இளங்குமரனார் தமிழ்வளம் 28 1. ஈரோடு வேலா (வரலாறு) 2. குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 28 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 264 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் ஈரோடு வேலா (வரலாறு) நூலாசிரியன் நுவல்பு 1 வரலாற்றாளர் வரைவு 4 கனவு நனவாக! 10 1. அன்புப் பண்பு 29 2. திருக்குறள் பேரவை 97 3. தமிழ்வழிக் கல்வி இயக்கம் 167 அ. இனநலம் 179 இ. உரை வீச்சு 188 நாம் பெறும் தெளிவுகள் 202 உரைவீச்சில் சாயும் உடலங்களை மீளச் செய்வது 204 யாருக்கு வாக்கு? 205 மதிப்பியலில் குறைவானவர்களே 206 இணைப்பு -1 வாழ்வுக் குறிப்புகள் - சில 207 இணைப்பு -2 வேலாவின் பொதுப் பணிகள் - சில 208 இணைப்பு -3 வேலா அவர்கள் செய்த குறளாயப் பணிகள் 209 இணைப்பு -4 வேலா வரைந்த குறளாயக் குறிக்கோள் உரைகள் 212 இணைப்பு -5 அறிஞர்கள் அன்பர்கள் பெருமக்கள் வேலாவைக் குறித்துரைத்த நன்மொழிகள் 214 குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா முன்னுரை 219 1. குணநலத் தோன்றல் குப்பு முத்துஐயா 225 2. உலகை உயர்த்தும் உயர்வர லாறே! 260 குறிப்பு 264 ஈரோடு வேலா (வரலாறு) நூலாசிரியன் நுவல்பு வள்ளுவர், வாழ்வியல் வகுத்துத் தந்த வாழ்வியல் அறவோர். அவர்தம் நூல், வாழ்வார்க்கு வாழ்வியல் இன்ன தெனத் தெளிவாய் வகுத்துத் தந்த நூல். அதன் வழியே வாழ்வும் அரசியலும் பொருளியலும் இயலல் வேண்டும் என்பதை வலியுறுத்தவும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருவர் வேண்டி இருந்தது. அவர் தாம் ஈரோடு வேலா! திருக்குறள் நம்மறை - நெறி என்றவர் - என்பவர் - வேலா! அக்கொள்கையை நடைமுறைப் படுத்திக் காட்டுவதற்கே, தம் பிறவிப்பேறு வாய்த்ததாக உணர்ந்து பூரிப்பவர் வேலா! அதன் பரப்ப முரசு குறளியம்; நடைமுறைப் படுத்தும் இயக்கம் குறளாயம்! குறளையும் வேலாவையும் பகுத்துக் காண இயலுமா? குறளையும் குறளியத்தையும் குறளாயத்தையும் பகுத்துக் காண முடியாமை போல வேலாவையும் பகுத்துக் காண இயலாது. நடமாடும் வள்ளுவமாகத் தம்மை ஆக்கிக் கொள்ள ஒருப்பட்டுள்ள ஒருவரை எப்படிப் பகுத்துக் காண இயலும்! வேலா தொடர்பு குறளிய இதழால் முதற்கண் எனக்கு உண்டாயது; குறளாயத்தால் பின்னர் அது செறிந்தது; இரண்டற்ற ஒருமையுள்ளத்தால் மேலும் ஒன்றியது. அவர் தம் உணர்வுக்கும் உரைக்கும் வேறுபாடு இல்லை என்பது உடனாக்கியது! அவர்த தம் வரலாறு - தனி மாந்தர் வரலாறு அன்று! திருக்குறளை வாழ்வியலாக்க விழைவார் - எதிர் காலத்து எழுவார் - அனைவர்க்கும் எடுத்துக் காட்டாம் இயக்க வரலாறு. அவ்வரலாறு எளியது; இயல்பினது; ஓ ஓ! ஆ ஆ! என்னும் கோலங்களோ - வாண வேடிக்கைக் காட்சிகளோ அற்றது; இயல்பான குடியில் பிறந்து, இயல்பாக வளர்ந்து, இயல்பான குடியில் பிறந்து, இயல்பாக வளர்ந்து, இயல்பான முயற்சியால் தம்மை வரலாற்றில் பதித்துக் கொள்ளத் தக்க தொண்டின் ஊற்றம் கொண்ட ஒருவரைப் பற்றியது! சலவைச் சட்டை போடும் வாய்ப்பில் எம் குடியில் முதலாமவராக விளங்கியவர் எம் தந்தையார் வேலாயுதனாரே. தொடக்கப்பள்ளிக் கல்வியில் கருத்துக் கொண்டதும் பாட்டனார் காலத்தேதான் எனக் கூறும் வேலாவின் திறந்த உள்ளம் - எளிய இனிய உள்ளம் - எவ்வெவர் முயற்சி முன்னேற்றங்களுக்கும் தூண்டுதலாகத் திகழும் என்னும் துணிவும், திருக்குறள் தொண் டரை