இளங்குமரனார் தமிழ்வளம் 25 1. தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு 2. திரு.வி.க. தமிழ்த் தொண்டு ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 25 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 216 = 232 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு நுழைவு வாயில் 1 தமிழ்த் தாயின் அருமைத் தனயன் 4 பொழிவாளன் புகல்வு 7 1. தமிழ்க் கா.சு. 15 2. தமிழர் சமயம் - பொது 21 3. தமிழர் 27 4. தமிழர் கலைகள் 34 5. தமிழர் சமயம் (சிறப்பு) 47 6. தமிழர் மெய்க்கலை 68 7. சீர் திருத்தம் 79 திரு.வி.க. தமிழ்த் தொண்டு பொழிவாளன் புகல்வு 103 பொதுச்சொத்து 111 1. எழுவாய் 112 2. தொண்டு 114 3. தமிழ்க் கல்வி 118 4. கல்வியின் உறைப்பு 122 5. தமிழாசிரியத் தொண்டு 127 6. இதழ்த்தொண்டு 132 7. அறிவியல் தொண்டு 151 8. நூற்றொண்டு 161 அ. நூற்றொண்டின் விரிவாக்கம் 181 9. வரலாற்றுத் தொண்டு 185 10. தமிழ் நடை 191 11. சொற்பொருள் ஆட்சிகள் 207 12. இறுவாய் 212 குறிப்பு 216 தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு நுழைவு வாயில் பல்கலைப் புலவர் தமிழ்க கா.சு. அவர்களின் நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும் குழித்தலை தமிழ்க் கா.சு. இலக்கியக் குழு இவ்வாண்டில் கா.சு. அவர்களுடைய சிந்தனைகளை ஆய்வு செய்து தமிழகத்தில் தவழச் செய்யும் முயற்சியின் நுழைவு வாயிலில் தனது முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. எடுத்து வைத்த எங்கள் முதலடியை எதிர்கொள்ளவும், ஏற்றமுறச் செய்யவும் வல்ல தக்காரை, தமிழ்ப் பெருமகனாரை தெளிந்த ஞானமும், தேர்ந்த சிந்தனையும், ஆழ்ந்தபுலமையும், ஆய்வு நோக்கும் ஒரு சேர அமைந்த இலக்கியச் செம்மலை, கழகப் புலவரை என்றுமுள தமிழின் இளமைக்கு வளமை சேர்க்கும் இளங்குமரன் அவர்களை அணுகி எங்களை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற வேணவாவை வெளியிட்டோம்! தொண்டுக்குத் துணை நிற்கத் துடிக்கும் தூய தமிழ் உள்ளத்திற்கு உரியவரான அவர், எவ்வித மாற்றமும் மறுப்பும் கூறலின்றி மனமுவந்த தனது இசைவை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். எழுதித் தாருங்கள் என்று கேட்டால் எது பற்றி எழுத வேண்டும் என்பது பற்றிக்கூட கேட்பதில்லை. எவ்வளவு கிடைக்கும் என்றே கணக்குப் பார்க்கும் இலக்கிய வியாபாரிகளின் காலமாகப் போய்விட்ட இன்றைய நாளில், கா.சு. அவர்களுடைய தமிழர் சமயத்தை ஆய்வு செய்து தாருங்கள் என்று கேட்டவுடனேயே மகிழ்ச்சியோடு ஒப்புதல் தந்ததோடல்லாமல் கட்டுரையை எப்போது உங்களுக்குத் தரவேண்டும் என்றும் கேட்டார்கள். வெள்ளத்தால் அழியாத வெந்தணலால் வேகாத கல்விச் செல்வத்தை நிரம்பப் பெற்றிருக்கும் அவர், பொருட் செல்வத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆய்வுக்கான பொருள் பற்றி எண்ணினாரே அன்றி அதற்காகப் பெறும் பொருள் மீது சிந்தை செலுத்த நினைத்தாரில்லை. ஆய்வு நூலை விழாவில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் விழைவைத் தெரிவித்தவுடன்; அகம் மலர அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவு செய்து அனுப்புகிறேன் என்றார். என்ன ஏமாற்றம்! நூல் செப்டம்பர் கடைசி வாரத்திலேயே கிடைக்கும்படி அனுப்பி விட்டார். இது அவர்களுடைய அருமைக்குரிய செல்வனான எனக்கு அவர்கள் செய்த ஆக்கத்துணை - ஊக்க உணர்வு- ஒரு உந்து சக்தி! நுழைவு வாயிலில்முதலடி வைத்த எங்கள் இலக்கியப் பணியும் பயணமும் தொடர்ந்து நடந்திட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகப் பல்கலைப்புலவர் கா.சு. அவர்களுடைய நூற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிட எண்ணு கிறேன். எங்களுடைய எண்ணம் திண்மை பெறவும், வண்ண முறவும் எங்களுக்கு என்றும் உள்ள தோன்றாத்துணை இளங்குமரன் அவர்களே ஆவார். கா.சு. அவர்களின் சிந்தனை வடித்த செந்தமிழ்ப பனுவல் தமிழர் சமயத்தின் அகவை நாற்பத்தாறு ஆண்டுகள். நாற்பத்தி ஆறு ஆண்டுகள் - அரை நூற்றாண்டுக் கால சிந்தனை. அது இன்னமும் தமிழ் மண்ணில் தவழக்கூட இல்லை என்பதைவிட அது தளிர் விடுவதற்கான எந்த முயற்சியுங்கூட இந்த நாடு - மக்கள் எடுக்கவில்லை என்பது எமக்குள்ள வருத்தம் ஆகும்! எமது வருத்தம் தணிக்க வந்த வான் மழையாகத் - தேன் மழையாக வாய்த்துள்ளது. அவர் தந்த ஊக்க உணர்வுகள் தமிழ் உணர்வைத் தூண்டும் ஊற்றுக் கண்ணாக வேண்டும். தமிழர் சமயம் கா.சு,வின் கனவு பேராறாய்ப் பெருக்கெடுத்து தமிழ்நிலத்தை வளப்படுத்தவேண்டும் - வளப்படுத்தும் என்று நம்புகிறோம்! பேராசிரியர்கள், பல்கலைப் புலவர்கள், கல்லூரிகள்! பல்கலைக் கழகங்கள் பாட நூலாக - ஆய்வு நூலாக இதனை ஆக்க மேற்கொள்கிற முயற்சி தமிழின் உயர்வுக்குச் செய்கிற தொண்டாகும். எங்கள் நம்பிக்கை வெற்றி பெறச் செய்யும் நற்பணியாகும்! தமிழ் சிறக்க - தமிழ் நிலம் செழிக்க - தமிழ் உணர்வு தழைக்க தமிழக மக்கள் நூலைப் படிக்கவும் - படித்தபடி நடக்கவும் எடுக்கிற முயற்சி எங்கள் பணிக்குக் கிடைத்த பாராட்டு - பரிசு என்பதைவிட தமிழுக்குச் செய்த உதவி என்றே கொள்வோம். பல்கலைப் புலவர், தமிழ்க் கா.சு. அவர்கள் இயற்றிய ஆராய்ச்சி நூல்களின் குறிப்பு - ஓரளவு சரியாக வெளிவந்த ஆண்டுகளின் குறிப்புடன் இணைத்திருக்கிறோம். அன்னையகம் மீ.சு. இளமுருகுபொற்செல்வி. குழித்தலை - 639104 தமிழ்த் தாயின் அருமைத் தனயன் தமிழ்க் கா.சு. அவர்கள் தமிழகத்துக்கு வழங்கியுள்ள தமிழ்ப் புதையல் - (நூல்களின் குறிப்பு) 1. இலக்கிய வரலாறு பகுதி 1 1928 2. இலக்கிய வரலாறு பகுதி 2 1928 3. அப்பர் சுவாமிகள் சரித்திரம் 1927 4. அறிவு விளக்க வாசகம் 1925 5. இந்தியச் சட்டக் கோவை 1927 6. உலக நன்மையே ஒருவன் வாழ்வு 1948 7. உலகப் பெருமக்கள் வாழ்வு பகுதி 1 1939 8. உலகப் பெருமக்கள் வாழ்வு பகுதி 2 1940 9. கடவுளும் வாழ்க்கை நலமும் 1948 10. குமரகுருபரஅடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 1932 11. சிவஞான முனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும் 1932 12. செகப்பிரியர் வரலாறும் நாடகக் கதைகளும் 13. திருஞானசம்பந்தசுவாமிகள் சரித்திரம் 1944 14. தியானமும் வாழ்க்கை உயர்வும் 1947 15. மக்கள் வாழ்க்கைத் தத்துவம் 1948 16. மெய்கண்ட நூல்கள் உரைநடை 1938 17. மெய்கண்டாரும் சிவஞான போதமும் 1932 18. மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் 1939 19. வாழ்க்கை இன்பம் 1948 20. வான நூல் 1938 21. Nature in Thevaram Ancient Tamil Scriptures 1938 22. தமிழர் சமயம் 1940 23. திருவாசகம் (தெளிவுரை) 24. திருக்குறள் - பொழிப்புரை 1944 25. சைவ சித்தாந்த வரலாறு 1924 26. திருமுருகாற்றுப்படை மூலமும் - உரையும் 1946 27. பழந்தமிழர் நாகரிகம் 1939 28. உடல் நூல் 1915 29. சந்தானாசாரியர் சரிதம் 1925 30. தாயுமான சுவாமிகள் சரித்திரம் 1931 31. தனிப்பாடற்றிரட்டு தொகுதி 1 1959 32. தனிப்பாடற்றிரட்டு தொகுதி 2 1960 33. சிவஞான சுவாகிகள் வரலாறு 1955 34. சேக்கிழார் சுவாமிகள் வரலாறு 1955 35. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரம் 1928 36. பட்டணத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் 1930 37. மணிவாசகப் பெருமாள் வரலாறு 1928 38. இலக்கிய சரித சாரக் கதைகள் 1957 39. ஆண்டாள் வரலாறும் நூலாராய்ச்சியும் 1934 40. சிவஞான போதப் பொழிப்புரை 1949 41. The Melaphysies of the Siva Siddantha Systom 1920 42. சைவ சித்தாந்த உண்மை வரலாறு 43. தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு 1924 44. குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology with Special Reference to their Applicationin India.) 1925 45. மணிமாலை - திங்களேடு (1முதல்12இதழ்கள்.) 1935 46. உலகப் பெருமக்கள் வாழ்வு பகுதி 3 1940 47. A Short Sketch of the HinduReligions 1923 48. A Note on the Hindu Religions Endowments Bill49. Tamil Blooms. 50. நீதிநெறி விளக்கம் (ஆங்கிலக் குறிப்பு) 1923 51. சிவப்பிரகாசம் ( ” )1924 52. இசைப்பாடல்கள் - (வெளிவரவில்லை) பொழிவாளன் புகல்வு கா.சு. என்னும் சுருக்கத்தின் பெருக்கம். காந்திமதி நாத சுப்பிரமணியனார்! பிறப்பு 1889. ஈராண்டு சென்றால் நூற்றாண்டு! கா.சு. சட்டப் பேரறிஞர். ஆனால் அச்சட்டம் அரசுச் சட்டத்திற்குப் பயன்பட்ட அளவினும் அன்னை மொழிச் சட்டத்திற்கே பயன்பட்டது. சட்டம் என்பது ஏடு, திருத்தம், முழுமை, tரம்புvன்னும்bபாருள்களையும்jரும்.r£l« பிள்ளை என்பவன் தலைவன்; வகுப்புத் தலைவன். இவண், தமிழர் தலைவர்! கா.சு.வின் தமிழ்ப் புலமை, தமிழ்க் கா.சு. ஆக்கியது. தமிழ்க் கா.சு. ஆக விளங்கிய அவர் தமிழ்க்கு ஆசு ஆகவும் (ஆசு - பற்றுக்கோடு) விளங்கினார் என்பதற்கு அவர் இயற்றிய ஒவ்வொரு நூலும் சான்று. அவற்றுள் இவண் சுட்டும் ஒன்று தமிழர் சமயம் தமிழர்சமயம் என்பது நூற்பெயரெனின், சமய ஆய்வளவில் நிற்பாரும் உண்டு. அவர் நோக்கு தமிழர் அல்லர்; தமிழர் சமயமே! கா.சு. தமிழரில்லாமல் அவர்தம் சமயமென ஒன்றேது என எண்ணுபவர். தமிழர் தாமும் தமிழ் என்னும் மொழிப் பெயர் வழியால்அன்றோ பெயர் பெற்றவர் என எண்ணுபவர். அதனால் தமிழ் ஆய்வுண்டு! தமிழர் சமய ஆய்வும் உண்டு. ஒன்றன் மேல்ஒன்றாம் மாடமென ஓங்கி உயர்ந்து செல்லல் உண்டு. தமிழ்க் கா.சு. சிவனெறி அழுத்தர்; முப்பொழுதும் எப் பொழுதும் முழுநீறு பூசுபவர்! எனினும் பொய்யடிமை இல்லாப் புலவர்! அதனால், வைணவம் என்னும் மாலியத்தை மறவார்; ஒதுக்கார்! சிவனியமும் மாலியமும் செந்தமிழ்ச் செந்நெறிகளே என்பதை நிறுவுவார்! சிவனலால் தேவியில்லை; சிவனியமன்றிச் சமய மில்லை - என்னும் கருத்துடையார், மாலியப் பகுப்பைச் சிவனிய இணைப் பாக்கிக் கொள்வரோ? பெண்ணுருஒரு திறனாகப் பிறங்கிய அம்மையப்பனின் முன் வடிவாக (அம்மை வடிவாக) மாலியத்தைக் காண்பவர். மூடுதிரையிட்டு முழு மறைப்புச் செய்வரோ? முனைப்புக் கொண்டு வெறுப்பால் ஒதுக்கி விடுவரோ? இரு கண்ணில் ஏற்ற மாற்றம் காண்பார், சார்பு நோக்கர்; சால்பு நோக்கர் அல்லர் என்க. சிவப்பு கறுப்பு என, வண்ண வேற்றுமை என்ன வேற்றுமை? செவ்வண்ணம், சேயோன், கருவண்ணன், மாயோன்! முன்னவன், செந்தழல் வண்ணன்; பின்னவன், கருமுகில் வண்ணன், நெருப்பும் நீரும் இன்றி வாழ்வென்னாம்? வான் சிறப்பு என்பது என்ன? வெம்மையால் உண்டாம் தண்மை அன்றோ? வெம்மையும் தண்மையும் இணையா - இணைந்தமையா - நிலை உய்யுமோ? ஏறும் வெம்மை எரிவாம்! வீறும் தண்மை உறைவாம்! இவை இணைவின் வழிப்பட்டதே வாய்த்த நிறைவாம். கா.சு. சமய வழி, காசிலா (குற்றமிலா) வழி! அன்றியும் fh.R.ச் செலவிலாச் சிக்கன வழி! இயற்கை வழி, இறைவழி எனக் காண் பார்க்குக், கருதுதல் என்னும் கைப்பொருள் போதுமே! சமயம் நெறிபயில்நிலையமாகக் காட்சி வழங்கியது ஒருகால்! அதனால், தொண்டின் உயிர்ப்பகமாகத் திகழ்ந்தது! பின்னாள் தமிழர் சமயம், தடம் மாறியது; தன்னிலை கெட்டது! தமிழை மறந்தது; தமிழ் நெறியாம் பிறப் பொப்பைப் பிறழ விட்டது; பேய்மைப் பேராட்டமும், பேராட்டமும் மூட்டும் தன்னலச் சாதிக்கும் பொருளுணர்ந்து ஓதற்கு இடமிலா வேற்றுமொழி வழிபாட்டுக்கும் இடமளித்தது. தூய சமயம் கொடு முடியினின்று குப்புற வீழ்ந்து தீய சமயமாகி விட்டது! வீழ்ந்ததை எழுப்புவது வேண்டும்; ஆம்; விழிப்புறுத்த வேண்டும். உறங்குவாரை எழுப்பலாம்; உறங்குவாராக நடிப்பாரை எழுப்புவது எளிமையோ? உறக்கமும் ஒரு நாள் இரு நாள் ஓராண்டு ஈராண்டு, உறக்கமோ? நெட்டிடையாகப் பட்ட மரமென உறக்கம்! உயிர் மட்டும் தாங்கி உணர்வெதுவும் இல்லா மயக்க நிலைப் பட்ட பேருறக்கம்! எல்லாம் மறந்தபேருறக்கம்! தமிழ் என்பதை மறந்து, தமிழினம் என்பதை மறந்து தமிழர் சமயம் என்பதை மறந்து மொழியாலும் வழியாலும் வேற்று மொழிக்கும் வேற்று வழிக்கும் கொத்தடிமைப் பட்டுவிட்ட தன்னிலை மறந்த மயக்கம்! எப்படி எழுப்புவது? வெற்றி கிட்டுமா? தவத்திரு மறைமலையார் கிளர்ந்தார்! தமிழ் வடிவாக - தனித்தமிழ் வடிவாகத் திகழ்ந்தார்! அவர்க்குத் தமிழின் தனித்தன்மை விளங்கிற்று! தமிழர்சமயம்விளங்கிற்று! தமிழர் நெறி விளங்கிற்று! தமிழர் நிலையும் விளங்கிற்று! அவர்மெய்கண்டாரானார்! நக்கீரரானார்! சிவஞான முனிவரானார்! வள்ளுவரும் தொல் காப்பியரும் புன்முறுவல் பூத்து வாழ்த்துக் கூறும் வழிகண்டார்! மெய்கண்டார், : பிறர்என்ன எண்ணுவர் என எண்ணித் தாம்கண்ட மெய்ம்மையை மறைப்பரோ? மறைப்பின், நெஞ்சகம் ஒழித்த வஞ்சகர் என்னும் பொய்யராவரேஅன்றி மெய்யர் ஆவரோ? தமிழையும் தமிழர் சமயத்தையும் இருகண்களென - கண் மணிப்பாவைகளெனக் கொண்டார்! இசையும் வசையும் வாய்மை நோக்கர்க்கு வருபொருளே எனத்துணிந்தார். எழுதினார்; பொழிந்தார் - தாம் கண்ட மெய்ப்பாடுகளை! மறுப்புகள் வெறுப்புகள் எதிர்ப்புகள் ஏசல்கள் பழிப்புகள் தூறல்கள்! எல்லாம் எல்லாம்! எவரிடமிருந்து - தமிழரிடமிருந்து! ஆயினும், நிமிர்ந்து நின்றார்; நிலைத்து நின்றார்! வாடையும் கோடையும் தாமே அடங்கும் வரை தனித்து நின்று தாங்கினார்! கொண்டலும் தென்றலுமாக நின்று நிலைப் பணி செய்தார்! அடிகளார் பணிக்கு - இருதிறப் பணிக்கு - வழிமுறை வேண்டாவா? இல்லாக்கால் கண்ட வளமை மூடுண்டன்றோ போம்! rka¡ f©iz¡ fh¡f¡ »s®ªjh® jÄœ¡ fh.R.: மொழிக கண்ணைக் காக்க முகிழ்த்தார் மொழிஞாயிறு பாவாணர்! ஓராலமரத்து, அதுவும் - மூதாலமரத்து - இணையிலா இரு சுவடுகள் எனக் காசுவும் பாவாணரும் பரந்தும் விரிந்தும், ஊன்றியும் உறைத்தும் பணித்திறம் பூண்டனர்! அடிகளார் பணிக்கு வழிஞர் பணித்திறம் ஊட்டமளித்தது! ஊற்றமுமளித்தது. அடிகளார், தமிழர் மதம் இயற்றினார். சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆவர் என்னும் நூல்களும் இயற்றினார். கட்டுரைகளும் பலப்பல யாத்தார். எந்நிலையில்நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் தாளை மறவாத செல்வர் கா.சு. அப்பணிக்கே தம்மை ஒப்புக் கொடுத்தார்! அவர்தம் நூல்கள் எல்லாமும் சமயச் சீர்த்தி சாற்றுபவை எனின் சாலும்! அவற்றுள் ஒன்றே தமிழர் சமயம் பாவாணரும் தமிழர் மதம் இயற்றினார். தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, தமிழர் திருமணம் இன்னவெல்லாம் இயற்றினார்! தனித்தமிழ்த் தந்தையார் மறைமலை என்றால், தனித் தமிழாம் தனியரசாண்ட கோவேந்தர் பாவாணர் எனத் தம் புகழ் நிறுவினார். இவர்களும் இவர்கள் வழிஞரும் எத்துணையோ முயன்றும் பாடுபட்டும் இன்றளவும் நிலைமை மாறிற்றா? ஒட்டு மொத்தத் தமிழரும் தம் முகத் திரையைக் கிழித்து வெளிப்பட்டால் அன்றி முழுமதியைக் காண முடியுமோ? முடியாது என்பது, அவர்கள் சமயச் சீர்திருத்தமெனச் சொல்லியவையெல்லாம் சொல்லள வாகவே நின்று விட்டன! அகலும் அறிகுறிதானும் அகப்பட வில்லை! என்பதாலேயே விளங்கும். சட்டப் பேரறிஞர் அவையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று அவாவினார் கா.சு. தமிழர் சமயச் சங்கமென நாடுதழுவிய ஓரமைப்பு வேண்டு மெனத் தொடக்க விழாவும் நடத்தினார். அனைத்திந்திய தமிழர் மத மாநாடு என்னும் பெயரால் 1940 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கூட்டி வரவேற்புரையும் வழங்கினார் கா.சு. அவ்வரவேற்புப் பொழிவும் தமிழர் சமயத்தின் முகப்பாக நின்ற அளவில் முடிந்து போயிற்று! தமிழ்ச் சமயம் தோன்றிற் றில்லை; தமிழ் வாழ்வும் தழைக்கவில்லை. உலகுக்கு வழிகாட்டத் தக்க உயர் சமயம் ஒடுங்கிக் கிடக்கின்றது. அதன்மேல்கவிந்துள்ள மூடுபனிக் கற்றையை முயன்று விலக்கி, உலகு காண வைக்க வேண்டும். அதற்குப் பணி செய்ய வருவாரைக் கண்டடையும் காலமேனும் அணித்தே உருவாக வேண்டும். தமிழர் சமயம் அடித்தளம் உடையது. கற்பனை - கதையாய் ஒழிவதன்று. வாழ்வாய் - வாழ்வொடு வாழ்வாய் - அமைந்தது! அவர் தம் அன்புவாழ்வு இல்லறம்! அவர்தம் அருள் வாழ்வு துறவறம்! இல்லறத்தின் இடமும் துறவறத்தின் இடமும் இல்லமே! ïu©L« åL«, fhL« m‹W, bga® kh‰w«, cil kh‰w« m‹W., ஒன்றன் வளர்நிலையில் ஒன்று அமைவது! தனித் தனிப் பகுப்பன்று! பள்ளிப்பயிற்சி முடித்தவர் கல்லூரிக் கல்வியில் தலைப் படுதல் போல வாழியல் நிலைமாற்றமேயன்றித் தனித் தனிப் பிரிவினதன்று. கல்வியில்கூட, பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் ஓரிடத்தும் உண்டு. வேறு வேறிடத்தும் உண்டு. ஆனால், தமிழர் தம் இல்லறமும் துறவறமும் இல்லத்தில் அமைந்து விளங்கும் வளர் நிலை வாழ்வேயாம். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்பது தொல்காப்பியம் (கற்பு. 51) மனநிறைவான இல்லறம்; அதன் பின்னர் மக்களும் சுற்றமும் சூழச் செம்பொருள் நெறியில் பழகுதல்; இவை மனையறப் பயன்! குடும்பத்துக்காக வாழும் வாழ்வு இல்லறம்; குடும்பத்தில் இருந்து ஊருக்கும் உலகுக்குமாக வாழும் வாழ்வு துறவறம்! இவ்விரண்டும் ஆடவர் பெண்டிர் ஆகிய ஒவ்வொருவர் வாழ்விலும் கட்டாயம் வேண்டத் தக்கதே! இரண்டில் ஒன்றை விடுத்த வாழ்வு வெற்றி வாழ்வன்று என்பது உட்கிடை. இவ் வளர் நிலை விளக்கமே வள்ளுவ அறத்துப்பால்! தமிழர் சமயத்தின் இவ்வடிப்படை போற்றப் பட வேண்டும். தமிழ் உணர்வுடன் சமயம் திகழ வேண்டும். தமிழர் வாழ்வுடன் இரண்டறக் கலந்ததாகச் சமயம் அமைய வேண்டும். தளர்வார்க்கு ஊன்றும், விழுவார்க்கு எழுப்பும் உடைய உயிர்த்துணையாகச் சமயம் அமைய வேண்டும். உணர்வால்உலகைத் தழுவிக் கொள்ளும் உயர்வுடைய தமிழ்ச் சமயம், தமிழ்கூறு நல்லுலகத்தில் தோன்றி உலகாக விரிதல் வேண்டும். தமிழ்க் காசுவின் தமிழர் சமயம் 1940 இல் முதற்கண் வெளி வந்தது. பின்னர் 1969 இல்மறுபதிப்பு வந்தது. அந்நூலின் பிரிவுகள் 18, வரவேற்புரை 1. ஆக இப்பத்தொன்பது பகுதிகளையும் ஏழு தலைப்புகளில் அடக்கி இந்நூல் வெளிப்படுகின்றது. இந்நூல் பொழிவு நூல். பொழிவாளன் கருத்தும், ஆய்வும் மூலவர் கருத்துடன் இடம் பெறுவது. சில கூறுகள் மிக வலியுறுத்தல், சில கூறுகள் வலியுறுத்தாமை, சில கருத்துகள் விடுதல், சில கருத்துகள் இணைத்தல் என்பனவெல்லாம் பொழி வாளன் நோக்குக்கு ஏற்ப அமையும் என்பது வெளிப்படை. ஒருநூற் கருத்துகளைப் பற்றிய ஆய்வு ஆதலால் மூல நூல் ஆசிரியர் வழங்கிய செய்திகள் அப்படி அப்படியே இடம் பெறுதல் இயற்கை. ஏனெனில் அவர்தம் கருத்துகளுக்கு அழுத்தம் தர வேண்டிய இடத்துத் தருதல் வேண்டுமாயின், அவர் கருத்து களை அப்படியே தாராமல் இயலாதே! தமிழர் சமயம் மீள்பார்வை பார்க்கப் பட்டு ஒழுங் குறுத்தியும் விரித்தும் எழுதப்பட வேண்டுமெனக் கா.சு. நினைந்தார். இந் நூலின் கருத்துக்கள் செவ்வையாகக் கோவை செய்யப்பட வில்லை என்றும் குறித்தார் (158). அக்குறிப்பின் தகவு கொண்டு இயன்ற அளவாற் கோவைப் படுத்தப்பட்டுள்ளது இஃது என்று கொள்ளலாம். தமிழர் மதம் (மறைமலையடிகள்), தமிழர் சமயம் (கா.சு.) தமிழர் மதம் (பாவாணர்) என்னும் முந்நூல்களையும் ஒருங் கெண்ணி ஒரு மொத்தத் திறனாய்வு நூலொன்று செய்யின் தமிழ்ச் சமய நோக்கின் விரிவாக்கம் விளங்கும். அப்பணி செய்தலும் வரவேற்புக்குரியதே; நூலின் சுருக்கம் கருதி இப் பொழிவு நூல் அவ்விரிவாக்கத்தை மேற்கொள்ளவில்லை. கா.சு. அவர்களுக்கு நெல்லையில்நினைவுச் சான்று உண்டு. அவர் அருளிய நூற்சான்றுகள் உண்டு. இவற்றினும் மேற்சான்றாக உயிர்ப்புச் சான்றாக விளங்குவது குழித்தலை தமிழ்க் கா.சு. நினைவு இலக்கியக் குழு. கா.சு. இலக்கியக்குழு கண்டு கண்ணெனக் காத்து வருபவர் மீ.சு.! ஆம்! மீ.சு. இளமுருகு பொற்செல்வியர்! பெண்ணொரு திறப் பெருமான் வடிவாகச் சிவனியத்தையும் மாலியத்தையும் கண்டவர்கா.சு. அக் கா.சு. இலக்கியக் குழு கண்ட மீ.சு. பெண்ணொரு கூறர். எப்படி? இளமுருகர் அவர்! பொற் செல்வியார் அவர்தம் வாழ்வரசியார்! இருவரும் இணை பிரியா இணைச் சானறாய் இளமுருகு பொற்செல்வியர்! குருவன் கொள்கை. கொண்டொழுகும் வழிஞர் மாண்பு இது! இளமுருகரும் பொற்செல்வியாரும் பெயருக்குள் மட்டும் ஒன்றியவரோ? இல்லை! பேச்சு, எழுத்து, தொண்டு ஆகிய அனைத்தினும் ஒன்றியவர். இருதலை ஒரு புறாவென இயைந்து தொண்டுக்கே தம்மை ஆக்கிக் கொண்டவர்கள். கா.ச. நினைவு, காசொடு நின்றதா? தமிழ் - தமிழினம் - தமிழ் வாழ்வு ஆகிய முந்நிலைகளிலும் முழுத் தொண்டுக்கு ஆட்படுத்திக் கொண்டது! எழுபது கடந்த இளைஞரும் இளைஞையும் இருபது அகவை எழுச்சிப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுளர். எண்ணத்தின் இளமைக்கு அகவைக் கணக்கென ஒன்று உண்டோ? கா.சு. நினைவு இலக்கியக் குழுவின் பொழிவு குழித் தலையுடன் நின்று விடுதல் கூடாது. காற்றொடு போதலும் கூடாது. வள்ளுவ வாய்மொழிப்படி, வினையால்வினையாக்கி எழுத்து வடிவில் இறக்கி விடுதல் வேண்டும். அவ்வெழுத்து இறக்கமும், பொழிவுப் போழ்திலேயே ஆர்வலர் கைகளில் தவழ வேண்டும்! காசு வைத் தமிழ்நூற் குழந்தையாக்கிப் பயிறலிலே அத்தகைய பற்று மீ.சு. வுக்கு. மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு என்பதன்றோ நம் மறை! செவிக்கின்பை உடற்கின்பாக்கி அதன் வழியே உயிர்க்கின்புமாக்கித் தம்மோடு தமிழுலகும் கூட்டுண்ணச் செய்விக்கும் செம்மல், தொண்டுச் செல்வர் இளமுருகு பொற் செல்வியர்க்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்! என் நெஞ்சில் தமிழ்க் கா.சு. வைத் தேக்கி வைக்கும் ஆக்கத்தைத் தேடி வைத்த ருளியவர் அவரல்லரோ! கா.சு இலக்கியக்குழு பொழிவு நூல் வெளியிட்டது எதனால்? கழகம் தமிழர் சமயம் வெளியிட்டதால், அதனால் தமிழர் சமயம் வெளியிட்ட சை.சி. நூ.ப. கழக ஆட்சியாளர், தாமரைத் செல்வர் வ. சுப்பையா அவர்களை நினைவு கூர்தல் வேண்டும்! அச் சுப்பையா இல்லையேல், மூலையில் இருந்த எளியேன் முற்றத்தில் வைக்கப் பட்டிருப்பேனோ? அச்சாலப் பெரியரைச் சாற்றச் சொல்லேது? தமிழ்ச் செல்வம், தமிழ்த் தொண்டன், பாவாணர் ஆராய்ச்சி நூலகம் இரா.இளங்குமரன் திருநகர், மதுரை - 6 22-9-86 1. தமிழ்க் கா.சு. வாழ்க்கைக் குறிப்பு “fh.R¥ãukÂa« fšÉ¡ flš; M§»y¤âY« v«.V., jÄÊY« v«.V., சட்டத்தில் எம்.எல். அவருக்கு எம்.எல். பிள்ளை யென்று ஒரு பெயரும் வழக்கிலிருக்கிறது. பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற் கென்று கா. சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திருந்து பலதிறத் தமிழ்ப் புதுமைகள் பிறக்கும். அவைகளைப் பழைமையென்றே அவர் சொல்வார். அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும். திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்களில் தமிழறிஞர் சுப்பிரமணியபிள்ளை என்னும் தலைப்பில் வரும் எழுவாய்க் குறிப்புக்கள் இவை. அதன் இறுவாய்க் குறிப்புக்கள் எம்.எல். பிள்ளையின் வாழ்க்கை நீதியுலகுக்குப் பயன்படா தொழிந்தமை அவ்வுலகின் துர் அதிர்ஷ்டமென்றெ சொல்வேன். சட்ட ஞானியைத் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பெற்றுள்ளது. பேராசிரியர் உடல் நலங் குன்றியுள்ளது. அவர் எந்நிலையில் நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் றாளை மறவாத செல்வத்தைப் பெற்றுள்ளது ஒருவித ஆறு தலளிக்கிறது. அச்சங்கரன் தமிழ்த் தொண்டரைக் காப்பானாக என்பவை. பீடும் பெயரும் தமிழ்க் கா.சு.வின் கல் நாட்டு விழாவிலே வெளிப்பட்ட சொல் நாட்டு ஒன்று : பிள்ளையவர்கள் வாழ்க்கையோ ஆடம்பரமற்றது. உள்ளம் குழந்தையுள்ளம்; இடையறா இறையன்புடையது. அவர்கள் பற்றெல்லாம் பற்றற்றானிடம்தான். உற்றார் உறவினரிடம் அவர் களுக்கு இருந்த பற்றெல்லாம் எண்ணெயும் தண்ணீரும் போல் தான் இருந்ததென்று சொல்ல வேண்டும். இறைபணி, அடியார் பணிகட்கு அடுத்து அவர்கள் ஈடுபட்டது தனித் தமிழ்த் தொண்டிற்றான். தனித் தமிழ்க்கலை, மொழிப்பரப்பு எல்லாம் பொருளற்ற பூசல் எனவும், நிலையா நாகரிகமற்ற கிளர்ச்சி எனவும் தமிழர்களாலேயே எள்ளி நகையாடப்பட்ட அக்காலத்தில் மக்கள் ஏளனத்தைப் பொருட் படுத்தாது, உண்மை என்றும் நிலை பெறும் என்னும் உறுதிப் பாட்டுடன் தனித் தமிழின் உயர்வையும் உயிர்ப்புத் தன்மையையும் ஒல்லும் வகையான் ஓவாதே சொல்லாலும் எழுத்தாலும் பரப்பி வந்த பெரியார் நம் பிள்ளையவர்கள். அவர்களைத் தனித் தமிழ் வீரர் எனின் சாலும்! என்னை? வீரம், போரிற்றான் என்பது இல்லையே; கொள்கையில் உறுதிப்பாடும் சிறந்த வீரமன்றோ? அந்த முறையில் கொள்கைக்காக வாழ்க்கைச் சிறப்பையும் இழக்கத் துணிந்த பெரியார் பிள்ளையவர்கள் என்றால் அன்னாரைத் தமிழ் வீரர் எனச் சொல்வது ஒரு சிறிதும் மிகையாகாது. இவ்வீரத்துடன் எத்தொழிலில் இருந்தாலும் தாம் கண்ட தமிழன் கலை மொழி உயர்வைத் தமிழ் உலகு கண்டு இன்புற்றுத் தன்னுணர்ச்சி பெறுமாறு பிள்ளையவர்கள் இடையறாத் தொண்டாற்றி வந்தார்கள். இன்று தமிழன் ஒரு சிறிதேனும் தன்னுணர்ச்சி பெற்றுத் தலைநிமிர்ந்து எண்ணவாவது செய்கிறான் என்றால், அது தமிழுலகுக்கு அன்று பிள்ளையவர்கள் ஈந்தருளிய பிச்சையின் பயன் எனத் தமிழுலகம் உணர்ந்து அவர்களுக்கு நெல்லையில் கல் நாட்டுதலுடன் அமையாது தமிழ் நாடெங் கணுமே உருவச் சிலைகள் வைத்துப் போற்றுதல் வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி 23 : 3) பொற்காசு 28-6-1920 இல் திருவரங்கனார்க்குப் பா.வே. மாணிக்க நாயகர் ஓரஞ்சல் விடுத்தார். அதில் தம்மையும் கா.சு.வையும் ஒப்பிட்டுத் தேர்கின்றார்: வேறுதக்காரைத் தேர்ந்து கொள்வதை விட்டுவிட்டு, தெய்வத் தமிழ் மொழியின் இதுகாறும் மறைந்து கிடந்த உண்மைகள் சிலவற்றை என்னுடைய தகுதியற்ற மூளையில் தோன்றச் செய்வதில் எனது ஆண்டவன் முருகப்பெருமான் ஒரு தலைச் சார்பாகவே இருக்கின்றான் என்று நாம் கருதுகின்றேன். இக்காலத்தில் ஆண்டவன் அருளால் உள்ளுணர்ச்சியுடன் கூடிய நிகரற்ற பெரும் புலவர், கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள். ஆனால் அவர்கள் தம்முடைய பெருமைகளை அறியாதிருக் கின்றார்கள். அதனால் ஒலிப்பன வல்லவாகிய உயர்ந்த உலோகங் களைப் போல அவர்கள் ஆரவாரம் செய்வதில்லை. நானோ மங்கிய உலோகங்களைப் போலத் தமிழ் நாட்டில் பெரிய ஆரவாரம் முழக்கி வருகின்றேன் என்று எழுதினார். மாணிக்கம் போற்றிய மாணிக்கம் இம்மாணிக்கர், மாணிக்கமா? மங்கிய மாழையா (உலோகமா)? எஞ்சினியர் மாணிக்க நாயக்கர் கூர்த்த மதியினர். வேர் அறிஞர். அவர் ஒரு பெரிய ஊற்று. அதனின்றும் புதுமைகள் சுரந்த வண்ணமிருக்கும். நாயக்கர் ஆராய்ச்சிகள் தமிழின் தனிமையை நிலைபெறுத்துவன. அவ்வாராய்ச்சிகளில் மிக மிகச் சிலவே வெளிவந்தன. எல்லாம் வெளிவந்திருப்பின் சரித்திர உலகில் தமிழ்நாடு ஒரு தனிமதிப்புப் பெற்றிருக்கும். தமிழ்நாட்டின் தவக்குறை. நாயக்கர் தொல்காப்பியக் கடலை அடிக்கடி கடைவர்; கடைந்து கடைந்து அமிழ்தம் எடுப்பர்; அதை, நீங்கள் ஏற்கிறீர்களா என்று என்னைக் கேட்பர். - இம் மதிப்பீட்டுரை மாணிக்கரைப் பற்றியது. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்களில் இடம்பெற்றது (182) ஆதலால் கா.சு. மாணிக்கம் போற்றிய மாணிக்கம் என்க. தொல்காப்பியத் தோன்றல் பரோடா மன்னர் 1915 இல் குற்றாலத்தில் சின்னாட்கள் உறைந்தார். அவரொடு திருவாங்கூர் தீர்வைத்துறை ஆணையர் பி. பொன்னம்பலம் பிள்ளை என்பார்க்குத் தொடர்பு உண்டாயிற்று. அக்காலத்தில் தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளைப் பொன்னம்பலனார் வழியே மன்னர் அறிந்தார். தம் தலைநகர் சென்றதும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்க்கத் தமக்குள்ள அவாவை வெளியிட்டார். அதற்குரிய திட்டங்களைக் குறித்தெழுதுமாறு அமைச்சர் மாதவராவ் வழியே கடிதம் வந்தது. அதற்கு விளக்கமிக்க மறுமொழி வரைந்தார் பொன்னம்பலனார் : மொழிபெயர்ப்புடன் முழுப் பொறுப்பையும் ஏற்கத் தக்க சிறந்த முகவர் யார் எனப் பன்னாள் சிந்தித்தும் நண்பர்களை உசாவியறிந்தும் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். திருநெல்வேலியைச் சார்ந்தவரும் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவருமான உயர்திரு கா. R¥ãukÂa ãŸis v«.V., பி.எல். (அப்பொழுது எம்.எல். ஆகவில்லை; 1917 இல் எம்.எல். ஆனார்) அவர்களே தொல்காப்பியத்தை மொழி பெயர்க்கவும் மற்றைப் பணிகளையெல்லாம் மேற்பார்வையிடவும் தக்கவர் என்று முடிவு செய்துள்ளேன்; அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பட்டம் பெறுதற்குத் தமிழ் இலக்கியம் படிக்குங்கால் தமிழின் தங்கை மொழியான மலையாளத்தையும் இரண்டாவது மொழியாக எடுத்துப் பயின்றவர். இவ்வாறு மூன்று மொழிகளில் நல்ல புலமை பெற்றுள்ளார். (பின்னேவடமொழிப் புலமையும் பெற்றார்) எனக் குறிப்பிட்டு அவர்தம் திறம்,. உழைப்பு, பரிசு இன்னவெல்லாம் விரித்தெழுதினார். (தொல்காப்பியமும் பரோடா மன்னரும் - செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தது.) கா.சு. எழுதிய நூல்களே அவர்தம் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுமெனினும் இத்தகைய காட்சிச் சான்றுகளும் கருதத்தக்கன அல்லவோ! இறைமைப் பேறு தமிழ்க் கா.சு.வின் பல்திறப் பிழிவுச் சுருக்கத்துள் ஒன்று : பிள்ளையவர்கள் அறிவுத் துறையில் பேராற்றல் வாய்ந்த வர்கள். அதுபோல் கடவுள் வழிபாட்டிலும் தலை சிறந்தவராவர்; நினைவாற்றல் மிக்கவர்; நேர்மை குன்றாதவர்; அடக்கமும் பணிவும் இன்சொல்லும் எழிலாகவுடையவர்; எளிய வாழ்க்கையினர்; உறுதி யுள்ளத்தர்; நல்லாரிணக்கமே நாடும் நயத்தினர்; கடவுள் வழிபாடு பொதுவாக எல்லார்க்கும் இளமை தொட்டு நிகழ்வதாயினும் சிறப்பாக அமைவது முதுமையிலே யேயாகும். நம் பிள்ளையவர்களுக்கு இளமைப் பருவந்தொட்டே அவ்வழிபாடு சிறப்பாக அமைந்துள்ளது. அவ்வழிபாடொன்றே அவர்களுடைய கல்வி முன்னேற்றத்திற்கும் நினைவாற்றற்கும் பேராசிரியப் பெருநிலைக்கும் பெருந்துணையாக அமைந்துள்ளது. (பேராசிரியர் கா.சு. பிள்ளை வரலாறு பதிப்புரை. பக். 6) காசு கா. சுப்பிரமணியனார், கா.சு. எனச் சுருங்கிய வடிவில் குறிக்கப்படுவார். கா.சு. - பொன்: பொற்காசு! வாசி தீரவே காசு நல்குவீர் என்பது தேவாரம். கோபத்தன்ன தோயாப் பூந்துகிலில் பல் காசு நிரைத்த பான்மையை முருகாற்றுப்படை தெரிவிக்கும். கா. சு. பொன்னால் ஆயது என்பதைப் பொலங்காசு என்னும் ஓர் அகப்பாட்டு (269), மணிக்காசு என்னும் இன்னொரு பாட்டு (அகம். 293) கூறுகிறது. கா.சு. என்று சுருக்க அளவில் சொல்லாராய்த் தமிழ்க்காசு என்று அன்பு மீதூர அழைப்பது தமிழ்ப் பற்றாளர் வழக்காயிற்று. தமிழ்க் காசு தமிழ்க் கா.சு. தமிழ்ப் பொன் என்ற அளவில் நில்லாமல், இனிய கா.சு. என்னும் பொருளும் தருவதாயிற்று. தமிழ் என்பது இனிமைப் பொருளதேயன்றோ! இனிமையும் நீர்மையும் தமிழென லாகும் என்பது நிகண்டன்றோ! இன்னும் இத்தொடரை ஆழமாக எண்ணியவர் தமிழ்க்கு ஆசு எனக் கண்டனர். ஆசு ஆவது என்ன? அது பற்றாசு. இரண்டு இரும்புகளைப் பற்றவைப்பதற்கு இடையே ஓர் இரும்புத் துண்டை வைத்துக் காய்ச்சியடிப்பது வழக்கம். இடையே வைக்கும் இரும்புத் துண்டுக்குப் பற்றாசு என்பது பெயர். பற்றிக் கொள்ளுதற்கு இடமாக இருப்பது என்பது பொருள். அதனால் அதனைப் பற்றுக்கோடு என்றும் கூறுவர். ஆதலால், தமிழுக்குப் பற்றுக் கோடாகத் திகழ்ந்தவரைத் தமிழ்க காசு என்பது தகவானதேயாம். பற்றாசு gHik¡F« òJik¡F« ghykhf ïUªjt® ‘jÄœ¡ fh.R.’; rka¤â‰F« Ó®âU¤j¤â‰F« ghykhf ïUªjt® ‘jÄœ¡ fh.R.’; bkhʤ öŒik¡F« bkhÊah¡f¤â‰F« ghykhf ïUªjt® jÄœ¡ fh.R.; thœî¡F« thœÉaš r£l¤â‰F« ghykhf ïUªjt® jÄœ¡ fh.R.; f‰wY¡F« f‰ã¤jY¡F«, ü‰gƉá¡F« üÈa‰wY¡F« ghykhf ïUªjt® jÄœ¡ fh.R.; ஏன்? மெய்ப்பொருள் அறிவு நாட்டத்திற்கும் உலகியல் அறிவுத் தேட்டத்திற்கும் பாலமாக இருந்தவர் - பற்றாசாக இருந்தவர் தமிழ்க் கா.சு. ஆதலால் தமிழ்க் கா.சு. என்று வழங்குபவர் தெளிவுடையர்! தேர்ச்சியுடையர்! பாராட்டுக்கும் உரியர்! 2. தமிழர் சமயம் - பொது கா. சுப்பிரமணியனார் இயற்றிய நூல்கள் பல திறத்தன; பல வகையின. அவற்றுள், தமிழரையும் அவர் தம் சமயத்தையும் பற்றிய ஆய்வு நூல் தமிழர் சமயம் என்பது. தமிழைப் பற்றியும், தமிழர் சமயம் பற்றியும் பல நூல்களை இயற்றியுள்ளார் கா.சு. இரண்டையும் ஒப்ப இயைத்துக் காட்டிய நூல் தமிழர் சமயம் என்பதாம். 1940 இல் தமிழர் சமயம் வெளிவந்தது. அதன் முகவுரை கி. ஆ. பெ. விசுவநாதரால் வரையப்பட்டது. கோடையிலே இளைப்பாறிக்கொள்ள இங்கு வந்த எனக்கு இந்நூல் ஒரு குளிர்தருவாயிருந்தது என்கிறார். பெங்களூர் 25-5-40 என்பவை இதனை எழுதிய இடத்தையும் நாளையும் காட்டும். இந்நூல் ஆரிய மணல் மேடுகளிற் புதையுண்டு கிடந்த தமிழர் பெருந்தனம் என்றே கூறவேண்டும். இதனைச் சுட்டிக் காட்டியதும் ஒரு தமிழ்க் கா.சு. வேயாகும் என்பது நூற்றகவும் நூலாசிரியர் தகவும் தெரிவிப்பது! பெருந்தனந் தந்தது காசு எனல் இயற்கை தானே! எம்.எல். பிள்ளை என்று நெல்லை வட்டத்தில் திரு. பிள்ளை அவர்களைக் கூறுவதுண்டு. பிற வட்டங்களில் அவர்களை நெல்லைத் தமிழ்ச் சைவர் எனக் கூறுவர். பண்டிதருலகத்தில் அவர்களைத் தமிழ்க் கா.சு. என மறைவாகக் கூறுவது மரபு. இந்நூலை வெளியிட்டு மூன்றாவது பெயருக்கு முற்றும் பொருத்த மானார்கள் பேராசிரியர் திரு. பிள்ளை அவர்கள் என்பதனால் தமிழர் சமயச் சிறப்புப் புலப்படும். இந்நூல் அச்சிடப்பட்ட பின்னர் தமிழ்ப் பெருமக்கள் சிலர் பார்வைக்குப் படிகள் விடுக்கப்பட்டன. நாவலர் பாரதியார், அறிஞர் தூ.சு. கந்தசாமியார், முதுபெரும்புலவர் வெ. ப. சுப்பிரமணியனார், நாவலர் ந. மு. வேங்கடசாமியார், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார், தவத்திரு மறைமலையடிகளார், பண்டித ஆனந்தனார், அறிஞர் காழி. சிவ. கண்ணுசாமியார் ஆகியவர்கள் இந்நூல் பற்றிய தத்தம் கருத்துகளை எழுதினர். அவை, மதிப்புரைகள் என்னும் தலைப்பில் இடம் பெற்றன. ஒரு நூலை தம் மதிக்கோல் கொண்டு அளவீடு செய்யும் போது, நம் மதிப்புக்குரிய புலமையாளர்கள் செய்தமதிப்பீடுகளும் கைவயப்படுமெனின் பெருநலமேயன்றோ? அம் மதிப்புரைகளில் சில மணிகளை அகழ்ந்து இவண் வைக்கப்படுகின்றன: அவர்கள் எழுதுமெதுவும் அவர்களின் அகன்ற கல்வியும் மிகுந்த ஆராய்ச்சியும் விளங்க அமைந்திருக்கும். - சோமசுந்தர பாரதி. அந்நூலுள் யாண்டும் தங்கள் ஆற்றலும், அறிவும், ஆராய்ச்சித் திறனும் புலத்துறை முற்றிய கலையறிவும் ஒளிசெய்து விளங்குவதைக் கண்டேன். - தூ. சு. கந்தசாமி சுருக்கமாக அறிவுக் களஞ்சியம் எனவும், ஒழுக்கக் கருவூலம் எனவும், சமய நிலையம் எனவும் சொல்லலாம். இந்நூலில் சீர்திருத்தங்கள் தமிழர் சட்டம் என்ற பகுதிகள் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்து விசேட திருப்தி அளித்தவைகளாம். - வெ.ப. சுப்பிரமணிய முதலியார். சீர்திருத்தங்கள் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ள பலவும் இக்காலத்திற்கு ஏற்றனவும் பலராலும் விரும்பத் தக்கனவும் ஆம் என்னும் கருத்துடையேன். -ந. மு. வேங்கடசாமி நாட்டார். காலக்கோட்பாட்டினால் ஆரியக் கொள்கைகள் நமது மெய்ந்நெறியை மாசுபடச் செய்தன. இவ்வுண்மையைத் தமிழறி ஞர்கள் நன்குணர்ந்து தமதுள்ளத்தே மதித்துக் கொண்டு ஆரியக் கொள்கைகளை விரைவில் களைத்தெறிந்து தமிழரின் சமய நெறிகளைத் தூய்மையாக்கும் கடப்பாட்டை இன்னே மேற் கொள்ளுதல் மிக மிக வேண்டப்படும். - த. வே. உமாமகேசுவரன். திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தாம் வரைந்த தமிழர் சமயம் என்னும் நூலை மிகவும் நன்றாக எழுதி யிருப்பதுடன், தமிழரின் பண்டை நாகரிக வரலாறு களெல்லாங் கூடிய வரையில் நன்காராய்ந்து அடக்கி, இனி எதிர்காலத்திற்கு வேண்டுல் திருத்தங்களையும் செவ்வனே எடுத்துக்காட்டி விளக்கி யிருக்கின்றார்கள். யான் சென்ற 40 ஆண்டுகளாக ஆராய்ந் தெழுதியிருக்கும் என்னுடைய நூற் பொருள்களை அவர்கள் தழுவியே எழுதியிருத்தலால் அவர்கட்கும் எனக்கும் பெரும்பாலுங் கருத்து வேற்றுமை இல்லை. - மறைமலையடிகள். தமிழர் தம்மை யறிவதற்கும் தமிழரை மதியாதுள்ள ஏனையநாட்டு மக்கள் தமிழரின் பண்டைய நாட்பெருமையை அறிந்து கொள்வதற்கும் வேண்டிய எல்லா உண்மைப் பொருள் களையும் சுருக்கி நெருக்கி எழுதியுள்ளார்கள். - பண்டித எ.எ. ஆனந்தம். தமிழ் மக்கள்மாட்டுள்ள அளவிலா ஆர்வத்தால் இயற்றி யளித்த ஆராய்ச்சியருங்கலப் பெட்டகம் என்றே தமிழர் சமயம் என்ற நூலை அறுதியிட்டுக் கூறலாம். தமிழ் மக்கட்குச் சாத்திரமேது, சமயமேது, மொழியேது, நீதியேது, முறையேது, தலையேது என்று உறுக்கிக் கேட்டுத் தருக்கித் திரியும் பெருமக்கள் இன்னும் இலரோ? அதிலும் மேனாட்டு முறைப்படி ஆராய்ச்சிக் கண்ணாடி பூண்டு துருவித் துருவி ஆராய்ந்து, அத்துறைகளில் உண்மை கண்டவிடத்தும், தந்நலமன்றி மெய்ந்நலம் பேணாப் பெற்றிமையால், அதனை ஏற்க மறுக்கும் பேரறிஞர்களும் இலரோ? இலராதல் இல்லை; உளர்; ஒரு சிலரேனும் உளர். ஐயம் நிறைந்தஅத்தகைய ஐயனார்கட்கும் ஆணித்தரமான விடையளிப் பதாகும் திரு பிள்ளையவர்கள் எழுதியுதவிய இவ்வொப்பற்ற ஆராய்ச்சி நூல். அறிவுக்கலைகள், ஆராய்ச்சிக் கலைகள், கருவிக் கலைகள் கவின்கலைகள் எல்லாம் தமிழ் நாட்டுஅறிவுக் கனிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப் பெற்ற முழு மணிகளே என்று அழுத்தந் திருத்த மாக இனிய எளிய திருந்திய தமிழ்நடையில் இந்நூல்நிறுவிச் செல்வது தமிழர்க்கே தனிப்பட்ட ஒரு சிறப்பை யளிப்பதாகும். - காழி. சிவ. கண்ணுசாமி. இவையெல்லாம் நூலாசிரியர்மேல் அன்புடையாரும் மதிப்புடையாரும் எழுதியவைதாமே! அவர்கள் என்ன கருத்து மாற்றத்தை எடுத்துரைத்தோ கடுத்துரைத்தோ செல்வரோ என்பார் உளராகலாம். அவ்வாறு கருதுவார் மதிப்புரைத்த மக்களின் தகவு மதித்தறியாப் பான்மையர் எனக் கொள்ள வேண்டி வருமாம். இந்நூலிற் கண்ட உண்மைகள் எல்லாம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுதல்வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. எனினும், அவை ஆழ்ந்து கருதி ஆராய்ந்து துணிவுடன் வெளியிடப் பட்ட ஆராய்ச்சிக் கருத்துக்களாதலின் அவற்றைத் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பரிந்தேற்றுப் படித்தல் தலையாய கடனாம் என்றும், சிற்சில ஆராய்ச்சி பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடு நிகழ்தல் இயல்பே. எனினும், இந்நூலில் சமய நெறி நின்று கடவுள் வழிபாடு செய்தல் வற்புறுத்தப் படுதலின் சமயப் பற்றுடை யோரால் இது விரும்பற்பாலதேயாகும் என்றும் வருவன அப்படியே ஏற்பனவோ? அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரனாரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று பாராட்டப்பட்டவர் மறைமலையடிகளார், பாராட்டியவர் திரு.வி.க.! தம் ஆசிரியராகவும் தம்மால் வணங்கத் தக்கவராகவும் கொள்ளப்பட்ட அடிகாளர் கருத்துகள் அனைத் தையும் அப்படியே ஏற்றுக் கொண்டாரோ? ஏற்றுக் கொண்டதாக நடித்தாரோ? அடிகளார் வாழ்ந்து கொண்டிருந்த நாளிலேயே எழுதினார்: மறைமலையடிகள் கருத்துக்கும் என் கருத்துக்கும் வேற்று மையுண்டா? இல்லையா? சிலவற்றில் உண்டு. அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு; அடியேன் போக்கு வேறு. இரண்டுக்கும் சந்திப்பு உண்டாதல் அரிது. அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்கும் கருவிகள் இருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும் என்பது எனது உட்கிடக்கை. மறைமலை அடிகள் சமய நூல்களிலும் தத்துவ நூல் களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடும் கருத்துக் களை என் மனம் ஏற்பதில்லை. சமயமும் தத்துவமும் ஆராய்ச்சிக்கு எட்டாதன என்பதும் இவ்வாராய்ச்சி யால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் எனது எண்ணம். ஒருவர் பன் மனைவியரை மணக்கலாம் என்று அடிகள் அறைவது எனது நோக்குக்கு முற்றும் முரண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது எனது கொள்கை. (வாழ்க்கைக் குறிப்புகள் : 168) சான்றாண்மைக்கு ஆழியாம் இத்தகையரை - இத்தகையர் உரையை - மதிப்பீட்டை அன்பர், நண்பர் என்னும் கூட்டு கொண்டு தள்ளிவிட முடியுமோ? (கா.சு. கண்ட புதுக்கருத்துக்களைப்) பழமை என்றே அவர் சொல்வர், அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும் என்பதில் தம் உடன்பாடின்மையைக் காட்டிவிடுகிறார் அல்லரோ திரு. வி.க. (th.F.: 189) தமிழர் சமயம் மதிப்புரைகள் இணைப்பில் ஆனந்தனார், தமிழர் சமய மாநாடு ஒன்று கூட்டப் போவதாகவும் அறிந்து மகிழ்ந்தேன் என்று இவர்கள் முன்னின்று தமிழர் சமய மாநாட்டைக் கூட்டின் பல பெரியோர்கள் கட்டாயம் ஒன்று சேருவார்கள். அதனால் நமது சமயக் கட்டம் புதுப்பிக்கப்படும். தமிழர் இழந்தபெருமையை மீண்டும் அடைவார்கள் என்பதே முடிவான நம்பிக்கையாகும் என்று குறிக்கும் செய்திகளும் உள. அனைத்திந்திய தமிழர் மத மாநாடு 1940 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நிகழ்ந்தது. மாநாட்டு வரவேற்புரை தமிழ்க் கா.சு. நிகழ்த்தினார். அவ்வரவேற்புரை தமிழர் தமிழர் சமயம் என்னும் இருகால் தூணங்களின் மேல் எழுப்பிய தோரண வாயி லெனத் திகழ்வதால் அவ்வரவேற்புரையும் தமிழர் சமய முகப்பாக வைக்கப்பட்டது. முதல் இருபத்திரண்டு பக்கங்களில் அவ்வுரை இடம் பெற்றுளது. நூல், தமிழர் யார் என்பது முதலாகத் தொகுப்புரை ஈறாகப் பதினெட்டுத் தலைப்புகளில் இயல்கின்றது. இச்சிறு ஆராய்ச்சியின் விரிவை விரைவில் தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்ததென்றும், தமிழர் சமயக்கடன்களைத் தொகுத்தும் வகுத்தும் வரிசைப்படுத்திச் சேர்க்க வேண்டும் என விரும்பியதென்றும், மதிப்புரையால் விளக்கமாகின்றது. நூலாசிரியரும் அக்கருத்துடன் இருந்தார் என்பதை நூலின் நிறைவில் இதன் விரிவும் திருத்தமும் எதிர்காலத்தில் நிகழற்பாலன என்னுமுறை தெளிவிக்கும். 3. தமிழர் தமிழர் ü‰bgaÇYŸs ïUbrh‰fËš K‹dJ ‘jÄH®! தமிழர் என்பார் இல்லாக்கால், அவர்தம் சமயமெனச் சொல்ல வேண்டுவதென்ன? தமிழ் மாந்தர், கண்டு கண்டு கடைப் பிடியாகக் கொண்ட கோட்பாடே சமயமாதலின் தமிழர் என்பாரே எழுவாய்! அவர் தம் சமயமே பயனிலை! தமிழ் என்பது மொழியின் பெயர். அம்மொழியைப் பேசியதால் தமிழர் எனப்பட்டனரா? தமிழர்பேசியதால் அம் மொழி தமிழ் என ஆயிற்றா? தமிழர் என்பதில் முன்னது தமிழே ஆதலால், அத் தமிழை யுடையவரே - அவ்வுடைமையாலேயே தமிழர் எனப்பட்டார் என்றும், அவர் வாழ்ந்த நாடு தமிழ் நாடு என்றும், தமிழகம் என்றும் தமிழ்கூறு நல்லுலகம் என்றும் வழங்கப் பட்டன என்றும் அறியலாம். தமிழர் யார்? தமிழர் யார்? என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு விடை தருகிறார் கா.சு. தமிழர் யார் எனில், தமிழ் மொழியைத் தாய் மொழியாக உடையவர் யாவரும் தமிழரே என்பது அது. தமிழ் பேசுவார், தமிழகத்து வாழ்வார்; எனினும் தமிழைத் தாய்மொழி என்னார்! அவர் தமிழறிந்தவர், எனின், தமிழறிந்தவர் என்றும்; தமிழ் கற்றவர் எனின், தமிழ் கற்றவர் என்றும்; தமிழ்மேல் அன்புடையவர் எனின், தமிழன்பர் என்றும் சொல்லப் படுவா ரெயன்றித் தமிழர் என்னப்படார். ஆங்கிலம் பயின்றாரும், ஆங்கிலம் பேசுவாரும், ஆங்கிலப் பாடம் நடத்துவாரும், ஆங்கில நாட்டு வாழ்வாரும் ஆங்கிலர் எனப்படுவரோ? ஆங்கிலத்தைத் தாய்மொழியாக உடையவரே ஆங்கிலர் எனப்படுதல் தெளிவே யன்றோ! இத்தெளிவை 1933 இல் நிகழ்ந்த ஒருநிகழ்வு காட்டுகின்றது. தமிழன்பர் மாநாடு சென்னை பச்சைய்பபன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆம் நாட்களில் தமிழ் அன்பர் மாநாடு என ஒன்று நிகழ்ந்தது. அந்நாள் சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திவான் பகதூர்குமாரசாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். அம் மாநாட்டுக்கு மறைமலையடிகளார் அழைக்கப்பெற்றார். அழைப்பு அறிக்கை ஆகியவற்றில் பொக்கிஷதார், காரிய தரிசி, அங்கத்தினர், மகாநாடு, தமிழபிமானி, புத்தகாலயச் சங்கம், பத்திரிகைகள், வியூகங்கள், அபிப்பராயம், சீக்கிரம், நகல், கஜான்ஜி, தமிழ் பாஷை, புராதனம், ஜனங்கள், ஆலோசிப்பது, பிரசார சங்கம், விஜயம், ராஜதானி இன்னபல சொற்கள் இடம் பெற்றிருந்தன. இம் மாநாட்டார் தமிழர் மாநாடு என்றார் அல்லர். தமிழன்பர் மாநாடு என்றே கூட்டினார். அதனால், தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்றும் தன் பண்டைநலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும் அதன் வளர்ச்சியினைக் குன்றச் செய்யுமென்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமதுதனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்து கொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக என்று மறுத்தெழுதினார் மறைமலையடிகளார். தமிழர் விரிவாக்கம் தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடையவர்தமிழரே எனினும், அவரொடு இன்னொரு மொழி இனத்தார்இணைந்து அவர் மொழியையே இணைந்தவரும்பேசுவராயின் - தம் தாய் மொழியெனக் கொள்வராயின் - அவரும் தமிழர் எனத்தக்க வரேயாம். இக்கருத்தால் மொழியானது இனத்தையும் இனச் சார்பையும் குறிக்கும் என்று தெளிவாக்குகிறார் கா.சு. ஆங்கில ஆடவர்க்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்த வர்கள் ஆங்கில மொழியைத் தங்கள் வீட்டு மொழியாகப் பேசி வருவதைச் சுட்டுகிறார். இவற்றால் தமிழைத தாய்மொழியாகக் கொண்ட வரும், தமிழரோடு கலப்புற்றுத் தமிழைத் தாய்மொழியென ஏற்றுக் கொண்டாரும் தமிழரே என்னும் விளக்கம் கிடைக்கின்றது. இன்னும் மொழியை வைத்து மக்களின் இனத்தைக் கூறுவது உண்டெனினும் ஓர் இனத்தாரின் மொழியை அவர்களோடு ஒருங்குவாழும் மற்றோர் இனத்தார் தழுவிக்கொள்ளுதலும் உண்டு. யூதர் என்பார் ஐரோப்பாவில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு மொழிகளைத் தங்கள் சொந்த மொழியாகப் பேசுவதை எடுத்துக் காட்டி விளக்குகிறார் கா. சு. இவ்வகையில் பல நூற்றாண்டுகளின் முன்னே தெலுங்க நாட்டினின்று இவண்போந்து தமிழைத் தாய்மொழியாகவே கொண்டு விட்டவரும் தமிழரென்றே கொள்ளல் வேண்டும் என்னும் கருத்து விரிவாக்கம் பெறுவதாம். தமிழர் தமிழகத்தாரே தாலமியின் குறிப்பில் தமிழ், தமிழகம் என்பவை இடம் பெற்றிருத்தலைக் குறிக்கிறார். திராவிடம் என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல்வந்தது என்பதை மறுக்கிறார் கா.