இளங்குமரனார் தமிழ்வளம் 23 1. பாவாணர் 2. பாவாணர் பொன்மொழிகள் 3. பாவாணர் உவமைகள் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 23 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 384 = 400 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 250/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் பாவாணர் 1. மும்மதிப்பீடுகள் 13 2. பிறவி நோக்கு 18 3. பிறப்பும் கல்வியும் 25 4. பலநிலைப் பணிகள் 31 5. மனைவி மக்கள் 79 6. ஓய்விலா ஓய்வு 89 7. உலகத் தமிழ்க் கழகம் 93 8. நூல் வெளியீட்டுதவிகள் 102 9. தேடிவரு திருவுக்கு மூலம் 109 10. அகரமுதலித் திட்டம் 114 11. விழாவும் விருதும் 128 12. அறிவிப்பும் அறைகூவலும் 139 13. பல்சுவைப் பாகு 162 14. பெரும்பிரிவும் பேரிரங்கலும் 208 15. நினைவகங்களும் நிலைபேறும் 220 16. படைப்பும் பல்கும் 232 பாவேந்தரின் மதிப்பீடு 255 பாவாணர் பதிப்பக உறுப்பினர் பட்டியல் 256 சிறப்புப் பெயர் நிரல் 258 பாவாணர் பொன்மொழிகள் பதிப்புரை 277 ஆராய்ச்சி முன்னுரை 278 குறுக்க விளக்கம் 284 பாவாணர் பொன்மொழிகள் 285 பாவாணர் உவமைகள் ஆராய்ச்சி முன்னுரை 319 குறுக்க விளக்கம் 325 1. தமிழ் 326 2. தமிழ்ப்புலவர் 332 3. பிறமொழி 336 4. வரலாறு 343 5. ஆராய்ச்சி 346 6. சொல் 357 7. பொருள்விளக்கம் 366 8. நூல் 374 குறிப்பு 382 பாவாணர் பதிப்பகம் நெறிமுறைகள் தோற்றுவாய் : மொழிநூன் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் உயிருடன் வாழ்ந்தபோதே அவர் எழுத விரும்பிய நூல்களை உடனுக்குடன் அச்சிட்டு வெளியிடும் ஏந்தின்மை யால் பல நூல்கள் அவரால் எழுதப்படாமலும், எழுதப்பட்ட சில நூல்கள் கையெழுத்து வடிவிலேயே அழிந்து போகவும் நேர்ந்தன. அச்சாகி வெளியானவையும் கிடைப்பதுமில்லை! பாவாணரின் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகள் அறிஞர்கள் மட்டுமே வாங்கிப் படிக்கக் கூடியவையாதலால் அத்தகைய நூல்களை எழுதுவாரும் துணிந்து வெளியிடுவாரும் அரிதாகின்றனர். பாவாணர் கொள்கைகளை அரண் செய்வனவும், தனித் தமிழின் பல்துறை சார்ந்தனவுமான நூல்களை வெளியிட வேண்டிய தேவை மிகுந்து வருகின்றது. இவற்றையெல்லாம் குறைந்த அளவிலேனும் உடன் நிறைவேற்றக் கருதிப் பாவாணர் பதிப்பகம் தோற்றுவிக்கப் பெறுகின்றது. நோக்கம் : 1. பாவாணரின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுதலும், நூல்களை மறுபதிப்புச் செய்தலும் அவற்றின் பிற மொழியாக்கங்களை வெளியிடுதலும்! 2. பாவாணர் கொள்கைகளைப் பரப்பும் வகையில் அவர் தம் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகளை ஊக்குவித்து வெளியிடுதலும். 3. பாவாணர் கொள்கைகளுக்கு உட்படுவனவும் அரண் செய்வனவும் தனித்தமிழ் வளர்ச்சி குறித்தனவுமான பல்துறை நூல்களை வெளியிடுதலும்; பாவாணர் பதிப்பகத்தின் நோக்கங்கள் ஆகும். அறிவுரைக் குழு : பாவாணர் பதிப்பகத்தின் நிலைத்த அறிவுரைக் குழுவினர் பின்கண்டோர் ஆவர்: திருவாளர்கள் : 1. பர். இரா. இளவரசு, தமிழ்த்துணைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, செனைன - 600 005. 2. பர். பொன். கோதண்டராமன், தமிழ் வாசகர், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை - 6000 005. 3. மாண்புமிகு பர். மு. தமிழ்க்குடிமகன், சட்டப் பேரவைத் தலைவர், சென்னை. 4. புலவர் இரா. இளங்குமரன், பாவாணர் ஆராயச்சி நூலகம், திருநகர், மதுரை. ம. இலெ. தங்கப்பா, தமிழ்ப்பேராசிரியர், புதுவை. அவ்வப்போது தக்காரைப் பதிப்பாசிரியராகவும் பொருளாள ராகவும் அமர்த்துதலும் அச்சீட்டிற்குரிய நூலைத் தேர்ந்தெடுத்தல், அச்சீடு, வெளியீடு, விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சி ஆகியன குறித்துப் பதிப்பாசிரியர்க்கும் பொருளாளர்க்கும் அறிவுரை கூறுதலும் அறிவுரைக் குழுவின் பொறுப்பு ஆகும். பதிப்பாசிரியர் : பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பு, நூல் வெளியீடு, விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சிக்குரிய வினைப் பாடுகளைத் தொண்டு கருதியும் ஊதியமின்றியும் அறிவுரைக் குழுவின் அறிவுரையுடன் ஆற்றும் பொறுப் புடையாரே பதிப்பாசிரியர் ஆவார். பாவாணர் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் திரு.கு. பூங்காவனம் ஆவார். பதிப்பாசிரியர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராகக் காணப்படினும் தக்கார் வேறொருவரை அறுவுரைக்குழுவினர் பதிப்பாசிரியராக அமர்த்துவர். பொருளாளர் : பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பின் வழியாகப் பொருள் திரட்டலும் வைப்பகத்தில் இடுதலும் பெறுதலும, பதிப்பக வரவு செலவை எழுதிப்பேணலும் பொருளாளர் பொறுப்புக்கள் ஆகும். பதிப்பகத்தின் பெயரால் தொடங்கப் பெறும் வைப்பகக் கணக்கை (Bank a/c) ஆளும் உரிமை இவர்க்குண்டு. பதிப்பகத்தின் பொருளாளராகத் திரு.சு.முகில்வண்ணன் அமர்த்தப் பெற்றுள்ளார். பொருளாளர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராய்க் காணப்படினும், வேறொரு பொருளாளரை அறிவுரைக்குழுவின் அறிவுரையுடன் பதிப்பாசிரியர் அமர்த்திக் கொள்ளலாம். புரவலர் : தமிழ்த் தொண்டு கருதியும், பாவாணர் கொள்கைப் பரப்புக் கருதியும் பாவாணர் பதிப்பகத்திற்கு உருபா 1000/- நன்கொடை வழங்குவார், அவ்வமைப்பின் புரவலர் ஆவர். பதிப்பகம் வெளியிடும் நூல்களில் இரண்டு படிகள் புரவலர்க்குக் கையுறையாக அனுப்பப் பெறும். பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்தும் புரவலர் கூறும் கருத்துக்கள் முன்னுரிமையுடன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெறும். உறுப்பினர் : பதிப்பகத்தின் நூல் வெடியீட்டிற்கான முதல்வைப்பிற்குக் குறைந்த அளவில் உருபா நூறு நன்கொடையாய் வழங்குவோர் பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினராகப் பதிவு செய்யப் பெறுவர். வணிகமும் ஊதியமும் கருதாத் தமிழ்த் தொண்டாதலின் உறுப்பினர்க்கு வட்டித் தொகையோ ஊதியப் பங்கோ அளிக்கப் பட மாட்டாது. ஆயின் அச்சாகும் நூலில் ஒருபடி அன்பளிப்பாக வழங்கப்பெறும். ஆண்டுதோறும் வரவு செலவு அறிக்கையும் உறுப்பினர்க்கு அனுப்பி வைக்கப்பெறும். பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்து உறுப்பினர் தம் கருத்துக்களைப் பதிப்பாசிரியருக்கோ அறிவுரைக் குழுவினருக்கோ தெரிவிக் கலாம். விற்பனைக்குழு : தமிழகத்தின் மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பின்கண்ட அக்குத்து (நிபந்தனை)களுக்கு உட்படும் விற்பனைக் குழு உறுப்பினர் அமர்த்தப் பெறலாம். 1. விற்பனைக்குழு உறுப்பினர் பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினராயிருத்தல் வேண்டும். 2. வெளியாகும் நூல்களில் குறைந்த அளவில் 50 படிகள் விற்பனை செய்தல் வேண்டும். 3. நூல் வெளியாகும் நாள், விலை முதலிய செய்திகள் பதிப்பாசிரியர் அறிவித்தவுடன் தமக்கு வேண்டிய நூற் படிகளைத் தெரிவிப்பதுடன், அவற்றின் விலை மதிப்பில் காற்பங்குத் தொகையைப் பொருளாளர்க்கு முன்பணமாகச் செலுத்திவிடுதல் வேண்டும். நூற் படிகளைப் பெற்றுக் கொண்ட மூன்று திங்களில் அவற்றிற்கான முழுத் தொகையையும் செலுத்திவிடுதல் வேண்டும். 4. விற்பனைக் குழுவினர்க்கு 20 விழுக்காடு கழிவு தரப்படும். பொதுவான பிற : 1) உறுப்பினர் / புரவலர் அன்பளிப்புத் தொகையைக் குறுக்கைக்கணக்குக் காசோலை / வரைவோலையாக (Crossed Cheque / Draft)Treasurer, Paavaanar Pathippagam என்னும் பெயருக்கு வழங்கலாம். 2) ஆண்டுதோறும் குறைந்த அளவில் இருநூல்களும் பதிப்பகத்தின் உறுப்பினர் தொகையும் விற்பனையும் ஊதியமும் பெருகப் பெருகப் பல நூல்களும் வெளியிடப் பெறும். 3) பாவாணர் பதிப்பகம் செயல்பட முடியாது முடங்கிப் போகும் நிலை உருவாகுமாயின் செலவுபோக எஞ்சியுள்ள தொகை விழுக்காட்டளவில் பகிர்ந்து புரவலர்க்கும் உறுப்பினர்க்கும் திருப்பியளிக்கப் பெறும். வரைந்தோன் வரைவு பாவாணர் தம் வரலாற்றைத் தாமே வரையக் கருத்துக் கொண்டார். 27-10-60 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கொற்றவன்குடி, விரிவுரையாளர் குடியிருப்பில் இருந்து, கழகக் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர் களுக்கு வரைந்த விரிவான கடிதத்தில் என் நூல் களெல்லாம் வெளிவந்த பின் என் வரலாற்றை நானே வரைவேன் என்றெழுதினார். 12-1-64 இல் மதுரை, தமிழ்க் காப்புக் கழகத்தில் தமிழ்ப்பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிய போது பட்டம் எனத் தொடங்கி ஓர் அரிய பொழிவாற்றினார். காப்புக் கழகத் தலைவர் பேரா. சி. இலக்குவனார் தலைமையேற்றார். பொதுச செயலாளர் என்ற முறையில் வரவேற்பும் நன்றியும் எனக்கு வாய்த்தன. நன்றியில், பாவாணர் ஆய்திறம் பாவால் இசைத்து, பாவாணர் உள்ளம் பறைசாற்றும் வீரத்தை; ஆய்வாளர் நூலகத்து நுண்ணிதாய்க் கண்டறிவார்; வேட்பாளர் மேடையில் கேட்டறிவார்; அல்லாதார் மீசையில் கண்டேனும் உண்மை உணரட்டும்; தூய தமிழுணர்ச்சி ஓங்கிப் பெருகட்டும்; ஏய தமிழாட்சி எங்கும் நிலவட்டும்; என்றென்று வாழ்த்தி இனிய நலமுரைத்து. அமைந்தேன். பாவாணரை நெருங்கினேன்; அள்ளி அள்ளிக் கொள்ளும் வள்ளற் செல்வத்தை வைப்பாகக் கொண்டிருந்தும் வறுவியேம் எனவாழும் அறிவறியார் பெருகியுள்ள தமிழ் மண்ணுக்குத் தங்கள் வரலாறு கட்டாயம் வேண்டும். நாலாயிரம் பேரைத் தட்டி யெழுப்பாவிட்டாலும், நான்குபேரைத் தட்டி யெழுப்பினாலும் போதும்; தாங்கள் குறிப்புத்தந்தால், உடன் வந்து வரைவேன் என்றேன். ஒரு பெருநகை நகைத்தார். என் வரலாறா? என்றார். பின்னர்க் கண்ணை மூடித் தலைதாழ்ந்து சிந்தித்தார். நானே எழுதுவேன் என்றார். தாங்கள் செய்தால் அக்கொடைக்கு வேறு கொடை இல்லை என அமைந்து, அதனை நிறைவேற்றி உதவ வேண்டினேன். பின்னர் அவரொடு அணுக்கத் தொடர்பு கொள்ளவும், ஓரிடத்து உறையவும், ஒரு துறையில் பணியாற்றவும் கூடிய பேறுகளின் போதும் நினைவூட்டினேன்! பாட்டு, பழைய பாட்டே! பேராசிரியர் பூங்காவனரும் இம் முயற்சியிலே ஊன்றினார். 17-2-81 இல் எழுதிய அஞ்சலில், ஓராண்டுக்கு முன்னரே - ஐயா அவர்கள் உயிருடன் வாழ்ந்தபோதே - அவர்களின் வரலாற்றை எழுத விரும்பினேன். ஐயா அவர்களிடமும் என் கருத்தை வெளியிட்டேன். ஒரு பெருஞ் சிரிப்புச் சிரித்து என் வரலாற்றை நானே எழுதுவேன் என்று தட்டிக்கழித்து விட்டார்கள். ஐயா அவர்களின் பேச்சை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இசைத் தட்டில் பதிவு செய்யவும் விரும்பி எழுதிக்கேட்டேன். ஆங்கில நூல் வெளியான பின்னர்ப் பதிவு செய்துகொள்ளலாம் என்று எழுதிவிட்டர்கள் என்பதால் பேராசிரியர் அவர்களின் முயற்சி புலப்படும். உடையவர் மறைந்துவிட்டார்! உருகினார் கழக ஆட்சியாளர்; மாலைமாலையாகக் கண்ணீர் சொரிந்தார்; என்னைக்கண்ட அளவில் எவ்வளவு விரைவில்கூடுமோ அவ்வளவு விரைவில் பாவாணர் வரலாறு வெளிவர வேண்டும் என்றார். என்னுள் இருந்த வரலாற்று வித்துக்கு, நீர்விட்டார் தாமரைச்செல்வர்! ஐம்பதாண்டு அணுக்கரல்லரோ அவர்! பாவாணர் கடிதக் காப்பாளர்அல்லரோ அவர! குடத்துள் விளக்கை எவரும் அறிவராக் காலத்தே அறிந்து போற்றிக் குன்றத்தின் மேலேற்றிக் கொலுவீற்றிருக்க வைத்த ஏந்தல் அல்லரோ அவர்! அவர்க்குப் பின்னர்த் தானே பிறர் பிறர் தொடர்தொடராய் அறியவும் அணுக்கராகவும் அரவணைக் கவும் ஆயது! பாவாணர்க்குக் கல்லறையில் நிகழ்ந்த இரங்கற் கூட்டத் திற்குப் பின்னர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களிடம் பாவாணர் வரலாறு எழுத விரும்பும் என் விருப்பை யுரைத்து, உதவ வேண்டும் என வேண்டினேன். செய்திகள், தொடர்புகள், கடிதக் குறிப்புகள் பெறுதற்கு வாய்புத்தர வேண்டினேன்; தாமே பாவாணர் வரலாறு எழுதவிருப்பதாகக் கூறியதுடன், இரண்டு வரலாறு வருதலாலும் குறைவில்லை; உங்கள் நோக்குப்படி ஒரு வரலாறு எழுதுங்கள்; என் நோக்குப் படி யான் ஒரு வரலாறு எழுதுவேன் என்றார்கள். அதுவும் தகு மென அமைந்தேன். தென்மொழி, பாவாணர் நினைவிதழ் கண்டேன். அதில், பாவாணர் வாழ்க்கை வரலாறு என்னும் தலைப்பில் (61) ஓர்அறிக்கை காணப்பட்டது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர். அவருடன் ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகள் அகப்புறத் தொடர்பு கொண்டும், துணையிருந்தும் அவரின் அரியவாற்றலை உலகுக்கு வெளிப்படுத்தியும் அவரின் அறிவு நலன்களை ஊக்கப் படுத்தி வெளிக்கொணர்ந்து மக்களுக்காக்கிய அவரின் தலை மாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் திட்டமிட்டுள்ளார். அவரின் இந்தப்பணி மிகவும் செவ்வையாக அமையவேண்டும் என்பதால் கடந்த காலங்களில் பாவாணருடன் தொடர்புகொண்ட அறிஞர்கள், மாணவர்கள், அன்பர்கள், நிறுவனங்கள் தங்களளவில் தாங்களறிந்த செய்திகள், புகைப்படங்கள், மடல்கள், கையெழுத்துப் படிகள், பழைய வெளியீடுகள் முதலியவற்றைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆசிரியர், தென்மொழி, சென்னை - 5 என்னும் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டுகின்றோம். அமைச்சர் - என்பது அது. அதனையறிந்து, பாவாணர் வரலாறு வெளிப்படும் சுடர் அரும்பியதாய் மகிழ்ந்தேன். செந்தமிழ்ச் செல்வி சிலம்பு -55, பரல்-6 பாவாணர் நினைவு மலராக வெளிவந்தது. மொழிப் பேரறிஞர் பாவாணரைப்பற்றிக் கட்டுரை விடுக்குமாறு நேரில் கூறியதுடன் 23-1-81 அஞ்சலிலும், மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்களைப்பற்றிய தங்கள் கட்டுரையினை விரைந்தெழுதி யனுப்புமாறு வேண்டுகிறேன் என்று எழுதினார் கழக ஆட்சியாளர். தொடர் கட்டுரையாகச் செல்வியில் மொழிஞாயிறு பாவாணரும் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலியும் என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஆசிரியர் உரையில், இவ்விதழில் பாவாணர் அவர்களைப்பற்றிக் கழக இலக்கியச் செம்மல்புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையின் ஒரு பகுதியினை வெளியிட்டுள்ளோம் எனத் தோற்றுவாயும் செய்தனர். செல்வியின் அளவில் 26 பக்கங்கள் கொண்ட கட்டுரைஅது. அக்கட்டுரைக்கென மேற்கொண்டுள்ள உழைப்பு வரலாற்றுக்கு முளையாயிற்று. அக் கட்டுரையைக்கண்ட பேரா. பூங்காவனர் 17-2-81 இல், செல்வி இதழ் இன்று வந்தது. தங்களின் (தொடர்) கட்டுரையைப் பன்முறை படித்தேன். உள்ளத்தை உருக்கிவிட்டது. பாவாணர் ஐயா அவர்களின் உடல் அடக்கத்தின் போதெழுந்த இழப்புத் துன்பத்தினும் மிகுதியாய்த் துன்பம் பெருகிவிட்டது. ஐயா அவர்களின் வரலாறு, தமிழ் வரலாறு; தமிழர் வரலாறு; தமிழுக்கு ஆக்கமும் தமிழருக்கு ஊக்கமும் விழிப்பும் ஊட்டக்கூடியது. நாவலர் வரலாற்றைப் படைத்த தாங்கள் தமிழ்க் காவலர் வரலாற்றையும் படையுங்கள். தங்கள் ஒருவரால்தாம் அப்பணியைச் செப்பமாய்ச் செய்யவியலும் என்று நான் உறுதியாய் நம்புகின்றேன். செல்வி இதழ்க் கட்டுரையின் முதல் தொடரே என் கருத்தை என் விழைவைப் பன்மடங்கு உறுதியாக் கியுள்ளது. இஃதென் வேண்டுகோள்; தமிழரின் வேண்டுகோள்; வேண்டுகின்றேன் என்று வரைந்தார். இவ்வளவுடன் நில்லாமல் வரலாற்றுக்குத் தக்க வழிகாட்டியும் உதவினார். கடந்த சிலவாண்டுகளில் இயக்கத் தொடர்பாக ஐயா அவர்கள் எழுதிய 36 கடிதங்கள் என்னிடமுள. அவற்றைப் படியெடுத்துத் தருவேன். ஐயா அவர்களுடன் நான் பழகிய வரையில் எனக்குத்தெரிந்த செய்திகளைத் தொகுத்தெழுதித் தருவேன். செல்வி முதலாய இதழ்கள் வழி வேண்டினால் பிற அன்பர்களும் உதவுவர். இன்னுமொன்று : ஐயா அவர்களால் எழுதப்பட்ட படைப்புகள் நூற்றுக்கணக்கானவை. அனைத்தும் தொகுக்கப் பெறல் வேண்டும். பல இதழ்களில் மலர்களில் எழுதியுள்ர்கள். பல தமிழ்ச் சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளார்கள். பலரை வாயடங்கச் செய்துள்ளார்கள். அவையெல்லாம் அரும்பெருங் களஞ்சியமாயமையவன. அப்பணியையும் தாங்களே மேற் கொள்ள வேண்டும். விருப்போடு செய்வீர்கள், பொறுப்போடு செய்வீர்கள். இப்பணிகளையாற்றத் தாங்களும் கழகமும் முன்வரவில்லை யென்றால் வேறு யாரே முன்வருவர்? என வினா எழுப்பித் தூண்டினார். மீட்போலையில் விளக்கமிக்க வேண்டு கோளையும் விடுத்தார். இவை வரலாற்றுப் பயிர்க்கு வாய்த்த உரமாயின. பாவாணர் நூல்களைத் தொகுத்தேன்; கடிதங்களைத் தொகுத்தேன்; எழுத்துப்படிகள், அறிக்கைகள், வெளியீடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து முயன்று கிடைத்தஅளவால் தொகுத்தேன். பெருகிய அளவால் கிடைத்த கடிதங்கள் எனச் சுட்டுவ தாயின் வரன்முறையே கழக ஆட்சியாளர் அவர்கள் தொகுத்துக் கோப்பில் வைத்திருந்த கடிதங்களே ஏறத்தாழ 1300 எண்ணிக்கையை, கோப்பில் வைக்கப்படாமல் கட்டாக இருந்தவை 120. இவற்றை வழங்கியவர் இற்றைக் கழக ஆட்சியாளர் இரா. முத்துக் குமாரசாமி அவர்கள். அடுத்துச் சேலம் அரிமாப் புலவர் கி.மு. சின்னாண்டார் வயத்தவை ஏறத்தாழ 200. பேராசிரியர் பூங்காவனர் தம் வயத்ததாகவும் பெரும் புலவர் வி. பொ. பழனிவேலனார் முதலிய பிறர் வயத்ததாகவும் தொகுத்து வழங்கியவை அடுத்த நிலையவை. mj‰F« mL¤jÃiyait beŒntÈ c.j.f., பாவாணர் தமிழ்க்குடும்பம் சார்ந்த கடிதங்களும், அவர்கள் வழியே பிறர் கடிதங்களாக வாய்த்தவையும், அன்புவாணர் அவர்களும் அப்பர் கருப்பையா அவர்களும் உதவியவை இவை. பாவாணரால் பெரிதும் பாராட்டப்படும் முத்துக்கிருட்டிணர் கடிதம் ஒன்றும் வாய்க்கவில்லையே எனக் கவன்றிருந்தகாலை, ஏறத்தாழ 30 கடிதங்களை அவர்தம்மகளார் வழியே பெற்று உதவிய நெய்வேலி அறவாழியார் உதவி பெரிது. தமிழ்ப் பாவைத் தொகுப்புகளையும் பாவாணர்தம் கைப்பட வரைந்த கலைச்சொல்லாக்கப் பட்டியை யும் அரிதில் தேடிப் பெரிதில் உதவிய ஆசிரியர் அருளனார் கருணையார்) ஆர்வம் பெரிது. பாவாணர் இயற்றிய நூல்களுள் தம்மிடம் இருந்தவற்றையெல்லாம் சுட்டியெழுதி வேண்டுப வற்றைக் கொள்கவெனத் தாமே முன்வந்துதவிய திருச்சி க.சி. தாமரைக்கோ பேரன்புக்குரியர். புன்செய்ப் புளியம்பட்டி ஆடலரசனார் இளமுருகனார், முருகவேள், திருச்சி அருள்செல்லத் துரையார், மு.வ. பரமசிவனார், ந. பிச்சுமணியார், சேலம் இல.சு. இரத்தினவேலனார், செங்காட்டுப் பட்டிச் செந்தமிழ்க்கிழார் ஆகியோர் உழுவலன் பொடும் தம்முடையவும் பிறருடை யவுமாம் மடல்களும் அறிக்கைகளும் தொகுத்து தவியமை பாராட்டுக்குரியது. பாவாணரின் மாணவர் பொன்னுசாமி அவர்கள்தம் முதுமையிலும் கொண்ட இளமையன்பு நெகிழச் செய்வது! பாவாணர் மேல் எத்தகைய பற்றுமை அவருக்கு! இன்னோர் காலத்தால் செய்த கொடைகள் இவ்வரலாற்றுப் பயிர்க்கு வேலிக் காப்பாய் விளங்கின. அஞ்சல்களின் எண்ணிக்கைப் பெருக்க உதவியால் தனித்தனியே சுட்டப் பட்டவர்கள் இவர்கள். ஓரட்டையாலும் நெஞ்சத்தில் நிறைந்து நிற்பவர் மிகப்பலர். அவர்களை நினைந்து போற்றி அமைதலே இம் முன்னுரைக்குத் தகுமென அமைந்தேன். பாவாணர் வரலாற்றுக்கு மூலவைப்பாகப் பாவாணர் கடிதங்கள், பாவாணர் உவமைகள், பாவாணர் பொன் மொழிகள் என்பவை முன்னரே வெளிவந்தன. பாவாணர் வேர்ச்சொற் சுவடியும் வெளிப்பட்டது. பாவாணர் பாடல்கள் பாவாணர் மடல்கள் என்பனவும் அச்சுக்கு அணியப்படுத்திக் கழக வெளியீட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள. இவையெல்லாம் இவ்வரலாற்றுக்கு உதவிச் சான்றுகளாக வாய்த்தவை. வரலாற்றுக்காகப் பல்கால் பல இடங்களுக்குச் சென்று பெருமக்கள் பலரைக்கண்டு கலந்துரையாட நேர்ந்தது. அந்நேர்வில் கிடைத்த கொடைகளுள் பலவும் பல்சுவைப் பாகின் வைப்புப் பொருளாயின. பாவாணரைப் பற்றிய நினைவுக் கூட்டங்கள், விழாக்கள், ஆய்வுகள், படத்திறப்பு நிகழ்ச்சி, உலகத் தமிழாராயச்சி நிறுவன அறக்கட்டளைப் பொழிவுகள் இன்னவெல்லாம் இவ் வரலாற்றுக்கு அழுத்தம் தந்தன. பாவாணர் பிறந்த வட்டத்தில் அமைந்த ஊரணுக்கம், அவர் முதற்கண் பணியாற்றிய சீயோன்மலையில் பயின்ற தொடர் பணுக்கம், அவர்தம் தந்தைவழித்தொடர்பாளர் உறவணுக்கம், பாவாணரின் மூத்த மனைவியார் மைந்தர் மணவாளர் தம்மொடு பழகிய கவை அணுக்கம், மணவாளர்க்கு நண்பினராகவும் ஆசிரியராகவும் முறையே இருந்த நெடுஞ்செழியனார், மணியர் இ.மு. சுப்பிரமணியனார் ஆகியோரிடம் இருந்த நுட்பணுக்கம், செல்வி இதழாசிரியர், கழக நூலாசிரியர் ஆகிய வகையால் நேர்ந்த எழுத்துறவணுக்கம், ஆய்வு கையால் மறைமலையடிகள் நூலக வள்ளலார் மாளிகை உடனுறை வணுக்கம், தம் துறைக்குத் தமிழ்ச் சொற்றொகுப் பாளனாக அமைந்தமையால் நேர்ந்த துறை நுணுக்கம், பாவாணர் உயிர்ப்பாகத் திகழ்ந்த உ.த.க. உறுப்பாண்மை பெறாமலே உரிய நிகழ்ச்சிகளிலெல்லாம் ஒன்றி உடனாய கொள்கையணிக்கம், மறைமலையைக் கடைப்பிடி யணுக்கம் இன்னவெல்லாம் இவ்வரலாற்றுப் படைப்புக்கு ஏந்தாக இருந்தமை முன்னால் இனிதுணர வாய்க்கின்றன. இவ்வணுக் கங்கங்களுள் ஒன்றிரண்டோ மிகையோ அறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் பாவாணர் வழிஞருள் ஒருவனென என்னையும் உட்கொண்டும், தாம் தரும் செய்திகள் பயன்பாட்டுக்கும் என்று கொண்டும், அஞ்சல்வழியாகவும் நேரிடை உரையாடல் வழியாகவும் பாவாணர் வரலாற்றுச் செய்திகள் உதவியுள்ளனர். பாவாணர் பெயரொடு விளங்கும் என் ஆய்வு நூலகத்தில் செந்தமிழ்ச் செல்வி இதழ்கள் முற்றாக உண்மை இவ்வரலாற்று ஆக்கத்திற்குப் பெருந்துணையாய் அமைந்தது. பின்னர்த் தொடர்பாக வாய்த்த தென்மொழி, முதன்மொழி, பிழம், மீட்போலை, அறிவு, கைகாட்டி, தமிழ்ப்பாவை இன்னவற்றிலும் ஓரளவு தொகுப்புண்மையும் உதவிற்று. தென்மொழியிற் கிட்டாதசில மடலங்களை மறைமலையடிகள் நூலகமும், அறவாழியார் மனை நூலகமும் உதவின. இவ்வெல்லாம் இவ்வரலாற்றுத் தொகைக்கு உதவிய வைப்புகளாம். இவ்வரலாறு 16 தலைப்புகளால் இயல்கின்றது. மும் மதிப்பீடுகளில் தொடங்கி படைப்பும் பல்கும் என்பதுடன் நிறைகின்றது. பல்நிலைப் பணிகள் என்பதும் (4) பல்சுவைப்பாகு (13) என்பதும் பிற தலைப்புகளினும் விரிவுடையவாகலின் முன்னது ஆறு உட்பிரிவுகளையும், பின்னது மூன்று உட்பிரிவுகளையும் கொண்டன. முன்னதன் பகுப்புகள் அரும்பு, முகை, மொக்கு, போது, மலர், அலர் என வளர் நிலை ஒழுங்குப் பகுப்புக்கு இடமாக்கப்பட்டன. பாவாண மலரின், பணிவளர் நிலைக் குறிப்பு நோக்கு இது. பின்னது சொல்லப்படும் செய்திகளுக்கு ஏற்பக், கேட்டலும் கிளத்தலும், நெருங்கலும் நிகழ்தலும், அறிதலும் ஆய்தலும், எனப் பொருள் கருதிய பகுப்பாக்கப் பட்டன. ஒன்பதாம் பகுதி தேடிவரு திருவுக்கு மூலம் என்பது. கருதுகோள் தலைப்பு. பாவாணர் என்னும் தனி ஒருவர் வாழவேண்டும் என்பதற்காகப் பலரும் உதவ முந்தியமை, பாவாணர் என்னும் தமிழ் வாழ்வுக்கு உதவ முந்திய முந்தலேயாம். பாவாணர் கொண்டிருந்த பல்லான்ற திறங்களைத் தொகுத்துக்கூறிய பகுதி அது. 16ஆம்தலைப்பு, படைப்பும் பல்கும் என்பது, அதில் படைப்பு என்பது பாவாணர் இயற்றிய நூல்கள். பல்கும் என்பது அவர் நூல்கள் - எழுத்துகள் - வழியே நூலாகியவை. கடிதங்கள், பொன் மொழிகள், உவமைகள், பாடல்கள் இன்னவை பல்குதல் வழிப்பட்ட பாவாணத் தொகைகளேயாம். எஞ்சிய தலைப்புகள் பெயரறிந்த அளவால் பொருள் விளக்கமாவன. தொகுப்பில் கிடைத்த குறிப்புகள் அனைத்தும் இவ் வரலாற்றில் இடம்பெற்றுள என்று கூறல் சாலாது. அதன், செம்பாதிக்கும் குறையவே இடம் பெற்றுளது, ஏறத்தாழ ஆயிரம் பக்கம் - நூலாய்வுடன் - வெளிவர வேண்டிய இவ்வரலாறு காலநிலை - பொருணிலை முதலிய கரணியங்களால் சுருக்கப் பதிப்பாக அமைந்தது, ஆனால், ஓர் உறுதியை இவ்விடத்தே உரைத்தே ஆதல்வேண்டும். ஒரு தொடர்தானும் - ஒரு குறிப்பு தானும் பாவாணச் சான்றின்றி இணைக்கப் பெற்றிலது என்பதே அது. நாவலர் பாரதியார் வரலாற்றை எழுதி முடித்து, அவரிடமே படித்தும் காட்டி, முழுமையாகப் படிக்கக் கேட்டேன்; முற்றும் சரிதான் என்று வாங்கப்பெற்ற ஒப்புகைக் கைச்சான்றுபோல இவ்வரலாற்றுப் பெருமகனாரிடம் வாங்கக்கூடும் நிலை இல்லையே என்பதோர் குறையேயாம். இத் தீர்க்க வியலாக் குறைக்கு என் செய்வது? பாவாணர் வரலாற்று நூல் கழகவழி வெளிவர வேண்டுவதே! கழகம்தானே பாவாணர் வரலாற்றுக் கொடையில் பெரும்பகுதிக்கு உரிமை பூண்டது! பாவாணர் பதிப்பகத்தின் வெளியீடாக வருதலும் சால்பே என உவப்புடன் கழகம் ஏற்றுக் கொண்டது. ஆதலால் கழக ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு யானும் பாவாணர் பதிப்பகமும் நன்றியம்! இனிப் பாவாணர் பதிப்பகம் வெளியிட்டமையை யான் பாராட்டுவதேன்? பாவாணர் வழிஞருள் யானும் ஒருவனாக ஒன்றிப் பாராட்டி நன்றியுரைக்கக் கடப்பட்டுள்ளேன். இவ்வரலாற்றுக்கு உதவிய பெருமக்களைப் பட்டியலிட்டால் நூற்றுவரையும் தாண்டும். ஆதலால் நெஞ்சார்ந்த நன்றியை நேயத்தால் பொதுவகையில் சொல்லி அமைகின்றேன். பாவாணர் நூலாய்வும், தேவநேயமும் தனித்தனியே பெருநூலாகத் தக்கன. அவை வெளிப்படல் ஒரு தொகுப்பாகப் பாவாணரை அறிந்துகொள்ள உதவும்! பாவாணர் பெருமை என்னும் நூல் புதுவைத் தமிழ் மல்லனாரால் எழுதி அண்மையில் வெளிவந்தது. எனக்கு இதுகாறும்கிட்டாத ஓரிரு குறிப்புகளுக்கு உதவியது. அக்குறிப்புள இடமும் செய்தியும் சுட்டப்பட்டுள. மறைமலையடிகளார் நாட்குறிப்பும் இதுகால் வெளி வந்தது. அதில் முக்குறிப்புகள் கிட்டின; அவையும் இணைத்துச் சுட்டப்பட்டன. பாவாணர் தொடக்கக் கல்வி, ஆசிரியர் பயிற்சி பற்றிய செய்திகள் அச்சீட்டு முடிநிலையில்கிடைத்தன. அவையும் உரியவகையில் போற்றப்பெற்றுள, தனித்தமிழ்ப் பற்றாளர், தொண்டர், ஆர்வலர், அன்பர், எழுத்தாளர், பாவலர், பொழிவர் ஆகிய அனைவர்க்கும் இப் பாவாணர் படையலாம்! பாவாணர் ஆராய்ச்சி நூலகம், தமிழ்ச் செல்வம் திருநகர், மதுரை 625 006 1. மும்மதிப்பீடுகள் ஓராயிரம் ஆண்டுகள் ஒய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி - பாவாணர்! ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி - பாவாணர்! இஃது, உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை இதனை, வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல் என்றும், செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே என்றும் வரூஉம் கழகச் சான்றோர் காட்சி யுரைகளைக் காட்டாக்கிக் கூறுவேன். பாவாணர், தமிழ்மொழியின் தனி ஒளியைப் பாருக்குப் பாரிக்கவென்றே பிறந்த, எழுசுடர் ஞாயிறு! மேலையாரிய மொழிகள், கீழையாரிய மொழிகள், திரவிட மொழிகள் இன்னவற்றையெல்லாம் விரல் நுனியிலே வைத்திருப் பார்போல், சொற்பிறப்பியல் விரிக்க வந்த விரகர்! எத்துணை எதிர்ப்புகளுக்கும், ஈடழிக்கும் தடைகளுக்கும், இன்னாங்கு எழுந்த இடர்களுக்கும், தலை தாழ்த்தாது மலையென நிமிர்ந்து நின்று, ஆக்கப்பணிகள் புரிந்த அரிமா! வாட்டும் வறுமையையும் தேட்டெனக் கொண்டு, திறமான பணிபுரிந்த வாட்டருஞ்சீர் வண்டமிழ்த் தொண்டர்! அன்னார் இழப்பு ஒன்றே மொழித்துறைக்கு உண்மையாகவே ஈடுசெய்ய இயலாத இழப்பு! வாரத்தால் மொழிவது அன்று இது! வாய்மையால் மொழிவது! பாவாணர் பாவலர்; நற்றமிழ் நாவலர்; இலக்கியச் செல்வர்; இலக்கண வித்தகர்; உரைவேந்தர்; கட்டுரை வன்மையர்; நகைச்சுவை மிளிர உரையாடும் நயத்தர்; நினைவின் ஏந்தல்; நுண்மாண் நுழைபுல எழிலர்; நுணங்கிய கேள்வியர்; நுண்ணிய அறிவுக்கு, வணங்கிய வாயினர்; உண்மைத் தொண்டை உரையாலும் பாட்டாலும் உள்ளார்ந்த உவகை ஊற்றெடுக்கப் பாராட்டும் ஒள்ளியர்; தக்காரை ஊக்கித் தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர்; ஆசிரியர் தொல்காப்பியனார்க்குப் பின்னே அருந்தமிழ் இலக்கணத் திணையிலாக் குரிசில் இவரே என்ன இலங்கிய பெற்றியர்! தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழ்ககு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன் எனத் தம் வர்த்த பணியின் சீர்த்தநிலையை நுண்ணிதின் உணர்ந்து செம்மாந்து கூறிய செந்நாவலர், சொற்பிறப்பியற் பணிக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன் என் உளங்கூர்ந்துரைத்து, அப்பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்து உழைத்த உரவோர்,1 - பாவாணரைப் பற்றிய மதிப்பீடுகளுள் ஈதொன்று. மொழிஞாயிறு மறைந்தது; தமிழ்க்கதிரவன் தலைசாய்ந்து விட்டான்; செந்தமிழுலகம் இருண்டது! தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகிய பெருமக்களுக்குப் பின், தமிழ் மொழியின் மேலும் அதன் வரலாறு இனம் ஆகியவற்றின் மீதும் அடர்த்துப் போர்த்து நின்ற அறியாமைக் காரிருளைத் தம் அறிவாண்மையால் அடித்து விரட்டிய தனித்தமிழ்க் கதிரவன், ஒளிப்புலன் ஞாயிறு, செம்புலச்செம்மல் ஞா. தேவநேயப் பாவாணர் என்னும் தீந்தமிழ்ப் பேரொளிக் கோளம் தன் ஆய்புல அறிவுக் கதிரைச் சுருக்கிக் கொண்டு சாவெனும் பேரிருளில் தன் அறிவியக்கத்தை ஒடுக்கிக் கொண்டது! நேரக்கூடாதது நேர்ந்து விட்டது; நடக்கக் கூடாதது நடந்தே விட்டது! தென்புல மக்கள் தங்கள் வாழ்வு நலன்களை நாடிச் சிறிது சிறிதாக முன்னேறுவதற்குத் தன் தெள்ளிய அறிவாலும், ஒள்ளிய ஆய்வுத்திறனாலும் பேரொளி உமிழ்ந்த பெருங்கதிர் ஞாலம் இறுதியில் மறைந்தே விட்டது! தமிழின வாழ்வில் ஒரு பேரூழி தோன்றி, இருந்து, தலைமறைந்து விட்டது! தொல்காப்பியனுக்கில்லாத தொகைச்சொல் அறிவும், திருவள்ளுவருக்கில்லாத தீந்தமிழ் வரலாற்றறிவும் தேவநேயமாய் முகிழ்த்துத், தமிழினம் தவற விட்ட மொழித் தடங்காட்டி, வழிநடை தோற்றிப் புது வரலாறாய்ப் புதுக்கிக் கொடுத்த ஊழிப்பேரொளி ஒரு நொடியில் காலவெள்ளத்துள் கட்புலன் படாது கரைந்து விட்டது. இனி இருள்! இருள்! எங்கும் இருள்!1 - பாவாணரைப் பற்றிய மதிப்பீடுகளுள் இது மற்றொன்று. உலகின் முதற் செம்மொழியாகிய தமிழ் மொழியின் தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு பண்புகளையும் மறைத்தும் திரித்தும் மழுப்பியும் குழப்பியும் வரும் மேலை ஆரிய மேய்ப்பர்களுக்கும் கீழையாரிய ஏய்ப்பர்களுக்கும் அறைகூவல் விடுக்கும் நிறைநூற் பெரும் புலவர்! ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெலாரையும் மிஞ்சி, தப்பிலக்கணம் கூறும் ஆரியப் புல்லரும் அஞ்ச - மொழியியல் ஆணிவேருக்கும் மூலம் காட்டி, வரலாற்றியலில் சல்லிவேரையும் கல்லிக் காட்டும் மொழி யாராய்ச்சி மூதறிஞர்! நல்லமரத்துப் புல்லுருவிகட்கும், சாரத்தை உறிஞ்சி ஈரத்தில் முளைத்த காளாம்பிகட்கும், பயிரை மேயும் வேலிகட்கும் - இலக்கணங்களாய்த் திரிந்திழியும்இற்றைத் தமிழகக் கூலிப் புலவர்கட்கிடையே மொழித் தூய்மைக்கும் இனக்காப்பிற்கும் வழிகாட்டியாய் உலவும் வல்லரிமா! குறைமதியர் தேக்கிவைத்த கறையிருளை நீக்கவந்த மறைமலையார் வழிவந்தநிறைமலையார்! தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய், ஆர்த்திலங்கும் சீர்த்தியினார்! நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால் புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி! அமைந் தொளிரும் குடவிளக்கு! மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால் மிடிமை வாய்ப்பட்ட கடமைக் காவலர்! - அவர்தாம் நம் திராவிட மொழியியல் ஞாயிறு திரு. ஞா. njnea¥ ghthz®!1 - பாவாணரைப் பற்றிய மதிப்பீடுகளுள் இஃதின் னொன்று. - இம்மூன்று மதிப்பீடுகளும் மூவேறு மாதிகைகளில் வெளிவந்தவை. மூன்றும் பாவாணரொடு தொடர்புடையவை. முன்னது, பாவாணரை இதழாசிரியர் கூட்டத்து முதன்மை உறுப்பினராகக் கொண்டது; அடுத்தது, பாவாணரைத் தன் சிறப்பாசிரியராகக் கொண்டிருந்தது; இறுதியது, பாவாணர் திறம் பரப்ப எழுந்தது! முன்னது, அடிநாள் தொட்டு முடிநாள்காறும் பாவாணர் அறிவம் தாங்கி வந்த பெற்றியது. அடுத்தது, பாவாணரை அரிய இயக்கமாக்கிப் பளிச்சிட வைத்தது. இறுதியது, பாவாணர்க்கு விழாக்கோலங்காட்டி விழுப்பம் சேர்த்தது. முன்னிரு மதிப்பீட்டுரைகளும் பாவாணர் மறைவின் இரங்கலில் எழுந்தவை. பின்னொரு மதிப்பீட்டுரையும் பாவாணர் வாழும் நாளில், பாவாணர் என்பவர் யார்? என வினாப்பறை எழுப்பி விளக்கமுறுத்தக் கிளர்ந்தது. முதலது, இவ்வரலாற்றின் நூலாசியரால் வரையப் பெற்றது. அடுத்தது, பாவலரேறு பெருஞ் சித்திரனாரால் காட்டப் பெற்றது. இறுதியது, பேராசிரியர் தமிழ்க் குடிமகனாரால் நாட்டப் பெற்றது. அறிவின் இலக்கணம், நுண் மாண் நுழை புலம் என்பது! இம்மூன்றும், பாவாணர் நுண்மாண் நுழைபுலம் சுட்டுவன! கலித்தாழிசை, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும்யாப் பியலது! இவை, அவ்வகையில் பாவாணக் கலிப்பா வின் முத்தாழிசை எனப் புகலலாம்! நிறைமலையாம் மறைமலையாரைப் பனிமலைக் கொடு முடியின் உயரம்; நீல ஆற்றின் நீளம்; அமைதி வாரியின் ஆழம்; - ஆகியவை ஒருங்கே அமைந்தவர் என்பார் பாவாணர்! அம்மதிப்பீடு பாவாணர்க்கு மேலும் சிறப்பத்தகும்! இதனைப் பாவாணரை அறிந்தார் நன்கனம் அறிவார்! 2. பிறவி நோக்கு பிறவிக்கு நோக்கு உண்டு; அதிலும் மாந்தர் பிறவிக்குத் தனிச்சிறப்பான நோக்குண்டு பிறவிக்கு நோக்குண்டு என்று அறிவார் அரியர்; அறியினும், தம் பிறவிநோக்கைப் பிறர்க்கு உரைப்பார் அவரினும் அரியர்; அவருள்ளும், அப்பிறவி நோக்கை நிறைவேற்றுவார் அரியருள் அரியர்; அத்தகைய அரியருள் அரியர் பாவாணர். பாவாணர் பிறவி நோக்கை நாம்காண்பது எப்படி? நோக்கை அறிந்தன்றோ பாவாணர் நோக்கை அறிய வேண்டும்! செய்யுள் உறுப்புகளுள் ஒன்று நோக்கு என்பது. முழுதுற நோக்கி முடிவெடுப்பதே அது. அதனை, மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே என்பார் தொல்காப்பியர்! அறிவார்ந்த சான்றோர் படைப்பாம் பாவுக்கு நோக்கு உண்டெனின், அவ்வறிவார்ந்த சான்றோர் பிறவிக்கு நோக்கு இல்லாமல் ஒழியுமோ? அவரிடத்திருந்த - அமைந்து கிடந்த - நோக்குத் தானே பாவின் கண் படிந்தது! பாவின் நோக்கு, பாவாணர் நோக்காதல் இயற்கையே யன்றோ! பாவாணர்க் கெல்லாம் பொதுமையாம் நோக்கு, மொழிஞாயிறாம் பாவாணரிடத்து மல்கியமை வியப்பாகுமா? தம் பிறவிக்கு நோக்கு உண்டு என்பதை எத்துணைப் பேர் அறிந்தனர்? அறிந்து கடனாற்றினர்? வெந்ததைத் தின்று விதிவந்தால் போதல் என்பார் நோக்கு எவ்வளவு சுருங்கி விட்டது! அவ்வாறு சுருங்குவதா நோக்கு? விரிய விரிய விரியும் சங்கப் பலகை யன்றோ நோக்கு! அறிதோறும் அறியாமை கண்டு, விரிதோறும் விரிவு விஞ்சிப் பெருகுவதன்றோ நோக்கு. எழுகதிர் ஞாயிறென விரிவுறும் நோக்கு, சுரிபுழுவாய் - சுருட்டையாய் - அமைந்து கெடுமோ? பாவாணர், பிறவி நோக்கை அறிந்து செயலாற்றியதை விளக்கும் சான்றுகள் ஒன்றா இரண்டா? அவர்தம் வாழ்வின் வண்ணமும், வாக்கின் வண்ணமும், படைப்பின் வண்ணமும் எல்லாம் எல்லாம் அவர்தம் நோக்கப் பறையறையும், தொய்விலா முழக்கங்களே! அவர்தம் பிறவி நோக்கை அறிந்தார் - பிறரறியவும் வெளிப்பட அறிவித்தார் - என்பவற்றுக்குச் சான்றுகளும்தாம் எத்துணை? தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமை தாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலும் இல்லை. தக்கார் ஒருவர் தலையெடுக்கா விட்டால், தமிழ்நாடு, அமிழ்நாடே1 - இது பாவாணரின் நாடு தழுவிய நோக்கு. அந்நோக்குக்கு உரியவராக ஒருவரைக் காணத் தவித்த தவிப்பின் வெளிப்பாடு இது. அத்தவிப்பை நிறைவுறுத்தத் தக்கார் ஒருவரைப் புலமைத் துறையில் தாம் காணாமையால், தம் நோக்கு முனைப்புற்று முந்துதலைத் தம் எழுத்தால் வெளிப்படுத்து கிறார். வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக் குறிக்கோள்2 தமிழை வட மொழியினின்று மீட்க வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டே நான் கற்றாய்ந்தவன். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை3 தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்4 என் காலத்தில் தமிழ் விடுதலையடையாவிடின் இனி ஒருகாலும் அடையாதென்பது திண்ணம். தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்ட வேண்டிய உண்மை தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே5 தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும் என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டிய வாறெல்லாம் என்னைத் தகுதிப் படுத்தி வருகின்றேன். இன்னும் ஐந்தாண்டிற்குள் அது நிறைவேறிவிடும் என்பது என் நம்பிக்கை1 மறைமலையடிகளின் குறிக்கோள், தமிழைப் பிற மொழிச் சொற்கலப்பின்றி முழுத் தூய்மையாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்பதே. அதை அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். அதனாற் பெரும்பயன் விளையாது. சமகிருதம் தேவமொழி என்று திருக்கோயில் வழிபாட்டு மொழியாக இருக்கும் வரை, தமிழுக்கு வளர்ச்சியோ முன்னேற்றமோ இராது; என் குறிக்கோள் தமிழைத் திரவிடத் தாயாகவும் ஆரியத்தின் மூலமாகவும் உலகறிய நாட்டி அதை வட மொழிப் பிணிப் பினின்று அடியோடு மீட்பதே. அதற்காகவே அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டு ஆய்ந்தேன்2 வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் புகழ் வேண்டி எழுதுபவை அல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை. ï¤Jiz¡ fhyK« ïnj neh¡Fl‹ f‰W« MuhŒªJ« ïU¡»nw‹., ஆராய்ச்சி முடிந்துவிட்டது. உண்மையும்கண்டு விட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி3 தமிழை வடமொழியினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் பிராமணியத்திலிருந்து முழுவிடுதலை யடைவதே அதன் பயன். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பட்டயங்களுள் ஒன்று, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி. அதை வலியுறுத்துவன இந்தியெதிர்ப்பு நூலொன்றும் வடமொழியெதிர்ப்பு நூலொன்றுமான ஈராவணச் சான்றுகள். அச்சான்றுகளே அகர முதலிவை மெய்ப்பிக்கும்4 திருவள்ளுவர், பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தித் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள், தமிழ் தனிமொழியென்று காட்டினார். பெரியார், கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சி ஊட்டினார். நான், தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிறமணீயப் பேயைத் தமிழ்நாட்டினின்று ஓட்டுவேன். இதன்று இறைவனே என்னைத் தோற்றுவித்திருக்கின்றான். இது என் செயலன்று. இறைவன் செயலே1 என் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதும் மேலையறிஞரின் ஆரிய மயக்கறுப்பதும், தமிழை மீண்டும் அரியணையேற்றுவதும் அகர முதலியல்லாத என் தனி நூல்களுள் இணையற்றதுமான The Lemurian Language and its Ramification” என்னும் ஆங்கில நூல் (500 பக்கம்) அச்சேறவிருக்கிறது2 - 1940 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய மடல் களுள் கிடைத்த செய்திகள் இவை. பாவாணர் தம் பிறவி நோக்கை உணர்ந்து வெளிப்படுத்தியவர் என்பதற்கு இவை போதுமல்லவோ! காலையில் ஒரு கொள்கை; கடும்பகலில் ஒரு கொள்கை; மாலையில் ஒரு கொள்கை; மறுநாளிலும் இப்படியே - உடை மாற்றுவதுபோல் நடைமாற்றித் திரியும் கொள்கைமாறிகளை அல்லது குறிக்கோள் மாறிகளைக் காண்கிறோமே! இன்னும் விளங்கச் சொன்னால் காட்சி மாறுவது போல் மாறும் கட்சி மாறிகள் மல்கிப் பளிச்சிட்டுக் காட்டும் இம்மண்ணில் தான், புரிவு தெரிந்த நாளில் கொண்ட கொள்கையை இறுதிநாள் வரை நிலைநாட்டி - எவ்வளவு வன்கொடுமைச் சூறையாலும் அசைக்க முடியாத வகையில் மலையென நிலைநாட்டிச் சென்றவர் பாவாணர். 1931 இல் மொழியாராய்ச்சி - ஒப்பியன் மொழி நூல் என்னும் பாவாணர் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளியாகியது. 1981 இல் நிகழ்ந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு விழாமேடையிலே, மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் பற்றிய ஆய்வுப் பொழிவின் நிறைவிலே தம் நெஞ்சாங்குலை வெடிப்புற்று என் பிறவி நோக்கு ஈதே என்பார் போலப் பேரா இயற்கையுற்றார் பாவாணர். பாவாணர் தம்பிறவி நோக்காகக் கூறியவற்றை நிறை வேற்றினரா? நிறைவேற்றா தொழிந்தனரா? அவர் படைப்பை முற்றாக அறிந்தார்க்கு விளக்கம் வேண்டுவதில்லை. நிறை வேற்றினார் என்பது குறைவற விளங்கும். 1) தமிழ் திரவிடத்திற்குத் தாய். 2) தமிழ் ஆரியத்திற்கு மூலம். 3) தமிழ் தோன்றிய இடம் - தமிழன் பிறந்தகம் - மறைந்த குமரிக்கண்டம். - இம் முக்கொள்கைகளை நிலைநாட்டுவதையே தம் வாழ்வுக் குறிக்கோள்களாகக் கண்டவரும் கொண்டவரும் பாவாணர். இவற்றுள் முதற், கொள்கையை விளக்குவதற்கே எழுதப்பட்டது, திரவிடத்தாய். இரண்டாம் கொள்கையை நாட்டுதற்கே எழுதப்பட்டது, வடமொழி வரலாறு. மூன்றாங் கொள்கையில் முன்னிரு கொள்கைகளும் அடங்கி யிருத்தலால் ஒப்பியன் மொழிநூல், The Primary Classical Language of the world. தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வேர்ச் சொற் கட்டுரைகள், தமிழின் தலைமையை நாட்டும் தனிச் செற்கள், An Epitone of the Lemurian Language and its ramifications (cyclostyled Book let) என்பவை. இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார் அவையமே உலகத் தமிழ்க் கழகமாகத் தோன்றியது; ஊன்றியது; கிளை விரித்துப் படர்ந்தது; இந்நாளிலும் அவ்வமைப்பும் அமைப்புடை யாரும் நீறுபூத்த நெருப்பெனச் சில இடங்களிலும், இடையிடையே கொழுந்து விட்டெரியும் சுடரெனச் சில இடங்களிலும், நுந்தா விளக்கெனச் சில இடங்களிலும் உரிமைக் கடனாற்றி வரக் காண்கிறோம். பிளவுக்கும் பிரிவுக்கும் உட்பட்டாலும், உரிய அமைப்பு உயிர்ப்போடு திகழவே செய்கின்றது! இவ்வமைப்பின் தோற்றமும காப்பும் பாவாணர்தம் குறிக்கோள் வெற்றியெனல் சாலுமா? அறிஞர் காரல் மார்க்கசு கொள்கை வென்றதா? தோற்றதா? மார்க்கசு தெரிவியல் அறிஞர்! அவர் தம் கொள்கையைத் தெரிவியல் தெளிவால் நிலைபெறுத்திக் காட்டிய அளவே அவர்தம் வெற்றி! அதனைப் புரிவியல் வெற்றியாக்கத் தோன்றினார் இலெனினார்! எதிரிடைப் பட்டாரும் எளிதாக மதிக்க வொண்ணாப் பெருவெற்றி எய்தினர்! தெரிவியலும் புரிவியலும் இருவேறு இயல்கள்! முன்னதைச் சார்ந்ததே பின்னது எனினும், முன்னதைச் செயவல்லார் பின்னதையும் செயவல்லாராக இருத்தல் வேண்டும் எனக் கருதுவார். இவ்வீரியல் அடிப்படையும் அறியார். ஒவ்வொரு கலைக்கும் அறிவியற்கும் தெரிவியல (Theory) புரிவியல் (Practice) என இருகூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும்போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று. அதற்குக் காலமும் இடந்தராது. நீர்மின்னோ, அனல்மின்னோ உருவாக்கப்படுவது எங்ஙனம் என்றறிவது தெரிவியல்; மின்வலியால் விளக்கெரியச் செய்வதும் விசிறியாட வைப்பதும் புரிவியல். மின் விளக்கைக் காணும் பொதுமக்கள் மின்னாக்க முறை அதனால் அறிவிக்கப் படாமையால் அது அறிவியலின்பாற்பட்டதன்று என்று பழித்துப் புறக்கணியார்- இக்குறிப்புகளைப் பாவாணரே வழங்குகின்றார். தாம் எழுதிவரும் வேர்ச்சொற் கட்டுரைகள் சொற்களின் திரிபையே காட்டிக்கொண்டு செல்கின்றன என்றும், அவற்றை யாளும் நெறிமுறைகளை எடுத்துக் கூறவில்லை என்றும், அதனால் அறிவியலின் பாற்பட்டன அல்ல என்றும், சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்யாத பலர் மறைமுகமாகக் குறை கூறுவதாகத் தெரிந்து அவர்க்கு மறுப்பு விளக்கமாக இவ்வறிவியல் கூறுகளைக் குறிக்கின்றார் பாவாணர். அணுவின் ஆற்றலைக் கண்ட ஐன்சுடீனாரோ, புவியீர்ப்பைக் கண்ட ஐசக்கு நியூட்டனாரோ பொறிகளையும் கண்டு பிடிக்க வேண்டுமென அறிவியல் உலகம் எதிர்பார்த்திருந்ததில்லை! அவற்றைக் கொண்டு பிறர் பிறர் வேண்டும் பெற்றிகளைக் கண்டு உலகுக்கு அளித்தனர். அவ்வாறே பாவாணரும் தமிழ்மொழி தமிழின மீட்புக்கு வேண்டும் அடிப்படைக் கருத்துகளைத் தெள்ளத் தெளிவாக நிலைப்படுத்திய அளவே அவர்தம் பணியின் வெற்றியாகும். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் ஆட்சியாளர் வயத்தது. அந்நிலை உருவாகும் வரை தனிமாந்தரோ, தனித்தனி அமைப்புகளோ எத்துணை முயன்றாலும் குளும் படியில் தங்கிய நீராக அமையுமேயன்றிக் குளுநீராகவோ, கடற்பரப்பாகவோ ஆக வாய்ப்பு இல்லை. மொழிக் கொள்கைக்கு மட்டுமன்றி வேறு எவ்வழிக் கொள்கைகளுக்கும் இதுவே முடிவாம். இதனைத் தெளிந்தே, தனித்தமிழ்ப் பற்றுடைய முற்றதிகாரி ஒருவர் ஆட்சியிலேதான் இவற்றை நிலைபெறுத்தக் கூடும் என்கிறார் பாவாணர்! தனித்தமிழ் மறவருள் ஒரு கடுங்கோல்முற்றதிகாரி தலைவனாக வந்தாலொழியத் தமிழ்த் தொண்டர் எத்துணையர் தோன்றினும் தமிழ் பேசும் நடை பிணங்கள் செவிக்கொளா; மனந்திருந்தா என்றும், நொந்தும் வெந்தும் உரைக்கிறார். அந்நிலை எப்பொழுது வரும்? அப்பொழுதில் புரிவியல் வெல்லும்! அதுவரை தெரிவியல் அளவில் அமையும்! திரு. வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் தம் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தொடக்கத்திலும் நிறைவிலும் ஆய்ந்து, அந்தண்மையாம் செந்தண்மை நிறைந்தமையையே வெற்றி எனத் தெளிவிக்கிறார், அவ்வகையால், பாவாணர் கொண்ட கொள்கைகள் அவரால் வலிவாகவும் பொலிவாகவும் நிலை நிறுத்தப்பட்ட துடன், தடை கிளர்த்துவார் உரையையெல்லாம் தவிடு பொடியாக் கியதை அறிவார், பாவாணர் வெற்றியைப் பளிச்சிடக் காண்டல் உறுதியாம். 3. பிறப்பும் கல்வியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் பட்டிக்கும் சங்கரன் கோயிலுக்கும் இடையில் தோக்கசு (Stokes) என்ற மேனாட்டுக் கிறித்தவக் குரவர் தொண்டாற்றியிருக்கிறார். அவர் இருந்தது வாகைக்குளம் என அறிய வருகின்றது. பின்னாளில் அவர் கோயில்பட்டியிலும் தங்கியுள்ளார். அவர்தம் வளமனைக் காவலராக இருந்தவர் முத்துசாமி என்பார்; அவர்தம் மனைவியார் வள்ளியம்மாள் என்பார். முத்துசாமி சங்கரன் கோயிலில் இருந்து நெல்லைக்குச் செல்லும் சாலையில் உள்ள பனைவடலி என்னும் ஊரினர்; அவ்வூரிலும் அடுத்தடுத்துள்ள தேவர்குளம், குருக்கள்பட்டி என்னும் ஊர்களிலும் உறவு உடையவர். அவர் தோக்கசின் வளமனைக் காவலராகிய பின்னர், அவரையும் அவர் மனைவி யையும் கிறித்தவ ராக்கியிருக்கிறார் தோக்கசு. உறவினர்கள் தம் சமயத்திலேயே அழுந்தி நின்றமையால் தொடர்பு சுருங்கலாயிற்று. முத்துசாமி-வள்ளியம்மாள் இல்வாழ்வின் பயனாக ஓர் ஆண குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த சின்னாளிலே தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். பெருங்குணம் வாய்ந்த தோக்கசு, அக் குழந்தைக்குத் தந்தை பெயருடன் வளர்ப்புத் தந்தையாம் தம் பெயரையும் இணைத்து ஞானமுத்து தோக்கசு எனப்பெயரிட்டு வளர்த்தார். உரியபருவத்தில் பள்ளியில்சேர்ப்பித்துப் படிக்கவும்வைத்தார். ஞானமுத்து தோக்கசு கல்வியில் கருத்துடையவராக இருந்தமையால், இளவயதிலேயே ஆசிரியத் தகுதி பெற்றார். சங்கரன் கோயிலில் இருந்த தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக அமர்ந்தார்; அப்பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த களப்பாளங்குளம், பெருங்கோட்டூர் முதலிய இடங்களில் இருந்து வந்தும் பிள்ளைகள் அவரிடம் பயின்றனர். ஆசிரியப் பணியில் சிறந்த ஞான முத்தருக்கு அவர் உறவிலேயிருந்த சொக்கம்மாள் என்னும் பெண்ணைத்திருமணம் செய்விக்கத் தோக்கசு ஏற்பாடு செய்தார். அதனால், அச்சொக்கம்மாளை மரியாள் எனப்பெயர் சூட்டிக் கிறித்தவராக்கி மணவினை நடத்து வித்தார். ஆனால், அவ்வம்மையாரின் உறவினர் ஈழத்தில்இருந்தமையால் கூடிவாழ விருப்பமின்றிப் பிரிந்து ஈழஞ்சென்றுவிட்டார். தாம் செய்துவைத்த திருமணம் இத்தகு இடர்க்கு ஆளாகியமை அறிந்த தோக்கசு, கோயில் பட்டிக்கு அருகில் உள்ள பாண்டவர் மங்கலத்தில் ஓதுவாராக (உபதேசியாராக) இருந்த குருபாதம் என்பாரின் திருமகளார் பரிபூரணம் என்பாரை ஞானமுத்தருக்கு மீண்டும் மணமுடித்து வைத்தார். பரிபூரணம் பாளையங்கோட்டையில் உள்ள சேராடக்கர் கல்லூரியில் மூன்றாம் தரம் (III grade) படித்துத் தேறியவர். சமயப்பற்றில் ஆழ்ந்தவர்;குடும்பப் பாங்கில் சிறந்து விளங்கியவர்; கணவரொடு கருத்தொருமித்து வாழ்ந்தவர்; ஆசிரியப்பணி செய்தவர். ஞானமுத்தர் பரிபூரணத்தம்மையார் இல்வாழ்வில் மக்கள் பதின்பமர் பிறந்தனர். மகளிர் அறுவர்; ஆடவர் நால்வர்; அவருள் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும்பிறந்தவரே நம் தேவநேசன்! தேவநேசன் (பாவாணர்) பிறப்பு கல்வி பணிபற்றிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்கள் விரிவாகவும், சுருக்கமாகவும் எண்ணிக்கையால் நான்கு கிடைக்கின்றன. அவற்றுள் மூன்று கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களுக்கு எழுதியவை. ஒன்று, அகரமுதலிப்பணி தொடர்பாக அரசுக்கு விடுத்தது. அவற்றுள், பிறந்தகிழமை நேரம் முதலியவற்றோடு நாளும் பிறவும் தெளிவாக வரைந்துள்ளார். தேவநேயன், தோக்கசு (Stokes) என்னும் துரை மகனாரால் எடுத்து வளர்க்கப்பெற்ற தோக்கசு ஞான முத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியராகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்கும் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் பக்கல் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு பத்தாம் பிள்ளையாகவும் நான்காம் மகனாகவும் பிறந்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நயினார் கோவிலிற் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது 1970 இல், வாழும் புலவர்கள் வரலாற்றுக் குறிப்பு களைக் கழகம் தொகுத்த போது, அதற்குப் பாவாணர் எழுதிய என் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் என்பதன் தலைப்பத்தியாகும். தேவநேசன் பிறந்து ஐந்து அகவையராய் இருந்த போது - 1906 இல் - அவர் தந்தையார் இயற்கை எய்தினார்; பின்னர், அன்னையாரும் இயற்கை எய்தினார்; பெரிய குடும்பம்; குடும்பத்தின் கடைக்குட்டி தேவநேசன்; ஆதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் இருக்கத் தக்கவராக இருந்தார். வடார்க்காடு மாவட்டம் ஆம்பூரில் தேவநேசனின் மூத்த அக்கையார் இருந்தார். அவர் தேவநேசனைத் தம்மொடு வைத்துக்கொண்டு பேணினார். ஆங்கிருக்கும் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார். ஆம்பூரில் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தேர்ச்சியுற்ற தேவநேசன் மேற்கல்வியை விரும்பினார். ஆங்கு அவ்வாய்ப்பு இன்மையால், தாம் பிறந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் பயில விரும்பினார். தம்பியார் கல்விக்கு உதவும் மனம் இருந்தாலும், அக்கையார் குடும்பப் பொருள்நிலை இடந்தருமாறு இல்லை. அவ்விடரைத் தீர்க்கத் திருவருளால் வாய்த்தார் யங் (young) என்னும் பெருமகனார்; துரைமகனார்! யங் என்பார் முகவை மாவட்டத்துச் சோழ புரத்தையடுத்த முறம்பு என்னும் சீயோன் மலையில் (திருவில்லிபுத்தூர் - சங்கரன் கோயில் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ நடுவு நிறுத்த நிலையமாக உள்ளது முறம்பு.) விடையூழியராக இருந்தவர். ஆங்கோர் உயர்தரப்பள்ளியை உருவாக்கித் தாளாளராகவும் இருந்தவர். திக்கற்றோர்க்கு இலவச உண்டுறை விடுதியும், வாய்ப்புடை யவர்க்கு எளிய கட்டணத்தொடு கூடிய உண்டுறை விடுதியும் நடத்தியவர். அவர் தேவநேசன் கல்வித்தேவையை உணர்ந்து கடனுதவி புரிந்தார். தேவநேசன், பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழியக் கழக (C.M.S.) உயர்நிலைப்பள்ளியில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளை (அந்நாளில் 4, 5, 6 ஆம் படிவங்களை)ப் பயின்று நற்றேர்ச்சி பெற்றார், பயிலும்காலத்திலே அவர் காட்டிய தேர்ச்சியும் எடுத்துக் கொண்ட கல்வித் துறைகளும் ஏற்றுக் கொண்ட கடைப்பிடிகளும் அவராலேயே எழுதப்பட்டுள்ளன: 4 ஆம் படிவத்தில் பூதநூல் உடல்நூல் நிலைத்திணைநூல் (Botany) தொகுதியையும், 5-ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சு, கணக்கு வைப்பு (Book-Keeping) த் தொகுதியையும், 6 ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த் தொகுதியையும் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். அன்று, ஆங்கிலப் பற்றாளனாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கியமன்றச் செயலாளனாகவும் இருந்ததனால் ஆங்கில இலக்கியத்தைக் கரைகாணவும் ஆக்கசுப்போர்டு (Oxford) என்னும் எருதந்துறையிற் பணிகொள்ளவும் விரும்மபினேன் (என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்? (செந். brš., 44 : 217) என்பது அது. தேவநேசனின் கல்வி விருப்பம், அவர் விரும்பியவாறே நிறைவேறி வந்தது; காலமெல்லாமும் நிறைவேறியே வந்தது; அஃது அவர் கடைப்பிடி. ஆனால், பணிவிருப்பம் அவரைக் கொண்டு மட்டும் நிறைவேறுவ தன்றே! அவ்விடரும் தொடக்கத்தில் மட்டும் இன்றிக் காலமெல்லாமும் இருந்தே வந்தது! யங் துரைமகனாரிடம் கடன் பெற்றுக் கொண்டு தானே பாளையங்கோட்டையில் மேல் வகுப்புக் கல்வி பெற்றார். அத்துரைமகனார் பொறுப்பில் சீயோன் மலையில் ஓர் உயர்தரப்பள்ளி நடைபெற்று வருதலை அறிந்தோம் அல்லமோ! அப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக அமர்ந்தார் தேவநேசன்! ஏன்? தாம் யங்துரைமகனாரிடம் பட்ட கடனைப் பணிக்கொடையால் தீர்ப்பதற்காக! அவர் முதற்கண் பண்யாற்றிய நிறுவனம் அச்சீயோன்மலைப் பள்ளியேயாம். தேவநேசன் பிறப்பு, வளர்ப்பு, படிப்புப்பற்றிய சுருங்கிய செய்திகள் இவை. இவர் பிறந்த ஊர் பெரும்புத்தூர் என்றும், புறக்கடையான்பட்டி என்றும், சங்கரன் கோயில் என்றும் பிறிதொன்றென்றும், பலவாறாக எழுதினாரும் கூறினாரும் உளர். சங்கரன் கோயிலைச் சார்ந்த ஊர் பெரும்புத்தூர்; நான்கு அயிரம் (கி.மீ.) வடபால் உள்ளது. அதற்கு நான்கு அயிரம்வடமேற்கிலே உள்ளது புறக்கடையான்பட்டி. அவ்வூர்களில் உறவினர்கள் இருந்துளர். அவ்வுறவு கருதியே பாவாணரை அவ்வூரினரெனக் கொண்டுள்ளன என அறியலாம். அவர் எழுத்திலேயே ஒன்றற்குப் பல இடங்களில் தாம் பிறந்த இடம் சங்கரன் கோயில் என்று இருப்பதால் மற்றை இடங்களை எண்ண வேண்டுவதில்லை! ஞானமுத்தனார் இளமையிலேயே பெற்றோரை இழந்து திக்கற்றவரானார். அவர்க்குப் புகலிடமாகத் தோக்கசு பெருமகனார் இருந்து ஆளாக்கினார். ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டு கொல்? என்று கண்ணகியார் வினாவிய வினாவுக்கு விடைபோலத் தோக்கசு, சான்றாண்மைக் கடனாற்றி யுள்ளார். படிப்பித்தும் மணப்பித்தும் வேலையளிப்பித்தும் முழுப்புரவாண்மை மேற்கொண்டுள்ளார். காலத்தால் செய்த அவர்தம் உதவி இல்லாக்கால், ஞானமுத்தனார், கணக்காயனார் பேறு எய்தியிரார்! கக்காய்ச்சியார்ஒருவர மணம் பூண்டிரார்! நம் அவர்க்கு அம்மூலவராம் பேற்றை அருளிய தோக்கசு நம் நன்றிக்கு என்றும் உரியவராவர்! ஞானமுத்தர்க்கு நேர்ந்த நேர்ச்சி, இளமையிலேயே பெற்றோரை இழந்தது. அந்நிலைமை தேவநேசர்க்கும் உண்டாக விட்டது! ஆனால், தேவநேசர் கடைக்குட்டி ஆதலாலும், அவர்க்கு மூத்தோர், வாழ்க்கைப் பொறுப்பு ஏற்றுப் பணியாற்று வோராகவும் இருந்தமையாலும் அவரைத்தம் குடும்ப உறுப்பினரே தாங்கும் சூழல் உண்டாயிற்று; மூத்த அக்கையாரே அன்னையார் கடனை மேற்கொண்டமை துன்பின் இடையேயும் வாய்த்த இன்பாம். அவரே, கல்விப் பொறுப்பும் மேற்கொண்டமையும் அறிந்தோம். அவரே தேவநேசர் வாழ்க்கைப் பேற்றுக்கும் மூலவராக இருந்தமை, முன்னைத் தோக்கசார் உதவியொடு எண்ணத்தக்கதாகிச் சிறக்கின்றது! வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிதல் பற்றிக் கூறுவார் திருவள்ளுவர். அவரே யாப்பினுள் (வரப்பினுள்) அட்டிய (தேக்கி நிறுத்திய) நீரையும் கூறுவார். அவ்வாறு தேவநேசப் பயிர்க்கு, வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தாராக அக்கையார் இருந்தார் எனின், யாப்பினுள் அட்டிய நீராக யங் துரையார் இருந்தமை நெகிழச் செய்வதாம்! எந்த மண்ணிலும், எந்நாளிலும் துயர்த் துணையாம் அருளாளர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதற்குயங் துரைமகனார் சீரிய சான்றாம்! வாழ்நாளெல்லாம் கடன்பட்டும் கடன்பட்டும், மொழித் தொண்டுக்கே தாம் கடன் பட்டார் போல நூல்களைத் தொகுத்தும் ஆய்ந்தும் மொழி ஞாயிறாகத் திகழ வாய்த்த தேவநேசனுக்குக் கடனுதவி, அதன் வழியாகக் கற்பிக்கும் கடனேற்ற அவர் தொண்டு, உப்புக்கும் காடிக்கும் உடைக்கும் ஒதுங்கற்கும் உதவிய உதவியளவில் ஒழியுமோ? பண்புடையார்ப் பட்டுண்டுலகம் என்பதற்கு இன்னவை யல்லவோ எடுத்துக் காட்டுகள்! தேவநேசன் மூளைக் கூர்ப்பு எண்மையானதா? எவர்க்கும் எளிதில் வாய்ப்பதா? சிறுப்பெரியா ரெனத் திகழ்ந்தமையை அவர்தம் உயர்பள்ளிக் கல்வித் தகவே காட்டுகின்றதே! கடன் பட்டுக் கற்கும் ஒருவர் வாழ்விலே ஆக்கசுப்போர்டு என்னும் எருதந்துறையில் பணி கொள்ளும் கனவு தானும் முகிழ்க்குமோ? ஆங்கில இலக்கியத்தைக் கரைகாணும் அவாவும் உந்தி எழுமோ? அவ்வுந்துதல் என்ன ஆயிற்று? ஒரு சொல் தானும் ஆங்கிலந்த விர்த்துப் பேசாத கடுநோன்பாயிற்று, அந்நாள் கடுநோன்பு பின்னேஎன்ன ஆயிற்று? எம் மொழிச் சொல்லாயினும் ஒன்றுதானும் கலந்து பேசாத தமிழ் நோன்பை உண்டாக்கிய சூழல் - நிலை - என்ன? பிறவிநோக்கு என்று பேசுகிறாரே! அந்நோக்கு நிறைவேற வேண்டாவா? தேவேநேசன் கற்ற தொடக்கநாள் கல்வியை இப்பகுதியில் கண்டோம். ஓதுவது ஒழியா மூதறிவராகத் திகழ்ந்த அவர்தம் புலவரை இறந்த புகழ்க்கல்வி, பள்ளிச் சுவர்களுக்கு ஊடேமட்டும் உண்டாயதோ? பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், எத்துணை நூல்களைக் கற்றார்! எத்துணை துறைகளில் ஆழ்ந்தார்! எத்துணை மொழிகளைக் கற்றுக் கற்றுக் கலைமாடங்களை எழுப்புதற்குச் சூள் கொண்டார்! அத்தனிப்பெருங் கல்வியை, இப்பள்ளிக்கல்வி அளவில் சுட்டி முடிக்க இயலுமோ நூற்றில் ஒரு விழுக்காடே என்னும் பள்ளிக் கல்வி இவ்வளவில்நிற்க, அவர்தம் பணித்திறம் தொடர்வோம். 4.பலநிலைப் பணிகள் க. அரும்பு சீயோன்மலை எனப்படும் முறம்பில் தேவநேசன் தம் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். சீயோன் மலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தாம் முதற்படிவ ஆசிரியராக அமர்ந்து ஈராண்டு பணியாற்றியமையைக் குறித்துள்ளார். அதன்பின், 1921 இல், தாம் பயின்ற ஆம்பூர்பள்ளியிலேயே ஆசிரியப்பணிமேற் கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஆதலால், 1919 ஆம் கல்வியாண்டு முதல் 1921 ஆம்கல்வியாண்டு வரை சீயோன் மலையில் தேவநேசர் பணியாற்றினார் என்பது தெளிவாகும். ஆறாம்அகவையில் பள்ளியில் சேர்ந்து பதினோராண்டுகள் (1-XI) பயின்று, தம் 17 ஆம் அகவையில் ஆசிரியப் பணியில் புகுந்தார் என்க. சீயோன் மலையில் பணியாற்றிய காலத்தில் ஆங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றனைத் தாம் 1972 ஆம் ஆண்டில் வெளியிட்ட தமிழர் வரலாற்றில் வரைந்துள்ளார். அவர் தம் நினைவாற்றலைச் சுட்டுவதுடன் யங் துரையின் கண்ணோட்டத்தையும் விளக்கு வதாக உள்ளது அது. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் முகவை மாவட்டத் திருவில்விபுத்தூர் வட்டத்தென் எல்லையில் உள்ள சீயோன் மலை என்னும் திருக்குறிப்புத் திருச்சவை (Baptist) நிலையத்தில், மேனாடு துரை இருந்த காலத்தில், அருள்புத் தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தகிறித்தவ ஆசிரியர், கல்பட்டியில் பிராமதண ஊராளி (கிராமமுனிசீபு) இருந்த தெருவழியாக வந்தார் என்று,. அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை வண்டிகட்டிக் கொண்டு கல்பட்டி சென்று ஊராளியில்லத் தையடைந்தார். அவர் வருகையறிந்து, ஊராளியார் வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத்திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, ஊராளியின் மனைவியார் கதவைத்திறந்து ஊராளியார்ஊரில் இல்லை என்று சொல்லி விட்டார். துரை நடந்ததைச் சொல்லி ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர்வேலைபோய்விடும்என்று சொல்லி விட்டுத் திரும்பி விட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக் கொண்டு துரையிடம் வந்து மன்னிப்பு கேட்டுச் சென்றார். குலவேற்றுமைக் கொடுமை யினின்று தப்பவே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதி யராயினர் என்று செய்தியையுரைத்து, அதன் விளைவையும் சுட்டுகிறார் (பக். 325 - 6)! இக்குறிப்பை அன்றே தமிழர் உணர்ந்திருந்தால், எத்துணை நலப்பாடாக இருந்திருக்கும்! சீயோன்மலையை விடுத்துத் தேவநேசர் ஆம்பூர்க்குச் செல்லுங்கால் (1921)அஃது உயர்தரப் பள்ளியாகவே இருந்திருக்கிறது. அங்கே தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக அமர்த்தப் பட்டிருக்கிறார். ஆம்பூர்ப்பள்ளி 1922 இல் உயர்நிலைப் பள்ளியாக உயரத் தேவநேசரும் உயர்நிலைப்பள்ளி உதவித் தமிழாசிரியராக உயர்த்தப்பட்டிருக்கிறார். இவ்வாம்பூரைப் பற்றிப், பின்னாளில் அவர் வரைந்த தமிழர் மதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார் நேயர். வடார்க்காடு மாவட்ட ஆம்பூரின் பழம் பெயர் ஆன்மையூர் என்றும் ஆவை வணங்கி வந்ததால் அப்பெயர் பெற்றதென்றும் அங்கிருந்த பெரும் புலவரும் பாவேந்தருமான துரைசாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் சிலவூரிலும் ஆவை வணங்கியிருக்கலாம் என்பது அது. ஆம்பூரில் வாழ்ந்த இக்கால நிலையே, தேவநேசனின் வாழ்வின் பெருந்திருப்புமையமாக அமைந்தது எனலாம். அந்நாளில், இவர் தமிழ் கற்பிக்கத் தக்கார் என ஒருவர்க்குப் புகழ் வாய்ந்த புலவர் ஒருவர் சான்று வழங்கினால், அதனைக் கொண்டே தமிழாசிரியப் பணியில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வட. அந்நடை முறையே இருந்தது. ஆதலால், தேவநேசனுக்குப் பண்டிதர் மாசிலாமணி என்பவர் (நண்பர் மாசிலாமணி என்றும் அவரைச் சுட்டுவதால் (11-11-37) இருவர் நெருக்கமும் இனிதின் விளங்கும்!) ஒருதகுதிச் சான்றிதழ் வழங்கினார். அதில் தேவநேசனைத், தேவ நேசக் கவிவாணன் எனக் குறிப்பிட்டிருந்தார். அப் பெயராலேயே ஆசிரியப் பதிவும் பெற்றார். பண்டிதர் மாசிலா மணியார் பாளையங் கோட்டைசி.எம். எசு. பள்ளித் தமிழாசிரியராக இருந்தவர். பாவாணர் தம் பின் வாழ்விலும் தொடர்பாக இருந்தவர் என்பது அறிய வருகின்றது. சான்றத் தகுதியால் தமிழாசிரியரான கவிவாணர், அப் பதவிக்கும், தலைமைத் தமிழாசிரியர் தகுதிக்கும் அந்நாளில் சிறப்பாக விளங்கிவந்த மதுரைத் தமிழ்ச சங்கப் பண்டிதத்தேர்வு மிகப்பயன்படும் எனக் கருதினார். அதனால் அதற்கு 1924 இல் விண்ணப்பித்தார். அத்தேர்வில் முதனிலை இடைநிலை இறுதிநிலை (பிரவேசம், பாலபண்டிதம், பண்டிதம்) என முந்நிலைகள் முறையேஉண்டு. எனினும், ஒருவர் தாம் இறுதிநிலைத்தேர்வு எழுதி வெற்றி பெறலாம் எனக் கருதினால், அத்தேர்வு மட்டுமே எழுதவும் வாய்ப்பு இருந்தது. அவ்வகையில், கவிவாணர் இறுதிநிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்து அதனையே எழுதினார். பண்டிதத்தேர்வுப் பட்டியலில் ஞா. தேவநேசக் கவிவாணன், மிஷன்உயர்தரப்பாடசாலை, ஆம்பூர், வட ஆற்காடு ஜில்லா என்றுள்ளது. தேர்வு ஏப்பிரல் 7,8,9 ஆம் நாள்களில் நடை பெற்றுள்ளது. பண்டிதத் தேர்வில் அவ்வாண்டில் கவிவாணன் ஒருவரே வெற்றி பெற்றுள்ளார். அவ்வெற்றியும் இரண்டாம் வகுப்பு. தொடர் எண்: 1; பதிவெண்:4; (செந்தமிழ்த் தொகுதி 22) என்பது அது. பண்டிதத் தேர்வு எளியது அன்று; அத்தேர்வு வினாக்களைக் குறித்த ஒரு குறிப்பைக் கண்டாலே உண்மை விளங்கிவிடும். வெண்பா இயற்று முறை ஒருவன் கற்றுளனோ என்று அறிய வேண்டின்யாதானும் ஒரு விஷயத்தின் பேரில் ஒரு வெண்பாவை இயற்றும்படி கேட்கலாம். மேலும், அவனது திறமையை ஊன்றி ஆராய வேண்டுமாயின் அரிய விஷயமொன்றைத் தாமாக நியமித்து அதன் பேரால் இன்னபொருள் அமைய ஒரு வெண்பாச் சொல் என்று கேட்பின் போதுமாய் இருக்கும். அங்ஙனஞ் செய்யாமல் திருப்பாற் கடனையும் சேடனையும் சிறப்பித்து ஒரு நேரிசைவெண்பா, வெண்டிரை எனத்தொடங்கி, விழைந்து என முடிய, ஆடு மாடு என்னுஞ் சொற்கள் மிருகங்களைக் குறிக்காமல் வேறு பொருளில் விரவிவர, ஐந்துசீர் ஈரசைச் சீராகவும் பத்துச சீர் மூவசைச் சீராகவும் அமைய, ஒற்று விரவாமல் பாடுக எனப்பணிப்பின் ஐயகோ! இளம்மாணவர் என்னதான் செய்குவார்! எனக்கூறி இரங்குகின்றார். ச. பூபாலர் என்பார் (செந்தமிழ். 18 : 343 - 349). இத்தகு தேர்வில் பண்டிதத் தேர்வே தேர்வெனக் கொண்டு, ஒரே முறையில் இரண்டாம் வகுப்பில் ஒரோ ஒருவராகத் தேவநேசக் கவிவாணர் தேர்ந்ததே பெருந்தேர்ச்சி எனற்கு ஐயமுண்டோ? பண்டிதர்க்கு இலக்கணம் 1, இலக்கணம் 2, இலக்கியம் 1, இலக்கியம் 2, வசனமும் தருக்கமும், செய்யுளியற்றல், வியாசம் என்பவை தேர்வுத்தாள்கள். இவற்றின் வினாக்குறிப்பாளர்கள் எவர்? முறையே, உ.வே. சாமிநாதர், இரா. இராகவர், இரா. சுப்பிரமணியக் கவிராயர், தி.த. கனகசுந்தரர், அ. குமார சாமியார், வெ.ப. சுப்பிரமணியனார், மு. இராகவர் என்பார். கவிவாணர் இத்தேர்வில் பெற்ற வெற்றி என்ன செய்தது? அவரே குறிக்கிறார்: 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப்பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும், ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக்கூடாதென்றும், பிறர் பேசின் செவிமடுக்கக் கூடாதென்றும் சூளிட்டுக் கொண்டேன். அம்மயக்குப் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால்தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித்தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும், ஆங்கிலப்பேச்சாற்றலை இழந்து விட்டதனால், ஆங்கிலப்பட்டம் பெறும் வரை கல்லூரியுட் கால்வைக்க முடியாது போயிற்று. அதனால் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றமும் இல்லாது போயின முழுமையாகத் தமிழுக்குத் தம்மை ஒப்படைத்து விட்டமையால் இத்மிழுலகும் தமிழகக்கல்வி நிலையங்களும், தமிழக அரசும், தமிழ் நாட்டுச் செல்வர்களும்சீராட்டிப் பாராட்டிச் சிறப்பித்து இருப்பாராயின், தேவநேசக் கவிவாணத் தமிழ் வாழ்வுக்கு இப்பட்டறிவு நேர்ந்திராது! நெடுகிலும் மாறாமை, இன்றும் நேரிடைக் காட்சிகள் தாமே! தம்மனம் தமிழின்பால் அழுந்தியமையையும் தேவநேசன் சட்டுகிறார். - (ஆறாம்படிவத்தில்) தமிழ் கற்றதனாலும், இசைப் பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், இசைத்தமிழ்ப் பித்தன் ஆனதனாலும், நான் அறியாவாறு இறைவன் என் மனப்பாங்கை மாற்றியதனாலும் தமிழாசிரியப் பணி தலைமேற் கொண்டேன் என்பது அது (என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? செந். செல்.44 :27) 2. முகை ஆம்பூரில் மூவாண்டுகள் பணியாற்றிய பின்னர் தேவநேசன் நாட்டம் சென்னையைச் சார்கிறது. அவர்தம் ஆய்வுக்கும் ஆர்வத் தொண்டுக்கும் ஆம்பூரினும் சென்னை ஏந்தாகத் தோன்றியிருக்கக் கூடும். பிரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவற்றுள் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி வேலை கிடைத்தது பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர்பெற்ற அறுவையரும் (Surgeon) பிராமணருமான காலஞ் சென்ற பண்டகர் (Dr.) மல்லையா வின் பரிந்துரையினால் என்பதைப் பாராட்டுகிறார் (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. பக். 17) தேவநேசர். அன்றியும் இம்மல்லையா உற்றிடத்துதவுநராகவும் தேவநேசர்க்கு விளங்கினார் என்பதும் விளங்குகின்றது. ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம். திராவிடம் முதற்பாகம் 1940 இல் வெளிப்படுத்திய தேவநேசன், அவ்வரிய பெரிய நூலை அம்மல்லையாவிற்குப் படையலாக்கி எனக்கு உற்றிடத்துதவிய நன்றிக் குறியாகப் படைக்கப்பட்டுள்ளது இப்புத்தகம் என்று தம்நன்றியைப் பதித்துள்ளமையால், இது நன்கு விளங்கும். மற்றைப் பள்ளிகள் கிறித்தவப் பள்ளிகள் ஆதலால் எளிதாகத் தமக்கு வேலை கிடைத்தமையையும் குறிப்பிடுகிறார். பிறபள்ளிகளில் தமக்கு வேலை கிடைத்தற்கு அக்காலத்தில் என்மொழியாராய்ச்சி அரும்பியிருந்ததே யன்றி மலர்ந்திலது எனத் தேவநேசனார் சுட்டுவதைக் குறித்து என்னே! என்னே! என்று இரங்க வேண்டியதாகவே உள்ளது! கல்வி நிலையங்கள் கலைமலர்ச்சியை விரும்பித்தவங்கிடக்குமா? கலைத்திறம் அரும்பாமையைக் கொண்டாடி அரவணைக்குமா? சென்னையில் தேவநேசனார் வாழ்ந்த காலத்தில் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வுக்குப் பயின்றார். பதிவெண் 15. ஞா. தேவநேசப் பாவாணன், தமிழாசியர், கிறித்தவ கலாசாலை, சென்னை என்னும் முகவரியில் விண்ணப்பித்துள்ளார். 1926 சூன் 28 முதல் சூலை 5 வரை தேர்வுகள் நடைபெற்றுள்ளன. அவ்வாண்டு, தமிழ்ப் புலவருள் தேர்ந்தார் இவர் ஒருவரே; தேர்ச்சி பெற்ற வகுப்பு மூன்றாவது ஆகும் (செந் செல். 4 : 336). தேவநேசக் கவிவாணன் இங்கே தேவநேசப் பாவாணனாகக் கிளர்கின்றார் (கவிவாணன் பாவாணன் ஆனார்; நேசம்இன்னும் நேயமாக வில்லை) இதன் பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வும் B.O.L. என்னும் கீழ்கலைத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். தேவநேசர், கெல்லற்று உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டும், கிறித்தவக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் மூவாண்டும் பணியாற்றிய பின், மன்னர் குடிப்பின்லேக் கல்லூரி (Finlay) உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டு பணிசெய்துள்ர். இசைத்தமிழ் ஈடுபாடும், இசைப்பா இயற்றுதலும் கருவி இயக்குதலும் முன்னரே கொண்டிருந்த தேவநேசர்க்கு இக் காலம் பொற்காலமாயிற்று. மன்னர் குடியில் இருந்த இசைப்பெரும் புலவர் இராசகோபாலரிடம் முறையாக இசைபயின்றார். பின்னே நேசமணியம்மையார் நினைவு வெளியீடாக வெளியிட்ட இசைத்தமிழ்க் கலம்பகம் என்னும் நூலில், இசையாசிரிய வணக்கம் பாடி இசைத்துள்ளார். மேலும் இசைத்தமிழ் தொடர்பாகப் பின்னாளில் எழுந்த மறுப்புக் கட்டுரை ஒன்றில் (செந். செல். 20 : 465) சென்ற பன்னீராண்டுகளாக என்னால் இயன்ற வரை இசைத்தமிழையும் ஆய்ந்து வருகிறேன். என்பதையும், நால்வகை இசைக்கருவிகளும் என்னிடமுள என்பதையும். ஒவ்வொரு வகையிலும் ஒன்றேனும் ஓரளவு இயக்குவேன் என்பதையும், அச்சில் முடிக்கல (கிரௌன்) அளவில் 200 பக்கம் வரும் இசைத் தமிழ்ச் சரித்திரம் என்னும் நூலையும் சென்ற ஆண்டிலேயே எழுதி முடித்தேன் என்பதையும் நம் நண்பர் அறியக் கடவர் என்று எழுதுகின்றார். இக்கட்டுரை 1943 இல் வரைந்தது ஆதலால், அதற்குப் பன்னீராண்டுகளுக்கு முன் என்பது மன்னார் குடியில் அவர் பணியாற்றிய காலமாகும் என்பதை அறியலாம். இசையாசிரியர் யாழ்ப்புலவர் இராசகோபாலர்க்கு இசைத்த இசைப்பா: இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் எழில்முகத்தான் என்னிடை அன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள் மன்னுக என்றன் மனத்து என்பது. இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை உயிர்க்கும் என்னும் இசையின்ப இசைப் பாட்டு (6) இவர் இசையீடுபாட்டை விளக்கும் இணையிலாச் சான்றாம். முதுமையும் நோயும் முழுதுற நீங்க வேண்டுமா இசையில்திளைக்க என்பது இவர்தம் பட்டறிவு வெளிப்பாடே என எவரும் அறியக் கூடும். மன்னார்குடியில் இருந்த நாளிலே மற்றோர் நலப்பாடும் இவர்க்கு இயல்பாக வாய்த்தது. ஆங்குக் காவல் துறையில் ஆய்வாளராகத் திகழ்ந்தவர் தொல்காப்பியப் பெரும் புலவர் சோமசுந்தரம் என்பார். மன்னார் குடியில் காவல் நிலையத்தில் தொல்காப்பியரைக் காக்கி உடையில் கண்டேன் எனப் பொறியல் அறிஞர் பா. வே. மாணிக்கரால் பாராட்டப் பட்டவர்இச்சோமசுந்தரர், அவர்தம் அணுக்கத் தொடர்பு, இலக்கணத்தில் எனக்கு எல்லை இல்லாத பைத்தியம் உண்டு என்னும் தேவநேசர்க்கு எப்படி இருந்திருக்கும்! இங்கிருந்த காலத்தே தான் சைவசித்தாந்தக் கழகத் தொடர்பும்உண்டாகித் தமிழ் வளமாகின்றது. செந்தமிழ்ச் செல்வியில் இவர்தம் முதற்கட்டுரை இக் காலத்தே தான் வெளிப்பட்டது. மொழியாராய்ச்சி (Comparative Philology) (வித்துவான் G. தேவநேசன் அவர்கள்) எனக்கட்டுரைத் தலைப்பும் ஆசிரியர்பெயரும் அதில் அமைந்துள்ளன (செந். செல். 9 : 275) 1931 சூன் சூலை இதழ் இஃதாகும். இதன்முகப்பின் நிறைவில் எல்லா மொழிகட்குமுள் பெரும்பாற் சொற்களைப் பகுதிப் பொருளுடன் இயற்கை வடிவில் வழங்குவது தமிழேயென்று மொழிநூலால் (Philology) விளங்குகின்றது. அவற்றுள் ஆங்கிலம் (English) கிரேக்கு (Greek) லத்தின் (Latin) என்ற மும்மொழிகளிலும் சென்று வழங்கும் தென் சொற்கள் ஆயிரக் கணக்கின என்பதை ஐநூற்றுக்கு மேற்பட்டவற்றால் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் காட்டுதும் என்று கூறிச் சொற்களை அவற்றின் விளக்கத்துடன் அகரவரிசையில் காட்டியுள்ளார். 1931 இல் ஏற்பட்ட இத்தொடர்பே ஐம்பானாண்டுக் காலம் தொடர்ந்து பாவாணர் படைப்புகளுள் பலவும்தமிழுலகுக்கு வெளிப்படப் பெருந்துணையாயிற்றாம். கழகத் தொடர்பு என்பது பதிப்புத் தொடர்பு மட்டுமன்று. 1. இறையனார் அகப்பொருள், 2. தொல்காப்பியம் (நமச்சிவாய முதலியார்) மூலம், 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் 4. ஏடிட. நச்சினார்க்கினியம் பேராசிரியம் (பவானந்தர் கழகம்) 4. நன்னூல்மூலம் 2, 5. நன்னூல்விருத்தி சங்கர நமசிவாயர், 6. சிதம்பரப் பாடியல், 7. தண்டியலங்காரம் அ. குமாரசாமிப் பிள்ளை, 8. முத்துவீரியம் 9. பன்னிருபாட்டியல், பன்னிரு பாட்டியல் கிடையாதிருக்கலாம். முத்துவீரியம் கிடையா விட்டால் உங்களதை அனுப்பிவையுங்கள். குமாரசாமி நாயுடு கம்பெனியில் தொல்காப்பியச் சொல்லதி காரமும் பேராசிரியமும் கல்லாடமும் மூன்றாண்டுகட்கு முன்னமே அச்சில் இருந்தன. அவை வெளியேறியிருப்பின் அவற்றிலும் ஒவ்வொன்று வாங்கி உடன் சேர்த்து அனுப்புக. நான் கேட்ட நூல்கள் எல்லாம் என்னிடத்தில்இல்லை. முத்துவீரியம் கிடைக்கு மட்டும் உங்களதை அனுப்பி வையுங்கள். மிகப் பத்தரமாய் வைத்திருப்பேன் (28-7-31); 29-7-31) என்கிறார். இலக்கணப் பைத்தியம் என்று தம்மைத்தாம் சுட்டுகிறாரே! அதன் விளக்கம் தானே இது! இறுதி நாள் வரை நூல்கள் வாங்கித் தரும் புரவாண்மைப் பொறுப்பைத் தட்டாமல்மேற்கொண்டது கழகம். அச்சான்றுகள் மிகப்பல. பாவாணர்க்கு நூல்கள் தருவித்துத் தருதலை- பதிப்பகம் விற்பனை நிலையம் என்ற நிலைகளையும் கடந்து மேற்கொண்டமை - பாவாணர் தமிழ்த் தொண்டுக்கு உதவுவதைப் பேறாகக் கொண்டமையாலேயாம். இம் மன்னார்குடியில் வாழ்ந்த நாளிலே பிற மொழி யாளர்க்குத் தமிழ் கற்பிக்கும் பணியும் மேற்கொண்டிருந்தார் என்பது ஓர் அஞ்சலால் வெளிப்படுகின்றது. தற்சமயம் ஒரு துரைசானிக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பது அது (23-10-31). மன்னார் குடியில் 6 ஆண்டுகள் தொடர்ந்து இவர் பணி செய்தமை அருமையேயாகும். ஆங்கிருந்து வெளியேறவே இவர் பல்கால் முயன்றார் என்பது கடிதங்களால் தெரிகின்றது, வேலைக்கு மட்டும் கேடில்லை. பண்டிதர்க்குரிய உரிமையும் அதிகாரமும் எடுபட்டன நான் சென்ற வாரமே வேலையை விடுதற்கிருந்தேன்; ஆனால் ஒரு பயனோக்கி இவ்வாண்டு முழுதும் இங்கிருக்கத் துணிந்தேன் வாணியம்பாடி இலாமியா காலேஜுக்கு ஒரு வித்துவான் வேண்டுமென்று விடுமுறையில் ஓர் விளம்பரம் இந்துப் பத்திரிகையில் கண்டேன். அது இம்மாதம் 19ஆம் தேதி வரை இருந்தது. இங்ஙனம் நேருமென்று எண்ணவேயில்லை. இன்றேல் அன்றே விண்ப்பித்திருப்பேன். எல்லாம் இறைவன் செயல் (1-7-31); இந்த வாரம் எனக்குக் கொஞ்சமேனும் ஊக்கம் கிடையாது. எனக்கு இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன (18-7-31) உலகம் அழுக்காறு நிறைந்தது (29-7-31) என் முதற்றாய்மொழியை அச்சிடவேண்டும். அதன் பிறகுதான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும் (14-8-31) பலவிதத்தில் எண்ணிப் பார்க்கையில் இன்னும் இரண் டோராண்டு இங்கே கழிக்கலாம் என்றே யிருந்தேன். இனிமேல் வெளியேறிச் செல்வதாயின் 55 ரூபாய்க்குக் குறையாதிருக்க வேண்டும். அடுத்த ஆண்டில் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வேன். பரீட்சை தேறினபின் குறைவாராது (23-10-31) - இத்தகைய நிலையில் மன்னார் குடியில் இருந்து பணி செய்து ஆறாம் ஆண்டில் தாமே வெளியேறினார்! வெளியேறிய நிலை எத்தகைய மாமாந்தர் இவர் என்பதை எண்ணச் செய்கிறது! பின்லே கல்லூரியின் வளர்ச்சி சுருங்கியது; இளங்கலை (B.A) வகுப்பு நின்றது; பின், இடைநிலை (Intermediate) வகுப்பும் தேய்ந்தது; உயர்பள்ளி நிலைக்குச் சுருங்கியது. கல்லூரியில் இருந்த முதுவர்கள் கீழே இறங்க இளையர்கள் வெளியேற வேண்டும் நிலை எழுந்தது. இளையருள் தலையராகச் செல்லவிருந்தவர் கோபால கிருட்டிணர் என்பார். அவர் வேலையின்றி மனைவி மக்களொடு வறுமையில் தவிப்பார் என வாடியது தேவநேயர் உள்ளம்! உருகியது! கோபால கிருட்டிணர் குடியிருந்த வீடும் மழையர்ஷஷால் இடிந்திருத்நது; இந்நிலையில் வெளியேற நேரின் பேரிடி யாகாதா அவரக்கென ஏங்கினார்; தாம் வெளியேறு வதாகவும், கோபாலகிருட்டிணர் அங்கேயே பணியாற்றலாம் என்றும் முந்து நின்று வெளியேறினார்! இவரல்லரோ தேவ நேயர்! தம்நிலையை எண்ணினாரா? குடும்பத்தை எண்ணினாரா? தாம் பெரும் வளப்பாட்டில் இருந்து வேலையை விட்டுத் தந்தாரா? அத்தகையரும் தருவரோ? கோபாலகிருட்டிணர் பிராமணர் என்பதும், தம்கருத்துக்களுக்கு முற்றாக உடன்பட்டவர் என்பதும் பாவாணர் குறிப்பு. பாவாணர்நிலை எந்நிலை? இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் 10 ரூ அனுப்ப முடியுமானால் அனுப்புக. கடன் கழுத்தை நெருக்குகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் என் 100 ரூபக்கடனையும்தொலைப்பீர்களாயின் அதுவே எனக்குப் பேருபகாரமாக இருக்கும் (10-7-31) இப்போது 20 உ க்குள் தயவு செய்து 10 ரூ அனுப்பி உதவுக. பணத்திற்குப் பெரிய முடை. தாட் செலவுக்கும் தபாற் செலவுக்கும் கூடப் பணமில்லை. என் கடன் தொலைந்து விட்டால் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன் (14-2-31) என்று கழக ஆட்சியாளர்க்கு கடிதம் விடுக்கும் பெருவளமை யில் பாவாணர் இருந்து கொண்டு தான் பணிக்கொடை புரிகிறார் எனின், எளிதில் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி தானா! 3. மொக்கு மன்னார் குடியில் இருந்து வெளியேறிய நேயர், திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்புப் பெற்றார். ஆங்கு ஒன்பது ஆண்டுகள் (1934 - 1943) பணியாற்றினார். மன்னார் குடியில்இசைத் தமிழ், இலக்கணம், மொழிநூற்பயிற்சி ஆகிய வற்றில் பெருங்கருத்துச் செலுத்திய பாவாணரின் திருச்சிப் பணிக்காலம், பன்மொழிகள் பயிலுதற்கும், நூல்கள் எழுதுதற்கும், தமிழ்க்காவல் கடப்பாட்டில்நிலைப்படுதற்கும் உரிய ஏந்தாக அமைந்தது. மொழி நூற்பயிற்சி சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த பற்றாட்டாக இருந்துளது; இன்னுமிருக்கும் என்று கூறும் பாவாணர் திருச்சிக்காலத்தில் தான் ஒப்பியன் மொழிநூலை வெளியிடுகின்றார் (1940). மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரை நூல்களும் இலக்கண நூல்களும் வரைகின்றார். வேர்ச்சொற்சுவடி என்னும் 100 சொற்களுக்கு விளக்கம் கொண்ட சிறிய நூல் ஒன்றையும் இக்காலத்தோன் பத்தே நாளில் எழுதுகின்றார். இந்தி கட்டாயப் பாடமாக 1937 இல் புகுத்தப் பட்டமையால் அவ் வெதிர்ப்பில் அறிவுசார் பெரும்பங்கு கொண்டவர் பாவாணர்: நான் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாயிருந்த போது ஒருநாள் 6-ஆம் படிவ வகுப்பில் இந்திச் சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் கூழைத் தன்மையையும்... விளக்கினேன். விளக்கி முடிந்தவுடன் பாடம் நடத்தத் தொடங்கி இன்னும் எத்தனை பாட்டு நடத்த வேண்டும் என்று மாணவரை வினவினேன். ஒருவன் அஞ்ச் பாட் என்றான். உடனே எனக்கு, இந்தி தமிழ் நாட்டிற்கும் பொதுமொழியாக வந்தால் நாளடைவில் தமிழ் இந்நிலைதான் அடையும் என்னும் உணர்வு பிறந்தது. நான் சொன்ன இந்திச் சொற்களின் கூழை வடிவம் அம்மாணவன் உள்ளத்தில் ஆழப்பதிந்ததால் அவ்வச்சிலேயே அவனை அறியாது எழுந்த சொற்கள் அஞ்ச் பாட் என்பன. அவன் குறும்புத்தனமாகக் கூறியன வல்ல. அவன் குறும்பனு மல்லன் (இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 19-20) என்று தம் வகுப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சுட்டுகிறார் பாவாணர். கட்டாய இந்திக் கல்விக்கண்டனம் - செந்தமிழ்க் காஞ்சி என்னும் நூல், காந்தியடிகளின் அட்டைப் படத்துடன் திருச்சிக் காலத்தில்தான் (1937) வெளிவந்தது. அதில் பாவாணர் பெயர், தேசாபிமானத் தண்டமிழ்த் தொண்டன் எனப் புனைவு பெற்றுள்ளது. அந்நாளில் பாவாணர் பேராயக் கட்சியைச் சார்ந்திருந்தார் என்பது மேல் வரும் கடிதம் ஒன்றால் விளங்குவதால், இப்பெயர்ப்புனைவு வறும்புனைவோ ஏமாற்றுப்புனைவோ அன்றென்று புலப்படும்! திருச்சியில் இருந்த காலத்தில் பாவாணர் செய்த தமிழ்க் காவல் தொண்டு விரிவான மூன்று மடல்களால் வெளிப்படுகின்றது. அச் செய்திகளை அறிந்து கொண்டால் பாவாணர் அழுந்திய, பிற்காலத் தமிழ்த் தொண்டுகளுக் கெல்லாம் மூலவ்ஷவைப்பாக அவை இருத்தல் துலக்கமாம். அவ்வஞ்சல்கள் கழக அமைச்சர் திருவரங்கனார்க்கு எழுதப்பட்டவை. கழக ஆட்சியாளர் வ.