திரு.வி.க. தமிழ்க்கொடை 1 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 1 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+306=320 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரம் இவ்வரலாற்றுநூல் 1908இல் வெளிவந்தது. திரு.வி. க. வரைந்த முதல் நூல் எனப்படுவது. அதன் அச்சீடு, அச்சுக்கூடம் அம்மை வார்த்தது என்று திரு. வி. க. தம் வாழ்க்கைக் குறிப்பில் வருந்தி எழுத அமைந்தது. அதன் இரண்டாம் பதிப்பு 1968இல் வெளிவந்தது. இராயப்பேட்டை இளைஞர் கழகம், யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை தொடர்பால் பால சுப்பிமரணிய பக்தசன சபையாக உருக்கொண்டது. திரு. வி. க. கதிரைவேலர் மாணவர்; அணுக்கர்; தொண்டர்; கதிரைவேலர் வரலாற்று நூல் ஆசிரியர். திரு.வி. க. வின் நூல்களைக் கற்றோர், இவ்வரலாற்று நூலை அவர்தாம் எழுதினார் என்பதை எளிதில் நம்பார். பண்டித நடை என்று திரு.வி. க. தள்ளிய நடையில் எழுதப் பட்ட நூல். மணிப்பவழ நடையது; எதுகை மோனை கருதிய அடுக்குமொழி கொண்டது. புராணப் போக்கினது. நூன்முகம் முதல் தொடரையும், நூல்முதல் தொடரையும் கண்ட அளவானே நூல் நடை - பொருட்போக்கு - புலனாகி விடும். ஈழ நாட்டு மேலைப்புலோலியூர் நாகப்ப பிள்ளை மகனாராகக் கதிரைவேலர் 1860 ஆம் ஆண்டு நவம்பர்மாதம் (பிரசோற்பதி மார்கழி 3 ஆம் தேதி குருவாரம்) தோன்றினார். சைவ வித்தியா சாலையில் பயின்று பதினெட்டாம் அகவையில் பண்டித ராயினார். வடிவாம்பிகை என்பாரை மணந்தார். சிவஞானம்பிகை என்னும் பெயருடைய மகவொன்று பெற்றார். சென்னைக்குக் கதிரைவேலர் வந்து சபாபதி நாவலர் அவர்களிடம் சிவஞானபாடியம் பாடம் கேட்டார். சோமசுந்தரநாயகர் நட்புற்றார். நூல்கள் சில இயற்றினார். அகராதி ஒன்று செய்தார். மாயாவாத தும்ச கோளரி என்னும் விருது பெற்றார். ஆரணி அரசின் அவைக்களப் புலவராகச் சிறந்தார். பழனிப் புராணத்திற்கு உரைவரைந்து அச்சிட்டு ஆங்கேயே அரங்கேற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலமைத் தேர்வாளராகத் திகழ்ந்தார். புத்தமதக் கண்டனம் என்னும் நூல் இயற்றினார்.வேளாளர் வைசியர் அல்லர் என்பதையும், நால்வர் பாடல்களே அருட்பா என்பதையும் விளக்கியுரைத்தார். வழக்குமன்றம் ஏறியும் நின்றார். கருவூரில் வாழ்ந்த கிளைடன்துரை என்பார்க்குத் தமிழ் கற்பிக்கும் கடனேற்றார். பல்வேறு இடங்களில் அவதானம் (கவனகம்) செய்தார். நூறு அவதானம் செய்யும் வல்லாராகத் திகழ்ந்தார். தில்லை, திருவையாறு முதலிய திருத்தலங்களுக்குச் சென்றார். அலுவல் பொருட்டாக நீலமலைக்குச் சென்ற கதிரைவேலர் அக்குளிர் ஏற்காமையால் பராபவ பங்குனி 13இல் (1907) இயற்கை எய்தினார். இது கதிரைவேலர் வரலாற்றுச் சுருக்கத்தில் சுருக்கம். அருட்பா - மருட்பா போர், கிளர்ந்தவகை இச்சுவடியால் புலப்படுதல் ஒரு தெளிவை ஆக்குகின்றது. நால்வர் பாடல்களை அருட்பா எனக் கொள்ளார் சிலர் கிளர்த்திய முரண்பாடே, வள்ளலார் பாடலை மருட்பா என வாதிடத் தூண்டுவதாயிற்று என்பது அவ்வுண்மையாம். பேரறிவினரையும் பிளந்து எதிரிடச் செய்து விடும் சிறுமையை ஆக்கவல்ல குறும்பர் - உட்பகைஞர் - உண்டு என்பதைக் காலம் கடந்தேனும் எண்ணிப் பார்த்து விழிப்புற இவ்வரலாற்றுக் குறிப்பு உதவும்! சன்மார்க்கமே என் மார்க்கம் என வாழ்ந்த வள்ளலார் மீள் பிறப்பாக வாழ்ந்த திரு.வி.க. பின்னே செய்த அருட்பாத் தொண்டுக்கு ஒப்பாக எவரைச் சுட்டிக் கூறக் கூடும். சமய ஆய்வர்க்கு வாய்த்த ஆவணம் திரு.வி.க. வரைந்த கதிரைவேலர் வரலாறு என்பது சாலும்! நாயன்மார் வரலாறு நாயன்மார் வரலாறு, முன்னுரை, சேக்கிழார், அறுபத்து மூவர், திரு நட்சத்திரம், உள்ளுறை என்பவற்றை முற்படக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நாயன்மார் வரலாறு (பெரிய புராணத்தைத் தழுவியது) என்னும் பொறிப்புடையது. தோற்றுவாய், நூலின் முதலும் வழியும் கூறுகிறது. அடுத்தே நாட்டுப்படலம், நகரப் படலம் இரண்டையும் இணைத்து நாடு - நகரம் எனத் தொடர்ந்து திருக்கூட்டம் என்பதனுடன் நிறைகிறது. சுந்தர மூர்த்த சுவாமிகள் முதலாகக் கொண்டு அவர் வரலாற்றை முழுவதாகத் தருகிறார். அதன்பின்னர்த் தில்லைவாழந்தணர், திருநீலகண்டர், இயற்பகையார் என இசைஞானியாருடன் நூலை நிறைவிக்கிறார். திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணசாரம் என்பவற்றை முன்வைத்தே நாயன்மார் வரலாற்றை வரைகிறார். பாடலால் அமைந்த மூலநூலைத் தழுவி வரலாற்றுநூல் வரைய வேண்டும். எனின், அதன் நடையும் தொடரும் பொருளமைவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாம் நூல் ஒன்று வேண்டின், அதற்குச் சான்றாகத் திரு.வி. க. இயற்றிய நாயன்மார் வரலாற்றைக் கூறலாம். அத்தகு தெளிவும் திறமும் ஓட்டமும் சுவையும் ஒருங்கே கொண்டது அது. விடுபாடு இல்லாத கருத்து; இடரிலா நடை; சிறு சிறு தொடர்; சிக்கலற்ற சொல்லாட்சி; அவர்க்கே இயல்பாக அமைந்த மொழி ஆளுமை இன்னவை, உரைநடை எழுதப் புகுவார்க்குப் பார்வைநூலாக வைக்கத்தக்க பான்மையில் அமைந்தது. குறுந்தலைப்புகளைத் தொடர்ந்து பார்த்தாலே வரலாற்றுத் தொடர்பு தானே அமையும் சீர்மையும் உடையது. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! அன்புடன் இரா. இளங்குமரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் சதாவதானம் நா. கதிரைவேற் பிள்ளைஅவர்கள் சரித்திரம் நூன்முகம் 3 இந்நூல் ஆக்கியோன் இயற்றிய கதிரைவேல் சரித்திர சாரம் 5 சதாவதானம் ஸ்ரீலஸ்ரீ நா. கதிரைவேல் பிள்ளை அவர்கள் சரித்திரம் 7 ஸ்ரீலஸ்ரீ நா. கதிரைவேற் பிள்ளையவர்களின் பிரிவாற்றாமையால் இயற்றிய செய்யுள்கள் 34 நாயன்மார் வரலாறு 39 முன்னுரை 41 சேக்கிழார் 46 அறுபத்துமூவர் திருநட்சத்திரம் 50 நாயன்மார் வரலாறு (பெரியபுராணத்தைத் தழுவியது) 52 தோற்றுவாய் 53 சுந்தரமூர்த்தி சுவாமிகள் 59 தில்லைவாழந்தணர் 90 திருநீலகண்டர் 92 இயற்பகையார் 96 இளையான்குடிமாறர் 99 மெய்ப்பொருளார் 101 விறன்மிண்டர் 105 அமர்நீதியார் 106 எறிபத்தர் 110 ஏனாதிநாதர் 114 குங்குலியக்கலயர் 123 மானக்கஞ்சாறர் 126 அரிவாட்டாயர் 129 ஆனாயர் 131 மூர்த்தியார் 133 முருகனார் 136 உருத்திரபசுபதியார் 137 திருநாளைப்போவார் 138 திருக்குறிப்புத் தொண்டர் 141 சண்டேசுரர் 143 திருநாவுக்கரசு சுவாமிகள் 147 குலச்சிறையார் 166 பெருமிழலைக் குறும்பர் 168 காரைக்காலம்மையார் 170 அப்பூதியடிகள் 175 திருநீலநக்கர் 179 நமி நந்தியடிகள் 182 திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் 184 ஏயர்கோன் கலிக்காமர் 225 திருமூலர் 228 தண்டியடிகள் 231 மூர்க்கர் 235 சோமாசிமாறர் 237 சாக்கியர் 238 சிறப்புலியார் 241 சிறுத்தொண்டர் 242 கழறிற்றறிவார் 249 கணநாதர் 255 கூற்றுவர் 256 பொய்யடிமையில்லாத புலவர் 258 புகழ்ச்சோழர் 259 நரசிங்கமுனையரையர் 261 அதிபத்தர் 262 கலிக்கம்பர் 264 கலியர் 265 சத்தியார் 268 ஐயடிகள் காடவர்கோன் 270 கணம்புல்லர் 271 காரியார் 273 நின்றசீர்நெடுமாறர் 274 வாயிலார் 275 முனையடுவார் 275 கழற்சிங்கர் 276 இடங்கழியார் 279 செருத்துணையார் 281 புகழ்த்துணையார் 282 கோட்புலியார் 283 பத்தராய்ப் பணிவார் 285 பரமனையே பாடுவார் 286 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் 287 திருவாரூர்ப் பிறந்தார் 288 முப்போதுந் திருமேனி தீண்டுவார் 290 முழுநீறு பூசிய முனிவர் 291 அப்பாலும் அடிச்சார்ந்தார் 292 பூசலார் 293 மங்கையர்க்கரசியார் 295 நேசர் 296 கோச்செங்கட் சோழர் 297 திருநீலகண்ட யாழ்ப்பாணர் 300 சடையர் 302 இசைஞானியார் 303 வாழ்த்து 304 சதாவதானம் நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள் சரித்திரம் நூன்முகம் அசிந்திய மவ்வியக்த மநந்த ரூபம் சிவம் ப்ரசாந்த மமிர்தம் ப்ரஹ்ம யோநிம்! ததாதி மத்தியாந்த விகீநமேகம் விபும்சிதாநந்தம ரூப மத்புதம்! உமா சகாயம் பரமேவரம் ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம் என்ற தொடக்கத்தனவாக யசுர் வேதாந்தத் தில் பிரதி பாதிக்கப்பட்ட பரசிவனார் நீர்மையைத் தன்னகத்தே சிறிது உடைத்தாம் மேருகிரி முடிகளுள் ஒன்றாய இலங்காபுரிக்கு ஓர் எழில் முகமாய் இலங்கும் யாழ்ப்பாணத்து உதித்துச் செந்தமிழ் நாடு எங்கணும் சென்று புறச்சமயக் கார் இருளைக் கடிந்த சித்தாந்த பானுக்களுள் சிறந்தார் கதிரைவேல் பிள்ளை எனும் காராளரே. அவர் 1860 ஆம் ஆண்டில் தோன்றி 1907 ஆம் ஆண்டில் கரந்தனர். அப்பெருந்தகைக்குக் கண் இமைபோன்ற கெழுதகை நண்பராய் விளங்கினார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சிந்தாந்த சபையினர். அச்சபையார் பச்சிமப் புலவகானப் பாவலராம் சைவ சித்தாந்த மகா சரபத்தின் சரிதத்தைக் தத்துவ ரூபமாகச் சுருக்கி வரைய அடியேற்குப் பணித்தனர். அப்பணியை மணி எனச் சிரமேல் தாங்கி உஞற்ற என் உள்ளத்து எழும் பேர் அவா என்னைப் பிடர் பிடித்து உந்தியது. பிள்ளை அவர்கள் வரலாற்றைச் சிறியேன் வரையத் தொடங் கியதை உணர்ந்த அன்பர்கள் தங்கட்கு மாயாவாத தும்சகோளரி மனமகிழ்ந்து விடுத்த கடிதங்களில் உள்ள கமலபந்தம், இலிங்க பந்தம், இரத பந்தம், நாக பந்தம், சதுரங்க பந்தம், மயூர பந்தம் முதலிய சித்திரக் கவிகளையும் சிலேடைக் கவிகளையும், பிற கவிகளையும் சரிதத்தின் இடை இடையே இன்றியமையாத இடங்களில் புனைக்குமாறு அனைத்தையும் எனக்கு அனுப்பினர்; எனினும் அன்னோர் விழைந்த வண்ணம் யான் செய்யாது சரிதத்தையும் சாலவும் சுருக்கினேன். எற்றுக்கெனில் அங்ஙனம் இயற்றின் அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் சரிதம் வாரிபோல் பெரிதும் விரிந்து பங்குனி மகத்திற்குள் வெளிவராது; ஆதலால் அக்கவி ரத்தினங்களைப் புவியுள்ள கவிஞர்கள் போற்றிப் புகழ்ந்து அணியப் பின்னர் பிரசுரிப்பல். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராய் இருந்த பிள்ளை அவர்கள் பிரிவாற்றாமைக்காகப் பிரபல வித்வ சிரோன்மணிகள் பாடிய பாக்களுள் வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார்க்குக் கிடைத்த கவிகளே இந்நூல் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.1 மற்றைய கவிகளை மகா-ள-ள-ஸ்ரீ புரசை பாலசுந்தரநாயகர் வெளியிடுகின்றார் என்று கேட்டுப் பெரிதும் மகிழ்வு எய்தினேன். அறிவினும் கல்வியினும் சிறியேனாய யான் யாத்த இச்சிறு நூலைச் சொல்நயம் உடைய நல்நயப் புலவர்கள் அன்னம் போல் கொள்வார்களாக. இங்ஙனம், திரு.வி. கலியாணசுந்தரன் இந்நூல் ஆக்கியோன் இயற்றிய கதிரைவேல் சரித்திர சாரம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சொல்லுபய கதிர்காமத் தூநா கப்பர் சுதன்கதிரை வேற்குரிசில் தொல்வே ளாளர் கல்விமிகு நாவலர்மா ணாக்கர் மாட்டுக் கலைகள்எலாம் கற்றுணர்ந்து கற்பின் மிக்க செல்விவடி வாம்பிகையை மணந்து சென்னை சேர்ந்தேமா யாவாத திமிரம் ஓட்டி நல்அரிக்குக் கண்டிகைநீ(று) என்றே நாட்டி நவையிறுரைத் தமிழ்ச்சங்க நாதர் ஆகி, 1 புத்தமத இருள்நீக்கிப் புலவ நாதன் பொற்சபைகண்(டு) அவ்வவைக்குத் தலைமை பூண்டு பத்திமுறை யேயருட்பா என்றே நீதி பதிவியக்க விதிகாட்டி அப்பா விற்குச் சத்தியமாய் உற்சவங்கள் இயற்றி ஈங்குத் தரணிபுகழ் அவதானம் சதமும் ஆற்றி சித்தியளி நீலகிரிக் குன்றூர்க்(கு) ஏகிச் சிவன்அடிக்கீழ்ச் சேரும்ஓரு சீர்பெற் றாரே. 2 சதாவதானம் ஸ்ரீலஸ்ரீ நா. கதிரைவேல் பிள்ளை அவர்கள் சரித்திரம் காப்பு தேன்மாமணி திகழும்மலர்த் திருவாரெழில் மருமன் மான்மாமணி மருகன்சபை மருவும்சிவ கதிரை வேன்மாமணி சரிதம்சொல விரிநீர்உல கத்தே வான்மாமணி மழமாஅருள் மலர்த்தாள்பணிந் திடுவாம். கடவுள் வாழ்த்து சிவபெருமான் ஆனேறும் பெருமானார் அரியேறும் கரியவனார் அளிக ளேறும் தேனேறும் திருமலரின் திசையேறும் சதுமுகனார் செயல்கள் ஏற மானேறும் கரம்அசைய மதியேறும் சடையசைய மன்றில் ஏறும் வானேறும் கடவுளர்தம் வாழ்த்தேறும் சிவனடியை வணங்கு வாமால் உமாதேவியார் எத்தேவர் செய்தொழிற்கும் முதற்பொருளாய் இலங்குமற இறைவ னார்க்கும் வித்தாகி இருபொருளை விழைந்தளித்தப் பொருளாக விளங்குந் தேவி சித்தாய பெருமாட்டி சிவகுகனை உவந்தளித்த செல்வி என்றும் சித்தாந்த ஒருமுதல்வி சிவகாம சுந்தரிதாள் சிந்தை செய்வாம். விநாயகர் நாரணனார் உருமாற்றி நல்லரவா யோகிருந்து நண்ண அன்னோன் பூரணப்பேர் உருவளித்துப் புகழருளும் புண்ணியத்தைப் புனித மிக்க வாரணக்கே தனன்வேண்ட வனத்தன்று நமையீன்ற வள்ளித் தாய்முன் வாரணமாய் வந்ததனி அத்துவித அரும்பொருளை வணங்கி வாழ்வாம். சுப்பிரமணியர் ஒருமயிலை வலத்தானை ஒருமயிலை இடத்தானை உருக்கை வேண்டும் திருமயிலை அளித்தானைச் சீர்மயிலைப் பதியானைச் சிந்தை செய்வோன் தருமயிலைத் தந்தானைத் தமிழ்மயிலை வளர்த்தானைத் தளிர்த்த தோகைக் கருமயிலை ஊர்வானைக் கரமயிலைத் தரித்தானைக் கருத்துள் வைப்பாம். சமயாசாரிய சுவாமிகள் சீர்பூத்த காழிநகர்ச் சிவஞான சம்பந்தர் திருத்தாள் போற்றி கார்பூத்த கடல்மிதந்த கவின்நாவுக் கரசரது கழல்கள் போற்றி போர்பூத்த திருத்தொண்டத் தொகைவிரித்த பெரியவர்தம் பூந்தாள்போற்றி ஏர்பூத்த மாணிக்க வாசகனார் இணையடிகள் என்றும் போற்றி. சந்தானசாரிய சுவாமிகள் சிவஞான போதம்செய் திருவெண்ணெய் மெய்கண்ட தேத்தாள் போற்றி சிவஞான சித்தியளி சித்தாந்தி அருணந்தி சிவன்தாள் போற்றி சிவஞான மறைஞான திருவாளன் செய்யஇணைத் திருத்தாள் போற்றி சிவஞானப் பிரகாசம் செழித்தஉமா பதிக்குரவன் செந்தாள் போற்றி. வித்தியா குரவர் செந்தமிழ் மணியே போற்றி சிவம்வளர் அரசே போற்றி இந்தமா நிலத்தில் உள்ளோர்க் கெழிலருட் பாவி னுண்மை தந்திட உற்ற எந்தை சதுரவா சகனே போற்றி கந்தவேள் சபைக்கு நாத கதிரைவேற் குரவ போற்றி. நூல் கதிரைவேலர் காசினி கண்டது. அகண்டாகார நித்த வியாபக அழல்சோதிப் பிழம்பாகிய அமலனுடன் அப்பில் தண்மையென அபேதமாய் இலங்கும் அம்பிகையின் அருளமுது உண்டோன் அருட்பாக்களை அணிந்து ஒளிரும் திருக்கோணவரையும் திருக்கேதீசமும் திகழப் பெற்றது; சிங்காரவேலர் துங்க நற் கோயில்கள் எங்கணும் ஓங்கும் எழிலினை உடைத்து; அமிழ்தினுமினிய தமிழணங்கினுக்கு ஓர் அரும் பீடம்; முத்தமிழ்க் கடலை முழுவதூஉம் உண்ட உத்தமப் புலவர்களுக்கு உற்பத்தித் தலம்; சல நில வளங்களைச் சாலவும் வகித்ததாய் மிளிரும் இமிழ்திரைப் பரவைசூழ் ஈழநாடு. அங்கு மேதாவியர் வாழ் மேலைப் புலோலியிலே, தொன்றுதொட்டு நிலவும் தூ வேளாள மரபில் தோன்றிப் புதுச்சந்நிதிப் புனிதவேள் பூங்கோயில் தர்மகர்த்தத்துவம் பூண்டு, அப்பெருமானுக்கு அல்லும் பகலும் அடிமைத் தொண்டு இயற்றும் அன்பையே இன்பு எனக்கொண்டு ஒழுகும் நாகப்ப பிள்ளை என்பார் நல்லறமாம் இல்லறத்தை நண்ணி நடாத்தினார். அவர் தமக்கு ஓர் ஆண் மகவு இன்றித் தவமணியாம் கதிர்காமக் கதிரைவேற் கடவுள் சந்நிதி அண்மிக் கருணை மிகுந்த அருண கிரியார் அருள் திருப்புகழை ஓதினார். கனிந்துருகும் அடியவர் களுக்குக் கருணை சுரக்கும் காங்கேய! எமக்கு ஓர் ஆண் மகவு அருளல் வேண்டும் என்று இரந்தார்; இல்லம் திரும்பித் தாரணி யோர் அனுட்டிக்கற் பாலகவாம் விரதங்களுள் தலைமையுடைத் தாம் சட்டி விரதத்தை அனுட்டித்து வந்தனர். இம்மை மறுமைப் பயன்களை எளிதில் ஈய வல்ல இவ்வரிய நோன்பை அவர் உஞற்ற, அஃதிற்கு உரிய அறுமுகன் அருளால் அவர் தம் அருமைக் கற்பரசியார்க்குக் கருப்பம் எய்தியது. பிரசோற்பதி ஆண்டு மார்கழி மதி குருவாரம் 3 ஆம் தேதிக்குச் சமமான 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அருள் பூடண உண்மை அவனியில் ஓங்கவும், அகம் பிரமவாத அலகைகள் அழியவும், குண்டர்கள் கொட்டம் குறையவும், வேளாளர் மேன்மை விளங்கவும், உண்மை அருட்பா இஃது என உலகு உணர்ந்து உய்யவும் ஒரு மாண்புடைய ஆண்குழவி பிறந்தது. அக்குழவி கதிரைவேல் கடவுளின் அருளால் காசினி கண்டமையால் அதற்குக் கதிரைவேல் என்னும் கவின் நாமம் சூட்டினர் கண்ணுதல் அடியார். அருமருந்தன்ன சுதனை அன்னையும் பிதாவும் பன்னிரு கரத்தனைப் போற்றி வளர்ப்பாராயினர். பள்ளியில் அமர்ந்து பண்டிதர் ஆயது பிறை என வளரும் பிள்ளைப் பெருமான் பள்ளியில் அமரும் பருவம் பெற்றதை நாகப்பர் கண்டு நனி உவப்பு எய்தித் தம் தவப்பேற்றைச் சைவ வித்தியாசாலையில் அமர்த்தினார். அவண் எம் குருநாதர் அம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அங்கை நெல்லிக் கனியென உணர்ந்தனர். பின்னர் பிறைமதிசூடிய இறைவன் புரையும் கறை இல் ஆசிரியர்பால் கன்மம் துமிக்கும் தீக்கைகள் பெற்று, நல்லூர் தோன்றிய நாவலர் சீடருள் சிறந்த யாழ்ப்பாணத்து நல்லூர்- மகாவித்துவான் தியாகராசப் பிள்ளையவர்கள் முதலியோர் மாட்டுத் தொல்காப்பியம் ஆதி இலக்கணங்களையும், சங்க நூல்களையும், தருக்க சாத்திரங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும், வட மொழிக் கிரந்தங்களையும் செவ்வனே கற்றுணர்ந்து, நல்லூர் - சதாசிவப் பிள்ளையவர்களான் சந்தேகம் பல தெளியப் பெற்றனர். பதினெட்டாண்டுகள் பாவலரும் நாவலரும் பரவும் பண்டித சிரோன்மணியாய் எண்திக்கும் ஏத்த இலங்கினர். இல்லறமாம் நல்லறம் ஏற்றது கற்றோர் மதிக்கும் காளையாம் கதிரைவேல் பெருமான் இல்லறமே வாழ்வினுக்கும் உயர்கதிக்கும் வித்தும் ஆம் துறவறத்தின் வேரும் ஆம் என்னும் ஆரணமொழியின் உள்ளக்கிடக்கையைக் கள்ளம் அறக்கற்ற கவிஞர் பெருமான். ஆகலான் தம் பதி வந்த கோவிந்தபிள்ளை எனும் குணம்மிக்கோன் கோது இலாத் தவத்து உதித்து, அறிவில் அயன்தேவியையும், கற்பில் வடமீனையும், கவியில் கமலாட்சியையும், கருணையில் காமாட்சியையும் ஒத்திருந்த வடிவாம்பிகை என்னும் கடிமலர்க் கோதையைக் கனிந்து அளித் தோர் களிப்பக் கலியாணம் செய்து, கோது இலா இல்லறத்தை நீதியுடன் ஆற்றி வந்தனர். அவர்க்கு மங்கையர்க் கரசியே இற்றை ஓர் உருக்கொளீஇ வந்தால் ஒப்ப ஒரு பெண் மகவு செனித்தது. அத்திருக்குழவிக்குச் சிவஞானாம்பிகை என்னும் சீரிய பெயர் அளித்தனர் கூரிய மதியினர். சென்னை சேர்ந்து செந்தமிழ் வளர்த்தது. செச்சையப்பன் இருதாளை உச்சியில் அணிந்து, பச்சிம புலவகான நகரத்தில் பைந்தொடியோடு இனிது உறைந்த எம் பெருவாழ்வை அநாரிய பாடையில் விழுந்து மதிமயங்கி இருந்த எங்கள் புண்ணியப் பயன்கள் சென்னை அம் பதிக்கு வலித்தன. சேய இளம் பரிதி எனச் சென்னை சேர்ந்த செவ்வேள் அடியார் செந்நாச் செவிலிகள் செப்பும் ஸ்ரீலஸ்ரீ சபாபதி நாவலரிடம் கெழுதகை நட்பு கொண்டு, அவர்பால் அவஞானம் அழிக்கும் சிவஞான பாடியம் பெற்று, அத்திருப்பாடியத்தின் உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்ந்தனர். அதுகாலை அத்துவித சித்தாந்த போதகாசிரியராய்ப் பிறங்கிய, வைதிக சைவசித்தாந்த சண்டமா ருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக்கர் அவர்கள் பாலும் அன்பு பாராட்டி வந்தனர். மாதொருபாகனாம் வேத நாயகன் பாத பத்மங் களைச் சித்தத்து இருத்திப் பத்தி மலர் தூவிப் பராவும் சிவவேடம் தரித்த தவவேடத்தார் வேண்டுகோள்படிச் சிவ க்ஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரித வசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை முதலியன முதியோர் புகழும் கதிரைவேல் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டன. இவையிற்றைக் கண்ட கற்றவரும், நற்றவரும் மற்றவரும் வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குருமுனியே! இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே! தமிழ்க்கடலை உண்ட தவப்பேறே! செந்தமிழ் அணங்கினுக்குச் சிறந்த சுதர்கள் பலர் உளரேனும், அவர்கள் அன்னையாம் கன்னிக்கு ஏற்றன ஆற்றினார் இல்லை. அப்பிராட்டியின் அகம் உவப்ப அரும் பேர் அகராதி ஒன்று ஆக்கல் வேண்டும் என்று விழைந்து பன்முறை கேட்ப, அவர்தம் விழைவைத் தழைப்பான் உன்னித் தாளாண்மை மிக்க வேளாளர் தமிழ்பேர் அகராதியொன்று தமிழ் நாட்டிற்கு உபகரித்துத் தமிழ்த்தாய்க்குத் தலைமகனாய் இலங்கினார். அவ் வகராதியின் அருமையைப் பூவில்இடை கடைஆதி எழுத்தின்முன் பேருறப் பதித்த புத்தகங்கள் யாவும்இடை கடைஎனவே யாழ்ப்பாணப் புலோலிநக ரினின்மா சீர்த்தி பாவுபுதுச் சந்நிதியான் அருட்கதிரை வேற்புலவன் பதித்த மேன்மை மேவும்அக ராதியிதே முதலதெனற் கிதன்பெயரே விளக்கும் அன்றோ என்று தஞ்சை சதாவதானம் பிரமஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் புகழ்ந்தமை காண்க. பிறரும் ஐயர் மொழியை மணி என அணிந் தனர். அதிவீரராம பாண்டியர் அருளிய கூர்ம புராணத்திற்கு உரையும் கண்டனர் கண்டிகை அணிந்த கதிரைவேலர். பின்னர் பிள்ளையவர்கள் முற்றத் துறந்த முனிவர் பெருமானாம் பட்டினத்து அடிகளார் புராணத்தை முன் ஒருவர் முதல் நூல் சிந்தியாது மொழிந்தமையால், அப்புராணத்துள் முதல் நூற்கு முரணாகக் கூறும் பாக்களை நீக்கி முதல் நூல் தழுவிப் பல பாக்கள் பாடிச் சேர்த்துப் பதிப்பித்தனர். அதில் எம் பெருந்தகை இயற்றிய செய்யுள் நடை கச்சியப்ப முனிவர் செய்யுள் நடையைக் கடுக்கும். மாயா வாத மருளை மாய்த்தது இங்ஙனம் வண்தமிழ்க் கன்னியின் தண்தமிழ்ச் சுதர்களுள் தலைமை வகித்து, முன் அறத்தை முரணாது இயற்றும் வேளையில் சூளை நாயகர் வேளை வணங்கும் வேலை விளித்து, கந்தனைக் கருதும் கதிரைவேலே! எமது யாக்கை வீக்குற்ற இக்கால் நாரணன் அறியாக் காரணன் அருளிய ஆரணத்து ஈற்றைப் பூரணமாய் உணரா நாம் பிரமம் என்னும் வேம்பு ஒத்த சோம்பர்கள் சைவ நிந்தனை புரியா நிற்கின்றனர். அம் மட்டிகளின் கொட்டம் குறைப்பது உம்கடனாம் என்ன, அவ்வமுத வாக்கைச் செவிமடுத்த எம் சீரியர் மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும் என்னும் நந்தி எம்பெருமான் பந்தம் அறுக்கும் வார்த்தையைச் சிந்தித்துச் சிந்தாதிரிப்பேட்டையில் சிவன்யாம் என்னும் தீக்கரிகள் குழுவில் அரி எனப்புக்குப் பொறித்த வினாக்கட்கு அன்னோர் விடை அளிக்காது அவை கலைத்தனர். மற்றொரு நாள் காசிவாசி - மாகவித்துவான் - சித்தாந்த பீடம் ஸ்ரீலஸ்ரீ செந்திநாத சுவாமிகள் அக்கிராசனத்தின்கீழ் மிக்கது ஓர் சபை தக்கவர்களால் சேர்க்கப் பட்டது. அப்பேர் அவையில் அத்துவிதம் செழிக்க வந்த அறிஞர் தருக்கநெறி பிறழாது சுருக்கமாகக் கடாவிய வினாக்கட்குச் செவ்வன் இறை இறுக்காது விழித்தனர் வேதாந்திகள். அதைக் கண்ட அக்கிராசனர் முக்கணன் நாமம் முழக்கி மக்கள் உய்ய வந்த மாதவப் பெருந்தகைக்கு மாயா வாத தும்ச கோளரி என்னும் மாண் பட்டம் அளித்தனர். இலக்கியம் இலக்கணம் தருக்க நூல்களில் வல்ல புலவர்களும் புலோலிப் பிறந்த புண்ணியனைப் புகழ்ந்தனர். அவ்வெற்றியைக் கேட்ட செற்றம் இலா நாயகர்க்கு உற்ற கழி பேர் உவகையை ஈண்டு விரிக்கின் பெருகும். ஆரணி சமத்தான வித்துவானாயது நாம் பிரமம் என்னும் நாதங்கட்கு இடி என இலங்கிய பிள்ளை யவர்களின் பெற்றியைக் கேட்ட பெற்றிமிகுந்த ஆரணி அரசர் எமது ஆசிரியப் பெருந்தகையை அழைத்துச் சைவ மணியே! நம் சமத்தானத்துக்குத் தாங்கள் வித்துவானாய் விளங்கல் வேண்டும் எனக் களங்கம் இலா உளம் கொண்டு உரைத்தனர். அங்ஙனே அவர் அகம் மகிழ நும் சமத்தானத்திற்கு வித்துவானாய் விளங்குவல் என வித்தகர் விடை விளம்பப் புளகம் போர்த்தனன் தீர்த்தனைப் போற் றும் ஏந்தல். அன்றுதொட்டு அச்சமத்தானம் அடைந்து அரசன் சிறார்கட்கும் பிறர்க்கும் அம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிவுறுத்தி வந்தனர். அஃது அங்ஙனம் ஆக அவண் போந்து நிதம் அத்துவிதம் எனப் பத்தி அழிக்கும் மாயா வாதத்தை ஓயாமல் போதித்து வந்த ஓர் சாத்திரியாரிடம் பாத்திரம் சிவம் எனப் பணியும் மாயா வாததும்ச கோளரியை வாதிப்பான், மன்னன் விடுப்ப, அத்திருப்பணிக்கு என அவனி தோன்றிய எமது ஐயர் சாத்திரியார் நாத்திகக் கொள்கையை மாத்திரைக்குள் ஓட்டி, அன்னவர்க்கு அத்துவித இலக்கணத்தை அறிவுறுத்தினர்; அஃதை நேரில் கண்ட அரசரால் எம் குருநாதர்க்கு அத்துவித சித்தாந்த மதோத் தாரணர் என்னும் அரிய பட்டம் அணியப்பட்டது. பூதிமாட்சி புகன்ற மேன்மை மாயாவாத தும்ச கோளரி, ஆரணி நகர சமதான வித்து வான், அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் என்னும் பட்டங்களைப் பெற்றுப் பலப்பல இடங்களில் உற்றுப் பிரசங்க மாரி பொழிந்து, சைவ வான்பயிர் ஓம்பச் செய்து வருங்கால் அவர் இயற்றிய சைவ பூடண சந்திரிகையில், அரிமேல் துயிலும் கரியவன் தரித்தல் கண்டிகை நீறு என்பது ஆழ்வாராதிகள் உள்ளக்கிடக்கை என்றும், அதற்குக் கரியாக, கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே யிடும் பெரிய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனிஎன்றுமே. என்னும் பிரபந்தச் செய்யுளை மேற்கோளாகக் காட்டி மண்குறி இடையில் உண்டாயது என்றும் வரைந்தது முற்றிலும் குற்றம் என்று அழகிய மணவாள இராமாநுஜ ஏகாங்கியாரைத் தலைவராகக் கொண்டு வாதிக்க எழுந்தனர் வைணவர்கள். பிள்ளைப் பெருமான் ஏகாங்கியார்க்குப் பின்னிடாது பிரமன் தாதை பூதி அணிந்த புண்ணிய மூர்த்தி எனப் பிரபந்தத்தினின்றும், வண்ண உரைகள் எண்இல காட்டிப் பிரசங்கவாயிலானும் பத்திரிகை வாயிலானும் நிறுவினர். இவ்விவாதம் மூன்று மதிகாலம் நீண்டது. இறுதியில் சென்னை வேணுகோபால் சுவாமி அரங்க மண்டபத்தில், அத்தியாச்சிரம பாலசரவதி ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் அக்கிராசனத்தின் கீழ் ஈட்டிய மாபெரும் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான வித்துவ ஜனர்களின்முன் அத்துவித சித்தாந்தி வேதாகம புராண இதிகாசங் களையும், திருவருட்பாக்களையும், திருவாய் மொழியையும் தழுவிக் கண்ணன் கண்ணுதல் அடியார் என்றும், அவர் அக்கமணியையும் அருநீற்றையும் அன்புடன் அணிந்து இன்புடன் ஒழுகுகின்றனர் என்றும் கன்னல் விதானத்தில் கள் மாரி பொழிந்தால் என்ன உபந்நியாச மாரிபொழிந்து, உண்மை அடியவர்களை உவகைக் கடலில் தோய்த்தனர். பின்னர் பிள்ளையவர்கள் சைவ பூடண சந்திரிகையில் விட்டுணு விபூதிருத்திராக்க தாரணர் என்பதற்குப் பல பாசுரங்கள் நாலாயிரப் பிரபந்தத்திலேயே திரட்டிப் புனைந்து அதனை இரண்டாம் முறை அச்சிறுத்திச் சென்னை செங்கான் கடைப் பந்தரில் மகா வித்துவான் புரசை ஸ்ரீமத் பாலசுப்பிரமணிய முதலியார் எம். ஏ. அவர்களைச் சபாநாயகராய் அமர்த்தி அரங் கேற்றினர். இஃதுடன் வைணவ விவாதம் முற்றுப் பெற்றது. விண்டு மூர்த்தி விபூதி ருத்திராக்க தாரணரே என்று நிறுவி வெற்றி உற்ற பின்னர் எமது பற்று இலார் பவம் நசிக்கும் சிவநிசிப் புராணத்திற்குச் சிறந்த விருத்தியுரை விளக்கினார். தடங்கருணைப் பெருங்கடலாய இறையுடன் இரண்டறக் கலந்த அடியவர் திருச் சரிதங்களைக் கேட்போர் மனம் கனிந்து உருகப் பிரசங்கித்து வருவாராயினர். அதுகாலை அவர்க்கு ஓர் சேய் உதித்துச் சேய் அடி சேர்ந்தது. அஃதும் செவ்வேள் அருளாம் எனச் சிந்தித்துச் சித்தாந்தம் செழிக்கச் சிறிதும் தளர்ந்தார் இல்லை. ஆவினன் குடி யாத்திரை செய்தது. அரியும், அயனும், அக்கினியும், அவனியரசியும், ஆவும், ஆதித்தனும் அருந்தவம் செய்து அறுசமயக் கடவுளை அருச்சித்துப் பெறுதற்கு அரிய பெரும் பேறு அடையப் பெற்றதும், மலர்தலை உலகில் மன்னும் மரகத மயூரன் மாத் தலங்களுள் தலையாய் மருவுவதும், கலிமிக்க இக்காலத்தினும் கண்டு தொழுவோர்க்கு வேண்டிய வரங்களை அருள வல்லதூஉம் ஆய பழநித்தல புராணத்துக்குப் பதினைந்து தினத்தில் எம் பாவல சிகாமணி விருத்தியுரை வரைந்து பதிப்பிக்கச் செய்தனர். அஃதைப் பதித்த பி. நா. சிதம்பர முதலியார் சிந்தித்த வண்ணம் பழநிப்பதியிலேயே வெளியிடக் கருதிச் சென்னையினின்றும் வெளிக்கிட்டனர் வேலர். அவர் ஆவினன் குடியை நாடிவருவதை அவண் இருந்த அந்தணரும், அடியவர் குழாங்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் அறிந்து அறிஞரை எதிர்கொண்டு அழைப்ப, எம் குருநாதர் அன்னவர் களுடன் பன்னிருபுய அசலப் பரமனார் பொன்நிறக் கோயிலைச் சென்னி உற வணங்கித் திருக்கோயிலுள் சென்று பெருமானையும் பெருமாட்டிகளையும் தரிசித்து ஓர் நிலையத்து இருந்தனர். மறுதினம் மாயா வாத தும்ச கோளரியால் பழநித் தலப்புராணத்தில் ஓர் சுருக்கம் சித்தாந்த நயம் தோன்றப் பிரசங்கிக்கப்பட்டது. அப்பிரசங்க அமுதைச் செவிமாந்த சிவனடியார்கள் சித்தாந்த மணிக்குப் பரிவட்டம் கட்டிச் சர்வ வாத்தியங்கள் முழக்கத்துடன் அவரைக் கிரிவலம் செய்வித்து, வாழ்த்தி, யோகமூர்த்தி ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அறுமுகத்து அண்ணலார்க்கு அருச்சனை செய்வித்தார்கள். மாதவப் பெருந்தகையும் அகத்து ஒளிரும் குகத் தேவைக் குனிந்து வணங்கிச் சந்நிதி விட்டு முன் இருந்த மந்திரத்தில் தங்கி, அடியவர் வேண்டுகோள்படி அவண் ஐந்து நாள் வதிந்து சென்னை நண்ணிச் செவ்வனே வாழ்ந்திருந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்க மாண்புலவராயதும் புத்தமதப் புன்மை விளக்கியதும் gHä jy¤â‰ gÇt£l« jÇ¡f¥bg‰w g©oj® nfhkh‹ âÇòu« vǤj ÉÇril¡ flîS«, F‹w« v¿ªj bt‹¿ ntyU«, jt¤âš fâ¤j mf¤âadhU«, fz¡fha® ikªjU«, f‹Å¤ jÄœ ts®¤j kJiu¤ jÄœ¢ r§f¥ òyt kÂahŒ, v¥.V., பி. V., வகுப்புகட்குச் சோதனைக் கர்த்தராய்த் துலங்குங்கால், தூ அடியார் பலர் சேர்ந்து அவர்பால் அணைந்து, அன்பு உருவாய ஐய! சின்னாள் பல் பிணிச் சிற்றறிவினர் ஆய சீவகோடிகள் நிமித்தம் திருவருளையே திருமேனியாக் கொண்டு, திருமறைகளை அருளிய சிவபெருமானிடம் தீக்கை பெற்றுச் சிவ ஞானபோத உண்மை அறிந்து சிவமாய் விளங்கும் திருவாதவூரர் ஆது தினகரர்களால் விலக்கப்பட்ட புத்த இருளில் புண்ணியக் குறைவால் சிலர் நண்ணிப் பித்தம் தலைக்கேறிப் பத்தி நெறி நில்லாது, முத்தி சேர்ந்த முதியோர்களையும், அவர்க்கு அன்பு பூண்டு ஒழுகும் அடியவர்களையும் எள்ளி நகையாடுகின்றனர் ;அவர்கட்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி ஆள வல்ல அறிஞர் தேவரீரே அன்றி வேறு யாவர்? என்று விண்ணப்பித்தனர். அவ்வார்த்தைகளைக் கேட்ட ஆரணி நகர சமத்தான வித்துவான் அன்று இரவே புத்தமத கண்டனம் என்னும் ஓர் புனித நூல் இயற்றி, ஆறு தினத்துக்குள் அச்சுவிமானம் ஏற்றி, அனல்பட்ட அத்தியை அங்கம் பூம்பாவை ஆக்கிய அருள் அற்புதம் நிகழ்ந்த திருமயிலாப்பூரிலே. பிரம மகோற்சவ காலத்திலே, பிக்ஷாடன மூர்த்தி உற்சவத்தன்று அரங்கேற்றம் செய்தனர்; சென்னை இராயப்பேட்டை பௌத்த ஆச்சிரமத்தின் பாங்கர் பெரிய பாளையத்தம்மன் பெரிய மண்டபத்தில் அரியதோர் உபந்நியாசமும் செய்து புத்தமத்தில் தத்துவம் இன்மையை விளக்கினர். வேளாளர் வருணம் விளங்க உரைத்தது அடுத்த தினம் சென்னை விடுத்து இறைவன், இறைவி, இளை யோன் இவர்களால் புரக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றனர். அவண் காராளரை மன்னர் பின்னர் என்றும், அங்ஙனே நிகண்டு கூறுகிறது என்றும், அதனைப் புரட்டி நான்காம் வருணத்தார் என்று அச்சிட்டனர் ஆறுமுக நாவலர் என்றும் கூறும் வருண சிந்தாமணி விடயமாகப் பலப் பல விவாத சபைகள் சேர்ந்தன; அவையிற்றில், காலம் எல்லாம் காமனைக் காய்ந்து சோமசுந்தரனைச் சேர்ந்த சுத்தராம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானை இகழ்ந்தனர் உண்மை உணரார். அவ் வசை வாசகங் களைக் கேட்ட அவர் மாணவரின் மாணவராய அருந்தவப் பெருந் தகையார் அங்கயற்கண்ணம்மை மன்றல் மண்டபத்தில், வடமொழி யினும் தென்மொழியினும், பிறமொழிகளினும் வல்ல சங்கப் புலவர்கள் ஏங்க வேளாளர் நான்காம் வருணத்தவரே என்று சுமார் 6 மணி காலம் உபந்நியசித்து, வைகறை எழுந்து வைகையில் மூழ்கி, அறுபான் நான்கு அருள் ஆடல்கள் புரிந்த அழகனையும், அங்கயற் கண் நங்ககையையும் அங்கம்உற வணங்கிச் சென்னை சேர்ந்தனர். சேர்ந்ததும் செயற்கு அரிய செய்து சித்தாந்த முத்தி சேர்ந்த சேக்கிழார் ஆதி பெரியோர்கள் திருவருளால் திருவாய் மலர்ந் தருளிய அருள் நூல்கட்கு முரணாக வேளாளரை வைசியர் என வகுக்கும் நூலினும், அதனைச் சிந்தியாதும் கண்ணுறாதும், பண்டி தர்கள் பாடிச் சூடிய சாத்துகவிகளினும் மலிந்து கிடந்த மாசுகளை மணிகடல் சுலவும் மாநில வரைப்பில் உள்ள மற்றவர்கள் கண்டு மனம் மகிழப் பத்திரிகையில் பிரசுரித்தனர். புராணம் உரைக்கும் புண்ணியம் ஏற்றது அவர் கல்வி ஆற்றலை அறிந்த ஸ்ரீமத் பாலசுப்பிரமணிய முதலியார், எம். V., திருமயிலை - மகாவித்துவான் சண்முகம் பிள்ளை முதலிய முதியோர் விழைந்த வண்ணம் வித்தகர் வட மொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்த சிவஞான சுவாமிகள் மாணவருள் சிறந்த ஸ்ரீமத் கச்சியப்ப முனிவர் பச்சைமயூரன் அருளால் பாடிய தணிகைப் புராணத்தைத் தனபதிகள் வாழும் கன பதியாம் சென்னைக் கந்தசுவாமி ஆலய வசந்த மண்டபத்தில் பிரதி ஆதிவாரத்தினும், சிந்தாதிரிப் பேட்டை வேதாகமோக்த சைவசித்தாந்த சபையடியவருள் ஸ்ரீமந் வேதாசல முதலியார் விரும்பியபடி விளங்கிழையாள் அருள் பெற்ற பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணத்தையும், கந்தன் அருளால் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிய கந்த புராணத்தையும் முறையே புதவாரத்தினும், சனிவாரத்தினும் பிரசங்கித்து வருவாராயினர். இப்பிரசங்க அமுது நறுஞ்சுவையை நுகர்ந்தோர் நூல் ஆராய்ச்சியில் மிகுந்த நுண்ணறிவாளரே. அருட்பா மேன்மை அவனியில் விளக்கியது இவ்வண்ணம் மாயன் இடும் புத்த இருள் விலக்கிய சேயஇளம் பரிதியாம் மாயா வாத தும்ச கோளரியின் கீழ்ச் செந்தமிழ் உலகம் மிளிர்வதைக் கண்ட போலிப் புலவர்கள் பொறாமல் பொறாமை யால் புதுச்சந்நிதியனைப் போற்றும் புலோலிப் புலவரேற்றின் புகழொளியைச் சிறுக்கப் பல சூழ்ச்சிகள் செய்தும், அவை பயன் இலவாயின. பின்னர், பிள்ளையவர்களை யாழ்ப்பாணச் சிங்கம் என்றும், சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தயே நம் பந்தம் கழிக்க நாகப்பர் சுதராய் உற்றனர் என்றும், சோமசுந்தர நாயகர்க்குப்பின் சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தைச் செழிப்போரில்லை என வாடிய எங்கள் உள்ளம் களி துளும்பச் சோமனார் சென்றார் சூரியனார் தோன்றினர் என்று உலகம் உரைப்ப உதித்த கதிரைவேல் என்றும், சைவ சிந்தாந்தக் கேட்டையைத் தகர்க்க வரும் புறச்சமயவீரர்களின் சிரங்களைக் கொய்யச் சைவ பூடண சந்திரிகை எனும் வாள் ஆயுதத்தை நமக்கு அளித்த நாயகர் என்றும், பலவாறு போற்றிய பண்டித ரத்னங்கள் வினை வயத்தான் நஞ்சநெஞ்சினர்களாகி சென்னையில் உள்ளார் பலர் வடலூரை வள்ளல் ஆகவும், அவர் பாக்களை அருட்பா ஆகவும் கொண்டுள்ளமை யானும், அவரோடு நேரில் வாதித்து அவர் பாக்கள் அருட்பா ஆகாது என நிறுவினர் ஆறுமுக நாவலர் ஆகலானும், அவர் மாணவரின் மாணவர் அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் ஆகலானும், அவர் தொகுத்த அகராதியும் அருட்பா என்பது திருமுறையே என அறைகின்றமை யானும், விவாத சபைகள் சேர்த்து இராமலிங்க பிள்ளையையும் , அவர் பாக்களையும் மருட்பிரகாச பொள்ளல் என்றும், மருட்பா என்றும் மனம் மகிழ்ந்துரைக்கும் யாழ்ப் பாணிகளைத் தாழ்த்தித் கூறின் எதிர் வேல் இல்லாது உலவும் கதிரைவேல் நம்மைக் கண்டிக்க எழுவர். சென்னைச் செல்வர்கள் மாயாவாத தும்ச கோளரிக்கு மாற்றலராய் விடுவார்கள் என்னும் வஞ்ச யோசனைகளை நெஞ்சில் தாங்கி முல்லா வீதியில் ஓர் சபை சேர்த்து எம் குருநாதனை யும் அவர் பரமாசாரியரையும் தூடித்து, இராமலிங்க பிள்ளை பாட்டை அருட்பா என்றும் ஐந்தாம் வேதம் என்றும் அவரை ஐந்தாம் குரவர் என்றும் உபந்நியாசித்தனர். அக்கரப் பிழை இன்றி அறைய ஆற்றல் இல்லா மக்களை ஓர் பொருட்படுத்திக் கதிரை வேற்பிள்ளை அவர்கள் எதிர்த்தார் இல்லை. பின்னர் அழுக்காறு உடையார் செந்தமிழ் கல்வி நிரம்பப்பெற்ற சித்தாந்த செல்வர் களைக் கொண்டு திருமுறைகளைத் திருவருட்பா என்போர் தீமையில் சிறந்தோர் என்று பிரசங்கிக்கச் செய்யின் பித்தமதம் எனப் புத்தமதத்தைப் பேசிய புலோவியார் தாமதிக்காது வாதத்திற்கு வருவர் என்று உத்தேசித்து, மகாவித்துவான் ஸ்ரீமத் ஆலாசுந்தரம் பிள்ளை அவர்கள்பால் ஏகி சுந்தர! புறச் சமயக்களைகளை அறக் களைந்து சொல் அரிதாம் தணிகைப் புராணத்தை நல் இசைப் புலவர் முன் ஞாயிற்றுக்கிழமை தோறும் நன்னயம் ஆகப் பிரசங்கித்து வரும் கதிரைவேலையே வல்லவர் என்று வந்திக் கின்றார் பலர். அவர் இன்னும் சின்னாள் இவண் நிலைப்பரேல் நமது வித்துவப் பட்டங்கள் செத்துவிடும் என்பது சத்தியம். திருமுறை களைத் திருவருட்பா எனல் பெருமை அல்ல என்றும் வடலூரர் பாக்களையே அப்பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் தாங்கள் உபந்நியசிப்பின் கணக்கர் பாக்களைக் கறைப் பாக்கள் எனக் கழறும் கதிரைவேலைத் துதிப்போரும் பிணக்குறுவர். சங்கப் புலவரும் தன் நாடு சேர்வர் என்று இயம்ப, உரை ஆசிரியர் உற்று நோக்கிப் பற்று அறுக்கும் நீற்றை அணியும் நல்தவம் வாய்க்கப் பெற்ற இவர்களே இறை அருள் கொழிக்கும் முறைகட்குக் குறை கூறத் தொடங்குவரேல், சிவநெறியாம் தவநெறியைச் சேரும் புண்ணியம் கைவரப் பெறாக் கைதவர்கள் அருட்பாவை நிந்தியாது ஒழிவாரோ! கலியின் வலிமையே வலிமை என்று உன்னி வந்தவர் கட்கு முகமன் மொழிந்தாற் போல அருட்பாவின் அருமையை அன்பர்களிக்க உபந்நியசிக்குதும் என்று இசைந்து சிந்தாதிரிப் பேட்டையில் பந்தம் ஒழிக்கும் பன்னிரு முறைகளின் மேன்மை களைப் பண்டிதர் வியக்கப் பிரசங்கித்தனர். புண்ணியம் இல்லாப் போலிப் புலவர்கள் தேவார ஆதி திருமுறைகளின் பெருமையையே சுந்தரர் பேசினர் அன்றி வடலூரர் பாக்களின் மாண்பை மனம் மகிழ்ந்து உரைத்தார் இல்லை என்று விசனித்து, இலகா இருள் அலகைபோல் இகலே பேசும் உலகா யதன்பால் உறாதே - பலகாலும் நாம்பிரமம் கண்டவர்போல் தம்மைக்கண்(டு) ஆங்குஅதுவே நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே - ஊன் தனக்குக் கொன்றுஇடுவது எல்லாம் கொலைஅல்ல என்றுகுறித்து என்றும்மற மேதெய்வம் என்றுஎன்று - வென்றிப் பொறையே எனும்புத்தன் பொல்லாத் புன்சொல் மிறையே விரும்பி விழாதே - சிறைமேவி வாழ்பவர்போல் மண்உலகில் மன்னும்உரோ மம்பறித்துத் தாழ்வுநினை யாதுதுகில் தான்அகற்றி - ஆழ்விக்கும் அஞ்சும் அடங்கும் அதுமுத்தி என்றுஉரைக்கும் வஞ்சஅம னண்பாழி மருவாதே - செஞ்சொலால் ஆதிமறை ஓதிஅதன் பயன்ஒன்றும் அறியா வேதியர்சொல் மெய்என்று மேவாதே - ஆதியின்மேல் உற்றதிரு நீறும் சிவாலயமும் உள்ளத்துச் செற்ற புலையர்பால் செல்லாதே - நல் தவம்சேர் வேடமுடன் பூசைஅருள் மெய்ஞ்ஞானம் இல்லாத மூடருடன் கூடி முயங்காதே - நீட அழித்துப் பிறப்பது அறியாது அரனைப் பழித்துத் திரிபவரைப் பாராதே. என்று பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தியருளிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள் அருமைத் திருவாக்கை ஒரு சிறிதும் ஓராது மாயாவாதிகள் , வைணவர்கள், புத்தர்கள், வேளாளரை வைசியர் என்போர் ஆகிய இன்னவர்களுடன் கலந்து பன்னிரு திருமுறை களையும் பரமாசாரிய சுவாமிகளையும் நாவலர் பெருமானையும் தூடித்தனர். சைவத்தின்மேல் சமயம் வேறு இல்லை என்றும், அச் சமய ஆசாரிய சுவாமிகளே ஜெகத் குருக்கள் என்றும், அவர்கள் அருளிய பாக்களே திருவருட்பா என்றும் பிரசங்க வாயிலானும் பத்திரிகை வாயிலானும் புத்தக வாயிலானும் கரதல ஆமலகம் போல் காட்டிய வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகர் அவர்களால் தாபிக்கப்பட்ட சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த வைச சித்தாந்த சபையார் அருட்பா நிந்தையைக் கேட்டுச் சகியாது புலவர் ஏற்றை அடைந்து நம் சபைத் தாபகரும் தலைவரும் ஆய நாயகர் அவர்கள் நம்பன் அடி நணுகிய பின்னர் நாவல மணியாய தங்களையே தலைவர் ஆகக் கொண்டு உள்ளோம்; சென்னைக்கண் உள்ள சிலர் முன் இரு வினையால் பன்னிரு முறைகளைப் பண்டைக் காலம் தொடங்கிப் பரன் அடியார்களான் வழங்கப்பட்டு வரூஉம் திருவருட்பா என்னும் பெயரால் அழைப்பது பாவம் எனப் பகர்ந்து பாவத்திற்கு ஆள் ஆகின்றனர். கற்றோர் அல்லாத மற்றையோர் அவர்தம் பொய் உரைகளை மெய் எனக் கொளாவண்ணம் திருமுறைக்குக் திருவருட்பா என்னும் திருப் பெயர் தொன்றுதொட்டு ஆன்றோர்களான் வழங்கப்பட்டு வருகிறதைப் போதித்தல் வேண்டும் என வேண்டினர். அடியார்க்கு எளியவன் அடியைப் பேணும் மிடி இல்லார் சபையாரை நோக்கி, அங்ஙனே செய்வல் என்னும் அரிய விடை அளித்து அன்று தொன்று, அருட்பா என்பது திருமுறையே என்றும், மருட்பா என்பது முக்குண வயத்தால் முறை மறந்து அறையும் இக் காலப் புலவர் பாக்களே என்று பசு மரத்து ஆணிபோல் பரத கண்டத்தில் நாட்ட விரதம் கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டையினும் பிற இடங்களினும் கூடிய விவாத சபைகள்தோறும் சென்று சிற்றம் பலத்து ஆடும் பெற்றம் ஊர்தியே அருட்பிரகாச வள்ளல் என்றும், காழியில் தோன்றிக் கணக்கு இலாச் சீவரைக் கரை ஏற்றிய கௌணியர் பெருமான் ஆதி கருணை வள்ளல்கள் திருவாய் மலர்ந்து அருளிய திருமுறைகளே திருவருட்பா என்றும், இராமலிங்க பிள்ளை அருட்பிரகாச வள்ளல் ஆகார் என்றும் அவர் பாக்கள் அருட்பா ஆகாது என்றும் ஆரண ஆகம அருள் நூல்களையும் மற்றைய தெய்வீக சாத்திரங்களையும் காட்டிச் சாதித்தனர். அவ் உபந்நியாச அமுதைச் செவிமடுத்த புண்ணியர் இன்புற்றார்; பூரியர் துன்புற்றார். ஸ்ரீமத் ஆலால சுந்தரம் பிள்ளை அவர்களும் அருட்பா என்பது திருமுறையே என்று அகமலர்ச்சியுடனும் முகமலர்ச்சி யுடனும் அன்பர்கட்குப் போதிக்கத் தொடங்கி ஆரணி நகர சமத்தான வித்துவானிடம் கெழுதகை நட்புபாராட்டினர். ஆலாலசுந்ரம் பிள்ளை அவர்களும் எமது ஆசிரியர் பக்கல் நண்ணியதைக் கண்டு ஆலம் அனைய வன்னெஞ்சர்கள் வடலூர்ப் பிள்ளையை வள்ளல் என்றும் அவர் பாக்களை அருட்பா என்றும் நாட்ட வேண்டும் என எழுந்த நோக்கத்தை அறவே ஒழித்துக் கதிரைவேற்பிள்ளை அவர்கட்கு இன்னல் விளைவிக்கத் தொடங்கி னர். பன்னிரு புய அசலங்களையுடைய பகவனாரைச் சென்னியுற வணங்கிச் செந்தமிழ்ச் மாலை சாத்தும் சீரியர்க்குப் பூரியர்கள் புரியும் புன்குறும்புச் செயல்கள் என்செய்யும்? அவைகள் பரிதிமுன் பட்ட பனி எனப் பறந்தன. திங்கள் அணிந்த சங்கரன் அருளால் தெய்வத் திருவாளர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகளை திருவருட்பா வென்றும் மற்றையோர் பாக்கள் மருட்பா என்றும் பெருஞ் சங்கங்களில் சென்று அருஞ் சங்கப் புலவர் செய்த உபந்நியாச சாரங்களைப் பின் வருவார்க்கு உபகரிப்பான் உன்னி வேதாகமோக்த சபையார்கள் அவையிற்றைத் திரட்டி அச்சு விமானம் ஏற்றிப் புத்தகம் ஆக்கி அதற்கு இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்னும் எழில் நாமம் ஈந்து உலகு அன்னை சிகி ஆகிப் புன்னையின் கீழ்ச் சென்னி, ஆறு உடையானைச் சென்னியுறத் தாழ்ந்து சிந்தித்து வந்தித்து வழிபடப் பெற்ற மயிலை அம் பதியிலே கபாலீச்சுரத்திற்கு எதிரிலே சித்தாந்த மந்திரம் என்னும் கிருகத்திலே கதிரைவேற் பிள்ளை அவர்களைக் கொண்டு அரங்கேற்றிப் பிரசுரித்தனர். மருட்பா மறுப்பைக் கண்ட மக்களுள் மா தேவன் மலரடியை என்றும் மனம் தாங்கி, மறை ஆகம வழி நிற்கும் மேதாவிகள் ஆனந்த வாரிதியில் ஆழ்ந்தனர். பூர்வ பக்கிகள் கிணறு வெட்டப் போய் பூதம் புறப்பட்டாற் போல யாழ்ப் பாணத்தானைத் தாழ்த்த வேண்டி யாம் காதலிப்ப இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாசங்கள் வெளியாயினவே; இவ் வண்ணம் நிகழும் எனக் கனவிலும் கருதவில்லையே; நாம் ஒன்று உன்ன நாதன் ஒன்று நினைத்தனனே; என் செய்வது என்று இரங்கி ஏங்கி ஏறு அரும் ஆகுலக் கடலில் ஆழ்ந்தனர். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்றால் போல வாளா இருந்த வண்தமிழ்க் கதிரைவேலை வலியவாதத்திற்கு அழைத்து, வடலூரார் மாண்பையும், அவர் பாக்களின் அபிவிருத் தியையும் அழித்தனரே பாவிகள் என்றும் சென்னைப் புலவர்கட்கும் பிறர்க்கும் புலோலிப் புலவன் புகழைக் கெடுக்கக் கருத்து உண்டேல் இராமலிங்கர் பாடலை எற்றிற்கோ இடையில் இழுக்க வேண்டும் என்றும் இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாசம் வெளிவந்ததற்குக் காரணங்கள் சென்னைப் புலவர்களே என்றும் கலியுகத்தில் இவர்கள் கலியாண நாட்டுக் கதிரைவேலை வலிந்து வாதித்தமை யால் அன்றோ பன் அரிதாம் பன்னிரு முறைகளின் மேன்மை பார் எங்கணும் பரவியது; யாவும் இறை அருளே ஆகும் என்றும் பலர் பலவிதமாகப் பகரா நின்றனர். சுமார் முப்பதிற்றைந்து வருடத்துக்கு முன்னர் வடலூரில் நடந்தேறிய விடயங்களை இக் காலத்தில் மெய்ப்பித்தல் மிக்க கடினம் என்று வழக்கு எடுப்பின் பிள்ளையை வள்ளல் என்போர் மீளா நரகத்திற்கு ஆளாவர் என்று கரையும் கதிரைவேலர் பயந்து கடல் மத்தியிலுள்ள தன் நாடு ஏகுவார்; அல்லது பிள்ளையை வள்ளல் என்றும் அவர் பாக்களை அருட்பா என்றும் ஒத்துக்கொள்வார் என்று யோசித்து விளம்பினர் வேறு சிலர். மருட்பா மறுப்பில் (27) இருபத்தேழு விடயங்கள் பொய்யாக வரையப்பட்டுள்ளன என்று 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை டவுன் போலீ கோர்ட்டில் இராமலிங்கம் பிள்ளை தமயன் தனயராய வடிவேற்பிள்ளை அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது. காலண்டர் நம்பர் 24533-1904, சென்னை ஹைகோர்ட் வாசால நியாய துரந்தர சிங்கங்கள் ஆகிய பிரமஸ்ரீவி. விசுவநாத சாதிரியார் B.A., B.L. அவர்களும், பிரமஸ்ரீ சாமராவ், B.A., B.L. அவர்களும் கலியில் திருமுறையின் உண்மையை வலியுறுத்த வந்த பெருந்தகைக்காக வாதிப்பான் நீதிபதி முன்னர் நின்று 27 விடயங்களுள் 20 விடயங்கள் இராமலிங்கர் பாக்களில் வெள்ளிடை மலைபோல் விளங்குவதைக் காட்டினார்கள். எஞ்சிய ஏழும் போலி அருட்பா மறுப்பு, குதர்க்க ஆரணிய நாச மகா பரசு கண்டனம், இராமலிங்கம் படிற்றொழுக்கம், முக்குண வயத்தான் முறை மறந்து அறைதல், தத்துவ போதினி, தத்துவ விவேசினி, தத்துவ விசாரணி, தினவர்த்தமானி, சுகிர்தவசனி, ஞானபானு, நேட்டிவ் பப்ளிக் ஒபினியன், அற்புதப் பத்திரிகை, வர்த்தமான விமர்சனி, திராவிடப் பிரகாசிகை, பாவல சரித்திர தீபம் முதலிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விளம்பரங்களையும் கொண்டு, வடலூர் மேட்டுக்குப்பத்திற்குச் சென்று இராமலிங்கர் செய்கைகளை நேரில் கண்ட சீரியர்களைக் கொண்டும் நிரூபிக்கப்பட்டன. அவ்வழக்கைச் சுமார் ஆறுமாத காலம் விசாரித்த நீதிபதி கனம் அஜீஜுடின் சாயபு பஹதூர் அவர்கள் 1904 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஆகிய கார்த்திகைச் சோமவாரப் புண்ணியத் தினத்தன்று தள்ளி விட்டனர். அந் நியாயாதிபதி அவர்களால் எம் குருநாதற்கு மாயாவாத தும்ச கோளரி என்ற பட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. அவ்வெற்றியைக் கேட்ட கற்றறிந்த நல்தவர்கள் வரம்பு இலா இறும்பூது எய்தினர். சிவனே கதி அவனே பதி எனக் கொண்டு சைவம் வளர்த்த சிவஞான சம்பந்தர் ஆதி திருவருள் செல்வர்கள் செம்மலர்த்தாளை நம்பிய ஸ்ரீமத் ஆனந்த முத்துக் குமாரசுவாமி பக்த ஜனசபையாரும், சைவ சித்தாந்த சங்கத்தாரும், சைவ சமய பக்த ஜன சபையாரும் ஒருங்கு சேர்ந்து ஸ்ரீ முத்துக் குமாரசாமியார் நல் திருக்கோயிலிலே 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எந்தையாம் கந்தவேட்கும், பரமாசாரிய சுவாமிகட்கும் அபிடேக அலங்கார ஆராதனம் செய்து அருட் பாக்களையும் அன்புடன் பூசித்து அழகிய விமானத்தில் எழுந் தருளுவித்து திருவீதி வலம் செய்வித்து அரசாங்கம் ஏறி அருட் பாவின் உண்மை விரித்த அத்துவித சித்தாந்த மதோத்தாரணரைக் கொண்டு திருமுறைகளின் மான்மியத்தைப் பிரசங்கிக்கச் செய்வித்துப் பெறுதற்கு அரிய பெரும் பேற்றை இம்மலையிலே அடைந்தனர்கள். அடுத்த ஆதிவாரம் எமது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையின் பிரதம வருடோற்சவத்தன்று சுந்தரேசப் பெருமானார் திருவாலயத்தினின்றும் அடியேம் ஆசிரியரை எதிர்கொண்டு அழைப்பக் கதிரைவேல் பெருந்தகையும் கடை யேமை ஒரு பொருட்படுத்தி எங்களுடன் அளவளாவி சபை நிலயம் அடைந்து அக்கிராசனம் வகித்து வருட உத்சவத்தைப் பெருமை யாய் நடத்தினர். சபைக்காரியதரிசியும் எமது தமயனாரும் ஆகிய திரு. வி. உலகநாத முதலியார் அவர்கள் இயற்றிய திருவருட்பா விஜய நாமாவளி சிவனடியார்க்கு விநியோகிக்கப்பட்டது. புரசை பரசிவ தமிழ்வேத பாராயண பக்தஜன சபையாரும் 1904 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பானுவாரம் ஸ்ரீகங்காதரேசுரர்க்கும் பங்கசாட்சி அம்மையார்க்கும் பரமாசிரிய சுவாமிகட்கும் மகாபி டேகம் அலங்காரம் ஆதி நடத்திப் புண்ணியத் திருவருட்பாக் களைப் புட்பச் சிவிகையில் எழுந்தருளுவித்துத் திருவீதி மகோற் சவம் நடாத்தினர். இங்ஙனம் சென்னைச் சிவனடியார் திருக்குழாங்கள் பன்னிரு முறைகட்கும் பத்தியாய் உற்சவம் செய்து பரம ஆனந்தராய்ச் செய்த வந்தன உபசாரங்களையும் பரிசுகளையும் ஏற்ற எம் குருநாதர் அருள் காமக்கோடியின் அம்கயற்கண்கள் களிக்கப் பாதம் தூக்கிப் பாசத்தால் கட்டுண்டு உழலும் பசுக்கள் ஈடேறப் பரமன் பஞ்சகிருத்திய நடம்புரியும் சிதம்பரத்திற்கு ஆரோத்திரா தரிசனத்திற்குச் சென்றனர். தில்லை வாழ் அந்தணர் பெருமான் களும் திருமடத்துத் தம்பிரான் சுவாமிகளும் தேவார பாடசாலை ஓதுவார் மூர்த்திகளும் திருவாதிரைத் தரிசினத்திற்காக வந்திருந்த சிவன் அடியார்களும் சிவஞான தீபத்தைக் கண்டு அகம் குளிர்ந்து முகம் மலர்ந்தனர். அவ் ஆண்டு ஆரோத்திரா தரிசினத்திற்கு அடுத்த தினம் ஆகிய (24. 12. 1904) ஆதிவாரம் ஸ்ரீ சமயாசாரிய சுவாமிகட்கு அபிடேக அலங்கார ஆராதனங்கள் செய்து அம்பலப் பாக்களாம் அருட்பாக்களை அன்புடன் பூசித்து அரசு உவாவாகிய அத்தியின் மீது எழுந்தருளப் பண்ணி, கொடி, குடை, சாமரம் ஆதிசர்வ உபசாரங்களுடன் புறப்பட்டு இருமொழித் திருவருட்பாக் கோஷத் தோடு மாடவீதி திருவுலா வந்து திருமுறைகளைக் கஜத்தினின்றும் ஹர நாம கோஷமும் கர தாள கோஷமும் திசைகள் தோறும் செவிடுபடச் சீராக இறக்கி, அரசசபையாம் ஆயிரக்கால் மண்டபத் தில் வீற்றிருக்கச் செய்தனர். அத்தியின் பின்னர் அஞ்செழுத்து ஓதி வந்த அத்துவித சித்தாந்த மதோத்தாரணரை அன்பர்கள் இன்புறு மாறு அருட்பா உண்மையை அம் மண்டபத்தில் உபந்நியசிக்க அந்தண சிகாமணிகள் ஆஞ்ஞாபிக்க அவரும் அன்னவர் ஆணையைச் சிரம்மேல் தாங்கி அருள் நாதன் மகா மண்டபத்தில் சுமார் 8000 அன்பர்கள் மத்தியில் அருட்பா உண்மையை உபந்நிய சித்தனர். திருமுறை உற்சவம் செய்த பெரு மறையோர்களால் எம்பிராற் குப் பூமாலை சூடப்பட்டுப் பட்டுப் பரிவட்டமும் சாத்தப் பட்டது. அவ்வருமையைக் கண்ட பெருமையில் சிறந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் தங்கள் தேவை அம் பதிக்குச் சிந்தா மணியை அழைத்துச் சென்று ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரப் பெருமானார் ஆலயத்திலே திருமுறைகட்குத் தில்லையம் பதியில் செய்த வண்ணம் மகோற்சவம் செய்தார்கள். அன்று இரவு வென்றிவேல் போற்றும் பிள்ளை அவர்களால் வள்ளல் அருள் மணக்கும் திருமுறை மேன்மை உபந்நியாசிக்கப்பட்டது. இறுதியில் மாயாவாத தும்ச கோளரிக்கு மாலை சாத்திப் பட்டுப் பரிவட்டம் தரித்து மாலை ஒழித்தனர் வணிக மாக்கள். அவையிற்றை அகம் மகிழ்ந்து குகன் அடி உன்னி ஏற்றுச் சென்னை அடைந்தனர் செந்நாப் புலவர். தொண்டை நாட்டுச் சிவ தலங்களுள் சிறந்த திருக்காஞ்சிச் சிவநேசத் திருக்கூட்டத்தாரும் சிதம்பரத்தில் இரண்டாம் முறை நடந்தேறிய திருவருட்பா உற்சவம்போல் திருவேகம்பத்தினும் நடத்த வேண்டும் என விழைந்து, நம் குருபால் அணைந்து, நம்பன் அருளால் நாகப்பர் தவத்து உதித்த நாயகமே! இக் காலத்து மக்களும் இனி வருவோரும் இன்புற்று உய்ய உண்மை அருட்பாக்கள் திருமுறைகளே என்று அரச மன்றம் ஏறி அறிவித்த ஆண்டகையே! செம்மறையோர் அம்பலத்தில் அருட்பா உற்சவம் செய்து ஆனந்தம் அடைந்ததற்குக் காரணராய் இருந்த கதிரைவேல் அரசே! அடியேம் அருட்பா வெற்றியைக் குறித்துத் திருக்காஞ்சியில் மகோற்சவம் நிகழ்த்த மகிழ்ந்துளேம். மாதவப் பெருந்தகை ஆண்டு எழுந்தருள வேண்டும் என வேண்டினர். வேண்டும் அடியவர்கட்கு வேண்டிய வரங்களை ஈயும் தாண்டவனை வரிபடூஉம் தாளாண்மை மிக்க வேளாள மணியும் அவர் வேண்டுகோட்கு இணங்கி அயன் ஆதியோர் வாழும் அருங்காஞ்சியை அணைந்தனர். கதிரைவேல் பெருமான் காதல் மேலீட்டால் காஞ்சிக்கு வருவதைக் கேட்ட கறைகண்டன் அடியார் கரை இலா இறும்பூது எய்திக் தெருக்கள் தோறும் பூம்பந்தர்களும் தோரணங்களும் நாட்டி வழிபார்த் திருந்தனர். அவ் வீதிகள் தோறும் அன்பர்கள் அகம் மகிழச் சென்று அன்னவர்கள் பானுவைக் கண்ட பங்கயம் என முகம் மலர்ந்து செய்த வந்தன உபசாரங்களை ஏற்று ஓர் அன்பர் நிலயம் அடைந்தனர். அடுத்த நாள் (22-1-1905) திருக்கூட்டத்தார் ஏகாம்பரப் பெருமானார் ஆலயத்தில் சமயாசாரிய சுவாமிகட்கும் சேக்கிழார் பெருமானுக்கும் அபிடேக அலங்காரம் செய்து அருட்பாக்களை அருச்சித்து ஆலய அரசு உவா மீது ஆரோகணிக்கச் செய்தனர். யானையும் குமர கோட்டத்துக் கஜமும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் வேழமும், வெண் சாமரம் வீச இராச வீதி நோக்கி நடந்தது. அந்தணர் வேத ஒலியும் அருந்தவர்கள் அருட்பா ஒலியும் அதிர் வேட்டுகளின் முழக்கமும் வாத்திய கோஷமும் திசைகளைச் செவிடுபடுத்தின. அவ்வுற்சவத் திருக்கோலத்திலே அன்பர்கள் மத்தியில் என்பு அணிந்த இறைவனே என இலங்கினர் எம் குருநாதர். இராசவீதியிலே இருகாலும் திருமுறைகளை முறைப்படி பாரா யணம் செய்யும் பலப்பல பக்த ஜன சபையார்கள் தத்தம் சபைகட்கு எதிராகத் தந்தி வந்தபோது செந்தமிழ் வேத பாராயணத்துடன் யனையை வலம் வந்து யாழ்ப்பாணப் பெருவாழ்விற்குப் பூ மாலைகள் சாத்தி நண்ணரிதாம் புண்ணியத்தைக் கண்ணிமைப் பொழுதில் கைவரப் பெற்றனர். இவ் வண்ணம் பெருங் கோஷ்டி களுடன் வருங் கஜங்கள் ஆயிரக்கால் மண்டபத்தை அண்மின. அந்தணர்கள் அருட்பாவை அத்தியின் நின்றும் பத்தியுடன் இறக்கிச் சபாமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்தனர். கதிரைவேல் பெருந் தகையைக் கண்டு அறியாத எண் இறந்த புண்ணியர்கள் ஆங்கே நண்ணிக் கதிரைவேல் பிள்ளை யாவர் யாவர் என்று ஒருவரை ஒருவர் வினவிய ஒலியே எங்கும் மலியா நின்றது. அதுகாலை ஆரியம் வல்ல வீரியர் ஓர் உயர்ந்த பீடத்தின் மீது ஏறிச் சிவ நாம சங்கீர்த்தனம் முழக்க அன்பர்களும் கண்ணாரக் கண்டு துன்பு ஒழித்தார்கள். உடனே அருட்பா மான்மியம் ஆசிரியரால் உபந்நியசிக்கப்பட்டது. உற்சவம் செய்து உற்சாகம் எய்திய உண்மைச் சிவநேயர்களால் இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண விஜய மகாசரபம் முதலிய புத்தகங்கள் பத்தர்கட்கு விநியோகிக்கப்பட்டன. ஞாபகச் சின்னத்திற்காக நாகப்பர்சுதர்க்கு அரதநம் பதித்த கௌரிசங்கர கண்டி அளிக்கப்பட்டது. உறையூர் சைவ சித்தாந்த சபையாரும் யாழ்ப்பாணத்து உபயகதிர்காம வாசரைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்று உண்மை அருட்பாக்கட்கு மேற்குறித்த வண்ணம் உற்சவம் செய்து பிள்ளை அவர்கட்குச் சன்மானம் செய்தனர். திருவருட்பா விளக்கம் என்னும் ஓர் பிரபந்தமும் இயற்றிப் புனிதர்க்கு உபகரிக்கப் பட்டது. திருவண்ணாமலை, சீர்காழி முதலிய தலங்கட்குச் சுவாமி தரிசனத்திற்காகப் பரிசனங்களுடன் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தாபகர் சென்ற காலையில் ஆங்காங்கே அன்பர்கள் அருட்பா உற்சவம் செய்து அருந்தவ மணியை வாழ்த்தினார்கள். செந்தமிழ் உலகம் செய்த வந்தனைகளை ஏற்ற செந்நாப் புலவர் சென்னை சேர்ந்து கந்தசுவாமியார் வசந்த மண்டபத்தில் தணிகைப் புராணமும் சிந்தாதிரிப் பேட்டையில் கந்த புராணமும், திருவிளை யாடல் புராணமும் பிரசிங்கித்து வந்தனர். அநபாயச் சோழ மகாராசன் செய்த அருட்பா உற்சவப் பெருங்கோலத்தை இக் காலத்து உள்ள மக்கட்குக் காட்டி இணை இலாப் பெரு மகிழ்ச்சி எய்துவித்த பெரியாரைப் பெற்றாரும் உற்றாரும் சுற்றத்தாரும் பிறரும் சுதேசத்திற்கு வருமாறு திருமுகங்கள் விடுத்தனர். அவையிற்றைச் சென்னை நேயர்கட்குக் காட்டிச் சில் நாள் நுமைப் பிரிந்து ஏத்துவோர்க்கு எந் நிதியும் அளிக்கும் சந்நிதி வேளைத்தரிசிப்பான் புலோலிக்குச் சென்று மீளுவல் என இசைத்து அன்னவர்கள்பால் விடை பெற்று, அருந்ததி அனைய கற்பரசி யாருடனும் புதல்வர்களுடனும் புறப்பட்டனர். இடையில் விடையவர் ஆடும் சிதம்பரம், சீர்காழி, புள்ளிருக்குவேளூர் திருக் கோலக்கா, திருச்செங்கோடு, திருமயிலாடுதுறை, திருவாலவாய், திருநெல்வேலி, இராமேச்சுரம் முதலிய திருப்பதிகளில் தங்கி ஆங்காங்கே உள்ள தீர்த்தங்களில் தோய்ந்து மூர்த்திகளைக் கண்டு வணங்கி அடியவர்கள் அன்பின் மேலீட்டால் செய்த பணிகளை மணி என ஏற்று அவர்கள் அகம் மகிழ்ந்து விழைந்த வண்ணம் அத்துவித சித்தாந்த மகோபந்நியாச மாரியைப் பிரம மேகம்போல் பொழிந்து வீணாகான நகரை அடைந்தனர். அந்தணரைக் கண்ட அந்தணர்களும், ஆசிரியர்களும் அன்பர்களும் அருட்பா முழக்கத் துடன் எதிர்வரக் கதிரைவேலரும் கண்ணுதல் நாம் சங்கீர்த்தனம் செய்து, அவர்களுடன் கலந்து, அவர் உபாசனா மூர்த்தியாம் உபயகதிர்காமப் பெருமான் அருள் கோயிலுள் சென்று உமை மகனை உள்ளத்து இருத்தி வணங்கித் தந்தையார் மந்திரம் அடைந்தனர். பலப்பல சைவ சித்தநாதத் திருக் கூட்டத்தினர்கள் தத்தம் கோட்டங்கட்குத் தாளாண்மை மிக்க வேளாளரை உபசாரத்துடன் அழைத்துத் திருவருட்பா உற்சவங்கள் செய்து தீமை ஒழித்தார்கள். பற்பல இடங்களில் மாயாவாத தும்ச கோளரியைக் கொண்டு உபந்நியாசங்கள் செய்வித்தார்கள். அவ் உபந்நியா சங்களைக் கேட்ட எம் குருநாதரின் குருநாதர்களே எமது ஆசிரியப் பெருந்தகையாம் நாவலர் பெருமான் பிரசங்க அமுதைச் சுமார் நாற்பது ஆண்டுகளாகச் செவி மடுக்காது வாடிய எங்கட்கு இன்றைய தினம் அஃதை உபகரித்த தடம் கருணைப் பெருங் கடல் ஆய சங்கரன் அருளை எங்ஙனம் வியக்க வல்லேம் என்று மகிழ்ந்து வியந்து புகழ்ந்தனர் எனின் ஏனைய புலவர்கள் புகழ்ந்தமையை ஈண்டு விரிக்கவும் வேண்டுமோ? போலி அருட்பாப் பிரபந்த நிர்க்கந்த கிஞ்சுக கண்டன பிரசண்ட மாருதம் சைவ சித்தாந்த மகா சரபம் என்னும் அரிய பட்டங்கள் பெரியோர்களால் சூடப்பட்டன. இணையிலாப் புலவர் பெருமான் ஈழ நாட்டில் வாழுங்கால் வடிவேல் பிள்ளை போலீ நியாயாதிபதி புகன்ற தீர்ப்பு பிழை உள்ளது என்று சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் எடுத்தனர். அதனைப் பத்திரிகைகளானும் கெழுதகை நண்பர்கள் விடுத்த கடிதங்களானும் அறிந்து சென்னை சேர உன்னினர். திடீரென்று விசாரணை தொடங்கினர் அரசாங்கத்து நியாயாதி பதிகளாய கனம் பென்சன் துரை அவர்களும் கனம் மூர் துரை அவர்களும். வேதாக மோக்த சைவ சித்தாந்த சபையார் பிரமஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்களையும், பிரமஸ்ரீ விவநாத சாத்திரியார் அவர்களையும் கொண்டு வாதிக்க, சென்னை போலீ கோர்ட் தீர்மானம் குற்றம் அற்றது என்று (21-11-1905) வழக்கைத் தள்ளி விட்டனர் நீதிபதிகள். சபையார் உடனே தம் சபாநாயகர்க்குத் தந்தி அடித்தனர். இவ் இரண்டாம் முறை வெற்றியைக் கேட்ட ஏதம் இலார் கதிரைவேல் காட்டில் இருந்தால் என்னை? நாட்டில் இருந்தால் என்னை? வீட்டில் இருந்தால் என்னை? இவ் வழக்கிற்கு அவர் ஓர் முன்னிலைச் சுட்டே அன்றி மூல காரணர் அல்லர்; முழு முதற்பொருளே இவ் வழக்கிற்குப் பிரதிவாதி என்று உள் எழும் காதல் மீதிட்டால் மொழிந்தனர். ஹைகோர்ட்டினும் வெற்றி பெற்றதை அறிந்த கொற்றவர் சமய சாரிய சுவாமிகள் திருவருளை உன்னி உன்னி ஆனந்த உருவர் ஆயினர். சென்னைச் சிவன் அடியார்களைக் காணப் பேர் அவாக் கொண்டு ஈழநாடு விடுத்துத் திருவாவடுதுறை அடைந்து விடையவனை வணங்கித் திரும்புகையில் ஸ்ரீ பண்டார சந்நிதிகள் விழைந்தபடி சந்தான பரம்பரை என்னும் அரிய விடயத்தை உபந்நியசித்துப் பரிசும் பெற்றுச் சிதம்பரம் அடைந்து சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்கள் உய்வான் கற்றைச் சடை அசையக் கால் தூக்கிக் கருணை நடம் செய்யும் பெரு வாழ்வைக் கண்டு தரிசித்துப் பல்முறை வணங்கிச் சென்னை நண்ணினர். பானுவைக் கண்ட பங்கயம் போல பன்னிரு திருமுறை சபையினர் முதலியோர் முகங்கள் மலர்ந்தன. வாடாவஞ்சியில் வாழ்ந்த சிறப்பு உடல் பொருள் ஆவி மூன்றையும் உத்தமச் சித்தாந்த சைவத்திற்காக அர்ப்பணம் செய்த அத்துவித சித்தாந்த மதோத் தாரணர் கந்தநாதன் செந்தாள் மலரை அல்லும் பகலும் சிந்தையில் இருத்திப் பழைய வைதிக சைவப் பிரசங்கங்கள் பல செய்து கொண்டு வாழ்வார் ஆயினர். கதிரைவேல் நாவலர் அங்ஙனம் வாழுங்கால் கடைச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட சிலப்பதி காரத்தைச் செய்த இளங்கோ அடிகள் அச்சங்கப் புலவராய் இருந்து கவியரங்கு ஏற்றிய கோவூர்க்கிழார், கருவூர்க்கிழார், ஓல்காப் பெரும்புகழ் தொல்காப்பியத்திற்கு ஓர் உரை கண்ட ஆரியர் சேனாவரையர் முதலிய செந்தமிழ் மணிகள் வதிந்த வாடா வஞ்சியாம் கருவூரிலே கனம் கிளைடன் துரை (Rev. Clyton) அவர் கட்கு ஓர் தமிழ்ப் பண்டிதர் வேண்டியதாய் இருப்பதை அறிந்து அத்துரை அவர்கட்கு விண்ணப்பப் பத்திரம் அனுப்பினர். அஃது துரை அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. சென்னைச் சிவநேயர் கட்குப் பல தேறுதல்கள் கூறிக் கார் இழையுடனும் கன்னியுடனும் கருவூரை அடைந்தனர். மூன்று மதிக்குள் எமது சபை இரண்டாம் வருட உற்சவம் நெருங்க அவ் உற்சவத்தை உற்சகாமாய் நடத்த அவண் நின்று சென்னை அணைந்து பன்னிரு கரத்தோன் பக்த ஜன சபையின் வருட உற்சவத்தை இனிது நடாத்தி எறிபத்தர் வாழ்ந்த எழில் ஊர்க்கு மீண்டனர். உத்தியோக காலம் ஒழிந்த மற்ற காலங்களில் தமிழ் வளர்க்கும் பெருமான் சிவஞான பாடியத்திற்குச் சிறந்த குறிப்புரைகள் வரைந்து கொண்டிருந்தனர். அஃதும் அன்றி சுப்பிரமணிய பராக்கிரமம் என்னும் ஓர் அரிய நூலும் பெரியரால் ஆக்கப்பட்டது. சிவஞான சுவாமிகள் பவஞானம் அழிக்கும் வியாக்கியானங்களின் உண்மை கற்றோர்க்கு அன்றி மற்றை யோர்க்குத் தெற்றெனப் புலப்படா. ஆகலான் அவையிற்றைத் திரட்டி யாவர்க்கும் பயன்படுமாறு எளிதான தமிழ் நடையில் தெளிவு ஆக எழுதினர். அஃது யாவர்பால் அடைந்துளதோ அறியேம்; அறுமுகனே அறிவன். வேனிற்கால விடுமுறை நாள் உறவே இல்லாளுடன் கல்லார் அல்லா நல்லார் கருதும் கதிரைவேற் பிள்ளை சென்னை அடைந்து பன்னிரு திருமுறைத் திருவருட்பாப் பாராயண பக்த ஜனசபையின் பிரதம வருட உற்சவத்தைப் பெற்றியாய் நடாத்தி மருட்பா மறுப்பின் வழக்கில் அவருக்காக வாதித்த வாசால நியாய துரந்தர சிகாமணியாம் விசுவநாத சாத்திரியார் அவர்கட்கு ஞாபகச் சின்னம் ஆகச் சில சன்மானங்கள் செய்து பூவாவஞ்சி எனப் புலவர் புகழ்ந்த கருவூர்க்கு ஏகினர். அத்திருப்பதிக்கண் உள்ள பத்தர் குழாங்கள் பண்டித சிரோன் மணிபால் அணுகி, இனிக் கரு ஊரா வண்ணம் கருவூரில் வதியும் கண்மணியே! இத்தலமான்மியத்தை எவரும் எளிதில் தெளியுமாறு கத்தியம் ஆகச் செய்ய வேண்டும் என வேண்டினர். அவர் வேண்டு கோளுக்கு இரங்கிய வேள்அடியார் கரு ஊர் மான்மியம் என்னும் ஓர் பனுவல் இயற்றிப் பசுபதீச்சுரப் பெருமானார் திருக்கோயில் கும்பாபிடேக தினத்தில் அரங்கேற்றினர். அம் மான்மியத்தில் செம்மான் மருகன் செம்மலர்த் தாளைக் கருதும் கதிரைவேல் கழறிய கவிகள் பல உளவேனும் அவையிற்றுள் இரண்டு சிலேடைச் செய்யுள்களைச் சிவனடியார் களிக்க ஈண்டுக் காட்டுதும். எறிபத்த நாயனார்க்கும் , கருவூர்க்கும், ஆம்பிரவ நதிக்கும், சிவ பெருமானுக்கும், விநாயகக் கடவுளுக்கும் சிலேடை ஐம்பொருள் சிலேடை பரசு கொளலாற் பவானியிட மார்ந்து விரவுநலி தீர்ததலான் மேற்பணியால் வஞ்சி யறியத்தம் பத்தத்த னாறுமுனோ னன்ன வெறிபத்தன் றாள்பணிவோ மே. கும்பாபிடேகத்திற்கும், கருவூர்க்கும், ஆம்பிரவதியாற்றுக்கும், பசுபதீசப் பெருமானுக்கும், பிரமனுக்கும், திருமாலுக்கும், தமிழ்க் கும், ஆரிய வேதத்திற்கும், தமிழ் வேதத்திற்கும், சமய குரவருக்கும் சிலேடை. பதின்பொருட் சிலேடை வாரம் வரலால் வருகுவனங் கோடலாற் சாரஞ் செறிதலாற் சார்கதியாற் - சீரகரு வூரா றரனயன்மா லொண்டமிழ்வே தங்கரவர் நேராங்கும் பாபிடேக நேர். இச் சிலேடைச் செய்யுள்களைக் கண்ட கருவூர்ச் சிலேடைச் சிங்கமும் பிள்ளையர்வகளை உள்ளில் போற்றியது. கருவூர்த் தேவர்க்குப் புராண சாரம் செய்யுமாறு வேண்டிய தாண்டவ மூர்த்தி யின் அடியவர் களிக்க ஓர் விருத்தமும் செய்தனர். கருவூர் கனவான் களும் தனவான்களும் கதிரைவேற் பிள்ளைக்குக் கெழுதகை நண்பர் ஆயினர். அலுவல் ஒழிந்த காலம் தவிர மற்றைய காலங்களில் கற்றைச் சடையான் நெற்றியில் தோன்றிய வெற்றிவேல் குகன் தாளை அகம்தாங்கி அவதானப் பழக்கம் செய்துகொண்டு வாழுங்காலை அவர் மனைவியார் வடிவாம்பிகை ஓர் ஆண் மகவு ஈன்று சிவ நாமம் உச்சரித்துக் கொண்டே சச்சிதானந்த சிற்சோதியில் கலந்தனர். அஃதும் எஃக வேலன் திருவருள் ஆம் என உன்னிச் சுதையையும் சுதனையும் தம்மைப் பெற்றோர்பால் சேர்க்க வேண்டும் எனத் தீர்மானித்து, யாழ்ப்பாணம் நோக்கினர். மத்தியில் திருச்செங் கோட்டில் தங்கி அரனே அறுமுகன் என்னும் அரிய உபந்நியாச மாரி பொழிந்தனர். அதைச் செவிமடுத்த அடியவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் வரம்பு இன்று. மூன்று நாள் அத் திருப்பதியில் பத்தியாய் இருந்து பின்னர் வேளாளர் வாழும் வீணாகானபுரம் அடைந்தனர். ஆங்கே இருமொழிக் கடலையும் பருகி ஏப்பம் இடும் புலவர் பெருமான்கள் முன்னர் சந்நிதிவேள் ஆலயத்திலும் புலோலி பசுபதீச் சுரப் பெருமானார் ஆலயத்திலும் பிள்ளை அவர்களால் சோடசாவ தானமும் அஷ்டதசாவதானமும் செய்யப்பட்டன. இங்ஙனம் சிவநாதன் அருளால் அவதானம் செய்த தவநாதரைப் புநர் விவாகம் செய்து கொள்ளுமாறு பெற்றோரும் மற்றையோரும் வேண்டினர்கள். அன்னவர் முகம் நோக்கி அன்புடையீர்! யான் சென்னைக்கு ஏகிச் சொல்நயம் உடைய நன்னயச் சிவநேயர்கள் வரம்பு இலா இறும்பூது எய்தும் வண்ணம் சதாவதானம் செய்து மீண்டும் நுங்களைக் காணச் செங்கை வேலன் திருவருள் இருப்பின், புநர் விவாகம் புரிந்து நும்மைப் புளகம் போர்ப்பச் செய்வல் என்று மொழிய தந்தையும் துணைவரும் குரவர்களும் நாஉலர்ந்து மறுமொழி பகரவும் வாய் எழாது நீர் நிரம்பிய கண்ணுடையர் ஆனார்கள். தம் சோதிடத்தை அவர்கட்குக் காட்டி, முதிர்தரு தவமுடை முனிவ ராயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினு மதியின ராயினும் வலிய ராயினும் விதியினை யாவரே வெல்லு நீர்மையார் என்ற ஆன்றோர் அமுதத் திருவாக்கின்படி விதியை மதியிலேன் எங்ஙனம் வெல்லுவேன். மாயமாம் வாழ்வை மெய் எனக் கொள்வர் அன்றோ மயங்க வேண்டும். முருகன் அருள் விட்டவழி நடக்கும். அஞ்சற்க என்று பல உறுதி மொழிகளை உற்றார் முதலியோர்க்கு உரைத்துக் கொண்டிருந்தனர். அதுபோது கருவூர்த் துரை அவர்கள் கதிரைவேல் துரையை நீலகிரிக்குன்று ஊர்க்கு வருமாறு கடிதம் விடுத்தனர். யாமும் எமது சபையின் மூன்றாம் வருட உற்சவத்தை முரணாது முற்றுப் பெறுவிக்கச் சென்னைக்கு விஜயம் செய்யுமாறு கடிதம் வரைந்தோம். இவ்விரண்டு கடிதங்களையும் தம் கரம் தாங்கி உடன் தோன்றிய உத்தமியை அருகு அழைத்து அம்ம! எனது புதல்வி ஆகிய சிவஞானம்பிகையையும் புத்திரன் ஆய திருநாவுக் கரசரையும் நும் செல்வர்கள் போல் பாதுகாத்தல் வேண்டும். யான் சென்னை சென்று பின் குன்றூரில் சின்னாள் தங்கி மீளுவல் என்று உரைத்து அவர் மாட்டுச் சிறுமியையும் சிறுவனையும் ஒப்புவித்துச் செல்வியை நோக்கித் திலதவதியே! நின் அருமைச் சோதரன் திருநாவுக்கரசைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவும். யான் ஸ்ரீ பால சுப்பிரமணிய பக்த ஜன சபையின் மூன்றாம் வருட உற்சவத்தை இனிது நடாத்திச் சதாவதானம் செய்யச் சென்னைக்குப் போகின்றேன் என்று கூறி விடை பெற்று வெளிக்கிட்டனர் வேலர். ஐயாற்றைக் கண்டு அறுமுகன் சபை சேர்ந்தது. தாண்டக வேந்தர்க்குத் தண் கயிலைத் தனிக்கோலத்தைத் தற்பர சிவம் சிற்பரையோடு அருளப் பெற்ற பஞ்சநதத்தைப் பார்க்கப் பன்னாளாக உள்ளத்து எழும் பேரவா ஆனது பிடர் பிடித்து உந்த மிடி இலார் இடையில் புகைவண்டி விட்டு இழிந்து திருவையாற்றை நோக்கிச் சென்றனர். தில்லையில் இரண்டாம் முறை உற்சவம் செய்த நல்லை நாவலர் மாணவரின் மாணவர் வரவைக் கேட்ட வள்ளல் அடியார்கள் வரம்பு இலா இறும்பூது எய்தி, எங்கள் தவமே தவம் என்று இயம்பி ஆலய அரசுவாக்கள் மீது பூமாலை, பன்னீர் , சந்தனம், பரிவட்டம் முதலியன அமர்த்தி எதிர்வந்து கதிரைவேலற்கு வந்தன உபசாரங்கள் செய்தனர்கள். அவ் அடியவர்களுடன் அகம் பிரம வாதக் கரிகளை அழித்த அரியும் ஐயாற்றுப் பெருமானையும் பெருமாட்டியையும் தரிசித்து ஆனந்த உருவாயது. பின்னர் சிவ உருவாய் விளங்கிய சித்தாந்தச் செல்வர்கள் விழைந்தபடி சைவ சித்தாந்த மகாசரபம் அத்திருத்தல மான்மியத்தை உபந்நியாசித்தது. மீண்டும் ஆலயத்தைக் கண்டு வணங்கி உண்மைச் சிவனடியார்கள் பால் விடை பெற்றுப் புகை வண்டி ஏறிப் புண்ணியர் வாழும் கண்ணியச் சென்னை சேர்ந்தனர். அடுத்த நாள் (17-2-1907) வருட உற்சவம் தொடங்கப் பெற்றது. அன்று காலை குன்றவில் ஏந்திக் குறுநகையால் திரிபுரம் எரித்த விரிசடைச் சுந்தரேசர் சுந்தர ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கந்தனாம் எந்தைக்கு அந்தணர் களைக் கொண்டு ஆகம விதி ஒரு சிறிதும் வழாது அபிடேக அலங்காரங்கள் செய்வித்துச் சிங்கார வேலரைத் தங்கவிமானத்தில் எழுந்தருளுவித்துத் திருவீதிம கோற்சவம் நடத்தப்பட்டது. பூதி அணிந்த வேதியர்கள் சிவநாம சங்கீர்த்தனச் சந்தடியும் பலப்பல சைவ சித்தாந்த சபைகளின் தமிழ் வேத பாராயண முழக்கமும் வாத்திய கோஷமும் பேட்டை எங்கணும் செவிடு படுத்தின. மரகத மயூரன் பின்னர் மறை ஓதி வந்த இறையடியார் குழுவில் கதிரை வேலர் அன்று விளங்கிய மேன்மையை என் என்று விரிப்பேம்? மால் அயன் இந்திரன் மற்றையவானோர் முனிவர்கள் போற்றக் கயிலையங் கிரியில் விற்றிருந்தருளும் கங்காதரனே எனக் கண்டோர் கழற இலங்கினர். இங்ஙனம் எழுந்தருளிய பெரு வாழ்வைக் கண்ட நம் பேட்டை வாசிகள் கதிரேசனைக் கண்ட கமலம் போல் அகம் முகம் மலர்ந்து தத்தம் இல்லங்கள் தோறும் பத்தியாய்க் கதலி விருக்ஷங் களும் கேதனங்களும் பந்தர்களும் தோரணங்களும் நாட்டிப் பூரியர் அல்லாச் சீரியர் புகழும் புனிதக் குரவர்க்குப் பூமாலை சாத்திப் புளகம் போர்த்தனர். அன்பர்கட்குச் சர்க்கரை, கற்கண்டு, கனிவகை கள் வழங்கப்பட்டன. மகோற்சவம் முற்றுப் பெற்றவுடன் வெற்றிவேலர் மாலையை எமது வெற்றி வேலர்க்குச் சூட்டி வாத்தியக் கோஷத்துடனும் திருவருட்பா விஜய நாமாவளி முழக்கத் துடனும் சபாகிருகத்திற்குச் சென்றனர் பால சுப்பிரமணிய பக்தர்கள். ஆசிரியர் அறுமுகன் சபை அடைந்து ஓர் அரும் பீடத்தில் அமர்ந்ததும் அவர் அடிகளை முடிமேல் அணிந்தனர் மிடி இலா மேதாவிகள். பிற்பகல் மகேவர பூஜை நடந்தவுடன் கூடிய பெருஞ் சபைக்கு அக்கிராசனம் வகித்து வருட உற்சவத்தைச் செவ்வனே நடாத்தினர். அன்று இரவு இராயப்பேட்டைக்கண் உள்ள செல்வர்களை அழைப்பித்து அன்புடைச் செல்வர்காள்! இன்றையத் தினம் இவண் நடந்தேறிய உற்சவத்தின் மாண்பை யெம்மால் எடுத்து இயம்பற்பாலது அன்று. இங்ஙனம் பிரதி ஆண்டினும் நடத்த வேண்டியது உம் கடமை. சபைக்கு மண்டபம், மணி முதலியன இல்லாதிருத்தல் பெருங் குறையாய் உள்ளது. அவையிற்றை விரைவில் பூர்த்தி செய்து சபைக்கு உபகரிக்க வேண்டுவதூஉ நும் கடமை என்று மொழிந்து அங்கத்தவர்களை நோக்கி நான்காம் வருட உற்சவத்திற்கு அக்கிராசனம் வகிப்ப நாயகன் எவரை விதித்துளனோ அறியேம் என்று கலங்கும் உளத்தராய்க் கரைந்து சிந்தாதிரிப் பேட்டைக்குச் சென்றனர் கதிரேசன் பிரியாக் கதிரைவேலர். சதாவதானம் செய்த மாட்சி அடுத்த ஆதிவாரம் (24-2-1907) சென்னை இலக்குமி விலாச மண்பத்தில் ஆடக மன்றாடிக் குமரனாம் குன்று ஆடித் திருவடிக் கண் இடையறாப் பேரன்பு வாய்ந்த பிள்ளை அவர்களால் சதாவதானம் செய்யப்படும் என் வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையர்களால் பத்திரிகைகள் பரப்பப்பட்டன. அவையிற்றைக் கண்ட அன்பர்கள் 12 மணிக்கே நாடக மண்டபத்திற்கு விஜயம் செய்தனர். அம் மாக சபைக்கு அத்தியாச்சிரம பால் சரவதி ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் அக்கிராசனம் வகித்தார். அப்பேர் அவையில் வீற்றிருந்த முத்தமிழ்க் கல்வி நிரம்பப்பெற்ற முதியோர்கள், ஆரியக் கலைகளில் வல்ல சூரியர்கள், ஆங்கில பாடையில் தேறி வித்தியாப் பட்டங்கள் பெற்ற வக்கீல் சிகாமணிகள், கணித சாத்திரிகள், பூகோள சாத்திரிகள், ககோள சாத்திரிகள், தத்துவ சாத்திரிகள், இன்பெக்டர்கள், எட்மாடர்கள் முதலிய பண்டிதர்கள் அவதானப் பரீக்ஷிகர்களாக ஏற்பட்டனர் கள். அவ்வித்துவ மணிகள் பொறித்த வினாக்கட்கு மாயா வாத தும்ச கோளரி அவர்கள் வேலும் மயிலும் துணை, வேலுமயிலுந் துணை என்னும் திருநாமத்தை முழக்கிக் கொண்டு தகுந்த விடைகள் விளம்பினர். அவ்விடைகளைக் கேட்ட அவதானச் சோதனைக் கர்த்தர்களும் அக்கிராசனரும் அவதானியைப் புகழ்ந்ததை ஈண்டு வரையப் புகின் நீண்டு விடும் எனக் கருதி விடுக்கின்றோம். அவதானப் பரீக்ஷிகர்கள் கடாவிய வினாக்களையும் அவரவர் அபிதானங்களையும் அவைகட்கு அபிதானச் சிங்கம் அளித்த விடைகளையும் இவண் விரிக்கில் பெருகும். ஆயினும் அவையிற்றின் ஓர் பாகம் ஆய கவிபேதங்களை மாத்திரம் புவியுள்ளார் களிக்க ஈங்குக் காட்டுதும். பரீக்ஷிகர் : திருமயிலை வித்துவான் வெள்ளியம்பல உபாத்தி யாயர் குமாரர் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள். வினா : காலிக் குளத்தில் பூ சரம் சரமாய் விழக் கொதித்து சுட்டது எனும் பொருள் தரக் கலித்துறையில் பாட வேண்டும். விடை : உளத்தில் துயருறும் வானவர் காமனை உந்தஅன்னான் களத்தில் கரம்உறும் காபாலி முன்ஒரு கன்னல் வில்லால் உழக்கச் சரஞ்சர மாப்பூ விழப்பதி ஆலயத்துக் குளத்தில் நெருப்புக் கொதித்தது சுட்டது குற்றம் அன்றே. பரீக்ஷிகர் : காஞ்சிபுரம் பி. செ. முருகேச முதலியார் அவர்கள். வினா : முருகனுக்கும், நவவீரர்க்கும், காஞ்சிக்கும் சிலேடை யாய் மூ என்று எடுத்துக் கு என முடியும் நேரிசை வெண்பாவாகப் பாடல் வேண்டும். விடை : மூவாத தன்மையில் மோகத்தை நீக்குதலால் காவார வைத்தலால் கண்ணுதலிற் - பூவார நிற்றலால் வேன்முருக னேரி னவவீரர் சொற்காஞ்சி நேரெனவே சொல்கு. பரீக்ஷிகர் : மயிலை அரங்கசாமி நாயகர். வினா : கோலம் எனத் தொடங்கி பார் என முடியும் ஓர் நேரிசை வெண்பாவில் சைவ சித்தாந்தத்தால் அன்றி முத்தி கிடைக்காது எனும் பொருளை அடக்கிப் பாடவேண்டும். விடை: கோலஞ்சேர் சைவமெனும் கொள்கை யரங்கப்பேர் மேலுமோர் சாமியைச்சேர் மேலவனே - ஞாலமதில் சித்தாந்த ஞானம் சிறந்ததன்றி யெவ்வுயிர்க்கும் பத்திமுத்தி சேராநீ பார். பரிக்ஷிகர் : யாழ்ப்பாணத்துத் தெல்லியம்பதி இராசரத்தினம் பிள்ளை அவர்கள். வினா : சபா மண்டபப் பெயரும் மாசி கார்த்திகை ஆயிற்று என்றும் பசு புலியைத் தின்றதென்றும் சொல் பொருள் பின் வருநிலை அணி அமைத்து ச எனத் தொடங்கி ஏ என முடியும் ஆசிரியப்பா ஆகப் பாடவேண்டும். விடை : சந்தம்ஆர் இலக்குமி விலாசம் என்னும் இந்தநன் மண்டபத் திருந்திடும் புலவருள் நூலறி தகுதிய நுவலுவ கேண்மோ இறும்பூ தன்ன வியலுறூஉம் பல்கால் வான்பொய்த் திமம்கடுத் துறுதலா லிந்த மாசியென் மதியும் கார்த்திகை யாமே புலிப்பூண் டுதைமான் பொதுவிக ரத்தால் புலிவெளிப் படுத்துப் புலிக்கூட் டடைத்த புலியைப் புலியால் வாங்கி யோர்பசு தின்றதோர் புதுமைத் தின்றியல் பறிதியே. பரிக்ஷிகர் : உரையாசிரியர் கா. ஆலாலசுந்தரம் பிள்ளை அவர்கள். வினா : சிவபெருமானுக்கும் அவதான சபைக்கும், சமுத்திரத் திற்கும் சிலேடையாய் மூன்றாம் அடியில் சைவ சித்தாந்தக் கருத் துடையதாய் சங்கப் புலவ என்று எடுத்து ர் என முடியும் ஓர் நேரிசை வெண்பாவாகப் பாடவேண்டும். விடை : சங்கப் புலவமணி சார்தலாற் றத்துவத்தால் தங்கக் கலைமதியம் சார்தலாற் - றுங்கமதாற் பேராற் சதசத் தடக்கலாற் பெம்மானும் நேரவையும் வேலையுமே நேர். நீலகிரிக்கேகி நீலகண்டர் ஆயது சண்முகன் அருளால் சதாவதானம் செய்த சைவ சித்தாந்த மகா சரபம் சீதளத் திருநோக்கத்துடன் நீலச் சிகியோன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நீலகிரிக் குன்றூர்க்கு ஏகி உத்தியோ கத்தை ஏற்றுக் கொண்டது. அத்திருப்பதிக்கண் உள்ள பத்தர்களாம் வித்தவசிரோன்மணி சொக்கலிங்கம்பிள்ளை முதலியோர் ஈழ நாட்டில் தோன்றி சோழ நாடு முதலிய தமிழ் நாடுகள் வாழத் தெய்வத் திருவருள் கைவந்து கிடந்த சைவத் திருவாளர்கள் அருளிய திருமுறைகளின் மாண்பைக் கலிமிக்க இக்காலத்தில் இராசாங்கம் ஏறி வலியுறுத்திய பெருமான் நம் நீலகிரிக்கு எழுந்தருள நாம் புரிந்த புண்ணியம் என்னோ? என் இசைத்துக் கதிரைவேல் பால் அணைந்தார்கள். அன்னவர்களைக் கண்ட மன்னர் நன்னயமாக நண்பீர்! சைவசித்தாந்த சபை ஒன்று தாபித்தல் வேண்டும். அச்சபையில் சைவப் புராணப் பிரசங்கங்கள் நடை பெறல் வேண்டும். இங்கே உள்ள குளிர்காற்று நம் தேகத்திற்குத் தீங்கு நிகழ்த்தும் எனக் கருதுகின்றேம். இரண்டு மதிக்குள் இவண் குளிர் முகத்துடன் உலவும் வாயுபகவான் எமக்கு நேயன் ஆவனேல் நுங் கண்முன் சதாவதானம் செய்து காட்டுவல் என்று இயம்ப, பூதி அணிந்த புண்ணியர்கள், சோதிபோல் தாங்கள் சொற்றபடி இப் பங்குனி மதி கழிந்தவுடன் வருடப்பிறப்பு அன்று அடியேங்கள் ஓர் சபை தாபிக்கின்றேம். மத்தியில் இளையான்குடி மாற நாயனார் புராணத்தைப் பிரசங்கிக்குமாறு பிரார்த்திக்கின்றேம் எனக் கூறினார்கள். அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் அவர்கள் வேண்டுகோட்கு இணங்கி பிரசங்கித்து வந்தனர். அந்நாயனார் பெருமான் அருமைத் திருப்புராணம் முற்றுப் பெறுவதற்குள் வெம் குளிர் சுரம் எம் குருநாதரைத் தாக்கியது. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நாவலர் பிரஸிலுள்ள ஸ்ரீலஸ்ரீ சதாசிவப்பிள்ளை அவர் கட்குத் தந்தி அடித்தனர். கிளைடன் துரை சிந்தாதிரிப் பேட்டைச் செல்வர்க்குத் தந்தி கொடுத்தனர். சுர நோயால் பீடிக்கப்பட்ட அக்காலத்தும் அவரைக் காணவந்த பெரியோர்கட்குச் சிவமான் மியங்களையே எம் குரவன் போதித்தனர் எனின் அன்னவரின் தவப் பெற்றியை அறிவிலி எங்ஙனம் வகுப்பேன். என்றும் நோய் கண்டு அறியார் நோய் கண்ட ஐந்தாம் நாள் தம் நண்பர் ஆய சொக்க லிங்கம் பிள்ளையையும் அவர் தமயனாரையும் அருகு அழைத்து, நடை பெற வேண்டிய இலௌகிக விடயங்களைச் சில மொழிந்து திருவை யாற்றில் கயிலாய தரிசனத்தைத் தாண்டவ மூர்த்தி காட்டிய காலை தாண்டகவேந்தர் அருளிச்செய்த மாதர் பிறைக் கண்ணி யானை என்னும் அருட்பதிகத்தை ஓதி அருகு இருந்த அரன் அடியார் களிக்கப் பொருளும் விரித்துப் பராபவ ஆண்டு பங்குனித் திங்கள் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மக நக்ஷத்திரம் கூடிய துவாதசித் திதியிலே அகண்டாகாரப் பொருளாம் சிவத்துடன் இரண்டறக் கலந்தனர். தந்தி சமாச்சாரங்கள் தமிழ் உலகு எங்கணும் உலவின. சென்னைச் சிவநேயர்கள் யாவரும் ஸ்ரீ கபாலீச்சுரப் பெருமானார் கண்டிகையும் திருநீற்றையும் பொருளாக் கொண்ட அறுபான் மும்மை நாயன்மார்களுடன் திருவீதி வலம் வந்து திருக்கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றும் திருக்கோலத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தகாலை சென்னைக்குக் கதிரைவேலர் கபாலீச்சுரனுடன் கலந்தார் என்ற சமாச்சாரம் எட்டியது. கபாலீசா கபாலீசா என்னும் சந்தடி கதிரைவேலா கதிரைவேலா என மாறியது. தொண்டை நாடு, பாண்டிய நாடு, சோழநாடு, ஈழநாடு முதலிய நாடுகள் துக்கசாகரத்தில் ஆழ்ந்தன. தகனக்கிரியையும் அத்தி சஞ்சயனமும் குன்றூரில் நடைபெற்றன. அந்தியேஷ்டி முதலிய கிரியைகள் யாழ்ப்பாணத் திலே நடந்தேறின. அக்கமணியையும் அருள் நீற்றையும் அன்புடன் அணிந்து பன்னிரு முறைகளைப் பாராயணம் செய்யும் பக்த ஜனசபையார்கள் கதிரைவேற்பிள்ளை அவர்கள் அற்புதத் திருவுருவப் படங்களைத் தத்தம் சபைகளினும் இல்லங்களினும் தாபித்து மெய்ப்பத்தியுடன் பூசித்து வாழ்கின்றார்கள். வாழி விருத்தம் பன்னிரு முறைகள் வாழ்க பாரினில் அவற்றின் மேன்மை சொன்னநற் கதிரை வேலெஞ் சுந்தரக் குரவன் வாழ்க அன்னவன் நூல்கள் வாழ்க அருஞ்சபை பலவும் நாங்கள் பன்னிரு புயத்தோன் பால பகவனார் சபையும் வாழ்க கதிரைவேற் பிள்ளை அவர்கள் சரித்திரம் முற்றுப் பெற்றது கதிரைவேலன் கழலிணை வாழ்க. ஸ்ரீலஸ்ரீ நா. கதிரைவேற் பிள்ளையவர்களின் பிரிவாற்றாமையால் இயற்றிய செய்யுள்கள் திருவாரூர் வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் இயற்றியது கலிவெண்பா மாதவனும் வேதியனும் வானவருந் தானவரு மாதவரு மானுடரு மற்றவரு - நாதவென நின்றுதுதி நின்மலனார் நீட்சிலைமா மேருவெனுங் குன்றத்தி னோர்முடியாங் கோணவரை - நன்றிமிகு நீதிநூல் வல்ல நிபுணர்வாழ் கேதீச மாதிதிரு வாலயங்க ளாங்காங்கே - சோதியா யோங்கீழ நாடதனி லொப்பில்வேற் சந்நிதிவேள் பூங்கந்த வெற்பொத்த பொற்கோயில் - தாங்குமொரு மேலைப் புலோலியெனு மேலோர் மொழிபதியி னாலாங் குலம்புரிந்த நற்றவமுஞ் - சீலமிகு தென்னாடும் பொன்னாடுஞ் செந்தமிழு மாரியமு மெந்நாடுஞ் செய்தவமு மேகியொன்றாய் - மன்னாடு நாகப்பர் நற்றவத்தி னான்மறையின் சீர்விளங்க வாகமவாய் மைவிளங்க வாரியையோர் - பாகரரு ளோங்கு திருமுறையி னுண்மையெல் லாம்விளங்கப் பாங்குறு சூதன் பகர்முதுநூல் - ஈங்கொலிக்க வெள்ளை விடையூரும் வித்தக னாரடியா ருள்ள முவப்ப வுதித்தோனே! - வள்ள லறக்கொடியோன் போன்ற வருட்குருவை நண்ணிப் பிறப்பொழிக்குந் தீக்கையெலாம் பெற்றோய்! - துறந்தோர் சொல் நல்லைநக ராறுமுக நாவலர்தம் மாணவர்பாற் சொல்லுதமி ழாரியநற் றூமொழியில் - வல்லோர்செய் கோதி லிலக்கணமுங் கூறு மிலக்கியமு மோதிமய னீங்க வுணர்ந்தோனே! - நீதிமிகு சென்னைமா நன்னகர்க்குத் தீயே மிருளொழிக்கத் துன்னுகதி ரோனெனவே தோன்றியவா! - நன்னீறுங் கண்மணியாங் கண்டிகையுங் கண்ணன் றரித்தொழுகு முண்மை விளக்கு முயராழ்வார் - வண்மைமிகு வாய்மொழிக்கு மாறாக வாதந் தொடங்கியபல் வாய்மையிலா வைணவர்தம் வாயடக்கித் - தூய்நீற்றி னுண்மை யவரறிந்தே யுய்ய மறைவிதிக டிண்மையாய்க் காட்டுந் திறலோனே! - மண்முகத்தி னற்றவத்தோர் போற்றுமெழி னயகரா நால்வரருள் வெற்றியருட் பாவோதும் வித்தகரே - குற்றமிலாத் தந்தைதாய் சுற்றந் தமய னெனக்கருதிப் பந்த வினைகளெலாம் பற்றறுத்தோய்! - சந்ததமு நாங்களே தெய்வமெனுஞ் ஞாலக் கரிகளெலா மேங்கியழிந் தோட வெதிரேறி - யீங்குப் பிரசங்கக் கர்ச்சனைசெய் பேரரியே றென்றே யரசாங்கத் தார்புகழ்ந்த வண்ணால்! - தரையின்மிசை யத்துவித சித்தாந்த வஞ்சமயத் தாபகனென் றுத்தமர்கள் போற்ற வொளிர்ந்தோனே! - புத்தமதப் பித்தர் விடுத்த பிழைமலிந்த நூல்களையெங் கத்தனடி யார்களிக்கக் கண்டித்தோய்! - அத்தியணி யண்டர் பிராற்கினிய வந்தமிழெ னுங்கடலை யுண்டமூத் தோரு ளுயர்ந்தோனே! - பண்மொழியா ளங்கயற்கண் ணம்மை யரசுபுரி மன்மதுரைச் சங்கப் புலவத் தனிமணியே ! - யிங்குள்ள சுந்தர மாணவர்க்குத் தூயதமி ழின்னமுதைச் சந்ததமு மூட்டுநற் சற்குருவே! - சுந்தரனார் சாத்திரத்தி னுட்பொருளைத் தாரணியி லன்பருக்கு மாத்திரைக்குட் சொல்லவல்ல மாண்புடையோய்! - நாத்திகர்க்கு நாதன் சிவனெனவே நாட்டி யவர்முகத்திற் பூதி யணிந்தாண்ட புண்ணியனே! - கோதினர்தம் பாக்களருட் பாவென்னும் பாமரர்தங் கொள்கைகளை மாக்களுய்ய வேரறுத்த மாதவனே! - வீக்கத்தார் நீதித் தலத்து நிறுத்திய வக்காலை நீதி பலகழறி நீசரது - வாதம் பரிதிப் பனியெனவே பற்றறுத் தீராறாய் விரித்த வருண்முறையே மேன்மை - யருட்பாவென் றெம்பெருமா னன்பரெலா மெங்கணுமே போற்றிசெய வும்பர்கள் வாழ்த்த வுறுதியாய் - வம்பில்லா நீதி பதிவியக்க நேராக மேல்விதிகள் சோதி யெனச்சொற்ற தூயோனே - கோதிலாத் தில்லைதிருக் காஞ்சி சிராப்பள்ளி தேவைநகர் செல்வமலி சென்னை சிவனெங்கோ - னல்லதிரு வாலயங்கண் மன்னு வரும்பதிக ளில்வாழுங் கோல மிகுவடியார் கூட்டமாச் - சீலமொ டன்றுநின் பாலேகி யன்புடனே வாழ்த்தியொரு வென்றியெமக் கீந்த விறலோனே! - யென்றுன்னைத் தத்தம் பதிக்கழைத்துத் தங்க விமானமதிற் றத்துவ வின்னருட்பா தாபித்துச் - சத்தியமாய் வேதியரும் வாழ்த்தியதை வேழத்தின் மீதிருத்தி வீதி வலம்வரவே வேழம்பி - னாதியடி யார்குழுவி லாறுமுக வண்ணலெனக் கைகூப்பிப் பாருளோர் போற்றிசைத்துப் பண்பாடச் - சீராக வஞ்செழுத் தோதிவந்த வன்பரசே! - யம்பலவன் செஞ்சொல்வே தாந்தத் தெளிவாகு - நஞ்சைவச் செஞ்சாலி யோங்கச் செழும்பிர சங்கமழை யஞ்சா துபொழி யருண்முகிலே! - செஞ்சடையன் றொண்டர் பெருமையெலாஞ் சொல்லச் சிவசபைக ளண்டத் துறச்செய்த வான்டகையே! - கண்டோர் கருவூர்த னீக்குங் கருவூரிற் சின்னாள் கருவூர்த னீக்கக் கருதிப் - பெருமானை யுள்ளத்தாற் பூசித் துறுபாசம் வீட்டிநின்ற வெள்ளலிலா நல்ல வெழின்முனியே! - புள்ளிமயிற் செல்வன் றிருவருளாற் சென்னையினிற் செந்தமிழ்மாக் கல்வி சிறந்த கவிஞரா - நல்லோர்மு னோர்நூ றவதான முண்மையாய்ச் செய்துபுகழ் பாரில்விரித் தோங்குவித்த பண்போனே! - யேர்மிகுந்த சீல வருணகிரிச் செந்தமிழ்ப்பா பெற்றுள்ள நீலகிரிக் குன்றூரி னின்மலனா - நீலகண்டன் செம்பொ னடிக்கன்பு செய்கணங் கள்கொணர்ந்த வம்பொன்றே ரேறியுண்மை யன்பரெலாம் - வெம்பிநிற்க கற்றோர் கதறக் கலைவாணி மோதியழச் சுற்றத்தார் சூழ்ந்திரங்கச் சோதரனும் - பெற்றவனும் வாய்கொட்டி வீழ்ந்தழவே வாடா வுளத்தரழத் தாயிழந்து பாரிற் றவிக்கின்ற - சேயெனவே யெஞ்சபையு மற்றனவு மேங்கியழ வேதமிலா நெஞ்சரு நேயரு நின்றிரங்கத் - தஞ்சமென வந்த வரைக்காக்கும் வண்கதிரை வேற்புலவா! தந்தைதா யில்லாத் தனிமுதலா - யந்தமு மாதியு மில்லா வரும்பெருஞ் சோதியாய் வேதவே தாந்த விரிபொருளாய்ப் - போதமாய்ப் பெண்ணா ணலியாய்ப் பிறப்பிலியாய்ப் பேசரிதாய் மண்ணீ ரனற்காற்று வானாகி - யெண்ணரிதா யொன்றிரண் டென்னாத வோங்கொளியி லொன்றினையா லென்றுமையாங் காண்பே மினி. (1) நேரிசை வெண்பா மெய்யருட் பாவெங்கே மெய்கண்ட நூலெங்கே தெய்வீக நீறெங்கே செந்தமிழின் - மெய்யெங்கே கந்தனடி போற்றுங் கதிரைவே னாவலநீ யிந்தநிலந் தோன்றாயே லிங்கு. (2) உன்போ லிலக்கணமு முண்மை யிலக்கியமு நன்ஞான நூல்களுஞ் ஞாலத்தி - லென்றனக்குச் சத்தியமாய்ப் போதிக்குஞ் சற்குரவர் வேறில்லை பித்தனே னென்செய்வல் பேசு. (3) சங்கரனைப் போற்றிநிதஞ் சாக்கியரைக் காய்ந்துமன்னர் சங்கந் தனைநண்ணிச் சார்மகத்தி - லங்கயிலைப் புக்க கதிரைவேற் புண்ணியனைப் புன்னெஞ்சே யிக்கால வாசகனென் றேத்து. (4) கட்டளைக் கலித்துறை வேலைப் புலோலி யெனும்பதி மேவிய வேலவனார் காலைக் கதியெனக் கொண்ட கதிரைவேற் கண்மணிநீ மாலையோர் பங்கன் மலரடி மன்னினை மற்றினியார் வேலை நிலத்தெழி னால்வர்தஞ் சீரறை வித்தகரே. (5) சங்கரி கந்தனை யாள்பதிச் சங்கத் தனிப்புலவ சங்கரி கந்தனைச் சூடரன் றாண்மலர்த் தங்கினையாற் சங்கரி கந்தனை யேறெங் குமரனார் தாரகனைச் சங்கரி கந்தனை யெஞ்சபை நாதன் சகத்தினியே. (6) அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் தென்னாட்டுச் செந்தமிழே சிவநெறியோர் தவநெறியே திருவே தேனே யிந்நாட்டுப் புலவருக்குத் திருமுறையி னுண்மையெலா மெடுத்துக் காட்டிப் பொன்னாட்டுப் புலவருக்குப் போதிப்பான் போந்தனையோ புலவ ரேறே மன்னாட்டு முனக்கினிய குகச்சபையை மறந்தேகல் வழக்கோ சொல்லாய். (7) முன்னாளி லெக்குரவற் கென்னபவஞ் செய்தேனோ மூட நாயே னிந்நாளி விளமையிலே யுனையிழந்து வாடுகின்றே னெந்தா யெந்தா யெந்நாளி லுனைக்காண்பே னெழின்முகத்தைக் காட்டாயோ வெங்கே சென்றாய் மன்னாவோ மன்னாவோ மாநிலத்து மாணவரை மறந்தாய் கொல்லோ. (8) எத்துயர மணுகிடினுங் குருபத்தி தவறாத வெழிலோ யென்று நத்திடும்யாப் பியல்பயிற்றும் பயனதனை யொருபாவி னாட்டி வாழும் உத்தமநற் சுகுணத்தோய் கல்யாண சுந்தரப்பே ருற்றோ யென்றுஞ் சத்தியனே யினியெனக்குக் கடிதங்கள் விடுப்பவருஞ் சகத்தி லுண்டோ. ஜெனனதினம் - கட்டளைக் கலித்துறை பேர்பிர சோற்பதிப் பீடுறு மார்கழிப் பேசிருநான் கார்பிர கற்பதி வாரமுற் பக்கந லைப்பிசியிற் சீர்பிர சங்கம் பொழிகதி ரைவேற் சிறப்புடையோன் சார்பிர மன்றரு வார்கடற் றாரணி சார்ந்தனனே (10) திருநக்ஷத்திர வெண்பா பன்னு பராபவத்துப் பங்குனிப்ப தின்மூன்றில் மன்னுமுதற் பக்கஞ்சேர் மாமகத்தில் - மின்னு கதிரைவே லன்றாதைக் கான்மலர்க்கீழ்ச் சேர்ந்தான் கதிரைவே னாவலவன் காண். (11)  நாயன்மார் வரலாறு முன்னுரை நாயன்மார் வரலாறு என்னும் இந்நூலுக்கு முதல் நூல் திருத் தொண்டத்தொகை; வழி நூல் திருவந்தாதி; சார்புநூல் பெரிய புராணம். இம்மூன்றும் முறையே வன்தொண்டராலும், நம்பி யாண்டார் நம்பியாலும், சேக்கிழாராலும் அருளிச்செய்யப் பெற்றன. திருத்தொண்டர் புராணசாரமென்பது பின்னே உமாபதி சிவாசாரியரால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நாயன்மார் வரலாற்றின் வரலாறு, எனது ஆராய்ச்சிக் குறிப்புரையைக் கொண்ட பெரியபுராணம் இரண்டாம் பதிப்பின் முன்னுரைக்கண் விளக்கப்பெற்றிருக்கிறது. அப்பகுதி வருமாறு:- **சென்னை வெலி கலாசாலையில் யான் மாணாக்கனா யிருந்த போது, யாழ்ப்பாணம் - நா. கதிரைவேற் பிள்ளை யவர்களது அன்புக்கு உரியவனானேன். ஆங்கிலத்தில் பித்துக்கொண்டு திரிந்த எனக்குத் தமிழில் வேட்கையை எழுப்பியவர் அவரேயாவர். அவரிடம் யான் நெருங்கிப் பழகி வந்தபோது, பெரியபுராணத்தைப் படிக்குமாறும், நாயன்மார் வரலாறுகளை உரை நடையில் எழுதி எழுதிப் பயிற்சி பெறுமாறும் அவர் எனக்கு அடிக்கடி சொல்லி வருவர். அவ்வாறே யான் பெரியபுராணத்தில் சிறுதேர் உருட்டியும், சிற்றில் கட்டியும் விளையாடி வந்தேன். அவ்வப்போது அரும்பதங்கட்கு உரை குறித்துக் கொள்வதுண்டு. நாயன்மார் வரலாறுகளை உரை நடையில் எழுதுவதுமுண்டு. கதிரைவேற் பிள்ளை சென்னை விடுத்து, நீலகிரிக்கேகித் தமிழ்த்தொண்டு செய்தபோது சிவனடி சேர்ந்தனர். தமிழிலுள்ள பேரிலக்கிய இலக்கணங்களையும், ஞான நூல்களையும் முறையாகப் பயிலுதல் வேண்டுமென்ற அவா என்னைப் பிடர் பிடித்து உந்தியே நின்றது. அவ்வவாவைத் தணித்துக்கொள்ள யான், மயிலை - மகாவித்துவான் - தணிகாசல முதலியாரை அடைந்தேன். அச்சமயத்தில், என் தமையனார்- திரு. வி. உலகநாத முதலியாரும், என் நண்பர் - அ. சிவசங்கர முதலியாரும் தமிழ் நூல்களை அடக்க விலையில் வெளியிடுதல் வேண்டுமென்று, உமாபதி குருப் பிரகாச அச்சுக்கூடம் என்றோர் அச்சகத்தை அமைந்தனர்; முதல் முதல், கதிரைவேற்பிள்ளை கட்டளை யிட்டவாறு, பயிற்சியின் பொருட்டு, யான் எழுதிய அரும்பத வுரையுடனும், வசனத்துடனும் பெரியபுராணத்தைச் சஞ்சிகையாக வெளியிட முயன்றனர். அம்முயற்சி 1907- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1910 ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது. அவ்வரும்பத உரையும் வசனமும் எப்பருவத்தில் எந்நிலையில் என்னால் எழுதப் பெற்றன என்பதை இங்கே விரித்துக்கூற வேண்டுவதில்லை. மயிலை - முதலியாரிடத்தில் யான் தமிழ் பயின்ற பின்னை, பெரியபுராணப் பதிப்பை மற்றுமொருமுறை திருத்தி வெளியிடுதல் வேண்டுமென்ற எண்ணம் என் நெஞ்சில் எழுந்துகொண்டே யிருந்தது. ஆனால் அதற்குரிய வாய்புக் கிட்டாமற் போயிற்று. யான் சென்னை வெலி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியனா யமர்ந்தஞான்று, 1916- ஆம் ஆண்டில், பெரிய புராணப் பணியில் தலைப்பட முயன்றேன். வேறு வேலைகள் குறுக்கிட்டு அம்முயற்சியைத் தகைந்தன. 1920- ஆம் ஆண்டு, யான், தேச பக்தன் ஆசிரியப் பதவியினின்றும் விலகியபோது எனக்குச் சிறிது ஒய்வு கிடைத்தது. அப்பொழுது பெரிய புராணத்தொண்டில் இறங்க எண்ணினேன். நவசக்தி பத்திரி கையை விரைந்து தொடங்க நேர்ந்தமையானும், தொழி லாளர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட நேர்ந்தமை யானும், அம்முறையும் எனது எண்ணம் நிறைவேறா தொழிந்தது. 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரப் போர் எழுந்த சமயத்தில் நவசக்திக்கு ஈடுகாணங் கேட்கப்பட்டது. அது காரணமாக நவசக்தி சிலகாலம் நிறுத்தப்பட்டது. அவ்வேளையில் எனக்கு வேறு வேலை இல்லாமையால், பெரியுபுராண முற்பதிப்பைப் பல வழியிலும் திரித்துத் திருத்தி விரித்துச் செப்பஞ் செய்யலானேன். அச்செப்பத்துடன் வெளிவந்தது இப்பதிப்பாகும். இப்பதிப்பு, மாதச் சஞ்சிகையாக வெளிடப்பட்டு, இப் பொழுது முற்றுப்பெற்றது. முற்பதிப்புக்கும் இப் பதிப்புக்கும் உள்ள வேற்றுமை பெரிது. இதனை ஒரு புது நிலையமென்றே கூறலாம். இதுகுறித்து, உலகமெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும் முதற்பாட்டின் விரிவுரையிலும் சிலவுரை பகர்ந்துள்ளேன். இத்துணை நாள் கடந்து இப்பதிப்பு வெளிவர நேர்ந்தமை குறித்து மகிழ்வெய்துகிறேன். என்னை? பெரிய புராண ஆராய்ச்சிக்கு வேண்டப்படுங் கருவிகள் பல. அவற் றுள் ஒன்று சமண சமய நூலாராய்ச்சி. சமணப் பெரியோர் சிலரிடம் அணுகிச் சமண சித்தாந்தத்தை ஒருவாறு தெளியும் பேறு எனக்கு வாய்த்தது. அஃது இப்திப்புக்குப் பெருந் துணையாக நின்றது. மத வாதங்கள் தொலைந்து? சமரச சன்மார்க்கம் பரவுதல் வேண்டும் என்னுங் கருத்துடன் யான் தொண்டாற்றிவரும் இந்நாளில், தொண்டர் புராணத்துக்கு அரும்பத ஆராய்ச்சி விசேடக் குறிப்புரை எழுத என்னை ஆளாக்கிய திருவருளை வழுத்துகிறேன்* * * * (19.5.1934) எனது குறிப்புரை முதலியவற்றுடன் வெளிவந்த பெரிய புராணம் இரண்டாம் பதிப்பிலுள்ள வசனத்தைமட்டுங் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக் கேற்ப, நாயன்மார் வரலாறு என்னுந் தலைப்பு நூலுக்குச் சூட்டப்பட்டது. நயான்மார் வரலாறு பெரிதும் பெரியபுராணத்தைத் தழுவி எழுதப்பெற்றது. அதன் ஊடே ஊடே மூலத்திலுள்ள சொற்களும் சொற்றொடர்களும் ஒரோவழிப் பெய்யப்பட்டுமிருக்கின்றன. மூலத்தைப் படிப்போர்க்கு இந்நூல் பொழிப்புரைபோல் நின்று பெருந்துணை செய்யும். வசனம் தனி நூலாக வெளியிடப்பட்டமை யான், தனிமைக்குரிய மாற்றங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டன. மூலக் கருத்துக்கள் உள்ளவாறே உரைநடையில் வடிக்கப் பெற்றுள்ளன. ஒருவர் மூலத்தை, வேறு ஒருவர் உரைநடையில் இறக்கும்போது, இடையிடையே அவர்தங் கருத்தைப் புகுத்துவது அறச் செயலாகாது. மூலக்கருத்துக்கு மாறுபடாத அறம் இந்நூற்கண் கடைப்பிடிக்கப் பெற்றிருக்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தில் சமணரைக் குறிக்குஞ் சில பொருள்கள் மிளிர்கின்றன. அவற்றைப் பற்றிய கருத்து வேற்றுமைகள் இந்நாளில் வீறிடுகின்றன. இதுபற்றி இரண்டாம் பதிப்பின் முகவுரையிலும், திருநாவுக்கரசர் புராணம் திருஞான சம்பந்தர் புராணம் முதலிய புராணங்களின் ஆராய்ச்சிக் குறிப்புரை களிலும், எனது உள்ளக் கிடக்கையைச் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். பழைய சித்தமார்க்கம் பின்னாளில் சமணமென்றும், சைவ மென்றும் வழங்கப்பட்டதென்பதும், இரண்டும் ஒரே இடத்தி லிருந்து பிறந்தனவென்பதும், இடைக்காலத்தில் சிற்சில பிணக்குகள் நிகழ்ந்தன வென்பதும், அப் பிணக்குகளின் காரணத்தை ஓராது வாதப்போரில் இறங்குவது அறியாமை யென்பதும், காரணத்தை ஓர்ந்து உண்மை கண்டால் பிணக்குக்கு இடமில்லை யென்பதும், சமணர் கழுவேறியதை உறுதிப்படுத்தப் போதிய சான்றுகளில்லை யென்பதும், அக்கழுக்கதை புனைந்துரை யென்பதும் எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மைகளாகும். பெரியபுணம்- திருஞானசம்பந்தர் புராணம், 634, 636, 684, 740, 786, 854 முதலிய பாக்கட்கு யான் பொறித்துள்ள ஆராய்ச்சிக் குறிப்புக்களைப் பார்க்க. அக்குறிப்புகள் பல திற ஐயப்பாடுகளை நீக்குமென்று நம்புகிறேன். அவ்வாராய்ச்சிக் குறிப்புகளிடைச் சிவநாமத்தைப் பற்றி இரண்டோர் உரை பகர்ந்து, யான் எடுத்துக்காட்டியுள்ள சில சமண நூற் பாக்கள் வருமாறு:- சிவநாமம் சமணத்துக்கும் சைவத்துக்கும் பொது வானது. சமணமும் சிவநெறி; சைவமும் சிவநெறி. சிவநெறி என்னும் அருள் நெறி ஒவ்வொருபோது ஒவ்வொரு பெயர் பெறுவது வழக்கம். பீ ஊண ணாணஸலிலம் ணிம்மல ஹதிஸடாக ஸெஸ உம்முக்கா உந்தி சிவாலய வாஸி திருவண சூடாமணி ஸித்தா****சிவா ஹொந்தி**** ஞாநீ சிவ பரமேஷ்டி****சச்வத் சிவ ஆசாதர ஹா*** - குந்தகுந்தோச் சாரியார் (அஷ்டபாகுடம்); சிவ சுகம ஜரஸ்ரீ***** - பூபால தோத்திரம்; இன்பமற் றென்னும் பேரானெழுந்தபுற் கற்றை தீற்றித் - துன்பத்தைச் சரக்கு நான்கு கதியெனுந் தொழுவிற் சேர்ந்து - நின்றபற் றார்வ நீக்கி நிருமலன் பாதஞ் சேரின் - அன்புவிற் றுண்டு போகிச் சிவகதி அடைய லாமே- சித்தாமணி : 3105 சினவரன் தேவன் சிவகதி நாயகன் - சிலப்பதிகாரம் :10. நாடுகாண். 180; மணிமலிந்த ஒளியெனவும் மலர்நிறைந்த விரையெனும் மல்கு சந்தின் - துணியுமிழ்ந்த தண்மையினுந் தோன்றியஅப் பேரின்பத் துள்ளே தோன்றி - இணைபிறிதும் இலராகி இமையவரும் மாதவரும் இறைஞ்சி ஏத்தப் - பணிவரிய சிவகதியின் அமர்ந்திருந்தார் அறஅமிர்தம் உண்டா ரன்றே - மேருமந்திர புராணம்: 1400; *****மாக்கயிலை மிசைநாப்பண் ***மூவிலையொரு நெடுவேலின் - மேவாத வினையவுணர், குன்றுபட நூழிலாட்டி வென்றட்ட விறல் வெகுளியை, மூவெயிலின் முரண்முருக்கி மூவர் சரணடைய நின்றனை, கருப்புநாண் வில்லிபட - நெருப்புமிழ் நெடு நோக்கினை, கோள்வலிய கொடுங்கூற்றைத் தாள் வலியின் விழவுதைத் தனை, பலிவில்கே வலக்கிழத்தி பிரிவில்லா ஒரு பாகனை, ஆன்றமெய் யறம்வளர்க்கும் - மூன்றுகண் முனித் தலைவனை, ஆல நெடுநிழல் அமர்ந்தனை கால மூன்றுடன் அளந்தனை, தாழ்சடை முடிச் சென்னிக் காசறு பொன் னெயிற் கடவுளை, மன்னியபே ருலகனைத்தும் நின்னுள்ளே நீ யொடுக்கினை, நின்னின்று நீ விரித்தனை - நின்னருளின் நீ காத்தனை, எனவாங் காதி பகவனை அருகனை, மாதுயர் நீங்க வழுத்தவம் பலவே - திருக்கலம்பகம் : 109. இவ்வெடுத்துக்காட்டுகள் சமணத்துக்கும் சைவத்துக்குமுள்ள ஒருமைப்பாட்டைக் குறித்தல் காண்க. பெரியபுராண வசனம் முன்னே பலரால் எழுதப்பட்டுள்ளது. அவருள் குறிக்கத்தக்கவர் காஞ்சிபுரம் - மகாவித்துவான் சபாபதி முதலியார், யாழ்பாணம் - ஆறுமுக நாவலர், தொழுவூர் - வேலாயுத முதலியார் முதலியோராவர். ஆறுமுக நாவலர் எழுதிய வசனமே பெரிதும் தமிழ்நாட்டில் படிக்கப்படுகிறது. ஆறுமுக நாவலரது பெரியபுராண வசனம் முதல் முதல் அவ ராலேயே பதிப்பிக்கப்பட்டது. அவ்வசனம், நாவலர் தம் பெயரின்றிச் சிலராலும், அவர்தம் பெயருடன் ஒருவராலும் வெளியிடப்பட்டது. புஷ்பரதச் செட்டியார் பதிப்பும், மற்றவர் பதிப்பும் நாவலரது பெயரின்றியே வெளிவந்தன. நாவலர் பெயருடன் வந்த பதிப்பு அவர் தம் காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் - சுவாமிநாத பண்டிதரால் வெளியிடப்பட்டது. பெரியபுராணத்துக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உண்டு என்றும், அப்பொழிப்புரையை முதலாக்கொண்டே புலவர்களால் வசன நூல்கள் செப்பஞ்செய்யப்பட்டன என்றும் சில முதியவர் கூறுகிறார். உண்மை விளங்கவில்லை. ஆராய்ச்சி உலகம் உண்மை கண்டு வெளியிடுவதாக. நாயன்மார் வரலாறு மிக எளியநடையில் இயற்றப்பட் டிருக் கிறது. உரைநடை பயிலும் மாணாக்கர்க்கும், மற்றவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படுவதாகும். சென்னை இராயப்பேட்டை திரு.வி. கலியாணசுந்தரன் 20-5-1937 சேக்கிழார் சான்றோ ருடைத்துத் தொண்டை நாடு என்பது பழமொழி. அச்சிறப்பு வாய்ந்த தொண்டை நாட்டிலே, குன்றத்தூரிலே, வேளாண் மரபிலே, சேக்கிழார்குடி என்றொரு குடியுண்டு. அக்குடியில் அருண்மொழித்தேவர் தோன்றினார். அவருக்குபின் பாலறாவாயர் பிறந்தனர். முன்னவரால் சேக்கிழார் மரபு விளக்கப் பெற்றது. அதனால் அவருக்குச் சேக்கிழார் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. அருண்மொழித்தேவர், கல்வி கேள்விகளில் வல்லவரானார்; சிவபக்தி சிவனடியார் பத்தியிற் சிறந்து விளங்கினார். அவர்தம் பெருமை அநபாயச் சோழருக்கு எட்டிற்று. அச்சோழர், அருண் மொழித்தேவரை முதலமைச்சராக்கினார். அருண்மொழித் தேவருக்கு உத்தமச் சோழப் பல்லவர் என்னும் பட்டஞ் சூட்டப் பட்டது. அருண்மொழித்தேவர் சோழநாட்டிலுள்ள திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியினிடத்துப் பேரன்பு செலுத்தி வந்தனர். அவ்வன்புக்கு அறிகுறியாக அவர் தமது குன்றத்தூரிலே ஒரு திருக்கோயில் கட்டினார்; அத்திருக்கோயிலுக்குத் திருநாகேச்சுரம் என்னும் திருப்பெயர் சூட்டி ஆண்டவனை வழிபட்டு வந்தனர். அந்நாளில் சீவகசிந்தாமணி என்னும் நூல் பேராக்கம் பெற் றிருந்தது. அநபாயச் சோழரும் அந்நூலின்கண் மயக்குற்றனர். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள். 1Kjš mik¢ruh»a nr¡»Hh®bgUkh‹, xUehŸ k‹diu¥ gh®¤J, ‘Ú® irt®; átfijia¡ nfshJ, mt fijia V‹ nf£»Ö®? என்று கேட்டார். அதற்கு மன்னர், சிவகதை எது? mj‹ tuyhW v‹id? என்று வினவினர். சேக்கிழார் பெருமான், திருத்தொண்டத் தொகையைப்பற்றி நீர் கேள்வியுற்றிருக்கலாம். அது, தியாகேசப் பெருனால் அடி எடுத்துக் கொடுக்கப்படுகிறது; சுந்தரமூர்த்தி சுவாமிகளால் அருளிச்செய்யப் பெற்றது. நம்பியாண்டார் நம்பி என்பவர் அத்திருத்தொண்டத் தொகையைத் தழுவி ஒரு திருவந்தாதி பாடினர். அத்திரு வந்ததி, அபயகுலசேகர சோழர், சிவாலய முனிவர் முதலிய பெரியோர் களால் போற்றப்பெற்றது என்று கூறினார். அநபாயச் சோழர், திருவந்தாதியை ஓதிப் பொருளுரைக்குமாறு சேக்கிழாரைக் கேட்டனர். சேக்கிழார் அவ்வாறே செய்தார். மன்னர், அன்பின் வயப்பட்டு, அடியவர் வரலாறுகளைக் காவியமாகச் செய்தருள்க என்று சேக்கிழார் பெருமானை வேண்டினர்; அதற்கெனப் பொருளும் வழங்கினர். சேக்கிழார் பெருமான் தில்லையை அடைந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டார்; தொழுதார்; திருமுன்னே நின்று, பெருமானே திருத்தொண்டர் அருட்பெருஞ் செயல்களைக் காவியமாகப் பாடுதல் வேண்டும். அதற்கு அடிகள் அடிஎடுத்துக் கொடுத்தருளல் வேண்டும் என்று முறையிட்டார். அவ்வேளையில் தில்லைகூத்தன் அருளால், உலகெலாம் என்றொரு வானொலி எழுந்தது. அவ் உலகெலாம் என்பதையே முதலாக் கொண்டு, சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார். அநபாயச் சோழர், நூல் முற்றுப்பெற்றதைக் கேள்வியுற்றனர்; தில்லை நோக்கினர். சேக்கிழாரும் மற்றவரும் மன்னரை எதிர் கொண்டனர். சேக்கிழாரின் திருமேனிப் பொலிவு, மன்னர் உள்ளத்தைக் கவர்ந்தது. மன்னர், சேக்கிழார் பெருமான் திருவடியில் விழுந்து வணங்கினார். பின்னர் எல்லோரும் ஒன்று சேர்ந்து திருச்சிற்றம்பலத்தை அடைந்தனர். அப்பொழுது, மன்னனே! நாம் உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்தோம். சேக்கிழான் அதனை முதலாக் கொண்டு திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தான். திருத்தொண்டர் திறங்களை நீ கேட்பாயாகஎன்று ஓர் ஒலி வானில் எழுந்தது. அதுகேட்ட மன்னர், திருத்தொண்டர் புராணத்தைக் கேட்டுப் பேறெய்துமாறு அன்பர்களுக்கு அழைப்புகள் விடுத்தனர். தில்லைக்கூத்தன் திருமுன்னர், திருத்தொண்டர் புராணப் பிர சங்கத்துக்குரிய ஏற்பாடுகளெல்லாம் குறைவறச் செய்யப்பட்டன. நானாபக்கங்களினின்றும் அடியவர் போந்து குழுமினர். மன்னர், சேக்கிழார் பெருமான் வேண்டச் சேக்கிழார் பெருமான். திருப் புராணத்தை ஓதிப் பொருளுரைக்கத் தொடங்கினர். அத்தொண்டு, சித்திரைத் திங்களில் திருவாதிரை நாளில் தொடங்கப்பெற்றது; மறு ஆண்டு அதே திங்களில் அதே நாளில் முற்றுப்பெற்றது. மன்னரும் மற்றவரும் ஆனந்தக் கடலில் தோய்ந்தனர். எல்லாரும் அன்புருவாயினர். மன்னர் பெருமான் திருத்தொண்டர் புராணத்தை யானைமீதேற்றினார்; சேக்கிழார் பெருமானையும் அதன்மீது எழுந்தருளச் செய்தார்; தாமும் ஏறி வெண்சாமரம் வீசினார். யானை திருவீதி வலம் வந்தது. எல்லாரும் உடன் சூழ்ந்து சென்றனர். யானை வலம் வந்து, சிற்சபை முன் நின்றது. அடியவர் யானையைச் சூழ்ந்து மிடைந்து நின்றனர். திருத்தொண்டர் புராணம் திருமுன்னே வைக்கப்பட்டது. மன்னர் பெருமான், சேக்கிழார் பெருமானுக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் திருநாமம் சூட்டி வணங்கினார். அங்கிருந்த மற்றெல்லாரும் தொண்டர் சீர் பரவுவாரைத் தொழுது ஆரவாரித்தனர். பின்னர், அநபாயச் சோழர், திருத்தொண்டர் புராணத்தை மற்றத் திருமுறைகளுடன் சேர்த்துச் சிறப்புச் செய்தனர். திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாந் திருமுறை என்று வழங்கலாயிற்று. megha¢ nrhH® m§»Uªjtiu¥ gh®¤J, ‘ï¤bjh©l® Ó® guîthUila j«ãah® ghywhtha® v§nf ïU¡»wh®? என்று கேட்டனர். அவர் பாலறாவாயர் குன்றத்தூரிலே திருநாகேச்சுரப் பெருமானுக்குத் திருத்தொண்டு செய்து கொண் டிருக்கிறார் என்று பகர்ந்தனர். மன்னர் பெருமான், பாலறாவாயரை அழைப்பித்தார்; அவருக்குத் தொண்டைமான் என்னும் நாமஞ் சூட்டினார்; அவரை முதலமைச்சராக்கிக் கொண்டார். சேக்கிழார் பெருமான் தில்லையிலேயே தங்கலானார்; நாடோறுந் தில்லைக்கூத்தனை வழிபட்டு வந்தார். சிவபெருமான் அவருக்குத் தமது திருவடி நீழலை வழங்கினார். அறுபத்துமூவர் திருநட்சத்திரம் (அறுபத்துமூவர் தனி அடியார். தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார்; முப்போதுந் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச் சார்ந்தார் ஆகிய ஒன்பதின்மரும் தொகை அடியார்.) சித்திரை சிறுத்தொண்டர் பரணி மங்கையர்க்கரசியார் உரோகிணி விறன்மிண்டர் திருவாதிரை இசைஞானியார் சித்திரை திருக்குறிப்புத்தொண்டர் சுவாதி திருநாவுக்கரசு சுவாமிகள் சதயம் வைகாசி கழற்சிங்கர் பரணி நமிநந்தியடிகள் பூசம் சோமாசிமாறர் ஆயிலியம் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மூலம் முருகர் மூலம் திருநீலநக்கர் மூலம் திருநீலகண்டயாழ்ப்பாணர் மூலம் ஆனி அமர்நீதியார் பூரம் கலிக்காமர் இரேவதி ஆடி மூர்த்தியார் கார்த்திகை புகழ்ச்சோழர் கார்த்திகை கூற்றுவர் திருவாதிரை பெருமிழலைக்குறும்பர் சித்திரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுவாதி கழறிற்றறிவார் சுவாதி கலியர் கேட்டை கோட்புலியார் கேட்டை ஆவணி செருத்துணையார் பூசம் புகழ்த்துணையார் ஆயிலியம் அதிபத்தர் ஆயிலியம் இளையான்குடிமாறர் மகம் குலச்சிறையார் அநுஷம் குங்குலியக்கலயர் மூலம் புரட்டாசி உருத்திரபசுபதியார் அச்சுவினி திருநாளைப்போவார் உரோகிணி நரசிங்கமுனையரையர் சதயம் ஏனாதிநாதர் உத்தராடம் ஐப்பசி திருமூலர் அச்சுவினி நெடுமாறர் பரணி இடங்கழியார் கார்த்திகை சத்தியார் பூசம் பூசலார் அநுஷம் ஐயடிகள் காடவர்கோன் மூலம் கார்த்திகை கணம்புல்லர் கார்த்திகை மெய்ப்பொருளார் உத்திரம் ஆனாயர் அத்தம் மூர்க்கர் மூலம் சிறப்புலியார் பூராடம் மார்கழி சடையர் திருவாதிரை இயற்பகையார் உத்திரம் மானக்கஞ்சாறர் சுவாதி சாக்கியர் பூராடம் வாயிலார் இரேவதி தை கண்ணப்பர் மிருகசீரிடம் அரிவாட்டாயர் திருவாதிரை சண்டேசுரர் உத்திரம் திருநீலகண்டர் விசாகம் அப்பூதியடிகள் சதயம் கலிக்கம்பர் இரேவதி மாசி எறிபத்தர் அத்தம் காரியார் பூராடம் கோச்செங்கட்சோழர் சதயம் பங்குனி நேசர் உரோகிணி கணநாதர் திருவாதிரை முனையடுவார் பூசம் காரைக்காலம்மையார் சுவாதி தண்டியடிகள் சதயம் ______ (மாணிக்கவாசகர் ஆனி மகம் மெய்கண்டார் ஐப்பசி சுவாதி அருணந்தி சிவாசாரியார் புரட்டாசி பூரம் மறைஞான சம்பந்தர் ஆவணி உத்திரம் உமாபதிசிவாசாரியார் சித்திரை அத்தம் சேக்கிழார் வைகாசி பூசம்) நாயன்மார் வரலாறு (பெரியபுராணத்தைத் தழுவியது) அம்பலத்தாடுவான் உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன்அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். தோற்றுவாய் நூலின் முதலும் வழியும் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவர் சிவபெருமான். அவர் உயிர்கள்மீது என்றுங் கைம்மாறற்ற பெருங்கருணை வாய்ந்தவர். அதனால் அவர் திருவருளையே திருமேனியாக் கொண்டு நங்கை பங்கராய் வீற்றிருந்தருள்கிறார். அப்பெருமான் வீற்றிருந் தருளும் பேறு பெற்றிருப்பது திருக்கயிலாய மலை. அத்திருமலை இமயப் பொற்கோட்டின் ஒரு பாங்கர் ஒளிர்வது. அது தூய வெண்ணிறமுடையது. அஃது அறமே ஓருருக் கொண்டு நிற்பது போன்று விளங்குவது. அதன் பக்கங்களில் முனிவர்களின் மறையோசையும், விஞ்சையர்களின் வீணாகானமும், பூதர்களின் பல்லிய முழக்கமும் என்றும் இன்பமூட்டிக் கொண்டிருக்கும். முனிவர்களும், கணநாதர்களும், மற்றவர்களும் சிவபெருமான் திருமுன்னர், வரிசை வரிசையாக நின்று, தலைமேற் கைகள் குவிய, இன்பக் கண்ணீர் பெருக்கெடுப்பச் சேவை செய்வார்கள். வாயிலில் நந்திப்பெருமான், பிரம்பு தாங்கித் தம்மாணை செலுத்துவார். பெரும் பெருந்தேவர்கள் தங்கள் தங்கள் குறைகளை முறையிட வேளைபார்த்திருப்பார்கள். இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருமலையின் அடியிலே உபமன்னிய முனிவரின் அழகிய ஆசிரம மொன்றிருந்தது. அம் முனிவர் புலிமுனிவரின் புதல்வர்; சிவபக்தி சிவனடியார் பக்தியிற் சிறந்தவர்; சிவபெருமான் திருவருளாற் பெற்ற பாற்கடலை உண்டு வளர்ந்தவர். அவரைச்சுற்றி எண்ணிறந்த முனிவர்களும் சிவயோகி களும் அமர்ந்து வேத வேதாந்த ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது வழக்கம். ஒருபோது ஆங்கே திடீரென ஒரு பேரொளிப் பிழம்பு தோன்ற லாயிற்று. அத்தோற்றம் ஆயிரம் ஞாயிறு ஓருருக்கொண்டு ஒளி உமிழ்ந்ததுபோன்றிருந்தது. அப்பேரொளியைக் கண்ட முனிவர் களும் மற்றவர்களும், இஃது என்ன! v‹d! என்று வியப்புற்றார்கள். அப்போது உபமன்னிய முனிவர், அந்தி வான்பிறை சூடிய அண்ணலை நினைந்தார்; ஆண்டவனருளால் தென்னாட்டில் றோன்றிய வன்றொண்டப் பெருந்தகையார் திருக்கயிலைக்கு எழுந் தருள்கிறார் என்று தெளிந்தார்; எழுந்தார். அவர்தங் கைகள் தலை மேலேறின; கண்கள் நீர் பொழிந்தன. முனிவர் தென்திசை நோக்கினார். அக்காட்சி கண்ட மற்ற முனிவர்கட்கு ஒருவித ஐயம் உண்டாயிற்று. அவ்வையத்தைக் களைந்துகொள்ள வேண்டி, அவர்கள் பாற்கடலை யுண்ட பரம ஞானியைப் பார்த்து, மாமுனிவரே! ãw¥ãw¥ãšyh¢ átbgUkhid a‹¿ - vtiuí« - vijí« -bjhHhj j§fŸ iffŸ, ï‹W ï¥ngbuhËia¡ f©lJ§ Fɪjbj‹d? என்று வினவினார்கள். அதற்கு உபமன்னியமுனிவர் , இப்பே ரொளிப் பிழம்பாயெழுந் தருள்வோர் நம்பியாரூரரென்று திருப் பெயருடையவர். அவர்தஞ் சிந்தை என்றுஞ் சிவத்தில் அழுந்திக் கிடக்கும். அவரே இறைவர்; இறைவரே அவர். அவர் நாம் வணங்குந் தகுதி வாய்ந்தவர் என்று திருவாய் மலர்ந்தருளினார். முனிவர்களும் மற்றவர்களும் புலிமுனிவரின் புதல்வரைப் பணிந்து, பேரொளிப் பிழம்பா யெழுந்தருளிவரும் நம்பியாரூரரின் தவப்பெருமையைக் கேட்க விரும்புகிறோம். அருளிச்செய்க என்று வேண்டினார்கள். உபமன்னிய முனிவர், மகிழ்வெய்தி, பேரொளிப் பிழம்பென எழுந்தருளி வருவோர் திருக்கயிலையில் சிவபெருமானுக்குப் பூமாலைத் தொண்டுந் திருநீற்றுத் தொண்டுஞ் செய்து வந்தார். அவர்தம் அருமைத் திருப்பெயர் ஆலால சுந்தரர் என்பது. அவர் ஒருநாள் வழக்கம்போல, அம்மையப்பருக்கு மலர்கொய்யத் திருநந்தனவனம் போந்தார். அவருக்கு முன்னே, அம்மையாருக்குப் பூக்கொய்ய அனிந்திதை, கமலினி என்ற இரண்டு தோழிமாரும் அவ்வனமே போயினர். அங்கே அழகர் மனம், பூங்கொடிகள் மீதும், பூங்கொடிகள் மனம், அழகர் மீதும் நடந்தன. பின்னர் ஒருவாறு தெளிவுற்றுப் பூப்பறித்து, அவரவர் தத்தம் இருக்கை சேர்ந்தனர். எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் எம்பெருமான், ஆலாலசுந்தரரை அருள்விழியால் திரு நோக்கஞ் செய்து, நீ பெண்கள் மீது வேட்கை கொண்டாய். அதனால் நீ தென்னாடு போந்து மானுடனாகப் பிறப்பாயாக. அப்பெண்களும் அங்கேயே பிறப்பார்கள். அவர்களுடன் இன்பம் நுகர்ந்து, வேட்கை தணித்து, மீண்டும் இங்கு வரக்கடவாய் என்று கட்டளையிட்டார். அது கேட்ட ஆலாலசுந்தரர், நடுநடுங்கிச் சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்; சிவமே மானுடனாய்ப் பிறந்து மாயவலையிற் சிக்கி மயங்கும்போழ்து, அடியேனைத் தடுத்தாட் கொள்ளல் வேண்டும் என்று வேண்டினர். தடங்கருணைப் பெருங்கடலாகிய சங்கரர், அவ்வேண்டுதலுக்கு இரங்கி அருளினார். பின்னர் ஆண்டவன் ஆணைப்படியே ஆலாலசுந்தரர், அனிந்திதை - கமலினி என்ற இரு பெருமாட்டிக ளுடன் தென்னாட்டிற் பிறந்தார்; இன்பந்துய்த்தார்; இப்பொழுது பேரொளிப் பிழம்பாக எழுந்தருளி வருகிறார் என்று சுந்தரர் தவப்பெருமையைச் சொன்னார். அருமறைவல்ல முனிவர்கள் உபமன்னி முனிவரைப் பணிந்து, ஆலாலசுந்தரர் தோன்றிய தென்னாடு, எட்டுத் திசைகளினுஞ் சிறந்து மேம்பட்டு விளங்குவதற்கு அதுசெய்த புண்ணியம் யாது? என்று கேட்டார்கள். உபமன்னிய முனிவர், கண்டாலும், சொன்னாலும், நினைந்தாலும், வீடுபேறளிக்கவல்ல பெருமை வாய்ந்த, தில்லை, திருவாரூர், காஞ்சி, திருவையாறு, சீகாழி முதலிய திருப்பதிகள் தென்னாட்டிலுண்டு. அதனால் தென்னாடு பிறநாடுகளினுஞ் சிறந்து மேம்பட்டு விளங்குகிறது என்றார். இங்ஙனம் உபமன்னிய முனிவர், வன்றொண்டருடைய தவப்பெருமையை முனிவர்களுக்கு அன்று சொன்னபடியால், சேக்கிழார் தமக்குண்டாகிய பேரவாவினால், திருத்தொண்டத் தொகையை விரித்துக் கூறலானார். திருத்தொண்டர்தொகையே பெரிய புராணத்துக்குப் பதிகம். திருத்தொண்டத் தொகையை முதலாகக்கொண்டு பிறந்த வழிநூல் நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி. நாடு - நகரம் திருத்தொண்டத்தொகை பிறந்த நாடு சோழ நாடு. அந்நாடு தமிழகத்திலுள்ள நாடுகளுள் மிகவுஞ் செழுமையுடையது. அந் நாட்டைக் காவிரி என்றும் வளஞ்செய்த வண்ணமிருக்கிறது. காவிரி பல முகங்கொண்டு கால்வாய்கள் வழியே ஓடிப் பாய்ந்து அந்நாட்டை நீரால் நிரப்புகிறது. அதனால் சோழ நாட்டுக்கு நீர்நாடு (புனல்நாடு) என்றொரு பெயருமுண்டு. காவிரியால் சோழநாட்டு மருத நிலங்கள் பலவழியிலும் நலம் பெறுகின்றன. அங்கே எங்கணும் மருதநிலப் பொருள்கள் கொழுமை யாக விளைகின்றன. நல்ல விளைவால் மக்கள் இன்பந் துய்ப்பார்கள். அந்நாட்டு மன்னர்கள் செங்கோண்மையிலும், வண்மை யிலும், வீரத்திலும், பிறவற்றிலும் பேர்பெற்றவர்கள். அவர்களுக் குரிய புலிக்கொடி இமயத்தில் பொறிக்கப்பெற்ற தென்றால், அவர்க ளுடைய ஆட்சித் திறங்களை விரித்துக் கூறலும் வேண்டுமோ? இத்துணைச் சிறப்புவாய்ந்த சோழநாட்டில் பழமையிற் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னுந் திருநகரம். அத்திருநகரில் திருமகள் என்றும் வீற்றிருப்பாள். அங்கே அறவோர்களும் துறவோர்களும் நீங்காமலிருப்பார்கள். அவ்வூரில் திருப்பதிகங்களைக் கிள்ளைகள் பாடும்; பூவைகள் கேட்கும். திருவாரூரில் பரவையார் திருவவதாரஞ் செய்த திருமாளிகை ஒன்றிருக்கிறது. அவ்வம்மையார் வன்றொண்டரை மணந்து இல்வாழ்க்கை நடாத்திய பெருமையுந் திருவாரூருக்கு உண்டு. அவ்விருவர்க்கும் நேர்ந்த புலவி தீர்க்கவேண்டித் தியாகேசப் பெருமானே திருவாரூர்த் திருவீதியில் தூது சென்றிருக்கிறார். இப்பெற்றிவாய்ந்த திருவாரூரில் என்றுந் தெய்வமணமுஞ் சைவமணமுங் கமழ்ந்துகொண்டேயிருக்கும். இத்திருவாரூரை ஆண்ட மன்னருள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர் என்பவர். அவர் அநபாயச் சோழரின் குல முதல்வர்; எல்லா உயிர்கட்குங் கண்ணும் உயிரும் போன்றவர்; ஊனமில் வேள்வி பல செய்தவர்; புற்றிடங்கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர். அம்மன்னர் ஆட்சி, அறம் பொருள் இன்பம் என்னும் பேற்றிற்கு அடிப்படையாக நிலவியிருந்தது. அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். அவனுக்கு இளமையில் பல கலைகளும், குதிரையேற்றம் - யானை யேற்றம் - தேரூர்தல் - விற்பயிற்சி - முதலியனவும் பயிற்றுவிக்கப் பட்டான். அவன் பிறையென வளர்ந்து இளங்கோவாகும் பருவத்தை அடைந்தான். அப்பருவத்தில் அவன் தேரிலேறி அரசிளங் குமரர்களும் சேனைகளும் மற்றவர்களும் புடைசூழ்ந்துவரத் திருவீதி உலா வருவது வழக்கம். வழக்கம்போல் ஒருநாள் அவன் உலாவரலானான். அன்று வழியில் ஓரிடத்திலிருந்த பசுங்கன்று ஒன்று துள்ளிப்பாய்ந்து தேருருளையில் அகப்பட்டு இன்னுயிர் துறந்தது. அக்காட்சி கண்ட தாய்ப்பசு அங்கே ஓடிவந்து, கதறிக் கதறித் துடி துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும் துடிப்பும் வீழ்ச்சியும் இளங்கோவின் நெஞ்சைப் பிளந்தன; அவனைத் தேரினின்றுஞ் சாய்த்துத் தள்ளின. தள்ளுண்ட இளங்கோ, மெய் விதிர்விதிர்ப்ப, வாய்குழற, நாவற்றத் தாய்ப்பசுவைப் பார்க்கிறான்; கன்றைப் பார்க்கிறான்; கண்ணீர் உகுக்கிறான்; அலமருகிறான்; பெருமூச்சு விடுகிறான்; அந்தோ! அறக்கோலோச்சும் என் தந்தைக்கு யான் எற்றுக்கோ பிள்ளையாய்ப் பிறந்தேன் என்கிறான்; மனுவென்னும் பெரும்பேர் தாங்கும் அவருக்கு இப்பெரும்பழி சுமத்தவோ யான் பிறந்தேன் என்கிறான்; அழுகிறான். அழுது அழுது, இப்பெரும் பாவத்துக்குக் கழுவா யுளதோ? உளதாயின், இக்கொலை என் தந்தை அறியா முன்னரே அக்கழுவாய் தேடுவது நலன் என்று சொல்லிக்கொண்டே, அவன் அந்தணரிருக்கை நோக்கிச் சென்றான். வாயில்லாப் பசு என்ன செய்தது? பசு, மனங்கலங்க, முகத்தில் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருக, நெருப்புயிர்த்து, மன்னுயிர்களைத் தன்னுயிர்போற் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரமனை நோக்கி விரைந்து நடந்தது; நடந்து அரமனை அடைந்தது; அடைந்து மனைவாயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது. அம்மணியோசை அரசர்பெருமான் செவியில் விழுந்தது. விழுந்ததும், அவர் திடுக்கிட்டு அரியாசனத்தினின்றுங் குதித்து வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் , மன்னர்பிரானை வணங்கி, இப்பசு தன் கோட்டினால் இம்மணியை அடித்தது என்றார். மன்னர்பெருமான் சினந்து அமைச்சர்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் ஆவுறு துயரம் எய்தினார்; நஞ்சு தலைக்கேறினாலென மயக்குற்றார்; விழுந்தஎன்னரசாட்சிநன்றுநன்று!! என்று ஏங்குகிறார்; இரங்குகிறார். துயருறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, அரசே! சிந்தை தளரற்க. இப்பழிக்குக் கழுவாயுண்டு. அதைச் செய்வதே முறை என்று சொன்னார்கள். அதற்கு அரசர், அமைச்சர் களே! நீங்கள் கூறுங் கழுவாய்க்கு யான் இசையேன். அக்கழுவாய் கன்றை இழந்து அலமரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால் அறக்கடவுள் சலிப்புறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, பகைவர்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து பயத்தையுந் தீர்த்து அறத்தைக் காப்பவனல்லனோ அரசன்? இன்று உங்கள் உரைக்கு யான் இசைந்து, நாளை வேறொருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டுங் கொலைத்தண்டனை விதிக்கலாமோ? பண்டை மனுவின் நீதி, பாவி மனுவால் தொலைந்தது என்னும் பழமொழி உலகில் நிலவாதோ? நீங்கள் மந்திரிகள்! வழக்கப்படி மொழிந்தீர்கள்! என்று இயம்பினார். மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நேர்ந்துள்ளது. இதன்பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறையாகாது. கழுவாய் தேடுவதே முறை என்று வேண்டிநின்றார்கள். சோழர் பெருமான், இத்தகைய நிகழ்ச்சி எங்கே நேர்ந்தது? எங்கே எந்தப் பசு துன்பத்தால் மணியடித்தது? ஆகவே பசு உற்ற துயரை யானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரையன்றோ என் மைந்தன் கொன்றான்? அவனைக் கொல்வதே தகுதி என்று கூறி அவ்வாறு செய்ய உறுதி கொண்டார். அவ்வுறுதி கண்ட அமைச்சர்கள் நடுக்குற்று அகன்றார்கள். நீதி மன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, இவனைக் கன்றிறந்த இடத்திலே கிடத்தித் தேரைச் செலுத்தக்கடவை என்று ஆணையிட்டனர். அவ்வமைச்சர் அவ்வாணைவழி நின்று கடனாற்ற ஒருப்படாது அவ்விடத்தின்றும் அகன்று, தம்முயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர்பெருமான் தம்முடைய குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, எண்ணியவாறு செய்து முடித்தார். கருணைவேந்தரின்செயற்கருஞ்செயல்கண்டுமண்ணவர்கண்மழைபொழிந்தனர்;விண்ணவர்óமழைbrரிந்தனர்.