சு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய மொழிகளை ஒருசேரக் குறிக்கும் சொல் திராவிடம் என்பது என்றும், அது வடநாட்டவர் வழங்கியது என்றும், தமிழரைத் தனியே குறிக்கத் தமிழர் என்றே வழங்கினர் என்றும் பலப்பல சான்றுகளால்நிறுவுகிறார். கால்டுவெல் ஐயர். பி. தி. சீனிவாசய் யங்கார் கூற்றுகளை எடுத்தாள்கிறார். தொல்காப் பியத்திலேயே தமிழ் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தலையும் விளக்குகிறார். இனித் திராவிடர் இந்நாட்டுப் பழங்குடிகள் அல்லர்; அவரும் பிறநாட்டினின்றே ஆரியர் வருகைக்கு முற்பட வந்தவரே என்று கூறுவார் கருத்தை நயத்தக மறுக்கிறார்: வெளிநாட்டிலிருந்து அவர்கள் இங்கே வந்தவர்கள் என்று சொல்பவர்கள் அங்ஙனம் சொல்வதற்குக் காரணம் அங்கங்குள்ள மக்களுடைய உடற்கூறுகள் பழக்க வழக்கங்கள் மொழிகள் முதலியவற்றிற்கும் திராவிட மக்களின் உடற்கூறு பழக்க வழக்கங்கள் மொழி என்பவற்றுக்கும் உள்ள ஒற்றுமையேயாம் என்க. அக் காரணத்தை வைத்தே இந்நாட்டினின்று வெவ்வேறு வெளிநாடு களுக்குத் திராவிட மக்கள் சென்று தங்கினர் என்று கூறுவதற்குத் தடை யாது? என வினாவுகின்றார். மேலும் அந்நாட்டில் இருந்து இங்கே மக்கள் வந்தனர் என்றால், அந்நாட்டுக்கு முதல்முதல்மக்கள் எங்கிருந்து போயினர் என்ற கேள்வி எழும் என்று வினா எழுப்பித் தமிழர் இந்நாட்டவரே என நிலைப்படுத்துகிறார். அன்றியும் அறிவர் கிரை யர்சன், அறிவர் பெர்கூசன், அறிஞர் பி. தி. சீனிவாச அய்யங்கார் முதலி யவர்கள், தமிழர்கள் இந்நாட்டுக்கே உரிய பண்டை மக்களினத் தவர்கள் என்பதை எடுத்து விளக்குகிறார். மாந்தரின் தோற்றம் முதல்முதல் மாந்தர் தோற்றம், கடல்கொண்ட தென்னா ட்டிலேயே ஏற்பட்டது என்பதையும் விரித்தெழுதுகிறார். கடல் கொண்ட தென்னாட்டில் நீகிரோ இனத்தவர் முதன் முதலாகத் தோன்றி ஆபிரிக்கா, கீழையாசியத் தீவுகள் ஆகிய வற்றிலும் தங்கினர். பின்னர் மஞ்சள் நிறத்தவராம் மங்கோலிய இனத்தவர் தோன்றிச் சீனநாட்டில் நிலைவரமாகத் தங்கினர். அவர்க்குப் பின், முன்திராவிடரும் தோன்றி எகித்து நாட்டில் தங்கியும், மங்கோலியரோடு கலந்தும் நின்றனர். ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெற்றனர். ஐரோப்பிய நாடுகளில் தங்கிய பண்டை மக்களே ஆரியர் என்னும் பெயருடன் தெற்கே மீண்டனர். இக்கருத்துகளை வலியுறுத்தும் கா.சு. ஒருவேளை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறபடி, திராவிடர் வேற்றிடத்திலிருந்து இவண் வந்தவரே எனினும் ஆரியர் வருகைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவுக்கு வந்து, நாடு முழுவதும் நாகரிகத்தைப் பரப்பியர் என்பதற்கு ஐயமில்லை என்றும் வலியுறுத்துவார். தமிழர் நாகரிகம் இறந்த முன்னோர்வழிபாடு, நினைவுக்கல் நாட்டல், மறு பிறப்பு நம்பிக்கை, சிவலிங்கவழிபாடு முதலியவெல்லாம் புதுக் கற்காலத்திலேயே தோன்றிவிட்டன என்றும், சிந்துவெளி நாகரிகம் தமிழரதே என்றும் விரிவாக விளக்குகிறார். சுமேரிய நாகரிகத்திற்குச் சிந்து நாகரிகமே முற்பட்ட என்றும் நிறுவுகிறார். வடமொழியினின்று தமிழ் வந்தது என்பாரை மறுத்துத், திராவிடர் காலத்தால் ஆரியர்ககு முற்பட்டவர் என்றும், திராவிடம் மொழி வளர்ச்சியில் முற்பட்ட ஒட்டுச்சொல் நிலை யிலும், ஆரியம் பிற்பட்ட உட்பிணைப்பு நிலையிலும் இருப்பதால் இரு மொழிக்கு முரிய ஒப்புமைப் பகுதிகள் திராவிடத்திலிருந்தே ஆரியத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் சான்றுடன் விளக்குகிறார். திராவிட மொழிகளுக்கும் ஆரியமொழிக்கும் உள்ள அடிப் படை அமைப்பு வேறுபாடுகளைக் கால்டுவெல் கண் காணியாரின் ஒப்பிலக்கண ஆய்வு முறையில் சொல்வதுடன், வடமொழியி லுள்ள தமிழ்ச் சொற்களையும் குறிப்பிடுகிறார். ஓரொப்பு பலமொழிகளின் ஒற்றுமையை நோக்குங்கால் அவர்களின் முன்னோர்கள் ஓரிடத்தில் முதற்கண் தோன்றி ஒருமொழி பேசினர் என்பது ஊகிக்கப்படும். மொழி தோன்றுங்கால் ஓரிடத் திலிருந்து பின்னர்ப் பிரிவுற்று வெவ்வேறு இடங்களில் தங்கி அவ்வவ் விடங்களுக்குத்தக்க நாகரிகங்களை மக்கள் தோற்று வித்து வளர்த்தனராதலின் மக்களினத்தார் பலரும் மொழி வேற்றுமையும் நாகரிக வேற்றுமையும் உடையவராயினர் என நிறுவுகிறார். தமிழ் என்க இனித் திராவிட நாகரிகத்தை விளக்கும் தனி மூல இலக்கியங்களும் இலக்கணங்களும் கல்வெட்டுகளும் தமிழிலேயே உள்ளன. ஹெரோடட்ட கி. மு. 493 இலும், மெகதனீ 300-க்கு முன்னும், டிராபோ கி.பி. 20-இலும், பிளினி 77-இலும், தாலமி - 130 இலும் வாழ்ந்தவர்கள், இவர்கள் தமிழ், தமிழர், தமிழகம் என்றே வழங்கினர். ஆதலால் ஆராய்ச்சிக்குத் திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்ற சொல்லை வழங்குதலே பொருத்தமாகும் என்று முடிக்கிறார். உலகளாவிய தமிழ் தமிழ் என்னும் சொல்லையொத்த பெயர்களை வெளி நாடுகளில் வழங்கியமையைத் தமிழ் வரலாற்றில் குறிக்கிறார் பாவாணர். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெரிப்புளுசு (Periplus) என்னும் கிரேக்க நூல் தமிராய் (Tamirai) என்று குறித்துள்ளது. பியூத்திங்கர் அட்டவணை (Peutinger Tables) என்னும் உரோம ஞாலப்படங்களில் (Atlas) தமிழகம் தமிரிக்கே (Damice) எனக் குறிக்கப்பட்டுள்ளது. தாலமி (Ptoleme) என்னும் எகுபதிய ஞாலநூலார் (கி.பி. 139-161) பியூத்திங்கர் அட்டவணையிடப் பெயர்களைப் பெயர்த் தெழுதும் போது, கிரேக்க டகரத்தை லகரமாகக் கொண்டு, திமிரிக்கே (Dymirice) என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கீ (Lumiriki) என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர் வந்த ரேவண்ணா (Ravanna) ஞாலநூலார் தமிரிக்கா (Damirica) எனத் திருத்திக் கொண்டார். தமிழ் என்னுஞ்சொல், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த இவென்திசாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில், சிமொலொ (Tehi-o-lo) என்னும் வடிவில் உள்ளது. இதைத் திமல (Dumala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெலார். பாலிமொழியிலுள்ள மகாவமிசம் (Maha (Vamso) என்னும் இலங்கை வரலாற்றில் த்மிலோ (Damilo) என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் தமுல் (Tamul) என்றனர். அவருள் தேனியவிடையூழியர் (Danish Missionaries) மட்டும் தமுலிக்கமொழி (Linga Damulica) என இலத்தீன் வடிவில் குறித்தனர். ஆங்கிலத்தில் தமிழ் (Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர் தென் மொழிக் குடும்பத்திற்குத் தமுலிக்கு (Tamulic) எனப் பெயரிட்டனர் (தமிழ் வரலாறு. முன்னுரை 31-32) உலக முதன் மொழி இலங்கை அறிஞராகிய ஞானப்பிரகாசப் பாதிரியார் தமிழோடு பிறமொழிகளுக்குள்ள ஒற்றுமையைக் காட்டி ஒரு பேரகராதி வெளியிட்டு வருகிறார். அது முற்றுப் பெறுமாயின் தமிழின் பழமையும் அது மக்களின் மூல முதல் மொழியோடு ஒத்திருக்கின்ற தன்மையும் நன்கு துலங்கும் என எதிரது போற்றி மொழிவார் கா.சு. அவ்வகர முதலி ஐஞ்சிறுபகுதிகளாக அகரந் தொடங்கி உகரந்தானும் நிறைவுறாமல் நின்றது. அதற்கே 1938 தொடங்கி 1944 ஆயிற்று. ஆயின் அதன் பின்னர் அப்பணியினும் அழுத்தமாக முதல் தாய் மொழி, ஒப்பியன் மொழிநூல் வேர்ச் சொற் கட்டுரைகள் முதலியவற்றைப் பாவாணர் எழுதி, தமிழ்திராவிட மொழியின் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாம் என்றும், மாந்தன் பிறந்தது குமரிக்கண்டமே என்றும், அவன் பேசிய முதன் மொழி தமிழே என்றும் நிறுவிக் காட்டினார். அவர்தம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி, அகர முதன் மடலத்தோடு அமையாமல் முற்றாக வெளிப்பட்டிருப்பின் தமிழ்க் கா.சு. எண்ணம் அவர் எண்ணிய அளவினும் அழுத்தமாக நிறைவேற்றப் பட்டிருக்கும்! எனினும் அத்தொண்டு இது கால் உலகளாவிய தொண்டாக விரிவுற்று வருவது எதிர்கால வெற்றியை நிலைப் படுத்துவதாக உள்ளது. 4. தமிழர் கலைகள் தமிழர் பண்டைய நாகரிக நிலை, நாட்டியக்கலை, இசைக் கலை என்னும் முப்பகுதியும் தமிழர் கலைகள் என்னும் இப் பகுதியில் கருதப்படுகின்றன. நாகரிகம் நாகரிகம் என்பது நகரமக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல்முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரகப் பெயரினின்று நாகரிகப்பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர் கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும் நாகரிக மில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிக முள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக. ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. L. Civitas, City or City - State, CIVIS Citizen, L. Civbilies - E. Civil - Civilize.” என்று நாகரிக வேர் கண்டு நயமிகக் கூறுவார் பாவாணர். (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்.1) உணவு, உடை, அணிகலன், ஓவியம், கட்டடம் ஆகிய வற்றைப் பற்றி நாகரிகநிலைக் கட்டுரையில் எழுதுகிறார் கா.சு. உயிர்வாழ்வுக்கு உண்டியும், பருவக்காப்பு மானக் காப்பு ஆகிவற்றுக்கு உடையும், அழகுக்கும் வளமைக்கும் அணிகலனும், காட்சியின்பத்திற்கு ஓவியமும், உறைவுக்கு உறையுளும் வேண்டத் தக்கவையாகலின் அவற்றை முறையே விளக்குகின்றார். உணவு உணவுக்கும் நாகரிகத்திற்கும் இயைபு என்னை எனின் மிகவுண்டா. மடைநூல் என ஒரு நூல் பழங்காலத்தில் விளங்கிய செய்தியுண்டு. இந்நாள் சயைமற் குறிப்பு நூல்கள் எத்துணை! இதழ்களில் கட்டுரைகள் எத்துணை உடலுக்கு ஊறு செய்யா வகையிலும், உணவே மருந்தாகவும் மருந்தே உணவாகவும் போற்றத் தக்க அமைவுடையது அட்டிற்கலை! திருக்குறளில் வரும் மருந்து அதிகாரச் செய்தி என்ன? உணவுச் செய்தியே பெரிதும்! உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதும், உண்டிமுதற்றே உணவின் பிண்டம் என்பதும் பழநூற் காட்சிகள். கையறி மடைமையில் கண்ணகியார் சமைத்தது சிலம்புச் செய்தி! குய்ப்புகை கமழத் தீம்புளிப்பாகர் ஊட்டும் தலைவி மகிழத் தலைவன் இனிது என்ன. அவள் முகமலர்தல் குறுந்தொகைக் காட்சி. ஆகலின், நாகரிகத்தில் தலைப்பாடு உடையதாகக் கா.சு உண்டியைத் தொடங்குகிறார். அரிசி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விளைவில் நெல்லுக்குத் தனி இடம் உண்டு. நெல்லரிசியால் ஆய சோறே சோறு எனக் கொண்டது அவர்கள் வாழ்வு. சொல் என்பது நெல் என்னும் பொருள் தரும் சொல். நெல் அரிசியால் ஆய சோறே. சொன்றி என்றும் சோறு என்றும் குறிக்கப்பட்டதாம். அவ்வரிசியின் பழமை அரும் பழமையாம். அரிசி என்னும் சொல் கிரீக் மொழியில்அரிசா (Oriza) என்றாய் அதிலிருந்து ரை (Rice) என்னும் ஆங்கிலச் சொல் வந்தது. அரிசிப் பழமையும் செல்வாக்கும் உலகப்பரவலும் உணரத்தக்கதாம். இருக்கு வேதத்தில் அரிசிக்குறிப்பு இல்லை என்றும், கோதுமை பார்லிக் குறிப்பு உண்டென்றும் குறிப்பிடுகிறார் கா.சு. ஆண் ஐந்தும் மூன்றும் இருந்தால் அறியாப் பெண்ணும் ஆக்கிப் படைப்பாள் என்பது வழங்குமொழி ஐந்து ஐந்தறைப்பெட்டியில் உள்ள ஐந்து பலசரக்குகள். மூன்று என்பது பால், தயிர், நெய் என்பன. இம்மூன்றும் பாற் சோறு, தயிர்ச்சோறு, நெய்ச் சோறு என ஆட்சியில் இருத்தல் நாடறி செய்தி. நெய்யில்லா உண்டி பாழ் என்பது இலக்கியங்கண்ட செய்தி. குடிநீர் வகைகளுளும் தமிழர் சிறப்புக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பந்தல் ஓரறமாக - ஏன் - பேரறமாகப் போற்றப்பட்டது. பட்டினத்தடிகளார் கழுமலமும் மணிக் கோவையில் சுட்டும் நுகர்வுப் பொருள்களைத் தம் உரைநடையில் தருகிறார் தமிழ்க் கா.சு. பாதிரிப்பூவும், புன்னைமலரும், தாமரையிதழும், வெளிய பச்சைக் கற்பூரமும், கத்தூரிக்குழம்பும், பிற மணப் பொருளுங் கலந்து உண்ணும் நீரமைத்த தண்ணீர்ப்பந்தரும், நறுநெய் கலந்த பொரிக்கறியும், தாளித நறும்புகை கமழும் கறிவகைகளும், வெண்ணிலவு போன்ற தயிரும், பலாப்பழமும், கற்கண்டும், நல்ல சுவைப்பதம் கெடாத முல்லையரும்பு போன்ற அன்னமும், தவத்தினர் யார்க்கும் வறியர் யார்க்கும் கருணையுடன் வழங்கும் அன்ன சத்திரம் என்பது அது. பழ ஆகாரம் என இடைக்காலத்தில் இருபிறப்பியாக வழங்கப்பட்டது. அதன் பொருளறிவாராவாய்ப் பலகாரமாகப் பெருகிவிட்டதாம். குழவுணவும் கிழவுணவும் பழவுணவே! முத்தமிழ்ச் சுவைகண்ட மாந்தர் முப்பழச் சுவையும் கண்டனர். பிறபிற கனிகளையும் கண்டு தேர்ந்து பயன்படுத்தினர். ஆகாத்தோம்பலும் ஆப்பயன் கொள்ளலும் கோவலர் வாழ்க்கையது! அதனைப்பேணல் பேரறமாகக் கருதப்பட்டது. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இழிவந்ததில் என்னும் குறளும். வெட்சிப் போர் என்பது ஆனிரை கவர்ந்து வந்து காத்தல் என்னும் புறத்திணை நெறியும், ஆகாத்தலின் அருமையைப் புலப்படுத்துவன. உடை இயற்கையொடு இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழர் வாழ்வில், காதல் தலைவன் தன் தலைவிக்கு வழங்கும் பொருள் களுள் தழையுடை என்பதும் ஒன்றாம். பூவூம் தழையும் கொண்டு புனைகலைத் திறமெல்லாம் வட்டிச் செய்யப்பட்ட உடையே தழையுடையாம்! பூவும் தழையும் பறிக்கும்போதும். புனைந்து புனைந்து எழில் கூட்டும் போதும். அதனை வாடிவதங்கா நிலையில் பொன்போல் போற்றிக் காத்துக் கொண்டுபோய்க் கொடுக்கும் போதும் அவன் உள்ளமெல்லாம் அள்ளுறி நிற்குமன்றோ! ஒவ்வோர் மலரும், அதன் ஒவ்வோர் இதழும் அவன் அன்புப் பொறிப்பை அடைந்து திளைக்குமேயன்றோ? தழையாடை அளவில் நில்லாமல் பூவாடையாகவே பொதுளுவதும் உண்டே யன்றோ! பொன்னாடையே எனினும் அவ்வாடைகட்கு ஒப்பாமோ? இந்நாள்வரை இறைவிக்குப் பூம்பாவாடை சாத்தி வருதல் பழந்தழையின் எச்சமாம் என எண்ணுகிறது கா.சு. வின் கூர்த்த மூளை. பாலாடையும் மெல்லிய நூலாடையும், மரவுரியாடையும், தோலாடையும் பிறவும் தமிழர் பயன் பொருளாக இருந்தன. மகளிர் கச்சணிந்த செய்தி பலபடக் கூறப்படுதலால் அவர் மேலாடையின்றியிருந்தனர் என்பது தவறாம் எனச் சுட்டுகிறார். மகளிர் அணிகலங்களும் விரிக்கப் படுகின்றன. வேந்தன் என்பான் அரசன். அவன் முடிவேய்ந்தவன் ஆதலால் வேந்தன் எனப்பட்டான். கொன்றை வேய்ந்த செல்வன் என்பது அறிக. இன்றும் கூரைவேய்தல் முடிகட்டி வேய்தலாக இருத்தலை அறிக. மணிமுடியணிந்த வேந்தன் - அணிகலம் பலப்பல புனைந்த வேந்தன் - இறைவன் எனப்பட்டான். இறைவனாம் முழு முதலுக்கும், மன்னனும் மக்களும் தாம் உவப்பனவெல்லாம் பூட்டியும் படைத்தும் உடுத்தும் மகிழ்ந்தனர். கோயில் கருவூலக் காட்சியைப் பெற்றது. பயன்பொருள்களின் நாட்டம் நிறைவுற்றபின் கவின் பொருள்களில் எவர்க்கும் கருத்துச் செல்லுதல் இயற்கை. அவ் வகையில் கிடைத்தற்கு அரியவும் வேலைப்பாடு மிக்கவுமாகிய பொருள்கள் பெருவரவேற்புக்குரியன. இவ்வரவேற்பே கடல் கடந்த நாடுகளுக்கும் கலஞ்செலுத்தி வணிகம் செய்யும் ஆர்வத்தை உண்டாக்கிற்றாம். தொல்பழங்காலத்திலேயே தோகை, தந்தம், முத்து, அரிசி, மிளகு, தேக்கு முதலியவை சிரேக்கம், சாலடியம், சீனம் முதலிய நாடுகளுக்குத் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனால் அந்நாட்டு நாணயங்கள் இங்கும், இந்நாட்டு நாணயங்கள் அங்கும் அகழ்வாய்வாய் புலப்பட்டுப் பழங்கால வாணிகத்தைப் பறைசாற்றுகின்றன. ஊர் என்பது மருதநிலைக் குடியிருப்பு. C®¡F cÇah‹ Cu‹; ‘Cu‹ v‹nfh? என்பது சங்கநூல்! சாலடிய நாட்டின் தலை நகரின் பெயர் ஊர் (Ur). அதில் மேல்மலைத் தேக்கந் துண்டங்களைக் கண்டெடுத்துள்ளனர். அதன் பழமை நாலாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாம். ஊரிலே ஒரு கல்வெட்டு தென் னாட்டில் இருந்து அணிகலம் செய்தற்காகத் தங்கம் வந்த செய்தியைக் குறிக்கின்றதாம். கிரேக்க மொழியில் நாவாய் என்னும் சொல் புகுந்து ஆங்கில நேவி யாதல் அறிந்தது. ஓவியம் ஒவ்வ வரையப்பட்ட ஒன்றே ஓவு, ஓவியம். ஓர் உருவைக் கண்டான் ஒருவன், அதனைக் காணாக்காலும், அதனைத் தீட்டி வைத்த காட்சி கண்டு அவ்வுருவைக் கண்டான் போலக் களிகூரச் செய்வது ஓவியம் ஆகும். ஓவியத் தொங்கலும், ஓவியத் திரையும், ஓவியப் படாங்களும், ஓவியமேற்கட்டுகளும் ஆங்காங்குப் பயன்படுத்தும் அழகுச் செல்வங்களாக விளங்கின. ஓவியச் செந்நூல் என ஒரு நூல் இருந்தது என்னும் மணிமேகலை, புனையா ஓவிய த்தையும் காட்டுகின்றது. ஓவியத்திற்கு உயிர்கொடுத்தலையே ஓவியர்கள் முதன்மை யாகக் கருதிய செய்தியைச் சுட்டும் கா.சு. கழுமலமும் மணிக் கோவையில் வரும் ஓவியக்காட்சி ஒன்றை விரித்துக் கூறுகிறார். இருக்குவேத நாளிலேயே தமிழர் கோட்டை கொத்தளம் கட்டியிருந்த குறிப்பைக் காட்டுகிறார். அரண்மனைக்கு நாலுவாசல் இருந்த செய்தியைக் குறிக்கிறார். வடநாட்டுக் கோயில்கள் தென்னாட்டுக் கோயில்கள் போல் பெரியவையாய் இன்மையை ஒப்பிட்டுக் காண்கிறார். மரங்களில் வழிபட்ட மக்கள் மன்றங்களிலும் அம்பலங் களிலும் வழிபட்ட வளர்ச்சியைக் காட்டுகிறார். திருக்கோயில் திருமரங்களே பண்டு தமிழர் மரங்களில் வழிபட்டதற்குச் சான்று என்று சான்றுகள் காட்டுகிறார். நடுகல் வழிபாட்டைத் தொல்காப்பியம் திருக்குறள் புறப்பாடல் குறிப்புகளில் காண ஏவுகிறார். இனித் தெய்வத் திருவுருவங்களின் வடிவமைப்பை நுணுகி யுரைப்பதுடன் நாகரிக நிலைப்பகுதியை நிறைவிக்கிறார் : மக்கள் மனக்கருத்துக்களைச் சிற்ப ஓவியங்களிற் காட்டு முறை தமிழர்களுள் மிக விரிவாகப் பெருகி வளர்ந்தது. நாலுபக்கமும் பார்க்கக்கூடிய தெய்வம் என்று காட்டுவதற்கு நான்கு முகங்கள் அமைப்பதும், வானையும் பார்ப்பதுணர்த்த ஐந்து முகங்களும், கீழ் உலகையும் நோக்குதல் காட்ட ஆறுமுகங் களும் அமைப்பது வழக்கமாயிற்று. அஞ்சாமையுணர்த்த அபய கரமும், கொடுப்பதுணர்த்த வரத கரமும், தீமைகளை ஓட்டுவதையுணர்த்த மழுத்தரித்த கரமும், பாதுகாப்பதையுணர்த்த மான்தரித்த கரமும் உருவங்களில் அமைப்பது வழக்கமாயிற்று. இருதயத்தில் நின்று உயிர்களை ஆட்டுவிப்பதையும் உடலில் இருபுறத்திலும் கத்திரிபோலக் குறுக்காகச் செல்லும் மூச் சோட்டத்தையும் குருதியோட்டத்தையும் நரம்பின் அமைப்பையும் உணர்த்த நடேசரது நடனவடிவம் அமைத்திருத்தல் காண்க. உடுக்கின் ஒலியினால் படைப்பதையும், அபய கரத்தினால் காப்பதையும், நெருப்பேந்திய கரத்தினால் ஒடுக்குவதையும், ஊன்றிய பாதத்தினால் மறைப்பதையும், எடுத்த பாதத்தினால் வீடளிப்பதையும் காட்டுவான் கூத்தப் பெருமானது உறுப்புக்கள் அமைந்துள்ளன காண்க. திருமால் வடிவத்தில் பிரணவ வடிவாகிய சங்கு ஓங்கார ஒலியால் இறைவன் படைத்தலைக் குறிக்கும் சக்கரம் உலகைக் காப்பதைக் குறிக்கும் தண்டம் அழிப்பதைக் குறிக்கும். வில் மறைப்பைக் குறிக்கும். வாள் பாசத்தை நீக்கி ஞானத்தைக் கொடுத்தலாகிய அருளுதலைக் குறிக்கும் (52-3) மெய்ப்பொருட் கருத்துக்களை ஓவியத்தின் வழியும் சிற்பத்தின் வழியும் காட்டும் கலைவல்லார் திறத்தை உணர்ந்து உணர்ந்து கூறியது இது! கடவுளுருவை வாளா கற்பனையால் படைத்தானல்லன் என்றும், அவ்வுருவின் ஒவ்வோர் உறுப்புக்கும் நிலைக்கும் பொருளுண்டு என்றும் நுணுகி யாராய்ந்து கூறிய இக்கூற்று சமய விழிப்புக்கு வழி காட்டுவதாம். நாட்டியக் கலை நாட்டியமாவது கூத்து. குதித்து ஆடுவதால் கூத்து வந்தது என்பர். தாள் என்பது வழியாக வந்தது தாளம்; அத்தாள் குதித்து ஒலிப்பதால் தாளம் வருவதுடன் அசைவும் குறிப்பும் உளவா கின்றன. ஆகலின் தாளத்துக்கும் கூத்துக்கும் தாள் தான் மூலம் என்க. நாடகம் என்பது தமிழ்ச்சொல் என்பதையும், அது நள்ளுதல் (பொருந்துதல்) வழியாக வருவது என்பதையும் மொழிஞாயிறு பாவாணர் குறிப்பார். நாடகக்கலை கூத்து நடனம் நாடகம் என முத்திறப்படுவதை அவர் விளக்குவார் : குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல், பொதுவியல்; உலகியல், தேவியல், வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வரிக் கூத்து, வரியமைதிக்கூத்து; அமைதிக்கூத்து (சாந்திக் கூத்து) வேடிக்கைக் கூத்து (விநோதக் கூத்து); விளையாட்டுக் கூத்து, வினைக்கூத்து; வெற்றிக் கூத்து, தோல்விக்கூத்து எனப் பல்வேறு வகையில் இவ்விருவகைப்படும். நடனம் அல்லது நடம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உட்கரணங்களோடும் கை கால்கண் வாய் முதலிய உறுப்புக்களின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை தொழிற்கை பொருட்கை என முத்திறப்பட்டு பிண்டி அல்லது இணையா வினைக்கை எனப்படும். ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும் பணையல் அல்லது இணைக்கை யெனப்படும். இரட்டைக்கை வண்ணம் பதினந்தும் கொண்டன வாகும். நடம் நடனம் என்னும் தென் சொற்கள் வட மொழியில் நட்ட, நட்டன என்று வலிக்கும். நட்ட என்பதனின்றும் நாட்ய என்னும் சொற்பிறக்கும். நடி என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ந்ருத் என்னும் அடியையே முதனிலையாக ஆள்வர். தமிழ் நடனம் இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது கி.மு. 4 ஆம் நூற்றாண்டாகும். அதற்கும் முந்தியது தமிழ்ப் பரதமேயென்பதை நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிரத்தில் கூறியிருப்பதால் அறிந்து கொள்க. நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து. அது பொருள் கதை (யோனி), தலைமை (விருத்தி), நிலை (சந்தி), சுவை,. வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்) நளிநயம் (அபிநயம்), சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்னும் பதினான்கு உறுப்பு களையுடையது. (150-152) இவற்றையும், தமிழர் நாகரிகம் பண்பாடு ஆயவற்றையும் பாவாணர் இயற்றிய பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலிற் கண்டு கொள்க. கூத்து கூத்து இன்னது என்பதை எளிமையாக விளக்குகிறார் கா.சு. மனத்தால் நினைப்பதை வாயினாற் பாடுவது போல உறுப்புகளின் குறிப்பினால் கருத்துக்களை விளக்குவது கூத்து எனப்படும் என்பது அது. கூத்து பெரிதும் மகளிரால் ஆடப்படுவ தெனினும் ஆனந்தக் கூத்து ஆடவரால் ஆடப்படுவதென்றும் சுட்டுகிறார். இறைவனும், உமையும், திருமாலும் பிற தெய்வங்களும் ஆடிய கூத்துகளை இனங் காட்டுகிறார். கூத்துக்கலை கூடா ஒழுக்கத்தவர் மேற்கொண்ட காரணத் தால் கடியப்பட்டதேயன்றி, அதன் குறைவு ஆகாது என்றும், ஆரியக் கூத்து விளையாட்டு வகையுள் ஒன்றாகலாம் என்றும், பரத நாட்டியத்தில் எவ்வளவு பகுதி ஆரியக் கூத்து என்பது தெரியவில்லை என்றும் சில கருத்துகளை இப்பகுதியில் வைக்கிறார். இசை இசை என்பது இனிமை தரத்தக்க ஒலிகளை இசைத்து ஒலிப்பது என்பது கா.சு. குறிப்பு. பண்ணோடு என்னாம் பாடற்கு இயைபின்றேல் என்பதில் வரும் இயைபு இசையாகும். பண்ணும் பாடலும் இசைவது உருவும் நிழலும் இசைவது ஒப்பது. அதனால் இசை என்பது ஒரு கருத்து. பாடுவோனையும் கேட்போனையும் இசையச் செய்வதனால் இசை என்பது மற்றோர் கருத்து. பொறி புலன்களையெல்லாம் பிற வகையிற் போகவிடாது இசைப்பது (கட்டுவது) இரைசயாதலால்இசைப் பெயர் பெற்றது என்பது வேறுமோர் கருத்து. இனிப் புகழுக்கு இடமாக இருத்தலின் இசையாயிற்று என்பது பிறிதோர் கருத்து. (இசையாவது புகழ்) இவ்வாறு பலப்பல கூறினும் பண்ணோடு பாடல் பொருந்து தலே இசையாய்ப் பின்னே பிறபிறவற்றைத் தழுவியதெனலாம். அசைத்து இசைகோடலின் அசையே என்பதால் அசையின் அடித்தளமே இசையாதலால் இப்பொருள் விளக்கமாம்! இசைவளம் பெரிது! அவ்வுலகம் பெரியது! அதிலும் தமிழிசைச் சிறப்பை என்னென்று சொல்வது? தேவாரம், நாலாயிரப் பனுவல், திருவாசகம், திருவிசைப்பா, திருப்புகழ் இவற்றில் இயைந்துள்ள இசை வளம் ஒரு பிறப்பில் ஒருவர் ஆய்ந்து காணக் கூடியவோ! வண்ணப் பாடல்கள் பாடிய சிறப்பாலேயே வண்ணச் சரபம் என்றும், வண்ணக் களஞ்சியம் என்றும் புகழ்ப் பெயர் பெற்று உலாக் கொண்ட பெருமக்கள் இருந்த இம் மண்ணிலேதான், தமிழிசையென ஒன்றுண்டா? என்று இசைக் கல்லூரி யாட்சியுடையாரும் வினா எழுப்பும் இழிதகைமை உண்டு! நாட்டுப்பாடல், சித்தர் பாடல்கள், ஏற்றப் பாட்டு, கும்மிப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு இத்தகைய நாடு தழுவிய பாடல்களுடன் வாழ்த்து வரி, அம்மானை வரி, கந்துக வரி, வள்ளை வரி, முரிவரி, திணை நிலை வரி இன்ன வரிப் பாடல்களும் தேவர்ப்பராய வாரப் பாடல்களுமாக ஏடு தழுவிய பாடல்களும் எத்துணை எத்துணை உள! கண்ணைக் காரெருமைத் தோல்போர்த்துக் கட்டிக் கொண்டு காட்சியெதுவும் இல்லை என்பார்க்குக் கருந்திரை கிழித்துக் காட்சி தரத் தனியொரு கதிரொளி வேண்டுமே! அது தமிழர் தன்னையுணர்ந்து மொழி அடிமைப்படா விடுதலை பெற்றாலன்றி வாராதே! எழுவகைத் தாளத்தில் இசை பிறக்கும் என்பதை முதற்கண் கண்டவர் தமிழர் என்று, கருணாமிர்த சாகரம் கூறுவதையும், தமிழ்ப் பண்களிலிருந்தே இராகங்கள் தோன்றின என்று சங்கீத ரத்னாகரம் கூறுவதையும் குறிப்பிடுகிறார். திருப்புகழிலமைந்துள்ள தாள விரிவையும், கல்லாடத் துள்ள இசைக் கருவி வளத்தையும் சுட்டுகிறார். ஐந்திணைப் பாகுபாட்டால் நேர்ந்த இசைநலம், வல்லிசை மெல்லிசைக் கருவிப்பாகுபாடும் குறிக்கும் கா.சு. யாழே வீணையாக உருவெடுத்தது போலும் என்கிறார். யாழ் தமிழ்ச் சொல்; வீணை வடசொல் எனக் கருதினோர் பலர். அவ்வேற்றுச் சொல் வடிவு மயக்க உணர்வாலோ, பெரு வழக்காலோ ஏற்பட்டு விட்டதாம். வீணையும் யாழே போல் தமிழ்ச் சொல்லே! நரம்பு சுண்டுதலை விண் விண் எனத் தெறிப்பதாகக் கூறும் மக்கள் வழக்கை உணர்ந்தால் உண்மை புலப்படும். விண் - வீண்; பண் - பாண் ஒப்புக் காண்க, ஐ - ஈறு. இனி வீணையின் நரம்பைச் சுண்டி அல்லது வருடிவிட்டு ஒலியை நுனித்து நோக்குக. ஒலி சுண்டி அல்லது வருடிவிட்ட நிலையிலும் பின் ஒலி குறைந்து குறைந்து வருதல் தெளிவாம். அதனால் வீழ்தல் உடைமையால்வீழ்நை வீணை ஆயிற்று என்று இசைவல்லார் வீ.ப. கா. சுந்தரனார் குறிப்பார். சாலை என்னும் பழஞ் சொல் ரோடு என்றோ ரதா என்றோ வழங்கப்படுவதால் வேறொன்றாகி விடுமா? வீணை என்பது பழந்தமிழர் யாழே! கால ஓட்டம், கருத்தோட்டம் ஆகியவற்றால் வடிவ மாற்றம் உறுதல் இயற்கை! காலணி மாற்றங் களைக் காணும் ஒருவன் பண்டைத்தமிழர் காலணி அணிந்திலர் எனலாமோ? மிதியல், அடையல், செருப்பு, தொடுதோல், அடிபுதை, அரணம் என்பனவெல்லாம் தம்முகங் காட்டுகின்றனவே! குழல் வகையே நாகசுரம் என்பார். நாகசுரம் நெடுங்குழல் எனப்படுவது கொண்டே இதனை மெய்ப்பிக்கலாம். கலைமலிந்த தமிழகம் கலைகளையெல்லாம் கை கழுவி விட்டு விட்டுக், கை பிசைந்து கொண்டிருக்கும் காட்சியையும் குறிக்கிறார் : தமிழ் மக்களிற் பலர் எல்லாக் கலைகளிலும் நன்கு பயிலாமை போலவே இசைக்கலையையும் நன்கு பயிலுவதில்லை. தமிழிசைவாணர் பலர் அருமையாக இயற்றியுள்ள பலவகைக் கீர்த்தனைகளையும் தமிழிசை அறிஞர் செவ்வையாகக் கற்றுத் தேர்வதில்லை. தற்காலத்தில் திருவனந்த புரம் இலக்குமண பிள்ளை முதலிய இசைச் செல்வர்கள் முயற்சியால் தமிழிசை புத்துயிர் பெற்று வருகிறது என்கிறார்.. யாழ்நூல் கண்ட விபுலானந்தஅடிகள், பாணர் கை வழி கண்ட வரகுணர் ஆகியோர் பணி நினைவுகூரத்தக்கது. குடந்தை சுந்தரேசனார் தமிழிசைப் பண்ணிசைத்தலில் நிகரின்றி அணித்தே விளங்கினார். இந்நாளில் தமிழிசை ஆய்வுக்கெனவே தம்மை ஆட்படுத்திக் கொண்டுள்ள அறிஞர் வீ.ப. கா. சுந்தரனார் தொண்டு எதிர்காலத்தில் எத்துணையோ நல்விளைவுகளை நாட்டுக்கு நல்கும். இசைக்கலைப் பகுதியிலே செய்யுட்கலை என்பதையும் இசைக்கிறார் கா.சு. செய்யுள் இயற்றமிழ்ப்பா ஆதலாலும், இயற்றமிழ் கொண்டே இசைத்தமிழ் இயலுமாதலாலும் அதனை இப்பகுதியிலேயே இணைக்கின்றார். தொல்காப்பியப் பாவகையைச் சுட்டுகிறார். பிற்காலப் பாவினங்களையும் குறிக்கிறார். பாட்டிடை வைத்த குறிப்பு, பாவில்லாதெழுந்த சொல்நடை. பொருளொடு புணர்ந்த பொய்ம் மொழி, பொருளொடு புணரா நகை மொழி என உரைச் செய்யுளின் நால்வகைகளையும் சுட்டுகின்றார். திருக்கோயில்களில் உள்ள இசைநிலைக்கு வருந்துகிறார்: சிவாலயங்களில் அத்திருவருட் பாடல்கள் தக்கமுறையில் பயிற்றப் படுவதும் மதிக்கப்படுவதும் இல்லை. வைணவ ஆலயங்களில் அது மதிப்படைந்தாலும் எல்லா மக்களாலும் செவ்விய முறையிற் பாடப்பெறாமல் ஓரினத்தாரால் வடமொழி வேதம் போலப் பிறர்க்கு விளங்காமுறையிற் பாடப் பெறுகின்றன. சிவாலயங்களில் நாயன்மார்களுக்கும், வைணவ ஆலயங் களில் ஆழ்வார்களுக்கும் குருபூசைகளும், திருவிழாக்களும் நடக்கின்றனவே ஒழிய அவர்கள் வரலாறுகளையும் உயர்ந்த கருத்துக்களையும் போதிக்கும் சொற்பொழிவுகள் நடைபெறு வதில்லை. அவ்வாறே திருவிழாக்களில் ஒவ்வொரு தலத்தின் ஐதிகங்களை விளக்கும் வரலாறுகளும் சிறப்புக்களும் வழிபடு வோர்க்கு எடுத்துரைக்கப் படுவதில்லை. தக்க சொற்பொழிவு களும் போதனைகளும் ஏற்படுமாயின் கோயில்சிறந்த கலாசாலை களாக விளங்கும். கல்வி இக்கருத்துக்களைக் கா.சு. கூறி நாற்பத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. திருக்கோயில்களில் தவறாமல் பள்ளியறைகள் உண்டேயன்றிக் கல்லூரிக் காட்சி உண்டாயிற்றில்லை. பல்கலைக் கழக மாட்சி அரும்பிற்றில்லை. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்னும் இருவகைக் கேட்டுக்கும் திருக்கோயில்கள் இடமாக இருப்பதால்தான் பிறபிற மதங்களுக்குப் பலப்பலர் பாய்ச்சல் காட்டவாய்க்கின்றது; நாமே அங்கே போ! அங்கே போ! என்னும் தள்ளுதலைச் செய்துவிட்டுப் போகிறானே; போய் விட்டானே! அழைத்து விட்டானே என்று இரங்குதல் மெய்யான நடிப்பேயன்றி வேறன்று! ஆக்கம் செய்வார் போல் அழிவு செய்யும் கேடர் செயல் அது என்பதை மெய்க்கண்ணுடையார் என்று காண்பரோ? இலக்கண ஆய்வில் தலைப்படும் கா.சு. தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்தி அதன் காலப்பழமை இருக்கு வேதத்திற்கும் முற்பட்டதென்னும் நச்சினார்க்கினியர் கருத்தை அழுத்துகிறார். பாரதப் போருக்கும் பாணினிக்கும் முற்பட்டதையும் குறிக்கிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஆவணி முதலாகத் திங்களை எண்ணும் காலக்கணக்கு இருப்பதால் வானியல் ஆய்வார் கணக்குப்படி 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேண்டும் தொல்காப்பியர் காலம் எனத் தெரிவிக்கிறார். தொல்காப்பியத்தில்பிற்காலத்தாரால் சிற்சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பினும் அதன் ஆதிப்பகுதி மிகவும் பழமையானது என்கிறார். ஆதிப்பகுதி என்பது எழுத்து சொல்லாகலாம். பொருளில் உள்ள இடைச் செருகல்கள் இவையெனக் குறித்திலர். செருகல் உண்டென அமைகிறார். மருத்துவம் மருத்துவத் துறை யாய்வும் இப்பகுதியில் இடம் பெறுகிறது. திருக்குறள் மருந்து பெரிதும் இவண் கருதப் பெறுகிறது. சித்த மருத்துவச் சீர்மை செப்பப்படுகிறது. வைத்தியத்திற்கு உயிராயுள்ள மூப்பு என்பதைக் கண்டு பிடித்து அதன் துணைக்கொண்டு உலோகங்களையும் நஞ்சுகளையும் சுத்தப்படுத்திப், பசிக்கு உணவுபோல நோய்க்குரிய செந்தூரம், பற்பம், சுண்ணம் முதலிய மருந்துகளைத் தயாரித்த தனிப்பெருமாண்பு தமிழ்ச் சித்தருக்கே உரியது. ஆனால் அவர்கள் கண்டு கூறிய முறைகள் ஒழுங்காகப் போதிக்கப் படாமையால்சித்தர் நூற்பொருளறியாது தவறான முறையிற் சென்று பலர் இடர்ப்படுதலின் உண்மைச் சித்த மருத்துவம் நன்கு பரவாதிருக்கின்றது. இது தமிழருக்கு ஒரு குறைவாகும். குட்டம், காசம், இருமல் முதலிய நோய்களை வேரறக் களையும் தாமிரபற்பம், தாளக செந்தூரம், இரசசுன்னம் முதலியன பிற மருத்துவ முறைகளில் உளவாயின் அவை தமிழ் நூல்களிலிருந்து தழுவப்பட்டனவேயாகும் என உறுதி மொழிகின்றார். காயகற்பம், இரசவாதம், யோகம், மந்திரம் என்பனவற்றையும் உரைக்கின்றார். துறவும் பிறவும் மெய்ப் பொருளாய்வு, அறநெறி, கணிதம், வானநூல், கணியம் (சோதிடம்) என்பவற்றில் தமிழ் மாந்தர் பெற்றிருந்த ஆற்றலையும் நினைவு கூர்கிறார். இல்லறம் ஆற்றியபின் உலக நிலையாமை உணர்ந்து வீட்டு நெறி நிற்றல் தமிழர் மரபு என்றும், மருந்து மந்திரம் மணி வாதம் யோகம் ஞானம் ஆகிய ஆறும் பிற்காலச் சித்தர் நூல்களிற் கலந்து பேசப்படும் என்றும், நீதி இலக்கியத்தில் தமிழ் வடமொழியை வென்றது என்று டாக்டர் கால்டுவெல் கூறுகிறார் என்றும், கோடிக்கு மேற்பட்ட எண்களைத் தமிழர்கள் தெரிந்திருந்தனர் என்றும், கதிரவனை முதலாகக் கொண்டு கணிக்கும் ஆண்டுமுறை தமிழர்க்குரியது என்பது ஆராய்ச்சிக் கருத்து என்றும் பல கருத்து களை வெளியிடடுகிறார். இசைக்கலை என்பதே தலைப்பாயினும் பலவகைக் கலை களையும் இவண் சுட்டுதல், தென்னை, மா, வாழை முதலிய மரங்கள் இருப்பினும் மாமர மிகுதியால் மாந்தோப்பு எனப்படுதல் போன்றது என்க. 5. தமிழர் சமயம் (சிறப்பு) சமயம் சமையம் என்பது சமைக்கப்பட்டது என்ற பொருளில் ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கு வகுக்கப்பட்ட நெறியினைக் குறிப்ப தாகும். சமையம் என்ற சொல் சமயம் என்று மருவிற்று என்பது கா. சு. காட்டும் சமையப் பொருள் விளக்கம் (11). அமையம் என்பதும் சமையம் என்பதும் ஒரு பொருளனவே. அமையம் முதல் வடிவம்; சமையம் அதன் வளர் வடிவம். நன்று இது என்று அமைக்கப்பட்டதே அமைப்பு; அமைச்சு; அமையம் இன்னவெல்லாம். அமர் சமர் என்றும், ஏண் சேண் என்றும் உவணம் சுவணம் என்றும் ஆதல்போல, அமையம் சமையமெனச் சகர மெய் பெற்று நின்றதாம். சமையல் சமையச் சொல்லின் பொருள் விளக்கம் சமைத்தல் என்பதால் விளங்கும். சமைத்தல் என்பது பக்குவப் படுத்துதல். அப்படி அப்படியே மாந்தன் இலை, தழை, காய்கறி முதலியவற்றை உண்ட நாள் உண்டு. அதன்பின் அறிவு வளரவளரத் தீயைக் கண்டு அதனால் உணவுப் பொருள்களை வாட்டியும் வதக்கியும் பொரித்தும் பொங்கியும் உண்ணும் திறம் பெற்றான். அவ்வாறு உணவைப் பக்குவப்படுத்தும் கலையே சமையற் கலையாய்ப் பெயர் பெற்றது. வன்பொருள்களை மென்பொருள்களாக்கவும், சுவையற்ற வற்றை சுவையுற்றவையாக்கவும் அச் சமையற்கலை உதவியது. கரடுமுரடாகவும் மேடு பள்ளமாகவும் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி விளைநிலைமாக்க அவன் அறிவு துணையாவது. சமைக்கவும், பண்படுத்தவும் உதவிய அவ்வறிவே, சமயத் தேர்ச்சியையும் அருளியது. சமைத்தல் கரடு முரடாக ஒழுங்கற்றுக் கிடந்த கல்லைமாந்தன் கலைத் திறத்தால் சிலையமைத்தல் சிலை சமைத்தல் எனப்படும். இவண் சமைத்தல் என்பதும் ஒழுங்குறுத்தலாகவே அமைதல் அரிக. ஒரு பெண் ஓராடவனை மணத்தற்குரிய பருவநிலை எய்துதலைச் சமைதல் என்பது பெருகிய நாட்டு வழக்கு. அவள் வாழ்வுக்குத் தகும் பக்குவம் அல்லது தகவு அடைந்தாள் என்பதை விளக்கும் சொல்லே சமைதல் என்பதாம். ஆளானாள், பெரிய வளானாள், அறிவடைந்தாள்; புரிவு தெரிந்தாள், முதுக்குறைந் தாள் என்னும் வழக்குகளை அறிந்தால் இவ்வுண்மை மேலும் தெளிவாம். இவற்றால் சமயக் கலையின் பொருட்சிறப்பும் நலப்பாடும் இனிதின் விளங்கும். சமயக் கலை இச்சமயக்கலை இருகூறுபட்ட தெனலாம். ஒன்று வழி பாட்டுக் கூறு. மற்றொன்று மெய்யியல் அல்லது மெய்ப் பொருட் கூறு. இவ்விருவகைக் கூறுகளாலும் கா.சு தம் ஆய்வை நிகழ்த்து கிறார். தமிழர் சமயம்தொன்மைமிக்கது. அது வழிபாட்டுக் கூறாகக் கிளர்ந்து, மெய்யியற் கூறு சிறந்து வளர்ந்தது. தெய்வம் உணாவே எனத் தெய்வத்தினை உணவுக்கு முற்படு கருப் பொருளாகத் தொல்காப்பியம் கூறுவதுடன், முதற் கருப்பொருளாகவும் குறித்தது அறிதல்வேண்டும். அவரே கந்தழி, வள்ளி, கொடிநிலை என்பவை கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமென்றதும் எண்ணத்தக்கது. ஆடவர் பீடும் பெயரும் எழுதி வழிதொறும் நடுகல் நாட்டும் வழக்கம் இருந்தமை இலக்கியக் காட்சியாவதுடன், இருமூன்று கல்லெனத் தொல்காப்பிய ஆட்சியுமுண்டு. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரப்பேறு என அவ்வறுவகைக் கல்விளக்கமாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் எழுந்ததும் சிந்திக்கத் தக்கது. பின்னே வளர்ந்த பரிபாடல், வாரப் பாடல், தேவார திருவாசக நாலாயிரப் பனுவல், திருப்புகழ், திருவருட்பா இன்ன வெல்லாம் வழிபாட்டுக் கருவிகளாம். இவை பண்ணோடு இசைத்துப் பரிந்து நின்று பாடும் பாடுதுறையாகவும் ஆடுதுறையாகவும் கூடுதுறைகள் எனின் சாலும். வழிபாட்டுத்துறை ஒருசார் இவ்வாறாக, மெய்யியல் துறை அல்லது மெய்ப்பொருட்டுறை, வழிபாட்டுத துறையின் வளர்ச்சியால் அரும்பி வளர்ந்துமுருகியதாகும். முப்பொருள் ஆசிரியர் தொல்காப்பியனார்காலத்திற்கு முற்படவே இறை, உயிர், உலகு என்னும் முப்பொருள் உண்மை அறியப்பட்டு விட்டது. அம்முப்பொருள் உண்மையை அவர் ஆங்காங்குத் தெளித்துச் செல்கிறார். எழுத்துகளின் பெயரீடு வழியாலும் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம், வல்லினம், மெல்லினம், இடையினம், புணர்ச்சி, உயிர்மயக்கம், மெய்ம்மயக்கம், உருபு மயக்கம் இன்ன வற்றின் விளக்கங்களாலும் மெய்யில் கருத்தை அமைத்துச் செல்கின்றார். அதனைத் திருவள்ளுவர் தனிப்பகுதியாக்கி நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஊழ் எனத் துறவுப்பகுதியில் முறைப்படுத்தினார். பின்னே மெய் கண்டார் முதலிய பெருமக்களும், திருமூலர் முதலிய ஓகம் வல்லாரும் மெய்யியலைப் பெருக்கமாக வளர்த்தனர். இவை யெல்லாம் வழிவழியாகத் தமிழர் வழ்வியலில் வளர்ந்த வளர்ச்சிக் கொடை யேயாம். வடசொல் இத்தகு கொடைப் பொருளாம் மெய்யியற் கலையில் வழங்கும் கலைச் சொற்களுள் பலவும் வடசொல்லாக இருத்தலை நோக்கித்தமிழர் பெற்றுள்ள மெய்யியல் வளமெல்லாம் வடமொழி வழிப்பட்டதோ எனக் கருதுவார் உளர்; எழுதினாரும் இயம்பி வருவாரும் உளர். இதனை எண்ணி கா.சு. தமிழ் நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை முதற்கண் ஆய்கிறார்: தமிழ் நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை ஆய்ந்து கொண்டு போனால் இவற்றை நாளிலும் கம்பர் காலத்தில் வடமொழிச் சொற்கள் குறைவாகவும், சங்க காலத்தில்அதிலும் மிகக் குறைவாகவும் காணப்படும். திருவள்ளுவர் நூலில் உள்ள சுமார் பன்னீராயிரம் சொற்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட வடமொழி இல்லை என்ப. அவை தாமும் தமிழில் நின்று வடமொழிக்குப் போயினவோ என்னும் ஐயப்பாட்டிற்கு இடந்தருவன. இதனால் நாம் தெரிவது யாதெனில் பண்டைக் காலத்தில் அஃதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியக் கலப்பு மிகவும் குறைவாய் இருந்தது என்பதே, இதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் ஆரியக் கலப்பு அறவே இல்லாது இருந்திருக்க வேண்டும். திருக்குறளில் ஐம்பதுக்கு மேற்பட்ட வடமொழிச் சொல் இல்லை என்று கா.சு. கூறினாலும், அதில் பாதியில் பாதிதானும் இல்லை என்பது தெள்ளிதின் விளங்குகின்றது. மிக அரிதான சில சொற்களும் தமிழில் நின்று வட மொழிக்குச் சென்று மீண்டு திரும்பிய சொற்களாம். தமிழகத்தார் கடல் கடந்து அயல்நாடு சென்று, தலை முறைகள் சில வாழ்ந்து, மீளவும் தமிழ்நாடு வந்து புகுந்தாற் போன்ற நிலையுடையவாம் அம்மீட்சிச் சொற்கள். தமிழர் கண்ட மெய்யியற் கலையில் வடசொற்களை நாட்டுதல் ஏனோ, அதனை வடமொழியாளர்களே கண்டன ரோ என வினவுவார் உளராயின் அதனையும் கருதுகிறார் கா.சு. தமிழர் தங்கள் கருத்துகளை வடமொழியிற் கூறுதல் நெடுநாள் வழக்கமாயிற்று. புதுமை, தோற்றப் பொலிவு முதலிய காரணங்களால் அவ்வழக்கம் ஏற்பட்டதாகும். இதனை நன்கறிந்த டாக்டர் சிலேட்டர் ஆரியரெல்லாம் நகரிகத்தால் திராவிடராயும், திராவிடரெல்லாம் மொழியளவில் ஆரியராயும் ஆயினர் என்றார் என்கிறார். திராவிடர்களின் நாகரிக வளத்தைத் தம் உடைமையாக ஆரியர் ஆக்கிக் கொண்டனர். திராவிடரோ, ஆரியரின் மொழியில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டனர். இவ்வாறு செய்தக்க அல்ல செய்த தாலும், செய்தக்க செய்யாமை யாலும் தமிழர் சமயக் கலை முதலிய கலைகளெல்லாம் ஆரியக் கலையாகப் பொய்த் தோற்றமுற்றன என்பதே மேலே குறித்த குறிப்பின் விளக்கமாம். வழிபாடு ïÅ, tÊghL njh‹¿a Kiwiaí« ts®ªj tif iaí« g‰¿¢ áy fU¤Jfis tH§F»wh® fh.R.: இறந்த தாய் தந்தையரை மக்கள் தொழத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்நாட்டி, அக்கல்லில் அவர்கள் உறைந்து நலந்தருவதாக நம்பி வழிபட்டனர். கடல் கொண்ட தென்னாட்டுத் தொன்மக்களில் ஒரு பிரிவார் பன்னிரண்டு முதல் பதினைந்து அடி உயரமுடையவராய். முன் தலையின் நெற்றிப் பகுதியில் கண் போன்ற ஓர் உறுப்புடையவராய் விளங்கினர். அவரைப் போற்றி வழிபட்ட வழிபாடே முக்கண்ணன் வழிபாடாக முகிழ்த்தது என்கிறார். காட்டு எலியட்டு என்பார் முக்கண் மாந்தரைப்பற்றிக் குறித்ததையும் குறிக்கிறார். சிவனியம் சிவன் என்பது தமிழ்ச்சொல் என்பதையும், ஆரியர் தென்னாடு வருமுன்னரே சிவ வழிபாடு தென்னாட்டில் விளங்கியது என்பதையும், சிவ என்பது செம்மை, நன்மை, மங்கலம் என்று பொருள்படும் என்பதையும், தமிழர் குறிஞ்சி நிலத்தில் இருந்த போதே அவ்வழிபாடு ஏற்பட்டுவிட்டதென்பதையும் குறிக்கிறார். பெற்றோர் வழிபாடு என்பது தாய் தந்தை ஆகிய இரு கூறுபட்டது அன்றோ! அவ்விரு கூறும் ஓருருவில் காணப்பட்டதே அம்மையப்பர் தோற்றம்! இவ் வழிபாட்டின் முதிர்வே கதிரவன் வழிபாடாயிற்று. கதிரினின் செந்நிறம் சிவமாகியது. காலைக் கதிராம் இளங்கதிர் முருகனாகக் கருதப்பட்டது. நீலக்கடலின்மீது நீலவானுக்கு முன்னாகத் தோன்றும் இளஞ் செஞ்ஞாயிற்றின் காட்சி, தோகைவிரித்த மயிலின் மீது வீற்றிருக்கும் சேயோன் காட்சியாகி முருகனுமாயிற்று. மலையுச்சியில் அக்காட்சி தெளிவாகத் தோன்றி வணங்கப் படுதலின் மலைநிலக் கடவுளாக அம்முருகு கொள்ளப்பட்டது என விளக்குகிறார். சேய் சேய் பற்றி இவண் கருதுதல் வேண்டும். சேயோன் என்பது, சிவன் என்னும் சொல். தமிழில் தோன்றுவதற்கு முற்பட்ட சொல் எனலாம். ஏனெனின், சேயோன் என்னும் ஆட்சி தொல் காப்பியத்தில் உண்டு. ஆங்குச் சிவன் என்னும் சொல் இல்லை. மற்றும், சேயோன் மலைநிலக் கடவுள். சேயோன் மேய மைவரை உலகம் என்பது தொல்காப்பியம். சே என்பது செம்மை வண்ணத்தின் வழிவந்த சொல். சிவந்த அடி சேவடி என்றும், சிவந்தவன் சேந்தன் என்றும், சிவந்தது சேந்தது என்றும் வழக் குண்மை அறிக. சேயோன் என்பது சிவப்பு வண்ணத்தன் என்பதைத் தாமரை புரையும் காமர்சேவடி, பவளத் தன்ன மேனி, திகழொளி, குன்றி யேய்க்கும் உடுக்கை என வரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து உவமைகள் நான்கும் தெளிவிக்கும். அதனை அடுத்த முதற்பாட்டில் செங்களம் படக்கொன்று என்றும், செங்காந்தள் என்றும் வருவனவும் விளக்கும். இச்சேய், முருகாற்றுப் படையில் மலை கிழவோன் எனப்பட்டது. அவன் வழிபாட்டுச் சிறப்புக்குரிமை பூண்டது மலைநிலம் என்பதைக் காட்டும். மலையின் இயற்கைச் செறிவும், ஆங்கு மலர்கள் பொதுளி நிற்றலும், ஆங்குள்ள மரம் செடி கொடிகளின் இயற்கை மணப் பெருக்காம் முருகு சிறத்தலும், வேல் கொண்டு வேட்டமாடலும், வெறியாட்டெடுத்தலும் ஆயவெல்லாம் முருகுப் பொருளாகிச் சிறந்தன. சேய் என்பது சிவந்தவன் என்னும் பொருள் தருவதோடு, மகன் என்னும் பொருளும் தருதல் உண்மையால் தந்தையர் ஒப்பர்மக்கள் என்னும் கருத்தால் சிவனைத் தந்தையாகவும், அவன் சேயை முருகனாகவும் காணத் தூண்டிற்றாம். இருவர் நிறத்தையும் சிவப்பாகக் கொள்ளவும், இருவரையும் மலைநிலக் கடவுளராகக் கொள்ளவும் வைத்ததாம். இனி, முருகனுக்கு முன்னோனாகச் சொல்லப்பட்டு வரும் மூத்தபிள்ளையார் வழிபாட்டுக் குறிப்பு சிறுத்தொண்டரின் வாதாவிப் படையெடுப்பின் பின்னர் அவர் கொண்டு வந்த வெற்றிப் பொருள்களுள் ஒன்றாகித் தமிழகத்திற்கு வந்தது என்பது வரலாற்றாளர் குறிப்பு அவ்வழிபாட்டுக் குறிப்பும் சிறுத்தொண்டர் காலத்திற்குப் பிற்படவே கிளர்ந்ததாயிற்று. ஆயின், யானை முகர் வழிபாடு யானைகள் மிகுந்துள்ள நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும். தென்னிந்தியாவில் அல்லது மேலை இந்தியாவில் அது முதலில் தொடங்கினது போலும் என்றும், மலைகளிலேதான் அது தொடங்கக்கூடும், ஆதலினாலும், இயற்கை வழிபாடாகிய முருகன் வணக்கம் ஏற்படும் முன்னரே மனிதன் தன்னிலும் பெருவடிவமுடைய யானையை வழிபட்டிருத்தல் கூடுமா தலாலும் முருகன் குறிஞ்சி நிலத்தெய்வமாகக் கருதப்படுமுன் யானைமுகன் குறிஞ்சி நிலத் தெய்வமாக இருந்தனர்போலும் என்றும், முருகன் சிவகுமரனாகக் கருதப்பட்டபோது அவருக்கு முற்பட்ட யானைமுகத்தெய்வம் சிவனாரது மூத்தபிள்ளையாகப் பேசப்பட்டது என்றும் கா.சு. குறிப்பார். பிள்ளையார் யானை கானுறை விலங்கே எனினும், பரிய விலங்கே எனினும், மாந்தன் எண்ணத்தை ஈர்க்க வல்ல தோற்ற முடையதே எனினும் அவ்வழிபாடு முதற்கண் ஏற்பட்டது என்றற்கோ சான்று அகப் பட்டிலது. தேவாரப் பதிகங்களிலும் பிற்காலத்தொன்ம நூல் களிலும் பேசப்படுவதும் பிள்ளையார் வழிபாட்டைச் சேயோன் வழிபாட்டுக்கு முற்படுத்த, முறைவாய்ந்த சான்றில்லை எப்து வெளிப்படை. கதிரோன் வழிபாட்டினின்று கிளர்ந்த சேயோன் வழிபாடு எத்துணைப் பழமையானது! கதிரினும்பழமையதோ களிறு? மலையிற் கிளர்ந்து பரவும்மணமிக்க முருகிற் பழமைப் பட்டதோ யானை? இலங்கம் உருவ வழிப்பாட்டின் தொன்மை, குறி எனப்படும். குறி யாவது அடையாளம். அதன் பொருளறிவாரா நிலையால், பொருள் வேறு குறித்துக் கதை வேறு சமைத்துக் கொண்டனர். குறி குணங்கடந்த முதல், அருவத் தோற்றத்தது. அதற்கு, அருவுக்கு அருவாகவும், உருவுக்கு உருவாகவும் கொண்ட வடிவாய்க் கண்டது இலிங்கம் என்னும் குறியாம். இலங்குதலையுடையது அல்லது விளங்குதலையுடையது இலங்கம். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். எல் என்பது ஒளிப்பொருட்டது. எல் கதிரோனைக் குறித்தல் பழ வழக்கு. எல்லங்காடி பகற்கடையைக் குறித்தலும் பழவழக்கே. எல் வழியாகத் தோன்றிய எலும்பு வெண்ணிற ஒளியுடைமை காண்க. எல் வழிபாடு உலகெல்லாம் தழுவிய பழவழிபாடு என்பதை வரலாற்றுலகம் கூறும். ஆகலின், அக்கதிர் வழிபாட்டுச் சான்றாம் குறியே இலங்கமே இலிங்கமாகச் சொல்லப்பட்ட தாம். கடல்கொண்ட தென்னாட்டு வழிபாடும், சிந்துவெளி மாந்தர் வழிபாடும் இலங்க வழிபாடாகத் திகழ்ந்திருத்தலை உணர்வார். அதற்கு முற்பட யானை வழிபாடு நேர்ந்தமை கொள்ளல் இயலாதாம். இனிப் பேரன், மகன், தந்தை, பாட்டன், கொள்ளுப்பாட்டன் (பூட்டன்), எள்ளுப் பாட்டன் (ஓட்டன்), சேயோன் (சிய்யான்) என வழங்குவதும்; பேரன் மகனும் அவன் மகனும் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் எனவும் வழங்குவதும், பேர்த்தி, மகள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி(பூட்டி), எள்ளுப் பாட்டி (ஒட்டி), பழையோள் என வழங்குவதும் பேர்த்தியின் மகளும் அவள் மகளும் கொள்ளுப் பேர்த்தி எள்ளுப் பேர்த்தி எனவும் வழங்குவதும் அறிதல் வேண்டும். சேயோன், பழையோள் ஆயதொன் மூதாளர் வழி வருவதையே பரம்பரை என்பதும் அறிதல் வேண்டும். பரன் ஆண்பால்; பரை பெண்பால். இரண்டும் இணைந்த பரன்பரை பரம்பரையாயிற்றாம். பரம் என்பது சேய்மை. அப்பால், மேல் முன் என்னும் பொருள் தருவது. பரன் - சிவன்; பரை - சிவை. பரம்பொருள் பரதேயம் என்பனவற்றைக் கருதுக. பாண்டியனைப் பழையோர் என்றது அறிக. சிவன் பாண்டியனாக வந்தான் என்றும், உமை தடாதகைப் பிராட்டியாக வந்து பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தாள் என்றும் வரும் தொன்மக் குறிப்புகளை எண்ணுக. இனி, முருகனைப் பழையோள் குழவி என்றதும் எண்ணத் தக்கதாம். இவ்வகையால் கதிர் வழிபாடு முருகன் வழிபாடாய்ச் சிவன் வழிபாடாய்ச் சிறந்ததாம் என்பது சாலும் என்க. தாய் வழிபாடு தந்தை வழிபாடு கதிராய், முருகாய், சிவமாய்த் திகழ்ந்த தென்னின், தாய் வழிபாடு அவ்வாறு விரிந்த வகையும் காணக் கூடியதாம். கதிரவனை இடமாகக் கொண்டசிவபிரான் வெம்மை யினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது, தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீ ராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய்த் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று. சந்திரன் குளிர்ச்சி தருவதாகத் தோன்றுவதால், சந்திரன் தாயின் அருவுரு வடிவமாகக் கருதப்படுதற்கு ஏதுவாயிற்று. சூரிய ஒளியில் தோன்றும் ஏழு நிறங்களில் முதலிலுள்ளது சிவப்பும் இறுதியிலுள்ளது நீலமுமாம். பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீலநிறமாகவும் கொள்ளப்பட்டது. சிவம் என்ற சொல்முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்டபோது எங்கும் நிறைந்திலங்கும் கடவுளின் ஆற்றல் சத்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாம் என்ற கொள்கை எழுந்தபோது சிவசக்தி அருளெனவும் தாயெனவும் வழங்கப் பட்டது. தாய்த் தெய்வ வழிபாடு மாலிய வழிபாடாக வழிப் பட்டதையும் தெளிவுறக் காட்டுகிறார் கா.