளாகும். எல்லா நலன்களும் முளையும் இடம் அதுவே என்று சுருங்கச் சொல்கிறேன். நடுமனம் புறமனம் பொறி புலன் முதலிய கருவிகளுடன் கலந்து உலகுடன் தொடர்புகொள்ளும் ஒன்றாதலாலும், அதன் செயல்கள் பெரிதும் வெளிப்படையாக விளங்கி வருதலாலும் அதைப்பற்றி விரித்துரைப்பது அநாவசியம். அடிமனம் பண் பட்டதொன்றாதலாலும், அஃது ஒடுக்கமுறும் இயல்பின தாதலாலும் அதைப்பற்றியும் விரிவுரை பெரிதும் வழங்க வேண்டுவதில்லை. ஆதலின், நடுமனத்தைப் பற்றிச் சிறிது பேசலாமென்று கருதுகிறேன். புறமனம் பொறிபுலன்களின் வழி உழன்றே உலகுடன் தொடர்புகொள்கிறது. அதனால் அதற்குப் பொறி புலன்களின் கலப்புத் தேவையாகிறது. அக்கலப்பின்றிப் புறமனம் ஒன்றும் செய்யாது. புறமனம் பொறிபுலக் கட்டுடையதாதல் கருதற் பாலது. நடுமனம் பொறி புலன்களின் கலப்பில்லாமலே இயங்கவல்லது. இதற்குப் பொறி புலக்கட்டில்லை. கட்டுடைய ஒன்றினும் கட்டற்ற ஒன்று சக்தி வாய்ந்ததென்று சொல்லலும் வேண்டுமோ? யான் இங்கே இருக்கிறேன். எனது புறமனம் இங்கிருந்த படியே பலவிடங்கட்குப் பறந்து செல்லும். அம்மனம் உங்களைப் பார்க்கிறது; காவேரியைக் காண்கிறது; பொதிகையில் புகுகிறது. கன்னியைச் சார்கிறது; கங்கையை அடைகிறது; இமயத்தை நண்ணுகிறது; சீனத்திற் செல்கிறது; சைபேரியாவைச் சேர் கிறது; நியுயார்க்கை நாடுகிறது; லண்டனுக்குப் போகிறது; பம்பாய் வருகிறது; உங்களை நோக்குகிறது. இவைகளிற் சில யான் கண்டன; சில கேட்டன. காணாதனவும் கேளாதனவும் புறமனத்தில் இடம் பெறுமா? இடம் பெறா. புறமனம் குவிந்து நடுமனம் விழித்து எழுந்தால் காணாதனவும் கேளாதனவும் எளிதில் விளங்கும்; நனி விளங்கும். மானதக் காட்சி இங்கே புறமனத்துக்கும் நடுமனத்துக்கும் உள்ள வேற்றுமையைக் கவனியுங்கள். புறமனம் பொறி புலன்களின் கலப்புடையது. அதனால் அது கட்டு உடையதாகிறது. நடுமனமோ பொறி புலன்களின் கலப்பில்லாதது. அதனால் அதை எப்பொறியும் எப்புலனுங் கட்டுப்படுத்துவதில்லை. குருடரும் செவிடரும் நடுமனம் நன்கு விளங்கப்பெறுவராயின், அவரும் ஓரிடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் அறியும் பேறு பெறுவர். நடுமன விளக்கம், மானதக் காட்சி - யோகக் காட்சி - என்று வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தண்டியடிகள் என்றொரு நாயனார் இருந்தனர். அவர் குருடர். அவர் நாட்டமிகு தண்டி என்று வன்றொண்டரால் போற்றப்பெற்றார். நாட்டம் புறத்தை உணர்த்துவதன்று; அகத்தை உணர்த்துவது. இப்பெற்றி வாய்ந்த நடுமன விளக்கம் நமக்கு வேண்டுமா? வேண்டாவா? வேண்டா என்று அறிஞர் எவரும் கருதார். அவ்விளக்கம் பெற முயல்வது அறிவுடைமையாகும். அதைப் பெறும் வழி முதலியவற்றைக் குறித்துப் பின்னே பேசுவன். நடுமனப் படிகளில் ஆள் ஏறுங்கால் சில விசித்திரங்கள் ஆங்காங்கே நிகழும். இதற்குப் பலருடைய வாழ்க்கைக் குறிப்புக்களிருக்கின்றன. அவைகளைச் சுருங்கிய முறையில் குறித்துச் செல்லினும் கால வரம்பு கடத்தல் நேரும். ஆதலால் சிலருடைய வாழ்க்கைக் குறிப்புக்களை ஆங்கொன்று ஈங் கொன்றாகத் தூவிச் செல்கிறேன். மன்னித்தல் வேண்டும். சில நிகழ்ச்சிகள் கூல்ரிட்ஜ் வழக்கம்போலப் பாட்டு எழுதப் புகுந்தார். ஒருபோது தடை ஏற்பட்டது. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கண்கள் சோர்ந்தன. பொறி புலன்களின் கூட்டுறவு அற்றது. அந்நிலையில் அவர்தங் கை எழுதத் தொடங்கியது. சிறிது நேரங் கடந்து கூல்ரிட்ஜின் கண்கள் திறந்தன. அவர் பாட்டு முற்றுப் பெற்றிருத்தல் கண்டார்; வியப்படைந்தார்; யார் எழுதியது என்கிறார்; கையெழுத்துத் தம்முடையதாயிருத் தலைக் காண்கிறார்; கனவு நினைவாகி எழுத்தாகியதை உணர்ந்து கொண்டார். புறத்தால் ஆகாத ஒன்றை அகம் ஆக்கியது! புராக்டர் என்பவர் சதுரங்க ஆட்டத்தில் தலைப்பட்டார். அவருக்குத் தூக்கம் வந்தது. அவர்தங் கை மட்டும் யானையை யும், குதிரையையும் உருட்டிக் கொண்டிருந்தது. அவரே வெற்றி பெற்றார். புராக்டர் கண் விழித்தார்; நண்பர் வாயிலாக வெற்றியை உணர்ந்தார்; வியப்புற்றார். கனவு நினைவாகிச் செயலாகியது! அகக்கண் செய்யும் அற்புதம் என்னே! என்னே! ஓரிடத்தில் விளங்கப்பெறாத அரிய கணிதம் புராக்டரின் கனவில் விளங்கியதாம். நடுமனம் மலர மலர விழிப்பிலேயே பல அரிய காரியங்களை நிகழ்த்தும் ஆற்றலை அது பெறுவதாகிறது. டாக்டர் லேஜ்ஜைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் வேகமாக ஓடிய இயந்திரத்தை நிறுத்தியதும், கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஒரே சமயத்தில் ஒரு கணத்தில் துயிலச் செய்ததும் விழிப்பில் நிகழ்ந்தனவே. லண்டனில் ஹைட்பார்க் என்று ஒன்றுளது. அவ் விடத்தில் பாம்பே கிடையாதென்று பேசப்பட்டதாம். அங்கிருந்த ஹிப்னொடிட் ஒருவர், நாளை இங்கே பாம்புகளே மலியும் என்றார். அவர்தங் கூற்று நகரில் பரவிற்று. அடுத்த நாள் மக்கள் கூட்டம் பார்க்கில் திரண்டது. ஹிப்னொடிடும் அங்கே போந்தார். எங்கணும் பாம்புகளே மலியலாயின. அறிஞரின் நடுமனம் எதை எண்ணியதோ அது, அதுவாகவே எங்கும் காட்சியளித்தது. மேல்நாட்டில் ஒரு சகோதரியார் பிறர் எண்ணுவன வற்றை, அவரவர் உள் நுழைந்து நேரிற் கண்டாற்போல அவ்வவ்வாறே உடன் உடன் வெளியிட்டு வந்தனர். இந்நாளில் சிலர் அச்சக்தி பெற்றுள்ளனர். சிற்சிலர் சக்தியைத் துர் விநியோகஞ் செய்கின்றனர். நடுமன விழிப்பு என்னவே செய்யாது! ஐரோப்பாவில் முன்னொருபோது ஒரு மகாயுத்தம் நடைபெற்றது. ஓரிடத்தில் ஒரு பக்கம் ஒரு பட்டாளம் அமர்ந்திருந்தது. இரவில் சுற்றுப்பக்கங்களில் ஆங்காங்கே காவலாளர் நிறுத்தப்பட்டனர். காவலாளரைச் சோதிக்கச் சேனைத் தலைவர் வருவர்; போவர். ஒரு காவலாளியைத் தூக்க மயக்கம் அடர்ந்தது. அவன் மயங்கினான். ஆனால் அவன் நன்றாகத் தூங்கினானில்லை. அந்நிலையில் அவனது கைத் துப்பாக்கி நழுவி விழுந்தது. தலைவர் வந்தார். குதிரையொலி கனவு நிலையிலுள்ள காவலாளிக்குத் தெரிந்தது. உடனே அவன் எழுந்து பக்கத்திலிருந்த ஒரு பெரும் பீரங்கியைத் தூக்கிச் சுமந்து நின்றான். தலைவர் அக்காட்சியைக் கண்டார். குதிரையை விடுத்து இறங்கினார்; காவலாளியை அணுகினார். காவலாளி விழிப்பிலில்லை. தலைவர் சிலரைக் கூவி அழைத் தார். அவர்தங் கூச்சல் காவலாளியை விழிக்கச் செய்தது. தலைவர் காவலாளியை நோக்கி என்ன! ஹிவ்வளஷி பெளீய பீரங்கியை எப்படித் தாங்கி பிற்கிறாய்? என்று கேட்டார். கேட்டதும் காவலாளியின் புறமனம் புலன்களுடன் சேர லாயிற்று. உடனே பீரங்கி அவனை உறுத்திக் கீழே விழுந்தது. மனம் புலன்களில் கலவாத காலத்தில் அதற்கு உண்டாகும் வல்லமை வருணனைக்கு எட்டுவதோ? சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளை நீங்கள் அறிவீர்கள். அவர்தம் அருமைப் புதல்வர் வித்வான் மறை: திருநாவுக்கரசு இளைஞராயிருந்த ஞான்று நோய் வாய்ப்பட்டார். மருந்துகளால் பயன் விளையவில்லை. அடிகள் தம் புதல்வரை ஒருவித அறிதுயிலில் அமர்த்தினார். தம் மனத்தின் வழியே புதல்வர் மனத்தை இயங்கச் செய்தார்; நோயே போ என்றார். நோய் அரசை விடுத்து அகன்றது. மறை : திருநாவுக்கரசரின் அன்னையார் அறிதுயிலில் காணும் நிகழ்ச்சிகள் விழிப்புலகில் நடப்பனவாகின்றன. தமது புதல்விமாருள் ஒருவர் ஒரு கேணியில் விழுந்ததாக அம்மையார் ஒருபோது அறிதுயிலில் கண்டனர். அவர் கண்டது நினை வுலகில் நிகழ்ந்தது. மற்றுமொருபோது அம்மையார் தம் மூத்த புதல்வியார் கோவையில் இறந்துபட்டதாகக் கனவுலகில் கண்டார். காலையில் தம் மூத்த புதல்வியார் இறந்துபட்ட செய்தி அம்மையார்க்குக் கிடைத்தது. இவைகளிற் சில யான் நூல்களிற் படித்தவை; சில கேட்டவை. கண்டன சில கூற விரும்புகிறேன். இராயப்பேட்டையில் அயோத்திதா பண்டிதர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த மருத்துவர்; நூலாசிரியர்; தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்த்தவர். அப்பண்டிதரிடம் ஒற்றைத் தலைநோயர் வரும்போதெல்லாம் அவர் மருந்து கொடுப்பதில்லை. அவர் நோயாளரின் தலையில் ஒரு பாதி வளைந்த இரும்பைத் தடவுவர்; நோய் தீர்ந்துவிடும். தேள் கொட்டலுக்கும் பாம்புக் கடிக்கும் பண்டிதர் மருந்து சிகிச்சை செய்வதில்லை. அவர் புன்னகை புரிந்துகொண்டே தமது தலையைச் சொரிவர். கூக்குரலிட்டும் அழுதும் புரண்டும் வந்தவர் சிரித்து நிற்பர். தீராத மயக்கங்களையெல்லாம் அயோத்திதாஸர், ஆட்களைத் தமது முன்னே இருத்தி அவர்களை உற்றுநோக்கி நோக்கிக் குணஞ் செய்வர். பண்டிதர் தமது செயல்களைப் பெருமிதமாகப் பேசுவதில்லை. அவர், சிலநாள் பயிற்சி செய்தால் எல்லார்க்கும் இச்சக்தி உண்டாகும் என்பர். மூலம் நடுமன விளக்கமே. யான் சிறுவனாயிருந்தபோது சென்னைக் கந்தசாமிக் கோயில் பக்கம் சென்றபோதெல்லாம் அங்கே ஓர் அழுக் குருவம் என் கண்ணில் படுவதுண்டு. அவரைச் சாமியார் சாமியார் என்று ஒரு கூட்டம் சூழ்ந்த வண்ண மிருக்கும். பல ஆண்டு கடந்த பின்னை, நண்பர் வேலூர் இரத்தினவேல் முதலியாரால் அழுக்குருவச் சாமியார் மாண்பு தெரியவந்தது. நண்பர் ஒருமுறை அச்சாமியாரிடம் என்னை அழைத்துச் சென்றனர். இருவேமும் வழியில் பேசியவற்றின் சாரத்தை வாய் பிதற்றுவதுபோல அச் சாமியார் வெளி யிட்டனர். அவர்தம் நடுமனத்தில் எமது பேச்சின் சாரம் படிந்து கிடந்தது. சமயம் நேர்ந்தபோது அது புறத்தே வெளியாயிற்று. நண்பர் இரத்தினவேல் முதலியார் உயிர்நூல் பயின்று தேர்ச்சியடைந்து பி. ஏ. பட்டம் பெற்றவர். அவர்தம் பெரும் பொழுது யோகாப்பியாசத்திலேயே செல்லும். அவர் சென்னை இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபைக்குரிய குகானந்த நிலைய த்தில் சில நாள் தங்கியிருந்தனர். ஒருநாள் நள்ளிரவில் அவர் வாய் பிதற்றினர். யான் விழித்து அவரை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். அவர் விழித்தெழ வில்லை. அந் நிலையில் அவர்தம் வாய், பட்டினப்பாலையில் ஒரு பகுதியைப் பாடலாயிற்று. யான் அவரை எழுப்புவதை நிறுத்திக் கொண்டேன். உரை சொல்லுங்கள் என்றேன். உரை ஒழுங்காக வெளிவந்தது. இலக்கணக் குறிப்புக்கள் கேட்டேன். அவை களுஞ் சொல்லப்பட்டன. ஏறக்குறைய அரைமணி நேரம் சம்பாஷணை நடந்தது. விழிப்பில் பேசுவதுபோலவே எல்லாம் நடந்தன. பின்னே படிப்படியே நண்பர் வாய் குழறிக் குழறி விழித்தனர்; எழுந்தனர்; என்னைக் கூப்பிட்டனர்; நாம் நள்ளிரவில் பட்டினப் பாலையைப் பற்றிப் பேசுதல் எற்றுக்கு நேர்ந்தது என்று வினவினர். இருவேமும் நீண்ட நேரம் மனத்தின் கூறுபாடுகளையும் பிறவற்றையும் பேசிப் பேசி இரவைப் போக்கினோம். குகானந்த நிலையத்தில் படுத்துவந்த வேறு ஒருவர் வே. தியாகராயர் என்பவர் மிக இளைஞராகயிருந்தபோது சில வேளைகளில் இரத்தினவேல் முதலியாரைப் போலவே கனவில் உரையாடியதை யான் காணலானேன். இவ்வாறு உரையாடுஞ் சிலரைப் பின்னாளில் யான் சந்தித்தல் நேர்ந்தது. அணித்தே ஒருவர் நடுமன உணர்விலிருந்து பேசி வந்தது இடையில் நின்றமை கண்டேன். இவைகளெல்லாம் தொடக்கத்தில் தோன்றும் மின்னல்களாகும். இம்மின்னல் தோன்றப் பெறுவோர் நடுமன விளக்கத்துக்குரிய பயிற்சிகளை முறையே செய்துவருவரேல், அவர்க்கு விழப்பிலேயே மானதக் காட்சி விளங்குவதாகும். யான் பள்ளி விடுத்ததும் சமயநூல் சிலவற்றைப் படித்து வந்தேன். அந்நாளில் அப்படிப்பு எனக்குச் சாமியார் பித்தை எழுப்பிற்று. அக்காலத்தில் திருவான்மியூரில் ஒரு சாமியார் இருந்தார். அவர்தம் பெருமை சென்னையில் பல இடங்களில் பேசப்பட்டது. அவரைக் காண யான் சிலருடன் போவது வழக்கம். சாமியார் மௌனி. அவர் தமது உள்ளக் கிடக்கை களை மணலில் எழுதி எழுதிக் காட்டுவர். ஒருநாள் சுமார் பிற்பகல் மூன்றரை மணியிருக்கும். அங்கே வேறொரு சாமியார் வந்தார். அவர்தம் விகார வடிவம் எங்களுக்கு அச்சமூட்டிற்று. அவர் திருவான்மியூர் சாமியாரிடம் பேசிப் பேசி இடை யிடையே வித்தையைக் கற்பியுங்கள் என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆவல் மட்டும் அதிகரித்தது. என்ன வித்தை என்று விகார சாமியாரை யான் கேட்டேன். அவர் சீறிவிழுந்தார். அவர் திடீரென எழுந்து, தம் கையிலிருந்த கோலால் மௌன சுவாமியைச் சுற்றி ஒரு வட்டமிட்டார். இட்டதும், மௌனி அப்படி இப்படி அசைந்தாரில்லை. கைகால்கள் கட்டுப்பட்டன. அவரது துன்பம் எங்கள் உள்ளத்தை உருக்கிற்று. மௌன சாமியார் சிறிது நேரங் கடந்து வீறி எழுந்தார்; ஓடினார்; வான்மியூர் அப்பன் திருக்குளத்தில் மூழ்கினார்; திருக் கோயிலைக் கும்பிட்டார்; திரும்பிவந்து அமர்ந்தார். விகார சாமியார் மீண்டும் வட்டக் கோடிட்டார். இம்முறை மௌன சாமியாரை வட்டம் ஒன்றுஞ் செய்யவில்லை. சூழ்ந்திருந்த பலரும் வாளா இருந்தனர். யான் மௌன சாமியாரை நோக்கி, சாமி! ஒன்றும் விளங்கவில்லையே என்றேன். அவர், எனது கவலை ஈனம் எனக்குத் துன்பம் விளைத்தது என்று எழுதினார். வேறு என்னென்னவோ எழுதினர். அவைகளை இங்கே விரித்தல் அநாவசியம். எனது ஐயம் நீங்கவில்லை. பின்னே யான் அகத்திணையருடன் நெருங்கிப் பழகப் பழகச் சாமியார்கள் நிலைகள் புலனாயின. இருவரும் ஓரளவில் நடுமனம் விளங்கப் பெற்றவர் என்பதும், ஒருவர் மனம் ஆக்கத்திலிருந்தபோது அது மற்றொருவர் மனத்தை ஆண்டது என்பதும், பின்னே இவர் மனம் ஆக்கம் பெற்று அவர் மனத்தை ஆண்டது என்பதும், விகார சாமியார் தமது மன விளக்கத்தைத் தீய வழியில் பயன்படுத்தினார் என்பதும், நடுமனம் செவ்வனே பண்பட்டால் அதற்கு எத்தகைய வீழ்ச்சியும் நேராதென்பதும், இன்ன பிறவும் ஒருவாறு விளங்கலாயின. யான் ஆயிரம்விளக்கு வெலியன்பள்ளியில் ஆசிரியனா யிருந்தபோது ஒரு கிறிதுவ சகோதர சங்கத்திற் சேர்ந்து தொண்டாற்றி வந்தேன். கோயில் கிறிதுவர் அச்சங்கத்தை வெறுத்துப் பழிப்பதுண்டு. சங்கத்தில் ஆவியுலக நுட்பங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. அதன் பயனாக இருவர் தேர்ச்சி யடைந்தனர். அவர், ஒரு சிறு பையன் முன்னே ஒரு பளிங்குப் பொத்தானைக் காட்டிக் காட்டி அவனை மயக்கத்தில் அதாவது துயிலில் சேர்ப்பர். பல கேள்விகள் கேட்கப்படும். பதில்கள் பையன் வாயிலாக வெளிவரும். xUehŸ igaid neh¡» ïUtUŸ xUt®, ‘Õ£l® v§nf ïU¡»wh®? என்று கேட்டார். ‘nkh£r¤âš’ v‹w gâš »il¤jJ; Û©L« ‘btÞÈ’ v§nf ïU¡»wh®? என்று கேட்டார். மோட்சத்தில் என்ற பதிலே வந்தது. ah‹ igaid¥ gh®¤J ‘jhíkhdh® v§nf ïU¡»wh®? என்று வினவினேன். நரகத்தில் என்று விடை பிறந்தது. kWgoí« ‘e«khœth® v§nf ïU¡»wh®? என்று வினவினேன். நரக விடையே பிறந்தது. என் மனம் புழுங்கிற்று. வீடு சேர்ந்தேன். ஹிப்னொடிஸத்தில் நற்பயிற்சி பெற்ற திரு. ஆர். கே. நாயுடுவிடஞ் சென்றேன்; நிகழ்ச்சிகளை முறையிட்டேன். mt®, ‘igaid¤ JÆy¢ brŒaî« nfŸÉfŸ nf£î« v‹id¢ r§f¤jh® ÉLtuh? என்று கேட்டனர். சங்கத்தார் சம்மதம் பெறப்பட்டது. திரு. நாயுடு குறிப்பிட்ட ஒரு நாளில் சங்கம் போந்து, தமது முறைப்படி பையனைத் துயிலச் செய்தனர். பின்னே அவர், பீட்டர் எங்கே இருக்கிறார்? என்று வினவினர். நரகத்தில் என்ற பதில் கிடைத்தது. Û©L« ‘jhíkhdh® v§nf ïU¡»wh®? என்று கேட்டனர். மோட்சத்தில் என்ற பதில் கிடைத்தது. மோட்ச நரகம் உள்ள இடம் ஹிப்னொடிட் மனம் என்பது தெளிவாயிற்று. ஹிப்னொடிட் மனத்துக்குப் பையன் மனம் எளிமை ஆகிறது. அம்மனம் நினைப்பதை இம்மனம் வெளி யிடுகிறது. என்ன அதிசயம்! மணிவிழாத் தலைவர்க்கும் எனக்கும் தெரிந்த ஜோசியர் ஒருவர் இருக்கிறார். அவர், எவர் என்ன நினைந்துவருகிறாரோ அதை நேரிற் கண்டதுபோலக் கூறுவர். இது பலரை மயங்கச் செய்தது. மணிவிழாத் தலைவர், இது மனப்பாங்கு. நமது நினைவுகள் படியும் மனம் ஜோசியரிடம் மலர்ந்திருக்கிறது. மனத்தில் படிந்தனவற்றைத் திரட்டி அவர் வெளியிடுகிறார் என்று சொல்வர். இச்சொல் சிலர்க்குப் பிடிப்பதில்லை. மனஇயல் தெரியாதார்க்கு எல்லாம் வியப்பாகவே தோன்றும். மற்றுமொரு ஜோசியர் நினைவு இங்கே உதிக்கிறது. அவர் தஞ்சையில் வாழ்ந்தவர். கடிதத்தில் சில கேள்விகள் பொறித்து, அதை உரையில் சேமித்து, அரக்கிட்டு அனுப்பினால் ஜோசியர் உறையை உடையாமலே பதில் விடுப்பர். அவர்க்கு இராயப் பேட்டை நண்பர் ப. கோவிந்தராஜர் என்பவர் ஒரு கடிதம் வரைந்து கொண்டிருந்தார். அதில் பொறிக்கப் பெற்றிருந்த கேள்விகளுள் ஒன்று. ‘v‹ jhah® v¥bghGJ ïwªJgLth®? என்பது. mU»Uªj eh‹, ‘v‹ jªijah® v¥bghGJ ïw¥gh®? என்றொரு கேள்வியையும் சேர்க்குமாறு நண்பரைத் தூண்டினேன். அக்கேள்வியும் சேர்க்கப்பட்டது. கடிதம் முறைப்படி அனுப்பப்பட்டது. விடைவந்தது. தாயார் இன்னும் ஓராண்டில் இறப்பார் என்றும், தந்தையார் இறக்க இன்னும் ஏழாண்டு ஆகும் என்றும் விடையில் காணப்பட்டன. நண்பர் தந்தையார் மாண்டு பல ஆண்டுகளாயின. சோதிடர் மனத்தில் கேள்விகள் உருக்கொண்டன. ஆனால் நிகழ்ச்சிகளின் உண்மை உணரும் நிலையை அவர் மனம் அடையவில்லை. இதனால் நடுமன விளக்கத்திலும் பல திறங்கள் உண்டு என்பதும், ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையில் விளக்கம் நிகழும் என்பதும் விளங்குகின்றன. இப்பொழுது குறிமேடை நினைவு எழுகிறது. உங்க ளுக்கும் அந்நினைவை உண்டாக்கிவிட்டேன். அந்த உலகிலும் யான் நுழைந்து ஆராய்ச்சிசெய்துள்ளேன். அதைப்பற்றித் தனி நூலொன்று எழுதவும் எண்ணிய காலமுண்டு. குறிசொல்லு தலும் மனோவித்தை என்ற முடிவுக்கு வந்தேன். கூடம் பல வழியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விளக்கு வெளிச்சம் கண்ணைப் பிடுங்கியது. பம்பை உடுக்கை, சிலம்பு முதலிய வாத்தியங்கள் முழங்குகின்றன. பாட்டுகள் வீறுகின்றன. கர்ப்பூர தீபம் எரிந்த வண்ணமிருக்கிறது. பெண் மணி குளிர்ந்த நீராடி வந்து பீடத்தில் அமர்கிறாள். ஆங்குள்ள அலங்காரமும், வாத்திய முழக்கமும், பாட்டொலியும், பிறவும் அவள் புலன்களைக் கவர்கின்றன. தலைமைப் பூசாரி கர்ப்பூர தீபத்தை உற்று நோக்குமாறு அவளைப் பார்த்துப் பார்த்து அடிக்கடி கூக்குரலிடுகிறான். கர்ப்பூர தீபத்தை இடைவிடாது உற்றுநோக்கியிருக்கும் பெண்மணியின் புறமனம் குவிகிறது; நடுமனம் சிறிது அரும்புகிறது. இம்மனத்தில் அங்குள்ளவர் களின் எண்ணங்கள் படிகின்றன. மருளிலுள்ள பெண்மணி தலைமைப் பூசாரியின் வழிநின்று குறிசொல்லத் தொடங்கு கிறாள். சாதாரண மக்களுக்கு வியப்புண்டாகிறது! குறிமேடை ஆராய்ச்சியில் யானும் என் நண்பர்களும் தலைப்பட்டிருந்த காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சிகளில் இரண் டொன்றை இங்கு இயம்ப முற்படுகிறேன். இராயப்பேட்டையிலே ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்குத் தெய்வமேற்ற நாள் குறிக்கப் பட்டது. அக்குடும்பம் என்பால் சகோதர நேயம் பூண்டது. சகோதரியாரை யான் நன்கு அறிவேன்; அவரிடம் அன்று பகல் அணுகி, அம்மா! யான் சொல்வதைக் கேளும். இன்றிரவு கொலுக்கூடத்தில் கர்ப்பூர தீபத்தையோ அல்லது குறிப்பிட்ட வேறு ஒருவிளக்கையோ உற்றுஉற்று நோக்குமாறு பூசாரி உம்மைத் தூண்டி தூண்டி உடுக்கையடிப்பான்; பாட்டுப் பாடுவான். அவ்வேளையில் நீர் மனத்தை அவன் வழிச் செலுத் தாமல் திருப்போரூருக்குப் போகும் பாதை, படகுப் பிரயாணம், வாணியன் சாவடியிலிறங்கல், கட்டுச்சோறுண்ணல், கோவளக் கதவடைப்பு, உப்பளம், படகுவிட்டிறங்கல், கூட்டத்துடன் உரையாடி வழிநடத்தல், திருப்போரூர் அடைதல், சத்திரம் சேர்தல், உணவருந்தல், காலையிலே சரவணப்பொய்கையில் நீராடல், தேங்காய் பழம் வாங்கல், கோயிலை வலம்வரல், பிரார்த்தனை செலுத்தல், பிச்சைக்காரர் நெருக்கம் முதலிய வற்றைப் படிப்படியே தொடர்ச்சியாக நினைந்துகொண்டே இரும்; திருப்போரூர் யாத்திரை முடிந்துவிடின், உமக்குத் தெரிந்த பாடல்களை மனத்துள்ளே பாடிக்கொண்டிரும்; வேறுவழியில் மனத்தைச் செலுத்திக் கொண்டிரும் என்று சொன்னேன். சகோதரியார் என்சொற் படி நடக்க உறுதிமொழி கூறினர். பூசாரி என்னென்னவோ செய்து பார்த்தான். அவன் வித்தை பலிக்கவில்லை. என் செய்வான் பாவம்! இக்கூட்டத் தில் தீட்டுக்காரர் வந்திருக்கிறார். அதனால் மருள் வரவில்லை என்று கதறி வாழ்த்துப் பாடினான். சகோதரியார் மனம் பூசாரியின் மயக்க வித்தைக்கு எளிமையாகவில்லை. விளக்கம் வேண்டுமோ? ஏமாற்றக் குறி மேடைகளும் இருக்கின்றன. மனங் குவியப் பெறாதாரும் குறிசொல்வதுண்டு. அவரிடை மோசம், வஞ்சம், சூழ்ச்சி முதலிய கொடுமைகள் தாண்டவம் புரியும். பணம் பறிக்க வல்ல சமர்த்தரும் குறிக்குத் துணை செய்வர். இவ்வநியாயங் களை என்னென்று கூறுவேன்! இவைகளிலும் எனது சோதனை நடந்தது. இராயப்பேட்டைக்கடுத்த விநாயகம்பேட்டையிலே ஒரு குறிமேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஓர் அம்மையார் செவ்வாய் - சனிக்கிழமைகளில் குறி சொல்வார். அம்மையாருக்கு உண்மை மருள் வருவதில்லை; நடிப்பு மருள் வருவதுண்டு. அவர்தம் மருளைச் சோதிப்பதற்கென்று ஓர் இளங்குழு திரண்டது. அக்குழுவினர் ஒரு சனியன்று பருத்த நெரிஞ்சி முட்களைப் பறித்துச் சேமித்து, அம்மையார் நீராடி வருவதற்குள், அவர் அமர்ந்து குறிசொல்லும் விளக்கு நிழல் செறிந்த இடத்தில் முட்களைத் தூவிப் பரப்பினர். அம்மையார் வழக்கம்போல் நீராடி அட்டகாசமாகத் தமக்குரிய பீடத்தமர்ந்து தலையைச் சுழற்றினார். சுழல் மிக மிக முட்களுஞ் சுழன்றன. அம்மையார்க்கு நோய்பொறுக்க முடியவில்லை. அவர் கரும்புடவை உடுத்தி அங்கே நின்றிருந்த ஒருத்திமீது பாய்ந்து அவளை அடித்துத் துரத்தி, இன்று இங்கே காட்டேரி வந்தது என்று சொன்னார். சொன்னதும் தெய்வம் மலை யேறிவிட்டது. கூட்டம் பலவாறு பேசிப் பேசிக் கலைந்தது. மயிலாப்பூரில் ஓர் இளம்கைம்பெண் குறி சொல்லி வந்தாள். மருள் அவளை அணுகுவதே இல்லை. இளம்பெண் பெரிய மோசக்காரி. அவள் சூழ்ச்சிகள் அளப்பரியன. அவள் வீட்டின் ஒருபகுதியில் ஓலை வேய்ந்த மாட்டுத் தொழுவம் ஒன்றிருந்தது. அதன்மீது உலர்ந்த சுரைக்கொடிகளும் பிறவும் படர்ந்திருந்தன. ஒருநாள் மாலை, அந்திவேளை - தொழுவத்தின் உச்சியில் பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்ற ஒரு தோற்றம் உண்டாயிற்று. பாம்பு அப்படி இப்படி அசையவில்லை. படம் அசைந்துகொண்டே இருந்தது. இளம்பெண் எழுந்தாள்; தலை விரித்தாடினாள்; கூச்சலிட்டாள்; பாளையத்து மாமாரி படமெடுத்து ஆடுகின்றாள்; வலது சொன்ன பேர்களுக்கு வந்திடுமே பேதி - வந்திடுமே சாவு . . . என்று அலறினாள். கூட்டம் பெருகிவிட்டது. இவ்வளவு சந்தடிக்கும் பாம்பு ஓடாம லிருக்கிறதே; படமும் ஒடுங்காமலிருக்கிறதே; என்று சிலர் ஐயுற்றனர். மருண்டு நின்றவரெல்லாம் என்னென்னவோ பேசினர். அஞ்சா நெஞ்சுடைய ஒருவர் தடைகளையெல்லாம் மீறி ஏணி தாங்கிப் புறப்பட்டார்; பின்புறம் சென்றார்; தொழு வத்தின்மீது ஏறினார்; பாம்பின் படத்தைக் கிள்ளி யெடுத்தார்; கீழே இறங்கினார்; பாம்பின் படம் பாருங்கள், பாருங்கள், என்று கிள்ளிக் கொணர்ந்ததைக் காட்டினார். பொருள் என்ன? பாம்பின் படமா? உலர்ந்த சுரை இலை! அந்தி வேளையில் அது பாம்பாகிவிட்டது! பழுதை பாம்பாகிய கதையோ என்னவோ தெரியவில்லை. விலங்கு பறவை முதலியவற்றின் மனோநிலைகளின்மீதும் என் கருத்து நடக்கிறது. விலங்கு முதலியவற்றின் மனோ நிலைக்கும் மனித மனோநிலைக்கும் வேற்றுமை உண்டா? இல்லையா? வேற்றுமை உண்டு என்று எவருங் கூறுவர். இது பொதுக்கூற்று! பெரும்பான்மை நோக்கிச் சொல்லப்படுவது. எதற்கும் புறநடை உண்டு. மனிதரிலும் நாயுண்டு; கழுதையுண்டு; புலியுண்டு; பிறவுண்டு; விலங்கு மனோநிலையை வில்லியம் ஜேம் உள்ளிட்ட அகத்திணையர் நன்கு ஆய்ந்து பல நுட்பங் களை உலகுக்கு உதவியுள்ளனர். அவர் தமது நூலில் எடுத்துக் காட்டியுள்ள ஒரு நாயின் நடக்கை போன்றதொன்று ஆயிரம் விளக்கில் ஒரு நாயினிடத்திலும் நிகழ்ந்தது. ஆயிரம் விளக்கில் ஓர் ஆங்கிலோ இந்தியர் ஒருநாய் வளர்த்தார். அந் நாய் அறிவும் பரிவும் உடையது; ஆங்கிலோ இந்தியர்பால் நட்புக்கொண்ட என்னை ஆயிரம்விளக்குப் பாதையில் பார்க்கும்போதெல்லாம் அந்நாய் என்னுடன் பள்ளிவரைத் தொடர்ந்து வந்து திரும்பும். அந் நாயை ஒரு நண்பன் என்றே சொல்வேன். அதன் அருஞ்செயல்கள் பலப்பல என் நினைவில் உறுகின்றன. அது கூடையையும் பெட்டியையும் கவ்விச் செல்லும் பயிற்சி பெற்றிருந்தது. காய்கறிக் கூடையை அது கவ்விப்போவதும் வருவதும் பொது மக்கள் கருத்தையும் சிலசமயம் ஈர்க்கும். ஆங்கிலோ இந்திய நண்பர் காலமல்லாக் காலத்தில் வழியில் ஏதேனும் பொருள் வாங்கிக் கூடையை நினைந்து நாயைப் பார்ப்பார். குறிப்பறிந்து நாய் வீட்டுக்கோடிக் கூடையைத் தாங்கி வரும்; மீண்டும் அதை எடுத்துச் செல்லும்; ஆங்கிலோ இந்தியரும் அவர்தம் மனைவியாரும் பந்தாட்டம் பார்க்க ஒருநாள் வெலியன் பள்ளி வெளிக்குச் சென்றனர். நாயும் அவரைத் தொடர்ந்தே போனது. என்னுடன் அவ் விருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் நண்பர் தாம் எடுத்துவர எண்ணிய பெட்டியைப்பற்றி மனைவிக்கு நினைவூட்டினர். அம்மையார் நாய்முகம் நோக்கி, பெஞ்சு மீதுள்ள தோல்பெட்டியைக் கொண்டுவா என்று கட்டளை யிட்டார். நாய் விரைந்தோடி மீண்டது. கொண்டு வந்தது எதை? வேறொரு பெட்டியை, அம்மையார், இப்பெட்டி தூணின் பக்கத்திலே இருந்தது. முன்னே தோன்றியதை நாய் எடுத்து வந்தது. நாயின் பகுத்தறிவு இவ்வளவே என்றார். அம்மையார் நினைந்தமை நாய் மனத்தில் நுழைந்தது. ஆனால் பொருள் இஃது என்பதுமட்டும் நாய் மனத்தில் நுழையவில்லை. அது நுழைய இயற்கையும் இடந்தாராது. நாய் மூளையைச் சூழ்ந்துள்ள நரம்புத்தொடைகளின் அளவினதாகவே அதன் மனம் விளங்கும். அதற்கு மேல் அதன் மனம் விளங்காது. பகுத் துணர்தற்குரிய நரம்புகள் வளர்ச்சியுறாமல் விலங்கு மூளைகளில் கிடக்கின்றன என்பது அகத்திணையர் உள்ளக் கிடக்கை. மனித மூளைகளெல்லாம் ஒரே தன்மையில் அமைந் துள்ளனவா என்னும் கேள்வி இங்கு எழலாம். மனிதரிலும் விலங்கு மூளை யுடையவர் இருக்கிறார். அவர் எதையும் ஆழ ஆராய விரையார்; கலைகளை அவர் மனம் காதலியாது; தத்துவ நுட்பங்கள் அவர்க்குச் சுமையாகவே தோன்றும். அவர்தம் அறிவு, பருமைகளையே பற்றிப் படரும்; நுட்பங்களில் நுழை யாது. நுண்மைகளில் அவர்க்கு நம்பிக்கையும் உண்டாகாது. அவரை இருகால் விலங்குகள் என்று கூறுவது மிகையாகாது. மனிதப் படைப்பிலும் படித்தரங்களுண்டு. தென்னாப்பிரிக் காவில் சில மனிதக் கூட்டங்களிருக்கின்றன. அவைகட்கு இரண்டு காலும் இரண்டு கையுமிருக்கின்றன; மூளையுமிருக் கிறது. எத்தகைய மூளை! சில கூட்டம் ஐந்து வரை எண்ணும்; சில கூட்டம் பத்துவரை எண்ணும். இத்தகைய மூளை! இக் கூட்டங்களும் மனித இனமே. மனவிளக்கம் எல்லார்க்கும் ஒருவிதமாக உறுவதில்லை. விளக்கமே உறாத பிறவிகளுமுண்டு. அப் பிறவிகள், இன்னும் பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். ஒவ்வோர் அளவில் சிற் சிலர்க்கு மனவிளக்கம் உண்டாகும். சிலருக்கு அவ்விளக்கம் தங்கு தடையின்றிப் பெருகிக்கொண்டே போகும். எல்லாம் மூளையின்நரம்புத் தொடையல்களின் அமைவைப் பொறுத்தன என்க. சித்து புறமனங் குவிந்து நடுமனம் முகிழ்க்குங்கால் சிலரிடத்தில் சில சித்திகள் உண்டாகும்; சில சக்திகள் பிறக்கும். அவைகளை நல்வழியில் மேலும் மேலும் நடுமனம் மலர்ந்து கனிதற்குப் பயன்படுத்தல் வேண்டும். சித்திகளையும் சக்திகளையும் தீயவழியில் பயன்படுத்தினால், நாளடைவில் நடுமனவிளக்கம் வெம்பிச் சாம்பி மீண்டும் புறமனமாகவே பூரிக்கும். மறுபடியும் நடுமனம் விளக்கம் பெறுதற்கு எவ்வளவு காலமாகும்! கிடைத்த வாய்ப்பை வீணாக்குவது அறிவுடைமையாகாது. இங்கே இராமலிங்க சுவாமிகள் பாட்டொன்று நினைவுக்கு வருகிறது. அது, திருஞானசம்பந்தர் தமக்கு அறிவுறுத்திய நன்மொழிகள் இன்ன இன்ன என்று உலகுக்குத் தெரிவிக்கும் முறையில் சுவாமிகளால் பாடப்பட்டது. அப் பாட்டு, உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனது இதயம். . . என்னுந் தொடக்கம் உடையது. அதன்கண், அட்ட சித்திகளும் நினது ஏவல் செயும் நீ அவை, 1அவாவியிடல் என்ற ஒளியே என்றொரு மணிமொழி ஒளிர்கிறது. அவாவி யிடல் என்பது கருதற்பாலது; பன்முறை கருதற்பாலது. நடுமன விளக்கத்தால் தம்மாட்டுப் பிறக்குஞ் சக்திகளைக் கொண்டு பிறர்க்குத் தீமை புரியத் தொடங்குவோரும் உளர். அவரை விலங்கென்று விளம்புவதா? பேய் என்று பேசுவதா? அரக்கரென்று அறைவதா? என்னென்று கூறுவதென்பது எனக்குத் தெரியவில்லை. பெற்ற சக்திகளைத் துர்விநியோகப் படுத்துவதன் விளைவு என்ன ஆகும்? பேயர் அதை எண்ணிப் பார்ப்பதில்லை போலும்! பிறர்க்குச் சிறு தீமை விளையினும் விளையும். ஆனால் பெருந்தீமை எவர்க்கு விளையும்? தீமை தன்னைப் படைத்த பேயரிடமே சென்று அவரைத் தாக்கும். தன்வினை தன்னைச் சுடுதல் இயற்கை. துர்விநியோகம் தீமை விளைக்கும் அளவில் நின்றுவிடாது. அது, முன் பெற்ற சக்திகளைப் போக்கும்; இன்னும் என்ன செய்யும்? நடுமன விளக்கை அழிக்கும்; புறமன .இருளைச் செறிவிக்கும்; ஆளைப் பலவழியில் அலைக்கும்; ஒறுக்கும். சூந்யம் வைப்போர், அறம் பாடுவோர் முதலியோர் உலகில் எப்படி வாழ்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கு மென்று நம்புகிறேன். அவர்தம் வாழ்வு மிகவும் இரங்கத் தக்க தாக முடியும். அவர்தம் நினைவை இங்கே உண்டாக்கியது குறித்து வருந்துகிறேன். ஆண்டவனை நினைப்போமாக; அடியவரை நினைப்போமாக. 1“btŸsªjhœ விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தான் நின்றுச்சி யளவு நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம் கண்ணினையும் மரமாம்தீ வினையி னேற்கே. 2சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே. நடுமன எழுச்சியை நல்வழியில் பயன்படுத்துவதே அறிவுடைமை; அதனால் அம்மனம் மேலும் மேலும் மலரும்; கனியும்; அடிமனம் முகிழ்க்கும்; அடிமனம் முகிழ்க்கத் துணை செய்யும் ஒன்றினுஞ் சிறந்தது வேறொன்றிருக்குமோ? நடுமன விளக்கத்தைத் தொடக்கத்திலேயே நல்வழியிற் செலுத்தி ஒழுங்கு செய்தால் விளைவைக் கண்கூடாகக் காணலாம். என்ன! அகக்கண் திறக்கும்; மானதக்காட்சி கூடும்; பேத உணர்வு அருகும்; பொதுமை உணர்வு பெருகும்; பிறர்க்குத் தீங்கு நினைத்தல் அற்றுப்போகும். உயிர்கட்குப்பயன் கருதாத் தொண்டு செய் வதில் ஊக்கம் பிறக்கும்; இன்னோரன்ன நலங்கள் உண்டாகும். இவையெல்லாம் பாவக் கருவின் வேரறுக்கும் ஞான வாட்களல்லவோ? ஒரு பெருஞ் சமய சங்கத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் ஐரோப்பியர். அச்சங்கத்துக்கு யான் போவதுண்டு. ஆனால் ஐரோப்பியப் பெரியாரிடம் யான் நெருங்குவதில்லை. அவர் நடுமன விளக்கத்தை நல்வழியில் பெருக்கி ஞான திருஷ்டி யடைந்தவர் என்று அறிஞரால் போற்றப்பட்டார். அவர் எழுதிய நூல்களிற் சிலவற்றுடன் யான் உறவுகொண்டு வந்தேன். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சில ஐயப்பாடுகள் தோன்றின. அவைகளைக் களைதற்குக் கலைப்புலமை துணை செய்ய வில்லை. ஐரோப்பியப் பெரியாரை அணுகிப் பார்க்கலாம் என்று அவரிடஞ் சென்றேன். சிறிதுநேரம் அவர்பால் உரையாடிய பின்னர் ஐயப்பாடுகளை வெளியிட்டேன். அவர்க்குத் தமிழ் தெரியாது. திருமந்திரம் தமிழாலாகிய ஒரு பெரும் நூல்! என் செய்வது! பெரியார் நூலைக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டார். மறுநாள் திருமந்திரத்தை எடுத்தேகினேன். அவர் நூலை வாங்கித் தமது மேசை மீது வைத்தார். அதைத் தொட்ட வண்ணம் சிறிது நேரம் கண்மூடி மௌனஞ் சாதித்தார்; பின்னே விழித்தார்; சில ஐயப்பாடுகளை நீக்கினார். அவரிடம் நெடு நேரம் பேசினேன். பல நுட்பங்கள் விளங்கப் பெற்றேன். மொழி களெல்லாம் தனி நாதத்தின் பரிணாமம் என்றும், நாதமே மொழிகட்கெல்லாம் மூலம் என்றும், நாதம் வெறுஞ் சப்த மயமா யிருப்பதென்றும், அதன் அலைகள் படிப்படியே பருத்துப் பருத்து நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பலதிற மொழிகளாக ஒலிவடிவில் பரிணமிக்கின்றன என்றும், ஒலிவடிவு பின்னே வரிவடிவாகிறது என்றும், புறமனம் ஒடுங்க, நடுமனம் மலர, அடிமனம் விளங்கி அடங்க, விந்து நாதம் வரைச் சென்று திரும்பும் பயிற்சி பெற்ற ஒருவர், நாமரூபமுள்ள எம்மொழியை யும் நாதமாக்கிக் கருத்தைத் தெளிந்து, பின்னே அதைத் தமது சொந்தமொழியில் வெளியிடுதல் கூடும் என்றும், தமிழும் ஆங்கிலமும், பிறவும் நாமரூபம் முதலியன அற்று நாதமாகுங்கால் ஒன்றேயாகும் என்றும், வேற்றுமை புறமன அளவில் நிகழ்வது என்றும் அவர் உண்மையை விளக்கிக் காட்டினர். நடுமனம் அவர்பால் நன்முறையில் விளங்கியிருந்தது. அதனால் அவர் விளம்பரத்தைச் சிறிதும் விரும்பினாரில்லை. அஃது எனது உள் ளத்தைக் கவர்ந்தது. கிறிது பெருமான் தம் சீடரைப் பல இடங்களுக்கு அனுப்பியபோது, அவர் எங்கெங்கே செல்கிறாரோ அங்கங்கே பேசப்படும் மொழிகள் அவர்க்கு இயற்கையாகவே விளங்கித் துணைபுரியும் என்று அருளியதும் இப்பொழுது எனது நினைவி லுறுகிறது. பலமொழி நூலாசிரியர் உள்ளமெல்லாம் ஒன்றுபட்டுத் தொண்டாற்றுதலும் ஈண்டு உன்னற்பாலது. சிறு கதைகள், களிக் கதைகள் முதலியன எழுதுவோர் புறமனத்தளவில் நின்று தொண்டாற்றுவோர். அவர்தஞ் சிந்தை ஆழ்ந்து ஆழ்ந்து செல்வ தில்லை. அவரல்லாத நன்னூலாசிரியர் சிந்தனையில் மூழ்கி மூழ்கி அதில் சமாதியாவதுண்டு. அவர்தம் நடுமனமும் விழிப்புப்பெறும். அவருள் ஒருவர் ஒரு மொழியில் வல்லவராய் ஒரு நாட்டில் இருப்பர்; மற்றொருவர் வேறு மொழியில் வல்லவராய் இன்னொரு நாட்டில் இருப்பர். இருவர் உள்ளத்திலும் ஒரே கருத்துப் படிந்து அவரவர் மொழியில் அது வெளிவரும். காரணம் இருவர் அகக்கண்ணும் திறக்கப் பெற்றமையாகும். அகக்கண்ணர்க்கு மொழிவேற்றுமையு மில்லை; பிற வேற்றுமை களுமில்லை. கெழுதகை நண்பரிடத்தும் நடுமனம் சிற்சிலபோது சிறிது விழித்து நிகழ்ச்சிகளை உணர்வதாகும். எமது அச்சுக்கூடத்தில் சிலகாலம் மேற்பார்வையாளராக ஒருவர் இருந்தார். அவர் பெயர் அருணாசலம். அவர் என் தமையனார் உலகநாத முதலியா ரிடத்தும், அவர்தம் புதல்வன் பாலசுப்பிரமணியனிடத்தும் ஆழ்ந்த நட்புக் கொண்டவர். பாலசுப்பிரமணியன் உயிர்நீத்த செய்தியை அஃதுற்ற அப்போதே அருணாசலம் கனவில் கண்டு வருந்தி வருந்திக் கண் விழித்தார். மரணச் செய்தி வாயிற்படியில் காத்து நின்றது. என் தமையனார்க்கு ஒருமுறை உற்ற ஒருவிதக் கொடுந் துன்பம் அருணாசலத்தின் கனவுலகில் நுழைந்தது. மறுநாள் அவர் அச்சுக்கூடம் போந்து தமையனாரைக் கண்டு உண்மை தெரிந்து சென்றனர். இனி எங்கே கருத்துச் செலுத்தலாம்? சாமியார் கூட்டம் ஒன்றிருக்கிற தன்றோ? சாமியார் கூட்டம் திரளாத இடமில்லை. சாமியார் கூட்டத்தில் பலவகை உண்டு. அவ்வகைகளை விரித்தால் அவைகள் பாரதமாகும். இங்கே வேண்டும் அளவில் சிலவற்றை ஆண்டு கொள்கிறேன். சாமியாருள் முக்கண் நீலகண்டம் சூலம் காட்டுவோர், சங்கு சக்கரம் காட்டுவோர், மயில் வேல் காட்டுவோர் இருக்கிறார்; மந்திரங்களால் நோய் தீர்ப்போர்; பேயோட்டுவோர் இருக்கிறார்; இன்னபிற நிகழ்த்து வோரும் இருக்கிறார். இவர்தஞ் செயல்களைக் கண்டு உலகம் மருள்கிறது. சாமியார் செயல்களை ஜாலவித்தை என்று கருது வோரும் உளர். சாமியாருள் ஜாலவித்தை செய்வோரும் இருக் கிறார். யான் இங்கே குறிப்பிட்டவைகள் ஜாலவித்தையைக் கடந்தன. அவைகளை என்னென்று கொள்வது? மேல்நாட்டு அகத்திணை வழிநின்று பார்த்தால், சாமியார் செயல்கள் ஹிப்னொடிஸம் என்று விளங்கும். ஆனால், சாமியார் அவை களை ஹிப்னொடிஸம் என்று உணர்வதில்லை. அவர் யோகாப்பியாசத்தால் பெற்ற சக்தி என்றே நினைக்கிறார்; சாதாரண மக்களும் அவ்வாறே கருதுகிறார்கள். இங்கே சோதனை வேண்டும். இதற்கு விஞ்ஞானக் கலையினதும் அகக் கலையினதும் துணை தேவை. நடுமனப் படிகளில் மகன் நடமாடுங்கால், அவ்வப் படித்தரத்துக் கேற்றவாறு சில சில விநோதங்கள் நிகழும். அவ்விநோதங்களால் உலகை மயக்குவோரும் இருக்கிறார்; அவைகளை உள்ளவாறே நம்பி நடப்போரும் இருக்கிறார். விளக்கம் பெற்றோர் மனம், அது பெறாதார் மனத்தைத் தன் வயப் படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கிறது. அவர்மனம் என்னென்ன நினைக்கிறதோ அவை இவர்தம் மனத்துக்கும் கண்ணுக்கும் காட்சியளிக்கும். இவைகளைச் சோதனை செய்து உண்மை காண்பது எப்படி? ஒரு சாமியார் வேல் மயில் காட்டுகிறார். அக்காட்சி இன்னொருவர்க்குப் புலனாகவில்லை. ஏன்? அவர் நடுமனம் ஏறிய படிகளை, இவர் நடுமனங் கடந்து மேலுஞ் சென்றிருக் கிறது. அதனால் அவர் வித்தை இவரிடம் பலிப்பதில்லை. இவ்வாறு பல சாமியார் சோதனையில் அகப்பட்டுத் தவிப் புற்றதைப் பார்த்து யான் இரங்கியதுண்டு. ஒருவர் தலைவேறு கைவேறாகி மீண்டும் அவை ஒன்றுபட எழுகிறாரென்றும், அவரை ஓர் அறையில் பூட்டிட்டு அடைத்தாலும் அவர் வெளியேவந்து உலவுகிறாரென்றும், அவர் ஒருவரே பலவிடங்களில் ஒரே காலத்தில் பேசுகிறா ரென்றும், முருகன் காட்சி கண்ணன் காட்சி முதலிய தெய்வக் காட்சிகளை வழங்குகிறாரென்றும், பாம்பு விடம் அவரை ஒன்றுஞ் செய்வதில்லை யென்றும், சாதாரண மக்கள் வியந்து வியந்து அவரை அவதாரமென்றும் போற்றலாயினர். சாமியா ரிடம் ஆயிரக்கணக்கில் பணம் குவிகிறது! அடிக்கடி அவரிடம் செல்லும் அம்மையார் ஒருவர்க்கு யான் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். அவர் தங்கணவர் கட்டுப்பாட்டுக்கும் அடங்கி நடப்பதில்லை. ஒருநாள் அம்மையார் பாம்பு விடம் சாமியார்க்கு ஏறாமையைத் தாம் நேரிற் கண்டதாகத் தெரிவித் தார். பாம்பு விடம் ஏறப்பெறாத உடலமைப்புகளுமுண்டு என்றும், இளமையிலிருந்து செய்து வரும் சில பழக்க வழக்கங் களாலும், சில மூலிகைகளை உண்பதாலும் பாம்புவிடம் ஏறாத உடலைப் பெறுவதுமுண்டு என்றுங் கூறி, உங்கள் சாமியார் உடலில் மார்பியாவைச் சிறிது அதிகமாக ஊசி வாயிலாக ஏற்றிச் சோதனை செய்ய அவர் உடன்படுவரா? mtÇl« foj« bg‰Wtu Koíkh? என்று கேட்டேன். அம்மையார் சென்று சாமியாரிடத்தில் என் கருத்தைத் தெரிவித்தார். சாமியார் உடன்படவில்லை. அம்மையார்க்குச் சிறிது ஐயம் பிறந்தது. அந்நாளில் ஓர் ஆந்திரர் சென்னை போந்து பலவிடங்களில் அரிய செயல்களை நிகழ்த்தி வந்தனர். அவர் கூட்டங்களின் முன்னிலையில் நைட்ரிக் ஆஸிட், பாஷாணம், நஞ்சு, ஆணி, ஈய எழுத்து முதலியவற்றை உண்டு காட்டுவர். யமன் அவரை ஒன்றுஞ் செய்வதில்லை. அவர் சாமி என்றோ யோகி என்றோ தம்மைச் சொல்லிக் கொள்வதில்லை; பயிற்சி பயிற்சி என்று சொல்வர். அவரிடம் அம்மையாரை அழைத்துச் சென்றேன். அவர்தஞ் செயல்கள் அம்மையாரைப் பிரமிக்கச் செய்தன. படிப்படியே சாமியார் பித்து அம்மையாரை விடுத்து அகன்றது. இன்னுஞ் சாமியார் கதைகள் பல உண்டு. ஹிப்னொடிஸம், மெமெரிஸம், டெலிபதி முதலியவற்றை யோக நிலை களென்று மருளும் அறியாமை, நாட்டை விடுத்து ஒழிதல் வேண்டும். அறியாமையை யொழிக்க ஆங்காங்குள்ள அறிஞர் முயல்வாராக. உண்மை யோகிகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துக்கூறி, அவர்கட்கு வணக்கமுஞ் செலுத்துகிறேன். போலியைக் கொண்டு மெய்ம்மையே இல்லை என்ற முடிவுக்கு வருவோருமுளர். இது தவறு. போலி வெறுக்கற் பாலதே. அப்படியே மெய்ம்மைக்கு இன்மை கூறலும் விரும்பற் பாலதன்று. மெய்ம்மையின்றிப் போலி தலைகாட் டாது. போலியைக் கொண்டே மெய்ம்மை இருப்பை உணரலாம். நற்பவளம் உள்ளமையாலன்றோ போலிப் பவளம் தோன்ற லாயிற்று? யான் கண்ட நிகழ்ச்சிகள் இன்னுஞ் சில இருக்கின்றன. அவைகளில் மூவர்பால் நிகழ்ந்தவற்றை உங்கள் முன்னிலையில் கிடத்தலாம் என்று எண்ணுகிறேன். சுரைக்காய் சுவாமியாரை உங்களிற் சிலராவது நேரிற் கண்டிருக்கலாம். அவர் சிலகாலம் சென்னையில் திருவல்லிக் கேணியில் பார்த்தசாரதிப் பெருமாள் தோட்டத்தில் தங்கி இருந்தவர். அவரைக் கண்டு தொழ மக்கள் கூட்டம் ஈண்டி நிற்கும். வேடிக்கை பார்க்க இளைஞருஞ் செல்வர். அவருள் யானும் ஒருவன். அங்கே ஓர் ஊமை கொண்டு வரப்பட்டான். நாளடைவில் அவன் பேசலானான். பல வழியில் தொல்லை விளைத்துவந்த பேயாடி ஒருத்தி கொண்டு வரப்பட்டாள். அவள் தோட்ட முழுவதும் ஆட்சி செலுத்துவாள்; அங்கும், இங்கும் ஓடுவாள்; பலவாறு பிதற்றுவாள்; பலமணி நேரம் ஏற்றம் பிடித்து இறைப்பாள். ஆனால் அவள் தோட்ட எல்லையை விடுத்து அகல்வதில்லை. ஒருநாள் அவள் திடீ ரெனச் சுவாமியாரை அடைந்து பணிந்து நின்றாள். அச்சமும் நாணமும் அவளைச் சூழ்ந்தன. அவள் நல்லுணர்வு பெற்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பலர் பலவாறு பேசினர். சுவாமியார் பெரியவர்; அவர் மருள்நிலை முதலியவற்றைக் கடந்த ஞானியர். அவர் முன்னிலையில் நிகழ்ந்தனவற்றை எந்த வித்தையில் சேர்க்கலாம்? சிந்தியுங்கள். மருதூரில் ஓர் அம்மையார் இருக்கிறார். அவரிடம் நிகழும் அற்புதங்கள் பத்திரிகைகளில் வெளியாயின. அம்மையார், ஒரு தட்டிலே அன்பர் கொணரும் மாலைகளை வைத்துப் பழனியப்பா என்று தூக்கியதும், அவை ஆகாய வழியே சென்று மறைகின்றன என்றும், தேங்காய் பழம் முதலியனவும் அவ்வாறே அனுப்பப்படுகின்றன என்றும், உடை பட்ட தேங்காய் மூடியும், திருநீறும் இறங்கிவருகின்றன என்றும், ஒருமுறை ஒரு குழந்தையைத் தட்டிலே வைத்து அம்மையார் முருகா என்றதும், குழந்தை மறைந்து சில மணிநேரங் கழிந்த பின்னர்த் திருநீற்றுக் கோலத்துடன் இறங்கியது என்றும், அவர் அதைப்பற்றி உரியவரிடஞ் சேர்த்தனர் என்றும், இளநீர் சர்க்கரைப் பொங்கல் வேல் முதலியனவும் அவரால் வர வழைக்கப்படுகின்றன என்றும் சொல்லப்பட்டன. இன்னோ ரன்ன அற்புதங்களைக் காணப் பலர் சென்றனர். என் தமையனார், இராயப்பேட்டை ஜவுளி நடேச முதலியாருடன் போயினர். அகத்திணை வல்ல மறைமலை அடிகளும், சச்சிதானந்தம் பிள்ளையும் அம்மையாரின் செயல்களை நேரிற் கண்டனர். பலநாள் கடந்து யானும் சில நண்பருடன் ஏகினேன்; நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். என்னுடன் போந்தவருள் சிலர் சிலவற்றை நினைந்து அவை கைகூடுமா கூடாவா என்று அம்மையாரை நோக்கிக் கேட்டனர். என்னையும் ஏதாவ தொன்றை நினைந்துகொள்ளுமாறு அவர் தூண்டினர். அவர் எண்ணியவற்றிற்கெல்லாம் விடைகள் கிடைத்தன. எனக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. நண்பர் விழித்தனர். யான் ஒன்றும் நினைக்கவில்லை; அதனால் பதில் வரவில்லை என்று சொன்னேன். பின்னே அவ்வூரிலுள்ள சிலரிடம் போய் நாங்கள் விசாரணை செய்தோம். அம்மையார் ஒருநாள் புளியம்பழம் உலுக்கிக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் அவர் தலைமீது குதித்து மிதித்தனர் என்றும், அன்று முதல் அம்மையாரிடம் அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், பல ஆண்டுகட்கு முன்னரும் ஒரு மூதாட்டியார் பால் இச்செயல்கள் நிகழ்ந்து வந்தன என்றும், அவர் தலைமீதும் ஒரு முனிவர் குதித்து மிதித்தனர் என்றும் அவ்வூரவரால் கூறப்பட்டன. மருதூர் அம்மையார் கல்வி அறிவில்லாதவர்; ஆராய்ச்சி இல்லாதவர்; நடுமனம் அடிமனம் முதலியவற்றைக் கேட்டும் அறியாதவர். அவரிடம் நிகழும் அற்புதங்களைக் குறித்துப் பலர் பலவாறு பக்திரிகைகளில் எழுதினர். ஆராய்ச்சியால் அம்மையார் நடுமன விளக்கமில்லாதவரென்பது நன்கு தெரியவந்தது. என்ன முடிவு கூறுவது? அம்மையார் தலைமீது குதித்த முனிவர் நுண்ணுடல் தாங்கி அங்கே உலவுகிறார் என்பதும், அவர் தம் ஆவித்துணை அம்மையார்க்குக் கிடைத்துள்ள தென்பதும், அதனால் அவரிடம் அற்புதம் நிகழ்கிறதென்பதும் எனது உள்ளக்கிடக்கை. என்னுடையதையே முடிவாகக் கொள்ளாது நீங்களும் உண்மை காண முயலுங்கள். சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தனர். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவின் குரு என்று உலகஞ் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப்போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வாசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவரா யிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவ ரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புக்கள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகைப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. யான் தேசபக்தன் ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவை யாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர் என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள். அற்புதங்கள் அற்புதங்களைக் கண்டு, தெய்விகம் - தெய்விகம் என்று மயக்குறுவோர் பலர். அற்புதம் உலகைக் கவர்வதுபோல வேறெதுவும் அதைக் கவர்வதில்லை. அற்புதம் செய்யும் சாமியார்க்கே அதிக மதிப்புச் சாதாரண உலகந் தருகிறது. அற்புதத்தை மதிக்கும் பேதைமை உலகை விடுத்து அகலுதல் வேண்டும். அற்புத நாட்டம் உள்ளொளிப் பெருக்கிற்குத் துணை செய்யுமா? அற்புதம் அரியதா? எளியதா? புறமனச் சுழலில் அகப் பட்டு அலைவோர்க்கு அற்புதம் அரியதாகத் தோன்றும். அம்மனம் ஒடுங்கப்பெற்றோர்க்கு அஃது எளியதாக - மிக எளியதாகத் - தோன்றும். நடுமன விளக்கம் பெற்றவரிடம் அற்புதம் எளிதில் நிகழ்தல் கூடும். ஒருவர் ஒருபோது ஏதோ சில காரணம் பற்றி அற்புதஞ் செய்தார். அவரே உள்ளொளிக்குரிய ஞானபோதனையுஞ் செய்தார். இரண்டில் சிறந்தது எது? அற்புதமா? போதனையா? போதனை என்றே யான் பறைசாற்றுவேன். அற்புதத்திற் கருத்துச் செலுத்தினால் உள்ளொளிக்குரிய வேட்கை எழுதலும் அரிதாகும். போதனையிற் கருத்துச் செலுத்தி, அதன்படி சாதனையுஞ் செய்துவந்தால், உள்ளொளி ஊற்றுத் தானே திறக்கும். கிறிது பெருமான், திருஞான சம்பந்தர் உள்ளிட்ட பெரியோரும் அற்புதங்கள் செய்திருக்கிறாரே என்று சில சகோதரர் நினைத்தல் கூடும். அற்புதங்கள் அவரைப் பெரியவராக்கவில்லை என்றும், அவரது ஞான போதனைகள் அவரைப் பெரியவராக்கின என்றும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிது பெருமானும், திருஞானசம்பந்தரும், மற்றவரும் தமது வாழ்நாள் முழுதும் தாமே வலிந்து அற்புதஞ் செய்து திரிந்தாரில்லை; அற்புத விளம்பரஞ் செய்தாரில்லை. அற்புதத்தை அவர் அவாவியதுமில்லை. அவர் காலத்திலும் நோய்கள் நடமாடின; மரணங்கள் நிகழ்ந்தன; காலன் ஆட்சி நடைபெற்றது. சில போழ்து இரக்கம் முதலிய காரணங்கள் பற்றிப் பெரியோர் பால் இரண்டோர் அற்புதம் நிகழ்ந்துவிடும். அற்புதமே அவர்க்குப் பெருமை அளித்ததென்று அதற்கு மதிப்பளிப்பது வாழ்வைப் பாழ்படுத்துவதாகும். அற்புதங் களைக் கொண்டு பெரியோர்க்கு உலகம் மதிப்பளித்தலைக் கண்ட பௌராணிகம் அற்புதக் கதைகளைப் பெருக்கிவிட்டது. இராமலிங்க சுவாமிகள் சமீபகாலத்தி லிருந்தவர். அவர் தம் அரிய போதனைகளடங்கிய அருட்பா பலரால் பதிப் பிக்கப்பட்டுள்ளது. முற்பதிப்புக்களில் காணப்படாத அற்புதங்கள் பிற்பதிப்புக்களில் காணப்படுகின்றன. பதிப்புக்கள் பெருகப் பெருக அற்புதங்களும் பெருகி வருகின்றன. இதனால் விளைந்த தென்னை? விளைவுகளை ஈண்டு விரிக்கில் பேச்சுப் பெருகு மென்று அஞ்சுகிறேன். இப்பொழுது நாட்டில் இராமலிங்க சுவாமிகளின் அவதாரங்கள் பெருகி வருதலை மட்டும் ஈண்டுக் குறிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த அளவில் பதினொருவர் தம்மை இராமலிங்க சுவாமிகள் என்று கரந்து கரந்து சொல்லித் திரிகின்றனர்; மக்களை ஏமாற்றுகின்றனர். இவருள் எவர் உண்மை இராமலிங்க சுவாமிகள் என்று தெரியவில்லை. ஒருவர் இன்னொருவரைப் போலி இராமலிங்கரென்றும், இவர் அவரைப் போலியென்றும் வாதமிட்டு வருவதும் ஒருவித அற்புதம் போலும்! ஆகவே, பெரியோரின் அற்புதத்தின்மீது வேட்கை கொள்ளாது, அவர்தம் போதனைமீது வேட்கை கொள்வது உள்ளொளிக்கு ஆக்கந் தேடுவதாகும். உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர் களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர் களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தை யுந் திருப்பிக்கொடு. - கிறிது (லூக்கா : 6 : 28-9) பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர் ஐமிகுத்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம் மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன் பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. - திருஞான சம்பந்தர் அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண்டு வனே. - இராமலிங்க சுவாமிகள் இப்போதனைகள் சிறந்தனவா? அற்புதங்கள் சிறந்தனவா? என்று கேட்கிறேன். எனக்குப் போதனைகளே சிறந்தனவாகத் தோன்றுகின்றன. விஞ்ஞானக் கலைகள் பெருகிவரும் இந் நாளில் அற்புதங்கட்கு மதிப்பளித்தல் ஆன்ம ஞான முயற்சிக்குக் கேடு சூழ்வதாகும். கண்ணொளி இழந்தவர் மூக்கொளியால் காண்டல், இளமையோடிருத்தல், எதையும் பொன்னாக்கல் முதலியன விஞ்ஞான உலகில் நுழைந்துவரும் இந்நாளில் அற்புதத்தில் மயங்குவது அறிவுடைமையாகாது. பெரியோர்பால் நிகழும் மெய்யற்புதங்கள் இருமுகம் பெற்று உலகுக்குப் பயன்படுவன. அவை புறமுகத்துக்கு ஒருவிதக் காட்சியையும், அகமுகத்துக்கு வேறுவிதக் காட்சியையும் அளிப்பன. புறமுகம் பௌராணிக உலகுக்கு உரியது. அகமுகம் ஞான உலகுக்கு உரியது. அற்புதங்கள் உள்ளுறையுடையன என்று மாது பிளவட்கி கருதுகிறார். அடிமனம் இன்னும் நடுமனத்தைப் பற்றிய சான்றுகள் பலகாட்டிச் செல்ல என் மனம் ஒருப்படவில்லை. நடுமனத்தை இவ்வளவில் நிறுத்திவிடுகிறேன். இனி அடிமனத்துடன் சில நிமிடம் உறவு கொள்ள முயல்கிறேன். அடிமனத்தைப் பற்றி என்ன பேசுவது! பேச்சற்ற ஒரு நிலைக்குக் கால் கொள்ளும் பெற்றிமை வாய்ந்த அடிமனம் நீண்ட பேச்சை விரும்புமா? நடுமனம் நலம் பெறப் பெற அஃது ஒடுக்கமுற்றுத் தூய்மை அடைந்து அடிமனமாகும். அடிமனம் அரும்பியதும் அஃது அசைவற்றதாகும். அங்கே மாசேது? மருளேது? தூய்மை துலங்கும்; சீலம் செறியும்; அறம் அமரும். அடிமனத்தைக் கரும வேர் அறுக்கும் ஞான வாளின் உறையுள் என்று சுருங்கச் சொல்லலாம். அடிமனம் மலர மலரச் சில மாறுதல் நிகழும். காமன் எரியுண்பான்; காலன் உதையுண்பான்; பொய்யாயின வெல்லாம் பொய்யாகும்; மெய்யாயின வெல்லாம் மெய்யாகும். அடிமனம், புறமனத்தால் விளைந்த குறும்புகளை யெல்லாம் போக்கி, உயிரை அறவண்ணமாக்கி, 1அதைப் பிராணனுடன் சேர்த்துத் தான் மறைவுறும். பின்னே உயிர் விந்துவின் துணை பெறும். விந்து உயிரை நாதமென்னும் பிரணவத்துடன் சேர்க்கும். அங்கே சுத்தமாயையின் தொடர்பு அற்றுப்போகும். மேலே மிளிர்வது ஒன்றே, அதுவே உள்ளொளி; பரவொளி; பரவெளி. அதை எண்ணுதற்குரிய மனம் ஏது? பேசுதற்குரிய நா ஏது? மனம் ஒடுங்கி மறைவதென்பது அதன் 2குறும்புச் செயல்கள் அற்றுப்போவதை உணர்த்துவது. குறும்பற்ற மனம் தன் ஆணை செலுத்தாது. 3அது ஞானியின் வழி அடங்கி நடக்கும். அடங்கிய மனம் வறுக்கப்பட்ட நெல்லைப் போலவும், நஞ்சற்ற பாம்பைப்போலவு மாகும். அந்நிலையில் மனம் நல்லதாய்க் 4குருபோல உள்ளொளிக்குத் துணையுஞ் செய்வதாகும். தோழர்களே! எடுத்த பொருளுக்கேற்ப உள்ளத்தைப் பற்றிச் சுருங்கிய முறையில் ஒருவாறு பேசினேன். இன்னுஞ் சில பகர்ந்து உள்ளத்துக்குரிய உருவத்தைப் பற்ற முயல்வேன். மனவெளி 5வெளிகள் பல உண்டு. அவை, அறிவுவெளி; அருள் வெளி; ஆகாய வெளி; மனவெளி முதலியன. பலதிற மனங்கட் கெல்லாம் மூலமாயிருப்பது மனவெளி. மனத்திலுள்ள மாசுக்கள் அகன்றால் அது மனவெளியில் ஒன்றும். எனது மனத்தில் மாசு படர்ந்துள்ளமையால், அது மனவெளியின் தொடர்பை இழந்து கிடக்கிறது. புறமனம், நடுமனமாகி அடிமனநாட்டங் கொள்ளும் போது மன வெளியின் தொடர்பு ஏற்படும். அந்நிலையில் மனம் ஞான திருஷ்டி பெறும். எண்ணங்கள் மனவெளி எண்ணங்களைத் தாங்கி ஓம்பி வருவது. மனித உடல் மறையும். எண்ணங்களோ தொடர்ந்து வரும். உருவம் அற்றுப்போகும்வரை எண்ணங்களின் தொடர்பு ஆட்சியி லிருக்கும். ஒரு தத்துவர் மன ஆராய்ச்சியில் நுழைகிறார். அவர் உண்மை காணச் சிந்தனையில் ஆழ்கிறார்; மூழ்குகிறார்; சமாதி யாகிறார். அவர்தம் உள்ளத்தில் சில நுட்பங்கள் விளங்கு கின்றன. அவரது பருவுடல் மறைகிறது. ஆனால், அவர் உள்ளத் தில் எண்ணிய எண்ணங்கள் மறைவதில்லை. அவருடைய எண்ணங்கள் அவரைப் போன்று தத்துவ ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்குவோரின் உள்ளம் புகுந்து துணை செய்கின்றன. 1அவரது எண்ணங்கள் அவர்பின் வருவோர்க்குத் துணை புரிகின்றன. ஒரு விஞ்ஞானியின் எண்ணங்கள் அவரளவில் நின்று ஒடுங்குவ தில்லை. அவை தொடர்ந்து தொடர்ந்து விஞ்ஞான உலகையே வளர்த்து வரும். இவ்வண்ணம் கலைஞர் எண்ணங்கள் கலை உலகை வளர்ப்பனவாகின்றன. மற்றவர் எண்ணங்களும் மற்ற மற்ற உலகங்களை ஓம்பிவருகின்றன. இம்முறையில் உலகம் வளர்ந்து வருகிறது. எண்ணங்களில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு; நல்ல எண்ணங்கள் நல்லுலகை வளர்க்கும்; தீய எண்ணங்கள் தீய உலகை வளர்க்கும். எவ்வுலகம் வளர்தல் வேண்டும்? நல்லுலகமென்று எவருங் கூறுவர். கூறுவதால் மட்டும் நல் லுலகம் வளர்ந்துவிடாது. நல்லெண்ணங்களைப் பெருக்க உறுதிகொள்ளல் வேண்டும். நல்ல எண்ணம் தீய எண்ணம் என்னும் இரண்டில் எது ஆற்றல் வாய்ந்தது? சிலர் நல்லதென்பர்; சிலர் தீய தென்பர். சில சமயம் தீயதே பேராற்றல் வாய்ந்ததுபோலத் தோன்றும். ஆழ்ந்த ஆராய்ச்சியால் நல்லதே பேராற்றல் வாய்ந்ததென்பது விளங்கும். எண்ணத்தின் ஆற்றல் பொதுவாக அது தோன்றும் இடத்தைப் பொறுத்து நிற்பது. ஒருவனது நெஞ்சம் தீமையையே எண்ணி ஆழ எண்ணி அதில் ஒன்றி அதுவாகிறது. இன்னொருவன் நெஞ்சம் நல்லதை எண்ணுகிறது; ஆனால் அதுவாகவில்லை. இவ்விருவித எண்ணங்களில் எது ஆற்றல் வாய்ந்தது? தீய எண்ணமே ஆற்றல் வாய்ந்ததாகும். வேறொருவன் உள்ளம் நல்லதிலேயே ஒன்றி ஒன்றி அதுவாகிறது. மற்றொருவன் உள்ளம் தீயதில் ஒவ்வொருபோது படிகிறது. ஆனால் அதுவாக வில்லை. இவ்விருவகை எண்ணங்களில் வல்லமையுடையது எது? நல்லெண்ணமே வல்லமையுடையதாகும். தீமையையே எண்ணி எண்ணி அது வாகிய நெஞ்சம் ஒன்று, நல்லதையே எண்ணி எண்ணி அதுவாகிய நெஞ்சம் ஒன்று. இரண்டும் அவ்வத்தன்மையில் பூரண சக்தி பெற்றிருக்கின்றன. இவைகளில் எதைப் பெரிதென்று சொல்வது? இதற்கு, அநுபவம் தேவை. நல்லதே பெரிது என்று அநுபவம் உணர்த்தும். முழு நல்லது முழுத் தீமையை வெல்லும். அரைகுறையி லேயே (நல்லதி லேயே) தீமை மேம்படுவதாகும். ஆகவே, நல்லெண்ணங்கள் பெருகப் பெருக உலகம் நலம் பெறுவதாகு மென்க. நல்லெண்ணத்தால் பழுத்த மனமுடையாரை எவ்வகைத் தீமையும் ஒன்றுஞ் செய்யாது. தீமை அவரைத் தாக்கினும் வெற்றி பெறாது; தோல்வியுற்றுச் சாயும். நல்லெண்ணங் கனியாத நெஞ்சுடையார் உலகில் மிக எச்சரிக்கையுடன் வாழ்தல் வேண்டும். இல்லையேல், அவரைத் தீமைப்பேய் தாக்கித் தாக்கித் தன் வயப்படுத்தும். அவர் தீமைப்பேய்க்கு எக்காரணம் பற்றியும் இரையாதலாகாது. அவர் தீயருடன் கலவாது நல்லாருடன் கலந்து வாழ்வாராக. தீயாரைக் காண்பதும் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்க ளுரைப்பதுவும் தீதே அவரோ டிணங்கி இருப்பதுவுந் தீது. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ டிணங்கி இருப்பதுவும் நன்று. - ஔவையார் ஒரு சிற்றூரிலே ஒரு பெரிய ஆலமரமிருக்கிறது. சில காலத்துக்கு முன்னர் அம்மரத்தடியில் சிலர் வதிந்தனர். அவர் தீய எண்ணமுடையவர். அவர் ஒருவரோடொருவர் பிணங்கிப் போரிடுவர். அவர்தங் குடில்கள் தீக்கிரையாயின. அவர் வெவ்வேறூருக்குச் சென்றனர். தீயர் மரத்தடியை விடுத்து அகன்றாலும், அவரிடத்திருந்து பிறந்த தீய எண்ணங்கள் அங்கேயே உலவலாயின. எவரேனும் அம்மரத்தடியில் சென்றால் அவரைத் தீய எண்ணங்கள் அலைத்து அல்லற் படுத்தும். இருவர் மூவர் சேர்ந்து செல்லினும் ஒருவரோ டொருவர் பிணங்கிப் போரிடுவோராவர். அங்கே ஆடு மாடுகள் செல்லினும் போரிட்டுக்கொள்ளும். அதையுணர்ந்த பலர் அம்மரத்தடியிற் செல்லாதொழிந்தனர். அவ்வூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. பட்டணத்தார் சிலர் அத் திருமணத்துக்குச் சென்றனர். அவருள் இருவர் ஒன்றுசேர்ந்து பேசிக்கொண்டே போய்க் கொடிய மரத்தடியை அடைந்து உறங்கினர். உறங்கி எழுந்த பின்னை இருவரும் ஏதேதோ பேசி ஒருவரை ஒருவர் தாக்கி மற்போர் புரிந்தனர். அதுகண்ட கிராமத்தார் சிலர் வேகமாக ஓடி அவ்விருவரையும் மரத் தடியினின்றும் வெளியே விரைந்து விரைந்து ஈர்த்துத் தள்ளி வந்தனர். வெளிவந்த இருவரும் தமது பிணக்கை மறந்து, தம்மை மரத்தடியினின்றும் வெளியேற்றியவர் ஓடிவந்த வேகத்தையும், தம்மை ஈர்த்துத் தள்ளிய விரைவையும் சிந்தித்தே நடந்தனர்; வீடு சேர்ந்ததும் பழையபடி நண்பராயினர். அவர் தமக்குள் பகைமை மூண்டதற்குரிய காரணங் காண முயன்றனர்; விசாரணையில் மரத்தடி நிகழ்ச்சியைக் கேட்டு நிலைமையை விளங்கிக் கொண்டனர். தீய எண்ணங்கள் அம்புகள் போலப் பாய்ந்து கேடு விளைக்கும். ஒருபோது அச்சிற்றூருக்குப் பெரியவர் மூவர் போந்தனர். அம்மூவரும் தீய ஆலமரத்தடியில் சிறிது நேரம் தங்கச் சென்றனர். எதிரே வந்த சிலரால் அவர் தடுக்கப்பட்டனர். காரணம் அவர்க்கு விளக்கப்பட்டது. அவர் அஞ்ஞாது அம்மரத்தடியிற் சென்று, வேயுறு தோளிபங்கன் என்னுங் கோளறு பதிகம் ஓதித் திருவாசகத்தில் சிவபுராணம் பாடினர். கிராமத்தார் பலர் தூரத்திருந்தே பாடலைக் கேட்டு நின்றனர். மூவரும் அவ் விடத்தை விட்டு உடனே போக விரும்பவில்லை; கிராமம் போந்து உணவு கொண்டு ஆலின் அடியிலேயே தங்கி வந்தனர். அவர்க்குள் பிணக்கு உண்டாகவில்லை. காரணமென்ன? அம்மூவரும் நல்லவர்; குணமலைகள். மரத்தடியில் சூழ்ந்து துன் புறுத்தி வந்த தீய எண்ணங்கள் அவர்களை ஒன்றுஞ் செய்தல் இயலவில்லை. பெரியவர் மூவரும் நாடோறும் காலையிலும் மாலையிலும் தமிழ்மறை ஓதிப் புராணப் பிரசங்கஞ் செய்து வந்தனர். இரண்டு வாரத்தில் மூர்க்கர் விடுத்துச் சென்ற தீய எண்ணங்கள் பெரியவர் மூவரது நல்லெண்ணங்களால் விழுங்கப்பட்டன. ஆலின்கீழ் உலவி வந்த ஆலகாலம் ஒழிந்தது. அங்கே அமிர்தம் பொங்கலாயிற்று. வழியே நடந்து போகிறோம்; நல்லதையே நினைந்து பேசிச் செல்கிறோம். திடீரென ஓரிடத்தில் மனங் கெடுகிறது; மனம் தீயதை நினைக்கிறது; வாய் தீயதைப் பேசுகிறது. சிறிது தூரம் நடந்ததும் இடையிற் பிடித்த சனி விட்டொழிகிறது. மீண்டும் மனம் நல்லதை நினைக்கிறது; வாய் நல்லதைப் பேசத் தொடங்குகிறது. என்ன காரணம்? இடை எல்லையில் எவனோ ஒருவன் தீய எண்ணங்களையே எண்ணி எண்ணித் தீமை களையே செய்திருப்பன்; அப்பேய் ஓர் எல்லைவரைத் தொடர்ந்து தொல்லை விளைக்கிறது. ஒரு கிராமத்துள்ள ஒருவனுக்கும் இன்னொரு கிராமத் துள்ள வேறொருவனுக்கும் எக்காரணம் பற்றியோ பகைமை மூண்டு வளர்ந்தது. ஒருநாள் அவனை இவன் கொல்லக் கூரிய வாளேந்திப் புறப்பட்டான். இடையில் காற்றும் மேகமும் அச்சுறுத்தின. அணித்தே ஒரு சிறு கோயில் கண்டு கொலைஞன் அதில் புகுந்தான். அங்கே ஒரு புலவர் திருக்குறளில் கொல்லாமை அதிகாரத்தைப் பிரசாரஞ் செய்தனர். அதைக் கேட்டு வந்த கூட்டத்தவருள் கொலைஞனும் கலந்து கொண் டான். பிரசாரம் முடிந்தது. புலவரும் இரண்டொருவரும் கோயில் மண்டபத்திலே படுத்துறங்கினர். கொலைஞனும் அங்கே தங்கிச் சிறிது நேரம் உறங்கினன். இரவு இரண்டு மணிக்குத் தீயன் எழுந்தான்; தன் உள்ளத்தில் மாறுதல் நிகழ்ந் ததைத் தெளிந்தான்; மீண்டும் தன் ஊருக்கே திரும்பினான். அவன் சிலநாள் குறளிலுள்ள கொல்லாமை அருள் முதலிய அதிகாரங்களைப் படித்துப் படித்துத் திருவள்ளுவர் அடியவனாய்க் கொல்லா அறத்தில் உறுதி யுடையவனானான். கோயிலில் சூழ்ந்திருந்த நல்லெண்ணங்கள் ஒரு கொலைஞனைக் கொல்லா அறவோனாக்கி விட்டன. பல ஆண்டுகட்கு முன்னர் பலவிதச் சமய சபைகட்கு யான் சென்று வருவதுண்டு. அவைகளிற் சிலவற்றில் தீக்குணங்கள் திரண்டு திருவிளையாடல் புரிந்ததை உணர்ந்து அநுப வித்துள்ளேன். அச்சபைகளில் நுழையும் போதே வெம்மை எரிப்பது போலத் தோன்றும்; பேய் பிடித்து இறக்குவது போலத் தோன்றும். இரண்டொரு சபைகள் பாழாயின. இரண்டொன்றில் சிலர் செல்வதை நிறுத்திக் கொண்டனர். அவைகளின் ஆக்கம் சுருங்குவதைப் பற்றி என்னிடம் நண்பர் சிலர் கேட்பதுண்டு. தீய எண்ணங்கள் நடமாடுவதே ஆக்கஞ் சுருங்குவதற்குக் காரணம் என்று யான் சொல்வது வழக்கம். சிலநாள் கடந்து அச்சபைகளின் நிர்வாகம் மாறியது. அவ்விடங் களில் திருவாசகம், திருவாய்மொழி, திருமுருகாற்றுப்படை, கந்தரநுபூதி முதலிய நன்னூல்கள் ஒரு மண்டலம் ஓதப்பட்டன. பின்னே படிப்படியே அவைகள் நன்னிலை எய்தின. முதியவர் ஒருவர்; இளைஞர் ஒருவர். இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். எப்படியோ இருவருக்குள் பிணக்குப் புகுந்தது. ஒருநாள் முதியவரைக் காண யான் சென்றேன். அன்று முதியவர்க்கும் இளைஞர்க்கும் போர் நிகழ்ந்தது. முதியவர் இளைஞரைக் கண்டபடி வைது நிந்தித்துச் சாபமிட்டனர். சாபம் எனக்குப் பிடிக்கவில்லை. அஃது அம்புபோல் எனக்குத் தோன்றியது. முதியவரிடம் விடைபெற்று என் வீடு நோக்கி னேன். ïisP® v‹id¤ bjhl®ªJ tªJ v‹id¡ f©L, ‘Kâat® ÛJ tH¡F¤ bjhL¡fyhkh? என்று கேட்டனர். அவர் வேகம் என்னைப் பதிலொன்றுங் கூற விடவில்லை. இளைஞரே! நாளை வாரும் என்று சொல்லி அவரை அனுப்பினேன். அவர் மறுநாள் என்னைக் கண்டனர். யான் கிறிது பெருமானது மலைப்பொழிவைப் படிக்குமாறு அவரிடம் பைபிலைக் கொடுத்தேன். அவர் அமைதியாக அதைப் படித்தனர். மலைப்பொழிவின் சாரம் உமது உள்ளத்தில் இறங்கியதா? ஒன்றியதா? என்று வினவினேன். இன்னும் இரண்டொரு நாள் அப்பொழிவைத் திருப்பித் திருப்பிப் படித்துத் தங்களைக் காண்கிறேன் என்று சொல்லி இளைஞர் விடை பெற்றனர். மூன்று நாள் கடந்து அவர் என்னைப் பார்க்க வந்தனர். அவரது முகத்தில் ஒருவித மாறுதல் கண்டேன். அகத்திலுற்ற மாறுதல் முகத்தில் உற்றுள்ளது. அவர் நோக்கில் அமைதியும் சாந்தமும் தவழ்ந்தன. கிறிது பெருமான் எப்படிப்பட்டவர்? சாந்தமூர்த்தி; அருட்கடல். அவர்தம் மனத்தினின்றும் எழுந்த தண்ணமிழ்தம் மலைப்பொழிவு. அவ்வருட் பொழிவு இளைஞர் மனநிலையை மாற்றியது. ‘tH¡F v¥bghGJ bjhL¡f¥ ngh»Ö®? என்று இளைஞரைக் கேட்டேன். அவர் பேசாது நின்றனர். அன் பார்ந்த இளைஞரே! மலைப்பொழிவு படிந்த உள்ளத்தால் ஜெபஞ் செய்க. ஜெபம் உம்முடைய உள்ளத்திலெழுந்த வழக்குப் பேயை ஓட்டும்; முதியவர் சாபம் உம்மை அணுகாதவாறு காக்கும்; உமது உள்ளத்தில் நல்லெண்ண அலைகளை எழச்செய்யும். அவைகள் முதியவரிடம் சென்று அவரது மனத்தையும் மாற்றும்; அவரது சாபவாயை ஜெபவாயாக மாற்றும். நல்லெண்ணங்களால் ஜெபஞ் செய்க என்றேன். இளைஞர் மனந்திரும்பி ஜெபஞ் செய்யத் தொடங்கினர்; ஜெபத்தில் ஆழ்ந்தனர். அவர் நெஞ்சம் அன்புக் கடலாயிற்று. நல்லெண்ண அலைகள் எழுந்து வீசின. அவை இளைஞரையுந் தூய்மை செய்து, சாபமிட்ட முதியவரையுந் தூய்மை செய்தன. சில நாட்கள் கழிந்தன. முதியவர் இளைஞரை அழைப்பித்து மன்னிப்புக் கேட்டனர். வசையும் நிந்தனையும் சாபமும் முதியவரை விடுத்து அகன்றன. இளைஞர் வழக்குத் தொடுத் திருந்தால் அவர் எரிவாய்க் கொள்ளிப் பைசாசாகி இருப்பர். அவரைக் காத்தது கிறிது பெருமான் திருவுள்ளம். தற்கால உலகம் எப்படி இருக்கிறது? அந்தோ! சொல்ல நாவெழவில்லை. என்றும் காணாத கொடிய கொலைப் போரை உலகங் காண்கிறது; படாத பாடுபடுகிறது. இன்னுஞ் சின்னாளில் நாமெல்லாம் எங்கே இருப்போமோ? உற்றார் உறவினர் எங்கிருப்பரோ? வீடு வாசல்களும் கன்றுகாலிகளும் எந்நிலை அடையுமோ? 1எறிகுண்டுக் கலையும் பீரங்கிக் கலையும் நீர்மூழ்கிக் கலையும் அல்லவோ பெருகி விட்டன? இவைகளெல்லாம் தீயஎண்ணங்களின் பரிணாமம். பிமார்க் எண்ணிய எண்ணங்கள் கெய்ஸரிடம் வளர்ந்தன. கெய்ஸர் எண்ணிய எண்ணங்கள் ஹிட்லரிடம் வளர்ந்திருக்கின்றன. அவ்வாறே பல நாடுகளிலுள்ள பொல்லாத அரசியலார் எண்ணிய எண்ணங்கள் - கொலை எண்ணங்கள் - உலக யுத்த மாக மூண்டிருக்கின்றன. தீய எண்ணங்களே உலகை வளைத்துக் கொண்டால், உலகம் என்ன ஆகும்? உலகம் பாழாகும். அந் நிலையை இயற்கை இறை உண்டுபண்ணாது. நல்லெண்ண உலகை அறவே இயற்கை இறை தொலைத்துவிடாது. இந்நாளி லும் கிறிது பெருமான் எண்ணம் - திருவள்ளுவர் எண்ணம் - பாழ்படவில்லை. அவை சிலரிடத்தில் வளர்ந்தே வருகின்றன. அச்சிலருள் ஒருவர் நம் நாட்டிலிருக்கிறார். இருள் சூழ்ந்த இக்காலத்தில் - கொலை மலிந்த இந்நாளில் - அஹிம்சா தர்மத்தை - கொல்லாப் பேரறத்தை - உலகுக்கு அறிவுறுத்தும் பெருந்தகை நமது நாட்டில் வாழ்வது நமக்குப் பெருமிதமே. காந்தியடிகள் வாழ்க; அவர்தம் நல்லெண்ணங்கள் வாழ்க; அவைகளால் உலகம் நலம் பெறுவதாக. எல்லாவற்றிற்கும் அடிப்படை உள்ளம். உள்ளம் நல்வழி யில் பண்படல் வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? அலையும் உள்ளத்துக்கு ஒரு கொழுகொம்பு தேவை. கொழுகொம்பு எது,? உருவம் ! உருவம்! உருவம்! உருவம் இனி உள்ளத்துக்கு விடை கொடுப்போம்; உருவத்தை எதிர்கொள்வோம். உருவம் என்றதும் சிலர்க்கு எரி உண்டாகும். அவர், என்ன? உருவமா? அஞ்ஞானம் - துக்கம் என்பர்; உருவங் கடந்த ஒன்றே தேவை. அதுவே ஞானம் என்பர். இந்த ஞானப் பேச்சு நன்றாக இருக்கிறது. இது திண்ணை வேதாந்தம் பேசிக் கொட்டாவி விட்டுக் காலங் கழிப்போருக்கு இன்பமும் ஊட்டும். உருவம் அஞ்ஞானம் - துக்கம் என்போர் தமக்குக் கை கால் கண் மூக்கு வாய் உண்டா இல்லையா என்று சற்றுச் சிந்திப்பாராக. உருவம் அஞ்ஞானம் - துக்கம் என்று நினைப்பது எது? பேசுவது எது? உருவமற்ற ஒன்றை நினைப்பது எது? பேசுவது எது? உன்னுங் கள். சகோதரர் மனத்தை விடுத்தும் வாக்கை விடுத்தும், உருவத்தைப் பழித்து உருவமற்றதைப் போற்ற முயன்று பார்ப்பாராக. அம்முயற்சி முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக முடியும். உருவத்திலிருந்து கொண்டும், உருவத் துணைகொண்டும், நினைந்தும், பேசியும் வாழ்வு நடாத்தும் சகோதரர் உருவத்தைப் பழிப்பது தவறு. அது நன்றி கொல்வதாகும். சூந்யப் பேச்சு உருவத்தை நினைத்துப் பார்ப்போம். நானாவித உருவங்கள் மீது உள்ளஞ் செல்கிறது. உருவமற்றதை உளங் கொண்டு பார்ப்போம். என்ன உறுகிறது.? ஒன்றையுங் காணோம். உருவமற்றது - உருவமற்றது என்று மட்டும் பேசப்படுகிறது. அப்பேச்சுக்குரிய பொருள் எது? அதை நினைத்தலும் இயலவில்லை. நினைவுக்கெட்டாத ஒன்றைக் குறித்து வாய் பேசுகிறது! என்ன வியப்பு! உருவமற்ற ஒன்று பேச்சுக்குமட்டும் அடங்குவதாகுமோ? பேச்சுக்கு அடிப்படை நினைவு. நினைவுக்கு எட்டாத ஒன்று எப்படிப் பேச்சில் அடங்கும்? அதைக் குறித்து எப்படிப் பேசுவது? என்னென்று பேசுவது? அது மூலமற்ற பேச்சு - பொருளற்ற பேச்சு - சூந்யப் பேச்சு - ஆகும். சூந்யப் பேச்சைக் கேட்பவரில்லையா? எதையுங் கேட்பவர் உலகிலிருக் கிறார். உருவமற்றத்தைப் பற்றி ஒருவர் பேசுகிறார்; மற்றவர் கேட்கிறார். இவர் உள்ளத்தில் என்ன நிலைக்கும்? பேசுவோரது வாயுங் கண்ணும் மூக்கும் தாடியும் பிறவும் நிலைக்கும். மற்றுமொன்று நிலைக்கும். அஃதென்ன, உருவ நிந்தனை. உருவமற்றதைப் பற்றிப் பேசுவோர் அதைப்பற்றி அவர் எங்ஙனம் பேசுதல் கூடும்? உருவத்தை நிந்தனை செய்வதே உருவமற்ற ஒன்றைப் பற்றிய பேச்சு என்று மக்கள் கொள்ளல் வேண்டும் போலும்! மனமும் வாக்கும் உடையார் உருவ மற்றதைக் குறித்துப் பேசுவதாலும், அதை மற்றவர் கேட்பதாலும் விளையும் பயன் என்னவோ தெரியவில்லை. உருவ இயல் உருவம் எது? வடிவமுடையது உருவம் என்று பொதுப் படச் சொல்லிவிடலாம். வடிவம் எது எனில் என்செய்வது? உருவமுடையது வடிவம் என்று சொல்லுதல் வேண்டும். இது நீரைப் புனல் என்று சொல்வதை ஒக்கும். உருவத்தை எப்படி விளக்குவது? உருவம் பெரியதிற் பெரியதாக வளர்ந்து செல்வது, சிறியதிற் சிறியதாகத் தேய்ந்துபோவது. உருவத்தை விளக்கப் புகும் பொழுதே அதன் அருமைப்பாடு புலனாகும். பெரியதிற்பெரியதாகவும், சிறியதிற் சிறியதாகவும் உள்ள ஒன்றைப் பெரியதிற் பெரியதைப் பரந்து பார்க்கவும், சிறியதிற் சிறியதைக் கூர்ந்து நோக்கவும் இயலாத ஒருவன் (அதை) எங்ஙனம் விளக்கிக் காட்டுதல் கூடும்? உருவத்தின் இயல்கள் பலபடக் கிடக்கின்றன. அவைகளில் இரண்டொன்றைச் சுருங்கச் சொல்ல முயல்கிறேன். காலத்தைப் பற்றிய கவலை வேண்டுவதில்லை. இன்றைய சொற்பொழிவு இன்னுஞ் சிறிது நேரத்தில் முற்றுப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள் கிறேன். எல்லை உருவம் எது? எல்லையுடையது என்று சுருங்கச் சொல்லலாம். இக்கல் எல்லையுடையது; இச்சுவர் எல்லை யுடையது; இக்கட்டிடம் எல்லையுடையது; இச்சிந்தாதிரிப் பேட்டை எல்லையுடையது; சென்னை எல்லைக்குட்பட்டது; சென்னை மாகாணம் எல்லைக்குட்பட்டது. இந்தியா எல்லைக் குட்பட்டது; ஆசியா எல்லைக்குட்பட்டது; உலகம் எல்லைக் குட்பட்டது; சந்திரனுக்கு எல்லையுண்டு; சூரியனுக்கு எல்லை யுண்டு; கோள்களுக்கு எல்லையுண்டு; அண்டங்கட்கு எல்லை யுண்டு; அண்டகோடிகளெல்லாம் எல்லைக்குள் இருப்பனவே. அண்டகோடிகட்கு மேலும் மனம் எட்டி எட்டித் தாவுகிறது; பாய்கிறது; முட்டுப்படுகிறது; சுழல்கிறது; எண்ண அலைகள் மோதுகின்றன; எல்லை கொண்ட இக்கல்லின் துணுக்கு எல்லை யுடையது; துகள் எல்லையுடையது; அணு எல்லையுடையது; பரமா அணு எல்லையுடையது; அணுவுக்கு அணுவாயுள்ளதற்கும் எல்லையுண்டு. அதற்குள்ளும் மனம் நுழைந்து நுழைந்து பார்க் கிறது; நெருக்கு ஏற்படுகிறது; எண்ணங்களே முகிழ்க்கின்றன. எல்லையற்ற ஒன்றைக் காணும் பேறு மனத்துக்கில்லை. எண்ணமும் உருவமும் எண்ணம் உருவமா? உருவமற்றதா? எண்ணத்துக்கும் வடிவம் நிறம் முதலியன உண்டு என்று இக்கால விஞ்ஞானியர் கண்டுள்ளனர். எண்ணத்தின் நிறங்கொண்டு மக்கள் குணம் இந்நாளில் கணிக்கப்படுகிறது. இவைகளை யெல்லாம் ஆராய்ந்து தெளிந்த அறிஞர் பலரும், எண்ணத்துக்கும் வடிவம் உண்டு என்ற முடிவுக்கு வந்தனர். எண்ணம் பிறக்குமிடம் உள்ளம். உள்ளம் மாயா காரிய மென்றும், ஒரு தத்துவமென்றும், தோற்ற ஒடுக்க முடைய தென்றும் முன்னே விளக்கப்பட்டன. ஆதலின், உள்ளமும் உருவம் என்க. எண்ணமாவது ஒலியின் ஈட்டம். ஒலி இருவகை. ஒருவகை கேட்கும் ஒலி; மற்றொருவகை கேளா ஒலி. இதைப் பற்றி விஞ்ஞானப் பேராசிரியர் இராஜேசுவரி யம்மையார் இரண் டொரு நாளில் இங்கே பேசப்போவது உங்களுக்குத்தெரியும். கேளாத ஒலியின் ஈட்டமே எண்ணம். அவ் வொலியலைகள் இந் நாளில் விஞ்ஞானிகளால் படம் பிடிக்கப்படுகின்றன. ஆகவே, ஒலியும் உருவத்தின் பாற்பட்ட தென்று கொள்க. உருவம் அருவம் அருவுருவம் எண்ணம் ஒலி முதலியவற்றை அருவமாகக் கொள்ள லாகாதோ என்று சிலர் கருதல் கூடும். அருவமென்பது உருவம் அற்றதன்று. உருவின் நுண்மையே அருவம். பருமை உருவ மென்றும், அதன் நுண்மை அருவமென்றும் வழங்கப்படு கின்றன. கட்டி பருமை; நீர் நுண்மை; நீர் ஆவியாம்போது நீர் பருமையாகிறது; ஆவி நுண்மையாகிறது. இம்முறையில் உருவ அருவ நிலைகளைக் கொள்க. நுண்ணுருவமே அருவமென்பது. அருவுருவமென்பது யாது? அது நுண்மையும் பருமையுங் கலந்த ஒன்று. அதுவும் உருவினதே. உருவம் அருவம் அரு வுருவம் என்று வழங்கப்படுவனவெல்லாம் உருவத்தின்பாற் பட்டனவே. வேற்றுமை, பருமை நுண்மைகளை ஒட்டி நிற்பது. சிவன் உரு அருவுமல்லன் . . . . . என்ற தொடக்கத்தை யுடைய பாட்டொன்று சித்தியாரில் இருக்கிறது. சிவன் உருவுமல்லன்; அருவுமல்லன் என்று சித்தியார் ஆசிரியர் அருளியிருக்கிறார். அருவம் உருவமற்றதாயின், ஆசிரியர் அருவத்தைப் பாட்டிற் பெய்யாது விலக்கியிருப்பர். 1அருவம் நுண்ணுருவமுடைய தாதலின் அதையுங் கடந்தது சிவம் என்று உலகுக்கு அறி வுறுத்தவேண்டி, ஆசிரியர் சிவன் உருவுமல்லன்; அருவுமல்லன் என்னுங் கருத்துப்பட அருளலாயினர். உருவம் எல்லையுடையது என்று சொல்லப்பட்டது. உருவத்தின் நுண்மைகளும், அவைகளின் கூறுகளும் எல்லை யுடையனவே. எல்லையுடையனவெல்லாம் அழிதன் மாலையன. எல்லையுடையன அண்டரண்ட பகிரண்ட மாயினுமாக; அணுவுக் கணுவாயினுமாக. எல்லாம் அழிந்து படுவனவாம். எல்லையுடையது அழியுந் தன்மையதாயின் அழியுந் தன்மையும் உருவின் ஓர் இயலாகும். காரண காரியம் உருவம் காரணமா? காரியமா? உருவமெல்லாம் காரியமே. காரியம் நாமரூபமுடையது. நாமரூபமுடைய ஒன்று- அது எதுவாயினும் - என்றாதல் அழிந்தே தீரும். தோற்ற முண்டேல் மரணமுண்டு என்றார் வன்றொண்டப் பெருமானார். உருவத்தின் இயல்களுள் இங்கே குறிக்கப்பட்டன இரண்டு. ஒன்று எல்லையுடைமை; மற்றொன்று அழியுந் தன்மை. வேறு பல இயல்கள் இவ்விரண்டில் அடங்கும். எல்லையும் அழியுந்தன்மையும் உடைய எல்லாம் முதலும் முடிவுங் கொண்டனவா யிருத்தல்வேண்டும். அவை ஓரளவையுமுடையனவா யிருத்தல்வேண்டும். உருவமெல்லாம் மாயா காரியம். மாயா காரியம் ஒன்றா, இரண்டா? பலப்பல! அவை மெய்யறிஞரால் தத்துவங்களாக முறை செய்யப்பட்டன. தத்துவங்கள் முப்பத்தாறாகத் தொகுக்கப்பட்டன. அத் தொகை விவரம் முன்னே பேசப் பட்டது. முப்பத்தாறு தத்துவங்களும் 2நாதம் முதல் மண் ஈறாக உள்ளன. ஒவ்வொரு தத்துவமும் எத்தனையோ புவனங்களாக விரிந்துள்ளது. தத்துவ புவனங்களைக் கணக்கிட்டு அறுதியிட லாகாது. அவ்வளவும் உருவமே. உருவம் நாதமுதல் நுண்ணிய தாக அரும்பி அரும்பிப் படிப்படியே பருமையாகிப் பருமையாகி மண்வரை விரிந்து நிற்பது. பருமை உருவம் மண்ணினின்றும் படிப்படியே நுண்ணியதாய் ஒடுங்கி ஒடுங்கி நாதம் வரைச் செல்லும். 