இனங்காண உதவும் என்னும் வேட்கையும் இவ்வரலாற்றை எழுதத் தூண்டினவாம்! முற்படவே குறிப்புகளைத் தொகுத்துச் சுருக்க நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெருமக்கள் இருவர். ஒருவர், என் இளந்தைக் கால உடன்பயில்வாள உழுவலன்பர் பாவலர் பொதிகைச் செல்வனார்; மற்றொருவர் குறளாயப் பொதுச் செயலாளர் பெரும் புலவர் மு. தங்கவேலனார்! ஈரோட்டில் இருந்து சென்னை வரை வேலா அவர்களின் உடன் வந்த இரண்டு செலவுகளில், கேட்டும் உரையாடியும் பெற்றுக் கொண்ட கருத்துகளும் குறளியத்தின் 120 (1990 சூலை வரை) இதழ்களும், யானே பல்காலும் நேர்காணலால் அறிந்து கொண்ட செய்திகளும் ஆகிய முப்பால் வைப்புகளே இவ் வரலாற்றின் மூலப் பொருள்களாம். வேலாவால் குறள் வளமுறு கிறது; வாழ்வியலாகிறது; குறள்வழி அரசு காணத் தூண்டப் படுகிறது! குறளால், வேலா வாழ்கிறார்; வளர்கிறார்; வளமும் வளமார் உளமும் பெறுகிறார்; திருக்குறள் மறைவழிக் குடும்பமாகக் கொண்ட தம் குடும்பச் சார்பு உடையாரும், இயக்கச் சார்புடை யாரும் திருக்குறளை நம்மறை எனப் போற்றுகின்றனர்; பொருந்தி வாழ்கின்றனர். இவ்வியக்கம் அமைந்த இயக்கம்; பரபரப்பற்ற இயக்கம்; ஆனால் படிப்படியாய்ப் பற்றிப் படர்ந்து பாராளவல்ல இயக்கம். இவ்வியக்கத்தின் வித்து வேலா! தொண்டர் வரலாற்றுக்குத் தொகை வகை விரி உண்டு! இத்தொண்டர் வரலாற்றுக்கும் தொகையுண்டு: வகை இது; விரி வரும். தொகை தந்தவர் எவர்? ஒரு மாணிக்கர்! ஒரு மாணிக்கத்தை மற்றொரு மாணிக்கம் மதிப்பிட்ட மாணிக்க மதிப்பீடே அது! அம்மாணிக்கம் தமிழ்க் காதல் -வள்ளுவ -வ.சுப. மாணிக்கம். என்மறை திருக்குறள் என்ற எழுச்சி மாணிக்கம். மாணிக்கத் தொகை இரண்டே இரண்டு வெண்பாக்கள். அவை ஈரியல்கள் ஆகின்றன. அன்புப் பண்பு, அறப் பயன் என்பன அவை. செந்தமிழே, நம்தாய்; திருக்குறளே, நம்மறை; நந்தா ஒழுக்கமே, நம்படை; - உந்து முனை வேலாவே, நம் தலைவன்; வெள்ளைக் குறளியமே, தோலாத நம்முரசுத் தூண். வேலா அரசன்; வெறிதமிழ் அந்தணன்; முப் பாலார் குறளின் பரப்பாளி; - மேலார் குறளாயங் கண்டான்; குறளியமும் கண்டான்; திறலாக வாழ்க திளைத்து. இத்தொகை, வகையாதல் இந்நூலைக் கற்பார்க்கு வெளிப்படை விளக்கமாம். குறளியம் சிறக்க! குறளாயம் வெல்க! வேலா வாழ்க! பாவாணர் ஆய்வு நூலகம் தமிழ்த் தொண்டன் திருநகர், மதுரை - 6 இரா. இளங்குமரன் 625 006 18-4-90. வரலாற்றாளர் வரைவு யான் எளியன்; அது மட்டுமன்று; கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவற்றில் முறையாக - முழுமையாக - திட்டமிடப்பட்டுக் குற்றுயிராக்கப்பட்டுப் பட்டுப் போன சில பல தலைமுறைகளின் அடிவாழை! தந்தை பெரியாரால் புத்துணர்வு பெற்ற தமிழ்நாட்டினருள் - அவர் தம் கருத்துகளைச் சிக்கெனப் போற்றிக் கொண்டவருள் - நாடளாவியிருந்த எங்கள் சுற்றத்தார் முதன்மை உற்றனர். எங்கள் குடும்பங்களில் வழிவழியாக விளங்கி வந்த வேத மறுப்புக் கொள்கை, கடவுளர் பலர் என்பதன் மறுப்புக் கொள்கை, உழைப்பு, அன்பு, அருள், அறம் என்பனவே வாழ்க்கையின் குறிக் கோள்கள் என்னும் வாழ்வியல் கொள்கை, சிவம் என்னும் பேரா இயற்கையே கடவுள் நிலை என்னும் இறைமைக் கொள்கை ஆகியவற்றைக் கொண்ட வீர சைவத்தை மீளவும் ஆழ்ந்து நோக்கவும் தன்மானத்தை