சு. அவர்கள் கோப்பின் வழி கைவயப்பட்டவை. முதல் அஞ்சல் : 74, புது அக்கிரா காரத்தெரு, புதூர், திருச்சி 13-9-37 அன்பார்ந்த ஐயா, நலம், நலமாக. சென்ற 5000 ஆண்டுகளாகத்தமிழையே பேசித் தமிழாலேயே வயிறு வளர்த்து வரும் பார்ப்பனக் கயவர் சங்க காலத்திலிருந்து இதுவரை ஏராளமான தென் சொற்களையும் தென்னூல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை கொண்டு, நமக்கும் நமது முன்னோர்க்கும் முட்டாட் பட்டங் கட்டி அகமகிழ்ந்து தூற்றியது போதாதென்று மொழியையும் வடமொழி போல வழக் கொழிந்துச் சிதையும் படி வழியமைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலக் குடியரசிற்கும் இந்திக்கும் இயைபு கற்பித்து அதைச் சட்டசபைத் தேர்தல் நிகழ்ந்து பதவி பற்றும் வரை எழுதாக் கிளவியாக மட்டுமன்றி ஓதாக்கிளவியுமாக மறைத்துக் காத்துத் தீதுநலமறியாத கோடிக் கணக்கான பேதைமக்களின் நம்பிக்கையைப் பல வகை விரகு நெறியிற் கவர்ந்து இன்று நட்டாற்றிற் கழுத்தறுப்பது போலத் திடுமென இந்திக்கட்டாயக் கல்வியைத் தமிழரின் விருப்பத்தைக் கேளாது ஆங்கிலேயரினும் பன்மடங்கு ஆணவத் தோடும் அகங்காரத்தோடும் எடுத்தும் உரப்பியும் கனைத்தும் கூறி, இந்த அதிகாரங் குன்றிய நிலையிலேயே அரசியல் இயைபுள்ள தமிழன்பர்தம் கருத்தை வெளியிடாதவாறு அச்சுறுத்தி இந்தியை எதிர்க்கும் ஒருசிலர்க்கும் ஓநாய் ஆட்டுக்குட்டி நியாயமாக ஏதேதோ பொருந்தா விடைகளையெல்லாம் அளித்து, நம்மவும் நம் வழித்தோன்றல்களுடையவுமான வாழ்க்கையும் மொழியும் அறவே கெடுமாறு பல்கோடி மக்கள் தலையில் ஒருபெருங் கருங்கல்லைப் போட்டு முறைகேடாய் நசுக்கிக் கொல்ல வருகிறார்களே! நீங்கள் என்ன செய்தீர்கள்? துண்டு வெளியீடுகள் போதுமா? ஒருநாள் அல்லது சிலநாள் இன்னிசை ஊர்வலம் போதுமா? இராஜ கோபாலாச்சாரி இன்னும் தம் எண்ணத்தை மாற்றவில்லையே. அஃதாயின் உங்கள் முயற்சியால்பயன் என்ன? நெல்லை செந்தமிழ்ப் பாண்டி நாடல்லவா? சேலத்திலுள்ள செவ்வாய்ப் பேட்டைப் பைந்தமிழ்க் கழகத்தார் செய்தஅளவுகூட நீங்கள் செய்யவில்லையே! ஒருநாள் இருநாள் செய்து விட்டு, விட்டுவிட்டால், இது நாளடைவில்படுகிடையாய்ப் படுத்துவிடும் என்று கூறும் தமிழ்ப் பகைஞர் கூற்று உண்மையாகி விடுமே! மதத்தினும் நிலத்தினும் மொழி யல்லவா சிறந்தது? ஒருவன் தன் நாட்டையும்மதத்தையும் நினைத்தபொது மாற்றலாம். தாய் மொழியை முதுகாடுகாறும் மாற்றவும் மறக்கவும் ஒண்ணாதே! தொல்காப்பியர் திருவள்ளுவர் மாணிக்கவாசகர் கம்பர் போன்ற உலகாசிரியர்களை நாம் காட்டிக் கொடுத்துக் கொல்லலாமா? ஆழ்கலத்தன்ன கலி அணுகும்போது நொடிப் பொழுதும் வீண்போக்கலாமா? தமிழாக்கம் பற்றிச் சிறந்த சூழ்ச்சிகள் என்வயமுள. எத்துணைப் பேரறிஞராய் இருப்பினும் உள்ளூரான் மதியான், உள்ளூரான் குற்றத்தைப் பார்ப்பான். குணம்பாரான். ஆதலால் அயலூர் அறிஞரை உடனுடன் வருவித்து அருந்தொண்டாற்றிப் பெருங்கிளர்ச்சி செய்க. எதிரிகள் கூறும் தடைகட்கெல்லாம் தக்கவிடைகள் என்கைவயமுள. போகவர 3-ம் வகுப்புச் செலவு கொடுத்தாற்போதும் வரத்தயார். நேற்றிருந்து 15 நாள் விடுமுறை. 7 ரூ. உங்கள் கழகத்தில் இல்லையா? நெல்லைத் தமிழரிடமும் இல்லையா? உண்டிச் செலவு நான் பார்த்துக்கொள்வேன். 7 ரூபாயும் இல்லையென்று பஞ்சம் பாராட்டுவீகளானால்நானே கடன் கொண்டேனும் வரத்தயார். உடனே தொலைவரி (தந்தி) விடுக்க. திருவருட்டுணை கொண்டு என் ஆராய்ச்சி அறிவால் பலரை வயமாக்க வொண்ணும். என்மொழியாராய்ச்சி நூல் அடுத்தமாதம் அச் சேறும். அதன்பின் தமிழ்த் தொண்டாற்ற நினைத்தேன். ஆனால், வீடுபற்றி வேகும்போது உடனே அணைக்க வேண்டும். வெந்தபின், கடலைத் திருப்பினாலும் வீடு திரும்பாது. வெள்ளிக்கிழமை இங்கோர் எதிர்ப்புக் கூட்டம் நிகழும். பாரதியார் அவர்கட்குத் தந்தி போயிருக்கிறது. நான் நெல்லை வருவதானால் படித்தவர்க்கொரு பெருங்கட்டடத்திலும் படியாதவர்க்கு வெளிநிலத்திலுமாக இருகூட்டங்கள் நிகழ்த்தலாம். ஞா. தேவநேயன். பாவாணர் நெல்லைக்குச் சென்றிருக்கிறார்; மூன்று பொழிவுகளும் செய்திருக்கிறார். அம்முயற்சி - விளைவு - ஆகியவைபற்றியும் 5-10-37 இல் ஒரு கடிதம் வரைந்திருக்கிறார். எடுத்த பணியில் எவ்வளவு தொடுத்துமுயல்கிறார் என்பது விளக்கமாகின்றது அக்கடிதத்தால. மேலும், தம் செயலை மீள்பார்வை பார்க்கும் பார்வையும் அதன்கண் தெளிவா கின்றது. நான் சென்ற மாதம் 19, 20, 21 ஆம் தேதிகளில் நெல்லை சென்று திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலுமாக 3 இந்தி எதிர்ப்புச் சொற்பெழிவுகள் நிகழ்த்தினன். பயன்படா விடினும் முதல் உழவென்று நினைக்க வேண்டியிருக்கிறது. முதலாவது, கூட்டத்திற்கே நம்மவர்வரவிடாதபடி தந்திர மாகக் கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள். வந்தாலும் தூரநின்று கேட்பதே யொழியகிட்ட வருவதில்லை. அதுவுங்கூடநான் காங்கிரசில் சேர்ந்திருப்பதினால். இப்போது நாம் தமிழைக் காக்க வேண்டுமானால்முதலாவது காங்கிரசில் சேர்ந்து கதருடுத்த வேண்டும். சுயராஜ்யத்திற்கு ஒன்று சேர்ந்து இந்திக்கு உள்ளிருந்தே எதிர்க்க வேண்டும்; மற்றப்படி நம்மவரைச் சேர்க்க முடியாது. இந்த ஞாயிறு 10ம் தேதி சென்னையில்கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வரும் கேட்டை முற்றுமாராய்ந்து எவரும் ஏற்கும்படி தக் நியாயங்களும் விடை களும் கண்டுள்ளேன். தயவு செய்துஅங்குப் போகவர முழுச் செலவை 7 ரூ கொடுக்க முடியா விட்டால் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன. இவ்வெள்ளி வெளிவரும், அதனுடன் வருவேன். ஓர்அனுபவசாலி சத்யாக்ரக முறை நன்றென்றார்; நாம் கூடி ஆராயவேண்டும் - இவ்வாறு வேற்றூர்களில் தொண்டாற்றத் தவித்த பாவாணர் திருச்சியில் செய்ய விரும்பிய பணிகளைப்பற்றிய கடிதம் தொடர்கிறது. 74, அக்கிராகாரத்தெரு புத்தூர், திருச்சி 11-11-37 அன்பார்ந்த ஐயா, நலம். நலமாக, நெல்லையிலும் பாளையங் கோட்டையிலும் இற்றை நிலையென்ன? நண்பர் பாரதியார் அண்ணா துரை முதலியோர் பேசிய பின்பு நம்மவர்க்குள் ஏதேனும் பெருமாறுதலுண்டா? இங்கு, சிறியோரும் பெரியோருமான பெரும்பால் அபார்ப்பனர் தமிழ்மீது கடும்பற்று வைத்திருக்கின்றனர். ஆனால் அடிக்கடிகூட்டம் நடத்தவும் துண்டுத்தாள்கள் வெளியிடவும் ஏனமில்லை. பட்டிகளிலெல்லாம் புகுந்து வேலை செய்யத் தொண்டர்களுண்டு. ஆனால் பொருளுதவியில்லை. இங்குத் திருச்சிப்பண்டிதர்கள் பணமட்டுமிருந்தால் பெரிய வேலை செய்வோம். நம்மவர்கள் பெரும்பாலார் என்ன நடக்கிற தென்றே அறியாதிருக்கிறார்கள். காங்கிர வெறிபிடித்தவர்கள் பலரிருந்தாலும் அதிலுள்ள சூழ்ச்சிகளை எடுத்துச் சொன்னால் விழித்துக் கொள்கிறவர்கள் சிலருண்டு. முதலாவது, பட்டிகளுக்குச் சென்று அவர்களுக்கு இந்திக்கேட்டை எடுத்துச் சொல்லவேண்டும். பட்டிவாசிகள் பெருந்தொகையினர், வீரமிகுந்தவர்கள்; பெருந்தொகையான வரி கொடுப்பவர்கள். அவர்கள் எதிர்த்து விட்டால் நகரங்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் முடியாது. நான் சென்றவாரம் காய்ச்சலில்விழுந்து 8 நாளுக்குப் பின் தான் எழுந்திருந்தேன். அடுத்தவார முதல் அண்மையிலுள்ள சிற்றூர்களுக்குச் சென்று இந்தித் தீமை எடுத்துரைக்க எண்ணியிருக்கின்றேன். அதற்கென்று 35 கீர்த்தனைளும்இயற்றி வெளியிட்டேன். டாக்டர் மதுரம் அவர்கள் 20 ரூ கொடுத்தார்கள். 1000 படிகட்கு 30ரூ ஆகிவிட்டது. சென்னைக்கும் சேலத்திற்கும் இந்தி எதிர்ப்புக்காகக் சென்றதில் 9 ரூ செலவாகி விட்டது. கீர்த்தனைகள் விரைந்து விலையாகுமென்று எண்ணினேன். விலை 1 அணாத்தான். பார்ப்பனரைத் திட்டுவதற்குப் பலர் கூடு கின்றார்களே யொழியத் தமிழன்பை எவ்விதத்திலாவது காட்டக் காணோம். 500 படிகள் தான் சென்னை சென்ற போது கழகத்திற்குக் கொண்டுபோய் விற்பனைக்காகக் கொடுத்தேன். இன்னும் பலபடிகள் விற்பனையாக வில்லையாம். உண்மையான தமிழன்பர் சென்னையில் 500 பேர்இல்லை என்று தெரிகிறது. நெல்லைக்கு உங்களிடம் 100 படிகள் விலைக்கனுப்பி வைப்பதாக உங்கள் தம்பியார் சொன்னார்கள். அனுப்பினார்களா? விலையானவா? என்னிடத்திலுள்ள ஏனை 500 படிகளில் சிலவற்றை நாமக்கல்லிலும் தஞ்சையிலும் விற்கக் கொடுத்திருக் கிறேன். என் வசம் 300 படிகள் உள்ளன. இவை விலையானால் அதிற்கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு வேறு 35 பாடல்களுள்ள 2-ம் பாகத்தை அச்சிட்டு அடக்க விலைக்கே அரையணாவிற்கு விற்க எண்ணம். ஆனால் விலையான பாடில்லை, இப்பொழுதுள்ள பணமுடையும் அதன் பெருந்தேவையும் நினைக்கும் போதெல்லாம் நீங்கள் ஓர் எருமைக்காகச் செலவிட்ட 200 ரூ நினைவிற்கு வருகிறது. (பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் எருமைப்பலியை விலக்குவதற்காக 1937 இல் செலவிட்டது:- நூலாசிரியர்) உலக முழுதும் நாள்தோறும் கணக்கற்ற ஆடுமாடுகள் உணவிற்காகக் கொல்லப்படுகின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் தமிழ்க்குப் பெருந் தொகையளிக்கத் தக்க பிரபுக்களும் ஜமீன்தார்களும் இல்லையா? அடுத்தவாரம் இங்குச்சில கூட்டங்கள் நடத்த எண்ணி யிருக்கிறோம். டிசம்பர் விடுமுறையில் இங்கு நிகழும் தமிழன்பர் மகாநாட்டிற்கு நீங்களும் வள்ளல் அவர்களும் பிறரும் கட்டாயம் வந்து தீரவேண்டும். வேனில் விடுமுறையில் நெல்லையில் ஓர் தமிழன்பர் மகாநாடு கூட்டவேண்டும். அதற்கு நீங்களே பொறுப்பு. ஒருமுறை இருமுறை சிலமுறை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கூட்டம் நிகழ்த்தி விட்டாற் போதாது. நம்மவர்க்குக் கண் திறக்கும் வரை இடைவிடாமல் கூட்டங்களும் மகாநாடுகளும் நடத்தியே தீரவேண்டும். இதுவரை பன்னூற்றாண்டுகளாக நமது முன்னோரும், பல்லாண்டுகளாக நாமும் விழிப்பில்லா திருந்தமைக்கு இன்று பெரும்பாடு படுகிறோம். இன்றும் நாம் அருந்தொண்டிற்கும் பெருமுயற்சிக்கும் பின் வாங்கினோமாயின் அணை கடந்த வெள்ளமாய் அழுதிறக்கும் காலம் நெருங்கிவிடும். தற்போது ஜின்னா செய்துவரும் கிளர்ச்சி நமக்குப் பெருந்துணையாயுள்ளது. அங்குள்ள மகமதியரை எவ்விதத்தும் துணைக்கொள்க. இங்குள்ள மகமதியர் ஜின்னாவைச் சார்பவர்கள். நம்மொடு சேரத் தயாராயுள்ளார்கள். இச்சமயத்தில் நாம் இடைவிடாது வேலை செய்யவேண்டும். தமிழன்பர் மாநாட்டிற்குப் பெருந்தொகையினர் வந்து சிறப்பித்துத் தீர்மானங்களை வலியுறுத்த வேண்டுகின்றேன். தேவநேயன். திருச்சியில் பணிசெய்த நாளில் கழக வேண்டுதற்படி கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டார் பாவாணர். ஐந்து நாள்கள் பள்ளிவேலைக்கு; சனி ஞாயிறு நாள்களில் கலைச் சொல்லாக்கப்பணி எனத் திட்டப்படுத்திக் கொண்டு பணிசெய்ய அணியமாகிறார் பாவாணர்: நான் முன்னமே எழுதியபடி இந்தவாரம்சனி ஞாயிற்றில் (20ம் 21ம் தேதிகள்) கலைச்சொல்லாக்க எச்ச வேலையை முடித்து விடலாம். இல்லாவிட்டால் அடுத்த சனி ஞாயிறு. சனி ஞாயிற்றில் வைத்துக் கொண்டால் எந்தச் சனி ஞாயிறும் சரியே. முன்னதாக மட்டும் தெரிவித்து விடல் வேண்டும். கலைச்சொல்லாக்கக் கிளர்ச்சி பயன்பட்டுவருவது மகிழத்க்கது. இவ்வூரில் அடுத்தவாரம் ஒரு கண்டனக் கூட்டம் நடக்கும் என்கிறார் (16-9-41) மேலே, திருச்சித் தமிழ்ப்புலவர்க் கழக மாநாடு பற்றித் தொடர்கிறார் பாவாணர். பிஷப் ஹீபர் உயர்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சி, 23-10-41 m‹gh®ªj Iah., நலம், நலமாக. தமிழறிஞர் கழகத் திட்டமும் தீர்மானமும் பற்றிய சுவடிகளும் விண்ணப்பத்தாள்களும் கைவயம். இங்கே திருச்சித் தமிழ்ப் புலவர் கழகம் என்ற கழகத்தை அமைத்து அதன் கூட்டம் ஒன்றில் வருகிற டிசம்பர் (1941) 20ம் 21ம் சனிஞாயிறுகளில் இங்கே சென்னை மாகாண 3-வது தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டுவதெனத் தீர்மானித்து வேலையும் தொடங்கி விட்டோம். மாநாட்டுக்குத் தலைமை தாங்குமாறு செட்டிநாட்டு இளவரசரைக்கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை. முதல் நாட்காலை, தலைவர் திறப்பாளர் கொடியேற்றுபவர் வரவேற்புத் தலைவர் ஆகிய நால்வரின் சொற்பொழிவுகளும், மாலை தீர்மானங்களும் தமிழ்ப் புலவர் கழக உட்கழக அமைப்புகளும், மறுநாட்காலை தொல்காப்பிய மாநாடும் நடைபெறும். தொல்காப்பிய மாநாட்டில் காலை மூவேறு புலவர்கள் எழுத்து சொல்பொருள் பற்றிய சொற்பொழிவும் நடைபெறும். இதற்குத் தலைவராயிருக்கச் சோமசுந்தர பாரதியாரைக் கேட்கப் போகின்றோம். தொல்காப்பிய மாநாட்டைக் குறுந்தொகை, கலித்தொகை மாநாடு போல நீங்களே பொறுப்பேற்று நடத்தலாம். முன்னதாகச் சொற்பொழிவுகளை அச்சிட்டும் கொள்ளலாம். தொல்காப்பியம் தமிழ்ச் சரித்திரத்திற்கு உயிர்நாடியாய் இருப்பதாலும், தமிழ்ப் பகைவரான பார்ப்பனர் சில முக்கியமான நூற்பாக்களுக்குத் தவறான உரை கூறுவதாலும் தொல்காப்பியக் காலம்கருத்து முதலியவை இவையே என்று நிறுவ வேண்டும். இருநாளும் புலவர்களுக்கெல்லாம் இலவச ஊணும் இடமும் அளிக்கப்படும். அண்மையில் விளம்பரம் மாநாட்டழைப்பு வேண்டுகோள் நிகழ்ச்சிக்குறிப்பு முதலியவை அச்சிட்டனுப்பப் பெறும். இம்மாதச் செல்வியில் 3பக்கம் இடம் விட்டுவைக்க. நாம் தனித்தனி ஆங்காங்கு எத்தனை கூட்டம் கூட்டினும் அத்துணை வலியுறுவன அல்ல. புலவரெல்லாரையும் ஒன்று சேர்த்துத்தொகுதியாக நின்று போராடுதலே வலியுடைத்து. சென்னையிலுள்ள எல்லாப் புலவர்க்கும்இதைப்பற்றித் தெரிவித்துப் பற்றுள்ள வரையெல்லாம் நீங்கள் அழைத்துக் கொண்டு வரவேண்டும். இதுபொதுத் தொண்டென்றும் புலவரையெல்லாம் ஏற்றத் தாழ்வுணர்ச்சியின்றி உடன் பிறந்தாரும் ஒருநிலையருமாய்த் தத்தம் பணிசெய்ய வேண்டியது கடமை யென்றும் அவர்க்கு உணர்த்தல் வேண்டும். மறைமலையடிகளைத் திறப்பாளராக்கி ஐம்பது ரூபா கொடுப்பதற்கு இருந்தோம். அவர் 250 ரூபா வுக்குக் குறைந்துவர முடியாதென்று எழுதி விட்டார். மாநாடு மிகமிகமுக்கியமானது. தமிழ்த்தடைகளை யெல்லாம்சல்லி சல்லியாகத் தகர்த்தெறிய வேண்டும் என்பது எங்கள் அவா. தமிழன் எப்படிக் கெட்டான்? தமிழர சரித்திரச் சுருக்கம் தமிழின் பெருமை தமிழ் அயன்மொழிக் கலப்பால் தளருமா? வளருமா? இந்தியப் பொது மொழியாதற்கு ஏற்றது எது? இந்தியா ஒருநாடா? மனுதருமமும் திருக்குறளும் திருந்திய வாழ்க்கைகலைச் சொல்லாக்கப் பாடல்கள் (20) என்ற சிறு சுவடிகள் அச்சாகின்றன, அவற்றுள் முந்தியது 40 பக்கம், 2 அணா, ஏனையவை தனித்தனி 12 பக்கம். 1/2அணா விலை. எனது “An Open Appeal to Mr. Anejay Recognition and Literatures Tamil” என்ற ஆங்கில முறையீடும் வெளியாகும். இதற்குரிய அச்சுச் செலவிற்கு நீங்கள் சிறிதாவது உதவவேண்டும். மொத்தச் செலவு 30 ரூபாயாகும். சென்னையில் நாம் ஏற்படுத்திய தமிழறிஞர் கழகத்தைத் தலைமையாக வைத்துக் கொண்டு கோட்டந்தோறும் கூற்றந் தோறும் கிளைகளும் சிறு கிளைகளும் அமைத்துக் கொள்ள வேண்டும். இதை மாநாட்டிலேயே செய்து விடலாம். தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே புலவர் அல்லது அறிஞர் கழகம் இருத்தல் வேண்டும். மெள்ள மெள்ள இவ்வறிஞர் கழகமே அரசியலில் தலையிட்டுத் தமிழ் நாட்டுக் கட்சியாகி அரசியலைக் கைப்பற்ற வேண்டும். தமிழறியாதவரையும், தமிழரல்லாத திராவிடரையும் நம்பிக் கொண்டிருப்பது கழிபெரு மடமையாகும். ஒவ்வொரு புலவரையும் தமிழறிஞர் கழகத்தில் உறுப்பினராயிருக்குமாறு மாநாட்டில் நேரிலேயே கேட்டுப் பதிவு செய்து கொள்ளலாம். பல தொண்டுகட்கும் தனித்தனி உட் கழகங்களும் மாநாட்டிலேயே அமைக்கப்படவேண்டும். வேலை பல்வேறு நிலையாய்ப் பிரிந்தும் பரந்துபட்டும் இருப்பதால் எங்களால் மட்டும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யமுடியாது. இடமும்ஊணும்ஊர்வலமும் ஏற்படுத்தி மற்றைய ஏற்பாட்டிற்குத் தான் முழுப்பொறுப்பும் ஏற்றுக் கொள்ளமுடியும். ஏனைய வெல்லாம் நாமிரு சாராரும் சேர்ந்தே செய்ய வேண்டும். அச்சிட்டமாநாட்டு அழைப்பு ஒவ்வொரு புலவர்க்கும் தனித் தனிவரும். சென்னைக்கு 100 அனுப்புவோம். நீங்களே பகிர்ந்து விடவேண்டும். மாநாட்டுக்கு முன் கலைச் சொல்லாக்கம் பற்றிஒன்றும், தமிழிசை பற்றி ஒன்றும்ஆக இரு கூட்டம் இங்கு நடைபெறும். அருணகிரிநாத அடிகள் கட்டாயம் மாநாட்டுக்கு வரவேண்டும். உடன் பதில். ஞா. தேவநேயன். மொழிக்காவலில் கடுந்தொண்டாற்றிய பாவாணர் அத் தொண்டொடு கூடியதும் அதற்குப் பொலிவும் வலிவும் ஊட்டுவதும் தாம் உலகுக்கு நிலை நாட்டக்கருதியது மாகிய திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் இடு நூலை (Thesis) எழுதிப் பல்கலைக் கழகத்தில் ‘M.O.L.’ பட்டத்திற்காகத் திருச்சிக் காலத்தில் தான் ஒப்படைத்திருந்தார். 13-11-35 இல் அவ்வாய்வில் அமிழ்ந்துள்ளதாக எழுதும் பாவாணர், 11-2-36இல் அவ்விடுநூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்பட்டமையை உரைக்கின்றார். மேலும் இதுஎனக்கு வியப்பாக இல்லை. இற்றைத்தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது என்கிறார். அன்றியும், இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால்எனது நூல்களையெல்லாம். ஒவ்வொன்றாய் வெளியிடப்போகிறேன் என் முடிவெடுக்கிறார்! இம்முடிவே செம்முடிவாயமை மேலும் மேலும் விளக்கமுறும் திருச்சிப்புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப் பள்ளியில் பாவாணர் தமிழாசிரியராக இருந்தபோது மறைமலை யடிகள் தாம் இயற்றிய தமிழர் மதம் என்னும் நூற்படி ஒன்றனை அன்பளிப்பாக விடுத்து, அதுபற்றிய பாவாணர்ஆய்வுயை இந்துத்தாளுக்கு எழுதுமாறு சொன்னார். பாவாணர்மதுரைப் பண்டிதத் தேர்வு தேறியபின் பத்தாண்டுகள் ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்ததால் தம் ஆங்கிலப் பேச்செழுத் தாற்றலைப் பெரிதும் இழந்திருந்தமையால் அடிகள் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பியும் இயலாமற் போயினார். இதனைப் பின்னாளிலும் வருந்தி எழுதியமை (மண்ணில்விண். 176) அவர்தம் அந்நாள் துயர் மிகுதியை நன்கு வெளிப்படுத்தும். திருவள்ளுவர்க்குப் பின் தோன்றிய ஒப்பற்ற புலவர் அடிகளே என்னும் பாவாணர்க்கு அவர் வேண்டுகையைநிறைவேற்றாமை எளிய துயராமா? மறைமலையடிகளார். தம்மை மதித்த மதிப்பீட்டுச் சான்றாக மற்றொரு சான்றும் பாவாணர்குறிக்கிறார்: ஒரு தமிழ்ப்புலவர் ஒருகால் தம் தவறான சொல்லா ராய்ச்சியொன்றைக் கூறியபோது, அது பொருத்தமன்றென மறுத்துரைக்க, அஃது என் ஆராய்ச்சியென்று அப்புலவர் பொய்த்தபின், அங்ஙனமாயின் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் என்று திருவாய் மலர்ந்தார்களாயின் அவர்கள் என்னை மொழி நூற்றுறையில் எத்துணை மதித்திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்க என்கிறார். (தென்மொழி 7:9:12) அடிகளாரைச் சுட்டிக்கூறாத ஒருநூல் பாவாணர் இயற்றி யவற்றுள் இல்லை என்பதே, அவரை மதித்தமதிப்பைப் புலப் படுத்துமே! யான் திருச்சிப்புத்தூர் ஈபர்கண்காணியார் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியனாயிருந்த பொழுதே திருவையாற்று அரசர் கல்லூரித் தமிழ்மாணவர் விருப்பத்திற்கிணங்கி அங்குச் சென்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் குற்றியலுகரம் உயிரீறே என்று நிறுவினேன். அதன் பின்னர்த் தமிழ்நாடு முழுமைக்கும் பயன்படுமாறு ஒரு கட்டுரையும் வரைந்தேன் என்கிறார் பாவாணர் (தென்மொழி 3 : 11 : 21) வரும் ஞாயிறு கரந்தைத் தமிழ்ச்சங்க ஆட்டை விழாவில் தமிழாக்க மரபு என்னும் பொருளிலோர் சொற்பொழிவு நிகழ்த்துவேன் என்கிறார் (17-1-38) மன்னார் குடியில் பாவாணர் வருந்தி உழைத்துத் தேடிய தமிழ்த்திரு, திருச்சித் தமிழ்த் தொண்டொடு கூடிப் பரிமணத்தல் இவற்றால் விளங்கும். 6-7-43 இல் கழக ஆட்சியாளர்க்குப் பாவாணர் ஒரு வேண்டுகை விடுக்கிறார் : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. பதிலுமில்லை. தற்போது வெற்றி மாளிகையில் போர்ப்பாடலாசிரியன் வேலைக்கு வேண்டி யிருக்கிறேன். திரு. மு.ஆ. பாலசுப்பிரமணியம்அவர்கள் பாடற்றுறையில் மாகாணத் தலைவர். அவர்களுக்கும் ஒரு திருமுகம் எழுதியிருக்கிறேன். அவர்கள் மனம் வைத்தால் 100 ரூபாய்க்கு எனக்கொரு வேலை கொடுக்கலாம். அன்பு கூர்ந்து உடனே அவர்களிடம் சென்று யாப்புத் திறனையும் பாடுமியல்பையும் எடுத்துச் சொல்லி ஒருவேலை கிடைக்கச் செய்க. தற்போது எனது வருவாய் போதாமல் வருந்துவதோடு தமிழ் முன்னேற்ற முயற்சியும் தடைப்படுகிறது என்பது அது. அப்பணி கிட்டாதுபோனது. அதனால் கழக ஆட்சியாளரும் பர். இராசமாணிக்கனாரும் வேறொரு முயற்சியில் இறங்குகின்றனர் என்பதை மேலே அறியலாம். 1934 முதல் 1943 வரையாகிய ஒன்பதாண்டுத் திருச்சி வாழ்வில், c.447, மதுரை வீரன் கோயில் தெரு, புத்தூர்; 74, அக்கிராகாரத் தெரு, புத்தூர்; 8, புத்தூர் மந்தை; 1896, புதுத்தெரு, புத்தூர்; 9, பிஷப்குளம் காலனி, புத்தூர் என்னும் ஐந்து இல்லங்களில் பாவாணர்குடியிருந்தமை கிடைத்துள்ள கடிதங் களால் புலப்படுகின்றது. இவ்வில்லங்கள் வாடகை இல்லங்களே எனச் சொல்ல வேண்டுவதில்லை. காலமெல்லாம் தனித்தமிழ்க் கொள்கையினால்குறைந்த சம்பளம் பெற்றுவந்தேன். இன்று தான் இறுதிக் காலத்தில் சம்பளம் சற்று உயர்ந்திருக்கின்றது. இன்னும் குடியிருக்க வீடில்லை; பொத்தகம் வாங்கப் பணமில்லை என 22-8-77 இலும் வரைகின்றார்! திருச்சிக் காலத்தைச் சொல்ல வேண்டுமா? திருச்சியில் இருந்து. 1943-கல்வியாண்டு தொடங்கிச் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர் நிலைப் பள்ளிக்குச் செல்கிறார். இச் செலவு பாவாணரே விரும்பி மேற்கொண்டார் என்று தோன்றவில்லை. என் அண்ணாமலநகர்வாழ்க்கை என்பதில் பண்டாரகர் (Dr) அரசமாணிக்கனாரின் பரிந்துரையும் தமிழ்ப்பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப் பற்றும் அற்றைப் பள்ளியாளுங்கணத்தாரின் தமிழ் உணரச்சியுமே கரணியம் என அவ்விடத்து வேலை கிடைத்தமையைக் குறிக்கின்றார். ஆனால், சைவ சித்தாந்தக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா அவர்களும் பண்டாரகர் அரசமாணிக்கனார் அவர்களும் பாவாணர் அப்பள்ளிக்கு வருதல் வேண்டும் என்று வலியுறுத்தியமையாலேயே திருச்சியில் இருந்து சென்னைக்குச் சென்றார் என்று கடிதங்களால் தெரிகின்றது. ஒருமனத்தராய்த தாமே விரும்பி முடிவு செய்யாமல் புறப்பட்டு விட்டார் என்று கருதுமாறே செய்திகள் கிட்டுகின்றன; பாவாணர் விரும்பி எழுதிய ஊதிய மிக்க வேல வேறு; இவர்கள் அமைத்துத் தந்த வேலை வேறு என்பதால இந்நிலை எனத் தெளிவாகின்றது. உங்களுக்கும் நண்பர் இ. மா. அவர்கட்கும் என் மீதுள்ள பற்றினால்65 ரூபாயானாலும்ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள். தற்போது அங்கு வருவதால் ஏற்படும் வசதிக் குறைவும் முடடுப்பாடும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது 1ரூ கொடுத்து வசதியான வீட்டில் இருக்கிறேன். அங்கு இத்தகைய வீட்டிற்கு 35ரூ கொடுக்க வேண்டும். சிறு வீட்டில் என் பொருள்கள் அடங்கா. அரிசித் திண்டாட்டம் நினைப்பினும் வருத்துகின்றது. பையன்கள் பல பள்ளிகளில் அமர்ந்து படிக்கிறார்கள். அங்கு வந்தால் புதுப் புத்தகம் வாங்கிப் புதுப் படிப்புத் தொடங்கவேண்டும். இங்கு வாங்கிய புத்தகம் வீண். தவணையிடையில் இடைமாறினால் தவணைச் சம்பளம் கட்ட நேரும். என் மருமகன் ஒருவன் இங்கு 5ஆம் பாரத்தில் இலவசமாய்ப் படிக்கிறான். அங்கு வந்தால் அது நீங்கும். தற்போது புகைவண்டியில் ஓர் ஆடவனுக்கே இடமில்லை. குடும்பத்தோடும் கைக்குழந்தையோடும் வர எங்ஙனம் இயலும்? இங்குள்ள நண்பர்கள் போக வேண்டாமென்று தடுக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளி தானே என்றும்அங்கத்து 70ரூ இங்கத்து 50ரூ என்றும் சொல்கிறார்கள், அது உண்மைதானே! எனக்குச் சென்னைக்கு வர விருப்பம்தான்; ஆனால் விலை மிகுந்தும் பொருள் கிடையாத காலத்தில் எப்படிக் குடும்பத்தோடு வரமுடியும்? என்றாலும், தாங்கள் விருப்பத்திற்கிசைந்து மேலாளர் வாயிலாப் இன்றை அஞ்சலுக்கு விண்ணப்பம் விடுத்துவிட்டேன். 70 ரூபாய்க்குக் குறையாது பார்க்க. முக்கியமான வேலையிலேயே போதிய வருமானம் வரவேண்டும். பிற முயற்சியும் செய்து பிழைப்பது நன்றன்று. குறிப்பு; தற்போது 5-க்குள் ஓர் அறை பார்க்க. எதிர்க்கடையில் சாப்பிடலாம் என 16-7-43 அஞ்சலில் எழுதியுள்ள செய்திகளால் பாவாணர் நிலை தெளிவாகி விடுகின்றது. 24-7-43 இல் வரைந்த மற்றொரு கடிதத்தில் மேலும் தெளிவாவதுடன் அற்றை நாள் தமிழாசிரியப்பணி நிலையும் நன்கு விளக்கமாகின்றது. அமர்த்தாணை வந்தவுடன் சம்பளம் இங்குள்ளது தானே என்றார்கள். பின்பு, முத்தையால் பேட்டைப் பள்ளியில் உயர்ந்த சம்பளத் திட்டம் போடுவார்கள் அதன்படி கொடுக்கமாட்டார்கள் என்றார்கள். பின்பு, 3மாத அறிவிப்பாவது 3 மாத சம்பளமாவது கொடுக்க வேண்டும் என்றார்கள். இவர்கள் சொல்கிற சம்பளத்திற்கு உடனே ஆள் கிடைக்கவில்லை. ஆகையால் இராமராவ் என்னும் சின்னப் பண்டிதரையே பெரிய பண்டிதராக்கச் சொல்லி யிருக்கிறேன். அவரும் போகிறதாக அறிவிப்புக் கொடுத்திருக்கிற தினால் 5ரூ கொடுத்தால் இருக்கிறேன் என்கிறார். மேலாளர் 48 வரை வந்திருக்கிறார். இன்னும் 2 கூட்ட வேண்டுன்று சின்னவர் சொல்கிறார். அவரது பழைய சம்பளம் 40 இம்மாத இறுதிக்குள் ஏதேனும் ஒழுங்காகும். வருகிற வெள்ளியிரவு புறப்படலாம் என்றிருக்கிறேன். துணி ஒரு பெட்டியும் முக்கியமான புத்தகம் ஒரு பெட்டியுமாக இருபெட்டிகள் கொணர்வேன் உயர்நிலைப்பள்ளி அளவில் மிகுதியான காலம் ஓரிடத்துப் பணியாற்றியது திருச்சி பிசப்பு ஈபர் பள்ளியேயாம். அங்கிருந்தும் வலியுறுத்தலால்தான் சென்னைக்குச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்தோம். அங்கும் ஒரோ ஓர் ஆண்டே (1943 - 44) பணியாற்றி யிருக்கிறார். திரவிடத்தாய் அக்காலத்தில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழியே வெளிவந்துள்ளது. சைலன் என்னும் சொல்லை, ஆசிரியர்கள் வகுப்பினுள் நுழையும் போது சொல்லும் வழக்கம் ஆங்கு இருந்ததாம். தமிழாசிரியர்களும் அவ்வாறு கூறுவதே வழக்கமாம். ஆனால் பாவாணர் வகுப்புள் புகுந்தமுதல்நாளே அமைதி என்றாராம்! வகுப்புக்குக் காணாததைக் கண்டது போலவும், கேளாததைக் கேட்டது போலவும் ஆயிற்றாம்! ஆங்கில வரலாற்றில் எட்கார் என்பார் வரலாற்றைப் படித்த மாணவர்கள், அவர் தம் படத்யும் பாவாணர் தோற்றத்தையும் ஒப்ப நோக்கி வியந்து அமைதியை விரும்பும் எட்கார் எனப்பட்டப் பெயரிட்டனராம். இது முத்தியாலுப் பேட்டை நிகழ்ச்சி. 21-10-1943 இல் சென்னைத் தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில், சைவசித்தாந்தக் கழகச் சார்பில் முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டுத் தலைமை கொண்டவர் பண்டிதமணி கதிரேசனார். உணர்வு மிக்க உரையாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.கு. கோதண்ட பாணியாரும் பாவாணருமாவர். 1933 திசம்பர் 23, 24 ஆம் நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நிகழ்ந்ததும், மறைமலையடி களாரால் புறக்கணிக்கப் பட்டதுமாகிய தமிழன்பர் மாநாட்டுக்குப் பின்னர், தனித்தமிழ்ப் பற்றாளர்களால் கூட்டப்பட்ட மாநாடாகும் இது. இம்மாநாடு பின்னே வெவ்வேறிடங்களிலும் நிகழ்ந்துள்ளது. பாவாணர் இங்குப்பணியாற்றிய இக்காலத்திலே தான் தொல்காப்பிய எழுத்து சொல் பதிப்புகளுக்குக் குறிப்புரையும் ஆய்வுரையும் எழுதியுள்ளார். இப்பதிப்புகள் கழகத்தின் வழி வெளியிடப்பட்டவை. செல்வியில் கட்டுரைகளும் இக் காலத்தில் நிரம்ப எழுதியுள்ளார். முத்தியாலுப் பேட்டை உயர்பள்ளித் தலைமை யாசிரியராக அந்நாள் இருந்தவர் ஞா. இலக்குமணசாமி என்பார். அவர் கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். அவர்க்குத் தமிழாசிரியராக இருந்தவர் பரிதிமாற் கலைஞர். அதனால் தமிழ்ப்பற்றுமிக்க பாவாணரொடு அன்பால் பழகியிருக்கிறார்: நெருங்கி அளவளா வியும் இருக்கிறார். அத்தகையதொரு வேளையில், ஐயா, பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய நாராயண சாத்திரியார் எனக்குக் கிறித்தவக் கல்லூரியிற் கலையிளைஞன் (B.A.) வகுப்பில் தமிழ் கற்பித்தபோது, பிராமண மாணவரையும் வைத்துக் கொண்டு, பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டனர் என்று சொன்னாரையா! என்று கூறியது இன்றும், இன்று சொன்னது போன்றே இருக்கிறது என்கிறார் பாவாணர் (செந். செல். 55 : 150) சென்னையில் இருந்து அவ்வாண்டின் நிறைவிலேயே வெளியேற விரும்பினார்பாவாணர். அவர்தம் வாழ்வில் பசுஞ் சோலை எனத்தக்க நிலையை உருவாக்கிய சேலம் நகராண்மைக் கல்லூரி வேலை வாய்த்தது. 4. போது சென்னையில் இருந்து சேலம் சேர்ந்ததும் சென்னை வேலையால் நேர்ந்தநேர்ச்சியையும், சேலத்துப் புகுந்த நிலையையும் ஓரஞ்சலில் தீட்டுகிறார் : சென்ற ஆண்டு சென்னை வேலையை ஒப்புக் கொண்டதால் 2 நிலைப்பேழைகளையும் சில அரிய நாற்காலிகளையும் விற்று விட்டேன். இன்று அத்தகையவை வாங்க முடியவில்லை. இங்கு வந்தவுடனே தலைவர் அவர்களிடம் ரூ. 30 கடன் வாங்கி, 16 உடல் நலத்தகுதித் தாளுக்கும், 4 செருப்புக்கும், 3 மேலாடைக்கும் செலவாய்விட்டது (13-8-44) என்பது அது. இதில் தலைவர் என்பவர் நகராட்சித்தலைவர்; சேலம் நகராட்சிக் கல்லூரித் தாளாளராகவும் திகழ்ந்த இரத்தினசாமியார். அந்நாள் கல்லூரிமுதல்வர் இராமசாமியார். எத்தனை எத்தனையோ கல்லூரிகள் தமிழகத்தில்உள; எத்தனை எத்தனையோ முதல்வர்களும் உளர். எனினும் உயர்நிலைப் பள்ளிகளிலே உழன்ற என்னைக் கல்லூரிக்கு அழைத்து உயர்வளிக்கும் பண்பாட்டைக் கற்றவர்இராமசாமி ஒருவரே என்று பாராட்டுகிறார் பாவாணர். இடைநிலைக் கல்லூரியாக இருந்த நகராட்சிக் கல்லூரியை உயர்த்தி மேனிலைக் கல்லூரியாக்கி இராமசாமியை முதல்வராக நிலைபெறுத்திக் கொண்ட பெருந்தகையர் இரத்தினசாமி; இவ்விராமசாமியே தாம் செய்த தமிழ்த் தொண்டுக்குப் பெருந்துணையாக இருந்தவர் எனப்பல நூல்களில் பல படப் பின்னாளில் பாராட்டியுள்ளார்; பதிகமும் பாடியுள்ளார் பாவாணர். நகராட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்ஆகிய இருவருடன், அந்நாள் நகராட்சி ஆணையராக இருந்த கீ. இராமலிங்கனாரும் தாம் கல்லூரிப் பணியேற்க உதவியதும். சுட்டியுள்ளார் பாவாணர். ஆகலின், பொறுப் பாளர்கள் அனைவரும் விருப்பாளர்களாக அமைந்து அரவணைத் துள்ளனர். தமிழ்ப் பற்றும் தமிழினப் பற்றும் தமிழ்வளர்ச்சித் தொண்டும் ஒருங்கே கொண்ட முதல்வர் இராமசாமியார் பாவாணர்க்கு எவ்வளவு மிகுதியாக ஓய்வு தந்து நூலாய்வுக்கு உதவமுடியுமோ அவ்வளவும் தாமே கருதிக் கருதிச் செய்திருக்கிறார். மாலைப் பொழுதுகளில் தம் இல்லத்திற்கு உடனழைத்துச் சென்று விருந்தோம்பி இனிதின் அளவளாவியும், உடனாகி உலவச் சென்றும் உவப்பளித் திருக்கிறார். பொருட்கவலைமுதல் எக்கவலையும் பாவாணர்க்கு வராமல் புரந்திருக்கிறார். இவ் வெல்லாவற்றினும் மேலாகப் பாவாணர் புகழ் பரப்புநராகவும் திகழ்ந்திருக்கிறார். இவற்றால் மகிழ்ந்த பாவாணர், சேலங்கல்லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமி ழாராய்ச்சி - நூலியற்றும் தேவநே யன்எங்கே? தென்மொழித் தொண்டெங்கே? பாவுதமிழ் மீட்பெங்கே யார். எனப் பாடியிருக்கிறார். இராமசாமியார்மேல் பாவாணர் பாடிய பதிகப்பாடலுள் ஈதொன்று (தமிழ் வர 298) அப்பசுமைப் பன்னீரியாண்டையும், பைந்தமிழ் முதல்வர் பரிவையும் பின்னாளில் எண்ணிப்பார்க்கும் பாவாணர், அங்குப் பன்னீராண்டு பணி யாற்றியும்இன்று சொற்பொழிவாற்றவும எனக்கதில் இடமில்லா திருப்பதும் பேராசிரியர் இராமசாமியார் அவர்கள் தமிழ்ப் பற்றின் பேரெல்லையை உணர்த்துகின்றன என்கிறார். (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. பக். 17) வரலாற்றுத் துறைப் பேராசிரியராக அந்நாளில் சேலங் கல்லூரியில் விளங்கியவர் தி.வை. சொக்கப்பனார். அவர் பாவாணர்க்கு உழுவலன்பொடு திகழ்ந்தவர். கல்லூரிக் காலத்தன்றி அதற்குப்பின்னரும்பாவாணர் தமிழ்த் தொண்டுக்குப் பெரிய துணையாக நின்றவர். முதன் மொழி மாதிகையின் ஆசிரியராகவும், கடனாற்றியவர். பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்புத் திட்டத்தை அரசு செயற்படுத்த வேண்டுமென அந்நாள் முதலமைச்சர் பத்தவற்சலனாரிடம் சென்ற தூதுக் குழுவின் தலைவராக இருந்தவர். ஆதலால் கல்லூரிச் சூழலும் வெளிச் சூழலும் இன்பம் பயப்பனவாக அமைந்தது சேலத்தில் பாவாணர் பணிசெய்த காலமே என அறியவாய்க்கின்றது. அத்தொடர்பே வேலை ஓய்வுக்குப் பின்னரும் உதவியாக இருந்தமையும் அறிய முடிகின்றது. சேலத்தில் பாவாணர் பணியாற்றிய காலத்தில் அவர் தம் புலமைத் திறத்தைப் போற்றித் தொடர்பு கொண்ட மாணவரே, பின்னாளைத் தென்மொழியாசிரியரும், உ.த.க. அமைப்புச் செயலாளரும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட உருவாக்குநரும் ஆகிய பெருஞ்சித்திரனார். அதனால் சேலம், தந்தசெயலாண்மைக் கொடைகளுள் ஒன்றாகவும், பாவாணர் பணிகளுக்கு அணிவகுத்து நின்று உதவும் வாய்ப்பாகவும் அப்பழந் தொடர்பு சிறந்தமை குறிப்பிடத் தக்கதாகும். சேலத்தில் 1944 முதல் 1956 வரை பணியாற்றியிருக்கிறார் பாவாணர். 1950 இல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் வரைந்து கழகத்தின் வழியே வெளியிட்டார். அதில் தம் கல்லூரி நிகழ்ச்சிகள் சிலவற்றையும், தலைவர் முதல்வர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றையும் எடுத்துக்காட்டாக வரைந்துள்ளார். நேர்கூற்று வாக்கியங்களை நேரல் கூற்றாக மாற்றுக என்பதிலுள்ள ஒன்று: இனிமேல் எந்தக் காரணத்தையிட்டும் எழுத்தாளர் அறைக்குட் செல்லக் கூடாது என்று எம் கல்லூரித் தலைவர் ஆசிரியர்க்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டு விட்டார் என்பது. (பக். 260) இன்னவாறு சில. செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலியிலும் இராமசாமி யாரை நினைக்கிறார் பாவாணர்: அடுத்து : அடுத்து பேரா. இராமசாமிக் கவுண்டர் அவர்கள் தொல்காப்பியம் பற்றி ஓர் அரிய ஆய்வுரை நிகழ்த்து வார்கள் சேலங்கல்லூரிப் பழநிகழ்ச்சி ஒன்றையும், இராமசாமியார் திறத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றையும் உயர்தரக் கட்டுரையில் சுட்டுதல் வருமாறு : பல ஆண்டுகளுக்கு முன் சேலங்கல்லூரியில் ஒரு மாணவன் இருந்தானாம் அவன் வகுப்புயர்த்த நாளில் ஆசிரியர் அறைக்குச் சென்று ஆசிரியர் அனைவரையும் நோக்கி ஆசிரியன்மீர் இன்று மாணவரை வகுப்புயர்த்தப் போகின்றீர்கள். மதிப்பாய் என்னையும் உயர்த்தி விடுங்கள், இல்லாவிட்டால் இதோ பாருங்கள் கத்தி உங்கள் குடலாயிற்று என் மாலைமாயிற்று என்று சொல்வனாம் என்ன துணிகரம் - இது நிறுத்தக் குறியிடத் தந்தவற்றுள் ஒன்று. (பக். 282). திருவாளர் அ. இராமசாமிக் கவுண்டர் தாழ்ந்த மதிப்பெண் (Marks) பெற்ற மாணவரைத் தம் கல்லூரியிற் சேர்த்து, உயர்ந்த விளைவை உண்டு பண்ணினார்- இது முக்காற் புள்ளியும் முற்றுப் புள்ளியும் இடத்தந்தவற்றுள் ஒன்று. (பக். 283) சேலம் கல்லூரியில் பணி செய்த காலத்தில் பாவாணர் தாமே தமித்துப் பயின்று (1952 இல்) தமிழ் முதுகலைப்பட்டம் பெற்றமை சுட்டத்தக்க தொன்றாம். சேலம் கல்லூரியில் தமிழ் வழியே ஏரணம் வரலாறு ஆகிய பாடங்களைக் கற்பிக்கக் கல்வியமைச்சர் கட்டளையிட்டிருக்கிறார். பாவாணர்க்கு உவப்பான அத்திட்டத்தில் ஆர்வமாக ஊன்றியிருக்கிறார். ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழிபெயர்த்து வருகின்றோம், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப்பெறுகின்றன என்கிறார் (13-7-46 வ.சு.). அந்நாளிலே, தமிழ்ப் புலவர்களிடையேயும் மறைமலையடிகள் மாறு கொள எண்ணப்பட்டமையும், மறக்கப்பட்டமையும் பாவாணரை வதைத்தன. அதனால் அடிகள் தமிழ்ப் புலவரிடையும் சு.ம. பண்டிதரானார். இத்துணை அண்மைக் காலத்திலேயே அவர் மறக்கப்படுவார் அல்லது புறக்கணிக்கப்படுவார் என்று கனவிலும் கருதவில்லை. மலைசாய்ந்ததென்று புகழ்ந்தவரெல்லாம் அலை யோய்ந்த தென்று மகிழ்கின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமைதாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலுமில்லை. தக்காரொருவர் தலை யெடுக்காவிடின் தமிழ்நாடு அமிழ்நாடே என அலமருகிறார். *15-7-51. வ.சு.) மொழிப்போரில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிறரும் உளர். நாட்டு எல்லைப் போரில் ஈடுபட்டவர் அரியர். எல்லை மாநாட்டைக் கூட்டவும் பாராளுமன்றத் தூதுக்குழுவைச் சந்திக்கவும் தூண்டுகிறார் பாவாணர்: இற்றைச் செய்திகளையும் நிலைகளையும் நோக்கும் போது இம்மாத இறுதிக்குள்ளேயே எல்லை மாநாட்டை வைத்துக் கொள்வது நலமென்று தோன்றுகின்றது. பாராளுமன்றத் தூதுக்குழு 14ம் தேதி வரை லாகூரில் இருக்கிறது. பின்பு இரு பகுதிகளாய்ப் பிரிந்து பெஷாவருக்கும் அமிருதசாருக்கும் செல்கிறது. வடக்கேயே இத்துணை நாள் தங்கினால் தெற்கே பம்பாய் பார்க்கவும் திருவாங்கூர் செல்லவும் சென்னை வரவும் இம் மாத இறுதியாகிவிடும். பெப்ரவரித் தொடக்கத்தில் நடக்கும் கூட்டத்தை இம்மாத இறுதியில் வைத்துக் கொள்வது இயலாத தன்று. பா.தூ. குழு அதிகார முறையில் வராவிட்டாலும் இந்தியாவின் பின்னிலை அமைப்பிற்குப் பெரிதும் காரணமா யிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. தூதுக்குழு சென்னைக்கு வரும்போது அவர்கள் கண்ணாரக் காண்பது போல, பின்னர் நடக்கும் எம்முயற்சியும் வலியுறாது என்பது தேற்றம். குழு டில்லிக்குத் திருப்பியவுடன் ஆந்திர மகாசபைத் தலைவராய விஜயா என்பவர் காணச் செல்கிறார். நாம் இன்று தூங்கிக் கொண்டும் நீட்டிக் கொண்டும் இருந்தோமாயின் நம் காரியம்கைகூடுவது அரிது. மாநாட்டிற்கு வேண்டியவை முன்னர்ச் சுவடியும் பின்னர் 1 புத்தகமுமாக 2. சுவடியில் வேங்கட எல்லைக்குச் சான்றுகளை யெல்லாம் சுருக்காய்க் கூறி அச்சிட்டுப் பெருமக்கட் கெல்லாம் அனுப்பிவிடலாம். பொங்கல் விடுமுறைக் குள்ளேயே பண்டிதர் ஆனந்தத் தையும் இராசமாணிக்கம் பிள்ளை அவர்களையும் கொண்டு எழுதுவித்து உடனே அசசிட்டுவிடவும். நாயக்கர் ஈரோட்டில் இருக்கிறார். எழுதிக் கேட்க எனக்கழக ஆட்சியார்க்கு 10-1-46 இல் எழுதியுள்ள செய்தி பாவாணரின் எல்லைக் காப்புப் பற்றிய ஆர்வச் சான்றாம். சேலம் கல்லூரியில், இலக்கியமன்ற நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்ததாம். அப்பொழுது பொழிவுக்கு வந்தவர், வசந்தசேனை என்பது எவ்வளவு சொல்லவும் கேட்கவும் சுவையாக இருக்கிறது; இதனை, இளவேனிற் படை என்றால் இன்பமாக இருக்குமா? என வினா வினாராம். பாவாணர், உம் தலைப்பைப்பற்றிப் பேசும்; அப்பால் போகாதீர்; தாயுமானவர் என்ற இனிய தமிழ்ப் பெயரை மாத்ரு பூதம் எனப்பெயர்த்து இராத்திரிப் பொழுதில் கூறினால் நடுக்கம் வந்து விடாதா என்று தடுத்துரைத்தாராம்! இதனை 1974 இல் விளக்கிக்கூறிப் பாவாணர் பெருக நகைத்தநகை இன்றும் கண்முன்னே நிற்கின்றது! சேலம்பாவாணர் உள்ளத்தில் மிக ஒன்றிப் போய்விட்டதாகும். சேலத்திற்குப்போன ஈராண்டு கழித்ததும் அண்ணா மலைப் பல்கலைக் கழகப்பணி ஓர் அசைவு அசைத்தது பாவாணரை: திரு. சேதுப்பிள்ளை அவர்கட்குத் தலைமைப் பதவி கிடைத்து விட்டதாகக் கேள்வி. இரண்டாவது வேலைக்கு முயற்சி செய்ய வேண்டுமே! அதுவும் இன்னே செய்யவும் வேண்டுமே! எனக்குக் கிடைப்பின் என் நிலை உயர்வதோடு தமிழ்நிலையும் உணரும் என்பதற்குத் தடையில்லை. ஆயின், ஒவ்வொருவரும் இவ்வாறே நினைக்கலாம் என 3-10-46 இல் எழுதுகின்றார். தக்க பணிக்கு உயர்ந்து செல்லுதற்கு உதவியாம் என்பது போல், மறைமலையடிகளார் சான்றொன்றை அவாவி யிருக்கிறார் பாவாணர். அவர் தகவுகள் அனைத்தும் நன்கு அறிந்து தெளிந்த வகையிலும், எதிர்கால நலப்பாட்டைக் கணித்துணர்ந்த வகையிலும் 1949 இல்அடிகளார் ஒரு சான்று வழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு : பண்டித ஞா. தேவநேயனார் பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பிற்பற்றித், தமிழ்ச் சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ் மொழிக்கு நீண்ட காலத் தேவையினை நிறைவு செய்தன. எம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசுமூலர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கில நூல்களையாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும் போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டும் என்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல்மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவும் உள்ள தமிழ் மொழியறிவுப் பரப்புப் பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல் அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச் சொற்களையெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந் துள்ளார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டுமென்று எம்மைத் தூண்டியது. எனவே ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத்துறையில் ஒன்றிரண்டு கட்டுரை களை எழுதி வெளியிட்டேம். ஆனால், அப்போது சமயம் மெய்ப் பொருளியல் இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டி ஏற்பட்டமையால் மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத்துறையில் ஆராய் வதற்கு முன்வரக் கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டு மென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத்துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித்திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம் (செந்தமிழ்ச் செல்வி 44: 172 - 74). 5. மலர் பாவணர் 1946 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல விரும்பிய முயற்சி செல்லவில்லை. அதன் பின் 1956 இல் மீண்டும் ஒரு தூண்டல் உண்டாயிற்று. அத்தூண்டல் வழியாக முயன்று, காலங்கடந்தேனும் நிறைவேறிற்றாயினும் அவர் விரும்பியவாறு பணி நிறைவேறிற்றில்லை. அதனைக் குறித்துப் பின்னாளில் தென்மொழி மாதிகையில் என் அண்ணா மலை நகர் வாழ்க்கை என்னும் தொடர் எழுதினார். அத் தொடர்பின்னர்ப் பாவாணர்பதிப்பகத்தின் வழியே தனிச் சுவடியாகவும் வெளிப்பட்டது. அதன் தொகைச் செய்தி இது : 1956 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை சூன் மாதம் ஏற்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர்முதலில்அமர்த்தப் பெறுவார் என்றும், முதற்கண்மேற் கொள்ளும் பணி, தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலித் தொகுப்பு என்றும் செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம் பாவாணர் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் வேர்ச் சொல் அகர முதலி அவரை யன்றி வேறெவராலும் தொகுக்க முடியாது ஆதலாலும் அவர்தம் உற்ற நண்பர் தூண்டுதலாலும் ஊக்கம் கொண்டு, துணைப்பேராசிரியப் பதவியினின்று நாளடைவில் பேராசிரியப் பதவிக்கு உயரலாம் என்னும் நம்பிக்கையுடன் அப்பதவிக்கு வேண்டுகோள் விடுக்கத் துணிந் துள்ளார். அந்நிலையிலே சேலங்கல்லூரி இராமசாமி மாணவர் விடுதியை அரசவயவர் முத்தையா அவர்கள் திறந்து வைக்க வந்துளர். அந்நாள் முதல்வரும், பேரா. சொக்கப்பா முதலியோரும் பாவாணர் திறத்தை எடுத்துக் கூறியுள்ளன்ர. பிறர் பிறரும் பரிந்துரைத்து முள்ளனர். பல்வேறு தடையுற்று அமர்த்தோலை வந்தது. அதனை ஓரளவு பசியடங்கினவன் பெற்ற உணவுபோல் பாவாணர் பெற்றுக் கொண்டுள்ளார். அமர்த்தோலையைத் தொடர்ந்து, அவர் பணியை மேற் பார்க்குமாறு வங்கநாட்டு வடமொழிப் பேராசிரியர்சுநீதிக் குமார சட்டர்சியைத் தலைவராகக் கொண்ட ஒன்பதின்மர் குழு ஏற்படுத்தப்பட்டமை அறிவிக்கப் பட்டிருந்தது. அக் குழுவில் தம்மளவு தமிழாய்ந்தவரேனும் தம் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவரும் இல்லாமையை உணர்ந்த பாவாணர், தம்மை அண்ணாமலை நகரினின்று விரைந்து வெளி யேற்றுதற்கு அமைந்த தள்ளி வெட்டி அஃதென்பதைக் கண்டு கொண்டார். கால்டுவெலும் மாக்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருந் திருப்பின் அவர் மனநிலை எங்ஙனம் இருந்திருக்கும் என வெதும்பினார். பாவாணரின் அற்றை அகவை 54 ஆதலால், அதன் மேல் சேலங்கல்லூரியில் ஓரீராண்டுகளே பணி தொடர முடியும். அண்ணாமலைக்குச் சென்றால் ஐயாண்டேனும் ஈராண் டேனும் அலுவல் இருக்கும். அதற்குள் தமிழ் வேர்ச் சொல் அகர முதலியையும் ஒருவாறு தொகுத்து விடலாம். அதன்பின் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி என்றெண்ணி 12-7-56 இல் வேலையை ஒப்புக் கொண்டார். 250 - 25 - 500 உருபா என்னும் சம்பளத் திட்டத்தில் மாதத்திற்கு 250 உருபாவும் அரசியலார் விழுக்காட்டுப்படி அருந்தற்படியும் பெறும் நிலையில் ஆய்வு வகையால் ஓராண்டளவுக்கு உரிய அமர்த்தம் அது. திராவிட மொழியாராய்ச்சித் துறைக்குரிய ஐவருள் வாசகராக (Reader) நான்தான் அமர்த்தப் பட்டுளேன். பேராசிரியர், மலையாள, கன்னட, தெலுங்கு விரிவுரையாளர் ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டில் தான் அமர்த்தப்படுவார்கள். அகராதி வேலையும் அதன் பின்புதான் தொடங்கும். இன்று அதற்கு முற்படையான வேலை செய்து வருகிறேன். அதாவது செந்தமிழ்ச் சொற்பிறப்பு நெறிமுறைகளைத் தொகுத்தல். அது 200 பக்கத்திற்குக் குறையாது ஒரு தனிநூலாய் வரும். என் அலுவல் தொடர்பாக ஒரு திறவோர் குழு சட்டர்சி தலைமையில் அமைக்கப் பெற்றுள்ளது. சென்னையிலாவது இங்காவது அடிக்கடி கூடும் எனக் கடிதத்தில் (15-9-56) இக்கால நிலையைக் குறிக்கிறார் பாவாணர். 8-4-1957 இல் திராவிட மொழி நூல்துறைத் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டர்சி தலைமையுரை நிகழ்த்தினார். ஆங்கில வழியிலே தமிழைக் கற்றவர் ஆதலாலும் நன்னெறி முருகன் என்னும் தம் பெயரை மட்டுமே தமிழில் எழுதப் பயின்றவர் ஆதலாலும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர் உரையில் இந்திய நாகரிக மெல்லாம் சமற்கிருத இலக்கியத்திலேயே எழுதப் பட்டுள்ளது. ஆதலால் இந்திய நாகரிகம்ஆரியரதே என்றார். இந்திய நாகரிகமெல்லாம் முதன்முதல் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ்விலக்கியம் முழுதும் இறந்துபட்டபின் அதன் மொழி பெயர்ப்பான சமற்கிருத இலக்கியமே மூலம் போற் காட்சி யளிக்கின்றது என்று பாவாணர் மறுத்தார். அச்செயல் அவர்க்கும் பேரா. சேது முதலியவர்களுக்கும் எதிரிடையாயிற்று. சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக 50 சொற்களுக்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதிக்காட்டுமாறு பணித்தனர். பாவாணர் இவற்றை எழுதத் தொடங்கிய காலையில் தேராதூனில் (Dehradun) நிகழும் கோடை மொழியியற் பயிற்சிக்குச் சென்று வருமாறு துணைக்கண்காணகர் உசாவியவாறு இசைந்தார். அதனால் வண்ணனை மொழிநூலின் (Linguistics) முழுப்பரப்பையும் கண்டார். தேர்விலும் வென்றார். அப்பயிற்சி தமக்கு எவ்வகையானும் பயன் படாது என்பதையும் அறிந்து கொண்டார். வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழி வழக்கும் ஆகரா, தில்லிக் காட்சிகளும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே இவ்வுலகில் தமக்கு என்றும் பயன் தரும் என்று கூறி, இது பற்றி என் எதிரிகட்கும் நன்றி கூறும் கடப்பாடுடையேன் என்கிறார். டேராடூனில் மே 4 ஆம் நாள் அல்லது 6 ஆம நாள் தொடங்கி 6 வாரம் பூனாடெக்கான் மொழிநூற்பள்ளியின் (DeccanSchool of Lingiuistics) சார்பாக ஓர் அமெரிக்க மொழிநூற் பள்ளிக்கு (Summer school of Linguistics) திரு. இராதாகிருட்டிணனும் யானும் அனுப்பப் பெற வேண்டும். என்று எம் மொழிநூல் திறவோர் குழு பரிந்துரைத்திருப்பதால் அண்ணாமலைப் ப.க.க. சார்பில் யாம் இருவேமும் மே முதல் வாரம் ஆங்குச் செல்லவிருக்கிறோம் என்று 13-4-57 இல் எழுதும் பாவாணர், 4-5-57 இல் தாம் பயிற்சிக்களம் சேர்ந்ததை எழுதுகிறார். இம்மாதம் முதல் நாட்காலை 11 மணி போல் புது டில்லி வந்து சேர்ந்தோம். முது டில்லியிலிருந்து டேராடூன் வண்டி இரவு 10.10 மணிக்குத்தான் புறப்பட்டது: அதிலேறி இங்கு நேற்றுக் காலை 8 மணிக்கு வந்து சேர்ந்தோம். சென்னையில் இருந்து புதுடில்லி வரையும் மாரி நாள் வீட்டிற்குள் இருப்பது போல் வசதியாக இருந்தது. இங்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. செலவு தான் மிகுதி. அதோடு சமையல் முறையும் மிக வேறுபட்டுள்ளது. ஒரு பஞ்சாபியின் உண்டிச் சாலையில் உண்கிறேன். எம் பள்ளி இன்று பெயரளவில் தான் தொடங்கிற்று. வருகிற திங்கள் கிழமையில் இருந்துதான் (6-5-57) வகுப்புகள் ஒழுங்காய் நடக்கும். அன்பு கூர்ந்து உடனே பண்டாரகர் (Dr) சேதுப்பிள்ளை அவர்களிடம் ஆளனுப்பி ஒரு தொகுதி பல்கலைக்கழக அகராதியும் குண்டர்ட்டு மலையாள ஆங்கில அகராதியும் வாங்கிவைக்க. வேனிலுக்கு ஏர்க்காடு போவதாகச் சொன்னார்கள். ஆங்குப்போகு முன் வாங்கிவைத்துவிடுக. கால்டுவெல் 3 ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்துவைக்க. சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க. The Holy shank பொருட்காட்சிச் சாலையில் கிடைக்காவிடின் மூர் அங்காடியில் வாங்கிவைக்க என்கிறார். 15-6-57 இல், 26 ஆம் நாள் புதுடில்லியில் இருந்து மாலை 5 மணிக்கு இன்னியல் (Deluxe) வண்டியேறி அங்குச் சென்னை நடுவண் நிலையம் 28ஆம் ஆட்சை தேதி) காலை 10 ணிக்கு வந்து சேர்வேன். இங்கு வந்ததினால் ஓரளவு பயனுண்டு என்கிறார். 1957 திசம்பர் 27, 28, 29 ஆகிய நாள்களில்தில்லியில் நடை பெற்ற அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டிற்குப் பாவாணர் சென்ற செய்தியும் ஒரு மடலால் (10-12-57) தெரிகின்றது. இப்பயிற்சிக் காலத்தில் உத்தரப் பிரதேச (U.P) முசாபர்நகர் (Mujaffair nagar) சமற்கிருதப்பேராசிரியர் உனியால்என்பார் நட்பு வாய்த்திருக்கிறது. அவர் மகளார் கர்கி உனியால் (Gargi uniyal) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருத ஆராய்ச்சி மாணவியராக விரும்பினார். அதற்கு உதவும் பாவாணர், உனியால் என்னும் சமற்கிருதப்பேராசிரியர் மகளார்; பிராமணர்; கர்கி உனியால் என்னும் பெயரினர். 20 ஆண்டு அகவையர்; 5 அடிக்குட்பட்டவர்: காதில் பொன் வளையத்தர்; சமற்கிருத எம்.ஏ. பட்டத்தினர்; இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருத ஆராய்ச்சி மாணவியராக வருகிறார். அவர் தந்தையாரும் தமையனாரும் எனக்குப் பழக்க மானதினால் அவரைச் சென்னை யில் இருந்து அழைத்து வருமாறு முன்னரே சொல்லியிருக் கின்றனர். ஆதலால் ஆளனுப்பி இயலுமாயின் தாங்களே நேரில் சென்று grand trunk (பெருந்தடிவழி) Janatha (மக்கள்) இருவண்டியிலும் பார்த்து வந்திருப்பின் அழைத்துச் சென்று எனக்குத் தொலைவரியில் தெரிவிக்க. இதை எங்ஙனமும் தப்பாது செய்க என வரைகிறார். (20-7-57) உதவியும் புரிகிறார். இது நிற்க. பாவாணர் அண்ணாமலை மீண்டபின் போலிகைச் சொற்கள் 50 எழுதும் பணியில் மீளவும் இறங்கினார். அவர்பால் அன்பு காட்டிய பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதனார் பர். சட்டர்சிக்குக் காட்ட வேண்டிய போலிகைச் சொற்பட்டியில் எள்ளளவும் கருத்து வேறுபாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தருக்கத்திற்கும் இடந்தராத ஐம்பது சொற்களையே சேர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் பாவாணர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சவேண்டும்? இங்ஙனம் எத்தனை நாளைக்கு அஞ்சியஞ்சி அடிமைத் தனத்திலும் அறியாமையிலும் தமிழன்மூழ்கிக்கிடப்பது! ஆரியச் சார்பினர் கருங்காக்கையை வெண்காக்கை யென்று எத்தனை துணிச்சலோடும் திடாரிக்கத் தோடும் கூறிவருகின்றனர். என்று எண்ணித் தாம் கருதும் சொற்களுக்கேவிளக்கம் எழுதி முடித்தார். சில மாதம் பொறுத்து பர். சட்டர்சி அண்ணாமலைக்கு வந்து அச்சுவடியைப் பார்வையிட்டார். எடுத்த எடுப்பிலேயே தமிழர் குமரிக் கண்டத்தினின்று வந்தவர் என்னும் உண்மை வரலாற்றுக் கூற்றையும், அச்சன் என்பது அத்தன் என்னும் தென் சொல்லின் திரிபென்னும் சொல் வரலாற்றையும் அவர் ஒப்புக் கொள்ள மறுத்து, நீ தன்னந்தனியாகப் போர்புரிகின்றாய் (you are fight-ing a lonelyfight - என்று கூறியிருக்கிறார். அவற்றுக்குத் தக்க விளக்கம் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் விரிவாக மறுமொழி எழுதியனுப்ப வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார். பின்னர், மொழிநூல் துறையினின்று பொதுத் துறைக்கு மாற்றப் பட்டிருக்கிறார் பாவாணர். வடநாட்டுப் புகலிலி போன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநாள் இருந்தது என்று தம் நிலையைக் கூறுகிறார் பாவாணர். தாம் பொதுத்துறையில் இருந்தது ஓர் அரசியல் தூதன் அயல் நாட்டில் இருந்தது போன்றதே என்றும் கூறுகிறார். மேலும், சந்தையின் நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றிற்று என்றும் குறிக்கிறார். சட்டர்சி சிலச்சில வேளைகளில் வணக்கம் என்று வடநாட்டுத்தலைவர்கள் சொல்லிக் கைதட்டு வாங்கிக் கொள்கிறார்களே தமிழ்நாட்டு மாநாட்டு மேடைகளில், அப்படி நன்னெறி முருகன் சாட்டர்ஜீ என்று கையெழுத்துப் போடுமளவில், தமிழறிஞருக்கும் தமிழறிஞராகி விட்டவர். மாப்பெருந்தமிழறிஞர் செயற்கரும் பணியை மதிப்பிட்டுத் தள்ளிவிடும் தலைமையைக் கைவரப் பெற்றவர்! அவர்க்கு நெய்வேலி உ.த.க. மேலைக்கிளையினர் தமிழில் இரண்டு மடல்கள் விடுத்தனர். அதற்கு அவர்விடுத்த ஆங்கில மறுமொழிச் செய்தி இது: 16, இந்துதான் பூங்கா, கல்கத்தா 29, 31-1-1972. அன்புடைய ஐயா, உலகத் தமிழ்க் கழக அலுவலகத்தில் இருந்து இனறு காலை இருதமிழ் மடல்கள் பெற்றேன். (அஞ்சல் நாள் 24-1-72) நற்பேறில்லாத கரணியத்தால் நான் தமிழ் படிப்பதில்லை. அக் கடிதங்களை எனக்கு விளக்கஞ்செய்யக் கூடிய ஒரு தமிழன்பரைக் காணச் சிறிது காலமாகும். ஓர் ஆங்கில ஆக்கமோ செய்தியின் சுருக்கமோ பேருதவியாயிருக்கும். தங்கள் உண்மையுள்ள, சுநீதிகுமார் ச்ட்டர்ஜீ (முதன்மொழி. கதிர் 1. மணி 9-12) என வரைகிறார். பர். சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ அவருக்கு இயலாது. தமிழைப்பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதிகுமார், சட்டர்சி என்னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் நன்னெறி முருகன் என்று மொழி பெயர்த்து அவற்றைத் தமிழெழுத்தில் குறிக்கக் கற்றிருக்கின்றார். நெறி என்பது வழி அல்லது விதி. நீதியைக் குறிக்க அதினும் சிறந்த சொற்கள் நயம், நேர்மை என்பன. குமார் என்பது குமரன் (=முருகன்) என்னும் தென் சொல்லின் திரிபே. ஆயின், முருகன் ஆரியத் தெய்வம் என்பதும் முருகன் என்பது சுப்பிரமணியன் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் நம்பிக்கை. தமிழை ஆங்கில வாயிலாய்க் கற்றதனால், சில தமிழ் நூற்பெயர்களைக் கூட அவர்சரியாய ஒலிப்பதில்லை. பத்துப்பாட்டு என்பதைப் பத்துப்பத்து என்று அண்ணாமலை நகரில்ஒரு முறை படித்தார். வேறிடங்களில் பட்பட் என்றும் பட்டுப்பட்டு என்றும் படித்ததாகக் கேள்வி என்கிறார் பாவாணர் (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. 32-33). இவர் தாம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மதிப்பீட்டுக் குழுவின் தலைவர்! தமிழறியார், தமிழ்த்தலைமணி ஆய்வுக்குத் தனியதிகாரி! பின், முடீவு என்ன ஆகும்? ஐந்தாம் ஆண்டு இறுதியில் துணைக் கண்காண கரைக்கண்டு மேலும் ஓராண்டு நீட்டிப்பின் சொற்றொகுப்பை முடித்துத் தந்து விடுவதாகக் கூறினார் பாவாணர். அவரும் இசைந்திருக்கிறார். அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் துணைக் கண்காண கர் மாறியிருக்கிறார். வந்தவர் நீட்டிப்புத் தர விரும்பினார் அல்லர். 1961 ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23 ஆம் பக்கல் அண்ணாமலைநகரை விட்டு வெளியேறினேன். என்னோடு தமிழும் வெளியேறியது என்கிறார் பாவாணர். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணிநலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்கும் பதிகம் பாடினார். அப் பதிகத்திலேயே, பாவாணர்க்குள்ள இடர்களையெல்லாம் உணர்ந்து அப் பதிக வழியாலேயே பல்கலைக் கழகத்தார்க்கு உணர்த்தியும் பார்த்தார். பாவாணரைப் போற்றுவதே பைந்தமிழைப் போற்றுவது என்றும் பாடினார்; நேரிடையாகச் சுட்டியும் குயிலில் எழுதினார்: நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று கூவும்அதுவுமோர் குற்றமா? - பாவிகளே! தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர் யாவர்க்கும் செய்வதே யாம் தேவநேயர்க்குத் தீமை வர இருப்பதை அறிந்து அல்லது வந்து கொண்டு இருப்பதை அறிந்துதானே பாடினார்! பாவிகளே என்ற விளி எத்தகையது? திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று மெய்க்குழைக்கும் தொண்டர்மனம் வேகவே - வைக்கும் தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன் நடுத்தெருவில் நாறும் பிணம். எரிதழலாய் எழுந்த இந்த உணர்வு என்ன ஆயிற்று? பாவாணரைக் காத்ததா? பகையைச் சாய்த்ததா? இல்லையே ஏன்? எங்கள் பகைவர் எங்கோமறைந்தார். இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே என்பதற்குரிய அடிப்படைதானும் தமிழர்க்கு அமைவது இல்லை! பகையென வேறு ஒன்று வருமுன்னரே, தமிழரேபகையாய் வீறி எழுந்து குடிகெடுக்கும் கூட்டுறவே - குழும்பே - பெருகும் - நிலை, இற்றைத்தமிழ்ப் பட்டந் தாங்கிகளிட மேனும் - பட்டறிந்த பின்னராவது- உண்டாயிற்றில்லையே! அதனால் தானே, நான் தமிழ்கற்ற அளவு ஆங்கிலம் கற்றிருந்தால் எருதந்துறையில் (Oxford) தலைமைப் பேராசிரியனாகியிருப்பேன். தமிழால்நான் பட்டபாடும் கெட்டகேடும் கொஞ்ச நஞ்சமல்ல. இறுதியில் என் உயிருக் குயிரான காதற் கற்பரசியை இழந்தேன். தலைக்கு மிஞ்சின தண்டனையில்லை. நீர்ச்சீலைக்கு மிஞ்சின நிரப்பில்லை என்று 12-2-64 இல் அன்பர் வி. அ. கருணைக்கு எழுதுகின்றார் (நிரப்பாவது வறுமை) பாவாணர்க்குப் பணிக்களம் ஓய்வு தந்துவிட்டது. உழைக்க ஆர்வம் இருந்தும் உழைக்க வேண்டும் பணி இருந்தும், அதனைப் பிறரெவரும் செய்யமுடியா நிலைஇருந்தும்- கட்டாயஓய்வு கிட்டிவிட்டது. அவர்பணிக்கு ஓய்வு உண்டா? அவரே கூறுகின்றார்: ஓர்உண்மை ஆராய்ச்சியாளன் ஒருநாளும் ஆராயாது இருக்க முடியாது. அவன் ஆராயாயவிடினும்அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென்றும் நனவென்றும் ஊண்வேளை யென்றும் உறக்க வேளையென்றும் இல்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பான இன்பந்தருங்கலைகள். வினைபற்றி எனக்கு எல்லா நாளும் வேலைநாள் விழைவு பற்றி எனக்கு எல்லாநாளும் விடுமுறை நாள் என என் அண்ணாமலை நகர்வாழ்க்கை என்பதில் கூறியுள்ளார் (54). நான் ஏழுநாளும் பத்துமணிநேர வேலைக்காரன். சொந்த வீட்டில் செந்தண (Airconditioned) அறை அமைத்துக் கொண்டு முழுப்பகலும் வேலைசெய்வேன். இது எனக்கு இன்பமானது (16-4-80) மொழிநூற்கல்வியும்ஆராய்ச்சியும்எனக்கு இன்பமான பாடத்துறை. அதனால், நான் இன்று பெறும் சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால், வேலை செய்யாது காலத்தைக் கழிக்கவோ வேறு வேலை செய்யவோ இயலவே இயலாது (2-5-80) என்ப பாவாணர்தமிழ்க்குடும்பச் செயலாளர் அன்பு வாணர் வெற்றிச்செல்வியர்க்கு எழுதுகின்றார் பாவாணர். இவை பாவாணர்நினைப்பினும் ஓய்ந்திருக்க முடியா உண்மையை வெளிப்படுத்துவன! பாவாணர் நாற்காலியில்அமர்ந்திருப்பார். மிசை (மேசை) மேல்கைகள் ஊன்றியிருக்கும்; ஊன்றிய அக் கைகள் கன்னத்தைத் தாங்கியிருக்கும்; கைவிரல்கள் நிமிர்ந்து விரிந்து கன்னப் படலத்தில் படிந்திருக்கும்; கண்களோ மூடியிருக்கும்; இப்படி இருப்பது 10 நிமையம் 15 நிமையங்களா? ஒருமணி ஒள்றரை மணி என்று கூட இருக்கும்; இடை இடையே கால்கள் மெல்லென அசையும்; நெற்றிச் சுருக்கம்ஏறி இறங்கும்; ஓரொரு கால்வலக்கைப் பெருவிரல் வலக்கண்ணின் மேலும் நடுவிரல் மடக்கண்ணின் மேலும் சுட்டு விரல் நெற்றிப் பொட்டின் மேலும் முச்சுட்டாய் நிற்கும். அத் தவக்கோலம் நிறைவுற்றதா? கிடுகிடு என ஒரு பேராய்ச்சிக் கட்டுரை எழுத்துருப் பெற்றுப் பிறந்து விடும்! பகலா இரவா? அந்தியா சந்தியா? எவ்வேளையிலும் இத்தவம் கூடிவிடும். தம்மை மறந்த தமிழ்த் தவத்தில் பாவாணர் ஒன்றிய போதெல்லாம் என்னை மறந்து அக்காட்சியில் ஒன்றிப் போவேன் (நாங்கள் காணும் பாவாணர்; தவம் செய்த தவமாம் நேயர் பக்.14 - 15) இவ்வாறு, தங்கருமம் செய்வார் தவம் செய்வாராம் நிலையர்க்குத் தமிழ்த்தவத்தை மூச்சுள்ள வரை விட்டு ஒதுங்கி இருக்க முடியாதே! அண்ணாமலைப் பணி நீங்கிய பாவாணர்காட்டுப் பாடி சென்றார். ஆ 1135, 2- ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வடஆர்க்காடு மாவட்டம் என்பது முகவரியாயிற்று. எனக்கு இறையருளால்அண்ணாமலைப் ப.க. கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறை வாசகர் (Reader) பதவி கிடைத்துள்ளது. அடுத்தவாரம் ஆங்குச் செல்கின்றேன். சம்பளத் திட்டம் 250 - 25 -500 அடுத்த ஆண்டில் நடுவண் அரசியலாரும் 250 உருபா கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது என்று கல்லூரிப் புறவீடு, குமாரசாமிப் பட்டி, சேலம் 4-7-56 முகவரியில்,ருந்து எவ்வளவு மகிழ்வோடு வரைந்துள்ளார் ப்வாணர்! அவர்தம் மீட்சி எத்தகைய தாயிற்று! இசைப்பாட்டும் இசைக்கிறார்; என் அண்ணாமலை நகர் வாழ்க்கை எனத் தொடர் கட்டுரை வரைந்த பாவாணர், இசைத் தமிழ்க் கலம் பகத்தில் என் அண்ணமலைப் பல்கலைக் கழகப் பணி என்னும் பாடலில் அதனைத் திரட்டுப பொருளாய்த் தருகின்றார் : புள்ளிக் கலாபமயிற் பாகன் என்ற மெட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - என்றும் அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே ஆரியம் வேரூன்றித் தமிழ் சீரழிந்து போனதாரே கண்டார் - வெளிவிண்டார், திரவிட மொழியியல் துறையே - அங்குத் திறந்தது வெள்ளிவிழா முறையே - தமிழ் வேர்ச் சொல்வரிசை முதலே சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார் - தாளிற் பெய்தார். தமிழுக்கு வந்தது நற்காலம் - என்று தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த் தலைமையிருந்தவர் அந் நிலை யறிந்து வழி சூழ்ந்தார்- தமிழ்கீழ்ந்தார் சட்டர்சி யென்னும் வங்காளியரே - அன்று சமைந்த குழுவில்மாபெரியரே - தமிழ்ச் சார்புகொண்டென் வேலையைமேற் பார்வை செய்ய வந்ததலங் கோலம்- கெடுகாலம் தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் - அவர் தமிழ்ச் சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் - அது தவறென்று விளக்கவும் கவனியா திழுக்கென மறுத்தார் - மிக வெறுத்தார் எதிரிகள் இதே யெதிர்பார்த்தார் - என்னை ஏனைத் துறைக்குத்தள்ளித்தீர்த்தார் - அங்கே இருந்து மூவாண்டின் பின்நான் அருந்தமிழோடு வெளியேற்றம் - திடுமாற்றம். வேர்ச்சொற்களஞ்சியம் வேறாரும் - செய்யும் விறலுள்ளார்உண்டோவென்று பாரும் - வினை வியங் கொள்ளா தென்னை யின்று வினை செய்ய வில்லை யென்றார் மெய்யோ - சுயமையோ. 6. அலர் பாவாணர் தம் பணிக்காலங்களை வகுத்தும் தொகுத்தும் காட்டியுள்ளார்: சீயோன் மலையில்உள்ள நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியராக அமர்ந்து ஈராண்டு பணியாற்றினேன். அதன்பின், யான் முன்பு மாணவராயிருந்தஆம்பூர் சென்று அங்கிருந்த கிறித்தவப்பள்ளி உயர் பள்ளியானபின் அதில் 1922 ஆம்ஆண்டு உதவித் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டேன். 1924 இல்மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறிய பின்னர் சென்னைத் திருவல்லிக்கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு உதவித் தமிழாசிரியராகவும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் மூவாண்டு தமிழாசிரி யராகவும் மன்னார் குடிப் பின்லேக் (Finlay) கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டும் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishob Heber) உயர்நிலைப் பள்ளியில் ஒன்பானாண்டும் முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பின் ... சேலங் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவனாக 1944 ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டேன். அங்குப் பன்னீராண்டு பணியாற்றிப் பேராசிரியனான பின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழி நூல் துறை வாசகனாக (Reader) அமர்த்தப் பெற்று ஐயாண்டிருந்தும்... செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் தொகுப்புத் தடுக்கப் பட்டு 1961 ஆம் ஆண்டு என் பதவியும் இழந்தேன் என்பது 1970 இல் பாவாணர் எழுதிய தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தில் உள்ளது (பாவாணர் கடிதங்கள் பக்.175-6) யான் ஓராண்டு நடுநிலைப்பள்ளியிலும் இருபத்தீ ராண்டு உயர்நிலைப்பள்ளிகளிலும், பன்னீராண்டு கல்லூரியிலும் தமிழாசிரியனாகப்பணியாற்றினேன். இவற்றுள் உயர்நிலைப் பள்ளி இரண்டும் கல்லூரி ஒன்றும் ஆக முக்கல்வி நிலையங்களே கிறித்தவ மதச் சார்பற்றவை. ஏனையவெல்லாம் கிறித்தவக் கல்வி நிலையங்களாதலின் அவற்றில் எளிதாய் எனக்கு வேலை கிடைத்தது. உயர்நிலைப்பள்ளி யிரண்டனுள் முதலதுபிரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, இரண்டாவது சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி ... கல்லூரி, சேலத்து அற்றை நகராட்சிக்கல்லூரி ... 12-7-56 அன்றே அ.ம.ப.க.க. வேலையை ஒப்புக் கொள்ள நேர்ந்தது..... 1961 ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23-ஆம் பக்கல் அண்ணாமலை நகரைவிட்டு வெளியேறினேன். இச்செய்திகள் என் அண்ணாமலை நகர் வாழ்க்கையில் காண்பவை. முதற்படிவ ஆசிரியராக இருந்த ஈராண்டுப்பணி, தமிழாசி ரியப்பணி அன்று. ஆகலின் அதனை இருபத்திரண்டு ஆண்டுக் கணக்கில்பாவாணர்எடுத்துக்கொள்ளவில்லை. ஆம்பூர் நடுநிலைப் பள்ளியின் முதலாண்டுத் தமிழ்ப்பணியே யான் ஓராண்டு நடுநிலைப்பள்ளியிலும் எனக் குறிக்கப்பட்டுளது எனக் கருதலாம். என் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்க்கையில், குறிக்கும் பிரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஓராண்டுக் காலம் தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் என்பதில் குறிக்கப்படவில்லை. ஆங்குத்தாம் பணியாற்றிய ஆண்டுகளின் மொத்தக் கூட்டுதலும் இல்லை. இவற்றை நோக்க எல்லா நிலைகளிலுமாக 1961 வர 42 ஆண்டுகள் பாவாணர் பணியாற்றி யுள்ளார் என முடிவு செய்யலாம். அப்பொழுது அகவை 59. பாவாணர் இளமையிலேயே கற்றிருக்கிறார். படிப்பு முடித்தகாலம் தொட்டு அகவை 59 வரைதொடர்ந்து பணியும் செய்திருக்கிறார். ஆறாம் படிவம் படித்துத் தேறிய அளவுடன் நில்லாமல் கலைமுதியர் தேர்வும் பெற்றிருக்கிறார். பண்டித புலவ வித்துவ விசாரத் பட்டங்களும் பெற்றிருக்கிறார். இவ்வளவு பெற்றும் பொருள் நிலையில் முன்னேற்றமோ - முன்னேற்றம் இல்லை எனினும் அடிப்படைத் தேவை நிறைவேற்றமோ - விரும்பத்தக்க பதவி வாய்ப்போ - தமக்கென ஒரு குடியிருப்போ - அமைத்துக் கொள்ள முடியாமை ஏன்? அமையாமை ஏன்? அவர் காலத்தில், அவர் உறவாக இருந்தவர்; அவரைப் போலவே கிறித்தவ சமயம் புகுந்தவர்; அலுவலக எழுத்தராகப் புகுந்து துறைத்தேர்வுகள் முடித்துப் படிப்படியே மாவட்ட ஆட்சியாளராக அமர்ந்து ஓய்வு பெற்றமை கண்கூடு. பாவாணர் உயர்வகுப்பில் எடுத்துப் படித்த பாடங்களைப் படித்து வங்கிப் பணியில் புகுந்து மாநில வங்கி மேலாண்மைப் பொறுப்பில் கைந்நிறையப் பணவாய்ப்பும் வளமனையும் நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் பெற்றுத்திகழ்ந்தார் உளர்! பாவாணரைப் போலவோ அதனினும் குறைந்தோ அடிப்படைப் படிப்புப் படித்துப், பாவாணர்போலவே மேனிலைப் பட்டங்கள் பெற்றவர், துறைத் தலைமை, கல்லூரித் தலைமை, பல்கலைக் கழகத் துணை வேந்தராம் நிலைகளில் அமர்ந்து சிறந்தமையும் பல்வேறு அரசியல் ஆட்சிக் குழுக்களிலும் பல்கலைக் கழகக் குழுக்களிலும் சிறந்து விளங்கியமையும் தெளிவு! ஆனால் பாவாணர்க்கு ஏன் இவையெல்லாம் எட்டாதவையாயின! எதிரிடைகள் போலவும் ஆயின! ஒப்ப நின்றாரும் ஒப்ப நில்லாரும் பதவியாலும் வாய்ப்பாலும் உயர்ந்து நின்று பாவாணரைப் புறக்கணிக்கவும் - பதவி பறிக்கவும் - பள்ளந்தோண்டித் தள்ளவும், பாவாணரே சொல்வதுபோல் ஆண்டி எப்பொழுது சாவான் மடம் எப்பொழுது ஒழியும் என்று பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட்காத்திருக்கவும் நேர்வானேன்? பிழைக்கத் தெரியாதவர் என்று தள்ளிவிடுவதா? இயலா தவர் என்று ஒதுக்கி விடுவதா? முரடர் என்றோ வெறியர் என்றோ ஒட்ட ஒழுக அறியார் என்றோ விலக்கி விடுவதா? பிழைக்கத் தெரியாதவர் தாம்! பிழைக்க என்பதற்குப் பிழை செய்ய என்பதே பொருள்! அதனால், பிழைக்கத் தெரியாதவர் தாம்! அன்றியும், நடிக்கவும் பசப்பவும் புகழ்பாடவும் அடி பிடிக்கவும் தெரியாதவர் தாம்! எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித் தான் வாழவேண்டும் என்று வரம்பு கொண்டவர் தாம். எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று உரமுற்றவர் தாம்! இவர்க்கு மட்டுமா இந்நிலை? கப்பலோட்டத் துணிந்த வ.உ.சி. நிலை என்ன? மன்றேறினால் மடி நிரம்பி வழிந்த வருவாய் என்ன ஆனது? மன்றாடித் திண்டாடிப் போகும் நிலைக்கு வைத்துவிட வில்லையா? மண்ணெண்ணெய் வணிகம் செய்துகூட, வயிற்றுப்பாடு பார்க்கும் நிலை உண்டாகி விட வில்லையா? மலையே நிலை சாய்ந்தது போல் ஆக, எந்தச் சூறை அடித்தது? எந்தச் சூழல் எழுந்தது? எந்தஆழிப்பேரலை முழுக்கியது? அயலார் அழிப்பினும் நம்மவர் அழிப்பே தலைப்பட்டு நின்றதல்லவா! திரு.வி.க. கையகல வீட்டுக்கு உடைமையராக வாவது கடைசி மூச்சை விட்டாரா? இருந்த வாடகை வீட்டையும் அரசாணையால் முத்திரை வைத்து வெளியேற்றிக், கண்ணொளி இழந்த நேரத்தும் - படுத்த படுக்கையாய் இறுதியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும் வெளியேற்றப் பட்டாரா இல்லையா? எத்துணைப் பெரிய தொண்டர்! எத்துணைப் பெரிய சால்பர்! எத்தனை எத்தனை தொழிற் சங்கங்களின் தலைவர்! எத்தனை நூல்களின் நூற்பர்! சட்டத்தில் முதுகலை; ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுகலை; தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் என்னும் சுர்த்தி; பன்னூலாசிரியர்; ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரே நாளில் படிக்கவும், எந்நூலையும் கருவிநூல் கையில் இல்லாமல் எழுதவும் திறம் பெற்ற உரம்; எம்.எல்.பிள்ளை என்றாலே போதும் நாடறியும் என வாழ்ந்த தமிழ்க் காசு பெற்ற பெருநலம் என்ன? பதவி என்ன? திருநான்மறை விளக்கம் எழுதியமை செய்யக் கூடாததா? சிவஞான போதம் தமிழ்மூலத்தது என்று நிறுவியது தமிழர்க்கும் அவ்வளவு கசப்பானதா? சமயச் சீர்திருத்தம் பேசிச் சாதிக்கட்டு சமயத்தொடு சாராதது என்றது செய்யத் தகாத குற்றமா? அவர்பிறந்த, நெல்லையர்க்கும் தூத்துக்குடியர்க்கும் வட வேம்பாகி விட்டாரே காசு! திருச்சியர் படுத்திய பாடுதான் சிறிதா? தனித்தமிழ் இயக்கம் என ஒன்றைக் கருதாமல் காணாமல் கண்மூடித்தனத்தை வளர்க்கும்புராணி கராகவும் பூசகராகவும் மடத்துத்தலைவராகவும் நடித்திருந்தால் கூட சுவாமி வேதாசலம் எவ்வளவு சிறப்பும் சீரும் பாராட்டும் பணிவிடையும் வாழ்த்தும் வரவேற்பும் பெற்றிருப்பார்! மறைமலையடிகள் ஆனது தானே, அவரே அவர் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டதாக உலகவர் கண்ணுக்கு ஆகிவிட்டது! குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடிக் குழிக்குள் விழ ஆகியிருந்தால் கோபுரத்துச் சிலையாகத் திகழ்வாரே அவர்! பல்லவபுரம் முழுமையும் அவருடைய மையாக வல்லவோ இருந்திருக்கும்! பயிற்றுமொழிக்காகக் கன்னிதொட்டுச் சென்னை வரை நடைத்திட்டம் கொண்ட பேராசிரியர் சி. இலக்குவனார் செய்ததீமை என்ன? நாடும் மொழியும்நம்மிரு கண்கள் என்பது என்ன நச்சுத்தனமா? அவரவர் வீடே குறி, குடும்பமே குறி, வாழ்வே குறி என்றிருக்கத் தாய் நாட்டையும் தாய்மொழியையும் எண்ணிக் காலமெல்லாம் தொண்டாற்றலாமா? தொண்டாற்ற விடலாமா? விரட்டப்பட்டேன் என எழுத வைத்ததே கல்லூரி! பறிக்கப்பட்டேன் பதவி எனச் சொல்ல வைத்ததே பணம்! செந்தமிழ்த் தொண்டா? சிறைக்குள் இரு என வைத்ததே அரசு! சுடச் சுடரும் பொன் என்பது வள்ளுவர்! சுடச் சுடர்வது பொன்னே! மற்றவை உருகும் கருகும் ஒழியும்! மேலும் மேலும் ஒளி செய்வது - தூய்மை பெறுவது - உரம் பெறுவது பொன்! சூடுபடாமல் - சுடுபடாமல் - எந்தச் சுடராவது உண்டாவது உண்டா? ஒளி செய்வதுஉண்டா? நீரில்இருந்து வந்தாலும், சூட்டொடு தானே ஒளி செய்கின்றது மின்னாற்றல்! வலிவராதஒருவர் - வலியுறாத ஒருவர் - வலிமை பெற்ற துண்டா? வலி வராமல் வலிமை வராதே - சொல் முதலே அது தானே! வலி தானே வலமாகிய வெற்றியின் மூலமும்! வறுமை வெறுமையன்று; இன்மையுமன்று; அந்நிலைக்கு ஏக்குவதும் உண்டு; நிரம்பிய நலமாக்குவதும் உண்டு; அதனால் தான் ஆழ மூழ்கி அரு முத்துக்குளித்த வள்ளுவர் நிரப்பு என்று வறுமையைக் கண்டார்! நிரம்பிய நலம் செய்வது! நிரம்பிய வளமாவது என்பதைச் சுட்டுகின்றதே நிரப்பு! வறுமை நொய்வையும் நலிவையும் தருதல் பொது நிலை. அது பெருவலிமை தருவது - தானே வந்து தருவது - சிறப்பு நிலை! அதனால்தான் அப்பொருள் விளங்கச் சொற்சுரங்கத்துள் புகுந்து சுடர்வயிரம் எடுத்த வள்ளுவர், நல்குரவு என்றார். நல்குகின்ற உரவு; உரவாவது வலிமை! உரம்! அறிவும் உரமே! ஆற்றலும் உரமே! இரண்டு பொருளாட்சியும் வள்ளுவத்தில் உண்டே! வேர்ச் சொல்லாய்வே விழுமிய பிறவித் தொண்டாகக் கொண்ட பாவாணர் நிலையை, இச் சொற் பொருள் விளக்கம் தெளிவாக்குதல் பொருததமே யன்றோ! நிரப்பாலும் நல்வகுரவாலும் சொல்விளக்கம் காட்டி என்ன? பாவாணர் பட்டபாடும் கெட்டகேடும் தீர்ந்து விடுமா? இருப்பும் இல்லை எடுப்பும் இல்லை என்று வருந்தியது நீங்கி விடுமா? அங்கேயும் திருவள்ளுவர் புன்முறுவல்செய்கின்றார் : அல்லல்அருளாள்வார்க்கு இல்லை என்கிறார். இல்லவே இல்லை என அறைந்து சொல்கிறார்! ஐயுறவா? வளிவழங்கு மல்லல்மாஞாலத்தைப் பார் அதுவே உண்மை எடுத்துரைக்கும் என்கிறார். இதற்கும் ஒருபடியன்று; பலபடி - பல்லாயிரம்படி மேலே செல்கின்றார் : நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர ` செய்யாது அமைகலா வாறு. என்கிறார். நயனுடையார் ஒருவர் நல்கூர்ந்தார் ஆகிவிட்டால் உண்டாம் கேடு உப்புக்கும் காடிக்கும் உலமருவோர் நிலைமையில் ஒழிவது அன்று; அந்நயனுடையார் தாம் செய்ய வேண்டியவற்றைச், செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்ய முடியாமலும் செய்யா மல்வாளா இருக்க முடியாமலும் இருக்கின்ற நிலை இருக்கிறதே! இக்கொடுமைதான் என்கிறார்! பாவாணர்க்கென எதிரதா மொழிந்த வள்ளுவமா இது? பாவாணர் அன்னார்க் கெனப் பொதுவாகப் புகன்ற பொய்யா மொழியார் புகற்சியா இது! கொடி கட்டிப் பறந்த தமிழ்ப் பதவியாளர்க்கு அவர்கள் கண்மறைந்த பின்னைக் கொடி பிடிக்க ஆள் உண்டா? ஓர் இயக்கம் உண்டா? உணர்வு மிக்க இயக்கம் உண்டா? ஒரே ஒரு பாவாணர்க்குத் தானே அவ்வியக்கம் உண்டு. அவர் தம் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் தலைவராகவும் போற்றிய மறைமலையடிகள் கண்ட பொது நிலைக் கழகம் எது எனக் கூறத்தடமுண்டா? அக் கழகம், அடிகளால் தவமாளிகை யொடு தவழ்ந்து தங்கிவிட்டதே! உலகளாவிய உணர்வு அமைப்பன்றோ, பாவாணர்க்கு அமைந்த உலகத் தமிழ்க் கழகம்! பாவாணரால் காணப்பட்ட உ.த.க! ஓரைவர் ஒரு பதின்மர் என்றேனும், உலகத்துத் தமிழர் வாழும் பரப்பில் உ.த.க. வின் உணர்வுப் பிழம்புகள் இல்லாமல் இல்லையே! நாடு மொழி இனக் காவலராகத் திகழ்வாருள் - திகழவருவாருள் - அவர்தாமே தலைமைப் பெறுப்பாளராக நிமிர்கின்றார்! அவர்க்கு முந்துநின்று உதவவும் வரிந்து கட்டிக் கொண்டு அவர்தாமே நிற்கிறார்! தமிழின் விடுதலை வரலாறு எழுதப் படத்தான் போகிறது! அங்கேதலைமணியாய்ப் பாவாணர் சுடரவே போகிறார்! 5. மனைவி மக்கள் புரிவு தெரியா நாள் தொட்டே மூத்த அக்கையையே அன்னையெனக் கொண்டு அவர் அரவணைப்பிலே விளங்கிய பாவாணர் ஆசிரியப் பணி ஏற்ற பின்னர் அக்கையார் தீர்மானித்த எசுத்தர் என்னும் பெண்ணையே மணந்தார். அவரே கரிவலம் வந்த நல்லூரின் மேல்பால் மூன்று அயிரத் தொலைவில்உள்ள புறக்கடையான்பட்டி என்னும் ஊர் உறவினர். பாவாணரும் துணையும் அன்பொத்த வாழ்வில் வாழ்ந்தனர். அவ்வாழ்வால் ஒரு மகப்பேறும் உண்டாயிற்று. மகவு ஆண்; மணவாளதாசன் என்பது பெயர். மணவாளனுக்கு ஓரகவை எய்து முன்னரே அன்னை யார் இறையடி எய்தினார். கைக்குழந்தை, பாவாணர் கைவயத்தாயிற்று! பாவாணரின் இளைய அண்ணனார்க்கு மகப்பேறு வாய்க்கவில்லை. அதனால், குழந்தை மணவாளனைத் தாம் தத்தெடுத்துக் கொள்வதாகக் கேட்டார். தத்துப் பிள்ளையாக எழுதிக் கொடுத்துப், பாவாணரிடம்சின்ன அண்ணனார் மணவாளக் குழந்தையைப் பெற்றுக் கொண்டார்; மனைவியார் இல்லை! மகனார் தத்தாயினார்! அத்தத்தும், தம் குடும்பத்தின் ஓருறுப்பில் நிகழ்ந்த தத்து. இந்நிலையில் மூத்தஅக்கையார்க்கு மீண்டும் பாவாணரை இல்லறத்தில் அமைக்கும் கடனுண்டாயிற்று. அக்கருத்தில் அவர் ஊன்றி, மணமகள் தேடுபடலத்தில் இருந்தார்! பாவாணர்மணமகள் தேடு படலத்தில் சிறிதும் விருப்புக் காட்டினார் அல்லர்; துணை போயினாரும் அல்லர்; அவர் இவர் என்று கருத்துக் கேட்புக்கும் காது வாங்கினார் அல்லர்; பாவாணர் தாமே மணமகளாரைக் கண்டு கொண்டார்; தேர்ந்து தெளிந்து கண்டு கொண்டார்! ஊரூர்க்குப் பெண்பார்க்கும் அக்கையாரை எண்ணி உள்நகைத்த பாவாணர், உரியாள் ஒத்த உணர்வாள் - அக்கையின் மகளையே மணவாட்டியாக்கும் உறைப்பில் நின்றார்! அவரே நேசமணி அம்மையார். தேவநேய - நேயமணி திருமணம் 1930 இல்நிகழ்ந்தது. அவர்கள் இல்வாழ்வு எப்படி இருந்தது? அவரே சொல்கிறார் : நானும் என்மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம் யானும் என்மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம் இத்தொடர்கள் இருமுறைகள் தவறாக அல்லது மறந்து எழுதப்பட்டனவோ என எண்ணவேண்டா. பாவாணர், பேராசிரியர் வி.பொ. பழனிவேலனார்க்குப்(ககூ அறவம் ககூ-ரு) தமிழ்ப்பாவை ஆசிரியர் வி.அ. கருணை தாசனார்க்கும் (26-11-3) எழுதிய கடிதங்களில் உள்ளவை. நான் யான் மட்டுமே மாற்றம். ஒரு முறைக்கு இருமுறை அன்று பன்முறை கூறியதும் எழுதி யதுமாம் மெய்ச் செய்தி. பாவாணர் நேசமணியார் திருமணம், பாவாணர் மன்னார் குடியில் பணிசெய்த காலத்தில் நிகழ்ந்தது. பாவாணப் பேரறிஞர் தம்மனை வாழ்வொடு எவ்வளவு ஒன்றிப் போய் விடுகின்றார்! இது விந்தையே! ஆழ்ந்தகன்ற அறிவர் - கலைத்திறம் வல்லார்- பேரிறைப் பற்றர் - பெருந்தன்மைத்தர் இன்னர், குடும்பத்தில் பற்றுவைத்தல்அரிது. பாவாணர் அதற்கு விலக்கென விளங்கியமை மடல்களால் அறிய வருகின்றது. என் மனைவிக்கு இது 7-ம் மாதம் ஆகையால் தன் தாயூர்க்கு (கொடுமுடிக்கு)ச் செல்கின்றாள். அவள் தங்கை சென்னையில் இருக்கின்றாள். அவளை உதவிக்காகக் கூட்டிக் கொண்டு வர வேண்டும் (18-8-31) என் மனைவி கொடு முடியில்சுகமாயிருக்கிறாள். இது 9 ஆம் மாதம்முதற்பேறான படியால் இம்மாதக் கடைசியில் இருக்கும் பிள்ளைப்பேறு (12-10-31). கொடு முடிபோய் அங்கு இருவாரம் இருந்து இந்த மாதம் 4 ஆம் தேதி என் மனைவியுடனும் குழமகனுடனும் கடவுளருளால் இங்கு (மன்னார் குடிக்கு)ச் சுகமாய் வந்து சேர்ந்தேன் (7-1-32) என்மகன் சென்ற இரண்டு வாரமாய் வயிற்றளைச் சலால் பெரும் பாடுபட்டுப் போனான். இன்று தெய்வத் திருவருளால் சுகமாயினும் பணமுடை பெரிதாய் விட்டது. எந்தக் கணக்கிலேனும் 5ரூ உடனே விடுத்தீர்களாயின் பேருபகாரமாகும். மனம் நன்னிலையில் இல்லை. (11-1-33). நூலை அச்சிட்டு முடித்ததும் எனக்குச் சேரவேண்டிய எஞ்சிய தொகையை மொத்தமாய் அனுப்பிவிடுக. என் மனைவிக்கு மிகத்தேவையானதோர் நகை செய்தல்வேண்டும் (23-10--34). (1963 முடியக் கிடைக்கும் கடிதங்கள் அனைத்தும் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களுக்கு எழுதப் பட்டனவே. அதற்குப் பிற்பட்டனவே பிறபிறர்க்கும் உரியனவாய் வாய்க்கின்றன என்பது அறியத் தக்க ஒரு குறிப்புச் செய்தியாம்) இக்கடிதங்கள் வழியே பாவாணர்இல்வாழ்வுப் பற்றுமை நன்கு விளக்கமாம். சிதலைதினப்பட்ட ஆலமரத்தை, மதலையாய் மற்றதன் வீழுன்றியாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற, புதல்வன் மறைப்பக்கெடும் என்பது போல் (நாலடியார் தாளாண்மை), தந்தை தாயிலியாகிய தம்மை முற்றாகத்தாங்கிய அக்கை குடியைத் தாம் தாங்கும் நெருக்கடியும் 1938 இல் பாவாணர்க்கு நேர்கின்றது. என் அத்தான் கொடுமுடியில்இறந்து போனார் (4-11-38) என் அக்காளின் இளையமகளும் என் மனைவியின் தங்கையுமாகிய நீலாம்பாள் என்னும் 18 ஆண்டுப் பெண் பிள்ளை சென்ற வாரம் முழுதும்கடு நோயாய்க் கிடந்து நேற்றுக் காலை இறந்து போனதால் எழுத்து வேலை சிறிதும் நடை பெறவில்லை. இன்னும் ஆற்றொணாத்துயரம் (21-8-39) என் கொழுந்தியார் இறந்தது மிக எளிதான காரியமன்று. என் அக்காள் குடும்பம்பொறையே என்மேல்விழுந்ததினால்பல ஒழுங்குகள் செய்யவேண்டியிருந்தது. பின்பு என் கைக்குழந்தை நோய் வாய்ப்பட்டு இன்னும் முழுச்சுகமும் பெறவில்லை. (21-8-39) என் கைக்குழந்தைக்கு இன்னும் நலமாகவில்லை. நாள் தோறும் மருத்துவம்தான். நான் கவனிக்கா விட்டால்வேறு ஆள் இல்லை. நாளிற் பெரும் பகுதி அதிலேயே செலவாகிறது. என் அக்காள் மகன் இங்கே படிக்கிறவன் விளையாட்டில் வலது கையெலும்பு முறிந்து நாள்தொறும் சிகிச்சை செய்யப் படுகிறான் (20-9-39) இன்றுதான் உளம் அமைதி அடைந்தது; குழந்தை நலமாகி விட்டது. பையனுக்கு முறிந்த முறியும் கூடி விட்டது (7-10-39) என் அருமைக்குழ மகன் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் முந்தா நாள் (24-12-39) ஞாயிறு காலை 8 மணிக்கு மீளா உலகம் புகுந்து விட்ன். இவ்வருத்தம் என் வாழ் நாளெல்லாம் நீடும. சென்ற ஒருமாதமாய் நோய் கொடிதாய் இருந்தமையின் என்னால் வேறு வேலை ஒன்றும் செய்தற்கில்லை (26-12-39) பாவாணர் சுற்றந்தழாலும், குடும்பச்சூழலும், பிள்ளைகள் மேற்கொண்ட பற்றுமையும் சீரிய வகையில் பேணும் குடும்பச் சீர்மையும் இவ் வெழுத்துகளாலே இனிது விளங்கும். இவை யெல்லாம் பாவாணர் திருச்சியில் பணியாற்றிய காலத்துச் செய்திகள்: பாவாணர்க்கு மக்கள் ஐவர் உளர்; நால்வர் ஆடவர்; ஒருவர்மகளார். அவர்கள் முறையே: இந்நாள் (1889) அகவை நச்சினார்க் கினிய நம்பி 56 சிலுவையை வென்ற செல்வராயன் 53 அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான் 50 மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி 42 மணிமன்ற வாணன் 41 என்பார். பெயர்களைப் பற்றி ஒரு குறிப்புக் காட்டுகிறார் பாவாணர் : பெயர்கள் நீண்டிருக்கும்போது இறுதிச் சொல்லைத் தான் அழைக்க வேண்டும் என்பது அது. எடுத்துக்காட்டாக, மடந்தவிர்த்த மங்கை- மங்கை என்கிறார். மேலும், பெண்களின் உறுப்பாகைக் குறிக்கும் பெயராக இடுவது நன்றன்று என்றும் சுட்டுகிறார். அவர் எடுத்துக் காட்டிய பெயர் தம்மகளார் பெயரே அன்றோ! இவருள் நச்சினார்க்கினிய நம்பி ஆசிரியர்; கோபியில் பணியாற்றியவர். சிலுவையை வென்ற செல்வராயனும் ஆசிரியரே; அவர் சேலத்தில் பணி செய்தவர். அடியார்க்கு நல்லான் சமயத்துற வோராய் (பாதிரியாராய்) மைசூரிலிருப்பவர். மடந்தவிர்த்த மங்கையர்கரசியார் செவிலியர் பணியராய் எண்ணூரில் வாழ்பவர். மணிமன்றவாணன் என்னும் மணி காட்டுப் பாடியிலும் பாவாணருடன் இருந்து தென்குமரி என்னும் பெயரிய அச்சகம் நடத்தி பின்னர்ச் சென்னைக்கு வந்து பாவாணர் பெயர் விளங்கு மனையில் (கலைஞர் கருணாநிதி நகரில்) இருப்பவர்; அரசுப் பணி செய்பவர். அக்காள் மகளார் நீலாம்பாள் பாவாணர் பெயர் சூட்டுதலால் கொண்டாரோ மறைமலையடிகளார் தவமகளார் பெயராயிற்றே அது! தலைமகன் நச்சினார்க்கினிய நம்பியின் திருமணம் 1957 இல்நிகழ்ந்துள்ளது. என் மகன் திருமணம் இன்னும் நாட்குறிப்பிடப் படவில்லை. ஆயின் அடுத்த மாதமாதலால் இன்றிருந்தே முன்னேற்பாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு உடுப்பே 300 உரூபாவிற்கு மேற்பட்டு விடும். அதைச் சென்னையிலே தான் வாங்கலாம் என்றிருக்கிறேன். என் மகனுக்குக் கைக் கடியாரமும் வாங்க வேண்டியிருக்கின்றது. எத்தனை சிக்கனமாக முடிப்பினும் திருமணச்செலவு ஆயிரம் ரூபாவிற்கு இழுத்துவிடும் (19-1-57) என் மகன் நம்பிக்கு ஆவணி 3ஆம் நாள் 19-8-57 கோயிலில் திருமணம்; அழைப்பிதழ் அச்சாகின்றது காரிக்கிழமை விடுப்பேன் (9-8-57) அடுத்த மாதம் என்று பாவாணர் குறித்த நாள், ஏழு மாதம் கடந்தமை கடிதத்தால் அறிய முடிகின்றது. கால நீட்டிப்புக்குக் காரணம் இருந்திருக்கும்! 