1இத் தத்துவங்களைக் கடந்து நிற்பது எதுவோ அதுவே உருவமற்ற ஒன்று. அது வாக்கு மனங் கடந்தது; எல்லையற்றது. உருவத்தைமட்டும் நினைக்கும் பண்பு வாய்ந்த மனத்தால் உருவமற்ற ஒன்றை நினைத்தல் கூடுமோ? இதற்குப் பெருத்த தர்க்க வாதங்கள் தேவையில்லை. உருவமும் இயற்கை அன்னையும் அண்ட கோடிகளும் அணுக் கோடிகளும் உருவமாகவே அமைந்துள்ளன. அவைகளினூடே இயற்கை அன்னை புரிந்து வரும் திருவிளையாடல்களை நோக்க நோக்க உருவத்தின் பெற்றிமை இனிது புலனாகும். உருவங்களில் அன்னை, உருவத் திருவிளையாடலே புரிகின்றாள். அவைகளைக் கண்டு இன்புறப் பல உலகம் புக வேண்டுவதில்லை. நமது நிலவுலகக் காட்சியே சாலும். நமது நிலவுலகை நோக்குவோம். இஃது உருவம் உடையதே. இதற்கு அகல நீளம் உண்டு. இதனின்றும் மலையும் காடும் வயலும் கடலும் பூத்துள்ளன. எற்றுக்கு? உருவத்தின் மாண்பை உணர்த்தவே இவைகள் பூத்துள்ளன. மலையும் காடும் வயலும் கடலும் ஒருதிறமாயில்லை. அவை பலதிறமாக அமைந் துள்ளன; பலதிறப் பெயர்களையும் பெற்றுள்ளன. ஏன்? உருவத்தின் பெருமையைப் புலப்படுத்தவே என்க. மரங்களில் பாகுபாடு - பறவைகளில் பாகுபாடு - விலங்குகளில் பாகுபாடு - மக்களிலும் பாகுபாடு - காண்கிறோம். இப்பாகுபாடுகளால் விளங்குவதென்னை? உருவத்தின் சிறப்பே விளங்குகிறது. இந்நாட்டு மரம், இந்நாட்டுப் பறவை, இந்நாட்டு விலங்கு, இந்நாட்டு மக்கள் என்று பேசப்படுதல் கண்கூடு. இப்பேச்சு உணர்த்துவதென்னை? உருவத்தின் பெற்றியையே உணர்த்து கிறது. மக்களெல்லாம் ஒரே இனம். அவர்கள் உயிரில் எவ்வித வேற்றுமையும் இல்லை. ஆனால், மக்கள் பலவேறு அமைப் புடையவர்களாய், பலவேறு நிறமுடையவர்களாய், பலவேறு மொழியுடையவர்களாய், பலவேறு உடையுடையவர்களாய் வாழ்கிறார்கள். இப்பன்மை, உருவத்தின் உயர்வைக் காட்டவே தோன்றியுள்ளது. இன்னார் இத்தொழில் ஏற்றுள்ளவர் என்று உலகம் உணர்ந்துகொள்ளப் பலவித உடைகள் காணப் பட்டுள்ளன. உடையைக் கொண்டு இவர் வக்கீல் - இவர் சிப்பாய் - இவர் போலிஸார் - என்று அறிகிறோம். இவ் வேற்றுமை உருவத்தின் மேன்மையைத் தெரிவிப்பதாகும். ஒரே கடவுள் - ஒரே சமயம் ! ஆனாலும் உலகம் கடவுளைச் சிவன் என்றும், திருமால் என்றும், ஜொஹோவா என்றும், அல்லா என்றும் தொழுகிறது. திருநீறு, திருமண், அங்கி, தாடி முதலியவற்றைச் சமயக்கோலங்களாக உலகம் கொண்டுள்ளது. இவ்வேறுபாடுகளிலும் உருவத்தின் விழுப்பமே பொதிந்து கிடக்கிறது. விஞ்ஞானியர் இயற்கையிலுள்ள சக்திகளின் உண்மையை முதலாவது ஊகஞ் செய்கிறார்; பின்னே உண்மை காணக் கருவிகளைக்கொண்டு ஆராய்கிறார். கருவிகளாகிய உருவங் களின் துணையின்றி விஞ்ஞானியராலும் இயற்கைச் சக்திகளின் உண்மையை நிறுவிக்காட்டல் இயல்வதில்லை. ஆகாய அலை, மின் அலை, வெப்ப அலை, ஒளி அலை, ஒலி அலை முதலியன எப்படி உணர்த்தப்படுகின்றன? உருவக் கருவிகளின் துணை யாலல்லவோ உணர்த்தப்படுகின்றன? ஆசிரியர் கணிதம் போதிக்கிறார். போதனையை மாணாக்கர் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிவிக்க அவர் கரும்பலகையில் எண்களைப் பொறிக்கிறார்; கோடிடுகிறார்; வட்டமிடுகிறார். இவை யாவும் உருவங்களல்லவோ? பத்திரிகாசிரியர் சில கருத்துக்களைப் படங்கள் வாயிலாக வெளியிடவே முயல்கிறார். ஏன்? படங்கள், கருத்துக்களை நன்கு புலப்படுத்துமென்பது அவர்தம் உள்ளக் கிடக்கை. நூலாசிரியர் உள்ளத்தில் பல கருத்துக்கள் செறிந்து கிடக்கின்றன. அவர்தம் உள்ளத்தில் கருத்துக்கள் செறிந்து கிடப்பதால் மற்றவர்க்கு என்னபயன் விளையும்? அவர்தங் கருத்துக்களை எழுத்துருவில் இறக்கிய பின்னரே அவைகள் மற்றவர்க்குப் பயன்படுகின்றன. இக் கட்டடத்தைப் பாருங்கள். அழகிய கட்டடம்! இது முதல் முதல் சிற்பியின் உள்ளத்தில் கருக்கொண்டது. பின்னே கல் மண் சுண்ணம் மரம் இரும்பு முதலியவற்றின் சேர்க்கையால் இவ்வுருக் கொண்டது. கல் முதலிய உருவங்களில்லையேல், சிற்பியின் எண்ணம் இக்கட்டடமாகிக் காட்சியளிக்குமோ? ஓவியத் துறையில் கைபோய ஒருவன் இருக்கிறான். அவன் ஓவியம் வரையாமலோ வடியாமலோ கிடந்தால் அவன் திறம் எப்படி வெளியாகும்? அவனால் ஓர் ஓவிய உருவம் வரையப் படின் - அல்லது வடிக்கப்படின் - அப்பொழுதே அவன் திறம் விளங்குவதாகும். அறிவு அழகு காதல் முதலியன பேசப்படுகின்றன. இவைகளை எப்படி அநுபவித்தல் கூடும்? இவைகள் உருக் கொண்டு கண்ணெதிரில் உலவுகின்றனவா? இல்லை. அறிவுக்கு நிலைக்களன் மூளை. மூளையில் நிலைத்து ஒருவர் வாயிலாகத் தன்னை உணர்த்துவது அறிவு. அழகு ஒருவரிடம் ஒன்றியே தனது இயல்பைப் புலப்படுத்துகிறது. காதல் மிக உயர்ந்தது. ஒப்புயர்வற்றது. ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான். இவளும் அவனைக் காதலிக்கிறாள். இருவர் மனமும் ஒன்றாகிவிட்டது. ஆனாலும் காதலாகிய பயன் விளைந்ததோ? பயன் விளைவுக்கு உறுப்பு வேண்டுவதாகிறது. ஆகவே, அறிவு அழகு காதல் முதலியன தன் தன் இருப்பை வெளிப்படுத்த உருவங்களை அவாவுதலைத் தெளிக. உள்ளம் நினைக்கிறது. அது தானே நினைக்கிறதா? இல்லை. அதற்குக் கருவி கரணத் துணை தேவையாகிறது. உள்ளம், கண்கொண்டு காண்கிறது; காதுகொண்டு கேட்கிறது. கண் காது முதலிய கருவிகளின் துணையால் உள்ளம் தன் கடமைகளைச் செய்கிறது. உடலில் பொறி புலன்கள் பூத்துள்ளன. அவைகள் படிந்து வினையாற்ற உலகமிருக்கிறது. உலகமில்லையேல், பொறி புலன்கள் என்செய்யும்? பொறி புலன்களில்லையேல், உலகால் என்ன பயன்விளையும்? பொறி புலன்களும் உலகமும் ஒன்று வதினின்றுமே வாழ்க்கை அரும்புகிறது; மலர்கிறது; வாழ்வுக்கு ஈருருவச் சேர்க்கை வேண்டும். எல்லாம் உருவம் உருவத்தைப்பற்றி இன்னும் பலபட விரித்துக் கொண்டே போகலாம். காலத்தின் அருமையை நோக்கி இவ்வளவில் நின்றுவிடுகிறேன். ஒலி உருவம் - எண்ணம் உருவம் - உள்ளம் உருவம் - கருவி கரணங்கள் உருவம் - பொறி புலன்கள் உருவம் - உடல் உருவம் - அகிலம் உருவம் - அகில கோடிகளெல்லாம் உருவம் - அணு உருவம் - அணுவுக்கு அணுவும் உருவம் - எல்லாம் உருவம். உருவிலே பிறந்து, உருவிலே வளர்ந்து, உருவிலே வாழ்ந்து, உருவாக விளங்கும் நாம், உருவத்தை எள்ளுவதும் பழிப்பதும் நிந்திப்பதும் அறிவாகுமா? நமது உள்ளத்துக்கு - கரணங்கட்கு - பொறி புலன்கட்கு - உடலுக்கு - உலகுக்கு - வாழ்வுக்கு - எல்லாவற்றிற்கும் உருவம் தேவை; தேவை; உருவமற்ற ஒன்றை உணர்வதற்கும் உருவத் துணை தேவை. தொடர்பு இனி வரவேண்டுவது உள்ளத்துக்கும் உருவத்துக்கும் உள்ள தொடர்பு. இத்தொடர்பு பின்னே பேசப்போகும் உள்ளுணர்வும் வழிபாடும் என்னும் பொருளிலும் கலந்து வரும். ஆதலின், இப்பொழுது அதுபற்றி இரண்டோர் உரை பகர்ந்துவிடலாமென்று எண்ணுகிறேன். உள்ளத்துக்கும் உருவத்துக்கும் உள்ள தொடர்பு இயற்கை யானது; இன்றியமையாதது. இதைத் தாதான்மியம் என்று தத்துவர் கூறுப. உள்ளத்தின் இயக்கம் உள்ளம் தோற்ற முடையதென்றும் ஒடுக்கமுடைய தென்றும் முன்னே சொல்லப்பட்டது. இவ்விரண்டியலையும் உடையது உருவம் என்பதும் முன்னர் விளக்கப்பட்டது. ஆதலின், உள்ளம் உருவமுடையதென்று மீண்டும் இங்கே வலியுறுத்த வேண்டுவதில்லை. உருவங்களில் நுண்மை வாய்ந்தனவற்றுள் உள்ளமும் ஒன்று. நுண்ணுருவமுடைய உள்ளம், மற்ற உருவங்களில் எவ் வகையிலாதல் ஒன்றியே தன் கடமைகளை ஆற்றும். அது தனித்து இயங்காது; ஏதாவது ஓர் உருவுடன் கலந்தே இயங்கும். எண்ணுவது எது? உள்ளம். உள்ளம் தானே எண்ணாது. அதற்குத் துணைக் கருவி வேண்டும். துணைக் கருவி எது? கரணம். உள்ளம் கரணத் துணைகொண்டே பொருளை எண்ணுவதாகிறது. கரணத்துக்கு ஆதாரமாக மற்றக் கருவிகள் நிற்கின்றன. ஆகவே, உள்ளம் ஒன்றை எண்ணுதற்குக் கருவி கரணத் துணை வேண்டி நிற்கிறதென்க. உள்ளம் பொறி புலன்களின் தொடர்பு கொண்டே காண்டல் கேட்டல் முதலிய செயல்களை ஆற்றுகிறது. உள்ளத் தொடர்பு உள்ளம் பற்பல உறுப்புகளின் வாயிலாகவே உலகுடன் தொடர்பு கொள்கிறது. உறுப்புக்களில்லையேல், உள்ளம் எங்ஙனம் உலகுடன் தொடர்பு கொள்ளும்.? உள்ள நிகழ்ச்சிக்கு எல்லா வழியிலும் உருவச் சேர்க்கை வேண்டப்படுகிறது. உள்ளத்துக்கு உருவம் தேவை; உருவத் துக்கு உள்ளம் தேவை. அஃதின்றி இஃதில்லை; இஃதின்றி அஃதில்லை. உள்ளமுள்ள இடத்தில் உருவமிருக்கும்; உருவ முள்ள இடத்தில் உள்ளமிருக்கும். இரண்டும் ஒன்றுபட்டே வாழ்க்கையை - உலகை - அமைக்கின்றன. உள்ளம் உள்ளவரை பிரகிருதி உலகமுமிருக்கும்; இஃதுள்ளவரை அஃதுமிருக்கும். உள்ளம் உறங்கினால் அவ் வுலகமும் உறங்கும்; இஃது உறங்கினால் அஃதும் உறங்கும். இரண்டும் ஒன்றே என்ற ஒரு சித்தாந்தமுமுண்டு. அச்சித்தாந் தம், மனமே கரணமாய்ப் பொறிபுலன்களாய் உடலாய் உலகமாய்ப் பரிணமிக்கிறது என்றும், மனம் மறைந்தால் எல்லாம் மறையும் என்றும் அறிவுறுத்துவது. இங்கே மனம் உள்ளவரை பிரகிருதி உலகமும் உண்டு என்பதும், அது மாய்ந்தால் இதுவும் மாயும் என்பதும் இரண்டுக்குமுள்ள தொடர்பை உணர்த்துவனவாம். உள்ளம் உலகுடன் கலந்தும், உலகம் உள்ளத்துடன் கலந்தும் உழன்று உழன்று படிப்படியே ஒடுக்கமுறும். அவை ஒடுங்க ஒடுங்கப் பிராணன் தனி ஆட்சி செலுத்தும். பிராணன் ஆட்சியில் விந்துநாத நெறி தோன்றும். விந்துநாதம் உள்ளொளிக்குரிய வழி காட்டும். உள்ளொளி, தோற்றமுற்றதும் விந்துநாதம் ஒடுங்கும். விந்துவும் நாதமும் முறையே ஒளி ஒலி ஆகிய நுண்ணுருவங்களுடையவை. அவை ஒடுங்கியதும், நுண்ணுருவங்களுக்குரிய சுத்த மாயை யின் தொடர்பு அற்றுப்போகும். அந்நிலையில் உள்ளொளிப் பேறு கிடைக்கும். உருவமற்ற பெருவெளி - சிதாகாச - உண்மை விளங்கும். உள்ளொளிப் பேற்றுக்கு உள்ளத் துணையும் - உருவத் துணையும் தேவை. அவை இன்றியமையாதன. இரண்டும் ஒன்றியே உள்ளொளிக்கு வழி கோலுகின்றன. அவைகட்கு எந்நன்றி செலுத்துவது? உள்ளமும் உருவமும் வாழ்க; வாழ்க. கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க் குவிதலுடன் விரித லற்றுக் குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான குழியற்று மலமு மற்று நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென நண்ணுதலு மற்று விந்து நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று ஞாதுருவின் ஞான மற்று வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிரண்டற்று வாக்கற்று மனமு மற்று மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே வாய்மடுத் துண்ட வசமாய்த் தேடுதலு மற்றவிட நிலையென்ற மௌனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்த குருவே. - தாயுமானார் 2. உள்ளுணர்வும் வழிபாடும் உள்ளுணர்வு தோழர்களே! முதல் நாள் உள்ளமும் உருவமும் என்ற பொருள் பேசப்பட்டது. இன்று உள்ளுணர்வும் வழிபாடும் என்பது பேசப்படும். இரண்டும் தொடர்புடையனவே. உணர்வு வகை உணர்வு இருவகை. ஒன்று வெளியுணர்வு; இன்னொன்று உள்ளுணர்வு. இவை முறையே பொய்யுணர்வென்றும் மெய் யுணர்வென்றும் வழங்கப்படுகின்றன. முன்னையது மனம் புறத்தே விரிந்து அலைந்து பொருளல்லாத பொருளிற் படியுங் கால் விளங்குவது; பின்னையது மனங் குவிந்து குவிந்து செம்பொருளிற் படியப் படிய விளங்கிவருவது. விவகாரத்தில் உள்ளமும் உருவமும் ஒன்றுடன் ஒன்று ஒன்றும்போது தன்னை விளங்கச் செய்துகொள்வது உணர்வு. அஃது இரண்டு பொருள் சேர்க்கையில் தோன்றும் புதுப் பண்பு போன்றதன்று. உணர்வு, எங்கும் இருப்பது; இரண்டின் கூட்டுறவிலே துலங்குந்தன்மையது. வெளியுணர்வு பொய்ம்மையது. அது பொறுமை அமைதி சாந்தம் அன்பு அருள் ஒப்புரவு முதலிய நறுங்குணங்களை வளர்க்கும் ஆற்றல் இல்லாதது. அதைப்பற்றிய பேச்சு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. எடுத்துள்ள பொருளும் அஃதன்று. உள்ளுணர்வுத் தோற்றம் உள்ளமும் உருவமும் ஒரு நிலையில் மறைந்தொழிவன. அவைகளின் கூட்டுறவால் எழும் உள்ளுணர்வோ அவை களுடன் மறைந்தொழிவதன்று. உள்ள உருவக் கூட்டுறவு அற்றதும் உள்ளுணர்வுக்கு வேறு கூட்டுறவுகள் கிடைக்கும். அக் கூட்டுறவுகளால் அவ்வுணர்வு படிப்படியே தன்னைப் பெருகச் செய்துகொண்டே போகும். அது தன் சொரூபம் அடைந்ததும் பரவெளியில் கலக்கும்; ஒளியாகும்; உள்ளொளி யாகும்; பரவொளியாகும். உள்ளுணர்வு உள்ளொளிக்குத் துணை செய்வதென்று சிலரும், உள்ளுணர்வே உள்ளொளியாகும் என்று வேறு சிலரும் கூறித் தம்முள் பிணங்கி வாதப்போரிடுவர். இது வாய் வேதாந்தம். உள்ளொளி நிலையில் வாக்கேது? மனமேது? அங்கே வாதமேது? கலத்தல், அதுஆதல் முதலிய சொற்களை வாய் வேதாந்திகள் மனம்போனவாறு பொருள்படுத்தித் தாங்களும் பாழாகிப் பிறரையும் பாழ்படுத்துகிறார்கள். அநுபவத்தில் தெளிவு பெறத்தக்க நுண்மைகளைப் பருமை யுணர்வால் வாதத்தில் புகுத்துவது அறமாகாது. உள்ள உருவச் சேர்க்கையால் தலைகாட்டும் உள்ளுணர்வு வாளா இராது. அது, தன்னை மேலும் மேலும் விளங்கச் செய்யவே விரையும். விரையும் உள்ளுணர்விற்கு ஏதாவதொன்று வேண்டுமன்றோ? பொருந்தியது எது? வழிபாடு, வழிபடுதல் வழிபாடு. உள்ளுணர்வு வளர்ச்சிக்கு வழிபாடு ஒளிபோன்றது. வழிபாடு உள்ளமும் உருவமும் என்னும் பொருளில் உள்ளுணர் வும் வழிபாடும் என்பது தொக்கி நிற்பது. உள்ளமும் உருவமும் ஒன்றுடன் ஒன்று உறவுடையன. இவ்வுறவால் விளைவது உள்ளுணர்வு. உள்ளுணர்வுடன் கேண்மை கொண்டது வழி பாடு. இத்தொகைமுறைமையை உள்ளமும் உருவமும் என்பதும், உள்ளுணர்வும் வழிபாடும்என்பதும் வகைப் படுத்துவனவாம். சில விடங்களில் தொகை முறைமைபற்றியும், சில விடங்களில் வகை முறைமைபற்றியும் பேசிச் செல்வன். உருவ வகை உள்ளம் எத்தனையோ வித உருவங்களில் படிகிறது. அப்படிவினின்றும் எழுவனவெல்லாம் உள்ளுணர்வாகுமா? ஆகா. உள்ளுணர்வை எழுப்பவல்ல உருவங்களில் உள்ளம் சேர்க்கை பெறுதலே நல்லது. இல்லையேல் உள்ளுணர்வு அரும்புதலுஞ் செய்யாது. இங்கே உருவங்களில் வகைகளிருத் தலைக் கருதுங்கள். வகைகளைப் பலபட விரிக்கலாம். பலபட்ட விரிவு இங்கே அநாவசியம். வகைகளை இரண்டாக இங்கே தொகுக்கலாம்; ஒன்று, உள்ளம் தன்பால் படியுங்கால் உள்ளுணர்வை எழுப்பத் தகுதி வாய்ந்த உருவக் கூட்டம்; மற்றொன்று, உள்ளுணர்வை எழுப்பத் தகுதி இல்லாதது. முன்னையதில் உறுவது வழிபாடு; பின்னையதில் உறுவது வழிபாடாகாது; வழிபாடு ஆழ்ந்த பொருளுடையது. வழிபாடென்று கண்ட கண்ட உருவங்களிற் கருத்துச் செலுத்த லாகாது. வழிபாட்டுக்கு விழுமிய உருவைக் குறிக்கொள்ளல் வேண்டும். உள்ளம் உருவத்தில் ஒன்றி ஒடுங்குதற்கும், அதனால் உள்ளுணர்வு எழுதற்கும் வேண்டப்படுவது வழிபாடு. அவ் வழிபாட்டைச் சிறிது விரித்துப் பேச முற்படுகிறேன். விழுமிய ஒன்று - கடவுள் விழுமிய ஒன்றைக் குறிக்கொண்டு நிகழ்த்தப்படுவது வழிபாடு. விழுமிய ஒன்று எது? மனநெடுந்தேரேறிச் செல்வோம். விழுமிய ஒன்று 1இஃதன்று இஃதன்று என்றே மனஞ் செல்கிறது; மேலுஞ் செல்கிறது; மனம் தளர்கிறது; சோர்கிறது; வீழ்கிறது. மேலே மேலே கடந்து அது செல்லினும் அதனால் விழுமிய ஒன்றன் எல்லை காண்டல் இயலவில்லை. எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்றதாக உள்ள ஒன்று இருத்தல் வேண்டும். எல்லைக்கு எல்லையற்ற ஒன்று இருந்தே தீரல்வேண்டும். அஃது எது? அதையே உலகம் கடவுள் என்று ஏற்றுப் போற்றி வருகிறது. கடவுளே விழுமியது. கடவுளினும் விழுமியதொன்றில்லை. பொருள் கடவுள் என்பது ஒரு சிறந்த சொல்; தமிழ்ச்சொல். கடவுள் -கடத்தல் என்னும் பொருளுடையது; எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்று நிற்பது. கடந்த உள் (உள்ளம்) என்று கொண்டு எல்லாவற்றையுங் கடந்த உள்ளத்தில் பொலிவது என்று பொருள் கூறுவோரும் உளர். கடவு உள் (கடவுதல் - செலுத்துதல்) என்று கொண்டு எல்லா உள்ளங்களையும் - உயிர்களையும் - செலுத்துவது என்று பொருள் விரிப்போரும் உளர். இன்னும் பல பொருள் பகர்வோரும் உளர். கடவுள் வழிபாடு கடந்த ஒன்றே விழுமியது. அதனிடம் உள்ளத்தைச் செலுத்துவது வழிபாடாகும். வழிபாடு என்றதும் உலகம் எதைக் கருதுகிறது? கடவுள் வழிபாட்டையே கருதுகிறது. இவ்வாறு கருதுவது பெருவழக்காய் - மரபாய் - விட்டது. ஆகவே, வழி பாடென்பது கடவுளையே குறிக்கொண்ட தென்று கொள்க. என்னை? கடவுளுக்குமேல் விழுமிய தொன்று இன்மையால் என்க. இங்கே யானும் வழிபாடு என்று கடவுள் வழிபாட்டையே பேசப் புகுகிறேன். கடவுள் உருவமா? உருவமற்றதா? வழிபாடு உருவத்தைப்பற்றி நிகழ்வது என்று முன்னே சொல்லப்பட்டது. இங்கே வழிபாடு கடவுளைக் குறிக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் கடவுள் உருவமா? உருவமற்றதா? என்னுங் கேள்வி எழாமற்போகாது. கடவுள் உருவமாயின், அஃது எல்லையுடையதாய் அழியுந் தன்மையதாதல் வேண்டும். கடவுள் எல்லையுடையதும் அன்று; அழியுந் தன்மையதும் அன்று. கடவுள் உருவமற்றதாயின், அதை எப்படி வழிபடுவது? உருவமற்றதை எவ்வாறு மனம் நினைக்கும்? வாய் வாழ்த்தும்? கை கும்பிடும்? கடவுளை உருவம் எனில் அதன் இயல்புக்கே ஊறு நேர்வதாகிறது. கடவுளை உருவமற்ற தெனில் வழிபாட்டுக்கு ஊறு நேர்வதாகிறது. தர்ம சங்கடம்! என்செய்வது! கடவுளின் உண்மைநிலை தெரியவரின் ஒருவித முடிவுக்கு வரலாம். கடவுளின் உண்மை நிலை - சொரூபம் கடவுளின் உண்மை நிலையை அறுதியிட்டுக் கூறுதற்கு என்போன்றார் அருகரல்லர். எனக்கு வாக்குண்டு; மனமுண்டு. வாக்கும் மனமும் எல்லையுடையன. எல்லையுடைய வாக்கும் மனமும் எல்லையற்ற கடவுளை எங்ஙனம் ஆராயும்? விஞ்ஞானக் கலையும் கடவுளாராய்ச்சிக்கு முற்றுந் துணை செய்யாது. அதன் துணை சிறிது தூரம் கிடைக்கும்; மேலே கிடைத்தல் அரிது. திருஞானசம்பந்தர், ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா. . . . . . என்று அருளியுள்ளனர். ஏன்? சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்று அவர் காரணமும் காட்டுகிறார். கடவுளை ஆராயப் புகுந்தால், அஃது ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் வளர்ந்து செல்லுந் தன்மையது என்பது கருத்து. பின்னை எவ்வாறு முடிவு காண்பது? அநுபூதிமான்களை அடைவதே நல்லது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களிருப்பிடங்கள் அவர்கள் நூல்களே. அவர்கள் துணையை நாடுவோம். பெரியோர் மறைமொழிக ளெல்லாம் ஒருமுகமாகக் கடவுள் உருவமற்றது என்றே அறை கூவுகின்றன. தன்மை யாரும் அறிவாரில்லை. - திருஞானசம்பந்தர் பின்னு சடை. . . . . இன்னஉரு என்று அறி வொண்ணா தான்காண். நற்பதத்தார். . . . . . சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை. - திருநாவுக்கரசர் உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுணர்ந்துரு வியந்தவிந் நிலைமை உணர்ந்துணர்ந் துணரினும் இறைநிலை உணர்வரிது. - நம்மாழ்வார் சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே. - மாணிக்கவாசகர் யார்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை யார்அறி வார்அந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதன் வேரறி யாமல் விளம்புகின் றேனே. உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள். - திருமூலர் அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது. - காரைக்காலம்மையார் வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது. - அருணகிரியார் பெருவெளியாய் . . . . . . . . .மனமாதிக்கு எட்டாத பேரின்ப மயமாய். சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை. சொல்லாய தொகுதியெலாங் கடந்துநின்ற சொரூபானந் தச்சுடரே. - தாயுமானார் இப்பெருமொழிகளை நோக்குழிக் கடவுள் உருவமற்ற ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. வழிபாடு - உருவம் - உருவமற்றது உருவமற்ற கடவுளை எப்படி வழிபடுவது? உருவமற்றது உள்ளத்தில் எவ்வாறு தங்கும்? அப்பொழுது கடவுள் வழிபாடு நடவாமலிருத்தல் வேண்டுமன்றோ? கடவுள் வழிபாடு நடவா மலா இருக்கிறது? அஃது எங்கணும் நடைபெற்றே வருகிறது. கடவுள் உருவமற்றது என்று பேசிக்கொண்டே அதை நினைக்கின்றவரும் இருக்கின்றனர்; ஜெபிக்கின்றவரும் இருக் கின்றனர். அன்னவர் உள்ளம் எதைப்பற்றி நினைக்கிறதோ? வாய் எதைப்பற்றி ஜெபிக்கிறதோ? தெரியவில்லை. பல ஆண்டுகட்கு முன்னர் உருவ வழிபாட்டைக் கண்டிப்பதற்கென்று சென்னைச் செங்கான்கடைக் கொட்டகை யில் ஒருபெருங் கூட்டங் கூடிற்று. அக்கூட்டத்தில் உருவ வழி பாடு மிக உரமாகக் கண்டிக்கப்பட்டது. இறுதியில் ஒரு ஜெபக் கூட்டம் நடந்தது. முடிவில் பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்பது ஜெபிக்கப்பட்டது. அங்கிருந்த ஒருவர், பரமண்டலம் எங்கே இருக்கிறது? அங்கே பிதா எக் கோலத்துடன் வீற்றிருக்கிறார்.? ïu©L« cUtkšyth? என்று கேட்டார்; இன்னொருவர், நீங்கள் ஜெபம் செய்யும் போது உங்கள் உள்ளத்தில் ஏதேனும் உருவம் நிலைக்கிறதா? mšyJ mJ NªakhŒ¡ »l¡»wjh? என்று கேட்டார். இக்கேள்விகட்குப் பாதிரியார் பதிலளியாமலே புறப்பட்டார். கூட்டத்திலிருந்த ஒரு சகோதரியார், பாதிரியார் ஜெபஞ் செய்தபோது அவரால் பெரிய பாதிரியாக மதிக்கப்பெற்ற பிஷப் உருவம் அவர் உள்ளத்தில் நிலவியிருக்கும்; எனக்கு அவ்வாறு நிலவுவது உண்டு என்றார். m§nf ïUªj ntW xU ghâÇah® ‘Ú xU »¿ÞJt¥ bg©zh? என்று சகோதரியாரைக் கடிந்தார். உருவ வழிபாட்டை மறுக்கும் பலரிடை யான் உரையாடி யுள்ளேன். ‘kd« cUtk‰wij v¥go Ãid¡F«? என்னுங் கேள்விக்குப் பொருந்திய விடையை யான் பெற்றதே இல்லை. வழிபாட்டைக் குறித்து எவ்வழியில் நின்று ஆராய்ந்து பார்த்தாலும், உருவமற்ற கடவுளை, உருவமே நிலைக்கும் மனமுடையார் வழிபடல் இயலாதென்று தெரிகிறது. கடவுள் உருவமுடையதாயின் வழிபாடு நிகழ்தற்கு இடமுண்டாகும். கடவுளோ உருவமுடையதன்று. அஃது உருவமுடையதாயின், அஃது எல்லையுடையதாய் அழியுந் தன்மையதாகும். கடவுள் எல்லையுடையதுமன்று; அழியுந் தன்மையதுமன்று. இதை மீண்டும் மீண்டுங் கூறுவதால் என்ன பயன் விளையும்? வழிபாடு வேண்டா என்னும் பயனே விளையும். வழிபாட்டை விட்டு விடலாமா? வழிபாடு விடப்படின் மக்களுலகம் மாக்களுலக மாகும். வழிபாடு வேண்டும்; அவசியம் வேண்டும். எதை எப்படி வழிபடுவது? ஒன்றும் விளங்கவில்லை. என்செய்வது! கடவுளுண்மையைத் தெளிந்து மெய்யுணர்வு பெற்ற அநுபூதிமான்களின் மறைமொழிகளைத் துணை கொண்டு பார்க்கப் பார்க்க வழி தோன்றும் என்று நினைக்கிறேன். கடவுளின் உருவநிலை மறைமொழிகளை ஆய்ந்தால் அவைகளில் கடவுளுக்கு இருநிலை காணப்படுகின்றன. ஒரு நிலை எல்லாவற்றையுங் கடந்து கடவுள்மட்டுந் தனியே நிற்பது; மற்றொரு நிலை எல்லாவற்றுள்ளுங் கடவுள் கலந்து நிற்பது. அது சொரூபம் (நிர்க்குணம்) என்றும், இது தடத்தம் (சகுணம்) என்றும் வழங்கப்படுகின்றன. தடத்தம் மூவிதம். அவை ; சகளம் (உருவம்), நிஷ்களம் (அருவம்), சகளநிஷ்களம் (அருவுருவம்) என்பன. உருவம் அருவம் அருவுருவம் ஆகிய மூன்றும் உருவ முடையன என்பது முதல் நாள் விளக்கப்பட்டது. நிஷ்களத்தைச் சிலர் உருவம் அருவம் அருவுருவங் கடந்த சொரூபம் என்று சொல்வர். அது தவறு. எல்லாவற்றையுங் கடந்த சொரூபம் உருவமில்லாதது. மனத்துக்கு எட்டாதது; பேச்சற்றது. இத்தகைய ஒன்றை மனமுடைய யான் எவ்வுரையால் அளந்து கூறவல்லவனாவேன்? தடத்தம் உருவமுடையது; கடவுளின் இருநிலையில் ஒன்றா யிருப்பது. உருவத்துக்குத் தோற்றம் அழிவு என்னும் விகாரமுண்டு. கடவுளுக்கு அவ் விகாரமில்லை. விகாரமில்லாக் கடவுளுக்குத் தடத்தம் என்னும் உருவமும் பேசப்படுகிறது! இஃதென்ன? மயக்கம் உண்டாகிறது. இங்குச் சிறிது விளக்கந் தேவை. கடவுள் உருவமற்றதே. அதில் எவ்வித ஐயமுமில்லை. கடவுள் உருவமற்றதாயின், அஃதல்லாத பிற எல்லாம் உருவ மற்றா கிடக்கின்றன? இல்லை, அவை யெல்லாம் உருவமுற்றே கிடக்கின்றன. மாயாகாரிய தத்துவ புவனமெல்லாம் உருவமே. மாயாகாரிய தத்துவம் எதுவரை? நாதம் வரை. மண் முதல் நாதமீறாக உள்ள தத்துவங்களும், அவைகளின் விரிவுகளும் உருவமே. உருவமுடைய மாயாகாரிய தத்துவ உலகங்களெல்லாம் சடம். சடம் தானே இயங்குமா? இயங்காது. சடஉலகங்கள் இயங்குகின்றனவா? இல்லையா? அவ்வுலகங்கள் இயங்குதலை நாம் நன்கு உணர்கிறோம். எப்படி அவைகள் இயங்குகின்றன? சட உலகங்களை இயக்கும் ஒன்றிருத்தல் வேண்டும். அவ்வொன்று சடமாக இருத்தலாகாது. அது சடத்துக்கு மாறுபட்ட சித்தாய் (அறிவாய்) இருத்தல் வேண்டும். அதுவே கடவுள் என்பது. உலகங்கள் கடவுளால் இயக்கப்படுகின்றன. அவைகளைக் கடவுள் எங்கிருந்து இயக்குகிறது? ஓரிடத்தி லிருந்து கைகால் கொண்டா இயக்குகிறது? கடவுள் எங்கு முள்ளது; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அஃது இல்லாத இடமில்லை. ஆங்காங்கே கடவுளின் கலப்புப் பெற்றே மாயா காரிய உலகங்கள் இயங்குகின்றன. இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை. எல்லா உலகமும் ஆனாய் நீயே. அருந்தவர்கள் . . . . . . மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்தொளிய தாரகையும் திசைக ளெட்டும் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும்ஆய பெருந்தகையை . . . . . . - திருநாவுக்கரசர் துன்பமும் இன்பமு மாகிய செய்வினையாய் உலகங்களுமாய் இன்பமில் வெந்நர காகி இனியநல் வான்சுவர்க் கங்களுமாய் மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளாய் இன்புறும் இவ்விளையாட்டுடை யானைப்பெற்றேது மல்லலிலனே. - நம்மாழ்வார் தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும் தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும் தானே உலகில் தலைவனு மாமே. - திருமூலர் எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங் கிருப்பதுநீ யன்றோ பராபரமே. எங்கெங்கும் பார்த்தாலும் இன்புறுவாய் நீக்கமின்றித் தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ . - தாயுமானார் பாராதி எட்டுமப் பாலுமெப் பாலுமாய் ஓர்சோதி யேநின்ற துந்தீபற உன்னுவே றில்லையென் றுந்தீபற. - சாந்தலிங்கர் கடவுள் உருவமற்றது; எங்கும் உள்ளது. எங்கும் என்பது இடத்தை உணர்த்துவது. மாயாகாரியம் எவ்வளவு தூரம் மண்டிநிற்கிறதோ அவ்வளவு தூரமும் மண்டி நிற்பது எங்கும் என்பது. எங்கும் என்பதற்கு மேலுங் கடந்து நிற்பது கடவுள். எங்கும் வரை நிலவுவது கடவுளின் தடத்தம்; அதற்குமேல் தனித்து விளங்குவது கடவுளின் சொரூபம். உருவமற்ற கடவுளுக்கு மாயாகாரியம் (எங்கும்வரை) உடலாகிறது. இவ்வுடலைக் கடவுளின் உருவம் என்று சொல்வது மரபு. கடவுள் ஒன்றே. நிலைமட்டும் இரண்டு. மாயா காரியம் வரைக் கடவுள் உருவநிலை பெறுகிறதென்றும், அதற்குமேல் அஃது உருவமற்ற நிலையிலிருக்கிற தென்றுங் கொள்க. கலப்பு நுட்பம் பூதம் ஐந்து. அவைகளில் ஒன்று ஆகாயம். ஆகாயத்தின் இயல்பென்னை? ஆகாயம் தனித்தும் மற்றப் பூதங்களிற் கலந்தும் நிற்பது. இதேபோலக் 1கடவுளும் தனித்தும் மற்ற மாயாகாரிய உலகங்களில் கலந்தும் நிற்பது. ஓர் ஆகாயத்துக்கு இரண்டு நிலை இருப்பது போல ஒரு கடவுளுக்கு இரண்டு நிலை இருக்கின்றன. ஆகாயம் மற்றப் பூதங்களினூடே கலந்து நிற்றலால், இவைகளின் தாக்குதலோ மாறுதலோ அதற்கு உண்டாவதில்லை. அங்ஙனே மாயாகாரியங்களில் கடவுள் கலந்து நின்றாலும், அவைகளின் தாக்குதலோ மாறுதலோ கடவுளுக்கு உறுவதில்லை. இயற்கை மாயை, மாயை என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். மாயை எது, இயற்கை. மாயை என்பது பழையகால ஆட்சி. இயற்கை (Nature) இக்கால ஆட்சி. மாயை என்றால் இக்கால இளைஞர்க்கு மயக்கம் உண்டாகும். இயற்கை என்றால் அவர்க்கு மயக்கம் உண்டாவதில்லை; பொருளும் எளிதில் விளங்கும். இயற்கை கடவுளின் உடல். அதற்குள் கடவுள் உயிராக நின்று அதை இயக்குகிறது. நம்முடைய உடலில் உயிர் இருப்பதுபோல இயற்கையில் கடவுள் இருக்கிறது. கடவுள் இயற்கை அளவில் நின்று விடவில்லை; அதற்கு மேலுங் கடந்து நிற்கிறது. இயற்கை கடந்த கடவுளின் நிலை சொரூபம் என்றும், இயற்கையினுள் இருக்கும் அதன் நிலை தடத்தம் என்றும் அடிக்கடி சொல்ல வேண்டுவதில்லை. என்னுடைய உடல் இருக்கிறது. அதனுள் உயிர் இருக் கிறது. உயிர் காணத்தக்கதா? காணத்தக்கதன்று. அதனால் உயிர் இல்லாததாகுமா? ஆகாது. உயிர் இருப்பது. அதனால் உடல் இயங்குகிறது. ஆனால் அது காணக்கூடியதாயில்லை. காணக்கூடாத அதன் உண்மையை எப்படி உணர்வது? காணக் கூடிய உடலைக்கொண்டே காணக்கூடாத உயிரை உணர்தல் வேண்டும். உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலுமா? கடவுள் உயிர் போன்றது. இயற்கை உடல் போன்றது. உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுளை உணர்தல் வேண்டும். கடவுளுண்மையை உணர்தற்கும் இயற்கை உடல் - உருவம் - தேவையாகிறது. ஈண்டும் உருவத்தின் பெற்றி விளங்குதல் காண்க. 1இயற்கையை விடுத்துக் கடவுள் உண்மையை உணர்தல் இயலாது. உடலாக நின்று கடவுள் உண்மையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு இருத்தலால், அதைக் கலைஞரும் ஞானியரும் பிறரும் பற்றலாயினர்; போற்றலாயினர். கலையும் ஞானமும் பிறவும் இயற்கையை அடிப்படையாக் கொண்டு பிறப்பனவாம். உருவமில்லாத கடவுளை நேரே உணர்தல் அருமை. கடவுள் உண்மையை உணர்தற்கு அதன் உடலாக உள்ள இயற்கையைப் பற்றுதல் வேண்டும். இயற்கையைப் பற்றிப் பற்றி அதனுடன் ஒன்ற ஒன்றக் கடவுள் உண்மை படிப்படியே விளங்கிவரும். இயற்கையைக் கடந்துள்ள சொரூபம் எப் பற்றுதலுக்கும் எட்டாதது. இயற்கையைப் பற்றுவது கடவுள் உடலைப் பற்றுவதாகும். உடலைக் கொண்டே உயிருண்மை உணர்தல் வேண்டும். இயற்கை என்னுங் கடவுளின் உடலைப் பற்றுவதை வழி பாடென்று உலகம் உரைக்கிறது. வழிபாடு கடவுளைக் குறிக்கொண்டதென்பதன் பொருள் இங்கே விளங்குதல் காண்க. இயற்கையை வழிபடுவது கடவுளை வழிபடுவதாகும். இயற்கை ஒரு வாயில். வழிபாடு அதன் வழியே அதன் உயிராக உள்ள கடவுளைச் சாரும். உருவமற்ற கடவுளை வழிபடுவதெப்படி என்ற ஐயம் எழுந்ததன்றோ? இப்பொழுது அவ் வையத்துக்கு இட முண்டோ? கடவுள் உருவமற்றதே. ஆனால் அஃது ஒரு நிலையில் உடல் பெறுவதாகிறது. அதனால் அதன் நிலைமையோ தன்மையோ மாறுவதில்லை. ஒரு நிலையில் கடவுள் இயற்கை உடல் பெறுவதால், அதை உருவநிலை யென்று உலகம் கொள்ளலாயிற்று. உயிர் உடலைத் தாங்கினமையால் உயிர் உருவமாகப் பரிணமித்ததாகுமோ? ஆகாது. உயிர் தன் தன்மையினின்றும் வழுவுவதில்லை. உயிர் உயிராகவே இருக்கிறது. அதன் உண்மையை உணர்த்த உடல் கருவியாகத் துணை புரிகிறது. இதேபோலக் கடவுள் இயற்கையை உடலாக் கொண்டமையால், அது தோன்றி நின்றழியும் உருவமாகப் பரிணமித்ததாகாது. கடவுள் கடவுளாகவே இருக்கிறது. இயற்கை தன் அளவுவரை அதற்கு உடலாகி, அதன் உண்மையை உணர்த்துங் கருவியாய் நிற்கிறது. கடவுள், இயற்கையை உடலாக்கொண்ட நிலையை அதன் உருவமென்று சொல்வது உலக வழக்கு. இயற்கையின் எல்லையைக் கடந்து கடவுள் தனித்து நிற்கும் நிலை உருவமற்ற சொரூபம் என்று சொல்லப்படுகிறது. கடவுள் எல்லாவற்றையுங் கடந்து தனித்து நிற்கும் தனது நிலையுடன், இயற்கையை உடலாகத் தாங்கும் மற்றொரு நிலையையுங் கொண்டுள்ளது. இஃது அதன் அருளேயாகும். உலகிடை வழிபாட்டை வாழச் செய்யவே கடவுள் இயற்கைக் கோலம் பூண்டது. இதைத் தெளிந்து வழிபாட்டை வளர்க்க வேண்டுவது நமது கடன். இயற்கையில் செயற்கை உலகில் பலதிற வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவைகள் யாவும் தொடக்கத்தில் இயற்கையை அடிப்படையாக்கொண்டே எழுந்தன. நாளடைவில் அவைகளிற் பலப்பல செயற்கைச் செக்கு களாயின. காரணம், இயற்கை வழிபாட்டிலே உலகம் நுழைத்த கிரியைகளேயாம். அந்தோ! உலகம் கோலிய கிரியை ஒன்றா? இரண்டா? பல்லாயிரம்! பல்லாயிரம்! பொருளற்ற வெறுங் கிரியைகள் இயற்கை வழிபாட்டைச் செயற்கையாக்கின. இயற்கைக்கு அரண் செய்யத்தக்க கிரியைகளுஞ் சில உண்டு. அவைகளை இங்கே தொகுத்துக் கூறவேண்டுவதில்லை. வழிபாட்டுத் திறங்கள் பலவாக; கிரியைகள் பலவாக. வழிபாடு மட்டும் இயற்கைவழிக் கடவுளைக் குறிக்கொள்வதாயின், அதற்கு எவ்விதக் கேடும் நேராது. இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொண்டு நிகழ்வது வழிபாடு. அதை இயற்கை வழிபாடென்று சுருங்கச் சொல்ல லாம்; இன்னும் வழிபாடென்று சுருக்கலாம். வழிபாடென்பது இயற்கைவழிக் கடவுளைக் குறிக்கொண்ட ஒன்று என்று கோடல் வேண்டும். இருவகை வழிபாடு வழிபாட்டை இரண்டு கூறிட்டுக் கொள்ளலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. புற வழிபாடு அக வழிபாட்டுக்கு ஆக்கந் தேடுவது. புறமனத்தை அலைய வைத்துக்கொண்டு அக வழிபாடென்று பேசுவதும் முயல்வதும் கானற்சலத்தை நம்பியோடினவன் கதையாக முடியும். புற வழிபாடு நேரிய முறையில் நடைபெறின், அக வழிபாடு தானே படிப்படியே கூடும். புற வழிபாடு ஏணி போன்றது. சகமலா தடிமை யில்லை தானலால் துணையு மில்லை நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் அகமலாற் கோயி லில்லை ஐயன்ஐ யாற னார்க்கே. இது திருநாவுக்கரசர் திருவாக்கு. இதில், புற வழிபாடு அக வழிபாட்டுக்குச் செய்யுந் துணையும், இரண்டுக்கு முள்ள தொடர்பும் விளங்குதல் காண்க. புற வழிபாடு, கடவுளைத் தன்னினின்றும் வேறுபடுத்திப் பிரித்து மகன் வழிபடுவது. அக வழிபாடு அவன் கடவுளைத் தன்னினின்றும் பிரியாது தன்னுட்கொண்டு வழிபடுவது. இவை முறையே துவித வழிபாடென்றும், அத்துவித வழிபாடென்றும் வழங்கப்படுகின்றன. இதனை, வேதமுட னாகம . . . .ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞானமாகும் எனவருந் தாயுமானார் மெய்ம்மொழி வலியுறுத்துவதாகும். கிறிதுபெருமான், 1பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்கிறார்; 2கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள் ளிருக்கிறது என்கிறார்; 3நானும் பிதாவும் ஒன்றே என்கிறார். இம்மூன்றும் ஒருவரிடத்திருந்தே பிறந்த மொழிகள். இவை உலகோப காரமாகப் பிறந்தன; தொடர்புடையன. முதலாவது புற வழிபாட்டை உணர்த்துவது; இரண்டாவது அக வழிபாட்டை அறிவிப்பது; மூன்றாவது வழிபாட்டைக் கடந்த நிலையைத் தெளிவிப்பது. தமிழ் நாட்டிற் றோன்றிச் செந்நெறி வளர்த்த நால்வரும் தமது மறைமொழிகளின் தொடக்கத்திலேயே அகவழிபாட்டுக் குறிப்புக்களைப் பொறித்தருளியது இங்கே கருதத் தக்கது. எனது உள்ளங் கவர் கள்வன் என்று திருஞான சம்பந்தரும், பிரியாது வணங்குவன் எப்பொழுதும் (பிரிந்து வணங்கல் புற வழிபாடு) என்று திருநாவுக்கரசரும், நினைக் கின்றேன் மனத்துன்னை என்று வன்றொண்டரும், இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மாணிக்கவாசகரும் அருளியிருத்தலை நோக்குக. இவர் புற வழிபாட்டைப் பெரிதுஞ் செய்து, அவ்வழிபாட்டைப் பாடியது உலகறிந்ததொன்று. ஆனால், அக வழிபாட்டைத் தொடக்கத் திலேயே ஏன் அருளிச் செய்தனர்? அக வழிபாடு சிறந்ததென்று உலகம் உணர்ந்து அதை அடைதற்குரிய புறவழி பாட்டில் ஈடுபடவேண்டுமென்பது அவர்தம் உள்ளக்கிடக்கை. ஆகவே, புற வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதென்க. புற வழிபாட்டைப் புறக்கணிப்போர்க்கு அக வழிபாடு கூடுதல் அரிது! அரிது! அரிது! வழிபாடு - யோகம் வழிபாடு என்றதுஞ் சிலர்க்கு அலட்சிய நோக்கு உண்டாதலை யான் பார்த்திருக்கிறேன். வழிபாடு என்னுஞ் சொல்லே அவர்க்குப் பிடிப்பதில்லை. சாதாரண அஞ்ஞானி கள் நிகழ்த்துவது வழிபாடு. என்று அவர் சொல்கிறார். மெய்ஞ்ஞானத்துக்கு வழி யாது என்றால் அவர் யோகம் என்பர். இச் சகோதரர் வழிபாடு, யோகம் என்னுஞ் சொற் களில் கருத்துச் செலுத்துவோர் என்று தெரிகிறது. வழிபாடு என்றால் என்ன? யோகம் என்றால் என்ன? இரண்டும் பொரு ளில் வேறுபட்டனவல்ல; ஒன்றே. தாயை, அன்னை என்றால் என்ன? மாதா என்றால் என்ன? மாதா என்னுஞ் சொல் தமக்கை என்னும் பொருளைத் தருவதாகுமோ? வழிபாடே யோகம்; யோகமே வழிபாடு. எவ் வழிபாடு? அக வழிபாடு. யோகம் என்பது ஒன்றல் என்னும் பொருளுடையது. ஒன்றல் தனித்த ஒன்றில் நிகழாது. ஒன்றலுக்கு இரண்டு தேவை. ஒன்றுடன் ஒன்றலே ஒன்றல் என்னும் பொருளுடைய தாகும். இரண்டு எவை? சீவான்மா பரமான்மா. சீவான்மா பரமான்மாவுடன் ஒன்றுவது யோகம். இதைச் சீவான்மா பரமான்மாவை அகத்தில் வழிபடுவது என்றுங் கூறலாம். ஒன்று ஒன்றுடன் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றே. ஆகவே, யோகமே அக வழிபாடு; அக வழிபாடே யோகம் என்று தெளிக. யோக மென்னும் அகவழிபாட்டுக்குக் கால்கொள்வது புற வழிபாடு. யோகங்கள் யோகங்கள் பலபடப் பேசப்படுகின்றன. அவைகளின் விரிவைக் கடலுக்கு ஒப்பிடலாம். நல்யோக முறைகள் பெருக்கெடுத்தபோது அவைகளினூடே போலிகளும் கலந்து கொண்டன. இது செவ்வியது; இது போலி என்று பகுத் தறிதல் தொல்லையாயிருக்கிறது. ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றால் பகுத்தறிவை நல்வழியில் பயன்படுத்தினால் உண்மை விளங்காமற் போகாது. யோக விதங்கள் யோக விதங்கள் பலவற்றுள்ளுஞ் சிறப்பாகக் குறிக்கத் தக்கன சில. அவை அஷ்டாங்கயோகம், பக்தி யோகம், கர்ம யோகம், இராஜயோகம் முதலியன. இந் நல்யோகங்களின் விரிவைப் பதஞ்சலி யோக சூத்திரம், பகவத் கீதை, திரு மந்திரம், விவேகாநந்தம் முதலிய நூல்களிற் பார்க்க. யோகப் பயிற்சிக்கு நூல் துணை மட்டும் போதாது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர் துணையுந் தேவை. இந்நாளிலும் சிலரால் யோக நூல்கள் எழுதப்படுகின்றன. அவைகளிற் பெரும்பான்மையன தீமை விளைத்தே வருகின்றன. அந்நூல்களைப் படித்துப் பயிற்சி யில் அமர்ந்த சிலரை யான் அறிவேன். ஒவ்வொருவர் ஒவ் வொருவித நோயால் பீடிக்கப்பட்டு அகால மரணமடைந்தனர். யோகம் தவறுதலாகச் செய்யப்படின், அது பக்கவாயு, தொண்டைப் பிளவு, வாயடைப்பு, காதடைப்பு, பார்வை மங்கல், மந்தம், மயக்கம், காமாலை, இதய நோய், காசம் முதலிய கொடிய நோய்களை உண்டுபண்ணும். பழைய நூல்களை முறைப்படி ஆய்ந்து, தக்கார் துணைபெற்று யோகப்பயிற்சியில் இறங்குவதே சிறப்பு. போலி யோகிகளையும் அவர்கள் நூல் களையும் நம்பி மோசம் போகாதிருக்குமாறு பொதுமக்கட்கு எச்சரிக்கை செய்ய வேண்டுவது அறிஞர் கடன். மின்னல் ஒளி ஓடும் கம்பிகட்கு ஊறு நேர்ந்தால் என்ன விளையும்? விளைவைக் கண்கூடாகக் காண்கிறோம். அதே வண்ணம் யோகப்பயிற்சி யில் தவறுதல் நேர்ந்தால் தீமை விளைதல் ஒருதலை. எச்சரிக்கை! போலிகளின் புறக்கோலங் கண்டு சிலர் ஏமாந்து விடுகின்றனர். 1நல்யோகத்துக்குக் காவியும், தாடியும் சடையும் கோலும் தோலும் பிறவும் வேண்டுவதில்லை. யோகி தோட்டியாகவும் இருப்பன்; தொண்டைமானாகவும் இருப்பன். வேடத்தைக் கண்டு ஏமாறுவது அறியாமை. பிராணாயாமம் அஷ்டாங்க யோகங்களுள் பெரிதும் பிராணாயாமமே பயிற்சி செய்யப்படுகிறது. இப்பயிற்சி நன்கு கைகூடின், மற்ற யோகப் பயன்களெல்லாம் தாமே பயிற்சியாளனிடம் பரிணமிக்கும். பிராணாயாமம் யோகங்களில் ஜீவ நாடி போன்றது. பிராணாயாமம் தூலம் சூக்குமம் காரணம் என மூவகைப்படும். தூல பிராணயாமம் நறுங்காற்றை உள்ளிறக்கி இறக்கி வெளியே விடுவது (Breathing Exercise). இதற்கெனத் தனி முயற்சியில் புகுந்து 1முகஞ்சிவக்க வலிந்து வலிந்து மூச்சை ஈர்த்து ஈர்த்து விட்டுக்கொண்டிருக்க வேண்டுவதில்லை. தூல பிராணாயாமத்துக்கென்று தனி முயற்சி வேண்டுவதில்லை. நறுங்காற்று வீசுமிடத்தில் உலவிவந்தால் போதும்; அமர்ந்து வந்தால் போதும்; இயற்கை தன் கடனை முறை முறையே ஆற்றும். சூக்கும பிராணாயாமத்துக்குத் தேர்ச்சி பெற்றவர் துணை வேண்டும். இது, நுரை ஈரலையும், நாடி நரம்புகளையும் தூய்மை செய்து உடல் நலனைக் காத்துவரும். காரணமென்னும் மூலப் பிராணாயாமம் சொலற்கரியது; எழுதற்கரியது. அது மக்களின் அக வொழுக்கத்தை யொட்டி இயங்குவது. அதற்கு இயம நியமம் அடிப்படை; சீலம் இன்றியமையாதது. மூலப் பிராணாயாமம் அமலயோகத்துக்கு அகரம் போன்றது. யோகங்களிற் பல மலயோகத்தின்பாற்படும்; சில 2அமலயோகத்தின்பாற்படும். மலயோகம் உடலுக்கு மட்டும் நலஞ் செய்யும். அமலயோகம் உயிரினுக்கும் உடலினுக்கும் நலஞ் செய்யும். இங்கு இவ்வளவே விளக்குதல் சாலும். பிராணாயாமம் என்று சிலர் மூக்கைப்பிடித்து மூச்சை ஈர்ப்பர்; சிலர் கண்ணைப் பிசைவர். சிலர் மூலக்கனலை எழுப்புவர். வேறு தீய - ஈன - முறைகளில் தலைப்படுவோரும் உளர். இவர் ஒளி காண்கின்றனராம்! பாவம்! ஒன்றுடன் ஒன்றைத் தேய்த்தால் அது தீயை எழுப்பி ஒளி காட்டுவது இயல்பு. இவ்வொளி போன்றது தீயர் காண்பது. வலிந்து செய்யப்படும் எதுவும் யோகமாகாது. வலிந்து மூச்சைப் பிடித்தல் முதலிய யாவும் மூர்க்கத்தின் பாற்படும். அவைகளை மூர்க்க அரக்க யோகங்களென்று தள்ளுக; அவைகட்கு இரை யாகாது ஒதுங்குக. மூச்சைப் பிடிப்போர் முதலியோர் பல பெரியோர் பாக்களை எடுத்துக் காட்டித் தங் கோளை நிறுத்த முயல்வர். தமிழ்நாட்டவர் பெரிதும் திருமூலர் திருமந்திரப் பாக்களை எடுத்துக் காட்டுவது வழக்கம். சில பாக்களை யானும் இங்கே சொல்கிறேன். ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவி னருள் பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே. வளியினை வாங்கி வயத்தி லடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே. ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. இவை மந்திர மொழிகள். இவைகளில் முதலிரண்டு பாட்டிலும், குருவின் அருள் பேசப்படுதலை ஓர்க. குருவின் அருளில்லாமல் வெறும் ஏடுகளின் - போலிகள் எழுதியுள்ள ஏடுகளின் - துணைகொண்டால் தீமையே விளையும். மூன் றாவது பாட்டில் கணக்கறிதல் என்றொரு குறிப்பிருத்தலைக் காண்க. கணக்கு விநாடிக் கணக்கன்று. விநாடிக் கணக்கு இயற்கையாகாது. இயற்கைக் கணக்குக்கும் குருவருள் தேவை. நான்காம் பாட்டில் ஒரு குறிப்புள்ளது. அது புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை ஈர்த்து - நெறிப்பட உள்ளே நின்மலமாக் கில். . . . என்பது. ஞாயிற்றின் ஒளி விழுங்கும் மரங்களின் நறுங்காற்று நமக்கும், நமது அழுக்குக் காற்று மரங்கட்கும் பயன்பட்டு வருதல் சிறுவர்க்குந் தெரியும். நறுங்காற்று மூக்கின்வழி உள்ளே நுழைந்து நமக்கு நலஞ் செய்கிறது. அதன் துணை இல்லையேல், நுரைஈரல் பாழ்பட்ட சுனையாகி வாழ்வுக்கே ஊறு செய்யும். ஒருவரது நல் வாழ்வுக்கு நுரைஈரல் வளமுடையதா யிருத்தல் வேண்டும். அதற்குப் புறப்பட்டுத் திரிகின்ற வாயு தேவை. அவ்வாயுவை ஈர்த்து நெறிப்பட உள்ளே நின்மல மாக்கினால் உறுப்புச் சிவக்கும்; உரோமங் கறுக்கும்; புரிசடையோனும் புறப்பட்டுப் போகான். உள்ளே நின்மலமாக்கல் என்பதில் நுட்பம் இருக்கிறது. காற்று ஈர்க்கப்படுகிறது; உள்ளே நிறுத்தப்படுகிறது; மீண்டும் வெளியே விடப்படுகிறது. உள்ளே செல்லும் காற்றை நெறிப்பட அங்கேயே நின்மலமாக்கும் வித்தை வேண்டற்பாலது. காற்று உள்ளே நின்றால் அஃது அழுக்காகி மற்ற அழுக்குகளுடன் கலந்து நுரைஈரலுக்கு ஊறு செய்யும் என்று இக்கால விஞ்ஞான உலகம் கருதும். பிற்கால விஞ்ஞான உலகம் உண்மை கண்டு திருமூலர் கருத்துக்குத் துணை புரிவதாகலாம். காற்றை உள்ளே நின்மலமாக்கினால் நம் மிடத்தில் தோன்றும் அழுக்குக் காற்று வெளி வாராமலே அங்கேயே நின்மலமாகும். நாளடைவில் படிப்படியே வெளிக் காற்றின் துணை தேவையில்லாமற் போகும். அந்நிலையில் அண்டாதித்தன் பிண்டாதித்தனாகி ஒளி உமிழ்வன். அவ் வொளி உள்ளொளி எழுச்சிக்குத் துணை நிற்பதாகும். பிற அநுபவத்தில் உணரத்தக்கன. உடல் நலன் உள்ளொளி விளக்கத்துக்குப் பலதிறத் துணைகள் வேண்டும். அவைகளுள் சிறந்த ஒன்று 1உடல் நலன். உடல்நலம் இழந்தோர் உள்ளொளி விளக்கம் எளிதில் பெறுதல் அருமை. மேற்பாட்டிலுள்ள உறுப்புச் சிவத்தல், உரோமங் கறுத்தல், புரிசடையோன் புறப்படாமை ஆகியவை உடல்நலத்தைக் குறிக்கொண்டு நிற்றல் வெள்ளிடை மலை. அந்நலத்துக்குக் காற்றை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கும் பயிற்சி வேண்டும் என்று திருமூலர் அறிவு கொளுத்தியவாறு காண்க. எந்த நல்யோகத்துக்கும் அறிஞர் உதவி வேண்டுமென்பதை மறத்த லாகாது. தீய யோகங்கள் யோகம் என்ற பெயரால் சில தீய மூர்க்க அரக்க யோகங் களும் வளர்ந்து வாழ்க்கை பெற்றுள்ளன. அவைகட்கும் நூல் கள் இருக்கின்றன; குருமார் இருக்கின்றனர். அக் கொடிய யோகங்களால் தீயொழுக்கம் பெருகும்; பெரிதும் பெண் ணுலகம் பாழாகும். அந்த யோகிகட்கு நற்கதி நினைவு தோன்றுவதில்லை போலும்! அவரை இயற்கை அன்னை ஒறுத்தே வருகிறாள். ஒறுத்தும் அம் மூர்க்கர் நல்லறிவு பெறுகிறாரில்லை. மனம் அடங்க என்னென்னவோ செய்து பார்த்தோம். மனம் அடங்கவில்லை. அதனால் யோகத்தில் தலைப்பட லானோம் என்று சிலர் மூச்சைப் பிடிக்கின்றனர். மூச்சைப் பிடிப்பதால் மனம் அடங்கிவிடுமோ? தீய எண்ணங்கள் மாறி விடுமோ? மூச்சு யோகிகள் தங்கள் மனநிலையைச் சோதித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். சிறு நேர மனஅடக்கம், அடக்கம் ஆகாது. கஞ்சா முதலியன கூட மயக்கம் விளைத்துச் சிறுநேரம் மனத்தை நிலைபெறுத்துகின்றன. அதனால் கஞ்சா யோகத்தையும் கொள்ளல் வேண்டும் போலும்! இப் பீடையை இவ்வளவில் நிறுத்திக்கொள்கிறேன். தியான யோகம் யோக விதங்கள் பலவா யிருத்தலால், அவைகளுள் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? இக்கேள்வி பலர் எழுப்புதல் எனக்குத் தெரியும். தீயொழுக்கத்தை வளர்க்கும் பொல்லாத அரக்க யோகங்கள் தள்ளற்பாலனவே. உடலுக்கு நலஞ் செய்யும் யோகங்கள் தள்ளற்பாலன அல்ல. அவைகளை முறைப்படி செய்யத் தக்கார் மாட்டுப் பயிலுதல் சிறப்பு. எல்லாவற்றிற்கும் விழுமியதாய், எவ்வித ஊறுஞ் செய்யாததாய் இருப்பது ஒன்றுளது. அதற்கு எப்பெயர் வழங்கினும் வழங்குக. யோக உலகம் அதைத் தியான யோகம் என்று வழங்கி வருகிறது. அஃது அஷ்டாங்க யோகத்தின் முடிவாயிருப்பது. அதில் எல்லா நல் யோகங்களும் அடங்கும். தியான யோகம் வழிபாட்டுக்கு அப்புறப்பட்டதன்று. வழிபாடு, மனம் மொழி மெய்களின் வழி நடைபெறுவது. மனம் நினையாமல் வாய் மொழியாது; கை கும்பிடாது. மொழிக்கும் மெய்க்கும் அடிப்படை மனம். தொடக்கத்தில் மனத்தை நிலை பெறுத்த வாயும் மெய்யும் தொடர்ந்த வழிபாடு செய்தல் வேண்டும். நாளடைவில் வாயும் மெய்யும் ஓய்வு பெறும். 1மனம் ஒன்றே வழிபாட்டில் ஈடுபடும். இதுவே தியானயோக மென்பது. இதற்கு ஒரு குறிவேண்டும். அக்குறி இறையையுணர்த்தும் தத்துவமுடையதாயிருத்தல் வேண்டும். இதற்கு இயற்கையை அடைவோமாக. இயற்கை வழிபாடு இயற்கை பெரியது; பல கூறுகளை உடையது. வழி பாடோ பலவகை. இங்கே எவைகளைத் தொடுவது? எவை களை விடுவது? தடுமாற்றம் ஏற்படுகிறது. பெருங்காடு எதிரிலே தோன்றுகிறது. எவ்வழியில் நுழைவது என்று தெரியவில்லை. எனது சித்தம் எங்கெங்கோ செல்கிறது; சென்று சென்று காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றில் படிகிறது. காதல் முதலியன இயற்கைத் தெய்வத்துக்கு வேறுபட்டனவல்ல. அவைகள் இயற்கைத் தெய்வத் தன்மை வாய்ந்தன. அவைகளை இயற்கைத் தெய்வக் கூறுகள் என்றுங் கொள்ளலாம். அத் தெய்வக் கூறுகளை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தப் பெறும் வழிபாட்டில் வழிபாட்டுத் திறங்கள் பல அடங்கிவிடும். காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றின்மீது கருத்துச் சென்றமையால், உருவம் உள்ளத்தைவிட்டு அகன்று விட்ட தென்று எவரும் எண்ணவேண்டுவதில்லை. காதல் முதலியன உருவங்களின் வாயிலாகவே தங்கள் இருப்பை - பொலிவை - உணர்த்துவன என்று முன்னைப்பேச்சில் யான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். காதல் முதலியன உருக்கொண்டு உலவுவன அல்ல. ஆனால், அவை உருவங்களின் வாயிலாகவே தங்களிருப்பை உணர்த்துவன. காதல் காதலரிடத்தும், வீரம் வீரரிடத்தும், பிற பிறரிடத்தும் நுண்மையிற் பொலிந்து கலைஞர் நெஞ்சைக் கவரும்; அவர்க்கு விருந்துமாகும். காதல் வீரம் முதலியவற்றைப் பற்றிய வழி பாடு என்றதும் உருவம் போய்விட்டது என்று கருதற்க. உருவ வழியே வழிபாடுகள் நிகழ்ந்து தீரவேண்டுமென்று வலி யுறுத்துகிறேன். காதல் முதலியவற்றைப் பீடிகையாக் கொண்டு வழிபாட்டுத் திறங்களை ஆங்காங்கே விரிக்கும் முகத்தான் எனது உள்ளக் கிடக்கைகளை வெளியிடலாமென்று எண்ணு கிறேன். காதல் காதல், அன்பின் கூறுகளுள் ஒன்று; சிறந்த ஒன்று. அன்பின் உயிருள்ள இடம் காதல். காதல், அன்பின் முழுமை யாகும் இயல்புடையது. காதலும் காமமும் ஒருவன் உள்ளத்தில் என்னென்னவோ உறுகின்றன. காதலும் உறுகிறது. உற்ற பலவற்றில் காதல் ஒன்றாகுமா? ஆகாது. காதல் எல்லாவற்றையும் அடிப்படுத்தித் தான் முடியா யிலங்கும். வேறு ஏதாவதொன்று கடந்து மேம்படு மாயின் உற்றது காதலன்று என்று கொள்ளல் வேண்டும். ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்கிறான். சிலநாள் கடந்து அவன் நாட்டம் இன்னொருத்தியினிடஞ் செல்கிறது. அம் மணமும் இந்நாட்டமும் காதலின்பாற்பட்டன ஆகுமா? ஆகா. அவனிடம் காதல் முன்னும் முகிழ்க்க வில்லை; பின்னும் பிறங்கவில்லை. அவனிடம் எழுந்தது காமம். காமம் பலவிடங் களை நாடி நாடி ஓடும். காதல் அவ்வாறு ஓடாது; ஓரிடத்தி லேயே நிலைத்து நிற்கும். ஓருயிர் ஈருடல் 1காதலால் விழுங்கப்படும் இருவர் ஒருவராவர். அவர் தம் உடல் மட்டும் இரண்டாகத் தோன்றும்; உயிர் ஒன்றாகும்; ஈருடல் ஓருயிர் என்ற ஆட்சி, காதலையொட்டியே எழுந்தது போலும். காதல் இருமை போக்கி ஒருமை யாக்கும் பேராற்றல் வாய்ந்தது. ஓருடலுக்கு நோய் உறின் இன்னோருடலும் நோயுற்றதுபோலாகும். ஒன்றைத் தேள் தீண்டின் மற்றொன்றும் தேள் தீண்டியதுபோலாகும். காதல் ஈருடல் ஓருயிர் கொண்டதன்றோ? காதல் கிழவன் ஒருவனுக்கும் காதல்கிழத்தி ஒருத்திக்கும் ஒரு மகள் பிறந்தாள். அவள் கற்பன கற்றுக் கேட்பன கேட்டு உற்ற வயதடைந்தாள். தனக்குரிய நாயகனைத் தெரிந்தெடுக்கும் பொருட்டு அவள் ஒரு தீம்பொழிலுக்கு அனுப்பப்பட்டாள். தோழியும் அவளுடன் சென்றாள். இருவரும் சில சமயம் சேர்ந்தும் சில சமயம் தனித் தனியாகவும் பொழிலகம் சுற்றி வருவர். ஒருநாள் இளம்பெண் ஒரு வழியே ஏகினாள். தோழி மற்றொரு வழியே போனாள். இளம் பெண் ஓர் இளைஞனைக் கண்டாள். இவனும் அவளைக் கண்டான். காதல் தெய்வம் இருவர் மனத்தையும் ஒன்றுபடுத்தியது. இருவருங் காதலில் மூழ்கியபின்னை நாளை வருவதாக இளைஞன் உறுதி கூறி விடைபெற்றான். இருவர் உடல்மட்டும் பிரிந்தன. இளம் பெண்மணி தனது இருக்கை சேர்ந்தாள். முன்னரே இருக்கை நண்ணிய தோழி தன் தலைவியைக் கண்டதும் ஐயுற்றாள். புறத் தோற்றம் ஐயமூட்டிற்று. வெளிப்படையாக வினவி உண்மை காணத் தோழி விரும்பினாளில்லை. அவள் தலைவியைப் பார்த்து, இன்று நீர் எவ்வழிச் சென்றீர்? அங்கே எவ்வெப் பூக்களைக் கண்டீர்? v›bt¥ ó¡fis¥ g¿¤Ô®? என்று கேட்கலானாள். தலைவியின் நெஞ்சம் ஓரிடத்தில் பதிந்து கிடந்தது. அந்நெஞ்ச முடையவள் என்ன விடையிறுக்க வல் லாள்! தோழி, தலைவியின் நிலையை ஒருவாறு உணர்ந்தாள். உணர்ந்து, அம்மா! யான் சென்ற வழியில் அழகிய மயில்களைக் கண்டேன். குயில்களைக் கண்டேன்; மான்களைக் கண்டேன்; பூப்பறித்துத் திரும்பியபோது வேறு ஒரு வழியே புகுந்தேன்; அவ்வழியில் ஓர் அழகிய இளைஞரைக் கண்டேன்; இவ்வழியே யாவரேனும் போயினரோ என்று அவரைக் கேட்டேன். ஓர் இளம்பெண் போயினள் என்று அவர் சொல்லிய வேளையில், ஒரு புலி வாய்திறந்து அவர் மீது பாய்ந்தது என்றதும், தலைவி யின் உடல் விதிர்விதிர்த்தது. வியர்வை சொரிந்தது. கண்கள் சோர்ந்தன. பெருமூச்செறிந்தது. தோழி, இளைஞர் தங் கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார் என்றாள். உடனே தலைவியினிடம் மாறுதல் உண்டாயிற்று. தலைவியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மகிழ்ச்சி பார்வையில் ததும்பிற்று. தோழி உண்மை உணர்ந்தாள். காதல் ஈருடலை ஓருயிராக்கும் தன்மையதென்பது இங்கே கருதற்பாலது. தோழி, இளைஞர் தங் கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார் என்று சொல்லச் சிறிது காலம் தாழ்த்தி இருப்பாளாயின் தலைவியின் நிலை என்னவாயிருக்கும்! காதலும் கடவுளும் காதலுக்கு ஒப்பானதுமில்லை; உயர்வானதுமில்லை. அஃது எல்லாவற்றையுங் கடந்து நிற்பது. அதற்குமேம்பட்ட தொன்று இருத்தல் கூடாது. கடந்த ஒன்றைக் கடவுள் என்று சொல்வது மரபு. இதனால், காதற்கடவுள் என்றோர் ஆட்சியும் பிறந்ததுபோலும். காதலனுக்குக் காதலியினுஞ் சிறந்த பொருள் வேறொன்றில்லை. இவளுக்கும் அப்படியே. அவனுக்கு இவள் கடவுள்; இவளுக்கு அவன் கடவுள்; இவர்க்கு வேறு தெய்வம் எற்றுக்கு? காதல் இயற்கை காதல் இயற்கையா? செயற்கையா? இயற்கை என்று எவருங் கூறுவர். காதல் எவரால் செய்யப்படுகிறது? அது செய்யப் படுவதா? காதல் இயற்கையாக எழுவது. காதல் இயற்கை யாதலின், அஃது உலகில் வளர வேண்டுமென்னும் நோக்கத்தை இயற்கைத் தெய்வம் உடைத்தாயிருக்கிறது. இஃது இயற்கைத் தெய்வத்தின் படைப்பை நோக்கிநோக்கி அதன்கண் படியப் படிய இனிது விளங்கும். நிலமும் திணையும் நாம் வாழும் நிலம் குறிஞ்சி என்றும் ,பாலை என்றும், முல்லை என்றும், மருதம் என்றும், நெய்தல் என்றும் பாகு பட்டிருத்தல் கண்கூடு. இப் பாகுபாடுகள் பருமை. பருமைக் குரிய நுண்மை இருத்தல் வேண்டுமன்றோ? நுண்மை புணர்தல் என்றும், பிரிதல் என்றும், இருத்தல் என்றும், ஊடல் என்றும், இரங்கல் என்றும் பாகுபட்டுக் கிடக்கிறது. புணர்தலும், பிரிதலும், இருத்தலும், ஊடலும், இரங்கலும் இயற்கைக் காதலுக்கு ஆக்கந் தேடுவன. இயற்கைக் காதலே உலகில் வளர்தல் வேண்டும். காதலுக்கு மாறுபட்ட ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம் முதலியன வளர்தலாகாது. அவ்வளர்ச்சி யால் உலகம் ஒழுக்கமுடையதாய், அமைதியில் நின்று, அன்பில் திளைப்பதாகும். இவ்வளர்ச்சியால் உலகம் பாழ்படும் என்னும் அளவில் நின்றுவிடுகிறேன். நந் தமிழ்நாட்டில் காதலுக்கு இலக்கணங் கண்டவர் தொல்காப்பியனார் உள்ளிட்டவர். இலக்கியங் கண்டவர் திருவள்ளுவர் உள்ளிட்டவர். காதல் பொருளற்றதாயின் அதற்கென்று இலக்கணங்களும் இலக்கியங்களும் எழமாட்டா. காதல் வளர்தல் வேண்டுமென்றே சான்றோர் அதற்கென்று நூல்கள் யாத்துச் சென்றனர். நூல்கள் இயற்கைத் தத்துவங் களின் ஓவியங்கள் - படங்கள் - என்பதை இப்பேச்சில் விரித் துரைக்க வேண்டுவதில்லை. இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் காதல் வளர வேண்டு மென்பது. அதை நூல்களும் வலியுறுத்துகின்றன. ஆதலின், இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் நிறைவேறச் சேவை செய்வது அத்தெய்வத்துக்கே சேவை செய்வதாகுமென்க. சேவை என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன? உலக வளர்ச்சி ஒருவன் பிறந்தான்; வளர்ந்தான்; கற்பன கற்றான்; கேட்பன கேட்டான். ஒருத்தியும் பிறந்தாள்; வளர்ந்தாள்; கற்பன கற்றாள்; கேட்பன கேட்டாள். அவன் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது; இவள் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது. முகிழ்ப்பு இருவர் உள்ளத்தையும் ஒருமைப்படுத்துகிறது. மணம் கமழ்கிறது. திருமணம் ஒருவித இயற்கை வழிபாடு. உலக வளர்ச்சிக்குத் துணைபுரிவது இயற்கைத் தெய்வத்தை வழிபடுவ தாகும். இவ்வழிபாடு பெரும் பெரும் வழிபாட்டுக்குக் கால் கொள்வது. ஒப்புரவு ஒருவன் இளைஞனாயிருந்த ஞான்று பெரிதும் தன் னையே நேசித்து வந்தான். ஒருத்தியும் இளமையில் தன்னையே நேசித்து வந்தாள். காதல் மணத்துக்குப் பின்னர் அவன் இவளை நேசிக்கிறான்; இவளும் அவனை நேசிக்கிறாள்; ஓரிடத்தில் கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு இப்பொழுது ஈரிடத்திற் செல்கிறது. அவ்வளவில் தன்னல மாசு அகல்கிறது. பின்னே மக்கட்பேறு உண்டாகிறது. இப்பொழுது தாயும் தந்தையும் தம்முடைய நலங்களை யெல்லாம் மக்கட் பொருட்டுத் தியாகஞ் செய்கின்றனர். அவர், தம்பொருட்டு வாழாது மக்கட்பொருட்டு வாழ்வோராகின்றனர். மாறுதலைக் கருதுங்கள். ஒருவனும் ஒருத்தியும் தாய் தந்தையராகிய பின்னர், தம் நல நேசமென்னும் மாசினின்றும் விடுதலையடைதல் உன்னத்தக்கது. தன்னலம் அற்ற இடத்தில் எழுவது அன்பு. தாய் தந்தையரிடம் அன்பு கோயில் கொள்கிறது. அவ்வன்பு என்ன அறிவுறுத்தத் தொடங்குகிறது? உமக்கும் உம் மக்கட்கும் பசி பிணி முதலிய துன்பங்களிருப்பதுபோல் மற்றவர்கட்கும் உண்டு. உம் பசி பிணி முதலிய துன்பங்களையும் உம் மக்களின் பசி பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க நீர் முயல்வது போல, மற்றவர் பசி பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க முயல்மின் என்று அறி வுறுத்தத் தொடங்குகிறது. இஃது அன்பின் இயல்பு. அன்பின் அறிவுறுத்தலுக்குத் தாய் தந்தையர் செவிசாய்க்கின்றனர்; ஒல்லும்வகை அவர் தம் சக்திக்கு ஏற்பப் பிறர்க்குத் துணைபுரிய முயல்கின்றனர். கைம்மாறு கருதாது அன்பால் பிறர்க்குதவுவது விருந்தோம்பல் எனப்படும். தம்மைத் தனித்தனியே நேசித்துக் கொண்டிருந்தவர் ஒருமை மனத்தவராய்த் தாய் தந்தையராய்த் தியாகிகளாய் இப்பொழுது பிறர்க்குதவும் 1அந்தணராகின்றனர். இந்நிலையில் அவர் தன்னல மாசு அகலப் பெறுகின்றனர்; அறவோர் ஆகின்றனர். எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுவது உயிர்கள் வழிபாடென்பது. உயிர்களில் வீற்றிருப்பது இறை. ஆகவே, உயிர்கள் வாயிலாக இறைவழிபாடு நடைபெறுகிறதென்க. காதல் வழிபாடு படிப்படியே உயிர்கள் வழிபாடென்னும் இறை வழிபாடாதல் காண்க. திருவள்ளுவர் மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம் என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அவ் வறநிலையை அடைதற்கு அவர் இல்வாழ்க்கை என்றும், வாழ்க்கைத்துணை என்றும், மக்கட் பேறென்றும், அன்புடைமை என்றும், விருந்தோம்பல் என்றும் வழி கோலியுள்ளதை ஓர்க. இவ்வழி, இயற்கைத் தெய்வ நோக்குக்கு அரண்செய்து நிற்றலை உன்னுக. திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையை அவர்தம் நூலுக்கு யான் கண்ட விரிவுரையில் விளக்கஞ் செய்துள்ளேன். விளக்கம் விரும்புவோர் அவ்வுரையைப் பார்ப்பாராக. இயற்கை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் காதலை வெறுத்து மணவாழ்வு கொள்ளாது, தன்னந்தனியராய் வாழ்ந்துவரின், அவரிடம் தியாகம் அணுகுமோ? அன்புத் தெய்வம் கோயில் கொள் ளுமோ? உயிர்கள் வழிபாடு நடைபெறுமோ? அவர் அறவோர் ஆவரோ? தனி வாழ்க்கை, தன்னலத்தை வளர்ப்பதாய் அன்பை அழிப்பதாய்க் தீயொழுக்கத்தைப் பெருக்குவதாய் வழி பாட்டைக் கூட்டாதொழியும். தனி வாழ்க்கை, செயற்கை; இயற்கையன்று; 2சேர்க்கைவாழ்வே இயற்கையின் பாற்பட்டது. சேர்ந்து வாழ்வதே மக்களியல்பு என்னுஞ் சீரிய கொள்கை இக்கால உயிர்நூல் வல்லவராலும் வலியுறுத்தப்படுகிறது. உயிர்கள் வழிபாட்டுக்குச் சேர்ந்த வாழ்க்கையெனுங் காதல் வாழ்க்கை வேண்டற்பாலது. இறைவனுங் காதலும் ஒருவனும் ஒருத்தியுங் காதலில் ஒன்றி அன்பராகி உயிர்கட்குத் தொண்டு செய்யும் அந்தண்மை என்னும் இறை நிலை எய்தல் இதுகாறும் பேசப்பட்டது. இந்நிலையைக் கூட்டு தற்குரிய காதல் வழிகள் இன்னும் பல உண்டு. அவைகளுள் இங்கே குறிக்கத்தக்கது ஒன்று. அஃது 1இறைவனை நேரே காதலித்து வழிபாடு நிகழ்த்துவது; இவ்வழிபாடு நிகழ்த்திப் பேறுபெற்றவர் பலருளர். அவருள் ஆண்டாள் அம்மையார் நினைவு இங்கே தோன்றுகிறது. பெண்பிறவிக்கு வீடுபேறில்லை என்ற பொல்லாத கொள்கை தமிழ்நாட்டில் வேரூன்றிய காலத்தில் ஆண்டவன் அருளால் தோன்றியவர் ஆண்டாள் அம்மையார். அவர் காதல்நெறி நின்று ஒழுகி, அந்நெறியை நேரிய முறையில் ஓம்பிப் பெண்ணுலகுக்கு விழுப்பந் தேடிய பெருமை வாய்ந்தவர். அம்மையாரின் காதல் நாயகன் நீல மேனியன்; பவளவாயன்; கமலக்கண்ணன்; செங்கையன் - அடியன்; இத் திருக்கோலமுடைய அரங்கநாதன் மீது அம்மையார் கொண்ட காதல் - உயிர்க்காதல், கருவிளை யொன்மலர்காள் காயாமலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர் திருவிளையாடு திண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே. பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள் வம்பக்களங் கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள் ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற எம்பெருமா னுடையநிறம் உங்களுக் கென்செய்வதே. துங்கமலர் பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற செங்கட் கருமுகிலின் திருவுருப்போல் மலர்மேல் தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில் தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே. இப்பாக்களில் தேங்குதல் காண்க. குயிலும் மயிலும் பூவும் கனியும் இன்ன பிறவும் அம்மையார்க்குக் காதலூட்டுகின்றன. இவை யா? அரங்கநாதன் மேனி - அரங்கநாதன் முகம் - அரங்கநாதன் கை - அரங்கநாதன் கால் - அரங்கநாதன் வடிவம். அரங்கநாதன், மயிலாகவும் குயிலாகவும் பூவாகவும் கனியாகவும் இன்ன பிறவாகவும் அம்மையார்க்குக் காதல் ஊட்டுகிறான். அம்மையாருள் காதல் எழுகிறது; பொங்குகிறது; ததும்புகிறது; வழிகிறது; தேங்குகிறது; வெள்ளமாகிறது; கடலாகிறது. எங்கணும் ஒரே கடல் - எல்லையற்ற கடல் - அன்புக் கடல் - பசுங் கடல் ! எல்லையற்ற அன்புப் பசுங்கடலில் அம்மையார் வீழ்ந் தார்; ஆழ்ந்தார்; கடல் அரங்கனா? ஆண்டாளா? தெரிய வில்லை. ஆண்டாள் உயிரெல்லாம் அரங்கன்; உள்ளமெலாம் அரங்கன்; உடலெலாம் அரங்கன்; எல்லாம் அரங்கன்; எங்கும் அரங்கன்; அரங்கனே ஆண்டாள்; ஆண்டாளே அரங்கன்! காதல் - காதல் ஒருமை! ஒருமைக் கடல்! கடலில் தரங்கம் எழுகிறது; எழுந்து, வெள்ளைவிளிசங் கிடங்கையிற்கொண்ட விமலனெனக் குருக்காட்டான் உள்ளம்புகுந் தென்னைநைவித்து நாளாமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக்காணும் கள்ளவிழ்செண்பகப் பூமலர்கோதிக் களித்திசை பாடுங்குயிலே மெள்ளவிருந்து மிழற்றிமிழற்றா தென் வேங்கடவன் வரக்கூவாய். இந்திர னுள்ளிட்ட தேவர்குழா மெல்லாம் வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான். எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன்ஒருவன் தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால் தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலைத் தீர்வேனே என்று தமிழ் பாடுகிறது. தமிழ்ப் பாட்டு - 1காதல் - காதல் மணம். கிறிதுவும் காதலும் மற்றுமொரு காதல் வடிவத்தின்மீது கருத்துச் செல்கிறது. அது கிறிது வடிவம். கிறிது உயிர்களெல்லாம் துன்பக் கடலினின்றும் இன்பக்கரை ஏறுதல் வேண்டும் என்னும் பெருங் காதலுடையவர். காதலின் முழுமையே அன்பு; அன்பே கிறிது. அவர் அன்பே ஆகி அன்பையே போதித்தார்; அவர் அன்பே தெய்வம் என்றார்; அயலவனிடம் அன்புகூருங்கள் என்றார். அவ்வளவில் அவர் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்று, பகைவனிடத்திலும் அன்புகூருங்கள் என்றார். இதுவே அன்புக்கு அறிகுறி. மெய்யான அன்பு பகைவனை வெறுக்கச் செய்யாது; அவனையும் நேசிக்கச் செய்யும். அன்பைக் கிறிது பெருமான் போதனையுஞ் செய்தார்; சாதனையிலுங் காட்டி னார். அவரைக் கொல்லச் சிலுவையில் நிறுத்தி ஆணி அறைந்த கொடியவரிடத்தும் அவர் அன்புகாட்டினார். அப்பொழுது இயேசு, பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. - லூக்கா : 23 : 34 இவ்வருள் மொழி எங்கிருந்து எழுந்தது? கொலை மரத்தினின்றும் எழுந்தது; அன்பின் அன்பு என்னே! அன்புள்ள இடத்தில் தியாகமிருத்தல் இயல்பு. தியாக மில்லாத இடத்தில் அன்பிருத்தல் அரிது. கிறிது அன்பு - அன்பின் முழுமை. அன்பே அவர்; அவரே அன்பு. அன்பு என்ன செய்தது? தியாகஞ் செய்தது. எத்தகைத் தியாகம்! ஒருவன் பொன்னை அளிப்பன்; பொருளை அளிப்பன்; வீட்டை அளிப்பன்; நிலத்தை அளிப்பன்; அரசை அளிப்பன்; உயிரை அளிப்பனோ? உயிர்அளிப்பு என்றதும் சிந்தனை உண்டாகும். கிறிது பெருமான் எதைத் தியாகஞ் செய்தார்? தமது ஆருயிரைத் தியாகஞ் செய்தார்; எவர் பொருட்டு? உயிர்கள் பொருட்டு; தம்பொருட்டன்று. அவர் உயிர்கள்மீது வைத்த காதல் அவரை இன்புடன் உயிர் துறக்கச் செய்தது. மெய்க்காதல் என்ன செய்யாது? ஓருயிர் தனக்கினிய ஓருயிரின் பொருட்டுத் தியாகஞ் செய்வதைக் காண்கிறோம்; கேட்கிறோம். இது காமிய அன்பு; கட்டுப்பட்ட அன்பு. கிறிது பெருமான் மற்ற உயிர்களின் பொருட்டுத் தாமே பலியானார். இதுவே நிட்காமிய அன்பு; கட்டற்ற அன்பு. உயிர்களெல்லாம் பாவத்தினின்றும் விடுதலை யடைதல்வேண்டுமென்ற பெருங் காதலால் கிறிது தம்மையே தியாகஞ் செய்தனர். இத் தியாகத்துக்கு அடிப்படை காதல். காதல் வடிவம் கிறிது. கிறிது காதல் மணவாளன்; நாம் காதல் மணவாட்டியராதல் வேண்டும். கிறிதுவைக் காதலித்து அவரை வழிபடுவோம். நாம் அன்பாவோம்; தொண்டாவோம்; தியாகமாவோம். வீரம் காதலைத் தொடர்ந்து வருவது வீரம்; காதலுக்கும் வீரத்துக்கும் தொடர்புண்டு. காதல் திகழும் இடத்தில் வீரம் செறியும்; வீரம் செறியும் இடத்தில் காதல் திகழும். அஃது இல்லாத இடத்தில் இஃது இராது. இஃதில்லாத இடத்தில் அஃது இராது. காதல் அகம்; வீரம் புறம்; அகநூல்கள் காதலையும் புறநூல்கள் வீரத்தையும் விளம்புதல் உங்கட்குத் தெரியும். காதல் காதலர்வழி இயங்குவதுபோல வீரம் வீரர் வழி இயங்கும். காதல் நெஞ்சில் கடவுள் விளங்குவதுபோல வீர நெஞ்சிலும் கடவுள் விளங்கும். இதுபற்றியே வீரர் வழிபாடு உலகெங்கும் நடைபெறுவதாயிற்று. பண்டை நாளில் வீரர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்தம் புகழ் பொறிக்கப் பெற்ற ஒரு கல் நாட்டப்படும். அது வீரக்கல் என்றும், நடுக்கல் என்றும் போற்றப்படும். அக் கல்முன்னே பலவித வந்தனை வழிபாடுகள் நடைபெறும். வீர மூலம் 1வீரத்துக்கு மூலம் ஈரம்; கோபமன்று; வன்மமன்று. ஈரத்தினின்றும் எழுவது வீரம். கோபத்தினின்றும் வன்மத்தி னின்றும் எழுவது வீரமாகாது. அது வெறி. இந்நாளில் அன் பற்ற கோபத்தினின்றும் - வன்மத்தினின்றும் எழுவது வீர மென்று கருதப்படுகிறது. இதனால் அறப்போர் குலைந்து மறப்போர் தலையெடுக்கலாயிற்று. கோழைகள் வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். முன்னாளில் போருக்கென்று ஓரிடம் குறிக்கப்படும். அவ்விடத்திலுள்ள ஆக்கள், அந்தணர், பெண் மக்கள், நோயாளர், மக்கட்பேறில்லாதவர் முதலியோர் அப்புறப் படுத்தப்பட்ட பின்னரே போர் துவங்கப்படும். நிராயுதபாணிகள் மீது எக்காரணம் பற்றியும் அம்புகள் சொரியப்படமாட்டா. இக்காலப் போர்முறைகளைப் பேசவும் வேண்டுமோ? பேசவும் நா எழவில்லை. ஆடு மாடுகள், அறவோர், பெண்மணிகள், குழந்தைகள், நோயாளர், நிரபராதிகள், நிராயுதபாணிகள் முதலியோர்மீது குண்டுகள் பொழியப்படுகின்றன! கொடுமை! கொடுமை! அறம் எங்கே போயிற்றோ? அன்பு எங்கே போயிற்றோ? இக்கொடிய மறப்போர் புரிவோர் வீரராவரோ? அவர் உருவங்களை வழிபடலாமோ? காதலும் வீரமும் காதலும் வீரமும் தொடர்புடையனவாதலின், அதற்கு ஏதேனும் இடர் நேர்வதாயின், இது வாளா இராது; வீறுடன் எழும். வீர எழுச்சிக்கு அடிப்படை காதலே; சீற்றமன்று; இகலன்று; வீரம் எழுங்கால் அதனிடைத் தெய்வத் தன்மை நடம்புரியும். மாசற்ற காதல் கடவுள் தன்மை வாய்ந்தது போல மாசற்ற வீரமும் கடவுள் தன்மை வாய்ந்ததே. இக்காரணம் பற்றியே வீரர் வழிபாடு உலகில் தோன்றியிருக்கும். வீரர் நெஞ்சில் சீற்றமில்லை; இகலில்லை. அங்கிருப்பது காதல். இத்தகைய வீரர் உள்ளம் தெய்வக் கோயிலாகுமன்றோ? காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு விளக்கவல்ல எடுத்துக்காட்டுக்கள் பல உண்டு. விரிவஞ்சி இரண்டொன்றைக் குறித்துச் செல்கிறேன். ஒரு களிரும் ஒரு பிடியும் காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தன. அவ்வேளையில் ஒரு சிங்கம் எதிர்ப்பட்டது. பிடி, களிற்றின் பக்கலில் நெருங்கிற்று. களிறும், பிடியும் காதலால் பிணிக்கப்பட்டவை. காதல் நடுக்கங்கண்டு வீரம் வாளா கிடக்குமோ? வீரம் களிற்றினிடம் எழும்பிற்று. காதலினின்றும் எழும் வீரத் தெய்வத்தின் முன்னே எவர் நிற்றல் முடியும்? உலக முழுவதும் ஒருங்கு திரண்டு எதிர்த்தாலும் காதல் வீரத்தைச் சாய்த்தல் இயலாது. களிற்றின் வீரம் பிடிக்கு என்ன உணர்த்திற்று? காதலே, அஞ்சற்க. உன் காதலே எனது வீரம். என்னுயிர் நீ. என்னுயிர் போம்வரை உன்னைக் காப்பேன்? என்பதை உணர்த்திற்று. காதல் வீரம் சிங்கத்தை நடுக்குறச் செய்தது. சிங்கத்துக்கு யானை அஞ்சி ஓடுவது இயற்கை. ஆனால் காதல்வீரம் இயற்கையையும் மாற்றியது. அது யானையைச் சிங்கமாக்கியது; சிங்கத்தை நரியாக்கியது. காதல் வீரம் எங்கே எழுந்தது? உயர்திணை உயிரினிடத்திலா? அஃறிணை உயிரினிடத்திலா? எளியதினிடத்திலா? வலிய தினிடத்திலா? காதல் வீரத்தின் எழுச்சியை அஃறிணை உயிரினிடத்தில் - எளியதினிடத்தில் - ஏற்றி, உலகுக்கு அவ் வீரத்தின் பெற்றியை அறிவுறுத்திய பெருமை யாருடையது? திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளையும் எதிர்த்த அஞ்சா நெஞ்சமுடைய வீரர் நக்கீரருடையது. நனந்தலைக் கானத் தாளி யஞ்சி இனந்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின் வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப் பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல் இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக் கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல் . . . . இஃது அகநானூற்றிற் போந்த நக்கீரர் காதல் மொழி - வீரமொழி. ஒரு களிறு, காதல் காரணமாக ஒரு சிங்கத்தை நடுக்குறச் செய்தது; உயிரைப் பொருளாக மதியாது தன்னினும் வல்ல சிங்கத்தை எதிர்க்கலாயிற்று. 1மனைவிமாட்டுள்ள காதல் என்னே? பெண்ணுலகைக் காக்க ஆணுலகங் கடமைப்பட்டதை உன்னுக. மனைவிக்கு ஆபத்து நேருங்கால் தன்னுயிரைக்காக்க ஓடுவோன் கணவனாகான்; உயிர்நாயகனாகான்; காதல் கொழுநனாகான்; அவன் வீர மகனல்லன்; பேடி; கோழை; கோழமை இக்கால ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும் காதல் என்னும் பெயரால் பதிவுமணஞ் செய்து கொண்டனர். அவன் எம்.ஏ. இவள் பி. ஏ. இவர் அடிக்கடி காடுகளிற் போந்து சுற்றிவருவது வழக்கம். ஒருநாள் காட்டில் ஒரு மரத்தடியில் தூர்த்தன் ஒருவன் பி.ஏ. பெண்ணைக் காணலானான். அவனது உள்ளக் குறிப்பை உணர்ந்த பெண்மணி பக்கத்திருந்த நாயகனுக்கு ஆங்கிலத்தில் அதைத் தெரிவித்தாள். தெரிவித்ததும் தன் உயிரைக் காக்கவேண்டி எம்.