மீளவும் பெறவும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் எங்களுக்கு உந்துகோலாய் அமைந்து உயர் வழிகாட்டி ஆயின. இவற்றின் விளைவே, திருக்குறள் நம்மறை என்னும் முடிபும் முழக்கமும் ஆயின. மறை என்பது பழஞ்சொல். பாதுகாப்பு என்னும் பொருளது. நமக்குப் பாதுகாப்பாம் நூல் தமிழில் இல்லையா? மறை நூல் நமக்கு இல்லையா? திருக்குறள் நம் மறையாகாதா? பொதுமறை, தமிழ்மறை எனப்படும் அது நம் மறையாகாதா? என்னும் வினாக்கள் அடுக்கடுக்காய் எம் நெஞ்சில் பல்கால் எழுந்தன. திருக்குறள் நமக்கு எத்தகு பாதுகாப்பு அருளும் நூல்! ஏன் நமக்கு மட்டுமா? மன்பதை முழுமைக்குமே பாதுகாப்பு அருளும் நூல் அல்லவோ! என்னும் நயனார்ந்த உண்மை எம் நெஞ்சை வருட வருடப் பிறந்ததனவே - குறளியமும்; குறளாயமும்; திருக்குறள் நம் மறை என்னும் குறிக்கோளுமாம்! திருக்குறள் நம் மறை என்பதைப் பலாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அவர்களால் மாறுபார்வை பார்க்கப்பட்டேன்; புறந்தள்ளவும் பட்டேன்; பொதுமறை எனக் கொண்டால் பலரும் ஏற்பர்; நம் மறை என்பதால் இற்றைச் சூழலில் பெயரும் புகழும் பொருளும் பிறவும் எய்துதல் இயலா என்று நன்றுரைப்பார் போல் உரைத்து நழுவிக் கொண்டனர். காலத்தை ஒட்டிப் பிழைப்பவர்களே மிகப் பலர். காலத்தை வென்று வழிகாட்டுவார் மிக அரியர். அவர்கள் நாளையுலகில் ஈகியராய் எண்ணப்பெறினும் நடைமுறையில் நலிக்கப்படுவர்; இது வரலாற்றுச் சான்று. இந்நிலை, எளிய எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் உள்ளமை அறிகின்றோம். எனினும், சிலச் சிலர் சிந்தனைக்கு இடமாகி வரும் பேறு வாய்க்கும் போதெல்லாம் அஃது உயிர்க்கு ஊதியமாகவே தோன்றுகிறது. வாழ்வாங்கு வாழும் வணக்கத்திற்கரிய தெய்வம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அமரர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆகிய பெரு மக்கள், எம்மையும் திருக்குறள் நம்மறை என்றும் கொள்கை யினரையும் வரவேற்று, நம் பாதையே செம்பாதை, செந்தமிழ்ப் பாதை எனக் கூறி வழிகோலியமை எமக்கு உண்டாகிய எதிர்ப்புகளை எதிரிட்டுச் செல்லும் துணிவையும் உறுதியையும் வழங்கின. சங்ககாலச் செந்தமிழ்ச் சான்றோர் இன்றும் உளர் என்ப தற்குச் சான்றாக நாளும் வாழ்ந்து, எம் சிந்தனை கட்கெல்லாம் விருந்தாகும் இலக்கியச் செம்மல் மதுரை இளங்குமரனார்; இனி எம் வாழ்நாளெல்லாம் குறளிய குறளாயத் தொண்டுக்கே எனப் பெருந்துணையாகிய பெரும்புலவர் பட்டுக்கோட்டை மீ. தங்கவேலனார்; செம் பொருள் நுகர்வே இறைவழி பாட்டிற் குரிய இனியவழி என்பதன் சான்றாகிய - புலவர்குழு உறுப்பினர் - தனித்தமிழ் அரிமா - சித்தோட்டுப் பாவலர் ஈவப்பனார்; இயற்கையே இறை; திருக்குறளே நம் மறை என வாழ்ந்து திருக்குறள் வழியிலேயே திருமணம் முதலிய சடங்குகளையும் பணிகளையும் நடத்தி வரும் புரட்சிக்கனல் திருவள்ளுவர் குருகுலம் கு. இரகுபதி; திருக்குறள் குமுகாய மலர்ச்சியே எம் குறிக்கோள் என ஓயாமல் ஒழியாமல் கடனாற்றி வரும் படைமேல்நர், திருவ ண்ணாமல த. சாமிநாதன் ஆகியோரும், தொண்டுள்ளத்துடன் ஊற்றமாகக் குறளாயப் பணியில் தம்மை ஆட்படுத்திக் கொண்டு நெஞ்சார்ந்த கடனாற்றி வரும் நேயத்தினர் பலப்பலரும் செய்து வரும் திருக்குறள் பணிகள் இந்நூற்றாண்டுப் புகழ் வரலாற்றின் ஒளிமிக்க