27-10-1963 ஆம் நாள் பாவாணர் வாழ்வில்பேரிடியாக அமைந்து விட்டநாள். அவர் கூறியவாறு ஓருயிரும் ஈருடலுமாக இருந்த உடல்கள் இரண்டனுள் நேசமணியார் உடல் வீழ்ந்து விட்டநாள்! பொற்றாலியோடு எவையும் போம் என்பதைப் பலுப்படுததி விட்ட நாள்! குழந்தையாய் - உலகியல் அறியாக் குழந்தையாய் - இருந்த பாவாணர்க்குத் தாயாய் - அமைச்சாய் - நட்பாய் - துணையாய் - மருத்துவியாய் - செவிலியாய் - இருந்த நேசமணியார் பிரிவு பாவாணரை வாட்டியது! வருத்தியது! காட்டுப்பாடியில், பணியின்றியிருந்த காலம்! வேலை செய்து வந்த நாளிலேயே முட்டிப்பாட்டில் முழுகிக் கிடந்த வாழ்வு, வேலையின்றி மூன்றாண்டு கடந்த நிலையில் எப்படி இருந்திருக்கும்! நோகோ யானே தேய்கமாலை என்னும் குறிஞ்சிக் கபிலர் பறம்புப் பிரிவுப் பாட்டுக்கே சான்றாகி விட்டார் பாவாணர் : செய்தி இது. திருவாட்டி நேயமணி தேவநேயன் மறைந்தார் மொழிப்பெரும்புலவர் திரு. ஞா. தேநேயப் பாவாணர் அவர்களின் அருமை மனைவியார் திருவாட்டி நேயமணி அம்மையார் ஐப்பசி 10ஆம்நாள் (27-10-63) அன்று இரவு 11 மணியளவில் திடுமென் இல்வுலக வாழ்வை நீத்தார் என்பதைத் தமிழ் அன்பர்கட்கு மிகப்பெரும் வருத்தத்துடன் கூறிக் கொள்கின்றோம். அன்பும் பண்பும் ஒருங்கே விளங்கப் பெற்றுப் பாவாணர்அவர்களின் தனித்தமிழ்ப் போராட்டங் கட்குப் பெருந்துணையாய் நின்று ஊக்கமளித்த அப் பெருமாட்டியைப் பிரிந்து, கையற்று நிற்கும் பாவாணர் அவர்கட்கும், அன்னையைப் பிரிந்து ஆறாத்துயருறும் குழந்தைச் செல்வங்கட்கும் நம் ஆற்றாமையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தண்டமிழ்த் தாயின் அருந்தமிழ் மகனாய பாவாணர்க் கேற்பட்ட இப்பேரிழப்பு ஈடுசெய்ய இயலாத தொன்றாகும். ஆசிரியர். தென்மொழி 1 : 10; நவ, 1963. பக்.7 என் மனைவியார் அகுத்தோபர் 27 ஆம் பக்கல்இறந்தார். அன்று மருத்துவச் சாலைக்கு வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் 10 உருபாஇல்லாதிருந்தது. அனுப்பியிருந்தால் பிழைத்திருப்பார்.... அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. பல் சான்றீரே பல் சான்றீரே என்னும்புலச்செய்யுளை நோக்கினால் என் கூற்று விளங்கும். காதல் பெண்பாற்கு மட்டும் உரியதன்று. முக்கடமைகளை நிறைவேற்றவே இன்று உயிரோடிருக்கிறேன். அவற்றுள் ஒன்று வடமொழியினின்று தமிழை மீட்டல் (19. அறவம் ககூசாரு; 1965 வி.பொ.ப) என் ஆருயிர் மனைவியார் பிரிவுத் துன்பம் ஆறறொணாததும் தாங்கொணாததும் ஆதலின், இன்னும் மூன்றாண்டிற்கு மேல்இருக்க விருப்பமில்லை. அதற்குள் தமிழ் வடமொழியினின்று மீட்கப்பட்டு விடும் (20 கும்பம் 1965; வி. பொ.ப) என் மனைவியார் இறந்த அன்றே என் உலக வாழ்க்கை முடிந்தது (27-1-64; வி. பொ. ப) மணமாகாத என் இரு மக்கட்காகவே உடல் தாங்கிக் கொண்டிருக்கிறேன் (26-11-63; வி.அ.க) என் மனைவியார் இறந்ததை எணணி வருந்திய தால் இன்று நெஞ்சாங்குலை ஈளைநோய் என்னைத் தாககியது. (1-12-64; மி.மு.சி) ஒரு பாடலாலும் தாம் பெற்ற துயரைப் பதின் மூன்றாண்டு களின் பின்னர் வெளியிடுகின்றார்: புற்று நோயினால் போன என்மனை பற்றி நீடியே பரிந்தொ ரீளையைப் பெற்று ழந்தபின் பிழையை நோக்கியே முற்று நீக்கினென் முதல்வ னருளினால் என்பது அது (15-11-77; இ.கு.) பல் சான்றீரே என்னும் புறப்பாட்டைச் சுட்டுகிறாரே பாவாணர். அது, பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் தன்னைத் தடுப்பாரிடம் பொய்கையும் தீயும் ஓரற்றே என்று சொல்லிச் சென்றதாகும் (புறம். 246) பாவாணர் துணையின் பிரிவால் வடக்கிருக்கவும் துணிந் திருக்கிறார். பின்னர் நண்பர்கள் மக்கள் வலியுறுத்தலால் தடையுண்டிருக்கிறார் என்பது கேள்விச் செய்தி. மணமாகாத மக்கள் இருவரைச் சுட்டுகிறாரே பாவாணர். அவர்கள் மங்கையர்க்கரசியாரும் மணியும் ஆவர். பாவாணர் துணையொடும் இருந்த போழ்திலேயே செல்வராயனுக்குத் திருமணமாகி விட்டது எனத் தெரிந்துளோம். பாவாணர்க்கு அணுக்கராகவும் ஆர்வத் தொண்டராகவும் இருந்தவருள் ஒருவர் சேலம் அரிமாப் புலவர் திரு. சின்னாண்டார். அவருக்கு 29-6-64 இல் எழுதிய கடிதத்தில் ஏத்தாம்பூரிலாவது ஆற்றூரிலாவது புள்ளி மான்குட்டி விலைக்குக் கிடைக்குமா? என்று வினாவுகின்றார். தாமும் பிற வகையாலும் மான் குட்டி வாங்கும் முயற்சியையும் மேற்கொள்கிறார். பின்னர் மான்குட்டி அரூர்ப் பக்கத்தில் - இருக்கிறது. ஆதலால் அங்குப் பார்க்க வேண்டாம் (2-9-64) என்றும் கூறுகிறார், அங்குப் புள்ளிமான் கலைக்குட்டி ஒன்றை வாங்கிய நிலை, அதனைக் கொணர்ந்த திறம் ஆகியவற்றை 25-7-64 அஞ்சலில் விரிவாக வரைகிறார். சேலத்தில் இருந்து அரூர் வந்து அன்று இரு புலவருடன் கோட்டப்பட்டி சென்று இராத் தங்கி மறுநாட் காலையில்புள்ளி மான் கலைக்குட்டி 100 உரூபாவிற்கு வாங்கிக்கொண்டு அரூர் திரும்பினோம். அன்னையார் இறந்ததினாலும் இன்னும் மணமாகா மையாலும் வேறு துணையின்மையாலும் மகள் ஆறுதல் அடைதற்பொருட்டே அவள் அவாவியவாறு அத்துணை விலை கொடுத்துஅதனை வாங்க நேர்ந்தது. மேலும் அவளுக்குரிய வீணையை 150 உரூபாவிற்கு விற்றுத்தான் அதனை வாங்கினோம். குட்டி இற்றை நிலைமையில் அவ்விலை பெறும். ஆயினும் 50 உரூபாவிற்கும் வேறிடத்தில் வாங்கலாம். குட்டியைப் பேரியங்கியில் ஒருவரும் ஏற்ற இசையாமையால் மொரப்பூர் சென்று புகைவண்டியில் ஏற்ற விரும்பினோம். ஆயின் குட்டி புதிய ஆட்களைக் கண்டு மருண்டு முரண்டு பண்ணியதால் புகைவண்டிக் கூட்டில் அடைப்பது சேதத்திற்கிடமாம் என்று தவறாய்ச் சொல்லி விட்டார். அதை நம்பி தி.வி.எசு, வில் (T.V.S) அனுப்புமாறு சீநிவாசன் இராசேந்திரன் என்னும் இரு புலவரிடமும் சொல்லி விட்டு இங்கு வந்தேன். தி.வி.எசு. வில் உயிரிகளைக் கடத்துவது இல்லையென்று அறிந்ததினாலும் என் மகள் உடனே கொண்டுவர விரும்பியதாலும் மறுநாளே அரூர் சென்று அடுத்தநாட்காலை அவ்விரு புலவருடனும் ஒரு மாணவருடனும் மொரப்பூர் கொண்டுபோய் நண்பகல் இணைப்பு விரைவானில் (Ling Empress) ஏற்றிவிட்டோம். மாணவர் என்னுடன் இங்குத்துணைக்கு வந்து திரும்பினர். மான் நன்றாய்ப் பழகியிருக்கின்றது. ஆயின் ஒரு புள்ளிமான் பிணைக்குட்டி வேண்டும். இல்லாக்கால், கலைக்குட்டி பெரிதானவுடன் மலைநாடலாம். உடனே தாங்கள் ஏத்தாப்பூர் நண்பருக்கெழுதிக் கேட்க. ஆற்றூர்ச் சந்தைக்கு மான்குட்டி விற்பனைக்கு வருமென்று சேலத்தில் இருந்தபோது கேள்விப் பட்டேன். அங்கு வராவிடினும் அப்பக்கம் யாரும்வளர்த்து விற்கலாம். மும்மாதக் குட்டியியிருப்பது நல்லது. ஆறு மாதமாயினும் குற்றமின்று. 25 உரூபாவரை தரலாம். அரூர்ப்பக்கம் இப்போது ஒருவரிடத்துமில்லை என்றெழுதினார். புள்ளிமான் பிணைக்குட்டி ஒன்று வேண்டும்என்னும் எண்ணம் பாவாணர்க்கு ஏன் எழுந்தது. ஏனெனில் கலைக் குட்டியன்றோ வாங்கியிருக்கிறார். கலைக்குட்டி பெரிதானவுடன் பிணைதேடி மலை நாடலாம் என்பதுஅவர் எண்ணமாயிற்றே. ஆதலால்பிணைமான் குட்டிதேடும் வேட்டம் எழுந்தது; எழுதினார்; முயன்றார். இணைசேர்க்கும் வண்ணம் பிணைமான் குட்டி கிடைத்திலது. அதனால் கலைக்குட்டி மலைநாடு முன் விலையாக்கி விட வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது போலும். ஆதலால் தமிழ்ப்பாவை ஆசிரியர் அருளர் (கருணை)க்கு என்னிடம் ஒரு புள்ளிமான் கலை இருக்கின்றது அதை 150 அல்லது 100 உரூபாவிற்கு வாங்குவார் யாரேனும் ஆகு (மதுரையில்) உண்டா? என்று கேட்டு எழுதினார் (5-12-64). அவர் விரும்பிய வண்ணம் பிணைக்குட்டி கிடைத்ததோ? கலைக்குட்டிவிற்கப்பட்டதோ? கிடைத்த கடிதங்களில் அதற்குமேல் செய்தி கிட்டவில்லை. ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவின் உறையுளாகத் திகழ்ந்த பாவாணர்அன்புள்ளம் ஒருமனைத்தேடிக் கொணர்கிறது; அருளுள்ளம் விடுதலை தரமுனைகின்றது. எதிர்பார்க்க இயலாத முரண்கள் இவை! வேர்ச் சொல்லாய்விலேயே வேளையை யெல்லாம் செலவிடும் ஈடுபாட்டாளர் பாவாணர். பண்ணிசைத்துப் பாடவும் கருவி கொண்டு இயக்கவும் தெரிந்தவர்; இசத்துறையில் பணியாற்றவும் வேட்கைகொண்டவர்; இசை வரலாறும் எபதியவர்; திருவள்ளுவர் பஜனைக் கீர்த்தனம் இயற்றியவர்; அவர், வீணையை விற்று மான்குட்டி வாங்குகிறார்! உள்ளொத்த நேயம் ஒன்றியிருந்தால் முரணும் அரணாம் என்பது தெளிவாம். நேயத்தின் முன்னேமுரணென்ன! அரணென்ன! மங்கையர்க்கரசி திருமணம் சென்னையில் 19-4-65 இல் நடைந்தேறியது. மணவாளப்பிள்ளை பள்ளியிறுதி தேறியவர்; எண்ணூரில் உள்ள இயங்கித் தொழிற்சாலையில் கணக்கர் (29-3-65 ; வி.அ.க.) அத்திருமணத்திற்குச் சென்ற எழுத்தாளர் மன்றத் தலைவர்பு. மனோகரனார் வழங்கிய நன்கொடையைத் தங்கள் ஒப்புயர்வற்ற தமிழ் நன்கொடையை நானும் என்மகளும் என்றும் மறவோம். நூறுரூபாஅளித்தது தாங்கள் ஒருவீரே (24-4-65) என்கிறார். மங்கையர்க்கரசியாரின் மணவாளப்பிள்ளையின் பெயர் இராபின்சன் என்பது. அப்பெயரை அறவாணன் என மாற்று தற்குப் பாவாணர் விரும்பினார் என்பது மு. அறவாழியார்க்கு எழுதிய அட்டையால் விளங்குகின்றது. அதில், திருவாட்டி மங்கை இராபின்சன், 21ஹ, உலகநாதபுரம், எண்ணூர், சென்னை - 87. என் மருமகன் பெயரை இனிமேல்தான் அறவாணன் என்று மாற்ற வேண்டும என்கிறார். எத்தனை எத்தனை பேர்களுக்குப் பெயர்மாற்றக் கருத்து வழங்கியவர் பாவணர்! பெயர்மாற்றி உதவியவரும் பாவாணர்! பெயர் மாற்றத் திருநாள் ஊரலறிய விழாவாக நடாத்த வேண்டும் என்று உ.த.க. வினர்க்கு உரைத்தவரும் பாவாணர்! தம்மருகரை மட்டும் பெயர் மாற்றத்திற்கு உட்படுத்த விரும்பாமல் இருப்பாரா? 6. ஓய்விலா ஓய்வு பாவாணர் தம் 17 ஆம் அகவை தொட்டே ஆசிரியப் பணியில்புகுந்ததை அறிவோம். 1961 ஆம் ஆண்டு வரை பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் பணி செய்தமையையும் அறிந்துள்ளோம். அவரிடம் பயின்ற மாணவர்கள் - பழகிய ஆசிரியர்கள் - பெற்றோர்கள், அன்பர்கள், நண்பர்கள் இத்தகையர் பல்லாயிரவர்எனற்கு ஐயமில்லை! 1931 இல் செந்தமிழ்ச் செல்வியின் கட்டுரை யாளராகின்றார். கட்டுரை முதற்கட்டுரையாக இருந்தாலும் முதன்மைக் கட்டுரையாகவே அமைந்து விடுகின்றது. ஆங்கிலம் பிரெஞ்சு இலத்தீனம் கிரேக்கம் முதலிய மொழித்திறம் பளிச்சிட விளங்கு கின்றது. வடமொழியுள் தமிழ்ச் சொல் புகாது என்று புலமைத் தலைக்கோல் கொண்டார் புகன்று கொண்டிருக்க ஆமாம் ஆமாம்! தேவமொழியில் மாந்தமொழி புகக் கூடுமா? என்று முழுதாக முடித்துவிட்டவர்கள்; புகும் என்று நினைவதே பாவம் முறைகேடு எனக் கணக்குத் தீர்த்துவிட்டவர்கள் கையில், கல்விப் பொருள் இருந்த காலையில், வடமொழி என்ன வடமொழி, எட்டாத் தொலைவில் இருக்கும் தொல் பழம் மேலை ஆரிய மொழிகளைப் பார்; அவற்றில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பார்; தமிழ்வேர்களைப் பார் பார் என்று ஒன்று இரண்டு என்னாமல் ஓரைந்நூறு சொற்களைப் பட்டியிட்டு முதல் கட்டுரை வரைந்தால்,. அக்கட்டுரை வரைந்தவரை இருகோணத்தில் பார்க்க மாட்டார்களா? இப்படியொரு எரிமலை வெடிக்கிறதே! என வெதும்பல் ஒரு பக்கம்; ஆம்; அதுவே பெரும் பக்கம்! இப்படியொரு வான்மழை பொழிகிறதே எனத் தளிர்த்தல் ஒரு பக்கம். ஆம்; அஃதொரு, கைவிரல்விட்டு எண்ணும் பக்கம்! அடி அடித்தால் அம்மியும் நகராதா? 31 இல் கிளர்ந்ததிறம் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து பேரொளிப் பிழம்பாகச் செந்தமிழ்ச் செல்வியில் திங்களுக்கு ஒரு முறையோ, முத்திங் களுக்கு ஒரு முறையோ, இடை இடையோ மின்னலிட்டால் கைவிரல்விட்டு எண்ணிய வட்டம் பெருகத் தானே செய்யும். பாவாணர் நல்ல பொழிஞர்; பல்வேறு மன்றங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அடுத்தும் தொடுத்தும் பொழிவுக்குச் சென்றுள்ளார்; மறைமலையார் உழுத முதல்உழவின் மேலுழவு செய்திருக்கிறார்; குலவொப்பு, சமயச் சால்பு ஆகியவற்றில் தலை நின்றிருக்கிறார்; சீர்திருத்தம் பகுத்தறிவு ஆகியவற்றில் பதப்பட்டு ஊறியிருக்கிறார்; பொதுமக்களொடும் ஊடாடி உறைந் திருக்கிறார்! இவ்வெல்லாமும் தொடர்பைப்பெருக்கி உள்ளன. 1934 தொட்டே நூலாசிரியராகக் கிளர்ந்துள்ளார்; மாணவர் நூலும் ஆய்வாளர் நூலும் என இரு கூறுபடவும் நூல்கள் படைத்துள்ளார்; நூல் நாட்டம் உடையாரிடத் தெல்லாம் உள்ளகம் புகுந்திருக்கிறார். பாவாணர் தோற்றம் தோற்றமே யாம்! ஏற்றமேயாம்! காலம் காலமாகக் கட்டான உடற்பயிற்சி செய்த காளை யென்னப் பீடு மிக்க பெருமிதத் தோற்றம்! நெட்டை என்றோ குட்டை என்றோ சுட்ட இயலாது அளவிட்ட உயரம்; ஒல்கி என்றோதடியென்றோ உரைக்க வொண்ணா ஒத்தகனம்! கட்டி வயிரமென்று அமைந்து கண்டாரை மதிக்கவைக்கும் கவர்ச்சி! வனப்பான முகத்திற்கு வாய்த்த எடுப்பான மீசை! படிந்தும் எழுந்தும் பயின்று சுரிந்த எழில்மிக்க சுருட்டை முடி! பார்த்த அளவில் பயப்படுத்தும் பளிச்சிட்ட பார்வை! புன்முறுவல் தவழும் இதழ்! குழந்தையெனக் குலுங்கிச் சிரிக்கும் நகைப்பு! நல்லொளிப் பிழம்பாய் முல்லையரும் பையடுக்கி வைத்ததென்னப் பல்! படிந்து விடாதும் நிமிர்ந்து விடாதும் அளவாய் அமைந்த செவி! தட்டை - சப்பை - கிளி - மாம்பழம் என்றெல்லாம் சொல்லப் பொருந்தாமல் உடல் நூலோர் வகுத்த வகுப்பென அமைந்த மூக்கு! எந்த ஒன்றையும்கூர்ந்து நோக்கும் நோக்கு! குப்பாயமிட்டு அதன்மேல்எடுப்பாக மடித்துப் போட்ட மடிதுண்டு! ஏறுபோல்பீடு நடை! கரவற்ற உள்ளம்! கலப்பற்ற தூய பேச்சு! உள்நோக்கு நோக்கியே பழகிப்போன தனிப்பெரும் தமிழ்த்தவ அமைதி! எதிரீட்டுப் பொய்ம்மையைத் துகள் துகளாக்கும் அரிமாவீறு! - இன்னவை பாவாணரை ஒரு முறை பார்த்தாரையும் மறக்கவிடாதவை. இவையெல்லாமும் பாவாணரைத் தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியிருந்தன. ஆயினும் அவ்வட்டம் எதிரும் புதிருமான அறிஞர்வட்டமும், ஆய்வு வட்டமுமாகவே இருந்தன! அவ்வட்டம் என்ன ஆயினும் சிறு வட்டமும் குறுவட்டமுமேயாம்! அன்றியும் அவ்வட்டம் ஈகவட்டமும் அன்று! அவ்வீகவட்டம், இள வட்டத்தில் அரும்புவது; தழைப்பது; விரிவது; பயன் தருவது! அவ்வட்டத்து நடுமணியாக நண்ணும்பேறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியேற்றத் தொடு பாவாணரைத் தொடர்ந்தது. அதன் தலையமைந்த விழிப்பாக்கம் பாவேந்தர் குயில் கூவுதலால் உண்டாயது! அண்ணாமலைப் பல்கலைக் கழகம்என்னும் தலைப்பில் இளவரசர் முத்தையா அவர்கட்கு என் விண்ணப்பம் எனத் தொடங்கி 19-8-58 (1 : 112) 26-8-58 (1 : 14) 9-9-58 (1:15) ஆகிய நான்கு இதழ்களில் எழுதினார் பாவேந்தர். மீண்டும் எச்சரிக்கை முறையில்இளவரசர் முத்தையா அவர்கட்கு விண்ணப்பிக்கிறோம். உடனே இந்தக் குழுவில் இருந்து (திராவிட மொழி யாராய்ச்சிக் குழுவில் இருந்து) சட்டர்ஜி, தெ. பொ. மீ. சேது ஆகியோர்களைப் பிடர்பிடித்து வெளியில்தள்ள ஆவன செய்யவேண்டும். கப்பலேறிச் சென்றுள்ள நாராயணசாமிப்பிள்ளை திரும்பி வந்தால் தமிழ் ஒழிப்பு வேலைக்கு எந்த வகையிலும் ஆதரவு கொடுக்காமல்திருந்திப்பிழைக்கும் படி செய்ய வேண்டும். டாக்டர் இராசமாணிக்கனாருக்கும் ஒரு வேண்டுகோள்: ஆளுக்குத் தக்கபடி வளைந்து கொடுக்கும் வேலை வேண்டாம். டாக்டர் சிதம்பர நாதன் அவர்கட்கு விண்ணப்பம்: நீங்கள் தமிழுக்கு - வாளைத் தூக்கிப் போர் செய்ய வேண்டாம். தமிழுக்குத் தீமை செய்வாரை ஒட்டிப் போகக் கூடாது. இராமநாதன் செட்டியாரைக் கேட்டுக் கொள்கின்றோம்: சட்டர்ஜி கூட்டத்தை ஆதரிக்கவேண்டாம். உடனே, தமிழைத் தொலைக்கக் காப்புக் கட்டிக் கொண்டுள்ள இந்தக் கூட்டம், குழுவினின்று நீக்கப் படும் என்ற அறிகுறி ஏற்படாவிட்டால்நம் தொடக்கத் தாக்குதல் பொதுக் கூட்டக் கண்டனங்களே யாகும்என்பதைத் திருவாளர் முத்தையா அவர்கட்குத்தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என முடிக்கிறார். (9-9-58; 1 : 15) என்ன ஆனது? எதுவும் ஆகவில்லை! 2-10-58 இல்சட்டர்சிக்கு வெள்ளிக்கேடயம் வழங்கப் பட்டது கல்கத்தாவில்; விழா எடுத்தவர் தமிழ் எழுத்தாளர் கழகத்தார்; கேடயம் உதவியவர் கருமுத்து தியாகராசர்! திருமுத்தமிழ் அழிக்கும் சட்டர்சிக்குக் கருமுத்து கேடயம் கொடுத்தார் எனக்கண்டித்து எழுதினார் பாவேந்தர் (7-10-58; 1 : 19) இதனைச் சுட்டி, உண்மைத்தமிழரான செல்வர் இருப்பின் மறைமலை யடிகட்கும் அவர்கள் அடியொற்றுபவர்க்குமே யன்றி வங்கத்துச் சட்டர்சிக்கு வெள்ளிக் கேடயம் செல்லாது என்று இரங்கினார் பாவாணர் (வி.அ.க. 12-2-64) மேலும் என்ன ஆனது? பாவாணருக்குத் துறைமாறியது; பின்னே வேலையும்பறிபோனது! குயிலைப் படிப்பார் தமிழியக்கப் பாசறை இளவட்டங்கள் தாமே! பாவாணர்பக்கம் பார்கக - பரிந்து பார்க்க - ஏவியது! உறைமோர் குயில்! வெண்ணெய் திரள் வித்து ஆயது அது. தனித்தமிழ்க்கழகம், தென்மொழி, உலகத்தமிழ்க் கழகம், பாவாணர்நூல்வெளியீட்டுக்குழு, செநதமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி - ஆயவை ஒன்றன் மேல்ஒன்றாய் உருவாகின்றன; உதவிக்கைகள் நீள்கின்றன; இந்த விழிப்பு பாவாணர்க்குக் களிப்பூட்டுகின்றது! கடமை தொடர வழியாக்குகின்றது. 7. உலகத் தமிழ்க் கழகம் 15-4-64 இல்ஒரு கடிதம் பாவாணர்வரைந்தது; தனித் தமிழ்க்கழகம் பற்றியது. இலால்குடிக் கழக உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் புலவர் சேந்தமாங்குடியார் 1960 ஆம் ஆண்டே அண்ணாமலை நகர் வந்து, தமிழ் நாட்டில் தனித்தமிழ்க்கழகம் தோற்றி விரிவு படுத்தவேண்டும் என்று என்துணை வேண்டினார். யான் இசைந்தேன். மூவாண்டு ஒன்றும் தெரியவில்லை. இன்று, திருச்சி மாவட்டடம் பல வட்டங்களில் தனித்தமிழ்க் கிளைகள் தோன்றி ஈராயிரம் உறுப்பினர் (ஆட்டைக் கட்டணம் அரைரூபா கட்டிச்) சேர்ந்திருப்பதாகவும் வைகாசி 4 ஆம் நாள் (17-5-64) ஞாயிறன்று என் தலைமையில் துறையூரில் முசிறிவட்டத் தொடக்கவிழா நடத்த விருப்பதாகவும் பிறமாவட்டங்களிலும் கிளைகள் தோற்றி நாளடைவில் மாநில மாநாடு நடத்துவதாகவும் எழுதியிருக் கின்றார். இதுவே, மறைமலையடிகள், நாவலர் சோ. சு. பா.வும், நானும் கண்ட கனா. பர். அரசமாணிக்கனாரும் இத்தகைய அமைப்பையே விரும்பினார். உறுப்பினரும், உழவரும்மாணவரும் பெரும்பாலரெனத் தெரிவிக்கின்றார் சேந்தமாங்குடியார். இவ்வியக்கம் தமிழகம் முழுதும் பரவின் தமிழுக்கும் தமிழனுக்கும் நற்காலம் அண்ணணித்தே. எதிர் காலத்தில்ஆட்சியையும்கைப்பற்றித் தமிழாட்சி நிறுவ இயலும். இதை நண்பர்க்குத் தெரிவித்து மாநாட்டுக்கு வர இயலின் வரச்சொல்க. கற்றாரையே கொண்டி ருக்கும் கழகம் விரிவடைய முடியாது, பொது மக்களும் மாணவரும் பெருவாரியாகச் சேர்ந்தால் தான் தமிழைக் காக்கவும் வளர்க்கவும் முடியும் என்பது அது. மேலும், உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேசவேண்டும் என்னும் யாப்புர வில்லை. தனித்தமிழ்ப் பற்றிருந்தாற் போதும் (1-8-64), தமிழைக் காப்பதே என் போன்றோர் கடமை. அந் நோக்கத்துடன் பிறருடன் ஒத்துழையாதான் தமிழன் அல்லன். தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க்கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன் (1-9-64) என்றும் பாவாணர் எழுதியுள்ளார். 1959 இல் தென்மொழி மாதிகை பாவலரேறு பெருஞ் சித்திரனாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் சிறப்பாசிரியராகப் பாவாணர் விளங்க வேண்டுமெனச் சித்திரனார் அவாவினார். பாவாணரும் இசைந்தார். ஆனால், பல்கலைக்கழகம், பாவாணர் அப்பொறுப்பை ஏற்க இசைவு தரவேண்டுமே! அதனை மறுத்தது. அந்நிலையில் பல்கலைக் கழகம் இசைவு தந்துதவுமாறு தென்மொழி ஒரு வேண்டுகை விடுத்தது. சிறப்பாசிரியர் தென்மொழி என்னும் பெயர்பூண்டு வெளிவரும் இவ் விதழ்க்குச் சிறப்பாசிரியராகவிருக்க திராவிட மொழியாராய்ச்சி வல்லுநர் புலவபண்டித வித்துவ ஞா. தேவநேயப்பாவாணர் எம்.ஏ. அவர் தம்மை நாம் வேண்டிக் கொண்டதற் கிணங்க அவரும் உளமுவந்து இசைந்தாராயினும், அவர்செந்தமிழ்த் தொண்டாற்றி வரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் இன்னும் இசைவு தராமையினால்அவர் அப்பொறுப்பினை ஏற்க இயலாது போனமை பற்றி மிகவும் வருந்துகீன்றோம். விரைவில், அண்ணாமலையாரின் முந்து தமிழ்ப் பல்கலைக் கழகம் இச்செந்தமிழ்த் தொண்டை ஏற்க அவர்க்கு இசைவு தந்துதவுமாறு அக்கழக வேந்தரைப் பல்லாற்றானும் வேண்டிக் கொள்கிறோம். இயல் 1. இசை. 2 ஆசிரியர், 17- 8 - 59 தென்மொழி இவ்வேண்டுகைக்குப் பின்னரும், தென்மொழிச் சிறப்பாசிரிய மேற்கோளுக்குப் பல்கலைக்கழகம் இசைந்திலது; இசையாது என்பதும் வெளிப்படை. காற்றைப் போல விடுதலை; கட்டில்லாத விடுதலை என்ற நிலைமை உண்டாகிய பின் எவர்இசைவு வேண்டும்? பாவாணர் சிறப்பாசிரியராக வள்ளுவராண்டு 1994 மாசி (1963 பிப்ரவரியில் அமர்ந்தார். இடை நின்ற தென் மொழி இதழ் தொடரந்தது! நடைமெலிந்த தென்மொழி மீண்டும், படை வலிந்து எழுந்தது எனக் கிளர்ந்தது. பாவாணரால் தென்மொழியும், தென்மொழியால் பாவாணரும் கொண்டும் கொடுத்தும் இருபாலும் பெற்ற நலங்கள் தமிழிதழியல் - தனித்தமிழ்- வரலாறுகளில் சிறப்பான இடம் பெறத்தக்கனவாம். தென்மொழியின் பொறுப்பாசிரியர் பாவலரேறு பெருஞ்சித் திரனார். பேராசிரியர் இலெனின் தங்கப்பா, பேராசிரியர் தமிழ்க்குடிமகனார் திரு. செம்பியன் ஆகியோர்உறுப்பாசிரியர். பாவாணரைப் பற்றிய செய்திகள், துடிப்புமிக்க இளைஞர்கள், துணிவுடைய செயல் வீரர்கள் ஆகியோர்க்குக் கிடைக்கும் வண்ணம் செய்தது இத் தென்மொழி. பாவாணர்க்கு உதவும் வகையில் பொருள் திரட்டல், பாவாணர் புலமைச்சுரப்பு தமிழுக்குப் பயன்படும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கத்தில் உதவல், உலகத் தமிழ்க்கழகம் என்னும் அமைப்பை உருவாக்கித் தமிழக மன்றி மொழி பெயர் தேயத்தும், கடல்கடந்த நாடுகளிலும் பாவாணர் புகழ் பரப்புதல் ஆகிய சீரிய கடமைகளைச் செய்தது. பாவாணரைப் பற்றிய செய்திகளை அன்றி, அவர்படைப்புகளும் தாங்கிவந்தது தென்மொழி. அவ்வகையில் பரப்பாண்மையொடு புரப் பாண்மை பாதுகாப் பாண்மையாகிய முத்திறக் கடப்பாடும் கொண்டது தென்மொழி. 1963 திசம்பர்த் திங்களில் பாவாணருக்காகப் பொருட் கொடைத் திட்டம் ஒன்றனை உருவாக்கியது. 6-7-64 இல் திட்டம் முடிக்கப்பட்டது. அக்கால எல்லையில் தொகுக்கப்பட்ட உரூபா 2211-04 பாவாணர்க்கு வழங்கப்பட்டது. 1956 இல். தென்மொழிக்கு ஒரு சிக்கல்நேர்ந்தது. அதனை உறுப்பாசிரியருள் ஒருவராகிய பேரா. தமிழ்க் குடிமகனார் வரைகன்றார்: 1965 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போர் உச்சமாக இருந்த நேரம். தென்மொழி இதழுக்கும் கொள்கை வழியில் சிக்கல் நேர்ந்தது. இந்திதொடர்பாக வெளியிடப்படும் கருத்துகள் அரசினரால் ஊன்றிக் கவனிக்கப்பட்டன. எருமை ஒன்று குத்துவாள் வீச்சுக்கு ஆட்பட்டுக் குருதி சிந்த ஓடுவதாக ஒரு முகப்புப் படம் வந்தது. கடுமையான இந்தி எதிர்ப்புடன் சிவப்புமையில்அச்சிடப்பட்டு ஆசிரிய உரையும் வந்தது. இந்த இரண்டுக்குமாகச் சேர்ந்து அரசினரால் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி (Defence of India Rules) தொடரப்பட்ட வழக்கில் தென்மொழியின் சிறப்பாசிரியர் பாவாணர் பெயர்தான் முதற் குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டது. மற்றும் பெருஞ்சித்திரன், தங்கப்பா, சாத்தையா (தமிழ்க்குடிமகள்), செம்பியன் ஆகியோர் குற்றவாளிகள். பாவாணர் இந்தி எதிர்ப்புக் கருத்தில் மிக அழுத்தமானவர் என்றாலும் அவரை வழக்கில் சேர்ப்பது முறையற்றதாக இருந்தது. அவர்எழுதாத கட்டுரைக்கு அவர் மீது ஏன் வழக்கு வரவேண்டும்? எனவே பெருஞ்சித்திரன், தங்கப்பா, சாத்தையா மூவரும் அவற்றுக்குப் பொறுப்பேற்றதாலும் பாவாணர்க்கும் அக் கட்டுரைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்து விட்டதாலும் அவர் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர் ஓராண்டுக் காலம் நடைபெற்ற வழக்கில் தங்கப்பாவும் சாத்தையாவும் விடுதலைசெய்யப்பட்டனர். பெருஞ் சித்திரனார்க்கு 200 உருபா தண்டம் அல்லது நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டம் கட்டமறுத்துஅவர்சிறை சென்றார். சிறை சென்ற தாலேயே அஞ்சல் அலுவலகத்தில் அவர்க்கிருந்த பதவியும் பறிபோனது. பாவாணரைப் போலவே பெருஞ் சித்திரனாரும் வறுமையில் வாடநேர்ந்தது என்பது அது (பாவாணரும்தனித்தமிழும் பக். 18, 19). இவ்விடத்தில் உலகத் தமிழ்க் கழகத் தோற்றம் பற்றியும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். புலவர் சேந்தமாங்குடியாரால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ்க் கழகம் பற்றிய செய்தியை அறிந்துள்ளோம். அவ்வியக்கத்தைத் தமிழகம் முழுவதும் விரிக்க வேண்டும் என்றும், உழவரும் மாணவரும் பொதுமக்களும் உறுப்பினருள் பெரும் பாலானவராக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குத் தமிழ்ப்பற்று இருந்தால் போதும் என்றும் குறித்தவற்றையும் அறிந்துள்ளோம். அவற்றையெல்லாம் உட்கொண்டு 6-10-1968 இல்திருச்சியில் அமைப்புக் கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில்தான் உ.த.க. எனப்படும் உலகத் தமிழ்க் கழகம் உருக் கொண்டது; தனித்தமிழ்க் கழகம் உ.த.க.வுடன் ஒன்றி விட்டது, உ.த.க.வின் தோற்றத்தை அதன் நிலைத்தபொருளாளர் எனப் பாவாணரால்பாராட்டப்படும்செங்கை செந்தமிழ்க் கிழார் கூறுகின்றார் : தமிழன்பர்களின் திருக்கூட்டம். திருக் கூட்டத்தின் நடுவே அரிமா போன்று பாவாணர்அவர்கள். அன்பர்களை நோக்கி அவர்தம் குரல் மறைமலையடிகள் தாம் தூய தமிழியக்கத்தைத் தோற்றுவித்தார். அவர்தாம் இந்தியினால் ஏற்படும் கேடுகளைத் தமிழர்க்குத் தெள்ளத் தெளிவாகக் கூறி இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அதன் பின்னர்த்தான் தமிழார்வம் தழைத்தோங்கத் தலைப்பட்டது: அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழர்களிடம் ஏற்பட்ட தமிழ்ப் பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அரசியல் தலைவர்கள் தங்கள் நலனுக்காகத் தான் தமிழைப் போற்றுகிறார்கள். உண்மையில் தமிழை வளர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை. தமிழ்ப் புலவர்களுக்கும் தமிழைப் பற்றிக் கவலையில்லை. எனவே, தமிழை முதன்மையாக வைத்துத் தமிழைப் போற்றி வளர்க்கும் ஓர் இயக்கம் தேவை. அந்த இயக்கத்தைத் தோற்றுவிக்கும் குறிக்கோளுடன்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம் இந்தக் கருத்தில் பாவாணர் அவர்கள் கூறிய சொற்கள் தமிழன்பர்களின் உள்ளத்தைத் தொட்டன. அன்பர்கள் அவர் தம் விழைவைச் செயற்படுத்த உறுதி பூண்டனர். அதன் பின்னர்ச் சில திங்களில் அன்பர்களின் ஒத்துழைப்புடன் பாவாணர்அவர்கள் தி.பி. 1999 (கி.பி. 1968) ஆம் ஆண்டு திருச்சியில் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தார்கள் என்பது. உ. த. க. வின் தலைவர் பாவாணர்; பொதுச் செயலாளர் பெருஞ்சித்திரனார்; துணைப் பொதுச் செயலாளர் இறைக் குருவனார்; பொருளாளர் செங்கை செந்தமிழ்க் கிழார்; மாவட்ட அமைப்பாளர்கள் தமிழ்க் குடிமகனார். சேந்தமாங் குடியார், இரா. இளவரசு, பா. வளனரசு, மி.மு. சின்னாண்டார், வி.பொ. பழனி வேலனார் ஆகியோர். உ.த.க. முதலாண்டிலேயே பக்கமெல்லாம் வீழ்ந்துவிட்டுப் பரவிய ஆலென விளங்கியது; மாவட்டத் தலைநகர்களிலும், நகரங்களிலும் சிற்றூர்களிலும் உ.த.க. கிளைகள் உண்டாயின. பாவாணர்புகழும், தென்மொழித் தொண்டும், உ.த.க. செயலாண்மையும் ஒருமுகமாக வளர்ந்து வந்தன. உ.த.க. தலைவராக அன்பர்கள் பாவாணரையே கொண்டி ருந்தனர். ஆனால் பாவாணரோ, தம்மை உ.த.க. தலைவராகக் கொண்டதிலர். மறைமலையடிகளே உ.த.க. தலைவர்; யான் அவர் தம்தூய தமிழ் இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தொண்டனே என்று அன்பர்களிடத்தும் உ.த.க. நிகழ்ச்சிகளிலும் கூறி வந்தார். இயக்கப் பொறுப்பில் பாவாணர் எப்படி இருந்தார்? உ.த.க. பொறுப்பாளர்கள் கழகத் தொடர்பான அன்பர்களுக்கு எழுதிய மடல்களை விடப் பாவாணர் அவர்கள் தம் கைப்பட எழுதிய மடல்களே எண்ணிக்கையில் மிகுதி. உ.த.க. வளர்ச்சியில் பொறுப்பாளர்கள் யாவரின் உழைப்பும் பாவாணர் அவர்களின் உழைப்புக்கு ஈடாகாது என்கிறார் செந்தமிழ்க்கிழார். மேலும்ஓர் அரிய குறிப்பைக் கிழார் சுட்டுகிறார்: உ.த.க. அன்பர்கள் ஐயாவின் நலனில் அக்கறை கொண்டு உழைத்ததுண்டு. உ.த.க. அன்பர்கள் ஐயாவின் புலமை தமிழகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு. ஆனால் உ.த.க. வைத் தந்நலத்திற்காக ஐயா அவர்கள் பயன்படுத்தக் கருதியதே இல்லை. தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள உ.த.க.வை ஐயா அவர்கள் கருவியாகக் கொள்ள எண்ணியதே இல்லை என்பது அது. கழகத்தின் ஆண்டு விழாவும் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டு விழாவும் 1969 திசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் முகவை மாவட்டத்துப் பறம்புக்குடியில்ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநில மாநாடென நடை பெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும பொறுப்பேற்று நடத்தியவர் பேரா. தமிழ்க் குடிமகனார். அம் மாநாட்டிலே பாவாணர் இயற்றிய திருக்குறள் மரபுரை வெளியீடும் நிகழ்ந்தது. பாவாணர் இயற்றிய இசையரங்கு இன்னிசைக் கோவையும் தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? என்னும் கட்டுரைச் சுவடியும் உ.த.க. சார்பால் வெளியிடப் பட்டன. பாவாணர் நூல்கள் மாநாட்டில் விற்றவகையில் உரூபா 2000 வரை சேர்ந்தது. மாநாட்டு ஊர்வலம், மக்கள் பெருக்கம், நிகழ்ச்சிச் சிறப்பு, கலந்துகொண்ட அறிஞர்கள் பாவலர்கள் உணர்வு, தொண்டர் களின் ஆர்வப் பெருக்கு - இன்ன வெல்லாம் பாவாணரைப் பூரிப்படையச் செய்தன. இவ்வகையில் உ.த.க. ஏழெட்டாண்டுகள் சிறப்பாகவளர்ந்தால் தமிழ்நாட்டு அரசையும் பிடிக்கும் வலிமையுடையதாகத் திகழும் என உவப்புற்றார். மாநாட்டுப் பொறுப்பாளராக இருந்து சிறக்கச் செய்த தமிழ்க் குடிமகனார் அமைச்சராகி ஆட்சி நடத்தும் நிலையும் நேரலாம் என நேரிலும் கூறினார்; எழுத்திலும் எழுதினார் பாவாணர்; அவ்வளவு பெரு நிறைவைத் தந்தது அம் மாநாடு! அவர் வறுமைப்பட்ட காலம்உண்டு. வாடிவதங்கிய காலம் உண்டு. ஆனால் அவர் காலத்தில் அவரால்தான் தனித்தமிழ் இயக்கம் மிகப் பெரிய அளவில் 140 கிளைகட்கு மேல் கொண்டு நிமிர்ந்து நின்றது என்பதனை யாரும்மறுக்க முடியாது. மிகப் பெரிய அறிஞர் என்னும் முறையில்அவரது நூல்களைப் படித்தே ஒருவன் மிகப் பெரிய அறிஞனாக முடியும் என்னும் அளவிற்கு அவர் ஆழமானவர் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று தமிழ்க் குடிமகனார் கூறும் தேர்ச்சியுரை களெல்லாம் ஒருங்கே பளிச்சிட்ட இடமாக அன்றோ பறம்புக்குடி மாநாடு விளங்கியது! பாவாணர் பூரிக்க மாட்டாரா? பாராட்ட மாட்டாரா? பேராசிரியர் இலக்குவனார், புலவர் குழந்தை, முனைவர் வ.சு. மாணிக்கனார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலாகப் பேரறிஞர் மிகப் பலர் கலந்து கொண்ட மாநாடு அது. இரண்டாம் மாநாடு மாமதுரையில் 9-1-71, 10-1-71 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. 9-1-71 காலை 9 மணியளவில் மாநாடு நடைபெற இருந்த வெற்றித் தனிப் பயிற்சிக் கல்லூரி (V.T.C.) யில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகர்மன்றச் சாலை. மாசி வீதிகள் வழியே விழா மண்டபத்தை அடைந்து விழாத் தொடங்கியது. பாவாணர் விழாத் தலைமையேற்றார். மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவரும், மதுரை மாவட்ட உ.த.க. அமைப்பாளருமாகிய வையை நம்பி வரவேற்றார். புலவர் வில்லவதரையர், நிலவழகனார், க.ப. அறவாணர், வி. மதியழகனார், பா. வளனரசர், எண்கவனகர் பெ. இராமையா, புலவர்மி.மு. சின்னாண்டார், பேரா.மு. இளமாறனார், பேரா. சொல் விளங்கும் பெருமாள், சி.சு. மணி ஆகியோர் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில் பாட்டரங்கும், பன்மொழிப் புலவர் அப்பாத் துரையார் தலைமயில் அரசியல் அரங்கும், பேராசிரியர் தி.னவ. சொக்கப்பனார் தலைமையில் வரலாற்றரங்கும் நிகழ்ந்தன. பாவலர்களும் அறிஞர்களும் பதினைவர்க்கு மேல் பங்கு கொண்டனர். தமிழ் என் உயிர் என்னும் நாடகம் விழா நிறைவில் நிகழ்ந்தது. புலவர் இறைக் குருவனார்நன்றியுரைத்தார். இதனைப் பற்றிய விரிவான செய்திகளும் ஆய்வுக் கருத்துகளும் முதன் மொழி, தென்மொழி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. மிக மேம்படவும் எழுச்சி மிகவும் கட்டுக் கோப்புடனும் நிகழ வேண்டிய மாநாடு ஓராற்றான் நிகழ்ந்த தென்றே மதிப்பீட்டாளரும் பார்வையாளரும் ஒருங்கு கருதினர். அந்நிலையை மாற்றியமைக்க எண்ணிய பாவாணர் உ. த. க. உறுப்பினர் களுக்கும் உ.த.க. கிகளைகளுக்கும் அறிக்கைகள் சில விடுத்தார். இவற்றை முதன்மொழியில் கண்டு கொள்க. பின்னே வரும்அறிவிப்பு அறை கூவலும் என்னும் பகுதியில் அவற்றுள் சிலவற்றைக் காணலாம். மூன்றாம் மாநாடு மாந்தன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடாகத் தஞ்சையில்நிகழ்ந்தது (இதன் விளக்கம் அறிவிப்பு அறைகூவலும் என்னும் பகுதியில் காண்க) நான்காம் மாநாடு சென்னை பெரியார் திடலில் நிகழ்ந்தது (1978) இவ்விடத்தில் உ.த.க. பற்றிய பாவாணர் கருத்துகள் சில குறிப்பிடத் தக்கனவாம் : தென்னிந்தியா முழுவதும் உ. த. க. கிளைகளைத் தோற்றுவிக்க வேண்டும் மொழிவகையாலன்றி வேறொன்றிலும் நான் தலையிடேன் ஆட்சியைக் கைப்பற்றாமல் நாம் தனித்தமிழை வளர்க்கவோ வடமொழியினின்று தமிழை மீட்கவோசின்ன பின்னமாகச் சிதறிக் கிடக்கும் தமிழினத்தை மீண்டும் ஒன்றுசேர்த்து முன்னேற்றவோ முடியவே முடியாது தமிழ்நாட்டுப் பிரிவினை உ.த.க. கொள்கையன்று; என்பவை சில. தென்மொழி உ.த.க. இதழாயிருந்தது; பின்னர் முதன் மொழியும் அதன்பின் மீட்போலையும் உ.த.க. இதழாயின. முறையே, இவற்றின் ஆசிரியர்கள் பேரா. தி.வை. சொக்கப் பனாரும் பரோ. கு. பூங்காவனரும் ஆவர். அறிவு தமிழம் வலம்புரி என்பனவும் உ.த.க. செய்திகளைத் தாங்கி வந்த இதழ்களாம். உ.த.க. வில் இருந்து பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழ் முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பின்னர்த் தமிழியக்கம் தமிழ்க் குடிமகனாரால் காணப்பட்டது. முன்னதன் இதழாகத் தென்மொழி தொடர்ந்தது. பின்னதன் இதழாகக் கைகாட்டி கிளர்ந்து அமைந்தது. பாவாணர் வரலாற்றுக்கு ஏற்ற வகையில் இச்செய்தி களின் அளவில் அமைந்து, உ.த.க. எழுச்சியாலும் உதவும் பான்மையாலும் உருவாகி உதவியாகித் தமிழ் வளம் சேர்த்த பாவாணர் நூல் வெளியீட்டுதவிகளைப் பற்றிக் காணலாம். 8. நூல் வெளியீட்டுதவிகள் 1. திருச்சிமாவட்டப் பெரம்பலூர் (பெரும்புலியூர்) வட்டம் செட்டிகுளம் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு: பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூல் (1966) வெளிவர இக்குழு உதவியுள்ளது. இந்நூல் வெளியீட்டிற்கு ஓராயிரம் உருபா தொகுத்துதவிய திருச்சிமாவட்டப் பெரம்பலூர் வட்டச் செட்டிகுளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவிற்கு நான்மட்டுமல்லேன், உண்மைத் தமிழர் அனைவருமே என்றும் கடப்பாடுடையர் என நன்றியுரைத்து மூன்று வெண்பாக்கள் பாடியுள்ளார் பாவாணர். நன்கொடைப் பட்டியல் விளக்கத்தைப் பின்னே இணைத்துள்ளார். செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் - வந்தே குளிர்ச்சி பெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து குளிப்பது செட்டி குளம் என்பது மூவெண்பாக்களுள் நடுவணது. இக்குழுவின் தலைவர் திரு. மு. பச்சைமுத்து அவர்கள் ஊராட்சித் தலைவர். பொருளாளர் அர. நாகமுத்து அவர்கள்; குழு உறுப்பினர் அறுவர். 2. திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதி: இதன் உதவியால் வெளிவந்த நூல்கள், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு என்பவை, (1967). இந்நூலும் வடமொழி வரலாறு என்னும் இன்னூலும் வெளியிட நாலாயிரம் உருபா தொகுத்து நல்கிய திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதிக்கு, சிறப்பாகத் திருவாளர் நா. செல்வராசனார்க்கு நான்மட்டு மல்லேன், இவ்வுலகிலுள்ள உண்மைத்தமிழர் அனைவரும் என்றுங்கடப் பாடுடையர் என நன்றியுரைக்கும் பாவாணர் ஒரு பதிகம் பாடியுள்ளார். செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப் பட்டியில்வந்து பருகப்பால் - அட்டியது போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு என்பது முதல் வெண்பா. பாங்கா யமர்தலைமைப் பச்சைமுத்து நாகமுத்து ஓங்கும் இராமுபுல வேணுகோபால் - தாங்கும் பொதுமது செல்வராசன் போற்றும்பா வாணர் புதுமுது நூல்வெளியீட் டார் என்னும் இரண்டாம் வெண்பா குழுவையே தன்னுள் அடக்கி வைத்துள்ளது! கொடையாளர் பட்டியல் நூலின் இறுதியில் உள்ளது. துறையூர் பிரசன்னாதிரையரங்கில் நிகழ்ந்த விழாவிற்கு வந்திருந்த அன்பர்களும் உருபா 338-42 வழங்கியுள்ள சிறப்பும் நூலில் பொறிக்கப்பட்டுள்ளது. செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த செய்தி வருமாறு: வள்ளுவராண்டு 1997 புரட்டாசி 30 ஆம் நாள் (6-10-66) ஞாயிறு காலை 10 மணிக்குத்துறையூர் பிரசன்னா திரைப்பட அரங்கில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் மொழியியல் அறிஞர் பாவாணர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அடிகளார் அவர்கள் பாவாணரின் மொழிநூற் புலமையை யும் அவர் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு களையும் பாராட்டிப் பொன்னாடை போர்த்தி, செங்காட்டுப்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவினரால் திரட்டப்பட்ட உரூபா 4001 கொண்ட பொற்கிழியையும் அளித்துச் சிறப்பித்தார். பாவாணர் தம் நன்றியுரையில் தமக்கு அளிக்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு தமிழ்வரலாறு வடமொழி வரலாறு ஆகிய இரு நூல்களை வெளியிடுவதாக அறிவித்தார். செந். செல். 41:135. பாராட்டு விழாவில் செட்டிகுளம் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு, 85 அடிகளைக் கொண்டபரிபாடல் ஒன்றனைப் பாராட்டுரையாக அச்சிட்டு வழங்கியது: அதில் சில அடிகள்: மண்ணெனப் பரந்தமனத்தை; மனத்தில் விண்ணென உயர்ந்த கோளினை; கோளில் நீரென ஆழ்ந்தநிலையை; நிலையில் தீயென ஒளிரும் தெளிவினை; தெளிவில் வளியென விரையும் வழக்கினை; அதனால் ஏமுறு மைஞ்சூர் ஏந்தல் நீயென காமுறு தமிழின கடலினைத் தேமுறு தமிழாற் சேர்த்ததும் மலிந்தே... சொல்லா ராய்ச்சிக் கட்டுரை கள்சொற்ற வல்லா ராய்ச்சி வளத்தன்நீ உயர்தரக் கட்டுரை இலக்கணம் தந்தியாம் உயர்தரக் கட்டுரை ஒருவன் நீ .............................................. அடங்கு நெஞ்சினை அடங்கா உளத்தினை நுடங்கு காட்சியை நுடங்கா நோக்கினை மடங்கு வழியினை மடங்கா நெறியை அதன்மேல், ........ வண்டமிழின் தெவ்வை மடக்கும் மடங்கலாய்த் தண்டமிழ் காக்குவை நீ தமிழர் பகையைச் சரித்தே ஒழிக்கும் இமிழ்வார் மதகரி நீ தமிழக நச்சைத் தடிந்தே அழிக்கும் அமிழ்தக் கலையமாம் நீ உலகோர் தமிழ்மாண் புணரச்செய்யும் இலகு தமிழ்ப் பரிதி நீ எனவாங்குச், சொல்வதையெல்லாம் தொழுதகை நின்செயல் வெல்வ தாக விரிதலின் ஒல்வதோ பெரும உரையும் மிகலே அதனால், வாழிய வாழிய வண்டமிழ்க் கென்றேயிவ் வாழிசூழ் வையத் தமைந்து நலமுறை ஊழி பலவென் றுவந்தேம் வழுத்துதும் வாழிய செந்தமிழ் வான் பாடல் அமைதிக்கும் நயத்திற்கும் இவ்வடிகள் காட்டு; இதனை யாத்த பாவலர் இப்பாவன்மையிலேயே ஊறிப் பழுத்திருந்தால், இந்நூற்றாண்டும் ஒரு பரிபாடல் தொகை வளம் பெற்றிருக்குமே தமிழ்மொழி! செங்கைக்கிழார், செங்கைப் பொதுவனார், செங்கை மதுவனார் ஆகிய தமிழ்த் தொண்டர்களால் தைப் பொங்கல் விழாவுக்குப் பயன்படும் வண்ணம் ஆண்டு தோறும் தொடர்ந்து 60 உரூபா நன்கொடை விடுக்கப் பட்டமையும் இவ்விடத்தே நினையத் தக்கவொரு செய்தியாம். 3. புத்தனாம்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு: செட்டிகுளம், செங்காட்டுப்பட்டி, துறையூர் ஆகிய இடங்களில் பாவாணர்க்குச் செய்யப்பட்ட சிறப்புகளை உணர்ந்து ஈடுபட்டுத் தோன்றியது புத்தனாம்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு பாவாணர் பெயரால் மன்றம் கண்டு ஆர்வத்துடன் உழைத்த அன்பர் ஆசிரியர் அ. முருகன் ஆவர், 27-10-68 இல் விழா எடுத்துப் பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கினார். பாவாணர் தமக்கு வழங்கப்பட்ட பொற்கிழியால் திருக்குறள் - தமிழ் மரபுரை வெளியிடப் பெறும் என்று விழாமேடையில் கூறிய செய்தி அறிய வருகிறது (பாவாணர் பெருமை. 84) 4. புன்செய்ப் புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு: இக்குழுவின் விருப்பிற்கு இணங்கிப் பாவாணர் எழுதித் தந்த சுவடி, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? என்பது, இதன் வெளியீட்டுக்கு இக்குழு தண்டியளித்த உரூபா 1500. குழுவுறுப்பு மன்றங்கள்: 1) புன்செய்ப்புளியம்பட்டி - மறைமலையடிகள் மன்றம் 2) புன்செய்ப்புளியம்பட்டி - இளங்கோமன்றம் 3) நம்பியூர் - மறைமலையடிகள்மன்றம் 4) அவிநாசி - முத்தமிழ்மன்றம் 5) அவிநாசிக்கருக்கங்காட்டுப்புதூர் - திருவள்ளுவர் மன்றம் 6) அவிநாசி - திரு.வி.க. மன்றம் 7) அவிநாசிக்கருக்கம் பாளையம் - பாரதிமன்றம் குழுச்செயலாளர் ப.கு. சுப்பையனார் என்ற முருகவேளார். துணைச்செயலாளர்கள் பு.கா. இளமுருகனார் நா.த. ஆடரசனார். 5. பாவாணர் மணிவிழாக்குழு ; மதுரை : மதுரையில் அமைக்கப்பட்ட மணிவிழாக் குழுவின் சார்பாகப் பாவாணர் நூல் வெளியீட்டுக்கு வழங்கிய நன்கொடை உரூபா 7000. அத்தொகையால் உலகமுதற் செம்மொழி என்னும் ஆங்கிலநூலும், தமிழர் வரலாறு என்னும் நூலும் (1972) வெளியிடப்பட்டன. மணி விழாத்திறம் விழாவும், விருதும் என்னும் பகுதியில் காண்க. 6. சிங்கை நன்கொடையர்முல்லைவாண முல்லைச் செல்வியர் : சிங்கை நன்கொடையாளர் குழுவினர் பதினெண்மர். அவர்கள் நன்கொடையால் கிடைத்த தொகை உரூபா 3100 ஐக்கொண்டு வெளிவந்த நூல் தமிழர் மதம் ஆகும் (1972). முல்லைவாண முல்லைச் செல்வியர் நன்கொடையில் முன்னின்றுளர். வெண்பாக்கள் ஆறு அவர்களுக்கும் நன் கொடையாளர் பெயர்ப்பா அகவலொன்றும் பட்டியலும் இடம் பெற்றுள. 7. நெய்வேலி உ.த.க. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) நெய்வேலி உலகத் தமிழ்க் கழகக் கொடையால் வெளிவந்தது. நெய்வேலி உ.த.க. நேயர் தமிழ்காக்கும் மெய்வேலி யாகி மிளிர்ந்தனர்காண் - மொய்வேலின் மண்ணில்விண் ணிற்கு மகிழ்ந்தளித்த வெண்பொற்கா செண்ணின்முன் மூவா யிரம். என்பது நன்றியுரை! அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்ட அருமையது இது! நெய்வேலி உ.த.க. செயலாளர் அன்புவாணன் வெற்றிச் செல்வியர். 8. முக்கூடல் அரிராம் சேட்டு நினைவுக்குழு : “The Primary classical Language of the world” என்னும் ஆங்கில நூல் வெளியீட்டுக்கு உதவியவர்கள் நெல்லை மாவட்ட முக்கூடல் அரிராம் சேட்டு நினைவு அமைப்புப் பணியினராவர். அதன் தலைவர் ஆர். ஆர.கே. கெருடலிங்கம் என்பார் (ஆண்டு 1966) 9-4-66 ஆம் நாள் காரிக்கிழமை முக்கூடலில் உயர்திரு அரிராம் சேட்டு அவர்களின் 34 ஆம் பிறந்த நாட் பெருவிழாவும் உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்னும் நூல் வெளியீட்டு விழாவும் நிகழ்ந்தன. முற்பகலில் கொடை வள்ளல் அவர்களின் ஆவி அமைதியுற இறை வழிபாடும், பிற்பகலில் அவர்திருப்பட ஊர்வலமும நிகழ்ந்தன. மாலை 6 மணிக்குக், கொடை வள்ளல் அவர்களுக்குப் படையலாக வெளியிடும் உலக முதல் உயர்தனிச் செம்மொழி (The Primary Classical Language of the World) என்னும் நூலின் வெளியீட்டரங்கு தொடங்கியது. விழாத் தலைமை ப-ர். சி. இலக்குவனார் ஏற்றிருந்தார். m.கி. பரந்தாமனார், மணித் தாமரையார், திருமாறனார் ஆகியோர் நூலைப் பாராட்டிப் பேசினர். ப-ர். மெ. சுந்தரனார் நூலின் படியொன்றைக் கொடைவள்ளலின் மூத்த மகனாரிடம் வழங்கினார். தலைவர் நிறைவுரைக்குப் பின் சின்னராசு நன்றி கூறினார். 9. சிங்கபுரி வெ. கோபால கிருட்டிணனார் (கோவலங் கண்ணனார்)! தனிக் கொடையால் தமிழ் இலக்கிய வரலாறு (1979) வெளிவர உதவிய தாளாளர் கோவலங் கண்ணனார். இவரைப் பற்றிப் பாவாணர் பாடியது பாடாண் பதிகம்: கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் - பாலடுத்து வேறொருவர் கூறினும் வெண்படத்துங் கண்டிரார்க்கு மாறிலாதீந் தார்கிருட்டி ணர். - இது, பதிகத்தின் நான்காம்பா. நன்றியுரையகவல், அன்புறு வெண் பொன் ஐயாயிர மெனத் தொகை சுட்டுகின்றது. பாவாணர்நூல் வெளியீட்டுக்கு உதவிய புகழ்க் கொடைகள் இவை. இக்கொடையாளர்தாமே, பாவாணர் அறிவுக் கொடையைத் தமிழுலகு கூட்டுண்ண ஆற்றுப்படுத்திய வண்மையர்! தனித்தனிக் கொடையாளர் - திங்கள் கொடையாளர் எனத் தக்கார் சிலர் பலராதல் எண்ணத்தக்கதே! 9. தேடிவரு திருவுக்கு மூலம் பாவாணர் நூல்களை வெளியிடுதற்குக் குழுக்கள் எழுவானேன்? பாவாணர் ஆய்வுக்குத் தடை கூடாது என முழங்குவானேன்? செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலிக்கு உதவத் தமிழார்வலர் நூற்றுக்கணக்கில் கிளர்வானேன்? செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, முதன்மொழி, தமிழ்ப்பாவை, தமிழம், குயில், வலம்புரி இன்ன தாளிகைகள் பறையறைவானேன்? ஆங்காங்குள்ள அமைப்புகளும், உ. த. க.வும்பாவாணர் பணிக் குதவுமாறு தீர்மானங்கள் போட்டும் முறையிட்டும் கடனாற் றுவானேன்? இவற்றுக் கெல்லாம் ஒரே மறுமொழி, இவை யெல்லாம் பாவாணரைப் புரிந்துகொண்டன என்பதே! பாவாணர் மூளைக் கூர்ப்பு கணினியைக் கண்டான் கூர்ப்புக்குக் குன்றாதது! அணுவைக் கண்டான் அறிவுக்குப் பிந்தாதது! தங்க வயிரச் சுரங்கங்களை அறிந்தான் பேரறிவுக்குச் சளையாதது! கல்லினைக் கருவிக் கொண்டு காலந் தீர்மானிக்கும் தொல் துறை வல்லானினும் இளையாதது! பன்மொழி வல்லார் எவரினும் பின் வாங்காதது! சொல்லய்வுக்கெனவே சுடர்ந்த சுடரொளி அது - எனக் கண்டு கொண்டது ஆர்வலர் உலகம்! அவர்க்கு உதவுதல் பிறவிப் பேறு எனவும் கொண்டது! தன்னலமில்லாத் தமிழ் நலத்தொண்டுக்கு, மொழிநலப் புரட்சி முகிழ்ப்புக்கு - உதவுதல் என்றலைக் கடனே எனக் கொண்டது! ஐம்பான் ஆண்டுகள் வேர்ச் சொல்லய்வில் செலவிட்டவர் பாவாணர். வேர்ச் சொற்கள் சிறுவேரும் பெருவேரும் என இருவகைய அவற்றுள் முன்னவை பன்னூற்றுக் கணக்கின. பின்னவை ஒரு நூற்றிற்குட்பட்டவை இவ்வுண்மை என் கடந்தஅரை நூற்றாண்டு மொழியாராய்ச்சியிற் கண்டது (வேர்ச்சொற் கட்டுரைகள் முகவுரை); ஐம்பான் ஆண்டாக மொழியாராய்ச்சி செய்து (வே. சொ. க. 202); வாழ்நாள் முழுதும் வேர்ச்சொல்ஆராய்ச்சியில் முழுகிக் கிடந்த ஒருவன் (வே. சொ. க. முகவுரை) என்பவை பாவாணர் எழுத்துகள். பாவாணர் தாம் எடுத்துக் கொண்ட ஒரு கருத்தை நிறுவுதற்கு நாட்டு வழக்கைக் காட்டுவார்; நாட்டின் உட்பிரிவாம் மாவட்ட வழக்கைக் காட்டுவார்; வட்டார வழக்கென்றும் சுட்டுவார்; உள் வட்டார வழக்குகளையும், ஊர் வழக்குகளையும் குறிப்பார்; உலக வழக்கையும் குடிவழி தொழில் வழி வழக்குகளையும் தெரிவிப்பார்; பொதுவாக வழக்கு என்று கூறும் அளவிலும் அமைவார். இவ்வாறு உலகியல் வழக்குகளிலும் செய்யுள் வழக்குகளிலும் தழும்பேறியவர் பாவாணர். உலகியல் வழக்குத் தேர்ச்சிக்கும் தொகுப்புக்கும் அடிக்களம் தமிழ் கூறும் பரப்பெல்லாம்தொடர்பிருத்தல். அத் தொடர்பு பாவாணர்க்கு இருந்ததா? பாவாணர்பிறப்பும்உயர்பள்ளிக் கல்வியும் நெல்லை மாவட்டத்தவை; முகவை மாவட்டத்தில் பணி தொடங்கினார்; மதுரைத் தொடர்பும்மிக்கிருந்தது; பண்டிதத் தேர்வு பெற்றதும், மணிவிழாக் கண்டதும், காப்புக் கழகஞ் சார்ந்ததும், திருநகர்க் குடியிருப்பு அவாவியதும், தமிழ்ப்பாவை தமிழ் எழுத்தாளர் மன்ற நெருக்கமும் மதுரை சார்ந்தவை. தஞ்சை மாவட்டத்து மன்னார் குடிப்பணி சோழ நாட்டுப் பரப்பைக் காட்டியது; திருச்சி வாழ்வு நடுமண்டலத்து நயப்பாட்டை அருளியது; சேலத்து வாழ்வு ஈரோடு கோவை நீலமலை இன்னவற்றையும் இணைத்தது; ஆம்பூர் வாழ்வும் பணியும் ஆர்க்காட்டொடு தொடர்புறுத்தியது; வேலூர்க் காட்டுப்பாடி வாழ்வும் ஆர்க்காட்டு மாவட்டப் பெருக்கமும் தந்ததே. இடை இடையும் கடைசி நாளும் சென்னை உறைவு செறிந்தது! எங்கும் அலைவு! எப்பொழுதும் அலைவு! பாவாணர் வாழ்வியலுக்கு இவ்வலைவுகள் இடரும் தடையும் இடையறாது தந்தவையே. எனினும் எத்தனை எத்தனையோ வகைகளில் வட்டார வழக்குகளைத் தொகுத்துத் தமிழ் வைப்பாக்கிக் கொள்ள வாய்த்த வாய்ப்பு இவ்வலைவுகளால் நேர்ந்ததே. வழக்குகளைத்தெளியக் கண்டாரால் தாமே வழக்குகளைத் தொகுத்துத் தமிழ் வைப்பாக்கிக் கொள்ள வாய்த்த வாய்ப்பு இவ்வலைவுகளால் நேர்ந்ததே. வழக்குகளைத் தெளியக் கண்டாரால் தாமே வழக்கற்ற சொற்களைப் பட்டியிட்டுக் காட்டமுடியும்! வழக்கற்ற சொற்களை யெல்லாம் ஒரு தனிச் சுவடியாக வெளியிட இந்நூலாசிரியன் கருதுதலின் ஈண்டு மிக வேண்டிய சொற்களே காட்டப்பெறும் என்று சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில் சுட்டுகிறார் பாவாணர் (பக். 83). பழமொழிகள் பதின்மூவாயிரம் தொகுத்தவர் பாவாணர். ஒரு சிறு சுவடியாகும் அளவுக்குப் பழமொழிகளைத் தம் நூலில்ஆட்சி செய்தவர் பாவாணர். பழமொழி பதின் மூவாயிரத் திற்கு ஆராய்ச்சி முன்னுரை மட்டும் 50 பக்க அளவில் வரைந்திருந்தார் பாவாணர். சேலம் திரு. சு.கு. அருணாசலம் என்பார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றிருந்தார். அதனை அவர் வெளியிடாமை மட்டுமன்றி அந்நூற் கைப்படி தானும் பாவாணர்க்கு வாராமலே ஒழிந்தது. (மி.மு.சி. 22-11-65; 2-7-66). சிற்றூர்களிலிருந்து வரும் மாணவர்கள் மூலம் வழக்கிலுள்ள பழமொழிகளையும் திரட்டினார். அவர்களுக்குக் காசு கொடுத்தார். பழமொழிகள் பன்னீராயிரத்தையும் கடந்தன எனப் பாவாணரின் திருச்சி மாணவர் திரு.சு. பொன்னுசாமி குறிப்பிடுகிறார் (செந். செல்வி. 55 : 272) பழமொழிகள் மட்டுமோ தொகுத்தார் பாவாணர்; மரபுத் தொடர்கள் இணைமொழிகள் இன்னவற்றையும் தொகுத்தார். பாவாணர் தம்உயர் தரக்கட்டுரை இலக்கணத்தில் இணை மொழிகள் 403-ஐ அகரமுறையில்பட்டியிட்டுக் காட்டுகிறார் (பக். 25). கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணத்தில் தொடர்மொழிகள் 221-ஐ அகர நிரலில் காட்டுகிறார். (பக்.99). தமிழ் நாட்டு விளையாட்டுக்கலையைத் தெளிந்தவர் பாவாணர்; தனி நூலாக விளங்குகிறது அது; அதில் 58 வகை விளையாட்டுகள் சொல்லப்பட்டுள. பாவணர் இசைக்கலைத் தேர்ச்சியை முன்னரே அறிந்துள்ளோம். தமிழர் திருமணம், தமிழர் சமயம்தமிழ் நாட்டு அரசியல்வழக்கு, பண்பாடு நாகரிகம், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வடமொழி வரலாறு இன்ன வாறான வரலாற்றுக் கலைச் சீர்ததியும் தனித்தனி நூலாகிய பெருமைய. பாவாணர் தொகுத்து வைத்திருந்த அகரமுதலி நூல்கள் ஒருபத்தா? ஒருநூறா? பன்மொழிப் புலவர்திரு. தேவ நேயப் பாவாணர் அவர்கள் வீட்டில் எட்டு அலமாரிகளில் (நிலைப் பேழைகளில்) உலகமொழிகளிலுள்ள அகராதித் தொகுப்புகள் உள்ளன என்கிறார் ச.வே. சுப்பிரமணியனார் (செந். செல். 55; 275). பாவாணர் அறிந்த மொழிகள் தாம் எத்தனை? மலையாள இலக்கணப்புத்தகமும் Arabic English Vocobulary யும் மூர் அங்காடியில் வாங்கியனுப்பக் கோருகிறார்பாவாணர் (4-10-84). ஹிந்தி பயில்கின்றேன் என்பதை 13-11-35 இல் குறிப்பிடு கிறார். Arabic grammar Hebrew grammar, Chinese self-taught & grammar ஆகியவற்றை Higgin bothams வாயிலாய்த் வருவித்துத் தர வேண்டுகிறார் (23-8-37) இதே நாளில் French grammar, German grammar என்பனவற்றையும் மூர் அங்காடியில் வாங்கித் தரவும் வேண்டுகிறார். மராட்டிய மொழி அகராதி மூர் அங்காடியில் 480 உருபா விலையில் பாவாணர்க்காகவே தரப்பட்டது. எருதந்துறை அகர முதலி மடலங்கள் அனைத்தும் (13 மடலங்கள்) கழிவுதள்ளி 1240 உருபாவிற்கு வாங்கினார். இன்னும் பிறமொழி நூல்களும் தமிழ் மொழிப் பல்துறை நூல்களும் அவர் வாங்கியவை தனித்தனியே குறிக்கப்பட்டால் பெருவிரிவாம் என அமைவாம். பாவாணரின் மேலையாரியப் புலமை ஆங்கிலத் தமிழ்ச் சொற்கள் அறுநூறு என்னும் கட்டுரைத் தொடராலும் (செந். செல். 13:253; 299; 363; 418; 501; 577), வடவாரியப் புலமை வடமொழி வரலாற்றாலும் நன்கு தெளிவாம். திரவிட மொழிகள் இந்திய மொழிகள், உலக மொழிகள் ஆகியவற்றில் பெரு மொழிகளாய் அமைந்த 23 மொழிகளின் இலக்கண அறிவும்பெற்றவர் பாவாணர் என்பர் (ஊற்று; மாதிகை. 9 : 11 பேரா. கு. பூங்காவனம்). பாவாணரின் தமிழ் வரலாற்றில் குறிக்கப்படும் குறுக்க விளக்க மொழிப் பட்டியில் மொழிப் பெயர்கள் 58-உம், ஆங்கிலக் குறுக்க விளக்க மொழிப் பட்டியில் மொழிப் பெயர்கள் 17-உம் ஆக 75 மொழிகள் இடம் பெற்றுள. பன்மொழி கற்கும் கூர்த்த மூளை ஒருவர்க்கு இருக்குமானால் எளிமையாய் 50 மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்னும் பாவாணர், தம்மொழிக்குத் தாமே தக்க சான்றாக விளங்கினார் எனச் சாற்றலாம். சொல்லாய்வுத் தூண்டல் பாவாணர்க்கு எவ்வாறு உண்டாகியது? பள்ளியிறுதி, இடைநடுவு, கலையிளைஞர் முதலிய பல்வகைத் தேர்வுகட்கும்உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டுவரும்சில உரையாசிரியர்கள் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென் சொற்களையெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை எழுந்தனவோ என்று தனித்தமிழர் ஐயுறுமாறு, கலை - கலா; ஆவீறு ஐயானவடசொல்; கற்பு - கற்ப என்னும் வடசொல்; சேறு - ஸாரம், என்னும் வடமொழியின் திரிவு; முனிவன்- மோனம் என்னும் வடசொல் அடியாகப்பிறந்தது; உலகு - லோக மென்னும் வடசொல்லின் திரிபு; காகம் - காக என்னும் வடசொல்; விலங்கு - திரியக் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப்பலதூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தமது உரைகளில் காட்டி வருவது பத்தாண்டுகளுக்கு முன் என் கவனத்தை இழுத்து. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன் என்கிறார் பாவாணர் (ஒம்பியன் மொழிநூல்: முகவுரை). பாவாணர் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்களைக் கண்டதும், ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன், கிரேக்கச் சொற்களைக் கண்டதும் மேலும் மொழி நூற்றுறையில் ஆழ இறங்கி அரும்பணி செய்து வந்ததும் இவரே தமிழ் மீட்பர் என்னும் எண்ணத்தைத் தமிழ்ப்பற்றாளர்க் கெல்லாம் ஊட்டியது! அவ்வூட்டுதலே எப்புலவர்க்கும் வாயாத அளவில் பாவாணர்க்குத் தொண்டர்படை ஒன்று உருவாக ஏந்தாயிற்று எனத்திரட்டுப் பொருளாய் முடிவு செய்யலாம்! அதன் விளைவே பல்வேறு வகை உதவிகளாகவும், அமைப்புகளாகவும் கிளர்ந்தன என்க. 10. அகரமுதலித் திட்டம் இனித் தென்மொழி வகுத்துத் தந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் குறித்துக் காணலாம். அத்திட்டமாகவே, அது தோன்றிற்றில்லை. முத்திட்டங்களுள் ஒன்றே அது. அம் முத்திட்டங்களும் இவை : 1. அரசை அணுகி அதன் வழியாக அகர முதலி வெளியிட ஏற்பாடு செய்தல்; 2. பாவாணர்நூல் வெளியீட்டுக் குழுவின் வழியாக நிறைவேற்றல்; 3. தென்மொழித் திட்டத்தின் வழியாக நிறைவேற்றல்; என்பவை அவை. முதலிரு திட்டங்களும் வெளிப்படை; அவற்றொடு, மூன்றாம் திட்டத்தையும் தொகுத்துத் திரு. தமிழ்க் குடிமகனார் வழங்குகிறார் : 1970 திசம்பர்மாதத்திலேயே தென்மொழி வாயிலாகப் பெருஞ்சித்திரனார் ஓர் அருமையான திட்டத்தை வெளியிட்டார். அது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாக்க வெளியீட்டுத் திட்டம் என்பதாகும். அரசு பாவாணரைப் புரிந்துகொண்டு அவரது அறிவைப் பயன்படுத்த முன்வாராமையால் மக்களே அந்த முயற்சியை மேற் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தி.வை. சொக்கப்பா பெருஞ்சித்திரனார் செந்தமிழ்க்கிழார், சின்னாண்டார், தமிழ்க் குடிமகன் ஆகிய ஐவர் கொண்ட குழு 1971 - ஆம் ஆண்டில் தமிழக அமைச்சர் மாதவனைச் சந்தித்து வேண்டியும் ஒன்றும் நடக்கவில்லை. எனவே, தென்மொழி இருநூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு திட்டம் தந்தது. ஒவ்வொருவரும் மாதந்தோறும் உரூபா 10-00 பாவாணர்க்கு விடுத்தல் வேண்டும். இதில் பாதி (உருபா 1000) பாவாணர் நூலை உருவாக்கத் துணை செய்ய; மீதி ஆயிரம் பிற்காலத்தில் நூலை வெளியிட வேண்டிச் சேமித்து வைக்க என்பதாகும். வல்லான் வகுத்தவழி தென்மொழியில், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி உருவாக்க வெளியீட்டுத் திட்டம் விரிவாக வகுக்கப்பட்டது (8-8-9; பக். 4 - 28). இத்திட்டத்தைத் தொகுத்து வல்லான் வகுத்தவழி என அத்திட்டம் இறையருளால் தோற்றுவிக்கப்பட்டது எனப் போற்றுகின்றார் பாவாணர். அதில் யான் மேம்பட்ட ஆங்கிலத் திறம் பெற்றும் சேக்கசுப்பியரின் முப்பானேழ் நாடகங்களையும் கற்றறிந்து கரைகண்டு எருதந்துறை ஆங்கிலப் பேராசிரியனாக அமர விரும்பினேன். ஆனி, எதிர் பாராத சில சூழ்நிலைகளால் என் மனம் தமிழ்ப்பணிக்கு ஈர்க்கப்பட்டது என்கிறார். அதன் நிறை வாகத், தமிழ் எதிர்காலத்தில் வாழவும் வளரவும் இன்றியமையாத பணி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பே யாதலாலும் இதை என்னையன்றி வேறெவரும் செய்ய இயலாதாகையாலும் எனக்கு வரவர மூப்பு மிகுவதாலும் தமிழன்பரான பொது மக்களின் உதவிகொண்டு இப்பணியை இன்னே செய்ய உ.த.க. பொதுச் செயலாளர் பாவலர் பெருஞ்சித்திரனார் தாம் வகுத்திருக்கும் திட்டத்தை உடனே செயற்படுத்த என் முழு இசைவையும் இதனால் தருகின்றேன். எல்லாம் வல்ல இறைவன் வகுத்த வழி இதுவேயாகும் என்கிறார் (1 சுறவம் 2002; தென் மொழி). தென்மொழி வகுத்த திட்டத்தின் வகையில் இருநூறுக்கும் ற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொகையும் விடுத்து வந்தனர். பாவாணரும் ஊக்கமாக வேலை செய்யத் தொடங்கினார். திட்டகாலம் 12-2-71 முதல் 29-2-76 முடிய என்று வரையறுக்கப் பட்டது, அகரமுதலி வெளியீட்டுக்கு உதவும் உறுப்பினர் இருநூற்றுவர் பட்டியல் 1. தாமரை பெருஞ்சித்திரன், கடலூர் - 1 எனத் தொடங்கி 200. ந.வெ. பெருமாள் அறி. இ. புதுவை - 1. எனத் தென்மொழி சுவடி 9. ஓலை 11 இல் (பெப். மார்ச்சு - 1972) வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் பாராட்டுக் குரியர்; தாமே தேடிவந்துதவிய தனித்தமிழ்த் தொண்டர்கள் அவர்கள். ஆயினும், ஒரு முறை இரு முறை என ஒரு பெருந்தொகை தரவல்ல உள்ளமுடையார்க்கும், தொடர்முறையாக உதவிவருதல் இடர் முறையாகவே அமைந்து விடுதல் உலகியல்! கண்கூடாகக் காணும் நடைமுறையுமாம். அதனால் படிப்படியே எண்ணிக்கை சுருங்கு வதாயிற்று. விடுத்தாரும் இடையறவு பட்டு விடுதலும், உண்டாயிற்று. மேலும் ஓர் இடரும் தலை காட்டியது. திட்ட உறுப்பினருள் சிலரும் பலரும் அகரமுதலி வேலை நடப்புப்பற்றி வினவவும் ஐயங்கிளத்தவும் தொடங்கிவிட்டனர். அதனால், செ.சொ. பி. அ. திட்ட அறிக்கை ஒன்று பாவாணரால் விடுக்கப்பட்டது (தென்மொழி 10; 2 - 4; பக். 8) 1. உறுப்பினர் இனிமேல் அடிக்கடி அகரமுதலித் தொகுப்பு வேலை நடப்பைப்பற்றி வினவிக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. வடமொழியினின்று தமிழை மீட்பதே ஆசிரியன் வாழ்க்கைக் குறிக்கோள், அதற்குத் தலை சிறந்த கருவி செ.சொ. அகர முதலியே. இது வரையிலும் வேறு எம்மொழியிலும் வெளிவராத வகையிலும் தமிழிலும் வேறு எக்குழுவாலும தொகுக்க முடியாத வகையிலும் அது பன்னிரு மடலமாக வெளிவரும். 2. இது ஐயாட்டைத் திட்டமாகையால், ஐயாண்டு கழிந்தபின் வினவுக. 3. ஐயாண்டு முடியுமுன்னரே முதன்மடல் அச்சு வேலை தொடங்கும். இவற்றொடு மேலும் மூன்று குறிப்புகளும் அவ் வறிக்கையில் தந்துள்ளார் பாவாணர். பன்னிருமடல் அமைப்பு முறையும் தென்மொழியில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது (சுவடி 10. ஓலை 10. பக், 59 - 60). முதன்மடலம் : முதற்பகுதி - அ, ஆ. 2உ - ஆம் பகுதி - இ, ஈ, 3. ஆம் பகுதி - உ, ஊ 4 - ஆம்பகுதி - எ, ஏ, ஐ. 5 - ஆம்பகுதி - ஒ, ஓ, ஔ. (இவ்வாறே தொடர்ந்து எட்டு மடலங்கள்) ஒன்பதாம் மடலம் : பிற்சேர்ப்பு (Supplement) பத்தாம் மடலம்: செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் நெறிமுறைகள் (Principles of the Tamil Etymology) பதினொன்றாம் மடலம் : தமிழ் அகர முதலி வரலாறு (History of Tamil Lexicography) பன்னிரண்டாம் மடலம் : முகவுரை, முன்னுரை, செ. சொ. அகரமுதலியமைப்பு விளக்கம், மேற்கோள் விளக்கம், செ. சொ. அகரமுதலித் திட்டம், செ. சொ. அ. உறுப்பினர் விளக்கம் முதலியன. குறிப்பு : முதல் எண் மடலங்களிலும் விடுபட்டுப் போன இருவகை வழக்குச் சொற்களும் சிறப்பாகத் தமிழகத்திலும் மலையாள நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கிவரும் உலகவழக்குத் தமிழ்ச் சொற்கள், பிற்சேர்ப்பு மடலமாக வெளிவரும். முதன் மடலம் முதற் பகுதி இவ்வைந்திர (பஞ்சாங்க) ஆண்டிற்குள் அச்சிடப்படும். அதன்பின் ஏனைப்பகுதிகளும் தொடரும். - இவை அகரமுதலி அமைப்பு விளக்கம் பற்றிய அறிக்கைச் செய்திகள். அகரமுதலிப்பணியில் ஆழ்ந்த பாவாணர்க்குப் பல்வேறு அகரமுதலிகளும் மாந்தவியல், திணையியல், தொல்லியல் தொடர்பான நூல்களும் தேவைப்பட்டன. தாம் தனிப்பட எழுதியும் வெளியிட்டும் ஓராற்றான் வாழ்க்கையை நடாத்த உதவிய நூற்பணி நின்று விட்டது. நூல் வெளியீட்டு உதவிகளுக்கும் ஓர் எல்லை தானே! தனிப்பட்ட அன்பர்கள் ஆர்வலர்கள் அமைப்புகள் ஆகியனவும் இயன்ற அளவான் உதவவே செய்தன! எனினும் எல்லாம் ஒரு கால எல்லைக்கே என்னும் நியதியே நியதியாயிற்று. பாவாணர் பெயரால் பணந் தண்டினோரும் தம்முடையமை யாக்கவும் தலைப்பட்டு விட்டமையும் அறிகிறார் பாவாணர்! தம்மிடம் நூல்கள் வாங்கிப்பணம் தாராமல் ஏமாற்றுவாரையும் காண்கிறார் பாவாணர். ஆதலால் முழு ஊன்றுதலும் அகரமுதலிக்கே என்னும் நிலைமை தளர்கின்றது. பாவாணர்க்குப் பலப்பலரும் பணவுதவி செய்வதால் அரசுதவி தேவை இல்லை என்று பரப்புநரும் உருவாகி விட்டனர். தமிழ்ப் பற்றில்லாத அல்லது தமிழ்ப்பகைவனான ஒருவன், பலர் எனக்குப் பணவுதவி செய்வதாகவும் அரசுதவி தேவை யில்லை என்றும் சொன்னதாகத் தெரிகின்றது. காலும் அரையுமாக ஏழைமக்கள் எனக்குக் கொடுக்கும் பணம் பனிபெய்வதும் சிறுதூறலும் போன்றது. அரசு தமிழைக் காக்கவும் வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளது. பரிசுச் சீட்டுப்பணம் குன்று போற் குவிகின்றது. அகரமுதலிக்கு ஒரிலக்கம் ஒதுக்குவது மிகமிக எளிது என்கிறார் பாவாணர் (12-11-70 ; தி. வை. சொ.). இந்நிலையில் அகரமுதலித்தொகுப்பும் ஆய்வும் விரைந்து நிகழாவிடினும் ஓரளவான் நடந்து வருதல் அறியமுடிகின்றது. செ. சொ. பி. பே. அ. வேலை தொடங்கி விட்டேன். பு. பு. பட்டிக்கொந்தில் மட்டும் வழங்கும் சிறப்புத்தமிழ்ச் சொற்களைப் பொருளுடன் எழுதி விடுக்க. ஓராண்டிற்குள் விடுத்தாற் போதும் எனப் புன்செய்ப் புளியம் பட்டி மறை மலையடிகள் மன்ற கா. இளமுருகனார்க்குப் பாவாணர் எழுதுகின்றார் (8-3-71) இவ்வாறே பிறவட்டாரத் தொகுப்புகளிலும் பாவாணர் கருத்துச செல்கின்றது. முதன்மடலம் முதற்பகுதி வெளியிடவும் பன்னீராயிரம் உரூபா வேண்டும். பணமனுப்பும் உறுப்பினர் தொகை 160-இலிருந்து வரவரக்குறைந்து இன்று நாற்பதாக உள்ளது. ஆகவே அரசின் உதவி இன்றியமையாதது. என்கிறார் (கா. இ.மு. 22-1-74). திருவாரூரில் திரு.வி.க. படிவத்திறப்பு விழா நிகழ்ந்தது. திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகஏற்பாட்டில் நிகழ்ந்த அந் நிகழ்ச்சிக்கு முதல்வர் அருட்செல்வர் (கருணாநிதியார்) சென்றிருந்தார். அம்மேடையில் பாவாணர் பொழிவும் நிகழ்ந்தது. அதனைப்பற்றிப் பாவாணர், திருவாரூரில் நான் முதலமைச்சரைக் கண்டு பேசவில்லை. மேடையில் அரைமணி நேரம் சொற்பொழிவாற்றினேன். அதன்பின் முதலமைச்சர் உரை நிகழ்த்தும்போது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிக்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகச் சொன்னார். அது என்று எவ்வழி எவ்வாறு என்பது இன்னும் தெரியவில்லை எனக் கழக ஆட்சியாளர்க்கு எழுதினார் பாவாணர் (வ.சு; 3-1-74) படிமத்திறப்பு 2-12-73 இல் நிகழ்ந்தது. 8-5-74 இல் பாவாணர் இயக்குநராக அமர்த்தம் பெற்றார். இறைவனருளால் நான் தமிழ்நாடு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக (Director) 1500 உருபாச் சம்பளத்தில் நாலாண்டிற்கு அமர்த்தப்பட்டுள்ளேன் என எழுதுகிறார் பாவாணர் (சு. பொ; 9-5-74). மேலும், நான் இறைவனை நம்பியிருந்தவாறே, மிகப்பிந்தியேனும்தமிழுக்கு நற்காலம் கிட்டிற்று. இதுமுற்றும் தவத்திருக் குன்றக் குடியடிகளின் தனிப்பெரு முயற்சியின் விளைவாகும் என்கிறார் (மு.வ.ப; 28-5-74). அரசு இயக்குநராக அமர்த்தியும் உடனடியாக அலுவலகம் தரவில்லை; பணி உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆயோர் அமர்த்தம் ஆகவில்லை. ஏறத்தாழ முத்திங்கள் கழித்துப்பாவாணர் வரையும் மடலால் துறைக் கிருந்தநிலை வெளிப்படுகின்றது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தி.மு.க. அரசு இதுவரை செய்துள்ள தமிழ்த் தொண்டுகளுள் தலை சிறந்தது. அது திரு. அருட் செல்வனார் ஆட்சியை நிலைப் படுத்துவது மட்டுமன்றி நாளடைவில் தமிழ்நாடு முழு விடுதலையடையவும் வழிகோலும். நான் விரும்பியவாறே திரவிடச் சொற்றொகுக்கவும் தமிழிலக்கியச் சொற்றொகுக்கவும் தலைசிறந்த உதவிப்பணியாளர் இருவர் அமைந்ததும் பெருமகிழ்சசிக்குரிய செய்தியாகும். ஆயினும் இத்திட்டத்தையேற்படுத்தி நான்கு மாதமாகியும் இன்னும் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்காமையும் மேற்குறித்த இருவரையும் அமர்த்தாமையும்மிக வருந்தத்தக்க செய்தியாம். மேலும், இத்திட்டத்தைச் சட்டசபையில் உறுதிப் படுத்திய பின்னரே என்னையும் கீழ் நிலைப்பணியாளரையும் அமர்த்தி யிருத்தல் வேண்டும். அது செய்யாமையால் இன்னும் எனக்கும் பிறர்க்கும் சம்பளம் வரவில்லை. மாதந்தொறும் உண்டிக்கு 150 உரூபாவும்வீட்டு வாடகைக்கு 65 உரூபாவும் செலவாகின்றது. தென்மொழித் திட்ட உறுப்பினர் இருநூற்றுவருள் அறுபதின்மர் முதலாண்டே விலகிவிட்டனர். நாலாம் ஆண்டில் முப்பதின்மர் பணம் விடுத்து வந்தனர். அரசு இத்திட்டத்தை ஏற்றபின் அம்முப்பதின்மருள்ளும் பதினைவர்நின்று விட்டனர். கடன் வாங்கிச் செலவு செய்யும் நிலைமையும் நீடித்தல்அரிது. இன்று நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் இடஒதுக்கம், இருவர் அமர்த்தம், சம்பளக்கொடுப்பேற்பாடு, என்ககு இயங்கி உதவல் ஆகிய நான்கும் முடிபு செய்யப் பெறுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது. சம்பளக் கொடுப்பேற்பாடு செய்யப் பெறினும் அடுத்தமாத இறுதியில்தான் அது கிடைக்கும் - இச் செய்திகள் திருச்சி ந. பிச்சுமணியார்க்கு 17-8-74 இல் எழுதப்பெற்ற அஞ்சல்வழி அறியும் செய்திகள். பாவாணர்க்கு ஆயிரம் ஆயிரமாக நூல்கள் வேண்டும் தேவை. பன்மொழி அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திணைநூல்கள் வேண்டும். ஆனால் ஆண்டுக்கு உரூபா 200 நூல் வகைக்கு ஒதுக்கப் பட்டது! சம்பளம் வாங்க வாங்க - தம்கைப்பணம் செலவிட்டு நூல்வாங்கினார் பாவாணர். காலமெல்லாம் அந்நிலையே நீடித்தது. அவர்க்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அலுவலக இடங்கள் பற்றிய குறிப்பை விரிக்க வேண்டுவதில்லை. பாவாணர்மறைந்த காலையில் செந்தமிழ்ச் செல்வியில்வந்தகுறிப்புகள் சிலவற்றைப் பொறித்தல் சாலும! உலகத்தின் முதன் மொழியாகிய தமிழ் மொழியின் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தையும் அதன் இயக்குநர் மேதகு பாவாணரையும் நினைத்ததும் அரசு, அவ்வியக்கத்திற்கு அளித்த அலுவலகச் சிறப்புப் பற்றி எத்தனை கற்பனைகள் நம் நெஞ்சில் விரிந்து எழும்! இஃது இயற்கை! வானோங்கி உயர்ந்தவளமாளிகை! அகன்ற பரப்பு! திறந்த புல்வெளி! சிறந்த இயற்கைச்சூழல்! வனப்பு மிக்க அறைகள்! வாய்ப்பான இருக்கைகள்! தேடிப்பெறுதற்கரிய திருவாம் நூற்குவைகள்! அலுவலகப் பணியாளர்கள்! அறிவுத் துணைகள்! ஏந்து வாய்ப்புகள்! - இன்னவெல்லாம் நெஞ்சத்தில் பளிச்சிடு கின்றன! ஏனெனில் தமிழறிந்த தகவுடைய தமிழமைச்சர்களே முதல்வராகவும் துணைவராகவும் தமிழகத்தை ஆட்சிபுரியும் தனிப்பெரும் சீர்த்தியமைந்த காலத்தில்அன்றோ இயக்ககம் உருவாகியது! அதிலும், கல்வித்துறையமைச்சரும் நிதித் துறையமைச்சருமாகியவர் - தமிழ் நாவலர் - நடமாடும் பல்கலைக் கழகம் - எனப் பாராட்டப் பெறுபவர் அல்லரோ! இந்நிலையில் தமிழ் அன்பர்களும் தமிழ்ப்பற்றாளர்களும்இயக்கக வளமைபற்றி எண்ணி இறும்பூது அடையாமல்இருப்பரோ? ஆனால் நிகழ்ந்தது என்ன? அகர முதலி இயக்கத்திற்கு அரசால் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 12 X 6 அளவில் ஓர் அறை கொடுக்கப்பட்டது. உலகளாவிய தமிழன்னை வீற்றிருக்க ஒருமேசை! ஒரு நாற்காலி! பணி செய்ய ஒரு தொண்டர் - போது மல்லவோ! சின்னஞ்சிறு சங்கப் பலகையிலே வீற்றிருந்த செந்தமிழ் அன்னைக்கு இப்பேரிடம் போதாதோ? பாவாணரின் அகரமுதலி இயக்ககம், பல்கலைக் கழகப் பக்கமும் பார்த்தல்ஆகாது! தமிழ்வளர்ச்சித் துறையை நெருங்கவும் தகாது! ஆட்சிமொழித் துறையை அணுகவும் ஆகாது! உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஒட்டவும் கூடாது! கல்வித்துறை இயக்கங்களைக் காணவும்தகாது! புதுவதாகக் கட்டப்பெற்ற எந்தஅரசு மாளிகையிலும் புகுதலும் பொருந்தாது. அங்கெல்லாம் அகரமுதலி இயக்ககத்தை வைக்க இடமில்லை! அறவே இல்லை! ஏனெனின், இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டும் இறையும், இருந்தமிழே உன்னால் இருந்தேன் என்னும் தமிழ்ப்பற்றும் இருந்தபடி இருக்கத் தானே வைக்கும்! அதையே செய்தது! ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்- என்னத்தக்க அறையில்தமிழ்த் தாயின் அகரமுதலி இயக்ககம் தனிக்கோலோச்சத் தொடங்கியது. தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்ற ஒருவர் அலுவலகத் துணையாய் அமர்த்தமாகி ஆங்கு வேலை இன்மையால் - (அவர்க்கு இருக்கவும் இடமும் இன்மையால்) வேறுபணிக்கு மாற்றவும் பெற்றார். நாலாண்டில் நிறைவிக்க வேண்டியபணி என ஆணையிடப் பெற்ற அமைப்புக்கு நாலாம் ஆண்டின் இறுதியிலும் ஏன் இன்று வரையிலும் (1981) வேண்டும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை. அதன் பணி நிறைவேற்றத்தைப் பகரவும் வேண்டுமோ?.............. தம் இயக்கக நிலையைப் பல்கால்அரசுக்கு எழுதினார் பாவாணர், அதன்பின் கன்னிமாரா நூல்நிலைய வளாகத்தில் ஓரிடத்தை அரசு ஒதுக்கித்தந்தது... கன்னிமாரா நூலகம் உலகப்புகழ்வாய்ந்த தாயிற்றே! அகரமுதலிப்பணிக்கு மூல வைப்பகமாக இருந்து முழுவுதவி புரியுமே! காலம் கழித்தேனும் அரசு கருத்துடன் கடனாற்றியிருக்கிறது என்னும் களிப்பு மேலிடும் பைந்தமிழ்ப் பற்றாளர்க்கு! இஃது இயற்கை தானே! கொடுக்கப்பட்ட இடம் கன்னிமாரா நூலகப் பகுதியன்று; அதன் காற்றுப்படவும் கனிந்து இடம் தரலாமா? நூல் நிலையத்திற்கு எட்டத்தில் தென் மேற்குக் கடைகோடியில் ஓர் ஓட்டை ஓட்டுக் கட்டம் ஒதுக்கப் பட்டது. புதர்ச் செடிகளுக்கு இடையே அமைந்த அந்தக் கட்டடத்தின் தளம் பழுது! ஓடு ஒழுகல்! தடுப்பற்ற ஒரு நெட்டறை. அவ்வறையின் சீர்மையைப் பற்றிப் பல சொல்ல வேண்டா. ஒன்று போதும், மேலைநாளில் நூல் நிலையத்திற்கு வரும் ஆங்கிலவராம் அலுவலர்கள் குதிரைகளிலோ குதிரை வண்டிகளிலோ வருவர். அவர்கள் குதிரைகளைக் கட்டிப் புல்போடுவதற்குக் கட்டடம் வேண்டும். வெள்ளைக் காரர்களின் குதிரை வெளியே வெயிலில் நிற்குமா? அக்குதிரைகளைக் கட்டி வைத்தற்குக் கட்டப்பெற்ற கொட்டடி தான் அது. குதிரைகளுக்குக் கொள்ளும் புல்லும்போட்டுத்தின்ன வைத்த நிலைப் பெட்டிகள் இன்றும் மாறா நினைவுச் சின்னமாய்த் திகழ்வதை ஆவலுடையார் நேரில் கண்டு மகிழலாம்! பூரிப்படையலாம்! உயிரோடே ஒழித்து விட்டு நினைவுச் சின்னம் எழுப்பிப் போற்றுவது தானே நம்மவர் நயத்தகு தொண்டு. அகர முதலித் திட்டத்தின்மேல் வேண்டா வெறுப்பா? வேண்டும் என்றே செய்யும் இழிவா? செயலாற்ற மாட்டாத விளங்காத்தனமா? அலுவலர்கள் வெறுப்பின் வெளிப்பாடா? திருப்புன்கூர் நந்தி மறைப்பன்ன இடைத்தடுப்பா? தமிழ்ப் பகைவர்உட்புகுந்தாற்றும் உருக்குலைப்பா? பாவாணர்மேல் பகையா? எல்லாமா? ஒன்றும் புரியவில்லை! உலகிலும் நம் நாட்டிலும் பாவாணர் அகர முதலிதானோ ஒரோ ஒன்றாய்த் தோன்றியது? எத்தனை அகரமுதலிகள் உள்ளன; ஒவ்வொரு மொழியாளரும் திட்டமிட்டுச் செய்துள்ளனரே! ஆக்கசுப் போர்டு ஆங்கிலப் பேரகர முதலி: 1858 - ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 7-ஆம் நாள் இவ்வகர முதலிப் பணிதொடங்கியது. 1929 - ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 19-ஆம் நாள் பணிமுடிந்தது. ஆகலின் இப்பணி நிகழ்ந்த காலம் 70 ஆண்டுகள். நான்கு பதிப்பாசிரியர்கள் தலைமையின் கீழ் நானூற்றுவர் நிலையாய் அமர்ந்து பணிசெய்தனர். சென்ற செலவு 30,50,00 பவுண். சமற்கிருத அகர முதலி : 1948 - ஆம் ஆண்டில் தொடங்கியது. 28 ஆண்டுகளுக்குப் பின் 1976 - இல் முதன் மடலத்து முதற்பகுதி 216 பக்க அளவிலும், 1977 - இல் முதன்மடலத்து இரண்டாம் பகுதி 288 பக்க அளவிலும் வெளிவந்துள்ளன. பணி தொடர்கின்றது ..... இதன் பதிப்புப் பணியாளர் 32 பேர். பதிப்புச் செலவுத் தொகையாக இந்திய அரசு உருபா ஒருகோடி வழங்கியுள்ளது. பல்கலைக் கழக நல்கைக்குழு (U.G.C.) மராத்திய நாட்டு அரசு, பூனாப் பல்கலைக்கழகம் ஆகியவை பெருந்தொகை வழங்கியுள்ளன. ஒன்றிய நாட்டினங் களின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பகம் (UNESCO) அச்சீடு முடியும் வரை ஆண்டுதோறும் பெருந்தொகை வழங்க இசைந்து உள்ளது. பாரிசு சமற்கிருதக் கழகம் உருபா இரண்டு கோடிக்கு மேலும் வழங்கியுள்ளது. மலையாள அகரமுதலி : 1953 - இல் தொடங்கப் பெற்றது இவ்வகர முதலிப் பணி. பன்னீராண்டுகளுக்குப்பின் 1965 - ஆம் ஆண்டில் முதன் மடலமும் (அ) 1970 - ஆம் ஆண்டில் இரண்டாம் மடலமும் (ஆ-ஔ) 1976 - ஆம் ஆண்டில் மூன்றாம் மடலமும் (க-கீ) வெளிவந்துள்ளன. பணி தொடர்கின்றது. நிலையாக 36 பேர்கள் பணியாற்றுகின்றனர். கேரள அரசு, கேரளப் பல்கலைக் கழகம் இவற்றின் இணைந்த அரவணைப்பில் இயல்கின்றது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலி : 1905- ஆம் ஆண்டு இவ்வகர முதலிப் பணி தொடங்கியது. 1931- ஆம் ஆண்டு இறுதியுடன் முடிந்தது. ஆக மொத்தம் 26 ஆண்டுகள் பணி நிகழ்ந்தது. நிலையாக இருந்து பணி செய்தவர் அறுவர். இடை இடை அமர்ந்து பணி செய்தவர் இருவர் மூவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப்பணியாளர் உதவுதலும் உழைப்பும் ஒன்றி இருந்தன. எடுத்துக் காட்டாகக் கூறப் பெற்ற இவற்றுடன் பாவாணர் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலிப் பணிக்குக் கிடைத்த உதவியையும் ஒப்பிட்டுக் காணல் வேண்டும். அன்றியும் பாவாணர் அகர முதலிப்பணியின் தனிப்பெருஞ் சிறப்பையும் ஒப்பிட்டு அறிதலும் வேண்டும். பாவாணர்அகர முதலியின் தனித்தன்மைகள் ; 1. இந்நாள் வரை வெளிவந்துள்ள தமிழ் அகர முதலிகளிலெல்லாம் இல்லாத எல்லாச் சொற்களையும் இயன்றவரை எடுத்துக்காட்டிப் பொருள் கூறுதல். 2. ஏனை அகர முதலிகளிலுள்ள தவறான சொல் வடிவங்களைத் திருத்துதல். 3. ஏனை அகர முதலிகளிலுள்ள சொற்களுக்கு விடுபாடுள்ள பொருள்களையெல்லாம்இயன்றவரை எடுத்துக் கூறுதல். 4. ஏனை அகர முதலிகளிலுள்ள தவறான பொருள்களைத் திருத்துதல். 5. எல்லாப் பொருள்களையும் ஏரண முறைப்படி (தருக்க முறைப்படி) வரிசைப்படுத்திக் கூறுதல். 6. எல்லாச் சொற்களுக்கும் இயன்றவரை திரவிட ஆரிய - இனச் சொற்களைக் காட்டுதல். 7. எல்லாச் சொற்களுக்கும் இயன்ற வரை வேருடன் கூடிய வரலாறு வரைதல் 8. ஏனை அகர முதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான மூலங்களைத் திருத்துதல். இவ்வெட்டுவகைத் தனித் தன்மை களையும் கொண்டது பாவாணர் அகரமூதலி. அதன் பயன்களும் பலவாம். செந்தமிழ்ச் சொற்களுக்குச் சொன்மூலம் மட்டுமன்றிச் சொன் மூலத்திற்கு மூலமான ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் மூலங்களும் காணலாம். தமிழ் மொழியில் இருந்து உலக மொழிகளுக்குக் கிளைத்துச் சென்ற இனமொழி மூலங்களும் காணலாம். அவற்றுக்குரிய சொற்பிறப்பியல் நெறியீடுகளை வகுத்துக் காட்டுதலைஅறியலாம். சமற்கிருதம் உள்ளிட்ட இந்து ஐரோப்பிய மொழிகள் சீனம் சப்பானியம் மங்கோலியம் ஆப்பிரிக்கம் ஆத்திரேலியம் முதலிய மொழிகளின் அடிப்படைச் சொல்வளத்தில் தமிழ்ச் சொற்களின் வேர் அமைந்துள்ளமையைத் தெரியலாம். செந்தமிழ்ச சொற் பிறப்பியல் ஒரு தனிமடலமாக வெளிவருதலால் அந்நெறி முறைகளைத் தெளியலாம். இந்த அகர முதலிகளுக்கு வழிகாட்டியாகவும், உலக மொழிகளின் தாய், தமிழ் மெழியே என்பதை அறிவியல் முறையில் நிறுவிக் காட்டுவதாகவும் இருத்தலால் மகிழலாம். பாவாணர்க்கு முழுதுற உதவிபுரிந்து இதனை ஒருங்கே எய்தும் பேறு தமிழுலகுக்கு இல்லாமல் ஒழிந்தது. ஓரிலக்கம் இருப்பினும் அகரமுதலித் திட்டத்தை முடிக்கலாம் எனக்கருதியிருந்த பாவாணர்க்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகக் கூறினாரே முதல்வர் அருட்செல்வர் (கருணாநிதியார்). என் வாழ்க்கையில் இதுவரை வீடுகட்ட இயலவில்லை. திரு. கருணாநிதியார் உதவியால் (என்பதவியால்) பதின் மூவாயிரத்திற்கு மனைநிலம் வாங்கவும், நாற்பதினாயிரம் வைப்பத்தில் இட்டுவைக்கவும் இயன்றுள்ளது. எனக்குச் சொந்த வீடிருந்தால் வேனில் உட்பட ஆண்டு முழுதும் இருமடங்கு வேலை செய்யலாம் என்று ஒரு முறைக்கு இருமுறை பேராசிரியர் கு. பூங்காவனர்க்கு எழுதுகின்றாரே பாவாணர்! (4-10-79). இவற்றை நோக்கப் பாவாணர்க்கு உதவவில்லை என்று கூற முடியாதே! ஆம்! பாவாணர்க்கு உதவியாக - வாழ்வுக்கு உதவியாக - இருந்தது. துறைக்கு உதவியாகவில்லை! 5-1-79 இல் கூட எழுதினார் : என் பணிக்கு வேண்டிய இருதுணையாளரை இன்னும் அமர்த்தவில்லை. ஓர் இயங்கியும் தொலை பேசியும் வேண்டு மென்று எத்தனை முறை சொல்லியும் செவி சாய்க்கவில்லை. முந்திய ஆட்சியும் இங்ஙனமே. என் சொந்த நூலகத்தைக் கொண்டே பணி நடந்து வருகின்றது. சம்பளத்தில் பாதி பொத்தகத்திற்குச் செலவாகிறது. இறைவனருளால் இறுதிவரை பணிதொடர்ந்தாற் போதும் - இது, பாவாணர் அன்புமாணவர் சு. பொன்னுசாமியார்க்கு வரைந்தது. இதில்கடைசிச் செய்தி ஒன்றேநிறைவேறியமை எவரும் அறிந்தது. அரசியல் அலுவலகப்பணிகள் ஒரு நாளில் நடக்க வேண்டியவற்றிற்கு ஓராண்டு செல்கின்றது. ஒன்றை அரசிடம் கொடுத்துமீளப் பெறுவது பூதத்திடம் கொடுத்ததைப் பெறுவது போன்றது. தமிழைப் பிடித்த நோய்முகன் (சனியன்) இன்னும் அதைவிடவில்லை. கேரளப் பல்கலைக் கழகத்தில் சூரநாடு குஞ்சன் பிள்ளைதலைமையில் தொகுக்கப்பெறும் மலையாள அகரமுதலி அலுவலகப் பணியர் நாற்பத்தைவர். இதைக் கலைஞர்க்குத் தெரிவப்பேன் என 19-7-75 இல் பாவாணர் குறிப்பிடுகிறார். தி.மு.க. அரசுக் காலத்திலும், அ.தி.மு.க. அரசுக் காலத்திலும் அமைச்சுக்கட்டிலிலும், பொருட் பொறுப்பிலும் இருந்தவர் நெடுஞ்செழியனார். அவரைப் பல்கால் கண்டு முறையிட்டார்; மணிக்கணக்கில் காத்திருந்தும்கூடத் திரும்பினார். அக்காத் திருக்கையால் சலிப்புமுற்றார் பாவாணர். ஒருமுறை இருவர்தம் உரையாட்டுச் செய்திகள் இவை : அகரமுதலி முடிய எத்துணைக் காலம் செல்லும் என்று மாண்புமிகு கல்வியமைச்சர் வினாவினார். பெருக்கமாகச் செய்தால் 12 ஆண்டென்றும், சுருக்கமாகச் செய்தால் 30-4-78 இற்குள் என்றும் சொன்னேன். சுருக்கமாய் வேண்டாம் என்றும், 12 ஆண்டு மிக நீண்ட தென்றும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், என் காலத்திற்குப்பின் வேறெவரும் எச்சத்தைத் தொடர்ந்து செய்ய இயலாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அவர் குறிப்பறிந்து இறைவன் அருளால் இன்னம் பன்னீ ராண்டிருப்பேன் என்னும் நம்பிக்கை எனக் குண்டென்றேன். அவர் நம்பவில்லை. இன்னும் நாலாண்டிற்குள் முடித்துவிட வேண்டும் என்பது அவர் கருத்து. ஆகலின் முதன் மடலம் வெளிவந்தபின் அவர் கருத்து மாறத்தான் செய்யும். அங்ஙனம் மாற்றுவது நம் கடமை. இயன்ற வரைவிரைந்து பணி செய்வதே நாம் செய்யக்கூடியது. இறைவன் அருள் நம் பக்கம்தான் இருக்கும். அவர் காலத்தில் அவர் விரும்பிய துணைகளோ, உதவிகளோ வாய்க்கவில்லை. அவர் எழுதி முடித்த முதன்மடலமும் அச்சேறிற்றிற்றிலை. அதனை எவ்வாற்றேனும் ஆறாம் உலகத்தமிழ் மாநாட்டுக்குமுன் (1981 சனவரி) அச்சிட்டு முடிக்கப் பேரவாக் கொண்டார் பாவாணர். அம்மடலம் ஒன்றைக் காட்டியேனும் உலகப்பேரறிஞர் உள்ளத்தைத் தமிழ்வளத்தின் பால்திருப்ப முயன்றார் பாவாணர். அது நிறைவேறாமையால் தாம் எழுதவிருந்த, “The Lemurian Language and its Ramifications” என்னும் நானூறு பக்க நூலின் சுருக்கமான 52 பக்கத் தட்டச்சுப்படியை நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்ப உதவியுடன் உலகப்பேரறிஞர்களுக்கு இலவயமாக வழங்கினார். ஆறாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு எவ்வளவு ஆர்வத்தோடு வந்தார் பாவாணர்! எத்தனை எத்தனை எண்ணங்கள் கொண்டிருந்தார் பாவாணர் : நான் மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினருள் ஒருவன். குழுத்தலைவர் முதலமைச்சரே. பொது வகையில், குமரி நாடே தமிழன் பிறந்தகம் என்னும் கட்டுரை மாநாட்டு மலர்க்கு விடுத்திருக்கின்றேன். வேறு கட்டுரை ஒன்றும் படிக்கவில்லை. ஆயின் An Epitome of the Lemurian Language and its Ramifications என்னும் ஆங்கிலக்கட்டுரை 10 படிகள் தட்டச்சடிப்பித்து முதல்வர்க்கும் முதன்மையான வெளி நாட்டறிஞர்க்கும் வழங்கப்படும். அதன் இறுதியில் மாநாடு நடத்தும் உரிமையை வையாபுரிக் குழுவில் இருந்து தமிழ் நாட்டரசு கைப்பற்ற வேண்டும் என்றும், அடுத்த மாநாடு செனகல் நாட்டில் நடைபெற வேண்டும்என்றும் அதிலே தமிழே உலகமுதல் உயர்தனிச் செம்மொழி என்பது நாட்டப்பட வேண்டும் என்றும் உள்ளது. இதற்காகவே இறுதிநாளில் கிளர்ச்சி செய்ய உண்மைத் தமிழர் திரண்டு வரவேண்டும். இனிமேல் தமிழ்நாட்டுப் பிரிவினை இயல்வதன்று. போரை ஒழித்து ஒற்றுமையும் அமைதியும் நல்வாழ்வும் நிலைநாட்ட உலகம் ஒன்றாதல் வேண்டும். ஒன்றிய நாட்டினங்கள் (U.N) என்னும் ஒன்றாத நாட்டினங்கள் மாறி உலகப் பொது நாயகம் என்னும் ஒரே பொது ஆட்சி தோன்ற வேண்டும். தமிழ் எல்லா மொழிகட்கும் அடிப்படை ஆதலால் உலகப்பொது மொழியாதல் வேண்டும். தமிழ்நாடு பிரிந்தால் தமிழ்நாட்டிற்குள்தான் தமிழிருக்கும். சிறை செல்லும்போதே மன்னிப்புக் கேட்கும் இருபதின்மரைக் கொண்டு தமிழ்நாட்டு விடுதலை பெறுவதும் குதிரைக் கொம்பே. ஆங்கிலக்கட்டுரையை மாநாட்டில் வழங்கப் பலபடிகள் வேண்டும். 