ஏ. ஆண் ஓட்டமாக ஓடினான். இஃது ஐந்துநதி பாயும் அழகிய ஒரு நாட்டில் ஓரிடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை முற்றுங் கூற விரும்புகிறேனில்லை. ஓடிய ஆள் தன் மனைவியைக் காதலித்தவனா? காமுற்றவனா? என்ப தொன்றே ஈண்டுக் கருதற்பாலது. அவன் மனைவியைக் காதலித்தவனல்லன்; காமுற்றவனே. காதல் தன்னுயிரை விடுத்து ஓடச்செய்யுமா? ஓடச்செய்வது காமம். காதல் வீரத்தை யன்றோ எழுப்பும்? நக்கீரர் காலக் காட்சிக்கும், இக்காலக் காட்சிக்கும் எவ்வளவு வேற்றுமை? இவ்வளவில் நின்று மேற் செல்கிறேன். இராமபிரான் நமது நாட்டில் இராமாயணம் படிக்கப்படாத இடமே இல்லை என்று கூறலாம். இராமாயணம் என்ன அறிவுறுத்து கிறது? காதல் வீரத்தை அறிவுறுத்துகிறது. சீதாராமன்; என்ன பொருள்? காதல் - வீரம் - என்பது பொருள். சீதை காதல்; இராமன் வீரம். காதலும் வீரமும் தொடர்புடையன. ஒன்றுள்ள இடத் தில் இன்னொன்றுமிருக்கும். இராமபிரான் வீரர்; ஈர நெஞ்சினர். இராமபிரானுக்கு முடிசூட்டு விழா என்ற செய்தி உலகுக்கே மகிழ்ச்சியூட்டியது. ஆனால் அவர் அத் தருவாயில் சிற்றன்னை விரும்பியவாறு நாட்டைவிடுத்துக் காட்டுக்கேகினர். என்ன தியாகம்! தனிமுடி கவித்து ஆளும் அரச இன்பத்தைத் திடீரென ஒரு நொடியில் அகமலர்ச்சியுடன் துறத்தல் எளிதோ! இராமபிரான் தியாகமே தியாகம்! தியாகத்துக்கு ஊற்று எது? ஈர நெஞ்சமே. இராமபிரானின் ஈரநெஞ்சம் என்னென்ன செய்தது? வேடனையும், குரங்கையும், அரக்கனையும், அணிலை யும் சகோதரமாகக் கருதச் செய்தது. போரில் இராவணன் நிராயுதபாணியாக நின்ற காலத்தில் இன்று போ, நாளை வா என்று சொல்லச் செய்தது. மற்றும் பலவற்றை இராமாயணத்திற் பார்க்க. இராமபிரான் உள்ளத்தில் சீற்றமில்லை; இகலில்லை; ஈர வீரமே இருந்தது. ஈர வீரம் பகைவனிடத்திலும் இரக்கங் காட்டச் செய்தது. ஈர நெஞ்சமுடைய இராமபிரான் வீரம் - சொலற்கரிய வீரம் - இராமாயண முழுவதும் பேசப்படுகிறது. வீரராகவன் என்ற பெயரும் இராமபிரானுக்கு உண்டு. இராமபிரான் வீரம் எப்பொழுது வீறி எழுந்தது? காதல் சீதைக்கு இடுக்கண் நேர்ந்தபோது இராகவன் வீரம் வீறி எழுந்தது. எப்படி எழுந்தது? அதை வருணிக்க யான் வான்மீகி யல்லன்; கம்பனல்லன். இராமபிரான் கடல் தாண்டிப் பெரும் போர் புரிந்து காம அரக்கப் பூண்டுகளையெல்லாம் அறுத் தொழித்துக் காதற் சீதையைக் காத்தருளினர். இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். நாம் வேறு ஒருத்தியை மணம் செய்து வாழலாம் என்று இராமபிரானது ஈரநெஞ்சம் - வீர நெஞ்சம் - நினைந்ததோ? அப்படி அந்நெஞ்சம் நினைக்குமோ? நினையாது. அந்நெஞ்சில் ஈர வீரம் படிந்து கிடந்ததற்கு அடிப் படை என்ன? சீதைக் காதல் ஊறி ஊறி இரண்டற்று ஒன்றினமை அடிப்படை. காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்புக்கு இராமபிரான் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு; ஒரு பெரும் இலக்கியம். வான்மீகி அருளிய இராமாயணத்தைத் தமிழ்மணங் கமழக் கம்பர் பாடப் புகுந்ததன் நுட்பத்தைச் சிந்தித்தல் வேண்டும். இராம காதையிலுள்ள காதல் வீரம் தமிழ்க் கம்பரை இராமாயணம் பாடுமாறு தூண்டியது. தொல்காப்பியரும், நக்கீரரும், திருவள்ளுவரும், மாணிக்கவாசகரும், ஆண்டாளும், மற்றவரும் வாளா கிடப்பரோ? நாடு அவரவர் நாட்டை அவரவர் ஆட்சி புரிவதே இயற்கை. இதற்கு மாறாக ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பற்றினால், இந்நாட்டவர் தமது நாடாகிய சீதையை மீட்க ஒவ்வொரு வரும் இராமராதல் வேண்டும். இக் குறிப்பு மிடையவும் இராமாயணம் பாடப்பட்டது. வீரத்துக்கு அடிப்படை காதல். வீரம் ஈர நெஞ்சினின்றும் எழுவது. ஈரநெஞ்சமாவது கோபமற்றது; வன்மமற்றது. மாசற்றது. இந்நெஞ்சமன்றோ கோயில் - தெய்வக் கோயில் ! இக் கோயில் கொண்ட நெஞ்சமுடைய வீரரை வழிபடுவதும் இயற்கை வழிபாட்டின்பாலதே. வீரர் வழிபாட்டுக்கென்று தோன்றிய காவியங்களும் ஓவியங்களும் கதைகளும் பலப்பல. இனி அழகை உன்னுவோம். அழகு காதலைப் போலவும் வீரத்தைப்போலவும் அழகும் உருவங்களிலேயே தன்னை உணர்த்துவது. பண்டை நாளில் நாகரிகம் நிறைந்த நாடுகளெல்லாம் அழகைக் கடவுளாக் கொண்டு வழிபட்டு வந்தன. அந்நாடுகளுள் இந்தியாவும் கிரீஸும் சிறந்து விளங்கின. இந்நாளிலும் அழகென்னும் முருகைக் கடவுளாக நந் தமிழ்நாடு வழிபட்டு வருதல் கண்கூடு; முருகன் அல்லது அழகு என்றொரு நூல் என்னால் யாக்கப் பட்டுள்ளது. அதன்கண் அழகுக் கடவுளைப்பற்றி விரித்துக் கூறியுள்ளேன். இயற்கையும் அழகும் அழகு யாண்டுளது யாண்டுளது என்று அலைந்து திரிந்து தேடவேண்டுவதில்லை. இயற்கையை நோக்குவோம். இயற்கை நம்மை விடுத்துச் சேய்மையில் நிற்கவில்லை. அது நம்மைச் சூழ்ந்து நானாபக்கமும் பொலிதருகிறது. அது நம்முள்ளும் புறமும் நிலவுகிறது. இவ்வியற்கையே அழகு; அழகே இயற்கை. இயற்கை அழகு; இயற்கைக் கூறுகளெல்லாம் அழகு; இயற்கைக் கலைகளெல்லாம் அழகு; இயற்கையினின்றும் முகிழ்ப்பன எல்லாம் அழகே. இயற்கையில் கோரமில்லையோ என்று சிலர் ஐயுறலாம். இயற்கையில் கோரமே கிடையாது. சில கோரம் போல் தோன்றும். அவையிற்றை நுணுகி நோக்கினால் அவை யும் அழகாகவே தோன்றும். கோரம் செயற்கை. கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் என்பது நக்கீரனார் திருவாக்கு. கைபுனைந் தியற்றாதது சொக்க அழகு என்கிறார் அப்பெரியார். கைபுனைந் தியற்றாதது இயற்கை; கைபுனைந்தியற்றுவது செயற்கை. கைபுனைந்தியற்றாத இயற்கையே அழகு என்றவாறாம். கைபுனைந்தியற்றுஞ் செயற்கை கோரம் என்பது தொக்கி நிற்கிறது. கோரம் இயற்கையிலுண்டு என்று நினைப்பது தவறு. அழகு வழிபாடு அழகு அழகு என்று பேசுதல்மட்டும் போதாது; எழுதுதல் மட்டும் போதாது. அழகை வழிபட்டு அழகாதல் வேண்டும். அழகை எண்ண எண்ண நெஞ்சு அழகாகும்; அதை ஓத ஓத வாய் அழகாகும்; அதைத் தொழத் தொழ உறுப்பெல்லாம் அழகாகும். இம்முறையில் அழகு வழிபாடு எங்கணும் இடை யீடின்றி நடைபெற்றுவரின், காண்பன கேட்பன செய்வன எல்லாம் அழகாகும். உலகம், அழகுத் தெய்வக் காட்சி வழங்கும். இந்நிலையில் 1எந்நாளும் இன்பமே துன்பமில்லை எனவரும் மொழியின் மெய்ம்மை இனிது விளங்கும். அழகு வழிபாடுகள் நூல்களில் பலவாறு ஓதப்பட்டுள்ளன. நாடுகளின் பிரிவும், தட்ப வெப்ப நிலைகளும், சமூக வழக்க வொழுக்கங்களும், இன்ன பிறவும் வழிபாடுகளைப் பல வாறாக்கின. இவைகட்கெல்லாம் முதலாய் - அடிப்படையாய் - உயிராய் - இருப்பது அழகொன்றே. அழகு வழிபாடு எளியது; அரியதன்று. ஞாயிறு காலையில் பசுங்கடலில் இளஞாயிறு விரைந்து அசைந்து எழுகிறது; நீல விளிம்பில் நிற்கிறது. அழகுக் காட்சி - செம்மைக் கோலம் - அனலுருண்டை! கண்ணுக்கினிமை; கருத்தஞாயிற்றைப் போற்றுவது இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அது சரித்திர காலத்துக்கு முன்னரே தோன்றியது. ஞாயிறு வழிபாடு தொன்று தொட்டது. அவ் வழிபாடு நமது நாட்டுப் பண்டை நூல்களில் மிக விரிவாகப் பேசப்பட்டிருத்தலை இன்றுங் காணலாம். ஞாயிறு வழி பாட்டில் (சூரிய நமகாரத்தில்) நமது நாடு பேர்பெற்றதென்று பறைசாற்ற வேண்டுவதில்லை. இருள்சூழ்ந்த இந்நாளிலும் ஞாயிறு வழிபாடு ஒருவாறு ஆங்காங்கே சிற்சில இடங்களில் நடைபெற்றே வருகிறது. காலை ஞாயிற்றை வணங்கி, அதன் ஒளியில் மூழ்கிவந்த நம் முன்னோர் நீண்டநாள் வாழ்ந்தனர்; நிறையில் நின்றனர்; நீள்கலைகளைத் தந்தனர். பண்டைப் பழக்க ஒழுக்கங்களைப் பழித்துப் பேசுவோருள் சிலர் பரிதி வழி பாட்டையும் பழித்துரைத்தலை யான் கேட்டிருக்கிறேன். அவர் நல்லறிவு பெறவேண்டுமென்று ஒளிவண்ணனை வழுத்து கிறேன். பழிக்குஞ் சகோதரர் மேல்நாட்டவர் புதிது புதிதாகக் கண்டுவரும் விஞ்ஞான உலகிலாதல் நடமாடுகிறாரா என்று கேட்கிறேன். இக்கால விஞ்ஞான உலகம் கதிரொளியை ஆராய்ந்து, அதன் நுட்பங்களைக் கண்டு கண்டு வியப்படை கிறது. காலைக்கதிர் பொழியும் உயிர்ப்பின் (பிராணனின் - Ozone) திறத்தை என்னென்பேன்! அதனைக் கடலோரத்திலோ மலைமீதிலோ இருந்து பருகுவோர் நோயின்றி நீண்டகாலம் வாழ்வர் என்னும் உண்மை காணப்பட்டிருக்கிறது. பிராணச் சக்தியை உயிர்நிலைகளிற் புகுத்தும் முறைகள் காணப்பட்டு வருகின்றன. சில இடையூறுகளால் அம்முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. அம்முயற்சி இச்சண்டைக்குப் பின்னர் முற்றுப்பெறும் என்று நம்புகிறேன். அது வெற்றியடைந்தால் உலகில் நோயையும் முதுமையையுங் காண்டல் அரிதாகும். இன்றைய விஞ்ஞான உலகில் முயற்சியிலிருக்கும் கதிரொளி வித்தை, பண்டைநாளிலேயே நமது நாட்டில் ஆட்சி பெற் றிருந்தது. அவ்வரிய வித்தை பலர்க்குப் போதிக்கப் படவில்லை. அதனால் அது வாழ்க்கையில் அற்று, ஏடுகளில் அக்காலக் குறியீடுகளுடன் அறிதுயில் செய்துகொண்டிருக்கிறது. மேல் நாட்டு விஞ்ஞான உலகம் கொலைப்போரில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறது. இஃது அரசியலார் கொடுமை! விஞ்ஞான உலகைக் கொலைப்போருக்குப் பயன்படுத்துவது அறமன்று. அதை நல்வழியில் பயன்படுத்தும் ஆட்சி முறை ஆங்காங்கே மலர்வதாக. செஞ்ஞாயிறு எழுந்ததும் இருட்படலம் ஒதுங்குகிறது. அது நெஞ்சம் புகுந்தால்ஆங்குள்ளஇருட்படலமும்ஒதுங்கும்;ங்கும்.இன்றெனக்கருளிஇருள்கடிந்துஎன்னுள்ளத்துஎழுகின்றஞாயிறேபோன்று... vன்றார் மாணிக்கவாசகனார். ஞhÆW வழிபாடு இயற்கை வழிபாடுகளுள் மிகச் சிறந்தது. இயற்கை அரசை - உயிர்ப்பொளியை - அழகு ஞாயிற்றை - இவ்வளவில்விட மனம் எழவில்லை. என்செய்வேன்! இரவு வேளை - விளக்கொளி குறைந்துள்ள காலம் - திங்களின் அருள் வேண்டும். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்ற இளங்கோ அடிகளின் நன்மொழியை நினைந்து நினைந்து திங்களிடஞ் செல்கிறேன். திங்கள் திங்கள் முழுக்கோலத்துடன் எழுகிறது. கீழும் மேலும் சுற்றும் முற்றும் எங்கும் நீல வெளி. பரந்த நீல வெளியில் வெள்ளிய திலகம்! திலகம் நிலவுபொழிகிறது; பொழிந்தே வானத்தில் உழுது செல்கிறது; செல்லுங் காட்சி என்னே! நிலவுமழை கருமைக் கடலிலும், வெண்மை மணலிலும், பசுமைப் பொழிலிலும், பிறவிடங்களிலும் பொழிகிறது. வெண்ணிலவு, கருமையிலும் வெண்மையிலும் பசுமையிலும் பிறவற்றிலும் படிந்து விராவி ஒன்றுங்கால், ஆங்காங்கே அழகுத் தெய்வம் எழுந்து ஆனந்த elம்புÇ»றது.அª நடத்தைக் காண ஐந்துபேர் அறிவும் கண்களை நாடிச் சேர்கின்றன. இச்சேர்க்கை இன்ப வழிபாடன்றோ? திங்கள் வழிபாட்டிலுள்ள சிறப்பைநன்குஉணர்ந்தசான்றோர்அவ்வழிபாட்டைஉலகில்நிலைபெறவேசெய்தனர். பொதுவாகத் திங்கள்தோறும், சிறப்பாகச் சித்திரைத் திங்களிலும் முழுமதி வழிபாடு நிகழ்ந்துவருதலை இன்றுங் காண்கிறோம். பாட்டுலகில் திங்கள் வழிபாடு பெற்றுள்ள ஏற்றம் அவ்வுலகில் வாழ்வோர்க்குச் bசவ்வனேbjரியும். சூÇa சந்திரர் அண்டத்தில் இருப்பதுபோல் பிண்டத் திலும் இருக்கின்றன. சூரிய கலை சந்திரகலை யோக நூல்களில் பேசப்படுகின்றன; இரண்டும் யோகருக்கு உயிர்நாடிகள். யோகர் உண்ணும் அமிர்தம் எங்கிருந்து சுரக்கிறது? அமிர்தகலச மென்னும் சந்திரனிடத்திருந்தன்றோ சுரக்கிறது? ஆகவே, நாம் என்செயல் வேண்டும்? திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும். மலை ஒரு பெண்; வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்தவள். அவள் பின்னாளில் நல்லறிவுபெற்று அமைதி நாடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாள்; எவரெவரிடமோ சென்றாள். எவர் போதனையும் அவளுக்கு அமைதி கூட்டவில்லை. ஒருநாள் அப்பெண் ஒரு மலைமீது இவர்ந்தாள். அம்மலையின் பசும்போர்வை அவளுக்குச் சிறிது மகிழ்ச்சி யூட்டிற்று. அவள் குகைகளைத் தேடிப் பார்த்தாள்; ஒருவரையுங் கண்டாளில்லை. ஒரு கல்லாலமரம் அவள் கண்ணைக் கவர்ந்தது. அதனடியில் அவள் அமர்ந்தாள். சிந்தை அப்படியும் இப்படியும் ஓடிற்று. அவ்வேளையில் அங்கே மயிலின் நடமும், குயிலின் கூவலும், வண்டின் இசையும், அருவியின் முழவும், இன்ன பிறவும் அவளுக்கு விருந்தளித்தன. விருந்தமுதம் அவளுக்கு மன அமைதி கூட்டிற்று. அடிக்கடி அவள் அம்மலைக்குச் செல்வாள்; அமைதி இன்பம் நுகர்வாள். அவள் மனம் பல வழியிலுந் திருந்தியது. நல்லோர் போதனையின் நுட்பம் அவளுக்குப் பின்னரே விளங்கலாயிற்று. அவள் இயற்கை அழகு வழி பாட்டின் சிறப்பைப் பிறர்க்கு அறிவுறுத்துந் தொண்டில் ஈடுபட்டாள். அத்தொண்டிற் கென்றே அவளது வாழ்நாள் அர்ப்பணமாயிற்று. கடலும் வானமும் இனி மலையை விடுத்துக் கடலிற் பாய்வோம்; கடற்கரை நண்ணுவோம். தரங்கம் பாடுகிறது; அப்பாட்டமுதைப் பருகப் பருக நெஞ்சம் கடலிற் படிகிறது; தன்னை யறியாமலே வானிலும் புகுகிறது. அந்நீலமும் இந்நீலமும் ஒன்றி மன அலையை மறிக்கின்றன. பரந்த கடலும் விரிந்த வானும் அகண்டபரம்பொருளை நினைவூட்டுகின்றன. பரம்பொருள் அகண்டம். அகண்ட நினைவுக்கு உயர்ந்த மலை, நீண்ட ஆறு, பரந்த கடல், விரிந்த வானம் முதலியவற்றின் சிந்தனை தேவை. மரம் நமது நாட்டில் மர வழிபாடு நடைபெற்று வருகிறது. வேம்பு அரசு முதலிய மரங்களை மக்கள் சுற்றி வருகிறார்கள்; வணக்கஞ் செய்கிறார்கள். இவ்வழிபாட்டை இழித்துக் கூறுதல் எளிது. மரவழிபாடு எந்நாளில் எக்காரணம் பற்றித் தோன்றி யதோ தெரியவில்லை. மூட நம்பிக்கையினாலும் அவ்வழிபாடு தோற்றமுற்றிருக்கலாம். 1பழமை என்று எதையும் தள்ளுத லாகாது. அவ்வாறே புதுமை என்று எதையும் கொள்ளுதலாகாது. எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்பதே அறிவுடைமையாகும். பசிய மரம் தழைதழைத்து நிற்கிறது. மரத்தால் மக்களுக்குள்ள நலங்கள், அது கற்பிக்கும் பாடங்கள் முதலியவற்றை இச்சொற்பொழிவில் விரித்துக் கூறுதல் அவசியம் என்று தோன்றவில்லை. எடுத்த பொருளுக்கேற்பச் சில கூறுகிறேன். பசிய மரம் கண்ணுக்கினிமையும் மூளைக்குத் தண்மையும் வழங்கும் இயல்புடையது. மூளையின் வெம்மையைத் தணிக்கும் ஆற்றல் பசுமைக்கு உண்டு. பசுமை பொழியும் சோலையில் பித்தரைச் சிலகாலம் வாழச் செய்தால் அவரது வெம்மை நீங்கும்; பித்தம் போகும். பல மரங்களை விடுத்து kக்கள்ntம்பையும்அuசையும்சிwப்பாகஏ‹சு‰றிச்சு‰றிவÊபடுகிறார்கள்?சka¢ சார்பில் சொல்லப்படும் பதில்கள் பல உள. அவைகள் மூட வழக்கங்கள் என்று எள்ளி நகையாடப் படுகின்றன. விஞ்ஞான உலகம் என்ன சொல்கிறது? பார்ப்போம். வேம்பரசுகளின் இலைகள் கூரிய நுனியுடையன. இத்தகைய இலைகள் ஞாயிற்றின் உயிர்ப்புப் பிறந்தவாறே (எவ்விதக் கலப்பும் பெறாது) விரைந்து பாய்ந்து அவைகளின் வாயிலாகச் சூழ்ந்துள்ளவரிடம் புகுந்து படர்கிறது. அதனால் மக்களைப் பற்றியுள்ள அகப்புறப் பிணிகள் நாசமா கின்றன. மரத்தைப் பன்முறை வலம் வருவதால் நடைப் பயிற்சி யும் தூய காற்று நுகர்வும் உண்டாகின்றன. மர வழிபாடு உடலை நன்முறையில் ஓம்புவது என்று சுருங்கச் சொல்கிறேன். உடலை ஒம்பும் வழிபாடு அழகுடையது; அழகை ஊட்டுவது. பாம்பு பாம்பொன்று படம் விரித்து ஆடுகிறது. வழியே சென்ற ஓர் ஓவியர் அதைப்பார்த்து நின்றார். அவர் ஓவியம் ஆனார். பாம்பின் பட அழகு அவரை ஓவியமாக்கியது. பாம்பின் படத்தில் அழகுண்டா? இல்லையா? அஞ்சாது பாம்பைப் பாருங்கள்; படத்தைப் பாருங்கள்; அழகு ததும்புகிறது; வழிகிறது. அவ்வழகைப் பருகுவோர்க்கு நஞ்சு ஏது? அச்சம் ஏது? படம் விரித்து ஆடும் பாம்பு ஓவியரிடம் அணுகிற்று. அவர் அஞ்சி ஓடினாரில்லை; பாம்பும் அவரைத் தீண்டவில்லை. அழகு வண்ணமாகவுள்ள பாம்பினிடம் நஞ்சு ஏது? அச்ச முடைய மனிதன் நெஞ்சம் பாம்பினிடம் நஞ்சிருக்கிறது என்று நினைக்கிறது. அந்நினைவு பாம்பினிடம் நஞ்சாகிறது. நஞ்சு மனம் நஞ்சைக் காண்டல் இயல்பு. நஞ்சில்லாப் பாம்பினிடம் நஞ்சை உண்டாக்குவது பாழும் மனம். ஓவியர் பாம்பின் அழகில் ஒன்றுபட்டார். அவர் நெஞ்சில் நஞ்சில்லை; அழகிருந்தது. அதனால் பாம்பினிடமும் நஞ்சு எழவில்லை. அஃது அழகு நெஞ்சினை அணுகலாயிற்று. இயற்கை அழகில் கொடுமையே கிடையாது. வேங்கை ஒரு சுனையின் பாங்கர் ஒரு வேங்கைப்புலி படுத்திருக்கிறது; நாத் தொங்க அசைவிடுகிறது. அங்கே நீர் அருந்த ஒரு கவிவந்தார்; அவர் புலியைக் கண்டார். அதில் ஈடுபட்டார். நீர்வேட்கை எங்கேயோ பறந்துபோயிற்று. புலியின் மீசையும், நாவும், கண்ணும், வரிப்பட்டையும், நகமும், பிறவும் அவர்க்கு நீராயின. வேட்கை தணிந்தது. கவி, புலியைப் பாட்டாகப் பார்க்கிறார். இயற்கை அழகு அவருக்கு விருந்தளிக்கிறது. அவர் உள்ளத்தில், புலி கொடியது என்ற எண்ணமே உதிக்கவில்லை. அவர்க்குப் புலி இயற்கை அழகுக் கடவுளாகவே புலனாயிற்று. புலி, கவியைக் கண்டு பாயவில்லை; அவர் அருகே குழந்தை போல் சென்று நின்றது. கொடுமை எங்கே? சாந்தம் சாந்தம் சிவம் என்று உபநிஷத் உரைக்கிறது. இதற்குப் பௌராணிகம் ஓர் உருக் கொடுத்துள்ளது. வெண் கயிலையில் கல்லால மரத்தடியில் சாந்தசிவம் வீற்றிருக்கிறது. அச்சிவத்தின் முன்னே எருதும் சிங்கமும் பாம்பும் மயிலும் பகைமையின்றி விளையாடுகின்றன என்று பௌராணிகம் புகல்கிறது. நுட்பம் என்ன? சாந்த நெஞ்சம் எல்லாவற்றையுஞ் சாந்தமாக்கும் என்பது நுட்பம். 1உலகம் பொல்லாதென் கின்றார் உளமே பொல்லா தென்றுணர்ந்தேன். கலக உளத்தைக் கடந்து நின்றால் கருணை வடிவே உலகமெலாம், இலகும் உயிர்கள் நின்வடிவே எங்கே குற்றம் இறையோனே இஃது என்பால் முகிழ்த்த பாட்டு. எரிமலை ஓரிடத்தில் எரிமலை நெருப்பைக் கக்குகிறது; உமிழ்கிறது. நெருப்புக் கனன்று நாவிட்டெரிகிறது; பொங்குகிறது. எங்கணும் அழல் - தழல் - கனல். இஃது இயற்கை. இது கோரமா? அழகா? கோரமன்று; அழகே. கோரம் எங்கே இருக்கிறது, மலையிலா? நெருப்பிலா? மலை இயற்கை. அது கோரமாகாது. நெருப்பு நாவிட்டு எழுந்து பொங்கி அருணாசலமாகிறது. ஒரே பிழம்பு! செம்மைப் பிழம்பு! செம்மைப் பிழம்பின் அழகை என்னென்று வருணிப்பது! காலையிலும் மாலையிலும் ஞாயிறு வழங்குஞ் செம்மை கோரமா? ஒவ்வொருபோது வானம் வழங்குஞ் செம்மை கோரமா? செம்மை, இயற்கை அழகுக்கு அழகு செய்யும் பெற்றிமை வாய்ந்தது. இயற்கை எவ்வடிவினதாயினும் அதன்கண் கோரங் குவியாது; அழகே அமையும். ஆகவே, இயற்கை அழகை எவ்வடிவிலும் எந்நிலையிலும் வழிபடலா மென்க. பெண்மை இயற்கை அழகெலாம் திரண்டு உலவும் ஒரு வடிவம் இருக்கிறது. அவ்வடிவம் இன்னதென்று யான் குறிப்பதற்கு முன்னரே அஃது இஃது என்று நீங்கள் ஊகித்துக் கொண்டிருப் பீர்கள். என் பேச்சிலும் எழுத்திலும் அவ்வடிவம் புகாம லிருப்பதில்லை. அஃது எது? அது நம்மனைவரையும் ஈன்ற அன்பு வடிவம்! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அன்னையை வழிபடுவது உலக இயற்கை. இறைவனிடத்தில் இருகூறு இருக்கின்றன. அவை பெண்மை ஆண்மை. பெண்மை அம்மை (Motherhood of God) என்றும், ஆண்மை அப்பன் (Fatherhood of God) என்றும் வழங்கப் படுகின்றன. பெண்ணுலகுக்கும் ஆணுலகுக்கும் மூலமாயிருப் பன இறையின் பெண்மைக் கூறும் ஆண்மைக்கூறுமாம். அவ்விரு கூறுகளினின்றும் பெண்ணுலகும் ஆணுலகும் தோன்றி நின்று அவைகளிலேயே ஒடுங்குகின்றன. இறைவன்பால் பெண்மைக்கூறு இல்லையேல் உலகில் பெண் தோற்றமே இராது. உலகம் எப்படி வளர்ச்சியுறும்? பெண்ணின் இன்றி யமையாமையை ஓர்க. ஆண் அநாவசியம் என்பது எனது கருத்தன்று. 1பெண்ணினல்லாள் தாயாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் நின்று உலகை வளர்க்கிறாள். ஒருத்தி ஒருவனுக்குத் தாய்; இன்னொருவனுக்குச் சகோதரி; மற் றொருவனுக்கு மனைவி. பெண்மை எவ்வெவ்வாறு உலகுக்குத் துணை புரிகிறது பாருங்கள்! பெண்ணினல்லாளிடம் பெண்மை தாய்மை இறைமை என்னும் மூன்று இயல்புகள் சிறந்து விளங்குகின்றன. பெண்மை, மக்கட்பேற்றிற் குரியது. தாய்மை, இரக்கம், தியாகம் தொண்டு முதலியவற்றிற் குரியது. இறைமை, எவ்வுயிர்க்கும் நலம்புரியும் செந்தண்மை என்னும் அந்தண்மைக்குரியது. பெண்மை யினின்றும் தாய்மையும், தாய்மையினின்றும் இறைமையும் படிப்படியே மலர்கின்றன. இம்மூன்றனுள் தாய்மையே சாலச் சிறந்தது. பெண்மையினிடத்திருந்து தாய்மை பிறந்தால், அதனின்றும் இறைமை தானே பிறக்கும். ஆதலின், பெண்ணி னிடத்துத் தாய்மை அமைந்திருப்பது சிறப்பென்க. இத் தாய்மையுடைய பெண்ணைப் போற்றுவது அறமே. பெண்ணுடன் கூடி அவளிடம் தாய்மை கண்டு, அதை வளர்க்க ஒருப்படாது ஒதுங்குவது, இயற்கைக்கு அரண்செய்து வாழ்வதாகாது. பெண்ணை விடுத்து ஓடுவது துறவு என்ற கொள்கை எப்படியோ உலகில் முளைத்து விட்டது. அம்முளை நச்சு மரமாகி உலகை எரிக்கிறது. துறவு, பெண்ணை வெறுத்து ஓடுவதன்று. அவளுடன் கூடி வாழ்ந்து மனமாசகற்றுவதே துறவு. இது திருவள்ளுவர் உள்ளிட்டார் கொள்கையுமாகும். இதைப்பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலிலும், திருக்குறள் விரிவுரை யிலும் எனது உள்ளக் கிடக்கையைத் தெளிவாக விளக்கஞ் செய்துள்ளேன். என் நூல்களைப் படியாமலே சிலர் என் கொள்கையை மறுத்து வந்தனர். இப்பொழுது என் நூல்களைப் பயில்வோர் தொகை பெருகிவருகிறது; எதிர்ப்புங் குறைந்துவருகிறது. இடைக் காலத்தில் வீழ்ந்துபட்ட பெண்ணுரிமை இனி ஆக்கம் பெறும் என்னும் உறுதி எனக்கு உண்டு. ஞானியர், பெண்பிறவியை இழித்துக் கூறியதென்னை என்று சிலர் நெஞ்சம் நினைக்கலாம். ஞானியர் பெண்ணுலகை இழித்துக் கூறவில்லை என்பது எனது ஆராய்ச்சியில் யான் கண்ட உண்மை. பெண்மையை நன்முறையில் தாய்மைக்குப் பயன்படுத்தி இறைமைப் பேற்றைக் காணாது வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்த வரைவின் மகளிர் தீமைகளை உலகுக்கு உணர்த்த ஞானியர் மறுப்புமொழிகள் வழங்கியது உண்மையே. அம் மறுப்புரைகளைப் பொதுவாக்கிப் பெண்ணுலகின்மீது சுமத்துவது தவறு. பெண்ணைப் பழித்துத் துறவோர் என்றும், ஞானியர் என்றும் திரிவோர் அனைவரும் தாயின் வயிற்றிற் பிறந்தவரே. அவர் வானத்தினின்றும் நேரே குதித்தவரல்லர். தம்மை ஈன்ற தாயைப் பழிப்பவர் எவராயினுமாக. அவர் துறவோருமாகார்; ஞானியருமாகார். ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்தலே இயற்கை அறம். இவ்வறம் உலகை வளர்க்கத் துணை புரியும். இயற்கை அறத்துக்கு மாறுபட்டு, ஒருவனோ ஒருத்தியோ தனித்து வாழ ஒதுங்குவதும், ஒருவன் பல பெண்களுடனும், ஒருத்தி பல ஆண்களுடனும் சார்பு கொள்வதும் இயற்கை அறமாகா. பலரிடம் மனத்தைத் தூண்டுவது காமம் என்றும், ஒருத்தியும் ஒருவனும் ஈருடல் ஓருயிர் என்ன ஒருமைப்பட்டு வாழ்வது காதல் என்றும் முன்னே பேசியுள்ளேன். பெண்ணைக் காமப் பொருளாக எண்ணுவது பாவம். அவ்வெண்ணம் மாறப்பெறல் வேண்டும்; மாறப்பெற்றவனே மனமாசற்ற துறவோன்; ஞானி. அவனே பெண்ணில் தெய்வங் காணும் பேறுபெற்றவன். ï¡ fU¤ij¢ br‹id¥ ‘g¢ira¥g‹’ k©lg¤âš irt á¤jhªj kfh rkh#¤â‹ X® M©L ÉHh¡ T£l¤âš ah‹ btËÆ£l ntisÆš, xU irt á¤jhªâ Ó¿ vGªJ, ‘kh¡fthrf® bg©iz ïʤJ¥ ghoíŸshnu; mj‰F v‹brhšå®? என்று கடாவினர். அப்பாடலைச் சொல்லுமாறு நண்பரை யான் கேட்டேன். அவர் வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண் ணகைச் செவ் வாய்க்கரிய - பானல்வாய்க் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே என்ற பாடலைச் சொன்னார். பாடல் என் கருத்துக்குத் துணைபோதலை அங்கே விளக்கிக் காட்டினேன். தோழர்களே! பாட்டைக் கூர்ந்து நோக்குங்கள். பெண்ணைக் காமப் பொருளாகக் கருதும் பாழ்நெஞ்சே என்று மாணிக்கவாசகர் தமது நெஞ்சைப் பழித்தமை நன்கு விளங்கும். நெஞ்சம் பெண்ணைக் காமக் கூடாகக் கருதலாகா தென்பதும், அவளைத் தெய்வமாகக் கருதும் மனம் தேவை என்பதும் பாட்டின் திரண்ட பொருள். மாணிக்கவாசகர் பெண்மக்களை முன்னிலைப் படுத்திப் பூவல்லிக் கொய்தல், தெள்ளேணங் கொட்டல், பொற்சுண்ண மிடித்தல் முதலியன பாடி யுள்ளனர். அவர், அம்மையெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே என்று அருளியுள்ளனர். இவைகளைச் சிந்தித்துப் பாருங்கள். மணிவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பெற்ற திரு வெம்பாவை என்ன அறிவுறுத்துகிறது? அப் பாவையில் பெண்மை மணமே கமழ்கிறது. இளம் பெண்கள் இறைவனை நோக்கி வரங்கேட்டமை ஈண்டு உன்னற்பாலது. இறைவனே! மழை வேண்டும். 1நல்ல கணவர் வேண்டும் என்று இளம் பெண்கள் வேண்டுதல் செய்தமை திருவெம்பாவையில் வெள்ளிடை மலையெனத் திகழ்கிறது. நல்ல கணவரை இளம் பெண்கள் விழைந்ததைப் பாட்டில் அமைத்தருளிய மாணிக்க வாசகர், பெண்ணை விடுத்து ஓடும் பொய்த் துறவையா போற்றுவர்? பெண்மணிகளைக் காமப் பொரு ளாகவா கருதுவர்? பெருமான் திருவாசகத்தை உலகுக்குத் தந்த அளவில் நின்றாரில்லை. அவர் திருக்கோவையையும் தந்தனர். திருக் கோவை பெண்ணைக் காமப்பொருளென்று வெறுத்தோடும் போலித் துறவையா போதிக்கிறது? காதல் - காதல் - மணங் கமழும் அகப்பொருளுக்குச் சிறந்த இலக்கிய மன்றோ திருக்கோவை? தெய்வ நிலை அடைந்த எவரும் தெய்வப் பெண் மக்களை இழித்துக் கூறார். அழகு, மகளிர் பெண்மையில் ஒழுகுகிறது. தாய்மையில் வழிகிறது; இறைமையில் பொங்கு கிறது; அழகுக் கடவுளுக்கு உறையுளாயுள்ள பெண்ணை வழிபடுவோரும் அழகு வண்ணராவர். குழந்தை குழந்தை அழகுக் கொழுந்து; அழகுத் தெய்வம். தெய்வம் அழகு. தெய்வ அழகுக் குழந்தை வழிபாடும் அழகுத் தெய்வ வழி பாடாகும். குழந்தையினிடம் தெய்வீகம் இருத்தல் மெய்ஞ் ஞானிகட்குப் புலனாதல் ஒருதலை. சேய்போ லிருப்பர் கண்டீர் மெய்ஞ்ஞானந் தெளிந்தவரே. - பட்டினத்தார் அந்தச் சமயத்தில் இயேசு இதற்கிசையத் திருவுளம் பற்றினதாவது; பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துப் பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை தோத்திரிக்கிறேன். - மத்தேயு : 12 :25. அவ்வேளையிலே சீஷர் இயேசுவிடம் வந்து; பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனென்று கேட்டார்கள். அவர் ஒரு பிள்ளையைத் தம்மிடம் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந் திரும்பிப் பிள்ளைகளைப்போ லானாலொழிய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவன். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். - மத்தேயு : 18:1- 5 அப்பொழுது சிறுபிள்ளைகளை அவர் தொடும்படி அவரிடம் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர் அதட்டி னார்கள். இயேசுவோ அதைக் கண்டு விசனப்பட்டு : சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணா திருங்கள்; கடவுள் ராஜ்யம் அப்படிப் பட்டவர்களுடை யது. சிறு பிள்ளையைப் போல் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் அதில் பிரவேசிக்கவே மாட்டா னென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களை ஆசிர்வதித்தார். - மார்க்கு : 10 :13 - 16 குழந்தை ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கும்; பாம்பையும் கயிற்றையும் பொதுவாகவே பார்க்கும்; சேற்றையும் சோற்றையும் சமமாகவே காணும்; இவ்வியல்பு தெய்வத் தன்மை கைவந்தவர்பால் விளங்குவது; குழந்தை யினிடத்திலும் விளங்குகிறது. குழந்தையின் உள்ளம் நரகமன்று; பரலோகம் . பரலோகம் பன்மையற்றது; ஒருமை இன்பமுடை யது. அப் பரலோக ஒருமை இன்பம் அழகுக் குழந்தையினிடம் இயற்கையாக அமைந்திருக்கிறது. அழகுக் குழந்தையை வழிபடு வோர் அழகுக் குணம் பரிணமிக்கப் பெறுவர். குழந்தையைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையின் மூளை பல வழியிலுஞ் சோதிக்கப் படுகிறது. சோதனையில் குழந்தையின் தெய்விகம் விளங்குகிறது. குழந்தையின் மூளையில் ஞானச் செல்வம் புதிதாக வலிந்து நுழைக்கப்பட வேண்டுவதில்லை என்றும், அதன்கண் ஞானச் செல்வம் இயற்கையாகவே படிந்து முகைபோல் கிடக்கிறது என்றும், ஆசிரியன் கலையுளங் கொண்டு குழந்தையுடன் ஆடியும் பாடியும் பேசியும் துணை புரிந்தால் அத்துணையாம் ஒளியால் அதன்பால் ஞானச் செல்வம் படிப்படியே தானே முகிழ்த்து மணம் வீசும் என்றும் இக்கால அறிஞர் கருதுகிறார். இதுவும் குழந்தையின் தெய்வத் தன்மையைவிளக்குவதென்று சொல்லலாம். நமது நாட்டில் ஒவ்வோராண்டும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள் கலைமகள் விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா முன்னை நாளில் குழந்தை வழிபாடாகவே கொண் டாடப்பட்டது. இந்நாளில் இவ் வழிபாடு நடைமுறையில் இல்லை. அந்நாளில் ஒரு வயது முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகள் திரட்டப்படும். ஒவ்வொரு நாளும் முறைமுறையாக ஒவ்வொரு குழந்தை பூசிக்கப்படும். இப் பொழுது கலைமகளிடத்தில் செல்வக் குழந்தைகள் சேர்க்கப் படுவதில்லை. கொலைமாக்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலை விழா கொலைவிழா வாகியது. பண்டை விழா பொருளுடை யது. அவ்விழா உணர்த்துவ தென்னை? அது குழந்தை நாகரிகத்தை உணர்த்துவது. நாகரிக உலகில் நுழைந்து பார்த்தால் அது பன்முகங் காட்டும். நாகரிகத் துறைகள் பலபட்டுக் கிடக்கின்றன. அவை களை மூன்று கூறிட்டுக் கொள்ளலாம். மூன்று எவை? முதுமை நாகரிகம், காளை நாகரிகம், குழந்தை நாகரிகம் என்பன. மக்கள் பருவம், குழந்தை காளை முதுமையென இவர்ந்து செல்லும். நாகரிகம் அவ்வாறு செல்வதன்று. அது தலைகீழாக மாறிவரும் பண்புடையது. விருத்த குமார பாலரான படலம் என்றொரு தலைப்புத் திருவிளையாடற் புராணத்திலிருக்கிறது. நாகரிகம் அம்முறையில் நிகழ்வது, அது முதுமை, காளை, குழந்தை என்று முத்திறமுடையது. முதுமை நாகரிகம் அறியாமை இருள் சூழ்ந்த காலத்தில் கருக்கொண்டது. மக்கள் குடலும் பல்லும் விலங்கின் குடலைப் போலவும் பல்லைப்போலவும் இருந்த காலத்தில் உருக்கொண்டு வளர்ந்தது. அந்நாகரிகத்தில் மாக்கள் தொகையே பெருகி யிருக்கும். காளை நாகரிகம் முதுமை நாகரிகத்தைக் கடந்தது. அதன் ஆணிவேர் மூர்க்கம். காளை நாகரிகம் அரக்க நாகரிகம் என்றும் வழங்கப்படும். அரக்க நாகரிகம் இதிகாச புராணங்களில் பதிவு பெற்றிருக்கிறது. திரிபுரத்தசுரர், சூரபன்மன், இரணியன், இராவணன் முதலியோரின் வாழ்க்கைகள் அந்நாகரிகத்துக்கு எடுத்துக் காட்டுகளாக நிற்கின்றன. அதன் விளைவுகள் பல பதிகளை ஒரு நொடியில் அழிக்கவல்ல விமானங்கள், அதிர சதிரங்கள், மந்திரங்கள் முதலியன. அக்கினி, வாயு, வருணன் முதலியோர் காளை நாகரிகத்தின் ஏவலாட்கள். குழந்தை நாகரிகம் காளை நாகரிகத்தைக் கடந்தது. அந்நாகரிகம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை வாழ்க்கையுடையது; அமைதி நாட்டமுடையது; கலையை வளர்ப்பது; எல்லோரும் ஓருயிர் என்னும் உண்மையை ஓம்புவது; எங்கணும் அழகுக் காட்சியை வழங்குவது. இம்மூன்றனுள் முதலாவது, இப்பொழுது உலகில் பெரும்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபெரிதும் இறந்துபட்டதென்றே கூறலாம். இரண்டாவது, உலகில் ஒரு பகுதியிலேயே இப்பொழுது பெரிதும் ஆட்சிபெற்றிருக்கிறது. எப் பகுதியில்? மேலைப்பகுதியில் என்க. மூன்றாவது, கீழைப் பகுதியில் ஆக்கம்பெற்று நீண்ட காலமாயிற்று. மேலை நாட்டில் காளை நாகரிகம் சண்ட தாண்டவ மிடுகிறது. அந்நாடு இவ்வேளையில் கொலைக்களனா யிருத்தல் கண்கூடு. பிணமலைகளும், இரத்தக் கடல்களும் அங்கே காட்சியளிக்கின்றன. ஆகாய விமானங்களும், நீர்மூழ்கிகளும், எறிகுண்டுகளும், விஷவாயுக்களும், இன்ன பிறவும் அந்நாட்டின் விளைவுகளாய்விட்டன. அக்கினி, வாயு, வருணன் முதலியோர் வேலைகளை மின்சாரம் செய்கிறது. காளை நாகரிகம் நமது நாட்டில் கோர நர்த்தனம் புரிந்த காலத்தில் நாடு அறியாமை இருளில் வீழ்ந்தது; மன்பதை மருட்கள்ளை அருந்திக் கொலைவெறி கொண்டது. அவ் வேளையில் ஒரு தர்மபானு உதித்தது. அப் பானு முதல் தீர்த்தங்கரர் என்னும் விருஷபதேவர். அவருடன் குழந்தை நாகரிகமும் பிறந்தது. குழந்தை நாகரிகத்துக்கு விதை விதைத்தவர் விருஷபதேவர். விருஷப பானு அஹிம்சை தயை முதலிய கதிர்களைக் கான்றியது. நாட்டில் அறியாமை இருள் அகன்றது. மன்பதை அருளமுதம் பருகிற்று. அதற்குக் கொல்லா நெறி விளங்கிற்று. விருஷபதேவர் காலம் சரித்திர உலகுக்கு இன்னும் எட்டவில்லை. அவர் கிறிதுவுக்கு முற்பட்டவர்; சோக்ரதர்க்கு முற்பட்டவர்; புத்தருக்கு முற்பட்டவர். பல் லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் விருஷபதேவரால் அஹிம்சா தர்ம விதை விதைக்கப்பெற்றது. அதனால் குழந்தை நாகரிகம் பரவலாயிற்று. நாடு குழந்தை நாகரிகத்தை ஏற்றமையால், அது கடவுளையும் குருவையும் குழந்தையாக வழிபட முற்பட்டது. கடவுளைப் பாலசுப்பிரமணியம் என்றும், பாலகிருஷ்ணன் என்றும் நாடு வழிபட்டு வருகிறது; திருஞான சம்பந்தர் உள்ளிட்டவரைக் குருவாகக் கொண்டது. மேலை நாட்டிலும் ஒரு கீழைநாட்டு அன்புக்குழவி ஒரு கன்னியின் கையில் பொலிகிறது. அது மேற்கரின் கண்ணுக்குப்படுகிறது. ஆனால் அவர் கருத்தில் படியவில்லை. அது கருத்தில் படிந்திருந்தால், அந்நாட்டில் காளை நாகரிகம் சாய்ந்திருக்கும். யுத்தங்களும் மகாயுத்தங்களும் நடைபெறமாட்டா. இந்நாளில் நமது நாட்டிலும் குழந்தை நாகரிக வளர்ச்சிக்குச் சிறிது முட்டு நேர்ந்திருக்கிறது. காரணம் மேலைநாட்டு நாகரிகக் கூட்டுறவு என்னலாம். இச்சமயத்தில் நாம் என் செய்தல்வேண்டும்? நமது நாட்டு நாகரிகத்தைக் காத்தல்வேண்டும். அதை மேலை நாட்டிலும் புகுத்த முயலல்வேண்டும். காளை நாகரிகத்தில் மூழ்கியுள்ள மேலை நாடு நமது நாட்டுக் குழந்தை நாகரிகத்தை ஏற்குமா? ஏற்கவும் நினைக்குமா? என்று ஐயங்கொள்ளற்க. இப்பொழுது நடைபெற்றுவரும் கோர யுத்தம் மேலை நாட்டினர்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தாமற் போகாது. காளை நாகரிகத்தின் கொடுமைகளை உணர்த்தவே இயற்கை அன்னை கோர யுத்தத்தைத் தோற்றுவித்திருக்கிறாள். இந்த யுத்தம் ஐரோப்பிய நாகரிகத்திலே மக்களுக்கு வெறுப்பூட்டு மென்பதில் ஐயமில்லை. இயற்கை அன்னை தன் கடனைச் செய்கிறாள்; நாம் அவள் வழி நின்று நமது கடனை முறையே செய்தல் வேண்டும். மக்கள் அழகில் உளங்கொண்டு, அதைக் கடவுளாக நினைந்து, குழந்தை அழகில் கருத்திருத்தி அதில் ஆழ்தல் வேண்டும். ஆழ்ந்தால் நெஞ்சம் அழகாகும்; உலகம் அழகாகும். கலைகள் அழகுக் கடவுள் தனி இயற்கையில் எவ்வண்ணம் பொலிந்து உருவங்கள் வாயிலாகத் தன்னை உணர்த்துகிறதோ, அவ்வண்ணமே இயற்கைச் சார்புபெற்ற கலைகளிலும் பிற வற்றிலும் பொலிந்து தன்னை உணர்த்தும். இயற்கைச் சார்பு பெற்று, அதன் தத்துவங்களையும் தம் அகத்தே தாங்கி நிற்கும் கலைகளெல்லாம் இயற்கையின் பாற்பட்டனவே. அவை செயற்கையல்ல. கலைகள் இயற்கைக் குழவிகள். அவைகளிடம் இயற்கைக் கூறுகள் இல்லாமற் போகுமோ? இயற்கைச் சார்புகொண்ட கலைகள் பலவகை. அவை களை இங்கே இசை என்றும், காவியம் என்றும், ஓவியம் என்றும் முக்கூறுபடுத்திக் கொள்கிறேன். இசை முதலாவது இசை. இசைக்கு மூலம் நாதம். நாதம் ஒரு தத்துவம். அதற்கு மேற்பட்ட தத்துவம் இல்லை. 1அதற்கு மேல் ஒளிர்வது பரம்பொருள் ஒன்றே. பரம்பொருளுக்கு மிக அணித்தாக நாதம் இருத்தலால், அது, நாதபிர்மம் என்றும், சப்தபிர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்றார் வன்றொண்டர். நாத ஒலி கேளாதது. அதைக் கேட்பதாக்க, மனம் கரணம் புலன் பொறி முதலியன அமைந்துள்ளன. நாதம் தனித்தும் இருப்பது; மற்றத் தத்துவங்களுடன் கலந்தும் இருப்பது. தனி நாதத்தினின்றும் எழும் இசையே தூயது; முழுமையது. மற்றத் தத்துவங்களுடன் கலந்துள்ள நாதத்தினின்றும் எழுவது தூய இசையாகாது; முழுமையதுமாகாது. கலப்பு நாதம் அவ்வத் தத்துவ இயல்புக் கேற்றவாறு இசையை எழுப்பும். அதனால் அது தூயதாகவும் முழுமையதாகவும் எழுவதில்லை. தனித்த நாதம் வரை சென்று திரும்பும் பயிற்சி பெறும் ஒருவனே சிறந்த இசைப் புலவனாவன். 2யோகத்தின் முடிந்த எல்லை தனி நாதம் என்று யோக நூல்கள் கூறுகின்றன. தனி நாதம் வரை செல்லாது சிற்சில தத்துவம்வரை சென்று ஆங்காங்குள்ள கலப்பு நாத உறவுகொண்டு திரும்புவோன் நல்லிசைப் புலவனாகான். தனி நாத இசை, கலப்பு நாத இசை என்னும் இரண்டில் முன்னையது தன்னை முழக்கும் ஆற்றல் வாய்ந்த ஒருவனையும் பரம் பொருளுடன் ஒன்றச் செய்யும்; பிறரையும் பிறவற்றையும் அதனுடன் ஒன்றச் செய்யும். இயற்கையிலே அருவி, கடல், மூங்கில், சங்கு, வண்டு, குயில், வானம்பாடி முதலியன இசை முழக்குகின்றன. அவ்விசையில் ஈடுபட்ட மனிதன், அதன் வயமாகியதும், அவனது மனம் புறத்தே ஒடுங்கி, நடுவில் நின்று, அடியிற் பாய்ந்து மறைந்து, நாதத்தின் கூட்டுறவை அவனுக்கு நல்குகிறது. நாதமூலங் கண்ட மனிதன் இசையின் இயலை உணர்ந்து, இயற்கை வழியே சுரம் முதலிய இசைக் கூறுகளைப் படிப்படியே வகுத்தான். இயற்கை இசை, மனிதன் குரல் - குழல் - 1யாழ் - வீணை முதலிய கருவிகள் வாயிலாக வெளியாகி இன்பூட்டுகிறது. சுரத்தில் அவம் பேசப்படுகிறது. அஃதென்னை? அவசுரம் இசையில் போதிய பயிற்சி இல்லாதவனிடம் உண்டாவது. இயற்கையில் அவசுரம் இல்லை. நாதமூலங் கண்ட இசை வாணனுக்குக் காகசுரமும் கழுதை சுரமும் நாதசுரமாகவே இனிக்கும். நாதமூலங் காணாதார் கூற்று ஏற்கத் தக்கதன்று. கடவுள் அழகு. அதற்கு அணித்தாக உள்ளது நாதம். நாதம் அழகின் சேர்க்கையால் அழகு வண்ணமாகி மற்றத் தத்துவக் காரியங்களாய இயற்கைக் கூறுகட்கெல்லாம் அழகை உதவிவருகிறது. நாதம் அழகுவண்ணம்; இசை மயம். நாத இசையும் அழகாகுமன்றோ? இசைவாணர் எத்தகையராயினும் அவர் முகத்தில் அழகு ஒளிசெய்தல் காண்கிறோம். இசைமனம் அழகுபெற்று முகத்துக்கும் விருந்து செய்கிறது. இசையையொட்டியது நாட்டியம். நாட்டியம் ஒவ்வொரு நரம்பையும் பயிற்சியால் பண்படுத்தலால், நரம்புகள் நன்னிலை எய்திக் குருதியோட்டத்தை ஒழுங்குபடுத்தி அழகைப் பொலி விக்கும். இசையும் அழகும் தொடர்புடையன. இத்தொடர்பு இசையைத் தெய்விகமாக்குகிறது. இசையின் தெய்விகம் செயற்கரிய செய்யும். பாணன் காட்டின் வழியே செல்கிறான். மதயானை வெறிகொண்டு ஓடிவருகிறது. பாணன் யாழை முழக்கினான். 2யாழிசை யானையை வயப்படுத்தியது. மதயானை இசை கேட்கிறது. அதன் மனம் மாறியது. இசைக்குப் பாம்பும் படம் விரித்து ஆனந்தக்கூத்தாடும். சங்கரனுக்கு ஆபரணம் எது? பாம்பு. பாம்பு சங்கரனுக்கு அணித்தாகவுள்ள நாத இசை கேட்டு (இசை) ஆபரணமாகியது. இதனால் இராகங்களுள் ஒன்று சங்கராபரணம் என்ற பெயர் பெற்றதுபோலும்! இசைக்குக் கனியாத கல்லுமிராது; மரமுமிராது. இசைக்குக் கனியாத மனிதன் இருப்பனேல் அவனை என் னென்று கூறுவது? அவன் கல்லினும் வலியன்; மரத்தினும் வைரன்; கொலைஞன்; பாவி; அரக்கன். இசையைப்பற்றிய தெய்விகக் கதைகள் பல உண்டு. அவை யாவும் இசையின் மாண்பை மக்கள் உணர்ந்து நடப்பதற்கென்று புனையப் பெற்றன. ‘ïir ghl‰FÇaJ; tÊgl‰FÇanjh? என்று சிலர் நினைக்கலாம். இசையைப் 1பாடுவதும் வழிபாடாகும். வழி பாடென்பது பூவெடுத்து மாலை கட்டி இறைவனுக்குச் சூட்டிக் கோயிலை வலம்வந்து கையால் கும்பிடுவது மட்டுமன்று. மனத்தால் அழகுக் கடவுளை நினைப்பதும், அதனுடன் ஒன்றுவதும், வாயால் அதன் புகழை இசையாகப் பாடுவதும், இன்ன பிறவும் வழிபாடுகளே யாகும். இசை வழிபாடு செய்து பேறு பெற்றவர் கதைகள் பலவுண்டு. அறுபான்மும்மை நாயன்மாருள் இசை முழக்கிப் பேறு பெற்றவரும் இருக்கின்றனர். ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர் முதலியோர் இசைவழிபாடு செய்தவர். இசை வழிபாட்டுச் சிறப்பைப் பாகவதம், பெரிய புராணம் முதலிய நூல்களிற் பார்க்க. காவியம் இனிக் காவியக் கடலில் விழலாமா? அக்கடலில் விழுந் தால் எழுதல் முடியுமோ? நீர்க்கடலின் ஆழத்தைக் காண்டல் இயலும். காவியக் கடலின் ஆழத்தைக் காண்டல் இயலாது. ஆதலின் ஓதத்தில், சிறிது நேரம் நின்று பார்த்துப் பின்னே ஓவிய மலையிலேற முயலுவோம். காவியம் கோயில்; இயற்கைக் கோயில். அது கல்லால் மண்ணால் எடுக்கப்படுவதன்று; பாட்டால் அமைவது. உரை நடையிலும் பாட்டு அமையும். நடை முதலிய கட்டுகள் பாட் டுக்கு வேண்டுவதில்லை. பாட்டு மேக ஓட்டம் போல் ஓடுவது. இப்பாட்டு உரிமையுடையது. இப்பாட்டாலாகுங் காவியமும் உரிமையுடையதாகும். பாட்டுக்கும் காவியத்துக்கும் முதலாக வுள்ள இயற்கை உரிமையுடையது. காரணம் எவ்வியல்பினதோ அவ்வியல்பினதாகவே காரியமும் அமையும். பாட்டு இயற்கைப் படம் என்று சொல்லப்படுகிறது. படம் என்றால் புகைப்படமா? எழுத்துப் படமா? எழுத்தோவியப் படமா? ஓர் அழகிய பசு நிற்கிறது. அதை ஒருவன் புகைப்படத்தில் இறக்குகிறான்; மற்றொருவன் எழுத்தில் இறக்குகிறான்; இன்னொருவன் எழுத்தோவியத்தில் இறக்குகிறான். இம் மூன்றனுள் எது இயற்கைப் படம்? புகைப்படம் ஒரு நொடியில் எடுக்கப்படுகிறது. இப் படமெடுப்போன் நெஞ்சம் பசுவினுள் படிவதில்லை. அவன் நோக்கம் கருவியின்மீது செல்லும். அவனால் எடுக்கப்படும் புகைப்படத்தில் பசுவின் புறத்தோற்றம் மட்டும் காணப்படும்; பசுவின் இயல், அகம் முதலியன விளங்குவதில்லை. பசுவின் இயல் முதலியவற்றை உணர்த்தாத ஒன்று எப்படி இயற்கைப் படமாகும்? எழுத்துப் படத்தில் எழுத்துக் கூட்டங்கள் காணப்படுகின்றன; சொல்லடுக்குகள் காணப்படுகின்றன. ஆனால் பசுவைக் காணோம். இப்படம் ஓவியக் கண்ணனால் எழுதப்பட்ட தன்று. எழுத்துஞ் சொல்லும் ஒருமைப்பட்டு ஓவியமாகிப் பொருளைப் புலப்படுத்தல் வேண்டும். ஓவியம் விளங்காத எழுத்துப்படம் இயற்கையாகாது. எழுத்தோவியப் படத்தில் பசு காட்சியளிக்கிறது. பசுவின் இயல், அகம் முதலியன விளங்குகின்றன. ஓவியம் எழுத்தை மறைத்துப் பசுவை உணர்த்துகிறது. அதனால் பசுத் தோற்றமும், இயலும், பிறவும் உள்ளத்தில் உறுகின்றன. அப்பசுவின் காட்சியால் விளையத்தக்க பயன்களெல்லாம் விளைகின்றன. காரணம் என்ன? பசுவை எழுத்தோவியன் நோக்குகிறான்; ஊன்றி நோக்குகிறான். பசு அவன் மனத்தில் படிகிறது. பசுவும் அவன் மனமும் ஒன்றாகின்றன. அவன் மனம் பசுவாகிறது. அம்மனம் எண்ணமாகி எழுத்தாகி ஓவியமாகிப் பசுவைக் காட்டுகிறது. பசு ஓவியன் மனம் புகுந்து மீண்டும் வெளியாகிறது. உயிருள்ள பசு காட்சியளிக்கிறது; பசுவின் இயல் முதலியனவும் விளங்கு கின்றன; பயன்களும் விளைகின்றன. எழுத்தோவியத்தின் பெற்றி என்ன? பெற்றிமையுடைய எழுத்தோவியம் இயற்கைப் படம்; பாட்டு. பாட்டு ஓவியம். எவ்வோவியம்? எழுத்தோவியம். அது வரி ஓவியமன்று; வடி ஓவியமன்று. எழுத்தோவியமும் பிற ஓவியமும் வடிவத்தில் மட்டும் வேற்றுமைபெறும்; பொருளில் வேற்றுமை பெறுவதில்லை. ஒரு மயிலை ஒரு பாவாணனும் எழுதுகிறான்; ஓர் ஓவியனும் வரைகிறான். இரண்டும் வடிவில் வேற்றுமை அடைகின்றன; ஆனால் பொருளில் வேற்றுமை அடைவதில்லை. இரண்டும் மனத்தில் மயிலையே நிறுத்தும். இங்கே பாவாணனது பாட்டென்னும் எழுத்தோவியத்துக்கும், மற்ற வரி ஓவியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஓர்க. இயற்கைப் படங்களாகிய பாட்டுக்களிற் சிலவற்றை யாதல் எடுத்துக்காட்ட இயலாமை குறித்து வருந்துகிறேன். தாலிபுலாக நியாயம் பற்றி ஆங்கொன்று ஈங்கொன்று எடுத்துக் காட்டு கிறேன். (வையை, பாண்டியன் சேனைபோன்று காட்சியளிக்கும் பாட்டு. இது பரிபாடலிலுள்ளது - 22) ஒளிறுவாட் பொருப்ப னுடல்சமத் திறுத்த களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர அரசுபடக் கடந்த வானாச் சீற்றத்தவன் முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக் கண்ணொளி ரெஃகிற் கடியமின் னியவன் வண்மைபோல் வானம் பொழிந்தநீர் மண்மிசை ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன் தானையி னூழி ... தாவூக் கத்திற் போன நிலமெல்லாம் போரார் வயல்புகுத *** ( யானை வரிசை : மேக வரிசை; முரசு முழக்கம்: இடி முழக்கம்; பகைவர்மீது பொழியும் அம்புகள்: மழைத் தாரைகள்; வேலொளி: மின்னல்; மன்னவன் வண்மை: மழை பெய்தல்; படை: வெள்ளப் பெருக்கு ) (கோவலனும் கண்ணகியும் மதுரைநோக்கிப் புறப் பட்டனர். வழியில் கவுந்தியடிகளைக் கண்டனர். அடிகள் வழி வளங் கூறினர். அதை இளங்கோ அடிகள் பாட்டோவியமாக வரைந்துள்ள பெற்றி நெஞ்சைக் கவர்கிறது. ஓவியத்துள் சீலம் சீவனெனச் சிறந்து விளங்குதல் உன்னற்பாலது. இயற்கை வருணனையில் சீலத்தைத் திகழவைத்த இளங்கோவின் தமிழ் வாழ்க.) கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக் கேதந் தருவன யாங்கும்பல கேண்மோ வெயினிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பக நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் கையறு துன்பங் காட்டினுங் காட்டும் உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்தேம் பழம்பகை முட்டினும் முட்டும் மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்குங் கயனெடுங் கண்ணி காதற் கேள்வ வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப் பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயிற் கலங்கலும் உண்டிக் காரிகை யாங்கட் கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து கரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் அடங்கா வேட்கையின் அறிவஞ ரெய்திக் குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும் குறுந ரிட்ட குவளையம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி அறியா தடியாங் கிடுதலுங் கூடும் எறிநீ ரடைகரை இயக்கந் தன்னில் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றா தூழடி யொதுக்கத் துறுநோய் காணில் தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா வயலுஞ் சோலையும் அல்ல தியாங்கணும் மயல்படக் கிடந்த நெறியாங் கில்லை நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு குறியறிந் தவையவை குறுகா தோம்பென [nrhiy¢ சூழல். வள்ளிக்கிழங்கு தோண்டி எடுக்கப் பெற்ற குழிகள். அவைகளில் உலர்ந்த பூக்கள்நிறைவு. மேல் நோக்கிச் சென்றால் குழியில் கால் வழுக்கித் துன்புறும்; (பூச்சிகள் துன்புறும்). கீழ்நோக்கிச் சென்றால் பழக்கொத்துக்கள் தாக்கும்; (மொய்த்துள்ள வண்டுகள் துன்புறும்). வெள்ளிடையே போனால் மஞ்சள் இஞ்சி பலாப்பருக்கை முதலியன சருகுகளில் மறைந்து உறுத்தும். வயல்வழியே போனால் கால்வாய்களில் நீர் நாய்களும் பலவித மீன்களும் மனக் கலக்கத்தை உண்டாக்கும். (நடை யொலி கேட்டு அவைகள் அப்படியும் இப்படியும் ஓடும். அவ் வேளையில் மீன்கள் நீர்நாய்களுக்கும், சிறுமீன்கள் பெருமீன் களுக்கும் இரையாகும். அக்காட்சி நெஞ்சைக் கலக்கும்.) கரும்புத் தோட்டம் ; தேனடைகள், தேனொழுகிப் பாயும் பொய்கை. நீர் வேட்கையால் பொய்கை நீரைக் குடித்தல் நேரும்; (தேன் கலந்த நீர் கள்ளன்றோ?) குவளைப் பூக்களுள் வண்டுகள். அவைகள் மிதியுண்டு சாகும். அடைகரை; நண்டு நத்தை முதலியவற்றின் உலா; அவை நடுங்கி ஓடும்; மிதியும் உண்ணும். சீலத்துக்குக் கேடுறாதவாறு எச்சரிக்கையாக el¡f.] (கட்டியங்காரன், சச்சந்தன் என்னும் மன்னனை வளைத்துக் கொண்டான். அப்பொழுது மன்னன் மனைவி விசயை கரு வுற்றிருந்தாள். மன்னன் அவளை மயிற்பொறியிலேற்றி வேறிடஞ் செல்லுமாறு விடுத்தான். போரில் சச்சந்தன் தோல்வியுற்று மாண்டான். அச் செய்தியை முரசொலியால் உணர்ந்த விசயை மூர்ச்சை யடைந்தாள். மயிற்பொறி மேலும் அவளால் செலுத்தப்படவில்லை. அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது. விசயை தெளிவு பெற்றாள்; கருவுயிர்த்தாள். ஓர் ஆண் குழவி(சீவகன்) பிறந்தது. குழவி சுடுகாட்டில் பிறத்தல் நேர்ந்தமையை அவள் நினைந்து நினைந்து வருந்திக் கண்ணீர் உகுத்தாள். பின்னே சுடுகாட்டுத் தெய்வமொன்று விசயையின் தோழிபோல வேடந்தாங்கி அவளிடம் போந்து, இங்கே இக்குழவியை எடுத்துச் செல்ல ஒருவன் வருவான். குழந்தையால் பின்னாளில் கட்டியங்காரன் கொல்லப்படுவான். நாம் மறைந்து நிற்போம் என்றாள். விசயை மறைந்து ஒரு கொம்பைப் புல்லி, ஒரு கண்ணால் குழந்தையை நோக்கி நின்றாள். விசயை குழந்தையை நோக்கிச் சுடுகாட்டில் வருந்தியதும், கொம்பைப் புல்லி ஒரு கண்ணால் அதை நோக்கியதும் சிந்தாமணியில் பாட்டுருவம் பெற்றுள்ள காட்சியை நோக்குக.) வெவ்வா யோரி முழவாக விளிந்தா ரீமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல் போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே. நல்வினை செய்தி லாதேன் நம்பிநீ தமியை யாகிக் கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப் புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோல் ஒல்கியோர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். (இராமபிரான் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் கௌசலை யின் கருத்திற் படிந்திருந்தன. அவை அவள் தன் கண்ணில் காட்சியாதற்கு முன்னரே இராமபிரான் சிற்றன்னை விரும்பிய வாறு காடுநோக்க ஒருப்பட்டு அன்னையினிடம் விடைபெறச் சென்றனர். அந்நிலையில் கௌசலையின் கருத்துங் கண்ணுங் கண்ட காட்சியைக் கம்பர் படமெடுத்துக் காட்டுகிறார்.) குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் குடையு மின்றி இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் னிரங்கி யேக மழைக்குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வருமென் றென்று தழைக்கின்ற வுள்ளத் தன்னாள் முன்னொரு தமியன் சென்றான். புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் என்கொல் என்னும் ஐயத்தாள் நளின பாதம் வளைந்தபொற் கழற்கால் வீரன் வணங்கலுங் குழைந்து வாழ்த்தி நினைந்ததென் இடையூ றுண்டோ நெடுமுடி புனைதற் கென்றாள். (கார்காலம் சேக்கிழாரின் எழுத்தோவியத்தில் அமைந் துள்ள திறத்தை முன்னுக.) நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள். அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புலரப் பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத் துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால் குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும். (இயற்கை வழியே இறையைப் பாடுதல் திருஞான சம்பந்தர் வழக்கம். திருவீழிமிழலையில் இயற்கை நாடகமும், இயற்கைத் திருமணமும் சம்பந்தர் உள்ளத்தைக் கவர்ந்தன. அவை பாட்டாயின.) உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் ஆங்காங்கே நின்றான் கோயில் வரைசேரும் முகிழ்முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை யாமே. அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் கோயில் தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத் தீயுள் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலை யாமே. (நக்கீரர் பாவாலும் உரையாலும் எழுத்தோவியம் வரை வதில் வல்லவர். இங்கே ஓர் உரை ஓவியம் காண்க.) *** சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலோடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக் குயில்கள் இசை பாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய் குன்றின்மேல், விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதொர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலரணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறை விரிவேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்த இடத்து, மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூநாறு கொழு நிழற்கீழ்க் கடிக்குருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொன் சிகரங்களின் முகடு தொடுத்து ஞான்று வந்து இழிதரும் அருவி, பொன் கொழித்து மணி வரன்றி மாணிக்கத் தொடு வயிரமுந்தி அணிகிளரருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ்முரல, வரிக்குயிலும் கிளியும் பாட, தண்தாது தவிசு படப் போர்த்த தோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக்கலாவம் கொள விரித்து, முளையிளஞாயிற்று இளவெயில் எறிப்ப, ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள். அப்பால், தலைமகனும் பற் பன்னூறாயிரவர் கூர்வேல் இளைஞரொடு நளிர்மாமலைச் சாரல் வேட்டம்போய் விளையாடுகின்றான். ஆண்டெழுந்ததோர் சுடுமானின் பின் ஓடி, காவலிளைஞரைக் கையகன்று, நெடுமான்தேரொடு பாகனை நிலவு மணல் கானியாற்று நிற்கப் பணித்து, தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன் ஞாணிற் பிணித்து, கடிகமழ் நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணம் அயர, அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன்பொழிலிடைப் பரந்து நாற, அடுசிலையொடு கணை ஏந்தி வடிவுகொண்ட காமன் போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழில் புகும். *** - இறையனார் அகப்பொருள் உரை : 2 இப்பாட்டுக்களை நோக்குங்கள்; இவைகளிலே நெஞ்சை விடுங்கள். நெஞ்சம் ஆழ்ந்து ஆழ்ந்து சென்று அவ்வப்பாட்டின் இயற்கைக் கூறுகளில் படிந்து நிற்கும். இதனால் பாட்டுக்கும் இயற்கைக்கும் உள்ள இயைபு நன்கு விளங்கும். காவியக் கோயில் இயற்கைக் கூறுகள் பலதிறத்தன. அக்கூறுகளெல்லாம் பாக்களில் இறங்குகின்றன. பாக்களால் காவியம் ஆகிறது. காவியம் இயற்கைக் கோயில். இயற்கையை வழிபட்டால் என்னென்ன நலன்கள் விளையுமோ அவ்வளவு நலன்களும் காவிய வழிபாட்டிலும் விளையும். காவிய வழிபாடென்பது காவியத்தைக் கையால் கும்பிடுவதன்று; அதன்வழி நிற்க உறுதிகொண் டொழுகுவது. காவியத்தின் வழி வாழ்க்கையைப் படுத்துவது காவிய வழிபாடாகும். காவியத்தில் என்ன இல்லை? இயற்கையில் என் னென்ன உண்டோ அவையெல்லாம் காவியத்திலும் உண்டு. இயற்கையோ டியைந்த வாழ்க்கைக்குக் காவியம் பெருந்துணை செய்யும். தனிச் சிறப்பு காவியம் ஒரு நாட்டில் ஒரு மொழியில் மட்டுந் தோன்றுவ தன்று. அஃது எந்நாட்டிலும் எம்மொழியிலுந் தோன்றுவது. உலகில் பலவிடங்களில் காவியந் தோன்றியிருத்தல் கண்கூடு. காவியம் பிறவாத இடம் நாகரிகம் அற்றதாகும். நாகரிக நாடெல்லாம் காவியம் பெற்றே இருக்கும். காவியம் நாகரிகத்தின் அறிகுறிகளுள் ஒன்று. உலகம் நாடுகளால் ஆக்கப்பட்டது. நாடுகள் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு வேறுபட்டிருக்கின்றன. நாடுகளைப் போலவே காவியங்களும் வேறுபட்டு நிற்கும். வேறுபாடு காவியத்தின் தனிச் சிறப்பை உணர்த்துவது. கலைகளில் இருவகை கலைகளில் இருவகையுண்டு. ஒருவகை பொதுமையின் பாற்பட்டது; மற்றொரு வகை சிறப்பின்பாற்பட்டது. விஞ் ஞானம் முதலியன பொது; காவியம் முதலியன சிறப்பு. விஞ் ஞானத்தை எம்மொழியிலும் பெயர்த்துக் கொள்ளலாம். காவியத்தை அவ்வாறு பெயர்த்துக் கொள்ளுதல் இயலாது. காவியம் பெரிதும் பாட்டால் அமைவதால், அது மொழிபெயர்ப்புக்கு அடங்குவதில்லை. எவ்வெம்மொழியில் காவியம் அமைகிறதோ அவ்வம்மொழியிலேயே அதன் இன்பத்தை நுகர்தல் கூடும். மொழிபெயர்ப்பில் அவ்வின்பத்தை நுகர்தல் இயலாது. கம்பரை ஆங்கிலத்திலும், ஷேக்பியரைத் தமிழிலும் பெயர்த்தால், அப்பெயர்ப்பில் ஒருவாறு கதைகளே அடங்கிவரும்; காவிய இன்பம் அடங்கிவராது. காவிய இன்பம் அவ்வம்மொழியிலேயே தேங்கி நிற்கும். இதனால் காவியம் தன் தாய்மொழியைக் காக்கும் திறனுடையதென்பது விளங்குகிறது. இது காவியத் தனிச் சிறப்புக்களில் ஒன்று. ரவீந்திரநாதர் இங்கே சிலர் எண்ணம் கீதாஞ்சலிமீது செல்லலாம். ரவீந்திரநாதரால் முதல் முதல் கீதாஞ்சலி வங்கத்தில் எழுதப்பட்டது; பின்னே அவராலேயே ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இரண்டுக்கும் ஆசிரியர் ஒருவரே. ஆசிரியர் வங்கத் திலும் புலவர்; ஆங்கிலத்திலும் புலவர். ஆதலின் அவர் மொழி பெயர்ப்பில் இறங்கினாரில்லை. ஆங்கிலக் கீதாஞ்சலி மொழி பெயர்ப்பு நூலன்று. இரண்டு கீதாஞ்சலிகளில் விழுப்ப முடையது, முதல் முதல் வங்கத்திலெழுதப்பட்டதே என்று அறிஞர் கருதுகின்றனர். கீதாஞ்சலி வேறு மொழிகளில் மற்றவரால் பெயர்க்கப்பட்டது. அவைகளில் கீதாஞ்சலியின் கவி இன்பம் தேங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. காவியக் காப்பு தட்ப வெப்ப நிலைமைக்கேற்றவாறு நாடுகள் வேறுபடு கின்றன. அவைகளின் வழக்கவொழுக்கங்களும் வேறுபடுகின் றன. நாடும் அதற்குரிய வழக்கவொழுக்கங்களும் பிறவும் காவியங்களாகப் பரிணமிக்கின்றன. பரிணாமக் காவியங்கள் வெவ்வேறுபட்டே நிற்கும். காவியம் தன் மொழியைக் காப்பது போலத் தன் நாட்டையும், நாட்டின் வழக்கவொழுக்கங் களையும், பிறவற்றையுங் காத்துவரும். இது காவியத்தின் மாண்பு. இன்னுஞ் சில உண்டு. காலமில்லை! என்செய்வேன்! முன்னாளும் இந்நாளும் இத்துணைச் சிறப்பு வாய்ந்த காவியங்கள் பெரிதும் எந்நாளில் பெருகின? என்ன பதில்? பழைய நாளில் பழைய நாளில் என்ற பதில் வரும். இதற்கு மாறுபட்ட கருத்துடையோர் இங்கிருப்பரோ? *** ஒருவரையும் காணோம்; எங்கும் இரார் என்றே நம்புகிறேன். இக்கால உலகம் காவிய நாட்டம் பெறாமைக்கு என்ன காரணம்? இக்கால நாகரிகமே காரணம். காவிய நாட்டத்துக்கு அமைதி வேண்டும். அமைதிக்கு இயற்கையோ டியைந்த வாழ்வு வேண்டும். இரண்டும் இக்கால நாகரிகத்தில் அருமை. இக்கால நாகரிகம் இயந்திர வாழ்வையும் சாம்ராஜ்ய நசையையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கு கிறது. இது மக்களை இயற்கையோ டியைந்து வாழுமாறு விடுவதில்லை. மக்கள் இயற்கையை விடுத்து விலகி நிற்கிறார் கள். இவர்கள் வாழ்வில் அமைதி ஏது? அமைதி குலைந்த வாழ்வு காவிய நாட்டம் பெறுமோ? இப் பொல்லாத நாகரிகத் தில் எங்கணும் பரபரப்பு! எங்கணும் ஆவேசம்! எங்கணும் வெறி! எங்கணும் பொறாமை! போர்! எங்கணுங் கொள்ளை! கொலை! இக்கருங்காலத்தில் இயற்கைக் கோயில் - 1பாட்டுக் கோயில் - காவியக் கோயில் - வழிபாடு தேவை; பெரிதுந் தேவை; அதனால் அமைதி விளையும். இயற்கையோ டியைந்த வாழ்வு அரும்பும். காவியம் வாழ்க! ஓவியம் ஓவியம் நம் முன்னிற்கிறது. ஓவியம் சிறந்தது. மிகச் சிறந்தது. அலைவுறும் மனத்தை நிலைபெறுத்தும் பேராற்றல் ஓவியத்துக்கு உண்டு. முன்னே பேசப்பட்ட உருவங்களில் ஏதாவதொன்றில் மனம் ஈடுபடும். ஒன்றிலும் ஈடுபடாத மனம் இருப்பின், அஃது ஓவிய உருவத்தில் ஈடுபட்டே தீரும். ஓவிய உருவத்திலும் ஈடுபடாத மனமொன்றிருக்குமேல் அதன் நிலை இரங்கத்தக்கதாகும். அது பல பிறவி தாங்கிய பின்னரே பண்படுவதாகும். ஓவியம், வர்ணம் மண் மரம் கல் செம்பு வெள்ளி பொன் மணி முதலியவற்றில் எடுக்கப்படும். பிண்டத்தில் இயற்கை -இயற்கை அழகு- இயற்கைக் கூறு- படியுங்கால் முகிழ்ப்பது ஓவியம். ஓவியத்தில் மூலத்தின் தத்துவங்கள் திகழ்தல் வேண்டும். இல்லையேல் அஃது ஓவியமாகாது. அது வெறுங் கீற்றுப் பிண்டமே யாகும். வெறும் பிண்டம் மனத்தை முற்றும் நிலைபெறுத்தாது. மனம் நிலை பெற மனம் நிலைபெறுதற்குரிய வழிகளென்று மேல்நாட்டு அறிஞர் சிலராலுஞ் சில காணப்பட்டுள்ளன. அவை புள்ளி நோக்கல், குறியில் நாட்டம் வைத்தல், சிவப்பு விளக்கில் கருத்தைப் பதியவைத்தல் முதலியன. புள்ளியையோ, குறியையோ, விளக்கையோ உற்று உற்று நோக்கும் பயிற்சியால் மனம் ஓரளவில் நிலைபெறும். அந்நிலை ஹிப்னொடிஸம் முதலிய சிறிய வித்தைகட்குப் பயன்படும். ஓரளவில் நின்று கடனாற்றிய பின்னர் மனம் மீண்டும் அலைவதாகும். புள்ளி - குறி - விளக்கு - நோக்குகளின் ஆற்றல் அவ்வளவினதே. மனம் குவிந்து நடுவிற் புகுந்து அடியில் அணைந்து மறைதல்வேண்டும். மனம் என்னும் தத்துவமே ஒடுங்குதல் வேண்டும். ஒடுங்காது மீண்டும் மனம் எழுந்து புறம் புகுந்து அலைதலாகாது. இந்நிலையைச் சேர்க்கும் ஆற்றல் புள்ளிக்கோ குறிக்கோ விளக்குக்கோ இல்லை. அவைகளில் எவ்விதத் தத்துவமு மில்லை. அவைகள் வெறும் பிண்டங்கள். வெறும் பிண்டங் களில் என்ன தத்துவமிருக்கும்? ஓவியத்தில் பலதிறங்க ளிருக்கின்றன. திறங்களுக்கேற்பத் தத்துவங்கள் அமையும். பூ ஓவிய மிருக்கிறது. அதில் பூ தத்துவம் பொருந்தும். வீரன் ஓவியத்தில் வீரத் தத்துவம் செறியும். ஞானியின் ஓவியத்தில் ஞானத் தத்துவம் பொலியும். இவை யாவும் இயற்கைக் கடவுளின் கூறுகளே. இவை மனத்தை நிலைபெறுத்தி அதன்கண் அவ்வத் தத்துவங்களை அமைக்கும்; வழிபாடு முதிர்ந்துவரின் மேல்நிலையையுங் கூட்டும். கடவுளும் இயற்கையும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாய், விழுமியதாய் இருப்பது கடவுள். 1கடவுள் எல்லாவற்றையுங் கடந்தும் நிற்பது; எல்லாவற்றிலுங் கலந்தும் நிற்பது. இவ்விரு நிலைகளில் முதலாவது உருவமற்றது; வாக்கு மனத்துக்கு எட்டாதது. அஃது ஓவியத்தில் அடங்காதது. இரண்டாவது ஓவிய உறவு கொள்ளுந் தன்மையது. கடவுள் எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் நிலை இயற்கையை உடலாக்கொண்டது. இது குறித்து முன்னரும் பேசியுள்ளேன். இயற்கையுடலை அநுபவ ஞானிகள் ஒரு வழியில் எட்டுக் கூறிட்டார்கள். அவை 1பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் சந்திரன் சூரியன் ஆன்மா என்பன. இவைகளில் அடங்காத இயற்கைக் கூறுகளிருக்குமோ? பூமியும் சூரியனும் இவ்வெட்டையுங் கொண்டது இயற்கை. இயற்கை எவ்வளவு அகல நீளமுடையதா யிருக்கும்! அதை மனக் கண்ணால் அளந்து பார்த்தலும் இயலவில்லை. இப் பூமியில் நாம் வதிகிறோம். இஃதொரு சிறிய கோளம். இதன் அளவை நினைக்க மனம் படும் பாட்டை என்னென்று கூறுவது? அப்பயிற்சியில் ஈடுபட்டவர்க்கே அப்பாடு தெரியும். இப் பூமியைப் பார்க்கிலும் மிகப்பெரியது சூரியன். அதன் அகல நீளம் அடங்க அதை எண்ணுவதில் எவ்வளவு இடுக்கண் உண்டாகும்? இவை இரண்டும் எல்லையுடையனவே. எல்லை அற்றன அல்ல. எல்லை அற்றது பரம்பொருள் ஒன்றே. எல்லை யுடையவைகளின் எல்லையைக் காண்டலே அரிதாயிருக்கிறது. இவையும் இவையிற்றின் இனங்களும் சேர்ந்த இயற்கையுலகம் எவ்வளவு பெரியதாயிருக்கும்? மனம் நடுக்குறுகிறது! கருவித் துணை சிறிய பூமி ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாடுகளும் பலவாறு பிரிந்து கிடக்கின்றன. இப் பிரிவுகளி லெல்லாம் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்; யாத்திரை செய் கிறார்கள்; பூமி முழுவதையுஞ் சுற்றி வருகிறார்கள். ஆனாலும் ஒரே காலத்தில் பூமி முழுவதையும் நினைத்துப் பார்த்தல் அரிதாகிறது. நினைப்பில் பூமியின் அப்பிரிவும் இப்பிரிவும் அக்கூறும் இக்கூறும் தோன்றித் தோன்றி மறையும். பூமியில் சஞ்சரிப்போர் - யாத்திரை செய்வோர் - அதைச் சுற்றிவருவோர் - சுருங்கச் சொல்லின் அதனுடன் பல வழியிலும் கூட்டுறவு கொள்வோர் - பூமியைப் பற்றியும், அதன்பெரும் பிரிவுகளைப் பற்றியும் சிறு பிரிவுகளைப்பற்றியும் தாம் உணரவும் பிறர்க்கு உணர்த்தவும் படத்தின் துணை நாடுவதை நாம் காண்கிறோம். பூகோள சாதிரம் போதிக்கப்படுங்கால் ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் படம் தேவையாகிறது. படமின்றிப் போதிக்கும் ஆசிரியர் நிலையும், அதைக் கேட்கும் மாணாக்கர் நிலையும் என்னவாகும்? வெட்ட வெளியேயாகும். பூமியின் பாகுபாடுகளைப் பயில்வோர் உள்ளத்தில் என்ன பதிகின்றன? படத்திலுள்ள கோடுகளும் வரிகளும் நிறங்களும் பிறவுமே பாகுபாடுகளாகப் பதிகின்றன. படத்திலுள்ள உருவங்களே பூமியின் பாகுபாடுகளாகத் தோன்றுகின்றன. நாம் வாழும் பூமியையும், அதன் கூறுபாடுகளையும் உணர்தற்கும் உணர்த்து தற்கும் படம் தேவையாகிறதெனில், பூமியைப் பார்க்கிலும் பல கோடி மடங்கு விரிந்தும் பரந்தும் பெருகியும் இருக்கும் பல கோளங்களைக் கொண்ட இயற்கையின் கோலத்தைப் படத் துணையின்றி எங்ஙனம் உணர்தல் கூடும்? சிறுசிறு பொருள்களை உணரவும் உணர்த்தவுங் கருவி வேண்டப்படுகிறது. கண் அணுவைப் பார்க்கும்; பரமா அணுவையும் பார்க்கும்; மேலும் மேலும் நுணுகி நுணுகிப் போகும் இறைகளை எப்படிப் பார்த்தல் கூடும்? அவைகளைப் பற்றிய ஆராய்ச்சியும் வாழ்வுக்கு இன்றியமையாததா யிருக்கிறது. என்செய்கிறோம்! நுண்மை நோக்கி என்னுங் கருவியின் துணையை நாடுகிறோம். கருவி, கண்ணுக்கெட்டாத அணுவகைகளைக் காட்டுகிறது. பின்னே ஆராய்ச்சி எழுகிறது. எவ்வழியில் பார்த்தாலும் வாழ்க்கைக்குப் படமோ கருவியோ எதுவோ தேவையாதல் விளங்குகிறது. ஓவியக் கலை இத்தேவையை நிறைவு செய்வது ஓவியம். இதற்கென்று ஓவியக் கலை தோன்றியுள்ளதென்றுங் கூறலாம். ஓவியக் கலையின் தோற்றத்துக்கு ஏதேனும் பொருளிருத்தல்வேண்டு மன்றோ? வீணுக்கென்று ஒரு கலை தோன்றுமோ? பூமி போன்ற சிறு சிறு கோளங்களை உணர்தற்குப் படமும் பிறவும் தேவையானால், எல்லாக் கோளங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ள இயற்கையின் முழுக்கோலத்தை நேரே எப்படி உணர்தல் முடியும்? படமோ பிறவோ தேவை. இயற்கைக் கோலம் இறையின் உடல். உடலைக் கொண்டே உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இயற்கையின் கோலமோ மிகப் பெரியதாயிருக்கிறது. என்செய்வது? ஓவியக்கலையை அடைதல் வேண்டும். அடைந் தால் அது துணை செய்யும். மனமும் உருவமும் இவ்வளவு தொல்லை எற்றுக்கு? கடவுளை நேரே நினைக்கலாமே; வழிபடலாமே; இடையில் இயற்கை உடல் எற்றுக்கு? ஓவியம் எற்றுக்கு? ãw v‰W¡F? என்று சிலர் கருதலாம். நல்ல கருத்து! சிறிது சிந்திப்போம் . கடவுள் எல்லா வற்றையுங் கடந்து உருவமற்று நிற்பது. உருவமற்ற ஒன்றை எண்ணிப் பாருங்கள்; அதை எண்ணம் எட்டுகிறதா? மனத்தில் என்ன உறுகிறது? ஒன்றையுங் காணோம்; சூந்யம் - பாழ் - 000. கடவுள் சூந்யமா? பாழா? மனம் உருவமற்றதை நினைத்தல் இயலாதென்பதும், அஃது உருவத்தைச் சார்ந்தே நினைக்கும் இயல்புடையதென்பதும் முன்னே விளக்கப்பட்டன. அவ் விளக்கத்தை மீண்டும் ஈண்டுக் கூறவேண்டுவதில்லை. மனம் உள்ளவரை அஃது ஏதேனும் ஓர் உருவையே பற்றி நிற்கும். அஃது உருவமற்றதை நினைக்கவல்லதாகாது. இஃது உண்மை; உண்மை; முக்காலும் உண்மை. இக்கால மனோ தத்துவர் மனத்தின் இயலை ஆராய்ந்து, மனம் அலைவற்று நிலைப்பதற்குப் புள்ளியோ குறியோ விளக்கோ ஏதோ ஓர் உருவச் சுட்டு வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உருவமற்றதைப்பற்றிப் பேசுவோர் மனங் கடந்தவரோ என்னவோ தெரியவில்லை. மனங் கடந்த நிலையில் பேச்சு ஏது? நினைவு ஏது? பேச்சும் நினைவும் எங்கிருந்து பிறக்கின்றன? உருவத்தைப் பற்றி நிற்கும் மனத்திலிருந்தே பிறக்கின்றன. இம்மனமுடையவர் உருவமற்றதைப்பற்றிப் பேசுவது நன்று! நன்று! வெறும் பேச்சு எற்றுக்கு? ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமோ? ஓவிய வழிபாடு இயற்கை, கடவுளின் உடல். இயற்கை வாயிலாகவே அதன் உயிராக உள்ள கடவுளை உணர்தல் வேண்டும்; வழிபடுதல் வேண்டும். இயற்கையோ பெரியது. அதை நேரே வழிபடும் ஆற்றல் மிகச் சிலர்க்கே உண்டு. இயற்கைக் கூறுகளின் நுட்பம் உணர்ந்து வழிபாடு செய்வோரும் பலராயிருப்பதில்லை. இயற்கைக் கூறுகளில் ஏதாவதொன்றை வழிபடினும் நாளடை வில் அது முழு இயற்கை வழிபாடாகும். இவைகளைப் பெரும்பான்மையோர் நிகழ்த்தல் இயலாது. பலர்க்கும் எளிதில் பயன்படும் வழிபாடொன்றுளது. அஃது ஓவிய வழிபாடு. ஓவியப் புலவன் கடவுள் உடலாகிய இயற்கை விரிந்து பரந்து நிற்கிறது. அஃது எளிய நெஞ்சில் அடங்குவதில்லை. எளிய நெஞ்சுக்கு இயற்கை ஓவியம் தேவை. ஓவியமாவது இயற்கையின் சுருக்கம். அதன்பெருக்கம் இயற்கை. பெருக்கைச் சுருக்கும் திறமை ஓவியனைப் பொறுத்தது. பெருக்கைச் சுருக்கும் பொழுது பெருக்கிலுள்ள கூறுகளும் நுட்பங்களும் உடன் தொடர்ந்து சுருக்கிலும் இறங்குமாறு ஓவியன் செய்தல்வேண்டும். இல்லையேல் அவன் எடுப்பது ஓவியமாகாது. இயற்கை மாயா காரியம். மாயா காரியங்களே தொண் ணூற்றாறு தத்துவங்களாக வகுக்கப்பட்டன; முப்பத்தாறு தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டன. இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே இயற்கை என்பது. இவ்வியற்கையை உடலாக் கொண்டு, தான் உயிராக நின்று, கடவுள் அதை (இயற்கையை) இயக்குகிறது. இயற்கையெனில் இவைகளை யெல்லாம் கொண்ட ஒன்று என்று கொள்க; வெறும் இயற்கையின் புறத்தோற்றத்தைமட்டுங் கொள்ளற்க. ஓர் ஓவியன் இயற்கையை எண்ணுகிறான் என்றால், அவன் உள்ளத்தில் இயற்கையும் அதன் உள்ளுறையும் ஒன்றி இறங்குகின்றன என்று கொள்ளுதல் வேண்டும். இவை இறங்கப்பெறாத உள்ளமுடையவன் இயற்கை ஓவியப் புலவனாகான். ஓவியன் இயற்கைத் தத்துவங் களை உணர்ந்து தெளிந்த புலவனா யிருத்தல் வேண்டும். புலவன் இயற்கையை எண்ணுகிறான்; நினைக்கிறான்; உன்னுகிறான்; முன்னுகிறான். அவன் உள்ளம் இயற்கையில் தோய்கிறது; படிகிறது; திளைக்கிறது; ஒன்றுகிறது. உள்ளம் இயற்கையாகிறது; இயற்கை உள்ளமாகிறது. ஓவியம் உள்ளத்தில் கருக்கொள்கிறது. உள்ளத்தில் இயற்கை எண்ணங்கள் எழுகின்றன. பொங்குகின்றன. இந்நிலையில் புலவன் ஓவிய மெடுக்கிறான். அவனது எண்ண அலைகளின் வழிப்படிப்படியே ஓவியம் உருக்கொள்கிறது. அஃது இயற்கையின் படமாகத் திகழ்கிறது. இயற்கை, கடவுளின் கோயில். அதன் படமாகிய ஓவியமும் கடவுளின் கோயிலாகாது வேறு என்ன ஆகும்? ஓவியமும் பிண்டமும் ஓவியம் எடுப்பதற்குப் புலவன் எதைத் துணையாகக் கொள்கிறான்? வர்ணத்தையோ மரத்தையோ மண்ணையோ கல்லையோ செம்பையோ எதையோ ஒன்றைக் கொள்கிறான். ஓவியம் முகிழ்த்ததும் வர்ணமோ மரமோ மண்ணோ கல்லோ செம்போ எதுவோ மறைவுறுகிறது. ஓவியக் கண்ணர்க்கு ஓவியமே தோன்றும்; வேறெதுவும் தோன்றாது. மற்றவர்க்கு வர்ணமோ கல்லோ செம்போ தோன்றும். ஒரு மாந்தோப்பில் ஒரு வீட்டின் வாயிற்படியில் சில கருங்கற்கள் கிடந்தன. அவைகளில் ஒன்றை ஓர் ஓவியன் எடுத்து அதில் ஓர் அழகிய பெண் வடிவம் பொறித்தான். பெண் வடிவம் கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது. அங்கே ஓவியப் புலவர் சிலர் ஈண்டினர்; மற்றவருங் கூடினர். ஓவியக் கண் ணில்லா ஒருவர், என்ன கூட்டம் என்று அங்கே போந்தனர். அவர் அங்குக் குழுமியிருந்தவரைப் பார்த்து, என்ன! ஒரு வாரத்துக்கு முன்னே படியாய்க் கிடந்த ஒரு கல்லுக்கா இவ்வளவு வாழ்வு வந்தது? கல்லை வணங்கும் மூடப்பழக்கம் நம்மவரை விடுத்து என்று அகலுமோ தெரியவில்லை என்று ஏசினர். அவருடன் சிலர் கலந்து கொண்டனர். ஒரு சாரார்க்கு ஓவியம் விளங்குகிறது; இன்னொருசாரார்க்குக் கல் தோன்று கிறது. இரு சாராரும் மனிதப் பிறவி தாங்கினவரே. ஓவியப் புலமை பெறாதொழியினும், ஓவிய நுட்பத்தை வியக்கும் புத்தியாதல் பெறுதல்வேண்டும். அப்புத்தி வாய்க்கப்பெறாதார் நிலை இரங்கத்தக்கது. மரத்தால் செய்யப்பெற்ற யானை யொன்று இங்கு நிற்பதாக வைத்துக்கொள்வோம். அதைக் காண அப்பக்கத் திருந்து சிலரும் இப்பக்கத்திருந்து சிலரும் வந்தனர். முன்னவர் மரத்தின் இயலை நன்கு உணர்ந்தவர்; மற்றவர் யானையின் இயலைச் செவ்வனே தெளிந்தவர். அவர், இம்மரம் எது வாயிருக்கும்? அத்தியாயிருக்குமா? பலாவாயிருக்குமா? nj¡fhÆU¡Fkh? என்று சோதித்துச் சென்றனர். அவர் நெஞ்சில் மரமே நின்றது; யானை தோன்றவில்லை. பின்னவர், யானையின் காது நன்றாயிருக்கிறது; வால் அழகாயிருக்கிறது; கால் அமைப்புச் செவ்விதாயில்லை; என்று பேசித் திரும்பினர். இவர் நெஞ்சில் யானையே நின்றது; மரம் தோன்றவில்லை. மரம் யானையை மறைத்தது; யானை மரத்தை மறைத்தது. பொன்னால் காப்புச் செய்யப்பட்டது. இப்பொழுது அது காப்பென் றழைக்கப்படுகிறதா? பொன்னென்று அழைக்கப்படுகிறதா? காப்பென்றே அழைக்கப்படுகிறது. பொன் இல்லாமலா போய்விட்டது? காப்பு, பொன்னை மறைத்தது. இங்கே ஓவியம், புலவன் உள்ளத்திருந்து கல் மரம் பொன் வாயிலாக முகிழ்த்தது; முகிழ்த்ததும் கல் மரம் பொன் எங்கேயோ போயின. ஓவியத்தின் முன்னே அவை சூந்யமாகி விட்டன. ஓவியத்தை முன்னி முன்னி அதில் ஒன்றுவோரை அது தனது முதலிடத்திற் சேர்க்கும். பண்டைநாளில் பலதிற இயற்கைப் புலவர் இருந்தனர். அவருள் ஓவியப் புலவரும் வாழ்வு பெற்றிருந்தனர். இவரிடத் திருந்து சில அரிய ஓவியங்கள் பூத்தன. அவைகளை ஆய்ந்தால் பல நுட்பங்கள் விளங்கும். அவ்வோவியங்களில் சிலவற்றை நோக்குவோம். அர்த்தநாரீசுரம் முதலில் அர்த்தநாரீசுர வடிவம் எனது நினைவிலுறுகிறது. அவ்வடிவம் உங்கள் உள்ளத்திலும் உறும். அர்த்தநாரீசுரம் பெண்மையும் ஆண்மையுஞ் சேர்ந்த ஒன்று. இஃது உணர்த்துவ தென்னை? இயற்கை உலகை நோக்க நோக்க அர்த்தநாரீசுரத்தின் நுட்பம் விளங்கும். இயற்கை உலகில் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள எல்லாம் பெண் ஆண் மயமாயிருத்தல் வெள்ளிடை மலை. பெண் ஆணாயிலங்கும் இயற்கை உலகின் படம் - ஓவியம் - அர்த்த நாரீசுரம். சிவப்பும் நீலமும் உலகங்களைத் துருவி ஆய்ந்தால் அவைகளினடியில் வர்ணங்களிருத்தலை உணர்தல் கூடும். வர்ணங்களின் தாயகம் இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். சிவப்பை ஆண்மை யாகவும், நீலத்தைப் பெண்மையாகவும் அறிஞர் கொண்டனர். அநுபூதிமான்கள் தங்கள் அநுபவத்தில் பல உண்மைகள் கண்டு உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவைகளுள் ஒன்று இடப்பக்கம் பெண்மையும், வலப்பக்கம் ஆண்மையும் இருப்பது. இவை சந்திர சூரிய கலைகளாக இயங்குகின்றன. பெண்மையும் ஆண்மையும் முறையே நீலமாகவும் சிவப்பாகவும் புலனாதல் அநுபூதிமான்களின் திருவாக்குகளை ஆராய்ந்தால் தெரிகிறது. நீலப் பெண்மையும் சிவப்பு ஆண்மையும் அநுபூதிமான் களிடத்தில் மட்டும் இல்லை. அவை எல்லாரிடத்தும் இருக் கின்றன. அவை அநுபூதிமான்களிடம் விளங்கித் தோன்று கின்றன. மற்றவர்களிடம் விளங்கித் தோன்றுவதில்லை. அநுபூதிமான்கள் என் செய்தார்கள்? அவர்கள் அர்த்த நாரீசுரத்தைக் குறிக்கொண்டு தியானயோகத்தில் அமர்ந் தார்கள். தியானயோகம் அவர்கட்கு நீலப் பெண்மையையும் சிவப்பு ஆண்மையையும் விளங்கச் செய்தது. அவர்களைப் போல அம்முயற்சியில் எவர் தலைப்படினும் அவர்கள் உணர்ந்ததை இவரும் உணரலாம். ஓவியர் நுண்மதி வியக்கத்தக்கது; போற்றத்தக்கது. இயற்கையிலுள்ள நீலப் பெண்மையையும் சிவப்பு ஆண்மையை யும் அழகிய அர்த்தநாரீசுர ஓவியமாகத் தந்தமையால், அது தியானத்துக்குக் கொழுகொம்பாக நின்று, உண்மையை விளங்கவைப்பதாய்ப் பயன்பட்டு வருகிறது. ஓவியர்க்கு உலகம் என்ன கைம்மாறு செலுத்தப்போகிறது? ஓவிய உலகம் வாழ்க. என்னிடம் பெண்மை நீலமும் ஆண்மைச் சிவப்பும் இருக்கின்றன. அவைகளை நான் விளங்கவைத்துக் கடவுள் நிலை பெறுதல்வேண்டும். வழி என்ன? மாணிக்க ஒளியும் நீல ஒளியுஞ் சேர்ந்த ஒரு வடிவம் - அர்த்தநாரீசுர ஓவியம் - எதிரே நிற்கிறது. அதைத் தியானித்தல் வேண்டும்; வழிபடுதல் வேண்டும். அரங்கநாதன் அரங்கநாத வடிவம் எப்படி இருக்கிறது? பாற்கடலில் அரவணையில் அறிதுயில் செய்யுங் கோலமுடையது அரங்க நாத வடிவம். அப்பெருமான் உந்தியில் அயன் தோற்றம் அழகு செய்கிறது. தத்துவங்கள் முன்னே சுருங்கிய முறையில் ஒருவாறு விளக்கப்பட்டன. அவைகளுள் விந்துவையும் நாதத்தையும் சிறிது நேரம் இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பேன். நாத தத்துவம் கடவுளுக்கு அணித்தாயிருப்பது. நாதத்துக்குமேல் தத்துவங் கிடையாது. அதை அணைந்து நிற்பது விந்து தத்துவம். நாதம் ஒலிமயமா யிருப்பது. விந்து ஒளிமயமாய்ப் பரந்து விரிந்து நிற்பது. திருப்பாற்கடல் விந்து தத்துவத்துக்கு அறிகுறி. அரவணை நாத தத்துவத்துக்கு அறிகுறி. நான் பேசுகிறேன். என் பேச்சு நாதத்தினின்றும் எழுகிறது. எப்படி எழுகிறது? பாம்பு போல் சுழன்று சுழன்று எழுகிறது. பெருங்காற்றுப் பேரொலி செய்து வீசும்போது, தும்பு தூசுகள் எப்படி எழுகின்றன? வளைந்து வளைந்து சுழன்று சுழன்றே எழுகின்றன. பாம்பு வளைந்து சுழன்று எழுவதுபோல், நாத ஒலி எழுவதால், அது பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. நாதத்துக்குமேல் ஒளிர்வது தெய்வம். அரங்கநாதத் தெய்வம் நாதப்பாம்பின்மீது பள்ளி கொண்டிருக்கிறது. நாதங் கடந்தொளிருந் தெய்வம், படைப் புக்குத் தனக்கு அணித்தாக உள்ள அந் நாததத்துவத்தை இயக்குகிறது. அதன்வாயிலாக மற்றத் தத்துவங்களியங்கிப் பலவகை உலகங்களாகின்றன. படைப்புக்கு அறிகுறி அரங்க நாதனின் நாபிக் கமலத்துள்ள அயனது தோற்றம். பாற்கடலில் அரவணையில் பள்ளிகொண்டுள்ள திருவுருவம், உள்ளத்தில் பதியப் பதியப் படிப்படியே அதன் நுட்பங்கள் விளங்கி விளங்கி, விந்துவைக் கடந்து, நாதத்தை உணர்ந்து, அதையுங் கடந்து, அரங்கநாதனை உணரும் பேற்றை உண்டாக்கும். கண்ணபிரான் கண்ணபிரான் புன்னையின்கீழ் நின்ற வண்ணம் குழலூது கிறார். அவரைச் சூழ்ந்து பசுக்கூட்டமும், பெண்குழுவும் நிற்கின்றன. இக்காட்சி வழங்கும் படத்தைப் பார்க்கிறோம். இஃது அறிவுறுத்துவ தென்னை? இயற்கையை விரிந்து பரந்த உலகாக்குவது விந்து. இங்கே இந்த இயற்கை உலகை உணர்த்துவது புன்னை. இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் அதனுள்ளுறை உணர்வில் உறும். அதுவே கடவுள். புன்னையின் கீழ்நிற்கும் அழகு அக்கடவுள். கடவுளுக்கு அணித்தாக உள்ளது விந்துவைக் கடந்த நாதம். இங்கே நாதம் குழலோசை. நாதக் குழலோசைக்கு மூலர் கண்ணபிரான். கண்ணபிரானது நாதமாகிய பிரணவத்தைக் - குழலோசையைக் - கேட்பவர் சாந்தநிலை யடைவர். சாந்தத்துக்கு அறிகுறி பசுக்கூட்டம். சாந்தம் மூர்க்க ஆண்மையை அழித்து அமைதிப் பெண்மையை வழங்குவது. அமைதியை உணர்த்துவது பெண்குழு. உயிர், மூர்க்க ஆண்மையை இழந்து பெண்மை எய்திய பின்னரே கடவுளை அடையுமென்பது மரபு. கண்ணபிரான் இயற்கையில் நீக்கமற நின்று நாதத்தை முழக்கியவண்ண மிருக்கிறார். மூர்க்கம் நீங்கினால் அந்தநாதம் கேட்கும். அதுவே பிரணவ உபதேசம். செவியுள்ளோர் கேட்பாராக. கண்ணபிரானின் புன்னைமரக் கோலத்தை நினைந்து வழிபட்டால் சாந்தமும் அமைதியும் விளைந்து தெய்விகம் கூடும். முருகன் ஒருகால் நினைந்தாலும் வருவோன் முருகன். இம் முருகனை ஓவிய உலகம் நமக்கு எப்படி உதவியுள்ளது? பார்ப்போம். கருணைவிழியும், பொன்மேனியும், மயிலூர்தியும், கோழிக் கொடியும், வள்ளியும் தெய்வயானையும், வேலுங் கொண்ட ஓர் அழகிய ஓவியம் நம்முன்னிற்கிறது. ஓவியம் புலன்களைக் கவர்கிறது; உள்ளத்தைக் கவர்கிறது. இவ் வோவியத்தின் உள்ளுறை என்ன? மயில் தோகையை விரித்து விரித்துப் படிப்படியே பரப்புவதைக் காண்கிறோம். விந்து தோகையைப்போல இயற்கை உலகாக விரிந்துபரந்து நிற்பது. ஆகவே, மயில் விந்துவை உணர்த்தவதென்க. முருகன் மயிலில் இவர்ந்து அதை நடத்துவது இறைவன் இயற்கை உலகை நடத்துவதைத் தெரிவிப்பது. விந்துவுக்கு மேல் நிற்பது நாதம். நாதம் ஒலி. கோழி கூவுவது. கோழிக் கொடி தொடர்ந்த நாத ஓசையை விளக்குவது. வள்ளியும் தெய்வயானையும் வேலும் முறையே இச்சா கிரியா ஞான சக்திகளைக் குறிப்பன. இச் சக்திகள் நாத தரிசனத்துக்குப் பின்னே எழுவன. இச்சா கிரியா ஞான சக்திகள் நம்மிடத்தில் இருக்கின்றனவே. எப்படி இருக்கின்றன? ஒடுங்கிக் கிடக்கின்றன. இவைகள் எழுந்தால் தான் நம்மிடத்துள்ள தெய்விகம் கூர்ந்து விளங்கும். நம்மிடத்து ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் தாமே எழுச்சி பெறுமோ? பெறமாட்டா. இவைகளை எழுப்புதற்கு வேறு இச்சா கிரியா ஞான சக்திகளின் துணை வேண்டும். அவை உண்மையானவையோ? பாவனையோ? அவ்வாராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை. இச்சா கிரியா ஞானம் என்று வெறுமை யாகப் பேசிக்கொண்டிருந்தால் அவை எழும்புமா? வெறும் பேச்சு அவைகளை எழுப்பாது. வெறும் வாயை மென்றுகொண் டிருந்தால் வயிறு கேட்குமா? முருகன் ஓவியம் அழகியது. வள்ளியுருவமும் தெய்வயானையுருவமும் வேலுருவமும் நம்முள் நுழையக் காத்துக்கொண்டிருக்கின்றன. வேண்டுவது தியானம் - வழிபாடு. தியானத்தில் அவ்வுருவங்கள் உள்ளத்தில் பசு மரத்தாணிபோல் பதியும்; பதியப் பதிய நம்பால் ஒடுங்கிக் கிடக்கும் இச்சா கிரியா ஞான சக்திகள் முறைமுறையே ஒளிபெறும்; எழும். இம் மூன்று சக்திகளும் முருகன்நிலை கூட்டும். ஓவிய வழிபாடு மக்களைத் தெய்வமாக்கும். அவ் வழிபாடு இல்லாத இடம் மக்களை மாக்களாக்கும். இச்சா கிரியா ஞான சக்திகள் மக்களிடத்திலிருப்பதை அகத்திணை வல்லார் அனைவருஞ் சொல்கிறார். அவ்வெழுச்சி பெறுதற் குரிய வழியை அவர் நன்முறையில் காட்டியுள்ளனரா? அச் சக்திகட்கு அறிகுறியாக உள்ள உருவங்களை உன்னினால் அவை எளிதில் எழும்புவது ஒருதலை. இதை அநுபவத்தில் பார்க்குமாறு தோழர்களே வேண்டுகிறேன். ஓவிய உலகம் செய்துள்ள நன்றி என்னே! என்னே! நடராஜன் இனி ஒரு காட்சி வரப்போகிறது. அஃதும் ஓவியக் காட்சியே. அது கூத்தோவியம். ஓவியத்தில் கூத்தா? கூத்தில் ஓவியமா? கூத்தாடி ஓவியம் எப்படியுமிருக்கும். எல்லாவற்றையுங் கடந்து உருவமற்றதாயுள்ள கடவுள் நிலை போக்குவரவற்றது; அசைவற்றது; தொழிலற்றது. அதற்குக் கூத்தேது? இயற்கையை உடலாக்கொண்டு அதன் கூறுகள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் கடவுள் நிலைக்குத் தொழில் தானே உண்டாகும். அதற்குத் தொழில் இல்லை யேல் இயற்கை எங்ஙனம் இயங்கும்? உயிர்களைத் தன்னைப் போலாக்கவே கடவுள் இயற்கையை உடலாகத் தாங்கி அதை இயக்குகிறது. அதனால் அது தொழிலுடையதாகிறது. அத் தொழில் ஐந்து வகை. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பி னானில வளாகமும் ஏனைய புவனமும் எண்ணீங் குயிருந் தானே வகுத்ததுன் தமருகக் கரமே தனித்தனி வகுத்த சராசரப் பகுதி அனைத்தையும் காப்பதுன் அமைத்தகைத் தலமே தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும் மாற்றுவ தாரழல் அமைத்ததோர் கரமே ஈட்டிய வினைப்பயன் எவற்றையு மறைத்துநின் றூட்டுவ தாகுநின் ஊன்றிய பதமே அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம் கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே. இது குமரகுருபரர் வரைந்த ஐந்தொழில் எழுத்தோவியம். ஐந்தொழிலும் நிகழ அப்பன் கூத்தாடுகிறான். நடம் புரிகிறான்; நடராஜனாகிறான். ஐயன் கூத்து ஓரிடத்திலா நடைபெறுகிறது? எங்கும் நடைபெறுகிறது. அக்கூத்து உயிரில் - உள்ளத்தில் - ஊனில் - நடைபெறுகிறது. உலகில் - உயர் அண்டங்களில் - அண்டபகிரண்டங்களில் - நடைபெறுகிறது; அணுவில் - அணுவுக்கணுவில் - நடைபெறுகிறது; எங்கும் எங்கும் நடைபெறுகிறது. அத்திருநடம் இல்லையேல் உலகில் இயக்கம் ஏது? உயிர்கட்கு வாழ்க்கை ஏது? காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேயாடி நீடிய நீர்தீகால் நீள்வா னிடையாடி நாளுற அம்பலத் தேயாடு நாதனே. அம்பல மாவது அகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே. வேதங்க ளாட மிகுவா கமமாடக் கீதங்க ளாடக் கிளரண்ட மேழாடப் பூதங்க ளாடப் புவன முழுதாட நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே. அண்ட மெழுகோடி பிண்ட மெழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைக ளெழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்க மெழுகோடி அண்டன் நடஞ்செயும் ஆலயந் தானே. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே. இவை திருமூலரின் நடனப் பாக்கள். அணுவுக்கு அணுவிலும் அண்டபகிரண்டங்களிலும் எங்கும் எங்கும் ஓயாது நிகழுங் கூத்துடையானை - நடராஜனை - நினைத்துப் பார்ப்போம். 1அவன் அடங்கவில்லை. அவனை எப்படித் தியானிப்பது? வழிபடுவது? பெருங் கூத்தன் - நடன வள்ளல் - புலவனது ஓவியத்தில் நின்று காட்சியளிக்க உளங்கொள்கிறான். அவன்றன் கருணையே கருணை! நடராஜ ஓவியத்தைக் காணுங்கள்; நம் முன்னே ஓவியம் நிற்கிறது. ஓவியத்தில் கூத்து! கூத்தில் ஓவியம்! நடராஜன் ஒருவன், அவன் பல கோலந் தாங்குகிறான். அவைகளில் இரண்டின் மீது கருத்துச் செலுத்த விரும்புகிறேன். ஒன்று திருவாலங்காட்டுப் பெருங்கோலம்; மற்றொன்று தில்லைத் திருக்கோலம். திருவாலங்காட்டில் நடராஜன் தூக்கிய கால் வானோக்கி நிற்கிறது. சிதம்பரத்தில் அவனது கால் எடுத்த பொற்பாத மாகவே - குஞ்சித பாதமாகவே - இருக்கிறது. திருவாலங்காட்டில் ஆண்டவன் புரிவது ஊர்த்துவ தாண்டவம். அத்தாண்டவத்தின் எதிரிலே ஒரு கோர ரூபமிருக்கிறது. அதன் தலைமயிர் பரம்பு; கண்களில் தழல் ; வாயெல்லாம் இரத்தச் சேறு; உடலில் படமெடுத்த பாம்பணி; வயிறு பூதம்; கை கால்களில் கூரிய நீண்ட வாள் நகங்கள்- என்ன கோரம்! இக்கோரம் காளி என்று சொல்லப்படுகிறது. இக்காளியுடன் ஈசன் வாது நடம் புரிகிறான் என்று புராணம் புகல்கிறது. புராணம் எதையும் கதையாகப் புனைந்து சொல்லும். அது நிற்க. கோர காளி ரூபம் எதற்கு அறிகுறி? கொள்ளை - கொலை - போர் - முதலிய கோரங்களைக் கொண்ட புரட்சிக்கு - இரத்தப் புரட்சிக்கு (Bloody Revolution) அறிகுறி. தில்லையில் அப்பன் புரிவது ஆனந்த நடனம்; இன்பக் கூத்து. அப்பன் நோக்கு ஒருபால் சென்றுகொண் டிருக்கிறது. எப்பால்? அங்கே நிற்பதென்னை? ஓர் அழகிய ஓவியம் - பெண்ணோவியம். அவ்வோவியத்தைக் காண இரண்டு கண் போதவில்லை; கருத ஓருள்ளம் போதவில்லை. அம்மை சிவகாமி நிற்கிறாள். அம்மை, சிவனை - ஐயனைக் காதலிக்கிறாள்! என்ன காதல்? காரிட்ட ஆணவக் கருவறையில் கட்டுண்டு கிடக்கும் உயிர்களை யெல்லாம் ஈடேறச் செய்தல் வேண்டும் என்னுங் காதல். அதற்கு அப்பன் அம்மையையே நோக்குகிறான். நோக்கின் பொருள் யாது? காதலி! உன் காதல் நிறைவேற உன் துணை வேண்டும் என்பது. 1அப்பன் நோக்கம் அம்மையின் காதலில் ஒன்றி ஆனந்தக் கூத்தாகியது. இருளிலிருந்த உயிர்கள் தனுகரண புவன போகங்களைப் பெறுகின்றன; விழிப் படைகின்றன. தில்லை சிவகாமி எதற்கு அறிகுறி? படைப்பாதித் தொழில்களின் நிகழ்ச்சிக்கு (Evolution) அறிகுறி. போராட்டம் காரிட்ட ஆணவக் கருவறையில் கிடந்த உயிர்கள் அம்மை அப்பன் அருளால் தனுகரண புவனங்களைப் பெற்று சிறு விடுதலை அடைகின்றன. தங்களுக்குத் தனு முதலியவற்றை வழங்கிய அம்மை அப்பனை மறவாது, அவனது அருட் கொடையை மறவாது, நினைந்து நினைந்து, பெண் ஆணுட னும் ஆண் பெண்ணுடனும் வாழ்ந்து, அற வழி நின்று ஒழுகின், உயிர்கள் முழு விடுதலை அடையும். உயிர்கள் பெரிதும் என்ன செய்கின்றன? தாங்கள் பெற்ற தனு முதலியன அம்மை அப்பன் கொடை என்பதை மறந்து, ஆணவத்தால் செருக்கிச், சகோதர நேயமிழந்து, அதர்ம வழிகளில் நுழைகின்றன. அதனால் உலகில் கொள்ளை - கொலை - போர் - புரட்சி - முதலியன வீறுகின்றன. இப்பொழுது நடைபெற்றுவரும் உலக யுத்தத் திற்கு - உலகம் எந்நாளுங் காணாத மகாயுத்தத்திற்கு - அடிப் படையான காரணம், மக்கள் பலர் ஆண்டவனையும் அவன் கொடையையும் மறந்தமையாகும். இவ்வுண்மை இன்று உலகுக்கு விளங்கா தொழியினும் நாளடைவில் விளங்காமற் போகாது. உயிர்களின் அறியாமை காரணமாக நாளுக்கு நாள் உலகம் போராட்டத்திற்கு இரையானால், பின்னே அஃது எப்படி வாழ்வு பெறும்? போராட்டமே என்றும் மலியும் படி ஆண்டவனது அருட் சக்தியாகிய சிவகாமி - நம் தாய் - விட மாட்டாள். அவள் உலகை வளர்க்குஞ் சக்தி. உலகம் போராட்டத்துக்கே இரையானால் அஃது அழிந்துபடுமன்றோ? உலகம் அழிந்து பட்டால் இறைவனுக்கு என்ன வேலை? அவன் கூத்துக்கு என்ன வேலை? அவனது அருட்சக்திக்கு என்ன வேலை? உலகம் போராட்டத்தால் அழியுமாறு இறைவனது அருட்சக்தி அதை விடாது. உலகுக்கு நல்லறிவு கொளுத்தப் போரும் புரட்சியும் இயற்கைச் சக்தியால் ஓரளவிலேயே உண்டாக்கப்படும். குண்டெறிதல் முதலியனவும் ஆண்டவன் அருளாலேயே நிகழ்கின்றன என்று கொள்க. 1மண்ணிடத்துங் கடலிடத்தும் வானிடத்துங் குண்டெறிதல் - அண்ணலுனை மறந்த உயிர்க்கு அருளூட்டுங் கருணைமழை என்று யானும் பாடியுள்ளேன். திருவாலங்காட்டுத் தெய்வவுரு ஊர்த்துவ தாண்டவம் புரிகிறது. ஒரு காலை உயரத்தூக்கி அவ்வுரு நிற்கிறது. எதிரில் இரத்தப் புரட்சிக்கு அறிகுறியாகக் கோரக்காளி வீறுடன் இருக்கிறாள். கோரக்காளியும் சக்தியின் கூறினளே. கோணிச் செல்லும் உலகில் புரட்சியைக் கிளப்புவது அவள் கடமை. உலகத் திருத்தத்தின் பொருட்டு அவள் ஓரளவிலேயே கட னாற்றுவள். அளவு மீறிக் கடனாற்ற அவள் முனைந்து எழுவளேல், உயரத் தூக்கியுள்ள இறையின் திருவடி வாளா இராது. அது காளியின் தலைமீது விழுந்து, அவளை மிதித்து நசுக்கி, 1அவள் வேகத்தை ஒடுக்கிவிடும். திருவாலங்காட்டுத் தெய்வ ஓவியம், காளி! உலகம் அறத்தைமறந்து, பாழ்படுங் காலத்து, அதை ஒழுங்குபடுத்த உன் கடமையை நீ செய்யலாம். அக்கடமை வரம்புக் குட்பட்டதா யிருத்தல்வேண்டும். வரம்பு மீறி உன் விருப்பம்போல் தலைவிரித்தாட நீ முனைந்தெழுந் தால், உயரத் தூக்கியுள்ள இக்கால் உன்னை மிதித்து அடக்கி ஒடுக்கிவிடும். எச்சரிக்கை! என்று புரட்சிக் காளிக்கு அறிவுறுத்தும் வண்ணம் இருத்தலைக் கருதுக. காளியின் எழுச்சியால் பழுதுற்ற உலகை மீண்டும் பண்படுத்துவது இறைவனது அருட்சக்தி. இதைக் குஞ்சித பாத நடராஜ ஓவியமும் சிவகாமி ஓவியமும் உணர்த்தா நிற்கின்றன. இந்நடராஜ ஓவியத்தின் கருணை நோக்கும், சிவகாமி ஓவியத்தின் காதல்நோக்கும் என்ன அறிவுறுத்துகின்றன என்று ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க உண்மை விளங்காமற்போகாது. தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம் ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ. இது மாணிக்கவாசகர் திருவாக்கு. இதில் திருக்கூத்தின் உள்ளம் விளங்குதல் காண்க. பயன் கருதாமை நடராஜன் ஆணவமில்லாதவன்; முனைப்பே யில்லாதவன். அன்பே அவன்; அவனே அன்பு. அன்பின் இயல்பென்னை? பிறர் துன்பங் களையத் தொண்டாற்றுவது. நடராஜன் அன்புமேலீட்டான் ஆனந்தத் தாண்டவம் புரிகிறான். அதனால் ஐந்தொழில் நிகழ்கின்றன. ஐந்தொழிலால் உலகங்கள் நன்முறையில் இயங்குகின்றன. நடராஜன் தொண்டை - அன்புத் தொண்டை - என்னென்று கூறுவது? அவன் தன் தொண்டுக்கு ஏதேனும் பயன் கருதுகிறானா? இல்லை. நடராஜன் பயன் கருதாத் தொண்டன்; பெருந் தொண்டன். பயன் கருதாத் தொண்டே நிஷ்காமிய கருமம் என்பது. இதுவே தெய்விக நிலை. இது கிட்டினால் போதும். இப்பேற்றுக்கு என் செய்தல் வேண்டும்? நடராஜனை வழிபடுதல்வேண்டும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாவது. நடராஜனை வழிபட வழிபட அவன்றன் இயல்பாகிய பயன் கருதாமை ஆன்மாவைத் தன்வண்ணமாக்கும். நடராஜன் அணுவுக்கு அணுவிலும் - அண்டபகிரண்டங் களிலும் - எங்கும் - தாண்டவஞ் செய்பவன். அவனை நேரே நினைக்கும் வல்லமை எளிய நெஞ்சுக்கு உண்டோ? என் செய்வது? நடராஜனது அழகிய ஓவியமிருக்கிறது. அதை வழிபடலாம். அது நடராஜனது அருட்குணங்களையெல்லாம் பதிவிக்கும். இலிங்கம் நடராஜனைத் தொடர்ந்து இலிங்கம் எனது நினை விலுறுகிறது. நடராஜ மூர்த்தம் ஆடுவது. இலிங்க மூர்த்தம் ஆடாதது. இலிங்க வழிபாடு மிகத் தொன்மையானது. அஃது எந்நாளில் தோற்றமுற்றதோ தெரியவில்லை. ஒரு காலத்தில் உலக முழுவதும் அவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தது. இன்னும் பால்டிக் கடலோரத்திலும், நீல் யூபரிட்டி டைகிர முதலிய ஆறுகள் வளஞ்செய்யும் நிலங்களிலும் இலிங்கங்கள் கிடைத்துவருகின்றன. இந்திய நாகரிகத்தின் பழமையைச் சரித்திர உலகத்தில் உறுதிப்படுத்திய மகேஞ்சதாரோவில் இலிங்க வழிபாடு இருந்தமை நன்கு தெரிகிறது. இலிங்க வழிபாடு உலகில் பொதுமையாயிருந்த காலமுண்டு. பழைய மதங்கள் - ஏறக்குறைய எல்லாம் - இலிங்க வழிபாட்டைக் கடைப் பிடித்தனவேயாம். நாளடைவில் அவ்வழிபாடு நேரியமுறையில் பலவிடங்களில் நடைபெறாதொழிந்தது. இலிங்கம் பல வுருவங்களாகச் சிதைவுண்டது. பழைய காலத்து யூதர் போற்றிய இலிங்கம் பின்னே சிலுவையாகத் திரிக்கப்பட்டது. கிறிதுக்குப் பின்னர் சிலுவைக் குறி வேறுபொருள் பெறலாயிற்று. திரிபு இலிங்க நுட்பங்களை இங்கே விரித்துப்பேசப் போதிய காலமின்மை குறித்து வருந்துகிறேன். இப்பொழுது சில சொற்களைத் தூவிச் செல்லும் நிலைமையிலேயே இருக்கிறேன். மன்னிக்க. இலிங்கம் என்னுஞ் சொல்லுக்குக் குறி என்பது பொருள். 1தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படாது வேறு ஆராய்ச்சிகளில் தலைப்பட்டவரால் இலிங்கத்துக்கு ஆண்குறி பெண்குறி என்றபொருள் சொல்லப்பட்டது. இதற்குக் காரணம், இலிங்கம் ஆண்மை பெண்மையினின்றுந் தோன்றியதென்ற கொள்கை திரிபாகப் பொது மக்களிடைப் பரவிநின்றதே யாகும். ஒரு சீரிய பொருள் பொதிந்த கொள்கை, சாதாரண மக்க ளிடைப் பரவும்போது, அஃது எத்தனையோ வழிகளில் மாறுதலடைவது இயற்கை. தெருப்பேச்சுக்களும் வதந்திகளும் ஆராய்ச்சியுல கேறுவதை நாம் காண்கிறோம். மூலசக்தி ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பது குறி யன்று; ஒருவிதசக்தி. அச்சக்தி பருமையதன்று; நுண்மையது; ஆனால் நிகழ்ச்சியிலிருப்பது; இன்பமுடையது. அது மின்சார சக்திபீடம் (Power House) போன்றது. சக்தி பீடத்தினின்றும் மின்சார ஒளியைப் பெறுதற்குக் கம்பிகள் மூடிகள் முதலிய பல கருவிகள் வேண்டப்படுகின்றன. அதேபோல ஆண்மை பெண்மை இயங்கி இன்பமளித்தற்கு ஒரு மூலமும், கம்பி மூடி முதலியனவும் இருக்கின்றன. மூலம் : சக்தி; கம்பிகள் : நரம்புகள்; மூடி (போர்வை): குறி. மின்சார ஒளி இயக்கத்திலிருக்கும் போது அது விளங்கித் தோன்றுதற்கு மூடி (போர்வை) அணியப்படுகிறது. அம்மூடி பிடுங்கப்பட்டால் ஒளி காணப் படுவதில்லை. இதனால் மூடி மின்சார சக்தியாகுமோ? ஆதலின் குறி, இன்ப மூலசக்தி ஆகாதென்க. சித்சக்தி இன்ப மூலசக்தி ஒன்றே. அதனிடத்தில் ஆண்மை பெண்மை என்னும் இரண்டு கூறுகளிருக்கின்றன. அவ் வாண்மை பெண்மை விளக்கங் கண்டு, அவ்வளவில் நின்ற மலயோகர், அவ்விரண்டையுங் கொண்ட சக்தியே இலிங்கமென் றறைந்தனர். அச்சக்தி கடந்து செல்வோருமுளர். அவர் அமல யோகர். அமலயோகர் இன்ப மூலசக்தியை யுணர்ந்து, அது சடமாயிருத்தல் கண்டு, மேலும் முயன்றனர். அவர்தம் முயற்சியில் மற்றுமொரு சக்தி புலனாயிற்று. அது சின்மயமா யிருத்தலை அவர் உணர்ந்தனர். சின்மயம் நாதங் கடந்தது. அச் சித்சக்தியினின்றும் எல்லாம் தோன்றுகின்றன; நிற்கின்றன; ஒடுங்குகின்றன. இத் தோற்ற நிலை ஒடுக்கங்களை நிகழ்த்துதற் கென்று சித்சக்தியினிடத்திலும் இரண்டு தன்மைகளிருக் கின்றன. அவை ஆண்மையும் பெண்மையுமாம். இவ்வாண்மை யும் பெண்மையும் சட சக்தியின் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மூலமாயிருப்பன. சித்சக்தியின் ஆண்மை பெண்மைக்கு உலகில் பல மொழியில் பல பெயர் வழங்கப்படுகின்றன; நம் நாட்டவர் இரண்டையும் முறையே சிவமென்றும் சக்தியென்றும் போற்றுகின்றனர். சித்சக்தியின் கூறுகளாயுள்ள ஆண்மையும் பெண்மையுஞ் சேர்ந்த ஒன்றை இலிங்கம் என்றனர் அமல யோகர். இலிங்கம் எல்லாவற்றிற்கும் ஆதிமூல மென்க. சித்சக்தியின் ஆண்மை பெண்மையாலாகிய இலிங்கத்தைச் சாதாரண ஆராய்ச்சியாளர் ஆண்குறி பெண்குறி என்கிறார். இவர்க்கு ஆராய்ச்சி முதிர்ந்து முதிர்ந்து அநுபூதியும் உடன் வளர்ந்துவரின் உண்மை விளங்கும். புரோடான் - எலக்ட்ரான் இக்கால விஞ்ஞான உலகம் பலதிற ஆராய்ச்சிசெய்து எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள சக்திகள் இரண்டு என்றும், அவை புரோடான் எலக்ட்ரான் என்றும் கண்டுள்ளது. புரோடான் ஆண்சக்தி; எலக்ட்ரான் பெண்சக்தி. இவை இரண்டும் அபின்னம். இவை சடமா? சித்தா? சடம். மலயோகர் கண்ட சடசக்தியின் கூறுகளாகிய ஆண்மையும் பெண்மையும் முறையே புரோடான் எலக்ட்ரானாக இருக்கலாம். சடசக்திக்கு முதலாக உள்ள சித்சக்தி ஆராய்ச்சிக்கு எட்டாதது. அதை உணர்தற்கு அநுபூதிவேண்டும். தூல சூக்குமம் சடசக்தி வேண்டுமா? வேண்டாவா? சடசக்தி வேண்டும். அஃது இன்றியமையாதது. அச்சக்தியைக் கொண்டே சித் சக்தியை உணர்தல் வேண்டும். சடசக்தி சித்சக்திக்கு ஏணி போன்றது. சடசக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைத் தூல லிங்கமென்றும், சித்சக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையைச் சூக்கும லிங்க மென்றுங் கொள்ளலாம். இலிங்கமும் அழகும் அழகைப்பற்றிப் பேசவந்த இந்த இடத்தில் இலிங்கம் வந்து குறுக்கிடுவானேன்? அதில் ஏதேனும் அழகுண்டா? என்று சிலர் வினவலாம். இலிங்கத்தினும் அழகுடையது வேறொன்றுண்டோ என்று யான் கேட்கிறேன். இலிங்கம் - சொக்கலிங்கம், அழகு - முழு அழகு. இலிங்கம் அழகுக்கு உறை யுள்; நிலைக்களன்; ஊற்று. அழகு எங்கே இருக்கிறது? உணவிலா? உடையிலா? தோலிலா? நிணத்திலா? நரம்பிலா? எலும்பிலா? எங்கே? ஒருவன் அழகொழுகப் பிறந்தான்; வளர்ந்தான்; தீயொழுக்கத்தில் வீழ்ந்தான்; குரங்கானான். அழகைக் காணோம். அவனுக்கு உணவில்லையா? உடையில்லையா? தோல் நிணம் நரம்பு முதலியன அவனை விடுத்து அகன்றா போயின? எல்லாமிருக் கின்றன. அழகை மட்டுங் காணோம். அழகு எங்கே? சித்சக்தியின் ஆண்மை பெண்மைச் சேர்க்கையில் அழகு பொங்கியவண்ண மிருக்கும். அழகுக்கு ஊற்றாயிருப்பது அச் சேர்க்கை. அஃது எது? அஃது இலிங்கம். அழகுக்கு ஊற்று எது? இலிங்கம். சித்சக்தியின் ஆண்மை பெண்மையினின்றும் பொங்கும் அழகைச் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கூட்டம் பெறுகிறது. அங்கிருந்து அழகெழுந்து உடல் முழுவதும் பரவி நிற்கிறது. சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேர்ந் தால், சித்சக்தியின் ஆண்மை பெண்மைத் துணை அதற்குக் கிடைத்தல் அரிதாகும். சடசக்தி அழகு பெறாதொழியின், உடலுக்கு அழகு எங்கிருந்து வரும்? ஆதலால் சடசக்தியின் ஆண்மை பெண்மைக்கு ஊறு நேராதவாறு காப்பது அறிவுக்கு அழகு. தீயொழுக்கம் சடசக்தியின் ஆண்மை பெண்மை வளத்தை நாளடைவில் குலைக்கும். அது குலையக் குலைய அழகு வற்றிப்போகும். அழகுக்கும் இலிங்கத்துக்கும் உள்ள தொடர்பை உணர்க. மூலத்தின் இடம் சடசக்தி இன்ப மூலமென்றும், அதன் கூறுகள் ஆண்மை பெண்மை என்றும் அடிக்கடிச்சொல்லி வருகிறேன். அம்மூலம் உடலில் யாண்டுள்ளது என்று இது காறும் யான் சொன்னே னில்லை. முன்னமே அதைச் சொல்ல நினைந்தேன். காலத்தைக் கருதி அதை அங்கே விடுத்தேன். இங்கே சிறிது தொட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறேன். 1எருவிடும் வாசலுக்கும் கருவிடும் வாசலுக்கும் இடையிலிருப்பது அந்தச் சக்திமூலம். இதைக் காமபீடமென்று (Semen Gland) உடற்கூற்று நூலார் கூறுப. யான் சொல்வது அஃது அன்று. அதற்குச் சார்பாக அதனினும் நுண்ணியதாக உள்ள ஒன்று யான் சொல்வது. அச் சக்திமூலம் எப்பொழுதும் ஆக்கம் பெற்றிருத்தல்வேண்டும். இல்லையேல் உடல் நாசமாகும். சக்திமூலத்தின் ஆக்கம், ஞானக்கண்ணென் னும் முக்கண் விளக்கத்துக்கு ஆக்கம் உண்டுபண்ணும்; முக் கண் பீடத்துக்கு (Pineal Gland) ஊக்கமளிக்கும் தொடர்பு உண்டு. அத் தொடர்பைச் செய்வது குண்டலினி (Spinal Cord). மூலம் கேடுற்றால் எல்லாம் கேடுறும். ஆதலின் சடசக்தி மூலம் காக்கப்படல் வேண்டும். அதன்காப்பைப் பொறுத்தே சின்மய லிங்கம் விளங்கும். அமலயோகர் உணர்ந்துரைத்த இலிங்கம் சின்மயம். அதை எப்படி வழிபடுதல் கூடும்? சின்மய லிங்கத்தைப் புலவர் ஓவியத்தில் இறக்குகின்றனர். ஓவிய லிங்கம் உள்ளத்தில் ஒன்றும்; நன்கு ஒன்றும்; அதை எளிதில் தியானஞ் செய்யலாம் - வழிபடலாம். இலிங்க வழிபாடு உள்ளத்தை அழகாக்கும்; உடலை அழகாக்கும்; உயிரில் அழகொளி படரச்செய்யும்; அமல யோகத்தைக் கூட்டும். அழகைச் சாரும் எதுவும் அழகாவது இயற்கை. இலிங்க ஓவியத்துக்கும், மற்ற மூர்த்த ஓவியங்கட்கும் வேற்றுமையுண்டு. கைகால்கள் முதலிய உறுப்புக்களை யுடைய ஓவியம் புறமனத் தியான அளவில் பயன்படும். நடுமனத்தில் உறுப்புக்கள் மறையும். அடிமனத்தில் ஓவியம் உறுப்பிழந்து இலிங்கமாகும். அதற்குமேல் இலிங்கத் தோற்றம் ஒடுங்கி, அது பிராணமயமாய், விந்து மயமாய், நாதமயமாய்ப் படிப்படியே மாறி மாறி ஆன்ம மயமாகும். ஆன்மலிங்கமே மேம்பட்டது. அதற்குமேல் பேச யான் அருகனல்லன். 1அண்டம் இலிங்கமயம்; அணு இலிங்கமயம்; உடல் இலிங்கமயம்; உயிர் இலிங்கமயம்; எல்லாம் இலிங்கமயம். ஆன்ம லிங்கம் விளங்கினதும் எல்லாம் இலிங்கமென்பது நன்கு விளங்கும். பழுத்த அமலயோகர் சின்மயமானதும் அதாவது இலிங்க மானதும் அவர்தந் திருமேனி ஓரிடத்தில் அடக்கஞ் செய்யப்படு கிறது. அதன்மீது ஓவிய லிங்கம் வைக்கப்படுகிறது. அதைச் சமாதி என்று புற உலகஞ் சொல்கிறது. புறச்சமாதி ஆதியுடன் சமம் ஆதலை உணர்த்துவது. இச்சமாதிகள் பெரும் பெருங் கோயில்களாயின. அக்கோயில்கள், இருள்மலிந்த இந்நாளிலும் உயிருள்ளனவாகவே பொலிகின்றன. ஆங்காங்குள்ள இலிங்கங்கள் அழகொளியை வீசுகின்றன; சின்மய சோதியைக் கால்கின்றன. அழகும் சோதியும் பக்தர்கட்கு விளங்கியே வருகின்றன. அமலயோகரல்லாத பிணங்கள் புதைக்கப்படும் இடங்களும் சமாதிகள் என்று சொல்லப் படுகின்றன. அவைகள் சமாதிகளல்ல; இடுகாடுகள். அறிவு அழகு வழிபாட்டை இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன். இனி அறிவு வழிபாட்டின் மீது சிறிது கருத்துச் செலுத்துகிறேன். அறிவும் ஓர் உருவின் வாயிலாகத் தன்னை உணர்த்துவது, அறிஞர்வழி ஒளிர்வது அறிவு. பொய்யறிவு மெய்யறிவு அறிஞர் இருசாரார். ஒரு சாரார் பொய்யறிவு விளங்கப் பெற்றவர். மற்றொரு சாரார் மெய்யறிவு விளங்கப்பெற்றவர். பொய்யறிவு எது? மெய்யறிவு எது? பொய்யறிவு, தோன்றி நின்று அழிதன் மாலையனவான பொருளல்லாப் பொருள் களின் சார்பில் விளங்குவது. மெய்யறிவு, தோற்றநிலை இறுதி என்னும் விகாரமுறாது - மாறுதலடையாது - என்றும் ஒரு பெற்றியதாயுள்ள செம்பொருளின் சார்பில் விளங்குவது. சிற்றறிவு - பேரறிவு தோன்றி நின்று அழிவன எல்லாம் மாயா காரியங் களாகிய தத்துவங்கள். தோன்றி நின்று அழியாதது பரம் பொருள் ஒன்றே. இது பேரறிவு எனவும்படும். அறிவு திடீ ரெனப் பரம்பொருளாகிய பேரறிவுடன் சார்ந்து அதுவாகாது. அது தத்துவங்களைப் படிப்படியே பற்றிப் பற்றிச் சென்று பேரறிவுடன் சார்ந்து அதுவாகும். அறிவு பேரறிவுடன் சார்ந்து அதுவாதல் என்று சொல்வதில் ஒருவித மயக்கம் உண்டாகும். சொல் உலகில் நிற்கும் வரை மயக்கம் உண்டாதல் இயல்பு. சொல் கடந்த அநுபூதியில் எவ்வித மயக்கமும் உண்டாகாது. பேரறிவுடன் சார்ந்து அதுவாவது சிற்றறிவு என்றும், அஃது ஆன்மா என்றும், பேரறிவு பரமான்மா என்றும், அதுவாதல் என்பது பேரறிவும் சிற்றறிவும் பொருட்டன்மையில் ஒன்றாதலை உணர்த்துவதன்று என்றும், அது கலப்பில் ஒன்றாதலை உணர்த்துவது என்றும், பேரறிவும் சிற்றறிவும் ஒன்றாயின் பேரறிவு சிற்றறிவாய் வருதற்குக் காரணம் வேண்டப்படும் என்றும், காரணம் பெறின் அஃது ஒரு பொருளுண்மைக்கு இடந்தாராமையைச் சிந்தித்தல் நேரும் என்றும், ஆதலின், சிற்றறிவும் பேரறிவும் பொருளால் வேறுபட்டும் கலப்பால் ஒன்றுபட்டும் இருப்பவை என்றும் கூறுவோரும் உளர். விவகாரத்தில் சிற்றறிவு பேரறிவு என் றிரண்டு உண்டு என்றும், பாரமார்த்திகத்தில் இரண்டில்லை என்றும், பொருள் ஒன்றே என்றுஞ் சொல்வோரும் உளர். இன்னும் பலதிறக் கருத்துடையோரும் உளர். இக்கொள்கை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு குறியீட்டுப் பெயர் அறிஞரால் அணியப்பட்டிருக்கிறது. அவ்வவ்வணியை அவ்வக் கொள்கை யுடைய நூலிற் காணலாம். வாதப் போர் சிற்றறிவு பேரறிவைப்பற்றி நமது நாட்டிலும், வேறு நாடுகளிலும் நடந்த வாதப் போர்கட்கு அளவே இல்லை. இப்பொழுது அரசியற் போராட்டம் அப்போராட்டங்களை ஓரளவில் விழுங்கி நிற்கிறது. வரப்போகும் புது உலகில் அப் போராட்டமும் இராது. இப்போராட்டமும் இராது; சிற்றறி வும் பேரறிவும் ஒன்று, வேறு, கலப்பு, முதலிய கொள்கை களையுடைய நூல்கள் பலவற்றைக் கேட்பதிலும், ஆராய்வ திலும், சிந்திப்பதிலும் காலங்கழித்தவருள் யானும் ஒருவன். வாதப் போர்களிலும் சிலகாலம் யான் உழன்றும் இருக்கிறேன். பலதிறக் கொள்கைகளை வெளியிட்டவ ரெல்லாரையும் பேரறிஞரென்றே யான் போற்றுகிறேன். உண்மை ஒன்றே உண்மை ஒன்றே. இஃது அநுபூதியில் விளங்குவது ஒருதலை. ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு நிற்கிறது. கவடு கோடுகட்குக் காரணம் காலதேச வர்த்த மானமேயாகும். ஒருகாலம் ஒருவிதக் கொள்கையை விரும்பும். அதை நிறைவுசெய்ய ஓரறிஞர் தோன்றுவர். இன்னொருகாலம் இன்னொருவிதக் கொள்கையை விழையும். அதை நிறைவு செய்ய இன்னோர் அறிஞர் தோன்றுவர். இவ்வாறு ஓர் உண்மை பலதிறக் கவடு கோடுகளை விட்டு விட்டு நிற்பதாயிற்று. கொள்கைகள் காலதேச வர்த்தமானத்தையொட்டி எழுவன என்னும் நுட்பம் விளங்கப்பெற்றவர் மனம் வாதப்போரில் செல்வது அரிது. இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிரிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே. இது திருவாசகத்திலுள்ள ஒரு பாட்டு. இவ்வொன்று ஒவ்வோரறிஞர்க்கு ஒவ்வொருவிதக் கருத்தை வழங்கிநிற்கிறது. நீயலால் பிரிதுமற் றின்மை என்பதற்கும், ஒன்றாம் என்ப தற்கும், ஒன்றுநீ அல்லை அன்றிஒன்றில்லை என்பதற்கும் அறிஞர்வாயிலாக எழுந்த விரிவுரை ஒன்றா? இரண்டா? பற்பல. சத்காரியம், ஆரம்பம், பரிணாமம், விவர்த்தனம் முதலிய வாதங்களெல்லாம் அறிஞர் உரைகளில் மலிகின்றன. அறிஞர் உரைகள் போராட்டங்களை விளைவியாமலில்லை; அறிவுப் போராட்டம் ஓரளவில் வேண்டற்பாலதே. அதை அறிவுக்குரிய விருந்தாகக் கொள்வது அழகு. அறிவுப் போராட்டம் என்றாவது, சொல்லை விடுத்து, உண்மைப்பொருளை நேரே நோக்கத் தூண்டும். பொருள் நோக்குப் போராட்டத்தைப் படிப்படியே தவிர்ப்பதாகும். போராட்டம் போராட் டத்தைக் களைவதை யான் அநுபவத்தில் உணர்ந்துள் ளேன். ஆதலின், எச்சார்பிலும் பற்றுக்கொண்டு இங்குப் பேச மனம் எழவில்லை. இதுவும் காலதேச வர்த்தமானப் போக்கா யிருக்கலாம். அதுவாதல் என்பது மூலம். இம்மூலத்துக்கு அறிஞர் அவ்வப்போது கண்ட உரைகள் பல; பலதிறத்தன. இப்பொழுது எனது நெஞ்சம் மூலத்தையே நாடுகிறது. இந்நாட்டத்தை எனக்கு வழங்கிய உரைகட்கும் வாதப்போர்கட்கும் வாழ்த்துக் கூறுகிறேன். சிற்றறிவைப் பேரறிவாக்கும் முயற்சிவேண்டும். அதுகுறித்து, வழிபாடு நிகழ்த்து என்பது இயற்கை அன்னை யின் ஆணை. இவ்வன்னையின் ஆணையும் காலதேச வர்த்த மானத்துக்கு ஏற்றவாறு பிறப்பது. அறிவும் தத்துவமும் தத்துவங்களைப் பற்றிச் செல்லச் செல்ல அறிவு பேரறிவின் துணைபெற்று அதைச் சார்ந்து அதுவாகும். அறிவு, தத்துவங்களைப் பற்றுவது யோகம். யோகமாவது ஒன்றல்- ஒன்றுடன் ஒன்றல். இரண்டு வாயிலாக நிகழ்வது யோகம். அறிவு ஏதேனும் ஒன்றைப்பற்றி அதில் ஒன்றினால் அது யோகமாகும். வழிபாடு என்பதும் யோகத்தின் பாற்பட்டதே. இதுபற்றி முன்னரும் பேசியுள்ளேன். அறிவு ஒன்றைப் பற்றும்வரை யோகம் நிகழும். அறிவு ஒன்றைப் பற்றுவது அற்றுப்போயின் யோகமும் அற்றுப் போகும். யோகத்துக்கு இரண்டு ஒன்றுதல் தேவை. இரண்டற்ற இடத்தில் யோகம் ஏது? ஒன்றில் ஒன்றல் என்னும் யோகம் நாதம் வரையுண்டு. முன்னர் இசைக்கண்யான் இதைக் குறிப்பிட்டது உங்கள் நினைவிலிருக்கும். அறிவு, தத்துவங்களில் தோய்ந்து செல்லும்போது நெடுந்தூரம் மனத் தத்துவத்தின் துணையை ஆங்காங்கே வேண்டி நிற்கும். அறிவு சுத்த வித்தையின் ஒளி பெற்றதும், மனம் - அடிமனம் - முற்றும் ஒடுங்கிவிடும்; பின்னே சுத்த தத்துவங்களின் துணையை நேரே பெற்றுப் பரத்துடன் அதுவாகும். பலபட விரிந்துள்ள மாயாகாரியத் தத்துவம் ஒவ் வொன்றையும் அறிவு பற்றிப் பற்றிச் செல்லல்வேண்டுமா? இதற்குப் பதில் சாதகமாகவும் பாதகமாகவும் நூல்களில் இருத்தலை யான் கண்டுள்ளேன். ஒவ்வொரு தத்துவத்தையும் பற்றிப் பற்றியே அறிவு செல்லுதல் வேண்டும் என்னும் நியதி இல்லை. ஒரு நொடியில் பரமாகும் உயிரும் உண்டு; பல பிறவி தாங்கித் தாங்கியும் மண் தத்துவத்தைக் கடந்து செல்ல இயலாத உயிரும் உண்டு. இதற்கு உரிய காரணங்கள் பலகூறலாம். அது பெருங் கடையாகும். அக்கடையைத் திறந்தால் மணிவிழா மண்டபம் பெரிய சந்தைக் கூட்டமாகும். மணிவிழாவில் வாணிபம் எற்றுக்கு? அறிஞர் அறிஞர் எவர்? மெய்யறிவு விளங்கப்பெற்றவர். இவரே மெய்ஞ்ஞானிகள். இவரை வழிபடுவது அறிவை வழிபடுவ தாகும். அறிவைத் தனியே வழிபடுதல் இயலாதன்றோ? மெய்ஞ்ஞானிகளென்று போலிகளை வழிபடலாகாது. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. அது போலியில் படிந்தால் போலியே யாகும். சில போலிகள் தங்களை மெய்ஞ்ஞானிகளென்று உலகங் கருதுமாறு நடிக்கின்றார்கள். ஒன்றுமறியா உலகம் ஏமாந்து போகிறது. போலிகளை வழிபட்டால் அவர்களது பொல்லாத கரவுக் குணங்க ளெல்லாம் வழிபடுவோரிடத்தில் படியும். சில நல்ல பிள்ளைகள் போலிகளை அடைந்த காரணத்தால் தீயவராய்க் கயவராய்க் கொலைஞராய் மாறியதை யான் அறிவேன். மெய்யர் பொய்யர் இன்னார் மெய்யர் இன்னார் பொய்யர் என்று எப்படி உணர்வது? கலைஞானியர் நிலை அவர்தங் கலைஞானத்தால் விளங்கும். மெய்யறிவு விளங்கப்பெற்ற நல்லறிஞர் நிலையை உணர்தற்கு நடுநிலை நெஞ்சம் வேண்டும்; துரபிமானம் கூடாது. மெய்ஞ்ஞானிகளிடம் தற்பெருமை நாடாமை, பிறரை இழித்துக் கூறாமை, விளம்பரங் கருதாமை, வலிந்து பணம் பறியாமை, அவரிடம் நெருங்கிப் பழகுவோர்பால் இகல் பகை முதலிய தீமைகள் தேய்ந்து, அன்பு அருள் சகோதரநேயம் முதலிய நலங்கள் வளர்தல் முதலியன காணப்படும். இவைகட்கு மாறுபட்ட குணங்கள் போலிகளிடங் காணப்படும். இவ்விரு விதக் குணங்களைக் கொண்டு மெய்யர் பொய்யர் நிலைகளை ஒருவாறு எளிதில் உணரலாகும். இந்நாளில் மெய்யறிஞரைக் காண்டல் அரிது என்றோர் எண்ணம் இக்காலக் கல்வியாளரிடைப் பெரிதும் உலவி வருகிறது. இதற்குக் காரணம் இக்காலக் கல்வியும் நாகரிகமு மாகும். எந்நாளிலும் மெய்ஞ்ஞானிகள் இலைமறை காய்போல் இருப்பார்கள். அவர்கள் துணையை உலகம் பெற்றே வரு கிறது. இக்காலக் கல்வியாளர் கருத்துப்படி மெய்ஞ்ஞானிகள் கிடையாவிடின், மெய்ஞ்ஞானத்துக்கு அறிகுறியாகவுள்ள பழைய உருவங்களில் அன்பர்கள் தாங்கள் விரும்புமொன்றை வழிபடலாம்; சனத்குமாரர், லாயோட்ஸி, கன்புஸிய, வான்மீகி, திருமூலர் முதலியோர் ஓவியங்களை வழிபட்டு வரலாம். மெய்ஞ்ஞானிகளை வழிபடுவதும், அவர்கள் ஓவியங் களை வழிபடுவதும் ஒன்றேயாகும். நீதி இனி நீதியை நினைப்போம். நெஞ்சில் ஏதேனும் உறு கிறதா? ஒன்றையுங் காணோம். நெஞ்சு சூன்யமாகவே இருக்கிறது. நீதியுடைய ஒருவரை நினைப்போம். நெஞ்சில் அவர் உருவம் நிற்கிறது. நீதியும் ஓர் உருவின் வாயிலாகவே தன்னை உணர்த்துவது. காதலும் வீரமும் அழகும் அறிவும் தெய்வக் கூறுகளாகப் பொலிவதுபோல, நீதியும் தெய்வக் கூறாகவே பொலிவது. கடவுள் நீதியாயிருப்பது; நீதிபதியா யிருப்பது. இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும் தன்னவுரு வாமென மிகுத்ததவன். இது திருஞானசம்பந்தர் திருப்பாட்டு. இதன்கண் கடவுள் நீதி வடிவம் என்னும் உண்மை ஒளிர்தல் காண்க. நீதியின் சிறப்பு ஒருவன் கற்றவனா யிருக்கலாம்; கொடையாளியா யிருக்கலாம்; கோயில் பற்றுடையவனா யிருக்கலாம்; யோகப் பயிற்சியில் தலைப்பட்டவனா யிருக்கலாம். அவனிடத்தில் நீதியொழுக்கம் ஒன்றில்லாவிடின், அவனுடைய மற்றக் குணங்களால் பயன் விளையாது. நீதியுள்ள இடத்தில் மற்றக் குணங்களெல்லாம் தாமே மருவும்; அவைகளால் விளையத்தக்க பயனும் விளையும். சீலங்களுள் சிறந்த ஒன்று நீதி. யோகம் முதலியன செய்து உய்யும் வழி காண முயன்று முயன்று வருந்துவதைப் பார்க்கிலும், அன்றாட வாழ்க்கையில் - தொழில் முறைகளில் - பிறவற்றில் - நீதியாக நடந்து வருவது சிறப்பு. வன்றொண்டர் வன்றொண்டப் பெருந்தகையாரது வரலாறு உங்களுக்குத் தெரியும். அவர் கடவுளிடத்து அன்பு செலுத்திச் செலுத்திக் கடவுள் வாயிலாகவே பெண், பொன், நெல் முதலியன பெற்று வாழ்ந்தவரென்றும், கடவுளைத் தோழராகப் பெற்றவரென்றும் சுருங்கச் சொல்லலாம். இப்பெருமை வாய்ந்த வன்றொண்டர் திருவொற்றியூரில் ஒரே முறை தாம் கூறிய உறுதிமொழியி னின்றும் வழுக்கி வீழ்ந்தார். கடவுள் அன்பு என்ன செய்தது? அது நீதியாய் அடியவர் கண்களை மறைத்தது. அன்று முதல் வன்றொண்டர் ஒரு பாடங் கற்றுக்கொண்டனர்; தம் தோழர் கடவுள் நீதியாகவும் இருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்து நடக்கலாயினர். அன்று தொட்டு அவர் அருளிய பாடல்களில் கடவுள் நீதியில் சீலமாயிருத்தலைக் குறிப்பிட்டே வந்தனர். மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித் தேனை யாடிய கொன்றையி னாயுன் சீல முங்குண முஞ்சிந்தி யாதே நானு மித்தனை வேண்டுவ தடியேன் உயிரொ டுநர கத்தழுந் தாமை ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் அரசே தண்பொழி லொற்றி மாநக ருடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் சீலந் தான்பெரி தும்உடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாளுமை நங்கை என்று மேத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே. குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்கா துடையானே உறவிலேன் உனையன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தா லிழிவுண்டோ சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொனே திருவா வடுதுறையுள் அறவனேயெனை அஞ்சலென் றருளாய் யாரெனக் குறவமரர்க ளேறே. இப்பாக்களில் நீதிச் சீலம் வலியுறுத்தப்பட்டிருத்தல் காண்க. விருஷபதேவரும் புத்தரும் இவ்வுலகில் நீதிச் சீலத்தை அறிவுறுத்திய பெருமை பலர்க்கு உண்டு. ஆனாலும், சிறப்பாக அப்பெருமை விருஷப தேவர்க்கும் புத்தருக்குமே உண்டு. அவ்விருவரும் நீதி வடிவம் என்று கூறுதல் மிகையாகாது. அவர்களைப் போற்றுவது நீதியைப் போற்றுவதாகும். அவ்விருவர் ஓவிய உருவங்களில் உளத்தை ஒன்றவைத்து நோக்கினால், அவைகளில் நீதி பொழிதலை உணரலாம். நீதிச் சீலமயமாயிலங்கும் அவ்வற வோரின் ஓவியங்களை வழிபட்டால் உள்ளம் நீதி வண்ணமாகும். 1நீதியுள்ளம் தெய்வக் கோயிலாதல் ஒருதலை. விரும்பும் உருவம் வழிபாட்டுக்கு அவரவர் தம்தம் மனம் விரும்பும் ஓர் ஓவிய உருவத்தைக் கொள்ளலாம். எவரும் தாம் கொண்டதை உயர்த்தியும், பிறர் கொண்டதைத் தாழ்த்தியும் பேசலாகாது. இரண்டும் தத்துவத்தில் ஒன்றே யாதலால், ஓர் உருவத்தை நிந்திப்பது மற்றோர் உருவத்தையும் நிந்திப்பதாகும். ஓவிய உருவங்களில் உயர்வு தாழ்வு கருதும் நெஞ்சம் ஓவிய நுட்பம் உணர்ந்ததாகாது. அதற்கு ஓவியம் புலனாகாது; வெறும் பிண்டமே புலனாகும். ஒருவித மண்ணால் பலதிறப் பாண்டங்கள் வனையப்படுகின்றன. அவைகளுடைந்தால் அம்மண்ணே ஆகும் . மூலமண்ணில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அறிவுடைமை யாகுமா? ஓவிய உருவங்கள் தத்துவ அறிகுறிகளாக அமைந்தன. ஓர் ஓவியம் என்ன நுட்பத்தை அறிவுறுத்துகிறதோ, அதே நுட்பத்தை மற்றோர் ஓவியமும் அறிவுறுத்தும். இவ்விரண்டின் மூலத்தில் என்ன வேற்றுமை இருக்கும்? ஒருவன் முருகனைத் தொழுகிறான்; இன்னொருவன் அரங்கநாதனை வணங்கு கிறான். மற்றொருவன் கண்ணனைப் போற்றுகிறான். இவ்வுருவ வேற்றுமை எதுவரை? புறமனங் குவியும்வரை. பின்னே முருகன் எங்கே? அரங்கன் எங்கே? கண்ணன் எங்கே? முருகன் மயிலும் வேலும் விந்துநாத மாகின்றன; அரங்கன் பாற்கடலும் அர வணையும் விந்துநாதமாகின்றன; கண்ணன் புன்னையும் குழலும் விந்துநாத மாகின்றன. விந்துநாதம் பலப் பலவா? இல்லை. ஒரே விந்து, ஒரே நாதம். அவை ஓவியத்தில் பல உருவங்கள் பெறுகின்றன. இதற்குக் காரணம் மக்களின் மனோநிலை பலவிதமா யிருப்பதாகும். ஒவ்வொரு மனம் ஒவ்வொன்றில் ஈடுபடும். அதனால் தத்துவங்கள் ஓவியத்தில் பலதிற உருவங்கள் பெறுகின்றன. இந் நுட்பத்தைக் கலையால் உணர்ந்த பின்னர் வழிபாட்டிற் புகுவது நலம். நுட்பங்களை உணர்தற்கென்றே பலதிறக் கலைகள் தோன்றியுள்ளன. காரியம் பல - காரணம் ஒன்று ஒரேவிதப் பொன் பலவித அணிகளாகச் செய்யப் படுகிறது. அணிகள் உருக்கப்பட்டால் அவைகள் பழையபடி பொன்னே ஆகும். பலவிதப் பனிக்கட்டிகள் நீராகவும் ஆவி யாகவும் மாறுங்கால் அவைகளில் பலவிதம் காணப்படுவ தில்லை. இவைகளைப்போலவே ஓவிய உருவம் மனங்குவிந்து ஒடுங்கும்போது தத்துவமாகும்; தத்துவம் ஒளியாகும்; ஒலி யாகும். இந்நிலைகளில் ஓவிய உருவம் ஏது? கோயில் ஓவிய உருவங்கள் முதல்முதல் மரத்தடியில் வைக்கப் பட்டன. பின்னே நாகரிகம் முதிர முதிரச், சிற்பம் வளர வளர, ஆகமம் பெருகப் பெருக, மரத்தடிகள் மாளிகைகளாய் மண்டபங்களாய்க் கோபுரங்களாயின. இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே கோயில் என்று அழைக்கப்பட்டது. ஓவியக் கூடங்கள் கோயிலாயின என்று சொல்லலாம். நாளடைவில் வேறு பல கலைகளும் கோயில்களில் இடம் பெறலாயின. இடைக்காலத்தில் நமது நாட்டுக் கோயில்கள் கலைக்கூடங்க ளாயின என்று கூறல் மிகையாகாது. பிற நாட்டுக்கோயில்கள் இம் முறையில் பெருகவில்லை. முதலில் அரசன் - இறைவன் - உள்ள வீடு கோயில் என்ற வழக்குப் பிறந்தது; பின்னே எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் அரசனாக - இறைவனாக - உள்ள ஆண்டவனிருப்பிடம், கோயில் - திருக்கோயில் - என்று அழைக்கப்பட்டது. இதை உலகம் ஏற்கலாயிற்று. எங்குமுள்ள ஆண்டவனுக்கு ஒரு தனியிடம் எற்றுக்கு? ஆண்டவன் எங்குமுள்ளவன் என்பதில் ஐயமில்லை. ஏறக்குறைய எல்லா மதங்களும் ஆண்டவன் எங்குமுள்ளவன் என்றே இயம்புகின்றன. இவ்வாறு இயம்பும் மதங்களெல்லாம் குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வருகின்றன. எக்காரணம்பற்றியும் உருவ வழிபாடு கூடாது என்று அறைகூவும் மதங்களும் நாற்பாங்கு எல்லை யில் சுவரிட்ட ஓரிடத்தைத் தொழுகைக்கென்று ஒதுக்கி வைத்துள்ளன. குறிப்பிட்ட ஓரிடத்தைக் கோயிலாக்கொண்ட தற்கு மதங்கள் கூறுங் காரணங்கள் பலப்பல. தத்துவ முறையிலும் பிற வழிகளிலும் காரணங்கள் சொல்லப் படுகின்றன. எளிய முறையில் இங்கொன்று சொல்ல விரும்பு கிறேன். நல்லெண்ணப் பெருக்கு மக்களிடத்தில் நல்லெண்ணமும் பிறக்கிறது; தீய எண்ணமும் பிறக்கிறது. எது பெருகல் வேண்டும்? எது அருகல் வேண்டும்? முன்னையது பெருகல்வேண்டுமென்றும் பின்னை யது அருகல்வேண்டுமென்றும் எவருங் கூறுவர். ஆனால் பெருகலும் அருகலும் வாழ்க்கையில் எப்படி நடக்கின்றன? முற்றும் மாறாகவே நடக்கின்றன. அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் நல்லெண்ணத்தைப் பெருக்கும் வாய்ப்பு மிகமிகச் சிலர்க்கே கிடைக்கிறது. பெரும்பான்மையோர்க்கு அவ்வாய்ப்புக் கிடைப்பதில்லை. தீய எண்ணப் பெருக்கினின்றும் விடுதலையடைய மக்கள் விரும்புகிறார்கள்; முயல்கிறார்கள்; இயலாமை குறித்து வருந்துகிறார்கள். இவ்வுண்மை கண்ட அறிஞர் நல்லெண்ணப் பெருக்குக்கென்று ஓர் அமைப்புக் கண்டனர். அதுவே கோயில். ஒருவர் ஒரு திங்கள் கோயிலுக்குப் போய் வருகிறார்; மற்றொரு திங்கள் மாஜிடிரேட் கோர்ட்டுக்குப் போய் வருகிறார். இரண்டமைப்புக்களில் எது நல்லெண்ணத்தைப் பெருக்குகிறது என்று அவரைக் கேட்டால் உண்மை விளங்கும். நல்லெண்ணத்தை வளர்க்கும் அமைப்புக் கோயிலென்றே அவரது அநுபவம் அறிவுறுத்தும். இவ்வநுபவத்தை எச்சமயக் கோயிலும் உண்டாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கோயில் எச்சமயத்தினதாயினும் ஆக; எந்நாட்டினதாயினும் ஆக; எச்சமூகத்தினதாயினும் ஆக; அது நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கென்று ஏற்பட்டதென்க. கோயில் வழிபாடு ஆங்காங்கே முறைப்படி நடைபெற்று வரின் மக்கள்பால் நல்லெண்ணம் பெருகும். அதனால் குடும்பம் நல்லதாகும்; ஊர் நல்லதாகும். கோட்டம் நல்லதாகும்; உலகம் நல்லதாகும்; எங்கும் அமைதி நிலவும்; சகோதரநேயம் ஓங்கும்; கலைகள் வளரும்; ஆண்டவன் அருளே ஆட்சிபுரியும்; இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோயில் வழிபாடு குன்றினால், மக்கள் நிலை என்னவாகும்? குடும்பம், ஊர், கோட்டம், நகரம், நாடு, உலகம் ஆகியவற்றின் நிலைகள் என்னவாகும்? எங்கணும் தீய எண்ணப் பேய் ஆட்சிபுரிந்து போராட்டத்தைப் பெருக்கும். தத்துவ அமைப்பு கோயில் வெறுங் கட்டடமன்று. அது தத்துவ அமைப்பு. தத்துவ நுட்பமுணர்ந்து கோயில் வழிபாடு நிகழ்த்துவது அறிவுடைமை. தத்துவ நுட்பங்களைக் கலைகளால் உணரலாம். அமைப்பின் நுட்பந் தெரியாது அதைச் சுற்றிச் சுற்றிக் கும்பிட்டுவந்தால், அது கல்லாக மண்ணாக வேடிக்கையாகவே தோன்றும். குறிக ளும்அடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியி லீர்மனம் என்கொல் புகாததே. என்று அப்பர் அருளிய கோயிற் பாட்டைப் பார்க்க. குறி - அடையாளம் - கோயில் - நெறி - முதலியன நுட்பங்கள் வாய்ந்தன. அவைகளின் உள்ளுறை தெரிந்து வழிபாடு நிகழ்த்தினால், அவைகளால் விளையத்தக்க பயன் விளையும். கோயில் அமைப்பின் உள்ளுறை உணராது, உதட்டளவில் ஆயிரக்கணக்கில் மறைகளை முழக்குவதால் என்ன பயன் விளையும்? இவ்வாறு வெறும் முழக்கஞ் செய்வோரைப் பொறியிலீர் என்று பொறுமைப் பொருள் விளிக்கிறது. வாயால் வேதங்களை ஓயாமல் ஓதுவதால் மட்டும் பயன் விளையா தென்பதும், அவ்வேதத்திலுள்ள தத்துவங்கள் கோயிலாக அமைந்துள்ள நுட்பம் மனம் புகுதல் வேண்டு மென்பதும், அப்பொழுதே குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும், அவர் நின்றதோர் நேர்மையும் இனிது விளங்குமென்பதும் அப்பர் கருத்து. நமது உடல் ஒரு பெருங்கோயில். அதன் உட்கோயில் உள்ளம். உள்ளத்தின் உட்கோயில் உயிர். உயிர்க்கு உயிரா யிருப்பது பரம்பொருள். உடல் உள்ளம் முதலிய உறுப்புக்கள் தத்துவங்களால் ஆக்கப்பட்டவை. உயிர் இத்தத்துவங்களில் வீழ்ந்து அவ்வம்மயமாய்க் கிடக்கிறது. அது படிப்படியே தத்துவங்களினின்றும் நீங்கி நீங்கிப் பரம்பொருளில் கலந்து ஒன்றுபட்டு அதுவாகும். உயிர் எப்படிப் பரம்பொருளாகும்? அதற்குரிய முயற்சி ஏதேனும் உண்டா? உண்டு. அஃது எது? அதுவே வழிபாடென்பது. இன்னோரன்ன உண்மைகளைக் கண்டவர்கள் அநுபூதிமான்கள். உடற் கோயில் அநுபூதிமான்கள் புற வழிபாட்டால் அக வழிபாடு ஆக்கமுறுவதை அறிந்தார்கள்; அக வழிபாட்டால் உடலும் உள்ளமும் உயிரும் கோயிலாதலையும், உயிர் பரமாதலையும் உணர்ந்தார்கள். அவர்கள் தாங்கள் கண்டதை மந்திர மொழி களாகத் தந்து சென்றார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை புற வழிபாடு. புற வழிபாடு நிகழ்த்தற்குரிய இடம் புறக்கோயில். புறக்கோயில் அமைப்பை ஆராய ஆராய, அஃது உடற்கோயி லின் பரிணாமமென்பது நன்கு தெரியும். இதற்கு அநுபூதி மான்கள் அருளிய மந்திர மொழிகள் சான்றுகளாக நிற்கின்றன. 1‘CÅ லுயிர்ப்பை ஒடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே. 2m‹ng தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். 3fhank கோயிலாக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்க மாக நேயமே செய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே. 4cŸs« பெருங்கோயில் ஊனுடம் பாலயம் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. இம் மறைமொழிகளால் புறக்கோயிலுக்கும் அகக்கோயி லுக்கும் உள்ள தொடர்பு செவ்வனே விளங்குகிறது. சிவக்ஷேத்தி ராலய மகோற்சவ உண்மை விளக்கம் என்றொரு நூல் சதாவதானம் - யாழ்ப்பாணம் - நா. கதிரைவேற்பிள்ளை அவர் களால் இயற்றப்பட்டது. அதில் பல நுட்பங்கள் விளக்கப் பட்டுள்ளன. நமது அருமை உடல் கோயிலாகப் பரிணமித்திருக்கிறது. இக்கோயிலை நாம் எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்? உயிர் என்றே பாதுகாத்தல் வேண்டும். அதன் ஒரு கல் ஓர் எலும்பு போன்றது. எலும்பை நொறுக்கவோ பறிக்கவோ நாம் ஒருப்படுவோமா? கோயிலின் ஒவ்வோர் உறுப்பும் பாது காக்கப்படல்வேண்டும். கோயில் நமது உடல். உடலை ஓம்புவது போலவே கோயிலையும் நாம் ஓம்புதல்வேண்டும். புறக்கோயி லிருக்கிறது; அகக்கோயிலிருக்கிறது; ஆன் றோர் மறைமொழிகள் இரண்டையுந் தொடர்பு படுத்தி நிற்கின்றன. நமக்கென்ன குறை? நாம் செய்ய வேண்டுவ தென்னை? வழி பாடு; ஒழுங்குபட்ட வழிபாடு; நேரிய வழிபாடு. வித்தகம் பேச வேண்டா பணிசெய்யவாரும். வழிபாட்டுப் பயன் தில்லைக் கோயிலில் மணியடிக்கிறது. கந்தன் வழி பாட்டுக்குப் புறப்பட்டான். அவன் நெஞ்சம் கோயிலில் ஈடு பட்டது. தீய எண்ணம் இடம்பெறாது ஒதுங்கி நிற்கிறது. அவன் கால்கள் நடக்கின்றன. கோபுரம் காட்சியளிக்கிறது. கோபுரம் வானோக்கி நிற்கிறது. நெஞ்சம் உயர்நோக்கிற் செல்கிறது. தீர்த்தம் காணப்படுகிறது; தண்மையும் சாந்தமும் நெஞ்சிற் படிகின்றன. கந்தனால் சில கடன்கள் ஆற்றப்படுகின்றன. பின்னே அவன் கோயிலில் நுழைகிறான். மதில்களும் மண்டபங் களும் பரந்த உணர்ச்சியை ஊட்டுகின்றன. தீபமாலைகளும், மலர்மாலைகளும், குவிந்த கைம்மாலைகளும் உள்ளத்தைத் தூய்மையில் நிறுத்துகின்றன. நடராஜ ஓவியம் கண்ணில் நுழைகிறது. 1குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே. என்னும் பாட்டை ஓர் அன்பர் பாடுகிறார். பாட்டு, காதின் வழி நுழைகிறது. இரண்டோவியமும் ஒன்றிப் புலன்களைக் கவர்ந்து புந்தியில் புகுகின்றன. கந்தனை அமைதிப் பெண்மை மணந்தது. அமைதியுடன் கந்தன் வீடு சேர்கிறான். இவ்வாறு அவன் நாடோறும் வழிபாடு செய்து வரலானான். கந்தன் இருக்கும் போதும், நிற்கும் போதும், நடக்கும்போதும், தொழில் புரியும் போதும், உண்ணும் போதும், உறங்கும்போதும் அவன் நெஞ்சம் கோயிலின் உயிர்ஓவியத்தை மறப்பதில்லை. நாளுக்கு நாள் அவன் மனங் குவிந்து குவிந்து நிலை பெறலாயிற்று. அவன் உள்ளங் கோயிலாயிற்று. அவன் அசைவற்ற ஓவியமானான். இந்நிலையை யான் எப்படிப் பேசிக்காட்டுவன்! இயலவில்லை. இப்பெருநிலையைச் சேக்கிழார் எழுத்தோவியத்தில் காட்டு கிறார்; பாருங்கள். ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். இஃது எழுத்தா? பாட்டா? ஓவியமா? யோகமா? முத்தியா? என்ன? சுந்தரமூர்த்தியை அணுகல் வேண்டும். சேக்கிழாரைச் சேரல்வேண்டும். சொலற்கரிய ஒரு நிலையைக் கூட்டியது எது? கோயில் - ஓவிய உருவம் - வழிபாடு. நடராஜன் நன்றுடையான்; தீயதில்லான்; அவனை வழிபடும் நெஞ்சமும் நன்றுடையதாகும்; தீயதில்லாததாகும். கோயில் நலனை உன்னுங்கள். தில்லையில் கோவிந்தன் என்றோர் அன்பனிருந்தான். அவனும் நாடோறும் கோயில் சென்று திரும்புவான். அவன் அரங்கன் ஓவிய உருவைக் காண்பவன். 1பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. என்னும் திருப்பாட்டை ஓதுவன். அவ்வுருவும் இப் பாட்டும் ஒன்றுபட்டு அவனைப் படிப்படியே நாளுக்குநாள் அமைதிப் பெண்மையை மணக்கச் செய்தன. கந்தனும் கோவிந்தனும் ஒருநாள் சந்தித்து ஓரிடத்தில் அமர்ந்தனர். இருவரும் தன் தன் அநுபவத்தைச் சொல்லிச் சொல்லி அளவளாவினர்; இருவர் அநுபவமும் ஒன்றாயிருத் தலை யுணர்ந்து ஆனந்தமடைந்தனர்; குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்- பச்சைமா மலைபோல் மேனியும் பவளவாயும் கமலக் கண்ணும் - புறமனம் குவிந்து ஒடுங்கி நடுமனமாகியதும் மறைவதையும், ஒரேவிதத் தத்துவக் கூறுகளாவதையும், நடுமனம் அடிமனமாகும்போது தத்துவக் கூறுகளெல்லாம் ஒன்றாகி ஒளியாய் ஒலியாய் உள்ளொளியை உணர்த்துவதையும் தெளிந்து, மதபேதங்களின் மடமையை ஒளித்துச் சமரச சன்மார்க்கத்தை உலகுக்குப் போதிக்கத் தொடங்கினர். வழிபாட்டின் நுட்பம் தத்துவ அமைப்புக் கோயில் என்று அடிக்கடிச் சொல்ல வேண்டுவதில்லை. அதை முற்றும் இங்கே விளக்கல் இயலாது. தத்துவ முறைகள் ஒல்லும்வகை முன்னே விளக்கப்பட்டன. மாயாகாரிய தத்துவம் நாதம்முதல் மண்வரை என்றும், மண்முதல் நாதம் வரை என்றும் சொல்லப்படுவது வழக்கம். தத்துவம் நாதத்தில் தொடங்கிப் படிப்படியே பருத்துப் பருத்து மண் வரை விரியும்; மீண்டும் மண்ணிலிருந்து படிப்படியே நுணுகி நுணுகி நாதம்வரை சென்று ஒடுங்கும். 1நாதத்துக்கு அப்பால் தத்துவங் கிடையாது. அங்கொளிர்வது பரவெளி. இத்தத்துவ முறைகளை உளங்கொண்டு, கோயில் வழிபாட்டின் நுட்பத்தைச் சிந்தித்தால், அகப்புற நுட்பங்கள் இனிது விளங்கும். கோயில் வழிபாட்டின் முதலையும் முடிவையும் பார்ப்போம். முதலிலும் முடிவிலும் பிற அடங்கிவிடும். முதலில் மணியோசை முழங்குகிறது. இடையில் பல நிகழ்கின்றன. முடிவில் மந்திர ஒலி முழங்குகிறது. வழிபாடு நாதத்தில் (மணியோசையில்) தொடங்கிப் பலவாறு விரிந்து, மீண்டும் நாதத்தில் (மந்திர ஒலியில்) ஒடுங்குகிறது. நாதத்துக்கு அப்பால் பரம்பொருளின் அறிகுறியாக ஓவிய உருவம் பொலிகிறது. அவ்வோவியத்தைத் தியானிக்கத் தியானிக்க அஃது ஒளியாகும். அதுவே உள்ளொளி என்பது. இவ்வொளியை விளங்கச் செய்வது எது? கோயில் வழிபாடு. கோயில் வழிபாடு மனமாசகற்றி, நல்லெண்ணத்தைப் பெருக்கி, உயிரை ஒளி பெறச் செய்வது கருதற்பாலது. கோயில் நிலை இதுகாறும் நீங்கள் பேசியது தத்துவம். இந்நாளில் கோயில்நிலை எப்படி இருக்கிறது? mij¢ á¿J brhšy¡ Tlhjh? என்று உங்களிற் சிலராவது நினையாமலிரார். கோயில்நிலை எப்பொழுதும் ஒரே தன்மையதாயிருக்கும். அதில் மாறுதல் எப்படி நிகழும்? கோபுரம் மாறுதலடையுமா? மாளிகை மாறுதலடையுமா? மூலத்தானத்திலுள்ள ஓவியம் மாறுதலடையுமா? அவை ஒரு தன்மையனவாகவே இருக்கும். பின்னை, மாறுதலுறும் இடம் எங்கே? மக்கள் மனோநிலையில் மாறுதலுறுகிறது. காலக் கல்வியும் நாகரிகமும் பிறவும் மக்கள் மனோநிலையை மாற்றிக்கொண்டே இருக்கும். தோழர்களே! மாற்றம் எங்கே உறுகிறது? உன்னுங்கள்! கோயிலிலா? மக்கள் மனோநிலையிலா? மாற்றம் கோயிலில் உறுவதாகக் கருதி அதை வைவது அறியாமை. கிறிது பெருமான் தாங்கண்ட கோயிலைக் 1கள்ளர் குகை என்றார். கோயிலை இன்னும் பலவாறு ஏசினோருமுளர். கோயிலா தன்னைக் கள்ளர்குகை யாக்கிக்கொண்டது? கோயிலா தன்னை ஏசுதலுக்கு இடமாக்கிக்கொண்டது? நடுநிலையில் நின்று உண்மை காண முயலுங்கள். பொல்லாத கல்வி பயின்று, நீச நாகரிகத்தில் வீழ்ந்து திரியும் கள்ளர், கோயிலைக் கள்ளர் குகை யாக்கினர்; கோயிலைக் கெடுத்தனர். குற்றம் யாருடையது? மக்களுடையதா? கோயிலுடையதா? மாறவேண்டுவது மக்கள் மனோநிலை. இதற்கு இக்காலக் கல்விமுறை, நாகரிகம் முதலியன மாறுதல் வேண்டும். மாற்றும் வல்லமை மாறுதல் நிகழ்த்தும் வல்லமை பலரிடத்தில் அமையாது. அது மிகச் சிலரிடத்தே அமையும். அச் சிலரும் கோயில் வழிபாட்டைச் செய்து தம்மிடத்துள்ள இச்சா - கிரியா - ஞான - சக்திகளை எழுப்பித் தொண்டில் இறங்குவது நல்லது. கோயில் வழிபாடு சக்திகளை எழுப்புமா என்று எவரும் ஐயுற வேண்டுவ தில்லை. கோயில் அமைப்பிலேயே இயற்கையாக நல்ல சக்தி பொருந்தி இருக்கிறது. அதுவல்லாமல் வேறு சக்திகளும் அங்கே திரண்டுள்ளன. அவைகளில் குறிப்பாக இரண்டொன்றை இங்கே சொல்கிறேன். சக்தி திரளல் கோயில் அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டு களாயின. இத்துணை ஆண்டுகளாகப் பலகோடி மக்கள் ஆங்காங்குள்ள ஓவிய உருவத்தை (அர்ச்சாவதாரத்தை) நோக்கி, தெய்வமே என்று நினைந்தும், வாழ்த்தியும், வணங்கியும் இருக்கிறார்கள். அவர்களது தெய்விக எண்ணங்கள் ஓவியத்தில் படிந்து ஒன்றுடன் ஒன்று ஒன்றி ஒன்றித் தெய்விகச் சக்தி பெற்றுள்ளன. நன்மக்கள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தியைப் பார்க்கிலும் ஞானிகள் நோக்கினின்றுந் திரளுஞ் சக்தி வல்லமை வாய்ந்தது; இச்சக்தியினுங் குருமார் நோக்கினின்றும் பிறப்பது சொல்லொணா ஆற்றல் வாய்ந்தது. நம் நாட்டு ஞானிகளும் குருமார்களும் தங்கள் ஆன்ம நலனைமட்டுங் கருதி வாழ்ந்தவர்களல்லர். அவர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்ற கருணையில் மூழ்கியவர்கள். அவர்கள் நூல்களை அருளி னார்கள்; கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தினார்கள். அவர்களது தெய்விகச் சக்தி நூல்களிலும், கோயில்களிலும் இறங்கியுள்ளது. மக்களிடத்துள்ள தெய்விகச் சக்தி ஒடுங்கிக் கிடக்கிறது. அச்சக்தி இடையறாத கோயில் வழிபாட்டால் எழுச்சி பெறும். மக்களிடத்து இயல்பாக அமைந்துள்ள தெய்விகச் சக்தியை எழுப்புதற்குக் கோயில் வழிபாடு ஒரு கருவி. கோயில் வழி பாட்டால் எழுந்து பொங்கிப் பெருகுஞ் சக்தியைப் பெற்றவர் நோக்கு எங்கெங்கே பொருந்திப் படிகிறதோ, அங்கங்கெல்லாம் அந்நோக்கின் வாயிலாக அவரது சக்தியும் இறங்கிப் படியும்; சிறப்பாகக் கோயிலில் நன்கு படியும்; பசுமரத்தாணிபோல் படியும். சக்தியை எழுப்புதற்குக் கோயில் கருவியாயிருப்பதால், அதனிடம் சக்தி விரைந்து நன்கு படிந்து சூழ்ந்து நிற்கும். இதுபற்றிய விரிவுரை ஈங்கு வேண்டுவதில்லை. எண்ணத்தின் ஆற்றல் தமிழ்நாட்டில் தோன்றிய நால்வரும், பன்னிரண்டு ஆழ்வாரும் தெய்வத் திருவருட் சக்திமயமானவர். எல்லாம் வல்லவர். அவர் என் செய்தனர்? அவர் தமிழ் மறைகளை உல குய்யத் தந்தனர். எம்முறையில் தந்தனர்? திருப்பதிகளிலுள்ள ஓவிய உருவைப் போற்றும் வாயிலாகத் தமிழ் மறைகளைத் தந்தனர். அவர் திருப்பதிகளை நேரே சென்றும் பாடினர்; நேரே செல்லாமலும் பாடினர். அவரால் பாடப்பெற்ற திருப்பதிகளின் தொகை ஆயிரத்து நூற்றுப் பதினாறு (ஆயிரத்தெட்டும் நூற்றெட்டும்) அக்குருமார் அருளிய மறைமொழிகட்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ, அவ்வளவு ஆற்றல் அவர்தம் திருநோக்கம் பெற்ற கோயில்கட்குமுண்டு. அக்கோயில்களை விடுத்து அவரது நல்லெண்ணங்கள் நீங்கவே மாட்டா. உலகி லுள்ள தீமைகளெல்லாந் திரண்டு ஓருருக்கொண்டு அக்கோயில் களைத் தாக்கினாலும், ஆங்குள்ள நல்ல எண்ணங்கள் அசைய மாட்டா; அகலமாட்டா. அத் தீமைகளை யெல்லாம் நீறாக்கும் ஆற்றல் பெரியோர் நோக்குப் படிந்த கோயில்களுக்குண்டு. மலைகள் அழியலாம்; கடல்கள் அழியலாம்; உலகம் அழிய லாம்; திங்கள் அழியலாம்; ஞாயிறு அழியலாம்; பிற அழிய லாம்; 1பெரியோர் எண்ணங்கள் அழியா. கோயில் கட்டிடங்கள் அழிந்தாலும் அவைகளைச் சூழ்ந்துள்ள நல்லெண்ணங்கள் அழியா. அவை மீண்டும் ஒரு காலத்தில் கோயிலாகும். கோயில் கல்லன்று; மண்ணன்று; சுண்ணமன்று; அஃது எண்ணம்; நல்லெண்ணம்; சக்தி வாய்ந்த எண்ணம்; தெய்விகச் சக்தி வாய்ந்த எண்ணம். அவ்வெண்ணம் இந்நாளிலும் தியானத்திற் சிறந்த அன்பர்கட்குப் பெருஞ் சக்தியை - உலகைத் திருத்தும் வல்லமையை - கடவுட் டன்மையை - வழங்கியே வருகிறது. இன்னலைப் போக்க இத்துணைச் சிறப்புவாய்ந்த கோயில் வழிபாடு இடை யீடின்றி வளர்ந்தோங்கல் வேண்டும். அதற்கு 2முட்டு நேரின் உலகம் இன்னலுறும். அவ்வின்னலைப் போக்கவும் வழி பாட்டையே கடைப்பிடித்தல் வேண்டும். வழிபாடே தியான யோகம்; தவம். இப்பொழுது உலகில் பெரும்போர் மூண்டுள்ளது. இத்தகைப் போரை உலகம் என்றுங் கண்டதில்லை. கொடும் போர் - கொடும் போர் - மூண்டுள்ளது. பிரளயமோ யுகாந் தமோ தெரியவில்லை. மன்பதை கோயில் வழிபாட்டை மறந் தது. மக்களிடை நல்ல எண்ணஞ் சாய்ந்தது; தீய எண்ணம் ஆட்சி புரிகிறது; தீய எண்ணம் கொலைப்போரை மூட்டி விட்டது. இவ்வேளையில் விமானங்களைப் பெருக்குவதிலும், பீரங்கி களைப் பெருக்குவதிலும், பிற நச்சுக் கருவிகளைப் பெருக்கு வதிலும் மக்கள் கருத்துச் செலுத்துவது வீண் வீணேயாகும். அதனால் போர் நில்லாது; போர் பெருகிக் கொண்டே போகும். மக்கள் மனந் திரும்பிக் கோயில் வழி பாட்டில் கருத்திருத்தினால் தீய எண்ணம் அகலும்; நல்ல எண்ணம் பெருகும்; போர் தானே பொன்றும். நல்ல எண்ணம் என்ன செய்யாது? எல்லாஞ் செய்யும். நல்லெண்ணத்துக்கு நிலைக்களன் - உறையுள் - கோயில். அக்கோயிலை, வழி பாட்டால் - தியான யோகத்தால் - தவத்தால், அகக்கோயி லாக்கல் வேண்டும். இது புது உலக ஆக்கத்துக்குரிய முயற்சி களுள் ஒன்று - சிறந்த ஒன்று - என்று மக்கள் உணர்ந்து நடப்பார்களாக. கோயில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற் கென்று ஏற்பட்ட தென்பதை இன்னும் விரித்துப் பேசப் போதிய நேரமில்லை. சீர்திருத்தம் கோயில் சீர்திருத்தம் பலவிடங்களில் பேசப்படுகிறது. பெரிதும் ஹிந்து கோயில் சீர்திருத்தம் பேசப்படுகிறது. ஹிந்து கோயில்களில் பலதிற மாசுகள் படியுமாறு மக்கள் நடந்தார்கள்; நடக்கிறார்கள்; அவைகளைக் களைந்து கோயிலைக் கோயி லாக்குவதும் சிறந்த தொண்டேயாகும். இத் தொண்டில் தலைப் படுவோர் கோயிலமைப்பிலும் வழிபாட்டிலும் பற்றுடையவரா யிருத்தல்வேண்டும். பற்றுச் சிறிதுமின்றிச் சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று கூக்குரலிட்டுத் திரிவோர் கொள்ளைக் கூட்டத்தவராகத் திரும்பினுந் திரும்புவர். பொதுவாகச் சீர்திருத்தத்தில் சிறப்பாகக் கோயில் சீர்திருத்தத்தில் இறங்கு வோர் அன்பராய்த் தொண்டராய்த் தன்னலமற்றவரா யிருத்தல் வேண்டும். உயர்வு தாழ்வு ஹிந்து கோயில்களில் உயர்வு தாழ்வுச் சிறுமை பிறப்பிலுங் கருதப்படுகிறது. சிறப்பிலுங் கருதப்படுகிறது. கோயில்களில் பிறப்பில் சாதிப் பாகுபாடு கருதப்படுவது அறமாகாது. ஓவியம் மரத்தடியில் இருந்த ஞான்று, வழிபாட்டில் உயர்வு தாழ்வு கருதப்படவில்லை. மண்டபங்களும் கோபுரங்களும் ஏற்பட்ட பின்னரும் பொது வழிபாடே நிகழ்ந்து வந்தது. இடைநாளில் விதிகளும் கட்டுப்பாடுகளும் கோயிலுக்குள் புகுந்தன. சாதி வேற்றுமையும் உடன் புகுத்தப்பட்டது. சமூகத்தில் தோன்றிய கொடுமை கோயிலிலும் நுழைந்தது. ஆன்றோர் முயற்சி இக்கொடுமையைக் களைய அவ்வப்போது அறிஞரால் முயற்சி செய்யப்பட்டே வந்தது. வெற்றி விளையவில்லை. நாயன்மாரும் ஆழ்வாரும் முயன்றனர்; அவர் வழி வழி வந்த ஆன்றோரும் முயன்றனர். அப்பெரியோர் முயற்சிகளெல்லாம் ஏட்டளவில் நிற்கலாயின. திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப் பாணாழ்வார், திருநாளைப்போவார், திருநீலநக்க நாயனார், இராமாநுசர் முதலியோர் வரலாறுகளைப் பார்க்க. அவ் வரலாறுகள் ஆண்டவன் திருவருள் நோக்கத்தை நன்கு புலப் படுத்துகின்றன. பொல்லாத சமூகம் ஆண்டவன் திருவருள் நோக்கத்தையும் புறக்கணித்தது. இதுபற்றி என்னுடைய நூல்களிலெல்லாம் விரித்தோதியுள்ளேன். பொதுமையுணர்வு புத்துயிர்பெற்று வரும் இந்நாளிலாதல் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுங் கொடுமையை யொழிக்க அறிஞர் உழைப்பாராக. உண்மை உழைப்பு, உறுதியை நல்கியே தீரும். ஹிந்து கோயில்களில் சிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவதை விரித்துக் கூறவேண்டுவதில்லை. உத்தியோகதர் வாடை வீசியதும் அர்ச்சகரும் தர்மகர்த்தரும் மற்றவரும் ஓடி வருகின் றனர்; கைகட்டுகின்றனர்; அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்; கட்டியம் பாடுகின்றனர். உத்தியோகதர் கடவுளாக ஏற்கப்படு கிறார். அவர் உடல் பூரிக்கிறது. அவர் கோயிலுள் ஏன் புகுந் தனர்? பாவம்! வெட்கம்! வெட்கம்! மசூதியில் கற்றவரும் கல்லா தவரும் நவாப்பும் பக்கிரியும் பொதுவாகவே பாவிக்கப்படுதல் ஹிந்து கோயில் குருமாருக்குப் புலப்படுவ தில்லைபோலும்! சந்நிதியில் உத்தியோகதரை ஒருவிதமாகவும், மற்றவரை வேறுவிதமாகவும் பாவிப்பது மடமை; இழிவு. இம்மணிவிழாத் தலைவர் பதவியிலிருந்தபோது கோயிலார் வரவேற்புக்கு இணங்கியதுமில்லை; அதைப் பொருட்படுத்தியதுமில்லை. கோயில் சிறுமைக்குப் படித்த பதவி வேடரும் காரணர் என்று கூறல் மிகையாகாது. உத்தியோகதரை வரவேற்றுத் தனிச் சிறப்புச்செய்யும் இழிவு கோயிலினின்றும் அகலப்பெறல் வேண்டும். நான் வழிபாட்டுக்கென்று கோயில் அமைந்தது. வழிபாடு நான் என்னும் முனைப்பை அகற்றுவது. கோயிலிலுள்ள பலிபீடத்தின் அறிகுறி என்ன? நான் என்பதைப் பலியிடுவதை அறிவிப்பது அப்பீடம். மக்கள் அங்கே தலையாரக் கும்பிடு கிறார்கள் . அதன் கருத்து, நான் என்பதைப் பலியிடுவதாகும். நான் என்னும் முனைப்பை அழிப்பதை உணர்த்துங் குறிகள் இன்னும் பல உள. முனைப்பை அழிப்பதற்கென்று ஏற்பட்ட அமைப்பில் அம்முனைப்பை எழுப்புதற்குரிய மரியாதை செய்வதும், அதை ஏற்பதும் நியாயமாகா. ‘eh‹’ gÈahF Äl¤âyh ‘eh‹? அந்தோ! அந்தோ!! கோயிலுள் மரியாதை செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயல்வது பெருந் திருத்தொண்டாகும். மரியாதை? மரியாதை பெரிதும் அர்ச்சனை முதலியன செய் வோர்க்கு அளிக்கப்படுகிறது. அர்ச்சனையின் அடியில் அன் பிருத்தல் வேண்டும். ஆனால் என்ன இருக்கிறது? பணம்! பணம்! பணம் படமெடுத்து ஆடுகிறது! பணங்கொடுக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொருபோதும் தனித்தனியே அர்ச்சனை செய்யப்படவேண்டு மென்னும் நியதி யாண்டுள்ளது? எந்த ஆகமத்திலுள்ளது? இக்கேள்விகளைக் கோயில் அர்ச்சகர் களை நோக்கிக் கேட்கிறேன். பணத்துக்கு அர்ச்சனை என்பது இடையில் நுழைந்த புன்மை. கற்பூர ஆராதனை கோயிலுள் இடம்பெற்ற நாள்தொட்டு, இப்புன்மையும் அங்கே இடம்பெற லாயிற்று. தனித்தனி அர்ச்சனை வழக்கமும் தொலைதல் வேண்டும். அதனுடன் தொடரும் மரியாதையும் தொலைதல் வேண்டும். வழிபாட்டு முறைமை ஓவிய உருவைத் துப்புரவு செய்து, மலரணிந்து, குறித்த வேளையில் தூபதீப வழிபாடு, மந்திர வழிபாடு முதலியன செய்து, பின்னைப் பட்டர் ஒரு பக்கத்தில் அமர்ந்து, ஒழுங்கு முறைகளைக் காத்துவரவேண்டுவது அவர்தங் கடமை. அன்பர்கள் மலராலோ பாட்டாலோ மனத்தாலோ எப்படியோ வழிபாடு நிகழ்த்திச் செல்வது முறைமை. 1இது பண்டைய வழக்கு. இடைநாளில் இவ்வழக்கு வீழ்த்தப்பட்டது. பணப்பேய் நன்முறையை வீழ்த்தியது. அன்பர்கள் நேரே வழிபாடு செய்யும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டால், கோயில் பல வழியிலுஞ் சீர்பெறும். முன்னாளில் பட்டர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராய்ப் பல தத்துவ ஞான நூல்களை ஆராய்ந்து தெளிந் தவரா யிருந்தனர். அவர் நிலைமை இந்நாளில் மாறியிருக்கிறது. அவரை நோதல் கூடாது. கால நிலையை நோதல் வேண்டும். இப்பொழுது பட்டருள் பெரும்பான்மையோர் கிளிப்பிள்ளை போலச் சில மந்திரங்களை ஒப்புவித்துத் திருமேனி தீண்டுந் திருத்தொண்டு செய்துவருகின்றனர். பொறுப்புவாய்ந்த தொண்டு செய்யும் பட்டர் கல்வி அறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகத் துணைசெய்யும். ஆதலின், வடமொழி தென் மொழிகளைப் பயின்று, தேர்ச்சி யடைந்து, தத்துவ ஞான நூல்களில் நுண்புலமை பெற்றவரைப் பட்டராகுமாறு பொதுமக்கள் முயல்வது நல்லது. நிதியும் நீதியும் கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மாசுகள் படர்ந்து மூலநோக்கத்துக்கு ஊறுசெய்து வருகின்றன. மாசுகள் படர்தற்குப் பல காரணங் கூறலாம். அவைகளுள் தலையாயது ஒன்று. அது கோயில்கட்கென்று ஏராளமாகச் சொத்துக்கள் பெருகிக் கிடப்பது. நிதி நடமாடுமிடத்தில் நீதி நடமாடுதல் அரிது. பொருட் பெருக்குக் கோயில்களில் களியாடல்களைப் பெருக்கு கிறது; ஊழியரைக் கள்ளராக்குகிறது; ஒழுக்க ஈனராக்குகிறது. சொத்துக்களை என்செய்வது? அவைகள் பறிமுதல் செய்யப் படல்வேண்டும். கலைகளையும், தொழின் முறைகளையும், இன்ன பிறவற்றையும் வளர்ப்பதற்குச் சொத்துக்களைப் பயன்படுத்தலாம். ‘brh¤â‹¿¡ nfhÆš fhÇa§fŸ v¥go el¡F«? என்று தோழர்கள் கேட்கலாம். கோயில் காரியம் எது? களியாட்டா? அன்று; வழிபாடு. வழிபாட்டுக்குப் பணம் எற்றுக்கு? அதற்கு அன்பு தேவை. அவ்வப்போது திருவிழா முதலியன அன்பர்கள் உதவியால் நடைபெறலாம். கோயில் பணிக்கென்று எவரும் பொருள் திரட்டவேண்டுவதில்லை. கோயில் பணிகள் கூலிகளால் செய்யப்படலாகாது. அவைகள் அன்பர்களால் செய்யப்படல் வேண்டும். திலகவதியார், அப்பர், முருகர் முதலியோர் நமக்கு வழிகாட்டிச் சென்றனர். அவர் தாமே திருப்பணி செய்ததை அவர்தம் வரலாறுகளிற் காண லாம். அவரது அடிச்சுவட்டைப் பற்றி நடக்க வேண்டுவது நம்முடைய கடமை. பெரியோர் பலரும் கூலிக்காகவா திருப்பணி செய்தனர்? நான் என்னும் முனைப்பைச் சாய்க்க அவரனைவரும் வழிபாடு செய்தனர். கையை வீசிக் கோயிலை வலம் வந்து இரண்டணா தந்து அர்ச்சனை செய்விப்பது வழிபாடாகாது. பலதிறப் பணிகள் செய்து செய்து முனைப்பை ஒழிக்க முயலல்வேண்டும். நம்முடைய நாட்டில் மன்னர் மன்னரெல்லாம் கோயில் பணி செய்ததைக் கூறுங் கதைகள் பலவுண்டு. வரகுண பாண்டியன் கோயிலில் நாய் மலம் எடுத்ததைப் 1பட்டினத்தடிகள் பாராட்டி உள்ளார்கள். கோயில் பணி அவரவரே செய்தல் நலம். பாவ புண்ணியம் தர்மகர்த்தர்களையும், மடாதிபதிகளையும், மற்றவர் களையும் கெடுப்பது எது? கோயிலா? மடமா? கோயிலுமன்று; மடமுமன்று. அவர்களைக் கெடுப்பது சொத்து. கோயில் சொத்து தர்மகர்த்தர் முதலியவரைக் கெடுப்பதைக் கண்ணாரக் கண்டும், இன்னுங் கோயிலுக்குச் சொத்தளிப்பது புண்ணியம் என்று கருதுவோருளர். ஒருபக்கம் பெரும் பெரும் பாவங்களை மனமாரச் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலும் மண்டபமும் மதிலும் படியுங் கட்ட இறங்குகிறார் சிலர். அப் பாவங்களை இப்புண்ணியங்கள் விழுங்கிவிடு மென்பது இவர் கருத்துப் போலும். இவர் இறைவனை ஏமாற்ற முயல்கிறார். இறைவன் எங்குமிருப்பவன்; எங்குங் கண்கொண்டு பார்ப்பவன்; எங்குங் காது கொண்டு கேட்பவன்; ஒவ்வொருவர் உள்ளத் திலும் வீற்றிருப்பவன். அவனை ஏமாற்றப் புகும் பாவத்தினுங் கொடியது வேறொன்றிருக்குமோ? ஒரு பக்கம் கோயிலோ மண்டபமோ மதிலோ படியோ கட்டினால் அப்பாவம் பறிமுதலாகுமோ? இக்கயவர்க்கு ஆண்டவன் அருள் கிட்டவே கிட்டாது. பாவம் எது? புண்ணியம் எது? காமியச் செயலெல் லாம் புண்ணியத்தின் பாற்படும். தாம் மனமாரச் செய்யும் பாவம் போக வேண்டுமென்று கோயில் மண்டபம் முதலியன கட்டுவதும் பாவமேயாகும் என்பதைக் கரவாடும் வன்னெஞ்சர் உணர்ந்து மனந்திரும்பி வாழ முயல்வாராக. சுங்கச் சாவடி கோயில் வாயிற்படியில் உண்டி வைக்கப்பட்டால், அதில் அன்பர் தம்மாலியன்ற காசு செலுத்துவர். அக்காசினைப் பட்டரும், அவரைப் போன்ற வேறு சிலரும் பயன்படுத்தலாம். உண்டியில் காசு செலுத்துமாறு எவரையும் வலியுறுத்தலாகாது; கோயிலை எக்காரணம் பற்றியுஞ் சுங்கச்சாவடியாக்கலாகாது. இன்னுஞ் சில சீர்திருத்தங்களை வெளியிடலாம். நேரமில்லை. பாட்டோவிய வழிபாடு கோயிற் பற்றுடன், அதில் தற்காலம் நடைபெறும் சிறுமை களைக் கண்டு, ஒதுங்கி வழிபாடு நிகழ்த்தாமலிருப்பவரும் உளர். அவர் பெரியோர் பாட்டில் திரண்டுள்ள ஓவிய உருவங்களில் தம் மனம் வேட்கும் ஒன்றைத் தியானிக்கலாம். அவருள் சிலர் உள்ளம் பாட்டோவிய உருவம் திரண்டு நிற்கும் நிலையை அடையாமலிருக்கும். அவ்வுள்ளத்தார் தமது வீட்டில் ஓர் அறையில் ஓவிய உருக்களில் தாம் விரும்பும் ஒன்றை வழிபட்டு வரலாம். பெரியோர் நோக்குப் பெற்ற பழைய ஓவிய உருவத்தைச் சூழ்ந்துள்ள பெருஞ் சக்தி மற்ற உருவத்தில் சூழ்ந்து நிற்றல் அரிது. விக்கிரக ஆராதனை! உருவ வழிபாடு விழுப்பமுடையதே. அஃது ஒரு காலத்தில் உலக முழுவதும் பரவி இருந்தது. ஒன்று விழுப்பமடைந்து உலகில் பெருமிதமாகப் பரவி வரும் பொழுது, அதனிடைத் திரிபுகளும், மாசுகளும் படர்வதுண்டு. திரிபுகளும், மாசுகளும் உலக முழுவதும் பரவி நின்ற உருவ வழிபாட்டு நிலையங்களில் படரலாயின. நிலையங்களில் படர்ந்த அழுக்குகள் உருவ வழி பாட்டின்மீதே சுமத்தப்பட்டன. அவ்வழிபாட்டை ஒழிக்கக் கிளர்ச்சி களும் எழுந்தன. இவைகளால் உருவ வழிபாட்டின் நுட்பம் சிற்சில இடங்களில் மக்கள் உள்ளத்தில் வேர் கொள்ளா தொழிந்தது. அவ்வவ்விடத்தில் உருவ வழிபாடு விக்கிரம ஆராதனையாகக் கொள்ளப்பட்டது; கடவுளை விக்கிரகமாகத் தொழுவது மடமை என்று கருதப் பட்டது. எதற்கும் உலகம் இடந்தருவதன்றோ? அரேபியாவில் உருவ வழிபாடு மிகச் சிறப்பாக நடை பெற்று வந்தது. நாளடைவில் அவ்வழிபாட்டின் நுட்பம் மக்களிடை விளங்காதொழிந்தது. மக்கள் ஓவிய உருவை விடுத்து, வெறும் பிண்டத்தையே - விக்கிரகத்தையே - கடவு ளாகப் போற்றலானார்கள். ஒவ்வொரு விக்கிரகமும் ஒவ்வொரு தெய்வமாகப் போற்றப்பட்டது. பல தெய்வ வணக்கம் குடி புகுந்தது. அந்நாளில் மகம்மது நபி தோன்றி, விக்கிரக ஆராதனையை அறவே களைந்து, ஒரு தெய்வ வழிபாட்டை நிலைபெறுத்தினார். பழைய கிறிதுவ மதம் உருவ வழிபாட்டை நிகழ்த்தி வந்தது. அவ்வழிபாட்டை முன்னின்று நடாத்தியவர் வாழ்க்கை களில் சில சிறுமைகள் நுழைந்தன. அச்சிறுமைகள் சிலருக்குச் சீற்றமூட்டின. சீற்றம் புரட்சியாய் உருவ வழிபாட்டின்மீது பாய்ந்தது. புரட்சி லூதர் முதலியோரைப் புரொடெடெண்ட் கிறிதுவத்தைக் காணுமாறு உந்தியது. பழைய மதம் கெத்தோலிக் கிறிதுவம் என்ற பெயரால் நிலவுகிறது. புரொடெடெண்ட் கிறிதுவம், உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று அதைக் கடிந்தது. கிறிதுவமும் இலாமும் நமது நாட்டில் பரவத் தொடங்கியதைக் கண்ட அறிஞர் சிலர் உருவ வழிபாட்டால் ஹிந்து மதத்தின் ஆக்கம் குன்றும் என்று கருதினர். அக்கருத்து ஆங்காங்கே வளரலாயிற்று. அதன் பயனாக ராஜாராம் மோஹன்ராய் உள்ளிட்ட சிலரது முயற்சியால் பிரம சமாஜம் தோன்றியது. ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டைக் கடிவதென்று சொல்லப்படுகிறது. ஆராய்ச்சியில், அச்சமாஜம் உருவ வழி பாட்டைக் கடிவதென்பது தெரியவில்லை; அது விக்கிரக ஆராதனையைக் கடிவதென்றே தெரிகிறது. ஆரிய சமாஜம் தீ வழிபாடு செய்கிறது. தீ வழிபாடு உருவ வழிபாடே. சிலர் ஜோதி ஜோதியென்று விளக்கொளியை வழிபட்டு, உருவ வழிபாட்டைக் கைவிட்டதாக நினைக்கின்றனர். விளக்கொளி உருவங் கடந்ததன்று. அஃதும் உருவமே. இன்னுஞ் சில இயக்கங்கள் உருவ வழிபாட்டை விக்கிரக ஆராதனை என்று கொண்டு அதனை மறுத்துவருகின்றன. உருவ வழிபாட்டை இழித்துக்கூறுவது காலப்போக்குக்கு ஏற்றது என்று கருதிப் பேசுங் கூட்டமும் உண்டு. வேறு பல கூட்டங்களுமுண்டு. புத்தகமும் கோயிலும் ஓரறிஞர் - உலகைச் சுற்றிச் சுற்றி வருவோர் - ஒரு பெருங் குரு என்று போற்றப்படுவோர் - சென்னையில் ஒரு பள்ளியில் கடவுளைப்பற்றி நல்ல இனிய ஆங்கில மொழியில் பேசினார்; அப்பேச்சில் பல இடங்களில் கோயிலுள்ளிருப்பது கல் லென்றும், குட்டிச்சுவரென்றும் குறித்தே வந்தார். பேச்சு முடிந்தது. கேள்விகள் கேட்கப்பட்டன. அவைகளில் என் னுடையன சில. அவைகளின் சாரத்தை இங்கே பிழிகிறேன்; - தாங்கள் புத்தகம் படிப்பதுண்டா? புத்தகத்திலுள்ள எழுத் துக்கள் வரிவடிவங்களா? அல்லவா? வரிவடிவம் எழுத்துக்க ளாக அமையாவிட்டால், கருத்துக்கள் தங்கள் உள்ளத்தில் படியுமா? vG¤j‰w ò¤jf« v‹d bghUis És¡F«? இவைகட்கு அவர், யான் புத்தகம் படிப்பதுண்டு. எழுத்துக்கள் வரி வடிவங்களே. வரி வடிவமாக எழுத்துக்கள் அமையா விட்டால் கருத்துக்கள் உள்ளத்தில் படியா என்று பதிலிறுத் தார். புத்தகம் கோயில்; வரிவடிவ எழுத்துக்கள் உருவங்கள். படிப்பது வழிபாடு . . . . என்று சொல்லிக்கொண்டே வந்தேன். அவர், காலமாகிவிட்டது; தங்களைத் தனியே பார்க்க விரும்புகிறேன் என்று விலாசங் குறித்துக் கொடுத்தார். மறுநாள் அவரும் யானும் உருவ வழிபாட்டைப்பற்றி நீண்ட நேரம் பேசினோம். உருவ வழிபாட்டில் நம் முன்னோர் அமைத்துள்ள நுட்பங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, மனம் உள்ளமட்டும் உருவ வழிபாடு தேவை என்பதை என்னா லியன்றவரை விளக்கினேன். அவ்வறிஞர், தாங்கள் சொல்லும் வண்ணம் பொருள் நுட்பம் அமைந்த உருவ வழிபாடு நடை பெறுவதில் எனக்கு எவ்விதக் கருத்து வேற்றுமையும் இல்லை என்று சொல்லி விடைகொடுத்து என்னை அனுப்பினர். உருவ வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்பட்டால், உருவ வழிபாட்டு மறுப்புக் குறையும் என்று யான் எண்ணுகிறேன். இரண்டுக்குமுள்ள வேற்றுமை முன்னே விளக்கப்பட்டது. அமைதிக்கு ஊற்று மனத்துக்கும் உருவத்துக்கும் தொடர்பு இருக்கிறது. 1மனம் உருவ வழிபாட்டில் ஈடுபடப்பட அது நிலைபெறும். மனம் நிலைபெறப் பெற அமைதியுறும். ஒவ்வொருவர் மனமும் உருவ வழிபாட்டில் ஈடுபட்டால் உலகில் அமைதி நிலைக்கும். உருவ வழிபாடற்ற மனம் என் செய்யும்? அலையும்; பேயாகும்; ஆசைப்பேயாகும். ஆசைப்பேய் கொள்ளையைப் பெருக்கிப், புரட்சியை எழுப்பி, இரத்தம் உமிழ்ந்து கோர நடம் புரியும். உலகம் கொலைக்களமாகும்; சுடுகாடாகும்; தோழர்களே! உருவ வழிபாடு சிறியது - எளியது - என்று நினையாதேயுங்கள். உருவ வழிபாடு பெரியது; விழுப்பமுடையது. உலக அமைதி அதனிடத்திலிருக்கிறது. உலக அமைதிக்கு உருவ வழிபாடு இன்றியமையாதது என்று உணருங்கள்; தெளியுங்கள்; அதைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள். இப்பொழுது உலகம் பெரும் போராட்டத்துக்கு இரையாகி வருகிறது. இதற்கு அடிப்படை யாக நிற்குங் காரணமென்னை? உலகம் உருவ வழிபாட்டின்மீது கவலை செலுத்தாமை; அதனை மறந்தமை; விடுத்தமை. உலகம் பழையபடி உருவ வழிபாட்டில் உளங் கொண்டால், உலகி லெழுந்துள்ள போராட்டமெல்லாம் ஒழிந்துபோகும். மக்கள் மனம் நிலைபெறும்; எங்கும் அமைதி பொலியும். அமைதிக்கு ஊற்று உருவ வழிபாடு. அத்தகைய உருவ வழிபாடு மீண்டும் உயிர்பெற்று எழுவதாக. வீடுபேறு உருவ வழிபாட்டால் மனமாசுகள் கழியும். மாசற்ற மனம் நிலைபெற்று அமைதியுறும். அமைதி, அன்பு ஊற்றைத் திறக்கும்; அருள் வெள்ளத்தைப் பெருக்கும். அருட்பெருக்கம் வேற்றமையுணர்வை வீழ்த்தும்; சகோதர நேயத்தை எழுப்பும்; பிற உயிர்நலங் கருதித் தொண்டு செய்யத் தூண்டும். இவ்வாறு தூண்டுவது அருட்பெருக்கின் இயல்பு. மனமாசற்ற இடத்தி னின்றும் எழுவதே சிறந்த தொண்டு. அதனடியில் பயன் கருதாமை - நிஷ்காமியம் - நிலவும். மாசுள்ள இடத்தினின்றும் தொண்டென்னும் பெயரால் ஒன்று எழுகிறது. அது தன்னலம். தன்னலத் தொண்டினடியில் பயன் கருதல் - காமியம் - நிற்கிறது. அது வாழ்க்கையைக் கெடுப்பது. நிஷ்காமிய கர்மமென்னும் பயன்கருதாத் தொண்டே வாழ்க்கையைச் செம்மை செய்வது. அத்தொண்டு செய்யும் பேறு கிடைத்தால் போதும். 1அது வீடுபேறாகும். ஏழ்மை போக்கல் தொண்டு ஏழைகளின் நலன் கருதிச் செய்யவேண்டு மென்று சொல்லப்படுகிறது. தொண்டு காலதேச வர்த்தமான நிலையையொட்டிச் செய்யப்பெறல் வேண்டும். ஏழைகள் நிலை கண்டு, இரக்கங்கொண்டு, அவர்கட்கு உணவு, உடை, இடம் முதலியன அளித்தல் தொண்டாகக் கருதப்பட்டு வந்தது. இனி அக்கருத்து மாற்றமுறுவது நல்லது. தொண்டு என்று ஏழைக் கூட்டத்தைப் பெருக்கலாகாது. ஏழைக்கூட்டத்தைப் பெருக்கு வதைப் பார்க்கிலும், ஏழ்மையைப் போக்க முயல்வது சிறந்த தொண்டாகும்; இது காலத்துக்கு ஏற்றதுமாகும். உருவ வழிபாடு மனமாசுகளைப் போக்கி அமைதியை நிலைபெறுத்துவது; அன்பு ஊற்றைத் திறப்பது; அருள் வெள்ளத்தைப் பெருக்குவது; சகோதர நேயத்தை வளர்ப்பது; பிற உயிர்நலங் கருதித் தொண்டு செய்ய உந்துவது. உருவ வழிபாடு உயிர்கள் வழிபாடாக விரிவது என்று சுருங்கச் சொல்கிறேன். தோழர்களே! யான் பிறந்தேன்; வளர்ந்தேன்; வாழ்வில் யான் பெற்ற அநுபவமென்ன? யான் உலகிற்குச் சொல்ல விரும்புவதென்ன? வாழ்விற்கு வேண்டற்பாலது வழிபாடு; தொண்டு; பணி; பயன் கருதாப் பணி; நிஷ்காமிய கர்மம். அதுவே வீடு பேறு. வேறு வீடு வேண்டுவதில்லை. பிறப் புண்டேல் மீண்டும் மீண்டும் யான் பிறக்க விழைகிறேன்; பிறவி தோறும் பயன் கருதாப்பணி செய்யும் பேற்றை யான் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே இஃது எனது அனுபவத்திற் கண்ட உண்மை. இதை உலகுக்குச் சொல்ல விரைகிறேன். சோர்வி னால்பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வி னவிலும் வாய்திற வாதே அந்த காலம் அடைவதன் முன்னம் மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாதவ னென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க் கரவ தண்டத்தி லுய்யலு மாமே. - பெரியாழ்வார் பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் - பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் குருந்தொசித்த கோபால கன். - பேயாழ்வார். 3. உள்ளொளி தோழர்களே! இன்று வருவது உள்ளொளி. ஒளி இருளைப் போக்குவது. இஃது எவருங் காண்பதொன்று. ஒளி இருவகை. ஒன்று புறவொளி; மற்றொன்று உள்ளொளி. இருளும் இருவகை. ஒன்று புறவிருள்; மற்றொன்று உள்ளிருள். புற ஒளி புற இருளை அகற்றுவது; உள் ஒளி உள் இருளை அகற்றுவது. உள்ளிருள் ஒழிந்தால் எல்லா இருளும் ஒழியும். ஆகவே உள்ளிருளை ஒழிக்க வேண்டுவது நமது கடமை. உள்ளிருளை நீக்குவது உள்ளொளி. ஒளி இருள் ஒளி இருள் என்னும் இரண்டும் பொருளா? அல்லவா? ஒளி பொருள் என்பது உறுதி செய்யப்பெற்ற உண்மை. இருள் பொருளா அன்றா என்பதில் கருத்து வேற்றுமை உண்டு. தத்துவருள் சிலர் இருளைப் பொருள் என்பர். வேறு சிலர் அதைப் பொருளன்று என்பர். விஞ்ஞான உலகின் கருத்து யாது? விஞ்ஞான உலகம் முழுமை எய்தாதது; வளர்ந்து வருவது; அதன் ஆராய்ச்சி சடத்தளவில் நிற்பது. இத்தகைய ஒன்றன் கருத்தை ஓரளவிலேயே கொள்ளுதல் வேண்டும். இருளைப்பற்றி ஆராய ஆராய அஃது ஒரு நிலையில் பொருளாகத் தோன்றும்; இன்னொரு நிலையில் பொருளாகத் தோன்றாது. அவ்வாராய்ச்சியில் தலைப்பட்டுத் தலைப்பட்டுப் பட்ட பாடு போதும்; போதும். யான் இரவையும் பார்க்கிறேன்; பகலையும் பார்க்கிறேன். இரவில் விளக்கொளியின் துணையை நாடுகிறேன்; அத் துணையைப் பகலில் நாடுகின்றேனில்லை. காலையில் ஞாயிற்றின் ஒளி பரவியதும் இருள் இரிந்து ஓடுகிறது. இது கண்கூடு. ஒளியை இருளாகக் காணும் உயிர்களுமுண்டு. அவைகளைப்பற்றிய ஆராய்ச்சி இங்கே வேண்டுவதில்லை. அறியாமை இருள் புற இருள் இருத்தலை யான் காண்கிறேன்; அக இருள் இருத்தலை யான் உணர்கிறேன். எனக்கு அறியாமை இருக் கிறது. அறியாமையே அக இருள் என்பது. அறிவு ஒளி எழ எழ அறியாமை இருள் அகல்வதை யான் அநுபவத்தில் அறிகிறேன். முழு அறிவு விளங்கினால் அறியாமை இருள் முற்றும் விலகும். இந்நிலையில் அறியாமை இருள் எங்குற்றது என்று ஆராயத்தக்க அவசியம் ஏற்படாது. அஃது ஆராய்ச்சி கடந்ததுமாகும். ஆகவே, இருள் பொருளா அன்றா என்னும் ஆராய்ச்சியில் யான் ஏன் புகல்வேண்டும்? இருளை அகற்றி ஒளி பெறவே யான் முயலுதல் வேண்டும். இதுவே எனது கடமை. ஒளி காண முயல்வோர், இருள் விசாரத்தில் மூழ்கி, அதில் கருத்து வைத்து, இருளடைதல் விரும்பத்தக்கதன்று. முப்பொருள் தீயொளி, விளக்கொளி, மின்னொளி, உடுக்களொளி, திங்களொளி, ஞாயிற்றொளி, ஒளிப் பிழம்பு முதலியன புறவொளிக் கூறுகள், புறவொளி, மண் புனல் வளி வெளி ஆகியவற்றிலும் உண்டு. அவ்வொளி உடல், உள்ளம், பிராணன், விந்து, நாதம் ஆகியவற்றிலும் இருக்கிறது. புறவொளி ஒன்று. அது பலமுகங்கொண்டு நிற்கிறது. புறவொளி அறிவற்றது; சடம். அதற்கு ஆதாரமாக யிருப்பது உள்ளொளி. உள்ளொளி பரவொளி - பரவெளி - கடவுள் - முதலிய பல பெயர்களால் போற்றப்படுவது. உள்ளொளி அறிவு; முழு அறிவு; அறியாமையே இல்லாதது; சித். சடம் அறிவில்லாதது; தானே இயங்காதது. சித் முழு அறிவு. முழு அறிவு புது விளக்கம் பெறவேண்டுவதில்லை. இவ்விரண்டுமே பொருளாயின் உலக நிகழ்ச்சிக்கு இடம் ஏது? உலகம் நிகழ்ச்சியற்றா கிடக்கிறது? உலகம் நிகழ்கிறது. உலக நிகழ்ச்சிக்கு மூன்றாவது பொருளொன்று வேண்டப்படுகிறது. அது தானே இயங்காத சடமாகவும் இருத்தல் கூடாது; முழு அறிவாகிய சித்தாகவும் இருத்தல் கூடாது. இடைப்பட்ட ஒன்றா யிருத்தல் வேண்டும். அதுவே உயிர் என்பது. உயிர் சடத்தைச் சாரும்போது அம்மயமாகும்; சித்தைச் சாரும் போது அம்மயமாகும். அது 1சார்ந்ததன் வண்ணமாகும் இயல் புடையது. உயிர் சடமா? சித்தா? உயிர் சித்தே. ஆனால் அஃது இருளால் விழுங்கப்பெறுதலால், அஃது அறிவற்றதுபோல் கருதப்படுகிறது. உயிரைச் சூழும் இருளே அறியாமை. அறியாமை - அஞ்ஞானம் - அவித்தை - ஆணவம் - முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இருள் அறிவில்லாததாதலின், அது சடத்துள் சேர்க்கப்பட்டது. உயிர் அறியாமையினின்றும் விடுதலையடைந்தால் அது சித்தாகும்; முழு அறிவாகும்; ஒளியாகும். பாடியங்கள் இங்கே சடம் உயிர் கடவுள் என்னும் மூன்று பொரு ளுண்மை தெரிகிறது. இம் மூன்றைப்பற்றி உலகம் இன்னும் ஆய்ந்தவண்ணம் இருக்கிறது. மூன்றும் ஒன்றே என்றும், வேறு வேறு என்றும், கலப்புற்ற ஒன்று என்றும் அறிஞர்களால் பலவாறு சொல்லப்படுகின்றன. முதல் நாள் உள்ளத்தைப்பற்றிப் பேசியபோதும், இரண்டாநாள் வழிபாட்டுள் அறிவைப்பற்றிப் பேசியபோதும் சடசித்துக்களைக் குறித்துச் சில உரை பகர்ந்தேன்; ஈண்டும் இரண்டோர் உரை பகர விரும்புகிறேன். பரம்பொருள் ஒன்றே என்றும், அதற்கு வேறாக இரண்டாவது பொருளே கிடையாது என்றும், நெருப்புக் கட்டியினின்றும் பொறிகள் எழுவதுபோலப் பரம்பொருளினின்றும் உயிர்கள் தோன்றுகின்றன என்றும், அவ்வுயிர்களை இருள் பற்றுகிறது என்றும், அதனால் நாமரூபங்கள் தோற்றமுறுகின்றன என்றும், அவை யாவும் கானற்சலம் போன்றன என்றும், அவை பொருளல்ல என்றும், உயிர் இருளினின்றும் விடுதலை யடைந்ததும் அது பரமேயாகும் என்றும், அந்நிலையில் எல்லாம் சூந்யமாகும் என்றும் ஒரு சாரார் கூறுப; இன்னொரு சாரார் முப்பொருளும் ஒன்றல்ல என்றும், தனித்தனி வெவ்வேறு இருப்புடையன என்றுங் கூறுப; வேறொரு சாரார் முப்பொருளும் எப்பொழுதும் இருப்பன என்றும், ஆனால் தனித்தனியே வேறுபட்டில்லை என்றும், மூன்றும் கடலும் நீரும் உப்பும் போலக் கலந்துள்ள ஒருமை என்றுங் கூறுப. இன்னும் பலவாறு கூறுவோரும் உளர். இக்கொள்கைகளின் விரிவுகளை நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மத்துவர் முதலியோரின் பாடியங்களிற் காணலாம். இவரனைவரும் பேரறிஞர். இவர்தம் பாடியங்கட்கெல்லாம் மூலம் பிரமசூத்திரம். பிரமசூத்திரம் உபநிடதங்களின் சாரம். மூலம் ஒன்று. பாடியங்கள் பல. பாடியங்களிலுள்ள கருத்து வேற்றுமைகள் பல. அறிஞரால் காணப்பெற்ற பாடியங்களுள் எதைக் கொள்ளுவது? எதைத் தள்ளுவது? உலகம் பலவிதம்; உள்ளம் பலவிதம்; வாழ்க்கை பலவிதம்; ஒழுக்கம் பலவிதம். பலவிதங்கட்கு ஏற்றபடி பாடியங்கள் காணப்பட்டன. ஒருவர்க்கு ஒருபோது ஒரு பாடியம் பொருத்தமாகவும், அவர்க்கே இன்னொருபோது இன் னொன்று பொருத்தமாகவும், வேறொருபோது வேறொன்று பொருத்தமாகவும், மற்றொருபோது மற்றொன்று பொருத்த மாகவும் தோன்றலாம். எப்பாடியமும் தன்னை அடைவோரைத் தனக்கு மூலமாகவுள்ள ஒன்றனிடத்திலேயே கொண்டுபோய்ச் சேர்க்கும். வழி பல. ஊர் ஒன்று. எல்லாப் பாடியக் கொள்கை களுந் தேவை என்பது எனது கருத்து. பாடியங்களெல்லாம் விடுதலை வேட்கையை எழுப்புவனவே. விடுதலை வேட்கையை எழுப்பாததொன்றில்லை. ஓருண்மை, காலதேச வர்த்தமானங்கட் கேற்றவாறு பலவிதமாக வெளிவருதல் இயற்கை. 1உங்கள் பேதமின்றியே உண்மை பேதம் இல்லையே. விஞ்ஞான உலகம் ஒளி இருளைப்பற்றிப் பலதிறக் கருத்துக்கள் தத்துவ உலகில் வெளிவந்துள்ளன. இங்கே விஞ்ஞான உலகத்தை மறப்பது நல்லது. விஞ்ஞான உலகங் கூறும் ஒளிவகைகட்கு மேற்பட்ட ஒளிவகைகள் தத்துவ உலகில் காணப்படுகின்றன. அவ்வுலகில் காணக்கூடாத - உணரக்கூடாத - ஒளிவகைகளும் சொல்லப்படுகின்றன; அவ்வாறே காணக்கூடாத - உணரக் கூடாத - இருள்வகைகளும், சொல்லப்படுகின்றன. உலகில் ஒளி இருள் என்றும், நினைப்பு மறப்பு என்றும், அறிவு அறியாமை என்றும் வழங்கப்படுதல் உங்களுக்குத் தெரியும். ஒளி - நினைப்பு - அறிவு - இவை ஒன்றே. இருள் - மறப்பு - அறியாமை - இவை ஒன்றே. கலக்கம் நாம் ஒளியையும் பார்க்கிறோம்; இருளையும் பார்க்கி றோம். ஒளி மறையும்போது இருள் படர்கிறது; இருள் மறையும்போது ஒளி படர்கிறது. இவ்வாறு ஒளியும் இருளும் மாறி மாறி வருதலைக் காண்கிறோம். மாறி மாறி வரும் ஒளி இருளைக்கொண்டு முழு ஒளி இருத்தல் வேண்டுமென்றும், முழு இருள் இருத்தல்வேண்டுமென்றும் ஊகித்து உணரலாம். ஆனால் முழு ஒளியும் முழு இருளும் எப்படி இருத்தல் கூடும் என்னும் ஐயமும் பக்கத்தே தோன்றா நிற்கிறது. இருப்பது முழு ஒளியாயின், அதில் இருள் எங்கு இடம் பெறும்? அங்ஙனே இருப்பது முழு இருளாயின், அதில் ஒளி எங்கு இடம் பெறும்? இரண்டும் ஓரிடத்தில் எப்படி இடம் பெறும்? இரண்டில் ஒன்றே இருத்தல் வேண்டும். ஆனால் நாம் இரண்டின் கூறுகள் மாறி மாறி வருதலைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எப்படி ஒன்றற்கே இருப்புக் கூறுதல் கூடும்? இம்முட்டுப் பாட்டை உணர்ந்த அறிஞர் சிலர் இருள் பொருளன்று என்ற முடிவுக்கு வந்தனர்போலும்! ஒளியும் இருளும் தத்துவ உலகையுங் கலங்கச் செய்தல் காண்க. அநுபூதிமான்கள் அநுபூதிமான்கள் என்ன அருளி யிருக்கிறார்கள்? அவர்கள் மொழிகளில் 1இரவு பகலற்ற வெளி - நினைப்பு மறப்பு அற்ற இடம் - அறிவு அறியாமையற்ற நிலை - என்பன காணப்படுகின்றன. இவை யாவும் வெவ்வேறல்ல. ஒன்றே. சொற்கள் வேறு. . பொருள் ஒன்று. இரவு பகலற்ற வெளி யினின்றும், ஒளியும் தோன்றுகிறது; இருளுந் தோன்றுகிறது. இரண்டும் காணக்கூடாதவாறு - உணரக்கூடாதவாறு - தோன்றிப், படிப்படியே காணக்கூடிய - உணரக்கூடிய - நிலையை அடைகின்றன. இரண்டும் விராவி நிற்பன. ஒளியில் இருள் உண்டு; இருளில் ஒளி உண்டு. சிலபோது ஒளியினின்றும் இருள் தோன்றும்; சிலபோது இருளினின்றும் ஒளி தோன்றும். உயிர் விளக்கம் உயிர் ஒளியுடையது. அஃது ஆணவ இருளால் விழுங்கப் படுகிறது. அதனால் அது தானே ஒளி பெற இயலாமற் கிடக்கிறது. இறைவன் ஒளிவண்ணன்; அன்பாயிருப்பவன்; அன்பின் இயல்பு பிறர் துன்பங்கண்டு இரங்கி அதைக் களைவது. அன்பாகிய இறைவன் உயிரின் நிலை கண்டு இரங்கி, அதன் இருளை அகற்றி, அதைத் தன்னைப்போலாக்கத் திருவுள்ளங் கொள்கிறான். கொண்டதும், அவனினின்றும் பிரியாத அருட் சக்தி, உயிருடன் மாயாசக்தியைச் சேர்க்கிறது. மாயை உடலாகவுங் காரணமாகவும் உலகாகவும் போகமாகவும் பரிணமித்து உயிர்க்குச் சிறு ஒளியை (சிற்றறிவையும் சிறு தொழிலையும்) வழங்குகிறது. கலப்பு ஒளியுடைய உயிர் ஆணவ இருளால் விழுங்கப்படுவது. இந்நிலை ஒளியும் இருளும் கலந்த ஒன்று. அருட்சக்தி மாயாசக்தியை உயிருடன் சேர்க்கிறது. மாயை ஒருவித இருள்; ஆணவ இருளைச் சிறிது ஒடுக்கும் பண்புடையது. அஃது உடல் உலகம் முதலியனவாகி, உயிரைச் சேரும் போது, உயிர் சிறிது ஒளிபெறுகிறது. உயிரில் இயற்கையாயுள்ள ஒளியே சிறிது விளக்கம் பெறுகிறது. ஆனாலும் உயிரின் சிறு விளக்கத்துக்குத் துணை நிற்கும் மாயா இருளிலும் ஒருவித ஒளி யிருத்தல் வேண்டும். இல்லையேல் உயிரின் ஒளி சிறிதளவாதல் விளக்கம் பெறுவதாகாது. மாயையின் இயல்புணர்ந்த ஆன்றோரும், அதை, மாயா தனுவிளக்கு என்றே கூறிப்போந்தனர். அவர்க்கு மாயை விளக்காகத் தோன்றியது ஈண்டுக் கருதற்பாலது. ஆகவே, மாயா இருளில் ஒளி மிக நுண்மையாகக் கரந் திருத்தலை உன்னிப் பார்க்க. மாயை என்னும் இருளொளியை உயிருடன் சேர்க்கும் அருட்சக்தி நீல நிறமுடையது. கருமை - இருள் கலந்தது. அருட்சக்தி பேரொளியாகிய இறைவனிடம் நீக்கமற நிற்பது. பேரொளியாகிய1 இறைவனிடத்திலும் நீல இருள் திகழ்கிறது. திங்களின் ஒரு பகுதியில் பௌர்ணமியும் (முழு நிலவும்), மற்றொரு பகுதியில் அமாவாசையும்(முழு இருளும்) உறு கின்றன. நெருப்புக் கனன்று நாவிட்டு எரியும்போது, அதன் விளிம்பில் நீலம் திகழ்கிறது. நமது உடலில் வலப்பக்கத்தில் வெம்மையும் (சிவப்பும்), இடப்பக்கத்தில் தண்மையும் (நீலமும்) உள்ளன. யோகியர் முதலில் கருநீலங் கண்ட பின்னரே சிவப்பொளியைக் காண்பர். இன்னும் பல கூறலாம். எவ்வழியில் பார்த்தாலும் ஒளியும் இருளும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொருவிதமாகக் கலந்தும், மாறியும், ஒன்றினின்று ஒன்று பிறந்தும் இயங்கி வருதல் தெளிவாகும். சிவப்பும் நீலமும் கடவுளுக்குரிய நிலை இரண்டில் சொரூபம் (நிர்க்குணம்), குணங்குறி நிறம் முதலியன இல்லாதது- வாக்கு மனம் கடந்தது; தடத்தம் (சகுணம்) - இயற்கையை உடலாக்கொண்டது - அருள் முதலிய குணங்களை யுடையது. அருட்குணத்துக்கு (நீல) நிறம் உண்டு. நிறங்கள் பலவற்றுள்ளும் அடிப்படையா யிருப்பன இரண்டு. ஒன்று சிவப்பு; மற்றொன்று நீலம். இவ்விரண்டும் தந்தை தாயாக நின்று பிற நிறங்களை ஈனுகின்றன. மூல மாகவுள்ள நிறங்கள் இரண்டும் முறையே வெம்மை தண்மை என்றும், ஆண்மை பெண்மை என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டையுங் கொண்டது அர்த்தநாரீசுரம். இவ்வடிவி லுள்ள நுட்பம் நேற்றுப் பேசப்பட்டது. முதற்பொருளின் தடத்த நிலையிலுள்ள சிவப்பும் 1நீலமும் முறையே 2ஒளியாகவும் இருளாகவும் உயிரிலும், உள்ளத்திலும், உடலிலும், உலகிலும் படிந்துள்ளன. எல்லாவற்றிலும் ஒளியும் .இருளும் எவ்வாறாதல் இருக்கைபெறுமென்க. அவைகளைக் கடந்த ஒரு நிலை சொரூபம்; இரவுபகலற்றது. அதை அடைதற்கு உள்ளொளி விளங்குதல் வேண்டும். இறைவன் நினைப்பு இரவு பகலற்ற உள்ளொளி விளக்கத்துக்கென்று, இரவு பகலுள்ள உலகம் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட் டிருக்கிறது. இவ்வுலகை நல்வழியில் பயன்படுத்தினால், இரவு பகலற்ற உள்ளொளியைப்பெறலாம். உள்ளொளி விளக்கத்துக் கென்று, இறைவன் அளித்த அருட்பெருங் கொடையை மறத்த லாகாது. இறைவனது கொடை - அருட் பெருங் கொடை - நமது நலனை நாடியே நிற்கிறது. அதை மறந்தால் நாம் எப்படி நலம் பெறுவோம்? இறைவனது நினைப்பை ஊட்டுதற்கென்று அவனது படைப்புக்கள் காட்சியளித்தவண்ணமிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இறைவன் நினைப்பை ஊட்டுதல் அநுபவத்தில் உணரத்தக்கது. எவ்விதக் கைம்மாறுங் கருதாது, இவ்வளவு துணை புரிந்துள்ள இறைவனை மறப்பதிலும் நன்றி கொல்வது வேறொன் றுண்டோ? இறைவனது இயற்கைப் படைப்புக்கள் பலபட நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றை - ஒன்றன் சினையை - சிறு புல்லை - புல்லின் நுனியை - நினைந்து நினைந்து அதில் ஒன்றினும், அஃது உள்ளொளியை விளங்கச் செய்யும். இறைவன் படைப்பு ஒவ்வொன்றும் நமக்குத் துணைபுரியக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன்மீது கருத்துச் செலுத்த வேண்டுவது நமது கடமை. ஒன்றா? இரண்டா? இயற்கைக்கூறு ஒவ்வொன்றும் தன்னைப்பற்றுவோர்க்கு உள்ளொளியை விளங்கச் செய்யும். இவ்விளக்கத்துக்குத் துணைபுரியும் இயற்கைக்கூறு அந்நிலையில் யாண்டுச் செல்கிறதோ தெரியவில்லை. தன்னைக் காட்டிப் பெருமைபெற அதற்கு விருப்பம் இல்லைபோலும்! இயற்கை அன்னை எவ்விதக் கைம்மாறுங் கருதாது உயிர்கட்கு நலஞ் செய்கிறாள். இயற்கை மாயா உலகம் தோன்றும்போது, உள்ளொளி தோன்றுவதில்லை. இது தோன்றும்போது அது தோன்றுவ தில்லை. இஃதென்ன வியப்பு? பொருள் ஒன்றா இரண்டா என்று சொல்லலும் இயலவில்லை. இரண்டுக்கும் உள்ள உறவு என்னே! தியான யோகம் இங்கே அப்பர் அருளிய திருப்பாட்டொன்று நினைவுக்கு வருகிறது. விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. இப்பாட்டின் கருத்தை நோக்குங்கள். விறகில்தீயும், பாலில் நெய்யும், மணியில் ஒளியும் மறைந்திருப்பதுபோல, இறைவன் இயற்கையில் மறைந்திருக்கிறான். உறவு என்னும் அன்புக்கோலிட்டு, உணர்வு என்னும் ஞானக் கயிறு பூட்டிக் கடைந்தால், மறைந்துள்ள இறைவன் தோன்றுவன் என்பது பாட்டின் சாரம். உறவுகோல்நட்டு உணர்வு கயிற்றினால் கடைவதே அகவழிபாடு அல்லது தியானயோகம் என்பது. உள்ளொளி விளக்கத்துக்குக் தியானயோகம் வேண்டும் என்றபடி. தியானயோகம் முன்னரும் பேசப்பட்டது. நல்லுடல் தியான யோகத்துக்குத் தூய உள்ளந் தேவை. தூய உள்ளத்துக்கு நல்லுடல் தேவை. நல்லுடல் இயற்கையோ டியைந்த வாழ்வில் - பொருந்திய உணவில் - ஒழுக்கம் ஓம்பலில் - இன்ன பிறவற்றில் அமையும். உடல் நலம்பெறின் உள்ளந் தூயதாகும். தூய உள்ளத்தால் இயற்கைக் கூறுகளையாதல், அவைகளின் நுட்பங்கள் அடங்கிய ஓவிய உருவங்களையாதல் தியானஞ் செய்யச் செய்யப் பலதிற ஒளிகள் படிப்படியே தோன்றித் தோன்றி, மறைந்து மறைந்து, இறுதியில் வாடாத உள்ளொளி விளங்கப் பெறும். உள்ளொளி, நெஞ்ச மலரில் கோயில்கொள்ளும்; எங்கும் கோயில் கொள்வதாகும். ஒளி வகை புறமனம் குறிக்கோளில் ஒன்ற ஒன்ற அது குவியும்; நடுமனம் எழும். நடுமனம் குறிக்கோளில் ஒன்றுபடும் போது, ஒருவித ஒளி தோன்றும். நடுமனமும் அவ்வொளியும் குவிந்து அடிமனத்திற் படியும். அடிமனத்தில் ஒருவித ஒளி தோன்றும். அடிமனமும் ஒளியும் மறைந்து பிராணனில் ஒடுங்கும். அங்கே பிராண ஒளி தோன்றும். அஃது விந்துவில் ஒடுங்கி ஒளியாகும். அவ்வொளி நாதத்தில் புகுந்து ஒருவித ஒளியா யெழும். இவ்வொளிகள் யாவும் மாயா சம்பந்தம் பெற்றவை. மாறுந் தகையன. ஒடுங்குந் தகையன. நாதங் கடந்தால் ஓர் ஒளி விளங்கும். அதுவே மாயா சம்பந்தமற்ற தூய தனி ஒளி - உள்ளொளி. அஃது இரவற்றது; பகலற்றது. ஒழுக்கம் தியான யோகத்தின் அடியில் ஒழுக்கக்கா லிருத்தல் வேண்டும். அக் கால்கொண்டு நடப்பது தியானயோகம். ஒழுக்கமற்ற உள்ளம் தியானத்துக்கு உரியதாகாது. அவ்வுள்ளம் நிலைபெறாது; அலைந்துகொண்டே யிருக்கும். தியானத்துக்கு அலைவற்ற நெஞ்சம் தேவை. நன்றிக்கு வித்தாகும் நல் லொழுக்கம் நெஞ்சைப்பலவழியிலும் பண்படுத்தும். பண் பட்ட நெஞ்சம் தியான யோகத்தால் திரையற்ற நீர்போலாகும். பாழ்மனத்தைப் பண்படுத்தவல்லது ஒழுக்கம் என்று உண ராதார் - அதைக் காக்கும் ஆற்றல் இல்லாதார் - தமது மனத்தை நிலைபெறுத்த, மூர்க்க அரக்க யோகங்களில் தலைப்படுவர். அவ்யோகங்கள் மேலும் மேலும் தீயொழுக்கத்தைப் பெருக்கி நெருப்பாகி மக்களை எரிக்கும். மூர்க்க யோகிகள் ஒழுக்கம் அநாவசியம் என்றும், தியானயோகம் விழுமியதன்று என்றும் பேசிப் பேசி, மூச்சைப் பிடித்து முகத்தைச் சிவக்கச் செய்வர். அவரது ஏமாற்றம் அவரைத் தாக்காமற் போகாது. ஒழுக்கக் கூறுகள் பல. அவைகளைத் திருவள்ளுவர் முறைமுறையே உலகுக்கு விரித்தருளினர். ஒழுக்கக் கூறுகளின் சாரத்தை இளங்கோ அடிகள் ஓரிடத்தில் தேங்க வைத் துள்ளனர். அதை நோக்குவோம். பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையா தொல்லுவ தொழியாது செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென. முறையீடு ஒழுக்கத்துக்குக் கேடு சூழவல்ல அரக்க நீர்மைகள் பல உண்டு. அவைகளுள் மிகக் கொடியதொன்று உள்ளது. அஃது எது? அது புறங்கூறல். புறங்கூறலை யொழிக்க முயல்வோன் அற ஒழுக்கத்துக்குக் கால்கொள்வோனாவன். புறங்கூறலை ஒழித்த நெஞ்சம் பொய்ம்மைக்கு அஞ்சும். இவ்வச்சம் பொய்ம்மையின் வேரைப் பையப் பையக் கல்லிக் கல்லிச் சாய்க்கும். அங்கே மெய்ம்மை என்னும் அற ஒழுக்கத் தெய்வம் கோயில்கொள்ளும். மனத்துக்கண் மாசில னாதல் அனைத் தறம் என்றார் திருவள்ளுவர். மாசற்ற மனம் தீயொழுக்கத்துக்கு இரையாகாது. அது பிறர் குற்றத்தைப் பாராட்டும் நீசத்தைப் போக்கும்; தன் குற்றத்தைக் கருதிக் கருதி அழச்செய்யும். அவ் வழுகையே முறையீடு என்பது. முறையீடு தியான யோகத்தின் உயிர்நாடி. மனித உலகம் மனித உலகம் விலங்கு உலகுக்கும் தெய்வ உலகுக்கும் இடையில் நிற்பது. மனிதன் முழு விலங்குமல்லன்; முழுத் தெய்வமுமல்லன். இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். அவனிடத் தில் இழிந்த விலங்கியல்பும் இருக்கிறது; உயர்ந்த தெய்வ இயல்பும் இருக்கிறது. அவா பொறாமை இகல் பகை முதலியன விலங்கியல்பின் கூறுகள்; அன்பு அருள் தியாகம் மன்னிப்பு தொண்டு முதலியன தெய்வ இயல்பின் கூறுகள். இவ்விருவகை இயல்புகளும் மனிதனிடத்தில் இருத்தல் வெளிப்படை. மனிதன் விலங்கினின்றும் தோன்றினமையால், அவன்பால் விலங்கியல்பும் இருக்கிறது; அவன் விலங்கை விடுத்து வெளி வந்தமையால், அவன்பால் தெய்வ இயல்பும் முகிழ்த்திருக்கிறது. மனிதன் விலங்கியல்பிலிருந்து விடுதலையடைந்து, தெய்வ இயல்பிலேயே ஒன்றல்வேண்டும். இதற்கு அவன் முயற்சிமட்டும் போதுமா? வேறு துணையும் வேண்டுமா? அருட்டுணை விலங்குத் தன்மை மகனை விடுத்துத் தானே அகல்வ தில்லை. மகனாலும் அத்தன்மையினின்றும் விலக இயல்வ தில்லை. இதனால் மகன் பாவ வினைகளைச் செய்பவனா கிறான். நாளுக்கு நாள் பாவ வினைகள் பெருக்கெடுக்கின்றன. பாவப் பெருக்கில் வீழ்ந்த மனிதன் இறக்கிறான். பாவ வினைகள் அவனை மீண்டும் பிறக்கச் செய்கின்றன. பழைய வினைகளை அவன் அநுபவிக்கிறான். மகன் குறையுடையவன். பழைய வினை களை அநுபவிக்கும்போது எப்படியாவது அவன் புதுப் பாவங்களைச் செய்துவிடுகிறான்; சாகிறான்; பிறக்கிறான்; இவ்வாறு வினைகள் தொடர்ந்து தொடர்ந்து வளர்ந்து பெருகுகின்றன. வினைகள் அறுந்தால் விடுதலை உண்டாகும். வினைகள் வளர்கின்றனவேயன்றித் தேய்ந்து ஒழிவதில்லை. பாவவினைகளினின்றும் விடுதலையடைய மனிதன் விரத மிருக்கிறான்; தவங் கிடக்கிறான்; காடு மலைகளில் நுழைந்து வாடுகிறான்; கோர யோகங்கள் செய்கிறான்; பழைய வினைகள் அறுவதில்லை. விடுதலை கிடைப்பதில்லை. எவ்வழியில் சுற்றிச் சுற்றிச் சிந்தித்தாலும், மனிதன் தன் முயற்சியால் மட்டும் தனது பாவ வினைகளைச் சிதைத்துக் கரையேற இயல்வதில்லை என்பது செவ்வனே விளங்கும். 1அவனது முயற்சியுடன் வேறு ஒரு துணை அவனுக்குத் தேவையாகிறது. அத்துணை பாவமே இல்லாததாய், பாவத்துக்கு அப்பாற் பட்டதாய், பாவங்களைக் களைந்தெறிய வல்லதாய் இருத்தல் வேண்டும். அதை ஆண்டவன் அருட்டுணை என்று உலகஞ் சொல்கிறது. அத் துணைபெற மனிதன் என் செய்தல் வேண்டும்? அவன் தன் சிறுமையை யுணர்ந்து, ஆண்டவனை நினைந்து நினைந்து, தனது குறைபாடுகளை உண்மையாக முறையிடுதல் வேண்டும். முறை யீடு நேரியதாயின், அவனைக் காக்க ஆண்டவன் அருட்டுணை வந்தே தீரும். அழுகை விலங்குக்கு ஐந்தறிவு. அதனினின்றும் வெளிவந்த மனிதனுக்கு மற்றுமோர் அறிவு அரும்புகிறது. அதுவே ஆறாவதறிவு.. பகுத்தறிவு. பகுத்தறிவால் மகன் மேனிலை எய்த முயலுதல் வேண்டும். ஆனால் அவன் வழுக்கி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, விலங்குக்கே இரையாகிப் பாவ வினைகள் புரிந்து கெடுகிறான். இது மனிதனிடத்துள்ள குறைபாட்டை உணர்த்து கிறது; மனிதன் தெய்வமல்லன்; குறைபாடுடையவன். அவன் குறைபாட்டால் கெடுதல் விளைத்துக்கொள்கிறான். கெடுதல் விளைத்துக்கொள்ளும் குற்றம் யாருடையது? மனிதனுடையது. ஆதலால், குறைபாடு குறித்தும், குற்றங் குறித்தும் வருந்தத் தக்கவன் அவனே. மைந்தன் தனது குறைபாடுகளையும் குற்றங்களையும் ஒளியாமல் ஆண்டவனை நோக்கி முறையிட்டு வருந்துகிறான்; கசிந்து கசிந்து உருகுகிறான்; அழுகிறான். அழுகை - உண்மை அழுகை - ஆண்டவன் திருச்செவிக்கு எட்டுகிறது. ஆண்டவன் கன்னெஞ்சனல்லன்; வன்னெஞ்ச னல்லன்; அவன் தண்டனை அறியாதவன்; அருளாளன்; மன்னிக்க விரைந்து நிற்பவன். மைந்தன் அழுகை கேட்டு அவன் வாளா இருப்பனோ? அவன் அருள் வாளா கிடக்குமோ? ஆண்டவன் மைந்தன் மீது அருள் சுரக்கிறான். ஆண்டவன் அருள், மைந்தனுக்கு இருவிதத் துணை செய்கிறது. அவ்வருள், மைந்தனது பழைய பாவங்களை மன்னிப்பதாகிறது. அவன் இனிப் பாவஞ் செய்யாதிருக்கும் வல்லமையையும் அவனுக்கு நல்குவதாகிறது. வினை செய்த வினையை அநுபவித்தே தீர்தல் வேண்டும் என்னுங் கொள்கையுடையவரும் இருக்கிறார். செய்த வினையை அநுபவிக்குங்கால், புது வினைகள் பொருந்துவதை அக் கொள்கையர் மறுப்பதில்லை. மீண்டும் மீண்டும் புதுமை பழமையாகிப் பழமையாகி வளர்ந்தே சென்றால் வினை முடிவடையும் இடம் எங்கே? வினை தன் விருப்பப்படி உலகை அலைத்து வருவதாயின், இறைவன் எற்றுக்கு இருக்கிறான்? அவன் அருளாளன் - கருணைக்கடல் - முதலிய பெயர்களால் எற்றுக்கு அழைக்கப்படுகிறான்? கடவுளுண்மையில் உறுதி யில்லாதார் பழைய வினை, புதிய வினை, தண்டனை முதலி வற்றைப் பேசிக்கொண்டிருக்கலாம். சீலம் விரதம் முதலியன ஒரோ வழியில் துணைபுரியுமன்றி, வினைகளை முற்றும் அறுக்க அவை துணைபுரியா. ஆண்டவன் அருளொன்றுக்கே வினை களை முற்றும் அறுக்கும் ஆற்றல் உண்டு. போலி ஆண்டவன் மன்னிப்பவன் என்று நினைந்து, மக்கள் ஒரு பக்கம் பாவஞ் செய்து செய்து, இன்னொரு பக்கம் அதுகுறித்து முறையிட்டு முறையிட்டு வந்தால் பாவம் தேயுமா? வளருமா? என்னும் ஐயம் பிறக்கலாம். இவ்வாறு ஐயுறுவோருள் யானும் ஒருவனாயிருந்த காலம் உண்டு. பாவி மனந்திரும்பி முறையிட்டு அழுவோனாதல் வேண்டும். மனந் திரும்பாமல் முறையிடுவதும் அழுவதும் போலியாகவே முடியும். ஆண்டவன் எங்கும் இருப்பவன்; எல்லாம் உணர்பவன். அவனுக்குப் பொய்மை மெய்ம்மை நன்கு தெரியும். பொய்ம்மை முறையீடும் அழுகையும் மன்னிப்புப் பெறமாட்டா. அவை மேலும் மேலும் பாவத்தைப் பெருக்கிக்கொண்டே போகும். பொய்ம்மை, நல்லறிவால் மெய்ம்மையாகத் திரும்புதலும் உண்டு. மனந் திரும்பிய முறை யீட்டினின்றும் எழும் அழுகையே, ஆண்டவன் மன்னிப்பைப் பெற்றுப் பாவத்தைக் கழுவும் ஆற்றல் வாய்ந்தது. மனந்திரும்பல் என்பது எனது ஐயத்தைப் போக்கியது. அது மற்றவரது ஐயத்தையும் போக்கும் என்று நம்புகிறேன். மனந்திரும்பித் தமது பாவங் குறித்து ஆண்டவனை நோக்கி அழுவோர் தமது பாவச்செயல்களைப் பகிரங்கமாக முறையிட அஞ்சார். அவரை அறியாமலும் அவர்தம் வாய் பாவச் செயல் களை முறையிட்ட வண்ணமிருக்கும். மெய்ஞ்ஞானிகள் தங்கள் பாவங்களை முறையிட்ட மொழிகள் மலையெனவும் கட லெனவும் கிடக்கின்றன. இங்கே இரண்டொன்றை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். 1Fy«bghšny‹ குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. 2nfhoa மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்துநா யினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலே னாதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித் திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் நாடிநான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசா ரணியத்து ளெந்தாய். 3moah® சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியே னுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 4bghŒÆnd‹ புலையனேன் கொலையினேன் நின்னருள் புலப்பட அறிந்து நிலையாப் புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல் பொருளலாப் பொருளை நாடும் வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்றென் னைநீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது வேறுகதி ஏது புகலாய் துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான துணைவனே இணையொன் றிலாத் துரியனே துரியமுங் காணா அதீதனே சுருதிமுடி மீதி ருந்த ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவைவிட் டகலாத கருணை வடிவே அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மான பரமே. 1Fy¤âilí§ கொடியனொரு குடித்தனத்துங் கொடியேன் குறிகளிலுங் கொடியனன்றிக் குணங்களிலுங் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலுங் கடையேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன் நலத்திடையோ ரணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்குமிக இழிந்தேன் நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை யறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே. பொல்லாதவன் புரசையில் ஒருவன் இருந்தான். அவன் பொல்லாதவன். அவன் பாவச் செயலில் பற்றுடையவனாகவே வளர்ந்தான். அவன் சிறு பையனா யிருந்தபோது பூனைகளையுங் கோழி களையும் துரத்தித் துரத்தி அடிப்பான்; வதைப்பான்; தோட்டத்தில் மேயுங் கழுதைகளைத் துன்புறுத்துவான். ஒருபோது வண்ணார் அவனைப் பிடித்துப் புடைத்து விடுத்தனர். பொல்லாத பாவி வண்ணார் மீது கொண்ட வன்மத்தை அவருக்குரிய ஒரு கழுதைமீது செலுத்தினான். ஒருநாள் ஒரு கழுதை மற்றக் கழுதை களை விடுத்துச் சிறிது தூரம் போய்த் தனியே மேய்ந்தது. பாவி அதை மெல்ல மெல்ல ஓட்டி, ஒரு புதரில் துரத்தி, நையப் புடைத்து ஓடிவிட்டான். அக்கழுதை எழுந்து நடக்க இயலாது வதைந்து வதைந்து மாண்டது. பழிபாவங்கட்கு அஞ்சாத மாபாவி பெண்களுக்குந் தொல்லை விளைப்பான். அழகிய பெண்கள் முகத்தில் சிகரெட்புகை விட்டு மகிழ்வதை ஒரு பெருந்தொண்டாகக் கொண்டிருந்தான் அப் பாவி. அவன் செய்த வேறு பல கொடுமைகளை ஈண்டு விரித்தல் அநாவசியம். அவன் பலமுறை தண்டிக்கப்பட்டான். தண்டனையைக் குறித்து அவன் கவலை யுறுவதே இல்லை. புரசையில் ஓரிடத்தில் ஒருவரால் இராமாயண வசனம் படிக்கப்பட்டது. அங்கே மக்கள் நூற்றுக்கணக்கில் கூடுவார்கள். ஒவ்வொருபோது பொல்லாதவன், இராமாயணக் கூட்டத்தில் புகுவான். கூட்டம் கலக்கமுறும். யுத்தப் பகுதி பொல்லாதவன் நெஞ்சைக் கவர்ந்தது. நாடோறும் அவன் கூட்டத்துக்குப் போகத் தொடங்கினான்; குளித்துத் தோய்த்த - உலர்ந்த - ஆடையுடுத்தித் திருநீறு அணிந்து வருவான்; மாலையில் பெருக்கல், தண்ணீர் தெளித்தல் முதலிய தொண்டு செய்பவருடன் கலந்துகொள்வான்; இராமாயணம் படிப்பவருடன் வீட்டுவரை சென்று திரும்புவான். அவன்றன் நற்செயல்கள் கூட்டத்தின் நடுக்கத்தைப் படிப்படியே போக்கின. ஒருநாள் அவன் இராமாயணச் சங்கத் தலைவர் வீட்டுக்குச் சென்று, யான் படிக்க விரும்புகிறேன். எனக்குப் பாடஞ் சொல்லவேண்டும்என்றான். அவ்வேளையில் யான் அங்கே இருந்தேன். அவன் சங்கத் தலைவரை நோக்கி, யான் பழைய ஆள் அல்லன்; என் மனத்தில் மாறுதல் உற்றுள்ளது என்று சொன்னான். அவனது மனோநிலை எனக்கு ஒருவாறு விளங் கிற்று. அவனுடன் சிறிது நேரம் யான் உரையாடிப் பார்த்தேன். அவனிடம் யான் பேசுவதும் நண்பர் தலைவருக்குப் பிடிக்க வில்லை. பள்ளிக்கூடத்தில் வந்து என்னைப் பார்க்குமாறு அவனுக்குச் சொல்லி, விலாசங் கொடுத்து யான் வீடு சேர்ந்தேன். சிலநாள் கழித்து அவன் பள்ளிக்கு வந்தான். தலைமை ஆசிரிய ரிடம் அவனை அறிமுகஞ் செய்வித்து, அவனது வரலாற்றையுங் கூறினேன். கிறிதுவின் அடியவராகிய தலைமை ஆசிரியர்க்கு அவனிடத்தில் நேசம் பிறந்தது. அவனைத் தமது தச்சப் பட்டறையில் அமர்த்திக்கொள்ள அவர் விரும்பினர். அவனும் அங்கே வேலை செய்ய இணங்கினான். ஓய்ந்த நேரங்களில் தலைமை ஆசிரியர் அவனுக்குக் கல்விச் செல்வத்தை அளித்து வந்தனர். அவனை யானும் அடிக்கடி சந்திப்பேன். அவன் மனந்திரும்பி வேறு ஓர் ஆளாக மாறியதை யான் உணர்ந்தேன். அவன் தனது பழஞ்செயல்கள் குறித்து வருந்துவான்; கழுதை நினைப்புத் தோன்றும்போதெல்லாம் கதறிக் கதறிக் கண்ணீர் விடுவான். அவனது நிலையை உணர்ந்த தலைமை ஆசிரியர் அவனுக்குக் கிறிது பெருமான் நற்செய்தியாகிய சுவிசேஷத்தைப் போதிக்கத் தொடங்கினர். அப் போதனை அவனுக்கு அமிர்த மாயிற்று. யான் அவனுக்குத் திருவாசக நூலொன்று தந்து, அதையும் படிக்குமாறு சொன்னேன். அப்படியே அவன் திருவாசகத்தையும் படித்து வந்தான். அவன் மற்றுமொரு பிறவி எடுத்தான் என்றே கருதல்வேண்டும். அவன் முற்றும் மாறுத லடைந்தான். அவனது நடையும், ஒழுக்கமும், தூய்மையும், கடவுளிடத் தன்பும், முறையீடும், பிறவும் ஆங்கிருந்தவருடைய உள்ளங்களையெல்லாங் கவர்ந்தன. அவன் ஆண்டவன் பிள்ளையானான் என்று சுருங்கச் சொல்கிறேன். ஒரு பெரிய குடும்பத்திற் பிறந்து வளர்ந்து, தெய்வ சிந்தனையில் மூழ்கிய ஒரு பெண்மணி, அவனது வரலாற்றைக் கேள்வியுற்று அவனை மணந்துகொண்டாள். அவ்விருவரிடத்திலும் மலர்ந்த வாழ்க்கை யில் தெய்வமணங் கமழ்ந்தது. இதை யான் நன்கு அறிவேன். பொல்லாதவன் இளமையில் எப்படி இருந்தான்? பின்னை எப்படியானான்? இரும்பு பொன்னாகியது. அறியாமையில் பாவம் பிறந்தது; அறிவில் அது விளங்குகிறது; அழுகை பெருகு கிறது; மனம் திரும்புகிறது. திரும்பிய மனத்தில் ஆண்டவன் அருள் பொலிகிறது. அருள், மகனைத் தன் வழியில் நடக்கச் செய்கிறது. முறையீடு - உண்மை முறையீடு - என்ன செய்யாது? அது, பழைய பாவங்களை அழிக்கும்; புதுப் பாவங்களைத் தடுக்கும்; ஆண்டவன் அருள்வழியில் நடக்கச் செய்யும். இளைய குமாரன் கிறிது பெருமான் அருளிய உவமைகள் பல உண்டு. அவைகளில் ஒன்று இளைய குமாரனைப் பற்றியது. அதை இங்கே படித்துக் காட்டுகிறேன். பின்னும் அவர் : ஒரு மனுஷனுக்கு இரண்டு குமார ரிருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனிடம் வந்து : தகப்பனே, சொத்தில் எனக்குரிய பங்கை எனக்குத் தாரும் என, அவனும் அவர்களுக்குத் தன் சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான். சில நாளைக்குள் இளைய மகன் எல்லாவற்றையுஞ் சேர்த்துக்கொண்டு தூர தேசம் போய் அங்கே துன்மார்க்க ஜீவியஞ் செய்து தன் சொத்தை விரயஞ் செய்துவிட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அத்தேசத்தான் ஒருவனிடம் போய் ஒட்டிக்கொண்டான். அவன் அவனைத் தன் வயல்களில் பன்றி மேய்க்க அனுப்பினான். பன்றி தின்னும் தவிட்டைத் தின்று தன் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான்; அவனுக்குக் கொடுப்பாரோ இல்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன், என் தகப்பனுக்கு எத்தனையோ கூலிக்காரருண்டு; அவர்களெல்லாரும் பூர்த்தியாய்ச் சாப்பிடுகிறார்கள்; நானோ இங்கே பசியினால் சாகிறேன். நான், எழுந்து என் தகப்பனிடம் போய் தகப்பனே, பரத்துக்கு விரோத மாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திரனல்ல. உமது கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளுமென்பேன் என்று சொல்லி எழுந்து தன் தகப்பனிடம் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே அவன் தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு திரும்பத் திரும்ப முத்தஞ் செய்தான். குமாரனோ தகப்பனிடம் : தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ் செய்தேன். இனி உமது குமாரன் எனப்பட நான் பாத்திரனல்ல என்று சொன்னான். தகப்பனோ தன் வேலைக்காரரைக் கூப்பிட்டு: நீங்கள் சீக்கிரம் போய் உயர்ந்த வதிரம் கொண்டு வந்து இவனுக்கு உடுத்தி இவன்கைக்கு மோதிரமும் கால்களுக்குப் பாதரட்சைகளும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் புசித்துச் சந்தோஷங் கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான். திரும்பவும் உயிரோடு வந்தான்; காணாமற் போனான்; திரும்பவுங் காணப் பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷங் கொண்டாடத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்கு சமீபமாய் வருகிறபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு வேலைக்காரரில் ஒருவனை யழைத்து, இது என்னவென்று விசாரிக்க அவன்: உமது சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே வந்து சேர்ந்தபடியினாலே உமது தகப்பனார் கொழுத்த கன்றை அடித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போகமாட்டேனென்று நின்று விட்டான். தகப்பனோ வெளியே வந்து அவனை நல்வார்த்தை சொல்லி யழைக்க அவன் தகப்பனிடம்: இதோ இத்தனை வருஷகாலமாய் நான் உமக்குத் தொண்டு செய்து வருகிறேன்; ஒருகாலும் உமது கட்டளையை மீறினதில்லை; அப்படியிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷங் கொண்டாடும்படி நீர் ஒருகாலும் எனக்கு ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்ததில்லை. உம்முடைய மகனாகிய இவனோ வேசிகளிடம் உமது சொத்தை அழித்துவிட்டுத் திரும்பி வந்தவுடனே இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்தீரே என்றான். அதற்கு அவன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளவைகளெல்லாம் உன்னுடையவைகளே. உன் சகோதரனாகிய இவனோ மரித்திருந்தான், திரும்பவும் உயிரோடு வந்தான்; காணாமற் போயிருந்தான், திரும்பவும் காணப்பட்டான்; ஆகையால் நாம் சந்தோஷங் கொண்டாடி மனமகிழ வேண்டுமே என்று சொன்னான் என்றார். - லூக்கா :15:11 - 32 இவ்வுவமையின் நுட்பத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; மெய்யாக மனந்திரும்பி முறையிட்டால் எல்லார்க்குந் தந்தை யாகிய ஆண்டவனது அருட்டிறமும் மன்னிப்பும் கிடைக்கும் என்பதைத் தெளியுங்கள். மாபாதகன் இவ்வுவமையை யொத்த ஒரு கதை பாண்டி நாட்டில் புனையப்பட்டது. அக்கதையை யான் முதல் முதல் படித்த போது, அஃது அடங்கியுள்ள பக்கங்களைக் கத்தரியால் வெட்டி விட்டேன். நாளடைவில் அக்கதையின் உள்ளுறை எனக்கு விளங்கலாயிற்று. விளக்கத்துக்குக் கருவியாயிருந்தது கிறிது பெருமான் போதனை. பாண்டிநாட்டிற் பிறந்த கதை எது? âUÉisahl‰ òuhz¤âYŸsJ; ‘khghjfª Ô®¤j gly«! என்னுந் தலைப்புடையது. அக்கதை முதல் முதல் எக்காரணம்பற்றி எவரால் புனையப்பட்டதோ தெரியவில்லை. அது பாண்டி நாட்டில் பரவி, அந்நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் புகுந் துள்ளது. முதல் முதல் அக்கதையைப் புனைந்தவர் உள்ளம் பாவங்களில் மிகப் பெரியதொன்றைக் காண முயன்றிருக்கும். அவர் தம் உள்ளத்தில் தந்தையைக் கொன்று, தாயைக் கெடுத்த பாவம் திரண்டிருக்கும். பின்னே ஊர் பேருடன் கதை அவரால் செப்பஞ் செய்யப்பட்டிருக்கும். நாளடைவில் அக்கதை வெவ் வேறு வழியில் வளர்ந்திருக்கும். திரிந்திருக்கும். பாண்டி நாட்டிலே ஓர் இளைஞன் விலாப்புடைக்கத் தின்று கொழுத்துக் காளை போல் வளர்ந்து திரிந்து வந்தான். அவன்றன் கொழுமை தாயைக் காமுறச் செய்தது. அவன் தனது மறவினைக்குத் தடையாயிருந்த தந்தையைக் கொன்றான். சில ஆண்டு கடந்த பின்னர் நல்லோர் சேர்க்கை அவனுக்குக் கிடைத்தது. அவனது இளமைச் செயல் அவனைத் துளைக்கத் தொடங்கியது. மைந்தன் துடிக்கிறான்; வெயிலிடைப் பட்ட புழுவெனத் துடிக்கிறான். அறியாமையில் விளைந்த அடாத செயல் அறிவில் துன்புறுத்து கிறது; வதைக்கிறது. மகன் அலறுகிறான்; கதறுகிறான்; பதறு கிறான். தவறுதல் அந்நாளில் விளங்கவில்லை; இந்நாளில் விளங் குகிறது. என்செய்வான்! பாதகன்! மாபாதகன்! படாதபாடு படுகிறான்; களைகண் உண்டோ என்று அலைகிறான்; களைகண் ஆண்டவனே என்று உணர்கிறான்; ஆண்டவனை நினைந்து நினைந்து அழுகிறான்; முறையிடுகிறான். ஒரே அழுகை; முறையீடு. அவனது உள்ளங் கண்ட அருட்கடல் - ஏழை பங்காளன் - அவனுக்கு அருள் சுரந்தான். நிகழ்ந்த பாவம் எத்தகையது? நினைந்தாலும் நெஞ்சம் பகீரென்று நடுக்குறுகிறது. கொடுஞ் செயல் எந்நாளில் நிகழ்ந்தது? அறியாமை 1இருளில் - பாவம் இன்னதென்று விளங்காத நாளில் - நிகழ்ந்தது. பின்னாளில் அச்செயல் பாவம் என்று விளங்கலாயிற்று. பாவம் விளங்கியதும், நெக்குநெக் குருகலும், 1அழுகையும், முறையீடும் பெருகின. அவை பாவத்தைக் கழுவி, ஆண்டவன் அருளைக் கூட்டும் ஆற்றல் வாய்ந்தன. பாவஞ் செய்த இரும்பு மனம் - வன்னெஞ்சம் - மாண்டு போயிற்று; புதிய அன்புமனம் -அறநெஞ்சம் - தோன்றியது. பழைய ஆள் மாண்டான்; புதிய ஆள் பிறந்தான். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் கடவுளின் ராஜ்யத்தைக் காணமுடியாதென்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். - யோவான் : 3: 3 இது கிறிது பெருமான் திருவாக்கு. மெய்ம்மையும் அஞ்சாமையும் முறையீட்டில் மெய்ம்மையும் அஞ்சாமையும் இருத்தல் வேண்டும். மெய்ம்மையுள்ள இடத்தில் அஞ்சாமையும், அஞ்சாமையுள்ள இடத்தில் மெய்ம்மையும் இருக்கும். அச்சத்தில் மெய்மை பிறத்தல் அரிது. அதில் பொய்ம்மையும், பொய்ம்மை கலந்த மெய்ம்மையும் பிறக்கும். முறையீடு, உண்மை என்னுங் கடவுள் முன்னிலையில் நிகழ்வது. அங்கே பொய்ம்மை எக்காரணம் பற்றியும் தலைகாட்டலாகாது; தலைகாட்டினால் முறையீடு பயனற்றதாகும். முறையீடாவது பாவ அறிக்கை. அதில் பொய்ம்மை கலந்தால், அஃது எப்படிப் பாவ அறிக்கை யாகும்? அது, குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டவன் கதையாக முடியும். மெய்ம்மையாக முறையீடு நிகழ்த்தும் நெஞ்சம் பாவத்துக்கு அஞ்சுவதாகும். முறையீட்டுக்கு நாணும் நெஞ்சம் அச்சமுடையதாகும். அச்சத்தில் மெய்ம்மை எழுங் கொல்? முறையீட்டில் மெய்ம்மை வேட்கை எழுந்தால் அச்சம் இரிந்தோடும்; அஞ்சாமை வீறிட்டெழும். பொறுப்பு பாவம் செய்பவன் மனிதன். அம்மனிதனே பாவ அறிக்கை செய்தல் வேண்டும். பொறுப்பு மனிதனுடையது. பொறுப்பில் மெய்ம்மை கலந்தால், பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் உண் டாகும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் பெறுவோன் வாழ்க்கை யில் வெற்றி பெற்றவனாவன். அவன் நெஞ்சம் புதுப் பாவத்தை நாடாது; ஆண்டவன் அருளில் வேட்கை கொள்ளும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் பொறி புலன்களில் வீழாது; குறும்பு செய்யாது; தியானத்தில் நன்றாக ஈடுபடும். தியானம் பாவக் கழிவுக்கென்று உலகில் கோலப்பட்ட முறைகள் பலப்பல. அவைகளுள் சிறந்ததும் எளியதும் மூர்க்கமில்லாத துமா யிருப்பது முறையீடு. 1பலவிதக் கிரியைகளாலும், யோகங் களாலும், பிறவாற்றாலும் அடைய முடியாத பேற்றை முறை யீட்டால் எளிதில் அடையலாம். முறையீடுமட்டும் மெய்ம்மை யுடையதா யிருத்தல் வேண்டும். மெய்ம்மை முறையீடு தியானத் துக்கு ஆக்கம் அளிக்கும். பேதம் அபேதம் தியானத்துக்குப் பேத உணர்வு இருத்தல் கூடாது; அபேத உணர்வு இருத்தல் வேண்டும். பேதம் தியானத்துக்கு ஆக்கந் தேடாது. அது தியானத்தைக் குலைத்துக் கொண்டே இருக்கும். தியானத்துக்குச் 2சாதி மதம் மொழி நாடு முதலிய வேற்றுமை களைக் கடந்த பொதுமை உணர்வு தேவை. சாதி முதலிய வெறி களுக்கு இரையாகும் நெஞ்சம் தியானத்தில் நிலை பெறாது. அது பாதரசம் போல் சஞ்சலத்தில் வீழ்ந்து கொண்டே தொல்லையுறும். ஆகவே தியானத்துக்கு அபேத உணர்வு தேவை என்க. நிந்தனை உலகில் தோன்றியுள்ள சமயங்கள் பலவும் தியானத்தை அறிவுறுத்துகின்றன. தியானத்தை அறிவுறுத்தாத சமயம் இல்லை என்று யான் சொல்வேன். சமயத்தவர் பலர் தியானத் தில் நாட்டஞ் செலுத்துவதற்குப் பதிலாக, வேறு வேறு துறை களில் நாட்டஞ் செலுத்துகின்றனர். சமயத்தவர் செய்யுந் தவறு சமயங்கள்மீது சுமத்தப்படுகிறது. இஃது உலக வழக்கு. அவரவர் தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகி வருவரேல், அவரவரது நெஞ்சம் தியானத்தையே நாடிச் செல்லும். தத்தஞ் சமயத்தில் நின்று ஒழுகாது, சமய நிந்தனையிலும் பூசனையிலும் இறங்கு வோர் நெஞ்சம் தியானத்தில் நாட்டஞ் செலுத்துவதாகாது. அஃது இகல் பகை எரி முதலியவற்றில் வீழ்ந்து கரியும். ஒரே இறை ஒரே நெறி 1இறைவன் ஒருவனே. அவனை அடையும் நெறியும் ஒன்றே. ஒரு நெறியில் பலவகைக் கவட்டைகள் ஏற்பட்டன. கவட்டைகள் ஏற்படுவது இயல்பு. எக் கவட்டையைப் பற்றி நடந்தாலும் அஃது ஒரு நெறியிலேயே சேர்ப்பிக்கும். இறைவன் உடலாகிய இயற்கை ஒன்று. அதன் காரியமோ பலவிதம். இயற்கைக் காரியம் பலவித மாகப் பிரிந்து நிற்றலால், மக்களின் புறத்தோற்ற அமைப்பு, வழக்கவொழுக்கங்கள் முதலியனவும் பலவிதமாகப் பிரிந்து நிற்கின்றன. அப் பலவிதங்கட் கேற்பச் சமயங்களும் பலவித மாகத் தோற்றமுறலாயின. மக்களின் புறத்தோற்ற அமைப்பு, வழக்க ஒழுக்கங்கள் முதலியன பன்மைபட்டுக் கிடந்தாலும், அப் பன்மை அவர்களது அக ஆன்மாவில் கிடப்பதில்லை. அங்கே ஒருமையே நிலவுகிறது. அக ஒருமைக்குப் புறப்பன்மை தேவை. புறப்பன்மைத் துணைகொண்டே அக ஒருமைக் காட்சி பெறுதல் வேண்டும். பன்மையில் ஒருமை காண்பதே புலமை. புறப் பன்மைத் தோற்றங்கள் போன்றன சமயங்கள். ஆன்ம ஒருமை போன்றது ஆண்டவன் நெறி. அச்சமயங்களும், இந்நெறியும் தொடர் புடையன. அத்தொடர்பை உணர்தற்கென்றே பிறப்பு, கல்வி, திருமணம், வாழ்க்கை முதலியன ஏற்பட்டுள்ளன. தத்தஞ் சமயம் நின்று ஒழுகுவோர்க்கு, அத்தொடர்பு நன்கு விளங்கும். சமயப் பூசலில் இறங்குவோர்க்கு அது விளங்காது. மக்கள் புறச் சமயங்களைக் கொண்டே அக ஆன்ம நெறியை அடைய முயல்வது அறிவுடைமையாகும். புறங்களைப் போருக்குப் பயன்படுத்துவது அறிவுடைமையாகாது. புறச்சமயங்களின் வழி நில்லாது, வாததர்க்கங்களில் இறங்குவோர், அகநாட்டமுடைய வராதல் அரிது. அக நாட்டத்துக்கென்று அமைந்துள்ள அரண்கள் சிதைந்தால், அந்நாட்டம் எப்படி உண்டாகும்? அகநாட்டமே ஆத்திகத்துக்குரியது. ஆத்திக அமைதிக்குப் போராட்டங் கூடாது. உலகில் ஆங்காங்கே தோன்றிய சமயப் பெரியோர் பலரும் அவ்வவ்விடத்தின் இயற்கைக்கேற்ற வண்ணம் புறச்சமய வழக்க ஒழுக்கங்களைக் கால தேச வர்த்தமானத்துக் கிணங்க அறிவுறுத்தியதுடன் நில்லாது, அகத்துக்குரிய ஒருமையென்னும் பொதுமையையும் அறிவுறுத்திச் சென்றனர். அவர்தம் அறிவுறுத்தல்களை உலகம் திரித்துத் திரித்து விடுதலால், பொதுமை அறம் வளர்ச்சியுறாது தடைபடுகிறது. பெரியோர் பெயராலும், அவர்தம் போதனைகள் பெயராலும் ஆங்காங்கே தோன்றிய மடங்களும், சங்கங்களும், சம்பிரதாயங்களும், பிறவும் தடைக்குக் காரணங்களாக நிற்கின்றன. அவைகளை நல்வழியில் திருப்புதற்குரிய அறக் கிளர்ச்சிகள் ஆண்டாண்டுத் தோன்றுதல் வேண்டும். பெரியோர் எண்ணிய எண்ணங்கள் கிளர்ச்சிக்குத் துணைசெய்யும். மக்கள் கிளர்ச்சியில் தலைப் படாது, வாளா கிடந்தால், பெரியோர் துணை வாராது. பற்பல இடங்களில் தோன்றிய பெரியோர் போதனைகளையெல்லாம் திரட்டிப் பார்த்தால், அவைகளினூடே சமரச 1சன்மார்க்கம் வெள்ளிடை மலையெனப் பொலிதல் காணலாம். ஒவ்வொரு சமயமும் சமரச சன்மார்க்கமென்பது எனது வாழ்க்கையில் செவ்வனே விளங்கியது. சமரச சன்மார்க்கத்தை அறிவுறுத்தாத சமயமே இல்லை என்பது எனது உள்ளக்கிடக்கை. எச்சமயத்தில் நின்று ஒழுகிப்பார்த்தாலும் அது சமரச சன்மார்க்க உணர்வை உண்டாக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருவன் தனக்கு இனியதாகத் தோன்றும் ஒரு சமயத்தில் நின்றொழுகலாம். தனது சமயத்தில் நின்றொழுகாது, பிற சமயங்களை ஒருவன் நிந்தனை செய்து வருவானாயின், அவன் சமரச சன்மார்க்கத்தை அடையவே மாட்டான். சமய ஒழுக்கத்தில் நிற்பவன் நிந்தனை யில் இறங்கலாகாது; இறங்கினால், சமய வொழுக்கமும் குலைந்துபோகும்; சமரச சன்மார்க்கப் பேறும் கிட்டாமற் போகும். சன்மார்க்கம் சத் + மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; கடவுள். மார்க்கம் - நெறி. கடவுள் நெறியே சன்மார்க்கமென்பது. அதில் பொதுமை என்னுஞ் சமரச மிருத்தலால், அது சமரசமென்று வழங்கப்படுகிறது. சன்மார்க்கமே எல்லா மார்க்கங்கட்கும் உயிராக நிலவுதலால் அதை மார்க்கமென்றுஞ் சொல்லலாம். சமரச மென்பதும், சமரச சன்மார்க்கமென்பதும், சன்மார்க்க மென்பதும், மார்க்கமென்பதும் ஒன்றே. சன்மார்க்கம் எப்பொழுது தோன்றியது? அது தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. மக்களுக்குக் கடவுள் உணர்வு என்று தோன்றியதோ, அன்று தோன்றியது சன்மார்க்கம் என்று ஒருவாறு கூறிவிடலாம். காலத்தைப்பற்றிய கவலை தியானயோகிகட்கு வேண்டுவதில்லை. குருமார் மக்கள் அறியாமை காரணமாகச் சன்மார்க்கத்தின் மீது மாசு படரும். அம்மாசினைப் போக்க அவ்வப்போது குருமார் போதருவர். குருமார் வரலாறு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர் ஒவ்வொருபோது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதப் பெயரால் போற்றப்படுவர். குருமார் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்தம் தொகை இவ்வளவினது என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. குருமார் அவதாரம் என்றும், அவதாரமல்ல என்றும், மனிதராயிருந்து தவத்தால் மேம்பட்டுக் குருநிலை எய்தினவர் என்றும், ஞானிகள் வேறு குருமார் வேறு என்றும், அவர் நுண்ணிய பொன்னுடலர் என்றும், சிற்சில சமயம் பருவுடல் தாங்கியும் வருவர் என்றும் உலகம் பலவாறு அவரைப் பற்றிச் சொல்கிறது. எவர் என்ன கூறினுங் கூறுக. குருமார் இருத்தல் உண்மை; அவர்வழி உலகம் நடத்தல் உண்மை. கடவுள், உறுப்பில்லாதது; உருவமில்லாதது; அசைவற்றது; போக்கு வரவற்றது. அஃது எப்படி வினையாற்றும்? வினை யாற்றுதற்கு உறுப்பு வேண்டும். உறுப்புக்கு உடல் வேண்டும். உறுப்பில்லாக் கடவுள் - உடலில்லாக் கடவுள் - இயற்கையை உடலாக்கொண்டும் 1குருமாரை உடலாக் கொண்டும் வினை ஆற்றுகிறது; படைப்பாதித் தொழில்களைச் செய்கிறது. இறை யின் உடல் இயற்கை என்பது நேற்றுப் பேசப்பட்டது. அவ்வுட லுடன் குருமார் உடலும் கடவுளுக்கு உண்டு என்று கொள்க. குருமார் மாசற்றவர். அவர்தம் மாசற்ற உள்ள மலரில் கடவுள் கோயில் கொள்கிறது. குருமாரை இயக்குவது கடவுள். குருமார் நினைப்பெல்லாம் கடவுள் நினைப்பு; அவர் மொழி யெல்லாம் கடவுள் மொழி; அவர் செயலெல்லாம் கடவுள் செயல். உருவமற்ற கடவுள் நேரே எதையுஞ் செய்யாது. அஃது இயற்கை வாயிலாகவும் குருமார் வாயிலாகவும் காரியங்களை நிகழ்த்துகிறது. முன்னே பேசப்பட்ட இயற்கை அன்னையையுங் குருமார் கூட்டத்தில் சேர்த்துப் பேசுவது தொன்றுதொட்ட வழக்கு. குருமார் பலரா ஒருவரா? அவர் தோற்றத்தில் பலர்; உண்மையில் ஒருவர். அவர் தம் உள்ளத்தில் வீற்றிருக்குங் கடவுள் ஒன்றே. ஒரே கடவுள் அவர் வாயிலாகச் செயல் புரிகிறது. ஒரே கடவுள் ஒளிரும் உள்ளமுடைய குருமார் எங்ஙனம் பலராவர்? அவர் ஒருவரே. குருமார் ஒருவரென்பது தியான யோகத்தில் நன்கு விளங்கும். எண்மர் உலகம் தோற்றமுடையது; தோற்றத்திலேயே கருத்துச் செலுத்துவது. தோற்ற நிலையுடைய உலகுக்குக் குருமார் பலராகவே விளங்குவர். குருமார் தொகை தெரியாமையால் அவரைப் பலர் என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது. பலரை ஒரு தொகைப்படுத்தவேண்டி, யான் எண்ணி நினைந்து உன்னி முன்னிப் பார்த்ததில், என் உள்ளத்தில் பலர் எண்மராய் ஒருவராயினர். எண்மராவார்; மகம்மது, இயற்கை அன்னை, கிறிது, விருஷப தேவர், புத்தர், கிருஷ்ணமுர்த்தி, குமரன், தக்ஷிணாமூர்த்தி. இவ்வெண்மர் பலராவர்; ஒருவராவர். தெய்வம் ஒன்றே என்றவர் மகம்மது; (தெய்வம்) தன் உயிர் என்று அறிவிப்பவள் இயற்கை அன்னை; அன்பு என்றவர் கிறிது; அஹிம்ஸை என்றவர் விருஷப தேவர்; தருமம் என்றவர் புத்தர்; நிஷ்காமியம் என்றவர் கிருஷ்ணமூர்த்தி; அழகு என்பதைத் தெரிவிப்பது குமரன் கோலம்; சாந்தம் என்பதற்கு அறிகுறி தக்ஷிணா மூர்த்தம். தெய்வம் ஒன்றே என்பது விளங்கும் இடத்தில், அதனூடே மற்ற ஏழும் விளங்கப்பெறும். தெய்வம் உயிர் - இயற்கை உடல் என்னும் உண்மை திகழும் இடத்தில் பிற ஏழும் திகழ்ந்து ஒன்றும். தெய்வம் அன்பு என்பது புலனாகும்போது, அதில் வேறு ஏழும் பொருந்திப் புலனாகி ஒருமைப்படும். ஒன்று விளக்கமுறும்போது மற்ற எல்லாமும் விளக்கமுற்றுக் கலப்புற்று ஒன்றாகும். ஒன்றை விடுத்து ஒன்று நில்லாது. எவர்க்கு எவரில் - எவர் போதனையில் - வேட்கை உண்டாகிறதோ, அவர், அவரில் - அவர் போதனையில் - அன்பு பூண்டு ஒழுகலாம். அவ்வொழுக்கம் தெய்வ நிலையைக் கூட்டுதல் ஒருதலை. சன்மார்க்கத்தைப்பற்றி இரண்டு தனிநூல்கள் என்னால் யாக்கப்பட்டுள்ளன. அவை சமரச சன்மார்க்கபோதம், சமரச சன்மார்க்கத் திறவு என்பன. அவைகளில் சன்மார்க்கத்தைப் பற்றிய குறிப்புக்கள் பல பொறித்துள்ளேன். விளக்கத்துக்கு அந்நூல்களைப் பார்க்க. (பின்னே, இரண்டும் சன்மார்க்க போத மும் திறவும் என்ற தலைப்புடன் ஒன்றாகவே அச்சிடப்பட் டுள்ளன) மகம்மது ஒருமையும்,இயற்கை உடலும், கிறிது அன்பும், விருஷப தேவர் அஹிம்ஸையும், புத்தர் தருமமும், கிருஷ்ணமூர்த்தி நிஷ்காமியமும், குமரன் அழகும், தக்ஷிணா மூர்த்தி சாந்தமும் தெய்வ உண்மையை உணர்த்துவதைத் தியானத்தில் விளங்கப் பெறலாம். இப்பேற்றிற்குத் துணை செய்வது சன்மார்க்கம். சன்மார்க்கமும் உலக மார்க்கமும் சன்மார்க்கம் வேறு உலக மார்க்கம் வேறு என்றும், உலகுக்கு அப்பாற்பட்டது சன்மார்க்கம் என்றும் சிலர் பேசுவதுண்டு. அப்பேச்சு, செயலாகும்போது, வாழ்க்கையில் துன்மார்க்கமே மலிவதாகும். உலக மார்க்கம் வேறென்று, வாழ்க்கையில் பலதிறப் பாவங்களைச் செய்து கொண்டு, கடவுள் பூசை ஒன்றே சன்மார்க்கத்துக்குரிய தென்று கடவுளைப் பூசிப்ப தால் பயன் விளையாது. அப்பூசை சத்தென்னுங் கடவுளிடம் சாராது. அதனால் பாவங்களே பெருகும்; வாழ்க்கை தூய்மை யுறாது; துன்மார்க்கம் துதையும். சத் என்னுங் கடவுள் உலகெங்கும் நீக்கமற நிற்பது. சத்தின் மார்க்கம் உலகத்தை விடுத்து எங்ஙனம் நிற்கும்? உயிர்கள் சன்மார்க்கத்தில் நின்றொழுகி விடுதலையடைதல் வேண்டு மென்னும் நோக்குடன் அவைகட்கு உலகம் அளிக்கப்பட்டது; உடல் உள்ளம் கரணம் முதலியனவும் அளிக்கப்பட்டன. இவை யாவும் சன்மார்க்க வாழ்க்கைக்குத் துணைசெய்யும் பொருட்டே வழங்கப்பட்டன என்று உணராதார் சன்மார்க்கம் வேறு உலக மார்க்கம் வேறு என்று பேசியும் நடந்தும் அல்லற்படுவர். உலகங்கடந்த நிலையில் மார்க்கம் ஏது? அங்கே மார்க்கம் எற்றுக்கு? அங்கே என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. ஒரே வெளி - ஒரே ஒளி. அவ்வெளியொளியை அடைவதற்கென்று கொடுக்கப்பட்ட உலகுக்கே சன்மார்க்கம் வேண்டற்பாலது. சன்மார்க்கமும் உலக மார்க்கமும் ஒன்றே. இரண்டையும் பிரித்து வாழ்வோர் விடுதலை யடைதல் அரிது. சன்மார்க்கம் பிறப்பில், வளர்ப்பில், கல்வியில், திரு மணத்தில், பிள்ளைப் பேற்றில், தொழிலில், பொருளில், நடக்கையில், இன்ன பிறவற்றில் இரண்டறக் கலந்து நிற்பதைத் தெளிந்து வாழ்க்கை நடாத்துவோர் சீலத்தில் செல்வராதல் உறுதி. சீலச் செல்வம் தியானத்துக்கு வேர் போன்றது. தியானம் விடுதலைக்கு வழிதேடுவது. ஆதலின், சன்மார்க்கம் வேறு உலக மார்க்கம் வேறு என்று வாழ்க்கை நடாத்துவது தவறு என்க. அரசியல் சன்மார்க்க வளர்ச்சிக்கு உலகியற்றுறைகள் நலம் பெற நிகழ்தல் வேண்டும். உலகியற்றுறைகளுள் சிறந்தது அரசியல். அரசியல் செம்மையுடைதாயின், மற்ற எல்லாம் செம்மை யுடையனவாகும். பழைய கால அரசியல் ஒருவித சமதர்ம வழியில் இயங்கி வந்தது. இடைக்காலத்தில் அதனுள் சர்வாதிகாரம், ஜனநாயகம் முதலியன புகுந்தன. அதனால் செல்வம் ஒரு கூட்டத்தினரிடைப் பெருகலும், மற்றொரு கூட்டத்தினரிடைச் சுருங்கலும் நேர்ந்தன. இப்பெருக்கமும் சுருக்கமும் உலக ஒழுங்குக்குக் கேடு சூழ்ந்தன. உலக ஒழுங்கைக் காக்கும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. இயற்கை அன்னை உலக ஒழுங்கை விரும்பினள். அவ்விருப்பம், காரல் மார்க் உள்ளிட்ட ஒரு சிலரை உந்திப் பழைய சமதர்மத்தைத் தற்கால விஞ்ஞான முறையில் செப்பஞ் செய்யத் தூண்டியது. காரல் மார்க் உள்ளிட்டவரால் சமதர்மம் செப்பஞ் செய்யப் பெற்றது. ஆனால் அது நிறையுடையதாக அமைய வில்லை. அதில் சன்மார்க்கம் புகவில்லை. சமதர்மம் உடல்; சன்மார்க்கம் உயிர்; சன்மார்க்கமற்ற சமதர்மம் நிறையுடைய தாகாது. சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமதர்மமே உலகில் மெய்ம்மையான அமைதியை நிலை பெறுத்தும். தற்போது எங்கணும் புதுஉலகம் பேசப்படுகிறது. அவ்வுலகம் சன்மார்க்க சமதர்மத்தினின்றும் அரும்புதல் வேண்டும். சன் மார்க்க வாயிலாகச் சமதர்மம் அரும்பும்வரை உலகில் அமைதி நிலைபெறாது. சன்மார்க்கத்தில் சமதர்மமும் அடங்குதலைத் தெளிக. தியானத்துக்கு அமைதி வேண்டும். தற்கால உலகில் அமைதி நிலவுகிறதா? அமைதிக்குப் பதிலாகப் பட்டினியும் பசி யும் கொள்ளையும் கொலையும் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விதமாக உலகை அலைக்கின்றன. இந்நிலை தியானத்துக்கு இடம் தாராது. உலக அமைதிக்குச் சன்மார்க்க அரசியல் தேவை. அவ்வரசியலை உலகம் பெறுதற்குரிய முயற்சியிலும் அறிஞர் தலைப்படுதல் வேண்டும். அதுவும் சன்மார்க்கத் தொண்டாகும். பரபரப்பு இக்கால நாகரிகம் பரபரப்பை ஈன்று வளர்த்துவிட்டது. பரபரப்பு, கருமுதல் சுடுகாடுவரை வீறிடுகிறது என்று கூறுதல் மிகையாகாது. உண்டி, உடை, கல்வி, தொழில், நடக்கை முதலிய வாழ்வுத் துறைகளிலெல்லாம் பரபரப்பு மிகுந்து நிற்கிறது. இவ்வாழ்க்கையில் தியானத்துக்கு இடம் ஏது? பரபரப்பு வாழ்க்கை, தியானத்துக்கு யமன் போன்றது. இக்கொடிய வாழ்க்கை உலகில் வேரூன்றி வளர்ந்து தழைத்ததற்கு அடிப்படையான காரணம் என்னை? காரணம் பலபடக் கூறலாம். அவைகளையெல்லாம் திரட்டி ஆராய்ந்தால் மூலம் புலனாகும். வாழ்க்கையில் பொருள் போராட்டம் புகுந்தமை மூலக்காரணம். பொருள் போராட்டத்தால் அமைதி வீழ்ந்து, பரபரப்பு எழுந்தாடல் இயல்பு. பரபரப்பு வீழ்தற்கு வாழ்க்கையில் பொதுமை அறம் புகுதல் வேண்டும். இதற்குப் புரட்சி தேவை என்று சொல்லப்படுகிறது. எப்புரட்சி? அறப்புரட்சி. இதுவே சன்மார்க்கப் புரட்சி என்பது. மறப்புரட்சி கூடாது. அது சன்மார்க்க மற்றது; துன்மார்க்க விலங்கியல்பைப் பெருக்குவது; போராட்டத்தை வளர்ப்பது. அஃது எற்றுக்கு? .m¥bghGJ அவர்கள் கிட்டவந்து இயேசுவின்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள். இதோ, இயேசுவோ டிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவிப் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனிடம் உன் பட்ட யத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். - மத்தேயு ; 26 : 50 - 53. இதிற் போந்துள்ள கிறிது பெருமான் திருவாக்கை உளங்கொண்டு பார்க்க. சன்மார்க்கம், மக்களிடைச் சகோதர நேய விதை விதைக்கும். அது தெய்வ இயல்புகளைப் பெருக்கிப் போராட்டத்தை அருகச் செய்யும். மக்கள் ஆன்ம நேய உரிமைப்பாட்டுடன் வாழ விரும்புவார்கள். அவ்விருப்பம் ஓங்கி வளர வளர அது தானே பொருள் நிலையைப் பொதுமைப் படுத்திவிடும். சகோதர நேயம் என்ன செய்யாது? அன்பை ஓம்பித் தியாகத்தைச் செறிவிக்கும். மக்கள் நெஞ்சில் அன்பும் தியாகமும் மலிந்தால் சிறுமைப்பொருள் போராட்டத்திற்கு அந்நெஞ்சம் இரையாகுமா? அந்நெஞ்சில் பரபரப்பு நாகரிகம் எவ்வாறு இடம்பெறும்? பரபரப்பற்ற வாழ்க்கையே மலரும். அவ்வாழ்க்கை தியானத்தை அவாவுவதாகும். சன்மார்க்க ஆட்சி முறையிலேயே இத்தகைய நல்வாழ்க்கை ஆக்கம் பெறும். இதற்கும் தியானம் தேவை. பரபரப்பு நாகரிகம் எங்ஙனம் தியானத்துக்கு இடந்தரும் என்னுங் கேள்வி எழுதற்கு இங்கே இடம் உண்டாகலாம். சிலர் முயற்சி எக்காரணம் பற்றியோ பரபரப்பு நாகரிகம் தோன்றிப் பரவிவிட்டது. அந்நாகரிகம் தியானத்துக்குக் கேடுஞ் சூழ்ந்து விட்டது. இந்நிலையை மாற்றுதற்குச் சன்மார்க்க ஆட்சி முறை வேண்டப்படுகிறது. இதற்குத் தியானம் தேவை எனில், எப்படி அது செயலில் நிகழ்வதாகும்? தியானத்துக்குப் பரபரப்பு யமன் என்பதில் ஐயமில்லை. உலகில் தியானம் ஆக்கம் பெறல் எளிதன்று. ஆனால் வாழ்க்கைக்கு இன்றியமையாத தியானம் உலகில் அருகி வருதல் ஒரு சிலர்க்காதல் உணர்ச்சி யூட்டாமற் போகாது. இக்காலச் சண்டை விளைத்துவரும் தொல்லை, தற்கால நாகரிகத்தில் வெறுப்புக்கொள்ளுமாறு எத்துணையோ பேருக்கு உணர்ச்சியூட்டி யிருக்கும். அவ்வுணர்ச்சி மக்களைச் சன்மார்க்கத்தில் வேட்கை கொள்ளவே உந்தும். அவர்தம் மனம் தியானத்தை நாடாது வேறென் செய்யும்? இயற்கை தன்னை விடுத்துச் சென்று உழல்வோர்க்கு எவ்வழியிலாவது நல்லறிவுச் சுடர் கொளுத்தித் திருப்புவது இயல்பு. உணர்ச்சி எழப் பெறுவோர் ஒருவராயினுமாக; இருவராயினுமாக; சிலராயினுமாக. அவ்வொருசிலர் உலக நலங்கருதித் தியானத்துக்கென்றே தமது வாழ்வை அர்ப்பணஞ் செய்ய உறுதி கொள்ளல்வேண்டும். அவ்வுறுதி தவமாகும். தவத்தால் ஆகாததொன்றில்லை. இரண்டொருவர் ஆழ்ந்த சிந்தனை - தியானம் - தவம் - உலகையே சீர்செய்யும் ஆற்றல் உடையதாகும். ஆயிரக்கணக்கானவரின் தேகசக்தி, ஒரு தியான யோகியின் ஆன்ம சக்திக்கு ஈடாகாது. ஆதலின், துன்மார்க்கம் நிறைந்த பரபரப்புக் காலத்திலும், அதை வீழ்த்திச் சன்மார்க்க அமைதியை நிலைபெறுத்தும் ஆற்றல் ஒருசிலர் தியானத்தில் அமையும் என்க. இதற்குச் சான்றுகள் பழைய சரித்திரங்களில் பல உண்டு. தவம் உலகில் கொடுமைகளே மலிந்த காலங்கள் நூல்களில் பேசப்படுகின்றன. அக்காலங்களில் மன்பதைக்குற்ற துன்பங்கள் அளவில்லாதன. கொடுமைகளைத் தவிர்க்கும் வழிகாணாது மக்கள் ஏக்குறுவார்கள். ஒருவர் இருவர் அமைதியாகத் தியானத்தில் அமர்ந்து தவங்கிடப்பர். அத்தவம் அவ்வக் காலநிலைக்கேற்றவண்ணம் தொண்டு செய்யத்தக்க ஒவ்வொரு பெரியவரைத் தோன்றச் செய்யும். அவரால் கொடுமைகள் களையப்படும். தவமுயற்சி அந்தரங்கத்தில் செய்யப்படுவது. அதனால் விளையும் பயனோ மிகப் பெரிது. கொடுமைகளை நீக்க வல்லது தியானம் - அமைதித் தவம். கலைகளின் தோற்றம் தியானம், கொடுமைகளை மட்டும் களைவதன்று; போராட்டத்தை மட்டும் போக்குவதன்று; அமைதிக்குரிய சன்மார்க்கக் கலைகளையும் நல்கும். சன்மார்க்கக் கலைகள் தியானத்தில் மூழ்கிய முனிவரரிடத்திருந்து பிறந்தனவேயாம். தியானத்தில் ஆழாத மனிதரிடத்திருந்து களிக்கதைகளும் பிற சிறுமைகளும் பிறக்கும். அவைகள் உலகைச் சன்மார்க்கத்தில் நடத்துவனவாகா. களிக்கதைகளும் பிற சிறுமைகளும் மக்கள் வாழ்வைக் கெடுக்கும். அவைகள் உலகைப் பல வழியிலும் அல்லற்படுத்தும். சன்மார்க்கக் கலைகள் பிறப்பதற்கும் தியானந் தேவை. தியானத் தொண்டு சன்மார்க்க வாழ்வு, தன்னலத்தைச் சிதைத்து, ஒப்புர வுடையதாகும். ஒப்புரவு அறத்தொண்டு நாட்டத்தை உண் டாக்கும். 1அறத்தொண்டாவது, உயிர்கட்கு எவ்வெவ் வழியில் நலஞ் செய்யலாம் என்று முன்னி முன்னிப் பணி செய்வது. இதனைத் தியானத் தொண்டு என்றுஞ் சொல்லலாம். இத் தொண்டு சிறந்த இறைவழிபாடாகும். தியானத் தொண்டு உள்ளொளியை விளங்கச் செய்யும். ஐயம் உள்ளொளி உண்டா இல்லையா என்னும் ஐயம் பிறத்தலுண்டு. ஐயத்துக்கு இடந்தரலாகாது. ஐயம் கல்லா ரிடத்தும் நிகழ்கிறது; கற்றவரிடத்தும் நிகழ்கிறது; பெரிதுங் கற்றவரிடத்தில் நிகழ்கிறது. காரணம் கற்றவர் நெஞ்சில் ஆராய்ச்சி நுழைந்து குடைவதாகும். ஆராய்ச்சி ஓரளவில் வேண்டற் பாலதே. கால முழுவதும் ஆராய்ச்சியில் வீழ்ந்து நெளிவது தவறு. அவர் எக்காலத்தவர்? ït® v¡fhy¤jt®? அவர் போக் கென்ன? ït® ngh¡bf‹d? என்று வாணாளைக் கழிப்பவர் உள்ளொளிப் பேற்றைப் பெறுதல் அரிது. உள்ளொளி ஆராய்ச்சியைக் கடந்தது. அதை ஆராயப்புகுவது அறியாமை. உள்ளொளி விளக்கத்துக்குச் சிந்தனை - ஆழ்ந்த சிந்தனை - தேவை. சிந்தனையில் ஆழ ஆழ உள்ளொளி விளங்கிக் கொண்டே போகும். உள்ளொளிக்கு அரணாக உலகு, உடல், உள்ளம், உயிர் முதலியன இருக்கின்றன. இவைகளை முறை முறையே சிந்திக்கச் சிந்திக்க உள்ளொளி நாட்டமுண்டாகும். உள்ளொளியர் நிலை உள்ளொளி விளங்கப்பெற்றவர் பிறப்பிறப்பு எய்தார். பிறப்பிறப்பாவது, சித்த விகாரம்; மயக்கம். உள்ளொளியர் சித்தங் கடந்தவர்; விகாரங் கடந்தவர்; மயக்கங் கடந்தவர். அவர் பிறப்பிறப்பில்லாப் பரவெளியில் ஒன்றியவர். அவரைச் சித்த விகார மயக்கங்கள் என் செய்யும்? அவர் முன்னே அவை நில்லா; சூந்யமாய் ஒழியும். சூந்யத்துக்குத் தாக்குதல் ஏது? உள்ளொளியரை ஆணவம் கர்மம் மாயை ஒன்றுஞ் செய்யா. அவரைப் பசி பிணி அணையா; நரை திரை மூப்பு அணுகா; அவர் அழியா அழகு வண்ணர்; அவர்தம் மாண்பு அளப்பரிது. உள்ளொளியர் நிலையை என்னென்று கூறுவது? அது கூற்றுக்கு அடங்குவதோ? உள்ளொளியர் பரத்திற் கலந்தவர்; பரமாயவர். அவர் பருமையில் வருவர்; நுண்மையில் போவர்; அவை கடந்தும் நிற்பர்; அவர் காட்சிக்கு உரியர்; அரியர்; எளியர். அவர் நிலை, வாத தர்க்கங்கட்கு எட்டாதது. அதைக் கட்டுப்பட்ட குறுகிய மனத்தால் பரவெளியிற் கலந்தவர் எப்படி வருவர்; போவர் என்று ஆராய்தல் கூடாது. பரவெளி எல்லை யற்றது. அதை எல்லையுடைய மனத்தால் எப்படி நினைந்து ஆராய்தல் கூடும்? உள்ளொளியர் எல்லாஞ் செய்ய வல்லவர். அவர் எப்படியும் இருப்பர். அவர் நிலையை ஆராயப் புகுவது அறியாமை. ஆராய்ச்சியை விடுத்து அவர் துணைபெற முயல்வது அறிவுடைமை. உள்ளொளியைப் பற்றி யானும் பேசி வருகிறேன். நீங்களுங் கேட்டு வருகிறீர்கள். அவ்வொளி பேச்சுக்கு அடங்காதது; பேச்சைக் கடந்தது; பேச்சற்ற அநுபூதி உள்ளொளி பெற முயலல்வேண்டும். அதற்கு வழிபாடு தேவை. வழிபாட்டைக் குறித்து இரண்டாம் நாள் நீண்ட நேரம் பேசினேனன்றோ? அவ்வழிபாட்டை ஈண்டு மீண்டும் நினை வூட்டி, இறுவாய் கூறி, என் பேச்சை நிறுத்திக்கொள்கிறேன். பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. - திருவாசகம் இறுவாய் தோழர்களே! நாம் எத்தனையோ பிறவிகள் எடுத்தோம்; இப்பொழுது இப்பிறவி எடுத்துள்ளோம். இது பெறுதற்கரியது. இப் பிறவியின் பெருமையைப் பேசாத சான்றோரில்லை. எல்லாச் சமயத்தவரும் மனிதப் பிறவி சிறந்ததென்று ஒரு முகமாகப் பேசியுள்ளனர். இத்தகைய அரிய பிறவி நமக்கு வாய்த்துள்ளது. இதை நல்வழியில் பயன்படுத்தல் வேண்டும். இதைப் பாழுக்குப் பயன்படுத்தலாகாது. பிறவி நோக்கம் மனிதப் பிறவியின் நோக்கமென்னை? உள்ளொளியை அடைதல் வேண்டுமென்பது அப்பிறவியின் நோக்கம். அந்நோக்கத்தை நிறைவேற்றுதற்கென்று தனு கரண புவன போகங்களை உரிய கருவிகளாக இயற்கை இறை உதவியுள்ளது. அவைகளைக் கொண்டு உள்ளொளியை அடைய முயல வேண்டுவது நமது கடமை. பிறவி நோக்கை மறந்து - உள்ளொளியை மறந்து - போகங்களில் மட்டும் வீழ்ந்து நெளிவது மனித இயல்பாகாது. அது விலங்கியல்பாகும். உலக வாழ்வு கூடாதென்று யான் கூறுகின்றேனில்லை. உலக வாழ்வு கடவுள் கொடை என்பதும், அதைத் துறத்தல் கூடாது என்பதும் எனது கொள்கை. இதைப் பல்லாண்டுகளாக யான் பேசியும் எழுதியும் வருகிறேன். என்னுடைய நூல் களெல்லாம் இயற்கையோடியைந்த வாழ்வை அறிவுறுத்தல் உங்கட்குத் தெரியும். இம் மணிவிழாப் பேச்சுக்களிலும் என் கருத்தை ஆங்காங்கே வெளியிட்டே வந்துள்ளேன். பிறவி நோக்கத்தை உளங்கொள்ளாது, வெறும் உண்ணல் உறங்கலில் மட்டும் உளங்கொண்டு வாழ்வது கூடாதென்பது எனது கருத்து. உள்ளொளி விளக்கத்துக்கென்று நன்கு உண்ணலாம்; உறங்கலாம்; வாழலாம். தொகுப்பு உள்ளொளி விளக்கத்துக்கு முதற் கருவியாயிருப்பது உள்ளம். உள்ளம் என் செய்வது? உள்ளுவது - நினைப்பது. எதை உள்ளுவது? உருவத்தை. எவ்வுருவத்தை? தத்துவ உருவத்தை. தத்துவ உருவத்தை உள்ள உள்ள உள்ளுணர்வு தோன்றும். உள்ளுணர்வை உள்ளொளியாக்க வழிபாடு தேவை. வழிபாடு புறத்திலும் நிகழ்தல் வேண்டும். அகத்திலும் நிகழ்தல் வேண்டும். அகவழிபாடே தியான யோகமென்பது. தியானத்தால் உள்ளொளி விளங்குதல் ஒருதலை. தியான அமைவுக்கு முறை யீடு, அபேத உணர்வு, பொதுமை முதலியன வேண்டும். இவை கட்கெல்லாம் அடிப்படை சமசர சன்மார்க்கம். சன்மார்க்க வாழ்க்கை உள்ளொளிக்கு ஆக்கந்தேடும். உள்ளொளி விளக்கத் துக்குரிய பிறவி - பெறுதற்கரிய பிறவி - மனிதப் பிறவி - இந் நாளில் என்ன பாடுபடுகிறது; அந்தோ! அந்தோ! உள்ளங் குழை கிறது; ஊன் நெக்குவிடுகிறது; கண்ணீர் பெருகுகிறது. உடல்கள் - மனித உடல்கள் - உள்ளொளியுள்ள உடல்கள் - ஆயிரக் கணக்கில் - இலட்சக்கணக்கில் - நாடோறுங் குண்டு பீரங்கி கட்கு இரையாகின்றன! கொடுமை! கொடுமை! கொடிய நாகரிகம் - அரக்க நாகரிகம் - காளை நாகரிகம் - சாய்தல் வேண்டும். அதைச் சாய்க்கவல்லது சன்மார்க்கமொன்றே. அதுவே உள்ளொளியை விளக்கவல்லது. ஆகவே, சேரவாரும் - சன்மார்க்கத்தில் சேரவாரும் - செகத்தீரே சேரவாரும் - என்று அழைக்கிறேன்; நீங்களும் அழையுங்கள்; சன்மார்க்க சமாஜத் தில் சேர எழுங்கள்! உழைக்க எழுங்கள்; உலகை உள்ளொளி வண்ணமாக்க எழுங்கள்; எழுங்கள். மூன்று நாளும் என் பேச்சுக்களைப் பொறுமையுடனும் அமைதியுடனும் செவிமடுத்த உங்கட்கு எனது நன்றியறிதலான வணக்கஞ் செலுத்துகிறேன். முன்னிரண்டு நாள் காலங்கடந்து நீண்ட நேரம் பேசிப் பேசி உங்கள் அரிய காலத்தைக் கொள்ளை கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். குற்றங் குறை களைப் பொறுத்தருள்க. என் பேச்சுக்கு மூலமாக நின்றது கீழைகிழார் தெய்வ சிகாமணி முதலியாரின் மணிவிழா. அவர் வாழ்க; அவர் குடும்பம் வாழ்க; நாடு வாழ்க; உலகம் வாழ்க; நீடு வாழ்க; * * * பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம் குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. - அப்பர் முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்னொரு கோலூன்றி விதிர்வி திர்த்துக் கண்சு ழன்று மேற்கிளை கொண்டிருமி இதுவென் னப்பர் மூத்த வாறென் றிளையவ ரேசாமுன் மதுவுண் வண்டு பாடுஞ் சோலை வதரிவ ணங்குதுமே. - திருமங்கையாழ்வார் கையார வேற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத் தையா துடுத்துநின் சந்நிதிக் கேவந்து சந்ததமும் மெய்யார நிற்பணிந் துள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப ஐயா வென்றோல மிடுவதென் றோகயி லாயத்தனே. - பட்டினத்தார் தலைபலவாய்ப் பெயர்பலவா நதிக ளெல்லாஞ் சாகரத்தில் ஒருநீராந் தன்மை போலப் பலபலவாய்ச் சொல்லுநெறி யெல்லாஞ் சொல்லப் பட்டதொரு பொருளினையாம் பணிதல் செய்வாம். - அஞ்ஞவதைப்பரணி சுருதிகள் சொல்பல் சமயத் துணிவுமப் பரசீவ பந்தமென் றுந்தீபற பகர்நாமம் வேறுவே றுந்தீபற. - அவிரோதவுந்தியார் உன் சகோதரன் பாவஞ்செய்தால் அவனைக் கண்டித்துப் பேசு. அவன் மனமாறினால் அவனுக்கு மன்னிப்பாயாக. - கிறிது (லூக்கா 17:3) Say : O My Servants! who have acted extravagantly against their own souls, do not despair of the mercy of Allah; surely Allah forgives the faults altogether; surely He is the Forgiving, the Merciful. xxxix : 53 O you who believe! be careful of (your duty to) Allah and believe in His Apostle; He will give you two portions of His mercy, and make for you a light with which you will walk, and forgive you, and Allah is Forgiving, Merciful! LVII : 28. The Holy Quran (Translation Maulvi Muhammad Ali, M.A., LL.B.) வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால் பொறுப்பவனே அராப்பூண் பவனேபொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின்திருவரு ளால்என் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே. - மாணிக்கவாசகர் ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே - நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு. - சிதம்பரசுவாமிகள் எப்பொருள் களுந்தா னாகி இலங்கிடுங் அறிவா மீசன் அப்படி விளங்கு கின்ற தறிதலே அவன்ற னக்கு மெய்ப்படு பூசை வேறோர் செயலினா லன்று மெய்யே இப்படி ஞானந் தன்னால் இறைஞ்சிடப் படுவா னீசன். - பிரமகீதை ஓடாதே தேடாதே உன்னாதே ஓசையெழப் பாடாதே சாத்திரங்கள் பன்னாதே - கேடுபிறர்க் கும்மாலே செய்யாதே ஒன்றாதே ஒன்றுமறச் சும்மா விருக்கை சுகம். - சிவானந்தமாலை எண்ணா யிரத்தாண்டு யோக மிருப்பினும் கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கிடில் கண்ணாடி போலே கலந்திருந் தானே. - திருமந்திரம் கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப் பண்ணொளிக்கும் உள்ளொளியாம் பான்மையினை- நண்ணிடவுன் சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே றித்தனைக்கும் ஆதரவும் இல். - தாயுமானார்  முடியா? காதலா? சீர்திருத்தமா? 