இளங்குமரனார் தமிழ்வளம் 26 1. கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 26 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 168 = 184 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 115/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு 1. புகழொடு தோன்றிய கழகம் 14 2. தெய்வத் திருவடிவம் 16 3. வாழும் வழிகாட்டி 21 4. ஈழத்தில் தமிழ்மலை 26 5. பெருந்தகை வள்ளல் 34 6. காதல் அரும்புதல் 38 7. செந்தமிழ்க் களஞ்சியம் 43 8. கழக அமைச்சர் 47 9. தொண்டின் உறைப்பு 52 10. காதல் நோன்பு 59 11. பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை 66 12. இனிய இரட்டையர் 75 13. செந்தமிழ்ப் பணியும் சிவநெறித் தொண்டும் 84 14. இடுக்கண் அழியாமை 89 15. மெய்கண்ட தொண்டர் 96 16. துன்பமாலை - 1 102 17. துன்பமாலை - 2 110 18. திறவோர் காட்சி 124 இணைப்பு 1. கடிதங்கள் 130 2. இரங்கல் மாலை - 1 136 3. இரங்கல் மாலை - 2 152 4. திருவரங்கர் வரலாற்றில் இடம் பெற்றுள்ள காலக் குறிப்புகள் சில. 164 குறிப்புகள் 166 கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு முகவுரை டாக்டர் பா. நடராசன் கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு என்பது, அவர் வாழ்ந்த காலத்திய தமிழ்மொழி, சைவத்தின் வரலாறு எனக் கூறலாம். கற்றோர்கள், தமிழில் பேசுதல் தமக்குச் சிறப்பளிக்கா தெனக் கருதிய அக்காலத்து இவர் தாய்மொழிப்பற்றின் மிகுதியால், அம்மொழியாம் தமிழுக்குக் கழகம் கண்டு, பகலும் இரவும் அயராது பாடுபட்டுப் பாரெல்லாம் போற்ற, அக் கன்னிமொழியின் வளம் பெருக்கி வளர்ச்சி கண்டவர். இலக்கியம், இலக்கணம், சமயம், வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இசைத்தமிழ் வளர்ச்சி, நாடகத்தமிழ்ப் பெருக்கம் போன்ற இன்னும் பல்வேறு துறைகளில் நூல்கள் தொடர்ந்துவர, தம் இளையவர் திரு.வ.சுப்பையாபிள்ளை அவர்களுக்கு வழி காட்டியாய் இருந்தவர் திருவரங்கரேயாவர். இவர் நெஞ்சுரம் மிக்கவர். தளராத முயற்சியும் சலியாத உழைப்பும் கொண்டவர். வாழ்வின் உயரிய குறிக்கோள்களைத் தெளிவாகத் தேர்ந்து காணும் இயல்பினர்; இனிய சொல்லாலும், இதம் மிக்க நடத்தையாலும் பழகியவர் நெஞ்சங்களில் நிலையான இடம்பெற்றவர். குடும்பத்தையும், சார்ந்தவரையும் பேணும் குணநலம் வாய்ந்த செம்மல். தமிழ்மொழியின்பாலும், சைவத்தின்பாலும் இவருக்கிருந்த ஆழமான ஈடுபாடு இவரை அனைவரும் போற்றும் அருமணியாக - சுடர்மணியாக ஆக்கிற்று. சின்னஞ்சிறு பருவத்தில் தம் தந்தையார் திரு. வயிரமுத்துப் பிள்ளை அவர்களை இழந்த திருவரங்கரும், இவர் தம் உடன்பிறந்தோரும் தன் அன்னையார் சுந்தரத்தம்மையார் அரவணைப்பிலேயே வாழவேண்டியவர்களாயினர். வறுமை யின் தாக்குதலால் திருவரங்கர் கற்றுவந்த கல்விக்குத் தடையேற் பட்டது. ஏதேனும் பணிசெய்து பொருளீட்ட விழைந்த இவர், தூத்துக்குடி வந்து சிற்றாள் வேலையில் ஈடுபட்டார். அங்கு இவருக்கு வழுதூர் அழகிய சுந்தரம்பிள்ளை என்பவர் தொடர்பு ஏற்பட்டது. இப் பெரியார் சிறந்த சிவநெறியாளர், தவத்திரு மறைமலையடிகளார் திறன் அறிந்த செம்மல்; அடிகளாரிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர்; தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் ஈடுபாடும் இவருக்கிருந்தது. இவரது துணையும் தூத்துக்குடித் தங்கலும் திருவரங்கர் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. எனினும் தம் வாழ்வில் தக்க பொருள்வளம் ஏற்படவில்லையே என்ற கவலை இவருக்கிருந்தது. எனவே இவர் தூத்துக்குடியில் நிலைத்திருக்க விரும்பவில்லை. வழுதூர் அழகிய சுந்தரனார் ஆலோசனையின்படி கொழும்பு சென்றார். அங்கு ஒரு வணிக நிறுவனத்தில் கணக்கெழுதும் பணியில் அமர்ந்த திருவரங்கனார் தம் உயரிய பண்புகளாலும், ஊற்றெனச் சுரந்து பொங்கும் தமிழ்ப் பற்று, சைவப்பற்றுகளாலும் கொழும்பு வணிகப் பெருமக்களிடம் மிக்க நெருக்கமுடையவ ரானார். தவத்திரு மறைமலையடிகளாரைக் குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த திருவரங்கர், மேலும் அவர்தம் சிறப்பியல்பு களை அறிந்து, அவரைத் தம் உள்ளத்தில் நிலைநிறுத்தி வழிபட்டு வந்தார். அடிகளாரை ஈழத்துக்கழைத்தும் பயன்பெற எண்ணினார். இவரது விருப்பத்துக்கு இசைவளித்தனர் அங்குள்ள தமிழ்ப்பெருமக்கள், இருமுறை தவத்திரு மறைமலையடிகளாரை இலங்கைக்கு வரவழைத்து, செந்தமிழ்ச்செல்வம் பற்றியும், சைவவிளக்கம் குறித்தும் அங்குள்ள பற்பல ஊர்களில் சொற்போருக்கு நிகழ்த்த வைத்தார் திருவரங்கர் அடிகளார் இனிய அரிய உரைமணி களைக் கேட்கும் மக்களெல்லாம் ஆனந்தக்கடலில் மூழ்கினர். இதற்கு வாய்ப்பளித்த திருவரங்கரை வணிகப்பெருமக்களும் ஏனைய சான்றோரும் பாராட்டிப் புகழ்ந்தனர். திருவரங்கர் செய்த மற்றொரு அரும்பெரும் செயலையும் இங்குக் குறிப்பிடவேண்டும். அடிகளாரின் பொருள் தேவையை உணர்ந்து பல பெருமக்களிடம் பணம் திரட்டி அவருக்கு உதவினார் இவர். இது எளிதான செயலோ? யாவராலும் செய்யதக்கதோ? இவ்வுதவி அடிகளாருக்கு மிக்க பயனை அளித்தது. அவர் தொடங்கியிருந்த மாளிகைப் பணி நிறைவேறுவதற்கும், புதிய அச்சகம் தொடங்குவதற்கும், அவரது அறிவுக் கடல் இதழைச் செம்மையாய் நடத்துவதற்கும் பயன்பட்டது. மேலும் அடிகளாரை ஊக்கி அரும்பெரும் நூல்கள் ஆக்கவும், ஆய்வுப்பணிகளைச் செவ்வனே செய்யவும் வாய்ப்பளித்தது. திருவரங்கரின் இவ்வரும் உதவியை அடிகளாரே நன்றிப் பேருணர்ச்சியில் பல கடிதங்கள் எழுதிப் பாராட்டினா ரென்றால் வேறு என்ன வேண்டும்! இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய திருவரங்கர் சென்னைக்கு வந்து, அங்குத் தம் திருசங்கர் கம்பெனியைத் தொடங்கி நடத்தியதும், தவத்திரு மறைமலையடிகளார் தமிழ்ப் பணி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டேயாகும். சென்னையில் இருப்பின் அடிகளாரோடும் நெருங்கிப் பழகவும் அவருக்கு அவ்வப்போது உதவவும் வாய்ப்புக் கிடைக்கும் எனக் கருதியே அங்குத் தங்கலானார். நெல்லையில் திரு. மா. திரவியம் பிள்ளை என்பவரோடு திருவரங்கரும் இணைந்து பங்குதாரர்களைச் சேர்த்துத்தக்க சட்டத்திட்டங்களோடு 1920இல் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இருவரும் இணைந்தே இப் பணியைச் செய்தார்களென்றாலும் திருவரங்கர் முயற்சியும் உழைப்புமே இதில் மேலோங்கி நின்றன. நெல்லையிலேயே தங்கிக் கழகப்பணியை இடையறாது செய்து கொண்டிருந்தார் திருவரங்கர். இவருக்கு இல்லத்துணைவியாய் வாய்த்தவர் மறைமலை அடிகளாரின் திருமகளார் நீலாம்பிகை அம்மையார் ஆவர். நிறைந்த தமிழ்ப்புலமை வாய்ந்த இவ்வம்மையார் தம் தந்தையாருக்கே தனித்தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தா ரென்றால் இவரது தனித்தமிழ் ஆர்வத்தை எவ்வாறு புகழ்வது! அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு அதன்வழி நூல்கள் பல பார்த்து வெளிக்கொணர்ந்ததில் இவ்வம்மையாருக்கு மிகுந்த பங்குண்டு. அம்மையார் எழுதி வெளிவந்துள்ள தனித்தமிழ் நூல்களும், வடசொற்றமிழ் அகராதியும் தமிழுக்குக் கிடைத்த வைரமணிப் பேழைகள்! இவ்வம்மையார் ஆலோசனைகளும் திருவரங்கருக்கு மிகுந்த பயன் அளித்திருக்க வேண்டும்! திருவரங்கர் ஒரு தனிமனிதராக நின்று தம் திறனாலும் முயற்சியாலும் ஆற்றிய பணிகள் நமக்கு வியப்பைத் தருகின்றன. இப்பணிகளிலிருந்து தமிழ்மொழி மீதும், சைவத்தின் மீதும் இவருக்கிருந்த ஆழமான பற்றினை உணர்ந்து கொள்ளலாம். தென்னிந்திய சைவசித்தாந்த சங்கம், திருக்குறள் தேர்வுகள், திருக்குற்றாலத்தில் சாரல் மாநாடு, நெல்லைத் திருநெறித் தொண்டர் குழாம், தென்னிந்திய தமிழ்ச்சங்கம், மெய்கண்ட சாத்திர மாநாடு, இசைத்தமிழ்க்கழகம் போன்ற எத்தனையோ அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் இவரது ஈடு இணையற்ற திறமையை வெளிப்படுத்தும். தம் இளையவரின் திறனையும் செய்தொழில் நேர்த்தியையும் சிறந்த குறிக்கோள் தெளிவையும் நன்கறிந்தவர் திருவரங்கர். சென்னையில் கழகத்தின் கிளையமைப்பு ஒன்றைத் தொடங்கி அப் பொறுப்பைத் தம் இளையவரிடமே (திரு. வ.சு. பிள்ளையிடம்) ஒப்புவித்தார். கழகம் தொடங்கிய காலத்திலிருந்து அஃது ஆண்டுக்கு ஆண்டு மிகுந்த நூல்களை வெளியிட்டுத் தம் வளர்ச்சியினைக் காட்டியது. தொடக்ககாலக் கழக வெளியீடுகளே கண்கவர் வனப்புடையனவாய் விளங்கின. மேலைநாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நூல்களுக்கொப்பத் தமிழில் அச்சுத் தெளிவோடும், அழகிய கட்டுக்கோப்போடும், நாட்டுக்கும் மொழிக்கும் நலம் தரும் சிறந்த நூல்களைக் கழகம் வெளியிட்டு வந்தது. தரம் தாழ்ந்த நூல்களையோ, தம் குறிக்கோளுக்கு மாறுபட்ட நூல்களையோ கழகம் ஒருபோதும் வெளியிட்ட தில்லை. இவ்வமைப்பு நூன்முறை, அன்றுமுதல் இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கழகப் பதிப்பு என்றால் அது சிறந்த பதிப்பு என்ற பொருளைத் தரும்படியாக நூல்கள் அமைந்து விளங்கின. அதுவே கழகச் சிறப்புக்கும் காரணமாயிற்று. எத்தனையோ எழுத்தாளர்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியவர்களைத் தமிழ்மொழிக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை, திருவரங்கருக்குண்டு. புத்தம் புதிய நூல்கள், பழைய நூல்களுக்குப் புத்துரைகள், கற்றோரேயன்றி மற்றோரும் கற்றுப் பயன் அடையத்தக்க எளிய உரைநடைப் பதிப்புகள், சிறுவர் நூல்கள் போன்றவை வெளிவரத் தம் தம்பியாருக்கு இவரே உறுதுணையாக நின்று வழிகாட்டலானார். 1934ல் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடத்தவும், சென்னை மாகாணத் தமிழர் சங்கம் அமைக்கவும் பேரறிஞர்களோடு திருவரங்கரும், அவர் இளையவர் திரு. வ.சு. பிள்ளையும் இணைந்து செயலாற்றிய பணிகள் குறிப்பிடத் தக்கவை. தமிழின் தூய்மையையும், இனிமையையும் பேணு வதற்கும், பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைக் காப்பதற்கும், தமிழ்ப் பாதுகாப்புச் சங்கம் அமைத்து அதன்வழி அறிஞர் பெருமக்களோடு கழகத்தின் இந்த இரட்டையர்களும் சேர்ந்து செய்த பணிகள் மறக்கற்பாலனவல்ல. கழக இதழாகிய செந்தமிழ்ச் செல்வியைத் தமிழ் வளர்ச்சிப் பணிக்காகவே பயன்படுத்தி வந்ததை யாவரும் அறிவர். இப்படி எத்தனை எத்தனையோ பணிகள். கழகப் பணியையே தம் முழுநேரப் பணியாகக்கொண்டு கழகத்தைக் கட்டாகக் காத்துப் பேணிவந்த திருவரங்கனாருக்குத்தான் எத்தனை சோதனைகள்! அவருடன் கழக அமைச்சர்களாக இருந்தவர்களே அவருக்கு எதிராக மாறி அவர் மீது வேண்டாத பழியைச் சுமத்தினார்களென்றால் இதனினும் துன்பம் தர வேறு என்ன வேண்டும்? தம்மீது சுமத்திய குற்றங்கள் அனைத்தும் தவறானவை என்பதைப் பங்காளிகள் கூட்டத்தில் தக்க சான்றுகளோடு இவர் மெய்ப் பித்துக் காட்டினார். பின்பு அனைவரும் இவரது நேர்மையை நன்கு தெரிந்துகொண்டனர். அத்தகைய செயல் முறையை அன்று இவர் மேற்கொள்ளாவிட்டால் இன்று கழகம் என்ற ஓர் அமைப்பே இருந்திருக்காது. அன்றிலிருந்து திருவரங்கர் ஒருவரே பங்காளிகளில் நம்பிக்கைக்குரிய அமைச்சராய் அமர்ந்து கழகப்பணியாற்றி வரலானார். நீண்டகால நண்பர்களும் திருவரங்கரை நன்கு அறிந்தவர்களும் அவருக்கு மாறுபட்டு முரண்பட்ட செயல்களில் ஈடுபட்டபோது, அவர் நெஞ்சம் கன்றிப்போனதில் வியப்பேதும் இல்லையே! குடும்பத்திலும் துயரம் தரும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. ஓய்வே இல்லாத உழைப்பும், மீண்டும் மீண்டும் வந்த மோதிய தொல்லைகளும், துயரங்களும் திருவரங்கர் உடல் நலத்திற்கு ஊறு விளைத்தன. அவர்தம் உயிரையே (1944இல்) கவர்ந்தன. ஆம், அவர் இன்று இல்லை. ஆனால் அவர் ஊன்றிய விதைகள் முளைத்து வளர்ந்து பல பயன்மரங்கள் கொண்ட பொழிலாகிக் கனிகளை உதிர்க்கின்றன. இக் கனிகள் தமிழ் மொழியின் சிறப்பாகவும், தமிழர் வாழ்வின் நலமாகவும், சைவத்தின் உயர்வாகவும் காணப்படுகின்றன. காலமெல்லாம் இக் கனிகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். வாழ்வெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நலனுக்கும் அயராது உழைத்த ஒரு மாமேதையின் வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இனிய தமிழ்நடையில் எழுதியுள்ளார் புலவர் இரா. இளங்குமரனார். தமிழ் வளர்த்த செம்மலின் வரலாறு முழுமையும் தமிழ்மணம் கமழ்கிறது. நூலைப் படிக்கத் தொடங்கியதும் படித்து முடிக்கும் வரை உள்ளம் வேறு எதிலும் செல்லாத நிலைக்கு, இஃது ஈர்ப்புச் சக்தி கொண்டு விளங்குகிறது. பல நிகழ்ச்சிகளை நம் கண்முன் நடப்பனபோல் ஓவியப்படுத்திக் காட்டும் ஆசிரியர் திறன் பாராட்டுதற்குரியது. இவ் வரலாற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றோர் இவ் வரலாற்று நாயகரைப்போல் தாமும் ஆக வேண்டும் என அவாக் கொள்ளுதல் இயல்பு. நல்லுள்ளமும் நயக்கும் குறிக்கோளும் கொண்டவர்கள் பொதுமைப் பணியிலன்றோ சிறப்பைக் காண்பர். அச் சிறப்பையன்றோ வாழ்க்கையில் தாம் பெறும் உண்மையான வெற்றி என்றும் கொள்வர்? அவ் வெற்றியினை விளக்கிக் காட்டும் ஒரு சிறந்த நூலே இது. 76, ஆரிங்டன் சாலை, சென்னை - 31. (ஒம்) பா. நடராசன் 6-6-82 FOREWORD K. RAMALINGANAR, M.A. The life history of Thiru. V. Tiruvarangam Pillai, entitled ‘Arangar’ is a valuable addition to the very few biographical works in Tamil. Tiruvarangam, shortened as ‘Arangar’, in this book, impressed me as a man of action, when I used to meet him now and then at Madras, before 1938. The love and reverance I had for the venerable Maraimalai Adigal and the fact that Tiruvarangam Pillai became the beloved Son-in-law of that great savant endeared Arangar to me. In 1938, I was posted to Palayamcottai as Municipal Commissioner and Tiruvarangam Pillai became a close acquaitance of mine. The acquaitance grew into friendship and gradually into fraternity. We used to meet each other frequently. During my visits to his house, his spouse Neelambigai Tiruvarangam and his aged mother Sundaram were hospitable to me. Tiruvarangam Pillai made his appearance outside dressed in a ‘dhoti’ with coat on and an upper garment over the latter. The coat had huge pockets bulging with all sorts of useful scripts and documents collected from knowledgeable persons and scholars of merit, whom he met while on his literary pursuits. I had never seen the pockets empty. When once he visited me in my house, I showed him the notebook in which I had copied my poems. He read them with avidity and expressed a desire to take the notebook with him so that the poems could be printed and published. From my personal contacts with him and the impressions I gained therefrom, I can vouchsafe that a true and graphical account of his personality has been portrayed in this biography. Tiruvarangam Pillai’s passion for work cannot be better expressed effectively than what has been rendered by the biographer in the book under review. Irrespective of the venue of his activity-Tuticorin or Colombo, Madras or Tirunelveli-and avocation-clerk or partner of a company or an orginator and promoter of the South India Saiva Siddhanta Works Publishing Soceity, he deployed the same fervor. The diction employed by the author in this biography is so attractive and the style classical, that I could brook no interruption, while absorbed in reading it. The language is chaste and rythmic and at the sametime strong and powerful depicting how Tiruvarangam Pillai met the arguments of those who opposed him, baffling them. Arangar, as Tiruvarangam Pillai is affectionately called in this book, was undaunted, while not only those who differed from him generally, but also those, supposed to be close to him, picked holes in the performance of his duties relating to the Saiva Siddhanta Works Publishing Soceity. He was sure of his ground. There was nothing wrong or out of the way in what he did, but the defects attributed to his work were either baseless or invented by the jealous of him or due to faulty understanding and misinformation. He stood like a rock against odds and but for him, the South India Saiva Siddhanta Works Publishing Soceity would not have grown to such dimensional proportion, as it is today. Arangar held strong views on the question of speaking and writing chaste Tamil, avoiding induction of words from Sanskrit and other languages into Tamil. He felt perfectly convinced that the Tamil language not only lost its natural form and charm by such an admixture, but also that such dilution of the language had given room for the false notion that Tamil was derived from Sanskrit. The dilution had paved the way for Kannada, Telugu, Malayalam and Tulu to break away from it as separate entities. Had not Sanskrit words forged their way into Tamil, these languages would not have sprung up and the South would be speaking one language today. He was not worried by the bogey of those, dubbing persons advocating the use of chaste Tamil as ‘Puritanic.’ Himself a firm believer in the use of pure Tamil and an advocate of the same, his devotion to the venerable Maraimalai Adigal and his marital relationship as the consort of his daughter Tirumathi Neelambigai Ammaiyar, made him more staunch in this respect. One of the noteworthy achievements to his credit was the shaping of his younger brother Subbiah Pillai in his mould, the future Managing Director of the Publishing Soceity, which owes its superb and enviable position in the book publishing field to him. Arangar, a hard Taskmaster given a rigid training to his brother in the ways and methods of developing this publishing house. Subbiah Pillai, in turn, proved worthy of the confidence and brought name and fame to the Soceity by his strenuous efforts. He made it hum with activity and stands as monument to the memory of his brother ‘Arangar’. The biographer deserves to be feliciated for the masterly way in which he has mobilised almost all the important facts of Arangar’s life and marshalled them in logical sequence, using forceful and inimitable language with flourish and fragrance. Even those evincing not much interest in the book as a biography, would get fascinated to read and re-read it for sheer enjoyment and the wonderful way in which the biographer had woven his fabric in beautiful prose. நூலாசிரியர் நுதல்வு கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. இளங்குமரன் தலைமைத் தமிழாசிரியர் மு. மு. உ. பள்ளி, மதுரை கழக ஆட்சியர் தாமரைச் செல்வர் வ.சு. அவர்களின் மணிவிழா 1957 இல் நிகழ்ந்தது. அப்பொழுது கழகப் புலவர் திருமிகு ப. இராமநாத பிள்ளை அவர்கள், கழக ஆட்சியர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் வரைந்தார். பின்னர் வ.சு. அவர்களின் 75 ஆம் ஆண்டை நிறைவு குறித்த பவள விழா 1973 இல் நிகழ்ந்தது. அப்பொழுது வெளியிடப்பெற்ற பவளவிழா மலரில் அவர்கள் வரலாற்றைச் சற்றே விரித்து யான் எழுதினேன். பின்னர்க், கழக மணிவிழா 1982 சனவரியில் நிகழ்ந்தது. அது போழ்து அவ் வரலாற்றை மேலும் யான் விரித்தெழுதினேன். அது, 350 பக்க அளவில், அருமை வாய்ந்த படங்களுடன் வெளிப்பட்டது. ஆகலின், வ.சு. அவர்களின் வரலாறு தொகை, வகை, விரி என்னும் நூல் வகை மூன்றையும் ஒருங்கே கொள்வ தாய் அமைந்தது. விரியின் விரியும் வேண்டும் என்னும் விழுமிய விழைவுடைய பெருமக்களும் உளர் என்பதை நினைக்க இனிமை மேலும் எழுகின்றது. வ.சு. அவர்களின் வரலாறு வெளியீட்டுக்கு அணியஞ் செய்யுங்கால் அவர்கள் உள்ளத்தில் ஓர் உறுத்துதல் எழுந்தது. தமியேன் வரலாற்று நூலைக் கழக மணிவிழாவில் வெளியிடுவது பற்றி என் நினைவுக்கு நேற்று வந்தபோது என் அருமைத் தமையனார் அவர்களின் சிறப்பு மிக்க வரலாற்று நூலையன்றோ முதற்கண் எழுதச் செய்து வெளியிடுதல் வேண்டும்; பின்னரே எனது வரலாற்று நூலை வெளியிடுவது பொருத்தமாயிருக்கும் என்ற எண்ணம் என் மனத் தகத்தே தோன்றி வருத்துகின்றது என்று வருந்தி எழுதினர் (8-12-81). அதுகால் என் இடக்கண்ணின் கருமணியை ஒட்டி வளர்ந்திருந்த வெண்படலத் தசையை அறுவை மருத்துவம் செய்திருந்தேன். அதனால், தங்களுக்கு அறுவை மருத்துவம் செய்யப் பெற்ற கண் செவ்விதாக வேண்டுமே! என் செய்வது! என் மனத்தில் ஏற்பட்ட உணர்ச்சியை உண்மை அன்புள்ள தங்கட்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இப்பொழுது எழுத முடியாவிடினும் எனது கருத்தைத் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அதற்குத் தாங்கள் கவலை கொள்ள வேண்டா என்று குறித்தனர். 16-12-81 இல் என் அருமை அண்ணா அவர்கள் கழகம் தொடங்கியது முதல் அவர்கள் வாழ்ந்த காலம் வரையுள்ள குறிப்புக்கள் செல்வி தொடங்கியது முதல் 1944 வரை வெளிவந்த சிலம்புகளில் காணலாம். மெய்கண்ட சாத்திர மாநாட்டை 7 நாள்கள் 1941 இல் நடத்தினார்கள். அதுவே அவர்கள் உடலுக்குப் பேரூறாக ஏற்பட்டது. திருக்குற்றாலச் சாரல் மாநாடு மூன்றோ நான்கோ நடத்தினார். நெல்லையில் சைவப் பெரியர் மாநாடு சிறப்பாக நடைபெற்றதோடு, தென்னிந்திய சித்தாந்த சங்கத்தின் சார்பில் சைவ மாநாடுகள் நடைபெற்றன என்றும் இன்னவாறு பல குறிப்புகளைச் சுட்டினர். பெருமகனார் வ.சு. அவர்களின் ஆர்வத்தையும் கடப் பாட்டுணர்வையும் எண்ணி மகிழ்ந்த யான் திருவரங்கர் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கலானேன். இவ் வரலாற்றுக்குக் கிடைத்த கருவிகள் பலப்பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஏழு. அவை : 1. செந்தமிழ்ச் செல்வியின் முதல் இருபத்தொரு சிலம்புகள். 2. பேரா. திருமிகு மறை. திருநாவுக்கரசு அவர்கள் திருவரங்கரும் நீலாம்பிகையாரும் இயற்கை எய்திய காலையில் வரைந்த வரலாற்றுச் சுரக்க நூல்களும், தவத்திரு. மறைமலையடிகளார் வரலாற்றுப் பெரு நூலும். 3. பெருந்திருவாட்டி சுந்தரத் தம்மையார் பிரிவு குறித்துச் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 27 இல் இதழாசிரியர் வரைந்த வரலாற்றுக் குறிப்புகள். 4. மறைமலையடிகள் திருவரங்கருக்கு வரைந்த கடிதங்களும், திருவரங்கரும் நீலாம்பிகையாரும் வ. சு. அவர்களுக்கும் பிறர்க்கும் வரைந்த கடிதங்களும். 5. கழகம் வெளியிட்ட பல்வேறு மலர்களிலும் தமிழ்ச் சான்றோர்கள் வரைந்த குறிப்புகள். 6. வ.சு. அவர்கள் அவ்வப்போது வரைந்துள்ள குறிப்பு களும், நேரிலும் விழாக்களிலும் நெக்குருகி நின்று உரைத்த உரைகளும். 7. கழகம் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகளும் செய்திக் குறிப்புகளும். இக் கருவிகளையும் பிறவற்றையும் வழங்கிய பெருமக்களுக்கு இவ் வரலாற்று நூல் ஆசிரியன் என்னும் நிலையில் நன்றி கூறும் கடப்பாடுடையேன். இவ் வரலாற்றுக் கைப்படி நிலையில் படித்தும் படிக்கக் கேட்டும் உருகிய பெருமக்கள் இருவர். அவர்கள் வ. சு. அவர் களும் மறை. திருநாவுக்கரசு அவர்களும் ஆவர். அரங்கரொடு முன்னவரும் அம்பிகையாரொடு பின்னவரும் உடன் பிறப்புரிமை உடையர் அல்லரோ! ஆகலின் இவர்கள் உடன் பிறந்து உடன் வளர்ந்து, நீருடனாடிச் சீருடன் பெருகி ஓலுடனாட்டப் பாலுடனுண்டு, பல்லுடனெழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையவர் என்று இறையனார் களவியல் உரைகாரர் நிரல் பெறவுரைக்கும் உரைத்திற உண்மையை மெய்ப்பித்து என்னையும் உருக்கினர். அமைச்சர் அரங்கர் வள்ளுவர் வகுத்த அமைச்சர் திறங்களெல்லாம் ஒருங்கே அமைந்தவர். அமைச்சருக்கு வள்ளுவர் வகுக்கும் திறங்கள் இருபதாம். அவை : செயலுக்குரிய கருவி செய்தற்காம் காலம், செய்யும் வகை, செய்யும் அருஞ்செயல் அஞ்சாமை, நற்குடிப் பிறப்பு, காக்கும் திறன், கற்றறிந்த அறிவு, அயரா முயற்சி, வேண்டாரைப் பிரித்தல், வேண்டுவாரை இணைத்தல், பிரிந்து வந்தாரைப் பிணைத்தல், ஆய்ந்து தெரிதல், தேர்ந்து செய்தல், ஒரு தலையாகத் துணிதல், அறன் அறிதல், ஆன்றமைந்த சொல்லல், திறங்கண்டறிதல், நூலறிவு, நுண்ணறிவு என்பன இவ்விருபதும் திருவரங்கருக்குப் பெருவரங்களாக வாய்த்தவை என்பதை இவ் வரலாற்றைக் கற்பார் எளிதில் அறிந்து கொள்வர். ஒரு வரலாறு சுருங்கியதா? விரிந்ததா? இவற்றைக் கருதுவது முதன்மையன்றாம். வரலாற்றின் நோக்கம் நிறை வேறியுள்ளதா என்பதே முதன்மையான நோக்கமாம். அந்நோக்கம் இந் நூலில் நிறைவுறுத்தப் பெற்றுளது என்றே நம்புகின்றேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக என் வாழ்வை முற்றிலும் தமிழ் வாழ்வாக ஆக்கி, எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி ஒழியாமல் இனிய தமிழ்ப் பணி செய்தற்குத் திருவருள் துணையால் வாய்த்த பெருந்தகை தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர். அவர்களுக்கு இந் நூற்பணி நோக்கியும் நன்றி கூறுங் கடப்பாடுடையேன். செல்வம், திருநகர் மதுரை - 6. தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன். 26-4-82 1. புகழொடு தோன்றிய கழகம் தோன்றிற் புகழொடு தோன்றுக என்பது பொய்யா மொழி. மனிதத் தோற்றத்திற்குரித்தாய் அமைந்த இம் மொழி, ஓர் அமைப்பின் தோற்றத்திற்கும் உரிமை பூண்டதேயாம் புகழொடு தோன்றிய புலமை மைந்தர் பேரார்வத்தால் புகழொடு தோன்றிய புலமைத் திருவினர் துணையால் தோன்றியது தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகும். கழகத்திற்கு இதுபோழ்து (1980) மணிவிழா. அது தோன்றிய ஆண்டு 1920. அறுபான் ஆண்டுகளின் முன்னே தோன்றிய கழகம் ஆற்றியுள்ள பணிகள் பொன்னெழுத்துகளில் பொறிக்கத் தக்க பெருமை உடையதாம். அதனை ஆய்தற்கு ஒரு நெறி முறையை வகுத்துத் திறனுறத் தந்துள்ளனர், தேர்ச்சிமிக்க திருவாளர்கள். அம் முறை எதிர்மறை முறையாம்! திரு. பிள்ளையர்களைக் காணும்போதெல்லாம், நினைக்கும் போதெல்லாம் அவர்களது அசைக்கலாகாத அன்னை மொழிப் பற்றும் தணிக்கலாகாத தனித்தமிழ் ஆர்வமும் என் நெஞ்சத்தை ஈர்த்து இன்புறுத்தும். தமிழ்த்தாய் செய்த தவப்பயனாய் அவர்கள் தமையனார் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்களும் திரு. பிள்ளையவர்களும் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்திராமல் இருந்தால், தோற்றுவித்தும் ஓயாது முனைந்து இன்றுள்ள அரும்பெரு நிலைக்குக் கழகம் உயருமாறு உழைத்திராமல் இருந்தால், இத்தனை இலக்கிய இலக்கண அறிவு சால் நூல்களை இவ்வளவு திருத்தமான முறையில் இத்துணை அழகழகான வடிவங்களில் தமிழுலகம் எங்ஙனம் பெற்றுப் பயனடைய இயன்றிருக்கும் என கல்லூரி, குமரகுருபரர் குழைந்தைப்பள்ளி, நீலாம்பிகையார் பல்துறைப் பயிற்சிப் பள்ளி, கா.சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றம் இன்னபல அறப்பணி அமைப்புகளை நிறுவிப் பேணி வளர்த்தலால், இத் தமிழ் கூறு நல்லுலகம் பெற்றுவரும் நலங்களைச் சொல்லவும் கூடுமோ? சீரிய கூட்டுறவு நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டா, செவ்விய இதழுக்கு எடுத்துக்காட்டா, குறைவிலா நிறைவாம் பதிப்புக்கு எடுத்துக்காட்டா, புத்தகக் கட்டட எழிலுக்கு எடுத்துக்காட்டா, வீட்டு நூலக வைப்புக்கு எடுத்துக்காட்டா, தொகுப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டா - கழகம் என்னும் ஒரே விடைதானே இவற்றுக்கு உண்டு! தனித்தமிழ் மலையாம் மறைமலையார் தொண்டு விளக்கமுற, மொழிஞாயிறு பாவாணர் தம் செந்தமிழ்ச் சொற்பிறப் பாக்கப்பணி துலக்கமுற, பேரறிஞர் மு வ வின் திருக்குறளுரை வீடெல்லாம் ஒளிசெய்ய வாய்த்த பணிக்களரி கழகமே யன்றோ! இக் கழகம் தோன்றிற் றில்லையேல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் முழக்கம் எழுந்திருக்குமோ? உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் தமிழ்ச் சங்கமும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இன்னபிற பேரமைப்பு களும் தோன்றுதற்கு வழிவகுத்துத் தந்த வளமனை கழகம் என்பதை எண்ணாதிருக்க இயலுமா? கழகந் தோன்றியதால் தோன்றிய பயன்கள் இவையெனின், அக் கழகத்தின் நிறுவனர் அதன் அமைச்சர், கழகந் தோன்றிய நாள் தொட்டு இந்நாள்வரை அதன் ஒவ்வொரு செயல் திறத்திலும் ஒன்றி உடனாகி இயக்கிவரும் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளையின் உடன்பிறப்பாய், வழிகாட்டியாய், குருவாய் அமைந்தவர் ஆகிய திருவரங்கனார் தோன்றிய பயனே மூலமும், முளைவும் விளைவுமாய் அமைந்தன என்பது வெளிப்படை. ஆகலின் அவர்தம் வரலாற்றை அறிதல், தமிழக மறுமலர்ச்சி வரலாற்றை அறிதலாம் என்னும் குறிப்புடன் அறிவோம். 2. தெய்வத் திருவடிவம் கற்சிலை எனத் தகுந்த கட்டுடல்; சற்று வழுக்கையுடன் கூடிய கனத்த பெரிய தலை; நீறுவிளங்கும் பரந்த நெற்றி; பெரிய கண்கள்; இனிக்க இனிக்கப் பேசும் குறுநகை முகம்; அகன்ற மார்பு, வெள்ளிய உட்சட்டை; சட்டைப்பைகள் யாவற்றிலும் பல வகையான கடிதக் கட்டுகளுடைய பொத்தான் போடாத மேற்சட்டை; இடுப்பிற் சுற்றியுள்ள செம்பட்டு; கணுக்காலுக்கு மேற்பட்ட வெள்ளை வேட்டி; ஐந்தடி உயரமுள்ள சற்றுக் குறைந்த உயரம்; நிமிர்ந்து எதிர்நோக்கி நடக்கும் வீரநடை - இவை, தமிழ்த் திருவரங்கரின் தோற்றமென அவர்தம் மைத்துனர் மறை திருநாவுக்கரசு கண்டது கண்டவாறு உரைக்கும் கவினுரை. தோற்றத்தால் சிறந்து விளங்கிய திருவரங்கர், தமக்குத் தமையனாராக அமைந்து வழிகாட்டிய ஏற்றத்தைத், தாமரைச் செல்வர் வ. சு. தம் பவள விழாவில் நினைவு கூர்ந்தார் : என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டவர் என் தமையனார் அவர்களே. அவர்கள் பழைய இதழ்களைத் தொகுத்துக் கொண்டே இருப்பார்கள். பழைய நூல்களைத் தேடித் தொகுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியெல்லாம் அவர்கள் எனக்கு வழிகாட்டியதைப் பின்பற்றித்தான் நான் அப்படியே செய்துவருகிறேன். மறைமலையடிகள் தொடர்பினாலே இந்தத் தனித்தமிழ்த் தொண்டு செய்யும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. ஆதலால், எனக்கு கிடைக்கப்பெறும் புகழுக்கும் - பெருமைக்கும் உரியவர்கள் என் அருமைத் தமையனார் திருவரங்கனார் அவர்களும், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடி களாருமே ஆவர் (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 47, பக்கம் 744) என்பது தம் தமையனாரை நினைவுகூர்ந்த தம்பியார் உரை. இந்திய வரலாறு தென்னகத்தில் தொடங்கியே எழுதப் பெறவேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முந்தை முடிவு. இன்றை அறிஞர்களோ, உலக வரலாறே தென்னகத்தில் இருந்து தொடங்கியே எழுதப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். உலக முதல் தாய்மொழி, தமிழே என்பதையும், மாந்தன் முதற்கண் தோன்றிய இடம், குமரிக் கண்டமே என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். இத்தகு புகழ்வாய்ந்தது தென்னகம். தென்னகத்திலும் தெற்கே செல்லச் செல்லத் தமிழின் சீர்மை சிறந்து விளங்குதல் கண்கூடு. இன்றும் பழந்தமிழ் வழக்காறுகள் பழுதுபட்டுவிடாமல் போற்றிக் காக்கும் வளமையோடு இலங்குவது பழம்புகழ்ப் பாண்டிநாடேயாம். பாண்டி நாட்டின் சிறப்பாக, முப்பொருள்கள் ஓதப்பெறு கின்றன. அவை முத்து, தென்றல், தமிழ் என்பன. திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதிமுனிவர் இறைவன் தெற்கு நோக்கி நடம்புரிவது ஏன்? என ஒரு வினாவை எழுப்பிக் கொண்டு, விடையிறுக்கிறார்: இறைவன் தன் ஆடலால் விளையும் இளைப்பைத் தென்றற் காற்று தன் முகத்தில் விசிறுதலால் நீக்கிக்கொள்வதற்கும், திருச்செவியால் தென்னன் தமிழமிழ்தம் பருகிக் களையாறுதற்கும் தெற்குநோக்கி நடம்புரிகின்றானாம்! இத்தகு தென்னாட்டின் நன்னாடாம் திருநெல்வேலி சார்ந்த பாளையங்கோட்டையில் பிறந்தார் திருவரங்கனார். பாளையங்கோட்டையில் முத்துசாமிப்பிள்ளை என்பார் பேரும் பெருமையும் விளங்கத் திகழ்ந்தார். அவர்தம் அருமைத் திருமகனார் வயிரமுத்துப்பிள்ளை. பெற்றோர் தம் மக்களைக் கண்ணே மணியே வயிரமே முத்தே என்று பாராட்டுவது வழக்கம். பாளை முத்தோ, தம் மகனை வயிரமுத்தாகப் பெயரிட்டுச் சீரோடும் சிறப்போடும் வளர்த்தார். அக்கால முறைப்படி உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பித்துத் தம் மரபுத் தொழிலில் பயிற்றினார். இந்நிலையில் உரிய திருமண பருவம் சார்ந்தார் வயிரமுத்து. பாடு புகழ் பெற்ற கொற்கைப் பழநகரில் ஐயன்பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர்தம் அருமைத் துணைவியார் பேச்சியம்மையார். இவர்கள் செல்வக் குழந்தையாக 1868இல் ஓர் அருமை மகவு பிறந்தது. அம் மகவின் புற அழகும் அக அழகும் கருதி வைத்தாற் போலச் சுந்தரத்தம்மை எனப் பெயர்சூட்டி வளர்த்தனர்! பெயர் விளங்கவந்த அவ்வழகம்மை, அழகுருவாம் மணப்பருவம் சார்ந்தார். அவரே வயிரமுத்தான் அழகுக்கு அழகு செய்யும் வாழ்க்கைத் துணையாக அமைந்தார். வயிர முத்தொடு அழகுசார்ந்த அருமை, இயற்கையொடு பொருந்திய இனிமை வாய்ந்ததேயாம். அவ்வாண்டு 1884. வயிரமுத்து சுந்தரத்தம்மை இணைந்த இனிய வாழ்வு எத்தகையது! பொன்னும் மணியும் - முத்தும் - பவளமும் - வயிரமும் ஒன்றுபட்டு விளங்கும் அணிமாலை தணியா அழகினதன்றோ! அவ்வழகு செய்தது இவர்கள் வாழ்வு! குறிஞ்சிப் பூவில் தேனை எடுத்துச் சந்தன மரத்தில் சேர்த்து வைக்கப்பெற்ற தேனின் சுவைக்கும் நறுமணத்திற்கும் ஒப்புண்டோ? அப்படி ஒப்பறத் திகழ்ந்தது இவர்கள் வாழ்வு! இவர்கள் இனிய இல்வாழ்வின் பயனாகக் கிளர்ந்த மக்கள் ஐவர். அவர்கள் முத்துசாமி, திருவரங்கம், ஐயம்பெருமாள், சுப்பையா, குப்பம்மாள் என்பார். திருவரங்கர் 1890ஆம் ஆண்டு மேத்திங்களில் பிறந்தார். காதல் இருவர் கருத்து ஒருமித்து நடாத்திய இல்லறம், பதினைந்து ஆண்டுகள்கூட முற்ற முடிய நடந்தேறிற்றில்லை. அதற்குள் 1899இல் வயிரமுத்தர் இறையடி எய்தினார். சின்னஞ் சிறு மக்களைக் கொண்ட முப்பது வயதே நிரம்பிய சுந்தரத்தம்மை என்ன பாடுபட்டிருப்பார்! பஞ்சுபடாப் பாடுபட்டு, மக்களை நோக்கி மனவுறுதியால் வாழ்ந்த அவர், தந்தையுமாகித் தம் கடன் ஆற்றினார். தாய்மையின் பெருமையே பெருமை! வெறுக்கத்தக்க வாழ்விலே, உருக்கம் தலைப்பட்டு விடுகிறது! குடும்பப் பெருக்கமே குறியாய்ப், பெண்மை பெருவாழ்வு வாழச் சூழ்கின்றது! இது படைப்பின் அருமைப்பாடேயாம்! இளமனைவிக்கும் இளமக்களுக்கும் தந்தையார் வைப்பு நிதி வைத்துச் சென்றாரா? நிலபுலன்கள் நிரம்ப விட்டுச் சென்றாரா? கன்றுகாலிகள் கணக்கிறந்து இருந்தனவா? இல்லை! இல்லை; வறுமையொன்றே வைப்புப் பொருளாய் விட்டுச் சென்றார்! வழி வழி வந்த வீடு ஒன்றுமே உடைமையாய் இருந்தது! தொண்டாற் பழுத்த தமிழ்க் கிழவர் சுப்பையா பிள்ளை அவர்கள், தம் தந்தையாரைப்பற்றித் தம் அன்னையார் வழியாக அறிந்த செய்திகளை நினைவு கூர்ந்து சுட்டியுள்ளனர் : என் அருமைத் தந்தையார் அவர்கள் திருவுருவம் என் மனக் கண்ணில் தெளிவாகப் படவில்லை. அவர்கள் தோற்றம் பெரும்பான்மை என் அருமை அண்ணனார் வ. திருவரங்கனார் போல இருக்குமாம். திருமணம் ஆகும்போது அவர்கட்கு 27 அகவை இருக்கும் எனத் தெரிகின்றது. அப்போது என் அருமை அன்னையார்க்கு அகவை 16. அவர்கள் கட்டுத்திட்டமான உடல் அமைப்புடையவர்கள் என்றும் யாவரிடமும் அன்பாய்ப் பேசி நட்புக் கொள்ளும் தன்மை உடையவர்கள் என்றும், உறவினர் களிடமும் அன்பு காட்டி வருபவர்கள் என்றும் அவர்கள் விழி கவர்ச்சி தருவதாய் இருக்கும் என்றும் அன்னையார் தெரிவிப்ப துண்டு. பல்வகைப் பொருள்கள் விற்கும் கடை (ஷாப்)யில் கணக்கு வேலைபார்த்து வந்தார்களாம். திருநெல்வேலிக்குச் சென்று ப.த, என்ற முகவரியிலுள்ள துலுக்கர் கடையில் பொருள்களை வாங்குவதற்குச் செல்வார்களாம். அப்படிப் போய் வருகையில் ஒருநாள் ஐயா, வயிரமுத்துபிள்ளை! நீர் சொந்தமாக ஒரு கடை தொடங்கும். உமக்கு வேண்டிய பொருள் களைக் கடனாகத் தருகிறேன் என்று சொல்லவே தனிக்கடை திறந்து நடத்தி வந்தார்களாம். அப்படி நடத்தி வரும்போது மொத்தமாக ஆமணக்கு முத்து, மண்ணெண் ணெய்த் தகரத் தூக்கு (டின்) ஆகியவை வாங்கி வீட்டில் வைத்தும், வியாழக்கிழமை தோறும் சந்தையில் வைத்தும் விற்க ஏற்பாடு செய்தார்களாம். இந்த முறையில் தொழில் வளர்ந்தோங்கி வருகையில் திடுமெனக் காய்ச்சலும் நெஞ்சு வலியும் ஏற்பட்டு மூன்று நாள் வரை துன்புற்று இறையடி சேர்ந்தார்களாம். அப்போது என் மூத்த தமையனார் முத்துசாமி பிள்ளைக்குக் கடையை நடத்துவதற்குப் பழக்கம் போதாது. சிறு பிள்ளைத் தனம். உறவினர் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே, மூன்று ஆண்டுகளில் கடையை நிறுத்தி அதிலுள்ள மிச்சப் பொருள்களை உறவினர் மளிகைக் கடை ஒன்றில் வைத்துவிட்டு அந்தக் கடையில் பணி ஏற்றுக்கொண்டார். கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். அதனினும் கொடிது, இளங்கைம் மையாய்க், குறுகுறு நடந்து சிறுகை நீட்டும் இளமக்களைப் பேணிக் காக்கும் கொடு வறுமையாம்! அக் கொடு வறுமையின் இடையே அன்றோ, ஆலின் அடிமரம் சாயவும் வீழ்து மரத்தைத் தாங்கிக் காப்பது போலச் சுந்தரத்தம்மையார் குடும்பத்தைக் காத்தார்! அவர் காத்த காவல் குடும்பக் காவல் ஒன்று மட்டுமா? அவன் அன்று காத்த காவலின் ஊட்டமும் திறமும் உழைப்பும் அல்லவோ, அருந்தமிழ் அன்னைக்குப் பன்னூறு அணிகலங்களைப் பூட்டிப் பூட்டிப் புகழுறுத்தும் நன்மக்கள் இருவரைத் தந்தது! அந்த வயிரமணிச் செல்வங்களை வயிற்றகத்துத் தாங்கி வளர்த்துத் தொண்டுக்கு ஆளாக்கித், தொண்டர் சீர் பரவுவார் போலத் தம் மக்கள் தொண்டிலே திளைத்து நின்ற தூய தெய்வத் தாய்மை வாழ்வு அதுவேயன்றோ! ஆகலின், இடும்பைக்கு இடும்பை தந்து, இன்மைக்கு இன்மை செய்து இணையற்று வாழ்ந்த அவ்வருமை அன்னையார் வாழ்வு உன்னுந்தோறும் உருக்கமும் அதே பொழுதில் உரமும் ஊட்டுவதாய்த் திகழ்கின்றதாம்! 