2-12-80 இற்கு மேல் நெய்வேலி அன்பருள் பொறுப்பு வாய்ந்தவர் எவரேனும் இங்குவரின் ஒருபடி தருவேன். அதை நெய்வேலியில் படியெடுக்கலாம். அச்சிற்கு நாளில்லை. ஆங்கிலநூல் சற்றுப் பிந்திவரும். பிந்தப் பிந்தச் சிறப்பு மிகும். இதுவே தமிழ்ப்பாதுகாப்புநூல் இக்கடிதம் நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்பத்திற்கு 12-12-80 இல் விடுக்கப்பட்டது. 11. விழாவும் விருதும் தமிழ்ப் பெருங்காவலர் மதுரை தமிழ்க்காப்புக் கழகம் பாவாணர்க்குச் சிறப்புச் செய்யக் கருதியது. 12-1-64 இல் அவர்க்குச் சிறப்புச் செய்வதுடன் அவர் சிறப்புரை கேட்கவும் திட்டமிட்டது. பாவாணர்க்குத் தமிழ்ப்பெருங்காவலர் என்னும் பட்டம் வழங்கிப் பட்டும் போர்த்திப் பாராட்டினார் காப்புக் கழகத் தலைவர் பேரா. சி. இலக்குவனார். வேறு சிலரும் பாவாணரைப் பாராட்டிப் பேசினர்; பாவாணர் சிறப்புரை முற்றிலும் சொல்லாய்வாகவே விளங்கியது. பட்டம் துணி என்னும் பொருளது எனத் தொடங்கிப் பட்டு, பட்டயம், பட்டோலை, பட்டாங்கு என்பனவற்றின் பிறப்பையெல்லாம் விரித்தார். கள்- பன்மையீறு. கலத்தல் - கல - கல் - கள் - களம் - கூட்டம்; பலகலத்தல் - கள் என விளக்கினார். மாற்றம் - மாட்ட - மாட்லாடு; மாறிச் சொல்வது மாற்றம், மாட்டாடு - கன்னடம். புத்தகம் - பொத்தகம்; பொத்து - போத்து - போந்து - போந்தை - புத்தகம்; பொத்தகம் படிக மாலை வடை - வட்டை என்பதன் இடைக்குறை. பெட்டை - பெடை; கிள்ளி - கிளி. இலை காய் கனிகளைக் கிண்ணி எடுப்பது. வெற்றிலை (பீற்றல்) - ஆங்கில அகர முதலி தமிழ்ச் சொல் என்று கூறும். வடமொழி அகரமுதலியில் அஃதில்லை. உவணம் - பருந்து. உ - உயரத்தைக் குறிக்கும். உவண் - உவணை - உவணர். சகரம் சேர்ந்து சுவணம் சொற்கள் உயிரில் தோன்றி மெய்யொடு கூடுதல். உருள் - சுருள்; உழல் - சுழல். முத்து - அம் - அம்பெருமைப் பொருள் ஈறு. முத்தி - விடுதலை. சிப்பியில் இருந்து முத்து விடுதலை பெறுதல். மணித்தக்காளி - மணி = சிறுமை; மணிக்குடல், மணிப்புறா, மணிக்கயிறு. திண்ணென்று இருந்தவன் திண்ணன்; வழவழப்பு- வாழை. வாழ்வடியாகச் சொல்வது ஆரவாரம். - இவ்வாறு சொல்லாய்வு நிகழ்த்தியதுடன் இடை இடையே கருத்துரைகளும் வழங்கினார். நம் கலத்தில் அயலான் தன் பெயரைப் பொறித்துக் கொண்டான்; வழக்குத் தொடர்ந்து உண்மையை நிலைநாட்டும் கடமை நமக்கு உண்டாயிற்று. தாய் இடத்தில் மகள் எடுத்துக் கொண்டால் குற்றமில்லை. அயலார் திருடினால்? பலநாடு சுற்றுபவன் ஏமாற்றுபவன்; உள்ளூரான் ஏமாறுவான். சோற்றுக்குத்தான் பஞ்சம், சொல்லுக்குமா பஞ்சம்? ஆய் ஆண்டிரன் என்பது ஆந்திரன் என்பதிலிருந்து வந்தது என்பது, பரதன் என்பவனில் இருந்து பிரிட்டன் என்பது பிறந்தது என்பது போன்றது. - என்பவை அவை. தமிழ்க் காப்புக் கழகங் குறித்து, இசைத்தமிழ்க் கலம்பக த்தில் வரும் பாடல். தம் நன்றியறிதல் வெளிப்பாடேயாம். பாவாணருக்கு மணிவிழா : இந்த நாட்டில் பாவாணருக்குச் சிறப்புச் செய்ய ஆளில்லையே என்று வருந்தியவர் பர். மா. இராசமாணிக்கனார். அவர்மதுரை எழுத்தாளர் மன்ற முன்னாள் தலைவர். அதன் விளைவால், 1961 ஏப்பிரல் 9 ஆம் நாள் ஞாயிறன்று பாவாணரை அழைத்து நிலவு விருந்தளித்தும் பொன்னாடை போர்த்தியும் மன்றம் சிறப்புச் செய்தது. அந்நாள் தலைவர் உரைவேந்தர்ஔவை சு. துரைசாமி அவர்கள். இராசமாணிக்கனார்க்கு, பாவாணர்க்குச் செய்த இச்சிறப்புப் போதாது என்று கருத்து உண்டாகியிருக்கிறது. அதனால் 23-3-67 இல் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர் கருணையாரிடம் நீங்கள் வருவதற்குச் சற்று முன்னர்தான் பாவாணர் இங்கிருந்து சென்றார். நீங்கள் வந்திருந்தால கண்டு உரையாடியிருக்கலாம். அவர்க்கு வேலையும்போய் மிகவும் துன்பப்படுகிறார். நம் எழுத்தாளர் மன்றத்தில் ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்குப் பாராட்டும் விருந்தும் அளிக்கிறீர்கள்: அதைவிடப் பாவாணர்க்குச் சிறப்பாக மணிவிழாக் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம். அவர் பொதுவகைப் பேராசிரியர் அல்லர். மிகப்பெரும் ஆராய்ச்சியாளர். வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர். செய்திறமையும் உறதியும் வினையாண்மையும் கொண்டவர். அவருடைய ஆய்வுத்திறன் அளிப்பரியது. நாங்கள் உங்கள் போன்றோர்க்கு மட்டுமே எழுதுகின்றோம். அவர் என்போன்ற ஆசிரியனுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எழுதுகின்றார். அவருடைய புத்தகங்கள் எளிதில் விலைபோகா. ஆனால் அனைத்தும் நிலைத்து நிற்பன. தமிழில் ஆரியமொழி புகுவதை வன்மையாகக் கண்டிப்பவர். அதனால் தொல்லைகள் அவரைத் தொடர்கின்றன. எனவே அப்பெரியார்க்கு மதுரையில் அதுவும் நம் மன்றத்தினர் கூடி விழா எடுத்தால்தான் சிறப்பு. விரைவில் அதற்கொரு குழுவைத் தொடங்குங்கள் என்னால் இயன்ற உதவியை இங்கிருந்தே செய்வேன் என்றார். அரசமாணிக்கனார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்து சென்னைக்கு வந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவந்த காலம் அது. அவர் உரைப்படி உடனே மணிவிழா ஏற்பாடு தொடங்கிற்றில்லை. 6 திங்கள் சென்றுவிட்டன. ஒரு நாள் அரசமாணிக்கனார் மீண்டும் மதுரைக்கு வரும் சூழல் அமைந்தது. எழுத்தாளர் மன்ற அன்பர்களிடம் பாவாணர் உயர்ந்த பண்பாளர். ஆனால் உலக இயல் தெரியாதவர். அதனால் மிகவும் துன்பப்படுகிறார். அவருடைய நூலைப் பாடப் புத்தகமாகக் கல்லூரிகளுக்கு வைத்தால் குறைந்தது பத்தாயிரம் வரை கிடைக்கும். பொத்தகத் தேர்வுக் குழுவில் நான், ஏ.சி. செட்டியார், அவ்வை போன்றோர் தாம் இருக்கிறோம். எளிதாகச் செய்து முடிக்கலாம். நூல் எழுதிக் கொண்டு வந்து பர்.மு.வ. அவர்களைப் பாருங்கள் என்றேன். நான் என்ன பார்ப்பது? என் திறமையை மு.வ. அறியாரா? நான் போய்ப் பார்க்க முடியாது என்று மறுத்து விட்டார். அவர் ஒரு வணங்காமுடி; தன்மானமிக்கவர்; யாரையும் அண்டமாட்டார். அவர்க்கு உங்கள் போன்றோர் உழைத்து ஒரு தொகை திரட்டி அவருடைய நூல்களை வெளிக்கொணர்ந்தால் தமிழும், தமிழகமும் பல்லாண்டுகட்குப் பயன்பெறும். இந்த அரசு அவர்க்கு மாதச் சம்பளத்தைக் கொடுத்துத் தனியாக ஓர் இடத்தைக் காட்டி உங்களால் எவ்வளவு எழுத முடியுமோ எழுதி எழுதிக் கொடுங்கள்; நாங்கள் அச்சிட்டுக் கொள்கின்றோம் என்று அமர்த்தினால் தமிழுக்கு நன்மைசெய்ததாகும்; எங்கே இந்த அரசு செய்யப்போகிறது. செய்யாது. நம்போன்றோர் தாம் அப் புத்தகங்களில் ஒன்றிரண்டாவது வெளிவர வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ப-ர். மெ. சுந்தரம் அவர்களும் திரு.பு. மனோகரன் அவர்களும் (எழுத்தாளர் மன்றப்புரவலர்) தனிக்குழு ஒன்று அமைத்து நன்கொடை தண்டி மணிவிழாவைச் சிறப்பாக நடத்துவது என ஏற்றுக் கொண்டனர். தலைவர் - கருமுத்து தி. சுந்தரம் செயலர் - ப-ர். மெ. சுந்தரம் துணைச்செயலாளர் - கருணைதாசன் பொருளாளர் - பு. மனோகரன். எனக்குழு அமைந்தது; உறுப்பினர்களும் தெரிந்தெடுக்கப் பட்டனர். குழு தன் கடமையை ஆற்றிய வகையையும், அதன் பட்டறிவையும் துணைச்செயலாளர் கூறுகிறார். வேண்டுகோளை அச்சாக்கிக் குறிப்பிட்ட பெரியார் களுக்கு அஞ்சலில் விடுத்தோம். நாளிதழ்களில் செய்தியை வெளியாக்கினோம். பாவாணரின் குடும்ப நலனுக்காக அன்றி, பொத்தகங்களை வெளியாக்குவதற்காக யார்யாரைத் தாளாளர்கள் வள்ளல்கள் என எண்ணி எதிர்பார்த்தோமோஅவர்கள் காற்றடைத்த பைகள் போன்று தமிழகத்தில் உலாவுகின்றனர் என்பதை அறிந்தோம். இக்குழுவுக்குப் பணம்அளித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று கணக்குப் பார்க்கும் வட்டிக்கடையர் போன்று தமிழின் பெயரால் வெற்றுத் தோற்றமளிக்கும் பலரை உணர இக்குழு ஒருவாய்ப்பாக இருந்தது என்பது அது. ப-ர். மெ.சு. அவர்களின் பேராற்றலால் த. பி. சொக்கலால் குழும்பினர், 2500 உரூபா தந்ததால் ‘The Primary Classical Language of the world’ என்னும் நூல் முக்கூடலில் சிறப்பாக வெளியிடப்பட்டது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 1001 உரூபாவும், திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகனார் 1001உரூபாவும், கருமுத்து தியாகராசர் 500 உரூபாவும் தந்து சிறப்பித்தனர். மாணவர்களும் தமிழ்ப்பற்றாளர்களும் தங்களால் இயன்ற பங்கு கொண்டனர். ஆகமொத்தம் 7362 உரூபா 58 காசு திரண்டது. விழாவுக்கு அறிஞர் அண்ணா வாழ்த்து விடுத்தார். திரு. தேவநேயப்பாவாணரின் மணிவிழா நடப்பதறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடை விடாத நற்றொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர். அவருடைய புலமையும், தெளிவும் துணிவுமிக்கது. தமிழ்மொழியின் தூய்மையும் வளமும் எத்தகையது என்பதனை ஆய்ந்தறிந்து தெரிவித்த பெருமகனாரிடம் தமிழிடம் பற்றுக் கொண்ட எவருக்கும் பெருமதிப்பு ஏற்படாதிருக்க முடியாது. தமிழ்ப்பெருநூல்கள் தமிழரால் நன்கு கற்று உணரப்பட்டு, தமிழ்நெறியில் தமிழர் நின்று வென்றிடல் வேண்டுமென்பதில் தளராத விருப்பம் கொண்டோர்க்கெல்லாம் பாவாணரின் புலமை நம்பிக்கை தந்து வருகின்றது. பாவாணர்மேலும் பல ஆண்டுகள் இனிது வாழ்ந்திருந்து தமிழ் மொழிக்கான தொண்டாற்றிவருதல்வேண்டும் என்ற வேண்டுகோளை, அவருக்காக நடத்தப்படும் மணிவிழா நிகழ்ச்சியின்போது நான் எடுத்துத் கூறும் நல்லெண்ணச் செய்தி என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பெரியாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க பாவாணர்! வெல்க தமிழ். தமிழ்ப்பாவை அன்பன், அண்ணாதுரை பாவாணர் தமிழுக்குச் செய்த பணியினையும் தொண்டி னையும் பாராட்ட மதுரையிலுள்ள என் உழுவலன் பர்கள் இந்த விழா எடுத்தது கண்டு மிக மிக மகிழ்கின்றேன். பாவாணரை நினைக்கும் போது அவரது தமிழ்த் தொண்டும் வீறு கொண்ட உருவமும் முறுக்கி விடப்பட்ட மீசையும் தமிழ்ப்பகைவர் கண்டு நடுங்கும் தோற்றமும் என் கண்ணெதிரே நிற்கின்றன. தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழகத்தின் எதிர் காலத்திற்கும் பாவாணர் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டும் வகையில் இவ்விழா கொண்டாடப் பெறுகின்றது. தமிழ் வளர்த்த சேர சோழ பாண்டிய மன்னர்களின் வழியைப் பின்பற்றித் தமிழ் அறிஞர்களின் வழியைப் பின்பற்றித் தமிழ் அறிஞர்களுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்து கின்றோம். தமிழ்ப்பாவை மு. கருணாநிதி 8-9-67 இல் மதுரையில் மணிவிழா நிகழ்ந்தது. திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் விழாத்தலைமை ஏற்றார். ப-ர். மெ. சுந்தரம் வரவேற்றார். கருமுத்துதியாகராசர், கலைஞர் கருணாநிதி, குன்றக்குடி அடிகளார், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். பாவாணர் அவர்கள் விழாவுக்கு வாராமையால் பொருளாளர் மனோகரனார் வழங்கிய பொற்கிழியைக் கலைஞர் விழாத் தலைவரிடம் வழங்கினார். மெ. சந்தரம் மொழிநூல் மூதறிஞர் எனப் பட்டம் பொறிக்கப்பட்ட தட்டத்தைத் தலைவரிடம் வழங்கினார். மன்றச் சார்பிலும், மணி விழாக் குழுச் சார்பிலும் பராட்டிதழ்கள் படிக்கப் பட்டன. ஒரு சொல்லைக் கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள் அருவியெனப் பொழிகின்ற அனைத்துமொழிப் பெருஞ்செல்வ! தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய் ஆய்தமிழுக் காட்பட்டோர் வ்ழஇனும் வழியிலையோ அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய் தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே என்பவை வாழ்த்து மடலில் முக்கண்ணிகள். விழாநாயகர் இல்லாலே விழா நிகழ்ந்ததா? ஆம்! திட்டமிட்டபடி நிகழ்ந்தது. பாவாணர்ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை? பாவாணர்க்கு விடுத்த அழைப்பிதழ் 9-9-67 இல்கிடைத்தது. விழாநாள் 8-9-67 ஆயிற்றே! இன்று சென்னையினின்று திரும்பப்பெற்ற அழைப்பிதழ் இங்கு வந்து சேர்ந்தது. என்பயன்? ஒருவரா இருவரா, சிறுவரா, எளியரா, விழாவில் என்னைச் சிறப்பிக்க வந்தவர் எத்துணைப் பெரியார், எத்துணை அரிய நேரத்தை எனக்காகச் செலவிட்டனர். இங்ஙனம் பலபெரியார் ஒன்று கூடல் எளிதா? நான் வராமையால் என்னைப் பற்றி அவர் எத்துணையோ தவறாகக் கருதி என்னை வெறுத்துமிருப்பரே! இவ்விழா ஏற்பாட்டிற்கு எத்துணைக் காலமும் முயற்சியும் தங்கட்குச் சென்றன. அவ்வளவும் வீணாயிற்றே! இதையெல்லாம் நினைக்கும் போது என் நெஞ்சம் எத்துணைப் புண்படுகிறது. பிறபுலவர்க்குப் பெரியவர்பலர் சேர்ந்தால் அதில் வியப்பொன்றுமில்லை, எளிய நிலையில் இருப்பவனும் முகமன் கூறிப் பிறரைப் புகழும் இயல்பில்லா தவனும் புலவரும் விரும்பாத தனித்தமிழ் நடையினனும் ஆரியத்தை வன்மையாய் எதிர்ப்பவனும் ஆகிய என்னைப் பாராட்டப் பலர் கூடினார் எனின் அது வியப்பினும் வியப்பாம் என்கிறார் பாவாணர். (9-9-67 வி. அ. கருணை). 18-9-67 இல் எழுதிய மடலில், தமிழக அரசினரும் பல்கலைக் கழகங்களும் செய்ய வேண்டிய பணி தனிப்பட்ட தமிழன்பர் வாயிலாக நிறைவேற வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும் என்றும், எனக்கும் தனித்தமிழ்க்கும் இத்தொகை தொக்க தெனின், அது தொகுத்தாரின் பெருமுயற்சியையன்றித் தந்தாரின் தனித்தமிழ்ப் பற்றைக் குறித்து விடாது என்றும், விழாவிற்கு நான் வராமை ஒரு வகையில் எனக்குப் பொந்திகையே (திருப்தியே) அளிக்கின்றது. நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல், ஆசானை எவ்விடத்து மப்படியே - வாச, மனையாளைப் பஞ்சணையில்மைந்தர்தமை நெஞ்சில், வினையாளை வேலை முடிவில் (ஔவையார்) என்றும் குறிப்பிடுகின்றார். என் மதுரை மணிவிழா அழைப்பிதழ் விழாவிற்கு மறுநாள் தான் கிடைத்தது. அதனாற் போக இயலாது போயிற்று. சென்ற காரிசென்று ஞாயிறு பெற்றுத் திங்கள் திரும்பினேன் என்று சேலம்சின்னாண்டார்க்கு 11-10-67 இல் வரைகின்றார் பாவாணர். பாவாணர்மணி விழாவின் போது ஒரு நற்செய்தி வெளிப்படுகின்றது: அது, மொழிநூல் மூதறிஞர் பாவாணரின் சொற் பிறப்பியல் அகரமுதலியை வெளியிடக் காரைக்குடித் தமிழ் வள்ளலும் இராமசாமித் தமிழ்க் கல்லூரித்தாளாளருமாகிய திரு. இராம. பெரிய கருப்பனார் மனமுவந்து இசைவளித்துள்ளார்கள் என்னும் நற்செய்தியைப் பாவாணரின் மணிவிழாச் செய்தியாக நன்றியுடன் வெளியிடு கின்றோம். பாவாணர் அவர்களும் முனைந்து விரைவில் எழுதி முடித்துத் தருவதாக இருக்கிறார்கள். அந்நூல் தமிழகத்தின் சிறந்த பொக்கிசமாக அமைய விருக்கிறது. நல்லுள்ளத்தோடு அப்பணியை ஏற்றுள்ள அப்பெரு மகனார்க்குத் தமிழ் உள்ளளவும் நன்றி நிலைத்து நிற்கும் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றோம் என்பது. (தமிழ்ப்பாவை. பாவாணர் மணிவிழாச் சிறப்புமலர் (7-10-67) தென்மொழி அகரமுதலித் திட்டத்திற்கு முன்மொழித் திட்மன்றோ ஈது! ஏன் தடையுற்றது? பறம்புமலைப் பாரிவிழாவில் பாவாணர்க்குச் செந்தமிழ் ஞாயிறு என்ற சிறப்புப் பெயர் சூட்டிப் பாராட்டுதல்: தவத்திரு. குன்றக்குடி அடிகளார் : இன்றைப் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு எனச் சிறப்பிக்கப் பெறுபவர் ஞா. தேவநேயப் பாவாணர். பாவாணர் ஒரு பைந்தமிழ் ஏறு; தனித்தமிழ் ஆறு; வடமொழிப் பகைகெடுக்கும் கூர்வேல்; நுண்மாண் நுழை புலத்தின் திருவுரு; அவர்தம் எழுத்தும் பேச்சும் தமிழைக்காக்கும் படை; அரண்! உலக மொழிக் கூட்டங்களுள்தமிழே தலையாயது; தனிச் சிறப்புடையதென்று இன்று எடுத்தோதும் தனித் தமிழ் வலவரைச் செந்தமிழ் ஞாயிறு எனப்போற்றுதும்! இஞ்ஞாயிறு தோன்றி விளங்குதல் மூலம் வடமொழிப் பனி மூட்டமும் இந்திக் கருமேகமும் இரிந்தோடும். பாவாணர் தனித்தமிழ் மரபுக்கேற்பச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பேரகரமுதலி தொகுக்க விரும்புகிறார். அதற்குரிய புலமை அவரிடத்தில்உண்டு; ஆனாலும் பொருளில்லை. புரவலர் மாவண்பாரியென விளங்கும் கலைஞர்கையில்இந்தச் செந்தமிழ் ஞாயிற்றினை ஒப்படைக்கின்றனம். அரசியல் உலகில் எழுஞாயிறு எழுச்சி தந்ததைப் போல, மொழி உலகில் இஞ்ஞாயிறு எழுச்சியினைத்தந்து அன்னைத் தமிழைக்களை களினின்று என்றும் காத்துஅதன் இயற்கைப் பசுமையினைக் காக்கும்! வாழ்க பாவாணர்! வாழ்க அவர்தம் தமிழ்த் தொண்டு! 5-5-71 முதன்மொழி க; 2-7-71. சேலம் தமிழ்ப் பேரவை பாவாணர் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி வெள்ளித் தட்டமும் திராவிட மொழி நூல் ஞாயிற்று என்னும் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தது. 1955 ஆம் ஆண்டு என்பது பாவாணர்எழுத்து. 1957 என்பது புலமை. -சூன். 1981. பக். 122. இவ்விழாத் தலைமை ஏற்றவர் தந்தை பெரியார். 1960 இல் தமிழ்நாட்டு அரசு சார்பில் ஆளுநரால், பாவாணர் தம் ஆட்சித்துறைக் கலைச்சொல்லாக்கம் குறித்துப் பாராட்டிச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. 1970 ஹில் பாவாணர் சொல்லாய்ஷி நலம் பாராட்டிச் சைவஞித்தாந்த நூற்பணிப்புக் கழகம் வெள்ஹீத்தட்டம் வழங்கிப் பட்டுப் போர்த்ணிப் பாராட்டியது.13-7-74 ஹில் சென்னை மாநகர மருத்துவக் கல்லூளீ மாணவர்கள் கலைவாணர் அரங்கில் நடத்ணிய முத்தலீழ் மாநாட்டில் தலீழ் ஞாழீறு பண்டித புலவர் தேவநேயப் பாவாணர் எம்.ஏ., அவர்கட்கு ஒரு பாராட்டு விழா சீரும் சிறப்புமாக நடத்தினர். விழாவிற்குத் திரு.ஏ.எல். சீனிவாசன் தலைமை தாங்கினார். பாவாணர் அவர்களைப் பாராட்டித் தமிழ்ப் பேரறிஞர் பலர் உரையாற்றினர். பாவாணர் அவர்கட்கு டாக்டர்கலைஞர் அவர்கள் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தனர். அப்போது, பாவாணரவர்களுடைய தமிழாற்றலை ஆராய்ச்சித் திறனை அறிவு நுணுக்கங்களை இந்தத் தமிழ்ச் சமுதாயம் பெற வேண்டும் என்பதற்காக அவரைப் பயன்டுத்தி ஒரு வேர்ச்சொல் அகரமுதலியைத் தயாரிக்கும் பொறுப்பினை இந்த அரசு அவரிடம் ஒப்படைத்துள்ளது என்று குறிப்பிட்டார். செந். செல். 48 : 662 செந்தமிழ்ச் செல்வர் விருது 1979 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 15 ஆம் நாள் திருவள்ளுவர் நாளன்று வள்ளுவர்கோட்டத்தில், தமிழுக்குத் தொண்டு செய்த பெருமக்கள் ஐவருக்குச் செந்தமிழ்ச் செல்வர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது அரசு. அப்பட்டம் பெற்றவருள் ஒருவர் பாவாணர்; பிறர், தி.சு. அவிநாசிலிங்கனார். கா. அப்பாத்துரையார். ம.ப. பெரியசாமித்தூரன், வ. சுப்பையா என்பவர். முதல்வர் ம. கோ. இராமச் சந்திரனார் பொன்னாடை போர்த்தி நினைவுத் தட்டமும் விருதும் வழங்கினார். விருது விளக்கச் செய்தி வருமாறு : மொழிஞாயிறு என்றும் மொழிநூல் மூதறிஞர் என்றும் தமிழ்ப்பெரு மக்களால் போற்றப்பெறும் பேராசிரியர் ஞா. தேவநேயப்பாவாணர் நெல்லை மாவட்டத்தில் 7-2-1902 அன்று கணக்காயனார் ஞானமுத்தனார்க்கு நன்மகனாகப் பிறந்தவர். பாளையங்கோட்டையில் சி. எம். எ. என்னும் திருச்சபை விடை யூழியக் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றபின் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு தேறித்தனிக் கல்வியால் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைப்பட்டமும் பெற்று, பல உயர்நிலைப் பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகவும் சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1922இல் தமிழாசிரியப்பணி ஏற்றதில் இருந்து மொழிநூல், வரலாற்று நூல், மாந்தநூல் ஆகிய முத்துறை நூலடிப்படையில் தமிழாய்ந்து, குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத் திற்கு மூலமுமாகும் என்னும் உண்மைகண்டு அதை விளக்கு முகமாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பன்மொழி வல்லுநரான பாவாணர் அவர்கள் மொழியியல் துறையில் ஒப்பற்ற தனித்திறம் வாய்ந்தவரென்று மறைமலையடி களாரால் சான்றளிக்கப்பெற்ற சிறப்புடையவர். அடிகளார் நெறியில் நின்று தமிழ்ப் பணியாற்றும் இவர் தம் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்றவர் உள்ளனர். தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையைத் தம்புலமைத் திறனால்நிறுவிக் காட்டிவரும் இப்பேராசிரியர் 8-5-1974 அன்று தமிழ் நாட்டு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக அமர்த்தப் பெற்றுத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ்ச் சொற்களின் வேர் முதலைத் தகவுற ஆராயும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியாக அது திகழும். வாழ்நாள் முழுவதையும் தமிழ்வளர்ச்சிக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குமே ஒதுக்கிய இத்தமிழ்ப் பெரு மகனாரைப் பாராட்டி இத் திருவள்ளுவர் திருநாளில் செந்தமிழ்ச் செல்வர் என்னும் சீரிய விருதினைத் தமிழ் நாடு அரசு வழங்கி மகிழ்கிறது என்பது அது. 12. அறிவிப்பும் அறைகூவலும் என்தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? 1938 இல் நான் திருச்சிப்புத்தூர் ஈபர் மேற்கண்காணியார் உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாக இருந்த போது திரு(சி) அரச கோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்சராகி இருநூறு உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்திபுகுத்தப்பட்ட பள்ளிகட்குமுன் மறியல் செய்த தமிழ்த் தொண்டர் சிறையில்இடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினார். முறைப் பட்டதமிழ்க்காப்பு, வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனை யுற்ற தமிழ்த் தொண்டரின் தற்காப்பிற்காக ஒப்பியன் மொழி நூல் முதற்புத்தகம் முதற்பாகம் என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன் வரவில்லை; சிறுதொகையும் உதவவில்லை. அதனால் என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானமும் என் கைப்பொருள் கொண்டு அதனை வெளியிட்டு ஓராயிரம் ரூபா இழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்டதினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகைய நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை. அந்நிலையில் இலக்கணம் சொல்லாராய்ச்சி மொழி யாராய்ச்சி அரசியல் வரலாறு விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள்பற்றியனவும், புலமக்களன்றிப் பொது மக்கள் வாங்காதனவும், விரைந்து விலையாகாதனவும் ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ்செலவு செய்ய வேண்டியனவும் சிறியவற்றோடு பெரியனவுமான இயற்றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திராவிடத்தாய், சுட்டு விளக்கம், முதற்றாய்மொழி, பழந் தமிழாட்சி, மாணவர் உயர்தரக்கட்டுரை இலக்கணம் (2பாகம்), என்னும் எண்ணூல் களோடு, நான் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரைவரைவியல் என்னும் நூலையும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத்திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்கள் வாரமுறையில் ஒவ்வொன்றாக வெளியிட்டு விற்புவிலையில் ஒப்பந்தத்திற்கேற்ப உரிமைத்தொகை யும்ஆண்டிற்கிருமுறை கணித்து ஒழுங்காக அனுப்பி வந்திருக் கின்றார்கள். இதனால் நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரியநூல் வெளிவந்து என் பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன் என்தமிழ்த் தொண்டும் பலமடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்து வந்த அரையாட்டைத்தொகை என் குறைந்த சம்பளக் காலத்தும், வேலையில்லாக் காலத்தும் பெரிதும் உதவிய தென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை. அதோடு அவ்வப்போது நான் செந்தமிழ்ச் செல்விக்கு விடுத்த வேர்ச்சொல்பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும் அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்த தென்பதைச் சொல்லாமல் இருத்தற்கில்லை. இனி அவர்கள் என்சொந்த வெளியீடான தமிழ் வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சான போதும், மறைமலையடிகள் நூல் நிலையத்தில் தங்க இடம் தந்தும், இறுதிப்படிவ மெய்ப்புக்களையெல்லாம் மூலத்துடன் ஒப்பு நோக்கிப் பொறுமையாகவும் செவ்வையாகவும் திருத்திக்கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும் அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும் வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும் பல்வேறு வகையிற் செய்து வந்தஉதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந்திறத்த அல்ல. இங்ஙனம் பலவகையிலும் என் தமிழ்த் தொண்டை இயல்வித்து மும்மொழிப் புலமை செம்மையிற்பெற்ற நிறைபுல முடியாம் மறைமலையடிகளளும் என்னை உளமுவந்து பாராட்டு மாறு செய்த திரு. வ.சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக் கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க கழக உறுப்பினரையும் ஏனைத் தமிழன்பரையும் என்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும் அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும் இன்னும் கழிபல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவர்கள் தங்கள் செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று ஆர்வத்துடன் வேண்டிக் கொள்வதே யன்றி வேறன்று. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத்திருவள் ளுவம்வாழி - செய்வெற்றிச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடூழி தப்பாது வாழி தமிழ். (1969-70) செந். செல். 44 : 217-220 - தொண்டின் துணையைக் கண்டுரைத்தது இது. சூடுகண்டவிளத்தம் எதிர் நீச்சலில் துணிந்து முதன்முதல் ஒப்பியன் மொழி நூலை வெளியிட்டார். தாள் கடன் உரூபா. 150 அச்சுக்கூலி உருபா. 60-க்குத் தொல்லைப்பட்டார். பலமுறை செய்தித் தாள்களில் அறிக்கையிட்டார். உதவுவார் இல்லை. அடியேன் அச்சுக்கூலி உருபா 60 கொடுத்து வெளிக்குக் கொண்டு வந்தேன். தமிழ் வள்ளல்களை எல்லாம் அண்டினேன்; பயன் இல்லை; முடிவில் எங்கள் தென் மாபட்டி வைக்கம் வீரர் வாசக சாலைக்கு வந்தபெரியார் அவர்களிடம் உருபா 150 வாங்கிக் கொடுத்துத்தான் வாங்கிய கடனையும் தீர்த்தேன். நான் கொடுத்தஉருபா 60க்கு 40 பொத்தகம் தந்தார். அதேபோல் பெரியாருக்கும் 100பொத்தகம் கொடுத்தார். நான் வாங்கிய 40 பொத்தகம் விற்க 4 மாதம் ஆகியது. அதில் அறிஞர் அண்ணாவுக்கு ஒன்று; சம்பத்து ஈழத்து அடிகள் ப. சீவானந்தம் ஆகியோருக்கு ஆளுக்கு ஒன்றாகச் சமேரசம் பேட்டை சுயமரியாதைமாநாட்டில் கொடுத்தேன். ஒருபொத்தகக் கடைக்காரரும் பதிப்பகத்தாரும் இந்நூலை வாங்க முன் வராததோடு அஞ்சவும் செய்தனர். அவ்வளவு தமிழ் மணம், ஆரியத்தாக்குதல். மதுரை இ. மா. கோ. நிறுவனத்தார் இந்தப் பொத்தகம் படுத்துவிடும்என்றார்கள். என்கிறார் திருப்பத்தூர் தொ. வீ. இரா. தொந்தியபிள்ளை. - இது, பாவாணர் சூடுகண்டதன் விளத்தமாம். மதிப்புரைக்கு மறுப்புரை சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளைப் பற்றி இந்துத் தாளில் சுப்பிரமணிய சாத்திரியார் ஒரு மதிப்புரைஎழுதினார். அஃது ஒருபால் போற்றியும் ஒருபால் தூற்றியும் வந்த மதிப்புரை. அதனைப் படித்தஅன்பர் ஒருவர் அதற்கு மறுப்பெழுத ஏவினார் பாவாணரிடம்; அதனைப் பொருட்டாக எண்ணாமல் விடுத்தார் பாவாணர். பின்னர்ப் பாணர் கைவழி என்னும் நூலுக்கு ஒரு மதிப்புரை (மறுப்பரை). வரஅதனை மறுத்துரைத்தார் பாவாணர். முன்னே வலியுறுத்திய நண்பர் மீண்டும் பாவாணரிடம் வந்து ஐயா ஏனையர் இயற்றிய நூல் பற்றி எழுந்த மதிப்புரைக்கு மட்டும் மறுப்புரை விடுத்தீர்களே. ஏன் தாங்கள் இயற்றிய சொல்லா ராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரைக்கு இன்னும் மறுப்புரை விடுக்கவில்லை. இதனால் திருவாளர் சுப்பிரமணிய சாத்திரி யாரவர்கள் வரைந்த மதிப்புரை சரியானதேஎன்றும் தங்கட்கு அதை மறுக்கும் மதுகையில்லை யென்றும் அல்லவா படும்? என்று மானவுணர்ச்சி தோன்றுமாறு பன்முறை வற்புறுத்தியதால் மறுப்புரை வரைந்தார் பாவாணர். அந்தணர் என்பார் ஒருகுலத்தார் அல்லர்; முனிவர் என்றும், பத்தினி என்பது பத்தன் என்பதன் பெண்பாற் சொல் என்றும், எழுத்து என்பதன் பகுதி எழு என்பதேயன்றி எழுது என்பதன்று என்றும், இன்னவாறு சுட்டி, தக்க சான்றுகளால் நிறுவினார். ஆசிரியர் மொழியொலி நூல் (Phonology) சொல் வடிவு நூல் (Morphology) பொருட் பாட்டு நூல் (Semasiology) ஆகியவற்றைப் பயின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று சாத்திரியார் குறிப்பிடுவதற்கு, கடந்த இருபானாண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கடந்த எனக்கு மீன்குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவது போலும், கொல் தெருவில் குண்டூசி விற்பதுபோலும் சாத்திரியார் அவர்கள் மொழிநூல் துறைகளையுணர்த்த விரும்பியது மிகவியப்பை விளைக்கின்றது. பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழா கொழ கொழா என்பது ஒருபுறமிருக்க, வடமொழியை இயன்மொழியாகவோ, தமிழுக்கு முந்திய மொழியாகவோ கொள்பவரெல்லாம், ஒப்பியன் மொழி நூல் மாணவராதற்கும் உரியவரல்லர் என்பது என் ஆய்ந்தமுடிபு. செயற்கை வல்லொலி யெல்லாம் சிறந்து, பலுக்க (உச்சரிக்க) அரிதான சொல்லமைப்பெல்லாம் பெற்று, ஆசியா ஐரோப்பா ஆகிய இருபெருங் கண்டங்கட்குப் பொதுவான சொற்களை யெல்லாம் தழுவி, எண்ணரு நூற்றாண்டுகளாக இடுகுறி முறையில் வளம்படுத்தப் பட்ட வடமொழியை; இயல்பாய எழுத்து எளிய வொலி கொண்டு இளஞ்சிறாரும் ஒலிக்கும் சொல்லமைப்புப் பெற்று மாந்தன் தோன்றிய காலந்தொட்டு மாண்பாக வளர்க்கப் பெற்ற தமிழுக்கு முந்தியதாகவும் மூலமாகவும் காட்டத்துணிவார்; மொழி நூற்றுறைகளில்முற்றத் துறைபோய முதுபெரும் புலவராகத் தம்மைத் தாமே மதித்துத் தருக்கின் அவருக்கு விடையாக யானொன்றும் விடுத்தற்கில்லை என்கிறார். இம்மறுப்புக் கட்டுரை முகப்பிலே, என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை ஆயும் ஆற்றலுடையார் இந்து நிலையத்திலாவது அந்நிலையச் சார்பிலாவது இல்லை என்பதே என்கருத்து என்கிறார். முடிவில், என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில் சாத்திரியார் அவர்கள்குறிப்பிடாத இரண்டொரு குற்றங் குறைகள் உள. அவை சொற்பொருள் பற்றியவை. அவற்றை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வேன் என்றும் கூறுகிறார். செந். செல். 25 : 457-64 திருவாவடுதுறை மடம் ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர்பாலும், சோறு என்னும் தூய தமிழ்ச் சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரையடித்த குட்டித் தம்பிரானைப் பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சி யாலும் திருவாவடு துறை மடம் சிறப்புற்றதே. ஆயினும் தமிழைப்போதிய அளவு போற்றாதது வருந்தத் தக்கதே. - தமிழர்மதம். 130 திருப்பனந்தாள் மடத்தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில் ஒருமுறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்துவரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன். ஆயினும், நான் கருதியது கைகூடுமா என்று ஓர் ஐயம் எனக்கிருந்தது. ஏனெனின், அங்கு இராயசம் என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரத் திருமுன்பு செல்லுமுன்பே என்னையழைத்து, தம் அகவைக்கும் அறிவுக்கும் பதவிக்கும் தகாத பலவினாக்கள் வினாவினார். நான் தங்கியிருந்தமடத்து விடுதி மேலாளரும் என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியாளரும் மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனிமனையையுங் கண்டேன். அவர்தம்பிரானுக்கு ஆசிரியரா யிருந்தவர் என்றுங் கேள்விப் பட்டேன். ஆதலால், வாய்த்தால் தமிழுக்கு வாய்க்காவிட்டால் வடமொழிக்கே என்று கருதிக்கொண்டு குரு பூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பிரான் அவர்களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். ‘Ia® mt®fis¥ g‰¿¤ bjÇíkh? என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள்; தெரியும் என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும் தமக்கு நினைவில்லை என்றார். அவ்வளவுதான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.... என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு. எங்கட்குப் பிற்பகல் 3 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது அப்பொழுதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவிக்கப்பட்டது. எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ் நாடு; மடம் தமிழன்மடம்; மதம்தமிழன் மதம்; பணம் தமிழன்பணம்! அங்ஙனமிருந்தும், தமிழன் நாய்போல் நடத்தப்படுவது இவ்விருபதாம் நூற்றாண் டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத் தெளிவாம். பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ் வேறிடத்தில் உண்டி படைக்கப்படினும் ஒரே நேரத்தில் படைக்கப் பட்டிருப்பின் ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப்பொது உண்டிச் சாலைகளில் பிராமணரின் எச் சிலிலைகளில் இருந்து கறிவகைகளை எடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாய் இருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமையாயின், இலவசமாய் உண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்! மடம் துறவியர்பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப்படுவன கொண்முடிபும் மெய்ப் பொருளியலும். முப்பத்து ஆறென்று கொள்ளப்படும் மெய்ப்பொருள்களுள் குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின் ஏனைநாடுகளில் ஏன் அஃதில்லை? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலரே சொல்ல வில்லையா? - இவை தமிழ்த் துறவோர்நிலை விளக்கங்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில் ஒரு நெடுஞ் சாலையைச் சற்றுமறித்துக் கொண்டிருந்த ஒரு நூறாட்டை வேப்பமரத்தை வெட்டி விடும்படி உத்தரவாயிற்று. அதிற் பேயிருக்கிறதென்று ஒருவரும் வெட்ட முன்வரவில்லை. கூலி அதிகமாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன் மேல் துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒருவெட்டு வெட்டினவுடன் பின் வாங்கிக்காய்ச்சல்கண்டு வீட்டிற் படுத்துக் கொண்டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த்தினும் வெட்ட ஒருவரும் இசைய வில்லை. அதன்பின் திருச்சித்தண்டலாளரான ஆங்கிலத்துரை, ஓர் 24மணிநேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டில்தாம்கையெழுத் திட்டு அம்மரத்தில் ஒட்டச் சொல்லி விட்டு, மறுநாள் தாமே சில வேலைக் காரரைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப்பட்டது. ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை. இது அச்சத்தினாலேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கப் பாவாணர் கூறும் சான்றுகளுள்ஒன்று. ஆராய்ச்சியாளர் அவலநிலை குறித்துப்பாவாணர் சுட்டும் ஒரு கட்டுரைப் பகுதி : முப்பதாண்டுகட்கு முன்னே ஒரு பெரும் புலவர் வடை என்னும் சொற்கு வடு என்பது வேர் என்றார். இக்காலத்தில் ஒரு பேராசிரியர் காரன் காரி என்னும் ஈறுகள் வடசொற்கள் என்றெழுதுகின்றார். மற்றொருவர், குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (1568) முடியலாகா அவ் வழக்குண்மையின், கடியலாகா கடனறிந் தோர்க்கே என்று தமிழ்ச்சொற்குக் கூறியதைப் பிறமொழிச்சொற்கும் கூறியதாகப் பிறழ உணர்ந்து சைக்கிள், மோட்டார், பசு (Bus) ரேடியோ முதலிய சொற்களையும் தமிழில் தழுவலாம் என்கிறார். இன்னுமொருவர், இந்தியால் தமிழ்கெட விருப்பதை, பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகை யினானே என்னும் நன்னூல் நூற்பாவால் (462) அமைக்கின்றார் என்கிறார். தமிழ்ப்பாவை 7 ஆம் ஆண்டு மலர்; கருப்பும் கறுப்பும். ஈ.வே. இரா. பெரியாருக்குப் பாவாணர் விடுக்கும் வெளிப்படை வேண்டுகோள் : தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வே. இரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது : வேண்டுகோள் அன்பார்ந்த ஐயா, வணக்கம், தாங்கள் இதுவரை அரைநூற்றாண்டாகக் குமுகாய (சமுதாய)த் துறையிலும் மதத்துறையிலும் தமிழ் நாட்டிற்குச் செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின், மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒருநாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை. ஆதலால், தங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க் காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகின்றேன். திட்டம் தமிழையும் அதன் வழிப்பட்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு, குடகு, துளு, கோத்தம், தோடம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கோண்டி, கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ என்னும் பதினெண் திரவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பித்தல். மதம் கற்பிக்கப் படாது. கடவுள் வாழ்த்துப் பாடப்பெறாது. அதற்கீடாகப் பெரியார்வாழ்த்து அல்லது புகழே பாடப்படும். கல்லூரிநடப்பிற்குரிய சட்டதிட்டங்களைத் தாங்களே அமைத்துத் தரலாம். ஆசிரியர் குழு முதல்வர் : பேரா. தி.வை. brh¡f¥gh v«.V., எல். â., தமிழ்ப்பேராசிரியர்: ஞா. தேவநேயன். துணைவர் : தமிழ் மறவர்வை. பொன்னம்பலனார்த. பிறமொழிகட்குத் தகுந்த ஆசிரியர் விளம்பரம் செய்து அமர்த்தப் பெறுவர். மாணவர் பள்ளியிறுதி அல்லது அதற்குச் சமமான தேர்வு முதல் வகுப்பில் தேறிய ஐம்பதின்மர் குலமத கட்சியின நாடு வேறு பாடின்றித் தெரிந்தெடுக்கப்பெறுவர். வெளியூர் மாணவர்க்கும் வெளிநாட்டு மாணவர்க்கும் உண்ணவும் தங்கவும் விடுதியிருக்கும். கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் பின்னர்த் தெரிவிக்கப்படும். மானியம் சென்னையில் சூழ்நிலத்தொடு கூடிய மாளிகை யொன்றும் ஐத்திலக்கம் உருபாவும். கடவை (Course) இலக்கணம், இலக்கியம், மொழிநூல், ஏரணம் (Logic), இசை, நாடகம் என்னும் ஆறும் ஐந்தாண்டு கற்பிக்கப்பெறும். பின் மூன்றும் தமிழிலேயே நடைபெறும். பாடத்திட்டம் பின்னர் வகுக்கப்பெறும். பயன் தமிழ்வடமொழியினின்று மீட்கப்பெற்றுத் தூய நடையில் கற்பிக்கவும் உலக முழுதும் பரப்பவும் பெறும். தமிழரும்திரவிடரும் ஆரிய அடிமைத்தனம் அடியோடு நீக்கி முன்னேற்றப் பாதையில் அடியிட்டு விரைந்து நடப்பர். ஐயாட்டைக் கடவை முடித்துப் பட்டம் பெற்ற மாணவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மொழியாசிரியரும் மொழி நூலாசிரியரும் இசையாசிரியரும் நாடகவாசிரியருமாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறுவர். அன்பன் ஞா. தேவநேயன் குறிப்பு : திருவள்ளுவராண்டு 2000 ஆடவை 13-ஆம் பக்கல் (25-6-69) அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு. மா. பா. சாரதி அவர்களின் தம்பி மகன் திரு. அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார்அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை. ஞா.தே. தென்மொழி 7:10,11. பக். 22-24. வெளிப்படைக் கடிதம் (An open letter) கருநாடக மாநில முதல்வர்மாண்புமிகு வீரேந்திரப்பட்டீல் அவர்களுக்குப் பாவாணர்வெளிப்படைக் கடிதம் ஒன்று ஆங்கிலத்தில் விடுக்கிறார். வாத்தல் நாகராசு என்பார் (சட்டமன்ற உறுப்பினர்) தமிழகத்தொடு சேர்ந்துள்ள தாளவாடியைக் கன்னட நாட்டொடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வன்முறை யாளரொடு தாளவாடியுள் புகுந்தார். தமிழர்க்கு இன்னல் விளைத்தார். அவரைத் தமிழ் நாட்டரசு சிறை வைத்தது. அவரை விடுவிக்கப் பட்டீல் முயன்று கொண்டிருக்கும்போதே, வன்முறைக் கும்பல் வெங்காலூர்க் கடைவீதியிலும் குடியிருப்பு களிலும் உள்ள தமிழர்களையும் சுற்றுலாச் சென்ற தமிழர் களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிப் பேரழிவும் பேரிழப்பும் செய்வித்தது. இதனைக் கண்டு கொள்ள முயலாத பட்டீல், நாகராசு சிறை வீட்டுக்கு முயன்றது போல் அதில் வெற்றி கண்டதுபோல், தமிழர்க்குப் பாதுகாப்பு ஏன் தரவில்லை. (8-5-70) உ.த.க. என்பது தமிழ்க்காப்பு தமிழ் வளர்ப்பு பற்றிய அமைப்பு மட்டுமன்று, தமிழினக் காப்பு அமைப்புமாம் என்பதை மெய்ப்பித்தவர் பாவாணர். அவ்வாறே ஈழச்சிக்கலில் தமிழர் உரிமை ஒறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட நிலையில் கொதிப் படைந்தவரும் பாவாணர். அவருணர்வே உ.த.க. அன்பர்கள் உழுவலன்புடன் உயிருரிமை உணர்வுடன் ஈழப்போராளிகளுக்கு உதவும் எழுச்சியாகக் கிளர்ந்ததாகும்! சங்கச் சான்றோர் செய்த அமைதிப் பணிகள், தூச் செலவுகள், இடிப்புரைகள் இன்னவற்றைப் பயில்வார் பாவாணரைச் சங்கச்சான்றோர் வரிசையராக எண்ணுவர் என்பது தெளிவு. உ.த.க மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள் உ.த.க. மாவட்ட அமைப்பாளர் பலர் தம் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆட்டை விழா அல்லது மாநாடு ஏதேனும் ஒரு மாவட்டத் திற்குச் சிறப்பாகவோ நிலையாகவோ உரியதன்று. எல்லா மாவட்டங்கட்கும் அல்லது தமிழகம் முழுவதற்கும் பொதுவான தாகும். ஏதேனுமொரு முறைப்படி ஆண்டுதோறும் ஒரு மாவட்டத்தில்தான் ஆட்டைவிழா நிகழ்தல்கூடும். சற்று முறைப்படி ஆண்டுதோறும் ஒரு மாவட்டமாக எல்லா மாவட்டங்களிலும் ஆட்டை விழா நடைபெற்றாதல் வேண்டும். அதன்பின் சுழற்சி முறைப்படி முன் நிகழ்ந்த மாவட்டத்திலேயே மீண்டும் மீண்டும் ஆட்டை விழா உரிய காலத்தில் நிகழவேண்டும். விழா ஒருமுறை ஒரு மாவட்டத்தில் நிகழினும் எல்லா மாவட்டமும் சேர்ந்தே அதை நிகழ்த்தும். மாநாட்டு வரவுக் கணக்கில் தொங்கல் விழுவதைச் சரிக்கட்டும் மிகைப் பொறுப்பே, விழா சுழற்சி முறைப்படி நடைபெறுவதால் இச்சிறப்பு நிலைமையும் எல்லா மாவட்டத்திற்கும் பொதுவானதே. ஆதலால், எங்கெழி லென் ஞாயிறெமக்கு என்றிருத்தல் கூடாது. தனிப்பொறுப்பில் விழாச் செலவை ஏற்றுக் கொள்ளக் கூடிய கோடிச் செல்வரோ இலக்கச் செல்வரோ நம் கழக உறுப்பினராயினமையால் பெரும்பாலும் செல்வநிலை தாழ்ந்த வரிடமே விழாச் செலவிற்குப் பணந்தண்ட வேண்டியுள்ளது. ஆதலால் ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் 200 உருபாவிற்குக் குறையாது விழாத்தொறும் தண்டித்தரல் வேண்டும் என்றும் விழாநிகழ்த்தும் மாவட்ட அமைப்பாளர் எச்சச் செலவுப் பொறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னரே நெறியிடப்பட்டுள்ளது. ஆதலால் மாநாட்டு நிகழ்விற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் 200 உருபாவிற்குக் குறையாது தண்டி உ.த.க. பொருளாளர் திரு. செந்தமிழ்க் கிழார்க்கு அனுப்பி விடுதல் வேண்டும். ஆண்டு முழுவதும் பணம் தண்டாமலே இருந்து மாநாட்டின் போது பதவியினின்று விலகிக் கொள்வது இருமடிக் குற்றமாகும்; பதவியினின்று விலகுபவர் ஆண்டுத் தொடக்கத்திலேயே விலகிக் கொள்ளல் வேண்டும். பணந் தண்டாதவர்அல்லது கொடாதவர் ஆட்சிக்குழுக் கூட்டத்திற் பார்வையாளராக இருக்கலா மேயன்றி, நடவடிக்கையிற் கலந்து கொள்ளக் கூடாது. பணந்தண்டும் ஆற்றலில்லாதவர் தாமாகப் பதவியினின்று விலகிக் கொள்வது கண்ணியமாகும். இனிமேல் நடைபெறும் ஆட்டை விழாவெல்லாம் திசம்பர் என்னும் ஆங்கிலமாத இறுதிக்காரி, ஞாயிறே நிகழும். ஆதலால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட அமைப்பாள ரெல்லாரும் தம் பங்குச் செலவுப் பணத்தை உ.த.க. பொருளாளர்க்கு அனுப்பிவிடக் கடவர். ஞா. தேவநேயன் உ.த.க. தலைவன் முதன்மொழி 1:3; 15-2-71. உலகத் தமிழ்க் கழக உறுப்பினர்களுக்கு அறிவிப்பு அருந்தமிழன்பர்காள், ஒவ்வோர் இயக்க வளர்ச்சிக்கும் அதற்குரிய ஒரு சிறப்பிதழ் இன்றியமையாதது அதனாலேயே பெரியார் குடியரசு விடுதலை என்னும் இதழ்களுடன் தம் இயக்கத்தை நடத்தி வந்தார். உ.த.க. இதழாயிருந்த தென்மொழி சில கரணியங்களால் நின்றுவிட்டது. இன்று அதற்குப் பகரமாக வெளிவருவது மீட்போலை ஒன்றே. தனித் தமிழைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள வேறு இரண்டோரிதழ்கள் இருப்பினும் அவற்றிற்கும் மீட்போலைக்கும் கொள்கையில் வேறுபாடுண்டு. ஆதலால், உ.த.க. கொள்கையை முழுத்தூய்மையாகக் கொண்ட மீட்போலையையே உறுப்பினர்அனைவரும் முதன்மையாக வாங்குதல்வேண்டும். ஒவ்வோர்உ.த.க. கிளையும் ஒரு படி வாங்குதல் இன்றிய மையாதது. கிளையில்லா விடத்தில் தனித்தமிழ்ப் பற்றாளர் தனித்தோ இணைந்தோ ஒவ்வொரு படி வாங்கலாம். கிளைகளும் தனி உறுப்பினரும் இன்றிருந்து படி யொன்றிற்கு ஆண்டிற்கு ரூ (ஐந்து) உருபா மேனி முன்பணமாக அனுப்பி விடுக. செல்வராயிருப்பவர் தமித்தும் வாங்கி இதழாசிரியரை ஊக்கலாம். படிகள் பெருகப் பெருக இழப்புக் குன்றும். இதழும் வளர்ச்சியடையும். தாள்விலைமிக ஏறியுள்ள இக்காலத்தில் 5 உருபா உயர் தொகையன்று. தமிழர் சிறுபான்மையராகவும் பெரும்பாலும் எளியராகவும் வாயில்லாதவராகவும் ஆரியச் சார்புமிக்க ஒரு திராவிட நாட்டில் (கன்னட நாட்டில்) வையாபுரிகள் நடுவில் இருந்து கொண்டு ஓர் அரசினர் மகளிர் கல்லூரியில் தன்னந்தனியான தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவர் தம் நெருக்கமான வேலைகட்கிடையே போதிய பணவுதவியுமின்றி ஒரு தனித்தமிழ் இதழை நடத்தி வருவது அரிதும் பெரிதும் பாராட்டத்தக்கது மாகும். ஆதலால், அவர்சிறிதும் தளர்ச்சியுறாவண்ணம் அவரை மேன்மேலும் ஊக்கிவருவது உண்மைத்தமிழர் அனைவர் தலைமேலும் விழுந்த தலையாய கடமையாகும். இனிமேல் இடையிடை என் கட்டுரைகளும் மீட் போலையில் வெளிவரும். அடுத்த ஆண்டுமுதல் இதழ் தோறும் வெளிவரும். இதழ் மிகவிரிவடைந்து சுவடிவடிவும் பெறும். இங்ஙனம் 24-7-80 ஞா. தேவநேயன் பிறந்தநாட் செய்தி இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென் கோடியில் கி.மு. 50000 (ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல்உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழி என்று ஏமாற்றித் தமிழகத்திற்புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல்வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள், தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லாவகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒருநாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப்பெயர் பெற்றவரெல்லாரும் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கு அறிவிக்கலாம். தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர் தம் அடிமைத்தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம். ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடைய வில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாகும். ஞா. தேவநேயன். - முதன்மொழி 1:3; 15-2-71 உலகத் தமிழ்க் கழகம், தமிழகம் உறுப்பினர்சேர்ப்புப் படிவம் 1. கிளைக்கழகப் பெயர் (கொட்டை எழுத்திற் குறிக்க) வட்டம் மாவட்டம் 2. உறுப்பினராக விரும்புபவரின் பெயர் (குலப்பட்டம் நீக்கித் தனித்தமிழிற்குறிக்க) 3. நிலையான முகவரி 4. தந்தைபெயர் (குலப்பெயர்நீக்குக) 5. அகவை 6. கல்வித்தகுதி 7. தொழில் அல்லது அலுவல் 8. அரசியற்கட்சித் தொடர்புடையவரா? ஆமெனில் எந்தக்கட்சி? 9. எழுத்து வன்மை உண்டா? (ஏதேனும் நூலியற்றி யிருப்பின் அல்லது பாடியிருப்பின் அதன் பெயரைக் குறிக்க) 10. இதுவரை செய்துள்ள தமிழ்த்தொண்டு (ஏதேனு மிருப்பின் குறிக்க) இடமும் பக்கலும் கைவரி உறுதிமொழிகள் 1. நான் என்னால் இயன்றவரை எப்பொழுதும் முழுத்தூய தமிழிலேயே பேசுவேன்; எழுதுவேன் பிறரையும் அங்ஙனம் செய்யுமாறு என்னால் இயன்ற அளவு தூண்டுவேன். 2. இன்றியமையாத இடங்களிலன்றிப் பிறஇடங்களில் தமிழையே கையாளுவேன். 3. என் வாழ்க்கையில் எல்லாச் சடங்குகளையும் தனித் தமிழிலேயே நடப்பிப்பேன். 4. குல, இன வேறுபாடுகளை நான் ஒப்புகிலேன். அவற்றின் பெயரையோ கொள்கைளையோ நான் எவ்விடத்தும் எந்நிலையிலும் கடைப்பிடியேன். 5. மதவேறுபாடுபற்றி நான் எவர்மீதும் வெறுப்புக் கொள்ளேன். 6. தமிழ்மொழிக்கும் நாட்டிற்கும் பண்பாட்டிற்கும் இழுக்கோ கேடோ செய்யும் எவ்வகைக் குழுவிலும் வினைப் பாட்டிலும் நான் ஈடுபடேன். 7. அவ்வப்பொழுது வெளியிடப்படும் தலைமைக் கழகக் கட்டளைகளை ஏற்றுச் செயற்படுத்த நான் எப்பொழுதும் அணியமாக உள்ளேன். 8. நான் ....... கட்சியிற் சேர்ந்திருப்பினும் தமிழ் முன்னும் கட்சி பின்னுமாகக் கொண்டுள்ளேன். ஆதலால் தமிழுக்கு முட்டுப்பாடு நேருமிடத்துக் கட்சியினின்று விலகி விடுவேன். எக்கரணியத்தையிட்டும் கட்டாய இந்தியை அல்லது நடுவணரசின் இந்தித் திணிப்பை ஏலேன். 9. உ.த.க. ஆட்டை விழாவோ சிறப்பு மாநாடோ (நான்சேரக்கூடிய) பொது வகைக்கூட்டமோ நடைபெற நாட்குறிக்கப்பட்டபின், அதே நாளில் நிகழ ஏற்பாடாகும் என் கட்சிக் கூட்டத்திற்கோ வேறுமாநாட்டிற்கோ நான் செல்லேன். 10. உ.த.க. சட்டதிட்டங்கள் எல்லாவற்றையும் படித்துப் பார்த்தேன். அவற்றைக் கைக்கொள்ள முற்றும் உடன் படுகிறேன். இது என் உறுதிமொழி. கைவரி..................... குறிப்பு : உ.த.க. உறுப்பினர்கள் மேற்காணும் முறையில் வெண்டாளில் ஒரு பக்கம் உறுப்பினர்சேர்ப்பும், மறுபக்கம் உறுதிமொழியும் எழுதிக் கைவரியிட்டு விடுக்க வேண்டும். (இது தற்காலிகமானது தலைமையகம் அச்சிட்டு வழங்கும் வரை) உ.த.க. கொடி கொடிநிற அமைப்பு வகைகள் : வானநீலம், வெள்ளை, அரத்தச்சிவப்பு (கொடிக்கு எழுவகை அமைப்புகளை வரைந்துள்ளார் பாவாணர்). நிறவிளக்கம் : 1. வானநீன்மை நீலவானத்தையும் நீலக்கடலையும் குறித்து வியனுலகியன்மையை (Universality) உணர்த்தும். 2. வெண்மை தமிழின் தூய்மையையும் தமிழ்ப் பண்பாட்டுத் தூய்மையையும் பகையின்மையையும் உணர்த்தும். 3. செம்மை செல்வம் மறவம் ஈகம் (தியாகம்) ஆகியவற்றை உணர்த்தும் (திரு. மி.மு.சி; 8-12-70) உலகத் தமிழ்க் கழகம் நடத்திய தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு. 31-12-72 ஞாயிறு அன்று, தஞ்சை அரண்மனை இசை மன்றத்தில்உலகத் தமிழ்க் கழகம் தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்னும் பெயரில் ஓர் அறை கூவல் மாநாட்டைக் கூட்டியது. இம்மாநாட்டில் தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் கருத்திற்குச் சார்பாக மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்பேரா. கோ. நிலவழகனார், திரு. சொல்லழகனார் ஆகியோர்தக்க சான்று காட்டி நிறுவுவதாகவும், பேரா. கே. ஏ. நீலகண்டர் (சாத்திரியர்)பர். சுநீதி குமார் சட்டர்சி, பர். தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தனிநாயக அடிகள், பர்.வி.ஐ. சுப்பிரமணியம்ஆகியோர் அக்கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் தக்க சான்றுகள் காட்டி மறுக்க வேண்டும் என்றும். இவ்விருசாரார் கருத்துகளையும் கேட்டு, மாநாட்டிறுதியில் திரு. குன்றக்குடி அடிகளார், திரு. காஞ்சி ஞானப் பிரகாச அடிகளார், திரு. அழகரடிகள், அரச வயவர் திரு. முத்தையா, திரு. கருமுத்து தியாகராசர், புதுப்புனைவாளர் கோவை திரு. கோ. துரைசாமி (G.D. Naidu), பர். திரு. மணவான ராமானுசம் பர். திரு.வ.சுப. மாணிக்கனார் பெரும்புலவர் நீ. கந்தசாமி உரை வேந்தர் திரு. ஔவை சு. துரைசாமை, பெரும் புலவர் திரு.மே.வீ. வேணுகோபாலனார், வரலாற்று அறிஞர் திரு. மயிலை, சீனி. வேங்கடசாமி ஆகிய பன்னிருவரும் அடங்கிய நடுவர் குழு அக்கொள்கை பற்றி அறுதியும் உறுதியும் இறுதியுமான தீர்ப்பு வழங்கவேண்டுமென்றும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன ............... இக்கருத்தரங்கு அறை கூவல் மாநாடு தி.பி. 2003 அலவன் 29-ஆம் பக்கல்ஞாயிறு அன்று, காட்டுப் பாடியில்நிகழ்ந்த உலகத்தமிழ்க் கழக ஆட்சிக் குழுவின் தீர்மானப்படி கட்சித் தலைவரும் மொழிப் பேரறிஞருமாகிய பெரும் பேராசிரியர் ஞா. தேவ நேயப் பாவாணர்அவர்களால் கூட்டுவிக்கப் பெற்றதாகும். இம் மாநாட்டுக்கு வரவேற்புக் குழுத்தலைவர் திரு.த.ச. தமிழனார். புலவர் திரு. சா. அடலெழிலனார்செயலாளர்; பொருளாளர்திரு. செங்கை. செந்தமிழ்க் கிழார். கண்காணகர் திரு. இறைக்குருவனார். நடுவராக அழைக்கப் பெற்றோருள் மூவர் உடல்நல மின்மை காட்டி இசைந்திலர். ஏனையோர் இசைந்து எழுதினர். எனினும் மாநாட்டுக்கு நீ. கந்தசாமியார், கோ. துரைசாமியார், வ.சுப. மாணிக்கனார்ஆகிய மூவர் மட்டுமே வந்திருந்தனர். மற்றையோர் வரவியலாமை தெரிவித்திருந்தனர். 31-12-72 ஞாயிறு காலை 9-15 மணிக்குத் தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து நீண்டதோர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர் வலத்தின் பின் கழகத்தலைவர் பாவாணர் இன்னியங்கியில் வந்தார். காலை 10-30 மணியளவில் நீ. கந்தசாமியார் தலைமையில் மாநாடு தொடங்கியது, இசைப்பேரறிஞர் சுந்தரேசனார் தமிழ் வாழ்த்துப் பாடினார். த.ச. தமிழனார் வரவேற்புரை நிகழ்த்தினார். கோ. நிலவழகனார், வீ.ப.கா. சொல்லழகனார், உரைக்குப்பின் பாவாணர்உரையாற்றினார். இக்கருத்தரங்கு ஆரியர் தம் பொய்க் கூற்றையும் நம் வையாபுரிகளின் புரட்டுகளையும் அம்பலப்படுத்தவே கூட்டப் பெற்றதென்றும், எதிர்க் கழித்துக் கொண்டவர்கள் நேரிடையாகத் தம் கருத்துகளை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள் என்றும், மறைமுகமாகப் பலகேடுகளைத் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் செய்து வருகிறார்கள் என்றும், வேண்டுமானால் இக் கருத்தரங்கால் நிறைவுறாதவர்கள் தாமே ஒரு கருத்தரங்கைக் கூட்டலாம் என்றும், அதற்கு இந்தியாவின் உயர் நெறி மன்ற நடுவர்களையோ குடியரசுத் தலைவரையோ கூடநடுவர்களாக அமைக்கட்டும் என்றும், தாம் ஒருவரே தமிழ் தொன்மை வாய்ந்தது என்றும், தமிழனின் பிறந்தகம் குமரிக் கண்டமே என்றும், தமிழனின் பிறந்தகம்குமரிக் கண்டமே என்றும் நிறுவுவதாகவும், தம்கருத்துக்கு எதிர்க்கருத்தை எவரும் எடுத்துக் கூறலாம் என்றும் அதன்பின் தீர்ப்புக் கூறட்டும் என்றும், அதன்பின் எவரும் இக்கருத்துப்பற்றி வாய் திறக்கக்கூடாது என்றும் சூளுரைத்துப் பேசினார். முற்பகல் நிகழ்ச்சி அவ்வளவில் நிறைந்தது. பிற்பகலில், திருக்குறள் பெருமாள் பாவேந்தர் தமிழுணர்வுப் பாடல்கள் பாடினார். வ.சுப. மாணிக்கனார் விரிந்ததோர் உரையாற்றினார். கோவை கோ. துரைசாமி, பாவலர் பெருஞ்சித்திரனார் ஆகியோர் பேசினர். காஞ்சி ஞானப்பிரகாச அடிகள் கட்டுரையும், பர்.தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அறை கூவலுக்கு மறுமொழியாக விடுத்த முடங்கலும் இறைக் குருவனாரால் படிக்கப்பட்டன. விழாத்தலைவர் திரு. நீ. கந்தசாமி தமிழன் பிறந்தகம் குமரி நாடே என்னும் உண்மையை உறுதி செய்து நிலை நாட்டிக் கருத்தரங்கை முடித்து வைத்தார். தமிழன் பிறந்தகம் குமரி நாடே என அவையோர் அனைவரும் ஒருமுகமாக முழங்கினர். மாநாட்டுச் செயலாளர் சா. அடலெழிலனார் நன்றி கூறு மாநாடு இனிதே நிறைவுற்றது. (தென்மொழி சுவடி.10) தமிழன் பிறந்தகத் தீர்மானம்பற்றிப் பாவாணர் கடிதங்களில் பல செய்திகள் உள. தமிழ் இலக்கிய வரலாற்று நூலின் முகப்பில், தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப்பட்டி ஒன்றுண்மையும் அறிக. இந்தித்திணிப்புப் பற்றிய அறிக்கையின் ஒருபகுதி தமிழுக்கு அதிகாரிகள் தமிழ்ப் பேராசிரியரேயன்றி, பேராய (Congress) அமைச்சர்களும் வடவரும் அல்லர். தமிழர் நூற்றுமேனி எண்பதின்மர் தற்குறியாதலால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் பிறரும் மொழிநாகரிகம் பண்பாட்டுத் துறையில் தமிழ் நாட்டுப் படிநிகராளியர் (Representatives) ஆகார். தமிழைக் காத்தல் தமிழாசிரியர் கடமை. தமிழுக்கு நேரும் கேட்டை உணரக் கூடிய பொதுமக்கள் மாணவரே. வருங்காலத் தமிழ் நாட்டையாளும் பொறுப்பு வாய்ந்த வரும் அவரே. ஆதலால் பேரா. இலக்கு வனாரைத் தண்டிப்பின பேரா. மு.வ. பேரா. அ. சிதம்பரனாதனார் உட்படத் தமிழாசிரியர் அனைவரும் பதவியை விட்டு விடுதல் வேண்டும். ஞா. தேவநேயன். தென்மொழி 3:1:24. சீர்கேடு எழுத்து வடிவம் பற்றி அரசு வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். அது சீர்கேடே யன்றிச் சீர்திருத்தமன்று. பெரியார் தமிழாக்கங்கருதி எழுத்து மாற்றஞ் செய்யவில்லை. அச்சுச் செலவைக் சுருக்குஞ் சிக்கனம் பற்றியே செய்தார். இந்தியையும் தமிழ்ப் பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தி யெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப் படையாய்ச் சொன்னார். தமிழெழுத்து முதற் காலத்தில் விடுதலை எழுத்துப் போன்றேயிருந்தது. இருசுழியும் இரு வளைவுமுள்ள எழுத்து வடிவங்கள் மயக்கத்தை விளைத்ததால் அவற்றிற்குரிய கொம்பையும் இணைக் கொம்பையும் காலையும் நீக்கியும் மாற்றியும் எழுதினர். இலக்கியம் பண்டை எழுத்துவடிவில் இருக்கும் வரை தமிழுக்குக் கேடில்லை. என்பது பாவாணர் மடல். - அன்பு வாணன் வெற்றிச்செல்வி 31-10-78 பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்ற வேண்டும் என்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில்அதைமாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒரு முறை கூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப்பற்றிச் சொன்னதில்லை. 1938 இல்அவர் ஈரோட்டில் இருந்து எனக்கெழுதிய ஏழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது. 1947 - இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. -பாவாணர் 17-9-79-இல் பேரா. கு. பூங்காவனத்திற்கு வரைந்த கடிதப் பகுதி. தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தனி நிலைமையே மாறிவிடும். அது பெரியாரின் அடிப்படைக் கொள்கையுமன்று என்பது பாவாணர் கொள்கை (கடிதம் 9-11-79; வி. பொ. பழனி வேலனார்). இகரத்தைச் சுழித்து ஈகாரமாக்குதல் ஒன்றே செய்ய வேண்டிய எழுத்துமாற்றம் என்பவரும் அவர். அதனைப் பாராட்டும் வ.சுப. மாணிக்கனார் தமிழாழ்வார் எனப் போற்றப்பெற்ற மொழியறிஞர் தேவ நேயப்பாவாணர் வடமொழி யெழுத்துக் கலப்பு தமிழின் தூய்மையைக் கெடுக்கும் எனவும் தமிழெழுத்து வரிவடிவ மாற்றமும் தமிழுக்குத் தேவையில்லை எனவும் அழுத்தமாகக் கூறியவர் என்கிறார். (எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போய் முடியும்? பக்.2) குகரத்தைச் சுழித்துக் கூகாரமாக்குதலும், ஔ என்பதிலுள்ள ள வைச்சிறிதாக்குதலும் ஏற்கத் தக்கவை என்பதும் பாவாணர் கருத்துகளாம். ‘jÄbHG¤Jkh‰w« j‹khd¤ jªijah® bfhŸifah? எனக் கட்டுரை ஒன்றும் வரைந்தார்பாவாணர் (செந். செல். 54:325). ஆய்த வரியைச் சில அயலொலி குறிக்கப் பயன்படுத்தி ஃபி (F) ஃச் (sh, ஷ) என்றும் பிறவாறும் ஆண்டு வருதல் பகைவர் கையில் குடுமியைக் கொடுக்கும் பேதைமை போலாகும். எழுத்தென்பது ஒலியேயன்றி வரியன்று. ஒலியின் குறியே வரி. அயலெழுத்து வேண்டாமென்றுநாமே சொல்லிக்கொண்டு நாமே அயலெழுத்தை ஆள்வோமாயின் அதை என்னென்பது? ஆய்த ஒலியைத் தவறான வழியிற் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகின்றது. கஃசு என்பதை Kahsu என்று ஒலிப்பதா? கஷு (Kashu) என்று ஒலிப்பதா? ஒலிஇலக்கணமும் தமிழியல்பும் அறியா மாற்றம் செய்தலால் பகைவர்க்குப் பிடிகொடுத்து அவர் எள்ளி நகையாடநேரும். - வ.சு; 31-1-52 அதிகாரப் பயன் நற்றமிழன் தக்க அதிகாரமுள்ள பதவியில் இருப்பதன் நலப்பாட்டைப் பாவாணர் தமிழ்க்குடி மகனார்க்கு வரைந்த கடிதமொன்றில் சீராகவும் செறிவாகவும் பொறித்துள்ளார் (11-8-79) கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்தமையால் அதற்குத் தக்க கடப்பாடுகளைச் சுட்டினார் பாவாணர்: தமிழ் வளர்ச்சியும் தமிழன் உயர்வும் ஒன்றை யொன்று தழுவியவை. அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் அதிகாரத்துடன் ஓரிடத்திருக்கும் நிலையே தொண்டு செய்யச் சிறந்தது. அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் அதிகாரத்துடன் ஓரிடத்திருக்கும் நிலையே தொண்டு செய்யச்சிறந்தது. 1. கல்லூரிமாணவர் அனைவர்க்கும் தமிழ்ப் பற்றூட்ட லாம். தமிழ் என்பது செந்தமிழே. 2. ஆண்டுதோறும் வெளியேறும் மாணவருள் ஒருவரை யேனும் தமிழ்த் தொண்டராக்கலாம். 3. அரசோ பல்கலைக் கழகமோதமிழுக்குக் கேடான சட்டம் பிறப்பிப்பின் அல்லது கட்டளையிடின் கண்டித்துத் தவிர்க்கலாம். 4. இதற்குப் பிறகல்லூரி வையாபுரிகள் வலிமையைக் குறைக்கலாம். 5. இந்தித் திணிப்பையும்வடமொழி வழிபாட்டையும் தடுக்லாம். 6. உ.த.க. மாநாட்டுக்குத் தலைமை தாங்கலாம். 7. கல்லூரிச் சார்பில் அல்லது தமிழ்ச் சார்பில்உலகஞ்சுற்ற வாய்ப்புண்டு. ஆங்கிலப் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் பெருக்கிக் கொள்க என்பது அது. தமிழாசிரியருள், தமிழ்ப்பற்றாளர் - தமிழ்ப்பகைவர் - கொள்கைகள் எனப்பாவாணர்வகுத்துக் காட்டும பதின் கோட்பாடுகள் : 1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு, தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். 2. மாந்தன் பிறந்தகமும் குமரி நாடே. - தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர். 3. தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமமுமாகும். - தமிழ் திராவிடத்தை ஒத்தது. ஆரியத்தால் பெரிதும் வளப்படுத்தப்பட்டது. 4. இந்திய நாகரிகம் தமிழரது. - இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம். 5. தமிழ் இயன்மொழி, தனிமொழி. - தமிழ் திரிமொழி, கலவைமொழி. 6. கடன் கொள்வதால் தமிழ் தளரும். - கடன் கொள்வதால் தமிழ் வளரும். 7. இறையனாரகப் பொருளுரையினின்று பெரிதும் வேறுபட்ட முக்கழகங்கள் பண்டைத் தமிழகத்திருந்தன. - பண்டைத் தமிழகத்தில் ஒரு கழகமும் இருந்ததில்லை. 8. தமிழே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு மொழியாகவும் இருத்தல் வேண்டும், - வடமொழியே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு மொழியாகவும் தொடர்தல்வேண்டும். 9. தமிழ்நாட்டிற்கு இருமொழித் திட்டமே ஏற்றது. - தமிழ்நாட்டிற்கு மும் மொழித்திட்டம் ஏற்கும். 10. இந்தியப் பொது மொழியாயிருக்கத் தக்கது ஆங்கிலேமே. - இந்தியப் பொதுமொழியாயிருக்கத் தக்கது இந்தியே. தமிழாசிரியப் பணிக்குத் தமிழ்ப் பற்றுண்மை யின்மை களைக் கண்டறிந்து கொள்ளும் கொள்கை வேறுபாடுகள் இவை என்கிறார், - மணணில்விண். 96-97 13. பல்சுவைப் பாகு பல்சுவைப் பாகு என்னும் இப்பகுதி முப்பகுப்புடையது. பாவாணர் வாழ்வில்நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள், சொல்லாட்சிகள், செய்திகள், குறிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள. ஓராற்றான் பொருணிலை கருதிக் கேட்டலும் கிளத்தலும், நெருங்கலும் நிகழ்தலும், அறிதலும் ஆய்தலும் எனப்பகுக்கப் பட்டிருப்பினும், மூன்றன் மயக்கமும் இடம்பெற வாய்ப்புண்டு. எனினும் பல்சுவைப்பாகு என்னும் பொதுப் பொருளுக்குத் தகும். 1. கேட்டலும் கிளத்தலும் அடிப்பா? எடுப்பா? காரைக்குடி அழகப்பா கல்லூரிக்குப் பாவாணர் பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர்தங்குவதற்கெனத் தனி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இலக்கிய மன்றச் செயலர், பாவாணரை அழைத்துக் கொண்டு தங்கு விடுதிக்குச் சென்றார். சென்றதும் பாவணர், விடுதியில் எடுப்பா? அடிப்பா? என வினவினார். செயலர்திகைப்படைந்தார். அவர்க்குப் பாவாணர் கூறுவதென்ன என்பது புரியவில்லை. அவர்திகைப்பதைக் கண்ட பாவாணர் கழிப்பு எடுத்துச் செல்லும் அமைப்பினதா? Flush-out அமைப்பினதா? எனக் கேட்டார். அவர், அடிப்பு என்றார். பாவாணர்சொல்லாட்சிப் புதுமை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு எளிய இயல்பான மொழியாக்கம் இது! எச்சம் காரைக்குடியில் நிகழ்த்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவாணர், தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும் என்பதிலுள்ள எச்சம் என்னும் சொற்பொருளை விளக்கிப் பலப்பல எடுத்துக்காட்டுகளைக் காட்டினார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மாவட்ட மன்ற நடுவர் ஒருவர் என்னையா எச்சம், எச்சம் என்று, காக்கை குருவியும்தான் எச்சம் போடுகிறது என்றார். சற்றும் அதனைக் கேட்டுத் திகைப்போ விதிர்ப்போ அடையாமல்பாவாணர், ஆமாம்; வழக்குரைஞர் பார்ப்பதும் கே (case) தான்; பண்டுவர் பார்ப்பதும் கே தான்; பொருள்கள் வைப்பதும் கேதான்; கே என்பதற்கு எத்தனை பொருள்கள்; எச்சம் என்னும் ஒருசொற் பல பொருளுக்கும் அப்படித்தான் என்றார். இதனைக் கூறியவர் அறிஞர் தமிழண்ணல். பகலுணவும் இராவுணவும் ஒருகால் பேராசிரியர்தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆசிரிய நண்பர்கள் சிலருடன் தாரைமங்கலம் என்னும் சிற்றூர் போய் இரவு தங்கியிருந்து மறுநாட் காலையில் திரும்பிவந்தார். அவரை அன்பர் சிலர் சூழ்ந்துகொண்டு, ஊர்போய் வந்த வகைபற்றி உசாவினர். அவருள் ஒருவர், ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன என்றார். பாவாணர் பகல் உணவு பகல் உணவாகவும், இரா உணவு இரா உணவாகவும் இருந்தன என்றார். பகல் உணவு என்றதில்பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுத்துண்ண நேர்ந்ததெனவும், இரா உணவு என்பதில் அனைவரும் உணவின்றி இரவைக் கழிக்க வேண்டியிருந்ததெனவும் உணர்ந்து கொண்டு கூடியிருந்தவர் மகிழ்ந்தனர். பசியும் பட்டினியும் தமிழ் வளத்தால் பறந்து விடுகின்றதே. -தென்மொழி. பாவாணர் நினைவிதழ் பக். 42 மன்னிக்க - உருதுச்சொல் பாவாணர் பால் வாங்கிக்கொண்டு தெருவில் நடந்து வந்தார். எதிரே மிதிவண்டியில் வந்த ஒருவர் அவர் மேல் மோதித் தள்ளிப் பாலும் கொட்டிப்போகச் செய்தார். தாம் செய்ததே தவறு என வருந்திய மிதிவண்டி ஓட்டி, ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார். மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக் கொள்க என்று சொலுங்கள் என்றார். அந்த இடர்ப்பொழுதிலும் சொல்லாய்வு செய்யும் இந்த விந்தை மாந்தரை வியப்போடு எண்ணி மிதிவண்டியோட்டி ஐயா பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். போம்; பொறுத்தோம் என்றார் பாவாணர். - இதனை எழுதியவர் மின்னூர் சீனிவாசனார். பீச்சு கடற்கரைமின் தொடர்வண்டிச் சாலைப்பகுதியில் பாவணர் சென்று கொண்டிருந்தார். தொடர்வண்டி நிலையத்தில் பீச்சு டேசன் என ஆங்கிலத்திலும் தமிழிலும் பலகையிருக்கக் கண்டார். இங்கே என்ன கறவைமாடா கட்டி வைத்திருக்கிறான் பீச்சுவதற்கு என்று தம்மொடும் இருந்த திருக்குறள் முனுசாமி அவர்களிடம் கூறினாராம் பாவாணர். (பாவாணர் பெருமை.99) குடிதண்ணீர் குமட்டும் பாவாணர் மன்னார் குடியில் பணிசெய்து வந்த காலம். ஓரிடத்தில் குடிதண்ணீர் பொதுமக்கள் பயனுக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை எவரும் வீண்படுத்தக் கூடாது என்பதற்காகக், குடிதண்ணீர்க்கு மட்டும் என்று எழுதியிருந்த எழுத்துகளில் க என்பதை எவனோ ஒருவன் சுரண்டிவிட்டான்! சொற்பொருள் என்ன ஆகிவிடுகின்றது? குடிதண்ணீர் குமட்டும் எனப் பலரும் குடியாது சென்றனர் என்று நகைச் சுவையுடன் சுட்டுகிறார் பாவாணர். அவர்க்கு நகைச்சுவை இயல்பானது. சோறும் சாதமும் சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாடு 1958; இடம் கோவை; தமிழ் மொழியில் கலைச்சொல்லாக்கம் பற்றி உரையாற்றிய பாவாணர் உரைத்தது: சென்னையிலே ஒருமுறை நானும் சப்பையா பிள்ளையும் இருந்தபோது திருநெல்வேலியிலிருந்து நான் சைவ வேளாளன் என்று தம்மைப் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் ஒருவர் வந்தார். rh¥ã£L tªjJ« ‘v‹d Iah e‹whf¢ rh¥ã£O®fsh? என்று கேட்டேன். சாதம் நன்றாக இருந்தது என்றார். சோறு என்று சொல்லுங்களேன் என்றேன். nrhW v‹W brhšYj‰F, eh‹ v‹d gŸS giwah? என்றார். அப்போது நான் பள்ளு பறையன்தான் சோறு உண்பதா? அப்படியானால் நீர் வேறு உண்ணும் என்றேன். ஆகவே, தமிழன் இப்படித் தன்னைத் தாழ்த்தி வைத்திருக்கிறான். இஃது ஒன்றே போதும், தமிழ் தாழ்த்தப்பட்டது. தமிழர் தாழ்த்தப்பட்டனர் என்பதற்கு என்றார். தென்மொழி 1 : 10 அங்காடி ஒரு நாள் சென்னை நகரப்பேருந்தில் பாவாணருடன் வந்தேன்; உட்கார இடமில்லாமையால் நிற்க நேர்ந்தது. வண்டி யோட்டத்தில் மிகுந்த குலுக்கல் உண்டாகியது. பாவாணர் நகைத்துக்கொண்டே, அங்கம் ஆடுகின்ற இடம்தான் அங்காடி என மலையாள அகர முதலி கூறகின்றது. பேருந்தையும் அங்காடி என்று கூறலாம். ஏனெனில், இங்கேதான் நன்றாக ஆடுகின்றது எனப்பெருநகை செய்தார். வண்டியின் இயல்பான ஆட்டத்தொடு பாவாணர் தாமே தம் உடலை அசைத்துக் காட்டியமை எத்தகைய குழந்தை இவர் என எண்ணத் தோன்றியது. தனிப்பால் ஒரு சமயம் பாவாணரிடம், தமிழில், தனித் தமிழ் என ஒன்று உண்டா? என்று ஒருவர் வினாவினார். உடனே பாவாணர், பால் கிடைக்கும் என்று எழுதாமல் தனிப்பால் கிடைக்கும் என்று எழுதும் நிலை ஏன் ஏற்பட்டது? கலப்படப் பால் உண்டாகிய மையால், கலப்பில்லாமை காட்டத் தனி என்பது சேர்க்கப்பட்டது போல், தமிழுக்கும் ஏற்பட்டது என்றார். மரத்தல் எல்லாச் சொல்லும் பொருள் குறித்ததே என்கிறீர்கள்; இடுகுறிப்பெயர் என்று நன்னூலார் கூறுகிறார். மரம் என்பது இடுகுறிப்பெயர் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. அதற்கும் காரணம் உண்டா? எனப் பெரும்புலவர் பா. நாராயணர், பாவாணரை வினாவினார். அவர் உடனே, நாம் நெடுநேரம் உட்கார்ந்திருக்கிறோம்! எழும்புகிறோம்; மதமதப்பு உண்டாகின்றது! என்ன சொல்கிறோம்? மரத்துப்போய் விட்டது என்கிறோம்! ஆம் மரத்தைப் போல் உணர்வு குன்றிய நிலைக்குப் போய்விட்டது என்பது தானே மரத்துப்போதல் என்பதன் பொருள். உணர்வு நிலையில் மிகக்குறைந்தது என்பதனாலேயே மரம் எனப்பட்டது என்பது விளங்குகின்றது அல்லவா என்றார். பெருந்துருத்தியார் சேலத்தில் ஒரு பாடகர் (பாகவதர்) இருந்தார். அவர் பெயர் லம்போதர பாகவதர் என்பது. லம்போதரர் என்பது பிள்ளையார் பெயர்களுள் ஒன்று. பெருவயிறர் என்பது (லம்போ உதரர்) பொருள். மத்தள வயிறன் என்பார் அருணகிரியார். பாவாணர் லம்போதரரைத் தமிழ்ப்பெயரிட்டு வழங்கினார். அது பெருந் துருத்தியார் என்பது. பெருந்துருத் தியாரே வாரும்; பெருந் துருத்தியாரே இன்னபாடல் பாடும் என்றே கூறுவார். அவர் பெயர் தமிழில் பெருந்துருத்தி யாராக நிலைத்தது! இதனைச் சேலம் நாகரத்தின ஓதுவார் உரைத்தார். தாம் உடனிருந்த காலத்து நிகழ்வெனச் சுட்டினார். கடுஞ்சறுக்கல்கள் பா.வே. மாணிக்கரின் மூத்தார் பா. வே. பொன்னுசாமி, அவர் திருக்குறள் இராமாயணம் ஆகியவற்றில் பெருந் தேர்ச்சியர். சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமியார், பொன்னுசாமி, பாவாணர் ஆகிய மூவரும் தமிழ் நிகழ்ச்சிகளில் எல்லாம் கட்டாயம் இணைந்திருப்பர். பொன்னுசாமியார் தலைமையில் பாவாணர் பரிமேலழகரின் கடுஞ்சறுக்கல்கள் எனப் பேசினார். பேசி அமர்ந்ததும் பொன்னுசாமியார் தம் முடிப்புரையில், பரிமேலழகரின் கடுஞ்சறுக்கல் என்னும் பொழிவு வழியே பாவாணரின் கடுஞ்சறுக்கல்களையே கண்டோம் என்று ஒவ்வொன்றாக மறுத்து விளக்கினார். ஒவ்வொரு மறுப்பைக் கேட்டும் பாவாணர் நகைத்தமை - எவரையோ மறுத்துரைப்பதாக எண்ணி நகைத்தமை போலிருந்ததேயன்றித் தம்மை மறுத் துரைத்ததாகக் கருதவே இல்லை என்றார் நாகரத்தின ஓதுவார். கணியரைக்கேட்க சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களும், நகரவைத் தலைவர் இரத்தினசாமி அவர்களும் மிகச் செல்வாக் குடையவர்: பெரியாரின் தன்மானக் கொள்கையில் தலைநின்றவர். எனினும் எதிர்ப்பாளர் சிலர் இருத்தல் நடைமுறை தானே! கல்லூரிச் சுற்றுச் சுவரிலே சில தொடர்கள் முதல்வரையும் தலைவரையும் பற்றிப் பழிப்பாக எழுதப் பட்டிருந்தன. அதனைக் கண்ட முதல்வர் அதன்முன் கண்டும் கேட்டும் அறியாது அதனைக் கண்டு வருந்தினார். ‘ah® brŒâU¥gh®? எனத் திகைத்தார்; பலரைச் சூழ்ந்தார். பாவாணர், முதல்வர் சூழ்நிலையை அறிந்து வருந்தியிருக்கத் தானே வேண்டும்! அந்நிலையிலும் அவர் குழந்தையாகவே இருந்தார்! என்த இடத்தில் எது சொல்ல வேண்டும் என்று தெரியாமல் உரையாடும் குழந்தையாகவே இருந்தார். இராமசாமியார்க்குக் கணியத்தில் மிகுந்த நம்பிக்கை யுண்டு; கணியை நாடித் தேடிப் பார்க்கும் வழக்கமும் உண்டு. அதனை அறிந்திருந்த பாவாணர், இவரா அவரா என ஏன் ஐயுற வேண்டும்? கணியனைப் போய்ப்பார்த்தால் அவன் கண்டு காட்டிக் கொடுத்து விடுவானே என்று நகைப்போடு கூறினார். பாவாணக் குழந்தையின் நகைப்போடு தாமும் நகைத்தாரேயன்றி உளம் வருந்தினார் அல்லர் இராமசாமியார். ஏனெனில், பாவாணரைப் புரிந்து கொண்டவர் அவர். கழுத்தறுப்பு பாவாணரின் வகுப்புத் தேர்வுத்தாள் கட்டுகளை எடுத்துத் திருத்தித் தருமாறு கூறினார் முதல்வர் இராமசாமியார். என்ன இந்தக் கட்டுகளைத் திருத்தவா? ஈரத் துணியைக் கழுத்தில் போட்டு அறுத்து விடலாமே இதற்கு! என்று சட்டென மறுமொழி தந்தாராம் பாவாணர். அவர் வகுப்புத்தாள்! திருத்த வேண்டிய கடமை அவர்க்கே உண்டு! எனினும், இவ்வாறு மறுமொழி சொல்பவர்க்கு என்ன சொல்வது? பாவாணர் விந்தை மனிதர் என்பதைப் புரிந்துகொண்ட அவர் வேறொருவரிடம் கட்டுகளைத் தந்து மதிப்பிடச் செய்தார். இவற்றைத் தம் உரையாட்டிடையே சிலம்பொலி செல்லப்ப னார் (5-5-89) உரைத்தார். என்வாழ்வில் பசுஞ்சோலையாக இருந்தது சேலங் கல்லூரியில் பணிசெய்த பன்னீரியாண்டே என்னும் பாவாணர், இராமசாமியாரை நினைந்து உருகுகிறார்; எழுதுகிறார்; பதிகம் பாடுகிறார்; அவர் வரலாற்றை நன்றிக் கடப்பாடு கருதியேனும் எழுதியாக வேண்டும் என்கிறார். இவர் சொன்னார் அதனால் வந்தேன் பாவாணர்க்கு, அரசின்சார்பில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப் பட்டது. அதனைக் கொண்டுவந்து தமிழ் வளர்ச்சித் துறை சிலம்பொலி செல்லப்பனாரைக் கண்டார் பாவாணர். நாம் விரும்பிய வண்ணம் ஆணை வந்து விட்டது, நான் பதவியேற்கிறேன் என்று முதல்வரிடம் ஒருசொல் சொல்லி விட்டு வந்து விடலாம். தங்கள் பணியமர்வுச் செய்தி அவர்க்கு மகிழ்வாகவும் இருக்கும். நம் நல்லெண்ண வெளிப்பாடாகவும் இருக்கும் என்றார் செல்லப்பனார். நான் முதல்வரைப் பார்த்துச் சொல்லவேண்டுமா? நீங்கள் சொல்கிறீர்கள். அதனால் பார்த்து விடலாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றார் பாவாணர். ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டாம். குறளகத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள் நானே அழைத்துப்போகிறேன். என்றார் செல்லப்பனார். மறுநாள் குறித்த நேரத்தில் பாவாணர் குறளகத்திற்கு வர, அவரை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் சந்தனமாலை ஒன்று வாங்கினார் செல்லப்பனார். ஏன் முளரி (ரோசா) மாலை வாங்கியிருக்கலாமே? என்றார் பாவாணர். வாங்கலாம்; இன்று முதல்வரைப் பார்க்க வாய்ப்பில்லாது போயினும், நாளையும் இம்மாலை பயன்படும்; முளரி மாலை பயன் படாதே. அதனால் தான் என்றார் செல்லப்பனார். அப்படியா! இது நல்ல ஏற்பாடு தான் என்று நகைத்தார் பாவாணர். முதல்வரைக் கண்டனர். செல்லப்பனார் பாவாணரிடம் மாலையைத் தந்து முதல்வர்க்குப் போடச் சொல்லியிருக்கிறார். அப்படியே சார்த்தி விட்டு இருக்கையில் தலை குனிந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் பாவாணர். என்ன செய்தி என வினாவினார் முதல்வர். அகர முதலிப்பணியை ஏற்பதை முன்னிட்டுப் பார்த்துப் போகலாம் என வந்திருக்கிறார் என்றார் செல்லப்பனார். இவர் பார்த்து விட்டு வந்து விடலாம் என்றார்; அதனால் வந்தேன் நல்லது; வருகிறேன் என்று புறப்பட்டு விட்டார் பாவாணர்! இவர்தாம் பாவாணர்! இம்முதல்வர், கலைஞர்! இதனை உரைத்தவர் செல்லப்பனார். அவர் உரையாடட்டும் வள்ளுவர் கோட்டத்திலே ஒருவிழா; திருவள்ளுவர் திருநாள்விழா. நாள் 15-1-79 பாவாணர் முதலிய ஐவருக்குச் செந்தமிழ்ச் செல்வர் என்னும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி. முதல்வரை அடுத்துப் பாவாணர் அமர்ந்திருக்கிறார். தம் பக்கத்தில் எவர் இருக்கிறார் என்பதைப்பற்றிய எண்ணம் பாவாணர்க்கு ஏற்படுவது இல்லையே! பாவாணர் துறை சார்ந்த மதிவாணர், ஐயா, தங்களை அடுத்து முதல்வர் அமர்ந்திருக் கிறார். அவரோடு உரையாடுங்கள் என்றார். முதல்வர் முதலாவது உரையாடட்டும்; பின் நான் உரையாடுகிறேன் என்று கூறி முன்னிருந்த சிந்தனையிலேயே ஆழ்ந்துவிட்டார் பாவாணர்! இவர் தாம் பாவாணர்! இம்முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனார். இதனை இசைத்தவர் மதிவாணர். குப்பாயம் பாவாணர் குப்பாயத்தை விடாமல் போடுவது ஏன்? எனக்கேட்டேன். முன்னர் உட்சட்டையும் மேற்சட்டையும் கிழிசலாகவே இருக்கும். இவற்றை மறைக்கும் மானமறை குப்பாயமாகவே இருந்தது. ஆதலால் அதனைப் போடாமல் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது. நிலைமை திருந்தி விட்டாலும் பழக்கத்தை விட முடியவில்லை என்று கூறிப் பாவாணர் நகைத்தார். அந்நகைப்பு வறுமையை எள்ளி நகைக்கும் நகைப்பாக வீறுடன் வெளிப்பட்டது! எத்தகைய வெள்ளை உள்ளம் இந்தப் பேரறிவர்க்கு என்று மருட்சியும் ஏற்பட்டது! நிலையாமையும் நிலைப்பும் சென்னை உணவும் பருவநிலையும் என்னை வருத்தின; ஈளைத்தொல்லை மிகுந்தது; கிடையில் கிடக்கும் நிலையும் ஆயிற்று. பாவாணரிடம் நிலைமையைக் கூறினேன். அவர் ஒருசிறு மறுப்பும் உரைத்தார் அல்லர்; உடலை வைத்துத் தானே எல்லாம் என்று கூறிப் பணி விலகலுக்கு இசைவு தந்தார். அப்பொழுது ஓர் அரிய செய்தியைக் குறிப்பிட்டார்: சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமியார் அவர்க்குப் பணிநிலைப்பாணைக் கோப்பு நகராட்சித் தலைவர் இரத்தின சாமியார்க்குச் சென்றது. இரத்தின சாமியார் மாம்பழச்சாறு எடுத்து மாலையில் குடித்திருக்கிறார். அவர்க்கு அச்சாறு ஒத்து வரவில்லை. உடனே வயிற்றுப்போக்கு ஆகிவிட்டது! ஒருமுறை இருமுறையல்ல; பன்முறை ஆகியது! தொடர்ந்தது, கண்மயங்கிக் கீழே தள்ளும் நிலையும் ஆகிவிட்டது. எழுந்து போகாக் கிடையிலும் வயிற்றுப் போக்குத் தொடர்ந்தது; மருத்துவர் வந்து பார்த்தும் கட்டுப்படவில்லை. இரவு 11 மணி. தட்டுத்தடுமாறித் தம் மிசைப்பலகைக்குச் சென்றார். ஆங்கிருந்த இராமசாமியார் கோப்பை எடுத்தார். நிலைப்பாணையில் ஒப்பமிட்டு ஒரு செயலை முடித்த நிறைவில் படுத்தார், என்ன நேருமோ தெரியவில்லை! ஒருநல்லவரை நிலைப்படுத்துவது தவறிவிடக் கூடாதே என்றுதான் ஒப்பமிட்டேன் என்று பாவாணரிடம் கூறினாராம் இரத்தினசாமி. அச் செய்தியைத் தொடர்புபடுத்தி உருகினார் பாவாணர்; அவருள்ளம் எத்தகு மெல்லியது! கல்பொறுக்கல் ஒரு முறத்தில் அரிசியைப்பரப்பிக் கல்லைப் பொறுக்கிக் கொண்டிருந்தார் பாவாணர். இளைய மகனார் மணி சமையல் கட்டில் இருந்தார். நிலத்தில் அமர்ந்து குனிந்து பார்த்துப் பார்த்துக் கல் பொறுக்குவதைக் கண்ட தமிழ்ப் பாவை ஆசிரியர் கருணையார். சொல்லைத் தேர்ந்து தேர்ந்து பொறுக்கும் இவர்க்கு இந்நிலை ஆயிற்றே என வருந்தினார். ஆம்! பாவாணர் தம் துணையை இழந்து, தாமே சமைத்து உண்டு, வேலையும் இழந்து இன்றும் வருவது கொல்லோ நெருநலும், கொன்றது போலும் நிரப்பு என்று இரங்குமாறு அமைந்த காட்டுப்பாடி வாழ்வுக் காலம்! தம்மைப் புதுவர் ஒருவர் நின்று நோக்குவதைக்கண்டு வாருங்கள் வாருங்கள் என்று கூறி அமர வைத்தார் பாவாணர். அவர் இல்லாமையால்தான் இந்நிலை என்று வெதும்பியதைக் கண்ட கருணையார், நானும் என் மனைவியும் ஈருடலும் ஓருயிருமாக இருந்தோம் என்று எழுதியதை நினைவு கூர்ந்தார். விறகுடைத்தல் சொற்றொகுப்புக்கருதி நீலமலைக்குச் சென்றார் பாவாணர்; ஆங்குப் பாவாணரிடம் பெரும் பற்றுமை கொண்ட கிருட்டிணையா என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். காலை உணவுக்குப் பின்னர்ப் பாவாணரை வீட்டில் தங்கவைத்து விட்டுக் காட்டுக்குச் சென்று திரும்பினார் கிருட்டிணையா. மீளவந்த போது பாவாணர் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, வீட்டின் முன்னால் கிடந்த விறகுக் கட்டையைக் கோடரியால் உடைப் பதைக் கண்டு, இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள். விடுங்கள் என்று தடுத்தார் கிருட்டிணையா, ஒன்றும் இல்லை; உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது என்றார்! பண்பட்டோர் பார்வையே வேறு தானே! சோறு கண்டால் சொர்க்கம் (வீடுபேறு) என்று இருப்பவர்க்கு இப்படி எண்ணம் வருமா? கூறியவர் கிருட்டிணையா. மயிலை சாத்திரி மன்றம்; நிகழ்ச்சி, பாவாணர் விழா. பொண்டான் சென்னை மறைமலையடிகள் நூல்நிலைய மேன்மாடி யாகிய வள்ளலார்மாளிகையில் பாவாணரும் யானும் சிறிதுகாலம் தங்கியிருந்தோம். ஒருநாள் இரவு 11 மணியளவில் ஒரு பெருச்சாளி வந்துவிட்டது. விளக்குப் போட்டுப் பார்த்தோம். மிகப்பரியது அப்பெருச்சாளி. பொண்டான் வந்து விட்டது; தடியிருந்தால் அடித்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டே வேட்டியை மடித்துக் கட்டினார்; கதவுகளைச் சாத்த ஓடினார். என்ன நினைத்தாரோ, கதவைத் திறந்துவிட்டு விட்டார்! வியப்பாக இருந்தது. வள்ளலார் மாளிகைக்குள் பொண்டானை அடிப்பது முறையாகாது போகட்டும் என்றார். நீங்கள் சைவம்; உங்களுக்கும் அடிப்பது பிடிக்காது என்றும் கூறினார். இடனறிதல், பிறர் கொள்கைமதிப்பு இவற்றில் பாவாணர் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறார். பாம்பண்ணர் பாம்பண்ணக்கவுண்டன் உலா என்பதொரு நூல். அந்நூலுடையாரின் அன்னையினிடம் ஒருபிராமணர், பாம் பண்ணன் என்பது கெட்ட பெயர்; நஞ்சுடைய அதன் பெயரை வைத்ததென்ன என இகழ்ந்தாராம். அதனைக் கேட்ட பாம் பண்ணன் அன்னையார் ஐயரே, சேஷண்ணா என்றாலும் அதே நஞ்சுதானே! வட மொழியில் பெயர் வைத்துக் கொண்டார் நஞ்சில்லை! தமிழில் பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் நஞ்சாகி விடுகின்றதா என்றாராம். இச்செய்தி அவ்வுலாவின் முன்னுரையில் உள்ளமையைக் கூறினேன். அப்பொழுது பாவாணர், இக்குறும்பு எங்கும் உண்டு என்று சேலம் கல்லூரிக்குச் சொற் பொழிவாற்ற வந்த ஒருவர் வசந்தசேனை என்ற பெயரைச் சொல்லத் தாம் தாயுமானவர் என்ற பெயரைக் கூறி அவரை மறுத்தமையை விளக்கிக் கூறினார். இச் செய்தி சேலம் கல்லூரிப் பணிபற்றிய இடத்தில் கூறப்பட்டது. சொல்லியல் நெறிமுறை தோகை என்பது பல பொருள் ஒரு சொல். மயில் தோகை, மயில், மயில் போலும் மங்கை, நெல் கரும்பு ஆகிய பயிர்களின் பக்கத்தாள் ஆகியவை தோகைப் பொருள்களாக வழக்கில் உள்ளன. இவற்றைச் சொற்பிறப்பு வரலாற்று முறையில் வரிசைப்படுத்த வேண்டுமானால்அடிப்படை முறைகள் இரண்டைக் கொள்ள வேண்டும். ஒன்று, இயங்குதிணை நிலைத்திணை ஆகிய இரண்டனுள் நிலைத்திணைப் பெயரீடே முன்னது என்பதும், அதன் வழியது இயங்குதிணைப் பெயரீடு என்பதும். மற்றொன்று கருத்துப் பொருள் காட்சிப் பொருள் என்னும் பொருள் வகைகளுள் காட்சிப் பொருள் முன்னது என்றும், கருத்துப் பொருள் பின்னது என்றும் கொள்ளுதல். இவ்வகையால் தோகைக்குரிய பொருள்களை ஆராய்ந்தால் முதற்கண் நெல்கரும்பு ஆகியவற்றின் தோகையும், மயிலின் தோகையும், அத்தோகையுடைமையால் மயிலும், மயில் போலும் சாயல் உடைமையால் மகளிரும் தோகைப்பெயர் பெற்றனர் என்பது விளக்கமாகும் என எங்கள் உரையாடல் இடையே கூறினார் பாவாணர். அவ்வாறே செய்க யான் பாவாணர் துறையில் பணி செய்த காலம். அகர முதலியில் இடம் பெறாத சொற்களைத் தொகுத்துப் பொருளும், தொடரும் தரவேண்டிய பொறுப்பினது என்னது. எனக்குத் தந்த கடமையை முடிந்த அளவான் கிழமைதோறும் வெள்ளியன்று பாவாணர்க்குக் கோப்பு விடுத்து வந்தேன். ஓரிரு கிழமைகளின் பின்னர் அகர முதலியில் இடம் பெறாச் சொற்களைத் தொகுப்பதே நுங்கள் கடன்; இடம் பெற்ற சொற்களையும் மீள எழுதுதல் இரட்டிப்பு வேலை; அது தவிர்க்க என எழுதினார் பாவாணர். என் தொகுப்பைப் பாவாணர் கூர்ந்து பாராமல் சொற்பட்டியைக் கண்ட அளவில் எழுதியுள்ளார் என்பது புலப்பட்டது. அதனால், இயக்குநர் என்னும் முறையில் தாங்கள் இடும் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளேன். அகரமுதலிப் பணியின் சீர்மை கருதி ஒரு கருத்தை உரைத்தல் நலப்பாடெனக் கொண்டு இதனை எழுதுகின்றேன் எனத் தொடங்கினேன். அகர முதலியில்இடம் பெறாச் சொற்களைத் தொகுத்துப் பொருள் விளக்கம் செய்வதுடன், அகர முதலியில் இடம்பெற்ற சொற்களிலும் பொருள் விடுபாடு இருக்குமானால் அதனைச் சேர்த்தலும் நம் கடன் எனக் கருதியமையால் அச்சொல்லை எழுதிவிடுபாட்டுப் பொருளையும் அப்பொருள் சுட்டும் சான்றையும் காட்டியுள்ளேன். மேலே தங்கள் குறிப்பின் வண்ணம் கடனாற்றுவேன் என எழுதினேன். மறுநாளே நுங்கள் கருத்து மிக நன்றே; அவ்வாறே தொடர்ந்து செய்க என எழுதினார்! எவ்வளவு பேருள்ளம் பாவாணர்க்கு! என்ன பேறு அவரொடு பணி செய்தற்கு வாய்த்தது என மெய்யாகவே உவந்தேன். அதனினும் பாவாணரைப் பனிமலையென மதிக்கவும் வாய்ப்புக் கிட்டிற்று. பனிமலைக் கொடுமுடி யான் அகர முதலித் துறையில் அமர்த்தமாகும் முன்பு பாவாணரும் மதிவாணரும் தொகுத்துச் சொற்பிறப்புக்காட்டி 100 பக்கங்கள் தட்டச்சிட்டுத் தலைமைச் செயலகத்திற்குப் பார்வைக் கோப்பாக விடுத்திருந்தனர். அதன் ஒரு படியை என்னிடம் தந்து, இத்தொகுப்பில் இணைக்க வேண்டும் சொற்கள் உளவாயின் அவற்றைத் தனியே குறித்து விடுக்க என்றார் பாவாணர். அந்நூறு பக்கத் தட்டச்சுப் படிவங்களில் இடை இடையே சேர்க்குமாறு 23 பக்க அளவில் சொற்கள் விளக்கங்களுடன் அமைந்தன. முன்னே நூறு பக்கங்கள் தலைமைச் செயலகத் திற்கு விடுக்கப்பட்டமையாலும் அவற்றின் இடைச் சேர்ப்பு இஃது ஆகலானும், அவ்விரு பத்து மூன்று பக்க, இணைப்புடன் இவ்விணைப்புச் சொற்கள் புலவர் இளங் குமரனார் அமர்த்தத்தின் பின் அவரால் தொகுக்கப்பட்டவை என மேற்குறிப்பு எழுதினார் பாவாணர். துறையில் இருப்பார் எவர் செய்யினும் தம் செயலே என்னும் தனிப் பெருமுறையே நிலைப்பட்டுவிட்ட நாட்டிலே பாவாணர் செயலை நோக்க அவர் பனிமலைக்கொடு முடியினும் உயர்கிறார் அல்லரோ! 