வரிகளாம். என் பேச்சிற்கும் மூச்சிற்கும் உற்ற வாழ்க்கைத் துணை நலமாக யான் பெற்ற சந்திரா அம்மையார், கொடிப் பெயர் மக்கள் மூவர், இனிய மருகர் சக்திவேலர், வளர்மகன் செந்தில் ஆகியோர் எம் பணிவளர்ச்சிக்கு ஊற்றங்கால்ளாக அமைந்தவை எம்பேரா கூழாகும். மொழியால், மதத்தால், சாதியால், கட்சியால், உடையால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் சிதைவுற்று மாறித் தன்னை மறந்து போனது தமிழினம். அது தன் மேம்பட்ட நிலைகளைக் கண்டுணரவும் முடியாத தாழ்நிலைக்கு ஆட்பட் டுள்ளது. திருக்குறள் வழிக் குமுகாயமும். திருக்குறள் வழி அரசும் என்று அமைகின்றனவோ அன்று தான் தமிழ் கோலோச்சும்; தமிழ்நெறி கோலோச்சும்; நம் மறை உலகு ஆளும்! இவையே நம் முடிபுகள்! இத்தகு நெடுவழிப் பேருலாவைத் தொடங்கியுள்ள எளிய எமக்கு ஒரு வரலாறு அரும்புவதை எளிய எம் உளம் ஒப்ப வில்லை; அஞ்சியது. எனினும் அன்பும், செந்தமிழ் அறிவும், வழிகோலிய தெய்வமும் எம் உறுதியைத் தளர்த்தின. எம் தந்தையார் அ. வேலாயுதனார் மறைந்த பின் அவர் பெட்டிகளைச் சரி பார்த்தபோழ்து அழகிய கட்டமைப்புக் கொண்ட அருமைக் குறிப்பேடு ஒன்று காணப்பட்டது. அதில் வேலா குடும்ப வரலாறு எனத் தலைப்பிட்டுச் சில பக்கங்களும் அரிய குறிப்பு களும் பொறித்திருந்தார். தம் குடும்பங்களைப் பற்றிய முன் பின் செய்திகளைச் சேர்க்க அவாவியிருந்தார். அவர் கனவு நனவாவதென என்னையும் அறியா இறும்பூது எய்திற்று. ஆம்! ... தமிழ்ச் சான்றோர் இளங்குமரனார் சிந்தனையில் பட்டவை பலப்பல, நமக்கும் வழிவழி மக்களுக்கும் வயிரமணி களாகி வருகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் யாத்தவர்; குண்டலகேசி படைத்தவர்; இலக்கண வித்தகர்; சொல்லாய் வறிஞர்; பெரும் பாவலர்; உரைவல்லார். அவர் எம் வரலாற்றையும் வரைந்தார். நான் வியந்தேன். எம்மையும் தம் எழுத்தால் வரலாற் றாளனாகச் செய்துள்ள செந்தமிழ்த் திறங்கண்டு, தமிழன்னை காலம் காலமாகப் பெற்று வரும் நன்மகப் பேற்றின் அருமை உணர்ந்தேன்; உவந்தேன். என் வரலாறு மட்டுமா இது! எங்கள் குடும்ப வரலாற்றின் ஒரு துளி! திருக்குறள் இயக்க வரலாற்றின் ஒரு துளி! நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நெறிகளின் முகைளின் சிலச்சில துளிகள்! எளிமையில் பிறந்து எளிமையில் வளர்ந்து எளிய தொண்டனாக வாழ்பவனும் வரலாற்று உலகுக்கு வேண்டும் ஒரு சிறு வளத்தை வழங்க முடியும் என்பதற்கொரு சான்று! திருக்குறள் நம்மறை என்னும் கொள்கையில் ஊன்று நின்று வாழ்வியல் மேற்கொள்ளும் பேறு வாய்த்தது எம் பிறப்பின் பெரும்பேறு! தமிழ்வழிக் கல்விக் கொள்கையில் யாம் ஈடுபட்டுப் பாடுபட நேர்ந்துள்ளமை மற்றொரு பெரும்பேறு! இவற்றினும் உயர் பேறு உண்டோ? இப்பேற்றைக் கொண்டபேறைக் கொண்ட பேற்றைக் காட்டவே இவ்வரலாறு எபந்ததோ? அன்றி எழுதத் தூண்டியதோ! நான் படித்துச் சுவை கண்ட செய்திகளை நீங்களும் படித்துச சுவைக்க வேண்டும் என்பதற்கே இந்நூல் வெளியீடு! எனைத்தாக இருப்பினும், அனைத்தாக நலந்தானே! இந்நூலை இவ்வழகிய வடிவில் அச்சிட்டுத் தந்த அருமையர் மூவேந்தர் முத்து ஆவர். அவர்க்கு நன்றி உடையேம். ஈரோடு வேலா அரசமாணிக்கம் 7-7-90 குடும்ப வழி அர்த்தநாளீயார் – பாப்பாயம்மாள் செல்லம்மாள் சின்னம்மாள் பொன்னுசாமி