சு. கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும், அவன் ஒளியைச் சத்திக்கு உவமையாகவும் வழங்கியபோது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சத்திக்குப் பேராயிற்று. ‘É©Q’ v‹w ngnu ‘É©L’ vdî« ‘ÉZQ’ vdî« kh¿‰W” v‹D« fh.R., இருக்கு வேதத்தில் விண்ணிற் பரவிய கதிரொளியே விணுவாகப் பேசப்பட்டது. வியாபக ஆற்றல் ஆண்தன்மையாகக் கருதப்பட்டபோது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சத்தியின் ஆண் வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக் கருத்துடைய ஆகம சுலோகமும் உண்டு என்றும், சொல்லின் இடையே ஷகரத்தை டகர ணகரங்களுக்குப் பதிலாக அமைத்துக் கூறுதல் ஆரிய மரபு. குட்டம் என்பதைக் குஷ்டம் எனவும், வேட்டி என்பதை வேஷ்டி எனவுங் கூறுதல் காண்க. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீலநிறமே பேசப்படுதல் காண்க என்றும் கூறுகிறார். மாயோள் வழிபாடே மாயோன் வழிபாடாகவும் கண்ணன் வழிபாடாகவும் உருக் கொண்டது எனக்கருதும் கா.சு. அதனை விளக்குகிறார். இருளடைந்த பொழில்களில் வணங்கப்பட்ட தாய்த் தெய்வத்திற்குக் கருநிறம் பேசப்பட்டது. மாயோள் என்ற தமிழ்ச் சொல் கருநிறமுடையவள் என்று பொருள்படும். மாயோள் ஆண் வடிவமாகத் தொழப்பட்டபோது மாயோன் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. காடுகள் அடர்ந்தமுல்லை நிலத்திற்குரிய தமிழ்த் தெய்வம் ஆதியில்மாயோளாய் இருந்து பின் மாயோ னாயிற்று. முல்லை நிலத்தில் மாயோன் குழலூதும் மேய்ப்பனாக வழி படப்பட்ட போது கருநிறத்தன் என்ற பொருளுடைய கிருஷ்ணன் என்ற சொல் ஆரிய வழக்கில் வந்தது. கிருஷ்ணன் என்ற சொல் ஆரிய வழக்கில்வந்தது. கிருஷ்ணன் முல்லைநிலத்தின் தமிழ்த் தெய்வமென்றும், அவன் ஆரியத் தெய்வங்களுக்கு வேறானவன் என்றும் காலஞ் சென்ற பி. தி. சீனிவாச ஐயங்கார் ஆய்ந்து கூறினார். ஆணைச் சிறப்பாகக் கூறும் மரபு பற்றி விஷ்ணுவைத் தமையனாகவும் சிவசக்தியைத் தங்கையாகவும் கூறும் வழக்கம் ஏற்பட்டது போலும் என்கிறார் கா.சு. தொல்காப்பிய முறையில் ஆய்ந்தால் முல்லைநிலத் தெய்வமாகமாயோன் சுட்டப்படுவன். மாயோன் மேயகாடுறை யுலகம் என்பது அது. மாயோன் மால் என்பவை, கரியன் என்னும் பொருளன. செம்மை சேய் எனப்பட்டது போல் கருமை மா நிறமாகக் கொள்ளப்பட்டது. மாயன் கண்ணன் என்பனவும் அப்பொருள் குறித்தனவே. இவ்விடத்தே மாரி, காளி என்னும் தாய்வழிபாட்டை எண்ணுதல் தகும். மாரி என்பது மழை; மழை முகில் நிறம் கருமையானதே. அது காளமுகில் கருமுகில் எனவும் படும். மழை பெய்யும் நிலையில் மாரியாம்! கருமுகில் நிலையில் காளியாம்! ஆகவே காளி மாரி வழிபாடுகள் மழை வழிபாடு எனலாம். வான்சிறப்பு எனவும் கூறலாம். இன்றும் மழை பெய்வான் வேண்டி மாரி வழிபாடு நிகழ்த்துதல் கண்கூடாம். செங்கதிர் வழிபாடு சிவ வழிபாடாய் அமைந்தது போல், கருமுகில் வழிபாடு காளி வழிபாடாய், திருமால் வழிபாடாய் விளங்கலாயிற்று எனலாம். மாயோன் என்பது ஆண்பால்! மாயோள் பெண்பால்! மாயோன் வழிபாடு முற்பட்ட சான்றுடையது. மாயோள் வழிபாடு பிற்பட்டது. அன்றியும் மழை பெய்தலறியாது பொய்த்துப் போம். வறண்ட பாலை நிலத் தெய்வ வழிபாடாகப் பின்னூல்களில் வழங்கிற்று. இவை ஆயத்தக்கவை. தாய் வழிபாடாம் சத்தி வழிபாடு, மாலிய வழிபாடாக வழங்கியதையும் கா.சு. ஆய்கிறார். அச்ச வடிவாகவோ அன்பு வடிவாகவோ உள்ள அம்மன் கோயில் இல்லாத பண்டைச் சிற்றூர் தமிழ்நாட்டில் இல்லை. கொற்றவை காடுகிழாஅள் முதலியன அச்ச வடிவாய் நின்ற அம்மை பெயராகும். பழையோள், மாயோள், உமை முதலியன அன்பு குறிக்கும் அம்மை திருப்பெயர்களாம். காளி வணக்கம் தமிழர்க்குரியதென்றே வட நாட்டில் கருதப்படுகின்றது. அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவா கமங்கள் கூறும். மாயோள் வழிபாடே மாயோன் வழிபாடாயிற்று என்பதும். குழலூதும் கண்ணன் தமிழ்த் தெய்வமே என்பதும், தமிழ் நூலாராய்ச்சியின் முடிவாகும் என்கிறார். இரு சமயப் பொதுமை தமிழர் சமயம் என்பது சிவனியம் மாலியம் என்னும் இரண் டையும் ஒருங்கு சுட்டுவதே என்பதைப் பலப்பல சான்றுகளால் நிறுவுகிறார் கா.சு. திருமுறை நூல்களையும் திருவாய் மொழியையும் ஒப்பித்துக் காட்டி விளக்குகிறார். முழுமுதற் கடவுளாம்இறைவன் மூவராலும் அறிய முடியா தவன், இறைவன் அறிவு வடிவானவன், இறைவன் உடலில் உயிர் போலவும் பாலில் நெய் போலவும் கலந்திருப்பவன், உயிர்களும் உலகமும் இறைவன் உடைமைகள். இருள், வினை, மருள் என்னும் மூவகைப் பாசங்களும் உயிர்க்குண்மை, இறைவனைக் குருவனாக வழிபடல் இன்னவையெல்லாம் சிவனியத்திலும் மாலியத்திலும் ஒப்பவிருத்தலை எடுத்துக் காட்டி விளக்குகிறார். மேலும், இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு கூறும் மரபு இருபாலும் இருந்தமையையும் குறிக்கிறார். சிவநெறியின் திருப்பொருளாகத் திருநீறு விளங்குதல் வெளிப்படை. ஆனால் மால்நெறியிலும் திருப்பொருளாகத் திருநீறு விளங்கியமையையும் நுணுகித் தேர்ந்து குறிக்கிறார். நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இரு சமயத்துக்கும் பொது அடையாளமாக இருந்தது. கரிய மேனிமிசை வெளிய நீறு நீறுசெவ்வேயிடக் காணில் நெடு மாலடியார் என்று துள்ளும் முதலிய வாக்கியங்களுள் நீறு என்பது திருநீற்றைக் குறிப்பது போலும் என்கிறார். அறுவகைச் சமயக் குறிப்பு இருசமயத்தும் இருத்தற்கும் சான்று காட்டுகிறார். அவ்வறுவகைச் சமயத்தின் வழிபாட்டாளரே அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கத்தார் எனத் தொல்காப்பியனாரால் சொல்லப்பட்டவர் என்பது புதுமையாக இருக்கிறது. (3-10) வழிபாட்டு வகை வழிபாடுகள் அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு, உருவ வழிபாடு என மூவகைத்தாம். அருவ வழிபாடு செய்ய இயலாத யாவரும் அருவுருவ வழிபாட்டை மேற்கொண்டனர். mtUŸS« cUt tÊghL brŒa ÉU«ãdt®fŸ MW rka§fËš x‹w‰FÇa KiwÆid¥ ã‹g‰¿ xG»d®” vd¡ TW« fh.R., பழமையான அறுவகைச் சமயங்கள் சிவன், மால், சத்தி, முருகன், பிள்ளையார், கதிரோன் என எண்ணுகிறார். பிற் காலத்தில் வந்து வழங்கிய அறுவகைச் சமயங்கள் உலகாயதம், நாலுவகைப் புத்த மதம், சமணம் என எண்ணி அமைகின்றார். வைதிக நூலார் தார்க்கீகம், மீமாம்சகம், ஏகான்மவாதம்,. சாங்கியம், யோகம், பாஞ்சாராத்திரம் என்னும் ஆறினையும் ஆறு சமயம் என்றனர் என்கிறார். இவையும் பிறவும் தமிழர் அறுசமயத்துக்கு வேறாய் ஆரியத் தொடர்பால் ஏற்பட்டன என அறிக. தமிழரது அறுசமயமும் ஒரு சமயமே. பிரிந்த மால் சமயத்தை மீட்டும் இணைத்துக் கொள்வதே நமது கடமையாகும் என்று தமிழர் மதத்தின் இணைப்புக்கு வழிகோலுகிறார். இவ்வழிகோலுதல், நிலைப்படுத்தப்படின் சமய ஆக்கத்திற்கும் இன ஆக்கத்திற்கும் பெரிதும் உதவும். இதனையும் அவர் சுட்டுகிறார். தமிழ்ச் சைவ வைணவ சமயங்கள், அடிப்படையில் ஒத்த கருத்துடையன. அது தொல்காப்பியம், திருவள்ளுவ நூல், பரிபாடல் முதலிய சங்க நூலாராய்ச்சியாலும் தேவார திருவாசக திருவாய்மொழி திருமொழி ஆராய்ச்சியாலும் நன்குபுலனாகும். சைவம் வைணவம் என இரு பிரிவடங்கிய ஒரு சமயத்தைத் தமிழர் சமயமென்று கருதி அதனைத் தமிழ் மக்கள் போற்றுவாராக என்கிறார். கொடி நிலை ஆசிரியர் தொல்காப்பியர், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்றார். அக்கொடி நிலையைத் திருமாலின் பறவைக் கொடி என்றும், கந்தழியைச் சோ அரண் அழிப்பு என்றும் இளம்பூரணர் கொண்டார். அக்கருத்து, புறப்பொருள் வெண்பா மாலையார் கருத்துமாம். வள்ளிக்குச் சான்று காட்டாராய், வந்தவழிக் கண்டு கொள்க என்றார். நச்சினார்க்கினியர், கீழ்த்திசைக்கண்ணே நிலை பெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் கொடிநிலை என்றும், ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் கந்தழி என்றும், தண்கதிர் மண்டிலம் வள்ளி என்றும் கூறினார். இவ்விளக்கத்தால், வெஞ்சுடர் மண்டிலமாம் ஞாயிறு கொடிநிலை என்றும், கட்டற்ற ஒன்று கந்தழி என்றும், தண்கதிர் மண்டிலமாம் திங்கள் வள்ளி என்றும் நச்சினார்க்கினியர் கொண்டார் என்பது தெளிவாம். இதனைக் கா.சு. ஏற்றுக் கொண்டு மேலும் விளக்குகிறார்: ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலேயே மூம்மூர்த்தி கள் உளர் என்ற கருத்து முளைக்கத் தொடங்கிற்று எல்லாக் கோள்களுக்கும் நடுவிலிருந்து தனது கவர் சத்தியால் அவற்றைப் பிணித்து நிற்கின்ற கதிரவனது மண்டிலம் கொடிநிலை எனப்பட்டது. இரவில் பயிர்களுக்கு உயிர் தரும் திங்கள் மண்டிலம் அமுதத்தை வழங்குவதாகக் கருதப்பட்டு வள்ளி என்ற பெயர் பெற்றது. பற்றினவெல்லாம் அழிக்கின்ற நெருப்பு கந்தழி எனப் பட்டது. கதிரவன் ஒளியால் எல்லாம் உண்டாதலின் சூரிய மண்டிலமாகிய கொடி நிலைக்கு அதிபதி பிரமா ஆவரென்றும், சந்திர மண்டிலத்திற்கு அதிபதி காத்தற் கடவுளாகிய திருமால் என்றும், நெருப்பு மண்டிலத்திற்கு அதிபதி அழித்தற் கடவுளாகிய உருத்திரன் என்றும் உலகங்கள் எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் சத்தி மண்டிலத்திற்கு அதிபதி கடவுள் என்றும் கருதப் பட்டது. இவற்றைக் கூறும் கா.சு. பிரம வழிபாடும், திக்குப் பாலகரின் வழிபாடும், நவக்கிரகங்களின் வழிபாடும் ஆரியச் சார்பால் ஏற்பட்டன போலும் என்கிறார். இவையெல்லாம் மீளாய்வுக் குரிய செய்திகளாம். எண்குணம் இறைவன் குணங்கள் எட்டெனக் கூறுவது பெருவழக் காயிற்று. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத்தான் என்பதை விளக்கும் பரிமேலழகர், எண்குணங்களாவன: தன் வயத்தனாதல்,தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை என இவை என்பார். இப்பொருளைக் கருதும் கா.சு. திருக்குறள் கடவுள் வாழ்த்து வான்சிறப்பு இரண்டையும் ஆய்ந்து புதுவிளக்கம் தருகிறார். (திருவள்ளுவர்) கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் எட்டுக் குறள்களில் இறைவனின் எண்குணங்களையும் முறையே கூறி ஒன்பதாவது குறளில் எண்குணங்களையும் தொகுத்துச் சுட்டிப் பத்தாவது குறளில் இறை வணக்கத்தின் இன்றியமை யாமையைப் பயன்கூறு முகத்தால் வற்புறுத்தினர். வான்சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தில் கடவுள் திருவருளினால் நடைபெறும் முத்தொழில் அல்லது ஐந்தொழிலை மழையின் வைத்துக் கூறிப்போந்தனர். இறைவனை அருவுருவ வடிவிலோ உருவ வடிவிலோ வழிபடலாம் என்பது குறிப்பிப்பார். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு திருக்குறளில் அடி அல்லது தாள் என்ற சொல்லை வழங்கினார். இவ்விளக்கம் புதுமையானதே, எண்ணுவார் எண்ணும் குணங்களையுடையான் என எண்குணத்தான் என்பதற்கு வ.உ.சி. யும் திரு. வி.க. வும் உரை யெழுதுவர். எல்லார் உரையிலும் இவ்வெண்குணத்தான் பாடல் ஒன்பதாக அமைந்திராமையால் எட்டுக் குறள்களில் கூறப்பட்ட குணம் எனல் சாலாது எனத் திருக்குறள் உரைவேற்றுமையார் குறிப்பர். வான்சிறப்பு இறையருள் என்னும் கருத்திலோ, அடி என்பது உருவ வழி பாட்டுக் கருத்துடையது என்பதிலோ ஐயுறவில்லை. ஆனால், எண்குணத்தான் என்பதற்கு முற்படு குறள்களைக் கூட்டிக் காணும் மரபுக்கு வள்ளுவச் சான்றும் காணல் அரிது. ஆயின், கா.சு. புது நோக்கு போற்றுதற்குரிமை பூண்டதாம். வைதிகமும் தமிழர் சமயமும் வைதிகச் சமயக் கொள்கையும், தமிழர் சமயக் கொள்கையும் வேறுபடுமாற்றைக் கா.சு. காண்கிறார். அக்காட்சியின் குறிப்பும் மறுப்பும் அவர் மொழியாலேயே காட்டப்பெறுகின்றன. சிவன் கோயிலில் சிவலிங்கத்தை ஓமகுண்டத்தில் வளரும் சோதிக்கு அறிகுறி எனவும், நந்தியை யாகப் பசு எனவும், பலி பீடத்தை யாகஞ்செய்யும் ஊனை வைக்குமிடமெனவும் கொடி மரத்தை வேள்வித் தூணெனவும் வைதிகர்கள் சிலர் கூறுவர் என்பது வைதிகக் குறிப்பு. சிந்து தேசத்தில் உள்ள ஹாரப்பா, மோஹஞ் சொதரோ என்னும் இடங்களில் ஆரியர் வருவதற்குமுன் சில்லாயிரம் ஆண்டு களாகக் கிடந்த சிவலிங்கங்கள் கண்டெடுக்கப் படுவதாலும், நெருப்பு வழிபாட்டைப் போற்றும் இருக்குவேதம் சிவலிங்கத்தை இகழ்வதாலும் ஆரியர் நெருப்புச் சோதியைச் சிவலிங்கம் உணர்த்தும் என்பது வரலாற்றுக்கு முற்றிலும் முரணாகும். மேற் சொன்ன இடங்களில் காணப்படும் முத்திரைகளிலே காளை வடிவம் பொறிக்கப்பட்டிருத்தலால் அஃது ஆரியரது யாகப் பசு வருவதற்கு முன்னேயே கடவுள் வாகனமாக மதிப்படைந்திருந்தது என்னலாம். திராவிடருக்குக்காளையும் ஆரியர்க்குக் குதிரையும் சிறந்தன என்பது சரித்திரக் கருத்து. வேள்விக்குப் பொதுவாக ஆட்டினையும் சிறப்பாகக் குதிரையையும் ஆரியர் கைக் கொண்டனர். காளையை அவர்கள் சிறந்த விலங்காகக் கொள்ள வில்லை. ஆதலால் அது யாகப் பசுவைக் குறிக்கின்றது என்பது தவறு. சிவபெருமானுக்குக் காளை வாகனம் உகந்ததாதலின் இறைவன் திருவருள் பெறக்கருதும் உயிர்க்கு அறிகுறியாக நந்தி சிவபெருமான் திருமுன் வைக்கப்பட்ட தென்றறிக. அம்மை கோவிலில் சிங்க வடிவம் திருமுன் வைக்கப் பட்டிருக்கிறது. முருகன் திருமுன் மயில் இடம் பெற்றுள்ளது. அம்மைக்குச் சிங்கத்தையும் முருகனுக்கு மயிலையும் கொன்று வேள்வி செய்கின்றார்களா? அத்தெய்வங்களுக்கு அவை ஊர்தி என்பதே தெளிவு என்பது வைதிகக் குறிப்பின் மறுப்பு. ஆன் - ஆன்மா இவ்விடத்தில் தமிழர்தம் அடிப்படைச் சமயக் கோட்பாடு அல்லது அறக்கோட்பாடு எண்ணத்தக்கது, பசு பலிப் பொருட்டாகக் கொள்ளல் அறக் கொடுமையாம். தூய அருட் பீடத்தை அறக் கொடும்புலைப் பீட மாக்கல் நினைக்கவும் ஒண்ணாததாம். தமிழர் தம் போரின் முற்பட நிகழ்த்தும் வெட்சி என்பது ஆதந்தோம்பலாம். ஆதருதல் மட்டுமன்று ஆ தந்து ஓம்பல் என்பதாம். விருந்தோம்பல் என்னும் வள்ளுவ வாய்மொழி யையும் இவண் கருதுக. ஆவிற்கு நீரூட்டல் அருட் செயலுள் தலையாயதாக இருந்தமையால்தான் ஆவிற்கு நீர் என்று இரத்தலையும் சுட்டினார் வள்ளுவர். யாவர்க்குமாம் ஆவிற்கு ஒரு வாயுறை என்றார் திருமூலர்; வாயுறையாவது உணவு. உயிரைப் பசு என்பது வடவர் வழக்கம். தமிழர் அதனை ஆன் என்றனர். ஆன் என்பது விலங்காதலின் அவ்விலங்குப் பொருள் சுட்டும் மா என்பதை இணைத்து உயிரை ஆன்மா என வழங்கினர். பரிமா, அரிமா, சரிமா, நரிமா என விலங்குகள் சுட்டப்படுதல்போல் ஆன் ஆகிய மா ஆன்மா எனப்பட்டதாம். இறைவன் பதி; உயிர்ஆன்மா; கட்டு பாசம்; இம்மூன்றும் தூயதமிழ்ச் சொற்களே, பாசம், பாசி என்பது இன்றும் வழக் காட்சியில்உள்ளது. நீரை மறைக்கும் பாசம்போல உயிரின் அறிவை மறைப்பதும் பாசம் என உவமையால் சொல்லப்பட்டதாம். நிற்க. பலி போற்றிக் காக்கத்தக்கதாம் பசுவைப் பலிப் பொருளாக்கல் குழவி பலி என்பதைக் குழவிப் பலி யாக்கிக் குழந்தையைக் காவு கொடுத்தலாக வழங்கும் கொடுங்காட்சியை நினைவூட்டுவதாம். குழவி பலி யாவது குழந்தைக்கு ஊட்டும் சோறு என்க. குழவிப் பலியாவது குழந்தையைக் காவு கொடுத்தலாம். வறுமைக்கு ஆட்பட்டவரின் குழந்தைக்கென, வளமானவர் சோறு வழங்குதல் பேரறமாகக் கொண்டு குழவி பலி யைக் குறித்தனர் முன்னோர், ஆயினும் அதனைப் பிறழ உணர்ந்தார் பேயாட்டச் செயல், இந்நாள் வரைக்கும் தீர்ந்தபாடில்லையே! ஆன், கோன் ஆனினம் போலும் அருந்துணை மாந்தர்க்கு ஒன்றுண்டோ? ஆ வாகிய அஃது ஆன் என னகர ஒற்றுப் பெற்று வழங்கும். அதுபோல் யகர ஒற்றுப்பெற்று ஆய் எனவும் வழங்கும். ஆய் என்பது தாய் என்னும் பொருட்டதாம். உயிர்களைக் காப்பவனாம் அரசன் கோ எனப்படுவான். அவ்வாறே உயிர்களைக் காக்கும் ஆவும் கோ எனப்படும். உயிரைக் காக்கும் கடப்பாடுடைய வேந்தன் னகர ஒற்றுப் பெற்றுக் கோன் என வழங்கப்படுவான். அவ்வாறே அவ்வானாம் உயிரைக் காவற் கடமை பூண்டவனும் கோன் எனச் சுட்டப் படுவான். கோ தெய்வப் பொருளும் தரும். அதன் உறைவிடமே கோயில் என்க. ஆக, ஆ விலங்கே எனினும் தாயாகவும், தெய்வமாகவும் ஓம்பப்பட்டது என அறிவார் அதனைப் பலியூட்டவும் கருதுவரோ? ஆவுறிஞ்சு குற்றி என்பது கல்வெட்டுகளில் காணப்படும் தொடர். அதன் பொருள் என்ன? நம் உடலில் தினவு உண்டானால் நமக்குக் கை இருப்பதால் சொறிந்து தினவாற்றுகிறோம். மொழி வாய்ப்பு இருப்ப தால்கையெட்டா இடத்தின் தினவைப் பிறரைக் கொண்டு நீக்கிக் கொள்கிறோம். ஆடு, மாடுகளுக்குத் தினவு உண்டாயின் என்ன செய்யும்? இவ்வினா அருளாளர் உள்ளத்து எழுந்தது. அதனால் அவற்றின் தினவை அகற்றிக் கொள்வதற்காக வழிகளில் தூண் களை நிறுத்தி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர். வழியே செல்லும் ஆடு மாடுகள் தம் தினவைத் தூணில் தேய்த்துப் போக்கிக் கொள்ள வாய்ப்பாயிற்று. ஆடு, ஆண், காளை ஆகிய எல்லா வற்றுக்கும் அத்தூணம் உதவும் எனினும் அதனை அமைத்தவன் நெஞ்சம் ஆவில் தோய்ந்து இருந்தமையால் அதன் சிறப்புக் கருதி ஆவுறிஞ்சுகுற்றி என்றான். உறிஞ்சுதல், தேய்த்தல், குற்றி, கற்றூண், இவ்வாறு ஆனின் துயரைத் தன் துயராகக்கொண்டு போற்றிக் காக்க முந்தும் அருளாளன் நெஞ்சில் ஆக்கொலையும் அரும்புமோ? பலி பீடம் பலி பீடம், கொடி மரம் ஆகியவை பற்றிக் கருத்துச் செலுத் துகிறார் தமிழ்க் கா.சு. பலி பீடம் என்பது பிறர்க்கு அளிக்கும் அமுது வைக்கும் இடம். பலி - பிச்சைச்சோறு. பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன் என்ற இடத்துப் பலி அப்பொருளில் வந்தது காண்க அரசர்கள் அல்லது செல்வர்கள் வீட்டு வாயிலில் ஏற்பார் எல்லார் க்கும் உணவளித்தற்குரிய கலங்கள் வைத்திருத்தல் பண்டை வழக்கம். எல்லா உயிர்களுக்கும் படியளக்கின்றவர் கடவுள் என்று அறிவுறுத்தற்கும் பரிவார தேவதைகளுக்குரிய உணவு வைத்தற்கும் பலிபீடம் அமைந்துள்ளது. பலி என்ற சொல்லைக் கேட்டவுடன் அது வேள்வியிற் செய்யும் ஊன்பலி என்று எண்ணி விடுதல் தவறு. இவ்விடத்தே பூப்பலி செய்ம்மின் என வரும் சிலம்பையும் (24 : 1: 19; 28. 231) அருச்சனை என அதற்குப் பொருள் விளக்கும் அரும்பத உரையையும் காண்க. கொடி மரம் கொடி மரம், கொடி கட்டுவதற்குப் பயன்படுத்தியதே யன்றி யாகப் பசுவைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவதன்று. அங்ஙனமாயின் அதற்கு யூபம் என்ற பெயர் இருத்தல் வேண்டும். எல்லாரையும் பாதுகாப்பதில் இணையற்றவன் என்று உலகினிற்கு அறிவிப்பதற்காகக் கொடி எடுக்கப் படுகின்றது. மலைவேடரும் முருகனுக்குக் கோழிக் கொடி எடுத்து அதனைத் தூணில் உயர்த்திக் கட்டித் திருவிழாக் கொண்டாடினரென்பது திருமுருகாற்றுப் படையால் இனிது விளங்கும். அரசர் இல்லம் போல அரசர்க் கரசனாகிய கடவுளுக்குக் கோயில் தமிழரால் அமைக்கப்பட்டது என்று அறியாத வேள்விச் சாலையின்படி என்று அதனைக் கூறுவது உண்மையை மறைப்பதாகும். இவ்விடத்தே கொடி நிலை பற்றி முன்னே உரைத்த செய்தியைக் கருதுதல் நலம். கொடியேற்றம் எனப் பெருவிழாத் தொடக்கமாகக் கோயில்களில் நடைபெற்று வருவதையும் கருதுதல் தகும். அரண்மனை என்பது அகழ், காவற்காடு, கோட்டை முதலிய பாதுகாப்புடைய வளமனையைக் குறிப்பதாம். அரசன் காக்கும் கடப்பாடு உடையவன். ஆதலால் அவன் காவற் கடவு ளாகவும் இறைவனாகவும் கருதப் பெற்றான். அதனால் இறைவன் கோயில் என்பவை காவலனுக்கும் கடவுளுக்கும் பொதுவயின. அரசனுக்குரிய பரிவாரங்கள் போல இறைவனுக்கு அமைத் தலும், பள்ளி எழுச்சிப் பாடலும். ஆடல் பாடல் நிகழ்த்தலும், பிறந்தநாள் வெற்றிநாள் மணநாள் முதலாய விழாக் கோடலும், உலாக்கொள்ளலும் முதலாயவெல்லாம் இறைவனுக்கும் அமைந்தன. இவற்றை அரசனே முன்னின்றும் நடாத்தினான். இவ்வகை விரிவாக்கங்களால் கோயில் பொருள் வளம் கலை வளம் முதலாய வளங்களுக்கு உரிமையுடையதாகவும், விரிவுடைய தாகவும் வளர்ந்தது என்க. பூசனை கோயிலில் அமைந்த பூசனை, நீராட்டு, திருவிழா ஆகிய வையும் கா.சு வால் எண்ணப்படுகின்றன. எதிர்பார்த்த பயன் கிட்டாமை, எதிர்காலப் பயன் கருதுதல், இடையூற்றை நீக்குதல் ஆகியவற்றைக் கொண்டு மாந்தர் தெய்வத் துணையை நாடுவது இயல்பு என்றும், அவ்வாறு நாடுகின்றவர் அரசர் பெரியர் விருந்தர் ஆகியோர்க்கு விரும்பிச் செய்யும் மதிப்புச் செயல்போலத் தெய்வத்திற்கு வழிபாடு செய்வர் என்றும் அது பூசனை எனப்படும் என்றும் குறிக்கிறார். தெய்வத்திற்கு முன்னர் வட்டகை மூன்றில் வைக்கும் நீர்க்குரிய காரணத்தைச் சுட்டி விளக்குகிறார்: வெயிலில்வழி நடந்து வந்தவர்களுக்குக் கால்கழுவத் தண்ணீர் கொடுப்பது போலத் தெய்வத்திற்கு வைப்பது கழுவு புனல்: நீர்வேட்கையுடை யவர்க்குக் கொடுப்பது போல் வைப்பது பருகு புனல்; வெப்பந் தணியுமாறு தலையில் தெளிப்பதற்குக் கொடுப்பதுபோல் வைப்பது தெளிபுனல். இவற்றை வட மொழியாளர் பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் என்பர்; இவை தமிழர் வழக்கத்தில் இருந்து பின்னர் வடமொழி ஆகமங்களில் வரையப் பட்டவை என விளக்குகிறார். நீராட்டு மணநீரில் செல்வர்கள் நீராடுவது போல், தெய்வத் திருவுருவுக்கு நீராட்டுதற்குத் திருமஞ்சனம் உண்டாக்கப்பட்ட வழக்கத்தையும் விளக்குகிறார். நெய், எண்ணெய், பால், தயிர், மாவுவகைகளை முழுக்காட்டுக்கு மாந்தர் பயன் படுத்தும் வழக்கத்தில் இருந்தே தெய்வத் திருமுழுக்காட்டு வளர்ந்த செய்தியையும் தெளிவிக்கிறார். இவ்வழிபாட்டு முறைகள் பண்டு தொட்டு வருவன என்பதைத் திருமுருகாற்றுப் படையின் வழியே உறுதிப்படுத்துகிறார். நிறை நாழி வைத்தல், கொடி நாட்டல், நெய்பூசல், நெஞ்சில்கை வைத்துக் கொண்டு தெய்வ உருவை நினைந்து கையால் பூச்சொரிதல், வெண்பொரி சிதறல், நீர் தெளித்தல், மாலை தொங்கவிடல், ஆடல் பாடல் நிகழ்த்தல், வாழ்த்துதல், ஒளிகாட்டல், மணியடித்தல், கொம்பு ஊதுதல் ஆகிய வழக்குகளெல்லாம் அம்முருகாற்றுப்படைக் காட்சியா தலுடன் இன்றுவரை தொடர்வதும் அறியக் கூடியவையாம். திருவிழா திருவிழா வெடுத்தல் மாந்தர்க்கு இயல்பாக அமைந்த நாடக உணர்வின்பாற்பட்ட தென்பதை நயமாகக் கூறுகிறார் கா.சு. திருவிழாவும், கொண்டாட்டமும் செல்வச் செழுமை காட்டு வதாகவும், உணவுப் பெருக்கம் காட்டுவதாகவும் இல்லாமல் அறிவுப்பெருக்கமும் உணர்வுப் பெருக்கமும் காட்டுவதாக அமைய வேண்டிய தம் வேட்கையையும் வெளிப்படுத்துகிறார். வீட்டுச் சடங்கு தமிழர் வீட்டு வாழ்விலும் தெய்வம் சார்பான சடங்குகள் நிகழ்கின்றன. அவை குலதெய்வ வழிபாடு, பிறந்த நாள் கொண்டாட்டம், சோறு உண்பித்தல், காது குத்துதல், மயிர் கழித்தல், பள்ளிக்கு வைத்தல், சமயப் புகவாம் தீக்கை நடத்துதல், திருமண விழா, நீத்தார் கடன் கழித்தல் முதலியவை சுருங்கிய செலவில், நிகழ்த்தப் படவேண்டும் என்றும், இவ்விழாக்கள் அனைத்தையும் நடத்தாமல் தீக்கை திருமணம் இறுதிக் கடன் என்பவற்றை மட்டும் வேண்டிய அளவில் நடத்தினால் போதும் என்றும், இம் மூன்றும் தமிழ்க் குருக்களைக்கொண்டு தமிழ் முறையில் தமிழ் மொழியிலேயே நடத்தவேண்டும் என்றும் கா.சு. வலியுறுத்துகிறார். நோன்பு கதிரவ வழிபாடாம் பொங்கல் விழாக் கொண்டாடுதலின் தகவை ஏற்கிறார். கொலையின் பொருட்டு மகிழ்வு கூர்வதாம் தீபாவளி தமிழர்க்கும் உரியதாகத் தோன்றவில்லை என விளக்கு கிறார். கார்த்திகை விழாவில் தெய்வ நினைவும் பட்டினி நோன்பும் புலனடக்கமும் நிகழ்வனவன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடலும் இல்லாமையால் அதனைக் கொண்டாடல் நலமெனத் தெளிவுறுத்துகிறார். அவ்வாறே திருவாதிரை, சிவனிரவு ஒன் பானிரவு முதலியன இயன்றவரை நோன்பு இருத்தலால் உடல் நலப் பயன் கருதி ஏற்பதால்கேடில்லை என விளம்புகிறார். இந்து மதம் இந்துமதம் என்பது ஒரு மதமன்று என்பதைத் தடை விடைகளால் விளக்கி மெய்ப்பிக்கிறார் கா.சு. சிந்து நதிக் கரையில் இருந்தவர்களை ஹிந்துக்கள் என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை இந்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது. இந்து மதம் என்ற பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டை நூல்களில் கிடையாது. தற்காலத்தில் வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வைதிகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்துள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானி மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்ற ஒரு மதமும் உண்டென்னலாம். அவை இலவாதல் போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது. வேதத்தையும் மிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதமே இந்துமதம் என்றால் அது இந்தியாவிலுள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமேயன்றி அது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொது மதமாகாது. தற்காலத்தில் இந்தியாவில் தோன்றிய புத்தம் சைனம் வைதிகம் சுமார்த்தம் சைவம் வைணவம் முதலிய எல்லா மதங் களையும் இந்துமதம் என்று கூறுதல் பொருந்துமாறில்லை. வேத வாக்கியங்களுக்கு சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்றமுறையில் பொருள் கொள்ளுதல் பைபிளுக்கும் குரானுக்கும் சைவ வைணவப் பொருள் கொள்ளுதல் போலாகும். தமிழ்ச் சைவ வைணவ சமயங்கள் அடிப்படையில் ஒத்த கருத்துடையன. சைவம் வைணவம் என இரு பிரிவடங்கிய ஒரு சமயத்தைத் தமிழர் சமயமென்று கருதி அதனைத் தமிழ் மக்கள் போற்றுவாராக. இவை கா.சு. கூறும் தமிழர் சமய நிலைப்பாட்டுச் செய்தி களாம். 6. தமிழர் மெய்க்கலை தமிழர் மெய்க்கலை தனிப்பெருஞ் சிறப்புடையதாகும். ஒரு கலையின் சிறப்பு, அஃது எத்துணை மக்களுக்குத் தொடர்பும் அறிமுகமுமாகியுள்ளது என்பதைப் பொறுத்தும் மதிப்பிடப்படும். அவ்வகையில் ஆய்ந்தால் தமிழர் மெய்க்கலையின் மாண்பு நிகரற்று விளங்குகிறது. எழுத்து எழுத்து மொழிக்கு அடிப்படை. அவ்வெழுத்துக்கும் அடிப் படை, அதன் பெயரீடு. அப்பெயரீட்டிலேயே தமிழர் மெய்க்கலை பளிச்சிடுகிறது. ஒன்றன் பெயரீடு பொருளுடையதாகவன்றி வேறு வகையால் அமைதல் தமிழில் இல்லை. ஏனெனில் தொல்பழ இலக்கணர் ஆணை, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது. பொருள் குறித்தன்றி ஒரு சொல்லும் வாராது என்று வரம்பு கோலிய பின் பொருளிலா இடுகுறி என ஒன்று உண்டோ? இல்லையாம்; பின்னே இலக்கணர், வேற்று மொழியியல்பில் தோய்ந்து முன்னை மொழியாம் தமிழுக்கும் இடுகுறி என்ப தொன்றையேற்றியமை கொண்டு சொல் என்பது ஏதோ பொருட் சுட்டே யன்றிப், பொருளொடு கூடியதாகாது என்று முடிவு செய்வது பிழையின்மேல் பிழையாய்ப் பெரும் பிழையாய் முடியும். தமிழ் எழுத்துகளில் உயிர் என்பது தலைப்பட்டது. மெய்யென்பது அடுத்து நிற்பது. இரண்டன் கூட்டத்தாலும் வருவது உயிர்மெய். இம் மூன்றையும் தவிர்ந்து நிற்கும் ஒரோ ஓர் எழுத்துத் தனிநிலையாம் ஆய்தம். உயிர் எழுத்துகளில் குறில் நெடில் என இருவகை. மெய் யெழுத்துகளில் வல்லினம் மெல்லினம் இடையினமென மூவகை. சொற்கள் ஒன்றோடு ஒன்று கூடுதலால் உண்டாம் புணர்ச்சி; அப்புணர்ச்சி வகைகள்; உடம்படுமெய் இன்னவெல்லாம் தமிழர் தம் மெய்க்கலைவிளக்கமாக விளங்குகின்றது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. இளமையில் கல் என்பவற்றைக் கண்ட தமிழ்மண், எழுத்தை அறிமுகப்படுத்தும் நாளையிலேயே மெய்க்கலைப் பணியையும் இணைத்துக் கற்பிக்கின்ற அருமை எண்ண எண்ண இன்பஞ் சேர்ப்பதாம். இவற்றை ஆய்கிறார் கா.சு. உயிர், மெய் ஏனைய மக்கள், உடம்பினின்று உயிரை நன்கு பகுத்தறியாத காலத்தில் உயிரும் உடம்பும் வெவ்வேறு பொருளென்று தமிழர்கள் பகுத்து உணர்த்தினர். அப் பகுப்பு அக்காலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு உணர்த்தப் பட்டமையால் இலக்கண நூலிலும் அவை எழுத்துக்களுக்கு உவமையாகு பெயராயின. இலக்கண நூற்பாக்களிலே இலக்கண விதி கூறுமுகத் தானே உயிரின் இயல்பினை ஆசிரியர் தெரிவித்துள்ளார். உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான என்ற சூத்திரம் உயிர் கலவாத பொருள்கள் அசையமாட்டா என்னும் உண்மையை உணர்த்திற்று உயிரில்லாத பொருளை இயக்குவதற்கு உயிர்ப்பொருள் இன்றியமையாத தென்பதைச் சுருங்கிய சொற்களால் பெற வைத்தார். உடம்பை இயக்கும் உயிர்போலச் சட உலகத்தை இயக்க ஒரு முதல்வன் வேண்டும் என்பது ஊகிக்கப்படும். உயிர் உடம்பின் சார்பாகத்தான் விளக்கம் எய்தும். உடம் பிற்கு வேறாக உயிர் காணப்படாதது என்னும் உண்மையை உணர்த்த, மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே என்று சூத்திரம் அமைத்தார். உயிர் உடம்பெடுத்தே விளக்கமடைய வேண்டியிருந் தாலும் உடம்பின் தன்மை வேறு; உயிரின் தன்மை வேறு; உடம்பு அறிவற்றதாய் இயக்கப்படுவதாய் நிலையில்லாததாய் இருப்பது; உயிரானது அறிவு, விழைவு, செயல்கள் உடையதாய்ப் பிறவற்றை இயக்குவதாய் நிலையுள்ளதாய் இருப்பது. உடம்போடு சேர்வதினாலே உடம்புமயமாய் நின்று பொருள்களை அறியினும் தன்னியல் பினை உயிர்இழக்காது என்ற உண்மையை விளக்கு வதற்காக, மெய்யோ டியையினும் உயிரியல் திரியா என்னுஞ் சூத்திரம் எழுந்ததாகும். ஆய்தம் ஆய்தம் என்பது நுட்பமானது என்னும் பொருள்படும். எல்லா எழுத்தும் தோன்றுவதற்குக் காரணமான மூச்சொலியையே ஆய்தம் என்றார். அது தானே எழுத்தாகாது எழுத்துக்கள் தோன்று தற்குக் காரணமாய் இருத்தலின் அதனைத் தனிப் பொருளாகிய கடவுளுக்கு ஒப்பிடுவார் தனிநிலை என்றார். மெய்யானது சட உலகின் பகுதியாய் அதன் இயல்புடைய தாய் இருத்தலின் அது ஒரு சிற்றுலகமாகும். உயிரெழுத்தானது உயிரைக் குறிக்கும். ஆய்த எழுத்தானது கடவுளைக் குறிக்கும். எனவே கடவுள், உயிர், உலகம் என்ற மூன்றுக்கும் குறிப்புச் சொற்கள் ஆதி இலக்கண நூலில் அமைந்திருத்தல் ஓர்க. பெயர் விளக்கம் உயிர் என்பதன் மூலம் உய் என்பது. இர் என்பது ஈறு. உய்ப்பது யாது, அஃது உயிர் என்க. உய்ப்பது என்பது செலுத்துவது, கடைத்தேற்றம் தருவது என்னும் பொருட்டது. உயிரின் இயல் புணர்ந்து அத்தன்மையுடைய எழுத்துக்குப் பெயராக வைத்தமை கொண்டு, எழுத்துகளைப் படைத்துக் கொள்ளுமுன்னரேயே அவற்றுக்குக் குறியீடு வைத்துக் கொள்ளுமுன்னரேயே தமிழறிவர் கொண்டிருந்த மெய்க்கலைத் தேர்ச்சி இத்தகைத்தென விளங்கச் செய்வதாம். மெய் யெழுத்து உடல் என்றும் வழங்கும். உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பதில் உடல் மெய்யெழுத் தாதல் அறிக. பொய்யாய் அழிவது என்றன்றோ உடலைப் பிற்காலப் போலிமைத் துறவர் இழித்தும் பழித்தும் ஒதுக்கினர்! அதனை மெய்யென்றது என்னை? மெய்ப்பொருள் உலகத்தில் நிலையாமை பேசப்படுவதேன்? நிலையாமையை மெய்யாக ஒருவன் உணர்ந்து கொண்டால் என்ன செய்ய முந்துவன்? உடலில் உயிர் இருக்கும்போதே அவ்வுடலின் நிலையாமையை எண்ணி உடனே செய்தக்கவற்றைச் செய்தலில் தலைப்படுதல் வேண்டும் என்பதேயாம். பொழுதுபோனால் கெடும் எளிய பண்டமொன்றை அதன் கேடு வருதற்கு முன்னேயே துய்த்துக் கொள்வது போலவும், கேடு விரைந்து வாராது காத்தற்காம் வழிகளையெல்லாம் சூழ்ந்து காத்துப் பயன்கொள்வது போலவும் நிலையாமை கருதி நிலைத் தக்க செய்தல் வேண்டும் என்பதே முன்னவர் மெய்ப்பொருள் நாட்டமாம். பொய்யாம் வாழ்வை மெய்ப்படுத்தத் துணையாவது உடலே ஆதலால் அதனை மெய்யென்றனர் என்க. மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே என்பது புறப்பாடல். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதிய மில்லை உயிர்க்கு என்பது குறட்பா. செத்தாரைச் சாவார் சுமப்பார் என்பது ஒரு பழமொழி. இப்பழமொழியின் புகற்சி என்ன? தானே இயங்கமாட்டாத கட்டை நிலைஒன்று வரும். அது வருதற்கு முன்னரே - அது வரும் பொழுது இன்னதென் அறியக் கூடாமையால் - அது வருதற்கு முனனரே செயற் கருஞ் செயல்களைச் செய்து முடிக்க! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளல்போல் உடலாக்கம் உள்ளபோதே உரிய கடமைகளைச் செய்து நிறைவிக்க! என்பதாம். மறைமலையடிகள் அறிஞர் கா.சு. எழுத்துகளை ஆய்வது போலவே அவர்க்கு முற்படவே ஆய்ந்தவர் மறைமலையடிகளார். தமிழ், சமயம், சீர்திருத்தம் ஆகியவற்றில் அடிகளாரும் கா.சு.வும் ஒரு காசின் இருபக்கம் போல இருந்தனர் என்பது தகும். இந்நிலையில் அடிகளார் கருத்துகள் சிலவற்றை அறிந்து கொள்ளலும் ஆக்கஞ் செய்வதாம். அகரம் உலகு உயிர்கட்குத் தலைவனான இறைவனதியல்பை உணர்த்துதற்கும் இவ் அகர ஒலியினையே எடுத்துக்காட்டுப். முதல்வன் இயல்பை உண்மையான் உணருங்கால் அவன் உலகுயிர் களின் வேறாய் அவற்றிற்கு முதல்வனாய் நிற்பன் என்பது புலப்படும். இனி, உலகுயிர்கள் அவனையின்றி இயங்காமையால் அவன் அவை தன்னுள் இயங்குவதற்கு இடந்தந்துதான் அவற்றினுள்ளு மாய்ப் புலப்படாது நிற்பன என்க. ஆகாரம் சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறைவனியல்பை அகரவொலி காட்டா நிற்ப, உலகுயிர்களை இயக்கி அவ்வியக்கத் தால் தன்னிலையைப் புலப்படுத்தி ஐந்தொழிலியற்றும் முதல் வனியல்பை ஆகார ஒலி குறிப்பிடா நிற்கும் என்க. இகரம் உலகுயிர்களெல்லாம் நிறைந்த இறைவன் போல வாயிட மெல்லாம் நிரம்பிய ஓசையாய் ஒலிக்கும் அகர ஆகாரங்கள் போலாது. இ என்னும் ஒலி, வாயின் ஓர் உறுப்பாகிய நாவின் தொழிலால் பிறத்தலின் இதுசிறிது இயக்கமுடைய சிற்றறிவுயிர் களை உணர்த்தும் ஓசையாம். இதன் நீட்டமாகிய ஈகார ஒலி பிறவி வட்டத்திற் செல்லும் சிற்றுயிர்களை உணர்த்துவதாம். உகரம் இதழ்களைக் குவித்துக் கூறும் முயற்சியாற் சிறிது இயங்கும் உகர ஒலி பிறவி ஓய்ந்து போக, இறைவன் திருவடியை நோக்கி மெல்லச் செல்லும் தூய உயிர்க்கு அடையாளமாகும். உகரத்தின் நீட்டமாகிய ஊகார ஒலி முதல்வனடியை நோக்கி முறுகிச் செல்லும் தூய உயிரைஉணர்த்தா நிற்கும். அ, இ, உ. அ இ உ என்னும் மூன்றொலிகளில் அகரம் முற்றோன்று தலின் அது தோற்றத்தினையும் இகரம் தோன்றிய ஒலி சிறிது நேரம்நிற்கப் பெறுவதாகலின் அது நிலையினையும், உகரம் அவ்வொலி முடியுமிடமாய் இருத்தலின் இறுதியினையும் உணர்த்துகின்றன. உணர்த்தவே பொருளுலகத்தின் நிகழும் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் ஒலியுலக மாகிய அகர இகர உகரங்களில் அறியக் கிடக்கும் என்பது பெற்றாம். இவ்வாறே பிற உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்பவற்றை யெல்லாம் மெய்ப்பொருள் விளக்கப் பொருளாகக் காட்டுகிறார் அடிகளார். மறைமலையடிகளார் அறிவுரைக் கோவை, சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூல்களில் கண்டு கொள்க. கோதண்டபாணியார் திருக்குறளின் முதற்குறளாம் அகர முதல என்பது பற்றிய ஆய்வு அறிஞர் கு. கோதண்டபாணியாரால்முதற்குறள் உவமை எனத் தனியொரு நூலாக எழுதப்பட்டது. அதில் முதல் என்னும் சொல்லாய்வைத் திருக்குறள் வழியாகவே ஆய்ந்து அதிலமைந் துள்ள மெய்ப்பொருள் நுணுக்கங்களை மிக அருமையாய் விளக்குகிறார். முதல் என்பது வேர் என்னும் பொருள் தருதல் வாடிய வள்ளி முதலரிந் தற்று (1034) என்பதாலும், கைப்பொருள் என்னும் பொருள் தருதல், முதலிலார்க்கு ஊதியமில்லை (449) என்பதாலும், எண்வரிசையில் முதல் என்னும் பொருள் தருதல், வளிமுதலா எண்ணிய மூன்று (941) என்பதாலும், காரணம் என்னும் பொருள் தருதல், நோய்நாடி நோய்முதல் நாடி (948) என்பதாலும் விளங்குவதைக் காட்டுகிறார். வேர் முதலை விளக்குகிறார் கோதண்டபாணியார் : முதலில் இருந்து முளை தோன்றுகின்றது. முளையிலிருந்து தளிர்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன; விரிகின்றன; பரவுகின்றன. இவ்வாறு முதலை அடிப்படையாகக் கொண்டு வளர்வன செடிகள் கொடிகள் மரங்கள் முதலியன. இவை பற்பல கொடிகள், பற்பல செடிகள், பற்பல மரங்களாக எங்கெங்கும் பரவுகின்றன. எங்கெங்கும் இவை நிலைத்திணையாக மிளிர்கின்றன. இத்தன்மையேபோல அகரமாகிய முதலிலிருந்து உயிர் எழுத்துக்கள் தோன்றின; உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றின; சொற்கள் தோன்றின; சொற்களின் தொடர்கள் தோன்றின; இவற்றாலான பற்பல நூல்கள் எழுந்தன. எங்கெங்கும் எழுத்துக்கள் பரவின; எழுத்துக்கள் எல்லாம் ஒரு தனி உலகமாய் மிளிர்கின்றன. இத்தன்மையே போன்று கடவுளாகிய முதலிலிருந்து ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் தோன்றின; இவற்றினின்றும் வான் வளி தீ நீர்நிலம் என்பன எழுந்தன; இவற்றினின்றும் உலகிற் காணும் இயங்குவன இயங்காதன உயிர் உள்ளன உயிர் இல்லன எல்லாம் தோன்றின. இவை எல்லாம் சேர்ந்து நாம் வாழும் உலகம் தோற்றம் அளிக்கின்றது. திருவள்ளுவர் கூறியவாறு முதலை அரிந்து விட்டால் வள்ளிக் கொடியில்லை; முதல் இல்லையேல் கொடியில்லை; செடியில்லை; மரமில்லை; நிலத்திணை உலகே இல்லை; அகர மில்லையேல் எழுத்தில்லை; சொற்கள் இல்லை; சொற்றொட ரில்லை; எழுத்து உலகமே இல்லை; கடவுளில்லை யேல் ஓசை யில்லை; ஊறு முதலியன இல்லை; வளி தீ நீர்நிலம் ஒன்றுமில்லை; உலகமே இல்லை; இவ்வுண்மைகளெல்லாம் முதல் என்ற சொல்லால் பெறப்படுகின்றன. இவ்வாறே பிற முதல்களையும் செவ்விதின் விளக்கிச் செல்கிறார் கோதண்டபாணியார். இவ்விளக்கப் பகுதி மட்டும் பதினெட்டுப் பக்கங்கள் (132-149) வளர்கின்றன. ஆங்குக் கண்டு கொள்க. கடவுளைப் பற்றிய சொற்கள் எழுத்துகளின் குறியீடுகள் வழியே மெய்க்கலை யாய்ந்த கா.சு. கடவுட் பொருட் சொற்கள் கொண்டும் மெய்க்கலை ஆய்கிறார். கடவுள் : எல்லவாற்றையும் கடந்த பொருள். இதனால் கடவுள் உயிரும்அன்று, உலகப் பொருள்களுள் எதுவும் அன்று, அதனால் உலகப் பொருள்போல் அழிவது அன்று, காணப்படுவது அன்று, உலகெலாம் அறிதற்கு அரியது என்னும் கருத்துக்கள் தொடர்ந்தெழும். கடவுதல், செலுத்துதல் என்னும் பொருளுடைமையால், எல்லா உலகத்தையும் உயிர்களையும் உள்நின்று செலுத்துவது அப்பொருள் என்பது முடியும். கடந்து நிற்கின்ற பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு யாதெனில் நம்மை அது செலுத்து கின்றது அறிவிக்கின்றது என்பதனாலாகிய தொடர்பு பெறப்படும். இயவுள் : எல்லாவற்றையும் இயக்குகின்றவன். இறைவன் : எங்கும் தங்குபவன்; தலைவன். முனைவன் : உண்மை உணர்த்தும் குரு. முதல்வன் : தலைமையானவன். ஆண்டவன் : உயிர்களை ஆட்கொண்டு நற்பேறளிப்பவன். ஐயன் : தலைவன், வியக்கத்தக்கவன். மெய்யன் : என்றும் ஒருதன்மையனாய் நிலைத்தவன். செம்பொருள் : செம்மையாகிய பேரின்பப் பெருவாழ்வு அருள்பவன். அறிவன் : அறிவு வடிவானவன். பெருமான் : பெருமையுடையவன். பிரான் : வண்மையுடையவன். இவ்வாறு இறைவனுக்கு வழங்கும் சொற்களை எண்ணி அவற்றுக்குத் தக்க பொருள் விளக்கம் செய்துள்ளார். மனம் உடல் மனம் உயிர் என்பவற்றைப் பற்றியும், அச்சொற் களாலும் அவற்றை ஆளும் தொடர்புகளாலும் பொருள் விளக்கம் கண்டு காட்டுகிறார் கா.சு. வெளி உடம்பு, உள்ளுடம்பு, நுண்ணுடம்பு, காரண உடம்பு என்பவற்றை முறையே புறவுடம்பு, அகம், மனம், உள்ளம் என ஆய்ந்து கூறுகிறார். மன இயல்பு, உயிரியல்பு ஆகியவற்றை முற்றாகத் திருக்குறள் கொண்டே நிறுவிக் காட்டுவது சிறப்பும் செறிவுமுடையதாகத் திகழ்கின்றது; மனத்தின் குண இயல்பு (706, 457) மனச்சான்று (263) நினைவாற்றல் (1204-5) அறிவின் உறுதி (661, 1299) உணர்ச்சி நிலை (53) பகுத்தறிவு (1242) உண்மையை மறைக்கும் நிலை (288) உன்ன ஆற்றல் (1310) ஊக்க எழுச்சி (1264) தீராக் கவலை (1295) காலத்தால் வருத்துதல் (1226) அசைவின்மை (917) பலபிறப்பினும் நினைவு (107) பல்காலும் நினைவு (1125) உள்ளறிவு (1277, 1278) ஐயம் (1081) திரிவு (112) என்னும் மனவியல்புகளைக் குறளொடும் பொருளொடும் கூட்டி இயைக்கிறார். அன்றியும், ஆசையினால் விரும்பாதவரையும் பின்பற்றுதல், ஆசையினால் செல்லாவிடத்தும் முயற்சி செய்தல், விரும்பி னோரைக் கண்டபோது அவர்கள் குற்றம் தோன்றாமை முதலிய பல இயல்புகள் மனத்தின் மீது வைத்துப் பல குறள்களில் உணர்த்தப்பட்டதையும் சுட்டுகிறார். மனத்தின்மீது வைத்துப் பேசும் இயல்புகள் எல்லாமும் உயிரின் குணங்களே எனத் தெளிவிக்கிறார். ஆய்வுத் திரட்டு உயிர் அழியாதது என்பது மாயாஉயிர் (1230) மன்னுமுயிர் (190) என்பவற்றாலும், உயிர்கள் பல என்பது எல்லா உயிரும் (260) என்பதாலும், உயிர் ஒரு தலைவனையுடைமை பற்றுக பற்றற்றான் பற்றினை என்பதாலும் (350) உயிர்க்குப் பிறப்பு இறப்பு வீடுபேறு உள்ளன என்பது புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு (340) என்பதாலும், துன்பம் மிகமிக உடல்மேல் பற்றுதல் மிகவுண்டாம் என்பது இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் (940) என்பதாலும், உயிர்க்குக் கட்டு உளது என்பது இருள்சேர் இருவினை (5) என்பதாலும், உயிர்க்கு மயக்குணர்வு உண்டு என்பது மருளானாம் (351) புல்லறிவு (331) என்பவற்றாலும், உயிர் சார்ந்ததன் வண்ணமாதலுடையது என்பது நிலத்தியல்பால் நீர் திரிந்தற்று (452) என்பதாலும் விளக்கப்படுதலை நயமாகக் குறிக்கிறார். திருக்குறளை ஊடகமாகக் கொண்டு அறமன்று, பொருளன்று, இன்பன்று பிறபிறவன்று, மனவியல் உயிரியல் ஆகிய அறிவியல் கலை நுணுக்கங்களையும் தெளிவுறக் கண்டு தேர்ச்சி கொள்ளக் கூடும் என்பதைத் தம் நிறைபெறும் துறை நலம் வாய்ந்த கூர்ப்பால் கண்டு கண்டுரைக்கிறார் கா.சு. மெய்யியல் வைப்பகமாகத் தொல்காப்பியர் திருவள்ளுவர் மெய்கண்டார் என்பவற்றைத்தெளிந்த கா.சு. அவற்றின் நிலைக் களங்களைத் தெரிந்து நேரிதின் வைக்கிறார்: முனைவன் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்னும் தொல்காப்பிய நூற்பாவைக் கருதும் கா.சு. இறைவனுக்கு இயல்பாகவே வினையில்லாமையால் அவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் என்பதும், இயற்கை அறிவும் முற்றறிவும் உடையவன் என்பதும், வினையும் சிற்றறிவுமுடைய உயிர்க்கு உண்மை உணர்த்தக் கூடியவன் அவனே என்பதும் கூறியவாறாகும். இறைவன் அருளால் முதல் நூல் தோன்றும் என்ற கொள்கை தமிழர்க் குள்ளே தான் முதலில் எழுந்ததாகும். அது பின்னர் ஆரியத்தில் தழுவப்பட்டது எனத் தெளிவிக்கிறார். கடவுளையும் திருவருளையும் கிழவனும் கிழத்தியுமாகக் கூறும் வழக்கு தொல்காப்பியர்க்கும் முற்பட்டது என்றும், அம்முறையைத் தழுவியே தேவாரம், திருவாய் மொழி அமைந்தன என்றும், இக்கருத்தை அறியாதார் இம்முறை காணப்படாத வடவேதத்தின் சாரம் தமிழ் வேதம் என்று பிழைபடப் பேசுவர் என்றும் மயக்கறுக்கிறார். இனித் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் முழுமுதற் கடவுள் இலக்கணம் நமக்கு வேண்டிய அளவு விளக்கப்பட்டுள்ளது என்பதை நிறுவுகிறார்: திருவள்ளுவப் பயன் கல்வியறிவினால் முற்றறிவுடைய முதல்வனை அறிந்து அவனைத் தொழுது பிறவித் துன்பத்தை ஒழித்து வீடெய்துதலே நம்முடைய முடிவான நோக்கமாய் இருத்தற்குரியது. இறைவனது அறிவாற்றலையும் செயலாற்றலையும் இடை விடாது நினைந்தால் நாம் உயர் நிலையடைவோம். இறைவன் இயல்பாகவே குற்ற மற்றவன். அவன் தனக்கென ஒன்றை விரும்புவதும் இல்லை; வெறுப்பதும் இல்லை. அவனை அன்போடு நாம் பற்றினால் பிறவித் துன்பத்துக்குக் காரணமாகிய உலகப் பற்று நம்மைவிட்டு அகலும். இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெறலாம். எல்லா அருஞ்செயல்களும் இறைவன் திருவருளால் நிகழ்வதால் உண்மைப் புகழ் இறைவனுக்கே உரியது. இறைவன் புகழை இடைவிடாது பேசுவார்பால் அறியாமை யால் வருகின்ற பயன் கருதிய நல்வினை தீவினைத் தொடர்புகள் சேரமாட்டா. ஐம்பொறி அடக்கம் உயிரின் உயர்நிலைக்கு இன்றியமை யாதது என்றும் நிலைத்த பேரின்பத்தை நமக்குக் கொடுப்பதில் இணையற்ற பெருமானிடம் அன்பு செலுத்தினால் அல்லாமல் மனக்கலைவை ஒழிக்க முடியாது. இறைவன் பலப்பல பிறவிக் கடல்களினின்றும் நம்மை எடுக்க வல்லான். ஏனெனில் அவன் பிறப்பு இறப்பு இல்லான்! இவை திருவள்ளுவப் பயன். மெய்கண்ட நூல் கடவுள் உயிரோடும் உலகத்தோடும் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் நிலையும், உயிரானது தன்னறிவால் அறிய இயலாது இறையறிவு கொண்டே அவனை அறியும் நிலையும், அழியும் பொருள் அழியாப் பொருள்முன் நில்லாத் தன்மையும், உயிர் கடவுட் பேரின்பத்தை நுகரும் முறையும் மெய்கண்ட நூலிற் காண்பது போலப் பிற எந்நூலினும் காண்டல் அரிது என முத்திரை பதிக்கிறார் கா.சு. சொல்லாக்கம் கடவுள் உயிர் மெய் என்ற பழந்தமிழ் வாய்பாடு பதி பசு பாசம் எனப்பட்டதையும், ஒலி முதல், ஒளி முதல், ஓம், கலைமூலம் என்பவற்றையும் தமிழ் வேதம் மந்திரம் கலை இறையுரு தொன்மம் முதலாய பலவற்றையும் ஆகமங் கூறும் முதல்கள் (தத்துவங்கள்) என்னும் பகுதியில் ஆய்கிறார். அப்பகுதியில் பெருவழக்காகவுள்ள வட சொற்கள் பலவற்றுக்குத் தமிழாக்கம் வழங்குகின்றார். அவர் தம் பன்மொழிப் புலமை அப் படைப்புகளால் இனிது விளங்கு கின்றது. அதேபொழுதில் அவர்தம் தமிழூற்றமும் சமய அழுத்தமும் புலப்படுகின்றன. அசுத்த மாயை - தூயதல்மாயை ஆங்காரதத்துவம் - உன்னமுதல் இச்சா சக்தி - விழைவாற்றல் கலாதத்துவம் - கலை முதல் கால தத்துவம் - காலமுதல் கிரியா சக்தி - செயலாற்றல் குண தத்துவம் - பண்பு முதல் சித்தர் - அறிவர் சுத்தமாயை - தூயமாயை சுத்த வித்தை - தூயபுலம் ஞான சக்தி - அறிவாற்றல் தத்துவார்த்தம் - மெய்மைப் பொருள் நாத தத்துவம் - ஒலி முதல் நியதி தத்துவம் -ஊழ் முதல் பசு - உயிர் பதி - இறை பாசம் - தளை புத்தி தத்துவம் - தெளி முதல் விந்துதத்துவம் -உருமூல முதல். இவ்வாறே பிற பகுதிகளிலும் தமிழக்கலைச் சொல்லாக்கம் புரிந்துள்ளார். அவர்தம் ஆக்கச் சொற்கள் தனி ஆய்வுக்குரியதாம். தமிழர் சமயம், தமிழர் வாழ்வியல் ஆகியவற்றில் கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் எவை என்பதை அடுத்த பகுதியில் காண்போம். 