3. வாழும் வழிகாட்டி குடும்ப நிலை எப்படி? முப்பத்தோராண்டுக் கைம்மை நோன்புத் தாய்! பதின்மூன்றாண்டு முத்துசாமி! பத்தாண்டுத் திருவரங்கர்! ஏழாண்டு ஐயம் பெருமாள்! மூன்றாண்டுச் சுப்பையா! ஓராண்டும் நிரம்பாத குப்பம்மாள்! வருவாய்? வரு வாய் இருந்தால்தானே வருவாய் உண்டு? பொருள் வரும் வாயே அடைபட்டுவிட்டதே! முத்துசாமி தந்தையார் வைத்துச்சென்ற கடையை மூடி உறவினர் கடையில் பணியில் அமர்ந்தார்! திருவரங்கர் கல்விக் காதல் தடையுற்றது. படிப்பை இரண்டாம் படிவத்துடன் முடித்து மூன்றாம் படிவம் செல்லும் அளவிலே படிப்பை விடுத்து வேலை தேடினார். அந்த இளம் பருவம் வேலைக் குரியதோ? கல்விக்குரிய வளமையான இளமை, வறுமையால் வேலைக்குத் தள்ளுண்டு சென்றது. வழக்கறிஞர் ஒருவரின் எழுத்தராக ஏவிற்று. அவ் ஏவுதல் விருப்பந்தரவில்லை. விரைவில் அதனை விடுத்து வேறு வேலைக்கு கிளப்பிற்று! வேலை கைக்குள்ளேயோ கிடைக்கிறது? பாளையங்கோட்டையை விடுத்து தூத்துக்குடிக்குச் சென்றார் இளைய அரங்கனார். துடிப்பும் துணிவும் கூடிவிடுமானால் இளமைக்கு ஈடு உண்டோ? சிற்றாள் வேலை எட்டாள் வேலை என்னும் பழமொழி மெய்யென்பதை அறியார் எவர்? கால்போன போக்கிலே போய்க்கொண்டிருந்தாலும் ஆகூழ் ஒன்று அமைந்துவிடும்போது கையில் கனப் பொருள் சிக்கிவிடும் போலும்! குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே என்னும் கோப்பெருஞ்சோழன் பொருண்மொழிக் காஞ்சி (புறம். 214) மெய்யாதற்குப் போலும், அரங்கனார் வேலை தேடித் தூத்துக்குடிக்குச் சென்றமை! தூத்துக்குடியில் வழுதூர் அழகிய சுந்தரம் பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் சிவநெறிச் செல்வர்; செம்பொருள் துணிவினர்; தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் தொடர்பு உடையவர். ஆசிரியர் மறைமலையடிகள் மாட்டுப் பேரன்பு கனிந்த பெருந்திருவாளர். அவர்தம் உறவும் உழுவலன்பும் இளைய அரங்கர்க்கு வாய்த்தது, வான்பார் பயிர்க்கு வளமழை பொழிந்தது போலாயிற்று! திக்குத் தெரியாத காட்டில் தெருமந்து அலமருவார்க்குத் திசை தெரிந்து வழிகாட்டும் திறலாளி உறவு வாய்த்தமை போல் ஆயிற்று! அம்மட்டோ, வாழத் துடிக்கும் வழிதேடுவார்க்கு வழிகூட்டும் வள்ளன்மையும் வாய்ப்பதுபோல் ஆயிற்று! தூத்துக்குடியில் நேர்ந்த திருப்பமே அரங்கனாரைத் தமிழ் அரங்கராய்ச் செய்தது என்பது வெளிப்படை. தூத்துக்குடி வணிக நிலையமொன்றில் பணி செய்தார் திருவரங்கர். வணிகப் பயிற்சி பெறுதற்கு வாய்ப்பும், வருங்கால வாழ்வுக்கு அடித்தளமுமாகத் தூத்துக்குடி வாழ்வு அமைந்ததே அன்றி, மனநிறைவான பணியாகவோ, தம் குடும்பத்தின் முட்டறுக்க உதவும் வருவாயான பணியாகவோ வணிக நிலையப் பணி அமையவில்லை. இந் நிலையில் ஆங்கிருத்தல் குடி செய்வல் என்னும் ஒருவற்கு ஆகாமையை உணர்ந்தார் அரங்கர். வீட்டார் இசைவு கேட்டுச் செல்வதும் இயலாது என உணர்ந்தார். அதனால் வழுதூர் அழகிய சுந்தரனார் வழிகாட்டலின்படி, தூத்துக்குடியில் இருந்து கப்பல் ஏறிக் கொழும்புக்குச் சென்றார். கொழும்பு சேர்ந்த பின்னரே தம் அருமை அன்னையார்க்கும், உடன்பிறந்தார்க்கும் செய்தி விடுத்தார். அரங்கரின் பிரிவு குடும்பத்தை அலைத்தது. எனினும் அவர்தம் ஆர்வ முயற்சிப் பெருக்கும் உருக்கியது! குடும்பப் பொறையும், அதன் நலமும் கருதி இருபாலும் நிறைவு கொள்ளும் நிலைமை உருவாகியது. இது நிகழ்ந்தது 1907ஆம் ஆண்டிலாகும். அப்பொழுது அரங்கனார் அகவை 17. கொழும்பு மாநகர் சேர்ந்த அரங்கர், திருநெல்வேலியைச் சார்ந்த * சிசுவ. என்னும் வணிக நிறுவனத்தில் பணி ஏற்றார். பணி என்றால் எப்படி? கடைக்கணக்கு எழுதும் எழுத்தர் பணி! எழுத்தாளர் எழுத்துகளை எல்லாம் முத்திரையிடப் பிறந்த பெருமகனார், கடைக்கக்கு எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்பணிக்கு, அணி சேர்க்க அமைத்தார். ஊழையும் வெல்லும் உரம்; உயர்ந்த குறிக்கோள்; குடும்பத்தைக் காக்கும் புரவாண்மை; தம்மைச் சான்றோராக்கும் தகவு; தம்மைச் சார்ந்தாரால் தலைமையாகக் கொள்ளப்பெறும் பீடு; தமிழ்க் கல்வி ஊற்றம்; சமயச் சால்பும் சிக்கெனப் பிடிக்கும் கடைப்பிடியும்; நெஞ்சார்ந்த நேர்மை; வஞ்சமற்ற உழைப்பு; உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு; தேனென இனிய கூறித் திளைக்கும் நாநயம்; காலந் தவறாக் கருதுகோள்; சுற்றந் தழூஉம் உரிமைப்பாடு; தலைமையை மதித்தொழுகும் தனிப்பெருந் தகவு; புதியன காண்டலில் பெரு வேட்கை; அறிவாராய்ச்சியில் எல்லையில்லா ஆர்வப் பெருக்கு-இவ்வளவு அரும் பெருங்குண நலங்களும் இளமையிலேயே வாய்ந்த பெருந்திருவினர் எப்பணியில் புகுந்தால் என்ன? எந்த இடத்தில் எந்தச் சூழலில் இருந்தால் என்ன? காலமும் இடமும் சூழலும் கைகட்டி நின்று மடி தற்றுத் துணை செய்தலுக்கு ஐயமுண்டோ? திருவரங்கனார் ஈழத்தில் இருந்த காலையில் உழைத்த உழைப்பை உடனிருந்து கண்டவர், பின்னாளில் மதுரைத் திருஞான சம்பந்தர் திருமடத் தலைவராகத் திகழ்ந்த திரு. சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களாவர். அவர்கள் அரங்கரைப் பற்றிய நினைவினை ஒரு முறைக்கு இருமுறை நினைவு கூர்ந்து எழுதினார் : நம் பேரன்பர் திருவரங்கம்பிள்ளை அவர்கள், எடுத்த காரியத்தை முற்றுப்பெறச் செய்வதில் சலியா உழைப்பும், தளரா ஊக்கமும், அயரா ஆர்வமும், அஞ்சா நெஞ்சமும், தமிழ்ப்பற்றும் இறைவனிடத்தில் மாறாத அன்பும் கொண்டவர்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டும் தூங்கி, பாக்கி 21 மணி நேரமும் உழைத்து வந்த காலமும் உண்டு என்று கழகத்தில் 1008வது வெளியீட்டு விழா மலருக்கு எழுதிய வாழ்த்துரையில் தெரிவிக்கிறார். அதன் மேலும் விளக்கமாகக் கழகப் பொன் விழா வாழ்த்தில் தெரிவித்துள்ளார் மதுரை அடிகளார். இக் கழகத்திற்குப் பங்குகள் சேர்த்து வரையறுக்கப்பெற்ற நிறுவனமாக உருவாக்க அதற்கென்றே அவதரித்த நமது மதிப்பிற்குரிய திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளை அவர்கள் எவ்வளவு பாடுபாட்டார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் இரவு மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவதும் மற்ற 21 மணி நேரமும் அயராது உழைத்து வந்ததும் நாம் நேரில் கண்டு வியப்புற்றிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சின உழைப்பால் பின்னர் அவர்கள் உடல் சிறிது நலிவுற்றதும் உண்டு. ஆனால், செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலா தார் என்ற திருக்குறளையும், துன்பம் உறவனினும் செய்க துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினை என்ற திருக்குறளையும் அவர்கள் நடைமுறையில் கையாண்டு வந்ததன் காரணத்தினாலேதான் இந்தக் கழகத்தை வெற்றி கரமாக அவர்கள் நடத்திவர முடிந்தது. திருவரங்கரின் வளமான இளநெஞ்சில் அழகிய சுந்தரம் பிள்ளை, மறைமலை என்னும் வித்தினை ஊன்றினார் அல்லரோ! அவ்வித்து முளைத்து இலையொடு வெளிப்படும் வாய்ப்பும் அடுத்தே நிகழ்ந்தது. அடிகளார் எழுதிய நூல்களைத் திருவரங்கர் தருவித்தார். அவற்றைப் பருகுவன் அன்ன ஆர்வத்தராய்ப் பயின்றார்; பயின்ற செய்திகளை வாளா ஒழிய விடாமல் தம்மொத்தவர்க்கும், உயர்ந்தவர்க்கும் பயிற்றினார். இயல்பிலேயே, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது, நாதன் நாமம் நமச்சியாயவே என்று கண்டவர் அரங்கர். அதனை அடைவதற்குக் குருமூர்த்தமாய் எழுந்தருளி இருப்பவர் தவத்திரு மறைமலையடிகளாரே என்னும் தெளிவுக்கு வந்தார்! ஆதலால், தம் நெஞ்சத் தாமரை இருப்பில் அடிகளாரை இருத்தி வைத்து வழிபட்டார். காணாமல் கண்டடைந்த குருமணியைக் கண்ணுறக் கண்டுகளிப்புறும் காதல் பெருகிற்று. இதனைப் பெருக்கியதில் மீண்டும் தூத்துக் குடிக்கும், அழகிய சுந்தரனார்க்கும் பெரும் பங்கு உண்டு. 1910ஆம் ஆண்டு முதல் தவத்திரு மறைமலையடிகளார் சில ஆண்டுகள் தொடர்ந்து தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் ஆண்டு விழாத் தலைமை பூண்டார்; தலைமைக்கண், அரும்பெரும் பொழிவுகள் செய்தார்; பிறர் பொழிவு தொடர்பாகவும் நிறைவுரை யாற்றினார். அடிகளார் வருகை முதல் விடைபெறல் ஈறாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், வழங்கிய அமுத மொழி களையும் தூத்துக்குடி அன்பர்கள் வழியாகவும், குறிப்பாக அழகிய சுந்தரர் வழியாகவும் அரங்கர் அறிந்தார். அடிக்கடி அவற்றைக் கேள்வியுற்று, என்று கொலோ கண்குளிரக் காணு நாளே என்று ஏக்குற்றார். இந் நிலையில் அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்துப் பயன் கொள்ளும் ஒரு முடிவுக்கு வந்தார். திருவரங்கர், உண்மைத் தமிழர், உழுவலன்பர், உரிமைத் தொடர்பர், வணிகப் பெருமக்கள், வள்ளன்மைச் செல்வர், பட்டம் பதவி வீறுடைய தமிழ் அறிஞர் ஆகியவர்களோடு அணுக்கத் தொடர்பு கொண்டு அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்துப் பேறு கொள்ளும் விழுப்பத்தை எடுத்துரைத்தார். நன்மக்கள் கூட்டம் நயந்து பாராட்டியது. அரங்கனார் ஆர்வத்திற்கு அரணாகிப் புலமைத் துணையும் பொருள் துணையும் புரியக் கிளர்ந்தது. அரங்கனார் விழைவு வெற்றிக் கனியாக இலங்கலாயிற்று. பல்லாவரத்தில் இருந்து கொழும்புச் செலவு மேற்கொண்ட அடிகளார், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் தலைமையேற்கும் பொறுப்பும் ஏற்றுக் கொண்டிருந்தார். 20-12-1913, 21-12-1913 ஆகிய இரண்டு நாள்களும் அரிய பொழிவுகள் செய்தார். 24-12-1913இல் தூத்துக்குடி கீழூர் சிவஞானப் பிரகாச சபை விழாவில், சென்னை கிருட்டிணவேணி அம்மையார் புலமைத் திறனைப் பாராட்டிப் பண்டிதை என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். 4-1-1914இல் தூத்துக்குடியில் திருஞான சம்பந்தரைப் பற்றிப் பொழிந்தார். 6-1-1914 மாலையில் தூத்துக்குடியில் இருந்து கப்பலேறிக் கொழும்புக்குச் சென்றார். 7-1-1914 காலையில் கொழும்புத் துறையை அடைந்தார் அடிகள். * சிசுவ. என்பது சாத்தான் குளம் சிவகாமிநாதபிள்ளை, அம்மன்புரம் சுப்பராய பிள்ளை, குலசேகர பட்டினம் வயிரவநாதபிள்ளை என்னும் மூவரும் நடாத்திய கூட்டு நிறுவனச் சுருக்கப் பெயராகும். 4. ஈழத்தில் தமிழ்மலை அடிகள் வந்துசேரும் கப்பலை அறிந்து கொண்டிருந்த அரங்கர், தம் அன்பர்களும் அணுக்கர்களும் நகரப்பெரு மக்களும் திரண்டிருக்க வரவேற்று மகிழ்ந்தார். அதற்கு முன்னர் அன்புக் கடிதங்கள் வாயிலாக மட்டும் அறிந்திருந்த அரங்கரின் இளமைப் பொலிவையும், வளமையுளத்தையும் நயத்தகு பண்பு நலங்களையும் நேரில் கண்டறிந்த அடிகளார் மட்டற்ற மகிழ்வு கொண்டார். தம்மை ஈழத்திற்கு இவ் விளைஞர்தாமோ அழைத்தார்? இவர்தம் ஆர்வமும் ஆற்றலும்தாம் என்னே! என்னே! இவ் விளைஞர்பால் இங்குறையும் பொருட் செல்வர்களும் அருட் செல்வர்களும் கொண்டுள்ள ஈடுபாடு தாம் என்னே! என்னே! எமக்குத் தொண்டு செய்ய வென்றே இறைவன் இவ் வரங்க வள்ளலை விடுத்தருளினான் கொல்லோ! என்று பலவாக எண்ணி உளந்ததும்பினார்; உவகை கூர்ந்தார்! தவத்திரு அடிகளார் சமயப் புலமையையும் தமிழ் வீறுகோளையும் நூல்கள் வழியாகவும், அவர்தம் பொழிவுகளைக் கேட்டுச் சுவைத்த ஆர்வலர் வழியாகவுமே அறிந்திருந்த அரங்கர், அடிகளாரின் தோற்றப் பொலிவிலும் தம்மை மறந்து மயங்கி ஒன்றினார்! சிவக்கோலம் என்பதும் இதுதானா! செந்தண்மையும் அந்தண்மை என்பதும் இதுதானா! என்னை வழிவழியாக ஆட்கொண்டருள வேண்டுமென்ற பேருள்ளப் பெருக்காகிய திருவருட் கோலம் என்பதும் இதுதானோ! வணங்கி வழிபடத்தக்க இறை மூர்த்தம் எளியேன் பொருட்டாக ஒருவடிவு கொண்டு எழுந்தருளியிருக்கும் பேறே பேறு! என்று தீராக் காதலராய் உள்ளம் அள்ளூறி ஊற்றெடுக்க நின்றார். வரவேற்பு அறிமுகம் என்பன வெல்லாம் முறையே நிகழ்ந்தன. அடிகளார்க்கு வளமெலாம் ஒருங்கு அமைந்த வளமனை ஒன்றில் தங்கும் வாய்ப்புச் செய்யப் பெற்றிருந்தது. முதற் கூட்டம் 10-1-14ஆம் நாள் மாலையில் கொழும்பு தம்பையா சத்திரத்தில் நிகழ்ந்தது. தொடக்க நிகழ்ச்சி எவ்வாறு அமைந்தது? பெருங்கூட்டமாகத் திரண்டது. உண்மையான சமய அன்பர்கள் கூட்டம் அது. கொழும்பு நகரில் பெருமை பொருந்திய முதலியார் கைலாச பிள்ளை, அடிகளைப் பற்றிய அருமை பெருமைகளை அவையோர்க்கு எடுத்துக்கூறி வரவேற்றார். பொன்மேனியில் காவியாடை ஒளிரும் தோற்றம், முக்காடிட்ட தாமரை போன்ற திருமுகப் பொலிவு, இனிமையே உருவெடுத்தாலனைய சாயல், ஆய எழில் வடிவாம் அடிகளின் திருமுகத்தை நோக்கியபடியே அவையோர் அசையாமல் விழித்த இமை மூடா யோகியர் ஆனார். எங்கும் மலைக்காட்டின் அமைதி. அடிகள் புனிதவாய் மலர்ந்து, கண்மூடிக், கை குவித்து மனமுருக-நீர்வார-கடவுள் வாழ்த்து, ஞானசம்பந்தர் வாழ்த்துகளைப் பாடி முடித்தார். அடிகளின் இசை இனிமை, இனிமைக்கு இறைவனாகும். அவ்வின்னோசை இன்ப வெள்ளத்தில் படிந்த அவையோர் தம்மையும் உலகையும் உணர்ந்திலர். இதுவரை கண்டும் கேட்டு மிராத சுவைத்திராத இன்ப நிலையடைந்தனர். அவையோர் உணர்ச்சி பேசுபவரையும் பற்றிக்கொள்ளும் அல்லவா? பேரின்ப உலகத்துக் குயில் அன்பர்களே என்று பேசத் தொடங்கியது. அவ்வளவுதான்! அவையோர் தேனுண்ட வண்டென மேலும் இன்ப மயக்கத்தில் கலைமகள் விழாப் பதுமைகளாய்ச் சமைந்தனர். எல்லோருடைய அறிவும் அடிகள் அறிவில் ஒன்றிவிட்டது. கற்பனை கடந்த அடிகளின் சொற்பொழிவின் பதிப்பில் திளைக்கலாயிற்று. பேசத் தொடங்கிய தமிழ்ப் பெருமான்- சிவபெருமான் - எதுபற்றிப் பேசியிருப்பார்? கருத வேண்டியதில்லை. திருஞானசம்பந்தரைப் பற்றித்தான். அடிகள் தம் ஆருயிரினும் சிறந்த அப்பிள்ளைப் பெருமானைப்பற்றிப் பேசி முடித்தனர். முதல் வெற்றி. முழு வெற்றி. வெற்றி, வெற்றி பெற வேண்டு மென்று தவங்கிடந்தது, அதன் பயனாய் அடிகள் பேச்சில் கலந்து வெற்றி பெற்றதென்றே சொல்ல வேண்டும். இன்பமோ துன்பமோ சொல்லியன்றித் தீராது. அடிகளின் சொற்பொழி வின்பத்தில் மகிழ்ந்தவர்கள் அம் மகிழ்ச்சியைத் தம்முள் அடக்கும் ஆற்றலற்றவராயினர். அடிகள் பேச்சு அவ்வளவு உயர்ந்தது. மூவுலகத்தும் கடவுளிடத்துங்கூட அவ்வளவின்பம் இருக்காது. ஆகவே, மறுநாள் அடிகள் இருக்குமிடத்தை எண்ணற்ற அன்பர்கள் நாளெல்லாம் சூழ்ந்துகொண்டனர். அடிகளும் சளைக்கவில்லை. வந்தவர்களிடம் இன்பமுறப் பேசினார். மேலும் அவர்கள் இன்புற்றுச் சென்றனர். (மறைமலையடிகள் வரலாறு 205 - 6) 7-1-1914இல் கொழும்புக்கு வந்து சேர்ந்து அடிகள் 24-3-1914 வரை ஆங்கிருந்தார். இவ் விரண்டரைத் திங்கள் காலமும் திருவரங்கர் அடிகளுக்கு அன்பராய், அணுக்கராய், அறிவறிந்த ஆர்வலராய், இவ் வெல்லாவற்றையும் கடந்த தொண்டராய்த் திகழ்ந்தார். எத்தனை இடங்களில் கூட்டம்; எத்தனை பெருமக்கள் தொடர்பு; எவ்வளவு பொருள் தண்டல்; எல்லாவற்றிலும் திருவரங்கர் தூய உள்ளம் படிந்து படிந்து தொண்டாற்றியது. ஈழத்திற்கு சென்ற அடிகள் பன்னிரு கூட்டங்களில் பொழிவு செய்தார்; திருவருட் செல்வத்தையும், செந்தமிழ்ச் செல்வத்தையும் வாரி வாரி வழங்கினார்! வழங்கிய அடிகளுக்குப் பொருட் செல்வம் வாரி வழங்கும் கடப்பாட்டில் முனைந்து நின்றார் திருவரங்கர். அடிகள் பல்லாவரத்தில் திருமாளிகை ஒன்று எழுப்புதலில் ஊன்றியிருந்தார். அதற்கு வேண்டும் பொருட்குறையால் இடருற்றிருந்தார். அக் குறையைத் தீர்க்கத்தக்க வகையில் அடிகளார்க்கு அரங்கர் பொருளீட்டி உதவினார். அடிகளாரின் முதற் சுற்றுலாவிலேயே ரூ. 1888 கிடைக்க வகை செய்தார் திருவரங்கர். அம்மட்டோ, அடிகளாரின் அறிவாக்கப் பணிகளுக்கு உதவும் வகையில் திங்கள் தோறும் கொழும்புச் செல்வர்கள் வழியாகத் தொகை கிடைக்கவும் வகை செய்தார். அடிகளார் நூல்களைத் தருவித்து விற்றுத் தந்தும் உதவினார். பின்னே, அடிகளார் அச்சகம் ஒன்று நிறுவுதற்கு முனைந்தார். அதற்கும் அரங்கர் பெரும்பொருள் திரட்டித் தந்தார். அடிகளார் தம் அறிவுக் கடல் (ஞானசாகரம்) இதழில் திருவரங்கர் தொண்டினை எழுதிப் பாராட்டினார் : நமது அச்சுக் கூடத்திற்காக அன்பர்களிடம் பொருள் திரட்டித் தர முன்வந்து நின்று, சென்ற ஒன்றரையாண்டுகளாக இடையறாது உழைத்து உதவி செய்துவரும் நம் அன்புருவான ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையர்களின் பேருபகாரச் செய்கைக்குத் திருவள்ளுவ நாயனார், செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது என்றருளிச் செய்தவண்ணம் எவ்வகையான கைம்மாறுதான் செய்யக் கூடும்? நம்மருமைச் செந்தமிழ் மொழியும் சைவ சிந்தாந்த ஞானமும் பரவும்பொருட்டு நாமெடுத்துவரும் நன்முயற்சிகள் தளராமல் நடைபெற வேண்டுமென்று எண்ணிய அவர்களின் புண்ணிய நினைவும், அந் நினைவை நிலைபெறச் செய்த அவர்களின் அரிய பெரிய முயற்சியும் எல்லாம் வல்ல இறைவனருளை இடையறாது இழுக்கவல்லன. அவர்கள் அத்திருவருட் பேற்றால் வரும் எல்லாச் செல்வங்களையும் பெற்று எம்னோர்க்கு உறுதுணையாய் இனிது வாழ்வார்களாக என்று வாழ்த்துகின்றோம். இனி ஸ்ரீமான் திருவரங்கம் பிள்ளையின் வேண்டுகோட் கிணங்கிப் புண்ணியத் திருவாளரான குலசேகரன்பட்டினம் ஸ்ரீமான் ரா. ப. செந்திலாறுமுகம் பிள்ளையர்கள் எழுநூற்றைம்பது ரூபாவும், தயாளகுணப் பிரபுவான கு. ப. பெரியநாயகம் பிள்ளையவர்கள் ஐந்நூறு ரூபாவும் நமது அச்சுக்கூடத்திற்கென்று தருமமாக உதவி, உடனே உயர்ந்த புதிய அச்சியந்திரம் வாங்கும்படி முன் முயற்சியுங் காட்டிய அரும்பெருந் தகைமை எழுமை எழு பிறப்பும் மறக்கற்பாலதன்று. அச்சகத் திறப்பு விழா அறிக்கையிலும் அரங்கரை அடிகள் நினைவு கூர்ந்தார் : நமக்கே சொந்தமாக ஓர் அச்சுக்கூடம் திறக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக உள்ளத்திற் கொண்டிருந்த பெருவிருப்பத்தை எல்லா நலத்திற்கும் உறைவிடமான நம் ஆண்டவன் திருவருளும் அவ்வருள்வழி நிற்பவரான அன்பர் ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையவர்களும் நிறைவேறச் செய்த பேருதவியினால் சாலிவாகனசகம் 1838 நள வருடம் கார்த்திகை மாதம் 26ந் தேதி (12 - 12 - 1916) புதன் கிழமை காலையில் ஏழரை மணிக்குப்பின் எட்டு மணிக்குள்ளாகப் பல்லாவரம் நமது சமரச சன்மார்க்க நிலையத்தின்கண் நமக்கே சொந்தமான டி.எம் என்னும் பெயர் வாய்ந்த நம் அச்சுக்கூடம் நிலைபெறுத்தப்பட்டுச் சைவ மங்களக் கிரியைகளோடு திறக்கப்படலாயிற்று. அச்சகத் திறப்பு விழா நிகழ்ந்த அன்றும், அதற்கு உதவியாம் பொருட்டுத், திருவரங்கர் தாம் நன்கொடையாகத் தண்டிய ரூபா அறுநூறை விடுத்திருந்தார். இத்தகைய அருமையை உணர்ந்ததால்தான், அடிகட்கு உதவச் சிவபிரானால் அனுப்பப்பட்டவர் திருவரங்கம் பிள்ளையாவர் என்றும் (மறைமலையடிகள் வரலாறு 199) திருவரங்கர் உதவியில்லா விட்டால் அடிகள் கவலையின்றி இன்பமாய் - சிறப்புடன் தம்மறிவினால் தமிழகத்தினை உயர்த்திருக்க முடியுமா? என்றும் (மேற்படி 250) நேரில் உணர்ந்தவர் பாராட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து அடிகளார்க்கு முட்டுப்பாடு இன்றி உதவிய திருவரங்கர் அடிகளாரை மீண்டும் கொழும்புக்கு அழைத்தார். 21-5-1917இல் கொழும்புக்குப் புறப்பட்ட அடிகளார் 28-9-1917இல் மீண்டார். ஏறத்தாழ நான்கு திங்களாக அமைந்த இச் சுற்றுலாவில் அடிகளின் புலமைச் செல்வத்தை ஈழம் பெற்றுப் பேரின்பம் துய்க்கவும், ஈழப் பெருமக்களின் நன்கொடைச் செல்வத்தால் அடிகளார் தம் தவப்பெரும் பணிகளை மேலும் மேலும் சிறக்கச் செய்யவும் வாய்த்தது. அன்றியும் அரங்கரின் அருமை இளவல் வ. சுப்பையா அவர்களும் அடிகளாருடன் அணுக்கராய் அன்பராய்த் திகழவும் வாய்த்தது. இவ்விரண்டாஞ் சுற்றுலாவில் அடிகளார்க்கு வேண்டும் நலங்களெல்லாம் சூழ்ந்த பேணியதுடன், நன்கொடை தண்டி ரூ. 1797உம் திருவரங்கர் வழங்கினார். அவர்தம் ஆர்வத் தொண்டில் முழுதுற ஆழ்ந்த அடிகளார் ஒரு பெருங் கூட்டத்தில் நீவிர் நாயன்மார் அறுபத்து மூவரை அறிவீர்; அறுபத்துநான்காம் நாயனார் ஒருவருளார். அவரே இத் திருவரங்கர் என்று பேரன்பு தழைக்கப் பாராட்டி மகிழ்ந்தார். அரங்கர், தொண்டராய் அடிகளார் தொண்டர்சீர் பரவுவாராய் அமைந்த பெற்றி இது. அடிகளாரும் அரங்கரும் அடிக்கடி கடிதத் தொடர்பு கொண்டனர். அறிவுத் தொண்டில் தலைப்பட்ட அவர்கள் உள்ளம் ஆர்வத்தால் உந்தப்பெற்று அன்புப் பிணைப்பில் ஒன்றியது. எட்டா இறையோடும் மாந்தரை இணைத்து வைக்கும் அன்புப்பெருக்கு எவரையே இணைக்காது? இருபாலும் பெருகிய அன்பின் முகிழ்ப்பு, தெய்வத் திருக்கோலமாய் உள்ளெலாம் அள்ளூறி நின்றது. அன்புருவான செல்வச் சிருஞ்சீவி திருவரங்கம் பிள்ளை அவர்களுக்குச் சிவபெருமான் றிருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக. நமது அச்சுக் கூடத்திற்குப் பொருளுதவி செய்ய இசைந்த அன்பர்களிடம் தாங்கள் அன்பு கூர்ந்து திரட்டியனுப்யிய ரூபா நூறும் வந்தது. பிறர்க்கென வாழும் பெருந்தகைமை வாய்ந்த தங்கள் பேருள்ளத்தில் எழுந்தருளி யிருக்கும் நம் சிவபெருமான் தங்களுக்கு நல்வாழ் நாளையும் களங்கமற்ற தூய உதவி நினைவுகளையும் மேன்மேல் அருளித் தங்களை எல்லா வகையிலும் மேம்படச் செய்வானாக. தாங்கள் இன்னுஞ் சிறிது விடாது முயன்றால் தொகை விரைவிற்றிரளும். நம் கவலைகளெல்லாம் அகலும்; உலகத்திற் றமிழும் சைவமும் நத்தாமணி விளக்கங்களாய்த் திகழும். தங்கள் புகழும் புண்ணியமுங் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் திகழும் என்று அடிகளார் 29-6-1916இல் அரங்கருக்குக் கடிதம் வரைந்தார். பாராட்டும் நன்றியும் பலபட உரைத்தார். இலங்கைக்குச் சென்று இரண்டாம் சுற்றுலாவை முடித்துக் கொண்டு பல்லாவரம் மீண்ட அடிகளார் 6-8-1917இல் எனதிரு கண்மணியாய் அன்புருவாய் விளங்கும் செல்வச் சீரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையவர்கட்கு நம் பெருமான் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக. தங்கள் பேரன்பின் பெருக்காலும் நம் மிறைவன் திருவருள் வளத்தாலும் சுகமாக இங்கு வந்து சேர்ந்தேன். நம் பெருமான் திருவருட் பேற்றையும் சைவ சமய விளக்கத்தையு மேயல்லாமல் பிறிதெதனையும் கைம்மாறாக நோக்காமல் உண்மையன்போடு உழைத்து வரும் தங்கள் அரும்பெருஞ் செயல் உலகின்கண் மற்றெங்கும் காண்டல் அரிதரிது. தங்களைக் கொண்டே நமது சிவஞான தர்மம் இனிது நடைபெறச் செய்துவரும் திருவருளுக்கு நமது வணக்கம் உரியது என்று ஆராவிருப்பார் எழுதினார். திருவரங்கர் தொண்டராகவும் புரவலராகவும் அறிவறிந்த அன்பராகவும் இருப்பதுடன் தாம் பெற்ற அறிவுநலத்தை மேடைப் பொழிவின் வழியே வாரி வழங்கும் வள்ளலாகவும் திகழ வேண்டும் என அடிகளார் எண்ணினார்; மிகமிக விரும்பினார்; அதற்குத் தாம் உதவும் முயற்சியும் மேற்கொண்டார். இரண்டு மூன்று நாட்களுக்குமுன் உபந்யாச விஷயம் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அது வந்துசேர்ந்த விவரம் உடனே தெரிவியுங்கள். இங்ஙனமே மாதம் ஒவ்வொன்று உங்கட்கு எழுதியனுப்புவேன். நீங்கள் திருவருட்டிறத்தால் நன்கு உபந்நியசிக்கும் ஆற்றல் பெற்றுத் தமிழையும் சைவத்தி னையும் எங்கும் விளங்கச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது பெருங் கோரிக்கை என்று எழுதி வழிகாட்டினார். ஆனால் அரங்கர் என்றும் செயற்கள வீரராகத் திகழ்ந்தாரே யன்றிச் சொற்கள வீரராகத் தோன்றினார் அல்லர். ஒருவேளை, சொல்லாண்மையினும் செயலாண்மையே அழியாதது என்றும், செயலாண்மையில் நிலைபெறுத்தாத சொல்லாண்மையால் பயனேதும் இல்லையே என்றும் அரங்கர் உள்ளம் திட்டப் படுத்தியிருக்கக் கூடும்! ஆகலின், அரங்கர் தம் வாழ்நாள் முழுமையும் சொற்களத்தில் தம்மைப் புகுத்திக்கொண்டார் அல்லர். பலபல சொற்பொழிகள் நடக்க ஏற்பாடு செய்துவந்த அரங்கர் தாம் சொற்பொழிவு செய்தலில் நாட்டஞ் செலுத்த வில்லை எனினும், கடிதம் எழுதுதலில் பேரார்வம் கொண்டி ருந்தார். கடிதம் எழுதுதலைத் தனிப் பெருங் கலையாகப் போற்றினார். அவர்தம் எழுத்தும் அடித்தல் திருத்தல் இன்றி முத்துக்கோவை போல் ஓர் ஒழுங்குபட இருக்கும். தாளின் மேலே கையை வைத்து எழுதத் தொடங்கினால் ஒரு சிறு தடையும் இல்லாமல் அப்படியே தாளின் அடிப்பகுதி வரை விரைந்து எழுதி முடிக்கும் திறம் அரங்கர்க்கு இயல்பாய் இருந்தது. நொடிப் பொழுதும், இடைத்தடையுற்றுக் கடிதம் கணங்காது! கடிதச் செய்தியும், இளமைத் துடிப்பும், முதுமைத் திறமும் ஒருங்கே காட்டவல்லதாய் அமைந்திருக்கும். பயனற்ற செய்தி ஒன்றும் அவர் கடிதத்தில் இடம் பெறுவதே இல்லை. இனிய தம்பியார் வ. சு. விற்கு 14-8-1913இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் : நீ இனிமேல் தமிழ் எழுத்துகளை ஒவ்வொரு வரையின் மேலும் இலக்கண வழுவின்றி fullstop, cama, semicolan, colan முதலிய புள்ளிகள் போட வேண்டிய இடங்களில் போட்டும், வெவ்வேறு விஷயமாகயிருந்தால் வெவ்வேறு பாராப் போட்டெ ழுதியும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாயும் தனித் தனியாயும் கூட்டெழுத்து எழுதாமலும் எழுதப் பழக வேண்டும். எழுத்துக்களைப்பற்றிக் கூறி நெறிப்படுத்தும் திருவரங்கர் கொள்ளத்தக்க நன்னெறிகள் சிலவற்றையும் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார் : நித்தியப்படி தேகாப்பியாசமும் செய்துவர வேண்டும். உன் வேலைகளை Time Table போட்டு ஒழுங்காய் (Regular) அணுகவும் பிசகாமல் நடந்து வருவாயென நம்புகிறேன். LibraryÆš News paper எடுத்து அதை வாசித்து வரவேண்டும். அதுவும் விருத்தியை உண்டுபண்ணும். “Om I am very active strong & healthy Sivayanama” இதனை எந்த நாளும் காலையில் 15 நிமிஷம் மனதில் நினைத்து ஒரே சிந்தனை செய்து வருவாயானால் நல்ல சுகமும், பலமும், மிகுந்த ஞாபக சக்தியும் அடைவாய். அதாவது தனியாக ஓர் அறையில் இருந்து மனத்தை ஓர்மையோடு செலுத்தி உச்சாடனம் பண்ணிக் கொண்டு வருக. தம்பியார் வ. சு.வுக்கு அரங்கர் இதனை 14-8-1913இல் எழுதினார். அப்பொழுது தம்பியார் அகவை 16. அரங்கர் அகவை 23. ஏழாண்டு மூத்த தமையனாராகவோ அரங்கர் எழுதுகின்றார்? தந்தை நிலையில் இருந்து காக்கும், தலைமகனா ராகவன்றோ எழுதுகின்றார்! தந்தையார் மறையும்போது சுட்டிக் கூறிய குறிப்பு அவர் உள்ளத்தின் ஆழத்துள் ஆழமாய்ப் பதிந்து கிடந்தது! நம் பெருங் குடும்பத்தைத் தொடக்கமுதல் நானே பாதுகாக்கக் கூடியவன் என்று ஐயர் அவர்கள் இறக்கும் போது சுட்டிக் காட்டி அறிவுறுத்திய அறிவுரையைச் சிரமேற் கொண்டு தாமே குடும்பக் கடமைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு அரங்கர் செய்தாரகலின், தம் சீரிளமைப் பருவத்திலேயே செழுமுதியராய் அறிவுறுத்தி வழிகாட்டும் திறம் பெற்றார் எனல் அமையும். 5. பெருந்தகை வள்ளல் திருவரங்கனார் உள்ளத்தில் அடிகளார் கோயில் கொண்ட நாள் முதல், எவ்வெவ் வகையால் எல்லாம் அவர்க்கு உதவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டே இருந்தார். அவ்வாறு திட்டமிட்டுச் செய்தவற்றுள் இரண்டனைச் சுட்டல் சாலும். ஒன்று திருசங்கர் கம்பெனி என்னும் பெயரால் புத்தக நிலையம் ஒன்று தொடங்கியது; மற்றொன்று அடிகளாரின் ஆய்வுக்கு உதவும் வகையில் திங்கள் தோறும் ஒரு தொகை கிடைக்குமாறு வகை செய்தது. திருவரங்கரின் கெழுதகை நண்பர் வி. சங்கர நாராயணபிள்ளை என்பார். தம் பெயரையும் சுருக்கி இணைத்துத் திருசங்கர் கம்பெனி என்னும் பெயரால் 1917இல் ஒரு புத்தக நிறுவனத்தைத் தொடங்கினார் திருவரங்கர். இப் புத்தக நிறுவனம் பொதுவாக அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி விற்று வந்தது. என்றாலும், அடிகளார் நூல்களை இலங்கையில் பெரிதும் பரப்பி அடிகளுக்கு உதவி செய்தற்காகவே தோன்றியதாகும். பின்னர் இந் நிறுவனத்தின் வழியாகவே செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரால் அடிகளார் வரைந்த திருவாசக விரிவுரை திங்கள் வெளியீடாக வெளிப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவரங்கரும் சங்கரநாராயணரும் இணைந்து செய்த இச்செயல் போலவே, திருவரங்கரும் அவர்தம் பேரன்பர் ராம. ப. செந்திலாறுமுகம் அவர்களும் இணைந்து செய்த உதவியே மற்றொன்று ஆகும். அடிகளார் நூலாராய்ச்சி செய்தல், புராணங்களுக்கு உரை வரைதல் ஆகிய ஆக்கப் பணிகள் செய்யுமாறு கொழும்பு வணிகப் பெருமக்களிடம் திங்கள்வாரி நன்கொடைத் திட்டம் ஒன்றைத் தொடங்கி உதவினார். அதன்படி, 1918 மே வரை ரூ. 1599-8-0 கிடைத்தது! இவ்வாறு காலத்தால் உதவும் பேறு திருவரங்கனார்க்கு அன்றி எவர்க்கே வாய்த்தது? அதனைப் பெற்று மகிழும் பேறும் அடிகளார்க்கு அன்றி எவர்க்கே வாய்த்தது? இவர்கள் தொடர்பே திருவருள் தொடர்பு போலும்! ஈழத்து வாழ்வையெல்லாம் அடிகளார் தொண்டுக்கே அரங்கர் ஆட்படுத்திவிட்டாரோ என்னும் நினைவு எழும்பலாம். ஆனால் அரங்கர் தாம் புகுந்த வணிக நிறுவனக் கடனை மறப்பாரோ? தம் குடும்பக் கடனை மறப்பாரோ? திருவள்ளுவர் அறத்துப்பால் ஒன்றனோடு அமையாமல், பொருட்பாலும் இன்பத்துப்பாலும் ஓதிய சீர்மையை உணராதவரோ திருவரங்கர்! முப்பாலும் போற்றி ஒழுகுதலே முறைமை எனக் கொண்டமையார், அடிகளார்க்கு உதவுதலை அறத்துப் பாலாய்த், தாம் புகுந்து செய்யும் வணிகப் பணியைப் பொருட்பாலாய்த், தம் குடும்பக் கடமை புரிதலை இன்பத்துப் பாலாய் மேற்கொண்டு ஒவ்வொன்றும் குறைவுறா வண்ணம் நிறைவுறுத்தினார். வாய், பேசினாலும், கை, ஆடி அசைந்தாலும், கண், வழிக் காட்சியைக் கண்டாலும், கருத்தெல்லாம் தலைமேல் இருக்கும் தண்ணீர்க்குடத்தின் மேலே இருக்கக் குடங்கொண்டு நீர் சுமந்து செல்வாரைக் கண்டுளோம் அல்லமோ! அவ்வாறு அரங்கர் அவ்வக் கடமைகளைப் புரிதலில் கருத்தாகவே இருந்தார். திக்கற்ற நிலையில் இருக்கும் தம் குடும்பத்திற்குத் தம்மால் இயன்ற அளவும் முயன்று ஈட்டிய பொருளைக் காலம் தவறாமல் விடுத்து வந்தார். அவர் செய்த உதவியே அன்னையார்க்கு ஆறுதலாயிற்று! தம் அருமை மகனார் தம் குடும்பச் சுமையைத் தாங்கித் தக்க வகையில் உயர்த்தியே தீர்வார் என்னும் முழுதுறு நம்பிக்கையை ஊட்டி அவர்க்கு உவகை தந்தது. உடன் பிறந்த இளையாருள் சுப்பையாவின் படிப்பில் தனி அக்கறை காட்டினார் அரங்கர். தந்தையார் மறைவால், தம் கல்வி நின்றுவிட்டது போல் தம் தம்பியார்க்கும் ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சினார். ஆதலால் அவர் கல்விக்குத் தாம் செய்ய வேண்டிய பொருளுதவிகளையெல்லாம் தட்டாமல் விடுத்தார். இளவல் சுப்பையாவுக்கே, தாம் குடும்பத்திற்கு விடுக்கும் பணத்தையெல்லாம் விடுத்தார். திட்டமிட்டுச் செலவிடல், சிக்கனத்தைப் பேணல், தவறாது வரவு செலவு எழுதுதல், கடமை தவறாமை என்பவற்றை யெல்லாம் சிற்றிளம் பருவத்திலேயே இளவல் சுப்பையா எய்துதற்குத் தோன்றாத் துணையாய் நின்று வழிகாட்டினார். இளவல் வ. சு. பாளையில் உள்ள தூய சவேரியார் உயர்பள்ளியில் பயின்றார். 1916ஆம் ஆண்டு பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அப்போது வாய்ப்பாக இருந்த அஞ்சலகப் பணியில் சேர விரும்பினார். ஆனால் அண்ணல் திருவரங்கனார் பேருள்ளம் வேறாக இருந்தது. தம்பியைக் கொழும்புக்கு வருமாறு எழுதினார். 1916ஆம் ஆண்டு சூலைத் திங்களில் வ. சு. கொழும்புக்குச் சென்றார். கொழும்பில் இருந்த முதனிலைக் கல்லூரியில் சேர்ந்தார் வ.சு. இலண்டன் மாநகர ஆசிரியர் கல்லூரி நடாத்தும் தேர்வினை எழுதுவதற்கு அக் கல்லூரி பயிற்சி தந்து வந்தது. அத்தேர்வுக்குச் சென்று வெற்றி பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர்தற்குரிய வாய்ப்பு உண்டு. ஆதலால் அம் முயற்சியில் ஆர்வமாய் ஊன்றுதற்கு அரங்கர் ஏற்பாடு செய்தார். தந்தையோடு கல்விபோம் என்பதை மெய்ப்பித்துவிடக்கூடாது என்பதே அரங்கரின் குறிக்கோளாக இருந்தது. இலங்கையின் பருவநிலை வ. சு. வின் உடல்நிலைக்கு ஏற்று வரவில்லை. ஆதலால், ஓயாத நீர்க் கோவைக்கு ஆட்பட்டு அல்லலுற்றார். எவ்வகையாலும் அதனைத் தீர்க்க முடியாமையால், இலங்கையில் இருந்து பாளையங்கோட்டைக்கே திரும்பினார். பாளையில் இருந்தாலும் பயிலுதலில் பெரு வேட்கை யுடைய வ. சு. தம் பயிற்சியை விட்டார் அல்லர். வீட்டில் இருந்து கொண்டே தேர்வுக்குரிய பாடங்களைத் தொடர்ந்து பயின்று தேர்வுக்குச் சென்று, ஆங்கு எழுதும் முயற்சி மேற்கொண்டார். அவ்வாறே உரிய காலத்தில் சென்று தேர்வு எழுதி அத் தேர்வில் வெற்றியும் பெற்றார். இலண்டன் மாநகரத் தேர்வில் பெற்ற வெற்றி, மருத்துவக் கல்லூரியில் சேர ஊக்கியது. ஆனால், அம் முயற்சி வெற்றி தரவில்லை. எனினும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து தொடர்ந்தார். இவற்றுக் கெல்லாம் தூண்டலும் துணையுமாக இருந்தவரும் ஆக்கமும் ஊக்கமும் தந்தவரும் அரங்கரே என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. ஆகலின், அரங்கர் சமயப்பணி மொழிப்பணிகளில் ஊன்றியிருந்தாரேனும், தம் குடும்பத்திற்குச் செய்யத்தக்க பணிகளில் கருத்தாகவே இருந்தார் என்பது விளங்கும். அரங்கர்க்கு இளமையிலேயே தொகுப்பு ஆர்வம் மிக்கிருந்தது. கிடைத்தற்கு அரிய நூல்களைத் தொகுத்தல், சான்றோர்கள் அடியார்கள் படம் தொகுத்தல், உயர்ந்த பெரு மக்களின் கடிதங்கள் தொகுத்தல் இன்னவாறான தொகுப்புகளில் இளந்தைப் பருவம் தொட்டே பேரார்வம் கொண்டிருந்தார். பொருள் முட்டுப்பாடு முன்னின்று தகைந்த போதும்கூட அரும் பொருள்களை விலை தந்து வாங்கிச் சேர்த்தலில் கருத்தாகவே இருந்தார் அரங்கர்! அவர் பின்னாளில் தொகுப்புக் கலைத் தோன்றலாய்த் திகழ்ந்ததற்கும், தொகுப்புத் துறையில் இணையற்ற தோன்றலாய்த் தம் திருத்தம்பி சுப்பையாவைத் திகழச் செய்ததற்கும், மூலக்கூறு இலங்கையில் அரங்கர் இருந்த நாளிலேயே தொடங்கிவிட்டது என்பதை இவண் நினைவு கூர்தல் தகும். 6. காதல் அரும்புதல் வணிக நிறுவனப் பணிகளின் இடையே துணைத் தொழிலாக அன்றோ அரங்கர் திருசங்கர் கம்பெனியை நிறுவிக் கடனாற்றினார். அதன் செயற்பாடும் பயன் விளையும் அரங்கர் உள்ளத்தில் ஊன்றின. அத் தொழிலையே தம் வாழ்வுத் தொழிலாக கொள்ளுதல் சிறக்குமெனக் கருதினார். அதே பொழுதில் தம் வாழ்வை தாய்த் தமிழகத்துக்கு மாற்றிக் கொள்வது நலம் என்ற முடிவுக்கும் வந்தார். அதற்கு அடிப்படை அடிகளார்க்கு அணுக்கமாகியிருந்து அவர் பணிக்கு ஒல்லும் வகையால் எல்லாம் உதவக்கூடும் என்பதாகவே இருந்தது. ஆகலின் திருசங்கர் கம்பெனியைச் சென்னையில் நிறுவிச் செயலாற்றுதற்குத் துணிந்தார். அத் துணிவிற்கு நெஞ்சின் அடித்தளத்தில் ஓர் உணர்வும் இருந்தது போலும்! திருவரங்கனாரின் கெழுதகை நண்பர் செந்தில் ஆறுமுகம் அவர்களைப்பற்றி முன்னரே அறிவோம். அவர் ஒருகால் பல்லாவரத்திற்கு வந்து அடிகளாரைக் கண்டு அளவளாவிச் சென்றார். சென்றவர் அடிகளாரின் அன்பு மாண்பையும், அவர் தம் இல்லத்தார் விருந்தோம்பு தலையும், அழகே வடிவெடுத்து அறிவான் முதிர்ந்து விளங்கும் நீலாம்பிகை என்னும் அடிகளார் தம் அருமைச் செல்வியர் தனிப் பெரும் சீர்மையையும், அடிகளார் அம் மகளார் மாட்டுக் கொண்டுள்ள தனிப் பேரன்பையும், இன்ன பிறவற்றையும் அரங்கர் திருச் செவியில் சேர்த்திருந்தார். அரங்கர் உள்ளத்தில் நீலாம்பிகை என்னும் பொற்கொடி மின்னலிடத் தொடங்கியது. ‘mo fsh®¡F m‹ò kUfuhŒ mikí« ngW thŒ¡Fnkh! என்று தமக்குள் வினாவி, அடிகளார் காட்டி வரும் பேரன்புப் பெரு வெள்ளப் பெருக்கில் நீந்தும் பேறு வாய்த்த எளியேன் மருகராம் பேறு எய்தலும் கூடுவதே என்று அமைந்து தாய்த் தமிழகம் நோக்கினார். திருவரங்கர் தமிழகத்தில் நிலையாய்த் தங்கும் திட்டத்துடன் வந்தார். கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து பாளையங் கோட்டைக்குச் சென்றார். தம் அருமை அன்னையாரையும், உடன் பிறந்தார்களையும் கண்டு உவகை கூர்ந்தார். சின்னாள்கள் சென்று, சென்னைக்குப் புறப்பட்டார். தம் மேற்கொண்ட தொழில்பற்றி அடிகளாரிடம் கலந்து உரையாட வேண்டுமே! அவர் கருத்தறிந்து நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டுமே! நேரே பல்லாவரத்திற்குச் சென்று அடிகளாரை அவர்தம் வளமனையில் கண்டார். கண்ட காட்சி எப்படி? வரவேற்பு எப்படி? உடனிருந்து கண்ட அடிகளார் செல்வர் உரைக்கிறார் : அடிகளின் நல்வாழ்விற்கு உயர் தொண்டிற்கு உயிராய் நின்று உதவிய வானனைய வள்ளலார் திருவரங்கம் ஒரு நாட்காலைப் பொழுது (9-11-1918) நாங்கள் யாவரும் ஆரா வேட்கையுடன் எதிர்பார்த்து இருந்தபடி பல்லாவரம் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று மகிழ்வதில் எங்கள் குடும்பம் அப்பரை வரவேற்ற அப்பூதியடிகள் குடும்பத்தையும் மிஞ்சிவிட்டது. திருவரங்கரைக் கண்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவரைப் போற்றுவதில் ஒருவர்க் கொருவர் முந்தினோம். அடியார்க்கு அடியாராக யாரும் விரும்புவர் அல்லரோ! என் அன்பான பெற்றோர்கள் அவருக்கு வகை வகையான விருந்தூட்டி மகிழ்ந்தனர். திருவரங்கருக்கு அப்போது ஆண்டு 28. பரந்த திருமுகமும், திருநீற்றினால் நிறைந்த பரந்த நெற்றியும், அகன்ற பெரு விழிகளும், உயர்ந்தகன்ற மார்பும், கல்லனைய தோளும் தாளும் கொண்டு கட்டமைந்த காளையாக் கவின் பொழியும் மேனியராய்த் திருவரங்கர் இலங்கினார். (மறைமலையடிகள் வரலாறு. 324) நீலாம்பிகையார்க்கு அப்பொழுது அகவை பதினாறு. இளமையின் வளமும் அறிவுன் பொலிவும் கொண்டு எழில்மிகு நங்கையாய் விளங்கினார். நாகையைச் சார்ந்தவர் அல்லரோ அடிகளார்? ஆதலால் நாகையில் கோயில் கொண்ட அம்மையின் திருப்பெயரைத் தம் மகளுக்குச் சூட்டினார். நீலாம்பிகையார் ஞு6-8-1903இல் பிறந்தார். நீலா தொடக்கப் பள்ளிப் படிப்பை சென்னையிலும் பல்லாவரத்திலும் பயின்றார். பல்லாவரத்தில் அதற்கு மேற்பட்ட வகுப்புப் பள்ளி அக் காலத்தில் இல்லாமையால் அவர் பள்ளிப் படிப்பு அவ்வளவில் நின்றது! படிப்பு, பள்ளியில் மட்டும் பயிலப் பெறுவதோ? அதற்கு இடமேது? காலமேது? ஆர்வம் இருந்தால் எங்கும் என்றும் கற்க வாய்ப்பு உண்டே! உலகத்தைப் போலத் திறந்தவெளிப் பள்ளிக் கூடம் ஒன்று உண்டோ? அதிலும் அடிகளார்தம் அன்புச் செல்வியின் கல்விக்குப் பள்ளிக்கூடம் விடுத்தமை ஒரு தடையாமோ? மும்மொழி வல்ல அடிகளார் புலமை நலம் எல்லாம் நீலாவினிடத்துத் தங்கியது. அவர் தாமும் மும்மொழிப் புலமையும், இலக்கிய இலக்கணத் தேர்ச்சியும், திருமுறை திருமுறைத் திறமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றார். அடிகளார், தம் மக்களுள் நீலாம்பிகையார்க்கே ஆர்வத்தொடும் கற்பித்தார் என்பதும், பல்வேறு பணிகளுக்கு இடையேயும் காலமும் - களமும் வகுத்து முறையே கற்பித்தார் என்பதும் கருதத்தக் கனவாம். அடிகளின் குரலோ தேனினும் இனியதாம்! நீலாம்பிகையின் குரலோ அதனினும் இனியதாம்! யாழும், குழலும், குயிலும் நீலாம்பிகையின் குரலுக்குத் திறை செலுத்தல் வேண்டுமாம்! அடிகள் தோடி, பைரவி, ஆனந்த பைரவி, மோகனம், மத்தியமாவதி, சங்கராபரணம், நீலாம்பரி முதலாய இசைகளை நீலாம்பிகைக்குக் கற்பித்தாராம்! 