இளங்குமரனார் தமிழ்வளம் 18 வாழ்வியல் வளம் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 18 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 192 = 208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 130/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங் களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடு கிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத் தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் வாழ்வியல் வளம் முன்னுரை 1 1. துன்பத்தை வெல்லும் துணிவு 3 2. நலமார்ந்த நட்பு 15 3. வாழ்வியல் வழி 27 4. சான்றோர் சால்பு 71 5. குறள் நெறி 80 6. ஒரு குறள் 94 7. வள்ளுவம் காட்டும் வாழ்வியல் 101 8. திருக்குறள் வாழ்வியல் உரை 107 9. திருக்குறளும் தரமேம்பாடும் 115 10. தன்னை உணர்விக்கும் தவக்குறள் 122 11. திருக்குறள் ஞானபீடம் 130 12. இலக்கியத்தில் இயற்கை 137 13. சங்க இலக்கிய இயற்கை வாழ்வியல் 150 14. அன்னை நெஞ்சம் 161 15. தோழியின் அருமை 165 16. இரவே வாழ்க 171 17. ஓதாக் கல்வி 177 18. சித்தர்-திருமூலர் 181 19. பேரும் பெருமையும் 187 20. வாழிய வையகம் 191 வாழ்வியல் வளம் முன்னுரை வாழ்வியல் வளம் வேண்டார் எவர்? வாழ விரும்பும் பிறப்பே உயிர்ப் பிறப்பு. வாழ்கிறதா? வளவாழ்வு வாழ்வதாக உணர்கின்றதா? வள வாழ்வுக்கு வழி என்ன என்று கண்டு அதனை அடைய முயல் கின்றதா? என்று வினாவின் அவ்வினாக்களுக்கு விடைதரப் பலரால் இயல்வதில்லை! ஏன்? வெந்ததைத் தின்று விதிவந்தால் போவது எனப் பலர் தம் வாழ்வைச் சுருக்கி விட்டனர். அதனை எண்ணிப் பார்க்கவும் துணிவிலார் ஆகிவிட்டனர். வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று போலித் துறவு புகலத் தொடங்கி விட்டது. ஒருவர் வாழ்வு மற்றொருவர் வாழ்வுக்கு எவ்வகையில் எல்லாம் துணையாய் - தூண்டலாய் - துலக்கமாய் - இருக்கும் எனின் வாழ்ந்தோர் வாழ்வியலைக் காண வேண்டும். வையக வாழ்வியலைக் கருத வேண்டும். பண்புடைய சான்றோர்களாலும், அறிவறிந்த பெரு மக்களாலும் இவ்வுலகம் பெற்றிருக்கின்ற - பெற்று வருகின்ற - பேறுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் வாழ்வு என்ன அவர்க்கே இயல்வதா? எம்மால் இயலாதா? அவரைப்போல் பிறர்க்கென வாழும் பெருந்தகையராகயாம்; வாழ எமக்குத் தடை என்ன? தடை எது எனினும் அதனை உடைத்து உயர்ந்தோங்கி நின்று உலகு பாராட்ட வாழ்ந்தவர் இலரா? அவரை அடி ஒற்றி தடம் பற்றி யாமும் நடக்கலாமே! நடையிட வேண்டுமே! என்னும் உணர்வு வீறி எழுந்தால், வெற்றி நம் கைக்குள் வந்து விடும் அல்லவா! வாழ்வின் பிழிவு துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் ஆம். அத்துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் தம்மளவில் நின்று பயனென்ன? யாம் பெற்ற பேறு பெறுக வையகம் என்னும் பெரு நெறி, எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்னும் அருள்நெறி. எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் அருள் நெறி, உலக நெறியாக உயர்வோர் நெறியாகத் தூண்டுவது இவ்வாழ்வியல் வளம்! துன்பத்தை வெல்லும் துணிவு என்று தொடங்கும் வாழ்வியல் வளம்; வாழிய வையகம் என்னும் வாழ்த்துடன் நிறைகின்றது. கட்டுரை எண்ணிக்கையில் இருபது; ஆனால் உட்பகுதிப் பிரிவதால் ஓர் ஐம்பதுக்கு மேற்பட்டது. ஒவ்வொரு தலைப்பும்-செய்தியும் படிக்கவும் முடிக்கவும் உரியது இல்லை. கடைப்பிடிக்க அமைந்தது. கடைப்பிடி வாழ்வே, கடமையுணர் வாழ்வு! வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வு! இக்கட்டுரைகள் வானொலி வழி வெளிப்பட்டவை; இதழ் வழி வெளிப்படவை; மலர் வழி வெளிப்பட்டவை எனப் பல திறத்தன. மலரை மாலையாக்கிய தொகுப்பு இது. இதனை அருமையாய்த் தமிழுலகுக்கு வழங்குபவர் தமிழ்மண் அச்சகத்தார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்தும். அன்புடன் இரா. இளங்குமரன் 1. துன்பத்தை வெல்லும் துணிவு இடுக்கண் என்பது துன்பம்; துன்பம் என ஒன்று வந்தால் அது எவ்வளவு சிறிதாக இருந்தால் கூட அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவள்பவர்களைப் பார்க்கிறோம்; துடிப்பவர் களைப் பார்க்கிறோம்; வாராதவை எல்லாம் வந்து விட்டனவாக எண்ணித் தங்களைத் தாங்களே வாட்டிக் கொள்பவர்களைப் பார்க்கிறோம். இத்தகையவர்களைப் பார்த்துத் திருவள்ளுவர் இரக்கப்படுகிறார். ஆறுதலும் தேறுதலும் சொல்கிறார். அரவணைத்துக் கொண்டு அறிவுறுத்துகிறார். துன்பம் வருகிறதா? வரட்டும்; துணிந்து நில்லுங்கள் துன்பத்தைத் துச்சமாகப் பாருங்கள்; துன்பமே நீ என்னை என்ன செய்துவிட முடியும் என்னும் உறுதியுடன் துன்பத்தைக் கண்டு சிரியுங்கள் என்கிறார் திருவள்ளுவர். இடுக்கண் வருங்கால் நகுக என்பது அவர் வாக்கு. திருநாவுக்கரசருக்குத் தொல்லைக்கு மேல் தொல்லை வந்தது. தொல்லையைத் தொல்லையாக அவர் கருதவில்லை. பிறகு என்ன செய்தார்? விலா எலும்பு விம்மி மொடுமொடுக்கத் துன்பத்தைக் கண்டு சிரித்தாராம்! விலா இறச் சிரித்திட்டேனே என்கிறார் அவர். துன்பம் திருநாவுக்கரசரிடம் தோல்வி காணாமல் என்ன செய்யும்? துன்பம் வரும் போது சிரிக்க முடியுமா? துணிவு இருந்தால் சிரிக்க முடியும். வலிமை வாய்ந்த ஒருவன் மற்போர்க் களத்தில் மார்தட்டிக் கொண்டு நிற்கிறான். அவன் முன்னே மெலிந்த ஒருவன் கச்சை கட்டிக் கொண்டு கை கலக்க வந்தால், நீயா என்னொடு போர் புரிய வருகிறாய் என்று நகைப்பானா மாட்டானா? போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுபவனைக் கண்டு வெற்றி கொண்ட வீரன் நகைப்பானா மாட்டானா? இத்தகைய வெற்றிச் சிரிப்பு, துன்பத்தை அலறியோடச் செய்பவர் களுக்கும் உரிமையானதுதானே. துன்பத்தைக் கண்டு எல்லாராலும் சிரிக்க முடியவில்லையே ஏன்? சிலர் உலகத்துத் துன்பமெல்லாம் தங்களுக்கே வந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அத்துன்பத்தில் இருந்து விடுதலையே கிடையாது என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர். நம்மைப் பார்க்கிலும் துயரப்படுபவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் படும் துன்பத்தில் நம் துன்பம் எம்மட்டு? என்னும் தெளிவு வந்து விட்டால் அவர்கள் தம் துன்பத்தைக் கண்டு சிரிக்க வல்லவர்கள் ஆகிவிடுவார்கள். அவ்வளவுதான்! அப்பொழுது பார்க்க வேண்டுமே அவர்கள் ஆண்மைத் திறத்தை! தைப் பொங்கல் விழாவின் போது சல்லிக்கட்டு நடத்து கிறார்கள். மஞ்சு விரட்டு என்பதும் அதுவே. பழங்காலத்தில் அதனை ஏறுதழுவுதல் என்றார்கள். கயிறுருவி விடப்பட்ட காளை வெடிவாலெடுத்து எப்படித் தாவி வருகிறது! எதிரிட்டவர் குடரைச் சரிக்கவும் குத்திக் கிழிக்கவும் கொம்பை எப்படியெல்லாம் சிலுப்புக் கொண்டு வருகிறது அந்தக் காளையையும் அஞ்சாமல் அணைத்து நிறுத்திச் செயலற்றுப் போகச் செய்து விடுகின்றனரே! பார்த்த பார்வையாலேயே பலரையும் நடுக்கும் அக் காளையின் திமிலைப் பாய்ந்து முதுகில் தாவி விழுந்து அடக்கி விடுன்றனரே! இத்தகைய துணிவு கொண்டவர், துன்பம் என்னும் காளையை அடக்கி ஊர்ந்து செல்லவும் வல்லவர் அல்லரோ! அதனால் தான் இடுக்கண் வருங்கால் நகுக என்ற திருவள்ளுவர். அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் என்கிறார். துன்பத்தைக் கண்டு சிரிக்கும் சிரிப்புத்தான், அடங்காக் காளையையோ, அடங்காக் குதிரையையோ அடக்கி அதன் மேல் ஏறிச் செலுத்துவது போலத் துன்பத்தின் மேல் ஏறிச் செலுத்த வல்லது என விளக்கினார். ஒரு கப்பல் கடலில் செல்லுகிறது. அப்பொழுது மேகம் திரள்கிறது! வானம் இருள்கிறது; புயல் எழும்பி சூறை மோதுகிறது; கடலலைகளோ மலைபோல எழும்பி எழும்பி வீழ்கின்றன. கப்பல் நடுங்கும் நடுக்கத்தைச் சொல்வதா? கப்பலில் இருந்தவர் நடுங்கும் நடுக்கத்தைச் சொல்வதா? இந்நிலையில் துணிவு மிக்க ஒருவன் கலங்குபவர் முன்னே வந்து நின்றான். காற்றில் வைக்கப் பட்ட விளக்குப்போல நீங்கள் நடுங்குகிறீர்கள்; நடுக்கத்தை விட்டொழியுங்கள்; நகைத்து மகிழுங்கள்; அப்படி நகைப்பதே துன்பத்தைத் தொலைக்கும் கூரிய வாளாகும்; அழுது புலம்பினால் மட்டும் யாரும் பிழைத்து விடுவீர்களோ? வருவது வந்தே தீரும்; துணிந்து இருங்கள் என்றான். அஞ்சி அலறியவர்கள் ஆண்மை பெற்றனர்; நடுக்கம் விட்டனர். நலமே சூழ்ந்தது. இது சீவக சிந்தாமணியில் வரும் ஒரு காட்சி. இடுக்கண் வருங்கால் நகுக என்னும் திருக்குறளுக்கு அமைந்த விளக்கமாகவே இச் செய்தி அமைந்துள்ளதாம். துன்பம் தனியே வராது என்பது பழமொழி. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதும் பழமொழியே. துன்பத்தின் மேல் துன்பம் தொடர்ந்து வரும் என்பதே இப்பழமொழிகளின் கருத்தாகும் ஒரு நாள் அடைமழை பெய்தது. அப்பொழுது பசு கன்று ஈன்றது! வீட்டுக் கூரை சரிந்தது: சுவர் சாய்ந்தது; மனைவி நோயுற்றுக் கிடந்தாள்; வேலைக்காரன் இறந்து போனான்; நிலத்தில் ஈரம் உலருமுன் விதைக்க வேண்டுமென்று விதைப் பெட்டியுடன் புறப்பட்டான்; கடனைத் தந்து விட்டுப்போ என்று வரிந்து கட்டிக் கொண்டு அலுவலர் தடுத்தார்; பாவலன் ஒருவன் வந்து, பாடிப் பரிசு கேட்டான்; இப்படி அடுக்கடுக்காகத் துயர் வந்தால் அந்தப் பாவிமகன் படும் பாட்டைப் பார்க்க முடியுமா? என்று விவேக சிந்தாமணி என்னும் நூலில் ஒரு பாட்டு வருகின்றது. இட்டுக்கட்டிய செய்திகளே இவை என்றாலும் துன்பம் தொடுத்துவரும் என்பதை விளக்குவதற்காக வந்ததேயாம். துன்பத்தைக் கண்டு இவ்வாறு துடித்துப் பாடுபவர், பலர் இருந்தாலும், திருவள்ளுவர் மிகத் தெளிவுடன் பாடியுள்ளார். துன்ப நீக்கத்தைப் பற்றிக் கருத்தாகக் கூறியுள்ளார். அழுபவர்களைக் கட்டிப் பிடித்து அழுதால் ஆகிவிடுமா? கலங்குபவர்களைக் கண்டு கலங்கிப் போனவர்களைத் தூக்கி நிறுத்தித் தூண்போல ஆக்குபவர் அல்லரோ வேண்டும்? அவ்வகையில் திருவள்ளுவர் துணிவு காட்டித் தூக்கி நிறுத்துகிறார். மழைத்துளி எவ்வளவு சிறிது. ஆனால் பலகோடி மழைத் துளிகள் கூடினால் வெள்ளமாகப் பெருக்கெடுக் கின்றதே. அதிலும் காட்டாற்று வெள்ளத்தைக் காணவேண்டும் வேண்டுமே! கரையுண்டா? கட்டுண்டா? காட்டாற்று வெள்ளம் போல் கவலை பெருகினால்தான் என்ன? வெள்ளத்தையே எதிரிட்டுக் கடக்கும் எழுச்சியாளர்கள் இலரா? வெள்ளத்தில் மூழ்குவாரை எடுத்துக் கரையேற்ற வல்ல ஏந்தல்கள் இலரா? அவர்களை வெள்ளம் என்ன செய்து விட்டது? வெள்ளத்தின் வீரார்ப்பையே அடக்கி வெற்றிக் கொடி நாட்டி விடுகிறார்களே! இத்தகையவர்களை எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் என்கிறார். நினைத்த அளவிலே துன்பம் இல்லாமல் ஒழியுமாம். யார் நினைத்த அளவில்? அறிவுடையவன் நினைத்த அளவில்! அறிவுக்கு உரன் என்பது ஒரு தமிழ்ப்பெயர். தைர்யம் என்பது வடமொழிப் பெயர். உரன் என்பதற்கும் அறிவு, ஊக்கம் என இரு பொருளுண்டு தைர்யம் என்பதற்கும் அறிவு, ஊக்கம் எனும் இரு பொருளும் உண்டு. அறிவும் ஊக்கமும் தனித்தனி பிரிக்க முடியாதவை என்பதைக் காட்டுவன அல்லவோ இச்சொற்கள். துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பதை எளிமையாக விளக்குகின்றதே. அறிவு துன்பத்தை அழிக்குமா? கட்டாயம் அழிக்கும். அப்படி அழிக்க வல்லதே அறிவாம். துன்பத்தை முளையிலேயே கிள்ளி எறிய வல்ல கருவி அறிவேயாம். துன்பம் என்பது என்ன? எண்ணத்தைப் பொறுத்துத் தானே துன்பமும் துன்பமில்லாமையும் உள்ளன. எவ்வளவு பெரிய பெரிய துயர்களையும் சிலர் எவ்வளவு எளிமையாகச் சட்டையில் பட்ட தூசியைத் தட்டுவது போலத் தட்டி விட்டுப் போய் விடுகிறார்கள்! எப்படி அவர்களால் முடிகின்றது? ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. அது அயலார் வீடு அன்று; தம் வீடு! தம் வீடு எரியும் போது எப்படித் தவிப்பு வரும்? ஆனால் ஒருவர் தம் வீடு பற்றி எரியும் போது வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அழகாக எரிகிறது. தீயின் நாக்கு எப்படி நீள்கிறது. தீ. பூப்பூவாய் எப்படிச் சொரிகிறது: என்னென்ன அழகாக வாண வேடிக்கை விடுகிறது தீப்பிழம்பு என்று பார்த்துக் கொண்டிருந்தாராம் .அவர். நோகுச்சி என்னும் சப்பானியப் புலவர். வரலாற்றுக் குறிப்பு, இது. பழைய திருவிளையாடல் புராணம் பாடிய புலவர் வேம்பத்தூர் என்னும் ஊரினர். அவ்வூரில் பிச்சுவையர் என்பார் ஒருவர் இருந்தார். அவர் வீடு ஒரு நாள் தீப்பற்றிக் கெண்டது. கட்டுக் கட்டாக இருந்த ஏடுகள் எல்லாம் எரிந்தன. புலவர்க்கு எரிச்சல்; ஏக்கம் தானே வரவேண்டும்! ஆனால் ஒரு பாட்டு வந்தது. வீட்டையும் தான் மேய்ந்தான் விளங்கமுன்னோர் தேடிவைத்த ஏட்டையும்தான் மேய்ந்தான் இதுவென்னே - கேட்டிலையே தெண்டிரைசூழ் இந்தச் செகதலத்த வன்நிதமும் அண்டினரைக் கொல்லியாத லான் தீயாகிய மாடு வீட்டை மேய்ந்ததாம்: ஏட்டையும் மேய்ந்ததாம்! ஏன் அப்படி மேய்ந்தது? அண்டியவரை எல்லாம் அழிப்பதே அந்த மாட்டின் வேலையாயிற்றே; அதனால் எரி நெருப்பையும் இனிய தென்றலாக்குவது எது? உள்ளம் தான்! உள்ளத்து உண்டாகிய உரம்தான். வெளி வீராப்பு இதனைச் செய்யுமா? சுவரின் மேல் ஓங்கி அடிக்கப் பட்ட பந்து, எவ்வளவு விரைவில் சென்றதோ அவ்வளவு விரைவில் திரும்புகின்றது. ஏன்? தாக்கிய விரைவில் தடுத்துத் திருப்பி விடுகிறது சுவரின் வன்மை அப்படியே வலிய உள்ளம் உடையவர்களைத் தாக்கச் சென்ற துன்பமும் அவர்கள் வலிமைக்கு முன் நிற்கமாட்டாமல் தலை தெறிக்க ஓடிவிடும் கற்பாறைமேல் மோதினால் தலை தப்புமா? கற்பாறைதான் தலை மோதுதலால் பொடியாகிப் போகுமா? கற்பாறைபோல் வலிமை வாய்ந்தவர்களைக் கவலை, கவலைப் படுத்துவதே இல்லை. கவலைக்கு இடந்தந்தால் தானே அது பதம் ப ர்க்கும்? கவலையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லையே! மோத வந்த கவலையை எப்படி முகத்தைச் சுழிக்காமல் திருப்பி விட்டுவிடுகிறார்கள்? புத்தர் பெருமான் ஒரு வீட்டின் முன் நின்றார். அவரைக் கடுமொழியால் திட்டினான் வீட்டுக்காரன். கடுப்பே அடையாமல் கனிவோடு புத்தர் வீட்டுக்காரனை நோக்கு கிறார். அன்பனே, நீ இரவலன் ஒருவனுக்குப் பிச்சை கொண்டு வருகிறாய். அந்த இரவலன் உன் பிச்சை வேண்டா என்றால் அப்பிச்சை யாரைச் சேரும்? என்றார். பிச்சை கொண்டு வந்தவனுக்கே பிச்சை சேரும் என்றான் வீட்டுக்காரன். நல்லது. நீ திட்டுவதை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது எவரைச் சேரும் என்றார். உன்னைத் தானே சேரும் என்றார். கவலையை மடைமாற்றித் திருப்பவல்லவர் காட்சி இது அறிவின் தலையாய அறிவு மெய்யறிவு. அதனை உண்மையறிவு. இலங்கறிவு, விளங்கறிவு, வாலறிவு என்றும் கூறுவர். இம்மெய்யறிவு வாய்ந்தவர் இயலும் செயலும் தனித்தன்மை வாய்ந்தனவாம். அவர்கள் வசையையும் வாழ்த்தாகக் கெ ள்ளப் பழகியவர்கள்; புல்லரிசிக்கஞ்சியையும் நெய் கலந்த நெல்வரிசிச் சோறாகக் கருதுபவர்கள்; கொடுங்கசப்பமைந்த எட்டிக் காயையும் கட்டிப் பாகாகக் கொள்பவர்கள். வைததனை இன்சொல்லாக் கொ ள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார் என்கிறது திரிகடுகப் பாட்டு வறுமை துன்பமானதா? வறுமை துன்பமானதுதான் எரியும் நெருப்பில் கண்ணுறங்கவும் கூடும் ஆனால் வறுமையின் இடையே இமைமூடவும் இயலாது என்று வள்ளுவர் கூறுகிறார். வறுமையை வெல்லும் முயற்சியையும் வினையாண்மையையும் வினைத் திட்பத்தையும் வள்ளுவர் கூறத் தவறவில்லை! ஏன் வறுமையையும் வறுமையாக்கிய வலியவர்கள் வரலாற்றில் எத்துணைப் பேர்? சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகத் திகழ்ந்த சர். தி. முத்துசாமி ஐயர், உருசியாவை உருவாக்கிய புரட்சி வீரர் லெனின், மூலதனம் என்னும் இணையற்ற நூலைப் படைத்து மார்க்சியம் என்னும் கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சு, சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலைப் படைத்துப் பெரும் புரட்சி செய்த ரூசோ, அமெரிக்க நாட்டில் லிங்கன் இவர்களெல்லாம் மாடமாளிகையில் பிறந்து செல்வச் செழிப்பிலே வளர்ந்து வாழ்ந்தவர்களா? அடுத்த வேளைக்கு என்ன செய்வோம் என ஏங்கிய ஏழைக் குடியிலே பிறந்தவர்கள் தாமே! இவர்கள் வெற்றியை வறுமைத் துயர் தடுத்து விட்டதோ? சிலர் பிறப்பிலேயே உறுப்புக் குறையுடையவர்களாகப் பிறக்கின்றனர். சிலர் பின்னாளில் உறுப்புக் குறையுடையவர்கள் ஆகின்றனர். இக்குறைபாடு வாழ்வின் வெற்றிக்குத் தடையாகுமா? பார்க்கும் ஆற்றல் இல்லாத ஒருவர் கெலன் கெல்லர், அவர்க்குக் கேட்கும் ஆற்றலும் இல்லை. பேசும் ஆற்றலும் இல்லை. ஒன்றரை வயதில் இப்படியாகிவிட்டார். ஆனால் இக்குறைகள் அவர் வெற்றிக்குத் தடையாகி விட்டனவா? பார்வை இருப்பவர்கள் படித்ததைப்போல் பன்னூறு மடங்கு படித்தார். செவியுள்ளவர்கள் கேட்பதை விட நன்றாகக் கேட்டார்; இசைக் கலையையும் இனிது நுகர்ந்தார் பிறர் நுகரவும் இசைத்துக் காட்டினார். பெரும் பெரும் மேடை களிலும் அரங்குகளிலும் சொற்பெழிவுகள் செய்தார். அயரா முயற்சியாலும் தணியா ஊக்கத்தாலும் தமக்குத் தடைகளாக வாய்ந்த உறுப்புக் குறைகளையெல்லாம் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தார் இத்தகையவர்களை நோக்கித்தான் திருவள்ளுவர். உறுப்புக் குறை ஒரு குறையன்று; அறிவறிந்து அரிய முயற்சி செய்யாமையே குறை என்றார். இதனை மெய்ப்பிக்கின்ற உரவோர்கள் உலகில் பலர். அவர்கள், இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் என்பதை மெய்ப்பிக்கின்றவர் ஆவர். ஒரு செயலைச் செய்யத் தொடங்குகிறோம். அச் செயலைத் தொடங்கிய அளவானே வெற்றி வாய்த்து விடுமா? சில செயல்கள் தடையின்றி நிறைவேறலாம். இன்னும் சில செயல்களோ பலப்பல தடைப்பாடுகளுக்கும் இடனாகி அயரா முயற்சியாலேயே வெற்றி காணத் தக்கதாக அமையும். அதனால் தான், திருவள்ளுவர் வினைத் திட்பம் என்னும் அதிகாரத்தில் வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்றார். எண்ணியதை எண்ணிய வாறே முடிப்பர் எண்ணியவர், மனத் திண்மையுடையவராக இருந்தால் என்றும், மனம் அசையாமல், காலம் தாழ்த்தாமல், விரைந்து ஊக்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எடுத்துக் கொண்ட செயலுக்குத் தடை வந்தவுடனே பெரும்பாலோர் சோர்ந்து விடுகின்றனர். ஆனால் துணிவு மிக்கவர்களோ எத்தகைய தடை ஏற்பட்டாலும் சரி, ஏறு போல நிமிர்ந்து நின்று கடனாற்றி வெற்றி கண்டு விடுகின்றனர். ஏறுபோல் பீடு நடை என்பர் ஏறுபோல் நடையினாய் வாவாவா? என்றார். பாரதியார் நடைக்கும் வினையாற்றும் திறமைக்கும் ஏறு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஏறு என்பது காளையைக் குறிக்கும். காளையிலும் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட வீறு அமைந்ததே ஏறு என்னும் பெருமைக்குரியதாம். முற்காலத்து வேந்தர் அரண்மனைகளில் மும் முரசுகள் முழங்கின. அவை கொடை முரசு, வெற்றி முரசு, மங்கல முரசு என்பன. வெற்றி முரசுக்குத் தனியொரு சிறப்புண்டு புலியொடு போரிட்டு வெற்றி கண்ட காளையின் தோலே வீரமுரசுக்கு உரியதாகக் கொண்டனர். புலி எத்தகைய வலியது! யானையையும் வெல்லும் வலியது ஆயிற்றே. அத்தகைய புலியையும் வெற்றி கொள்ள வல்லது காளை என்றால் அதன் வீரச் சிறப்பைக் கூறமுடியுமோ? காளையின் வீரத்திறம் இருக்கட்டும். அதன் முயற்சித் திறம் தான் எத்தகையது? வண்டியில் சுமக்க மாட்டாப் பெரும் பாரம் ஏற்றப்பட்டிருக்கிறது. அவ்வண்டியோ அளறும் சேறும் மண்டிய வழியில் செல்கிறது. வண்டியின் அச்சும் பாரும் நிலத்தைத் தொடும் அளவுக்கு ஆழ்ந்து விடுகின்றன. அந்நிலையிலும் நுகக்கோல் ஒடிந்தாலும் கயிறு அவிழ்ந்தாலும் விடாமல், தலையைச் சாய்த்துக் கொம்பை உயர்த்தி மூக்கை ஊன்றி மண்டியிட்டு வண்டியை இழுத்துச் செல்கிறது காளை. துணிவை நோக்கும்போதுதான் இறைவன் ஊர்தியாகக் காளையை வைத்த திறமும், இறைவனைக் காளையர் என்றும், காளையப்பர் என்றும் விடையேறி என்றும் கூறும் அருமையும் புலப்படும். திருவள்ளுவர் இடுக்கண் அழியாமையைப் பற்றிக் கூற வரும்போது அவர் எண்ணத்தில் காளை முற்பட்டு நிற்கின்றது. உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றும் உழவினைப் போற்றிய திருவள்ளுவர், காளையைக் கொண்டே, இடுக்கண் அழியாமையை வலியுறுத்தியது எதிர்பார்க்கக் கூடியதேயாம். மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப் பாடுடைத்து என்பது குறள், தடை ஏற்பட்ட இடத்தெல்லாம் பாரம் ஏற்றிய வண்டி அழுந்தி விடாமல் இழுத்துச் செல்லும் காளைபோல், எடுத்துக் கொண்ட செயலை விடா முயற்சியுடன் முடிக்க வல்லவனை அடைந்த துன்பம், தானே துன்பப்படும் என்பது இதன் பொருள். அதியமானை நோக்கி ஔவையார் ஒருமுறை கூறினார்: மறப்புலி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டமும் உண்டோ? கதிரோன் கடுகி எழுந்தால் அதனைத் தடுக்கும் இருளும் உண்டோ? மணல் பரக்கவும் கல் பிளக்கவும் நடக்க வல்ல மனச் செருக்குடைய காளை போதற்கு அரிய வழியும் உண்டோ? இல்லையன்றோ இவைபோல நீ போரில் புகுந்தால் நின்னை எதிர்த்து நிற்பவர் எவர்? என்றார். ஐயூர் முடவனார் என்னும் புலவர் மாறன் வழுதி என்னும் பாண்டியனை நோக்கி ஒரு முறை கூறினார்; நீர் மிகுந்தால்அதனைத் தாங்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தால் உயிர்களுக்கு உதவும் நிழல் இல்லை; காற்று மிகுந்தால் அதனைத் தாங்கும் வலிமையொன்றில்லை. நீ ஊக்கத்தொடு கிளர்ந்தால் உன்னைத் தடுக்கவல்லார் உளரோ? என்றார். எட்மண்ட்பர்க் என்பார் சொன்னார்; எவன் நம்மோடு போராடுகிறானோ அவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகின்றான். நம்முடைய திறங்களையெல்லாம் கூர்மைப் படுத்தி விடுகின்றான். ஆகலின் நம் பகைவன் எவனோ அவனே நமக்கு நலம் பல செய்கிறான் என்றார். இவர்களெல்லாம் வள்ளுவர் கூறியவாறு, துன்பத்துக்குத் துன்பம் ஆக்கியவர்களாவர். வெள்ளம் போலப் பெருகி வரும் துன்பமும் அறிவுடையவன் உள்ளத்தில் நினைத்த அளவானே ஒழிந்து விடும் என்று கூறிய திருவள்ளுவர், அத்துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி படைத்தவனிடத்து என்ன செய்துவிட முடியும்? அந்த இடுக்கண் இடுக்கட் பட்டே செல்லும் என்கிறார். இரும்பைக் கடித்துத் தின்று இஞ்சிச் சாறு குடிக்க வல்லவனுக்கு, இலைக் கறிதானா செரிக்காமல் போய் விடும்? என்பது பழமொழி. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். என்பது திருக்குறள். அடுக்கி வரினும் என்றார் திருவள்ளுவர். அவன் அழிவிலான் ஆதலால் அடுக்கி வர முடியாது என்பது திருவள்ளுவர் கருத்து. அப்படியே அடுக்கி வந்தாலும் அவன் விட்டு வைக்கப் போவ தில்லை என்பதை வெளிப்படுத்துவது போல அழிவிலான் என்றார். அவன் துன்பத்தை அழிப்பவனே அல்லாமல் அவன் அழிவில்லாதவனே யாவன் என்பது வெளிப்படை. இடுக்கண் செய்ய வந்த இடுக்கண் தான் இடுக்கண் படுமே, அல்லாமல் எவனை இடுக்கண் செய்ய வந்ததோ அவனை ஒன்றும் செய்து விட மாட்டாது என்று உறுதிப்படுத்துகிறார். தோற்றுப் போய் இழிவு படுவதற்காக இவ்விடுக்கண் இந்தப் படையெடுப்பை நடத்துகின்றதே என்று இகழ்வது போல் இடுக்கண் இடுக்கட்படும் என்கிறார் வள்ளுவர். அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட்படுமா? இடுக்கட்பட்டதை வரலாற்று உலகம் அடுக்கிக் காட்டுகின்றதே இரண்டு பெருமக்களை எண்ணிப் பார்ப்போமே! முன்னே வருபவர் இந்திய நாட்டின் தந்தை காந்தியடிகளார், அவர் ஆப்பிரிக்காவில் ஒரே ஒரு நாள் பட்டபாட்டை லூயி பிசர் குறிப்பிடுகிறார். காந்தியும் லாப்டனும் நடந்து கொண்டேயிருக்கும் போது கூட்டம் பெருகியது: வன்முறையிலும் இறங்கி விட்டது. லாப்டனிடமிருந்து காந்தியை மக்கள் பிரித்துத் தனிப் படுத்தினார்கள். அவர்மீது கருங்கல், செங்கல், முட்டை இவற்றையெல்லாம் வீசினார்கள். பிறகு அவரிடம் நெருங்கி வந்து அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அவரை அடித்தார்கள்; உதைத்தார்கள்; வலிதாங்காமல் காந்திக்கு மூர்ச்சை தளர்ந்தது, என்றாலும் ஒரு வீட்டின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டார். அப்போதும் வெள்ளைக்காரர்கள். உடம்பில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் என்பவரின் மனைவியார் இவ்வேளையில் அப்பக்கம் வந்தார். அவருக்குக் காந்தியைத் தெரியும்; அவர் குறுக்கிட்டார். வெறிபிடித்த கூட்டத்துக்கும் காந்தியடிகளுக்கும் இடையே வந்து நின்று கொண்டார். பின்னர், காவல் துறையினர் வந்து காந்தியடிகளைக் காத்தனர். தாக்கியவர்கள் மேல் வழக்குத் தொடுக்குமாறு காந்தியடிகள் வலியுறுத்தப் பெற்றார். ஆனால் அடிகள் அதனை மறுத்துவிட்டார். இது அவர்களுடைய குற்றம் அன்று; நாட்டுத் தலைவர்களும் நேட்டால் அரசுமே இதற்குப் பொறுப்பாளர். இது என் உறுதியான நம்பிக்கை பற்றிய செய்தி; இதில் நான் தன்னடக்கம் காக்கவே விரும்புகிறேன் என்றார் இதனைக் குறிப்பிடும் பேராசிரியர் எட்வர்ட்டு தாம்சன் என்பார் தம் வாழ்நாள் வரை ஒவ்வொரு வெள்ளையர் முகத்தையும் காந்தியடிகள் பகைத்திருந்தால் முறையாக இருக்கும்என்றார். ஆனால் காந்தியடிகளோ ஆங்கிலவரைப் பகைவராகக் கருதினர் அல்லரே! கருதியிருந்தால் அவரை இடுக்கண் வெற்றி கொண்டிருக்கும்! அவர் இடுக்கணுக்கு இடுக்கண் தந்தவர் அல்லரோ! இன்னொருவர், திரு.வி.க.ஆவர். யான் ஒரு சிறு குடிலில் பிறந்தவன்; எளிமையில் வளர்ந்தவன் என்றும், ஓலை வேய்ந்த குடிசையில் தேளும், பாம்பும் நடமாடிய இடத்தில் யான் வளர்ந்தேன் என்றும் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுகிறார். பின்னே என்ன வளமையில் தவழ்ந்தாரா? கையிலே பணப்பையும் வீட்டிலே பணப் பெட்டியும், வங்கியிலே இருப்பும், தமக்கென ஒரு வீடும் இல்லாமலே வாழ்நாளெல்லாம் இருந்தார் திரு.வி.க. ஆனால் அதற்காக வருந்தினாரா? பள்ளிப் படிப்பை இடையில் விடுத்தார்; தாமே முயன்று கற்று ஆசிரியப் பணியேற்றார். அப்பணியையும் நாட்டுத் தொண்டுக்காக உதறினார். தொழிலாளர் தொண்டில் கல்லனைய உடலும் கரைந்தார் கண்ணொளி மறையும் இடருற்றார். இனிய மனைவி மக்களையும் அடுத்தடுத்து இளமையிலேயே இழந்தார். ஆனால் அவர் தம் வாழ்வை எவ்வாறு மதித்தார் இடருடைய தென்றொ எண்ணினார்? எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொதுவெனும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிறவுயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும் மற்றவர் வ ழ்க்கை தோல்வி யுடையதென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அனுபவம் முதலிய எனக்கு உணர்த்துகின்றன என்றார். இல்லையேல் கண்ணொளி மங்கிய நிலையில் இருளில் ஒளி இயற்றுவரோ? முதுமையில் முதுமை உளறலும், படுக்கையில் பிதற்றலும், சித்தந்திருந்தல் அல்லது செத்துப் பிறத்தலும் இயற்றி உலகுக்கு உதவுவரோ? திரு.வி.க.வின் வாழ்வு இடுக்கணுக்கு இடுக்கண் தந்த வாழ்வு! ஆதலால் வெற்றி வாழ்வாயிற்று. 2. நலமார்ந்த நட்பு அன்பு ஓர் அருமையான பண்பு, அப்பண்பை உடையவராக ஒருவர் இருப்பதே உயிருடையவர் என்பதற்கு அடையாளம் என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய உயர்ந்த அன்புக்கு, அன்புடைமை என ஓர் அதிகாரமே பாடினார் அவர். அன்பினும் உயர்ந்தது அருள். எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பேணும் தன்மையே அருளாகும். அதனையும் அருளுடைமை என்னும் ஓரதிகாரத்திலேயே பாடினார் திருவள்ளுவர். எந்த நன்றியை மறந்தாலும் உய்வு உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வே இல்லை என்னும் அருமையும் பெருமையும் வாய்ந்தது நன்றியறிதல், அதனைச் செய்ந் நன்றியறிதல் என்னும் ஓரதிகாரத்தால் மட்டுமே பாடினார். ஆனால் நட்பைப் பற்றி எத்தனை அதிகாரங்கள் இயற்றியுள்ளார்? நட்பு, நட்பாராய்தல், கூடா நட்பு தீ நட்பு, பழமை என்பவற்றைக் கூறுகிறார். சிற்றினஞ் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல், உட்பகை முதலியவற்றையும் கூறுகிறார். இவையெல்லாம் நட்பைப் பற்றியனவே, இவ்வதிகாரங்களின் எண்ணிக்கைப் பெருக்கம், நட்பின் சிறப்பை மட்டுமோ சுட்டுகின்றது? நட்பினால் நேரும் சிக்கல்களையும் அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் நட்பின் நலங்களையும் பிறவற்றையும் விளக்குகின்றது. மனித வாழ்வு கூடி வாழ்தலை இயல்பாக உடையது. தனியே ஒருவர் ஒரிடத்திற்குச் செல்வதினும், துணையுடன் செல்வதால் இன்பமும் நலமும் காண்பது. இத்துணை வழித்துணை எனப்படும். தன்னந்தனியே இருப்பவர்க்கு ஒரு பேச்சுத் துணை இருப்பது நலமாகின்றது, இத்துணை,நாத்துணை என்றும் சொற்றுணை என்றும் சொல்லப்படும். இனித், துன்புறும் காலத்து அத்துன்பை ஒழிப்பதற்கு, ஓடி வந்து உதவும் துணையுண்டு; அத்துணைத் துயர்ந்துணை என்பர் இத்துணைகளில் எல்லாம் மேம்பட்டது வாழ்க்கைத் துணையாம். வாழ்க்கைத் துணையின் நன்மையைக் கருதியே திருவள்ளுவர், வாழ்க்கைத் துணை நலம் என்றார். ஏனெனில், வாழ்க்கைத் துணையே மனத்துணை யாக உள்ளதாம். மனத்தில் உள்ளதை, ஒழியாமல் மறையாமல், கூறுவதற்கு வாய்த்த துணை, மனத்துணையே, அத்துணையே பால் வேறுபாட்டால், காதலாகவும், பால் ஒன்றுபாட்டால், நட்பாகவும் அமைகின்றதாம். காதலோடு ஒத்த நட்பை எளிமையான ஒன்றாக மதிக்கலாமோ? கூடாது என்றே, நட்பாராய்தலை விளக்குகிறார் திருவள்ளுவர். கீரை ஆய்தல், காய் ஆய்தல் என்பவை வழக்கில் உள்ளவை. குப்பை கூளம், தூசி தும்பு, காம்பு நரம்பு முதலியவற்றைக் களைந்து நல்லவை தேர்ந்துகொள்வதே ஆய்தலாம். எளிய உணவுப் பெருளாம் கீரை காய்கறி வகைகளையே ஆய்ந்து கொள்ளும்நாம் ஆக்கமும் கேடும் ஆக்கும், மனத்துணையாம் நட்பை எவ்வளவு ஆராய்ந்து கொள்ள வேண்டும்? ஒருவரை நண்பராகத் தேர்ந்து கொண்ட பின்னர் அவரை ஆராய்வதா? நண்பராகக் கொள்வதற்கு முன்னர் அவரை ஆராய்வதா? வெள்ளத்தில வீழ்ந்த பின்னர், நீந்தப் படிப்பேன் என்பார் நிலை என்னாம்? முன்னரே நீந்தப் பழகியிருத்தல் வேண்டுமல்லவோ? இல்லையானால், வெள்ளத்தோடு வெள்ளமாகப் போகாமல் தப்பிப் பிழைக்க மாட்டாரே அவர் பேயோடு ஆயினும் பிரிவு அரிது என்பது பழமொழி. ஆதலால், ஒருவரொடு நட்புச் செய்து, பின்னர் அவரைப் பிரிவது என்பது முடியாதது. அன்றியும், கேடானதும் கூட ஆதலால் தக்கவரைத் தேர்ந்து, நட்புக் கொள்ளுதலே முறைமையாம். இக் கருத்தையே, நாடாது நட்டலில் கேடில்லை: நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு என்றார் திருவள்ளுவர். நட்பாள்பவர்க்கு நட்ட பின் வீடில்லை ஆகையால், நாடாது நட்டலில் கேடில்லை என்பது இக்குறளின் பொருள் முறை. நாடுதல் என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் விரும்புதல், ஆராய்தல் என்பவை குறிப்பிடத் தக்கவை. விரும்புபவை எல்லாம் நல்லவை இன்பமானவை- என்பது இல்லை! அவற்றை ஆராய்ந்தே நல்லவையா அன்றி அல்லவையா எனக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் சொல்லே நாடுதல் என்பதாம். ஒருவரை ஆராயாமல் நண்பராக்கிக் கொள்ளல் கூடாது. அப்படி ஆக்கிக் கொண்டால் அவரைப் பிரிதற்கு இயலாது. அதனால் உண்டாம் கேட்டைப் போல் வேறு கேடு இல்லை என்பது இக்குறளின் விளக்கமாம். ஒருவர் தம் கையை மூடிக்கொண்டு என் கைக்குள் இருப்பதைக் கூறு என்று கேட்கிறார். அவர் கைக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பதை அறியாத மற்றவர் திகைக்கிறார்.. இது இது என்று எதை எதையோ சொல்கிறார். இல்லை இல்லை என்று சொல்லி மறுக்கிறார் கையை மூடியிருப்பவர், கைக்குள் இருப்பதைச் சொல்ல முடியாதவர் எனக்குக் குறி சொல்லத் தெரியாது என்று ஒதுக்குகினறார், மூடிய கைக்குள் உள்ள, பொருளையே இன்னதென்று அறிய முடிவது இல்லையல்வா? இவ்வாறாக மூடி வைத்த பெட்டிக்குள் இருப்பவற்றையோ பூட்டி வைத்த வீட்டுக்குள் இருப்ப வற்றையோ இன்னவை என்று கூறி விட முடியுமா? இவற்றையே சொல்ல முடியாது என்றால் ஒருவர் கூட்டுக்குள் இருக்கும் எண்ணத்தை மற்றொருவர் இன்ன தென்று திட்ட வட்டமாகக் கூறிவிட முடியுமோ? ஆனால், அறிவியல் உலகம் என்ன செய்துள்ளது? பல்லாயிரம் அடிக்குக் கீழே புதைந்துள்ள பொருள்களையும், பல்லாயிரம் கல் தொலைவுக்கு மேலேயுள்ள பொருள்களையும் உள்ளது உள்ளவாறு அறிந்து கொள்ளத் தக்க கருவிகளைப் படைத்துள்ளது மேல் போர்வை மட்டுமன்றித் தோல் போர்வைக்குள்ளேயும் அடங்கியிருக்கும் உடல் உறுப்புகளையும் அவற்றின் இயக்கங்களையும் அப்படி அப்படியே கண்டு கொள்ள ஒளிப் படம் எடுக்கும் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது! இத்தகைய விந்தை அறிவியல் உலகமும் ஒருவர் நெஞ்சத்தில் உள்ள நினைவைத் திட்டவட்டமாகக் கண்டு கொள்வதற்குரிய ஒரு கருவியைக் கண்டுள்ளதோ? காணவும் முடியுமோ? காற்றின் அழுத்தத்தையும், நெஞ்சத் துடிப்பின் அழுத்தத்தையும் கண்டு கொள்ளக் கருவிகளைக் கண்டுள்ள அறிவியல் உலகம் நினைவைக் கணக்கிட்டுக் கூறும் கருவியைக் காண முடியவில்லையே! காணல் அருமையை உணர்ந்து தானே திருவள்ளுவர். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்றார். முகத்தைக் காட்டும் கண்ணாடிகளிலேயே எத்தனை வேறுபாடுகள்? ஒருவர் முகத்தையே ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு வகையில் காட்டுவது இல்லையா? முகங்காட்டும் கண்ணாடி நிலையே இவ்வாறானால், அகத்தைக் காட்டும் முகத்தின் தன்மை உள்ளவாறு உணர அமைந்து விடுமோ? முகத்தைக் கண்ட அளவானே அகத்தைக் கண்டு கொள்ள எல்லார்க்கும் இயலுமானால் ஏமாறுவாரும் ஏமாற்றுவாரும் உலகில் இருப்பரோ? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் நிகழுமோ? உள்ளத்தே கசப்பு வைத்து உதட்டிலே இனிப்பு வைத்துப் பசப்புவார் உலவ முடியுமோ? கும்பிட்ட கையினுள்ளும் கொலைக் கருவி இருக்கக் கூடும் என்று எச்சரித்தாரே திருவள்ளுவர்; இதற்குக் க லந்தோறும் காணும் சான்றுகள் இல்லாமலா போய் விட்டன? அழுகையைக் கண்டு ஏமாந்து விடாதே? அவ்வழுகைக் குள்ளேயே உன்னை அழிக்கும் வஞ்சம் அடங்கியிருக்கும் என்று தெளிவித்தாரே, திருவள்ளுவர், இதற்கு உலகில் சான்று இல்லாமலா போய்விட்டது? ஆதலால் தான், ஒருவர் இயல்பை மேலோட்டமாக ஆராய்ந்தால் போதாது. மேலும் மேலும் ஆராய்தல் வேண்டும்; அப்படி ஆராய்ந்தே ஒருவரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்று அழுத்திக் கூறினார். விருந்தில் படைத்த வகை வகையான உணவுகளைக் கொண்டு ஒரு வீட்டின் வளத்தைச் சொல்லி விட முடியுமா? மணவிழாப் பந்தலில் காணும் ஒருவர் மகிழ்வைக் கொண்டு அவர் வாழ்வின் மகிழ்வை மதிப்பிட்டு விட முடியுமோ? நாடகத்தில் வரும் பாத்திரத்திற்குத் தக்கவாறு நடிக்கும் நடிப்பைக் கொண்டு ஒருவரை நல்லவர் அல்லவர் என மதிப்பிடுவது முறையில்லையே! பருப்பொருள்களையே மேலோட்டமாகப் பார்த்து முடிவு செய்ய முடியாதிருக்க, நுண்ணிதில் நுண்ணிதாம் எண்ணத்தை எண்ணி அறிவதன் அருமை அறிந்தே திருவள்ளுவர். ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் என்றார். கேண்மையாவது நட்பு; சாம் துயர் என்பது சாவும் துயராம்! நொடி நொடிதோறும் சாவது போன்ற துயரம், சாகுமளவும் வரும் துயரம் ஆம். பலகாலும் பல நிலைகளிலும் ஆராய்ந்து பார்த்தே ஒருவரை நண்பராகக் கொள்க என்பது இக்குறளின் பொருளாம். கண்ணாரக் கண்டதும் பொய்; காதாரக் கேட்டதும் பொய்; தீர ஆய்வதே மெய் என்பது பழமொழி. நட்புச் செய்தற்கு உரியவரைப் பலகாலும் பலவகைகளிலும் ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் திருவள்ளுவர். எவற்றை ஆராய வேண்டும் என்று கேள்வி எழும் அல்லவோ? கை காட்டி மரமென்றால் நின்ற இடத்தில் இருந்தே வழி காட்டிக் கொண்டு இருக்கலாம். ஆனால் அறிவறிந்த வழிகாட்டியாக இருக்கும் ஒருவர் வழிகூட்டியாகவும் இருப்பார் அல்லரோ? ஆதலால் திருவள்ளுவர், ஒருவரை நண்பராகக் கொள்வதற்கு முன் ஆராய வேண்டியவை இவை என்பதைக் குறிப்பிடுகிறார். குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு என்பது அது. ஒருவர் குணத்தையும் ஆராய வேண்டும்; அவர் குற்றத்தையும் ஆராய வேண்டும். அவர் பிறந்த குடியையும் ஆராய வேண்டும்; அவரைச் சேர்ந்த கூட்டத்தையும்ஆராய வேண்டும். இந் நான்கையும் ஆராய்ந்த பின்னரே தக்கவராயின் அவரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்றார். இக்குறளை நுண்ணிதின் நோக்கிய மணக்குடவர் இவை ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லும் என்றார். உறவு நீடிக்க வேண்டும் என்றால் இந்நான்கும் ஒத்தனவாக அமைய வேண்டும் என்பது வெளிப்படையாம். உன் நண்பன் எவன் என்று கூறு நான் உன்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன் என்பதோர் ஆங்கிலப் பழமொழி. இனம் இனத்தோடு; வெள்ளாடு தன்னோடு என்பது தமிழ்ப் பழமொழி. மெய்ப்பொருள் கொள்கைகளுள் ஒன்று சார்ந்ததன் வண்ணமாதல் என்பது, ஒருவர் எந்தக் கூட்டத்தை அல்லது எந்தச் சூழலை ஒட்டி உறவாடி இருக்கிறாரோ, அக் கூட்டத்திற்கு அல்லது அச்சூழலுக்கு ஏற்ப அமைந்து விடுவார். அவர் அப்படி அமைந்து விடக்கூடாது என்று தம்மைத் திட்டப்படுத்திக் கொண்டிருந்தான். சிற்றினஞ் சோராமையை வலியுறுத்திய வள்ளுவர், பெரியாரைத் துணைக் கோடலையும் வற்புறுத்தினார். மனிதராகப் பிறந்தவரும் எவரும் பழுதிலா முழுதுறு குணத்தராக இருப்பதும் இல்லை. முற்றிலும் குற்றமே வடிவாகினாரும் இல்லை! குணமும் குற்றமும் இணைந்தே இயல்கின்றனர். இவற்றுள் குற்றம் மிகுதியா குணம் மிகுதியா என்பதை ஆராய்ந்து, குணம் மிக்காராயின் அவர் நட்பைக் கொள்க என்பது விளக்கமாம். குணம் மிக்காராயின் அவர் நற்குணத்தை நாம் பெற வாய்க்கும், குற்றமிக்காராயின் நமக்கு அமைந்த நற்குணத்தையும் இழந்து விடவல்லவோ நேர்ந்து விடும். ஊதிய மில்லாது போனாலும் உள் முதலையும் இழந்து விட எவராவது நினைவரா? ஒரு செயலை ஒருவனிடம் ஒப்படைத்தற்கு அவன் குணத்தை ஆராய்ந்து, குற்றத்தையும் ஆராய்ந்து குணம் மிக்குளனாயின் அவனிடம் அச்செயலை ஒப்படைக்க வேண்டும் என்பது வள்ளுவம். அத் தேர்வையே நண்பரைத் தேர்ந்து கொள்ளுதற்கும் தேர்வாக வைத்தார் திருவள்ளுவர். இதனைத் தெளிந்தாய்ந்த பரிமேலழகர், குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப் படுவதாயின் அவர் நட்பு விடற்பாற் றன்று என்று விளக்கினார். பொறுக்கத்தக்க குற்றமானால் பொறுத்துக் கொண்டு நட்பைப் போற்றிக் கொள்ள வேண்டும்; ஏனெனில் முற்றிலும் குற்றமிலார் உலகத்தில் இலர் ஆதலால் என்பது அவர் கருத்தாம் குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை எவரே அறியார்? நெல்லுக்கு உமியும் நீருக்கும் நுரையும், பூவுக்குப் புறவிதழும் உண்மையை எவரே தெரியார்? இனிக் குடிமையையும் இனத்தையும் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை எண்ணுவோம். நல்ல குடியில் பிறந்தவர்க்கு இயல்பாகவே நல்ல குணங்கள் பலவும் அமைந்திருக்கும், அவர்கள் எத்தகைய வறுமைக்கு ஆட்பட்டு அல்லல் உற்றாலும் தம் இயல்பில் இருந்து தவறார். கோடி கோடியாகச் செல்வம் குவிப்பதாக இருந்தாலும் குடிப் பெருமையைக் கெடுக்கும் குற்றஙகளைச் செய்யார். ஆதலால் நற்குடிப் பிறந்தாரை நயத்து நட்புக் கொள்ளல் சிறப்பாம். இனி, இனமாவார் சுற்றத்தாராம், அவர்க்குத் தனிச் சிறப்பாம் தன்மை ஒன்று உண்டு. ஒருவன் எத்தகைய வறுமைக்கு ஆட்பட்டு நலிந்தாலும் அவனுக்கும் தமக்கும் உள்ள பழைய உறவைப் பாராட்டி தழுவிக் கொள்ளும் தன்மையே அதுவாம். அத்தகைய இனத்தவர் நண்பராக வாய்ப்பின் ஒன்றுக்கு இரண்டாய் நன்மையும் நெருக்கமும் அமையும். ஆதலால் தான் இனம் என்று மட்டும் சொல்லாமல் குன்றா இனம் - குறைவிலா இனம்-என்றார் பொய்யாமொழியார். (இக்குறளால் குணமும் குற்றமும் குடிமையும் இனமும் ஆராய்ந்து அவரொடு நட்புக் கொள்க என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவர்.) ஒவ்வொருவர் வாழ்வுக்கும் கட்டாயமாகச் சில பொருள்கள் தேவைப்படுகின்றன. அவற்றை எண்ணிச் சொன்னால் மூன்று எண்ணலாம் அவை உண்டி, உடை, உறைவிடம் என்பனவாம். இம் மூன்றும் அடிப்படைத் தேவைகள். கட்டாயம் இல்லாமல் முடியாதவை. ஆனால் இம் மூன்றுடன் மனித வாழ்வு நிறைவடைந்து விடுகின்றதா? நாம் நாள்தோறும் பயன்படுத்தி வரும் பொருள்களை இரண்டு பட்டியலாகப் பகுத்து எழுத வேண்டும். ஒன்று கட்டாயமாக இல்லாமல் வாழ முடியாத பொருள்கள்: மற்றொன்று இல்லாமலும் வாழக்கூடிய பொருள்கள் பகட்டுப பொருள்கள் என்னும் பொருள்கள். இவ்விரு வகைப்பட்ட பட்டியல்களையும் கணக்கிட்டு ஒப்பிட்டால் முன்னதனினும் பின்னதே பலர் வாழ்வில் மிகுந்திருக்கக் காணலாம். அவர்கள் வாழ்வில் வேண்டாப் பொருள்களுக்குப் பணம் வீணாவதால் வேண்டும் பொருள்களை வாங்குவதற்குத் தட்டுப்பாடும மூட்டுப்பாடும் ஏற்படுவதும் உண்டு. ஒரு பொருளை வாங்குகின்றோம் என்றால் அதற்கு விலையாகப் பணம் தந்தோ உழைப்பைத் தந்தோ மாற்றுப் பண்டம் தந்தோ, அல்லவோ கொள்கிறோம். உழைத்துத் தேடிய பொருளை உடல் ஊட்டத்திற்கும் உயிர் நலத்திற்கும் உயர்ந்த வாழ்வுக்கும் அல்லவோ பயன்படுத்த வேண்டும். அதனை வீணுக்கும் வெட்டித் தனத்திற்கும் அழித்துவிடக் கூடாதே. திருவள்ளுவர் காலத்திலேயே வாணிகம் வளமாக நடந்து வந்ததற்குக் குறிப்பு உள்ளது. வாணிகர்கள் தம் பொருளைப் போலவே பிறர் பொருளையும் பேணி வாணிகம் செய்தனர் என்பதை அறிய முடிகின்றது. இப்போது நிலை வாணிகத்தை அறநிலை வாணிகமாக நடத்த வலியுறுத்திய திருவள்ளுவர் ஒரு புதுமையான வாணிகத்தையும் குறிப்பிடுகிறார். அதனை நேரிடை முறையில் கூறுவதுடன் எதிரிடை முறையிலும் கூறுகிறார். ஒருவர் நல்லவராயின் அவர் நட்பை, அவர் வேண்டும் பொருளைக் கொடுத்தாயினும் வாங்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பது அது. கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு என்பது அது. நல்லவர் நட்பைக், கொடுத்தும் கொளல் வேண்டும் என்ற வள்ளுவர், அல்லவர் நட்பையும் சுட்டுகிறார், நம் நட்புக்குப் பொருந்தாதவர் நட்பை, அவர் விரும்புவது எது வாயினும் அதனைக் கொடுத்தாவது விலக்கி விட வேண்டும் என்கிறார். ஒன்றீத்து ஒரூஉக ஒப்பிலார் நட்பு என்பது அது. நல்லோர் நட்பைக் கொடுத்தும் கொளல் வேண்டும் என்ற வள்ளுவரே, அல்லோர் நட்பைக் கொடுத்தும் விடல் வேண்டும் என்கிறார். நல்லோர் நட்பைக் கொடுத்துக் கொள்வதால் உண்டாம் நன்மையினும், அல்லோர் நட்பைக் கொடுத்தும் விலக்குதலே பன்மடங்கு நன்மையாம். என்னெனின் நல்லோர் நட்பு இல்லையானாலும் தன்னிலையில் தாழாமல் ஒருவன் வாழலாம். ஆனால் அல்லோர் நட்பை இல்லையானாலும் தன்னிலையில் தாழாமல் ஒருவன் வாழலாம். ஆனால் அல்லோர் நட்பை விலக்காமல் இருந்தால் தன்னிலையில் தாழாமல் இருக்க முடியாதல்லவா இனிக் கொடுத்தும் நட்புக் கொள்ளத் தக்க நல்லோர் எவர் என்பதையும் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர். அவர், குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான் என்றார் நற்குடியில் பிறந்தால் மட்டும் போதாது தனக்கு வரும் பழிக்கு நாணுபவனாகவும் இருக்க வேண்டும் என்பாராய்க் குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான் என இணைத்துச் சொன்னார். நாணுதல் என்பது செய்யத் தகாத செயல் செய்தற்கு வெட்கப் படுதலாம் சோழன் மாவளத்தான் என்பானும் தாமப்பல் கண்ணனார் என்னும் புலவரும் வட்டாடுதல் என்னும் ஆட்டம் ஆடினர். ஆட்டத்தின் போது புலவர் வட்டுக்காய் ஒன்றை மறைத்துவிட்டார். அதனைக் கண்ட மாவளத்தான் சினங்கொண்டு தன் கையில் இருந்த வட்டால் புலவரை எறிந்தான். புலவர் செய்தது தவறே எனினும் அவர் மாவளத்தானைப் பார்த்துப் புறாவின் துயர் தீர்ப்பதற்காகத் தன்னையே தந்த சோழன் சிபியின் வழிவந்தவனோ நீ; நீ சோழன் மகன் அல்லன் என்றார், சோழன் மகன் அல்லன் என்று சொல்லுமாறு குடிக்குப் பழியாக்கி விட்டேனே என நாணினான் மாவளத்தான். அதனைக் கண்டு வருந்திய புலவர், உனக்கு நான் பிழை செய்தும், நீ எனக்குப் பிழை செய்தாய் போல நாணங் கொண்டாய்; நின்னைப் போலும் உயர்குடிப் பிறந்தார்க்கு இது இயற்கை போலும் என்றார். இச் செய்தியால் நற்குடிப்பிறந்தார்க்கு நாணம் இயல்பாதல் தெளிவாம். ஆதலால், குடிப்பிறந்து நாணுவார் நட்பைக் கொடுத்தும் கொளல் வேண்டும் என்றார் வள்ளுவர் . உள்ளங்கவர் ஓவியத்திற்குப் பல்லாயிரம் கொடுத்து வாங்குவார் உளர், கொள்ளை கொள்ளும் சிற்பத்திற்கு இலக்கக் கணக்காய்க் கொடுத்து வாங்குவார் உளர். பொன்னும் மணியும் முத்தும் வைரமும் தேடித் தேடி வாங்குவார் உளர். கலைப் பொருள்களுக்கும், காட்சிப் பொருள்களுக்கும் கணக்கின்றிச் செலவிட முந்தும் உலகம் நல்லவர் நட்பைக் கொடுத்துக் கொள்வதற்கு விரும்பி முன் வருமா? வருமானால் உயிரின்ப அன்பு வாணிகம் அஃதாக அமையும் என்பது வள்ளுவம் முழக்கும் முழக்கமாம். குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு என்பது குறள் நட்பு உயிர்த் தொடர்புடையது. தம் நண்பர் அடையும் இன்பத்தைத் தம் இன்பமாகவும், அவர் அடையும் துன்பத்தைத் தம் துன்பமாகவும் அவர் அடையும் புகழைத் தம் புகழாகவும், அவர் அடையும் பழியைத் தம் பழியாகவும் கொள்ளக் கூடியது நட்பேயாம். ஆதலால் நட்பு உயிர்த் தொடர்பினது என்பது தகும். நட்புகள் எல்லாமும் உண்மை நட்புகளோ? உயிர் நட்புகளோ? இல்லை போலியான நட்புகளும் உண்டு நல்ல துளசி போலவே நாய்த் துளசி உண்டே! நல்ல சுரைக்காய் போலவே பேய்ச் சுரைக்காய் உண்டே! இவை போல நட்பிலே அமைந்த போலி அதுவாம். அப்போலி நட்பு எப்படி இருக்கிறது? ஆடல் பாடல்களுக்கும், கேலி கிண்டல்களுக்கும் உரியது நட்பு எனக் கொள்கிறது; களிப்புக்கும் மகிழ்வுக்கும் துணை என்று மதிக்கிறது; பொழுது போக்குக்கு உரியது என்று நினைக்கிறது. அன்றியும் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் மறுக்காமல் அவற்றை எல்லாம் ஒப்புக் கொண்டுஆமாம் என்பதே நட்பு என்றும் கொண்டுள்ளது. தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நட்பு என்பதை முதலீடாகப் போட்டு நடிக்கும் அவர்களிடம் உண்மை நட்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறவிகளில் எல்லாம் சிறந்த பிறவி மனிதப்பிறவி. அப்பிறவியோ தன் இயலாலும் செயலாலும் தெய்வ நிலை அடைதற்குரியது. அதற்கு உரிமைத் துணையாக அமைந்தது நட்பு என்றால் அந் நட்புக்கு எத்தகைய பெருமை உண்டு? இப்பெருமைக்குரிய நட்பினைச் சிறுமைக்கு இடமாக்கி விட அறிவுடையவர் நினைவரோ? பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளம் போல, உள்ளமும் சில வேளைகளில் தாழ்ந்து ஓடும்; உரிய தல்லா வழியில் விலகிச் செல்லும், அந்நிலையில் அறிவுறுத்தி வழிப்படுத்த வாய்த்த துணை நட்பேயாம்! மற்றையோர் அறிவுறுத்தல் புகாத இடத்திலும் நண்பன் அறிவுரை ஒன்றே நெறிப்படுத்தும்! அறிவுரைக்கும் ஆசிரியன் உரையினும், அரவணைக்கும் பெற்றோர் மொழியினும், தண்டிக்க முந்து நிற்கும் சட்டத்தினும் ஒருவனை அவன் உணர்ந்து நல்வழிப்பட வைப்பது நன்னண்பன். ஒருவன் உரையும், பாதுகாப்பும் துணையுமேயாம்! அவன் பாதுகாவலே வழுக்கு நிலத்தில் நடக்குங்கால் ஊன்று கோல் போல் உடனாக்கிக் காப்பதாம்! ஆதலால் நண்பன் என்பான் உருவத்தால் ஒருவன் ஆனாலும், அவனே தாயும் தந்தையும் ஆசானும் பாதுகாவலனுமாகப் பல நிலைகளில் பலராய்த் திகழ்கின்றானாம் இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைக்கும் அமைச்சனை