வீâ Éடங்கப்bபருமான்Éடைமேல்fட்சிtழங்கினார்.nrhH® பெருமான் ஆண்டவனைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந்நிலையில் பசுவின் கன்று எழுந்தது; அரசிளங் குமரனும் விழித்தெழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்றெழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் வரம்பிலா மகிழ்வெய்தினார். பாலூட்டிய கன்றைக்கண்டு பசுவும் துன்பம் நீத்தது. தியாகேசப்பெருமான், வெற்றி வேந்தர்க்கு வீதியிலே திருவருள் புரிந்தார். அக்கருணைத்திறத்தை ஏழுலகமும் வியந்தோதின. இங்ஙனம் அறவழி நின்று ஒழுகும் மெய்யன்பர்கட்கு ஆண்டவன் அருள்புரியும் பெருமை வாய்ந்தது திருவாரூர். அதன் சிறப்பு எம்மொழி யில் எவ்வளவில் அடங்குவதாகும்? அத்திரு நகரினுக்குப் புற்றிடங் கொண்டவரது பூங்கோயில் அகமலராகப் பொலிகிறது. திருக்கூட்டம் திருவாரூர்ப் பூங்கோயிலிலே, தேவாசிரியனென்னுந் திருப் பெயருடைய மண்டபம் ஒன்று உளது. அம்மண்டபத்திலே தேவர்கள் என்றும் நிறைந்திருப்பார்கள். கண்டிகை விளங்குகின்ற திருமேனியின்மீது பூசுந் திருநீற்றைப்போல் உள்ளத்தினும் புனித முடையவரும், சிவஞான ஒளியால் vல்லாத்âசைகளையும்Éளக்கினவரும்,Iந்துóதமும்jன்Ãலையில்fலங்கினும்mம்மைmப்பரதுâருவடிகளைkறவாதவரும்,mன்புருவாய்Ãன்றவரும்,Fzத்தில்மiலயைஒ¤jவரும்,இன்gதுன்g§களைஒழித்jtU«,ஓட்டையும் பொன்னைíம்ஒக்கவேnநாக்குtரும்,பேரன்பினhல்சிவபெருமhனைவணங்குவத‹றிவீட்டின்பத்iதயுங்கருதாதவUம்,கண்டிகைaஆரமாகவு«,கந்தையை உடையாகîம்,இறைபணிÃற்றலைப் பெரும்பணிaகவுங்கொண்டுள்sவரும்அத்திருக்fவணத்திšவீற்றிருப்ப®.அவர்தம்mU£l‹ik அளப்பரிது. ஆலாலசுந்தரர், திருக்கயிலையின்றுந் தென்திசையில் âருவவதாரஞ்brŒது,அம்kதவர்திரு¡கூட்டத்தைத்தெhழுது,திரு¤தொண்டத்தெhகையைத்திருtய்மலர்ந்தருளினர்.அத் திருத்தொண்டத் தொகையை அடிப்படையாக் கொண்டது இந்நூலென்க. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர் திருவந்தாதி நந்திக்கு நம்பெரு மாற்குநல் லாரூரில் நாயகற்குப் பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலின் சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே வந்திப் பவன்பெயர் வன்தொண்ட னென்பரிவ் வையகத்தே. திருத்தொண்டர் புராணசாரம் தண்கயிலை யதுநீங்கி நாவ லூர்வாழ் சைவனார் சடையனார் தனய னாராய் மண்புகழ அருட்டுறையான் ஓலை காட்டி மணம்விலக்க வன்தொண்டாய் அதிகை சேர்ந்து நண்பினுடன் அருள்புரிய ஆரூர் மேவி நலங்கிளரும் பரவைதோள் நயந்து வைகித் திண்குலவும் விறன்மிண்டர் திறங்கண் டேத்துந் திருத்தொண்டத் தொகையருளாற் bசப்பிdhரே.r¥பyU§ குண்டையூர் நெல்ல ழைத்துத் திருப்புகலூர்ச் செங்கல்செழும் பொன்னாச் செய்து தப்பில்முது குன்றர்தரும் பொருளாற் றிட்டுத் தடத்தெடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து நாதன் ஒப்பில்தனித் தூதுவந்தா றூடு கீறி உறுமுதலை சிறமதலை உமிழ நல்கி மெய்ப்பெரிய களிறேறி அருளாற் சேர வேந்தருடன் வடகயிலை மேவி னாரே. பிறப்பும் வளர்ப்பும் திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரிலே, ஆதி irவkரபிyசடையdர்என்பவ®ஒருவர் இருந்தhர்.அவர், இசை ஞானியார் என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடாத்தி வந்தார். வருநாளில், அவருக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அப் புதல்வருக்கு நம்பியாரூரர் என்னுந் திருநாமம் சூட்டப்பட்டது. நம்பியாரூரர் பிறையென வளர்ந்துவரலானார். நம்பியாரூரர் தமது குழந்தைப் பருவத்துக்கேற்பச் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார். ஒருநாள், அவ் விளையாட்டின்போது, அந்நாட்டு மன்னராகிய நரசிங்கமுனையர், குழந்தைப் பெருமானைக் கண்டார்; காதல் Tர்ந்தார்;rடையdரிடஞ்bசன்றார்;eம்பியாரூரரைத்jருமாறுnவண்டினார்.k‹d® வேண்டுதலுக்குச் சடையனார் இணங்கினார். நரசிங்க முனையர் நம்பியாரூரரை அன்பினால் மகன்மை கொண்டனர். நம்பியாரூரர், அரசிளங்குமரர்போல் அந்தணர் நெறியில் வளர்க்கப்பட்டார். உரியகாலத்தில் அவருக்கு உபநயனம் செய்யப் பட்டது. நம்பியாரூரர் அளவிலாக் கலைகளை ஆய்ந்து ஆய்ந்து வல்லவரானார். அவருக்குத் திருமணப் பருவம் உற்றது. திருமணம் புத்தூரிலே சடங்கவி சிவாசாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு பெண்மகவு உண்டு. அப்பெண்மணியை நம்பிaரூரருக்குkzஞ்செய்விக்கச்சiடயனார்விU«பினார்;விரு«ãச்சிலbgரிahர்களைப்புத்தூருக்Fஅனுப்பினhர்.அவர்கள், ò¤தூருக்குப்gய்ச்சlங்கவிசிtசாரியாரைக்க©டு,சiடயனார்விUப்பத்தைத்jரிவித்தார்கள்.சlங்fÉ சிவாசாரியார், சடையனார் விருப்பத்துக்கு உடன்பட்டார். பெரியோர்கள் திரும்பி வந்து, சடங்கவி சிவாசாரியார் உடன்பட்டதைச் சடையனாருக்கு அறிவித்தார்கள். சடையனார் மகிழ்வெய்தித் திருமணத்துக்குத் திருநாள் குறிப் பிட்டார். நானாபக்கமும் அழைப்புகள் அனுப்பப் பட்டன. சடங்கவி சிவாசாரியாரும் புத்தூரில் திருமண வினைகளைக் குறைவறச் செய்து முடித்தார். திருமணத்துக்கு முன்னாளில் நம்பியாரூரர்க்குக் காப்பணிதல் முதலிய சடங்குகள் செய்யப்பட்டன. அவர், அடுத்தநாள் காலைக் கடன்களை முடித்துத் திருமணக்கோலங் கொண்டார்; குதிரைமேல் ஏறினார்; புத்தூரை அடைந்தார். பெண்மணிகள் நம்பியாரூரரை எதிர்கொண்டார்கள். திருமணப் பொலிவை விரித்துக் கூறுதல் இயலாது. அது வருணனைக்கு எட்டாதது. புத்தூர், மணம்வந்த புத்தூர் ஆயிற்று. நம்பியாரூரர் குதிரை விட்டிறங்கித் திருமணப் பந்தருள் நுழைந்தார்; அங்கே இடப்பட்டிருந்த ஒரு பீடத்தில் அமர்ந்தார். தடுத்தாளல் அவ்வேளையில் திருக்கயிலாயத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வாக்களித்தவாறு, அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டுச் சிவபெருமான் புறப்பட்டார். அவர், ஒரு முதிய அந்தணக்கோலந் தாங்கினார்; தாங்கித் தண்டூன்றிக் கொண்டே வந்தனர்; திருமணப் பந்தருள் நுழைந்தனர்; சபையாரை உற்று நோக்கினர்; நோக்கிச், சபையோரே என் மொழியைக் கேளுங்கள் என்றனர். சபையோரும் நம்பியாரூரரும் அந்தணரைப் பார்த்து, அடிகள் இங்கே எழுந்தருளியது எங்கள் தவம்; சொல்வதைச் சொல்லும் என்று கூறினர். அப்பொழுது அந்தணர், நாவலூரரைக் கருணை நோக்கஞ் செய்து, ஏ நம்பீ! எனக்கும் உனக்கும் ஒரு பெரும் வழக்கு உண்டு. அதைத் தீர்த்த பின்னரே நீ மணஞ் செய்தல் வேண்டும் என்று சொன்னார். நாவலர் பெருமான், என்ன! வழக்கா? வழக்காயின், அதைத் தீர்த்தே மணஞ்செய்வேன். வழக்கைச் சொல்லும் என்றார். உடனே அந்தணர், சபையோரைப் பார்த்து, கேளுங்கள், இந்நம்பியாரூரன் எனக்குப் பரம்பரை அடிமை. இதுவே யான் சொல்ல வந்தது என்று கூறினர். இக்கூற்று, அங்கிருந்தவர்களைத் திடுக்கிடச் செய்தது. சிலர், இவன் யாவன், என்றார். சிலர் அந்தணர் அருகே சென்றனர். சிலர் வெகுண்டார். சிலர் சிரித்தார். e«ãah%u®, ‘ï›tªjz® bkhÊ e‹whÆU¡»wJ! என்று நகைத்தார். அச்சமயத்தில் அந்தணர், ஆரூரர் அருகே போய், அடே! அந்தக் காலத்தில் உன் பாட்டன் எனக்கு எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இருக்கிறது. Ú V‹ v‹id ïfœªJ eifahL»whŒ? என்று கேட்டனர். நாவலர் பெருமானது eகைப்புxழிந்தது.mt® mந்தணரைnehக்கி,அªதணர்க்குஅந்jணர்அடிiமயாதல்உண்nடா!அj இன்று நீர் சொல்லவே கேட்டேன். Ú® ã¤jnuh! என்று மொழிந்தார். அதற்கு அந்தணர், யான் பித்தனாயினும் ஆக; பேய னாயினும் ஆக; நீ என்ன கூறினுங் கூறு. யான் நாணமுறேன். நீ என்னை அறிந்தாயில்லை; வித்தகம் பேசாதே; பணிசெய்ய வா என்றனர். நம்பியாரூரர், இஃதென்ன! அடிமை ஓலை ஒன்றிருப்பதாக இவர் கூறுகிறாரே; அதன் உண்மையை அறிதல்வேண்டும் என்று சிந்திக்கலானார்; சிந்தித்து அந்தணரைப் பார்த்து, அடிமை ஓலை எங்கே? fh£L«! என்று கேட்டார். அந்தணர், ‘நம்பி!ஓலையைக் காண்டற்கு நீ அருகனல்லன். அதை இச்சபை முன்னே காட்டுவேன். உண்மை உறுதிப்பட்ட பின்னர், எனக்கு அடிமைத் தொழில் bசய்யவேÚ mUக‹’என்றுcரைத்jனர்.அவ்வுu நாவலர் பெருமானுக்குக் கோபமூட்டிற்று. அவர் வெகுண்டார்; எழுந்தார். அந்தணர் ஓடினர். ஆரூரர், அவரைத் தொடர்ந்து ஓடினார்; பிடித்தார்; ஓலையைப் பிடுங்கினார்; அந்தணர்க்கு அந்தணர் அடிமையாவது என்ன முறை? என்று அதைக் கிழித்தெறிந்தார். அந்தணர், நாவலர் பெருமானைப் பற்றி, இது முறையோ! என்று கூக்குரலிட்டார். அருகிலிருந்தவர்கள் இருவரையும் விலக்கினார்கள். அவர்கள், அந்தணரைப் பார்த்து, என்ன ஐயரே! உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டுவந்தீர்! Ú® ïU¥gJ v§nf? என்று கேட்டார்கள். அதற்கு அந்தணர், யான் இருப்பது இத் திருவெண் ணெய்நல்லூர். இவன் என் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்தான். அதனாலேயே இவன் என் அடிமை என்பது உறுதியாயிற்று என்று முழங்கினார். mJnf£l ehtÿu®, ‘ït‹ giHa k‹who nghY«! என்று நினைந்து, அந்தணரே! உமது ஊர் இத் âUbவண்ணெய்நல்ÿ® vன்றுrல்கிÖர்.அங்கேnghŒ இவ்வழக்கைப் பேசலாம் என்றார். அதற்கு அந்தணரும், அப்படியே செய்வோம். என்னிடத்தில் மூல ஓலை இருக்கிறது. அதைக் கொண்டு என் கட்சியை நிலைபெறுத்தல் கூடும் என்று சொல்லிக் கொண்டே தண்டூன்றிப் புறப்பட்டனர். எல்லோரும் திருவெண்ணெய்நல்லூரை அடைந்தனர்; அங்கே வேதியர்கள் நிறைந்த சபைக்குச் சென்றனர். அந்தணர், சபையாரை நோக்கி, மூதறிஞரே! இந்த நம்பியாரூரன் எனக்கு அடிமை. அதை உறுதிப்படுத்த ஓலை காட்டினேன். இவன் அதை வலிந்து பிடுங்கிக் கிழித்தெறிந்தான். அது குறித்து இருவேமும் இங்கே வந்திருக்கிறேம் என்று முறையிட்டனர். சபையர் அந்தணரைப் பார்த்து, அந்தணர் அடிமையாகும் வழக்கம் எங்கும் ïல்லையே!என்றார். தன்னந்தனியாராய்நின்றஅந்தணர்,என்tழக்குÃயாயமானது.ït‹ tலிந்து»Êத்தஓiy,இவ‹ பாட்lன்எழுதி¡கொடுத்தது,என்றdர். சபைah® நம்பியாரூரரைப் பார்த்து, ஓலையை வலிந்து கிழிக்கலாமா? அது வெற்றியாகுமா? இம் முதியோர் தமது வழக்கைச் சொன்னார். ckJ v⮥ò v‹d? என்று கேட்டார். நம்பியாரூரர், சபையாரை நோக்கி, நூலறி புலவீர்! யான் ஆதிசைவன் என்பதை நீர் அறிவீர். இவர் என்னைத் தம் அடிமை என்கிறார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இது மாயையாய் இருக்கிறது என்று சொன்னார். அது கேட்ட சபையார், அந்தணரைப் பார்த்து, உமது வழக்குக்குச் சான்று வேண்டும். ஆட்சி, எழுத்து, அயலார் கூற்று என்று மூன்றுவிதச் சான்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்றையாவது காட்டுக என்று கேட்டார். அந்தணர் சபையாரைப் பார்த்து, ‘முன்னேïவன்»ழித்ததுgடிXலை.மூy ஓலை என்னிடத்தில் இருக்கிறது என்றார். அதைக் காட்டுக என்று சபையார் கூறினர். அந்தணர், மூல ஓலையைக் காட்டுவேன். mijí« ït‹ »Ê¤jhš v‹brŒtJ? என்றார். சபையார் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; அஞ்சாது காட்டுக என்று உறுதி கூறினர். அந்தணர், மூல ஓலையை எடுத்தார். சபையார் ஏவுதல்படி ஒரு கணக்கன் அவ்வோலையை வாங்கிப் படித்தான். அதில், திருநாவலூரில் வாழும் ஆதி சைவனாகிய ஆரூரன், திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது: யானும் என் மரபினரும் திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு வழித் தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகிறோம். இங்ஙனம் ஆரூரன் என்ற வாசகம் இருந்தது. அதில் கையெழுத் திட்டவர், தத்தம் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டனர். அதற்குமேல் சபையார், நம்பியாரூரரைப் பார்த்து, இஃது உமது பாட்டன் கையெழுத்தா? பாரும் என்றார். அப்பொழுது அந்தணர், இவன் பாட்டன் கையெழுத்தை இவனா பார்க்க வல்லான்! இவன்றன் பாட்டனுடைய வேறு கையெழுத்துக்களை வரவழைத்து நீங்கள் பாருங்கள்; பார்த்து உண்மையை வெளியிடுங்கள் என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். இரண்டு கையெழுத்தும் ஒத்திருந்தன. சபையார் நம்பியாரூரரை நோக்கலாயினர்; நோக்கி, நம்பியாரூரரே! என்ன செய்தி? இவ்வந்தணருக்கு நீர் தோற்றீர். அவருக்கு அடிமையாயிருப்பது உமது கடன் என்று முடிவு கூறினார். நம்பியாரூரர் என்செய்வார்! இஃது என் தலை எழுத்து. c§fŸ Ô®¥ò¡F ïirahJ ah‹ ntW v‹ brŒjš TL«? என்று ஏக்குற்றார். அவ்வேளையில் சபையார் அந்தணரைப் பார்த்து, முதியவரே! ஓலையில் உமது ஊர் இவ்வூர் என்று குறிக்கப் பட்டிருக்கிறது. இவ்வூரில் நீர் எங்கே வதிகிறீர்? என்று கேட்டனர். அந்தணர், இங் குள்ள ஒருவரும் என்னை அறியீரா? என் வீட்டைக் காட்டுகிறேன்; வாரும் என்று சொல்லி நடந்தனர். நம்பியாரூரரும் மற்றவரும் அந்தணரைத் தொடர்ந்து சென்றனர். அந்தணர், அவ்வூரிலுள்ள திரு அருட்டுறை என்னுந் திருக்கோயிலி னுள்ளே நுழைந்தார்; மறைந்தார். தொடர்ந்து சென்றவர் எல்லோரும் மயங்குகிறார்; திகைக்கிறார். நம்பியாரூரர், என்னை ஆட்கொண்ட அந்தணர் திருக்கோயிலுள்ளே நுழைந்தார். ï~bj‹d? என்று வியப்படைகிறார். அவர் தனியே போய் அந்தணரை அழைத்துப் பார்த்தார். அப்போது, சிவபெருமான் உமாதேவியாருடன் மழவிடை மேல் தோன்றினார்; தோன்றி, நாவலூரா! முன்பு நீ நமக்குத் தொண்டன்; வேட்கை கூர்ந்தாய்; அதனால் நமது ஏவற்படி இம்மண்ணில் பிறந்தாய். இவ்வுலகப் பாசம் உன்னைப் பிடியாதபடி நாமே தடுத்தாட்கொண்டோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருளொலி கேட்ட நம்பியாரூரர் ஆனந்தப் பரவசராய், அடியேன் நாயினும் கடையேன். என்னை ஒரு பொருளாகக் கருதித் தடுத்தாட்கொண்டீர். உமது கருணையே கருணை என்று போற்றி நின்றார். átbgUkh‹ ehtÿuiu¥ gh®¤J, “Ú e«nkhL t‹ik ngádhŒ., அதனால் உனக்கு வன்தொண்டன்என்று பெயர் வழங்குவதாக. நமக்குரிய அர்ச்சனை பாட்டே யாகும். நீ அவ்வர்ச்சனை செய்யக்கடவாய் என்றார். அதற்கு நம்பியாரூரர், யான் சிறியேன்; ஒன்றும் அறியேன்; பெருமான் அருட் குணங்கள் எனக்கு என்ன தெரியும்? v¥go¥ ghLnt‹? என்று முறையிட்டார். சிவ பெருமான், என்னைப் பித்தன் என்று முன்னே நீ பேசினாய்; என்னைப் பித்தன் என்று பாடு என்று அருளிச் செய்தார். வன்தொண்டப் பெருமான் பித்தா பிறைசூடி என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக் கேட்ட சிவபெருமான், வன்தொண்டரைப் பார்த்து, இன்னும் நமது புகழைப் பாடிக் கொண்டு இருப்பாயாக என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். புத்தூரிலே திருமணம் குலைந்தது. சடங்கவி சிவசாரியா ருடைய புதல்வியார், வன்தொண்டப் பெருமான் திருவடியிலேயே நெஞ்சைப் பதியவைத்தார்; அவரையே நினைந்து நினைந்து சிவலோகமடைந்தர். வன்தொண்டர் திருவெண்ணெய்நல்லூரினின்றும் திருநாவ லூருக்குச் சென்றார்; ஆண்டவனைத் தொழுதார்; திருத்துறை யூருக்குப் போனார்; அங்கே இறைவனை நோக்கித் தவநெறி வேண்டினார். அவருக்குத் தில்லையைக் கண்டு தொழுதல்வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. அவ் வேட்கையுடன் அவர் புறப்பட்டார். திருவடி சூடல் நாவலர் பெருமான் பெண்ணையாற்றைக் கடந்தார். மாலைக்காலம் வந்தது. அவர் திருவதிகைப் புறத்தே அணைந்தார். திருவதிகை திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் திருத்தொண்டு செய்த திருப்பதி. ஆனால், அதனை மிதிக்க வன்தொண்டர் அஞ்சினார்; பக்கத்திலே இருந்த சித்தவடமடத்தில் தங்கினார்; திருவதிகைப் பெருமானை நினைந்து கொண்டே துயின்றார். திருவதிகைப் பெருமான், ஒரு கிழவேதியராய் அம்மடம் போந்தார்; போந்து, வன்தொண்டப் பெருமானுடைய தலையின்மீது காலை வைத்துக் துயில்வார் போல் இருந்தார். வன்தொண்டர் விழித்துப் பார்த்தார்; ஐயர் நிலை கண்டு, ஐயரே! உமதடியை என் முடிமீது வைத்தீர் என்று சொன்னார். Ia® ‘v‹ _¥ò âira¿ahk‰ brŒJ É£lJ! என்றார். வன்தொண்டர் வேறொரு திசையில் தலை வைத்து உறங்கினார். அவ்வேதியர் மீண்டும் வன்தொண்டர் முடிமீது அடியை வைத்தார். வன்தொண்டர், ஐயரே! நீர் யார்? gyfhY« v‹id Äâ¡»Ö®? என்று கேட்டார். ntâa®, ‘v‹id m¿ahnah! என்று கூறி மறைந்தருளினார். clnd ehty® bgUkh‹, ‘tªjt® átbgUkh‹’ v‹W cz®ªjh®; ‘ïWkh¥ghš bf£nl‹’ v‹W tUªâdh®; ‘j«khid m¿ahj rhâah Usnuh? என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர்த் திருநாவலூரர் திருக்கெடில நதியிலே நீராடினார்; திருமாணிக்குழியையுந் திருத்தினை நகரையுந் தொழுதார்; தில்லை சேர்ந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டார்; வணங்கினார்; புலன்கள் ஒன்றப் போற்றினார்; தம்மை மறந்தார்; இன்புறுவரானார். அவ்வேளையில் வன்தொண்ட! திருவாரூருக்கு வா என்றொரு வானொலி எழுந்தது. அதுகேட்ட வன்தொண்டர் தில்லையைத் தொழுது புறப்பட்டார்; கொள்ளிடத்தைக் கடந்தார்; சீர்காழியை அணுகினார்; சீர்காழி ஆளுடைய பிள்ளையார் பிறந்த திருப்பதி என்று அதனை மிதியாது, அதன் எல்லைப்புறத்தை வலம் வந்தார். அப்பொழுது சிவபெருமான் காட்சி கொடுத்தருளினார். வன்தொண்டர், கழுமல வளநகர் கண்டுகொண் டேனே என்று பாடி இன்புற்றார். பின்னே, வன்தொண்டர் திருக்கோலக்காவைத் தொழுது, திருப்புன்கூரை வணங்கிக் காவிரிக் கரையைச் சேர்ந்தார்; காவிரியில் நீராடித் திருமயிலாடுதுறை, திரு அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுது, தமிழ் பாடித் திருவாரூரை அணைந்தார். தோழமை தியாகேசப் பெருமான் கட்டளைப்படி, திருவாரூர் வாசிகள் நம்பியாரூரரைச் சிறப்புடன் வரவேற்றார்கள். e«ãah%uU« mt®fnshL fyªJ, ‘vªij ïU¥gJ« M%® mt® v‹idí« MŸtnuh nfç®? என்று பாடிக் கொண்டே சென்றார்; திருக்கோயிலுள் நுழைந்தார்; தேவாசிரிய மண்டபத்தைத் தொழுதார்; திருமூலட்டானத்தை அடைந்தார்; ஆண்டவனை வணங்கி, அன்பால் அகங்குழைந்து குழைந்து உருகினார். அப்பொழுது திருவருளால் நமது தோழமையை உனக்குத் தந்தோம்; நாம் உன்னைத் தடுத்தாட் கொண்டபோது நீ பூண்டிருந்த திருமணக்கோலத்தை என்றும் பூண்டிருப்பாயாக; வேட்கை தீர வாழ்வாயாக என்ற வாக்கு எழுந்தது. வன்தொண்டர் இறைவனை வணங்கிப் போற்றினார். அன்றுதொட்டு, அடியவர்கள் நாவலூரரைத் தம்பிரான் தோழர் என்று அழைக்கலானார்கள். தம்பிரான் தோழன், இறைவன் ஆணைப்படி திருமணக்கோலந் தாங்கலானார். அவர், திருவாரூரில் தங்கி நாடோறுஞ் சிவபெருமானை வழிபட்டு வந்தார். பரவையார் திருமணம் திருக்கயிலாயத்திலே உமாதேவியாரின் தோழிமார் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் கமலினியார் என்பவர். அவர் திருவாரூரிலே, உருத்திரகணிகையர் மரபிலே பிறந்தார். அவருக்குப் பரவையார் என்ற பெயர் அணியப்பட்டது. பரவையார் உற்ற வயதடைந்தார். நாள்தோறும் திருவாரூர்ப் பெருமானை வழிபடுவது அவர்தம் வழக்கம். வழக்கம்போலப் பரவையார் ஒருநாள் திருக்கோயிலுக்குப் போனார். அவ்வேளையில் தம்பிரான் தோழரும் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். இருவரையும் பண்டைவிதி கூட்டிற்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இவர் மனத்துள் அவர் நின்றார். அவர் மனத்துள் இவர் நின்றார். பரவையார் திருக்கோயிலுட்புகுந்தார். வன்தொண்டர் அங்கிருந்தவர்களைப் பார்த்து, இவள் யார்? என் மனத்தைக் கவர்ந்தாள் என்று கேட்டார். அவர்கள் பரவையார் என்றார்கள். தம்பிரான் தோழர், என்னை ஆண்ட பெருமானிடஞ் செல்கிறேன் என்று திருக்கோயிலுக்குப் போனார். ஆரூரர் போவதற்கு முன்னரே, பரவையார் இறைவனைத் தொழுது வெளியே சென்றார். நம்பியாரூரர் பரவையாரை விரும்பி ஆண்டவனை வேண்டினார்; வேண்டி, எம்பிரான் திருவருள் எந்நெறிச் சென்றது என்று தமக்குள் வினவிக்கொண்டே தேவாசிரியமண்டபத்தை அடைந்தார்; என்னைத் தடுத்தாட் கொண்ட பெருமான் எனக்குப் பரவையாரைத் தந்தருள்வார் என்று நினைந்திருந்தார். மாலைக் காலம் உற்றது. பரவையார், நம்பியாரூரர் நினைப்புடன் வீடு சேர்ந்தார். வேட்கை கிளர்ந்து கிளர்ந்து பரவையாரை முடுக்கலாயிற்று. guitah® kyuizÆš mk®ªjh®; njhÊia¥ gh®¤jh®; ‘eh« nfhÆY¡F¥ nghdnghJ ek¡F vânu tªjt® ah®? என்று கேட்டார். தோழி, அவர் நம்பியாரூரர்; தம்பிரான் தோழர்; சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றவர் என்று கூறினார். சிவனடியார் என்று கேட்டதும் பரவையார்க்கு மேலும் காதல் பெருகலாயிற்று. காதல் பெருக்கு அவரைப் புலம்பவுஞ் செய்தது. அன்பர்கள் வேண்டியவற்றை வேண்டியாங் களிக்குஞ் சிவபெருமான், பரவை நாயகியாரை நம்பியாரூரருக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று திருவாரூர் நேயர்களுக்குக் கட்டளை யிட்டார்; அதனை வன்தொண்டருக்கும் பரவையாருக்குந் தெரிவித்தார். அடுத்தநாள் காலையில், சிலநேயர்கள் எல்லாரும் ஒருங்கு சேர்ந்து திருவருளை வழுத்தினர்; வழுத்திப் பரவையாரைத் தம்பிரான் தோழருக்குத் திருமணஞ் செய்து கொடுத்தனர். இருவரும் இன்பவாழ்வு நடாத்தி வந்தனர். திருத்தொண்டத்தொகை அருளல் tH¡f«nghš e«ãah%u® xUehŸ âU¡nfhÆY¡F¢ br‹wh®; njtháÇa k©lg¤âny ToÆUªj âU¤bjh©l® fis¡ f©lh®; ‘ït®fS¡F ah‹ moa‹ MF« ehŸ vªehŸ? என்று கருதிக்கொண்டே சிவசந்நிதியை யடைந்தார். அதை அறிந்த தியாகேசப் பெருமான், வன்தொண்டர் முன்னே தோன்றினார். அடியவருடைய வழித்தொண்டை அவருக்கு உணர்த்தினார்; அவர்கள்மீது பதிகம் பாடும்படி நாவலூரருக்குக் கட்டளை இட்டார். தம்பிரான் தோழர், யான் சிறியேன்; அடியவர்கள் இயல்பை அறியேன்; அவர்கள் திறத்தை என்னென்று பாடுவேன்! திருவருள் துணை வேண்டும் என்று முறையிட்டார். சிவபெருமான், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்தருளினார். உடனே நாவலர்பெருமான், தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார்; திருக் கூட்டத்தை வணங்கினார்; திருத்தொண்டத் தொகையை அருளிச்செய்தார்; மீண்டும் திருக்கூட்டத்தைத் தொழுதார். ஆனந்த வெள்ளத்துள் அழுந்தினார்; பின்னே வீடு சேர்ந்தார். நெல் பெற்றது குண்டையூரிலே ஒரு கிழவர் இருந்தார். அவர் வேளாளர். அக்குண்டையூர்க் கிழார், தம்பிரான் தோழரின் சிறப்புக்களைக் கேள்வியுற்று அவருக்கு அன்பராயினார். குண்டையூரர், தம்பிரான் தோழருக்குத் திருவமுதாகும்படி, செந்நெல் - பருப்பு முதலிய வற்றைப் பரவையார் திருமாளிகைக்கு அனுப்பிவைத்தனர். வருநாளில், மழைவளஞ் சுருங்கியது. ஒரு நாள் கிழவருக்குப் போதிய நெல் கிடைக்கவில்லை. கிழவர் வருந்தினார்; உணவுங் கொண்டா ரில்லை; நேர்ந்த குறையை நினைந்துகொண்டே துயின்றார். அவர்தங் கனவிலே சிவபிரான் தோன்றி, ஆரூரனுக்காக உனக்குப் போதிய நெல் அளித்தோம் என்றார்; உடனே குபேரனை ஏவினார். குபேரன் குண்டையூர் முழுவதும் மலைமலையாக நெல்லைக் குவியச் செய்தான். நெற்குவியல்களால் விண்ணும் மறைந்தது. எங்கும் நெல் மயமாகவே இருந்தது. பொழுது விடிந்தது. குண்டையூர்க்கிழவர் விழித்து எழுந்தார்; நெல் மலைகளைக் கண்டார்; திருவருளை வியந்தார்; வன்தொண்டரை எண்ணினார்; இந்நெல்லை யரால் எடுத்தல் கூடும்! இதனை வன்தொண்டர்க்குத் தெரிவிப்பேன் என்று திருவாரூர் நோக்கினார். இந்நிகழ்ச்சியைச் சிவபிரான் நம்பியாரூரர்க்குத் தெரிவித்தார். நம்பியாரூரர் குண்டையூரை நோக்கிவந்தார். குண்டையூர்க் கிழவர் ஆரூரரைக் கண்டார்; வணங்கினார்; ஆண்டவன் அருட் செயலையும், நெல்லெடுத்தனுப்புதல் இயலாமையையும் விளக்கி னார். இருவருங் குண்டையூரைச் சேர்ந்தனர். நாவலர் பெருமான், நெல்மலைகளைக் கண்டார்; சிவபிரானைப் போற்றினார்; இவைகளை எடுத்துச் செல்லச் சிவபிரான் அருளால் ஆட்கள் பெறுதல் வேண்டும் என்று எண்ணி, அருகேயுள்ள திருக்கோளிலி என்னும் திருப்பதிக்குப் போனார்; கோயிலுக்குள் நுழைந்தார்; நீள நினைந்தடியேன் என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; அதன் வாயிலாக ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே என்று வேண்டினார். அப்பொழுது சிவபெருமான் திருவருளால், இன்று இரவு பூதகணங்கள் நெல்மலைகளைத் தூக்கி வரும் என்று வானில் ஓர் ஒலி எழுந்தது. தம்பிரான் தோழர் திருவாரூரரை அடைந்து, இறைவனைத் தொழுது, பரவையாரிடம் நிகழ்ந்ததைச் சொன்னார். அன்றிரவே பூதகணங்கள் நெல்மலைகளைத் திருவாரூரில் சேர்த்தன. பொழுது புலர்ந்தது. திருவாரூர் வாசிகள், எங்கணும் நெல் மலைகளைக் கண்டார்கள்; இவை பரவையாருக்கு நம்பியாரூர ரால் அளிக்கப்பட்டவை என்றும், நடப்பதற்கும் வழியில்லையே என்றும், இவ்வளவு நெல்லைப் பரவையார் எங்கே வைப்பார் என்றும் பேசினார்கள். பலர் வீட்டைவிட்டு வெளியே வந்தாரில்லை. சிறிது நேரத்திற்குள் பரவையார், அவரவர் வீட்டின் எல்லையில் உள்ள நெல்லை அவரவர் எடுத்துக்கொள்ளலாம் என்று பறையறைவித்தார். மக்கள் அவ்வாறே செய்து மகிழ்வெய்தினார்கள். சிங்கடி - வனப்பகை - அப்பனாதல் திருநாட்டியத்தான்குடியில் கோட்புலியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், திருவாரூரை அடைந்து, வன்தொண்டரைக் கண்டு தொழுதார்; தம் ஊருக்கு வருமாறு ஆரூரரை வேண்டினார். அவர்தம் வேண்டுகோளுக்கு ஆரூரர் இணங்கினார். கோட்புலியார் மகிழ்ச்சியுடன் தம் ஊருக்குத் திரும்பினார். பின்னர்த் தம்பிரான் தோழர் திருநாட்டியத்தான்குடி நோக்கினார். கோட்புலியார் நம்பியாரூரரை முறைப்படி எதிர்கொண்டார். நம்பியாரூரர் கோட்புலியார் வீடு சேர்ந்து, அவ்வன்பர் விருந்தினராய் இருந்தார். கோட்புலியார் , தம் புதல்விகளாகிய சிங்கடியாரையும், வனப்பகையாரையும் அழைத்து வந்தார். அவர்கள் வன் தொண்டரைப் பணிந்து நின்றார்கள். அப்பொழுது, கோட்புலியார், நாவலர் பெருந்தகையைப் பார்த்து, அடிகளே இவ்விருவரையும் ஆட்கொண் டருளல்வேண்டும் என்று முறையிட்டார். அதற்குப் பரவையார் கணவர், இவ்விருவரும் எனக்குப் புத்திரிகள் என்று கூறினார்; அம்முறையில் அவர்களை உச்சிமோந்தார்; திருக் கோயிலுக்குப் போனார்; பதிகம் பாடினார். அன்றுமுதல் நாவலூரர் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், வனப்பகையப்பன் என்றும் தாம் பாடும் பதிகங்களில் அமைத்துப் பாடலானார். வன்தொண்டப் பெருமான் அங்கிருந்து திருவலிவலம் போய்த் தமிழ் பாடித் திருவாரூரைச் சேர்ந்தார். செங்கல் பொன்னாயது பங்குனி உத்திரத் திருநாள் நெருங்கிற்று. பரவையார்க்குச் செலவுக்குப் பொன் தேவையா யிருந்தது. அதன் பொருட்டு நாவலர்பெருமான் திருப்புகலூருக்குச் சென்றார்; திருப்பதிகம் பாடித் தங் கருத்தைச் சிவசந்நிதியில் குறிப்பாக முறையிட்டார்; முறையிட்டு அருகேயுள்ள திருமடத்துக்குச் சென்றாரில்லை; கோயில் முற்றத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவபிரான் திருவருளால் வன்தொண்டருக்கு உறக்கம் வந்தது. அவர் கோயில் திருப்பணிக்கென அங்கே இருந்த செங்கற்களை எடுத்தார்; தலையணையாக வைத்தார்; வெண்பட்டாடையை விரித்தார்; பள்ளி கொண்டார். உடனிருந்த அடியார்களும் உறங்கினார்கள். வன்தொண்டர் சிறிது நேரம் உறங்கி விழித்தெழுந்தார்; செங்கற்களெல்லாம் பொன்கற்களாக மாறி இருப்பதைக் கண்டார்; சிவனருளை வியந்தார்; திருக்கோயிலுள்ளே நுழைந்தார்; தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் என்னுந் திருப்பதிகம் பாடினார்; பாடிப் பொன்னை எடுத்துத் திருப்பனையூரைச் சேர்ந்தார். அங்கே சிவபெருமான் திருக்கூத்துக் காட்சி வழங்கினார். நாவலர் பெருமான், அரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே என்று பாடித் திருவாரூருக்கேகினார். நம்பியாரூரர் சிலநாள் திருவாரூரில் இருந்தார். பின்னே அவர், திருநன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், திருநரையூர், அரிசிற்கரைபுத்தூர், திருவாவடுதுறை, திருவிடமருதூர், திருநாகேச்சுரம், சிவபுரம், திருக்கலைய நல்லூர், கும்பகோணம், திருவலஞ்சுழி, திருநல்லூர், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி முதலிய திருப்பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்கே, சிவபெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். பொன் பெறல் தம்பிரான் தோழர் திருவாலம்பொழிலைத் தொழுது, அன்றிரவு அங்கே தங்கிப் பள்ளிகொண்டார். சிவபெருமான் அவர்தங் கனவிலே தோன்றி, மழபாடியை மறந்தாயோ என்று கேட்டருளினார். தோழர் விழித்து எழுந்தார்; திருமழபாடிக்குச் சென்றார்; பொன்னார் மேனியனே என்னும் திருப்பதிகம் பாடினார்; அவ்விடத்தில் சிலநாள் தங்கினார்; பின்னர் அங்கிருந்து திருவானைக்கா அணைந்து, மறைகளாயின நான்கும் என்று பாடினார்; அதில் சோழ மன்னருக்குச் சிவபெருமான் அருளிய பெருமையைச் சிறப்பித்தார்; அத்திருப்பதியை விடுத்துத் திருப்பாச்சி லாச்சிராமஞ் சேர்ந்தார். அங்கே சிவபெருமான் வன் தொண்டருக்குப் பொன் அளிக்கவில்லை. தம்பிரான் தோழர், இவரல்லா தில்லையோ பிரானார் என்று பாடிப் பொன் பெற்றார்; சில நாள் அங்கே வதிந்தார்; பின்னர்த் திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய் மலை முதலிய திருப்பதிகளைத் தொழுது கொங்கு நாடு நோக்கினார். வன்தொண்டப் பெருமான் திருப்பாண்டிக்கொடுமுடிக்குச் சென்றார்; மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன் என்னும் பஞ்சாக்கரப் பதிகத்தைப் பாடியருளினார்; பல திருப்பதிகளைத் தொழுது பாடித் திருப்பேரூரைச் சேர்ந்தார். அங்கே சிவபெருமான், தாம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் திருக்கூத்தைக் காட்டியருளினார். வன்தொண்டர் அக்காட்சி கண்டு ஆனந்தமுற்றார். தில்லைக்கு ஏகுதல் வேண்டும் என்னும் வேட்கை அவர்பால் முருகி எழுந்தது. அவ்வேட்கையுடன், அவர், திருவெஞ்ச மாக்கூடலை அடைந்தார்; இறைவனை வழிபட்டார்; அங்கிருந்து சோழநாடு போந்து, திருக்கற்குடி, திருவாறைமேற்றளி, திரு இன்னம்பர், திருப்புறம்பயம் முதலிய திருப்பதிகளைத் தொழுது திருக்கூடலையாற்றூரை அணுகினார். வன்தொண்டர் திருக்கூடலையாற் றூருக்குப் போகாது, திருமுதுகுன்றை நோக்கி நடந்தார். வழியிலே சிவபெருமான் ஒரு கிழவேதியராய் வீற்றிருந்தார். வன்தொண்டர் அவரைப் பார்த்துத் திருமுதுகுன்றுக்கு வழி கேட்டார். கூடலை யாற்றூருக்குப் போகும்வழி இது என்றுசொல்லி, வேதியர் வன்தொண்டருடன் சென்று திடீரென மறைந்தார். வன்தொண்டர், அடிகள் இவ்வழிப் போந்த அதிசயம் அறியேனே என்று பாடினார்; திருக்கூடலை யாற்றூருக்குச் சென்றார்; இறைவனைத் தொழுதார்; அங்கிருந்து திருமுதுகுன்றை அடைந்தார்; சிவபெருமானை வழிபட்டுத் தமிழ்மாலை சாற்றினார். பொன்னை ஆற்றிலிட்டுக் குளத்திலெடுத்தல் முதுகுன்றப் பெருமான், தந் தோழர்க்குப் பன்னீராயிரம் பொன் கொடுத்தார். நம்பியாரூரர், சிவபெருமானை வணங்கி, இப்பொன் முழுவதும் திருவாரூர்க்கு வருதல் வேண்டும். அதனால் திருவாரூர் மக்களுக்கு ஒரு வியப்புத் தோன்றுதல்வேண்டும் என்று வேண்டினார். அப்பொழுது ஆரூர! இப்பொன் எல்லாவற்றையும் இம் மணிமுத்தா நதியிலே இடுவாயாக; திருவாரூர் திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக என்று ஒரு வாக்கு எழுந்தது. அது கேட்ட வன்தொண்டர் மகிழ்வெய்தினார்; 1மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டார்; திருவருள் ஆணைப்படி பொன் எல்லாவற்றையும் மணிமுத்தா நதியில் இட்டார்; இட்டு, என்னை வலிந்து ஆண்டருளிய இறைவன் திருவருளை இதில் பார்ப்பேன் என்று நினைக்கலானார். வன்தொண்டர் திருமுதுகுன்றை விடுத்தார்; தில்லையை நோக்கினார்; வழியில் திருக்கடம்பூர் முதலிய திருப்பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்குப் பதிகம் பாடித் தில்லை சேர்ந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டு வணங்கினார்; மடித்தாடும் அடிமைக்கண் என்னுந் திருப்பதிகத்தை ஓதினார்; அதிலே, தாம் திருப்போரூரில் கண்ட காட்சியை அமைத்துச் சிறப்பித்தார்; பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், திரு மண்ணிப் படிக்கரை, திருவாழ்கொளிபுத்தூர், திருக்கானாட்டு முள்ளூர், திருஎதிர் கொள்பாடி, திருவேள்விக்குடி முதலிய திருப்பதிகளைத் தொழுது தொழுது திருவாரூரை நண்ணினார். தம்பிரான் தோழன் திருமுதுகுன்ற நிகழ்ச்சியைப் பரவை யாருக்கு விளக்கிச் சொன்னார். guitah® Éa¥ò‰W, ‘ï~ bj‹d mâra«! என்று புன்னகை செய்தார். வன்தொண்டர், பரவையே! திருக்குளத்தில் பொன்னை எடுக்கலாம் வா என்றார். இருவரும் திருக்கோயிலுக்குச் சென்றனர்; திருவாரூர்ப் பெருமானை வணங் கினர்; திருக்குளத்தை அடைந்தனர். தம்பிரான் தோழர், பரவையாரைக் கரையிலே நிறுத்திவிட்டுத் தாம் குளத்திலே இறங்கினார்; பொன்னைத் தடவினார். அவரது பாட்டின் பயனாக உள்ள சிவபெருமான் அவரைப் பாடுவிக்க விரும்பினார். அதனால் ஆரூரருக்குப் பொன் கிடைக்கவில்லை. கரையில் உள்ள பரவையார், இஃதென்ன! ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடுவதா? ïJjh‹ mUŸnghY«! என்று நகைத்தார். ஆரூரர், பொன் செய்த மேனியினீர் என்னும் திருப்பதிகத்தை எடுத்துப் , பரவை இவள் தன் முகப்பே என் செய்தவா றடிகேள் என்று பாடியருளினார்; ஒன்பதாம் பாட்டில் ஏத்தா திருந்தறியேன் என்று இரங்கினார். உடனே பொன்திரள் புலனாயிற்று. வன்தொண்டர் அதை எடுத்துக் கரை ஏறினர்; அப்பொன்னையும் தாம் கொண்டு வந்த மச்சத்தையும் உரைத்துப் பார்த்தார். பார்க்கவே, குளத்தினின்றும் எடுக்கப்பட்ட பொன்னின் உரை தாழ்ந்திருந்தது. நம்பியாரூரர் வருந்திச் சிவபெருமானைப் பாடினார். பின்னே உரை ஒத்தது. நம்பியாரூரர் மகிழ்வெய்தினார். பொன்னெல்லாம் பரவையார் வீட்டுக்கு அனுப்பப் பட்டன. வன்தொண்டரும் பரவையாரும் திருக்கோயிலுக்குப் போய் இறைவனைத் தொழுது வீடு சேர்ந்தனர். சில நாட்கள் கழிந்தன. நம்பியாரூரருக்கு இன்னும் பல திருப்பதி களைக் கண்டு தொழுதல் வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. எழவே, அவர் திருவாரூரை விடுத்துத் திருநள்ளாறு, திருக்கடவூர் மயானம், திருக்கடவூர் வீரட்டம், திருவலம்புரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருநின்றி யூர், திருநீடூர், திருப்புன்கூர் முதலிய திருப்பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்கே ஆண்டவனை வழிபட்டுப் பதிகம் பாடினார்; திருக்கோலக்காவை அடைந்தார்; இறைவனைத் தொழுது தமிழ் பாடினார்; அதில் ஞானசம்பந்தப் பெருமான் தாளம் பெற்றதைச் சிறப்பித்தார்; அங்கிருந்து சீர்காழி சேர்ந்தார்; எல்லையை வலம்வந்து ஆண்டவனை வணங்கினார்; ஞானசம்பந்தரையும் வழுத்தினார்; வழுத்தித் திருக்கருகாவூருக்குப் புறப்பட்டார். தண்ணீரும் பொதிசோறும் வழியில் பசியும் தாகமும் நம்பியாரூரரை வருத்தின. சிவ பெருமான் அதையுணர்ந்து, ஒரு வேதியராய், வழியில் ஓரிடத்தில் பந்தர் அமைத்துத் தண்ணீர், பொதிசோறு முதலியன வைத் திருந்தார். தம்பிரான்தோழர் திருக்கூட்டத்தோடு அவ்விடத்துக்கு வந்தார்; பந்தரைக் கண்டார்; பந்தரின் கீழே போய், சிவாயநம சிவாயநம என்று ஓதிக்கொண்டிருந்தார். அருகே இருந்த வேதியர், வன்தொண்டரைப் பார்த்து, நீர் மிகப் பசித்ததிருக்கீறீர் போலும்; என்னிடத்தில் பொதிசோறு இருக்கிறது. அதை உண்டு தண்ணீர் அருந்தும்; இளைப்பாறும் என்றார். நம்பியாரூரர் அதற்கு இசைந்தார். வேதியர் பொதிசோற்றைத் தந்தார். நம்பியாரூரரும் அவர்தம் அடியார்களும் அச்சோற்றை உண்டார்கள். அஃது எல்லோர்க்கும் பயன்படு முறையில் வளர்ந்தது. எல்லாரும் தண்ணீர் அருந்தினர். நம்பியாரூரர் வேதியருடன் பேசிக் கொண்டே உறங்கினர். மற்றவர்களும் உறங்கினார்கள். நம்பியாரூரர் விழித்து எழுந்தார். வேதியரையுங் காணோம்; பந்தரையுங் காணோம். இத்தனை யாமாற்றை அறிந்திலேன் என்று பாடித் தம்பிரான் தோழர் திருக்கருகாவூரைச் சேர்ந்தார்; அங்கே சிலநாள் தங்கினார்; பின்னே, திருக்கழிப்பாலை, தில்லை, திருத்தினைநகர் முதலிய திருப்பதிகளை வணங்கித் திருநாவலூர் போந்தார். அன்பர்கள் எதிர் கொண்டார்கள். வன்தொண்டர் அவர்களுடன் கலந்து இறைவனைத் தொழுதார்; அங்கே சிலநாள் இருந்தார். அப்பொழுது நம்பியாரூரர்க்குத் தொண்டைநாட்டின்மீது எண்ணஞ் சென்றது. செல்லவே, அவர் தொண்டை நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சோறுங் கறியும் இரந்தளித்தல் வன்தொண்டர் தொண்டைநாடு புகுந்து திருக்கழுக்குன்றம் சேர்ந்தார்; சிவபெருமானைத் தொழுதார்; பதிகம் பாடினார்; அங்கிருந்து திருக்கச்சூர் ஆலக்கோயிலுக்கு எழுந்தருளினார்; அங்கே சிவபெருமானை வழிபட்டு வெளியே வந்தார். சாப்பாட்டு வேளை வந்தது. சமையல் செய்வோர் வரவில்லை. நம்பியாரூரர்க்குப் பசிமேலிட்டது. அவர் மதிலின் ஒரு புறத்தே தங்கினார். அப்பொழுது சிவபிரான், ஒரு மறையவராய் நம்பியாரூரரை அணைந்து, நீர் பசித்திருக்கிறீர் போலும். யான் இரந்து சோறு கொண்டு வருகிறேன். இங்கே இரும் என்று அருளிச்செய்தார்; அப்படியே அவர் சோறும் கறியும் இரந்து வந்தார்; வன்தொண்டருக்குக் கொடுத்தார். வன் தொண்டர் அடியவர்களுடன் சோறு உண்டார். உண்டதும் மறையவர் மறைந்தார். வந்தவர் சிவபெருமான் என்று அறிந்து, நாவலர் பெருமான், முதுவாய் ஓரி கதற என்னுந் திருப்பதிகத்தை அருளினார். பின்னர்த் தம்பிரான் தோழர், திருக்கச்சூரை விடுத்துத் திருக் காஞ்சியை அடைந்தார்; திருஏகம்பத்தைத் தொழுது பதிகம் பாடினார்; காமக்கோட்டத்தையும் கண்டு தொழுதார்; அங்கிருந்து, திருமேற்றளி, திருஓணகாந்தன்றளி, திருஅநேகதங்காபதம், திருப்பனங்காட்டூர், திருமாற்பேறு, திருவல்லம் முதலிய திருப்பதி களுக்குச் சென்று , சிவபெருமானை வழிபட்டுத் திருக்காளத்தி சேர்ந்தார்; காளத்தியப்பரை வணங்கினார்; தமிழ் பாடினார்; கண்ணப்பரைக் கண்டு தொழுதார்; அத்திருப்பதியில் இருந்து கொண்டே வட திசையிலுள்ள ஸ்ரீபருப்பதம், ஸ்ரீகேதாரமலை முதலிய திருத்தலங்களைப் பணிந்து பதிகம் பாடினார்; திருக் காளத்தியினின்றும் புறப்பட்டுத் திருவொற்றியூரை அடைந்தார்; அடைந்து, மூன்று வேளையும் எழுத்தறியும் பெருமானை வழிபட்டு வந்தார். சங்கிலியார் திருமணம் ஞாயிறு என்னும் ஊரிலே வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் ஞாயிறு கிழவர் என்பவர். திருக்கயிலையிலே சுந்தரரைக் காதலித்த இருவருள் அனிந்திதையார் என்பவர், ஞாயிறு கிழவர்க்குப் புதல்வியராகப் பிறந்தார். அப்புதல்வியார் சங்கிலியார் என்னும் பெயர் சூட்டப்பெற்றார். சங்கிலியார், உமையம்மையாரிடத்து இயற்கை யன்புடையராய் வளர்ந்தார்; வளர்ந்து திருமணப் பருவம் எய்தினார். தாய் தந்தையர், சங்கிலியரைத்தக்க ஒருவர்க்குத் திருமணஞ் செய்துகொடுத்தல்வேண்டும். என்று பேசிக் கொண்டனர். அப்பேச்சு, சங்கிலியார் காதில் விழுந்தது. r§»Èah®, ‘ah‹ xU átdoahU¡F cÇatŸ; ït®fŸ v‹ brŒth® fnsh! என்று உள்ளங் கலங்கி மயங்கி விழுந்தார். தாய் தந்தையர் சங்கிலியாரை எடுத்தனர்; பனி நீர் தெளித்தனர்; சங்கிலியார் தெளிவடைந்தார். bg‰nwh®, r§»Èahiu¥ gh®¤J, ‘cd¡F c‰wJ v‹d? என்று கேட்டார். சங்கிலியார், தாய் தந்தையரை உற்றுநோக்கி, நீங்கள் பேசிய மாற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. யான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள். இனி யான் திருவொற்றி யூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன் என்றார். பெற்றோர்க்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர் வாழ்ந்துவந்தனர். ஓற்றியில் சங்கிலியார் ஞாயிறு கிழவரது மரபில் தோன்றிய ஒருவன் இருந்தான். அவன், சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழவர்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது. அம் முதியோர் ஞாயிறு கிழவரிடம் போந்து, தம்மை அனுப்பினவன் கருத்தைத் தெரிவித்தனர். ஞாயிறு கிழவர் என் செய்வார்! அவர், முதியோரிடம் ஒருவாறு இனிய மொழிகள் பேசி அவரை அனுப்பினர். முதியோர் வீடு சேர்வதற்கு முன், அவரை அனுப்பினவன், ஏதோ ஒரு தீங்குசெய்து மாண்டவனைப் போல மாண்டான். அச்செய்தி, ஞாயிறு கிழவருக்கு எட்டிற்று. அவரும் அவர்தம் மனைவியாரும், சங்கிலியார்பால் பேசத் தகாத மொழி களைப் பேசலாமா? இனிச் சங்கிலியார் வழி நடப்பதே நல்லது என்று கருதலாயினர்; உண்மையை உறவினர்க்கு உணர்த்தினர். பின்னே, பெற்றவரும், மற்றவரும் ஒன்று சேர்ந்து, சங்கிலியாரைத் திருவொற்றி யூருக்கு அழைத்துச்சென்றனர்; ஆண்டவனை வழிபட்டனர்; ஒரு கன்னிமாடங் கட்டுவித்தனர்; அதிலே சங்கிலியாரை இருக்கும்படி செய்து, அவரை வணங்கி, விடைபெற்று வருத்தத்தோடு ஊருக்குத் திரும்பினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்ட வனை வழிபட்டு வந்,தார். அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத் தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று. அதனால் சங்கிலியார், பூமண்டபத்தில் திரைசூழ்ந்த ஓரிடத்தில் இருந்து, பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பிவந்தார். சங்கிலியார் காட்சி நம்பியாரூரர் வழக்கம்போல ஒருநாள் திருக்கோயிலுக்குச் சென்றார்; இறைவனைத் தொழுதார்; அடியவர் செய்யுந் திருத் தொண்டுகளைத் தனித்தனியே கண்டு கண்டு வணங்கிச் செல்வா ரானார். அவர் பூமண்டபத்தின் உள்ளே புகுந்தபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிதற் பொருட்டுப் பூமாலையைத் தோழிகளிடங் கொடுத்தார்; மின்போல் மறைந்தார். நம்பியாரூரர் அவரைக் கண்டார். இருவரையும் பண்டைவிதி கூட்டலாயிற்று. வன்தொண்டர் வெளியே வந்தார்; அங்கிருந்த சிலரைப் பார்த்துப், பூமண்டபத்திலே திரைக்குள்ளே ஒரு நங்கையைக் கண்டேன். அவள் என் மனத்தைக் கவர்ந்தாள். mtŸ ah®? என்று வினவினார். அவர்கள், அவர் சங்கிலியார் என்போர்; கன்னிகை யார்; சிவபெருமானுக்குத் தொண்டு செய்வோர் என்றார்கள். அதுகேட்ட வன்தொண்டர், இப்பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை; மற்றொருத்தி இவள்தான் என்று மருண்டார்; உடனே திருக்கோயிலுக்குச் சென்றார்; சிவபெருமானைக் கண்டார்; சங்கிலியாரைத் தந்தருளுமாறு வேண்டினார்; வேண்டி, வெளியே வந்து, திருக்கோயிலின் ஒரு புறத்திலே இருந்து, சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார். மாலைக்காலம் வந்தது. சிவபெருமான் அதலும் சபதமும் சிவபெருமான தம் தோழர்பால் அணைந்தார்; ஆரூர! சங்கிலியை உனக்குக் கொடுக்கின்றோம்; கவலையை ஒழி என்று அருளிச் செய்தார். வன்தொண்டர், பெருமானே! அன்று என்னைத் தடுத்தாட்கொண்டீர்; இன்று என் விருப்பத்துக்கு இணங்கி வந்தீர்; அருள் செய்தீர் என்று வியந்து வணங்கி மகிழ்வெய்தினார். பின்னர்ச் சிவபெருமான், சங்கிலியார் கனவிலே தோன்றினார். சங்கிலியார் எழுந்தார்; தொழுதார்; ஆனந்தப் பரவசரானார்; என் தவமே தவம்! பெருமான் எழுந்தருளினார் என்று மீண்டும் வணங்கினார். சிவபெருமான், அம்மையாரைப் பார்த்துச் , சங்கிலி! நம்பியாரூரன் என்பவன், நம் மாட்டுப் பேரன்புடையவன்; நம்மால் தடுத்தாட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை மணஞ்செய்ய விரும்பி என்னை வேண்டினான். அவன் விருப்பத்துக்கு நீ உடன்படுவாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார். சங்கிலியார், பெருமான் ஆணைப்படி இசைகிறேன்; ஆனால் திருமுன்னே முறையிட்டுக்கொள்ள வேண்டுவது ஒன்றுண்டு என்று தொழுதார்; தொழுது, நாணத்துடன், வன்தொண்டர், திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர். இதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். சிவ பெருமான், வன்தொண்டர் நிலையை உணர்ந்து, சங்கிலி! அவன் உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதஞ் செய்து கொடுப்பான் என்று கூறியருளினார். சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரரிடம் எழுந்தருளினார்; எழுந்தருளி, நம்பி! சங்கிலியைக் கண்டோம்; உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறையுண்டு. அக்குறையைத் தீர்த்தல்வேண்டும் என்றார். t‹bjh©l®, ‘m~bj‹d? என்று கேட்டார். சிவபெரு மான், அவன் முன்னிலையில், உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்றிரவே செய்துகொடு என்றார். நம்பியாரூரர், எதைச் செய்தல் வேண்டுமோ அதைச் செய்வேன்; உமது அருள் வேண்டும் என்றார். átbgUkh‹, ‘ï‹D« v‹dnt©L«? என்று கேட்டார். j«ãuh‹ njhH®, ‘ï¢rgj«, ãw gâfis tz§Fj‰F ïilôW brŒínk! என்று எண்ணலானர்; எண்ணிப் பெருமானை வணங்கிப், பெருமானே! சபதஞ் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன். அப்போது அடிகள், திருமகிழின்கீழ் எழுந் தருளல் வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் அதற்கு இசைந்தார்; இசைந்து மீண்டுஞ் சங்கிலியாரிடஞ் சென்றார்; சென்று, சங்கிலி! ஆரூரன் சபதஞ் செய்துகொடுக்க இசைந்தான்; அதன் பொருட்டு உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழின்கீழ்ச் சபதஞ் செய்துகொடுக்குமாறு அவனை நீ கேட்பாயாக என்று அருளிச் செய்தார். சங்கிலியார் சிவபெருமான் கருணையைப் போற்றி நின்றார். சிவபெருமான் திருவுருக்கரந்தார். இருவர் சந்திப்பு சங்கிலியார், திருவருளை நினைந்து துயிலாதவரானார்; தோழிமாரை எழுப்பினார்; நிகழ்ந்ததைக் கூறினார். தோழிமார் மகிழ்வெய்தி, அம்மையாரைத் தொழுதார். திருப்பள்ளி எழுச்சிக்கு மலர்தொடுக்கும் பொழுதாயிற்று. சங்கிலியார் தோழிமாருடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான், தோழர் முன்னரே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் சங்கிலியாரைக் கண்டார்; அருகே சென்றார்; சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார், நாணத்தால் ஒன்றுங் கூறாது திருக்கோயிலை நோக்கி நடந்தார். அவரைத் தொடர்ந்து போனார். எல்லாரும் சிவசந்நிதி சேர்ந்தனர். மகிழின் கீழ் நம்பியாரூரர், சங்கிலியாரைப் பார்த்து, நான் உன்னைப் பிரியேன் என்று சபதஞ் செய்து கொடுத்தல் வேண்டும். முன்னே வா என்று கூறினார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் உணர்ந்துள்ள தோழிமார், அடிகள் இதற்காக இறைவன் முன் சபதஞ் செய்தல் தகாது என்றனர். e«ãah%u® átbgUkhÅ‹ âUÉisahliy m¿ahjtuhŒ¥, ‘ã‹id v§nf rgjŠ brŒJ bfhL¤jš nt©L«? என்று கேட்டார். தோழிமார், மகிழின் கீழ் என்றார். வன்தொண்டர் மருள்வாரானார்; வேறு வழியில்லை! என்செய்வார்! அப்படியே செய்கிறேன் வாருங்கள் என்றார். எல்லாரும் மகிழின்கீழ்ச் சென்றனர். சங்கிலியார் காணுமாறு தம்பிரான் தோழர் மகிழை மும்முறை வலம் வந்தார்; வந்து, யான் சங்கிலியைப் பிரியேன் என்று சபதஞ்செய்து கொடுத்தார். அதைக் கண்ட சங்கிலியார் கலங்கினார்; சிவ பெருமான் ஆணையால் பாவியேன் இக்காட்சி கண்டேன் என்று நைந்து, ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார். நம்பியாரூரர் திருக்கோயிலுள் நுழைந்து, ஆண்டவனை வாழ்த்திச் சென்றார். சங்கிலியார், வழக்கம்போலத் தமது திருக்தொண்டைச் செய்து கன்னிமாடத்துக் கேகினார். சிவபெருமான், அன்றிரவு திருவொற்றியூரிலுள்ள தொண்டர் கள் கனவில் தோற்றி, வன்தொண்டருக்குச் சங்கிலியாரைத் திருமணஞ்செய்து கொடுக்குமாறு கட்டளை யிட்டார். தொண்டர் கள் சிவபணியை அடுத்த நாளே நிறை வேற்றினார்கள். தம்பிரான் தோழர், சங்கிலியாரோடு இன்பம் நுகர்ந்து திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தார். இரண்டு கண் மறைவு தென்றற் காலம் வந்தது. தென்றற் காற்று நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழா நினைவை யூட்டிற்று. எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே என்று ஆரூரர் பாடினார். நாளுக்குநாள் திருவாரூர் வேட்கை அவர்பால் முறுகி எழலாயிற்று. ஒருநாள் நாவலர் பெருமான், திருக்கோயிலுக்குப் போய், ஆண்டவனைத் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினார். நீங்கினதும், அவர் தம் இருவிழியும் மறைந்தன. நம்பியாரூரர் மூர்ச்சித்தார்; தூர்ச்சித்தார்; திகைத்தார்; பெருமூச்சு விட்டார்; சபதம் தவறினமையால் இத்துன்பம் நேர்ந்தது என்பதை உணரலானார்; சிவநாதனைப் பாடியே இத்துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டார்; அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்; அதில், ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் என்றும், ஊன்றுகோல் எனக் காவதொன் றருளாய் என்றும், உற்றநோய் உறுபிணி தவிர்த்தருளாய் என்றும் வேண்டுதல் செய்தார். ஊறு நீங்கவில்லை. திருவாரூருக்குப் போதல் வேண்டும் என்னும் உறுதியினின்றும் நம்பியாரூரர் பிறழவில்லை. áy® tÊfh£l mt® âUKšiythÆY¡F¢ br‹wh®; ‘r§»È¡fhf v‹f© bfh©l g©g!’ v‹W ghodh®; m§»UªJ âUbt©gh¡f« nr®ªjh®; ‘âU¡nfhÆš cŸçnuh? என்று சிவபெருமானைக் கேட்டார். சிவபெருமான், அவருக்கு ஊன்று கோல் தந்து, உளோம் போகீர் என்றார். நம்பியாரூரர், பிழையுளன பொறுத்திடுவர் என்னுந் திருப்பதிகத்தை ஓதிப் பழையனூர்த் திருவாலங்காட்டை அடைந்தார். ஒற்றைக் கண் பெறல் திருவாலங்காடு, காரைக்கால் அம்மையார் தலையாலே வலஞ் செய்த பெருமை யுடையது. அதனால் நம்பியாரூரர், அதன் அகத்தே நுழையாது புறத்தே நின்று, முத்தா முத்தி தரவல்ல என்னுந் திருப்பதிகத்தை அருளினார்; அங்கிருந்து புறப்பட்டுத் திருவூறலைத் தொழுது, திருக்காஞ்சியை அணைந்தார்; திருக்காமக்கோட்டத்தை வணங்கித் திரு ஏகம்பத்தை நோக்கினார்; திருஏகம்பர் திருமுன் நின்று, பெருமானே! கண்ணளித் தருளும் என்று வேண்டினார். இடக்கண்மட்டும் ஒளிபெற்றது. ஏகம்பநாதர் தமது காட்சியை வழங்கினார். வன்தொண்டர் மகிழ்வெய்தி, எம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே என்று வழுத்தினார்; அங்கே சிலநாள் தங்கினார். மற்றொரு கண் பெறல் ã‹d® e«ãah%u® âU¡fhŠáia ÉL¤jh®; ‘âUth%® ò¡F vªij ãuhdhiu v‹Wbfhš VŒJtnj?’ v‹W gho¡bfh©nl âUMkh¤ö® nr®ªjh®; m§nf âU¥gâf« gho¤ âUmu¤Jiw e©Âdh®; ‘v‰nw xU f©Ây‹ Ëidašyhš bešthÆš mu¤Jiw Ë kynd - k‰nwš xU g‰¿y‹’ v‹WU» Xâdh®; X⤠âUthtLJiw neh¡»dh®; ‘Mbud¡Fwî mku®fnsnw! என்றும், கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன் என்றும் பரவித் திருத்துருத்திக்குப் போனார்; சிவபெருமானைத் தொழுதார்; அடியேன்மீதுள்ள பிணியை ஒழித்தருளல் வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான், நம்பியாரூரரைப் பார்த்து, நம்பி! இக்கோயிலுக்கு வடபுறத்திலே ஒரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்குவாயாக என்று அருளிச்செய்தார். நம்பியாரூரர் அப்படியே செய்தார். பிணி நீங்கிற்று. பொலிவு தோன்றிற்று. நாவலர் பெருமான், என்னுடம் படும்பிணி இடர் கெடுத்தானை என்று ஆண்டவனை வாழ்த்தினார்; பிறகு பல திருப்பதிகளைக் கண்டு கண்டு வணங்கிக் கொண்டே திருவாரூர் அணைந்தார்; ஒற்றைக் கண்ணால் திருவாரூரைக் கண்டார்; மாலைக்காலத்திலே ஊருக்குள் நுழைந் தார்; முன்னே தூவாயாரை வணங்க விரும்பிப் பரவையுண் மண்டளி என்னுந் திருக்கோயிலுக்குச் சென்றார்; ஆண்டவனை வணங்கி மற்றும் ஒரு கண் தந்தருளுமாறு வேண்டினார்; தூவாயா என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து, நள்ளிரவிலே திருமூலட்டானத்துக்குப் போனார். அடியவர் எதிரே வந்தனர். தம்பிரான் தோழர் அவரைக் கண்டு, குருகு பாய என்னுங் கைக்கிளைப் பதிகத்தை அருளினார்; தியாகேசப்பெருமானைக் கண்டார்; தொழுதார்; வலக்கண்ணை அருளுமாறு கேட்டார்; மீளா அடிமை உமக்கே ஆளாய் என்னுந் தமிழ்மாலை சாத்தினார்; அதில், எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே என்பதை அமைத்து ஓதினார். தியாகேசப் பெருமான், தந்தோழருக்கு வலக்கண்ணைக் கொடுத்தருளினார். நம்பியாரூரர், ஆண்டவனை இரு கண்ணாரக் கண்டார்; இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்; பின்னே, புறத்தே வந்து, தேவாசிரிய மண்டபம் போந்து அங்கே வீற்றிருந்தார். பரவையார் புலவி பரவையார், தம்மை நீண்டகாலமாக நம்பியாரூரர் பிரிந் திருந்தமையால், அவர்தம் நிலையைத் தெரிந்துவரச் சிலரை விடுத்தார்; அவர் வாயிலாக நம்பியாரூரர் திருவொற்றியூரிலே சங்கிலியாரைத் திருமணஞ் செய்துகொண்டதை உணர்ந்தார். அதனால் பரவையார் துயரக்கடலில் அழுந்திக் கிடந்தார். நம்பியாரூரர் திருக்கோயிலுக்குப் போன போது, அவர் தம் பரிசனங்களிற் சிலர், பரவையார் வீட்டுக்குச் சென்றனர். அவர் உள்ளே நுழையாதவாறு தடுக்கப்பட்டார். அவர் திரும்பிவந்து, தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த வன்தொண்டரைக் கண்டு, அடிகளே! நாங்கள் பரவையார் வீட்டுக்குச் சென்றோம்; உள்ளே நுழையாதவாறு தடுக்கப்பட்டோம்; திருவொற்றியூர்ச் செய்கை முற்றும் பரவையார் உணர்ந்திருக்கிறார் என்று கூறினர். வன்தொண்டர் வருந்திப் பரவையார் செற்றந்தீர்க்கக் கற்ற மாந்தர் சிலரை அனுப்பினார். அவர் சென்று பரவையாரைக் கண்டனர்; பல நியாய உரைகளால் பரவையார் செற்றந் தீர்க்க முயன்றனர். பரவையார் அவரைப் பார்த்து, நம்பியாரூரர் குற்றம் பொருந்தி யவர்; அவர் சார்பில் ஒன்றும் பேசாதேயுங்கள்; இனிப் பேசின், என் உயிர் போய்விடும்என்றார். அவர் நடுங்கி, வெளியே வந்து தம்பிரான் தோழரிடஞ் சென்று நிகழ்ந்ததைக் கூறினர். சிவபெருமான் தூது சென்றமை வன்தொண்டருக்குத் துயரம் பெருகிவிட்டது. பக்கத்துள்ள எல்லாரும் உறங்கினர். நள்ளிரவு உற்றது. நம்பியாரூரர் சிவபெருமானை நினைந்தார்; பெருமானே! இஃதென்ன வினை? இதற்கு மூலமா யிருப்பவள் பரவை. இந்த நள்ளிரவில் நீர் அவளிடஞ் சென்று, அவள் தன் புலவி தீர்த்தல் வேண்டும். இல்லையேல் யான் பிழையேன் என்று முறையிட்டார். அப்பொழுது அங்கே சிவ பெருமான் எழுந்தருளினார். பெருமான் வன்தொண்டரைப் பார்த்துத், தோழனே! cd¡F c‰wJ v‹d? என்று கேட்டார். வன்தொண்டர், சிவபெருமானை வணங்கி, உமது அருளால் சங்கிலியைப் பெற்றேன். அதைப் பரவை கேள்வியுற்றாள். இப் பொழுது யான் அவளிடஞ் சென்றால், உயிர் விடுவேன் என்கிறாள். யான் அடியன் என்பதும், நீர் தோழர் என்பதும் உண்மையானால் இன்றிரவே நீர் பரவைபால் சென்று, அவள் புலவியைத் தீர்த்தருள்க என்று வேண்டினார். சிவபெருமான், நம்பி! இப்பொழுதே பரவை வீட்டுக்குத் தூதாகச் செல்வோம் என்று சொல்லிப் புறப்பட்டார். சில தேவரும் முனிவரும், அன்பரும் சிவபெருமானைச் சூழ்ந்து சென்றனர். சிவபெருமான், பரவையார் மாளிகையை அடைந்தார். உடன் போந்தவர் அனைவரும் புறத்தே நின்றனர். சிவபெருமான் தம்மை அர்ச்சிக்கும் மறைமுனிவராய்க் கோலங்கொண்டு கதவைத் தட்டினார். துயிலின்றிக் கிடந்த பரவையார், என்ன! அர்ச்சகர் குரல்போல் இருக்கிறது! ïªeŸËuÉš mt® ï§F tUthnd‹!’ v‹W ÉiuªJ tªJ fjit¤ âwªjh®; FU¡fis¥ gh®¤jh®; ‘átbgUkhid¥ nghy ï§nf Ú® vGªjUËÜ®; v‹d brŒâ? என்று கேட்டார். மறையவர், என் சொற்படி நடப்ப தாயின், யான் வந்ததைச் சொல்வேன் என்றார். நீர் அதை அருளிச் செய்க; அது கூடுமானதாயின், அதன்படி நடப்பேன் என்று பரவையார் கூறினார். அதுகேட்ட பெருமான், நம்பியாரூரர் உன்னிடம் வர, நீ இசைதல் வேண்டும் என்றார். பரவையார், முனிவரே! உமது கூற்று நன்றாயிருக்கிறது! அவர் என்னைப் பிரிந்தார்; திருவொற்றியூரிலே சங்கிலியின் தொடக்குண்டார். அவருக்கு இங்கே என்ன சார்பு என்று சொன்னார். அர்ச்சகர், நம்பியின் குற்றங்களை மனத்திற் கொள்ளாதே. உன் கோபதத்தைத் தணிக்கவே யான் இங்கே வந்தேன்; மறாதே என்று வேண்டினர். பரவையார், இது குறித்து நீர் ஏன் வந்தீர்? இஃது உமது பெருமைக்குத் தகாது; போம் என்றார். பெருமான், சிரித்துத் தமது உண்மைக் கோலத்தைக் காட்டாது நம்பியாரூரரிடம் திரும்பினார். e«ãah%u®, ‘átbgUkhid¤ öjhf mD¥ãndnd!’ v‹gh®; ‘átbgUkh‹ v‹ brŒjhnuh! என்பார்; பரவையின் புலவியைத் தீர்த்தே சிவபெருமான் மீள்வார் என்பார்; இவ்வாறு பலபல பேசிப், பலபல நினைந்து, சிவபெருமான் வரவை எதிர் நோக்குவார்; அவரைக் காணாது திரும்புவார்; வருந்துவார். அச் சமயத்தில், சிவபெருமான் வந்தார். நம்பியாரூரருக்கு மகிழ்ச்சி பொங் கிற்று. அவர், அன்று அடியேனைத் தடுத்தாட்கொண்டீர்; இன்று பரவையின் புலவி தீர்த்து வந்தீர் என்று சொன்னார். சிவபெருமான், வன்தொண்டரைப் பார்த்துத், தோழனே! நீ விரும்பியவாறு பரவை வீட்டுக்குச் சென்றோம்; உன் விருப்பத்தைத் தெரிவித்தோம். அவள் நம்மையும் நிந்தித்து மறுப்புரை கூறினாள் என்றார். நம்பியாரூரர் நடுக்குற்று, உமது ஆணையைப் பரவையோ மறுக்க வல்லாள்! நஞ்சை உண்டீர் - தேவர்களை ஆண்டீர்; முப்புரம் எரித்தீர் - மூவர்க்கு அருள்செய்தீர்; காலனைக் காய்ந்தீர் - மார்க் கண்டர்க்குக் கருணை புரிந்தீர். அவர்கள் அன்பு எனக்கு ஏது? நீர் திரும்பிவந்தீர். என்னடிமை வேண்டாத நீர் அன்று ஏன் என்னைத் தடுத்தாட் கொண்டீர்? என் துன்பந் தீர்க்க மீண்டும் நீர் பரவையிடஞ் செல்லுதல் வேண்டும்; இல்லையேல் என் உயிர்போய் விடும் என்று முறையிட்டு விழுந்தார். உடனே சிவபெருமான், நாம் பரவைபால் செல்வோம்; அவளை நீ அடையுமாறு இப்பொழுதே செய்வோம்; வருந்தாதே என்று தேறுதல் கூறினார். வன்தொண்டர், சிவபெருமானைப் பணிந்து, அடியேன் பயங்கெடுத்து இவ்வாறு பணிகொள்வதன்றோ கருணை என்று போற்றினார். சிவபெருமான் மீண்டும் பரவை வீடுநோக்கிப் புறப்பட்டார். முன்னர் அவருடன் சூழ்ந்து செல்லாத, தேவரும் மற்றவரும், இப்பொழுது அவரைச் சூழ்ந்து சென்றனர். மறையவர் திரும்பிய பின்னர், பரவையார் நெஞ்சில் வந்தவர் சிவபெருமான் என்று விளங்கத்தக்க சில அறிகுறிகளும் அதிசயங்களும் தோன்றின. பரவையார் நெஞ்சம் சுழன்றது. அவர், யான் பாவி; எம்பிரான்முன் எதிர் மொழி கூறினேன். தோழர் பொருட்டுப் பெருமான் குருக்கள் கோலந் தாங்கிவந்தார். மறுப்புரை வழங்கிவிட்டேன் என்று வருந்திவருந்தி வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான் எழுந்தருளினார். தேவர், முனிவர், யோகர், சித்தர் முதலிய எல்லாருஞ் சூழ்ந்திருந்தனர். பரவையார் மாளிகை, திருக்கயிலை யாயிற்று. பரவையார் சிவபெருமானைக் கண்டார்; நடுக்குற்றார்; வணங்கினார்; சிவபெருமான், பரவையே! நம்மை நம்பி ஏவினான். மீண்டும் உன்பால் வந்தோம்; முன்போல் மறாதே; ஆரூரன் வர இசைதல் வேண்டும் என்றார். பரவையார், முன் எழுந்தருளிவந்த மறையவர் நீவிரோ! என் தவமே தவம்! அன்பர் பொருட்டு அங்கும் இங்கும் உழன்றீர். ah‹ ïirahJ v‹ brŒnt‹! என்றார். அப்பொழுது சிவபெருமான், பரவையாரைப் பார்த்து, பரவையே! நீ உன் தன்மைக்கேற்ப நன்மையே மொழிந்தாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். பரவையார் வணங்கி நின்றார். சிவபெருமான் உடனே புறப்பட்டார்; கங்கை ததும்ப விரைந்து நடந்தார். e«ãah%u®, ‘v‹d gâš tUnkh?’ v‹W V§»¡bfh© oUªjh®; átbgUkh‹ tUjiy¡ f©lh®; ‘v‹d gâš? என்று கேட்டார். சிவபெருமான், பரவையின் கோபத்தைத் தணித்து விட்டோம்; நீ அவளிடம் செல்லலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறியருளினார். m¢brhš nf£lJ«, e«ãah%u® fÊngUtif í‰wh®; “bgUkhnd!போகமும் நீர் - மோட்சமும் நீர் என்பது விளங்கலாயிற்று. இனி எனக்குத் துன்பம் ஏது? என்று சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான் தோழருக்கு அருள் புரிந்து மறைந்தருளினார். வன்தொண்டர், பரவையார் வீடுநோக்கிச் சென்றார். உறங்கிக் கொண்டிருந்த அடியவர் எல்லாரும் விழித்து எழுந்து அவருடன் கலந்துகொண்டனர். பரவையார் மாளிகையை அலங்கரித்தார்; வாயிலிலே நின்று, ஆரூரர் வரவை எதிர்பார்த்து நின்றார். பரவையார் நம்பியாரூரரைக் கண்டார்; கண்டதும் அவரைத் தொழுதார்; ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். அப்பொழுது நம்பியார், நங்கையாரின் கையைப்பற்றி உள்ளே புகுந்தார். முன்போல் இருவரும் இன்பம் நுகர்ந்து ஆண்டவனை வழிபட்டு வந்தனர். கலிக்காமர் அன்பு நம்பியாரூரர், சிவபெருமானைத் தூதுகொண்ட செய்தி ஏயர்கோன் கலிக்காமருக்கு எட்டிற்று. அவர் நம்பியாரூரரை வெறுக்கலானார். அது காரணமாக நாயனார்க்கு இடர் நேர்ந்தது. நம்பியாரூரர், கலிக்காமருக்கு உற்ற இடரைச் சிவபிரான் திருவருளால் போக்கினார். இருவரும் நண்பராகித் திருப்புன்கூர் சென்றனர். அந்தணாளன் உன் அடைக்கலம் என்னும் திருப் பதிகத்தை நாவலர் பெருமான் அருளிச்செய்தார். இருவரும் திருவாரூருக்கேகினர். கலிக்காமர், சிலநாள் திருவாரூரில் வன் தொண்டரோடு தங்கி இருந்தார். பின்னே அவர், வன்தொண்ட ரிடம் விடைபெற்றுத் தம் பதி நோக்கினர். நம்பியாரூரர் திருநாகைக் காரோணத்துக்குப் போய்த் தமிழ் பாடினர்; சிவபெருமான் திருவரு ளால் பொன், மணி, அணி, உடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியன பெற்றுத் திருவாரூருக்குத் திரும்பினர். சேரமான் தோழமை கழறிற்றறிவார் என்னும் சேரமான்பெருமாள் சிவபிரான் திருவருளால் செங்கோல் தாங்கி, மலைநாட்டைப் புரந்து வந்தார். அவர், வன்தொண்டர் பெருமையை இறைவனால் அறியப்பெற்றார். வன்தொண்டரைக் காணுதல் வேண்டும் என்னும் வேட்கை அவருள்ளத்தில் கிளர்ந்து எழுந்தது. அவ்வேட்கையைத் தணித்துக் கொள்ள அவர் மலை நாட்டினின்றும் புறப்பட்டார்; தில்லை, சீர்காழி முதலிய திருப்பதிகளைத் தொழுதுகொண்டே திருவாரூரை அணுகினார். சேரமான் வருகையைக் கேள்வியுற்ற வன்தொண்டர், அவரை எதிர்கொண்டார்; ஒருவரை ஒருவர் வணங்கி இன்புற்றனர். இருவரும் ஓருயிராயினர். அதனால் நம்பியாரூரருக்குச் சேரமான் தோழர் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. தம்பிரான் தோழரும், சேரமானும் திருவாரூரில் ஆண்டவனை வழிபட்டுக்கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுக்கேகல் அச்சமயத்தில் பாண்டியநாடு போந்து, மதுரை முதலிய திருப்பதிகளை வணங்க வன்தொண்டர் விரும்பினர். அவருடன் செல்லச் சேரமான் பெருமாளும் விழைந்தனர். இருவரும் திரு வாரூரை விடுத்தனர்; கீழ்வேளூரையும், திருநாகைக்காரோணத்தையும் வணங்கித் திருமறைக்காட்டைச் சேர்ந்தனர். திருநாவுக்கரசு சுவாமிகளாலும், திருஞானசம்பந்த சுவாமிகளாலும் முறையே திறக்கவும் மூடவும் பெற்ற திருவாயிலை இரண்டு பெரியாருங் கண்டு இன்புற்றனர். நாவலர் பெருமான் தமிழ் பாடினர். இருவரும் அங்கே சிலநாள் தங்கி மறைக்காட்டு மணியை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து வன்தொண்டப் பெருமான், சேரமான் பெருமாளுடன் அகத்தியான்பள்ளிக்குப் போய்க் கோடிக்குழகரைத் தொழுது பதிகம் பாடிப் பாண்டிநாடு புகுந்தார். மூவேந்தர் வணக்கம் இருவரும் திருப்புத்தூருக்குச் சென்று ஆண்டவனை வாழ்த்தி மதுரை சேர்ந்தனர். பாண்டியனும், அவன் மகளை மணந்து அங்கிருந்த சோழனும், ஆரூரரையும் சேரமானையும் அன்புடன் எதிர் கொண்டனர். எல்லோருஞ்சேர்ந்து திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்க நாதரை வணங்கினர். தம்பிரான் தோழர் ஆண்டவனுக்குத் தமிழ்மாலை சாத்தினர். நாவலர் பெருமான், மூவேந்தருடன் மதுரையில் தங்கி அளவளாவி இறைவனை வழிபட்டு வந்தனர். நம்பியாரூரர் திருப்பூவணந் தொழப் புறப்பட்டார். மூவேந்தரும் உடன் சென்றனர். அடியவர்கள் திருக்கோயிலைக் காட்ட, வன்தொண்டர், பூவணம் ஈதோ என்று பாடி, இறைவனை வழிபட்டு மதுரைக்கு வந்தார். பின்னர் அவர், அரசர்களுடன் திருவாப்பனூர், திருவேடகம் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று திரும்பினார். வன்தொண்டப் பெருமானும், மூன்று மன்னரும் திருப்பரங் குன்றத்துக்குப் போயினர். சிவபெருமானுக்கு ஆட்செய்தலின் அருமைப் பாட்டை வன்தொண்டர் நினைந்து, கோத்திட்டையுங் கோவலும் என்றெடுத்து, உமக்கு ஆட்செய அஞ்சுதுமே என்று பாடினர். அத் திருப்பதிகத்தைக் கேட்ட வேந்தர் மூவரும், வன்தொண்டரை வணங்கிப்போற்றினர். வன்தொண்டர், சேரமான் பெருமாளுடன் பிற தலங்களை வணங்க எழுந்தருளினர். பாண்டி யனும் சோழனும், இரு பெரியார்க்கும் வேண்டுவன செய்யச் சிலரை விடுத்து, விடைபெற்று மதுரை நோக்கினர். தம்பிரான் தோழர், சேரமான் பெருமாளுடன் , திருக் குற்றாலம், திருக்குறும்பலா, திருநெல்வேலி முதலிய திருப்பதி களைத் தொழுது, இராமேச்சுரத்தை அடைந்தனர்; அங்கிருந்து கொண்டே ஈழநாட்டிலுள்ள மாதோட்டத் திருக்கேதீச்சுரத்தை வணங்கித் தமிழ் பாடினர்; பிறகு இராமேச்சுரத்தை விடுத்துத் திருச்சுழியலைச் சேர்ந்தனர்; சிவபெருமானை வழிபட்டு வந்தனர். காளைக் காட்சி ஒருநாள் சிவபெருமான், காளையாய், திருக்கையிலே பொற்செண்டு திகழ, திருமுடியில் சுழியம் பொலிய, வன்தொண்டர் கனவிலே தோன்றி, நாம் இருப்பது கானப்பேர் என்று அருளி மறைந்தார். வன்தொண்டர் விழித்தெழுந்தார்; தாம் கனவில் கண்டதைச் சேரருக்குத் தெரிவித்தார்; உடனே புறப்பட்டார்; கண்டு தொழப்பெறுவ தென்றுகொலோ அடியேன் கார்வயல்சூழ் கானப் பேருறை காளையையே என்று பாடிக்கொண்டே திருக்கானப் பேரூருக்குப் போனார்; அங்கே ஆண்டவனை வழிபட்டுச் சிலநாள் தங்கினார்; அங்கிருந்து திருப்புனவாயிலுக்குச் சென்றார்; பதிகம் பாடினார்; பாண்டியநாடு விடுத்துச் சோழ நாட்டையடைந்து பாதாளீச்சரத்தை வணங்கித் திருவாரூர் சேர்ந்தார். காவிரி வழிவிடல் இருவரும் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டுக் கொண் டிருந்தனர். சேரமான்பெருமாள் நாயனர், தமது நாட்டுக்கு எழுந்தருமாறு வன்தொண்டரைப் பன்முறை வேண்டினர். வன் தொண்டர் அவ் வேண்டுதலுக்கு இணங்கினர். வன்தொண்டர் சேரருடன் திருவாரூரை விடுத்துக் காவிரியின் தென்கரையே நடந்தனர்; திருக்கண்டியூரைக் கண்டனர்; ஆண்டவனை வணங் கினர். அப்பொழுது வடகரையிலுள்ள திருவையாறு புலப்பட்டது. சேரமான் அத்திருப்பதியைக் கண்டு தொழ விரும்பினார். அந்நாளில் காவிரி, பெருக்கெடுத்து ஓடிற்று. அப்பெருக்கிடை ஓடங்களுஞ் செல்லா. அக்காட்சி கண்ட நம்பியாரூரர் ஆண்டவனை நினைந்து, எதிர்த்து நீந்த மாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே - விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி - அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ என்று பாடினார். ஆண்டவன் அருளால் காவிரி பிரிந்து வழி விட்டது. அடியார்கள் ஆரவாரஞ் செய்தார்கள். சேரபெருமான் வன்தொண்டரை வணங்கி வாழ்த்தினார். வன்தொண்டரும், சேரமான்பெருமாளை வணங்கி, இஃது ஆண்டவன் உமக்கு அருளியதன்றோ என்று அருளினர். பின்னே எல்லாருங் காவிரி யைக் கடந்து திருவையாற்றுக்குப்போய் இறைவனை வழிபட்டுத் திரும்பினர். காவிரி பெருக்கெடுத்து ஓடலாயிற்று. இருவரும் திருவருளை வியந்து கொங்குநாடு போந்தனர்; அங்கிருந்து மலைநாடு சேர்ந்தனர். அடியவர்கள், இருவரையும் எதிர்கொண்டு வாழ்த்தினார்கள். சேரமான்பெருமாள், வன்தொண்டப்பெருமானைத் திரு வஞ்சைக்களத்துக்கு அழைத்துச் சென்றார். நாவலர் பெருமான், முடிப்பது கங்கை என்னுந் தமிழ்ப்பதிகம் ஓதினார். சேரமான் வன்தொண்டரை வழிபடல் சேரமான் பெருமாள், தம்பிரான் தோழரை யானைமீதேற்றி னார்; தாம் பின்னே அமர்ந்து வெண்சாமரம் வீசினார். யானை, திருமாளிகை வாயிலை அடைந்தது. சேரமான் பெருமாள், தாம் யானையினின்றும் இறங்கி, ஆரூரரையும் இறக்கினார்; இறக்கித் தந்தோழரை அரியாசனத்தில் அமர்த்தினார். பெண்மணிகள் கரகநீர் வார்த்தார்கள். சேரமான் பெருமாள், வன்தொண்டர் திருவடிகளை விளக்கப் புகுந்தார். இஃது என்ன! தகாத செயல் என்று வன்தொண்டர், தமது திருவடிகளை வாங்கிக்கொண்டனர். கழறிற்றறிவார், தம்பிரான் தோழரைப் பணிந்து, நாங்கள் அன்பால் செய்யும் வழிபாடுகளை மறாது ஏற்றருளல் வேண்டும் என்று முறையிட்டார். ஆரூரர், அரசர் பெருமான் அன்புக்கு எளியராயினர். இருவரும் அஞ்சைக்களத்தப்பனை வழிபட்டு இன்புற்று வந்தனர். சில நாட்கள் கழிந்தன. வன்தொண்டருக்குத் திருவாரூர் நினைவு தோன்றிற்று. அவர், ஆரூரானை மறக்கலுமாமே என்று பாடித் திருவாரூர்க்குப் புறப்பட முயன்றனர். mJ f©l nrukh‹ bgUkhŸ, ‘mofis¥ ãǪJ ah‹ v§‡d« thœnt‹? என்று வன்தொண்டரை வணங்கினார். வன்தொண்டர், இன்மொழி யால் தேறுதல் கூறி, மலை நாட்டில் ஆட்சி புரிந்திருக்குமாறு மன்னருக்குக் கூறினார். மன்னர் பெருமான், நம்பியாரூரரைப் பார்த்து, அடிகள் திருவடியே எனக்குரிய ஆட்சி என்று வணங்கி னார். வன்தொண்டர், திருவாரூர்ப் பெருமானை மறந்திரேன் என்று சொல்லி, மன்னரை வணங்கினர். சேரமான் பெருமாள், வன்தொண்டரின் மனோ நிலையை உணர்ந்து, அமைச்சர்களைப் பார்த்து, அரண்மனையிலுள்ள பண்டாரம் எல்லாவற்றையும் பொதி செய்யுங்கள்; அவற்றைச் சுமந்து, ஆரூரர் பரிசனங்கள் முன்னே போமாறு ஆட்களை ஏவுங்கள் என்றார். உடனே, அமைச்சர்கள் அரசர் கட்டளையைச் செய்து முடித்தார்கள். வன்தொண்டர், சேரர் பெருமானைத் தழுவி விடை பெற்றனர். பூதகணங்கள் பொருளைக் கவரல் நம்பியாரூரர் மலைநாட்டை விடுத்தார்; கொங்கு நாட்டிற் புகுந்தார்; திருமுருகன் பூண்டி வழியே வரலானார். சிவபெருமான், ஆரூரருக்குப் பிறர் பொன் கொடுத்தலாகாதென்றோ, சேரமான் பெருமாள் அளித்த பொருளைத் தாம் பறித்து மீண்டுந் தாமே கொடுத்தருளல் வேண்டுமென்றோ திருவுளங்கொண்டார்; கொண்டு, பூதகணங்களைப் பார்த்தார்; நீங்கள் வேடர்களாகி, வன்தொண்டன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பறித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். பூதகணங்கள், இறைவன் ஆணைப்படி வேடுவர் களாகி, நம்பியாரூரர் பரிசனங்களுக்கு முன் சென்ற சுமையாட்களை மறித்தன; வில்லைக் காட்டி மருட்டின; பொருள்களைப் பறித்தன; நம்பியாரூரரிடம் ஓடிவந்தார்கள். அக்காட்சி கண்ட வன்தொண்டர், திருமுருகன் பூண்டித் திருக்கோயிலுள் நுழைந்து, கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் என்றெடுத்து, எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரான் நீரே என்று பாடியருளினார். உடனே, இறைவனருளால் பூதகணங்கள் தாங்கள் பறித்த பொருள்கள் எல்லாவற்றையும திருவாயிலின் முன்னே கொண்டு வந்து வைத்தன. நம்பியாரூரர் அவற்றைப் பெற்றுத் திருவாரூரைச் சேர்ந்தனர். வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வருநாளில், அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. நம்பியாரூரர் திருவாரூரை விடுத்துப் பல திருப்பதிகளைத் தொழுதுகொண்டே கொங்கு நாட்டைச் சேந்தனர்; திருப்புக்கொளியூரை அடைந்தனர்; மாடவீதி வழியே நடந்தனர். முதலைவாய்ப் பிள்ளை அப்பொழுது அங்கே, ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மற் றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர்பெருமான், அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், அடிகளே! இரண்டு சிறுவர்கள் - ஐந்து வயதுடையவர்கள் - மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடை பெறுகிறது. இம்மங்கல ஒலி, இறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்றுவிட்டனர். மகனை இழந்த தாய் தந்தையர், நின்றவர் வன் தொண்டர் என்று உணர்ந்து ஓடிவந்தனர்; வன்தொண்டரை வணங்கினர். t‹bjh©l® mt®fis¥ gh®¤J, ‘kfid ïHªjt®fŸ Ú§fsh? என்று வினவினார். அவர்கள், அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாட்களாக உண்டு. mJ âUtUshš ï‹W To‰W! என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சிகண்ட ஆரூரர், இவர்கள் புத்திர சோகத்தையும் மறந்து எனது வரவைக் குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு! ïiwtdUshš ah‹ ït®fŸ òjštid Kjiy thÆÅ‹W« miH¤J¡ bfhL¤nj mÉehá m¥gid¤ bjhGnt‹’ v‹W cs§bfh©lh®; bfh©L g¡f¤nj Ëwt®fis¥ gh®¤J, ‘kL v§nf ïU¡»wJ? என்று கேட்டார்; அவர்கள் வாயிலாக மடுவுள்ள இடத்தைத் தெரிந்து அங்கே போனார்; திருப்பதிகம் பாடினார்; கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே என்று வேண்டி னார். உடனே காலன், பிள்ளை பூமியில் வளர்ந்தால் எவ்வயது உற்றிருப்பானோ, அவ்வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலை, பிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். பிள்ளையுடன் தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கருஞ் செய்கையைக் கண்ட வானும் மண்ணும் வியப் பெய்தின. வன்தொண்டர், புதல்வனை அழைத்துக் கொண்டு அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார்; பின்னே, அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார்; அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர், நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கினார். மகோதையில் தங்கல் அவிநாசியில் ஆரூரர் நிகழ்த்திய அற்புதச் செய்தி எங்கும் பரவிற்று; மலைநாட்டிலும் பரவிற்று. அங்குள்ள அன்பர்கள் சேரர்பெருமானை அணைந்து, அவிநாசியில் ஆரூரர் முதலை வாயினின்றும் பிள்ளையை வருவித்துத் தந்து, நமது நாடு நோக்கி வருகிறார் என்று தெரிவித்தார்கள். அச்செய்தி சொன்ன அன்பர் களுக்குச் சேரர்பெருமான், பலவகைப் பொருள் கொடுத்தார்; இன்பக் கடலுள் தோய்ந்தார்; யானை ஏறிப் புறப்பட்டார். அமைச்சர் முதலிய அனைவரும் புடைசூழ்ந்து சென்றனர். சேரர், பலப்பல சிறப்புடன் வன்தொண்டரை எதிர்கொண்டனர். ஒருவரை ஒருவர் தழுவினர்; வணங்கினர். இரு சார்பினருஞ் சிவ நாம முழக்கஞ் செய்தனர். அன்பு அலை எங்கணும் வீசிற்று. சேரர்பெருமான், தம்பிரான் தோழரை யானைமேல் ஏற்றினார்; தாமே வெண்கொற்றக்குடை பிடித்தார். யானை ஊர்வலம்வந்து திருமாளிகையை அடைந்தது. சேரர்பெருமான், யானையினின்றும் இறங்கி வன்தொண்டப்பெருமானை அழைத்துச் சென்று அரியாசனத்தில் அமர்த்தினார்; வணங்கினார்; அன்பர்கள் மகிழப் பொன்னையும் மணியையும் வாரி வாரி மழைபோலப் பொழிந்தார். வன்தொண்டப் பெருமானும் சேரர்பெருமானும் பல திருப்பதி களை வணங்கி, ஆண்டவனை வழிபட்டு, மகோதையில் தங்கி இருந்தனர். வன்தொண்டர் யானை ஏறிச்செல்லல் ஒருநாள் சேரமான்பெருமாள் நாயனார் தலை முழுகிக் கொண்டிருந்த வேளையில், நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் என்னுந் திருக்கோயிலுக்குச் சென்றார்; ஆண்டவன் திருமுன்னே நின்றார்; குழைந்து குழைந்து உருகினார்; பிறவிப் பெருங்கடலி னின்றும் கரை ஏற்றுமாறு ஆண்டவனை வேண்டினார்; தலைக்குத் தலை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். சிவபெருமான் கட்டளைப்படி வன்தொண்டரைத் திருக்கயிலாயத்துக்கு அழைத்துச் செல்லத் திருமால் பிரமன் முதலிய தேவர்கள், வெள்ளை யானையைக் கொண்டுவந்தார்கள். தேவர்கள், வன்தொண்டரைக் கண்டு, சிவாஞ்ஞையைத் தெரிவித்தார்கள். வன்தொண்டர், சிவபெருமானை நினைந்து தம்மை மறந்துநின்றார். தேவர்கள் வன்தொண்டரை யானை மீது ஏற்றினார்கள். வன்தொண்டர், தந்தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து கொண்டே ஏகினார். சேரமான் குதிரை ஏறிச் செல்லல் கழறிற்றறிவார், தம்பிரான்தோழர் நிலையை உணர்ந்தார்; பக்கத்தில் இருந்த ஒரு குதிரைமீது ஏறினார்; திருவஞ்சைக் களத்துக்குச் சென்றார். நம்பியாரூரர் வெள்ளை யானைமீது வான்வழிச் செல்வதைப் பார்த்தார்; குதிரையின் செவியிலே சிவமந்திரத்தை ஓதினார். குதிரை, மேலே எழும்பி, வெள்ளை யானையைக் கிட்டி, அதனை வலஞ் செய்து, முன்னே சென்றது. சேரமான் பெருமாள் குதிரைமீது வான்வழிச் செல்வதை அவருடைய படைவீரர்கள் கண்டார்கள்; நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்தார்கள். அதற்குமேல் குதிரை புலப்படவில்லை. மன்னரைப் பிரிந்துநிற்க அவர்கள் மனம் இடந்தரவில்லை. அவர்கள், தங்களை வாளால் சிதைத்துக் கொண்டார்கள். அவர்கள் நுண்ணுடல்பெற்று மன்னர்க்கு முன்னே தொழுது சென்றார்கள். இருவருங் கயிலை சேரல் வன்தொண்டர், தானெனை முன்படைத்தான் என்னுந் திருப்பதிகத்தை எடுத்து, மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் என்றும், இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம், வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள் புரிந்து என்றும் பாடிக்கொண்டே திருக்கயிலையை அடைந்தனர். சேரர்பெருமான் குதிரையைவிட் டிறங்கினர். நம்பியாரூரரை யானையினின்றும் இறங்கினர். இருவரும் பலப்பல படிகளைக் கடந்து சென்றனர். திரு அணுக்கன் திருவாயிலிலே சேரர்பெரு மானுக்குத் தடை நேர்ந்தது. வன்தொண்டர், உள்ளே சென்றனர்; சிவபெருமானைக் கண்டு வணங்கினர். átbgUkh‹, ‘M%und, tªjidnah! என்றார். வன்தொண்டர், அடியேனுடைய பிழையைப் பொறுத்தருளினீர்; தடுத்தாட் கொண்டீர்; கயிலைப் பேற்றையும் அருளினீர். பெருமான் கருணையே கருணை! என்று போற்றினர். பின்னர், வன்தொண்டர், திருவணுக்கன் திருவாயிலிலே சேரர்பெருமான் தடைப்பட்டு நின்றதைச் சிவபிரானிடம் முறையிட் டனர். சிவபெருமான், சேரமான் பெருமாளை அழைத்துவருமாறு நந்தியெம் பெருமானுக்குக் கட்டளையிட்டார். நந்தியெம்பெருமான் அக்கட்டளையை உடனே நிறைவேற்றினார். திருவுலா அரங்கேற்றம் சேரமான் பெருமாள் போந்து சிவபெருமானைக் கண்டார்; தொழுதார். இன்ப வெள்ளத்துள் மூழ்கி நின்றார். அப்பொழுது சிவபெருமான் புன்முறுவல்புரிந்து, சேரனே! eh« c‹id miH¡fÉšiy; Ú tªjJ v‹id? என்று கேட்டார். சேரர் பெருமான் சிவபெருமானைத் தொழுது, வெள்ளையானைக்கு முன்னே ஆரூரரை வணங்கிக்கொண்டே வந்தேன். பெருமான் கருணை வெள்ளம் இங்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. திருமுன் ஒரு விண்ணப்பஞ் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். átbgUkh‹, ‘m~bj‹d? என்று கேட்டார். பெருமான் மீது ஞான உலா ஒன்று பாடியுள்ளேன். அதைக் கேட்டருளல் வேண்டும் என்று சேரர் பணிந்தார். சிவபெருமான் அன்பர் வேண்டுதலுக்கு இசைந்தார். சேரமான்பெருமாள் திருவுலா வைச் சொற்றனர். சிவபெருமான் திருவருள் செய்து, ஆரூரனாகிய ஆலாலசுந்தரனும், நீயும் நம் கணங்களுக்குத் தலைமைபூண்டு இருங்கள் என்று திருவாய்மலந்தருளினார். இருவரும் சிவபெருமானை வணங்கினர். வன்தொண்டர், பழையபடி ஆலாலசுந்தரராகித் தந்திருத் தொண்டை நிகழ்த்தி வரலானார். சேரமான் பெருமாள் கணத் தலைவராய்த் தொண்டாற்றி வரலானார். பரவையாரும் சங்கிலியாரும் பழம்பேறெய்தல் உமையம்மையார் திருவருளால் பரவையார் கமலினியா ரானார்; சங்கிலியார் அநிந்திதையாரானார். இருவரும் திருக் கயிலையில் தமது பழமைத் திருத்தொண்டில் ஈடுபட்டனர். வன்தொண்டர், தாம் வழியில் அருளிய