1916ஆம் ஆண்டு! நீலாவுக்கு அகவை 13! அடிகளார் வள்ளலார் பாடிய, பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும் உற்றதேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்றநெஞ்சங் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவா யத்தை நான் மறவேனே என்னும் பாடலைப் பாடினார். பாடியதுடன் நீலா, இப் பாடலில் தேகம் என்றுள்ள வடசொல் ஒன்றனையும் நீக்கி, அவ்விடத்தில் யாக்கை என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருக்குமானால் இச் செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கும்! பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது; அன்றியும் நாளடையில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம் அருமைத் தமிழ்ச்சொற்கள் மறைந்து விடுகின்றன என்றார். இவ்வுரை கேட்ட திருமகள் நீலா, அடிகளாரைப் பார்த்து, அப்படியானால் நாம் அயல் மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கென முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும் என்றார். அன்புத் தந்தையாம் அடிகளாரின் ஆர்வமும், அருமை மகளாம் நீலாவின் வேண்டலும் ஒன்றுபட்டு ஓர் இயக்கம் பிறந்தது. அதுவே தனித்தமிழ் இயக்கம். தனித்தமிழ் இயக்கம் எங்கே தொடங்கியது? அடிகளாரிடம் அல்லவோ தொடங்கியது! சுவாமி வேதாசலமாக இருந்தவர் மறைமலையடிகள் ஆனால். அவர்கள் சமரச சன்மார்க்க சங்கம், பொது நிலைக் கழகம் ஆயிற்று. அவர் நடாத்திய ஞான சாகரம் அறிவுக் கடல் ஆயிற்று! அடிகளார் பேச்சும் எழுத்தும் தனித் தமிழ் அயிற்று! அத் தனித் தமிழ்த் திருவிளக்கை ஏற்றிய செல்வி நீலா என்னின், அவர் தனி ஒரு மகள் அல்லர்! அவர் ஒரு இயக்கம் என்பதே சாலும் அன்றோ! இத்தகு நல்லியற் புலமை மெல்லியல் நங்கையார்தம், அறிவு திருவுரு ஆற்றல்களில் அரங்கர் எத்துணை ஈடுபாடு கொண்டிருப்பார்! அடிகளார்மேல் ஆரா அன்பு அரங்கர் கொண்டதே, அவர்தம் அறிவு திருவுரு ஆற்றல்களால் அல்லவோ! அவ்வாறாக அவர்தம் அமிழ்த முளையாம் அம்பிகையை அடைதற்கு அரங்கர் உள்ளம் எத்துணை அவாவி இருக்கும்! நாளெல்லாம் பொழுதெல்லாம் அரங்கர் திருப்பெயர் கூறுதலும், அவர் தம் பண்பு நலம் பகர்தலும், அவர்தம் சிவனெறிச் சால்பும் செந்தமிழ்த் தொண்டும் விளம்புதலும், அடிகளார்மேல் அவர் கொண்டுள்ள அன்பு வெள்ளத்தையும் அவர்க்குச் செய்துவரும் உதவிப் பேற்றையும் அடிகளாரும் உடன் பிறந்தாலும் பிறரும் உரைக்கக் கேட்டுக் கேட்டுக் கிளர்ந்த உள்ளம், கரையற்ற காதலில் கவிந்து நிற்றல் உறுதியன்றோ! ஆகலின், நாவின் வேந்தர் அருளிய, முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவர்க்கே பிச்சியானாள் என்னும் தேவாரத் திருப்பாடலின் திருப்பொருளாகித் திகழ்ந்தார். பேர் கேட்டும், பெற்றி கேட்டும், ஊர் கேட்டும் உவந்து உவந்து - முதிர்ந்து முதிர்ந்து நின்ற காதல் நேருக்கு நேர் காணவும், உரையாடவும் வாய்க்கும்போது முழுமதி கண்ட அல்லி எனவும், செங்கதிர் கண்ட தாமரை எனவும் விரிந்து மலராதோ? அரங்கனார் உள்ளமும் அம்பிகையார் உள்ளமும் தேனொடு பால் கலந்ததெனக் கலந்தன. கம்பர் கூறுமாறு போல, இருவரும் மாறிப் புக்கு இதய மெய்தினார் எனலாம். (பால. மிதிலைக். 37). செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்றும் கூறலாம். (குறுந். 40). 7. செந்தமிழ்க் களஞ்சியம் அடிகளார் திருமனையில் அரங்கர் சின்னாள்கள் வதிந்தார். திருசங்கர் கம்பெனியைத் தொடங்குவது குறித்து ஆய்ந்தார். சென்னை பவழக்காரத் தெரு இரண்டாம் எண் (புதிய எண் 87) கட்டடத்தில் இருந்த தெருப் பக்கத்து அறையில் அதனைத் தொடங்கி நடாத்தினார். அரங்கரின் வாழ்வு சென்னைக்கு மாறியமையால் அடிகளார் தொடர்பு மிக நெருக்கமாயிற்று. அடிக்கடி பல்லாவரத்திற்கு வந்து அடி களாரைக் கண்டு கலந்துரையாடிச் செல்லும் கடமையும் உண்டாயிற்று. இந்த இட நெருக்கமும், இனிய கெழுமிய தொடர்பும் அரங்கர்க்கும் அம்பிகைக்கும் உள்ளத்திற்கு விருந்தாய் அமைந்தன. அடிகளார், அம்பிகையின் அன்னையார், உடன் பிறந்தார் அனைவருக்கும் இருவரின் உணர்வொத்த உயர்ந்த காதல் நலம், புலப்பாடும் ஆயிற்று. சிலபல வாய்ப்புகளைக் கருதித் திருமண நாள் தள்ளிச் செல்வதாய் அமைந்தது. அரங்கர் தம் திருசங்கர் கம்பெனி வழியாகச் செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரில் ஒரு திங்களிதழ் நடாத்துதற்கு விழைந்தார். அவ்விதழில் திங்கள் தோறும் அடிகளார் திருவாசக விரிவுரை எழுதுதல் வேண்டும் என்றும் விழைந்தார். விழைந்த ஒன்றை அரங்கர் செயலுக்கு கொண்டு வராமல் விடுவார் அல்லரே! ஆகலின் திட்டமிட்டவாறு இதழைத் தொடங்கி விட்டார். தொடங்கி மட்டுமோ? அவ் வெளியீட்டுக்கு உறுப்பினராக ஆயிரவரைச் சேர்த்தும் விட்டார்! அயரா முயற்சி எதனைத்தான் ஆக்காது? செந்தமிழ்க் களஞ்சியத்தின் உள்நாட்டுக் கையொப்பம் ரூ 4. வெளிநாட்டுக் கையொப்பம் ரூ 6. அதற்கு உரைவளம் நல்கும் அடிகளார்க்குத் திங்களுக்கு - ஓரிதழுக்கு - நூறு ரூபாய். கொடுத்துவிடுவது என்றும் உறுதி செய்யப்பெற்றது. 1920 பிப்ரவரியில் தொடங்கியது செந்தமிழ்க் களஞ்சியம். இந் நிலையில் அடிகளார்க்கு அன்பராய் நெல்லையிலே திரு. மா. திரவியம் பிள்ளை என்பார் ஒருவர் திகழ்ந்தார். அவர் அடிகளாரைப் பன்முறை நெல்லைக்கு அழைப்பித்துச் சொன்மழை பொழியச் செய்தார். அடிகளார் தம் அறிவுப் பயிர் தழைதற்கு அவர் திரவியம் ஆகவும் இருந்தார். அவர்க்கு அன்பர் திரு. செ. விசுவநாத பிள்ளை என்பார். அவர் தமிழும் சைவமும் தழைத்தோங்க வேண்டும் என்பதில் பெரு விருப்பி னராக விளங்கினார். சைவநலங் கமழும் நற்குடியில் தாம் பிறந்திருந்தும் தோல் பதனிடும் தொழிலக மேலாண்மைப் பொறுப்பில் இருக்க நேர்ந்ததை எண்ணி அவர் வருந்துவ துண்டு. அப்போழ்தில், நம் மக்கள் எத்தனையோ புதுப்புதுப் தொழில் முறைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், உயிர்க்கு ஊதியமாம் அறிவுநூல் வெளியீட்டுப் பணியில் ஈடுபடுவார் இலரே என்று வருந்தி உரைப்பதும் உண்டு. அவ் வருத்தம் திரவியம் பிள்ளையை அசைத்தது. திரவியனார், அடிகளார் துணையை அவாவினார் அடிகளார் எண்ணம் அரங்கர்மேல் படிந்தது. அரங்கர்க்கு அடிகளார் ஆற்றுப் படை ஆனந்தத் தேனாயிற்று. திரவியம் பிள்ளை வழக்குரைஞர் ஒருவரிடம் எழுத்தராகப் பணி செய்து வந்தவர். தென்னிந்திய வங்கி விதிகளைத் திறமாக அமைத்துத் தந்தவர் அவர். ஆகலின் புதிது தோன்றவிருக்கும் கழக விதிகளை அருமையாய் அமைத்தார். அந் நாளிலேயே உடனிருந்து உதவினார் அரங்கர் தம் இளவலார் வ. சு. சீரிய மாளிகை எடுப்பதற்கு முன்னே வரையும் வரைபடத்தில் அன்றோ அதன் அமைப்பும் அழகும் அருமையும் வளர்ச்சி வாய்ப்பும் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன! கழகத்தின் முதற் பொருள் உரூ. 50,000 என்றும அது, பங்கு ஒன்றுக்கு உரூ. 10 விழுக்காடு 5000 பங்குகளாகக் கொடுக்கப்படும் என்றும், திருவரங்கனாரும் திரவியம் பிள்ளையும் கூட்டமைச்சர் களாக இருந்து கழகத்தை நடத்துவது என்றும், கழகம் பதிவு செய்யப்பெற்ற காலம் முதல் இருபத்தைந் தாண்டுகள் அவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் அமைச்சர்களாகவும் கழகச் செயற்குழு உறுப்பினர்களாகவும் விளங்கிக் கழகத்தை நடாத்தும் உரிமை உடையவர் என்றும் உறுதிமுறி எழுதப்பெற்றது. பின், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் பெயரால் 21-9-20 இல் திருநெல்வேலியில் பதிவு செய்யப்பெற்றது. கழகம் பதிவானதும் அரங்கனார் திருநெல்வேலியிலேயே தங்குதற்கு நேர்ந்தது. அதனால் அவர் சென்னையில் நடத்தி வந்த திருசங்கர் கம்பெனி புத்தக வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பினை இளவலாரிடம் ஒப்படைத்தார். 1921 பிப்ரவரித் திங்களில் திருசங்கர் கம்பெனி இருந்த பவளக்காரத் தெரு இரண்டாம் எண் அறையிலேயே கழகக் கிளை நிலையம் தொடங்கப்பெற்றது. அதன் முகவராக இளவலார் வ. சு. அமர்ந்தார். அதுமுதல் புத்தக வாணிகம் கழகத்தின் பெயராலேயே நடைபெறலாயிற்று. திருசங்கர் கம்பெனி என்னும் சிற்றாறு, கழகம் என்னும் பேராற்றில் கலந்து ஒன்றாகியது. நல்ல எண்ணத்தால் தொடங்கப்பெற்ற நன்முயற்சிக்கும் கூடச் சில வேளைகளில் தடைப்பாடுகள் உண்டாகிவிடவும், உள்ளார்ந்த அன்புடையாரும் எதிரிட்டுக்கொண்டு இகலிடமும் நேர்ந்து விடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம் அல்லமோ! அத்தகு ஒரு நிலை அரங்கர்க்கும், அடிகளார்க்கும் உண்டாயிற்று. அடிகளாரை நோக்கியே அரங்கர் செந்தமிழ்க் களஞ்சிய இதழைத் தொடங்கினார் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். அது தொடங்கிய 1920 பிப்ரவரி முதல் 1922 ஏப்பிரல் முடிய 12 இதழ்களே வெளிப்பட்டன. இருபத்தேழு திங்களில் இருபத்தேழு இதழ்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் பாதியளவும்கூட வெளிப்படவில்லை. பின்னர் அறவே வெளிப் படுத்த முடியாத சூழலும் உண்டாகிவிட்டது. முயற்சியையும், நம்பிக்கையையுமே மூலப் பொருளாகக் கொண்டு தொடங்கிய திருவரங்கருக்கு இந் நிலை எத்தகையதாக இருக்கும்! அடிகளாருக்காக எவ்வுதவி செய்யவும் கடப்பாடு கொண்டவர் எனினும் தம் நாநயம் இழந்து தலைகுனிய நேர்ந்த இதழ்த் தடைப்பாட்டினை எண்ணி எண்ணி வருந்தினார். அடிகளார் மேல் தாம் கொண்டுள்ள பெருமதிப்புக்காகப் பொது மக்களிடையே ஏற்படும் தலைக்குனிவைத் தாங்கிக்கொள்ளவும், தாம் மேற்கொண்ட அரிய முயற்சியில் தோல்வியால் துவளவும் அவர் நெஞ்சம் ஒருப்படவில்லை.. ஆனால், அடிகளாரால் பல்வேறு பணிகளுக்கும் ஆழ்ந்த ஆய்வுக்கும் இடையே திங்கள்தோறும் தொடர்ந்து திருவாசக விரிவுரையைக் காலத்தால் எழுதித் தரவும் கூடவில்லை. ஆழ்ந்து அகன்று நுண்ணியதாம் இறைமையைப்பற்றி, உருகி உருகிப் பாடிய திருவாசகத்தின் உரையைப் புனைகதை போலவோ, உலகியல் கட்டுரை போலவோ விரைந்து வரைந்து விடக்கூடுமோ? அவ்வாறு விரைந்து வரைந்து பக்கத்தை நிரப்பி அடிகளார், தம் புலமைக்கோர் இழுக்கை வருவித்துக்கொள்ள இசைவரோ? ஆழ்ந்து கற்று அரும்பெரு நூல்களின் மேற் கோள்கள் இலங்க வரைதற்கு எத்துணை நூல்களை ஒப்பிட்டு ஓதவேண்டும்? எத்துணைக் காலம் ஆகும்? நாளிதழ்ச் செய்தி போல்வதன்றே அடிகளார் எழுத எடுத்துக்கொண்ட பணி? அடிகளார் நிலைமை ஈதாக அரங்கனார் நிலையையும் எண்ண வேண்டுமே! அவரல்லரோ ஆயிரம்பேரிடம் கையொப்பம் வாங்கிக் காலத்தால் இதழை வெளிப்படுத்த ஒப்புக்கொண்ட பொறுப்பாளர்! இதழ் சோர்ந்துபடின், இருதிங்கள் முத்திங்களுக்கு ஒன்றாக வெளிப்படின், பணத்தைத் தண்ட இயலுமோ? பணம் தந்தவரும் கண்டனம் எழுப்பாது இருப்பரோ? இந் நிலையால் அடிகளார்க்கும் - அரங்கர்க்கும் கருத்து வேறுபாடு எழுந்தது! வளர்ந்தது! கண்டு கலந்துரை யாடலும், கடிதம் வரைதலும் ஆகியவும் தடையுற்றுப் போயின. அரங்கனார் அடிகளார் தொடர்பு வணிக அளவிலோ, இதழ் நடாத்துதல் அளவிலோ, பொருள் அளவிலோ நிற்கும் தொடர்பாக அமைந்து விடவில்லையே! மாமன், மருகன் தொடர்பாக வன்றோ மலர்ந்தது! இரு வீட்டார் நிலையும் சொல்லொணாத் துயருக்கு உரியதாயிற்று. திருவாசக விரிவுரை அமைந்தது! செந்தமிழ்க் களஞ்சியம் நின்றது! அரங்கர் உள்ளம் நைந்து போனார்! அடிகளாரும் தீயூழை எண்ணித் தெருமந்தார்! அரங்கரும் கழகக் கால்கோளுக்குப் பின்னர்ச் சென்னையை விடுத்துப் பாளையங்கோட்டைக்குச் சென்று தங்க நேர்ந்து விட்டது. அதனால் திருநெல்வேலித் தலைமைக் கழகப் பணிகளிலே அரங்கர் ஆழ்ந்தார். 8. கழக அமைச்சர் அரங்கர்க்குக் கழகப்பணி பெருஞ்சுமையாயிற்று. தாம் தாங்கும் அளவில் அமைந்த பணியன்றே! கூட்டுப் பங்கு சேர்த்து இயக்கும் பணியை யன்றோ தொடர்ந்துளார்! அவர் தொடர்ந்த நாளில் கூட்டுறவு அமைப்புப் புதியது! அதிலும், நூல் வெளியீட்டுத் துறையில் கூட்டுறவைக் கனவிலும் கருதிப் பார்த்திராக் காலம்! அன்றியும், கூட்டுறவுத் துறையை நம்பிப் பணம் போடுவாரும் அரியர்; அப்படிப் பணம் நம்பிப் போட்டவர்களும் ஏமாற்றத்திற்கு ஆட்பட்டும் வெறுப்புற்றனர். இந் நிலையில், அவர் எடுத்துக் கொண்டு செயல் எண்ணியது போல் அவ்வளவு எளிமையாக அமைந்துவிடவில்லை. கழகந் தொடங்கிய இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியும் உண்டாயிற்று. மூலப் பணம் முழுவதும் (50,000) சேர்வதற்கு 25 ஆண்டுகள் ஆயின என்றால், அதுவும் அரங்கர் வாழ்நாளுக்குப் பின்னர் அவர் தம் இளவல் வ. சு. அவர்கள் முயற்சியால் நிறைவுற்றது என்றால், அந்நாளில் அரங்கர் பட்டபாடுகள் இத்துணைத்தென உரைக்கக் கூடுமோ? என் அருமை நண்பர் வ. திருவரங்கம்பிள்ளை அவர்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்து நிலைநாட்டப் பெரும்பாடுபட்டார். அதற்கு முதலீடு அமையப் பங்குகள் சேர்க்க அந்தக் காலத்துத் தேசபக்தர்களைப் போலவே எல்லையில்லாத் துன்பங்களை ஏற்றுத் தன்னலமற்றுப் பெரும்பணி ஆற்றினார் என்று கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்கள் நினைவு கூர்வது அரங்கர் ஈக (தியாக) வாழ்வைத் தெள்ளிதில் விளக்குவதாம். (வ. சு. பவளவிழா மலர். பக். 12) திருவரங்கர் பணி கழகத்தோடும் ஒடுங்கிவிடுமோ? பொருள் ஈட்டல் ஒன்றனை மட்டுமோ கருதிக் கழகத் திருப்பணியில் ஒன்றினார்? அவர் உள்ளம் சமயப் பணியிலும், மொழிப் பணியிலும், சீர்திருத்தப் பொதுப் பணியிலும் ஒன்றி நின்றது. அப்பணிகளுக் கெல்லாம் நிலைக்களமாகக் கருதியே கழகப் பணியில் ஊன்றினார்! ஆகலின், கழகத்திற்குரிய பணிகளை வரம்பு செய்து கொண்டு திட்டமிட்டுச் செயலாற்றினார். நூல் வெளியீட்டுத் துறையைச் செவ்விதில் தடைப் படாமல் செய்தற்குத் தம் அருமைத் தம்பியரையே கழகத் தொடக்க நாள் முதல் பொறுப்பாளராக்கினார். செந்தமிழ்ச் செல்வியாம் அச்சுப் பணியோ, நச்சுப் பணியோ என்னும் பொறுப்பைத் தம்பியார் முழுதுறத் தாங்கிக் கொண்டமையால், அரங்கர் மற்றைப் பணிகளில் முழுதுற ஈடுபட்டார். அருமைச் செல்வியைச் சீருற வளர்க்கும் செவிலியாகவும் தம் அருமை இளவலாரையே தொடக்க நாள் முதல் வைத்தார். கழகந் தொடங்கிய முதல் ஆண்டில் ஐந்து நூல்களும், இரண்டாம் ஆண்டில் ஏழு நூல்களும், மூன்றாம் ஆண்டில் பதின்மூன்று நூல்களும், நான்காம் ஆண்டில் இருபது நூல்களும் என நூல் வெளியீடு ஆண்டுதோறும் மிகுந்து பெருகியது. 1961ஆம் ஆண்டில் 1008ஆம் நூல் வெளியீட்டு விழாவைக் கழகம் சிறப்புறக் கொண்டாடியது. மூன்றாம் ஆண்டிலேயே செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்களிதழைத் தொடங்கி இடையறவு படாமல் நடத்துவதாயிற்று. இவற்றின் விரிவையெல்லாம் இவர்தம் இளவலார், கழக ஆட்சியாளர் வ. சு. வரலாற்றில் விரியக் காணலாம். கழகத்தின் தொடக்கக் காலப் பதிப்பே கண்கவர் வனப்பினதாக இருந்தது. அது அக்காலப் பெருமக்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் அமைந்தது. கழகத்தின் சார்பில் 3-12-1923இல் திருநெல்வேலியில் அந்நாள் வளர்ச்சித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற திவான்பகதூர் டி. என். சிவஞானம் பிள்ளை அவர்களுக்கு ஒரு நல்விருந்து தந்து பாராட்டும் எடுக்கப்பெற்றது. அப்பொழுது பாராட்டுக்கு நன்றியுரைக்கு முகத்தான் அமைச்சர் கழகப் பதிப்பினைப் பாராட்டினார் : இங்கிலாந்தில் ஆக்போர்டு சர்வகலாசாலை அச்சுக் கூடத்தார் பல மொழிகளிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அழகாக அச்சிட்டுக் கண்ணைக் கவரும் வண்ணம் கட்டடஞ் செய்து உலகத்தாருக்குப் பயன்படுமாறு செய்துவரும் நன்முயற்சி போல நம் நாட்டில் நம் தமிழில் அவ்விதம் எக்காலத்து அச்சிட்டு வெளிவருமென்று தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அந்தக் குறை திருவருளியக்கத்தால் குறித்த கழகத்தாரால் நிறைவிக்கப்பட்டு வருகின்றதென்றும், அதற்குக் காரணம் கழகத்தின் நன்முயற்சி களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவரும் அமைச்சர்கள் இருவரின் தளர்வில்லா ஊக்கமென்றும், இக் கழகத்தார் வெளியிட்டுள்ள அழகிய புத்தகங்களை வாங்கிப் படிக்க மனமில்லாதவர்களுங்கூடப் புத்தகத்தின் அழகிய பதிப்பையும் கண் கவர் வனப்பினையும் நோக்கியாவது வாங்கி வாங்கி வைக்கவேண்டுமென்ற எண்ணம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டு விட்டதென்றும் தாம் இதன் நன்னோக்கத்தை விரும்பி ஒரு பங்காளியாகச் சேர்ந்து பங்குகள் எடுத்து ஆதரிப்பதுபோலச் சைவ நன்மக்கள் ஒவ்வொருவரும் போதிய பங்குகள் எடுத்து உதவி புரிந்து ஆதரிக்க வேண்டும் என்றும், அவ்விதம் செய்தல் இத் தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி எந் நாட்டிற்கும் நன்மையாம் என்றும் கூறித் திருவருளை வேண்டினார்கள் (செந்தமிழ்ச் செல்வி 1 : 414-5) கழகம் தோன்றிய தொடக்க நாளிலேயே சமயப்பணி செய்தற்காகத் திருநெல்வேலியில் திருநெல்வேலி சைவ சித்தாந்த சங்கம் என்னும் பெயரிய நிறுவனம் நிறுவப்பெற்றது. அஃது, அவ்வப்போது கூடி ஆக்கப் பணிகள் பல செய்தது. ஆண்டுதோறும் சிறப்பாக மாநாடுகள் நடாத்தித் தமிழ் நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிவநெறிக்கும் ஆக்கமான பல தீர்மானங்களை நிறைவேற்றியும் வலியுறுத்தியும் தொண்டாற்றியது. கழக அமைச்சரே அதன் பொறுப்பாளராக இருந்து இயக்கினார். திருநெல்வேலி சைவ சித்தாந்த சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 9-2-24, 10-2-24, 11-2-24 ஆகிய மூன்று நாள்களிலும் நடந்தது. அம்பாசமுத்திரம் அறிஞர் வி.பி. காந்திமதி நாத பிள்ளை தலைமை தாங்கினார். அவர் வணிக முறையோடு தமிழ் வளர்ச்சி சமய வளர்ச்சி ஆகியவைகட்குக் கழகத்தார் செய்துவரும் அறச் செயல்களின் திறத்தை வியந்துரைத்தார். திருக்குறள் பயின்ற மாணவ மாணவியர்களை ஆய்வு செய்து 47 பேர்களுக்குப் பரிசும், தேவாரம் பண் முறையோடு ஓதிய மாணவியர் இருவருக்குப் பரிசும் சங்கச் சார்பில் வழங்கப்பெற்றன. கடந்த ஆண்டுப் பணிகளையும் இனிச் செய்யவிருக்கும் பணிகளையும் கழக அமைச்சர் திருவரங்கனார் அறிக்கையாகப் படைத்தார். மறைத் திருவர் சுந்தர ஓதுவா மூர்த்திகள் இன்னிசைக் கருவிகளுடன் திருமறை ஓத வீதி உலா வந்து கூட்டம் நடாத்தும் மரபு சிறப்புடன் குறிக்கத் தக்கதாக இருந்தது. (செ. செ. 2 : 50-52) சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாத் தலைமை சிவக்கவிமணி கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் ஏற்றார். விழா 1-1-25, 2-1-25 ஆகிய இரு நாள்களில் நிகழ்ந்தது. அமைச்சர் அரங்கனார் சங்க அறிக்கையை அவையில் படைத்தார். செயலாண்மை மிக்க அரங்கர் படைத்த அறிக்கை வெற்றுரையாய் அமையுமோ? அவைத் தலைவர் அறிக்கையை உள்ளடக்கித் தம் தலைமையுரையைப் பொழிந்தார் : உங்கள் அமைச்சர் அறிக்கைப் பத்திரம் ஒன்று வாசிக்கக்கேட்டீர்கள். அதிலே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினது சென்ற ஆண்டின் முயற்சிகளையும், அதைச் சார்ந்த தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்தின் முயற்சிகளையும் தெளிவாய் எடுத்துக் கூறினார்கள். அவற்றைக் கேட்டு நான் மிகவும் களி கொண்டேன். இக் கழகத்தார் சைவநூல்களைப் பதித்து வெளியிடு வதன்றியும் பிரசங்கங்களின் வாயிலாகச் சைவப் பிரசாரமும், தமிழ்ப் பிரசாரமும் நடத்தி வருகின்றமையும் சாத்திரங் கற்பித்து வருகின்றமையும் தமிழ்ச் சர்வகலாசங்கமாக இதனை நிறுவ முயற்சி செய்து வருவதனையும் கேட்கத் தமிழ்மக்கள் யாவரும் களிகூர்வர். இதன் மூலமான புத்தக வெளியீடுகள் உயர்ந்த பதிப்புகளாகவும் கண்கவர் வனப்பின வாகவும் உள்ளமையால் அமைச்சரவர்கள் அறிக்கையிட்டபடி கழகத்தாருக்கு வியாபார முறையிலும் ஆதாயம் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இதன் சார்பாக ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பெறுதல் வேண்டும் என்பது மிக அவசியமாகும். இனி இக் கழகத்தின் சார்பாகத் தாபிக்கப்பெற்ற இச் சைவசித்தாந்த சங்கம் செய்துவரும் வேலைகளும் நமக்குக் களிப்பூட்டுவனவேயாகும். முதலாவதாக முழுமதி, முளைமதித் தினங்களிலும் நாயன்மார்கள் குருபூசை நாட்களிலும் இன்னிசைக் கருவிகளுடன் கதை உருவான பிரசங்கங்கள் நடந்தன. இரண்டாவதாக திருக்குறட் பாடங்களில் பரீட்சைகள் வைத்து அவற்றிற்றேர்ந்த மாணவ மாணவிகளுக்கு வெகுமதிகள் கொடுத்து வருதலால் இந் நாடெங்கும் திருக்குறள் பயிலப் பெற்றுவரக் காரணமாயிற்று. மூன்றாவதாக, திருக்குற்றாலத் தலத்தில் சாரற் பருவகால மாநாடு என ஒன்று ஆரம்பித்து அதில் பல பெரியார்கள் பெருஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்தி உபகரித்தமையும், நந்தனார் சரிதம் மாணிக்கவாசகர் சரிதம், சைவசமயம், சுந்தரமூர்த்தி மாண்பு என்னும் விசேட உரைகள் நிகழ்ந்தமையும் கேட்க உவகை பூத்தது. நான்காவது முயற்சியாக நூற்கருவூலம் ஒன்று தாபித்து ஒழுங்கு செய்யப்பெற்று வருவதும் கவனித்து மகிழ்தற்பாலதேயாம். ஐந்தாவதாக நெல்லைத் திருநெறித் தொண்டர் குழாம் என ஒன்று தாபிக்கப்பெற்று அதன் அங்கத்தினர் அரிய திருப்பணிகளை மேற்கொண்டு நடத்தி வருதல் கழிபேருவகை பயப்பதாம். வாரங்களிலும் தினந்தோறுமாகக் குறித்த காலங்களில் இக் குழாத்தினர் திருவள்ளுவர் சாத்திரத்தைப் பரப்புதல், தமிழ்மறை ஓதுதல், ஓதுவித்தல், கொல்லாமையைப் பரப்புதல், சிவசின்னங்களை யாவரும் அணியச் செய்தல், வீடுகளிற் சென்று பெண்பாலார்க்குச் சைவத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்தல் ஆகிய பதினொரு நோக்கங்களைக் கைக்கொண் டவர்களாய் மிகவும் ஆர்வத்தோடும் நடத்திவருவது நாம் எல்லாரும் போற்றத்தக்க முயற்சியாகும். இவ்வாறு கழகமும் - சங்கமும் குழாமுமாகக் கூடி நடத்திவரும் உண்மைத் திருத் தொண்டானது இறைவன் திருவருளாலே இனிது நிலவுவதாக (செந். செல்வி 3 : 13 - 14) என்று நலங்கனிந்த பாராட்டும் நல்வாழ்த்தும் உரைத்தார். சைவசித்தாந்த சங்கத்தின் செயல் திட்டம் வரவர விரிவுற்றது. 31-10-1925, 1-11-1925 ஆகிய நாட்களில் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் தொடர்பாகத் திருநெல்வேலியில் திருக்குறள், சமயப் பாடம், பெரிய புராணம் முதலிய பரிசுத் தேர்வுகளை நடாத்தியதுடன், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், நாகர்கோயில், திருவனந்தபுரம், தஞ்சாவூர் முதலிய இடங்களிலும் நடாத்தியது. இப்போட்டிகளில் அவ் வாண்டில் 152 மாணவர்கள் பங்கு கொண்டனர். இப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தியதுடன் மேலும் மேலும் விரிவாக்கியும் நடாத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 9. தொண்டின் உறைப்பு திருவரங்கனார் அடங்கி அமைந்து கிடப்பார் அல்லர்; செயல் வீரர்; எடுத்த செயலில் முழுதுறப் பதிந்து அடுத்தூன்றும் ஆண்மையர்; ஆகலின் பொதுப்பணியில் பிறர்க்கெல்லாம் அரிதாகிய செயற்பாடு, அவர்க்கு எளிதாக வாய்த்தது. அவர்க்கென வாய்ப்பாக இயற்கை அருளிய ஆளுமைத்திறம் பொதுத் தொண்டுக்குப் பொலிவூட்டி வளர்த்தது. தனியொரு வருக்கு அமைந்த தகவார்ந்த திறங்கள் மன்பதைப் பொதுவாய் வயங்கும் என்பதற்குத் திருவரங்கனார் வாழ்வு சீரிய எடுத்துக் காட்டாகும். தென்னிந்திய சைவசித்தாந்த சங்கம், கழகஞ் சார்ந்ததோர் அமைப்பு என்பதை அறிவோம். அதன் தலைவரும் அமைச்சர் களுமே இதன் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர். ஒரு வணிக நிறுவனம் தன் பொருட் பணியை ஒருபால் நடாத்தினும் மறுபால் அருட்பணியும் நடாத்துதல் தலையாய கடமை என்பதைச் செயலில் நிறுவிக் காட்டும் அமைப்பாகவே தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கமும், கழகஞ் சார்ந்த பிற அமைப்புகளும் வெளிப்படுத்துகின்றன. அமைப்பின் விளக்கமும் செயலும் என்பவை எவை? அமைப்புடையார் விளக்கமும் செயல்களுமே அல்லவோ? தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்தார் 1927 பிப்ரவரித் திங்களில் ஓர் அறிக்கை விடுத்தனர் : சைவசித்தாந்த உண்மை நமது நாட்டில் எங்கும் விளங்குதற்குச் சைவசித்தாந்த சங்கம் ஒவ்வோர் ஊரிலும் நிறுவிச் சைவ சமய நூல்கள் படித்தும் சொற்பொழிவு செய்தும் வரல் வேண்டும். சைவ சித்தாந்த சங்கம் நிறுவுவதற்கு எங்கள் உதவி வேண்டுபவர்கள் எங்களுக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம். சைவசித்தாந்த சங்கம் எந்த ஊரில் நிறுவினாலும் அதைப்பற்றி எங்களுக்குத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். இவ் வறிக்கை வேலை செய்யத் தொடங்கியது. திருநெல்வேலி சைவசித்தாந்த சங்கத்தின் கிளையாக ஒரு சைவசித்தாந்த சங்கம் நிறுவப்பெற்றது. பெருமக்கள் 34 பேர்கள் கிளைச்சங்க உறுப்பினராகினர். திருவைகுண்டம் வட்டக் கழகத் தலைவர் சங்கரலிங்கக் கவிராயர் தம் ஊராகிய வெள்ளூரில் ஒரு சங்கம் நிறுவுதற்கு வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறே மற்றை மற்றைச் சிற்றூர் பேரூர்களிலும் சைவசித்தாந்த சங்கத்தின் அமைப்பு அலை கிளர்ந்தது; பணியும் மேற்கொண்டது. இஃதிவ்வாறாக இதன் இணைச் செயற்களரியாகத் திருநெறித் தொண்டர்குழாம் என்பதொன்றும் உருவாயிற் றன்றோ! காரைக்குடி அரு. சோமசுந்தரன் என்பார் திருநெறித் தொண்டர் குழாங்கள் என்பதுபற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். எல்லா இடங்களிலும் எப்பொழுதும் தொடர்ந்து ஊர்கள் தோறும் சென்று சொற்பொழிவுப்பணி, உண்மைத் தொண்டு செய்யக்கூடிய திருநெறித் தொண்டர் குழாங்களை ஏற்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு குழாத்திலும் ஒரு பத்துத் தொண்டர்கள் இருந்தால் போதும். இக் குழாங்களில் சிவநெறியுணர்ச்சியுடையவர்கள் அனைவரும் பேரறிஞராயினும் - சிற்றறிஞராயினும் - இளையராயினும் பெரியோராயினும் - அலுவல் ஓய்வுபெற்றோராயினும் யாவரும் தாராளமாகச் சேர்ந்து தொண்டு புரியலாம். இவ்வாறு தொண்டு புரிதலின் சைவ நன்மக்கள் பலருக்கும் பேரார்வம் இருத்தல் வேண்டும். அனைவரும் சிவத்தொண்டு புரிதலே என் பிறப்புரிமை என எண்ணுதல் வேண்டும் என்றும், இவ்வாறு நாம் நமது செந்தமிழ்ச் சைவத் திருநாட்டிலே ஓராயிரம் தொண்டர்களடங்கிய நூறு திருநெறித் தொண்டர் குழாங் களையாவது தோற்றுவித்து ஒரு சில ஆண்டுகள் தொண்டு புரிந்து வருவோமானால் சிவமணமும், செந்தமிழ் மணமும், சீவகாருணிய மணமும் பண்டை நாளிலே பரவி இருந்ததைப் போல் நன்கு பரவுதல் கூடும் என்றும் வேண்டியிருந்தார். நல்ல தொண்டுகளையெல்லாம் நயந்தேர்ந்து நல்லுணர் வுடன் எடுத்துக்கொள்ளும் திருத்தொண்டர் திருவரங்கனார் இவ்வேண்டுதல் அறிக்கையைக் கண்டார். அதன் வழியே சைவ சித்தாந்த சங்கத்தின் ஒரு கிளையாகத் திருநெறித் தொண்டர் குழாத்தைத் தோற்றுவித்துச் செயலாற்றினார். பேர் அளவுக்கு எந்த அமைப்பையும் தொடங்கி அமைதல் திருவரங்கர் அறியாததன்றே! பேரளவில் திருநெறித் தொண்டர் குழாம் பணிசெய்தற்கும் தூண்டலும் துலக்கலுமாக இருந்தார். அம்பாசமுத்திரம் சார்ந்த கோபால சமுத்திரத்திற்குத் திருநெறி தொண்டர்குழாம் சார்ந்த உறுப்பினர் பன்னிருவர் 18-1-1925 ஞாயிறு அன்று கொல்லா நோன்பினைப் பரப்பும் நோக்குடன் சென்றனர். அத் தொண்டர் குழாத்தின் தலைவர் இந்துக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. வி. சிதம்பர ராமலிங்கம்பிள்ளை என்பார். அவர் தலைமையில் சீவகாருணியம், கொல்லாமை, புலான் மறுத்தல், அருளுடைமை முதலிய தலைப்புகளில் திருநெறித் தொண்டர்களாகிய திரு. க. நெல்லையப்ப பிள்ளை, நரசிங்க நல்லூர் திரு. சுந்தரத்தேவர், திருவள்ளுவத் தொண்டர் திரு. மாணிக்கவாசகம்பிள்ளை, திரு. பு. சிதம்பர புன்னைவனநாத முதலியார் ஆகிய பெருமக்கள் உருக்கமும் உயர்வுமிக்க உரையாற்றினர். பொழிவுகேட்ட ஊர்ப் பொதுமக்கள் உருகினர்; உள்ளம் மறுகினர்; அக் கூட்டநிறைவின் போழ்திலேயே, தாங்கள் இனி ஊனுண்பதில்லை என்று பதினேழு பெருமக்கள் உறுதிமொழி தந்து உறுதிக் கைச்சான்றும் வைத்தனர். இன்னும் பலர் கொல்லாநெறி கொண்டொழுக இசைந்தனர். திருநெறித் தொண்டர் குழாத்தின் திருப்பணி இவ்வாறு பலப்பல இடங்களில் பலப்பல காலங்களில் சீருற நடைபெறலா யிற்று. முதற்கண் இத் திருநெறித் தொண்டர் குழாத்தினைப் பற்றி அறிக்கை விடுத்த காரைக்குடி அரு. சோமசுந்தரனார் சைவ சித்தாந்தச் சங்கஞ்சார்ந்த தொண்டர் குழாத்தின் பணியின் பெருமையை அறிந்து மகிழ்வுற்றார். அதனால் இவ் வேண்டு கோளை முதன்முதலாக எளியேன் அன்புடன் செய்துகொண்ட காலத்து, உண்மையுடன் வேலைசெய்யும் சங்கத்தினராகிய நமது திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தார், தங்கள் சங்கத்தின் சார்பில், ஓர் திருநெறித் தொண்டர் குழாத்தினை ஏற்படுத்திச் சில திங்களாகத் தொண்டு புரியச் செய்து வருவது கண்டு களிப்புற்று அவர்களுக்கு எனது மனமொழி மெய்களாலாகிய பெருவணக்கத்தினைச் செலுத்து கிறேன். அத் திருநெறித் தொண்டர் குழாத்தினருக்கும் எனது பெருநன்றியறிதலும் பேரன்பும் உரியனவாகுக என்று நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தார். தொண்டின் பெருமையைத் தொண்டரே உணர்வர் அன்றோ! சமயத் தொண்டுக்குச் சைவசித்தாந்தச் சங்கமும், திருநெறித் தொண்டர் குழாமும் என்றால் தமிழ்த் தொண்டுக் கெனவும் தனியோர் அமைப்பு வேண்டுமெனத் திருவரங்கர் கருதினார். அதனால் 1924ஆம் ஆண்டு சூன் திங்களில் தென்னிந்திய தமிழ்ச் சங்கம் தோன்றியது. தமிழ்மொழி தொடர்பான ஆக்கப் பணிகளை செய்தற்கென அமைக்கப்பெற்ற இச் சங்கம் தனித் தமிழ்த் தேர்வுகள் நடாத்துதலையும் மேற்கொண்டது. தனித் தமிழ்த் தேர்வுகளில் முதலாவது, தமிழ்த் தேர்வு; இரண்டாவது இளந்தமிழ்ப் புலவர் தேர்வு; மூன்றாவது தமிழ்ப் புலவர் சிறப்புப் பட்டத் தேர்வு. இதில் காப்பியச் சிறப்புப் புலவர், நீதிநூல் சிறப்புப் புலவர், சங்க நூற் சிறப்புப் புலவர், இலக்கணச் சிறப்புப் புலவர், சமய நூல் சிறப்புப் புலவர் (1) சைவ சித்தாந்தம், (2) வைண சித்தாந்தம் என்னும் பாகுபாடுகள் உண்டு. இதன் முதல் தேர்வு 1926ஆம் ஆண்டு சூன் திங்கள் 28ஆம் நாள் முதல் சூலைத் திங்கள் 5ஆம் நாள் முடிய நிகழ்ந்தது. இத் தேர்வில், சங்க நூல் புலவர் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் ஒருவரே யாவர். அவரும் வெற்றி பெற்றார். பதிவெண். 15. மூன்றாவது வகுப்பு. அவர் யாவர்? ஞா. தேவநேசப் பாவாணன், தமிழாசிரியர், கிறித்தவ சாலை, சென்னை (செந். செல். 4 : 334) என்பது முகவரி. கழகம் நடாத்திய தனித் தமிழ்த் தேர்வில், சங்க நூலை ஆய்ந்து சிறப்புப் பட்டம் பெற்றவர் - முதல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரோ ஒருவர், தனித் தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் பெரும் பாராட்டுக்கு உரியவராக இலங்கி, தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை நிறுவிக் காட்டிய மொழி ஞாயிறு பாவாணர் எனின் தனித் தமிழ்த் தேர்வுக்கே ஒரு தனிச் சிறப்பு அன்றோ! தேர்வு திருநெல்வேலியில் மட்டுமா நடந்தது? திருச்சிராப் பள்ளி, சிதம்பரம், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங் களிலும் நடந்தது. இத் தேர்வுத் திட்டமே பின்னர்த் திருவள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி நடாத்தவும் வகை செய்தது. அரங்கனார் ஆர்வம், தமிழ்ப் புலமை பெருக வேண்டும்; எங்கும் பரவவும் வேண்டும். அதனைப் பரப்புதற்குரிய வாயில்கள் பல; அவற்றுள் தேர்வு நடாத்திப் பரிசு வழங்குதலும் பட்டம் தருதலும் என்பது ஒன்று! நூல் வெளியிடுதல், விற்பனை செய்தல், அறிஞர்களைக் கூட்டி ஆராய்தல், அறிஞர்களைத் தேர்ந்து சொற்பொழிவாற்றச் செய்தல், மாநாடு நடாத்துதல், கருத்தரங்கு கூட்டுதல் என்பனவெல்லாம் தமிழ் வளர்க்கும் துறைகளே என்பது தெளிந்த திருவரங்கர், அப் பணிகளுக் கெல்லாம் மூலமாக அமைந்த புலமையாளர்களை உருவாக்குதலே தலையாய பணி என மேற்கொண்டு தக்கோர்களைத் தேர்ந்து தனித் தமிழ்த் தேர்வு நடாத்தியது பெரும் பாராட்டுக்குரிய செயலேயாம். அரங்கர் கழகத் தந்தையரே எனினும் அவர் மன்பதைத் தொண்டர் என்பதன்றோ ஒப்பிலா ஒரு பெரும் புகழாய் ஓங்குவது என்க. திருவரங்கர், வினையால் வினையாக்கிக் கொள்ள வல் விரகர் என்பதற்கும், உயிரிரக்க உரவோர் என்பதற்கும் ஒவ்வொரு சான்று காட்டுவோம் : கோடைக்கானல் உதகமண்டலம் ஆகிய இடங்கள் கோடை வாழ்விடங்கள் என்பதை அறிவோம். அவ்விடங்களில் கோடைப் பருவங்களில் கூடும் மக்கள் பெறும்பயனை நோக்கி மலர்க் காட்சியும், படகுப் போட்டியும் அரசு நடாத்தி வருகின்றது. அவ்வாறே குற்றாலத்துப் பருவநாளில் சாரல் மாநாடு கூட்டு மக்களை மகிழ்விக்கின்றது அரசு. இச் சாரல் மாநாட்டை 1924ஆம் ஆண்டிலேயே தொடங்கிச் சில ஆண்டுகள் தொடர்ந்து நடாத்தினார் திருவரங்கர். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தின் சார்பில் குற்றாலச் சாரல் மாநாடு பேரறிஞர் கா. சு. பிள்ளை தலைமையில் 20-6-1924 முதல் 22-6-1924 முடிய மூன்று நாள்கள் நிகழ்ந்தது. திருக்கோவலூர் ம. ரா. குமாரசாமிப் பிள்ளை, தூத்துக்குடி ந. சிவகுருநாத பிள்ளை, காரைக்குடி அரு. சோம சுந்தரஞ் செட்டியார், ராய. சொக்கலிங்கஞ் செட்டியார், சிந்துபூந்துறை வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி சிதம்பரநாதபிள்ளை, குலசேகர பட்டினத் முத்துக்குமார சாமியாபிள்ளை, மறைத்திருவர் சுந்தர ஓதுவாமூர்த்தி ஆகிய பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உயிரிரக்க உரவோர் அரங்கர் என்பது பாளையங் கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் நிகழ்ந்துவந்த எருமைக் கடாப் பலி விலக்குப் போராட்டத்தால் விளங்கும். ஆயிரத்தம்மன் கோயிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருமைக் கடா ஒன்று, சூல் ஆடு ஒன்று, சூல் பன்றி ஒன்று ஆகிய மூன்றையும் பலியிடுவது வழக்காக இருந்தது. அதனை ஒழிப்பதற்காகப் பலி விலக்குச் சங்கம் என ஒரு சங்கத்தை நிறுவி அறிஞர் பெருமக்களையும், சமயப் பெரியோர்களையும் திரட்டி அருட்பொழிவு செய்வித்தும், அரசியல் பெருமக்கள் எண்ணத்தை ஈர்த்து அவர்கள் தலையிட்டு நிறுத்த வேண்டியும், நீதித் துறையில் வழக்குத் தொடுத்துத் தடை பிறப்பிக்கவும் - வேண்டும் ஏற்பாடுகளை யெல்லாம் முன்னின்று முனைப்பாகச் செய்தார் திருவரங்கர். அதற்குப் பெறலருந் துணையாக அவர்தம் இளவல் சுப்பையா திகழ்ந்தார். இவ் வரும்பெறல் மணிகளைத் தம் திருவயிற்றுத் தாங்கிய பேறு பெற்ற சுந்தரத்தம்மையாரும் இக் கொடுமையை ஒழித்தலில் பேரூக்கம் காட்டினார். தமிழகத்து அருளிரக்கச் சான்றோர்களும் உறுதுணையாக நின்றனர். அக் கொடும் பலி நிறுத்தப்பெற்றது! அரங்கர் கொல்லா விரதம் குவலய மெல்லாம் ஓங்க விரும்பிய பெருமகன் தாயுமானவர் வழி நிற்கும் திருப் பெருந் தொண்டராகத் திகழ்ந்து பலர்புகழ் பாராட்டுக்கு உரியவர் ஆனார். பலியிட விழைந்து வெறியொடு நிற்பார்க்கு இத் தடை வெறுப்பையன்றோ விளைக்கும்? அவ் வெறுப்பு முனைந்து தாக்கவும் அஞ்சுமோ? அவ் வெதிர்ப்புக் கெல்லாம் அஞ்சாத அடலேறாக அரங்கர் பணி செய்தது அருளிரக்கச் சான்றுதலுடன் அவர்தம் ஆண்டகைமைச் சான்றாகவும் அமைந்தது! பலி வெறியர் அரங்கரைக் கொல்லவும் சூழ்ந்தனராம்! ஆனால், கொல்லுதலைக் கொல்லுதலே குறியாகக் கொண்ட அரங்கர் அஞ்சி ஒதுங்குவரோ? அடலேறாக நின்றார். அரிய துணைகளையும் சேர்த்துக் கொண்டார். அருளுரை வழங்குதற்கு அந் நாளிலேயே, இந் நாள் அருண்மொழி அரசு கிருபானந்தவாரியாரை முதற்கண் நெல்லைப் பகுதிக்கு அழைத்துப் பன்னிரு நாள்கள் பொழிவு நடாத்த ஏற்பாடு செய்தார். உயிரிரக்கக் கோட்பாட்டையே உயிர்ப்பாகக் கொண்ட பெருமகன் திருபால் (ஸ்ரீபால்) அவர்களையும், சிவனெறித் தொண்டில் சிந்தையைப் பறிகொடுத்துத் தம்மை ஆளாக்கிக்கொண்ட காரைக்குடிப் பெருமகனார் அரு. சோமசுந்தரனார் முதலியவர்களையும் அடுத்தும் தொடுத்தும் உரையாற்ற ஏற்பாடு செய்தார். பொழிவு கேட்ட அருளுளத்தர் உருகி நின்று உயிர்ப்பலி ஒழிக்க உதவினர். கல்லுள்ளம் வாய்ந்தவரும் அரங்கரின் கலங்காத் துணிவு கண்டு அஞ்சி அகன்றனர். ஆகலான், அரங்கரின் அருளும் ஆண்மையும் உயிர்ப்பலி விலக்குப் பணியால் ஒருங்கே விளங்குவதாயிற்று. உயிர் காத்த அத்தகு திறத்தைத்தானே கருணை மறம் என்றார் இளங்கோவடிகளார்; அதனைத்தானே பெருந்தகை மறம் என்றார் புறநானூற்றார். தொண்டின் தளமே உயிரிரக்கமே யன்றோ! உயிரிரக்கம் இல்லா ஒன்று தொண்டும் ஆகுமோ? அருள் தொண்டர் அரங்கர் புகழ் வாழ்க. 10. காதல் நோன்பு வினையே ஆடவர்க்கு உயிர் என்றார் சங்கச் சான்றோர் ஒருவர். அதனை அடுத்தே, மனையுறை மகளிர்க்குக் கற்புச் சிறந்தன்று என்றும் கூறினார். திருவரங்கர் கழகப்பணிகளிலும் பொதுப்பணிகளிலும் முழுதுற அழுந்தி நின்றார்! அவர்தம் ஆழத்தின் ஆழத்தில் பதிந்திருந்த நீலாம்பிகையார் காதல் தடைக்குக், காலத்தால் வாய்த்த மருந்தாகக் கடமைகள் அமைந்தன. அதனால் உண்மைக் காதலை-உயிர்க் காதலை-மறந்தார் என்பது இல்லை! உயிர்க் காதலை மறக்கவும் கூடுமோ? அது மறக்கவும் விடுமோ? வழுக்கி வீழினும் சொல்லு நா நமச்சிவாயவே என்னும் தெய்வப் பேரன்பின் ஊற்றிடமே காதல் தானே! அக் காதல் வயப்பட்டார்க்கு அதனை மறக்கவும் இயல்வதோ? ஆனால், வணங்கத்தக்க பெண்பிறப்பாய், வீட்டளவில் அடங்கிவிட்ட அமைதிப்பிறப்பாய், சமயச் சால்பில் தோய்ந்த அறிவு நல நங்கையாய்த் திகழும் நீலாம்பிகையார்க்கு, அரங்கர்க்கு வாய்த்தவாறு, தாங்கமாட்டாக் கடமைகளைத் தலைமேல் அள்ளிப் போட்டுக்கொள்ள வாய்ப்பு இல்லையே! என் செய்வார்? அனலிடைப் புழுவெனத் துடிப்பதை அன்றி ஆற்றும்வகை ஒன்றும் அவர்க்கு உண்டோ? அரங்கரை நினைந்து நினைந்து உருகினார்! உள்ளத்து உருக்கம் வாளா ஒழியுமோ? உடலை உருக்கிற்று! நோயைப் பெருக்கிற்று! பல்கால் நோய்ப்படுக்கையிலும் வைத்தது! பெண்மைப் பெருங்கனி என்செய்வார்! என்செய்வார்! நீலாம்பிகையார் நிலைமை வீட்டை அமைதியில் வைக்குமோ? பெற்ற அன்னையின் உள்ளத்தைப் பெரும்பாடு படுத்தியது. உடன் பிறந்தார் உள்ளத்தைக் கரைத்தது. அடி களாரையும் அசைத்தது. எதற்கும் மலையாத மலையும், மகளின் நிலைகண்டு சொல்லொண்ணா உருக்கத்தில் சோர்ந்தது. உடல் நோயைத் தீர்க்கும் அளவில் ஒழிந்து போவதோ நீலா கொண்ட உளநோய்! பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து என்பது இருபால் பொதுமை இயம்பும் குறள்மணி என்பதை அறியாதவரோ அடிகள்! அவர் கழகநாள் காதலர் நிலையைக் கனிந்து கனிந்து பொழிந்தும், எண்ணி எண்ணி எழுதியும் போற்றுபவர் அல்லரோ! தம் மகளார் காதல் வாழ்வுக்கு - கருத்தொத்த இனிய வாழ்வுக்குத் - தாமே குறுக்கீடாக இருக்க நேர்ந்தததை விரும்புவரோ? உள்ளத்தின் கூத்தாட்டம் ஒருவரையும் விட்டொழியாது போலும்! அதற்கு அடிகள் என்ன? அன்பர் என்ன? அறிந்தார் என்ன? அறிவறியார் என்ன? அரங்கர் - அம்பிகை திருமணம் தடைப்பட்டு நின்றது! நிகழுமா? நிகழாதா? என்ற ஐயமும் கிளைத்தது! ஆண்டுகள் நீள நீள நிகழாது என்ற முடிவுக்கே வந்தாரும் பலர். இத் திருமணம் இடையறவுபட்ட செய்தியை அறிந்து வருந்தினவருள் தலையாய ஒருவர் கொழும்புச் செந்திலாறுமுகனார். அவர் தாமே திருவரங்கருக்கு நீலாம்பிகையை முதற்கண் நினைவுறுத்தித் திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய மாக்கி வைத்தவர். கருத்தொத்த காதல் வாழ்வில் கனிந்து விளங்கிய ஆறுமுகனார் தம் மனைவியொடும் 10-1-1923இல் பல்லாவரத்திற்கு வந்து சேர்ந்தார். அடிகள்மேல் மட்டற்ற மதிப்பும், பேரன்பும், அடித் தொண்டும், உடையவர்தாம் செந்திலார். எனினும் தாம் வந்துள்ள பணியைக் கருத, அவர் முதன்மையானவர் அன்றோ. அரங்கர் அம்பிகை திருமணத்தின் முதன்மையர் அரங்கரும் அம்பிகையும் தாமே! அவ்விருவர் உட்கிடையை உள்ளவாறு அறிந்தபின்னர் அன்றோ அதன் நிறைவேறல் குறித்துச் சூழ வேண்டும்? ஆகலின் அம்பிகையின் கருத்தறிய அவாவினார். அதற்கு வாய்த்த துணையொடுதாமே வந்துள்ளார்? ஆகலின், ஆறுமுகர் அன்புத் துணைவி பிரமு அம்மையார் வாய்த்த பொழுதில் அம்பிகையைக் கண்டு தனியே உசாவினார். கேள் உரைத்துக் கிளையுரைத்துக் கேட்டதுரைத்துச் செய்திக்கு வந்தார். நெஞ்சத்துள்ளதன்றோ வாய் பேசும்! அதிலும், உண்மையன்பினர் உயிரன்பினர் முன்னே உள்ளம் ஊற்றுக் கண்திறந்து மடைபாயும் வெள்ளமெனப் பொழியத் தவறாதே! ஆகலின், மணந்தால் அரங்கரை மணப்பது; இல்லையே மணமின்றியே கழிப்பது; என்று அரங்கரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு என்னைத் தந்தேனோ அன்றே எங்கள் உள்ளமறிந்த திருமணம் நிகழ்ந்துவிட்டது; இன்னொரு வர்க்கு என் நெஞ்சில் இடனென்பது எள்ளளவும் இன்று; அரங்கரும் என்னில் தாழாத ஏற்றத்தோடும் ஏக்கத்தோடும் என்னையே யடைய என்றுங் காத்திருப்பார்! எங்கள் இருவரும் உள்ளத்தின் உள்ளமும், உயிரின் உயிரும் இவ்வுண்மை அறியும் என்று கூறி விம்மி விம்மி அழுதார்! அம்பிகையொடு சேர்ந்து பிரமு அம்மையும் அழுதார்! காதலர் அழுகை எளிதாய் ஒழிவதோ? அல்லல் பட்டு ஆற்றாதார் அழுமையே, செல்வத்தைத் தேய்க்கும் படை என்றார் காதலர் அழுகை கற்கோட்டையையும் உடைக்கும்; இரும்புக் கதவையும் துளைக்கும்; காவல் கூற்றையும் தகர்க்கும்; விண்ணையும் மண்ணையும் ஊடுருவும்; பிளக்கமாட்டாத மலையையும் பிளக்கும்; அணுவையும் அணுவுள் அணுவையும் நொறுக்கிப் பதம் பார்க்கும்; உயிரோத்த காதலைத் தடுத்து நிறுத்த ஒருவர் உலகில் பிறந்ததும் உண்டோ? அதிலும் அறிவறிந்த அடிகளோ, ஆரா அன்பினை மகள்மேல் கொண்டு அடிகளோ, முழுதுற தடையாய் என்றும் இருப்பார்? இளக்க மிக்க அந்த மலையினிடம் இரக்கம் என்னும் ஊற்றுக் கண் அடைபட்டுப் போய்விடமுடியாதே! திருக்கோவையையும், தேவார திருவாசகங்களையும் சங்கச் சான்றோர் அகப்பாடல் களையும், கேட்போர் கண்ணீர் வடித்துக் கரைந்தழ இசைத்து விளக்கும் அவ்வடிகளால் கடுங்கற்பாறையாய் என்றும் நின்றுவிட முடியுமோ? என இன்னவாறாகச் செந்திலாரும் அவர் தம் துணைவியாரும் எண்ணினர். உள்ளார்ந்த அன்பால் அரங்கர் - அம்பிகை திருமணம் விரைவில் நிறைவேறுக! என்று இறையருளை வேண்டிக்கொண்டு பல்லாவரத்தில் இருந்தும் பாளையங்கோட்டைக்கு வந்தெய்தினர். அம்பிகை பாகன் அங்கன்றோ இருக்கிறார்! அரங்கர் கழகப் பணியிலும், பொதுத் தொண்டிலும் பொழுதையெல்லாம் செலவிட்டுப் பிறிதொரு கருத்துக்கு இடந்தராமல் வாழ்ந்தார். திருமணம் என்பதுபற்றி நண்பர்கள் அன்பர்கள் வாய்களுக்கும் தடையிட்டுக் காத்தார். ஆனால், எளிதில் காத்து நிறுத்தவோ, தடையிட்டு நிறுத்தவோ இயலாத-பெற்ற பெருமகளார் சுந்தரத்தம்மையார்-முயற்சிகளுக்கு என்செய்வார்! தம் பிள்ளை பிறர்போல மணங்கொண்டு மக்களொடு விளங்க எத்தாயர் தாம் விரும்பார்? அதிலும் பல்லாற்றானும் பாராட்டத்தக்க சீர்மைகளெல்லாம் சிறக்க அமைந்த திருவரங்கராம் தம் செல்வர்க்குப் பலப்பல செல்வர்களும் செழுங்கிளைகளும் அறிவுமிக்காரும் பெண்தர அடுத்தடுத்துப் படைபடையாய் வரும்போது பெற்ற தாயின் பெருந்தக்க உள்ளம் ஓய்ந்து கிடக்குமோ? அங்கும் இங்கும் பார்த்தது! ஆய்ந்தும் அறிந்தும் முயன்றது! இயலும் செயலும் வினவியது! பார்த்தும் என்? முயன்றும் என்? வினவியும் என்? அரங்கர் தலையசைக்க வேண்டுமே! அம்பிகையாரை அன்றி அயலார் ஒருவருக்குத் தம் வாழ்வில் இடமில்லை! அதனைக் கடந்து எம்முயற்சி செய்தாலும் அதற்காகத் தம்மேல் வருந்திப் பயனில்லை! தாய் சொல் கேளாத தடிமகன் என்னும் சிறுமையைத் தமக்குத் தந்து தாமும் தம் பெருமையைக் குறைத்துக் கொள்ளாமையே தகவாகும் என்பதை நயத்தக உரைத்து அன்னையார் எண்ணத்தைந் தகைந்தார்! ‘ïiwt‹ É£l tÊ! என்ற அமைதியில் நின்றார் அன்னையார்! இந்நிலையிலே தான் செந்திலாறுமுகனார் தம் இனிய துணைவி யாரொடும் பாளைக்கு வந்தார். ஆறுமுகனார் அரங்கரைக் கண்டு அளவளாவினார். அவர்தம் தீராக் காதலைத் திட்டமாக அறிந்து மகிழ்ந்தார். அம்பிகையார் உறுதிபாட்டையும் தம் துணைவியார் வழியே தெரிந்ததையும் உரைத்தார். உள்ளார அரங்கர் உணர்ந்த செய்திதானே அது! எனினும், ஒற்றறிந்து உண்மையன்பர் அதனை உறுதிப்படுத்தி உரைக்கும்போது அதன் பெருமை ஒன்றுக்குப் பத்தாக உயர்தல் ஒருதலையன்றோ! ஆகலின் இறையருளை வாழ்த்தி என்றேனும் தம் திருமணம் நடந்தேறுதல் உறுதி; காலம் வரும்வரை காத்திருப்போம் என்று அமைதி கொண்டார். இருபக்கமும் இணையாய் அமைந்த இனிய மெய்க்காதல் ஈடேறவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார் ஆறுமுகனார். வழக்கம்போல் பணியில் ஒன்றினார் அரங்கர். அரங்கர் பணிகளில் பொழுதைச் செலவிட்டுத் தம்மை வாட்டும் காதலைக் காத்துக் கொண்டார் என்றால், வீட்டுள் அடைந்து கிடக்கும் அம்பிகையார்க்குக் காதல் வேக்காட்டைத் தீர்க்கும் வாயிலொன்று உண்டோ? அம்மையார் அவ் வாயிலைத் தேர்ந்து கொண்டார். அஃது அவர் பேரார்வம் காட்டிவந்த கல்வி பயிற்சியே! 