ஆறுமுகம் கெங்கையன் செல்லையன் வேலாயுதம் (வெங்கட்டம்மாள் சிவலிங்கம் (கமலம்) வேலா அரசமாணிக்கம் (சந்திரா) சரவதி (சித்தையன்) வேலா அரசமாணிக்கம் - சந்திரா வேல் மலர்கொடி வேல் சுடர்க்கொடி வேல் பூங்கொடி (சக்தி வேலர்) வேல் அரசு திருக்குறள் நம் மறை திருக்குறளுக்குத் தனி நிறமுண்டு; குணமுண்டு; மணமுண்டு. திருக்குறளே நம் மறை என ஏற்று, நம்பி, நம்மிடம் தொற்றியுள் பிற வழிகளை அறுத்துத் திருக்குறளே வாழ்வியல் என்ற உட்பாடு, வெளிப்பாடுகளே சொல்லும் செயலும் ஒன்றென உணர்த்த வல்லவை ஆகும். அதை விடுத்துத் தாம் கொண்ட பிற வரிகட்குத் திருக் குறளைத் துணையாகக் கொள்வோரை என்னென்பது? உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் பிறமொழிக் கலப்பில் தான் வளரும் எனக் கூறும் அறிவிலிகள் கூற்றுப் போன்றதுதான் திருக்குறளை உயர்தனிச் செந்நெறி முழு முதல் நூல் என்று அறியாது கூறுவார் நிலையும். திருக்குறள் - குறளாயம் எதன் சார்பிலும் பிறப்பதன்று. உயர் தனிச் செந்நெறியுடையது. அதனால்தான் பொதுமறை, உலகமறை, வான்மறை, தெய்வமறை, ஐந்தாம்மறை, தமிழ்மறை என்ற பொய்யுரைகளை மறுத்துக் குறளாயம் - திருக்குறள் நம் மறை என அறிவிக்கிறது. நாம் அறிவோம் நாளை நமதே என்று. - வேலா கனவு நனவாக! வேலாவும் அவர் தம் நண்பர் நால்வரும் அமெரிக்க நாட்டிற்குத் தனி வான்ஊர்தியில் பயணமாகிறார்கள். அகத்திலும், முகத்திலும் ஏதோ ஒரு விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களின் உறுதி தளர்ந்தோ, குலைந்தோ போய்விடக் கூடாது என்பதால். எப்புதுமையையும் விரைந்து வரவேற்பதும், வரவேற்பதைத் துணிந்து மேற்கோளாக்கிக் கொள்வதும், மெய்யெனப்பட்டதை எங்கும் எந்நிலையிலும் பரப்புவதுமாகிய உரிமைச் சிந்தனை மிகுந்தது அமெரிக்க மண். அம்மண்ணிற்குச் சென்று, திருக்குறள் ஒன்றே ஈடு இணையற்ற தன்மான வாழ்வியல் நூல் என்றும், இதற்கு இணையான தோர் நூல் இதுவரை உலகில் தோன்ற வில்லை என்றும் முழக்கமிட வேண்டும். இதுவே எங்கள் நோக்கம். அமெரிக்காவின் நியூயார்க் நகரம். ஆங்காங்கு மக்கள் கூடிக்கூடி நாளிதழ்களில் வந்த சிகப்புக் கட்டமிட்ட செய்தி களைப் படித்துக் கொண்டுள்ளார்கள். அமெரிக்க மக்களே! சிந்தியுங்கள்!! * நீங்கள் இதுகாறும் நம்பி வாழ்ந்த மதங்களும், அம்மத நூல்களும் உங்களை மனிதனாக வாழ வைத்ததா? இல்லை. * நீங்கள் நம்பித் தொழுத கடவுள்கள், தெய்வங்கள் உங்களை அச்சப்படுத்தி, மதவெறியர்களின் அடிமைகளாகத் தானே வைத்துள்ளது, மறுக்க முடியுமா? * அறிவுக்கும், மதத்திற்கும் தொடர்பில்லை என்பது தானே இன்றைய நிலை. மாந்தன் மாந்தனாக வாழும் வழி, அறம் என்பது என்ன? பொருள் என்பது என்ன? இன்பம் என்பது என்ன? இறைமையின் உண்மை நிலை ஆகிய இவைகளை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலுடையவர்கள் எங்களைச் சந்தித்து நாங்கள் கொணர்ந்த பெட்டகத்திலுள்ள அறிவுச்செல்வத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்தி வந்த நாளே ஆயிரக்கணக்கான மக்கள் எங்களைச் சூழ்ந்தனர். தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் அனைத்திலும் இதே செய்திகள். திருக்குறள் தந்த அறிவுச் செய்திகளால் அறியாமை நீங்கித் தெளிவுற்றனர். திருக்குறள் நம் மறை என முழங்கிப் பின்பற்றி மகிழ்ந்தனர். உலகெலாம் இச்செய்தி