7. சீர் திருத்தம் சீர் என்பது சிறப்பு, புகழ், அழகு, நன்மை, செம்மை, நடுவு நிலைமை முதலாய பல பொருள்களைத் தரும் சொல்லாகும். சீர் என்பது சீர்த்தி எனப்படும். அதனைச் சீர்த்தி மிகு புகழ் என்றார் தொல்காப்பியர். அச்சீர்த்தி, கீர்த்தி என மாறியதுடன் வேற்றுச் சொல் எனவும் மயங்க வைத்தது. திருத்தம் என்பது ஒழுங்குபடுத்துதல்; திருத்தி அமைத்தல் எனப் பொருள்படும். சீர் அமைந்திருந்த ஒன்று சீர்கேடு அடைந்தபோது, மீண்டும் அதனைச் சீரிய நிலையில் ஆக்கி வைத்தலே சீர்திருத்தம் ஆகும். நாடுதல் தமிழர் சமயத்தில், தமிழர் நெறியில் சீர்கேடுகள் நேர்ந்துளவா? அவ்வாறாயின் அவை முன்னே சீராகத் திகழ்ந்தமைக்குச் சான்று உண்டா? சீர்கேடுகள் எப்படி நிகழ்ந்தன? அவற்றைப் போக்கும் வழியென்ன என்றெல்லாம் எண்ண வேண்டும். ஏனெனில் ஒரு நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டுமெனின், நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் வேண்டும் என்பதுபோல், சீர்கேட்டு நோயைத் தீர்த்துச் சீராக்கம் புரியவும் இவ்வாய்வுகள் எல்லாமும் வேண்டத் தக்கனவேயாம். நடைமுறைக் கேடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று முழக்கமிட்டது திருக்குறள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றது திருமந்திரம். சாதியாவதேதடா என வினாவியது அறிவர் (சித்தர்) பாடல். ஆயினும் என்ன? சாதிப் பிரிவு பெருகுவதன்றிச் சிறுகுதல் இல்லை! கல்வியால் சாதி ஒழியும் என்பது ஆய்ந்தோர் முடிவு. ஆனால் அக்கல்வி மெய்க்கல்வியாக இல்லாமையால், கற்றோரே சாதி வளர்ச்சிக்கு நிலைக்களனாக உள்ளனர். அதற்கு அடிப்படை, கற்றவர்கள் கட்டுக் கோப்போடு கட்டி வைத்தது சாதி ஆதலால் அஃதகலும் பாடில்லை. அரசியலும் ஆட்சியும் சாதியைச் சார்ந்தே இயங்கும் நிலையில் சாதிக்கு ஒழிவு வருமோ? விலங்கின் சாதி, பறவைச் சாதி என்பனவே தொல்காப்பி யத்துக் காணும் சாதி, பகுத்தறிவிலா உயிரிக்கு அமைந்த சாதி, அப்பகுத்தறிவு இருந்தும் பகுத்தறியா மாந்தச் சாதியாய்க் கொடி கட்டிப் பறக்கிறது. குலமும் ஒன்றே குடியும் ஒன்றே பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே என்று, கபிலர் அகவல் பாடினாலும், எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை என்று பாரதி பாட்டுக் கிளர்ந்தாலும், ஆயிரம் உண்டிங்குச் சாதி என்னும் நடைமுறை மாறாமலேயே உள்ளது. மாற்றியமைக்க வேண்டிய கற்றோரும், சமயச் சால்புடை யாரும், அரசியல் அறமுடையாரும் அவர்களின் எதிரிடைப் போக்கால், வெறிகொண்டு மிகுந்தே வருகின்றது. பொது நலம் கருதாமல் தந்நலக் கருத்திலேயே கற்றாரும், சமயத்தாரும், ஆட்சி யாரும் செல்லும் நாட்டில் நன்மாற்றம் நோக்கக் கூடுமோ? முதல்வன் அருளால் உயிர்பிறப்புற்றது. அவனருளாலே அவனை அடையவேண்டுவது அவ்வுயிர். இது சமய உட்கிடை என்றால், மாந்தர்ப் பிறப்பில் ஏற்றத் தாழ்வு காண்பார் சமயச் சால்புடையரோ! குலப்பாகு பாட்டில் குலவுதல் சமயம் என்றால், அச்சமயத்தின் நோக்கும் போக்குமே தகவு என்றால், அத் திட்டத்தையே தீண்டத்தகாதார், காணத்தகாதார் என்பாரும் ஏற்றுக் கொள்ளுவதே சமயச் சால்பு என்றால், அச் சால்பை ஏற்றுப் போற்றுதலே தமக்குப் பிறப்புரிமை என மீளா அடிமைக்கு ஆட்பட்ட வரும் நினைக்கின்றனர் என்றால் எளிதில் சாதி ஒழியுமோ? வண்ணப் பிரிவு வண்ணப் பிரிவு என்னும் சாதிக்கொடுமை ஒரு வழியிலா கேடு செய்துள்ளது? செய்து வருகின்றது? நந்தனார் அடிமைத் திறமும் திருப்பாணர்கள் இசைத்திறமும் ஊரறியப் பேசிக் கொண்டும் போற்றிக் கொண்டும் உள்ளறியத் தாழ்த்திக் கொண்டும் தடுத்துக் கொண்டும் இருப்பது நாட்டு நாடகமாயிற்று; நடை முறையாயிற்று. இறைவன் தந்தை என்றும், மக்களெல்லாரும் அவன் மக்கள் என்றும் சொல்லிக் கொண்டு சாதிச் சுவர்களை எழுப்பி எழுப்பி அப்பால் நிறுத்தியும், அப்பாலுக்கு அப்பால் நிறுத்தியும் வைக்கச் சமயம் தூண்டி வைத்தது என்றால், அச்சமயம் வளர்ந்த சாதியின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட சமயமே யன்றிப் சால்புச் சமயமன்றாம். ஏணிப்படிபோல் சாதிகளை ஆக்கி வைத்ததன் பயன் என்ன? நான் கீழிற் கீழாய்க் கிடக்கிறேன் என்னும் எண்ணவுரிமையும் அறியாராய்ப் பெரும்பான்மை மக்கள் வீழ்ந்து கிடக்க நேரிட்டு விட்டதாம். இந்நிலையில் கலப்பு மணம் வரவேற்கப்படுமா? உடனுண்ணல் ஏற்கப் படுமா? நாட்டுக்கு உய்வும் உண்டோ? உண்டோ? வழிபாட்டு மொழி இன்பபாகுபாடு இம்மட்டில் ஒழியுமோ? சமயத்தின் மேலாண்மையராய்க் கோயிலாட்சியைக் கையில் கொண்டிருந்த உயரினத்தால், தம்மொழியை உயர் மொழி யென்றும், தேவ மொழியென்றும் அத் தேவ மொழியிலேயே ஓதுதல் வேண்டு மென்றும் திட்டமிட்டுக் கேடு புரிந்தனர். அதன் விளைவு இன்று வரை மண்ணின் உரிமை மொழியாம் தமிழ், கோயில் மொழியாக முடியவில்லை. அடிமையர் மொழியாய், தீண்டத் தகாதவர் மொழியாய், வட்டார மொழியினும் கீழ்மொழியாய் உயிர் மட்டில் தாங்கிக் கொண்டுள்ளது. தமிழ் ஞானசம்பந்தர், அப்பரடிகள், தம்பிரான் தோழர் மணிமொழியார், நம்மாழ்வார், பெரியாழ்வார், காரைக்காலார், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் இவர்களினும் தூயரா - அன்பரா - இறைமை வாய்ந்தவரா - நாவசைப் பளார் - மணி அசைப்பாளர்! நெக்கு நெக்குருகவும் - கருங்கல் மனமும் கரையவும் பாடிய பண்ணாரும் பாடல்கள் திருக்கோயிலில் இறைவன் திருமுன்னேயே நின்று பாடிய தீந்தமிழ்ப் பாடல்கள், கோயிலில் பூசனைப் பாடலாகக் கூடாதாம்; அப்படிப் பாடின் கோயிலிலே தீட்டுப் பட்டு விடுமாம்; இக்கொடுமை - கயக்கொடுமை - இக் கேடு கெட்ட தமிழ் மண்ணுக்கு அன்றிப் பிறிதொரு மண்ணுக்கு உண்டாமோ? சாதி அடிமை தந்த மொழியடிமை யன்றோ இது? இல்லாக் கால் தமிழ் மண்ணில் - தமிழர் உழைப்பில் - தமிழர் வளத்தில் - தமிழர் கலையில் உருவாகிய திருக்கோயில் வழிபாடு தமிழாக இல்லாமல் ஒழியுமோ? சமயம் எக்கேடு கெட்டால் என்ன? சாதிமை காக்கப்பட வேண்டும். அவ்வளவே! இனி, தமிழ்நாட்டு இசையின் நிலைமை என்ன? சடங்கு மொழி கோயில் மொழி வடமொழி என்றால் திருமணச் சடங்கு எம் மொழியில் நடத்தப்பட்டது? இறுதிக் கடன் எம்மொழியில் நடத்தப்பட்டது? நன்னிகழ்வா அன்னிகழ்வா எல்லாம் எல்லாம் சமயச் சார்புண்டானால் வட மொழிக்கே வாய் திறந்து வைக்கப் பட்டது! குடும்பச் சடங்கும் சொந்த மொழியில் நடத்தமாட்டா மூங்கையராக மூத்த தமிழ் மக்கள் முடங்கிக் கிடந்தனர். பொருளறி வாரா வேதமொழி கேட்டு ஆட்ட ஆடும் ஆடிப் பாவை போலக் கரணங்களை நடத்தும் கடமை வீரராகத் திகழ்வதே பிறவிப் பயன் எனக் கொண்டு விட்டனர். இன்றளவும் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்ட தெனக் கூற முடியவில்லை. மறைமலையார் எழுதியென்ன, கா.சு. எழுதியென்ன, பெரியார் பேசியென்ன, அண்ணா முழங்கி யென்ன, பாவேந்தர் பாடியென்ன, திரு.வி.க. பொழிந்தென்ன, பிறர் பிறர் முயன்றென்ன? பழைய கதை பழைய கதையே! இசை இசை மேடை என்றால் தெலுங்கே! இப்பொழுது இந்தியும்! தமிழ்ப் பாட்டு, மேடையில் துக்கடா என்னும் துணுக்கு அளவை விட்டுப் பெருகியதில்லை. தமிழிசைக் கல்லூரியாரே தமிழிசை என ஒன்றில்லை என்னும் பேறமைந்த நாட்டில் தமிழிசை பற்றிப் பேச வேண்டுமா? இம் மட்டோ? ஆட்சிக் களங்கள், கல்விக் களங்கள், தொழில் நிறுவனங்கள் இங்கெல்லாம் தமிழ்நிலைமை என்ன? வெள்ளை ஆங்கிலர் போனாலும் கறுப்பாங்கிலர் கட்டிக் காக்க அவரினும் மேலாகக் காத்திருக்கும் நாட்டில், ஆட்சி மொழியும், பயிற்று மொழியும், நடுவர் மன்ற மொழியும் தாய்த் தமிழ் மொழியாக இருக்குமோ? அடிப்படையை விட்டு விட்டு வாண வேடிக்கை காட்டி என்ன பயன்? மூச்சுக்குக் கேடாய் முழக்கமிட்டு என்ன பயன்? ஆட்சி மொழி நாட்டுக்கு விடுதலைப் பாட்டுப் பாடி நாற்பது ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், தமிழின் நிலை கோப்புகளில் - தமிழ் நாட்டு அரச அலுவலகங்களின் கோப்புகளில் - தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்ற முன்னேற்றம் உள்ளது! கையெழுத்து மாற்றத்திற்கே நாற்பது ஆண்டுகள் வேண்டியிருந்தால், தலையெழுத்து மாற்றத்திற்கு எத்தனை நாற்பது ஆண்டுகள் வேணடியிருக்கும்? இவற்றையெல்லாம் ஏறத்தாழ ஐம்பான் ஆண்டுகளின் முன்னே எண்ணிப்பார்த்து வலியுறுத்துகிறார், வழிகாட்டுகிறார் கா.சு. அன்றே தமிழர்கள் எண்ணாதொழியினும் இன்றேனும் எண்ணிப் பார்த்து நடைப்படுத்த வேண்டுமே! தூய்மை கோயில் இறையுறை இடம்; உடலும் இறையுறை இடமே; ஊனுடம்பு ஆலயம் என்பது திருமந்திரம். முன்னது படமாடக் கோயில்; பின்னது நடமாடக் கோயில்; இக்கோயில்களின் அகமும் புறமும் தூய்மை போற்றப்பட வேண்டும். புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது இருவகைக் கோயில்களுக்கும் ஏற்புடையதே. கோயிலின் தூய்மை, அமைதி ஆயவை வழிபாட்டுக்கு வருபவரை வயப்படுத்தி இறைமை யூட்டத் தக்கதாக இருக்க வேண்டியது கட்டாயமானது. மூக்கைப் பொத்தும் நெடியும், கண்ணைப் பொத்தும் காட்சியும் நினைக்க வெறுக்கும் நிலையும் ஆங்கு நிகழல் கூடவே கூடாது. அவரவர் உடலையும், உள்ளத் தையும், உறையுளையும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் தன்னிலையால் கற்பிக்கும் கலைநிலையமாகக் கோயில் திகழல் வேண்டும் என்பது சாலும். கோயில்தூய்மை குறித்து கா.சு. கூறுகிறார்: கோயில்களின் மூலத் தானங்களையும் பிற இடங்களையும் எப்பொழுதும் புனிதமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிறித்துவக் கோயில்களும் மகம்மதியப் பள்ளிகளும் மனங்கவர் புனிதத்தோடு விளங்குதல் போல் நம்முடைய ஆலயங்கள் தூய்மை யோடு திகழ்வதில்லை. எண்ணெய்ச் சிக்கினால் மாசடைந்து அழுக்கு மிகுதற்கு இடமாயுள்ள பகுதிகளை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். மூலத்தானங்களில் திருவடிவங்களைக் குருக்கள்மார் தூய்மையாக வைப்பதில்லை. ஆறு காலத்திலும் எண்ணெயையும் தண்ணீரையும் கொட்டி வழுக்கும் அழுக்கும் சேருமாறு செய்து விடுகிறார்கள். இதை அறநிலையத் தலைவர்கள் ஒரு சிறிதும் கவனிப்பதில்லை. ஆறு காலத் திருமுழுக்கைப் பார்க்கிலும் இருகால ஒருகால நீரோட்டே போதுமானது. எண்ணெய் அழுக்கினைச் சீயக்காய், நெல்லிப் பருப்பு, மாக்காப்பு, மஞ்சட் காப்பு முதலியவற்றாற் போக்கித் திருவொற்றாடை யினால் திருவடிவங்களையும் இடங்களையும் துடைத்துத் துப்புரவு செய்ய வேண்டும். விளக்குகளை நாள்தோறும் துடைத்து, அவற்றில் துய்மையான திரியிடல் வேண்டும். கோயில் வருவாய்க்கு ஏற்பத் தகவாகச் செலவிடல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி நெறிமையாக்கல், விரைந்தும் கருத்தி ன்றியும் பலர் பெயர்க்கு ஒரே வேளையில் அருச்சனை செய்தல் என்பவற்றையெல்லாம் கருதிக் கூறுகிறார் கா.சு. அருச்சனை (மலர் வழிபாடு) அருச்சனை பாட்டேயாகும் என்பது தமிழ்நெறி. அந் நெறியால் உண்டாயதே தேவபாணி, பரிபாடல், திருவிசைப்பா, தேவாரம், திருவாசகம் நாலாயிரப்பனுவல், திருப்புகழ், திருவருட்பா என்னும் இன்னவெல்லாம். இவை யெல்லாம் திருக்கோயில் திருமுன்னிலேயே உடையவர்களால் பாடப்பட்டவை. இவற்றைச் சொல்ல - இன்னும் அவ்வக்கோயிலுக் கென்றே பாடப்பட்ட திருப்பாடல்களைச் சொல்லி - அருச்சனை செய்தலும் வழி பாடாற்றலும்இல்லை! வடமொழி வழிபாடே வழிபாடாக நிகழ்கின்றது. தமிழில் வழிபாடு வேண்டும் என்று கேட்பவர் அமைதிப்படுத்துவதற்காகத், தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என ஒரு பலகை நான்றுகொண்டு கிடக்கும்! அதனைச் சொல்லி ஒருவர் தமிழ் வழிபாட்டைக் கேட்டால் மொழித் துண்டாராக எண்ணி முணகிக் கொண்டு வடமொழி மந்திரம் போலவே சொல்லுதல் வழக்கு! விரியச் சொல்வானேன்? ஓதாதுணர்ந்து பல்லாயிரம் பாடல்களைப் பாடியவர் வள்ளலார். அவரது பொது நிலைக் கழகத்திலேயே (சன்மார்க்க சபையிலேயே) வடமொழி வழிபாடே நிகழ்த்தப்படுகிறது. அதனைச் செய்து நடைசார்த்திய பின்னரே புறத்தே நின்று அருட்பாப்பாடும் நிலை! இவற்றை எண்ணி வழிபாட்டாக்கம் குறித்துக் கா.சு. கூறும் கருத்துக்கள் மிகச் சீரியவை: அருச்சனைகளைத் தமிழர்கள் கோயில்களில் தமிழிலேயே நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும். பொருள் விளங்காத மொழியில் இறைவனை வாழ்த்துவதிலும் தமிழில் நாமம் சொல்லி மலர்தூவிப் போற்றுதலே வழிபடுவார்களுக்கு அன்பு பயக்கும். பூசை முறைகளைத் தமிழிலே எழுதுவித்துப் பூசைகளைத் தமிழில் நடத்தஅருச்சகர்களைப் பழக்குதல் வேண்டும். கிரியை களின் கருத்தை விளக்கும் ஆற்றல் அருச்சகருக்கு இருத்தல் வேண்டும். அருச்சகர் பயிற்சிக்காக ஒரு கலாசாலை அமைத்தல் வேண்டும். சைவ வைணவ சமயப் பெருந்தலைவர்கள் தமிழிலேயே இறைவனைத் துதித்திருக்கின்றார்கள். ஆதலால் தமிழிலே அருச்சனை செய்தல் கூடாது என்றல் பெருந்தவறாம். தமிழில் வழிபாடு செய்தல், மந்திரங்களைப் பெயர்த்தல் முதலியவற்றைப்பற்றி விரிவாகக் கூறுகிறார் (125-7). வழிபாடு செய்தற்கும் குலப் பிறப்புக்கும் தொடர்பில்லாமையையும் விளக்கு கிறார்: பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டிற்கு இல்லை என்பதைக், காசியில் யாவரும் வருண வேறுபாடின்றிச் சிவபெருமானைப் பூசிக்கும் வழக்கில் வைத்து அறிந்து கொள்க. காசியில் நடக்கும் முறை வழிபாட்டினர்க்கு வசதி தராதது. ஆதலின் நல்லொழுக்கமும் கள்ளுண் விலக்கும் உடைய அறிஞர் எக்குலத்தவராயினும் பூசனை முறையறிந்து அன்பாய்ப் பூசனை செய்யக் கூடுமானால் அவரை ஆலயத்தில் அருச்சகராக நியமித்துக் கொள்ளுதல் நலம். உடலைப்பற்றிய சாதியினும் உயிரைப்பற்றிய சமயமே பெரியதென்பது சமய நூற்கொள்கை என்று உண்மை தெரிக்கிறார் கா.சு. இனிக் கூட்டமற்ற நாளில் இறையன்பாளர்கள், வாய்ப்பான தொலைவில் நின்று தாமே மலர் தூவி வழிபாடு செய்தற்கு இடங் கொடுத்தல் வேண்டும் என்னும் கருத்தையும் காசு கூறுகிறார். நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன் என்று ஏங்கவும், கண்ணப்பன் ஒப்பதோர்அன்பு இல்லை என்று வியக்கவும் செய்யும் காளத்திவேடன், தானே தன் நிலையில் வழிபட்டதை எண்ணின் உண்மை விளங்கும். கோயில் சூழல் கோயில்களில் மெய்ப் பொருள், இசை, கூத்து, பொழிவு இன்னவெல்லாம் பயில வாய்ப்பு வேண்டும் என்றும், சோம்பர்க்குத் துயிலிடமாகவும், பிச்சையர்க்குப் புகலிடமாகவும் கோயில்இருக்கும் நிலையைத் தவிர்த்தல் வேண்டும் என்றும் பிறவும் கூறுகிறார். பிச்சையொழிப்புக்கு வழி காட்டுகிறார் கா.சு. பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ய விரும்பும் மக்கள் நன்கொடைகளை ஒருங்கு சேர்த்து ஏழைகளுக்குத் தொழிலும் உணவும் உதவும் நிலையங்களைக் கோயில் அலுவலர்கள் நிறுவி நடாத்த வேண்டும் என்பது அது. ஆரிய வருண வேறுபாடுகள் ஆகமத்துட் புகுந்த பின்னர்க் கோயிலுள் சாதிக் கட்டுகள் புகுந்தன. அக்கால நிலையிலும்கூடத் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு அந்தணராகிய திருஞானசம்பந்தர் அருகில் நின்று கோயிலில் அவர் பாடும் பாடல்களை யாழிலிட்டு வாசிக்கும் பேறு கிடைத்தது. அந்தணர் வீட்டில் வேள்வி மேடையில் தம் மனைவியோடு தங்கும் உரிமையும் கிடைத்து. வைணவத்தில் காவிரிக்கரையில் பாடி நின்ற திருப்பாணாழ் வாரைத் திருவரங்கத்து அருச்சகர் தோளில் தூக்கிச்சென்று பெருமாளுடன் ஐக்கியம் செய்வித்த வரலாறு கேட்கப்படுகிறது. அந்நிலையும்கூட அழிந்ததே என்று இரங்குகிறார் காசு. சைவம், வைணவம் என்னும் சமயத்தில் வழிவழியாக வந்த குடியினரும் பிறபிற சமயங்களில் புகுதல் நேர்ந்த தென்ன? சமயம் சமையற் கூடமாகியது! சாதிக்களம் ஆயது! பொது நலம் போக்கித் தன்னலச் சுரண்டல் மையம் ஆகியது. அறிவு நிலையம் அறியாமைக் கூடம் ஆகியது. இவ்வெல்லாவற்றுடன் தொண்டு என்பதைக் கண்டு கொள்வதும் பாவம் எனத் தொலைவில் வைத்தது. இந் நிலையில் வேற்றுச் சமயப் புகவு நேர்தல் கட்டாய மாகியது. அங்கே நில்! இங்கே நில்! என்று தமிழ்ச் சமயத்தார் தடை யமைத்துத் தனித்தனியே மக்களைப் பிரித்து வைத்தனர். வருக வருக என வாயிலைத் திறந்து வைத்து வரவேற்கப் புதுச்சமயத்தார் கிளர்ந்தனர் பொது மாந்தர் உள்ளம் வரவேற்பை நாடுமா? புறக்கணிப்பை நாடுமா? மதிப்பாக்கத்தை நாடுமா? இழிவுறுத் தத்தை நாடுமா? ஒருவர்படும் துன்பத்தில் பங்குகொள்ளாத வாழ்வுச் சிக்கலில் தீர்வு காணாத சமயத்தை எவரே வாய்ப்பென ஒட்டிக் கொண்டிருப்பார். நட்புக்குக்கூட அத்தகையரை ஒன்ற முடியாத போது இறைமைப் பாட்டுக்கு ஏற்பரோ? தொண்டு பாண்டியன் வெப்பு நோயிற் கிடந்தான், ஆளுடைய பிள்ளையாரும், சமணப் பெரியாரும் அருகில் இப்பாலும் அப்பாலும் நின்றனர். தத்தம் சமயச் சீர்மைகளைச் சொல்லித் தருக்கிட்டனர். அத் தருக்கு, நோயர்க்கு வேண்டுவதோ? நோயற்கு வேண்டுவது அந்நோய் நீக்கமே! பிறிதன்றே! பாண்டியன் பகர்ந்தான்; பாண்டியன் உள்ளோட்டத்தில் சேக்கிழார் பகர்ந்தார். என் பிணியைத் தீர்ப்பவர் எவர்? அவரே வெற்றி கொண்டவர்; யான் அவர் பக்கஞ் சேர்ந்து விடுவேன் என்றான் பாண்டியன். இது தானே மெய்ம்மை! இந்நாள் அயற் சமயம் புகுவாளரை வினவுக! நூற்றுள் தொண்ணூற்று ஒன்பதின்மர் என்ன சொல்கின்றனர்? கல்விக்கும், தொழிலுக்கும், தன்மானத்திற்கும் இச்சமயம் ஏந்தாக உள்ளது என்பதே! சமயத்தின் கொள்கைச் சிறப்பு என்று எவர் கண்டு போயினார்? தமிழர் சமயத்தில் இல்லாச்சால்பா ஆண்டுள்ளது? சால்புகள் ஏட்டில் உள்ளன; எழுத்தில் உள்ளன; நெஞ்சில் நிறுத்தி மேடைப் பொழிவுக்கு உள்ளன; தன்னலப் பசப்புக்கு உள்ளன! சால்புக்கு உள்ளனவோ? இறைமையைக் காக்க உள்ளனவோ? தொண்டலால் துணையும் இல்லை இறைவனுக்கே என்னும் தூய்மை உண்டா? வாய்மை உண்டா? துவள்வாரைத் தூக்கி நிறுத்தக் கைந்நீட்டாத எச்சமயத்தையும் வாழ்வுப் போராட்ட முடையார் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட செய்தியாம்! தேனென்று எழுதிய தாளை நாக்கில் வைத்த அளவில் சுவைக்கின்றதெனச் சொல்வாரார்? மீட்பர் தொண்டால் சமயம் காத்தல் கடனாக - தொண்டர் சமயமாகத் தமிழர் சமயத்தைக் காத்தல் கடனாக - அறிஞர் தலைப்படல் வேண்டும்! அருளாளர் தலைப்படல்வேண்டும். அத் தலைப்பாட்டின் பின் அயற்சமயம்புகுந்தார் மீள்வரேல் அவரை அரவணைத்துமீட்கும் மீட்பர் வேண்டும். இவற்றைக் கருதும் கா.சு. நமது சமயத்தில் இருந்து புறச்சமயம் புகுந்தவரை மீட்டும் தமிழர்சமயத்தில் ஏற்றுக் கொள்ளுதல் பொருத்த முள்ளதே யாகும். சமண சமயம் புகுந்த திருநாவுக்கரசர் மீண்டு சைவ சமயத்துக்கு வந்தகாலை அவர் தமக்கையாராகிய திலகவதியார் அவருக்குத் திருநீறு அளித்து அவரைத் தடையின்றித் திருவதிகைக் கோயிலுள் அழைத்துச் சென்றமை பெரியபுராணத்திற் கூறப் பட்டது என்கிறார். திருமடம் இனித் திருமடத்தலைவராவார் எவர்? தமிழர்! தமிழ்ச் சமயத்தர்! அவர் தம் செயன்மைகள் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கந் தருவனவாக அமைந்துளவோ? தமிழர் தந்தஅறக் கொடையால் செழிக்க வாழும் அம் மடத்தர், கொடை தந்த மக்கள் நலத்தைப் பேண வேண்டும் அன்றோ! ஆங்கும் என்ன சாதிச் சழக்கு! மாற்றுக் குறை மதிப்பீடு! சிவனெறி மடத்தார் சிவனெறிச் சால்பு உடையரா என்னும் நோக்கை நோக்குதல் இன்றி, இனப்பார்வை பார்த்தல் அவர் தமிழரல்லர், தமிழாசியர் என்பதையே காட்டும்! அவர்தாமும் தமிழ் வழிபாட்டுக்கு முயன்றனரா? முயல்வார்க்கு ஊக்கம் தந்தனரா? தமிழாரியராகத் தம்மைக் கொண்டவர் எப்படித் தமிழ் நலம் நாடுவார்? தமிழர் நலம் நாடுவார்? சமய அழுத்தத்தில் சற்றும் குன்றாத பெருமகனார் ஆறுமுக நாவலர்! அவர் தமிழ்ச் சைவச் சான்றோர் ஆயின் தமிழ் வழி பாட்டை வலியுறுத்தினரா? இந்நாள் சமயப் பொழிவில் இணையின்றி விளங்கும் திருமுருக வாரியார் தமிழ்ச் சமயப் பொழிவாலேயே சீரும் சிறப்பும் எய்தி வருபவர். இருளடைந்த திருக்கோயில்களுக்கெல்லாம் ஒளிவிளக்கேற்றி வருபவர். திருப் பணிகள் குடமுழுக்குகள் எல்லாமும் செய்பவர். எனினும் தமிழ் வழிபாட்டை அறவே கருதினாரல்லர்; மெய்ப்பொருட் சமயச் செம்பொருள் வழிகாட்டாராய்ப் புனைவுச் சமயத்திலேயே பொழுதெலாம் போக்கிவருதல் கண்கூடு. அத்தகையரும் தமிழ் வழிபாட்டைக் கருதாமை தமிழர்க்கென்றேயமைந்து விட்ட தீக்கோளே போலும்! வாரியார் பெருமகனாரைத் தனியர் எனலாமோ? அவர் ஒர் அமைப்பு! ஒரு நிறுவனம்! அதனால் திருமடத்தார் கூட்டிலே ஆறுமுக நாவலரும் அருளின்பவாரி யாரும் எண்ணப்பட்டனர் என்க. ஆதீனம் பற்றிக் காசு கருதும் கருத்துக்கள் காண்க: ஆதீனத் தலைவர்கள் தமிழ் மொழியையும் தமிழர் சமயத்தையும் இரண்டு கண்களாகப் பாதுகாக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். ஆதீனங்கள் சிறந்த கலைநிலையங்களாய் இருத்தல் வேண்டும. தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் ஆதீனத் தலைவர்களால் நிலைநாட்டப்படுதற்குரியன. கிளை மடங்களிலும் தலைமையிடத்திலும் ஏழைத் தமிழர்க்குப் பயன்படும் அறச்சாலை களும் தொழில் நிலையங்களும் அமைத்தல் வேண்டும். ஆகிரா (Agra)Éš உள்ள இராதா சுவாமியின் தொழில் நிலையம் போன்ற அமைப்புக்கள் தமிழர் வறுமையை ஒழிக்கத் துணைபுரியும். தமிழருடைய ஆதீனச் செல்வம் தமிழர்க்கே பயன்படுதல்நலம். தமிழர் சமயம் இன்னதென்று அறியாது தமிழ்ப் பற்றும் இல்லாது தன்னலங் கருதும் புற மதத்தினர்க்கு அது பயன்படுதல்கடியத்தக்கது. தமிழர் சமய நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் ஆதீனங்களையும் மடங்களையும் ஒழுங்கு படுத்து வதற்கு அவசியமாயின் சட்டம் நிறைவேற்றுதல் நலம். பெண்டிர் மக்கட் கூட்டத்தின் செம்பாதி (சரிபாதி) மகளிர். சிலவிடங் களில் மிகை எனலும் தகும். அத்தகு பெண்டிர் நலம் பேணப்படுதல் கட்டாயமன்றோ! விளைநிலம் பண்படாக்கால், உர ஊட்டம் நீர்வளம் பெறாக்கால். பயிரூட்டம் உண்டோ? விளைவு ஈட்டம் உண்டோ? பெண்டிரைப் பேணாமை நாடு பேணாமையே! வீடு பேணுவாரைப் பேணாக்கால் அவ்வீடுகளின் கூட்டமாம் நாடு பேணப்பட்டதாகுமா? தாய் வழிபாடு என்கிறோம்! பெண்ணின் பெருமை என்கிறோம்! அம்மை அப்பன் என்கிறோம்! ஆனால் பெண் பிள்ளைப் பிறவிக்கும் ஆண்பிள்ளைப் பிறவிக்கும் பிறப்பு வேளையிலேயே வேற்றுமை காட்டப்படுகின்றதே! குரவையிட்டுக் கொண்டாடப்படுகிறது ஆண் மகவின் வரவு! பெண் மகவு ஊமைப் பிறப்பாக அமைகின்றது. ஆண்பிறப்பு இனிப்பில் தவழ்கின்றது. பெண்பிறப்பு வாய்ச் சொல்லுக்கும் வறுமைப் படுகின்றது. பெண் எவ்வகையில் தாழ்வு? அன்பின் பிறப்பு; அருளின் சுரப்பு; அழகின் இருப்பு; இறைமையின் உறைப்பு! இப்பெண்மையில் காணும் கேடென்னை? ஆணினும் படும் கேடென்னை? பெண் என்ன நிலமா புலமா, நகையா நட்டா, ஆடா மாடா, பொட்டா பூவா? உயிர்! உயிர்! உயிர்! பண்பின் கொள்கலமாம் பரிவுயில்! ஓடி ஓடி உதவும் உயிர்! உருகி உருகி உதவும் உயிர்! அவ்வுயிரை ஆண்மைச் செருக்குப் படுத்தியுள் - படுத்திவரும் - பாடு ஒன்றோ? இரண்டோ? ஒத்த கிழவனும் கிழத்தியும் என்றும் என்ன? பெண்ணிற் பெருந்தக்கதில் என்றும் என்ன? தாயிற் சிறந்தொருகோயிலும் இல்லை என்றும் என்ன? திருமகளாய், கலைமகளாய், மலை மகளாய் வழிபட்டும் என்ன? நிலமகள் நீர்மகள் வீரமகள் வெற்றி மகள் என்றும் என்ன? பெண்ணுக்குப் பெருமையுண்டோ? ஔவையாரைஅறிவார் பெண்ணினம் அறிவில் தாழ்வென அறைவரோ? காக்கைபாடினியாரை அறிவார் பெண்ணினம் புலமையில் தாழ்ந்ததெனப்புகல்வரோ? காரைக்காலம்மை யாரையும் ஆண்டாளாரையும் உணர்வார் பெண்டிர் இறைமைப் பெருக்கை எளிதில் எடை போடுவரோ? புறப்பாடலை ஆய்வார் முதுகுடிப்பெண்டிர் வீரத்தை எண்மையாய் எண்ணுவரோ? உலகளாவிய தொண்டால் தம்மை உலகத் தெய்வத் தாயாக்கி வரும் கன்னி அன்னை தெரேசாவை எண்ணுவோர், பெண் மையைக் குறுகிய வட்டத்துள் அடக்குவரோ? வேலு நாச்சியார், மங்கம்மாளார், சான்சிபாய் இன்னோரை எண்ணுவோர் பெண்டிர் அரசியல் சீர்த்தியை அளவில் குறுக்குவரோ? ‘jÄH® rka¤âš cyfshÉa bg©o® ngr¥gL thnd‹? என வினவலாம்! பெண்மை அன்புலகு! அருளுலகு! தொண்டுலகு! அவ்வுலகில் குறுக்கமில்லை! சுருக்கமில்லை! குறுக்கச்சுருக்க ஆண்மையே, பெருக்கத்தை தலையில் தட்டி வீட்டில் ஒடுக்கி நாட்டில் ஒடுக்கி உலகில் ஒடுக்கி வருகின்றதாம். ஆளுமை ஆடவர்க்குரிமையாய் இருந்தது. கல்வி ஆடவர்க்கு உரிமையாய் இருந்தது. வெளியுலகும் ஆடவர்க்கு உரிமையாய் இருந்தது. இவற்றை என்றும் தம் கைக்குள் வைத்துக் கொள்வதற் கென்றே திட்டமிட்டுத் திட்டமிட்டுத் தேர்ந்து கட்டுகளை உண்டாக்கிக்கொண்டது. வெளியுலகச் சாதிக்கட்டுகள் போல் வீட்டுக்குள்ளும் ஒரு தாழ்ந்த சாதிக்கட்டு ஆக்கிக் கொண்டது. அச்சாதி பெண்சாதி. பெண்மையின் மென்மை ஆக்கத்திற்கா? அழிவுக்கா? ஆண்மையின்வன்மை ஆக்கத்திற்கா? அழிவுக்கா? பெண்மையை ஒடுக்குதற்கோ ஆண்மை முனைப்பு கொள்ள வேண்டும்! தன்னைத் தானே தானறியாமல் அன்றி அறிந்தே கெடுத்தகேடு; வழிவழி மரபைக் கெடுத்த கேடு. புறத்தார் தமிழரைத் தாழ்த்திக் கெடுத்தார் என்பது எவ்வளவு மெய்யோ அவ்வளவு மெய் இடைக்கால - பிற்காலத் தமிழராம் அகத்தார், பெண்ணினத்தைத் தாழ்த்திக் கெடுத்தார் என்பது. பெண்ணைப் பழித்த பாடல்கள் ஒன்றா இரண்டா, ஓராயிரமா ஈராயிரமா? குப்பையும் கொடு நாற்ற மலமும் அள்ளிச் செல்லும் நகராட்சி வண்டியளவுடையதன்றோ ஏடுகள்! ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் - தாயைத் தெய்வமென வழிபடுபவன் அப்படிப் பழிப்பனோ? விரிவு வேண்டாவென அமைக. களவு கற்பு என வாழ்வை நெறிப்படுத்திய அகப்பொருள் கண்ட நாட்டிலே அகவாழ்வு சீரழிக்கப்பட்டது. பரிசுப் பொருளா கவோ விலைப்பொருளாகவோ மணம் நிகழ்வதாயிற்று! கல்விக்கும் செல்வத்திற்கும் தக மகற்கொடை (வரதட்சணை) பொருளாயிற்று! விலைபேசும் வாழ்வு விலங்கும் வாழ்வாமோ? வாழ்க்கைத் துணை என்னின், பொருள் வழக்கு தலைக்காட்ட லாமோ? இன்னவெலாம் காசுவின் உணர்வை உலுக்கியிருக்க வேண்டும். அப்பெண்ணைப் போற்றுதல் சமயத் தொடர்புடையதே என்ற அமைதி ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால் மகளிர் உரிமையை மனங்கொண்டுரைக்கிறார். தொழிலுரிமையைத் துலக்குகிறார்; கலப்பு மணத்தை வரவேற்கிறார்; கைம்மை நிலைக்குக்கரைந்து அவர்கள் மணத்தையும் ஏற்கிறார். அவர் தம்கு றிப்புகளுள் சில: ஒப்புரிமை தமிழர் தம் ஆதி நூல்களில் ஆண்மக்களுக்குப் பெண் மக்கள் அடிமை என்ற கருத்தில்லை. குடும்பத்தலைவனாகிய தந்தையின் சொல்வழி பிறர் நிற்பதனால் குடும்ப ஒற்றுமை நிலைபெறும். தாய், தந்தைக்கு அமைச்சர் போல்பவள். தலைவன்பால் உள்ள அன்பு நிலை பெறுவதற்காக அவனிடத்தில் கடவுட் குணங்களைக் கண்டு பாராட்டும் வழக்கம் மிகுதிப்பட்ட காலத்தில் கணவனைத் தெய்வமாகப் பாவிக்கும் கொள்கை ஏற்பட்டது. தெய்வமாகக் கருதப்பட்ட கணவன் தெய்வம் போலக் கைம்மாறு கருதாது கருணை காட்டாது தன்னைத் தெய்வம் போலக் கருதி அதிகாரம் செலுத்தும் தன்னலம் மிகுந்தவனானபோது பெண்களிடம் கொடுமை காட்டும் வழக்கம் ஆண்மக்களுக்கு ஏற்பட்டது. பெண்களுக்குத் தன்னுரிமை கொடுப்பதே அறிவுக்குப் பொருத்தமானது என்னுங் கருத்துடைய திருவள்ளுவர், பெண் களை சிறையில்வைத்துக் காத்தல் பயனற்றது. அவர்கள் மன உறுதியினாலேயே தங்கள் கற்பைக் காத்துக் கொள்வது சிறந்தது என்றார். கம்பநாடார் கூறியபடி பொருந்து செல்வமும் கல்வியும் பூத்லால் மனமொத்த காதலுடைய இருவர் களவும் கற்பும் ஒன்றன்பின் ஒன்றாக நன்கு நடாத்தினர். இக்காலத்தில் மனம் ஒவ்வாத ஒருவர் விலகிக் கொள் வதற்குச் சட்டம் இடம் கொடுப்பதாயிற்று. உலக நன்மைக்குரிய பெரிய செயல்கள் செய்வதில் பெண் களுக்குச் சுயாதீனம் முற்காலத்தில் இருந்திருக்கிறது. (மங்கையர்க் கரசியார் சான்று) தவம் செய்யும் பெண்டிர்க்குப் பெற்றோர்கள் திருமணத்தை வல்வந்தமாகச் செய்விக்கவில்லை. பெண்கள் போதகாசிரியராய் வேலை பார்ப்பதில், பெண் கல்லூரிகளில் அவர்கள் அமர்தல்மிகவும் பொருத்தமாகும். அவர்கள் வழக்கறிஞர்களாய் இருப்பதற்குத் தகுதியுடையவர் களே. (கண்ணகியார் சான்று) அவரவர் ஆற்றலுக்கும் தன்மைக்கும் ஏற்ற தொழில்கள் செய்வதற்கும் வேலை நியமனம் பெறுவதற்கும் பெண் பாலர் என்ற காரணம் தடையாக இருத்தல் கூடாது. திருமணம் செய்து கொள்ளக்கூடிய வயதுள்ளவர் களாயும் விருப்பம் உள்ளவர்களாயும்இருக்கும் கைம் பெண்கள் மணம் செய்து கொள்வதால் இடையூறு ஒன்றுமில்லை. பல்வேறு குலத்தினர் குலத்தடையின்றிக் கலப்பு மணம் செய்வதற்குரிய சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அது விரைவில் நிறைவேற வேண்டும். கலப்பு மணச்சட்டம் கைம்பெண் மணத்திற்குத் துணைபுரியும். கலப்புமணம் தமிழர்களுக்குள் இருந்ததென்பது சங்க நூற் செய்யுள்களால் தெரிய வருகிறது. சந்தரமூர்த்தி சுவாமிகள் சரிதம் அதற்குச் சான்றாகும். கன்னி மணம் மிகுந்தவிடத்திலேதான் விதவை மணம் இன்றியமையாததாகும். குடும்பக் கட்டுப்பாடு குடும்பக் கட்டுப்பாடு என்பது இந்நாளில் பரப்பப்படாத இடமேயில்லை. செம்முக்கோணம் எம்மூலை முடுக்குகளிலும் காணும் காட்சி. மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகள் மிகப் பலவாம் என்பது மெய்யே! எனினும் அதற்குரிய அறிவுறு மன வடக்கம் அறியாராய்ப் புறவழிகளில்புகுவார் படும் இடரும் கொடுமையாம். திருமணத் தரகர் போலவே குடும்பக் கட்டுப்பாட்டுத் தரகரும் பல்கி வருகின்றனர். பள்ளியாசிரியன்மாரும்அப்பணி தலைக்கொண்டு வாழ வேண்டும் கட்டாயமல்லாக் கட்டாய நிலை! மணமாகா இளவர்க்கும், மூத்துக் கழிந்த முதுவர்க்கும்கூட அறுவைச் செய்தி! புலன் அறிவு; உணர்வு; புலக் கட்டுப்பாட்டால் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத்தக்க ஒரு நிலை நாட்டில் தோன்றவேண்டும். அத்தோற்றம் நாகரிக நயன்மைச் சான்றாம்! கருச்சிதைப்புப் பற்றியும் தம் கருத்தை நாட்டுகிறார் கா.சு. எளிய வாழ்க்கை வாழும் மக்களுக்குக் குழந்தைகள் மிகுதிப் பட்டால் பொருளாதாரம் குறைவுபட்டு இடர் விளையுமென்று எண்ணித் தற்காலத்தில் பெண்டிர் கருத்தரியாமல் இருப்பதற்குரிய தடைகளைப் பற்றிப்பல நூல்கள் வெளிவந்துள்ளன. கருவைச் சிதைப்பது குற்றமாகுமேயன்றிக் கருத்தரியாதிருக்க வழி தேடுவது பிழையாகாது. எனினும், அதற்குரிய உபாயங்கள் உடம்புக்கு உடனேயாதல் நாட்கழித்தாதல் ஊறு செய்யாதிருக்க வேண்டும். சிலவகைத் தடைகளால் உடம்புக்கு நோயும் துன்பமும் விளை கின்றன. மன அடக்கமே சிறந்த கருவியாகும். கருத்தரித்தற்குரிய காலத்தில் சேர்க்கையில்லாத் திருத்தல் நலமென்று சிலர் கருதுகின்றனர். கல்வி மக்கள் முன்னேற்றத்திற்குக் கல்வி இன்றியமையாதது. அதிலும் வாழ்வியலுக்கு வேண்டும் பொருள் தேடுதற்குத் தொழிற் கல்வி கட்டாயமானது. பொதுக் கல்வி, தொழிற்கல்வி, தொழிற் சாலை வாய்ப்பு என்பன பற்றி யெல்லாம் மக்கள் முன்னேற்றம் கருதும் கா.சு. கருதுகின்றார் : இளமையில் கற்பது நன்றாக மனத்திற் பதியுமாதலால் நினைவு கூரத்தக்க பாடங்களை இளமையிலே அழுத்தமாகக் கற்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். ஏழு வயதில் சமயம் புகுதற்குரிய நெறிச் செயல்களைச் சுருங்கிய செலவில் நடத்தல் வேண்டும். நல்லொழுக்கமும் அவசியக் கல்வியும் (கட்டாயக் கல்வியும்) பயில்விக்கப்பட்ட மாணவர்களுக்குப் பன்னிரண்டு ஆண்டுக்கு மேல் அவரவர் மனப்பான்மைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழிற்கல்வி பயிற்றுதல் வேண்டும். அல்லது தக்க நூற்கல்வி பயிற்றுதல் வேண்டும். செல்வர்கள் கல்வியாளர் களோடு கலந்து தொழிற்கல்விக்கு ஆவன செய்தல் வேண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோராற்றல் பிறவியில் உண்டு. அத்தொழிலில் அவர் ஈடுபடல் நன்று. பாவமற்ற தொழில் எதனைச் செய்தாலும் இழிவில்லை. தொழிலில் உயர்வு தாழ்வு என்பது இல்லை தொழில் இல்லார்க்கு வேலை கொடுப்பதற்குச் சமுதாயத் தலைவர்கள் துணை புரிய வேண்டும். முயற்சிக்குத் தக்க பயன் எந்தச் சமுதாயத்தில் எளிதாய் அமையுமோ அச்சமுதாயம் முன்னேற்றத்தில் முதல் நிற்பதாகும். சமுதாயச் செல்வர்கள் தங்கள் கடமையை ஒழுங்காக இயற்றுவார்களானால் சமுதாயத்தில் பிழைப்புக்கு வழி இல்லாத மக்களே இருக்க மாட்டார்கள். ஓரினம் தமிழர் இனம் படிப்படியே முன்னேறுதற்கும், ஒரே இனமாதற்கும் ஒருவழியைச் சுட்டுகிறார் கா.சு. தமிழரினத்தில் உள்ள பல குலங்களும் ஒன்றோடு ஒன்று போரிடாமல் பகைமையையும் பொறாமையையும் ஒழித்து ஓருடம்பின் பல உறுப்புக்கள் போல ஒற்றுமைப் பட்டு வாழ வேண்டும். கல்வி நிலையும் செல்வ நிலையும் தழைத்தோங்கும் பொருட்டுக் குலத்தலைவர்கள் குலத்திற்காகப் பாடு பாடுவதில் ஒருவருக்கொருவர் உதவியும் இணக்கமும் உடையவர் களாய் இருத்தல் வேண்டும். கலப்பு மணத்தால் குலங்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு ஒரு பெருஞ் சமுதாயம் ஆதல் வேண்டும். பல இனங்களும் உணவாலும் மணத்தாலும் இணைக்கப் படின் தமிழர் என்ற உணர்ச்சி தலையெடுத்து வெவ்வேறு குல மக்கள் குலப்பெருமை பாராட்டும் வழக்கம் தளர்வடையும். நடையுடை பாவனைகளிலும் தூய வழக்கங்களிலும் ஒரு தன்மையான முறை பல இனத்தாருள்ளும் ஏற்படுமாயின் இன வேற்றுமையுணர்ச்சி விரைவில் ஒழிந்துபோம். தமிழருள் இயல்பாகப் புகுந்துவிட்ட பல்வேறு பிரிவினை களுள், புதியதோர் பிரிவினையும் புகுந்துள்ளது. அது நம்பு மதம் (ஆத்திகம்) நம்பா மதம் (நாத்திகம்) என்னும் பிரிவாம். தமிழர் சமயமானது விரிந்த நோக்கமுடைமையால் தெய்வ நம்பிக்கை இல்லாதவரையும் அஃது இகழ்வதில்லை. சமய உயர்நிலை அடைவதற்கு ஏதுவாகிய நல்லொழுக்கமும் மொழிப் பற்றும் தமிழ் நாகரிகப் பயிற்சியும் தமிழ்மக்கள் எல்லாரையும் ஒற்றுமைப் படுத்தும் தன்மையன. இவ்வுண்மையினை யாவரும் கடைப் பிடித்து ஒன்று சேரவேண்டும் என நம்பு மத நம்பா மதப் பிரிவொழித்துத் தமிழினமாக விளங்க வழி கூறுகிறார். வெவ்வேறு சமயத்தார் தம்முள் மணந்து கொள்வதற்கும் தமிழர் சமயம் தடையாயதில்லை என்பதைக் கூன்பாண்டியன் மங்கையர்க்கரசியார் மணங்கொண்டு கூறுகிறார் கா.சு. தமிழ் மொழிப் பற்றும் தமிழரது செந்நெறிக் கொள்கையும் உடையவர் எக்குலத்தராயினும் எம்மதத்தராயினும் தமிழர் சமயத்தைச் சேருதற்குத் தகுதியுடையவரே. ஆதலின் தமிழர் திருநெறி உலகிற்கே பொது நெறியாகும் வாய்ப்புபடையது எனத் தமிழர் சமயச் செந்நெறியை நிறைவிக்கிறார் தமிழ்க் கா.சு. சட்டத்துறை மேலோர் கா.சு. தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பரிசும் பாராட்டும் பெற்றவர். நடுமன்ற நாயகராகச் செல்ல வேண்டியவர். நற்றமிழ் மன்ற நாயகராக விளங்கினார். அவர் அழுந்திப் பயின்ற சட்ட நுணுக்கம் தமிழர் சீர்திருத்தத்திற்கும் சட்டத்துணை செய்ய முந்துகின்றது. சீர்திருத்தங் கருதுவார்க்குச் சட்டத் துணை இன்றி மக்களாட்சி முறையில் எவ்வொன்றும் செய்தற்கியலாதே. கிளர்ச்சி இப்பொழுதுள்ள இந்து சட்டம் ஆரியருக்கு உரியதாகவும் தமிழருக்குப் பொருந்தாதாகவும் உள்ளது. ஆண் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. கலப்பு மணத்திற்கு இடந் தரவில்லை. ஆதலால் பொருள் வழக்குச் சட்டமாகிய சிவில் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கிச் சட்டமாக்குதற்குக் கிளர்ச்சி செய்தல் வேண்டும். திருக்கோயில் பூசை தமிழில் நடத்துதல், கல்வி நிலையம், உண்டுறை விடுதி முதலியன நிறுவி நடத்துதல், குலத்தடையின்றித் தக்க அருச்சகர்களையும் வேலைக்காரர்களையும் நியமித்தல், இசை, கூத்து முதலிய கவின் கலைகளைப் பேணுதல், திருமடங் களின் செல்வத்தைத் தமிழர்க்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக் குரிய கிளர்ச்சியை இடைவிடாது நடாத்துதல் வேண்டும் என்கிறார். சட்டம் தமிழர் திருமணத்துக்குப் பலர் அறியத்தாலி கட்டுதல் ஒன்றே போதுமானதென்ற விதி தெளிவாக்கப் படுதல்வேண்டும். நெருப்பு வழிபாடு முதலிய சடங்குகள் இன்றியமையாததல்ல என்ற கொள்கை நிலை பெறுதல் வேண்டும். கணவனும் மனைவியும் தக்க காரணங்களால் ஒத்து வாழக் கூடாத இடத்தும் பிரிதல் கூடாதென்ற இந்து சட்ட விதி ஒழித்தல் வேண்டும். பிரிந்தார் மறுமணம் செய்து கொள்ளச் சட்டம் இடங்கொடுக்க வேண்டும். குழந்தைகளைத் தத்து எடுத்து (சுவீகாரம் செய்து) அக்கினி காரியம்செய்யப்பட வேண்டுமென்ற விதி தமிழருக்கில்லை. தேச வளமைப்படி மஞ்சள் நீர் குடிப்பது அதன் சார்பான சடங்காகும். தத்து எடுக்கும் புதல்வனை ஈதலும் ஏற்றலும் காட்டக்கூடிய சான்றுகளே இந்நாட்டில் இக்காலத்தில்போதுமானவை. விதவைகள் தத்தெடுக்கக் காரணமாகாத தடைகள் இருத்தல் கூடாது. விதவைச் சொத்துரிமை (Widow’s Estate) என்ற குறைவு பட்ட சொத்துரிமை இந்துச் சட்டத்திலிருந்து எடுபடவேண்டும். அமைப்பு இன்னின்ன சட்டச் சீர்திருத்தம் வேண்டற்பாலது என்று தீர்மானிப்பதற்குத் தமிழருள் தக்க வழக்கறிஞர்களைத் தெரிந் தெடுத்த சிறு கழகம் ஒன்று அமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்துதற்குத் தமிழர் சமய சங்கம் என ஓர் அமைப்பு வேண்டும். அவ்வமைப்பில், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்னும் கொள்கையுடையவராய்த், திருவள்ளுவர் நூலிற் கூறப்படும் முழுமுதற் கடவுளின் உண்மை யையும் தன்மையையும் ஒப்புக்கொள்பவராய் உள்ள யாவரும் உறுப்பினராதற்குரியர். அவர் அருள் ஒழுக்கத்தையும் வடிவ வழிபாட்டையும் அறிவுக்குப் பொருந்திய சடங்குகளையும் இகழ்தல் கூடாது. உறுப்பினர் கடவுளன்பையும் நல்லொழுக்கத்தையும் போற்ற வேண்டும். எத்தகைய சடங்குகளையும் செய்ய வேண்டிய தில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் தமிழ் உயர்மொழி யென ஒப்புக்கொள்வராயின் அவர்கள் பற்றாளராகச் செல்லலாம். அவர்கள் உறுப்பினராகச் சேர இடமில்லை. தமிழர் சமய சங்கத்துக்கு ஒவ்வோர் ஊரிலும் கிளைச்சங்கம் நிறுவப்பட வேண்டும. தமிழருக்குள் சமய ஒற்றுமை ஏற்படுமாயின் அது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாகும். சமுதாயச் சீர்த்திருத்தத்துக்குச் சமயம் தடையாகா தென்ற கருத்து நமக்குள் பரவவேண்டும். தமிழர் சமய சங்கம் கிளைகளோடு செழித்துத் தழைத்துச் சிறப்புற் றோங்கும்படி தமிழ் நன்மக்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து இடை விடாது உலைவின்றி முயல வேண்டும். இவையெல்லாம் அரை நூற்றாண்டின் முன்னரே கா.சு. கருதிய கருத்துகள். இவற்றுள் மிகச்சில சட்ட உரிமை பெற்றிருக் கின்றன. ஆனால்பலபழைய நிலைமையிலேயே உள. சட்டத்திருத்த வழக்கறிஞர் குழு வொன்று அமைந்து தமிழர் நலத்தில் ஊன்றிற்றில்லை. தமிழர் சமய சங்கம் தோன்றிக் கிளையமைக்கவும் இல்லை; கிளர்ச்சி செய்யவும்இல்லை. பழைய குழறுபடைகள் அப்படியேநிலைத்திருப்பதற்கே சமயச் சார்பு மன்றங்கள் தோன்றுகின்றன; கடனாற்றுகின்றன. சமய நம்பிக்கை அல்லது இறையுண்மை யுடையார். மெய்ப் பொருள் காண்பது அறிவு என்பதை ஏற்பதில்லை. கண்ணை மூடி நம்புதலே கடப்பாடு என்பது அவர்கள் வைப்பு நிதி! வள்ளலார், கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடிப் போகவேண்டும் என்றாலும், அதனைக் காணவும், கண்மூடிக் கொள்பவர் கண்ணைத் திறப்பது என்றோ? அழுத்தமான சமய நம்பிக்கை, முழுதோன்றிய இறையன்பு, தெளிவான மெய்ப் பொருள் அறிவு இவற்றை ஒருங்கே கொண்ட கா.சு எத்துணைப் பகுத்தறிவுச் செல்வராகத் திகழ்கிறார்! எத்துணைச் சீர்திருத்தச் செம்மலாகத் திகழ்கிறார்! நிறைவுரை தமிழர் மதம் என்றும், பழந்தமிழ்க் கொள்கையே சைவம் என்றும், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூல்கள் எழுதிய மறைமலையடிகளாரும், தமிழ்க் கா.சு. ம் வள்ளுவர் வள்ளலார் வழித் தொண்டுகளுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள். சமயமும் பகுத்தறிவும் அல்லது சமயமும் சீர்திருத்தமும் இருகோடிகள் என்பதைப் பொய்ம்மைப் படுத்தி இரண்டற்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர்கள்! இவர்கள் கொண்ட சமயச் சால்பும் சீர்திருத்த நோக்கும் பகுத்தறிவுப் பார்வையும் தமிழினத்தை ஒன்று படுத்துதற்கு வாய்த்த ஒரு பெரும் பேறாம்! அப்பேறு வாய்க்கத் தமிழார்வலரும் இறையன்பரும் இணைந்து செயல்படும் நாளே நன்னாள்! அந்நாள் அணித்தே கிளர்வதாக! திரு.வி.க. தமிழ்த்தொண்டு பொழிவாளன் புகல்வு தென்னாடு பெற்ற பேறுகளுள் தலையாயது தென்றல். தெற்கிலிருந்து தவழும் மென்காற்றைத் தென்றல் என்று வழங்கினர். தென்றல் மெல்லியது; ஊற்றின்பத்திற்கு உறையுளாய் அமைந்தது. ஆதலால், தென்றல் என்பதற்கு இனிமை, மென்மை முதலிய பொருள்களும் வழங்கினர். தென்றல் இயலும் நாட்டில் பிறந்து திளைத்த குமரகுருபரர், தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் என்றார். மென்கால், இளங்கால், சிறுகால் என்பனவெல்லாம் தென்றலே! தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே என விளித்து, நின் வளத்தைத் தென்னாட்டுக்கு அல்லால் எந்நாட்டுக்கு அளித்தாய் என வியந்து வினாவினார் பாவேந்தர். தென்றல் இன்பத்தை நுகர்தற் கென்றே இறைவன் தென்முகம் நோக்கி ஆடுகின்றான் எனக் கரணியங் காட்டினார் திருவிளையாடற் பரஞ்சோதியார்! ஒரு தென்றலோ தமிழ்நாட்டுக்கு வாய்த்தது? இல்லை! இரண்டு தென்றல்கள் வாய்த்தன. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் ஒரு தென்றல் அல்லரோ! திருவாரூர் விருத்தாசல - கலியாண சுந்தரராம் பெருக்கத்தின் சுருக்கம், திரு.வி.க. இதனை, அறிஞருலகம் எப்படி வெள்ளி டையாக அறியுமோ, அப்படியே தமிழ்த் தென்றல் என்றாலும் அறியும்! சால்பு பண்பாடு மனிதம் - என்பவை கருத்துப் பொருள்கள். இவற்றைக் காட்சிப் பொருளாகக் காட்ட வேண்டுமா? திரு.வி.க.வின் ஓவியத்தைக் காட்டலாம்! சிற்பத்தை நாட்டலாம்! வள்ளுவமாமுகில் பொழிந்த வளமழை தமிழ் மண்ணுக்கு உண்டு என்றால், அவ்வளமழைப் பேறாக முகிழ்த்த வாழ்வுப் பேறும் தமிழ் மண்ணுக்கு உண்டு! அது திரு.வி.க. திரு.வி.க. வாழ்வே நூல்! வாழ்க்கைக் குறிப்புக்கள் அதனைக் காட்டும்! நூலே வாழ்வு என்பதை எது காட்டும்? திரு.வி.க. இயற்றிய நூல்களெல்லாம் காட்டும்! திரு. வி.க. எண்ணியது நூல்; எழுதியது நூல்; புகன்றது நூல்; பொழிந்தது நூல். இவை நூலார்க் கெல்லாம் பொதுமைப் பட்டனவே. ஆனால், திரு.வி.க. வுக்கோ இம் மண்ணும் நூல்! விண்ணும் நூல்! கதிரும் நூல்! மதியும் நூல்! நீரும் நூல்! நெருப்பும் நூல்! இயற்கைப் பூதமெல்லாம் நூல்! இயற்கைப் பூதங்கள் மட்டுமோ திரு.வி.கவுக்கு நூல்கள்? மலரும் நூல்! மகவும் நூல்! மங்கையும் நூல்! தொழிலாளர் நூல்! தொண்டர் நூல்! தொல்லை அரசியலும் நூல்: தூய்மைக் களங் களும் நூல்! துறவும் நூல்! இறையும் நூல்! எல்லாம் நூல்! எங்கும் நூல்! நூலே அவர்! அவரே நூல்! ஆகலின், திரு.வி.க. நூலர் என்க. இளமை விருந்தைப் படைத்தது எது? கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பாம் இயற்கை அழகில் முருகைக் கண்டது எது? பெண்ணின் பெருமையாய்ப் பிறங்கியது எது? முடியா? காதலா? Ó®âU¤jkh?- என முழங்கியது எது? மனித வாழ்க்கையும் காந்தியடிகளுமாய் மாண்புற்றது எது? தமிழ்த் தென்றலாய்த் தவழ்ந்ததும் தமிழ்ச் சேலையாய்த் தழைத்ததும் எது? எது? திருக்குறள் விரிவுரை தெளிந்து தெளிந்து தேர்ந்து தேர்ந்து உரைத்தது எது? பொருளும் அருளும், இந்தியாவும் விடுதலையும் இன்னவெல்லாம் இசைத்தது எது? கொலை வேட்டல் வெறுத்துக் கலைவேட்டலாய் வேட்டங் கொண்டது எது? சித்தமார்க்கமும், நாயன்மார் திறமும், இருமையில் ஒருமையும் கண்டது எது? ஆலத்தையும் அமுதாக்கும் அந்தண்மை அருளியது எது? வளர்ச்சியும் வாழ்வுமாய் வயங்கியது எது? உள்ளொளியாய், இருளில் ஒளியாய் ஒன்றியது எது? எது? முதுமை உளறல் அல்லது படுக்கைப் பிதற்றல் பகர்ந்தது எது? சித்தந்திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் செப்பியது எது? இவற்றைச் செய்தது வாழ்வு நூலா? நூல் வாழ்வா? இருமையும் ஒருமையாய் இலங்கிய ஒன்றை எப்படி இசைப்பது? எப்படி இசைத்தால் தான் என்ன? 1954-யான் பெறற்கரிய பேறு பெற்றயாண்டு! அதே யாண்டே நெஞ்சை நீராய் உருக்கிய யாண்டுமாம்! எதிரிடைப்பட்ட இரண்டையும் ஒன்றாய் ஊட்டியது ஒரு நூல். அது திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் என்னும் நூல்! ஒரு நூல், இருநிலை - எதிரிடை இருநிலைப்படுத்துமோ? ஏன் படுத்தாது? நோயும் மருந்தும் ஒரு பொருளாக இருப்பதை வள்ளுவம் கூறுமே! பெருக வைத்ததே உருகவும் வைத்ததைக் கம்பன் காட்டும் சூடையின் மணி காட்சிப்படலத்தில் காட்டுமே! வாழ்க்கைக் குறிப்புக்கள் ஒரு நூலா? தேனொடு கலந்த பாலா கருக்கொடு கூடிய வேலா. வாழ்க்கைக் குறிப்புக்கள் திரு. வி. க. வரலாறா? இல்லை, சால்பின் வரலாறா? இல்லை, தவம் செய்த தவத்தின் வரலாறா? வாழ்க்கைக் குறிப்புக்களைப் பயில வாய்த்த பிறப்பின் பேறேபேறு என்னும் பெருமிதம் ஒருபால்! அவ் வாழ்வுடையாரைப் பார்க்கவும் கொடுத்து வைக்காத பாழ்த்த பிறப்பு நேர்ந்ததே என உருகுதல் ஒருபால்! நெஞ்சின் நினைவாகி - நிறைவாகியவர்க்கு என்ன நினைவுக் குறி செய்யலாம்? உணர்வுக்குறியாக, உயிரின் உயிர்க்குப் பெயர் சூட்டலாம்! காட்சிக்குறியாக ஒளிப்படம் நாட்டலாம்! முன்னதே முதற்கண் முந்தி நின்றது; பின்னது பின்னே பிறங்கியது. என் இனிய உயிர்த்துணை வயிறு வாய்த்திருந்தபேறு ஆண் எனின், மண வழகன் (கலியாண சுந்தரன்) பெண் எனின் திலகவதியாய்ப் பிறந்தது. ஏனெனின், வயிறு வாய்த்திருந்தபோதே தீர்மானித்திருந்த பெயரேயன்றோ! திலகவதியார் திருநாவுக்கரையர் தம் அக்கையார் பெயரன்றோ! ஆம்! அத்திருத்தொண்டரைத் திருத்தொண்டுக் கெனவே ஆட்கொண்டு, அவர்க்கெனவே உயிர்தாங்கித் தம்மையும் திருத்தொண்டுக்கே ஆளாக்கிக் கொண்ட தவப்பெருமகளார் அத் திலகவதியாரே! அவர்தம் தொண்டு ஆட்படுத்திய பேற்றால், தம்மைத் தொண்டுக்கெனவே ஆட்படுத்திக்கொண்ட திரு.வி.க. தம் அருமை மகளார்க்கு அவர் பெயரைச் சூட்டினார். திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்களில் மின்னலிடும் அத் திலகவதிச் செல்வி கண்காட்டி முகங்காட்டி கைகாட்டி கால் காட்டி ஓராண்டு வளர்ந்து (வா.கு. 712) பெருநிலையுற்றது! அத் திலகவதிப் பெயர் சூட்டல்- திரு.வி.க. உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் அன்பால் சூட்டிய அப் பெயரைச் சூட்டல் அவர்க்குச் செய்யும் படையலாமன்றோ! உள்ளத்தை அள்ளிக் கொள்ளை கொண்ட அவ்வுள்ளொளிப் பெயர் வடிவம், உலவுமிடத் தெல்லாம் அவருணர்வும் உலாவி நிற்றல் உணர்வுடையார் உணரக் கூடியதேயன்றோ! இனிக் காட்சிக்குறி எப்படி எழுப்புவது? என் தமிழ்ச் செல்வத்தால் கையகல வீடொன்று எழுப்பப்படும் எனினும், அதன்கண் முதற்கண் காட்சி வழங்குபவர் திரு.வி.க.வாகவே இருத்தல் வேண்டும் என்பது என் உட்கிடை! 1960 இல் ஒரு சிற்றில் எழுந்தது. குடிபுகுவும் ஆயிற்று! ஆயினும் திரு. வி.க. என் உள்ளகத் துத்தான் உறைந்தாரேயன்றி, உறைவகத்து ஒளிப்படமாய்ப் புகுந்தாரல்லர். ஏன்? உள்ள நிறை ஓவியம் ஒன்று அகப்பட்டிலது! அகப்பட்டார் ஓரன்பர்; அரிய தொண்டர்; காந்தியார் காதலர்; நீ. இராசகோபாலர்! என் உட்கிடை உணர்ந்த அவர், தம் அன்புக்கினிய ஓவர் ஒருவரைக் கொண்டு திரு.வி.க. நிழற்படச் சிற்றோவம் ஒன்றைப் பேரோவமாக்கிப் பேரன்பால் வழங்கினார்! தமிழ்த் திரு.வி.க. தமிழால் கிளர்ந்த தமிழ் உறையுளில் புகுந்தார்! இந்நாள் தமிழ்க் கோயிலுள் வீற்றிருக்கின்றார்! தமிழ்க் கோயிலாவது, நூலகம்! பாவாணர் ஆராய்ச்சி நூலகம்! என் இளந்தைப் பருவத்திலேயே என்னை ஆட் கொண்ட தமிழ்ச் சான்றோர் - நூலாசிரியராய்க் கிளர்ந்து நெஞ்சாசிரியராய் நிலைத்தவர் - நால்வர். அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பேராசிரியர் சி. இலக்குவனார், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார். இவர்கள் எப்படி என்னுள் புகுந்தனர்? எப்படி என்னை ஆட்கொண்டனர்? எப்படி என்னை உய்யக் கொண்டனர்? எளியேன் வாழ்வு என்றும் தமிழ் வாழ்வாகத் தழைக்கும் வண்ணம் தமிழால் வயப்படுத்தி, ஊனும் உயிரும் உணர்வும் அதிலேயே ஒன்ற வைத்தவர்கள் இவர்கள். கட்டை விரலை வாங்காமல், காதலை மட்டும் வாங்கிக் கொண்ட காதல் தலைவர்கள் இவர்கள்! நால்வர்மேல் நலத்தகு காதல் ஒருவர்க்கு முகிழ்க்குமோ? நால்வர் நான்மணி மாலையை மேலோட்டமாகப் பார்த்தவரும் இவ் வெளிய வினாத் தொடார்! தொடார்! நால்வர் என்ன? நன்மொழிக் காதல், நாற்பது பேர்மேலும் ஒருவர்க்கு முகிழ்க்கும்! சங்கப் பலகை என்பது தமிழ்க் காதல் நெஞ்சமே! தக்கோர்க் கெல்லாம் தகுமிடம் தரும் தாமரைத் தண்மலர் தமிழ்க் காதல் நெஞ்சமே! தனித்தமிழ் உணர்வை வழங்கி ஆட்கொண்டவர் முதலாமவர்; தனித்தமிழ்ச் சொல்லாய்வுச் சுடர்ம்மையால் ஆட்கொண்டவர் இரண்டாமவர்; தனித்தமிழ்த் தொண்டுக்கே ஆட்பட்டு ஆட்கொண்டவர் மூன்றாமவர்; வாழ்வாங்கு வாழும் தமிழ் வாழ்வால் ஆட்கொண்டவர் நான்காமவர்; அகவை பதினேழில், கிருஷ்ணனாக .