1920இல் சென்னை வில்லிங்கன் பெருமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் முதற்படிவத்தில் சேர்ந்தார் அம்பிகையார். அதினொடு சார்ந்த விடுதியிலேயே உறையுள் கொண்டார். ஈராண்டுகள் ஆங்குப் பயின்றார். பின்னர் இவர் நான்காம் படிவம் பயிலும்போது இளைப்பு இருமல் பெரிதும் வாட்டிற்று! அம்பிகையை வாட்டிய இருமல், அடிகள் முதலாகக் குடும்பத்தினர் அனைவரின் உள்ளத்தையும் வாட்டிற்று. சின்னாள் விடுப்பும், பன்னாள் விடுப்பும் ஆகிப் படிப்பை முற்றாக விடுக்கவும் இருமல் வாட்டியது! ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் எல்லாம் செய்தாயின. உடல் நோய்த் தீர்வு, உள்ள நோய் தீராமல் தீராது போலும்! பள்ளிப் படிப்பை விடுத்த அம்பிகையார் வீட்டிலே யிருந்தே ஓதினார். வாய்த்த போதுகளில் தந்தையாரிடமும் பாடங்கேட்டுப் பயின்றார். இந் நிலையில் பல்லாவரத்தில் வித்யோதயா என்னும் ஆங்கிலக் கல்லூரி ஒன்று தொடங்கியது. அதன் தமிழாசிரியர் வேலை அம்பிகையாரைத் தேடிவந்தது. அம்பிகையார் தம் பத்தொன்பதாம் அகவையில் அப் பணி மேற்கொண்டார். ஈராண்டுகளுக்குப் பின் அக் கல்லூரி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதிக்கு மாறிற்று. ஆங்கும் அம்பிகையார் பணி மேற்கொண்டார். முன்னே ஓரளவு தணித்திருந்த இருமல் பெருகியது; வேலையைத் தகைந்தது; பணி விடுத்து வீட்டில் அமைந்தார் அம்பிகையார். காலம் உருண்டது! 1924இல் சென்னை இராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை மீண்டும் ஏற்றார். ஆங்கு நான்காண்டு பணி செய்தார். ஆசிரியப் பணி ஏற்ற காலந்தொட்டே தக்க அவைகளில் பொழிவாற்றும் கடப்பாடு மேற்கொண்டார். பொழிவுக்கும் பயிற்றுதற்கும் முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வு அவரை அழியா மொழிச் செல்வியராய் ஆக்கி வைத்தது. அக் காலத்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி நுணுக்கங்கள் பின்னே தனித்தமிழச் செலவங்களாக வெளிப்பட்டு அடிகளார் வழிமரபைச் சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கதாம். அம்பிகையின் உள்ளம் அறியாதார் என்ன செய்திருப்பர்? அடிகளாரிடமும் அன்னையார் சவுந்தரவல்லியினிடமும் பெண் பேசவும் வந்தனர். பெருந்தொகை தந்து மணங்கொள்ளவும் செல்வச் செருக்கினர் முனைந்தனர். புலமைநலங் காட்டிப் பொருந்தும் மணம் பெறவும் முயன்றாரும் சிலர். ஆனால் மகள் வாழ்வுக்காகத் தம்மையே நொந்து கிடக்கும் அடிகளார் இசைவரோ? செவி கொடுத்தும் கேட்பரோ? கேட்பின் நீலாம்பிகையார் நிலை யாதாகும்? அடிகளார் மெல்லுள்ளம் கரைந்தது; அரங்கர் அம்பிகை காதல் நோன்புக்கு உருகியது. நீலா, உங்கள் திருமணத்தை யான் தடுக்கவில்லை; நம் வீட்டில் என் முன்னிலையில் உங்கள் திருமணம் நிகழ இயலாது. நீயும் உன் காதலரும் வேறிடத்தில் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளுங்கள்; யான் அதற்கு வரமாட்டேன்; ஆனால் உன் தாயும் உடன்பிறந்தாரும் உங்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுவனவெல்லாம் செய்வேன். அணிகலன்களும், திருமணச் செலவுக்கும் பொறுப் பேற்றுக் கொள்வேன் என்று பல்கால் வலியுறுத்தினார். இத் திட்டத்தை அறிவறிந்த அம்பிகை ஏற்பரோ? அரங்கர்தாம் ஏற்றுக்கொள்வரோ? காதல் கடைப்பிடியில் அழுந்தி நிற்கும் பிறராயின் உடன் போக்கும் கொள்ளுதல் புதுமை அன்றோ! பதிவு மணத்தைக் கொள்ளுதற்கும் துணிவர் அன்றோ! பெற்ற தந்தையார் இருந்து கொடுக்கவும் கொண்டு சிறக்கவும் அல்லாமல் உணர்ச்சியால் ஒன்று செய்யத் துணியாமை காதல் வயப்பட்டார்க்கு அரிதினும் அரிதாம் செய்கையாம். அரங்கர் அம்பிகை காதல் அருமை, அடிகளார் முன்னின்று நடத்தாமல் ஏற்றுக்கொள்ளாத தெய்வக் காதலாய் இலங்கியதாம்! அரங்கர் சென்னைக்கு வரும்போது ஓரிரு வேளைகளில் அம்பிகையார் பணி செய்யும் கல்லூரிக்கு வந்து கண்டது உண்டு. காதல் கிழமையை விளக்கிக் காலம் கட்டாயம் வந்தே தீரும் என்று கனிந்து நின்றதும் உண்டு! அக் காட்சிக்கும் உரையாட்டுக்கும், அடிகளார் அறியினும் தடைப்படுத்தியதும் இல்லை! அவர்கள் உயிர்க் காதலை ஊட்டி வளர்த்ததில் அடிகளார்க்குப் பங்கில்லை என்று அவர்தம் மனச்சான்றும் இடித்துக் கூறாமல் விடுமோ? இல்லையேல் அவர்களே விரும்பு மாறு மணந்து கொள்ள இசைவும் தந்திருப்பரோ? ஆண்டுகள் ஒன்றோ இரண்டா கடந்தன? ஒன்ப தாண்டுகள் கடந்தன! ஒருநாள் ஓராண்டாய்த் துயர் தந்து ஒன்பதாண்டுகள் உருண்டன. இடை இடையே அரங்கரின் இளவல் சென்னைக் கழக முகவர் சுப்பையா பிள்ளை பல்லாவரம் வருவார். அடிகளைக் காண்பார்; கலந்துரையாடுவார்; அரங் கருக்காக அடிகளாரிடம் பேசாத் தூதராக வந்து செல்வார்; அடிகளாரிடம் வேண்டிக் கட்டுரைகள் பெறுவார்; செல்வியில் செழிப்புறுத்துவார்; அடிகளார் பொழிவுக் குறிப்பு களை வெளியிட்டுச் சிறப்பிப்பார்; அவர்தம் தொண்டுக்கு அரணாக அமைவார். அடிகளார் உவப்புறத் தம் அன்பினை யெல்லாம் ஒருங்கு பொழிந்து அணுக்கத் தொண்டராய்த் திகழ்வார்! அடிகள் உள்ளம் படிப்படியே மாறி வருவதை உணர்ந்து மகிழ்வார்! அம் மகிழ்ச்சி நிலைபெறும் நாளும் வந்தது. ஒருநாள் சுப்பையாபிள்ளை, தமிழ்க்காசு என்னும் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களுடன் பல்லாவரத்திற்கு வந்தார். வந்தது எதற்காக? அரங்கர் அம்பிகை திருமணத்திற் காகவே என்பது வெளிப்படை. அடிகளார் உருகினார்; உள்ளார இசைத்தார்; பிரிந்தவர் கூடும் பெருவாய்ப்பினை உன்னி இருபாலும் இன்பந் தவழ்ந்தது. பருவத்தால் அன்றிப் பழா என்பதுபோல் உரிய பருவம் அன்றே போலும்! அடிகளார் இசைவினை அரங்கர் அறிந்தார். தம்பியருடன் பல்லாவரத்தை அடைந்தார். அடிகளாரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அம்பிகையார் தம் நோன்பு கைகூடிய மகிழ்ச்சியில் தவழ்ந்தார். வீடு அன்றே மணக்கோலத்தில் மகிழ்ந்தது. 11. பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை அரங்கர் அம்பிகை திருமணம் 2-9-1927ஆம் நாள் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் நிகழ்ந்தது. அடிகள் அம்பிகையாரைப் கொடுப்ப அரங்கர் பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகைக் கோலம் கொண்டு திகழ்ந்தார். மண வாழ்த்துகள் நிறைந்தன. கூடிய பெருந்திருவினர் எத்தகையர்? மறைமலையடிகளார் மகளார் திருமணமாயிற்றே! அறிவறிந்த மெல்லியல் நங்கை பல்கலைப் பாவை அம்பிகை திருமணமாயிற்றே! கழக அமைச்சர் கன்னித் தமிழ்த் தொண்டர், சிவநெறிக் குரிசில், புலவர் தோழர் திருவரங்கர் திருமணமாயிற்றே! எத்தகைய பெருந்தக்கார் குழுமியிருப்பர்? வாழ்த்தியிருப்பர்? பேரறிஞர் கா. சு. பிள்ளை; பொறியியற் செல்வர் பா. வே. மாணிக்கநாயகர்; தமிழ்த்தென்றல் திரு. வி. f., மணி, திருநாவுக்கரசர்; பெரும்புலவர் கா. நமச்சிவாயர்; சைவப்புலவர் ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர், இசைவேந்தர் சாம்பமூர்த்தியார்; நெல்லை சா. சுந்தர ஓதுவாமூர்த்திகள்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர் இ. மு. சு. இன்னபல அறிஞர்களும், கலைச் செல்வர்களும் பொது மக்களும் குழுமியிருந்தனர். அரங்கனார் கழக அமைச்சர் அல்லரோ! அந்நாளில் கழகம் இருந்த இலிங்கிச் செட்டித் தெருவில் அமைந்ததொரு மாளிகையில் மணமகனார் வீட்டு அழைப்பும், மறுநாள் பல்லாவரத்தில் அடிகளார் மாளிகையில் மருவீட்டு அழைப்பும் நிகழ்ந்தன. இரண்டு நாள்களும் இசையரங்கும் விழாவும் இனிது சிறந்தன. வள்ளி திருமணம் என்னும் இசைக்காதையைச் சுந்தர ஓதுவாமூர்த்திகள் நிகழ்த்தினார். அரங்கர் அம்பிகை இல்லறம் பாளையங்கோட்டையில் தொடங்கியது. அருமை அன்னையாரின் முதுமைக்கு ஏந்தான இனிய மருமகளைப் பெற்று இன்பப் பெருக்கானார்! அவர் நாளெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல நிகழ்ச்சி நடந்துவிட்டதே! இளையவராக இருந்தாலும் மூத்தவர் மணம் செய்தற்கு முழுத்துணையாய் நின்று வெற்றிகண்ட இளையவர் வ. சு. வின் மகிழ்ச்சிக்குக் கரையுண்டோ? மறைமலையடிகளார் முதல் அவர் தம் பெரிய குடும்பத்தவர்க்குத்தான் என்ன மகிழ்ச்சிக் குறைவு? தடைப்பட்ட ஒன்று நிறைவேறுங்கால் எய்தும் இன்பத்திற்கு எல்லை என்பதொன்று ஏது? அறிவறிந்த அரங்கர் பெண்மைநலங் கனிந்த அம்பிகை ஆகிய இவர்கள் இல்வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? அம்பிகை உடன்பிறந்தாரும், அரங்கர் மைத்துனரும் ஆகிய மறை. திருநாவுக்கரசர் தன் அக்கை அத்தான் இல்லறச் சிறப்பை எடுத்துரைப்பதை அப்படியே பெய்தல் சாலும்! ஏனெனில், இருபாலும் இணைந்து கண்டும் ஊடாடி இருந்தும் உறவாடி மகிழ்ந்தும் எழுதியது ஆயிற்றே! கருதுகோளினும் காட்சி யுரையன்றோ கவின்மிக்கது! அம்மையாரும் அரங்கனாரும் பண்டைத் தண்டமிழ் இலக்கியங்களிற் கண்ட தலைவர் தலைவியரென வாழ்ந்தனர். திருவள்ளுவர் கூறிய வாழ்க்கைத் துணைநலம்பற்றிய பொருளுரைக்கோர் எடுத்துக்காட்டென அம்மையார் விளங்கி னார். அரங்கனாரும் அம்மையாரும் ஒருவர் மற்றவர்க்கென்றே அழகிற்றிகழ்ந்தனர்; அன்பிற் சிறந்தனர்; அருளில் வாழ்ந்தனர். இருவரும் ஓருயிராய் நின்று கடவுட் போற்றியும் சுற்றத் தாங்கியும் விருந்து புரந்தும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினர். தம் வாழ்க்கையின் பயன் செந்தமிழ் வளர்த்தலும் சிவநெறி பரப்பலும் என்றே கொண்டு அவற்றினுக்காக இடையீடின்றிப் பணியாற்றி வந்தனர். அவர் தம் அன்பு வாழ்க்கையைக் கண்டார் எல்லாரும் இவரனைய இல்லறத் துணைவரை நூல்களில் கேட்டோம்; இன்றோ, நேரிற் காணும் பேறு பெற்றோம் என மகிழ்ந்தனர். அம்மையார் அரங்கனாரை மணந்தபின் தமிழாசிரியர் வேலையை விடுத்துப் பாளையங்கோட்டையிலுள்ள தம் கணவனார் இல்லத்தில் 1928ஆம் ஆண்டுமுதல் வாழலானார். சற்றேறக்குறைய ஆண்டுக்கொரு குழந்தையாகப் பதினோரு மக்களை ஈன்றார். அவற்றில் பெண்மக்கள் எண்மர்; ஆண்மக்கள் மூவர். மக்களைப் போற்றி அன்புடன் வளர்ப்பதில் அம்மையார் இணையற்றவர் என்றே இயம்பலாம். குழந்தைகள் செய்யும் குறும்பும் தொல்லைகளும் அவர்க்குப் பேரின்பம். அவைகளை வையவோ அடிக்கவோ அவர் மனம் இடந்தராது. இத்தனை குழந்தைகள் எற்றுக்கு? இவைகளால் துன்பமே என்று உலகவர் நினைப்பர். அம்மையாரைக் கேட்டால், இன்னும் எனக்குக் குழந்தைகள் வேண்டுமென்றே கூறுவார்; கூறியும் இருக்கிறார். அம்மையார் வாழ்க்கை துன்பக் கடலென்றே கூறிவிடலாம். அதில் அவர் பெற்ற இன்பப் பெரும்புனை மூன்று! அவையாவன : 1. சிவன் பணியும் செந்தமிழ் வளர்ப்பும். 2. ஆருயிர்க் கணவர். 3. மக்கள். தம்மக்களைக் காண்டொறும் காண்டொறும் அளவிலா இன்பமுற்று அம்மையார் என்பெருஞ்செல்வம் இவைகளே என்றும், சிவபிரான் எனக்களித்த அருள் வடிவங்களே இவைகள் என்றும் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்து மகிழ்ந்தார். 1920 இல் அம்மையாரைப் பீடித்த இளைப்பிருமல் நோய் 1930 வரையில் இடையிடையே வருத்திவந்தது. அதுகண்டு மிக வருந்திய திருவரங்கனார் நோய் நீக்கத்திற்கென்று செய்த முயற்சிகள் எழுத்திலடங்கா. திருவரங்கனாரின் அருமை நண்பர் திரு. கீழப்பாடம் பிச்சாண்டியா பிள்ளை என்னும் தமிழ் மருத்துவர் அன்பும் அருளும் உருக்கமும் கொண்டு அருமருந்துகள் பலவற்றை வருந்திச் செய்து அம்மையார்க்களிப்ப, நோய் நீங்கினார். நன்றியுணர்வு மிகுந்த அம்மையார் பிச்சாண்டியா பிள்ளையின் பேரன்பைப் போற்றும் வகையில் தாமெழுதிய நூல் ஒன்றை அவர் நினைவாக வெளியிட்டும், தம் மக்களில் ஒருத்திக்குப் பிச்சம்மை என்று பெயரிட்டும் மகிழ்ந்தார். அம்மையாரைத் துன்புறுத்திவந்த நோய் ஒழிந்ததெனினும் இரவிலும் விழித்துப் பிள்ளைகளைப் பேணுதலினாலும் இதனால் நேர்ந்த மெலிவினாலும் அம்மையார் எப்போதும் நலிந்தவராகவே இருந்தார். கணவனார், அம்மையார் நலத்திலேயே நாட்டஞ் செலுத்திக் கவலையில் ஆழ்ந்திருந்தார். இந் நிலையிலும் தம் அன்பு என்னும் அமுதத்தால் இருவரும் உலகத் துன்பத்தை மறந்து இன்புற்றே வாழ்ந்தனர். (நீலாம்பிகையார் வரலாற்றுச் சுருக்கம் 8 - 9) 14-11-1928இல் அடிகளார் திருவரங்கருக்கு எழுதிய கடிதத்தில் நீலாம்பிகையார் பெற்றெடுத்த முதல் மகவைப்பற்றிய செய்திகளை எழுதிப் பூரிப்படைகிறார்! அடிகளாரைத் தாத்தா வாக்கப் பிறந்த முதற்குழந்தையன்றோ அது! ஓம் சிவம் பல்லாவரம், 14 - 11 - 1928. அன்புமிக்க திருவாளர் திருவரங்கம் பிள்ளையவர்கட்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக,...... நுங்கள் மகவு யாருடைய வடிவை ஒத்திருக்கின்றது? கறுப்பா? சிவப்பா? குள்ளமா? நீளமா? நீலா, பிள்ளைக்குப் பால் கொடுப்பது நல்லது. மீனாட்சிக்கு அவ்வூர் பிடித்திருப்பதும் செல்வம் லோகநாதனுக்கு உடம்பு நலமெய்தி வருவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன. நீலாளுடைய உடம்பைப் பாதுகாப்பதில் உங்கட்கே மிகுந்த கருத்திருத்தலால், யான் அதைப்பற்றி மிகுதியாய்ச் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைக்குப் பசியெடுக்கும் காலத் தன்றி மற்றைக் காலங்களிற் பாலூட்டுதல் ஆகாது. குழந்தைக்கும் தாய்க்கும் தலை முழுக்குச் செய்விப்பது காலமும் உடம்பின் நிலையும் அறிந்து செய்தல் வேண்டும். நீலாவுக்கு சத்தான உணவு செரிக்கும் அளவிற் கொடுத்தல் வேண்டும். எல்லார்க்கும் எங்கள் அன்பைத் தெரிவியுங்கள். நலம். நுங்கள் எல்லீர் நலமுங் கோரித் திருவருளை இடையறாது வழுத்தும் அன்புள்ள, மறைமலையடிகள். 1928 நவம்பரில் மகப் பெற்றுத் தாயான அம்பிகையார் அதற்கு முன் திங்களில் (அக்டோபர் 1928) காரைக்கால் அம்மையார் என்னும் இனிய நூன் மகவொன்றைப் பெற்று அடிகளார் முன்னர் முகங் காட்டச் செய்து, அவர் தம் வனப்புறுத்தலைப் பெற்றுப் பொலிவுறுத்தித் தமிழ் உலகில் தவழ விடுதற்குரிய அரும் பேற்றைப் பெற்றிருந்தார். 6-10-1928இல் அடிகளார் அரங்கருக்கு எழுதினார் : நேற்றுமுதல் நீலா எழுதின காரைக்காலம்மையார் வரலாற்றினைப் பார்த்துத் திருத்தி வருகின்றேன். தமிழ்நடை இனிதாயிருக்கின்றது. பிழைகள் மிகுதியாய் இல்லை; சில நுட்பச் சீர் திருத்தங்களே செய்யப்பட்டு வருகின்றன. திருத்திய படியை நீலா பார்த்தபின் அச்சுக்குக் கொடுத்தலே நலம் என்பது நீலாம்பிகையார் பெற்றெடுத்த நூன் மகவைப்பற்றி அடிகளார் நுவன்ற செய்தி. ஏறக்குறைய ஆண்டுக்கொரு குழந்தையாய் அம்பிகையார் பெற்றெடுத்தாலும், அதற்குத் தாழாமல் நூற் குழந்தைகளையும் பெற்றுத் தந்துகொண்டேயிருந்தார். எடுத்த எடுப்பிலேயே வடசொற்றமிழ் அகர வரிசை கண்டவர், அடிகளாராலேயே தமிழ் நடை இனிதாயிருக்கின்றது என்று பாராட்டும் பேறு பெற்றவர், கல்லூரியில் தமிழ் பயிற்றும் கடனைத் துறந்து கணவருக்குத் துணையாய், நூற்பதிப்புக் கழகத்திற்கு இணைத் தொண்டராய் இலங்கியவர், தொடர்ந்து நூன் மகவுகளைப் பெறுதலில் வியப்பில்லையே! அம்பிகையார் 1917, 1918ஆம் ஆண்டுகளிலேயே தமிழ்க் கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டார். அப்பொழுது அவர் அகவை 14, 15. திராவிடன், தேசாபிமானி, ஆனந்த போதினி, ஒற்றுமை, தமிழ்நாடு முதலான இதழ்களில் எழுதினார். அவற்றைத் தொகுத்துத் தம் திருமணத்திற்கு முன்னரே பல்லாவரம் பொதுநிலைக் கழகச் சார்பில் 1925இல் நூலாக வெளியிட்டார். அக் கட்டுரைத் தொகுதியிலேயே அம்பிகை யாரின் புலமை நலம் பளிச்சிடுகின்றது. கல்வியும் தாய்மாரும், ஒழுங்கான கல்வி, கற்றலிற் கேட்டலே நன்று, நாகரிகமும் மொழி வளர்ச்சியும், தனித்தமிழ்ப் பாதுகாப்பு, தமிழைப்பற்றிய வினாக்களுக்கு விடை, தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டாயக் கல்வி, நாவலந் தீவின் பழைய குடிகள், பெண்மக்களின் அறிவும் ஆண்மையும், உயிர் போன உடம்பை என் செய்வது? இறந்தோர் வீட்டிற்குச் செல்பவர்களும் அவ் வீட்டினரும், பெண் பாலார்க்கே கொல்லாமை முதன்மையாம், திருக்காளத்திக் காட்சி, சைவ மாதரும் சைவமும் என்னும் தலைப்புகளே நூலின் உட்கிடையைத் தெள்ளிதின் விளக்க வல்லதாம். இக் கட்டுரைகளில் வடசொற்கள் மருந்துக்கும் அகப்படா; வடசொற் கலப்பால் தமிழ் தன் இனிமையும் தூய்மையும் இழத்தலை யான் முதன்முதல் அறிந்தது பின்வருமாறு என்று தனித் தமிழ் இயக்கங் கண்ட செய்தியைத் தனித் தமிழ்க் கட்டுரைகளின் முகவுரையில் பொறிக்கின்றார் அம்பிகையார். அடுத்த வெளியீடாக வருவது முப் பெண்மணிகள் வரலாறு என்பதாம். அஃது 1925இல் வெளிப்பட்டது. வெளியிட்டது பல்லாவரம் பொதுநிலைக் கழகமேயாம். அந் நூலில் காரைக்காலம்மையார் வரலாறு திலகவதியார் வரலாறு மங்கையர்க்கரசியார் வரலாறு ஆகிய மூன்றும் இடம் பெற்றுள. அவர்தம் இளைப்பிருமலை அகற்றியுதவிய மருத்துவவல்லார் பிச்சாண்டியா பிள்ளைக்கு அந் நூலைப் படையலாக்கு கின்றார்: சென்ற ஒன்பது ஆண்டுகளாக எனக்கு இருந்த இளைப்பிருமல் நோயை எல்லாம் வல்ல இறைவன் அருளால் தக்க மருந்துதவி நலப்படுத்திய தமிழ் மருத்துவமணி கீழைப் பாட்டம் திரு. சு. பிச்சாண்டியா பிள்ளையர்கட்கு என் உளமு வந்த நன்றிக்கு அறிகுறியாக இந்நூல் வெளியிடப்படுகிறது என்பது படையற் குறிப்பு. அதன் பின்னர்க், கண்ணப்பர் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும், ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும், ஐரோப்பிய அருண்மாதர் இருவர், பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பவை தொடர்கின்றன. திருவாசகம் சிவபுராணத்திற்குப் பொழிப்புரை குறிப்புரைகளும் காண்கிறார். இந் நூல்களில் பொதுளிய கருத்துகள் தனித்தமிழ் ஊற்றம் தருவதாய், மெய்யுணர்வு அறிவுறுத்துவதாய், சீர்திருத்தம் மேற்கொள்ளச் செய்வதாய், மகளிர் நலமும் முன்னேற்றமும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளன. அடிப்படை நன்றாகப் போடாத கடைக்காலின் மேல் பெரிய கட்டிடம் நில்லாதது போன்று தாய்மொழிக் கல்வியாகிய அடிப்படை இல்லாத நம் மாணவர் மாணவி களுக்கு மற்றக் கல்விகளாலாம் பயனளிப்பதும் மிக அரிதாய் இருக்கின்றது. தாய்மொழிக் கல்வி நன்கு பயிலாத மாணவர் மாணவி களுக்கு மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகா. மற்ற எம் மொழியையும் அவர்களாற் பயனுறப் பயிலவும் முடியாது. பட்டம் பெற்ற தமிழ் மாணவர் ஒருவர் எழுதிய கார்டு என்னும் ஓர் அட்டைக் கடிதத்தில் இருபத்தைந்து பிழைகளை இருக்கக் கண்டு மிகவும் வியப்புற்று மனம் வருந்தினேன். தமிழ்ப் பிள்ளைகளுக்கு நம் அருமைத் தாய்மொழியாகிய தமிழைப் பள்ளிக்கூடங்களில் இன்னுங் கட்டாயப் பாடமாக வைக்கப் பெறாத நிலையில் வடநாட்டு மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்கலாமா? இன்னவை பலவும் தமிழ் நலம் கருதிய தகவுரைகள். ஒரு நாட்டு மாதரின் முன்னேற்றத்திற்கு மற்றொரு நாட்டு மாதரின் முன்னேற்றம் தூண்டுகோலாகவும் இருக்கும் என்பது ஒருதலை என்று மேனாட்டு மகளிர் வரலாற்றைத் தமிழ்நாட்டு மாதர்க்குப் படைக்கின்றார் நீலாம்பிகையார். நம் நாட்டு மகளிர் கொள்ளத்தக்க கடமைகளையும் சீர்திருத்தங்களையும் பல்கால் வலியுறுத்துகின்றார் : மணமான பெண்மக்கள் தம் அருமைக் கணவன்மார் களின் வருவாய்க்கேற்ப வீண் செலவு செய்யாமல் தம் வீட்டு வேலைகளைத் தாமே ஒழுங்குபடப் பார்த்தும் ஓய்ந்த நேரங்களில் கல்வி கற்றும் தம் மக்களைப் பாதுகாத்தும் வந்தாற் போதுமே! எத்தனை பெண்மக்கள் தம் வீட்டு வேலைகளைப் பாராமல் ஆள் வைத்து வீட்டுக் குழந்தைகளையும் உன்னியாமல் படக்காட்சி பார்ப்பதற்கும் உலாவப் போவதற்கும் புறப்படுகின்றனர்! வெளியே நாளெல்லாம் உழைத்து ஓய்வு பெறும்பொருட்டுச் சாயங்கால வேளையில் ஆண்மக்கள் வீடு வரும்போது பெண்கள் சிலர் தம் இல்லக் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கப் போய்விடுகின்றனர். மணமான நம் தாய்மார்கள் இவ்வாறு நடப்பதைத் தவறென்று கூறி, அவர்கட்கு அறிவுறுத்தி அவர்கள் வீட்டு வேலைகளை ஒழுங்காகப் பார்க்கவும் எஞ்சிய நேரங்களில் அறிவுநூல் சமயநூல்களைக் கற்று மேன்மையடையுமாறும் செய்தலே நம்மவர் கடமையாகும் (மேனாட்டுப் பெண்மகளிர் பக். 100) செல்வநிலையில் வாழும் மாதர்களிற் பெரும்பாலார் சில குழந்தைகளே உடையராயினும் அக் குழந்தைகள் தொல்லையால் ஏதுஞ் செய்ய முடியவில்லை என்றும், நேரங் கிடைப்பதில்லை என்றுங் கூறி வாளாவிருந்து காலங் கழிக்கின்றனர். ஆனால் எலிசபெத் அம்மையாரோ ஒன்பது குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களையும் தம் அருமைக் கணவரையும் கருத்துடன் அன்பாகப் பார்த்து வந்ததோடு அமையாமல் தாமிருந்த பிளாஷெட்டில் ஒரு பள்ளிக்கூடமும் மருத்துவச் சாலையும் வைத்து நடாத்தி வந்தமை பெரிதும் பாராட்டத் தக்கதன்றோ! இவர் அண்டை அயலாரிடமும் அவர்தம் மக்களிடமும் மிகுந்த அன்பு காட்டும் இயல்பினர். இவருடைய இனிய குரலும் இன்சொல்லும் பிள்ளைகளை நன்றாய் வளர்க்கத் தெரியாத அக்காலத்தில் குழந்தைகளைக் கருத்தாய் வளர்க்கும் முறைகளை அவர் தம் தாய்மார்களுக்கு இவர் நன்கெடுத்துக் கூறிவந்தார் (எலிசபெத் பிரை பெருமாட்டி) இவ் வுரைமணிகள் அம்பிகையார்தம் உள்ளத்தில் உறைந்து உணர்வில் ஒன்றித் திகழ்ந்த கடைப்பிடிகள் என்பது விளங்கும். தம் வாழ்வை எடுத்துக்காட்டாக்க விழைந்தவர் அவர். எடுத்துக்காட்டே, எடுத்துக்காட்டுபவராய் அமைந்து விடின் இரட்டுற மொழிதலாம் அணிநலம் பெறுதல் இயல்பேயன்றோ! எல்லாம் அவன் செயல் திருவருளே வழி நடத்தும் என்னும் கடைப்பாட்டில் அழுந்திய அம்பிகையார் இறையன்பு, கண்ணப்பர் வரலாற்றில் திரள்கின்றது. திருவாசகத்தில் பொதுளி நிற்கின்றது: இறைவன் அன்பு வடிவினன் ஆதலின் அவனை அன்பால் நினைந்து உருகுவார்க்கே அருள் செய்வான். மாசற்ற உள்ளத் தினின்றும் எழும் அன்பே இறைவனைக் காணும். உவர் நிலத்துப் பிறந்த நீர் பருகப் பயன்படாததுபோற் குற்றமுள்ள உள்ளத்தி னின்றும் எழும் விருப்பால் இறைவனைப் பெறுதல் இயலாது. நல்ல மணற்பாங்கில் ஊறுந் தீஞ்சுவைத் தண்ணீர் சிறிதானாலும் அது பருகுவார்க்கு விடாய் தணித்துப் பெருமகிழ்ச்சி தருதல் போல மனத்துக்கண் மாசு இல்லான் கொள்ளும் அன்பே அவனை தூயனாக்கி இறைவனுக்குப் பெருங்களிப்பைத் தரும் (கண்ணப்பர் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும்; முகவுரை) நிலையில்லாதனவும் துன்பந்தருவனவுமான நினைவு செயல்களிற் கிடந்து உழலும் நாம் அவைகளினின்றும் விடுபட்டு நிலைபெற்ற பேரின்ப வடிவினனாகிய எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவதற்குரிய வழிகளைக் காட்டும் தெய்வ அருள் நூல் (இத்) திருவாசகமே யாகும் (சிவபுராணம்; முகவுரை) இன்னபல உரைகளெல்லாம் நீலாம்பிகையார் பத்திமைப் பெருக்கையும், அதன் தோய்வையும் விளக்குவனவாம். இவ்வாறு பெண்ணுரிமை பேசப்படாத நாளில் உரிமையுற்ற பெண் மகளாய்த் திகழ்ந்து, பெண்ணுரிமையை ஆடவர் உரிமைக்கு மாறாக மாற்றாமல் அரவணைப்பாக்கி, சமயச் சால்பு என்பது உருக்கத்தின் வழி வருவதேயன்றிக் கண்மூடித் தனத்தின் வழியாக வருவதென்று என்பதை வெளியாக்கி, மகளிர் இனத்தின் மணிவிளக்காய் விளங்கியவர் நீலாம்பிகையார்! அவர்தம் சமயச் சால்பும் சீர்திருத்தமும் என்ன செய்தன? நம்பா (நாத்திக) மதத் தலைவராய் விளங்கிய ஈ.வே. இராமசாமியாரின் மன்பதைத் தொண்டில் மனங்கொண்டு அவர்தம் சீர்திருத்தத்தில் தழுவுவன தழுவிக்கொண்டார். பெண்ணுரிமைக்கும், குல ஒருமைக்கும், விழிப்புறுத்தும் தொண்டுக்கும் மகிழ்ந்து, அவரைச் சென்னையில் நிகழ்ந்த மகளிர் மாநாட்டுக்கு அழைத்து அம் மாநாட்டிலே இராமசாமியார் தொண்டு நலங்களை எடுத்துரைத்துச், செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் செந்நாப்போதார் செம்மொழிக்கோர் எடுத்துக்காட்டாய் இலங்கும் இவரை இம் மகளிர் மாநாட்டின் சார்பில் பெரியார் எனப் பட்டம் தந்து பாராட்டுகிறோம் என்று கூறிப் புதுமைப் பெண்ணாக விளங்கியவர் நீலாம்பிகையார். அம்மாநாட்டுத் தலைமை ஏற்றிருந்த பெருமகனார் டாக்டர் தருமாம்பாள்! இப்படியெல்லாம் நாகையார்க்கும் திறம் எப்படி வந்தது? அடிகளார் அருமை மகளார் என்பது மட்டுமோ? அரங்கர் அன்பு மனைவியார் என்பது மட்டுமோ? ஆம்; இவற்றொடும், அவர்தம் உண்மையறிவும் கூடிச் சேர்ந்த சிறப்பே அம்பிகையார் திறத்திற்கு வாய்த்த வாய்ப்பாயிற்றாம். இத் தனிப் பெரும் வாய்ப்புகளின் பயன் என்ன? பிறந்த குடிக்கும் பெருமை; புகுந்த குடிக்கும் பெருமை; தம் தனிப் பிறவிக்கும் பெருமை; பெண்ணினத்திற்கும் பெருமை; பிறந்த நாட்டுக்கும் பேசும் மொழிக்கும் பிற பிறவற்றுக்கும் பெருமை! தத்தம் கருமமே கட்டளைக் கல்லாம் பெருமை! 12. இனிய இரட்டையர் திருவரங்கர் செயல்வீரர்! அவர் சொல்வது அரிது; எழுதுவது அதனினும் அரிது; மாநாடுகளில் பொழிவது - நன்றியுரையா வரவேற்புரையா இவற்றைக் கூறுவதுகூட அரிது! ஆனால் ஓயாமல் ஒழியாமல் கடமையாற்றிக்கொண்டே இருப்பார். எத்தனை இடர் வந்தாலும், எத்தனை நோய் நலிந்தாலும் சோர்வென்பது எட்டுணையும் இன்றி என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று ஈடுபட்டிருப்பார்! அவர் எத்தனை எத்தனை அமைப்புகளைத் தோற்றுவித்துள்ளார்! எத்தனை எத்தனை மாநாடுகளைக் கூட்டிச் சிறப்பாக நடாத்தியுள்ளார்! எத்தனை எத்தனை பெருமக்களையெல்லாம் மேடையேற்றி மேன்மையுறுத்தி யுள்ளார்! எத்தனை எத்தனை அறிஞர் பெருமக்களை எழுத்தின் வேந்தர்களாய் எழிலுறுத்தி யுள்ளார்? எங்காவது தம் பெயரைக் காட்டிக் கொள்வாரா? மேடையில் முன்னின்று முகத்தை நீட்டிக் கொள்வாரா? மாநாட்டு ஓவியங்களில் அவர் ஒளிப்படத்தைக் காண இயலாது! மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அவர் பெயரை எங்குத் தேடினும் காணக் கிடையாது! ஆனால் அனைத்தையும் தோற்றுவித்தும் நிலைபெறுத்தியும் நடாத்துவித்தும் எல்லாவற்றுக்கும் ஊடகமாக அவரே இருப்பார். புகழும் விரும்பாப் புகழ் வாழ்வு அது! பிள்ளைகளைப் பாராட்டும் வகையால், பெற்றோர் மகிழும் போல்வது அது! அவரின் பிறவி இயற்கையே இத்தகைய பெருமையில் பிறங்கிற்று என்க. அன்பர்கள் ஆர்வலர்கள் அவரைப்பற்றி என்ன சொல்கி றார்கள்! எப்படி எப்படி யெல்லாம் பாராட்டி மகிழ்கிறார்கள்! எழுதி எழுதி ஏத்துகிறார்கள்! பாடிப் பாடிப் பூரிக்கிறார்கள்! அவரோ யாரையோ இவர்கள் சொல்கிறார்கள் என்று ஒதுங்கிப் போய்விடுகிறாரே! தமக்கென ஓரிதழ் - போற்றுவார் போற்றும் புலமைப் புகழிதழ் - செந்தமிழ்ச் செல்வியாம் சீரிதழ் திங்களுக்கென்றாகத் தித்திக்கத் தித்திக்க வெளிப்பட்டும் தம் பெயரால் ஒரு கட்டுரை வெளியிட்டாரா? தாம் செய்த - பொழிவையோ நன்றியுரையையோ வெளியிட்டாரா? எல்லாம் அமைதி! அமைச்சர் என்பதற்கே கடமை புரிந்து அமைந்து விடுபவர் என்று பொருள்கொண்டார் போலும். திருவரங்கர் குடும்பச் சூழலையும் தமிழ்ப்பற்றின் சிறப்பையும் நேரில் கண்ட ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் உரைக்கின்றார்: 1938 இல் நான் பாளையங்கோட்டை நகராட்சி ஆணையனாக மாற்றப்பெற்றதும் அந்நகரிலே அவர்களது இல்லத்தில் திரு. (வ.சு.) பிள்ளையவர்களையும் அவர்கள் தமையனார் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்களையும் அடிக்கடி பார்த்து அளவளாவி அகமகிழ்வேன். வடசொல் தமிழ் அகரவரிசை முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும் அருள்திரு மறைமலையடிகளார் திருமகளாருமான திருவாட்டி நீலாம்பிகை திருவரங்கம் அவர்களையும் அருமைக் குழந்தை களையும் கண்டு களிக்கும் பேறும் அங்கு எனக்குக் கிட்டிவந்தது. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்னும் தொடரை நினைவூட்டும் வகையில் திரு. பிள்ளையவர்கள் குடியிருந்த திருக்கோயிலான அகவை முதிர்ந்த அவர்களின் அன்னை பெருமாட்டியாரையும் அங்குச் சேவித்து அளவளாவி அகமுவப்பேன். அண்ணனாரும் தம்பியாரும் பல்வகையான தமிழ்ச் செய்திகளைத் திரட்டுவதிலும் பழந்தமிழ் நூல்களைச் சேகரிப்பதிலும் கொண்டிருந்த உந்தும் ஊக்கத்தை அப்போது நேரில் அறிவேன். திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்களது சட்டையின் மூன்று பைகளிலும் கையெழுத்துத் தாள்களும் அச்சு ஏடுகளும் எப்போதும் அடைபட்டு இருப்பதைக் கண்டு வியப்பேன். சட்டைப் பைகள் அவர்கள் தமிழ்ப்பற்றினைப் போலவே பெரியனவாக இருந்தமையின் அவை கிடைத்தவற்றை யெல்லாம் கொள்ளும் தகையனவாய் இருந்தன. ஆட்சிமொழிக் காவலர் கண்ட காட்சி ஈதாக, சென்னை உயர்நீதிமன்ற நடுவர் நாவலர் திரு. மகாராசன் தாம் அரங்கரைக் கண்ட காட்சியை விளக்குகிறார்: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நினைக்கும் போதெல்லாம் தங்கள் (திரு. வ.சு) தமையனார் திருவரங்கம் பிள்ளையவர்களுடைய உருவம் கண்ணுக்கு முன்வந்து நிற்கிறது. அவர்களை நான் முதன்முதலாகச் சந்தித்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் - பாளையங்கோட்டையில் நான் வழக்கறிஞனாக இருந்த காலம் அது. அழுத்தம் திருத்தமான தமிழ்ப்பேச்சு; உதாரமான - ஆனால் நகைச்சுவையும் கிண்டலும் பொதிந்த உரையாடல்; என்ன இடையூறு வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்துவிட்டு நினைத்த திட்டத்தை நிறைவேற்றித் தீர்க்கும் ஆற்றல்; ஊர்வாய்க்கு அஞ்சாது தாம் கொண்ட குறிக்கோளில் நிலைத்து நிற்கும் ஆண்மை; இத்தனை அரிய குணங்களையும் பயன்படுத்தித் தமிழுக்கும் - சைவத்திற்கும் ஏற்பட்ட இன்னல்களைத் துடைப் பதிலும் முழு வெற்றி கண்டவர்கள் தங்கள் தமையனார். அவர்களுடைய முயற்சியின் மகுடமாகவும் வெற்றியின் சின்னமாகவும் இருப்பது கழகம். திருவரங்கனாரின் முயற்சிச் சின்னம் கழகம் என்றார் நடுவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அதனை மேலும் மெருகிட்டு விளக்குகிறார்: ஆசிரியர் மறைத்திரு மறைமலையடிகளாரின் தேசிய உடல் புகழ்த் திருமேனியே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதனைக் கனவார்வத் திட்டமாகப் படைத்தாக்கிய பெருமை அண்ணல் வ. திருவரங்கனாருக்கு உரியது என்பது அவர் உரை. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் பாவேந்தர். கண்ணிரண்டும் ஒன்றையே காண் என்றார் பட்டறிவு மீக்கூர்ந்தோர். கழகப் பணியில் அரங்கரும் அம்பிகையாரும் ஆம் குடும்பமே ஈடுபட்டு நின்றதைக் கவினுறுத்துகிறார் காவல் கடன் வல்ல அறிஞர் என்.கே. வேலனார்: சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் திருவரங்கம் பிள்ளை அவர்களும் நீலாம்பிகை அம்மையார் அவர்களும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். அறிவியற் கருத்துகளைத் தமிழில் எழுதுங்கள்; தமிழுக்குத் தொண்டு செய்தது போலாகும் என்றார்கள். காவல் துறையில் பணியாற்றுகிறேன்; எனக்கு நேரம் ஏது என்றேன். ‘jÄG¡fhf miu k neu« xJ¡» it¡f¡ Tlhjh? என்று கேட்டார்கள். ஒரு நாளைக்கு அரைப் பக்கமாவது எழுதுங்கள் என்று அம்மையார் வற்புறுத்தினார்கள். அன்று தொடங்கி ஓய்வு கிடைத்தபோதெல்லாம் கட்டுரைகள் எழுதி வந்தேன். அவற்றின் விளைவாகப் புதியது புனைந்த அறிவியல் அறிஞர், இயற்கையும் செயற்கையும், மண்ணும் விண்ணும் முதலிய நூல்கள் வெளிப்பட்டன. தொண்டால் தம்மைக் கழகத் தொண்டுக்கு ஆளாக்கிக் கொண்ட அரங்கர்தம் சிறப்பை, உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் குறிப்பிட்டு பாராட்டு கிறார்கள்: 46 ஆண்டுகளுக்குமுன் திருவரங்கம் பிள்ளை அவர்களின் தொடர்பு பெற்றுச் சில திங்களில் நண்பனாயினேன். அவர்கள் என்னைச் செப்பறைத் திருமடத்துக்கு அழைத்துச் சென்று அதன் அதிபர் சிவத்திரு அழகிய கூத்ததேசிகர் அவர்கள்பால் தகுவன சொல்லி ஞானாமிர்த ஏடு பெற உதவினர். அன்றுமுதல் கழகத்தின் தொடர்பு பெருகிற்று. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் பணி செய்தலும். உதவுதலும், உள்ளன்பு செலுத்துதலும், குடும்பத்துடன் உழைத்தலும், உரிமை பாராட்டுதலும் வேண்டி யிருக்கிறது என்பது இவற்றார் வெளிப்படையாய் விளங்கும். இவ்வெல்லாவற்றினும் தம் செயலையும் எண்ணத்தையும் யான் கண்டனையர் என் இளையரும் என்பதுபோல் குறிப்பறிந்தும் கூறாமல் வழிப்பட்டும் செல்லவல்லால் வாய்த்தல் கட்டாயம் வேண்டும். அவ்வகையில் கழகத்தின் அடிநாள் தொட்டு இன்று வரை தம்மையே கழகத்திற்கு ஆளாக்கித் தாமே கழகமாகவும், கழகமே தாமாகவும், கழகத்திற்காக எத்தகைய ஈகத்தை (தியாகத்தை)ச் செய்யவேண்டுமாயினும் எண்ணிப் பாராது செய்ய வல்லாராகவும் வாய்த்த இளவர் வ.