திருப்பதிகத்தை வருணனிடம் கொடுத்தருளினர். அவன் அதை ஏற்றுத் திருவஞ்சைக் களத்திலே கொண்டுவந்து வெளியிட்டனன். சேரர் பெருமான் அருளிய திருவுலாவைத் திருக்கயிலாயத்திலே கேட்ட மாசாத்தா வானவர், அதைத் திருப்பிடவூரிலே வெளிப்படுத்தினர். தில்லைவாழந்தணர் திருத்தொண்டத் தொகை தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. திருத்தொண்டர் திருவந்தாதி செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியில் செழுமறையோர் ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த துப்பர்க் குரிமை தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. திருத்தொண்டர் புராணசாரம் நல்லவா னவர்போற்றுந் தில்லை மன்றுள் நாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொன் தொல்லைவான் பணிஎடுத்தற் குரியார் வீடுந் துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத் தில்லைவாழ் அந்தணரென் றெடுத்து நாதன் செப்பும்அரு ளுடையார்முத் தீயார் பத்திக் கெல்லைகாண் பரியாரொப் புலகில் தாமே எய்ந்துளார் எமையாள வாய்ந்து ளாரே. தில்லைவாழ் அந்தணர்கள், நடராஜப் பெருமான் திருவடித் தொண்டர்கள். அத்திருத்தொண்டே. அவ்வந்தணர்களுக்குரிய பெருந்தவம். முறைப்படி எரிமூன்றோம்பி உலகுக்கு நலஞ்செய்வதில் அவர்கள்தங் கண்ணுங் கருத்தும் படிந்து கிடக்கும். அறத்தைப் பொருளாக்கொண்டு வேதங்களையும் வேதாங்கங்களையும் பயில் வதில் அவர்கள் பொழுது போகும். அவர்கள் மரபு மாசில்லாதது. அவர்கள் ஒழுக்கம் மாறில்லாதது. அவர்களது அறுதொழில் ஆட்சி யால் அருங்கலி நீங்கும். திருநீறு அவர்களது செல்வம். ஞானம் முதலிய நான்குபாதங்களில் அவர்களது உழைப்புச் செல்லும். அவர்கள் மானமும், பொறையுந் தாங்கும் இல்லறம் பூண்டு, இப்பிறவியிலேயே இறைவனை வணங்கும் பேறு பெற்றமையால், இனிப் பெறும் பேறு ஒன்றுமில்லாதவர்கள். அவர்கள் பெருமையிற் சிறந்தவர்கள்; தங்களுக்குத் தாங்களே ஒப்பானவர்கள்; தியாகேசப் பெருமானே, சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துச் சிறப்பித்த முதன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் பெருமையை என்னென்று சொல்வது? திருநீலகண்டர் திருத்தொண்டர் திருவந்தார்தி சொல்லச் சிவன்திரு ஆணைதன் தூமொழி தோள்நசையை ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்னுமை கோனருளால் வில்லைப் புரைநுத லாளொ டிளமைபெற் றின்பமிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாஞ் செய்தவனே. திருத்தொண்டர் புராணசாரம் தில்லைநகர் வேட்கோவர் தூர்த்த ராகித் தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று சொல்லுமனை யாள்தனையே அன்றி மற்றுந் துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங் கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்கள் எடுத்திலமென் றியம்புமென இழிந்து பொய்கை மெல்லியலா ளுடன்மூழ்கி இளமை எய்தி விளங்குபுலீச் சரத்தரனை மேவி னாரே. தில்லை என்னும் பழம் பெரும்பதியிலே குயவர் குலத்திலே தோன்றியவர் ஒருவர் இருந்தார். அவர் அறவழியிலே நின்றவர்; சிவபக்தி சிவனடியார் பத்திகளிற் சிறந்தவர். அப்பெரியார் மட்கலம் வனையுந் தொழில் செய்து வாழ்வு நடாத்திவந்தார். அடியவர் களுக்குத் திருவோடு கொடுப்பது அவர்தந் திருத்தொண்டு. சிவபெரு மான்றன் திருநீலகண்டத்தினிடத்துப் பேரன்புக்கொண்டு, திருநீல கண்டம் - திரு நீலகண்டம் என்று அவர் சொல்லி வந்தமையான், அவருக்குத் திருநீலகண்ட நாயனார் என்னுந் திருப்பெயர் வழங்கலாயிற்று. ஊடல் நாயனார் இன்பத்துறையில் எளியராய் அருந்ததியனைய ஒரு மங்கை நல்லாரைத் திருமணஞ் செய்து இல்லறத்தில் வாழ்ந்து வந்தார். வருநாளில் ஒருநாள் அவர் ஒரு பரத்தைபா லணைந்து வீடுசேர்ந்தார். அதையுணர்ந்த இல்லக்கிழத்தியார், ஊடல்கொண்டு, வீட்டுப் பணிகளெல்லாவற்றையுங் குறைவறச் செய்து, கூடலுக்கு மட்டும் இசையாதிருந்தார். ஊடலைத் தீர்க்கவேண்டி, நாயனார் ஒருபோது, இரப்புரைகள் பலகூறி, மனைவியாரைத் தழுவ முயன்றார். அவ்வேளையில் அம்மையார் வெகுண்டு, நீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்றார். அடியவரோ திரு நீலகண்டத்தினிடத்தில் பெரும் பற்றுடையவர். அப்பற்று மாறு படா வண்ணம் நாயனார், தம் மனைவியாரைத் தீண்டாதகன்று, அவரை அயலாரைப்போல் பார்த்து, இவள் எம்மை எனப் பன்மையாகக் கூறினமையால் இவளையும், இவளினமாகிய மற்ற மாதர்களையும் யான் மனத்திலுந் தீண்டேன் என்று சூளுரை பகர்ந்தார். இக்கொள்கையுடன் இருவரும் வீட்டைவிட்டுத் துறவாது, புணர்ச்சியின்மையை அயலறியாதவாறு, மற்ற இல்லப் பணிகளை இயற்றி வாழ்ந்து வந்தனர். இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. இளமைச்செவ்வி மறைந்து முதுமை எய்தலாயிற்று. எய்தியும் சிவபத்தி சிவனடியார் பத்திமட்டும் அவரிடந் தளர்ச்சியுறவில்லை. சிவயோகியார் ஓடளித்தல் திருநீலகண்ட நாயானாரது திருத்தொண்டின் பெருமையை உலகுக்குணர்த்தவேண்டி, நடராஜப் பெருமான், ஒரு சிவயோகிய ராகிக் குயவர் பெருமான் வீட்டுக்கு எழுந்தருளினர். ehadh® mtiu Kiw¥go tÊg£L, ‘mona‹ brŒ g ahJ? என்று கேட்டனர். சிவயோகியார், அன்பனே! இத் திருவோட்டைச் சேமித்து வைத்திருந்து யான் கேட்கும்போது கொடுப்பாயாக. இத்திருவோடு, தனக்குத்தானே ஒப்பானது; தன்னிடஞ் சேரும் எல்லாப் பொருளையுந் தூய்மை செய்யும் ஆற்றலுடையது; பொன்னினும் மணியினும் போற்றுந் தகையது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இத்திருவோட்டினை வாங்கிவை என்று அதை நீட்டினார். நாயனார் அதை அன்புடன் வாங்கி, இல்லத்தில் ஒரு பக்கத்தில் - காப்புடைய ஓரிடத்தில் - வைத்துத் திரும்பினார். சிவயோகியார் அவ்விடத்தினின்றும் புறப்பட்டார். நாயனார் அவருடன் சிறிது தூரஞ் சென்று விடைபெற்றனர். சிவயோகியாக வந்த நடராஜ வள்ளல் பொற்சபைக் கெழுந்தருளினார். திருவோட்டின் மறைவு பன்னெடு நாட்கள் கடந்தன. ஒருநாள், திருவோடு வைக்கப் பெற்ற இடத்தினின்றும் மறைந்தொழியச் சிவபெருமான் திருவருள் செய்து, முன்போலச் சிவயோகியர் வடிவந் தாங்கி நாயனார் இல்லம் போந்தனர். நாயனார் அவரை வழிபட்டு நின்றார். சிவயோகியார் அவரைப் பார்த்து, முன்னே உன்னிடந் தந்த ஓட்டைக் கொண்டுவா என்றார். நாயனார், திருவோடு கொண்டுவரச் சென்றார்; திருவோட்டைக் கண்டாரில்லை; என் செய்வார் பாவம்! மனைவி யாரைக் கேட்கிறார்; மற்றவரைக் கேட்கிறார்; பிற இடங்களில் தேடுகிறார்; திகைக்கிறார்; யோகியார்க்கு என் சொல்வேன்; என் செய்கேன் என்று அலமருகிறார்; ஒன்றுந் தோன்றாது நிற்கிறார். ïªÃiyÆš átnah»ah®, ‘v‹d ï›tsî neu«? என்று கூவுகிறார். நாயனார் ஓடிவந்து, எந்தையே! திருவோட்டை வைத்த இடத்திலுந் தேடினேன்; வேறிடங்களிலுந் தேடினேன்; அதைக் கண்டிலேன்; அப் பழைய ஓட்டினுஞ் சிறந்த புதிய ஓடு ஒன்று வனைந்து தருகிறேன்; ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். பிழை பொறுத்தருளல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவயோகியார்க்குச் சினம் மூண்டெழுகிறது. அவர் நாயனாரை உற்று நோக்கி, என்ன சொன்னாய்? புது ஓடா கொடுக்கப்போகிறாய்? யான் கொடுத்த மண்ணோடே வேண்டும். மற்றது பொன்னோடே யாயினுமாக. அஃதெனக்கு வேண்டா. என் ஓட்டைக் கொண்டுவா என்றார். அடியவர் நடுக்குற்றுப் பெரியவரைப் பணிந்து, ஐயரே! தங்கள் திருவோடு கெட்டுவிட்டது. வேறொரு நல்ல ஓடு கொடுக்கிறே னென்றாலும் அதை ஏற்க மறுக்கிறீர். தங்கள் மறுப்புரை என் உணர்வு முழுவதையும் ஒழித்து விட்டது. v‹d brŒnt‹! என்று ஏக்குற்று நின்றார். புண்ணியப் பொருளாக நின்ற பெருமான், என்ன இது! உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிக் கொண்டாய்; பழி பாவங்கட்கு அஞ்சுகிறா யில்லை. யான் உன்னை விடேன்; விடேன்; என் ஓட்டை வாங்கிக்கொண்டே போவேன் என்றார். நாயனார், திருவோட்டை நான் வௌவினே னில்லை; என் உள்ளத்திலுங் களவின்மையை எங்ஙனம் விளக்க வல்லேன் என்று இரங்கிக் கூறினார். அங்ஙன மாயின், உன் மகனைப் பற்றிக் குளத்தில் மூழ்கித் திருவோடு கெட்டது என்று சொல்லிப் போ என்று சிவயோகியார் உரைத்தார். அதற்கு நாயனார், எனக்குப் புதல்வ னில்லையே என்றார். சிவயோகியார் உன் மனைவியைப் பற்றிச் சொல் என்று கூறினார். அதற்கும் நாயனார், எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சூள் உண்டு. அதனால் அவள் கையைப் பிடித்து மூழ்க இயலாமை குறித்து வருந்துகிறேன். யானே மூழ்கி உண்மை சொல்கிறேன் என்று மொழிந்தார். உடனே, சிவயோகியார் கனன்று, என் ஓட்டையுங் கொடாமல் - மனைவியைப் பற்றிக் குளத்தில் மூழ்கவும் இசையாமல்- சிந்தை வலித்திருக்கிறாய். தில்லைவா ழந்தணர் கூடியுள்ள பேரவையில் என் வழக்கை உரைக்கப் போகிறேன் என்று சொல்லி விரைந்து நடந்தார். நாயனாரும் அவரைத் தொடர்ந்து நடந்தார். சிவயோகியார், அந்தணர் அவைக்களம் புகுந்து நிகழ்ந்ததைக் கூறினார். அந்தணர் வேட்கோவரைப் பார்த்தனர். வேட்கோவரும் விளைந்ததை விளம்பினர். இருவர் கூற்றையுங் கேட்ட அந்தணர், வேட்கோவரை நோக்கி, இவர்தம் ஓட்டை நீரிழந்தீராயின், இவர் விரும்பும் வண்ணம் செய்வது நியாயம் என்று தீர்ப்பளித்தனர். தமக்கும் மனைவிக்குமுள்ள தீண்டாமையை நாயனார் வெளியிட மாட்டாராய், பொருந்திய வகையால் குளத்தில் மூழ்குகிறேன் என்று சொல்லிச் சிவயோகியாருடன் தமது இல்லத்திற் கேகி, மனைவியாரை அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சுரத்திற்கு முன்னுள்ள திருக்குளத்தையடைந்து, ஒரு மூங்கிற்றண்டின் ஒரு முனையை மனைவியார் பற்ற, மற்றொரு முனையைத் தாம் பற்றி மூழ்கலானார். அப்போது சிவயோகியார், உன் மனைவி கையைப் பற்றி மூழ்கு என்றார். திருநீலகண்ட நேயர் அப்படிச் செய்யக் கூடாமையை யாவரும் அறிய விளக்கி மூழ்கிக் கரையேறினர். ஏறிய இருவரிடமும் முதுமை ஒழிந்து இளமைச் செவ்வி மலர்ந்தது. அக்காட்சி கண்டவர், அங்கிருந்த சிவயோகியாரைக் கண்டார்க ளில்லை. ‘ï~bj‹d kha«! என்று அவர்கள் மருண்டு நின்றார்கள். இளமைப் பேறு அந்நேரத்தில் சிவயோகியராக வந்த சிவபெருமான் உமை யம்மையாருடன் விடைமீது காட்சி வழங்கினார். திருநீலகண்ட நாயனாரும், அவர் தம் மனைவியாரும் சிவபெருமானை வணங்கிப் போற்றி இன்பக் கடலில் மூழ்கினர். எல்லாம்வல்ல இறைவர், ஐம்புலனை வென்ற விழுமிய அன்பர்களே! இவ்விளமை என்றும் நீங்காமல் நம்பாலிருங்கள் என்று திருவருள் சுரந்து எழுந்தருளினர். நாயனாரும், நாயகியாரும் சிவலோகமடைந்து பெறுதற்கரிய இளமை பெற்றுப் பேரின்ப முற்றனர். இயற்பகையார் திருத்தொண்டர் திருவந்தாதி செய்தவர் வேண்டியதி யாதுங் கொடுப்பச் சிவன் தவனாய்க் கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந் தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. திருத்தொண்டர் புராண சாரம் எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்துள் இயல்வணினர் இயற்பகையார் இருவர் தேட அழலாய பிரான் தூர்த்த மறையோ னாகி ஆயிழையைத் தரவேண்டி அணைய ஐயன் கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக் காதலியைக் கொடுத்தமர்செய் கருத்தால் வந்த பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப் பிஞ்ஞகனார் அழைத்தருளப் பெற்று ளாரே. சோழ நாட்டிலே, காவிரிப்பூம் பட்டினத்திலே, வணிகர் குலத்திலே பிறந்த அடியவர் ஒருவர் இருந்தார். அவர் இயற்பகை என்ற பெயரை உடையவர். அவர் இல்லற ஞானியார். அவர்பால் அடியவராய் அணைவோர் எவராயினும், அவர் விரும்புவது எதுவாயினும், அவருக்கு அதை இல்லை என்னாது அளித்து வருவது அவர்தந் திருத் தொண்டாகும். சிவபெருமான் வருகையும் ஒரு பொருள் கேட்டலும் ஒருநாள் சிவபெருமான் இயற்பகை நாயனாரது திருத் தொண்டின் திறத்தை உலகுக்கு உணர்த்த விரும்பினார்; விரும்பி வேதியராய்த் திருநீற்று மேனியராய்க் காமுகராய்க் கோலங் கொண்டார்; நாயனாரிடம் போந்தார். நாயனார் அடியவரைக் கண்டதும் முறைப் படி வழிபட்டு நின்றார். நின்ற அன்பரை அந்தணர் நோக்கி, உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்விற்யுற்று ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அதை அளிப்ப நீர் இசைவீராயின், அதை இன்னதென்று இயம்புவோம் என்றார். அன்பிற் சிறந்த நாயனார், எப் பொருளாயினும் ஆக. அஃதென்பால் இருப்பின், அஃதடியவருடைமை. அதை அருளிச் செய்க என்று கூறினார். இல்லையே என்னும் அறங்காத்தல் மறையோர், முன்பின் சிந்தியாது, உம் மனைவியை நாடி இங்கு வந்தோம் என்றார். என்றதும், இயற்பகையார் அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன் என்று அதிக மகிழ்வெய்தினார்; உள்ளே விரைந்து நுழைந்தார்; இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தங் கருத்தையும் தெரிவித்தார். மனைவியார்க்குச் சிறிது மனக்கலக்கம் உண்டாயிற்று; உடனே தெளிவும் பிறந்தது. அம்மையார், நாயனார் கருத்துக்கு இணங்கி அவரை வணங்கினார். நாயனாருங் காதலியாரைத் தொழுதார். மாதரசியார் மறையவரிடஞ் சென்று, அவரைப் பணிந்து எழுந்து திகைத்து நின்றார். நாயனார் துணை போதல் m¡fh£á f©L k»œbtŒâa ïa‰gifah®, ntâaiu neh¡», ‘ï‹D« ah‹ v‹ brŒjš nt©L«? என்று கேட்டார். சுவாமியார், இத்தையலை யான் தனியே அழைத்துக்கொண்டு போதல் வேண்டும். உம்முடைய உறவினரையும் இவ்வூரையுங் கடந்துபோக நீர் எமக்குத் துணை வரல் வேண்டும் என்று வாய்மலர்ந்தார். நாயனார், இப்பணியை யானே செய்ய முற்பட் டிருத்தல் வேண்டும். இவர் அருளும் வரை தாழ்த்தது பிழை என்று வருந்தி, வேறோரிடஞ் சென்றார்; போர்க்கோலம் பூண்டு வந்தார்; வேதியரையும் அருந்ததியனையாரையும் தமக்கு முன்னேபோக விடுத்தார்; தாம் அவருக்குப் பின்னே தொடர்ந்து சென்றார். சுற்றத்தவருடன் பொருதல் அச்செய்தி ஊர் முழுவதும் பரவிற்று. பரவியதும், சுற்றத்தவர் ஒருங்கே திரண்டு, என்ன அநியாயம்! இத்தகைய அடாத செயலை இதுகாறும் எவரே செய்தார்! ïa‰gif ã¤jdhÆD« eh« thsh »l¤jš nt©Lnkh? என்று கூறிக்கொண்டு, தங்கள் குலத்துக்கு நேரும் பழியை ஒழிக்கப் போர்க் கருவிகளைத் தாங்கி ஐயரை வளைத்துக் கொண்டனர். ஐயர் அம்மையாரை நோக்கினார். அம்மையார், எம்பிரானே! அஞ்சற்க. இவரை இயற்பகையார் வெல்வார் என்றார். உடனே இயற்பகை நாயனார் வேதியருக்குத் தேறுதல் கூறி, உறவினர்க்கு நல்லுரை வழங்கினார்; ஓடிப்பிழைக்கு மாறு அறிவுறுத்தினார். சுற்றத்தவர், அடா! நீ என்ன செய்தாய்? ஊரார் பழிப்பர்; பகைவர் நகைப்பர். உனக்கு நாணமில்லை. மனைவியை மறையவனுக்குக் கொடுத்தோ நீ வீரம் பேசுகிறாய்? நாங்கள் ஒருங்கே செத்தாலும் சாவோம். இப்பெண்ணை மறையவன் கொண்டு போக விடோம் என்று வீரமொழி பகர்ந்தனர். இயற்பகையார் சினந்து, உங்கள் உயிரை விண்ணுக் கேற்றி, இப்பெரியாரைப் போகவிடுவேன் என்று விளம்பி, உறவினரை எதிர்த்தார். உறவினர் இயற்பகையாரை விடுத்து, அந்தணரைத் தாக்கினர். இல்லையே என்னாத இயற்பகையார், அந்தணரைத் தாக்கிய அனைவரையும் வாளினால் துண்டம் துண்டமாக வெட்டி வீழ்த்தினார்; எதிர்ப்பவர் ஒருவருமின்றி ஏறுபோல் உலாவினார். பின்னர் பிறவி வேரை வெட்டி வீழ்த்திய பெருந்தகையார் அந்தணரைப் பார்த்து, இக்காட்டை அடிகள் கடக்கும்வரை உடன் வருகிறேன் என்று மொழிந்து, திருச்சாய்க் காடு என்னுந் திருப்பதிவரை உடன் சென்றார். அங்கே அந்தணர், அன்பரைத் திருக்கண்ணோக்கஞ் செய்து, நீர் வீட்டிற்குத் திரும்பலாம் என்றருளினார். செயற்கருஞ் செய்கை செய்த இயற்பகை நாயனார், அந்தணரைத் தொழுது வாழ்த்தித் திரும்பினார். சிவத்தின் ஓலம் சிவபெருமான், இவன் மனைவியை விடுத்துத் திரும்பியும் பாராது போகிறான். இவன்றன்அன்புநிலைஎன்னேஎன்னே!! என் வியந்து, இயற்பகை முனிவா ஓலம்! ஓலம்! இவ்விடம் விருத்தொண் ர் அவ்வோலங் கேட்டு, வந்தேன்; வந்தேன். இன்னுந் துன்பஞ் செய்பவர் இருக்கி றாரா? அவரைத் தொலைத்துவிடுகிறேன் என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடினார். ஓடிவந்தவர், மறையவரைக் கண்டா ரில்லை; நங்கையை மட்டுங் கண்டார்; அந்நிலையில் சிவபிரான் உமாதேவியாரோடு விடைமேற் காட்சியளிப்பதையுங் கண்டார்; நாயனார், விழுந்து விழுந்து, வணங்கி வணங்கி, வாழ்த்தி வாழ்த்தி ஆனந்த வடிவினராயினர். அப்பொழுது சிவபெருமான், அன்பனே! உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வளித்தது. நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக்கடவாய் என்று திருவாய் மலர்ந்தருளித் திருவுருக்கரந்தனர். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோக மெய்தி இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினரும் விண்ணடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தனர். இளையான்குடிமாறர்âU¤bjh©l® âருவந்தாதிïயyh விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச் செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க் கயலார் இளையான் குடியுடை மாறனெங் கற்பகமே திருத்தொண்டர் புராண சாரம் மன்னியவே ளாண்தொன்மை இளசை மாறர் வறுமையால் உணர்வுமிக மறந்து வைகி உன்னருநள் ளிருள்மழையில் உண்டி வேண்டி உம்பர்பிரான் அணையவயல் உழுது வித்துஞ் செந்நெல்முளை அமுதுமனை அலக்கால் ஆக்கிச் சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து பன்னலரும் உணவருந்தற் கெழுந்த சோதிப் பரலோகம் முழுதாண்ட பான்மை யாரே. இளையான் குடிப்பதியிலே வேளாளர் மரபிலே பிறந்தவர் ஒருவர் இருந்தார். அவர் மாறனார் என்ற பெயருடையவர். அவருக்கு வேளாண்மையில் ஏராளமான வருவாயுண்டு. அவர் சிவபக்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர். தமது இல்லம் போதரும் அடியவர் எவராயினும் அவருக்குச் சோறிடுவதை ஒரு பெருந் தொண்டாகக் கொண்டு அவர் வாழ்ந்து வந்தார். சோறிடுந் தொண்டும் வறுமையும் இத் திருத்தொண்டின் பயனாக மாறனார்க்குச் செல்வம் பெருகலாயிற்று. இளையன் குடியில் அவர் அளகேசனைப் போல வாழலானார். அவர் வறியராய் வருந்தினுஞ் சோறிடுந் திருத் தொண்டைத் தளராது செய்யும் உறுதி உடையார் என்பதை உலகுக்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளங்கொண்டார்; அதனால் மாறனார்க்கு வறுமை எய்திற்று. எய்தியும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்புற்றுத் தளர்ச்சியுற்றாரில்லை. அவர், தம் பொருள்களை விற்று விற்றுத் திருத்தொண்டு செய்து வந்தனர்; பின்னே, தம்மை விற்றுக் கொடுக்கத்தக்க கடன் வாங்கியும் தமது தொண்டை நெகிழ விடாது செய்தே வந்தனர். பசியின் கொடுமையும் அடியவரை வரவேற்றலும் வருநாளில் மழைக்காலத்தில் ஒரு நாளிரவில் இளையான்குடி மாற நாயனார் உணவின்றி நீண்ட நேரந் தனியே விழிந்திருந்தார். எவ்வித உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை. பசியோ, முறுகி எழுந்து குடைகிறது. அவர் பசியைப் பொறுத்துக்கொண்டு வீட்டுக் கதவை அடைத்துச் சென்றார். சிறிது நேரத்திற்குள் அம்மையப்பர், அடியவர் வேடந் தாங்கிக் கதவைத் தட்டினார். உடனே நாயனார், கதவைத் திறந்தார்; அன்பரைக் கண்டார்; அவரை அழைத்துச் சென்று, திருமேனி துடைத்து, ஈரம் போக்கி, இருக்கும்படி செய்தார். மனைவியார் வழி காட்டல் அடியவர்க்கு mமுதளிக்கÉரும்பிkறனார்kனைவியாரைப்gர்த்தார்.m«ikah® என் செய்வார்! fணவரை nநாக்கி,‘வீட்டில்xருbபாருளுமில்லை.mயyhU« இனிக் கடன் கொடுத்தல் அரிது. பொழுதும் போயிற்று. போகும் இடம் வேறில்லை. v‹ brŒnt‹? என்று வருந்தினார். மின்போல் ஒரு நினைவு அம்மையாரிடந் தோன்றிற்று. தோன்றவும், அவர் இன்று வயலிலே நெல் விதைக்கப் பட்டது. அந்நெல்லை வாரிக்கொண்டு tந்தால்Toயவரைமுaன்றுஅKதாக்கலாம்.இ~j‹¿ வேறொன்றும் எனக்கு விளங்கவில்லை என்றார். அவ்வுரை மாறனார்க்கு வரம்பிலா இறும்பூதெய்துவித்தது. அவர் பெருஞ் செல்வம் பெற்றது போன்றவரானார். அவருள் பெருமகிழ்ச்சி பொங்கிப் பொங்கி வழிந்தது. வறுமையிற் செம்மை kழைபொழியும்eள்ளிரவிலேxருTடையைக்fவிழ்த்துக்bகாண்டுkறானர்òறப்பட்டார்;fல்களினால்jடவித்jடவிச்bசன்றுjம்tயலைmடைந்தார்;kழைÚரிலேÄதந்தbநல்முளைfளைக்nகாலிtரினார்;mவைகளால்TடையைÃரப்பினார்;Tடையைத்öக்கிச்Rமந்துtந்தார்.eha»ah®, நாயனார் வரவைப் பேராவலோடு எதிர் பார்த்து, வாயிலில் நின்று கொண்டிருந்தார்; கூடையை அன்புடன் வாங்கினார்; நெல்முளைகளைக் கழுவினார்; நாயனாரைப் பார்த்தார்; விற கில்லையே! என்றார். அன்பிற் பெரியவர், கிலமாய்க் கிடந்த தம் இல்லத்தின் வரிச்சுகளை அறுத்துத் தள்ளினார். மனைவியார் அவற்றை அடுப்பில் வைத்து, நென்முளை களை வறுத்து, அரிசிகொண்டு சோறாக்கினார்; கறியமுதுக்கு என் செய்வது என்று துணைவனாரைக் கேட்டார். தொண்டர் பெருமான் புறக்கடை போந்து, புன்செய் குறும் பயிர்களைத் தடவிப் பிடுங்கிக் கொணர்ந் தார்; இல்லக்கிழத்தியார் அவற்றைக் fழுவித்öய்மைசெய்தார்.if¤âwikahš பலதிறக் கறியமுதாக்கினார்; ஆக்கியதை நாயனார்க்குத் தெரிவித்தார். ஆண்டவன் சோதியாய்த் தோன்றல் நாயனார், fண்துயிலும்mடியவரிடஞ்bசன்று,bgரியீர்!திUtKJbrŒa vழுந்தருள்கv‹றுஅiHத்தார்.அவ்ntisÆš அடியவர், சோதியாய் எழுந்து தோன்றினார். நhadhU« அவர்தம் நாயகியாருந் திகைத்து நின்றனர். சிவபிரான் உமாதேவியாருடன் விடைமீது எழுந்தருளி, அன்பனே! அறுசுவை உண்டியை அன்பர்களுக்கு நாடோறும் ஊட்டிய ஐயனே! நீ உன் மனைவியுடன் நமது உலகை அடைந்து, குபேரன் உன் ஏவல் கேட்ப, இன்ப நுகர்வாயாக என்று திருவாய்மலர்ந்தருளித் தமது அருளுருவை மறைத்தருளினார். மெய்ப்பொருளார் திருத்தொண்டர் திருவந்தாதி கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லுந்திருவாய் kற்றவன்jத்தாeமரேvனச்சொல்லிthனுலகம்g‰wt‹ சேதிபன் மெய்ப்பொரு sமென்றுngRtnu. âருத்தொண்டர் òராணrரம்nrâg®e‰ கோவலூர் மலாட மன்னர் திருவேடம் மெய்ப்பொருளாத் bதளிந்தáந்தைÚதிÆdh® உடன்பொருது தோற்ற மாற்றான் நெடுஞ்சினமுங் கொடும்படையும் நிகழா வண்ணம் மாதவர்போல் ஒருமுறைகொண் டணுகி வாளால் வன்மைபுரிந் திடமருண்டு வந்த தத்தன் காதலுற நமர்தத்தா என்று நோக்கிக் கடிதகல்வித் திறைவனடி கைக்கொண் டாரே. மெய்ப்பொருள் நாயனார் சேதி நன்னாட்டில் திருக்கோவ லூரில் வாழ்ந்த வேந்தர் பெருமான். அடியவர் திருவேடத்தையே மெய்ப் பொருளெனக் கொண்டமையால் அவர், மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டனர். அவர், மலையமான் வழியில் தோன்றியவர்; பகைவரை வென்று நாட்டுக்கு நலஞ் செய்வதில் பேர்பெற்றவர்; அடியவர் கருத்தறிந்து ஏவல் செய்வோர்; தமது உடைமை எல்லாம் அடியவரது உடைமை என்னுங் கருத் துடையவர். âUக்கோயில்களில்óiச,விHமுjலியனrŒtதும்அவர் தம்âருத்bதாண்டுகளில்ஒன்றh«. முத்தநாதன் nதால்விK¤jehj‹ என்ற ஓர் அரசன் மெய்ப்பொருள் நாயனாரிடம் பகைமை பூண்டிருந்தான். அtD¡F« நாயனார்க்கும் பலமுறை போர்கள் நிகழ்ந்தன. ஒரு முறையாவது முத்தநாதன் வெற்றிபெற்றா னில்லை. நேரிய முறையில் போர் புரிந்தால் இந்நாயனாரை வெல்லுதல் இயலாது என்று அவன் எண்ணினான்; நாயனாரின் திருநீற்றன்பையுஞ் சிவனடியார் நேயத்தையும் உணர்ந்தான்; வஞ்சனையால் அவரை வெல்லக் கருதினான். முத்தநாதன் கரவுக்கோலம் அக்கருத்துக்கொண்ட முத்தநாதன் என்ன செய்தான்? xUநாள் அவன் தன்னுடல் முழுமையுந் âருநீறுóசினான்;rடைகளைச்RUட்டிக்கட்டினான்;உiடவாளைமiwத்துவை¤துள்s ஒருò¤தக¡ கவளியை ஏந்திக்fண்டான்;மனத்தில் மட்டுங்fரவெனு« கறுப்புக்fண்டான்;இக்கோல¤துடன்மெய்யடியh® அரண்மனைeக்கினான்;வாயில்காப்gர்அவனைச்சிவdடியார்vனக்கருதி, அரண்kனையில் நுழைந்துபேhமாறுஅtனைவிடுத்jனர்.mவன்பலவாÆல்fisí§ கடந்தான்; பள்ளிவாயில் அடைந்தான். அங்கிருந்த தத்தன் என்ற வாயில் காப்போன், வஞ்சகனை நோக்கி, இது மன்னர் உறங்கும் நேரம்; சமயமறிந்து போதல் வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான். விரைந்து நுழையும் வஞ்சகன், ‘மன்னருக்குaன்cறுதிப்bபாருள்Tறப்போகிறேன்;jடைbசய்யாதேvன்றுjத்தனைÉலக்கிக்bகாண்டேcள்Eழைந்தான்.m¥ பாவி, அரசர் பெருமான் துயில்வதையும், பெருமாட்டியார் பக்கத்திலிருப்பதையுங் கண்டான்; கண்டுங் கட்டிலின் அருகணைந்தான். உடனே அம்மையார், உண்மை நாயனாரை எழுப்பினார். நாயனார் விழித்து விரைந்திழிந்தார்; கயவனைச் சிவனடியானெனக் கருதிப் பணிந்தார்; அடியவரே! ï§F vGªjUËa neh¡f« v‹id? என்று கேட்டார். ஆகமப் போதனையென்று வாளால்****? முத்தநாதன், உங்கள் இறைவன் முன்னர் அருளிச் செய்த ஆகமங்களுள் ஒன்று என்னிடமிருக்கிறது. அஃது எங்கணுங் காணப்படாதது. அதை உமக்கு அறிவுறுத்த வந்தேன் என்று சொன்னான். அச்சொல், அடியவர் பெருமானை ஆனந்த வாரிதியில் தோய்த்துவிட்டது. இதைவிட எனக்கு என்ன பேறு! அவ்வருளாக மத்தை வாசித்தருள்க என்று மன்னர் பாதகனை வேண்டினார். பாதகன், உன் மனைவி இங்கே இருத்தலாகாது. நாம் இருவேமும் தனித்திருத்தல் வேண்டும் என்று இயம்பினான். உடனே மன்னர் பெருமான், தம் நாயகியாரை அந்தப்புரம் போகும்படி கட்டளை யிட்டார்; கரவாடும் வன்னெஞ்சனைப் பீடத்திலிருத்தினார்; தாம் கீழேயிருந்து, மெய்யன்பரே! அருள் செய்க என்று பாதகனைப் பணிந்தார். அப்போது, இரக்கமில்லா அரக்கன் கவளியை எடுத்தான்; புத்தகம் அவிழ்ப்பவனைப்போல் நடித்தான். கவளியில் மறைத்துக் கொணர்ந்த உடைவளால் நினைந்தவாறே செய்தான். அந்நிலையில் நாயனார் பெருமான், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கொடியனைத் தொழுதார். சத்தியாக்கிரகம் முத்தநாதன் உள் நுழைந்தபோதே அங்கு மனம் வைத்த தத்தன், நொடிப் பொழுதில் அரசர் பெருமானிடம் அணுகினான்; பாவியை வாளினால் வீசப்போனான். அப்பொழுது, செங்குருதி பொங்க விழப்போகும் வேந்தர் பெருமான், தத்தனே! இவர் நம்மவர்; சிவனடியார் என்று தடுத்துச் சாய்ந்தார். சாய்ந்த மெய்யன்பரைத் தத்தன் தாங்கி, அரசே! vd¡FŸs g ahJ? என்று வினவினான். மெய்ப்பொருள் நாயனார், இவ்வடியவர்க்கு எவராலும், வழியில் தீங்கு நேராதவாறு காத்து இவரைக்கொண்டு போய்விடு என்று சொன்னார். ஆணைப்படியே தத்தன் அவ்வஞ்ச கனை அழைத்துச் சென்றான். அரண்மனை நிகழ்ச்சி ஊரில் பரவிற்று. அதை அறிந்தவ ரெல்லாரும் ஆங்காங்கே முத்தநாதனை வளைத்துக் கொண்டனர். அவர்கட்கெல்லாம், அரசர் பெருமானின் அருள் மொழியைத் தத்தன் தெரிவித்து அவரைத் தடுத்தான்; நகரத்தைக் கடந்து, காட்டை அடைந்து, வாளேந்தி மக்கள் வராத இடத்தில் பாவியை விடுத்தான்; அரண்மனைக்குத் திரும்பி, நாயனாருக்குச் செய்தி தெரிவித்தான். திருநீற்று நெறி அந்நற் செய்தியைக் கேட்கும் வரை உயிர் தாங்கிக் கொண் டிருந்த நாயனார், தத்தனைப் புகழ்ந்தார்; அரசியலுக்குரிய புதல்வர் களையும் மற்ற அன்பர்களையும் பார்த்தார்; திருநீற்று நெறியை அன்புடன் பாதுகாக்குமாறு அறிவுறுத்தினார்; தில்லைக் கூத்தன் சேவடியைச் சிந்தைசெய்தார். அப்பொழுது சிவபெருமான், மெய்ப்பொருள் நாயனார் எண்ணியவாறு அவர்க்குக் காட்சி யளித்து, அவரைத் தமது அருட்கழல் நீழலில் சேர்த்தருளினார். விறன்மிண்டர் திருத்தொண்டர் திருவந்தாதி பேசும் பெருமையவ் வாரூ ரனையும் பிரானவனாம் ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல் வீசும் பொழிற்றிருச் செங்குன்ற மேய விறன்மிண்டனே. திருத்தொண்டர் புராண சாரம் விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் தொன்மை விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில் வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும் வன்தொண்டன் புறகவனை வலிய ஆண்ட துளங்குசடை முடியோனும் புறகென் றன்பால் சொல்லுதலும் அவர்தொண்டத் தொகைமுன் பாட உளங்குளிர உளதென்றார் அதனால் அண்ணல் உவகைதர உயர்கணத்துள் ஓங்கி னாரே. சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே பிறந்தவர் விறன்மிண்ட நாயனார் என்பவர். முன்னே திருத்தொண்டர்களை வணங்கிப் பின்னே சிவபெருமானைப் பணிவது அவரது வழக்கமாகும். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்தார்; அங்கே ஒரு நாள் சுந்தரமூர்த்தி சுமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அடியவர்களை வணங்காது ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டார்; கண்டதும், திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும் புறம்பு; அவனை ஆண்ட சிவனும் புறம்பு என்றார். விறன்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்புறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தங்கருத்து முற்றுப்பெறவும், உலகுய்யவுந் திருத்தொண்டத் தொகையைத் திருவாய் மலர்ந் தருளினார். அத் திருத்தொண்டத்தொகை விறன்மிண்ட நாய னாருக்குப் பெருமகிழ்ச்சி யூட்டிற்று. சிவபெருமான், தன் கணங் களுக்குத் தலைவராயிருக்கும் பெருவாழ்வை நாயனார்க்கு அளித்தருளினார். அமர்நீதியார் திருத்தொண்டர் திருவந்தாதி மிண்டும் பொழிற்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணநேர் கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன் துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. திருத்தொண்டர் புராண சாரம் பழையாறை வணிகர்அமர் நீதி யார்பால் பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலும் நல்லூர்க் குழைகாதர் வந்தொருகோ வணத்தை வைக்கக் கொடுத்ததனை எடுத்தொளித்துக் குளித்து வந்து தொழிலாரும் அதுவேண்டி வெகுண்டு நீர்இத் துலையிலிடுங் கோவணநேர் தூக்கும் என்ன எழிலாரும் பொன்மனைவி இளஞ்சேய் ஏற்றி ஏறினர்வா னுலகுதொழ ஏறி னாரே. சோழநாட்டிலே, பழையாறை என்னும் பழம் பதியிலே, வணிகர் குலத்திலே தோன்றிய நாயனார் ஒருவர் இருந்தார். அவர்தம் பெயர் அமர்நீதி நாயனார் என்பது. அவருக்கு அளவில்லாச் செல்வம் உண்டு. அவர், அச்செல்வத்தை, அடியவர்க்குத் திருவமுது செய்வித்தல், அவர்தங் கருத்துதறிந்து, அவர்க்குக் கந்தை, கீள், உடை, கோவணம் அளித்தல் முதலிய திருத்தொண்டுகட்குப் பயன்படுத்தி வந்தனர். திருநல்லூரில் திருத்தொண்டு திருநல்லூர் என்னுந் திருப்பதியிலே நடைபெறுந் திருவிழாவைக் கண்டு இன்புற அடியவர் பலர் அங்கே போவது வழக்கம். அவ்விடத்தில் அடியவர்க்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டு நாயனார் ஒரு திருமடங்கட்டினார். நாயனார் சுற்றத்தவருடன் அத் திருமடத்தில் தங்கித் தந்தொண்டுகளைக் குறைவற ஆற்றிவரலானார். பிரமசாரியார் கோவணங் கொடுத்தல் நாயனார்க்குத் திருவருள் சுரக்கவேண்டிச் சிவபெருமான் திவுளங்கொண்டார்; ஒரு நாள் ஒரு வேதியப் பிரமசாரி வடிவந் தாங்கினார்; இரண்டு கோவணமும் திருநீற்றுப்பையும், தருப்பையுங் கட்டப்பெற்ற ஒரு தண்டேந்தினார்; இக்கோலத்துடன் திருமடம் நோக்கிவந்தார். வந்ததும், அமர்நீதிநாயனார், அவரை முறைப்படி வழிபட்டார்; வேதியர் பெருமான் நாயனாரை நோக்கி, உமது திருத்தொண்டைக் கேள்வியுற்றோம்; உம்மைக் காணவந்தோம் என்றார். அதுகேட்ட நாயனார், இங்கே அந்தணரும் அமுது செய்வர். அந்தணராற் சமைக்கப்பெற்ற அமுதும் உண்டு என்று அந்தணரை வணங்கினார். பிரமசாரியார், காவேரியில் நீராடி வருவோம். ஒருவேளை மழைவரினும் வரும். இவ்வுலர்ந்த கோவணத்தை வைத்திருந்து கொடும் என்று தண்டிலுள்ள ஒரு கோவணத்தை அவிழ்த்தார்; அவிழ்த்து, இதன் பெருமையை உமக்குச் சொல்ல வேண்டியதில்லை; இதனை இகழாமல் வைத்துக் கொடும் என்று அதனை நாயனாரிடம் அளித்துச் சென்றார். அடியவர் பெருமான், அக்கோவணத்தை ஒரு தனியிடத்திற் சேமித்து வைத்தார். கோவண மறைவு திருவருளால் அக்கோவணம் மறையலாயிற்று. அந்தணர் நீராடி மழையில் நனைந்து வந்தார். மடத்தில் திருவமுதுஞ் சித்தமா யிருந்தது. அந்தணர் பெருமான், தொண்டர் அன்பெனுந் தூயநீ ராட விரும்பினார்; அன்பரைப் பார்த்தார் ;ஈரத்தை மாற்றல் வேண்டும். தண்டிலுள்ள கோவணமே ஈரமாயிருக்கிறது. ஆதலால், உம்மிடம் அளித்த கோவணத்தைக் கொண்டுவாரும் என்றார். நாயனார், கோவணத்தைக் கொண்டுவரச் சென்றார். சென்ற நாயனார், கோவணத்தைக் கண்டாரில்லை. என் செய்வார் பாவம்! தேடுகிறார்; திகைக்கிறார்; அங்கு மிங்கும் ஓடுகிறார்; அலைகிறார்; இடர் வந்ததே என்று அலமருகிறார். இனி நிற்கமாட்டாதவராய் வேறொரு கோவணத்தைக் கொண்டுவந்தார்; அடிகளை நோக்கினார்; அடிகள் அளித்த கோவணம் கெட்டுவிட்டது. அதனைத் தேடித் தேடிப் பார்த்தேன். அதை எங்குங் கண்டே னில்லை. வேறு இக்கோவணங் கொண்டுவந் திருக்கிறேன். இஃது ஒன்றினின்றுங் கிழிக்கப்பட்டதன்று. புதிதாக நெய்யப் பட்டது. இதனை ஏற்றருளும்; பிழை பொறுத்தருளும் என்று இறைஞ் சினார். மறையவர் வெகுண்டு, இன்று கொடுத்த கோவணம்! அஃது எப்படிக் கெட்டுவிடும்? அதனைக் கவர்ந்து வேறு கோவணங் கொடுக்கவா துணிந்தீர்? அடியவர்க்கு நல்ல கோவணங் கொடுப்ப தாகச் சொல்வித்தது, என் கோவணத்தைக் கவருதற்கே போலும்! ckJ thÂg« e‹W; e‹W; Äf e‹W! என்று கூறினார். நாயனார் நடுநடுங்கி ஐயரைப் பணிந்து, இப் பிழையைத் தெரிந்து செய்தேனில்லை. இக் கோவணமின்றி நல்ல பட்டாடைகளையும் மணிகளையுங் கொடுக்கிறேன். ஏற்றருளல் வேண்டும் என்று வேண்டினார். அடிகள் தணிவுற்று, எனக்கு ஒன்றும் வேண்டா. எமது கோவணத்துக்கு ஒத்த நிறையுள்ள கோவணம் ஒன்று கொடுத்தாற் போதும் என்றார். mj‰F ehadh®, ‘vj‹ Ãiw¡F x¤âU¤jš nt©L«? என்று கேட்டார். அந்தணர் பெருமான், இக் கோவாண நிறைக்கு என்று தண்டில் கட்டியுள்ள கோவணத்தை அவிழ்த்துக் காட்டினார். துலை நாட்டலுந் துகிலிடுதலும் அடியவர் விரைந்து ஒரு துலை நாட்டினார். அந்தணர் நமது கோவணத்தை ஒரு தட்டில் இட்டார். நாயனாரும் தாம் கொண்டு வந்த கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார். நிறை ஒத்துவர வில்லை. நாயனார், அந்தணரின் ஆணை பெற்றுத் தம்பாலிலுள்ள கோவணங்களையும் பட்டாடைகளையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாகவும் பொதி பொதியாகவும் இட்டு இட்டுப் பார்த்தார். தட்டு ஒத்து வரவில்லை. நாயனார் அந்தணர் அனுமதிபெற்றுத் தம்மிடமுள்ள பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் பிற பொருள்களையும் குவியல் குவியல்களாகக் கொண்டுவந்து கொண்டுவந்து முறைமுறையே தட்டில் சேர்த்தார். தட்டு நேர் நிற்கவில்லை. அக்காட்சி கண்ட நாயனார், அடிகளே! என்னிடத் துள்ள எல்லாவற்றையுங் கொண்டுவந்து வைத்து விட்டேன். இனி அடியேனும் மனைவியும் புதல்வனும் எஞ்சி நிற்கிறோம். திருவுள மிருப்பின், நாங்களும் தட்டில் ஏறுகிறோம் என்றார். அந்தணரும் அதற்கிசைந்தார். அமர்நீதி நாயனார் பெரிதும் மகிழ்ந்து, மனைவி யுடனும் மைந்தனுடனும் துலையை வலம்வந்து, இது காறும் நாங்கள் நிகழ்த்திவந்த தொண்டு தவறுதலில்லாத தாயின், நாங்கள் ஏறினதும் இத்துலை நேர் நிற்பதாக என்று மொழிந்து, ஐந்தெழுத்தை ஓதித் தட்டிலேறினர். ஏறினதும், தட்டுகள் நேர் நின்றன. மண்ணவர் வாழ்த்தினர். விண்ணவர் மலர் சொரிந்தனர். பிரமசாரியாக வந்த பெருமான் உமாதேவியாருடன் மழவிடைமேல் தோன்றினார். தட்டிலே நின்ற நாயனாரும் அவர்தம் மனைவியும் மைந்தனும் ஆண்டவன் திருக்கோலத்தைக் காண்கிறார்; போற்று கிறார். சிவபெருமான், மூவர்கோலத்தைக் காண்கிறார்; போற்று கிறார்; சிவபெருமான், மூவர்க்கும் தம்மை என்றுந் தொழுது கொண்டிருக்கும் வான்பதம் அருளி எழுந்தருளினார். திருவருளால் அத்துலையே விமானமாகி மேலே சென்றது. அமர்நீதி நாயனார் தம் மனைவியுடனும் மைந்தனுடனுஞ் சிவலோகஞ் சேர்ந்தார். எறிபத்தர் திருத்தொண்டத் தொகை இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கு மடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. திருத்தொண்டர் திருவந்தாதி ஊர்மதில் மூன்றட்ட உத்தமர்க் கென்றோர் உயர்தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொளும் பாகர் உடல்துணி யாக்குமவன் ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரி லெறிபத்தனே. திருத்தொண்டர் புராண சாரம் திருமருவு கருவூர்ஆ னிலையார் சாத்துஞ் சிவகாமி யார்மலரைச் சிந்த யானை அரனெறியோர் எறிபத்தர் பாக ரோடும் அறஎறிய என்னுயிரும் அகற்றீர் என்று புரவலனார் கொடுத்தபடை அன்பால் வாங்கிப் புரிந்தரிவான் புகஎழுந்த புனித வாக்கால் கரியினுடன் விழுந்தாரும் எழுந்தார் தாமுங் கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே கருவூர், சோழமன்னர்க் குரிய தலைநகரங்கள் ஐந்தனுள் ஒன்று. அது கொங்கு நாட்டி லிருப்பது. அங்கே ஆனிலை என்னுந் திருக் கோயில் ஒன்றிருக்கிறது. அவ்வானிலையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை வழிபட்டுச் சிவனடியார்க்குத் தீங்கிழைப்பவரை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் வாழ்ந்தார். அவர், எறிபத்த நாயனார் என்ற பெயருடையவர். சிவகாமியாண்டார் எறிபத்தர் காத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சினடியார்; ஆனிலையடிகளுக்குப் பூத்தொண்டு செய்வோர். ஒருநாள் - அதாவது நவமி முன்னாள் - சிவகாமி யாண்டார் வழக்கம்போலப் பூக்கொய்தார்; பூக்களால் கூடையை நிரப்பினார்; கூடையைத் தண்டில் தூங்கச்செய்து, திருக்கோயில் நோக்கிச் செல்வாரானார். யானை பூக்களைச் சிந்தல் அவ்வேளையில் அவ்வழியே புகழ்ச்சோழ மன்னரின் பட்டவர்த்தன யானை, காவிரியில் மூழ்கி, பாகர்கள் மேலேயிருப்ப, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, விரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவகாமியாண்டாரை நெருங்கித் தண்டிலிருந்த பூங் கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக்கண்ட பாகர்கள், யானையை வாயுவேகமாக நடாத்திச் சென்றார்கள். சிவகாமி யாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கே! சிவகாமி யாண்டார் தளர்நடை எங்கே! மூப்பால் சிவகாமியாண்டார் கால்தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதினார்; எழுந்து நின்றார்; ஆனிலையப்பா! நின் முடிமீது ஏறும் மலரையா ஒரு யானை மண்ணிற் சிந்துவது? சிவதா! átjh! என்று ஓலமிட்டார். எறிபத்தர் யானையை எறிதல் அச்சமயத்தில் எறிபத்த நாயனார் அவ்வழியே வந்தார். அவருக்குச் சிவகாமியாண்டாரது ஓலங் கேட்டது. ehadh® átfhÄah©lhiu ailªJ gªJ, ‘m¡bfhoa ahid v§F‰wJ? என்று கேட்டார். சிவகாமியாண்டார்அந்த யானை இவ்வீதி வழியே போயிருக்கிறது என்றார். என்றதும், எறிபத்த நாயனார் காற்றெனப் பறந்தார்; யானையைக் கிட்டினார்; அதன்மீது பாய்ந்தார். யானையும் எறிபத்தர்மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்தார்; எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக்கொண்டே கருமலைபோல் விழுந்தது. பின்னே குத்துகோற்காரர் மூவரையும், பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர் விரைந்து ஓடி, பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர் என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தனர். மன்னர் வருகை சோழர்பெருமான், வடவைபோற் சீறி, ஒரு குதிரைமீது இவர்ந்து புறப்பட்டார். நால்வகைச் சேனைகளும், பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான், யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். ahidia¡ bfh‹wt® v¿g¤j® v‹W bfhŸshjtuhŒ, ‘ahidia¡ bfh‹wt® ah®? என்று கேட்டார். அங்கிருந்த பாகர்கள், மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானைக் கொன்றவர் என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, இவர் சிவனடியார்; குணத்திற் சிறந்தவர். யானை பிழைசெய்திருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்றிரார் என்று எண்ணினார்; சேனைகளை யெல்லாம் நிறுத்தி விட்டுக் குதிரையினின்றும் இறங்கி, இப்பெரியவர் யானைக்கெதிரே சென்றபோது வேறொன்றும் நிகழாதிருந்ததே! யான் முன்னே என்ன தவஞ் செய்தேனோ! அடியவர் இவ்வளவு முனியக்கெட்டேன்! ne®ªj ãiH v‹ndh?’ v‹W mŠá, ehadh® K‹nd br‹W mtiu¤ bjhGjh®; bjhGJ ‘ahidia¡ bfh‹wt® moat® v‹W ah‹ m¿na‹; ah‹ nf£lbjh‹W; ïªj ahid brŒj ãiH¡F , ïjid¥ ghfnuhL« khŒ¤jJ nghJkh? என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். அன்புக் காட்சி சோழர் பெருமான், எறிபத்தநாயனாரை வணங்கி, சிவனடி யாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது; என்னையுங் கொல்லுதல் வேண்டும்; அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை யன்று என்று மொழிந்து, தமது உடைவாளை எடுத்து, இதனால் என்னைக் கொன்றருள்க என்று அதை நீட்டினார். எறிபத்தர், அந்தோ! இவர் அன்பர்! இவர் தம் அன்பிற்கோரளவில்லை; வாளை வாங்காவிடின் தற்கொலை செய்து கொள்வர் என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், ஆ! இப்பெரியவர் அடியேனைக் கொன்று, என் பிழைதீர்க்கும் பேறு பெற்றேன் என்று மனமகிழ்ந் தனர். எறிபத்தர், இத்தகை அன்பருக்கோ தீங்கு நினைந்தேன்! யான் பாவி முதலில் என்னுயிரை மாய்த்துக் கொள்வதே முறை என்று உறுதிகொண்டனர்; வாளைத் தங் கழுத்திலிட்டு அரியப்புகுந்தனர். அக்காட்சி கண்ட அரசர் பெருமான்,கெட்டேன்கெட்டேன்!!