இல்லாத அரசன் தன்னைக் கெடுக்க ஒருவர் வேண்டாமலும் தானே கெட்டுப் போவான் என்பார் திருவள்ளுவர். அவ்வாறே இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைக்கும் நண்பனைப் பெறாதவனும் தன்னைக் கெடுக்க வேறு எவரும் வேண்டாமல் தானே கெட்டுப் போவான் என்று குறிப்பிடுகிறார். உண்மை கசக்கும் என்பது பழமொழி, உண்மையை நேருக்கு நேர் சொல்லும் போது உண்மை தவறியவர்க்கும் கேட்கக் கசப்பாகவே இருக்கும். எவ்வளவு நேர்மையானாலும் முகத்துக்கு நேரே குற்றம் கூறுவதை எத்தனை பேர்களால் வரவேற்க முடிகிறது? அப்படி நேருக்கு நேர் கூறுவதை விரும்பாதது மட்டுமின்றி, வெறுக்கவும் செய்தல் இல்லையா? இந்நிலையிலும் உண்மை நண்பன் என்பவன் நண்பன் நலமொன்றே கருதி இடித்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும். அப்படிச் சொல்லத் தவறினால் தனக்கோ தன் நண்பனுக்கோ நன்மை செய்தது ஆகாது. மகிழ்வுத் துணையாக இருப்பதே நட்பு என்று கருதுபவன், இடித்துக் கூறி இன்னல் விளைப்பதை ஏற்பனா? ஏற்காமல் எதிரிட்டு நிற்பதும் உண்டல்லவா! இடித்துரை தாங்காமல் அழுது தேம்புவது கூட இல்லையா? அவன் அழுவதைக் கண்டு அதற்காக உருகி இப்படி அழவைத்து விட்டோமே என்று உண்மை நண்பன் வருந்த வேண்டியதில்லை. இப்பொழுதில் அழும் அழுகையை நினைத்து, விட்டு விட்டால் அவன் எப்பொழுதும் அழுதுகொண்டே இருக்க வேண்டியவன் ஆகிவிடுவான். மருந்துண்ண மறுக்கும் குழந்தையின் காலையும் கையையும் அமுக்கி வாயிதழை அதுக்கி, அன்னையார் மருந்து புகட்டுதல் போல் உண்மை நண்பன் கடமைபுரிய வேண்டும். இதனைக் குறிக்கும் திருவள்ளுவர். அழச் சொல்லி அல்லது இடித்து என்கிறார். நண்பன் தவறும் போது அழச் சொல்லல் இடித் துரைத்தல் இவ்விரண்டு மட்டும் போதா. காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாதே. கால்வாய் வழியாகவும், வாய்க்கால் வழியாகவும் நீரைக் கொண்டு சென்று வயல்களில் பாய்ச்சி வளமான விளைவு காண வேண்டும் அல்லவா! அதுபோல, நல்வழி காட்டி அவ்வழியில் நிலை நிறுத்த வேண்டியதும் நண்பன் கடமையேயாம். ஆதலால் தான், அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் என்றார் திருவள்ளுவர். 3. வாழ்வியல் வழி தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்குச் சான்றாகத் தோன்றியது நில முளரி (ரோசா), எவ்வளவு கவர்ச்சி மிக்கது அது; குழந்தையர் உள்ளத்தையா, முதியர் உள்ளத்தையா, மகளிர் உள்ளத்தையா, ஆடவர் உள்ளத்தையா எவர் உள்ளத்தை அது கவரவில்லை? பற்றற்ற துறவோரையும் பற்றிக்கொள்ளும் பெற்றியுடைய தன்றோ முளரி! முளரியை நினைத்த அளவில் நம் நினைவில் எவர் முந்துகிறார்? அதோ.... நேரு புகழொடு தோன்றுக என்பதை உலகுக்கு, என்றென்றும் உணர்த்தும் ரோசா, தோன்றும்போதே புகழொடு தோன்றிய, நேரு பெருமகனாரின் அகத்தையும் முகத்தையும் அமைகக் காட்டுவது போல், அவர் சட்டையில் விளங்கி, அழகுக்கு அழகு காணீர் எனச் சொல்லாமல் சொல்லி நின்றதே! சான்றோர் சான்றோர் பால ராப என்னும் சங்கச் சான்றோர் சால்புரைக்குச் சான்றாகி நின்றதே அந்த ரோசா! ரோசா மலரின் நிறமென்ன? அதன் நிறந்தானே ரோசர்! உலகத்திற்கு ரோசா வழங்கிய வண்ணக்கொடை இது! அதன் எண்ணக் கொடைகளைத்தான் எண்ண முடியுமா? முடிவிலா அழகுடைய ரோசா, முட்செடியிலேயா தோன்ற வேண்டும்? முள்ளில்லாச் செடியில் தோன்றக்கூடாதா? என்னும் வினா நம்முள் உண்டாதல் இயற்கை. ஆனால் அம்முள்ளின் பயனை எண்ணிப் பார்த்தால் அல்லவா, விந்தையின் விந்தையாய், வியத்தகு காவலாய்த் திகழ்கின்ற அருமை விளங்கும்! மெல்லிய தென்றலின் அசைவுக்கும் இதழை உதிர்க்கும் மிக மெல்லிய ரோசாவை, ஆடு மாடு முதலிய விலங்குகள் உரசாமல் விட்டு வைக்குமா? அவை உரசாமை எதனால்? அந்த முள்களால் தானே! இயற்கையின் காவல் கடமையை எண்ணிப் பாராமல் எளிதாகத் தள்ளிவிடலாமா? ரோசாவின் முள் இதனை மட்டும் தானா சொல் கின்றது? கவர்ச்சி மிக்கதென எதனையும் எண்ணிக் கண்மண் தெரியாமல் போகாதே! அழகு இருக்கும் இடத்தே அல்லலும் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் இடத்தே கவலைக்குரியதும் இருக்கும்! எச்சரிக்கையாக அணுகு என்கிறது! ரோசாப்பூ ரோசா வண்ணத்திலே மட்டும்தானா உள்ளது? எத்தனை வண்ணங்கள் வெள்ளை ரோசா - சிவப்பு ரோசா -மஞ்சள் ரோசா - ஊதா ரோசா - இப்படி எத்தனை வண்ணங்கள் வண்ணங்கள்! வேற்றுமைப் பட்டாலும், எங்களுள் உயர்வும் இல்லை! தாழ்வும் இல்லை! ஏற்றமும் இல்லை! இறக்கமும் இல்லை! நாங்கள்ஓரினம்! ஒருகுலம்! எங்களைப் பாருங்களேன்! வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால், அதில் மானுடர் வேற்றுமை இல்லை என்று தெளியுங்களேன்! எனத் தெரிவிக்கிறதே அது! விதை இல்லாத கனியைக் கருதிப் பார்த்தார் திருவள்ளுவர், காழில் கனி என்றார் அவர். விதையில்லாக் கனியையும் கண்டு தருகின்றது அறிவியல்! இவ்வாறே முள்ளில்லாத ரோசாவும் வாராதா என்ன? மாந்தனே! அறிவுக்கு எல்லை இல்லை! அறிவு நாளும் பொழுதும் வளர்ச்சியடைவது! நாம் வளர வளர அதுவும் வளர்வது அறியுந் தோறும் அறியாமை காணக் கூடியது அறிவு. அத்தகைய அறிவை, அறிவே வடிவாம் இறைவன் அருளியுள்ளான்!. கண்டுபிடி! கண்டுபிடி! மேலும் மேலும் கண்டுபிடி! உன் கண்டுபிடிப்புகளை யெல்லாம் ஆக்கத்திற்கென்றே கண்டுபிடி என்று ஏவி, வேண்டி நிற்கின்றதே, முள்ளில்லாத ரோசா முள்ளில்லா ரோசாவை நீங்கள் கண்டது இல்லாயா? எனக், குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் குழந்தையின் அழகு முகம் கேட்கின்றதே! அது முள்ளில்லாத ரோசா இல்லையா! காணார் கேளார் கால்முடமாயோர் பேணா மாந்தர் பிணி நோயுற்றோர் யாவரும் வருக ஆபுத்திரன்கை அமுதசுரபி என்ற - புகழும் வேண்டாப் புகழ்ச் செல்வி மணிமேகலையின் அழகு முகம், முள்ளில்லா ரோசா இல்லையா! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளற் பெருமகனார் அழகொழுகும் அருள் முகம் முள்ளில்லாத ரோசா இல்லையா! துறவின் தூய்மையும், அரிமாவின் துணிவும் அறிவின் உயர்வும் தொண்டின் உறைப்பும் ஒருங்கே கொண்ட, வீறுசால் விவேகானந்தரின் முழுமதி முகம் முள்ளில்லா ரோசா இல்லையா? தொண்டிலே பழுத்த தோன்றல் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் முகம் முள்ளில்லாத ரோசா இல்லையா? கோடி கோடிப் பேர் உள்ளங்களை யெல்லாம் கொள்ளை கொண்ட அந்தப் பொக்கைவாய்ப் புன்முறுவல் காந்தியார் தொண்டுமுகம், முள்ளில்லாத ரோசா இல்லையா? எங்கே புயல், அங்கே அவர்! எங்கே நிலநடுக்கம், அங்கே அவர்! எங்கே நோய், அங்கே அவர்! எங்கேபகை, அங்கே அவர் - என ஐந்நூறு கோடி உலக மக்கட்கெல்லாம் ஓருயிராய் - ஒரு தாயாய்த் - திகழ்ந்தாரே! திரேசா அன்னையார்! அவர் திருமுகம் முள்ளில்லாத ரோசா இல்லையா? இத்தனை முள்ளில்லாத ரோசாக்களும் நமக்கு என்ன சொல்கின்றன? நீங்களும் முள்ளில்லாத ரோசாவாக விளங்க முடியும் என்பதை யன்றோ! கரும்பு, இனிப்பு; வேம்பு, கசப்பு! பார்வையில் முரணாகத் தோன்றுகின்றன! சுவையிலும் முரண்பட்டவையா? பார்வையாளிக்கு இருக்கும் முரண், படைப்பாளிக்கு இருப்பதில்லை. இருப்பின் படைக்கப்பட்டிரா! கரும்பும் வேண்டும் உலகுக்கு! வேம்பும் வேண்டும் உலகுக்கு! இரண்டும் இணைதலும் வேண்டும் உலகுக்கு! வேண்டும் காலத்து, வேண்டுபவர்க்கு வேண்டும் பொருள்களில் முரண் என்ன முரண்? சுவைகளை எண்ணி, ஆறு என்றனர். ஆறு சுவைகளின் கலப்புச் சுவைகளோ, ஆயிரம் ஆயிரம்! ஆறு சுவைகளும் இனிப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு என்பன. ஆறும் சுவைகள் என்று முடிவு செய்யப்பட்ட பின் எதிரிடைப் பேச்சுக்கு இடமேது? உலகம் கரும்பையும் வேம்பையும் ஒப்பப் பார்க்கிறதா? பார்க்கத்தான் முடிகிறதா? உம்சொல் கரும்புபோல் இன்சொல் என்று பாராட்டட்டும்! உளறிக் குழறுபவருக்கும் உவகை பிறந்து விடுமே! நன் மொழி தேர்ந்து நயமாக உரைப்பவரையும் உம் சொல் வேப்பங்காயாக இருக்கிறது என்று சொல்லட்டும் வேப்பெண்ணெய் குடித்தது போல் முகஞ் சுழிக்க மாட்டாரா? காதலிலே கரும்பாகக் கருதிய தலைவன், கற்பிலே வேம்பாகக் கருதினானாம் தலைவியை வேம்பின் ஒண்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் முன்னே என்று இடித்துக் கூறித் திருத்துகிறாள் தோழி! கரும்பு வேம்பாதலும், வேம்பு கரும்பாதலும் மனநிலையைப் பொறுத்தது என்னும் காட்சி இது. நோய் தீர்ப்பதற்குரியது மருந்து: அது கசப்புமிக்கது. அதனை மன இயல் அறிந்த மருத்துவர் எப்படித் தருகின்றனர்? இனிப்புக் கட்டிக்குள் கசப்பு மருந்தை வைத்துத் தருக்கின்றர் இதனைக் கட்டி பூசிக் கடுத்தீற்றல் என்பது இலக்கணர் வழக்கு! வாய்ச் சுவைக்கு இனிக்கட்டும்; நோய்த் தீர்வுக்குக் கசக்கட்டும் என்னும் நுண்ணிய தேர்ச்சியால் கரும்பும் வேம்பும் உடனாகி - ஒன்றாகி- உறவாகி விடுகின்றன! இந்த வேம்புக்கும் கரும்புக்கும் உள்ள பெருமையின் பரப்பு அருமையினும் அருமையாம்! பாண்டியன் மாலை வேப்பம்பூ! அவனே வேம்பன் ஆனான்! வெப்பு - வேப்பு - வேம்பு என ஆகியது வேம்பு! வெப்பு நோயாம் அம்மை கண்டுவிட்டால், வேம்பு தலை வாயிலில் தலைநீட்டும்; படுக்கையிலும் தலை வைக்கும்; முழுக்காட்டு நீரிலும் மிதக்கும்! அதன் கொழுந்தை அரைத்துத் தேய்த்தற்கும் முந்தும், சித்திரைப் பிறப்புக்கு வேம்பின் சாறு (இரசம்) வைத்தல் நாடு தழுவிய வழக்கம். சிற்றூர் விழாத் தொடக்கத்திற்கு அடையாளம் வேப்பிலைத் தோரணம்! மாரியம்மனுக்குத் தீச்சட்டி எடுப்பார் கையில் திகழ்வது வேப்பந்தலை வேப்பம் பழத்தை விரும்பித் தின்னும் காக்கையை மறக்கலாமா? வேப்பம் பழத்தைச் சிவந்த வாய்க்குள் வைத்துள்ள கிளியைக் கண்ட புலவன், நங்கை ஒருத்தி தன் பவழ விரல்களில் இடையே பொற்காசு ஒன்றை வைத்திருப்பது போன்றுது என்பது எவ்வளவு அழகு! வேம்பே இத்தகைய தென்றால் கரும்பைச் சொல்லி முடியுமா? கரும்பின் பெயரே அதன் நிறம் கருமை என்பதைக் காட்டும். அதில் செங்கரும்பு, வெள்ளைக் கரும்பு, இராமக் கரும்பு எனப் பலவகை, பேய்க்கரும்பும் உண்டு! பட்டினத்தார் கையில் இருந்து பெருமை கொண்டது அது! சேர்ந்த இடத்தால் அடைந்த சிறப்புக்குச் சான்று அது. கார்க்கரும்பின் கமழாலையைக் காட்டுகிறது பட்டினப் பாலை! கரும்பாலையின் வெப்பமும் புகையும் நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூவை வாட வைப்பதையும் பாடிவைக்கிறது அப் பட்டினப்பாலை! நுனிக் கரும்பில் இருந்து தின்பதை நல்லோர் நட்புக்கும், அடிக்கரும்பில் இருந்து தின்பதை அல்லோர் நட்புக்கும் உவமை காட்டுகிறது நாலடி. அதே நாலடி கரும்பை ஆட்டிக் கட்டிக் கொண்டவர், சக்கை எரிவதைப் பற்றிக் கவலைப் படார்; அவ்வாறே காலத்திலேயே அறத்தைச் செய்தவர் இறப்புக்குக் கவலைப்படார் என்றும் கூறுகிறது. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் ஆட்டினால்தான் பயன்படுவர் கீழோர் என்றார் திருவள்ளுவர். கசப்பான செய்தியைக் கூட இனிப்பாகச் சொல்லலாமே என்பதை, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்கிறதே குறள்! கரும்பின் இனிமையினும் இனியன் இறைவன் என்பதை எத்தனை பாடல்கள் கூறுகின்றன! கடியாமல் சுவைக்கின்ற கரும்பு என இறைவனைக் குறிக்கிறாரே வள்ளலார்! கரும்பு வில்லையுடையவன் காமன் என்பதில் உள்ள உள்ளுறை, எவ்வளவு ஆழமானது! முரண்போல் தோன்றுவன, எவ்வளவு இணைந்தவையாகி விடுகின்றன! எதிரிடைகளை இணைத்துப் பார்க்கும் பார்வை என்றும் வேம்பாகக் கசப்பதில்லை! கரும்பாகவே இனிக்கும்! மரம், செடி, கொடி, புல், பூண்டு, ஆகியவற்றின் அடிமூலம் வேர், மண்ணுள் மறைந்து கிடக்கும் வேரே, மண்ணுக்கு மேலேயுள்ள தண்டு முதலிய பகுதிகளையெல்லாம் தாங்கிக் கொண்டுள்ளது! கண்ணில் கட்டுப் படாமலே தன் கடனாற்றும் வேர், புகழையும் விரும்பாப் புகழாளராய்க் கடமை புரிவார்க்கு எடுத்துக் காட்டாம் கிளையில் இருந்து கிளைத்துக் கீழே ஊன்றி நிற்பது வீழ்து! நீர் வீழ்ச்சியைக் காண்பவர் இவ்வோர் வீழ்ச்சியை ஒப்பிட்டு இன்புறுவர்! பொழுது போழ்து ஆவது போல் விழுது வீழ்து ஆகும்! வேரும் வீழ்தும் வேறு வேறானவையா? இல்லை! இரண்டும் வேர்களே என்பது அறிவியல் நிலத்தின் உள்ளே மறைந்திருந்தால் என்ன, நிலத்திற்கு மேலே வெளிப்பட்டிருந்தால் என்ன, பயிரைப் பாதுகாக்கும் செயலைச் செய்வது வேரேயாம்! முதல் வேரில் இருந்து தோன்றாமல் தண்டு முதலிய உறுப்புகளினின்று உண்டாகின்ற வேர் ஒட்டுவேர்! ஆலம் விழுது, தாழை வேர், வெற்றிலைத் தண்டில் இருந்து எழும்பும் வேர் ஆகியவை நிலத்திற்கு மேலே காற்றிலே வளர்கின்றன! சிலவகைக் கள்ளி இலைகளின் விளிம்பிலும் வேர்கள் உண்டு! வேரி என்பதற்குப் பொருள் மணம். வேர்க்கு மணம் இருப்பதால் வந்த பொருள் இது, வெட்டி வேர், நன்னாரி வேர் முதலியன நறுமணமுடையவை மட்டும் தாமா? மருத்துவத்தின் பயன்கள் தாம் எவ்வளவு மிகுதி! வேர்க் கடலை தருவது ஏது? வேர்க்கிழங்கு முதலாக எத்தனை கிழங்குகள்! வேர்ப்பலாவைச் சொல்லாமல் விடலாமா? பயிர்களின் தாய் வேர் எனலாம்! தந்தையும் அதுவே எனலாம்! ஏன் காவலனும் அதுவே எனலாம்! உரமும் நீரும் பயிர்க்கு நிலத்தில் இருந்து. அது தானே எடுத்துத் தருகிறது; காற்று மோதுதலில் இருந்து, அது தானே நிலை நிறுத்திக் காக்கிறது! அகல் மரமாம் ஆலமரம் அகல அகல அதன் வீழ்துகளாம் வேர்க்கால்கள் தாமே, இயற்கையின் ஆயிரக்கால் மண்டபமாக நிலைநிறுத்தி வைக்கின்றன. வேரும் வீழ்தும், தோன்றும் இடங்களால் வேறு பட்டால் கூட, செயலில் வேறுபடாச் செம்மையுடையவை! கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி என்பவற்றின் வேர்கள் மருத்துவர்களால் பஞ்சமூலம் எனப்படும். இப்ஞ்சமூலங்களும் மாந்தர் உடல் நோய்க்கு மருந்தாவன. இவ்வாறே மாந்தர் உயிர் நோய்க்கு மருந்தாகும் ஐந்து ஐந்து கருத்துகளைக் கொண்டதொரு நீதிநூல் உண்டு! அதற்குச் சிறு பஞ்சமூலம் என்பது பெயர், அதிலே வரும் ஒரு பாடற் கருத்து; பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமை; அதனையே எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை; பகையை மறந்து வாழ்தலும், ஆன்றோரும் சான்றோரும் இகழாதிருக்க வாழ்தலும் நன்மை என்பது. ஆயிரம் வேரைக் கண்டவர் அரை வைத்தியர் என்பது பழமொழி! வேரறிந்த மருத்துவரே, பேரமைந்த மருத்துவர் அல்லரோ! ஒரு மரம்! பெரிய மரம்! ஆலமரம்! அம்மரத்தின் பழைமை காட்டுவதுபோல் அதனைத் தொன்மரம், முதுமரம் என்றனர், மூதாலம் என்றும் கூறினர் அம்மூதால மரத்தின் வேரைக்கறையான் அரித்துவிட்டது! வேரில் இருந்து அடிமரத்தையும் தின்று விட்டது! ஆயினும், மரம் வீழ்ந்துவிடவில்லை! சிதைந்து விடவும் இல்லை! மரம் மரமாகவே நின்றது! வழக்கம் போல் அடி நிழலில் தங்குவார் தங்கினர்! படுப்பன படுத்தன! கிளையில் இருந்த பறவைகளும் வழக்கம்போலவே தங்கின! இதனைக் கருதிக் கருதிக் களிப்புற்றார் ஒருவர். பாவலராகிய அவர் ஓர் அரிய காட்சியை அமைத்து விளக்கினார்! குடும்பத்தைக் காக்கும் தந்தை முதிர்ந்துவிட்டார்! தளர்ந்தும் போனார்! குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கடமையைச் செய்ய இயலாதவராய் ஒடுங்கி விட்டார்! அந்நிலையில், அக்குடும்பத்தை அவரின் மக்கள் காப்பது போல், அடிமரம் சிதைந்தாலும் இவ்வீழ்துகள் முழுமரத்தையும் தாங்கிக் காக்கின்றன! என்று பூரிப்படைந்தார்! சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றில், தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் என்பது அப்பாட்டு; நாலடியாரில் உள்ளது! மலையே நிலைசாய்ந்தது போலத் தலைவர்கள் சாய்ந்து விட்ட எத்தனை குடும்பங்களை நிலைப்படுத்திய நன்மக்கள் நாம் காண - கேட்க - உள்ளனர்! அவர்கள் கிளை தாங்கும் வீழ்துகள் போல், குடி தாங்கும் தூண்கள்! வேரும் வீழ்தும் இயற்கைக் கொடை! இறைமைக் கொடை! இயற்கையன்னையின் இரு கைகளைப் போல, இருபால் இருந்தும் ஊட்டுகின்றன; உதவுகின்றன! கடமைகளைக் காலம் காலமாகப் புரிந்து வருகின்றன! இயற்கை அருளிய இரட்டைக் கைகளை யுடைய நமக்கு இவ்வேரும் வீழ்தும் எங்களைப் பார்த்து இசைபட வாழுங்கள் என்று சொல்கின்றன அல்லவா! எல்லா அறங்களிலும் சிறந்தது சொல்லறம். அது, செலவற்றது; செம்மையானது; சிறப்புத் தருவது; சீர்மை செய்வது. அச்சொல்லறமாம் நல்லற உரைகளுள் ஒன்று பழிப்பன பகரேல் என்பது. பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைபடுவதும் சொல்லாலே என்பது பழமொழி. பெருமையும் சிறுமையும் சொல்லும் சொல்லால் உண்டாகும் என்பதைச் சொல்லும் பழமொழி இது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதும் ஒரு பழமொழியே. நுணல் என்பது மணல் தவளை, அதன் வாயொலியால் பாம்புக்கு இரையாகி விடுவதைச் சொல்லுவது அது. ஆனால் தவளை மட்டுமா? ஆறறிவு படைத்தும், அடாவடித்தனம் எதுவும் செய்யாதும் வாய்ச் சொல்லால் இழிவும் பழியும் அடைவார் இலரா? வாயால் கெட்டான்; வாய்ச்சனியன் என்றெல்லாம் சொல்லக் கேட்பதில்லையா? ஆதலால்தான். யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்கிறார் திருவள்ளுவர். ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும் காக்கப் படுவன இந்திரிய மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேனு மாறே என்று வளையாபதி பாடிற்று. ஐம் பொறிகளிலும் நாக்கைக் காத்தலே முதன்மையானது என்பானேன், தீயால் சுட்டு வெளியேயும் உள்ளேயும் புண் ஆறிப் போகும். ஆனால் காலமெல்லாம் ஆறாப்புண் தழும்பு படாமலே தழும்பாகிப் போன புண், நாவு சுட்ட சொற் புண்! அதனால், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்றார் பெருநாவலர். பழிப்பன என்பது சான்றோர் பழித்துக் கூறியனவாம். வசைச் சொல் ஆகாது என்பது வையகம் சொல்வது. ஆசிரியர் தொல்காப்பியர் வசைச் சொல்லை வைஇய மொழி என்பார். ஏன்? வசை மொழி என வெளிப்படத் தெரிந்தாலும் அதன் ஆழப் பொருள் பெரிதாம். வகைச் சொல் அழியவே அழியாது. கொல்லும் சொல் என்பது வசைச் சொல்லே. அதனால் அச் சொல்லைக் கேட்டார் எவரும், அச்சொல்லைச் சொன்னார் எவரையும் மறந்து விடமாட்டார். தம் நெஞ்சத்திலே எட்டிக் காயின் கசப்புப் போலவும் ஈட்டி குத்திய குத்துப் போலவும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பர். அச் சொல்லைக் கூறினார் வலியராயின் அவரைத் தாக்கியழிக்க முடியாதென உள்ளம் வெதும்பி வெதும்பி உருக்குலைந்து உரிய பொழுதைத் தேடிக்கொண்டு இருப்பர். ஆயினும் நெஞ்சில் அவர் சொல்லிய பழிச் சொல்லை வைத்துக் கொண்டே இருப்பர். ஆனால் பழிச்சொல் சொல்லியவர்க்கு ஒப்பாகவோ உயர்வாகவோ இருப்பவர் உடனே அவரைத் தாக்கவும் பழிக்கவும் ஆவர். விளைவு கொடிய விளைவாகவே இருக்கும் குடும்பத்தை அழிக்கும் கொடுமையாகவும் ஆகிவிடும். சொல்லும் சொல் கொல்லும் சொல்லாகவோ இருக்க வேண்டும். பழிச்சொல் சொல்வது வஞ்சச் செயல் என்று திரிகடுகம் சொல்லும்; வாயின் அடங்குதல் துப்புரவாம்; மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம்-பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும்; இம்மூன்றும் வஞ்சத்தற் றீர்ந்த பொருள். என்பது அது. ஓர் அறநெறிக் களஞ்சியமாகத் திகழ்வது திருமறை எனப்படும் பைபிள். அதில் ஓர் அரிய நீதி உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு, அயலான் கண்ணில் இருக்கும் துரும்பை எடு என்பது. இதனைத் திருக்குறள் தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம் என்று கூறும். தன் குற்றத்தை அறிவான் பிறர் குற்றத்தைப் பழித்துப் பேசுவனா? பேசினால் என்ன ஆகும். மனச் சான்று இல்லாதவன் என்பது உறுதியாகும். அவ்வளவோடு நிற்குமா? நில்லாது என்கிறார் அறநெறி கண்ட அண்ணல் திருவள்ளுவர். எவன் பழிச் சொற்களைப் பரப்பித் திரிகின்றானோ அவன் பழிச் செயல்களையெல்லாம் ஒன்று ஒன்றாகக் கண்டு கணக்கிட்டு எல்லாவற்றையும் ஒரு மொத்தமாகத் திரட்டிக் கூட்டிப் பிறரால் பழிக்கப் படுவானாம். இதனை, பிறன்பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் என்பார். பழிப்பவனின் பழிச் செயல்களில் மிகப் பெரிய பழிகளைத் தேடித்தேடிச் சொல்வராம். அவ்வாறானால தன் பழியைப் பலப்பலரும் பரப்பத் தான் கேட்டுக் கேட்டு கேவலப்பட விரும்புபவன் எவனோ அவன் பழிப்பன பகரட்டும்; பிறர் பழிப்பன பகர்தல் ஆகாது என்று கூறுவதாய் அமையும் மலைமுன் நின்று வாழ்த்தினால் எதிரொலியும் வாழ்த்தாகவே இருக்கும். இம்மலைமுன் நின்று பழித்தால் அதன் எதிரொலியும் பழிப்புரையாகவே இருக்கும். மக்கள் சொல்லும் சொல்லும் நம் சொல்லுக்கு எதிரொலியே என உணர்ந்து கொண்டால் பழிப்பன பகர வாய் வராது ! புகழ்வன புகல ஆர்வம் கிளரும் ஒருவர் சொல்லும் சொல்லைக் கேட்ட அளவில் அதனை மேலும் கேட்க ஆர்வம் உண்டாகின்றது. அச் சொல்லை மீண்டும் நினைக்கத் தூண்டுகிறது. அச் சொல்லை நினைக்கும் போதெல்லாம் இன்பமும் கிளர்ச்சியும் உண்டாகின்றன. காலம் கடந்தாலும் இடம் கடந்து சென்றாலும் வாழும் சொல்லாக நம்மிடம் நிலை பெறுகின்றது. நம் தொடர்புடையவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் மகிழ்வும் நலமும் ஆக்க ஏவுகின்றது. சொல்லுக்கு இவ்வளவு ஆற்றலா? என நாம் வியக்கிறோம். சிலர்க்கு வாய்த்த அவ்வாற்றலை நினைத்துப் பூரிப்படைகிறோம். இவரைப் போல இவர் சொல்லும் இச்சொல்லைப் போல நாமும் சொல்லலாமே-அதற்கு முயலலாமே - என்னும் ஊக்கம் உண்டாகின்றது. இத்தகு நிலையை நோக்கியே உரைக்கும் உரையை நயம்பட உரை என்றார் ஔவையார். ஆத்திசூடி இளையவர் இலக்கியம்; வளர்ந்தவர்கள் இலக்கியம்; வளர்ப்பவர்கள் இலக்கியம். இளமை தொட்டுப் பெருமுது நிலையர் வரை பேணிக் கொள்ள வேண்டிய பெருமைமிக்க அற இலக்கியம். பாட்டியார் கண்ட பட்டறிவு இலக்கியம் அது. ஏனோ தானோவென்று சொல்லிய சொல் அன்று அது. சொல்லும் சொல் வெல்லும் சொல் என்னும் சிறப்புக்குரியதாம். நவில்தொறும் நூல் நயம் உண்டாம் என்றார் திருவள்ளுவர் உணவோடு கலந்துண்ணும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படும். அதற்கு நயம் எண்ணெய் என்பது பொது மக்கள் வழக்கு. நயன், நயன்மை என்பவை நேர்மையானவை. நீதி என்பதை நயன்மை என்று சொல்வது மொழிவல்லார் நெறி. நாகரிகத்தைப் போற்றும் திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் என்பார். நுண்ணிய கலைமலிந்த இசைப் பாடலை நயந்தெரி பாடல் என்பார் இளங்கோவடிகள். நலம் பாராட்டுதலை நயப்புரை என்பது இலக்கிய வழக்கு. ஆதலால் நன்மையாவது. நேர்மையாவது இன்பமாவது ஆகியவை நயம் எனப் பட்டமை புலனாம். அவையெல்லாம் உண்டாகச் சொல்லாடு என்பதைச் சுருக்கியே பாட்டியார் நயம்பட உரை என்றார். சொல்பவர் நாவுக்கு நன்மணமாக்குவது நயம்பட உரைத்தல். கேட்பவர் செவிக்கு நன்மணமாக்குவதும் நயம் பட உரைத்தல், தனக்கு நயவுரை விரும்புபவன் பிறர்க்கு நயவுரை தருதல் முறைமை அல்லவா என்பதைச் சுட்டிக் காட்டுவது நயம்பட உரை என்னும் சொல்லாணையாம் நல்லாணை. நயம் தேன் மட்டுமா சுவை. சொல்பவரும் கேட்பவரும் நயம்தேன் என்று சொல்லிப் பாராட்ட உரைக்கலாமே! அவரும் நயந்து நயந்தேனை நாளெல்லாம் நாடெல்லாம் பரப்ப வழிகாட்டலாமே! படித்தாலும் பக்கம் நின்று கேட்டாலும் தித்திக்கும் தெள்ளமுதம் என்றாரே வள்ளலார் பெருமான்! உரைத்தாலும் உரைக்க நின்று கேட்டாலும் உள்ளெலாம் அள்ளூற நயம்பட உரைக்கலாமே! தாம் பெற்ற இன்பம் உலகமும் பெற வேண்டும் என்னும் உயர்வின் வெளிப்பாடு ஆகுமே அது. இனியவை கூறல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று. இரக்கம் கலந்தது; குற்றம் இல்லாதது! மெய்ப் பொருள் கண்டவர் வாயில் இருந்து வருவது - இன்சொல் என அதன் இலக்கணம் கூறினார். இன்சொற்கள் நம்மிடம் நிரம்பிக் கிடக்கவும் அவற்றை