சு. வை அரங்கர் பெற்றது போல் வேறொரு பேறு இல்லையாம் எனலாம்! வ. சு. வுக்கும் தந்தையாய், தமையனாய், ஆசானாய், வழிகாட்டியாய், புரவலராய், புகழ் வளர்க்கும் செவிலியாய், புகழ்த்தொண்டிலே புகுத்திவைக்கும் ஒருமாமணியாய் இலங்கிய அரங்கரை அண்ணலாகப் பெறும் பேறும் கிட்டற்கு அரியதாம். திருவருளே இவ்வாறு கழகப்பணிக்கென இலங்கும் இரட்டையரைப் படைத்து எழிலுறுத்தியது! இரட்டையர் என்றவுடன், இவர்கள் இருவருக்கும் எவ் வகையிலும் கருத்து வேறுபாடு இல்லையோ? கருத்து வேறுபாடு எழுந்ததும் இல்லையோ? என்னும் எண்ணங்கள் தோன்றலாம். உடன்பிறப்பாய், உடன் உறுப்பாய் ஒட்டிப்பிறந்த இரட்டை யர்க்கும் உணர்வு வேறுபாடுகள், செயல்திற வேறுபாடுகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே! அவ் வேறுபாடு உயிர் கலந்தோன்றிய செயிர்தீர்க் காதலர்க்கும் உண்டு எனின், உடன் பிறப்பாளர்மாட்டு ஏற்படுவதில் வியப்பு இல்லை! ஆனால் அவ்வேறுபாடு, தன்முனைப்பால், தடித்தனத் தால் ஏற்படாக்கால் போற்றக்கூடியதாய் அமைந்துவிடுமன்றோ. தந்தையின் கருத்தும் மைந்தனின் கருத்தும் மாறுபடும் இடங்கள் உண்டாயினும் தந்தைமைத்தகவும், மைந்தமைத் தகவும் ஊடகமாக இருக்குமாயின் ஒருவருக்காக ஒருவர் உருகி நின்று, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாய், இணையாய், ஊற்றமாய் நின்று உதவுவர் அன்றே! அந்நிலை திருவருள் வலத்தால் அரங்கர்க்கும் அவர்தம் இளவலுக்கும் அமைந்து இருந்ததாம். அரங்கர் கண்டிப்பானவர்; கண்டிப்பில் உடன் பிறப்பையோ உறவையோ கலக்க இசையாதவர்; பணிவேறு குடும்பப் பாசம் வேறு என்று துணிந்தவர்; கழக நிறுவனராத லோடு காவலராகவும் திகழ்ந்தவர்; கழகமே தம் ஊனினும் உயிரினும் உயர்ந்ததென உளங்கொண்டவர்; கழகப்பணி என்பது தம் முழுப்பணியேயன்றி மணிகண்டு பொழுது கண்டு நிறுத்தியும் தொடங்கியும் ஓய்ந்தும் உறுத்தும் செய்யும் பணியென எள்ளளவும் கருதாதவர்! நாளின் பகலும் இரவும், நன்மையும் தீமையும், வாழ்வும் வறுமையும் எல்லாம் எல்லாம் கழகமாகவே மாறிவிட்டவர்! தலைமையின் பொறுப்பும், தலைமையை மதித்து நடக்கவேண்டிய அலுவலர் ஏவலர் நிலையும் வரம்பாக மதித்துப் போற்றுபவர்! இவ்வளவும் அரங்கர்க்கு இயல்பு என்றால், இதே இயல்பு இளவலார் வ. சு. வுக்கும் உண்டு என்றால், எஞ்சிய வேறுபாடுகள் எல்லாம் என்ன செய்ய வல்லன! நோக்கு ஒன்றாகிவிட்டால், போக்கில் உண்டாகும் வேறுபாடுகள் வேறுபாடுகளாக நிற்கத் தக்கனவோ? தம் தம்பியே முகவர் என்பதால் கண்டிக்காமல் விட்டாரா அரங்கர்? அறிவுறுத்த வேண்டியதை அறிவுறுத்தாமல் தளர்ந் தாரா? தவிர்ந்தாரா? ஏனையோரைக் கண்காணிப்பதற்கு ஒப்பாக என்பதினும் ஒருபடி மேலாகவே கண்காணித்தார்! கண்டித்தார்! அழுது தேம்புமாறும் கண்டித்தார்! தாம் அழுது தேம்பிக் கொண்டும் கண்டித்தார். உன் நன்மைக்குத் தானே சொல்கிறேன், உன் எதிர்காலம் எண்ணித்தானே சொல்கிறேன்; உன் அண்ணனாக இல்லை; தந்தையுரிமையில்தானே தட்டிக் கேட்கிறேன் என்றெல்லாம் நைந்துருகி நன்மொழியுரைத்தார். தம் உடன் பிறந்தார் பிறர் நோக்கில் எவ்வளவு பெருமையராய்ப் பேராற்ற லராய் விளங்க வேண்டும் என்னும் எண்ணத்தின் எழுச்சியால் எடுத்துரைத்தார். பாராட்டத்தக்கவை அடுக்கடுக்காக நிகழும் போது உள்ளுக்குள் கிளுகிளுத்து உவகை கூர்ந்து, மட்டோடு காட்டி அமைத்தார். எப்படி யெப்படியெல்லாம் செயலாற்ற வேண்டும் என்பதை வரையறுத்து வலியுறுத்தினார். தம் தம்பியின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆர்வமீதூரப் பெற்றாரோ அதற்குத் தகவெல்லாம் வழிகாட்டினார். மாறுபட்ட கருத்து எழும்போது தம் மனக் கருத்தை வலியுறுத்தினாலும், தம்பியர் எண்ணம் போல் செயல்படுவதற்குத் தடையாக நிற்காமல் தம் கருத்தை உரைத்த அளவில் அமைந்தார். தலைமையில் இருப்பார் எவருக்கும் இத் தன்மை வருதல் அரிதினும் அரிதாம்! தமையன் தம்பி என்பது வீட்டில் கைக்கொள்ள வேண்டியதாகும். ஆபீசுக்கு வந்துவிட்டால் அதனை முற்றிலும் மறந்துவிடவேண்டும் வேலைக்காரர்கள் அன்பு, பணிவு, நேர்மை உடையவர் களாயிருக்கிறார்களா வென்பதை முதன்மையாகவும், வேலைத் திறமையுடையவர்கள்தாமா வென்பதை அடுத்தபடியாகவும் எண்ணிப் பார்த்துத்தான் வேலைக்கு வைப்பார்கள். அப்புறமும் அவ்வாறு நடக்கிறார்களா என்பதை ஆராய்வது முதன்மை யாகும் என்பதை எவர்தம் தெரியாமல் இருக்க முடியும் அவரவர் சொந்தக் காரியம் வரும்போது பேச்சு வேறு செயல் வேறாகவே இருப்பதைக் கண்டு வருகிறேன். ஆதலால் நாம் எப்போதும் நம் சொந்தக் காரியத்திலும் பொதுக் காரியத்திலும் மனச் சான்றுக்கு விரோதமின்றித் தாராள புத்தியுடன் வஞ்சனையின்றி நடந்துவந்தால் ஆண்டவன் நமக்கு நன்மையே செய்வான் என்பது எனது நம்பிக்கை. வஞ்சனையின்றி நடப்போர்க்குத் துன்பமிராது. பொருள் தானாகவே சேரும். வஞ்சனையுடையோர், சூதும் வாதும் வேதனை செய்யும் என்று பெரியோர் திருமொழிப்படி துன்பமே யடைவார்கள். ஆதலால், நாம் கள்ளங் கவடின்றி ஒருமையோடு கழகத்தை நடத்த வேண்டியது முதன்மை என்பதைக் கடைப் பிடிக்க. நிமிர்ந்தவன் குனிய வேண்டியதும், குனிந்தவன் நிமிர வேண்டியதும் உலகில் வந்தே தீரும் தூய்மையோடு அஞ்சாமல் நடப்பதுதான் ஆண்மை; உன்னை நான் பிள்ளையாக நினைத்துத்தான் புத்தி புகட்டி வருகிறேன். செலவிற்குச் சோம்பாதே. இதிலெல்லாம் மனிதன் நினைத்தபடி எதுவும் நடந்துவிடாது. ஆண்டவனைத்தான் நம்பி நடக்க வேண்டுவது நம் கடமையாய் இருத்தல் வேண்டும். தூய உள்ளமுடையார் எதனையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இடைவிடாமல் அறப்பணி செய்து வருவதாகவே கருதி வருகின்றேன். என் தொடர்பாய் உள்ளவர்களும் என்னைப் போலவே கருதி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம். அறிவுரை - அறவுரை - அருளுரை கூறும் அரங்கர் நூல் வெளியீடு பற்றி எழுதி வழிகாட்டவும் செய்கிறார்: சங்க இலக்கிய இன்கவித் திரட்டை அறம் பொருள் இன்பம் என்ற வகையில் முறைப்படுத்தி வெளியிடுதல் நலமாகும். பல பேருக்குத் தபாலில் எழுதிக் கேட்பதைவிடத் திரு. ந. மு. வே. (வேங்கடசாமி நாட்டார்) அவர்கள் திரு. T. S. K. (தூ. சு. கந்தசாமி முதலியார்) அவர்கள், இவர்கள் போன்ற இயல்புடையார் சிலர் - அதாவது பொறாமையியல்பில்லால் சிலரிடம் மட்டும் காட்டிக் கேட்டால் போதுமானதாகும். எல்லார் சொல்வதையும் Carry-out செய்தால் நலமாகாது. சங்க நூற் பயிற்சி மிக்க சிலரை, நம் கழகத்தினிடம் அபிமானமுடைய சிலரைக் கேட்டால் போதுமானதாகும். என் எழுத்தில் இருந்தே நுட்பமறிதல் வேண்டும். பரநலப் புலியாயிருத்தல் வேண்டும். அச்சிடுவது பெரிதன்று. அழகாய்ப் பயிண்டு செய்வது பெரிதன்று. பிழையும், பொருட்பிழையும் இன்றியும், பிழை கண்ட ஞான்றே திருத்தி வெளியிடுதலுமே புகழைத் தரும் மரக் கோட்டம் (வளைவு) தீர்ப்பது நூல்; அதுபோல் மனக் கோட்டம் தீர்ப்பதும் நூல்; இத்தகைய உயர்ந்த பெருமைக் குரியதாம் நூலை, இழிவுறுத்துவதுபோல் நூலின் பெயரால் எத்தனையோ குப்பை கூளங்களும் தீமைக் கிருப்புகளும் வெளிப்பட்டு நாட்டைக் கெடுக்கின்றன. இவை ஒருபாலாக, மற்றொருபால் பள்ளியில் பயில்வாரும் மூலநூலைக் காண வொட்டா வகையில் உரைநூல்கள் பல எழுதுகின்றன. கழகம் தொடக்கநாள் முதலே மூலநூலையன்றிக் கருவிநூலை யன்றி என்றும் வாழும் நூலையன்றி நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், பெருமையும் நலமும் பயக்கும் நூலையன்றிப், பிறவகை நூல்களை வெளியிடாத வீறுமிக்க நோன்பை விழுமிதாகப் போற்றி வருகின்றது. அப்போற்றுதலைச் சிறிதும் நெகிழ விட்டதேயில்லை! ஆனால் கழக அமைச்சர் திருவரங் கருக்கு ஓர் எண்ணம் 1941இல் உண்டாயிற்று. பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C. தமிழ்ப்பாட) நூலுக்கு உரைநூல் போட வேண்டும் என்பது! அவர், தம் நினைப்பை நூல் வெளியீட்டுப் பொறுப்பை மேற்கொண்டிருந்த சென்னை முகவராம் தம் தம்பியார் வ. சு. வுக்கு எழுதினார். நேரிலும் கூறினார். ஆனால் வ. சு. அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை! அமைச்சர் கட்டளை இட்டும், அவர் கட்டளையை நிறைவேற்றற்கமைந்த முகவராம் அலுவலர், நிறைவேற்றாதிருக்க இயலுமோ? வ. சு. வின் உறுதிப்பாடு அசையவில்லை; ஆட்டங் கொள்ளவில்லை. பின்னரும் வலியுறுத்தினார் அரங்கர். எழுதத்தக்கார் இவர் என்பதையும் வலியுறுத்தினார்; உரைநூல் வெளியீட்டால் கழகத்திற்காம் நலத்தையும் தெளிவித்தார். ஆயினும் வ. சு. வின் நிலைமை சிறிதும் மாறிற்றில்லை. “S.S.L.C. Notes போட்டால் லாபமில்லாவிட்டாலும் கழக adverticements பரவுமென் றெண்ணினேன். உன்னிடம் கலந்த போது வேண்டாமென்று தெரிவித்துவிட்டாய். நான் வேண்டு மென்பதை வேண்டாம் என்பதே உன் இயல்பாய் இருக்கிறது. “S.S.L.C. NotesI நமது இளவழகரைக் கொண்டே எழுதச் செய்யலாம். இன்றேல் வேறு யாரையேனும் கொண்டு விரைந்து எழுதச் செய்து வெளியிடுதல் நலமாகும். தமிழ்மொழியைக் காலத்திற்கு ஏற்றதாய் வளர்த்துச் சிறப்பிப்பதில் வ. சு. அவர்களுக்கு இளமை முதலே ஈடுபாடு இருந்தது. துறைதோறும் அது வளர்தற்குக் கழகம் பணி செய்தல் கட்டாயம் வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அரசும் பல்கலைக் கழகங்களும் அவற்றைச் செய்ய வேண்டும் என்று அமைந்துவிடாமல், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டியாய்க் கழகம் செயலாற்ற வேண்டும் என்று முனைந்து பணி செய்தார். அவற்றுக்கு அடிப்படை, கலைச் சொல்லாக்கம் என்பதைக் கண்டுணர்ந்தார். ஆதலால் பல்வேறு துறைகளிலும் நல்லறிவு வாய்ந்த பெருமக்களைக் கூட்டிக் கலைச் சொல்லாக்க ஆய்வு நடாத்தினார். சொல்லாக்கம் செய்யவும், நூல் வெளி யிடவும் துணிந்தார். ஆனால், கழகம் கூட்டுப்பங்கு நிறுவனம் என்பதையும், அதற்கு அமைச்சர் ஒருவர் உளர் என்பதையும் பங்காளிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதே அமைச்சர் முதல் அனைவர் கடமையுமாம் என்பதையும் வ.சு.வின் ஆர்வம் கருதிற்றில்லை. செய்தக்க அல்ல செயக்கெடும் என்பது போலவே, செய்தக்க செய்யாமையானும் கெடும் என்னும் துணிவால் செயலில் இறங்கிவிட்டார். கலைச் சொல்லாக்கம் சம்பந்தமாய் இயக்குநர்கள் இசைவு இன்றி இனி ஏதும் நான் அனுமதி தர முடியாது என்று தடைவிதித்தார் திருவரங்கர். ஆனால் வ. சு. தளர்ந்தார் அல்லர்; தவிர்ந்தாரல்லர்; தொடர்ந்தார்! அரங்கரைப் பாராட்ட வேண்டும்! தம்பியர் திட்டத்தை வலக்காரமாய் நிறுத்திவிட முனைந்தார் அல்லர். சுட்டிக் காட்டிய அளவில் அமைந்துவிட்டமையால் வ. சு. வுக்கும் பிற்பயக்கும் நற்பாலவைகளைத் தேர்ந்து செய்தற்கு வாய்த்தது. இத்தகைய வேறுபாடுகளுக்கும் மூலம் இல்லாமல் இல்லை. கழகத்தைக் கட்டிக் காப்பதில் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர் சளைத்தவர் அல்லர் இருவரும்! ஆனால், கழகத்தின் இரு கண்களாக விளங்கிய சமயப்பணி மொழிப்பணி என்பவற்றை இருவரும் மேற்கொண்ட அளவில் வேறுபாடு இருந்தது. திருவரங்கர் பணியில் மொழிப் பணியினும் சமயப் பணியே தலைதூக்கி நின்றது. வ. சு. பணியில், சமயப் பணியினும் மொழிப் பணியே தலைதூக்கி நின்றது. இரண்டையும் பேணுதலில் கருத்துண்டாயினும் விஞ்சிய உணர்வுகளால் இடைவெளியுண்டாதலும் இயற்கைதானே! ஆனால், அவ் வியற்கை, உரிமை, உறவு, கடமை ஆயவற்றைக் குறுக்கிட்டுத் தடுத்துவிடவில்லை என்பதே இவ் விரட்டையர் வரலாறு உணர்த்தும் இனிய செய்தியாம். 13. செந்தமிழ்ப் பணியும் சிவநெறித் தொண்டும் மணங்கொண்ட மக்கள் தாமின்புற எத்தனை எத்தனை திட்டங்களைப் போடுவது உலகியல் நெறி! மண்ணிலே கால் வைத்துக்கொண்டே, விண்ணில் திகழும் நிலவைத் தேனிலவு ஆக்கக்கூடிய ஆர்வப் பெருங்குடையதாயிற்றே புதுமணவாளர் பூரிப்பு! எத்தனை எண்ண வுந்துதல்கள் எக்களித்து ஆர்க்கும் புதுமணக் காதலர்களுக்கு! அதுவும் காதல் தடையுற்று ஒன்பான் ஆண்டுகள் காதல் கடுந்தவம் புரிந்தவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா? ஒரு நாள் பிரிவும் தடையுமே ஓராண்டாய்க் கழியுமாம்! அப் பிரிவு பாம்பாய்த் தேளாய்த் தீண்டித் தீண்டிக் கடுப்பேற்றுமாம்! அத்தகைய பிரிவுக்கு ஆட்பட்டவர் கூடினால் அக் கூட்டத்தின் விளைவு என்னாகும்? அறிவறிந்த அரங்கர் அம்பிகை யுள்ளங்கள், கட்டற்ற காதல் வயப்பட்ட நிலையிலும் கட்டுற்றே நின்று கவின் செய்தன! மணங்கொண்ட நாள் தொட்டே உலகின்புறு பணிகளில் அவர்கள் ஒன்றிவிட்டனர்! கருத்தொருமித்த நண்பர்கள் பணியும் சிறக்கும்! ஆயின், கருத்தொருமித்த காதலர் பணி சிறக்கக் கேட்க வேண்டுமோ? அன்றியும், ஒருவரை ஒருவர் விஞ்சிய நல்லுணர்வும், செயல் திறமும், சிந்தனை வளமும் பெற்றவர்கள் கூடிய இல்வாழ்க்கையின் சார்பில் இயலும் அகக் கடமைகள் புறக் கடமைகள் எல்லாம் அறக் கடமைகளாய் அமையும் என்பதில் ஐயமும் உண்டோ? ஆகலின், இவ்வினிய மக்கள் தொடர்பு அவர்தம் தனி வாழ்வுக்கும் மன்பதை வாழ்வுக்கும் பொதுநலம் பொலிவூட்டுவ தாய் அமைந்து சிறந்தது. தனித்தமிழ் எழுச்சியைத் தந்தையாம் அடிகளாருக்கே எழுப்பிய இனிய இயல்பினர் நீலாம்பிகையார்! அவர்தம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இனிய வாய்ப்புக் கையின் கண் கனியென வாய்த்தபோது நழுவ விடுவாரோ? வினையால் வினையாக்கிக் கொள்ளும் வித்தகர் அரங்கர்தம் வாழ்க்கைத் துணைவியார் அல்லரோ அவர்! ஆகலின், மணம்புரிந்து இல்லறம் புக்க காலை முதலே எழுத்துப் பணியில் அழுத்தமாக ஊன்றினார். ஆராய்ச்சி புரிதலில் பொழுதெல்லாம் செல விட்டார்! அவர் எழுத்தில் சுரந்த முதல் படைப்பு எது? சொல்லவும் வேண்டுமோ? வடசொல் நீக்கத்திற்கும் வண்டமிழ் ஆக்கத்திற்கும் கருவியாக அமைந்த வடசொற்றமிழகராதி யைத் தொடராக வெளியிட்டார். 1927ஆம் ஆண்டு நவம்பர்ச் செந்தமிழ்ச் செல்வி இதழில் (சிலம்பு 5; பரல் 10; பக். 631) இத் தொடர் கட்டுரைக்கு ஒரு முன்னுரை வரைந்து வெளியிட்டார்: எழுநூறு ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சியாலும், அவர் தம்மைப் பின்பற்றிய போலித் தமிழர்களிற் பெரும்பாலார் முயற்சியாலும் புகுத்தப்பட்டுப் பலப்பல வடசொற்கள் நந்தமிழிற் கலந்துவிட்டன. இங்ஙனந் தமிழின்கண் பல வடசொற்கள் வந்து புகுந்துபின் பழந்தமிழ்ச் சொற்களிற் பல வழங்காதொழிந்தன. தமிழிற் கலந்து அது தன்னை முற்றும் வேறுபடுத்தும் ஆரியமொழிச் சொற்களை இப்போதே நாம் தடை செய்யாவிடின் தமிழ் தன்னிலை கெட்டு வேறுமொழி போலாகும் என்பதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. வேறு நாடுகளிற் குடியேறி நாகரிகமில்லாத தமிழ்மக்கள் தம் தமிழ்மொழியினைப் பாதுகாவாமல் திரித்து வழங்கியதோடு, வடமொழிச் சொற்களும் கலக்க இடந்தந்தமையினாலேதான் தமிழ்மொழி ஒன்றே தன்னிலை திரிந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலான பல்வேறு மொழிகளாயிற்று. தமிழின்கண் வடமொழிச் சொற்கள் நிரம்பவும் விரவினமையால் இவைதாம் வடசொற்கள் இவைதாம் தமிழ்ச் சொற்கள் எனத் தமிழ்மக்களிற் பெரும்பாலார் அறியக்கூடாத வாறு அவை தலைமயங்கிக் கிடக்கின்றன. இக்காலத்துத் தமிழ்மக்களிற் பெருந் தொகையினர் ஆரிய மொழிச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் பகுத்துணரும் கல்வி இலராகித் தாமெழுதுங் கட்டுரைகளிலும் நூல்களிலும் வடசொற்களைச் சேர்த்தெழுதுவதோடு அவைகளைத் தமிழ்ச் சொற்களாகவே பிழைபடக் கருதி அவை தம்மை மிகவும் சேர்த்தெழுதித் தமிழின் தூய்மையையும் இனிமையையும் பழைமையையும் கெடுத்து வருகின்றார்கள். வடசொற்கள் இவை தமிழ்ச் சொற்கள் இவை என நந்தமிழ்மக்கள் எளிதில் உணர்ந்து வடசொற்களை நீக்கித் தூய தனித்தமிழில் எழுதி நந்தமிழை நிலை திரியாமல் பாதுகாக்கும் பொருட்டு உலக வாழக்கிலும் நூல் வழக்கிலும் காணப்படும் வடசொற்களுக்குத் தூய செந்தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து காட்டுதல் நன்றென்று கருதிப் பின்வருமாறு அகரவரிசை முறையாக எழுதப் புகுந்தாம். வடசொற்களுக்கு இதன்கண் காட்டப்படும் தமிழ்ச்சொற்களை விட இன்னுந் திறமான தமிழ்ச்சொற்களை எவரேனும் தெரிந்து எமக்குத் தெரிவிப்பார்களாயின் அவற்றை அவர்கள் பெயருடன் நூலில் வெளிப்படுத்துவாம். திருவரங்கர் எப்படித் தனித்தமிழ்ப் பற்றாளரோ அப்படியே சைவநெறிப் பற்றாளராகவும் திகழ்ந்தார். இன்னும் சொல்லப் போனால், சைவத்தின் ஊற்றம் தமிழ் ஊற்றத்தினும் மிக்கிருந்தது என்றும் கூறினோம். நுண்கலைச் செல்வர் அ. இராகவன் அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார்கள்: 1923ஆம் ஆண்டு நெல்லையில் சுயமரியாதைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத் தொடக்க விழாவைத் திருவரங்கனார் அவர்களே முன்னின்று நடத்தி வைத்தார். அவ்வியக்கப் பத்திரிகையை ஞானியார் சுவாமிகள் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கம் சைவ சமயத்தைத் தாக்கியது. திருவரங்கனார் அவர்கள் அவ்வியக்கத் தொடர்பை அறுத்துக் கொண்டார். சைவ அன்பர்கள் பலரையும் அதில் பங்கு கொள்ளாது தடுத்தார். இராகவனார் சுட்டும் குறிப்பு அரங்கனாரின் சைவநெறி அழுத்தத்தைப் புலப்படுத்துகின்றதன்றோ! தொடர்பை அறுத்துக் கொண்டதைச் சைவப்பற்று எனின், தடுப்பு இருக்கிறதே அது சைவ அழுத்தத்தைக் காட்டத் தவறாதே! தடுத்தாட்கொண்ட படலம் திருத்தொண்டர் புராணம் கண்டதாயிற்றே! தொண்டர் சீர் பரவுவார் பாடியது ஆயிற்றே! வேறென்ன வேண்டும்? 29-3-1929 முதல் 31-3-1929 முடியத் திருநெல்வேலியில் சைவப் பெரியார் தனிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதன் தலைமையைச் சைவத் திருவாளர் ச. சச்சிதானந்தம் பிள்ளை ஏற்றிருந்தார். தமிழ்நாட்டின் பகுதிகளாகிய தொண்டைநாடு, சோழநாடு, சேரநாடு, பாண்டிநாடு, நடுநாடு, கொங்குநாடு ஆகியவற்றில் இருந்தும் ஈழநாட்டிலிருந்தும் பெருமக்கள் வந்திருந்தனர். அதன் பொருளாய்வுக் கூட்டம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைமை நிலையத்தில் நிகழ்ந்தது. பொதுக் கூட்டம் கணபதி விலாச நாடக அரங்கில் நிகழ்ந்தது. அரங்கர் பங்கு பெரிது! சமயச் சால்பு அக் கூட்டத்தின் தீர்மானங்களில் பொதுளிப் பெருமை செய்வதாய் உள்ளது (செல்வி 7 : 183 - 192). இலால் குடி நாட்டாண்மைக் கழக உயர் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகத் திகழ்ந்த பெருஞ்சொல் விளக்கனார் அ. மு.. சரவண முதலியார் அவர்களை அழைத்து நெல்லையில் 14-5-30 முதல் 5-6-30- முடியப் பல்வேறு தலைப்புகளில் பெரிய புராணச் சொற்பெ ழிவு நிகழ ஏற்பாடு செய்தார் திருவரங்கர். 14-5-30 முதல் 17-5-30 முடிய அமைந்த நான்கு நாள்களிலும் தடுத்தாட் கொண்ட புராணம் விரித்துரைக்கப்பெற்றது. அதன் பொறுப்பைக் கழகச் சார்பில் அரங்கர் ஏற்றுக்கொண்டார். எஞ்சிய நாள்களின் சொற்பொழிவுகளுக்குப் பல்வேறு அமைப்புகளைப் பங்கேற்றுச் சிறப்பிக்க ஏற்பாடும் செய்தார். இம் முயற்சியும் நடைமுறையும் புதுவது கவினும் திறத்ததாய் அமைந்தது. இவ்வாறே பிற நகரங்களிலும் ஏற்பாடு செய்யு மாறும் வேண்டுகோள் விடுத்து வழிகாட்டினார் திருவரங்கர். 1933ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 23, 24ஆம் நாள்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழன்பர் மாநாடு என்னும் மாநாடு கூடிற்று. அம் மாநாட்டின் அழைப்பிதழே தமிழன்பர் மாநாடு எத்தகையது, எவ்வாறு நடைபெறும் என்பவற்றை எடுத்துக் காட்டியது. எண்ணற்ற வட சொற்களைப் பெய்து வெளிப்பட்ட தமிழன்பர் மாநாட்டு அழைப்பிதழ் தனித் தமிழ்த்தோன்றல் தவத்திரு மறைமலையடிகளார்க்கும் விடுக்கப் பெற்றது. மாநாட்டு முதன்மையர். திரு. கே.வி. கிருட்டிணசாமி ஐயர், அடிகளார்க்குத் தொலைவரியில் தயை கூர்ந்து தமிழன்பர் மாநாட்டுக்கு வரவேண்டும் எனத் தங்களைப் பரிவுடன் வேண்டுகிறேன் என்று அழைப்பும் விடுத்தார். ஆனால் அடிகளாரோ ஏற்றார் அல்லர். எனக்கு அனுப்பி வைத்த கடிதங்கள், அழைப்புகள், தொலைவரி முதலியவற்றிற்காகத் தங்களுக்கும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும் நன்றி செலுத்துகின்றேன். தமிழ்மொழியின் தூய்மையைப் பாதுகாத்து முன்னேற்றுங் கருத்தில்லாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலுங் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை யென்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டைக் காலச் செம்மொழிகள் பலவற்றுள்ளும் தமிழொன்றே தன் தனிப் பெருமையை இற்றை நாள் வரை இழவாதிருந்து வருகிறது. பிறமொழிச் சொற்களைக் கலத்தலால் தமிழ்மொழியின் தூய்மைநலங் கெடுவதோடன்றி அதன் வளர்ச்சியுரனும் தடைபடு மென்பதே என்னுடைய முடிந்த முடிபாகும். எனவே அம் முடிபுடன் ஒவ்வாததாகத் தோற்றும் உங்கள் கூட்டத்திற்கு நான் வராமைக்குப் பொறுத் திடுக என வரைந்தார் (செந். செல். 12: 244-5). தமிழன்பர் மாநாட்டில் அடிகளார் மட்டுமோ கலந்து கொள்ளவில்லை! அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சைவப் பெரியார் ச. சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியவர்களும் கலந்துகொள்ளவில்லை. தமிழன்பர் மாநாட்டின் விளைவாகத் திருநெல்வேலியில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு 1934 ஆம் ஆண்டு சூன் திங்கள் 10, 11 ஆம் நாள்களில் கூடியது. சென்னை மாகாணத் தமிழர் சங்கம் என்னும் ஓர் அமைப்பும் உருவாகியது. தமிழவேள் உமாமகேசுவரனார், மறைத்திரு மறைமலையடிகளார், அமைச்சர் தி. பொ. இராசன், அமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார், நாவலர் ச. சோமசுந்தரபாரதியார், அறிஞர் கா. சு. பிள்ளை முதலிய பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். சங்க அமைச்சராகப் பெரும்புலவர் இ. மு. சுப்பிரமணியபிள்ளை தேர்ந்தெடுக்கப்பெற்றார். கழக இரட்டையராம் வ. திருவரங்கர், வ. சுப்பையாபிள்ளை ஆகியவர்கள் அரவணைப்பில் சிறந்த பணி செய்தது. அதன் முரசமாகச் செந்தமிழ்ச் செல்வி திகழ்ந்தது. 1937 இல் இந்தி நடுத்தரப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கப்பெற்றது. தமிழ்மொழியை அயன்மொழித் தாக்கத்தில் இருந்தும் காப்பதற்காக 29-8-37 இல் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கச் சார்பில் நடத்தப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்ப் பாதுகாப்புச் சங்கம், திருநெல்வேலி என்னும் பெயரில் சங்கம் ஒன்று தொடங்கப்பெற்றது. அதன் தலைவராகச் சிந்துபூந்துறை மா. வே. நெல்லையப்பபிள்ளையும் அமைச்சர்களாகப் பாளையங் கோட்டை சோ. சிவஞானதேசிகர், சாத்தூர் வழக்கறிஞர் தூ. சு. கந்தசாமி முதலியார், கழக அமைச்சர் திருவரங்கம்பிள்ளை ஆகியவர்களும் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். 3-9-37 இல் ஆய்வுக் கூட்டமும் 5-9-37 இல் ஊர்வலமும் நடாத்தப்பெற்றன. தமிழைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு விடுத்தனர். பின்னர் 3-12-37 இல் சிவஞானமுனிவர் நூல்நிலையத்தில் நடைபெற்ற தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தில் தமிழர் கழகம் நிறுவி அதற்குரிய விதிமுறைகளும் வகுக்கப்பெற்றன (செந், செல் 16 : 210-11). 14. இடுக்கண் அழியாமை இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல், கோடையும் குளிரும் மாறிமாறி வருவதுபோல், இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறிமாறி வருவனவேயாம். ஆனால், இன்பத்தை மாந்தர் விரும்புவதுபோல் துன்பத்தை விரும்புவது இல்லை; துன்பத்தை விரும்பாதொழியினும் வெறுக்காமல் இருப்பதும் இல்லை. இன்பத்தை விரும்பும் மாந்தர், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துன்பத்தை ஓரொருகால் அடையாமல் தீராது. துன்பம் என்பது வாழ்வை ஒழுங்குறுத்தவும் வளமாக்கவும் இயற்கை தந்த கொடை. அக் கொடையைக் கொடை யென்று குறிக்கோளாக்கிக்கொண்டவர்கள், வாழ்வில் வெற்றி காண்கிறார்கள். மற்றையோர் துன்பம் வருமுன்னரே துவண்டு போய் அலைக்கழிந்து தம் ஆற்றலையும் இழந்து அல்லல் படுகின்றனர். துன்பத்தை எதிரிட்டு நின்று வெற்றிகொள்ள வல்லவரே வாழ்வியல் உண்மையை உணர்ந்த உரவோர் ஆவர். சுடர் எப்படிக் கிளம்புகிறது! சுட்டெரிவதால் அல்லது எரிப்பதால் சுடர் கிளம்புகின்றது. சூடு பிறக்காமல் சுட்டெரியாமல் எச் சுடரேனும் சுடர்வதுண்டோ? கதிரானால் என்ன? விண்மீன் ஆனால் என்ன? மின்சாரம் ஆனால் என்ன? மெழுகுதிரி, விறகு, கரி முதலியவை ஆனால் என்ன? சுடப்பட்டதே சுடர் தருகின்றது. துன்பத்தால் சுடப்பட்டவர்களே சுடர்விடும் பெருமக்கள் ஆகின்றனர். சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம். சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்னும் வள்ளுவர் வாய்மொழி இவ் வுண்மையை உவமைகொண்டு செவ்விதின் விளக்குவதாம்! அறுத்து, அவித்து, இடித்து, ஆட்டி, வெதுப்பி ஆக்காமல் சோறு வருமோ? ஒடித்து நறுக்கி ஆட்டி நைத்து வடிக்காமல் கரும்பின் சாறு கிட்டுமோ? தொல்லைக்கும் துயருக்கும் தொய்ந்தவர்கள் துணிந்து முன்னேற்றம் காண்பரோ? துலங்கும் வாழ்வினராயப் போற்றப் பெறுவரோ? அரங்கர் தம் கைம்முதலைக் கொண்டோ கழக நிறுவனத்தைத் தொடங்கினார்? கூட்டுப்பங்கு நிறுவனம்தானே அது? பங்காளிகள் பலருள் அவரும் ஒருவர்தாமே! நிறுவன ராகவும் பொறுப்பாளராகவும் இருந்தமைதாமே அவர்தம் சிறப்புநிலை! ஆனால், ஆட்சிக்குழு என ஒரு குழு உண்டே! அக் குழுவின் ஆணையை ஏற்றுப் பங்காளிகளாம் பொதுக் குழுவின் தீர்மானத்தைத் தழுவிக் கடமை யாற்றுவதன்றோ அவர்தம் முதன்மையான பணி! பொதுக்குழு ஆட்சிக்குழு ஆகியவற்றுள் இருப்போர் அனைவரும் ஒத்த உணர்வினர் ஒருநோக்கினர் என்று கூறவொண்ணுமோ? குடும்பத்துக்குள்ளேயே, உடன்பிறந் தார்க்குள்ளேயே எத்தனை எத்தனை பிணக்குகள்! சண்டைகள்! முரண்பாடுகள்! ஆனால், ஒரு கூட்டுப்பங்கு நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் அனைவரும் பங்காளிகளாம் உரிமையமைந்த நிறுவனத்தில் வேறுபாடு வராமல் இருக்குமோ? இரண்டு கருத்து ஏற்பட்டுப் பொறுப்பாளர்கள் இரண்டாகித் தன்முனைப்புடன் செயலில் இறங்கிவிட்டால் கூட்டுப் பங்கு நிறுவனம் ஆட்டம் கொடுக்காமல் தீருமா? கழகப் பணியையே தம் முழுப்பணியாகக் கொண்டு தொடக்க நாள் முதல் பணி செய்து வந்தவர் திருவரங்கர். அவரொடும் அமைச்சராக இருந்தவர் திரு.மா. திரவியம் பிள்ளை. அவர் நான்காண்டுகளே உடனமைச்சராக இருந்து இயற்கை எய்தினார்.அதற்குப் பின் அவர்தம் மைந்தர்கள் உடன் அமைச்சராக இருக்கும் பொறுப்பேற்றனர். ஆனால் கருத்துடன் பாட்டுடன் பணி நிகழவில்லை. செயன்முறைகளிலும் இடைவெளி யுண்டாயிற்று. எதிரிடையும் ஏற்பட்டது. கழகப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகத் திருவரங்கர் மேல் பழி சூட்டினர். அதனை ஆய்ந்து உரைக்குமாறு கழகத்தில் நிறைவேற்றற் கழகத்தார் ஊர் உட்கழகத்தை நிறுவினர். அவர்களும் ஆய்ந்தனர். குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றும், அதனை உறுதிப் படுத்தும் சான்று இல்லை என்றும், தெளிவுசெய்து உட்கழகத் தார் நிறைவேற்றற் கழகத்தார்க்கு அறிவித்தனர். அவ்வளவில் முரண் தீர்ந்துவிடவில்லை. அறிக்கையும் எதிர் அறிக்கையும் விடும் அளவுக்கு வளர்ந்தது. கருத்து வேறுபாடும் வெறுப்பும் குற்றச்சாட்டும் அறிக்கை வெளியீடும் தொடர்ந்தபின் ஒன்றைத் தொட்டு ஒன்று வளருமேயன்றி ஒழியாது. அவரைச் சார்ந்தும் இவரைச் சார்ந்தும் -எனக் கூட்டம் இரண்டுபட்ட பின்னர்த் திறமை மிக்கவர்களாலும் ஈடுகொடுப்பது அரிதேயாம். இந் நிலை வளர்ந்து வரினும் அரங்கர் கழகப் பணியை இடையறவுபடாமல் செய்துவந்தார். கழகப் பங்கு சேர்ப்பதற்காகவும், புத்தக விற்பனைக்காகவும் கொழும்புக்குத் திருவரங்கர் 1929 இல் சென்றார். அப்பொழுது பழைய பூசல் மிகத் தலைதூக்கியது; கழகத்தின் உண்மை வரலாறு எனத் துண்டு வெளியீடு ஒன்றும் வெளிப்பட்டது. ஆக்கப் பணிக்கெனத் தொடங்கிய கழகம் அழிபகையில் சிக்கிக் கொண்டது நல்லவர்கள் சிலர் உள்ளத்தை நலித்தது. அந்நாள் கழகத் தலைவராக இருந்தவர் திரு. மா. வே. நெல்லையப்பபிள்ளை ஆவர். அவரும் கழகத்தின் பங்காளி களுள் ஒருவரும் கொழும்பில் இருக்கும் திருவரங்கருக்குக், கழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையைத் தொலைவரிச் செய்தி வழியே தெரிவித்து, உடனே நெல்லைக்கு வருமாறு செய்தனர். திருவரங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது! கட்டிக் காத்து வந்த கழகத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டினை ஒழிக்க வேண்டும் என்றும், உண்மை நிலையைப் பங்காளிகள் உணர வேண்டும் என்றும் உன்னினார். உரிய முயற்சிகளை மேற்கொண்டார். குற்றம் என்று சாட்டினால், இல்லை என்பதை மெய்ப் பித்துத்தானே ஆக வேண்டும்! அதிலும் பொது அமைப்பில் பங்காளிகளாக இருக்கும் அனைவருக்கும் உண்மைநிலையை விளக்கி உறுதிப்படுத்தித்தானே ஆக வேண்டும்! தணிக்கைக்கு ஏற்பாடு செய்து, கணக்குச் செவ்வையாக இருப்பதை மெய்ப்பித்து ஆயிற்று. நிறைவேற்றற் கழகத்தார்க்கும் குற்ற மின்மை உறுதியாயிற்று. அவர்களே பொய்க் குற்றச் சாட்டை மறுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால் எளிதில் தீர்ந்துவிடும் அன்றோ! அரங்கர் கழகக் கடமைகளைக் கருத்தாகச் செய்யவில்லை என்னும் குற்றச்சாட்டு மிக மிகப் புண்படுத்தியது அவரை! ஏன்? கழகப்பணி யொன்றன்றி வேறு பணி அவர்க்கு இல்லையே! அதிலும் குற்றம் சாட்டுபவர் தம்மினும் பேருழைப்பாளராக இருப்பினும் எப்படியோ போகிறது என்று ஒழியலாம். அப் பணியை ஒதுக்கி, ஒதுங்கியவர் தம்மைக் குற்றம் சாட்டியதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனைப் பொய்யாக்கற்குச் சான்றுகள், கையிற் கனியாய் இருக்கப் புண்படுவானேன் எனச் சான்றுகளைத் திரட்டி வைத்தார். தொடக்கத்தில் கழகப் பங்கு சேர்ப்பதே கழகப் பணிகளில் தலையாய பணி. அப் பணியே தலைமைக் கழகத்தில் இருந்த அமைச்சர்கள் இருவர்தம் பணியாக இருந்தது. அப் பணியை நிறைவேற்றுதலில் தம் பங்கு எவ்வளவு என்பதை வெளிப்படுத் தினாலே போதுமே! அதனைப் பட்டியலிட்டு அறிக்கையால் வெளிப்படுத்தினார். நிறைவேற்றற் கழகத்தாரும் சரிபார்த்து ஒப்புதல் வழங்கினர். பங்குகள் சேர்த்த வகை, 1. திரு. மா. திரவியம் பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள் 124 2. திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள் 3216 3. திரு. மா. தி. அவர்களும் திரு. வ. தி. அவர்களும் சேர்ந்து சேர்த்த பங்குகள் 1120 4. திரு. தி. மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள் தனியாய்ச் சேர்த்த பங்குகள் 15 5. திரு. தி. கணபதியப்ப பிள்ளையவர்கள் தனி யாய்ச் சேர்த்த பங்குகள் -- ------------- ஆகப் பங்குகள் : 4475 ------------- இப்பட்டியலில் இருந்தே திருவரங்கர் செய்த கழகப் பணி எத்தகையது என்பது வெளிப்படுமே! இதன் பின்னர்ச் சிக்கல் குறைந்தது. நிறைவேற்றற் கூட்டத்தார் முடிவுப்படி திருவரங்கர் ஒருவரே அமைச்சராக இருக்கும் நிலைமை உண்டாயிற்று. அதன் பின்னர் உன்னிப்பாகக் கழகப் பணிகளை நிறைவேற்றி வந்தார். காற்றுப் புகாத நட்பும் காசு புகக் கெடும் என்பது வழக்கு மொழி. மயிர் ஊடாடா நட்பும் பொருள் ஊடாடக் கெடும் என்பதும் அது. கொழும்பிலேயே கொழுமையான நண்பராகத் திகழ்ந்தவர் குலசைச் செந்தில் ஆறுமுகனார். அவரே திருவரங்கர் நீலாம்பிகையார் திருமணத்திற்கு எழுவாயும் பயனிலையுமாய் இருந்து நடத்தி வைத்தவர். அவர் கருத்தும் திரிந்தது! தீயூழ் அல்லது போகூழ் புகுந்துவிட்டால், எண்ணிப் பார்க்க இயலாத நிகழ்ச்சியும் நடக்கும் போலும்! 1937-38ஆம் ஆண்டுக் கணக்கை முடிப்பதற்காகச் சென்னை முகவர் திரு. வ. சு. நெல்லைக்கு வந்திருந்தார். திருவரங்கர் நெல்லைக் கணக்குகளை ஒழுங்குறுத்திக் கொண்டிருந்தார். அவ்விருவரிடையேயும் செந்திலாறுமுகனார் பேசினார். திருவரங்கரைப் பார்த்து, நீங்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளவேண்டும். நாங்கள் தக்க ஒருவரைத் தேர்ந்து கழகத்தை நடத்திக்கொள்வோம் என்றார். ஆறுமுகர் உரை அரங்கர் எதிர் பாராதது! திடுமென்று இப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியுமா திருவரங்கர்? பங்காளிகள் கூட்டம் தீர்மானித்தபடி என் பதவிக் காலம் நிறைவுற இன்னும் 71/2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் நான் பதவி விலக வேண்டிய கட்டாயம் என்ன? வளர்ந்து வரும் கழகத்திற்கு என்னால் நேர்ந்த கேடென்க? நான் என் பதவிக் காலம் முடியும் அளவும் விலகப் போவதில்லை என்று மறுத்தார். செந்திலாறுமுகனார் சினந்தார். அவர்கள் இயல்பாய் அமையாத அப் பான்மையை அவர் கொண்டிருந்தது அரங்கருக்கும், வ.சு.வுக்கும் வியப்பும் திகைப்பும் ஆயின. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் போலும்! வயப்படுத்தாளர் வழிப்பட்ட இவர் இதுவும் உரைப்பார்; எதுவும் உரைப்பார் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதிலே, நெல்லையப்பர் திருக்கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளிலும் சுற்றி வரும்போது, காதைப் பொத்திக்கொண்டு போக வேண்டியுள்ளது. அண்ணனும் தம்பியும் கூடிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று பேசுவதைக் கேட்டு முடியவில்லை! என்றார். அரங்கர்க்கு ஆறாத்துயராக இருந்தது. தனிப்பட்ட தம்மைக் குறித்த பழிச்சொல்லுக்காக வருந்தித், தம் உயிரினும் மேலாகக் கருதி வளர்த்துவரும் கழகத்தைப் பொறுப்பில்லாதவ ர்களிடத்தே விட்டுப் போக்கடித்து விடுவது பொல்லாதது. எப்படியும் கட்டிக் காப்பதே கடமை என்று தமக்குள் திட்டப்படுத்திக் கொண்டார். கழகப் பங்காளிகள் தேர்ந்தெடுத்துக் கட்டளையிட்டுள்ள காலம் வரை கழகத்தைக் காப்பதே என் கடன்; அதற்குமுன் உங்கள் வசைமொழிக்காக விலகப்போவதில்லை என்று உறுதியாகச் சொன்னார். ஆறுமுகர் உள்ளம் படபடத்தது. அவர் முன்னரே கலந்து பேசிக்கொண்டிருந்தபடி, நீங்கள் பதவியில் இருந்து விலகவில்லையானால் நாங்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று கூறிப் பதவி விலகல் கடிதத்தை முன் வைத்தார். அவர் பதவி விலகல் மட்டுமோ? ஒரே வேளையில் (1-5-1938இல்) தலைவரொடும் சேர்ந்து எட்டுப் பேர்கள் மொத்தமாகப் பதவி விலகினர். மொத்த ஆட்சிக் குழுவினரே பதின்மர்! அவருள் எண்மர் பதவி விலகிவிட்டனர். ஒரோ ஒருவர் மட்டும் பதவி விலகல் தரவில்லை. அவர் அக் கூட்டத்திற்கு வரவில்லை. அவரே, திருசங்கர் கம்பெனி என்னும் அமைப்பில் அரங்கருடன் இணைப்பங்காளராக இருந்த திரு. சங்கர நாராயண பிள்ளை என்பார். வந்து விட்டதோர் இடையூறு என்று திருவிளையாடல் மொழிவது போலப், பேரிடையூறு கழக நிறுவனத்திற்குச் சூழ்ந்தது. அரங்கர் என்ன செய்வார்? நேரே சங்கர நாராயணரைச் சார்ந்தார்! அவரை அழைத்துக்கொண்டு, நாகர்கோயிலுக்குச் சென்று கழகப் பங்காளருள் ஒருவரும், கழக வளர்ச்சியில் பேரார்வம் கொண்டவரும், உண்மையை உள்ளவாறு அறிந்தவருமாகிய வழக்கறிஞர் ப. சிதம்பரம் பிள்ளையைக் கண்டு கலந்துரையாடினார். அவர் கழக விதிகளை நன்கனம் ஆய்ந்து, இருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் இருவரும், இருவரை இணைத்துக்கொள்ள விதியில் இடமிருப் பதைச் சுட்டிக் காட்டி நிலைபெறுத்தினார். கழகத்திற்கு நேரும் இக்கட்டுகளை நிமிர்ந்து நின்று விலக்கிக் காத்தற்குத் துணிவும் உண்மையும் ஒருங்கு கொண்ட ப. சிதம்பரம் பிள்ளை தலைமைப் பொறுப்பில் இருத்தல் நலமென அரங்கரும் வ. சு.வும் கருதினர். சிதம்பரரும் இசைந்தார். அவருடன் திரு. தி. சி. இராமலிங்கம் பிள்ளை என்பாரும் ஆட்சிக் குழுவில் இணைத்துக் கொள்ளப் பெற்றார். அதற்குப் பின்னர் நால்வரும் மற்றும் நால்வரைத் தெரிந்தெடுக்கும் உரிமை வாய்ப்பதால் எண்மர் ஆட்சிக் குழுவினர் ஆயினர். கழகத் தலைவராய் அமைந்த சிதம்பரர் ஒரு கருத்தினைக் கழகத்தில் வைத்தார். நெல்லையைச் சார்ந்தவராகவே கழகத்தில் வைத்தார். நெல்லையைச் சார்ந்தவராகவே கழக ஆட்சிக் குழுவினர் இருந்தால் இப்பொழுது ஏற்பட்ட இடையூறு பின்னும் பல்கால் ஏற்படக் கூடும். அதனைத் தவிர்ப்பதற்காக, நெல்லையை மட்டும் மையமாக்காமல் நெல்லையோடு, நாகர்கோயில், செட்டிநாடு என்னும் முப்பகுதிகளையும் தேர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் மும்மூன்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கும் புதுமுறையை மேற் கொண்டால் ஒட்டு மொத்தமாகக் கழகத்தின் செயன்மையை முடக்க நினைவார் எண்ணம் நிறைவேறாமல் போகும். அவ்வாறே இனிச்செய்வோம் என்று அம் மரபை நிலைப்படுத்தினார். அம் முறை கழகத்தின் விரிவுக்கு மெய்யாகவே உதவியாய் அமைந்தது. இதனால், பின்னே இத்தகைய இடையூறு கிளைக்கவில்லை என்று பொருளில்லை. அரங்கர் காலத்திற்குப் பின்னர்த் திரு.வி. சங்கரநாராயண பிள்ளையும் கருத்து மாறுபட்டார்; கடுத்து நின்று செயலாற்ற முனைந்தார். அவர்மேல் நடவடிக்கை மேற்கொண்டு 1953இல் அவரைப் பதவி விலக்கம் செய்யும் அளவும் நேர்ந்தது! காய்த்த மரத்திலே கல்லெறி என்பதுபோல் எத்தனை தாக்குதல்கள் கழகத்திற்கு, இவற்றையெல்லாம் வென்றமையே கழகத்திற்கு இணையான நூல் வெளியீட்ட மைப்பு ஒன்று இல்லை என்னும் தனியுயர் பெருமை பெருகிக்கொண்டே வரும் பேற்றை நல்கியதாம். வெள்ளைத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் இவை, வள்ளுவர் வழங்கும் இடுக்கண் அழியாமைத் திருப் பாடல்கள். 15. மெய்கண்ட தொண்டர் திருவரங்கனாரால் கூட்டப்பெற்ற மாநாடுகள் பல, அவற்றில் தனிச் சிறப்புடையது மெய்கண்ட சாத்திர மாநாடு ஆகும். அம் மாநாடு 21-5-41 முதல் 27-5-41 முடிய ஏழு நாள்கள் திருநெல்வேலியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது : மெய்கண்ட சாத்திர மாநாடு, திருநெல்வேலி. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சார்ந்த தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க ஆதரவில், வருகிற வேனிற் கால விடுமுறையில் அதாவது சித்திரைத் திங்கள் 29ஆம் நாள் முதல் 5 நாள்கள் இம் மாநாட்டைத் திருநெல்வேலியில் நடத்தத் திருவருளை முன்னிட்டுத் தீர்மானித்திருக்கிறோம். மெய்கண்ட நூல்கள் பதினான்கையும் ஆராய்ந்து அவ்வா ராய்ச்சிக் குறிப்புகளைச் சொற்பொழிவுக் கட்டுரைகளாகத் தொகுத்து அச்சிட்டு விழாக் காலத்திலேயே வெளியிடக் கருதியுள்ளோம். கட்டுரைகள் வெறும் ஆராய்ச்சிக்காகவே இருக்குமானால் சித்தாந்த நூலுணர்ச்சி பெற விரும்பும் எல்லா மக்களும் படித்து உண்மை காண முடியாதிருக்கும். ஆதலால், மேற்குறித்த நூல்களின் பொருள்களைச் சொற்பொழிவு வடிவாகவே எழுதியளிக்க வேண்டும் என்று சொற்பொழிவு செய்யும் பெரியோர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மேல் மேல் நடைமுறைகளைப்பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும். வேண்டுகோள் மக்களுக்கு மக்கட் பண்புகளை அளித்து உலகியலை இனிமையாக நடைபெறச்செய்து இருமைப் பயன்களையும் ஒருங்கே உதவுவது சமய உண்மைகளேயாகும். ஆதலால், இம் மாநாடு சிறப்பாகவும் பயன் பெறவும் நடைபெறுவதற்கு நாடு முழுமையும் தக்கவாறு கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். சித்தாந்த ஆராய்ச்சி மிக்க அறிஞர்களும் அன்பர்களும் அங்கங்கே இருப்பார்கள். ஆதலால் செல்வி நேயர்கள் அன்பு கூர்ந்து அறிந்த வரையில் அவர்களைப்பற்றி அவரவர் முகவரி களுடன் திருநெல்வேலிக் கீழரத வீதிக் கழக நிலையத்துக்கு அறிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்பன் வ. திருவரங்கம் பிள்ளை அமைச்சர் மெய்கண்ட சாத்திர மாநாடு, திருநெல்வேலி. தொடக்க நாள் முதலாகக் கழக அமைச்சராக அமர்ந்து அரும்பணி செய்துவந்த திருவரங்கர் தம் பெயரால் வெளியிட்ட அறிக்கை இரண்டேயாம். அவற்றுள் ஈதொன்று, மற்றொன்று இசைத் தமிழ்க் கழக வேண்டுகோளாக வெளிப்பட்டதாகும். எஞ்சியவற்றிலெல்லாம் அமைச்சர் என்னும் பதவிக் குறியீட்டளவிலே அமைவது அவர்க்கு இயல்பாம். ஐந்து நாள் திட்டத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பெற்ற மாநாடு அதன் அரவணைப்பாலும் ஆர்வத்தாலும் ஏழு நாள்களாக வளர்ந்தது, இம் மாநாட்டைக் கூட்டியது ஏன்? ஆறாம்நாள் விழாவில் மெய்கண்ட சாத்திர மாநாடு என்னும் தலைப்பில் உரையாடிய சிறுமியர் உரையைக் கேட்போம் : மங்கை : மெய்கண்டாரும் அவர்வழி வந்த மாணவரும் இயற்றிய நூல்கள் பன்னிரண்டுடன் அவற்றிற்கு முற்பட்ட உந்திகளிறு என்னும் இரண்டோடு 14 நூல் களும் மெய்கண்ட சாத்திரம் என்று பெயர் பெறும். புனிதா : அம் மெய்கண்ட சாத்திரத்திற்கும் இங்குக் கூடியுள்ள மாநாட்டுக்கும் என்ன தொடர்பு? மங்கை : மேற்கண்ட சாத்திரங்களைப் பயில்வாரும் உணர் வாரும் தெளிவாரும் குறைந்துவரும் இக் காலத்து அவற்றின் பொருள்களையும் கருத்துகளையும் சைவ மக்கள் யாவரும் இவை என்று தெரிந்து மகிழுமாறே இம் மாநாடு கூடியுள்ளது. புனிதா : இத்தகைய மாநாடு இதற்கு முன்னர்க் கூடியதில்லையே? இதனைக் கூட்டுவிப்பவர் யார்? மங்கை : இந் நகரில் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மொன்று இருப்பதும் தமிழ்நூல்களும் சமய நூல்களும் மிகவும் அழகாக வெளிப்படுத்தி வருவதும் தெரியாதா? புனிதா : ஓகோ! நினைவு வந்தது, பள்ளி மாணவர்க்கெனக் காலணா வெளியீடுகள் பல வெளியிட்டு வருவது அக்கழகத்தார் தாமே? மங்கை : நன்று சொன்னாய்; அவர்கள் இதுவரை மெய்கண்ட சாத்திரங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினர். வாங்கி னவர்கள் படித்துத் தெளியக் கருதினர். எல்லாருக்கும் அச் சாத்திரப் பொருள்களை விளக்கி மகிழ்விக்க இம் மாநாட்டைக் கூட்டியுள்ளார்கள். புனிதா : மிகவும் நன்று. மாநாட்டு நிகழ்ச்சி முறைகளைக் கவனித்து யாவரும் இன்புறுவோமாக. மாநாட்டின் முதல் நாள், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானபோதம் என்பனவும், இரண்டாம் நாள், சிவஞானசித்தியார் பரபக்கம், சிவஞானசித்தியார் சுபக்கம், இருபா இருபஃது என்பனவும், மூன்றாம் நாள், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் என்பனவும், நான்காம் நாள் திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, உண்மை நெறி விளக்கம் என்பனவும், ஐந்தாம் நாள், கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, சங்கற்ப நிராகரணம் என்பனவும் ஆராயப்பெற்றன. நான்காம் நாள் விழாவினிடையே தமிழ்ப்புலவர் மாநாடும் ஊர்வலமும் நிகழ்ந்தன. ஆறாம் நாள் விழா சைவ மாதர் மாநாடாக நிகழ்ந்தது. ஏழு நாள்களும் இசையும் நாடகமும் உரையாடலும் என்னும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன, ஏழாம் நாள் இரவு முற்றாக இசை நிகழ்ச்சியே நடாத்தப் பெற்றது. இந்த ஏழு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட புலவர் பெருமக்கள், கலைச் செல்வர்கள் சரியாக ஐம்பதின்மர் ஆவர். ஏழு நாள்களாக இடையீடு இன்றி இராப்பகலாகத் திருவரங்கர் உழைத்தார்; தம்பியரும் உடன் உழைத்தார்; சீரமைந்த தொண்டர் குழுவொன்றும் பணி செய்தது; ஊரவர் ஆர்வம் கட்டுக் கடங்காது நின்றது! கூட்டம் விழாக் கோலம் கொண்டது! ஊர்வலத்தின் சிறப்பு உள்ளங் கவர் காட்சியாக இலங்கியது. இம் மாநாட்டுத் தீர்மானங்கள் இருவகையாய் மிளிர்ந்தன. மெய்கண்ட மாநாட்டுத் தீர்மானங்கள் 10; தமிழ்ப்புலவர் மாநாட்டுத் தீர்மானங்கள் 9. இம் மாநாட்டின் போது சிறப்புப் பட்டங்களும் பரிசுகளும் பெற்ற கலைச் செல்வர்கள் பதின்மர். மாநாடு என்றால் இப்படி நடாத்தப்பெற வேண்டும் என்று எண்ணவைத்த மெய்கண்டார் மாநாட்டின் பயன் பெரிதாயிற்று. அப் பயன் விளைவின் இடையே அதற்கு அரும்பாடுபட்ட விளைவால் திருவரங்கர் உடல் நலம் குன்றத் தொடங்கியமை தவிர்க்க முடியாதது ஆயிற்று. மாநாட்டின் உழைப்பு அவர்க்குத் தீராத நெஞ்சு வலியைத் தந்து வருத்திற்று. கருமமே கண்ணாயினார், மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார் என்பது நாடு அறிந்த செய்தியாயிற்றே! ஆனால் இயற்கையை ஒறுப்பாரை இயற்கை ஒறுக்காமல் விடாது என்பது திரு. வி. க. பட்டறிந்துரைத்த மெய்ம்மொழியாயிற்றே! உந்தும் உணர்வும் உலையா உரமும் உடையார் பின்வருவதை எண்ணிப் பின்னிடுவது என்பது வரலாறு காணாத செய்தி என்பதை அறியார் எவர்? அரங்கர் தம்மை நஞ்சென நெஞ்சு வலி வருத்தும் காலையிலும் அதனை ஒதுக்கி வைத்துத் தம் கடமைகளிலேயே ஒன்றி நிற்பாராயினார். பிணிக்குப், பணி செய்வார் செய்யார் என்னும் நோக்கு ஒன்றும் உண்டோ? âU¡nfhÆiy tlbkhÊ g‰¿¡bfh©lJnghy ïirau§Ffis¤ bjY§F g‰¿¡ bfh©L ‘jÄÊš ïirí« c©nlh? என்று வினாவும் நிலையும் உருவாகிற்று. இதனை நினைந்து வருந்தி ஆக்கப் பணிகள் புரிந்தவர்களுள் தலையாய ஒருவர் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் ஆவர். அவ்வாக்கப் பணிக்கு நாட்டினரெல்லாரும் அரவணைப்புத் தர வேண்டும் என்பதில் அரங்கர் பேரார்வலராய் இருந்தார். அதனால் இசைத் தமிழ்க் கழகம் ஒன்றனைத் திருநெல்வேலியில் தோற்றுவித்தார். ஒரு வேண்டுகோளும் விடுத்தார். இசைத் தமிழ்க் கழகம், திருநெல்வேலி. தமிழன்பர்கட்கு ஒரு வேண்டுகோள். திருநெல்வேலியில் இதுவரை இசைத் தமிழ்க் கழகம் இல்லாதது பற்றித் தமிழர் ஏக்கங் கொண்டிருந்தனர். இப்போது எங்கே பார்த்தாலும் இசையைப்பற்றிய இயக்கம் வலுத்து வருவதை அன்பர்கள் நன்குணர்வர். தமிழிசையைப் போற்ற வேண்டுவது தமிழர்கள் கடமையன்றோ! இயல் இசை நாடகம் என மூன்றையும் முன்னையோர் முத்தமிழ் என்றே வழங்கி வந்திருக்கின்றனர். இதனாலேயே ஞானசம்பந்தப் பெருமானை முத்தமிழ் விரகர் என்று பாராட்டிப் பரவுவாராயினர். சங்க காலத்திற்குப் பின்னுள்ளவர்கள் இயற்றமிழையே பெரும்பாலும் போற்றவாராயினர். ஆதலால் இசைத் தமிழும் நாடகத் தமிழும் சிறிது சிறிதாகத் தளரலாயிற்று. அதனை யுணர்ந்து இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் வளர்த்தல் தமிழ் மக்களுடைய தலைமையான கடனாக இருக்கின்றது. ஆதலால் பொருளாளர்களும் - அறிஞர்களும் - இசைவாணர்களும் இச்செயலுக்கு உரிமையாளராகித் தமிழிசையே நன்கு வளரும்படி உதவிபுரிய மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். உறுப்பினர் கையொப்பமிட வேண்டிய இதழை அடியிற் கண்ட முகவரிக்கு எழுதிப் பெறுக. அதிற் கையொப்பமிட்டுக் கையொப்பத் தொகையுடன் கீழ்க் குறித்த கழக முகவரிக்கு அனுப்ப வேண்டுகின்றோம். இதனைத் தங்கள் நண்பர்களுக்குந் தெரிவித்து அவர்களையும் இம் முயற்சியிற் கலந்து கொள்ளும்படி செய்தல் நன்று. 