பரவுகிறது. திருக்குறள் குமுகாயம் தோன்றுகிறது; திருக்குறள் பேராட்சி மலர்கிறது. உலக மக்கள் ஒன்றாகின்றனர். மாந்தன் மாந்தனாகிறான். தமிழ்மண் உலக மக்கட் கெல்லாம் புனித மண் ஆகிறது. தமிழ் மொழியும், தமிழ் இனமும் உலக மக்களால் போற்றப்படுகிறது. நாங்கள் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறோம் ..... இல்லை இல்லை..... நான் மட்டும் சிரிப்பதாகப் படுகிறது. எதிர் நின்று என் ஆருயிர் வாழ்க்கைத் துணைநலம் சிரிக்கிறது; கனவு கலைகிறது. - வேலா 1. அன்புப் பண்பு வேலா : வணக்கம்; வேலா பேசுகிறேன். வணக்கம். மறைமலை நகர்த் தொடர் வண்டி நிலையப் பெயர் மாற்றம் குறித்த தங்கள் அறிக்கை உரை ஆகியவற்றைப் படித்தேன். ஒரு தமிழ்ச் சான்றோர் பெயரை மாற்ற வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள நடவடிக்கையை விடுதல் நன்று. தமிழ், தமிழ் நாட்டினர் அனைவர்க்கும் பொதுச் சொத்து; தமிழ் அறிஞர்களும் அப்படிப் பொதுச் சொத்தானவரே; புகழ் வாய்ந்த தமிழ்ப் பெருமகனார் பெயரை மாற்ற வேண்டும் என்று பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம். பேராயக் கட்சி தமிழுக்கு எவ்வளவோ தொண்டு செய்த துண்டு. அவற்றை யெல்லாம் மறந்து பழிக்கு ஆளாக்கிவிட வேண்டாம். பெருந்தலைவர் பெயரை மாற்றக் கூடாது என்கிறோம். மறைமலையடிகளை நாங்களும் மதிக்கிறோம். அவர் பெயர் நிலையத்திற்கு வைக்கப்படவில்லை. நகர்ப் பெயரை நாங்கள் மாற்றச் சொல்லவில்லையே. நகர்ப்பெயர்த் தொடர்பால்தானே நிலையப் பெயர் அமையும். அதுதானே வழக்கம். ஒருநாள் நடைபெற்ற மேடைப் பெயர் நிலைத்த பெயர் ஆகுமா? பெருந்தலைவர் பெயரால் மாவட்டம் உண்டு; பல்கலைக்கழகம் உண்டு; நகரங்கள் சாலைகள் நினைவகசங்கள் உண்டு! ஆனால், மறைமலையடிகள் பெயரால் அமைந்த நகரத்தோடுவிளங்கும் நிலையத்தை மாற்றி அமைக்கப் போராடத் துணிவதும், அந்நிலையத்தில் உள்ள தமிழ் எழுத்தைத் தார் கொண்டு அழித்ததும் மாறாப்பழியும் களங்கமும் ஆகும். பெருந்தலைவர் மேல் நாங்கள் கொண்டுள்ள மதிப்பைக் குறைப்பது போல் எளிய பொருளாக்கிவிட வேண்டாம். அரசியலில் பெருந்தலைவர்; தமிழக முதல்வராக இருந்தவர்; அனைத்திந்தியத் தலைவராகத் திகழ்ந்தவர்; அவர்பெயரை மாற்றி விட்டதே தவறு; அரசியல் சூழ்ச்சிக்குத் தமிழாசிரியர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் இரையாகி இப்படிக் கூறுகிறீர்கள். நாங்கள் எங்கள் போராட்டத்தை விடப்போவ தில்லை. அதுநேர்மையான உறுதி யான போராட்டம். தோற்கப் போகிறீர்கள்; பழிக்கு ஆளாகப் போகிறீர்கள்; அரசியலில் எவ்வளவு பெரிய தலைவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தமிழ்ச் சான்றோர்க்கு இணையாகார்; காமராசர் எனினும் சரி; அறிஞர் அண்ணா எனினும் சரி; அவர்கள் மறைமலையடிகள் போலும் தமிழ்ச் சான்றோர் களோடு இணைத்துச் சொல்லத் தக்கவர் அல்லர். அவர்கள் பெயரை நிலையத்திற்கு வைக்க முயன்றாலும் எதிர்த்துப் போராடவே செய்வோம். சான்றோரை மதித்துப் போற்றாத நாடு, தன் தகுதியை இழந்து போகும். தாம் வாழுவதற்காகப் பாடித்திரியும் அரசியலாளி போல்பவர் அல்லர் மறைமலை யடிகள் போலும் சான்றோர்; தமிழ்நாடு வாழ. தமிழ் வாழ, தமிழினம் வாழப் பாடித் திரிந்த குயில்கள் அவர்கள்! ஏன் உங்களுக்குத் திறம் இருந்தால் வடநாட்டில் ஒரு நிலையத்தின் பெயரைப் பெருந் தலைவர் பெயராக்குவதற்குப் போராடுவது