2. நெருங்கலும் நிகழ்தலும் பாவாணர் வகுப்பு நான் படித்த சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் தமிழாசிரியராக இருந்து தனித்தமிழில் இனிக்க இனிக்கப்பேசி, மாணவர்களைச் சிரிக்க வைத்துத் தமிழ் மீது ஆழ்ந்த பற்றுக்கொள்ளச் செய்தவர்; தமிழ் நெறிக்கு எவர் தவறு செய்தாலும - அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கவலைப்படாமல் அவர் தம் கருத்தை மறுத்துரைத்து வந்தவர் - என்கிறார் அவர்தம் மாணவர் மா. சு. சம்பந்தனார். 1934 - 36 ஆம் ஆண்டுகள் திருச்சிப்புத்தூர் பிசப் கீபர் உயர்நிலைப்பள்ளியில் யான் மாணவன். ஐந்தாம் ஆறாம் படிவங்களில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்து மொழிப் பற்றையும் இனப் பற்றையும் வளர்த்தார். அவர் தம் இல்லத்தில் ஓயாது படிப்பார்; இன்னிசை மிழற்றுவார்; யாழ்மீட்டுவார், மத்தளம் இசைப்பார்; இசைப் பாமாலைகள் தொடுப்பார்; அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கட்குத் திருச்சி தேவர் மன்றத்தில் வரவேற்பளித்த போது தாமே பாடினார். திருக்கோயில் என்ற தாளிகையில் நம்பு மதம் நம்பா மதம் என்று குறித்து இறைநம்பிக்கை உடையவர்களையும் இல்லாதவர்களையும் இணைத்தார். - என்கிறார் அவர்தம் மாணவர் சு. பொன்னுசாமி. பாவாணர் நடத்தும் செய்யுள் வகுப்பு, இசையுடன் தவழும். இசையின்றிப் பாடலைக் கற்பிக்கக்கூடாது என்பதும், தமிழாசிரியர் தகுதிகளுள் இசைப்புலமை என்பதும் ஒன்று என்பதும் பாவாணர் கொள்கைகள். படிப்பும் அடிப்பும் வகுப்புக் கட்டொழுங்கில் பாவாணர் மிகக்கண்டிப் பானவர். மாணவர் உளங்கொளக் கற்பிப்பார். ஒன்றற்குப் பல எடுத்துக் காட்டுக் காட்டியும் கற்பிப்பார். இலக்கண வகுப்பில் மிக ஆர்வம் கொள்வார். தாம் கற்பித்த இலக்கண நூற்பாக்களை மனப்பாடமாக்க வற்புறுத்துவார். மனப் பாடமாகச் சொல்லத் தவறும் மாணவர் எவராயினும் பாவாணரின் அடிக்குத்தப்ப முடியாது. நாள் ஒன்றுக்கு நன்னூல் நூற்பா ஐந்து ஒப்பித்தே ஆகவேண்டும் என்ற திட்டமும் பாவாணர்க்கு உண்டு. ஒப்பிக்கத் தவறும் மாணவர்க்குப் புளியவளார் அடியும் கட்டாயம் உண்டு என்பதால் மாணவர்கள் மனப்பாடம் செய்தலை நோன்பு எனக் கொண்டனர். இலக்கணத்தில் முழு மதிப்பெண் பெற்று விடுவர். பாவாணரிடம் பயின்ற மாணவர்கள். பாவாணர் பொழிவு அண்மையில் மூவேந்தர் அரங்கில் தமிழக முதல்வர் உள்ளிட்ட கூட்டத்தில் தலைமை தாங்கிய நீதிபதி கோகுல கிருட்டிணன் அவர்களின் பத்துமணித் துளிகளே பேசவேண்டும் என்ற கட்டளையையும் ஏற்க மறுத்து ஒருமணி யளவிற்கு மலையருவியெனத் தம் கருத்துகளைப் பொழிந்தார் பாவாணர். அப்போது மலையெனவே வாய்மட்டுமே அசைய, கடைந்தெடுத்த குன்றறென நின்ற வண்ணம் நிற்காமல், அவர் வாலயின் கன்றின் குரலெனத் தமிழ்ககுரல் ஒலித்தது. அப்போது, நாற்பது ஆண்டு கட்குமுன் அவர் திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் கலித்தொகைத் தலைமகன் காமம் அருவியெனப் பெருகியது என்று கூறிய கருத்து நினைவுக்கு வந்தது. 19-2-1944இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் புரசைப்பாக்கம் எம்.சி.டி.எம். உயர் நிலைப்பள்ளியில் புறநானூற்று மாநாடு நடத்தினார்கள். அதில் திரு. வையாபுரிப் பிள்ளையையும் திரு. வேங்கடராச ரெட்டியாரையும் எள்ளி நகையாடிப் பாவாணர் சாடு சாடு எனச்சாடிய சாட்டம் இப்போதும் நினைவில் இருந்து நீங்கவில்லை. 2-2-81 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை 27 ஆம் வாரக் கருத்தரங்கில் முனைவர் ந. சஞ்சீவி வழங்கிய கருத்துரை இது. ஆராய்ச்சிக் குறைவும் முதிராமையும் சுட்டு விளக்கம் எழுதும் போது ஆராய்ச்சிக் குறைவினால் சில அடிப்படை உண்மைகளைக் கண்டு பிடிக்க இயலாமற் போயிற்று. இன்று கண்டு பிடித்து விட்டேன் என்றும் (17-2-49 வ.சு.) ஒப்பியன் மொழிநூற் சட்டை கவர்ச்சியாயிருக்கின்றது. 25 ஆம் பக்கம் வீழ் - to fall in love’ என்று குறித்தது ஆராய்ச்சி முதிராத காலம். விள் - விழு - வீழ் என்பதே சரி. விழு - விழை. அடுத்த பதிப்பில் தான் திருத்த வேண்டும். பன்னீர் ஓரைப் பெயர்களிலும் சிலவற்றை மாற்ற வேண்டும். (சொல் அல்லது வடிவு) 140 ஆம் பக்கம் மேடம் மேழம், இடபம் - விடை, இரட்டை - ஆடவை, கடகம் - அலவன், ஆளி - மடங்கல், தேள்- நளி, வில் - சிலை, மகரம் - சுறவம் - இவற்றுள் வலப்பக்கமுள்ள சொற்களைத் தான் இன்று ஆள்கின்றேன் என்றும் (9-4-71 வ.சு.) பாவாணர் தம் அறியாமையைச்சுட்டி எழுதுதல் எத்தகு பெருநிலை! எத்துணைப் பேர்களுக்கு இது வாய்க்கும்? வீறு கட்டுரையில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஒவ்வொரு பகுதியும் ஆராய்ச்சி முடிவென்பது ஒருமுறை வாசித்தால் தெரியவரும் (18-8-31) என்றும், நான் அனுப்புவதில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஏதேனும் பிறர்க்கு உடன்பாடன்றாயினும் அவர்கூறும் தடைகட்கெல்லாம் தகுந்த விடைகூறச் சித்த மாயிருக்கிறேன் (29-9-31) என்றும், கட்டுரைக்கு எவரேனும் மறுப்பு எழுதினால் விடையளிக்கத் தயாராய் இருக்கிறேன் (12-10-31) என்றும் அடிநாளிலேயே கடிதம் வரையும் பாவாணர் தனிவீறு மேலும் வளர்ந்ததேயன்றிக் குறைந்ததன்று. கல்லும் சொல்லும் கல்லாய்வில் வல்ல ஓர் அறிஞர் இக்கல் இத்தனை இலக்கம் ஆண்டுப் பழையது என்றால் ஏற்றுக்கொள்ளும் உலகம், ஐம்பான் ஆண்டுகளாகச் சொல்லாய்விலேயே ஆழமுழுகி ஆய்ந்துள்ள ஒருவன் அச்சொற்பழைமையைச் சொலுங்கால் ஐயுறுவானேன் என்று வினாவும் வீறு படைத்தவர் பாவாணர் என்பது எண்ணத்தக்கதாம். உருவம் சொல்லாராய்ச்சிக் கட்டுரை நூலில் பாவாணர் படத்தை வெளியிட விரும்பினார் கழக ஆட்சியாளர் வ.சு. என் உருவம் எடுக்க விரும்பவில்லை என மறுத்து விட்டார். அவர் நூல்கள் எதிலும் அவர் படம் அமையவில்லை. இயற்கையிலே நான் தோற்றப் பொலிவில்லாதவன் என்று பாவாணர் தம்மைத் தாமே மதிப்பிட்டுக் கொண்டுள்ளார் என்பதை எவராவது நம்ப முடியுமா? அவர் எழுத்தே உள்ள போது நம்பாமல் எப்படி இருப்பது? எத்தகைய வீறுமிக்க - பொலிவுமிக்க - கட்டமைந்த - எடுப்பான தோற்றம், பாவாணர் தோற்றம்! இதனைத் தம் மொடுக்கம் என்பதையன்றி என்ன சொல்வது? தொண்டின் உறைப்பு 8-3-64 இல் நடக்க இருப்பது குறைந்த சம்பளத் தமிழாசிரியர் வகுப்பாதலால் ஒருவரையும் வற்புறுத்தவோ இடர்ப்படுத்தவோ வேண்டேன். பெற்றது கொண்டு பொந்திகை (திருப்தி) யடைவேன். தங்கற்கும் அறையமர்த்த வேண்டிய தில்லை. என் உறவினர் வீட்டில் தங்கிக் கொள்வேன். வழிச் செலவுப் பணமும் வந்த பின் வாங்கிக் கொள்கிறேன். எனச் சேலத்தில் நிகழ இருக்கும் தமிழாசிரியர் தொல்காப்பிய வகுப்புக்கு வருதல் பற்றி 29-2-64 இல் திரு. மி. மு. சின்னாண்டார்க்கு மடல் எழுதுகிறார் பாவாணர். அரைக்கட்டணம் 20-1-68 இல், மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்தில் கூட இயலின் நான்வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணியமாயிருக்கிறேன். போக வரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற்போதும். அதுவும் இல்லாக் காலும் வருவேன் எனத் திரு. வீ.ப. கா. சுந்தரனார்க்கு எழுதுகின்றார். இந்தியெதிர்ப்புக் கூட்டங்களுக்கு அரைக் கட்டணப் போக்கு வரவு தரினும் வர அணியமாக இருப்பதாக எழுதியதை முன்னர்க் கண்டுளோம். இவை பாவாணர் தொண்டின் உறைப்புச் சான்றுகளாகும். தம்நிலைசில இயற்கைக்கண்ணொளி குன்றியுள்ளது உண்மைதான். ஆயின், செயற்கைக் கண்ணொளி இன்றுள்ளது. என் வேலைக்குப் போதும். மேலும், எனக்கேற்ற பணியும் நல்ல சம்பளமும் கிடைப்பின் மகிழ்ச்சியாலும் நல்லுணவினாலும் உடல்நலமும் உறுப்பாற்றலும் மிகுமென்றே கருதுகின்றேன். அண்மையில் எனக்கு வந்த கிறுகிறுப்பிற்கும் உணவுக் குறைவே அடிப்படைக் கரணியம் - திரு.வை. சொ. 7-11-70 20 நாட்குமுன் ஒருவைகறை திடுமென மயங்கி விழுந்து விட்டேன். அரத்தக்கொதிப்பின் விளைவாகத் தெரிகின்றது. இன்னும் முழு நலமில்லை. -ந.பி. 22-9-70. சென்றமாதம் முழுதும் வெப்பமிகையால் மிக இடர்ப் பட்டுப் போனேன். ஒரு கிழமை அண்ணமும் நாவும் அழன்று பெரிதும் துன்புற்றேன். - கு. பூ. 3-6-80 மறைமலையடிகளும் யானும் ஒரு தனி வகையரேம். எம் வாழ்வைத் தமிழ்வாழ்வொடு ஒன்றுவித்துக் கொண்டேம். தமிழை வடமொழியினின்று மீட்கவே இறைவனாற் படைக்கப்பட்டேம். தமிழ் ஆரியப் பேராட்டத்திற்கு ஆங்கில அறிஞர் ஒருவரும் பிராமணர் ஒருவரும் சிவநெறியார் ஒருவருமாக மூவர் எனக்கு முன் தோன்றினர். மேலையர்க்கறிவிக்க நான் ஏற்பட்டுள்ளேன். என்னோடு இப் போராட்டம் முடிகின்றது. இத்தகைய போராட்டம் உங்கட்கில்லை. - கா. இள. 4-11-71. நடுமை நயம் நுங்கள் பாரியைப் பார்த்தேன். முற்றும் சரிதான். ஆயின், அவல் சிறிது மாற்றம் பெறல் வேண்டும். மேலும், அவலம் என்பது இதனொடு தொடர்புடைய தன்று. அல்-அ+வலம்= அவலம். வலமின்மை, நோய், வருத்தம். என்னிடம் சிறிது பயிற்சி பெறின் என் போன்றே செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பணியாற்றலாம். - இரா. இ. 20-11-80. தமிழ்த் தந்தை தமிழர் தந்தை பெரியார் எனப்படுதல் எவரும் அறிந்தது. தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் எனப்படுதலும் கேட்கக் கூடியது. பாவாணரைத் தமிழ்த் தந்தை என வழங்குதற்குப் பாவாணர் தமிழ்க் குடும்ப நிறுவனரும் செயலருமாகிய அன்புவாணர் அவாவினார். தம் கருத்தைப் பாவாணர் ஒப்புதற்கும் விடுத்தார். தமிழ் எழுத்து வடிவு பற்றிய பாவாணர் கருத்துகளைக் கொண்ட அக்கடிதத்தின் இறுதியில் தமிழ்த் தந்தை, ஞா. தேவநேயன் எனப் பொறித்துள்ளார். அவ்வஞ்சல் முகப்பில், அரும்பெறல் அன்புகெழு தமிழ்மக்காள் என விளிப்புடைமை கருதிப் பார்க்கப் பெருநயமுடையதாம் (அஞ்சல் நாள்: 31-10-78). தமிழர் யார்? ‘jÄH® ah®? என்பதை விளக்கும் பாவாணர் தாம் காணும் தமிழர் எவர் என்பதையும் தெள்ளிதின் உரையாலும் பாட்டாலும் உரைக்கிறார்: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழர் கொள்கை. தமிழைப் போற்றுவாராயின் தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும் ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல் நாட்டாரும் தமிழரே. பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து பிறருக்கொன்றீயாத புல்ல ரேனும் எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார் இரப்பெடுப்பார் ஞதயதொழு நோய ரேனும் கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர் காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்பு வாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர் தமிழைப் போற்றுதலாவது, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக் கொள்வதே, என்கிறார். சங்கநிதி பதுமநிதி எனத் தொடங்கும் அப்பரடிகள், கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே என்பதன் போலிகையாக, அருமையுறும் தனித்தமிழை விரும்பு வாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர் என்று அமைத்துக் கொள்ளும் ஊற்றம் பாவாணரதாம். மொழிஞாயிறு பாவாணர் மொழிஞாயிறு எனப்பட்டார். தமிழ் ஞாயிறு எனவும், தனித்தமிழ் ஞாயிறு எனவும் வழங்கவும் பட்டார். மொழியை - தமிழ் மொழியை - ஞாயிற்றொடும் ஒப்பிடுகிறது தண்டியலங்காரம்; ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னேர் இலாத தமிழ் என்பது. இப்பாடலைப் பெரிதும் போற்றித் தம் நூல்களில் ஆள்வார் பாவாணர். அவர்தம் அகர முதலித்திட்ட உருவாக்கம் தென்மொழியில் கிளர்ந்த போது (8-9-1970) மொழிஞாயிறு என்னும் சிறப்படை மொழி பயன்படுத்தப்பட்டதாகும். மொழி ஞாயிறு என்றாலே பாவாணரைக் குறிக்கும் புகழ் மொழியாயிற்று அது. பட்டங்கள் என் பெயர்க்குமுன் பண்டித அல்லது பண்டித புலவ என்னும் அடை கொடுக்க வேண்டேன். தமிழில் பேரா. என்றும் ஆங்கிலத்தில் Prof. என்றும் குறிக்க. இதைப் பன்முறை சொல்லியும் தாங்கள் கவனிக்க வில்லை (16-1-71) என் பெயர் தேவநேயன் என்று மட்டும் இருத்தல் வேண்டும் (2-3-72) நூற்பெயர் பெரிய எழுத்திலும் ஆசிரியன் பெயர் சிறிய எழுத்திலும் இருக்க வேண்டும் (4-3-72) ஆசிரியன் பெயர் ஞா. தேவநேயன் என்று மட்டும் குறிப்பிடுக. முன்னும் பின்னும் அடைமொழியோ பட்டமோ ஒன்றுமிருத்தல் கூடாது (3-12-72) - .இவை, கழகத்திற்குப் பாவாணர் எழுதிய செய்திகள். தம் நூலின் அளவுகோல் நூற்செய்தியே! பட்டமன்று என்னும் முடிவுக்குப் பாவாணர் வந்த நிலை விளக்கமாக அமைபவை இவை எனலாம். பட்டம் விரும்பார்க்கும் பட்டத்திட்டம் 15-10-72 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் குழுக் கூட்டத்தில் பழம் பெரும்புலவர் பன்னிருவர்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவருள் பாவாணரும் ஒருவர். அங்குத் தீர்மானிக்கப் பட்டவருள் கி.ஆ.பெ. விசுவநாதரும், ம.பொ.சிவ ஞானமும் பின்னர் அப்பட்டம் பெற்றனர். (பாவாணர்க்குப் பட்டம் தருவதால் வரும் பயன் என்ன?) - செந். செல். 47 : 181) உறையுள் வாங்கவும் உரிமை விற்கவும் காட்டுப்பாடி விரிவில் இருந்தபோது, 13-5-72 பாவாணர், கழக ஆட்சியாளர்க்கு ஓரஞ்சல் விடுத்தார். அதன் செய்தி வருமாறு: இன்று தாங்கள் எனக்கு ஓர் அரும்பேருதவி செய்ய வேண்டும். நான் குடியிருக்கும் வீட்டுக்காரர் வீட்டை விற்கப் போகின்றார். வீட்டை வாங்குபவர் உடனே என்னை வெளியேற்றுவார். அல்லது 65 உருபா வாடகையை 80-இலிருந்து 100 வரை உயர்த்துவார். வாடகையை உயர்த்துவதிலும் வெளியேற்றுவதும் துன்பந்தரும். இத்தகைய வீடு இங்கு வேறில்லை. சென்னையில் 300 உருபாவிற்குக் குறைத்து கிடையாது. ஆதலால், இதுவரை நான் எழுதிய பொத்தகங்களின் உரிமை முழுவதையும் விற்று இவ்வீட்டை விலைக்கு வாங்க விரும்புகிறேன். வாங்கின் ஓரறையிற் செந்தண நிலைப்பாடு (A.C) அமைத்துக் கொள்ளலலாம்; மேற்கட்டடமும் கட்டிக் கொள்ளலாம். தங்கள் வார வெளியீடாக உள்ளனவும் என் சொந்த வெளியீடாக உள்ளனவும் ஆகியவற்றுடன் வேர்ச்சொற் கட்டுரைகளும் சேர்த்துக் கொள்க. ntÅš fʪjîl‹ ï‹D« g¤J¡ f£LiufŸ vG⤠jUnt‹., பழமொழித் திரட்டும் விற்பேன். இவற்றிற்கெல்லாம் நேர்மையான ஒருவிலை தருக. என் நூல்களை வாங்குவது தமிழுக்குச் செய்யும் தலைத்திறத் தொண்டெனக் கருதுக. திருக்குறளுரை திருத்தமும் விரிவும் பெறும். ஒரு கிழமைக்குள் நன்மொழி எதிர்பார்க்கிறேன். எல்லா நூல்களையும் வாங்க இயலாவிடின் வீடுவாங்கும் தொகையளவிற்கு வாங்குக. அது முப்பதினாயிரத்திற்குக் குறையாதிருக்கும் என்கிறார். புன்குடி லாயினும் நன்குடிலாயிருக்க வேண்டும் என்று இளையர்க்குக் கற்பித்த பாவாணர் (கட்டுரை இலக்கணம் ஐ,பக்.29) கொண்ட முதுமை ஆர்வம் இது! முடிந்ததா? பின்னே முடிந்தது; முடிந்தும் குடிபுக முடியாது முடிந்தது! வாழைக் கன்று என் உறையுளின் புறக்கட்டைப் பக்கம் சிறிது வெறுநிலம் உளது. அதில் காய்கறித் தோட்டம் போட்டிருக்கின்றேன். இரு வாழை வைக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாத பச்சைவாழை தவிர வேறொன்றும் இங்குக் கிடைப்பதில்லை. 30 கல் தொலை விலுள்ள படைவீடு என்னும் ஊரினின்று மொந்தனும் கப்பல் வாழையும் (அரசதாளியும்) கொண்டுவரச் சொல்லியிருக் கின்றேன். நும் இல்லத்திலுள்ளது எனக்கு மிக விருப்பம். ஆர்க்காட்டு அன்பர் அடுத்த முறை அவர் ஊர் வரும்போது இரு சிறு கன்று கொடுத்தனுப்ப முடியுமா? நான் இன்று ஊதைப் பொருளென்று வாழைக்காய்க்கறி உண்பதில்லை. கொம்பிற் பகுக்கவிட்டு உண்ணவே வாழை வைக்கின்றேன். நான் அண்மையில் அங்கு வரும் நிலைமை இல்லை எனத் தம் ஆர்வத்தை அன்பர் பிச்சுமணியார்க்கு எழுதுகிறார் பாவாணர். சுவைப்பற்று எத்தகைய பேரறிஞர்க்கும் சிலவற்றில் பெரும் பற்றுதல் உண்டாகியிருக்கும். உணவு - சிற்றுண்டி - வகைகளிலும் அப்படியே! பாவாணர்க்கு இஞ்சி முரப்பு மேல் மட்டமற்ற பற்று. அதன் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் விரும்பியுண்பார். அதிலும் சேலத்து இஞ்சி முரப்பே அவர்க்குப் பற்றுமையானது. மயிர்க் கிழங்கும் குச்சிக் கிழங்கும் முளரி (Rose) ஊறுகாயும் அப்படியே விரும்பியிருக்கிறார். இவையெல்லாம் அவர் தம் கடிதங்களில் பலபட விளக்கமாகின்றன. புலவூண் விருப்பம் புலப்பாடாகின்றது. குரு பற்பொடியை மிகப் பயன்படுத்தியிருந்தார்; முட்டை முளை வரை என்னும் ஓவல்டின்னையும் மிக விரும்பி யிருக்கிறார்; தட்டுப்பாடாம் காலத்தில் கூடத் தேடியலைந்து வாங்குவித்துப் பயன்படுத்தியுள்ளமை அறிய வருகின்றது. மாம்பழம் பலாப்பழம் முதலியவற்றைப் பெரிதும் தள்ளியிருக்கிறார். வாழைப்பழத்திலும் கொம்பில் பழுத் ததையும் ஊதைத்தன்மை இல்லதையுமே பயன்படுத்தி யுள்ளார். ஈரத்துணி பாவாணர்க்குச் சற்றும் ஒவ்வாதது கோடை வெம்மை! எரிநாள் போது (அக்கினி நட்சத்திரம்) இன்னும் பெரும்பாடு பட்டுப் போவார்! தலையில் ஈரத்துணியைச் சுற்றிக் கொள்வார்; அனற்காற்றுத் தாக்காவண்ணம் சாளரத்யும் ஈருத்துணித் தொங்கலால் மூடிக்கொள்வார். இக்கடுங் கோடையைத் தவிர்க்கக் கோடைவாழ் மலையிடங்களுக்குச் செல்ல நண்பர்கள் அழைத்தாலும், நூலகம் வீட்டில் இருப்பதால் அதனை விடுத்துப்போக முடிவதில்லை. நூலைப் பாராமல் அவரால் இருக்க முடியாதே! செந்தணப்பு அறை வைத்துக்கொள்ள விருப்பிருந்தும் வாய்ப்பு ஏற்படவே இல்லை! வாய்ப்பு உண்டாகி வீட்டில் செந்தணப்பு அமைக்கக் கூடிய நிலைமை நெருங்கியபோது அதனை அடைய அவரில்லை! கோடைக் கொடுமை அவர் கடிதங்களுள் பலவற்றைத் தன்னதாக்கிற்று. மிதிவண்டி விடல் மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தார் பாவாணர். அவர்க்கு ஏதோ சொல்லாய்வு கிளர்ந்து விட்டது. அதனை எண்ணிவிட்டால் அவர் தம்மை மறந்து அதிலேயே ஒன்றி விடுதல் இயற்கை! அப்படி மிதிவண்டி நடத்தும் போது ஒருமுறை சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின்மேல் மோதி வண்டியும் சாய்ந்து, சிறுசிறு சிறாய்ப்புகளுடன் தப்பினார். அதன்பின் மிதிவண்டியில் ஏறுவதையே விட்டு விட்டார். கிறித்து பெருமான் ஓவியம் பாவாணர் கடவுட் பற்று மிக்கவர். ஒவ்வொரு நூலிலும் அதற்குச் சான்றுண்டு, ஒவ்வொரு வாழ்த்திலும் சான்றுண்டு. தாம் இருந்து பணி செய்யும் இடத்தில் தம் கண்ணில் நேரேபடுமாறு கிறித்து பெருமான், பாறை மேல் அமர்ந்து மேய்ப்பராய்க்காணும் உயர் ஓவியத்தை வைத்திருந்தார். அப்பட்டத்தை விரும்பித் தேடி வைத்தார் என்பது கடிதத்தால் தெரிகின்றது. அப்படத்தை அணியம் செய்து தந்தவர் மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் சோ. சாமிநாதன். கிறித்தவப் பிறப்புப்பயன் மாந்தன் முதன் முதலில் தோன்றிய இடம் ஏதேன் தோட்டமே என்பது கிறித்தவ மதக் கொள்கை. ஆதலால், கிறித்தவர்கள் குமரிக்கண்ட உண்மையை ஒப்புவதிலர். கிறித்தவ மதத்தவர் அல்லார் ஏதேன் தோட்டச் செய்தியை மறுத்துக் குமரிக் கண்டமே மாந்தன் பிறந்தகம் என்று கூறுவதினும், கிறித்தவ மதத்தில் பிறந்த ஒருவரே அவ்வாறு கூறுவது வலுவும் சிறப்புமாம் என்றும், அதற்காகவே இறைவன் தம்மைக் கிறித்தவ மதத்தில் பிறப்பித்தான் என்றும் பாவாணர் கூறினார். - பாவாணர் நினைவு மலர். தென்மொழி 67. கடவுள் நம்பிக்கை பறம்புக்குடி உ. த. க. மாநாட்டில் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியிடத் திட்டப் படுத்தப்பட்டது. அது பாவாணர் வெளியீடே யாகும். அட்டைக் கட்டு அச்சீடு ஆகிய வற்றில் கழக ஆட்சியாளர் வ.சு. அவர்கள் பேருதவி புரிந்தார். இந்நிலையில் கழகமே பாவாணர் திருக்குறளுரையை வெளியிடுவதாகக் கருதிக் கொண்டார் பெருமழைப்புலவர் சோம சுந்தரனார். கடவுள் நம்பிக்கை இல்லாத பாவாணர், திருக்குறளுக்கு உரை எழுதக் கழகம் வெளியிடுகிறதா என வினவினார் சோம சுந்தரனார்! பாவாணர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? அப் பாவாணர் அத்திருக்குறள் தமிழ் மரபுரை நூலைக் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வெளியிடுதல் கூடாது என்று! ஆய்ந்து தெளிந்து ஒரு முடிவுக்கு வராமல் தமக்குப் பட்டதே முடிவெனக் கொள்வது ஆய்வாளர்க்குள்ளும் எத்தனை விரிசல்களை - பிளவுகளை - உண்டாக்கியுள்து! ஓஓ! பொழுதாய் விட்டது பாவாணரை ஒருவர் பார்க்க வருகிறார்; வணக்கமிடுகிறார்; அவரை வரவேற்று உரையாடத் தொடங்கு கிறார். எத்தனைமணி நேரம் ஆனது? வந்தவர் எதற்காக வந்தார்? இருவரும் உண்ண வேண்டிய பொழுதா? அடுத்த பணி என்ன? ஒவ்வொன்றையும் கருதாமல் காலம் தானே ஓடிக் கொண்டிருக்கும்! பாவாணர் நா பேசிக் கொண்டிருக்கும்! வந்தவர் வண்டிப் பொழுதோ, வேறுகுறியோ உடையவராய் ஏதோ குறிப்புடன் அசைந்தால், ஓஓ! பொழுது ஆய்விட்டது! போக வேண்டும் அல்லவா! என்பார். அப்பொழுதுதான் பாவாணர், தம் சொல்லாய்வு உலகத்தில் இருந்து இந்த இயல்பு உலகுக்கு வருவார்; போய் வாருங்கள் என்பார். வந்தவர் பெயரென்ன? ஊரென்ன? எதற்காக வந்தார்? இவ்வெவற்றைப் பற்றியும் கேட்பதும் இல்லை! கேட்டுக் கொண்டு உரையாடுவதும் இல்லை! யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்பதன் தெளிநிலையா இது! பாவாணர் எழுதிய கடைசி அகரமுதலிச்சொல் தம் வாழ்வையே தமிழாராய்ச்சிக்காகவும் தமிழின் தனித் தன்மையைக் காப்பதற்காகவும் காணிக்கையாக்கிக் கொண்ட மொழி நூல் மூதறிஞர் பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முதன்மடலத்தின் முதற் பகுதியை எழுதி முடித்து இரண்டாம் பகுதியைத் தொடங்கினார். அவர் இம்மண்ணுலகை விட்டு நீங்குமுன் விளக்கம் எழுதிய கடைசி அகரமுதலிச் சொல் ஆசைமொழி, தமிழ் மொழியின் மீது தாம் கொண்டமாளாத ஆசையைத் தமிழுலகிற்குக் காட்டும் பொருட்டே ஆசைமொழி என்னும் சொல்லோடு அவர்தம் அகர முதலிப் பணியை முடித்துக் கொண்டாரோ என எண்ணி எண்ணி மாழ்க வேண்டியுள்ளது. இரா. மதிவாணன் செந்.செல். 55.398 சிறித்தவப் பாவாணர் சிவனியக் கரணமுறை சீரிதின் எழுதுகிறார்: உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும் பெரிய புராணக் கடவுள் வாழ்த்தையாவது அதை யொத்த திருப்பதிகச் செய்யுளையாவது பாடிக் கரணத்தைத் தொடங்கச் சொல்லலாம். மாதர் பிறைக் கண்ணியானை என்னும் திருவையாற்றுப் பதிகத்தையும் மண்ணினல்லவண்ணம் வாழலாம் என்னும் திருக்கழுமலப் பதிகத்தையும் முன்னும் பின்னுமாகப்பாடுவது பொருத்தமாகும். இசையின்றி ஓதுவதை விட இசையுடன் பாடுவதே நன்று. - அன்பர் மு.வ. பரமசிவனார்க்குச் சைவநெறிச் சடங்கு குறித்துப் பாவாணர் வரைந்த கடிதச் செய்தி இது (24-1-75). நினைவு இதழ்கள் தேவநேயப் பாவாணர் படத்தை முகப்பில் கொண்ட தமிழம் முதல் இதழ் வெளிவந்தது. உலக முதல்வி, 17, நாகப்ப முதலி தெரு, சென்னை - 12 என்பது ஆசிரியர் முகவரி. அரண முறுவல் அவர்களை ஆசிரியராகக் கொண்ட தமிழியக்க இதழ்: இயக்கம்! நடை 8. பாவாணர் நினைவிதழாக வெளிவந்தது. பாவாணர், ஒலிவாங்கி முன் நின்று உரையாற்றுவது போன்ற அமைப்புடையது முகப்புப்படம். முதன் மொழியும் மீட்போலையும் மலர்களாய் மலர்ந்தன; அவற்றில் பாவாணர் படங்கள் உண்டு. நாங்கள் காணும் பாவாணர், பாவாணர் தமிழ்க் குடும்ப வெளியீடு. செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி ஆகியவையும் விரிந்த செய்திகளையும் படங்களையும் கொண்டு நினைவிதழ் களாக வெளிவந்தன (1981. பெப்) முன்னும் பின்னும் இடையும் பாவாணர் வரலாற்றுத் திரட்டாக வாய்த்த இதழ்கள் இவை. வியப்பும் திகைப்பும் திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழ்ப் புலவர்கள், அரசியல் தொண்டர்கள், சமயச் சான்றோர்கள், தொழிலாளர் தோழர்கள், இன்னோர் வரலாற்றுக் குறிப்புகளின் பெட்டக மாகவும் விளங்குதல் எவரும் அறிந்தது. ஓரிருமுறைகளில் தொடர்புடை யாரையும் ஒழிவின்றிக் குறிப்பிட்டுச் செல்லும் நினைவுக் கொழுமையது. முதுவரைப் போற்றுவதுடன் இளையரை வரவேற்றும் வாழ்த்துக கூறுவது. முரணி நின்றாரையும் அரணாம் பகுதி கூறி அரவணைத்துச் செல்வது. அத்தகு வாழ்க்கைக் குறிப்பில் பாவாணர் ஓரிடத்தும் சுட்டப் படாமை வியப்பும் திகைப்புமாம் தன்மைய. ஒருவர் பட்டறிவு வெளிப்படாமல் போகாது; அவற்றுள்சில : இக்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப் பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர வேறொன்றுமில்லை. ஆனால், தமிழைக கெடுப்பவர்க்கோ போற்றலும் பட்டம் பதவிகளும் பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்ப உண்டு. - கட்டுரை இலக்கணம் பக்: 283. அயன்மொழி வளர்ச்சிக்கு அளவிறந்து நீளும் சில வள்ளல்களின் கைகள் தமிழுக்கு முடம்படுகின்றன. - மேற்படி 284. - இவை பாவாணர் பட்டறிவின் வெளிப்பாடெனற்கு ஐயமில்லை. இவ்வாறு வேறு சில குறிப்புகளும் காணலாம். சிறந்த மனைவி அவற்றுள் ஒன்று. சிறந்த மனைவி சிறந்த மனைவி தன் கணவனுக்கு அறிவுரை கூறுவதில் அமைச்சியாயும் அன்பும் பொறையும் கற்பிப்பதில் ஆசிரியயை யாயும், உடல்நலம் பேணுவதில் அன்னையாயும், வீட்டுக் காரியத்தை நடத்துவதில் கருமத்தலைவியாயும் பணிவிடை செய்வதில் வேலைக் காரியாயும் இருப்பாள். - கட்டுரை வரைவியல். 109 அறிந்தார் அறிவிக்க தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் மூத்த மகனாரான சோதிபாண்டியனோடு சேர்ந்து இசைத் தமிழாராய்ச்சி செய்த ஒரு பெருமகனார் தம் மாணவர் பதின்மருடன் சென்ற பொங்கல் திருநாள் என் உறையுள் வந்து ஓர் இசைத்தமிழாராய்ச்சி மன்றம் தோற்றுவித்தார். விடை ஆடவையாகிய சூன்மாதத்திற்குப்பின் வருமாறு சொன்னேன். அவரை உடனே என்னிடம் வரச்சொல்க. அல்லது அவர் முகவரியைத் தெரிவிக்க. ஞா. தேவநேயன் எசு.பி (S.P) 57, க.க. நகர், சென்னை - 78. - செந். செல். 54 : 505. - காலம் போற்றிய பாவாணர் கருதியழைக்கும் அழைப்பு ஈதென்க. தமிழர் நிலையில் இனிப்பும் கசப்பாதல் தம்பிறஹந்த நாள் விழாவைக் கொண்டாட விரும்பாதவர் பாவாணர். தம் பிறந்தநாள் மலரோ - இதழோ - வருதல் கூடாது என்பவரும் பாவாணர். தம் வரலாறு வெளியிட வேண்டா என மறுப்பவரும் பாவாணர். எனினும் அவர் பிறந்தநாள் விழா தனித் தமிழ்ப்பற்றாளர்களால் - அமைப்புகளால் - ஆங்காங்கு எடுக்கப் பட்டே வந்தன. அப்படி எடுக்கப்பட்ட இடங்களுள் ஒன்று தென்னார்க்காடு மாவட்டத் தேவ பாண்டலம். உ.த.க. சார்பிலேவிழாநடை பெற்றது. விழா நிறைவில் அவ்வூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்க முயன்றனர். ஆனால் ஆங்கிருந்த தமிழினத் தலைமையாசிரியர் இனிப்பு வழங்குதலை மறுத்து விட்டார். இது தமிழ்மேல் கொண்ட கசப்பா? பாவாணர் மேல் கொண்ட கசப்பா! உ.த.க. வினர் கண்டித்துக் கைகாட்டிக்கு எழுது மளவுக்கு வந்தது செய்தி! 3. அறிதலும் ஆய்தலும் ஆட்சிச் சொற்குழு நாடு விடுதலை பெறுதற்கு முன்னரே 1940 இல், விடுதலை பெறும் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாதல் வேண்டும் என்னும் ஆர்வத்தால் அதற்கு அடிப்படையாம் ஆட்சிச்சொல் அகரவரிசை இயற்றக் கழக ஆட்சியாளர் திரு. வ.சு. விரும்பினார். அதன் ஆய்வுக் குழுவில் பெரும் பங்கு கொண்டு கடனாற்றிய பெரு மக்களுள் ஒருவர் பாவாணர். மற்றையோர் காழி சிவ. கண்ணுசாமியார், க.ப. மகிழ்நர், கீ. இராமலிங்கனார். சொற் பட்டியை ஆட்சிச்சொல் அறிஞர் இராமலிங்கனார் அணியப் படுத்தியிருந்தார். அச் சொற்களை மேலாய்வு செய்து, வேண்டும் திருத்தங்கள் அமைத்துத் தந்தது ஆய்வுக்குழு. தமிழ் ஆட்சி நடைபெறுதற்குரிய கால்கோள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் பாவாணர் என்பது விளங்கும். இவ்வாறே சென்னை மாநிலத்தமிழ்ச் சங்கம் எடுத்துக் கொண்ட கலைச்சொல்லாக்கக் குழுவிலும் பங்கு கொண்டு கடனாற்றியவர் பாவாணர். கலைச் சொல்லாக்கம் எனத் தொடக்க நிலையிலேயே செல்வியில் கட்டுரை எழுதிய பாவாணர்க்கு இப்பணி கைவந்த கலைப்பணியாவதுடன், கரும்பு தின்னும் விரும்புறு பணியும் போல்வதாம். தமிழ்ச்சொல்லாக்க மன்றம் பல்வேறு துறைகளிலும் இதுகாறும் செய்யப்பட்டுள்ள கலைச்சொல்லாக்கங்களை மதிப்பிடுதற்கும் புதிய சொல்லாக்கங் களை அவ்வத்துறைகளோடு தொடர்புபடுத்தித் தமிழ்வளர்ச்சியை விரைவுபடுத்தற்கும் நிறுவப்பட்டது இச்சொல்லாக்க மன்றம். மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் துணைத்தலைவர்கள் ஆட்சிமொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் ஆட்சிமொழித் திறவோர் கோ. முத்துப்பிள்ளை மன்றச்செயலாளர் பேராசிரியர் இரா. மதிவாணனார் இம்மன்றத்தின் தோற்றம் 17-7-80 அண்ணா சாலை நடுவண் மாவட்ட நூலகத்தில் நிகழ்ந்தது. செந். செல்.54 : 606 கலைச்சொல் வடிவு கோவை, தொழிற்செல்வர் புதுப்புனைவாளர் கோ. துரைசாமி பாவாணர்மேல் மட்டற்ற அன்பர். ஒருபோது தம் தொழிலகத்திற்கு வந்த பாவாணரிடம் துள்ளுந்து உறுப்பு களுக்குத் தமிழ்ப்பெயர் வினவி இருக்கிறார். துள்ளுந்து உறுப்பு ஒவ்வொன்றனையும் பிரித்துக்காட்டி அதன் ஆங்கிலப்பெயர் சொல்லச் சொல்ல அனைத்திற்கும் தமிழாக்கச் சொல் எந்நூற் குறிப்புமின்றிப் பாவாணர் வழங்கினார். இரண்டு மணிப் பொழுதில் துள்ளுந்து உறுப்புகள் அனைத்துக்கும் தமிழ்ச்சொற்கள் படைத்துத் தந்து விட்டார் என்றால், அவரை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் தமிழ்ச் சொல் இல்லை என்னும் தட்டுப்பாடு நேர்ந்திருக்குமா? அறியாமை என்னைப் பணியில் அமர்த்துமாறு தமிழன்பர் வேண்டின், எனக்கு ஏதோ நன்மைசெய்யச் சொல்வது போல் அதிகாரிகள் கருதுகின்றனர். அது, தமிழுக்கே நன்மை என்றறியும் ஆற்றல் அவர்கட்கில்லை. இது அவர்களது தமிழறியாமையையோ தமிழ்ப்பற்றின்மையையோ தான் காட்டும் என்கிறார் பாவாணர். மண்டைக்கனம் புலவர் பெருமிதம் மண்டைக்கனம் அன்று. புலவர் வறுமையைப் பயன்படுத்தி அவரை அடக்கியாளத் துணிவது தான் செல்வனின் அல்லது அமைச்சனின் மண்டைக்கனம். சில வணிகப்புலவர் வணங்கிப் பணிவது போல் எல்லாரும் பணியார். தமிழர் வரலாறு. 343 - 4. - தந்நிலை விளக்கத்தால் தமிழர்நிலை விளக்கத் தடம் காட்டுகிறார் பாவாணர். அடிமை நிலை ஆங்கிலர் போன்ற மேலையர் ஆட்சி இங்குத் தோன்றியிராவிடின் தொடர்வண்டிகளிற் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் (தீண்டாதார்) என்னும் ஐந்து வகுப்புக்களேயன்றி முதலாவது இரண்டாவது மூன்றாவது என்னும் வகுப்புக்கள் தோன்றியிரா. ஆதலால் குமுகாயத் துறையிலும் ஆங்கிலராட்சி மாபெரு நன்மை செய்ததாகும் என்று பாவாணர் கூறுவது நகைச்சுவை மட்டுமா? பாவுக்கும் எழுத்துக்கும் பிற பிறவுக்கும் வருணப் பகுப்புச் செய்த வன்கொடுமையை நினைத்துக்கூறும் குறிபேயன்றோ! (மண்ணில்விண் பக். 164) நோய் போய், வியாதி வந்தது; வியாதிபோய்ச் சீக்கு வந்தது; இனிச் சீக்குப் போய்ப் பீமாரி வரும்என்பது நகையாட்டுப் போல் இருப்பினும் வடமொழிக்கும் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் தமிழ் அடிமைப்பட்டுக் கிடத்தலை விளக்கும் அருமையதன்றோ இது. (இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? பக்.18). தோசை சென்ற திசம்பர்ச் செல்வியில் கோவை இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் தோசை என்னுஞ் சொற்பொருட் காரணத்தை அறிந்தோர் அறிவிக்குமாறு எழுதியிருந்தார்கள். பின்வருவதை இம்மாதச் செல்வியில் வெளியிடுக. (5-2-57) தோசை ஞா. தேவநேயன் இட்டிலி போன்றே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கிவரும் தமிழர் சிற்றுண்டி வகையாகும். தோசை என்னுஞ் சொல், தோய் என்னும் பகுதியடியாகப் பிறந்ததாகும். தோய்தல் - உறைதல், திரைதல், பிளித்தல். தோயும் வெண்டயிர் (கம்ப. நாட். 28) இட்டிலி மாவினும் தோசை மா மிகப் புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால் சட்டியில் எழும்பாது. எளிதாய் வேகாது, சுவையாயுமிராது தோய் - தோயை - தோசை. ய-ச. போலி. இன்றும் நாட்டுப்புறத்தார் தோயை என்றே வழங்குவர். தோசை தூய தமிழ்ச்சொல். மலையாளத்தில் தோச என்றும், கன்னட தெலுங்கு மொழிகளில் தோசெ என்றும் வழங்குகின்றது. - தேடிப்போயும் தெளிவு செய்யும் பாவாணர் இயல்புச் சான்றுகளுள் தோசை ஒன்று. காலம் முதலியன திருச்சியில் நிகழ்ந்த வடமொழிச் சங்கத்தின் ஆண்டு விழாவில் அவைத்தலைவர் காலம் என்பது வடசொல் என்றார். பாவாணர் அது தென்சொல்லே என்பதை விரிவாக விளக்கித் தம்பள்ளிக் கூடச் செய்திச் சுவடியில் வெளியிட்டார். அது, காலம் என்னும் சொல் எம்மொழிக்குரியது? என்னும் வினாவுடன் செல்வியில் வெளிவந்தது. (17:394). அதற்கு முன்னரே, பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை எனக் கட்டுரை வரைந்தவர் பாவாணர் (17:261) குரல் மத்திமம் என்றொரு கருத்து எழுந்தது. குரலே சட்சம் என்று எழுதினார் பாவாணர் (20:330) மீண்டும் குரல் மத்திமம் என்று கட்டுரை வெளிப்பட்டது. குரல் சட்சமே மத்திமமன்று என நிலைப்படுத்தினார் பாவாணர் (20; 465). திரு என்னும் சொல் வடசொல் என்றனர். திருவென்னும் சொல் தென் சொல்லே என்று நாட்டினார் பாவாணர் (20: 243). மாணவன் தென்சொல்லா? வடசொல்லா? காரம் காரன் காரி குடிகை குடிசை விளக்கம் இவ்வாறெல்லாம் எழுந்த கட்டுரைகளின் வளர்ச்சியே தெ. பொ. மீயின் திரிபாராய்ச்சி என விரிந்ததாகும் (செந். செல். சிலம்பு. 54). வரிசையறிதல் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 29-3-80 இல் ஔவை சு. துரைசாமி அவர்களுக்கும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கும் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியது. இதனை அறிந்த பாவாணர் பொற்பதக்கம் பற்றியோ, பொற்கொடை பற்றியோ ஒரு குறிப்புமில்லை என்று சுட்டிக் காட்டி வரிசையறிதல் என ஒரு கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வரைந்தார் (54 : 453). அதில், இருவர்தம் இணையற்ற தமிழ்த்தொண்டுகளையும் விரித்தெழுதி, நிறைவில் இவ்விருவர்க்கும் தனித்தனிக் குறைந்த பக்கம் பத்தாயிரம் உருபாயேனும் பொற்பதக்கத்துடன் வழங்குதல் வேண்டும். இவ்விருவரும் கழிபெரு மூப்பெய்தி யுள்ளதோடு, புலவர்மயிலை சீனி வேங்கடசாமியார் நோய்வாய்ப்பட்டும் பாயும் படுக்கையுமாயுள்ளார். ஆதலால் அரசோ ஒரு பல்கலைக் கழகமோ இரண்டும் இணைந்தோ இச் சிறப்பை இயன்ற விரைவில் செய்து தம் கடனைத் தீர்ப்பனவாக: நோயுண்டவர்க்கு மருத்துவம் செய்வதும் அரசின் கடமையே. ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின் பாற்பட்டதே. Domn with faint praice a comment go frigidl as to suggest disapproval. இவ்வாறு வரைந்த பாவாணர், குறிப்பு என்னும் தலைப்பிட்டு எழுதுகின்றார்: இக்கட்டுரை எழுதியபின் மிக வருந்தத்தக்க அமங்கலம் நேர்ந்துள்ளது. ஆதலால் ஆராய்ச்சிப் பெரும்புலவர் மயிலை சீனிவேங்கட சாமிக்குக் கொடுக்க வேண்டியதை அவர் குடும்பத்தார்க்குக் கொடுக்க என்பது அது. தக்காரைப் புரத்தல் தமிழறிந்தார் கடனெனப் பாவாணர் அறிவுறுத்துதல் இவ்வரிசையறிதலால்புலப்படும். பிற தமிழறிஞர் பெறும் பேறு தாம் பெறும் பேறு எனப் பாவாணர் கொண்டதை யும் இதுவிளக்கும். முதல் தனித்தமிழ்க் காப்புநூல் பாம்பன் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய சேந்தன் செந்தமிழ் பார்க்கவில்லை. 1906 இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்தபோதும், அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க் காப்புநூல் முதன் முதலாக எழுதினார்கள் என்பது மிகமிக மெச்சத் தக்கதே. உடனே ஒருபடி வாங்கியனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்டவேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்கவில்லையே (17-8-71 வ.சு.) என ஏக்கமுறும் பாவாணர் தமிழர் வரலாற்றில் தனித்தமிழ் முன்னோடியாக அவரைக் காண்கிறார் (332-333) தனித்தமிழ் முன்னோடியார் இருவர். நாட்டுப் பற்றிற்கு உயிர், மொழிப்பற்று, முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்; பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும். இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கி வைத்தார். பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி நூற்றுக் கணக்கான வடசொற்கட்கு நேர்த்தென் சொற்களும் மொழி பெயர்த்தும் ஆக்கியும் வைத்துள்ளார் எனப் பாராட்டுகிறார். ஓராய்வாளருக்கு அல்லது உண்மையைத் தேடுநர்க்குக் கருவிகள் கிட்டக் கிட்டப் பயன்படுத்திக் கொண்டு மேலே செல்லுதல் கண்கூடாதல் இதனால் விளங்கும். மகிழ்ச்சிச் செய்தி ஒருவாறு நாடு கடத்தப்பட்ட பண்டாரகர் சி. இலக்குவனார் மீண்டும் தமிழ்நாட்டில் முன்பு பணியாற்றிய நாகர்கோவில் இந்துக் கல்லூரி முதல்வராக அமர்த்தப் பட்டிருப் பதறிந்து மகிழ்கின்றோம். அது அவர் முன்பு அவாவிய பதவியேயாயினும் தமிழுக்கும் தமிழர்க்கும் அவர் அறிவாற்றலும் தொண்டும் பெரும் பயன்படுமாறு மதுரைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகராக அமர்த்தப்பெறின் பெரிதும் மகிழ்வுறு வோம். அவர் நீடு வாழ்க. அவர்பணி பன்மாண் சிறந்தோங்குக. பெருஞ்சித்திரன் ஞா. தேவநேயன் பொதுச்செயலாளர், உ.தக. தலைவர் உ.த.க. - பொறாமைத் தமிழுலகில், புகழ்ஞாயிறு கிளர்ந்தது புத்தொளி பரப்புதலன்றோ இது! மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தி பர். வ.சுப. மாணிக்கனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவராக அமர்த்தப் படுதலை அறிந்த பாவாணர், மிகமகிழ்கிறார். பேரா. இலக்குவனார் பதவியமர்த்தம் பெற்றதாம் மகிழ்வுக்குப் பின்னர் நேர்ந்த மகிழ்வுச் செய்தி ஆதலான் மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தியாகக் கொள்கிறார். தாம் பணி முடிக்குமுன் விடுவிக்கப்பட்டதும், சொற்பிறப்பியல் அகர முதலி செய்யவிடா வண்ணம் இடர்ப்படுத்தியதுமாம் தீமைகளுக்குக் கழுவாய் போல இவ்வமர்த்தம் வாய்ந்ததாகப் பாராட்டுகிறார். தகுதி வாய்ந்த மாணிக்கரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக அமர்த்துதற்கு இது முதற்படியாக அமைவதாக என வாழ்த்து கிறார். பாவாணர் பேருள்ளம் இவற்றில் பளிச்சிடல் உண்மை. மூவர் தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை; உயர்நிலை மக்கட் குரிய தொண்டாற் றியவர்; மறைமலை யடிகள் இடை; இடை நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்; பெரியார் கடை; கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். தமிழைப் பொறுத்த மட்டில், மறைமலையடிகள் தொண்டு மூவகுப்பார்க்கும் பொதுவாகும். பாவாணர் வரிசை யறிதலில் தேர்ந்தவர் என்பதைச் சுட்டும் ஒன்று இது. இருமொழிச் தேர்ச்சி பாவாணர் மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கையே. ஆய்வாளர்க்குப் பன்மொழிக் கொள்கைதகும் எனப் பரிந்துரைப்பவர் அவர். பன்மொழிப் புலவராகிய அவர் ஆங்கிலத்தை உலக மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் கண்டமையால் அம்மொழித் தேர்ச்சி, நம்மொழி வளர்ச்சிக்குப் பேருதவியாம் எனப்பட்டறிவால் அறிந்தவர். ஒருகால் ஈரகவையாக இருந்த முத்தமிழ்ச் செல்வியை (அறவாழி தமிழரசியர் மகள்)க் குறித்து முத்தமிழ்ச் செல்வியை ஒருபோதும் மறவேன். இளமையில் இருந்தே தமிழ் ஆங்கிலம் இரண்டும் பயிற்றுவிக்க என எழுதுகின்றார் (1-5-71). ஆங்கில மொழிவல்லாரால் தமிழும் தமிழரும் பெற்ற நலங்களைப் பல்கால் பன்னூல்களில் பாராட்டும் பாவாணர் உள்ளம் இவ்வூக்குறுத்தலால் நன்கு விளங்கும். எருதந்துறை எருதந்துறையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் விழைவு பள்ளியிறுதித் தேர்வு முடித்த காலந்தொட்டே பாவாணர்க்கு எழுந்திருக்கிறது. அவ்விழைவு தம் அளவில் நிறைவேறவில்லை என்பதனால் அதனை விடுத்தார்அல்லர். தம் பேரன்புக்கு உரியவரும் உற்றுழி உதவாளருமாகிய திரு. முத்துக் கிருட்டிணர்க்குத் தம் விழைவைக் கூறி அவர் மக்களை அவ்வழிக்குப் பயிற்றுவிக்க வேண்டுமென்று (செல்வன் நக்கீரனை) ஊக்குக. நக்கீரனுக்குச் சொன்னதே இறைவிக்குமாம். என்கிறார். இறைவி நக்கீரன் தங்கை! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்பதனினும் மேலே ஒருபடி சென்று யான் பெறாப் பேறும் இவ்வையகம் பெறுக என்பதான செய்தி இது. மேலும் குழந்தைகள் எருதந்துறை செல்லநேரின் பெற்றோர்களும் உடன் செல்லவும் உடன் உறையவும் அணியமாதல் வேண்டுமெனக் கருதும் பாவாணர் அந்நாட்டு நற்குடி மக்கள் ஒரு மேசையில் ஊண் வகைகளை வைத்துச் சூழ இருந்து உண்ணுகின்றதும் உரையாடுவதுமாம் பயிற்சிகளையும் இங்கேயே - தம் இல்லத் திலேயே - வழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட வேண்டு மென்றும், அக்கடைப் பிடியையும் உள்வைத்து அயலறியா வண்ணம் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். தம்மை அக்குடும்பத்துள் ஒருவராகக் கொண்டு ஒன்றாகி உடனாகிச் சொல்லும் அருமை பாவாணர் தனிச் சிறப்பென உருக வைக்கினற்து. (எ. சுறவம், 2000) தமிழே ஆட்சிமொழி கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல கொன்றை மலர்சூடிக் கும்மியடி நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம் நண்ணிய தென்றுநீ கும்மியடி ஆட்சி மொழியிங்கே ஆங்கிலமாய் - என்றும் ஆகிவிடின் அதுகேடாகும் மாட்சி மிகுந்ததமிழ் மாநிலத் தாளுகை மாதரசே வரக் கும்மியடி கும்மியாட்டத்துப் பாட்டிலே ஆட்சிமொழி தமிழாக வேண்டு மென்பதைத் தேர்ந்து சொல்கிறார் பாவாணர். அதனைச் செயலாக்காமை கேடு ஆதலை நாடு இன்னும் அறிந்த பாடில்லை. எட்டாப் பெயர்களும் பட்டறிவும் படங்கு, கரணன், முக்காட்டான், விசிறிவாலி, புக்கா, குமுறி, சுவரொட்டி, வானீலி, செம்புகரி, காடன், திரிவான், கொண்டையன், தென்கண்டத்தான் என்று புறாவகைகளாகப் பாவாணர் குறிப்பிடுவன, இன்னும்அகரமுதலியை எட்டாப் பெயர்களாகவே உள்ளன (கட். இலக். I. 187). இக்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப்பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர வேறொன்று மில்லை. ஆனால், தமிழைக் கெடுப்பவர்க்கோ போற்றலும் பட்டமும் பதவிகளும்பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்பவுண்டு என்பது (கட். இலக். I. 288) தம்பட்டறிவின் பிழிவுச் செய்தி எனலாம், முன்னரும் இது சுட்டப்பட்டது. தமிழர்க்குப் பெயரிட அருமையாம் பொருளுண்டா? தண்டோடு ஒட்டியிருப்பதைத் தாள் என்றும்; அது நீண்டு தொங்கின் தோகை என்றும்; திண்ணமாயிருப்பின் ஓலையென்றும்; மெல்லிதாயிருப்பின் இலையென்னும்; மாம்பிஞ்சை வடுவென்றும்; பலாப்பிஞ்சை மூசு என்றும், வாழைப் பிஞ்சைக் கச்சல் என்றும் வேறுபடுத்துச் சொன்ன நுண்மாண் நுழைபுலத் தமிழர்க்குப் பெயரிட அரிதாம் பொருள் இவ்வுலகத்தில் ஏதேனும் உண்டோ? இவ்வாற்றல் இன்னும் அழியாதிருப்பதை நாஞ்சில் நாட்டு வைத்தூற்றி (Funnel) என்னும் சொல்லிற் காண்க. தமிழர்க்குப் பெயரிட அருமைப் பொருள் இல்லை! பாவாணர்க்குப் பெயிரிட அரியதெதுவும் அறவே இல்லை என்பது நாடறி செய்தி, தவளை வகைவிளக்கம் ஒரு சான்று: தவளை இனத்திற் பலவகை வெளிறித் தேய்ந்து போய் இருப்பது தேரை; சொறியுள்ளதாய் இருப்பது சொறியன்; பருத்துப் பச்சையாய் இருப்பது மொங்கான்; மணலுக்குள் இருப்பது நுணல்; வாலறாத தவளைக்குட்டி அரைத்தவளைஎன்றும் தலைப் பிரட்டை என்றும் சொல்லப்படும். தெ. பொ. மீ. தமிழுக் கதிகாரியா? -தென்மொழி 3 தொன்மையன்று முன்மை 18-12-70 ஆம் நாள் சென்னை இராசேசுவரி திருமண மண்டபத்தில் கழகப்பொன்விழா நடைபெற்றது. அதன் பிற்பகலில் நிகழ்ந்த மொழி மாநாட்டில்தமிழின் தொன்மை பற்றி உரையாற்றினார்: தலைப்பு என்ன ஆகின்றது பாவாணரிடம்? தமிழின் தொன்மை என்பது எனக்குத் தரப்பட்ட பொருள். அதற்குத் தொன்மை எவ்வளவு காலமோ அவ்வளவு காலம் வேண்டும் அதைப்பற்றிப் பேச! தமிழின் தொன்மை என்று சொல்வதை விட முன்மை என்று சொல்வதே எனக்குச் சற்று உவப்பாகவும் தெரிகிறது! இந்த மாநாட்டு மலரிலே முன்மை என்ற சொல்லைத் தான் நான் ஆண்டிருக்கிறேன். ஏனென்றால் கிறித்துவுக்கு முற்பட்ட நிலைமைகள் எல்லாம்- செய்திகள் எல்லாம் பொதுவாகத் தொன்மையானது எனத்தான் சொல்லப் படுகின்றன. தமிழோ மிகத் தொன்மையானது. உலகத்திலுள்ள 3000 மொழிகளுக் குள்ளே முதன்மையானது. முந்தியதென்று சொல்லப்படக் கூடியது. ஆகையினாலே அதை முன்மை என்று சால்வது மிகப் பொருந்தும் என்கிறார். சாலமோன் காலத்தில் தோகை பற்றிய குறிப்புண்மை கால்டுவெல் காட்டினார். அதற்கு முற்பட்ட ஆரிய வேதத்திலேயே தமிழ்ச்சொல் உண்டு. சிறப்புநிலைப் பொருளால்தான் ஒருசொல் எம்மொழிக் குரிய தென உறுதிசெய்யலாம். அவ்வகையில் தா, வெள்ளம், செப்பு என்பவை தமிழில் சிறப்புப் பொருள் தருதலால் தமிழ் என்று உறுதிப்படுத்தலாம். இது தமிழின் முன்மைச் சான்று என இக்கூட்டத்தில் விளக்கினார். கழகநூலாசிரியருள் ஒருவராகிய பாவாணர் இவ்விழாவில் பாராட்டுப் பெற்ற எழுவருள் முதன்மையர். பிறர் ஔவை சு. துரைசாமி, பொ. வே. சோமசுந்தரனார், கீ. இராமலிங்கனார், என். கே. வேலன், மா.சண்முக சுப்பிரமணியம் பி.எல். சாமி என்பார், தமிழ்க்கொடி திருச்சி புத்தூரில் இருந்த ஐயா தமிழ் உணர்வால் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு அவர் இல்லத்தில் தமிழ்க்கொடி ஏற்றியதால் வேலை இழந்தார் என்றும், அப்பால் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும் சேலம் கல்லூரியிலும் தமிழாசிரியர் ஆளார் என்றும், இந்தி எதிர்ப்புப் போர்இறுதியில் ஆங்கிலப் பேரரசுக்குத் தமிழ் நாட்டைத் தமிழ்நாடாக ஆக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார் என்றும் திருப்புத்தூர் தொ. வி. இரா. தொந்தியா பிள்ளை திருச்சி.8, கூறுகிறார். தென்மொழி; பாவாணர் நினைவிதழ் பக்.60. பெயரிலும் பிரியாமை மணமக்கள் பெயரைப் பிரித்து எழுதவும் விரும்பாதவர் பாவாணர். இருவர் பெயரையும் இணைத்தே திருமண வாழ்த்தில் பொறிப்பது அவர் வழக்கம். அவர் பாடியளித்த திருமண வாழ்த்துகள் அனைத்திலும்இக் கடைப்பிடியைக் காணலாம். மருவுதல், கலத்தல்; மணத்தல், கலத்தல் - என்னும் சொல்லாய்வுத் தேர்ச்சியும் வாழ்வியல் தெளிவும் பாவாணர்க்கு இருந்தமையால் இதனைப் போற்றினார். உரைநடை எழுத்திலும் இக்குறிப்பை உணர்த்தினார். பகுத்தறிவு, புதுமை, சீர்திருத்தம் இன்னன இயல்பாக அமைந்தவர் பாவாணர். அவற்றுள் சில: கணியம் பார்த்தல் சென்னைச் சிறுவழக்கு மன்றத் தீர்ப்பாளராக இருந்த பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தை பம்மல் விசயரங்க முதலியார்க்கு மணம்பேசியபோது சென்னையில் இருந்த முப்பெருங்கணியரும் அம் மணத்திற்குப் பொருத்தமில்லை என்றும், மணம் நிகழின் மணமகள் மகவுபெறாது விரைந்து அமங்கலையாவாள் என்றும் கூறிவிட்டனர். ஆயின் மண மகனார்க்கு மனப் பொருத்தம் மட்டிற்கு மிஞ்சியிருந்தது. அதனால் மணம் நிகழ்ந்தது. மணமகளார் நீடு வாழ்ந்து நாற் புதல்வரும் நாற்புதல்வியருமாக எண்மக்களைப்பெற்று அறுபதாம் கலியாணத்தின் பின்பும் பல்லாண்டு மங்கலியராயிருந்து வாழ்வு முடித்தார். இவ்வாறு பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யான்கண்ட புலவர்கள் என்னும் வரலாற்றுக் கட்டுரைப் புத்தகத்தில் உண்மையைச் சுட்டிக் காட்டிக் கணியம் பார்த்தலின் வேண்டாத்தனத்தை விளக்குகிறார் பாவாணர். மண்ணில் விண் 142. மூடநம்பிக்கை வீட்டு வாசலைக் குட்டையாக வைத்து முட்டிக் கொண்டு வாசல் தட்டிவிட்டதென்றும், வீட்டில் வளர்க்கப்படும் பூனை வெளியேவரின் பூனை குறுக்கிட்டதென்றும், வினைத்தடை யென்று மனந்தளர்வதும் மூவர்போன கருமம் மூதேவியடையும் என்பதும் மூட நம்பிக்கைகள் என்பதை விளக்குகிறார் பாவாணர். மண்ணில்விண் 143. தீயோரைத் திருத்தும் வகை தீயோரை நல்விழப்படுத்தும் உளவியற் கருத்துகளையும் குறிப்பிடுகிறார் பாவாணர்: கள்வருக்கு ஒற்றர்வேலையும் கொள்ளைக் காரருக்குப் படைத்துறை வேலையும் கொடுப்பின் ஓரளவு நிலைமைதிருந்தலாம் என்றும் கள்ளக் காசுத்தாள் அடிப்பாரையும் கள்ளத்தனமாகத் துமிக்கி (gun) சுழலி (revolver) முதலியன செய்வாரையும் பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின் சிறந்த பொறிவினைஞராகவோ புதுப்புனை வாளராகவோ தலையெடுக்கலாம் என்றும் கூறுகிறார். (மண்ணில் விண். 144). பந்தயமும் பரிசும் பாவமே கிண்டிக்குதிரைப் பந்தயமும அரசுப்பரிசுச் சீட்டும் சூதாட்டே, அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா. வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினையாகா. குதிரைப்பந்தயத்தில் ஒட்ட மொட்டிக்கெட்ட குடும்பங்கள் எத்தனையோ. பரிசுச்சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய்யப்பட்டதெனின் கொள்ளையடித்த பொருளைக் கொண்டும் அது செய்யலாம்என்க. என்கிறார். மண்ணில்விண் 138, 149. ஓர் எத்தன் நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கோர்எத்தன், முன்னதாக வழியில் ஒரு பித்தளை நகையைப் போட்டு விட்டு வந்து, என்னோடு கூட நடந்துதான் புதிதாய் அந்நகையைக் கண்டெடுத்ததுபோல் எடுத்து, இதோபார்! ஒரு நல்ல பொன்நகை! இது ஐம்பது ரூபாய் பெறும்போல் இருக்கிறது. இது நம்மிருவருக்கும் பொது. கடைக்குப் போய் விற்று நாமிருவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், எனக்கு நேரமில்லை. உடனே புகைவண்டிக்குப் போக வேண்டியிருக் கின்றது. ஆகையால் நீயே எடுத்துக்கொள். ஒரு மதிப்பாய் விலையிட்டுப் பாதியைக் கொடுத்து விடு. நான் போகிறேன் என்று சொன்னான். நான் எனக்கு இது வேண்டாம். நீதானே எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டுப போய் விட்டேன். இங்ஙனம் எத்துணையோ ஏமாற்றங்கள் நடந்து வருகின்றன. -கட்டுரை இலக்கணம். 259 - இச் செய்தி புனைவா? இல்லை, இலங்கைச் செலவு உண்மையா? இலங்கைச் செலவு பற்றிய செய்தி பிறவகை யான்அறியக் கூடவில்லை. வஞ்சப்புகழ்ச்சி (Irony) இளங்கோவன் என்னும் மாணவனுக்கு இப்பள்ளிக் கூடத் தினிடத்து அளவிறந்த பற்றிருப்பதனால் இதிற் சேர்ந்து இருபதாண்டாகியும் இன்னும் இதனின்று வெளியேற விரும்பவில்லை. கட்டுரை வரைவியல் 106 உரைநடையில்அணிநடை காட்டும பாவாணச் சான்றுள் ஒன்று இது. மேலே வருவனவும் சில. வளைகூற்றணி (நேராக் கூறாமல் சுற்றிக் கூறல்). அரைவண்டியில் கால்மாட்டைப் பூட்டிப் போகிறான் - நடந்து போகிறான். கட்டுரை வரைவியல். 110 இருபதினாயிரம் கொட்டைப் பாக்காய் (அம்மணமாய்) இருந்தாள். (இருபதினாயிரம் கொட்டைப் பாக்கின் அளவைப்பெயர் அம்மணம்) கட்டுரை வரைவியல்110 சிறு நூல்களிலும் பெருநூல்கள் நெடுந்தொகை யேயன்றிக் குறுந்தொகையன்று (இரட்டுறல்) 17-1-33 உலாச்செல்ல இடமில்லை தொழிலாளரும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வதியும் இடங்களிலெல்லாம், தெருக்களிலும் சாலைகளிலும் இருமருங்கும் செய்யப்படும் துப்புரவுக்கேட்டைநினைப்பினும் சொல்லொணா அருவருப்புணர்ச்சியுண்டாம். நகரம் நரகமாகின்றது. மாநகரமோ மாநரகமே. சாலை நடுவிற் சென்றால் வண்டிகட் கச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறு நரகத்திற் கச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங் காற்றெல்லாம் வீச்சமன்றோ? அமைதிக்குச் சிறந்ததாகச் சொல்லப்படும் நாட்டுப் புறச் சூழலும் இக்கால்இத்தகையதே. என்றோ ஒரு கால் வரும் பெருவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுபோய்க் கடலிற் சேர்ப்பினும் மீண்டும் பழைய நிலைமையே நேர்வதால் உலகிலுள்ள வரை அல்லது மக்கட்டொகை சரிபாதியாகக் குறையும் வரை உலாச் செல்ல இடமில்லை. மண்ணில் விண்; 61 நகைச்சுவை நகைச்சுவைச் செல்வர் பாவாணர்; ஒன்றைத் தாமே தம்மையடக்க முடியாமல் நகைக்கும் சொல்லிக் குழந்தை அவர். எழுத்தில் வரும் சில நகைச் கெய்திகள்: ஒரு முரட்டுச் சேவகன் தன்ம மனைவியை நாள்தோறும் காரணமில்லாமல் அடித்துக் கொண்டிருந்தான். xU ehŸ tH¡f¥go mtis mo¡ifÆš mtŸ ‘Ú V‹ ï¥go v‹id mo¡»‹whŒ? என்று கேட்டாள். அதற்கு அவன், நான் சொன்னபடி செய்யாமையால் அடிக்கின்றேன் என்று சொன்னான். உடனே அவள் அவனுக்கு மதிகற்பிக்க எண்ணி இனிமேல் நீ சொன்ன படியே செய்கின்றேன். ஆனால், என்னை அடிக்கக் கூடாது என்று சூள் (ஆணை) இடுவித்துக் கொண்டாள். பின்பு ஒருநாள் அடி! அடி! எங்கே போகிறாய் என்று கேட்டான், அவள் ஓடிவந்து அவனை இருமுறை அடித்து நீ சொன்னபடியே செய்தேன் என்றாள். மற்றொருநாள் அவன் அவள் தலையில் உமியைப் பார்த்து அடி! தலையில்உமி என்றான். அவள் உடனே அவனை ஓரடியடித்து அவன் தலையில்உமிழ்ந்தாள். வேறொருநாள் கொஞ்சம் பணம் கொண்டு வந்து சொடுத்து இதை வீட்டுக்குள்ளே வை என்றான். அவள் அதை வீட்டுககுள்ளே கொண்டுபோய், மூடனுடைய பணமே! KulDila gznk! என்று வைது கொண்டிருந்தாள். அவன் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, அறிவடைந்து அதற்குமேல்அவளை அடிப்பதை நிறுத்திவிட்டான். கட்டுரை இலக்கணம் : 257-8 உரைநடை அழகர் பாவாணர்: ஒரு சில சான்றுகள் : எளிமையில் அருமை திங்கட்கிழமை திருநாவுக்கரசு திரும்பி வந்தான் - மோனை கோனார் போனார்; எங்களூர் பெங்களூர் - எதுகை அரவம் அரவம் அறியும் - மடக்கு அறிவார் அறிவார்? அறிவார்அறிவார்! - பின்வருநிலை ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் - இரட்டுறல் மேலை விடையூழியர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்த பெருநன்மையை மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது - ஒலிப்போலி - இங்ஙனமன்றிச் செயற்கையாய் அமைக்கும் மோனை எதுகை முதலியவை சிறந்தன அல்ல. சில நயமான தொடர்கள் ஊழுக்குக் கூத்தன்; கூழுக்கு ஔவை - கட்டுரை இலக்கணம்: பக். 14 வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி, கொடைக்குக் குமணன் நடைக்கு நக்கீரன் - கட்டுரை இலக்கணம் : பக். 15 மனைக்கு வேம்பு; மன்றுக்குப் புளி - கட்டுரை இலக்கணம்: பக். 16 புன்குடி லாயினும் தன்குடிலா யிருக்கவேண்டும் - கட்டுரை இலக்கணம்: பக். 29 மூத்த பிள்ளைக்கு உடல்வலி மிக்கிருக்கும் இளைய பிள்ளைக்கு மதிவலி மிக்கிருக்கும் - கட்டுரை இலக்கணம்: பக். 277 நடை பேச்சு நடைக்கு ஏற்ப எழுத்து நடை வேண்டும்; அதுவே மெய்யில் என்பார் உளர். கீழ் மக்கள் பேச்சை ஒப்புக் கொள்ள வேண்டுமெனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அங்ஙனம் கொள்ளின் ஆட்சியும் காவலும் வழக்குத் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதே இல்லை என்கிறார் பாவாணர். (வ.சு. பவழவிழாமலர் பக்.4) உரைநடையிலும் பாவுக்குரிய மெய்ப்பாடு செறிய வரைபவர் பாவாணர்: இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப் பட்டதை அறிந்தவுடன் இளசைக்கிழார் சோமசுந்தர பாரதியார்க்குக் கண் சிவந்தது; மீசை துடித்தது; மயிர்சிலிர்த்தது; தம் உதட்டைக் கடித்து வஞ்சினங் கூறி உரறினார் என்று விறலணிக்கு எடுத்துக் காட்டுக் கூறுகிறார் கட். வரை. 106) மாப்பிள்ளை - பெண் சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டரின் இளைய மகன் (கடைக்குட்டி) வேங்கடேசன் 25 அகவையினன். பொறியியல் இளங்கலைஞன் (B.E.) சென்னையில் அரசியல் அலுவலன். 1500 உருபாச் சம்பளம் பெறுவோன். அழகுன், பொன்னிறத்தன், நற்குணன், திறமையன், மணப் பருவத்தின், ஆதலால் பெண்தேடுகின்றனர். இது வரை தக்க பெண் அமையவில்லை. பொன்னிறமும் பொற்பும் ஒண்கல்வியும் உயர் குணமுமுள்ள பெண் உம் இனத்தில் இருந்தால் உடனே தெரிவிக்க. வந்து பார்க்கச் சொல்கிறேன். மணமக்கள் வீட்டார் கொங்கு வெள்ளாண் குடியினரே. - மறை. நித். 17-8-71. பெண்பார்ப்பவரும் மாப்பிள்ளை பார்ப்பவரும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைச் சுட்டும் பாவாணப் பார்வை இது. தமிழ் மணம்: பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளையும், பாவாணரும் ஓரிடத்தில் இருந்து உரையாடிக் கொண்டிருந் தனர். அவ்விடத்திற்குப் பாவேந்தர் சென்றார். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினார் பாவேந்தர். ஏன் மூக்கை உறிஞ்சுகிறீர்கள்? உடல் நலம் இல்லையா? என்றார் பாவாணர். உங்கள் இருவரையும் காணும் போது தமிழ்மணம் கமழ்கிறது என்றார் பாவேந்தர். - பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து. வரலாற்று வரைவில் ஓர் ஒழுங்கு வேண்டும் என்கிறார் பாவாணர்: வரலாற்றுச் செய்திகளும் எடுத்துக் காட்டுகிறார். அவை மிகப்பல. அவற்றுள் சில; ஒருவர் வளர்ந்து பெரியவரான பின் திரும்பவும் குழந்தையாதல் கூடாமையின் ஒருவரைப்பற்றி வரையும் போது இளம் பருவத்தைக் கூறும் பகுதியில் ஒருமைப் பாலிலும், வளர்ந்த பருவத்தைக் கூறும் பகுதியில் உயர்வுப் பன்மைப்பாலிலுமாக வேறுபட வரைவது பொருந்தாது - கட்டுரை வரைவியல் . 114. ஒருவரைப் பற்றிக் கட்டுரை வரையும்போது அவரைக் குறித்த சுட்டுப் பெயரை முதலில் அவர் என்று உயர்வுப் பன்மையில் தொடங்கினால் இறுதிவரை அவர் என்றே யெழுதுதல்வேண்டும். அவன் அவள் என்று ஒருமைப் பாலில் தொடங்கினால் இறுதிவரை அங்ஙனமே இருத்தல் வேண்டும். உயர்ந்தோரை யெல்லாம் உயர்வுப்பன்மையிலேயே கூறல் வேண்டும். வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும் பற்றி வரையும் போது சிறுபுன் செய்திகளைக் கூறுதல் கூடாது. ஈகைப் பயன் மன்னார் குடியில் இருந்த ஒரு பண்ணையார் (மிராசுதார்) தம் பெருங்குடும்பத்துடன் இராமேசுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும் போது, வழிப்பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன் அப்பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியராய் இருந்ததினால் அவர் வண்டியை மட்டும் தானே காவல் செய்து கவராது விட்டு விட்டான். (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும். பக். 224-225). ஐயாத்துரையார் காலஞ்சென்ற செண்டாத்தூர் ஐயாத்துரை முதலியார் மக்களால் மறக்கப்பட்ட வள்ளல்களுள் ஒருவர் எனக்கட்டுரை இலக்கணத்தில் சுட்டுகிறார் (1:34) பாவாணர். அவரை அறிந்தார் வெளிக்குக் கொணர்தல் வரலாற்றுப் பணி. பிறநாடுகளில் எல்லாம் அரசியற் கட்சி பலவிருப்பினும் நாட்டு மொழி அவையெல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப்பாழாய்ப் போன தமிழ் நாட்டிலோ ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படுகிறது. அதிலுங்கேடாக நாட்டுமொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி? தாய் மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டா? என்று வினாவும்நிலை (கட். இலக். ஐ.65) அன்றையினும் இன்றை மிக வினாவுமாறே உள்ளது. பாவாணர் பாவன்மை நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிவிருத்தம், கலித்தாழிசை, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, எண்சீர் ஆசிரிய விருத்ம், அறுசீர் ஆசிரிய விருத்தம், எழுசீர்ச் சந்தவிருத்தம், இசைப்பா, கும்மிப்பா, நூற்பா ஆகிய பலவகை பாக்களும் பாவினங்களும் பாடியவர் பாவாணர். சீர்த்தனை எனப்படும் கீர்த்தனை முதலாம் இசைப்பாடல்கள் பாடுதலிலும் இசைத்தலிலும் தேர்ந்தவர். அவர் பாடல்களுள் சில மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவிக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும் கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதாசன். பெரியார் புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும் பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு மண்ணாற்றிற் கலஞ்செலுத்தும கடுஞ்செய் கையோல் கைதூக்கித் தென்னவரைக் கரையி லேற்றித் தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும் துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால் நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றின் நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே முதன்மொழி 1 : 3 : 1. மறைமலையடிகளார் நாட்குறிப்புகளில் பாவாணர் 7-5-1945 சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர்திரு. தேவநேயப் பாவாணர் சில தமிழ்ச்சொற்களின் பிறப்புக் குறித்து ஆழமான உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதிந்திருந்த ஆழ்ந்த அறிவும் நகைச்சுவையும் கேட்போரைப் பணித்தன. பக்.91 19-4-1946 பண்டிதர் தேவநேயப் பாவாணர் வந்தார். தம் தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் வழங்குமாறு வேண்டினார். கொடுக்க இணங்கினேன். தம்முடைய நூல்களான திரவிடத் தாய், கட்டுரைவரைவியல், சுட்டு விளக்கம் ஆகியன எனக்குக் கொடுத்தார். பக், 92 - 3. 1-7-1949 டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதர் இராசமாணிக்கம்பிள்ளை, திரு. தேவநேயன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்க்குப் பதில் விடுத்தேன். பக். 95 (இக்குறிப்புகள் 26-6-89 இல் கிடைத்தன) பாவாணரை நெருங்கியிருந்தவரும் அவர் உறவினரும் என் தலைமையாசிரியருமாகிய திரு. பால் வாசன் அவர்கள் 27-6-89 இல்சில குறிப்புகள் விடுத்துளர். என் இனிய தமிழன்பர் புலவர் திரு. மாடசாமி அவர்கள் வழியே கிடைத்த குறிப்புகள் இவை. 1) திரு.வி. வேதநாயகம் (தாளாளர்) நடத்திய சோழபுரம்மி-ன் (S.M.) பள்ளியில் விடுதியிருந்ததால் 1910 ஆம் ஆண்டில் அங்குத் தங்கி ஐந்ண்டுகள் திரு. S. முத்துசாமி ஆசிரியரிடம் தொடக்கப்பள்ளிப் படிப்புப் படித்தார். 2) வேலூர் (வடஆர்க்காடு) மிஷன்பள்ளி ஆசிரியர் குருபாதம் அவர்கள் வீட்டில் தங்கியும் அங்கிருந்த விடுதியில் தங்கியும் எட்டுவரை படித்தார். (இவ்விடம் ஆம்பூர் ஆகலாம்) 3) ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டு 1921 சூலை மாதம் சோழபுரம் மிஷன் பள்ளியில் (சீயோன் மலையில்) திரு. இராசேந்திரன் என்னும் தலைமை யாசிரியரின் கீழ் மூன்றாம் ஆசிரியராக 1921 சூலை தொடங்கி 1922 பெப்பரவரித் திங்கள் இடைவரை வேலை பார்த்தார். 4) 1922 சனவரிக்கு உருபா. 16-உம், பெப்ரவரித் திங்களுக்கு உருபா. 8-உம் சம்பளப்பட்டியில்கையொப்ப மிட்டுப் பெற்றுள்ளார். (இக்குறிப்புகளால் பாவாணர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற பின்னரே முறம்பில் ஆசிரயரானார் என்பது தெரிகின்றது. 14. பெரும்பிரிவும் பேரிரங்கலும் பெரும்பிரிவு நான் மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினனாதலால் 4- 10. மதுரையில் தங்கி, 11-1-81 சென்னை திரும்புவேன். குழுத் தலைவர் முதலமைச்சரே. 5-1-81 பிற்பகல் 2 மணிக்கு மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் மாநாட்டில் சொற்பொழி வாற்றுமாறு மாநாட்டுப் பொதுக்கூட்டத் தலைவரும் வேளாண்மைத்துறை அமைச்சருமான திரு. காளிமுத்து விருப்பப்படி இசைந்துள்ளேன். நண்பருடன் வருக எனப் பேராசிரியர் பூங்காவனர்க்கு 31-12-80 இல் மடல் விடுக்கிறார்பாவாணர். 2-1-81 இல் எனக்குத் தாம் 3-1-81 இல் மதுரைஎய்தி அரிமா உண்டிச்சாலையில் தங்க இருப்பதைக் கைவழியஞ்சலாய் விடுக்கிறார். அதன்படியே மதுரைக்கு 3-1-81 இல் வந்து அரிமா விடுதியில் தங்குகிறார். உரையாடலிடையே அரிமா விடுதியில் அரிமா உணவும் வரிமா உணவும் வழங்குவதைச் சுட்டுகிறார். 4-1-81 இல் சளித்தொல்லையுடன் எம் இல்லத்திற்கு வந்தார். மருத்துவரைப் பார்க்கலாம்; மருந்துண்டு சீர்செய்து விடவேண்டும் என்றேன். பழக்கூட்டு உண்டேன்; அதனால் தொண்டை கட்டி விட்டது; சீராகிவிடும் என்று நிலைவிளக்கம் செய்தார். நலங்குன்றிய நிலையிலும் உறுதியில் தலைநின்றார். மறுநாள் (5-1-81) பந்தயத்திடலில் நிகழ்ந்த பொது நிலைக் கருத்தரங்கில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் பொழியத் தொடங்கினார். அலைமோதும் மக்கள் தலைகளெல்லாம் பழங்குமரிப் பரப்பும் குமரிக்கடலுமாகத் தோன்றியவோ என்னவோ? பாவாணர் கடல்மடை திறந்த வெள்ளமென - பொங்குமாகடல் வீழ்ச்சியென - ஊழியிறுதி யிலாம் ஆழிப் பேரலையென்னப் பொழிந்தார்! தம்மை மறந்தார்! தம் பொழிவே உருவானார்! கூட்டம் எத்தகையது! எத்தகு செவியர் கூடியிருப்பவர்! மேடையில் இருப்பவர் எந்நிலையர்! இவற்றை எண்ணினார் அல்லர்! தாம் வேறு தம்பொழிவு வேறு எனப்பகுத்துணர வல்லார்க்குத் தாமே அவையெண்ணவரும்! தாமே கருத்தாகவும், தாமே கருதுகோளாகவும் ஆகிவிட்ட இருமையில் ஒருமையர் - இடைத்தடையைக் கருதுவாரா, கையொலியைக் கணக்கிடு வாரா? நிறுத்துக என்றும் கூட மேடையில் இருந்த ஒருவர் இடையே வந்து, காதோடு காதராகிக் கடித்துப் போனாராம்! அவர்க்கு, நிறுத்துகிறேன்; நிறுத்தத்தான் போகிறேன் என்று சொல்லிய சொல்லை நிலைப்படுத்தி விட்டார் பாவாணர். ஒன்றே கால் மணிநேரப்பொழிவு; தமிழுக்கு - தமிழினத்திற்கு-த் திருப்பு முனையாம் காலம்வந்து விட்டது என நம்பிப் பொழிந்த பொழிவு! அதன் விளைவு இயல்பாக உடல் நலங்குன்றியிருந்த அவர்க்கு இவ்வுணர்வுப்பீறீடு - நெஞ்சாங் குலையைத்தாக்கி விட்டது! விடுதிக்கு வந்தார் பாவாணர் நெஞ்சில் வலி கண்டது! குருதியழுத்தம் மிகுந்தது; பேச்சுத் திணறியது! உடனே மருத்துவர்கள் வந்து பார்வையிட்டனர். மருத்துவமனையில் சேர்க்க ஏவினர். மதுரை அரசினர் இராசாசி மருத்துவமனையில் இரவு 10.45-க்குச் சேர்க்கப்பட்டார். செய்தியறிந்த முதல்வர் மருத்துவமனைக்கு எய்தினார். மருத்துவமனை அவ்விரவுப் போழ்தும் கூட சுருசுருப்பாயிற்று! எத்தகைய சுருசுருப்பு உடனே எய்துகிறது! தனிப்பெருங் கண் காணிப்புகள் எப்படியெல்லாம் தேடியும் ஓடியும் குவிகின்றன. ஓரளவு வலி நின்றது! மீண்டும் தாக்குமோ என்னும் அச்சம் இருந்திருக்கிறது மருத்துவர்களுக்கு! மயக்க நிலையிலே பாவாணர் வைக்கப்பட்டார்! மயக்கநிலை நீங்கியபோது அவர்க்கு உண்டாகிய அரற்றொலி அதிர்ந்தது! அந்த உரவோரையும் அப்படி வாட்டும் வலியா? வலியை வென்றுவென்று வலிமையுருவாகி யவர்க்கும் வலியின் வாட்டுதலா? கேட்கப் பொறுக்கவில்லை! நிற்கப் பொருந்த வில்லை! பேச்சிலா நிலைக்குச் சென்று விட்டார் பாவாணர்! மூச்சிலா நிலைக்குப்போகாவண்ணம் மருத்துவர்கள் கண்காணிப்பு நிகழ்ந்தது! பாவாணர்க்கு நேரிட்ட நேர்வு தெரிந்து அவர் மக்கள் எய்தினர்; மறுகிப்போயினர்; எப்படி வழியனுப்பி வைத்தவர்கள் அவர்கள்! ஒரு சொல்தானும் சொல்லமுடியாமல் - விழிதிறந்து ஒரு பார்வையும் பார்க்க முடியாமல் இருக்கும் தம்முயிர்த் தந்தையரைக் கண்டு எவர்க்கே தாங்க இயலும்! எவர் வந்தென்ன? எவருருகி என்ன? 14-1-81 இல் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்பட்டது. எது வரக்கூடாதென எண்ணப்பட்டதோ, அது வந்து விட்டது! செய்தியறிந்த முதல்வர் - சென்னையில்இருந்து வானூர்திவழியே தேர்ச்சி மிக்க மருத்துவர் இருவரை அனுப்பினார். மருத்துவர்கள் பெரிதும் முயன்றனர்! ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று சூழினும் தாம்முந் துறும் என்னும் பொய்யாமொழி பொய்யாமொழியாயிற்று. 15-1-81 இரவு 12.30 க்குப் பாவாணரின் ஒடுங்கா மூச்சு ஒடுங்கிவிட்டது! மாலைக் கதிர்களை ஒடுக்கிச் சுருட்டி மறையும் ஞாயிறென மொழிஞாயிற்றின் பேச்சுடன் மூச்சும் ஒடுங்கி விட்டன! வாராது வந்த மாமணியைத் தமிழுலகு இழந்தது! அரசுச் சார்பிலே பாவாணர் உடல் 16-1-81 இல் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. செய்தியறிந்த தமிழுள்ளங்கள் துடிதுடித்தன. தமிழ்த் தலை மகனைக் கடைசி முறையாகக் காண நேர்ந்ததைத் தவறவிடக் கூடாதெனத் தத்தளித்துச் சென்னைக்குத் திரண்டன. பாவாணர் தமிழுலாச்சென்றதைக் கண்ணாரக் கண்டவர்கள் அவர் உடலம் திரும்பிவரும் செய்தியறிந்து அவர் குடியிருந்த இல்லத்திலே குழுமியிருந்தனர். பெரும்பிறிதாதல் என்பதை விளக்கிய பெருமான், பெரும்பிறிதாகிய துயர் அறிவறிந்தோர் மயிர்க்கால் தோறும் புகுந்து துளையிட்ட தென்று வாட்டியது! நின்றான் இருந்தான் கிடந்தான் என்றாற்போல்கிடையில் அமைக்கப்பட்ட பாவாணர் உடலுக்கு எவரெவர் வளையம் வைத்தனர்; மாலை சூட்டினர்! அரசுச் சார்பிலே இறுதிச் சடங்கு நடக்குமெனின், முதல்வர் முதல், அமைச்சர்களும் வாரா திருப்பரோ? வாழ்ந்த நாளில் காத்துக் கிடக்க வைத்த பதவியரும் காத்துக் கிடந்து காண நேர்ந்த சூழல் நெக்குருகச் செய்தது; ஆனால் அது, நாட்டுக்கொரு பாடமாக அமைந்தால் அன்றோ பயன்பாடு! பண்பாடு! இருந்த போது போற்றிக் கொள்ளா இழப்பை எண்ணி, அதன் பின்னாவது செய்தக்க செயல்கள் செய்யப்பட வேண்டுமே! அஃதென்று வருமோ? 17-1-81 ஆம் நாள் பாவாணர் திருவுடல், கலைஞர் கருணாநிதி நகரில் இருந்து கீழ்பாக்கம் கல்லறைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது! உணர்வுமிக்க நெஞ்சங்கள் அழுதன! தத்தம் குடும்பத்துத் தலைமகனை இழந்தார்போலப் பொங்கி அழுதனர்! இத்தகு மொழிநூல் வல்ல மாந்தரைக் காணல் எளிதோ என ஏங்கினர்! பாவாணர் திறத்தையும் உரத்தையும் பன்னிப் பன்னி இரங்கினர்! மாலையைச் சார்த்தும்போதே கண்ணீர் மாலையையும் சார்த்திய அன்பர்கள், பாவாணர் அமைதி முகம் கண்டு ஆறாத் துயருற்று அனலிடைப் புழுவெனத் துடித்தனர்! வாழ்வெல்லாம் வண்டமிழ்க்கே என வாழ்ந்த அந்த வாழ்வு கீழ்பாக்கம் கல்லறைக்குள் அமைந்தது! கல்லறையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தைச் சீராக ஒழுங்குறுத்திச் சிலம்பொலி செல்லப்பனார் நடாத்தினார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தலைமையில் அமைச்சர்கள் அரங்கநாயகம், பொன்னையன், இலங்கை அமிர்தலிங்கனார், பெருஞ்சித்திரனார், இளவரசு, இளங்குமரன், சனார்த்தனம், பொற்கோ, செல்லப்பனார், பொன்னடியான், வா.மு. சோதுராமன், சா. கணேசன், த.ச, தமிழன், சிறுவை மோகன சுந்தரன், செ. இராசு, புகழேந்தி, பாலசுந்தரம், தமிழமல்லன் ஆகியோர் இரங்கல்மொழிந்தனர். சிங்கைத் தமிழர் சார்பில் வீரப்பனும் கருநாடக மாநில உ.த.க. சார்பில் பூங்காவனமும் இரங்கல் தெரிவித்தனர். தமிழறிஞர் ஒருவர்க்கு அரசு இத்தகைய சிறப்பு இதுவரை செய்ததாகத் தெரியவில்லை என இதழ்கள் பாராட்ட அரசுச் சார்பில் இறுதிச் சடங்குகள் நிகழ்ந்தது உண்மை! அச்சிறப்பால் பாவாணர்க்குப் பயனா? அச் சிறப்பால் நாட்டுக்குப் பயனா? கல்லறைக்கூட்டம் முடிந்ததும் உ.த.க. எதிர்கால நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்தனர். குடந்தை கதிர் தமிழ்வாணர் கூட்டததிற்கு ஏற்பாடு செய்தார். திரு. அ. நக்கீரனார் தலைமையில் கூட்டம் நிகழ்ந்தது. திரு. இரா. இளவரசு வரவேற்றார். திருவாளர்கள் பூங்காவனம், மி.மு. சின்னாண்டார், செந்தமிழ்க்கிழார், த.ச. தமிழனார், மு. பாவாணனார், ந. அரணமுறுவல், க. தமிழமல்லனார், அன்புவாணர், சங்கரலிங்கனார், சிங்கை வீரப்பனார், தங்க வயல் வெற்றிச் செல்வனார் ஆகியோர் பங்கு கொண்டு கருத்துரைத்தனர். ஓரிரு திங்களில் புதுக் கோட்டையில் உ.த.க செயற்குழுவைக் கூட்டுவதென்று முடிவு செய்தனர். நகரப் பெரியவர் என மதிக்கப்படும் செரீப்பு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 29-1-81 மாலையில் நகரப் பெருமக்கள் கலந்து கொள்ளும் வகையில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ம. கோ. இரா. முதலாக, அமைச்சர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இவ்வேற்பாடும் எத்தமிழறிஞர்க்கும் செய்யப்படாத ஏற்பாடாகும்! அவ்விரங்கலில் கலந்து கொண்டோர்கள்; திருவாளர்கள் - ம.பொ.சி; கே. இராசாராம்; எம்.பி. சுப்பிரமணியம்; ப.உ. சண்முகம்; பி, மாணிக்கம்; டி.என். அனந்தநாயகி; குமரி அனத்நன்; ப. நெடுமாறன்; சந்தோசம்; அபிபுல்லாபேக்; மெ. சுந்தரம்; பிரன்சிசு ராயன்; மூர்த்தி; வை. பாலசுந்தரம் ஆகியோர். இக்கூட்டத்திலே பேசிய முதல்வர் தமிழ்மொழி ஆராய்ச்சியில் பாவாணரின் விளக்கம் நம்மைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றது. அவருடைய கருத்துக்கள் தமிழின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. பாவாணர் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்து இருக்கிறார். தமிழரின் தகுதிக்கு உண்மையான ஆதாரங்களைத் தந்தவர் பாவாணர். அவரை நான் தமிழ்த் தெய்வமாகக் கருதுகிறேன் என்றார். இதனினும் மேலே சென்று, அரசு நூல் நிலையங்களுக்கு இதுவரை எந்தத் தனிப் பெயரும் தரப்படவில்லை. இனி அரசு நூல் நிலையத்திற்குப் பாவாணர் பெயர் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். தமக்கும் அவர்க்கும் எட்டாண்டுகளின் முன்னரே தொடர்புண்டு என்பதையும் சுட்டினார் முதல்வர்: 1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க. துவக்கப்பட்ட நேரத்தில் பாவாணர் என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போதே அவருக்கு அகரமுதலி தயாரிக்கும் எண்ணம் இருந்ததை வெளிப்படுததினார். இறுதி வரையும் அந்த எண்ணத்தின் படியே பணியாற்றினார்! இப்பரிவுக்கும் பாசத்திற்கும் உருகிநிற்கும் நாம் பாவாணர் தம் அகர முதலிப் பணிக்குக் காலத்தால் வேண்டும் ஏந்துகளைச் செய்து உதவாத அரசாண்மை நிலையை எண்ணிக் கருகுகிறோம்! கண்ணீர் பெருகுகிறோம்! உயிர்ப்பணிக்கு உதவாமல் உடலை எழிலூட்டி வாண வேடிக்கை காட்டி அடக்கம் செய்வதால் எவருக்குத்தான் என்ன பயன்? சிந்திப்பவர்க்கு இச் செய்கைகூடச் சீராகத் தோன்றாதே! இரங்கல் கூட்டம் நிகழ்ந்த சில இடங்களும் அமைப்புகளும் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை, சொல்லாக்க மன்றம் சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்றம் சென்னை, தொலைக் காட்சி நிலையம் சென்னை, மாநிலக் கல்லூரி சென்னை, இளங்கோ கலைமன்றம் சென்னை, வளர் கலை மன்றம் சென்னை, தமிழியக்கம் மதுரை, தமிழ்நாடு இறையியற் கல்லூரிக் கால்டுவெல் மன்றம். மதுரை தமிழ்ச் சங்கம் மதுரை தமிழ் எழுத்தாளர் மன்றம் மதுரை பசும்பொன் தேவர் பைந்தமிழ் இலக்கிய அணி கோவை சிந்தனைப் பேரவை கோவை தென் மொழி இயவம் கோவை மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் திருச்சி உலகத் தமிழ்க் கழகம் சேலம் உலகத் தமிழ்க் கழகம் கரூர் பகுத்தறிவு ஆசிரியர் கழகம் தஞ்சை தமிழியக்கம் தஞ்சை தமிழ்த்தொண்டர் குழாம் நெய்வேலி உலகத் தமிழ்க் கழகம் நெய்வேலி பாவாணர் தமிழ்க்குடும்பம் நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்ப அறக்கட்டளை கொற்கைத் தமிழ்ச்சங்கம் கூகலூர் திருவள்ளுவர் மன்றம் நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் உரத்தநாடு தமிழர் உரிமைக் கழகம் கடத்தூர் தமிழர் நட்பு மன்றம் கடத்தூர் பாவேந்தர் இலக்கியமன்றம் கடத்தூர் தமிழ்மன்றம் புதுக்கோட்டை பாவாணர் பாசறை புதுக்கோட்டை பாவேந்தர் மன்றம் புதுக்கோட்டை பாவேந்தர் மன்றம் புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணி காரைக்குடி நடுவண் மின்வேதி ஆய்வகம் பல்லடம் திருக்குறள் மன்றம் அரிமணம் முத்தமிழ் மன்றம் திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகம் குடந்தை உலகத் தமிழ்க் கழகம் அவிநாசி ஆசிரியர் சங்கம் புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றம் பாகூர் மறைமலையடிகள் தமிழ் மன்றம் முதலிய பல மன்றங்கள் திருக்கழுக் குன்றம் தேசுமுகிப்பேட்டை மறைமலையடிகள் மன்றம் சித்தூர் - புதுப்பேட்டை நகரி மாணவர்இலக்கியமன்றம் புதுவை அரசு சட்டக் கலலூரி புதுவை சேலிய மேடு இலக்கியச் சோலை புதுவை தமிழ்க் காவற்குழு புதுவை தட்டாஞ்சாவடி பாவாணர் இளைஞர்நற்பணி மன்றம் பெங்களூர் உலகத் தமிழ்க் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தங்கவயல் முச்சுவைக்கலை மன்றம் தங்கவயல் உலகத் தமிழ்க் கழகம் தங்கவயல் தமிழ்ச் சங்கம் மலேசியா தமிழ் இலக்கிய மன்றம் கிள்ளான் மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மலேசியா செலாமா பேராக்கு. பேரிரங்கல் பாவாணர் அண்ணாமலை நகரில் வாழ்ந்த நாளில், அவர்தம் திறம் அறியார்க்கு அவர்திறம்உணர்த்தப் பாவேந்தர் பாடிய பதிகம் ஒன்று; அது முன்னாகத் தரப்படுகின்றது. பாவாணர் மறைவின்பின் எண்ணற்ற பாவலர்கள் இரங்கற் பாக்கள் இசைத்துளர். அவற்றுள், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடிய பதிகம் ஒன்று மட்டும் அடுத்துத் தரப்படுகின்றது. இரண்டும் இரங்கல் ஆமோ? முன்னது உணரார்க்கு இரங்கியது! பின்னது உயிரார்க்கு இரங்கியது! ஆதலால் இரங்கல் வகையவே! பாவாணரைப் பற்றிப் பாவேந்தர் (நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) செந்தமிழ்ச் செல்வச் சிறப்பும் திருநாட்டில் வந்தே றிகள் அடிக்கும் வாய்ப்பறையும் - இந்தாபார் என்னும்பா வாணர் எவன்எவ் விடர்செயினும் இன்னும்பார் என்னுமடல் ஏறு. ஆதி மொழிஎன் அருமைத் தமிழென்றே ஓதி உலகுக் குணர்த்திடவே - தீதின்றி ஆவன செய்பே ரறிஞர் அண்ணாமலையின் தேவநே யப்பாவா ணர். தமிழில் தமிழ்சார்ந்த கன்னடந் தெலுங்கில் அமைகேரளந்துளுவில் ஆர்வம் - கமழ்கின்ற ஆங்கிலத்தில் ஏனை அயல்மொழியில் வல்லுநர்எப் பாங்கிலுளர் பாவாணர்போல்? வடமொழியும் இந்தியும்மற்றும் வடக்கில் படுமொழிகள் என்ற பலவும்- தடவியே அந்தமிழே ஆதிஎன்னும் தேவநே யர்தாம் எந்தமிழர் எல்லார்க்கும் வேந்து. என்தமிழிற் கொஞ்சம் இருந்ததெலுங் கிற்கொஞ்சம் பின்ஆங் கிலத்திலே பிஏயும்-நன்குடையேன் என்றுமொழி வார்போல் இல்லைநம் பாவாணர் பன்மொழிவல்லார்இந்தப் பார்க்கு. பன்மொழியில்வல்லரென்று பைந்தமிழர் நாவினிலே இன்னும் சிலபேர் இருக்கின்றார் - அன்னவர்கள் நாட்டுக்குச் செய்ததென்ன? நம்தமிழை மாற்றலர்க்குக் காட்டிக் கொடுக்கும் கயவு. வீணாள்ப டாதுதமிழ் மேன்மையினைக் காட்டுவதில் வாணாளை ஆக்கும்பா வாணர்க்கு - நாணாமல் அல்லல்விளைக்கும் அயலார்க் கடியார்கள் இல்லாமல்இல்லை இவண். நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர் யாவர்க்கும் செய்வதே யாம். திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று மெய்க்குழைக்கும் தொண்டர்மன்ம வேகவே - வைக்கும் தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன் நடுத்தெருவில் நாறும் பிணம். புண்ணானால் நெஞ்சம் தமிழுலகு பொன்றுமென்று அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - இந்நாளில் தேவநே யர்க்குத் திருத்தொண்டு செய்ததென்க யாவரும் ஏத்தும் படி. வாழ்நதாலே நாம் வாழ்வோம் வாழாளேல் நாம்வாழோம் தாழ்ந்த தமிழகத்தில் செந்தமிழ்த்தாய் -ஆழ்ந்தாழ்ந்து பாராது பாவாணர்க் கின்னல் புரிவதனால் வாராது வாழ்விற் புகழ் எந்தமிழ் மேலென்ற உண்மை எடுத்துரைப்போன் செந்தமிழன்! செந்நெற் பயன்மழை! - தந்தமிழின் கீழறுப்போன் கீழோனே! தேவநே யர்வாழ்க! வாழிய செந்தமிழ் மாண்பு. - பாவேந்தர்; குயில் 3 : 10; 23 - 8- 60. பாவாணர் இரங்கல் பதிகம் கண்ணீர் வற்றிக் கடல்வற்றி - நீள் கடலின் அருகில் ஊற்றெடுக்கும் உண்ணீர் வற்றி உலகளிக்க - மேல் உலாவும் மேகத் திரள்வற்றித் தண்ணீர் பற்றித் தரைமுழுதும் - செந் தணலே பற்றித் தீய்த்ததுவே ஒண்ணீர் அறிவுப் பாவாண - நான் உனையே பிரிந்த போழ்தினிலே! கண்கள் இருண்டு காதழன்று காலும் சோர்ந்து கையற்று மண்கொள் மலைகள் இடிந்துருண்டு - என் மண்டை யழுத்த வளிதிக்கித் திண்கொள் நெஞ்சம் அறக்கிழிந்தே - எண் திசையும் அரத்தம் பாய்ந்ததுவே பண்கொள் நாவின் பாவாண - நீ படுக்கை சாய்ந்த போழ்தினிலே! தசையும் காய்ந்து கரியாகி - மெய்த் தண்டும் நரம்பும் பொடியாகிப் பசையும் உருகி நெய்யாகிச் - செம் பாலும் கவர்ந்து வளியாகிப் பெரும்பிரிவும் பேரிரங்கலும் பிசையும் நெஞ்சக் குலைவெடித்துச் - சாப் பேய்க்குக் களமாய்ப்போயினவே வசையில் இசைசேர் பாவாண - நீ வானம் புகுந்த போழ்தினிலே! நிலமும் வெந்து நீறாகி - மண் நீரும் கொதித்து வளியாகிப் பொலமொண் தீயும் புகையாகி - வான் போழும் வளியும் வெளியாகிப் புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம் பூதத் தூழி ஆர்த்ததுவே அலமார் நெஞ்சில் பாவாண - நீ ஆக்கை கழன்ற போதினிலே! தமிழே தொகைந்து கருவாகித் - தீந் தமிழே புகுந்துள்ளுயிர்ப்பாகித் தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த் தமிழே உருவாய் உலாவந்து தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின் தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம் தமிழாய் வாழ்ந்த பாவாண - நீ தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே! ஒளிசேர் விழியும் சுடர்நுதலும்- நல் உரஞ்சேர் நெஞ்சும் தமிழ்நினைவும் வளிவார் முடியும் நரைதலையும் - உயர் வல்லென் மூளைக் கொழுந்திரளும் அளிசேர் தமிழ்தோய் ஆருயிரும் - ஓர் அணுவாய் அணுவாய் உட்கரைந்தே வெளிசேர்ந் தனவோ பாவாண - நீ விண்ணில் ஏறிய போழ்தினிலே! சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர் சோரா துயர்த்துந் தெள்ளறிவும் காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க் கதையாய்ச் சொன்னாய்; கதைநிறுத்திப் பாலை நடுவில் எனைவிடுத்தாய் - உள் பதைப்புற் றுயிரும் சிதைந்ததுவே வாலை அறிவுப் பாவாண - நீ வாழ்க்கை துறந்த போழ்தினிலே! பொன்னார் மாடத் திருக்கோயில் - நின் புலனால் சமைத்துத் தமிழணங்கை மின்னேர் இறைமைத் திருவுருவாய் - ஒளி மிளிரச் செய்தே வழிபட்டாய்! உன்னோர் அழுங்க ஊரழுங்க - என் உயிரும் உடலும் ஒருங்கழுத என்னேர் ஆவிப் பாவாண - நீ எனையே தவிர்ந்த போழ்தினிலே! உலவல் மறந்தாய் ஊண்மறந்தாய் - உன் உறவே வாழ்வென் றுவந்ததுணைக் குலவல் மறந்தாய் குளிமறந்தாய் - புதுக் கூறை வாங்கும் நிலைமறந்தாய்! கலவல் தமிழ்க்கே தனித்தமிழ்காண் - ஒளி காழ்க்கும் நினைவின் பாவாண! பலவல் லின்பம் மறந்தாயே - நீ பாயல் மறந்த போழ்தினிலே! வேட்கும் தமிழே விளைவாகிச் - சொல் விளைக்கும் தொழிலே வாழ்வாகித் தோட்கும் துண்டைப் போர்த்தாமல் - ஒரு துறவியைப் போலும் மனங்கொண்டே நாட்கும் மணிக்கும் உழைப்பெடுத்தாய் - யாம் நலிந்தோம் மெலிந்தோம் செந்தமிழை மீட்கும் முயல்வில் பாவாண - நீ மீளாத் துயில்காண் போழ்தினிலே. -தென்மொழி - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நினைவிதழ். 