1. கா. சங்கரம் பிள்ளை 2. சு. தம்பா பிள்ளை தமிழ் இசைவாணர்கள் 3. ரா. கனகசபாபதி பிள்ளை திருநெல்வேலி. 4. பெ. திருப்பாற்கடனாத பிள்ளை இசைத் தமிழ்க் கழகம், 24, கீழ ரத வீதி, வ. திருவரங்கம் பிள்ளை திருநெல்வேலி. நிறுவிப்பவர் இசைத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்துப் பாடுபடத் துணிந்து அறிக்கை விடுத்த அரங்கர் அக் கழகம் உருவாகிக் கடனாற்றும் அளவும் வாளா அமையாமல் சென்னை மாகாணத் தமிழர் ஒன்பதாவது மாநாட்டை இசை மாநாடாகவே நிகழ்த்தினார். அம் மாநாடு நெல்லையில் 27-3-43, 28-3-43 ஆகிய நாள்களில் நிகழ்ந்தன. இந்து அறநிலைய ஆணையர் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் தலைமையில், திரு. பொன்னம்பலம் தியாகராசனார் தமிழ்ச்கொடியேற்ற, இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை தமிழிசை யரங்கு நடத்தினார். மெய்கண்டார் மாநாட்டின் போது கலைச் செல்வர்களுக்குச் சிறப்புப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கினார் என்பதை முன்னே அறிந்தோம். அவ்வாறு பாராட்டப்பெற்ற ஒன்பதின் மருள் எழுவர் இசைக் கலைஞர்களேயாவர் என்பது குறிப்பிடத் தக்கது. அப் பெருமக்கள் பெயர்களையும் அவர்களுக்கு வழங்கப் பெற்ற பட்டங்களையும் அறிந்துகொள்வது திருவரங்கனாரின் இசைத்தமிழ் ஈடுபாட்டுக்கும், அதன் வளர்ச்சியில் கொண்டிருந்த ஆர்வத்திற்கும் சான்றாம். திருவனந்தை தி. இலக்குமணப்பிள்ளை இசைக்கலை ஆசிரியர் மயிலம் க. வச்சிரவேல் முதலியார் இசைமணி சிதம்பரம் செல்வரத்தினம்பிள்ளை இசைச்செல்வர் நெல்லை சா. சுந்தர ஓதுவாமூர்த்தி மறையிசைமன்னர் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை இசைமன்னர் மேலகரம் சம்பந்த ஓதுவார் மறையிசைச் செல்வர் வீரவனல்லூர் சுந்தர ஓதுவாமூர்த்தி மறையிசைமணி பல்கலைக் கழகமோ, இசைக் கல்லூரியோ தரவேண்டிய பட்டங்களைத் தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் வழங்கு கின்றது. சைவ சித்தாந்த சங்கம் என்பது என்ன? சைவ சித்தாந்தக் கழகத்தின் ஓர் உறுப்புத்தானே! கழகம் ஒரு பல்கலைக்கழகம் என்றும், அதன் அமைச்சர் அரங்கர், துணைவேந்தர் நிலையில் நின்று பட்டம் வழங்கியுள்ளார் என்றும் கொள்வது தகும் அன்றோ! இவ்வாறு ஒருவகையிலோ முன்னோடியாக அரங்கர் திகழ்ந்தார்? 16. துன்பமாலை - 1 உழைத்து உழைத்துப் பழகியவர்களுக்கு உழைக்கமுடியாத நிலைமையே ஒரு நோய்; அதிலும், ஒரு நோயால் உழைக்க முடியாத நிலை உண்டாயின் அது மற்றொரு நோயை உண்டாக்கத் தவறாது. அந் நோய், உளநோயாகும்; உழைக்க முடியாமையால் உள்ளம் உடைந்துவிட்டால் சங்கச் சான்றோர் கூறுவது போல், களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல (நற். 284) உடல்நிலை ஆகிவிடத் தவறாதே! இரண்டு வலிய யானைகள் ஒரு தேய்ந்த பழைய கயிற்றை மாறுபட்டு இழுத்தால் எத்துணைப் பொழுது அந்தக் கயிறு அறுந்துபடாமல் தாங்கும்? இருபக்க உள்ளப் போராட்டம் உடலுக்கு ஆக்கஞ் சூழ உதவுமோ? அரங்கனாரின் அயரா உழைப்பின் கடுமையால், விடாது நெஞ்சுவலி வருத்திக்கொண்டிருந்த காலையில், அவர், கருதியும் பாராத கடுவிளைவொன்று சூழ்ந்தது. அவர்தம் அருமைச் செல்வி, முதன்மகள், மங்கையர்க்கரசி - பூத்துக்குலுங்கும் பூங்கொடியாய்த் திகழும் பன்னிரண்டாம் அகவையில் இயற்கை எய்தினாள்! ஆராத அன்பு, அம் மகள்மேல் கொண்டிருந்த அரங்கரை, அப்பிரிவு வாட்டியது. நொடி நொடியும் அவ் வருமைச் செல்வியின் அறிவும், அருமைப்பாடுகளும், எழில்மதி முகமும், இனிய முறுவரும் இடையீடின்றி நினைவுறுத்தி வருத்தின. இப்பெரும் பிரிவு, மருமத்தில் பெரும் புண்ணாகி நலிக்கும் போதில் தம் ஈருடல் ஓருயிராகத் திகழ்ந்த அருமை மனைவி நீலாம்பிகையார் மிகுந்த உடல்நலக் குறைவுற்றார்! 1943ஆம் ஆண்டில் அம்மையார் பெரும்பாடு என்னும் நோயால் பற்றப் பட்டார். முன்னமே பத்தாண்டுகள் இளைப்பிருமலினால் அல்லல் உற்றவர் அவர். அடிக்கடி மக்களைப் பெற்ற நலிவும், இராப் பகலாய் அவற்றை ஓம்பும் நலிவும் ஒருங்கே யுற்றவர். அவர்க்குக் குருதி யொழுக்கும் நேர்ந்தது எனின், தாங்கிக்கொள்ள ஒண்ணுமோ? ஆருயிர்த் துணையின் அவலநிலை அரங்கரை வாளா விடுமோ? அதனால் அரங்கரின் உடல் நலமும், உளநலமும் மேலும் கேடுற்று வந்தன! சைவ நெறியில் அசையாத பற்றாளர், தனித் தமிழில் பேரீடுபாட்டாளர், சங்க இலக்கியத்தில் பெருந்தோய்வாளர், பன்னூல்களுக்கு உரைகண்ட ஏந்தல், வாய்மை, தூய்மை, நடுவுநிலை இன்னபலவும் இலங்கிய குணமலை, அரங்கர்க்குப் பேரன்பர் நாவலர் ந. மு. வேங்கடசாமிநாட்டார். அவர்க்கு அறுபான் ஆண்டு விழா ஏற்பாடு அன்பர்களால் தொடங்கப் பெற்றது. அதனை அறிந்த அரங்கர் தம் கடனாற்றுதற்கு முந்து நின்றார்; முனைந்து நின்றார். விழா ஏற்பாடுகளை நாவலர் தூண்டுதலும் வேண்டுதலும் இன்றித் தாமே மேற்கொண்டு தம் மேற்கோளை அவர்க்கு எழுதி விடுத்தார்; இசைவும் பெற்றார். நாடறிந்த நல்ல தமிழர் பெருமானுக்கு நயக்கத் தக்க நல்விழா எடுக்குங்கால் நாட்டவர் எடுக்க வேண்டிய நன்முயற்சிகளைத் திட்டப்படுத்தி விளம்பரம் செய்தார். ஆனால் விழைவு என்ன ஆயிற்று? விழைவு வேறாக விளைவு ஆயிற்று! மணிவிழாக் காணவேண்டிய மாத்தமிழ்ப் புலவரேறு 26-3-44 ஆம் நாள் கழகத்திற்கு விடுத்த கடிதத்தில், 19-3-44 ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய தமிழ் மருந்துண்பதனால் உடல் நலம் பெற்று வருகிறது. வைகாசி மாதம் 12 இல் சனி இடபத்தி னின்று பெயரும் பொழுது முழுநலனும் உண்டாகிவிடும். பின்பு பல தமிழ்ப் பணிகள் செய்ய இறைவனருள் துணைபுரியும் என்று வரைந்த செய்தி வழிமாறிப் போயிற்று! 28-3-44 காலை ஒன்பதுக்கு அத் தமிழ்ப் பேரொளி ஒடுங்கிவிட்டது! மணிவிழாக் கோளில் மகிழ்ந்திருந்த அரங்கர்க்கு இச் செய்தி ஆறாத் துயராயிற்று! புண்மேற்பட்ட புண்ணாயிற்று! நீலாம்பிகையாரையுற்ற நோய் சொல்லொணாத் துயரூட் டிற்று. படுத்த படுக்கையானார்; பருவரலுக்கு இடமானார். அரங்கர் என்செய்வார்? 21-4-44இல் அவரைத் தோனாவூர் மருத்துவச் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் வயிற்றில், அறுவை மருத்துவம் செய்யப்பெற்றது! அறுவைக்குப் பின் 27-4-44 இல் தம் இல்லத்துக்கு அம்பிகையார் அழைத்துவரப் பெற்றார்! அம்மையாரின் தீரா நோய்நிலையும் அதனால் அவர்படும் பாடும் அரங்கரை வாட்டின! இளங் குழந்தைகளின் சூழலும் அவற்றின் அவலமும் அசைத்தன! மேலும் மேலும் பெருக்கெடுத்து அலைக்கும் வெள்ளத்தை உப்புக் கரை எத்துணைப் பொழுதுதான் தாங்கிவிடும்? தோனாவூரில் இருந்து திரும்பும்போதே சோர்வுடன் இருந்த அரங்கர், பாளையங்கோட்டைக்கு வந்து தம் வீட்டை அடைந்தும் அயர்ந்து படுத்தார். அப் படுக்கை, அவரை மீண்டும் எழுந்திருக்க விடவில்லை! தாழா நெஞ்சுவலித் தாக்கத்தில் அழுந்தினார். அண்ணல் அரங்கர், பாளையங்கோட்டையில் பட்டுக் கொண்டிருக்கும் பாடு, சென்னையில் இருக்கும் இளவல் வ. சு. விற்கு எப்படித் தெரிந்தது? வ. சு. அவர்கள் உள்ளத்தில் அறிதற்கு அரியதோர் கலக்கம் எழுந்தது. சென்னையில் அவரால் இருப்புக்கொள்ள இயல வில்லை. ‘v‹d ÃfH¥ngh»wnjh? என்ற பெருந்துயர் கப்பிக்கொள்ளப் பெற்றார். உடனே பாளையங்கோட்டைக்கு வந்தார்! வந்தவர், அண்ணல் நிலையைக் கண்டார். ஆறாத் துயறுற்றார். என்றும் ஆறாத்துயராக்கி விட்டுச் செல்லக் காத்திருந்த அரங்கர், தம் தம்பியார் மார்பில் சாய்ந்து கொண்டே செம்பொருளில் கலந்துவிட்டார்! அண்ணலாரைத் தாங்கிக் கொள்ளத்தான் சென்னையில் இருந்து அறிவிப்பு ஏதும் இல்லாமல் ஓடி வந்தாரோ இளையவர்! அண்ணலார் தோற்று வித்த கழகத்தையும், அவர் குடும்பத்தையும் தாங்குதற்கு உரியார் தம்பியரே என்பதை நிறைவுறுத்தத்தான் அண்ணல் அரங்கர் அவர் மார்பில் சாய்ந்துகொண்டே உயிர் துறந்தாரோ! எத்தனை நாள்கள்தாம் படுத்தார் அரங்கர்! ஒரோ ஒருநாள்! 28-4-44 பகல் முழுவதும் படுத்தார்! அன்றிரவு 9 மணிக்கு பிரிந்தார்! அரங்கர் பிரிவு அம்பிகையை என்ன பாடு படுத்தி யிருக்கும்? அருமைத் தம்பியரை என்ன பாடு படுத்தியிருக்கும்? இன்னும் இளமக்களையும் இனிய சுற்றத்தையும் எப்படி யெல்லாம் அலைக்கழித்திருக்கும்? முழபேரன்னை சுந்தரத் தம்மையார் எத்தகைய முட்டுற்றிருப்பார்? அறிஞர் பெரு மக்களையும் புலவர் பெருமக்களையும் எப்படியெல்லாம் புண்படுத்தியிருக்கும்? செந்தமிழ்ச் செல்வி - அவர் தோற்றுவித்து இருபத்தோராண்டுகளாக இனிதின் வளர்த்து வந்த எழிற் செல்வி-எத்துணைத் துயருள்ளாள்? அவள் துடித்த துடிப்பு தலைப்பாகி வெளிப்பட்டது! (சிலம்பு 21 : பரல் 6) : அமைச்சர் திருவரங்கர் சிறந்த முயற்சி யேறு! அவர் கழகத் தந்தை; செந்தமிழ்ச் செல்வியின் தந்தை; பற்பல நூல் வெளியீடுகளின் தந்தை; இன்று அவையனைத்தும் தம் தந்தையை இழந்து நிற்கின்றன. தமிழ்நாடு மும்முரமான செய்கை வீரரை இழந்து நிற்கின்றது. 1890ஆம் ஆண்டில் இந்நாட்டிற் பிறந்து 54 ஆண்டுகள் முயற்சியோடு வாழ்ந்து அருஞ்செயல்கள் பல ஆற்றி 1944 நம்மினின்று விரைந்து பிரிந்து விட்டார். திருவரங்கர் செல்வரல்லர்; ஆனால், செல்வர் செய்தற்குரிய செயல்களைச் செய்து மெய்ச் செல்வராய் விளங்கினார்! திருவரங்கர் கல்வியாளருமல்லர்; ஆனால், கற்றோர் பலர் நாளுந் தாவுமாறு கல்வித் துறையின் பெருமுயற்சியாளராய்த் திகழ்ந்தார்! திறமையாளர் பலர் உலகத்தில் உள்ளனர். கருமமே கண்ணாய் ஓய்வு ஒழிவில்லா முயற்சியாளரும் உளர். ஆனால், நாட்டின் உயர்வகையான அறிவுநிலைக்கும் வாழ்க்கை நிலைக்கும் நிலையான முறைகளில் பணிசெய்யும் கலைத்துறை வீரர் எத்தனை பேர் உளர்! ஒரு சிலர் நூலெழுதுவர்; ஒரு சிலர் நூல் பதிப்பர்; ஒரு சிலர் உரை எழுதுவர்; ஒரு சிலர் இனைய அறிஞர்க்கு உதவியாய் இருப்பர்; ஒரு சிலர் நூல் வெளியிடுவர்; ஒரு சிலர் விற்றுப் பரப்புவர்; ஒரு சிலர் மாநாடு கூட்டுவர்; ஒரு சிலர் சங்கங்கள் நடத்துவர்; ஒரு சிலர் கற்றோர்க்கு உதவுவர்; ஆனால் அனைத்தையும் ஒருங்கு செய்வித்துக்கொண்டு அனைத்திற்கும் அச்சாணியாய் விளங்கினார் திருவரங்கர்! செல்வரும் கல்வியாளரும் அலுவலுடையோரும் நிலைமிக்க வரும் இனைய செய்கைகளைச் செய்வது வியத்தற் குரியதாயினும் அஃதவர்க்கு இயலத் தகுந்தது. திருவரங்கனார் இக் கருவிகள் யாவுமின்றியே உயர்ந்த துறைகளில் பெருங் காரியங்களை நிகழ்த்தி வந்த அருமைப்பாட்டை என்னென்பது! உயர்ந்த எண்ணங்களும் நிறைந்த முயற்சியுமே அவர்மாட்டுச் செழித்திருந்த செல்வங்கள்! அவைதாம் ஆ! இவ்விருபதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சிக்கு என்ன முறுக்கத்தை உண்டாக்கிவிட்டன! திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் திருவாளர் திருவரங்கனாரவர்களின் நல் அறிகுறி! தமிழ்நாட்டின் தூய தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்களின் எல்லா வகையான உரிமைகளின் அடிப்படைக்கும் அருள் வாழ்விற்கும் கழகம் செய்துவருகின்ற நிலைத்த பணிகளையும் கிளர்ச்சிகளையும் எண்ணினால் திருவரங்கரின் ஏற்பாட்டுத் திறன் இனிது புலனாகும். தமிழ்நாட்டின் குழந்தைக் கல்வி முதல் முதியோர் கல்வி ஈறாக ஆண் பெண் இருபாலார் கலைத் துறைக்கும் கழகம் ஆற்றலோடு தொண்டு செய்து வருகின்றது. தமிழ்நாட்டுக் கூட்டுறவு முறையில் முதன் முதல் இங்ஙனம் தமிழ்க்கலைக்கு அமைந்த லிமிடெட் கழகம் இத் திருவரங்கனார் கழகமேயாகும். திருவரங்கரின் முயற்சியினால் எத்தனையோ எழுத்தாளர்கள் அரும்பினர்; மலர்ந்தனர்; விளங்கினர்! எத்தனையோ புதிய நூல்கள் எழுந்தன; புதிய பதிப்புகள் எழுந்தன; அழகிய நூல்களாய் மாறின! ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உரையில்லாதிருந்த அகநானூறு முதலிய தமிழ்நூல்களுக்கும், திருவாசகம் முதலிய சைவ நூல்களுக்கும் புலமை மிக்க பேராசிரியர்களின் உரைகள் வெளிவந்தன. விற்பனையாகாமல் இருந்த தக்கோர் நூல்கள் பலவும் நாட்டின் மூலை முடுக்கு களிலெல்லாம் பரவிப் பயனும் பெருங்கிளர்ச்சியும் விளைந்தன. முயற்சியும் திறமையும் உடையோர் உலகத்தில் எவ்வகையிலும் வாழ்ந்து விளங்கிடுவர். அதுதானா பெரிது! திருவரங்கரின் திறமையான முயற்சி, தமிழ்நாட்டின் கலைத் துறைக்கண் சென்று பீடுநடை கொண்டதே ஈண்டுக் கருதத் தகுந்த பெருமையாகும். தமிழ்நாடு செய்த தவமென்றே அதனைக் கூறுதல் வேண்டும். அவர் இடத்தை நிரப்புதல் அத்தனை எளிதில் இல்லை. திருவரங்கனாரின் எண்ணத்திலும் முயற்சியிலும் பயனிலும் சிறிதும் வறுமையே இல்லை. அவர் எத்தனையோ பெருங்காரியங்களைச் செய்ய எண்ணியிருந்தார். தமிழ்நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அவரது பிரிவு அதனால் பேரிழப்பாயிற்று. நாடு மட்டுமன்று, கழகமும் குடும்பமும் அவரது பிரிவாற் கொழுகொம்பற்ற தளர்கொடி போல அலமந்து நிற்கின்றன. செந்தமிழ்ச் செல்வியின் இப் புலம்பல் உண்மையில் செந்தமிழ் வாழ்வினராகிய மக்கள் அனைவரின் உண்மைப் புலம்பலாகவே வெளிப்பட்டது! எத்தனை புலவர்கள் வருந்தினர்; வதைந்தனர்; வாடினர்; எத்தனை கவிஞர்கள் கரைந்தனர்; கனிந்துருகினர்; கண்ணீர் வார்ந்தனர்; எத்தனை எத்தனை அன்பர்கள் அடியார்கள் நண்பர்கள் ஆறாத் துயருற்றனர்! அரங்கரின் அன்புத் தம்பியார் வ. சு. வின்மேல் பரிவும் பாசமும் காட்டிப் பரிந்து பரிந்து எழுதியவர் எத்தனைபேர்? அம்பிகையார் நிலைக்காவும் அவர்தம் இளமக்கள் எண்மர்க்காகவும் இரங்கி இரங்கி உருகி நின்று எழுதியவர்கள் எத்தனை பேர்? அரங்கனார் இருந்த காலையில் செய்த தொண்டுகளின் முழுமைப் பெருக்கும் ஒருங்கே வெளிப்படுத்தும் வண்ணம் இரங்கல் மாலைகள் வெளிப்பட்டன! அரங்கர் இழப்பைத் தமிழன்னையின் போகூழ் என்று அறிஞர்கள் புலம்பினர்; தமிழன்னையின் இரு கண்களில் ஒரு கண் பறி போயிற்று என்று புண்பட்டனர். தமிழன்னை தன் கால்களுள் ஒரு காலை இழந்தாள் எனத் தவித்தனர். தமிழ் அன்னை தன் தளையறுமுன், தன் தனிச் சிறப்பமைந்த தனயனை இழந்தாள் என இரங்கினர். கழகக் கற்பகம் தன் ஆணிவேரை இழந்தது என்று அலமந்தனர். கழகத்தின் உயிர் நாடி ஒடுங்கியது என உருகினர். கழகப் பதிப்பின் கண்கவர் வனப்பைப் பாராட்டிப் பாராட்டி, அதற்கு வித்தாக இருந்த அரங்கரை நினைந்து வெதும்பினர். எவ்வாறு திரு. அண்ணியார் அவர்கள் உள்ளம் துடிக் கின்றதோ! குழந்தைகள் எங்ஙனம் கையற்று வருந்துகின்றனவோ! திரு. அன்னையார் அவர்களுடைய பெற்ற வயிறு எப்படி வெதும்புகின்றதோ! தங்கள் உடன் பிறந்த நெஞ்சம் எவ் வண்ணம் நைகின்றதோ! என்று குடும்பத்தாரை நினைந்து குமைந்தனர். உடன் பிறந்த தாங்கள் ஒரு தோளைப் பறிகொடுத்தீர்கள்; அன்னை நீலாம்பிகை தன் ஒரு கூறு நீங்கினார் என்று நெட்டுயிர்த்தனர். ‘âyftâah® tuyhW gil¤j m«ik¡F ah« TWtJ ahJ? என்றும், கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல் என்று மேற்கோள் காட்டி வருந்தினர். இப்பிரிவு ஆறத் தக்கதும் இல்லை; ஆற்றத் தக்கதும் இல்லை என்று ஆற்றாது அரற்றினர். உடன் பிறப்போடு தோள் வலிபோம் என்றும், உங்கள் பொறுப்பு மிகுதி என்றும், உங்கள் சுமை தாங்க வொண்ணாதது என்றும் இளவல் வ. சு. அவர்கள் நிலைமைக்கு இரங்கினர். அரங்கனார் செய்த உதவிகளை தோன்றாத் துணையைத் தூண்டி எழுத வைத்த திறத்தை, விருந்தூட்டிய சிறப்பை - இன்ன பலவற்றை எடுத்தெடுத் தியம்பி இணைத்தவர் பலர். சான்றோம் மெய்ம்மறை, தமிழர் செல்வம், தமிழ்ப் புலவர் தோழர், முயற்சித் திரு, தமிழுணர்ச்சிப் பெரியார், தனித் தமிழ்த் தொண்டர், பழங்கலன் தூய வாக்கியவர், புதுக்கலன் புதுக்கியவர், கடமை வீரர், தமிழகத்தின் தனித் தலைவர், பிறர் துயர் தாங்கும் பெருமான் தமிழகம் முழுதும் புரந்த பெருந்திறல், தமிழர் நன்னிலைக்கு அடிகோலிய அண்ணல், பேர் பெறும் வள்ளல், தமிழ்க் கடவுள் என்று புகழ்ந்து புகழ்ந்து புண்பாடுற்றனர் பலர். கம்பீரத் தோற்றம், சிங்க நோக்கு, அஞ்சா நெஞ்சம், பீடு நடை, பொறுமை இனியநகை அன்பு நண்பு அருள் இன்னபல இயல்புகளை எழுதி இரங்கினர் பலர். நீறு விளங்கிய நெற்றி, தாழ்வடம் தொங்கிய கழுத்து, அகமுக மலர்ச்சி, சொல் வணக்கம், சொல் விருந்து, முத்தன்ன எழுத்து-இன்ன பலவற்றையும் எண்ணி மறுகினர் பலர். ‘v›tsî M‰wš’?, ‘v¤Jiz åu«?’, ‘v¤jF Ka‰á? - என்று வியந்துரைத்தாரும் பலர்! பேராசிரியர் பெருந்தகைமையும்,, பெரு நாவலர் சிறப்பும், முதுபெரும் புலமையும் பூண்டுள்ள எங்கள் மறைமலையடி களாரின் மருகராயிற்றே! எங்கள் தமிழ் பெருமாட்டி, புலவர் போற்றும் தனித்தமிழ்ச் செல்வி நீலாம்பிகையின் கணவராயிற்றே! வீறுற்ற தமிழரையெல்லால் ஒருங்கே திரட்டி ஒப்புயர்வற்ற கட்டுரை சொற்பொழிவு நூல் வெளியீடு இவற்றால் தமிழகம் ஓங்க நாளும் திருப்பணி பூண்டொழுகும் பெருந்தமிழ்த் தளபதி திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களின் தமையனாராயிற்றே! என்றென்று இனஞ் சொல்லிச் சொல்லி ஏங்கினார் பலர்! ஆறுதலும் தேறுதலும் உரைத்து இயற்கை நியதியை எடுத்துக் கூறி அமைதி காட்டினாரும் பலர்! பண்ணாரும் பைந்தமிழ்ப் பாடலால் பட்ட பருவரலையெல்லால் பசைந்து பசைந்து எழுதிப் பரிந்திரங்கினாரும் பலர். திருவரங்கம், தமிழர்அங்கம் துடிது டிக்கச் சீரியற்கை யாம்அரங்கம் சேர்ந்திட் டாரோ! பெருவரங்கம் தமிழ்க்கென்று பேசு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நாடி வருவர்அங்கம் என்படுமோ? வையம் வாடி வண்தமிழ்நா டுற்றமறை மலைஎம் அண்ணல் ஒருவர்அங்கம் தம்மருகர்க்காக நொந்தால் உயர்தனிச்செந் தமிழணங்கும் உயிர்நை வாளே என்பது முதலாகப் பாவேந்தர் ஓர் ஐந்தகம் (பஞ்சகம்)) பாடி நைந்தகம் நலிந்தாரெனின் மற்றைப் பாவலர் மறுக்கத்தை உரைக்கவும் வேண்டுமோ? இரங்கல் உரைகளையும், இரங்கல் பாக்களையும் இணைப்பில் கண்டு கொள்க என்று இங்கமைவாம். 17. துன்பமாலை - 2 திருவரங்கர் மறைவால் தமிழகம் ஒரு நற்றொண்டரை இழந்தது; சைவ சமயம் ஓர் அரிய அடியாரை இழந்தது; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தன் நிறுவனரை இழந்தது; நீலாம்பிகையார் தம் காதல் தலைவரை இழந்தார்! இளவல் வ. சுப்பையாபிள்ளை தம் முற்றேன்றலை இழந்தார்; இளஞ்சேய் களோ அரவணைத்த ஆருயிர்த் தந்தையை இழந்தனர்! மூதாட்டி சுந்தரத்தம்மையோ தம் அன்பின் வைப்பகமாம் அருமைச் செல்வரை இழந்தார்! இவ் விழப்பெல்லாம் இனி எங்கே தாக்கும்? எவரைத் தாக்கும்? தாங்கும் தவத்தைத் தாங்கி வந்த தம்பியார் வ. சு. வைத் தாக்கியது. எல்லாச் சுமைகளும் அவர்மேல் வீழ்ந்தன. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு (1029) என்று குடிசெயல் வகையில் கூறும் வள்ளுவனார், அதற்கு ஓரெட்டுக்கு முன்னரே, அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை (1027) என்று சொல்லிய அருமைக்கே இடனாகிப் பிறந்தார் போலும் இளவலார்! அவருக்கு மட்டுமா அச் சுமை? அவருக்கு வள்ளுவர் வகுத்த வாழ்க்கைத் துணையாய் வாய்த்த, மங்கையர்கரசியார்க்கும் சேர்த்தே அச் சுமை ஏறியது! தம் அன்புத் தலைவரைப் பிரிந்து பாளையிலேயே பல ஆண்டுகள் அவர் உறைந்திருக்கவும் நேர்ந்தது! தலைவரோ சென்னைக்கும் நெல்லைக்கும் அலைந்த வண்ணமும், அடுத்தடுத்தும் அடுக்கடுக்காயும் வந்து கொண் டிருந்த நோய் நொடிகளுக்கு ஆட்பட்டுக்கொண்டும், எண்ணற்ற வேலைகளையும் குடும்பச் சுமையையும் தாங்கிக்கொண்டும் நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்னும் மணிமொழியை நெஞ்சார நினைந்துகொண்டு கடமை புரிந்து வந்தார். நீலாம்பிகையார் நிலைமை என்ன? நீலாம்பிகை தம் காதல் தலைவருக்காக ஒன்பதாண்டுகள் தம் கன்னிமைப் பருவத்திலேயே கடுந்தவம் மேற்கொண்ட தவம் செய்த தவமாம் தையலர் ஆயினரே! அப் பிரிவைத் தாங்கித் தாங்கி உருகும் உள்ளத்தை உருக்காக்கிக் கொண்ட கடும் நோன்பினர் ஆயினரே! அவர்க்கு அரங்கர் பிரிவைத் தாங்கும் ஆற்றல் இருக்கத்தானே வேண்டும்! குழந்தையரை நினைத்தேனும் கொழுநர் பிரிவைத் தாங்கித் தானே ஆக வேண்டும்! இறைவன் செய்யும் கூத்துக்குத் தகக் கொண்டு ஒழுகத்தானே வேண்டும்! ஆம்! வேண்டுவது தான். ஆனால், அப் பிரிவு கல்லைக் கனியாக்கிக்கொள்ள வாய்த்த காதல் பிரிவு! இப் பிரிவு, அத்தகைத்தோ? கைம்மைப் பிரிவன்றோ! என்றேனும் காதல் அரங்கரைக் காண ஒண்ணும்; கைப்பிடிக்க ஒண்ணும்; கலந்து களிப்புற ஒண்ணும் என்னும் திடந்தந்த திண்மைப் பிரிவு அது! இஃது, அந்தோ பெரும் பிரிவு ஆயிற்றே! அவர் திருமுகத்தைக் காணக் கூடுமோ, காலமெல்லாம் காத்திருந்தாலும்! அவர் திருச் சொல்லைக் கேட்கவும் கூடுமோ ஆண்டாண்டாகக் செவியைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருந் தாலும்! நெஞ்சில் உறைந்த காதலர் நெகிழப் போய்விட்டாரே நெடுந்தொலைவுக்கு! என்றும் மீண்டுவாரா நெடுந்தொலைவுக்கு! நெக்குருகி இனிச் செய்ய என்ன ஆகும்! அவர் ஆருயிர் அம்பலவன் அடி நிழலில் ஆறுதல் பெறுக என்று வேண்டுவது ஒன்றுதானே! அம்மையார் அதனைச் செய்தார்! குழந்தைகளை நோக்கிக் குற்றுயிர் தாங்கினார். ஆனால் அவர்க்கு உயிர் மூச்சாக இருந்த அன்னைத் தமிழ்ப்பணியில் தோய்ந்து அமிழ்த முண்ணும் பேற்றையும் அரங்கர் பிரிவு வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விட்டதே! அந்தோ! அம்மையை வாழவைத்துக்கொண்டிருந்த வண்டமிழ் மருந்தை, மாந்தி மாந்தி மனநோயை மாற்றிக் கொள்ளுதற்காம் வாய்ப்பையும் அன்றோ அரங்கப் பெருமான் கூடவே அள்ளிக்கொண்டு போய்விட்டார்! அவரா அள்ளிக் கொண்டு போனார்? தாம் தொண்டு செய்யாது விடுத்த அரை குறையையும் தவமகள் நீலா செய்வார் என்று திண்ணமுற எண்ணியிருந்த அண்ணல் அரங்கரோ அவ் வன்மையைப் புரிவார்! அவர் பிரிவு அம்மையை அப்படி உலுக்கிவிட்டது! உலைத்துவிட்டது! ஒடுக்கிவிட்டது! ஓடாய்த் தேய்த்துவிட்டது! அரங்கரோடு வாழ்ந்த நாளிலும் அம்மையார் நோயின்றி வாழ்ந்தாரோ? ஆனால், அரங்கர் இருந்தார்! ஆளன் இருந்தார்! ஆருயிர் இருந்தார்! அவருக்காக இருந்தார்! ஆதலால், அம்மையார் படித்தலையும் ஆராய்தலையும் எழுதுதலையும் கைவிட்டார் அல்லர். அறிஞர் அவையம் சென்றோ, இறைவன் திருக்கோயில் சென்றோ, மங்கையர் மன்றம் சென்றோ உரை யாற்றத் தவறவில்லை! மொழிக்கு ஆக்கந் தரும் பணியாற்று தலில் முட்டுற்று நின்றதில்லை! தனித் தமிழ் இயக்கத்தைத் தூண்டி வளர்த்த அத் திருமகளார் 1920இல், தனித் தமிழ் இயக்கம் குறித்துக் கட்டுரைகள் வரைந்தார். செய்தித் தாளுக்கு விடுத்தார். கிழமை இதழ், திங்களிதழ் ஆகியவற்றுக்கும் செய்தி விடுத்தார். என்ன விளைந்தது? jŤjÄœ¡ f£Liufis kW¤J, kW¥ò¡ f£LiufŸ btË¥g£ld; Édh¡fŸ »s®ªjd; ‘jŤ jÄÊny xU ünyD« c©nlh?’ ‘jŤ jÄÊš vGjî« TLnkh?’ ‘jŤ jÄœ vd xU jÄœjhD« c©nlh? என்றெல்லாம் வினாக்கணை தொடுத்தனர். எவர்? பொது மக்களா? புலமை மக்கள் என்பாரும் அறிவுத் துறையையே தம் கையில் வைத்திருந்த அறிஞர் பெருமக்கள் என்பாரும்! பிறர் நிலை பேசவும் வேண்டுமோ? தனித் தமிழ் என்றபோது தனித்து அமிழ் என்று தவத்திரு அடிகளாரையே பழித்த பழிப்பிறப்புகள் தோன்றிய நாடாயிற்றே! இம் மெல்லியற் செல்வியின் கருத்தைத் தானோ மறுக்கத் தயங்குவர்? அம்மையார் என்ன செய்தார்? மறுமொழி யுரைத்தார்! தனித்து இயக்க வல்லது தமிழ்மொழி என்பதை வாளா சொல்வேன் அல்லன்; வாங்கிப் படித்துப் பாருங்கள்; தனித் தமிழ் அல்லாச் சொல் ஒன்றைக் குறித்துக் கூறுங்கள்; என்று செயலால் நிறுவிக் காட்டுவார் போலத் தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். பதின்மூன்று கட்டுரைகளைக் கொண்ட அந் நூல் 1925இல் வெளிப்பட்டது. வெளிப்பட்ட பயன் தனித் தமிழ் இயங்க முடியும்; அதில் நூலும் எழுதலாம் என்னும் உறுதியை உண்டாக்கிற்று. தமிழ்ப் பற்றாளர் மகிழ்ந்தனர்; தனித் தமிழ் நெறியைப் பற்றிக்கொண்டனர்; தனித் தமிழ் ஓர் இயக்கமாகச் செழித்து வளரலாயிற்று. தனித் தமிழ்க் கட்டுரைகளைத் தந்தையாருடன் மகளாக இருந்த காலத்தே வரைந்த அம்மையார், அரங்கருடன் வாழ்ந்த காலத்துப் பத்து நூல்களைப் படைத்தார். அழுந்திப்போன பழக்கத்தால் அரங்கர் மறைவுக்குப் பின்னரும் இரண்டு நூல்களை யாத்தார். ஆக, அம்மையார் தமிழ் கூறு நல்லுலகுக்குத் தந்த தமிழ்க் கொடை பதின்மூன்று நூல்களும், தனித் தமிழ் இயக்கமுமாகும். mª üšfŸ, (1) jŤ jÄœ¡ f£LiufŸ, (2) K¥ bg©kÂfŸ tuyhW, (3) vÈrbg¤ãiu bgUkh£o, (4) jÄœehL« jÄœbkhÊí« K‹ndWtJ v¥go?, (5) ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் ஆங்கிலப் பழமொழிகளும், (6) வடசொற்றமிழ் அகரவரிசை, (7) ஜோன் வரலாறு, (8) பிளாரென் நைட்டிங்கேல், (9) அருஞ்செயன் மூவர், (10) மேனாட்டுப் பெண்மணிகள் (முதற் பகுதி), (11) மேனாட்டுப் பெண்மணிகள் (இரண்டாம் பகுதி), (12) பழந்தமிழ் மாதர், (13) நால்வர் வரலாறு என்பன. அம்மையாரின் பின்வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அவர்தம் அருமை இளவல் மறை திருநாவுக்கரசர்: தம் ஆருயிர்க் கணவரின் பிரிவுக்குப்பின் அம்மையார், உயிர் போன உடலென வாழ்ந்தார். தம் அருமை மக்களுக்காகவே உயிர் தாங்கியிருப்பதாகச் சொல்வார். எனினும், அழுந்திய சிவ பக்தியின் மாண்பினாலும், கற்ற கல்வி கேள்விகளினாலும் இயல்பாயமைந்த நற்பண்புகளினாலும் அம்மையார் ஒருவாறு தேறி அமைதியுடன் வாழ்ந்தார். ஒற்றை வெண்புடைவையும் நெற்றி நிறைந்த நீறும் இயல்பான செம்மை நலமுமே அவர்க்கு அணிகலன்களாகத் திகழ்ந்தன. அம்மையாரின் இந்த அருமைக் கோலம் திலகவதியம்மையின் சைவத் தெய்வத் திருக்கோலத்தை நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும். திருவரங்கனார் பிரிவுக்குப் பிறகு அம்மையார் குடும்பத்தைத் தாய்போற் பேரன்பினராய்ப் பேணிக் காத்தவர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களாவர். இவர் திருவரங் கனாரின் தம்பி. அண்ணனாரிடத்துப் பேரன்பு வாய்ந்தவர். அதைவிட அண்ணியாரிடத்துப் பேரன்பு கொண்டவர். கழகம் தோன்றிய நாள்முதல் அண்ணனாருடனிருந்து சிவத் தொண்டு தமிழ்த் தொண்டுகளாற்றி வருகின்றனர். இவர்தம் அன்பார்ந்த பாதுகாப்பும், அரங்கனாரின் தொண்டினைப் பெரிதும் போற்றிய வகையில் வாழ்க்கைக்குப் போதிய வருவாய் இல்லாத அக் குடும்பத்தினருக்குத் திங்கள்தோறும் கழகப் பணத்திலிருந்து கடமைப் பொருள் கொடுத்துதவும் கழகத்தாரின் அரிய உதவியும் அம்மையாரின் குடும்பக் கவலையைப் பெரிதளவு குறைத்துவிட்டன. திருவரங்கனாரின் அரும் பெருந் தொண்டினையும் அவர் தம் குடும்ப நிலையினையும் அறிந்து தம் கடமையுணர்ந்து கழகத் தலைவரவர்கள் அம்மையார் குடும்பத்திற்கு இயன்றவரை உதவிகள் செய்து வருவது தமிழ்மக்களின் பாராட்டுதலுக்குரிய தாகின்றது (நீலாம்பிகையார் வரலாற்றுச் சுருக்கம்) நீலாம்பிகையார் பெற்ற மக்கள் பதினொருவர்; அவருள் இருந்தவர் எண்மர்; அவருள், ஆடவர் இருவர்; மகளிர் அறுவர்; அவர்கள்: ஆவுடையப்பன் (வயிர முத்து), திருநாவுக்கரசு; சுந்தரம் (மயில்); முத்தம்மாள் (பாப்பா); வேலம்மாள், சிவசங்கரி, பிச்சம்மாள், மங்கையர்க்கரசி என்பார். எட்டுக் குழந்தைகளும் அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் என்பதை முழுமையாக உணர்ந்து உருகி இன்புற்றவர் தாம் அம்பிகையார். தம்மைச் சூழக் குழந்தைகள் படுத்திருக்க, அவர்கள் முகத்தைப் பார்ப்பதில் பூரித்துப் போவார் அவர்! பிள்ளைகளின் கன்னத்தைத் தடவி உச்சி முகந்து உவகை கூருவதுடன், கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கிளுகிளுப்பு அடைவாராம் அம்பிகையார். அக் கிள்ளிய தடங்களும் பிள்ளைகளின் முகத்தில் அன்பின் பதிப்பகமாக விளங்கிக் கொண்டிருக்குமாம்! ஓடி விளையாடி உவகையால் நகைத்து மகிழும் மகிழ்ச்சிக் கொள்ளையிலே, ஒரு தாய் எப்படியெல்லால் சொக்கிப்போய் மயங்கிப் போய் நிற்க முடியுமோ அப்படியெல்லாம் நின்றார். ஆனால், அக் குழந்தைகள் தொடர்ந்து ஒன்றும் இரண்டும் மூன்றும் பலவும் படுக்கையில் கிடந்து நோய் நொம்பலங்களில் அழுந்தி அரற்றி அழுகைக் காடாய்க் கிடந்துவிடக் காணுங்காலை அப் பெற்ற மனம் என்னென்ன பாடுபடும்? புறத்தே அழும் குழந்தைகளுக்கு அகத்தே அழுது அழுது வெம்பி வெதும்புமே தாயுள்ளம்! அந் நிலை ஒரு நாள் இரு நாள் அன்றிப் பல நாள், சில திங்கள் தொடர்ந்தால், அத் துயரால் ஊணும் தவிர்ந்து, உறக்கமும் இழந்து, ஓய்வும் ஒழிந்து, மனமும் நைந்துபோகும் நிலை படை படையாய்ச் சூழ்ந்து தாக்கினால் பெற்ற மனம் என்னாகும்? தமக்கு உதவியாய் இருந்த முதியவரும் நோயில் படுத்துவிட்டால் சொல்ல வேண்டுமா? அந்தோ! அரங்கர் பிரிவுக்குப் பின்னர் அவர்தம் அருமை இளவல் வ. சு. தம் குடும்பத்தைத் தாங்கும் காவல் தெய்வமாய் அமைந்தாலும், அவர்தம் அருமை மனைவியார் மங்கையர்க்கரசியார், தாம் பெறாது பெற்றெடுத்த பிள்ளைகளெனப் பேணிப் புரந்தாலும் முழு ஆறுதலைத் தந்துவிடுமோ? அதுவும் நலிந்துபோய் நாளெண்ணிக் கொண்டிருந்த உணர்வுப் பிழம்புக்கு அமைதி தந்துவிடுமோ? தம் அருமைக் கொழுந்தனார்க்கு உருகி உருகி எழுதிய உரைமணி களில் சில கேட்போம் : உருக்கமிக்கவர்கள் அழுது அழுதே அவனடி அடைய வேண்டுவதே ஊழ் போலும்! தொடர்ந்தெழுதிய கடிதங்களிலிருந்து பொறுக்கி எடுத்தவை இவை; விடப் பெற்றவையோ மிகப் பல : அருமை அத்தை அவர்களுக்கு இன்னுங் காய்ச்சல் விடவில்லை. குளிர் காய்ச்சல் என்று மருந்து கொடுத்திருக் கிறார்கள். 5-1-45 அருமைச் செல்வன் ஆவுடையப்பனுக்கு முட்டில் அடிபட்டு மிகுதியாய் நடக்க முடியவில்லை 7-1-45 அருமை அத்தை அவர்களுக்கு காய்ச்சல் விடவில்லை. நேற்றிலிருந்து தெளிநீருங் கூட மிகக் குறைவாகக் குடிக்கிறார்கள். தளர்ச்சி நாளுக்கு நாள் மிகுதியாக இருக்கிறது. அவர்களை மிக அன்போடு கருத்தாகப் பார்த்து வருகிறேன். ஆண்டவன் அருள் தான் வேண்டும். அவர்களைத் தூக்கித்தான் தண்ணீர் கொடுத்தல் வேண்டும். எழுந்திருக்க முடியவில்லை. 9-1-45 ஆவுடையப்பன் உள்ளங்கையில் ஒரு கொப்புளம் வந்து தொல்லைப்பட்டு நேற்றிலிருந்து சலம் வெளியாயிற்று. மயிலுக்கு இடுப்பு. தொடையில் சிரங்கு, தொல்லைப்படுகிறாள். மருந்தும் போடுகிறாள். 18-2-45. கவலை ஏதொன்றும் நினையாமல் வீட்டு வேலை நேரந் தவிர மற்ற நேரங்களில் ஓயாமற் படிப்பதும் எழுதுவதும் ஆண்டவனை வணங்குவதும் பிள்ளைகளை உன்னிப்பதுமாகக் காலங் கழித்து வருகின்றேன் 27-2-45. ஒரு கிழமையாக ஆவுடையப்பனுக்குக் கடுமையான காய்ச்சலாக இருந்து சிவபிரான் அருளால் அவனுக்கு நேற்றிருந்து நலம். 5-3-45. மூன்று நாள்களாக நம் அருமைச் சங்கரிக்கு மேல் முழுதுந் தடிப்பு. இது ஒரு வகையான வைசூரியாம்; இன்னும் இறங்கவில்லை. பெரிதும் தொல்லைப்படுகிறாள். திருநீற்றுப் பதிகம் சொல்லித் திருநீறு பூசினால் சிறிது நோய் தணியப் பெறுகிறாள். இதோடு ஓயாமல் வயிற்றை வலிக்கிறதென்று தொல்லைப்படுகிறாள். 23-3-45. அருமைச்செல்வன்.....bjhšiynah மிகுதி. தங்கள் பெருவேலைக்கிடையே யான் அவனைப்பற்றித் தங்கட்கு ஓயாமல் தெரிவித்து மனத்தைப் புண்படுத்த விரும்பாமலே இருந்தேன். அவன் அறிவுடையவன்தான். ஆனால் அறவே படியாமல் அலைந்தால் அவன் எப்படிப் பயன் பெறுவான்? 15 நாள்களுக்குள் சினிமாவுக்கு இருமுறைபோயிருக்கிறான். ஓரடி அவனை அடித்தால் என்னைக் கடுமையாக அடித்துவிடுகிறான். ஏசினால் அதற்கு விடையாக இழிவாக ஏசுகிறான். அவனைத் தாங்கள் அடிப்பதாற் சிறிதும் பயனில்லை. அதுவும் எனக்குத் துன்பம். மயிலைக் கண்டாலும் பிடிக்கிறதில்லை. அவளிடம் ஓயாமல் சண்டை. அச்சமே தெரியாத இவ்விளமைக் காலத்தில் நாம் அவனை இப்படியே விட்டுவிடுவோமேயானால், பின்னர் அவனும் பயன்பெறாமல் நமக்கும் bபரியmல்லல்களைÉளைப்பான்vன்பதில்Iயமுண்டோ?யான் என் அறிவறிந்த நாள்முதல் சிவபிரான் அருளால் பெரும்பாலும் கல்வித்துறையிலேயே, கவலை மிகுதியாயின்றிக் காலங்கழித்து வந்தேன். தங்களருமைத் தமையனாரவர்களாலும் நலமே பெற்றேன். ஆனால் என் பழைய ஊழ் ஒன்று மிகக் கொடியது. அஃதே..... என்னிடமிருந்து அவன் தங்கள் போன்றோரிடம் இருப்பனாயின் அவன் எல்லாரும் விரும்பத் தக்க நிலையில் நடப்பான் என்பதில் பின்னடைவில்லை. அவனுக்குத் தாங்கள் கடிதம் எழுதுவதாலும் அவனை அடிப்பதாலும் சிறிதும் பயனில்லை. அவனை என்னினின்றும் பிரித்துச் சென்னையில் கல்விபயில விடுவதே தாங்கள் அவனுக்குச் செய்யும் தந்தை உதவியாகும். பெண்மக்களால் பெரிய அல்லல் இல்லை என்றெண்ணுகிறேன். 26-3-45 யான் பிறந்த வீட்டை நினைக்கும்போது என் உள்ளம் அமைதியிலதாகின்றது. எழுதுவதும் பயில்வதுமே எனக்கு ஆறுதல். அதற்குக்கூடத் தடையாகப் பிள்ளைகட்கு அடிக்கடி நலக்கேடு. சிவமணிக்குக் கையில் சிரங்கு, வீக்கம், மிகுதியும் தொல்லைப்படுகிறாள். அருமை மங்கை முன்னாளிரவு இளைப்பினால் மூச்சுவிட முடியாமல் தவித்துத் துடித்துத் துடித்து விழுந்தது. உடனே மருத்துவரை வருவித்து மருந்து கொடுத்து எல்லாம்வல்ல ஆண்டவன் அருளால் இன்று நலம். பிச்சாளுக்கும் கழுத்தில் ஒரு பெரிய கட்டி. உடையாமை யால் மருத்துவரைக் கொண்டு அதனை அறுத்து நலப்படுத் தினோம். ஆண்டவனருளால் அவள் இப்போது நலம். இவ்வாறு குடும்பத்தில் அடுத்தடுத்து நோயுந் துன்பமும் மிகுதியாகத் தான் இருக்கின்றன. அவனருள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தல் ஒன்றே நாம் செயற்பாலது. 20-4-45.......gL¤J»w பாட்டுக்கு ஓர் அளவே யில்லை. என் செய்வேன். புண்பட்ட என்உள்ளம் மேலும் மேலும் புண்படு கின்றது.......ml¡f எங்களால்முடியவில்லை. இவன் துன்பம்பொறுக்கமுடியாமšஎ‹உடல்நலமு§கெடு«என்பதிšஐயமில்லை. இன்னும் நான்கு நாள்கள் நல்லனவாயில்லையாம். ஆகலான் அவனை வியாழக்கிழமையன்று பகல் ஒன்றரைமணி வண்டிக்குத் தெரிந்தவர் எவருடனேனும் அனுப்பித் தங்கட்குத் தந்தி கொடுக்கின்றேன். என் ஆருயிர்க் கணவனாரை இழந்த தீவினையாட்டியாகிய யான் மகனால் மன ஆறுதல் பெற நல்வினை செய்தேன் இல்லை. எல்லாம் வல்ல சிவபிரான் அருள்கொண்டும் என் உடன் பிறப்பனையதங்கள்துணைகொண்டுமேபிள்ளைகளுடன்சிறிதுமனஆறுதலுடன்இருக்கிறேன். 20-5-45. ïவையெல்லாம்bபற்றkனத்திலிருந்துãறந்தvத்தகையtருந்தத்தக்கcரைகள்!தம்பொருள் என்பதம் மக்கள் என்பது மெய்ம்மையேயாயினும், அம் மக்கள் எண்ணிக்கையும் கட்டாயம் ஒரு கட்டுக்குள் இருக்கவேண்டுவது இன்றியமை யாததே. எத்துணை வளமை பொழியினும் ஒத்த அளவில் பல மக்களைப் பேணுதற்கு ஒருவரால் இயலுமோ? அதிலும் கணவரைப் பிரிந்து கைம்மை நோன்பு கொண்டு கடுநோய்க்கும் ஆட்பட்ட ஒருவரால், சின்னஞ் சிறு சிட்டுகள் போன்ற குழவிகள் பலரை உரிய அளவில் பேணிக் காக்கவும் இயலுமோ? மக்கள்மேல் பேரன்பு இருத்தலில் குறைவில்லை எனினும், அம் மக்களின் எண்ணிக்கையிலும் பேரன்பு வைப்பது தக்கதாகாது என்றும், மக்கள்மேல் பெரும்பற்றுதல் உடையார்க்கும், மக்கள் பலர் உளராயின் மனவெறுப்புக் கொள்ளுதற்கும் வழிசெய்து விடும் என்றும், அம்பிகையார் வாழ்வால் நன்கு அறியலாம். அவர்தம் பெருந்துயர்களில் பிள்ளைகளால் பட்ட துயரம் பெரிதே என்பது வெள்ளிடையாம். அம்மையார் உள்ளம் ஒருவேளை மக்கள்மேல் சலிப்புற்ற தில்லை எனினும், அம் மக்களைப் பேணுதலில் உடல் நலத்தைக் கெடுத்து, இயல்பாகவே நோயுற்ற உடலை மேலும் வாட்டித் தீராநோய்க்கே தம்மை ஆட்படுத்திக்கொண்டு விட்டார் என்றே கருதவேண்டியுளது. தம் கணவரின் இனிய இளவலார் வ. சு. அவர்களின் அருமை மனைவியார் மங்கையர்க்கரசியார் தமிழரசியைப் பெற்றபோது எப்படிப் பூரித்துபோய்ப் பாராட்டுகிறார் நீலாம்பிகையார்! என் அருமை மகள் தமிழரசி நந்தமிழ்நாட்டின் பெருநலத்திற்காகப் பிறந்திருக்கிறாள். ஆகலால் பெருமகிழ் வடைக என்பது அவர் தம் எழுத்து. குடிக்கு விளக்காகிய மகப்பேற்றை நாட்டின் நலத்திற்குப் பிறந்த பிறப்பாக நயந்தேத்திய நாகையார் உள்ளம் பெரிதேயாம். பெருஞ்சேரல் இரும்பொறை தான் பெற்ற மகனை இவ்வுலகோர் நலங்கருதிப் பெற்றான் என்று கூறும் அரிசில்கிழார் திருவாக்கிற்கு (பதிற்றுப் பத்து. 