தானே தமிழ் நாட்டுப் பெருந்தலைவர் பெயர் வடநாட்டிலும் உள்ளது என்று தமிழர்கள் உங்களைப் பாராட்டுவார்களே! நாங்கள் எடுத்த முடிவு முடிவேதான். தமிழனத்தின் வசையை வாங்கிக் கட்டிக் கொள்ள முடிவெடுத்து விட்டீர்கள்! உங்கள் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தீய விளைவுகளை உண்டாக்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் இது நல்லதன்று; நன்றி. டொக். - இது 12-2-90 இல் மாலை 5 மணிக்கு நிகழ்ந்த வேலா தொலைபேசித் தொடர்பு ஒன்று. தமிழ்ச் சான்றோர் பெயரை எதிரிட்டு நிற்பாரை நேருக்கு நேர் அழைத்துக் கூறிய அறை கூவல் செய்தி இது! உடனிருந்து கேட்ட செவிகள் ஆகலின், இப்பொழுதும் அச்செய்திகள் பளிச்சிடுகின்றன! வேலாவின் உணர்வு படக் காட்சி காண்பது போல் இப்போதும் அக் கண்ணில் ஒளிர்கின்றது. இவ்வீறு எப்பொழுது அரும்பியது? ஈரோடு மாசன உயர்நிலைப் பள்ளி! பத்தாம் வகுப்பு! இடைவேளை நேரம்! ஒரு மாணவனை மற்றொரு மாணவன் ஓங்கி அறைந்து விட்டான்! பள்ளிக்குள் நடந்த நிகழ்ச்சி! உடனே தலைமைக்குச் சென்றது; அடிப்பட்டவன் கண்கலங்கி நின்றான். அடித்தவன் இவனெனக் கூறினான். கொண்டுவா அவனை என ஆணை பறந்தது! அடித்தவன் அழைத்துச் செல்லப்பட்டான்: அடிபட்டவன் சினமாறாது நின்றான்! ஏன் அடித்தாய்? - பிரம்பு விளையாடும் என்பது அவனுக்குத் தெரியும்! ஆயினும், துணிந்து கூறினான் அடித்தவன் : நான் அவனை அடித்தேன்; உண்மை! ஆனால், அவன் என் நெஞ்சில் அறைந்தானே அதைத் சொன்னானா? நெஞ்சில் அறைந்தானா? தலைமையாசிரியர் பார்வை, அடிப்பட்டவன் பக்கம் திரும்பிற்று! அவன் நடுங்கினான்! இல்லை! பொய் என்றான். அடித்தவன் பக்கம் திரும்பினார் தலைமையாசிரியர் என் மார்பில் கையால் அடித்திருந்தால் பொறுத்திருப்பேன்: ஆனால் நாவால் - சொல்லால் - என் நெஞ்சில் அறைந்தான். என்ன சொன்னான்? தமிழைப் பழித்தான்; தடுத்தும் பழித்தான். பழித்துச் சொன்னாயா? தலை தாழ்ந்தான் அடிப்பட்டவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேல் என்று நான் எத்தனை முறை வகுப்பில் சொல்லியிருக்கிறேன்! குற்றத்திற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொண்டாய் போகலாம். இத்தலைமையாசிரியர் பெருந்தலைவர் காமராசரின் ஒன்றுவிட்ட தங்கை மகனார் சண்முகனார் என்பார். அவ்விளைய மாணவர் வேலா அரச மாணிக்கனார்! 1990இல் காணும் வீறு, 1952 இல் அரும்பியதன் சான்று இது! முந்தையோர் : ஆந்திர நாட்டுத் திருப்பருப்பதத்தில் (ஸ்ரீசைலத்தில்) இருந்து வெளியேறிய வீரசைவக் குடும்பத்தவர் (இலிங்காயதர்) கும்பகோணம், மதுரை, காஞ்சி, திருப்பரங்குன்றம், சென்னை, சேலம், திருச்சி, தஞ்சை, கோவை,புதுவை முதலிய இடங்களுக்கு வந்தனர். அவர்கள் முதற்கண் வந்து அமைந்ததும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம் பெருமையுடையதும் கும்பகோணம் மடம் என்பர். அது இன்றும் பெரிய மடம் என்னும் பெயரா லேயே வழங்கப்படுகிறது. இங்கு வந்த வீரசைவர்கள் சங்கமர் எனப்படுவர். சங்கமர் என்பார் சமயப்பரப்புநர். கும்பகோணம் மடமும், அதனைச் சார்ந்த வீரபத்திரர் கோயிலும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை என்பர். சங்கமர் சென்னை முதல்கன்னி வரை வெவ்வேறு பெருநகர்களிலும் சிற்றூர்களிலும் பரவினர். 