17 : 6-7; 15. நினைவகங்களும் நிலைபேறும் பாவாணர் தமிழ்க்குடும்பம் நெய்வேலி அன்பர் த. அன்புவாணர்க்கு ஓர் ஆர்வம்; தமிழர் ஒன்றுபட்டுக் கடனாற்றுவதில்லை. முதற்கண் தம் உள்ளும் புறமும் ஒன்றுபட்டுக் கடனாற்றாமையுடன் குடும்ப உறுப்புகள் ஒன்றுபட்டும் கடனாற்றுவதில்லை, அம்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது. அதனைத் தம் உள்ளொத்த அன்பர்களுடன் உறவாடி, ஒத்த உணர்வுடைய சில குடும்பங்களை இணைத்துத் தமிழ்க்குடும்பம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என முயன்றார். அம்முயற்சி ஆய்வில் தமிழ்க்குடும்பம் என்னும் பொதுப் பெயரினும் மொழி - இன - நாடு - தழுவிய வகையில் வழிகாட்டுவார் ஒருவர் பெயரிணைப்பு இருத்தல் சாலுமெனப் பல்வேறு ஆய்தல்களுக்கு இடையே நிறைந்த ஒருமித்த முடிவாகப் பாவாணர் தமிழ்க்குடும்பப் பெயர் தோற்றமுற்றது. துணைவன் கொண்ட கொள்கையைத் துணைவி யேற்கவும், துணைவியின் உணர்வைத் துணைவன் மதிக்கவும் அவற்றை மகள் கடைப்பிடிக்கவும் தனி நிலையிலும் குடும்ப நிலையிலும் ஒவ்வொருவரும் மொழி இன நாட்டு வளர்ச்சிக்கு உண்மையில் பயன்படச் செய்யும் பண்பாட்டு அமைப்பே பாவாணர் தமிழ்க் குடும்பம் என்பது குடும்ப அமைப்பு விளக்கம், பாவாணர் பெயரைத் தேர்ந்து அமைப்புக்குச் சூட்டு வானேன்? கிறித்தவராய் இருந்தும் தமிழராய் வாழ்ந்தவர். தம் மக்கட்கெல்லாம் மங்கையர்க்கரசி மணிமன்றவாணன் போன்ற தமிழ்ப் பெயர்களையே சூட்டியவர். தம் வாழ்வையே தன்னல மின்றித் தமிழ்க்காக ஈகம் செய்து தமிழாராய்ச்சியில் மூழ்கியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் வழியைப் பின்பற்றித் தமிழே முதன்மொழி தமிழரே முதன் மாந்தர் என்னும் கொள்கைகளை நிலைநாட்டியவர். அப்பழுக்கில்லா வாழ்வுக்கு உரியவர். சொன்னதைச் செயற்படுத்தும் திறனாளர். எக்கருத்தையும் எவ்விடத்தும் யாரிடத்தும் சொல்லத் தயங்காத்துணிவாளர்! இப்பெற்றியராம் ஞா. தேவநேயன் எனும் பெயர் பெற்ற செந்தமிழ் ஞாயிறு பாவாணர் பெயரே சாலப் பொருந்துவதாய் ஆய்ந்தெண்ணிப் பெயர் சூட்டப்பட்டது. தி.பி. 2001 கடகம் 17 (2 - 8- 1970) இல் நெய்வேலியில் 8 குடும்பங்களை உறுப்பாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. இக்கால், அதன் இரட்டி எண்ணிக்கைக் குடும்பங்களொடு தொய்வின்றித் தன் பணியைத் தொடர்கின்றது. சில குறிப்புகள் : தமிழ்ப்பெயர் தாங்கும் துணைவனும் துணைவியும் இணைந்தே பா. த.கு வில் உறுப்பாக முடியும். எக் கூட்டத்திற்கும் எவ்விழாவுக்கும் இருவரும் வர வேண்டும். அவர்தம் மக்களும் சார்பாளரும் எந்நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளலாம். உறுப்பினர்களுக்குத் தேவைப்படும்போது நலிவைப் போக்கும் பொருளுதவியைக் குடும்பம் செய்கிறது. ஓராண்டிற்குத் தேவையான பருவப் பொருட்களை வாங்கி வழங்குகிறது. பொங்கலுக்குத் தேவையான துணிவகைகளை வாங்கியளிக்கிறது. உறுப்பினருடன் நெய்வேலி வாழ் மக்களும் பயன் பெறப் பொங்கல்விழா, திருவள்ளுவர் திருநாள், பாவாணர் பிறந்தநாள் விழா, மறைமலையடிகள் விழா, பாவேந்தர் பெரியார் அண்ணா பிறந்த நாள் விழா, விளக்கணி வேரறுப்பு விழா போன்ற விழாக்களை நடத்திவருகிறது. வெளியூர்களுக்குச் சுற்றுச் செலவு செல்லவும் செல்லுங்கால் அங்குள்ள தமிழ் அறிஞர்களைக் கண்டு அளவளாவவும் அதே போன்று நெய்வேலி வருகை தரும் தமிழறிஞர்கட்கு விருந்தளித்து வரவேற்றுக் கலந்துரையாடவும் செய்கின்றது. தமிழர் அறக்கட்டளை ஒன்று (10-4-76) நிறுவியுள்ளது. திருக்குறள் வகுப்பு, தனித்தமிழ்ப் பயிற்சி வகுப்பு, அறிஞர்களின் நூல்களை விற்று உதவுதல், அறிக்கை வெளியீடு இவற்றின் வழியே அரசையும் பிறரையும் நற்செயலுக்குத் தூண்டுதல் இன்ன வெல்லாம் குடும்பம் தன் கடனாகக் கொண்டுள்ளது. த.கு. மகளிர் ஆடவர் மக்கள் ஆகிய அறுபதின்மர், தனிப் பேருந்தில் சுற்றுலாச் சென்று பாவாணரை 16-10-75 இல் சென்னையில் கண்டு 11/2 மணிப்பொழுது அளவளாவினர். பாவாணர் உரையும் கலந்துரையாடலும் ஒலிப்பதிவுற்றன. உவகைக் களமாகவும் திகழ்ந்தன. தமிழ்க்குடும்பம் பற்றிப் பாவாணர் எண்ணம் பசுமையாகத் திகழ்ந்தது. பாவாணரும் நெய்வேலியில் தம் பெயர்க்குடும்ப விருந்தினராகவும் சிறந்த மகிழ்வுற்றார். அவருடன் பாவலரேறு பெருஞ் சித்திரனாரும் பங்கு கொண்டார்: பாவாணர் தமிழ்க் குடும்பம் பற்றிய பாவாணர் எழுத்து : இந்நெய்வேலி நகரமைப்பில் பாவாணர் தமிழ்க் குடும்பம் என்று தமிழுணர்ச்சியாலும் பணியக ஒருமைப் பாட்டாலும் ஒன்றுபட்டு, திருநாள் பெருநாட்களில் கூட்டுக்குடும்பம் போலும் நெருங்கிய உறவினர் போலும் உண்டாட்டில் ஒன்று கலக்கும் ஒருதனித் தமிழ்க் கூட்டமான பதினொரு குடும்பத் தொகுதியால் நானும் என் நண்பரும் இன்று உயர்பெருந்தரமாக விருந்தோம்பப் பெற்றேம். தமிழுணர்ச்சியும் உழுவலன்பும் கலந்த அறுசுவையின் னடிசிலும் என் பெயர் தாங்கலும் இவ்வுலகில் உவமையில்லா ஒரு தனிச்சிறப்பும் என் உள்ளத்தை மறுமையும் மறவாவாறு இறுகப்பிணித்து விட்டன. இக்குடும்பம் மேன்மேலும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் பொழிக. ஞா. தேவநேயன் உங்கள் தொழில் பணி இவற்றிற்கேற்ப மாத மொரு முறையோ, இருமுறையோ கூடுவது சிறப்பு. கூடுமானவரை தனித்தமிழில் உரையாடுங்கள். நம் தமிழர் பண்பாடு ஒழுக்கம் இவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டும். தமிழர்களுக்குப் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் மூன்றும் மிகமிக வேண்டியவை. ஆடவன் பெண்ணிடம் எப்படிக் கற்பை எதிர்பார்க்கிறானோ அப்படியே தானும் கற்புடன் வாழ வேண்டும். இறை மறுப்போ உடன்பாடோ அவரவர்களின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. தமிழர்களுக்கு இன வுணர்வும் மொழியுணர்வும் இருகண்கள்! குடும்பநிலையில் தலைவன் தலைவி அன்பு நிலையில் ஒன்றுபட வேண்டும். அன்பு நிலையில் இணைந்து வாழ்ந்தால் சிக்கல் ஏற்படுவது மிகவும் குறையும். மனவிக்குத் தமிழ்ப் பண்பாடு கெடாத அளவுக்கு உரிமை வழங்குவதில் தவறில்லை - இவை தமிழ்க் குடுப்த்தார்க்குப் பாவாணர் உரைத்த வாழ்வியலுரை. - நாங்கள் காணும் பாவாணர். பக்.25 உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பாவாணர் அறக்கட்டளை : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ச.வே. சுப்பிரமணியனார் தூண்டலால், மாதந்தோறும் அறக்கட்டளைச் சொற்பொழிவொன்று நிகழ்த்தவேண்டும் என்னும் திட்டத்தில் நிறுவப்பட்ட ஒன்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளைப் பொழிவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் வைப்புத்தொகை உருபா பத்தாயிரம். இத்திட்டத்திற்குப் பெருந்தொகை வழங்கிய பேரார்வலர் சிங்கை வணிகவியற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார் ஆவர். இத்திட்டத்தின் தனிச் சிறப்பு பொழிவுநாளிலேயே பொழிவுநூல் வெளியிடுதல் என்பதாகும். இவ்வகையால் மூவாண்டு முப்பொழிவுகளில் மூன்று நூல்கள் வெளி வந்துள்ளன. அதன்பின், திட்டம் நெட்டுறக்கங் கொண்டுள்ளது. சொற்பொழிவு 1. 1985 சனவரி; முனைவர் மு. தமிழ்க் குடிமகனார் பொழிவு; நூல் : பாவாணரும் தனித்தமிழும். சொற்பொழிவு 2. 1985 பெப்ரவரி; புலவர் இரா. இளங்குமரன் பொழிவு; நூல் : தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுகள். சொற்பொழிவு 3. 1986 ... பேரா. கு. பூங்காவனம் பொழிவு. நூல் : உலகமுதன்மொழி - தமிழ். பாவாணர் பதிப்பகம், பெங்களூர். 9-3-84 மாலை 6-30 மணிக்கு பெங்களூர், 156, வீரப்பிள்ளைத் தெரு, குமரிமின் அச்சகத்தில் நடைபெற்ற கருத்துரைக் கூட்டத்தில் பாவாணர் பதிப்பகம் நிறுவுதல் பற்றி முடிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பதிப்பக நோக்கங்கள் : 1. பாவாணரின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடு தலும் நூல்களை மறுபதிப்புச் செய்தலும் அவற்றின் பிறமொழி யாக்கங்களை வெளியிடுதலும்; 2. பாவாணர் கொள்கைகளைப் பரப்பும் வகையில் அவர் தமிழ் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகளை ஊக்குவித்து வெளியிடுதலும் : 3. பாவாணர் கொள்கைகளுக்கு உட்படுவனவும் அரண் செய்வனவும் தனித்தமிழ் வளர்ச்சி குறித்தனவுமான பல்துறை நூல்களை வெளியிடுதலும் - பாவாணர் பதிப்பகத்தின் நோக்கங்கள் ஆகும். இதன் முதற்பதிப்பாசிரியர் பேரா. கு. பூங்காவனம்; முதற்பொருளாளர் தாமோதரன். அறிவுரைக் குழுவினர்; பர். இரா. இளவரசு, பர். பொன். கோதண்டராமன், பர். மு. தமிழ்க்குடிமகன், புலவர் இரா. இளங்குமரன், ம.இலெ. தங்கப்பா புரவலர் நன்கொடை உருபா 1000, உறுப்பினர் நன்கொடை உருபா 100. அச்சாகும் நூலில் ஒருபடி புரவலர்க்கும் உறுப்பினர்க்கும் வழங்கப்படும். இப்பதிப்பக வழியாக வெளிவந்த முதல் நூல் என் அண்ணாமலை நகர்வாழ்க்கை என்பது. அடுத்து வெளிவருவது இப் பாவாணர் பாவாணர் தமிழ்மன்றம் என்றோர் அமைப்பு பெங்களூர் வசந்தா நகரில் உள்ளது. பாவாணர் ஆராய்ச்சி நூலகம் இப்பெயரிய நூலகம் மதுரை - திருநகரில், புலவர் இரா. இளங்குமரனால் நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் 26-6-83. தமிழ்நாடு வேளாண் துறையமைச்சர் கா. காளிமுத்து நூலகத்தைத் திறந்து வைத்துத் தம் கொடையாக நூல்கள் ஆயிரம் வழங்குவதாகக் கூறினார். விழாத்தலைமை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் தமிழண்ணல் அவர்கள் ஏற்றனர். பேரா. தமிழ்க்குடிமகனார், பேரா. வீ. ப. கா. சுந்தரனார், பேரா. அ. சங்கரவள்ளி நாயகனார் பாவாணர் குறித்தும் நூலகம் குறித்தும் சிறப்புரையாற்றினர். பாவாலர் ஆ. முத்துராமலிங்கனார், பாவலர் ம. முத்தரசர் ஆகியோர் பாப்பொழிவு செய்தனர். புலவர் படிக்கராமு நன்றியுரைத்தார். நிறுவனரின் குடும்பத்தவர் அனைவராலும் தொகுக்கப்பட்ட அரிய நூலகம், இந்நாள் எண்ணாயிரம் நூல்களுடன் விளங்குகின்றது. பாவாணர் நூல்கள் அனைத்தையும் கொண்டிருப்பதுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து அஞ்சல்களையும் கொண்டுள்ளது. முதுகலை பண்டாரகர் பயிற்சியாளர்க்குப் பயன்படுவதுடன், நூலாய் வாளர்க்கும் உதவுகின்றது. இங்குள நூல்கள் இருந்து படிக்கவே என்பது நூலக நடைமுறைக் குறிப்பு. நிறுவனரின் தமிழ்வருவாய் அனைத்தும் நூலாகவும் நூலகக் கட்டடமாகவும் எழுந்தமை சுட்டத் தக்கன. சொல்லாய்வுத் துறையில் ஈடிணையற்று விளங்கியதுடன், தம்மைத்தாமே விரும்பித் தம் துறைக்கு அழைத்தமை, தம் சொல்லாய்வை ஊக்கியமை ஆகிய நன்றிக் கடன்களின் வெளிப்பாடாகவும் அமைந்தது நூலகப் பெயரீடு. பாவாணர் படிப்பகம் தங்க வயல் உ.த.க. சார்பில் ஆண்டரசன் பேட்டையில் 29-7-84 ஞாயிறு காலை 10-30 மணிக்குப் பாவாணர் படிப்பகத் திறப்பு விழா நிகழ்ந்தது. திரு. த. குமணன் தலைமயில் மீட்போலை ஆசிரியர் திருமாவளவன், படிப்பகத்தைத் திறந்து வைத்தார். பாவாணர் படமும் திறக்கப்பட்டது. பேராசிரியர் கு. பூங்காவனம் சிறப்புரையாற்றினார். படிப்பகச் சார்பில் இதழ்கள் பல வருகின்றன; தனியாரும்சில இதழ்களை வழங்குகின்றனர். படிப்பகக் கட்டட இடம் சிறிதே எனினும் அதன் பணி பெரிதும் அரிதுமாம். தமிழ்ப் பற்றாளர் ஒருங்கு கூடி உணர்வொத்த ஒப்புரவாண்மை கொள்ள இப்படிப்பகம் உதவி வருதல்நிறைவான செய்தியாம்.. ஒதுக்குப் புறத்தில் உள்ள படிப்பகத்தை, ஆரவாரமிக்க சாலைப் பகுதியும் அறிந்திருத்தல் அதன் தொண்டின் விளக்கமாகும். பாவாணர் மையநூலகம் சென்னை அண்ணா சாலையில் நூலக ஆணைக் குழுவின் சார்பில் அமைந்துள்ளயைமநூலகம் பாவாணர் பெயர் தாங்கியுள்ளது. பாவாணர் மறைவின் பின், அவர் நினைவுக் குறியாக அரசின் சார்பில் செய்யப்பட்ட பெயர் மாற்றங் கொண்டது இந் நூலகமாகும். இதனை அந்நாள் முதல்வர் ம. கா. இராமச் சந்திரனார் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெருமக்கள் சார்பில் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் அறிவித்தார். மாநகரில் சிறப்பான இடத்தில் அமைந்துள்ள இந்நூலகம், வாழ்நாள் எல்லாம் நூல்தொகுத்தல், நூல் ஆய்தல், நூல் எழுதுதல் என்றே இருந்த பாவாணர்க்குத் தக்க நினைவுச் சின்னமாகும். அரசு நூல் நிலையங்களுக்கு இதுவரை எந்தத் தனிப்பெயரும் தரப்படவில்லை. இனி அரசு நூல் நிலையத்திற்கும் பாவாணர் பெயர் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்பது முதல்வர் உரை. ஈப்போ பாவாணர் தமிழ் மன்றம் பாவாணர் நினைவாக மலைநாடு ஈப்போவில் தமிழ் மன்றம் ஒன்று அவர் வாழும்போதே ஏற்படுத்தப்பட்டது. முப்பது உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தின் தலைமையர் சுப்பையா. பாவாணர் இசைத்தமிழ்க்கலம்பகத்தில் இசைக் கிறார் : பல்லவி மாவாணர் தமிழ்மன்றம் பைந்தமிழ்த் தண்பரங் குன்றம் உருவடி மாவாழும் மலையா என்றும் மன்றும் ஈப்போ மகிழ நன்றும் மூ)வாநற் சுப்பையா ஒன்றும் முப்பான் உறுப்பினர் இப்போது துன்றும் - பா பாவாணர் நாட்காட்டியும் நாட்குறிப்பும் பாவாணர் கண்டதும் கொண்டதுமாகிய தமிழியல் நாட்குறிப்பு தமிழ்ப் பற்றாளர் நடைமுறைப்படுத்துவதற்கு வாகாக நெய்வேலி அறவாழியார் - தமிழரசி அவர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. நாட்காட்டி என்னும் அளவில் நில்லாமல் பலப்பல தமிழூற்றச் செய்திகளையும் சான்றோர் பிறப்பு நினைவு நாள்களையும் நயத்தகு கருத்துகளையும் தாங்கி வெளிவருகின்றது. வேண்டுவார்க்கு அவர்தம் முகவரியிட்டும் அச்சிட்டு வழங்குகின்றது. பாவாணர் நாட்குறிப்பு : த.ச. தமிழனாரால் வெளியிடப்பட்டது. பாவாணர் வரலாற்றுச் சுருக்கம். வாழ்வியல் செய்திகள் நூலாய்வு ஆகிய வெல்லாம் கொண்ட அரிய ஆய்வுத் தொகை நூலாகவும் திகழ்கின்றது. மேலும், பாவாணர் பெயரால் பாவாணர் தனித் தமிழியக்கம், புதுவை, பாவாணர் நற்பணி மன்றம் தட்டாஞ் சாவடி, புதுவை; பாவாணர் பயிற்றகம், புதுவை, பாவணர் மன்றம், வாணியம்பாடி; பாவாணர் பாசறை புதுக்கோட்டை; பாவாணர் இலக்கியக் கழகம், சென்னை; பாவாணர் கலைக்குடில் போழறப் பட்டி என்பனவும் பிறவும் உள! பாவாணர் பெயர்ச் சுட்டு இன்றேனும் பாவாணர் தொடர்பும் தொண்டும் கொண்டு திகழ்வன பிறவும் உள. தாயுமானவர், வள்ளலார் ஆகியோர்க்குப் பின்னர்ப் பாரதி, பாரதிக்குப் பின்னர்ப் பாவேந்தர், பாவேந்தருக்குப் பின்னர்ப் பாவலர் வரிசையுண்மைபோல் அறிஞர் கால்டுவெல், அவர்க்குப் பின்னர் மறைமலையடிகள், அடிகளுக்குப்பின்னர்ப் பாவாணர் அவர் வரிசையர் என வழிவழி வருவார் தொண்டும் பாவாணச் சின்னமே! வழி நூல் சார்புநூல் நூல் என்பனபோல் முதல்நூலைத் தழுவினும் வேண்டும் விகற்பம் கூறினும் இவ்வகைத் தொடர்ச்சி எனவே முறைமை. ஆகலின் தமிழ்ச் சொல்லாய்வார் அனைவருக்கும் பாவாணர், ஊடகமாகத் திகழ்தல் கருதிப் பார்ப்பார் உணரத் தக்கதே. உ.த.க. முதலிய அமைப்புகள் பாவாணர் மறைவுக்குப் பின்னரும்உ.த.க. மறையாமல் காத்து வருகின்ற அமைப்பு ஆர்வலர்களைப் போற்ற வேண்டும். தமிழகப் பரப்பெல்லாம் ஆலென விழுதுவிட்ட அமைப்பின் நிலை சுருங்கிற்றே எனினும், சோர்விலாவண்ணம் தொடர்ந்து கடனாற்றிவரும் நெய்வேலி, திருச்சி ஊரகம், பாளை, திருவாரூர், நீடாமங்கலம், குடந்தை அமைப்புகளும்; புதுவை, வெங்காலூர், தங்கவயல் ஆகிய வெளிமாநில அமைப்புகளும் நெஞ்சில் பசியவை. தனித் தமிழ்க்கழகம், தமிழ்க் கழகம், மறைமலையடிகள் மன்றம் என வேறு பெயர்களைக் கொண்டவையும் பாவாணர் கருத்து வழியே கடனாற்றி வருவனவாகவும் உள்ளன. அவற்றின் தொண்டும் நினைவு கூரத்தக்கன. எவ்விடர் வரினும் எவர் எந்நோக்கு நோக்கினும் எம் கொள்கைவழி தக்கதே எனப் பாவாணர் வழியில் ஊன்றி நிற்கும் எழுத்தாளர்கள் பாவலர்கள் எங்கும் உள்ளர். அவ்வப் போது தம்தம் திறத்திற்கும் வாய்ப்புக்கும் தக்க வெளியீடுகளும் செய்து வருகின்றனர். எத்துணைப் பேர்கள் பாவாணர் வழியில் தம் பெயர்களைத் தனித் தமிழாக்கிக் கொண்டுளர்! எத்துணைப் பேர்கள் பாவாணராலேயே பெயராக்கம் பெற்றுளர்! அவர்களுள் எத்துணை எத்துணைப் பேர்கள் தம் கொள்கை ஊற்றத்தால் தமிழ்த் தொண்டு செய்து வருகின்றனர்! இவர்களெல்லாரும் உயிரோடு உலாவரும் நினைவு நிறுவனங்களும் நிலைபெற்றச் சின்னங்களும் அல்லரோ! இவர்களிடத் தெல்லாம் பாவாணர் இரண்டறக் கலந்து நிற்கின்றார் அல்லரோ! இனிச் சொல் வழியால் வாழ்வாங்கு வாழும் தேவநேயரைக் காண்போம்: சொல்லும் சீர்த்த சின்னந்தானே! தேநேயர் படைப்பாக்கங்களை யெல்லாம் ஒருங்கு திரட்டி, அகரநிரலில் ஓரடைவு செய்தால் அது தேவநேயமாகத் திகழும். ஆசிரியர் தொல்காப்பியனார், தொல்காப்பியத்தால் நம்முடன் ஒன்றி உறைந்து உடனாகித் திகழுமாப் போலத் தேவநேயத்தால் தேவநேயரும் நம்மொடும் ஒன்றி உறைந்து உடனாகித் திகழ்வார். தேவநேயரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி அவராலேயே முற்றுற முடிக்கப் பெற்றிருப்பின் ம்ற்றொன்று வேண்டா என்னும் நிலையில் அஃதொன்றே தேவநேயமாகத் திகழ்ந்திருக்கும். அதனைப் பெறும் பேறு தமிழ் மண்ணுக்கு வாயாமையால் கிடைத்த - கிடைக்கின்ற - அளவிலேனும் தேவ நேயத்தை உருவாக்கி வருதல் வேண்டும். அதனை உருவாக்குதல் எவ்வண்ணம்? தேவநேயர் படைப்பெல்லாம் சொல்லாய்வாகவே வெளிப்பட்டவை. அவர், எப்பொருளை எடுத்துக் கொண்டு பேசினாலும் எழுதினாலும் அவர்க்கு முந்துற நிற்பது சொல்லாய்வே! சொல்லாய்வு ஊடாடாத உரையாட்டும் கூட அவர்மாட்டு அமைந்தது இல்லை. ஆகலின் அவர்தம் படைப்பு களில் - பரிந்தெழுதிய அஞ்சல்களில் - அறிக்கைகளில் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகள் அனைத்தையும் அகர நிரலில் தொகுக்க வேண்டும். அவர், வேர் கண்ட சொற்களுக்கு வேர், விளக்கங்கண்ட சொற்களுக்கு விளக்கம், ஒப்புமை கண்ட சொற்களுக்கு ஒப்புமைப், பொருள் மட்டும் கூறிய சொற்களுக்குப் பொருள், சொல்லை மட்டும் சுட்டின் அச்சொல், ஆங்கிலம் முதலிய பிறமொழி விளக்கம் உண்டாயின் அவ்விளக்கம் ஆகிய அனைத்தையும் தொகுப்புப் பொருளாக்கிவிட வேண்டும். வடமொழியைத் தென்மொழியாக்கம் ஆக்கிய தாயினும்சரி, ஆங்கிலத்தைத் தமிழாக்கம் செய்த தாயினும் சரி, புதிது படைத்த கலைச் சொல்லாயினும் சரி, பழஞ்சொல்லைப் புதுப்பொருளில் புதுக்கிக் கொண்டதாயினும் சரி, அவ்வகர நிரலில் விடுபாடின்றி இணைத்துவிடவேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்டுவிடுமானால் சொற் பொருளாய்வாளருக்கும், கலைச் சொல்லாக்கம் புரிய விரும்பு வார்க்கும், சொல்லியல் நெறிமுறை வகுக்க விழைவார்க்கும், பாவாணர் பழுத்த புலமை நலம் திரட்டாகக் கண்டு திளைக்க முனைவார்க்கும் தேடி வைத்த திருவாகித் திகழ்தல் உறுதியாம். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம் புகழ் நிறீஇத் தாம் அமைந்தனர். தம்புகழாவது தம் புகழை நிலைபெறச் செய்யும் செயற்பாடுகள்! செயற்பாட்டின் உலாச்சான்று மொழி - சொல் - தானே! திருவாசகம் இன்றில்லையேல் சாழல் தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காண முடியும் என ஏங்குபவர் பாவாணர் (சொல். கட். பக். 89). ஆயிரம் ஆயிரம் சொற்களை மணிவாசகர் தம் நூலில் வைப்பாக்கியிருந்தாலும் சாழலும் தெள்ளேணமும் தனித் துயர்ந்து தலைதூக்கி நிற்பானேன்? அவ்வாட்சி பிறரிடத்துக் காணற்கில்லாப் பெற்றியதாகலின் என்க. பத்தோடு பதினொன்று என்று இல்லாமல் அவருக்கே உரிமைபூண்ட ஆட்சிச் சொற்கள் அவை ஆகலான் மணிவாசகர்க்குத் தனிவீறும் தனிப்பேறும் நல்கின. இந்நல்குதலை நோக்கிய பாவாணர் நோக்கே, சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை நோக்கிய வனப்பு நூல்களுக்கே உரிய சொற்களைத் தனித்தனியே தொகுத்து வனப்புச்சொல் வளம் எழுதத் தூண்டிற்று (செந். செல். 39: 305-310). இவ்வகையில் பாவணர்க்கே உரிய - பாவாணரை அடையாளம் காட்டக்கூடிய - சொற்கள் ஒருபதா? இருபதா? தனித்துத் தொகுத்து அடைவு செய்யின் ஒருதனிநூலாம் தகையது. பாவாணராக வாழ்ந்து கொண்டிருக்கும் சொல்வாழ்வுகள்! பண்டாரகரா1 பண்டுவரா2 பாவாணரை நினைவு கூராமல் முடியுமா? குளம்பி3 வேண்டுமா? கொழுந்துநீர் 4 வேண்டுமா? என்று வினவுவாரிடைப் பாவாணர் அன்றோ மென்னகை புரிகிறார். நான் அணியமாக5 இருந்தேன். நீங்கள் இப்பொழுது வந்தது ஏந்தாக6 வாய்த்தது என்பாரிடைப் பாவாணர் இரண்டறக் கலந்து நிற்கிறார். இந்த மொட்டான்7 தான் அந்த மேடைக்கு8 அமைவாக இருக்கும் என்பவர் இன்றமிழ் உள்ளத்தில் பாவாணர் அல்லரோ வீற்றிருக்கிறார். பழக்கூட்டும்9 பனிக்கூழும்10 எனக்கு ஒத்துக் கொள்வ தில்லை; வெதுப்பாகப் பருகவேண்டும் என் பாரிடத்துப் பழக்கூட்டும் பனிக்கூழுமாகப் பாவாணர் குளிர்கிறார். பொந்திகை11 யாக உண்டு, சடுத்தமாக12 வருவாருடனே பாவாணரும் அகமிக்க பொந்திகையாக வருகின்றார். பிறப்பியம்13 எழுதி ஐந்திறம்14 அறிவாரிடத்தும், தொன்மம்15 படித்துத் தோற்றரவை16 நம்பு வாரிடத்தும் கூடத் தமிழால் ஒன்றிவிடுகிறார் பாவாணர். அறிவன்17 காரி18 பார்த்து நீராடுவாரிடத்தும் செந்தணப்பில்19 வீற்றிருப்பார் இடத்தும் பாவாணர் இனிதின் உறைகின்றார். தூவல்20 கொண்டு எழுதுவாரிடத்தும் பாடகராகிப்21 பாடுவாரிடத்தும் பாவாணர் ஒன்றியுள்ளார். குமுகாய22 மேம்பாட்டுக்கு எடுப்பை23 அகற்றி அடிப்பைப்24 பயன்படுத்த வேண்டும் என்று சூளிட்டுக் கொள்வாரிடத்தே பாவாணர் சுடர்கின்றார். அரத்தம்25, படைச்சால்26, வைத்தூற்றி27, மணிப்பவழம்28 இன்னவற்றை அகரமுதலியில் இணைப்பாரிடத்தே பாவாணர் இணைகின்றார். அழகனார்29, அழகமதியர்30, அருட்செல்வர்31, ஆமலையழகர்32, மதியழகர்33, மணவழகர்34, அருளர்35, மனங்கவர்ந்தார்36 சின்னாண்டார்37 மகிழ்நர்38 இன்ன பெயராளர்களிடத்தெல்லாம் பேராளராகப் பாவாணர் திருக்கோலம் கொண்டுள்ளார். வெங்காலூர்39, வேம்பாய்40, எருதந்துறை41, பைந்தீவர்42, அமைதிவாரி43 என்று எண்ணுவாரிடத்தும், வேம்பா (கொதிகலன்) தொழிற்சாலை44, தடிவழிவிரைவான்45, நாட்சரி46, மாதிகை47 என்று பெயரிடுவாரிடததும் பாவாணர் அமைந்திருக்கிறார். காட்டு விலங்காண்டி48 என்றாலும் பட்டந்தாங்கி49 என்றாலும் நேரியைப்50 பயன்படுத்தும் அளவில் மொழியாக்க நோக்குக் கொள்ளுதல் வேண்டும் என்று கருதின், அவரிடத்தே பாவாணர் அகமலர்ந்து முகமலர்ந்து அழகுக் காட்சி வழங்குகின்றார். இங்குச் சுட்டிக்காட்டிய ஐம்பது சொற்கள் தாமோ தேவநேயம். இப்படி எத்தனை எத்தனை ஐம்பதுகள். இவற்றைத் தொகுத்துத் தொகைப்படுத்துவதே நேவநேயம். இத்தேவநேயம் இயன்ற விரைவில் வெளிப்படுமாக. குறிப்பு விளக்கம் : 1. டாக்டர், 2. மருத்துவர், 3. காபி, 4. தேநீர், 5. தயார், 6. வசதி, 7. டூல், 8. மேசை, 9. புரூட் சாலிட், 10. ஐகிரீம், 11. திருப்தி, 12. விரைவு, 13. சாதகம், 14. பஞ்சாங்கம், 15. புராணம் 16. அவதாரம் 17. புதன் 18. சனி. 19. ஏர்கண்டிசன் 20. பேனா, 21. பாகவதர், 22. சமுதாயம், 23 எடுப்புக் கக்கூ, 24. பிளஅவுட், 25. இரத்தம், 26. பர்லாங், 27. புனல், 28. மணிப்பிரவாளம், 30. இராமச்சந்திரன், 31. கருணாநிதி, 32. பசுமலைசுந்தரம், 33. சோமசுந்தரம், 34. கலியாணசுந்தரம், 35. பசுமலைசுந்தரம், 36. மனோகரன், 37. சின்னச்சாமி, 38. சந்தோஷம், 39. பெங்களூர் 40. பம்பாய், 41. ஆக்சுசுப்போர்டு, 42. கிருன்லாண்ட், 43. பசிபிக்குக்கடல், 44. பாய்லர்தொழிற்சாலை, 45. சிரேட்டிரங் எக்பிர; 46. தினசரி, 47. மாதப்பத்திரிகை, 48. திருகாண்டி (மிராண்டி) 49. பட்டதாரி, 50. X£L.* * தேநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் என்னும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனப் பாவாணர்அறக்கட்டளைப் பொழிவு நூலின் இறுதிக்கட்டுரையைப் பெரிதும் தழுவியது இப்பகுதி. 16. படைப்பும் பல்கும் நேசமணியம்மையார் நினைவு வெளியீடு -1. இசைத்தமிழ்க் கலம்பகம் முதற்பாகம் முதற்பதிப்பு 1966 சேலம் நகராண்மைக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியன் மதுரைப்பண்டிதன் நெல்லைப் புலவன் சென்னைப் புலவ (வித்துவ) கலைத் தலைவன் (எம்.ஏ.) ஞா. தேவநேயன் பாடியது. (குறியீட்டு விளக்கம், பாயிரம், காப்பு, இசையாசிரிய வணக்கம் என்பவற்றுடன் நூல் 303 இசைப்பாடல்களால் இயல்கின்றது. தமிழ், தமிழகம், தமிழர், ஆரியம், ஆங்கிலம், இந்தி, தமிழர் கடமை, சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி இன்னவாறானவை பற்றிய இசைப்பாடல்கள் இவை. தமிழ் வளர்ப்போர், தமிழ்த் தொண்டு செய்யும் அமைப்பு, பல்வேறு வாழ்த்து இன்னவும் இந்நூலில் உண்டு. தமக்கு உதவி செய்தோரைப் பற்றிய நன்றிப்பாடலும் இதன் கண் உண்டு. எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்கலம் என நூல்நிறைகின்றது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதன் நெல்லைத் தமிழ்ச் சங்கப் புலவன், சென்னைப் பல்கலைக் கழகப்புலவ கலைத் தலைவன், மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தலைவன், மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன் ஞா. தேவநேயன் எழுதியது. ஆசிரியர் வெளியீடு. 1968. ஆசிரியர் உரிமையது. (இந்திய எதிர்ப்புத் தொண்டாற்றும் தனியார்க்கும் படைஞர்க்கும் பயன்படுமாறு இந்நூல்எழுதப்பட்ட தென்றும், புன்செய்ப் புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் விருப்பத்திற்கிணங்கி. எழுதப் பட்டதென்றும் முகவுரையில் குறிக்கிறார் பாவாணர். காட்டுப்பாடி விரிவு, 17 கும்பம், 1999 (29-2-68) ஞா. தே. என்பவை இடமும் காலமும் ஒப்பமும். 89 பக்கங்களைக் கொண்ட இச்சுவடி முற்படை, இந்திவரலாறு, இந்தியால் விளையுங் கேடு, இந்திப் போராட்டம், பல்வேறு செய்திகள், முடிபு என்னும் ஆறுபெரும் பகுப்புகளும் மூன்று பின்னிணைப்புகளும் கொண்டது. விலை உருபா. 1) இயற்றமிழ் இலக்கணம் கழக வெளியீடு - 172. 4, 5, 6 ஆம்பாரங்களுக்குரியது. திருச்சி, புத்தூர்ப் பிஷப்ஹீபர் கலாசாலைத் தமிழாசிரி யன் வித்வான் ஞா. தேவநேயப் பாவாணன், B.O.L., எழுதியது. பாடநூல் குழு ஒப்புதல் பெற்றது. முதற்பதிப்பு - சூலை 1940; ஐந்தாம் பதிப்பு 1943. இதன் ஒளிப்படி வழங்கியவர் பூங்காவனர். (முகவுரை, ஒருபக்கம் பாவாணர் எழுதியுள்ளார். கையெழுத்து ஞா. தே. பா. திருச்சிப்புத்தூர் 23-12-34. எழுதிவைத்து ஏழாம் ஆண்டு வெளிவந்தது. இந் நூல் விளங்க வைத்தல் என்னும் ஒரே நோக்கம் பற்றி எழுதப்பட்டது என்பது இதனைப் பயில்வார் நன்குணர்வர் என்கிறார். மொத்தப்பக்கம் 148. ஐந்தாம் பதிப்பின் விலை 15 அணா 6 பைசா. கழக உரிமை.) கழக வெளியீடு : 566. முதற்பாகம் முதற்பதிப்பு திசம்பர் 1950 சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் திணைக்களத் தலைவன் பண்டித புலவ வித்துவ ஞா. njtnea‹, ã.X.vš., இயற்றியது. முகவுரை - இரண்டு பக்கங்கள் ஞா.தே. சேலம், 4-11-50. (இந்நூல் தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல்களையுடையது; இம்முதற்பாகம் முதலியலைக் கொண்டது. இந்நூல் ஒரு புதுமுறையில் முதன்முதல் எழுதப் பெற்றதாகலின் இதிலுள்ள குற்றங்குறைகளை அறிஞர் எடுத்துக் காட்டின் அவற்றை அடுத்த பதிப்பில் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வேன் என்கிறார். நூல் பக்கம் 284. நூலுரிமை vÞ.o.Rªjuuh{) உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் கழக வெளியீடு : 908 சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் திணைக்களத் தலைவர் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் எம். V., இயற்றியது. முதற்பதிப்பு : நவம்பர் 1951. இரண்டாம் பதிப்பு : மார்ச்சு 1968. (மரபியலும் கட்டுரையியலும் கொண்டது. பக். 251 முகவுரை மஇடம் நாள் : சேலம், 23-8-1951 ஞா.தே. உரிமை : ஞானமுத்து தேவநேயன்) ஒப்பியன்மொழி நூல் முதன்மடலம் திராவிடம் - முதற்பாகம் (தமிழ்). பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேசன் எழுதியது. 1940. (மொழிநூல், பண்டைத்தமிழகம், தமிழ்த்தோற்றம், உலக முதன்மொழிக் கொள்கை என நான்கு பெரும் பிரிவுகளையும் பல்வேறு உட்பிரிவுகளையும் உடைய இந்நூல் 378 பக்கங்களைக் கொண்டது. மருத்துவ அறிஞர் டாக்ற்றர் NB. ஸ்ரீநிவாச மல்லையா அவர்களுக்குப் படையலாக்கப்பட்டது. பேரா. S. ஆறுமுக முதலியார் (M.A; L.T.) க்கு உதவியுரைக்கிறார். என் கட்டுரைகளைக் குறைகூறி என்முடிவுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த பல நண்பர்கட்கும் யான் மிகவும் கடப்பாடுடையேன் என்கிறார். இடம் நாள் ஒப்பம் : புத்தூர் திருச்சி. 29-1-40: ஞாதே.) ஒப்பியன் மொழி நூலுக்கு ஒரு மதிப்புரை. பாளையங்க கோட்டையில் பாவாணர் பயின்ற நாளில் ஆங்குத் தலைமைத்தமிழ் ஆசிரியராக இருந்த G.S. துரைசாமி என்பார் ஒப்பியன் மொழி நூலுக்கு ஆங்கிலத்தில் வரைந்த மதிப்புரையின் தமிழாக்கம் இது. பாவாணர் செய்தது. தமிழ் கிரேக்கு ஆங்கிலம் மூன்றினும் வல்லாரான துரைசாமிப் பிள்ளையது என்பது முற்குறிப்பு. நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை 15-7-1940. ஆசிரியர் திருவாளர் ஞா. தேவநேசன் அவர்கள் அன்புடன் உதவிய ஒப்பியன் மொழிநூல் கிடைத்து வாசித்து மகிழ்ந்தேன். இந்நூல் ஏடு தொறும் இன்பம் பயப்பது. தமிழின் தொல் சிறப்பு தமிழ்மக்களின் பண்டைமேனிலை தமிழ்மொழிகளின் வரலாறு முதலியவற்றைத் தெள்ளிதின் விளக்குவது. ஆசிரியரின் ஆராய்ச்சி வன்மை சொல்லிறந்து நிற்பது. இப்பேரறிவாளர் தமிழ் நாட்டுக்குச் செய்துள்ள பேருதவியைத் தமிழ் உரிமை மிக்குடைய தமிழ்மக்கள் யாவரும் பாராட்டுங் கடப்பாடுடையர். தமது நலத்தைக் கருதாது உழைக்கும் இத்தகைய கலைவல்லாரைத் தமிழ்நாடு பொன்னேபோல் போற்றுதல் வேண்டும். தமிழ்மொழிக்குத் தாழ்வு நேர்ந்துவிடுமோவெனக் கலங்கிநின்ற இக்காலத்தினாற் செய்த நன்றியை ஞாலத்தின் மாணப் பெரிதாகத் தமிழ்மக்கள் போற்றுவாராக. தமிழுரிமை மிக்குடையேம் எனக் கூறிக் கொள்ளும் தமிழ்மக்கள் சொல்லளவில் நின்றுவிடாது இந்நூலை வாங்கிக் கற்றுப் பயன் பெறுவாராக. G.S. துரைசாமிப் பிள்ளை. கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் செந்தமிழ்க் காஞ்சி முதற்பாகம் முகப்பில் காந்தியார் படமுடையது தேசாபிமானத் தண்டமிழ்த் தொண்டன் 1937 ஸ்ரீநிலையம் அச்சுக் கூடம் திருசசி. விலை அணா 2. (இசைப் பாடல்கள் 35 கொண்டது. இறுதி ஒரு பாட்டும் திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம் என்பது பற்றியது. ஒவ்வொருபாட்டு முகப்பிலும் இன்ன மெட்டு என்னும் குறிப்புள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம், தொகையரா என்னும் பகுப்புகளும் உண்டு. நூல் பக்கம் 33.) கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் திருச்சிப் புத்தூர்ப் பிஷப் ஹீபர் உயர்தரப் பாடசாலைத் தமிழாசிரியன் பண்டித புலவவித்துவான், கீழ் கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேயன் எழுதியது. முதற்பதிப்பு : 1937. சிங்காரம் அச்சுக் கூடம், திருச்சி. (புத்தூர், திருச்சி. 12-12-1936; ஞா. தே என்பவை முகவுரை இறுதியவை. முகவுரை ஒருபக்கம். இந்நூற்றிருத்தம் பற்றி அறிஞர்தம் கருத்துக்களைத் தெரிவிப்பின் அவை நன்றியறி வுடன் அடுத்த பதிப்பிற்றழுவப்படும் என்கிறார். தலைப்புகள் குறியீடுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள. எ-டு : உள்ளடக்கம் - Contents, முகவுரை - Preface. எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல், அணியில், வியாசவியல் என ஐந்து இயல்களும் அனுபந்தமும் கொண்ட இந்நூல் 84 பக்கங்களையுடையது. இது மாணவர்க்கென வெளியிட்ட நூல். ‘A Guide to Tamil Composition for Schools & Colleges’ எனும் தலைப்புப் பொறிப்பே இதனைத் தெளிவுறுத்தும். ஆங்கிலச் சொன் மொழிபெயர்ப்பு என்னும் இணைப்பு (அனுபந்தம்) Appendix முப்பக்கங்கள் உள்ளது. அதற்கும் அவர்தம் வளர்நிலைச் சொல்லாக்கத்திற்கும் ஒப்பிட்டுக்காண அவரா? இவர் என எவரும் வியவாதிரார்). கட்டுரை வரைவியல் என்னும் இடைதரக் கட்டுரை இலக்கணம் கழக வெளியீடு : 400 சேலம் கல்லூரித் திணைக்களத்தலைவன் பண்டித புலவ வித்துவான் ஞா. தேவநேயன் (B.O.L.) எழுதியது. முதற்பதிப்பு : சூன் 1939, நான்காம் பதிப்பு. நவம்பர் 1952. (மூன்றாம் பதிப்பின் முகவுரை: ஞா. தே; மண்ணடி, சென்னை 20-1-1944. பல திருத்தங்களும் பல புதுச் சேர்க்கைகளும் நிகழ்ந்துள்ளன என்கிறார். எழுத்தியல், சொல்லியல், சொற் றொடரியல், அணியியல், கட்டுரையியல் என்னும் ஐந்தியல்களும் நான்கு பின்னிணைப்புகளும் கொண்டது. பக். 160. உரிமை, கழகம்) கிறித்தவக் கீர்த்தனம் இந்நூலின் இரண்டு அட்டைகளும் கிட்டவில்லை: நூற்பொருளுக்கு முற்பட்ட பக்கங்களும் கிட்டவில்லை. எனவே இது முதலில் எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்பது தெரியாத நிலை என நூல்நிலையப் பிற்பதிப்பாம் வேதாகம மாணவர் பதிப்புக் கூறுகின்றது. (1981). நல்ல தமிழ் மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியில் அவ்வளவு வரவேற்பும் வாய்ப்பும் காணா நிலையில் தம் மனத்தைத் தமிழ்மொழி இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதைப் பாவாணர் தம்மிடம் நேரில் உரைத்ததாகப் பதிப்பாசிரியர் ஞானசிகாமணியார் குறிப்பிடுகிறார் (1969). இயற்பாக்கள் 25-உம், இசைப்பாக்கள் 50-உம் கொண்ட சுவடி இது. சிலப்பதிகார வரிப்பாடல்கள் தேவாரப்பண், திருப்புகழ் வண்ணம், திருவருட்பா அமைதி இன்னவெல்லாம் இசைக் கீர்த்தனங்களுடன் இடம் பெற்றுள. சிறுவர் பாடல் திரட்டு இந்திய கிறித்தவ இலக்கியக் கழகத்தால் 1925-இல் வெளியிடப்பட்டது இந்நூல். இதன் முகவுரையில் ஞான. தேவநேசப் பாவாணன், திருவல்லிக்கேணி, 26-8-24 என்றுள்ள குறிப்புகள் பெயர், இடம், நான் தெரிவிக்கும். பொருட் பாடம், கதை, விளையாட்டு, கைவேலை முதலியவைமேல் 29 பாடல்களைக் கொண்ட இந்நூலின், ஒவ்வொரு பாட்டுக்கு மேலும் மெட்டுக் குறிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த சிறுவர் பாடல் நூல்கள் கருத்தில்லாமல் குருட்டுப் பாடங்களாக இருக்கின்றமையால் இந்நூல் வந்தது என்கிறார் பாவாணர். இசைப்பித்தனாக இருந்த என்னை இறைவன் மாற்றினான் என்று பிற்காலத்துக் கூறுதற்கு அமைந்த முற்பட்ட இசைச்சான்று இந்நூல் எனத்தகும். ‘G.L.S, Press, Madras - 1925’ என்பது அச்சீட்டுக்குறிப்பு. நூல் 32 பக்கங்களால் ஆயது. இதன் ஒளிப்படி யொன்றை உதவியவர் பேரா. திருமாறனார். சுட்டு விளக்கம் அல்லது அடிப்படைவேர்ச்சொல் ஐந்து சென்னை, முத்தியாலுபேட்டை உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியன் பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேயன், B.O.L. எழுதியது. 1943 (ஒப்பியன் மொழிநூல் : முதன்மடலம் - 2-ம் பாகம் முற்பகுதி என்னும் குறிப்பில் உள்ளது. ஆசிரியர் சொந்த வெளியீடு. நூல் கிடைக்குமிடம் கழகம் முகவுரை 6 பக்கம். ஞா. தேவநேயன். இடமும் நாளும் இல்லை. எனது மொழி யாராய்ச்சி குன்றாவாறு இடை இடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப் பாடுடையேன் என்றும், இவ்வாராய்ச்சிக்கும் அதன் வெளி யீட்டிற்கும் தோன்றாத் துணையாய் இருந்து உதவியருளும் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை நெஞ்சார நினைத்துத் தலையார வணங்குகின்றேன் என்றும் முகவுரையை நிறைத்துள்ளார். சுட்டு, சுட்டுத்தோற்றம், சுட்டுவேர்ச்சொற்கள், மூவிடப்பெயர், வினாப்பெயர் என்னும் ஐம்பகுப்பும் மூன்று பின்னிணைப்பும் கொண்ட இந்நூல் 104 பக்கங்களுடையது). சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு மதுரைப் பண்டிதன், நெல்லைப்புலவன், சென்னைப் புலவ (வித்துவ) கலைத்தலைவன் (M.A.), ஓய்வு பெற்ற சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன் ஞா. தேவநேயன் எழுதியது. 1961 விலை 75 புதுச்சல்லி. (முகவுரை மூன்றுபக்கம். சொல்வழுக்கள், பொருள் வழுக்கள், வேர்வழுக்கள், இலக்கணவழுக்கள், மரபு வழுக்கள், அகராதி அமைப்புவழுக்கள், அகராதி ஆசிரியர் குறைகள், சென்னைப் பல்கலைக் கழக அமைப்புக் குறைகள் என்னும் எண் பகுப்பினது நூல். புதுவை, 20-8-1961. ஞா. தே. என முகவுரை நிறைவில்உள்ளது. புக்கில் அமைந்தினறு கொல்லோ சிலரிடைத் துச்சில் இருந்த தமிழ்க்கு எனக் குறள் மாற்றுவடிவொன்று முகவுரையில் உள்ளது. 46 பக்கங்கள். நூல்நிறைவில், அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப்பல்கலைக் கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும் என்று முடிக்கிறார். சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் கழக வெளியீடு: 484 முதற்பதிப்பு 1949, முன்னாள் சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பண்டித புலவர் ஞா. njtnea‹ v«.V., பி.ஓ.எல். உரிமை : நேசமணி தேவநேசன். (முகவுரை ஒரே பக்கம் : இடம் நாள் பெயர்: சேலம்; 29-12-48; ஞா. தே. என்னைப் பல்லாற்றானும் ஊக்கி இந்நூல் விரைந்து இயல்வதற்குக் காரணமாயிருந்த சேலம் நகராண்மைக் கல்லூரித் தலைவர் திரு.அ. இராமசாமிக் கவுண்டர் M.A. L.T., அவர்களுக்கு யான் என்றுங் கடப்படுடடையேன் என்கிறார். அணியியற் சொற்கள் முதலாகச் சொற் குடும்பமும் குலமும் ஈறாக 120 பக்கங்களைக் கொண்டது. தமிழ் இலக்கிய வரலாறு மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவன் ஞா. தேவநேயன் எழுதியது. நேசமணி பதிப்பக வெளியீடு; முதற்பதிப்பு 25, சூலை 1979. உரிமை : ஞானமுத்து தேவநேயன் அச்சகம் : காட்டுப்பாடி தென்குமரி அச்சகம். நூலுதவி : வெ. கோபல கிருட்டிணனார் சிங்கப்பூர். (நன்றியுரை, பாடாண்பதிகம், நூலாசிரியன் முகவுரை, பதிப்பாளன் முகவுரை (தே.மணி) தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப் பட்டி ஆகியவற்றுடன் முன்னுரை 65 பக்கமும், நூல் தலைக் காலம் இடைக்காலம் இக்காலம் எதிர்காலம் பின்னிணைப்பு ஆகியன 326 பக்கங்களும் கொண்டது. வ.உ.சி. கப்பலோட்டியதைத் தடுத்தது ஆங்கிலராட்சியால் விளைந்த சிறுதீங்கே. ஆயின் முதன் முதல் கலம்புணர்த்து ஓட்டியவன் தமிழன் என்பதை மறைத்து நாவாய் என்னும் கலப்பெயரையும் தமிழ் என வழங்கவிடாது நௌ என்னும் வடசொற்றிரிபெனத் தடுப்பதே பிரித்தானியச் செயலினும் கொடிது என்கிறார் (299.) தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் கழக வெளியீடு : 752 முதற்பதிப்பு திசம்பர் 1954. ஆசிரியர் சேலங் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் திரு. ஞா. தேவநேயன், அவர்கள் எம்.ஏ. (இளைஞர் பக்கம், பெரியோர் பக்கம் பின்னிணைப்பு என்னும் முப்பகுதிகளைக் கொண்டது நூல். இளைஞர் பக்கம் ஆண்பாற்பகுதி, பெண்பாற்பகுதி, இருபாற்பகுதி என முப்பகுதிகளையுடையது. பெரியோர் பகுதி ஆண்பாற் பகுதி, பெண்பாற் பகுதி என இருபகுதிகளையுடையது. பக்க அளவு 144. உரிமைக் கழகம்) தமிழ் வரலாறு nry« efuh£á¡ fšÿÇ nkdhŸ jÄœ¥ nguháÇa‹ kJiu¥ g©oj‹, bešiy¥ òyt‹ br‹id¥ òyt (ɤJt) fiy¤jiyt‹ (v«.V.,), ஞா. தேவநேயன் எழுதியது. நேசமணி பதிப்பகம். 1967. பெப். உரிமை : ஞானமுத்து தேவநேயன். (காட்டுப்பாடி, 12 கும்பம் 1998 (24-2-1967) ஞா. தே. என்பவை நாற்பக்க முகவுரை இறுதி. பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு செங்கைப் பகுதிக்கு நற்றியுரைப் பதிகமும் முன்னுரை 50 பக்கங்களும் நூல் இயனிலைப் படலம், திரிநிலைப் படலம், சிறைநிலைப் படலம், மறை நிறைப்படலம், கிளர்நிலைப்படலம்,, வருநிலைப்படலம் என ஆறு படலங்களும் பின்னிணைப்பு களுமாக 319 பக்கங்களையுடையது). தமிழர் திருமணம் சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவன் பேராசிரியன் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் (எம்.ஏ.) எழுதியது. 1956. (நூலாசிரியன் முகவுரை ஓர் அரைப்பக்கம்: சேலம் 15-5-56. ஞா. தேவநேயன். வெளியிடுவோன் முகவுரை ஓர் அரைப்பக்கம்: 15-6-56. நச்சினார்க்கினிய நம்பி. இந்நூலின் எல்லாவுரிமையும் திருவாட்டியார் நேசமணி தேவநேயனுக்குரிய, முன்னுரை 6 பக்கமும், நூல் பண்டைத் தமிழ்மணம் இடைக்கால மாறுதல்கள் திருமணச் சீர்திருத்தம் என்னும் முப்பகுப்புகளும் பின்னிணைப்பு மாக 96 பக்கங்களையுடையது. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் ஏனை நூல்கள் (வெளிவர விருப்பவை) என 20 நூற்பெயர்கள் உள. அவற்றுள் தமிழர்மதம், தமிழ நாகரிகமும் பண்பாடும், தமிழர் வரலாறு, திருக்குறளும் தமிழ் மரபுரையும் என்னும் நான்குமே பின்னே வெளிவந்தன. எஞ்சியவை எழுதத்திட்டப் படுத்தியவை ஆகலாம். பழமொழி பதின்மூவாயிரம் எழுதி முடித்தும் இழந்த நூலாயிற்று. தொல்காப்பியம் தேவநேயம் என்பது அவர் உரைகாண எண்ணியதாகலாம்) தமிழர் மதம் தேவநேயன் எழுதியது நேசமணி பதிப்பகம் முதற்பதிப்பு : 15 நவம். 1972 உரிமை : ஞானமுத்து தேவநேயன். அச்சகம் : மறைமலை அச்சகம். (காட்டுப்பாடி விரிவு 200 3, கன்னி, 7. (23-9-1972) தேவநேயன். இது முகவுரையீறு. கோவை இராமசாமிக் கவுண்டர், அவர் மைந்தர் நித்தலின்பனார், மறைமலை அச்சக உரிமையாளர், மெய்ப்புத் திருத்தாளர், முல்லைவாணன் ஆகியோர்க்கு நன்றி யுரைக்கிறார் : நன்கொடையாளர் பெயர்ப்பாவும் நன்கொடைத் தொகையும் குறிக்கப்பட்டுள. முன்னுரை குமரிநிலையியல் இடை நிலையியல் நிகழ்நிலையியல் வருநிலையியல் முடிபுரையியல் பின்னிணைப்புகள் ஆகியவற் றுடன் நூல் 200 பக்கங்களால் இயல்கின்றது. கடவுளை நாடாமல் உண்டென நம்பு என நம்புமதம் என்பதை முகப்பு வெண்பாவிலேயேசுட்டுகிறார். மதம் சமயம் மதம் தேன்றியவை மூவகை மதம் குமரிநாட்டு மதநிலை என்பவை முன்னுரைப் பொருள்) தமிழர் வரலாறு தேவநேயன் எழுதியது நேசமணிபதிப்பக வெளியீடு உரிமை : ஞானமுத்து தேவநேயன். முதற்பதிப்பு : பெப். 1972. (காட்டுப்பாடி விரிவு, 17, சுறவம், 2003 (31, சனுவரி, 1972) தேவநேயன் - என்பவை முகவுரை நிறைவு. 1929 ஆம் ஆண்டில் சீநிவாச ஐயங்கார் தெற்கினின்று தொடங்கித் தமிழ் வரலாறு வரைந்துவிட்டாரேனும் அது ஆங்கிலத்தில் இருப்பதனாலும் போதிய அளவு மொழிநூற்சான்று காட்டாமையாலும் இவ்வரலாற்று நூலை வரையத் துணிந்தேன் என்று நூலெழுது கரணியம் முகவுரையில் குறிக்கிறார். மதுரைமணிவிழாக் குழுவினர், கோவை இராமசாமிக்கவுண்டர் அவர் மகனார் நித்தலின்பனார், புன்செய்ப்புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் பாராட்டப்படுகின்றனர். முன்னுரை 25 பக்கங்கள், தனிநிலைக் காண்டம் கலவுநிலைக் காண்டம் தெளிநிலைக் காண்டம் என நூல் முக்காண்டங்கள்; பின்னிணைப்புகள் 2. ஆக 382 பக்கங்களைக் கொண்டுளது.) தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள் செந்தமிழ்ச் செல்வியில் வேர்ச் சொற் கட்டுரைகள் வெளிவந்த பின்ர்த் தொடராக வெளிப்பட்டது இவ்வாய்வுக் கட்டுரைகள். சிலம்ஸப 52; பரல் 1 இல்இத்தொடர்தோன்றியது (செப். 1977). உம்பர், உய், உருளை, அரத்தம், கண், காந்து, காலம், கும்மல், அந்தி, எல்லா, கலித்தல், மகன், மன், தெய்வம், புகா (உணா), பள்ளி, பாதம், புரி, பொறு, என்பன (19) சிலம்பு 54; பரல் 2 வரை (1979 அக்) வெளிவந்தன. பின்னர்த் தமிழினத் தலைமையை நாட்டும் தொகுதிச் சொற்கள் என்னும் தலைப்பில் பூனைப் பெயர்கள் என்பது வந்தது (54:3) மீண்டும் தொடர்ந்து பகு, பேசு என்னும் தனிச்சொற்கள் (54:4;5) வெளிவந்தன. இவை இது காறும் தனிநூலாக்கம் பெற்றில. வெளிவரின் வேர்ச் சொற்கட்டுரைகள் போலச் சிறக்கும். திரவிடத்தாய் கழக வெளியீடு : 899. முதற்பதிப்பு : ஆசிரியர் 1944 சனவரி மறுபதிப்பு - கழகம் 1956 மே. திரு. ஞா. தேவநேயன். முன்னுரை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, முடிவு என்னும்ஆறு பகுப்புடையது. பக். 112.) திருக்குறள் தமிழ் மரபுரை தேவநேயன் எழுதியது நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி விரிவு. உரிமை : ஞானமுத்துதேவநேயன். முதற்பதிப்பு : திசம்பர் 1969. (மேலைத்தாம்பரம் சென்னை 45, 18, கன்னி, 2000 (4-10-1969) ஞா. தேவநேயன் முகவுரை நிறைவில் உள்ளவை. பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள் பன்னிரண்டனைச் சுட்டுகிறார். தம் உரை திருந்தியுள்ள வகைகள் ஐந்தனை விளக்குகிறார். தாமரைச் செல்வர் சுப்பையா, இராசிபுரம் சேயோன், ஆரணிச் செல்வராசன், பாரி அச்சக நாராயணர் ஆகியோர் பாட்டாலும் உரையாலும் முகவுரையில் பாராட்டப்பட்டுளர். நன்றியுரைப் பகுதியில், அன்னத்தாளக ஆசிரியன் முருகன், புலவர் கந்தசாமி ஆகியோர் ஈராயிரத்திற்கு மேல் தந்த தொகையும், திருச்சிநகர்கல்லூரி மாணவர் விடுத்த திங்கட்பணவிடையும், இந்திய நாட்டுவைப்பகக் கணக்கர் முத்துக்கிருட்டிணர் விழுப்பமிகு விருந்தேம்புதலுடன் மெய்ப்புத் திருத்தியமையும் சுட்டப் படுகின்றன. நூன்முன்னுரை 34 பக்கங்களால் இயல்கின்றது. நூலுரை (35 - 726) முடிந்தபின் பின்னிணைப்பும் (727 - 812) விரிகின்றது. 24 பின்னிணைப்புகளில் இறுதியது திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாச் செய்தி. அது 108 அடியான் அமைந்தஅகவல்; பறம்புக்குடியில் உ.த.க. முதன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்ச்சி தென்மொழியில்விரிவாக வந்தது). தொல்காப்பியக் குறிப்புரை 1944-இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் வெளியிட்டது. நூற் பாக்களிலும் உரைகளிலும் மாணாக்கர் விளக்கம் பெறவேண்டிய பகுதிகளின்மேல் தக்க ஆராய்ச்சிக் குறிப்புகளும் விளக்கங்களும் மேற்கோளிடங்களுடன் அவ்வப் பக்கத்தின் அடிக்குறிப்பு வரைந்தவர் பாவாணர். குற்றியலுகரம் உயிரீறே என்பதொரு கட்டுரையும், உரையாசிரியர் உரையொடு நச்சினார்க்கினியர் உரை வேறுபடும் இடங்களும் பாவாணர் வரைந்துளார். தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையருரைப் பதிப்பு கந்தசாமியாரால் செய்யப்பட்டது. (1923) அதன் மறு பதிப்பில் (1946) பாவாணர் விளக்கக் குறிப்பு வரைந்தார். தொல்காப்பியத்திற்கு உரையெழுத விரும்பியவர் பாவாணர். அது நிறைவேறியமை அறியக் கூடவில்லை. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் நேசமணியம்மையார் நினைவு வெளியீடு - 2. பண்டித புலவ கலைத்தலைவன் ஞா. தேவநேயன். (சேலங் கல்லூரி மேனாள் தமிழ்ப்பேராசிரியன்) எழுதியது. 1966. (முகவுரை இருபக்கம். காட்டுப்பாடி, க, சுறவம் 1997. ஞா. தே. செட்டிகுளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளிவந்தது. மெய்ப்புப் பார்த்த அருணாசலம் என்னும் நல்லிறையனைப் பாராட்டியுள்ளார். முன்னுரை (1-23) நூல் 1. பண்டைத் தமிழ நாகரிகம் (24-195) பண்டைத் தமிழப் பண்பாடு (196-225) பின்னிணைப்பு, நூல் வெளியீட்டுக்குழு ஆக 240 பக்கங்கள்). பழந்தமிழாட்சி கழகவெளியீடு : 613 முதற்பதிப்பு பெப். 1952 சேலங்கல்லூரித் தமிழ்த் திணைக் களத்தலைவன், பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன், எம். ஏ,. எழுதியது. உரிமை : D. அன்னபூரணம். முகவுரை : சேலம் 13-12-1951. ஞா. தே. (இந்நூல் முகவுரையின் இறுதியில் என்றும் திருத்தம் இயம்பும் அறிஞரின், நன்றி யறிவேன் நனி எனக் குறட்பா வொன்றுளது. அரசியல் உறுப்புகள் தொடங்கி அரசர் முடிவு ஈறாக 26 தலைப்புகளில் (பக். 158) நூல்இயல்கின்றது. பின்னிணைப்பு நான்கு குறுந்தலைப்பினது (159-170). இந்நூலில் முதற்கண் பதிப்புரை இருபக்கங்கொண்டுள்ளது). மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவன் ஞா. தேவநேயன் எழுதியது. நேசமணிபதிப்பகம் முதற்பதிப்பு : 1- 4-1978 உரிமை : ஞானமுத்து தேவநேயன் பதிப்பாளன் : தே. மணி (காட்டுப்பாடி விரிவு 31-8-1973; ஞா. தேவநேயன் என்பது முகவுரையீறு. என் தந்தையார் ஓர் அரசியல் அலுவலராயிருப்பதால் இதைத் தாமாக வெளியிட இயலவில்லை. அதனால் நானே வெளியிடுகின்றேன் என்பது பதிப்பாளன் முகவுரை. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே உலகுக்குத் தக்க உயரிய கூட்டு உடைமையாட்சி திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதை விரிவாக எழுதியதே இந்நூல். நெய்வேலி உ.த.க. அன்பர் பொருளுதவி யால் நூல் வெளிவந்தது. முன்னுரை முப்பத்தாறு பக்கத்துடன் நூல் வள்ளுவர் கூட்டுடமை, தமிழ்நாட்டு அரசின் கடமை, தமிழ்நாட்டு அரசின் தனிக் கடமை, நடுவணரசின் கடமை, உலகக்கூட்டரசு, முடிவுரை என்னும் ஆறு பெரும் பகுப்புகளும் சேர்த்து 250 பக்கங்களைக் கொண்டுள்ளது). முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் கழக வெளியீடு : 631 முதற்பதிப்பு : சனவரி 1953 ஆசிரியர் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் எம்.ஏ. உரிமை : D. அன்னபூரணம். (இதனை ஆக்கித் தந்த மெய்ப்பொருள் காணும்பேரறிவு படைத்த புலவர்திரு. தேவநேயனார். என்பது பதிப்புரைச் சுட்டு. பாவாணர் முகவுரை இறுதியில் பகுத்தறிவைச் சற்றும் பயன் படுத்தார் கல்வி, மிகுத்ததினால் ஏது பயன்? என வினாவும் குறட்பாவொன்று இணைத்துள்ளார். குறிப்பொலிக் காண்டம், சுட்டொலிக் காண்டம் என இரு காண்டங்களும் இயல், துறை என்னும் உட்பிரிவுகளும்கொண்ட இந்நூல் 344 பக்கங்களை யுடையது. வடமொழி வரலாறு மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன், மதுரைப்பண்டிதன், நெல்லைப் புலவன், சென்னைப் புலவ (வித்துவ)கலைத் தலைவன் (எம்.ஏ.) ஞா. தேவநேயன் எழுதியது. நேசமணி பதிப்பகம். முதற்பதிப்பு : திச. 1967 உரிமை : ஞானமுத்து தேவநேயன். முகவுரை : இடம் நாள் ஒப்பம் ; காட்டுப்பாடி 20, நளி, 1998 (6-12-67) ஞா. தே. (இந்நூலும் திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதியர் உதவியால் வெளிவந்ததாகும். முன்னுரை, ஐம்பத்து நான்கு பக்கங்களுடன், நூல்மொழியதிகாரம், இலக்கண வதிகாரம் இலக்கிய வதிகாரம் தமிழ் மறைப்பதிகாரம் முடிபதிகாரம் என்னும் ஐந்ததிகாரமுமாக 350 பக்கங்களைக் கொண்டது. மொழியதிகாரம் மிகவிரிந்தது (55-295) தனி அகர முதலியாக அமைந்தது. அக்கம் தொடங்கி வைகையில் முடிகின்றது. முடிபதிகாரம்பதினாறு வெண்பாக்ளைக் கொண்டது. வடமொழி தெய்வ மொழியென்றால், தமிழ்மொழி தெய்வத்தின் தெய்வத் திருமொழி என்று ஐந்தாம் வெண்பாவில் கூறுகிறார். பகுத்தறிவின்றி மிகுத்தறிவு பெற்றுப் பயனில்லை என்பதை, காளவாய் கற்றை கற்றையாய்த் தின்றாலுமி நல்லறிவு பெற்றிடுமோ என உவமையால் கூறுகிறார் (11). வண்ணனை மொழி நூலிடன் வழுவியல் ‘ïªâahš jÄœ v›thW bfL«? என்னும் நூலில் உள்ளது போன்றே ஆசிரியர் பட்டங்கள் குறிக்கப்பட்டுள. உரிமை ஆசிரியரது. முதற்பதிப்பு 1968. (காட்டுப்பாடி விரிவு, 12 மடங்கல் 1999 (28-8-1968) ஞா. தே. என்பவை முகுவுரையில் இடம் பெற்றுள்ளவை. மொழிநூல், வண்ணனை மொழிநூல், உலகத்தமிழ்ப் பேரவைகள் என்னும் முப்பெருந்தலைப்புகளும் 16 உட்டலைப்புகளும் கொண்ட. இந்நூல் 122 பக்கங்களால் இயல்கின்றது. இப்பொத்தகம் கிடைக்கும் இடங்கள் என ஐம்முகவரிகள் இறுதி அட்டையில் உள. வெள்ளைக்காரர் சொல்வதெல்லாம் விழுமிய அறிவியல் என்பது குருட்டுத் தனமான கருத்து என்றும், மொழிநூல், உலகின் முதன் முதல் இலக்கணம் இயற்றப்பெற்ற தமிழில் தோன்றிய தென்றும், அறுகிழமை அல்லது முக்கிழமை பயிற்சி பெற்ற அளவான் வண்ணனை மொழிநூல் அறிஞராக ஒருவர் ஆகிவிட முடியாது என்றும் முகவுரையில் கூறுகிறார். கழக ஆட்சியாளர் வ.சு. உதவியையும் பாராட்டுகிறார்). வேர்ச்சொற் கட்டுரைகள் கழக வெளியீடு : 1469 பண்டித புலவ (வித்துவ) கீழைக்கலைத் தேர்ச்சியாளன் ஞா. njtnea‹, v«.V., நூலுரிமை : ஞா. தேவநேயன். முதற்பதிப்ஸப : மார்ச்சு 1973 (பதிப்புரை (கழகம்) அணிந்துரை (பேராசிரியர் க. அன்பழகன்) ஆசிரியன் முகவுரை ஆகிய மும் முன்னுரைகளை நூன்முகப்பில் கொண்டுள்ளது. இக் கட்டுரைகள் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவை. அவற்றில்சில திருத்தங்கள் பெற்று நூலாக்கம் பெற்றமையைப் பதிப்புரை சுட்டுகின்றது. பாவாணர் இயற்றிய ஒப்பியன் மொழிநூல்தான் எம்போல்வார் பலருக்கும் தமிழ்ப்பகையையும் அதன்மறை நிலையையும் கண்டு கொள்ளுதற்குத் துணை செய்தது என்று அணிந்துரை கூறுகின்றது. கருத்து வேறுபடும்போது சொல் வேறுபடல் வேண்டும். அன்றேல், பொருள் மயக்கம் உண்டாவதோடு மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க அடிப்படை நெறிமுறை என்கிறது ஆசிரியன் முகவுரை. உயிர்முதல் வேர்ச்சொற் கட்டுரைகள் பதினைந்தும், உயிர்மெய் முதல் வேர்ச் சொற்க ட்டுரைகள் பதினாறுமாக முபபத்தொரு கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் 298 பக்கங்களை யுடையது.) The Primary Classical Language of the world. By G. Devaneyan M.A., B.O.L., Ex-Reader and Head, Dept. of Dravidian Philoogy Annamalai University, (Formerly Prof. and Head of the Dept. of Tamil, Municipal College, Salem) Nesamani Publishing House Edition - First 1966. Pages: 312. Place of Publication; Mukkudal. (முக்கூடல் அரிராம் சேட்டு நினைவு அறக்கொடையால் வெளிவந்த நூல் இது. முன்னுரை மிக விரிந்தது. (1-107) நூல் அளவில் மூன்றில் ஒரு பங்கின் மிக்கது. இந்நூலின் தமிழாக்கம் பாவாணரால் தென் மொழியில் தமிழே உலகமுதல் உயர் தனிச் செம்மொழி எனத் தொடர் கட்டுரையாக வெளிவந்து ஓரளவான் அமைந்தது.) “THE LEMURIAN LANGUAGE AND ITS RAMIFICATIONS” இப்பெயரிய நூலின் (400 பக்கம்) சுருக்க நூலாகப் பாவாணரால் வரையப்பட்ட (52 பக்க அளவில் தட்டச்சு) நூல் அல்லது சுவடி இஃதாகும். நெய்வேலி உ.த.க.வினர் இதன் தட்டச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர்க்கென அணியப் படுத்தப்பட்ட சுவடி இது. 1984 திசம்பர். இசையரங்கு இன்னிசைக்கோவை தி.பி. 2000, சூலைத்திங்கள், 13 ஆம் நாள் முகவை மாவட்டம் பறம்புக்குடி நகரில் நடைபெற்ற உ. த. க. முதல் மாநாட்டில் பாடப் பெற்றவை. இயற்றியவர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஞா. தேவநேயப்பாவாணர் க.மு. பாடியவர்: வேழத்திருமகள் என்னும் கசலட்சுமி, வேலூர். முதற்பதிப்பு : 1 - 8 - 1969. இச்சுவடியில் இசைப்பாடல்கள் 34 உள. உலகத் தமிழ்க்கழகம் (91) பறம்புக்குடி (32) திரு. இரா. முத்துக் கிரட்டிணன் (வள்ளன்மையர்) (33) பற்றிய பாடல்களும் உள. நிறைவுப்பாடல் மங்களம் (34) இந்நூல் உ.த.க. வெளியீடாக வந்தது. பக்கம் 31. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை தென்மொழி 216 முதல் 2012 முடிய வெளியான கட்டுரைத் தொடர் இது. தென்மொழியாசிரியர் பாவலரேறு பெருஞ் சித்திரனார் இசைவுடன் பாவாணரின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக பாவாணர் பதிப்பகம் (பெங்களூர்) வெளியிட்ட நூல், இதன் பதிப்பாசிரியர் பேரா. கு. பூங்காவனம் அவர்கள். பதிப்பக முன்னுரை, பாவாணர் பதிப்பகம், பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு பாவாணர் நூல்கள் என்பன முன்னிணைப்புகள். கட்டுரை எழுதுவது எப்படி? பாவாணர் எழுதிய உயர்தரக்கட்டுரை இலக்கணம் என்னும் நூலில் இருந்து கட்டுரை எழுதுவது எப்படி என்னும் பகுதி பிரித்துத் தனிச் சுவடியாக அமைக்கப்பட்டது இஃதாகும். முபபத்தாறு பக்கங்களையுடைய இச்சுவடி கழகத்தின் 1717 ஆம்வெளியீடாக 1984 இல் வெளிவந்தது. குற்றங்களும் குணங்களும், பாகியமைப்பு, கட்டுரை வரைவு என்னும் முப்பகுப்புகளையுடையது, கடிதம் வரைவது எப்படி? பாவாணர் எழுதிய உயர்தரக் கட்டுரை இலக்கணத்தில் இருந்து பகுத்துக் கொள்ளப்பட்ட வெளியீடு இது. கடித வடிவம், கடித வகைகள் என்னும் இரு பிரிவுகளையுடையது. வெளியீடு, கழகம். முதற்பதிப்பு : 1984. பக்க அளவு : 36. இடம் நாள், செய்தி ஆகியவற்றில் காலத்துக்குத்தக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை தெரிகின்றது. சிலபகுதிகள் சுருக்கவும்செய்யப்பட்டுள்ளது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி முதன்மடலம்- முதற்பகுதி மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்ககத்திற்காகத் தமிழ் நாட்டுப் பாடநூல்நிறுவனம் வெளியிட்டது. முதற்பதிப்பு : சனவரி 1985. முதற்கண் அண்ணா வாழ்த்து முதல்பிழைதிருத்தம் ஈறாக 112 பக்கங்கள் அகரமுதலிப்பகுதி 1-574. இறுதிச்சொல் அனோபகம். ஆகாரவரியில் ஆசை மொழி என்பது வரையில் எழுதப்பட்ட செய்தி அறிய வருகின்றது. அகரமுதலி இயக்குநர் (பொறுப்பு) பேரா. இரா. மதிவாணரால் அச்சுக்கு அணியப்படுத்தி முடிக்கப் பட்டது. பாவாணர் தென்மொழியில் (1-8-1959) எழுதிய கட்டுரை இது. பயன் கருதியும் பன்னூற்றுவர் விழைவினை ஏற்றும் நூல் வடிவு பெற்றது இது (1-8-1969) நூல் 21 பக்கங்களையுடையது. பறம்புக்குடியில் நடைபெற்ற உ.த.க. முதல் மாநாட்டில் வெளியிடப் பட்டது. உ.த.க. வெளியீடு இது. பழமொழி பதின்மூவாயிரம் முதலியன. பழமொழி பதின்மூவாயிரம், தொல்காப்பியச் சீர்மை, இசைத்தமிழ்ச் சரிதம், சொல்லியன் நெறி முறை முதலிய நூல்களைப் பாவாணர் எழுதி முடித்த செய்தி அறிய வருகின்றது. இவ்வாறே வேறு சில சிறு நூல்களும் பெருநூல்களும் வெளிவந்த - வெளிவர இருக்கின்ற பட்டியலில் காணப்பட்டும் கைப்படவில்லை. சில நூல்கள் அச்சேறாமையும் சில எழுதப்படாமையும் அறிய வருகின்றன. சில நூல்களின் பெயர்கள் சிறிது பெயர் மாற்றத்துடனும் வெளிவந்துள்ளன. பாவாணர் கடிதங்கள் பாவாணர் பல்கால்தம் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் வரைந்த கடிதங்களின் (1520) தொகைநூல் இது. அவர்தம் 50 ஆண்டுக் கடிதங்கள் இவை. 1931 முதல் 1963 வரை உள்ளவை அனைத்தும் கழகத்திற்கு எழுதியயை. அதற்குப் பின்னரே கழகத்திற்கும் பிறர்க்கும் எழுதியது. இக் கடிதங்கள் பொருட்பகுப்பு முறையால் 28 கூடியது, நூற்பகுதி 192 பக்கம். முதற்பதிப்பு பிப்ரவரி 1985. தொகுப்பு : இரா. இளங்குமரன். வெளியீடு ; கழகம். வெளியீட்டு எண்: 1779. பாவாணர் உவமைகள் பாவாணர் நூல்களில் காணக்கிடக்கும் உவமைகளைத் தொகுத்த தொகை இது. முன்னுரை ஆறு பக்கம். தமிழ், தமிழ்ப் புலவர், பிறமொழி, வரலாறு, ஆராய்ச்சி, சொல், பொருள் விளக்கம், நூல் என எண் தலைப்புகளில்64 பக் அளவில் நூல்அமைந்துளது. இதிலமைந்துள்ள உவமைகளின் எண்ணிகை 221, வெளியீடு : கழகம் ; முதற்பதிப்பு 1986 தொகுப்பு இரா. இளங்குமரன். பாவாணர் பொன்மொழிகள் பாவாணர் நூல்களில் பொதிந்து கிடக்கும்பொன் மொழி களைத் தொகுத்து வெளியிட்ட நூல். தொகுப்பு; இரா. இளங்குமரன். வெளியீடு : கழகம். முதற்பதிப்பு : 1985. ஆராய்ச்சி முன்னுரையுடன் நூல்50 பக்கம். பொன்மொழிகள் பொருளகர நிரலில் அகமணம் புறமணம் தொடங்கி, வேலைநிறுத்தம் என நிறைகின்றது. இதன்கண் உள்ள பொன்மொழிகள்; 156. சிலஇரண்டாய், மூன்றாய் அமைந்ததுடன் பன்னிரண்டாகப் பல்கியதும் உண்டு. கடிதங்களில்கண்ட பொன் மொழிகள் சில, முன்னுரையில் அமைக்கப்பட்டுள. பாவாணர் வேர்ச்சொற் சுவடி 1940 இல் எழுதிய சிறிய சுவடி இது. ஒருபக்கத்திற்குள் 4 வேர்ச் சொற்றிரிபுகள் அடங்குமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப் பற்றி எழுதியனுப்புவேன் (29-8-40) என்று கூறியவாறு எழுதிய நூல். 14-9-40 வேர்ச் சொல் சுவடி எழுதி முடிந்தது என்கிறார். எனினும் பாவாணர் வாழ்நாளெல்லாம் அந்நூல் வராது நின்றுவிட்டது. அவர் கடிதங்களைத் தொகுக் குங்கால் இச்சுவடி கிட்டியது. அதில் அர் தொடங்கி வேள் முடிய 65 சொற்களுக்கு வேர் விளக்கம் காட்டிய அளவேயுள்ளது. உட்பிரிவுகளையும் சேர்த்து நூறுசொற்கள் எனக் கணக்கிட்டார் என்றும் தோன்றவில்லை. வரிசை யெண்ணும் தொடர்ச்சியாக உள்ளது. இந்நூல் முன்னுரை விளக்கத்துடன் என்னால் வெளியிடப்பட்டது. வெளியீடு: கழகம். பாவாணர் பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு நூல்களிலும்; பல்வேறு அன்பர்களுக்கு எழுதிய வாழ்த்து நன்றிகளிலும் இருந்து தொகுக்கப்பட்ட பாடல் 320 க்கு மேற்பட்டவை. அவை பாயிரம், வாழ்த்து, இரங்கல், நன்றி, ஐந்தகம், பதிகம், வரலாறு, கதை, பலவகை, முடிநிலை எனப்பதின் தலைப்புகளில் அமைந்தன. விரிவான தொகையுரையைக் கொண்டது. தொகுப்பாளன் : இரா. இளங்குமரன். பாவாணர் மடல்கள் பாவாணர் கடிதங்கள் என்னும் தொகை நூல் உருவாகியபின் கிடைத்த - ஏறத்தாழ - அறுநூறு கடிதங்களின் தொகை இச்சுவடி. அடைவு செய்து அச்சுக்கு அணியமாக்கிக் கழகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. தொகுப்பு நிறைவு : 1988. தொகுப்பு : இரா. இளங்குமரன். வாழ்வும் வரலாறும், உடலும் உள்ளமும், அன்பும் நண்பும், ஆய்வும் அறிவுறுத்தமும், உலகத்தமிழ்க் கழகமும் பணியும், அமைப்புகளும் நிகழ்ச்சிகளும், நூலார்வமும் நூலாக்கமும், அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பணி, சொல்வளம் என்னும் 10 தலைப்புகளில்இயல்வது. சிலநூற்குறிப்புகள் : மருத நிலப்பாடல் - 1925 மருத நிலத்தினர் பாடும்கும்மி - ஆனந்தக்களிப்பு. நொண்டிச் சிந்து மெட்டமைந்தது. - தமிழ் நூல்விவர அட்டவணை 6/2. கிறிதவக்கீர்த்தனம் - முதற்பாகம் பாரதி அச்சுக்கூடம் - மன்னார்குடி 1932. - தமிழ் நூல்விவர அட்டவணை 7/1 துவாரகை மன்னன் அல்லது பூபாரந்தீர்த்த மன்னன் எ.எ. சாதிரி & Co. 1932. துவாரகை மன்னனாகிய கண்ணபிரானைப் பற்றியது (பூபாரந்தீர்த்த என்னும் வில்லியாட்சி நூற்பெயர்த் தூண்டல் ஆகியிருக்கலாம்) தமிழன் எப்படிக் கெட்டான்? முகவுரையில்: தமிழன் வைத்துக் கெட்டமை இச் சுவடியில் விரிவாய்க் கூறப்படும் என்கிறார். நூல்: 1. மதப்பைத்தியம் 2. கொடைமடம் 3. இனநலம் பொறாமை அல்லது தன்னினப்பகைமை 4. குறிபார்த்தல் 5. துறவியைப் பின்பற்றல் 6. ஆரியம் 7. அரசியற் கட்சிகள் என்னும் தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள். - இக்குறிப்புகள் பேரா. திருமாறனார் வழங்கியவை. பாவாணர் நூல்களைப் பற்றிய சிலகுறிப்புகள் தமிழ்மொழியில் சொற்கள் முச்சுட்டிலும் அவற்றுள்ளும் ஊகாரச் சுட்டொடுகலந்த மொழி முதல்மெய்களிலும் தோன்றின என்னும் புத்தம் புதிய புதையற் கண்டுபிடிப்பை வெளியிட்ட நூல் - முதல் தாய் மொழி. மற்றைத் தமிழறிஞரல்லாதாரும் வடசொல்லே என்று வரிந்து விட்ட 713 சொற்களை எடுத்து வேர் நிலையில்ஆய்ந்து அருந்தமிழ்ச் சொல்லாதலை எண்பிக்கும் - வடமொழி வரலாறு. மலைஞாலம் கன்னடம் தெலுங்கு முதலிய மும் மொழிகளில் முழங்கும் சொல்தமிழினின்று கிளைத் தவை என உறுதிப்பாப் பாடும் நூல் - திரவிடத்தாய். மொழியியல் அறிஞர் ஏன் அரசியல் பற்றிக் கருத்தெழுதப் போகிறார் என்று முன்னம் சொல்லும் போதெல்லாம் எண்ணிய எண்ணம் மண்ணாக விண்ணாக உயர்வதுபோல் உலக அரசியலினைப் பிழிந்து தரும் அரும்நூல் - மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை. ஏழு தொகுப்பாக வந்துள்ள அரிய பெரிய தமிழ் - தமிழ் - ஆங்கில அகர முதலியவை ஓரியின் கணைபோல் ஊடுருவிப் பாரியின் கைபோல் பைந்தமிழ் உண்மையைப் பரப்பிடும் நூல் - சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியின் சீர்கேடுகள். பாவாணர் களஞ்சியம் - த.ச. தமிழனார். பாவேந்தரின் மதிப்பீடு பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த காலம்; பாவேந்தர் ஒருமுறை அங்கு வந்தார். பாவாணர் இல்லஞ்சென்று காணவிரும்பினார். உடனிருந்த மெய்யப் பானர், நீங்கள் போய்ப் பாவாணரைப் பார்க்க வேண்டுமா? என வினாவினார். ஆம்! அவர் தாமே நமக்கெல்லாம் ஊற்றம்; அதைத் தானே நான் பாடுகின்றேன் என்றாராம்! பாவேந்தர் மதிப்பீடு எத்தகு பாராட்டுக்குரியது! இதனைக் கூறியவர் பேரா. மெய்யப்பனார். பாவாணர் பதிப்பக உறுப்பினர் பட்டியல் திருவாளர்கள் 1. கோ. தாமோதரன், பெங்களூர். 2. முத்துச்செல்வன், பெங்களூர். 3. கு. பூங்காவனம், பெங்களூர். 4. சு. ஒளிமலரவன், பெங்களூர். 5. அ. தூயவன் (தனிலாசு), கோலார்த்தங்கவயல். 6. அ. ம. குழற்கோமான், பெங்களூர். 7. மு. நெடுமாறன், பெங்களூர். 8. பு. அ. கொடையரசன், பெங்களூர். 9. பர். மு. தமிழ்க்குடிமகன், மதுரை. 10. கோ. கண்ணன், நெய்வேலி. 11. ஆ. கருப்பையா, நெய்வேலி. 12. க. அரசு, பெங்களூர். 13. சி. பூ. மணி, பெங்களூர். 14. சி. பசுமலையரசு, பெங்களூர். 15. தனித்தமிழ்க்கழகம், புதுவை. 16. பேரா. ப. பாலசுப்பிரமணியன், ஈரோடை. 17. பேரா. ம. இலெ. தங்கப்பா, புதுவை. 18. மு. சாயபு மரைக்காயர், புதுவை. 19. மா. ஐயாச்சாமி, புதுவை. 20. பாவலர்முதுகண்ணன், புதுவை. 21. பாளை - எழிலேந்தி, புதுவை. 22. ஈ. செயராமன், புதுவை. 23. சிவ. கணபதி, புதுவை. 24. சிவ. கண்ணப்பர், புதுவை. 25. க.எ. மணவாளன், பெங்களூர். 26. கு.சு. இராமலிங்கம், பெங்களூர். 27. இரா. சு. மதிவாணன், பெங்களூர். 28. திருவாட்டி மணிமொழி, பெங்களூர். 29. பா. நல்லபெருமாள், பெங்களூர். 30. பொற்செழியன், பெங்களூர். 31. பா. திருநாவுக்கரசு, பெங்களூர். 32. சு. முகில்வண்ணன், பெங்களூர். 33. மு. சரவணன், பெங்களூர். 34. அ. குணசேகரன், பெங்களூர். 35. பாலசுப்பிரமணியன், புதுவை. 36. மு. செந்தில், பெங்களூர். 37. க. செகதீசன், வேலூர். 38. ப. அரசு, பெங்களூர். 39. பேரா. த. கிருட்டிணமூர்த்தி, பெங்களூர். 40. புலவர். சு. காமராசன், பெங்களூர். 41. கோ. மணிவாசகம், புதுதில்லி. 42. மு. அறவாழி தமிழரசி, நெய்வேலி. 43. பர். கு. திருமாறன், திருச்சி. 44. பர். ச.சு. இளங்கோ, பெங்களூர். 45. திரு. கோ. கருணாநிதி, பெங்களூர். சிறப்புப் பெயர் நிரல் (முழுவதும் அடங்கிய தன்று) எண் - பக்கம் அகர முதலி அமைப்பு 131 - 3. அகர முதலி இயக்ககம் 138 - 9. அடலெழிலனார் 183, 185 அண்ணா 42, 54, 165, 303 அண்ணாமலை. ப.க.க. 50, 75, 77, 100, 104, 160 அப்பரடிகள் 212 அப்பாத்துரையார் கா. 111, 159, 182 அமைதிவாரி 6 அரசமாணிக்கனார் மா. 51, 52, 61, 101, 150, 151, 247 அரிராம் சேட்டு 120, 153, 301 அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான் 89, 90 அருட்செல்வர் (கருணாநிதியார்) கலைஞர் 134, 135, 143, 154, 199 அருணாசலம் சு.கு. (நல்லிறையன்) 124, 296 அருள்புத்தூர் 24 அரூர் 94 அவிநாசி - கருக்கங்காட்டுப்புதூர் - திருவள்ளுவர் மன்றம் 118 அவிநாசி - கருக்கம் பாளையம் - பாரதிமன்றம் 119 அவிநாசி - திரு.வி.க. மன்றம் 119 அவிநாசி - முத்தமிழ்மன்றம் 118 விநாசிலிங்கனார் 159 அழகரடிகள் 183 அறவாணர் க.ப. 111 அறவாழியார் மு. 96, 97 அறிவு 113 அன்புவாணர் வெற்றிச்செல்வியர் 74, 186, 211 அன்ன பூரணம் 297 - 8 அனைத்திந்திய கீழைக்கலை மாநாடு 68 - 9. ஆக்கசுப் போர்டு - எருதந்துறை 20, 22, 73, 130 ஆட்சிச்சொற்குழு 224 ஆடலரசனார் நா. த. 119 ஆபிரகாம் பண்டிதர் 222 ஆம்பூர் 18, 24 - 29, 77 ஆயிரத் தம்மன் கோயில் 43 ஆற்றூர் 95 இசைத் தமிழ்க் கலம்பகம் 280 இசைத் தமிழ்ச் சரித்திரம் 31 இசையரங்கு இன்னிசைக் கோவை 110, 302 இதழ்கள் 221 இந்தியால்தமிழ் எவ்வாறு கெடும்? 37, 280, 281 இந்துநிலையம் 167 இயற்றமிழ் இலக்கணம் 281 இரங்கல் கூட்டங்கள் 255 - 6 இரத்தினசாமி - சேலம் 56, 196, 200, 201 இராகவர் இரா. 28 இராகவர் மு. 28 இராசகோபாலர் 31 இராசகோபலாச்ரியார் 39, 162 இராசேந்திரன், ஆசிரியர் 247 இராசேந்திரன், புலவர் 94 இராதாகிருட்டிணன் 67 இராபின்சன் (அறவாணன்) 96 இராச்சந்திரஞ்செட்டியார் 227 இராமச்சந்திரனார் ம. கோ. 159, 199 இராமசாமி (கோவை) 289, 292, 293 இராமசாமி (சேலம்) 56- 59, 66, 196, 197,200, 243 இராமநாதன் லெ.ப. கரு. 69, 101 இராமலிங்கனார் கீ. 56 இராமையா பெ. 111 இலக்குமணசாமி ஞா. 55 இலக்குவனார் 82, 110, 120, 148, 185, 230 இலங்கைச் செலவு 238, 239 இலால்குடி 103 இலெனின் தங்கப்பா 105, 106 இலெனினார் 13 இளங்குமரன் இரா. 5, 93, 199, 202 - 5, 211, 304 இளமாறனார்மு. 111 இளமுருகனார் பு. கா. 119, 134, 211 இளவரசு இரா. 108 இறைக்குருவனார் 1087, 111, 183 இறைவி 232 உயர்தரக்கட்டுரை இலக்கணம் 58, 282, 283 உலகத் தமிழ்க்கழகம் 12, 84, 107 - 113, 175 - 185, 273, -4 உலகத்தமிழ்மாநாடு 12, 249 ஊற்று 126 எசுத்தர் 85 எல்லை மாநாடு 60 எழுத்தாளர்மன்றம் 150 என் அண்ணாமலைநகர் வாழ்க்கை 29, 51, 64, 74, 75,302 ஏர்க்காடு 68 ஐசக்கு நியூட்டன் 14 ஐயாத்துரை, செண்டாத்தூர் 245 ஐன்சுடீன் 14 ஒப்பியன் மொழிநூல் 12, 30, 127, 283 கசலட்சுமி - வேழத்திருமகள் 302 கட்டாய இந்திக்கல்விக்கண்டனம் 37, 284 (செந்தமிழ்க்காஞ்சி) கட்டுரை எழுதுவது எப்படி? 302 கட்டுரைக் கசடறை 285 கட்டுரை வரைவியல் 285 கடிதம் எழுதுவது எப்படி? 303 கந்தசாமி, புலவர் 295 கந்தசாமி நீ. 183, 184 கம்பர் 39 கர்கி உனியால் 69 கரந்தைத் தமிழ்ச் சங்கம் 50 கரிவலம் வந்த நல்லூர் 85 கருணாநிதி நகர் 252 கருணை வி. அ. (அருளனார்) 73, 86, 92, 150, 152 - 156, 201 கருமுத்து தியாகராசர் 102, 154, 183 கரூர் 170, கல்பட்டி 24 கல்லறை இரங்கல்கூட்டம் 252, 253 கல்யாண சுந்தரனார் திரு.வி. 15, 81, 134, 221 கலைச் சொல்லாக்கம் 45, 224 கலைவாணர்அரங்கு 159 கழகப் பொன் விழா 235 களப்பாளங்குளம் 17 கன்னிமாரா நூலகம் 139 கனக சுந்தரர் தி.த. 28 காட்டுப்பாடி 75 காந்தியடிகள் 37 காரல்மார்க்கசு 13 காரைக்குடி 191, 192 கால்ரடுவெல் 2, 4, 63, 65, 68 கிருட்டிணையா 201, 202 கிறித்தவக் கீர்த்தனம் 286, 307 கீழ் பாக்கம் 252 குடியரசு 177, குண்டர்ட்டு 68 குமாரசாமி அ. 28, குயில் 100, 101 குருக்கள் பட்டி 16 குரு பாதம் 17, 247 குழந்தை, புலவர்110 குன்றக்குடி அடிகளார் 115, 116, 135, 153, 183 கை காட்டி 113, 223 கொடுமுடி 87 கோயில் பட்டி 16 கோவலங் கண்ணனார் சிங்கை 35, 121, 290 சங்கப் பலகை 8 சங்கரன் கோயில்16 - 21 சஞ்சீவி ந. 207, 208, சம்பத்து 165 சம்பந்தனார் மா. சு. 208 சமற்கிருத அகரமுதலி 140 சாமிநாதர் உ.வே. 28, 168 சாமிநாதன் சோ. 218 சாய்சு 62, சாரதி மா. பா. 173 சிதம்பர நாதனார் 101, 151, 185, 247 சிதம்பரனார் வ.உ. 80 சிவஞான முனிவர்167 சிலுவையை வென்ற செல்வராசன் 89, 90 சிறு சுவடிகள் 47 சிறுப் பெரியார்22 சிறுவர்பாடல்திரட்டு 287 சின்னராசு 121, சின்னா 44 சின்னாண்டார் மி.மு. 92 - 95, 108, 111, 124, 129, 157 சீநிவாசன் புலவர் 94 சீயோன்மலை (முறம்பு) 19, 20, 24, 77 சீவானந்தம் 165 சீனிவாசன் ஏ.எல். 59 சீனிவாசன் மின்னூர் 193 சுட்டுவிளக்கம் 287, 288 சுந்தரம் கருமுத்து தி. 152 சுந்தரனார் மெ. 120, 152 - 154 சுந்தரனார் வீ.ப.கா. (சொல்லழகர்) 182, 184, 210 சுநித்குமார் சட்டர்சி (நன்னெறி முருகன்) 65, 66, 69 - 71,101, 102, 182 சுப்பிரமணியக் கவிராயர் 28 சுப்பிரமணிய சாத்திரியார் 165, 166 சுப்பிரமணியனார் கா. 81 சுப்பிரமணியனார் ச.வே. 125 சுப்பிரமணியனார் வி.ஐ. 182 சுப்பிரமணியனார் வெ.ப. 28 சுப்பையனார் (முருகவேள்) 119 சுப்பையா வ (தாமரைச்செல்வர்) 18, 36, 50, 52, 60, 87, 135, 159, 163, 164, 188, 194, 214, 215, 219 சுவாமிநாதத் தம்பிரான் 168 சூரநாடு குஞ்சன் பிள்ளை 144 செங்காட்டுப் பட்டி (செங்கை) 114 - 6 செங்கைக் கிழார் (ந. செல்வராசனார்) 107, 108, 115, 117, 129, 176, 183 செங்கைப் பொதுவனார் 115, 117 செங்கை மதுவனார் 115 117 செசுப்பர்சன் 65 செட்டி குளம் 114, 116 செந்தமிழ்ச் செல்வர் 161 செந்தமிழ்ச் செல்வி 11, 55, 64, 98, 126, 137, 223 செந்தமிழ்ச் சொ. பி. அ.இ. முதலி 77, 303 செந்தமிழ் ஞாயிநு 17 செம்பியன் 105, 106 செல்லப்பனார் சு. (சிலம்பொலி) 198, 199 சென்னை 30, 43, 47, 52 -- 56, 68 சென்னைப் ப.க.அ. முதலி 141, 288 சென்னைப் ப.க. கழகம் 30 சென்னை மாநாடு 112 சேக்கசுப்பியர் 130 சேது இரா. பி. 62, 68,101 சேந்தமாங்குடியார் 103, 107, 108 சேயோன் 295, சேராடக்கர் 17 சேலம் 39, 42, 55 - 65, 160 சேலம் தமிழ்ப்பேரவை 158 சைவசித்ந்தக் கழகம் 32, 33, 58, 159, 163 சொக்கப்பாதி.வை. 57, 111, 113, 129, 172, 210 சொக்கம்மாள் (மரியள்) 17 சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 289 சொல்விளங்கும் பெருமாள் 111 சொற்பிறப்பியல் அகரமுதலி 67 சோதி பாண்டியன் 222 சோமசுந்தரபாரதியார் 40, 42, 46, 50, 142 சோமசுந்தரம்32 சோமசுந்தரனார் 219 சோமரசம் பேட்டை 165 ஞானப்பிரகாச அடிகள் 183, 183, 184 ஞானப்பிரகாசர் 63 ஞானமுத்து தோக்கசு 16, 18, 21, 160 தஞ்சை 43 தஞ்சை மாநாடு 112 தமிழ் இலக்கிய வரலாறு 289 தமிழ்க்கழகம் 103, 104 தமிழ்க்காப்புக்கழகம் 148 தமிழ்க்குடிமகனார் 105 -109, 113, 129, 188 தமிழ் கடன்கொண்டு தழைக்குமா? 110, 304 தமிழ்நாட்டுவிளையாட்டுக்கள் 290 தமிழ்நாடு 8 தமிழ்ப்பெருங்காவலர் 148 தமிழ்மீட்பர் 128 தமிழ் வரலாறு 291 தமிழ் வேர்ச்சொல் அகரமுதலி 65 தமிழகஉலா 123, 124 தமிழண்ணல் 192 தூமிழம் 113 தமிழர் திருமணம் 291 தமிழர் மதம் 25, 292 தமிழர் வரலாறு 293 தமிழறிஞர் கழகம் 45 - 48 தமிழன் த.ச. 183, 184, 308 தமிழன் எப்படிக் கெட்டான்? 307 தமிழன்பர் மாநாடு 44 தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு 182 தமிழியக்கம் 113 தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள் 293 தனிநாயக அடிகள் 182 தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உ பள்ளி. 29, 30, 77 தாமரை பெருஞ்சித்திரன் 131 திரஞ்சு 62, திரவிடத்தாய் 12, 284 திராவிட மொழிநூல் ஞாயிறு 158 திராவிட மொழியாராய்ச்சித்துறை66 திராவிட மரபுதோன்றிய இடம் - இடுநூல் 48, 49 திருக்குறள் தமிழ் மரபுரை 1089, 294 திருக்குறள் பெருமாள் 184 திருச்சி பிசப்பு ஈபர் உ.ப. 36, 55, 77, 162 திருநான் மறை விளக்கம் 81 திருநெல்வேலி தெ. த. சங்கத்தேர்வு 30 திருப்பனந்தாள் 16, திருப்புன் வர் 1408 திருமாறனார் 120, 307, 308 திருவல்லிக்கேணி கெல்லற்று உ.ப. 29, 30, 77 திருவள்ளுவர் 3, 10, 22, 39, 83, 84, 297 திருவள்ளுவர் திருநாள் 161 திருவள்ளுவர் பஜனைக் கீர்த்தனம் 96 திருவாரூர் 134, 135 திருவாவடு துறை திருவில்லிபுத்தூர் 24 திருவையாறு அரசர் கல்லூரி 50 துரைசாமி. கோ. 183, 184, 225 துரைசாமிப்பாவலர் 26 துரைசாமிப்பிள்ளை ஔவை 150, 151, 183, 228, 243 துவாரகை மன்னன் 307 துறையூர் 115 தென்மொழி 50, 92, 104, 105, 111, 113, 129, 131, 174, 184, 192, 194 தேசாபிமானத் தமிழ்த்தொண்டன் 37 தேராதூன் 67 தேவதாசன் 24, 25 தேவநேசக் கவிவாணன் 26 தேவநேசப் பாவாணன் 30 தேவநேயம் 275 தேவபாண்டலம் 223 தேவர்குளம்19 தொந்தியா பிள்ளை 165 தொல்காப்பியக்குறிப்புரை 295 தொல் காப்பியநமாநாடு 46 தொல்காப்பியனார் 2, 3, 7, 39 தோக்கசு 16, 18, 21 நக்கீரன் 232 நச்சினார்க்கினியநம்பி 89 நம்பியூர் - மறைமலையடிகள் மன்றம் 118 நாகமுத்து அர. 114, 115 நாகரத்தின ஓதுவார் 196 நாங்கள் காணும் பாவாணர் 75 நாமக்கல் 43 நாயகம் சி.டி. 51, நாராயணன் பா. 195 நாராயணசாமி 101 நித்தலின்பனார் 243, 292, 293 நிலவழகனார்111, 182, 184 நீல ஆறு 6 நீலகண்டர் 182 நீலாம்பாள் 88, 90 நெடுஞ்செழியனார் 144 நெய்வேலி உ.த.க. 71, 119, 297, 302 நேசமணி அம்மையார் 31, 86, 91, 92 பச்சைமுத்து மு. 114,115 பூச்சையப்பன் திடல் - இரங்கல் கூட்டம் 254 பண்டிதத்தேர்வு 27, 28, 77 பண்டிதர்ஆனந்தம் 61 பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் 296 பத்தவற்சலனார் 58 பத்துப்பாட்டு 71, 72 guªjhkdh® m.கி. 120 பரமசிவம் மு.வ. 135 பரிதிமாற்கலைஞர் 2, 55 பரிபூரணம் 17, 18 பழந்தமிழாட்சி 296 பழமொழி பதின்மூவாயிரம் முதலியன 124, 304 பழனிவேலனார் வி. பொ. 86, 92, 108 பறம்புக்குடி மாநாடு 109 - 111 பறம்புமலைப் பாரிவிழா 157 பனிமலை 6 பனைவடலி 16 பாண்டவர் மங்கலம் 17 பாணர்கைவழி 165 பாம்பண்ணக் கவுண்டன் உலா 202 பாம்பன் சுவாமிகள் 229, 230 பாராளுமன்றத் தூதுக்குழு 60, 61 பால்வாசன் 247 பாலசுப்பிரமணியம் கே.எம். 50 பாவாணர்அறக்கட்டளை 267, 268 பாவாணர்ஆராய்ச்சி நூலகம் 270 பாவாணர்உவமைகள் 305 பாவாணர் கடிதங்கள் 304 பாவாணர் தமிழ்க்குடும்பம் 74, 145, 264-267 பாவாணர்தமிழ் மன்றம் ஈப்போ 272 பாவாணர்நாட்காட்டி 272 பவாணர் நாட்குறிப்பு 273 பாவாணர் நூலகம் 254 பாவாணர் படிப்பகம் 271 பாவாணர் பதிப்பகம் 64, 268, 269 உறுப்பினர் பட்டியல் 309, 310 பாவாணர் பாடல்கள் 306 பாவாணர் பெருமை 118, 193 பாவாணர் பொன்மொழிகள் 305 பாவாணர்மடல்கள் 306 பாவாணர்மணிவிழா 119 பாவாணர்வேர்ச்சொற் சுவடி 305 பாவேந்தர் 72, 73, 100-102, 245, 257, 308 பாளையங்கோட்டை 17, 19, 41, 160 பிச்சுமணி ந. 136, 210, 216 பிரம்பூர் கலவலகண்ணன்உ.ப. 29, 78 புத்தனாம்பட்டி 118 புதுதில்லி 67, 68 புறக்கடையான்பட்டி 20, 85 புன்செய்ப்புளியம்பட்டி - இளங்கோமன்றம் 118 மறைமலையடிகள் மன்றம் 118 பூங்காவனம் கு. 113, 126, 143, 177, 178, 186, 211,302 பூபாலர் 28 பெயர் மாற்றத் திருநாள் 97 பெரிய கருப்பன் இராம.157 பெரியசாமித்தூரன் 159 பெரியார் 10, 158, 162, 171, 173, 177, 246 பெருங்கோட்டூர் 17 பெருஞ்சித்திரனார் பாவலரேறு 5, 58, 104 - 106,108, 111, 113, 129, 130, 184, 260 பெருந்துருத்தியார் 196 பெரும்புத்தூர் 20 பெருமாள் ந. வெ. 131 பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் 88 பொன்னம்பலனார் வை. 172 பொன்னுசாமி சு. 125, 135, 144, 206 பொன்னுசாமி பா.வே. 196 மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி 89, 93, 96 மண்ணில் விண் 49, 297 மணவாளதாசன் 85 மணவாளராமாநுசம் 183 மணி சி சு. 111 மணித்தாமரையார் 120 மணிமன்றவாணன், தே. மணி 89, 93, 297 மதிவாணர் இரா. 199, 220, 303 மதுரம் டாக்டர் 43 மதுரை கா.ப.க.கழகம் 228 மதுரைத் த. சங்கம் 26-28, 49, 77 மதுரை மாநாடு 111 மருத நிலப்பாடல்கள் 307 மல்லையா 39, 30 மலையாள அகரமுதலி 141 மறைமலையடிகள் 2, 4, 6, 9, 10, 47, 49, 60, 62, 81, 102, 107, 109, 160, 164 மறைமலையடிகள் அச்சகம் 292, 299 மறைமலையடிகள் நூலகம் 202, 205, 246 மன்னார்குடி 193, 244 மன்னார்குடி பின்லே உ.ப. 31-36, 77 மனோகரனார் பு. 152 மாக்கசுமூலர் 62, மாடசாமி 247 மாணிக்கர் பா. வே. 32, 196 மாணிக்கவாசகர் 39 மாணிக்கனார் வ.சுப. 110, 182, 184, 231 மாசிலாமணி, பண்டிதர் 26 மாதவன் அமைச்சர் 130 மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் 12 மாநகரப் பெருமக்கள் - இரங்கல் கூட்டம் 254 மீட்போலை 177 மீனாட்சி சுந்தரனார் தெ. பொ. 101, 182, 184 முத்தமிழ்ச் செல்வி 232 முத்தியாலுப்பேட்டை உ.ப. 5, 55, 77,78 முத்துசாமி 16 முத்துசாமி அமைச்சர் 154 முத்துசாமி ஆசிரியர் 247 முத்துப்பிள்ளை கோ 225 முத்தையா அரசவயவர் 45, 65, 100, 101, 183 முதற்றாய்மொழி 35, 298 முதன்மொழி 57, 111, 113, 158, 176, 179 முதுடில்லி 67, முருகன் 118, 295 முல்லைவாணன் - முல்லைச்செல்வியர் 119, 292 மூர் அங்காடி 68, 125, 126 மெய்யப்பனார் 308, மொரப்பூர் 94 மொழிஞாயிறு 213 மொழிநூல் மூதறிஞர் 155 மொழியாரய்ச்சி - ஒப்பியன் மொழிநூல் 11, 36 யங்குரை 19-25 வடமொழி வரலாறு 12, 299 வடமொழி வரலாறும் - தலைநாகரிகமும் 10 வண்ணனை மொழி நூலின் வழுவியல் 299 வரதராசனார் மு. 151, 185 வலம்புரி 113, வள்ளியம்மாள் 16 வளனரசு 108, 111 வாகைக்குளம் 16 வாணியம்பாடி - கல்லூரி 34 வாத்தல் நாகராசு 174 விடுதலை 177, வில்லவதரையர் 111 வீரேந்திரப்பட்டீல்174 வேங்கடசாமி மயிலை சீனி. 