இருந்த என்னை இளங்குமரன் ஆக்கி வைத்தவர் முதலாமவர். அகவை பதினெட்டிலே, சுட்டும் சுடர்ச் சொல்லால் தொட்டுத் தழுவியவர் இரண்டாமவர். அதே அகவையிலேயே, கால்பட்ட இடமெல்லாம் கன்னித் தமிழ் கமழச் செய்தலால் கவர்ந்து கொண்டவர் மூன்றாமவர். அகவை இருபத்து நான்கில், நெஞ்சை உருக்கி நேயத்தால் உறவாகிக் கொண்டவர் நான்காமவர். பின்னைப் பின்னை எத்துணை எத்துணைப் பெருமக்கள் நெஞ்சில் தடம் பதித்துளர்! இடங்கொண்டுளர்! தமிழ் நெஞ்சம் சங்கப் பலகை என்பது எத்துணை மெய்ம்மை! தமிழ்க்காதல் எத்துணைப் பெருமையது! தமிழை விடுத்த காதலோ, காதலை விடுத்த தமிழோ - தமிழ் மண்ணில் உண்டோ? உண்டோ? தமிழே காதல்; காதலே தமிழ்! என்பதன்றோ தமிழ்த் தேர்ச்சியர் நுவற்சி. இது தமிழ் கூறிற்று என்பது இறையனார் களவியலுரை. தமிழறிவுறுத்தற்குப் பாடியது என்பது குறிஞ்சிப் பாட்டு. இவற்றில் தமிழ் எது? காதல் எது? இரண்டையும் பிரித்துத் தனித்தனியே காண வொண்ணுமோ? தமிழ்க் காதலைக் காதற்றமிழ் எனலாம். தமிழ் மாணிக்கம் வழங்கிய தமிழ்க் காதல் காண்க. தமிழ்க் காதலர்மேல் அத்தமிழ்க் காதலுக்காகவே காதல் கொண்ட ஒருவன், காதல் மொழி கூறின் அதனை ஆழத்துள் ஆழமாய் ஆய்ந்து பார்த்தல் உண்டோ? காதல் எதுவும் நினையும்! எதுவும் சொல்லும்! எதுவும் எழுதும்! அதற்கு வரையென்ன! துறையென்ன! முறையென்ன! அகக்காதல், களவு, அக் களவு, களவாக ஒழிதலைக் கருதாதது தமிழ்மண்! கற்பாக விளங்கவேண்டும் என்பதே தமிழ் மண்ணின் காதல். அதனால், களவின் வழித்தே கற்பென இலக்கணம் கண்டது. இலக்கியம் படைத்தது. வாழ்வாங்கு வாழ நூல் செய்த வள்ளுவர் அத் தமிழ் வழக்கை விடுவரோ? வரிந்து கொண்டார். என் அகக் காதலை - உள்ளகக் காதலை - திரு.வி.க. காதலைக் கற்பாக்கிக் காட்ட விழைந்தது கோயிற்பட்டி, திருவள்ளுவர் மன்றம்! மன்றம் இன்றேல் மன்றல் உண்டோ? மன்னல்தான் உண்டோ? என்னுள் மன்னிய காதலர் திரு.வி.க. மன்றுள் மன்னத் தலைப்பட்டார்! நூல்கண்ட - நூல் தந்த நூலரை, மன்றில் எப்படி ஏற்றுவது? நூலரை நூலாய் ஏற்றுவதே நூன்முறை! பொழிவெலாம் நூலாக்கிய பொழிஞரைப் பொழியும் பொழிவும் நூலாதலே முறை! முறை கண்டேன்! ஆம் நூல் கண்டேன்! நூல் என்பதும் முறை என்பதும் நூன் முறை என்பதும் ஒரு பொருளவே. நூலாக்கத்தில் புகுந்தேன்.திரு..É.f. தமிழ்த் தொண்டு எனப் பெயர் சூட்டினேன். அப் பெயராட்சியும் மன்றம் வழங்கியதே! அரசியல் உலகில் தமிழ்ச் சிந்தனையாளர்கள் என்னும் பொதுத் தலைப்பில்,தமிழ்த்தென்றல்திரு.வி.க.என்னு«சிறப்பு¤தலைப்பு. ஆகலின் திரு. வி. க. தமிழ்த் தொண்டு என்பது மன்றந்தந்த தலைப்பேயாம்! மன்றம் என்பது எது? மன்றத்தாரே மன்றம்! மன்றத்தார் இலரேல்மன்றமெdஒன்றுண்டோ? மன்றத்தார் ஒருவர் இருவரா? பலப்பலர்! பண்பட்ட பலப்பலர்! தழும்பேறிய செவியர்; தழும் பேறிய நாவர்; முருகிய நெஞ்சர்; தூக்கி மதிக்கும் துணிவும் துலக்கமும் மிக்கவர்! தொல்காப்பிய இலக்கணமா, தனித்தமிழ்ச் சொல்லாய்வா நான்குமணிப்பொழுதும் நயந்து கேட்டு நடுமை காணும் நீர்மையர்! எளியேற்குக் கேளும் கிளையுமாய்க் கெழுமியவர். ïம்மன்றாடியருள் தலைமன்றாடியார் பேராசிரியர் சங்கரவள்ளி நாயகர். அt® மணி மன்றாடியார்; பன்மணி மன்றாடியார்! அவரோர் மன்றம்! மன்றம் vதைத்jரும்?மன்றத்தையே தரும். வள்ளிநாயக மன்றம் தந்த மன்றங்கள் பல. அவற்றுள் இரண்டு இராசை (இராச பாளையம்) மன்றமும், கோயிற்பட்டி மன்றமும். இவை என்னையும் தம்முறுப்பாக்கி உரிமை செய்வன. நாயகர் செய்து வரும் தனித் தமிழ்த்தொண்டும், வள்ளுவத் தொண்டும் தலைமேல் கொள்ளத்தக்கன, மன்றம் நடாத்துதலில் திறவோராய அவர் பலப்பல திறவோர்களைப் படைத்துப் பயனுறுத்தும் பான்மை பாராட்டுக்குரியது! செயலர் புலவர் படிக்கராமர், பேராசிரியர் முத்துராமலிங்கர், புரவலர்கள் இராம கிருட்டிணர், சங்கரலிங்கர் - இப்படி எத்துணைப் பேர்களை எண்ணுவது. அவர்கள் எண்ணமும் எழுச்சியும் என்னுள்ததும்பு கின்றன! அவர்கள் வாழ்க! வள்ளுவர் மன்றம் பொழிவுக் கடன் மேற்கொண்ட தென்றால், அச்சீட்டுக் கடன் ஏற்றுக்கொண்டது எது? எது என்று சொல்லவும் வேண்டுமோ? கழகம்! கழகம்! கழகமே! நூற் பதிப்புக்கெனவே அறுபானைந்து ஆண்டுகளின் முன்னே தோன்றி ஏறத்தாழ ஈராயிரம் சுவடிகளைத் தமிழுலகுக்குத் தந்துள்ள கழகம், திருக்குறளின் பல்வேறு வெளியீட்டின் சிறப்பாலே தீந்தமிழ் உலகாட்சி கொண்டுள்ள கழகம், திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக் களைத் தமிழ் வைப்பாக்கி வழங்கி வரும் கழகம் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்! அதன் பெருமை தரு ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக் குமாரசாமி அவர்கள். நூற்காப்பிலே - நூற்றொகுப்பிலே -நூலகத் துறையிலே இணையற்ற பெருமகனார் அவர். அவர் தம் தகவு நூற்பதிப் பாண்மைக் கழக ஆட்சிக்கு அமைச்சராக ஆக்கிற்று. தமிழ்த் தென்றலை உலாவவிடும் அவர்க்குத் தமிழ்த்தென்றலாம் திரு.வி.க.வின் பேரன்பில் திளைத்த மு.வ. வின் பேரன்பில் திளைத்த மணவராம் அவர்க்கு - இஃது இயற்கையே எனினும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எளியேன் பொழிவுகள் எல்லாம் எழுத்துகள்! எழுத்துகள் எல்லாம் பொழிவுகள்! இவை, இரண்டு மூன்றாண்டுகளாக நடைமுறை நிலை! இவ்வகையில் தனி நூலுருப் பெறுவதில் திரு.வி.க. தமிழ்த் தொண்டு நான்காவது. தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் மறைமலையடிகளார் தனித்தமிழ்க் கொள்கை (இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அறக்கட்டளைப் பொழிவு வெளியீடுகள்) தமிழ்க் காசு வின் தமிழர் சமயம் (இது குழித்தலை தமிழ்க் காசு இலக்கியக் குழு வெளியீடு) என்பவை மற்றவை. தன்னடித் தொண்டுக்கே என்னை ஆளாக்கிக் கொண்ட அன்னை அடியை முடிக்காக்கி வணங்கி வாழ்த்துகிறேன். பாவாணர் ஆராய்ச்சி நூலகம், தமிழ்த்தொண்டன். தமிழ்ச் செல்வம், திருநகர், இரா.இளங்குமரனார் மதுரை - 625006. 25.9.86 பொதுச்சொத்து இத்துயர்கொள் தமிழ்நாட்டில் எனைமகிழச் செய்தனவாய் இருப்ப வற்றுள், முத்தமிழ்வாய்; உழைப்பாளிக் குழைக்குந்தோள்; அன்புள்ளம்; தமிழெ ழுத்தை, வித்தியுயிர் விளைக்கும்விரல்; தமிழருக்கோர் தீமையெனில் விரைந்தோ டுங்கால்; இத்தனைகொள், கலியாண சுந்தரனார் என்றபொதுச் சொத்தும் ஒன்றே! - பாவேந்தர். 1. எழுவாய் பிறவிக்கு நோக்கம் உண்டு; அந்நோக்கம் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் ஆம்! துன்பநீக்கம் வேண்டும் என்றும், இன்ப ஆக்கம் வேண்டும் என்றும் எண்ணா உயிரி ஒன்று உண்டோ? இல்லையாம்! துன்பநீக்கம் இன்ப ஆக்கம் என்பவை, தன்னளவில் நிற்பதில் உலகுக்குப் பயன் யாது? தன்னளவு நோக்கம் என்பது தன்னலத்து நோக்காகவே அமையும். தன்னளவில் அரும்பும் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும், படிப்படியே வளர்ந்து வளர்ந்து உலகாக விரிவதிலேயே பிறவிநோக்கு நிறைவேறுகின்றதாம். அப் பிறவி நோக்கின் கட்டளைத் தொடரே வாழ்வாங்குவாழ்தல் என்பதாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். என்பது பொய்யாமொழி. ‘thœth§F thH¥ gƉW« fUÉbah‹W©nlh? எனின் ஆம் கருவியுண்டு என்பதே விடையாம். அக்கருவி யாது? எனின், அக்கருவி நூற்கருவி என்க. அந்நூற் கருவியுள்ளும் தலையாயது, வாழ்வுநூற்கருவி என்க. அவ்வாழ்வு நூற்கருவியுள்ளும் தலையாயது, பொது நலத்தொண்டுக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட சான்றோர்தம் வாழ்வு நூற்கருவி என்க. அந் நூற்கருவியுள்ளும் தலைநிற்பது, அச்சான்றோரா லேயே எழுதப்பட்ட வாழ்வியல் நூற்கருவி என்க! அத்தகு கருவிகளுள் ஒன்று - தலையாய ஒன்று - தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரரால் எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் நூற்கருவியாம்! வடக்கே வாய்மை ஆய்வு (சத்தியசோதனை) அரும்பியது! தெற்கே வாழ்க்கைக்குறிப்பு முகிழ்த்தது! வாழ்க்கைக் குறிப்பின்வழியே, திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு, அவர் தம் வரலாற்றொடும் - வாழ்வொடும் - பின்னிப்பிணைந்து விளங்கும் காட்சி வெளிப்படுகின்றது! மேலும் அவர் அருளிய நூல்கள், கட்டுரைகள் எல்லாமும் பளிச்சிட்டு அவர்தம் நூல்களை ஆய்ந்தோர் நூல்களும் உதவுகின்றன! எனினும், ஆய்வுகள் அனைத்தும் ஒரு முழு மர ஆய்வை ஒன்றிரண்டாக அகப்பட்ட இலைகளைக் கொண்டு ஆய்வதாகவே அமைகின்றன! ஆம்! அகன்று விரிந்த கடலை ஒருபார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்? ஓங்கி உயர்ந்த வானை ஒரு பார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்? பரந்து விளங்கும் நிலப்பரப்பனைத்தையும், நேரே பார்க்கும் ஒரு பார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்? நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரள வின்றே என்னும் குறுந்தொகையைத்தானே (3) நெடுந்தொகையாக நீட்டித் திரு.வி.கவின் தமிழ்த்தொண்டைக் காண வேண்டியுள்ளது. 2. தொண்டு தொண்டு என்பதன் பொருளென்ன? விளக்கமென்ன? தொண்டுக்கே தம்மை ஆக்கிய தொண்டர் திரு.வி.க. உரைக்கிறார். எங்கே? தொண்டர் மாநாட்டிலே 1 தொண்டு - பொதுவியல் உலகில் பணிகள் பலதிறப்பட்டுக் கிடக்கின்றன. அவை யாவும் தொண்டாகுமோ? ஆகா. பலதிறப்பட்டுக் கிடக்கும் பணிகளை, இரு தொகுப்பாகக் கூறிடலாம். ஒரு தொகுப்பு, தன்னலங்கருதி ஆற்றப்படும் பணிகள், இன்னொரு தொகுப்பு, பிறர் நலங்கருதி ஆற்றப்டும் பணிகள். இவ்விரண்டனுள் பிறர்நலங்கருதி ஆற்றப்படும் பணியையே தொண்டெனக் கோடல் வேண்டும். என்னை? தன்னலப்பணியில் விருப்புடைய ஒருவன், என்றும் பிறர் நலம் பேணாது தனிவாழ்வொன்றே நாடிப் பிறரை அடிமைப் படுத்தித் தான் தலைமைப் பேறெய்தவே முயல்வன். அவன் உள்ளத்தை அவா என்னும் பேய் அலைத்துக் கொண்டேயிருக்கும். அப் பேயால் அலைக்கப்படுகிறவன், எக்கொடுமையும் செய்ய ஒருப்படுவன், அவன் நெஞ்சில் பிறர்பொருள் அவாவும், அதையொட்டி வெகுளியும், அழுக்காறும் பிறவும் உலாவிக் கொண்டேயிருக்கும். இத் தன்னலமுடையான் ஆற்றும் பணியைத் தொண்டு என்று எவ்வாறு கூறுவது? பிறர் நலங்கருதி உழைப்பவன்பால் தன்னல அவா என்னும் பேய்க்கு என்ன வேலையுண்டு? அவன் உள்ளத்தில் என்றும் பிறர் நலமே ஊறிக்கொண்டிருக்கும். அவ்வன்பனை அவா என் செய்யும்? வெகுளி என் செய்யும்? அழுக்காறு என் செய்யும்? இவையற்ற ஆண்டவன், அவன் உள்ளத்தில் கோயில் கொள்வன். ஆண்டவன் எவ்வாறு கைம்மாறு கருதாது தன் கடனாற்றுகிறானோ, அவ்வாறே தன்னலங் கருதாத பெரியோனும் தன் கடனாற்றுகிறான். இவன் செய்யும் பணியையும் மற்றவன் செய்யும் பணியையும் பொதுப் படத் தொண்டென்று கொள்வதோ? ஆகவே பிறர் நலப்பணியே தொண்டென்று கோடல் வேண்டும். தன்னலங்கருதாத் தொண்டே யாண்டும் பரவினால் உலகில் கொடுமை ஏது? நடுக்கம் ஏது? கவலை ஏது? உலகில் வாழும் ஒவ்வொருவரும் நாம் பிறர்க்குத் தொண்டு செய்யவே படைக்கப் பட்டோம் என்று நினைத்துத் தங்கடனாற்றினால், உலகம் தெய்வலோகமாக வன்றோ மாறும்? உலகில் தோன்றிய சமயாசாரியர் பலரும் இத்தொண்டையே அறிவுறுத்திச் சென்றனர். எச்சமயத்தை எடுத்து ஆய்ந்தாலும் அதன்கண் தன்னல மறுப்பும், பிறர் நலச்சேவையும் பேசப்படுதல் காணலாம். சமயங்கள் பலவாகக் காணப்பட்டாலும் அவற்றின் ஊடே தொண்டெனும் ஒருபெருஞ் சமரசம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலமதங்கள் என்று பன்மையாகக் கூறுதற்குப் பதிலாகத் தொண்டு மதமென்று அவற்றை ஒருமைப்படுத்திக் கூறலாம். அத்தொண்டை மனிதன் மறந்தநாள்தொட்டு, முனைப்புப் பெருக்கெடுத்து உலகை அரித்து வருகிறது. தொண்டு - சிறப்பியல் இக்குறிப்புகள் தொண்டின் பொதுவியல்! சிறப்பியல் என்ன? எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொதுவென்னும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிறவுயிரும் என்னும் உணர்வுபொங்கித் தொண்டு செய்யும் அன்புச்செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வியுடைய தென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன2. திரு.வி.கவுக்கு உணர்த்திய, தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை வளர்ந்ததோ? நிறைந்ததோ? நிலைத்ததோ? பலதிறத் தொல்லைகளிடை என் வாழ்க்கை வளர்ந்தது. ஆனால் அது பொருட்பெருக்கில் புரளாததாயிற்று. தொண்டின் பெருக்கில் புரள்வதாயிற்று. வாழ்க்கையின் அடைவு பொருட் பெருக்காயின் என்னுடையது தோல்வி எய்தியதாகும்; தொண்டாயின் அது வெற்றி எய்தியதாகும். தொண்டின் சேய் எது? அந்தண்மை. தொண்டு, அந்தண்மை ஊற்றைத் திறந்தது. அந்தண்மை அருவியாய் ஓடுகிறது. அது வெள்ளமாதல் வேண்டும். எனது வாழ்க்கை ஒரோவழி அந்தணச் செல்வத்தைப் பெற்றது. அவ்வந்தணச் செல்வம் முழுநிலை எய்தும் முயற்சியில் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியும் ஈடுபடுமாறு ஆண்டவன் அருள் சரப்பானாக. இப்பிறவியில் எனது வாழ்க்கை அந்தணச் செல்வம் பெறுதற்குத் துணை நின்றகல்வி கேள்வி கட்கும், நல்லிணக் கத்துக்கும் இல்வாழ்க்கைக்கும், இயக்கங்கட்கும், பிறவற்றிற்கும் எனது வாழ்த்து உரியதாக.3 யான் பிறப்பை வெறுக்கின்றேனில்லை; அதை விரும்பு கிறேன். தொண்டுக்குப் பிறவி பயன்படல் வேண்டும் என்பது எனது வேட்கை. எனது வேட்கை ஒருவாறு நிறைவேறியே வருகின்றது. இளமையில் என் தொண்டு காமியத்தில் (பற்றில்) சென்றது. பின்னே அது நிஷ்காமியமாக (பற்றின்மையாக) மாறியது, அம்மாற்றம் எப்படியோ உற்றது நல்ல நூல்களும் பெரியோர் சேர்க்கையும் இல்வாழ்க்கையும் இயற்கை இறையின் அருளும் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறுவேன். தொண்டுக்குரிய பிறப்பை யான் தாங்க அருள்புரிந்த என் தாய் தந்தையர்க்கு யான் என்ன கைம்மாறு செலுத்த வல்லேன்? அவர்களை மனமொழி மெய்களால் வணங்குகிறேன். இவ்வணக்கம் போதுமா? வேறு காண்கிலேன்! என் செய்வேன்! பெற்றோர் அன்புக்கு ஈடுசெய்யும் பொருள் எவ்வுலகில் உண்டு? இவ்வாழ்க்கை வாழ்க; வெல்க! ïšthœ¡ifia thœ¤j thœ¤j v‹ kd« FË®»wJ!4 தொண்டின் விளக்கம் தம் வாழ்க்கைக் குறிப்பைத் தொண்டிலே தொடங்குகிறார்! அத் தொண்டை முன்னிறுத்தியே தொடர்கிறார்! அத் தொண்டி லேயே நிறைவுறுத்தவும் செய்கிறார். இதன் விளக்கம் என்னை? தொண்டின் விளக்கமே வாழ்க்கைக்குறிப்பு என்பதாம்! தொண்டின் பயன்தானும், தம்மைச்சாரத், தாம் ஏற்பரோ? காணார் கேளார் கால்முடமானோர், பேணாமாந்தர் பிணி நோயுற்றோர் யாவரும் வருக; ஆபுத்திரன்கை அமுதசுரபி இஃது என்று புகலும், புகழும் வேண்டாப் புகழமைந்த மணிமேகலை யார் அனைய தொண்டர், தொண்டின் பயனை ஏற்பரோ? முனைப்பின் மூலவேரையும் முழுதறுத்தவர்க்குப் புகழ்ப்பயன் ஒரு பயனோ? காண்பார் காண்பாராக! கருதுவார் கருதுவாராக. 1. திருப்பத்தூர் தாலுக்கா 1-வது தொண்டர்மகாநாடு, 1924 ஆம் ஆண்டு சனவரி மாதம், 19, 20 ஆம் நாள்கள். 2. வா. கு (வாழ்க்கைக் குறிப்புகள்) பக். 6. 3. வா. கு. 986.. 4. அ.வா.கு.19. 3. தமிழ்க் கல்வி தமிழ்த் தொண்டில் ஒருவர் தலைப்பட வேண்டுமாயின் முதற்கண் அவர்க்குத் தமிழறிவு வேண்டும்: தமிழ்ப்பற்றுமை வேண்டும். தமிழை வளர்க்கும் காதல் வேண்டும்; காத்தோம்பும் கடப்பாடு உருத்தெழுந்து ஒலி செய்ய வேண்டும். இல்லாக்கால் தொண்டு வாய்க்குமோ? மழலைக்கல்வி தமிழ்க்கல்வி திரு.வி.கவுக்கு எங்கே தொடங்கியது? எப்படித் தொடங்கியது? மழலையர் பள்ளி என்னும் பெயரால் தமிழ் வாழ்வையும் தமிழர் வாழ்வையும் கெடுத்துவரும் புற்றீசற் பள்ளிகள் இக்கால் எங்கெங்கும் புகுந்துள்ளனவே? கூத்தாடுகின்றனவே! திரு.வி.க. பயின்ற மழலையர்பள்ளி எது? ஆசிரியர் எவர்? அவர் பயின்ற கல்வி என்ன? அவரே கூறுகிறார். கடையின் தாழ்வாரம் பள்ளியாயிற்று. தந்தையாரே ஆசிரியரானார். பள்ளிக்கூடத்தின் முன்னே காலையிலும் மாலையிலும் மர நிழல் வாசஞ்செய்யும். தமிழ் எழுத்துக்களை மணலில் எழுதி எழுதித் தந்தையார் தமையனார்க்குப் போதிப்பார். அதை யான் விளையாட்டாகப் பார்ப்பேன். சிலசமயம், யானும் அ-ஆ என்று சொல்வேன் எழுத்துப் பயிற்சிக்குப் பின்னே அண்ணார்க்கு அரிச்சுவடி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, வாக்குண்டாம் முதலி யனவும் நெல்லிலக்கம், பொன்னிலக்கம், எண்சுவடி முதலியனவும் கற்பிக்கப்பட்டன. நாடோறும் மாலைவேளையில் பெரியசாமியால் பாடங்கள் ஒப்புவிக்கப்படும், சின்னசாமி சிலசமயம் பெரியசாமி யுடன் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பன்; சில சமயம் இடையில் ஓடி விடுவன்; சில சமயம் அவ்விடஞ் செல்லாமலே இருந்துவிடுவன். அவனைக் கேட்பாரில்லை தமையனார் பாடங்களை ஒப்பிக்குங்கால், அவைகள் பெரிதும் என் சிந்தையில் படியும். படித்ததைப்பகலில் சொல்லிச் சொல்லித் திரிவேன். உரத்த குரலில் சொல்லிக் கொண்டே ஓடுவேன்; ஆடுவேன். சிலநாட்கடந்து எனக்கும் முறையான போதனை தொடங்கப்பட்டது. பாடங்கள் எனக்கு எளியனவாகவே தோன்றின. பெரிதும் பழம் பாடங்களாகவே தோன்றின; பல முன்னரே கேட்டவையல்லவோ?1 பள்ளிக்கல்வி இராயப்பேட்டை, முத்துமுதலிவீதி ஆரியன்பிரைமரி பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்தார் திரு.வி.க. மூன்றாம் வகுப்பையும் நான்காம் வகுப்பையும் இணைத்து ஒரு கட்டுரைப் போட்டி! தென்னை, வாழை, பசு, நாய் ஆகிய நான்கனுள் ஒன்றைப்பற்றி எழுதலாம். வாழையை எடுத்துக்கொண்டு வாங்கினார்! என்ன வாங்கினார்? சோதனையில் என் கட்டுரை முதன்மையாக நின்றது. பரிசில் எனக்கே கிடைத்தது!2 தமிழ் தன் தனிப் பெருந்தொண்டர்க்கு வைத்த முதற்றேர்வும் முதன்மைத் தேர்வும் ஈதே! வெசிலி பள்ளியில் நான்காம் வகுப்புப் பயின்றார் திரு.வி.க. அப்பொழுது பற்றியந் தப்பலால் இடக்கால் முடங்கி நடக்க இயலாதவர் ஆனார். உடல் என்புக் கூடாயிற்று. நோய் ஓராண்டும் ஓய்வு ஓராண்டும் குடும்பத் தொல்லைகள் ஈராண்டும் ஆக நாலாண்டுகள் விழுங்கப் பட்டன! நான்காண்டுகள் கழித்து மீண்டும் நான்காம் வகுப்பிலே பயில நேர்ந்தது.3 இலக்கணம் நான்காம் வகுப்பிலேயே கற்றதொரு நூல்; அது போப் ஐயர் இலக்கணம். ஆசிரியர் (தேவதாசர்) அன்பு, அவர் வீட்டை என்வீடாக்கிற்று. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன்; சந்தேகங்கேட்டுத் தெளிவேன். ஆசிரியர் மனைவியாரால் போப் ஐயர் இலக்கணம் மிகத் தெளிவாகப் போதிக்கப்படும். தமிழ் இலக்கணத்தில் முதல் முதல் எனக்குச் சுவையூட்டியவர் அவ் வம்மையாரே யாவர்4 தமிழ்ச் செல்வம் இலக்கணச் சுவை கண்ட திரு.வி.க. ஆறாம்படிவம் படிக்கும் போது ஒரு தமிழ்ச்செல்வத்தைக் காண்கிறார் : கதிரைவேல் எங்கள் பள்ளியில் முதல் முதல் அளித்த காட்சி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தமிழ்ச்செல்வம் நம் பள்ளிக்கு வந்ததே என்று யான் ஆனந்தமெய்தினேன். யானும், சிவசங்கரன் உள்ளிட்ட மாணாக்கர் சிலரும் பிள்ளையினிடம் நெருங்கிப் பழகினோம். அவரொடு பழகுவதை உயிரனைய ஆசிரியன்மார் சிலர் கதிரைவேல் மதவாதப்பேய். அப் பேய் உன்னையும் பிடித்துக் கொள்ளும். படிப்புப்பாழாகும். நீ மாணாக்கன் என்று எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். அவ்வெச்சரிக்கை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலாயிற்று. அதையான் பொருட்படுத்துவதே இல்லை.5 அருட்பா மருட்பாப்போர் நடந்த காலம் அது. வில்வபதி என்பாரைக் கதிரைவேலர் கொத்தைவால் சாவடியண்டை தாக்கிப் புடைத்ததாக வழக்கு. அதே நாள், கதிரைவேலர் பள்ளிக்கு வந்து தமிழ் கற்பித்த நாள்! அதற்கு மாணவர் ஒருவர் சான்று வேண்டும். இல்லையேல் குற்றம் உறுதியாகிவிடும். ஆனால் சான்று கூறத் திட்டப்படுத்தப்பட்ட நாள், ஆறாம் படிவப்பொறுக்குத் தேர்வின் தலைநாள்! சோதனை என்செய்வேன் என்சோதனை பெரிதாயிற்று சான்றுக்குச் செல்வதா? பரீட்சைக்குப் போவதா? இரண்டும் மாறிமாறி என்னை வாட்டின. ஒரு பக்கம் கதிரைவேல் இன்னொரு பக்கம் வாழ்வு; கதிரைவேல் அன்பே விஞ்சியது6 இரண்டு அரைநாள், பரீட்சையில் அமர்ந்து எழுதும் பேற்றை இழந்தேன். சோதனையின் முடிவைச் சொல்லவும்வேண்டுமோ?.7 1898 ஆம் ஆண்டிலிருந்து 1904 ஆம் ஆண்டு வரை ஒரே ஒட்டம் ஓடிற்று. திடீரென மாடு படுத்தது..8 மீள்பார்வை : மீள்பார்வை பார்க்கிறார் திரு. வி. க. பள்ளிப் படிப்பில் வேட்கை எனக்கு vங்கிருந்தெழுந்தது?தொடக்கத்தில் அது நோயால் நொறுக்கப்படுவானேன்? மீண்டும் அது முகிழ்த்து மலர்ந்து கனியாது படுவானேன்? எங்கேயோ பிறந்த கதிரைவேற்பிள்ளைக்கும் எனக்கும் உறவு ஏற்படுவானேன்? அவரை எனது பள்ளிக்கூடத்தில் சேர்த்ததெது? வழக்கில் என் சான்றின் அவசியத்தை உண்டுபண்ணியது எது? இரண்டு நாளும் வண்டிகளால் தொல்லை விளைத்தது எது? எல்லா வற்றிற்கும் காரணம் என் அறியாமையா? ஊழா? கடவுள் அருளா? சிலவேளை அறியாமை என்று தோன்றும்; சில சமயம் ஊழ் என்று தோன்றும்; சிலபோது கடவுள் அருள் என்று தோன்றும். பள்ளிப் படிப்பின் வீழ்ச்சியால் நல்லது விளைந்ததா? கெட்டது விளைந்ததா? என்ன விடை கூறுவது? இங்கே ஆராய்ச்சி வேண்டும். ஆராய்ச்சிக்குரிய பிற வாழ்க்கைக் கூறுகளை வெளி யிடுகிறேன்.9 பள்ளிப் படிப்பு வெற்றி பெற்றிருப்பின், தொண்டுச் செல்வம், ஒரு வேளை தலைப்பட்டிருந்தாலும் இருக்கலாம்! பொருட் செல்வம் மட்டும் பெற்று தொண்டுச் செல்வம் அறவே துலங்காமல் போனாலும் பேயிருக்கலாம். ஆனால் பள்ளிப்படிப்பின் வீழ்ச்சி, தொண்டுச் செல்வத்தையே வாரிவாரி வழங்கிற்று என்பது ஐயுறவின்றி மெய்ப்பிக்கப்பட்டமை, பிறவாழ்க்கைக் கூறுகளால் கையிடைக் கனியாய்த் துலங்குகின்றதாம்! கல்வி என்பது பள்ளியின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதோ? கற்றவரெல்லாரும் செந்தண்மைத் தொண்டுக்கு மீளா அடிமையாய் ஆளாதல் அந்நான்கு சுவர்களுக்குள் மட்டும் பயிற்றப்பட்டுவிடுவதோ? அப்படிக் கூடுவதாயின், எத்தனை எத்தனை திரு.வி.க. வை இந்தத் தமிழ் மண் பெற்றிருக்க வேண்டும்? எத்துணை எத்துணை அந்தண்மைச் செல்வங்களை வாரி வாரி வழங்கியிருக்க வேண்டும்? 1. வா. கு. 42-43 2. வா. கு. 46 3. வா. கு. 50-51. 4. வா. கு. 52. 5. வா. கு. 58 6. வா. கு. 59 7. வா. கு. 60 8. வா. கு. 51 9. வா. கு. 62. 4. கல்வியின் உறைப்பு பள்ளிப்படிப்பு வெம்பி வீழ்ந்தது. அதனால் யான் கல்வி பயிலத் தொடங்கினேன். முதன்முதல் எனக்குக் கல்விக்கண் திறந்தவர் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளை1 என்று கல்வியைத் தொடங்குகிறார் திரு.வி.க. கதிரைவேலர். கதிரைவேலர் தமிழ்த்தொண்டு சென்னையில் எங்கெங்கு நடக்குமோ அங்கெங்கெல்லாம் சென்று தமிழ் விருந்துண்டார் திரு.வி.க. அவர் சொன்மாரி வெள்ளத்தில் இலக்கியம் இலக்கணம் தருக்கம் மெய்ப்பொருள் எல்லாம் எல்லாம் தேங்கும். அவர் பொழிவு பொழிவாக மட்டும் அமையாது? கலைக்கழகமாகவே அமையும். கதிரைவேலர் வேனில் விடுமுறையில் சிந்தாதிரிப் பேட்டையில் தங்கினார். திரு.வி.கவுக்கு யாப்பிலக்கணம் கற்பித்தார். அவ்விலக்கணம் மட்டுமே விடுமுறையை விழுங்கியது. கதிரைவேலர் நீலமலை bசன்றார்;Mங்கேயேbவஞ்சுரத்துப்gட்டுïறையடிvய்தினார்.J‹g¡ கடலில் வீழ்ந்து அதனைக் கடந்தேறப் பன்னெடு நாட்களாயின திரு. வி.க. வுக்கு! சுவாமிநாத பண்டிதர் கதிரைவேலரிடம் கற்றவர் பிறரிடம் பாடம் கேட்பதில்லை என்ற உறுதியில் பலர் இருந்தனர். திரு. வி. க. மனம் அவர் கூட்டில் சேர ஒருப்படவில்லை. யாழ்ப்பாணம் சுவாமிநாதபண்டிதர் சென்னையில் தங்கியிருந்தார். அவரிடம் சின்னாள் பழகியபின் அவர் நீர் என் நண்பராக இரும்; மாணாக்கராக இராதேயும் என்று வரம்பிட்டு நின்றார்.2 சோமசுந்தரநாயகர் இயற்றிய நூல்களைத் தனியே பயின்றார். சபாபதி நாவலர் நூல்களையும் பயின்றார். அப்பயிற்சி முறையாகத் தமிழ் பயில வேண்டும் என்னும் காதலை அவர்க்கு எழுப்பின.3 சூரியனார் கோயில் துறவியார் ஒருவர் சென்னையில் இருந்தார். திரு.வி.க. அவரிடம் தமிழ் பயிலச் சென்றார். அவர், உமக்குத் தீக்கையாகியிருக்கிறதா? என்றார்;. இல்லை என்றார் திரு. வி.க. ஆயின் மடத்தார் கட்டளை வேண்டும் என்றார் துறவியார்! அடிகட்குத் தொல்லைவேண்டா என்று விடைபெற்றுக்கொண்டார் திரு. வி. க.4 தணிகாசலர் விடைபெற்றுக்கொண்டது தடையாயிற்றோ? உடையாய் என்னைக் கண்டுகொள்ளேஎன்பது போல் மயிலை - தணிகா சலராக முன்னின்றது. சூரியனார் கோயில்சாமியார் எற்றுக்கு? இந்தப்பாவியிடம் வரலாகாதா? என அருளொழுக அழைத்தது! m›tiH¥ò vŒ¥ãÅš it¥ghƉW!5 தணிகாசலர் திருவருட்பயன் கற்பித்தார்; சிவப்பிரகாசம் கற்பித்தார். அவரிடம் சிவப்பிரகாசம் ஒன்று பாடங்கேட்டால் போதும்; மற்றைப் பதின்மூன்றும் தாமே விளங்கிவிடும் என்கிறார் திரு. வி. க. 6 கலியாணசுந்தரத்திற்கு இலக்கிய இலக்கணம் போதிக்கலாம். சாத்திரம் போதித்தலாகாது; அவன் பின்னே சாத்திரத்தை நாசஞ் செய்வான்; கண்ட சாதியார்க்குப் போதிப்பான். அவன் சீர்திருத்த உள்ளமுடையவன். அது வயதில் தாண்டவம் புரியும் என மயிலையார்க்குக் கோள் உரைக்கப்பட்டதாம்! அக் கோளர் சுவாமிநாத பண்டிதராம்! ஆனால் மயிலையார் வழக்கம் போலவே கற்பித்தார். வட மொழியும் கற்பிக்கத் தொடங்கினார்.7 திருக்குறள் சிதம்பரர் திருக்குறள் சிதம்பர முதலியார் என்பார், இராயப்பேட்டை யார். அவரை அணுகினார் திரு. வி. க. சங்க இலக்கியம் பயிலும் வேட்கையை வெளியிட்டார். அவரோ, யானா ஆசிரியன். அப்பதவிக்கு யான் அருகன் அல்லன்! போதனைக்கும் எனக்கும் எவ்வளவு தூரம்? சேர்ந்து படிக்கலாம் என்றார். அப்படியே சேர்ந்து படித்தனர்.8 தணிகாசலர் எழுப்பிய வடமொழி வேட்கை பெரிதாயிற்று. பாம்பன் குமரகுருதாச அடிகள், மருவூர் கணேச சாத்திரியார், கிருட்டிணமாச்சாரியார், கடலங்குடி நடேச சாத்திரியார் ஆகியோரிடம் வாய்த்தபோதெல்லாம் கற்றார். வடமொழி அருகநூல்களைப் பார்சுவநாதர், சக்கரவர்த்தி நயினார் ஆகியோரிடம் பயின்றார்; பாலியும் அரபியும் பயின்றார்; ஆங்கிலப் புலமையையும் வளர்த்தார். ஒரு தூண்டல்: கற்றிலனா யினும் கேட்க என்பது! இசை நாட்டம் : இசைப்பயிற்சியிலும் நாட்டம் எழுந்தது. என்ன வாயிற்று? இசை பயில ஒருவரிடஞ்சென்றேன். அவரது வழக்க வொழுக்கம் அவரை ஆசிரியராக ஏற்க என் மனத்தை இசைவிக்க வில்லை. வேறு ஒருவரை அடைந்தேன். அவரும் முன்னவர்க்கு அண்ணாராகவே விளங்கினார். இன்னொரு வரை அணுகினேன். அவரும் முன்னவரலாகவே காணப்பட்டார். இசைப் பயிற்சியில் எழுந்த வேட்கை வீழ்ந்தது. ஆனால் இசையில் வெறுப்புத் தோன்றவில்லை. இயற்கையும் இறையும் இசைவண்ணமாயிருக்கும் போது என் உள்ளம் எப்படி இசையை வெறுப்பதாகும்? இசைக்குச் செவி சாய்ப்பதில் எனக்குத் தணியா வேட்கையுண்டு. இயற்கை இசையில் என் மனம் மூழ்கும். அதில் யான் யோகியாவேன். நாடகத்தில் ஈடுபாடு கொண்டிலரோ திரு. வி. க: வாழ்க்கை நாடகத்திலும், இயற்கை நாடகத்திலும், காவிய ஓவிய நாடகங் களிலும் யான் கருத்திருத்தி வருபவனானேன் என்கிறார்.9 பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னேமேல்வரு மூப்பு மாகி நாளுநாம் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தென்னே என இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, வாழ்வு நிலையாமை ஆகியவற்றைச் சொல்கிறது பழங்குண்டலகேசிப் பாட்டு, உடற் பருவ மாற்றம் பற்றிய அளவிலே இப்பாடற் பொருள் அமையின், கையறு நிலையும் இரங்கலுமின்றி எஞ்சுவ தென்ன? அறிவுப் பிறப்பு அறிவு வரவர அறியாமை அகல்வு அன்றோ - அறிவுப் பிறப்பு அடுத்தடுத்துத் தோன்றத் தோன்ற, அறியாமை இறப்பு நொடிநொடியும் அமைதலன்றோ - உள்ளுறையாம் பொருள்! அப்பொருள் கொள்ளாக் கால் அஃது அழுகைப் பொருளாம்! எழுகைப்பொருளாமா? திரு. வி. க. கல்விக்கண் உண்டாய மற்றைப் பிறப்பை மனங்கொள உரைக்கிறார் : யான் கற்றன சில; கேட்டனசில; இரண்டும் எனக்குச் செல்வமாயின. பொருட்செல்வம் பெறாத எனக்குக் கல்விச் செல்வம் சிறிது வாய்த்தது. இச்செல்வத்தை யான் பெறாதிருப் பனேல் என் வாழ்வு என்ன வாகியிருக்கும்? கல்விச் செல்வம் என்னைத் தொண்டனாக்கியது; தமிழ்த் தொண்டனாக்கியது. யான் பெற்ற கல்விச் செல்வம் பலமொழிப் பொருள் களினின்றும் திரண்டது. பலமொழிக் கருத்துக்கள் என் உள்ளத்தில் ஊறாத முன்னர் எனக்குத் தமிழ்க்காவியங்கள் வழங்கிய காட்சி ஒருவிதம்; ஊறிய பின்னர் வழங்கிய காட்சி வேறுவிதம். இவ் வேற்றுமைக்கு ஈண்டு ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பெரியபுராணத்துக்கு இளமையில் ஒரு குறிப்புரை கண்டேன்; அரசியல் உலகில் ஈடுபட்ட பின்னர் ஒரு குறிப்புரை கண்டேன். அதற்கும் இதற்கும் உற்றுள்ள வேற்றுமை வெள்ளிடை மலையென விளங்கா நிற்கிறது. ஆள் ஒருவன். வேற்றுமையுறுவானேன்? அக்கால மனோ நிலைவேறு; இக்கால மனோநிலைவேறு; வேறுபட்ட மனோ நிலை கருத்தில் வேற்றுமையுறுத்துவது இயல்பு. அருச்சுனன் ஒருவன். அவன் கீதை கேட்பதற்கு முன்னே எப்படியிருந்தான். பின்னே எப்படியானான்? கல்வி கேள்வியாலும் சேர்க்கையாலும் இன்ன பிறவற்றாலும் மனோநிலை மாண்டு மாண்டு புத்துயிர் பெறும். ஒரே பிறவியில் மனிதன் எத்தனையோ முறை இறக்கிறான்; எத்தனையோ முறை பிறக்கிறான். இவ்விறப்பும் பிறப்பும் மனிதன் அறிவை விளக்கம் செய்தே செல்லும். இது வெறும் பேச்சன்று; கதையன்று; அநுபவம்.10 அறிதோறும் அறியாமை கண்டற்று என்பதற்கும் பல் பிறப்பும் பல இறப்பும், ஒரோ பிறவியிலே வருவதற்கும் இப் பகுதியினும் வேறு விளக்கம் வேண்டுமோ? இது வெறும் பேச்சன்று; கதையன்று; அநுபவம் (பட்டறிவு) என்பதிலேயுள்ள மும்மை அழுத்தம் என்ன? உறுதிப் பாடேயன்றோ! பள்ளிப்படிப்பை முற்றிலும் முடியாமல் இடைத்தடையுற்ற திரு. வி. க. பல்கலைக் கழகத்தின் பக்கம் கால் வைக்கக் கூடுமோ? கூடாதென்றே கல்வியுலகம் கூறும்! ஆனால் அறிவுலகம் அவ்வாறு கூறுமோ? இயற்கைக்கல்வி திரு. வி. க. பயின்றது தனியொரு பல்கலைக்கழகம். அஃது இயற்கைப் பல்கலைக் கழகம்! உலகெலாம் விளங்கும் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். வானும் ஞாயிறும் திங்களும் விண்மீனும் கடலும் வயலும் காவும் மலையும் முகிலும் பிறபிறவுமாக விளங்கும் இயற்கைப் பல்கலைக் கழகம். தமிழ் இயற்கைமொழி! தமிழ்மொழி இயற்கை நெறிப்பட்ட ஒலியுடையது; சொல்லுடையது; பொருளுடையது. இயற்கை முதுமாந்தன் - அவன் செயற்கைக் கட்டு அறியாக்காலத்து - இயற்கையொடு இயற்கையாக வாழ்ந்த காலத்து அரும்பி மலர்ந்து மணம் பரப்பிய மொழி; அம் மொழியை, இயற்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தினும் சிறந்த எப்பல்கலைக்கழகத்தின் வழி கற்க முடியும்? இயற்கை அன்னை தண்ணருள் பொழிகிறாள். அவள் கோலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவிய ஓவியமாகத் தோன்று கிறது. (இயற்கைக்) கழக மாணாக்கருள் யானும் ஒருவனானேன். அங்கே ஆசிரியன்மாரில்லை, இயற்கைக் கூறு ஒவ்வொன்றும் ஆசிரியத் தொண்டு செய்கிறது. இங்கே பள்ளியில் பலதிறப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அங்கும் பலதிறக்கலைகள் இருக்கின்றன. யான் மாணாக்கன். இயற்கைக் கழகத்தில் பயில்கிறேன். ஏட்டுக் கல்வியை எத்துணைநாள் கட்டி அழுவது? ஏட்டுக்கல்வி என் செய்யும்? ஏட்டளவில் நின்று கொண்டிருக்கும். ஏட்டுக்கல்வி இயற்கைக் கல்வியாதல் வேண்டும். இதற்குரிய எண்ணம் தேவை. எண்ணம் என்ன செய்யாது? எல்லாம் செய்யும். இயற்கைக் கல்வி எவ்வுயிரும் பொதுவென்னும் உணர்வைப் பிறப்பிக்கும்; உணர்வு செயலாகும்; செயல் தொண்டாகும். இயற்கைக்கல்வி என்னைத் தொண்டனாக்கியது; தமிழ்த் தொண்டனாக்கியது.11 இம் மணிமொழிகள் இயம்புவதென்ன? எங்கெங்கும் கல்வி! என்றென்றும் கல்வி! கல்வி என்பது, கற்பார் நெஞ்சப்பொருள்! அப்பொருளைக் கால இடக்கட்டுக்கு நிறுத்திக் காண்பார், இரங்கத்தக்கவர் - இயற்கைக்கல்வியில் தோயாதவர் - என்பவை யன்றோ உள்ளுறை? 5. தமிழாசிரியத் தொண்டு திரு. வி. க. பார்த்த மாதச்சம்பள ஊழியம், வாழ்க்கைக் குறிப்பில் 29 பக்க அளவில் (222 - 250) இடம் பெற்றுள்ளது. அவ்வூழியத்துள்ளும்நம் ஆய்வுப்பொருளுக்கு ஏற்பத் தமிழூழியம் ஒன்றே இவண் பேசப்படுகின்றது. திரு. வி. க. வின் வாழ்வே, தமிழ் வாழ்வு! எழுவாய் முதல் இறுவாய் வரை தமிழாக அமைந்த ஒருவரின் தமிழ்த் தொண்டை, வாழ்வாகக்காண்பதன்றி வரைந்து காட்ட இயலுமோ? மாணப்பெரிய மலையின் மாண்பு ஒரு சிறு கற் காட்சியளவில் நின்றுபடுமோ? கையெழுத்து யான் லோயர் செகண்டரி சர்டிபிகேட் உடையவன். புக்கீப்பிங் சர்டிபிகேட் உடையவன். எனது கையெழுத்தோ தலை யெழுத்து! எனக்கு என்ன ஊழியம் கிடைக்கும்? ஊழியத்துக்குச் செல்ல மனமெழுவதில்லை. நூல்களை ஆராய்ந்து காலங் கழிக்கவே மனம் விரும்பியது. மனவிருப்பம் நிறைவேறியதா? இல்லை. ஏன்? குடும்பத் தொல்லை பெருகியது,1 ஊழியத்திற்குப் போயே தீரவேண்டிய நெருக்கடியால் சென்றாரே அன்றி, உவந்து சென்றார் அல்லர் - என்பது இம் முகப்புரையாலேயே தெள்ளிதின் விளங்கும். வேலைதேடிச்செல்கின்ற இடத்தில் பொறுப்பாளர்கள், என்ன படித்திருக்கிறீர்? என்று வினாவினால், அதற்காம் மறு மொழியுடன் இருப்பாரோ திரு. வி. க. இராரே! என் கையெழுத்து நன்றாயிராது என்று கட்டாயம் சொல்லிவிடுவார்! இந்த நெஞ்சத்திற்கு வேலை கிடைக்குமா? »il¥ãD« Ãiy¡Fkh?2 “v‹j«ã bjh£lhš RU§»; mtD¡F ešy jiyikaháÇa® »il¤jh®” v‹D« jikadh® cyfehj® ciunfhš, j«ãah® CÊa msînfhš!3 1. வா. கு. 96 6. வா. கு. 100. 11. வா. கு. 126. 2. வா. கு. 98 7. வா. கு. 100. திரு.வி.க.தொ.2 3. வா. கு. 98. 8. வா. கு. 101. 4. வா. கு. 98. 9. வா. கு. 116. 5. வா. கு. 99. 10. வா. கு. 116-7. நல்லகாலம் பென்சர் குழுமத்திற்குச் சென்றார் திரு. வி.க. பார்க்கர் என்பாரிடம் நேர்முகக்காணல் நேர்ந்தது. எனது கையெழுத்தின் சிறுமையை வெளியிட்டேன். அவர், எல்லார்க்கும் கையெழுத்து நன்றாயமையுமா? என் கையெழுத்தைப் பாரும் என்றார். நல்லகாலம் என்று மகிழ்ச்சியுற்றேன் என்கிறார் திரு. வி. க.4 நாமும் நினைக்கிறோம்; பார்க்கருக்கு வாய்த்தகோணல் எழுத்து மட்டுமோ - கோணலற்ற உள்ளமும் அன்றோ - அவ்வூழியக் கொடையை அருளிற்று! அத்தகு கோணலற்ற உள்ளம் உடைய தலைமையாசிரியர் சான் இரத்தினம். ஆசிரியர் திரு.வி.க. ஆயிரம் விளக்கு வெசிலியன் பள்ளியில்ஆறாம் வகுப்பு ஆசிரியரானார். அப் பள்ளியில் ஆறாண்டுகள் பணி செய்தார். அவ்வளவு நெடுங்காலம் பணிசெய்ய வாய்த்தது எதனாலாம்? கண்டிப்பு தண்டிப்பு, அதிகாரம் முதலிய உருமாற்ற பேய்கள் ஆயிரம் விளக்குப் பள்ளியில் நடம்புரிதல் அருமை அவை ஒரோ வழி நடம்புரிய எழினும், ஆங்கு வீற்றிருக்கும் அன்புத் தெய்வத்தின் முன்னர் ஒடுங்கி ஒதுங்கும்5 இதற்கு மறுதலையாக ஆயிரம் விளக்கு இருந்திருந்தால்? கண்டிப்பும் தண்டிப்பும் அதிகாரமும் பள்ளியிற் பங்கெடுத் திருப்பின், யான் அங்கே ஆறாண்டு கழித்திரேன்; அரையாண்டில் ஓடிவந்திருப்பேன்.6 திரு. வி. க. தமிழ் பயின்றவர் என்ற செய்தி இரத்தினர்க்கு எட்டுகிறது. அவ்வெட்டுதல், வீட்டுக்கு அழைக்கிறது. தமிழில் மூழ்குகிறது. பொழுது நீள்கிறது. நீண்ட நேரம் போக்கினேன் என்றார் திரு. வி. க. தமிழுக்கு மணிக்கணக்கு ஏது? என்றார் இரத்தினர்! தமிழறிந்த அன்பரிடத்தில் பணிசெய்யும் பேறு கிடைத் தமைக்குத் திருவருளை வழுத்துகிறேன் என்று எழுந்தார் திரு. வி. க. யான் தமிழ்ப்புலவனல்லன். ஒரு தமிழ்ப்புலவரை இப்பள்ளி பெற்றமை குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார் தலைவர்.7 ஆம்! திருவருள்வழுத்தும், ஆண்டவன் நன்றியும் தமிழாகக் கலந்து இனித்தன! அவ்வினிப்பு எதிர்காலத் தமிழ்த்தொண்டுக்கு ஓரேணியாயிற்று! தமிழ்வாழ்வு ஓய்வு நேரத்தைத் தமிழ்ப் பொழுதாக்கிய இரத்தினர் ஓய்வு நாளை வாளா விட்டுவைப்பரோ? தேம்பாவணிக்குப் பொருள் கேட்டார்; சைவசாத்திர ஆய்வும் செய்தார். இவற்றின் பயன் என்ன? மனந்திரும்பல், முறையீடு முதலியவற்றின் நுட்பங்கள் என்னை அறியாமலே எனக்குள் திடீரென விளங்கின8 என்கிறார் திரு. வி. க. திரு. வி. க. திருமணம் செய்துகொள்ள விரும்பாதிருந்தார், இதனை அறிந்தார் எண்கவனகர் (அட்டாவதானர்) பூவை கலியாணசுந்தரர்! கலியாணம் வேண்டாக் கலியாணரைக் கலியாணர் ஒரு துறவுமடத்துச் சேர்க்க விரும்பினார். செய்தி தலைமையாசிரியர் இரத்தினர் செவிக்கு ஏறிற்று. அவர் திரு. வி. க. வினிடம் மரம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார். அம் மரம் எவ்வெவ் வழிகளில் பயன்படுகிற தென்பதை உங்களுக்கு விரித்துச் சொல்ல வேண்டுவதில்லை. எத்தனை பறவைகள் அதில் தங்குகின்றன. அதனடியில் எத்தனை மாடு கன்றுகள் படுத்திருக் கின்றன. பாருங்கள். நீங்கள் இப் பள்ளியில் நல்ல மரமாயிருக் கிறிர்கள். நாடோறும் எவ்வளவு பிள்ளைகள் உங்களிடத்தில் கூடுகிறார்கள்! அவர்கட்கெல்லாம் நீங்கள் பயன்படுகிறீர்கள். மடத்தில் இவ்வளவு உயிர்கட்கு நீங்கள் பயன்படுவீர்களா? நீங்கள் மட்டும் ஒரு வேளை நலம் பெறலாம். இவைகளை யெல்லாம் கூர்ந்து உன்னி உங்கள் விருப்பப்படி நடக்க என்றார்.9 அம்மட்டில் நின்றாரோ? மடம் நோக்க ஏவியது மணவாமை நோக்கமேயன்றோ! அதற்கும் முடிவு கண்டார் இரத்தினர். தொண்டுக்குத் தனிவாழ்க்கை கூடாது. மணவாழ்க்கை வேண்டும் என்று வலியுறுத்தினார். தொண்டர்க்கு இத் தூண்டல் பயன் செய்யா தொழியுமோ? பேராசிரியர் ஆயிரம் விளக்குப் பள்ளியில் இருந்து, அதன் சார்புடைய வெசிலிக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார் திரு. வி. க. அக் கல்லூரியில்பேராசிரயராக இருந்த கிருட்டிணமாச்சாரியார் ஓய்வு பெற்றமையால் ஏற்பட்ட இடவாய்ப்பே அது. அப் பேராசிரியருக்கு நிகழ்ந்த வழியனுப்பு விழாவில் திரு. வி. க. பேசினார். அப் பேச்சைக் கேட்ட பழைய ஆசிரியன்மார் - அங்கேதானே திரு. வி.க. பயின்றார். நீ கணிதப் பேராசிரியனாக வரத்தக்கவன். கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் தமிழ்ப் பேராசிரியனாக வந்தனை என்றனர்.10 வெசிலியில் பேராசிரியராய ஆண்டு 191. பணிபுரிந்த காலம் ஒன்றரையாண்டு. வெசிலியின் மாணவராகத் திரு.வி.க. இருந்தநாளிலேயே தமிழ்ச்சங்கம் ஒன்று காணப் பெரிதும் முயன்றார். அம் முயற்சிக்குச் சே. கிருட்டிணமாச்சாரியார் இடந்தரவேயில்லை. பின்னர்த் தசரத ராமசாமி என்னும்மாணவர் முயற்சியால், சச்சிதானந்தம் பிள்ளை மெய்ப் பொருளியல் பேராசிரியராகப் பணிசெய்த காலத்தில், அவர் துணையால் தமிழ்ச் சங்கம் காணப்பட்டது, அச் சங்கத் தலைவராகும் வாய்ப்பு திரு. வி.க.வுக்கு வந்தது. அதனைப் பல்லாற்றானும் பேணிவளர்த்தார். கல்லூரிவகுப்பில், பாடத்தின் அளவில் திரு.வி.க. நிற்ப தில்லை. பாடத்துடன் பலதுறைகளைக் கலந்து கற்பிப்பார். மில்தன், செல்லி, கீட்சு முதலியவரோடு மாணவர் உறவாட விடுவார். வள்ளுவர், இளங்கோ. செயங்கொண்டார், வில்லி முதலியோரைக் காட்டுவார். மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் மாணாக்கரிடை எழுப்புவார். மாணவரும் அவரும் உடலுயிர் போலாயினர். அரசியலாசிரியர் கோபால கிருட்டிண கோகுலர்படத்திறப்புவிழா ஒன்று கல்லூரியில் நிகழ்ந்தது. திரு. வி. க. உரையாற்றினார். கல்லூரி முதல்வர் நீல் தலைமையேற்றிருந்தார். அவர் முடிவுரையில் நம் தமிழ்ப்பேராசிரியர்அரசியலாசிரியராகவும் இன்று விளங்கினார் என்று கூறினார்.11 அப்படியே ஆக என்றொரு கூக்குரல் ஒரு மூலையில் எழுந்தது. மூலையில்மட்டுமோ எழுந்தது! அகத்தே எழுந்திருந்த ஒன்றுதானே, புறத்தே வெளிப்பட்டது! இதழாசிரியர் தன்னாட்சிக் கிளர்ச்சியை ஒடுக்க நயன்மைக் (நீதிக்) கட்சி எழுந்தது. அன்னிபெசண்டு அம்மையாரைக் காப்பில் வைத்தது. திரு.வி.க. நெஞ்சம் அரசியலில் தோய்ந்தது. நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற வேட்கை முருகிக் கிளர்ந்தது. அதன் முடிவு 5.12.1917 இக் கல்லூரிப் பணியை விடுத்தார். 7.12.1917இல் தேசபக்த ஆசிரியரானார். தேசபக்தனை இரண்டரை ஆண்டு வளர்த்து விடுத்தார். பின்னே நவசக்தியைத் தொடங்கி இருபதாண்டுகள் வளர்த்தார். கல்லூரிப்பணியையும் இதழ்ப்பணியையும் பின்னே நிகழ்ந்த அரசியல் தொண்டையும் மீள்பார்வை பார்க்கிறார் திரு. வி. க. யான் வெலி கல்லூரியை விடாதிருந்தால் பள்ளிப் பாட நூல்கள் பல என்னால் எழுதப்பட்டிருக்கும். பல்கலைக்கழகச் சோதனையாளனாகியிருப்பேன்; பொருட் செல்வம் பெறுதற்குப் பலவித வாய்ப்புகள் கிட்டியிருக்கும்; யான் வீடுவாசல் உடைய வனாயிருக்கலாம். பொருட்செல்வப்பேறு எனக்குக் கிடைக்குமோ? அதற்கும் எனக்கும் எவ்வளவுதூரம்? அத்திரு கருவில் அமைய வில்லை. ஆதலின் யான் வெலி கல்லூரியை விடுத்து விலகல் நேர்ந்திருக்கலாம். இன்னொன்று என் ஊகத்தில்படுகின்றது. அதையும் இங்கே இரண்டொரு சொல்லால் சொல்கிறேன். முப்பத்து நான்கு வயதுவரை எனது வாழ்க்கை ஒரு விதமாக இயங்கி வந்தது. அது மட்டும் வாழ்க்கைக்குத்தகுதியாகுமா? ஆபாசங்களில் வாழ்க்கை படியும் வாய்ப்பையும் பெறுதல் வேண்டும். அஃதொருவிதச் சோதனை. அச் சோதனைக்கென்று கல்லூரியை விடுத்து அகலல் நேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை. அரசியல் உலகம் ஆபாசம் உடையதா? அச் சோதனைக்குரிய குறிப்புக்களையும் பொறிக்க முயல்கிறேன்.12 1. வா. கு. 222. 2. வா. கு. 223. 3. வா. கு. 238 4. வா.கு. 224 5. வா. கு. 230 6. வா. கு. 230 7. வா. கு. 229-30 8. வா. கு. 237-7. 9. வா. கு. 237-8. 10. வா. கு. 241. 11. வா. கு. 245. 12. வா. கு. 249-50. 6. இதழ்த்தொண்டு திரு.வி.க. நடத்திய இதழ்கள் இரண்டு. முன்னது தேசபக்தன்; பின்னது நவசக்தி. இரண்டும் ஆணும் பெண்ணுமாம் இரு மகவாகவே பேணிவளர்க்கப்பட்டன. அஃறிணையாம் இதழை, ஆண்பால் பெண்பால் படுத்துக் கொஞ்சி மகிழ்ந்தவர் திரு.வி.க. இதழ் மக்கள் ஈரிதழ்களையும் ஒருங்கு வைத்து ஒப்பிட்டுத் திறனாய்கிறார் திரு.வி.க. இரு குழந்தையின் இயலும் செயலும் இத்தகைத்தென அவற்றின் பெற்றோர் தெளிந்துரைத்தலினும் மற்றோர் உரை சாலுமோ? தேசபக்தன் மகன்; நவசக்தி மகள்; தேசபக்தன் லிமிடெட்டுள் புகுந்தான்; நவசக்தி அதில் புகாதவள்; தேச பக்தனில் பெரிதும் அழிவு வேலை நடந்தது; நவசக்தியில்பெரிதும் ஆக்கவேலை நடந்தது. ஆவேசமும் பரபரப்பும் தேசபக்தனில் அலைந்தன; அன்பும் அமைதியும் நவசக்தியில் தவழ்ந்தன. தேசபக்தன் அதிதேவதை ருத்ரன் - எழுதுகோல் பாசுபதம். நவசக்தியின் அதிதேவதை சிவம் - எழுதுகோல் குழல். தேசபக்தன் நடையில்காளி; நவசக்தி நடையில் உமை.1 வெசிலியன் கல்லூரியில்நன்மொழி கூறி வழியனுப்பும் விழா. அவ் விழாவில் ஏற்புரை வழங்கிய திரு.வி.க. வெலியன் மிஷனால்நான் பெற்ற நலங்கள் பல. அவைகளுள் சிறந்த ஒன்று கிறிதுவச் செல்வமெனும் அந்தணச்செல்வம். அதன் வேலையை இக் கல்லூரியில் செய்துவந்தேன். அதைத் தொடர்ந்தே இனி நாட்டுக்கல்லூரியில் செய்யப்புகுந்தேன்2 என்றார். கல்லூரிப் பணியும் ஆசிரியப் பணியே; இதழ்ப்பணியும் ஆசிரியப் பணியே. ஆசிரியப் பொதுநிலை மாறிற்றில்லை. ஆனால், பணிசெய்யும் வழி நிலையில் மாறுதல் மிகவுண்டு. யான் தமிழ்ப் போதகாசிரியனாக இருந்தவன். இப்பொழுது தமிழ்ப்பத்திரிகா சிரியனானேன்3 என்றார் திரு.வி.க. இதழ்தொண்டின் சிறப்பு இதழ்த்தொண்டு தமிழ்த்தொண்டாகுமோ? எனின், அதனினும், விஞ்சிய தமிழ்த்தொண்டு ஒன்று உண்டோ? எனலாம். உண்பது போலவும், பருகுவதுபோலவும் கட்டாயப் பொருளாகி விட்டது இதழ்! தேடித்தேடி வந்து வாங்கிப் பயன் கொள்வது ஒருபாலும், தேடித்தேடிப் போய் வழங்கிப் பயன் செய்வது ஒருபாலும் என விரிந்து வருவது இதழ்த் தொண்டு. காலையில் குளம்பி (காபி) தேநீர் குடியாத கற்றவரைக் காணினும், இதழ்பாராக் கற்றவரைக் காணல் அரிதெனக் காட்டுவதும் நாட்டுவதும் இதழ்! ஓரிதழ் ஒன்பது பேரையென்ன அதன் ஒன்பது மடங்குப் பேரையும் பார்க்க வைக்கும் பொதுப்பொருள் இதழ். அத்தகு இதழ்த் தொண்டுதானே எழுத்துக் கூட்டிப் படிப்பார் முதல், நாட்டின் தலையெழுத்தையே கையில் வைத்திருப்பார் வரை சமன்மைப் பயன்கொள்ளும் அரும்பொருள்; அவ்விதழ்த் தொண்டினால் விளையும் ஆக்கத்திற்கு அளவுண்டோ? இதழாசிரியன் கயமைக் கிருப்பானால் அதனால் விளையும் கேட்டுக்கும் அளவுண்டோ? திரு.வி.க.வின் தமிழ்த்தொண்டு நாடு தழுவியதாயிற்று; கடல் கடந்து, உலகு தழுவியது மாயிற்று! நவசக்தியின் தமிழ்நடம் வெளிநாடுகளிலும் புகுந்தது, இலங்கை, பர்மா, மலேயா, மொரிஷிய, நெட்டால், இங்கிலாந்து, பிரான், ஜெர்மனி முதலிய நாடுகளிலும் நவசக்தியின் கலை வீசியது. தமிழ்நாட்டினின்றும் தத்தம் தாய்நாடு நோக்கும் ஐரோப்பியப் பாதிரிமார் பலர் நவசக்தியை மறப்பதில்லை.4 இதழ்நடை கற்பதனையே கடமையாகக் கொண்டு பயில வந்த மாணவர்க்குப் பயிற்றும் தமிழ்நடைக்கும், பல திற பலநிலைப் பொதுமக்களுக்கு உணர்த்தவிரும்பும் தமிழ்நடைக்கும் வேற்றுமை வேண்டுமன்றோ! ஒரு பொருளைத்தருவது மட்டுமன்றித் தரும் வகையும் ஆளைப்பொறுத்தெல்லாம் வேறுபடுமன்றோ! சுருங்கச் சொன்னால் எடுத்துண்ணவும் அறியாக்குழந்தைக்கு அன்பால் ஆர்வத்தால் அரவணைப்பால் குழைத்துக் குழைத்து ஊட்டும் தாய்போலவும் இதழாசிரியன் தன் எழுத்து நடையையும் பொருளையும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பயன் பெருக்கம் என்பது, விரும்பிப் படிப்போர் பெருக்கமே யன்றோ! திரு.வி.