1. தோற்றுவாய் ஆண்டவன் ஒருவனே பெரியவன். அவனுக்கே எல்லாந் தெரியும். அணுவுக்கு அணுவாயிருப்பவன் அவன். அண்டத் துக்கு அண்டமாயிருப்பவன் அவன். அவனுக்குத் தெரியாத தொன்றில்லை. அகில கோடிகளை யெல்லாம் ஆட்டுவோன் அவன். அவன் ஆட்ட எல்லாம் ஆடும். அவனன்றி ஓரணுவும் அசையாது. ஒவ்வொரு நொடியும் - ஒவ்வொரு பொழுதும் - எத் துணையோ காரியங்கள் நிகழ்கின்றன! அவைகளையெல்லாம் அளந்து கூறுதல் எவரால் இயலும்! அவைகளிற் பெரியன சில; சிறியன சில; வெளிவருவன சில; வெளி வாராதன சில. 1936-ம் ஆண்டின் இறுதியில் உலகில் ஒரு பெரும் நிகழ்ச்சியுற்றது. அஃதென்னை? ஒரு பெரிய சாம்ராஜ்யத்துக்குத் தலைமை பூண்டிருந்த ஒருவர் அத்தலைமைப் பதவியை நொடிப் பொழுதில் துறந்தமை யாகும். அத்துறவால் ஒருவித வியப்பும் விழிப்பும் உலகில் தோன்றியுள்ளன. அப்பெருந் துறவுக்குரிய காரணமென்னை? புறக்காரணஞ் சில இருக்கலாம்; அகக் காரணஞ் சில இருக்கலாம். ஒரு பெரிய சாம்ராஜ்ய நிகழ்ச்சியைப் புறத்தளவில் ஆராய்ந்து எளிதில் விடுதல் கூடாது. அதன் அகத்தையுந் துருவித் துருவி ஆராய்ந்து நோக்குதல் வேண்டும். அதனால் பலதிற வாழ்வு நுட்பங்கள் தெளிவாகும். அத்தெளிவு வாழ்வுக்குத் துணை புரிவதாகலாம். ஒவ்வொரு நிகழ்ச்சி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வித மாகத் தோன்றும். ஒருவர்க்கு நல்லதாகத் தோன்றுவது மற் றொருவர்க்குத் தீமையாகத் தோன்றும். அவர்க்குத் தீமையாகத் தோன்றுவது இவர்க்கு நல்லதாகவுந் தோன்றும். இஃது உலக இயல்பு. மாறுபட்ட உணர்வுக்கு முடிவு உண்டோ? உண்டு. எப் பொழுது? மெய்யுணர்வு தோன்றும்வரை ஐயந்திரிபு மயக்கத் துக்கு இடம் உண்டு. மெய்யுணர்வு தோன்றியதும் உண்மை விளங்கும். அப்பொழுது மாறுபட்ட உணர்வு மாய்ந்தொழியும். அப்பர் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தைத் துறந்தவர் உலகறிந்தவர். அவர்தம் வரலாற்றை விரித்துக் கூறவேண்டுவதில்லை. வாழ்வின் பண்புக்குரிய முறையில் -அளவில் - அத்துறவைப்பற்றிச் சுருக்க மாகச் சிந்திக்க முயல்கிறேன். அம்முயற்சியில் தலைப்படும் இவ் வேளையில் தமிழ்நாட்டிற் றோன்றிய ஒரு பெரியார் திருவாக் கின் மீது எனது கருத்துச் செல்கிறது. அத் திருவாக்கு வருமாறு :- கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும் தனிமு டிகவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே இஃது அப்பர் திருவாக்கு. பாட்டின் பொருள் வெளிப்படை. கனியைப் பார்க்கிலும், கற்கண்டைப் பார்க்கிலும், பெண்ணைப் பார்க்கிலும், அரசைப் பார்க்கிலும் இனிமை யுடையவன் இறைவன் என்பது திரண்ட கருத்து. பொருண்முறை வைப்பை நோக்குக. இனிமை படிப் படியாக உயர்ந்து செல்வதையும் உன்னுக. குறிப்பிட்ட பொரு ளெல்லாம் இனிமை யுடையன. இனிமையில் படித்தரம் வகுக்கப் பட்டிருக்கிறது. ஈண்டு நமக்கு வேண்டும் இனிமை இரண்டு. ஒன்று பெண்ணினிமை; மற்றொன்று அரசினிமை. இரண் டில் விழுமியது எது? பெண்ணின்பத்துக்கு அடுத்தபடியாகக் கடவுளின்பத்தைச் சொல்வது உலக வழக்கு. கவிவாணர் பலரும் அவ்வாறே பாடிச் சென்றனர். அப்பரம்பெருமான் பெண்ணுக்குங் கடவுளுக்கும் இடையில் தனிமுடி கவித்தாளும் அரசை நுழைத்துள்ளார். அப்பர் உள்ளக்கிடக்கை அப்பருக்கே தெரியும். எக்கருத்துக் கொண்டு அப்பர் அப்பாட்டை யருளினரோ? அதை யாவர் அறிவர்? அவரவரது கல்வி அறிவு ஒழுக்கம் ஆராய்ச்சி அநு பவம் முதலியன ஒன்றி, அவரவர்பால் முகிழ்ப்பித்துள்ள மனங்கொண்டு, அப்பர் திருவாக்கை முன்னிப் பார்க்கவேண்டு வது அவரவர் கடமை. ஒருவன் பெண்ணின்பத்தை விடினும் விடுவான். பதவி இன்பத்தை - அதினும் தனி முடி கவித்தாளும் அரசின்பத்தை - தானே விடான். ஆகவே பெண்ணின்பத்தினும் தனிமுடி கவித் தாளும் அரசின்பமே சிறந்தது என்பது அப்பர் உள்ளக்கிடக்கை என்று கூறுவோருமிருப்பர். குழந்தைக்கு இனிமை கனியிலும் கற்கண்டிலும்; இளங் காளைக்கு இனிமை பெண்ணில்; பதவி வேடர்க்கு இனிமை அரசில். உண்மை இனிமை இவைகளி லில்லை. இனிமைக்கெல்லாந் தாயகம் இறைவனடி. அதைப் பற்றுவதே சிறப்பு. அவ்விடத்துள்ள இனிமையே கனி முதலிய வற்றிலிருப்பது என்று அப்பரைக் காண முயல்வோருமிருப்பர். கனியுங் கற்கண்டும் அவரவர் அளவில் இன்பம் பயப்பன. பெண்ணால் ஈருயிர் இன்பம் நுகர்கின்றன. அரசால் பல்லுயிர் இன்பம் பெறுகின்றன. எங்குமுள்ள இறைவனை அடைந் தோரால் எவ்வுயிர்க்கும் இன்பம் விளையும் என்னுங் கருத்துப் படிப்படியாகப் பொதுளி வருமாறு அப்பர் அருளினர் என்று சொல்வோருமிருப்பர். இன்னும் பலவாறு உரைப்போரு மிருப்பர். அப்பலபட்ட உலகிடை - இப்பொழுது - இங்கே - புக வேண்டுவதில்லை. அணித்தே நேர்ந்த சாம்ராஜ்யத் துறவின் நுட்பமுள்ள இடத்தைத் தெரிந்து கொள்ளுதற்கு அப்பர் திருவாக்கை ஒரு கலங்கரை விளக்கமாகக் கொள்ளலாம். பெண்ணின்பமா? அரசின்பமா? பெண்ணின்பம் பெரிதா? அரசின்பம் பெரிதா? இதற்கென்ன பதிலிறுப்பது? கேள்வி மிகச் சிக்கலானது; ஒவ்வொருவர் ஒவ் வொருவிதப் பதிலிறுக்குந் தன்மை வாய்ந்தது. பதில் அவரவர் மனோ நிலையைப் பொறுத்தது. பெண்ணின் சார்பினருமிருக் கலாம்; அரசின் சார்பினருமிருக்கலாம். எனது கருத்து என்னை என்று நேயர்கள் வினவலாம். எனது விடை சிந்தனைக்குரியதாயிருக்கும். இன்பத்தில் பெருமையுமில்லை; சிறுமையுமில்லை. இன்பம், அதனை நுகர்வோன் மனோ நிலையைப் பொறுத்து நிற்பது என்பது எனது முதல் விடை; இரண்டாவது, பெண்ணின்பம் இல்லை யேல் அரசின்பம் இல்லை என்பது. அரசின்பம் மட்டுமா - இறை யின்பமுமில்லை என்றுங் கூறுவேன். பெண்ணினிமையைப் புலன்களால் பருகாத ஒருவன் அரசனாயிருப்பதற்கோ, இறைவன் அடியவனாயிருப்பதற்கோ அருகனல்லன். அவன், அன்பின் தன்மை இன்னதென்றறியாத கொடியனாய் அரக்கனா யிருப்பன். பெண்ணினிமையை நுகராத ஒருவன், அரச இனிமை யையோ இறை இனிமையையோ எங்ஙனம் நுகரவல்லான்? ஒரு பெரும் சாம்ராஜ்யத்தைத் துறந்த ஒருவரைப் பற்றி யது இந்நூல். அவர் எக்காரணம் பற்றித் தனி முடிகவித் தாளும் அரசினைத் துறந்தார்? உன்னுங்கள்; உன்னி உன்னி உண்மையுணர முயலுங்கள். இனிமைப் பெண்ணெனுங் கனி என்னிடமின்றி யான் எங்ஙனம் அரசாள்வேன் என்றன்றோ அவர் அறைந்து அரசைத் துறந்தார்? இஃது அறமொழியா? மற மொழியா? இஃது அறமொழி; ஆண்டவன் மொழி என்றுந் தோன்றுகிறது. இப்பெரு நோக்குடைய மன்னரைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இழந்ததே என்று வருந்துகிறேன். அவர் ஆண்ட வன் ராஜ்யத்தில் வாழ்கிறார். அவர் வாழ்க. அவர்வழி வெல்க. எப்பெண்? பெண்ணெனுங் கனி வாழ்வுக்கு வேண்டற் பாலதே. ஆனால் பெண்ணெனில் எப்பெண்? கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? இருவரை மணந்து விலகிய ஒரு பெண்ணையா ஓர் அரசர் நாடுவது? என்று உலகங் கேட்கும். எவ்வுலகங் கேட்கும்? பால்டுவின் உலகங் கேட்கும்; பாதிரி உலகங் கேட்கும். உலக மென்பது உயர்ந்தோர்மாட்டு என்னும் பொருளுடைய உலகங் கேட்குமோ? காதல் இன்னது என்றுணர்ந்த கடிமண உலகங் கேட்குமோ? காதல் என்பது தெய்வத் தன்மை வாய்ந்தது. அது காமமன்று. காதல் கடலினும் பெரிது; மலையினும் பெரிது; உலகினும் பெரிது; அகிலத்தினும் பெரிது. அதற்கு ஈடு மில்லை; எடுப்புமில்லை. காதல் எல்லையற்றது. அதற்கு அகலமுமில்லை; நீளமுமில்லை. காதலின் மாண்பை அறி வார் யார்? காதலரே காதல் பெற்றியை உணர்வர். காதலுக்கு முன்னே, கல்வி என்ன-செல்வம் என்ன-சீர் என்ன- சிறப் பென்ன-பதவி என்ன-பட்டம் என்ன-அரசு என்ன-சாம்ராஜ் யம் என்ன-எல்லாஞ் சிறுமை! சிறுமை! காதலுக்குக் காதலே ஈடும் எடுப்பும். காதலுக்குக் காதலே பெருமை. காதலரிடம் காதலே வீறுகொண்டு நிற்கும். ஏனைய இரிந்தோடும். வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவை யல்லால்விய வேனய வேன்றெய்வ மிக்கனவே இத்திருக்கோவைப் பாட்டைப் பார்க்க. இப்பாட்டின் கருத்தாதல் பால்டுவின் உலகினது நெஞ்சில் நின்றிருக்குமா? வறட்டு உலகின் கொடுமை என்னே! என்னே1 ‘ïUtiu kzªJ Éy»a xU¤â fhj‰ fÅah tnsh? என்பதே புல்லிய உலகைக் கலக்கியிருக்கிறது. வின்ஸர் கோமகளார் மேல்நாட்டுப் பெண்மணி. அவ்வம்மையார் செயலை மேல்நாட்டு வழக்க வொழுக்கக் கண்கொண்டே பார்த்தல்வேண்டும். ஒரு நாட்டில் புலாலுண்ணாத மரபில் தோன்றிய ஒருவ னிருந்தான். புலாலுண்ணாமையே கடவுளுக்கு அன்பு செய்தல் என்று அவன் எண்ணி வந்தான். அந்நாட்டில் மற்றோரிடத்தில் இன்னொருவனிருந்தான். அவன் புலாலுண்பவன். புலாலுண் ணாமை அறம் என்பதே அவனுக்குத் தெரியாது. அவனும் ஆண்டவனுக்கு அன்பன். அவன் அன்பை ஆண்டவன் ஏற்று அவனுக்குப் பல வழியிலும் அருள் புரிந்தான். ஆண்டவ னருளால் அப்புலையன் செயற்கருஞ் செயல்களெல்லாஞ் செய்யலானான். அதைக் கேள்வியுற்ற புலாலுண்ணாத அன்பன், இஃதென்ன! புலாலுண்போனுக்கு ஆண்டவன் அருள்செய் வது. அவ்வாண்டவன் நல்லவனல்லன் என்று ஆண்டவனையே கடியத் தொடங்கினான். புலாலுண்ணாமை அறம் என்பதையுணர்ந்த மரபில் தோன்றி அவ்வழி நடப்போன் ஒருவன். அதை முற்றும் உணராத மரபில் தோன்றியவன் இன்னொருவன். அவன் இவன் செயலை வெறுக்கிறான். இஃது உலக இயல்பு போலும்! ஒருவர் நிலையை மற்றொருவர் உணராமலும், ஒரு சமூகப் போக்கை வேறொரு சமூகம் உணராமலும், ஒரு நாட்டார் வழக்க வொழுக்கங்களை இன்னொரு நாட்டார் உணராமலும் - ஒருவரை மற்றொருவரும், ஒரு சமூகத்தை வேறொரு சமூகமும், ஒரு நாட்டாரை இன்னொரு நாட்டாரும் நிந்தித்துக் கூறுவது தவறு. அவரவர் நிலையை - அவ்வச் சமூகப் போக்கை அவ்வந் நாட்டார் வழக்க வொழுக்கங்களை - நேரிலுணர்ந்தோ, நூல்கள் வாயிலாகத் தெரிந்தோ, மற்றவர்பால் கேட்டோ - தெளிவடைந்த பின்னரே மக்கள் செயல்களைப் பற்றி முடிவு கூறுதல் அறம். ஒன்றையும் உணராது வாயில் வந்தவாறு உளறுவது அற மாகாது. ஆகவே மேல்நாட்டுச் சமூகவழக்கம், ஒழுக்கம், சட்டம் முதலியவற்றைக் கொண்டே வின்ஸர் கோமகளாரது நிலையை அளந்து கூறுவது நியாயம். அவ்வழி விடுத்து ஒரு பெண்மணி மீது பழி பாவங்களைச் சுமத்துவது நியாயமாகாது. 2. நாகரிகமும் உரிமையும் உலக நாகரிகம் பலபட்டது. நாகரிகம் என்பது அவ்வந் நாட்டு இயற்கைக்கேற்றபடி அமைவது. அஃது எங்கும் - என்றும் ஒரு பெற்றியாயிராது. ஓரிடத்தில் ஒருபோது அமைந்த நாகரிகம் மற்றொருபோது அவ்விடத்திலேயே மாறுதல் அடையினும் அடையும். காலதேச வர்த்தமானச் சுழற்சியால் மாறுதல் நேர் வது இயல்பு. மாறுதல்மட்டும் இயற்கைக்கு அரண்செய்வதா யிருத்தல் வேண்டும்; இல்லையேல் மாறுதல், தீமை - கலாம் முதலியவற்றை விளைத்து வீழ்ந்துபடும். நாகரிகம் எத்துறையில் அமையினும் அமைக. அதன் கண் இடையிடை எத்தகை மாறுதல் நேரினும் நேர்க. நாகரிக மென்று சொல்லப்படுவதில் மட்டும் இரண்டு உயிர்நாடிகள் ஓடிக்கொண்டிருத்தல் வேண்டும். அவை கண்ணோட்டம், உரிமை என்பன. அவ்விரண்டும் அற்ற ஒன்று எத்தகைய தாயினும் அது நாகரிகமாகாது. நாகரிகக் கூறுகள் பல. அவைகளில் ஒன்று - சிறந்த ஒன்று பெண்ணுரிமை. பெண்ணுரிமையினின்றும் அரும்பி மலர் வது நாகரிகம். ஒரு நாடு நாகரிகம் உடையதா அன்றா என்பதை அந்நாட்டின் பெண் மக்கள் நிலைகொண்டு அளந்து கூறுதல் கூடும். பெண்ணுரிமையுள்ள நாடே நாகரிகம் வாய்ந்தது. பண்டைநாளில் உலகம் முழுவதும் பெண்ணுரிமை பெற்றிருந்தது. பின்னே நாளடைவில் சிற்சில இடங்களில் பெண் ணுரிமைக்குக் கேடு சூழப்பெற்றது. மேல்நாட்டு நாகரிகத்தில் பெண்ணுரிமை பொலிவது கண்கூடு. அவ்வுரிமை அந்நாக ரிகத்திலுள்ள சில சிறுமைகளையும் மறைத்து நிற்கிறது. பெண் ணுரிமை மேல்நாட்டு நாகரிகத்தைப் பல வழியிலும் அணிசெய் கிறது. நாகரிக வாழ்வுக்கு உயிர்போன்றது திருமணம். அத்தகைத் திருமணத்தில் ஈடுபடுவோர்க்கு உரிமை இருத்தல் வேண்டுமா? வேண்டாமா? அத்துறையில் உரிமை இல்லையேல் வாழ்வு பாழாகும். திருமணத்தில் உரிமை பெறாத சமூகமோ நாடோ எதுவோ ஆக்கம் பெறாது சாம்பி நைந்து ஒழிந்து போகும். திருமணத்தின் அடிப்படை காதல். காதலற்ற சேர்க்கை மணமாகாது. அது சொன்மணம் - வெறுமணமாகும். காதல் உரிமையில் எழுவதா? அடிமையில் எழுவதா? கட்டற்ற உரிமை யுணர்வினின்றும் எழுவதே காதல். அக்காதலால் பிணைபடும் ஈருயிர்களிடைப் பிரிவு நேர்தல் அரிது. அப்பிணை எழுமை யிலுந் தொடர்ந்து வரும் ஆற்றல் வாய்ந்தது. சட்ட திட்டம் முன்னை நாளில் மன்பதையில் காதல் மணமே பெரிதும் நடைபெற்று வந்தது. பின்னே அம்மணத்துக்குப் பலதிற இடர்கள் நேர்ந்தன. இடர் விளைத்தது ஆணுலகமேயாகும். பொய்யும், வழுவும் ஆணுலகிற் புகுந்தன. அதனால் திருமணத் தில் சட்டதிட்டங்கள் நுழைந்தன. சட்டதிட்டங்கள் ஒவ் வோரிடத்தில் ஒவ்வொரு விதமாக வகுக்கப்பட்டன. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருள் மேல்நாட்டைப் பற்றி யது. அந்நாட்டுச் சட்டதிட்ட வழக்கவொழுக்கங்களை ஒட்டியே அந்நாட்டு நிகழ்ச்சியை ஆராய்வது நியாயம். அங்கே, இவள் இவனை - இவன் இவளை - மணஞ் செய்து கொள்ளல் வேண் டும் என்னும் நியதி இல்லை. ஒருத்தி தான் விரும்பும் ஒருவனை ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியை - மணஞ்செய்து கொள்ள லாம். மணஞ்செய்யும் முறைக்கு மட்டுஞ் சட்ட திட்டங்கள் கோலப்பட்டிருக்கின்றன. காதல்வழி மணஞ்செய்து கொள்ளும் உரிமையே போற்றற்குரியது. உரிமைகளுள் உயிர் போன்றது அதுவே. அவ்வுரிமை சில இடங்களில் பாழ்பட்டுக் கிடக்கிறது. அவ் விடங்களும் பாழ்பட்டு நாறுகின்றன. ஒருத்தியும் ஒருவனும் தாம் விரும்பியவாறே மணஞ் செய்து கொள்வதற்கு மேல்நாடு உரிமை வழங்கியுள்ளது. இருவரும் விரும்பினால் பிரிதற்கும் அந்நாடு உரிமை வழங்கி யிருக்கிறது. பிரிவுக்கென்று சட்டதிட்டங்களுஞ் செய்யப் பட்டிருக்கின்றன. சட்டதிட்டங்களின்படி வாழ்வு நடாத்த மக்கள் கடமைப்பட் டிருக்கிறார்கள். குறைபாடுகளிருப்பின், அவை சட்ட திட்டங்களைப் பொறுத்தனவேயன்றி, மக்களைப் பொறுத்தனவாகா. மணக்கூட்டை இடையில் உடைத்துக் கொள்வது அறமா மறமா என்னும் ஆராய்ச்சி ஈண்டைக்கு வேண்டுவதில்லை. இது பற்றிப் பெண்ணின் பெருமை என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. ஒரு நாட்டில் வாழ்வுக் கென்று நிறுவப் பெற்ற சட்டதிட்டங்கள் நேரிய முறையில் ஆளப்படுகின்றனவா இல்லையா என்னும் ஆராய்ச்சியே ஈண்டைக்கு வேண்டுவது. தனது வழக்க வொழுக்கங்கட் கேற்பச் சட்ட திட்டங்கள் கோலிக்கொள்ளும் ஒரு நாடு, அச்சட்டதிட்டங்களின்படி நடந்தே தீர்தல்வேண்டும். சட்டதிட்டங்கட்கு மதிப்புக் கொடுப்பதில் கீழ்நாட்டைப் பார்க்கிலும் மேல் நாடு பேர் பெற்று விளங்குவது. சட்டதிட்டமே மேல் நாட்டவர்க்குத் தெய்வம் என்றுஞ் சொல்லலாம். மண விலக்கையும் மறுமணத்தையும் மேல் நாடு பழிப்ப தில்லை; அவைகளை இழிவாகவுங் கருதுவதில்லை; பெண்ணுரி மைக்கு நிலைக்களனாயிருப்பது தற்போதைய மேல்நாடு. அங்கே மணவிலக்கு உரிமையும் உண்டு; மறுமண உரிமையும் உண்டு. அவ்வுரிமை அங்கே எல்லார்க்கும் பொதுவாயிருப்பது. பொது வாய் உரிமை யின்பத்தைக் குறிப்பிட்ட சிலர் மட்டும் நுகராத முறையில் கேடுசூழ்வது நியாயமாகுங்கொல்! ஒருபோதும் நியாயமாகாது. நாகரிக உலகம் அதை அநியாயம்! அநியாயம்! என்றே எள்ளும். திரு. பால்டுவின் செய்த தவறு - அவர் தம் அரசாங்கஞ் செய்த தவறு - இங்கிலாந்தையே பாதிக்கிறது; மேல்நாட்டையே பாதிக்கிறது; நீதியுலகத்தையே பாதிக்கிறது. ஆணவம் பின்னே நோய் செய்யாமற் போகாது. சட்டமும் அரசினரும் சட்டம் நாட்டுக்கென்றே செய்யப்படுகிறது. தோட்டி முதல் தொண்டைமான் வரையுள்ள எல்லாருஞ் சேர்ந்த ஒன்றே நாடு என்பது. தோட்டியும் ஒரு விதக் கடமையைச் செய்கிறான்; தொண்டைமானும் ஒருவிதக் கடமையைச் செய்கிறான். சட்டம் எல்லார்க்கும் பொதுவாகவே செய்யப் படுகிறது. அதை ஒருவர்க்கு ஒருவிதமாகவும் மற்றொருவர்க்கு இன்னொரு விதமாகவும் பயன்படுத்தலாகாது. சட்டத்தை நேரிய நீதி வழியில் பயன்படுத்தும் நாட்டில் நாகரிகத் தெய்வம் தாண்டவம் புரியும். மற்ற நாட்டில் அத்தெய்வம் தாண்டவம் புரிதல் அரிது. சட்டஞ் செய்வோர் அரசினர். அரசினரே சட்டத்தின் வழிநின்று ஒழுகிக் காட்டுவது சிறப்பு. அவரே சட்டத்தைப் புறக் கணித்தால் நாடு என்னாகும்? வேலியே பயிரை மேய்ந்த கதையாகும். இங்கிலாந்தில் மண விலக்குக்கும் மறு மணத்துக்குஞ் சட்டதிட்டங்க ளிருக்கின்றன. அவைகள் ஆட்சியிலும் இருந்து வருகின்றன. மன்னராவார், இருவரை மணந்து விலகிய ஒருவரை மணத்தலாகாது என்று ஏதேனும் விதியுண்டா? மணம் என்பது அவரவர் விருப்பத்தினின்றும் எழுவதன்றோ? அதில் பிறர் தலையிடுதற்கு உரிமையுண்டா? மன்னரோ மற்றவரோ தாம் தாம் விரும்புமாறு மணஞ் செய்துகொள்ளலாம். தேசச் சட்டத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பொறுப்பு, மற்றவரைவிட மன்னருக்கு அதிகம் என்று சொல்லவும் வேண்டுமா? எட்வர்ட் மன்னர் தம் மனம் பற்றிய ஒரு மங்கையை மணம்புரிய விரும்பினர். அதைத் தடுக்கும் உரிமை எவர்க்கு உண்டு? இறைவனுக்கும் அவ்வுரிமையில்லை. இறைவன் இயற்கைவழி கடனாற்றுவோன். இயற்கைக்கு மாறுபட்டு இறைவனும் நடப்பதில்லை. ஆகவே இயற்கைக் காதலைத் தடுக்கும் உரிமை எவர்க்குமில்லை என்க. அதிகாரத்தாலோ, செல்வாக்காலோ, இன்ன பிறவற்றாலோ காதல் மணத்தைத் தடுப்பது அநாகரிகம். அதிகாரத்தையோ ,செல்வாக்கையோ துர்விநியோகப்படுத்தினால் அவ்வதிகாரமோ, செல்வாக்கோ விரைவில் வீழ்ந்துபடும். வின்ஸர் கோமகளார் மேல்நாட்டில் (அமெரிக்காவில்) பிறந்தவர்; அங்கே வளர்ந்தவர்; இருவரை மணம் புரிந்து விலகி யவர்; முடி துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னர் தங் காதலுக்கு உரியவரானவர். இவரை எட்வர்ட் மன்னர் மணத்தலாகாது என்றொரு கட்சி இங்கிலாந்தில் எழுந்தது. இது நாகரிகமாகுமா? உரிமை யுணர்வாகுமா? எட்வர்ட் ஓர் அரசர். அவர் இருவரை மணந்து விலகிய ஓரு பெண்ணையா மணப்பது? அப்பெண், அரசியாதல் எங் ஙனம்? mtŸtʤ njh‹W« ãŸis ïs§nfhthjš v§ ‡d«? என்று சிலர் எண்ணிய சிறுமை எண்ணமே, எட்வர்ட் முடிதுறப்பதற்கு ஒரு காரணமாகவும் நின்றது. இப்பாழ் எண் ணம் எங்கே பிறந்தது? எவரிடத்தில் பிறந்தது? ஏழை மக்க ளிடத்திலா பிறந்தது? கல்வியறிவில்லாத மக்களிடத்திலா பிறந் தது? அந்தோ! அப்பாழ் எண்ணம் பெரிய இடங்களினின்றும் பிறந்தது. அவ்வெண்ணம், பிரபுக்களிடத்தினின்றும் - பிஷப்புக் களிடத்தினின்றும் - அரசை நடாத்தும் அறிஞர்களிடத்தினின் றும் பிறந்தது. அப்பாழ் எண்ணம் நாகரிகத்துக்கும் உரிமைக்கும் தளையிடுவதாகும். நாகரிகத்துக்கு அறிகுறி உரிமை; அதினும் பெண்ணுரிமை. பெண்ணுரிமை காவாத நாடு, எத்தகைய தாயினும், அது நாகரிக முடையதாகாது. ஒரு மன்னர் தாம் விரும்பிய பெண்மணியை மணந்து கொள்ளும் உரிமை பெறாதவாறு கேடு சூழ்வது நாகரிகமாகுமா என்பது உன்னற்பாலது. எட்வர்ட் மன்னரது வாழ்வு நாகரிகத்துக்கும், அதன் பயனாய உரிமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக நிற்கிறது. 3. வின்ஸர் கோமகளார் வின்ஸர் கோமகளாரது வரலாற்றுக் குறிப்புகள் பல பத்திரிகைகளிலும் நூல்களிலும் வந்துள்ளன. அவைகளிற் சிலவே இந்நூலுக்கு வேண்டுவன. வின்ஸர் கோமகளார் அமெரிக்காவில் மேரிலாண்டி லுள்ள பால்டிமூர் என்னும் பதியில் 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் பிறந்தவர். அவர் தம் தந்தையார் திரு. வாலி வார்பீல்ட் என்பவர். அவருடைய பெயரை யொட்டியே வின்ஸர் கோமகளார் இளமையில் திருமதி வாலி என்று அழைக்கப் பட்டார். திருமதி வாலிஸின் கிறிதுவப் பெயர் பெஸி என் பது. பெஸிவாலி வார்பீல்ட் என்பது அவரது முழுப் பெயர். குடிப் பிறப்பு திருமதி வாலி வார்பீல்ட் பிறந்தகுடி பழமை வாய்ந்தது; பேர் பெற்றது. அக்குடிப்பிறப்பை ஆராய்ந்துழி அஃது ஆங்கில - அமெரிக்கச் சார்பினது என்பது நன்கு விளங்கும். வார்பீல்ட் பெருங்குடி, உரிமை, தியாகம், வீரம், கலை, அரசியல், வாணிபம், ஒப்புரவு, அழகு, பெருந்தகைமை முதலியவற்றால் ஆக்கப்பெற்று வளர்ந்த ஒன்று. அப்பெருங் குடியின் புகழ்மணம் இன்னுங் கமழ்ந்துகொண்டே யிருக்கிறது. அது, திருமதி வாலி வார்பீல் டால் இப்பொழுது உலகெங்கும் மண்டி நிற்கிறது. திருமதி வாலி வார்பீல்டின் முன்னோரது தாய் நாடு இங்கிலாந்து. திரு. பெகன் டி வார்பீல்ட் என்பவர் வில்லியம் மன்னர் (William the Conqurer) காலத்தில் வாழ்ந்தவர். அவர் ஹேடிங் போரில் ஈடுபட்டவர். அவரால் வார்பீல்ட் குடும்பம் பெருமை பெறலாயிற்று. திரு. பெகன் டி வார்பீல்ட் குணத்திற் சிறந்தவர்; இராஜ பக்தர்; தேசத் தொண்டர். அவர்தம் நற்குணமும், மாசற்ற இராஜ பக்தியும், உண்மைத் தேசத் தொண்டும் மன்னரது உள்ளத்தைக் கவர்ந்தன. மன்னரால் திரு. வார்பீல்டுக்குப் பெருநிலம் வழங்கப்பட்டது. திரு. பெகன் டி வார்பீல்டின் வழித்தோன்றல்களில் பலர் ஆங்கிலப் பரம்பரையைச் சிறப்பித்தவராவர். அவருள் குறிக்கத் தக்க அறிஞர் ராபர்ட் டி வார்பீல்ட், ஜான் டி வார்பீல்ட், எலய டி வார்பீல்ட் முதலியோர். வார்பீல்ட் வழிவழி வந்தவருள் ஒருவர் திரு. ரிச்சர்ட் வார்பீல்ட் என்பவர். அவரே அமெரிக்காவில் முதல் முதல் 1662ஆம் ஆண்டில் குடிபுகுந்தவர். அவருக்கு இரண்டாம் சார்ல மன்னரால் மேரிலாண்டில் பால்டிமூரில் வளப்பமுள்ள ஒரு நிலப்பகுதி கொடுக்கப்பட்டது. அந்த ரிச்சர்ட் வார்பீல்டின் நேரிய வழியில் வந்தவர் திருமதி வாலிஸின் பாட்டனாராகிய திரு. ஹென்றி மாக்டியர் வார்பீல்ட் என்பவர். அவர் அமெரிக்க உரிமைப் போராட்டத்தில் கலந்தவருள் ஒருவர். அவரால் பால்டிமூர் ஒளிபெற்றது என்றுங் கூறலாம். திரு. ஹென்றி வார்பீல்டின் புதல்வர் திரு. டிக்கல் வாலி வார்பீல்ட். திரு. வாலி வார்பீல்ட் தந்தையாரைப் போலவே உரிமைவேட்கை யுடையவர்; கல்வியில் தந்தையினுஞ் சிறந்து விளங்கியவர். அவர் சட்ட நிபுணர்; நூலாசிரியர். பெயினைப் பற்றிப் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டன. திரு. வாலி வார்பீல்ட், திருமதி அலிஸிமாண்டேகு என் பவரை மணந்தனர். இருவருக்கும் பிறந்தவர் திருமதி வாலி. திருமதி வாலி தமது மூன்றாம் வயதில் அன்பிற்சிறந்த தந்தை யாரை இழத்தல் நேர்ந்தது. அவருடைய அன்னையார் சில ஆண்டு கடந்து வேறு ஒருவரை மணந்து கொண்டார். அக்கண வர் ஈராண்டில் விண்ணுல கெய்தினர். திருமதி வாலிஸின் தாயார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர் சிந்தை மீண்டும் மற்றும் ஒரு வரிடம் நடந்தது. முறைப்படி மணவினை முடிந்தது. மூன்றாங் கணவருடன் அம்மையார் நீண்டகாலம் வாழ்ந்தாரில்லை. அவர் இவ்வுலக வாழ்வை நீத்தனர். அன்னையார் பிரிவு திருமதி வாலிஸுக்குச் சொல்லொணாத்துயரம் விளைத்தது. அருமை அன்னையார் தமது ஆருயிர் மகள் திருமதி வாலிஸின் முதன் மணத்தைக் காணும் பேறு பெற்றார்; இரண்டாம் மணத்தையுங் கண்டு மகிழ்வெய்தினார்; உலகத் தையே கவர்ந்த ஒருபெரும் திருமணத்தைக் கண்டின்புற அவருக்கு ஆண்டவன் அருள் பாலிக்கவில்லை. என் செய்வது! மூன்றாண்டில் தந்தையாரை இழந்த இளங்குழந்தை திருமதி வாலி பெரிதும் அவர்தம் சிறிய தந்தையாராகிய திரு. சாலமன்டேவி வார்பீல்ட் பார்வையிலேயே வளர்ந்து வந்தார்.திரு. டேவி வார்பீல்ட் செல்வர்; ஒப்புரவாளர். அவர் மரணத் தறுவாயில் தமது சொத்துக்கள் அறச்சாலைகட்குப் பயன்படு முறையில் சாசனம் எழுதினர். அவ்வேளையில் அன்பர் டேவி இளைய வாலிஸை மறந்தாரில்லை; திருமதி வாலிஸுக்கும் பதினையாயிரம் டாலர் உதவினர். அப்பொருள் திருமதி வாலிஸின் இளமை வாழ்வுக்கு ஒரோ வழியில் பயன் பட்டது. வார்பீல்ட் குடியில் தோன்றிய பலர் அரசியல், சட்டம், இராணுவம், வாணிபம், மருத்துவம் முதலிய துறைகளில் பேர் பெற்று விளங்கியவர். அவர்தம் பெயர்கள் அமெரிக்கச் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. கவர்னர் எட்வின் வார்பீல்ட் திருமதி வாலிஸின் உறவினர் என்பதும், கவர்னர் ஆண்டுரு ஜாக்ஸன் மாண்டேகு திருமதி வாலிஸின் அன்னையாரது உறவினர் என்பதும் ஈண்டுக் குறிக்கத்தக்கன. பள்ளி வாழ்வு திருமதி வாலி பள்ளிக்கூடத்தில் பயின்று வந்தபோது ஒழுங்கு முறையில் தவறுவதில்லை; வேளை ஜெபத்தில் தவறுவ தில்லை. ஆசிரியர் வழி நிற்பதில் அவர் ஆர்வம் உடையவ ராகவே யிருந்தார். அவருக்கு விளையாட்டில் வேட்கை அதிகம். பள்ளியில் சில நிபந்தனைகள் உண்டு. அவைகளுள் ஒன்று பள்ளிச் சிறுமிகள் பள்ளிச்சிறுவர்கட்குக் கடிதம் எழுதல்கூடா தென்பது. அந்நிபந்தனையை மீறுவோர் மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புமாறு பள்ளித் தலைவியால் வலியுறுத்தப்படுவர். ஒருமுறை திருமதி வாலி மன்னிப்புச் சொல்லுதல் நேர்ந்தது. அதன்கண் நகைச்சுவை பொருந்தியிருந்ததாம். இளமையிலேயே திருமதி வாலி நகைச்சுவைக்கு ஓர் இலக்கியமாக விளங்கினர். பெண் மக்களின் நகைச்சுவையில் ஒருவகைக் காந்தம் உண்டு. பள்ளியில் திருமதி வாலி படித்த கதைகள் பல. அவை களுள் ஒன்று ஈண்டைக்கு ஏற்புடைத்தென்று தோன்றுகிறது. அக்கதையைப் பால்டிமூர் பள்ளிப் பிள்ளைகள் பலரும் படிப்பது வழக்கம். அதன் சுருக்கம் வருமாறு:- அமெரிக்காவுக்கு முதல் முதல் அனுப்பப்பெற்ற பிரஞ்ச் ஒற்றர் காப்டன் ஜிரோம் போனபார்ட்டி என்பவர். அவர் நெப்போலியன் போனபார்ட்டியின் தம்பியார். காப்டன் 1803ஆம் ஆண்டு அமெரிக்கா சேர்ந்து பால்டிமூரில் வதிந்துவந்தார். அவ்வேளையில் காப்டன் போன பார்ட்டிக்கும், அவ்வூரிலிருந்த திருமதி பெட்ஸிபாட்டர்ஸன் என்பவருக்கும் நேசம் உண்டா யிற்று. நேசம் காதலாக முதிர்ந்தது. இருவரும் மணஞ்செய்து கொள்ள முயன்றனர். மணத்தை எவ்வழியிலாதல் தகையத் திருமதி பெட்ஸி பார்ட்டர்ஸனின் தந்தையார் முனைந்து நின்றார். அவர் தம் புதல்வியாரை வெளியூருக்கு அனுப்பிப் பார்த்தார். உடற்பிரிவால் உள்ளப் பிரிவு நேரவில்லை. திருமதி பெட்ஸி தமது உறுதியனின்றுஞ் சிறிதும் பிறழவில்லை. தந்தையார் முயற்சிகளெல்லாம் பாழ்பட்டன. அவர், புதல்வியாரின் உறுதி கண்டு, தடை கிளத்தலை நிறுத்திவிட்டார். திருமதி பெட்ஸி, தந்தையார் அனுமதி பெற்று, காப்டன் போனபார்ட்டியை மணஞ்செய்தனர். அத்திருமணச் செய்தி நெப்போலியன் போனபார்ட்டிக்கு எட்டிற்று. அவர் உள்ளங்கனன்றது; முகஞ்சிவந்தது. தம்பியார் உடனே பிரான்ஸுக்குத் திரும்பி வருதல் வேண்டுமென்று நெப்போலியன் கட்டளை பிறப்பித்தார். நெப்போலியன் கட்டளைப் படி காப்டன் போன பார்ட்டி அமெரிக்காவினின்றும் புறப்பட்டார். அப்பொழுது அவரது அருமை மனைவியார் கருவுற்றிருந்தார். அந்நிலையிலும் அவர் கணவரைத் தொடர்ந்தே போனார். இருவரும் லிபன் அடைந்தனர். அங்கே அம்மையார் தடுக்கப்பட்டார். காப்டன் மட்டும் பாரி சேர்ந்தார். அவர் தமது மனைவியாரைத் தம் முடன் வாழ்தற்கு உளங்கொள்ளுமாறு தமையனாரை வேண்டினார். பயன் விளையவில்லை. காரிழையார் தமது ஆருயிர்க்கணவரை மீண்டுங் கண்டாரில்லை. கணவர் பாரிஸில் அழுந்திவிட்டார். திக்கில்லாப் பெண்மணி இங்கிலாந்து போந்தார்; லண்டனுக் கணித்தாயுள்ள காம்பர்வெல்லில் தங்கினார். அச்சமயத்தில் அவர் கருவுயிர்த்தார். பிறந்த ஆண் குழவிக்கு ஜிரோம் நெப்போலியன் போன பார்ட்டி என்னும் பெயர் சூட்டப்பட்டது. திருமதி பெட்ஸியையும் ஜிரோமியையும் பிணித்துள்ள அன்புக்கயிற்றை அறுக்குமாறு நெப்போலியன், போப்பைக் கேட்டார். அப்பாவச் செயலுக்குப் போப் உடன்படவில்லை. பின்னே நெப்போலியன் நீதிமன்ற வாயிலாக மணக்கட்டை அவிழ்த்து விட்டார். அன்பற்ற ஜிரோமி தமது தமையனார் ஆணைப்படி அவர்தம் மனத்துக்கிசைந்த ஒரு பெண்ணை மணஞ் செய்து கொண்டார். திருமதி பெட்ஸி மனமுடைந்து பால்டிமூருக்குத் திரும்பிச் சின்னாளிருந்து விண்ணடைந்தார். இக்கதையைப் பால்டிமூர் பிள்ளைகள் பலரும் படிப்பதன் நோக்கம் என்ன? வாசகர்கள் சிந்திப்பார்களாக. திருமதி வாலிஸும் இக்கதையைப் படித்தனர். இக்கதை அவர்தம் பிற் கால வாழ்வுக்குத் துணை புரிந்ததா, இல்லையா? சேவை 1914-ம் ஆண்டில் ஐரோப்பாப் போர் வீறிட்டெழுந்தது. அதில் வேல் இளங்கோ தலையிட்டது ஈண்டுப் பொறிக்கத் தக்கது. இளம்பெண்ணா யிருந்த திருமதி வாலிஸும், அப் போரில் ஒப்புரவு முறையில் தலைப்படல் நேர்ந்தது. போரில் படு காயமுண்டு துன்புறுவோர்க்குப் பலதிற உதவிகள் செய்யப்பட வேண்டுமென்று உலகின் நானாபக்கங்களிலும் முயற்சிகள் செய்யப்பட்டன. பால்டிமூர் இளம் பெண்களில் முப்பத்து நான்கு பேர் அம்முயற்சிக்குத் துணை புரிய விரும்பினர். அவருள் திருமதி வாலிஸும் ஒருவர். பால்டிமூரில் இளைஞர் கழகம் என்று ஒன்றுண்டு. அதில் பல இளம் பெண்கள் நடம்புரிவார்கள். திருமதி வாலிஸும் நடம்புரிவர். திருமதி வாலிஸின் நடத்தில் பலர் திளைத்துவிடு வர். இளைஞர் கழகத்தில் நடைபெற்ற நடனங்களால் பெரும் பொருள் கிடைத்தது. அப்பொருள், போரில் காயமுண்டு கிடந்தோர்க்கு அனுப்பப்பட்டது. திருமதி வாலி இளமையிலேயே நடனக்கலையில் வல்லவராயினர். அவரது புகழ் நானாபக்கங்களிலும் பரவலா யிற்று. வாலி நடனம் எனில் பெருங்கூட்டங்கூடுவது வழக் கம். ஒருபோது அவரது அழகுத் திருநடனம் ஒரு குதிரைப் படை வீரரின் மனத்தைக் கவர்ந்தது. அவ்வீரர் திருமதிவாலிஸை மணம் புரிய வேட்கை கொண்டார். அம்மையாரது அக்கால வயது மணவினைக்கு இடந்தாராமற் போயிற்று. குதிரைப் படை வீரரும் வேற்றூருக்கு மாற்றப்பட்டார். (இஃதொரு பத்திரிகை யில் கண்ட குறிப்பு. எனக்குக் கிடைத்த நூல்களில் இக்குறிப்பைக் காணோம்) மணமும் விலக்கும் திருமதி வாலி பத்தொன்பதாம் ஆண்டெய்தினர். பத் தொன்பதாண்டுப் பாவை பாவலர்க்கு இனிமையூட்டுதல் இயல்பே. திருமதி வாலிஸின் இளமை திரண்டெழுந்து ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் காட்சி யளித்தது. அக்காட்சியில் அமிழ்தம் பொழிந்தது; ஆனந்தம் நடம் புரிந்தது. அவ்வமிழ்த முண்டு ஆனந்தத்தில் திளைக்கும்பேறு ஒருவருக்குக் கிடைத்தது. பிளோரிடாவில் பென்ஸகோலா என்றொரு பதியுண்டு. அங்குத் திருமதி வாலிஸுக்கு உறவினர் உளர். அவரைக் காண அம்மையார் பென்ஸகோலா சென்றார். வாலி போகுமிட மெல்லாம் நடனவிழா நடக்குமன்றோ! அங்கும் அவ்விழா நடந்தது. அவ்விழாவில் கலந்து கொண்டவர் பலர். அவருள் லெப்டினன்ட் எரல் வான்பீல்ட் பென்ஸர் என்பவரும் ஒருவர். அவர் விமானப்படை போதகாசிரியர். அவரது நாட்டம், திருமதி வாலி வார்பீல்ட் மீது விழுந்தது; பாய்ந்தது; படிந்தது. இவர் நாட்டமும் அவர் நாட்டத்தில் ஒன்றியது. பின்னர் இருவரும் பன்முறை கண்டு கண்டு பேசிப் பேசிக் காதலராயினர். அக்காதலுடன் திருமதி வாலி பால்டிமூர் திரும்பினர். காதல் வாளா கிடக்குமோ? அது கடிதம் எழுதத் தூண்டிற்று. இருவர்க்கும் கடிதப் போக்கு வரவு நடந்தது. திரு மணம் உறுதி செய்யப்பட்டது. திருமணம் பால்டிமூரில் 1916ஆம் ஆண்டில் சிறப்பாக நடைபெற்றது. திருமதி வாலி வார்பீல்ட் அம்மையார் திருமதி வின்பீல்ட் பென்ஸர் அம்மையாரானார். பென்ஸகோலாவில் இருவரும் இன்பம் நுகர்ந்து வந்தனர். திரு. பென்ஸர் உள்ளத்தில் மட்டும் அமைதி நிலவுவதில்லை. அந்நாளில் ஐரோப்பாவில் பெரும்போர் முழங்கிக் கொண் டிருந்தது. அதில் அமெரிக்காவும் கலந்து கொண்டது. திரு. பென்ஸர் விமானப்படை யொன்றன் தலைவராக்கப் பட்டார். எங்கே மாற்றப்படுவோமோ என்ற எண்ணம் திரு. பென்ஸரைப் பீடித்து அலைத்து வந்தது. லெப்டினன்ட் பென்ஸர் கலிபோர்னியாவுக்கு மாற்றப் பட்டார்; பின்னே வாஷிங்டனுக்கு மாற்றப்பட்டார். வாஷிங்டன், திருமதி வாலி பென்ஸர் அம்மையாருக்குப் பல வழியிலும் மகிழ்ச்சி யூட்டிற்று. அடிக்கடி தேநீர் விருந்தும், நடனக் கூட்ட மும் அங்கே நடைபெறும். தலைவர் அடிக்கடி பலவிடங்களுக்கு விமானத்தில் செல் லல் நேரும். அச்செலவு அம்மையாருக்குப் பிடிப்பதில்லை. இளமை இன்பத்துக் குரியதன்றோ? அது பிரிவை விரும்புமா? அந்நிலையில் திரு. பென்ஸர் திடீரென்று சீனத்திலுள்ள ஷாங்கேய்க்கு மாற்றப்பட்டார். அவர் தமது அருமை மனைவி யாரை உடன் அழைத்துச் சென்றாரில்லை. கணவர் மாற்றம் அம்மையார்க்கு அடக்க ஒண்ணாத் துயர் விளைத்தது. தனிமை அவருக்குப் பெரும் பொறையாயிருந்தது. அம்மையார் ஐரோப்பா சென்று சுற்றியும் வந்தார். சில ஆண்டுகடந்த பின் னர், திருமதி பென்ஸர் அம்மையார் ஷாங்கே சென்றார்; அங்கே சிலநாள் வதிந்து அமெரிக்கா திரும்பினார். தனிமை விரும்பாத அம்மையார் திரு. பென்ஸர் சம்மதம் பெற்றே 1927ஆம் ஆண்டில் மணவிலக்குச் செய்து கொண்டார். பின்னே திருமதி பென்ஸர் அம்மையார், 1928ஆம் ஆண்டில் கானடா வாசியாகிய காப்டன் எர்னட் ஆல்டிரிச் ஸிம்ஸனை மணம்புரிந்து திருமதி ஸிம்ஸன் அம்மையா ரானார். இருவரும் லண்டனில் வாழ்ந்து வந்தனர். இடையில் காப்டன் ஸிம்ஸன் அயலகம் போந்து துயில் நீத்து வருவா ராயினர். அது திருமதி ஸிம்ஸன் மனத்தைப் புண்படுத்திற்று. அது காரணமாக அம்மையார் திரு. ஸிம்ஸன்மீது வழக்குத் தொடுத்தார். அம்மையார் விரும்பியவாறே 1936-அக்டோபர் - 27ம் நாளில் மணவிலக்கு நல்கப்பட்டது. தீர்ப்பு நாள் தொட்டு ஆறு திங்கள்வரை அம்மையார் எவரையும் மணஞ் செய்யா திருத்தல் வேண்டும். அது நாட்டு விதி. அதனால் அவர் அக் கால எல்லைவரை திருமதி ஸிம்ஸன் என்னும் பெயரையே தாங்கியிருந்தார். திருமதி ஸிம்ஸன் இரண்டுமுறை மணவிலக்குச் செய்து கொள்ளும் அவசியம் நேர்ந்தது. முதன்முறைக்குரிய காரணத் தையும் நோக்குங்கள்; இரண்டா முறைக்குரிய காரணத்தை யும் நோக்குங்கள். அம்மையாரிடம் எவ்விதத் தவறுதலும் நிகழ வில்லை என்பதும், அவர் மீது குற்றங்கண்டு நாயகன்மாரே வலிந்து அவரைத் தள்ள முயலவில்லை என்பதும் நன்கு தெரி கின்றன. முதன்முறை மணவிலக்கைப் பற்றிச் சிலர் ஒருவிதக் கருத்துக்கொள்ளலாம். அஃது, அம்மையார் தனிமை வாழ்வை இன்னுஞ் சில ஆண்டு பொறுமையுடன் நடாத்தியிருக்கலாம் என்பது. அஃது அவரவர் மனோநிலையைப் பொறுத்து நிற்பது. திருமதி ஸிம்ஸன் பாரதமாதாவின் வயிற்றிற் பிறக்கும் பேறுபெற்றவரல்லர். அவர் அப்பேறு பெற்றிருந்தால், பொறுமை என்னும் இயற்கைப் பூண் அவருடன் பிறந்திருக்கும். அவர் பிறந்த நாடு, அவரைச் சூழ்ந்துள்ள நாகரிகம், வழக்க வொழுக்கம் முதலியன திருமதி ஸிம்ஸனுக்குப் பொறுமைப் பூணை அணியவில்லை. அவைகளிடை அப்பூண் அமைதலும் அரிது இரண்டாம்முறை விலக்கைப்பற்றி நாயகனைத் திருத்த அம்மையார் ஏன் முயன்றிருத்தல் கூடாது என்னும் கேள்வி எழுதற்கு இடமுண்டு. திருமதி ஸிம்ஸன் திருநீலகண்ட நாய னார் புராணம் படித்தவரல்லர். என் செய்வது? மணவிலக்கு நாவல்களையே அவர் பெரிதும் படித்திருப்பர். மண விலக்குச் சட்டமொன்று எதிரிலே நின்று கொண் டிருக்கிறது. உன்போன்றோர் துயர் போக்கவன்றோ யானிருக் கிறேன்? v‰W¡F¡ ftš»‹wid?என்னை ஆள்வாயாக என்று அச்சட்டம் அம்மையாரைத் தூண்டாதிருக்குமோ? சட்டமுள்ள இடத்தில் சட்டத்துக்கு இரையாதல் மக்களியல் பன்றோ? சட்டமில்லாதிருப்பின் அம்மையார் வாழ்வு எவ் விதம் முடிந்திருக்குமோ? இப்பொழுது அதைப்பற்றி ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. இந்தியாவில் இந்து சமூகத்தில் இப்பொழுது மண விலக்குச் சட்டமில்லை. இந்தியாவில் பண்டை அறம் வீழ்ந்து பட்டுள்ள இந்நாளிலுங் கணவரையே உயிரெனக் கருதி வாழும் பெண்மணிகளிருக்கிறார்கள். அக்கொள்கை அரும்பி நிற்பதற் குரிய வழக்க வொழுக்கங்கள் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. எவரெவர் எவ்வெவ்வழக்க வொழுக்கங்களிற் படி கிறாரோ அவரவர் அவ்வவ் வழக்க வொழுக்கங்களின் வண்ண மாதல் இயல்பு. குணநலன் திருமதி ஸிம்ஸன் நல்லுடையில் விருப்பமுடையவர். நீலத்தில் அவருக்கு விருப்பம் அதிகம். திருமதி ஸிம்ஸன் நகைப் பித்தரல்லர். காதணியை அவர் வெறுத்த நாளுண்டு. பின்னா ளில் அவ்வணியில் அவர்தஞ் சிந்தை நடந்தது. அமைதியும் இரக்கமும் திருமதி ஸிம்ஸனுடன் பிறந்த இயல்புகள். பிறர்நிலையை மிகவிரைவில் உணர்ந்து கொள்ளும் பேராற்றல் அம்மையாரிடம் அமைந்துள்ளது. ஆனால் பிறரைப் பற்றித் தாங்கொள்ளுங் கருத்தை அவர் பெரிதும் வெளியிடுவ தில்லை. தமக்குத் தெரிந்தவருள் எவரேனும் தவறாக நடந்து, அந்நடக்கையால் அவருக்குப் பெருந்தீங்கு விளையுமென்று தமக்கு உறுதியாய்த் தோன்றும்போது, அவர் மனம் புண்படாத முறையில், ஏதோ ஒன்றைப் பேசுவதுபோலவும், யோசனைகள் செய்வது போலவும் புத்திமதி கூறுவது அம்மையார் வழக்கம். இலக்கியம், ஒவியம், நாடகம் முதலிய கலைகளில் திருமதி ஸிம்ஸனது மனம் படிவதுண்டு. நடனம் அவரது உரிமைக் கலை. அம்மையாரின் நெஞ்சம் அச்சம் அறியாது. அஃது அவர்தம் முன்னோர்பால் சிறந்து விளங்கிய இயல். திருமதி ஸிம்ஸனது கட்புலன் ஒருவிதத் தனியமைப்பு வாய்ந்தது. பல வகைப்பொருள்கள் மலியும் ஒரு காட்சியில் அம்மையாரின் கட்புலன் நுழைந்து சுழலுமாயின், ஆண்டுள்ளன வெல்லாம் அவர்தம் அகத்தில் அச்சாகிவிடும். ஈண்டொரு நிகழ்ச்சி வருமாறு: ஒருமுறை திருமதி ஸிம்ஸன் சில நண்பருடன் ஒரு பழங் கோயிலுக்குச் சென்றனர். அக்கோயிலில் எத்தனையோ பழம் பொருள்கள் காட்சியளித்தன. அவைகளை எல்லாரும் பார்த்து வெளியே வந்தனர். வந்ததும் திருமதி ஸிம்ஸன், நண்பர்களைப் பார்த்து, அந்தப் பழங் கடிகாரம் எப்படி யிருக்கிறது, பார்த் தீர்களா? என்றார். நண்பர்களெல்லாரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்; விழிக்கிறார்; கடிகாரம் எங்கேயிருக்கிறது? வாலி தவறாகக் கூறுகிறாள் என்று நகைத்தனர். திருமதி ஸிம்ஸன் அவர்களை நோக்கி திரும்புங்கள் கோயிலுக்கு என்று நண்பர் களை அழைத்துப்போனார்; கோயிலில் ஒரு மூலையில் பழமைக் காட்சி வழங்குங் கடிகாரத்தைக் காட்டினார். எல்லாரும் அம்மை யாரது கட்புலனின் திறத்தை வியந்தனர். கட்புலனில் திறமுடை யார் கூர்த்த மதியினர் என்பது மனோதத்துவர் கண்ட உண்மை களுள் ஒன்று. விருந்தோம்புவது திருமதி ஸிம்ஸனிடத்தில் சிறந்து விளங்கும் நல்லியல்பு. விருந்தினரிடம் தனித் தனியே பேசிப் பேசி அமுதூட்டுவதில் அம்மையாருக்கு வேட்கை அதிகம். அதனால் அவர் மிகச் சிலரையே விருந்தினராக அழைப்பது வழக்கம். விருந்து காரணமாக நண்பர் தொகை பெருகுவதுண்டு. திருமதி ஸிம்ஸன் நல்லவரென்றே பலராலும் போற்றப் படுகிறார். இதற்குப் பல சான்றுகளிருக்கின்றன. அச்சான்று களில் எவருடையதைச் சிறப்பாகக் கொள்ளலாம்? நெருங்கிய உறவு கொண்டவருடையதைக் கொள்வதே சிறப்பு. பெண்மணி களுக்கு நெருங்கிய உறவினர் யாவர்? அவரவர் கொழுநன் மாரே யாவர். எட்டாம் எட்வர்ட் மன்னருக்கும், திருமதி ஸிம்ஸனுக்கும் நேர்ந்த காதற் செய்தி யாண்டுங் காட்டுத் தீப்போல் பரவிற்று. அச்செய்தி சுழலாத இடமேயில்லை. அச்சுழற்சி திருமதி ஸிம்ஸனது முதற் கணவர் லெப்டினன்ட் பென்ஸர் கருத்தை ஈர்த்தது. அவ்வேளையில் அவர், திருமதி ஸிம்ஸனைப் பற்றித் தங்கருத்தை வெளியிட்டார். அக்கருத்தின் சாரம் வருமாறு:- 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் நாள் கார்னோடோ விடுதியில் ஒரு நாட்டியம் நடைபெற்றது. அதற்குத் திருமதி வாலிஸும் (இப்பொழுது திருமதி ஸிம்ஸன்) யானும் போயிருந்தோம். அங்கே எட்வர்ட் மன்னர் (அப்பொழுது இளங்கோ) வீற்றிருந்தார். நாங்களிருவரும் அவரைக் கண்டோம்; ஆனால் அவருடன் பேசும்பேறு பெற்றோமில்லை. திருமதி வாலி அழகு வாய்ந்தவர்; நகைச்சுவை யுடையவர்; மகிழ்ச்சியை விளைவிப்பதில் வல்லவர். அவர் எங் கிருப்பினும் யான் எங்கிருப்பினும் அவர் நலனை யான் நாடிக் கொண்டிருப்பன். அவரை எட்வர்ட் மணந்தால் அவர் திருவுடையவ ராவர். திருமதி வாலிஸுக்கும் எனக்கும் வெறுப்புக்காரணமாகப் பிரிவு நேரவில்லை. யான் சீனத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கேயே தங்கும் நிலைமை ஏற்பட்டது. அது காரணமாகச் சமாதான முறையில் நாங்கள் மணவிலக்குச் செய்து கொண்டோம். இது, முதற்கணவர் நன்மொழி. திருமதி ஸிம்ஸனிடத்தில் ஏதாயினும் தீக்குணமிருப்பின், அதைத்தூற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது முதற்கணவர் தூற்றலாமன்றோ? திருமதி ஸிம்ஸனிடத்தில் தீக்குணமில்லை, அதனால் முதற்கணவரிட மிருந்து எவ்விதத் தூற்று மொழியும் பிறக்கவில்லை; போற்று மொழியே பிறந்தது. முதற்கணவர் நீண்ட காலம் வெளியூரில் வதிந்தவர்; திருமதி ஸிம்ஸனுடன் சிலகாலமே நெருங்கி வாழ்ந்தவர்; இளமை இன்பம் நுகர்ந்தவர்; அச்சில நாளில் - அதினும் இளமையில் - ஒருவரது நலந்தீங்கை அளந்துணரல் அருமை என்று சிலர் கருதலாம். நீண்டநாள் வாழ்வில் நெருங்கி ஈடுபட் டிருந்த இரண்டாங்கணவராகிய காப்டன் ஸிம்ஸனாதல் திருமதி ஸிம்ஸனைப்பற்றிக் குறைவாக ஓருரையாவது இது காறுங் கூறியதாகத் தெரியவில்லை. திருமதி ஸிம்ஸனிடம் ஏதாயினுங் குறைபாடிருந்தால் அதைக் காப்டன் ஸிம்ஸன் நீதிமன்றத்தில் கூறியிருப்பர்; அல்லது பத்திரிகை வாயிலாகவோ வேறு வாயிலாகவோ வெளியிட்டிருப்பர். பல பத்திரிகைகளில் பலர் திருமதி ஸிம்ஸனைப் பற்றிப் பலவாறு எழுதினர். ஒருவரேனும் ஸிம்ஸன் தீக்குணமுடை யார் என்று கூறினாரில்லை. அவர்தம் உரைகளால் திருமதி ஸிம்ஸன் நல்வழியில் வாழ்வு நடாத்துவோர் என்பதே விளங்கு கிறது. பழிகள் திருமதி ஸிம்ஸன் மீது சுமத்தப்படும் பழிகள் சில. அவை களை ஆராய்ந்து முடிவு காண வேண்டுவது அறிஞர் கடமை. முதலாவது சாட்டப்படும் பழி அம்மையார் இருவரை மணந்து விலகியவர் என்பது. இப்பழியை மேல்நாட்டிற் பிறந்தவர், மேல்நாட்டிற் பிறந்த ஒருவர்மீது சுமத்துவதற்கு இடம் ஏது? அந்நாட்டுச் சட்டதிட்டங்கள் அப்பழிக்கு இடந் தருவனவா யிருக்கின்றனவா? இல்லையே! அங்கே சட்டப்படி மணவிலக்கும் மறுமணமும் செய்துகொள்ளும் உரிமையுண்டு. இந்தியாவில் - சிறப்பாக ஹிந்து சமூகத்தில் - மணவிலக்குச் செய்வதில்லை. அதற்கெனத் தற்போது சட்டமொன்றுமில்லை. அச்சமூகத்தார் மண விலக்கில் ஈடுபட்டு மறுமணஞ் செய்து கொண்டால் சமூக முறைப்படி பழிசுமத்தற்கு இடமிருக்கும். திருமதி ஸிம்ஸன் மேல் நாட்டிற் பிறந்து, அந்நாட்டு வழக்க வொழுக்கங்கட் கியைந்த சட்டங்களின் படி வாழ்ந்து வருவோர். அவர்மீது மணவிலக்குப் பழியோ மறுமணப்பழியோ சுமத்து வது நியாயமாகாது. வாழ்வு என்பது என்ன? நாட்டு வழக்க வொழுக்கங் களின்படியும், சட்ட திட்டங்களின்படியும் பரிணமிக்கும் ஒன்றே வாழ்வு என்பது. எவரெவர் எவ்வெவ்வழக்கவொழுக் கங்களில் ஈடுபடுகிறாரோ அவரவர் அவ்வவ் வழக்க வொழுக் கங்களின் வண்ணமாதல் இயற்கை. சார்ந்ததன் வண்ணமாவது உயிரின் தன்மை. மனிதர் எவர்? மனிதர் என்பவர் வெறுந் தோலல்லர்; எலும்பல்லர்; நாடி நரம்பல்லர்; பிறவுறுப்புக்களுமல்லர்; இவை யெல்லாஞ் சேர்ந்த கூடுமல்லர். பின்னை என்னை? எண்ணம் - எண்ணத்தின் ஈட்டம் - மனிதர். எண்ணம் எது? காண்டல், கேட்டல், பயிறல், உண்ணல், உணரல், உறுதல் முதலியவாற்றான் முகிழ்ப்பது எண்ணம். எண்ணமே மனிதராகிறது. எண்ணமே வாழ்வு, வீடு, ஊர், நாடு, உலகம், எல்லாம். சூழ்ந்துள்ள வழக்கவொழுக்கங்களும் பிறவும் எண்ணத்தின் பரிணாமங்களேயாகும். வழக்க வொழுக்கங்கள் உயிர்களைத் தங்கள் வயப்படுத்தித் தங்கள் மயமாக்கும். அஃது இயற்கைத் தத்துவம். வின்ஸர் கோமகளார் மேல்நாட்டு நாகரிகமென்னும் தடத்தில் பூத்த ஓரழகிய மலர். அம்மலரில் எம்மணங் கம ழும்? அவர்தம் நாட்டு வழக்கவொழுக்க மணமே கமழும். மேல்நாட்டு மணவிலக்கும் மறுமணமும், அந்நாட்டு வழக்க வொழுக்கங்களினின்றும் அமைந்தவை. அவ் வழக்க வொழுக்கச் சட்டதிட்டச் சூழலிடைப் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஒருவர் மனம் எம்மயமாகும்? அம்மனக் கண்கொண்டே அவரது நடைமுறையை நோக்குதல் வேண்டும். இந்திய மனம் - ஹிந்து மனம் - கொண்டு அவர்தம் நடை முறையை நோக்குதல் கூடாது. மேல்நாட்டில் மணவிலக்கும் மறுமணமும் ஆட்சியி லிருப்பதால், அந்நாட்டு ஒழுக்கத்துக்கும் நம் நாட்டு ஒழுக்கத் துக்கும் பொருளில் வேறுபாடு உண்டு. நம் நாட்டிலுஞ் சட்டம் பிறந்து, ஆட்சி பழம்பாடமாயின், ஒழுக்கத்தின் பொருள் நாளடைவில் வேறுபட்டுவிடும். இங்கே மேல்நாட்டுச் சட்டமுறைபற்றிய ஒழுக்கத்திறனே பேசப்படுகிறது என்று நேயர்கட்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மணவிலக்குச் சட்டமுள்ளவிடங்களில் ஒருத்தி ஒருவ னுடனும் ஒருவன் ஒருத்தியுடனும் வாழும் போது, அவர் பிறரிடத்தில் வேட்கை கொள்ளாதிருப்பதே ஒழுக்க வாழ்வு எனப்படும். அதுவும் சட்டதிட்டங்களால் சிதைவுறுதல் உண்டு. இருவர்க்குள் வெறுப்போ பிறவோ தோன்றினால், ஒருவர் வேறு ஒருவரிடம் மன உறுதி செய்துகொண்டு, மணவிலக்குச் செய்துகொள்வதும் மேல்நாட்டு வழக்க வொழுக்கங்களி லொன்று. அந்நாட்டு நாகரிகம், வழக்க வொழுக்கம், சட்டம் முதலியவற்றை உளங்கொண்டு, காய்தல் உவத்தல் அகற்றி, நடுநின்று, நிலைமையை ஆய்ந்தால், திருமதி ஸிம்ஸன்மீது பழி சுமத்துதற்கு எவ்வழியிலும் இடமில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். ஆகவே, திருமதி ஸிம்ஸன்மீது சுமத்தப்பெற்ற முதற்பழிக்கு அவர் உரியவரல்லர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறதென்க. திருமதி ஸிம்ஸன் மீது சுமத்தப்படும் இரண்டாவது பழி அவர் நடுத்தரக் குடியிற் பிறந்தவர் என்பது. ஒருவிதத் தருக்க முறைப்படி நடு என்பது பொருளற்ற ஒன்றாகும். நடு என்பது ஓரளவில் உயர்வைச் சாரும்; இன்னோரளவில் தாழ்வைச் சாரும். அது தனிப் பட்டு நிற்பதன்று. உலக வழக்கில் மட்டும் அஃதோரிடம் பெற்றிருக்கிறது. இயற்கைப்படைப்பில் உயர்வு தாழ்வு முதலிய வேற் றுமைகளில்லை. உயர்வு அல்லது தாழ்வு என்னுங் குறியுடன் எவரேனும் பிறக்கின்றனரோ? வறியர் குழந்தையின் பிறப்புக்கும், செல்வர் குழந்தையின் பிறப்புக்கும் ஏதாயினும் வேற்றுமை யுண்டோ? எல்லார்க்கும் பிறப்பும் ஒன்றே; இறப்பும் ஒன்றே. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மக்களுக்குள் உயர்வு தாழ்வு முதலிய வேற்றுமைகள் கற்பிக்கப்படுகின்றன. அக்கற்பனையி னின்றும் சமூகக்கட்டும், விதி விலக்கும், இன்ன பிறவும் முளைக் கின்றன. உயர்வு தாழ்வு முதலிய கற்பனையாதல் எல்லாவிடங் களிலும் ஒரேவிதமாக இருக்கிறதா? இல்லையே. கற்பனை ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. உயர்வு தாழ்வு முதலியன சில விடங்களில் பிறப்பை யொட்டிக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. சில விடங்களில் சிறப்பை யொட்டிக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன; பிறப்புக் கற்பனை நாளுக்குநாள் மாய்ந்து வருகிறது. மற்றையது மாய்ந்து வருதல் காணோம். சிறப்புக்கள் பல திறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று கல்வி யறிவுச்சிறப்பு; மற்றொன்று செல்வச் சிறப்பு. இவ்விரண்டனுள் முன்னையது இயற்கையின் பாற்பட்டது; பின்னையது செயற்கையின் பாற்பட்டது. இயற்கை மாயாது; செயற்கை மாயும். ஓருவரிடத்துள்ள கல்வியறிவைக் கவர்தல் எவரால் இயலும்? (நோயும், பித்தும், முதுமையும், இன்னபிறவும் அதை ஒரோவழிக் கவர்தல் கூடும்) செல்வம் எளிதில் கவரப்படலாம். செல்வம் சிறப்புப்பெறாத நிலையையும் உலகம் காண்டல்கூடும். செல்வர் வறியர் என்னும் வேற்றுமைக்கே இடமில்லாமல், எல்லாரையும் ஒரேவிதப் பொருளுடையராக்கும் ஆட்சி முறையில் செல்வம் சிறப்புறுதற்கு இடம் ஏது? எத்திற ஆட்சி முறையிலும் கல்வியறிவுக்குச் சிறப்பிருந்தே தீரும். மேல் நாட்டிற் பெரிதும் பிறப்பு வழியிற் சிறப்புக் கருதுஞ் சிறுமையில்லை. அங்கே செல்வத்தின் வழிச் சிறப்புக் கருதுஞ் சிறுமை பல விடங்களில் உண்டு. அவ்விடங்களிலுஞ் செல்வம் குறிப்பிட்டவரிடத்திலேயே என்றும் நிலைத்திராது. அஃது ஒருவரிடத்திலிருந்து மற்றொருவரிடத்துக்குச் சென்று கொண்டேயிருக்கும். இன்று செல்வராயுள்ள ஒருவர் நாளை வறியராயினுமாவர்; அவ்வாறே இன்று வறியராயுள்ள ஒருவர் நாளை செல்வராயினுமாவர். நிலையில்லாத செல்வத்தைப் பொருளாக் கொண்டு மக்களுக்குள் தரங்கள் வகுப்பதும் கருதுவதும் அறியாமை. திருமதி ஸிம்ஸனைப் பார்க்கிலும் செல்வத்திலுஞ் சீரிலும் இழிந்தவர்களை ஆங்கில மன்னர்கள் மணஞ்செய்துள்ளார்கள். சரித்திர உலகஞ் சாகாமலே இருக்கிறது. அவ்வுலகை நோக்குக. அதை விரிக்கின் கட்டுரை நீளும். சமதர்ம ஆட்சியில்லாத இடங் களில் வறியர் செல்வராதற்கு வாய்ப்புகள் பல உண்டு. திருமதி ஸிம்ஸன் இந்நிலையிலேயே இருப்பர் என்று எப்படி எண்ணுதல் கூடும்? நிலைமை மாறினும் மாறும். ஆகவே, நடுத்தரம் என் னும் காரணம் கிளத்துவது நியாயமாகாது. மன்னராட்சியில் மன்னரென்றும் குடிமக்களென்றும் இரு பகுதி யுண்டு. குடிமக்களில் இன்னார் குடிமக்கள், இன்னார் குடிமக்களல்லர் என்னும் வேற்றுமையுண்டோ? செல்வர் மட்டுமா குடிமக்கள்? மற்றவர் குடி மக்களல்லரோ? மன்ன ருக்கு எல்லா வகையினருங் குடிமக்களேயாவர். எல்லாருள்ளத் திலுந் தங்குவோரே மன்னராவர். அவர் எல்லார்க்கும் உரியர். மன்னர் நெஞ்சில் செல்வர் நடுவர் வறியர் என்னும் வேற்று மையே இருத்தல் கூடாது. வேற்றுமை மனமுடையார் மன்ன ராகார். ஆதலால் மன்னரொருவர் மனங்கொண்டால் நடுத்தர வகுப்புப் பெண்ணையும் மணஞ்செய்து கொள்ளலாம். எனவே, திருமதி ஸிம்ஸன் மீது சுமத்தப்பெறும் இரண்டாம் பழிக்கு அறவுலகில் இடமில்லை என்றே கூறலாம். மூன்றாம் பழி, திருமதி ஸிம்ஸன் அமெரிக்கப்பெண்மணி என்பது. இதைவிட அறியாமை வேறொன்றில்லை. காதலில் சாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய வேற்றுமைகட்கு இடம் ஏது? காதல் எல்லாவித வேற்றுமைகளையுங் கடந்தது. அந்தோ! குறுமதி, இற்றை ஞான்றும் - நாகரிக உலகிலும் தன்னாட்சி செலுத்துகிறதே! இது விந்தையா? வியப்பா? ஆண வமா? குறுமதியர் வழி நின்றே மூன்றாம் பழி யை நோக்கு வோம். அவர் வழி நின்று நோக்கினும் அப்பழி பொருளற்ற தொன்றென்றே தோன்றும். அமெரிக்கா எந்நாடு? அது கீழ் நாடன்று; மேல் நாடு. அமெரிக்காவின் மொழி என்ன? ஆங்கிலம். அமெரிக்கா இனம் பலவித ஐரோப்பிய இரத்தங் கலந்ததொன்று; பெரிதும் ஆங்கில இரத்தம் கலந்தது. திருமதி ஸிம்ஸனுடைய முன்னோர் ஆங்கிலேயரே. அமெரிக்கா ஆங்கில ஆட்சியினின்றும் விடுதலை பெற்ற ஒருநாடு. பல வழியிலும் அமெரிக்கா ஆங்கில இனத் துடன் பெரிதும் தொடர்புடையது. அஃது எப்படித் தீண்டாமை நாடாகும்? இங்கே இங்கிலாந்து அரசர் வழி வழியைச் சரித்திரக் கண்கொண்டு நேயர்கள் ஆராய்வார்களாக. அஃது ஒரே வழி யில் தோன்றி, ஒரே வழியில் வளர்ந்து, ஒரே வழியில் நின்று கொண்டிருப்பதா? கலப்பு இயற்கை. ஆதலால் ஆராய்ச்சியில் மூன்றாம் பழியும் போலியாதல் விளங்கும். இன்னுஞ் சில பழிகள் சொல்லப்படுகின்றன. அச்சிறுமைகள்மீது கருத்துச் செலுத்தி நூலைப் பெருக்க விருப்பமில்லை. மலர் அமெரிக்கா இயற்கை அன்னையின் ஓர் உறுப்பு. அவ்வுறுப்பு அழகியது; வளஞ்செறிந்தது; மலை, காடு, வயல், ஆறு, கடல் முதலிய கலன்களை நன்கு அணிந்தது. கலன்களின் எடுப்பாகவும், அரும்பாக வும், படுகராகவும், பிறவாகவும், பொழில் - கா- தூறு - பைங்கூழ் - பசும்புல் முதலியனவும் முகிழ்த்து நிற்கின்றன. சுனை-அருவி-ஓடை-கேணி- தடம் முதலியனவும் அவைகளினின்றும் மலர்ந்து கண்ணை யுங் கருத்தையுங் கவருந் துணர்கள் பலப்பல. அத்துணர்களிலுள்ள ஒரு மலர் திருமதி ஸிம்ஸன் என்னும் பெண்ணொளி. அவ்வொரு மலர், பால்டிமூர் என்னுஞ் சோலை சூழ்ந்த வார்பீல்ட் என்னுங் குடும்பத் தடத்திடைப் பூத்தது. ஒருசிறு தடத்திடைப் பூத்த மலரின் மணம் எவ்வளவு தூரம் வீசுகிறது! மணம், வார்பீல்டில் மட்டுமா - பால்டிமூரில் மட்டுமா - அமெரிக்காவில் மட்டுமா - மேல்நாட்டில் மட்டுமா வீசுகிறது! உலக முழுவதும் அந்நறுமணம் வீசுகிறது. அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் தோன்றிய ஒரு பெண்மணி மூன்று வயதில் தந்தையை யிழந்த ஒரு பூங்கொடி - இப்பொழுது உலகோர் உதட்டில் உலவும் ஒரு நிலை எய்தியுள்ளார்! திருமதி ஸிம்ஸன் முதலில் ஒரு தளபதியை மணந்தார்; பின்னர் ஒரு வாணிபரை மணந்தார்; இப்பொழுது உலகிலேயே ஒப்பும் உயர்வும் அற்ற ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர் மன்னரா யிருந்த ஒருவர்தங் காதலராயினார். திருமதி ஸிம்ஸன் இப்பேறு பெறுதற்குக் காரணமாக நின்றது எது? ஆராய்ச்சி யுலகுக்கு இஃதொரு பெரிய வேலை. காரணம் எது என்று கூறுவது? திருமதியின் கருங்கூந்தலா? நீலக்கண்ணா? பவளவாயா? தொங்குந் தோடா? முத்துப்பல்லா? அமுதமொழியா? புன்னகையா? நகைச் சுவையா? ஒளிர்மேனியா? நடனத்திறமா? ஒப்புரவா? நல்லறிவா? ஊழா? எது? இவைகட்கு நிலைக்களனாயுள்ள ஒன்றா? திருமதி ஸிம்ஸனிடத்தில் ஒருவித மின்னலிருக்கிறது. அஃது அவர் பிறவியில் அமைந்தது. அம் மின்னலோட்டத் தினின்றும் பல கூறுகள் கிளர்ந்து காளாமணி விளக்குகளாக ஒளி செய்கின்றன. விளக்குகளின் ஊடே புகுந்து புகுந்து பார்த்தால் மின்னலும், அதன் ஓட்டமும் புலனாகும். கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான் வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி - நான்மணிக்கடிகை 4. வின்ஸர் கோமகனார் வின்ஸர் கோமகனார் (எட்டாம் எட்வர்ட்) வரலாற்றை ஈண்டு விரித்துக் கூற வேண்டுவதில்லை. வின்ஸர் கோமகனார் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்க்கும் மேரிராணியார்க்கும் முதற் பிள்ளையாக 1894ஆம் ஆண்டு, ஜூன் திங்கள், 23ஆம் நாள் பிறந்தவர். முதற்பிள்ளை இளங்கோவாதல் சம்பிரதாயம். பிரிட்டன் இளங்கோ, வேல் இளவரசர் என்று அழைக்கப் படுவது வழக்கம். வின்ஸர் கோமகனார் 1இருபத்தைந்தாண்டு வேல் இளங்கோவாக இருந்தவர்; 2ஏறக்குறைய ஓராண்டு மன்னராக விளங்கினவர்; திருமதி ஸிம்ஸன் காரணமாக அரியாசனந் துறந்தவர் என்று சொல்லப்படுவோர். வின்ஸர் கோமகனார் இளமையில் கற்பன கற்றார்; கேட்பன கேட்டார். அவருக்கு ஐந்து மொழி தெரியும். வேல் இளங்கோவாக வருவோர் பெரிதும் பிரிட்டன் சாம்ராஜ்யத்தி லடங்கிய தேசங்களைச் சுற்றி வருவது வழக்கம். அவ்வழக்கப்படி வின்ஸர் கோமகனார் இளங்கோவா யிருந்தபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளையும், மற்ற நாடுகளையுஞ் சுற்றி வந்தார். தரைச் செலவிலும் கடற்செலவிலும் அவர் பெரும்பொழுது போக்கினார். உலகில் அவர் நுழையாத நாடு இல்லை என்றே கூறலாம். மன்னராகும் வாய்ப்புடைய ஒருவர், கற்பன கற்றுக் கேட்பன கேட்டுத் தெளிவடைந்த பின்னர்ப் பல நாடுகளைச் சுற்றி வருவது நல்லது; ஆங்காங்குள்ள நிலைமைகளை நேரிற் கண்டுணர்வது சிறப்பு. அதனால் பலவித நாட்டின் இயல்பு களையும், பலவித மக்களின் இயல்புகளையும் அளந்துணரும் ஆற்றல் உண்டாகும். கல்வி கேள்விகளால் விளங்கும் அறிவுடன், தரைச்செலவாலும் கடற்செலவாலும் அநுபவ அறிவு நன்கு விளங்கும். அநுபவம் அற்ற அறிவினும், அநுபவம் உற்ற அறிவு வாழ்வுக்கும் உலகுக்கும் நன்முறையில் பயன்படுவதாகும். வின்ஸர் கோமகனார் பல வழியிலும் அநுபவ அறிவு பெற் றவர்; எதையுந் தாமே ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு காணும் பேராற்றல் வாய்ந்தவர். இத்துறையில் வின்ஸர் கோமக னாரைப் போன்றதொரு மன்னர் மன்னரைப் பிரிட்டிஷ் சாம் ராஜ்யம் இதுகாறும் பெறவில்லை என்று சரித்திரங் கூறும். உலக அநுபவ ஞானத்தினின்றும் முகிழ்த்தெழுந்த ஒரு பெரும் பல்கலைக் கழகம் என்று வின்ஸர் கோமகனாரைக் கூறுதல் மிகையாகாது. மன்னரியல் போதிய கல்வி யறிவும், அநுபவ ஞானமும் உடைய ஒருவரே மன்னராதற்கு உரியர். மன்னராவார் எவர்? மற்றவராட்டும் பொம்மைபோ லிருப்பவர் மன்னராகார். உயிர்களின் உள்ள மெனும் அரியாசனத்தில் வீற்றிருப்பவரே மன்னராவர். நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் - மோசிகீரனார் (புறநானூறு) நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பில் புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழ விலங்கு வாட்கை மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான் - திருத்தக்கதேவர் மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன், தன்னுயிர் - சாத்தனார் மண்ணில் வாழ்தரு மன்னுயிர்க் கெலாம் கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலன் - சேக்கிழார் வைய மன்னுயி ராகஅம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு -கம்பர் இம்முது மொழிகளை நோக்குக. வின்ஸர் கோமகனாரிடத்தில் மன்னர்க்குரிய இயல்புக ளெல்லாம் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகள் பிரிட்டனுக்கும், மற்றச் சார்பு நாடுகளுக்கும் பயன்படாமற் போயின. வேறு வழியில் அவைகள் பயன்படுங் காலம் வரினும் வரும். வின்ஸர் கோமகனார் தாளாளர். சோம்பல் அவரை அணுக அஞ்சும். எல்லாவற்றிற்கும் அவர் பெரிதும் வேலையாட் களை நாடுவதில்லை. பல காரியங்களை அவரே செய்வர். அவர் நீந்துவார்; ஆடுவார்; தோட்ட வேலை செய்வார்; தாமே எழுதுவார்; டைப் அடிப்பார். பெல்விடியர் கோட்டையைச் செப்பஞ் செய்த பெருமை வின்ஸர் கோமகனார்க்கே உண்டு. பாழாக் கிடந்த அக் கோட் டையை அவர் ஒரு சிறு உலகாக்கி விட்டார். அங்கே என்ன இல்லை? கோமகனார், கோட்டையுள் குளமெடுத்தார்; சோலைக ளமைத்தார்; செடி கொடிகள் படரவைத்தார்; உலாவுமிடம், உட்காருமிடம், பேசுமிடம், ஆடுமிடம், பாடுமிடம் முதலியன வகுத்தார்; கோட்டையின் உள்ளும் பல ஒழுங்குகள் செய்தார். அவர் எதையும் தமது நேர்பார்வையிலேயே நிகழச் செய்வார்; சில சமயம் தொழிலாளருடன் தாமுங் கலந்து கொள்வார். எட்டாம் எட்வர்ட் மன்னர், கல்வி யறிவும், உலக ஞான மும், சோம்பலின்மையும், சுறுசுறுப்பும், தொண்டில் நாட்டமும் உடையவராதலின், அவர் மற்ற மன்னர்களைப் போலச் செல் வக்களியாட்டில் மட்டும் அயர்ந்து கிடந்தாரில்லை. மன்னர் மன்னராகிய அவர், மக்களிடம் நேரிற் போவார்; குறைகளைக் கேட்பார்; அவைகளைக் களைய முயல்வார்; அவர் அரண் மனைக் குகையில் உயிரற்ற சிம்மாசனத்திற் கிடந்து, உண்பன உண்டு, உடுப்பன உடுத்து, பூசுவன பூசிக் குருடராய்ச் செவிடராய் நடைப்பிணமாய் அரசு செய்தாரில்லை. அவர் ஏழை மக்கள் உள்ளமெனும் அரியாசனத்திலிருந்து உயிருள்ள மன்னராகவே அரசு செய்தார். அத்தகைய ஒருவரைப் பிரிட்டன் மன்னராகப் பெற்றும், பெறாதொழிந்தது. வின்ஸர் கோமகனார் மன்னர் வழியில் தோன்றியும் இருபத்தைந்தாண்டு இளங்கோவாயிருந்தும் - ஏறக்குறைய ஓராண்டு மன்னராயிருந்தும் - அவர் மனம் செருக்கில் விழுந்ததே யில்லை. அஃது அவரிடத்திலமைந்த பிறவிக் குணம்போலும்! அதுபற்றி அவர்தம் வாழ்வினின்றும் பல குறிப்புக்கள் எடுத்துக் காட்டலாம். சில வருமாறு:- குணநலன் வின்ஸர் கோமகனார் ஒரு பெரும் மன்னர் வழியில் தோன்றியவர்; மன்னரானவர். அவர் தம்மை மன்னர் வழியினர் என்றோ மன்னர் என்றோ நினைந்ததில்லை. அவர் தம்மை மனிதவர்க்கத்தில் ஒருவர் என்றே எண்ணி வாழ்ந்து வருகிறார். எளிமையிலேயே அவர் மனம் படிந்து கிடக்கும். உயர்வு தாழ்வை நினைவூட்டும் மரபு, சம்பிரதாயம், வழக்கவொழுக்கம் முதலியவற்றில் அவர் சிந்தை தோய்வதில்லை. கண்மூடி வழக்கங்கட்கு அவருடைய வாழ்வு இரையாகாமலே இருக்கிறது. மன்பதையின் வளர்ச்சியைத் தகையும் கொடுமைகளை வீழ்த்து வதில் அவருக்கு ஊக்கமுண்டு. வின்ஸர் கோமகனாரை ஒரு சம ரச ஞானி என்றுங் கூறலாம். பார்லி மெண்டில் அரசர் பேசும் போதெல்லாம் தம்மை நாம் என்று குறிப்பது மரபாக இருந்து வந்தது. எட்டாம் எட்வர்ட் மன்னரோ அம்மரபை விடுத்து நான் என்றே தம்மைக் குறித்தனர். வின்ஸர் கோமகனார், தம் தந்தையார் இறந்ததும், தாம் அரியாசனமேறிக் குடிமக்களுக்கு வாழ்த்துக்கூற முற்பட்டார். அவ்வேளையில் கோமகனார் தம் தந்தையாரின் அருங்குணங் களைப் புகழ்ந்து, வேல் இளங்கோவாக என்னை நீங்கள் அறிவீர்கள். யான் ஐரோப்பாப் போரில் தலைப்பட்ட ஒருவர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது சுற்றுப்பிரயாணத்தில் யான் உங்களுடன் நெருங்கிப் பழகி யிருக்கிறேன். இப்பொழுது மன்னர் என்ற முறையில் யான் உங்களுக்கு வாழ்த்துக் கூறினா லும், பழைய மனிதன் என்னும் நினைவுடனேயே அக்கடனாற்று கிறேன் என்று உரைத்தார் 1914-ம் ஆண்டில் ஐரோப்பாப் பெரும்போர் தொடங்கிற்று. அப்போரில் தாமும் ஒரு போர்வீரராகச் செல்லக் கோமகனார் விரைந்து நின்றார். அப்பொழுது சேனாதிபதியாயிருந்த லார்ட் கிச்சினியர் வேண்டாம் என்று கோமகனாரைத் தடுத்தார். தடுக்கப்பட்டும் கோமகனார் போர்க்களத்தில் புகுந்தார். தாம் ஓர் இளங்கோ - ஒரு மன்னர் புதல்வர் - என்ற நினைவே அவர்க்குத் தோன்றவில்லை. ஐரோப்பாப் போரில் காயமடைந்தவர்களைக் காண்பதற் கென்றே ஒருமுறை வின்ஸர் கோமகனார் பிரான்ஸுக்குச் சென் றார். அவர் வருகையைக் கண்ட டாக்டர், ஓர் அறையில் காய மடைந்து கிடந்த ஒருவரை வேறோர் இடுக்கில் மறைத்து விட்டார். காரணம், நோயாளியின் முகம் பலவழியிலுங் காய முண்டு மிகப் பருமையாகிப் பயங்கரத் தோற்றத்தை வழங்கிய தால், அதைக்காண இளங்கோவின் மனஞ் சகியாது என்பதே யாகும். அவ்வறையில் இளங்கோ புகுந்தபோது நோயாளியைக் காணோம். mt® R‰WK‰W« gh®¤jh®; ïL¡»ÈUªj gL¡ifia¡ f©lh®; ‘ï~bj‹id? என்று கேட்டார். டாக்டர் உண்மைகூறி முகத்தின் விகாரத்தை வருணித்தார். இளங்கோ விகார வருணனையைக் கேட்டுக் கொண்டே நோயாளியினிடஞ் சென்று மூடியை விலக்கினார்; புண் மலிவைக் கண்டார்; முகத்தோடு முகம் வைத்து முத்தந்தந்தார். ஒருசமயம் எட்டாம் எட்வர்ட் பெயின் தேசஞ்சென் றார்; பூனோ நகரத்திலுள்ள ஆகாயவிமான நிலையம் போந்தார்; ஆங்கிருந்த ஆங்கிலேயருக்கு பானிய மொழி தெரியாமை கண்டார்; கண்டு, நீங்கள் பெயினில் வதிகிறீர்கள். ஆனால் பானிய மொழியை நீங்கள் பயிலவில்லை. இது நீங்கள் வதியும் பெயின் தேசத்துக்குக் கேடு விளைப்பதாகும் என்றார். இஃது எத்தகைய உணர்வு? சமதர்ம உணர்வன்றோ? மன்னர்கள் பெரிதும் ஏழை மக்கள் வாழும் இடங்கட்குச் செல்வதில்லை. அவர்கள் செல்வர்களுடன் களியாட்டயர்ந்து ஞாயிறு எங்கெழிலென் என்றிருப்பார்கள். எட்வர்டோ அப்படியில்லை. அவர் ஏழைகளின் இருக்கைகளைத் தாமே தேடிச் செல்வார். எட்வர்ட் ஒருபோது வடகிழக்கு இங்கிலாந்தைச் சுற்றி வந்தார். அங்கே ஓரிடத்தில் ஒரு மூலையில் ஒரு சிறு குடில் காட்சியளித்தது. அஃது அவர் மனத்தை ஈர்த்தது. அக்குடில் இரண்டே அறைகளையுடையது. அங்கே பத்துப் பேர் உண வின்றிக் கிடந்தனர். அவர்கள் நிலை எட்வர்டைக் கண்ணீர் உகுக்கச் செய்தது. ஒருமுறை திடீரென எட்டாம் எர்வர்ட் ஒரு குடிசைக்குள் நுழைந்தார். அவ்விடத்தில் ஒரு சிறு குழவி இறந்துகிடந்தது. பெற்றோர் துயரத்தில் மன்னருங் கலந்து கொண்டார். மன்னர்கள் நுழையாத இடங்களிலெல்லாம் எட்டாம் எர்வர்ட் நுழைவார். காத்லந்தில் சில பகுதிகளையும், வேல் ஸில் சில பகுதிகளையும் எட்வர்ட் நேரில் பார்த்தார்; வேலையற் றோர் கூட்டம் பெருகி யிருத்தலை உணர்ந்தார்; இவர்கட்கு எவ்வழியிலாதல் வேலை கொடுக்க ஏற்பாடு செய்தல் வேண்டும் என்று திரும்பினார். தொழிலாளிகள் நீண்டகாலம் ஒரு சாலையில் உழைக்கி றார்கள். வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் வீட்டுக்கு அனுப் பப்படுகிறார்கள். முதுமையில் அவர்கள் வாழ்வு எப்படி நடை பெறும்? அவர்கட்கு உதவி நல்க எட்வர்ட் பெரிதும் முயன்றார். ஓர் ஏழைக் கிழவியை எட்வர்ட் காண்டல் நேர்ந்தது. அவள் தன் மகனுக்கு உதவிச் சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறினாள். அவ்வுதவி உடனே கிடைக்குமாறு அவர் செய்தார். வேலையற்றவர்மீது எட்வர்ட் மனம் என்றும் சென்று கொண்டிருக்கும். வேலையற்றவரைப் பற்றிப் பேச நேர்ந்த போதெல்லாம் அவர், வேலையற்றவரும் மனிதரே. அவர்க்கும் மகிழ்ச்சி முதலியன வேண்டும். கிளப்புகள் அவர்க்கும் அமைக்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்துவார். எட்டாம் எர்வர்ட் தொழிலாளிகள் முன்னேற்றத்தில் கண் ணுங்கருத்து முடையவர். சமதர்மிகளிடத்தில் சலிப்புக் கொள் ளாது அவர் பேசுவதும் ஈண்டுக் குறிக்கத்தக்கது. இன்னும் பல குறிப்புக்களுண்டு. இத்தகைய ஒருவரல்லரோ மன்னர் பதவிக்குத் தகுதிவாய்ந்தவர்? எட்டாம் எர்வர்ட், மன்னர் மன்னர். அவர் தொழிலாளர் களிடம் நேரே போதல், அவர்களிடம் பேசுதல், அவர்கள் குறைகளைக் களைய வழிதேடுதல் முதலிய நற் செயல்கள், செல்வர்கட்கு - அதிலும் இங்கிலாந்து செல்வர்கட்கு - பிடியா மலிருந்தன. லார்டுகளும் பிஷப்புகளும், கன்ஸர்வெட்டிவ் களும் கூடிக்கூடிப் பேசுவார்கள்; என் செய்யலாம் என்று சிந்திப்பார்கள்; என் செய்வது? அரசர்! அரசர் செயலை எப்படி மறுப்பது என்று வாளா கிடப்பார்கள். மீண்டும் சூழ்ச்சியில் இறங்குவார்கள். அவர்கள் செய்கைகளைக் கண்டுங் கேட்டும் எட்வர்ட் தமது இயற்கை நிலையினின்றும் மாறுபடக் கருதவே யில்லை. பதவியின் பொருட்டு நல்லோர் தமது நிலைமையினின் றும் பிறழ மாட்டார். செல்வர்கள் வாயிலாகச் சூழ்ச்சி மேல் சூழ்ச்சிகள் எழுந் தன; சதியாலோசனைகள் கிளம்பின. காலநிலையும், தொழி லாளர் எழுச்சியும் செல்வர்களைப் பெருமூச்செறியவுஞ் செய்தன. அவர்கள் இரவு பகல் தூங்குவதில்லை. அவர்கள் கன விலும் எட்வர்டே. இவ்வாறு செல்வர்கள் ஏக்குறலானார்கள். அந்நிலையில் திருமதி ஸிம்ஸனது காதற் புகை எழுந்தது. அஃது எதிரிகட்கு எய்ப்பினில் வைப்பாயிற்று. அதுபற்றி அவர்கள் என் னென்னவோ நிகழ்த்தினார்கள். எவையும் எர்வர்டை அச் சுறுத்தவில்லை. அவர் எவர்க்கும் அஞ்சி மனச்சான்றை விற்றா ரில்லை. மனச் சான்றுடையார்க்கு அச்சமேது? 