183, 228 வேங்கடராசு 207 வெங்கடேசன் 243 வேணுகோபால் 115 வேதநாயகம் வி. 247 வேர்ச்சொற் கட்டுரைகள் 14, 300 வேர்ச்சொற் சுவடி 37, 305 வையாபுரியார் 207 வையைநம்பி 111 The Lemurian Language and its Ramifications 11, 12, 145, 146, 301 The Primary classical Language of the world 12, 153, 301. பாவாணர் பொன் மொழிகள் பதிப்புரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் நுண்மாண் நுழைபுலமிக்க ஒரு மொழியியல் அறிஞர். இவர் தம் ஆராய்ச்சிகள் மொழி அளவில் தோன்றி, அம் மொழி பேசும் மக்கள் - அம் மக்கள் வாழும் நிலம் என்றெல்லாம் பரந்து விரிந்து செல்லக் காணலாம். இங்ஙனம் இவ் அறிஞர் ஆராய்கின்ற போது அவர்தம் பட்டறிவில் பட்ட உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படக் காணலாம். ஆனால் அவை போற்றித் தொகுத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொன் மொழிகள் என எண்ணிச் செயல்படுவார் இல்லை. இக் குறையினைப் போக்கும் வகையில் பாவாணர் அவர்களின் மொழியாற்றலில் பேரீடுபாடு கொண்ட கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள், பாவாணர் சிந்தனையினின்று சிதறிய பொன்னனைய கருத்துகள் பலவற்றைத் தொகுத்து பாவாணர் பொன் மொழிகள் என்னுந் தலைப்பில் இந்நூலினை உருவாக்கியுள்ளனர். பட்டறிவுக் கருவூலமாகப் பயன்தரும் இதனைத் தொகுத்தளித்தபுலவர் அவர்கட்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியது. பாவாணர் உவமைகள், பாவாணர் பொன்மொழிகள் ஆகியன பாவாணர் அன்பர்களின் இல்லங்கள் தோறும் இருக்க வேண்டிய பயனுள்ள நூல்களாகும் என்பதில் ஐயமில்லை. ஆராய்ச்சி முன்னுரை அணிகலன் : அணிகளை விரும்பார் எவர்? அணிகலன்களை விரும்பார் எவர்? அணிகலன் என்பது என்ன? அஃது எப்படி அமைந்தது? அழகான மணிக் கல்களைத் தேர்ந்து, ஓர் ஒழுங்கு முறையால் அமைக்கப்படுவதே அணிகலன். அணியும் கலனும் இணைந்து காட்டும் விளக்கம் இது. கல் இல்லாமல்கலன் இல்லை: கலன் என்பதன் முன்னிலை காட்டுவது இந்நிலை! கல் மட்டுமோ கலனாம்? வரம்பிலா விலை வயிரமும், முடிவிலா விலை முத்தும், தாமே அணிகலமாமோ? அவற்றைத் தாங்கி, அமைப்பும் அழகும் ஊட்டும் கொள்கலம் வேண்டுமே! அக் கொள்கலம் எது? பொன்னே அது! பொன் பொன், தானே அணியாம்! மற்றை அணிகலன்களைத் தன்னுள் கொண்டு பொலிவு செய்வதுமாம்! தானே உணவாயும், மற்றை உணவுகளைத் தருவது மாயும் அமைந்த மழையன்னது பொன்னெனலாம்! பொன்தானே பொலம், பொற்பு, பொலிவின் அடிப்படை! பொன் மொழி : உடற்கு அணியாம் பொன்னே இத்தகைத்து எனின், அறிவறிந்த சான்றோர் அருளிப்பாடாய் - அறப்பாடாய் - அறிவுப்பாடாய் - வெளிப்படும் பொன் மொழி யின் சீர்மை எத்தகைத்தாம்? உயிர்க்கு - உணர்வுக்கு - உய்வுக்கு - உந்து கோளாய் வந்தமையும் பொன்மொழியின் பெருமை, என் மொழியின் அளவில் அமையுமோ? பாவாணர் : ஐம்பானாண்டுகள் தனித்தமிழ்த்தவமே தம் பொருளாய் - தம்வாழ்வாய்க் கொண்ட தவப் பெரியார் பாவாணர், தம் படைப்புகளில் வழங்கியுள்ள பொன் மொழிகளை ஓராற்றால் தொகுத்தவை இச் சுவடியாய் அச்சுறலாயிற்று. இஃது அகர முறையில் அகமணம் புறமணம் தலைப்பட்டு வேலைநிறுத்தத் தோடு நிற்கின்றது. எண்ணிக்கை : தொகுத்துக்காட்டப்பட்டுள்ள பொன்மொழிகள் எண்ணிக் கையால் 156. ஆனால், சில தலைப்புகளில் இரண்டாய் மூன்றாய் அமைந்தனவும் உள. ஏழென எழுந்தவும் உள (வழிபாட்டொழுங்கு). பன்னிரண்டெனப் பல்கியவும் உள (மணமக்கட்குப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள்). அளவு : ஒன்றரை வரியில் அமையும் பொன்மொழியும் உண்டு (வரிசையறிதல்). பதினைந்து வரிகள் (பிள்ளைப் பேறில்லாத வரைப் பாராட்டுதல்) பத்தொன்பது வரிகள் (பிள்ளை வரம்பீட்டில் பால் பற்றிய கருத்து) என விரிந்தவும் உண்டு. உவமை : பொன்மொழிகள் உவமை வடிவு தாங்கல் உண்டு. எடுத்த பொருளை உவமையால் விளக்குதல் சிறப்புரிமை வாய்ந்தது. அத் திறத்தில் தேர்ச்சி மிக்கவர் பாவாணர். அவர் தம் உவமைகள் தனிச் சுவடி யாய் வெளிப்பட்டுள்ளது. எனினும், இப் பொன் மொழியிலும் இடம் பெற்றவை சிலவுள. எப்படிப் பேசினால் என்ன, ஏழையர்க்குப் பொலக் கொடை, குலப்பிரிவொழிப்பு, குழந்தை கைப் படைக்கலம், மலடாக்கமும் மதமும், வழியறியா வழிகாட்டி, வானத்து மீனுக்கு வன்றூண்டில் முதலியவற்றைக் காண்க. சொற்பொருள் விளக்கம் : சொல்லுக்குத் தரும் பொருள் விளக்கமே பொன் மொழியாம் சிறப்பை அன்பு, காதல், தமிழப் பார்ப்பார், திருமணம், நாகரிகம், பண்பாடு, மதம் என்பவற்றுக் காண்க. நுண் பொருள் நயம் : பொன்மொழி, நுண் பொருள் நயத்தால் விளங்குவதை இல்லறம் துறவறம், இல்வாழ்க்கை, நாகரிகமும் பண்பாடும் என்பவற்றுக் காண்க. சொன்னடையின் எதிரிடைச் சுவை சொன்னடையின் எதிரிடை, சுவை பயப்பதைக் குழப் பருவம் கிழப்பருவம் (ஆன்பண்ணை,) அகமணம் புறமணம், அல் வாழ்க்கை நல் வாழ்க்கை, காதல் மணமும் சாதல் மணமும், படும் பாடும் கெடும் கேடும் (இந்தியாவின் அருளறம்) தூய தீய (நகரமும் நரகமும்) முதலியவற்றால் அறியலாம். அடுக்குத் தொடுப்பு : அடுக்குத் தொடுப்பின் அருமையையும் அழகையும் இருகட்சியரசு, இல்லறமே நல்லறம், ஒப்புயர்வற்ற தமிழர், கைந்நூலாடை, நோய்க்கேற்ற மருந்து, தொழிற் சாலையிடம் என்பவற்றால் அறிக. தனியொரு பார்வை : பாவாணர் தம் தனியொரு பார்வையைப் பிள்ளைப் பேறில்லாரைப் பாராட்டல் (பக். 30.35) கட்டாய மலடாக்கம், துறவியரை ஊக்குதல் என்பவற்றில் காணலாம். கட்சியிணைப்பு, எழுத்துத் திருத்தம், மாணவரும் கட்சியமைப்பும், பிறப்பியம் பாராமை, திருமணக் காலம் பார்த்தல், வேலை நிறுத்தம், பன்றிவளர்ப்பு, மதுவிலக்கு என்பவும் இத்தகையவே. காலத்திற் கேற்ற நடைமுறைத் திட்டம் : இக்காலச் சிறந்த துறவு, இல்லறத்தின் பாற்படுவன, உறவினர் மணவீட்டில் தங்கல், கொல்லரைப் பொறி வினையிற் பயிற்றுதல், தீயோரை நல்வழிப் படுத்தல், நிலக் கொடை, பொருளியல்நூலுக்கு மாறான குற்றம், மொய் செய்தல், வீடு கட்டும் திட்டம் என்னும் தலைப்பில் உள்ளன, காலத்திற் கேற்ற நடைமுறைத் திட்டமாம். குடும்பக் கட்டுப்பாடு : இரு பிள்ளை வரம்பும் கட்டாய மலடாக்கமும் குடும்பக் கட்டுப்பாட்டு விளக்கம், துறவியரை ஊக்குதல், மலடாக்க அச்சம், மலடாக்கப் பொதுமை, மலடாக்கம், மலடாக்கமும், மதமும் நோய்க்கேற்ற மருந்து என்பனவற்றால் குடும்பக் கட்டுப்பாட்டில் பாவாணர் கொண்டிருந்த அளவிலா அழுத்தம் புலப்படும். பிறப் பொருமை : குலப்பிரிவு ஒழிப்பு, குலவுயர்வு தாழ்வு, குலவெறி கொள்ளாமை, குலவேற்றுமையால் உயர்திணைப் பண்பு குன்றல், குலவொழிப்பு அரசின் கடன், தாழ்த்தப் பட்ட மாணவர் விடுதி, தோட்டியர்பணி, பள்ளிப் பதிவேடு என்பவை குலவேற்றுமை ஒழித்துப் பிறப்பொருமை நிலைநாட்டப் பாவாணர் கூறும் திட்டங்கள். அரசியல் : பாவாணர் அரசியல் தேர்ச்சியை, ஆட்சி ஒப்புமை, இரு கட்சியரசு, இருமொழிக் கொள்கை, இலங்கைத் தூதர், உலகுக்கு ஓராட்சி, உறுமதி மாணவரைப் போற்றுதல், குடியிருப்புரிமை, குழந்தை கைப் படைக்கலம், கூட்டாட்சி, கூட்டுடைமை, கைத் தொழிற் பயிற்சி, கைந்நூலாடை, சம்பளத்திட்டம், சூதாட்டொழிப்பு, தந்தையும் அரசும், தமிழகக் கட்சிகளெல்லாம் தமிழ்க் கட்சியாதல், திராவிட முக்கட்சியும் ஒன்றாதல், தொழிலாளர் ஒன்றியம், நாட்டுப் பணி அமர்த்தம், நினைவுச் சின்னம், பரிசுச்சீட்டு நிறுத்தம், புதுப்புனைவாளரைப் போற்றுதல், மது விலக்கு, மரமடர்ந்த காடு, மாணவரும் அரசியற்கட்சியும், மாணவர் வேலை நிறுத்தம், வணிக இடைஞன் வேண்டா, வரிசையறிதல், வேலை நிறுத்தம் என்னும் பெருகிய தலைப்புச் செய்திகளால் அறியலாம். தமிழ் - தமிழினம் : உயர்ந்தவனும் தாழ்ந்தவனும், எழுத்துத் திருத்தம், ஒப்புயர் வற்ற தமிழர், சமற்கிருதச் சொற்கள், தமிழ் நாட்டுப் பிராமணர், தமிழ்வயிற்றை நிரப்புமா, தமிழ் விடுதலை, தமிழர்க்கு இன்மைகள் பல, தமிழரசின் தலையாய கடமை, தமிழன் பிறந்தகம், தமிழில் வழிபாடு, தமிழின் சிறப்பு, தாய்மொழியில் திருமணக் கரணம் செய்தல், திருக்குறள், தூய தமிழன் முயற்சி, தேவ தேவ மொழி, பயிற்று மொழி, பொத்தகக் குழு, மொழிபெயர்ப்பும் புதுச் சொற் புனைவும், வாழ் நாள் நீடித்தல் என்பன தமிழ் தமிழினம் பற்றிய பாவாணர் ஆய்வுக் குறிப்புகளாகும். அருள் : ஆன் பண்ணை, இந்தியாவின் அருளறம், உழைப்பாளி, ஏழையர்க்குப் பொலக் கொடை, சூதாட்டொழிப்பு என்பவை அருள் வழிப்பட்ட பொருள்கள். இறை வழிபாடு : இறை வழிபாட்டிலும், இறைமை உணர்விலும் ஈடுபாடு மிக்கவர் பாவாணர். இறை வழிபாடு, இறைவன் ஏற்பாட்டைப் பழிப்பவர், இறைவனுக்கு ஏற்ற வழிபாடு, உண்மையான பகுத்தறிவு, கடவுள் உண்மை, கடவுள் உண்மை இன்மை, கருத்து வேறு பாட்டை மதித்தல், தென் மதம், வழிபாட்டொழுங்கு வழியறியா வழிபாடு, வீண் செயல் என்பவை பாவாணர் இறை வழிபாட்டில் கொண்டிருந்த பற்றுமையை வெளிப்படுத்தும். சில சிறப்புக்கூறுகள் : ஒருவன் உழைப்பாளியாய் உதவும் நிலையைப் பற்றியும், உறுமதி மாணவனை ஊக்கி உயர் சம்பளம் அளித்தலைப் பற்றியும், பொற் கொல்லர்க்கு நகை வரம் பீட்டை உயர்த்துதல் பற்றியும், குறிப்பிடத் தக்க பணிகளுக்கு நாட்டு மக்களையே அமர்த்துதல் பற்றியும், மதுவிலக்கை விலக்குதல் மருந்து போல் கொள்ளத் தக்கது பற்றியும், மரமடர்ந்த காடுகளை முப்பகுப்புச் செய்வது பற்றியும், யாழ்ப்பாணம் தனி நாடாதல் பற்றியும், வணிக இடைஞன் வேண்டா என்பது பற்றியும், வள்ளுவர் கூட்டுடைமை பற்றியும், வாழ்நாள் நீடித்தல் வழி பற்றியும் பாவாணர் கூறும் கருத்துகள் சிறப்பாக ஆய்ந்து கொள்ளத் தக்கன. நகைச் சுவை : ஒப்புயர்வற்ற தமிழர் எனத் தமிழரைக் குறிப்பது அங்கத அருமை உடையது. நகரமும் நரகமும் பற்றிய நவிற்சி நயத்தகு நகைச் சுவை அமைந்தது. பாவாணர் மொழிகளாம் பொன் வெளிப்பட உதவியது ஒரு முத்து; அம் முத்து கழக ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்பார் இளங்கோவடிகளார்! தமிழ்ச்செல்வம் தமிழ்த் தொண்டன். பாவாணர் நூலகம் இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 18-4-86. குறுக்க விளக்கம் செ.செ. - செந்தமிழ்ச் செல்வி த.இ.வ. - தமிழ் இலக்கிய வரலாறு த.தி. - தமிழர் திருமணம் தமிழர்.வ. - தமிழர் வரலாறு த.வ. - தமிழ் வரலாறு திருக்.மர - திருக்குறள் மரபுரை. தெ.மொ. - தென் மொழி நூ.முக. - நூலாசிரியர் முகவுரை. ப.த.நா.ப. - பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும். ம.வி. மண்ணில் விண் முன். - முன்னுரை. பாவாணர் பொன்மொழிகள் அகமணம் புறமணம் அகமணமாவது, ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல். புறமணமாவது, ஒரு குலப்பிரிவார் தம் பிரிவிற்குள் மணவாது வேறொரு பிரிவில் மணத்தல். த.தி.12. அஞ்சல் அட்டை உறை தமிழ்நாட்டில் வழங்கும் அஞ்சற் படிவங்களும், அட்டை உறை முத்திரைகளும் தமிழாங்கிலச் சொற்களையே கொண்டி ருத்தல் வேண்டும். த.இ.வ.310. அல் வாழ்க்கை ஒருவன் துறவு மேற்கொண்டும் அதற்குரிய அறம் பூணானாயின் அது ஈரறத்தொடும் கூடாது தீவினை மிகுக்கும் அல்வாழ்க்கையாம். த.தி.முன்.3. அன்பு அன்பென்பது ஏசுவும் புத்தரும் போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். அது அறமாகவும் அறவினை கட்கெல்லாம் காரணமாகவும் கருதப்படும். த.தி.6. ஆங்கிலந் தந்த விடுதலை இந்தியர் ஆங்கிலத்தைக் கற்கவும் கேட்கவும் கூடா தென்றும், கற்பினும் கேட்பினும் நாவையறுக்கவும், காய்ச்சிய ஈயத்தைக் காதில் வார்க்கவும் வேண்டுமென்றும் ஆங்கிலர் கோட்பாடு கொண்டிருந்திருப்பின் காந்தியடிகளும் நேருவும் தோன்றியிரார். இந்தியா விடுதலை பெற்றிருக்காது. ம.வி. 163. ஆட்சி ஒப்புமை ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத் தனத்திற்கு ஏதுவாகாது. ம.வி.35. ஆய்வுத்துறை அகவை வரம்பு ஒருவர் அறுபது அகவைவரை பணியாற்றலாம். ஆற்றல் குறையின் முன்னும் அது நிறையின் பின்னும் ஓய்வு பெறலாம். ஆராய்ச்சி ஆசிரியப் பணி முதலியவற்றிற்குப் பட்டறிவு மிகமிக ஆற்றல் பெருகுவதனால், அப் பணியாளர்க்குப் பகரமாகப் பணியாற்றப் பிறரில்லா விடத்து இயன்றவரை நீட்டிப்புக் கொடுக்கலாம். ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. ம.வி. 109. ஆன்பண்ணை உலக முழுதும் தொன்று தொட்டுக் குடிப்பாகவும் குழம்பாகவும் பயன்பட்டு வருவதும் குழப்பருவம் முதற்கிழப் பருவம் வரை வாழ்நாள் முழுதும் ஊட்டந் தருவதும், ஆனைந்து என்னும் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் ஆகிய ஐவகையில் ஆரமுதாவதுமான ஆவின்பால், எல்லா வகுப்பார்க்கும் வேண்டியிருப்பதானாலும் குழவிக்குத் தாய்ப்பால் போல் நோயாளிக்கு முற்றுணவாக உதவுவத னாலும் நாடு முழுதும் ஆனபண்ணைகள் நிறுவுதல் வேண்டும். ம.வி. 76. இக்காலச் சிறந்ததுறவு இக்காலத்தில், துறவு பூண்டோர் காட்டிற்குச் செல்லாது நாட்டிலும் நகரத்திலும் தங்கி, தம்மாலியன்ற வரை பொது மக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. த.தி.முன்.3. இந்தியாவின் அருளறம் இந்தியா மதங்கட்கும் அருளறத்திற்கும் உலகப் புகழ் பெற்றது. பலவிலங்குகள் அல்லது அவற்றின் வடிவங்கள் தெய்வமாக இந்தியரால் வணங்கப்படுகின்றன. ஆவின் நல்வாழ் வொன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டமு முள்ளது. ஆயினும் சில விலங்குகள் படும்பாடும் கெடுங்கேடும் நீங்க வழியில்லை.... இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். ம.வி. 85. இம்மைப் பேரின்பம் ஒருவர்க்கு ஊண் இசை காட்சி முதலிய பிறவற்றாலும் இன்பமுண்டாகுமேனும் பேரளவுபற்றியும் ஐம்புலனும் தழுவல் பற்றியும் பெண்ணின்பமே இம்மையிற் பேரின்பமாகக் கொள்ளப் பெற்றது. த. தி. முன்.1. இருகட்சியரசு ஆனைக்கும் அடிசறுக்குமாதலாலும், தன்குற்றந் தனக்குத் தோன்றாதாதலாலும் முற்றுமுணர்ந்தவர் மக்களினத்திலில்லை யாதலாலும், கட்டுப்பாடில்லாவிடின் காவலனுங் காவானா தலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற்கேற்றதாம். ம.வி. 36. இருபிள்ளை வரம்பும் கட்டாய மலடாக்கமும் பிள்ளை பெறுபவர் இருபிள்ளைக்கு மேற் பெறுதல் கூடாது. இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகட்குப் பங்கீட்டுரி மையும் தகாது. மிகைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துண்டலே பெற்றோரியல்பாகுமாதலால், இருபிள்ளையென்னும் வரம்பீடு மட்டும் போதாது. இரண்டாம் பிள்ளைக்குப்பின் தாய்க்குக் கட்டாய மலடாக்கமும் செய்தல் வேண்டும். அல்லாக்கால் வரம்பு மீறுபவரை அடிக்கடி கவனிக்கத் தனி அலுவலர் வேண்டியிருக்கும். அது அரசிற்கு வீண் செலவாகும். ம.வி.66. இருமொழிக் கொள்கை ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுத் தாய்மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழியே கற்பிக்கப்படலும் கல்வி வாயிலா யிருத்தலும் வேண்டும். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்.... அல்லாக்கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். ம.வி. 88. இல்லறத்தின் பாற்படுவன ஒருவன் மணஞ் செய்யாது இறுதிவரை மாணியாய் (பிரமச்சாரியாய்) இருப்பினும், அவன் உலகப் பற்றுள்ள வனாயின் அவன் வாழ்க்கை இல்லறத்தின் பாற்படும். ஒருவன் நாட்டினின்று நீங்கிக் காட்டில் வாழினும், மனையாளொடு கூடி வாழின் அது இல்லறத்தின் பாற்படும். த.தி.முன்.3. இல்லறம் துறவறம் ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும் இல்லறத்தில் எளியதாகவும் செயல்பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு: களவு செய்யாமை இல்லறம்; களவு செய்யக் கருதாமை துறவறம். ம.வி.38 இல்லறம் துறவறம் : மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இரு வகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். அது மணவா நிலையிலும் தொடங்கலாம். மணந்த நிலையிலும் தொடங்கலாம். த.தி.முன்.3. இல்லறமே நல்லறம் இறைவன் ஏற்பாட்டின்படி மக்களுலகம் இடையறாது தொடர்ந்து வருவதற்கு இல்லறமே காரணமாதலாலும், துறவி யர்க்கும் அவர் முற்றத் துறக்கும் வரை இன்றியமையாத் துணையா யிருப்பது இல்லறத்தாரே யாதலாலும், இல்லறத்தாலும் வீடுபேறு கிட்டுமாதலாலும் மாயமால நடிப்பிற் கிடம் துறவறத் தினும் இல்லறத்திற் குறைதலாலும் இல்லறமே நல்லறமாம். த.தி. முன்.3 இல்வாழ்க்கை ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடி வாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது; வெறுமனான இல்வாழ்க்கையாம். த.தி.முன்.3 இலங்கைத் தூதர் இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக் காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் (Head of the Indian Embassy) இனப்பற்றுள்ள தமிழராகவே இருத்தல் வேண்டும். ம.வி.202. இறைச்சிகளும் மருந்தும் தமிழ மருத்துவத்தில் சில இறைச்சி வகைகளும் கொடிய நோய்களுக்குக் கைகண்ட மருந்தாகக்குறிக்கப் பட்டுள்ளன. எ-டு: எலும்புருக்கும் இருமலுக்குப் பச்சைப்புறா. மூல நோய்க்குப் பன்றி வார். அம்மை நோய்க்கும் பன்றியிறைச்சி தடுப்பு மருந்தாம். ம.வி.76 இறைவழிபாடு ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர் உண்ணு முன்னும், ஓரிடத்திற்குப் புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்கு முன்னும், ஒரு நன்மை கிட்டிய போதும், தீங்கு நேர்ந்தபோதும், உறங்கப் புகு முன்னும் இறைவனை ஒரு நிமையம் எண்ணினாலும் இறைவழிபாடு செய்ததாகும். இங்ஙனம் மனநிலையிலேயே இருக்கக்கூடிய மதத்தை எவரும் அழிக்க முடியாது. ம.வி.46 இறைவன் ஏற்பாட்டைப் பழிப்பவர் சில துறவியர் வரையிறந்து பெண்ணை வெறுத்துப் பெண்ணின்பத்தைப் பழித்திருப்பர். அது துறவியர்க்கே கூறிய தென்று இல்லறத்தார் பொருட்படுத்தாது விட்டுவிடல் வேண்டும். விலைமகளுறவையும் நெறி திறம்பிய காம நுகர்ச்சியையும் பழிக்கலாமேயன்றி, பெண்ணின்பந் தன்னையே பழித்தல் கூடாது. அங்ஙனம் பழிப்பவர், இறைவன் ஏற்பாட்டையும் தம் பெற்றோர் வாழ்க்கையையும் பழிப்பவரே ஆவர். த.தி.2. இறைவனுக்கு ஏற்ற வழிபாடு இறைவனுக்கு ஏற்றது எங்கும் என்றும் உருவமின்றி நேரடியாய்ச் செய்யும் தாய்மொழி வழிபாடே. த.ம.193. உண்மையான பகுத்தறிவு (மத நம்பிக்கையாளரும் நம்பிக்கையில்லாரும்) தத்தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்ட முடியாதிருப்பதால், கருத்துவேறுபாட்டிற்கிடந்த ஒரு சாராரை ஒரு சாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். த.ம.190. உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் இவ்வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. தமிழர் வ.முக.1. உலகுக்கு ஓராட்சி பன்னாட்டுக் கழகத்திற் (League of nations) போன்ற ஒன்றிய நாட்டினங்களிலும் (UN) பலகுறைகளும் பிரிவினையும் இருத்தலாலும் போரையும் மக்கட் பெருக்கத்தையும் தடுக்கும் வழியின்மையாலும் உலக முழுதும் ஒரே ஆட்சியேற்படல் இன்றியமையாததாம். ம.வி.216. உறவினர் மணவீட்டில் தங்குதல் உறவினர் அயலூரில் இருந்து ஒரு மண வீட்டிற்கு வந்திருப்பின், கரணம் முடிந்தபின் எத்துணை விரைந்து திரும்ப முடியுமோ அத்துணை விரைந்து திரும்பிவிட வேண்டும்; என்று செல்வாரோ - என்று மணவீட்டார் ஏங்கிக் கலங்குமாறு பன்னாள் தங்கிவிடுதல் கூடாது. த.தி.61. உறவினர், மொய்வைத்தல் உறவினர் மொய் வைக்கும் போது, மணவீட்டார் தமக்கு முன்பு செய்த அளவே செய்யவேண்டும் என்று கருத வேண்டுவ தில்லை. தம் செல்வநிலைக் கேற்பக் கூட்டியோ குறைத்தோ செய்யலாம்; அல்லாக்கால் அது. வட்டியில்லாக் கடன்போலிருந்து தன் சிறப்பையிழக்கும். மணவீட்டாரும் உறவினர் நிலையறிந்து பெருந்தன்மையாய் இருந்து கொள்ள வேண்டும். த.தி.61. உழைப்பாளி உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம் இல்லாமையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அது அவன் தவறன்று. ஆதலால், அவனை இகழக் கூடாது. அவன் தன் உடல் வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவுவதைப் பாராட்ட வேண்டும். ம.வி.42. உறுமதி மாணவரைப் போற்றல் ஏதேனும் ஒரு துறையில் ஒரு மாணவன் உறுமதி (Genius) என்று காணப்படின், அரசு அவனைக் குல மத கட்சிச் சார்பு நோக்காது ஊக்குதலும் அவன் அயல்நாட்டிற்குச் செல்லாவாறு அவனுக்கு உயர்ந்த சம்பளம் அல்லது மானியம் அளித்தலும் வேண்டும். ம.வி.92. எப்படிப் பேசினால் என்ன? மொழியின் பயன் கருத்தறிவித்தல்தானே, அதை எப்படிப் பேசினால் என் என்று வினவுவது, உண்ணுதலின் பயன் பசியைப் போக்குதல் தானே! எப்படி யுண்டாலென்ன? (சமைக்கவும்) பல் துலக்கவும் குளிக்கவும் துப்புரவான இடத்தில் அமரவும் இலையில் அகப்பையால் வெவ்வேறாகப் படைக்கவும் ஒவ் வொன்றாக உண்ணவும் வேண்டுமோ? சமைத்த கலத்திற்குள்கையை விட்டே எடுத்துண்ணலாமே! என்று வினவுவது போலிருக் கின்றது. பலவினைகள் இருதிணைக்கும் பொது. ஆயின் செய்யும் முறை வெவ்வேறு. உயர்திணைமாந்தன் எவ்வினையையும் நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் செய்தல் வேண்டும். ம.வி.54. எழுத்துத் திருத்தம் ஈ என்னும் வடிவை இ என்று குறிப்பதும், ஔகார வடிவின் உறுப்பான ள என்னும் குறியைச் சிறிதாக எழுதுவதும் ஆகிய இரண்டே தமிழுக்கு வேண்டிய எழுத்துத் திருத்தமாம். குகர நெடிலை மேற்சுழிக்கலாம். த.இ.வ.318. ஏட்டுச் சுரைக்காய் பொதுமக்கள் நூற்றுமேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அவரால் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பள்ளியிறுதி (S.S.L.C.)asntD« படித்திருத்தல் வேண்டும். அமைச்சரா யிருப்போர் பட்டந் தாங்கியராகவும் தத்தம் வாரியத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், குடியரசென்பது ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். ம.வி.35. ஏழையர்க்குப் பொலக்கொடை தங்கக் கட்டுப்பாட்டினால் நடுவணரசு தொகுத்துள்ள குன்று போன்ற பொற்குவையினின்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வோர் ஏழைப் பெண்ணிற்கும் காதணியும் கழுத் தணியுமாக மும்மூன்று சேரை (Pound) நல்கின் மிக நன்றாம். ஏழைப்பெண்டிர்க்குப் பொன்னளிப்பதைச்சிலர் நெறி திறம்பியதாகக் கருதலாம். நிலம் மிக்கவரிடமிருந்து பெற்ற மிகை நிலத்தை நிலமில்லாதவர்க்குப் பகிர்ந்து கொடுப்பது போன்றதே பொலம் (பொன்) மிக்கவரிடமிருந்து பெற்ற மிகைப் பொலத்தைப் பொலமில்லாத பெண்டிர்க்குப் பகிர்ந்து கொடுப்பதும். ம.வி.79. ஒப்புயர்வற்ற தமிழர் இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழ வைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப் பதிலும், தம்மருமைத் தனிமொழியைப்புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்று வதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். த.வ.மு.1. கடவுள் உண்மை உலகில் எத்துணை நாகரிகப் பண்பாட்டு நாடாயினும் இரவில் நகர விளக்கு அரைமணி நேரம் எரியாது போயினும், ஐந்து நிமையம் அரசன் அதிகாரம் இல்லாது போயினும் காட்டு விலங்கினும் கேடாக நாட்டு மக்கள் நடந்துகொள்கின்றனர். அங்ஙனமிருக்க, உயிரற்ற பன்னிரு கோள்களும் பற்பல நாண் மீன்களும் இடைவிடாது பெருவெளியில் ஒழுங்காய் இயங்கி வருவது இயக்குவான் ஒருவனின்றி இயலுமா? கடவுளுண் மையைக் காட்ட இதுபோல் வேறு சான்றுகள் எத்துணையோ இருப்பினும் இஃதொன்றே போதுமாம். த.இ.வ. 318. கடவுள் உண்மை இன்மை கடவுள் உண்மையை எல்லாரும் நம்புமாறு நாட்டற்குப் போதிய சான்றுகள் இல்லையெனின், அதை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லையென்பதை உணர்தல் வேண்டும். ம.வி.47. கருத்து வேறுபாட்டை மதித்தல் காணப்பட்ட பொருள்களைப் பற்றியே கருத்து வேறு பாடிருக்கும் போது காணப்படாத கடவுளையும் மறுமையையும் பற்றிக் கருத்துவேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால் கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரை ஒருவர் குறை கூறாதும் வெறுக்காதும் உயர் திணைக்குரிய உடன்பிறப்பன்பு பூண்டு ஒழுகல் வேண்டும். த.ம.192 காதல் காதல் என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாக் கழிபெரு நேயமாய் இருவரிடை நிகழ்வது. அது கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் போலும் நண்பரிடத்தும், பெற்றோரும் பிள்ளையும் போலும் உறவினரிடத்தும், பூதப்பாண்டியனும் அவன் மனைவியும் போலும் கணவன் மனைவியரிடத்தும் அமைவது. அது அரிய பிறவிக்குணம். த.தி.முன்.7. காதல் மணம் பெற்றோரும் பிறரும் முடித்துவைக்கும் திருமணத்திலும் மணமக்கள் இருவர்க்கும் காதலுண்டாகலாமெனினும் காதல் மணமென்று சிறப்பித்துச் சொல்லப்பெறுவது ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் தாமாகவாழ்க்கை ஒப்பந்தஞ் செய்துகொள்வதே. த.தி.8. காதல் மணமும் சாதல் மணமும் மண்ணுலகில் விண்ணுலக இன்பந் துய்க்க த் தக்க காதல் மணங்கள் (பிறவிக்குலத் தீமையால்) தடைப்பட்டுச் சாதல் மணங்களாக முடிகின்றன. ம.வி.116. காமம் காமம் என்பது கணவன் மனைவியரிடத்தேயே அல்லது ஆண் பெண் என்னும் இருபாலிடையேயே, நிகழக் கூடிய சிறப்புவகை நேயம். கணவன் மனைவியர் இல்லற இன்பந் துய்த்தற்குக் காரணமான நேயம் என்னும் பொருளிலேயே காமம் என்னுஞ் சொல்லை ஆண்டு, இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் எனக் குறித்தனர் வள்ளுவர். த.தி.முன்.7. குடியிருப்புரிமை ஒரு நாட்டிற் பன்னீராண்டு தொடர்ந்து குடியிருந்தவர்க் கெல்லாம் குடியுரிமையுரியதாகும். அவரை நாட்டை விட்டு அகற்றுவது நாகரிக அரசிற்குரியதன்று. தமிழ் நாட்டிற்குக் கோன்மை இருந்திருப்பின் அநாகரிக அரசுகளுடன் எதிர்த்துப் போராடித் தமிழரின் உரிமையைக் காத்திருக்கும். ம.வி.203. குடும்பக் கட்டுப்பாட்டு விளக்கம் செய்தித்தாள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, சொற்பொழிவு, துண்டு வெளியீடு முதலிய அறிவிப்பு வாயில் களால் மக்கட் பெருக்கத் தீங்கையும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நன்மையையும் பொது மக்கட்கு விளக்கிக் கூறல்வேண்டும். சுவர்களிலும் பலகைகளிலும் சில சொலவங் களை (Slogans) மட்டும் எழுதிவைத்தாற் போதாது. நம் நாட்டில் நூற்றுமேனி எழுபதின்மர் இன்றும் தற்குறிகளாய் (கீறற் புள்ளி களாய்) இருப்பதால் அவர்க்கு அச் சொலவங்கள் பயன்படா. ம.வி.68. குலப்பிரிவு ஒழிப்பு ஓர் உடம்பு நலமாயிருத்தல் வேண்டின், அதன் உறுப்புகள் எல்லாம் நலமாயும் ஒன்றுபட்டும் இருத்தல் வேண்டுவதுபோல; ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின், அதன் மக்கள் வகுப்பா ரெல்லாம் முன்னேறியும் ஒன்று பட்டும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய முன்னேற்றத்திற்குக் குலப் பிரிவினை பெருந்தடையாய் இருத்தலின் அரசியலார் அதை அறவே ஒழித்தற்கான செயல்களை உடனடியாய் மேற்கொள்ள வேண்டும். த.தி.62. குலவுயர்வு தாழ்வு பண்டைத் தமிழகத்தில் (பிறவிக் குலப் பிரிவினை) மூடவழக்கம் இருந்ததேயில்லை. எல்லா வகுப்பாரும் பிற நாட்டார்போல் தம் பெயரை இணைப்பு வாலின்றி வெறுமை யாகவே வழங்கி வந்தனர். அறிவும் நாகரிகமும் துப்புரவும் ஒழுக்கமும் உண்மையின்மைகளே உயர்வு தாழ்வைக் குறித்து வந்தன. ஆரியப் பிறவிக்குல வுயர்வு தாழ்வைத் திருவள்ளுவர் தெளிவாகக் கண்டித்தார். த.இ.வ. 319. குலவெறி கொள்ளாமை தமிழரைப் பிரித்துக் கெடுத்தற்கென்றே பிறப்பொடு தொடர்புற்ற குலப்பிரிவினை அயலாராற் புகுத்தப்பட்ட தென்றும், அது நூல் உத்தி பட்டறிவுகட்கு முற்றும் முரணான தென்றும், உலக முழுமையினும் இந் நாவலந் தேயத்திலேயே அது உள்ள தென்றும், திருவள்ளுவர் திருமூலர் முதலிய பெரியோ ரெல்லா ராலும் கண்டிக்கப்பட்டதென்றும் உணராத தமிழர் இன்னும் குலவுணர்ச்சியிலேயே திளைத்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு குலத்தாரும் தமக்குள்ளேயே மணந்து தமிழினத்தில் பேரறிவுச் சுடர்கள் பெருவாரியாய்ப் பிறவாதபடி தடுத்து விடுகின்றனர். அதோடு தமிழர்க்குள் ஒற்றுமையும் இல்லாது போகின்றது. த.தி.50. குலவேற்றுமையால் உயர்திணைப்பண்பு குன்றல் உலகில் வேறெங்கு மில்லாத ஒரு குமுகாயக்கேடு Socil evil இங்கு இந்தியாவில் உள்ளது. வேறு எந்நாட்டிலும் எவர் பெயரைக் கேட்பினும் அவர் பெயர் மட்டும் தோன்றும்; இங்கோ ஒரு பெயருடன் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், பிள்ளை, முதலியார், செட்டியார், கவுண்டர், தேவர், நாட்டார், கோனார், மூப்பனார், நாடார், படையாட்சி முதலியவற்றுள் ஒன்றாக ஒரு வாலும் நீளும். இதனால் இந்தியரின் உயர்திணைப் பண்பு குன்றி, இக்கால அறிவியல்களை யெல்லாம் மேனாட்டாரே தோன்றி வளர்க்க வேண்டியதாயிற்று. ம.வி.112. குலவொழிப்புக்கு அரசின் கடன் 1. கலப்பு மணஞ் செய்வார்க்கு மணச் செலவு முழுவதையு மேனும் அதில் ஒரு பகுதியையேனும் ஏற்றுக் கொள்ளுதலும். 2. அவர்க்கு மண முடிந்தவுடன் அவர் தகுதிக்கேற்ப அரசியல் அலுவலளித்தலும் 3. அவர் பெறும் மக்கட்குப் படிப்புதவி செய்தலுமாகும் த.தி.62. குழந்தை கைப் படைக்கலம் சட்டசபைக்குத் தகுந்தவரைத் தெரிந்தெடுக்கும் ஆய்வும் அறிவும் இல்லாத கல்லா மக்களின் நேரியுரிமை, குருடன்கைத் தீப்பந்தமும் குழந்தைகைப் படைக்கலமும்போல் உடையார்க்கும் பிறர்க்கும் தீங்கே விளைக்கும். ம.வி.35-6. கூட்டாட்சி அரசியற் கொள்கை ஒப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒரு வட்டாட்சி அமைக்கலாம். த.வ.முன்.29. கூட்டுடைமை எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும் வகுப்பு வேற்றுமையைத் தேற்றுவிக்காததும் உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும் இறைவழி பாட்டை மறுக்காததும் தனியுடைமையை விலக்காததும் பகுத்தறிவிற்கு முற்றும் ஒத்ததும் உயரியதுமான கூட்டுடைமை யாட்சி அல்லது வாழ்க்கை கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ம.வி.நூ.மு.க. ச. கைத்தொழிற் பயிற்சி பள்ளியிறுதித் தேர்வில் தவறியவர்க்கும் குறைந்த மதிப்பெண் வாங்கியவர்க்கும் வெவ்வேறு கைத்தொழிற் பயிற்சியளித்தல் வேண்டும். நாட்டிற் பிறந்த எல்லாரும் வாழ வேண்டுமாதலால் தாமாக ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்ளாதவர்க் கெல்லாம் அரசே அவரவர் திறமைக்குத் தக்கவாறு பயிற்சியளித்துப் பணியிலும் அமர்த்த வேண்டும். ம.வி.89. கைந்நூலாடை கதர் என்னும் கைந்நூலாடை ஆங்கிலேயர் காலத் தேசியப் போராட்டத்தில் ஆலை நெசவிற்கும் ஆங்கில ராட்சிக்கும் எதிர்ப்பாகக் காந்தியடிகள் கையாண்ட அரசியல் வலக்காரக் கருவியாதலால், இக்காலத்திற்கு ஏற்காது. காலத்தின் அருமையை உணரச்செய்யாததும், உலகத்தோடொட்ட ஒழுகலை மேற் கொள்ளாததும் அகக் கரண வளர்ச்சியைத் தடுப்பதும் பயன்பாட்டிற் குறைபாடுள்ளதுமான அவ்வாடை நெசவை அரசு ஊக்குதல் கூடாது. ம.வி.77. கொல்லரைப் பொறிவினையிற் பயிற்றுதல் ஏமப் பூட்டு, துமிக்கி (Gun) குண்டுக் குழாய் (Cannon) சுழலி (Revolver) முதலிய கருவிகளும் படைக்கலங்களும் செய்யக் கூடிய கொல்லர் இன்றும் நம்மிடையுள்ளனர். அவரைப் பொறிவினையிற் பயிற்றினால் நாளடைவில் மேலையர் போலப் புது நாகரிகக் கருவிகளை யெல்லாம் செய்யக்கூடிய ஆற்றலராவார். ம.வி.78. சம்பளத் திட்டம் சம்பளத் திட்ட வகுப்பு கீழிருந்து மேற்செல்ல வேண்டும். மனைவியும் இருபிள்ளைகளுமுள்ள ஓர் ஏவலன் (Peon) குடும்பத்திற்கு இக்காலத்தில் 300 உருபா இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு காவலன் (Constable) நிலைமையும் ஏவலன் நிலைமையை ஒத்ததே. அதற்கு மேற்பட்ட பதவிகட்கெல்லாம் ஐம்பதும் நூறும் இருநூறும் ஐந்நூறும் ஆயிரமுமாக ஐயாயிரம் வரை கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குமேல் எவர்க்கும் சம்பளமிருத்தல் கூடாது. ம.வி.111 சமற்கிருதச் சொற்கள் சமற்கிருதச் சொற்களை நடுநிலையாய் ஆய்ந்து பார்ப்பின் அவற்றுள் ஐந்திலொரு பங்கு மேலையாரியமும், ஐந்திலொரு பங்கு வடவிந்திய முந்துமொழியாகிய முது திரவிடமும், ஐந்திலிரு பங்கு தமிழும், ஐந்திலொரு பங்கு புத்தாக்கமும் ஆகும் என்பது தெளிவாய்த் தெரியும். ம.வி.153. சூதாட்டொழிப்பு கிண்டிக் குதிரைப் பந்தயமும் அரசுப் பரிசுச்சீட்டும் சூதாட்டே. அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா; வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினை யாகா. குதிரைப் பந்தயத்தில் ஒட்டம் ஒட்டிக் கெட்ட குடும்பங்கள் எத்தனையோ பல. ம.வி.183. தகுதிபற்றிக் கல்வியும் வேலையும் மாணவர் சேர்ப்பிலும் வேலை யமர்த்தத்திலும் தாழ்த்தப் பட்டவர்க்கு இன்னும் பத்தாண்டு கூட்டக் கூடிய சிறப்புச் சலுகை தவிர ஏனை நிலைமைகளிலெல்லாம் தகுதி (Merit) ஒன்றையே கவனித்தல் வேண்டும்). தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. ம.வி.35 தமிழ்நட்டுப் பிராமணர் தமிழ்நாட்டுப் பிராமணர், இன்று தமிழ்நாட்டாரும் தமிழ் பேசுவோருமாய் இருக்கின்றனரேயன்றித் தமிழராயில்லை. பரிதிமாற் கலைஞன் போல் தமிழை ஒரே உண்மையான தாய் மொழியாகக் கொள்ளின் முழுவுரிமைத் தமிழராவர். அதுவரை அயலார் போன்றே கருதப்படுவர். த.இ.வ,301 தமிழ் வயிற்றை நிரப்புமா? வயிறு கொதிக்கும்போது தமிழ் எதற்கு? தமிழ் வந்து வயிற்றை நிரப்புமா? என்று வினவும் மாந்தன் வடிவுகளும் உள. அத்தகைய மாக்களை நோக்கித்தான். செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் என்று வெகுண்டு வினவுகின்றார் திருவள்ளுவர். ம.வி. 54 தமிழ் விடுதலை கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம் பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். த.வ. 340 தமிழகக் கட்சிகளெல்லாம் தமிழ்க்கட்சியாதல் இங்கிலாந்திலுள்ள மூவேறு கட்சிகளும் தத்தம் கொள்கை குறிக்கோளில் முற்றும் அல்லது மிகவும் வேறுபட்டிருப்பினும் மொழியென்னும் ஒரு செய்தியில் ஒரு கட்சி போன்றே இயங்கும். அத்தகைய பண்பாட்டையே தி.மு.கவும் அ.தி.மு.க.வும் அல்லாத தமிழ் நாட்டுக் கட்சிகளும் மேற்கொள்ளல் வேண்டும். தமிழைப் போற்றாத கட்சி தமிழர் கட்சியுமாகாது. தமிழ் நாட்டுக் கட்சியு மாகாது. த.இ.வ. 303 தமிழப்பார்ப்பார் தமிழப் பார்ப்பார் பண்டாரம், புலவன், குருக்கள் திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி, நம்பி, அருமைக்காரன், (புடவைக்காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். பார்ப்பான் கோயிற் கருமங்களைப் பார்ப்பவன். த.தி.2 தமிழப்பூசாரி அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன் முதல் தமிழப்பூசாரியையே குறித்தது. த.தி.2 தமிழர்க்கு இன்மைகள் பல எட்டாம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மையரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Sovereignty) கொண்ட தனிநாடு பெற்று விட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். j.t.: மு.2 தமிழரசின் தலையாய கடமை தென்சொற்கட் கெல்லாம் கூறுவதோடு வேர்ப்பொருள் காட்டித் தமிழென விளக்கும் சொற் பிறப்பியல் அகர முதலி இன்றியமையாத தாகின்றது. இதற்கு ஒரு கோடி யுருபா வேண்டினும் ஒதுக்கித் தொகுப்பிப்பது தமிழரசின் மேல் விழுந்த தலையாய கடமையாகும். த.இ.வ. 312 தமிழன் பிறந்தகம் தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. த.வ.12 தமிழில் வழிபாடு முருகன் வழிபாடு, சிவன் வழிபாடு, திருமால் வழிபாடு, அம்மன் வழிபாடு ஆகிய நால்வகை வழிபாட்டு முறைகளையும், அவற்றிற்குரிய போற்றி (அர்ச்சனை) களையும் தனித்தமிழில் தொகுத்து, ஓதுவாரைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு நடத்துவித்தல் வேண்டும். த.இ.வ. 311 தமிழின்சிறப்பு கூட்டமும் கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெறு வதனாலேயே தமிழ் சிறப்படைந்துவிட்டதெனக் கருதுதல் தவறாகும். தெ. மொ. 3:12:16 தாய்மொழியில் திருமணக் கரணம் செய்தல் : ஒவ்வொரு தமிழனும் தமிழிலேயே கரணம் செய்வித்தல் வேண்டும். பிராமணன் தமிழன்பனாகித் தமிழிற் கரணம் செய்ய இசையின் அதை ஏற்றுக்கொள்ளலாம். தமிழிற் கரணம் செய்வியாதவன் தமிழனாகான். த.தி.57 தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி தாழ்த்தப்பட்டவரைத் தாழ்த்தப்பட்டவரென்று சொல்வதே மானக் கேடாம். அதினும், பிறர் சொல்லாது தாழ்த்தப்பட்டவரே சொல்லிக் கொள்வது தம்மைத் தாமே தாழ்த்துவதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்ட (அரிசன) மாணவர் விடுதியென்று தனியாக இருப் பதை உடனே நீக்கிவிட்டு மேல்வகுப்பு மாணவர் விடுதியொடு சேர்த்துவிடல் வேண்டும். ம.வி. 131 திராவிட முக்கட்சியும் ஒன்றாதல் மூவாயிரம் ஆண்டு ஆரியத் தடையால் முடங்கிக் கிடந்த தமிழும் தமிழரும் முன்னேறவும், இந்தியை வட நாட்டிற்குத் துரத்தவும், தமிழர் ஒற்றுமைஇன்றியமையாதது ஆதலால் தி.க; தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய முக்கட்சியும் உடனே ஒன்றாகுதல் வேண்டும். அல்லது ஒன்று சேர்தல் வேண்டும். கட்சித் தலைவர் இனநலம் நோக்கித் தத்தம் பிணக்கை விட்டுவிடுதல் வேண்டும். த.இ.வ. 302 திருக்குறள் எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லை களும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழ வேண்டுமென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்திருக். மர. முன்.17 திருந்தாமணத்தினும் தீய செயல் மணமகள் வீட்டார் சீர்திருத்த மணத்திற்கு இசையாமை யாலோ மணமகன் வீட்டார்க்கு அதில் முழு நம்பிக்கை இல்லாமையாலோ வடமொழிக் கரணம் முன்னமே நடந்து விடுகின்றது. அதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அங்ஙன மன்றித் தமிழ்க்கரணமும் செய்து மக்களை ஏமாற்றுவது திருந்தா மணத்தினும் தீய செயலாகும். த. தி. 64 திருமணக் காலம் பார்த்தல் உடல் நலத்தையும் வினை வசதியையும் தாக்கும் கோடை மாரி போன்ற கால வேறுபாடும் பகல் இரவு போன்ற வேளை வேறுபாடும் அல்லது வேறு வகையில் காலப்பகுதிகளைக் கணித்து வீணாக இடர்ப்படுவதை விட்டு விடல் வேண்டும். தி. தி. 55. திருமணம் ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்த இசைந்து ஒன்று சேர்வதே மணமாம். மணத்தல் கலத்தல் அல்லது கூடுதல். மண வாழ்க்கைக் கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத் திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப்பொறுப் புள்ளமையாலும், அது ஆயிரங்காலத்துப் பயிர் ஆகையாலும் வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின் முன் அல்லது தெய்வத்தின் பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுதலாலும், மணம் தெய்வத் தன்மை பெற்றுத் திருமணம் எனப் பெற்றது. த. தி. முன். 5 தீயோரை நல்வழிப்படுத்தல் வேலையின்மையாலும் விளைவின்மையாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்குங் கொள்ளைக்குங் கரணியமாயிருத் தலால், கள்வருக்கு ஒற்றர் வேலையும், கொள்ளைக் காரருக்குப் படைத்துறை வேலையுங் கொடுப்பின் ஓரளவு நிலைமை திருந்தலாம். கள்ளக் காசுத் தாளடிப் பாரையும் கள்ளத்தனமாகத் துமுக்கி (Gun) சுழலி (Revolver) முதலியன செய்வாரையும் பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின் சிறந்த பொறிவினைஞராகவோ புதுப் புனைவாளராகவோ தலையெடுக்கலாம். ம.வி. 144. துறவியரை ஊக்குதல் மக்கள் தொகை மிக்கு மாநில முழுதும் இடர்ப்படும் இக்காலத்தில் துறவறஞ் சிறந்த தென்று கூறித் துறவியரை ஊக்குதல் வேண்டும் என்றே தோன்றுகின்றது. த. தி. முன். 4. தூய தமிழன் முயற்சி ஒவ்வொரு தூய தமிழனும் தன்வீட்டு (த் திருமணக்) கரணத்தை மட்டுமன்றிப் பிறர் வீட்டுக் கரணத்தையும் தமிழிற் செய்விக்க முயற்சி செய்தல் வேண்டும். வடமொழியில் நடக்கும் கரணத்திற்குச் செல்லுதல் கூடாது. த. தி. 57 தென்மதம் சிவநெறியான் தன்னைச் சிவனியன் என்றும் திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே குறித்தல் வேண்டும். இருநெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின் தென்மதத்தான் அல்லது தமிழ்மதத்தான் என்று குறித்தல் வேண்டும். த. ம. 144 தேவ தேவ மொழி வடமொழி தேவமொழியென்னும் காலம் மலையேறி விட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால் வடமொழியைத் தேவமொழியெனின் தமிழைத் தேவ தேவ மொழியெனல் வேண்டும். த. இ. வ. 301. தொடர் வண்டியில் வகுப்புகள் ஆங்கிலர் போன்ற மேலையர் ஆட்சி இங்குத் தோன்றி யிராவிடின் தொடர்வண்டிகளிற் பிராமணர் சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் (தீண்டாதார்) என்னும் ஐந்து வகுப்புக் களேயன்றி முதலாவது இரண்டாவது மூன்றாவது என்னும் வகுப்புக்கள் தோன்றியிரா. ஆதலால் குமுகாயத் துறையிலும் ஆங்கிலராட்சி மாபெரு நன்மை செய்ததாகும். ம. வி. 164. தொல்காப்பிய விரிவுரை தொல்காப்பிய வுரைகள் பலவிடத்து வேறுபட்டும் சிலவிடத்து வழுவியும் இக்கால மாணவர்க்கு எளிதாய் விளங் காத நடையிலும் இருப்பதால், இலக்கணப் பெரும் புலவரை யெல்லாம் ஒன்றுகூட்டி ஒரே புதிய திருந்திய விளக்கமான தெளிநடை விரிவுரை வரைவிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். த. இ. வ. 311. தொழிலாளர் ஒன்றியம் ஒரு தொழிலுக்கு ஒரே தொழிலாளர் ஒன்றியம் இருத்தல் வேண்டும். அதுவும் கட்சிச் சார்பற்றதாய் இருத்தல் வேண்டும். ம. வி. 81. தொழிற்சாலையிடம் தொழிற்சாலைகள் மக்கள் குடியிருப்பிற்கும் கல்வி நிலையங்கட்கும் விளைநிலங்கட்கும் குறைந்தது ஒரு கல் தொலைவிற் கப்பால் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், அவற்றினின்று வெளிவரும் தீநீராலும் நச்சுப் புகையாலும் நாற்றக் காற்றாலும் மக்கள் நலங்கெடும். மரஞ்செடி கொடிகள் படும்; பயிர் பச்சைகள் விளையா; ஆறு ஏரி கிணறு முதலிய நன்னீர் நிலைகளெல்லாம் உவர்நீராக மாறிவிடும். தோற்பதனீட்டுச் சாலைகள் ஊரருகில் இருப்பவற்றையும் அளவிற்கு மிஞ்சின வற்றையும் உடனே அகற்றிவிடல் வேண்டும், ஆலைக் கழிவு நீரைத் தூய்மைப் படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும். ம. வி. 81. தோட்டியர் பணி (தோட்டிகட்கு) வீடுதொறும் சலக்கப் புரையில் நரகலை வார்வதும், அதைப்பலர் முன்முறத்திற் சுமந்து கொடுபோய்ப் பறைகளில் கொட்டுவதும், அப்பறைகளைச் சரக்கியங்கிகளில் (Lorries) ஏற்றிக் கொண்டு போய்க் குழாய் நீரடிப்பதுமான அருவருப்பான வேலைகளை அடியோடு நீக்குதல் வேண்டும். இன்றேல் குமுகாயத் (Social) துறையில் அவர் ஒரு காலும் முன்னேற முடியாது. அவரைப் பொறுத்த வரையில் தீண்டாமையும் தொடரும். மாந்தன் நரகலை மாந்தனே வாரிச் சுமக்கச் செய்வது, நாகரிக மாந்தனுக்கும் நாகரிக அரசிற்கும் கடுகளவுந் தகாது. ஒவ்வொரு வீட்டிலும் அடிப்புச் (Flush-out) சலக்கப்புரையே யன்றி எடுப்புச் சலக்கப்புரையிருத்தல் கூடாது. ம. வி. 80 நகரத் திருமணம் நகரங்களில் நடைபெறும் திருமணங்கட்கு வருவார் பலர் அலுவலாளராய் இருப்பாராதலால், அவர் வசதி நோக்கி, பொது விடுமுறையல்லாத நாட்களில் நடத்தும் திருமணங்களை யெல்லாம் காலை 8 மணிக்கு முன்னாவது, மாலை 4 மணிக்குப் பின்னாவது வைத்துக் கொள்வது நலம். த. தி. 55. நகரமும் நரகமும் நகரம் நரகம் ஆகின்றது. மாநகரமோமாநரகமே - சாலை நடுவிற் சென்றால் வண்டிகட்கு அச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறிய நரகத்திற்கு அச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங் காற்றெல்லாம் வீச்சமன்றோ? ம.வி. 61. நகை வரம்பீட்டு உயர்த்தம் மேனாட்டினின்று பொற்காசு வரத்தில்லாத இக்காலத்தில் பொற்கொல்லர் முதலீடெல்லாம் நகையே ஆதலால் ஒரு பொற்கொல்லன் குடும்பம் பிழைக்குமளவு வருவாய் வரத்தக்க தொழில் ஒழுங்காய் நடக்குமாறு அவன் நகை முதலீட்டு வரம்பை உயர்த்துதல் வேண்டும். ம. வி. 80 நாட்டுப்பணி அமர்த்தம் போக்குவரவு தற்காப்பு வெளிநாட்டுறவு நடுத் தீர்ப்பு என்னும் நாற்பெருந்துறையில்தான் நடுவணரசிற்கு அதிகார முண்டு. ஏனைத் துறைகளிலெல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப் பெறல் வேண்டும். ம. வி. 107. நாகரிகம் நாகரிகம் என்பது நகரமக்களின் திருந்தியவாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. ப. த. நா. ப. 1. நாகரிகமும் பண்பாடும் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப்பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. ப. த. ப. நா. 8. நிலக்கொடை நிலமில்லாதவர்க்கு நிலங்கொடுத்தல் என்பது தவறான திட்டம். இது அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் போன்ற குடியேற்ற நாட்களில்தான் ஓரளவு இயலும். இனிமேற் பிறக்கும் பிள்ளைகட்கு எங்ஙனம் பெற்றோர் தம் சிறு நிலங்களைப் பாகம்பிரித்துக் கொடுக்க முடியாதோ அங்ஙனமே அரசும் இனிமேல் தோன்றும் உழவர்க்கும் புதிதாக நிலம் ஒதுக்க இயலாது. மேலும் ஆடுமாடு மேய்ச்சலுக்குப் போதிய இடமும் வேண்டும். ம. வி. 74. நிலத்தை மேலும் துண்டுபடுத்தாமை தமிழ்நாடு மிகப்பழைய நாடு ஆதலாலும் பல்வேறு வெளிநாட்டு மக்கள் இங்குக்குடியேறியிருப்பதனாலும் மக்கட் டொகை மட்டிற்கு மிஞ்சி நன்செய்களும் புன்செய்களும் மனைநில அளவாகக் குறுகியுள்ளன. இவற்றை இனிப் புதல்வர்க்குப் பாகம் பிரிப்பின் பாத்தியளவாக ஒடுங்கும். அதன் செறுவிற்கு (Acre)¡ குறைந்த செய்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கூட்டுப் பண்ணையாகப் பயிரிடுவதே தக்கதாம். ம. வி. 74. நினைவுச் சின்னம் உருவந் தெரியாத திருவள்ளுவர் போன்ற உலகப் பொதுப் பேரறிஞர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் படிமை நிறுவாது நினைவுச் சின்னமே நிறுவுதல் வேண்டும்; அல்லது மாபெரு மணி மண்டபமே எழுப்புதல் வேண்டும். ம. வி. 147. நோய்க்கு ஏற்ற மருந்து நோயின் கடுமைக்குத் தக்கவாறு மருந்தின்கடுமையும் இருக்கும். மருந்தின் கடுமை நோக்கி அதை விலக்குபவன் நோயை வளர்த்து மாய்பவனேயாவன். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகள் கட்டத்தை விளைப்பினும் பின்னர்க் காலமெல்லாம் மக்கள் இன்புற்று வாழ வழி கோலுவது தேற்றம். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் அடுத்த தலைமுறையில் மக்கள் மாற்றொணாத் துன்புற நேரும், களவும் கொள்ளையும் கொலையும் கட்டிற் கடங்கா: பகையும் பசியும் பிணியும் மட்டிற்கு மிஞ்சும்; காவலருங் கள்வராவர்; அரசும் ஆற்றலறும்; நாடுங்காடாகும். அத்தகைய நிலைமை நேராவாறு எதிர்காலமக்கள் மீது இரக்கங் கொண்டேனும் இக்காலமக்கள் பண்பாடு மேற் கொள்ள வேண்டும். ம. வி. 69. பகுத்தறிவாளர் வழிகாட்டல் பகுத்தறி வியக்கம் தமிழரெல்லார்க்கும் பொதுவாயினும் பெரியாரைப் பின்பற்றியர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் தாமே முன்பு பகுத்தறி வொழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். த. இ. வ. 319. பண்பாடு பண்படுவது பண்பாடு. பண்படுதல் சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப் பட்ட நிலமென்றும் திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும் திருந்திய வுள்ளத்தைப் பண்பட்ட வுள்ளமென்றும் சொல்வது வழக்கம். ப. த. நா. ப. 6 பயிற்றுமொழி துவக்கக் கல்வி முடிந்தபின் பாதிப்பேர் தொழிற் பயிற்சி பெறலாம். மீதிப்பேர்நடுத்திறப் பள்ளிகளில் சேரலாம். நடுத்திறப் பள்ளிக் கல்வியில் இருந்து பல வகைப்பட்ட கல்லூரிக்கல்வி வரையும் இருமொழிவாயிற் கல்வி இருக்கலாம். மேற்கல்வி கல்லாதவர், வெளிநாடு செல்லாதவர், ஆங்கிலங் கற்கும் ஆற்றல் இல்லாதவர் ஆகிய மூவகையாரும் தமிழ்வாயிற் கல்வியையும் ஏனையோரெல்லாம் ஆங்கில வாயிற் கல்வியையும் மேற் கொள்ளலாம். இங்குத் தமிழ் என்றது தமிழ்நாட்டை நோக்கி. ம. வி. 89. பரிசுச் சீட்டு நிறுத்தம் ஆசைகாட்டல், போட்ட பணம் மீளாமை, உழைப்பின்றிப் பிறர் பணத்தால் விரைந்து செல்வராதல், இழப்பால் வருத்தமும் வென்றவன்பாற் பொறாமையும் உண்டுபண்ணல், எத்தனை முறையாயிடினும் எல்லாரும் வெல்ல முடியாமை ஆகிய சூதாட்டியல்புகளுடன், அயல் மாநிலத்திற்குப் பணம் போதலாகிய தீதும் கூடிய பரிசுச் சீட்டுத் திட்டம், தமிழ்நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் பெயருக்கு இழுக்கு நேரா வண்ணம் உடனே நிறுத்தப் பெறுவதே நன்றாம். தமிழர் வ. 352. பள்ளிப் பதிவேடு சேர்ப்புப் படிவங்களிலும் பதிவேடுகளிலும் பெற்றோரின் தொழில் தவிர, பிறப்புப்பற்றிய குலப்பெயர்க் குறிப்பு இருத்தல் கூடாது. எல்லோரும் ஓரினம் என்னும் சமவுணர்ச்சியே பள்ளிச்சூழலில் நிலவ வேண்டும். இங்கு மாணவ மாணவியருக்குச் சொன்னதே ஆசிரியர்க்கும். ம. வி. 87. பன்றிவளர்ப்பு நாட்டுப் புறத்திலும் நகருள்ளும் நரகலைத் தின்று வாழும் பன்றிகளை வளர்ப்பவரை அரசு தண்டித்தலும் அவ் வளர்ப்பை உடனடியாக நிறுத்துதலும் வேண்டும். வெண்ணிறமான மேனாட்டுப்பன்றியினத்தைக் கிழங்கும் கொட்டையும் இட்டு வளர்க்கும் பண்ணைகளை அரசு ஊக்குவதுடன் தானும் அத் தொழிலை மேற்கொள்ளலாம். காட்டுப்பன்றியாயின் நாட்டுப் பன்றியும் நன்றாம். ம. வி. 75. பிள்ளைப் பேறில்லாதவரைப் பாராட்டுதல் பிள்ளைப் பேறு பண்டை நல்வினைப்பயன் அல்லது திருவருட்பயன் என்றும் பிள்ளைப் பேறின்மை பண்டைத் தீவினைப் பயன் அல்லது இறைவன் சாவிப்பு (சாபம்) என்றும், பிள்ளைப் பேறே செல்வத்துட் செல்வமென்றும், அஃதில்லாதார் ஓர் எரி நரகை அடைவரென்றும் பலதவறான நம்பிக்கைகள் இன்னும் ஒரு சார் மக்களிடையேயிருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்றைக்கரணியமாகக்கொண்டும் தம் - பெண்ணின்ப நுகர்ச்சியை மிகுத்தற் பொருட்டும், தம் முதல் மனைவியின் இசைவைப் பெற்றோ பெறாதோ சிலர் மறு மணமும் செய்துள்ளனர். பிள்ளைப் பேறில்லாதவர் அஃதுள்வர்முன் உள்ளத்தி லேனும் நாணி வருந்தாவாறு அரசும் பொதுமக்களும் புலவரும் இனி அத்தகையோரையே பாராட்டி வாழ்த்துதல் வேண்டும். ம. வி. 66. பிள்ளை வரம்பீட்டில் பால்பற்றிய கருத்து இருபிள்ளை என்னும் வரம்பீட்டிற் கால் பற்றிய கருத்து கலத்தல் கூடாது. இரு பிள்ளையும் ஆண்பாலாகவும் இருக்கலாம். பெண்பாலாகவும் இருக்கலாம். இருபாலுங் கலந்துமிருக்கலாம், இரண்டும் ஒரே பாலாயிருப்பின் ஏனைப்பாலும் ஒன்று வேண்டும் என்பது பொருந்தாது. அதற்கு இசையின் சிலர்க்குமுப்பிள்ளை யாகி நடுநிலை திறம்பும். மேலும் மூன்றாம் பிள்ளையும் முந்தின பாலாகவே இருக்கலாம். நம் நாட்டில் இன்றும் சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை என்னும் பழமொழிக் கருத் திருப்பதால் முப்பிள்ளையும் பெண்ணாய்ப் பிறந்த குடும்பம் செல்வஞ் சிறந்திருந்தாலன்றித் தொல்லைப் படத்தான் செய்யும். கோவரசு போய்க் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்தில் பட்டத கட்டிப் பாராளப் பிள்ளையில்லையென்று வருந்த வேண்டிய தில்லை. மேலும் பெண்பிள்ளைக்கும் பட்டம் கட்டலாம். பிள்ளைகளின் பாலமைப்பு இறைவன் அல்லது இயற்கையேற் பாடேயன்றி, மாந்தன் படைப்பன்று. ஆதலால் எப்பாற் பிள்ளை பிறப்பினும் பொந்திகை (திருப்தி) அடைதல் வேண்டும்.ம. வி. 68. பிறப்பிய நம்பிக்கையால் கேடு பிறப்பியத்திற் குறிக்கப்பட்ட, வாழ்நாள் நீட்சியை நம்பி, நோய் மருத்துவம் செய்யாதும் உடலைப் பேணாதும் இறந்து போனவரும்; ஆக்க நிலையை நம்பி முயற்சி செய்யாது வினை தோற்றாரும், முற்காப்பின்றி ஏற்கெனவே இருக்கும் நிலைமையும் இழந்தாரும் எண்ணிறந்தோராவர். த. தி. 56. பிறப்பியம் பாராமை மணமக்களின் பிறப்பியத்தை (ஜாதகத்தை) நோக்குவதும் தவறாம். மனப் பொருத்தமே பணப்பொருத்தம். அஃதன்றிக் கணிய முறையில் வெவ்வேறு பொருத்தம் பார்ப்பதால், பொருந்தும் மணங்கள் விலக்கவும் பொருந்தா மணங்கள் பொருத்தவும் படுகின்றன. பிறப்பியக் கணிப்புப்படி பெரும்பால் நிலைமைகள் நேர்வதில்லை. ஏதேனும் நேரினும் அது தற் செயலாக நேர்வதே. பிறப்பியத் தவற்றைக் கணிப்புத் தவறென்று கூறுவதும் பொருந்தாது. சரியாய்க் கணிப்பவர் எவருமிலர். ஐந்திற் கிரண்டு பழுதில்லா திருக்கும். என்பதே எக்கணியர் கூற்றும். அவ்விரண்டுகள் எவை என்பதும் அவர் அறியார். த. தி. 56. புதுப்புனைவாளரைப் போற்றுதல் இக்காலத்தில் பொன்னும் எண்ணெயும் போன்ற கனிமப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம் புதுப் புனைவுகளாலும் கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்க முடியும். ஆதலால், அவ்வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல்வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால் புதுப்புனைவாளரை யெல்லாம் குல மத கட்சி வேறுபாடின்றி, நாட்டுவளம் பெருக்கிய வராகவும் உலகப் பொதுநலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும். ம. வி. 44. புறமணம் விதிப்பு ஒரே குலத்துள் தொடர்ந்து மணங்கள் நடைபெறுவதால் விளையுங் கேட்டை விலக்குதற்கே, குலப்பிரிவுகட்குப் புறமணம் விதிக்கப்பட்டதாகத்தெரிகின்றது. த. தி. 13. பூங்காப் பொருட்காட்சியகம் ஐந்திணை நிலமும் அறுதிணைப் போரும் பெயர் பெறக் காரணமாயிருந்த பூச்செடி கொடி பூண்டு மரங்களை ஒரு பூங்காவில் வளர்த்துப் பொருட்காட்சியக மாக்கலாம். த. இ.வ. 312 பூச்சி மருந்தடிப்பவர் நிலத்தை உழும்போது பூச்சி புழுக்கள் கொல்லப் படுவதனால் உயர்ந்தோர் உழவுத்தொழிலைத் தாழ்ந்த தென்று தள்ளிவிட்டனர் என்று - மனு தருமசாத்திரம் கூறுவதோ எள்ளி நகையாடத் தக்கதாம். இன்று நன் செய் புன் செய்களிற் பூச்சி மருந்தடிப்பவரெல்லாம் அதன்படி கொலையாளியராவர். ம. வி. 72. பெண்டிர் சமன்மை தமிழர் நாகரிகமும் பண்பாடும் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் பெண்டிர் சமன்மை ஏற்படாதது பெரிதும் இரங்கத் தக்கதே. த. தி. 64. பெண்பரிசம் பெண்ணிற்குப் பரிசம் கேட்பது ஓரளவு விலை கூறுவது போன்றிருத்தலால் செல்வப் பெற்றோர் அதனைக் கேளாதிருத்தல் சிறப்பாம். ஏழைப் பெற்றோராயின் மணச் செலவு நோக்கி ஒரு தொகை கேட்பது குற்ற மாகாது. த. தி. 51. பெரியாரைப் பின்பற்றுவோர் பகுத்தறிவியக்கப் பகலவன் என்னும் பெரியார் தம் கற்பிப்பிற்கேற்ப, பிறவிக் குலவொழுங்கை மீறியே ஒரு பெண்ணை மணந்தார். அவரைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் பலர் மதவியல் ஒன்று தவிர மற்றவற்றில் அவர் பெயர் கெடுமாறே ஒழுகி வருகின்றனர். பிறவிக் குலவுணர்ச்சியைச் சொல்லளவில் நீக்கினும் உள்ளளவில் நீக்கவில்லை. த.இ.வ. 319. பெரும்பால் விரும்பும் இன்பம். இம்மையின்பமாகிய பெண்ணின்பமும் மறுமையின்ப மாகிய வீட்டின்பமும் ஒப்பு நோக்க வகையால் முறையே சிற்றின்பம் பேரின்பம் எனப்படினும், சிற்றின்பமே இயற்கைக் கேற்றதும் உடனே நுகர்தற்குரியதும் எளிதாய்க் கிட்டுவதும் கண்கூடாகக் காணப்பெறுவதுமாயிருத்தலால் அதுவே பெரும்பாலரால் விரும்பப்படுவதாம். த. தி. முன் 2. பொத்தகக் குழு தாளைச் சிக்கனமாகச் செலவிடவும் வழுவுள்ளனவும் பயனற்றனவுமான வெளியீடுகளைத் தடுக்கவும் பொத்தகக் குழுவொன்றும் இருப்பது நல்லது. த. இ.வ. 311 பொதுநலத் தொண்டருள் தலையாயவன் திங்களையடைந்து திரும்பிவரினும் நிலத்திலும் நீரிலும் வானிலும் ஒரு நிகராய்ச் செல்லும் விரைவூர் தியைப் புனையினும் உயிர் வாழ்விற்கு இன்றியமையாத உணவை விளைக்கும் உழவனைப் போன்ற பொது நலத் தொண்டன் இல்லை. ம.வி. 71 பொதுவுடைமை பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன் படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும். ம. வி; நூ.முக.3 பொருள் விலை குறைப்பு ஒரு பொருளின் விலை குறைப்பு முயற்சியை அது விளையும் அல்லது செய்யப்படும் இடத்திலேயே தொடங்குதல் வேண்டும். ஆகவே, விளைப்பான், விற்பான், அரசு ஆகிய மூவரும் சேர்ந்தே பொருள் விலையிறக்கப் புதிரை விடுத்தல் வேண்டும். ம. வி. 86. பொருளியல் நூலுக்குமாறான குற்றம் உறவினரும் நண்பரும், மணமக்கள் ஏழையராயும் திருப்பிச் செய்ய இயலாதவராயும் இருந்தால்தான் அவர்க்குப் பரிசும் நன் கொடையும் வழங்கல்வேண்டும். செல்வராயிருப்பின் தேவையில்லை. பெருஞ்செல்வராயிருப்பின் வழங்கவே கூடாது. அவர்க்கு வழங்குவது பொருளியல் நூலுக்கு மாறான பெருங்குற்றம். தி. தி. 61 பொறிவினை நலப்பாடு பொறிவினையால் மக்கட்கு மட்டுமன்றி மாடு, கழுதை, குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம், யானை முதலிய விலங்கு கட்கும் நன்மையுண்டாகிறது. இயற்கையாகக்காட்டில் முழுவுரிமை யுடன் மகிழ்ந்துலவித் திரியும் விலங்குகளைப் பிடித்துச் சிறைப் படுத்தி இரவும் பகலும் வேலை வாங்கி, விடுமுறையும் விடுதலையு மின்றி வாழ்நாள்முழுதும் வருத்துவதால் அவற்றிற்கு ஏற்படக் கூடிய மனநிலையை நாள் தோறும் கடுமையாய் உழைத்து இட்டவுணவையுண்ணும் வாழ்நாட் கடுஞ்சிறை யாளி தான் உணர முடியும். ம.வி. 85 பொறிவினைப் புறக்கணிப்பு பொறிவினைத் தொழில் இறைவனருளால் மாந்தனுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சியின் பயனே. இதைப் புறக்கணிப்பது மாந்தனை அஃறிணைப்படுத்துவதும் இறைவனை நேரல்லா வழியிற் பழிப்பதுமாகும். எல்லா வகையிலும் பொறிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைப் பழிப்பவர் ஏமாற்றுக்காரருள் முதல் வகுப்பின ரேயாவர். ம.வி.83 மக்கள் திட்ட ஈகியர்க்குச் சலுகை மணவாமை, பிள்ளை பெறாமை, மலடாக்கம் செய்து கொள்கை முதலிய ஈகம் (தியாகம்) செய்யும் ஈகியர்க்கு அவரவர் விட்டுக்கொடுப்பின் அளவிற்குத் தக்கவாறு வேலையளிப்பு, வீடமைப்பு, கடனீக்கம், வரிக் குறைப்பு, பணவுதவி, இலவச மருத்துவம் முதலிய பல்வேறு வகையில் அரசு சலுகை காட்டுவது அவர்க்குச் செய்யும் கைம்மாறும் பிறர் அவரைப் பின் பற்றச் செய்யும் தூண்டுகோலுமாகும். ம.வி. 69. மணமக்கட்குப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள் : 1. காதற் பொருத்தம் 2. உடல் நலப்பொருத்தம் 3. ஒழுக்கப் பொருத்தம். 4. கருத்துப் பொருத்தம் 5. உண்டிப் பொருத்தம் 6. அகவைப் பொருத்தம் 7. உருவப் பொருத்தம் 8. கல்விப் பொருத்தம் 9. முறைப் பொருத்தம் 10. வினைத்திறப் பொருத்தம். 11. தொழிற் பொருத்தம் 12. குடும்பநிலைப் பொருத்தம். த. தி. 43.8 மணவகவையுயர்த்தம் முதற்கண் ஆடவர்க்கு 25-உம் பெண்டிர்க்கு 20-உம், பின்னர் முன்னவர்க்கு -30. உம் பின்னவர்க்கு 25-உம் மண அகவையை உயர்த்துதல் வேண்டும். ம. வி. 65. மணவாண்டு குறிப்பு எவ்வாண்டிலும் எம்மாதத்திலும் எந்நாளிலும் மணஞ் செய்யாவாறு முதற்கண் ஐயாண்டிற்கும் பின்னர்ப் பத்தாண்டிற்கும் ஒரு முறையே மக்கள் மணஞ் செய்யுமாறு அரசு மணவாண்டு குறித்தல் வேண்டும். நன் மாதமும் நன்னாளும் பார்ப்பார்க்கு ஓராண்டு போதும். இது திருமண ஒத்தி வைப்பு. ம. வி. 66 மணவாமை போற்றல் மக்கட் டொகையை ஒடுக்குதற்கு அரசு கன்னித் துறவியராகவும் (confirmed bachelors) தனிவாழ்க்கையராகவும் (Celibates) வாழப், பூட்கை கொண்டவரைப் பாராட்டுதல் வேண்டும். ம.வி.65. மணவாளன் பரிசம் பெண்ணிற்கு (ப் பரிசம்) கேட்பதற்குப் பதிலாக மணவாளப் பிள்ளைக்குக்கேட்பது இயற்கைக்கு மாறான தாயும், எக் காரணத்தாலும் சரிமைப்படுத்த முடியாததாயும், இருக்கின்றது. இவ்வுலகத்தில் ஒருவன் பெறக்கூடிய பேரின்பப் பேறு பெண்ணே. அகத்தழகும் புறத்தழகும் ஒருங்கேயமைந்த அருமைப் பெண்ணிருக்கவும் அவளை விட்டுவிட்டுக் காசிற் காசைப் பட்டு அழகிலியை மணப்பது இல்லற இன்பத்தையும் வாழ்க்கை வசதியையும் பணத்திற்கு விற்பதுபோன்றதே. த.தி.51. மதம் மதம் என்பது இம்மை மறுமை கடவுள் என்னும் மூன்றையும்பற்றி ஒருவன் மதித்துக்கொள்ளும் கருத்தேயன்றி வேறன்று. ம.வி. 46 மதம் அழிபடாது கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் இருப்பினும் நடப்பினும் வேலை செய்யினும் உரையாடினும் உண்ணினும் இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின் மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக. த. ம. 191. மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஒரு நாட்டில் அல்லது ஊரில் கொலை களவு கொள்ளை கற்பழிப்பு முதலியன பெரும்பாலும் இல்லா திருப்பதற்கு அரசன் அல்லது அரசு தண்டிக்கும் என்னும் அச்சமேயன்றி வேறொன்றும் கரணியமன்று. அங்ஙனமேபலர் தீயொழுக்கத்தைவிட்டு நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருத்தற்கும் மறுமையில் இறைவன் எரி நரகில் இட்டும் தண்டிப்பான் என்னும் அச்சமே கரணியமாகும். பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது ஆதலால் மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையேயாகும். ம. வி. 45. மதஇயக்கம் கூட்டு வழிபாடும் ஓய்வு நாளில் அல்லது நேரத்தில் பொது விடத்தில் அல்லது ஒருவர் இல்லத்தில் பலர் கூடிச்செய்யலாம். இங்ஙனம் எளியமுறையில் அரசிற்கு எவ்வகை இடர்ப்பாடும் விளைக்காது இயங்கக் கூடியது மதம். ம. வி. 46. மதுவிலக்கு மதுவிலக்கு நல்லதே. ஆயின் அதற்கும் சில விலக்குண்டு. உழைப்பாளி, பிள்ளை பெற்ற பெண்டு, நோயாளி, அயல் நாட்டார் ஆகியோர்க்கு மது மிகத் தேவையானதே. ம.வி. 136 மரமடர்ந்த காடு ஒரு வெப்ப நாட்டில் ஆண்டுதோறும் ஒழுங்காக மழை பெய்தற்கு முக்காற் பங்கு மரமடர்ந்த காடு இருப்பது தலை; 2.3. பங்கு இருப்பது இடை; 1.2 பங்கு இருப்பது கடை. இன்றோ 1.3 பங்குமில்லை. ம. வி. 59. மலடாக்க அச்சம் இந்தியா பல்வேறு நாடும் இனமும் குலமும் மதமொழி கட்சிதொழில் நிலைமைபற்றிய வகுப்புக்களும் கொண்ட உட்கண்ட மாதலால். மலடாக்கத்தை விருப்பத்திற்கு விடின், சிலகுலம் அல்லது வகுப்புவரவரச் சிறுகவும் சிலகுலம்அல்லது வகுப்பு வரவரப் பெருகவும் நேரும். இது நடுநிலைக்கு இழுக்காம்; நாட்டு வளர்ச்சிக்கும் இந்திய ஒன்றிய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாம். ஆதலால் அணுவளவும் அஞ்சாதும் ஒருவகுப்பார்க்கும் கடுகளவும் கண்ணோட்டம் காட்டாதும் அரசு, தன் கடமையை நிறைவேற்றல் வேண்டும். அஞ்சுவது கோழைத்தனத்தையும் ஆளுந் தகுதியின் மையையும் ஓரவஞ்சகத் தையுமே காட்டும். ம.வி. 67. மலடாக்கம் பொதுமை மலடாக்கம் குடிசை வாணர் முதல் கோடிச் செல்வர் வரை குல மத கட்சி தொழில் நிலைமை வேறுபாடின்றி, எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். ஓர் எளிய ஏவலன் மனைவியும் இந்தியக் குடியரசுத் தலைவர் மனைவியாரும் இவ்வகையில் ஒன்றே. இந்நடுநிலை தவறின் அரசு, அரசாகாது. கூட்டுடைமை அரசே அரசென்று கொள்ளற் கிடமாகும். ம. வி. 66 மலடாக்கம் பிள்ளைபெறுவது பெண்ணேயாதலால், மலடாக்கம் பெண்டிர்க்குச் செய்தாலும் போதும். கட்டாய மலடாக்கச் சட்டம் ஆட்சிக்கு வருமுன்னரே இருபிள்ளையும் பல பிள்ளையும் பெற்றிருக்கும் தாய்மார்க்கெல்லாம் உடனே மலடாக்கம் செய்து விடல் வேண்டும். இரு பிள்ளை பெற்றிருக்கும் இளம் கைம்பெண்டிர்க்கும் மலடாக்கம் செய்துவிடல் வேண்டும். ம. வி. 68. மலடாக்கமும் மதமும் மதச் சார்பாக எவர் தடை நிகழ்த்தினும் அரசு ஒப்புக் கொள்ளுதல் கூடாது. எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்பே. ஆயினும் மாந்தன் தனக்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வேண்டாதவற்றை விலக்கி விடுகின்றான். வேண்டிய வற்றையும் தன் தேவைப்படி வெவ்வேறளவில் வைத்திருக்கின்றான். தலைமுடி பெண்டிர்க்குப் போல் ஆடவர்க்கும் நீண்டு வளர்வது இயற்கையே. இறைவனேற் பாடே. ஆயினும் ஆடவன் தன் தலைமுடியை விரும்பியவாறெல்லாம் மட்டுப்படுத்திக் கொள்கின்றான். இனி, தாடியும் மீசையும் ஒக்க வளரினும் முன்னதை நீக்கிவிட்டுப்பின்னதைப் பேணுகின்றான். இச்செயல்கள் இறைவன் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பாகா. இங்ஙனமே, மண்ணுலகில் இறைவனைப் படிநிகர்க்கும் அரசும், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மக்கட்டொகையை மட்டுப்படுத்துவதும் உண்மையான மதத்திற்கு மாறாகாது. ம. வி. 67. மாணவரும் அரசியற் கட்சியும் மாணவர் கல்வியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய பயிற்சியாளராயும் தத்தம் திறமைக்கும் மனப் பான்மைக்கும் ஏற்பப் பிழைப்பு வழி தேடும் முயற்சியாளராயும், பட்டறிவும் அகக்கரண வளர்ச்சி நிறைவும் பெறாத இளம் பருவத்தாராயும் இருப்பதால் அவர் அரசியற் கட்சிகளிற் சேர்தலோ சேர்க்கப்படுதலோ கல்வி நெறிக்கு மாறும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையும் ஆன கேடாகும். இதைக் கல்வியமைச்சன்மார் கண்டித்துத் தடுக்க வேண்டியிருக்க அதற்கு மாறாக அதை ஊக்குவது வேலியே பயிரை மேய்தல் போன்றாம். தமிழர் வ. 353. மாணவர் வேலை நிறுத்தம் குலச்சார்பாகவும் மதச்சார்பாகவும் கட்சிச்சார்பாகவும் இடச்சார்பாகவும் கருத்துச் சார்பாகவும் மாணவர் கூடிக் கொண்டு வேலை நிறுத்தம் செய்வதும் உண்ணா நோன்பிருப்பதும் மறியல் செய்வதும் ஆசிரியரை முற்றுகை யிடுவதும் அவரைப் பழிப்பதும் தாக்குவதும் கல்வி நிலைய உடமைகட்குச் சேதம் விளைப்பதும் மாணவர் மாண்பிற்குத்தகாத கல்லா மக்கள் கயமையாகும். ம. வி. 91. மொழிபெயர்ப்பும் புதுச்சொற்புனைவும் மேலையறிவியல் கம்மியக் குறியீடுகளையெல்லாம் மொழிபெயர்க்கவும் அவ்வப்போது வேண்டிய புதுச் சொற்களைப் புனையவும் அறிவியல் திறவோரும் தனித் தமிழ் வல்லுநரும் கொண்டு ஒரு நிலையான குழுவை அமர்த்தல் வேண்டும். த. இ.வ. 311 யாழ்ப்பாணம் தனிநாடு ஆங்கிலர் நீங்கும் வரை யாழ்ப்பாணம் தனிநாடாக இருந்தமையால் அந்த நிலைமை மீளவேண்டும். இன்றேல் தமிழும் சிங்களத்தோடொத்த ஆட்சி மொழியாதல் வேண்டும். ம. வி. 202 வணி இடைஞன் வேண்டா விளைப்பானுக்கும் விற்பானுக்கும் இடையில் மொத்த விலைஞன் அல்லது அரசு தவிர வேறோர் இடைஞனும் இருத்தல் கூடாது. ம. வி. 86. வரிசையறிதல் ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின் பாற்பட்டதே. செ. செ. 54:455 வழிபாட்டொழுங்கு 1. கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல். 2. அவ்வம் மத நம்பிக்கையும் தெய்வபத்தியும் கல்வித் தகுதியும் பணிப்பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள பலவகுப்பாரும் பூசகராக அமர்த்தப்பெறல். 3. பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர் மரபு (Hereditariness) நீக்கப் படல். 4. அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர்பதவியாளரும் பெருமக்களும் அரசரும் திருவுண்ணாழிகை அல்லாத கோவிலகத்துட் புகவுச் சீட்டுப் பெற்றுப் புகவிடல். 5. பெருங்கோவில்களின் வருமானத்தில் ஒருபகுதியைப் பொதுநலப்பணிக்குச் செலவிடல். 6. அறநிலையப் பாதுகாப்புத் துறையமைச்சர் கடவுள் நம்பிக்கையுடையவராயிருத்தல். 7. உருவிலா வழிபாட்டைப் படிப்படியாகப் பொது மக்களிடைப் புகுத்தல். த. ம. 194.5 வழியறியா வழிகாட்டி அறிவும் ஆற்றலுமில்லாத தற்குறிகளும், சிற்றறிவினரும் சட்டசபையராகி, பேரறிஞரையும் பெரியோரையும் ஆளும் சட்டஞ் செய்வது, பிறவிக் குருடரும் புரை படர்ந்த கண்ணரும் கூர்ங் கண்ணருக்கு வழிகாட்டுவதையே ஒக்கும். ம. வி. 36 வள்ளுவர் கூட்டுடமை ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடமை. ம. வி. 109. வாழ்க்கைக் குறிக்கோள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு சிறிதேனும் இன்பமாய் வாழ விரும்புவதாலும், அவ்வின்பத்திற்கு இன்றிய மையாது வேண்டுவது பொருளாதலாலும், அப் பொருள் பெற்றார் செய்ய வேண்டிய கடமை அறமாதலாலும் இம்மையில் மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் இன்பமும் பொருளும் அறமும் என மூன்றாகக் குறித்தனர் முன்னோர். த. தி. முன். 1 வாழ்நாள் நீடித்தல் திருவருள், பெற்றோர் உடற்கட்டு, நல்லுணவு, உடற்பயிற்சி, அகமலர்ச்சி, கவலையின்மை, சினமின்மை, நல்லொழுக்கம், அறிவுடைமை, வரம்புகடவாமை முதலியவற்றாலேயே மக்கள் வாழ்நாள் நீடிக்கும் என்பதை அறிதல் வேண்டும். த. தி. 55. வானத்து மீனுக்கு வன்தூண்டில் கடல்கோட்கு எஞ்சியுள்ள இற்றைத் தமிழ்நாட்டிற் கிறித்துவிற்குப் பிற்பட்டகோவிற் கல்வெட்டுக்களில் தொல் பொருட்டுறைச் சான்று காண முயல்வது வானத்து மீனுக்கு வன்தூண்டில் இட்ட கதையாகவே முடியும். தமிழ்நாட்டு வரலாற்றிற்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இம்மியும் பயன்படா தென்பதை அறிதல் வேண்டும். ம. வி. 1. வீண்செயல் படிமைமேற் படிக்கணக்காய்ப் பாலைக் கொட்டுவதும், பெருங்கலத்திற் கலக்கணக்காய் நெய்யை வார்த்து விளக் கெரிப்பதும் போன்ற வினைகளே பொருளழிப்பும் வீண் செயலுமாகும். ம. வி. 46 வீடமைப்பு உழவர் வீடுகளும் ஆயர் வீடுகளும் தொழிற்சாலைகளும் தவிர ஏனையோர் வீடுகளெல்லாம் மேனோக்கியன்றிப் பக்கவாட்டில் விரிவடைதல் கூடாது. ம. வி. 145 வீடுகட்டும்திட்டம் வீடு கட்ட நிலப்பரப்பைப் பயன்படுத்தாது வான் வெளியையே பயன்படுத்தி வானளாவிகள் (Sky crapers) எழுப்ப வேண்டும். நிலப்பரப்பைப் பயன்படுத்தின் பழனங்களையும் ஏரிகளையும் விட்டு விட்டுப் பாறை நிலத்திலும் கல்லாங் குத்திலும் முரம்பு மேட்டிலுமே கட்ட வேண்டும். விளைநிலங்கள் என்றும் விளை நிலங்களாகவேயிருத்தல் வேண்டும். தமிழர்வ. 353 வேலை நிறுத்தம் தக்க கரணியம் இருந்தாலன்றி வேலை நிறுத்தம் செய்தல் கூடாது. மேலாண்மையோடு ஏதேனும் பிணக்கு நேரின், முதற்கண் தொழிற்றுறையில் வல்லாரிடத்தும், பின்னர்த் தொழிற்றுறை யமைச்சரிடத்தும் முறையிடல் வேண்டும். அவ்விருவராலும் தீராவிடின் பின்னர்ப் பொதுமக்களிடம் முறையிடுதல் போல் முந்நாட்குமுன் தெரிவித்து, அமைதியாகவும் வன்செயலின்றியும் தனிப்பட்டவர் உடமைக்கும் அரசுடமைக்கும் சேதம் விளைக்காதும் ஊர்வலமும் கூட்டமும் நடத்தி வரல்வேண்டும், சில நாட்குள் ஏதேனும் ஓர் ஒழுங்கு ஆகத்தான் செய்யும். ம.வி. 81. பாவாணர் உவமைகள் ஆராய்ச்சி முன்னுரை சொல்லும் ஒன்றனை அழகுபடச் சொல்வது மட்டுமன்றிப், பயன் மிக்கதாகவும் சொல்ல வேண்டுமானால் உவமையைக் கையாளுதல் வேண்டும் என்பது அறிவறிந்த சான்றோர் உரை. தொல்காப்பியத்தில் உவம இயல் என்பது ஓர் இயல். அவ்வுவமை, உரைநடையினும் செய்யுட்கு மிகவேண்டத்தக்கது என்பாராய்ச், செய்யுளியலுக்கு முற்பட அதனை வைத்தார். ஆயினும், உரைநடையிலும் அவ்வுவமையின் பயன்பாடும் அழகும் பெரிதாம். உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என்று கூறும் தொல்காப்பியர், உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை எனவும் முற்படக் கூறியுள்ளார். முன்னது, உவமையின் ஒப்பாந்தன்மையையும், பின்னது, உவமையின் உயர்வாந்தன்மையையும் உரைப்பன. உவம இயல் முகப்பில் உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல் என்பார் பேராசிரியர். இளம்பூரணர் அம்முகப்பில், புலன் அல்லாதன புலனா தலையும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம்பயத்தலையும் எடுத்துரைப்பார். வினை (தொழில்), பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) என்னும் நான்கு கருத்து வகையாலும் உவமை தோன்றும் என்பர். ஓர் உவமையிலேயே இந்த நான்கும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது இல்லை. ஒன்று இடம் பெற்றிருப்பினும் உவமையேயாம். இதனைப் புலியன்ன மறவன் என்பது வினையுவமம்; அது பாயுமாறே பாய்வன் என்னும் தொழில்பற்றி ஒப்பித்தமையின். அற்றன்றித் தோலும் வாலும் காலும் முதலாகிய வடிவும் ஏனைவண்ணமும பயனும் ஒவ்வா என்பது எனவரும் பேராசிரியர் விளக்கத்தால் அறியலாம். உவமைகள் ஒரோ ஒரு பொருளான் அன்றி இரண்டும் மூன்றும் கொண்டு பாராவோ எனின் வருதல் உண்மையால், விரவியும் வரூஉம் மரபின என்ப என்றார் தொல்காப்பியர். தேன்மொழி என்றால் தேன்போலும் இனிய மொழி என்னும் இனிமைத் தன்மை ஒன்றுமே உவமையாயிற்று. தேன் இனிமையாவதுடன் கூட்டமும் மருந்துமாம்பயனும் செய்தலின் அத்தகு பயன் செய்யும் மொழி எனின், பண்பும் பயனும் ஆகிய இருவகை ஒப்புடைய தாயிற்றாம். இவ்வாறே பலவகை ஒப்புடையதாக உவமை வருவதும் உண்டு. இனி, ஒரு பொருளோடு ஒரு பொருளும், ஒரு பொருளோடு பலபொருளும், பலபொருளோடு ஒரு பொருளும், பல பொருளோடு பலபொருளும் உவமையாக வருவதுண்டு. பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளோடு பொருள் புணர்த் தொப்புமை தோன்றச் செப்புவ துவமை. என்பது தண்டியலங்காரம் (31) செவ்வான் அன்ன மேனி என்பது ஒரு பொருளோடு ஒரு பொருள். இலங்கு பிறை அன்ன விளங்குவால் எயிறு என்பது ஒரு பொருளோடு பலபொருள் பீடின்மன்னர் போலவாடை என்பது பலபொருளோடு ஒரு பொருள். சுறவினத்தன்ன வாளோர் என்பது பலபொருளோடு பலபொருள். சொல்ல எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். சொல்ல எடுத்துக் கொண்டதற்குக் கூறும் ஒப்புப் பொருள் எதுவோ அது, உவமை. இரண்டற்கும் பொதுவாய் அமைந்த தன்மை எதுவோ அது, பொதுத்தன்மை. இரண்டை இணைக்கப், போல, ஒப்ப, அன்ன, முதலான வற்றுள் வருவதொன்று எதுவோ அது, உவமை உருபு. இந்நான்கனுள் முன் மூன்றும் உவமையுள் கட்டாயம் இருத்தல் வேண்டும். இறுதியதொன்றும் வெளிப்படாமல் மறைந்திருத்தலும் உண்டு. ஆயினும், பொருள் விரிக்குங்கால் இயல்பாக அது வெளிப்படுவதாக இருக்கும். உவமை என்பதன் பொதுச் செய்தி சிலவற்றை இது காறும் அறிந்தோம். இனிப் பாவாணர்தம் உவமையாட்சி பற்றிச் சில குறிப்புகளைக் காணலாம். சிறு சிறு கட்டுகளாகக் கட்டிச் சேர்க்காதும் ஒரு பெருங்கட்டாகக் கட்டாதும் மாங்காயும் தேங்காயும் போல் அனுப்பிவிட்டார். ஆங்கிலநூல்2-ஆம் உலகப்போரை ஒழித்த அணுக்குண்டைப் போல் பிராமணியத்தை அடியோடு ஒழிப்பது தமிழியக்கம் வேறு; உ. த. க. வேறு, (அதன்) முயற்சி யானையைப் பூனை எதிர்ப்பது ஒத்ததே மொழித்துறையை மதத்துறையினின்று பிரிப்பது, உலகியலை மதவியலினின்று பிரிப்பது போன்றதே; கடவுளை நம்புகின்றவர் செய்கின்ற ஒவ்வொரு வினையும் அவனருளை முன்னாடியே செய்யப் பெறுவதால் வாழ்க்கை முழுவதும் ஈரியலும் அகங்கையும் புறங்கையும் போல் ஒன்றியே நிகழ்கின்றன. பாரிமீது மூவேந்தரும் பல்வேளிரும் போன்று திரு. கிருட்டிணனார் மீதும் சிங்கைத் தமிழ்ச் செல்வரும் அழுக்காறு கொண்டுள்ளனர் போலும் தோல் தமிழகத்தாயினும் அதனாற் செய்யப்படும் பாதக்கூடு மேனாட்டதே. அங்ஙனமே மூலம் தமிழாயிருப்பினும் சொல்லளவில் சிலவட சொல்லே இற்றைத் தமிழிலக்கியத்திற்கு ஆணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுதற்கு ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே பொன்னாடை போர்த்தினால் என்வருத்தம் மிகும் என்று சொல்லியிருந்தேன், அதுவுமன்றிப் பன்னாடை போர்த்தியது என் மனக்குறையைப் பன்மடங்காக்கியது. நானும் என் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம். அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. கடிதங்களிலேயே இத்தகு உவமைகளை எழுதும் பாவாணர், தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் எழுதியுள்ள உவமைகள் பலப்பலவாம். கூடிய அளவும் முயன்று தொகுக்கப் பட்டதே இத்தொகுப்பாம். இதில் விடுபாடுள்ளனவும் அருகிய அளவில் இருக்கலாம். கட்டுரைகளின் முழுமையான தொகுப்பும் கைப்படின் உவமைத் தொகுப்பும் முழுமையுறும் என்பது வெளிப்படை. பொருள் ஒழுங்கு கருதி இவ்வுவமைகள் எண் பகுப்பில் அமைக்கப்பட்டுள. இவ்வொழுங்கு ஒருசார் பொருந்துவ தாகவும் இருக்கலாம்; பிறிதோரிடத்து இணைக்கத்தக்கதாகவும் இருக்கலாம்; எனினும், வெளிப்பட விளங்கும் இயைபு பற்றியே ஒழுங்குறுத்தப்பட்டுள என்பது தகும். இனி, இந்நூலில் இடம் பெற்றுள உவமைகள் 212. கடிதங்களிலிருந்து இம்முன்னுரையில் மேலே எடுத்துக் காட்டியவை 9. ஆக, 221 உவமைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள. இவற்றுள், ஏழாம் பகுதியாக வரும் பொருள் விளக்கம் பற்றிய உவமைகள் 31. இவை அகரவரி முறையில்வைக்கப் பெற்றுள. மற்றவை பொருள் ஒழுங்கு முறையில் வைக்கப்பெற்றுள. ஒரு சில உவமைகள் சிலரை ஆட்படுத்தி அல்லது வயப்படுத்திப் பல்கால் வழங்குமாறு செய்ய வல்லன. அவ்வகையில் பாட்டன், பேரன், தாய், தந்தை மக்கள் என்னும் முறைப் பெயர்கள் பாவாணர் உவமைகளில் மிகப் பேரிடம் பெற்றுள. பக்கம் 1, 5, 13, 15, 16, 20, 22, 33, 40, 41, 43, 61 ஆகியவற்றைப் பார்க்க. அடிமணை (20, 24) மணிநோட்டம் (31) விண்ணக மீன் (4, 35) பால் (2, 19) என்பவை ஒருமுறைக்கு மேல் பயன் கொள்ளப் பெற்றுள. ஒருபொருளுக்குப் பலவுவமை கூறுதல் முதற்பக்கத்திற் காணலாம். ஓருவமை பலபொருளுக்கு ஆதல் பெயரன் பாட்டன் (13, 15, 16, 20, 22, 33) என்பவற்றில் காணலாம். இரட்டுறல் பொருள் வருமாறு உவமையமைத்தலைக் கூற்றும் கூற்றும் (6) காட்டும். உவமையில் தொன்மச்சுட்டு (புராணக்குறிப்பு) உண்மை, எத்தனையோ தென் சொற்கள் வடமொழிச் சென்று வாழ்கின்ற. அவை நளராங்காலமும் நண்ணும் என்பதால் விளங்கும். பாம்பு தீண்டுதலால் உருமாற்ற முற்ற நளன் தேரோட்டியாகத் தன் பெயரை வாகுகன் என வைத்துக கொண்டதும், பின்னே, கலியின் எல்லை முடிந்த காலை, மீளவும் நளனாகியதும் ஆகிய நளன் கதைச் செய்தி இவண் சுட்டப் பெற்றதாம். தென் சொற்கள் வடசொற்களாக உருமாறியதும், மூலமொழியாய்வுத் தலைப்பாட்டால் அவ்வுருமாற்ற வடசொற்கள் மீளவும் தமிழ்ச் சொற்களாக மாற்ற முற்றுவருவதும் ஆகிய மீட்பு நிலை கருதின் இவ்வுவமையின் அருமையும் ஆழமும் புலனாம். பாவாணர் வரிசையில் முதன் முதல் வெளிப்பட்டது பாவாணர் கடிதங்கள் என்பது. அடுத்து இதுகால்வருவது பாவாணர் உவமைகள் என்னும் இச் சுவடி. அடுத்து வெளிவர இருப்பவை. பாவாணர் பொன்மொழிகள் பாவாணர் வேர்ச் சொற்சுவடி என்பவை. பாவாணர்பாடல்கள் பாவாணர் மடல்கள் என்பவை அச்சுக்கு அணியமாகவுள. இவ்வெல்லாம் பாவாணர் வரலாற்றுக்குக் கருவிநூல்களாக அமைவன. பின்னே பாவாணர் வரலாறு வெளிப்படும். பாவாணரைப் பற்றிப் பிறர் உரைத் தவையும் தொகுக்கப் பெற்று வருகின்றன. நூலளவுக்குத் தக்க தொகுப்பு வாய்த்தபின் அஃதுருப்பெறும். பாவாணர் புலமை நலங்கண்டு 1931 முதலே அவரைத் தமிழுலக வைப்பாக ஆக்கியபெற்றியும் பெருமையும் ஒருங்கே உற்ற பெருந்தகை, மேனாள் கழக ஆட்சியர் தாமரைச்செல்வர் வ.சு. அவர்கள். வல்லான் வகுத்த அவ்வாய்க்கால், வழியே வழியாகச் சென்று பாவாணர் வரிசை வெளிப்பட ஏந்தாக இருப்பவர் இந்நாள் ஆட்சியாளர் திருமிகு இரா. முத்துக் குமாமரசாமி அவர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். பாவாணர் ஆராய்ச்சி நூலகம் தமிழ்த்தொண்டன் தமிழ்ச் செல்வம் இரா. இளங்குமரன் திருநகர், மதுரை-6 27.3.86 குறுக்க விளக்கம் இ.இ. - இயற்றமிழ் இலக்கணம் இ.த.எ.கெ. - இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? ஒ.மொ. - ஒப்பியன் மொழி நூல் சு.வி. - சுட்டு விளக்கம் செ.செ. - செந்தமிழ்ச் செல்வி சொ. ஆ.க. - சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் த.இ.வ. - தமிழ் இலக்கிய வரலாறு த.க.கொ.த - தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? த.ச.பொ.வி. - தமிழ்ச் சங்கப் பொன் விழா த.தி. - தமிழர் திருமணம் த.ம. - தமிழர் மதம் தமிழர்.வ. - தமிழர் வரலாறு த.வ. - தமிழ் வரலாறு தி. தா. - திரவிடத்தாய் திருக்.மர. - திருக்குறள் மரபுரை தெ.மொ. - தென் மொழி ம.வி. - மண்ணில் விண் மு.க. - முகவுரை மு. தா. முதல் தாய்மொழி முன் - முன்னுரை வ.மொ.நூ.வ. - வண்ணனை மொழி நூலின்வழுவியல் வ.வ. - வடமொழி வரலாறு வேர்ச். - வேர்ச் சொற் கட்டுரைகள் 1. தமிழ் தமிழ்மொழி தமிழ், உலகின் முதன்முதல் தானே தனியாகத் தோன்றிய மொழியாதலால் நீண்ட காலமாகச்சிறப்புப் பெயரின்றி மொழி என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிவந்தது. ஓர் ஊரில் ஒரே ஆறு இருப்பின் ஆற்றிற்குப் போய்வந்தேன் என்றே சொல்வர். அதுபோல் ஒரே மரமிருப்பின் மரத்தடிக்குப்போ என்றே சொல்வர். இங்ஙனம் தமிழும் தமிழகத்தில் ஒரே மொழியாய் இருந்ததனால் மொழியொன்றே முதலில் வழங்கிற்று. தமிழர் வ. 92 ஆறும் மொழியும் ஒரு நாட்டில் ஒரே மொழி வழங்குமாயின் அதற்குச் சிறப்புப் பெயர் தோன்றாது. பேச்சு அல்லது மொழி என்னும் பொதுப் பெயரே அதற்கு வழங்கும். ஓர் ஊரில் ஒரே ஓர் ஆறிருப்பின் அதை ஆறென்று பொதுப்பெயராலேயே குறிப்பர். இங்ஙனமே மலை குளம் மரம் முதலிய பிறவும் ஒன்றேயொன்றாயிருப்பின் பொதுப்பெயராலேயே குறிக்கப் பெறும். த.வ. முன். 37 தாயும் தாய்மொழியும் ஒரு மரத்தில் சிறு கிளைகட்கு நேர் இயைபுஇன்றேனும் அவற்றைத் தாங்கும் பெருங்கவைகட்கு, அடிமரத்துடன் நேர் இயைபு இருப்பதுபோல, உலகமொழித் தொகுதிகட்குள் சிறு பிரிவுகட்கு நேர் இயைபின்றேனும் அவற்றிற்கு மூலமான பெரும் பிரிவுகட்கு நேரியைபு திட்டமாயுள்ளதாம். எல்லாக் கிளைகட்கும் மூலமான ஓர் அடிமரம் இருப்பதுபோல எல்லா மொழிகட்கும் மூலமான ஒருதாய்மொழியு மிருத்தல் வேண்டும். உலகத்திலுள்ள மக்களெல்லாம் ஒரு தாய்வழியினராதலின் அவர் வழங்கும் மொழிகளும் ஒருதாய் வயிற்றுவழியினதாதல் வேண்டும். மொழியாராய்ச்சி. செ. செ. 9.275 கறந்த பாலைக் காம்புக் கேற்றல் திராவிடம் என்னும்சொல் முதலாவது தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப் பனுவல் திராவிட வேதமென்றும், மெய்கண்டான் நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகலவுரை திராவிட மாபாடியம் என்று பெயர் பெற்றுள்ளது வென்றும், தனித் தமிழாராய்ச்சியில்லாத பண்டை நிலைமையைக் கூறி, தமிழ் நாட்டையும் பிரிந்துபோன திராவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர் கறந்த பாலைக் காம்பிற்கு ஏற்றுபவரேயாவர். ஆயின்,. அரசியற் கொள்கை ஒப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒருவட்டாட்சி அமைக்கலாம். த.வ. 29 பால் தயிராதல் பால் பிரைக் கலப்பால் தயிராகத் திரிவது போல், திராவிட மொழிகளும் வடசொற்கலப்பாலும், வல்லொலியாலும் அரை யாரிய வண்ணமாக மாறிவிட்டன. தயிர் மீண்டும் பாலாகாதது போல் திராவிடம் மீண்டும் தமிழாகா. இ.த.எ.கெ. 36 தயிர் பாலாகாது தியூத்தானியம் (Teutonic) என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம் தச்சம் (Dutch) ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப ஒன்று சேராவோ அங்ஙனமே தென்மொழியம் என்னும் வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும் ஒன்று சேரா பால் திரிந்து தயிரானபின் மீளப் பாலாகாததுபோல், தமிழ் திரிந்து திரவிடமானபின் மீளத் தமிழாகாது. இங்கு மொழிகட்குச் சொன்னது நாடுகட்கும் ஒக்கும். த.வ.முன்.29 காசி காஞ்சித் தொடர்பு வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந்திராமையானும், இற்றை வங்கமொழி ஆரியவண்ணமாய் மாறியிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு காசி என்னும் பெயர்க்குக் காஞ்சியென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது. த.