க. இதழ்நடையை நெறிப்படுத்திக் கொண்ட வகையைக் குறிக்கிறார் : தேசபக்தனுக் கென்று ஒருதனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துக்கள் விளங்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்குரிய இயற்கை யாகியது. பழைய தொடர்மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம்நேர்ந்துழிச் சிலவேளைகளில் அவை தலை காட்டும். இலக்கணம் தமிழ்ப்போதகாசிரியனிடம் கொஞ்சிக் குலாவும்; தினப்பதிப்புப் பத்திரிகாசிரியனிடம் அது கொஞ்சிக் குலாவுவதற்கு இடம் பெறுமோ? இவன் விமானத்தில் பறப்பவ னல்லனோ? இலக்கணநூல், என்னில் ஒன்றி அத்துவிதமாயிற்று. யான் இலக்கணமானேன். என் நடை எங்கெங்கேயோ ஓடும்; திரியும்; அலையும்; பொருளுக்கேற்ற கோலந்தாங்கும்; இடத்துக் கேற்ற நடம்புரியும்.5 இற்றை இதழ்நடை பலலக்கம் விற்பனையாகும் இதழ் குமுதம். அதன் 23.8.86 ஆம் நாள் இதழ். தலைப்புச் செய்திகளில் மட்டும் ஜெயிக்கும் (2) கார்ட்டூன் (16) ரேடியோ (19) ஜன்பாத், கே (20) பாஷன் (31) போன் (39) மானேஜர் (56) நபர் (61) ஜெயில் (72) டய்ங் நாட்ய்ங் (77) ஆபீஃ (95) என்னும் சொற்கள்! இவையெல்லாம் குமுதத்திற்குத் தமிழ்! இவற்றைப் போடுவதெல்லாம் தமிழ்த்தொண்டு! குமுதத்தின் தொடர்தலைப்பு ஒன்றின் பெயர் லைட்ஃ ஆன்; இனி அதில் வரும் செய்தி எப்படியிருக்கும்? எழுதுபவர் பெயர் வினோத்; நடையைக் கேட்கவேண்டுமா? திருக்குறளார் என்றால் பெயர் சொல்லாமலே நாடறிந்தவர். அவர் நேருரையாடற் செய்தி இதே குமுத இதழில் இடம் பெற்றுள்ளது. நாத்தழும் பேறக் குறளைச்சொல்லிவரும் அவர் உரயாடலில் -டூட்டி, சார், பிரசங்கம், காரியங்கள், சினிமா, சீப்மினிடர், புரோக்ராம், ப்ரிவ்யூ தியேட்டர், சந்தேகம், ஃபேம இன்னவை இடம் பெறுகின்றன என்றால் பேட்டி காணும் சுகாசினி உரையாடலில் எத்தனை தூய சொற்கள் இருக்கும்! நேருரையாடல் தொகுப்பு, பால்யூ எனின் விட்டுவைப்பாரா மொழித் தூய்மையை? இனி ஜூனியர் விகடன் துக்ளக் முதலிய பெயர்களுடைய இதழ்கள் தாமா மொழியாக்கம் செய்பவை? பெயரே முத்திரையிட்டுக் காட்டு கின்றனவே! தனித்தமிழ் இயக்கம் தோன்றி, தமிழிசைச்சங்கம் தோன்றி, தமிழ்நாடு என்னும் பெயர் தோன்றி, தமிழாட்சி மொழிச்சட்டம் தோன்றி, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழாட்சி மொழித்துறை. தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ்ச் சங்கம் இன்னவெல்லாம் தோன்றி - எங்கும் தமிழ் எல்லாம் தமிழ் என்று முழங்கிக்கொண்டு, அரசியல் வேட்டையாடும் இந் நாளையிலேயே இதழ் நிலை இத்தகைத்து எனின், ஆங்கில அயல்மொழியே ஆண்டவன் மொழியாகவும், வட மொழியே தெய்வமொழியாகவும் கோலோச்சிய நாளில் தமிழிதழ் எப்படி இருந்திருக்கும்? அற்றைநாள் இதழ் அந்நாளில் நாட்டுமொழிப் பத்திரிகைகளில் அயல் மொழி நாற்றம் வீசும். அரசியல் குறியீடுகள் அந்நியத்தில் அப்படியே பொறிக்கப்படும். தேசபக்தன் பத்திரிகையுலகில் புரட்சி செய்தான். எப்படிச் செய்தான்? படிப்படியே செய்தான். புரட்சி நிகழ்ந்ததென்று பத்திரிகையுலகுக்கே தெரியாது. புரட்சிகளைத் தேசபக்தனிற் காணலாம். தேச பக்தன் தமிழாக்கிய அரசியல் சொற்களும் சொற்றொடர்களும் குறியீடுகளும் இப்பொழுது பத்திரிகைகளிலும் மேடைகளிலும் பிறவிடங்களிலும் ஏற்றமுற்று அரசு புரிதல் வெள்ளிடைமலை. தமிழ் நாட்டில் பல குறைபாடுகள் உண்டு. அவைகளில் ஒன்று பெருந்தலைவர்கள் தமிழ் தெரியாதென்று ஆங்கிலத்தில் நாவன்மை காட்டிவந்தமை. அது பற்றித்தேச பக்தன் எழுப்பிய கிளர்ச்சி தலைவர்களைத் தமிழ் பேசச் செய்தது. இந்நாளில் தென்னாட்டு மகாநாடுகளின் நிகழ்ச்சி முறைகளும் காரியக் கூட்டங்களின் நிகழ்ச்சி மறைகளும் தாய்மொழியில் நடைபெற்று வருவது கண்கூடு. மேடைகளிற் பேசுதற் பொருட்டுத் தலைவர்கள் தேசபக்தனைப் படித்ததும், தமிழாய்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் பலர் தேச பக்தன் சந்தாதாரர் ஆயதும் ஈண்டுக் குறிக்கத் தக்கன. தேசபக்தன் தமிழரை அந்நிய மோகத்தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது.6 வஞ்ச இதழ்கள் இவற்றைத் தமிழ்ச் செய்தித் தாள்கள் பெரும்பாலான வற்றின் உண்மை எப்படி உள்ளது? தமிழால் பிழைக்கும் வழியாகவே உள்ளது. வயிற்றைத் தமிழுக்கு வைத்து, நெஞ்சத்தைப் பிற மொழிக்கு வைக்கும் வஞ்சமாக அல்லது இரண்டகமாக உள்ளது! தமிழுக்குக் கேடு பயக்கும் செய்தியா கொட்டை கொட்டை எழுத்துகளில் பத்தி பத்தியாக வெளிப்படும்! மின்னற் பளிச்சிடும்! தமிழ்ப் பயிற்று மொழி, தமிழ் ஆட்சிமொழி, தமிழிசை, தமிழ் வழிபாடு இன்ன செய்திகளா வெளிப்படுத்துவதே இல்லை. முழுக்க முழுக்கத் திரையிட்டு மறைப்பதை மூச்சாகக் கொள்கின்றன. ஒரு வேளை புறக்கணிக்க முடியா நிலையில் வெளியிடவேண்டி நேரின் தாழ்த்தப்பட்ட இடத்தினும் தாழ்த்தப்பட்ட இடந்தந்து புறக்கணிப்பை வெளிப்படப் புலப்படுத்தத் தவறுவதில்லை! அல்ல கருத்தைப் பளிச்சிட்டுக் காட்டும் இதழ், அதற்கு மறுப்பு வருங்கால் ஒத்தவுரிமை தந்து வெளிப்படுத்துதல் அன்றோ நேர்மைத் துணிவு- கொள்கைமுறை! ஆனால், அவ்வல்ல கருத்தை மறுக்கும் மறுப்பைப்பற்றி ஆயிரம்பேர் எழுதினும் மூடி மறைத்து, ஓரிருவர் அவ்வல்ல கருத்தினை வரவேற்று எழுதி யிருந்தால் தேடி எடுத்துப் படம்பிடித்துப் போட்டுப் பறை சாற்றும்! இது தமிழிதழ்நிலை! தமிழனே நடத்தும் தமிழிதழின் நிலை! திட்டமிட்டுக் கடைப்பிடித்து வரும்கொடு நிலை இது. இதுவே பத்திரிகை தர்மம் என்று அவர்களால் பகரப்படுவதாம்! தேச பக்தன் தேசபக்தன் என்ன செய்தான்? அக்காலத்தில் சட்டசபையில் ஆங்கிலமே பேசப்படும். தமிழர்க்கும் தமிழ் நினைப்பு வருதல் அருமை. அப் பஞ்ச நாளில் சேலம் பி. வி. நரசிம்ம ஐயர் சட்டசபையில் ஒரு முறை தமிழில் பேசினார். அதுபற்றி எப்பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. தேசபக்தன் மட்டும் ஒரு குறிப்புப் பொறித்தான். அதுகண்ட நரசிம்ம ஐயர் தேசபக்தனுக்கு வாழ்த்துக் கூறினார்.7 தேசபக்தன் செய்த தலையாய தமிழ்த்தொண்டு ஒன்றைச் சுட்டவேண்டும். அது விடுதலைத் தொண்டின் சார்புடையதே எனினும் தமிழ்விடுதலையும் கொண்டதேயாம். தேயத் தொண்டர் வ. வே. சுப்பிரமணிய ஐயரும், பாவலர் கோமான் பாரதியாரும் புதுவையைப் புகலிடமாகக் கொண்டிருந்த காலம், தேசபக்தன் உலாவந்த காலம். அப்பொழுது தேசபக்தன், அவர்கள், ஆங்கில அரசின் எல்லையில் உலவும் உரிமையுடையராதல் வேண்டும் என்று கிளர்ந்தெழுந்தான். அதன் பயன் என்ன? வ. வே. சு. எழுதுகின்றார்: தாங்கள் பக்தனில் அடிக்கடி எழுதியதன் பயனாக நான் ஆங்கில இலாகாவுக்கு யாதொரு நிபந்தனைகளும் தடையுமின்றி வரலாம் என்று அரசாங்கத்தார் என் சகோதரன் எழுதிய கடிதத்திற்குப் பதில் இறுத்திருக்கிறார். என் நன்றியை எதிர் பார்த்துத் தாங்கள் கிளர்ச்சி செய்யவில்லையாகிலும் என் மனமார்ந்த நன்றியைத் தங்களுக்கு நான் தெரிவியாமலிருத்தல் எங்ஙனம் சாத்தியம்? கட்டுகள் நீங்கிவிட்டமையால் தாங்களும் இதர தலைவர்களும் குறிப்பிடுகிறபடி தேசத் தொண்டைச செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்.8 தேசபக்தன் தொண்டு இரண்டரை யாண்டே நிகழ்ந்தது! எனினும் என்ன? அதன் ஆற்றலும் ஆக்கமும் பெரிது! காண்க; யான் உருத்திரனானேன்; என் எழுதுகோல் பாசுபத மாயிற்று. எனக்குத் துணைபுரிந்த கணத்தவர்கள் எப்படியானார்கள்? அவர்கள் வேலாயுதர்களாகவும் கோதண்ட பாணிகளாகவும், காண்டீபர்களாகவும் ஆனார்கள்.9 என்மேசை மீது திலகர் பெருமான் திருமுக உருவம் பொலியும். அஃது என் கருத்தில் நின்று ருத்திரகலை எழுப்பும்; எழுது கோலைப் பாசுபதமாக்கும்.10 தேசபக்தன் நிலையம் காளிகட்டமாயிற்று. அங்கே காளி வீரநடம் புரிந்த வண்ணமிருப்பாள். அந்நடனம் உமிழும் சுவாலை எரிமலை போன்றிருக்கும்.11 தேசபக்தன் அம்பறாத் தூணியினின்றும் வழக்கம் போலப் புறப்பட்டது பாணம்.12 பெற்ற தம் பிள்ளைக் குணங்களை யெல்லாம் பெற்றவர் அறிவரே யல்லால் மற்றவர் அறியார் என்னும் பிள்ளைச் சிறு விண்ணப்பத்தைப் பேசுதலன்றிப் பிறிதென் பேசுவது? தமிழ்மொழிபற்றித் தேசபக்தன் 12.3.1918 இல் வெளியிட்ட செய்தி, அதன் தமிழ்த்தொண்டை விளக்குவதாக அமைகின்றது. பல்பல தமிழாக்கக் கருத்துகள் பிறபிற தலைப்புகளில் வெளிப் பட்டிருப்பினும் ஒரு சான்றாக இதனைக் கருதலாம். தனிமொழி மக்கள் முதன்முதல் பேசிய மொழியாகிய தமிழைத் தனிமொழி எனக்கூறாது வேறென் கூறுவது?13 இவ்வொரு தொடரிலேயே முழுக்கருத்தையும் பிழிந்து வைத்துவிடுகிறார் திரு. வி. க. பிறமொழி எதுவும் தலைப் படாமல், மக்கள் முதன்முதல் பேசிய மொழியே தமிழாக இருந்தது எனில் அதனைத் தனிமொழி எனக்கூறாது வேறென் கூறுவது என்பது, உணர்ச்சி மிக்க ஒரு வினா! அவ் வினாவிலேயே தனித்தமிழின் அன்மைக்கருத்துத் தகர்ப்படுகின்றது. செய்தி தொடர்கின்றது. வடமொழி யொன்றே பயின்று அம்மொழியின் மாட்டுப் பெரும் பற்றுடையராய் வாழும் ஒரு சிலர் தமிழ் தனி மொழியன்று; அது வடமொழியினின்றும் பிறந்தது என்று கூறத் துணிந்தனர். அது கண்ட தமிழ்மக்களுள் வடமொழி ஆராய்ச்சி இல்லாதவர் வடமொழி தமிழினின்றும் பிறந்தது என்னும் கொள்கையை நிறுத்த முயன்றனர். இவ்விரு கூட்டத்தினர் கூற்றையும் இரு மொழியிலும் ஆராய்ச்சியுடைய ஒருவர் ஏற்றுக் கொள்ளார். வடமொழியும் தனிமொழியே; தமிழ்மொழியும் தனிமொழியே என்பது எமது கொள்கை. எழுதப்பட்ட ஆண்டு 1918 என்பதை நினைவு கூர வேண்டும். எமது கொள்கை என்பதையும் கருதவேண்டும். இல்லாக்கால் வடமொழி ஆராய்ச்சி இல்லாதவரால் தனித் தமிழ்க்கொள்கையும், தமிழ் வடமொழிக்கு மூலம் என்னும் கொள்கையும் உருவாக்கப் பட்டது எனக் கூறுவதாகக் கருதி இடர்ப்படநேரும்! மறைமலை யடிகளார் மும்மொழிப் புலமையாளர்; ஞானப்பிரகாச அடிகளார் பன்மொழிப் புலமையாளர்; பாவாணரும் அவ்வாறே பன்மொழிப்புலமையாளர். அதற்குத் திரு.வி.க. தரும் செய்தியே செய்தி. அக்கால மனோநிலை வேறு; இக்கால மனோநிலை வேறு; வேறுபட்ட மனோநிலை கருத்தில் வேற்றுமை யுறுத்துவது இயல்பு14 என்பதே அது. ஐங்குறுநூறு கலித்தொகை, பதிற்றுப்பத்து முதலிய தொன்னூல்களை ஆய்ந்த அறிஞர்கள் தமிழ் பிற மொழியின் உதவியால் இயங்குவது என்று கூறத்துணிவார்களோ? திருவள்ளு வரில் வடசொல் ஒன்றுமில்லாக் குறள்வெண்பாக்கள் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. பலரும் போற்றும் ஆத்தி சூடியை வாசிப்பின் உண்மை விளங்கும். அதில் வடமொழிக் கலப்பின்றிச் சிறு சிறு கட்டுரைகள் முத்துப்போல் கோக்கப் பட்டிருக்கின்றன. இன்றும் வட மொழிக்கலப்பின்றி எழுது வோரும் பேசுவோரும் இருக்கின்றனர். அன்னார், அந்நடை ஒரு சிலர்க்கே பயன்படுமாகலின் அதைவிடுத்துத் தமிழ்மொழியிற் கலந்து ஆட்சி பெற்ற வடசொற்களை இடையிடையே பெய்து இப்பொழுது எழுதியும் பேசியும் வருகின்றனர். தமிழ்மொழி தனிமொழி என்பதை முற்கால ஆசிரியன்மார்களும் பிற்கால ஆசிரியன்மார்களும் நன்குவிளக்கிக் காட்டியுள்ளார்கள். தமிழ்ப்புலமை நிரம்பப்பெற்று நூல் பல எழுதிவரும் மகாமகோபாத்தியாயர் சாமிநாத ஐயரவர்களும் இராகவ ஐயங்கார் முதலியோரும் தமிழ் தனிமொழி யென்னும் கூற்றை மறுப்பரோ? ஒரு நாளும் மறுக்கத் துணியார், தமிழின் மூலை கண்டறியா ஒரு சிலரே அதைக் குறை கூறத்துணிவர். காலஞ் சென்ற சூரிய நாராயணசாதிரியார் எழுதிய தமிழ்மொழி வரலாறு என்னும் சீரிய நூலைத், தமிழின் எழுத்திலக்கணமும் தெரியாது தமிழ் தனிமொழியன்று என்று கூறும் அறிஞர்கள், வாசித்து உண்மை காண்பார்களாக. தனித்தியங்கும் ஆற்றலுடைய தமிழ்மொழியை நமது சென்னைச் சர்வகலாசாலையார் எங்ஙனம் வளர்த்து வருகின்றனர் என்பதைச் சிறிது ஆராய்ச்சி செய்வோம். சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர்த் தமிழ், பி.ஏ. வகுப்பு வரை கட்டாயப் பாடமாக இருந்தது. தமிழொன்றே யெடுத்து எம்.ஏ. பரீட்சையில் தேறினரும் பலர் இருக்கின்றனர். அங்ஙனம் தமிழை வளர்த்து வந்த சர்வகலா சாலையார் சில போலிக் காரணங்களை முன்னிட்டுத் தமிழை இஷ்டபாடமாக மாற்றி விட்டனர். சர்வகலாசாலை அங்கத் தலைவர்களில் பலர் தமிழ் இன்னதென்றே தெரியாதவர். ஒரு சிலரே தமிழாராய்ச்சி யுடையவர். jÄœbkhÊia¥ g‰¿ mo¡fo r®tfyh rhiyÆš Éthj« Ãfœ»wJ., அவ்வக் காலங்களில் தமிழ்ச் சொல் காதிலும் கேட்டறியாத சிலர் தமிழைப்பற்றி அபிப்ராயங்கூறத் தொடங்குகின்றனர். தமிழா ராய்ச்சி யுடையார் வாக்குச் சர்வகலாசாலை அரங்க மேறுவ தில்லை. சில காலத்தில் தமிழங்கத்தினர் மௌன விரதம் பூண் கின்றனர். சர்வகலாசாலை இன்னும் தமிழ் மொழியைத் தனிமொழி என உணர்ந்ததோ இல்லையோ என்பது சந்தேகம். சென்னைச் சர்வகலாசாலையில் வித்துவான் பரீட்சை யென்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப் பரீட்சைக்குச் செல்வோர் வடமொழி பயிலல் வேண்டும். தமிழ் மக்களுள் பலர் வடமொழிப் பயிற்சி செய்வதில்லை. சிலர் வடமொழியை உச்சரிக்கவே வருந்துவர். எத்தனையோ தமிழ் மக்கள் வித்துவான் பரீட்சைக்குச் செல்ல விரும்புகின்றார்கள். ஆனால், அவர்கள் தமிழல்லாப் பிறமொழிகளைப் பயிலல் வேண்டும் என்னும் நியதிக்கு அஞ்சித் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள். இதைக் குறித்துச் சென்றவாரம் சர்வகலாசாலையில் பெரும் விவாதம் நடந்தது... அதுகாலை நீதிபதி சேஷகிரி ஐயரவர் களும், ஸ்ரீமான் சி.பி. இராமசாமி ஐயரவர்களும் தமிழ் உண்மை கண்டு பேசியதற்குப் பெரிதும் நன்றி யறிதலுடையோம். தெலுங்கு முதலிய திராவிட பாஷைகளைப் பயில்வோர்க்கு வடமொழி ஞானம் அவசியம் வேண்டுமென்பதை மறுப்பாரில்லை. தமிழ்ப் பரீட்சைக்குச் செல்வோர்க்கு வடமொழிப் பாடம் பெருந் தடையாக நிற்கிறது என்பதையே ஈண்டு நம் சர்வகலாசாலை யாருக்கு அறிவுறுத்துகிறோம். தமிழ்மக்கள் இனி உறங்கலாகாது; வேறுவித வேற்றுமை களைப் பாஷா விஷயத்தில் பாராட்டலாகாது. ஒற்றுமை உழைப் பிற்குப் பயனுண்டு. தமிழ் தனிமொழி என்பதைச் சர்வகலா சாலையார்க்கு நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி வாயிலாக அறிவுறுத்த வேண்டுவது நமது முதற்பெருங்கடமை. இக்காரியத்தில் பிராமணரும் பிராமணரல்லாதாரும் ஒன்றுகூடி உழைப்பாரென நம்புகிறோம்.15 ஆசிரியவுரை தமிழ் ஒரு வட்டாரமொழியென்றும், அது உயர் தனிச் செம்மொழியன்று என்றும், தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் கட்டாயம் கற்பிக்கத் தகுதியுடையதன்று என்றும், விருப்பப் பாடமாக இருப்பின் விரும்புவார் கற்றுக்கொள்வர் என்றும், அது கட்டாயப் பாடமாக இருப்பின் வடமொழியை இழிவு படுத்துவதாய் அமையும் என்றும், ஆங்கிலமும் வடமொழியுமே கட்டாய மொழிப்பாடங்களாக இருத்தல் வேண்டும் என்றும் படித்தறிந்த சூழ்ச்சியாளர் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் வலியுறுத்தினர். வெற்றியும் கண்டனர். அந்நிலையில் எழுதப்பட்ட ஆசிரியவுரைக் கட்டுரை இது. சில போலிக் காரணங்களை முன்னிட்டு என்று திரு. வி. க. கூறுவதில் மறைந்துள்ள செய்திகள் இவை. 1902ஆம் ஆண்டில் ஏற்பட்ட இத்தகு நிலைமையைப் பரிதிமாற்கலைஞர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, பொ. பாண்டித்துரைத்தேவர் ஆகியோர் தலைப்பட்டு நிறுத்திய செய்தி ஒன்றுண்மையும் அறியத்தக்கது.16 தமிழாசிரியர் நிலை தமிழாக்கம் பற்றிய கருத்தளவில் தேசபக்தன் நில்லானாகத் தமிழாசிரியரைப் பற்றியும் எண்ணினான். வரவரத் தமிழ்ப் புலவர்கள் மாண்பிழந்து இயற்கை நுண்ணறிவும் மங்கப்பெற்று, வறுமைக்கும் சிறுமைக்கும் ஆளாகி வருகின்றார்கள். பல தமிழ்ப் பண்டிதர்களுக்குப் பண்டைத் தமிழ் நூல்கள் வேறுமொழி நூல்களாகத் தோன்றுகின்றன. அவர்கட்கு இயற்கையின்பம் தெரியாமல் போய்விட்டது. இதுகாலை ஒரு சிலரே சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவரையும் வறுமை சிறுமைப்படுத்தி வருகின்றது. என்செய்வர்? பாவம்! என இரங்கினார்.17 தேசபக்தனிலிருந்து விலகிய திரு.வி.க. வைத் தொழிலாளர் பேரன்பே நவசக்தியைத் தொடங்கத் தூண்டியது. எப்படி? விரும்பும் தொழிலாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உருபாய் தரலாம் எனத் தோழர் சிலர் திட்டமிட்டனர். அதனால் ஐயாயிரமும் ஈராயிரமுமாய் ஏழாயிரம் திரண்டது! ஏழாயிரவர் உணர்வு கூடின் என்ன தான் நிகழாது. நவசக்தி கிளர்ந்தாள். அதன் முதற் சிலம்பின் முதற் பரல் 22-10-1920 இல் வெளி வந்தது. இருபது சிலம்புகள் தொடர்ந்து வெளிவந்தன. நவசக்தி நவசக்தி வாரம் மும்முறைப் பதிப்பாக வெளிவந்தது. நாட்பதிப்பாக்கப் பலர் வலியுறுத்தினர். திரு. வி.க. உடன்பட்டார் இலர்; திங்களிதழாகவும், கிழமை இதழாகவுடம்கூட வெளிவர நேர்ந்தது. 1941 சனவரியில் இராதாமணி அம்மையார் என்பார் பொறுப்பில் இதழ் விடப்பட்டது. அவர், தாம் ஆர்வத்துடன் நவசக்தியை வளர்ப்பதாக ஏற்றுக்கொண்டார். காலஞ்சென்ற நம் குழந்தை திலகவதி மீண்டும் வரதையரிடத்தில் பிறந்து இவ்வாறு பேசகிறதோ!18 என்று கருதி வாழ்த்து வழங்கினார் திரு. வி. க. நவசக்தியில் பொதுவுடைமைக் கட்டுரைகள் பூத்தன; சன்மார்க்கச் செய்திகள் திகழ்ந்தன; பெரியபுராண ஆய்வுக் குறிப்புரைப் பதிப்பும் வெளிவந்தது! இரண்டரையாட்டைத் தேசபக்தன் செய்த தொண்டு இவை யென்றால், அதனினும் எண்மடங்கு நாள் நடைபெற்ற நவசக்தி தொண்டு எத்தகு விரிவுடையதாம்! அதன் ஆசிரியக் கட்டுரை களும், சிலம்பொலி என்னும் தலைப்பின்கீழ் வந்த கட்டுரைகளும் தேர்ந்து திரட்டித் தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு என்னும் தலைப்பில் 1935 இல் வெளிப்பட்டது. தமிழ்ச்சோலை எனப் பெயர் சூட்டப்பட்டதேன்? பலதிறக்கட்டுரைகளால் ஆக்கப்பெற்ற இந்நூலுக்கு எப்பெயர் சூட்டுவது? என்று எண்ணலானேன். பலதிற மரஞ்செடி கொடி முதலியவற்றைக் கொண்ட சோலை மீது எனது எண்ணஞ் சென்றது. அவ்வெண்ணம் தமிழ்ச் சோலை என்று பரிணமித்தது.19 நவசக்தி-ஒன்பது சக்தி; நவசக்தி இதழும் ஒன்பான் வழிகளில் தொண்டு செய்வதாக நேர்ந்தது. அவற்றுள் ஆறாம் வழி: தமிழ்மொழியையும், தமிழ்நாட்டுப் பழைய வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றையும் செப்பஞ்செய்தல் என்பது,20 தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் முப்பொருளும் திரு. வி.க. எழுத்து- பேச்சு- நினைவு ஆகிய முப்பாலும் பொதுளுதல் வெள்ளிடை. எனினும் இத் தலைப்புக் கொண்டே வெளிப்பட்டவை மிகக் கருதத்தக்கவை யல்லவோ! மொழிப்பற்று தமிழ்மக்கள் எம்மதத்தைத் தழுவினும் தழுவுக. ஆனால் அவர்கள் தங்களைத் தமிழ்மக்கள் என்பதை மட்டும் மறத்த லாகாது. அவர்கள் தங்கள் முன்னோரிடத்தும் மொழியினிடத்தும் நாட்டினிடத்தும் என்றும் பற்றுடையவர் களாய் வாழ்தல் வேண்டும்.21 நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றி யமையாதது. தமிழ்நாட்டில் திலகர் பெருமான், காந்தியடிகள் போன்ற தேசபக்தர்கள் தோன்றாமைக்குக் காரணம் தமிழர் களிடம் மொழிப்பற்றின்மையேயாகும்.22 இப்பொழுது சில தலைவர்கள் கட்டுரைகளை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னைத் தமிழில் மொழி பெயர்க்கும் வழக்கத்தை ஏற்று வருகிறார்கள். அதுவும் கூடாது. தமிழிலேயே முதலில் கட்டுரைகளை எழுதப் பழகல் வேண்டும். கருத்தும் சொல்லும் செயலும் தமிழ் மயமாக இருத்தல் வேண்டும். பிற கருத்தும் பிற சொல்லும் பிறசெயலும் தேசப்பற்றை வளர்க்க மாட்டா. ஆகவே, முதலில் தமிழ்மொழியை வளர்க்கத் தேச பக்தர்கள் முயலல் வேண்டும்.23 தமிழ்நாடு நமது நாட்டை நம் முன்னோர்கள் தமிழ்நாடு என்றார்கள். அத் தமிழ்நாடு இப்பொழுது எங்கே என்று நாம் வினவுகிறோம். நிலப்பரப்பு இருக்கிறது. தமிழ்மக்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைக் காணோம். முற்றிலுங் காணோம் என்று கூறத் துணிகிறோமில்லை. தமிழ்நாடு சிறிது புலனாகிக்கொண்டே யிருக்கிறது. தமிழ்நாடு சிறிது புலனாகிக்கொண்டேயிருக்கிறது. தமிழ்நாடு தமிழ்நூல்களில் உறங்கிக்கொண்டிருப்பதைக் காண் கிறோம். தமிழ்நாடு தமிழ்மக்களிடைப் பெரிதும் தவழ்வதைக் காண்கிறோமில்லை,24 தமிழ்நிலை குன்றல் தமிழ்மொழியின் நிலை குன்றி வருவதற்குரிய காரணங் களைப் பலவாறு கூறுப. நாம் மூன்று காரணங்களைச் சிறப்பாகக் கூறுவோம். ஒன்று, நாடு உரிமை இழந்திருப்பது; மற்றொன்று தமிழ்ப்புலவர்கள் புதுமையைக்கண்டு மருள்வது; இன்னொன்று ஆங்கிலம் பயிலும் தமிழ்மக்களின் கவலையீனம்.25 (ஆங்கிலம் பயின்ற) கூட்டத்தார் நினைவெழும் போதே, நமது உள்ளம் கனன்று கனன்று கொதிக்கிறது. நமது நாட்டைக் கொலை செய்தவர் - செய்கிறவர் - இவரேயாவர் ... தாய்மொழியில் பேசுவதையும் எழுதுவதையும் இழிவெனக் கருதும் இக்கூட்டத் தாராலன்றோ நமது நாடு இந்நிலைக்கு வந்திருக்கிறது. இப் பெரியோர்கள் தமிழில் என்ன இருக்கிறது; சரியான இலக்கியங் களில்லை; நாடகங்களில்லை; என்று குறை கூறுவார்கள் குறை கூறும் இக்கல்வியாளர்கள் ஏன் குறையொழியத் தாங்கள் முன் வருவதில்லை?26 காந்தியடிகள், பரதகண்டத்தைப் பாஷை வாரியாகப் பிரித்திருக்கிறார், அவர் நோக்கம் என்னை? அவ்வம் மொழி வளம்பெற வேண்டும் என்பதே. பரதகண்டத்தின் பல பகுதியினர் தத்தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். ஆனால் தமிழ்ப் பிள்ளைகள் தம்மொழியைக் கனவிலும் கருதுகிறார் களில்லை. கனவிலாவது கருதினால் தமிழ் நாடு மாகாண காங்கிர கமிட்டி என்ற பெயர் நிறுவுவார்களோ? நாடு எதுவோ? மாகாணம் எதுவோ? தெரியவில்லை. தமிழ்மொழியில் வெளிவரும் பத்திரிகைகள் அதைக் கவனிக்கின்றனவோ? இதைப்பற்றி நம்மிடமிருந்து எழுந்த கூக்குரல் லோகோபகாரிக்குக் கேட்டது. மற்றவைகட்கோ.27 நாட்டுக்கல்லூரி நாட்டுக்கல்லூரி ஒன்று ஏற்படுத்தத் தமிழ்நாட்டுக் காங்கிர ஏன் முயற்சி செய்யலாகாது? நாட்டுக்கல்வி நாட்டுக்கல்வி என்று பேசிப்பேசி மேல் நாட்டுக் கல்விக்குத் துணை போகலாமோ? நாட்டுக் கல்லூரியொன்று ஏற்பாடு செய்து அதன் கண் தமிழ்வாயிலாக எல்லாப் பாடங்களையும் போதிக்க முயலல் வேண்டும். இதனால் பண்டைத் தமிழும்வேறு பல நாட்டின் கூட்டுறவும் ஒன்றிய தமிழ்நாடு மிகவளமாக அரும்பும். அந்நாடு சுயராஜ்ஜியத் தமிழ் நாடாகும்.28 மணிமணியான கருத்துகளைச் செறித்த இவ் வளநடை இவ்வளவில் அமைக. தாய்மொழி எனத்திகழும் ஒரே ஒரு கட்டுரை திரு.வி.க. வின் தமிழ்நோக்கை ஓவியக் காட்சியாகக் காட்டுகின்றது, அக்கட்டுரையில் விட்டுச் செல்ல அல்லது விட்டுச் சொல்ல ஒரு சொல்தானும் இல்லை; அதனை அப்படியே பொறிப்போம்: தாய்மொழி ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய் தாய் தாய் என்று போற்று கிறான். ஒருவனுக்குத் தன்னைப் பெற்ற தாயின்பால் எத்தகை அன்புண்டோ அத்தகை அன்பு, அவனை அளித்த நாட்டினிடத்தும் அவனை வளர்க்கும் மொழியினிடத்தும் அவனுக்கு இருத்தல் வேண்டும். நாட்டையும் மொழியையும் நேசியாதவன், பெற்ற தாயையும் நேசியாத பாவியாவான். பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே யாகும். பேசுந் தாய் மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான். தமிழ் மொழியின் நிலைமை இப்பொழுது நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி எந்நிலையுற்றிருக்கிறது? தமிழ்த்தாய் யாண்டு உறைகிறாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கிறாளா? மன்றங்களில் வதிகிறாளா? சட்டசபைகளில் வாழ்கிறாளா? கல்லூரிகள் எனப்படும் நிலையங் களிலாதல் அவளைப் பார்க்கலாமா? உரிமைக்கு உழைப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கழகங்களிலாதல் அவளைக் காணலாமா? தமிழ்ப்பத்திரிகைகளிலாதல் அவளுக்கு இடமுண்டா? பல பத்திரிககைகள் தமிழ்த் தாயின் சிகையை - கழுத்தை - இடுப்பை - கொய்யும் இறுவாளாகவும், அறுக்கும் கொடுவாளாகவும், உடைக்கும் தண்டமாகவும் அல்லவோ உலவுகின்றன? அப் பத்திரிகைகளுக்கேற்ற நூல்களும் வெளிவருகின்றன. சுருங்கக்கூறின் தமிழ்மக்கள் தாய்மொழியைக் கொலை செய்வதில் பேரும் புகழும் பெற்றவர்களென்று கூறலாம். சிலர் சிற்சில இடங்களில் தமிழ் தமிழ் என்று கண்ணீர் விடுகிறார். அவருள் சிலர் தமிழுக்கு ஆக்கந் தேடுவது போல், அதற்கு அழிவு தேடி வருகிறார். தமிழ்த் தாய் நானா பக்கங்களிலும் தாக்கப்பட்டு வலியிழந்து வீழ்ந்து கிடக்கிறார். ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அவதியுறு நிலையை நந்தாய் அடைந்திருக் கிறாள். தமிழ் வேந்தர்கள் காலத்தில் கன்னி (என்னும் அழியாதவள்) என்னும் பெயர் தாங்கிய நம் அன்னை, இக்காலத்தில் இறந்து படுவாளோ என்னும் ஐயமும் நிகழ்கிறது. இரண்டகம் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருப்பவர் பெரிதும் ஆங்கிலம் கற்றவர். அன்னார் பேச்சுக்கும் எழுத்துக்கும், நாடும் மதிப்புக் கொடுக்கிறது. அவருள் பெரும்பான்மையோர் தம்மைத் தமிழர் என்பதை மறந்திருப்பவர். சிலருக்கு மட்டும் தமிழ் நினைவு உண்டு. இவர் எழுதும் தமிழே பிள்ளைத் தமிழ்மொழி இலக்கியங்களாக நிலவும். இவர் என் செய்வர்? இவருக்குப் போதிய தமிழ்ப்புலமை இல்லை. ஆங்கிலப் புலமையிருக்கிறது. இவர்களால் எழுதப்படும் நூல்கள் பல இதுகாலை வெளிவருகின்றன. அவைகளின் கருத்து, தமிழ்நாட்டிற்கு இன்றியமையாது வேண்டற்பாலதே; ஆனால், அவைகளிலுள்ள மொழியோ அவைகளைத் தொடவும் மனத்தைத் தூண்டுவதில்லை; என் செய்வது! ஆட்சியை ஆக்ஷி யாகவும், காட்சியைக் காக்ஷி யாகவும் செலவைச் சில வாகவும் நாகரிகத்தை நாகரீக மாகவும் காணும் போது தமிழுணர்ந்த எவருள்ளந் தான் வருந்தாது? பாஷையாலென்ன? எப்படி எழுதினாலென்ன? என்று சில அறிஞர் கூறுகிறார். இக் கூற்றுத் தமிழ்மொழியை மாத்திரம் பற்றி எழுவதா? ஆங்கில மொழியைப் பற்றியும் எழுவதா என்று அவ்வறிஞரைக் கேட்கிறோம். ஆங்கில நினைவு தோன்றும் போது எழும் மொழி வனப்பு, தமிழ்நினைவு தோன்றும் போது ஏன் எழுவதில்லை? தமிழ்த் தாயை எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத்தாயை ஓம்பினால் போதும் என்னும் எண்ணம் இந்நாட்டார்க்கு உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்றத்தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்! மொழியும் விடுதலையும் தமிழ்மொழியினிடத்துப் பற்றின்றி நாட்டுக்கு உரிமை பெற முயல்வது கானற் சலத்தை நாடி ஓடினவன் கதையாக முடியும். உரிமைக்காக மிகப்பரிந்து உழைக்கும் காங்கிரசாவது தமிழ்வளத்தைக் கருதி உழைக்கிறதா? ஹிந்தி பாஷையை வளர்ப்பதைப் பற்றி நாம் குறைகூற வில்லை. பாரத நாட்டுக்கே பொதுமொழியாக ஹிந்தி நிலவ வேண்டுமென்று நாமுங் கூறுகிறோம். இதனால் தாய்மொழியாகிய தமிழைக் கொலை செய்ய வேண்டுமென்று எவரும் கூறார். மயிலாப்பூரில் ஒரு ஹிந்தி கல்லூரி திறக்கப்பட்டது. அதன்திறப்பு விழா அழைப்பு நமக்கு வந்தது. அதன் கண் ஒருபக்கம் ஆங்கிலமும் மற்றொரு பக்கம் ஹிந்தியும் பொலிவதைக் கண்டோம்; தமிழும் ஹிந்தியும் ஏன் அவ்வழைப்புத்தாளில் திகழலாகாது? என்று எண்ணினேம். தமிழ்நாட்டில் காங்கிரகாரர் இனியாவது தமிழ்மொழி வளர்ச் சிக்கென உழைக்க முன் வருவரோ என்று கூவி அடங்குகிறோம். தமிழாசிரியர் தமிழ்ப்பண்டிதர்கள் ஒன்றுபட்டுத் தமிழை வளர்ப்பது இந்த யுகத்தில் இல்லை, காரணங்கள் கூறின் மிக விரியும். தற்கால நாகரிக உணர்வுடைய சில தமிழ்மக்கள் தமிழ் நாட்டில் வதிகிறார்கள். அவர்கள் ஒன்று கூடித் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆங்காங்கே கழகங்கள் கண்டு உழைப்பார்களாக. தாய்மொழி வளராத நாடு, ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய்மொழி யோம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக.29 நாற்றும் நடவும் பயிரிலே, நெற்பயிர் உண்டு. புற்பயிரும் உண்டு. நெற் பயிராகவே இருப்பினும் அது நாற்றங்காலிலேயே நன்றாக வளமுற வளர்தல் வேண்டும். நாற்றங்காலில் வளமுற வளராத பயிர் அங்கே பூச்சியரித்தும் நோய் பற்றியும் ஊட்டமின்றியும் நலிந்தும் நசிந்தும் வளரும். நெற்பயிர் - நடவு நிலத்தில் நன்றாக வளருமோ? அந் நடவு நிலந்தானும் பண்பட உழாததாய், ஊட்டமிக்க உரமிடாததாய், நீர் வளங்குன்றியதாய் இருக்குமேல் பயிர் விளைவு என்னாம்? நாற்றங்கால் போன்றவை கல்விநிலையங்கள்; பயிர் போன்றவர் மாணவர். நடவு நிலமாக இருப்பது நாட்டியலில் அவரவர் மேற்கொள்ளும் பணித்துறை. இளமையில் கல் என்னும் மணிமொழி சுரந்து பெருக்கெடுக்க வேண்டிய இடம் கல்வி நிலையங்களேயன்றோ! அங்கே தமிழ்க்கல்வி நிலை எத்தகையது என்பதை ஆய்கிறார் திரு.வி.க. அவர்களுக்கு அறிவு கொளுத்து கிறார். நானும் ஏறக்குறைய 15 ஆண்டுகள் உங்களைப் போன்ற மாணாக்கர்களிடத்தில் நன்கு பழகிச் சில கல்லூரிகளில் ஆசிரிய னாகவும் இருந்ததுண்டு. அதிலிருந்து பெற்ற அடைவு என்ன வெனில், நம்முடைய நாட்டில் இளைஞர்களுக்குப் பெரிதும் தாய்மொழியினிடம் பற்று இல்லை என்பதே. அவ்வுண்மையைக் கண்டே. சர்வகலாசாலையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கட்டாயப்பாடமாக இருத்தல் கூடாது. அதை இஷ்டபாடமாகச் செய்தல் நலம் என்று நினைந்து அவ்வாறே செய்திருக்கிறார். எனவே இளைஞர்களாகிய உங்களுக்குத் தமிழினிடத்தில் வேட்கை இல்லையெனில், வேறு எப்பொருளிடத்து உங்களுக்கு வேட்கை உண்டாகும் என்று நீங்களே ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். பிறர் தொண்டு நம்மவர்க்குள் ஆங்கிலம் படித்தவர் பலர் தொல்காப்பியம் அறிந்திலர். ஆனால் பிஷப் கால்டுவல் அந்நூலைப் பயின்று ஆராய்ந்து அதன் நுட்பங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி யிருக்கிறார். மாணிக்க வாசகருடைய திருவாசகத்தின் உள்ளுறையை ஆங்கிலம் பயின்ற நம்மவர் அறிய விரும்பும் போது டாக்டர் போப்பினுடைய மொழி பெயர்ப்பைத் தேடிப்பார்க்கிறார். நம்மாழ்வார் திருவாய் மொழியின் கருத்தை அறிய வேண்டு மானால் சிலர் ஆங்கில பொழிபெயர்ப்பைத் தடவுகிறார். இன்னும் திருவள்ளுவர் திருக்குறளை நேராகத் தமிழில், ஆங்கிலம் பயின்ற தமிழர்களிற் பலர் படிக்கிறாரில்லை. நம் நாட்டுப்பெரியோர்கள் அருளிய உண்மைகளைத் தாய்மொழிவாயிலாக உணரும் ஆற்றலையும் வன்மையையும் இழந்து, அவைகளை வேறு மொழி வாயிலாக அறிந்துகொள்ளும் நிலையை நாம் அடைந்திருக் கிறோம்.30 இவ்வாறு சுட்டிக்காட்டும் திரு.வி.க. பிறமொழிப் பெருமக்கள் தாம் பிறமொழிகளை அறிந்திருந்தும் தம் தாய்மொழி வழியாகவே அரிய நூல்களை இயற்றி வழி காட்டிய சிறப்பை எடுத்துக் காட்டுகிறார். தாய்மொழிமேல் பற்று தாகூர் கீதாஞ்சலியை முதல்முதல் ஆங்கில மொழியில் எழுதினாரா? அல்லது தாய்மொழியாகிய வங்க மொழியில் எழுதினாரா? முதல் முதல் வங்கத் தாய் மொழியிலேயே அவர் அதை எழுதினார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தேச பக்தியிற் சிறந்த பாலகங்காதர திலகர் ஆறு ஆண்டு சிறைக் கோட்டம் நண்ணிய காலத்தில், கீதாரகசியம் என்னும் அரிய நூலை ஆங்கிலத்திலா எழுதினார்? அவரும் முதலில் அதைத் தமது மொழியாகிய மஹாராஷ்டிர மொழியிலேயே எழுதினார். ஏன்? அவர் நாட்டின் மொழியை வளர்க்க வேண்டு மென்ற ஆர்வத்தினாலே அக் கடனாற்றினார். இவ்வளவு ஏன்? இவ்வுலகம் போற்றும் மகாத்மா காந்தி எங்இந்தியா பத்திரிகையில் எத்துணையோ கருத்துக்களை நேராக ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தம் வாழ்க்கை வரலாற்றை மட்டும் அவர் தாம் பிறந்த நாட்டின் மொழியாகிய கூர் ஜரத்திலன்றோ எழுதுகிறார்? பின்னைத் தேசாய் என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார்.31 காலக்கண்ணோட் டத்தில் தமிழின் நிலையைக் கணித்துக் கூறுகிறார் திரு. வி.க. சங்ககால மாண்பும், இடைக்கால வீழ்ச்சியும், இக்கால இழிமையும் அவர்தம் உணர்வு மொழிகளில் வெள்ளமாகப் பாய்கின்றன. இடைக்கால இக்கால நிலைபற்றிய செய்திகள் இவை: தமிழ்த்தாய் நிலைமை இடைக்காலம் தமிழ்த்தாய்க்குச் சிறைவாழ்வு வழங்கிற்று. இந்நாளோ அவளுக்குச் சிறையுடன் நோய்களையும் வழங்கி யிருக்கிறது. உணவின்றிச் சிறப்பாகக் காவிய உணவின்றித் தமிழ்த்தாய் மெலிகிறாள்; நலிகிறாள். மெலிவாலும் நலிவாலும் அவளது நரம்பு தளர்ந்து தளர்ந்து செந்நீர் ஓட்டம் குலைந்து கொண்டேபோகிறது. செந்நீர் வெந்நீராகிக் கொதிக்கிறது; கொதித்துக் கொதித்து ஆ! ஆ! எத்துணைப் புண்களை, எத்துணைச் சிரங்குகளை, எத்துணைக் கட்டிகளை, எத்துணை உடைவுகளை, எத்துணைப் பிளவுகளைத் தாயினிடம் உண்டு பண்ணியிருக்கிறது. தமிழ்த்தாயின் அழகிய உடல் - செழியமேனி - புண்ணீர் ஒழுகும் புன்தேகமாகிவிட்டது. அவள் உள்ளமோ... தமிழனே! நீ தமிழ்த்தாயின் சேயா? நீ எங்கேயிருந்து விடுதலை விடுதலை என்று முழங்குகிறாய்? என் தாய்முகம் நோக்கு. அவள் எப்படியிருக்கிறாள்? எவ் வழியில் நின்று, எத்துறையில் இறங்கி, அவளை நோயினினின்றும் சிறையினின்றும் விடுதலை செய்யப் போகிறாய்? அறை கூவல் தமிழ்மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன? விடுதலை முயற்சி, விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும், விடுதலை விடுதலை என்று சிறைக் கூடத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தமிழ்த்தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவள் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதைக் கவனிக்க. தமிழ் அன்னை இடைக்காலத்தில் சிறைப்பட்டாள்; பின்னே நோய்ப்பட்டாள்; இப்பொழுது விடுதலை என்னும் பெயரால் எரிக்கப்படுகிறாள். அந்தோ! நாங்கள் தாய்க்கு எரியா மூட்டுகிறோம்; விடுதலைக்கன்றோ முயல்கிறோம் என்று சில சகோதரர்கள் கருதலாம். சகோதரர்களே! உங்கள் பேச்சில் எழுத்தில் விடுதலை விடுதலை என்னும் ஒலியும் வரியும் இல்லாமல் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால் எழுத்தால் விளைவ தென்ன? 32 இதழ்பற்றிய இச்செய்தியின் நிறைவாக ஒரு செய்தி. அஃது ஆந்திரதேயத்தை எடுத்துக்காட்டி எழுச்சியூட்டிய செய்தி. தமிழ்நாடே தமிழ்நாடே! உனது சகோதர நாட்டைப்பார். அங்கே என்னென்ன நிகழ்கின்றன? அத் தேசத்தின் ஒற்றுமையை நோக்கு; உறுதியைக் காண். உனக்கு அந்த ஒற்றுமையும் உறுதியும் என்று வரும்? உன் மக்கள் உன்மொழியில் பற்றுக் கொள்வதில்லை; அவர்கள் பொறாமைக்கு இரையாகிறார்கள். பொறுமையும் மொழிப்பற்றும் உண்டாகும் வரை நீ ஆந்திர தேசம்போல் ஆகமாட்டாய். காங்கிர கூட்டங்களிலும் உன்மக்கள் உன் மொழியைப்பேச நாணுகிறார்கள். உன் பழம் பெருமைகளே உன்னைச் சிறப்பித்து வருகின்றன. உன்னைக்கடவுள் ஆசீர்வதிப்பாராக.33 7. அரசியல் தொண்டு ‘muáaš jÄiH ts®¡Fnkh? என அறிந்தோர் ஐயுறார். அரசியலார் தமிழில் ஈடுபட்டு வளர்க்காமையே தமிழின் தளர் நிலைக்கெல்லாம் அடிப்படை. அரசியல் துணையில்லாமல் எத்துணை எத்துணை அறிஞர் கூடினும் தொண்டர் கூடினும் மொழிவளம் எய்தாதாம்! அரசியலே அச்சு ஆங்கில ஆட்சியாளர் கருத்தில்லாமல், ஆங்கிலம் வளர்ந்ததோ? ஆங்கிலர் அகன்றும், ஆங்கிலம் அகலாமல் ஊன்றி நிற்குமோ? அரசியல் ஆணை இல்லாமல் இந்தியை இத்துணைச் செலவிட்டுப் பரப்ப இயலுமோ? முந்தை வேந்தர்களை வயப்படுத்தி வைத்ததனால் அன்றோ இன்றுவரை தமிழ்நிலத்தில் வடமொழி கோயில் மொழியாக நிலைத்துள்ளது! அரசியல் இன்றித் தமிழை வளர்க்க - நினைத்தவாறு சீராக வளர்க்க - இயலாது. ஆனால் அவ்வரசு தமிழை வளர்க்கப் பொதுமக்கள் வலியுறுத்தல் இல்லாமல் முடியாது! மக்கள் ஆட்சியில் மக்களை அறவே புறக்கணித்து ஆட்சி நடத்த முடியுமோ? தமிழ்த்தீர்மானம் 20.4.1918, 21.4.1918 ஆகிய இரண்டு நாள்களிலும் சென்னை மாகாணச் சங்க மாநாடு தஞ்சையில் நிகழ்ந்தது. அம் மாநாட்டில் தமிழ்பற்றி வந்ததொரு தீர்மானம். அதை வழிமொழிந்து பேசினார் திரு.வி.க. இனிப் பொதுக் கூட்டங்களில் தமிழர்கள் தாய் மொழியிலேயே பேசுதல் வேண்டும். அயல்மொழியில் பேசுதல் கூடாது. எவரேனும் அயல்மொழியில் பேசப்புகுந்தால் அவரைத் திருத்தும் பொறுப்பைப் பொதுமக்கள் ஏற்றல் வேண்டும் என்று வலியுறுத்தினார். தேசபக்தனிலும் கிளர்ச்சி செய்தார். அதனால், தமிழில் பேசலாகாது என ஆங்கிலத்தில் நாவன்மை காட்டி வந்தோரும் தமிழில் பேசினர். பொது மக்கள் கிளர்ச்சியின் முன்னர் எந்தத்தலைவர் என்ன செய்தல்கூடும்? என்கிறார். 1. வா. கு. 290. 2. வா. கு. 247-8. 3. வா. கு. 267. 4. வா. கு. 290-1. 5. வா. கு. 267. 6. வா. கு. 268. 7. வா. கு. 268-9 8. வா. கு. 284-5 9. வா. கு. 265. 10. வா.கு. 272. 11. வா. கு. 273 12. வா. கு. 283 13. தே.ப.பக்.114. 14. வா. கு. 116. 15. தேசபக்தாமிர்தம் பக். 114-6 (12.3.1918.) 16. தமிழ்தமிழ் தமிழ். பக்.38. 17. தேசபக்தாமிர்தம் பக்.122. 18. வா.கு. 296. 19. த.சோ. முகவுரை.4 20. த. சோ. பக். 3 21. த. சோ. 5-6. 22. த. சோ. 9. 23. த. சோ-10 24. த. சோ. 11,12. 25. த. சோ. 12 13 26. த. சோ. 16. 27. த. சோ. 17. 28. த. சோ. 18. 29. த. சோ. 19-21. நவசக்தி. 12:10. 1924. 30. த. சோ. 22-23. மாணாக்கரும தாய்மொழியும் 8.2.1928. 31. த.சோ.24. மாணாக்கரும் தாய்மொழியும் 8.12.1928. 32. த. சோ.30,31 விடுதலையும் தமிழ்நாடும் 18. 25.11.1931, 33. த. சோ. 43, ஆந்தரதேசம் 27.1.1922. இதனைக் கூறும் திரு.வி.க. என் வாழ்வில் நிகழ்ந்த முதுற்புரட்சி இது ஆகும். தமிழ் நாட்டுக்காங்கர காரியக்கூட்டமும் தன் கடன்களையெல்லாம் தமிழிலேயே ஆற்றலாயிற்று என்கிறார்! பலதிறத்தொண்டு இதழ்த் தொண்டினைக் கண்டோம். இதழ்த்தொண்டு அரசியல் தொண்டே அன்றோ! நாட்டு விடுதலைப்பற்றால் அன்றோ இதழாசிரியர் ஆனார் திரு.வி.க. அதற்காகத் தானே ஊரூர்தோறும் நகர்நகர்தோறும் முழக்கமிட்டார்! இவையெல்லாம் அரசியலேயன்றோ! இனித் திரு.வி.க. அல்லும் பகலுமாகவும், ஊண்உறக்க மின்றியும், நோய்நொடி பாராதும் பாடுபட்ட ஒரு தொண்டு தொழிலாளர் தொண்டேயன்றோ! அவர் கூறுமாப்போலப் பீமனைப் பிருங்கியாக்கி வைத்த பேறு அத்தொழிலாளர் தொண்டையே சாருமன்றோ! அஃது அரசியல் அன்றோ! இன்னொன்றும் கருதலாம். திரு.வி.க.வின் பொழிவு சமயம் சார்ந்ததாயினும் சரி; தொழிலாளர் இயக்கம் சாந்ததாயினும் சரி; விடுதலை வழிப்பட்ட தாயினும் சரி;இலக்கியத் தொடர்பின தாயினும் சரி; அவற்றுள் பெரும் பாலனவும் நூற்றொண்டாக அன்றோ கிளர்ந்தது. தம் பொழிவை வாய்மொழியுரை என்றும், எழுத்துரை யென்றும் இருபால் படுத்தும் திரு.வி.க.வின் எழுத்துரையெல்லாம் என்ன ஆயின? நூற்றொண்டாயின. ஆகலின் எங்கும் தமிழ்த்தொண்டு; எதிலும் தமிழ்த்தொண்டு; என வாழ்ந்த ஒரு பெருமகனார் பணிகளைச் சிக்கறத் தனித் தனியே பிரித்துக் காட்டல் அரிது என்பதைச் சுட்டவே இவ் விளக்கம் என்க. அன்றியும் ஒரு தலைப்புத்தொண்டின் உள்ளுறையாய், வேறொரு தலைப்புத் தொண்டும் இயலும் என்பதும் தெரிவித்தற் கென்க. அரசியல் தொண்டின் அடித்தளத்தை அல்லது உயிர்ப்பைத் திரு.வி.க. தமிழ்த் தென்றல் அணிந்துரையில் குறிப்பார்: அரசியல் மக்கள் வாழ்வு நலனுக்குரிய துறைகள் பல. அவைகளுள் ஒன்று அரசியல். அவ்வொன்றோ உயிரனையது. என்னை? உலகி லுள்ள மற்ற வாழ்வுத் துறைகளின் ஆக்கமும் கேடும் அரசியலைப் பொறுத்து நிற்றலின் என்க அரசியல் அரசு அரசன் என்னும் சொற்களின் மூலம் அர் என்பதே. அர் என்பது செம்மைப்பொருளின் அடிச்சொல்! ஆகலின் அரசு என்பதே செங்கோல் என்பதைக் காட்டும் சால்புச் சொல்லேயாம். அருள் என்பதும் அர் வழி வந்ததே. அருள்தானேசெந்தண்மையாம் அந்தண்மை! செம்மைக்குரிய அரசு, கொடுமைக்குரிய நிலையில் கொடுங் கோல் ஆயிற்று. வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு என்னும் குறள் கொடுங்கோன்மை விளக்கமாம்.1 நாட்டவர் அரசே நயனிலார் வழிப்படின், கொடுங் கோலரசாம் எனின், வேற்றவர் அரசியலில் விழுப்பத்தை நோக்க முடியுமோ? அந்நிலையிலேயே அரசியல் கிளர்ச்சியும், புரட்சியும் கட்டாயம் எழவேண்டியவாயினவாம். மேடைத்தமிழ் திரு.வி.க. தம் அரசியல் தொண்டைச் சுட்டுகிறார்: சுயராஜ்ய சேவையினூடே, தமிழ்நாட்டார் பற்பல மகாநாடுகளில் தலைமைவகிக்கும் பணியையும் அடியேனுக்கு வழங்கியதுண்டு. மகாநாடுகளில் தலைமை வகிப்பேர் தமது முதலுரையைச் சமயத்துக்கேற்றவாறு சில இடங்களில் பேசி விடுவது வழக்கம். சில இடங்களில் எழுதிப்படிப்பது வழக்கம். இவை முறையே இக்கால வழக்கில் வாய்ப்பேச்சு, எழுத்துப்பேச்சு (Written Speech) என்னப்படும். இவ்விரு வழியிலும் அடியேன் கடனாற்றியிருக்கின்றேன்.3 அரசியல் பொழிவை ஆங்கிலத்தில் நிகழ்த்துவதற்கும் தமிழில் நிகழ்த்துவதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கண்டவர் திரு.வி.க. தமிழில் நிகழ்த்துவதன் சிக்கலைப் பெரிதும் உணர்ந்தவர்; அதனால் இடரும் பட்டவர். ஆகவே அவ்விடர் அகல்வதற்காக ஆக்கமான ஒரு வழியைக் குறிப்பிடுகிறார். அது தமிழில் சுருக்கெழுத்துப்பயிற்சி பெருக வேண்டும் என்பதாம். சுருக்கெழுத்து தமிழ்நாட்டில் தாய்மொழிவாயிலாக நிகழ்த்தப் பெறும் வாய்ப்பேச்சுக்கு உள்ள அல்லல் வேறு எதற்கும் இல்லை என்று கூறலாம். அல்லலுக்குக் காரணம், தமிழ்மொழியில் சுருக்கெழுத்துப் பயிற்சி இன்னும் முற்றும் வளம் பெறாமையேயாகும். தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் தமிழ்ச்சுருக்கெழுத்துப் பயில்வதில் கவலை செலுத்துகிறார்களில்லை. அப்பயிற்சி பெரிதும் இப் பொழுது போலீசார்க்கு உரிமைப்பெருளாயிருந்து வருகிறது. போலீசார் அல்லாத இரண்டொருவர் தமிழ்ச்சுருக்கெழுத்தில் பயிற்சி பெற்றிருத்தல் எனக்குத் தெரியும். அவர்க்குப் போதிய தமிழ்ப்புலமை இன்மையால், அவர் இடர்ப்படுவதையும் யான் கண்டிருக்கிறேன்: தமிழ்ப் புலமையுடன் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயின்றோர் வேறு சிலர் இருக்கிறாரோ என்னவோ யான் அறியேன். தமிழ்ப்புலமை யுடையார் தமிழ்ச்சுருக்கெழுத்துப் பயின்று தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்வது நலம்.4 தமிழ்த்தென்றல் மாநாடுகளில் நிகழ்த்தப்பெற்ற எழுத்துரைகளின் தொகுப்பே தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு என்னும் பெயரால் 1928 இல் வெளிவந்தது. அத்தலைப்பே திரு.வி.க. வைக் குறிப்பதாகத் தமிழர்களால் கொள்ளப்பட்டது. அவர் வாழ்ந்த நாளிலேயே நூற்றலைப்புச் சூட்டுங்காலையிலேயே - திரு.வி.க. தமிழ்த் தென்றல் எனச் சிலரால் எண்ணவும் எழுதவும் சொல்லவும் பெற்றிருப்பார்போலும். அச்செய்தி நூன் முகப்பிலே வரும் அணிந்துரை வழியே குறிப்பாக அறியக் கிடக்கிறது. என்னுரையில் தமிழ்த்தென்றல் வீசுவதாக எவரும் கொள்ள வேண்டுவதில்லை. தமிழ்த்தென்றல் எங்கே? ஏழையேன் எங்கே? ஆனால் தமிழ்த்தென்றலில் மூழ்கும் வேட்கை மட்டும் எனக்கு உண்டு. தமிழ்த்தென்றல் என்னும் பெயர் எனது தமிழ் நடையைக் குறிக்கொண்டு நிற்பதன்று என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழ்த்தென்றலுக்கு நிலைக்களனாயிலங்கும் நமது நாட்டின் பண்டைவளம், கல்வி, அறம், அரசு, வழக்கவொழுக்கம் முதலிய வற்றை மக்கட்கு நினைவூட்டி, இப்பொழுது இன்றியமையாது வேண்டற்பாலதாய உரிமை வேட்கையை அவர்களிடை எழுப்ப வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்கு அடிப்படை தாய்மொழி என்பது எனது உட்கிடை. அன்பர்கள் நெஞ்சில் தாய் மொழி நினைவு நிலைபெறுதல் வேண்டும் என்னுங் கருத்துடன் தமிழ்த் தென்றல் என்னும் முடியை இந்நூலுக்கு அணிந்தேன். தமிழ்த்தென்றலுக்குரிய நாட்டின் உரிமை குறிக்கும் ஒருநூலென இதைக்கொள்க. ஈண்டுத் தென்றல் ஆகுபெயர்.5 தமிழர் மாநாடு 1925 நவம்பர் 21, 22 ஆம் நாள்களில் காஞ்சியில் தமிழ்மாகாண காங்கர சார்பில் 31 ஆவது தமிழர் மகாநாடு நிகழ்ந்தது. அந் நிகழ்ச்சி பற்றிய கட்டுரை 69 பக்க அளவில் நீண்டது. அதன் எழுவாய் முதல் 25 பக்கங்கள் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழிலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு என்பவை பற்றியவாம். தமிழிசை பற்றிய திரு.வி.க.வின் கருத்துகள் 3 ஆம் தமிழிசை மாநாட்டுத் திறப்பு மொழியாக (23.12.1945) வெளிப்பட்டுளது. இவ்விரண்டு கட்டுரைகளிலிருந்தும் சிலச்சில கருத்துகளை அகழ்ந்து இவண் பெய்யப்படுகிறது. தமிழர் தொன்மை .இப்பொழுதுள்ள இந்துமகாசமுத்திரம் என்னும் பெரு நீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்ததென்றும், ஆண்டே மக்கள் தோற்றம் முதன்முதல் உற்றதென்றும் அந்நிலம் பின்னைக் கடலால் விழுங்கப்பட்டதென்றும் ஆசிரியர் எர்னட் ஹெக்கல், காட் எலியட் உள்ளிட்ட அறிஞர் பலர் தமது ஆராய்ச்சியில் கண்ட உண்மையை உலகுக்கு உணர்த்தியிருக்கின்றனர்.6 நாடு என்பது வெறும் மண்ணைமட்டும் குறிப்பதன்று என்பதும் அம் மண்ணில் வாழ்மாந்தரது வழக்க ஒழுக்கம் முதலியன கொண்ட ஒன்றென்பதும் கருத்தில் இருத்தத்தக்கன.7 தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள். தமிழ் தழீஇய சாயலவர் என்றும் தமிழ்சேர்காஞ்சி என்றும் புலவர் இனிமை என்னும் பொருள்படத் தமிழ் என்னுஞ் சொல்லை ஆண்டிருத்தல் காண்க. பழமை மக்கள் இயற்கையிலூறும் தமிழையே பின்னைத் தாங்கள், அவ்வியற்கைப் பொருளுக் கிட்ட சொன்மொழிக்கும் வழங்கினர் போலும்.8 நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தங்கொண்ட நாடு இந்நாடு ஆ! ஆ! இது நினைவிலுறும்போது உறும் இன்பத்தை என்னென்பேன்! v‹bd‹ng‹!9 இன்பத் தமிழ்நாட்டிற் பிறந்தநாம் இதுபோழ்து தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே; காரணமென்ன? உரிமை இழந்தோம்; தமிழை மறந்தோம்; மீண்டும் உரிமை உணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும்? தமிழ்த்தாயிடம் செல்வோமாக; அவள் சேவையால் உரிமையுணர்வு பெறலாம். தமிழ்மக்களே; சேவைக்கு எழுங்கள்; எழுங்கள்;10 தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அரசு, பிறப்பொப்பு, பெண்மக்கள்; இவற்றை விளக்கிய திரு.வி.க. இறைமை இயற்கையை வடிக்கிறார். இறைமை அவர்கள் (தமிழர்கள்) கடவுளைக் கந்தழி என்னும் பெயரால் வழுத்தினார்கள். கட்டற்ற ஒன்று கந்தழி என்பது. அழுக்காறு அவா வெகுளி முதலிய கட்டுகள் கடந்து விளங்கும் இன்ப அன்பே கந்தழி என்னுங்கடவுள். ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே என்று பின்வந்த தமிழ்நாட்டன்பர், மணிவாசகனார் - அருளியிருத்தலை நோக்குக. அவர், கடவுளை இன்பமே என்றும் அன்பே என்றும் விளித்திருத்தலை ஓர்க. அன்புக் கடவுள் யாண்டில்லை? இயற்கையெல்லாம் அன்புக்கடவுள் வடிவல்லவோ? இயற்கையினின்றும் திரண் டெழுந்த அன்புக் கொழுந்தன்றோ நம் பெண்ணமிழ்தம்? இப் பெண்ணமிழ்தமா காமப்பொருள்? கொடுமை! கொடுமை! மாசுபடர்ந்த மனத்துக்கன்றோ பெண்ணெனும் பெருமை காமப் பொருள்? மாசிலா மனத்தார்க்குப் பெண்ணெனும் பெருமை காதற்கடவுளல்லவோ? பெண்ணோடு கூடி வாழும் வாழ்வன்றோ இயற்கைவடிவான இறையன்பைக் கூட்டும் வாழ்வாகும்? ïa‰ifia ÉL¤J, ïiwtid v›thW fh©lš Koí«?11 கலைகள் இனித் தமிழிலக்கியம், தமிழிசை, தமிழ்மருத்துவம், வானியலாய்வு, ஓவியம், தொழில் இன்னவற்றையெல்லாம் விரித் துரைக்கிறார்: நெடுநிலை மாடத்து இடைநிலத் திருந்துழி என்றும் நிரைநிலைமாடத் தரமியம் ஏறி என்றும் வேயா மாடமும் என்றும், மான்கண்காலதர் மாளிகை இடங்களும் என்றும் இளங்கோவடிகள் தமிழ் மக்களின் கட்டடங்களைச் சிறப்பித் திருக்கிறார்.12 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண்வினை கண்டவர்கள் நந்தமிழ்மக்கள்; கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கியவர்கள் நம் தமிழ்மக்கள்; பாலாவியன்ன மிக மெல்லிய ஆடை நெய்தவர்கள் நம் தமிழ்மக்கள் என அடுக்குகிறார்.13 ஒருமைப்பாடு இத்துணைச் சிறப்பு வாய்ந்த நம் மருமைத் தமிழ் நாடெங்கே? தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கமெங்கே? அன்பெங்கே? அரசெங்கே? வீரத்தாய்மாரெங்கே? தமிழ்த் தாயெங்கே? தமிழர்களே! உங்கள் தொன்மை என்ன? உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை என்ன? உங்களுக்குள் இதுபோது எத்துணைப் பிளவு? எத்துணைப் பிரிவு? நந்தமிழ்த்தாய், கால்வேறு - கைவேறு - தலைவேறு - வேறுவேறாகக் கூறுபட்டுக்கிடப்பதைக் காண உங்கட்குக் கண்ணி ல்லையா? நினைக்க மனமில்லையா? மீண்டும் நீங்கள் பண்டை நிலை எய்த வேண்டாமா? வேண்டுமேல் பழந்தமிழ்நூல்களை ஆராய்ந்து உண்மைத் தமிழ்நாட்டைக் காண எழுங்கள்! vG§fŸ!14 இத்தமிழ் நரட்டவராகிய நாம், பலப்பல சாதியினராய்ப் பலப்பல சமயத்தவராய்ப் பிரிந்து பிளவுபட்டுக் கிடக்கின்றோமே; ஒருமைப்பாட்டுக்கு வழியும் உண்டோ என்று சிலர் வினவலாம். சிலர்கருதலாம் சாதிசமய வேறுபாடுகளைக் கடந்துநின்று நம்மனைவரையும் ஒருமைப்படுத்தி நிற்பது ஒன்றுளது. அதன்மீது நாம் கவலை செலுத்துவமேல் அது வேறுபாடுகளை வீழ்த்தி ஒருமைப்பாட்டை உண்டு பண்ணும். அஃது எது? அதுவே நமது அருமைத்தமிழ்.15 சமய வேற்றுமை, கடைச்சங்கப்புலவர் காலத்திலேயே தலைகாட்டிற்று. அன்னார் சமய வழிபாட்டில் பன்மைப் பட்டு நின்றும், தமிழை வளர்ப்பதில் ஒருமைப்பட்டு நின்றமையான், இவ்வொருமை அப் பன்மையை விழுங்கி, நாட்டை ஓம்பியதை ஆராய்ந்து உண்மைகண்டு ஒருமைப் படுவோமாக. ஆதலால், நம்மை ஒருமைப்படுத்தவல்ல தமிழை வளர்க்க முயல்வோமாக.16 தமிழிசை இனித்தமிழிசை பற்றிய சில குறிப்புகளைக் காணலாம். பரிபாடல் இசைவகுத்துப் பண்ணமைத்துப் பாடப்பெற்றது, பெருந்தேவபாணி, தேவபாணி என்பவை தெய்வம் பராய பாடல்கள். தமிழிசைச்சீர்த்தியைத் திருவிசைப்பா என்னும் பெயரே காட்டப் போதுமன்றோ! தேவாரம். திருவாசகம், நாலாயிரப் பனுவல், திருப்புகழ் இன்னவையெல்லாம் தோன்றிக் கவின் செய்யும் ஒரு மொழியில் இசை இல்லை என்னலாமோ? என் தாய் மலடி என்று ஒரு மடவன் அல்லது வெறியன் கூறுவதற்கும், தமிழிசையென ஒன்றில்லை என்று கூறுவதற்கும் வேறு பாடில்லையாம். சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையொடு பார்த்தவரும், சேக்கிழார் தொண்டர்மாக்கதை கண்டவரும் தமிழிசையென ஒன்று இல்லை என்று நெஞ்சாலும் நினைவரோ? என்செய்வது? நினைவாரும் உளர்! சொல்வாரும் உளர்! வெறிகூர்ந்து தமிழிசை இல்லெனப் பழிப்பாரும் இசைக் கல்லூரிப் பெருமக்களாக உலா வருகின்றனர். இல்லென்பார்க்கே உண்டெனத் தந்த பொறுப்பு, என்னென்ன எதிரிடை வேலை களைச் செய்யா? இந் நிலையிலே தமிழிசை இயக்கம் என ஓரியக்கம் தோன்றுதலும் தமிழிசையை நிலைபெறுத்துதலும் கட்டாயத் தேவையாயிற்று. அவ்வாறு தோன்றியதே சென்னைத் தமிழிசைச் சங்கமாம். அதன் மூன்றாம் விழாவின் திறப்பு மொழியில் திரு.