74) அரணென அமைந்து திகழ்கிறது அம்பிகையார் வாக்கு! அத்தகைய வாக்குடையார், புண்பட்ட என்னுள்ளம் மேலும் மேலும் புண்படுகிறது என்றும் என் உடல் நலமுங் கெடும் என்பதில் ஐயமில்லை என்றும் மன ஆறுதல் பெற நல்வினை செய்தேன் இல்லை என்றும் வருந்து நிலை எதனால் உண்டாயது? அறிவு நலங் கூர்ந்தார் எண்ணிப்பார்ப்பாராக. மங்கையர் கூட்டத்தில், மாநாட்டில், பேரவையில், கருத்தரங்கில் பங்குகொண்ட அம்பிகையார், வீட்டுள் அடங்கிப் போனார். கூட்டத்திற் பங்கு கொள்வதற்கேயன்றிக் கேட்டதற்குச் செல்லும் அமைதியையும் இழந்தார். திருக்கோயில் வழிபாட்டுச் செல்லவும், சமயப்பொழிவும் ஒடுங்கின. அவரைக் கைம்மைக் கோலத்திலே கண்டு உருகியவர் மிகப் பலர். அறிவறிந்தோர்க் கெல்லாம் அறிமுகப்பட்டிருந்த அடிகளாரின் திருமகளார், அரங்கரின் துணைவியார், அம்பிகையாரைத் தமிழ்ப்பற்றாள ருள்ளும் சமயப்பற்றாளருள்ளும் எவரே அறியார்? அவரை அந் நிலையில் ஒரு சமயப் பொழிவுக் கூட்டத்தினிடையே கண்டு கண்ணீர் வடித்து நாத் தழுதழுத்தது வெதும்பி நின்றார் அவர் உடன் பிறந்த மறை. திருநாவுக்கரசர். அக் கோலத்திலே கண்டுகொண்டு உரையாற்றவும் இயலா உளத்துயரை எடுத்துரைத்தார். பிறர் கூட்டத்திற்கு வந்து கேட்கும் மனமும் வற்றிப்போன யான், ஒரு சிறிது ஆறுதல் பெறுதற்காகவேனும் உன் பொழிவைக் கேட்கலாம் என வந்தேன்; என் பொல்லாத வேளை அதனையும் தடுக்க ஏவுகின்றது என்று வருந்தினார். உணர்வாளராய்ப் பிறப்பதில் எத்தனை எத்தனை அல்லர்கள் வாழ்வில்? அம்பிகையாரின் இறுதிக்கால வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார் மறை. திருநாவுக்கரசர் : அரங்கனாருக்குப்பின் அம்மையார் வாழ்வு ஒருவாறு அமைதியாக நடந்துகொண்டிருந்தது. 8-10-45இல் சுப்பையா பிள்ளை பாளையங்கோட்டையில் இருந்து (சென்னைக்குச்) சென்றார். 10-10-45 இல் அம்மையார் காய்ச்சல் என்று படுத்தார். காய்ச்சல் ஒரு கிழமையாகியும் தணியவில்லை. வெம்மையளவு 104 0 வரையில் உயர்ந்தது. 102 0-க்குக் குறையவில்லை. இஃதறிந்து வருந்திப் பரபரப்புடன் சுப்பையாபிள்ளை 20-10-45 இல் பாளை மீண்டார். அறிவும் உலகியல் உணர்வும் வயதும் நிறைந்த டாக்டர். திரு சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் அம்மையாரைத் தம் அருமை மகளென அன்புடன் விழிப்பாய் உன்னிப் பார்த்தார். தக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. காய்ச்சல் தணியவில்லை. அம்மையார் நம்பிக்கை இழந்தார். என் தம்பி மறை. திருநாவுக்கரசுக்கும் அவன் மனைவிக்கும் வருமாறு தந்தி கொடுங்கள் என்றார். சுப்பையாபிள்ளை அனலிற் பட்ட புழுவெனத் துடித்தார். 24-10-45 இல் மறை. திருநாவுக்கரசின் மனைவியார் அறிவம்மையார் பாளையங் கோட்டை போந்து அம்மையாருக்கு இரவு பகலாகப் பணிவிடை புரிந்து வந்தார். அம்மையாரின் பெற்றோர்க்கும் உடன்பிறந்தார்க்கும் அன்றன்று காய்ச்சல் நிலைபற்றிக் கடிதப் போக்குவரவு நிகழ்ந்துகொண்டே இருந்தது. எங்கும் கவலையும் கலக்கமும் அச்சமும் குடிகொண்டிருந்தன. கவலைக்கிடமா யிருக்கிறது புறப்படுக என்று தந்தி கிடைக்கவே 3-11-45 பிற்பகல் பாளைசென்று மறை. திருநாவுக்கரசு தம் அருமைத் தமக்கையாரைக் கண்டார். காய்ச்சலுடன் இருமல்; இருமல் சளியுடன் இரத்தம் கொட்டல், இவற்றுடன் 4-11-45இல் இருந்து கைகால்களை அசைத்தல், எழுந்து உட்கார நடக்க முந்துதல் முதலியனவும், இடை இடையே இரண்டொரு சொற்கள் உணர்விழந்தும் பேசுதல் ஆகிய செயல்கள் அம்மையாரிடம் காணப்பட்டன. அன்று மாலை அனைவரையும் அழைத்தார். மைத்துனரைப் பார்த்து, இனி யான் பிழைக்கமாட்டேன்; என் மக்களை அன்புடன் பாதுகாத்தல் வேண்டும். எனக்கு உயிர்விட விருப்பமில்லை. பிள்ளைகளுக்காக வாழவே விரும்புகின்றேன். ஆனால் சிவபிரான் அழைக்கின்றான். eh‹ v‹d brŒtJ? என்று இயல்பாகச் சொன்னார். மறை. திருநாவுக்கரசு, அறிவம்மை, சுப்பையாபிள்ளை மனைவி, தம் மாமியார் முதலியோரிடமும் தம் மக்களை அன்புடன் பாதுகாக்க வேண்டுமென வேண்டினார். மக்க ளெல்லாரையும் பெயரிட்டழைத்துப் பேசினார். முத்தமிட்டார். இரவு 9 மணி. அம்பலவாணன் படத்தைக் கொண்டுவந்து தம்மருகே மாட்டச் சொன்னார். அதற்குப் பூ அணியச் சொன்னார். அவை செய்யப்பட்டன. வணங்கினார். எழுந்து உட்கார்ந்து, புண்ணியனே! உன்னடிக்கே போதுகின்றேன்; பூம்புகலூர் மேவுகின்ற புண்ணியனே என்று திருத்தாண்டக அடிகளைக் கூறினார். அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! என்று திருவாசக அடிகளைக் கூறி இறைஞ்சினார். அதற்குமேல் பேசல் அவரால் இயலவில்லை. இரவு மணி 1. தமக்குப் பணி செய்துகொண்டிருந்த தம்பியைத் தேவாரம் பாடுக என்றார். இரண்டு மணிக்கும் அவ்வாறே கூறினார். அவர் பாடினார். இரவெல்லாம் உறக்கமே இல்லை. கைகால்களைப் புரட்டிக் கொண்டும் வருந்திக்கொண்டும் இருந்தார். பொழுது விடிந்தது. தாம் பிழைத்தல் இயலாது என்றார். விரைவில் இறப்பேன் என்றார். பிள்ளைகள் எல்லாரையும் அருகழைத்து இனிமையாகப் பார்த்தார். முத்தமிட்டார். 5-11-45 திங்கட்கிழமை பகல் 11 மணிக்கு அம்மையார் இறப்புத் துன்பத்திற்கு ஆளானார். உடனே மறை. திருநாவுக்கரசு அம்மையார் அருகமர்ந்து அவர் தலைமீது திருவாசகத்தைப் பொருத்தி வைத்து, அதிலுள்ள பாடல்கள் பலவும் தேவாரத் திருமுறைகளிலுள்ள பாடல்கள் பலவும் பாடினார். உடற் புரட்டலும் கைகால் இழுப்பும் மிகுதியாகியும் அம்மையார் பாடல்களை மிகவும் உன்னிப்பாய்க் கேட்டார். தாமும் அம்மையே அப்பா என்ற திருவாசகத்தில் பாதியளவு பாடினார். மணி 12. தம் மக்களை விழித்துப் பார்த்தார். மறை. திருநாவுக்கரசு அக்கா, இந் நேரத்தில் மக்களை நினைத்தல் ஆகாது. கூத்தன் திருவுருவத்தையே நினைத்தல் வேண்டும் என, அம்மையார் ஆம் என்று சொல்லிக் கூத்தன் படத்தைத் தம் இரு கைகளாலும் பற்றி மார்பு மீது வைத்துக்கொண்டு சிறிது நேரம் பார்த்தார். அது வாங்கிக்கொள்ளப்பட்டது. கடைசியில் அம்மையாரின் வாயினின்றும் திருநீறணிக என்றும், சிவ என்றும் சொற்கள் வந்தன. நீறணிவிக்கப்பட்டது. கைகளால் வணங்கினார். பிறகு அம்மையாரால் பேசல் முடியாது போயிற்று. மறை திருநாவுக்கரசு சிவாயநம, நமச்சிவாய அம்மையப்பா அம்பலவாணா கூத்தா என்ற திருப்பெயர்களை உயர்ந்த குரலில் ஆர்வம் ததும்ப முழங்கிக்கொண்டே இருந்தார். அம்மை யார் அவற்றுக்கெல்லாம் ஊங்காரம் கொடுத்துக் கொண்டே இருந்தார். 12 3/4 மணி. அதுவுமியலாது போன போது திருப் பெயரொவ்வொன்றற்கும் தலையசைத்தார். 1 மணி. அப்போதும் சிவன் பெயர்களைக் கேட்டது கட்குறிப்பால் அறியலாயிற்று. 1.10 மணிக்குக் கண்களை மூடினார். சிவன் திருப்பேர் ஒலியுடன் அம்மையார் ஆருயிர் சிவன் சேவடியில் 1.16 மணிக்குக் கலந்தது. அன்று மாலையே (5-11-45) அம்மையாரின் திருவுடன் சிவபிரானின் பொங்கழல் உருவில் சேர்க்கப்பெற்றது. 15-11-45 இல் இல்லத்திலேயே வீண் சடங்குகள் எல்லாம் நீக்கித் தீ வளர்த்தும் திருமுறை ஓதியும் சிவவழிபாடு செய்யப்பெற்றது அம்மையார் வழிபாடும் ஆற்றப்பெற்றது. 28-4-1944இல் இறையடி எய்தினார் திருவரங்கர். 5-11-45 இல் இறையடி எய்தினார் நீலாம்பிகையார். திருவரங்கர் இளவல் வ. சு. அவர்கள் தம் தமையனார் அண்ணியார் செய்த திருப்பணிகளை எண்ணி உலகம் மறவாது இருக்கப் பண்டை யோர் கண்ட முறையில் நடுகல் விழா நடத்தினர். பீடும் பெயரும் எழுதுதல், நடுகற் குறிப்பு! செயற்கருஞ் செயல் செய்த செம்மலர்களுக்கு நினைவுக் குறியாக நிறுத்தப் பெறுவது நடுகல்! பல்லோர் பார்வையும் படும் இடத்தில் பீடும் பெயரும் எழுதப்பெற்ற கல்லை நடுதலும், வழிபாடு செய்தலும் வாழ்த்துதலும் காவியப் புகழ் வாய்ந்த செய்திகள். அவற்றுக்குக் காட்டாகச் செய்யப்பெற்ற பெருமை மிக்க நிகிழ்ச்சி இஃதாகும். 12-8-46ஆம் நாள் வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள், பொருநைக்கரை சார்ந்த, பாளையங்கோட்டை வெள்ளைக் கோயில் தோப்பில், பாளையங்கோட்டை நகர் மன்றத் தலைவர் திரு. பி. டி. R¥igahãŸis ã.V., ã.vš., அவர்கள் தலைமையில் நடுகல் விழா நிகழ்ந்தது. 13-8-46ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பாளையங்கோட்டை பெருமாள் கோயில் தெரு, நகரவைப் பெண்கள் பள்ளியில், திருவாளர் சி. r©Kf eÆdh® ãŸis ã.V., ã.vš., அவர்கள் தலைமையில் நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. நினைவுக் கூட்டத்தில் இருபெருங் காதலராம் திருவரங்கர்-நீலாம்பிகையார் அருந்தொண்டுகள் பற்றி அறிஞர்கள் சி. இலக்குவனார், ந. சேதுரகுநாதன், குருசு அந்தோணி, ந. சிவகுருநாத பிள்ளை, மறை. திருநாவுக்கரசு, ஆ. முத்துக்குமார சாமி பிள்ளை, சிவகாமி அம்மையார், மு. இராசாக் கண்ணனார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தேவாரம் இடைஇடையே ஓதப்பெற்றது. திரளான பொதுமக்களும் பேரறிஞர்களும் அன்பர்களும் உற்றார் உறவினர்களும் நினைவு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தம் பேரன்பைப் புலப்படுத்தினர். அம்பிகையார் பிரிவுக்கு ஆறாத்துயருற்று இரங்கல் தெரிவித்தோருள் ஒருவர் தமிழ்த்திரு இளவழகனார். அவர் தவத்திரு. அடிகளார் மாணவர்; நீலாம்பிகையார் உடன் பயின்றவர். அவர் இரங்கல் செய்தியிடையே நினைவுக்குறி பற்றி நினைவுறுத்தினார் : தனித்தமிழ் அன்னையாரான திருவாட்டி நீலாம்பிகை யம்மையார் அவர்களின் இரங்குதற்குரிய மறைவு தெரிந்து உள்ளம் உன்னுதொறும் இன்னதென்றறியாததோர் உரிமை யுணர்ச்சியினால் இழுதாகின்றது. ஆசிரியர் மறைமலையடி களிடத்தில் யானும் அவர்களும் உடன் பிறந்தாரைப்யொப்ப ஒரு சாலை மாணவராய்ப் பழகினோம். அதனாலும், தனித்தமிழ் உணர்ச்சியினாலும் யான் எனது வாழ்க்கையில் முதன்மையாகத் தொடர்பு பெற்றிருந்த என் அலுவலகத்தின் இல்லத் தலைவியார் என்னும் மதிப்பாலும், இத்தகைய உரிமையுணர்ச்சி எனதுள்ளத்தைக் கவர்ந்து நினைதொறும் உருக்குகின்றது. யானும் இதனால் ஆறுதல் காணாதே அலமருகின்றேன்.... ஆற்றாமையுடையார் உரை ஏனை ஆற்றாமை யுடையார்க்கு ஓர் ஆறுதல் அளிப்பது உண்மையாயின், அஃது அதனை அளிப்பதாகவென நினைக்கின்றேன். தமிழகத்தில் தனித்தமிழ் அன்னை, சைவத்தாய், பல நல்ல நூல்கள் இயற்றிப் பெருந்தொண்டு புரிந்த அருள் தலைவி, திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் ஒருவரே. அவரது வாழ்க்கையும் மறைவும் தமிழ் வரலாற்றிற்குரியவை. அவர்தம் கணவனார் வாழ்க்கையும் பிரிவும் அத்தகையனவே. அவ்விரு வருக்கும் ஒருமிக்க நினைவுக் குறிகளும் வரலாறுகளும் அமைப்பது இன்றயமையாதது. 1946இல் நடுகல் எழுப்பப்பெற்றது; தனித்தனியே சிறிய அளவில் வரலாறுகளும் எழுதப்பெற்ற.ன இப்பொழுது இருவருக்கும் இணைந்த வரலாறு சற்றே விரிந்த அளவில் இந் நூலாகின்றமை நினைவு கூரத்தக்கது. திருவரங்கர் நடுகல்லில் பொறிக்கப்பெற்றுள்ள செய்தி : இங்கமர்ந்துள்ள திருவரங்கம் பிள்ளை 23-5-1890இல் பாளையங் கோட்டையில் வயிரமுத்துப் பிள்ளை சுந்தரத் தம்மையார்க்கு மகனாகப் பிறந்து, 1906 முதல் 1918 முடிய, கொழும்பில் தமிழும் சைவமும் வளர்த்து, 22-9-1920இல் திருநேல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி, ஆயுள் அமைச்சராயிருந்து எண்ணற்ற அருந்தமிழ் நூல்களை ஒப்பற்ற முறையில் பதிப்பித்து, பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் எருமைக் கடாப்பலியை நிறுத்தி, நீலம்பிகையம்மையாருடன் இன்ப வாழ்வு வாழ்ந்து 28-4-1944இல் சிவனடி சேர்ந்த செந்தமிழ்ப் புரவலர். நீலாம்பிகையார் நடுகல்லில் பொறிக்கப்பெற்றுள்ள செய்தி : இங்கமர்ந்துள்ள நீலாம்பிகையம்மையார் 3-6-1903இல் நாகப்பட்டினத்தில் மறைமலையடிகள் சௌந்தர வல்லியார்க்கு மகவாகப் பிறந்து, சென்னை வித்யோதயா, நார்த்விக் மகளிர் பள்ளிகளில் தமிழாசிரியராயிருந்து 1919இல் தனித் தமிழியக்கங் கண்டு, 2-9-1927இல் திருவரங்கனாரை மணந்து, தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொற்றமிழ் அகர வரிசை முதலிய பத்து நூல்களை இயற்றித் தமிழும் சைவமும் வளர்த்துப் பாளையங் கோட்டையில் வாழ்ந்து, 5-11-1945இல் மக்கள் எண்மரை விடுத்துச் சிவனடி சேர்ந்த செந்தமிழ்ப் புலவர். 18. திறவோர் காட்சி வட கடலில் ஒரு நுகக்கோல் இடப்பெற்றது. தென் கடலில் ஒரு கடையாணி இடப்பெற்றது. இரண்டும் நகர்ந்தன; நகர்ந்து நகர்ந்து, அலைந்து அலைந்து நெருங்கின; ஓரிடத்திலே, வடகடலில் கிடந்த நுகக் கோலின் ஒரு துளையில், தென் கடலில் கிடந்த கடையாணி செவ்வையாகப் பொருந்திக்கொண்டது! இஃது எத்தகையது? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவனும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருத்தியும், எங்கோ ஓரிடத்துக் கண்டு ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியா விருப்பில் கூடி வாழ்வது போன்றது என்பது அகப்பொருள் கட்டுரை. வட கடலிட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென் கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல என்கிறது அது! (இறையனார் அகப்பொருள் 2. உரை.) இவ் வரலாற்று நாயகர், பாளைத் திருவரங்கர்க்கும், நாகை (நாகப்பட்டினம்) மறைமலையடிகளுக்கும் அணுக்கத் தொடர்பு எவ்வாறு உண்டாயது? ஒருவருக்கொருவர் தொடர்பு எப்படி யுண்டாம்? அடிக்கடி பார்த்து உறவாடும் உரிமையன்பு தலைப்பட்டார்க்கே தொடர்பு உண்டாதல் உலகியல்! ஆனால் அடிகளும் அரங்கரும் ஓரூரா? ஓரிடத்தாரா? ஒரு குடும்பத்துப் பிறந்த நெருக்கத்தாரா? உறவு முறையாரா? இல்லை! இல்லை! இனி, அடிகள் ஆசிரியராய், அரங்கர் மாணவராய்ப் பயின்று பழகும் வாய்ப்பு ஏற்பட்டதா? உடன் வேலையாளியாய் ஒன்றி உறையும் நிலைமை இருந்ததா? அடிகளார்க்கும் அரங்கர்க்கும் வணிகத் தொடர்பு நேர்ந்து கலப்பாயிற்றா? அடிகளார் வணிக நிறுவனராகவோ, அரங்கர்க்குத் தொழில் தந்த தலைவராகவோ இருந்தாரா? இல்லை! இல்லை! அடிகளார்க்குத், தமிழ் தொடர்பாக அன்புடையார் பலர் இருந்தனர்; சமயம் தொடர்பாக ஈடுபாட்டாளர் பலர் இருந்தனர்; இவ்விரண்டன் பேராலும் அமைப்புகள் ஏற்படுத்திப் பொறுப்பாளராய் இருந்து அடிகளாரை அழைத்துப் பயன் கொள்ள விழைந்தாரும் பலர் இருந்தனர். அடிகளார் தொண்டுக்கு உதவும் வகையில் புரவலராகப் பொருந்தியவரும் பலர் இருந்தனர். இவ் வகையில், எவ் வகையாலும் அரங்கர்க்கும் அடிகளார்க்கும் தொடர்பு ஏற்பட வாய்ப்பு இல்லை! இளமையிலேயே தந்தையாரை இழந்து, அத் தந்தைக்குப் பின் குடும்பத்தைத் தாங்கும் வறிய குடும்பத் தலைமையாய் இருந்து, படிப்பை விடுத்து, வேலை தேடி ஊரூராய் அலைந்து, கடல் கடந்து சென்றும் கடமை மறவாமல் தொழில் தேடிக், குடிநலம் பேணித் தீரும் கட்டாயத்திற்கு ஆட்பட்ட பாளை அரங்கனார் எங்கே? சீரிளமைப் பருவத்திலேயே நல்லாசிரியரை அடுத்துக் கற்பன கற்று, இருபான் ஆண்டுக்குள்ளாகவே இலக்கண இலக்கிய சமய ஊற்றங் கண்டு, இதழாசிரியராய், நூலாசிரியராய், பேராசிரியராய், பொழிவாளராய்ப் பல நிலைக் கடன்கள் ஆற்றித் தமிழ் வானில் முழுமதியாய்த் திகழ்ந்த நாகை அடிகளார் எங்கே? கண்டதும் காதல்என்பது காதலர் காட்சிச் சிறப்பு உரைக்கும் பழவுரை; ஆனால் இவர்கள் கண்டதும் இலரே! ஏன்? கேட்டதும் கூட இலரே! தூத்துக்குடி சைவ சித்தாந்த சபைக்கு அடிகளார் பொழிவு செய்ய வருங்கால் அரங்கர் ஆங்கு இருந்தாலும் அலரே! அவர் பொழிவினைக் கேட்டோர் வழிக்கேட்டுப் பேரன்பு கொண்ட இயல்பாய் நடக்கக் கூடியதோ? அவர்கள் வழியே அடிகளார் எழுதிய நூல்களை அறிந்து கொழும்புக்குத் தருவித்துப் பயிலும் ஆர்வம் எளிதில் ஏற்படக் கூடியதோ? அரங்கர் என்ன, தேர்வுக்குப் படித்தாரா? ஆய்வுக் களப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டிருந்தாரா? பல் பொருள் வாணிக நிறுவனக் கணக்கருக்கு என்ன இவ் வியப்பான பற்று உண்டாக வேண்டியிருக்கிறது? அவர் பற்றுக்கும் அவர் ஈடுபட்ட தொழில் துறைக்கும் உண்டாகிய தொடர்பும் கட்டாயமும்தான் என்ன? எதுவும் இல்லையே! அரங்கர் வளமாக வைத்திருந்த கைப் பொருள் கொண்டோ அடிகளார் இயற்றிய நூல்களையும் இதழ்களையும் வாங்கினார்? அப் பொருள் கொண்டோ அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்தார்? அப் பொருள் கொண்டோ அடிகளார்க்கு மாளிகை கட்டுவதற்கும், அச்சகம் வைத்தற்கும், இதழ் நடத்துதற்கும் வேண்டும் போதெல்லாம் தொகை வழங்கினார்? இல்லையே! ஒரு பெருநிலை வணிக நிறுவனத்தில் பணி புரியும் இளையராம்-புதியராம்-நாடு கடந்தவராம்-ஒரு கணக்கருக்கு அப்படியென்ன பெருஞ் செல்வாக்கு? பெரும் பெருஞ் செல்வரும், வணிக வளவரும், தொழில் தோன்றலரும், அறிவுறு பெரியரும், ஆர்வ இளையரும், துடிப்புள்ள தொண்டரும் கேளும் கிளையுமாய் ஒட்டும் உரிமையுமாய்ச் சொல்லியது சொல்லியது நிகழ, வேண்டியது வேண்டியவாறு கிட்ட வாய்த்தது? அடிகளாரைக் கொழும்புக்கு ஒருகாலைக்கு இருகாலை அழைக்கும் ஆர்வமும், பெரும் பொருள் வழங்கும் திறமும் எப்படி வாய்த்தது? அதற்கு முன்னரே பொதுப்பணியில் அழுந்தி நின்று பலப்பல செய்து, பலப்பலரும் அறியும் பேறு அரங்கர்க்கு இருந்ததில்லையே! அடிகளார்க்காகவோ பொதுப்பணியில் இறங்க வேண்டும்? அடிகளார்க்கு உதவுவதற்காகவோ திருசங்கர் கம்பெனியைத் தொடங்க வேண்டும்? அடிகளார்க் காகவோ செந்தமிழ்க்களஞ்சிய இதழ்ப்பொறுப்பை ஏற்க வேண்டும்? அடிகளார் ஆர்வத் தூண்டலுக்கு ஆட்பட்டோ சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவ வேண்டும்? திரு. தி. செ. விசுவநாத பிள்ளையே கழகத்தைத் தொடங்கி யிருக்கலாம். அவர்க்கு அன்பராம் மா. திரவியம் பிள்ளையோடு இணைந்தே தொடங்கியிருக்கலாம். இல்லையேல், அவர்கள் மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியராய் அமைந்த தவத்திரு. அடிகளாரை இணைத்துக்கொண்டே நடத்தியிருக்கலாம். அடிகளாரும் தம்மை வந்து கலந்த திரவியனாரிடம் திருவரங்கரை விடுத்துத், தம்மைச் சார்ந்திருந்த ஒருவரைக் கைகாட்டி இணைத் திருக்கலாம்! இல்லையேல் தம்மையோ, தம் மக்களையோ இணைத்துக் கொண்டும் இருக்கலாம்! அரங்கர்மேல் அடிகள் ஆர்வத் துள்ளல் பாய்ந்தது ஏன்? நெல்லையார் தொடங்கிய கழகம், தொடக்கத்தை அடுத்தே சென்னையில் கிளையை நிறுவும் நிலைமை எளிதோ? நிறுவிய நாளில் பங்குகள் அனைத்தும் சேர்ந்துவிட்டனவோ? பங்காளிகளுள் எவரேனுமோ, ஆட்சிப் பொறுப்பாளருள் எவரேனுமோ சென்னையில் இருந்தனரோ? இல்லையோ! திருவரங்கருக்கேனும் சென்னையில் ஒட்டும் உறவும், கடையும், இடமும், வீடும் வாய்ப்பும் இருந்தனவோ? அதுவும் இல்லையே! அறிவுத் தொடர்பு உடையார் எல்லாரும் குடும்பத் தொடர்பினர் ஆகிவிடுவரோ? உதவியாய் இருந்தவர்கள் எல்லாரும் கொள்வினை கொடுப்புவினைக்குரியவராய் விடுவரோ? அடிகளார் எண்ணம் அரங்கரை மருகராக்கிக் கொள்ள முந்தியதேன்? அரங்கர் உள்ளமும் அதனை ஏற்றதேன்? அம்பிகையார் ஆர்வப் பெருக்கு அரங்கரை வரிக்க உந்தியதேன்? இருபால் குடும்பத்தவரும் இனிதின் இசைந்தது ஏன்? இசைந்த திருமணம் திடுமென இடைத்தடையுற்றதேன்? தடையைத் தகர்த்தெறியத் தக்க உரனை இருபால் காதலரும் இயல்பாய்க் கொண்டு முருகி நின்றதேன்? உண்மைக் காதலுக்கு உருகி நின்று அவர்க்கு உதவுதற்காகவே நல்லோர் பலர், நாடி ஓடிவந்து நல்லாற்றுப்படுத்ததேன்? அரங்கர்க்கும் அடிகளார்க்கும் பிணக்கம் உண்டாகியும், அரங்கர் அம்பிகை திருமணம் தடையுற்று நின்றும், தம் அன்புத் தொடர்பை விடாமல் பொதுத் தொண்டை மறவாமல், அடிகளாரைப் பல்கால் சென்று கண்டும் கலந்தும் அவர்க்கு ஆவன புரிந்தும், அவரைக் கொண்டு செய்வன செய்தும், இடையறவுபடாத அன்பை விரித்துக் கொண்டே, அரங்கரின் இளவல் சுப்பையவேள் காலமெல்லாம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததேன்? கடும் பகையிடையேயும், இனி நடவாது இத் திருமணம் என்று கைவிட்ட போதிலேயும் அவ்வாறு ஆகாமல், சான்றோர் மகிழ, அடிகள் தம் திருமகளாரை வழங்க, அரங்கர் தம் மனையரசியாய் அம்பிகையாரைக் கொள்ள வாய்த்ததும் நடைபெறக் கூடியதோ? பிணக்கம் நீங்கி இணக்கம் ஆகிய பின்னும் மாமன் மருகராய் அமைந்தபின்னும், இடைஇடைப் பிணக்கம் ஏற்பட்டும் இணக்கம் ஏற்பட்டும் அவற்றால் கழகப்பணியோ அதன் வளர்ச்சியோ குறைவுபடாமல் வளர்ந்து வந்தது, கருதிப் பார்க்கவும் இயல்வதோ? பங்காளர், ஆட்சிப் பொறுப்பாளர் உணர்வுக் கொந்தளிப்புகள், உள்ளக்கோள்கள் எத்தனை வகையாலெல்லாம் உருக்குலைக்க எழுந்தன? அவையெல்லாம் தலைமடங்க வீறுகொண்டு வெற்றி தலைதூக்கி நடக்க வாய்த்ததே! செயலாண்மைவல்ல அரங்கரும், அறிவாண் மைவல்ல அம்பிகையும் நடுவயதை நண்ணியும் நண்ணாதும், எண்ணியும் பரர்கவியாப் பெரும் பிரிவுக்கு ஆட்பட்டதும், அதற்குள்ளாகவே தம் ஒரு பிறவியில் செய்யத்தக்கவை யெல்லாம் குறைவுபடாமல் செய்வித்து அழியும் உலக;ல அழியா நிலைபெற்றதும் எண்ணிப் பார்ப்பின் உலகியல் விளக்கம் விளங்காமல் போகாது! திறவோர் காட்சி இன்னதெனக் கணியன் பூங்குன்றனார் பாட்டு தெளிவிக்கிறது. சங்கச் சான்றோருள் ஒருவராகிய அப்பெருமான், கல்பொருதிரங்கு மல்லல்பேர்யாற்று, நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர், முறைவழிப்படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் என்கிறார். (புறம். 192) கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின்வழியே போம் மிதவை போல அரிய வுயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் என்பது இவ்வடிகளுக்கு அமைந்த பழையவுரை. சிறுதுளியே பேராறு ஆகும் முறையும், பேராறு கல்பொருது இரங்கும் முறையும், சிறுதுளி உடல் அல்லது உருவம் மறைந்து மறைந்து மாறிமாறி வளர்ந்து வளர்ந்து வந்த முறையும், ஆருயிர் யாவும் பின்பற்றும் முறையாகும். ஆனால் ஏனைய உயிர்களிலிருந்து மாறுபட்டவன், மனிதன். ஏனைய உயிர்களுக்கில்லாத எண்ணித் துணியும் ஆற்றலும், தீதையும் நன்றையும் பகுத்தறி திறனும் மனிதனுக்கே உரியன. ஆதலின், அவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான முறைகளின் வழிப்படுதலோடு அந்நீர்வழிப்பாடும் புணைபோலவும் அவன் ஆருயிர் முறை வழிப்படுகின்றது என்றும், இல்வாழ்வான் தனிமனிதனாக வாழ்பவன் அல்லன்! தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்பவன். மிதவைகள் ஒன்றாமாறு இறுகப் புணைக்கப்படுதல் போல் இங்கு ஈருயிர்கள் அன்பெனும் பாசத்தால் ஒன்றாமாறு பிணிப்புற்று ஒருமையெய்தி வாழ்க்கைப் பேராற்றில் புணையே போல் அமைகின்றன. புணையின் உறுதியும் அது நீர்வழியில் தரும் பயனும் அதன் பிணிப்பின் வன்மையைப் பொறுத்தே அமைவன. அப் பிணிப்புறுதியே அப் பிணை தரும் பயனின் உறுதியுமாகும் என்றும், புணை, நீருள் முற்றிலும் ஆழ்ந்தால் நீரே அதை அழித்து விடும்! நீருள் சற்றும் ஆழாது நிற்பின் அது பயனற்றதாகும். அதன்மேற் செல்வோரை அவர் ஏறு முன்னரே அப் புணையே புரண்டு கவிழ்த்துவிடும். நீர் வழிப்படும் இப் புணையின் முறையே போல் இல்வாழ்வான் ஆருயிர் முறைவழிப் படுகின்றது என்றும் அறிஞர் கு. கோதண்டபாணியார் தரும் புத்துரை விளக்கம். திறவோம் காட்சியைத் தெள்ளிதில் விளக்குவதாம். (திரு. வ. சு. பவளவிழா மலர்! யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் திறன்) பிறந்தபிறப்புத் தொடர்பிலராய், முந்தைப் பிறப்புத் தொடர்பால் மூளும் தொடர்பை இயற்கைப் புணர்ச்சி, தெய்வக் கூட்டம் எனப் பழந்தமிழ் இலக்கணம் கூறுதல் திறவோர் காட்சியேயாம். அக் காட்சியே கோப்பெருஞ்சோழர் பிசிராந்தையார் தொடர்பு போலவும், மறைமலையடிகளார் திருவரங்கனார் தொடர்பு போலவும் நிகழ்த்திக் காட்டியதாம். இணைப்பு: 1 கடிதங்கள் திரு. வ. திருவரங்கம் பிள்ளை கொழும்பு V. Thiuruvarangam Pillai of Palayamcottai. கொழும்பு, 9 - 10 - 1913 84, Bankshall Street, Colombo, 9 - 10 - 1913. அன்பினு மருமையினு மிக்க சுப்பையாவுக்கு, உன் கடிதம், அருமை அண்ணாத்தவர்கள் கடிதம், அருமைச் சகோதரன் ஐயம்பிள்ளை கடிதம் மூன்று உரிய காலத்தில் கிடைத்தன. இவ்விடத்தில் என் சம்பள விஷயமாய்த் தருக்கம். அதனால் பணம் அனுப்பச் சுணக்கம். விரைவில் அனுப்பத் தெண்டிக்கிறேன். முன் எழுதியனுப்பிய அப்பியாசங் களைச் செய்து வருகின்றாயா? அத்தோடு கீழ்வரும் முறைப்படி அப்பியாசத்தைக் கீழ்க்கண்ட விவரப்படி செய்து வருக. சுவாசம் உடம்பின் வலிவுக்கு முதன்மையான சுவாச ஓட்டத்தை ஒருவாறு ஒழுங்கு செய்துகொள்ளல் வேண்டும். நல்ல காற்று ஓட்டம் உள்ள ஓர் அறையிலே தனிமையாகப் போய் நாற்காலியிலாயினும், நிலத்தில் மணை மேலாயினும் இருந்து கொள்ளல் வேண்டும். இருந்தபின் முதுகு, கழுத்து முதலிய உறுப்புகள் சிறிதும் வளையாமல் நேராக நிற்கும்படி செய்தல் வேண்டும். அதன்பின் வலது கைப்பெருவிரால் வலது நாசியை அடைத்து, இடது நாசியால் உள்ளிருந்த வாயுவை வெளியே மெதுவாய்க் கழித்துவிடுக. அங்ஙனங் கழித்தவுடனே அவ்விடது நாசியினாலேயே வெளியேயுள்ள வாயுவை மெதுவாக உள்ளே இழுத்த பிறகு வலது கை மோதிர விரலால் நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியைத் திறந்து உள்ளிழுத்த வாயுவை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. அவ்வாறு வெளிவிட்ட பின் மறுபடியும் அவ் வலது நாசியினாலேயே வெளி வாயுவை உள்ளிழுத்து இழுத்தவுடன் வலது நாசியை முன் சொன்னவாறே அடைத்துக்கொண்டு இடது நாசியைத் திறந்து உள்ளிழுத்த வாயுவை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. இங்ஙனம் இடது நாசியிலிருந்து வலது நாசிக்குப் போய்த் திரும்பவும் இடது நாசியில் வந்து முடிவது ஒரு சுவாச ஓட்டமாகும். இங்கே சொல்லியவாறு மாறுபடாமல் ஏழு தரம் சுவாசிக்க வேண்டும். இவ்வப்பியாசத்தை உறக்கம் நீங்கி எழுந்தவுடனும், நீராடிய பின்னும், அந்தி நேரத்திலும், வெறு வயிற்றில் முறை தவறாமற் செய்து வருக. இவ்வப்பியாசத்தால் இரத்தம் சுத்தப்பட்டு உடம்பிலுள்ள அகக்கருவிகள் வலுப்படுவதுடன் மனமும் தலைவிரிகோலமாய்ப் பலவாறு ஓடும் ஓட்டத்தினின்று மடங்கி அடங்கும். கோபமாவது வேறு மனவருத்தமாவது கவலையாவது உண்டாகும் போதெல்லாம் மேற்சொல்லியவாறு ஏழு தரம் சுவாசித்தால் அவையெல்லாம் நீங்கிச் சிந்தை களங்கம் அற்று அமைதியாய் நிற்கும். இக் கடிதத்தைப் பந்தோபதாய் வைத்திருந்து அதன்படி நீயுந் தம்பி அய்யம்பிள்ளையையும் இவ்வப்பியாசத்தைப் பழகி வரும்படி சொல்லிக்கொள்வதுடன் காண்பித்துக் கொள்ளவும். உன் சுகத்தைக் கோரித் திருவருளை வழுத்துகின்ற அன்புள்ள, (ஒம்.) வ. திருவரங்கம். வ. திருவரங்கம்பிள்ளை, பெருமாள் வடக்குத் தேர்த் தெரு, பாளையங்கோட்டை. நாள். 19-10-1941 அருமையிற் சிறந்த அன்னை திருவடிக்குப் பணிவுடன் வணக்கஞ் செய்து எழுதுவன. உன் அருமைக் கடிதம் வந்து நீலா படித்துப் பார்த்து வருந்தினாள். நீ ஏன் வருந்துகின்றாய்? நீ உன் உயிருள்ள போதே எல்லாப் பேறுகளையும் கண்ணாற் பார்த்து மகிழ்ந்தாச்சுது. பேரன் பேத்திமார், மக்கள், மருமக்கள் எல்லாரும் பெரும்பாலும் நல்லவர்களாகவே அமைந்திருப்பதும் உனக்கு என்றும் மகிழ் வினைத் தரக்கூடியதே. மகளை நினைத்தற்கு அறிகுறியாகப் பேரன் எங்களுடனேயேயிருந்து வருவதும் உனக்கு மகிழ்வினையே தந்துவரும். பொருளில்லாமற் கஷ்டப்படுகிறோமோ, படுவோமோ என்ற கவலையும் உனக்கு இருக்க இடமில்லாம் ஆண்டவனே எங்களுக்குத் துணைபுரிந்து வருவதும் உனக்கு மகிழ்ச்சியையே தரும். உன் கண் நலமாக வேண்டி நீலாளும் நானும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண் பெற்ற தேவாரத்தை இன்றுமுதல் ஓதிவரத் தீர்மானித்து ஒதி வருகின்றோம். உன் பேரன், பேர்த்திமார் களையும் அவ்வாறே ஓதி வர ஏற்பாடு செய்திருக்கின்றோம். நீ என்ன நினைத்துக் கொண்டாலுஞ் சரி, உன் பேரன் பேர்த்திமார்கள் அத்தனை பேரும் இடைவிடாமல் நீ எப்பொழுது வருவாய், எப்போழுது வருவாய் என்றே கேட்ட வண்ணமாயிருக்கின்றார்கள். ஆவுடையப்பன் ஆச்சி இங்கேயிருந்தால் கண்ணை நீ பார்க்கமாட்டாயோ? அப்பா என்று கேட்கிறான். கண்ணுக்காக நீ கவலைப்படாதே. அழாதே. நீ அழுதால் என் மனந் தாழாது. நான் உன்னிடத்தில் பேரன்பு கொண்டவன் என்பது உனக்கு நன்கு தெரியும். உன்னை நினைத்துவிட்டால் என்னையறியாமலே என் கண்ணில் ஊற்று நீர் ஒழுகிக்கொண்டேயிருக்கும். உன் வயிற்றிற் பிறந்தமை யினாலேயே எனக்கு இத்தனை சீரும் சிறப்பும் வந்ததாக இன்றும் என்றும் நினைத்து நடந்து வருகின்றேன், வருவேன். பிறர் பொருளுக்காசைப்படாமலும் பிறர் நலம் பேணிப் பிறர்க்கு என் பொருளை வாரி வாரி இறைத்தாலும் ஆண்டவன் இன்றுவரை எனக்கு நன்மையே செய்து வருகிறதை எண்ணிப் பார்த்து அவன் திருவடிகளை இடையறாது போற்றி வருகின்றேன். இங்கே உனக்கு எல்லா வசதிகளும் உண்டு. வெளிக்குப் போக, பிள்ளைகளோடு அளவளாவி மகிழ டாக்டர்கள் எல்லா இடத்திலும் ஒன்று போலவேதான் கவனிப்பார்கள். நீ இங்கு வந்து அங்கு கண்ணைப் பார்க்கச் செய்யவிடாமல் வரவழைத்து விட்டாயே யென்று சினந்து பேசிவிடுவாயோவென்று அஞ்சித்தான் வாளாவிருந்தேன். நான் என்றுமே இரக்கமான நெஞ்சுடையவன் என்பதை எவரும் நன்குணவர். உண்மையை மறைக்க முடியாது. செல்வ நிலையாமையை எண்ணி நடக்குமாறு ஆண்டவன் அருள் புரிய வேண்டிவரும். அன்பன், (ஒம்.) வ. திருவரங்கம். ஓம் பல்லாவரம், 29-8-1917 பிற்பகல் நான்குமணி. அன்புருவாய் என்னிரு கண்மணியாய்த் திகழும் செல்வச் சீரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலங்களம் உண்டாவதாக. 26ஆம் தேதி இரவு 12 மணிக்குத் தாங்கள் அன்புடன் எழுதிய கடிதம் இப்போதுதான் என் கைக்கு எட்டியது. இதனைக் கண்டதும் ஸ்ரீமான் கோபாலகிருஷ்ணன் பிள்ளை யவர்கட்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றேன். ஆனால் அது நாளைக்கே அவர்கள் கைக்கு எட்டுமோ என்பது ஐயந்தான். தாங்கள் கடிதம் சிறிது முன்னே கிடைத்திருந்தால் உடனே காரியங்களில் நாம் கவலையின்றி யிருக்கும்பொருட்ட மாதந் தோறும் பொருளுதவி செய்ய முன்வந்த அன்பர்கள் நமது பெருமைக்குத் தக்கபடி உதவினாற்றான் அவர்கட்குப் புகழும் புண்ணியமுமாம். அங்ஙனமின்றிப் பிச்சை கொடுப்பதுபோல ரூபா இரண்டரையும் இரண்டுந் தர எண்ணுவார்களாயின் அஃது அழியாப் பெருங்கல்விச் செல்வத்தைப் பெற்ற நம்மையும் நமக்கு அதனை அருளிய சிவபிரானையும் குறைவுபடுத்துவ தாகும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்றபடி நாம் அச்சிறிய தொகைகளைப் பெற இசையோம் என்பதை நம் அன்பர்கட்குத் தெரிவித்து விடுங்கள். ஸ்ரீமான் கோபால கிருஷ்ணபிள்ளையவர்களும் கொழும்பிற் பழைய வியாபாரியும் பெரிய கடைக்காரருமாயிருத்தலால் அவர்கள் பால் பத்து அல்லது ஏழு ரூபாய்க்குக் குறைந்தது வாங்க வேண்டாம். இந்தக் கடிதத்தையும் அவர்கட்கும் ஏனை அன்பர்கட்கும் காட்டுங்கள். தாங்கள் குறிப்பிட்ட மற்ற அன்பர்கட்கும் உடனே கடிதங்கள் எழுதுவேன். ‘áWnjtijf£F cÆ®¥ gÈÆlyhkh? என்னுந் துண்டுப் பத்திரஞ் சித்தமாகின்றது. ஒரு வாரத்தில் அனுப்புவேன். காகித விலை இவ்வாரம் இன்னும் மிகுதியாயிற்று. ஞானசாகரம் 8ஆம் பதுமமுஞ் சித்தமாகின்றது. பெரியபுராண வுரையுஞ் சித்தமாகும். தொகை அச்சுக்கும் உரைக்கும் உடனே அனுப்புங்கள். மற்றை பின். சுகம்; அன்புள்ள, வேதாசலம். மறைமலையடிகள் திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம் 17-9-1948 அன்பிற் சிறந்த வ. சுப்பையாபிள்ளைக்கு அம்பலவாணர் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக. உங்களருமை மனைவி குழந்தைகளும் உங்கள் தமையனார் குழந்தைகளும் மருமகன் முதலியோரும் நலமுடன் வாழும்படி அம்பலவாணர் திருவருளை வேண்டுகிறேன். எனது குடும்ப நிலையும் எனது தொண்டும் யானிருக்கும் போதே ஓர் ஒழுங்கு பெறுதற்கு விரைந்து உதவி செய்வீர்களாயின் அஃதுங்கூட கழியாப் புகழ் புண்ணியங்களைத் தரும். கழகம் பொதுவுடைமை யாதலால் தொழில் முறையில் அஃதுங்கட்குப் பெயரும் புகழும் பயவாது. சிறப்பு முறையில் என்னுடைய நூல்கள் பரவும் முறையில் தொண்டாற்றுவீர்களாயின், அது தமிழ்மக்களும் பிறரும் நூல்களை என்றும் புகழ்ந்து பாராட்டுதற்கு இடஞ்செய்யும். இனித் தமிழுலகில் என்னுடைய நூல்களே பெரிதும் பயிலப்படும். அதை நினைந்து யான் சொல்லுமாறு செய்யுங்கள். என்னும் நிலையத்தையும் நூல்களையும் பிறர் வாங்குவதைவிட, நீங்களே வாங்கினால் நமதுடைமை நமது குடும்பத்திலேயே இருந்து உலகிற்கு பெரும்பயன் தரும். பாளையங்கோட்டையிலுள்ள உடைமை முழுதும் விற்று என்னுடைய நிலையத்தையும் நூல்களையும் வாங்கிக்கொண்டு நீங்களெல்லாரும் பல்லாவர நிலையத்திலேயே நிலையாகக் குடியேறி நன்கு உயிர் வாழலாம். செலவு சுருங்கும். பிள்ளைகள் எல்லாங் கல்வியில் தேர்ந்து மேனிலையடைவர். ஓர் அச்சகமும் இந் நிலையத்திலேயே வைத்துக்கொண்டு என் நூல்களை யெல்லாம் பதிப்பிட்டு வெளியிடலாம். மிகுதியாக ஊதியமும் கிடைக்கும். எனது பிற்காலம் அமைதியாகச் சிவவழிபாட்டிற் செல்லும். நம் குடும்பத்தார் தனித்தமிழ்த் தொண்டிலே முழுதும் ஈடுபட்டு நின்ற பெருஞ்சிறப்புண்டாம். இன்னும் இது பற்றியனவெல்லாம் நேரிற் பேசுவம். விரைந்து வருக! சிவபிரான் திருவருள் வழங்குக! தனித்தமிழ் ஓங்குக! நலம். அன்புள்ள, மறைமலையடிகள். நாள் அருமைப் புதல்வன் திருநாவுக்கு, நின்னருமைத் தமக்கை நீலாம்பாள் இறந்த செய்தி கேட்டு, யானும் நின் அன்னை தமையன் தங்கையும் மற்றையோரும் அனலிடை மெழுகாய் உருகி அரற்றினோம். பிறப்பை வகுத்த இறைவன் இறப்பையும் உடன் வகுத்தால் சிற்றுயிர்களாகிய யாம் என் செய்வதென்று கலங்கினோம். தாய் தந்தையரை ஒருங்கிழந்த நின் தமக்கையின் மக்கள் நிலைமையை நோக்கி நெஞ்சம் நீராய்க் கரைகின்றது. அவ்வுயிர்களைப் பிறவியிற் கொணர்ந்த இறைவனே அவர்களைக் காத்துப் பயன்படுத்தும். வீட்டிலுள்ளார் அனைவர்க்கும் எங்கள் ஆறுதல் மொழிகளைத் தெரிவி. மறைமலையடிகள். இணைப்பு : 2 இரங்கல் மாலை : 1 தமிழ்த் திருவரங்கர் இறையடி எய்தியமைக்கு இரங்கித் திருவரங்கர் இளவலார் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு அறிஞர் பெருமக்கள் விடுத்த இரங்கலுரைகளுள் சில தமிழ்மக்களின் தவக்குறையை என்னென்பது! தங்கள் (வ. சு.) அண்ணாவின் தமிழ்ப்பற்றுக்கு எல்லை காண்பரிது! என் அண்ணாவின் (ந. மு. வேங்கடசாமி நாட்டார்) 60ஆம் ஆண்டு நிறைவு விளம்பரம் அவர்களுக்கெட்டியதும் அவர்கள் தாமாகக் கடிதம் உறைகள் முதலாயின அச்சிட்டுப் பொருள் திரட்டத் தொடங்கினர். இத்தகைய அன்பு யான் யார்மாட்டும் காணவில்லை. இப் பெரியார் ஏன் இவ்வளவு இளமையில் இவ்வுலக வாழ்வை நீத்தல் வேண்டும்? இறைவன் செயலில் நீதியுண்டு என அறிஞர் கூறுகின்றனரே! எனக்கு விளங்வில்லை! - மு. கோவிந்தராச நாட்டார். பழைமை வாய்ந்த சொன்மணிக்கலன்கள் பல ஒளி பெற்றிலங்கத் தூயவாக்கியும் புதுக் கலன்கள் பல சமைப்பித்தும் அழகுநலங் கனியத் தனக்கு அணிந்து மகிழ்ந்த திருமகனை இழந்தது தமிழ்த் தாயின் தவக்குறைவேயாம். சைவ உலகமும் ஒப்பற்ற திருத்தொண்டர் ஒருவரை இழந்தது. - நா. ஆறுமுகம் பிள்ளை. நல்ல பதிப்பாசிரியர் ஒருவர் திடீரென இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கியது தமிழ் உலகை மிகவும் வருத்துகிறது. எனது உள்ளம் உண்மையில் உணர்வற்று நிற்கிறது. உடைந்து உடைந்து பாழாகிறது. - சிறுவை நச்சினார்க்கினியன். திரு. வ. தி. தமிழகத்தின் உயர்வுக்கு உழைத்தவருள் ஒருவர். ஒருவகையில் தமிழகத்தின் முதல் தலைவரும் ஆவர். கண்கவர் கட்டடங்களுடன் பொன்பூச்சொளி எழுத்து களுடன் இளைஞரும் விரும்பிப் போற்றுமாறு மேனாட்டார் பதிப்புகளை ஒப்பத் தமிழ்நூல்களை எளிதே எவரும் பெறுமாறு முதற்கண் பதிப்பித்த பெருமையை உடையவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்று கூறினாலே தமிழ்மக்கள் எவருள்ளத்தும் அழகிய கண்கவர் வனப்புற்ற நூல், பிழையில்லாத நூல், தமிழ் மாண்பு காணும் நூல், வாழ்க்கையின் உயர்வுக்காய நூல், எவரும் விரும்பித் தம் இல்லத்துட் பெற்றுப் போற்றும் நூல் என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தனிப்பெருமை கண்ட பெரியார் அவர். பேராசிரியர் பெருந்தகைமையும், பெருநாவலர் சிறப்பும், முதுபெரும் புலமையும் பூண்டுள்ள எங்கள் மறைமலையடி களாரின் மருகராயிற்றே! எங்கள் தமிழ்ப் பெருமாட்டி புலவர் போற்றுந் தனித்தமிழ்ச் செல்வி நீலாம்பிகையின் கணவராயிற்றே! வீறுற்ற தமிழரை யெல்லாம் ஒருங்கே திரட்டி ஒப்புயர்வற்ற கட்டுரை, சொற்பொழிவு நூல் வெளியீடு இவற்றால் தமிழகம் ஓங்க நாளும் திருப்பணி பூண்டொழுகும் பெருந்தமிழ்த் தளபதி திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் தமையனார் ஆயிற்றே! என்னே இஞ்ஞாலம்! நிலத்தின் பொறையாக நாட்டின் புல்லுருவியாகத் தமிழின் பகையாக எத்துணையோ பயனிலார் வாழ்வதைக் காலம் அறியவில்லையே! என் இனிய பெருமானின் இன்னுயிர் என்றும் இறவா இன்பநிலை எய்தி எழிலோடிருக்கு மாறு வேண்டுகின்றேன். - சிவ.குப்புசாமி. தங்கள் தமையனார் அவர்கள் மறைவினால் தென்னாடு ஓர் அரியபெரிய கரும வீரரை இழந்தது. தமிழரும் சைவசமயிகளும் தமிழறிவு வளர்ச்சிக்கும் சைவசித்தாந்த ஞானம் பரவுதற்கும் பெரும்பாடு பட்டுழைத்த ஒரு பெரு முயற்சியாளரை இழந்தனர். நான் என்பாற் பேரன்பும் பெருமதிப்புங் கொண்டிருந்த அருமை நண்பரை இழந்தேன். - வெ.ப.சுப்பிரமணி முதலியார். நம் அருமை உடன்பிறந்தார் இறையடி எய்தியது உணர்கின்றேன். அந்தோ! கழகம் செய்த நற்றவம் உருப்பெற்றதென விளங்கினர்! தமிழ்த்தாய்க்குக் கழகம் செய்துள நற்றொண்டுகட் கெல்லாம் முதல்வராக விளங்கினார்! தம் அருமை நண்பர் நாவலருடன் தாமும் தமிழ்த்தாயின் திருவடி நீழலில் இனிது இருப்பர்! என் செய்வாம்! தமிழர்தம் வலி, இங்ஙனம் அண்மையில் ஈராற்றல் பிரிந்தேகியதே! - அரங்க வேங்கடாசலம் பிள்ளை, கரந்தை. தமிழ் நூல்களைச் சிறந்த முறையில் வெளிவரச் செய்த ஒப்பற்ற பெருமை அவர்களுக்கே உரியது. அவர்களுடைய சிறந்த தமிழ்த்தொண்டுக்குத் தமிழகம் என்றும் கடமைப்பட்டதாகும். அவர்களுடைய பிரிவு ஆறத்தக்கதுமில்லை, ஆற்றத்தக்கது மில்லை. - நீ.கந்தசாமி, பள்ளியக்கிரகாரம். பல இடர்களுக்கு இடையே கழகத்தை நடத்திச் சிறப்புறச் செய்த பெருமை திருவரங்கம் பிள்ளை ஒருவர்க்கே உரியது. - அருட்டிரு. சச்சிதாநந்த அடிகள், கொரடாச்சேரி. அவர்களது மலர்ந்த முகமும் இனிய பேச்சும் எப்போதும் அகக்கண்முன் நிற்கின்றன. - திரு. சிவசைலம் பிள்ளை. அவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த அரிய தொண்டை எந்தத் தமிழனாலும் மறக்க முடியாது. தென்னிந்திய சைவசித்தாந்தக் கழகம் நிறுவப்பட்டதன் பின்னரே, தமிழர் களாகின்ற நாம் அழகான, கண்ணைக் கவரக்கூடிய மகிழ்ச்சி தரக்கூடிய தமிழ் நூல்களைப் பார்க்கத் தொடங்கினோம். - சி.பன்னிருகைப் பெருமாள் முதலியார். திருவரங்கம் பிள்ளையவர்கள் செய்துவந்த தொண்டு மலையினும் மாணப் பெரிது. தமிழுலகும் சைவவுலகும் ஈடுசெய்ய முடியாமல் வருந்தா நிற்கும். - பி.வேங்கடாசலம் பிள்ளை. கேட்டுத் திடுக்கிட்டு உளமுடைந்தேன். என்னே தமிழன்னையின் போகூழ்! அன்னை இரு கண்களில் ஒன்று இழந்தன்றோ நிற்கின்றாள்! ஒப்பற்ற தமிழ்த் தொண்டர்! கழகத்தின் உயிர் நாடி, அவர் உருவமும் தமிழ் நன்மக்கள் மனத்தில் நின்றுலவத் தகுந்த முறையில் ஏற்பாடு செய்யத் தமிழுலகு நன்றியுடன் முந்துறும் என எதிர்பார்ப்பது மிகையாகாது. - ஆர்.பாலகிருஷ்ண முதலியார். நானும் என் மனைவியும் ஆறாத் துயரடைந்தோம். என் மகள் காமாட்சி படிப்பதற்கு அவர் அன்புடன் நூல்கள் அனுப்பினார். நாங்கள் திருச்சியில் இருந்தபோது என் இளைய மகள் உடல் திட்பமடைய எண்ணெய் பல தடவை அன்புடன் அனுப்பியதை எண்ணும்போது மனம் வருந்துகிறது. - இராவ்பகதூர் க.