50, 100 வீடுகள் சேர்ந்த குடியிருப்பும் உண்டு. 4,5 குடிகள் தங்கிய ஊர்களும் உண்டு. அவர்களுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் கொண்டு கொடுத்தல் உறவு கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் சாதி வகையில் ஒருமைப்பட்டமை போலவே, தமிழ் மொழி வகையிலும் பெரும்பாலும் தமிழராகவே ஆகிவிட்டனர். புதிதாக வீரசைவ நெறியை ஏற்றுக் கொண்டவர்கள் எனினும் அவர்களைத் தனித்துப் பார்க்கும் பார்வை விடுத்தனர். வீரசைவக் குடும்பங்களுள் சில நாமகிரிப் பேட்டை, ஈரோடு - அவினாசி சாலையிலுள்ள பள்ளகவுண்டன் பாளையம், பவானி, சேலம் ஆகிய இடங்களுக்குச் சென்று உப்பு, பருப்பு வாணிகமும், சமுக்காள நெசவும் செய்து வாழ்ந்தனர். வேலாவின் ஓட்டனார் பள்ளகவுண்டன் பாளையத்தில் இருந்தவர். வேலாவின் பாட்டனார் காலத்தில்: மொடக்குறிச்சி விளக்கேத்தியைச் சார்ந்த திட்டுக்காட்டூரில் தங்கினர். தாத்தா பாட்டனார்) அர்த்தநாரி என்பார். அவர் பிறப்பியம் எழுதுவதிலும், கணியம் கூறவதிலும் தேர்ச்சி மிக்கவர். ஊர்ப் பெரிய கவுண்டர் இன்ன நாளில் இறந்து விடுவார் என்று கணியர் சிலர் உறுதியாகக் கூறினர். அர்த்தநாரியார், இறப்பு இல்லை; உறுப்புக் குறை உண்டு என்றார், அதன்படி கால்கை இயக்கக் குறை ஏற்பட்டது. இறப்பு இல்லாது ஒழிந்தது. அதனால் அவர் வாழ்ந்த காலமெல்லாம் வீட்டுக்கு வேண்டும். நெல் வழங்க நிலம் ஒதுக்கினார் பெரிய கவுண்டர். அர்த்த நாரியார் கணியத்தில் வல்லார் எனினும் அதனைக் காசாக்கக் கருதினார் அல்லர். உப்பு பருப்பு அரை செலவு (சில்லறைச்செலவு)ப் பொருள் வணிகமே செய்தார். உப்பு, உள்ளூர் விளைவன்று; கடல் விளைவு; பருப்பு, ஆந்திர நாட்டில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது; ஆதலால். உள்ளூர்ப் போட்டியில்லாத வணிகத்திலே சங்கமர் ஈடுபட்டி ருந்தனர். ஆகலின் அர்த்த நாரியாரும்அவ்வழியே மேற்கொண் டார். பட்டுச் சமுக்காளம் நெய்யும் நேர்த்தியால் சமுக்காள சங்கமர் என்னும் பெயரும் உண்டு. இத்தெழிலும் அர்த்த நாரியார் சார்ந்த பல குடும்பத்தவர் மேற்கொண்டதேயாம். அர்த்த நாரியாரின் துணைவியார் இலிங்கம்மாள் என்பார் பவானியில் பிறந்தவர். தந்தையார் : அர்த்த நாரியார் - இலிங்கம்மாள், இல்வாழ்வுப் பயனாக மக்கள் எழுவர் தோன்றினர். மகளிர் இருவர்; ஆடவர் ஐவர். இவருள் நான்காம் மகனாகப் பிறந்தவர் வேலாயுதம் எனப்படும் வேலாயுதனார்! வேலாஅரச மாணிக்கனாரின் தந்தையார்! இவர் பிறந்த நாள் 6-10-1904. வேலாயுதனார் பள்ளிப் படிப்புப் படித்த அளவில் தந்தையாருடன் வணிகம் செய்ய வேண்டியவரானார். உப்பும் பருப்பும் கொண்டு ஏழுநாள்களுக்கும் ஏழு ஊர்களில் நடை பெறும் சந்தைகளுக்குச் சென்று வாணிகம் செய்வர். ஒருநாள் இவர்கள் கடைக்குப் பக்கத்திலே, கும்மி அம்மானை ஒப்பாரி தாலாட்டு முதலாய சிறுசிறு நூல்களையும், விக்கிரமாதித்தன் கதை, அல்லியரசாணிமாலை முதலான பெரிய எழுத்து நூல்களையும் பரப்பி வைத்து வணிகம் செய்து வந்த பெரியவர் ஒருவர் அர்த்தநாரியாரிடம் எனக்கு முடியவில்லை; இந்த நூல்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு தொகை தாருங்கள் என்று அவற்றை வைத்திருந்த, பெட்டியுடன் ஒப்ப டைத்தார். m®¤jehÇah® j« tÂf¤â‰W¤ Jiz nt©L bk‹W gŸË¥ gUt¤ânyna j«kfid