வி.க. கூறிய இசைக்கருத்துகள் சிலவற்றை இவண் இசைக்கலாம். இசை, நுண்மை; உயிர். இதன் விளக்கத்துக்கு ஒரு பருமை உடல் தேவையன்றோ? அப் பருமை உடலே மொழி என்பது மொழி எனில் எம்மொழி? அவ்வந்நாட்டில் இயற்கையாக அமைந்துள்ள தாய்மொழி என்க.17 நாம் தமிழர். நாம் எம்மொழியில் இசையைப்பாடுதல் வேண்டும்? தமிழ்மொழியில் என்று சொல்லலும் வேண்டுமோ? தமிழனுக்குத் தமிழ்ப்பாட்டே சுவைக்கும். மற்ற மற்றவர்க்கு அவரவர் மொழிப்பாட்டே சுவைக்கும். இஃது இயற்கை, இசையில் மொழிப்போரை நுழைப்பது அநாகரிகம். பகைமையைப் போக்க எழுந்த ஒரு கலையினிடைப் பகைமையைப் புகுத்துவது அறியாமை. தமிழ் இனிமை; இசையும் இனிமை; இரண்டினிமையும் ஒன்றுபட்டால் எத்தகைய இன்பம் சுரக்கும்! தமிழிசையின் மாண்பு என்னே! என்னே! தமிழர் திருவே திரு! தமிழிசை தொன்மை வாய்ந்தது; மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்விசை எந்நாளில் தோன்றியது, வளர்ந்தது, முதிர்ந்தது என்று அறுதியிட்டுக்கூறல் இயலவில்லை. அது சரித்திரகாலத்தையுங் கடந்து நிற்பது. பலநாட்டவர் இசைநுட்பம் இன்னதென்று தெரியாது திரிந்த காலத்தில், தமிழ்நாட்டவர் இசை நுட்பத்தைச் செவ்வனே தெளிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பலபடக் கிடக்கின்றன. தமிழர் கோயில்களும், மறைகளும், காவியங்களும், ஓவியங் களும் பிறவும் எடுத்துக்காட்டுகளாக இலங்குகின்றன. தமிழ்நாடே ஓர் இசை நிலையம் என்று சுருங்கச் சொல்லலாம்.18 (இசை) மன்றங்கள் வெறும் விளம்பரக் கூடங்களாதல் கூடாது. அவற்றில் ஆவேசம், வெறி, வகுப்புப் பிணக்கு, மொழிப்பூசல், கட்சிப்போர் முதலிய பேய்கள் நடம்புரிதலாகாது. பேய்க்கூத்தால் இசை ஆக்கம் பெறாது; வசையே ஆக்கம் பெறும். சில மன்றங்கள் திங்கட்கொருமுறை விழித்து இசைவிருந் துண்டு தூங்கிவிடுகின்றன. சில ஆண்டுக் கொருமுறை விழித்து விழாநிகழ்த்தி உறங்கிவிடுகின்றன; சில கும்பகர்ணனுக்குத் துணை போகின்றன. சோம்பல் ஒழிக; சுறுசுறுப்பு எழுக. ஒவ்வொரு மன்றமும் இசைப்பயிற்சிப் பள்ளியாதல் விழுப்பம்; பிரகாரக்கழகமாதல் சிறப்பு; நூல்வெளியீட்டு நிலைய மாதல் நல்லது; மன்றச் சார்பில் பந்தாட்டம் முதலியன நடை பெறலாம்; கலை ஆராய்ச்சிகள் நிகழலாம்; புதுமை காணவும் முயலலாம்.19 தேவாரம் நாலாயிரப்பனுவல் திருஞானசம்பந்தர், இறைவனை, இயல்-இசை, நாடக மாக்கித் தமிழில் தந்த பெரியார். அவர் தமிழ்த் தோன்றல் - முத்தமிழ் விரகர். உள்ளத்தில் இறைமையும், வாயில் பண்ணும், கையில்தாளமும், காலில் நடமும் கொண்ட ஓர் இசைக்கலை திருஞானசம்பந்தம். அக்கலை அறிவுறுத்திய ஆடலும் பாடலும் கொண்ட இசைநெறி செந்நெறிக்கு மாறுபட்டதென்று சமயவாதிகள் நினைக்குங் காலமும் தோன்றியுள்ளது! வெட்கம்! வெட்கம்! பண்மயமான தெய்வத் திவ்வியப் பிரபந்தம் கோயில் களில் எம்முறையில் ஓதப்படுகிறது? கொலை- கொலை -இசைக் கொலை கோயில்களில் நடைபெறகிறது! கலைநாடு கொலை நாடாகியது. இசைநாடு வசைநாடாகியது. கோயில் பழையபடி கலைக்கூடமாக - இசைக்கழகமாக - தமிழிசைச் சங்கத்தார் உழைப்பரென்று நாடு எதிர்பார்க்கிறது.20 இசைவழியே தமிழ்ப்பாக்களைப் போதிப்பது மரபு. இம் மரபு இதுகாலை வீழ்ந்துபட்டு வருகிறது. மரபைக் காக்க வேண்டுவது தமிழ் ஆசிரியன்மார்கடமை. இக்காலத் தமிழ் ஆசிரியன்மார் சிலர் பாக்களைப் பாடி உரை கூற நாணுகின்றனர். சிலர் தமக்கு இசைஞான மில்லையே என்று வருந்துகின்றனர். நாணமும் வருத்தமும் மரபை அழிக்குமே! பின்னே கண்ணீர் உகுப்பதால் என்ன பயன்? தமிழ் நாடு இதுபோழ்து வழங்குங்காட்சி இரங்கத் தக்க தாயிருக்கிறது. ஒரு சிறு நிலத்துள் எத்துணை வகுப்பு! எத்துணைப் பிளவு! எத்துணைப்பிணக்கு! தமிழ்நிலம் பழையபடி ஒருமைத் தமிழ்நாடாதல் வேண்டும். ஒருமையைக் கோலவல்லது இசை. இசையை - தமிழ் இசையை - ஓம்ப முனைந்துள்ள தமிழிசை இயக்கம், தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் உழைப்பதைத் தனக்குரிய முன்னணி வேலைகளுள் ஒன்றாகக் கொண்டிருக்கு மென்று நினைக்கிறேன்.21 எப்பணியைச் செய்தாலும் எத்துயரைப் பட்டாலும் முத்தர்மனமிருக்கும் மோனத்தே என்பது போல் திரு.வி.க.வின் எப்பணியின் ஊடகத்தும் தமிழ்த் தொண்டு பொதுளியிருந்தது என்பது இக்குறிப்புகளால் விளக்கமாம். 8. நூற்றொண்டு எனது நூற்றொண்டுக்குரிய காலம் பெரிதும் இரவாகியது. எனது கை நள்ளிருள் அலகையாயிற்று.1 திருக்கை கை, அலகையாவானேன்! அலகையாவதுபேய்! நள்ளிருளில் அலைந்து திரிவது என்பது நம்பிக்கை! நள்ளிருளில் அசைந் தசைந்து எழுத்தாட்டம் ஆடிய கை அலகை எனப்பட்டதாம். ஆனால், எழுத்தாளர் கை - அறம்பயில் எழுத்தாளர் கை அலகையோ? திருக்கை என்பதே பண்டை வழக்கு! திருக்கை என்று இருவர்கைகளைப் பழநூல்கள் வழங்கின. ஒன்று உழவர் கை. சான்று; திருக்கை வழக்கம் என்னும் நூல். மற்றொன்று ஏடு எழுதுவார் கை. சான்று; திருப்பதியம் எழுது வார்க்கெனத் திருக்கோயிலில் இடம் பெற்றிருந்த திருக்கைக் கோட்டிக் கல்வெட்டுகள். அத் தெய்வத் திருக்கையோ, அலகை? உவமை எதுவும் செய்யும்! பணிவார்ந்த உள்ளத்தில் முனைப்பிலா உள்ளத்தில் - தம்மைப் பற்றி எழும்பும் உவமை எதுவும் சொல்லும்! நூற்றொண்டு : திரு. வி.க.வின் பொழிவும் நூற்றொண்டே! அரசியலும் நூற்றொண்டே! தொழிலாளர் இயக்கமா, பெண்டிர் விடுதலையா எல்லாமும் நூற்றொண்டே! இன்னும் சொன்னால் அவர் வாழ்வே நூற்றொண்டு ஆதலை வாழ்க்கைக்குறிப்புக் காட்டும்! அவர் கண்ணொளி மங்கியபோதும், படலம் அறவே மறைத்தபோதும், படுக்கையில் கிடந்த போதும், செய்தவையெல்லாம் நூற்றொண்டே! சிலர் வாழ்வு நூலாகும்! சிலர் நூலே வாழ்வாகத் திகழ்வர்! திரு. வி. க நூலே வாழ்வாகத் திகழ்ந்த திருவாளர். திரு.வி.க. இயற்றிய நூல்கள் ஒருதுறைப்பட்டனவா? தமிழின் துறைகள் அனைத்தும் தழுவிய நூல்கள் அவை! கதை நூல்கள். 1. திருக். 552. 3. த.தெ. அணிந்துரை 5, 6. 4. த.தெ. அணிந்துரை 6. 5. த.தெ. அணிந்துரை 7, 8. 6. த.தெ. அணிந்துரை 43. 7. த.தெ. 44. 8. த.தெ. 47. 9. த.தெ. 47. 10. த.தெ. 48. 11. த.தெ. 51. 12. த.தெ. 53, 54. 13. த.தெ. 54. 14. த.தெ. 62. 15. த.தெ. 63. 16. த.தெ. 64. 17. த.தெ. 422. 18. த.தெ. 424. 20. த.தெ. 426-7. 21. த.தெ. 431-2. எழுதுவதில்லையே என்று அன்பர்கள் வினவிய துண்டு. அதற்கும் இன்மையோ மறுமொழி? உண்மையே! கதைநூல் நீங்கள் ஏன் கதைநூல் எழுதல் கூடாது என்று என்னைச் சிலர் கேட்டு வந்தனர். சில பத்திரிகைகளும் விண்ணப்பஞ் செய்து வந்தன. என் பிறப்பும் கதை; வளர்ப்புங் கதை; என் வாழ்க்கை பெருங்கதை; யான் வாழும் உலகம் நீண்ட கதை; எல்லாம் கதைகளே. இவைகளையொட்டி யான் எழுதும் நூல்களும் கதைகளே. யான் கதை நூல் எழுதாமலில்லையே என்று சொல்வேன். நாங்கள் சொல்வது இந்தக் கதையன்று; நாவல் என்று அன்பர்கள் கூறுவார்கள். உலகம், வாழ்க்கை முதலியவற்றைப் பண்டை மூதறிஞர் ஓவியமாகவும் காவியமாகவும் தந்தனர். நாளடைவில் ஓவியம் ஒதுக்கப்பெற்று; அவ்விடத்தில் புகைப் படம் புகுந்தது. காவியம் அகன்றது; அங்கே நாவல் குடியேறிற்று. ஓவியமும் காவியமும் வாழ்க்கையினிடம் விடைபெற்றால் உலகம் என்ன ஆகும்? என்ன ஆகுமென்று கூறலாம்? சாக்கடையாகு மென்று சுருங்கச் சொல்லலாம்.2 பொதுவாக நாவல் உலகம் வாழ்வைப் பண்படுத்தல் அரிது என்று கூறும் திரு.வி.க. யானும் ஒரு கதைநூல் எழுதி யுள்ளேன். அஃது எது? அது நாயன்மார் வரலாறு3 என்கிறார். வரலாறு 1906 இல் கதிரைவேற்பிள்ளை சரிதம் எழுதினார் திரு.வி.க. அதுவே அவர்தம் முதல்நூல். அவர்தம் ஆசிரியர் அன்பில் திளைத்து எழுதிய நூல், அதனை எழுதத்தூண்டியவர் சிந்தாதிரிப் பேட்டை வேதாகமோக்த சைவசித்தாந்த சபையார் நூலை அச்சிட்டவரும் அவரே. நூல் எப்படி வெளிப்பட்டது? அச்சுக் கூடம் அம்மைவார்த்தது. ஈழம் யீழமாயிற்று; சிரோமணி சிரோன் மணியாயிற்று. நூல் மணற்சோறாயிற்று. பிழை மலிவு என் நெஞ்சை எரித்தது. இளமை மனம் எப்படித் துடித்திருக்கும்? v‹gJ âU.É.f Édh!4 பெரியபுராணப்பதிப்பு அடுத்துப் பெரியபுராணம் குறிப்புரை உரைநடை ஆகிய வற்றுடன் பகுதிபகுதியாக வெளிவந்தது. (1907-10) அதன் மீள்பதிப் பொன்றும் 1934 இல் வெளிப்பட்டது. பெரியபுராண முதற் பதிப்பின் போதே திருமந்திரப் பதிப்பொன்றும் வெளி வந்தது. பட்டினத்தார் பாடற்றிரட்டு பொழிப்புரை விளக்கவுரை களுடன் 1913 இல் வரைந்தும் பல்லாண்டுகள் சென்றே உலாப் போந்தது! நூல்கள் : 1917 இல் இதழாசிரியரானது முதல், இதழ்கள் திரு.வி.க. வின் எழுத்தைத் தாங்கின. நூல்களும் தொடர்ந்தன. கால அடைவில் உரைநடை நூல்களைத் திரு.வி.க. பட்டியலிடுகிறார்: 1919 - தேசபக்தாமிர்தம்; 1921 - மனிதவாழ்க்கையும் காந்தியடி களும்; 1921 - என் கடன் பணிசெய்துகிடப்பதே; 1922 - நாயன்மார் திறம்; 1923 - தமிழ்நாடும் நம்மாழ்வாரும்; 1925 - முருகன் அல்லது அழகு; 1925 - சைவத்தின் சமரசம்; 1927 - பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை; 1928 - தமிழ்த்தென்றல்; 1928 - கடவுள் காட்சியும் தாயுமானாரும்; 1929 - தமிழ்நூல்களில் பௌத்தம்; 1929 - சைவத் திறவு; 1929 - சீர்திருத்தம் அல்லது இளமைவிருந்து; 1929 - இராமலிங்கசுவாமிகள் திருவுள்ளம்; 1930 - நினைப்பவர் மனம் 1931 - சமரச சன்மார்க்கபோதம்; 1934 - சமரசசன் மார்க்கத்திறவு; 1934 - சமரசதீபம்; 1935 - தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு; 1935 - சித்தமார்க்கம்; 1936 - சைவ சமய சாரம்; 1937 - நாயன்மார் வரலாறு; 1938 - முடியா? காதலா? சீர்திருத்தமா? 1939 - திருக்குறள் விரிவுரை; 1940- இந்தியாவும் விடுதலையும்; 1942 - உள்ளொளி.5 இவை மட்டுமோ, அறிஞர் திரு.வி.க. நூல்கள். இன்னும் உரைநடை நூல்கள் உள; பாநடை நூல்கள் உள; பிறர் நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகள் உள. அவற்றை அடங்கல் செய்து காட்டியவர் உளர். அவர் அ. நாகலிங்கம்; நூல் - திரு.வி.க. வாழ்க்கையும் தொண்டும் - ஒரு கை விளக்கு. திரு. வி. க. படைத்த நூல்கள் 56. இவற்றுள் பதிப்பித்த நூல்கள் - 8; படைப்பு நூல்கள் -33; பாநூல்கள் - 15. பாநூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 2648. அறிஞர்களைப் பற்றிய தனிப் பாடல்கள் 56. ஆகப் பாடல்கள் 2704. தம் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் - 48. பிறர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் 72. ஆக முன்னுரை களின் எண்ணிக்கை - 120. கட்டுரைத் திரட்டுகளாக வெளிவந்த நூல்கள் மூன்று. அவை தேசபக்தாமிர்தம், தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல் என்பன. அவை முறையே 56, 126, 17 ஆக 299 கட்டுரைகள்.6 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னுடைய நூல்களில் முதல் முதல் படிக்கத் தக்கது மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்பது என்கிறார் திரு.வி.க. அவரே அதனை முதல் முதல் படிக்க வேண்டியதன் காரணத்தையும் சுட்டுகிறார்: ஏன்? அதில் வாழ்க்கையுள்ளதாகலின் என்க7? தமிழுலகுக்குத் தாம் செய்யும் கடனாகவே மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலை எழுதுவதாகக் குறிக்கிறார் திரு.வி.க. காந்தியடிகள் வாழ்விலுள்ள நுட்பத்தையும், அவர் அறிவு றுத்தும் அறத்தையும் தமிழுலகம் உணர்ந்து உய்ய வேண்டு மென்னும் அவா இந்நூலை விரித்தெழுத என்னைத் தூண்டிற்று. இத்தகைக் கடனையன்றி வேறெத்தகைக்கடனைத் தமிழுலகிற்கு ஏழையேன் ஆற்ற வல்லேன்!8 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் என்னும் திருக்குறளுக்குப் பொருளாக வாழ்ந்தவர் காந்தியடிகள். திருக்குறளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழைக் கற்றவர் காந்தியடிகள். தொழுத கையுள்ளும் படை யொடுங்கும் என்பதன் மெய்ப்பாக வாழ்வை நிலைபெறுத்தியவர் காந்தியடிகள். இத்தகைய பெருமகனார் வரலாற்றை எழுதும் தமிழ்த் திரு.வி.க. - வள்ளுவ வாய்மொழித் திரு.வி.க. காந்தியடிகள் மாட்டுத் திருக்குறள் நுட்பம் காணாரோ? திருக்குறள் என்ன அறிவுறுத்துகிறது? மனிதன் பிறர்நலம் கருதும் அருளாளனாய் வாழ்தல் வேண்டும் என்னும் உண்மையை அறிவுறுத்துகிறது. இதனைத் திருக்குறள் அதிகார முறை வைப்பே இனிது விளக்கும். திருக்குறளின் நுட்பமும், மனித வாழ்க்கை பிறர்க்குக் கிழமை பூண்டொழுகும் இயற்கை நோக்குடைய தாயிருத்தல் வேண்டும் என்பதே9 எனத் தெளிகிறார். குறள் வாய்மை, மெய்யறிவு, பொறுமை ஆகியவற்றை அகழ்ந்து அகழ்ந்து பெய்கிறார். ஏன்? காந்தியடிகள் வாழ்வு, வள்ளுவ வாய்மொழி வழிப்பட்டது என்னும் உணர்வு கூர்தலாலேயாம். தாய்மொழிப்பற்றில் தலைநின்றவர் திரு.வி.க. அப் பற்றில் இணையிலா ஒரு நிலையுற்றவர் காந்தியடிகள். தம்மைப்போல் பிறரும் வாழ வாழ்ந்து வழிகாட்டிய அடிகளார் தமிழ்நாட்டு மயிலாடுதுறைக்கு எழுந்தருளிய போது அவர்தம் பணித்திறம் பாராட்டி வரவேற்பு மடல் வழங்கப்பட்டது. எம்மொழியில் தரப்பட்டது? தந்தவர்கள் தாய் மொழியிலா? இல்லை! வர வேற்புரையைப் பெறும்அடிகளார் தாய்மொழியிலா? அதுவும் இல்லை! ஆங்கில மொழியில். அது குறித்து அடிகளார் தம் உரையில் அக்கூட்டத்திலேயே குறிப்பிட்டார்: வரவேற்பு ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருத்தல் காண்கிறேன். இந்திய தேசியக் காங்கரஸில் சுதேசித் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் சுதேசிகள் என்று கருதிக்கொண்டு இவ்வறிக்கையை ஆங்கில மொழியில் அச்சிறுத்தினால் நான் சதேசியல்லன். ஆங்கிலமொழிக்கு மாறாக ஒன்றும் யான் சொல்வ தற்கில்லை. நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று அவற்றின் சமாதிமீது, ஆங்கிலத்தை நிலவச் செய்வீர்களாயின், நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாக மாட்டீர்கள் என்று சொல்வேன் (கேளுங்கள்; கேளுங்கள்). எனக்குத் தமிழ்மொழி தெரியா தென்று நீங்கள் உணர்ந்தால் அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும், அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கையை அளித்து,. அதை மொழி பெயர்த்து உணர்த்தியிருப்பீர்களாயின் உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவர்களாவீர்கள், என்றும், மற்றோரிடத்தில் தாய் மொழியின் வழிப் பிள்ளைகட்குக் கல்விபயிற்றல் மிக முக்கிய மானது. தாய்மொழியை அவமதிப்பது நாட்டுத் தற்கொலையாகும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.10 இதனை எடுத்துரைக்கும் திரு.வி.க. அடிகளார் தாய்மொழி பற்றி உரைத்துள்ள மணிகளை அகழ்ந்து அகழ்ந்து மாலையெனத் தொடுத்தமைக்கிறார். அவற்றுள் சில வருமாறு: ஐம்பதாண்டுகளாகத் தாய்மொழி வாயிலாகக் கல்வியறிவு பெற்றிருப்போமாயின், நம் மூத்தோரும் ஊழியரும் சுற்றத்தாரும் நமது கல்வியறிவில் கலப்புற்றிருப்பர். ஒருபோஸோ ஒரு ராயோ கண்டுவரும் புதுமைகள் இராமாயண பாரதம் போல ஒவ்வொரு வீட்டுச் செல்வங்களாகியிருக்கும்.11 தாயின் அமுதமொழியால் பெற்ற பயிற்சி அயல் மொழி வாயிலாகப் பயிற்சி தரும் பள்ளிக்கூடத்தில் அற்றுப் போகிறது. பள்ளிக்கூட வாழ்வையும் வீட்டு வாழ்வையும் பிணித்துள்ள பாசத்தை அறுக்கிறவன் நாட்டின் பகைவன். இத்தகைக் கல்வி முறையில் நாம் வீழ்ந்து கிடப்பதால் தாயை வஞ்சித்தவர் ஆகிறோம்.12 ஆங்கிலம் பயில நாம் செலுத்தும் பேரவாவினின்றும் விடுதலையடைவது, நமது சமூகத்துக்குப் பெருந்தொண்டு செய்வ தாகும். சிறு பள்ளிகளிலும் பெருங்கழகங்களிலும் ஆங்கிலமொழி வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. அது நாட்டின் பொது மொழியாகி வருகிறது. நமது உயரிய கருத்துகளெல்லாம் அம்மொழியில் வெளியிடப்படுகின்றன. உயர்ந்த குடும்பங்களில் ஆங்கிலம் இனித்தாய்மொழியாகும் என்று லார்ட்செம்பர்ட் நம்புகிறார்.13 அயல்நாட்டுக்கல்விமுறை நம் பிள்ளைகளை நமது நாட்டிலே அயலவராக்கிவிட்டது. இக்கால முறை பெருங் கொலைத் துன்பமாயிருக்கிறது. அயல்மொழி வாயிலாகக் கல்வி பெறுவதினின்றும் நிறுத்தி மாறுதல் நிகழ்த்தவேண்டி ஆசிரியன் மாரை விலக்கிவிடுவேன். பாடப்புத்தகங்கள் ஆயத்தப்படுத்து மளவுங் கூடநான் பொறுத்திரேன்.14 தாய்மொழிகள் நசுக்கப்படுவது காண என்னால் பொறுத்தல் முடியவில்லை. தாய்தந்தையர் தம் குழந்தைக்கும், நாயகன்மார் தம் நாயகிமார்க்கும் கடிதங்கள் தாய்மொழியில் எழுதாது ஆங்கிலத்தில் எழுத எண்ணுவது குறித்து என் மனம் பொறுக்கவில்லை.15 குழந்தைகட்கு ஆங்கிலக் கல்வி போதிப்பதைக்குறித்து எனக்கும் அன்பர் போலக்குக்கும் பெரும்பெரும் வாதம் நிகழ்ந்த துண்டு. குழந்தைமையிலேயே ஆங்கிலத்தில் கருத்துக் களை நினைக்குமாறும் வெளியிடுமாறும் பிள்ளைகளைப் பழக்கும் இந்தியப்பெற்றோர் குழந்தைகளையும் நாட்டையும் வஞ்சிக்கிறார் என்பது எனது உட்கிடக்கை. அவர் குழந்தைகளை நாட்டு வழக்க ஒழுக்கங்களினின்றும் விலக்கி நாட்டுச் சேவைக்கே அருகரல்லா தவராகச் செய்கிறார். ஆதலால் யான் குழந்தைகளுடன் தாய் மொழியிலேயே பேசுவதென்ன உறுதிகொண்டுள்ளேன். 16 காந்தியடிகள் தாய்மொழி பற்றிக் கூறிய கருத்துக்களைத் திரட்டியுரைத்த திரு.வி.க. அவர்க்கும் தமிழ் மக்களுக்கும் இருந்த தொடர்பையும், தமிழ்மொழிமேல் அவர் கொண்டிருந்த பற்றையும், திருக்குறளைத் தமிழ்வழியே பயில அவர்க்கு எழுந்த வேட்கையையும் விரித்துக்கூறுகிறார். அவற்றைக் கூறுங்கால், இரண்டு குறிப்புகளை முன் வைக்கிறார். ஒன்று தென்னாப் பிரிக்காச் சிறை யநுபவச் செய்தி. மற்றொன்றுதூத்துக்குடியில் 12, 10, 27 இல் அளிக்கப்பட்ட வரவேற்பறிக்கைக்கு இறுத்தவிடை: முன்னது :- (தென்னாப்பிரிக்கப்) போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப்போல வேறெவ்விந்தியரும் புரியவில்லை. அவர்கட்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழி பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம் மொழியைப் பயிலப்பயில அதன் அழகை உணரலானேன். அது மனங்கவரும் ஓர் இனியமொழி. தமிழ் மக்களுள் பண்டை நாளிலும் - இந்நாளிலும் கூட பல அறிஞர் இருந்தனர் - இருக் கின்றனர் என்பது அம்மொழியின் அமைப்பானும் பயிற்சியானும் அறியக் கிடக்கிறது. இந்தியாவில் ஓரினம் ஏற்பட வேண்டுமானால் சென்னை மாகாணத்துக்கு அப்புறமுள்ள வரும் தமிழுணரல் வேண்டும்.17 பின்னது :- ஆங்கிலம் பயில்வதற்கு முன்னர்த் தமிழ் மொழி பயிலவேண்டுமென்று யான் பன்முறை பகர்ந்திருக்கிறேன். 1915 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்திலும் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ்மக்களை வேண்டிக்கொண்டேன். இற்றைக்குப் பத்தாண்டுக்கு முன்னர் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி அயல்மொழி வாயிலாகப் பிள்ளைகட்குக் கல்வி புகட்டலாகாதென்று கிளர்ச்சி செய்தேன்; தாய்மொழியில் பேசுமாறும் தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் மக்கட்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன். திருக்குறளைப்பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகட்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டுமென்று என்னுள்ளத்தெழுந்த அவாவேயாகும். தமிழ் மொழியில் புலமை பெறுதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன் அருளினானில்லை. அது குறித்து யான் உறும் வருத்தத்துக்கோர் அளவில்லை. அவரவர் அவரவர்க்குரிய தாய்மொழி வாயிலாகவே கல்விபெறல் வேண்டும். தமிழ்மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழ்பயில வேண்டுவது அவர்களது இன்றியமையாக் கடமை. தமிழர் தம்மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருதல் வேண்டும். தமிழ் நாட்டில் ஓரிடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற் பறிக்கை வழங்கப்பட்டது. அதை உடனேயான் மறுத்துரைத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.18 அடிகளார் உரைத்த தாய்மொழிச் செய்திகளையும் தமிழ்ச் செய்திகளையும் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் திரு.வி.க. உரைப்பானேன்? அடிகளார் வாழ்வியல் நயத்தைக் கூறவந்த செய்தியளவோ இதன் அளவு! திரு.வி.க.வின் கொள்கை, கோட்பாடுகளின் அளவும் கடைப்பிடியும் இவையாகலின் பயில எடுத்துரைத்தார். பிறர் பிறர் அடிகளார் பற்றி எழுதிய நூல்களில் இவ் விளக்கங்கள் உண்டோ? நோக்குவார் நோக்கு, நோக்கப்படும் பொருளொடும் ஒன்றியிருக்குமானால் ஊற்றென, ஆறென, வெள்ளமெனப் பெருக்கெடுக்காதோ? அடிகளார் தமிழ்வாழ்வைத் தமிழ்வாயிலாய் வெளிப்படுத்தக் கிளர்ந்த திரு.வி.க. தமிழ்மக்களை முன்னிறுத்திச் சில முத்துகளைப் பெய்துள்ளார். அப் பெய்வு திரு.வி.க. என்னும் முகில், தமிழ்ப்பயிர் வளப்பயன் வழங்கப்பொழிந்த மழையெனத் திகழ்கின்றதாம்: தமிழ்நாட்டில் பிறந்த அடியேன் தமிழ்மொழியில் காந்தியடிகள் வாழ்க்கை நுட்பத்தைச் செப்பப்புகுந்தமையால், காந்தியடிகள் தமிழைப் பற்றியும் தமிழ்மக்களைப் பற்றியும் கொண்ட கருத்துக்களை ஈண்டுப் பொறிக்கும் வாயிலாகத் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்திச் சில உரைகள் பகரவிழைகிறேன்: ஆங்கிலம் பயின்ற தமிழ்மக்களிற் பெரும்பான்மையோர் தமிழ்த்தாயை மாசு படர்ந்த துச்சிலில் இருத்தி அவளுக்கு உணவும் உடையும் அளியாது, அவளை வருத்தி, அயல் மாதை நடுவீட்டில் அமர்த்தி, அம் மாதுக்கு நல்லுணவும் உடையும் தந்து, மலர் சூட்டி அவளை வழிபடுதல் எவரும் அறிந்ததொன்று. இது நம்மக்களின் அறிவைப் புலப்படுத்துகிறதா? அறியாமையைப் புலப்படுத்து கிறதா? தமிழ்மக்களே! கேளுங்கள். தமிழின் தொன்மை என்ன! தமிழ்ப்பாக்களின் வனப்பென்ன? மயிர் சிலிர்க்கின்றது. மிகத் தொன்மைவாய்ந்த ஒரு பெருந்தனி மொழியன்றோ நந்தமிழ்? தமிழனாகப் பிறந்து தமிழ்ச்சுவையுணர்ந்த ஒருவன் வீடுபேற்றையுங் காதலியான். அவனுக்கு வீடுபேறு தமிழ்மொழி இன்பமேயாகும். அவன் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்து தமிழ்ச்சுவை மாந்தி இன்புறவே விரும்புவான். சிறியேன் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டுத் தொண்டு புரிந்த காலத்தில் 1921 ஆம் ஆண்டில் நேர்ந்த ஆறு திங்கள் பெருங்குழப்பத்தில் கத்திகளிடையும் குண்டுகளிடையும் நுழைய நேர்ந்தபோதும் எனது உள்ளத்தில் கலித்தொகையும் திருக் கோவையும் இன்முகங்காட்டி மறைவதுண்டு. அத்தகைக் கலித்தொகையும் திருக்கோவையும் வேறு மொழி நூல்களாக இக்காலத் தமிழ்மக்களுக்குத் தோன்றுகின்றன. இக்காலமன்றோ வறுமைக்காலம்.19 1918 இல் தேசபக்தன் ஆண்டுமலரின் ஒரு கட்டுரை யாயுருப் பெற்றது. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். 1921 இல் ஐம்பத்தொரு பக்கங்கொண்ட ஒரு சிறு நூலாக முதல் முதல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பில் ஏறத்தாழ ஐந்நூறு பக்கங் கொண்ட விரிந்த நூலாயிற்று.20 அதன் பிற் பதிப்புகளிலும் செய்திகள் இடை இடை விரிந்தன. அதனால் தொகை, வகை, விரி என்னும் மூவிலக்கணமும் முழுதமைந்த தொரு நூல், மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என அமைவோம். பெண்ணின் பெருமை ஒரு நூலை இயற்றுவார்க்கு ஒரு நிறைவு ஏற்படுதல் வேண்டும். அந் நிறைவு யாது? அவர் இயற்றிய நூலால், அவர்தம் நோக்கு நிறைவேறியிருத்தல் என்பதாம். அதுவும், பிறர் பகுத்தாய்ந்து கூறுவதினும், அந் நூலாசிரியர் தம் வாழ்விலேயே கண்டு களிப்புற வாய்ப்பது தனிப்பெருஞ் சிறப்பாம். அத்தகு சிறப்பினைத் தந்த அருமை நூல் பெண்ணின் பெருமை என்பதாம். பெண்ணின் பெருமை என்ற நூலை எந்நோக்குடன் இயற்றினேனோ அந்நோக்கு நிறைவேறியே வருகிறது. அந்நூல் ஒருபெரும் அறப்புரட்சியை நுண்மையாகச் செய்து வருதல் கண்கூடு. அப் புரட்சியை இப்பிறவி காணும் பேறு பெற்றது. பெண்ணின் பெருமை என் வாழ்க்கையில் ஒருவித வெற்றியை விளைத்ததென்று நினைக்கிறேன். பெண்ணின் பெருமை பிறங்கப் பிறங்க நாடு விடுதலை யடைதல் ஒருதலை. இது வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. (139). பெண்ணின் பெருமையின் எட்டாம் பதிப்பின் முகப்பு இந்நூல் செய்த அறப்புரட்சியை விரித்துரைக்கின்றது: முதற்பதிப்புத் தலைகாட்டியபோது எதிர்ப்புப் பெரிதும் எழுந்தது; இப்பொழுது எதிர்ப்பு மறைந்துவிட்டதென்று கூறலாம். இந்நூல் வெளிவந்த பின்னைத் தென்னாட்டில் பெண்ணுரிமைக்கெனத் தோன்றிய இயக்கங்கள் பல; சங்கங்கள் பல; முயற்சிகள் பல; மேலுங் கலப்பு மணங்களும் கைம்மையர் மணங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன; இளைஞருள் ஒருவிதப் புத்துணர்வு தோன்றியிருக்கிறது; மூலை முடுக்குகளிலும் பெண்ணின் பெருமை பேசப்படுகிறது. பெண்ணுலகம் விழித்துக் கொண்டது என்று சுருங்கச் சொல்லலாம். இந்நூல், இன்னும் பல நலன்களைச் செய்யும் என்றே நம்புகிறேன். எனது குறட்காதல், முன்னே 1927ஆம் ஆண்டில் பெண்ணின் பெருமை என்னும் நூலாகத் திரண்டது. இப்பொழுது திருக்குறள் விரிவுரையாக உருக்கொண்டு வருகிறது எனவரும் திருக்குறள் விரிவுரையின் அணிந்துரைப்பகுதி, பெண்ணின் பெருமை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஓர் ஆராய்ச்சி நூல் என்பதை விளக்கம். திருக்குறள் விரிவுரை திருக்குறள் விரிவுரை எவ்வாறு எழுந்தது? சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்தசனசபையில் நக்கீரர் கழகச் சார்பில் நிகழ்ந்த தமிழ் வகுப்பில் 1915 ஆம் ஆண்டில் திருக்குறள் பாடம் நடத்தினார் திரு.வி.க. திருவல்லிக்கேணி தியோசாபிகல் சங்கக் கிளையில் 1928 ஆம் ஆண்டில் திருக்குறள் வகுப்பு நடத்தினார். முன்னை யிடத்தில் திருக்குறளுக்குக் காலத்துக்கேற்றதோர் உரை காணவேண்டு மென்னும் விருப்பம் எழுந்து, பின்னை யிடத்தில் முதிர்ந்தது. தென்காசித் திருவள்ளுவர் கழகப் பொழிவின்பின் குற்றாலச் சண்பகாடவி உரையாடல் 1936 இல் நிகழ்ந்தது. அது முன்னை வேட்கையை மீதூரச் செய்தது. அந்நாளில் திரு.வி.க. நடத்தி வந்த நவசக்தி முதற்பக்கத்தில் பிறந்து, தமிழ்நூல் உலாக்கொண்டது. இது நூல்வந்த வரலாறு (அணிந்துரை 6, 7). திருக்குறளின் தோற்றுவாய் என்ன? அதனை, விரிவுரையின் தோற்றுவாய் இரு தொடர்களால் படம் பிடித்துக் காட்டுகிறது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே உலகமும் உடன் தோன்றுகிறது. உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்பவை அவை. திருக்குறளை ஓர் இனிய குளிர் தருவாகக் காண்கிறார் திரு.வி.க. திருக்குறள், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் விதையினின்றும் எழுந்த ஓர் இனிய குளிர்தரு. முதற்பாட்டு விதை. பாயிரம் முளை. அறம் பொருள் இன்பம் - என்னும் முப்பாலும் கவடுகள். இயல் அதிகாரம் முதலியன, கோடு துணர் முதலியன. திருக்குறள் நூல் தரு. என்பது அது.21 முதல் நான்கு அதிகாரங்களையும் பாயிரமாகக் கொண்டு (நானூறு பக்க அளவில்) உரை விரிகிறது. அதிகாரத்திற்கு நூறுபக்கமேனி. இல்வாழ்க்கைமுதல் இன்சொல் ஈறாம் ஆறு அதிகாரங் களும் இல்வாழ்க்கை இயலாய் 380 பக்கமாக உரை விரிகிறது. அதிகாரத்திற்கு ஏறத்தாழ அறுபத்து நான்கு பக்கமேனி. இளமையில் உரையியற்றுதலில் ஈடுபட்டிருப்பின் நலமெனத் தோன்றுதலுண்டு. ஆயின் அவ்விளமையில் உரை இயற்றப் பட்டிருப்பின், இந்நாளில் அமைந்த முறையில் விரிவுரை அமையுமா? என்றும் ஐயம் அவருக்கே உண்டு.22 திருக்குறள் விரிவுரை தமிழ் மண்ணைத் தளிர்க்கச் செய்தது. அம்மட்டோ! தமிழ் கற்ற செருமானிய அறிஞர் கெய்தான் உள்ளத்தைத் தழுவியது! உணர்வைத் தூண்டியது. அத்தூண்டல் வாளா அமையாமல் திருக்குறள் விரிவுரைப் படைப்பு நாயகரைப் பெர்லின் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பேராசிரியப் பணியேற்க வேண்டி நின்றது. யான் என்ன பதிலிறுத்தேன்? மறுபிறப்பில் என்று பதிலிறுத்தேன்23 என்பது திரு.வி.க. வைத்த முற்றுப்புள்ளி. திரு.வி.க. தம் நூல்களுக்கும் பிறர் நூல்களுக்கமாக எழுதிய அணிந்துரை முன்னுரை முதலாயவற்றைத் தொகுத்து அடைவு செய்துவெளியிட அவர்க்கே ஒரு கருத்து இருந்தது. அப்பணி இன்றேனும் செய்தற்குரிய சீர்மையுடையதே. அவர் எழுதிய அணிந்துரைகளுள் ஒன்று அறிஞர் மு. வ. எழுதிய திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கத்திற்கு உரியது. பதினெட்டுப் பக்க அளவில் விரியும் அவ்வணிந்துரை, நூலையும் உரையையும் பற்றிய அரிய பிழிவாகவே அமைந் துள்ளது. திருக்குறள் சரங்கமாதலையும், மு.வ. திருக்குறட் சுரங்கத்தில் இருந்து அகழ்ந்து அருமணி எடுப்பவராதலையும் இணைத் தெழுதும் அருமை கருதத்தக்கது: திருக்குறள் ஒரு சுரங்கம். அஃதுஅவ்வக்கால உலகைப் புரக்கும் பொருள்களை அவ்வப்போது வழங்கும் பெற்றியது. அதனின்றும் இதுகாறும் அறிஞரால் எடுக்கப்பட்ட பொருள் சிலவே. மிகச்சிலவே. இவ்வேளையில் திரண்டுவரும் புது உலகமும், இனித் திரளப்போகும் பலவகை உலகங்களும் ஏற்கத் தக்க பொருள்கள் இன்னும் திருக்குறளில் மிடைந்து கிடக்கின்றன. திருக்குறட் சுரங்கம் வற்றாதது என்பது எடுப்பு (10) ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந் தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியதே என்பது முடிப்பு (14). முருகன் அல்லது அழகு இயற்கை இன்பத்துக்கென்று யாக்கப்பெற்ற நூல் முருகன் அல்லது அழகு. அதில் காவியம் ஓவியம் இசை அழகு ஆயவை நடம்புரிதல் கண்கூடு. முருகன் முருகு என்பவற்றைத் தமிழர் எவ்வணம் கொண்டனர்? இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர்; உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ் நாட்டார் கொண்டனர். முருகை மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர். காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரனுக்கு விடுத்த, ஒரு கட்டுரை முருகன். அம் முருகனே, மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் போல் பெருக் குற்றான். அதன் பன்னிரண்டாம் பதிப்பு 1982 -இல் வெளிவந்துள்ளது. நூலுருக்கொண்ட சிறிய முதற்பதிப்பு 1925-இல் வெளிவந்தது. முருகு வழிபாட்டை நூல்வழிபாடாகத் திரு.வி.க. நாட்டு கிறார்: இயற்கை என்னும் எனது ஆருயிர் அன்னைக்கும், அவ் வியற்கையை விடுத்து என்றும் நீங்காத அழகு என்னும் அப்பனுக்கும் இந்நூலைக் கோயிலாக்கித் தமிழ் மலர் தூவி ஒல்லும் பகைவழிபாடு நிகழ்த்தினேன் என்கிறார் (நூன்முகம்). முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பென்ன? அவனை வாழ்த்தத்தக்க மொழி யாது? முருகன் எல்லா மொழிகட்கு முரிய இறைவன். ஆயினும் அவனது வடிவாகிய இயற்கையின் இனிமையே தமிழ் என்னும் ஒரு மொழியாக நிலவுகிறது. இம் மொழியால் அவனைப் போற்றுவதும் பாடுவதும் சிறப்புடைமையாகும். பண்டைத்தமிழர் இயற்கைவாழ்விலேயே தோய்ந்து கிடந்தவர். இயற்கை அவர்க்கு இனிமையூட்டியிருக்கும். அந்நாளில் இனிமை என்பது தமிழ் தமிழ் என்று வழங்கப்பட்டு வந்தது. இயற்கை இனிமையைத் தமிழ் என்று கொண்ட அப் பழைய மக்களிடை இயற்கைப்பொருள் வேற்றுமை குறிக்கவும், வேறுபல வாழ்வுத்துறை குறிக்கவும் சொற்கள் அரும்பியபோது அவர்கள் அச் சொற்கட்கும், அச்சொற்களாலாகிய மொழிக்கும் இயற்கை இனிமையத் தாங்கள் தமிழ் என்று வழங்கி வந்த வழக்கத்தை யொட்டியே தமிழ் என்னும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இயற்கை, முருகன் உடல். இயற்கைத் தமிழை (இனிமையை) என்னென்று சொல்வது? இயற்கை முருகனைத் தமிழ் முருகன் என்று கூறல் பொருந்தும். ஆகவே முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு கூர்த்த மதியால் உன்னத்தக்கது. தமிழ் முருகனைத் தமிழாலன்றோ போற்றுதல் வேண்டும்? ஏத்துதல் வேண்டும்? பாடுதல் வேண்டும்? முருகனடியார் பலர் முருகனைத் தமிழ்ப்பாமாலையால் அணிசெய்து செய்து அன்பால் குழைந்து குழைந்துருகினர். இரும்பு நெஞ்சைக் குழைக்குந் தன்மையும், வெம்மையுளத்தைத் தணிக்கும் தண்மையும் இன்பத் தமிழுக்கு உண்டு.24 இந்தியாவும் விடுதலையும் முதலியன: இனித் தொழிலாளர் இயக்கத்தைத் தேங்கவைத்துள்ள இடம் இந்தியாவும் விடுதலையும். இளந்தைப் பருவத்தர் எழுச்சி வாழ்வுக்கெனக் கலைக்கழக மேடைகளில் பொழிந்தது இளமை விருந்தாம் சீர்திருத்தம். உலகியலாக விரிந்த பார்வைக்கும், கிறித்து பெருமான் மறைமொழிச்சுரப்புக்கும் பாதிரி மதத்துக்கும் உண்மைக் கிறித்துவத்துக்கும் உள்ள வேற்றுமை விளக்கத்துக்கும் வைப்பகமாம், முடியா? காதலா? சீர்திருத்தமா? தம் வரலாற்றுக் குறிப்பாகவும், தமிழகச் சான்றோர் பலர் தம் வாழ்க்கைக் குறிப்பு களின் உறையுளாகவும் விளங்கும் வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆகிய இன்னவெல்லாம் விரிந்த நூல்களாம். இனிச் சிறு சுவடிகளும், பாடல்நூல்களும் உருவால் சிறியவை எனினும் உணர்வாலும் உள்ளுறையாலும் பெரியவை என்பது வெளிப்படை. பொதுமை வேட்டல் செய்யுள் நூல்களுள் ஒன்று பொதுமை வேட்டல். திரு.வி.க அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒருநூலால் அறிய வேண்டின் அது பொதுமை வேட்டல் என்னும் நூல் என்பார் மு.வ.25 தெய்வநிச்சயம் முதல் போற்றி ஈறாக 44 தலைப்புகளில் இயல்வது அது. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் என்னும் நூலில் ஒரு பாடல் தமிழின் பெருமையையும் தமிழர் சிறுமை யையும் மிக எளிமையாய் உரைக்கின்றது. தமிழினைப்போல் உயர்ந்த மொழி தரணியில்வே றெங்குமிலை தமிழனைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே என்பது அது. பொருளும் அருளும் முதலியன: மார்க்சியச்சாரம் பிழிந்து காந்தியத் தேன்கலந்த நூல் பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும். என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன் எழிலுடல் ஓம்பலும் வேண்டேன் மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும் என்று சென்னிமலை முருகனிடம் பன்னுகிறார் திரு.வி.க. இது, முருகன் அருள்வேட்டல். என்னுள்ளே நீபிறந்தாய் ஏசுபெருமானே உன்னுள்ளே யானிருந்தேன் உற்று என்பது கிறிதுவின் அருள்வேட்டல் (1:8) தம்முள் இறைபுகப் பெறுதலே, இறையுள் தாம் புகுதல் என்பதை எளிமையாயும் அருமையாயும் காட்டும் காட்டாக்கலை விளக்கம்! குறள், கட்டளைக்கலித்துறை, கலித்தாழிசை, எண்சீர் விருத்தம், எழுசீர்விருத்தம், அறுசீர் விருத்தம், கண்ணிகள் என்னும் எழுவகை யாப்பால் எண்பது பாடல்களால் இயல்வது அது. உயிரின் விடுதலைக்குரிய வழிகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று சிறந்த ஒன்று சித்தந்திருத்தல் அல்லது செத்துப் பிறத்தல். இதனை விளக்கும் நூல், சித்தந்திருத்தல் அல்லது செத்துப் பிறத்தலாம். அழுகை பாவம் அழிக்கும் மருந்தே (27) இன்ப துன்ப இருப்பிடம் பிள்ளை (111) நல்லான் பிறர்குறை சொல்லான் (175) சித்தம் திருந்தினன் செத்துப்பிறந்தனன் (188) தனித்தனி மனிதனைத் தலையில் தூக்கி வெறிகொண் டாடல்அறிவா காது கொள்கை வளர்க்கக் கொள்க அன்பை (248-50) இன்ன மணிமொழிகள் மிடைந்தது சித்தந் திருத்தலாம். அகவல் அடிகள் 369 கொண்டது. முதுமை உளறல் உடல் நலம் குலைந்தது. கண்ணொளி குன்றியது. முதுமை அடர்ந்தது; பொழுது பெரிதும் படுக்கையில் கழிகிறது என்னும் நிலையில் கருத்தொளித் துணையால் வெளிப்பட்ட பாநூல் முதுமை உளறல். ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலன் விளக்கம்(24) உளறலுக் குண்டோ ஒழுங்கும் வரம்பும் இளமை உளறுமோ? உளறினும் வளமே! முதுமை உளறும் புதுமை பூக்குமோ? இவை நூல் வெளிப்பாட்டு நிலைவிளக்கம் (37-9) மாதவிமீதும் தீதெணாக் கண்ணகி (59) சேக்கிழார்அருளிய பாக்கள் மனநூல் (66) உடையவர் கேளாமல் உரிமையன்பால் வழங்கும் சான்றிதழ்கள் இவை; மனம் சார்ந்தவை! எழுத்துச் சொல்லில் ஒழுக்கம் பழுக்குமோ? வாழ்க்கையில் ஒழுக்ம்பழுத்தல் வேண்டும் (3, 4) இஃது ஒழுக்க விழுப்பம். உள்ளம் உள்ளம் நள்ளும் நட்பே (3) முறையிடும் பயிற்சி குறைக்கும் குற்றம் (14) என்பவை சீர்திருத்தச் செம்பொருளில் செறிந்தவை. இருமை யற்ற ஒருமைக் காதலில் ஒன்றி உமிழ்ந்த அன்பே (9-10) என அம்மா! அப்பா வைக்காட்டுதல் ஆழமான செய்தி! பிள்ளைப் பேற்றால் உள்ளம் வளரும் உலகம் வளரும் உணர்வும் வளரும் இருவரை ஒருவர் ஆக்கிய காதல் பிள்ளை ஆகும் கள்ளம் காண்க! (2-5). என்பது பிள்ளைப்பேறு. கள்ளம் ஆயது எப்படி? இரண்டை ஒன்றாக்கிய - ஒன்றைப் பறித்துக்கொண்டது - கள்ளம் அன்றோ! இப்பிள்ளை, உடல் உள்ளம் உயிர் எல்லாம் எல்லாம் கவர்ந்து கொண்ட கள்ளம் உடையது அன்றோ! கள்ள ஆட்சி கவின்மலை காட்டும் கண்ணாடி மாட்சி. முதுமை உளறல் பதினாறு பகுதியாம்! பதினாறும் பதினாறு பேறுகளே! வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றலும் பதினாறு பகுதிகளே; அகவல் நடைவழியதே! மரத்தடி மாண்பு பரத்தடி யாகம் (16) இம் மரத்தடி, இறையுறையுள் எழுந்த வரலாற்றுச்சுருக்கம். உள்ளத் துள்ளே உள்ளது காடு வேட்டை ஆடி ஓட்டுக விலங்கை (22-23) என்பது வேட்டை! புறவேட்டை விடுத்து அகவேட்டை யாட ஏவும் அருமணி. போரை ஒழிக்கப் போரில் இறங்கினோம் குண்டைத் தொலைக்கக் குண்டை எறிந்தோம் வாளை வீழ்த்த வாளை ஏந்தினோம் விளைந்த தென்னை (13-16) என்பது தவநெறிக்கு ஆட்படுத்தல். அத் தவநெறி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என ஒருமை நாட்டம் அமைதல். வெறியைக் கடந்ததறிவுச் சமயம் (8-2) என்பது சமயச்சால்பு. நல்ல தொண்டை மெல்ல மெல்லத் தந்தை ஆற்றின் மைந்தன் ஆற்றுவன் (26-27) என்பது தொண்டுக்கு வழிகாட்டல் பெற்றோரிடத்திலிருந்து பிறக்க வேண்டும் என்பதை நாட்டுவது. பகைமை அறியாத் தகைமையர்அறவோர் அறவோர் ஓவியக் காட்சி இது. மேடை கள் நஞ்சின் ஓடைகள் ஆயின (60) என்பது நாட்டைக் கெடுக்கும் இந் நாளைப் பெருநோய் இன்ன தெனப் பொதுமை உரைத்தது. ஒருவன் பொருளை ஒருவன் கவரும் கல்வி பயிலாச் செல்வம் (23-24) என்பது வாழ்வின் வாழ்வு! திரு.வி.க.வின் நூற்றொண்டு பெரிதும் அல்லலிலேயே பிறந்தது. வறுமை, ஏழ்மை என்பவற்றை வென்றவர் திரு.வி.க. அவை அல்லல் இல்லை. தொழிலாளர் போராட்டம். அரசியல் சிக்கல் என்பவையும் அவற்றால் இரவைப்பகலாக்கி இளைத்த துயர்! இயற்கையை அவர் ஒறுக்க, அவ்வியற்கை அவரை ஒறுத்துப் பார்வையைப் பறித்ததும், படுக்கையில் கிடத்தியதுமாம் நிலை. படுக்கை நிலையிலே நூற்றொண்டு செய்ததை முதுமை உளறலில் உரைக்கிறார். தோற்றுவாய் அந்த நாட்களில்சிந்தனைப் பொருள்களை விழிகள் நோக்க எழுதுவன் கையால்; படலம்: அறுபத் தாறினில்சிறுபரல் ஆணிப் படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது; பழைய வண்ணம் விழிகள் நோக்க எழுதும் பேற்றை இழந்தனன் பாவி! உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன் உளறலும் நூலாய் வெளிவருகின்றது; ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில் பரம்பொருள் நூலைப் பகர்ந்தனன் உரையால். இரண்டு கண்ணொளி வறண்ட இந் நாளினில் இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால் இருமையும் ஒருமையும் அருகன் அருகே பொருளும் அருளும் மார்க்கி காந்தி சித்தந் திருந்தல் செத்துப் பிறத்தல் என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால். உரைநடை: பழைய உரைநடை, விழுமிய அகவல் பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது உளறுமென் அகவலும் ஒருவித உரையே; பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின் கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்; பாவின் அமைப்போ ஓவியம் ஆகி உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்; மொழிந்த பின்னம் அழிதல் அரிதாம் ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன் உரைநடை நூல்கள் யாப்பு நூல்களாகக் கோப்புற்ற வகை இதுவாம். நோயே வாட்டியும், அலக்கணே அலைத்தும், கண்ணொ ளியையே கவர்ந்தும், படுக்கையில் கிடத்தியும் திரு. வி.க. தோற்றாரோ? இல்லை! இல்லை! ஊழை ஒன்று ஒன்றாக உலைவின்றி வென்ற வரலாறு அவருடையது. ஊழையும் உப்பக்கங் கண்டதும், சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிட்டதும் அவர்தம் வாழ்வு. வெற்றி கொண்ட வரலாற்றை அவர் வாழ்வியல் காட்டும்; வாக்கும் காட்டும். வாக்குகளுள் ஒன்று: தொல்லைநோய்க்கு மருந்து : தொல்லைநோய்க்கு மருந்துண்டோ? மருத்துவர் என்ன விடையிறுப்பரோ அறிகிலோன். எனக்கொரு மருந்து துணை செய்து வருகிறது. அஃதென்னை? அஃது எனது தாய்மொழி; அமிழ்தினும் இனிய தாய்மொழி. என் போன்றார்க்கென்று தமிழ்க்கலைகள் தோன்றினவோ என்று யான் அடிக்கடி நினைப்பது முண்டு. தொல்காப்பியனார், நக்கீரனார், நல்லந்துவனார், திருவள்ளுவனார், இளங்கோ, சாத்தனார், திருத்தக்க தேவர், மாணிக்கவாசகனார், நம்மாழ்வார், சேக்கிழார், கம்பர், பரஞ் சோதியார் முதலிய தமிழ்மருத்துவர் யான் நூலெழுதும் சிற்றறை யிலும் வீற்றிருக்கின்றனர். அவர் முன்னே தொல்லை அணுகி எங்ஙனம் நோய் செய்யும்? அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். இப் பாக்களின் சொல்லிலும் பொருளிலும், இரண்டும் கலந்த ஒருமையிலும் ஒன்றி ஒன்றித் திளைக்கும் மனம் என்நிலை எய்தும்? அம்மனத்தைத் தொல்லை உறுத்துங்கொல்? தொல்லைவிளையும் போதெல்லாம் பெரிதும் நூலை எழுதும் அல்லது பதிப்பிக்கும் வாய்ப்பை அடியேனுக்குக் கூட்டும் ஆண்டவன் அருட்டிறத்தை என்னென்று வியந்து கூறுவேன்! இல்லையேல் தொல்லை என்னை என் செய்யுமோ? எனது வாழ்வியல் தொல்லை ஒரு பக்கம்! அதைத் தகையும் மருந்து மற்றொரு பக்கம்! தொண்டு இன்னொரு பக்கம்! (திருக்குறள் விரிவுரை பாயிரம்; அணிந்துரை - 8, 9) நூற்றொண்டு இவ்வளவில் நிற்க, நூற்றொண்டின் விரிவாக்கம் தொடர்கிறது. 1. வா. கு. 138. 2. வா. கு. 130. 3. வா. கு. 132, 133. 4. வா. கு. 126-7. 5. வா.கு. 128. 6. துறைதோறும் திரு.வி.க. பதிப்புரை; இலக்கிய அறிஞர் திரு.வி.க. 1-2. 7. வா. கு. 139. 8. ம. வா. கா. அ: முன்னுரை. 9. ம. வா. கா. அ: முன்னுரை 28-30. 10. ம.வா.கா.அ. 139 - 40. 11. ம.வா.கா.அ. 141. 12. ம.வா.கா.அ. 142. 13. ம.வா.கா.அ. 142. 14. ம.வா.கா.அ. 143. 15. ம.வா.கா.அ. 144. 16. ம.வா.கா.அ. 144-5. 17. ம. வா. கா. அ. 157. 18. ம. வா. கா. அ: 159, 19. ம. வா. கா. அ: 154-5 20. ம. வா. கா. அ: முன்னுரை. 6, 7. 21. தி.வி. 1:47 22. வா. கு. 143. 23. வா. கு. 143. 24. நூன்முகம் 25. திரு.வி.க. 26-27. 8. அ. நூற்றொண்டின் விரிவாக்கம் நூலாசிரியருள் பெரும்பாலோர் தாம் இயற்றும் நூலளவுடன் கடனாற்றுதல் கண்கூடு. ஆனால் திரு.வி.க.வின் நூற்றொண்டு அவரளவில் அமைந்தது அன்று. பிறர் பிறர் நூலாசிரியராக இலங்குதற்கும் வழிவகுத்துத் தந்ததுடன், வாய்ப்பும் தந்தார்! இது பாராட்டி வரவேற்கத் தக்க அருமைப்பாடுடையதாம். எழுத்தாற்றல் உடைய பலர், பிறர் எழுத்தாற்றலைப் பாராட் டுவது இல்லை; ஊக்குவதற்குப் பதிலாக உலைத்து விடுவதும் உண்டு. திருந்துதற்காம் வழிகாட்டுதல் செய்யா தொழியினும். வருந்துதற்காம் செய்கையைச் செய்யாதிருப்பினும் குற்றமில்லை. ஆனால் அதனையும் செய்வாருளர். திரு.வி.க. பிறவெழுத்தாளர்களுக்குச் செய்த தூண்டுதல், துணை, ஏந்து இன்னவற்றைத் தொகுப்பின் அதுவே மிக விரிவுடையதாகும். ஆனால் அவ்வாறு விரித்துக் கூறாமல் குறிப்பிடத்தக்க சிலரையாவது சுட்டிச் செல்லுதல் முறையாம். வெ. சாமிநாதர் சிக்கலான அரசியல் செய்திகளையும் செவ்வையாகப் புலப்படுத்தவல்ல திறவோர் வெ. சாமிநாத சர்மா. அவர் வாழ்வு இதழ்ப்பணியும், நூற்பணியுமாகவே திகழ்ந்தது. இயன்ற அளவும் தனித்தமிழ்ச் செவ்விய நடையில் - தெளிவான நடையில் - எண்ணற்ற அரசியல் - வரலாற்று நூல்களை எழுதிக் குவிக்கும் தவத்தை மேற்கொண்டார். அவர் நடையழகராகத் திகழ வாய்த்த தூண்டலாகவும் துணையாகவும் நின்றவர் மணவழகராம் கலியாண சுந்தரர். திரு.வி.க. வை முதன்முறையாகச் சந்திக்கிறார் சர்மா. தேச பக்தன் இதழ் தொடங்க இருக்கும்பொழுது அது. அவ்விதழ்த் தொண்டில் ஈடுபடுதற்காகவே நேரில் கண்டார். தேசபக்தன் தொடங்குநாள் எந்த நாளோ. அந்த நாளே தொடங்கி வேலை செய்யலாம் என்று வாய் மொழியாணை வழங்கினார் வள்ளுவ வாழ்வார். பின்னே மெதுவாக ஏதேனும் நூல் எழுதியிருக்கிறீர்களா? என வினாவினார். தாம் எழுதிய நூலான கௌரீமணி என்பதைக் கையில் கொண்டு சென்றிருந்த சர்மா. அதனைக் கொடுத்தார். நூலைச் சிறிது பார்த்துவிட்டு தமிழ்ச்சொற்களை இன்னும் அதிகமாகப் பெய்து எழுதினால் நன்றாயிருக்கும் என்று கூறினார். இதனைக் குறிப்பிடும் சாமிநாதர் அவர் உள்ளக் கிடக்கை இன்னதென்று உணர்ந்துகொண்டேன். கௌரீமணி என்ற அந்த நூலில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் பகுத்தியிருந்தேன். காரணம் வேறொன்றுமில்லை. எனக்கும் வடமொழியில் பரிச்சயம் உண்டு என்று காட்டிக் கொள்ளவேண்டுமென்ற அகந்தை மனப்பான்மைதான். அந்த நூல்வெளியான போது எனக்குப் பத்தொன்பது வயது என்கிறார். சாமிநாதர் தமிழ்நடை தேசபக்தனில் புகுந்த மூன்றாம் நாளே பாராட்டுக்குரியதாயிற்று. வடமொழி கலவாத தமிழில் தூய தமிழில் எனக்கு எழுதத்தெரியுமென்பதை முதலியார் தெரிந்து கொண்டார். இப்படித் தான் எழுதவேண்டும். நமது பத்திரிக்கைக்கு ஏற்ற நடை என்று கூறி என்னைப் பாராட்டினார் என்கிறார், சாமிநாதர். சாமிநாதர் திரு.வி.க. நடையை மட்டும் பற்றினார் அல்லர். திரு.வி.க.வின் சால்பையும் பற்றினார். வழிவந்த தம் குடிவழிப் பண்புடன் இச் சால்பும் செறிய அரசியல் எழுத்தா, மொழி பெயர்ப்பா சாமிநாதர் இணையில்லார் என்னும் பேற்றையும் பெற்றார். அவரைப் பார்த்தது எந்நாளோ அந்நாளே நான் எழுத்தாளனாகப் பிறந்த நாள் என்றும், முதலியாரைக் கண்டேன் ஆட்கொண்டார்; ஆட்பட்டேன்; அவ்வளவுதான் தெரியும் என்றும் சர்மா கூறுவதிலிருந்தே சான்றாண்மை புலப்படுமன்றோ! ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப்படுகொலை என்பதொரு நூல் சர்மா எழுதினார். திரு.வி.க. முகவுரை வழங்கினார். தேசபக்தன் அலுவலகம் இராயப்பேட்டையில் இருந்தது. நூலச்சு பாரிமுனைத் தம்பு செட்டித் தெருவில் நடந்தது. போக்குவரவு வாய்ப்பற்ற அந் நாளில் அம் முகவுரை பிழையின்றி வெளிவருதற்காக அச்சகத்திற்கு மூன்று நான்கு முறை நேரில் வந்தாராம் திரு.வி.க. சர்மாவின் மேல்கொண்ட அன்புச்சான்று மட்டும் காட்டு வதன்று; பிழையின்றி நூல் அச்சிடப்பட வேண்டும் என்னும் தமிழ்க் காதலையும் காட்டுவதாம்! அவர் தம் நூலில் ஒரு பிழைதானும் காண்டற்குக் கூடுமோ? சர்மாவின் நூற்றொண்டைத் திரு.வி.க. நூற்றொண்டின் விரிவாக்கம் என்னத் தடையுண்டோ? கல்கி வரலாற்றுக்கதையின் முன்னோடியாகவும், சுவை சொட்டச் சொட்ட எழுதும் எழுத்தாளராகவும் திகழ்ந்த கல்கி யின் பெயரை நாடு நன்கு அறியும்; அவர் எழுத்தையும் அறியும். எத்தனை எத்தனை ஆயிரம் பக்கங்கள் தொடர் கதை எழுதினார்! வெடிச்சிரிப்புச் செய்தி எழுதினார்! அவர் திரு.