அரங்கசாமி முதலியார். தமிழர் உண்மைத் தமிழராக வேண்டுமென்றும் பேரவாவுடன் ஓயாது உழைத்து வந்த பெருந்தகையாளர் வான் கலந்தார். அறிவுடையவர்; அடக்கமுடையவர்; தமிழ்மொழி யிடத்தும் சைவ சமயத்திலும் மாறாத் தனி அன்புடையவர்; தமிழ்ப் பெரியார்; திருவரங்கத்தை எந்தப் பெருவரங்கத்தில் இனிக் காணப்போகின்றோம்! நீறணிந்த நுதலும் புன்னகை பூண்ட முகமும் அகக் கண்ணெதிரில் தோன்றுகின்றன. கல்வியிற் சிறந்த நீலாம்பிகைக்கும் கருத்துக்கிசைந்த உங்களுக்கும் என்ன ஆறுதல் சொல்ல இயலும்? - பண்டித எ.எ.ஆனந்தம். கழகத்திற்கும் அதன் வாயிலாகப் பல நல் அணிகலன் பெற்றுவந்த தமிழகத்திற்கும் ஈடுசெய்ய இயலாத துன்பமே இது! - மு.வரதராசனார். திடுக்குற்றேன்! நம்ப முடியவில்லை. எப்படி மறைந்தனரோ! அன்பார்ந்த அவர்கள் திருத்தோற்றம் என்முன் காட்சியளிக் கிறது. எவ்வளவு ஆற்றல்! எத்துணை வீரம்! ஆற்றிக்கொள்ள முடியவில்லை. எவ்வாறு திரு. அண்ணியார் அவர்கள் உள்ளம் துடிக்கின்றதோ! குழந்தைகள் எங்ஙனம் கையற்று வருந்து கின்றனவோ! திரு. அன்னையார் அவர்களுடைய பெற்ற வயிறு எப்படி வெதும்புகின்றதோ! தங்கள் உடன்பிறந்த நெஞ்சம் எவ்வண்ணம் நைகின்றதோ! - கீ.இராமலிங்கனார் இந்தப் பிரிவு துன்பமென்னும் முத்திரையை நம் அகத்தில் பதிப்பித்துச் செல்கின்றது. - நவாப். டி.எ.இராசமாணிக்கம். தங்கள் தமையனார் அவர்களது மலர்ந்த முகமும் இனிய பேச்சும் என் கண்முன் நிற்கின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன் செல்விக்குக் கட்டுரைகள் எழுதும்படி திரு. பிள்ளையவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார். இப்பேருதவியை யான் என்றும் மறவேன். - என்.குழந்தைவேலன். அவர்கள் உடல்நலமின்மை அறிந்து சிறிது காலத்திற்கு முன் உடல்நலம் பேணல் தலையாய பணி என நினைவூட்டி எழுதினேன். அவர்கள் தமிழ்மொழிக்குச் செய்துவந்த தொண்டு எவராலும் மறக்கொணாதது. புலவர்க்குச் செய்துவந்த தொண்டும் அவ்வாறே. என்னிடத்தில் அவர்கள் வைத்திருந்த அன்புக்கு எல்லையில்லை. - தூ.சு.கந்தசாமி முதலியார். யான் சில நூல்களும் கட்டுரைகளும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பூட்டி வந்துள்ளார். அவர் மனம் குளிருமாறு நிரம்ப எழுத இயலாதவனாயொழிந்தேன். - ச.சச்சிதானந்தம் பிள்ளை. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்ற தொடரை நினைந்தும், உடன் பிறப்போடு தோள்வலி போம் என்பது நினைந்தும் என் உள்ளம் உருகிக் கவலைக் கடலுள் ஆழ்ந்தது. - வித்துவான் வை.குஞ்சிதபாதம் பிள்ளை. எதிர்பாராத மறைவு உடலையும் உயிரையும் வாட்டிக் கொண்டிருக்கின்றது. அருமைக் குழந்தைகள் ஒப்புவிக்கப் பெற்றிருப்பதால் அவர்கள் பொருட்டு உடலைப் பேணி வைத்துக் கொண்டிருத்தல் வேண்டும். திலகவதியார் சரித்திரம் எழுதிய அம்மைக்கு யான் கூற வேண்டியது யாதுளது? - சித்தாந்த ஆசிரியர் ந.சிவகுருநாத பிள்ளை. நம் அரும்பெருந் தமிழரை இழந்தோம். அருமை நீலாவையும் மக்களையும் நினைக்குந்தோறும் நெஞ்சம் நடுங்குகிறது. நீலாவுக்கும் உடல் நலமில்லை என்று கேள்விப் பட்டேன். ஆண்டவன் அமைதி அளிப்பாராக. துன்பம், பெருந்துன்பம். - டாக்டர். S.jUkh«ghŸ. துயரெல்லாம் தாங்கித் துணை தந்த பெரிய தந்தையாம் வ. தி. பிரிந்தனர் என்ற நம்பொணாச் செய்தி கேட்டுச் செயலறுகின்றேன். அவர் நீத்த உலகில் இனி எம் போன்றார்க்கு ஏது இடன்? அன்னை நீலக் கண்ணம்மையார் குழந்தைகள் துயர் எண்ணத் தாளகில்லேன். தமிழன்னை தளையறுமுன் ஒப்பற்ற தனயனை இழந்தனன். - கா.அப்பாதுரைப் பிள்ளை. முயற்சித் திருவாளர்! அல்லும் பகலும் தமிழுணர்ச்சிப் பெருவெளியில் உலவிய பெரியார்! நாவலர் நாட்டாரவர்கள் பிரிந்த துயரத் தீ ஆறுவதற்கு முன்பே இப் பிரிவுத் தீ எமது வயிற்றிற் கொதிப்பூட்டுகிறது. - புத்தனேரி ரா.சுப்பிரமணியன். கழகக் கற்பகம் தன் ஆணிவேரை இழந்துவிட்டது. - வித்துவான் வி.சிவக்கொழுந்து. நண்பர் நாட்டரையா அவர்கள் மறைவு குறித்து உள்ளத்தில் எழுந்த செந்தீயில் இது நெய் சொரிந்தது போலாயிற்று. - அ.மு.சரவண முதலியார். எந்தை போன்று எனக்கு உறு துணையாக இருந்தருளியவர். பொறுமையும், இனிய நகையும், அன்பும், பண்பும், அருளும் நிறைந்த அண்ணல். தமிழ்க் கடவுள். ஆற்றொணாத மனக் கலக்கம். ஏங்குகின்றேன். என் செய்வேன்! - வித்துவான் ந.சேதுரகுநாதன். அன்புள்ள அம்மையீர்! செய்தியறிந்து பெரிதும் வருத்த முறுகின்றேன். கற்றுத்துறை போய கற்பரசியாராகிய தங்களுக்குக் குழந்தைகள் சின்னஞ் சிறுவராக இருக்கும் இந் நிலையில் கணவனார் பிரிவு நேர்ந்தது ஆற்றொணாத்துயர் விளைப்பதொன்றே! நிலைமையாமையின் இயல்பு இருந்த வாறிதுவெனக் கொண்டு ஆறுதல் அடைய வேண்டும். உள்ள நிலையைத் துயரத்திற்குள்ளாக்காமல் மக்களைப் பேணுங்கள்; தமிழ்நூல்களை ஆராய்ந்து புதிய நூல்களை எழுதுங்கள். இச் செயலே ஆறுதல் எய்துதற்குரிய நெறியாகும். தமிழன்னையின் அருமை மகளாகிய உங்களுக்கு இங்ஙனம் நேர்ந்தது கருதி, என் உடனிரக்கத்தை இதனடியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். கணவனார் நல்லுயிர் இறையடி நீழலில் இன்புற்று அமைதி எய்துக. இறையருள் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக. - பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். இற்றைக்குத் தமிழ்நாட்டில் பரவியுள்ள தனித்தமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு வாய்ந்தவர்களில் தங்கள் அருமைத் தமையனாரும் ஒருவர். நம் நாட்டிற்குப் பல துறைகளில் பணிகள் செய்ய ஆற்றல் வாய்ந்தவர். தம் வாழ்நாள் முழுதும் வேண்டிய தொண்டாற்றினார். தொண்டு செய்ய வேண்டியவற்றிற்குத் தக்க ஆக்க வேலைகளைச் செய்துவிட்டுச் சென்றார். - பி.வி.அரங்கநாத முதலியார், திருவல்லிக்கேணி அண்ணா! பொறுக்க முடியாத துன்பச் செய்தி. செய்தியறிந்தவுடன், அருமை மகள் பாளையங்கோட்டையில் நோயால் இருந்ததும், அதற்குத் தந்தை போல் இருந்து ஆற்ற வேண்டிய எல்லாப் பொறுப்புகளும் அவர்கள் உடனிருந்து செய்த பேருதவிகளும் அடியேன் மனக்கண்முன் தோன்றின. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தேர்ச்சி பெற்ற திருவாகத் திறமையுள்ள பெரு முயற்சியாளரான தக்கவரைப் பறி கொடுத்துவிட்டது. அடியேன் யாது ஆற்றல் சொல்ல முடியும்? - வா.தி.மாசிலாமணி முதலியார். அவர்கள் இல்லையேல் கழகம் ஏது? வனப்பு மிகுந்த பதிப்புகள் ஏது? கல்லாதாரையும் கற்கும்படி அவ் வெளியீடுகள் செய்கின்றனவே! - பொ.மாணிக்கஞ் செட்டியார். அடைந்தவர்களை அன்புரை கூறி ஆற்றுந்தன்மையும், எல்லாவற்றிற்கும் மேலாக அக்காள், குழந்தைகளைப் பராமரித் தலும், எண்ண எண்ண என் மனம் சஞ்சலப்படுகிறது. - வித்துவான் மதுரை நாயகம், திருச்சி. தமிழன்னை ஒரு காலை இழந்தாள், தாங்கள் ஒரு தோளைப் பறி கொடுத்தீர்கள்; அன்னை நீலாம்பிகை தன் ஒரு கூறு நீங்கினர். முத்தண்ணாவை இனிக் காணமுடியாது. - டாக்டர் S.M.ekátha«, சேலம். தமிழ்நாடு முழுதும் அவர்கள் பருவுடல் மறைவு குறித்து வருந்துகின்றது. கம்பீரத் தோற்றம்; சிங்க நோக்கு; பீடு நடை; அஞ்சா நெஞ்சம்; என்ன செய்வது? - அ.திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்தி. கவற்சி, குறிக்கும் தரத்ததன்று. சரிப்படுத்த இயலாத பேரிழப்பு. தமிழரின் நற்காலம். தமிழ்மொழியின் செழிப்புக் காலம், தனித்தமிழின் வளர்ச்சிக் காலம் இன்று துவங்கிற்று என்னும் நன்னிலைக்கு அடிகோலிய அண்ணலார். தவக்கோலங்க கொண்ட திரு. நீலாம்பிகையம்மையவர்கட்கும் துணைவலியிழந்த தங்கட்கும் எங்கள் ஆழ்ந்த துயரம் தெரிவிக்கின்றோம். - சுகவனம். சிவப்பிரகாசம் பிள்ளை. பிள்ளையவர்கள் சொல் வணக்கமும், சொல் விருந்தும் மறக்கற்பாலனவல்ல. சென்னைச் சிவனடியார் திருக் கூட்டத்தின் சார்பில் சிவஞானபோத விரிவுரைகள் நடத்த அவர்கள் தோன்றாத் துணையாய் இருந்து அளித்த ஆதரவு போல்வனவும் மறக்கத்தக்கன அல்ல. - ந.வே.அப்பாத்துரை முதலியார், சென்னை. சைவத் திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளை அவர்கள் எமது பழைய நண்பர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னையில் நிறுவப்பட்ட 1921ஆம் ஆண்டில் இருந்தே அவர்களை எமக்கு நன்றாகத் தெரியும். தனிச் செந்தமிழ்ச் செல்வியார் நீலாம்பிகை அம்மையாரை அவர் தம் குழவிப் பருவத்திலிருந்தே எமக்குத் தெரியும். யாம் அம்மையாரை 1922இல் யாழ்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு திரு. மறைமலையடிகளார்தம் பொதுநிலைக் கழக மாளிகையின்கண் காண்பேமாயினேம். 1925இல் பிள்ளை அவர்கள் செல்விக்குக் கட்டுரைகள் எழுதுமாறு எம்மைத் தூண்டி எமது யாழ்ப்பாண முகவரிக்குப் பத்துக் கடிதங்கள் வரையில் திருத்தமும் அழகும் அமைந்த தமது கையெழுத்தால் எழுதுவாராயினர். அவ்வாண்டிலேயே அவர்களைச் சிதம்பரத்தில் திருவாதிரை நாளில்..... நீறு விளங்கிய நெற்றியோடும் தாழ்வடந் தொங்கிய கழுத்தோடும் காணும் ஓர் அரிய வாய்ப்புப் பெற்றேம்.... தமது இயல்பான உயர்ந்த வழக்கம் போலவே தமது அகமலர முகமலர இனிது உரையாடினார்கள். கழகப் பதிப்பு நூல்கள் தமது கண்கவர் வனப்பால் யாழ்ப்பாணத்திலே எவ்வாறெல்லாம் பரவுகின்றன என்பதை ஈண்டு யாம் எடுத்தெழுத உறுதியாகக் கருதினும் இக் குறிப்பின் விரி வஞ்சி விடுக்கின்றேம். - சுவாமி உருத்திர கோடீசுவரர், சென்னை. கழகம் என்ற துணையானே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்று மக்கள் நினைக்கவும் பேசவும் நிற்கவும் பெருமை திரு. வ. தி. அவர்களின் முயற்சிப் பயனாகும். அவர்கள் சான்றோம் மெய்ம்மறு; தமிழர் செல்வம்; தமிழ்ப் புலவர் தோழர். - வித்துவான் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை. கூற்றுவன் என் ஆரூயிர் நண்பன் செய்து போதரும் அருந்தொண்டைத் தானும் அறிந்தானில்லையே! அவர் தம் அன்பு கனிந்த முகத்தையும் பாடறிந் தொழுகும் அவரது உயரிய பண்பையும் நண்பரொடு அளவளாவும் வகையையும் எங்ஙனம் மறப்பேன்! ஆற்றொணாத் துயரம்! - வே.நாகலிங்கம், வட்டுக்கோட்டை, இலங்கை. தமிழுக்கும் சைவசித்தாந்த நூல்களுக்கும் தம் உடல் பொருள் ஆவி மூன்றனையும் அர்ப்பித்து உண்மைச் சைவத்தமிழ் மக்கள் உள்ளத்தை அரியணையாகக் கொண்டு உவந்திருந்து தமிழகம் முழுவதும் இனிது புரந்த பெருந்திறல் பேர் பெறும் வள்ளல் திருவரங்கனார் இறைவன் திருத்தாள் அடைந்தமை கேட்டுத் துன்பக்கடற் சுழியில் ஊசலாடுகின்றனன். - அ.வரத நஞ்சைய பிள்ளை. இரங்கற் பாக்கள் தமிழந் தணன்பெற்ற தையலாள் கேள்வ! தமிழர் குடியின் தவமே! - தமிழர் பணிக்கோர் தனியிருப்புத் தூணே! பழியேம் பணிக்குற்ற தின்று பழுது. எந்தையே எந்தாய்த் தமிழ்ப்பணிக் கென்றுதன் சிந்தையே தான்கொடுத்த செல்வனே! - நிந்தையே கொண்டும் தமிழ்ப்பணியிற் குன்றாத கோமானே! என்றுனைக் காண்பம் இனி? கழகங்கள் பற்பலவாம்; காணில் எமக்கே கழகம் எனவொன்று காட்டிப் - பழகும் தமிழோசை எங்கும் தழைப்பித்த சான்றோய்! தமிழுலகு நீத்த தெவன்? தேவார மெல்லாம் தெருப்பாட் டிசையன்றென்(று) ஓவா துரைத்தார் உரையெல்லாம் - ஓவாத தன்பணியால் மாற்றும் தகையோய் உனையன்றி என்பணி இந்நாட் டினி? தனித்தமிழ் வாழ்வின் தவமே! தமிழர் இனிப்பெறும் பேற்றின் எழிலார் கனிவளமே! ஏதிலார்க் கும்இனிய ஏந்தலே ஏகுதியோ கோதிலா நின்புகழ் கொண்டு. எல்லாத் திருவும் இசைந்தான் இவனெனவே பொல்லாத் திருத்தான் பொருமினளோ - நல்லோர்கள் தம்மை நலிவித்துத் தானாள எண்ணினனோ அம்மையப்ப னானான் அமைந்து. - கா.அப்பாதுரைப் பிள்ளை அண்ணா திருவரங்கா ஆனா அருங்கடலுள் எண்ணா தெமையாழ்த்தி எண்ணமெலாம் - மண்ணாகப் போகப் புகுந்தனையோ பொன்னாடும் நன்னாடே யாகத் தமிழமைச்சாய் ஆங்கு. முத்தமிழே எத்திசையும் முந்தப் புகழ்மணக்க வைத்ததனோ டுன்புகழை வைத்தனையே - பத்தினியாள் நீலாள் நினக்குகந்த நீராள் நினைப்பிரிதல் ஏலாள் எனல்மறந்த தென்? - வளவன் பாண்டியனார் இறைவன்எழிற் பண்பனைய இருநால்வர் மக்களையும் இயைந்த காதல் நிறைகல்வி பொறை யொழுக்கம் நீடுநலம் இன்பமொழி நீலாளையும் தரையின்மிசைத் தயங்கவிட்டுத் தனித்தேக எவண்கற்றாய் தமிழ்த்தொண் டாற்றும் முறையுணர்ந்தோய் நாள்வேண்டி முயலாத முறையென்னே மொழிகு வாயே. வாயேதும் மொழியாது வண்தாயர் உடன்பிறந்தார் நண்பர் வாடத் தூயதமிழ் சிவனெறியும் துணையிழந்து துன்பமுறத் துணிந்து வெள்ளி ஆயமலை சென்றெய்த அகங்கொண்ட அறிவதனை யாருங் கொள்ளார் நாயகனும் ஏன்றுகொளான் ஏற்பானேல் நடுநிலைமை நாடா னாகும். ஆகுமுயிர் நம்மைவிட்டங் கரன்றாளை யணுகலுறின் அவ்வு யிர்க்குப் போகும்வழி நன்றாக்கல் புரிகடமை செய்தமர்தல் புலமைப் பாலாம் ஏகுமுயிர் செய்யுரிமை கடமையெலாம் இறையருளால் இங்கு நல்லார் ஆகுமுயிர் வழியாக வருமெனற்கோ ரையமிலை ஆறு வாமே. வேறு சித்தாந்த நூற்பதிப்புத் தேர்ந்த திருவரங்கன் பித்தாந்த மக்கள்மனை பீடழிய - முத்தாந்மும் சேர்ந்தனன்மன் செல்வர்குழுச் சேர்ந்தனன்மன் செந்தமிழோ டார்ந்தநெறி வாடினன்மன் ஆங்கு. - குலசை ப.இராமநாத பிள்ளை திருவரங்கா தற்கண்ணு தற்கடவுள் திருவடியிற் சிறக்கப் பெற்ற திருவரங்கா நீயிறந்தாய் நின்கழகம் யார்புரக்கத் தெரிந்தாய் ஐயா திருவரங்கா நடனமிடும் திருநெல்வே லிப்பதியிற் றிகழுஞ் சைவத் திருவரங்காத் தழுதிரங்கத் திருநீலாம் பிகைமக்கள் தியங்க மாதோ. - சொக்கநாதபுரம் செந்தமிழ்க் கழகம் தனிக்கூட்டம் சென்றானோ எம்மில் திருவரங்கப் பிள்ளையிவன் வென்றானோ இப்பிறப்பின் வெம்போரை - நின்று கிடந்தலறும் கேளிர் கிளைகளெலாம் நீங்க நடந்தனனோ விண்ணாட்டின் நன்று. சைவமும் மேன்மைத் தமிழும் நனிவளர மெய்வகையே வாழ்வை விடுத்தனனால் - மைசெறியும் கண்டத்தன் மங்கையொரு பங்கத்தன் செங்கமலம் அண்டித்தான் வாழும் அவன். - ஆ. முருகவேள், ஆசிரியர், பைந்தமிழ். மும்மைத் தமிழ்வளர்த்த மூவாப் புகழ்நிறைந்த செம்மைத் திருவரங்கச் சீராளா! - மெய்ம்முகிலே! எங்கேபோய் எவ்விடத்தில் எவ்வாறு நீமறைந்தாய் இங்கென்ன செய்கோம் இனி. தண்ணார் தமிழ்க்குந் தமிழருக்கும் நீசெய்த எண்ணார்ந்த பேருதவி யார்செய்வர் - கண்ணார்ந்த மன்னு திருவரங்க மாமகிழ்வே வாழ்வேநீ என்னினைந்து சென்றாய் இயம்பு. தோனாவூர் போய்வருவேன் என்றென்பாற் சொல்லியநீ வானாடு சென்ற வகையறியேன் - மேனோக்கம் வாய்ந்த திருவரங்க வள்ளலே மற்றினிமேல் ஆய்ந்ததமிழ்க் கியாரே அரண். - வித்துவான் ந.சேதுரகுநாதன். திருவரங்கம் என்றவுடன் சிவனுறையும் தளியென்று சிலர்சொல் வார்கள் பெருவரங்கிற் பேசிடுவோர் பெரிதுநினை யறிந்தோர்கள் பேச்சொன் றின்றி ஒருவரங்கத் தும்அகலா உண்மைசெறி இறையுறையும் உருவே இந்தத் திருவரங்கம் என்றுரைப்பார் தெளிவுடையாய் சிவனடியைச் சேர்ந்தாய் என்னே. மனைவியையும் மக்களையும் மாண்புறுநின் அன்னையையும் மதிவல் லோனாய் உனைநிகரும் இளவலையும் ஒதுக்கியெந்த உலகதனை உற்றாய் அந்தோ தனைநிகரும் தமிழினையும் தகவுநிறை கழகத்தின் சார்பைத் தானும் உனையன்றிப் பிறரொருவர் உயர்வடையச் செய்தனரோ உரைப்பாய் அன்பா. மறைமலையின் மருமகனாய் மாண்புறுநல் மணிவிளக்காய் மதிவல் லோனாய் இறையடியிற் பேரன்பாய் எளியவர்பால் தண்ணளியாய் ஏங்கி நின்று குறையிரப்பார்க் குறுதுணையாக் கூடிநிகழ் பலகுணஞ்சேர் குணக்குன் றேநின் நிறைபிறைநேர் நெடுநட்பை நினைந்துநினைந் தென்னெஞ்சம் நிலைநில் லாவே. சைவநூல் ஒவ்வொன்றும் தக்கஅரும் பொருளுடனே தமிழ்த்தாய் நன்மை கைவந்திவ் வுலகிலுள்ளார் கற்பதற்கே எளிதாகக் கருதிச் செய்தாய் மெய்வந்த மொழிப்பெருமை விலைமதியா நெறிப்பெருமை வேறுள் ளாரும் கைவந்து கற்பதற்கே கவினுறநீ கருதிமிகக் கடிதில் தந்தாய். இவ்வுலகு தனைநீத்தே இறையடியை எய்தியநின் எழில்சேர் ஆவி செவ்வியசெவ் வேட்பரமன் திருவடிக்கண் நனிபொருந்தித் தீமை யின்றி மைதவழும் கண்ணாளாம் வள்ளிமண வாளன்தன் மலர்ப்பொற் றாளின் எவ்வுலகுங் கண்டின்ப மெய்துகவென் றேத்தினனால் இன்பார் நண்பா. - புகழ். முத்துசாமிப் பிள்ளை, உடன்குடி திருவரங்கம் பிள்ளையெனும் செல்வா! நீ பாரில் மருவுபல நூல்களையும் மாண்பார் - திருவிளங்க அச்சடித்த தல்லாமல் அவ்வுலக நூல்களையும் வைத்தடிக்கச் சென்றாயோ மன். - S. A.ïuhkrhÄ, ஆசிரியர், செந்தமிழ்ச் செல்வம். திருவரங்கம் தமிழர்அங்கம் துடிது டிக்கச் சீரியற்கை யாம் அரங்கம் சேர்ந்திட் டாரோ பெருவரங்கம் தமிழ்க்கென்று பேசும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நாடி வருவர்அங்கம் எனப்படுமோ! வையம் வாடி வண்தமிழ்நா டுற்றமறை மலைஎம் அண்ணல் ஒருவர்அங்கம் தம்மருகர்க் காக நொந்தால் உயர்தனிச்செந் தமிழணங்கும் உயிர்நை வாளே! மலைவிளக்காய்த் தமிழகத்து வீற்றி ருக்கும் மறைமலைப்பே ரடிகட்கு மகளா ராய்,நற் கலைவிளக்காய்த் தனித்தமிழே இயங்கும் என்னும் காட்டுக்கோர் அணையாத விளக்காய் எங்கள் நிலைவிளக்க உடன்பிறந்தா ராய்அ மைந்த நீலாம்பி கையாரின் உளத்தில் இந்நாள் இலைவிளக்கென் றாயிற்றோ திருவ ரங்கர் இருப்பரெனில் இறப்புலகு சிறப்பெய் தாதோ? கமழ்சைவ சித்தாந்த நூற்ப திப்புக் கழகத்தின் கண்ணான திருவ ரங்கர் அமிழ்வித்து நமைத்துயரில் சென்றார் ஆதல் அருந்துணையைப் பெருந்தமிழ்த்தாய் இழந்தாள்; மேலும் திமிர்இந்தி போக்கற்குச் சிறையும் சென்ற செழியுமறைத் திருநாவுக் கரச ரென்னும் தமிழ்காத்தார் மைத்துனரை இழந்தார் நாமும் தலைசிறந்த தோழரையே இழந்தோம் அன்றோ! செந்தேனும் பொற்குடமும் எனமேல் நாட்டார் திகழ்நூலும் அழகுமென வெளியிட் டார்கள் நந்தமிழ்நூல் அதனினும்பன் மடங்காய்த் தோன்ற நன்றுழைக்கும் கழகத்தின் முகவ ரான முந்தறிஞர் சுப்பைய னாரோ தம்மில் மூத்தவராம் திருவரங்கர் தமைஇ ழந்து பைந்தமிழ்நூற் கழகத்தின் அமைச்சை யுந்தாம் பறிகொடுத்தால் அவர்நெஞ்சு பதைத்தி டாதோ. வெல்வேலும் மறைவதுவோ! படைவீ டிந்நாள் வில்லைத்தான் இழப்பதுவோ! தமிழ்எ திர்ப்போர் சொல்வேலி னால்எதிர்த்துச் சோர்வு பெற்றும் சூழ்ச்சிவேல் எறிகின்ற இந்நாள், எங்கள் நெல்வேலித் திருவரங்க மறவர் தம்மை நெடுந்தமிழ்நா டிழப்பதுவோ! அவரின் உற்றார் பல்லோர்க்கும் யாம்கொண்ட உடன்துன் பத்தைப் பகர்கின்றோம்! திருவரங்க னார்பேர் வாழி. - பாரதிதாசனார். எழுத்தியலும் சொற்பொருளும் நடையழகுந் தனித்தமிழுக் கியன்ற வாபோல் வழுத்துபிற மொழிக்குளதோ? எனல்மானத் தமிழ்மொழியில் வாய்ந்த நேயம் பழுத்தநிலை திருத்தமுறப் பதிப்பளித்தான் உயர்ந்தகலை பாலித் தானென் றழுத்தமுறப் புகழுலகம் பெரிதிரங்கத் திருவரங்கம் அகன்ற வாறே. ஒருவரிங்குத் தோன்றிடினும் உறுதிபயப் பவருளரேல் உயர்வா மென்னாப் பொருவரிய மொழிபுகலுங் கருத்தினுக்கோர் இலக்கியமாய்ப் புதுமை காட்டித் தருமொழுங்கிற் பதிப்பகநற் றனிக்கழகம் நிறுவிநெல்லை தழைப்ப வந்தாய் திருவரங்கப் பெருந்தகைநின் சீர்த்திதமி ழுளவளவுந் திகழு மன்றே! - சுகவனம் சிவப்பிரகாசனார். கருவரென்றும் காணாத பெருமையினான் கயிலாயன் கடைநாள் அந்த இருவரங்கம் புனைந்துநடம் புரிகின்ற எம்பெருமான் இணைய டிக்கே திருவரங்க நீயடைந்தாய் எனக்கேட்டேன் இதுவுமவன் சித்த மென்றும் ஒருவரதைத் தடுக்கவொண்ணா தெனவோர்ந்து சிவஎன்றென் னுள்ளந் தேர்ந்தேன். - இராவ்பகதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை. இணைப்பு : 3 இரங்கல் மாலை : 2 தமிழ்த் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகையார் இறையடியெய்தியமைக்கு இரங்கித், திருவரங்கர் இளவலார் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு அறிஞர் பெருமக்கள் விடுத்த இரங்கலுரைகளுள் சில திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் சிவபெருமான் திருவடி நிழல் அடைந்த செய்தியறிந்து பெரிதும் வருத்தம் அடைகின்றேன். தமிழ்ப் புலமை சான்ற அவர்கள் அணிமையில் கணவனை இழந்த துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு தம் இளம் பிள்ளைகளுக்குத் துணையாக இருக்க வேண்டிய நிலையில் இங்ஙனம் மறைந்தது ஆற்றொணாம் துயரம் தருவதே! என் செய்யலாம்! ஊழ்வலி பெரிதன்றோ! எல்லோர்க்கும் இறைவன் ஆறுதல் அளிப்பாராக. தங்கள் மகன் என்று குறிப்பிட்டு அன்பு பாராட்டி எனக்குக் கடிதம் எழுதிய அம்மையின் மறைவு குறித்த என் ஆழ்ந்த துயரத்தை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். - பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், அண்ணாமலைநகர். திரு. நீலாம்பிகையின் பருவுடல் பிரிந்தமை கேட்டுத் திடுக்கிட்டேன். அம்மையாரின் பிரிவு தங்கட்கும் தமிழ்நாட்டுக்கும் சைவ உலகுக்கும் பெருந் துன்பத்தை விளைத்துள்ளது! ஈடு செய்தல் அருமை. குழந்தைகட்கு ஆறுதல் கூறுக. தங்கட்குக் கடமை பெருகியது. எல்லாம் ஆண்டவன் செயல். - திரு. வி. கலியாணசுந்தர முதலியார், சென்னை. நீலாம்பிகை அம்மையார் அவர்கள் நல்ல பண்பாட்டில் பிறந்து வளர்ந்து தமிழுக்கு அரிய தொண்டு செய்தவர்கள். திருநெல்வேலிக்கு ஓர் அணிகலமாய் இருந்தார்கள். இப்போது மறைந்து விட்டார்கள். குழந்தைகளுக்கும் தங்களுக்கும் தந்தை யாருக்கும் நேர்ந்த துயரத்துக்கு மாற்றுத்தான் உண்டா? - டி.கே.சிதம்பரநாத முதலியார், திருக்குற்றாலம். இல்லறம் மாண்புக்கும் மொழித் தொண்டிற்கும் அவர் காட்டிய வழியை நமது தமிழ்நாட்டுப் பெண்மணிகள் பின்பற்றினார் நமது நாடு வருங்காலத்தில் சிறப்புற்று ஓங்கி உயரும். - டாக்டர் டி.எ.திருமூர்த்தி, நுங்கம்பாக்கம். அம்மையார் பிரிவால் பெண்கள் உலகு தன் தோள் வலியை இழந்தது. - ச.சிவகாமி அம்மாள், தூத்துக்குடி தனித்தமிழ்க் கொண்டலின் நல்மரபாய் விளங்கிய அம்மையாரின் பிரிவு தமிழன்பர்களைத் திடுக்கிடச் செய்து விட்டது. ஓர் ஒப்பற்ற தமிழ்மணியை-உயரிய சைவமணியை-ஒரு நற் பெண்மணியை இழக்க நேர்ந்ததைப் பற்றிக் கவல்கின்றேன். - பி.டி.எ.குமாரசாமி செட்டியார், கும்பகோணம். இனித் தனித் தமிழில் நூலெழும் ஆற்றலுடையார் யார்? இது தமிழன்னையின் தவக்குறையே. - டி.என்.ஆறுமுகம் பிள்ளை, தமிழகம், கோவை. அண்ணாரை இழந்து துன்புறுந் தாங்கள் அருந்தமிழ் அண்ணியாரை இழத்தல் கொடுமை! கொடுமை! சொல்லாழம் துன்பத்தின் ஆழத்தைச் சொல்லுந்திறத்த தன்று! உடலைப் பிரிந்த ஆவி அமைதியுறுக. - வித்துவான் மு.இராசாக்கண்ணனார் பி. ஓ. vš., குடந்தை. வாழ்க்கைத் துணைநலத்துக்கு அவ்வம்மை ஓர் எடுத்துக்காட்டு. நம் தமிழுக்குச் செய்துள்ள பணிகளோ என்றும் மறவாமற் போற்றற்குரியன. தங்கை நீலாம்பிகையால் நம் தமிழ்நாடு மிகப் பெரிய நலன்களையெல்லாம் பெற்றுச் சிறக்கும் என்று எண்ணியிருந்தேன். ஏமாற்றம் உற்றேன். - மயிலை சிவ. முத்துக் குமாரசாமி முதலியார், சென்னை. திருவாட்டி தி. நீலாம்பிகை அம்மையார் பிரிவினால் தாங்கள் தங்கள் அண்ணியாரை இழந்தீர்கள்; தமிழன்னை கடமையறிந்து பணி செய்யும் ஓர் அருமை மகளை இழந்தாள்; தமிழர்கள் ஒரு வீரத் தமிழம்மையாரை இழந்தனர்; சமூகம் ஒரு கற்புடை நங்கையை இழந்தது; இலக்கிய உலகம் ஒரு சிறந்த ஆசிரியரை இழந்தது. எனவே தங்கள் இழப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. - செ. முத்துவீராசாமி, காவேரிப்பாக்கம். திரு. நீலாம்பிகை அம்மையார் பிரிவு குடும்பம் கழகம் மொழி அனைத்திற்கும் ஈடுசெய்ய இயலா இழப்பாகும். துன்பம்! துன்பம்! என் மனம் குடும்பத்தை - அருமை மக்களை - நினைந்தே பெரிதும் வருந்துகின்றது. செந்தமிழ்த்தேனும் செல்வப் பண்பாடும் ஒருங்கே குழைத்து ஊட்டிய அருமை அன்னையார் பிரிந்த பின் அந்த அன்புருவாம் குழந்தைகளை ஏங்கும் ஏக்கமே என்னைப் பெரிதும் கலக்குகின்றது. இறைவன் துணை. - . மு. வரதராசன் எம். ஓ. எல், சென்நம்பவொண்ணாச் செய்தியொன்று கேட்டு மனம் நைகின்றேன். தாயிற் சிறந்த தகவுடைய அம்மையார் மறைந்தனரா? தமிழறிவுக் களஞ்சியம் கொள்ளை போயிற்றா? பெண்கள் குல விளக்கு அணைந்துவிட்டதா? செந்தமிழிற் பேசி எழுதி இனிமை புகட்டிய அம்மையாரின் வாழ்வுக்கும் அழிவு நேர்ந்ததா? ஈடு செய்ய வெண்ணாத இழப்படைந்தான் தமிழன்னை! பேணித் தமிழறியும் பெருமாட்டி நீலாம்பிகையின் பிரிவுத்தீ எளிதில் ஆறக் கூடியதன்று. தந்தையோடன்றித் தாயையும் பிரிந்து தவிக்கும் தமிழ்க் குழந்தைகளும் தமக்கையுன் பிரிவால் வாடும் தம்பியரும் தாங் களும் ஆச்சியும் இனி எவ்வகையில் ஆறுதல் அடைய முடியும்? - புத்தனேரி ரா. சுப்பிரமணியன், சென்னை. தமிழணங்கைப் போற்றிவந்த செவிலித்தாய் அன்ன அம்மையார் தமது புகழுடம்பைச் செந்தமிழகத்திருத்தித் தமது நாயகரைத் தேடி இத்துணை விரைவில் செல்வார் என யாரே நினைந்திருப்பார்! அஃது அவ்வம்மையாரின் நாயக பத்தியையும் திருவருளின் சக்தியையும் புலப்படுத்துகின்றன. இவ் வுண்மை தெரிந்து நாம் ஆறுதல் அடைய வேண்டும். எங்கள் ஆசான் திரு. மறைமலையடிகள் இந் நிகழ்ச்சியைப்பற்றி உளச் சோர்வு பாராட்டாதிருக்கத் திருவருளை வேண்டுகின்றேன். - இராவ்பகதூர் வ. சு. செங்கல்வராயபிள்ளை எம். ஏ., சென்னை. தங்கள் தமையனார் மறைவினால் ஏற்பட்ட விசனம் மாறுமுன் இவ்வாறு நிகழ்ந்தது வெந்த புண்ணில் வேல் நுழைந்ததை ஒத்துளது. பெரும் புலமை வாய்ந்த ஆடவரையும் மகளிரையும் யமன் இவ்வாறு நியாயமின்றிக் கொண்டுசென்று விட்டால் தமிழுலகத்துக்கு என்ன நன்மை விளையக்கூடும்? - செல்வி இராசாமணி அம்மையார், எம்.ஏ., எல்.டி., சென்னை. புராணங்களிலே படித்தோம் ஔவையாரையும் மங்கையர்க் கரசியாரையும் மற்றும் பல திலகங்களையும் நேரில்கண்டு மகிழ நம் அம்மையார் இருந்தார்கள் அவர்களின் பிரிவு தமிழர் அனைவருக்கும் பெருங்கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. - டாக்டர் ப. சிற்சபை. காஞ்சிபுரம். தமிழ்த்தொண்டு செய்யும் பெண்மணிகள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே. அவர்களுள் சிறப்பான தொண்டு புரிந்து தம் வாழ்வைத் தமிழ் வாழ்வாகப் பண்ணிய திருவாட்டி நீலாம்பி கையம்மையார் இன்னும் பல தொண்டுகளைச் செய்யக்கூடியவர். அதற்கு இடமின்றி இறைவன் தம் இணையடியிலே சேர்த்துக் கொண்டது திருவருள்போலும். - கி.வா.ஜகந்நாதன், ஆசிரியர், கலைமகள். சகிக்கமுடியாத துன்பச் செய்தியைத் தினமணியிற் கண்டேன். துடிதுடித்தேன். ஒன்றும் எண்ணவே முடியாத நிலையை அடைந்தேன். ஆறு பெண் குழந்தைகள் எப்படி அலறித் துடித்து அழுகின்றனவோ? பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழிக்கு நாம்தாமே எடுத்துக்காட்டாக இருக்கின்றோம். நேற்றுக் காலையில்தான் அம்மையார் எழுதிய எலிசபெத் பிரை பெருமாட்டியார் புத்தகத்தை முழுவதும் படித்தேன்! காலை எட்டரை மணிக்கு எடுத்துப் பத்தேகால் மணிக்கு முடித்தேன். செந்தமிழ் நடை அடியேனை இழுத்துக்கொண்டே போய்விட்டது. இன்று அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கடிதம் எழுத எண்ணினேன்! அக் கடிதம் வேறு வகையாக எழுத நேர்ந்தது. - வா. தி. மாசிலாமணி முதலியார். இந்துமத பாடசாலை, வாலாசாபாத். அன்பே உயிராய், அருளே யாக்கையாய் விளங்கிய அம்மணி, கூரிய அறிவும் சீரிய கல்விப் பயிற்சியும் பெற்றுத், தனித்தமிழ் உணர்ச்சியும் சமய வுணர்ச்சியும் தமிழ்நாடெங்கும் பரப்புதற்கு முன் வந்த அம்மையார் மறைவு தமிழ்நாடு செய்த தவக்குறையே. - மா.சரோஜினி, சேத்துப்பட்டு. பல்கலைக் குரிசில் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை முதலான பேரறிஞர்களால் நன்கு மதித்துப் போற்றப்பெற்ற வரும், ஈரோடு வே. இராமசாமியார் அவர்கட்குப் பெரியார் என்ற பீடுறு பெயரைப் பேரன்போடும் தன்மதிப்போடும் வழங்கியவரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராய் இலங்கியவரும், தமிழகத்தில் தனித்தமிழ் மக்களிடத்தில் தனித்தமிழ் வெறியையும் பற்றையும் உண்டாக்கியவரும், தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து இனிக்கும் செவ்விய தனித் தமிழ்ச் செந்தமிழ் நடையில் தனித்தமிழ்க் கட்டுரைகள், முப்பெண்மணிகள் வரலாறு, சோன் வரலாறு, வடசொற்றமிழ் அகரவரிசை முதலான தனிச் செந்தமிழ் நூல்களின் கணக்காயரும், கோப்பெண்டு, ஔவையார் முதலான சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப் போன்ற அறிவாற்றலும், செந்தமிழ்த் திறனும் மனைமாட்சியும் ஒருங்கே யுடையவரும், குழலினும் யாழினும் இனிய தமது குயிற் குரலால் ஆன்றவிந் தடங்கிய ஆன்றோரின் இன்றமிழ்ச் செய்யுட்களைப் பாடி அம்மையப்பரைப் போற்றும் அருமையரும், உளத்தாலும் உரையாலும் செயலாலும் நற்றமிழிற்கு நற்றொண்டு புரிந்த நங்கையாரும், தமிழ்த் தகைமை யெல்லாம் ஓருருவாய்த் திரண்டு தமிழகத்தில் தமிழினத்தில் இருபதாம் நூற்றாண்டில் பெரும்புலமையுடன் மிளிர்ந்த பெருமாட்டியும் உலகமக்கட்கு எடுத்துக் காட்டாக விளங்கிய வரும், நினைக்க நினைக்க உணர உணர உள்ளத்தை நெய்யாய் உருகவைக்கும் இயல்புகளும், மொழியும் தொண்டும் உடைய உயர்பெரும் அம்மையும் ஆகிய செந்தமிழ்ச் செல்வியார் திரு. திருவரங்க நீலாம்பிகை அம்மையாரவர்கள் பிரிவு தெரிந்து யானும் உளம் வீங்கி உறுங்கவல்கொண்டு இடுக்கணுற்றேன், கண்ணீருங் கம்பலையும் கொண்டேன். - வித்துவான் வை.பொன்னம்பலனார், வேலூர் (சேலம்) தமிழன்னை தன் பெண்டிற்குரிய தோழியருள் ஒருவரை இழந்தாள். உரைநடையுலகம் தன் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் தையல் நல்லாரையிழந்தது; விருந்தினராய்ச் செல்லும் எம்மனோர் தம்மையேற்றுப் புரந்தருவாரை இழந்தனர்; தாங்கள் உடன்பிறந்த அண்ணனை இழந்த இழப்பு மறப்பதற்கு முன் அண்ணியாரை இழந்து வருந்துகின்றீர்கள். அவர்கள் மக்கள் பெற்ற தாயை இழந்து பேதுறுகின்றனர். இதுகண்டு வருந்தும் அறிஞர் உலகம். - வித்துவான் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளை, அண்ணாலை நகர். தம் அருமைக் கணவனாரைப் பிரிந்த துயரமே அம்மையார் ஆருயிரை அலைத்து வந்திருக்கிறது. மக்களைப் காப்பாற்ற வேண்டும் கடமையுணர்ச்சியால் தளருமேனியைத் தைரியத்துடன் தாங்கிக் கடனாற்றி வந்தார்கள். அந்தோ! அறிவுக் களஞ்சியமாயும், அருந்தமிழ்க் கணிகலமாயும் தமிழ்ப் பெண்கட்கோர் தனிப்பெருந் தலைவியாயும், ஒழுக்கச்சுடர்க் கொழுந்தாயும் விளங்கிய இவ் வம்மை நரைமூதாட்டியாய் இக் கால ஔவையெனப் பன்னெடுங்காலம் இம் மண்மிசை வாழ்ந்து மக்களை மாண்புறச் செய்வார் என்று நினைத்திருந்தேனே! மறைந்து விட்டார்களே! - ச. சச்சிதானந்தம் பிள்ளை, பி. ஏ., எல். டி., வேலூர். செந்தமிழ்நாடு தன் உயிர் அன்னையை இழந்துவிட்டது. கற்புக்கரசி செந்தமிழ்ச் செல்வி, என் அருமைத் தோழி காரைக்கால் அம்மையாரைப்போல் இறைவன் திருக் கரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பாள். - ஆண்டாளம்மாள், திருவல்லிக்கேணி. இவர் பிரிவு மக்களுக்கும் உறவினருக்கும் மட்டுமா இன்னலை விளைவித்துளது? தமிழன்னை அணியை இழந்தனள். மாணவர் செந்தமிழ் நூல்களை இழந்தனர். பெண்ணுலகம் உயரிய பெட்பை இழந்தது. நினைக்குந்தோறும் மனம் பெரிதும் வருந்துகின்றது. - பண்டிதை எ. கிருஷ்ணவேணி, திருவல்லிக்கேணி. தமிழர் செய்த தவக்குறைவு இவர்கள் போன்ற கலைச் செல்வப் பெண்மணிகளை இளமையிலேயே துறக்க நேர்கின்றது. தமிழர் செய்த பாவம், தமிழ்த்தாய் செய்த பாவம்! அந்தோ! இவர்கள் இழப்பு தமிழ்நாட்டு உயர்கலை இழப்பென்றே எண்ணுகின்றேன். பலகூறிப் பயனென்னை? கலை விளக்கம் அவிந்தது; தனித் தமிழுரை சாய்ந்தது; பெண்ணருங்கலம் பிரிந்தது; அறிவுக்கடல் வறண்டது. ஆ! ஆ! அம்மையார் நீலாம்பிகையார் பிரிந்தார்! தமிழணங்கின் சாயலன்றோ ஒழிந்தது! - செ. ரெ. இராமசாமி, பாகனேரி. தமையனாரவர்களைப் பிரிந்த துயரம் தீர்வதற்குள் இவ்வளவு விரைவில் கனம் அண்ணியாரும் பிரிந்த செய்தி அறிந்து பெருந்துயரம் அடைந்தேன். குழந்தைகளின் நிலையை நினைத்தால் துயரம் இன்னும் மிகுதியாகிறது. - பரலி சு.நெல்லையப்பர், சென்னை. அம்மையாருடைய அரும்பண்புகளும் உயரிய கல்வித் திறனும் உலகம் அறிந்ததே. அம்மையார் தம் மனையில் எனக்குச் சில ஆண்டுகளின் முன்பு ஊன் அளித்து விருந்து ஓம்பின அன்பை என்றும் மறவேன். வாழ்க்கைத் துணைவர் பிரிந்த சிறிது காலத்தில் அம்மையாரும் அருமை மக்களை விட்டுப் பிரிந்தது மிகத் துயரம்! அந்தோ மிகத் துயரம். - இராவ்பகதூர் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கோவை. இந்தி எதிர்ப்பிலே தமது திறமையைத் தமிழகத்திற்குக் காட்டிய திருவாட்டி நீலாம்பிகையம்மையின் தொண்டைத் தமிழகம் என்றும் மறவாது. அம்மை இறந்த செய்தியைக் கேட்டுத் தமிழ்மகன் ஒவ்வொருவனும் துடிக்காதிருக்க முடியாது. - இரா.சண்முகன், செயலாளர், மாணவர் கழகம், போத்தனூர். அண்ணனின் பின் குழவிகள் பலரையும் தவிக்கவிட்டு அண்ணியையும் அழைத்துக் கொண்டது மிகக் கொடுமை என்று தான் கூறுவேன். சிறார்களை நினைக்குங்கால் என்னுள்ளம் புழுங்கு கின்றது. வள்ளுவரோடு சேர்ந்து கெடுக இவ்வுலகி யற்றியான் எனச் சூளுரைக்கவும் வெதும்புகின்றது. - டாக்டர் முத்து நமச்சிவாயம், சேலம். தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் அல்லும் பகலும் உழைத்து அதனாலேயே உடல்நலிந்து உயிர் நீத்த உயரிய இரு தமிழ்த் தொண்டர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு முன்வரின் நன்றியுள்ள செயலாகும். ஏன் இந்தக் குடும்பத்தைக் காக்க நீலாம்பிகையார் நிதி என்று ஒன்று துவக்கக் கூடாது? - R.ghy»UZz‹ (இளங்கண்ணன்) பி.ஏ., எல்.டி., அந்தோ! தமிழுக்கே உழைத்த குடும்பத்திற்கு இதுவோ முடிவு! இவ்வாறு துன்பம் நேருதல் தகுமோ? இதுவும் இறைவன் திருவுள்ளமாமோ? - இராவ்சாகிப் கே.கோதண்டபாணி பிள்ளை இரங்கற் பாக்கள்பட்டகாஸீலேபடுமெனும்பழமொழிப்பட்டவரங்கனார்பத்தினிநிள்ளைமைப்பட்டவெண்மரை விட்டிறந்துண்மைகைப் பட்டபோதியான்பட்டதைbயன்சொல்வன்! தனித்தலீழ்இயக்கிiனத்தாங்குவார்தம்iமயே தவீப்படவiளத்தனன்தகையில்கூற்றுவன்இனித்தமிழ் என்னிலைஎய்துமவெனப் பனிப்பவர்தீக்குறிபhர்ப்பதற்கிதோ!புதுவதே யன்றுயிர் போலணியல்பெனமுதுவரும்முன்னரேமெhழிந்ததுண்மயால் இதுவரையிருந்தமைக்கிறையையேத்தியேகதுமெனயாஞ்bசயுங்கடமைமுற்றுnவாம்.சேலம்,ஜீத்துவhன்ஞ. தேவநயன், ஆ. டீ. டு. நீலாம்நிகையும்நிமலனடிப்பட்டனள்கலனழைக்கக்கைவிட்டனன்மருத்துவன் பாவலர்கள்பாiலகள் எண்மருந்தஜீக்கவே.வாணிவரம்பெற்றவாணிவீமறைந்தனள் ஆணித்தரமாஅநகநூல்இiழத்தவள்பேணினள்தமிழைப்பிரியத்துடனே. என்வீவீயஇளவலெனஎவருங்கண்டுளங்களிக்கஇனந்தேஎங்கும் முன்னுபொருள் வளம்பெருக்கிமுத்தமிழும் வளர்த்தமூதறிஞன்நண்பன் தன்னிகளீல்தாளாளன்திருவரங்கம் எனும்பெயர்க்கேதமகைசான்றன் மன்னவரும்வியக்குமுறைமhநாடுபலநடத்து வண்மைமிக்கான். மூவாறிற்குறைnயாராண்டில்வாழ்க்iகச்சகடூர்ந்து முதிர்ந்தபண்பால் பhவேறுபுலவரகம் பரிந்துபுகுகலைவல்லhன்பாரில்எங்கும் சாவேறுதாள்வேறென்றறைதுணிபhன்உயர்வாகச்சார்ந்தமக்கள் தாவேறு தலையறியாச் சமனாட்சிச் சிவநெறியன்தண்மசார்ந்தோன். மண்பிரிந்தமணிழீbரான்பான்பிறைதலுமப்பசியிருபான்மதிநாள்மக்கள் கண்பிரிந்த நீர்பெருக்கக்கடியவாண் டினள்மாலீகலங்கிஏங்கப்பண்பிரிந்தபாட்டொலிபேhல்பகbரம்பி சுப்பையன்பரிவுற்றேங்க எண்பிரிந்த வளைப்போல எய்தினைஜீண் எமர்துன்பம்இயம்பப்போமேh? மக்களெhருபாற்புலம்பமாமியரு பாலலற ஒக்கலெலாங் கூடிஒஸீபெருக்க-மிக்கதமிழ்அன்னைஇரங்கஅலுவலகத்தார்புலம்ப என்னநீலாநிரிந்தாய்ஹிங்கு. - ணிருச்ஞி ஜீத்துவான்பு.சி.புன்னைவனநாதமுதலியார். ணிடுக்கிட்டேன்தீச்செய்ணிதிருநீலhம் பிiகயம்மைbசன்றாரென்றநடுக்குற்ற மெழிகண்டேன்நஸீவுற்றேன்உளம்நந்தேன்நாளநொந்தேன்உடுக்கையிழந்தவர்iகபோல்உயர்தனிச்செம் மொழித்தமிழ்க்கேஉரைநூலாற்றிக் கெhடுக்கும்கலைமகஹீவர்போல்புலவர்கொளுநள்நினைந்தேன்கெhண்டேன்துன்பம். என்அன்னைதலீழ்வளர்த்தாள்எஷீல்நலமர் உiரநடைநூல் இயனூலணியாய்த்தன்நிகரில்தலீழ்ச்சொல்லால்தந்தபெருங் கலைச்செல்விதமிழ்ப்பேரன்பால் முன்னுற்ற ணிருவரங்கர்பொன்னட்டில்தமிழ்த்தொண்டில்முயலஎண்ணி அன்புற்றே அiழத்திடவேஅருமைமக்கள்உறஷிமற்றும்மறந்தள்என்ன! மறைமலழீன்மகளாகித்திருவரங்கர்துணைபற்றிமதிbபற்றோங்கி நிறைதமிழால் உiரநடைநூல் தமிழ்நிலத்தில் பயிராக்கிநிiலத்தபுகழின் குறவுபடாத்தமிழ்ச்bசால்லால்வடசொல்லின் துடுக்கடக்கிக்குiறயாக்கல்வித் துறைபயில்நீ லாம்பிகையார் விண்ணுற்றர் மண்வழ்நர்துயரேபூண்டார். - ஈரோடுசிவ.குப்புசாமிப் நிள்ளை. செந்தமிழ்க்கர்தாயகமாம்சல்விதிருநீலம்மை பந்தமறுத்துன்றனடிபற்றினளே-எந்தமது அன்னதமிழ்மொஷீக்கிங்கியாnரபுகலhவார்bபhன்னேன்சடிலாய்புகல். - தூத்துக்குடி ஞித்தந்தஆஞிரியர் சிவகுருநாதபிள்ளை.ஏழாறhண்டுகள்கழிந்ததுமரங்கனைஏழெட்டுமhதமhக்காணhக்குறையhல் ஊழிநயுறயூழ்த்துணையேகினள்,நண்பர்கள் பலரையும்நீங்கியபண்டிதைபண்டிதர்தந்iதயைப்நிரிந்ததெங்ஙனம்? கண்டவர்கேட்டவர்கடுந்துயர்எய்தவே.-மு.சி.பூரணலிங்கம்நிள்ளை நி.ஏ.,எல். டி. தலீழருந்தாய்மறந்தார்தலீழ்த்தாஜிந்தன்சய்மறந்துதமிழருந்தாய்இலரவெனபின்றநிலைழீடையேதமிழருந் தாய்அருந்தhய்எனஊட்டியதமிழுருந்தாய்தமிழருந் தாய்இலnரஎனநீத்தெமைஏகினளே! விழுத்தகுbமய்த்தமிழ்நன்னிலைகாட்டிஅறநெறிக்கே இழுத்தவம்bமய்த்தவன்வண்டமிழ்ஏந்தல்மறைமலயின் முழுத்தமிழ்ஆர்வம்மெய்ஜிருப்பெற வந்துமூவததமிழ் பழுத்துருகஅனையாய்பழியேமைவிட்டேகினைய! உடன்பிறந்ததார்எண்மர்சேயர்நின்றார்ஹிவண்;நின்னறிவுக் கடற்பிறந்தhர்எண்திலாதவர்சேயர்நின்றார்இனும்பின் னிடப்பிறந் தார்இளஞ்செல்வர்நின்றார்நின்நன்னூற்றெhகுதிக் கடற்புரந்தர்இவண்நின்றனர்என்கடந்தகினதே. செந்தமிழ்நந்தமிழாக்கியசேவகன்தந்iதமுறை; வந்தமிழ்தாமறைவரையறஎங்கும்வழங்குபுகழ் நந்தமிழ்வள்ளல்நின்வாழ்துணயாம்முறை;நலிந்திங்ஙனே நொந்தமிழ்வமும்நின்சேய்முiறயேhஎனநீத்தனயோ? கல்லாbலாருமலைபல்லாவரமதன்புடையறிவுச்சல்லாலொருமலைதுன்னிய தென்னஹிருந்ததவன் நல்லறதன்பயனாகிய நல்லாறனவெழுந்தய்!தல்லாறிதுவெனக்காட்டுவதாளீனித்தோமறnவ! சீலக்கண்கொண்டேநம் செந்தமிழின்செல்வbமலாம் ஞாலக்கண்காட்டியமெய்ஞ்ஞனத்திருவுருவே! நீலக்கண்ணம்மேநீ நீத்தனையல்எம்மையிங்கே மாலக்கண்நீக்கியெம மகிழ்விப்பார் யாளீவீயே. - ஜீத்துவான்கா.அப்பhதுரைப்பிள்ளை எம். ஏ., எல்.டி., முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளிஆசிரியர்.திருவரங்கர் வரலாற்றில்இடம்bபற்றுள்ள கhலக் குறிப்புகள் ஞில 23-5-1890 திருவரங்கர்தாற்றம்1899தந்தையார்இயற்கஎய்துதல் 1906 1918 ணிருவரங்கர்கொழும்பில் உறைதல் 1914 தவத்திருமiறமலையடிகளின்முதல்இலங்கைச்செலவு 1916அடிகளார்க்குத்தனித்தமிழ்எண்ணம்உருவதல்1917 அடிகளாரின் இரண்டாம் ஹிலங்கைச்செலவு திருசங்கர்கம்பெனி தோன்றுதல் 1919 தனித்தமிழ் இயக்கம்உருவாதல் 1920bசந்தமிழ்க்களஞ்சியம்என்னும் ணிங்கள்வளியீடுbதாடங்குதல் 21 - 9-1920ணிருநெல்nவலிதென்னிந்ணியசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தோற்றம் 1920சவசித்தாந்தசங்கம்தன்றுதல் 1921bசன்னையில்கழகக்கிளையின்தோற்றமும் ‘திருசங்கர்கம்பெனிகழகத்துடன்இiணதலும் 1924 திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் தோன்றுதல் 1924iசவசித்தாந்தசங்கச்சர்பில்குற்றாலத்தில் சரல்மநாடுநடத்தத்தடங்குதல் 2 -9- 1927 திருவரங்கர்நீலம்பிகையhர்திருமணம்1933 தமிழன்பர்மாநாடு,சென்னை 1934சென்iனமாகhணத்தமிழர் மாநாடு,நெல்ல 1937தமிழ்ப் பதுகாப்புச் சங்கத்தாற்றம் 1937 பாiள,பலிஜீலக்குச்சங்கத்தேற்றம் 21 - 5 -1941 முதல் மெய்கண்ட சhத்ணிர மாநாடு, நெல்iல27-5-1941 27-3- 194328 - 3 -1943 சென்னைமhகாணத்தமிழர் மாநடு, நெல்iல 28-4-1944 திருவரங்கர் nபராவியற்கைஎய்துதல் 5-11- 1945 நீலம்பிகயார்பேராஜீயற்கை எய்துதல் 12 - 4 - 1946 ணிருவரங்கர் நீலாம்நிகையார் - நடுகல் ஜீழா. முற்றிற்று.