என்று வாளையுபிடித்தார். அரசர் கையைப் பற்றினரே என்று அன்பர் வருந்தா நிற்கிறார். இஃது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். வானொலியும் அருளெழுச்சியும் உற்ற இடுக்கணை மாற்ற உங்கள் திருத்தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன என்று ஒரு வானொலி பிறந்தது. பிறந்ததும், யானை, பாகர்களோடு உயிர்பெற்றெழுந்தது. எறிபத்த நாயனார் வாளைவிடுத்துப் புகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழர் வாளை எறிந்து எறிபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர். திருவருளால் கூடையில் பூக்கள் நிறைந்தன. சிவகாமியாண்டார் ஆனந்தவாரிதியிற் றிளைத்தனர். பட்டவர்த்தனத்தை அழைத்துக்கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தார்கள். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக் கிணங்கிப் புகழ்ச்சோழ நாயனார் யானைமீ தெழுந்தருளிச் சேனைகள் புடைசூழ்ந்து செல்ல அரமனையை அடைந்தார். சிவகாமி யாண்டார் பூங்கூடையைத் தண்டிற்றாங்கித் தந்தொண்டின்மேற் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டைக் குறைவறச் செய்து வாழ்ந்து, திருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார். ஏனாதிநாதர் திருத்தொண்டர் திருவந்தாதி பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினை தன்னுள் அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும் நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீணிலத்தே. திருத்தொண்டர் புராண சாரம் ஈழ குலச்சான்றார் எயின னூர்வாழ் ஏனாதி நாதனார் இறைவன் நீற்றைத் தாழத் தொழுமரபார் படைகள் ஆற்றுந் தன்மைபெறா அதிசூரன் சமரில் தோற்று வாழத் திருநீறு சாத்துக் கண்டு மருண்டார் தெருண்டார்கை வாள்வி டார்நேர் வீழக் களிப்பார்போல் நின்றே யாக்கை விடுவித்துச் சிவனருளே மேவி னாரே. ஏனாதிநாத நாயனார் சோழநாட்டிலுள்ள எயினனூரில் தோன்றியவர்; ஈழகுலச் சான்றோர். அவர், திருநீற்றினிடத்துப் பேரன்பு வாய்ந்தவர். அரசர்க்கு வாள்வித்தை பயிற்றுவிப்பது அவர்தந் தொழிலாகும். அதனால் கிடைக்கும் பொருளைச் சிவனடியார்க்குக் கொடுத்து வருவது அவர்தந் திருத்தொண்டாகும். அதிசூரன் அழுக்காறும், போரும் ஏனாதிநாதர் காலத்தில் அதிசூரன் என்ற மற்றுமொரு வாள் வீரன் இருந்தான். அவனது தொழிலும் வாள் வித்தை பயிற்று விப்பது. நாயனார் தமது தொழின் முறையில் அதிசூரனிலும் நலம் பெற்றுவந்தார். அதை யுணர்ந்த அதிசூரன் அழுக்காற்றால் புழுங்க லானான். அவன் நாயனாரிடம் போரிடக் கருதிக்கொண் டிருந்தான். ஒரு நாள் அவன்தன் வீட்டினின்றும் புறப்பட்டான். மாணாக்கரும் மற்றவரும் அவனைச் சூழ்ந்து சென்றனர். அதிசூரன், நாயனார் இல்லம் போந்தான்; போந்து தலைவாயிலில் நின்று அவரைப் போருக்கழைத் தான். சூரன் அழைத்தலைக் கேட்ட நாயனார், போர்க்கோலந் தாங்கி வெளிவந்தார். அவர்தம் மாணாக்கரும், ஊரவரும், மற்றவரும் படை தாங்கி அவரைச் சூழ்ந்து தொடர்ந்தனர். அதிசூரன் தோல்வி அதிசூரன், நாயனாரைப் பார்த்து, இவ்வெளியிலே அமர் செய்வோம். வெற்றியடைவோரே வாள்வித்தை கற்பிக்கும் உரிமை ஏற்றல் வேண்டும் என்று கூறினன். அதற்கு நாயனாரும் உடன் பட்டனர். உடனே இருவருந் தத்தம் படைகளுடன் அவ்வெளி யடைந்து போர் புரிந்தனர். இறுதியில் அதிசூரன் புறமுதுகிட்டு ஓடினன். சூழ்ச்சி ஓடிய சூரன், அன்றிரவு முழுவதும் உறங்கினானில்லை; துயர்க்கடலில் அழுந்தினான்; ஏனாதி நாயனாரை எப்படிக் கொல்வது என்று எண்ணி எண்ணி ஏக்குற்றான்; முடிவில் வஞ்சனை வழியில் கொல்லுதல் வேண்டும் என்று உறுதி கொண்டான். பொழுது புலர்ந்தது. அதிசூரன் ஓர் ஒற்றனை அழைத்தான்; நீ ஏனாதி நாயனாரிடம் போய், போருக்கு வேறு எவரும் உடன்வருதல் கூடாது; அவரும் யானும் மட்டும் தன்னந் தனியராய்ப் போர் புரிதல்வேண்டும் என்று அவரிடஞ் சொல்லி, அவர்தங் கருத்தைத் தெரிந்து கொண்டுவா என்று ஏவினான். ஒற்றன் அவ்வாறே நாயனாரிடம் போந்து, சூரன் சொன்னதை அவர்க்குத் தெரிவித்தான். நாயானார் அதற்கு உடன்பட்டார்; உடனே ஒருவருக்குந் தெரியாமல் அதிசூரன் குறிப்பிட்ட போர்க்களம் சேர்ந்தார். திருநீற்றுப் போலியும் அன்பும் என்றும் வெண்ணீறணியாத அதிசூரன், அன்று புண்ணிய நீற்றை நெற்றியிலணிந்து, போர்க்களம் நோக்கினான். அங்கே, சிங்க ஏறுபோல் நாயனார் உலாவிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கும் வரை அதிசூரன் கேடகத்தால் தன் நெற்றியை மறைத்துச் சென்றான். ஏனாதி நாயனார் அதிசூரன்மேல் பாய அடி பெயர்த்தார். அவ் வேளையில், அதிசூரன், முகமூடி போன்ற கேடகத்தை விலக்கினான். அவன் நெற்றியில், புண்ணிய நீறு பொலிகிறது! அப்பொலிவு கண்ட நாயனார், கெட்டேன்! இவர் நெற்றியிலே நீற்றினை இன்று கண்டேன். இவர் சிவபிரான் தொண்டராயினார் என்று நினைந்து வாளையுங் கேடகத்தையும் விட்டெறியக் கருதினார்; பின்னே நிராயுதனைக் கொன்றார் என்னும் பழி இவரை அடர்க்கும் என்றஞ்சி, வாளையுங் கேடகத்தையும் நீக்காது, போரிடுவார்போல் நடித்தனர். அப்பொழுது நாயனார் முன்னின்ற பாதகன், தன் கருத்தை முற்றுவித்தான். சிவபெருமான் ஏனாதிநாத நாயனார்முன் எழுந்தருளித் தம்மை என்றும் பிரியாப் பெருவாழ்வை அவருக்கு அளித்து மறைந்தருளினார். கண்ணப்பர் திருத்தொண்டர் திருவந்தாதி நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி வலத்திற் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான் குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே. திருத்தொண்டர் புராண சாரம் வேடர்அதி பதியுடுப்பூர் வேந்தன் நாகன் விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக் காடதில்வாய் மஞ்சனமும் குஞ்சிதரு மலருங் காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யார்க்குத் தேடரும்அன் பினில்ஆறு தினத்தளவும் அளிப்பச் சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீர் ஓடஒரு கண்ணப்பி ஒருகண் ணப்ப ஒழிகஎனும் அருள்கொடரு குறநின் றாரே. பொத்தப்பி நாடு வேடர் நிறைந்த ஒரு மலை நாடு. அதன் பேரூர் உடுப்பூர் என்பது. அவ்வூரில் வேட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் நாகன். திண்ணனார் பிறப்பு நாகன், தத்தை என்பவளை மணந்து இல்லறம் நடாத்தி வந்தான். வந்த நாளில் அவன், தனக்கு மகப் பேறின்மை கருதி வருந்தி, முருகப் பெருமானை வழிபடலானான். முருகப்பெருமான் திருவரு ளால் அவனுக்கு ஓர் ஆண்குழவி பிறந்தது. அக்குழவியை நாகன் ஏந்தியபோது அது திண்மையாகத் தோன்றியது. அதனால் அவன் அதற்குத் திண்ணன் என்னுந் திருப்பெயரைச் சூட்டினான். விற்பயிற்சி திண்ணனார், வேடர்கள் போற்ற வளர்ந்து விற்பயிற்சிக்குரிய பருவத்தை அடைந்தார். அவர் நல்லாசிரியர்பால் வில்வித்தை பயின்று தேர்ச்சி பெற்றார். திண்ணனார்க்கு வயது பதினாறு ஆயிற்று. அவர் தந்தை நாகன், முதுமையால் மெலிவுற்றான். அதனால் அவன் காடுபோந்து வேட்டையாட இயலாதவனானான். திண்ணனார்க்கு முடி சூட்டல் ஒருநாள், வேடர் குழு ஒன்று, நாகனிடம் போந்து, அரசே! மாதந்தோறும் வேட்டையாடுதல் தவறியபடியால், கொடிய விலங்குகள் பெருகிப் புனங்களை அழிக்கின்றன என்று முறை யிட்டது. அதற்கு நாகன், நான் மூப்பால் மெலிந்து விட்டேன் இனி வேட்டையாடுதல் என்னால் இயலாது. என்மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக்குகிறேன் என்று சொல்லித் தேவ ராட்டியை அழைப்பித்துத் திண்ணனார்க்கு அரசுரிமை வழங்கினான். தேவராட்டியுந் திண்ணனாரை வாழ்த்திச் சென்றாள். வேட்டை வேடமன்னராகிய திண்ணனார், வேட்டைக்குரிய கோலந் தாங்கிக் காடு நோக்கினார். வேடவீரர்களும் அவருடன் புறப்பட் டார்கள். நாய்களுஞ் சூழ்ந்து ஓடின. வேடர்கள் காட்டில் நுழைந்து ஆங்காங்கே முறைப்படி வலைகளை வளைத்துக் கட்டினார்கள். திண்ணனார் காட்டிலே சுழன்று சுழன்று வேட்டை யாடினார்; கொடிய விலங்குகளை வீழ்த்தினார். அப்பொழுது கொழுத்த பன்றி ஒன்று வீறிட்டு எழும்பி வலைகள் அறும்படி கடுவிசையில் ஓடிற்று. அப்பன்றியைத் தொடர்ந்து திண்ணனாரும் அவ்விசையில் ஓடினார். பன்றியைத் தொடரல் திண்ணனார் பன்றியைத் தொடர்ந்து ஓடியது மற்ற வேடர்க்குத் தெரியாது. நாணன் காடன் என்ற இருவர் மட்டுந் திண்ணனாரைத் தொடர்ந்தே ஓடினர். அப்பன்றி, நாய்களுக்குந் தப்பி நெடுந்தூரம் ஓடிற்று; இளைப்புற்றது; மேலும் ஓட இயலாததாய், ஒரு மலையடியிலே உள்ள சோலையை அடைந்தது; அங்கே மரச்செறிவில் நின்றது. திண்ணனார் அப்பன்றியைக் கண்டார்; அதன்மீது அம்புகளை எய்தாரில்லை; அதனிடம் நெருங்கினார்; உடைவாளை உருவி அதைக் குத்தினார். அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்த நாணன், காடனைப் பார்த்து, காடனே! பல காதங்கள் ஓடிவந்தோம்; இளைத்தோம். முடிவில் இப்பன்றியை நம் வேடர் பெருமானே கொன்றார் என்று திண்ணனாரை வியந்தான். இருவரும் திண்ணனாரை வணங்கினர். காளத்திக் காட்சி அதற்குமேல் இருவரும் திண்ணனாரை நோக்கி, நாம் நெடுந்தூரம் வந்துவிட்டோம். பசி நம்மை அரிக்கிறது. இப் பன்றியைக் காய்ச்சித் தின்று தண்ணீர் அருந்திப் பசி தணித்துக் கொள்வோம்; பின்னே, வேட்டைக் காட்டுக்குப் போவோம் என்றனர். â©zdh®, ‘ešyJ ï¡fh£oš j©Ù® v§nf ÆU¡»wJ? என்று கேட்டார். நாணன், அதோ பெரிய தேக்குமரம் தெரிகிறதன்றோ? அதற்கு அப்பால் நீண்ட குன்று ஒன்று இருக்கிறது. அதற்கு அயலில் பொன்முகலி ஆறு ஓடுகிறது என்றான். திண்ண னார், நாம் அங்கே போவோம். இப்பன்றியை எடுத்து வாருங்கள் என்று சொல்லி, அக்குன்று நோக்கிப் போனார். போம்போது அரைக்காதத்துக் கப்பால் திருக்காளத்தி மலைச்சாரலிலுள்ள சோலை அவர்தங் கண்ணுக்கு விருந்தளித்தது. அவ்விருந் துண்ட திண்ணனார், நாணனே! நமக்கு முன்னே தோன்றும் இக்குன்றி னுக்குப் போவோம் என்றார். அதற்கு அவன், இக்குன்றில் நல்ல காட்சி காண்போம். அங்கே குடுமித்தேவர் வீற்றிருக்கிறார். கும் பிடலாம் என்றான். என்ன நாணா! மலையை நெருங்க நெருங்க என்மேலுள்ள சுமை குறைகிறதுபோலத் தோன்றுகிறது. ஒருவிதப் புது விருப்பமும் பொங்கி எழுகிறது. அது விரைந்து என்னுள் பாயா நிற்கிறது. தேவர் இருக்கும் இடம் எங்கே? கடிது செல்க என்று திண்ணனார் விரைந்து நடந்தார். பொன் முகலி அடைதல் மூவரும் பொன் முகலியை அடைந்தனர். அவ்வாற்றங் கரையி லுள்ள ஒருமர நிழலிலே பன்றி வைக்கப்பட்டது. தீக்கடைக்கோலால் நெருப்பை உண்டுபண்ணி வைக்குமாறு காடனுக்குக் கட்டளை யிட்டுத் திண்ணனார் நாணனோடு மலை நோக்கிச் சென்றார். தத்துவப்படி ஏறல் முன்னைத் தவம் திண்ணனாரை வேற்றுருவாக்குகிறது. அவர்பால் அன்பு பெருக்கெடுக்கிறது; அளவிலா ஆர்வம் பொங்கு கிறது; காதல் கூர்ந்து கூர்ந்தெழுகிறது; என்பு நெக்கு நெக்குருகு கிறது. இவ்வாறு உள்ளத்தெழும் வேட்கையோடு திண்ணனார் மலையேறுகிறார். நாணன் முன்னே செல்கிறான். அவனுக்குப் பின்னே அன்பு செல்கிறது. அதற்குப் பின்னே திண்ணனார் மலைப்படிகளென்னும் தத்துவப்படிகளை ஏறிச் செல்கிறார். அன்பேயாதல் திண்ணனார் சிவபெருமானைக் காண்பதற்கு முன்னே, சிவபெருமான் அவரைத் திருக்கண்ணோக்கஞ் செய்தார். செய்ததும், வேடர் கோமான், ஒளிமயமாய் அன்புருவம் பெற்றார். அவர் மலைக்கொழுந்தென விளங்கும் மகாதேவரைக் கண்டார்; கண்டதும் கட்டித்தழுவுகிறார்; மோந்து மோந்து நிற்கிறார்; பெருமூச்சு விடுகிறார். அவர்தம் மெய்ம்மயிர் சிலிர்க்கிறது. புளகம் போர்க்கிறது; கண்களினின்றும் அருவி பெருகுகிறது. அச்சோ! இவர் அடியேனுக்கு அகப்பட்டார் என்று திண்ணனார் கூறுகிறார்; ஆனந்தக் கூத்தாடுகிறார். இது கொடிய விலங்குகள் திரியுங் கானம்! இங்கே வேடரைப்போல ஐயன் தனித்திருப்பதென்னே! துணைவர் ஒருவருமிங்கில்லையே! அந்தோ! கெட்டேன்; கெட்டேன் என்று அவர் நைந்து நைந்து உருகுகிறார். கைச்சிலை நழுவி விழுந்தது. அஃதும் அவருக்குத் தெரியவில்லை. ã‹d® mt® á¿J bjË î‰W, ‘ït® KoÛJ Úiu th®¤J¥ g¢áiyí« óîÄ£L¢ br‹wt® ahnuh? என்கிறார்; சுற்று முற்றும் பார்க்கிறார். அருகிருந்த நாணன், யார் என்பது எனக்குத் தெரியும். முன்னொரு நாள் உம் தந்தையாருடன் வேட்டையாடி இங்கே வந்தோம். அப்பொழுது ஒரு பார்ப்பான் இவர்மீது நீரை வார்த்தான்; பச்சிலைகளையும் மலர்களையுஞ் சூட்டினான்; உணவூட்டினான்; முன்னின்று சில மொழிகளைச் சொன்னான். இவற்றை நான் பார்த்தேன். அவனே இன்றும் இச்செயல்கள் செய்திருத்தல் வேண்டும் என்றான். அதைக்கேட்ட அன்பர், இவை இறைவனார்க்கு இனியவை போலும் என்று அவற்றை உளங்கொண்டு, ஆண்டவனைப் பிரிந்து செல்ல மனமில்லாதவராய், இவர் இங்கே தனியராய் இருக்கிறார். இவர் அமுதுசெய்ய இறைச்சியும் அளிப்பாரில்லை. இவரைப் பிரிதலும் ஒண்ணாது. என் செய்வேன்! இவருக்கு இறைச்சி கொண்டுவந்தே தீர்தல் வேண்டும் என்று நினைந்து சிறிது தூரம் போவார்; மீண்டுந் திரும்புவார்; தழுவிக்கொள்வார்; திரும்பவும் போவார்; காதலால் நோக்கி நோக்கி நிற்பார்; கன்றை விட்டகலும் பசுப்போலாவார்; ஐயனே! திருவமுதுசெய்ய நல்ல இறைச்சியை நானே கொண்டுவருவேன். இங்கு உனக்குச் சுற்றத்தார் ஒருவரு மில்லை. உன்னைப் பிரிந்து செல்லவும் மனம் எழவில்லை. பசியோ டிருத்தலையும் மனம் விரும்பவில்லை. ஆதலால் போய்வருகிறேன் என்று கூறிக் கண்களில் அருவிபாய, வில்லை எடுத்து, மலையி னின்றும் இழிந்து சோலை சேர்ந்தார். நாணனும் அவர் பின்னே தொடர்ந்து போனான். நாணன் - காடன் வருந்தல் அங்கிருந்த காடன், திண்ணனார் எதிரேசென்று பணிந்து, தீக்கடைந்து வைத்துளேன். பன்றியின் உறுப்புகளையெல்லாம் உமது குறிப்புப்படி பார்த்துக்கொள்க. ï›tsî neuª jhœ¤jJ v‹id? என்றான். அதற்கு நாணன், நிகழ்ந்தவைகளைக் கூறி, குடுமித் தேவர்க்கு இறைச்சி கொண்டு போகும்பொருட்டு இவர் இங்கே வந்திருக்கிறார்; நமது குலத் தலைமையை விட்டுவிட்டார்; அத்தேவர் வழி பட்டுவிட்டார் என்று சொன்னான். அதைக்கேட்ட காடன், திண்ணனாரே! என் செய்தீர்! நீங்கள் எங்கள் குலத் தலைவரல்லரோ! என்ன பித்துக்கொண்டீர் என்று கூறினார். அன்புப் பித்தம் கானவர் பெருமான் காடனை நோக்காது பன்றியை நெருப்பிலே வதக்குகிறார்; வதக்கி அதன் இறைச்சியைப் பதம் செய்கிறார்; வெந்த இறைச்சிகளை வாயிலிட்டு அதுக்குகிறார்; அதுக்கி, இனியவற்றைக் கல்லையிலே வைக்கிறார்; மற்றவற்றைப் புறத்திலே துப்புகிறார். இச்செயல்களைப் பார்த்த நாணனுங் காடனும், இவர்க்குப் பித்தம் தலைக்கேறி விட்டது. இவர் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்; இருந்தும், இறைச்சிகளை உண்கி றாரில்லை; அவற்றை வீணாக இலைக்கலத்திலிடுகிறார்; புறத்தில் உமிழ்கிறார்; நமக்குங் கொடுக்கிறாரில்லை. இவர் தெய்வப் பித்துக்கொண்டிருக்கிறார். நாம் என்செய்வது? தேவராட்டியையும் நாகனையும் அழைத்து வருதல்வேண்டும்; நாம் காடு நண்ணி, நம்முடன் சூழ்ந்து வந்த மற்றவரையும் அழைத்துப் போவோம் என்று பேசிச்சென்றார். ஞானார்ச்சனை இருவருஞ் சென்றது சிவத்தில் ஈடுபட்டுள்ள திண்ணனார்க்குத் தெரியாது. அவர் ஊனமுதைக் கல்லையிலே வைத்தார்; திருமஞ் சனத்துக்குப் பொன்முகலியாற்று நீரை வாயிலே முகந்தார்; பச்சிலை களையும் மலர்களையும் குடுமியிலே செருகினார்; ஒரு கையில் ஒரு வில்லையும் அம்பையும் தாங்கினார்; மற்றொரு கையில் ஊனமுத முள்ள இலைக்கலத்தை ஏந்தினார்; எனக்கினிய பெருமான் சாலப் பசித்திருப்பார் என்று இரங்கி ஏங்கி விரைந்து நடந்து மலையை அடைந்தார்; அங்கே சிவனார் திருமுடிமீதிருந்த மலர்களைக் கால் செருப்பால் மாற்றினார்; வாய் நீரைத் திருமுடிமீது அன்புபோல் உமிழ்ந்தார்; குடுமியில் செருகிவந்த பூக்களை ஆண்டவனுக்குச் சாத்தினார்; ஊனமுதைத் திருமுன்னே வைத்து, ஆண்டவனே! இவ்விறைச்சிகள் நல்லன; இவற்றை யானே சுவை பார்த்துத் திருமுன்னர்ப் படைத்துள்ளேன்; அமுது செய்தருள்க என்று இன்சொற் கூறி அமுதூட்டுவித்தார். அன்பில் சிவத்தைக் காணல் அப்பொழுது கதிரவன் மறைந்தான். இரவில் கொடிய விலங்குகள் ஐயனுக்குத் தீங்கு செய்யும் என்று திண்ணனார் கருதி அஞ்சித் திருக்கையில் சிலை தாங்கிச் சிவபிரானை நோக்கி நின்றார். காடுகளில் நுழைந்தும் மலைகளிற் புகுந்தும் பன்னெடு நாள் அருந்தவங் கிடந்த தேவர்களும் முனிவர்களும் காண்டற்கரிய பெருமானைத் திண்ணனார் அன்பினால் கண்டுகொண்டார். பொழுது புலர்ந்தது. பறவைகள் ஒலி செய்தன. இரவு முழுவதும் கண் துயிலாத வீரர், ஆண்டவனுக்கு ஊனமுது கொண்டுவர வேட்டைக்குப் புறப்பட்டார். சிவகோசரியார் ஆகமப் பூசை திண்ணனார் சென்ற பின்பு, சிவகோசரியார் அங்கே வந்தார். சிவகோசரியார் என்வர், திருக்காளத்தியப்பரை நாள்தோறும் ஆகமவிதிப்படி அருச்சிப்பவர். அவர் வழக்கம் போலத் தொண் டாற்றத் திருமுன்னர்ச் சென்றார்; அங்கே வெந்த இறைச்சியையும் எலும்பையும் பார்த்தார்; அகல மிதித்து ஓடினார்; இவ்வநு சிதத்தைச் செய்தவர் யாவர்? வேடப் புலையர்களே இதைச் செய் திருத்தல் வேண்டும். இக் கொடுமைக்குத் தேவ தேவன் திருவுள்ளமும் இசைந்ததே என்று கலங்கினார்; தெளிவடைந்தார்; இறைச்சி, இலை, செருப்படி, நாயடி முதயவற்றைத் திருவலகால் மாற்றினார்; பொன்முகலி போந்து மூழ்கினார்; விரைந்து சந்நிதி சேர்ந்து பிராயச்சித்தம் செய்தார்; முறைப்படி அருச்சித்துத் தமது தபோ வனம் போனார். மாறுபட்ட ஆசைகள் திண்ணனார் கான் புகுந்தார்; வேட்டையாடிப் பன்றி மான் முதலிய விலங்குகளைக் கொன்றார்; அவற்றின் ஊனெடுத்துப் பதஞ்செய்து தேன் கலந்து கல்லையிலே வைத்தார்; முன் போலவே மஞ்சனமும் மலருங் கொண்டார்; இவற்றைக் கொண்டு மலை யேறிப் பழையபடி பார்ப்பனர் பூசையை அகற்றித் தமது பூசையைச் செய்தார்; இறைச்சிகளைத் திரு முன்னே வைத்து, ஐயனே! இவ்விறைச்சிகள் முன்னவைகளைவிடச் சிறந்தன; இவை பன்றி, மான், கலை, மரை, கடமை இவற்றின் இறைச்சிகள்; யானுஞ் சுவை பார்த்தேன்; தேனுங் கலந்துள்ளேன்; தித்திக்கும்! அமுது செய்தருள் என்று இன்மொழி பகர்ந்து அமுது செய்வித்தார். இவ்வாறு திண்ணனார் பகலில் வேட்டையாடி ஆண்டவனுக்கு ஊனமுதம் படைத்தும், இரவிலே உறங்காமல் ஆண்டவன் முன்னே நின்றும் திருத்தொண்டு நிகழ்த்தி வந்தார். சிவகோசரியாரும் சிவசந்நிதி போந்து வனவேந்தர் பூசனையை மாற்றி மாற்றி ஆகம முறைப்படி அருச்சித்து வந்தார். நாகன் முயற்சி பலியாமை நாணனுங் காடனும் ஊருக்குச் சென்று, திண்ணனார் செயல் களை நாகனுக்கு அறிவித்தனர். நாகன் ஊணுறக்கமின்றித் தேவ ராட்டியையும் அழைத்து மைந்தரிடம் போந்தான்; அவரைத் தன் வழிப்படுத்தப் பற்பல வழியில் முயன்றான்; முயன்றும் பயன் விளையாமை கண்டான்; மனம் நொந்து வீட்டுக்குத் திரும்பினான். சிவகோசரியார் ஒளித்திருத்தல் சிவகோசரியார் நாடோறும் அநுசிதத்தை விலக்கி விலக்கிச் சலிப்புற்றார்; ஒருநாள் ஆண்டவன் எதிரே நின்று, என்னுடைய நாயகனே! இவ்வநுசிதஞ் செய்தாரைக் காண்டல் கூடவில்லை. இதனை உன்னருளாலேயே ஒழித்தல்வேண்டும் என்று வேண்டிச் சென்றார். அன்றிரவு சிவபெருமான் சிவகோசரியார் கனவிலே தோன்றி, அநுசிதஞ் செய்யும் ஒருவனை வேடுவன் என்று நீ நினைத்தல் வேண்டா. அவன் அன்பன். அவனுடைய வடிவெல்லாம் நம் பக்கலுள்ள அன்பேயாகும். அவனுடைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவேயாகும். அவனுடைய செயல்களெல்லாம் நமக்கு இனியவையாகும். அவன் நிலை இத்தகைத்து. நீ நாளை நமக்குப் பின்னே ஒளித்திரு; அவன்தன் அன்புச் செயல்களைக் காண்பாய்; கவலையொழிக என்றருளி மறைந்தார். சிவகோசரியார் கண் விழித்தார். பொழுது விடியும்வரை அவருக்கு உறக்கம் வரவில்லை. பொழுது விடிந்தது. சிவகோசரியார் எழுந்து பொன் முகலியில் நீராடினார்; மலையேறினார்; வழக்கம் போல ஆண்டவனை வழிபட்டார்; ஆண்டவன் ஆணைப்படி பின்பக்கம் ஒளித்திருந்தார். ஒரு கண் அகழ்ந்து அப்பல் ஆறாம்நாள் வழக்கம்போலத் திண்ணனார் இறைச்சி முதலியவற்றைத் தாங்கி விரைந்து வருகிறார். அவர் அன்று வழியில் துர்ச்சகுனங்களைக் காண்கிறார்; இவை உதிரங்காட்டுங் குறிகள். v‹ IaD¡F v‹d ne®ªjnjh! என்று கலங்கி ஓடிவருகிறார். திருக்காளத்திப் பெருமான், திண்ணனார்தம் அன்பின் பெருமை யைக் காட்டத் தமது வலக் கண்ணினின்றும் உதிரம் பெருகச் செய்தார். அக்காட்சியைத் தூரத்தே கண்ட திண்ணனார், ஓடோடி வந்தார். இரத்தங்கண்டார்; மயங்கினார். அவர்தம் வாயிலுள்ள நீர் சிந்திற்று; கையிலுள்ள ஊன் சிதறிற்று; வில்லும் விழுந்தது; தலைமயிரினின்றும் மலர்கள் விழுந்து அலைந்தன. திண்ணனார் பதை பதைத்து வீழ்கிறார்; எழுகிறார்; எழுந்துபோய் இரத்தத்தைக் துடைக்கிறார்; துடைத்தும் இரத்தம் நிற்கவில்லை. mt® bgU_¢R É£L ÉGªjh®; ã‹ xUthW nj¿, ‘ah® ïJ brŒjh®? என்று எழுந்தார்; திசை திசை ஓடிப்பார்க்கிறார்; வில்லை எடுக்கிறார்; அம்பைத் தொடுக்கிறார். எனக்கு மாறாக இத்தீங்கை வேடர் செய்தனரோ? bfhoa Éy§FfŸ brŒjdnth? என்று கூறிக் கொண்டே மலைப் பக்கங்களில் ஓடுகிறார்; நெடுந் தூரம் ஓடிப் பார்க்கிறார். திண்ணனார் வேடரையுங் கண்டாரில்லை; விலங்கு களையும் கண்டாரில்லை; அன்பர் திரும்பி வந்து, ஆண்டவனைக் கட்டி, ஐயனே! உனக்கு அடுத்தது என்னோ? v‹ndh? என்று கதறிக் கதறி அழுகிறார்; இஃது என்செய்தால் தீரும்? பச்சிலை மருந்துகளைத் திரட்டி வருவேன் என்று காடெலாஞ் சுற்றிப் பச்சிலைகளை பறித்து வந்தார்; அவற்றைப் பிசைந்து பிசைந்து ஐயன் கண்ணில் வார்க்கிறார். இரத்தம் நிற்கவில்லை. ‘ïÅ v‹brŒtJ? என்று அண்ணல் சிந்தித்து நிற்கிறார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. வந்ததும், திண்ணனார் அம்பால் தமது வலக்கண்ணை அகழ்ந் தெடுத்து ஐயன் திருக் கண்ணில் அப்பினார். இரத்தம் நின்று விட்டது. m‹g® bgUkh‹ Fâ¡»wh®; njhŸ bfh£L»wh®; T¤jhL»wh®; ‘eh‹ brŒjJ e‹W e‹W! என்று கூறிக்கூறி மகிழ்ச்சி யடைகிறார். மகிழ்ச்சிப் பெருக்கால் அன்பர் உன்மத்தர் போலானார். மற்றொரு கண்ணகழ்தலும் கண்ணப்பராதலும் இன்னும் திண்ணனார் அன்பின் உண்மையைக் காட்டச் சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், இதற்கு யான் அஞ்சேன்; மருந்து கைக் கண்டிருக்கிறேன்; இன்னும் எனக்கொரு கண்ணுண்டு; அதை அகழ்ந்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன் என்று அடை யாளத்தின் பொருட்டு காளத்திநாதர் திருக்கண்ணில் தமது இடக் காலை ஊன்றினார்; உள் நிறைந்த விருப்பத்தோடும் தமது இடக் கண்ணைத் தோண்ட அம்பை ஊன்றலானார். ஊன்றிய பொழுது, தடங்கருணைப் பெருங்கடலாகிய தேவதேவர் மனந் தாளாதவராய், கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! f©z¥g Éf! என்றருளிக் கொண்டே திண்ணனார் கையைத் தமது திருக்கையால் பிடித்துத் தடுத்தார். அவ்வரும் பெருங் காட்சி கண்ட சிவகோசரியார் ஆனந்த வாரிதியில் மூழ்கினார். கண்ணப்பர் திருக்கையைப் பற்றிய முக்கணப்பர், கண்ணப்பரைப் பார்த்து, மாறிலா அன்பனே! என் வலப்பக்கத்தில் இருக்கக் கடவாய் என்று அவருக்குப் பேரருள் புரிந்தார். குங்குலியக்கலயர் திருத்தொண்டர் திருவந்தாதி ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள் சாய்ந்த சிவனிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண்ட னற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிற் கலயனையே. திருத்தொண்டர் புராண சாரம் சீலமலி திருக்கடவூர் கலய னராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளஎன்று வாங்கிக் கொண்டு சங்கையில்குங் குலியத்தால் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தாள் நாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சால் நயந்து போதப் பாலமுதம் உண்டாரும் அரசும் எய்திப் பரிந்தமுது செயஅருள்சேர் பான்மை யாரே. சோழ நாட்டிலுள்ள திருக்கடவூரிலே ஒரு நாயனார் வாழ்ந்தார். அவர் மறையவர்; கலயனார் என்னும் பெயருடையவர்; சிவபத்தியிலும் ஒழுக்கத்திலும் மிகச் சிறந்தவர். திருக்கோயிலில் குங்குலியத் தூப மிடுவது அவர்தந் திருத்தொண்டு. வறுமையும் கொடுமையும் இத் திருத்தொண்டைக் கலயனார் குறைவற நிகழ்த்தி வரு நாளில், ஆண்டவன் அருளால் அவருக்கு வறுமை நேர்ந்தது. நேர்ந்தும் அவர் திருத்தொண்டைத் தவறாது செய்து வந்தார். கலயனார் தமக்குள்ள நிலபுலங்களையும் பிறவற்றையும் விற்கலானார். அவர்தஞ் செல்வங்களெல்லாம் ஒழிந்தன. அவருக்கு நேர்ந்த வறுமையின் கொடுமைக்கு ஓர் அளவில்லை. அக்கொடுமை அவரையும், அவர்தம் மனைவி மக்களையும் மற்றவரையும் இரண்டு நாள் பட்டினி கிடக்கவுஞ் செய்தது. தாலிகொண்டுந் தொண்டு செய்தல் அந்நிலைகண்டு மனஞ்சகியாத நாயனாரின் அருமை மனைவியார், தாலியை நாயனாரிடந் தந்து, நெல் வாங்கிவாரும் என்றார். கலயனார் தாலியைக் கொண்டு கடைவீதி வழியே சென்றார். அவ்வேளையில் ஒருவணிகன் குங்குலியப் பொதிக் கொண்டு அவ்வழியே வந்தான். moah® mtid¥ gh®¤J, ‘ï~bj‹d? என்று வினவினார். அவன், குங்குலியப்பொதி என்றான். அன்பர், இன்று யான் பெரும்பேறு பெற்றேன் என்று அளவிலா மகிழ்வெய்தி, பொன் தருகிறேன். இதைக்கொடும் என்றார். tÂf‹, ‘v›tsî bgh‹? என்று கேட்டான். நாயனார் தாலியை நீட்டினார். வணிகன் தாலியை வாங்கிப் பொதியைக் கொடுத்தான். கலயனார் அப்பொதியை ஏற்று விரைந்து ஓடினார்; திருக்கோயிற் பண்டாரத்தில் அதைச் சேர்த்தார்; சிவபெருமான் திருவடியைப் போற்றிக்கொண்டிருந்தார். சிவபிரான் பொருள் அருளல் இல்லத்தில் நாயனாரின் மனைவி மக்கள் முதலியோர் பசியால் வருந்தி வருந்தி உறங்கிவிட்டனர். அந்நிலையில் அடியவர்க் கெளியவராகிய சிவபிரான், நாயனார் வீடு முழுவதும் பொற்குவிய லும், நெற்குவியலும், பிறவும் நிரம்புமாறு திருவருள் செய்தார்; செய்து, அதை அம்மையார்க்குக் கனவில் உணர்த்தினார். அம்மையார் விழித்தெழுந்தார்; செல்வக் குவியல்களைக் கண்டார்; ஆண்டவன் அருளை வியந்து வியந்து போற்றினார்; போற்றிக் கணவனார்க்கு அமுது சமைக்கச் சென்றார். நாயனார் அமுதுண்ணல் திருக்கோயிலிலுள்ள நாயனார் கனவிலுஞ் சிவபெருமான் தோன்றி, நீ பசியால் வருந்துகிறாய்; வீடு போந்து உணவு கொள் வாயாக என்று கட்டளையிட்டருளினார். நாயனார் திருவருள் ஆணையை மறுத்தற்கஞ்சி, வீடுநோக்கிச் சென்றார்; வீட்டை அடைந்தார்; வீட்டில் நிரம்பியுள்ள செல்வக் காட்சியைக் கண்டார். kidÉahiu gh®¤jh®; ‘ï~bj‹d? என்று கேட்டார். அம்மையார் எல்லாம் ஆண்டவன் அருள் என்று சொன்னார். நாயனார் ஆண்டவன் அருளைப் போற்றிப் புகழ்ந்து, அடியவருடன் அமுதுண்டு இன்புற்றார். கலயனார் வழக்கம்போலத் தமது திருத்தொண்டைக் குறைவற நிகழ்த்தி, அறுவகைச் சுவையுடன் அடியவர்க்கு அமுதூட்டி வந்தார். சிவலிங்கச் சாய்வு திருப்பனந்தாளிலே சிவலிங்கத் திருவுருவிற்குச் சாய்வு நேர்ந்தது. அச்சாய்வைப் போக்கிப் பெருமானை வழிபட மன்னன் விரும்பினான். அவன், தன் சேனை யானைகளை யெல்லாம் பூட்டித் திருவுருவை இழுப்பித்தான். இழுப்பித்தும், அவன் விருப்பம் நிறைவேறவில்லை. அவன் துயரக்கடலில் அழுந்தினான். சிவலிங்க நிமிர்வு மன்னன் படுந் துயரைக் குங்குலியக்கலய நாயனார் கேள்வி யுற்றுத் திருப்பனந்தாள் சேர்ந்தார்; அங்கே மன்னன் துயரையும் சேனை யானைகளின் இளைப்பையுங் கண்டார்; யானும் இத் தொண்டில் ஈடுபடுகிறேன் என்று, சிவலிங்கத்திற் பூட்டியுள்ள கயிற்றைத் தங்கழுத்திற் பூட்டி இழுத்தார். அன்புக்கயிற்றின் இழுப்புக்குச் சிவலிங்கம் நிமிராதிருக்குமோ? சிவலிங்கம் நிமிர்ந்து விட்டது. மன்னன், நாயனாரை வணங்கி வாழ்த்தித் திருக்கோயில் திருப்பணிசெய்து தனது பதியைச் சேர்ந்தான். இரு பெரியார் காட்சி நாயனார் திருப்பனந்தாளில் சிலநாள் தங்கிப் பின்னே தமது திருக்கடவூருக்குத் திரும்பினார். திருக்கடவூருக்குத் திருஞான சம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் எழுந்தருளி னார்கள். குங்குலியக்கலயர் அப்பெரு மக்களை எதிர்கொண்டழைத்து, அவர்கட்குத் திருவமுது செய்வித்தார்; அவர்கள் அருளையும் ஆண்டவன் அருளையும் பெற்றார். நாயனார் தமது திருப்பணியை முறையாகச் செய்து வாழ்ந்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். மானக்கஞ்சாறர் திருத்தொண்டர் திருவந்தாதி கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும் அலசும் எனக்கரு தாதவள் கூந்தல் அரிந்தளித்தான் மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாற னெனும்வள்ளலே. திருத்தொண்டர் புராண சாரம் கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க் காதல்மகள் வதுவைமணங் காண நாதன் வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப் பஞ்சவடிக் காமென்ன அரிந்து நீட்டும் பத்தர்எதிர் மறைந்திறைவன் பணித்த வாக்கால் எஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை ஏயர்பிராற் குதவியருள் எய்தி னாரே. மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறூரிலே தோன்றியவர். அவர் வேளாண்குலத் தலைவர்; சேனாதிபதி; சிவனடியாரைச் சிவனே என்று கருதுவோர்; தமது உடைமை யெல்லாம் சிவனடியார் உடமை என்று எண்ணும் பெருநிலையில் நின்றவர்; எதையுங் குறிப்பறிந்து கொடுப்பவர். பெண் மகவு பிறத்தல் நாயனார்க்கு நீண்டகாலமாக மகப்பேறில்லாமலிருந்தது. அது குறித்து அவர் திருவருளை வாழ்த்துவார். திருவருளால் அவருக் கொரு பெண்மகவு பிறந்தது. அதை நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக அவர் வளர்த்து வந்தார். அப்பெண்மகள் உற்ற வயதடைந்தாள். திருமணம் அப்பெண்மணியை ஏயர்கோன் கலிக்காம நாயனார்க்கு மணம்பேசச் சில முதியோர், மானக்கஞ்சாற நாயனாரிடம் போந்தனர். நாயனார் முதியயோரை முறைப்படி உபசரித்தனர். அவர் தங் கருத்தைத் தெரிவித்தனர். அதற்கு மானக்கஞ்சாறர் உடன் பட்டார். இருசார்பிலும் திருமண முயற்சி நிகழ்ந்து வரலாயிற்று. மாவிரதியார் வருகை ஏயர்கோன் கலிக்காம நாயனார் மணக்கோலங் கொண்டு உறவினருடனும் மற்றவருடனும் கஞ்சாறூருக்குப் புறப்பட்டார். அவர் கஞ்சாறூரை அடைவதற்குள், சிவபெருமான் மாவிரத கோலந் தாங்கி, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுள் நுழைந்தார். நாயனார் அவரை எதிர்கொண்டு வணங்கி, உய்ந்தேன் உய்ந்தேன் என்று குழைந்து குழைந்து உருகினார். உருகும் அடியவரை மாவிரதியார் பார்த்து, இங்கென்ன? kzÉidah el¡f¥ngh»wJ? என்று கேட்டார். மானக்கஞ்சாறர் அடியேனது ஒரு புதல்விக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்று பணிவுடன் கூறினார். மாவிரத முனிவர், உமக்கு நலம் உண்டாக என்று வாழ்த்தினார். தலைமயிர் கேட்டுப் பெறல் உடனே நாயனார் உள் புகுந்து தம் புதல்வியை அழைத்து வந்து முனிவரைத் தொழச் செய்தார். தொழு தெழுந்த மணப்பெண்ணின், மேகம்போன்று தழைத்துப் பொலியும் அழகிய கூந்தல்மீது முனிவரனார் மனஞ்செலுத்தினார்; செலுத்தி நாய னாரைப் பார்த்து, இவ்வணங்கின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவக்கூடும் என்றார். என்றதும், நாயனார் தமது உடைவாளை உருவிப் புதல்வியின் கூந்தலை அறுத்து மாவிரதியாரிடம் நீட்டினார். அதை வாங்குவார் போல் நின்ற சிவபெருமான், தாம் ஏற்ற கோலத்தை மறைத்து, உமையம்மையாருடன் மழவிடைமேல் காட்சி தந்தார். நாயனார் விழுந்து எழுந்து மெய்ம்மறந்தார். சிவபெருமான், அன்பரை நோக்கி, நம்மாட்டு உனக்குள்ள அன்பின் திறத்தை உலகறியச் செய்தோம். இனி நம்மை அடைவாயாக என்று திருவருள் செய்து திருவுருக் கரந்தார். நாயனார் ஆண்டவன் அருட் பெருந்திறத்தைப் போற்றும் அரும்பேற்றைப் பெற்றார். ஏயர்கோன்கலிக்காமர் அன்பு ஏயர்கோன்கலிக்காம நாயனார் கஞ்சாறூரை அடைந்தார்; நிகழ்ந்ததைக் கேள்வியுற்றார்; திருவருளைப் போற்றி மகிழ்ந்து, அந்நிகழ்ச்சியைக் காணும் பேற்றை யான் பெறவில்லையே என மனந் தளர்ந்தார். அருளால் எழுந்த திருவாக்கைக் கேட்டு அவர் துன்பம் நீத்தார். திருவருளால் மணப் பெண்ணின் கூந்தல் முன்போல் வளரப்பெற்றது. ஏயர்கோன் கலிக்காம நாயனார் அப்பெண் மணியை மணந்து தம்மூர் நோக்கினார். அரிவாட்டாயர் திருத்தொண்டர் திருவந்தாதி வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே வெள்ளச் சடையாய்! அமுதுசெய் யாவிடில் என்தலையைத் தள்ளத் தகுமென்று வாள்பூட் டியதடங் கையினன்காண் அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே திருத்தொண்டர் புராண சாரம் தாவில்கண மங்கலத்துள் வேளாண் தொன்மைத் தாயனார் நாயனார் தமக்கே செந்நெல் தூவரிசி எனவிளைவ தவையே யாகத் துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை ஆவினில்ஐந் துடன்கொணரக் கமரிற் சிந்த அழிந்தரிவாள் கொண்டூட்டி அரியா முன்னே மாவடுவின் ஒலியும்அரன் கரமுந் தோன்றி வாள்விலக்கி அமரர்தொழ வைத்த தன்றே. சோழ நாட்டில் கணமங்கலம் என்றொரு பதியுண்டு. அப் பதியில் தாயனார் என்ற பெயருடையவர் ஒருவர் இருந்தார். அவர் செல்வத்திற் சிறந்தவர்; வேளாண்குலத் தலைவர். செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் சிவபெருமானுக்குத் திருவமுது செய்விப்பது அவர்தந் திருத்தொண்டு. செல்வ மாற்றம் தாயனாரின் செல்வ வளங்களை யெல்லாம் மாற்றச் சிவபெரு மான் திருவுளங் கொண்டார். அன்பருடைய செல்வங்க ளெல்லாம் யானையுண்ட விளங்கனிபோல் ஒழிந்தன. ஒழிந்தும் நாயனார் தமது திருத்தொண்டினின்றும் வழுவினா ரில்லை. தாயனார் கூலிக்கு நெல்லறுத்தல் தாயனார் கூலிக்கு நெல்லறுக்கப் புகுந்தார். அவர், செந்நெல் லறுத்துக் கூலியாகப் பெறுஞ் செந்நெல்லை ஆண்டவனுக்கு அமுதாக்குவார்; கார்நெல் லறுத்துக் கூலியாகப் பெறுங் கார் நெல்லைத் தாம் உண்பார். தாயனார் இந்நெறி பற்றி ஒழுகுநாளில், அவர் செல்லும் வயல்களெல்லாம் செந்நெல்லாகக் காணப்பட்டன. அன்பிற் சிறந்த தாயனார், இது யான் செய்த புண்ணியம் என்று மகிழ்ந்து, பெறுஞ்செந்நெல்லை யெல்லாம் ஆண்டவனுக்கே உதவித் தாம் பட்டினி கிடக்கலானார். இலையும் நீரும் உண்டு காலங்கழித்தல் தாயனாரின் அருமை மனைவியார், வீட்டுக்கொல்லையி லுள்ள இலைக்கறிகளைக் கொய்து அவருக்குப் படைக்கத் துவங்கி னார். அன்பர் அதை உண்டு கழிப்பார். கொல்லையில் இலைக்கறி களும் அற்றுப்போயின. அம்மையார் நீர் வார்ப்பார். நாயானர் அதையும் அருந்தித் தமது தொண்டைச் செய்துவந்தார். தாயனார் வீழ்தல் ஒருநாள் தாயனார் வழக்கப்படி ஆண்டவனுக்கு அமு தூட்டச் செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் கூடையில் வைத்துச் சுமந்து செல்கிறார். அவர் பின்னே, மனைவியார் பஞ்சகவ்யத்தை ஏந்திச் செல்கிறார். உணவின்றி மெலிவுற்றிருந்த தாயனார், கால் தளர்ந்து தவறி வீழ்ந்தார். அப்போது அம்மையார் பஞ்சகவ்யக் கலத்தை மூடியிருந்த கையால் நாயகரை அணைக்க முயன்றார். முயன்றும் பயன் விளையவில்லை. செந்நெல் முதலிய யாவும் நிலவெடிப்பில் சிந்திவிட்டன. ஊட்டியை அறுத்தல் தாயனார், இனி ஏன் திருக்கோயிலுக்குப் போதல் வேண்டும்? செந்நெல் முதலியவற்றை ஆண்டவன் அமுது செய்யும் பேற்றைப் பெற்றேனில்லை என்று அரிவாளை எடுத்துத் தமது ஊட்டியை அறுக்கலுற்றார். அச்சமயத்தில் அன்பனார் தமது கையைத் தடுக்க, எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறைவனாரது வீசிய கையும், (அவர் மாவடுவைக் கடிப்பதின்றும் எழும்) விடேல் விடேல் என்னும் ஓசையும் வெடிப்பின்றும் எழுந்தன. ஆண்டவன் திருக்கை அடியவரின் கையைப் பற்றியது. தாயனார் வெருக்கொண்டார். ஊறு நீங்கியது. ஆண்டவன் அருளல் தாயனார் ஆண்டவன் அருளைப் போற்றி நிற்கிறார். சிவ பெருமான் விடைமேல் தோன்றி, நீ புரிந்த செய்கை நன்று. உன் மனைவியுடன் என்றும் நமது உலகில் வாழ்வாயாக என்று அருள் செய்து எழுந்தருளினார். அவருடன் நாயனாரும் அவர்தம் மனைவி யாருஞ் சென்று பெறுதற்கரிய பேற்றைப் பெற்றார். தாயனார் தமது ஊட்டியை அறுக்க அரிவாள் பூட்டினமை யால், அவர் அரிவாட்டாயர் என்னும் தூயநாமம் பெறலானார். ஆனாயர் திருத்தொண்டர் திருவந்தாதி தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன் ஆயவன் ஆனாயன் என்னையு வந்தாண் டருளினனே. திருத்தொண்டர் புராண சாரம் மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருள் மருவுபுகழ் ஆனாயர் வளர்ஆ மேய்ப்பார் கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து குழலிசையில் ஐந்தெழுத்துங் குழைய வைத்துத் தங்குசரா சரங்களெலாம் உருகா நிற்பத் தம்பிரான் அணைந்துசெவி தாழ்த்தி வாழ்ந்து பொங்கியவான் கருணைபுரிந் தென்றும் ஊதப் போதுகஎன் றருளஉடன் போயி னாரே. மழநாட்டில் திருமங்கலம் என்னும் பதியில் ஆயர் குலத்தில் தோன்றியவர் ஆனாய நாயனார். அவர் திருநீற்றினிடத்திற் பேரன்பு வாய்ந்தவர்; மன மொழி மெய்களில் சிவபெருமான் திருவடியையே போற்றுபவர். பசுக் காத்தலும் குழலூதலும் அப் பெரியார், இடையர்க்குத் தலைமை பூண்டு, பசுக் கூட்டங்களைக் காத்துவந்தார். அவர்தம் முயற்சியால் பசுக் கூட்டங்கள் காட்டுக்குப்போய் எவ்வித இடையூறுமின்றி நறும்புல் மேய்ந்து, தூநீர் அருந்தி, நல்வழியில் பெருகலாயின. பசுக்கூட்டங் களை மேய்த்துக் காப்பதுடன், வேய்ங்குழல் வாசிப்பதும் ஆனாயரின் வழக்கமா யிருந்து வந்தது. கொன்றைக் காட்சி ஒரு நாள், ஆனாயர் வழக்கம்போலக் கார்காலத்திற் காடு நோக்கச் சென்றார். அங்கே பூத்துத் தளிர்த்து நின்ற ஒரு கொன்றை மரம் அவரது கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது. அவ்வருங் கொன்றை, தாழ்சடையில் கொன்றை யணிந்த சிவபெருமானைப் போலவே ஆனாயருக்குத் தோன்றலாயிற்று. தோன்றவே, அவர்தம் மனம் சிவத்தில் ஒன்றிவிட்டது; கருவி கரணங்களெல்லாம் குழைந்து குழைந்து உருகின. அவர்பால் அன்புமடை திறந்துகொண்டது. அன்பில் மூழ்கிய ஆயர் பெருமான், வேய்ங்குழலை மணிவாயில் வைத்து, அஞ்செழுத்தை இசையில் அமைத்து, வாசிக்கத் துவங் கினார். அவ்விசையின் திறத்தை என்னென்று கூறுவது! எல்லாம் இசை மயம் அவ்விசை அமுதம் எல்லா உயிர்களிலும் பாய்கிறது. அறுகம் புற்களை மேய்ந்துகொண்டிருந்த ஆனிரைகள் அசைவிடாமல் அவரைச் சூழ்ந்தன; நுரைவாயுடன் பாலூட்டிக் கொண்டிருந்த இளங்கன்றுகள் தங்களை மறந்தன; எருதுகளும், மான் முதலிய காட்டு விலங்குகளும் மயிர் முகிழ்த்து அங்கே வந்து சேர்ந்தன; ஆடும் மயில்கள் அசையாது அணுகின; மற்றப் பறவை இனங்க ளெல்லாம் மயங்கி மயங்கி நெருங்கின; மாடு