வ.முன்.34 மூவேந்தரும் முப்பேராசிரியரும் முற்காலத்தில் தமிழைக் கெடுத்தவர் பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் அரச வேள்விவேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் போலும் மூவேந்தர்; இக்காலத்தில் தமிழைக் கெடுப்பவர் முத்தலைமைத் தமிழ்ப் பேராசிரியர். த.வ. 300 வழக்காடியும் எதிர் வழக்காடியும் வடமொழி தமிழைத்தாழ்த்தித் தொன்றுதொட்டு அதற்குரிய அரியணையில் தான் இருந்து வருவதால், அதனைத் தாக்காது தமிழைக் காக்க முடியாது. வட மொழியைத் தாக்காதே தமிழை வளர்க்க வேண்டும் என்பார் வரலாற்றை அறவே அறியாதார் வடமொழிக்கும் தமிழுக்கும் இடைப்பட்ட உறவுநிலை வழக்காடிக்கும் எதிர் வழக்காடிக்கும் அல்லது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு வழக்காடி தன் எதிர் வழக்காடியைத் தாக்காது தன் வழக்கில் வெல்ல முடியாதோ, அங்ஙனமே தமிழையும் வடமொழியை விலக்காது அல்லது அதன் உயர்வொழிக்காது வளர்க்க முடியாது. த.வ.300 உரிமையை நாட்டல் தமிழுக்கும் ஆரியம் என்னும் சமற்கிருதத்திற்கும் இடைப் பட்ட உறவு தன்உரிமை இழந்த வழக்காடிக்கும் பிறன் உரிமையைக் கவர்ந்த எதிர் வழக்காடிக்கும் இடைப் பட்டதாதலால் ஒரு வழக்காட்டோ போராட்டமோ இன்றித் தமிழை வடமொழியினின்று மீட்க முடியாது. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. மு. மொழி. 1.1:4 உயிரும் உடம்பும்: ஆடையும் அணியும் தமிழல் திராவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையும் முக்கியமுமான பகுதிகளிலெல்லாம் தமிழே யென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புற வணியில்மட்டும் ஆரியந் தழுவினவென்றும் அவ்வாரியமும் தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும் வட மொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரியதோர் ஏமாற்ற மென்றும் தெரிந்து கொள்க. தி. தா. 112 வானத்து மீனுக்கு வன்தூண்டில் இந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப்புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும் வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமேயாகும். தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள். செ.செ. 52:248 கொற்றெருவில் ஊசிவிற்றல் சென்ற நூற்றாண்டிறுதியில் ஒலியன்களைக் கண்ட மேலை மொழிநூலார் தமிழருக்கு ஒலியன்களைக், கற்பிக்க வந்தது கொற்றெருவில் ஊசி விற்பதே. செ.செ. 50:91 திரைப்பட நடிகையர் உடை வண்ணனை மொழிநூல் புதிதாக வந்ததென்று அதைப் போற்றுவது, திரைப்பட நடிகையர் மேற்கொள்ளும் மானக் கேடான புதிய உடைமுறைகளையெல்லாம் புது நாகரிகக் கோலமென்று புகழ்வதையே ஒக்கும். வ. மொ. நூ. வ. 105 அவலை நினைத்து உரலை இடித்தல் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துக்களையும் தமிழிற் புகுத்தின், தமிழ் நாளடைவில் மலையாளம் போல் வேறொரு திராவிட மொழியாக மாறிவிடும். அதன் பின் அதைத் தமிழென வழங்குவது அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போன்றதே. ம.வி. 236 மகளும் தாயும் மகள் தாயைப் பெற்றாள் என்னும் முறையில் இயற்றமிழ் வடமொழி வழியதென்றும், இசைத்தமிழ் கருநாடக சங்கீத வழிய தென்றும், நாடகத் தமிழ் பரத சாத்திர வழியதென்றும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் உலவியும் ஓரளவு நிலவியும் வருகின்றன. பழந்தமிழ் இசை. பதிப்புரை விளம்பர உத்தி வணிகத் துறையிற் போன்றே மொழித் துறையிலும், ஒரு மொழி விளம்பரத்தினால் உயர்வதும் இன்னொருமொழி அஃதின்மையால் தாழ்வதும் நேர்கின்றன. தம்பொருளை விளம்பரஞ் செய்வார் பிறர்பொருள் விளம்பரத்தைப் பலதீய வழிகளில் தடுப்பதும், எல்லாத் துறையிலும் வழக்கமாயிருந்து வருகின்றது. வ.மொ.நூ.வ.முக.3 போலித்தமிழ்ப்பற்று அயன்மொழிப் பெயரை மாற்றாது தமிழ்ப் பற்றுக் காட்டுவதெல்லாம், பெற்றோர்க்கு ஓரளவு உதவினும் அவரைப் பிறரிடத்து மற்றோராகக் காட்டி மறைப்பதும் போன்றதே. தெ. மா. 7:1:12 இருவகைப் பகைவர் தமிழைக் கெடுக்கும் தமிழ்ப் புலவர், வாள்போற் பகைவரும்; கேள்போற் பகைவரும் ஆக இரு சாரார். த.வ. 300 வாளும் கேளும் தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள் போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. முதன்மொழி 1.3 :6 எலும்புத் துண்டு (தமிழ் நலத்தைக் கருதாது தம் நலம் ஒன்றையே தன்மை கருதிச் சொற்பொழிவாற்றும் புலவர்) தனக்கு ஒரு சூப்பெலும்புத் துண்டு கிடைக்குமாறு தன் தந்தை மரத்தினின்று கீழ் விழுந்து காலொடிவதை விரும்பிய சிறுமியின் தன்மையையே ஒக்கும். வ.மொ.நூ.வ. 56 கூற்றும் கூற்றும் நேர்நின்று காக்கை வெளிது என்பாரும் தாய்க்கொலை சால்புடைத்து என்பாரும் தமிழை ஒழிக்கத் தயங்கார். ஆதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற்றென்றே கொள்ளுதல் வேண்டும். த.க.கொ.த.21 சண்டிக் குதிரையும் பட்டிமாடும் (மேலையர்) தமிழர்போல் ஒரு சிறந்த இலக்கண நடைமொழியை அளவைப் படுத்திப் பேச்சு வழக்கையும் பலுக்கல் (உச்சரிப்பு) முறையையுங் கட்டுப்படுத்தாது, சண்டிக் குதிரையும் பட்டிமாடும்போல் போன போன போக்கெல்லாந் திரியவிட்டு, கீழோர் வழக்கையும் மேலோர் வழக்கொப்பக் கொண்டு அவற்றை எழுத்து வடிவில் எழுதிக் காட்டவும் வழியின்றி இடர்ப்படுவது எத்துணைப் பண்பாடற்ற செயலாம். வ. மொ. நூ. வ. 100 செம்மை வரம்பு மொழிக்குச் செம்மை வரம்பிடாது வாய்போன போக் கெல்லாம் பேச்சுத்திரியவிடின், அது குதிரைபோல் ஓரிடத்து நில்லாது காடு மேடாய் இழுத்துச் செல்லும்; இறுதியில் குழிக் குள்ளும் தள்ளும். புதுப்புது நடைதோன்றிப் பழநடை வழக்கு வீழும். பண்டை இலக்கியம் பயனற்றுப்போம். வ.ச. பவளவிழா மலர். செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு. 4 மொழி நடையும் வாழ்வு நடையும் எல்லா வகையிலும் மேன்மக்கள் நடையையே கீழ் மக்கள் பின்பற்றல் வேண்டும். கீழ்மக்கள் பேச்சை ஒப்புக்கொள்ள வேண்டும் எனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளின் ஆட்சியும் காவலும் வழக்கும் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதே யில்லை. வ.சு. மவளவிழாமலர், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு.4 பயனும் திருத்தமும் கருத்தறிவிப்புத் தானே மொழியின் பயன்! எந்நடையிற் பேசினாலென்ன? என்பர் சிலர். அது, பசியைப் போக்குவது தானே உணவின் பயன்! எங்ஙனம் பல் துலக்காதும், குளியாதும், அடுகலத்திற்குள் கையிட்டும் உண்டாலென்ன? என்று வினவுவது போன்றிருக்கிறது. ஆறறிவு படைத்த நாகரிகமாந்தன் எவ்வினை செய்தாலும் திருத்திய முறையிலேயே செய்தல் வேண்டும். பவள விழாமலர், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு 4 ஊதாரி தமிழுக்கு இம்மியும் உதவாது பிறமொழி வளர்ச்சிக்கு ஏராளமாய் வாரிக் கொடுக்கும் தமிழ அரசனை அல்லது செல்வனை ஊதாரி எனின் அது மிகப் பொருத்தமே. வேர்ச். 98 கதிரோன் வெளிப்படல் கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒரு நாள் திகழ்ந்து தோன்றுவதுபோல் தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. மதி.தா.முக.3 2. தமிழ்ப்புலவர் தமிழ்ப்பயிர் 1916 ஆம் ஆண்டு, மறைமலையடிகளும் அவர்களின் அருமை முதன்மகளார் நீலாம்பிகை யம்மையாரும் வட சொல்லுள்ளிட்ட வேற்றுச் சொற்களைக் களைந்து நல்லுரமிட்டு நன்னீர் பாய்ச்சிக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்க்கத் தொடங்கியதினின்று தமிழ்ப் பயிர் தழைத்தோங்கி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. அதே சமயத்தில் அகப்பகையும் புறப்பகையுமான பல்வகைத் தமிழ்ப் பகை வரும் வேற்றுச் சொற்களை மீண்டும் மீண்டும் ஊடு ஆயினும் தாம் விதைத்துக்கொண்டும் விலங்கு பறவைகளை ஏவிக்கொண்டும் வரத்தான் செய்கின்றனர். படுதோல்வி யடைந்து அடியோடு அழிந்தொழிந்து போவது அண்ணணித்தே. மறைமலையடிகள் நடை ஓதிம (அன்ன) நடையினும் மாதர் நடையினும் உயர்ந்த அழகுள்ளது மறைமலையடிகள் நடையாகிய செந்தமிழ் நடை. வ.சு. பவளவிழாமலர். செந்தமிழ் வலம்பீட்டின் சிறப்பு 3 அமைதிவாரி அன்ன அடிகளார் உலக மொழிகள் (ஏறத்தாழ) மூவாயிரத்துள், ஒருபோதும் வழங்கா இலக்கியப் பெருமொழி என்னும் வகையிற் சமற் கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர் தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும் தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரெனும் அவரனைவருள்ளும் எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று. மறைமலையடிகள் நூற்றாண்டு விழாமலர். மறைமலையடிகளின் மும்மொழிப்புலமை. 11 பனிமலை மறைமலை இருபதாம் நூற்றாண்டில் பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே. தெ. மொ. 7,9:12 பெரியாரைப் பேணாமை சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். திருக். மர. 976 தொல்காப்பியரும் சாமிநாதையரும் பாரதக் காலத்திற்குப் பிற்பட்டவரும், ஐந்திரவிலக்கணத்தை நன்கு கற்றவரும் பாணினிக்கு முற்பட்டவருமான தொல்காப்பியர், கி.மு. 7-ஆம் நூற்றாண்டு போல் சேரநாட்டின் தென்கோடியில் வாழ்ந்திருந்து தமிழிலக் கண இலக்கியங்களைக் கற்றபின் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர் போற் பல செந்தமிழ் முந்து நூல்கண்டு முறையாக ஆய்ந்து தம்பெயரால் தொல்காப்பியம் என ஒரு பிண்ட நூலைத் தொகுத்து நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக் களத்தில் (அக்காலத்தில் கழக மின்மையால்) திருவங் கோட்டில் நான் மறையில் முற்றத் துறைபோயிருந்த ஓர் ஆரியத் தமிழ்ப் புலவர் தலைமையில் அரங்கேற்றினார். த.வ. 282 விறகுத் தலையன் போல் ஏடுசுமத்தல் காவிரி வாய்ப்படவும் கறையான் வாய்ப்படவும் இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை ஊரூராகவும் தெருத் தெருவாகவும் வீடு வீடாகவும் திரிந்து தேடியும் விறகுத் தலையன்போல் தலையிற் சமந்து கொணர்ந்தும் அல்லும் பகலும் கண்பார்வை கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும் அரியஆராய்ச்சிக் குறிப்புக்களும் ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும் ஆராய்ச்சி யாளர்களுக்குப் பேருதவியாகவும் பிறர்க்குப் பெரும் பயன்படவும் வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர் பண்டாரகர், உ.வே. சாமி நாதையரே. த.வ. 294 சூறாவளிபோற் சுழற்றி எறிதல் சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியக் குறிப்பை மறுத்து, சூறாவளி போற் சுழற்றி எறிந்தவர் மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளையே. த.வ. 295 வெம்பாலைத் தண்சோலை பொறுப்பு வாய்ந்த உயர்பதவித் தமிழாசிரியரெல்லாம் ஊமையராயும் செவிடராயும் எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்றிருக்கும் இக்காலத்தில் ஓய்வு பெற்ற அரசியலதிகாரியார் ஒருவர் (கு. கோதண்ட பாணிப் பிள்ளை) வெம்பாலைத் தண் சோலையும் கடும் பஞ்சத் திடிமழையும் போல எதிர் பாராத வகையில் இசைத் தமிழைக் காக்கத் துணிந்தது இறைவன் ஏற்பாடே என்பது என் கருத்து. பழந்தமிழிசை. மதிப்புரை. 26 ஒப்புரவு வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன் கொண்டு ஒப்புரவாற்றியது இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார், கடனறி காட்சி யவர் என்பதற்கோர் எடுத்துக் காட்டாம். திருக். மர. 218 நாளும் கோளும் பார்த்தல் நாள்கோள்களின் இயக்கத்தால் மழையும் மழையின் மையும் போல நன்மை தீமை விளைவது உண்மையாயினும், அவ்விளைவை அவ் இயக்கத்திற்குக் காரணமான எல்லாம் வல்ல இறைவன் ஏற்பாடாகக் கொள்வதல்லது ஞாலம் போல் உயிரற்ற அஃறிணையிடப்பொருள்களாய நாள்கோள்களின் செயலாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்? தமிழ்நாட்டுக் கீழைக் கரைப் புயற் சேதத்தால் துன்புற்ற மக்கட்குச் சென்னை மாகாண முதலமைச்சர் மதிதகு காமராச நாடார் புகைவண்டி வாயிலாய் நடைப்பரிகாரம் அனுப்பினாரெனின், அம் முதலமைச்சர்க்கு நன்றி கூறுவதல்லது அப் புகைவண்டிக்கு நன்றி கூறுவது பொருந்துமோ? த.தி. 53 துறவியும் ஆண்டியும் செல்வத் தொடர்பிருந்தும் சிறிதும் பற்றின்றிச் செல்வத்தைத் திருத் தொண்டிற்கும் பொது நலத்திற்கும் பயன்படுத்தி, தவத்திருக் குன்றக்குடியடிகள் போல் இடையறாது எழுத்தாலும் சொல்லாலும் மக்கட்கு அறிவுறுத்திவரும் துறவியர் ஒரு சிலரே, துவராடை யணிந்து இரந்து பிழைப்பவர் ஆண்டியரேயன்றித் துறவியராகார். திருக. மர. துறவு. முக. 3. பிறமொழி ஆனை கொன்றான் ஆனை கொன்றான் என்னும் மலைப்பாம்பு ஓர் யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று, இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்வி விட்டது. த. இ. வ. நூ. மு. இரவலன் புரவலனாதல் ஆரியர் வருமுன்பே தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கும் ஏற்ற பலதுறையிலும் உயர்நாகரிக மடைந் திருந்தனர். தமிழர் கண்ட கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் பெயர்க்கப்பட்டும் விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலையறிஞர் இதையறியாது இந்திய நாகரிகம் முழுதும் ஆரியரதென மயங்கிவிட்டனர். இஃது, ஓர் இரவலன் தன் சூழ்ச்சியாற் புரவலனான பின், அவனை அரசர் குடிப்பிறந்த வனாகக் கருதுவதொத்ததே. வ.வ. 32 விளக்கிலா இருள்வழி ஆரியர் வருமுன்னரே தமிழ் முத்தமிழாய்வழங்கிய தாதலின், ஒருவர் எத்துணைக் கலைபயில்தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் வாய்ந்தவர் எனினும் ஆரிய வேதங்களை இசை முதனூலாகக் கொண்டு ஆராயின் விளக்கின்றிப் புத்திருள் வழி போவார் போல் இடர்ப்படுவாராவர். குரலே சட்சம். செ.செ. 20, 33 பெயரன் பாட்டனைப் பெற்றான் கீழையாரியமும் வட இந்தியப் பிராகிருதமும் சேர்ந்து வேதமொழியும், தமிழும் வேதமொழியும் சேர்ந்து சமற்கிருதமும் அமைந்திருக்கவும் பெயரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்னும் தலைகீழ் முடிபிற்கு உந்தப்படுவது, தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்று கொள்ளும் அடிப்படைத் தவற்றினாலேயே. வ.வ. 47 அரத்தம் - அரங்கன் வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லே யென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றியிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு அதைத் தமிழ்முறைக் கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. வேர்ச். 62 வடக்கும் தெற்கும் இயல்பிலும் போக்கிலும் வடமொழியும் தென்மொழியும் வடக்கும் தெற்கும் போல் நேர்மாறானவை. செ. செ. 31. 178 நௌ - நாவாய். கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நிலவழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவருமாகிய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வடசொல்லினின்று நாவாய்ச் சொல்வந்த தென்பது, வாழைப் பழத் தோலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே. தெ. மொ: 4. 3: 16 வீணையும் யாழும் வீணை என்னும் பெயர் வேறுபாட்டானேயே யாழ்வேறென்று கொள்வது விருத்தாசலத்தின் வேறு பழமலை (முதுகுன்றம்) என்று கொள்வதேயாம். குரல் சட்சமே, மத்திமமன்று செ. செ. 20. 466 மகன் தந்தையைப் பெற்றான் இலக்கணம் என்னும் சொல்லே வடமொழியில் லக்ஷிண என்று திரியும். இதற்கு மாறாக மகன் தந்தையைப் பெற்றான் என்பது போல லக்ஷணம் வடசொல்லே தமிழில் இலக்கணம் எனத் திரிந்தது என்று பல்கலைக்கழக அகராதியிற் குறித்திருப்பதும், இவ்வுலகிலேயே இலக்கணவரம்பும் வளர்ச்சியும் மிக்குப் பிறமொழிகட்கெல்லாமில்லாத பொருளிலக்கணம் பெற்றதென்று பாராட்டப்படும் தமிழுக்கு இலக்கணத்தைக் குறிக்க ஒரு சொல்லுமில்லையென்று தமிழ்ப் பகைவரான அயலார் கூறுவதை, ஆராய்ச்சியும் உரிமையுமிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்ப் புலவர் நம்பிக்கொண்டு அடங்கி யிருப்பதும் விந்தையிலும் விந்தையே. சு. வி. 32 பேரனே பாட்டனுக்கு முன்னவன் பேரனே பாட்டனுக்கு முன் பிறந்தான் என்பது. போன்று, வடமொழியினின்றே தமிழுக்கு ஐகார ஔகாரங்கள் வந்தன என்று சொல்வதனாலும், அதுகண்டு மாணவர் பலர் மயங்கு வதனாலும் அம்மயக்கறுக்கவே இதனை எழுதத் துணிந்தேன். ஐ ஔ அய் அவ் தானா? செ. செ. 53; 273 காரிருளிற் காட்டு வழிக் காட்சி முதலில் முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங் களுக்கும் உரிய எல்லா வினை வடிவிற்கும் பொதுவாயிருந்தது; பின்பு, பாலீறும் காலவிடைநிலையும் எச்சமுற்று வேறுபாடும் முறையே தோன்றின. இவ்வுண்மையெல்லாம் தமிழ்போன்ற இயன்மொழி வாயிலாகவே அறிய முடியும். சமற்கிருதம் போன்ற திரிமொழியையும் செயற்கை மொழியையும் அடிப்படையாய் வைத்தாராயின், ஐரோப்பியராயினும் அமெரிக்கராயினும் காரிருளிற் காட்டு வழிச்செல்வார் போல் ஒன்றுங் கண்டறியார். த.வ. 60 பேரன் பாட்டனைப் பெற்றவன் உலகப் பெருமொழிகளில் வடமொழி, திரிபு முதிர்ந்த தாதலின், அதனைக் கொண்டு மொழியின் இயல்பான தோற்றத்தை அறிய விரும்புவார், பேரன் பாட்டனைப் பெற்றவன் என்று கொள்ளுபவரே யாவர். சு. வி. 2 நெய்யும் தொன்னையும் நெய்யே தொன்னைக் காதாரம் என்பது போலத் திரிபிற் சிறந்த வடமொழியை இயன் மொழியாகக் கொள்வாரே வாக்கியத்தை மொழியலகாகக் கொண்டு இடர்ப்படுவர். சு. வி. 6 வாகுகன் நளன் எத்தனையோ தென்சொற்கள் வடமொழிச் சென்று வாகுகராய் வழங்குகின்றன. அவைநளராங் காலமும் நண்ணும். வட மொழிச் சென்ற தென்சொற்கள். செ. செ. 9.308 அஃறிணை உயர்திணை அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மான மூட்டி மீண்டும் உயர்திணைப் படுத்தியவன் ஆங்கிலேயனே. த.வ. 338 ஆங்கிலத்தின் சிறப்பு ஆங்கிலம் தானே இங்கு வந்திராவிடின், இந்தியர் மேனாடு சென்று வருந்தித் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நிலைமை நேர்ந்திருக்கும். அதுதானே இங்கு வந்ததனால் வலிய வந்தாற் கிழவி என்பதுபோல் அதன் அருமை பெருமை அறியப் படாதுள்ளது. இற்றை அறிவியற்கெல்லாம் அடிப்படையான நீராவி வலிமையும் மின்னாக்கமும் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மொழியாகிய ஆங்கிலம் இந்தியர்க்குக் கிடைத்தது இறைவன் பேரருள் என்றும் ஆங்கிலர் வண்கொடையென்றும் வலிய வந்த வானமுதம் என்றும் போற்றத் தக்கதாம். ம.வி. 164 ஊமையன் கனா ஒருவர் இன்று திருவள்ளுவரும் கம்பரும் போல் பெரும் புலவராயிருப்பினும் ஆங்கிலப் பட்டமின்றிக் கல்லூரிக்குட் கால்வைக்க முடியாது. ஒருவர் எத்துணை ஆழ்ந்து பரந்தாராய்ந்து அரியவுண்மைகளைக் கண்டிருப்பினும் ஆங்கில அறிவின்றேல் ஊமையன் கண்டகனாவே. ம.விஇ. 177 மருத்துவரும் உடல்நலமும் ஓர் உணவுப் பொருள் உடல் நலக்கேடான தென்று ஒரு நாட்டுத் தலைமை மருத்துவர் கூறின், அதற்கு மாறாக அப் பொருளை விற்குங் கடைக்காரன் அல்லது அவனுடைய வேலைக்காரன் சொல்லுவது செல்லுமோ? இந்தியால் தமிழ் கெடும் என்றறிந்தே இந்தி பொது மொழியா? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத் தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்மிழ்ப் பெருமை. இ.த.எ.கெ. 43 பித்துக் கொண்ட பெற்றோர் இக்கால வாழ்விற்கு இன்றியமையாத ஆங்கிலத்தைக் கல்லாது இந்தியார்தாமே தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள விரும்பின், அதைத் தடுக்கத் தமிழர் ஏன் இந்திக் கல்வித் தண்டனை அடைய வேண்டும்? செல்லப் பிள்ளை முரண்டுகொண்டு சோறுண்ணாவிடின், பித்துக் கொண்ட பெற்றோர் அதைச் சோறுண்ண வைக்கும்படி அது கேட்டதை யெல்லாம் கொடுப்பர். சொன்னபடி யெல்லாம் செய்வர். ஆயின் பிறர் அங்ஙனம் செய்வரோ? இ.த.எ. கெ 44 தெற்கும் வடக்கும் இந்தியார் இந்தியை ஒரே இந்திய ஆட்சிமொழியும் இணைப்பு மொழியுமாக்க வேண்டும் என்பதை எவ்வகையிலும் மாற்றொணாக் கொள்கையாகக்கொண்டிருக்கும் போது வடக்கும் தெற்கும் போல் நேர்மாறாக வேறுபட்டிருக்கும். இருசாராரையும் எங்ஙனம் ஒப்புர வாக்க இயலும்? நிலவரைப்பு ஒன்றாயிருந்தால் மட்டும் போதுமோ? தவளை தண்ணீர்க்கும் எலிதிட்டைக்கும் இழுக்கும் போது இரண்டையும் இணைக்கும் கயிற்றால் என்னபயன்? வண்டியிற் பூட்டிய இருகாளைகளுள் ஒன்று வடக்கும் ஒன்று தெற்குமாக இழுக்கும்போது இரண்டையும் இணைக்கும் நகக் கோலால் என்ன பயன்? இ.த.எ.கெ. 45 புகைவண்டியும் கட்டை வண்டியும் வடவர் ஆங்கிலம் கற்பதால் தென்னவர் இந்தி கற்க வேண்டும் என்று புதிதாக உத்திக்குச் சிறிதும் பொருந்தா வகையில் தருக்கிவருகின்றனர். இது இந்தியா அமெரிக்கா ஒன்றிய நாடுகளை (U.S.A) நோக்கி, நான் உங்கள் புகைவண்டிச் சூழ்ச்சியங்களை (Engines) விலைக்கு வாங்குவதால், நீங்கள் என் கட்டை வண்டிகளை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று சொல்வது போன்றன்றோ இருக்கின்றது. இ.த.எ.கெ. 48 தூக்குத் தண்டனை நேரு உறுதிமொழி, இந்தித் திணிப்புபிந்தி நிகழும் என்பதேயன்றி நீக்கப்படும் என்பதன்று. இது மும்மொழித் திட்டத்தை மேற்கொண்ட திராவிட நாடுகட்கே ஏற்கும். இருமொழித் திட்டத்தைக் கொண்ட தமிழ் நாட்டிற்கு ஏற்கவே ஏற்காது. ஆதலால் அது தனித்தே உடனடியாக முழு வலிமையுடன் இந்தித் தொடர்பை எதிர்த் தொழித்தல் வேண்டும். தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று சொன்னவனுக்கு ஒரு கிழமை பொறுத்துத் தூக்குவோம் என்பது நன்மை பயக்கும் விடையன்று. த.இ.வ. 309 சாவு வரும் நாள் இந்தி வெறியர் இந்தியை உடனே அரசியல் மொழியாக்க வேண்டும் என்கின்றனர். தமிழ் நாட்டுப்பேராயம் சற்றுப் பிந்தியாக்க வேண்டும் என்கின்றது. தி.மு.க. மிகப் பிந்தியாக்க வேண்டும் என்றது. இது ஒருவனுக்குச் சாவு இன்றே வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை நின்று வரட்டும் என்று ஒரு சாராரும் கூறுவதொத்ததே. இ.த.எ.கெ. 37 நஞ்சொடு கலந்த பால் பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே. தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரின் தன்னலக் குறும்பு பாவை. புதுவேட்டுவன் புலிவேட்டைக்குச் சென்ற புது வேட்டுவன் புலித் தடங்கண்டு அஞ்சி ஓடி வந்துவிட்ட கதைபோல் இந்தி யெதிர்க்கத் தில்லி சென்ற சென்னை இந்தி யெதிர்ப்பு மாணவரும் தேசியப் பேராயமாணவர் போன்றே நேரு உறுதி மொழியை நிறை வேற்றினாற் போதும் என்று கோட்டை விட்டுத் திரும்பிவிட்டார். இ.த.எ.கெ. 41 4. வரலாறு தெற்கினின்று வரலாறு தொடங்குதல் ஒருவரது வரலாற்றை அவர் உண்மையாகப் பிறந்த காலத்தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்த வராகக் கொள்ளின் அவ் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரி நாட்டை, அடிப் படையாகக் கொண்டே, தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். தமிழர் வரலாறு 18 பேரன் பாட்டன் மகன் தந்தைக்கும், பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பதுபோல் தலை கீழாகத் தமிழ் வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் இருந்து வருகின்றன. த.ச.பொ.வி. மலர் ஒப்பியல் இலக்கணம் 170 அடிமணை எல்லாக் கலைகட்கும் அறிவியல்கட்கும் வரலாறு அடி மணையும் முதுகந்தண்டுமாதலால் வரலாற்றை நீக்கி வரையப் பட்ட எந்நூலும் எவர் இயற்றியதேனும் அறிவியன் முறைப்பட்ட தாகாது. வ. மொ.நூ.வ.முக. 3 வரலாற்று மொழி நூல் ஒரு குடும்பத்தாருள், இன்னார் தந்தையார்; இன்னார் தாயார்; இன்னார் புதல்வர்; இன்னார் புதல்வியார்; இன்னார் தமையனார்; இன்னார் தம்பிமார்; இன்னார் தமக்கையார்; இன்னார் தங்கைமார் என்றிங்ஙனங் கூறுவது போன்றது வரலாற்று மொழிநூல். (Historical Linguistics) வ.மொ.நூ.வ. 90 ஒப்பியன் மொழி நூல் ஒரு குடும்பத்தார் எல்லாரையும் ஒப்பு நோக்கி, இக் குடும்பத்தில் ,அத்தனையர் ஆடவர்; இத்தனையர் பெண்டிர்; இத்தனையர் சிவப்பர்; இத்தனையர் கருப்பர்; இத்தனையர் நெடியர்; இத்தனையர் குறியர்; இத்தனையர் ஒத்தவர்; இத்தனையர் வேறுபட்டவர் என்றுரைப்பது போன்றது ஒப்பியன் மொழிநூல். (Comparative Linguistics). வ.பொ.நூ.வ. 90 வண்ணனை மொழியியல் ஒரு குடும்பத்திலுள்ள மக்களுள் ஒவ்வொருவரையும் பற்றி இவர் இன்ன பாலினர்; இன்ன நிறத்தர்; இன்ன வளர்த்தியர்; இன்ன தோற்றத்தர்; இன்ன இயல்பினர்; இன்ன திறமையர் என்று கூறுவது போன்றது வண்ணனை மொழியியல் (Descriptive Linguistic th.bkh.ü.t. 89) ஆவணம் ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றே ஒரு நாட்டிற்கு வரலாறு உரிமைச் சான்றாகும். ஆயின், ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப் படலாம். அதுபோன்றே, ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவர்க்கேற்றவாறு மாற்றப் படலாம். ஆதலால், இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ளல் வேண்டும். தமிழனின் பிறந்தகம் செ.செ. 55: 256 ஆவணம் வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும். தமிழர் வ.முக. 2 ஆவணம் ஒரு நாட்டு வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களையும் வந்தேறிகளையும் (Immigrants) பிரித்துக் காட்டுவதால் ஒரு வீட்டுக்காரனுக்கு அவ்வீட்டு ஆவணம் எமக் காப்பாவது போல் ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந்நாட்டு வரலாறு சில வுரிமை வகையில் ஏமக் காப்பாம். த.மு.1 பேரன் பாட்டனைப் பெற்றான் ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் அமெரிக்கருமான மேலையர் இற்றை அறிவியல்களில் தலைசிறந்தவரும் வழி காட்டிகளுமாயிருப்பினும், தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று தென்னாடு வந்தவரென்றும் இந்திய நாகரிகம் வேத ஆரியர் கண்டதென்றும், இருதவறான கருத்துக்கள் அவருள்ளத்தில் ஆழ வேரூன்றியிருப்பதனால், பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், பிற்பட்ட சமற்கிருதத்தை முற்பட்ட தமிழுக்கடிப் படையாக வைத்தாய்ந்து, ஆரிய வெம்மணற் பாலைப் பரப்பில் அலைந்து திரிந்து வழிதெரியாது மயங்கி எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்றும், ஆயிரமாண்டிற் கொருமுறை மொழிகளெல்லாம் அடியோடு மாறிவிடுகின்றன என்றும், அதனால் மொழித் தோற்றத்தைக் காணமுடியாதென்றும் முடிவு கொண்டு மேற்கொண்டு உண்மைகாண முடியாவாறு தம் கண்ணைத் தாமே இறுகக் கட்டிக் கொண்டனர். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். த.வ. முகவுரை வரும் போதேனும் காத்தல் துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல்வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்தபின் அணைகட்டுவதும், குதிரை களவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும் நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும். ம.வி.65 5. ஆராய்ச்சி கல்வியும் ஆராய்ச்சியும் எந்தத் துறையிலேனும் ஆராய்ச்சி என்பது கல்வியின் பிற்பட்டதே. கல்வியில்லாதவர் ஆராய்தல் ஒண்ணாது. ஓர் இயங்கியை (automobile) ஓட்டத் தெரிவது போன்றது ஆராய்ச்சி. ஓட்டத் தெரியாதவர் பழுது பார்ப்புத் தெரிந்துகொள்ள முடியாது. முதன்மொழி. 1.7-8-4 அடி மணை கலைகளும் (arts) அறிவியங்களும் (sciences) 91) தற்சார்புள்ளது (Independent) (2) மற்சார்புள்ளது (dependent) என இரு திறப்படும். தற்சார்பறிவியங்களுள் ஒன்றான வரலாறு, ஏனை அறிவியங்கட் கெல்லாம் அடிமணையாயும், முதுகந் தண்டாயும் இருப்பதாகும். த.வ.முன். I நம்பிக்கையும் ஆய்வும் ஒருபொருளை எங்கெங்குந் தேடியும் காண முடியா தென்று நம்பிக்கை கொண்டவனுக்கு எங்ஙன் தேடன் முயற்சி பிறக்கும்? எல்லாச் சொல்லும் இடுகுறிகளே என்றும், எல்லா மொழிகளும் ஆயிரம் ஆண்டிற்கொரு முறை அடியோடு மாறிவிடுகின்றன என்றும் நம்புகின்றவனுக்கு எங்ஙன் மொழியாராய்ச்சி வேட்கை எழும்! சொல்வேர் காண்வழிகள் செ. செ. 41:323 முத்துச்சிப்பி படிப்பு வேறு, ஆராய்ச்சிவேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக் கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும். செ. செ. 50:91 தலைகீழ்ப் பார்வை ஒரு படத்தைத் தலைகீழ்த் திருப்பிப் பார்ப்பது போல் முதனூலை வழிநூலாகவும், வழிநூலை முதனூலாகவும் பிறழக் கொண்டு ஆராய்ச்சி நடாத்துவது ஒரு சிறிதும் தக்கதன்று. குரலே சட்சம். செ. செ. 20: 330 பல்வகை நடைமொழி மேலையர், இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மூலமான தமிழை அடிப்படையாகக் கொள்ளாது ஆரியத்தையே கொண்டாராய்ந்து, கோட்டைச் சுவரில் முட்டிய குருடர்போல், இடர்ப்பட்டு, தாய்மொழியும் கிளைமொழியும் என்னும் முறையின்றி, தனியாள் நடைமொழி (Personal dialect) குழு நடைமொழி (Grou[ dialect) வகுப்பு நடைமொழி (communal dialect) தொழில் நடைமொழி (Professional dialect) இட நடை மொழி (Local dialect) வட்டார நடைமொழி (Regional dialect) என ஒவ்வொரு பெருமொழியையும் பல நடைமொழிகளாகப் பகுத்து ஆராய்ந்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். வ.சு. பவளவிழாமலர்; செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு.4 மருத்துவம் இசை தாண்டவம் தமிழ், ஆரியச் சூழ்ச்சியினால் நெடுங்கணக்கு முதல் பொருளிலக்கணம் வரை எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் தருக்கப் பொருளாக்கப்பட்டிருப்பதால் தமிழா சிரியர் எத்துணைப் பெரும் புலவரேனும், மொழி யாராய்ச்சியும் நடுநிலை அஞ்சாமை தன்னலமின்மை மெய்யறியவா என்னும் நாற்பண்பும் இல்லாதவர், வேர்ச் சொற்களைத் தொகுப்பது குருடன் கண் மருத்துவமும், செவிடன் இசையாராய்ச்சியும், சப்பாணி தாண்டவம் பயிற்றலும் செய்வதொத்ததே; கல்விவேறு, ஆராய்ச்சி வேறு. வேர்ச்.முக.11 குன்று முட்டிய குருடர் தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தொன்மூதியன் மொழி யாதலின், அந்நிலமிருந்த இடத்தை யொட்டிய தென்னாட்டுத் தென்கோடியில் வழங்கும் தமிழொலிகளை, தமிழ் வாயிலாகத் தான் அறிய முடியுமேயன்றிப் பிற வடநிலத் திரிமொழிகள் வாயிலாய் அறிய முடியாதென்றும் அங்ஙனம் அறிய முயல்வார் குன்றுமுட்டிய குருடர்போல இடர்ப் படுவாரென்றும் அறிந்து கொள்க. வேர்ச்.99 தலைகீழ் வைத்துத் தவறாகப் பொருள் கொள்ளல் முந்திய மொழிகளில் சொல்வடிவம் இயல்பாயும் பிந்திய மொழிகளில் திரிந்தும் இருக்கும். திரிந்த மொழியை முந்தினதாகவும் இயல்பான மொழியைப் பிந்தினதாகவும் கொண்டு ஆராயப்புகின், பேரனைப் பாட்டனாகக் கொண்டு மரபுவழி கூறுவதும், சிறிது சிதைந்துபோன ஏட்டை அல்லது கல்வெட்டைத் தலை கீழ் வைத்துத் தவறாகப் பொருள் கொள்வதும் போன்றதாகும். சு.வி.முக.7. வாலும் தலையும் நீக்கிய முண்டம் கால்டுவெலார்க்குப் பிற்பட்ட மேலை மொழி நூலா ரெல்லாம் பேரனைப் பாட்டனாகப் பிறழவுணர்ந்து வரலாறு தீட்டுவார் போல், சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழியாராய்ச்சி செய்ததனால், முட்டுப்பட்டு மதிமருண்டு, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் (தொல்.பெயர்.1.) தமிழ்நெறிமுறைக்கு நேர்மாறாக, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே என்று தம் இருகண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டு, ஓர் உயிரியின் தலையும் வாலும் நீக்கி முண்டத்தை மட்டும் வரைந்தாற்போன்று முன்பின் வரலாற்றை முற்றும் புறக்கணித்து மொழிகளின் இற்றை நிலையை மட்டும் எடுத்துக் கூறும் வண்ணனை மொழிநூலை (descriptive Linguistics) வளர்த்து மாணவரையும் ஆசிரியரையும்மயக்கி வருகின்றனர், வண்ணனை ஒப்பியல் வரலாறு ஆகிய மூவியல்களையும் ஒருங்கே கொண்டதே மொழிநூல். தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே.ஷா. அவர்கட்குப் பாராட்டு செ.50:89 கேசவக் கிருட்டிணனே ஏசுக்கிறித்து கிரேக்க நாட்டில் என்றேனும் தமிழ் வழங்கிய தென்பதற்கோ தமிழர் வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்றும் இன்மையானும்; தமிழ்ச் சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும் கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும் காணப்படுவதாலும்; கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும் தெரிமில என்னும் சொல்லைத் திர-இல்-அர் என்று பிரித்து, கடற்கரையில் குடி கொண்டவர் என்று பொருள் கூறுவது, கேசவக் கிருட்டிணனே ஏசுக் கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடை ஒப்புமைபற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலைவிற்கப் பாற்பட்ட வேறொரு நாட்டினின்று வந்தவராகக் கொள்வது, மொழிநூன் முறைக்கு முற்றும் முரணான தாகலானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக்கொண்டு தொன்று தொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்தலானும்; கிரேக்க நாட்டு மூலக் கொள்கை மிகத் தவறானதென்று கூறிவிடுக்க. த.வ.முன்.33 பொறியறிஞனும் மொழியறிஞனும் ஒரு பொறியறிஞன் ஒரு பொறியில் இல்லாத உறுப்பைக் கண்டு கொள்வது போன்றே, ஒரு மொழியறிஞனும் அம்மொழியில் இறந்து பட்ட சொற்களிற் சிலவற்றை அவற்றொடு தொடர்புள்ள பிறசொற்களின் துணை கொண்டு அறியவியலும். த.வ.64-5 சூழ்ச்சிப் பொறியமைப்பும் பொறிக்கலையும் குடியேற்றப் பாதுகாப்பான ஒரு சிறு பகுதியால் தமிழின் தாய்மை குன்றிவிடாது. சில சூழ்ச்சிப் பொறிகளின் பழைய அமைப்புக்கள் இன்று கீழ்நாட்டில்தான் உள்ளன. இதனால், மேனாட்டார் கீழ் நாட்டாரிடமிருந்து பொறிக் கலையைக் கற்றார் என்றாகாது. இங்ஙனமே குடியேற்றப் பாதுகாப்பும். தி.தா. 112 அயன்மை வெளிப்பாடு ஒரு நாட்டான் அயல்நாடு சென்று பல்லாண்டு தங்கிக் குடியுரிமை பெற்றுவிடினும் அவன் அயன்மையை மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க முயலின் வரலாற்றாராய்ச்சி அதை வெளிப்படுத்திவிடும். அங்ஙனமே ஒரு மொழிச் சொல்லும் பிறமொழிச் சென்று வழக்கூன்றினும் அதன் அயன்மையை மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க முயலின் வரலாற்றாராய்ச்சி அதனை வெளிப்படுத்திவிடும். சொற்குலமுங் குடும்பமும் செ.செ. 22:17 சிக்கல் எடுத்தல் ஒரு சிக்குப்பட்ட நூற்கண்டைச் சிக்கல் எடுப்பதற்கு முதலாவது அதன் இரு முனைகளில் ஒன்றைக் காணவேண்டும். ஒரு பொருளுரிமைபற்றிய வழக்கைத் தீர்ப்பதற்கு முதலாவது, முதன்முதல் அதை வைத்திருந்தவன் யார் என்று அறிய வேண்டும். அங்ஙனமே, மொழி நூலை உருவாக்குவதற்கு முதலாவது, மாந்தன் தோன்றிய இடம் எதுவென்றும் தொடர்புள்ள மொழிகட்குள் எது முந்தியது என்றும் அறிதல் வேண்டும். சு.வி.முக.7 ஆடு-ஓநாய்-ஓரி பிராமணர் பெரும்பாலும் தமிழுக்கு மாறாயிருப்பதால் அவரைக் கொண்டு தமிழை ஆராய்வது பாலுக்குப் பூனையையும், ஆட்டுக் கிடைக்கு ஓநாயையும் காவல் வைப்பது போன்றதே யாகும். தென் மொழி வடமொழிப் பிணக்கைத் தீர்க்க அவரை நடுவராக அமர்த்துவது ஆட்டுக்குட்டிக்கும் நரிக்கும் இடைப் பட்ட வழக்கைத் தீர்க்க ஓர் ஓரியை அமர்த்துவது போன்றதே. செ.செ.50:92 கத்தரிக்காயும் கழுத்தும் கத்தரிக்காய் அறுக்க வாங்கிய கத்தி கழுத்தறுக்குங் கருவியாயிருப்பின் அது கழுத்தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந்தரை யெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன்பிறப்பு அன்பால் ஒன்றுபட்டு இன்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை ஒரு தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும் பிறர் தாழவும் பயன்படுத்தின் அக்குற்றம் எங்ஙனம் மதவியலைச் சாரும்? த.ம.186 மொழிநூல் வானூல் கணிதம் வானூல் முதலிய கலைகளைப் போல் மொழிநூலும் ஒரு திட்டமான நெறி முறைப்பட்ட கலையே. சு.வி. முக.5 மேனாட்டு வானூற்கலை சர் ஐசக்கு நியூட்டன் காலத்தில் தான் அவரால் உருவாயிற்று. அதற்கு முன் அது வழிவரம்பின்றிப் பழிபடு நிலையில்தான் இருந்தது. அது போன்றே இற்றை மொழிநூலும். சு.வி.முக.6 முற்செலவு முதல் துருவல் முடிய முற்செல்லச் செல்ல, சேரவேண்டிய இடத்திற்கு நெருக்கம் ஏற்படுகின்றது; சேர்ந்தபின் பொருந்தல் நேர்கின்றது. இடை வழியிற் சுவரும் கல்லும் மலையும் போலத் தடை ஏற்படின் வளைய அல்லது பக்கமாகத் திரும்ப நேர்கின்றது. தடுத்த பொருளையும் இடத்தையும் துளைக்க முடியுமாயின் எலி சுவரையும் மாந்தன் மலையையும் துளைத்தல் நேர்கின்றது. துளைத்து மறுபுறங்காணின் அதுவே துருவல். அதன்பின் தோன்றல் முதலிய பழைய நிலைமைகளே மீண்டும் நிகழும். மண்ணில் வேர் இறங்குதலும் மரத்தில் ஆணி பதிதலும் பொத்தகத்திற் புழுவரித்தலும் போன்ற செயல்களாயின் வளைதலின்றியே துளைத்தலும் துருவலும் நிகழும். த.வ. 61 இரு கிழமை தோன்றுதல் முன்வருதல் ஆகலின், தோன்றற் கருத்திலேயே தற்கிழமை பிறிதின் கிழமை ஆகிய இருவகை முன்மைக் கருத்தும் அடங்கியுள்ளன. முன்கிளையும் முன்கையும் போன்றவை தற்கிழமை முன்மை; முன் பொறையும் (பாரமும்) முன் தூதனும் போன்றவை பிறிதின் கிழமை முன்மை. த.வ.61 இயற்கைத் தோன்றலும் செயற்கைத் தோன்றலும் தோன்றல் என்பது, தாயினின்று குழவியும் மரத்தினின்று துளிரும் தோன்றுவது போன்ற இயற்கைத் தோன்றலும்; வீட்டினின்று மாந்தனும் வளையினின்று எலியும் தோன்றுவது போன்ற செயற்கைத் தோன்றலும் ஆக இருவகைப்படும். த.வ.61 குத்தலும் துளைத்தலும் குத்தலும் துளைத்தலும் கலத்தை நீர்மேல் வைத்தலும் அதற்குள் முழுக்குதலும் போன்ற நெருங்கிய அல்லது அடுத்து நிகழும் வினைகள். வேர்ச். 246 வடிவியல் வடிவியலாவது, குழவி நிலையும் பிள்ளைமையும் இளமையும் மகன்மையும் முதன்மையும் போல அல்லது புல்லும் பூண்டும் செடியும், கொடியும் மரமும்போல மொழி வளர்ச்சி தொடர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைப்பற்றியது. உலக மொழிகளின் தொடர்பு. செ. செ. 23:166 மணிநோட்டகர் ஒவ்வொரு துறையிலும் உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்து விடுகின்றது. அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணி நோட்டகன் தொண்மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லிவிடுகின்றான். அது ஏனை யோர்க்கு இயலாமையால் அதை உன்னிப்பு வேலையென்று தள்ளி விட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கையிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின் ஒவ்வோரெழுத்தும் சொல்லும் திரியும் வகைகளை யெல்லாம் கண்டு வரலாறு மாந்தனூல் (Anthropology) ஞாலநூல் (Geography) நிலநூல் (Geology) உளநூல் (psychology) முதலிய அறிவியல் களோடு பொருந்த ஆராய்வாராயின் பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். தமிழர் வ. 18. மணிநோட்டகன் வயிரக் கற்களின் உயர்வு தாழ்வை மணி நோட்டகன் கண்ணே காண்பதுபோல் சொற்களின் வேரையும் பொருட் கரணியத்தையும் மொழிநூல் வல்லான் அகக் கண்ணே காணுமென்றும் அறிவொடு உயிருமற்ற அஃறிணைக்கருவிகள் காணாவென்றும் அறிதல் வேண்டும். வ.மொ.நூ.வ. 105 பிராமி எழுத்தும் தமிழ்நெடுங்கணக்கும் அசோகன் கல்வெட்டுச் செய்திகளாற் கவரப்பட்ட தமிழகப்பொதுமக்கள், அவற்றைத் தாமே படித்தறிய வேண்டும் என்னும் அவாவினால் உந்தப்பட்டு அவற்றின் பிராமி யெழுத்தைப் பயின்று கொண்டனரென்றும் அதுவே தமிழ் நெடுங்கணக்குத்தோற்ற மென்றும்........ கண்டிருப்பது ............ ஒரு கல்லறைத் தோட்ட வாயிலின்மேல் நாய்கள் புகற்க என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பலகையைக் கண்டவுடன் ஒரு நாய்புகாது நின்றுவிட்டது என்று கூறும் பிக்குவிக்குத் தாட்களை (Pickwick Papers) விட இது நகைச் சுவை விஞ்சியதே. செ.செ. 54:428 முழுப் பூசணிப் காயைச் சோற்றுள் முழுக்குதல் கி.மு. 2. ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று வந்து வைகை மதுரையில் தங்கிய சில சமணரும் பவுத்தரும் தங்கள் வடநாட்டெழுத்தோடு தமிழுக்கேற்பச் சில புதுக் குறிகளையும் புனைந்து பொறித்த கல்வெட்டுக்களைக் கொண்டு முழுப்பூசணிக் காயைச் சோற்றுள் முழுக்குவது போல், தமிழ் நெடுங் கணக்கே அசோகப் பிராமி எழுத்தினின்று தோன்றியதாகக் கூறி வருகின்றனர். ஆழியை நாழிகொண்டளப்பது பிற்காலக் கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே. ம.வி.3. முடவன் முண்மரமேறல் தமிழ்ப் பொதுமக்கள் அசோகன் கல்வெட்டினின்று தமிழெழுத்தைக் கற்றுக்கொண்டது (என்பது) முடவன் முண்மரமேறிக் கொம்புத்தேனைக் கொணர்ந்த செய்தியே யாகும். செ.செ. 54:430 புதைந்தவையெல்லாம் பழையவையல்ல மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. தமிழர் வ.22 பூட்டனை நம்பாதார் முக்கழக உண்மையை இற்றை இலக்கியச் சான்றின்மை பற்றி நம்பாதார் பாட்டனைப் பெற்ற பூட்டனைக்கண்டா ராகாமையால் அவன் இவ்வுலகில் இருந்ததை நம்பாதாரே. த.இ.வ.எ. தலைகீழ் அடிப்படை ஒரு கொடி வழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலை கீழான அடிப்படை தலைகீழான முடிவிற்கே கொண்டு செல்லும். இங்ஙனமே, குமரி நாட்டுத் தமிழ நாகரீகத்திற்கு நெடுங்காலத்திற்குப் பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது. தமிழர் வ.17. பேரன் பாட்டனைப் பெற்றான் தமிழின் தொன்மை தென்மை முன்மை மென்மை முதலிய தன்மைகளை அறியாமையால் கால்டுவெல் உள்ளிட்ட மேலை யாராய்ச்சியாளர் ஆரிய ஏமாற்றை நம்பித் தமிழைச் சமற்கிருத அடிப்படையில் ஆய்ந்து பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் தமிழ்நெடுங் கணக்கு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்று முடிவுகொண்டு விட்டனர். த.வ.119. நரிவாலும் கடலாழமும் நரி தன் வாலை விட்டுக் கடலாழம் கண்டாற் போல் தமிழின் தொன்மையை ஆய்ந்து அதன்தோற்றம் கி.மு. 1500 என்று வரையறுத்திருப்பது தன்னாராய்ச்சி இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கு எத்துணை அறிவியல் உண்மையாகக் காட்சி யளிப்பினும் முறைப்பட்ட மொழியாராய்ச்சியாளர்க்கு எத்துணை நகையாட்டிற்குரிய பகடிக் கூத்தாம். முதன்மொழி 1.3:9 ஓசையும் இரும்பும் மொழிநூலின் திறமறியாத சிலர் ஓசை நிலைப்பானது; ஆகவே ஓசை வடிவானமொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது. ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானைவை; புதிதாய் உண்டாயவை அல்ல என்று கூறுவது போன்றதே. தி.தா.1 முந்துமாந்தனும் குழந்தையும் மொழி நிரம்பாத முந்து கால (Primitive.) மாந்தன், கருத்து வெளியீட்டில் குழந்தை போன்றவன். அவன் M.ஈ.th.ngh.Ñ.nk முதலிய சில தனியசைகளாலும் சில சைகைகளாலுமே தன் கருத்தைப் புலப்படுத்தினான். இவ்வியல்பை இன்றும் சில மலைவாணரிடமும் தென்கண்டத் தீவாரிடமும் காணலாம். சு.வி.4. மலை விளக்கு ஆஈஊ என்னும் ஒலிகளை மொழி மூல வொலிகளாகக் கூறுவது இன்று மலையேறிவிட்டதெனின் அது குன்றின் மேலிட்ட விளக்குப் போல விளங்குதற்கு மலையேறிவிட்ட தென்க. சு.வி.6. பிஞ்சு காயாதல் உண்மை அறியாதார், தமிழிலும் முதற்காலத்தில் எடுப் பொலிகள் (G,J,d,d,b) இருந்து பின்னர் எடுப்பிலா வொலிகளாக மாறின எனப் பிதற்றுவர். தமிழ் தோன்றியது குமரி நாடென்னும் உண்மையறியின் அங்ஙனங் கூறார். எடுப்பிலா வொலி எடுப் பொலியாக மாறுமேயன்றி, எடுப்பொலி எடுப்பிலா ஒலியாகத் திரியாது. பிஞ்சு முற்றிக் காயாவதேயன்றி, காய் இளந்து மீண்டும் பிஞ்சாவதில்லை. த.இ.வ.முன்.10 விண்ணக மீனும் மண்ணக மானும் அருச்சுனன் திருநீராட்டிற்குத் தென்னாடு வந்த போது சித்திராங்கதன் என்னும் பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதைபற்றி, பாண்டவன் என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் பெயர் திரிந்த தென்று வரலாற்றிற் கெட்டாத தொன்மை வாய்ந்த பாண்டியக் குடிப்பெயரைக் கி.மு.10-ஆம் நூற்றாண்டினனான பாண்டு வொடு தொடர்புபடுத்துவது, விண்ணக மீனையும் மண்ணக மானையும் ஒன்றாய் இணைப்பது போன்றதே. அருச்சுனன் பாண்டியன் மகளை மணக்கு முன்பே அவன் மாமன் பாண்டியன் எனப் பெயர் பெற்றிருந்தமையை அக்கதையே கூறுகின்றதே!. த.வ.முன்.43 இராமர் அணைக்கட்டு தமிழ் நாட்டின் தென்பகுதி கடலுண்முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின் சரித்திரமறியாத மக்களால் அது இராமாயணக்கதை யொட்டி இராமர் அணைக்கட்டு எனப்பட்டது. ஆதாம் வாராவதி (Adams Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ அவ்வளவே இராமர் அணைக்கட்டு என்னும் பெயரும் பொருந்துவதாகும். ஓ.மொ.53. சான்றுகள் அழிபாடு ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையால் அதினின்று சான்று காட்ட இயலாதென்றும், மாடம் அழிந்த பின் அதினின் றெடுத்த உறுப்புக்களைக் கொண்டமைத்த வடம் போன்ற பிற்காலத் திலக்கியத்தினின்றே சான்று காட்டப் படுமென்றும் அறிந்து கொள்க. த.ம.58. 6. சொல் சொற்படையும் மட்படையும் நிலம் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கும் பல படைகளாய் அமைந்திருப்பது போல் சொற்களும் ஒன்றன் மேல் ஒன்றாய் வளர்ந்துள்ள எழுத்துக்களும் அசைகளுமாகிய பலபடைகளைக் கொண்டுள்ளது. த.வ. 234 சொல்லும் செல்வமும் சொல்லும் பொருள் போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். த.க.கொ.த.3 செல்வப் பெருக்கமும் சொற் பெருக்கமும் முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவதுபோல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும். த.க.கொ.த.3 கடன் கோடல் கடன் கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி: தமிழுக்கோ தளர்ச்சி. ஓ.மொ.366 பொருட்கடன், சொற்கடன் பொருட்கடன் கோடல் போன்றே சொற்கடன் கோடலும் தேவையும் தேவையின்மையும் ஆகிய இருவகை நிலைமைகளில் நேர்வதாகும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளமின் மையால், அவற்றிற்குப் பிறமொழிகளினின்று கடன்கோடல் இன்றியமையாததாயிற்று. தமிழ் பெருவள மொழியாதலின் அதற்குச் சொற்கடன் தேவையில்லை. தமிழில் இதுவரை புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற்சொற்களெல்லாம் அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமாயிருந்தவையே. த.க.கொ.த.2,3 ஆங்கில மொழி கடன் கொள்ளல் ஆங்கிலர் தாம் புதிதாகக் கண்ட அறிவைப் புலப்படுத்த இலத்தீன் கிரேக்கச் சொற்களைக் கடன் கொள்வது நெல்லை விளைவித்த உழவன் அதைச்சந்தைக்குக் கொண்டு செல்ல வண்டியையும், அரிசியைக் கடையில் வாங்கினவன் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லப் பையையும் இரவல் வாங்குவது போன்றதே. நெல்லை விளைவிக்காமலும் அரிசியை விலைக்கு வாங்காமலும் வண்டியையும் பையையும் மட்டும் இரவல் வாங்கிப் பயனில்லை. உள்ளடக்கமே கொள்கலத்திலும் சிறந்தது. ம.வி.166 பையும் வண்டியும் இரவல் ஆங்கிலர் தம் கருத்தை உணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்கும் இடத்தில் பையையும் உழவன் தான் விளைத்தகூலத்தைச் சந்தைக்குக் கொண்டு போக வண்டியையும் இரவல் பெற்ற தொக்கும். புதுமணிப் பவளப்புன்மையும் புரைமையும் செ.செ. 52:582. பேதையும் சூதனும் இற்றைத் தமிழிற் கலந்துள்ள பிறழிச் சொற்க ளெல்லாம், தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. செந்தமிழ்காக்கும் நக்கீரர் மரபு அற்று. ஆரியம் போற்றும் கொண்டான் மரபு ஓங்கி, சேர சோழ பாண்டியர் ஆட்சியை வேறு பல நாட்டார் கவர்ந்து மொழியுணர்ச்சியும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்துத் தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டவையாம். இது ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்தற்கு, ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டி மேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே. த.க.கொ.த.3. குற்றத்தைக் குணமாகக் கொள்ளல் மொழி திருந்தாதார் வழங்கும் கார் ப முதலிய சொற்களைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்வது கீழ்மக்களின் ஐம்பெரும் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக் கொள்வது போன்றதே. த.க.கொ.த.19. பயிரும் களையும் தமிழ்ச் சொற்பயிர் கெடுமாறு அயற்சொற் களைகள் மலிந்துவிட்டதனால் பல தென்சொற்குப் பிற சொல் வாயிலாகவே பொருள் கூற வேண்டியதாயிற்று. த.க.கொ.த.17. செல்வத்தமிழ் பிறரிடம் கடன் கொள்ளவேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு, பிர்லா முதலிய பெருஞ் செல்வர் போல் தமிழும் பிற மொழிகளினின்று கடன் கொள்ளாது. த.த.க.கொ.த.21. பொதுமகள் குலமகளைப் பழித்தல் தமிழின் சொல்வளத்தையும் தனிப்பெருந் தூய்மையையும் ஆரியச் சொற் கலப்பால் அதற்குநேர்ந்துள்ள அழிவு நிலையையும் அறியாத மேலையர் தம்மொழி போல் தமிழையும் கருதிக் கொண்டு அதன் தூய்மையைத் தாக்குவது பொதுமகள் குலமகளின் கற்பைப் பழிப்பது போன்றதே. வ.மொ.நூ.வ. 117. அகக்கடன் : திசைச் சொல் என்பன, செந்தமிழ் நிலத்து வழங்காது கொடுந் தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய திருந்திய சொற்களும் சொல்வழக்குகளுமே... இத் திசைச் சொற்கள் பெற்றோர் பிள்ளைகளினின்று கடன் கொள்வது போன்ற அகக் கடன் (Internal loan) என்று அறிக. வ. மொ. நூ.வ. 2 மக்களும் சொற்களும் மலையா, சிங்கபுரம், தென்னாப்பிரிக்கா முதலிய வெளிநாடு கட்குத் தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக வாழினும் அவர்களின் முன்னோராலும் தமிழ்நாட்டு உறவினராலும் அவர்கள் தமிழர் என்றே அறியப் படுதல்போல் தமிழ்ச் சொற்களும் அண்மை யிலும் சேய்மையிலும் உள்ள அயன் மொழிகளிற் சென்று வழங்கினும் அவற்றின் மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும். வேர்ச். முக.10. செல்வத்தாயும் மகளும் தமிழில் மிகுந்த சொல்வளமுண்டு. ஒரு செல்வத்தாய் வீட்டினின்று ஒருவகைப்பட்ட பலபொருள்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு புதல்வியும் எடுத்துச்செல்வது போல், தமிழிலுள்ள ஒரு பொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திசை மொழியும் கையாண்டுள்ளது. த.வ. 256. தாய்வீட்டுக் கலங்கள் குமரி நாட்டுத் தமிழே திரவிட மொழிகட்கெல்லாந் தாயாதலால் முன்னதன் ஒரு பொருட் சொற்களினின்றே பின்னவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லைத் தெரிந் தெடுத்தாளுகின்றது. இது தாய்வீட்டிலுள்ள ஒரு வினைக்குப் பயன்படும் பல்வகைக் கலங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு மகளும் எடுத்துப் பழங்குவது போன்றது. த.இ.வ.19. தாய் வீட்டில் வழங்காத கலங்கள் ஒருமொழியின் தாய்வழக்கில் ஒரு பொருட் கரிய பல சொற்களில் வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில்தான் வழங்கும். இது ஒரு தாய் வீட்டிலுள்ள வழங்காத கலங்களை யெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது. ஓ.மொ.162. தாய்படமும் புதல்வியர்படமும் ஒரு குடும்ப மொழிகளின் பொதுவியல்பைக் கொண்டு அவற்றின் தாய்மொழியை மீள அமைக்கலாம் என்பது, இறந்துபோன ஒருதாயின் உருவப் படத்தை அவள் புதல்வியரின் உருவப் படங்களை ஒப்பு நோக்கி அமைக்கலாம் என்பது போன்றதே. வ. மொ. நூ.வ. 102. இலையும் மரமும் ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்ட இலைகள் வேறோர் இடத்திற் கிடப்பின், அம் மரத்தினின்று அவ்விலைகள் வந்தன வென்று கொள்வதல்லது, அவ்விலைகளினின்று அம் மரம் வந்ததென்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? ஒரு பெருமரத்தின் வேருந்தூரும் அடியுங்கவையும் கொம்புங்கிளையும் போத்துங் குச்சும் குழையும் கொழுந்தும் போல் ஏறத்தாழ ஐம்பதினாயிரம் சொற்கள், எளிய வொலிப்பட்ட இயற்கையான தோற்றமும் பல்வேறு நிலைப்பட்ட வளர்ச்சியும் வேர்ப்பொருட் கரணியமுங் காட்டி ஒரே தொடர்பு கொண்டு வரலாற்றிற் கெட்டாத் தொன்றுதொட்டு இத் தென்னாட் டிலேயே வழங்கிவரவும் அவற்றைச் சிறிதும் ஆராயாதும் நோக்காதும் வேற்று நாட்டிலிருந்து வந்தனவென்று கொள்வது, எத்துணைப் பொருந்தாக் கொள்கையாம். த.வ.முன்.24 மரமும் வேரும் பல மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப்பின், பார்த்தமட்டில் அவற்றின் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக் கொழுந்தில் இருந்து இணுக்கும் வளாரும் குச்சும் போத்தும் சினையும் கொம்பும் கிளையும் கவையுமாக ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக் கொண்டே வரின் இறுதியில் நிலத்தின்மேல் முதற் கீழ்ப்பகுதியாக வுள்ள அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக் காண்பது தேற்றமாயினும் நிலத்தைத் தோண்டினாலன்றிக் காண முடியாது. இப் பன்மரப் பிணையல் போன்றே பல அடிகளினின்று கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ள சொற்றொகுதிகளும் பார்த்தமட்டில் பிரித் துணரப் படாவாறு தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேல் இருந்து கீழ்நோக்கி வரல்வேண்டும். அடியைக் கண்ட பின் ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காணமுடியாது. சொற்குலமும் குடும்பமும் செ. செ. 22.225. குடும்பமும் குலமும் ஒரு குடும்பம் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமும் சேர்ந்து ஒரு குலமாதலும் போல, ஒரு சொற் குடும்பமும் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமும் சேர்ந்து ஒரு குலமாதலும் உண்டு. எடுத்துக் காட்டாக தின், திரி, திருகு, திரும்பு, திறம்பு, திமிறு முதலிய சொற்களோடு சேர்க்கப்படின் தில் குடும்பமும் ஒரு குலமாகிவிடும். சொற்குலமும் குடும்பமும் செ. செ. 22;112. குலமும் குடும்பமும் வகு என்னும் அடியின் கீழ்க் காட்டப்பட்ட சொற் களெல்லாம் கொட்பாட்டன்-பாட்டன் மகன்-பேரன்-கொட்பேரன் என்ற தொடர்புபோலத் தொடர்பு பட்டிருப்பதை (அறிக). சொற்குலமும் குடும்பமும், செ.செ.22, 72. கனியிருக்கப் பூப்பிஞ்சு கவர்தல் செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சம் (Present Participle) உலக வழக்கில் இருக்கவும் அதைப் பயன்படுத்தாது..... இடர்ப்படுவது கனியிருக்கப் பூப்பிஞ்சைக் கவர்வ தொப்பதே. த.வ. 222 புதுத் தண்டின் பூணும் பழந்தண்டின் பூணும் சொல்லின் ஈறு முதனிலையினின்று பிரியாது அதனொடு இரண்டறக் கலந்து நிற்பது, சொல்லின் திரிபு முதிர்ச்சியை யன்றி மொழியின் உயர்நிலையைக் குறிக்காது; புதுத் தண்டின் பூண் பிரியக் கூடிய நிலையையும், துருப் பிடித்த பழந்தண்டின் பூண் பிரிய முடியாத நிலையையும் ஒப்பு நோக்கிக் காண்க. வ.மொ.நூ.வ.98. பெற்றோர் பிள்ளைகள் ஒப்பு குணம் குறிகளில் பெற்றோர்க்கும் பிள்ளைகட்கு முள்ள ஒப்புமை போல, சொன்னிலையிலும் சொல்லாக்க நெறிமுறை யிலும் மரபியல் உறவுற்ற மொழிகளிடை ஒப்புமையுண்டு. உலக மொழிகளின் தொடர்பு செ.செ. 23:166 பிஞ்சு காய் கனி ல, ள, ழ ஆகிய மூன்றும் முறையே பிஞ்சும், காயும், கனியும் போல மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின் வேறுபாடுகள் ஆதலின், சொற்களில் ஒன்றுக் கொன்று போலியாக வருவதுண்டு. எ-டு: வேலை - வேளை, பவளம் - பவழம் சொற்குலமும் குடும்பமும் செ.செ. 22:227. கருவி நிலையும் செய்பொருள் நிலையும் சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக் குறிப்புமாகும். மண்ணும் மரமும் போலக் கருவி நிலைப்பட்டவை ஒலிக்குறிப்புக்கள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள். மு.தா.மொ.5. ஓட்டுநர், இழுப்பர் என் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலித் திட்டம் தள்ளப்பட்டு அதற்கு ஒரு குழு அமர்த்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இது ஒரு புகைவண்டியை ஓட்டுநர் ஒருவர்க்குத் தலைமாறாக (பதிலாக) அதை இழுத்துச் செல்ல ஒரு குழு அமர்த்தவேண்டுமென்று சொல்வது போன்றதே. த.வ. 341. கொல்தெருவில் குண்டூசி விற்றல் கடந்த இருபான் ஆண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கிடந்த எனக்கு, மீன் குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவது போலும், கொல்தெருவில் குண்டூசி விற்பது போலும், சாத்திரியார் (பி.எசு.சுப்பிரமணிய சாத்திரியார்) அவர்கள் மொழிநூல் துறைகளையுணர்த்த விரும்பியது, மிக வியப்பை விளைக்கின்றது. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - மதிப்புரை மறுப்பு, செ.செ. 25:464 தன்னை அறியான் அறியான் மொழிநூல் துறையில் குழந்தைப் பருவத்திலுள்ள புலவர் சிலர் என் முன்னின்று சொல்லாராய்ச்சி பற்றிக் கூறுவதும், என் கூற்றை மறுப்பதும், தேவதூதருங் கால்வைக்க அஞ்சுமிடத்திற்குள் முழு மக்கள் புகுகின்றனர். “(foolls enter where angels fear to tread”) தான் அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள் (He who knows not he knows not is a fool) என்னும் ஆங்கிலப் பழ மொழியையும் பொன் மொழியையும் நினைவுறுத்துகின்றன. தெ.மொ.7.9,12. அகரமுதலித் திருத்தக் குழுவும் நரிபரியாக்கலும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியைத் திருத்துதற்கு அமர்த்தப்பட்ட குழுவிலுள்ள தமிழ்ப் புலவரை நோக்கின், நரி பரியாக்கிய சிவபெருமானும் தம் திருவிளை யாடல் பெருமை இழந்தது பற்றி வருந்தத்தான் செய்வர். முதன்மொழி 1.7-8:5. மொட்டைத் தலை முழங்கால் முடி சென்னைப் பல்கலைக் கழக அகர முதலி (Lecicon) நச்சுக் குறும்புத்தனமாக நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் மரண என்னும் வடசொல்லை, சுரணை என்னும் சொற்கு மட்டுமன்றிச் சுணை என்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. சுணை, சுரணை என்னும் தென் சொற்கள் குத்தற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சுள் என்னும் வேரினின்றும் மரண என்னும் வடசொல்நினை என்னும் பொருள் படும் ம்ரு என்னும் வினை முதனிலையினின்றும் பிறந்துள்ளன என வேறுபாடறிக. இங்ஙனம் மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோட்டுக் காட்டுவதற்குத் தமிழரின் பேதைமையும் பேடிமையுமே முழுக் கரணியமாகும். வேர்ச்: 207. கலைச் சொல்லாக்குநர் தமிழறியாத பெருமாளர் கலைச் சொல்லாக்குவது குருடர் வழிகாட்டுவதையும், சொல்லாராய்ச்சி யில்லாதார் ஆக்கும் கலைச்சொல் இளஞ்சிறார் ஓவியத்தையுமே ஒக்கும். தமிழ்ப் பற்றில்லாதவரிடம் கலைச் சொல்லாக்கத்தை ஒப்புவிப்பதோ பெற்ற தாயைப் பற்றலரிடம் ஒப்பிப்பதேயன்றி வேறன்று. கலைச் சொல்லாக்க நெறிமுறைகள். செ. செ. 19: 234 கலைச்சொற் கோட்பாடு கலைச் சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு தனித்தமிழில் நூல்கள் ஆக்கவேண்டுமேயல்லாது, வழக்கத்திலுள்ள பொதுவான தமிழ்ச் சொற்களையும் கைவிட்டுப் பிறமொழிச் சொற்களைக் கூட்டியும் கொச்சைச் சொற்களைப் புகுத்தியும் இலக்கணப் பிழையுறவும் எழுதுதல் கூடாது என்பது ஒரு கன்னி சிலரொடு மட்டும்சிலமணி நேரம் கூடி விளையாடிவிட்டு ஏனைப் பொழுதெல்லாம் தன் கற்பைக் கண்டிப்பாய்க்காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது போலிருக்கிறது. புதுமணிப் பவழப் புன்மையும் புரைமையும் செ. செ. 52: 585 தெரிவியல், பிரிவியல் ஒவ்வொரு கலைக்கும், அறிவியற்கும் தெரிவியல் (Theory) புரிவியல் (Practical) என இரு கூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும்போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று. அதற்குக் காலமும் இடந்தராது. நீர்மின்னோ அனல் மின்னோ உருவாக்கப்படுவது எங்ஙனம் என்றறிவது தெரிவியல்; மின்வலியால் விளக்கெரியச் செய்வதும் விசிறியாட வைப்பதும் புரிவியல். மின் விளக்கைக் காணும் பொதுமக்கள் மின்னாக்கமுறை அதனால் அறிவிக்கப்படா மையால் அது அறிவியலின் பாற்பட்ட தன்று என்று பழித்துப் புறக்கணியார். வேர்ச். 202. மக்களும் சொற்களும் மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம் குடும்பமாகவும் குலம் குலமாகவும் இனம் இனமாகவும் கொடி வழி (Geneological) முறையில் இயங்குகின்றன. வேர்ச். முக.10. 7. பொருள்விளக்கம் அணியும் அழகும் சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பதுபோல் வல்லோர் செய்யுட்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும். சொ.ஆ.க.1. அரவணைத்தல் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து தழுவுந் தொழிலிற் சிறந்தவை. இதனால், முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும், பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக் கெழுந்தது. அரவு, பாம்பு; அணைத்தல் தழுவுதல். மாசுண மகிழ்ச்சி என்றார் திருத்தக்க தேவரும். (சீவக. நா. 189) சொ.ஆ.க.6 அரும்பும் மலரும் ஒருவினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும் பலர் அறிந்து வெளிப்படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் - அரும்பு; அலர் - விரிந்த மலர். சொ.ஆ.க.8. இருதலை மணியன் பாம்பு வகைகளுள் மங்குணி (மழுங்குணி) என்பதொன்று. அதற்குத் தலையும் வாலும் வேறுபாடில்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும் தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்ல முடியுமாதலாலும் அதற்கு இருதலை மணியன் என்று பெயர். பகை நட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று இருசாரார்க்கும் நல்லவனாக நடிப்பவன் இருதலை மணியனை ஒத்திருத்தலால் அவனையும் அப் பெயரால் அழைப்பர். சொ.ஆ.க.12 உயிரெழுத்து (உயிர் எழுத்துகள் உயிர் போன்றமையின் உயிர் எனப்பட்டன. உயிரானது தானே அசையும், ஓர் உடம்பையும் அசைவிக்கும். அதுபோல உயிரெழுத்துத் தானே ஒலிக்கும்; ஒரு மெய்யெழுத்தையும் ஒலிப்பிக்கும். இ.இ.2 ஊட்டி சங்கினால் குழந்தைகட்குப் பால் ஊட்டுவதால் அதற்கு ஊட்டி என்று பெயர். மக்களின் கழுத்தின் முன்புறத்துள்ள சங்குபோன்ற புடைப்பும் ஊட்டி எனப்படும்; சங்கு எனவும்படும். சொ. ஆ. க. 13 ஒழுகுதல் வாழ்க்கை ஓரூரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழிப் போக்குப் போன்றது. நிலத்தின்மேல் காலால் நடந்து செல்வதுபோல வாழ்க்கையில் ஒருவன் நினைவு சொல் செயல் ஆகிய முக்கரணத் தொழிலால் நடக்கின்றான். இதனால் முக்கரணவொழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக்காரணம் பற்றியதே. ஒழுகுதல், நடத்தல். சொ. ஆ.க. 10. கட்டாயம் ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீரவேண்டுவதைக் கட்டாயம் என்பர். கட்ட வேண்டிய ஆயம் கட்டாயம். கட்டுதல், செலுத்துதல்; ஆயம் - வரி, வரிகட்டுவது பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம். வரிகட்டுவது போன்ற கண்டிப்பு; கட்டாயம். சொ. ஆ. க. 15. கரையேறுதல் இவ்வுலக வாழ்க்கை, ஓர் ஆற்றை அல்லது கடலைப் போன்றது. இவ்வுலக இன்பமாகிய சிற்றின்பத்திற் பற்றுவைத்து வாழ்வது அந் நீர்நிலையில் மூழ்கி யிறப்பதையும், பற்றற்று வாழ்வது அதை நீந்திக் கரையேறியுய்வதையும் நிகர்க்கும். இதனால் உலகப் பற்றொழித்துப் பேரின்ப வீட்டையடைதற்குக் கரையேறுதல் என்றும் வீட்டுலக வாசிகளுக்கு அக்கரையர் என்றும் பெயர். சொ. ஆ.க. 5. கிளை - கிளைஞர் பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு குடியை ஒரு மரமாகக் கொள்ளின் அக்குடும்பங்கள் அதன் கிளைகளைப் போன்றிருத் தலால் இனத்திற்குக் கிளையென்றும். இனத்தார்க்குக் கிளைஞர் என்றும் பெயர். சொ. ஆ. க. 3. குருகு குருகு என்பது நாரை கொக்கு முதலிய நீர்ப் பறவைப் பொதுப்பெயர். கொல்லன் உலைத் துருத்தி, கொக்கும், நாரையும் போன்ற வடிவாயிருப்பதால் அதனையும் குருகு என்பது செய்யுள் வழக்கு. சொ. ஆ. க. 13. கொடி புல் பூண்டு செடி கொடி மரம் என்னும் ஐவகை நிலைத்திணை (தாவர) உயிர்களுள், பெரும்பாலும் மெல்லியதும் விரைந்து வளர்வதும் ஒரு கொள்கொம்பைப் பற்றிப் படர்வதும் கொடியே. பெண்ணைக் கொடியென்று சொன்ன அளவிலேயே, அவள் ஆடவனிலும் மெல்லியள் என்றும், அவனிலும் விரைந்து வளர்பவள் என்றும், ஒரு கொழுநனைத் துணைக்கொண்டே வாழ்வள் என்றும் மூன்று பெண்பாற் குணங்கள் குறிப்பாய் அறியக் கிடக்கின்றன. சொ. ஆ. க. 2. கொண்டாடுதல் கொண்டாடுதல் என்பது, ஒரு பொருளைக் கையிற் பற்றி அல்லது தலைமேற் கொண்டு கூத்தாடுதல், தந்தை தன் குழந்தையையும், பத்தன் தான் வழிபடும் கடவுள் உருவையும் கையில் ஏந்தி அல்லது தலைமேற் கொண்டு மகிழ்ச்சியாற் கூத்தாடுதலே கொண்டாடுதல். சொ. ஆ. க. 11 கோல் கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும் கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். சொ. ஆ. க. 4. கோவன் - கோன் - கோ ஆயன் ஆக்களைக் காப்பது போல அரசன் மக்களைக் காத்தலால் அரசனுக்குக் கோவன் என்பது பெயர். கோவன் என்பது முறையே கோன் கோ எனத் திரியும். கோ-பசு. கோக்களை மேய்ப்பதுபற்றி ஆயனுக்குக் கோன், கோனார் என்னும் ஒருமைப் பெயரும் உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகட்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே. சிலந்தி உடம்பில் தலைக்குக்கீழ் எங்கேனும் புறப்படும் கொப்புளம் சிலந்திப் பூச்சியின் உடல்போல் திரண்டிருத்தலால் சிலந்தி எனப்பெயர் பெற்றது. ஒருவகைக் கட்டியை ஆங்கிலத்தில் Cancer என்றும் Canker என்றும் அழைப்பர். அது நண்டு போலிருத்தலின் இப்பெயர் பெற்றது. சொ. ஆ. க. 9. சீர் தூக்கல் சீர்தூக்கல் என்பது, முதலாவது துலைக்கோலில் ஒன்றை நிறுத்தலுக்குப் பெயர். சீர், துலைத்தட்டு. தூக்கல், நிறுத்தல். இன்று மனத்தில் ஒன்றை நிறுத்தல் போல ஆராய்ந்து பார்த்தலுக்குச் சீர்தூக்கல் என்று பெயர். மனமாகிய துலைக்கோலில் மதிநுட்ப மாகிய வரை அல்லது படியிட்டு நடுநிலையாகிய நாவினால் நிறுப்பது போல ஆராய்தல், சீர்தூக்கல். சொ. ஆ.க. 11. சோ காத்தல் சோ காத்தல், சிறையிற் காத்திருத்தல், அதுகனகவிசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததினால் சேரன் செங்குட்டுவனின் சீற்றத்திற்காளாகிச் சிறைப்பட்டது போல்வது. திருக்.மர.127 தன்மை தீயைப்போல் தீங்கு செய்யும் தன்மை தீமை என்றும், நீரைப்போல் நன்மை செய்யும் தன்மை நீர்மை என்றும், புல்லைப்போல் இழிந்தநிலை புன்மை என்றும், சொல்லப்படும். முதலாவது இனிய தன்மையைக் குறிக்க எழுந்த நீர்மை என்னும் சொல் இன்று தன்மை என்னும் பொதுப் பொருளையே குறிக்கின்றது. சொ. ஆ.க.6 தாராளம் படைஞர் போரில் ஒருகால் தம் உயிரிழக்குமாறு பகைவரைக் கொல்லுந் தொழிலை அல்லது வெல்லும் தொழிலை மேற்கொண்டிருப்பதனாலும் அவர்களின் நாட்டுத் தொண்டும் நிலையாமைச் சிறப்பும் நோக்கி அவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உரிமை அல்லது ஒழுக்கவிதித் தளர்ச்சியினாலும் அவர்கள் பிறர் பொருளை விரும்பிய விடத்து அவரைக் கேளாமலே எடுத்துக் கொள்வது வழக்கம். இதற்குத் தாராளம் என்று பெயர். தார் என்பது சேனை. ஆளம் என்பது ஆளின் தன்மை. தாராள், படைஞன். தாராளம் ஒருவரைக் கேளாமலே அவர் பொருளை எடுத்துக்கொள்ளும் படைஞன் இயல்பு. ஒருவர்க்குரிய இடத்தில் அவரைக் கேளாமற் புகுவதும் தாராளம் எனப்படும். பொருளை வௌவுவதும் உரிமையை வௌவுவதும் ஒன்றே. சொ. ஆ.க. 112. திண்டாடுதல் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் உள்ள சந்தி சதுக்கங் களிலும் அம்பலங்களிலும் திண்டுகள் இருப்பதுண்டு. திண்டு, சிறுதிண்ணை. அத்திண்டுகளில் குறச் சிறுமியர் சோற்றுக்குக் கூத்தாடுவது வழக்கம். அவரைப்போல ஒருவன் சோறில்லாது இடர்ப்படும்போது அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான் என்பர். சொ. ஆ. க. 11. துருத்தி ஆற்றிடைக் குறை, கொல்லன் துருத்திபோல முன் குவிந்தும் பின் விரிந்தும் இருப்பதால் அதையும் துருத்தி என்பர் புலவர். சொ. ஆ.க. 13. நடுவு நிலை நிறைகோலின் நாவு இருபுறமும் சமனாய் நிற்குமாறு நடுநிற்றல் போல, பகை நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்தநிலை நடுநிலை அல்லது நடுவுநிலை எனப்பட்டது. சொ. ஆ.க. 6. நூல் முதலாவது இருவகை நூலையும் (அறிவு நூல் ஆடை நூல்) நோக்கின், அவற்றுக்குப் பொதுவான நுண்மை நீட்சி நேர்மை என்னும் மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பது போலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல் அல்லது சிலந்தி பட்டுப்பூச்சி முதலியவற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப் போலப் புலவனின் உள்ளத்தினின்று அறிவு நூல்வெளிப்படுதல் மற்றுமொரு பொதுத் தன்மையாம். இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின் அவற்றிற்குப் பொதுவான நீட்சி, பரப்பு, இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும். சொ. ஆ. க. 8. நொண்டிச் சிந்து இசைத் தமிழ்ப் பாட்டு வகைகளுள் ஒன்று, அடிக்குறுமை பற்றிச் சிந்து எனப்பெயர் பெறும். அச் சிந்து வகைகளுள் ஒன்று, நெடியதும், குறியதுமாக ஈரடி கொண்டுள்ளமையாலும் நொண்டி நொண்டிச் செல்வதுபோன்ற ஓசையுடைமையாலும் நொண்டிச் சிந்து எனப்படும். சொ. ஆ. க. 10. பஞ்சாய்ப் பறத்தல் வறுமையால் வருந்தும் மாந்தர் நொய்யவுடம்புடன் வள்ளலாரை நாடி அங்குமிங்கும் அலைந்து திரிதல். ஆலிலையும் இலவம்பஞ்சும் ஆடிக்காற்றில் அங்கும் இங்கும் பறந்து திரிவதை ஒக்கும். இதனால், ஆலாய்ப் பறத்தல், பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்குகள் எழுந்தன. எளிமையைக் குறிக்கும் பஞ்சை என்னும் சொல்லும் வற்கடத்தைக் குறிக்கும் பஞ்சம் என்னும் சொல்லும் பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்கினின் றெழுந்தவையாம். சொ. ஆ. க. 8. பிறப்பும் இறப்பும் மக்கள் பிறப்பு கண் விழிப்பும், அவரது இறப்பு கண்ணடைப்பும் போன்றது. வாழ்க்கை முழுதும் ஒரு பகல் நடவடிக்கை போன்றதே. பெற்றோர் தம்பிள்ளைகளைத் தம் கண்ணுள்ள போதே கரையேற்ற வேண்டுமென்று சொல்வது வழக்கம். பகல் முடிந்து இரவு வந்த பின் கண்மூடித் தூங்குவது போல வாழ்க்கை முடிந்த போதும் மக்கள் தம் கண்மூடி விழியாத் துயில் கொள்வர். சொ. ஆ. க. 9. போலி போல வருவது போலி, உலக வழக்கினுள்ளும் பட்டுப்போலி, கற்போலி, கதர்ப்போலி முதலியவற்றைக் காண்க. பட்டுப் போல்வது பட்டுப்போலி, ஓரெழுத்துப் போல மற்றோரெழுத்து வருவது எழுத்துப் போலி. இ.இ.8. மரம் - முளை பெற்றோர் மரம்போல்வராயின், பிள்ளைகள் கிளைகளும் கொழுந்தும் போல்வர். ஒருமரத்தின் அடியில் முளைக்கும் முளையைப் போன்று மகனிருத்தலின் அவனுக்குக் கான்முளை என்றும் பெயர். சொ. ஆ. க. 3. முதல் எழுத்து முதல், முதன்மை அல்லது காரணம், வாணிகமுதல்போல. உயிரும் மெய்யும் முதலில் உண்டானமையும் பிற எழுத்திற்குக் காரணமானமையும் அறிக. ï., இ. 2. மெய்யெழுத்து (மெய்யெழுத்துகள்) மெய் போன்றமையின் மெய் எனப் பட்டன. மெய், உடம்பு. ஓர் உடம்பு எங்ஙனம் ஓர் உதவியின்றித் தனித்து இயங்காதோ அங்ஙனமே ஒரு உயிர்மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்து உச்சரிக்கப்படாது. இ. இ. 3. 8. நூல் ஒன்றின் ஒன்று சிறந்தன முதனூலாசிரியர் மெய்ப்பொருள் அறிஞராய் இருந்த தனால், மொழிநடை எதுவாயினும் பொருளே அதன் உள்ளீடென்றும், தனிச் சொற்கும் பொருள் உண்டென்றும் கண்டு, அதனையே சொல்லிற் கடுத்துக் கூறியதோடு அதற்கே சிறப்புக் கொடுத்துச் செய்யுளை அதனுள் அடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப் பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கண நூலின் முடிமணியாக்கினார். திருக் கோவிலின் முகமண்டபமும், இடைமண்டபமும், உண்ணாழிகையும் போல எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றின் ஒன்று சிறந்தனவாகும். த.வ. 114. தூய்மணிச் சேய்கள் தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எழுவகை நிலத்திற் கும் எண்வகை வனப்பிற்கும் இலக்கியமாயிருந்து இறந்துபட்ட ஏராளமான இருவகைத் தொடர்நிலைச் செய்யுட்களே ஆரிய வருகைக்கு முற்பட்டுச் சொல்லிலும் யாப்பிலும் பொருளிலும் கருத்திலும் முழுத் தூய்மையான மணிச் சேய்களாகும். வ. மொ. நூ. வ. 117. பொருளிலக்கணம் செய்யுள் சிறந்த கலமாகவும் அதன் பொருள் சிறந்த அமுதாகவும் கருதப்பெற்றதினால் வேறெம்மொழியிலுமில்லாத பொருளிலக்கணம் தமிழிலக்கணத்தின் கொடுமுடியும் முடி மணியும் முதிர்விளைவும் உயிர்நாடியும் தமிழனின் தனிப்பெரும் பெருமையும் ஆகக் கொள்ளப்பெற்றது. த.வ. 24. மரபியல் மரபியலாவது பாட்டனும் தந்தையும் மகனும் பேரனும் போல, அல்லது அடியும்கவையும் கொம்பும் கிளையும் போல ஒன்றினொன்று பிறந்தும் கிளைத்தும் வரும் தொடர்ச்சி பற்றியது. உலகமொழிகளின் தொடர்பு செ. செ. 23:166. மரபு வித்தும் வேரும் அடியும் கிளையும் குச்சும் கொழுந்து மாகத் தொடர்ந் தோங்கும் மரம் போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத் தொடர்ச்சி மரபு எனப்பட்டது. தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழக்காற்றையும் மரபு என்பதுமுண்டு. தொல்காப்பியத்திலுள்ள மரபியல் என்னும் இயற்பெயர் இப்பொருள் பற்றியதே. சொ. ஆ.க. 3. கொடிவழி பலதலைமுறையாக; தொடர்ந்து வரும் குலத் தொடர்ச்சி கொடியும் மரமும்போல நீண்டும் தொடர்ந்தும் இருத்தலின், அதனைக் கொடி என்றும் கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். சொ. ஆ. க. 3. அகங்கையும் புறங்கையும் (காதல் மறம்) ஆகிய இரு குணங்களுள்ளும் அல்லது குணவாழ்க்கையுள்ளும் உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது அகங்கையும் புறங்கையும் போல ஒன்றியே நிற்கும். த. வ. 115. நிறைமொழி மாந்தர் மறைமொழி காளமேகம் திருமலைராயன்பட்டினத்தில்மண்மாரி பெய்வித்தது, நிறைமொழி மாந்தர் மறைமொழி போன்றதாம். திருக். மர. 872. மூலநோயாளர் பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே, அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் என்று தொல்காப்பியம் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேகூர்ங் கண்ணும் எஃகுச் செவியும் நுண்மாண் நுழைபுலமும் கொண்ட குமரி நாட்டுத் தமிழ்மக்கட்கும் உரை வேண்டியிருந்தது என்பது புலனாகும். ஆதலால் உரைத் துணையின்றி மூலத்தையே படிப்பவர், மூலநோயாளிகள் என்னுமளவு பலவிடத்தும் பொருளுணராது இடர்ப்படுவர் என்பது தேற்றம். தெ. மொ. 7 9 : 14. குற்றியலுகரம் எண்ணப்பெறுதலும் பெறாமையும் சிறுவர் சிலவகையிற் கணக்கிற் சேர்க்கப்பெற்றும் சிலவகையில் சேர்க்கப்பெறாதும் போவதுபோல், குற்றியலு கரமும் சீர்நிலைக்கும் தளவகைக்கு எழுத்தெண்ணப் பெற்றும், ஐவகையடிகளின், பதினேழ் நிலைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாதும் தொன்றுதொட்டு இயங்கி வந்திருக்கிறது. தெ. மொ. 3. 12 : 12 பொற்கலத்து அறுசுவையுண்டி இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவாற் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவை யுண்டியைப் படைத்தாற் போலும். திருக். மர. முன். 18. திருக்குறள் சுரங்கம் இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும் அது மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும் ஆகும். ஆயினும், இன்னும் அச் சுரங்கத்தினின்று கருத்து மணிகள் தோண்டத் தோண்ட மென்மேலும் வந்து கொண்டே யிருக்கின்றன. திருக். மர. முன். 24. ஏமப்புணை ஏமப்புணையாவது நடுக்கடலிற் கப்பல் மூழ்கும் போது கலவர் ஏறித் தப்பும் ஏமப்படகு (Life Boat). வாழ்க்கைக் கடலைக் கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக் காக்கும் இனத்தார் ஏமப்புணையார். பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவ வோகங்களில் தவறு நேர்ந்து அவர்கெடும் நிலையில் அவரைத் திருத்தி ஆற்றுப் படுத்தும் முழுத் துறவியர் ஏமப்புணையார். திருக். 306 ஆதிபகவன் ஆதிசங்கரர் முதன் முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற் காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற் பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. இதை ஆதிசங்கராச் சாரியார் என்பது போலக்கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதி என்னும் புலைச்சியை மணந்தவரல்லர். திருக். மர. முன். 11 ஆதிபகவன் என்பதிலுள்ள ஆதியைப் புலைச்சியாகவும் பகவனைப் பிராமணனாகவும் காட்டும் கட்டுக் கதை மறுப்பு இஃது. தழை - தண்டு - தாள் தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின் பிறவிப் பிணிக்கு மருந்தாகும் குறிப்புப் பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். திருக். மர. 2 பண்பு, பயன் இல்லற வாழ்க்கை இருபகட்டு ஒருசகட்டு ஒழுக்கம் போல்வதாகலின், கணவன்மனைவியரிடைப் பட்ட இருதலையன்பு அதன்பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. திருக். மர. 45 திருக்குறள் அழியாமை பரிமேலழகர் உரையால் ஒரு பெரு நன்மையும் இல்லையோவெனின் உண்டு. அது எதுவெனின் அவருரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கப்படா திருந்ததே யென்க. எதுபோலவெனின், முதலிருகழகத்தும் வழங்கிய இயற்றமிழிலக்கணம் முழுதும் அதன் தொகுப்பாசிரியராகிய தொல்காப்பியரது தொல்காப்பியம் என்னும் பிண்ட நூலான் போற்றப்பட்டிருப்பது போன்று என்க. திருக்.மர. முக. 8 அறுசுவையுண்டியில் ஆரிய நச்சு (பரிமேலழகர் உரை) பெரும்பாலும் ஏனையுரைகள் எல்லாவற்றினும் சிறந்த தென்பதும், சிலகுறள்கட்கு ஏனை யுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே. ஆயின் பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப உண்மைக்கு மாறானதும் தமிழுக்கும் தமிழர்க்குங்கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தி யிருப்பது இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது. திருக்.மர. முக.5. பாட்டிக்கு நூற்கப் பேர்த்தி கற்பித்தல் அறியாமை அகப்பற்று அவா ஆசை சினம் என வடநூலார் கூறும் குற்றம் ஐந்தனுள் அகப்பற்றை அறியாமைக் கண்ணும் அவாவை ஆசைக்கண்ணும் திருவள்ளுவர் அடக்கிக் காமவெகுளி மயக்கம் என மூன்றாகக் கூறியதாகப் பரிமேலழகர் உரைப்பர். இது பாட்டிக்கு நூல்நூற்கப் பேர்த்தி கற்றுக் கொடுத்தாள் என்பது போன்றதே. வேள்வி ஒன்றே இயற்றும் ஆரியர் ஓகமுறை கற்றது தமிழரிடத்திலேயே ஆதலின் தமிழ் நூலார் கூறும் முக்குற்றங்களையுமே வடநூலார் ஐந்தாக விரித்தார் என அறிக. திருக். மர. 360 பாட்டி பேர்த்தியிடம் நூற்கக் கற்றல் மூவேந்தராட்சி படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருவதென்று இவரேவேறோரிடத்திற் கூறியிருந்தும் பாட்டி பேர்த்தியிடமிருந்து நூல் நூற்கக் கற்றுக் கொண்டாள் என்பது போல, தமிழவேந்தர்பிற்காலத் தாரியரிடம் அரசியல் திறங்களை அறிந்து கொண்டார் என்பது தம்முரணானதே. திருக். மர. 501. தேனை வழித்தவன் தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல, பொருளின் அதிகாரச் சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்தரியல் பாதலால் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத் தலைவர் வினையும், இறுதி வரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் சிறிது வேறுபட்ட விடத்தும் அவரை வினையினின்று விலக்கி விடுவதும் இன்றியமையாதன என்பதாம். திருக். மர. 514 உண்மையும் தலைமையும் விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயருக்கு நாகம நாயக்கன் இருந்தது போலன்றி, அவன் மகன் விசுவநாத நாயக்கன் இருந்ததுபோல் உண்மையான படைத் தலைவனே நிலையான படைத் தலைமைக்கு அமர்த்தப்படுவான். திருக்.மர 511 எட்சண் டெருமைத்தோல் தென்னாலி யிராமனின் எட்சண் டெருமைத் தோல் (திலகாஷ்ட மகிஷ பந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல் வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திருப்பதால் படைத்தகையாலும் பகைவரை மருட்டலாம் என்றார். திருக். மர. 768 அரம் கடுமொழியையும் கையிகந்த தண்டத்தையும் ஈரரமாகவோ, இருபுறமும் அராவும் ஓரரமாகவோ கொள்க. திருக். மர.507. புகழுடம்பும் பூதவுடம்பும் புகழை ஓர் உடம்பாக உருவகிப்பது இலக்கிய மரபு. பூதவுடம்பு தாய்வயிற்றில் கருவாகத் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து பத்தாம் மாதம் முழு வளர்ச்சியடைந்து, குழவியாகப் பிறக்கின்றது. இந்நிலைமையைப் புகழுடம்பிற்குப் பொருத்திக் கூறியுள்ளார் ஆசிரியர் வள்ளுவனார். தனக்கென வாழப் பிறர்க்குரியாளன் பொதுநல வூழியத்தைத் தொடங்கும் போது, புகழுடம்பு கருக்கொள்கின்றது. ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டில் புகழுடம்பு பிறக்கின்றது. பூதவுடம்பு இறக்கின்றது. இதையே நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் என்றார். திருக். மர. 315 இன்பவகை உலகவின்பம், ஒருபுலவின்பமும் பலபுலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ண வோவியமும் எழுவும் யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன ஒரு புலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன. கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தரவல்லாள். திருக். மர. 36 விலக்கா விருந்து அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும் வடசொற்கள் தமிழில் அருகியே வழங்கியமையாலும் அவற்றைத் திருவள்ளுவர் கண்டு விலக்க முடியாமற் போயிற்று. எதுபோல வெனின், ஆயிரக் கணக்கானவர் உண்ணும் ஒரு திருமண விருந்தில் ஒரு சில அயலார் அமர்ந்திருப்பினும் பரிமாறிகள் அவரைக் கண்டு விலக்க முடியாதது போலவென்க. திருக். மர. 732. படைக்கல நூல் போர்க் களத்திற்குப் படைக்கலம் போல் (மொழிப் போராட்டத்திற்கும்) சில கருவி நூல்கள் வேண்டும். முதன்மொழி, 1, 1:4. மறைமலையடிகள் நூலகம் திருவள்ளுவர் முதல் மறைமலையடிகள் வரை பெரும்புலவர் எத்துணையர் தோன்றியிருப்பினும் அவரெல் லார் அறிவாற்றலை யும் தொகுத்து ஓரகத்தே தேக்கி, எண்ணற்றவர் வந்துண்ணினும் வற்றாவாரி போன்றும், எடுக்க எடுக்கக்குறையா உலவாக் கோட்டை போன்றும், நாடெங்கும் வறளினும் கேடறியா மூலபண்டாரம் போன்றும், புலவரெ ல்லாம் கூடும் பொது மண்டபம் போன்றும். ஆராய்ச்சியாளர்க் கெல்லாம் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) அளிக்கும் ஆவினன்குடி போன்றும், குன்றாது உணவு பெருக்கும் வட்டுப் பண்ணை போன்றும், பகைவரெல்லாம் கூடிமுற்றுகையிடினும் புறங்காட்டுவிக்கும் படைக்கலக் கொட்டில் போன்றும் தமிழ்மொழி இலக்கிய நாகரிகப் பண்பாட்டைக் காத்துத் தமிழுக்கு ஊறு நேர்வதைத் தடுக்கும் தனிக்காவற்கூடம் போன்றும் விளங்கும் ஒரு நூலகம் (மறைமலையடிகள் நூலகம்). ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு எவர்பட்ட அரும்பாடு செ. செ. 54:6 முற்றிற்று.