விடுத்து வன்சொற்களைத் தேடிக் கண்டு சொல்கிறார்களே இவர்கள் செயல் கனியிருப்பக் காய் கவர்வது அல்லவா என்கிறார். கரும்பு இருக்க இரும்பு கடிப்பாரா? என்பார் அப்பரடிகள்! குயில் ஒலி கேட்பதை விடுத்துக் கழுதைக் கத்தலை எவர் கேட்பார் என்பார் தனிப்பாடலார். மலர்ந்த முகத்தானும் மதுர உரையானும் நலந்தந் திடுவர்கள் நல்லோர் - புலந்திருந்த இன்னாமுகத்தான் அருளா திடும்பொருள் தன்னாற் பயனுண்டோ தான் என்று பாரத வெண்பாப் பகரும். ஈகையினும் சிறந்தது இன்சொல் என்பதை அகமனர்ந்து ஈதலின் நன்றே முகமனர்ந்து இன்சொல னாகப் பெறின் என்னும் இனியவை கூறற் குறள் நயம்பட உரைத்தல் நல்ல கொடையினும் சிறந்தது என்பதைக் காட்டும் அல்லவா! நயம்பட உரைத்தால் நாடெல்லாம் பாராட்டும்; நாளெல்லாம் பாராட்டும்! பன்னீர் தெளிப்பார் பன்னீர் தெளிக்கவும் படுவார் அல்லவா தாமரைக் குளம் ஒன்று இருக்கிறது. இதனை, ஒருநாள் மாலைப் பொழுதில் பார்க்கிறோம். அப்பொழுது அதில் தண்ணீர்க்கு மேலே, அழகு முகம் காட்டிக் கொண்டு இருக்கிறது, தாமரை மலர், அன்று இரவு நல்ல மழை அடைமழை; காட்டுப் பகுதி நீரெல்லாம் வெள்ளமாகப் பெருகித் தாமரைக் குளத்தை நிறைத்தது கொஞ்சமா? எட்டடி உயரத்திற்கு, நீர்மட்டம் ஏறிவிட்டது ஐந்தடித் தண்ணீர் வந்தது, ஒரு நாள் மழையில் - ஓர் இரவில்! ஆனால் வியப்பு! வியப்பிலும் வியப்பு! அந்தத் தாமரைப் பூக்கள், அந்த எட்டடி நீருக்கும் மேலே ஏறிக் கிடந்து, எழில் முகம் காட்டுகின்றனவே! மூன்றடி உயரத் தாமரை எட்டடி உயரமாய் - எப்படி வளர்ந்தது? உள்ளே சுருண்டு கிடந்த கொடி, வெள்ளம் உயர உயரத் தானும் உயர்ந்த, வெள்ளத்திற்கு மேலே நிமிர்ந்து விட்டது! இந்த மெய்ம்மைக் காட்சியைப் பொய்யில் புலவர் திருவள்ளுவரும் கண்டார்! வியப்புக் கொண்ட அளவில் நின்றார் அல்லர்; வெற்றியின் அடித் தளம் ஈதெனத் தெளிந்தார். அதனால், வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு என்றொரு குறட்பா அருளினார்! வெள்ளத்தின் அளவு, தாமரையின் அளவு; உன் உள்ளத்தின் அளவு, உன் உயர்வின் அளவு என்றார் தாமரைக் கொடிக்கு உயரம் உள்ளே கிடந்ததா? வெளியே கிடந்தார்? உள்ளேயே கிடந்தது: வெளியே இருந்து வரவில்லை. வெளியே இருந்து வெள்ளம் வந்தது. உள்ளே இருந்த உயரம் எழுச்சி கொண்டது! அதுபோல், உள்ளத்தின் உள்ளேயே உயரமும் இருக்கத்தான் செய்கிறது! அது வெள்ளம் போன்ற உணர்வால் எழுப்பப்பட வேண்டும்! எழுந்து உயர்ந்து விடும்! எண்ணாத வெற்றியை எல்லாம், எண்ணித் தரத் தொடங்கிவிடும்! உள்ளம் - ஊக்கம் - உரம் - உண்டா உன்னிடம்? உன்னிடம் உயர்வும் உண்டு! என்பது வெற்றிச் சூத்திரம்! இதனை, உள்ளம் உடைமை உடைமை என்கிறார் திருவள்ளுவர், அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை என உடைமைகளைக் கூறும் திருவள்ளுவர் தாம், உள்ளம் உடைமை உடைமை என்கிறார். உள்ளமுடைமை இல்லாவிட்டால், எந்த உடைமையும் பயன்படா என்பதை நன்கு அறிந்தே சொல்கிறார். அதனால், உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று என்றார். ஊக்கம் என்னும் உடைமை இல்லா விட்டால், மற்றை எந்த உடைமையும் உடைமையாகாது என்பதைத் தெளிவாக்கியது இது. ஊக்கம் இருந்தால் உயர்வு வரும் என்பது மட்டும் தானா இல்லை, ஆக்கமும் தேடிவரும் என்கிறார். ஆக்கத்தை ஊக்க முடையவன் தேடிப் போக வேண்டியது இல்லை! ஆக்கமே ஊக்கமுடையவன் இருக்கும் இடத்தை அறிந்து, அவனை அடைவதற்கு உரிய வழியைத் தானே கேட்டுக் கொண்டு, தேடி வந்து சேருமாம், இதனையே, ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை என்றார். அதர் என்பது வழி; அதர் வினாய் - என்பது வழி கேட்டு என்னும் பொருளுடையதாகும். ஊக்கம் இவ்வளவு உயர்ந்ததா? ஊக்கம் இருந்தால் ஆக்கம் வந்து விடுமா? என்று வியப்போடு நினைக்கும் போதே, ஆம்! ஊக்கம் வேறு ஆக்கம் வேறா? ஊக்கமே ஆக்கம் தான் என்கிறார். நாம் கழுத்துக்கு அணிகலம் அணிவோம்! கையிற்கும் அணிவோம்! விரலுக்கும் அணிவோம். காலுக்கு காதுக்கு எனவும் அணிவோம். ஆனால் இவை தாம் அணிகலங்களா? இவற்றினும் சிறந்த அணிகலம் விலைமதிப்பற்ற அணிகலம், தமக்குள்ளாகவே இருக்கும் அணிகலம்; அணிகலங்களுக் கெல்லாம் அணிகலம் ஒன்று உண்டு; அது ஊக்கம் என்னும் அணிகலம். எவரையும் தூண்டி விட்டு அல்லல் ஆக்காத, அருமை அணிகலம் அது. உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை என்னும் அணிகலம் என்கிறார் திருவள்ளுவர். ஊக்கம் என்னும் அணிகலம் அணிந்தால் அழிவு இல்லையா? இல்லை! என்று சொல்கிறார் வள்ளுவர். வெள்ளம் பெருகி வருகிறது? மேலும் மேலும் பெருகி வருகிறது; புல்லைப் பறிக்கிறது; நெல்லை யழிக்கிறது; மரத்தை வீழ்த்துகிறது; வீட்டைச் சாய்க்கிறது; ஆனால், அந்த வெள்ளம், மலையை என்ன செய்துவிடும்? முட்டட்டும் - மோதட்டும் - சுற்றிச் சுற்றி வளைக் கட்டும் - மலையை என்ன செய்துவிடும் அந்த வெள்ளம்? மலைபோலும் ஊக்கமுடையவனைத் துன்புறுத்த வரும் எவையும் துன்பமுற்று ஓடுமே அல்லாமல், அவனைத் துன்புறுத்த மாட்டவே மாட்டா! வெள்ளம், உள்ளத்தின் உயர்வுக்கும் உவமையாயிற்று! அதே வெள்ளம், உறுதிப் பாட்டுக்கும் உவமையாயிற்றா? வள்ளுவப் பார்வையில், அவ்வாறு ஆனமையால் தான். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் என்றார். எழுத்தும் கை கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கைத் தொடர். நம்பினார் கெடுவது இல்லை நல்ல நம்பிக்கை என்றும் கை கொடுக்காமல் போவது இல்லை என்பது, நாளும் பொழுதும் கண்டுவரும் காட்சிகள். பேசத் தெரிந்தவர் எல்லாரும் எழுத முடியும் பேச்சின் வரிவடிவம். எழுத்துப் பிழையில்லாமல் பேசத் தெரிந்தவர். எழுத்தின் வரிவடிவத்தை அறிந்து கொண்டாலே போதும் பிழை இல்லாமல் எழுதிவிட முடியும் பேசும் போதே எத்தனை உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன! எத்தனை அவலங்கள் - அழுகைகள் - வழிகின்றன! எத்தனை நகைச் சுவைகள் வெடிக்கின்றன; எத்தனை எள்ளல்கள் - கேளிக்கைகள் கிளர்கின்றன; எத்தனை வருணனைகள் வயப்படுகின்றன! இவற்றுக்கு எழுத்து வடிவம் தந்துவிட்டால் காலமெல்லாம் அழியாத சுவைச் செல்வமாகி விடும் அல்லவோ! ஆகவே, எழுத்து எவர்க்கும் கைகொடுக்கும் வள்ளலாகும் என்பது தெளிவாகும் எழுத்து, பாட்டானால் என்ன? உரையானால் என்ன? இரண்டுமே அவரவர் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் தக்க வகையில் கைகொடுப்பனவே, நோக்குமிட மெல்லாம் அறிவுக் குவியல்கள்! காணும் இடமெல்லாம் கலைச்செல்வங்கள்! அள்ளிக் கொள்ளும் ஆர்வம் வேண்டும்! அந்த ஆர்வந்தான், வெள்ளமெனப் பெருக் கெடுக்கும்! கொள்ளை கொள் அருவியாய்க் கொழிக்கும் ஆழிப் பேரலையாய் - ஊழிப் பெருக்காய் உயர்ந்து தாவும்! அதற்கு வடிவம் - உரையென்ன, பாட்டென்ன, உரைப்பாட்டென்ன, நாடகம் என்ன நகையாண்டி என்ன, நறுக்கென்ன, நளி நயம் என்ன- எல்லாமும் கை கொடுக்கும். தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிறார் திருவள்ளுவர், அவரே, குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்றும் கூறினார். பாரதியார் பாடுகிறார் நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வைய முழுதும் பயனுறப் பாட்டி லேயறங் காட்டெனும் ஒர் தெய்வம்; பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி யெங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறென்றே! தெய்வங்களே ஓடி ஓடி வந்து, பாடு பாடு என்று தூண்டு கின்றன என்கிறாரே, பாரதியார். நமக்கென்ன கூடாததா அது? நாமும் சிக்கெனப் பற்றிக் கொண்டால், அத்திறம் நம் கைக்குள் சிக்காமல் போகாது. இதோ பாவேந்தர் பாடுகிறார்: காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்; மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ் சாலையிலே, கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில், அந்த அழகென்பாள் கவிதை தந்தாள் சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாய் திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நா ரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளையில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடட! செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள். காணும் காட்சியெல்லாம் நெஞ்சத்தில் குடியேறி விட்டால் அதனை வெளிப்படுத்துவது தானா அருமை? எந்த வடிவத்திலேயும் அது அவரவர் ஆர்வத்திற்கும் பயிற்சிக்கும் தக்கவாறு வெளிப்படுமே! டூமாசு என்பவர் ஓவியர், அவர் ஒர் ஆட்டை ஓவியமாகத் தீட்டினார். அதனைப் பார்த்த சுவைஞர் ஒருவர். டூமாசு ஆட்டை வரையவில்லை; ஆடாகவே மாறிவிட்டார் என்றார்! எதைக் காணுகின்றாரோ அதுவாக மாறிவிடுதல் என்பது, அருமையான திறம்! அத்திறம் வல்லவர் படைப்புகள் சுவைஞர் களையும் படைப்பாளி நிலைமைக்கே உயர்த்திவிடும். அதே டூமாசு வரைந்த புறாவின் ஒவியம் ஒன்றைப் பார்த்த சுவைஞர் ஒருவர், நான் டூமாசு வரைந்த புறாவைப் பார்த்ததும் புறாவாகவே மாறிவிட்டேன்; கூழாங்கற்களைப் பொறுக்கித்தின்ன வேண்டும் என்று ஆர்வம் உண்டாயிற்று என்கிறார். இராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. வாலிபன் ஒருவன் மந்தரை வேடமிட்டு நடித்தான், மந்தரையின் நடிப்பும் சூழ்ச்சித் திறமும் பார்வையாளருள் இருந்த ஒருவரை அப்படியே வயப்படுத்தி விட்டது. உண்மை நிகழ்ச்சியே போலவும், தம் கண் முன் நிற்பவள் மந்தரையே என்பது போலவும், உணர்ந்த அவர் செருப்பைக் கழற்றி அவன்மேல் வீசினார்! ஆனால் அவனோ எரிச்சல் படாமல். என் நடிப்புக்கு இது போலப் பாராட்டுக் கிடைத்ததே இல்லை; இனிக் கிடைக்கவும் கிடையாது என்று தலைமேல் அதனை வைத்துக் கொண்டு பாராட்டினான். உணர்ந்து எழுதிய எழுத்து, உணர்ந்து நடித்த நடிப்பு. உணர்ந்து பார்த்த பார்வை - இவற்றின் ஒட்டு மொத்த வெற்றி இதுவாம் அறிஞர் பெர்னாட்சா எந்த ஒரு செய்தியையும் நாடகக் காட்சியாகவே பார்த்தார். மேடை - காட்சி - உரையாடல் - நடிப்பு - என்பனவாகவே எந்தச் செய்திப் பதிவும் ஆகிய அவரும் எடுத்த எடுப்பிலேயே வெற்றிக் கனிகளைக் கொய்து விடவில்லை. எழுத்தையே தொழிலாகக் கொள்வேன் என்று துணிவாக ஒரு முடிவெடுத்து எழுத்தர் வேலையை விட்டுப் விட்டுப் போனார் அவர். எழுதுவதிலேயே முழுமூச்சாக இறங்கினார். ஓராண்டு ஈராண்டுகள் இல்லை; ஒன்பது ஆண்டுகள் எழுதிய எழுத்தின் வழியாக ஆறே ஆறு பவுன் தான் வருவாய் கிடைத்தது. எழுதிய எழுத்தை அச்சகத்திற்கும் பதிப்பகத்திற்கும் அனுப்பு வதற்குரிய அஞ்சல் செலவுக்குக் கூடக் காசு இல்லாத நிலை. உடைகளோ கிழிவு; காலணிகளோ தையல்; வயிற்றுப்பாட்டுக்கும் திண்டாட்டம்! ஆயினும், கொண்ட உறுதியில் சலியாமல் உழைத்தார்! வெற்றிமேல் வெற்றி குவித்தார். நான் வாழப்போவது ஒரே ஒரு முறைதான்! அவ்வாழ்வில் காலமெல்லாம் அழியாத என் எழுத்து முத்திரையைப் பதித்தே ஆவேன் என்று அவர் கொண்ட முடிபும் அதனை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட உறுதியும் அவரை உலக மலைமேல் ஒளிக் கதிராக்கி விட்டதாம். இதோ! ஒர் இளைஞர் புறப்படுகிறார் வேலை தேடி! அலுவலகங்கள் - தொழிலகங்கள் என ஏறி இறங்கினார். எங்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. பொழுது போக்காக ஒரு நூலகத்துள் நுழைந்தார். அது பெருநூலகம்; சென்னை கன்னிமாரா நூலகம்; காலமெல்லாம் கற்கத் தக்க கடலளவு நூல்களைக் கொண்ட நூலகம்; நுழைந்தவர், பன்னாள் பசித்துக் கிடந்தவர் என நூல்களைச் சுவைமிகு உணவாகக் கொண்டார்; உவகை கொண்டார்; இனி வேலை தேடேன்; வேலை என் கைமேல் கனியாக வாய்த்து விட்டது; படிப்பேன்; படிப்பேன்; நூல்கள் படைப்பேன்; படைப்பேன் - என உறுதி கொண்டார். அப்படியே எழுதிக்குவித்தார்; அவரால் - அவர் எழுத்தால் - உந்தி எழுப்பப்பட்டு