மேய்த்துக் கொண் டிருந்த கோவலர் அவ்வப்படியே நின்றனர்; நாகலோக வாசிகள் பிலங்கள் வழியாக வந்தார்கள்; மலையில் வாழுந் தெய்வப் பெண்கள் இசையிற் றேங்கி நின்றார்கள்; விஞ்சையர், சாரணர், கின்னரர், தேவர் முதலியோர் விமானங்களில் போந்தனர்; கற்பகத் தருவின் மருங்கிருந்து கிளிகளுக்கு அமுதூட்டிய தேவமகளிர், அக்கிள்ளைகளுடன் தங் குழல் அலைய, விமானங்களில் விரைந் தேறி இசை அமுதத்தைப் பருகினர். வலியார் மெலியா ரெல்லாரும் இசையால் ஒன்றுபட்டமையான், பாம்புகள் மயில்மீது விழு கின்றன; சிங்கமும் யானையும் ஒருங்குசேர்ந்து வருகின்றன; மான்கள் புலியின் பக்கத்தில் செல்கின்றன. காற்று விசைத் தசையவில்லை; மரக்கிளைகள் சலிக்கவில்லை; மலைவீழ் அருவிகளும் காட்டாறு களும் கலித்து ஓடவில்லை; முகில்கள் புடை பெயரவுமில்லை; மழை பொழியவு மில்லை; முழங்கவுமில்லை. இசைக்கு இறைவன் எளிவரல் இவ்வாறு சராசரங்களெல்லாம் இசைவாய்ப்பட்டுப் பொறி புலன்கள் ஒன்றப்பெற்றன. ஆனாயர் குழலோசை, வையத்தை நிறைத்து வானையும் வசப்படுத்திவிட்டது. எஞ்சி நிற்பது என்ன? சிவம் ஒன்றே. அச்சிவத்தின் செவியிலும் குழலோசை நுழைந்தது. பொய்யன்புக் கெட்டாத பெருமான் ஆனாயர் முன்னே தோன்றி, இப்படியே நம்பால் அணைவாய் என்றருளினார். ஆனாய நாயனாரும் அப்படியே ஆண்டவனை அடைந்து பேரின்பம் பெற்றார். மூர்த்தியார் திருத்தொண்டத் தொகை மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. திருத்தொண்டர் திருவந்தாதி அவந்திரி குண்டம ணாவதின் மாள்வன்என் றன்றாலவாய்ச் சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர் நிவந்தபொன் மாட மதுரா புரிஎன்னு நீள்பதியே. திருத்தொண்டர் புராண சாரம் வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம் வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத் தழங்குதிர முழங்கை தரத் தேய்த்த ஊறும் தவிர்ந்தமணர் வஞ்சனையும் தவிர மன்னன் இழந்தவுயி ரினனாக ஞாலம் நல்க எழில்வேணி முடியாத இலங்கு வேடம் முழங்குபுகழ் அணியா விரைநீ றாக மும்மையுல காண்டருளின் முன்னி னாரே. பாண்டி நாட்டிலே மதுரைமா நகரிலே வணிகர் குலத்திலே பிறந்தவர் மூர்த்தி நாயனார். அவர் சிவபத்தியிற் சிறந்தவர்; அன்பையே திருவுருவாக் கொண்டவர். சந்தனக் காப்பு அப்பெரியார், சொக்கலிங்கப் பெருமானுக்குச் சந்தனக் காப் பணிவதைத் தமக்குரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வருநாளில் வடுகக் கருநாடக மன்னன் ஒருவன், தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன் சமண சமயத்தைத் தழுவித் திருநீறணியுஞ் சிவனடியார்க்குத் தீங்கிழைத்து வந்தான். அவன் தீங்கிடை மூர்த்தி நாயனாரது திருத் தொண்டும் நிகழ்ந்து வந்தது. தொண்டுக்கு இடர் கருநாடக மன்னன், மூர்த்தியார்க்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். புரிந்தும், மூர்த்தியார் தந்திருத்தொண்டி னின்றும் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு எவ்வெத் தடைகளைச் செய்ய வேண்டுமோ, அவ்வத் தடைகளைச் செய்தான். நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்தமேலீட்டான் நாயனார், இக் கொடுங் கோலன் என்றே மாய்வான்? ïªehL âUÚ‰W be¿Æid¤ jh§F« ntªjid v‹nw bgW«? என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடித் தேடிப் பகல் முழுவதுந் திரிந்தார். சந்தனக் கட்டை எங்குங் கிடைக்கவில்லை. முழங்கையைத் தேய்த்தல் மூர்த்தியார் என் செய்தார்? அவர் திருக்கோயிலுட் புகுந்தார்; இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லையே என்று கருதி, ஒரு சந்தனக் கல்லின்மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் வெள்ளம்போல் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது. என்புத் துவாரங்கள் திறந்தன. மூளை ஒழுகியது. இராச்சியம் அருளல் அக்காட்சி கண்டு பொறா ஆண்டவன் அருளால் ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே. இராச்சியமெல்லாம் நீயே கைக்கொள்க; கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்துவிடுக; உன் திருப்பணியைச் செய்து நமது சிவலோகத்தை அடைவாயாக என்று ஒரு வானொலி எழுந்தது. எழுந்ததும், நாயனார் நடுக்குற்றார்; கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கையின் ஊறு நீங்கிற்று; கை பழையபடி யாயிற்று. மன்னன் மரணம் மூர்த்தியார், இறைவன் திருவருள் சுரப்பின், இன்வையத்தை நான் தாங்குவேன் என்று நினைந்து, திருக்கோயிற் புறத்தில் நின்றார். அன்றிரவே அக்கொடிய மன்னன் இறந்துவிட்டான். அடுத்தநாட் காலையில் அவனுக்கு ஈமக்கடன்கள் செய்யப்பட்டன. யானை அரசரைத் தேர்ந்தெடுத்தல் இறந்துபட்டவனுக்குப் புதல்வரில்லை; தாயத்தாருமில்லை. mjdhš ‘vtiu muruh¡FtJ? என்று அமைச்சர்கள் ஆலோசித்தார்கள்; முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும், அஃது எவரை எடுத்து வருகிறதோ அவரே அரசராதல் வேண்டுமென்றுந் தீர்மானித்தார்கள்; அவ்வாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத் துகிலால் அதன் கண்ணைக் கட்டிவிட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து, அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது. அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்; அவரை முடிசூட்டு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள்; சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். மும்மையும் முடிசூட்டலும் முடி சூட்டற்குரிய வினைகள் தொடங்கப்பட்டன. அப்போது நாயனார், அமைச்சர்களை நோக்கி, சமணம் அழிந்து சைவம் ஓங்கினால் யான் அரசாட்சியை ஏற்றல் கூடும் என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலன்களாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும் என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலாயினோர் உடன் பட்டனர். அம்முறையில் முடி சூட்டுவிழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது, யானைமீது ஏறி அரண்மனை சேர்ந்தார். மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு - கண்டிகை - சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடுநாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். முருகனார் திருத்தொண்டர் திருவந்தாதி பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர் மதியஞ் சடையார்க் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து துதியங் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் தொண்டனம்பொன் அதிகம் பெறும்புக லூர்முரு கன்னெனும் அந்தணனே. திருத்தொண்டர் புராணம் சாரம் மன்னுதிருப் புகலூர்வாழ் முருக னாராம் மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார் சென்னியினுக் கழகமரும் மலர்கள் கொய்து திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக் கன்னிமதிற் கழுமலநா டுடைய நாதன் காதல்மிகு மணங்காணுங் களிப்பி னாலே இன்னல்கெட உடன்சேவித் தருளால் மீளா திலங்குபெரு மணத்தரனை எய்தி னாரே. முருக நாயனார் சோழ நாட்டிலே திருப்புகலூரிலே வேதியர் குலத்திலே தோன்றியவர். அவர் சிவபத்தியிலும் அடியார் பத்தியிலுஞ் சிறந்தவர். அவர் நாள்தோறும் வைகறை எழுவார்; காலைக் கடன்களை முடிப்பார்; நீராடுவார்; திருநந்தனவனம் புகுவார்; கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நால்வகை பூக்களைக் கொய்வார்; அப்பூக்களால் இண்டை, தாமம், கண்ணி, பிணையல் முதலிய மாலைகள் கட்டுவார்; அம்மாலைகளைச் சிவபிரானுக்குச் சூட்டுவார்; நெஞ்சங் குழைந்து குழைந்து உருகுவார்; அஞ்செழுத்து ஓதுவார். இம்முறையில் திருத்தொண்டு செய்து வந்த முருக நாயனார், திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு நண்பராகி, அச்சுவாமிகளின் திருமணச் சிறப்பிற் கலந்து சிவபிரான் திருவடி நீழலை அடைந்தார். உருத்திரபசுபதியார் திருத்தொண்டர் திருவந்தாதி அந்தாழ் புனலிடை அல்லும் பகலுநின் றாதரத்தால் உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தார் உருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே. திருத்தொண்டர் புராண சாரம் பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும் பசுபதியார் எனும்மறையோர் பணிந்து செந்தேன் அங்கமல மடுவினிடை அல்லும் எல்லும் அகலாதே யாகளமாய் அமர்ந்து நின்று திங்கள்வளர் சடைமுடியான் அடியே போற்றித் திருஎழுத்தும் உருத்திரமும் திருந்த ஓதி மங்கையிடம் உடையபிரான் அருளால் மேலை வானவர்கள் தொழும்உலகில் மன்னி னாரே. சோழ நாட்டுப் பதிகளில் திருத்தலை என்னும் பதியும் ஒன்று. அப்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பசுபதி என்பவர். அப்பெரியார் தாமரைத் தடாகத்துட் சென்று கழுத்தளவு நீரிலே நின்று ஸ்ரீ ருத்திரத்தை ஓதுவார். இஃது அவர்தந் திருத்தொண்டு. அவர் இத்திருத்தொண்டில் ஈடபட்டுச் சின்னாள் வாழ்ந்து சிவபதஞ் சேர்ந்தார். உருத்திர மந்திரத்தை ஓதியபடியால், அவர் உருத்திர பசுபதி நாயனார் என்ற திருப்பெயரைப் பெற்றார். திருநாளைப்போவார் திருத்தொண்டர் திருவந்தாதி நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தானருள் பெற்றுநாளைப் போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியாய வன்பதிதான் மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பரிம் மண்டலத்தே. திருத்தொண்டர் புராண சாரம் நன்மைதிகழ் மேற்காநாட் டாத னூர்வாழ் நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப் பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப் பொய்கைஅமைத் தடலேறு பிரிய நோக்கி வன்மதில்சூழ் தில்லைஇறை அருளால் வாய்ந்த வண்தழலின் இடைமூழ்கி மறையோர் போற்ற மின்மலிசெஞ் சடைமுனியாய் எழுந்து நாதன் விளங்குநடந் தொழமன்றுள் மேவி னாரே. சோழ நாட்டின் ஒரு பாங்கரிலுள்ளது மேற்காநாடு. அந் நாட்டில் ஆதனூர் என்னும் ஒரு திருப்பதி உண்டு. அத் திருப்பதியில் ஆதிதிராவிடர் மரபில் தோன்றியவர் நந்தனார் என்பவர். அன்புத் தொண்டும் நெகிழ்ச்சியும் நந்தனார்க்கு மானிய நிலங்களிருந்தன. அவைகளின் விளைவு அவர்தம் வாழ்விற்குப் பயன்பட்டு வந்தது. சிவாலயங்களிலுள்ள பேரிகைக்குத் தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், சிவார்ச்சனைக்குக் கோரோசனையும் அவரால் கொடுக்கப்பட்டு வந்தன. அவரது சிந்தை சிவன் கழலிலேயே சேர்ந்து நிற்கும். திருக்கோயில்களின் வாயிற் புறத்தே நின்று ஆண்டவனைத் தொழுவது அப்பெரியாரது வழக்கம். தொழுகையில் அவருடைய நெஞ்சங் கசிந்து கசிந்து உருகும்; கண்கள் நீர் சொரியும். அன்பால் அவர் மெய்ம்மறந்து ஆடுவார்; பாடுவார். திருப்புன்கூர்த் தரிசனம் திருப்புன்கூர்ச் சிவலோகநாதனைக் கண்டு பணிசெய்தல் வேண்டும் என்னும் வேட்கை நந்தனார்பால் எழுந்தது. அவ்வேட்கை யைத் தணிக்கை செய்ய அவர் திருப்புன்கூர் சென்றார்; சென்று திருக்கோயில் வாயிலிலே நின்று, சிவலிங்கப் பெருமானை நேரே கண்டு தொழ விரும்பினார். அன்பர்கள் விரும்புமாறு அருள்புரியும் சிவபெருமான், தம்முன்னுள்ள இடபதேவரை விலகும்படி செய்து, நந்தனார்க்குக் காட்சி தந்தருளினார். அடியவர் பெருமான் அன்புடன் பணிந்து ஆனந்த முற்றார்; பின்னே அவ்விடத்தில் ஒரு பள்ளத்தைக் கண்டு, அதைப் பெரிய திருக்குளமாக வெட்டித் திருப்பணி செய்து தமதூருக்குத் திரும்பினார். அவர் வேறு பல திருப்பதிகட்கும் போந்து போந்து தமது வழித்தொண்டு செய்வார். நாளைப் போவேன் ஒருநாள் நந்தனாரது சிந்தை சிதம்பர தரிசனத்தின்மீது சென்றது. சென்ற அன்றிரவு முழுவதும் அவர் உறங்கினாரில்லை. பொழுது புலர்ந்தது. சிதம்பரப் பித்து அவரை விட்டகலவில்லை. அவர் தில்லையை நினைந்து நினைந்து, அந்தோ! தில்லை நண்ணினும் திருக்கோயிலுட் புகுந்து திருக்கூத்தைக் காணும் பேறு இப்பிறவிக்கு இல்லையே என்று வருந்துவார்; இஃதும் எம் பெருமான் திருவருள் என்று போக்கொழிவார்; மேலும் மேலும் எழுங் காதலால் நாளைப்போவேன்; நாளைப்போவேன் என்று சொல்வார். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. ஒருநாள் திருநாளைப் போவார் உறுதிகொண்டு தில்லை நோக்கிச் சென்று திருவெல் லையை அடைந்தார். ஆண்டவனருளல் m§nf, mt®, mªjz®j« ahfrhiyfisí«, ntj« XJ« ïl§fisí«, kl§fisí«, ãwt‰iwí§ f©ld®; mŠád®; mŠá¤ âUbtšiyia k£L« ïuî gfš tyŠ brŒthuhÆd®; brŒJ brŒJ xUehŸ, 1‘cŸ EiHɉF ï¥ãwÉ jilahf É»wnj; v›tÊÆš âU¡T¤ij¡ f©L bjhGtJ? என்று நினைந்து நினைந்து மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டனர். அன்பருளங் கோயில் கொண்ட தில்லைக்கூத்தன், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல்செய்து, இப்பிறவி ஒழிய நீ நெருப்பில் மூழ்கி அந்தணருடன் நம்முன் அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளினன்; மேலுந் தொடர்ந்து தில்லைவாழ் அந்தணர்தங் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்க்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்தருளினன். அந்தணர் ஐயரைக் காண்டல் அந்தணர் பெருமக்கள் விழித்தெழுந்து, அச்சத்துடன் ஆலயத் திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடஞ் சென்றார்கள்; சென்று, ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம்; உம் பொருட்டு எரி அமைக்கப் போகிறோம் என்றார்கள். திருநாளைப் போவார், உய்ந்தேன்; உய்ந்தேன் என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார். பொன்மேனி பெறல் அந்தணர் தென்மதிற் புறத்துத் திருவாயிலின் முன் தீ வளர்த்து, அதைத் திருநாளைப்போவார்க்குத் தெரிவித்தனர். திருநாளைப் போவார் தீக்குழியை அடைந்து, இறைவன் திருவடியை மனங் கொண்டு, அதை வலம் வந்து நெருப்பில் மூழ்கினார். முழுகியதும், அவர்தம் மாயப்பொய்யுடலம் ஒழிந்தது. அவர், புண்ணியப் பொன்மேனி திகழும் முனிவராய்ப் பூணூலுஞ் சடைமுடியும் பொலிய எழுந்தார். அது கண்டு அமரர் மலர் மாரி சொரிந்தனர்; அந்தணர் கை கூப்பித் தொழுதனர்; அடியவர் மகிழ்வெய்தினர். சிவமாதல் திருநாளைப்போவார், தில்லைவாழ் அந்தணர் முதலியவருடன் சென்று திருக்கோபுரத்தைக் கண்டு தொழுது பொன்னம்பலம் புகுந்தார். புகுந்ததும், அவர்தம் திருவுருவம் மறையவர்க்கும் மற்றவர்க்கும் புலப்படவில்லை. அவரனைவரும் அதிசயித்தனர். நடராஜப்பெருமான் திருநாளைப் போவார்க்குத் தமது திருவடிப் பேற்றை நல்கினர். திருக்குறிப்புத் தொண்டர் திருத்தொண்டர் திருவந்தாதி மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா மீண்டும் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத் தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. திருத்தொண்டர் புராண சாரம் கொந்தலர்பூம் பொழிற்கச்சி நகர்ஏ காலிக் குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்து ளார்பால் வந்திறைவா நமக்கின்று தாரீ ராகில் வருந்தும் உடல் எனவாங்கி மாசு நீத்த கந்தைபுல ராதொழிய மழையும் மாலைக் கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கன்மேல் சிந்தமுடி புடைப்பளவில் திருவே கம்பர் திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே. தொண்டை நாட்டிலே உமையம்மையார் அறம் வளர்த்த திருப்பதி காஞ்சிமா நகரம். அத் திருப்பதியிலே வண்ணார் குலத்திலே தோன்றிய ஒரு நாயனார் இருந்தார். அவர், அடியவர் திருக்குறிப்பை அறிந்து திருத்தொண்டு செய்தமையால் அவருக்குத் திருக்குறிப்புத் தொண்டர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அடியவர்க்கு வதிரம் வெளுத்துக் கொடுப்பது அவர்தந் தொண்டு. தொண்டுக்கு இடர் குளிர் காலத்தில், ஒருநாள் சிவபெருமான் திருநீறு பூசி, அழுக்கேறிய கந்தை யுடுத்தி, மெலிந்த மேனியாய், வறியராய், நாயனார்பால் அணைந்தார். நாயனார் அவரைக் கண்டு, எதிர் கொண்டு பணிந்து, அவர்தந் திருக்குறிப்பை அறிந்து, தவத்தீர்! திருமேனி இளைத்திருப்பதென்ன? அணிந்துள்ள கந்தையை அளித்தருளும்; வெளுத்துத் தருகிறேன் என்று வேண்டி நின்றார். தவவேடர், நாயனாரை நோக்கி, இக்கந்தை அழுக்கேறியதே. குளிரின் கொடுமையால் இதைவிடவும் மனமெழவில்லை. பொழுது போவதற்குள் இதை ஒலித்துக்கொடுக்க முடியுமாயின், இதைக் கொண்டு போம் என்றருளினார். நாயனார் அதற்கு இசைந்தார். இறைவர், பொழுது போவதற்குள் இதை வெளுத்து உலர்த்திக் கொடுத்தல் வேண்டும். இல்லையேல், நீர் இவ்வுடலுக்கு இடர் செய்தவராவீர் என்று கூறிக் கந்தையைக் கொடுத்தார். நாயனார் அதை வாங்கி வெளுக்கப் புகுந்தார். அப்பொழுது சிவனருளால் மேகங்கள் திரண்டு எழுந்து மழை பொழிந்தன. தலையைப் பாறையில் மோதல் திருக்குறிப்புத் தொண்டர் என்செய்வார்! அவர், சிவனடியார்க் களித்த உறுதிமொழியை நினைக்கிறார்; வருந்துகிறார்; மழை விடவுங் கூடும் என்று நின்று பார்க்கிறார். மழை விடவில்லை. பொழுது போயிற்று. அடியேன் குற்றேவல் தவறிற்றே என்று நாயனார் விழுந்தார்; விழுந்து, மழை யொழியாது; அடியவர் குறிப்பிட்ட காலவரையுங் கழிந்தது. முன்னரே இதை ஒலித்து வீட்டில் காற்றேறக் கட்டிவிட்டேனில்லை; அடியவர் திருமேனியைக் குளிரினால் வருந்தச் செய்தேன்; பாவியானேன் என்று எழுந்து, கற்பாறையில் தமது தலையை மோதினார். அங்கே சிவபெருமான் திருக்கைதோன்றி நாயனாரைப் பற்றிக் கொண்டது. புனல்மழை யொழிந்தது. பூமலை சொரிந்தது. சிவபெருமான் உமையம்மையாருடன் மழ விடைமேற்றோன் றினார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மெய்ம்மறந்து பணிந்து எழுந்து கைதொழுது நின்றார். சிவபெருமான் நாயனாரைப் பார்த்து, உனது நிலையை மூவுலகும் அறியும்படி செய்தோம். நீ நமது உலகை அடைவாயக என்று அருள் சுரந்து மறைந்தருளினார். சண்டேசுரர் திருத்தொண்டர் திருவந்தாதி குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ் தலமே றியவறற் சண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும் வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமேல் நலமே றியபால் சொரிந்தவர் சூட்டிய நன்னிதியே. திருத்தொண்டர் புராண சாரம் வேதமலி சேய்ஞலூர் எச்ச தத்தன் விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர் கோதனம்மேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே கொண்டுநிரை மண்ணியின்தென் கரையி னீழல் தாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத் தாதைபொறா தவைஇடறுந் தாள்கள் மாளக் காதிமலர்த் தாமமுயர் நாம முண்ட கலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே. சோழநாட்டுத் தலைநகரங்களுள் ஒன்றாயிருப்பது திருச்சேய் ஞலூர் அவ்வூரில் வேதியர் குலத்தில் காசிபர் கோத்திரத்தில் உதித்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் எச்சதத்தன் என்பது. அவன், பவித்திரை என்பவளை மணந்து இல்லறம் நடாத்தி வந்தான். அவனுக்கு விசாரசருமர் என்பவர் தவப் புதல்வராகப் பிறந்தார். முற்பிறப்புணர்வு விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றனர். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடை பெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினர். அவைகளைத் தாம் கற்பிப் பதற்கு முன்னரே அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந் திருந்ததைக் கண்டு ஆசிரியர் அதிசயித்தனர். வேதாக மங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் எனத் துணிந்து அவ்வன்பில் விசாரசருமர் நிற்பாராயினர் பசுவின் மாண்பு ஒரு நாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கருடன் வெளியே புறப்பட்டார். அவ்வேளையில் அவருடன் அவ்வூர் ஆனிரைகளும் போந்தன. அந்நிரைகளிலுள்ள ஓரிளங்கன்றுப் பசு, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன் அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார்; ஆங்கே பசுக்களின் மாண்பை நினைந்தார்; என்னே! பசுக்களின் உறுப்புகளில் தேவரும் முனிவரும் இருக்கின்றனர். புண்ணியத் தீர்த்தங்கள் இருக்கின்றன! சிவபிரான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்ய மளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன! அவற்றின் சாணம் திருநீற்றுக்கே மூலம்! M©lt‹ C®âah»a btŸnsW gR¡fËd¤ij¢ nr®ªjJ! என்று எண்ணி எண்ணி நின்றார்; மேலும் பசுக்களின் மாண்பை உன்னி, இப்பசுக்களை மேய்த்துக் காப்பதைவிட வேறு சிறந்த தொண்டு ஒன்றுண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும் என்று உறுதி கொண்டார்; கொண்டு, ஆயனைப் பார்த்து, இவ்வானிரையை இனி நீ மேய்த்தல் வேண்டா. அத் தொண்டை யானே செய்யப் போகிறேன் என்றார். ஆயன் நடுநடுங்கிக் கைகூப்பி ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர் களின் சம்மதம் பெற்று, அன்றுமுதல் பசுக்களை மேய்க்குந் திருத் தொண்டை ஏற்றார். பசு மேய்த்தல் விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங் கரையிலும் வேறிடங் களிலும் மேய்ப்பார்; பசும் புற்களைப் பறித்துப் பசுக்களுக்கு ஊட்டுவார்; நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த அவைகளை விடுவார்; அச்சத்தைத் தாமே முன்னின்று நீக்குவார்; காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகொழுகச் செழித்தன. வேதியரும் மற்றவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பசுக்களின் அன்பு பசுக்கள் தங்கள் கன்றுகளைப் பார்க்கிலும், மறைக் கன்றாகிய விசாரசருமரை அதிகம் நேசித்துவந்தன. கன்றுகள் தங்களைப் பிரியினும் அவை தளரமாட்டா. விசாரசருமர் தங்களைவிட்டுப் பிரியின், அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும்; தாங்களே பால் சொரியும். சிவபூசை பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணுந்தொறுங் காணுந்தொறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது; விசாரசருமர் மண்ணியாற்றங்கரையில், ஒரு மணற் றிட்டையில், ஓர் ஆத்தி மரத்தடியில், மணலினால் சிவலிங்கம் ஒன்று அமைப்பார்; திருமதில்கள் எழுப்புவார்; கோபுரங்கள் வகுப்பார்; சுற்றாலயங்கள் எடுப்பார்; வழிபாட்டுக்கு அவர் ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வருவார்; புதிய குடங்களை வாங்கி வருவார்; கறவைப் பசுக்களிடஞ் சென்று மடியைத் தீண்டுவார்; பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொணர்வார்; சிவலிங்கத்தை அருச்சிப்பார்; திருமஞ்சனம் ஆட்டுவார்; பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்புவார். இவ் வன்புப் பூசையைச் சிவபெருமான் இன்புடன் ஏற்பார். திரு மஞ்சனத்துக்குப் பால் உதவியும் பசுக்கள் உரியவர்க்குப் பால் குறையாதபடி வழங்கி வந்தன. அந்தணர் எச்சரிக்கை இவ்வாறு நிகழ்ந்துவரு நாளில், ஒருநாள் ஒருவன் சேய்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். அவன் உண்மை யுணராதவ னாய், அவ்வூர் அந்தணர்க்கு அதை அறிவித்தான். அவர் உடனே எச்சதத்தனை அழைப்பித்து, அவ்வொருவன் சொன்னதை அவனுக்குச் சொற்றனர். எச்சதத்தன், இஃதெனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி அப்பிழை நிகழுமாயின் அஃது என்னுடையதாகும் என்று வணங்கி விடை பெற்றுச் சென்றான். தந்தையைத் தடிதல் அடுத்தநாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப்போனார். அன்று எச்சதத்தன் அவரைத் தொடர்ந்து பின்னே சென்றான்; சென்ற மணற்றிட்டையின் அருகேயுள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்திருந்தான். விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பாற் குடங்களை ஏந்தி அபிடேகஞ் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தினின்றும் விரைந்திறங்கி ஓடிக் கைத்தண்டால் பிள்ளையார் முதுகில் ஓங்கி அடித்தான். வெம்மொழிகளால் அவரை வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச் சீறி அன்பரைப் புடைக்கிறான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல் பாவி, பாற்குடங்களை உதைத்தான் அவ்வடாத செயலைச் செய்தவன், தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார்; உணர்ந்து அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்த ஒரு கோலை எடுத்தார். அக்கோல் மழுவாயிற்று. அம்மழுவால் தந்தையின் கால்களை வெட்டி, அவர் முன்போலச் சிவபூசையில் அமர்ந்தார். சிவபெருமான் தேவியுடன் விடைமேல் தோன்றினார். விசாரசருமர், ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் எய்தினார்; விழுந்து வணங்கினார். சண்டீச பதமருளல் சிவபெருமான், விசாரசருமரைத் திருக்கையால் எடுத்து, நம் பொருட்டு நீ உன் தந்தையைத் தடிந்தாய்? இனி நாமே உனக்கு அடுத்த தந்தை என்று திருவாய்மலர்ந்து அவரை அணைத்தார்; அவருடலைத் தடவினார்; உச்சிமோந்தார்; மகிழ்ந்தருளினார். விசாரசருமரது திருமேனி சிவமயமாயிற்று. அவர் பேரொளியாய் விளங்கினார். சிவபெருமான் சேய்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, திருத்தொண்டர்க்கு உன்னைத் தலைவனாக்கினோம். நாம் உண்பன, உடுப்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம் என்று அருளித் தமது திருச்சடையிலுள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருள் செய்த சண்டேசுர பதத்தை அடைந்தார். எச்சதத்தன் சண்டீசுரப் பெருமானால் வெட்டுண்டமையால் அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான். திருநாவுக்கரசு சுவாமிகள் திருத்தொண்டத் தொகை திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. திருத்தொண்டர் திருவந்தாதி நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள் உற்றவன் உற்ற விடமடை யாரிட ஒள்ளமுதாத் துற்றவ னாமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே. மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணையன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலில் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர்பி ரான்ற னருந்தமிழே. திருத்தொண்டர் புராண சாரம் போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப் பொருவில்கொறுக் கையர்அதிபர் புகழ னார்பால் மாற்றரும்அன் பினில்திலக வதியாம் மாது வந்துதித்த பின்புமரு ணீக்கி யாரும் தோற்றிஅமண் சமயமுறு துயரம் நீங்கத் துணைவர்அருள் தரவந்த சூலை நோயால் பாற்றருநீள் இடரெய்திப் பாடலிபுத் திரத்திற் பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார். வந்துதமக் கையரருளால் நீறு சாத்தி வண்டமிழால் நோய்தீர்ந்து வாக்கின் மன்னாய் வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி வியன்சூலங் கொடிஇடபம் விளங்கச் சாத்தி அந்தமில்அப் பூதிமகன் அரவு மாற்றி அருட்காசு பெற்றுமறை அடைப்பு நீக்கிப் புந்திமகிழ்ந் தையாற்றில் கயிலை கண்டு பூம்புகலூர் அரன்பாதம் பொருந்தி னாரே. தமிழ்நாட்டில் பலப்பல அழகிய நாடுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று திருமுனைப்பாடி நாடு. அத் திருநாட்டில் திருவாமூர் என்றொரு திருப்பதி உண்டு. அதன்கண் வேளாளமரபில், குறுக்கையர் குடியில் தோன்றிய புகழனார் என்பவர் ஒருவர் இருந்தனர். அவர், மாதினியார் என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடாத்திவந்தனர். விருந்தோம்புவதிலும் சுற்றங்களைத் தாங்குவதிலும் அவர் பேர்பெற்றவர். திலகவதியார் - மருணீக்கியார் - தோற்றம் புகழனார்க்கும் மாதினியார்க்கும் முதலில் திலகவதியார் என்ற புதல்வியார் பிறந்தார். சில ஆண்டு கடந்த பின்னர் அவர்கள்பால் மருணீக்கியார் என்பவர் தோன்றினார். புகழனார் மருணீக்கியாரை அன்புடன் வளர்த்துக் கலைகளைப் பயிற்றுவித்தார். மருணீக்கியார் பல கலைகளைப் பயின்று இளம்பிறைபோல் வளர்ந்து வரலானார். திலகவதியார்க்குப் பன்னிரண்டு வயதாயிற்று. கலிப்பகையார் திலகவதியாரை மணம் பேசுவித்தல் அந்நாளில், கலிப்பகை நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் வேளாளர்; சிவனடியார்; சேனாதிபதி. அந்நாயனார், திலகவதி யாரை மணம் புரிய விரும்பிச் சில பெரியோரைப் புகழனாரிடம் அனுப்பினார். அவர் புகழனாரிடம் போந்து கலிப்பகையார் கருத்தைத் தெரிவித்தனர். புகழனார், குணம் குலம் முதலியன பேசிய பின்னர்த் தம் மகளைக் கலிப்பகையார்க்குக் கொடுக்க இசைந்தனர். அந் நற்செய்தியைப் பெரியோர் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். திருமணம் நிகழ்வதற்குள் வடபுலத்தில் போர்மூண்டது. அப் போர்முனைக்குக் கலிப்பகையார் அனுப்பப்பட்டார். அங்கே அவர் நீண்டநாள் போர்புரிதல் நேர்ந்தது. பெற்றோர் மறைவு அவ்வேளையில் திருவாமூரில் புகழனார் பிணிவாய்ப்பட்டு விண்ணெய்தினார். அவர்தம் மனைவியாராகிய மாதினியாரும் அவருடன் உயிர் துறந்தார். திலகவதியாரும், மருணீக்கியாரும் துயரக் கடலில் அழுந்தினர். உறவினர் தேற்றத்தேறி அவ்விருவரும் தாய் தந்தையருக்கு இறுதிக்கடன் ஆற்றினர். தம்பியார் பொருட்டுத் தமக்கையார் உயிர் தாங்குதல் கலிப்பகையார் வீரப் போர் புரிந்து போர்களத்தில் மாண்டார். அச் செய்தி திலகவதியார்க்கு எட்டிற்று. அம்மையார், என்னருமைத் தாய் தந்தையர் என்னை அவருக்கு மணம் பேசி முடிவு செய் திருந்தனர்; இவ்வுயிர் அவருடையதாயிற்று; ஆதலால் இவ்வுயிரை அவ்வுயிரோடு இசைவிப்பேன் என்று துணிவு கொண்டார். அந் நிலையில் மருணீக்கியார், அம்மையாரை வணங்கி, நம் தாய் தந்தையர் சிவலோகமடைந்த நாள்தொட்டு உம்மையே அவராகக் கருதி வாழ்ந்து வருகிறேன்; என்னைத் தனியனாக விடுத்துச் செல்லத் துணிவீராயின், முதலில் என் உயிரை விடுகிறேன் என்று புலம்பினார். திலகவதியார், தம்பியார் உலகில் வாழ்தல் வேண்டும் என்னும் தயா உடையரானார். அதனால் அம்மையார், பொன் மணி நூல் பூணாது, அனைத்துயிர்க்கும் அருள் பூண்டு, இல்லத்திலேயே தவம் புரிய லானார். மருணீக்கியார் துயரொழிந்தார். மருணீக்கியார் அறத்தொண்டு பின்னே, மருணீக்கியார் உலக நிலையாமை முதலியவற்றை உணர்ந்து அறநெறியில் நின்றார். அவர் அறச்சாலைகள் அமைத்தார்; தண்ணீர்ப் பந்தர் வைத்தார்; சோலைகள் வளர்த்தார்; குளங்கள் எடுத்தார்; விருந்தளித்தார்; நாவலர்க்கு உதவினார். அவர் துறவு பூண்டு சமய ஆராய்ச்சியில் தலைப்பட்டார். ‘rka§fˉ áwªj rka« vJ? என்பதை உணர அவருக்கு ஆண்டவன் அருளினானில்லை. மருணீக்கியார் தருமசேனராதல் மருணீக்கியார் சமண சமயத்தில் பற்றுள்ளங்கொண்டு, பாடலிபுத்திரம் போந்து, சமண் பள்ளி அடைந்தார். அங்கே சமணர், வீடறியும் நெறி தம் நெறியேஎன்று மருணீக்கியாருக்கு அறிவுறுத்தினர். மருணீக்கியார் சமண சமயக் கலைகளை நன்றாக ஓதி யுணர்ந்தார். அவர்தம் புலமையையுந் தெளிவையுங் கண்ட சமணர், அருக்குத் தருமசேனர் என்னும் பெயரும் சூட்டி, அவரைக் குருவாகக் கொண்டனர். தருமசேனர் புத்தரை வாதில் வென்று, சமண சமயத்தை வளர்த்து வந்தார். திலகவதியாருக்குத் தம்பியார் நினைவு தோன்றல் திலகவதியார் சிவநெறியில் நின்று, சிவனருள் பெறத் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து, திருத்தொண்டு செய்து வந்தார். ஒருநாள் அவருக்குத் தம்பியார் நினைவு தோன்றிற்று. அவர், துயருற்றுத் திருவதிகைப் பெருமானைத் தொழுது, பெருமானே! என்னை ஆண்டருள்பவர் நீராயின், இக்காலச் சமணப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் என் தம்பியாரை அதனின்றும் எடுத்தாளல் வேண்டும் என்று பன்முறை விண்ணப்பித்தார். சிவபெருமான் அம்மையார் கனவில் தோன்றி, உன் மனக்கவலையை ஒழிப்பாயக; உன் தம்பி முன்னமே முனியாகி நம்மை அடையத் தவஞ் செய்தவன்; அவனிடம் சூலை நோய் செலுத்தி அவனை ஆண்டருள்வோம் என்று அருளிச் செய்தார். சூலை நோய் எல்லாம் வல்ல இறைவனருளால் தருமசேனர் வயிற்றில் சூலை நோய் புகுந்தது; புகுந்து குடலை முடுக்குகிறது. தருமசேனர் வருந்தினார்; வருந்தி வருந்தி அவர் பாழி அறையில் மயங்கி வீழ்ந்தார். அவர் சமண சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் நோய் தீர்க்க முயன்றார். நோய் மேலும் மேலும் முடுகியே எழுகிறது. அவர்தம் துன்பங் கண்ட சமணர் பலர் ஒன்று சேர்ந்து, இச்சூலை மிகக் கொடியதாயிருக்கிறது. இது நஞ்சுபோல் கவர்கிறது. இதைப் போன்ற தொன்றை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ïj‰ bf‹ brŒtJ! என்று துயருழந்தனர். பின்னே அவர் பார்ப்போம் என்று குண்டிகை நீரை மந்திரித்துத் தருமசேனரைக் குடிப்பித்தனர்; மயிற்பீலிகொண்டு அவரது காலளவுந் தடவினர். நோய் தணிந்த பாடில்லை. அது, முன்னிலும் வீறுகொண்டு முடுக்குகிறது. அடி கண்மார் வேறு பல வழியிலும் முயன்றனர்; முடிவில் இது நம்மால் போக்கல் அரிது என்று சொல்லிக் கைவிட்டனர். தருமசேனர் தூதனுப்பல் தருமசேனர் என் செய்வார் பாவம்! அவர்தம் நெஞ்சம் திலகவதியாரை நினைந்தது. அவர் தமது நிலையைத் திலகவதி யாருக்குத் தெரிவிக்கச் சமையற்காரனை அனுப்பினார். அவன் திருவதிகை யடைந்து, அருந்தவக் கொழுந்தாகிய திலகவதி யம்மையார் நந்தனவனத்தின் புறம்பணையும்போது, அவரைக் கண்டான்; இறைஞ்சினன்; உமக்கிளையவர் ஏவலினால் வந்தேன் என்றனன். அம்மையார், என்ன! mtU¡F Vjh»Y« Ô§F c©nlh? என்று கேட்டார். அதற்கு அவன் ஆம்; உண்டு என்று நிகழ்ந்ததைக் கூறி, உம்மிடம் உய்யும் வழி கேட்டு இரவே திரும்பி வருமாறு என்னை அவர் அனுப்பினார் என்றான். அம்மையார், சமண் பள்ளியில் யான் அடி எடுத்து வையேன். இதைத் தம்பியாருக்குத் தெரியப்படுத்து என்று கூறினார். அதைக் கேட்ட சமையற்காரன் திரும்பித் தருமசேனரிடஞ் சென்று அம்மையார் சொற்றதைச் சொற்றான். தருமசேனர் திருவதிகை சேரல் நோயால் வருந்துந் தருமசேனர், அந்தோ! v‹ brŒnf‹! என்று மனஞ் சோர்ந்தார். அந்நிலையில் ஆண்டவன் அருள் கூடலாயிற்று. மருணீக்கியார், இவ்வெந் நோய், இப்புன்னெறியில் உள்ளவரை ஒழியாது; நன்னெறி நின்று ஒழுகும் திலகவதியார் திருவடி அடைவேன் என்று உறுதி கொண்டார். அப்பொழுது சிறிது ஆறுதல் உண்டாயிற்று. அவர் சமணக் கோலங்களை நீக்கி, வெள் ளாடை புனைந்து, சூலைநோய்க் காரணத்தால் சிலரைப் பற்றிக் கொண்டு திருவதிகையில் உள்ள திலகவதியார் திருமடத்தைச் சோர்ந்தார். அங்கே அவர் தமக்கையாரைப் பார்த்து, நங்குலஞ் செய்த நற்றவப் பயனே! அடியேன் சூலை நோயால் பெரிதும் வருந்து கிறேன்; பொறுக்க முடியவில்லை; உய்யும் வழி உணர்த்தி யருள்க என்று திருவடியில் வீழ்ந்தார். திலகவதியார் தம்பியாருக்குத் தீக்கை செய்தல் அம்மையார் தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவ பெருமான் திருவருளை நினைந்தார்; கைதொழுதார். தொழுது பரசமயப் படுகுழியில் வீழ்ந்து வருந்தும் தம்பியாரே! எழுந்திரும் என்றார். மருணீக்கியார் நோயுடன் நடுங்கி எழுந்து தமக்கையாரை வணங்கி நின்றார். அருந்தவ அரசியார், இது சிவபெருமான் திருவரு ளாகும். அவரே பற்றை யறுக்கும் பேரருளாளர். அவர்க்கே தொண்டு செய்க என்று கட்டளையிட்டார்; தம்பியார் திருக்கோயிலுள் புகுதற்குத் திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றை அவருக்குக் கொடுத்தார். மருணீக்கியார் திருநீற்றை வாங்கி அணிந்துகொண்டார்; பொழுது புலர்ந்தது. சூலை போதல் திலகவதியார் வழக்கம்போலத் திருவலகும், திருமெழுக்கும், திருத்தோண்டியுந் தாங்கி ஆலயத்துக்குப் புறப்பட்டார். அவர் தம்பியாரையும் உடனழைத்துச் சென்றார். மருணீக்கியார், வீரட்டா னேசுரர் திருக்கோயிலைத் தொழுது, வலம் வந்து, திருமுன் விழுந்து எழுந்து நின்றார். அதுகாலை, சிவநாதன் திருவருளால் அவருக்குத் தமிழ்ப் பாமாலை சாத்தும் மெய்யுணர்ச்சி தோன்றிற்று. தோன்றவே, சூலை நோய் ஒழியவும், உலகம் உய்யவும், கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்னுந் திருப்பதிகத்தை அவர் ஓதியருளினார். ஓதியருளினதும் சூலை நோய் ஒழிந்தது. திருநாவுக்கரசராதல் தெய்வத் திருவருள் கைவரப் பெற்ற அடியவர் பெருமான், அன்புருவாய் நிற்கிறார்; நின்று விழுந்து புரண்டு புரண்டு எழுகிறார்; இப்பெரு வாழ்வைப் பெறச் செய்த சூலை நோய்க்கு என்ன கைமாறு செய்வேன் என்கிறார். அப்பொழுது ஆண்டவன் அருளால், மொழிக்கு மொழி தித்திக்கும் தீந்தமிழ்ப் பதிகத்தை நீ பாடினாய், அதனால், நாவுக்கரசு என்னும் பெயர் உனக்கு ஏழுலகங்களிலும் வழங்குவதாக என்றொரு வானொலி எழுந்தது. அது கேட்ட யாவரும் வியப்புற்றனர். திருநாவுக்கரசர், தீவினையேன் அடையும் பேறோ இது என்று இன்புற்றார். அப்பொழுது அவர், இராவண னுக்கு ஆண்டவன் செய்த திருவருட்டிறத்தின் உண்மையை உணர லானார்; உணர்ந்து அத் திருவருட்டிறத்தைத் துதித்தலை மேற் கொண்டார். அடியவர் ஆரவாரித்தனர். முத்திறத் தொண்டு திருநாவுக்கரசருக்கு மனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்க ளாலும் தொண்டு செய்தல் வேண்டும் என்ற பேரவா எழுந்தது. அவர் மனத்தால் ஆண்டவனைத் தியானித்தும், வாயால் அவன் புகழைப் பாடியும், கையால் உழவாரத் தொண்டு செய்தும் வரலானார். âyftâah®, ‘v«ik xU bghUshf kâ¤J M©lUËa átãuh‹ fUiz¤ âw¤ij ï§nf bg‰wt® aht®? என்று வியந்து வியந்து ஆண்டவனைப் போற்றினார். மாற்றார் சூழ்ச்சி திருநாவுக்கரசர் திருவருள் பெற்ற செய்தி பாடலிபுரத்தில் பரவிற்று. ஆங்குள்ள சமணர் புழுங்கினர். அவர், தருமசேனர்க்குற்ற சூலை நோயைத் தீர்த்தல் நம்மால் முடியாமற் போயிற்று. அன்னார் திருவதிகைக்குப் போய், முன்போலச் சைவராயினர். இனி நமது சமயம் ஒழிந்தது என்று தளர்ந்து ஒருங்கு சேர்ந்தனர். சேர்ந்த சமணர், இதைப் பல்லவ அரசன் கேள்வியுறுவானாயின், அவனுஞ் சைவனாவன். நமது விருத்தியும் கெடும் என்று மனங்கலங்கிச் சூழ்ச்சியிலிறங்கினர். அவர் அனைவரும் தருமசேனரின் தமக்கை சைவ நெறியில் நிற்றலால், தருமசேனரும் அந்நெறி நிற்க எண்ணிச் சூலை நோய் தீரவில்லை என்று நடித்துப் போய்விட்டார் என்று அரசனிடங் கூறுதல் வேண்டும் என்று தீர்மானித்தனர். இதை அரசன் கேள்வியுறுதற்கு முன்னரே நாம் போய் முறையிடுவோம் என்று அவர் எழுந்து, அரமனை வாயிலை அடைந்து, தமது வரவை அரசனுக்குத் தெரிவிக்கும்படி வாயில் காப்பவரிடம் சொல்லினர். வாயில் காப்பவர் அடிகண்மார் வரவை அரசனுக்குத் தெரிவித்தனர். அரசன் ஆணைமேல் அடிகண்மார் அரமனைக்குள் நுழைந்தனர். அடிகண்மார் மன்னவனைக் கண்டு தாம் சித்தரித்த பொய்மையைக் கூறினார். நாமார்க்குங் குடியல்லோம் என்னல் பல்லவன் வெகுண்டு, இதற்கு என் செய்வது? என்றான். சமணர், நஞ் சமயங் கெடுத்த பாவியைத் துன்புறுத்தல் வேண்டும் என்று விடையிறுத்தனர். உடனே மன்னவன், அமைச்சரை நோக்கி, இவர் குறிப்பிட்ட தீயோனைப் பிடித்து வாரும் என்று கட்டளை யிட்டனன். அமைச்சர் திருவதிகை அடைந்து, திருநாவுக்கரசு சுவாமிகளைக் கண்டு, அரசன் ஆணையைத் தெரிவித்தனர். சுவாமிகள் நாமார்க்குங் குடியல்லோம்என்னுந் திருத்தாண்ட கத்தைத் திருவாய்மலர்ந்தருளி, அரசன் ஆணைக்கு இணங்க மறுத்தனர். அமைச்சர், திருநாவுக்கரசர் திருவடிகளில் பன்முறை விழுந்து விழுந்து வணங்கி வேண்டினர். திருநாவுக்கரசர், எல்லாவற்றுக்கும் எம்பெருமா னுளன் என்று நினைந்து அமைச்சருடன் மன்னன் சபை சேர்ந்தனர். நீற்றறையிலிடல் k‹d‹, mG¡fhWila mof©khiu neh¡», ‘ïtid v‹ brŒtJ? என்று கேட்டான். அவர், நீற்றறையி லிடுக என்றனர். அவ்வாறு செய்யுமாறு அரசன் ஏவலாளர்க்குக் கட்டளை யிட்டான். ஏவலாளர், திருநாவுக்கரசரை நீற்றறையில் இட்டுக் கதவைத் தாளிட்டனர். âUehî¡fur® , jh©lt _®¤âÆ‹ jhŸ ÃHiy¤ jiy¡bfh©L, ‘