5. காதற் காரணம் திருமதி ஸிம்ஸன் அமெரிக்காவில் ஒரு மூலையில் பிறந்த பெண்மணி. எர்வட்டோ ஒரு பெரும் மன்னர்! இருவருக்குங் காதல் நேர்ந்தது! அமெரிக்கக் கடலில் மிதந்த ஒரு நங்கூரத்துக்கும், இங்கி லாந்துக் கடலில் மிதந்த ஒரு கயிற்றுக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது? தற்செயல் என்று கூறுவது எளிது. தற்செயலுக்குங் காரணமிருக்குமா என்று துருவிப் பார்க்க இடமுண்டு. எந்நிகழ்ச்சிக்குங் காரணமிருக்கும். காரணமின்றி எந்நிகழ்ச்சி யும் உறாது. காரணமின்றிக் காரியமில்லை. காரணத்தைத் துருவிக் காண்பதில் பலர் கவலை செலுத்துவதில்லை; பொறுமையுடன் கவலை செலுத்தினால் காரணம் புலனாகியே தீரும். காரணம், புறம் அகம் என இருவகைப்படும். புறக்காரணத் தால் ஆன்ற உண்மை காண்டல் இயலாது. எதற்கும் அகக் காரணங் காண முயல்வதே அறிவுடைமை, அகக்காரணம் ஏதுக் களாலும், சான்றுகளாலும், இன்ன பிறவற்றாலும் விளங்குதல் அரிது. ஆழ்ந்த சிந்தனை அகக்காரணத்தை நனி விளங்கச் செய்யும். பருவுடல் உணர்வால் சிந்திப்பது ஒருவகை. நுண்ணுடல் உணர்வால் சிந்திப்பது மற்றொருவகை. முன்னையது புறக்கார ணத்தை ஒருவாறு உணர்த்தும். பின்னையது அகக்காரணத்தை நன்கு விளக்கும். நுண்ணுடற் சிந்தனையிலும் படித்தரங்களுண்டு. சிந்தனை அடிவரையிற் செல்லுதல் வேண்டும். அவ்வாழ்ந்த சிந்தனையில் விளங்குவதே உண்மை. நுண்ணுடலுணர்வால் ஆழ்ந்த சிந்தனையில் அமர்வது எல்லார்க்கும் இயன்ற ஒன்றன்று. அவரவர் சீலத்துக்கேற்ற அளவில் சிந்தனை செல்லும். சிந்தனையின் எல்லையிற் சென்றும் - சில சமயம் அதைக் கடந்தும் - சிந்திப்பது ஆழ்ந்த சிந்தனை யாகும். பருவுடலுணர்வில் உதயமாகும் சிந்தனை படிப்படியே வளர்ந்து செல்லும். ஒவ்வொருபடியில் ஒவ்வொரு விதக் கருவி கரணம் துணைசெய்யும். கருவிகரணத் துணை யிழந்த சிந்தனை நிலையுமிருக்கிறது. அதுவே நுண்ணுடலுணர்வு பற்றிய சிந்தனை. அதை என்னென்று கூறுவது? அதைச் சிந் தனாகாரம் என்று கூறலாம். அதற்கு மேற்பட்ட நிலையும் உண்டு. சிந்தனை கடந்த சிந்தனை பெறுதற்குப் பல வழிகள் அமைந்துள்ளன. அவைகளுள் புத்தர் பெருமான் அறிவுறுத்திய வழியே ஈண்டைக்கு வேண்டற்பாலது. புத்தர் பெருமான் சில பயிற்சிகள் அறிவுறுத்தியுள்ளார். அவை சீலப்பயிற்சிகளாகும். பௌத்த சீலமும் பழம் பிறப்பும் சீலம், பஞ்ச சீலமென்றும், அஷ்டசீலமென்றும் தசசீல மென்றும் மூவகைப்படும். பஞ்சசீலம் :- கொல்லாமை, திரு டாமை, பிறர்மனை இச்சியாமை, கள்ளுண்ணாமை, பொய் கூறாமை. இவ் வைந்துடன் உயர்ந்த பீடத்திலிருந்து துயிலாமை, மணவகைகளைப் புனையாமை, உதயத்துக்கு முன் உண்ணாமை என்னும் மூன்றுஞ் சேர அஷ்டசீலமாம். இவ்வெட்டுடன் நட னம் முதலியவற்றை விரும்பாமை, பொன் வெள்ளி முதலிய வற்றைத் தீண்டாமை என்னும் இரண்டுஞ் சேரத் தசசீலமாம். இச்சீல வகைகளில் ஈடுபடுவதுக் கேற்பச் சிந்தனை நிலைகளும் அரும்பி மலர்ந்து கொண்டே போகும். சீலங்களை முறைப்படி கடைப்பிடித்து ஒழுகி ஒழுகித் தெளிவு பெறப்பெற நுண்ணுடற் சிந்தனையில் பழம் பிறவி யுணர்ச்சி தோன்றும். தமது பழம்பிறப் புணர்வைப் பெறு வோர், மற்றவர் பழம் பிறப்பையும் உணரும் ஆற்றல் பெறுவர். சீலங்கள் பலதிறக் குற்றங்களென்னுஞ் சிறைமதில்களை உடைத்து உடைத்துச் சாய்க்கவல்லன. குற்றங்கள் சாயச்சாய அகக்கண் ஒளி பெறும். அவ்வொளியால் பிறரது புறநோக்குக்குப் புலனாகாத நுண்மைகளையும், பழம்பிறப்பு முதலியவற்றையும் தெளிதல் கூடும். இதனை யோகக் காட்சி என்ப. சித்தார்த்தர் சீலங்களை யெல்லாம் அனுஷ்டித்துப் போதி மரத்தடியில் அமர்ந்தன ரென்றும். அப்போது அவர்க்குப் பழம் பிறப்புணர்வு தோன்றிய தென்றும், அத்தோற்றத்தின் பின்னரே சத்திய சதுஷ்டயஞானம் பிறந்ததென்றும் பௌத்த சரித்திரம் கூறுகிறது. மணிமேகலையம்மையார் தானந் தாங்கிச் சீலந் தலைநின்று, பழம்பிறப் புணர்ந்த வரலாற்றை மணிமேகலை விளம்புகிறது. மற்றும் பல பௌத்த சரித்திரங்களும் இருக் கின்றன. இப்பெருநிலை கூடப்பெற்றவர் அர்ஹத் என்று அழைக்கப் படுவர். அர்ஹத் என்பது பாலிமொழி. அதற்குத் தமிழ்ப் பெயர் அறவணவடிகள் என்பது. முன்னை நாளில் அறவண வடிகள் நிலையடைந்தோர் ஆங்காங்கிருந்து அறம் வளர்த்துச் சத்சங்கங்களைப் பெருக்கி வந்தனர். நாளடைவில் மன்பதையில் சீலம் ஒடுங்க ஒடுங்க அறவண அடிகளின் குழுக்களும் ஒடுங்கி விட்டன. வின்ஸர் கோமகனார்க்கும் திருமதி ஸிம்ஸனுக்கும் நேர்ந்த காதலின் அகக் காரணத்தை உணர்தற்கு எவ்வறவண வடி களிடஞ் செல்வது? அறவணவடிகளைக் காணோம். அறவண வடிகளைப் பற்றிய நூலுணர்வு கொண்டு, வின்ஸர் கோமகனார் திருமதி ஸிம்ஸன் அம்மையார் காதலின் அகக்காரணத்தை ஊகஞ் செய்து கூற முயலலாம். பழம் பிறப்பைப்பற்றி ஐயுறுவோர் பலர். புத்தர் அறிவுறுத் திய சீல நெறியில் நிற்போர்க்கு எவ்வித ஐயப்பாடுந் தோன்றாது. இக்காலத்தவர் பலர் சான்றோர் உணர்த்திய நெறிகளுள் ஏதாவதொன்றில் நின்றொழுகாது, அந்நெறிகளை ஏட்டளவில் பயின்று வெறுங் கல்விக்கண் மட்டுங் கொண்டு அவைகளை ஆராய்கின்றனர். அதனால் ஐயப்பாடுகளுக்கு இடம் நேர்கிறது. அந்நெறிகளில் நின்று ஒழுகுவோர்க்குக் கல்விக் கண்ணுடன் வேறு ஒரு கண்ணுந் திறக்கப் பெறும். அக்கண்ணர்க்குப் பழம்பிறப்பு நன்கு விளங்கும். இந்நாளில் பழம் பிறப்பு உண்டு என்று சொல்வோரும், அஃதில்லை என்று சொல்வோரும் பெரிதும் ஏட்டளவில் நிற்பவரேயாவர். வழிதுறை தெரியாமல் இரண்டு குருடர் ஒருவரோ டொருவர் முட்டிக் கொள்கிறார். உண்மை வழி காட்டுதற்கு அறவணவடிகளில்லை. என் செய்வது? அறவண வடிகளின்மையால் குருடர்களுக்குள் வாதப் போர் மலிகிறது. இருள் சூழ்ந்த இந்நாளிலும் பழம்பிறப்புணர்வுடை யோர் ஆங்காங்கே இலை மறை காய்போ லிருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகள் வாயிலாக வெளிவருகின்றன. பத்திரிகை யுலகக் கண்ணுக்குத் தோன்றாத சிலரும் இருக்கலாம். பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை யெல்லாம் ஈண்டு நிரப்ப வேண்டுவதில்லை. வட இந்தியாவில் ஓரிளம் பெண்மணி தம் முற்பிறவியைப் பற்றியும், முற்பிறப்பின் ஊர், இல்லம் முதலியவற்றைப் பற்றியும் கூறின ரென்றும், அக்கூற்றுச் சோதனையில் உறுதி பெற்ற தென்றும் பத்திரிகை யுலகம் அணித்தே தெரிவித்தது. அவ்வாறே ஐரோப்பாவில் ஓர் அம்மையார் தமது பழம் பிறப்பை உணர்த் தின ரென்றும் பத்திரிகை யுலகம் அறிவித்தது. பழம் பிறப் புண்மையைத் தெளிவதற்கு மக்கள் வாழ்க்கை விநோதங் களைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனை உண்மையை ஒருவாறு புலப்படுத்தும். எட்டாம் எர்வர்டுக்கும் திருமதி ஸிம்ஸனுக்கும் உற்ற காதலின் அடிப்படையான காரணம், அவர்தம் பழம்பிறப்பை யொட்டியதாகவே யிருக்கும். பழம் பிறப்புணர்வு அவ்விருவர்க் கும் இல்லாம லிருக்கலாம். புத்தர் வழிபற்றி ஆழ்ந்த சிந்தனை யில் அமர்ந்தால், பழம் பிறப்புத் தொடர்பே காரணம் என்று ஊகித்தல் கூடும். ஊழ் பழம்பிறப்புத் தொடர்பே ஊழ் என்பது. ஊழ் வழி உலகம் என்றொரு பழமொழியும் பிறந்திருக்கிறது. ஊழைத் தெளிந்து அநுபவிப்போர் விரைவில் விடுதலை அடைவர். அதைத் தெளியாது அநுபவிப்போர் விரைவில் விடுதலை எய் தார். ஊழ் மிக வலியது. அஃது எவ்வழியிலாதல் வந்து சூழும். ஊழைப் பற்றிய ஆன்றோர் உரைகள் சில வருமாறு :- ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துரும் - திருக்குறள் இறந்த பிறப்பிற்றான் செய்த வினையைப் பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து செய்யும் வினையா லறிக இனிப்பிறந் தெய்தும் வினையின் பயன் - அறநெறிச் சாரம் முதிர்தரு தவமுடை முனிவ ராயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் மதியின ராயினும் வலிய ராயினும் விதியினை யாவரே வெல்லு நீர்மையார் - கந்தபுராணம் இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ் விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார் வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்களன்றே - சிந்தாமணி ஊழை வெல்லுதல் இயலுமா? இயலாதா? இயலும் என்றே விடையிறுக்கலாம். ஊழ் வெல்லப்படுவதொன்றன் றாயின், அஃதழியாமல் உயிரைத் தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும். உயிருக்கு இன்பம் என்பதே இல்லாமற் போகும். உயிரின் இயல்போ இன்பத்தை நாடுவது. அவ்வியல்புடைய உயிர் எத்துணை நாள் ஊழுக்கு இரை யாகிக்கொண்டிருக்கும்? என்றாதல் ஒருபோது உயிர் உணர்வு பெற்று ஊழின் திறனுணர்ந்து, அதை வெல்ல முயன்றே தீரும். ஆகவே, ஊழ் வெல்லுந் தன்மையதென்க. உயிருக்குச் செயல் (Action) உண்டு என்பது வெள்ளிடை மலை. அச்செயல் நல்ல வழியிலும் நிகழும்; பிறவழியிலும் நிகழும். செயலே வினையென்றும், கர்ம மென்றுஞ் சொல்லப் படும். ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவது விளைவிருத்தல் (Re-action) இயல்பு. ஒருவன் கொதிநீரில் கையை வைத்தான். அதனால் அவன் கையில் புண்ணுண்டாயிற்று. செயலுக்கேற்ற விளைவு நிகழ்ந்தது. விளைவாகிய புண்ணைப் போக்க மகன் முயல்வானா, வாளா கிடப்பானா? விளைவைப் போக்க அவன் முயலாது வாளா கிடப்பதில்லை. முயற்சியால் அவன் வெற்றி யும் பெறுகிறான். வினையின் விளைவை முயற்சியால் வெல்லுதல் இயலும். ஊழைப் பற்றிய உணர்வு பெற்றால், அதை யொழிக்கும் முயற்சியும் உடன் தொடர்ந்து எழும். சோதிடம் தற்கால உலகில் சோதிட நூல்கள் பெருகி வருதல் கண் கூடு. விஞ்ஞானம் பெருகி வரும் மேல்நாட்டிலும் புத்தம் புதியன வாக வான நூல்களும் சோதிடக் கலைகளும் பெருகி வருகின் றன. சோதிடக் கலை, விதியின் உண்மையை வலியுறுத்து வது; விதியால் விளையும் வாழ்வு நிகழ்ச்சிகளை விளக்குவது. விளைவது விளைக, சோதிடக்கலை எற்றுக்கு என்று சிலர் கேட்கலாம். சோதிடக் கலையில் நுழைந்து பார்த்தால் அது நல்விடை பகரும். அக்கலையால் வருங்கால நிலையை உணர்தல் கூடும். அதற்கேற்ற முறையில் வாழ்வைப் பண்படுத்திக் கொள்ளும் முயற்சியெழும். ஆகவே, முயற்சியால் விதியின் விளைவை வெல்லுமாறு தூண்டுவது சோதிடக்கலையென்க. விதியை வெல்வதற்கு அறிவு கொளுத்தவே அக்கலை ஏற்பட்டது. அஃதொரு விஞ்ஞானக்கலை. விதியை வெல்கை சோதிடம் பார்த்தும், பின்விளைவை உணர்ந்தும் வாளா கிடந்தால், விதி தன் வேலையைச் செய்தேதீரும். விதிக்கு வாழ்வு இரையாகும். விதியை வெல்லுதற்கென்று எம்முயற்சியில் தலைப்படுவது, முயற்சிக்குரிய வழிகள் எத்தனையோ கோலப் பட்டிருக்கின்றன. அவரவர் மனத்துக்கிசைந்த வழியில் நின் றொழுகலாம். நந்தமிழ் நாட்டிற் றோன்றிய பெரியோர் பலர். அவருள் தலை சிறந்தவரெனப் பலரால் போற்றப்படுவோர் திருவள்ளு வர். அவர் அருளிய நூல் பொதுமறை என்றும் போற்றப்படுகிறது. அவர்தம் நூற்கண் ஊழ் என்னும் ஓர் அதிகாரமும், ஆள்வினை யுடைமை என்னும் மற்றுமோர் அதிகாரமும் இருக்கின்றன. அவ்விரண்டையும் கூர்ந்து கூர்ந்து உன்னுதல் வேண்டும்; உன்ன உன்ன ஊழின் வலியும், அதைத் தவிர்க்கும் வழியும் நன்கு புல னாகும். ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று - சூழினுந் தான் முந்துறும் என்று ஊழ் அதிகாரத்திற் கூறிய திருவள்ளுவரே, ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் - தாழா துஞற்று பவர் என்று ஆள்வினை யுடைமை அதிகாரத்திற் கூறியுள் ளார். ஊழைப் புறங் காண்டல் கூடும் என்பது திருவள்ளுவர் உள்ளக் கிடக்கை. ஊழைப் புறங்காண்டற்கு ஆள்வினை உடைமை வேண்டற்பாலது என்று அப்பெரியார் அறிவுறுத்தி யிருத்தல் காண்க. முயற்சி பலதிறம். அவைகளுள் தலையாயது ஆண்டவன் திருவடியைப் பற்றி வாழ்வது. அப்பற்றால் ஊழ் ஒதுங்குவது ஒருதலை. நாள் கோள்களின் தாக்குதலால் உயிர்கள் பல வகை வினைகளில் ஈடுபடுகின்றன. நாள்கோள்களின் தாக்குதல் உயிர்கட்கில்லை என்று கூறுதலாகாது. திங்களின் நிலவு காலுதலுக்கும், கடல் நீருக்கும் தொடர்பிருத்தல் வெளிப் படை. நிலவின் தாக்குதல் கடல் அலையைப் பெருக்குதல் கண்கூடு. முழு நிலாவின்போது கடற்கன்னி பொங்கிப் பொங்கி மகிழ்ச்சி யுறுகிறாள். அம்மகிழ்ச்சி எத்துணைப் புலவர்க்கு விருந்தாகிறது. அவ்விருந்தமுதம் பாடல்களாய் நமக்கு இன்பூட்டுகிறதன்றோ? நாள்கோள் தாக்குதல் உல குக்குண்டு என்பதற்கு இஃதொரு சான்றாகும். நாள்கோள்கள் சடப்பொருள்கள். அவைகள் அறிவுப் பொருளொன்றால் இயங்குகின்றன. அவ்வறிவினிடத்துக் கருத்தைச் செலுத்தின், நாள்கோள் தாக்குதலில் தொடக்குண்டு வருந்த வேண்டுவதில்லை. நாள்கோள்களை இயக்கும் பரம் பொருளை மறந்து, அவைகளை மட்டுங் கருதிக் கொண் டிருந்தால் வாட்டந் தீராதென்க. நாள்கோள்கள் ஆண்டவனால் இயங்குவன. அவ்வியக்கத் தால் தீமையேயில்லை. அவையாவும் உயிர்களின் நன்மைக் கென்றே இயங்குகின்றன. அவைகளின் இயக்கத்தின் வழி வாழ்வு நடந்தால் எல்லாம் நல்லனவாகவே விளையும். அதற்கு மாறுபட்டு வாழ்வு நடந்தால் தீமையே விளையும். நாள் கோள்களின் இயக்கத்தின்வழி நடக்கும் வாழ்வும், அவைகளை இயக்கும் ஒன்றனிடத்தில் மனம் படிந்தாலன்றி அரும்பாது. ஆதலால் இறையடி உணர்வு இன்றியமையாதது என்பது தெளிதற்பாலது. நாள்கோள் என்பன எல்லாம் இயற்கையின் பரிணாமமே யாகும். இயற்கை, இறையின் உடல். இறை, இயற்கையின் உயிர். இரண்டும் பிரிவின்றி இருப்பன. இயற்கை - இறைவழி நின் றொழுகினால் தீமை விளைவதில்லை. நாள்கோள்க ளெல்லாம் நலஞ் செய்யவே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்நுட்பம் அடியவர்கட்கு நன்கு விளங்கும். வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே என்பொடு கொம்பொ டாமை யிவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்குடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே - சம்பந்தர் நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே - அருணகிரிநாதர் விதியை மதியால் வெல்லலாம் என்றொரு மூதுரை நமது நாட்டில் வழங்கி வருகிறது. அவ்வுரையை யொட்டி எழுந்த கதைகள் பல. அவைகளுள் சிறந்த ஒன்று மார்க்கண்ட ருடையது. மார்க்கண்டர் வளர்ந்து வந்தார்; பதினாறு வயது உறலானார். அவர் பதினாறு வயது உற்றதும் அவர்தந் தாய் தந்தையர் சோர்வடைந்தனர். சோர்வின் காரணத்தை மார்க்கண்டர் பெற்றோரால் உணரப்பெற்றார்; நாள்கோள் தாக்குதலையும், அதற்குத் தாரகமாயுள்ள கடவுளின் அருட் டன்மையையும் செவ்வனே தெளிந்தார். விதி என்பது ஆண்ட வனை மறந்தவரிடமே வலி செய்வதென்பதும், மற்றவரிடம் அஃது அணுகாதொழியும் என்பதும் அவருக்கு விளங்கின. உடனே அவர் ஆண்டவன் திருவடியில் உறுதி கொண்டு தவங்கிடந்தார். ஆண்டவன் அருள் அவர்தம் மரண நிலையைப் போக்கிற்று. மார்க்கண்டர் ஆண்டவனருளால் விதியை வென்றார். தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே - திருமூலர் நாள்கோள் முதலியவற்றை இறையென்று வாழ்த்தி வணங்குதல் கூடாதென்றும், அவைகளை யெல்லாம் படைத்து அவைகளை உயிர்களின் நன்மைக்காக இயக்கும் ஆண்டவன் ஒருவனே பெரியவனென்றும், அவனையே வாழ்த்தி வணங்கு தல் வேண்டுமென்றும் நபிகள் நாயகம் அருளிச் செய்ததும், மனிதன் பாவத்தினின்றும் விடுதலை யடைதற்குப் பாவமற்ற பரமனையே நினைந்து நினைந்து உருகி உருகி அழுதல் வேண்டு மென்றும், அழுகையால் பாவம் கழுவப்படு மென்றும் கிறிது பெருமான் போதித்ததும் ஈண்டுக் கருதற்பாலன. திருவருள் வழி நிற்பவராலேயே விதியை வெல்லுதல் கூடும். மற்றவரால் விதியை வெல்லுதல் இயலாது. விதியை வெல்லுதற்குப் பழம் பிறப்புணர்வு தேவை. அதற்குப் புத்தர் முதலிய பெரியோர் வழிகோலியுள்ளார். அவ்வழியில் நின்று ஒழுக ஒழுகப் பழம் பிறப்புணர்வு அரும்பும். திருமதி ஸிம்ஸனையும், எட்வர்டையும் காதலாற் பிணித்தது முன்னையூழென்றே ஊகித்துக் கூறலாம். ஊழ் எவ்வாறு படர்ந்து இருவரையும் பிணித்தது? 6. காதற் கனிவு இங்கிலாந்தில் திருமதி ஸிம்ஸன் ஒரே இடத்தில் வாழ்ந்து வந்தாரில்லை. அவர் பல இடங்களில் வாழ்ந்து வந்தார். ஒரே இடம் அவருக்கு மகிழ்ச்சியூட்டுவதில்லை. அடிக்கடி இடம் மாற்றுவதால் அவருக்கு இன்பம் பெருகும்போலும்! திருமதி ஸிம்ஸன் யாண்டு வதியினும், ஆண்டுள்ளாருடன் உறவு கொள்வது அவர்தம் இயல்பு. இளம் பெண்ணாண் களிடைக் காலங் கழிப்பதில் திருமதி ஸிம்ஸனுக்கு அதிக விருப்பம். இளஞ் சூழலிலுள்ள இன்பம் வேறெதிலுண்டு? அந்நுட்பம் திருமதி ஸிம்ஸன் வாழ்வில் படிந்து உறைந்து ஒன்றுபட்டது. இளஞ் சூழலிடை நிலவைக் கான்றிக்கொண்டிருந்த திருமதி ஸிம்ஸனது திங்கள் வதனம் எப்படியோ வேல் இளங்கோவைக் கவர்ந்தது. இளங்கோவின் நெஞ்சம், அத்திங்கள் நிலவில் ஈடுபட்டது. அந்நிலவு மழையில் அவர் மூழ்கினார்; திளைத்தார். தண்மை அமுதை இனிது உண் டார். அவ்வமுதம் இருவருக்கும் கெழுதகை நட்பை உண்டாக் கிற்று. நட்பு, அரும்பி மலர்ந்து காய்த்து நாளடைவில் காத லாகிக் கனிந்தது. வின்ஸர் கோமகனார்இளங்கோவாயிருந்த ஞான்றே அவர்க்கும் திருமதி ஸிம்ஸனுக்கும் காதல் விளைந்தது. அச் செய்தி காற்று வழியாகப் பறந்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் செவி யிலும் நுழைந்திருக்கும். தொடக்கத்தில் அச்செய்தி கருவறையில் அடங்கி ஒடுங்கிக் கிடந்திருக்கும். இளங்கோ அரசராகிய பின்னர் அவர் திருமதி ஸிம்ஸ னிடங் கொண்ட காதல் படிப்படியே வெளியாயிற்று. அக்காதற் செய்தி வெளியாக வேண்டுமென்பதே அரசரது விருப்பம். அது வெளியாகும் முறையிலேயே அவர் நடந்து வந்தார். சில குறிப்புகள் திருமதி ஸிம்ஸன், கோமகனார் உள்ளத்தில் எப்படி இடம் பெற்றார்? இதைப்பற்றிய விவரங்கள் பலபடச் சொல்லப் படுகின்றன. அவைகளுள் சிலவற்றை ஈண்டுப் பொறித்தல் சாலும். லண்டனில் ஆங்கிலோ - அமெரிக்கச் சங்கம் என்றோர் அமைப்பிருக்கிறது. அச்சங்க அங்கத்தவர் பலர் கோமகனார் நண்பர். நண்பருடன் கோமகனார் அச்சங்கம் போவார். சங்கத் தின் சிற்சில அங்கத்தவர்க்குத் திருமதி ஸிம்ஸன் விருந்தளிப்பது வழக்கம். விருந்து, கோமகனார் உள்ளத்தில் திருமதி ஸிம்ஸனை மிளிரச் செய்தது. 1931ஆம் ஆண்டு பெல்விடியர் கோட்டையில் ஒரு விருந்து நடந்தது. அவ்விருந்துக்குத் திரு. ஸிம்ஸனும், திருமதி ஸிம்ஸனும் அழைக்கப்பட்டனர். அவ்வழைப்பு இருவருக்குங் கழிபேருவகை யூட்டிற்று. இருவரும் போந்து விருந்துண்டனர். அச்செய்தி, விருந்தில் கலந்திருந்த திரு. பென்ஜமென் தாவாலும், அவர்தம் மனைவியாலும் பின் நாளில் வெளி வந்தது. 1934-35இல் கோமகனார் பிரான், ஆதிரியா முதலிய இடங்களுக்கச் சென்றபோ தெல்லாம் குறிப்பிட்ட சிலர் அவ ருடன் போந்தனர். அவருள் திருமதி ஸிம்ஸனும் ஒருவரென்று சொல்லப்படுகிறது. கோமகனார் அளிக்கும் விருந்துகளுக்கு அழைக்கப்படும் நண்பர்களது பெயர்களின் அட்டவணையில் திரு. ஸிம்ஸன் பெயரும், திருமதி. ஸிம்ஸன் பெயரும் விளங்கினமை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத்தக்கது. அரண்மனையில் மன்னராவார் ஏழைமக்களுக்குத் தானஞ் செய்வது வழக்கம். அத்தானம் காண்டர்பரிஆர்ச் பிஷப் முன் னிலையில் வழங்கப்படுவது மரபு. எட்டாம் எட்வர்ட், மன்ன ராயதும் முறைப்படி முதல் முதல் ஏழை மக்களுக்குத் தானம் வழங்கப் புறப்பட்டார். அவ்வேளையில் சிலர் அழைக்கப் பட்டனர். அவருள் திரு. ஸிம்ஸனும், திருமதி ஸிம்ஸனும் பொலிவுடன் வீற்றிருந்தனர். மன்னர், ஆர்ச் பிஷப் பக்கத்தில் அமர அசைந்து நடந்த போது, அவர்தம் விழிகள் திருமதி ஸிம்ஸனிடம் நடந்தனவாம். 1936-மே 28இல் ஒருபெரும் அரச விருந்து நடைபெற்றது. அதற்கு மந்திரிகள், பிரதானிகள், பிரபுக்கள் முதலியவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அப்பெயர்களுடன் திரு ஸிம்ஸன் - திருமதி ஸிம்ஸன் பெயர்களும் காட்சியளித்தன. அக்காட்சியே பொது மக்களின் கருத்தை முதல் முதல் ஈர்த்தது. அம்முறையில் காத்லந்தில் நடைபெற்ற விருந்திலும் திருமதி ஸிம்ஸன் பெயர் பத்திரிகையுலகில் புகலாயிற்று. அவ்விருந்தில் மன்னர் தம்பி மாரும், அவர்தம் மனைவிமாரும், மற்ற அரச குடும்பத்தினரும் கலந்திருந்தனர். அவ்விருந்துச் செய்தி பிரிட்டனையே கலங்கச் செய்தது. எட்டாம் எட்வர்ட், பெல்விடியர் கோட்டையில் அடிக்கடி தேநீர் விருந்து வைப்பார். தேநீர் விருந்து காரணமாகத் திருமதி ஸிம்ஸன் பெல்விடியர் கோட்டைக்குப் பன்முறை போதருவார். திருமதி ஸிம்ஸனின் தோற்றம் சிலருக்கு வியப்பூட்டியே வந்தது. அரச குடும்பம் முதலாவது அரச குடும்பத்தினர் நிலைமையை நோக்கு வோம். அரச குடும்பத்தில் தலையாயார் மேரி ராணியாரே யாவர். அவர்தம் நெஞ்சம், எட்வர்ட்-ஸிம்ஸன் காதல்மீது படியலாயிற்று. அவரது நெஞ்சில் அவ்வெண்ணமே பெரிதும் குடிகொண்டது; வேறு எண்ணம் எழினும் அது நிலைத்து நிற்ப தில்லை. தாய்மை நெஞ்சம் இருவர் காதலைப்பற்றி என்னென் னவோ நினைந்திருக்கும். ஒருநாள் எட்வர்ட் மன்னராகிய தம் புதல்வருடன் அவரது திருமணம் பற்றி, மேரி ராணியாராகிய அன்னையார் பேசுதல் நேர்ந்தது. அன்னையார் பரிவுடன் மைந்தர் முகம் நோக்கி, எனது ஆருயிர் மைந்த! உனது மணத்துக்கு எதிர்ப்பு நாட்டில் பலமாயிருக்கு மென்று நினைக்கிறேன் என்று சொற்றனர். அதற்கு மைந்தர் எதிர்ப்பு இராது. பொது மக்கள் என்பால் அன்புடையவர்கள் என்று பதிலிறுத்தார். அப்பதிலால் மைந்தர் மனோ நிலையை அன்னையார் நன்கு உணரலானார். மைந்தர் மனோ நிலையை மாற்றல் அரிது என்பதையும் அவர் கண்டார்,. அதற்குமேல் மேரி ராணியார் என் செய்தார்? திருமதி ஸிம்ஸனின் குணங்களை ஆராயத்தலைப்பட்டார். திருமதி ஸிம்ஸனுடன் அவர் உரையாடத் தொடங்கினார். இருவரும் நன்கு கலந்து கலந்து பேசலானார். அப்பேச்சின் பயனாக மேரி ராணியார்க்குத் திருமதி ஸிம்ஸனின் நல்லியல்புகள் பல புலனாயின. தம் மைந்தர்க்குத் தக்கவர் திருமதி ஸிம்ஸன் என்ற முடிவை மேரி ராணியார் பெற்றார். திருமதி ஸிம்ஸனின் அழகும், பழமை விருப்பும், கோயி லுக்குப் போதலும், இன்ன பிறவும் மேரி ராணியாரின் உள் ளத்தைக் கவர்ந்தன. மேரி ராணியார் பழமையில் விருப்புடை யார் என்பதும், கோயிலுக்குப் போவோர் என்பதும் உல கறிந்தவை. தம்மியல்புகள் சில, திருமதி ஸிம்ஸனிடத்தில் பொலிந்துள்ளமை மேரி ராணியாரை மயக்கி யிருக்கலாம். அன்னையாராகிய மேரி ராணியாரின் இசைவினைப் பெற மைந்தர் முயன்றார்; முயற்சியில் வெற்றியும் பெற்றார். அரச குடும்பத்தின் தலைவர் கருத்தே மற்றவருடையதுமாயிற்று. அரச குடும்பத்தில் கருத்து வேற்றுமை அற்றுவிட்டது. அமைச்சர் இரண்டாவதாக எவர்மீது மன்னர் பெருமான் கருத்துச் செலுத்தல் வேண்டும்? அமைச்சர் - முதலமைச்சர் - மீது என்று சொல்லவேண்டுவதில்லை. கோடை காலத்தில் ஒருநாள் எட்டாம் எட்வர்ட் தம் முதல் அமைச்சர் திரு பால்டுவினையும், அவர்தம் மனைவியாரையும் தேநீர் விருந்துக்கு அழைத்தார். இருவரும் போந்தனர். திருமதி ஸிம்ஸனும் ஆங்கிருந்தார். எல்லாரும் விருந்துண்டனர். மன்னர் தங்கருத்தை முதல் அமைச் சரிடங் குறிப்பாகத் தெரிவித்தார். அதற்குப் பின்னரே மன்னர் துருக்கி முதலிய பல விடங்களுக்குத் திருமதி ஸிம்ஸனுடன் சென்றார். அச்செலவே நிலைமையை உலகறியச் செய்தது. ஆயினும் பிரிட்டிஷ் பத்திரிகை யுலகம் வாய் பொத்தியே கிடந்தது. இது பெரும் வியப்பு! அமெரிக்கப் பத்திரிகை யுலகம் மட்டும் ஆரவாரம் செய்தது. ஆர்ச் பிஷப்பின் ஆத்திரம் முடிசூட்டலிலும் திருமணத்திலும் சமயச்சடங்கு ஆற்றும் பொறுப்பேந்தியுள்ள காண்டர்பெரி ஆர்ச் பிஷப்பும், திருமதி ஸிம்ஸனைப் பார்த்தல் நல்லது என்று மன்னர் கருதினார் போலும்! அவரையும் மன்னர் ஒருநாள் தேநீர் விருந்துக்கு அழைத்தார். ஆர்ச்பிஷப்பும் அழைப்புக் கிணங்கிப் பெல்விடியர் கோட்டைக்குச் சென்றார். ஒரு சிறு கூட்டம் அங்கே வீற்றிருந் தது. அஃது இளங் காவெனத் திகழ்ந்தது. அதனிடை ஸிம்ஸ னின் மதிநிலவு பொழிந்து தண்மை விருந்தூட்டிக் கொண்டிருந் தது. அதைப் பிஷப் கண்டார். அது பிஷப்புக்கு எரியூட்டிற்று. அவர்தம் மனம் வெகுண்டது. உதடுகள் துடித்தன; கண்களில் பொறிகள் பறந்தன; காதுகளில் புகை எழுந்தது; மெய் விதிர் விதிர்த்தது. bgÇat® fhiy ã‹nd vL¤J it¤J it¤J¤ âU«ãdh®., திரும்பினவர் யார்? பிஷப் - பெரிய பிஷப்; கிறிதுவின் ஆலயத்தில் ஜெபஞ் செய்வோர்; கிறிதுவின் சுவிசேஷத்தைப் பரப்புந் தொண்டேற்றிருப்பவர். அவர் ஓர் ஏழை மகளுடன் தேநீர் அருந்த விரும்பினாரில்லை. அவர்க்கும், பாவிகளுக்காக வந்த எளிய கிறிதுவுக்கும் ஏதாயினுந் தொடர்பிருக்குமா? பின்பு, வீட்டில் அவர் பந்தி யிருக்கையில், இதோ, ஆயக் காரரும் பாவிகளும் அநேகர் வந்து இயேசுவோடும் அவர் சீஷரோடும் பந்தி யிருந்தார்கள். அதைக் கண்ட பரிசேயர் அவர் சீஷரிடத்தில்: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன என்றார்கள். அவர் அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதே யல்லாமல் சுக முள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீங்களோ போய், பலியை யல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் பொருளைக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார் - மத்தேயு: 9:10-13 இத்திருமொழியை நோக்குங்கள்; கிறிது பெருமானை நினையுங்கள்; அவர் பாவிகளிடை நின்று கண்ணீர் உகுக்குங் காட்சியைக் காணுங்கள்; கிறிது பெருமான் உலகுக்கு ஏன் வந்தார்? எவருக்காக வந்தார்! எவருக்காகச் சிலுவையில் தொங்கினார்! நேயர்களே! உன்னுங்கள்! அவரடித் தொண்டு செய்தற்கெனக் கோலங் கொண்டவர் பெரிய பிஷப். அவர் ஓர் எளிய பெண் அணங்கைக் காய்கிறார்! mtUl‹ njÚ® mUªj kd§bfhŸshJ âU«ò»wh®!ஏன்? பெரிய பிஷப் செல்வர்; செல்வத்தில் புரள்வோர் நேயர். அவர் எளிய கிறிதுவுக்கு எங்ஙனம் நேயராதல் கூடும்? கிறிது பெருமானுக்கு வேண்டுவது அன்பு; வெறுங் கோலமன்று. வேதபாரகரைப்பற்றி எச்சரிக்கையா யிருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரிய விரும்புகிறார்கள். சந்தை வெளிகளில் வந்தனங்களையும், ஜெபாலயங்களில் முதல் ஆசனங்களையும் , விருந்துகளில் முதல் இடங்களையும் விரும்பு கிறார்கள். விதவைகளின் வீடுகளையோ பட்சித்துப் பார்வைக்கு நீண்ட ஜெபஞ் செய்கிறார்கள். அவர்கள் அதிகத் தண்டனை பெறுவார்கள் என்றார் - மார்க்கு : 12:38-40 என்றும், மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடாம்! வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளும் சகல அசுத்தங்களும் நிறைந்திருக்கின்றன. அப்படியே நீங்களும் புறம்பே மனுஷருக்கு நீதிமான்களென்று காணப்பட்டும் உள்ளேயோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக் கிறீர்கள் - மத்தேயு: 23: 27-8 என்றும் கிறிது பெருமான் திருவாய் மலர்ந்துள்ள மெய்ம்மொழி களை நோக்குக; நோக்கிப் பிஷப்பின் நிலையை ஆராய்க. மேல்நாட்டில் பிரபுக்கள் (முதலாளிகள்) கூட்டமென்று ஒன்றுண்டு. அக்கூட்டத்தின் ஆக்கத்துக்கென்றே பல பிஷப்புகள் வாழ்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் கிறிதுவின் தொண்டர் களாயிருத்தல் கூடும் அவர் (கிறிது) வழி நடந்து வெளியே செல்லுகையில் ஒருவன் அவரிடம் ஓடிவந்து முழங்கால் படியிட்டு: நல்லபோதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்யவேண்டு மென்று கேட்டான். அதற்கு இயேசு : நீ என்னை நல்லவர் என்று சொல்வானேன்? கடவுள் ஒருவரே தவிர நல்லவர் ஒருவரு மில்லையே. நீ கற்பனைகளை யறிவாய்: கொலை செய்யாதே, விபசாரஞ் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணு என்பவைகளே என்று சொல்ல, அவன் : போதகரே, இவைகளை யெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறே னென்றான். இயசு அவனை உற்றுநோக்கி அவனில் அன்பு கூர்ந்து : உன்னிடம் ஒரு குறைவு உண்டு. நீ போய் உனக்குண்டானவைகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்தில் உனக்கு ஐசுவரியமிருக்கும்; அப்பால் வந்து என்னைப் பின்பற்று என்றார். அவன் மிகுந்த ஆதியுள்ள வனாயிருந்தபடியால் இந்த வார்த்தையைக் கேட்டு முகம் வாடித் துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்துத் தமது சீஷரிடம்: ஐசுவரியமுள்ளவர்கள் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தை களைக் கேட்டுப் பிரமித்துப்போனார்கள். இயேசு பின்னும் அவர் களைப் பார்த்து: பிள்ளைகளே, கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிது. ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிது என்றார். - மார்க்கு: 10:17-25 இத்திருமொழிகளில் இரண்டு பொருள் சிறந்து விளங்கு கின்றன. ஒன்று, நல்லவர் எவர் என்பது; மற்றொன்று, செல்வக் களியாட்டயர்வோர் கடவுள் பிள்ளை களாதல் அரிது என்பது. பிஷப், தம்மை நல்லவரெனக் கருதியே திருமதி ஸிம்ஸனைக் கடியலானார்; செல்வர் வழி நிற்கலானார். இவர்க்கும் கிறிதுவுக்கும் எப்படித் தொடர்பு ஏற்படும்? சுவிசேஷ த்திலுள்ள மற்றுமொரு போதனை இங்கே நினைவிற்கு வருகிறது. அது வருமாறு :- இயேசுவோ ஒலிவமலைக்குப் போனார். காலையிலே அவர் திரும்பவும் தெய்வாலயத்திற்கு வந்தார். ஜனமுழுதும் அவரிடம் வரவே, அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசஞ் செய்தார். அப்பொழுது விபசாரத்தில் பிடிபட்ட ஒரு திரீயை வேத பாரகரும் பரிசேயரும் அவரிடங்கொண்டு வந்து நடுவே நிறுத்தி : போதகரே, இந்த திரீ விபசாரத்தில் கையுமெய்யுமாய்ப் பிடிபட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே; நீர் சொல்லுகிறதென்ன என்றார்கள். அவர்மேல் குற்றஞ் சுமத்த வேண்டுமென்று அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து விரலினால் தரையிலே எழுதிக்கொண்டிருந்தார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அவர் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து: உங் களில் பாவமில்லாதவனெவனோ அவன் முதலாவது இவள்மேல் கல்லெறியக்கடவனென்று சொல்லி அவர் மறுபடியும் குனிந்து தரையிலே எழுதிக் கொண்டிருந்தார். அவர்களோ அதைக் கேட்டுத் தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டுப் பெரியோர் முதல் கடையானவர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு அங்கே தனியே இருந்தார்;அந்த திரீயும் எதிரே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: அம்மா, உன்மேல் குற்றஞ் சாட்டினவர்கள் எங்கே? உனக்கு ஆக்கினைத் தீர்ப்பிடுகிறதில்லை; நீ போ, இனி பாவஞ்செய்யாதே என்றார் - யோவான்: 8:1-11 இது பிஷப்புக்குத் தெரியாதோ? தெரியும்; நன்றாகத் தெரியும். தெரிந்தும் என்ன பயன்? சுவிசேஷத்தைப் படிப்பதால் மட்டும் பயன் விளையாது. அது வாழ்வில் ஒன்றுதல் வேண்டும்; ஒன்றினால் பிறர் குற்றம் பாராட்டும் இயல்பு ஒழியும்; மன் னிக்கும் குணம் பெருகும். மேல்நாடு அமைப்பில் பேர்பெற்றது. அவ்வமைப்புப் பேய், சமயத்திலும் நுழைந்துகொண்டது. மேல் நாட்டில் கிறிதுவின் பெயரால் அமைப்புகள் நன்முறையில் நிறுவப் பட்டுள்ளன. அவ்வமைப்புகள், அரசியலார் அமைப்புகளைப் போலவே கடனாற்றி வருகின்றன. அமைப்புக்களுக்கு அடிமை பூண்ட மேல்நாடு அன்புக் கிறிதுவை மறந்து விட்டது. அமைப்புக்களால் பணம் பெருகப் பெருக, பணத்தால் பாதிரிக்கூட்டம் பெருகி நிற்கிறது. மேல்நாடு ஒரு பெரிய சுடுகளமாய் - வெடிநிலனாய் - இருப்பதற்குக் காரணம் என்ன? கிறிதுவின் அன்பு ஆண்டுப் பரவாதிருப்பதே யாகும். கிறிதுவின் பெயரால் அமைப்புகள் ஆயிரக் கணக்கில் கிடக்கின்றன. கிடந்தும் பயனென்ன? அவைகளில் அன்புக் கிறிதுவுக்கு இடனுண்டோ? என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படுமென்று எழுதி யிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகைகளாக்குகிறீர்களே என்றார் - மத்தேயு :21:13 என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்கவேண்டாம் - யோவான் :2:16 நரிகளுக்குக் குழியுண்டு, ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளுண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இட மில்லை என்றார் - மத்தேயு :8:20 மேல்நாட்டில் பிஷப்புகள் பிரபுக்களுக்காக வாழ் கிறார்கள்; கிறிதுவுக்காக வாழ்கிறார்களில்லை. அதனால் அந்நாடு கொலைக்களனாய் விட்டது. காண்டர்பெரி ஆர்ச்பிஷப் செயலைச் சிந்தியுங்கள். அவர் கிறிதுவை மறந்தே திருமதி ஸிம்ஸனை வெறுத்தார். எளிய ஸிம்ஸனைக் கருணைக் கிறிது காப்பாராக. கனிந்த காதலைக் குலைக்கப் பின்னே சூழ்ச்சிகள் படைபடையாக எழுந்தன. 7. சூழ்ச்சி எட்வர்ட் - ஸிம்ஸன் காதல் கனிந்து நீடியாதென்றும், எப்படியாவது அது முறிந்து போகுமென்றும் பிரபுக்கள் கருதி, அதன்மீது கவலை செலுத்தாதிருந்தார்கள். பின்னே நிகழ்ச்சி களை நோக்க நோக்க அவர்கள் வாளா கிடக்க விரும்பினார் களில்லை. காதல் மணமாக முடியும் என்ற உறுதி அவர்கட்கு ஏற்பட்டது. திருமதி ஸிம்ஸன் மணவிலக்குக்கென்று திரு. ஸிம்ஸன் மீது தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றமை பிரபுக் களை நடுக்குறச் செய்துவிட்டது. அவர்கள், மன்னர் முடிசூட்டு விழா மே மாதத்தில் நடைபெறுமென்றும், அதற்குள் அதாவது ஏப்ரலுக்குள் ஆறுமாதத் தவணையுந் தீர்ந்துவிடுமென்றும், மன்னர் மணமுடித்தே முடிசூட்டிக் கொள்வரென்றும், மன்னரே ஏழைகளிடத்தில் இரக்கமுடையவரென்றும் அவ ருடன் மற்றுமோர் ஏழை சேர்ந்தால் பிரிட்டன் நிலைமை என்னாகுமென்றும், உலகிலோ சமதர்மக் கிளர்ச்சி வீறு கொண்டு நிற்கிறதென்றும் இரவு பகல் எண்ணி எண்ணிக் கலாம் விளைக்கத் துணிவு கொண்டார்கள். பிரபுக்கள் எவ்வழியில் கலாம் விளைக்க வல்லார்கள்! அவர்கள் நேர்முகமாக எதையுஞ் செய்யமாட்டார்கள். அவர்கள் திரை மறைவு வேலையில் பேர்பெற்றவர்கள்; திரை மறைவிலிருந்தே பொறிகளைத் தூண்டுவார்கள். பாவைகள் அவர்கள் வழி ஆடத் தொடங்கும். அப்பொறியற்ற பாவை களின் வாயிலாக அவர்கள் தங்கள் கருத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இஃது அவர்களது தொன்று தொட்ட வழக்கம். பிரபுக்கள் ஆட்டும் பாவைகள் எவை? பாதிரிக் கூட் டங்கள் என்று சொல்ல வேண்டுவதில்லை. பிரபுக்கள் நலத்துக் கென்றே பாதிரிகள் வாழ்கிறார்கள். சமயம் நேரும்போது மதம் என்னும் போர்வையால் பாதிரிகள் பிரபுக்கள் கட்சிக்குத் துணை போவார்கள். வழக்கப்படி பிரபுக்கள், பாதிரிகளைக் கொண்டே கலாம் விளைக்கப் புகுந்தார்கள். பிரபுக்கள் நெஞ்சில் இருள் சூழ்ந்தது. கருமை கொண்டல் கொண்டலாக எழுந்தது; சூழ்ச்சிகள் செறிந்தன. சதியாலோசனைக் கென்று ஒரு கூட்டம் திரண்டது. வெடி குண்டு லார்ட் சபையில் ஒரு முடுக்கில் சில பிரபுக்களும் சில பிஷப்புகளுங் கூடினார்கள்; ஆழ்ந்து ஆழ்ந்து நிலைமையை ஆய்ந்தார்கள். சூழ்ச்சிகளெல்லாம் ஒன்றுபட்டன. அவை, திருமதி ஸிம்ஸன் இருமுறை மணமுடித்தவர். இருகொழு நன்மாரும் உயிருடன் இருக்கின்றார். அத்தகைய ஒருவரை எட்வர்ட் மணஞ்செய்ய உறுதி செய்தால், மணவினையில் பாதிரிமார் கலந்து கொள்ளுதல் கூடாது. முடி சூட்டுதற்குக் காண்டர்பரி ஆர்ச்பிஷப்பும் மறுப்புரை வழங்குதல்வேண்டும் என்னும் பலவித நச்சுக் கருவிகளைக் கொண்ட வெடிகுண் டாயின. அக்குண்டை எறியுமாறு பிராட்போர்டு பிஷப் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரும் உடன்பட்டார். உடன்பட்டவாறே முடுக்கில் செப்பஞ் செய்யப் பெற்ற வெடிகுண்டை, பிராட்போர்ட்டு பிஷப் ஓரிடத்தில் ஓங்கி எறிந்தார். ஒரே வெடி! பிரிட்டன் அதிர்ந்தது; பார்லிமெண்ட் நடுங்கியது; மந்திரிசபை கலங்கியது. எங்கணும் புகை மேக மெனச் சூழ்ந்தது; கமழ்ந்தது. கருவிகள் மின்னி மின்னி இடித்து இடித்து நஞ்சைப் பொழிந்தன. நஞ்சு எரிந்தது; எழுநாவிட்டு எரிந்தது. எரி, பத்திரிகை உலகைப் பற்றியது. பத்திரிகை உலகைப் பற்றிய எரி எளிதில் தணியுமோ? பத்திரிகைகள் மனம் போனவாறு எழுதத் தொடங்கின; சாதக பாதகக் கருத்துக்கள் வெளிவரலாயின. அமெரிக்கப் பெண்மணியை ஆங்கில மன்னர் மணம் புரிந்து கொள்ள ஆங்கி லேயர்கள் விரும்பவில்லை யென்றும், இழிவுற்ற பெண்களை இன்னின்ன ஆங்கில மன்னர் மணம் புரிந்தனரென்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் தூற்றத் துணிந்தன. ஆங்கிலப் பத்திரிகைகள் மோனத்தை விடுத்துத் தக்க விடை பகர்ந்துகொண்டே வந்தன. இருநாட்டுப் பத்திரிகைகளும் பத்திரிகை யுலகையே கலக்கி விட்டன. எங்கணும் எட்வர்ட் - ஸிம்ஸன் பேச்சாயது. எட்வர்ட்- ஸிம்ஸன் நிலவாத இடமே யில்லை. அமைச்சர் தலையீடு பிரிட்டனுக்கு என்ன நேருமோ! சாம்ராஜ்யத்துக்கு என்ன நேருமோ! குழப்பமற்ற பிரிட்டனும் குழப்பங் காணல் நேர்ந்ததே! என்று பிரிட்டிஷ் மக்கள் ஏக்குற் றார்கள். அஞ்சா நெஞ்சுடைய ஆங்கிலமாதின் -அகிலத்தி லும் ஆட்சிபுரியும் ஆங்கிலமாதின் - பொறி புலன்கள் கலங் கின; அவள் மெய்ம்மறந்தாள்; விழித்தாள்; சூலைநோய் அவளை முடுக்கிற்று; குடரோடு தொடக்கி முடுக்கிற்று. மருத்துவர் - முதல் அமைச்சர் - திரு. பால்டுவின் புறப்பட்டார்! இந்நிலையில் திருமதி ஸிம்ஸன் தாம் இங்கிலாந்தி லிருத்தலாகாதென்றும், மன்னர் விரும்புமாறு செய்வது ஆக என்றும் எண்ணி, இங்கிலாந்தை விடுத்துக் கடல் கடந்து, பிரான்ஸிலுள்ள ஒரு சிற்றூருக்கேகினார். அம்மையார் காற் றெனப் பறந்தாரோ - காரெனப் பறந்தாரோ - ஆண்டவனே அறிவன். அழகிய அமெரிக்க வானம்பாடி இங்கிலாந்தி னின்றும் எப்படியோ பறந்துவிட்டது! எட்டாம் எட்வர்டோ மன்னர்! சாம்ராஜ்யத் தலைவர்! நிகழ்ச்சி அவரை யொட்டியது. இங்கிலாந்தின் ஆட்சி கோனாட்சியன்று. அது குடிக்கோனாட்சி. பொறுப்பை வகிப் பது மந்திரிசபை. திரு. பால்டுவின் மந்திரிசபையைக் கூட்டினார்; நிலைமையைக் கூர்ந்து கூர்ந்து ஆய்ந்தார்; ஆய்ந்தபின் அரச மாளிகை நோக்கினார். மன்னர் பெருமான் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தார். அவரை முதலமைச்சர் கண்டார். இருவருங் கலந்து பேசத் தொடங்கினர். பையப்பையத் திரு. பால்டுவின் உலகில் கொந்த ளிப்பை விளைத்துக்கொண்டுள்ள ஒன்றைப்பற்றி உரையாட லானார். உரையாடல் விட்டுந் தொட்டும் ஏறக்குறைய ஒரு வாரம் நடைபெற்றது. இடையிடை மந்திரிசபை பன்முறை கூட்டப்பட்டது. இரண்டொருமுறை பார்லிமெண்டுங் கூட்டப் பட்டது. சுழற்சி எழுந்தது; ஓரிடத்திலா எழுந்தது! எங்கணும் எழுந்தது! அரசகுடும்பம் சுழன்றது; பார்லிமெண்டு சுழன்றது; பிரிட்டன் சுழன்றது; மந்திரிசபை சுழன்றது; சாம்ராஜ்யம் சுழன் றது; மண்ணுஞ் சுழன்றது; விண்ணுஞ் சுழன்றது; எல்லாஞ் சுழன்றன. எது சுழன்றும் - எல்லாஞ் சுழன்றும் எட்வர்ட் நெஞ்சம் சுழலவில்லை. அன்னையார் என்னென்னவோ சொல்லி யிருப்பர்; மற்ற அரச குடும்பத்தினர் என்னென்னவோ சொல்லியிருப்பர்; பால்டுவின் எவ்வளவோ சொல்லி யிருப்பர்; பிறரும் பல பல சொல்லியிருப்பர். எவர் சொல்லும் எட்வர்ட் செவியில் ஏறவில்லை. அவர், ஆரா ரெனக் கென்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்கவசமோ என்று, உறுதியில் நின்றார். பெண்ணணங்குக்கு உரைத்த உறுதிமொழியினின்றும் யான் பிறழேன் பிறழேன் என்னும் பதிலே எட்வர்டினிடமிருந்து பிறந்துகொண்டிருந்தது. திரு. பால்டுவினும் எட்வர்டும் பேசிய பேச்சுக்களில் சில வெளிவந்தன. அவைகளுள் ஒரு பகுதி உன்னற்பாலது. திருமதி ஸிம்ஸனை மணஞ்செய்யாது வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் அரசருக்கு அறிவுறுத்தினாராம். நல்ல அமைச்சர்! அதற்கு அரசர், புலைய னும்விரும் பாதஇப் புன்புலால் யாக்கை நிலையெ னாமருண் டுயிரினு நெடிதுறச் சிறந்தே தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வது தரியேம் கலையு ணர்ந்தநீ எமக்கிது கழறுவ தழகோ. என்னும் பாட்டுக்கு இலக்கியமாகி நின்று, அவ்விழி செயலுக்கு யான் உடன்படேன்என்று கூறினாராம். அரசர்பாலுள்ள ஒழுக்கத்தின் விழுப்பத்தைப் பாருங்கள். ஒழுக்கம் விழுப்பந் தரலால் ஒழுக்கம் - உயிரினும் ஓம்பப்படும் என்பது திரு வள்ளுவர் வாக்கு. எளிமையில் நாட்டம் எட்டாம் எட்வர்டின் தம்பிமார் மணஞ்செய்து வாழ்வு நடாத்துகின்றார். எட்வர்டோ மணமின்றியே காலங்கழித்து வந்தார். நண்பர் சிலர் அவரை நோக்கி, மணஞ் செய்யாதிருப்ப தற்குக் காரணங் கேட்பராம். mj‰F v£t®£, ‘vd¡FÇa bg© ïU¡»whsh? என்று சிலவேளை பதிலிறுப்பாராம்; சிலவேளை, எனக்கு அரசகுமாரிகளும் லார்ட் வீட்டுப் பெண்களும் பிடிக்கவில்லை. எளிய வாழ்க்கை நடாத்தும் இனிய பெண் தேவை என்று சொல்வாராம். எட்வர்ட் யார்? மன்னர் வழித்தோன்றல்; மன்னரால் மன்னராக வளர்க்கப்பட்டவர். அவர்மனம் எங்கே ஈடுபட்டுக் கிடக்கிறது! பிறவிக்கூறுகள் பலவிதம். எட்வர்ட் ஒருத்தியுடன் வாழவே விரும்பினார். மனைவி ஒருத்தி! அவளுடன் கூத்தி இன்னொருத்தியா! கொடுமை! கொடுமை! என்று எட்வர்ட் செவிகளைப் பொத்திக் கொண் டாராம். திரு. பால்டுவின் விழித்தார். எட்வர்ட் மன்னர் தம் பேச்சிடை ஒன்று கூறினாரென்று பத்திரிகை யுலகம் தெரிவித்தது. அதைத் திரு. பால்டுவின் பார்லிமெண்டுக்கோ சாம்ராஜ்ய மந்திரிமாருக்கோ தெரிவிக்க வில்லையாம்; தெரிவித்திருந்தால் நிலைமை வேறு விதமாக முடிந்திருக்கும். பத்திரிகைச் செய்தி உண்மையானால் திரு. பால்டுவின் பெருந்தவறே செய்துவிட்டார் என்று கருதுதற்கு இடனுண்டு. நியாயத் தீர்ப்பு நாளில் திரு. பால்டுவின் என்ன சொல்வரோ? என்ன செய்வரோ? எட்வர்ட், தமக்கும் திருமதி ஸிம்ஸனுக்கும் கான்முளை தோன்றினால் அதற்கு அரசுரிமை நல்கப்பட வேண்டுவ தில்லையென்று தாம் உறுதி கூறுவதாகச் சொற்றனராம். இப்பொன்னுரையைத் திரு. பால்டுவின் வெளியிட்டிருப்பின், நிலைமை ஒழுங்குபட்டிருக்குமன்றோ? திரு. பால்டுவின் மனத்திலுள்ள மூலகாரணம் வேறு. திருமதி ஸிம்ஸன் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாகவே கொள்ளப்பட்டது. மூலகாரணம் என்ன? மன்னர், தொழிலாளர் சார்பில் அன்பு காட்டுவதே யாகும். ஜனநாயகச் சிறுமை மற்றுமொன்று ஈண்டுக் குறிக்க விரும்புகிறேன். அது பார்லிமெண்ட் நிகழ்ச்சி. எட்வர்ட் - ஸிம்ஸன் காதல் காரண மாகச் சிலமுறை பார்லிமெண்ட் கூட்டப்பட்டது. ஒரு கூட்டத் திடை கர்னல் வெட்ஜ்வுட் ஒரு தீர்மானங்கொணர்ந்து, இரண் டொரு மொழி பகர்ந்தார். அம்மொழி ஈண்டுக் கருதற்பாலதே. எட்டாம் எர்வர்டே நம் மன்னர். ஐந்தாம் ஜார்ஜ் இறந்ததும் எட்வர்டே நம் மன்னரானார். திருமணம் மன்னர் விருப்பத்தை யொட்டி நிகழ்வது. அதைப்பற்றி நாம் ஏன் பேசுதல் வேண்டும்? முடி சூட்டல் என்பது தொன்றுதொட்டு வரூஉம் ஒரு சிறு சம்பிரதாயம். அதற்கும் மன்னர் பீடத்துக்கும் என்ன தொடர்பு? என்று வெட்ஜ்வுட் மொழிந்தார். அதற்குச் செவ்வனிறை இறுக்கப்பெறவில்லை. இப்பொழுதுள்ள பார்லிமெண்டில் கர்னல் வெட்ஜ் வுட்டை ஆதரிப்போர் தொகை மிகச் சிறியது. அதன்கண் கன்ஸர்வெடிவ் கட்சியே ஆக்கம் பெற்றிருக்கிறது. அக்கட்சிச் சார்பில் மந்திரிசபை அமைக்கப்பட்டிருக்கிறது. கன்ஸர் வெட்டிவ்கள் முதலாளிகளாகவும் முதலாளிகளை ஆதரிப்ப வர்களாகவுமிருப்பவர்கள். அவர்கள் எப்படிப் பிரபுக்களுக்கு மாறுபட்டு நடப்பார்கள்? பார்லிமெண்டின் பெரும்பான்மை அத்தகையவர்களிடத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையைத் தழுவி நிலவும் ஒருமுறை. நல்லதோ - கெட்டதோ, நீதியோ - அநீ தியோ பெரும்பான்மை வாக்கால் நிறைவேறப் பெறுவதே ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனநாயகத்தில் சில சமயங்களில் அறிவுத் தெய்வம் இடம்பெறாது நெருக் குண்டு சிறுமை யுறுவதுண்டு. ஜனநாயத்தில் மூடரோ பிடிவாதக்காரரோ தொகையில் மட்டும் பலராயிருந்து கொண்டு அறிஞரையும் அறவோரையும் வீழ்த்தல் கூடும். அறிவற்ற பெரும்பான்மையால் தீங்கே விளையும். தற்கால ஜனநாயகத்தில் அறிவும் அறமும் குன்றிவரல் கண்கூடு. மன்னர் பெருந்தகைமை முதலமைச்சர் திரு. பால்டுவின் மண்ணிலுருண்டார்; வானிற் பறந்தார்; என்னென்னவோ செய்தார்; கடைசியில் பிரிட்டன் மந்திரி சபையும், சாம்ராஜ்ய மந்திரிமாரும் அரசர் விருப்பத்துக்கு ஆதரவு நல்கவில்லை என்று அறிக்கை செய்தார். பார்லிமெண்டின் பெரும்பான்மை ஆதரவு முதலமைச்சர்க் குண்டு. பார்லிமெண்ட் பொது மக்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் அமையும் ஒன்று. பொது மக்கள் கருத்தோ மன்னர் விருப்பத்துக்கு அரண் செய்தே நின்றது. அதைத் தெரிந்து கொள்ள மன்னர் பார்லிமெண்டைக் கலைத்துப் புதுத் தேர்தலுக்குக் கட்டளை பிறப்பித்தல் வேண்டும். எட்வர்ட் மன்னர் அத்துறையிலிறங்கிக் கடனாற்றியிருந்தால், பால்டுவின் மந்திரிசபை கவிழ்ந்தேயிருக்கும். அதனால் என்ன விளைந் திருக்கும்? பிரிட்டன் இருபிளவாகியிருக்கும்; சாம்ராஜ்ய தேசங்களுள்ளும் பிளவு நேர்ந்திருக்கும். பிளவு, புரட்சி வரை சென்றிருக்கும். அப்புரட்சிக்குக் கால்கோள் விழா நிகழ்த்த மன்னர் விரும்பினாரில்லை. அரசகுடும்பத்தை அலைக்க அவர் மனம் எழவில்லை. நற்குடியிற் பிறந்த பெரியோர்கள், தங்கள் நலன் கருதி, அமைதி குலைக்குந் திருவிளையாடல் புரியத் தலைப் படமாட்டார்கள். அரசர் கட்சி என்றொன் றுண்டாக்க யான் விரும்பவில்லை என்று எட்வர்ட் சொற்றது ஈண்டு ஊன்றிக் கருதற் பாலது. மன்னர் மிகப் பெருந்தகைமையுடன் நடந்தார் என்றே கூறலாம். அவர் மனங் கொண்டால் பிரிட்டனை அலங்கோலஞ் செய்திருக்கலாம். அவர் நெஞ்சம் அத்துறையில் புகவேயில்லை. தீமையை எதிர்த்து நில்லாதே என்னுங் கிறிது பெருமான் திருமொழி எட்வர்ட்டை ஆட்கொண்டது. எட்வர்ட், தங் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளக் கலகத்துக்கோ குழப் பத்துக்கோ புரட்சிக்கோ தேசத்தையும் சாம்ராஜ்யத்தையும் இரையாக்க மனங்கொண்டாரில்லை. துராக்கிரகத்தில் அவர் தம் நெஞ்சம் நுழையவில்லை. அவர் நடப்பது நடக்க என் றிருந்தார். அன்றே யென்ற னாவியும் உடலு முடைமை யெல்லாமுங் குன்றே யனையா யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்க ணெம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே. - திருவாசகம் 8. துறவு திரு. பால்டுவின் கடைசியாக மன்னரிடம் போந்து நிலைமையை நன்கு விளக்கிப் பதில் விரும்பி நின்றார். யான் காதலிக்கும் பெண்மணியை மணஞ் செய்து கொள்ள முடி தடையாக நின்றால் யான் முடியையே துறப்பேன் என்று மன்னர் கூறினார். Kjyik¢r® k‹diu¥ gh®¤J “ÉU«ò khW brŒf” v‹wh®., எட்வர்ட் உடனே துறவுக்குச் சித்தமானார்; ஆகி அன்பு கனிந்த ஓர் அறிக்கை விடுத்தார். அறிக்கையின் சாரம்: ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன்; அதில் மூழ்கினேன்; மூழ்கி எழுந்தேன்; எழுந்த பின்னரே என் தந்தையார்க்குப் பின்னை யான் ஏற்ற அரியாசனத்தைத் துறக்க உறுதி கொண் டேன். அத்திண்ணிய உறுதியை அறிக்கை செய்கிறேன். யான் கொண்ட உறுதியையும், அதற்கு அடிப்படையாயுள்ள காரணங்களையும் எனது குடிமக்கள் சீர்தூக்கிப் பார்ப்பார் களாக; பார்த்தால் எனது செயலில் நியாயம் திகழ்வதை உணர் வார்கள் என்று நம்புகிறேன். எனது உள்ளத்தில் கிளர்ந்துள்ள உணர்ச்சியை வெளி யிடுதற்கு யான் விரைகின்றேனில்லை. பொதுமைக் கடனாற் றவே யான் விரைகிறேன். அரச பாரம் மிகப் பொறுப்பு வாய்ந்தது. அவ்வரும்பொறுப்பை ஏற்றுக் கடனாற்றத் தற்போதைய நிலைமை இடந்தரவில்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை யான் உணராம லில்லை. உணர்ந்தே, பொறுப்புக்கேற்றவாறு இனித் திறம் பட வும், எனது உள்ளம் நிறைவுபடவும் கடனாற்றல் இயலாது என்ற முடிவுக்கு வந்தேன். அதனால், முடி துறக்கவே உறுதிகொண் டேன். அதற்குரிய உடன்படிக்கை வருமாறு:- கிரேட் பிரிட்டனுக்கும், அயர்லாந்துக்கும், மற்ற பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளுக்கும் மன்னனும், இந்தியா வின் மன்னர் மன்னனுமாகிய எட்டாம் எட்வர்ட் என்னும் யான் அரியாசனத்தைத் துறக்கக் கொண்ட திண்ணிய உறுதியை அறுதி யிடுகிறேன். என்வழித் தோன்றல்கட்கும் அவ்வரியாசன உரிமையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடன்படிக்கை உடனே ஏற்றுக்கொள்ளப் படல் வேண்டு மென்பது எனது விருப்பம். 1936ஆம் ஆண்டு, டிசம்பர் 10-ம் நாளாகிய இன்று, சான்றுகள் முன்னிலையில் யான் எனது கைச்சாத்தைப் பொறிக்கிறேன்: (ஒப்பம்) எட்வர்ட், ஆர்.ஐ. யான் நிறுவிய இவ்வுடன் படிக்கைக்குச் சான்றவர் என்னுடன் பிறந்த மூவர். அவர், யார்க் கோமகனாரும், குளோஸடர் கோமகனாரும், கென்ட் கோமகனாருமாவர். என் பொருட்டுப் பலதிற வேண்டுதல்கள் வந்தன. அவை களில் கெழுமியுள்ள அன்பைப் பாராட்டுகிறேன். அவைகளைக் கூர்ந்து கூர்ந்து உன்னினேன். மனம் மாறுதல் அடைய வில்லை. யான் கொண்ட உறுதியிலேயே என் மனம் நிலைத்துவிட்டது. இன்னுங் காலந்தாழ்ப்பது எனது அன்பார்ந்த குடிமக்களின் நலத்துக்குக் கேடு விளைப்பதாகும். அவர்கள் நலங்கருதி யான் வேல் இளங்கோவாகவும், மன்னனாகவும் தொண்டாற்றி யிருக்கிறேன். அவர்கள் மேலும் மேலும் நலம்பெற வேண்டுமென்பது எனது இடையறாத வேட்கை. அரசும் சாம்ராஜ்யமும் நீடுவாழவும், குடிமக்கள் இன்புறவும் இம்முடிவுக்கு வருதலே நல்லது என்று கருதலானேன். இக்கருத்துடன் விடை பெற்றுக் கொள்கிறேன். யான் அரியாசனம் இவர்தற்கு முன்ன ரும் பின்னரும் குடிமக்கள் என்பால் செலுத்திவந்த அன்பை மறவேன்; அதற்கு என்றும் நன்றி யறிதலுடையேன். அதே அன்பை என் பின்னவர்க்கும் குடிமக்கள் செலுத்துவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. யான் நிறைவேற்றியுள்ள உடன்படிக்கை உடனே ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். எனக்குப் பின்னர் அரியாசனத்தில் அமரும் உரிமையுடையார் என் தம்பியார் யார்க் கோமகனாரே யாவர். அவர் அரியாசனம் அமர்தற்குரிய காரியங்கள் விரைவில் நடத்தப்பெறல் வேண்டும்( ஒப்பம்) எட்வர்ட், ஆர். ஐ அறிக்கை பார்லிமெண்டில் வாசிக்கப்பட்டது. முத லமைச்சர் திரு. பால்டுவின் நிகழ்ச்சிகளை யெல்லாம் விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன்கண் இருவரை மணந்த ஒருவர் திருமதி ஸிம்ஸன் என்பதும், இரு கணவரும் உயிருடனிருக்கிறார் என்பதும் சிறப்பாக விளக்கப் பட்டன. மற்றுஞ் சிலரும் பேசினர். கர்னல் வெட்ஜ்வுட் தமது தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். சம்பிரதாய முறைகளெல்லாம் நடைபெற்றன. யார்க் கோமகனார் மன்ன ரானார். அவர் மன்னராயதும் தம் தமயனாரை வின்ஸர் கோமகனாராக்கினார், எட்வர்ட் அரசு துறந்ததும், சாம்ராஜ்ய மக்களுடன் தேனினுமினிய தீம்மொழியால் பேசினார், பேச்சின் சுருக்கம்: மன்னன், மன்னர் மன்னன் என்ற தொடர்பைச் சிறிது நேரத்துக்கு முன்னரே யான் அறுத்துக் கொண்டேன்; இப்பொழுது கோமகன் என்னும் முறையில் பேசுகிறேன். என் தம்பியார் யார்க் கோமகனாரால் அரச பாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனது வணக்கத்தை முதலாவது அவர்க்குச் செலுத்துகிறேன்; இதை என் மனமார நிகழ்த்துகிறேன். யான் அரசு துறக்க நேர்ந்த காரணம் உங்கட்குத் தெரியும். அரசு துறந்தமையால், கடந்த இருபத்தைந்தாண்டாக வேல் இளங்கோவாகவும் மன்னனாகவும் நின்று ,தொண்டு செய்தற்கு நிலைக்களனாக இருந்த தேசத்தையும் சாம்ராஜ்யத்தையும் யான் ஒருபோதும் மறந்துவிடேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னர் பொறுப்புச் சீரியது; பெரியது. பொறுப்புக்குரிய தொண்டாற்றல் வேண்டும். யான் காதலித்துள்ள பெண்ணணங்கின் கூட்டுறவின்றி அத்தொண்டை என்விருப்பப்படி ஆற்ற இயலா தென்று நன்கு தெளிந்தேன்; தெளிந்தே அரசு துறக்கத் துணிந்தேன். இச்செயலுக்கு யானே பொறுப்பாளி, விடயம் என்னைப் பற்றியது. அதை யானே முடிவு செய்தல் வேண்டும். யான் கண்ட முடிவல்லாத பிறிதொன்றைக் காணுமாறு கெழுதகையர் ஒருவர் என்னை வலியுறுத்தினர். அதனால் என் மனம் மாறுதல் அடைய வில்லை. இம்முடிவுக்கு யான் ஏன் வந்தேன்? இதற்குரிய காரணம் ஒன்றே. அஃது, எனது செயலால் எல்லார்க்கும் நலன் விளைதல் வேண்டும் என்பதே. இம்முடிவுக்கு யான் எளிதில் வரலானேன்; எதனால்? இத்தேசத்தின் பொதுக் காரியங்களில் ஈடுபட்டுப் பெரிய அநுபவம் பெற்றவரும், நற்குணம் வாய்ந்தவரும், சாம்ராஜ்ய நிகழ்ச்சிகளில் எவ்விதச் சிக்கலோ இடரோ நேராதவாறு எனது பதவியை ஏற்கும் உரிமையும் வல்லமையும் உடையவருமாகிய தம்பியார் இருத்தலினால் யான் எளிதில் நன்முடிவுக்கு வரலானேன். அவருக்கு ஒரு பெரும் பேறு உண்டு. அஃது உங்களில் பெரும்பான்மையோர்க்கு வாய்த்தது; எனக்கு வாய்க்காதது. அஃதென்னை? அது, மனைவி மக்களோடு கூடிய இன்ப வாழ்வுப் பேறு. சோதனை நாட்களிலும் என் அருமை அன்னையாரும், மற்ற அரச குடும்பத்தவரும் என் உள்ளம் மகிழ்வுறும் முறையிலேயே நடந்து கொண்டனர். அமைச்சரும், சிறப்பாக முதலமைச்சரும் பரிவுடன் என்னொடு உறவாடியே வந்தனர். எனக்கும் அவர்கட்கும், எனக்கும் பார்லிமெண்டுக்கும் ஆட்சி முறையில் எவ்விதக் கருத்து வேற்றுமையும் நிகழ்ந்ததில்லை. வரம்பு முறையினின்றும் யான் பிறழாது நடக்குமாறு என்னைப் பண்படுத்திய பெருமை என் தந்தையாருடையது. யான் இளங்கோவான நாள் தொட்டு, யான் அரியாசனம் அமர்ந்த நாள் வரை -சாம்ராஜ்யத்தில் எப்பகுதியிலும் யான் வதிந்த போதும், சென்றபோதும் குடிமக்கள் எல்லாரும் என்பால் அன்பு பூண்டே ஒழுகினர். எல்லார்க்கும் எனது நன்றியைச் செலுத்துகிறேன் யான் பொதுக் காரியங்களினின்றும் விலகுகிறேன். என் சுமையை இறக்கிவிட்டேன். மீண்டும் நாடு நோக்கச் சின்னாளாகும். பிரிட்டிஷ் இனத்தினதும், சாம்ராஜ்யத்தினதும் நலனை நாடிய வண்ணமா யிருப்பேன். மன்னருக்கு எனது ஊழியம் எப்பொழு தேனும் வேண்டப்படுமானால், அதைச் செய்ய யான் தவறேன். நாம் அனைவரும் இப்பொழுது ஒரு புதிய மன்னரைப் பெற்றிருக்கிறோம். அவர்க்கும், அவர்தம் குடிமக்களாகிய உங்கட்கும், மகிழ்வும் நலனும் உண்டாக என்று மனமார வாழ்த்துகிறேன். இறைவன் உங்கட்கு நலம் புரிவானாக; மன்னரைக் காப்பானாக என்று பேசி விடைபெற்று, உடனே எட்வர்ட் ஐரோப்பா கண்டத்துக்குப் புறப்பட்டார். அரச குடும்பம் அலமந்தது. பிரிட்டன் உருகலாயிற்று. சாம்ராஜ்யம் கண்ணீர் உகுத்தது. ஒரு பெரும் சாம்ராஜ்ய மன்னராயிருந்த ஒருவர் கோமகனாராகி வியென்னாவுக் கருகேயுள்ள ஒரு பதியைச் சேர்ந்தார். 9. சோதனை எட்வர்ட் துறவு போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு போது நேர்கின்றன. அந்நிகழ்ச்சிகள் நேர்வானேன்? உலகியல் காரணங்கள் பலபடக் கூறலாம். அக்காரணங்கள் ஒருபால் கிடக்க. அந்நிகழ்ச்சிகட்கும், இயற்கை - இறையின் நோக்குக்கும் ஏதாயினுந் தொடர்பிருக்குமா என்று சிந்தித்தல் வேண்டும். அத்தகை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு போது நேர்தல் வேண்டு மென்பது இயற்கை - இறையின் திருவுள்ளமோ என்னவோ தெரியவில்லை. அந்நிகழ்ச்சிகளால் உயிர்களின் இயல்களை மன்பதை பயின்று திருந்துதற்கு இடமுண்டாகுமென்பது இயற்கை - இறையின் நோக்கம் போலும்! இயற்கை - இறை, உயிர்களைத் தன்னைப்போலாக்க அவைகட்குத் தனு கரண புவன போகங்களைத் தருகிறது. அவைகளைக் கொண்டு உயிர்கள் நல்வழியில் வாழ்ந்து இறை மயமாதல் வேண்டும். எல்லாம் இறையின் கருணை யால் நிகழ்கின்றன என்பதை மறத்தலாகாது. இறையருளால் உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் சிறந்தது மனிதப் பிறவி. என்னை? அப்பிறவியில் பகுத்தறிவு உண்மையால் என்க. மக்கள் பகுத்தறிவுடன் வாழ் கிறார்களா இல்லையா என்னுஞ் சோதனை இறையருளால் நிகழ்வதுண்டு. அச்சோதனை ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்கிறது. அதை உணர்ந்து நடப்போர் சிலர். அச்சோதனைக் குறிப்பை உணர்ந்து நடப்போர் பலராயின், உலகில் நீதி மன்றங்கள் வேண்டுவதில்லை; அரசும் வேண்டுவதில்லை என்று கூறலாம். உயிர்களின் நலங் கருதியே திருவருட் சோதனை நிகழும். அதை யுணர்தற்கே மனிதப் பிறவியில் பகுத்தறிவு விளங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வாய்ப்பை நல் வழியில் பயன்படுத்தல் வேண்டும். அதை நல்வழியில் பயன் படுத்துவோர் மனிதரில் மனிதராகி இன்புறுவர்; ஏனையோர் மனிதரில் விலங்காகித் துன்புறுவர். உலகில் கல்வி - செல்வம் - பேர் - புகழ் மட்டும் ஒருவரை மனிதரில் மனிதராக்கா. அவைகளுடன் அறவொழுக்கமும் வேண்டும். அறவொழுக்கம், பகுத்தறிவு வழி நடப்பவரிடமே அமையும். அவ்வொழுக்கம் இன்னாரிடம் அமையும், இன் னாரிடம் அமையாது என்னும் நியதியில்லை. அஃது எல் லார்க்கும் உரியது. கல்வி - செல்வம் - பேர் - புகழ் முதலிய பேறு களுடையாரும் அறவொழுக்கத்தில் நிற்கலாம்; அவையில்லா தாரும் அவ்வொழுக்கத்தில் நிற்கலாம். அறவொழுக்கம் பொது. சில சமயங்களில் கல்வி - செல்வம் - புகழ் - பேர் முதலியன அறவொழுகக்த்துக்குத் தடை செய்வனவாகவும் நிற்கும். தடையைப் பகுத்தறிவால் கடந்து அறவொழுக்கத்தில் நிற்க முயல்வதே சிறப்பு. எட்வர்ட் துறவுக்குக் காரணராக நின்றோ ரெல்லாரும் உலகியற் சிறப்புடையோரே யாவர். அவர்கட்குச் சோதனை நேர்ந்தது. சோதனையில் வெற்றிபெற்றவர் எத்துணைபேர்? எட்வர்ட் சோதனையில் வெற்றியே பெற்றார். பால்டுவின் உள்ளிட்ட மந்திரிமாரும், பிரபுக்களும், பிஷப்புக்களும், மற்றவர்களும் சோதனையில் மயக்குண்டு வீழ்ந்தார்கள். அவர்களது கல்வி - செல்வம் - பேர் - புகழ் முதலிய யாவும் பயன் படவே யில்லை. பால்டுவின் தோல்வி திரு. பால்டுவின் உலகியலில் எவ்வளவோ பெரியவர்; பிரிட்டனில் முதலமைச்சர் பதவியை வகித்திருந்தவர். அதை விடச் சிறந்த பதவி பிரிட்டனில் வேறொன்றில்லை. அவருக்குச் சோதனை நேர்ந்தது. எப்பொழுது? அநுபவம் பழுத்து முதிர்ந்த வயதில் - பெரும் பதவி இன்பத்தை நுகர்ந்த வேளையில் - சோதனை நேர்ந்தது. திரு. பால்டுவின் சோதனையில் வெற்றி பெற்றாரா? தோல்வியுற்றாரா? அந்தோ பாவம்! அவர் முழுத் தோல்வியுற்றார். அவர் வாழ்வில் வீழ்ந்தாரென்றே கூறலாம். நல்ல வாய்ப்பு வீணாயிற்று! சோதனையின்போது திரு. பால்டுவின் முன்னே இரண்டு வழிகள் தோன்றி நின்றன. ஒன்று மனச்சான்றென்னுந் தெய்வவழி; மற்றொன்று செல்வமென்னும் பேய்வழி. திரு. பால்டுவின் அறிவு - பகுத்தறிவு எவ்வழிச் சென்றது? அவர்தம் அறிவு பேய்வழியே சென்றது. திரு. பால்டுவினுக்கு என்ன இல்லை? கல்வியில்லையா? செல்வமில்லையா, பேரில்லையா? புகழில்லையா? எல்லா மிருக்கின்றன. இருந்தும் பயன் விளைந் ததா? அவர்தம் அறிவு தெய்வ வழியிற் புகவில்லை; வேறொரு வழியிற் புகுந்தது. திரு. பால்டுவின் பேய் வழியில் பலமுறை உழன்றவர். அவர்க்குத் தெய்வவழி தோன்றும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வாய்ப்பை அவர் பாழ்படுத்திவிட்டார்! முதிய பால்டுவின் வீழ்ந்தார். இங்கே ஏழைத்தொழும்பனேன் எத்தனையோ கால மெல்லாம் - பாழுக்குழைத்தேன் பரம்பரனைப் பணியாதே எனவரூஉம் மணிமொழியை நோக்குக; இருவே றுலகத் தியற்கை திருவேறு - தெள்ளிய ராதல் வேறு என்னும் பொய்யா மொழியையும் ஓர்க. திரு. பால்டுவின் வாழ்வெல்லாம் பிரபுக்களுக்கென்றே பெரிதும் பயன்பட்டது. முதிய வயதிலாவது - சோதனை நேர்ந்த போதாவது - அவர் மனம் அறவழியில் நிற்க ஒருப்பட்டதா? இல்லையே! நன்மனமுடைய ஒருவரை அரியாசனத்தினின்றுந் துரத்தவே அவர் மனம் ஒருப்பட்டது. முதிய ஒருவரையும் சாத் தான் தன் வயப்படுத்தியே நின்றான்! அவன்றன் ஆற்றல் என்னே! திரு. பால்டுவின் இன்னுஞ் சாத்தான் பிள்ளையாகவே வாழ்கிறார். அவர் இப்பொழுது எர்லாகி, லார்ட் கூட்டத் திடை நின்று களியாட்டயர்கிறார். பிரபுக்கள் அவர்தஞ் செயலைப் போற்றுகிறார்கள். புகழ்கிறார்கள். எட்வர்ட் துற வுக்குத் துணை நின்றதை முன்னிட்டுத் திரு. பால்டுவினுக்கு எவரோ ஒரு பிரபு ஊர் பேரில்லாதவர் - இரண்டரை லட்சம் பொன் (பவுன்) தந்தாராம். அத்தொகை சாம்ராஜ்யக் கட்டுப் பாட்டை ஓம்புதற்கெனச் சேதனநிதியாக வைக்கப்பட்டிருக்கிற தாம். இன்னும் பிரபுக்கள் அக்காப்புக்கென்று பெரும் பொருள் திரட்டுவார்கள். தாங்கள் விரும்பாத மன்னரைத் தொலைத்த ஒருவர்க்குப் பிரபுக்கள் என்னதான் செய்யமாட்டார்கள்? திரு. பால்டுவின் இன்னும் சாத்தானுக்கு ஏவல்புரியவே முனைந்து நிற்கிறார். அவர், என்று பேய்க்கடலைக் கடந்து தெய்வக்கரை ஏறுவரோ? அவர் என்று மனந் திரும்பிக் கிறிதுவ வாழ்வு பெறுவரோ? தாஞ்செய்த தவறுதல் குறித்து அவர் மனங் கசிந்து கசிந்து என்று அழுவரோ? அவ்வழுகை அவரிடம் இன்னும் எழவில்லை. அழுகை எழுந்தால் அவர் எர்லாக எண்ணுவரோ? பாவநிதிக்கென இரண்டரை லட்சம் ஏற்பரோ? அவர் மனம் இன்னும் திரும்பவில்லை. அவர் மனந் திரும்பி உய்யுமாறு ஆண்டவன் அருள்வானாக. பிரபுக்கள் உலகம் எட்வர்ட் துறவுக்கு மூலகாரணம் பிரபுக்களின் சூழ்ச்சி என்பது மேலே சொல்லப்பட்டது. பிரபுக்கள் வழியே மந்திரிசபை ஆடிற்று; முதல் மந்திரியும் ஆடினார்; மற்றவரும் ஆடினார். இந்நாளில் உலகை ஆட்டிவைப்போர் பிரபுக்களேயாவர். பிரபுக்கள் பழைய அன்பு நிலையைப் பெறுவார்களாயின், உலகில் போராட்டத்துக்கு இடங் கிடைத்தலே அருமையாகும். பிரபுக்கள் பண்டை நாளில் தெய்வ பக்தியுடைய வர்களாக இருந்தார்கள்; தங்கட்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் நிலபுலங்களையும், பொன் பொருளையும், பிறவற்றையும் தங்களுரிமைச் செல்வங்களாகக் கொண்டார்க ளில்லை; அவைகள் இறைவனுடையனவென்றும், அவைகளின் பயனை மக்கள் அறவழியில் பகிர்ந்துண்பதற்குத் துணைபுரியுந் தர்மகர்த்தர்கள் தாங்களென்றும் எண்ணியே காலங்கழித் தார்கள். அந்நாளில் பிரபுக்கள் ஜீவகாருண்யமுடையவர்களாக வாழ்ந்தார்கள் என்று சுருங்கச் சொல்லலாம். பின்னே இயந்திர ஆட்சி தோன்றிற்று. அவ்வாட்சி பிரபுக்களை ஆசைச் சேற்றில் அழுத்தியது. தன்னலப் பேய் அவர்களை விழுங்கிற்று. பிரபுக்கள் தங்கள் நலன் கருதியே வாழலானார்கள்; தங்கள் நலத்துக்கு ஏழை மக்கள் படைக்கப்பட் டார்கள் என்று எண்ணலானார்கள். ஏழை மக்களை அடக்கி யாளவேண்டி, அவர்கள் அரசுகளைத் தங்கள் வயப்படுத்தி னார்கள். பத்திரிகைகளைத் தங்கள் வயப்படுத்தினார்கள்; புரோகிதர்களையுந் தங்கள் வயப்படுத்தினார்கள். சட்டங்கள் பல அவர்கள் நலத்துக்கென்றே செய்யப்பட்டன. கோடிக்கணக் கான மக்களைக் கொண்ட ஒவ்வொரு தேசமும் ஆங்காங்குள்ள ஒரு சில பிரபுக்களின் வயப்படலாயிற்று. பிரபுக் கூட்டத்தின் தன்னலச் செயல்களால் விளைந்த தென்னை? விளைவு, முதலாளி - தொழிலாளி போராட்டமே யாகும். மேல்நாடு, தற்போது முதலாளி - தொழிலாளி போராட்டத்துக்கு இரையாகி வருதல் கண்கூடு. மேல்நாட்டில் பொதுவுடைமை யென்றும், சர்வாதிகாரமென்றும் விலங் கியல்புகள் வீறிடுகின்றன. அந்நாட்டின் செல்வங்கள் பெரி தும் குண்டு பீரங்கிகளுக்கே செலவாகின்றன. அந்நாட்டின் போராட்டம் உலக முழுவதும் பரவிவருகிறது. அறவோர் எல்லாம் வல்ல ஆண்டவன், உலகம் கொலைக்களமாதற்கு விரும்புவனோ? ஒருபோதும் விரும்பான். அவன் தன் விருப் பத்தை நிறைவேற்றுதற்கு அறவோரை ஆங்காங்கே தோன்றச் செய்கிறான். அறவோர் வழி உலகம் நடைபெற்றால் உலகில் போராட்டம் ஒழியும். உலகம் - தற்கால உலகம் - அறவோர் வழி நிற்க ஒருப்படுகிறதா? அறவோரையும் தற்கால உலகம் கடிந்து விடுகிறது. பிரிட்டனில் ஓர் அறவோர் தோன்றினார். அவர் எவர் வழித்தோன்றினார்? அவர் ஒரு பெரும் மன்னர் வழித் தோன்றி னார். அவரே எட்டாம் எட்வர்டாயிருந்தவர்; இப்பொழுது வின்ஸர் கோமகனாராயிருப்பவர். அவர், முதலாளி - தொழி லாளி போராட்டத்தை அன்பு வழியில் போக்கப் போந்த பெரியார் என்பது அவர்தம் வரலாற்றால் நன்கு தெரிகிறது. எட்வர்ட், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் நின்று, அவர்தம் போராட்டத்தைத் தீர்க்க முயன்றார். அவர் நீண்ட காலம் மன்னராயிருக்கும் பேறு பெற்றிருப்பரேல், முதல் - தொழில் போராட்டத்தை நேரிய முறையில் ஒழித்திருப்பர். அவர் எத்துணை நாள் மன்னராயிருந்தார்? ஏறக்குறைய ஓராண்டே. முளையிலேயே அவர்தம் முயற்சி களையப்பட்டது. சோக்ரதரை நஞ்சூட்டிக் கொன்ற உலகம் - கிறிதுவைச் சிலுவையி லறைந்த உலகம் - மகம்மதுவைத் துன்புறுத்திய உலகம் - காந்தியடிகளைச் சிறைப்படுத்திய உலகம் - எட்வர்டை எளிதில் விடுமோ? பொல்லாத உலகம் அவரை அரசு துறக்கச் செய்தது. முதலாளி - தொழிலாளி போராட்டத்தைப் பிரிட்டன் வாயிலாக நீக்கும் வாய்ப்பு ஆண்டவனால் வழங்கப்பட்டது. அவ்வாய்ப்பைப் பிரபுக்கள் உலகம் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நிலையாமை ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பு, பிரபுக்களுக்குப் புலனாதல் அரிதே. செல்வச் செருக்கு அவர்கள் கண்களை மூடி யிருக்கிறது. செருக்குக்கு உலகமும், உடலும், வாழ்வும், பிறவும் நிலைபேறாகவே தோன்றும். செருக்குடையார் நெஞ்சில் நிலையாமை தோன்றுவதில்லை. மரணம் தமக்கில்லை என்பது அவர்தம் எண்ணம் போலும்! உலகமும் உடலும் ஆண்டவன் கொடை. அக்கொடையி னின்றும் அரும்புவது வாழ்வு. வாழ்வுக்குப் பொருள் தேவை. பொருள் இன்னார்க்கு வேண்டும் இன்னார்க்கு வேண்டாம் என்னுங் கட்டுப்பாடில்லை. பொருள் எல்லார்க்குமே வேண்டும். முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியுமன்றே என்று திருக்கோவை சொல்கிறது. பொருளில்லார்க் கிவ்வுலக மில்லை என்று திருவள்ளுவர் கூறியருளினார். இம்மூதுரை களால் பொருளின் இன்றியமையாமை நன்கு விளங்குகிறது. அப்பொருள் அறவழியில் ஈட்டப் பெறல் வேண்டும். அறவழியில் பொருளீட்டி, அறவழியில் உலகில் வாழ்ந்து, அறவழியில் இன்பந் துய்த்தலே விடுதலைக்கு வழிகோலுவ தாகும். உலக வாழ்வு விடுதலைக் கென்றே நல்கப்பட்டது. அறியாமை (அவித்தை) நோய் போக்கும் மருந்து உலக வாழ்வே யாகும். இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்பது சுந்தரர் திருவாக்கு. உலக வாழ்வு, கட்டடம் எழும்புதற்குத் துணை புரியும் சாரம் போன்றது; இக்கரையினின்றும் அக்கரை சேர்தற்கு உதவி புரியும் தோணி போன்றது. அத்தகை வாழ்வைத் துறத்தலும் அறியாமை; அதுவே நிலைபேறு என்று அதன்கண் அழுந்தலும் அறியாமை. பிறவிக் கடலைக் கடந்து இறைவனடி என்னுங் கரையேறுதற்கு உலக வாழ்வை ஒரு பெருங் கருவியாக - ஆண்டவன் அருட்கொடையாக - கொண்டு ஒழுகுவதே சிறப்பு. உலக வாழ்வே நிலைபேறு என்றும், அதற்கு வேறாக மற்றொரு வாழ்வு இல்லை என்றும் வாழ்வோர் பாவச் செயல் களுக்கு அஞ்சார். அவர் தமது நலனுக்கென்று இரக்கமின்றிப் பிறரைத் துன்புறுத்துவர். அவர்தம் அறிவில் புகவேண்டுவது நிலையாமை. அவர் பால் நிலையாமை உணர்வு பெருகப் பெருகப் பாவச் செயலும் அருகிக் கொண்டே போகும். அது பற்றியே அவர் பொருட்டு நிலையாமையைப் பல வழியிலும் ஆன்றோர் அறிவுறுத்தினர். ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேயத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாகண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே தெய்வச் சிதம்பர தேவாவுன் சித்தந் திரும்பி விட்டால் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங் கேமண்ட லீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடக சாலையெங் கேயிது கண்மயக்கே - பட்டினத்தார் பிரபுக்களுக்கு நிலையாமை உணர்வு எழுமோ? எழுந்தால் அவர்கள் மனந் திரும்பி ஏழைகளிடத்து அன்புடையவர் களாகவே வாழ்வார்கள். பிரிட்டன் பிரபுக்கள், ஓர் ஏழைப் பெண்ணைத் தங்கள் மன்னர் மணம் புரிதலாகாது என்று கிளர்ச்சி செய்தார்கள்; அவரை அரியாசனத்தினின்றுந் துரத்தி னார்கள். மன்னர், பிரபுக்களுக்கு நல்லறிவு கொளுத்த வேண்டிச் சாம்ராஜ்யத் தலைமையையே துறந்து காட்டினார். எட்வர்ட் துறவு பிரிட்டன் பிரபுக்களுக்கு ஒரு நல்ல பாடம். அஃது ஆண்டவன் அருளால் நிகழ்ந்தது. அருள் நிகழ்ச்சி பிரபுக் களுக்குப் புலனாகுமா? பிரபுக்கள் கண்ணிருந்துங் காணாதவர் - செவியிருந்துங் கேளாதவர் - வாயிருந்தும் பேசாதவர் - அல்லரோ? எட்வர்ட் துறவு நிகழ்ச்சி இன்றுடன் மறைவதன்று; அஃது என்றும் நிற்பது; பிரபுக்களையும் மனந்திரும்பத் தூண்டுவது; அவர்களை மனிதரில் மனிதராக்க அறிவுறுத்துவது. பிரபுக்கள் உலகம் மனந்திரும்பி உய்வதாக. புரோகித மாயை இனி, பிஷப் உலகத்தின்மீது சிறிது கருத்துச் செலுத்து வோம். எட்வர்ட் துறவுக்குப் பிஷப் உலகமும் (புரோகித உலகமும்) காரணமாக நின்றது. அவ்வுலகில் குறிப்பிடத்தக்கவர் காண்டர் பரி ஆர்ச் பிஷப், யார்க் ஆர்ச் பிஷப் முதலியோர். அவர்கள் எட்வர்ட் துறவில் கலந்து கொண்டது அநாவசியம். பிரபுக்களுக்குத் துணை போகவே பிஷப்புக்கள் எட்வர்ட் துறவில் கலந்து கொண்டார்கள். தற்கால பிஷப்புக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் பைபில் படிக்கிறார்கள்; சுவிசேஷப் பிரசாரஞ் செய்கிறார்கள்; நித்திய ஜெபமுஞ் செய்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ் வில் பைபில் படிப்பும், சுவிசேஷப் பிரசாரமும், நித்திய ஜெபமும் நுழைந்து ஒன்றுவதில்லை. கலெக்டர்களைப் போலவும், கவர்னர்களைப் போலவும் பிஷப்புக்கள் அதிகாரிகளாகவே வாழ்கிறார்கள். அன்பைப் பார்க்கிலும் அதிகாரமே அவர்களிடத்தில் விஞ்சி நிற்கிறது. பிஷப்புக்கள் கிறிதுவைப் பற்றிப் பேசுகிறார்களே யன்றி, கிறிதுவைப்போல் வாழ அவர்கள் விரும்புகிறார்களில்லை. அவர்கள் பிரபுக்கள் உலகில் வாழவே விரும்புகிறார்கள். அவர்கட்குக் கிறிதுவின் உலகம் எங்ஙனம் புலனாகும்? சாத்தான் உலகம் எட்வர்ட் திருமணத்திலும் முடிசூட்டலிலும் நாங்கள் கலந்துகொள்ளோம் என்று கூக்குரலிட்டவர்கள் யார்? பிஷப்புக்களல்லவோ? அவர்கள் ஏன் கூக்குரலிடல் வேண்டும்? அவர்கள் அன்புக் கிறிது உலகில் வாழ்ந்தால் கூக்குர லிட்டிருப்பார்களோ? அதிகாரச் சாத்தான் உலகம் கூக்குரலை எழுப்பிவிட்டது. சாத்தான் உலகம் சோதனைக்குரியது. அச் சோதனையைக் கடப்பவரே தெய்வப்பிள்ளைகளாவர். .ã‹D« பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலைமேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால் இவைகளெல்லாவற்றையும் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் கர்த்தராகிய கடவுளைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரை விட்டுப் போனான். இதோ, தெய்வதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள். - மத்தேயு : 4 : 8-11 இங்கே சாத்தான் உலகம் எது? கிறிதுவின் உலகம் எது? என்பது நன்கு விளங்குகிறது. இவ்விரண்டில் காண்டர்பரி ஆர்ச்பிஷப் உலகம் எது? அன்பர்களே! சிந்தியுங்கள். பிரபுக்கள், பிஷப்பைத் தூண்டிய போது அப்பாலே போங்கள் என்று கூற அவருக்கு மனம் எழுந்ததா? சகல ராஜ்யங்களையும் அவை களின் மகிமையையும் கொடுக்கவந்த சாத்தானைப் பார்த்து, இயேசுபெருமான் என்ன சொன்னார்? அப்பாலே போ சாத்தானே என்றன்றோ சொன்னார்? அக்கிறிதுவின் அடிய வர் சாத்தானுக்கு ஏவல் செய்ய ஒருப்படுவரோ? அகலிடமே... துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவோர் சொல்லுஞ் சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே வாராண்ட... பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற்றோமே - அப்பர் கிறிது எவருக்காக வந்தார்? காண்டர்பரி ஆர்ச் பிஷப்புக்கும் மற்றவருக்கும் சீற்றம் எழுப்பியது எது? எட்வர்ட் ஓர் ஏழை மகளைத் திருமணஞ் செய்ய விரும்பியதேயாகும். அப்பெண்மணி இருவரை மணந்து விலகிய பாவியாம்! அந்தோ! கிறிது யாருக்காக உலகில் வந்தார்? ஆர்ச் பிஷப் பதிலிறுப்பாராக. பைபில் என்ன சொல்கிறது? சத்தியச் சுவிசேஷம் என்ன சொல்கிறது? .jǤâuU¡F¢ சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது - மத்தேயு : 11 : 5. நீதிமான்களை யல்ல பாவிகளையே மனந்திரும்ப வேண்டுமென்று அழைக்க வந்தேன் என்றார் - லூக்கா : 5 : 32. பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை (கிறிதுவை)க் கேட்டுக் கொண்டான்; அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய்ப் பந்தியிருந்தார். இதோ அந்த ஊரில் பாவியெனப் பேர் வாங்கின ஒரு திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதையறிந்து ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் பரிமளத் தைலம் கொண்டுவந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைக்கத் தொடங்கித் தன் தலைமயிரினால் துடைத்து அவர் பாதங்களைத் திரும்பத் திரும்ப முத்தஞ்செய்து பரிமள தைலத்தைப் பூசினாள். அவரையழைத்த பரிசேயன் அதைக் கண்டு இவர் தீர்க்கதரிசி யென்றால் தம்மைத் தொடுகிற திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இயேசு அவனிடம்: சீமானே, உனக்கு நான் ஒரு காரியஞ் சொல்லவேண்டுமென, அவன்: சொல்லும், போதகரே என்றான். அப்பொழுது அவர்: ஒருவனிடம் இரண்டு பேர் கடன் பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு திநாரியமும் மற்றவன் ஐம்பது திநாரியமும் கொடுக்க வேண்டியதாயிருந்தது. கடனைத் தீர்க்க அவர்களுக்கு நிர்வாக மில்லாதபோது இருவருக்கும் மன்னித்து விட்டான். இவர்களில் எவன் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் எனச் சீமான்: எவனுக்கு அதிகம் மன்னித்து விட்டானோ அவனே என்று நினைக்கிறேன் என்றான். அவர் அவனிடம்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி அந்த திரீயின் பக்கமாய்த் திரும்பிச் சீமானை நோக்கி: இந்த திரீயைப் பார்; உன் வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தந்ததில்லை. இவளோ தன் கண்ணீரினால் என் கால்களை நனைத்துத் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ் செய்ததில்லை. இவளோ நான் உள்ளே வந்தது முதல் என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசின தில்லை, இவளோ என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்பு கூருவானென்று சொல்லி அவளைப் பார்த்து: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார். அப்பொழுது கூடப் பந்தி யிருந்தவர்கள்: பாவங்களையும் மன்னிக்கிற இவர் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்கள். அவரோ அந்த திரீயி னிடம்: உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது. சமாதானமாய்ப் போ என்றார். - லூக்கா : 7 : 36 - 50. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரண்டை வந்து கொண்டிருந்தார்கள். பரிசேயரும் வேத பாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் இந்த உவமையைச் சொன்னார்: உங்களில் நூறு ஆடுகளையுடைய எந்த மனுஷன் அவைகளில் ஒன்று காணாமற்போனால் தொண்ணூற்றொன்பது ஆடுகளையுங் காட்டிலே விட்டுப்போய்க் காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியான்? கண்டுபிடிக்கவே அவன் சந்தோஷமாய் அதைத் தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சிநேகிதரையும் அயலாரையுங் கூட வர வழைத்து: காணாமற் போன என் ஆட்டைக் கண்டு பிடித்தேன், என்னோடு சந்தோஷப்படுங்கள் என்பானே; அதுபோலவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப்பற்றி யுண்டாகும் சந்தோஷத்திலும் மனந்திரும்பும் ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷம் அதிக மாகுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அன்றியும் பத்து வெள்ளிக் காசையுடைய எந்த திரீ அதில் ஒரு வெள்ளிக் காசு காணாமற் போனால் விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி அதைக்கண்டுபிடிக்கிற வரைக்கும் கவனமாய்த் தேடாமலிருப்பாள்? கண்டுபிடிக்கவே, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையுங் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன். என்னோடு சந்தோஷப்படுங்கள் என்பாளே. அதுபோலவே, மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் கடவுளின் தூதருக்குள் சந்தோஷமுண்டாகுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா : 15 : 1 - 10 கிறிது தரித்திரர்க்கென்றே வந்தார்; பாவிகளுக்கென்றே தோன்றினார். அவரடிச்சுவட்டைப் பற்றி நடப்போரும் தரித் திரர்க்கென்றும் பாவிகளுக் கென்றும் வாழ்தல் வேண்டும்; உழைத்தல் வேண்டும். கிறிது கிறிது என்று உதட்டளவில் சொல்வதாலும், அவர்தஞ் சுவிசேஷத்தைப் படிப்பதாலும், அதைப் பிரசாரஞ் செய்வதாலும் மட்டும் ஒருவர் கிறிதுவின் அடியவராகார். தரித்திரர் நலங் கருதியும், பாவிகள் நலங் கருதியும் மனமாரப் பாடுபடுவோரே கிறிதுவின் அடியவ ராவர். பிஷப்புக்கள் நீண்ட அங்கிகளைத் தரித்துச் சுவி சேஷத்தைப் பிரசாரஞ் செய்கிறார்கள்; ஜெபஞ் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தரித்திரர்க்கென்றும் பாவிகளுக்கென்றும் வாழ்கிறார்களில்லை. அவர்கள் பிரபுக்களுக்கென்றே வாழ் கிறார்கள். பிரபுக்களுக்கென்று வாழ்வோர் எங்ஙனங் கிறிது வுக்கு அடியவராயிருத்தல் கூடும்? பிறர் குற்றம் கிறிதுவின் அடியவர் பிறர் குற்றம் பாராட்டலாகாது. பிறர் குற்றம் பாராட்டுவோர் தங்குற்றம் உணராதவராவர். அவர் தெய்வப்பிள்ளைகளாதல் அரிது. குறைவிலா நிறைவாயிருப் பவன் ஆண்டவன் ஒருவனே. குறைவிலா நிறைவே கோதிலா அமுதே... என்பது திருவாசகம். இவ்வுண்மை யுணர்வோர் பிறர் குற்றம் பாராது தங்குற்ற முணர்ந்து அதைக் களையவே முயல்வர். இதுபற்றிச் சுவிசேஷம் சொல்வது வருமாறு :- நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைக் கவனியாமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைப் பாராமலிருந்து கொண்டு உன் சகோதரனிடத்தில் : சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடுகிறேன் பொறு என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே, முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு. பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடத் தெளிவாய்ப் பார்ப்பாய். - லூக்கா : 6 : 41 - 2 இத்திருமொழியின் நுட்பம், காண்டர்பரி ஆர்ச் பிஷப் முதலியோர் நெஞ்சில் நின்று, இரத்தத்தில் ஒன்றியிருந்தால், எட்வர்ட் விரும்பிய பெண்மணியைப் பொல்லார் என்று கருதி ஒதுங்கிச் செல்லார்; பிரபுக்கள் செய்த சூழ்ச்சிக்குத் துணை போயிரார்; தம்மைக் குணமுடையாரெனக் கருதி இறுமாப் படையார். தன்னை உயர்த்துகிறவ னெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - லூக்கா : 18 : 14 மன்னிப்பு எட்வர்ட் விரும்பிய பெண்மணி பாவியாயிருக்கலாம். பாவியாயிருப்பவரைப் பாவியாக விடுவதோ அறம்? பாவங் கருதி அவரை அழுமாறு தூண்ட வேண்டுவது அன்பர் கடமை. அவ்வூழியத்தை மேற்கொண்டவரே பிஷப்புக்கள். அப்பிஷப் புக்கள் ஒருவரைப் பாவி என்று எண்ணி ஓடினால் நாளைக்கு அவர்கள் கிறிதுபெருமான் முன்னிலையில் என்ன கூறு வார்கள்? எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் - மத்தேயு : 6 : 12 அப்பொழுது பேதுரு அவரிடத்தில் வந்து : ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால் நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்க, இயேசு : ஏழுதரம் மாத்திரமல்ல எழுபதுதர மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு : 18 : 21 - 2 உன் சகோதரன் பாவஞ் செய்தால் அவனைக் கண் டித்துப் பேசு. அவன் மன மாறினால் அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒரே நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றம் செய்து ஏழுதரம் உன்னிடம் வந்து. நான் மன வருத்தப்படுகிறேனென்று சொன்னால் அவனுக்கு மன்னிக்க வேண்டும் என்றார். - லூக்கா : 17 : 3 - 4. இவ்வறவுரைகளையும், காண்டர்பரி ஆர்ச் பிஷப் முதலி யோர் நிலையையும் நேயர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக. காண்டர்பரி ஆர்ச் பிஷப்புக்கும் மற்றவர்க்கும் பைபில் தெரியாதோ? சுவிசேஷம் தெரியாதோ? நன்றாகத் தெரியும்; தெரிந்தும் என்ன பயன்? பிரபுக்களோடு நீண்ட நாள் பழகிப் பழகி அவர்கள் மயமாகி நிற்பவர் எளிய கிறிதுவின் போதனை வழி நிற்றல் அரிதே. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் - சொல்லிய வண்ணஞ் செயல் என்றார் வள்ளுவனார். பிரபுக்களின் கூட்டுறவால் காண்டர்பரி ஆர்ச்பிஷப்பும் மற்றவரும் நீண்ட காலமாகக் கிறிதுவின் உண்மைப் பிள்ளை களாகாமல் வாழ்ந்தாலும், அவர்களிடத்துக் கிறிது பெரு மானுக்குக் காழ்ப்பில்லை; கருணையேயுண்டு. கிறிது பெரு மான் கருணையால் அவர்கட்கு ஒரு நல்ல வாய்ப்பு நேர்ந்தது. அவ்வாய்ப்பையாதல் அவர்கள் பயன்படுத்திக் கொண் டார்களா? காதல் மணம் கடவுளருளால் கூடுவது. அதை நடாத்து விக்கப் பிஷப்புக்கள் கடமைப்படல் வேண்டும். அதைத் தகையவோ மறுக்கவோ பிஷப்புக்கட்கு உரிமையில்லை, காண்டர்பரி ஆர்ச்பிஷப்பும் மற்றவரும் என் செய்தனர்? எட்வர்டின் காதல் மணத்தைத் தகைய முயன்றனர்; அதை நடாத்துவிக்க மறுப்புரை பகர்ந்தனர். இது கிறிதுவ தரும மாகாது. கிறிதுவின் அருளால் நேர்ந்த வாய்ப்பையும் பிஷப் புக்கள் நன்முறையில் பயன்படுத்தினார்களில்லை. பரலோகத்துள்ள கிறிது பெருமான், அந்தோ! என்ன அநியாயம்! என் பெயரால் அநியாயம்! என் பெயரை முழக்கிக் கொண்டு பிஷப்புக்கள் அநியாயஞ் செய்கிறார்கள்! காதல் மணத்துக்குக் கேடு சூழ்கிறார்கள்! காதல் மணத்துக்குக் கேடு சூழ இவர்கள் யார்? பிஷப்புக்கள் என்ன செய்கிறார்களென்று அவர்கட்குத் தெரியவில்லை. பாவம்! பாவம்! என்று மன மிரங்கி, எட்வர்ட்டின் காதல் மணத்துக்குக் கருணை செய் திருப்பர். காதல் மணத்துக்குக் கேடுசூழ முயன்ற பிஷப்புக்கள் கிறிதுவின் திருவுள்ளக் குறிப்பை உணரும் ஆற்றலுடைய வர்களல்லர். ஏழைகளிடத்தன்பும் பாவிகளிடத்திரக்கமும் உடையவர்களே கிறிதுவின் திருவுள்ளக் குறிப்பை யுணர வல்லவர்களாவார்கள். பிரபுக்கள் வழி நிற்கும் பெரிய பிஷப் புக்கள் கிறிதுவ தருமத்துக்கு மாறுபட்டு நடந்தார்கள். அவர்களைக் கேட்பார் யார்? கிறிது பெருமான் ஒருவரே அவர் தம் அநியாயத்தைக் கேட்டல் வேண்டும். நியாயத் தீர்ப்புக்கு முன்னரே பிஷப்புக்கள் தங்கள் தவறுதல்களை உணர்ந்து கசிந்து கசிந்து உருகுவார்களாக; கிறிதுவின் கருணைக்குத் தங்களை உரியவர்களாக்கிக் கொள்வார்களாக. எட்வர்ட் விரும்பிய பெண்மணியி னிடத்தில் குறைபாடுக ளிருக்கலாம். அவைகளை அவர்க்குணர்த்தி அவரை நல்வழிப் படுத்தவன்றோ பிஷப்புக்கள் முயன்றிருத்தல் வேண்டும்? அரசியல் கூட்டத்தவருடன் கூடிப் பிஷப்புக்கள் அன்பை இழப் பது அறிவுடைமையாகாது. எட்வர்ட் காதலித்த நங்கையார் நாத்திகரல்லர்; அவர் கிறிது நேயர்; கோயிலுக்குச் செல்வோர். அவரைக் கசிந்து கசிந்து முறையிடச் செய்வது அருங்காரிய மன்று. நன்முறையில் கிறிதுவின் தொண்டு செய்யவா பிஷப்புக்கள் வாழ்கிறார்கள்? அவர்கள், மாடிகளில் உலாவி, மஞ்சத்தில் உறங்கி, விலாப்புடைக்கத் தின்று, களியாட்டயருங் கூட்டத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் எளியரைக் காயாது என் செய்வார்கள்? நீண்ட அங்கியும், பருத்த பட்டையும் ஒரு வரைக் கிறிதுவராக்கா. ஏழைகளிடத்தன்பும், பாவிகளிடத் திரக்கமும் ஒருவரைக் கிறிதுவராக்கும். காண்டர்பரிஆர்ச் பிஷப்பும் மற்றவரும் சோதனையில் வழுக்கி வீழ்ந்தனர். அவர்கள் தங்கள் பிழை குறித்து இனியாதல் வருந்தி வருந்தி அழுவார்களாக; அழுதால் அவர்களையுங் கிறிது காப்பார். எட்வர்ட் வெற்றி எட்வர்ட் என் செய்தார்? அவர் கிறிதுவின் வழி நின்றாரா? சாத்தான் வழி நின்றாரா? அவர் முன்னே உறுதி மொழியும் நின்றது; சாம்ராஜ்யப் பதவியும் நின்றது. உறுதி மொழி கிறிதுவின் இருக்கை; சாம்ராஜ்யப் பதவி சாத்தான் இருக்கை. எட்வர்ட் எவர் பக்கம் நின்றார்? அவர் கிறிதுவின் பக்கமே நின்றார். சாத்தான் வல்லமை அவரை ஒன்றுஞ் செய்ய வில்லை. சாத்தான் ஆற்றல் எட்வர்ட் முன்னே விழுந்துபட்ட தென்றே கூறலாம். சோதனையில் எட்வர்ட் வெற்றியே பெற் றார். சோதனையில் வெற்றி பெற்றவரல்லரோ தியாகமூர்த்தி யாதல் கூடும்? 10. தியாகம் உறுதிமொழி காப்பது ஆண்டவன் ஆணைவழி நிற்ப தாகும். ஆண்டவன் ஆணைவழி நிற்பதாவது உரிமை யுணர்வு வழி நின்று வாழ்வது. உரிமையே மக்களின் உயிரணி. அவ்வணி இழந்தவர் மக்களாகார். அவர் உயிர்நிலை யற்றவர்; என்புதோல் போர்த்தவர். எக்காரணம் பற்றியும் உரிமையுணர்வை இழத்த லாகாது. எட்வர்ட் உரிமை யுணர்வினர்; அதை உயிரணியாக் கொண்டவர். அவர் உரிமையின் பொருட்டு ஒரு பெரும் சாம் ராஜ்ய இன்பத்தைத் துறந்தார். எட்வர்ட் மனிதரில் மனித ரானார். அவர் வாழ்வில் வெற்றி பெற்றவரானார். எட்வர்ட் ஒரு பெருஞ் சாம்ராஜ்யத் தலைமை பூண்டவர். அத்தலைமைக்குமேல் வேறொரு தலைமை அச்சாம் ராஜ்யத்தி லில்லை. அப்பெரும் பதவியிலுள்ள ஒருவர் தமது மனத்துக் கிசைந்த ஒரு பெண்மணியை மணக்க விரும்பினார். அவ்விருப் பத்துக்கு மந்திரி சபை இசைந்து வரவில்லை. சாம்ராஜ்யத் தலைவருக்குச் சோதனை ஏற்பட்டது. என்ன சோதனை? சாம்ராஜ்யம் பெரிதா? fhjš bgÇjh? என்னுஞ் சோதனை. உரிமையா? பதவியா? எட்வர்ட்டுக்கு சாம்ராஜ்யம் பெரிதாகத் தோன்றிற்றா? காதல் பெரிதாகத் தோன்றிற்றா? காதலே பெரிதாகத் தோன்றிற்று. அவர் என்ன நினைத்திருப்பர்? நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யத் தலைவர்; நமக்கு மேல் வேறொரு தலைவர் சாம்ராஜ்யத்திலில்லை. இத்தகைத் தலைமை தாங்கியுள்ள நமக்கு, நாம் விரும்பிய பெண்ணை மணஞ் செய்யும் உரிமை யில்லையே. v‹nd rh«uh{a¤ jiyik! என்று நினைத் திருப்பர். இந் நினைவெழும் நெஞ்சினார்க்குச் சாம்ராஜ்யத் தலைமை எங்ஙனந் தோன்றும்? அஃது இன்பமாகத் தோன் றுமா? அது சுமையாகத் தோன்றும்; தளையாகத் தோன்றும்; சிறையாகத் தோன்றும். உரிமையற்ற இடம் எத்தகைய தாயினும் அது சிறையேயாகும். சகோதரர்களே! உலக வாழ்வை நோக்குங்கள். பதவி இன்பத்தைச் சிந்தியுங்கள்! ஒரு பெரும் சாம்ராஜ்யத் தலை வருக்குத் தாம் விரும்பிய நங்கையை மணஞ் செய்து கொள்ளும் உரிமை யில்லை! இவ்வுரிமை காட்டில் விலங்கொடு வாழும் குறவனுக்கு உண்டு. ஒருபெரும் மன்னர் மன்னருக்கு அவ்வுரிமை இல்லை! என்னே உலகம்! இங்கிலாந்து உரிமை நாடாம்! எட்வர்ட் எத்தகையவர்? அவர் உரிமையில் பிறந்து, உரிமையில் வளர்ந்து, உரிமை வண்ணமாயிருப்பவர். அத்தகைய ஒருவர் சாம்ராஜ்யப் பதவியின் பொருட்டு உரிமையைப் பறிகொடுப்பரோ? ஒருபோதுங்கொடார். அவர் என் செய்தார்? சாம்ராஜ்யப் பதவியையே துறந்தார். துறந்தமையால் அவர் உரிமைக் கடவுளுக்கு உரிமைப் பிள்ளையானார். காதல், உரிமை யுணர்வினின்றும் பிறப்பது. அதைப் பறிகொடுப்பது உரிமையைப் பறிகொடுப்பதாகும். மக்கள் எதையும் பறி கொடுக்கலாம். ஆனால் உரிமையை மட்டும் பறி கொடுத்தலாகாது. உயிருள்ள வரை உரிமைக்காகப் போராடியே தீர்தல் வேண்டும். உரிமை எல்லாவற்றினும் விழுமியது. அதன் பொருட்டு எதையும் இழக்கலாம். உரிமை இழந்து மன்னராக வாழ்வதினும், உரிமை இழவாது ஏழையாய் வாழ்வது சிறப்பு. உலகில் மக்கள் எப்படி வாழ்தல்வேண்டும்? 1நாமார்க்குங் குடியல்லோம் என்றும், 1என்று நாம் யாவர்க்கு மிடைவோ மல்லோம், இருநிலத்தில் எமக்கு எதிராவார் யாருமில்லை என்றும் வாழ்தல் வேண்டும். இவ்வாழ்வே இன்ப வாழ்வாகும். ஆகவே, உரிமையுணர்வினின்றும் முகிழ்க்குங் காதலைப் பறிகொடுப்பது உரிமையையே பறிகொடுப்பதாகும். காதல் பெரிது; மிகப் பெரிது; அஃது உலகினும் பெரிது; அண்டங் களினும் பெரிது; எல்லாவற்றிற்கும் மேலாகவுள்ள கடவுளினும் பெரிது. காதலில் ஈடுபட்டவர்க்கே காதலின் பெருமை புலனாகும். எட்வர்டுக்குச் சாம்ராஜ்யத்தினுங் காதலே பெரிதாகத் தோன்றிற்று. சாம்ராஜ்ய இன்பத்தின் பொருட்டு எட்வர்ட் காதலை நெகிழ விட்டிருப்பாராயின், அவரை உலகம் மனித ராகவே கொள்ளாது. இப்பொழுது எட்வர்ட் எப்படி மதிக்கப் படுகிறார்? அவர் மனிதரில் மனிதராக மதிக்கப்படுகிறார்; உரிமைக்கு உறையுளாக மதிக்கப்படுகிறார்; காதலுக்கு ஓர் இலக்கியமாக மதிக்கப்படுகிறார். தற்கால உலகில் அவரே பெரியவராக மதிக்கப்படுகிறார். உரிமை யுணர்வுடையார் எதையுந் தியாகஞ் செய்ய முற்படுவர். அவ்வுணர்வில்லாதார் தியாகத்துக்கு அஞ்சுவர். எட்வர்ட், உறுதிமொழியின் பொருட்டு - உரிமைக் காதலின் பொருட்டு - பெருந் தியாகஞ் செய்தார். அவர் தியாகத்தின் பொருளானார்; தியாகத்தின் இலக்கியமானார்; தியாக மேயானார் என்றுங் கூறலாம். உலகச் சரித்திரத்தில் எட்வர்டின் தியாகத்தைப் போன்றதொரு தியாகமில்லை. எட்வர்டின் தியாகம் உலகத்துக்கே ஒரு பெரும் பாடமாக நிற்கிறது. தேசங்களின் பொருட்டும், சாம்ராஜ்யங்களின் பொருட் டும் உலகில் போராட்டம் மிகுந்துள்ள வேளையில் எட்வர்ட் ஒரு பெரும் சாம்ராஜ்யப் பதவியைத் துரும்பாக நினைந்து அதைத் துறத்தல் நேர்ந்தது. அந்நிகழ்ச்சி நேர்ந்த சமயத்தை உன்னுதல் வேண்டும். உன்ன உன்ன ஆண்டவன் திருவுள்ளக் குறிப்புப் புலனாகும். உலகை நல்வழிப் படுத்த ஆண்டவன் இத்தகைய நிகழ்ச்சிகள் நேரத் திருவுள்ளங் கொள்வன். அதைக் கண்டு உலகம் மனந்திரும்புதல் வேண்டும். பொல்லாத உலகமே! சாத்தான் உலகமே! போராட்டத்தை ஒழிப்பாயாக; அவரவர் இயற்கைவழி நடக்க விடுவாயாக; நீ ஆண்டவன் உலகமாவாய்; உரிமை இன்பம் நுகர்வாய். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. - திருமூலர் மனிதர் யார்? தியாகத்தைப் பற்றிய சரித்திரங்கள் பல உண்டு. ஒவ் வொன்றைப் பற்றி ஒவ்வொரு விதத் தியாகம் நிகழ்ந்திருக்கிறது. எட்வர்டின் தியாகம் உரிமையை அடிப்படையாகக் கொண்டது. உரிமையின் பொருட்டு அவர் செய்த தியாகத்தை உன்ன உன்ன அவர்தம் உள்ளநிலை புலனாகும். எட்வர்ட் தியாகஞ் செய்த பதவி எத்தகையது? அஃது ஒரு ஜில்லா போர்ட் தலைமைப் பதவியா? ஒரு சட்டசபைத் தலைமைப் பதவியா? ஒரு மாகாண மந்திரி பதவியா? ஒரு கவர்னர் பதவியா? ஓர் அரச பதவியா? ஒரு சக்கரவர்த்தி பத வியா? அஃது இவை யெல்லாவற்றினும் பெரிதாய சாம்ராஜ்யப் பதவியன்றோ? சிறு சிறு அமைப்பின் தலைமைப் பதவியை இழக்க மக்கள் எளிதில் ஒருப்படுகிறார்களா? தம்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மலிந்தாலும், தம்மைப் பிடித்துத் தள்ளினாலும், ஊரார் சீ! Ó! என்று எள்ளினாலும் ஒரு சிறிய அமைப்பின் பதவியை விட்டகல இக்காலத்தவர் விரும்புகிறாரா? அவர் மானத்திலும் பதவியையே பெரிதாக மதிக்கிறார்; அதற்காக அவர் எவ்வளவு பாடுபடுகிறார்! உழைக்கிறார்! இழிதுறை களிலும் இறங்குகிறார்! அவர்தம் மனம் உடும்பினுங் கடுமை யாகப் பதவியைப் பற்றிக் கிடக்கிறது. அவர்கள் மனிதர்களா? ஒரு பெரும் சாம்ராஜ்யப் பேற்றை உரிமையின் பொருட்டு ஒரு நொடியில் தியாகஞ் செய்த ஒருவர் மனிதரா? மனிதப் பிறவி தாங்கினவ ரெல்லாரும் மனிதராவரோ? மனிதரிலுங் கல்லுண்டு; மரமுண்டு; விலங்குண்டு; மானங் கெட்ட மருளுண்டு. மனிதரில் மனிதராக விளங்குவோரே மனிதப் பிறவி தாங்கிய பயனைப் பெற்றவராவர். இதோ! இந்நாளில் எட்வர்ட் மனிதரில் மனிதராக விளங்குகிறார். உரிமையுணர்வு அவரை மனிதரில் மனிதராக்கியது; தியாகம் அவரை மனிதரில் மனிதராக்கியது. அவர் உரிமை யிழந்து, வானேயும் பெறில் வேண்டேன்; மண்ணாள்வான் மதித்து மிரேன் என்று உறுதி கொண்டார். அதனால் அவர் தியாக மூர்த்தியானார்; தியாக மூர்த்திகள் சங்கத்தில் தலைவரானார். தியாகம் வேறு, எட்வர்ட் வேறா? தியாகமே எட்வர்ட்; எட்வர்டே தியாகம். தியாகம் என்பதற்கு அகராதியில் இனி எட்வர்ட் என்று பொருள் பொறிக்கலாம். இராமபிரான் எட்வர்ட் தியாகம் நினைவிலுறும்போது, அதைத் தொடர்ந்து இராமபிரான் தியாகமும் நினைவில் உறுகிறது. - அயோத்தியில் முடிசூட்டு விழா. அயோத்தி முழுவதும் அவ்விழா மயம். முனிவரெல்லாம் போந்துள்ளார்; மன்ன ரெல்லாம் கூடியுள்ளார்; சேனைகள் திரண்டுள்ளன; ஆடவர் அணி அணியாக நிற்கிறார்; மகளிர் நிரை நிரையாக நிற்கிறார்; கங்கை நீர் காத்துக் கொண்டிருக்கிறது; வசிட்டர் சித்தமா யிருக்கிறார்; எங்கணும் மகிழ்ச்சி; மகிழ்ச்சியின் பொங்கல். அந்நிலையில் - அவ்வேளையில் - என்ன நிகழ்ந்தது? கைகேயி நுழைந்தார்; இராமபிரானைக் கண்டார்; கண்டு என்ன சொன்னார்? ஆழிசூ ழுலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு பூழிவெங் கான நண்ணிப் புண்ணியத் துறைக ளாடி ஏழிரண் டாண்டின் வாவென் றியம்பின னரச னென்றாள் இவ்வுரை கேட்டதும் இராமபிரான் முகம், அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா! அவர் உடனே என்ன செய்தார்? அன்னாய்! மின்னொளிர் கான மின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன் என்று கூறிக் காடு நோக்கினார். இராமபிரானுக்கு என்ன இல்லை? தோள்வலி இல்லையா? ஆள்வலி இல்லையா? கோதண்டமில்லையா? முனிவரெல்லாம் அவர் பக்கம்; மன்னரெல்லாம் அவர் பக்கம்; படைகளெல்லாம் அவர் பக்கம்; குடிகளெல்லாம் அவர் பக்கம்; இலக்குமணன் அவர் பக்கம்; எல்லாம் அவர் பக்கம். எல்லா முடைய இராமபிரான் எதிர்ப்பை நினைந்தாரா? அந்நினைவே அவர்தம் நெஞ்சில் எழவில்லை. போகின்றேன் விடையுங் கொண்டேன் என்று அவர் புறப்பட்டார். மிக அணித்தே நெருங்கி வந்த அரச இன்பத்தை - திருமுடியை - நொடிப்பொழுதில் இராமபிரான் துறந்தார்! அஃதன்றோ தியாகம்? அத்தியாகம் அந்நாளையது; எட்வர்ட் தியாகம் இந்நாளையது. சகோதர வாஞ்சை எட்வர்ட் அரசு துறந்த வேளையில் வெளியிட்ட அறிக்கை யிலும், சாம்ராஜ்ய மக்களுடன் பேசிய பேச்சிலும் பல செம் பொருள்கள் செறிந்து கிடக்கின்றன. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று சகோதர வாஞ்சை; மற் றொன்று பெண்ணின் பெருமை. அன்புக்கு அறிகுறி சகோதர வாஞ்சை. தம்முடன் பிறந்த சகோதரரை நேசியாத ஒருவர், உலகை எங்ஙனம் நேசிக்க வல்லார்? உலகிலுள்ள உயிர்களையெல்லாம் சகோதரமாக் கொண்டு, அவைகளைத் தம்மைப்போல் நேசிக்கும் நிலையே பந்தத்தையறுப்பது; வீடுபேற்றை யளிப்பது. தன்னலமே பந்தத்தைப் பெருக்குவது; வீடுபேற்றைத் தகைவது. சகோதர நேயத்தை வளர்ப்பதற்கென்று குடும்பங்கள் அமைகின்றன; சகோதரர்கள் தோன்றுகிறார்கள். குடும்பத்தில் தம்முடன் பிறந்த சகோதரரைத் தம்மைப்போல் நேசிப்பவரிடம் உலக சகோதர நேயம் (Universal Brotherhood) தானே வளரும். உடன்பிறந்தவரை நேசியாத ஒருவர் உலகை நேசித்தல் அரிது. உலக சகோதர நேய வளர்ச்சியின் பொருட்டுக் குடும்பமென்றும் சகோதரமென்றும் இயற்கையில் அமைகின்றன. சகோதரநேயம் அற்றவர் இயற்கைவழி நில்லாதவரென்க. கைகேயி, இராமபிரானை வேறாகவும், பரதனை வேறா கவும் பிரித்துப் பேசினார். இராமபிரானோ அவ்வாறு பிரித்துப் பேசினாரில்லை. அவர், பின்னவன் பெற்ற செல்வம் அடிய னேன் பெற்ற தன்றோ என்றார். இராமபிரான் தியாகமூர்த்தி யாதலான், அவர் தம்மினின்றும் பரதனை வேறாகக் கொண் டாரில்லை. தியாகமுள்ள விடத்தில் சகோதர நேயமும் இருந்தே தீரும். இராமபிரான், பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்று தம்முடன் பிறந்தவரைத் தம்மைப் போலவே நேசித்தமையால், அவர் வேடனையும், குரங்கையும், அரக்கனையும் சகோதரராகக் கொள்ளுந் தன்மையுடையவ ரானார். இராமபிரான் சபரியின் அன்புக்கு எளிமையானதும், அணிலுக்கு அருளியதும், இன்ன பிறவுங் கருதற்பாலன. தன்னுடன் பிறந்த சிங்கமுகன் மாண்டபோது சூரபன்மன் என்னென்னவோ சொல்லி அழுதான். அவ்வழுகையில் சகோ தரவாஞ்சையே தேங்கிக் கிடக்கிறது. ஒரு குறிப்பு வருமாறு:- பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னை யுளபொருளை யெல்லாம் பெறலாகும் என்னை யுடைய இளையோனே இப்பிறப்பில் உன்னை யினிப்பெறுவ துண்டோ உரையாயே எட்வர்ட் தியாகத்திற் சிறந்தவராதலான், தமது அரச பதவியைத் தம்முடன் பிறந்தவர்க்கு வழங்கிச் சென்றார். பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னும் மொழிக்கு எட்வர்ட் இலக்கியமானார். அறியாமை மிகுந்த பிரபுக்களுக்கும் மற்றவர்கட்கும், எட்வர்டும் யார்க்கோமகனாரும் வேறாகத் தோன்றலாம். எட்வர்ட்டுக்கு அங்ஙனந் தோன்றவில்லை. நாம் அனைவரும் இப்பொழுது ஒரு புதிய மன்னரைப் பெற்றிருக்கிறோம். அவர்க்கும் குடிமக்களாகிய உங்களுக்கும், மகிழ்வும் நலனும் உண்டாக என்று மனமார வாழ்த்துகிறேன் எனவரூஉம் எட்வர்ட் மொழிகளை நோக்குக. அவைகளில் சகோதர நேயம் உறைதல் காண்க. பெண்ணின் பெருமை மற்றொன்று பெண்ணின் பெருமை. உலகில் ஆண்மகன் எவன்? பெண்ணின் பெருமையுணர்ந்தவனே ஆண்மகனாவன். எட்வர்ட், பெண்ணின் பெருமையுணர்ந்த பெரியவர். அவர் தமது பேச்சில் யான் காதலித்துள்ள பெண்ணணங்கின் கூட்டுறவின்றி அரசைத் தாங்குதல் என்னால் இயலாதென்பதை நன்கு தெளிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். சாம்ராஜ்யத் தொண்டுக்கு முதலாவது வேண்டற்பாலது அன்பு. அன்புக்கு உறையுள் பெண்மை. பெண்மையுடன்கூடி வாழ வாழ ஆண்மையில் அன்பு சுரக்கும். தனித்த ஆண்மையில் அன்பு சுரவாது. ஆணின் அன்பூற்று, வன்கண் என்னும் பாறை யால் அடைபட்டுக் கிடக்கிறது. அவ்வாண், பெண்ணின் சேர்க்கை பெற்றதும் அவனது வன்கண் பாறை உடைபடும். பெண்ணுடன் கூடி வாழாத மகன் முழுமையனல்லன். பெண் பாதி சேர்ந்தால் அவன் முழுமையனாகிறான். இயற்கைக் கூறு ஒவ்வொன்றும் பெண் ஆணாயிருத்தல் கண்கூடு. பெண் ஆணா யுள்ள இயற்கையின் காரணமும் பெண் ஆணாகவே இருத்தல்வேண்டும். காரணம் எது? இறை, இறையைப் பெண் ஆணாகவே நம் முன்னோர் போற்றினர். குவளைக் கண்ணிக் கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க (மாணிக்கவாசகர்) என்றும், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே (மாணிக்கவாசகர்) என்றும், மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே (சம்பந்தர்) என்றும், ஆன்றோர் அருளியுள்ளதைச் சிந்திக்க. ஆகவே உலகில் வாழும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியுடன் வாழ்வதே இயற்கை - இறைநெறி நின்று ஒழுகுவதாகும். இதுபற்றிப் பெண்ணின் பெருமை என்னும் நூலில் விரித்துக் கூறி யுள்ளேன். விரிவு அந்நூலிற் காண்க. எட்வர்ட் பெண்ணுடன் வாழ விரும்பியது இயற்கை - இறை நெறிக்கு அரண் செய்வதாகும். சாம்ராஜ்யத் தொண்டுக் கென்று பெண்ணுடன் வாழ்தலை அவர் விரும்பியது ஈண்டுச் சிறப்பாகக் கருதத்தக்கது. மனத்துக்கினிய பெண்ணுடன் வாழ்வதே தொண்டுக்கு எழுச்சி யூட்டுவதாகும். அதனால் எட்வர்ட், யான் காதலித்துள்ள பெண்ணணங்கு... என்றார். தாம் காதலித்த பெண்மணியைத் தாம் மணஞ் செய்தற்குத் தாம் ஏற்றுள்ள சாம்ராஜ்யத் தலைமையே ஊறாக நிற்கச் சிலர் சூழ்ச்சி செய்தமையான், அவர் அத் தலைமைப் பதவியைத் துறத்தல் நேர்ந்தது. இஃது, எட்வர்ட் பெண்ணின் பெருமை யுணர்ந்த பெரியவர் என்பதைச் செவ்வனே தெரிவிக்கிற தன்றோ? வாழ்வுத் துறைகள் பல. அவை எதற்கு? பெண்ணின் பெருமை யுணர்ந்து நடப்பதற்கென்க. பெரியவரென்று போற்றப்படுவோ ரெல்லாரும் பெண்ணின் பெருமையுணர்ந்து நடந்தவரேயாவர். அவர்தம் வரலாறுகள் நூல்களாக எழுதப் பட்டுள்ளன. அவைகளின் வாயிலாகப் பெண்ணின் பெரு மையை யுணர்ந்து உலகம் நடந்து உய்தல் வேண்டும் என்னும் நோக்குடன் அவைகள் எழுதப்பட்டன. இராமபிரான் பெண்ணின் பெருமை யுணர்ந்த வீரர். அவர் ஒரு பெண்ணரசியின் பொருட்டுக் காடு கடந்து, மலை கடந்து, யாறு கடந்து, கடல் கடந்து போராடியதை இராமா யணங் கூறுகிறது. பாரதப் போர் எவர் பொருட்டு நடந்தது? ஒரு பெண்மணியின் பொருட்டன்றோ? பெரிய புராணம் பெண்ணின் பெருமை பேசும் நூலேயாகும். திருநீலகண்ட நாயனாரை நல்வழிப்படுத்தியவர் யாவர்? அவர்தம் மனைவிய ரல்லரோ? திருநாவுக்கரசருக்கு ஞானதீட்சை செய்தவர் யார்? திருஞானசம்பந்தரை உலகிற்கு வரவழைத்தவர் யார்? பெண் மணிகளே யாவர். விளக்கம் பெரிய புராணத்திற் பார்க்க. பெண்ணின் பெருமை யுணர்ந்து நல்வாழ்வு நடாத்து வோரே பெரியவர். மற்றையோர் பேயர். எட்வர்ட் பெண்ணின் பெருமையுணர்ந்த பெருந்தகையாளர். எட்வர்ட் பெண்ணின் பொருட்டு ஒரு பெரும் பதவியை இழந்தவரல்லரோ? 11. பணியும் பதவியும் காதலின் பொருட்டு எட்வர்ட் சாம்ராஜ்யப் பணியைத் துறக்கலாமா? அதற்கென்று நேர்ந்த வாய்ப்பை அவர் நெகிழ விடலாமா? என்று சிலர் கருதலாம். பணிக்கஞ்சி எட்வர்ட் சாம் ராஜ்யத்தைத் துறந்தாரில்லை. பணியைத் துறத்தலும், அதற் கென நேரும் வாய்ப்பை விடுத்தலுந் தவறு என்பதை அவர் நன்கு உணர்ந்தவரே. நிலைமையை உணராது அவர்மீது பழி சுமத்து வது பாவம். மனிதப் பிறவி எற்றுக்கு? கல்வி கற்பதும், இல்லறமேற் பதும், பொருளீட்டுவதும் எற்றுக்கு? பணி செய்தற்கல்லவோ? பணியே மனிதரை மனிதராக்குவது. பணி செய்யச் செய்ய மனித ரிடத்துள்ள தீய இயல்புகள் படிப் படியே குறைந்துபோகும். அத்தகைய பணியில் கருத்திருத்தாத மனிதர் மேனிலை எய்தல் இயலாது. அவர்தம் வாழ்வு சிறை நீர் போலச் சாம்பும். எவ்வெப்பணிக்கு எவ்வெவ்வழியில் எவ்வெவ் வாய்ப்பு நேர்கிறதோ, அவ்வவ் வழிநின்று, அவ்வவ் வாய்ப்பை நிஷ்காமிய முறையில் பயன்படுத்தி, அவ்வப் பணியை மகிழ்ச்சியொடு செய்வதே இயற்கை - இறைநெறியில் நிற்பதாகும். தத்தம் நலங்கருதாது ஒருவருக்கொருவர் செய்யும்பணி இறை பணியாய் விடுதலைக்குத் துணைபுரியும். இறை பணி என்பது தனித்து நிற்பதன்று. பயன் கருதாது உயிர்கட்குச் செய்யும் பணியே இறை பணியாகும். தன்னலங் கருதாப் பணியே பிறவியின் நோக் கத்தை நிறைவேற்றவல்லது. பணியைப் பற்றி, என்கடன் பணி செய்து கிடப்பதே என்னுந் தலைப்புடைய ஒருநூல் எழுதி யுள்ளேன். விரிவு அந்நூலிற் காண்க. எட்வர்ட் தமக்கு அமைந்த சாம்ராஜ்யப் பணியை வெறுத் தாரில்லை. அதற்கென நேர்ந்த வாய்ப்பையும் அவரே வலிந்து விட்டாரில்லை. சாம்ராஜ்யப் பணியில் அவருக்கு வெறுப்புத் தோன்றி யிருப்பின், அவர் இருபத்தைந்தாண்டு இளங்கோ வாகவும், ஓராண்டு மன்னராகவும் நின்று கடனாற்றியிரார். சாம்ராஜ்யப் பணிக்கென்றே எட்வர்ட் ஒரு பெண்மணியைக் காதலித்தாரென்று தெரிகிறது. அவர்தம் துறவுப் பேச்சை ஊன்றி நோக்கினால் உண்மை விளங்கும். யான் காதலிக்கும் பெண்ணணங்கின் கூட்டுறவின்றி அரசைத் தாங்குதல் இய லாது என்பது எட்வர்டின் பொன்மொழி. அரசு தாங்கப் பெண்மணிதேவை என்பது, பணியை வெறுப்பதா? பணிக்கு ஆக்கந் தேடுவதா? நேயர்களே! உன்னுங்கள். பணியும் பெண்ணும் பணிக்கு வாழ்க்கைத் துணையின் இன்றியமையாமையை எட்வர்ட் தமது துறவுப் பேச்சில் மற்றுமோரிடத்தில் வலி யுறுத்தியுள்ளார். தம் தம்பியார் தமக்குப் பின்னர் அரசராதல் வேண்டுமென்று எட்வர்ட் கட்டளையிட்டுத் தம்பியாரின் நல் லியல்புகளை வியந்து கூறினார்; கூறும்போது பணிக்குப் பெண் ணின் துணை தேவை என்பதையும் விளங்க வைத்தார். எனக்கு இதுகாறும் வாய்க்கப் பெறாததும், உங்களில் பலருக்கு வாய்த் ததுமான ஒரு நற்பேற்றை என் தம்பியார் பெற்றிருக்கிறார். அது மனைவி மக்களோடு கூடிய இன்ப வாழ்வுப்பேறு என்று எட்வர்ட் குறிப்பிட்டது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. அதன் உள்ளுறை என்னை? யான் ஏற்றுள்ள பணிக்குப் பெண் துணை யில்லை. அத்துணை பெறச் சாம்ராஜ்யப் பதவியே குறுக்கிட்டு நிற்கிறது. அத்துணை என் தம்பியார்க்கு உண்டு. ஆதலால் அப்பணிக்குரியார் அவரே என்பது அதன் உள்ளுறை. பணியின் ஆக்கத்துக்கென ஒருவர், தாம் விரும்பிய பெண்ணை மணஞ் செய்து கொள்ளத் தாம் ஏற்றுள்ள பதவியே குறுக்கிட்டால் அவர் என் செய்தல் வேண்டும்? பணியைத் துறப்பதா? பணிக்குத் தடையாக நிற்கும் பதவியைத் துறப்பதா? பணியைத் துறவாது பதவியைத் துறப்பதே அறம். குறிப்பிட்ட ஒரு பதவியின் வாயிலாகவே பணி செய்தல் வேண்டும் என்னும் நியதியில்லை. எந்நிலையில் நின்றும் பணி செய்யலாம். எட்வர்ட் என்ன செய்தார்? சாம்ராஜ்யப் பதவியைத் துறப்பினுந் துறப்பேன்; பணியைத் துறவேன் என்று உறுதி கொண்டார். அவ்வுறுதி பணியின் மாட்டு அவர்க்குள்ள ஆர்வத்தையே காட்டுகிறது. பணி பொது; பதவி வாய்ப்பு. வாய்ப்பு மாறுந்தகையது; பணி மாறுந் தகையதன்று. தோட்டிக்கும் பணி உண்டு; தொண்டைமானுக்கும் பணி உண்டு. பணியில் பெரிதுமில்லை; சிறிதுமில்லை. பணி எதுவாயினும் அதனடியில் நிஷ்காமியம் ஊர்தல் வேண்டும். அப்பணியே சிறந்தது. எட்வர்ட் சாம்ராஜ்யத்தைத் துறந்தாரே யன்றிப் பணியைத் துறந்தாரில்லை. அரச பாரம் என்னை விட்டகன்றது. மீண்டும் யான் நாடு நோக்கச் சின்னாளாகும். தேசத்தார் நலனை என்றும் நாடிய வண்ணமாயிருப்பேன்; மன்னருக்கு எப்பொழுதேனும் என் ஊழியம் வேண்டப்படுமானால் அதைச் செய்ய யான் தவறேன் எனவரூஉம் எட்வர்டின் மணிமொழிகளை நோக்குக. அவைகளில் பதவித் துறவும் பணியின் வேட்கையும் இருத்தல் வெள்ளிடைமலை. ஆகவே, எட்வர்ட் பணியில் வேட்கை கொண்டே அதற்குத் தடையாயுள்ள பதவியைத் துறந்தாரெனக் கொள்க. காதற் பெண்ணை மணஞ் செய்யக் கருதுவது பணியின் மாட்டுள்ள எழுச்சியேயாகும். பெண் வேண்டாம்; மண்வேண் டாம்; பொன் வேண்டாமென்று காட்டுக்கோ மலைக்கோ ஓடி அலைவோரே பணியை வெறுப்போராவர். எட்வர்ட் அவ் வினத்தைச் சேர்ந்தவரல்லர். எட்வர்ட் பணியை விரும்பும் பண் புடையார். அவர் பணிக்கஞ்சிச் சாம்ராஜ்யத்தைத் துறந்தார் என்று கருதுவது தவறு. பணிக்கென்றே அவர் சாம்ராஜ்யத்தைத் துறந்தாரென்க; பணிக்கென்றே அவர் திருமணஞ் செய்து கொண்டாரென்க. 12. திருமணம் எட்வர்ட் ஆதிரியாவில் ஒரு பதியில் வதிந்து வந்தார். திருமதி ஸிம்ஸன் பிரான்ஸிலுள்ள ஒரு சிற்றூரில் வதிந்து வந்தார். நண்பர் சிலரும், உறவினர் சிலரும் எட்வர்டைப் பார்த்துப் பார்த்துச் சென்றனர். இங்கே அவர்தம் சகோதரியார் போந்தது சிறப்பாகக் குறிக்கற்பாலது. வின்ஸர் கோமகனார் தாய் நாட்டை விடுத்து வெளி வந்ததும் பலதிற வதந்திகள் எழும்பின; பொய் மூட்டைகள் உருண்டன; பத்திரிகை யுலகில் பொல்லாத வாந்தி பேதிகளும், கொள்ளை நோய்களும் தோன்றின. அவை பிரிட்டனைக் கலக்கின. எல்லாம் நாளுக்கு நாள் தணிந்து அடங்கின. மக்களின் அன்பு பெரிய பிஷப்புக்கள் குறும்புகள் மட்டும் அடங்கவில்லை. அவர்கள் சமயம் நேரும்போதெல்லாம் வின்ஸர் கோமக னாரையும், திருமதி ஸிம்ஸனையும் தூற்றியே வந்தார்கள். அத்தூற்றல்கள் பலர் உள்ளத்தைப் புண்படுத்தின. அறிஞர் சிலர் பதிலிறுக்கப் புறப்பட்டனர். அவருள் ஒருவர் திரு. எச். ஜி. வெல் என்பவர். திரு. எச். ஜி. வெல் உலகறிந்த பேரறிஞர் என்பதை ஈண்டுச் சொல்ல வேண்டுவதில்லை. அவர், பிஷப்புக்களின் பொல்லாக் குறும்புகளை மறுத்துக் கூறிய மொழிகளில் சில வருமாறு:- எட்டாம் எட்வர்டைப் பற்றியும், அவரைச் சேர்ந்தவரைப் பற்றியும் ஆர்ச்பிஷப் குறை கூறுவது நியாயமாகாது. அவர் கூறும் முறையில் அவர்களிடம் தவறுதலில்லை. எட்வர்ட் கோஷ்டியினர் தூய வாழ்க்கையையே நடாத்தி வந்தனர். அவர்கள் பழைய வழக்க வொழுக்கங்களில் பற்றுடையவர்க ளல்ல... யான் திருமதி ஸிம்ஸனுக்காகப் பரிந்து பேச முன் வரவில்லை. ஒரு பெண்மணியைப் பற்றி மறைமுகமாக ஈனச் சொல் புகல்வது ஆண்மை யாகாது. அவ்வாறு புகல்வோரைக் குதிரைச் சவுக்கால் அடிப்பதே நியாயமாகும். மதக் குருக்கள் இத்தகைத் தண்டனையைப் பெறமாட்டார்கள். இந்த வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. எட்வர்ட் உரிமைகளைக் காப்பதற்கென்று ஒரு கழகமுங் காணப்பட்டது. பிஷப்புக்கள் வாய் பொத்திக் கொண்டார்கள். எட்வர்ட் மன்னர் பதவியைத் துறந்த பின்னரும் - அவர் பிரிட்ட னில் இல்லாத நேரத்திலும் - அவரிடம் அந்நாடு பரிவு காட்டியது போற்றற்குரியது. எட்வர்டின் செல்வாக்கு, பிஷப்புக்களுக்கும் மற்றவர்களுக்கும் செவ்வனே விளங்கலாயிற்று. பெருஞ் செல் வாக்குப் பெற்றுள்ள ஒருவர், தஞ் செல்வாக்கை யுன்னிக் கலாம் விளைக்கப் புகாது, மகிழ்ச்சியுடன் அரசு துறந்ததின் பெருந் தகைமையை என்னென்று கூறுவது? அந்நிலையில் கிறிது பிறந்த திருநாள் உற்றது. பிரிட்டன் வின்ஸர் கோமகனாரை மறக்கவில்லை. வாழ்த்துரைகளும் அன் பளிப்புகளும் பறந்தன. மேரி ராணியார் தம் அருமை மைந்த ருக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்தை அனுப்பினார். திரு. லாயிட் ஜார்ஜ் ஒரு தந்திச் செய்தி விடுத்தார். அதன் கருத்து வருமாறு: பழைய அமைச்சனின் கிறிதும வாழ்த்து. என்றும் தங்கள்பால் சிறந்த மதிப்புடையேன்; நிறைந்த அன்புடையேன். தங்களுக்கு விளைக்கப்பட்ட சிறுமைக் கயமை நிகழ்ச்சிகளைக் குறித்து வருந்துகிறேன்; கோழைகளின் செயல்களை வெறுக்கிறேன். குடி மக்களின் உள்ளங் கவர்ந்த ஒரு மன்னரைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இழந்ததனால் நேர்ந்த நஷ்டம் அளப்பரிது. மீண்டும் மீண்டும் சூழ்ச்சிகள் எழுந்தன. சூழ்ச்சிகள் எத்துணையோ உருவங் கொண்டெழுந்தன. திருமணத்தைத் தடுக்கச் சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. அவைகளெல்லாம் இரும்புண்ட நீராயின. உண்மை கடைப்பிடித்தொழுகுவோரிடம் எந்தச் சூழ்ச்சியும் ஒன்றும் செய்யா. நேர்மை யற்றுப் பதவி மோகங் கொண்டு பொய்மையில் உழல்வோரைச் சூழ்ச்சி ஆட்சி புரியும். அவரிடம் அது தன்னாணை செலுத்தும். பிரபுக்களின் இகலும், பிஷப்புக்களின் குறும்பும், மந்திரிசபையின் கரவும் எட்வர்ட் எண்ணத்தை மாற்றினவா? அவர்தங் காதலைத் தவிர்த்தனவா? அவை சாம்ராஜ்யத்தை விடுத்து விலகுமாறு எட்வர்டைச் செய்யவில்லையோ என்று சிலர் கேட்கலாம். சாம்ராஜ்யம் என்றும் நின்று நிலவுவதன்று. அது நீர்க்குமிழி போன்றது. உலகில் எத்தனையோ சாம்ராஜ் யங்கள் அழிந்தன. அக்கதைகள் பல உண்டு. காதலோ சாம்ராஜ் யம் போன்றதன்று. அஃது அழியாதது. அது மேலும் மேலும் வளர்ந்து மறு உலகத்திலுந் தொடர்ந்து செல்வது. அஃது உடலளவில் நிற்பதன்று; ஊன்கடந்து உயிர்கடந்து அழியா இன்பமாவது. அதைப் பிடுங்கல் எவரால் இயலும்? திருமண முயற்சி திருமதி ஸிம்ஸனது மணவிலக்கு வழக்கை யொட்டிய ஆறுமாதத் தவணை 1937-மே-3ம் நாளுடன் முற்றுப் பெற்றது. அக்கால எல்லை முற்றுப் பெற்றதும் மணவிலக்கு உறுதிசெய்யப் பெற்றது. திருமதி ஸிம்ஸன் திருமதி வாலி வார்பீல்ட் ஆயினார். (வார்பீல்ட் என்பது அம்மையாரின் தந்தையார் பெயர்.) வின்ஸர் கோமகனாரும் திருமதி வாலி வார்பீல்டும் டூர் என்னுமிடத்தில் சந்தித்து மகிழ்வெய்தினர். ஜுன் மூன்றாம் நாள் திருமணம் குறிக்கப்பெற்றது. திருமணச் செய்தி பிரிட்டனுக்கு எட்டிற்று; எட்டியதும் பிஷப்பு உலகம் எரிய லாயிற்று. மன்னரா யிருந்த ஒருவர் பெருந்தகைமையுடன் அரசைத் துறந்த பின்னரும், பிஷப்புலகம் காழ்ப்புக் கொண்டு கனன்றதெனில், அவ்வுலகின் நிலை நன்கு புலனாகிறதன்றோ? திருமணம் பிரான்ஸிலுள்ள ஓர் ஆங்கிலக் கிறிதுவக் கோயிலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தடுக்க லண்டன் பிஷப் புறப்பட்டார். அக்கோயில் அவர்தம் ஆட்சியின் எல்லைக்கு உட்பட்டதாம். அவர், திருமணவினை நிகழ்த்த இசைந்திருந்த ஜார்டன் பாதிரியார் மீது பாய்ந்தார். ஜார்டன் பாதிரியார் மணவினை நிகழ்த்தல் கூடாது என்று லண்டன் பிஷப்பு கட்டளை யிட்டார். இவர் அன்புக் கிறிதுவின் அடியவராம்! சுவிசேஷப் பிரசாரகராம்! வெட்கம்! வெட்கம்! உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக் கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையுந் திருப்பிக் கொடு - லூக்கா : 6 : 127 - 9. இவ்வாறு சுவிசேஷஞ் சொல்கிறது. பிஷப்போ அதற்கு மாறுபட்டு நடக்கிறார். சம்பிரதாயப் பேய்க்கும் சட்டதிட்டப் பூதத்துக்கும் பிஷப்பு இரையாகிறார்! பாவம்! அவர் நிலை இரங்கத்தக்கது! ஜார்டன் பாதிரியார் கிறிதுவின் அடியவர்; சுவிசேஷத் தின் பொருளில் ஒன்றி நிற்பவர்; அஞ்சா நெஞ்சினர். அவர், யான் எவர்க்குங் கடமைப்பட்டவ னல்லன்; என் மனச்சான்று வழியே நடப்பேன் என்று உறுதி கொண்டு திருமண வினையில் தலைப்பட்டார். திருமணம் எளிய முறையில் சிறப்பாக நடை பெற்றது. வாழ்த்துக்களும் ஆசிகளும் ஆயிரக் கணக்கில் வந்து குவிந்தன. வின்ஸர் கோமகளார் திருமதி வாலீ வார்பீல்ட் வின்ஸர் கோமகளானார். வின்ஸர் கோமகனாரும் வின்ஸர் கோமகளாரும் மனமொன்றிய காதலராகி அன்றில் அகன்றிலென இன்பந் துய்த்து வருகிறார். அவர் நீடு வாழ்க. திருமதி வாலீ வார்பீல்டின் எண்ணம் ஈடேற வில்லை யென்றும், அவர் சாம்ராஜ்ய மகாராணியாகாமல் ஒரு கோமக ளாரே யானாரென்றும், அவர் தம் வாழ்வில் ஏமாற்றமே நேர்ந்த தென்றும் சிலர் எண்ணலாம். அவ்வாறு எண்ணுதல் தவறு என் பது எனது கருத்து. திருமதி வார்பீல்ட், எட்வர்ட் என்னும் மனிதரை நேசித்தாரா - அல்லது ஒரு சாம்ராஜ்யத் தலைவர் என்ற முறையில் அவரை நேசித்தாரா - என்பதை உன்னுதல் வேண்டும். சாம்ராஜ்யத் தலைவர் என்ற முறையில் திருமதி வாலி, எட்வர்டை நேசித்திருக்கமாட்டார் என்றே கூறலாம். ஏன்? சாம்ராஜ்யத் தலைவர் என்ற முறையில் திருமதி வாலி, எட்வர்டை நேசித்திருந்தால், எட்வர்டினிடமிருந்து சாம்ராஜ்யத் தலைமை கழன்றதும் திருமதி வாலிஸின் நேயமும் கழன்றிருத்தல் வேண்டும். சாம்ராஜ்யத் தலைமை போன பின்னரே திருமணம் நடைபெற்றது. ஆதலால் திருமதி வாலி, எட்வர்ட் என்னும் மேன்மகனையே நேசித்தார் என்று கோடல் வேண்டும். சாம்ராஜ்ய எட்வர்ட் பெரியவரா? தற்போதைய எட்வர்ட் பெரியவரா? எத்தனையோ சாம்ராஜ்யத் தலைவர்களின் பெயர்கள் மறைந்தன. இராமர், புத்தர் போன்றவர்களின் பெயர்கள் மறை கின்றனவா? இல்லை. தற்போதைய எட்வர்ட், இராமர் - புத்தர் போன்றவர் இனத்தில் சேர்ந்துவிட்டார். இச்சிறப்பு வாய்ந்த ஒரு வரை மணந்த பெருமை திருமதி வாலிஸுக்குக் கிடைத்தது. இஃது அழியாப்பேறு. வின்ஸர் கோமகளாரின் தவமே தவம்! வழக்குகள் வின்ஸர் கோமகனார் - கோமகளார் காதலைப்பற்றிச் சில வழக்குகள் நடைபெற்றன. ஒன்று அம்மையார் மணவிலக்குச் செல்லா தென்பது; மற்றொன்று திரு. ஸிம்ஸன் மணவிலக்கு வழக்கில் ஈடுபடாமல் வாளாகிடந்தமைக்குக் காரணம் அவர் பெரும் பொருள் பெற்றமை என்று சொல்லிய ஒருவர் மீது திரு. ஸிம்ஸன் தொடுத்த வழக்கு; இன்னொன்று வின்ஸர் கோமகனாரே தொடுத்தது. முதலவர் வழக்கை நடத்தாது ஒதுங்கிவிட்டார். திரு. ஸிம்ஸனைத் தூற்றியவர் மன்னிப்புக் கேட்டு விடுதலையடைந்தார். வின்ஸர் கோமகனார் தொடுத்த வழக்கு ஒரு நூலைப் பற்றியது. திரு. ஜியோபிரே டென்னி என்பார் வின்ஸர் கோமகனார் - கோமகளார் காதலைப்பற்றி என்ன என்ன வதந் திகள் உலவினவோ அவைகளை யெல்லாம் திரட்டி ஒரு நூலாக் கினார். அது, வில்லியம் ஹியினிமான் கம்பெனியாரால் வெளி யிடப்பட்டது. நூலாசிரியர் மீதும், நூலை வெளியிட்டோர் மீதும் வின்ஸர் கோமகனார் வழக்குத் தொடுத்தார். கோமகனார் வழக்குத் தொடுக்க மனங்கொண்டமைக்குக் காரணம், பொய்ம்மை, சரித்திரக்காரரால் பின்னே மெய்ம்மையாகக் கொள்ளப்படலாகா தென்பதேயாகும். இது கோமகனார் வக்கீலால் நீதி மன்றத்தில் மிகத் தெளிவாக விளக்கஞ் செய்யப் பட்டது. எதிரிகள் வழக்கை நடாத்த விரும்பினார்களில்லை. அவர்கள் மன்னிப்புக் கேட்கவே துணிவுகொண்டார்கள். அவர்கள், தங்கள் வக்கீல்கள் வாயிலாக - நூலின் உள்ளுறை வதந்திகளையே கொண்டதென்றும், அதன்கண் மெய்ம்மை யில்லையென்றும், வதந்திகள் பொய்ம்மைப்பட்டால் கோமக னாரின் புனிதம் உலகுக்கு என்றென்றும் விளங்குமென்னும் நோக்கத்துடன் நூல் யாக்கப்பட்டதென்றும், வெளிவந்த பிரதிகளெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுமென்றும், கோமகனார்க்கு நஷ்டஈடு செலுத்தச் சித்தமென்றும், அவர்க்கு மனமார்ந்த மன்னிப்புச் செலுத்தப் படுமென்றும் நீதிமன்றத் துக்குத் தெரிவித்தார்கள். கோமகனார் வக்கீலும் மன்னிப்பை ஏற்க ஒருப்பட்டார். முதன்மை நீதிபதி லார்ட் ஹீவார்ட், மன்னிப்புக்கு உடன் பட்டுத் தீர்ப்பில் எதிரிகளைச் சுட்டிக் குற்றம் பெரிதென்றும், அது குதிரைச் சவுக்கடிக்கு உரியதென்றும் கூறினார். நஷ்டஈடாகச் செலுத்தப்பட்ட தொகையில் ஒரு காசையாவது வின்ஸர் கோமகனார் ஏற்றுக் கொண்டாரில்லை. அத்தொகை முழுவதும், கோமகனார் இளங்கோவாயிருந்த போதும், மன்னரா யிருந்தபோதும் ஊக்கத்துடன் நடாத்திவந்த சில அற நிலையங்கட்கு அளிக்கப்பட்டது. பொல்லாத உலகம் ஒரு நல்லாரை எவ்வெவ்வழியில் துன்புறுத்துகிறது பாருங்கள்! துன்பத்தில் இன்பங் காண்பவர் வின்ஸர் கோமகனார். 13. சீர்திருத்தம் இதுகாறும் எட்வர்டின் துறவு நிகழ்ச்சியைப் பற்றிச் சிறு ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவ்வாராய்ச்சியின் தலைப்பு, முடியா? காதலா? Ó®âU¤jkh? என்பது. இம்மூன்றனுள் நடு வணதாய்ச் சிங்கநோக்காய் நிற்பது காதல். அஃது ஒரு நோக்கால் முடியை (எட்வர்டினின்றும்) வீழ்த்தியது; மற்றொரு நோக்கால் சீர்திருத்த உலகை எழுப்பியது. இவ்விரண்டனுள் சிறந்தது, சீர் திருத்த உலகை எழுப்பியதாகும். காதலுக்குத் தடையாக உலகில் எதுவும் நிற்றல் கூடாது. அதற்குத் தடை ஏற்படுமானால் அஃது உலகம் இன்னும் சீர்திருத்த முறவில்லை என்பதை உணர்த்துவ தென்றே கொள்ளுதல் வேண்டும். உலகம் பல வழியிலுஞ் சீர்திருத்தம் பெறுதற்கு எத் தனையோ நிகழ்ச்சிகள் உற்றன; உறுகின்றன; இன்னும் உறலாம். சரித்திரங்களும் பல சீர்திருத்தங்களை உந்திக் கொண்டிருக் கின்றன. எவ்வளவு பழமை நிகழ்ச்சிகளிருப்பினும், புதுமை நிகழ்ச்சிகளே உலகுக்கு ஊக்கமூட்டும். அஃது உலக இயல்பு போலும்! பழமையைப் புதுப்பிப்பது புதுமை. இரண்டுக்கும் மூலம் ஒன்றே. முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே - பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே என்றார் மாணிக்க வாசகனார். உலகச் சீர்திருத்தத்தின் பொருட்டு அவ்வப்போது புது நிகழ்ச்சிகள் ஆண்டவனருளாலேயே உண்டாகின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது. இதையுணர்ந்து நடப்பதே அறிவுக்கு அழகு. எட்வர்டின் துறவு திடீரென நிகழ்ந்தது. திடீர் நிகழ்ச்சி எப்பொழுதும் உலகை வீறிடச் செய்யும். எட்வர்ட் துறவு உலகை எழுப்பியுள்ளது; தட்டி எழுப்பியுள்ளது. அத்தகை எழுச்சியைக் கிளப்புதல் எத்துணையோ நூல்களாலும் இய லாது. எட்வர்ட் துறவு, சீர்திருத்தப் போராட்டத்தை உலகில் எழுப்பியிருக்கிறது. போராட்டம் ஒருவழியிலா நிகழும்? பல வழியிலும் நிகழும். எட்வர்ட் துறவு நிகழ்ச்சியை ஆயும் அறிஞர் உள்ளத்தில் எத்தனையோ சீர்திருத்த முறைகள் தோன்றும். அவைகளை யெல்லாம் நிரலே கிளந்து கூறவேண்டுவதில்லை. மூலமாக வுள்ள சிலவற்றை மட்டும் ஈண்டுக் குறிக்கலாமென்று எண்ணு கிறேன். (1) காதல் மணம் உலக வாழ்வு எற்றுக்கு? இன்பம் நுகர்தற்கன்றோ? நேரிய வழியில் உலக இன்பம் நுகர்வது இறையின்பம் நுகர்வதேயாகும். இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு என்றும், பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் என்றும் வன்தொண்டர் அருளியதை நோக்குக. இன்ப வாழ்வு தனிமையில் கிட்டாது. ஒருத்தியும் ஒரு வனும் கூடி வாழ்வதிலேயே இன்பம் உண்டு. கூடி வாழ்தலென் பது உடலளவினதன்று. இரண்டு உயிர் இருமையற்று ஒருமைப் பட்டு வாழ்வதே கூடி வாழ்வதாகும். உயிரொன்றிய இன்ப வாழ்வுக்கு உடல் கருவியாகத் துணைபுரிவது. பெண் ஆண் என்னும் ஈருயிரையும் ஒருமைப்படுத்துவது காதல் என்பது. காதல் நிகழ்ச்சிக்கென்று இயற்கை உலகம் நானாவிதக் கோலம் பூண்டிருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பிரிவுகளை நோக்குக. இவை காதலின் பொருட்டு இயற்கையில் முகிழ்த்திருக்கின்றன. இவைகளின் புறம் நிலமென்றும், அகம் திணையென்றும் வழங்கப்படுகின்றன. நிலம் பருமை; திணை நுண்மை (திணை - ஒழுக்கம்). காதல் நிகழ்ச்சிக்கெனப் புற நிலமும், அகத்திணையும் இயற்கையில் அமைந்திருத்தலை ஆராய்ந்து உண்மை தெளிக. காதல் வழி மணம் நிகழ்தல் வேண்டும். காதலற்ற மணம் மணமாகாது. அது பிணம். காதலற்ற வெற்றுடற் சேர்க்கை பெறுவோர் இவ்வுலக வாழ்வில் இறந்தவரே யாவர். அப்பிண வாழ்விலும் நரகம் மேலானது. காதல் மணம் பெருகப் பெருக உலகம் அன்பாகும்; அமைதியுறும்; நலம் பெறும்; கொலை - களவு - கள்- காமம் - பொய் முதலியவற்றினின்றும் விடுதலை யடையும். காதல் மணம் பிறவி நோக்கத்தை நிறைவேற்றுதற் குரியது. அத்தகைக் காதல் மணமே உலகில் யாண்டும் நடை பெறுதல் வேண்டும். இல்லையேல் உலகம் பல வழியிலும் நாசமுறும். காதல் மணத்துக்கு எத்தகைத் தடையும் இருத்தல் கூடாது. தடைகளிருந்தால் அவைகளை உடைத் தெறிய வேண்டுவது அறிஞர் கடமை. காதல் மணம், நாடு - மொழி - நிறம் - பிறப்பு - மதம் - பதவி முதலியவற்றைப் பற்றிய கட்டு களுக்கு அடங்காதது. கட்டுகளையெல்லாங் கடந்து அன்பில் நிகழ்வது காதல் மணம். இதனால் காதலுக்குக் கண்ணில்லை என்னும் பழமொழி பிறந்தது போலும்! காதல் மணத்துக்குத் தடைகள் பலவிடங்களில் இருக் கின்றன. நாகரிகத்தில் முதிர்ந்ததென்று சொல்லப்படும் இங்கிலாந்தில் காதல் மணத்துக்குத் தடையிருக்கிறது! எட்வர்ட் சாம்ராஜ்யப் பதவியை ஏன் துறந்தார்? இந்தியச் சட்டசபையில் ஒரு முலிம் சகோதரர், ஒரு மன்னர் தாம் விரும்பிய ஓர் ஏழைப் பெண்மணியை மணஞ் செய்து கொள்ளக் கிறிதுவ ராஜ்யம் உரிமையளிக்கவில்லை; இலாத்தில் அவ்வுரிமை யுண்டு. ஒரு மன்னர் ஓர் ஏழைப் பெண்மணியை மணக்க இலாம் அநுமதியளிக்கிறது என் னுங் கருத்துப்படக் கூறியது இங்கே குறிக்கத்தக்கது. அம் முலிம் சகோதரரின் பேச்சைப் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் அங்கத்தவரும் மற்றவரும் பத்திரிகையில் படித்தேயிருப்பர். காதல் மணத்துக்கு உரிமை இருத்தல் வேண்டும். அதைக் கட்டுப்படுத்தச் சட்டதிட்டம் எற்றுக்கு? சம்பிரதாயம் எற்றுக்கு? பிற தளைகள் எற்றுக்கு? அவைகளெல்லாம் தகர்க்கப்படல் வேண்டும். அவைகளைத் தகர்க்கச் சீர்திருத்தக்காரர்கள் எழு வார்களாக. காதல் மணத்துக்கென்று ஒரு பெரிய சாம்ராஜ்யத் தலைவர் நமது பதவியையே தியாகஞ் செய்தார். அவர் தமக்கென்று மட்டும் அத்தியாகஞ் செய்தாரில்லை; உலகத்துக்கென்றுஞ் செய்தார். உலகம் அதை உணர்ந்து நடப்பதாக. ஆதலால் உலகமெங்குங் காதல் மணங் கமழச் சீர்திருத்த நேயர்கள் உழைப்பார்களாக. (2) பிரபுக்கள் கூட்டம் உலகில் பிரபுக்களென்றும் ஏழைகளென்றும் இருத்த லால், வாழ்வில் பலதிறச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஏழை பணக்கார வேற்றுமை மக்கள் உரிமையைப் பாழ்படுத்துகிறது. அவ்வேற்றுமை, காதல் மணத்துக்குங்கேடு சூழ்வதைக் காண் கிறோம். எட்வர்ட் துறவை உன்னுங்கள். மண உரிமையைக் கடிவது நாகரிகமா என்பதையும் உன்னுங்கள். ஏழை பணக்கார வேற்றுமையுள்ள வரை உலகில் துன்பம் நீங்காது. பிரபுக்களுங் கவலையின்றி வாழ மாட்டார்கள். கவலைக்கு விதை விதைப்பது ஏழை பணக்கார வேற்றுமை என்று கூறல்மிகையாகாது. இங்கிலாந்தில் அவ்வேற்றுமை யுண்மையான், மன்னர் ஓர் ஏழை மகளை மணஞ் செய்து கொள்ளப் பிரபுக்களின் மனம் ஒருப்படவில்லை. பிரபுக்களும் மனிதர்களே. அவர்களுக் கென்று பிறப்புவழி வேறேயில்லை. அவர்களைக் கெடுப்பது செல்வச் செருக்கே யாகும். செல்வத்தின் புன்மையை உணர்த் தவும் எட்வர்ட் பெரிய சாம்ராஜ்யச் செல்வத்தைத் துறந்து காட்டினார். பிரபுக்களுலகம் இனியாதல் சீர்திருத்தம் உறுமா? அவ்வுலகம் சீர்திருத்தம் பெறுதல் வேண்டும். பிரபுக்களுலகை இருவழியில் சீர்திருத்தஞ் செய்யலாம். பிரபுக்களின் இருண்ட உள்ளத்தில் ஜீவகாருண்ய விளக்கை ஏற்றும் வழி ஒன்று; மற்றொன்று பொருள் நிலையைச் சமப் படுத்துவது. முன்னது தொன்று தொட்டு நிலவுவது. அஃது இடைநாளில் பிரபுக்கள் உலகினின்றும் பட்டொழிந்தது. அக்காலந்தொட்டே பிரபுக்கள் உலகம் ஏழையுலகைத் தொல்லைப் படுத்தத் தொடங்கியது. அத்தொல்லை காரண மாகப் பொருளாதார சமரச இயக்கம் உலகில் தோன்றலாயிற்று. ஜீவகாருண்ய முறையில் பிரபுக்களுலகம் திருந்த இசையா தொழியின், பொருள் நிலைச் சமத்துவ முறை கால் கொண்டே தீரும். சீர்திருத்தக்காரர் முதலில் ஜீவகாருண்ய முறையைக் கையாண்டு பார்ப்பது அறம். இது காந்தியடிகள் வழி. (3) பிஷப் உலகம் பிஷப் உலகம் என்பது பொதுவாகப் புரோகித உலகம் என்று வழங்கப்படுகிறது. புரோகித உலகம், பெரிதுஞ் செல்வ உலகிலும், அரசியல் உலகிலும் உறவு கொண்டு உழல்வதால் தெய்வ உலகை மறந்தே விடுகிறது. அவ்வுலகம் தெய்வத் தொண்டுக்கென ஏற்பட்டது. அது தெய்வத்தை மறந்தால் உலகம் எந்நிலை எய்தும்? காண்டர்பரி ஆர்ச் பிஷப்பும் மற்றவரும் எட்வர்டைப் பலவழியிலுந் தொல்லைப் படுத்தின ரல்லரோ? எட்வர்ட் நல்லவராதலால் எதிர்ப்பில் தலைப் பட்டாரில்லை. அவர் எதிர்ப்பில் தலைப்பட்டிருந்தால் பிரிட்டன் நிலை என்னவாயிருக்கும்? சரித்திர உலகை நோக்கினால் புரோகித உலகின் கொடுமை நன்கு புலனாகும். புரோகித உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல; சமூகங்கள் பல; கலைகள் பல; நாகரிகங்கள் பல. எக்காரணம் பற்றிப் புரோகித உலகம் ஏற்பட்டதோ அக்காரணம் பற்றி அவ்வுலகம் இப்பொழுது இயங்கவில்லை. அதனால் அவ் வுலகம் தொல்லை விளைத்து வருகிறது. புரோகித உலகம் இனிச் சீர்திருத்தம் பெறல் வேண்டும்; இல்லையேல் அஃது ஒழிதல் வேண்டும். சீர்திருத்த முறைகளைப் பலபடக் கூற வேண்டுவதில்லை. புரோகித உலகம் அறவாழ்வைச் செலுத்தக் கடமைப் படல் வேண்டும். அவ்வுலகம் பொருள் நசைக்கு இரையாதல் கூடாது. அன்றாட வாழ்வுக்குச் சிறு பொருளிருத்தல் சாலும். நாளைக் கென்று பொருள் தேடும் எண்ணம் அவ்வுலகில் இருத்தலாகாது. பொருள்நசை காரணமாகவே புரோகித உலகம் தீய வழிகளில் புகுகிறது. அந்நசையற்றால் அது தூய்மையுறும். எளிமையை விரும்பாதவர் புரோகிதராகாது ஒதுங்குவது நல்லது. தெய்வக் கலைகளை ஓம்புவதில் புரோகித உலகம் புகுதல் சிறப்பு. எக்காரணம் பற்றியும் அவ்வுலகம் அரசியற் சேற்றிலுங் கட்சிப் பிணக்குகளிலும் வீழ்ந்து நெளிதல் கூடாது. புரோகித உலகம் சீர்திருத்தத்துக்கு உடன்படல் வேண்டும்; இல்லையேல் அது மறையும் நிலை நேரும். சீர்திருத்த உலகம் நன்முறையில் முயன்று தீமைகளைக் களைவதாக. (4) மன்னர் சார்பு இங்கிலாந்தில் ஒரு மன்னர் இறந்ததும், அவர்வழி வந்த மற்றொருவர் மன்னாராகிறார். அவர் மன்னராகிச் சில நாள் கடந்த பின்னரே முடிசூட்டுவிழா நடைபெறுகிறது. இச்சம்பிரதாயம் மாறுதல் வேண்டும். ஒருவர் இறந்து மற்றொருவர் மன்ன ராயதும் அவர் முடிசூடப் பெறல் வேண்டும். ஜனப்பிரதிநிதிகள் சார்பில் முதல் மந்திரி மன்னருக்கு முடி சூட்டலாம். அதில் பிஷப்பின் தலையீடு வேண்டுவதில்லை. முடிசூட்டுக்கெனத் தனி விழா அநாவசியம். முடி இராஜ்ய பாரத்துக்கோர் அறிகுறி. ஒருவர் மன்னராயதும் அவர்மீது இராஜ்ய பாரம் பொருந்தி விடுகிறது. பின்னே சில நாள் கடந்து அதன் அறிகுறியாகிய முடியை மன்னருக்கு ஏன் சூட்டுதல் வேண்டும்? எக்காரணம் பற்றியோ ஒரு போது ஏற்பட்ட சம்பிரதாயம் இந்நாளில் எற்றுக்கு? இதைக் குழப்பத்தின்போது கர்னல் வெட்ஜ்வுட் பார்லிமெண்டில் நன்கு விளக்கிக் காட்டினர். அவர் பேசியதன் சாரம் முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஒருவர் இராஜ்யபாரத்தைத் தாங்கிய பின்னர்ச் சிலநாள் கடந்து முடிசூட்டுவிழா நடைபெறலும், அதில் பிஷப் தலை யிடுதலும், முடிசூட்டைப் பற்றிய பழைய சம்பிரதாய வழக்க வொழுக்கங்களை மேற்கொள்ளலும் ஒழிந்தால் மன்னருக்கும் பிஷப்புக்குமுள்ள அரசியல் தொடர்பு அறுந்தேபோகும். அந்நிலை நேர்ந்தால், முடிசூட்டு விழாவில் கலந்து கொள் ளேன் என்று காண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னரை அச்சுறுத்தல் இயலுமோ? எனவே, இங்கிலாந்தில் மன்னர் சார்பில் இம் மாறுதல் செய்ய ஆங்குள்ள அறிஞர்கள் வீறுகொண்டெழு வார்களாக.எட்வர்ட் காதல், உலகில் சீர்திருத்த வேட்கையை எழுப்பி யிருக்கிறது. சீர்திருத்த உலகம் எட்வர்டுக்குத் தலைமை வழங்குவதாக. காதல் வெல்க; சீர்திருத்தம் பெருக. 14. இறுவாய் உலகம் நல்லதா? தீயதா? உலகம் நல்லதென்று சொல் வோரும் உளர்; தீயதென்று சொல்வோரும் உளர். நன்மையும் தீமையும் உலகில் இல்லை. இரண்டுக்கும் இடம் உள்ளமே. நலம் திகழும் உள்ளத்துக்கு உலகம் நல்லதாகவே தோன்றும்; தீமை நெளியும் உள்ளத்துக்கு உலகம் தீயதாகவே தோன்றும். உயிர்களின் விடுதலைக்கென்றே உலகவாழ்வு ஆண்டவ னால் நல்கப்படுகிறது. அறவழியில் நின்று, பொருளீட்டி, இன்பம் நுகர்ந்து உலகில் வாழ்வோர், நல்லுள்ளம் பெற்று, உலகை நல்லதாகவே கண்டு, விடுதலை எய்துவர். ஏனையோர் நல்லுள்ளம் பெறாது, உலகைத் தீயதாக் கண்டு, விடுதலை எய்தா தொழிவர். விடுதலைக்கு அறவழியில் நின்று பொருளீட்டி இன்பம் நுகரும் நல்வாழ்வு வேண்டற்பால தென்பது இயற்கை நியதி. அறநெறி, மனமாசை அகற்றி, அன்பை வளர்த்து, உலகை இறையாக உணர்த்தும். மற்ற நெறி, மனமாசை அகற்றாது, ஆசையை வளர்த்து, உலகைப் பேயாகக் காட்டும். இறையுலகில் பொறுமை, அமைதி, அருள், தியாகம் முதலியன நிலவும்; பேயுலகில் பொறாமை, பரபரப்பு, வன்கண், தன்னலம் முதலியன உலவும். வாழ்வில் வெற்றி உலக வாழ்வைக் கருவியாக் கொண்டு விடுதலை பெறுதல் வேண்டும். அதுவே வாழ்வில் விளையும் வெற்றியாகும். வெற்றி வாழ்வு பெறாதார்க்குத் துன்பம் பெருகிக் கொண்டே போகும். வாழ்வில் வெற்றி என்றால் என்ன? செல்வம் பதவி முதலிய வற்றில் மேம்பட்டுச் செல்வது வாழ்வில் வெற்றி என்று கருதப் படுகிறது. அவைகளில் மேம்பட்டுச் செல்லாமை வாழ்வில் தோல்வி என்று கருதப்படுகிறது. இம்முறையில் வாழ்வில் வெற்றி தோல்வி கருதுவது அறமாகாது. மேம்பாடெல்லாம் மேம்பாடாகா. அவைகளை இருகூறு படுத்தலாம். ஒன்று, அன்புத் தெய்வத்துக்கு ஆளாகிச் செல்வம் பதவி முதலியவற்றில் மேம்பாடுறுவது; மற்றொன்று, ஆசைப் பேய்க்கு அடிமையாகிச் செல்வம் பதவி முதலியவற்றில் மேம் பாடுறுவது. முன்னையதில் சேவை பெருகும்; பின்னையதில் தன்னலம் பெருகும். சமயம் நேரும்போது முன்னையதில் தியாகம் இடம் பெறும்; பின்னையதில் அஃது இடம் பெறாது. சேவையும் தியாகமும் ஒன்றிய வாழ்வில் விளைவதே வெற்றி யாகும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு போதும் எவ்வழியி லாதல் சோதனை நேரும். சோதனை, தான் விளங்கு முறையில் நிகழ்வதும் உண்டு; விளங்கா முறையில் நிகழ்வதும் உண்டு. சோதனை எம்முறையில் நிகழினும், அஃது அன்பு ஆசை என் னும் இரண்டையும் குறிக் கொண்டு நிகழும். செல்வம் பதவி முதலியன அன்பால் வகிக்கப்படுகின்றனவா அல்லது ஆசை யால் வகிக்கப் படுகின்றனவா என்னுஞ் சோதனை எழுகிறது. சோதனையில் சேவையும் தியாகமும் முன்னின்றால் வாழ்வில் வெற்றி என்றும், தன்னலமும் அவாவும் முன்னின்றால் வாழ்வில் தோல்வி என்றும் கோடல் வேண்டும். அன்பால் செல்வம் பதவி முதலியவற்றில் மேம்பாடுறு வோரிடம் சேவையும் தியாகமும் உண்மையாண், அவர் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணராகிறார். ஆசையால் செல்வம் பதவி முதலியவற்றில் மேம்பாடுறுவோ ரிடம் தன்னலமும் அவாவும் இருத்தலான், அவர் உயிர்கட்குத் துன்பஞ் செய்யும் அரக்கராகிறார். இவ்வரக்கர் எங்ஙனம் வாழ் வில் வெற்றி பெற்றவராவர்? எவ்வுயிரையும் தம்மைப்போல் கருதி, அவ்வுயிர்க்குச் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரா வோரே வாழ்வில் வெற்றி பெற்றவராவர். வின்ஸர் கோமகனார் வாழ்வு வின்ஸர் கோமகனார் வாழ்வு வெற்றியுடையதா? தோல்வி யுடையதா? வின்ஸர் கோமகனார் ஒரு பெரும் மன்னர் வழி வந் தவர்; இருபத்தைந்தாண்டு இளங்கோவாக இருந்தவர்; ஏறக் குறைய ஓராண்டு மன்னராகவும் வீற்றிருந்தவர். இவ்வளவில் அவர் தம் வாழ்வு நின்றிருந்தால், அவர் வாழ்வில் வெற்றி பெற்ற வரா, தோல்வியுற்றவரா என்று அளந்து கூறல் அரிதேயாகும். வின்ஸர் கோமகனார் வாழ்வில் சோதனை எழுந்தது. அவர் திடீ ரென முடி துறந்தார். சோதனை, சாம்ராஜ்யச் செல்வப் பத வியை எட்வர்ட் அன்பால் ஏற்றிருந்தாரா? mšyJ Mirahš V‰¿Uªjhuh? என்பதைக் குறிக்கொண்டே எழுந்தது. எட்வர்ட் முடி துறந்து தியாக மூர்த்தியானமையால், அவர் அன்பு வழிநின்றே செல்வப் பதவியை ஏற்றிருந்தார் என்னும் உண்மை உலகுக்கு விளங்கலாயிற்று. ஆகவே வின்ஸர் கோமகனார் வாழ்வு வெற்றியுடைய தென்க. வின்ஸர் கோமகனார் வாழ்வு வெற்றிக்கோர் அறிகுறி. அவர்தம் வாழ்வை நிராசை என்னுந் தெய்வம் நடாத்துகிறது. அவரது வாழ்வை ஓர் எடுத்துக் காட்டாக உலகங் கொள்வதாக. எட்வர்டின் துறவுக்குப் பலர் பல காரணங் கூறுப. அவை களிற் சிறந்தன இரண்டு. ஒன்று அகக் காரணம்; மற்றொன்று புறக்காரணம். அகக்காரணம் எட்வர்ட் தொழிலாளர் தோழ ரானமை; புறக் காரணம்அவர் தொழிலாளர் தோழராகிய ஓர் அணங்கைக் காதலித்தமை. இவையிரண்டும் ஆசை யுலகை விதிர் விதிர்க்கச் செய்தன. அன்புத் தெய்வத்துக்கும் ஆசைப் பேய்க்கும் போர் மூண்டது. அன்புத் தெய்வமே வெற்றி பெற்றது. ஆசைப் பேய் தோல்வி யடைந்தது. எட்வர்ட் எவர்க்குந் தீங்கு நேராத முறையில் அரசைத் துறந்தார்; பெண்ணணங்குக்கு அளித்த உறுதிமொழிப்படி அவரை மணஞ் செய்தார்; இப் பொழுது தொழிலாளர் நலன் கருதி உழைத்து வருகிறார். அவர் சோதனையில் வெற்றி பெற்றவரானார். அவர் மனிதரில் மனித ரானார்; அந்தணரானார்; அறவோரானார்; ஆண்டகைய ரானார். செம்மை நலங்கள் வின்ஸர் கோமகனார் வாழ்வு அறிவுறுத்துஞ் செம்மை நலங்கள் பல. அவைகளுள் சிறப்பாகக்குறிக்கத்தக்கன சில. அச் சில, அன்பு வழியில் செல்வப் பதவி யேற்றல், ஏழைகட்கிரங்கி நலஞ் செய்தல், பெண்ணுடன் வாழல், பெண்ணின் பொருட்டு எதையுந் துறத்தல், தியாகம், அஞ்சாமை, உறுதிமொழி காத்தல், தீமையை எதிர்த்து நில்லாமை, பகைமை பாராட்டாமை, வன்மங் கொள்ளாமை, எளிமையில் நாட்டம், உரிமையில் வேட்கை, சேவையில் உள்ளம், நேர்மை, சீர்திருத்தம், சமநோக்கு முதலியன. வின்ஸர் கோமகனார் வாழ்வு திருவள்ளுவர் நூலுக்கு ஓர் இலக்கியம் என்று சுருங்கச் சொல்லலாம். அவர்தம் செவ்விய குணங்கள் மன்பதையில் படிக; பெருக; வாழ்க. ஓர் உறுதி மொழியின் பொருட்டு ஒரு பெருஞ் சாம் ராஜ்யச் செல்வத்தைத் துறந்த தியாக மூர்த்தியை - ஒரு பெரியாரை - இந்நாளைய உலகம் பெற்றிருக்கிறது. அவரை ஈன்ற வயிறு திருவுடையது. அவரால் உலகம் நலம் பெறுவதாக; சமரச ஞானம் பெறுவதாக. வாழ்க உலகம்; வெல்க நல்லறம். - திரு.வி.க.  காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சமரச சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953  1. மந்வாநோமந : - பிருஹதாரண்யம் : 3 : 4 2. அருளேயோர் . . . . நெஞ்சே நீ - மருள்தீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ - இருள்தீர நீயுறைந்த தெவ்விடமோ - தாயுமானார். 1. எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல் இருக்கவிலையோ மனதெனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமைச் சடமதென்றுனைச் சித்தென்றுமே - அந்நாளில் எவனோ பிரித்தான் . . . . சுக வாரியே - தாயுமானார். 1. இடம்பெறு . . . . மடம் பெறு மாயை மனமே; தன்னிலே. . . . பொன்னிலே பணிபோலும் மாயை தருமனமே - தாயுமானார். 1. ‘Mind’ is a name given to the sum of the states of consciousness grouped under thought, will and feeling. - The Secret Doctrine I : 111 1. அநாத்ம மூலம் மாயா - யஜுர் வேத ஸர்வஸாரோபநிஷத். 2. நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை. 3. புருடன், மாயை, வித்தை, அராகம், நியதி, கலை, காலம். 4. சித்தம், அகங்காரம், புத்தி, மனம், உபத்தம், பாயு, பாணி, பாதம், வாக்கு, சுரோத்திரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்கிராணம், சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி. 5. குறிகளோடு... அறிவதேதும் அற அறிவிலாமை மயமா யிருக்குமெனை அருளினால் அளவிலாத தனுகரணமாதியை அளித்த போதுனை அறிந்து நான் - தாயுமானார். 6. மருவிய... கலாதிக ளைந்துங் கூடி - ஒரு புலனுகரும் - சிவப்பிரகாசம். 1. பாராதி... பேய்மனதை அண்டியே : பொறியிற் செறி . . .மறுகிச் சுழலும் மனக்குரங்கு : கூறாய . . . குணமிலா மனமெனும் பேய்க் குரங்கின்; மனமான வானரக் கைம்மாலை யாகாமல். - தாயுமானார். 2. பூதலய மாகின்ற... பாதரச மாய்மனது சஞ்சலப் படுமலால் பரமசுக நிஷ்டை பெறுமோ ; பட்டப் பகற்பொழுதை . . . நடுவே முளைத்த மனதைக் கட்ட அறியாமலே வாடினேன். எனதென்பதும் . . . மனதென்பதுமோ என் வசமாய் வாராது. - தாயுமானார். 1. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற் றாகும் மதத்தால் அறிவழிந் தாரே. - திருமூலர். *1. திருவாசகம் *2. திருவாசகம் 1. பற்றுவன... பிராணலயம் என்னுமொரு பூமியைப் பற்றின் மனம் அறும் - தாயுமானார் 2. அராப்புனை... மனமும் பதைப்பறல் வேண்டும். - அருணகிரியார். 3. மனமெனுமோர் பேய்க்குரங்கு மடப்பயலே நீதான் மற்றவர்போல் எனைநினைந்து மருட்டாதே கண்டாய், இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனிற் சுகமாய் இருந்திடுநீ என்சொல் வழி ஏற்றிலையானாலோ, தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளாற் கணத்தே. நனவிலெனை அறியாயோ யாரெனஇங் கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. - இராமலிங்க சுவாமிகள். 4. மனதேகல் லாலெனக் கன்றோ - தெய்வ மௌன குருவாகி வந்துகை காட்டி, என தாம் பணியற மாற்றி - அவன் இன்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி - தாயுமானார் 5. வெள்ளத்தார் . . . கள்ளத் தைக்கழி யம்மனம் ஒன்றிநின் - றுள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே. - அப்பர் விண்ணிறைந்த வெளியாய் என்மன வெளியிற் கலந்து; ஆரார் . . . பேராமல் நின்ற பர வெளியிலே மனவெளி பிறங்குவதலாது; வெளியான நீ என்மன வெளியூடு விரவின் - தாயுமானார். 1. Actually : I am a transmitter and not a maker, believing in and loving the ancients - Confucius : (Life and teachings of confucius : I : 95) 1. *இச்சொற்பொழிவு நிகழ்ந்த காலத்தில் அணுகுண்டு காணப்படவில்லை. இப்பொழுது அக்குண்டு காணப்பட்டது. 1. ஐந்து பூதம் . . . . தொந்த ரூபமுடன் அரூபமாதி குறி குணமிறந்து வளர் வதுவே; அருவுருவமெல்லாம் அகன்று அதுவாயான பொருள் . - தாயுமானார். 2. பூதமுத லாகவே நாதபரி யந்தமும் பொய்யென்று - தாயுமானார். 1. ஆறாறி னதிகமக் ராய மனுதினம் . . . . சாமிமலையுறை - தம்பிரானே. - அருணகிரியார். 1. அல்லைஈ தல்லை ஈதென மறைகளும் அன்மைச் சொல்லி னால்துதித் திளைக்குஞ் சுந்தரன். - திருவிளையாடற்புராணம். 1. ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாய்மறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத் திசை தானாய் வேறாய்உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே. - திருஞானசம்பந்தர் 1. வெற்ற . . . . . இயற்கையை யொழிந்திட்டு - அற்றவர்க்கு அற்றசிவன் - திருஞானசம்பந்தர். 1 மத்தேயு : 6 : 9 2. லூக்கா : 17 : 21, 3. யோவான்: 10 : 30 1. செந்துகில் புனைவார் சீவரந் தரிப்பார் திரிதண்டோ டொருதண்டு பிடிப்பார் தந்தமுத் திரைகள் பலப்பல தரிப்பார் தவமெனத் தம்முடம் பொறுப்பார் முந்துகாய் கிழங்கோ டிலையயின் றிடுவார் மோனமென் பார்கத றிடுவார் இந்தவா குலத்தால் ஈசன்மே விடுமோ இவர்துயர் உறுவதேன் அந்தோ. - தத்துவ சரிதை 1. மாறுபடு . . . . . சீறு புலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி செக்கச் சிவக்க அறிவார் . . . உனையாவர் அறிவார். -தாயுமானார். 2. அமல யோகர் உளவை யெலாம் - இராமலிங்க சுவாமிகள். 1. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந்தோம்புகின் றேனே. - திருமூலர் 1. பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிப் பிரானைப் பிரதிட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியான மதுசெய்யே. -திருமூலர். 1. ஆனந்த வெள்ளத் தழுந்துமோர் ஆருயிர் ஈருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும். . .; சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் . . . . .. - திருக்கோவையார் 1. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுக லான். - திருவள்ளுவர் 2. மனையி லிருந்தவர் மாதவ ரொப்பர். ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை 1. காதலில் அண்ணலைக் காண இனியவர் நாத னிருந்த நகரறி வாரே. - திருமூலர் 1. சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே யுணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளம் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்கும்இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. - திருஞானசம்பந்தர் 1. ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்புந் தகையதோ. - சேக்கிழார் 1. பிழைத்த பிடியைக் காணா தோடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத் திரிந்தங் குறங்குஞ் சாரல் அண்ணா மலையாரே. - திருஞானசம்பந்தர் 1. அப்பர் (நாமார்க்கும்...). 1. தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய நூல் எனும்எவையும் தீ தாகா துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன்களங்கம் நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர் தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல் இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர்ஏ திலருற் றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே. - சிவப்பிரகாசம் 1. முருகன் அருள்வேட்டல் 1. வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. - திருமூலர் 1. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையு மிலோம் ஏலோ ரெம்பாவாய். - திருவாசகம் 1. நாதனை; நாதாதீத நண்பனை . . . . பூதமொடு பழகிவளர் . . . . நாதாந்த வெட்ட வெளியே. - தாயுமானார் 2. வரேணா ஸந்தயேத்யோக மவரம் பாவயேத்பரம் (யோகம் சுரத்துடன் (நாதத்துடன்) சேர்ந்தது; பரம் சுரம் கடந்தது.) - அம்ருதபிந்தூபநிஷத் 1. வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும் பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல் - சிந்தாமணி : 1500 2. காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு - கலித்தொகை: பாலை: 1 1. ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் - கந்தரநுபூதி 1. பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனி தமர்ந்தார் தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல் தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சே. - அப்பர் 1. பாருந் திசையும் படரொளியா லேநிறைந்தான் தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் முளையாகி மேவுதனுச் சத்தாதி பூதங்கள் தாமாகிச் - சுத்த வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பால் உறுபொருளாய் நின்ற ஒருவன். - நெஞ்சுவிடுதூது : 81-3 ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாக மேறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனேயுன் ஆக முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே. - திருவாய்மொழி 1. தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில் தாளொன்றால் அண்டங் கடந்துருவித் - தோளொன்றால் திக்கனைத்தும் போக்குந் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம். - நக்கீரர் (கைலைபாதி காளத்திபாதி) அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரில் வான் திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு. - காரைக்காலம்மையார் (அற்புதத் திருவந்தாதி) 1. தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. - திருவாசகம்: திருச்சாழல் : 9 *1. பொதுமை வேட்டல் : 40-10 * 1. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க - திருவாசகம் : சிவபுராணம் :6 1. ... The lingam of the Hindus has a spiritual and highly philosophical meaning. While the missionaries see in it but an “ indecent” emblem ... The Secreat Doctrine - V: 285 (1938) ... Shiva - worship, with its lingam and yoni, stands too high Philosophically, its modern degeneration not withstanding, to be called a simple phallic worship... - S.D. IV: 159-160 ... The Hindu lingam is identical with jacob’s “Pillar” - most undeniably . But the difference as said, seems to consist in the fact that the esoteric significance of the Lingam was too truly sacred and metaphysical to be revealed to the profane and the vulgar; hence its superficial appearance was left to the speculations of the mob... - S.D. IV : 39 1 எருவிடும் வாசல் இருவிரல் மேலே கருவிடும் வாசல் இருவிரல் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. - திருமூலர் 1 இலிங்கம தாவதி யாரு மறியார் இலிங்கம தாவது எண்டிசை யெல்லாம் இலிங்கம தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக வெடுத்த துலகே. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் ... .... ... சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகுந் தாபரந் தானே. - திருமூலர் 1. உள்ளத்து ளோமென ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளே நீதியாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே. - திருமூலர் * 1 சம்பந்தர். 2 பூதத்தாழ்வார். 3 அப்பர். 4. திருமூலர் 1. *அப்பர் *1 தொண்டரடிப்பொடி ஆழ்வார் 1. நாதமே நாதாந்த; வெளியே : மாதத்திலே... விந்து நாதத்திலே அடங் காதந்த வான்பொருள் நாடிக்கொள்ளே. - தாயுமானார் 1 என் வீடு சகல ஜாதியாருக்கும் ஜெபவீடெனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கி னீர்களே என்று சொன்னார். - மார்க்கு; 11 : 17 1. வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதே இல்லை. - லூக்கா: 21 : 33 2. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னருள் நந்தி எடுத்துரைத் தானே. - திருமூலர் 1. பேதை மட . . . . . . . . . . . . . . . . மாதரொடும் ஆடவர்கள் வந்தடியி றைஞ்சிநிறை மாமலர்கள் தூய்க்,கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே. - திருஞானசம்பந்தர் * 1...nfhÆš முற்றத்து மீமிசை கிடப்ப - வாய்த்த தென்று காய்க்கட்டம் எடுத்தும், . . . பெரிய அன்பின் வரகுண தேவரும். . . . - பட்டினத்தார் (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 28: 49: 55) 1 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் நெஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே - அப்பர் 1 கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார். - சேக்கிழார்1 1 வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். - தாயுமானார் 1 சிவவாக்கியர். 1 பொங்கும் இருள் நீக்கும். . . . கங்குல் பகலினுங் காணாத கூத்தனை . . . - திருமூலர் சினந்தனை அற்று . . . . நினைந்ததும் அற்று நினையாததும் அற்று . . - பட்டினத்தார் அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து . . . - அருணந்திசிவம் (சித்தியார்) இரவுபக லில்லா இன்ப வெளியூடே . . . - உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) தந்தைதாய் . . . இரவுபக லில்லா இடத்து ஏகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே . . . - தாயுமானார் 1. நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே. - திருவாசகம்: சிவபுராணம் : 89 1. நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன். - பெருந்தேவனார் (ஐங்குறுநூறு) 2. வேதமும் வேள்வியும்......... சோதியு மாய்இரு ளாயி னார்க்கு . . . - மாணிக்கவாசகர் கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானை . . . பகலுங் கங்குலு மாகிநின் றானை - சுந்தரர் தெருளாகி மருளாகி . . . இருளாகி ஒளியாகி . . . . - தாயுமானார் 1. மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாது உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே. - அப்பர் 1. அப்பர் * 2. திருமங்கையாழ்வார், 3. மாணிக்கவாசகர், 4. தாயுமானார் * 1. இராமலிங்க சுவாமிகள் 1. Repentance with Allah is only for those who do evil in ignorance, then turn (to Allah) soon, so these it is to whom Allah turns (mercifully), and Allah is ever Knowing, Wise. And repentance is not for those who go on doing evil deeds, until when death comes to one of them.. he says: Surely now I repent; not (for) those who die while they are unbelievers. These are they for whom We have prepared a painful chastisement - The Holy Quran IV: 17,18 (Translation by Maulvi Muhammad Ali, M.A. LL.B.) 1. யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. - மாணிக்கவாசகர் 1. புற்று மாய்மரமாய்ப் புனல் காலே உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும்நின் மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே - மாணிக்கவாசகர் 2. சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்திர முங்குல முங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. - அப்பர் 1. ஒன்றதே பேரூர் வழியா றதற்குள என்றதே போலும் இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை மாந்தர்கள் குன்று குறைத்தெழு நாயையொத் தார்களே. - திருமூலர் 1. எய்த எளிதாம் இறையருள் இல்லையேல் எய்த அரிதா மியாவர்க்கும் - மெய்தெளிந்தால் எம்மார்க்கத் தோடும் இகலற் றிருக்குமதே சன்மார்க்கம் ஆகுநெறி தான் - அமுதசாரம் 1 குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவமாகிக் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. - திருமந்திரம் துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ண நிற்கவே துயரில் மலியு மனிதர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து துயரங்கள் செய்துதன் தெய்வநிலை யுலகில் புகவுய்க்கும் அம்மான் துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர் துன்பமிலனே - திருவாய்மொழி 1. சத்தியம் உரைக்க நாளும் சகலபல் லுயிர்கட் கெல்லாம் நித்தலும் இதமே செய்ய நினைப்பது சிவத்தை யென்றும் அத்தன்வே தாக மத்தி னருளிய பொருளிம் மூன்றும் எத்திறச் சமயத் தோர்க்கும் எம்மதங் களுக்கு மிட்டம். - மெய்மொழிச் சரிதை