வி.க.வினிடம் வளர்ந்த நவசக்தி அன்பர் அல்லரோ! செல்வர் அல்லரோ! அவர் படைப்புகளைத் திரு.வி.க. படைப்புகளின் விரிவாக்கம் என்னத் தவறென்ன? மு.வ. திருக்குறள் என்றால் மு.வ. உரை எனத் தமிழுலகு அறிந்து ள்ளதே! பத்திலக்கம் படிகளுக்கு மேலல்லவோ அவ்வுரை நூல் விற்பனையாகியுள்ளது. அவர் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த நாளிலேயே திரு.வி.க.வின் அணுக்கத் தொண்டராய்த் தழைத்தவர் அல்லரோ! கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்கட்குப் போவோம்; இயற்கையை எண்ணு வோம்; பேசுவோம்; உண்போம். என்று தம் வாழ்க்கைக்குறிப்பிலே சுட்டும் நெருக்கம் சென்னைக்கு வந்த காலை, குடும்பப்பிள்ளை யாகும் சீர்மையை வழங்குகின்றது! அவர் செய்த நூற்றொண்டில், திரு.வி.க.வின் விரிவாக்கம் இல்லையெனலாமா? நம் தமிழ்நாடோ தூங்குகிறது. இன்னும் தூக்கமா? தமிழ் மக்கள் நிலையை உன்ன உன்ன உள்ளம் குழைகிறதே! உலகிற்குக் கலையறிவை ஊட்டிய தமிழ்மக்கள், உலகின் முதன்முதலில் எழுத்துவடிவம் பெற்ற மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழ் மக்கள், மொழிகள் பலவற்றுக்குத் தனிப்பெருந் தாயாய் இயங்கும் மொழியைப் பேசும் தமிழ்மக்கள், உலக மொழிகள் எல்லாவற்றையும்விட எழுதப்படிக்கக்கற்றல் எளிதாக உள்ள ஒருமொழியைப் பயிலும் தமிழ்மக்கள், எழுத்தறிவும் இல்லாது வாழ்தல் தகுமோ? இந்நிலை ஒழிக. நன்னிலை எய்துக! தமிழ் மக்களே எழுங்கள்! அனைவரும் முயலுங்கள்! அறிவொளியைப் பரப்புங்கள். - இது திரு.வி.க. நடையா? மு.வ. நடையா? திரு.வி.க.வின் நடையில் தோய்ந்த மு.வ. நடை! (படியாதார் படும்பாடு - 96) திரு.வி.க. எழுதிய நூல் முகவுரைத் தொண்டால் ஊக்கப் படுத்தப்பட்டவர்கள் எத்துணைப்பேர்? அவர் தம் மேடைத் தொண்டால் ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் எத்துணைப்பேர்? இவர்கள் செய்துள்ள நூற்றொண்டையும் விரிவாக்கமாக விளம்புதல் தகுமன்றோ? 9. வரலாற்றுத் தொண்டு திரு.வி.க. வரலாறு வாழ்க்கைக்குறிப்புகள் என்னும் பெயரால் வெளிப்பட்டது. அவர் வரலாறு மட்டும் அதில் இல்லை. பன்னூற்றுவர் வரலாறு பயின்ற வரலாறு அவ்வொன்று. தம்மொடு தொடர்புடைய அறிஞர்களைப் பற்றிய குறிப்புகளைத் தமிழறிஞர், கூட்டுறவினர், தோழர்கள், சமயத்தவர், சீர்திருத்த நேயர் சிலர், தொண்டர், தொடர்பினர் என்னும் பகுப்பில் அவ்வப்பொருள் பற்றிய வரலாற்று நிறைவில் குறிக்கிறார். இவ்வெழு பாற்பகுப்பினரும் முறையே 67, 39, 38, 29, 23, 12, 52 ஆக 260 பக்கங்களின் ஆட்சி புரிகின்றனர். இவ்வாட்சிப்பக்கங்களை மட்டுமன்றியும் இவர்களை யன்றியும் பிறபக்கங்களில் ஆட்சி செய்வாரும் உளர். தமிழ் வரலாற்றைப் பொறுத்த அளவினும் இவ்வறிஞர்கள் அனைவர் வரலாறும் எண்ணத் தக்கதும் போற்றத் தக்கதுமேயாம். அரசியல் தொடர்பாளர்கள் தமிழ்த் தொண்டும், தமிழ்போற்றிக் கொண்டு வளர்ந்துள்ளதே! தொழில் தொண்டர் தாமும் தமிழ்த் தொண்டராக இயங்கியுள்ளனரே! சமயத்தையும் தமிழையும் பிரிக்கவொண்ணா வகையில் சமயத்தொண்டினர் ஊன்றி யுள்ளனரே! சீர்திருத்தரும் தொண்டரும் தமிழ் வளத்திற்குப் பாடுபட்டுள்ளனரே; தொடர்பினர் - திரு.வி.க. வின் உழுவல் தொடர்பினர் - எப்படித் தமிழ்த்தொண்டில் தலைப்படாது இருந்திருக்கமுடியும்? இவ்வாறாக ஒருபெரும் தொண்டர் வரலாற்றில் பலப்பல தொண்டர் வரலாறுகள் செறித்து வைக்கப் பட்டுள்ளன என்று சொல்லலாம். வரலாற்று வறுமை: தமிழ் நாட்டு வரலாறும், தமிழ்ப்பெருமக்கள் வரலாறும் செவ்விதின் வரையப்பட்டில. செவ்விதில் தொகுத்து முறையாக வெளிப்படுத்தி ஒருநிலைப்பட்ட வரம்பில் ஆட்படுத்தவுமில்லை. அதனால் பிற்பட்டோர் முற்பட்டோராகவும், முற்பட்டோர் பிற்பட்டோராகவும், அறிவொளி தந்தோர் அறிவு வளமிலராகவும், அறிவுவளமிலார் அறிவு வளமுற்றோ ராகவும், கலைச்செல்வம் பல்கியோர் கலையறியா மாக்களாகவும், கலையறியா மாக்கள் கலையறி செல்வராகவும், நாகரிகம் வழங்கியவர்அல் நாகரிகராகவும், அல் நாகரிகர் நாகரிக ஏந்தலராகவும் வரலாற்றில் தடம் புரண்ட காட்சி உருவாக்கப்பட்டுவிட்டது. உலகத்தின் முதன்மொழியாம் தமிழ், வட்டாரமொழியெனவும், தமிழ் மாந்தர் வேறொரு நிலத்தினின்று வந்தேறியவர் எனவும், இந்திய நாகரிகம் என்பது வடஇந்திய நாகரிகமே எனவும் திட்டமிட்டுத் திரையிட்டு மறைக்க நேர்ந்துவிட்டது. கடல்கொண்ட குமரிக்கண்டமே தமிழர் பிறந்தகம் என்றும், முதன்முதன் மாந்தன் ஆங்கேயே தோன்ற உலகெலாம் பரவினான் என்றும், இந்திய நாகரிகத்தை ஆய்வார் முதற்கண் தெற்கிலிருந்தே தொடங்குதல் வேண்டும் என்றும், தமிழ் திரவிட மொழிகளுக்குத் தாயும் ஆரிய மொழிக்கு மூலமுமாம் என்று, உண்ணாட்டு வெளிநாட்டு அறிஞர்களால் இதுகால் ஒளியுறுத்தப்பட்ட நிலையிலும், உண்மை வெளிப்பட உலகுக்குத் தோன்றிற்றில்லை! ஏழுதிரை விலக்கியே ஒளிச்சுடர் காணல் போலும், மூடு திரையகற்றியே கலையெழில் காட்சியை மேடையில் காணல்போலும், செயற்பாடுகள் வேண்டியுள. இந்நிலையில் திரு.வி.க. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்பெருமக்கள் வரலாற்றைத் தம் வரலாற்றொடும் இணைத்தும் பிணைத்தும் காட்டியுள்ளமை போற்றுதற்குரியதாம். தம் வரலாற்றின் தந்தை யென இளங்கேவடிகளைக் கூற வாய்க்கின்றது. அவர் தம் வரலாற்றுச் செய்தியைச் சிலம்பின் நிறைவில் கண்ணகியார் வாக்காகக் காட்டியுள்ளார். என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி எனப்பாராட்டுகிறார், தமிழகத்து வரலாற்றைக் கொண்டு புனையப்பட்ட அக்கதைக்குப் பின்னே, சேக்கிழார் அப்பணிக்கு வளமூட்டுகிறார். திரு.வி.க. மிகப்பேரளவில் அத்தொண்டை நிலைப்படுத்துகிறார். இளங்கோ என்பது இயற்பெயரா? கோவூர் கிழார் ஆவூர் கிழார் என்பவை பெயர்களா? ஓரேருழவர், தொடித்தலை விழுத்தண்டினார். குப்பைக் கோழியார், வில்லக விரலினார் என்பார் அவர்தம் தொடரால் பெயர் சுட்டப்பட்டார்கள் எனின். இவர்கள் பெயர்கள் தொடர் புடையார்களால் பெரியண்ணன், சின்னண்ணன், தெற்குத் தெருப்பெரியவர், மேலவீட்டார், கீழூரார், கடைக்காரர், பண்ணையார் என்பவைபோல வழங்கப்பட்ட பெயர்களாம். தமிழறிஞர் இனி மேலே சுட்டிய எழுவாய் பெயர்களுள், கல்விப் பகுதியில் வரும் தமிழறிஞர் நாம் எடுத்துக்கொண்டுள்ள ஆய்வுப் பொருளுக்கு மிக அணுக்கராக உளர். ஆகலின், அவரைப் பற்றி ஒரு சிறிது காணலாம். தமிழறிஞர் என்னும் தலைப்பில் கிருஷ்ணமாச்சாரியார் முதல் அன்புகணபதி ஈறாக நாற்பத்தைவர் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள. அவருள் சிலரைப் பற்றிய ஓரிரு குறிப்புகள் காண்க: கதிரைவேலர் : தம் ஆசிரியர் கதிரைவேலர் அகராதிச் செவிலியாக இருத்தலைக் குறிக்கிறார் திரு.வி.க. கதிரைவேற்பிள்ளையாற் செப்பஞ்செய்யப்பெற்ற தமிழ்ப் பேரகராதி, பின்னே தோன்றிய பல அகராதிகட்குச் செவிலித்தாயாக நின்று வருதலை அறிஞர் இன்றும் போற்றா நிற்கின்றனர். பாம்பன் அடிகள்: சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம். உ.வே. சாமிநாதர் : சாமிநாதர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார்; அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வும் தமிழ்; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர். மறைமலையடிகள் : அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரனாரும் ஓருருக்கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார். ஞானியாரடிகள் : ஞானியார் சுவாமிகள் பேச்சைக்கேட்டபின்னைத் தமிழ் நாட்டில் மற்றுமொரு நாவலர் இருத்தலைக்கண்டேன். தமிழ் நாட்டிலும் கிளாட்ஸன்கள், சுரேந்திரர்கள் இருக்கின்றார்கள் என்று என் நெஞ்சம் எண்ணியது. மாணிக்கநாயக்கர் : நாயக்கர் தொல்காப்பியக்கடலை அடிக்கடி கடைவர் கடைந்து கடைந்து அமிழ்தம் எடுப்பார். ‘mij Ú§fŸ V‰»Ö®fsh? என்று என்னைக் கேட்பர். jÄœ¡ fh.R.: பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற் கென்று கா. சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திலிருந்து பல திறத் தமிழ்ப்புதுமைகள் பிறக்கும். அசலாம்பிகையார் : பண்டித அசலாம்பிகை அம்மையார் இக்கால ஔவையார். பாண்டித்துரை : பாண்டித்துரை தேவர் பாலவனத்தம் ஜமீன்தார். மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்டவர்; தமிழ்ப்புலவர்; பெரும் புலவர். அவர்தம் அரியவாழ்க்கை தமிழுக்கே அர்ப்பணமாகியது. பரிதிமாற் கலைஞர் : பரிதிமாற்கலைஞர் நீண்டநாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் இவர்ந்திருப்பாள்; முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும். சோமசுந்தரபாரதியார் : பாரதியார் வக்கீல் தொழில் அளவில் நின்றாரில்லை. அவர் கம்பர் திருவள்ளுவர் தொல்காப்பியர் முதலியவர் மன்றங்களிலும் பழகிவந்தார். அப் பழக்கம் அவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்குத் தூக்கியது. வையாபுரியார் : இப்போது வையாபுரிப்பிள்ளை தமிழ்நாட்டுப் பதிப்பா சிரியர் உலகிலே ஒரு வான்மணியெனத் திகழ்கிறார். ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, சாமிநாத ஐயர் ஆகியவர் இனத்தில் சேர்ந்தவரானார். கோதண்டபாணியார் : கோதண்டபாணி பிள்ளை நெஞ்சம், பல புலவர் உலகைக் கண்டு கண்டு அவைகளைக் கடந்து கடந்து நக்கீரர் உலகில் நிலைத்தது. அவர் நெஞ்சம் நக்கீரர் ஆயது; அவர் நக்கீர ரானார். சமயத்தவர் 16 பேர்களைச் சுட்டுகிறார் திரு.வி.க. அவருள் இருவர்: பூவை கலியாணசுந்தரர் : அவர் காலத்தில் அவரது சாற்றுகவி பெறாத நன்னூல்களைக் காண்டல் அரிது. ஸ்ரீபால் ஸ்ரீபால் இளைஞர். அவர்தம் இளமை வாழ்க்கை ஜீவ காருண்யத் தொண்டுக்குப் பயன்பட்டுவருவது எனக்குத் தெரியும். ஸ்ரீபாலின் தவமே தவம். அவர் பிறவியே பிறவி! சீர்த்திருத்த நேயர்களில் பதினைவர் எண்ணப்படு கின்றனர். அவருள் ஒருவர். வரதராசனார் : வரதராசனார் தமிழறிஞரா? சீர்திருத்தக்காரரா? அவர் தமிழறிஞர் என்பது வெள்ளிடைமலை. சீர்திருத்தக்காரர் என்பது உள்ளிட்ட விளக்கு. சி.எம். இராமச்சந்திரர் : செட்டியாரின் ஆராய்ச்சி மொழிகளையும் பாட்டுக் களையும் யான் பார்த்திருக்கிறேன். அப் பார்வை, இராமச்சந்திரஞ் செட்டியார் ஒரு கலைக்கூடம் என்று தெரிவித்தது. தொண்டர் ஐவர் துலங்குகிறார். அவருள், ஒருவர்: சுத்தானந்தர் : நீலவானம்; ஒரே அமைதி; மணிகள் ஒளிர்கின்றன; ஒரு தமிழ்மணி பொலிகிறது; அம்மணியே சுத்தானந்தம். தொடர்பினர் இருபத்து நால்வர் இசைக்கப்படுகின்றனர் அவருள் முதல்வர் தாய்; ஆறாமிடத்தார் மனைவியார்; ஏழாமிடம் மகனார்; பின்னைப் பிறர் பிறர். இவருள் இருவர்: இராமலிங்கனார் : இராமலிங்கம் மாணாக்கராயிருந்தபோதே அவரைத் தமிழ்க்காதல் மணந்தது. அக் காதல் அவரைத் தமிழ் எம்.ஏ. ஆக்கியது. அவர் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் காண்பதில் கண்ணுங் கருத்துமுடையவர். பிறமொழிச் சொற்களால் தமிழ் அன்னைக்கு அம்மைநோய் உண்டாதல் கூடாதென்பது அவரது கொள்கை. விசுவநாதனார் : ஹிந்திக் கிளர்ச்சி வீறிட்டது. நாயக்கர் சிறை புகுந்தார். அவ்வேளையில் அக்கிளர்ச்சியை விசுவநாதன் நடத்திய முறையும் ஒழுங்கும் நேர்மையும் திறமும் என்னை வியக்கச் செய்தன. விரிந்த தொண்டர் எண்ணிக்கையைச் சுருக்கி, தொண்டுச் செய்தியையும் சுருக்கி, வைக்கப்பட்ட குறுந்திரட்டு இது. தொண்டர் தம் பெருமை சொல்ல வொண்ணாதே என்பது ஔவையுரை. 10. தமிழ் நடை தமிழ்நடை திரு.வி.க.வின் மொழிநடை, தமிழ்நடை; தீந்தமிழ் நடை; தேன் ஒழுகும் தீந்தமிழ்நடை. அந்நடை தென்றலாய்த் தவழும்; கொண்டலாய்க் கெழுமும்; கோடையாய் முழங்கும்; வாடையாய் வாட்டும் இடங் காலம் பொருளியற் கேற்பச் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும்! ஓரிடத்தில் சிற்றருவியாய்ப் பொழியும்! மற்றோரிடத்தில் புவியருவியாய் வீறும்; இன்னோரிடத்தே சண்பக அடவியாய்ப் பொதுளும்; வேறோரிடத்தே தேனருவியாய்த் ததும்பும்! அவற்றுள் பழங் குற்றாலக் காட்சியும் உண்டு! புதுக்குற்றால மாட்சியும் உண்டு! திரு.வி.க.வின் தமிழ் உரைநடைக்காட்சி, குற்றால அருவி நடைமாட்சி! சிறிய தொடரா? சின்னஞ்சிறிய தொடரா? ஒரே ஒருசொல் தொடரா? உண்டு! பெரிய தொடரா? பென்னம்பெரிய தொடரா? ஒரு பத்தியாய் விரிந்த தொடரா? உண்டு! திரு.வி.கவின் நடையில் வினாக்கள் மிகுதியா? உணர்ச்சிக் குறிகள் மிகுதியா? ஒன்றில் ஒன்று மிகுதி என்பதைக் குறியீட்டு அடையாளங்கள் காட்டும்! அவற்றொடு இரட்டை மேற்கோளும் ஒற்றைமேற்கோளும் போட்டியிடும்; கால்புள்ளி அரைப்புள்ளிகள், கலைமுகம் காட்டும். அவர் எழுத்தை அச்சுக்கோக்க, எழுத்தில் பாதியளவு குறியீடுகளின் அச்சு வேண்டும்! செம்பாதி அன்று பெரிது என்பதும் சிற்சில இடங்களில் விளங்கும்! அவர் நடைத்திறம் இதழ்த்தொண்டில் கண்டோம்? இங்கும் அவர் நடை அவர் நடையாகவே நடக்கின்றது. மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப் போராட்டம் பொருளற்றதென்பது எனது உள்ளக்கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப்பழக அவருக்கென்று ஒரு நடைஇயற்கையாகும். இன்னொருவர்க்குவேறுவித நடை இயற்கையாகும். இவர் அவரைக் குறை கூறுவது, அவர் இவரைக் குறைகூறுவதும் தவறு. ஒரே வித நடை எல்லாரிடத்திலும் அமைவது அரிது. உலகம் பலவிதம். ஒரே வித விதைகள் ஒரேவித நிலத்தில் விதைக்கப்படு கின்றன. அவை முளைத்து மரங்களாகுங்கால் எல்லாம் ஒரேவித வடிவங்களையா பெறுகின்றன? இல்லையே. மரங்கள் எத்துணையோ வடிவங்களைப் பெறுகின்றன. இஃதுஇயற்கை அன்னையின் திருவிளையாடல் மொழி நடையும் அவரவர் இயற்கைக்கேற்றவண்ணம் அமையும். இயற்கை அமைவைக் குறித்துப் போராட்டம் எற்றுக்கு? என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது; மற்றொன்று பத்திரிகையுலகை அடைந்த நாளில் அமைந்தது. இறுதியதே எனக்கு உரியதாய் - உடையதாய் - நிலைத்தது. இந்நடை எளியது; சிறுசிறு வாக்கியங் களாலாவது. இந்நடையிலும் நூலுக்கேற்ற - காலத்துக் கேற்ற - அமைவுதானே பெறும்! எனது பேச்சு நடையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். பெரும் பேச்சுக்குரிய குரலையும் நாவையும் இயற்கை அன்னை எனக்கருளியுளார். பலதொண்டுகட்கு எனது பேச்சே பெருந்துணை செய்து வருகிறது. திரு.வி.க. வின் நடையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அரிதாக வடமொழிக்கலப்பு வரும்; வடமொழி எழுத்து வருவதும் விலக்கப்படாது. அவ்வாறே அரிதாக ஆங்கிலச் சொற் பெய்வும் நிகழும்; அது மாஜிட்ரேட், மானேஜர், லிமிடெட் - எனத் தமிழ் வடமொழி எழுத்துப்பெய்வுடன் நிற்கும். தேர்தல் (Selection) சோதனை எனவும் மிகமிக அரிதாய் ஆட்சிபெறும். தனித்தமிழ் “ntjhrydh® jÄœ - brªjÄœ - r§f¤jÄœ - v‹id m›thW brhšyî« vGjî« brŒjJ” v‹W«, “mtuJ jÄœ clY«, jÄœ ciuí«, jÄœ¡ FuY« jÄœ¥bghUS« v‹id mt®j« njhHdh¡»d; bjh©ldh¡»d” v‹W« - TW« âU.É.f., அவர்தம் தனித்தமிழ்க்கொள்கையைச் சுட்டி மறுத்தாரல்லர். அவர், அடிகளார் கருத்துக்கும் தம் கருத்துக்கும் வேற்றுமை சிலவற்றில் உண்டு என்று பட்டியலிட்டுக் காட்டுவார்: அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு; அடியேன் போக்குவேறு. இரண்டுக்கும் சந்திப்புண்டாதல் அரிது. அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்குங் கருவிகள் இருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் கலைக்குமென்பது எனது உட்கிடக்கை. மறைமலையடிகள் சமய நூல்களிலும் தத்துவ நூல்களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடுங் கருத்துக்களை என் மனம் ஏற்பதில்லை. சமயமும் தத்துவமும் ஆராய்ச்சிக்கு எட்டாதன என்பதும் இவ்வாராய்ச்சியால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகுமென்பதும் எனது எண்ணம். ஒருவர் பன்மனைவியரை மணக்கலாமென்று அடிகள் அறைவது எனது நோக்குக்கு முற்றும் முரண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது எனது கொள்கை. இப் பட்டியில் தனித்தமிழ் கலப்புத்தமிழ்வேறுபாடு இடம் பெற்றிலது. ஏன்? திரு.வி.க. வும் தனித்தமிழ் ஆர்வலரே; அப் பற்றுமிக்கவரே! எனினும் அவர் நுழைந்த சமயக் களமும், அரசியல் களமும், தொழிலாளர் களமும், அத் தொடக்க நாளில் தமிழாக்கச்சொற்கள் உடனுக்குடன் காணல் அருமையும், கண்டு தருவார் அருமையும் ஆகிய இன்னவையே திரு.வி.க. தனித் தமிழ்நடை போற்றிக் கொள்ளாமைக்கு அடிப்படையாம். தனித் தமிழ்ச்சொற்கள் வாய்க்கும் இடத்தும் வேற்றுச்சொல் பயன் படுத்துகிறாரே எனின், எளிமையும் தெளிவும் வழக்காட்சியும் அவர் நோக்காக அந்நாள் இருந்தன எனலாம். அவர்தம் தனித் தமிழ் வேட்கையையும் அதனைப் பின்பற்ற முடியாமையையும் தேசபக்தனில் எழுதுகின்றார்: பண்டைத் தமிழ்மக்கள் உரைநடையில் எனக்குப் பெரும் பற்றுண்டு. பிறமொழிக்கலப்பின்றித் தமிழ்பேசல் வேண்டும். எழுதல் வேண்டுமென்னும் ஆர்வமும் எனக் குண்டு. அப் பற்றும் ஆர்வமும் என்னளவில் கட்டுப்பட்டுக் கிடப்பதைநோக்குழி வீட்டின்பத்தில் வெறுப்பும், தமிழ் நாட்டில் பலமுறை பிறவி தாங்கித் தொண்டு புரிவதில் விருப்பும் எனக்கு நிகழ்கின்றன. யான் தமிழ்மொழி மீது கொண்டுள்ள எண்ணம் முற்றுநாள் எந்நாளோ தெரியவில்லை. அதற்கு ஆண்டவன் அருளும் தமிழ்மக்கள் ஒற்றுமையும் வேண்டும். திருவாரூர் விருத்தாசலர் கலியாண சுந்தரர் என்பதே திரு.வி.க. என்பதன் விரி. ஆனால் சிலர், திருவைத்திரு வாளராகக் கருதிக்கொண்டனர். அக் கருத்தை விளக்குதல் வழியாகத் தமிழ்த் திருவைத் தம்மொடும் இயைத்துக் கொள்கிறார்: சிலகாரணம் பற்றி வடமொழி ஸ்ரீ தமிழ்க்திருவாக மாற்றப் பட்டது. அம் மாற்றம் எங்கள் திருவுடன் முடடலாயிற்று. எங்கள் திருவின் உண்மை தெரியாதார் நாங்கள் ஸ்ரீக்குப் பதிலாகக்த திருவை உபயோகிக்கிறோம் என்று கருதி ஸ்ரீவி. உலகநாத முதலியார் என்றும், ஸ்ரீ.வி. கலியாணசுந்தர முதலியார் என்றும் எழுதிவிடுகிறார்கள். இத்தொல்லை பெரிதும் பத்திரிகை உலகில் நிகழ்ந்து வருகிறது. ïij Ú¡F« bghU£Lv‹ üšfË‹ Kf¥ãš âUths® âU.É. fšahzRªjudh® v‹W v‹ bga® bgh¿¡f¥gL»wJ” (th.F.:17) ஸ்ரீ திரு மாற்றப் போராட்டம் பெரிதாக நடைபெற்ற நாளுண்டு. அந்நாளில் திரு.வி.க. திருவில் நின்றதும் அவர்தம் தனித்தமிழ் நாட்டத்தைப் புலப்படுத்துவதாம். செவ்விய தமிழ்நடை, தமிழ் நாட்டிலுள்ள பல்லோர்க்கு இதுபோழ்து பயன்படாதென்று கருதித் தேச பக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை உரைநடையைக் கொண்டுள்ளேன். இது காலைத் தமிழ்நாட்டு வழக்கிலுள்ள பிறமொழிக் குறியீடுகளையும் இக்கால வழக்குச் சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத் தமிழ்மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு வருகின்றேன் என்று எழுது கின்றார். தம் உரை பண்டையோர் முறைக்கு முரணே என்றும், ஆயின் பெரிதும் முரணாதவாறு எழுதப்படுகிறது என்றும், அதுவும் இது போழ்துள்ள பயன்கருதியதென்றும் விளக்கி யுள்ளதையும் கூர்ந்தறிக. 1920 சார்ந்த எழுத்து இஃதென்றும் இவ்வெழுத்தின் பின் ஒரு மணிவிழாக்காலம் கடந்துவிட்டது என்றும் நினைவுகூர்தல் வேண்டும்! எனினும் இந்நாள் இதழ்கள், கதைகள் ஏன் நூல்களும் கூடத் தமிழாக்க நடையிற் செல்கின்றனவா? திரு.வி.க. ஆட்சிசெய்த சொல்நயம், பொருள்நயம் விறு, உணர்வு, மெய்ப்பாடு இன்னவைபோற்றப் பெறுகின்றனவா? திட்டமிட்டுத் தமிழைக் கெடுக்கும் தாளிகைகள் பெருகிய வண்ணமாகத் தானே உள. முன்பெல்லாம் கூடியவரை நல்ல நடையிலும் கலப்பு இன்றியும் எழுதிய தாள்கள் கூட, முன்பு தாம் பயன்படுத்திய தகவினைக் காற்றிற் பறத்திக் கயமைக் கிடமாகின்றனவே! இது வளர்ச்சியாமோ? வளர்ச்சிக்கு அறிகுறி தானுமாமோ? திரு.வி.க. வினிடம் கொஞ்சிய தமிழ்நடையை எத்துணை எத்துணைப் பகுப்புகளாகப் பகுத்துக் காண்பது? அவர் நடைநயம் குறித்தே முனைவர் ஆய்வு ஒருவர் செய்யினும் முழுதாய்வாக முடியுமோ? ஓராற்றான் சிலவகை நடைகளைக் காண்போம்: நடைவகை : அடுக்குநடை உன்னுங்கள்! உன்னுங்கள் எழுமின்! எழுமின்! ம.வா.கா.அ. 530. அழுத்தநடை நின்றேன்! நின்றேன்; நெடுநேரம் நின்றேன்! வா.கு. 500. இணைச்சொல்நடை என்தந்தையார் வைத்திருந்த நிலபுலங்களும் ஈட்டிய சிறு பொருளும் படிப்படியே கரைந்தன. வா.கு. 960. எனது இளைப்பு களைப்பு எல்லாம் நீங்கும். வா.கு. 800. இணைப்பு நடை கிருஷ்ணாராவ் என்னுள் நிற்பார்; யான் அவருள் நிற்பேன். வா.கு:57. இயற்கைஇயல் விளக்கநடை இளஞாயிறு தனது செங்கதிரை நீலக்கடலில் பரப்பும் போது அப் பரவையிடை அழகு ஒளிர்கிறது. அஞ்ஞாயிறு தனது இளவெயிலை, பசுங்கடல் பொங்கி யெழுந்தாலென உருண்டு திரண்டு பரந்து ஒளி நுழைதற்கு இடமின்றிச் செறிந்து மிடைந்து சரிந்து சாய்ந்து நிற்கும் குறிஞ்சிக்காடுகளின் பச்சை மேனியில் உமிழும் போது அவ்விடை அழகு அரும்புகிறது. திங்கள் தன் பால் நிலவை, வெள்ளை வெளேலென வெள்ளி அறல் படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது காலும்போது அங்கே அழகு ஒழுகுகிறது. இவ்வாறு சிலசில வேளைகளில் சில இடங்களில் அழகு தனது நுண்ணிய காட்சி வழங்குதல் உணர்க். மு.அ.அ:15. இயைபுநடை திருச்சியிலே கூட்டம்; ஓய்ந்த நேரத்தில் மாணாக்கர் ஈட்டம். வா.கு. 800. உனக்கு முன்மதி; எனக்குப் பின்மதி வா.கு:709. இரங்கல் நடை காமச்சத்திரங் கட்டி நடாத்துவது அறமாம்! அந்தோ! அந்தோ! உலகம் எப்படி ஏமாற்றப்பட்டது! ஏமாந்த உலகமே! இன்னுமா ஏமாறுவை? ஏமாந்தது போதும்! போதும்! பெ.பெ. 194. இரட்டுறல் நடை அவர் குணமலை; அவர் பெயர் மாணிக்கம்; மாணிக்கம் வகுப்பை ஒளிபெறச் செய்தது. (மாணிக்கம் - ஆரியர் இரத்தினம். மணி) வா.கு. 56 இருமை ஒருமைநடை - (இரண்டற்ற ஒருமை) பறவையே பாட்டு; பாட்டே பறவை. திரு.வி.பாயி. 176. அவர் தமிழாயினார்; தமிழ் அவராயிற்று. th.F.:160. இலக்கணநடை உழவு உழப்பு இரண்டும் ஒன்றே. இதனின்றும் வந்தது உழைப்பு. கிண்டல் கிளறல் கிளைத்தல் இவை யாவும் ஒரு பொருட்சொற்கள். இக் கிண்டல் முதலியவற்றை உழவு - உழப்பு என்று ஆன்றோர் வழங்கியுள்ளனர். திருக்.விரி.பாயி. 203-4. இலக்கணவிளக்க நடை பெண்மை என்னுஞ் சொல், கடை குறைந்து பெண்ணென நின்று பின்னைப் பெண்ணெனும் ஓர் இனத்தைக் குறிப்பதாயிற்று. பெண் ஆகுபெயர். இது, தமிழ் இலக்கண வழக்கு. ஈண்டுப் பெண்ணை எவள் என்னாது எது என்றது முதற்பொருளை ஒட்டி என்க. பெ.பெ.14. இலக்கணை நடை நோய் ஓராண்டை விழுங்கியது; ஓய்வு மற்றோராண்டை விழுங்கியது. th.F.:51. (பிறிதொன்றன் இலக்கணத்தைத் தந்தது). இழிதிணையாக்கநடை (அவர்) உருமற் பேய் வா.கு.230. உயர்திணை யாக்கநடை அவர் யார் ? நாயார். வா.கு.44. (வண்டிக்குப் பின்னே ஓடிவந்த நாயைக் குறித்தது). உவமை உருவகநடை நீலவானம்; முத்துக்கள் போன்ற உடுக்கள்; வெண் திங்கள்; உழவு. வா.கு. 120 (வானவயலில் திங்கட்செலவு, உழவு) உவமை நடை தியாகராஜர் பிரிவை உன்னுங்கால் அப்பிரிவை - ஆறும், மலையும், கூவலும் குளமும், கலையும் தொழிலும் மக்களும் ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்ததுபோல் எமக்குத் தோன்றுகிறது. அந்தோ தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ என்று அழுகிறோம். த. சோ. 357 உருவகநடை பருவநல்லாள் எதிர் தோன்றுகின்றாள். வா.கு. 122. கமலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. வா.கு. 248 யான் பொய்கை நடுவண் நின்றேன்; மெல்ல மெல்ல நீந்தியே வந்தேன். மாணாக்கர் கூட்டம் வீட்டுவரை தொடர்ந்தது. (கமலங்கள் - மாணவர்கள்; கூட்டம் - பொய்கை) எச்ச இணைப்பு நடை பழந்தமிழன் உலகம் உலகம் என்றே நினைத்து, என்றே பேசி, என்றே செயலாற்றினான். (என்று - எச்சம்). எதுகை நடை அந்நாள் எந்நாள்? ம.வா.கா.அ:14 வாட்டம் தீர்த்து மீண்டும் தோட்டம் நோக்கினேன். வா.கு: 708 பாலர் சொற்பொழிவு எனக்கு விற்பொழிவாகவும் தோன்றியது. வா.கு. 252 துட்டுவந்து அவர்பெட்டி நிரம்புகிறதேயன்றித் திட்டு அவரை ஒன்றும் செய்யவில்லை.வா. கு:358. எதுகைவழி, முரண்நடை ஒலிபெருக்கி பாலரைக் கண்டிருப்பின்அஃது ஒலி சுருக்கியாய் ஒடுங்கும். வா.கு: 252 கலைநாடு கொலை நாடாகியது; இசைநாடு வசை நாடாகியது. த.தெ. 426 (வழி - மீண்டும் வருதல்; முரண் - எதிரிடை). எள்ளல் நடை இப் போலிக் கூட்டத்தார்க்குப் பாவம் ஏது? புண்ணியம் ஏது? இவர் முத்த ரல்ரோ? இவர்க்கு எல்லாம் ஒன்று தானே! பெ.பெ:194. குதிரைவால் என்று முதியவர் குறும்பு துவங்கியது. சிறியவர் பதில் சாக்கடைச் சேறாகியது. வா.கு. 759. (பெரியவர் சீறுவர்களைக் குதிரைவால் என்றார்; சிறுவர்கள் சேற்றை வாரி இறைத்தனர்). ஐயநடை அடிகளை அரிச்சந்திரனோ, புத்தரோ, திருவள்ளுவரோ என்று மனம் நினைத்தது. வா.கு:302. ஒருபொருட் பன்மொழிப் பயனிலைநடை உடல்நலம் குலைந்தது; கண்ணொளி குன்றியது; முதுமை அடர்ந்தது. மு.உ. முன்னுரை. ஒருமொழியடுக்கு விடைப் பயனிலைநடை காமத்தராம் அவர்களை மலையிலும் எரிக்கும்; நீரிலும் எரிக்கும்; காட்டிலும் எரிக்கும்; நாட்டிலும் எரிக்கும்; எங்கும் எங்கும் எரிக்கும். பெ.பெ. 164. ஒரு மொழியடுக்கு வினாப் பயனிலை நடை நாம்எதற்கு அழுவோம்? அவரது சட்ட ஞானத்துக்கு அழுவோமா? நீதிநிலைக்கு அழுவோமா? கலைஞானத்துக்கு அழுவோமா? அஞ்சா நெஞ்சத்துக்கு அழுவோமா? பரோபகார உழைப்புக்கு அழுவோமா? எது குறித்து அழுவோம்? த.சோ. 356. காதல் நடை (தம் மனக்காட்சியில்) அத்தமிழ்மலர் மணத்தை யான் நுகர்ந்து கொண்டே பக்கத்திருந்த மணமகளை நோக்காமல் நோக்கினேன். அவள் பூரிப்புப் பலுனாயிற்று. வா.கு:702. குறிப்பு மொழிநடை என்கை கலக்கவில்லை; கருத்துக்கலந்தது வா.கு. 64. அது வறுத்த நெல்லாயிற்று; பல்லிழந்த பாம்பாயிற்று. வா. கு. 269 கூறாதன கூறல்நடை பெண் தெய்வத்தின் அருகே அழகிய குழந்தை நிற்கிறது. அதை அணைத்து கடவுள் நிலை உன்னிடத்தில் திகழ்கிறதென்று அறிஞர் கூறுவதன் நுட்பமென்ன என்று கேட்க வாயெடுத்ததும் அது சிறுகை நீட்டுகிறது. நீ என்னைப் போலாகிப்பார்; உண்மை விளங்கும் என்பது கைநீட்டியதன் பொருள் என்று கொள்வேன். th.F.: 123. சின்னஞ்சிறு நடை தமிழ் எது? மொழியா? அன்று; நாடா? அன்று. பின்னை எது? வாழ்க்கை - யான் பெற்ற இன்பம். அணிந்துரை திரு.வி.க. சொன்மீட்சி நடை மலையெலாம் முருகன்; வனமெலாம் திருமால்; மலரெலாம் இறைமணம். ம.வா.கா.அ. 231 தன்மை, அயற்கையாம்நடை இவ் விளையாட்டில் இவனுக்குப் பங்கு உண்டா? இல்லையா? பாருங்கள்! இவன் மதிலைத் தாண்டான்; மரத்தை அணுகான். பின்னை என்ன செய்வான்? பிள்ளைகட்குச் சூழ்ச்சி சொல்வான்; சமயம்பார்த்துக் கல்லெறிவான்; விழுங் காய்கனிகளை ஓடி எடுத்துவருமாறு மற்றவரைத் தூண்டுவான். வா.கு. 79 (அயற்கையாம் - அயலாராகக் கூறுவதாம்) தன்மைநடை என் நா கனியினுஞ் செங்காயையே வேட்கும். செங்காய் என் பொருட்டு வாங்கப்படும்; பறிக்கப்படும். வா.கு. 79. தொடர் நடை திருவாரூர் தொன்மைக் களன்; தெய்வக்கோயில்; கலை நிலையம்; அன்புஊற்று; அருள்ஆறு; அங்கேகிள்ளை தமிழ்பாடும்; அதைப் பூவை கேட்கும். வா.கு. 9 தொன்னடை எனது நடை பரிமேலழகர் நச்சினார்க்கினியர் நடையைக் கடுப்ப தென்றும், ஜான்ஸனைச் சிவணுவதென்றுங் கூறலாயினர். வா.கு. 141 (கடுப்பது - போன்றது; சிவணுவது - பொருந்துவது; இச் சொற்கள் தொல்பழநூல் வழங்கின) நிகழாதன நிகழ்நடை சோலையில் புகுவேன். மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும். வா.கு. 121. நெடுந்தொடை நடை வெள்ளிக்கம்பியென நரைமயிர்திரண்டு, கண்குழி விழுந்து, பல்தேய்ந்து, நரப்புக்கட்டுக் குலைந்து, எலும்பு உலுத்து, முதுகு வளைந்த தொண்டு கிழவன், மேகங் கட்டுக்கட்டாகத் தவழ்ந் தாலென அடர்ந்தமயிரும், பிறைத் திங்களும் வெஃகும் நுதலும், நீலக்குருவிழியும், முத்தன்ன வெண்ணகையும், பவழ இதழும், குயில் குரலும், மயில் நடையுமுடைய இளமையும் அழகும் ஒழுகியூரும் கன்னியை மணக்குங்கொடுமைநமது நாட்டில் மலிந்து கிடக்கிறது. பெ.பெ. 232. படிப்படி அடையேற்ற நடை சுயமரியாதை இயக்கம் வீறிட்டெழுந்தபோது அதன் பொருந்தாப் பகுதியை யான் எதிர்த்தேன்; உரமாக எதிர்த்தேன்; மிக உரமாக எதிர்த்தேன்! வா.கு:177. பயனிலைத் தொடர்நடை வேறு ஒருவர் பிள்ளைகளை மருட்டுவர்; தள்ளுவர்; வா.கு. 63. பிறிதுமொழிதல் நடை திடீரென மாடு படுத்தது. வா.கு:51 (படிப்பு நின்று விட்டது). பெயர்மாற்று நடை கமலம் தேன் பிலிற்றியது. வா.கு. 709. (கமலம் - திரு.வி.க. மனைவியார்; தேன் பிலிற்றுதல் - இனிமையாகக் கூறுதல்). பெருவினாக் குறுவிடை நடை உலகில் தனிப்பெண் தோற்றமாதல், தனி ஆண் தோற்ற மாதல் புலனாகிறதோ? இல்லை. பெ.பெ.1. பொருத்திக் காட்டல் நடை கருமுகில் சூழல்; பெரும்புயல் தாக்கல்; கருமுகில் இரிவு; பரிதித்தோற்றம்; உலக உவப்பு. கருமுகில் - ஏகாதிபத்தியம்; பெரும்புயல் - புரட்சி; கருமுகில் இரிவு - ஏகாதிபத்திய முறிவு; பரிதித்தோற்றம் - சுதந்திர உதயம்; உலக உவப்பு - பொதுமை இன்பம். மு.உ. முன்னுரை. முரண்நடை வாழ்க்கையில் வெற்றியும் பேசப்படுகிறது. தோல்வியும் பேசப்படுகிறது. வெற்றி வாழ்க்கை எது? தோல்வி வாழ்க்கை எது? வா.கு: 5. கீழ் நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது. வா.கு. 804. மெய்ப்பாட்டு நடை மதில்மீதிருந்து சுழன்று சுழன்று, அப்படியும்இப்படியும் பார்த்துபபார்த்துத் திடீரென ஆங்கொருவர் ஈங்கொருவர் அணில்களென ஓடி, தோட்டக்காரர் முன்னும் பின்னும் துரத்த, மற்றப்பிள்ளைகள் ஆரவாரஞ் செய்யப் பறித்து வரும் காய் கனிகளே நன்றாக இனிக்கும். ஒரே மரம்! ஒரே விதக்காய்கனிகள்! இனிப்பு வேறுவிதம்! இஃது அற்புதமன்றோ! அற்புதம் எங்கே? திருட்டில். திருட்டில் இனிப்பு அதிகம்போலும்! என்னே! பிள்ளை விளையாட்டு. வா.கு. 79. (மெய்ப்பாடு - உடற்கண் தோன்றும் உணர்வு வெளிப் பாட்டுக் குறிப்பு) மேற்கோள்நடை உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் என்பது இந் நாட்டார் மெய்யுரை. ம.வா.கா.அ. 231. மோனைநடை எழுத்தும் சொல்லும் ஏட்டுக் கல்விக்குத் துணை செய்வன. இயற்கைவாழ்வு இறைவாழ்வைக் கூட்டுதல் இயல்பு. திருக்.விரி.இல்: 10. வண்ணிப்பு நடை நீலவானமும் வெண்திங்களும் மாங்குயிலும் நீல மஞ்ஞையும் அழகிய மலரும் விரைக்கொடியும் அருவி கொழிக்கும் மணிகளும் பிறவும் ஒருங்கு திரண்டு பெண்ணெனப் பொலிதல் காணலாம். பெ.பெ. 271. (வண்ணிப்பு - வருணிப்பு) வழிமொழி நடை எனது வாழ்க்கை வரலாற்றை முறைமுறையே கிளந்து கூறப்போகின்றேனில்லை. அதைக் கிளந்து கூற யான் எண்ணியதே இல்லை. எண்ணியிருப்பேனாயின் நாட்குறிப்பை நிரலே பொறித்து வைத்திருப்பேன். (வழிமொழிதல், மீளவருதல்) th.F.: 8 வாழ்த்து நடை பனிகொழிக்கும் கையும் ப்கொழிக்கும் நாவும் உடைய தமிழ் அன்னையர் வாழ்க! வாழ்க! நீடுவாழ்க. வா.கு. 194. வியப்பைய நடை செம்பரப் பாக்கத்து ஏரியைக் கண்டே, ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் என்று அப்பர் பாடினரோ என்னவோ தெரியவில்லை. வா.கு. 12. (வியப்பையம் - வியப்பும் ஐயமும்) விளிநடை வானமே! நீலநிறத்தை எப்படிப் பெற்றாய்? அஃது உண்மையா, கடலே! நீ ஏன் பரந்து விரிந்து கிடக்கிறாய்? ஏன் ஆழியாய் இருக்கிறாய்? வா.கு:120. வினாமேல் வினா அடுக்குநடைக்கு நிரல்நிரல் விடை நடை கடவுள் உங்களை ஏன் உலகிற்கு அனுப்பினார்? பிஞ்சில் பழுத்து உதிரவா? நோய்வாய்ப்பட்டு வருந்தவா? அண்ணன் தம்பி உற்றார்உறவினர் சீ சீ என்று ஏசி ஏசி உங்களை ஒதுக்கவா? அன்று! அன்று! நீங்கள் தாயாதல் வேண்டும்; நல்வாழ்வு எய்தல் வேண்டும்; பேரின்பம் அடைதல் வேண்டும் என்பது ஆண்டவன் நோக்கம். பெ.பெ. 80-1 (பலவினாக்களுக்கு நிரலே பலவிடை) வினாமேல் வினாநடை பெண் மனங்கொள்ளா மணம் மணமா? என்று வினவுகிறேன். திருமணம் என்பது நகையா? இசையா? பந்தரா? மாலையா? கூட்டமா? விருந்தா? மனம் ஒன்றாத இடத்திலே மணமேது மகிழ்வேது? பெ.பெ. 236. (பல வினாக்கள் தொடர்தல்) வினாவிடை நடை அழகு எதன் வாயிலாக உணரக்கிடக்கிறது? அழகு தன்னையுடைய இயற்கைவாயிலாக உணரக் கிடக்கிறது. அதற்கம் இதற்கம் உள்ள தொடர்பென்ன? அழகுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை என்னென்று கூறுவது? இயற்கையினூடே அழகு நீக்கமின்றி விராவி நிற்கிறது. மு.அ.அ: 15 வினாவுக்கு விடை வினாநடை (திருட்டில்) பங்கு உண்டா? இல்லையா? நேரே செய்தா லென்ன? துணை போனாலென்ன? (வினாவுக்கு விடையும் வினாவாகவே இருத்தல்) வினைமாற்றநடை கத்தரி இடப்பட்டது. வா. கு. 224. (கத்தரியின் வேலை துண்டாக வெட்டுதல், இவண் நட்பைக் கெடுத்ததைக் குறித்தது) வேறுபாட்டு விளக்கநடை காதல் மாறாதது; காமம் மாறுவது. காதல் கடவுள்; காமம் பேய். காதல் இன்பம், காமம் துன்பம் காதல் அன்பென்னும் தன்மையினின்றும் பிறப்பது. காமம் அவாவென்னும் வெம்மையினின்றும் பிறப்பது. காதல் உடலை வளர்க்கும்; காமம் உடலை எரிக்கும். காதல் உடல் மனம் அறிவு என்னும் மூன்றினும் ஊடுருவிப் பாய்ந்து நிலைத்து நிற்கும். காமம் உடலளவில் எழுந்து விழ்ந்துபடும். காதல் நாளுக்கு நாள் பெருகுந்தன்மையது; காமம் நாளுக்குநாள் அருகுந் தன்மையது. பெ.பெ. - 253 நடை என்பது பலபொரு ளொருசொல். நடத்தலையும், ஒழுக்கத்தையும் வெளிப்படக் குறிக்கும். அது, மொழி நடையையும் குறிக்கும். மொழிநடையையும் உலகியல் நடை, செய்யுள் நடை எனப் பகுத்தும் காட்டும். ஒரு நடையாகிய ஒழுக்கநடையையும், மற்றொரு நடையாகிய மொழி நடையையும் ஒருங்கு பேணியவர் திரு.வி.க. அவர் வழியே மாந்தர் சால்பு என்பவற்றுக்கு எத்துணை இடமுண்டோ அத்துணை இடம், அவர்தம் தமிழ் உரை நடைக்கும் உண்டு! தமக்கெனத் தனிநடை யமைத்துக்கொண்டு அந்நடையை நடைமுறைப்படுத்துதல்தானே நிலைபேறு. அந் நிலைபேற்றில் தலையாய ஒருவர் திரு.வி.க. என்க. 11. சொற்பொருள் ஆட்சிகள் இது செய்யுட்சொல் என்று சொல்லப்பட்டவற்றையும் பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்ற சொற்கள் இவை என்பவ ற்றையும் இயல்பான பொதுமக்கள் நடைமுறைச் சொல்லாக்கிக் காட்டியவர், திரு.வி.க. பழஞ்சொல்லில் உள்ள அடியை அல்லது வேரைக்கொண்டு புதுச் சொல்லைப் படைத்துப் புலவரை அன்றிப் பொதுமக்களிடையேயும் பயிலுமாறு வழங்கியவர்அவர். அறிவியல் வளர்ச்சிமிக்க காலநிலைக்கு ஏற்பத், தமிழ் வளம் பெற்று ஓங்குதலை எண்ணி எண்ணிக் கலைச் சொல்லாக்கங்கள் கண்டு வழக்கில் உலாவவிட்டவர் அவர். பொதுமக்கள் வழக்குச் சொல்லாக அல்லது உலகியல் சொல்லாக விளங்கி வருவன வற்றையும் புலமையாளர் சொல்லாக வழக்கில் உலாவச் செய்த வரும் அவர். வெளிப்படுசொல்லாக நிற்பனவற்றைக் குறிப்பாக வேறொரு பொருள்தரும் உள்ளுறைச்சொல்லாக நயம்பட அமைத்து, நறுமையூட்டியவரும் அவர். இவற்றைச் சிலச்சில சான்றுகளால் சுட்டுவதேஇச்சொற் பொருளாட்சிப்பகுதி என்க. பழஞ்சொல் மீட்பு : சோழன் குளுமுற்றத்துத துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியதொரு புறப்பாட்டு. அப்பாட்டு பாணாற்றுப்படை என்னும் துறையமைந்தது. அதில் பண்ணன் சிறுகுடியைப், பாணன், வழியே வருவாரிடம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எமக்கே என்று வினாவுகிறான். அவ் வினாவை அறிந்த திரு.வி.க. அணித்தோ? சேய்த்தோ? எனச்சில இடங்களில் ஆள்கிறார். மணிமேசலையில் உண்ணாநோன்பி ஒருவன் காட்சி வழங்குகிறான். அவ் வுண்ணாநோன்பு பழஞ்சொல். ஆயினும், உண்ணாவிரதம் எனப் பலரும் வழக்கில் கொணர்ந்தனர். ஆனால், திரு.வி.க. உண்ணா நோன்பு என ஆட்சி செய்து நிலைப்படுத்தினார். கால்கோள் என்பது பழந்தமிழ்ச் சொல்; தொல்காப்பி யத்தும் சங்க நூல்களிலும் இடம்பெறுவது. சிலம்பில் கால்கோட் காதை என்பதொன்றுண்டு. அக் கால் கோள் கால்கொள்ளுதல் என்பவற்றைப் பெருவழக்காக்கினார். இப்படி எண்ணற்றவை அவரால் புதுப்பிறப்பு அடைந்தவை. உன்னுங்கள், அந்தோ, எத்துணை, யாண்டும், நல்குதல், எய்ப்பினில் வைப்பு, விடையிறுத்தல். முகிழ்த்தல் இன்னவை இவ்வழிப்பட்டவை. புதுச்சொல்லாக்கம் : நீர் என்பதிலிருந்து நீர்மை தோன்றும். நீர்மையு டையவனை நீரன் என ஆள்கிறார் திரு.வி.க. தேர்ந்து கொள்ளுதல், தேர்ந்தெடுத்தல் என்பவை விரிசொல். இச்சொல்லைத் தெரித்தல் என வழங்குகிறார். உலகோரைக்குறிக்கும் மன்பதை என்னும் சொல்லைக் குமுகாயம் (சமுதாயம்) என்னும் பொருளில் ஆட்சிக்குக் கொணர் கிறார். காய்தல் என்னும் இருவழக்குச் சொல்லைச் சீறுதல். (சினப்) பொருளில் நடைமுறைப்படுத்துகிறார். மருந்து உண்ணும் நோயனை மருந்தன் என்கிறார். அருகில் இருப்பவர் உரிமையுடையவர் என்னும் பொருளில் அருகர் என்னும் சொல்லை ஆள்கிறார். செலல், செலவு என்பவற்றை நோக்குதல் என்கிறார். எ-டு. அவர் இங்கிலாந்து நோக்கினார் எதற்கு எனப் பெரு வழக்காக வழங்கும் சொல்லை எற்றுக்கு என்று இலக்கியச் சிறப்பூட்டுகிறார். இத்தகைய ஆட்சிகள் பொதுளியுள. கலைச்சொல்லாக்கம் சுதந்திரப்போரை உரிமைப்போர் என்றும், சம தர்மத்தைப் பொதுவுடைமை என்றும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார் திரு.வி.க. இதழ் நடாத்துதற்குரிய அரசு வைப்புத்தொகையை ஈடுகாணம் என்கிறார். சிறைச்சாலையில் வைத்தலைக் காப்பில் வைத்தல் என்றும், ஒழுங்கமைந்த மறுமொழியைச் செவ்வனிறை என்றும் பயன் படுத்துகிறார். பொதுமக்களைப் பொதுவர் என்பது வழக்கப் பொருளை விலக்கிய கலைச்சொல்லாகும். ‘Vote’ என்பதை வாக்கு என்றும் Psychology என்பதை அகத்திணை என்றும், Budget என்பதை வரவு செலவுத்திட்டம் என்றும் வழங்குகிறார். இவ்வாறு கலைச்சொல்லாக்கப்பணியிலே அவர்க்குப் பெரும் பங்குண்மை அறியத்தக்கதாம். பொதுச்சொல்லைப் புலமைச் சொல்லாக்கல் இரைச்சல் என்னும் கூச்சல் பொருள்தரும் சொல்லைக் கூறுதல் என்னும் பொருளில் பயன்படுத்துகிறார். குழந்தை நோய்நொடியுற்று மெலிந்து கிடத்தலைச் சவலை யுறுதல் என்பது வழக்கு. அதனை ஈரல் சவலை யுற்றதென் ஆள் கிறார். கடாவல் என்னும் சொல்லை மறுவினா வினாவுதல் பொருளில் வழங்கிப் பொருட் பெருமை சேர்க்கிறார். செவிசாய்த்தல், கருங்காலி, மதர்த்தெழுதல், அணைந்தேன், முகவாய்க் கட்டை இன்னவாறான பல சொற்களை வழக்குக்குக் கொணர்கிறார். உள்ளுறை அல்லது குறிப்பு ஈக்களுடன் கலந்து சுண்டல் வாங்க என்மனம் ஒருப்படு வதில்லை. இதில், சிறுபிள்ளைகள் சுண்டல் வாங்குதற்கு ஈக்கள்போல் மொய்த்தலால், ஈக்கள் எனப்பட்டனர். வா.கு. 63. எவரையும் திடீரென மேலே பறக்க யான் விடமாட்டேன். - தணிகாசலர், ஒருமாணவர் முறை முறையேகற்றுச் சிறக்க விடுத்தலன்றி எடுத்தவுடனே பெருநூலைக் கற்க விடுவதில்லை எனக் கொண்ட முறைமையை வெளிப்படுத்துதல் இது. வா. கு. 99 அச்சுக்கூடம் அம்மை வார்த்தது. - பலப்பல பிழைகளுடன் அச்சிட்டதைச் சுட்டும் குறிப்பு. வா. கு. 126. ஒரு மதில்கோழியும் சில ருத்ராட்சப்பூனைகளுஞ் சேர்ந்து உளறின போலும். - மதில்கோழி, டிக்குடியிருப்பர்; உருத்திராட்சப் பூனை, பொய்த்துறவியர். வா. கு. 156 அமிர்தம் திரண்டது; குடம் உடைக்கப்பட்டது - வேலைக்குச் செய்த ஏற்பாடு நிறைவேறிற்று. ஆனால் அவ் வேலை கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்து. வா. கு. 190 அவரால் கத்தரி இடப்பட்டது. -துண்டிக்கப்பட்டது. வா.கு. 224. புலி அவ்வகுப்புக்கும் இவ்வகுப்புக்கும் ஓடிஓடி ஆசிரியன் மாரை நடுங்கச் செய்தது. - கல்வி ஆய்வாளர், நடுங்கவைக்கும் இயல்பர்; அவர் ஒவ்வொரு வகுப்புக்கும் விரைந்து சென்று ஆசிரியன் மாரை நடுங்கவைத்தமை குறித்தது. வா. கு. 234. அவர், செக்குமாடு - புலிக்குப்பின்னே வந்த ஆய்வாளர் திரும்பத்திரும்ப அதையே சொல்பவர். அவர் செக்குமாடு போன்றவைரானார். வா. கு: 236. இந்தியச் செல்வம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகாராட்டிர சிங்கம் கர்ச்சித்தது; பூனா நகரளித்த புண்ணியம்; இந்திய ஞானச்செல்வம்; கலைக்கடல் நகைத்தது. -இவையெல்லாம் திலகரைக் குறிப்பால் உணர்த்துவன. th.F.: 311 - 315 இவ்வாறு குறிப்பு மொழிகளாக அமைந்து நடையின்பமும், பொருளின்பமும் பயப்பன எண்ணற்றனவாம். 12. இறுவாய் செல்வமிலாச் செல்வம் யான் ஒரு சிறுகுடிலில் பிறந்தவன்; எளிமையில் வளர்ந்தவன் என்பது திரு.வி.க. thœ¡if¡F¿¥ò K‹DiuÆ‹ K‹Diu!1 என் வாழ்க்கை யானைச் செல்வம் பெற்றதா? பூனைச் செல்வமாதல் பெற்றதா? என்பது பிறப்பின் ஆறாம் பேற்றில் கிளரும் ஒரு வினா.2 வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு செல்வம் தேவை. எச் செல்வமும் பெறாத வாழ்க்கை வாழ்க்கையாகாது. என் வாழ்க்கை ஏதேனும் செல்வம் பெற்றதா? என்பது இறுவாய் வினா.3 பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனப்பொய்யா மொழியில் புகலப்படுவது. அப் புகற்சி பொதுமை சட்டியது. திரு.வி.க. வாழ்வில் பொருள் வளம் எழுவாய் முதல்இறுவாய் வரை ஆட்சி நடத்தவில்லை. அதனைப் போற்றாரிடம் பொங்குமோ, தேடிச் செல்லும் வழியைத் தேடவே உள்ளமில்லார்க்குப் பொருள் கூடிக் குவியுமோ? ஆயின் அப் பொருளிலா வறுமை, வாழ்வைக் கெடுத்ததோ? தொண்டைத் தடுத்ததோ? செல்வமின்மையே செல்வ மாக்கிக்கொண்ட ஒருவரைச் செல்வமின்மை என்ன செய்யவல்லது? கட்டிலாக் கலைவளம் கல்வி தொடக்க நாளிலேயே தடையுற்றது; பள்ளியிறுதி வகுப்பில் முழுத்தடையாய் முடிந்தது. அக் கல்வித் தடை அறிவுத் தடையாயிற்றோ! இல்லை! பள்ளிப்படிப்பு முற்றும் நின்று விட்டபின்னரே பலதுறைக் கல்வி பெற்றார். பன்மொழிக்கல்வி பெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாம் இயற்கைக் கல்வி பெற்றார். உள்ளொளிக் கல்வி பெற்றார். ஆகலின் பள்ளிக்கல்வி முற்றும் வாயாமை, தடையாயிற்றில்லை! பள்ளியெல்லை என்பது கால வரம்பு, இடவரம்பு, துறைவரம்பு, பாட அளவு வரம்பு ஆயவற்றுக்கு உட்பட்டது. அப் பள்ளி நீங்கிய உலகப் பரப்புக் கல்விக்கோ, எல்லையில்லையே! அக்கல்வி பெற வாய்த்த ஒருவரைப் பள்ளிக் கல்வித்தடை என்ன செய்துவிட முடியும்! கல்வித் தடையையே, கல்வியாக்கிக் கொண்ட வெற்றிவாழ்வு அது. தொழிலிலாத் தொண்டுத்தொழில் : தொழில் எனத் திரு.வி.க.வுக்கு எது வாய்த்தது? தொடக்க எழுத்தர் பணி நின்றதா? ஆசிரியப் பணி நிலைத்ததா? அவர்க்கென வருவாய்த்தொழில் என்ன தான் இருந்தது? இதழாசிரியத் தொழில், திரு.வி.க. போலும் சான்றோர்க்கு வருவாய் தருமோ? நூலாசிரியப் பணியும்தான் பொருள் குவிக்குமோ? தொழில் என ஒன்றைச் சொல்ல முடியாத அல்லும் பகலும் ஓய்வு என்பதே இல்லாத தொண்டத் தொழிலை அல்லது தொண்டத் தொழிலைக் கொண்டவர்க்கு - தொண்டே பிறவிநோக்காகப் பிறங்கிய பெரு மகனார்க்குப் பொருள் வருவாய்தரும் தொழிலின்மை ஓர் இன்மையாமோ? ஒரு தொழில் என்னும் கட்டு இருந்தால்தானே, அத்தகையர்க்கு இடர்? தொழில் தன்னளவில் நலம் தேடுவது! தொண்டோ, எல்லாவுயிர்களுக்கும் நலம் சூழ்வது. வானத்துப் பறக்கும் பறவை வாழ்வும் நிலத்துத் தவழும் தவளை வாழ்வும் ஒப்பவை தொண்டு வாழ்வும் தொழில் வாழ்வும் என்க. ஆகவே, தொழிலொன்றை நாடாமையால் தொண்டத்தொழிலையே தொழிலாக்கி அத் தொழில் நிலையை வென்றவரானார் திரு.வி.க. நோய்க்கு நோய் செய்தல் திரு.வி.க. இளமையிலேயே நோய்க்கு ஆட்பட்டவர். மருந்தாலும், மனத்திண்மையாலும் ஓயாப்பணியாலும் நோயை வென்றவர். பின்னே கண்ணொளி மழுங்கி மழுங்கிப் படலம் முற்றும் மறைக்கவும் படுக்கையில் கிடந்தவர். ஆயினும் அந்நோய் அவர் பணிக்குத் தடையாயிற்றோ? முருகன் அல்லது அழகு, இளமை விருந்து; பெண்ணின் பெருமை, மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல் இன்ன வெல்லாம் பொழிந்த வாயும் கையும், பார்வையற்றுப் படுக்கையில் கிடந்தநாளிலும் பணியோய்வு கொண்டவோ? முதுமை உளறல், படுக்கைப்பிதற்றல், செத்துப்பிறத்தல் படைத்ததே! இருளில் ஒளி தந்ததே! நோயும் பிணியும் உள்ளொளித் தொண்டை ஒடுக்கி யவோ? அவற்றை ஊர்ந்து வாகை கொண்ட வரலாறு அல்லவோ திரு.வி.க. வரலாறு! இழப்பிலா இணைப்பு ஒவ்வொருவன் வாழ்வின் வெற்றியிலும், ஒவ்வொருத்தி மறைந்திருக்கிறாள் என்பது பெருமக்கள் வரலாற்றுச் செய்தி. திரு.வி.க. வுக்கு வாய்த்த துணை, வாழ்நாள் துணையாயிற்றா? கருத்தொத்துக் கனிந்த அவ்வாழ்வு காலமெல்லாம் கைகொடுத்து உதவியதா? இல்லையே! ஆனால், ஆறு ஆண்டு ஆறுநாள் (13.9.1912-18.9.1918) வாய்த்த அவ்வாழ்வு. நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டு தானே இருந்தது. பருவுடலம் கழியும். நுண்ணுடலமாம் உயிருடலம் கழியுமோ? ஒழியுமோ? இருமையும் ஒருமையாதல் இல்வாழ்வு இலக்கணம்! அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்த திரு.வி.க. கமலாம்பிகையார் வாழ்வு, ஒருமையில் இருமை யாய் என்றும் ஒன்றியே நின்றது. இருக; ஒரு கவுள் ஒன்றியது. ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்பதை மெய்ப்பித்த அவ்வாழ்வு, இழப்புக்கு ஆட்பட்ட தாமோ? இன்மையன்றோ இழப்பு? உண்மை இழப்பாமா? (இரு க; கலியாணசுந்தரர்; கமலாம்பிகை) இன்மைக்கு இன்மை தம்பொருள் என்பதம் மக்கள் என்பது வாய்மொழி, திரு.வி.க.வுக்கு மகப்பேறு வாய்த்தும் - ஒன்றுக்கு இரண்டு வாய்த்தும் - அவை நிலைத்தவோ? இருகுடிக்கு ஒருமகவாக வாய்த்த அண்ணார் அருமை மைந்தன் பாலசுப்பிர மணியன் வாழ்வு தானும் நீடித்ததோ? அவன் மறைவு வாட்டி வாட்டி நெஞ்சை உருக்கி நெய்யாக்கிவிடினும் தொண்டு நின்றுபட்டதோ? உயிர்த் தொண்டிலே ஈடுபட்டவர் உயிர்ப்பு உள்ளவரை விட்டு ஒழிவரோ? மனைவி மக்களுடன் இணைந்து உயிர்த்தொண்டு செய்யவேண்டும் சுமையைத், தம் தலைமேல் தாமே அள்ளிப் போட்டுக் கொண்டு சுமக்கும் நிலையர் அவர்! ஆதலால் அவ் வின்மையும்இன்மையாய் அவர்களை வாட்டுவதில்லை. வாழ்வில் பொதுநிலையரைத் தோல்வியுறச் செய்யும் செல்வம், கல்வி, தொழில், மனைவி, மக்கள் ஆகிய இன்மை யெல்லாம் - தடையெல்லாம்- தொண்டரிடத்துமண்டியிட்டுத் தோற்றோடு கின்றன! இதனைத் திரு.வி.க. வாழ்வு மெய்ப்பிக்கின்றது. ஊழை உப்பக்கங் காணல் இனி ஊழால் - முறையால் - வந்தெய்தும் - முதுமை தானும் தொண்டர்தம் தொண்டைக் கெடுக்க வல்லதோ? இருபதில் எழுச்சி; முப்பதில்முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்; என்னும் பெதுவியல் தொண்டர் மாட்டும் ஆட்டம் காட்டவல்லதோ? நழுவலுக்கு நழுவல் தருபவர் தொண்டர்; அசதிக்கே அசதியாக்குபவர் தொண்டர்; ஏக்கத்திற்கே ஏக்கம் தரும் எழுச்சியர் தொண்டர்; தூக்கத்தைத் தூக்கி எறியும் துணிவர் தொண்டர்; அத் தொண்டரியல் முழுதுருவாகச் செறிந்திருந்த பெருந்தகை திரு.வி.க. எழுபதில் இளமை திரும்புகிறது என்ற ஏந்தலை முதுமை வாட்டியதெனக் கூறலாமோ? தொண்டு அறவே கூடாது ஒழியும் நாளே, அவர்களுக்கு முதுமைநாள்! தொண்டு செய்யாத ஒரு நாளைக் கண்டறியாத திரு.வி.க. வாழ்வு என்றும் இளமை வாழ்வாம், என்றும் இளையாய் அழகியாய் என முருகில் முதிர்ந்த வாழ்வு மூத்து விளியும் வாழ்வாமோ? வாழ்க : உள்ள உறுதியுடைய காளைக்கு வண்டியில் ஏற்றிய பாரம் சுமையாவதில்லை. வழியில் உண்டாம் இடர் இடராவதில்லை; முட்டும் குறுக்கீடுகள் முடக்கி வைப்பதில்லை. அந்நிலையரை அடுக்கும், இன்மைகள் எல்லாம் தவிடு பொடியாகிப் பாறையில் பட்ட பளிங்கெனத் துகள் துகளாகின்றன! இன்பம் விழையாரைத் துன்பம் என்ன செய்யும்? இடும்பைக்கு இடும்பை படுப்பாரை இடும்பை என்ன செய்யும்? வாழ்க்கைக் குறிப்பின் இறுவாய் வாழ்த்தைக் கூறி நிறைவாம்: என்பால் தொண்டுச் செல்வம் பெருகுமாறும் பொருட் செல்வம் பெருகாதவாறும் அருள் சுரந்த இயற்கை இறையை வாழ்த்தல் வேண்டாமா? அது வாழ்க. முற்றிற்று.