உயர்ந்தவர் எண்ணற்றவர். அவர் கண்ட வாழ்க்கையில் வெற்றி, பலர் வாழ்க்கையை வெற்றியாக்கிற்று. படைப்பாளி நிலைக்குப் படிப்பாளி உயர்த்தப் பெற்ற இரட்டை வெற்றி இது! இந்த இளைஞர் - எழுத்தையே தொழிலாகக் கொண்ட இந்த இளைஞர் - எவர்? அவர், அப்துல்றகீம்; இப்பொழுது, எழுத்தும் கை கொடுக்கும் என்பது தெளிவாயிற்றல்லவா! இதோ! ஒரு முதியவர்! அவர் இளந்தைப் பருவத்திலே பள்ளி இறுதித் தேர்வும் எழுதாமலே படிப்பை நிறுத்தும் இக்கட்டுக்குத் தாமே நேர்ந்தவர். ஆனால், நான்கு சுவர்க்குள் மட்டுமா, கல்வி? நானிலம் எவ்வளவு விரிவானது. எத்தனை கோடி அறிவுக் குவியல்கள் உலகில். ஆர்வப் பொருள் கைம் முதலாக இருந்தால், என்ன பொருளைத்தான் வாங்க முடியாது? அவர், சமயத்திறத்தோரை, மொழிவல்லோரைத் தேடித் தேடிக் கற்றார்! பன் மொழிப் புலமை உற்றார்! பள்ளி - கல்லூரி - எனத் தமிழாசிரியப் பணிகள் தேடிவந்தன. ஆங்குப் பணிபுரிந்த அளவிலே அமைந்தார் அல்லர். நாட்டு விடுதலைத் தொண்டு, தொழிலாளர் தொண்டு, மகளிர் மேம்பாட்டுத் தொண்டு எனத் தொண்டுகளைத் தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு நடையிட்டார்; தேசபக்தன், நவசக்தி என இதழ்களை நடத்தினார்! உரையா, பாட்டா ஆய்வா - எல்லாம் கை வந்த கலைகள் ஆயின. மேடைப் பொழிவில் குற்றால அருவியெனக் கொழித்தார்! அவர் பொழிவுகள் எல்லாமும் நூல்கள் ஆயின! நூல்கள் எல்லாமும் பொழிவுகள் ஆயின; அவரே நூலர் ஆனார்! அவர் பெயரைச் சொல்லவும் வேண்டுமோ? தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர். இளமை விருந்து படைத்தவர் அவர்; முருகன் அல்லது அழகு கண்டவர் அவர்; பெண்ணின் பெருமை பேசியவர் அவர்; தமிழ்த் தென்றலும் தமிழ்ச் சோலையும் தந்தவர் அவர்; பொருளும் அருளும் அல்லது மார்ச்சீயமும் காந்தியமும் போற்றியவர் அவர்; மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் எனும் நூலைப் படைத்தவர் அவர்; என் கடன் பணி செய்து கிடப்பதே எனக் கண்டு, சமயச் சார்பு கடந்து, சமயச் சால்புக்கு இலக்கியமானவர் அவர். பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் ஆகிய புகழ் வாழ்வினர் அவர். இருளில் ஒளி, முதுமை உளறல், படுக்கையில் பிதற்றல், செத்துப் பிறத்தல் என வாழ்வு நிலைகளையே தாழ்விலா நூல் ஆக்கிய தவத் தோன்றல் அவர். அவர்க்குக் கை கொடுத்த எழுத்து, அவர் பேரர் பேர்த்தியர்களாகிய இந்நாள் இளையர்க்குக் கை கொடுக்காமல் போய்விடுமா? வரலாற்றுக் கதைப்பின்னல் என்றால் இவர்க்கு இணை எவர் என விளங்கிய கல்கியார். சமுதாயப் புனைகதை உலகில் கொடி கட்டிப் பறக்கும் செயகாந்தனார். திரையுலக மன்னரகவும், ஈடுபடா எழுத்துத் துறை எதுவுமே இல்லை என்னவும் முத்திரை பதித்துச் சென்ற கவிஞர் கண்ணதாசனார். இளவயதிலேயே எழுத்தை வரித்துக் கொண்ட புதுமைப்பித்தனார்; எள்ளல் சுவையை இப்படி நயம் பெற ஆள முடியுமா என வியப்பில் ஆழ்த்திய வ.ரா. நடைமுறைச் செய்திகளை நாத்தழும்பேறச் சொல்லிக் கைத் தழும்பேற எழுதிக் குவித்த பெரியார். இவர்களெல்லாம் பெரும் பெரும் பட்டந்தாங்கிகளா? பேராசிரியக் கட்டில் பெற்றவர்களா? இவர்களையெல்லாம் காலம் காலமாக நிறுத்தி வைக்கக் கை கொடுத்துள்ள எழுத்து, நமக்கு மட்டும் கை கொடுக்காமல் போகுமா? வாழை பழம் என்று படியாதவர் எவரேனும் சொல்வதுண்டா? வாழைப்பழம் என்றுதானே இலக்கணமாகச் சொல்கிறார். பூனைக்குட்டி என்று சொல்லாமல் எவராவது பூனை குட்டி என்பாரா? அப்படிச் சொல்லாத போது அப்படி எழுதலாமா? பிண்ணாக்கை எவரும் அறிவர். ஆனால் அதனைப் பலரும் புண்ணாக்கு என்று சொல்லவும் எழுதவும் காண்கிறோம். அப்படிப் பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கரின் துணைவியார் புண்ணாக்கு என ஒரு முறை கடிதத்தில் எழுதினார். அதனைப் படித்த மாணிக்கர் புண்ணாக்கு என எழுதிப் புண்ணாக்கி விட்டாய்; பிண்ணாக்கு என எழுது என்று எழுதினார். தெருத்தோறும் ஊர்தோறும் நகர்தோறும் அடகுக்கடை என்னும் பெயர்ப்பலகையைப் பார்க்கிறோம். அடகு என்பது கீரை. பாரி மகளிர் படைத்த கீரைக் கறியை, ஔவையார், வெய்தாய் நறுவிதாய் வேண்டளவு தின்பதாய் நெய்தான் அளாவி நிரையிட்டு - மெய்யாய் அடகென்று சொன்னார் அமுதத்தை எனப் பாராட்டுகிறார். அடகு-கீரை; அடைவு -அடவு-அடைமானம் என்பவை ஒரு பொருளை ஒப்படைத்து அதற்கு ஈடாகப் பொருள் பெறுவது ஆதலால் அடவுக் கடை அடைவுக்கடை என்பதே பிழையற்றதாகும். எண்ணிப் பார்க்காமலே தொடர்ந்து பலரும் செய்யும் பிழை அடகு என்பதாகும். எழுத்து கை கொடுக்க வேண்டுமானால் உலகியல் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் உன்னிப்பாக நோக்குதல் வேண்டும். அதனை வாழ்வியல் பொருளாக்கி விட வேண்டும். தேக்கடியில் கண்டதொரு காட்சி நீர்த் தேக்கத்தில் படகு செல்கின்றது. விரைந்து சென்று படகைத் திடுமெனப் படகோட்டி நிறுத்துகிறார். திகைப்பாக நோக்குகின்றோம் படகில் இருந்த எல்லாரும். படகுக்குச் சிறிது முன்னால் பாறைகள் கிடப்பன போன்ற தோற்றம். ஆனால் பாறைகள் நகர்வது இல்லையே! இதோ பாறைகள் நகர்கின்றனவே எனக் கூர்மையாய் நோக்க அவை யானைகள் என்று கண்டு கொள்கிறோம். அவ் யானைகள் நகர்ந்து கரையேறுகின்றன. குட்டியானை ஒன்று; பெட்டை யானை இன்னொன்று; ஆண் யானை இன்னொன்று. மூன்றும் கரையேறியும் அசையவில்லை. படகைப் பார்க்கின்றன; படகின் முன்னே மெல்லென நகரும் மற்றொரு யானையையும் பார்க்கின்றன. அந்த ஆண்யானையின், தந்தை யானையோ தாய் யானையோ அது. அல்லது அந்தப் பெண் யானையின் தந்தையானையோ தாய்யானையோ அது? அதுவெளியெறியதும் ஆண் யானைக்கு உண்டாகிய மகிழ்ச்சியில் மண்ணை அள்ளித் தன் தலையிலும் மற்றவற்றின் மேலும் வீசி மகிழ்ந்தது. ஐயறிவு படைத்த அந்த யானை தன் பெற்றோரைப் போற்றும் காட்சி, ஆறறிவு படைத்த மாந்தர்க்குக் கட்டாயம் வேண்டும் அல்லவோ முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் என்பது சங்க இலக்கிய வரலாறு! தேக்கடிக் காட்சியோ முதியர்ப் பேணும் யானைக் காட்சி! இக்காட்சியைப் பார்வைதானே! ஊன்றி உணர்ந்த பார்வை, ஒவ்வொரு காட்சியையும் உயிரோவிய எழுத்தாக்கி விடுதல் உறுதி, எழுத்தும் கைகொடுக்கும் என்பதை நிலைப்படுத்தி விடுதலும் உறுதி. தன் கையே தனக்கு உதவி என்பது பழமொழி, ஒவ்வொருவரும் உணர்ந்து போற்றிக் கொள்ள வேண்டிய பழமொழி இது. தன்னொடு பிறந்தது தன் கை; அக்கை உதவுவது போல், தன்னைப் பெற்றவரும், தன் உடன் பிறந்தாரும் தன் வாழ்க்கைத் துணையும் தன் மக்களும் கூட உதவ முடியாது என்றால், அன்பர் நண்பர் உற்றார் உறவினர் தொண்டர் தொழிலாளர் என்பவர் உதவிவிட முடியுமா? இவற்றை எண்ணினால்தான். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறியதன் அருமையும் பெருமையும் விளங்கும். உடுக்கை இழிந்தவன் அல்லன்; உடுக்கை இழந்தவன்; கொடியவர்களால், உடுத்திய உடையை இழந்தவன்! துணைக்கென எவருமில்லாத இடத்தில் அடாவடியாய்ப் பறித்துக் கொள்ளப் பட்ட உடை; அப்பொழுதில் உடையை இழந்தவன் கை எப்பாடு பட்டுத் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முந்துகிறது; காத்துக் கொள்கிறது; அக்கையே மானமறையாய் விளங்குவது போல விளங்குவாரே நண்பர் என்பது உடுக்கை இழந்தவன் என்னும் திருக்குறளின் விளக்கமாகும். இவ்வுவமை. தன்கையே தனக்குதவி என்பதையும் நன்கு விளக்கிக் காட்டும். தமக்கு வேண்டும் சிறு சிறு தேவைகளைக்கூடத் தாமே செய்து கொள்ளாதவர் உளர். தம் படுக்கையைச் சுருட்டி வைக்க, தம் பல்லைவிளக்க, தாம் குளிக்க, தாம் உடுத்திக் கொள்ள, தம் அலுவலகப் பொருள்களை எடுத்துக் கொள்ள இப்படி ஒவ்வொன்றுக்கும் பிறரையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - வளர்ந்தும் வளராத குழந்தை போன்றவர் - செல்வச் செழிப்பிலே விளங்குகின்றவர் - ஆள் அரவணைப்பிலே பொழுது கழிப்பவர் - அவற்றை இழக்கின்ற ஒரு நிலைக்கு ஆட்பட்டுவிட்டால் - என்ன பாடுபடுகின்றனர்; மலையே நிலை சாய்ந்து உருள்வது போல உருளும் நிலை உண்டாகிவிட்டால், அவர்கள் எவ்வளவு வருந்தத் தக்கநிலையில் - தலைமேல் கைவைத்துக் கொண்டு தவிக்கின்றனர்! ஆனால், தன் கையே தனக்குதவி என வளர்ந்து வாழ்ந்து கொள்ளப் பழகியிருந்தால் சூறைக் காற்றுப் போல் வாழ்க்கையில் மோதல்கள் ஏற்பட்டாலும் உறுதியான மலைபோல் நிலைகுலையாது தாங்கிக் கொள்வார்கள் அல்லவா! தம்மால் செய்யக் கூடிய செயலைத் தாம் செய்யாமல் பிறரை எதிர்பார்த்து இருப்பதால் தம் தேவை காலத்தில் நிறைவேறுமா? வேண்டும் போதெல்லாம் வேண்டும் வகையால் கிட்டுமா? உதவிக்கு வருபவர்களுக்கும், அவர்கள் தம் கடமையைச் செய்வதற்கு எத்தனை குறுக்கீடுகள்! எத்தனை அலுப்பு சலிப்புகள்! அவர்கள் உதவியை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது போல், நம் உதவியை அவர்கள் எதிர்பார்த்தால் அது தவறாகுமா? இவற்றையெல்லாம். தன் கையே தனக்குதவி என்பதை அறியாதவர், அறிந்து கொள்வதில்லை! அறிந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை! ஆனால், எவரும் துணைக்கு வராத ஒரு நிலை எதிர்பாராமல் உண்டாகி விடும் போதுதான், முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் தவிக்கினறனர் பின்னே நினைத்து என்ன பயன்? முன்னே அல்லவோ எண்ணியிருக்க வேண்டும்!. தம்மால் முடியும் செயலைத் தாமே செய்து கொள்ளாமல் பிறரைக் கொண்டு செய்து கொள்ளலாம் என்று இருப்பவரை. வெந்நீரிலேயே நீராட முடியாதவர் வேகும் நெருப்பிலே வீழ்வாரோ? என்று வினாவுகிறது பழமொழி நானூறு. பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ என ஒரு பழமொழியையும் அது தருகிறது. நம் உடல் என்பது என்ன? மூளை மட்டுமா? கண் மட்டுமா? காது மட்டுமா? இல்லையே உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள எல்லாமும் சேர்ந்தது தானே உடல். தலைமுடி நமக்கு எத்தகு தேவையானது! நகம் எவ்வளவு வேண்டத் தக்கது! பல் ஆட்டம் போட்டால் என்ன நிகழ்கிறது! ஒரு மூட்டு விலகி விட்டால், அதன் விளைவு என்ன? எந்த உறுப்புத் தான் பயனற்ற உறுப்பு? எல்லா உறுப்புகளின் ஒருமித்த இயக்கமும் இல்லாமல் வாழ்வில் முழுநிறைவு உண்டா! அப்படியானால் அவ்வுறுப்புகளை இயக்கமுடையதாக வைத்திருக்கத் தவறலாமா? காலையும் கையையும் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இரும்பு பயன்படுத்தப் பயன்படுத்த வலுவாக இருக்கிறது! கூராகவும் சீராகவும் வலிவாகவும் பொலிவாகவும் விளங்குகின்றது. அதனைப் பயன்படுத்தாமல் சிலகாலம் போட்டுவிட்டாலே, அதில் உண்டாகிய துருவே அதனை அழித்து விடுகின்றதே! யார் அதனைக் கொடுத்தார்? பயன் படாத நிலையே அதற்கு அழிவாகி விட்டதல்லவா! அது போல், பயன்படுத்தாத உறுப்புகள் தாமே சோர்ந்து செயலிழந்து கெட்டுப் போகின்றன! ஆன பின்னே அழுது ஆவதென்ன? தொழுது ஆவதென்ன? ஆனது ஆனதேயாம்! தன் கையே தனக்கு உதவி என்பதைக் கடைப்பிடியாகக் கொண்டவர்கள் தந்நம்பிக்கையாளர்களாக விளங்குகின்றனர்; எத்தகைய இக்கட்டையும் தாங்கிக் கொள்ளும் வலுவைத் தாமே பெறுகின்றனர். எந்த நெருக்கடியையும் தாமே தீர்த்துக் கொள்ளும் பக்குவத்தையும் உறுதிப் பாட்டையும் இயல்பாகப் பெறுகின்றனர் அதனால் எத்தகைய வளமும் வாழ்வும் உடையவர் எனினும் தம் நலம் கருதியேனும் தன் கையே தனக்குதவி என்பதைக் கடைப்பிடித்தல் வேண்டும். உயர்ந்த நிலையிலே உன்னை நிறுத்த விரும்புகிறாயா? உன்னை உயர்ந்த நிலையில் இருந்து கீழே தள்ளிக் கொள்ள நினைக்கிறாயா? இருக்கும் நிலையில் இருந்து மேலேமேலே உயர்த்திக் கொள்ள நினைக்கிறாயா? உன்னைப் பிறர்பிறர்க் கெல்லாம் தலைமையாளனாக ஆக்கிக் கொள்ள முனைகிறாயா? - இவையெல்லாம் பிறர்தர வருவன அல்ல! நீயே ஆக்கிக் கொள்ள அமைவன என்கிறது நாலடிப் பாடல் ஒன்று. இந்நிலையை ஒருவர் அடையக் கருதினால், அவர் கற்றுக் கொள்ள வேண்டிய முதற்பாடம், தன் கையே தனக்குஉதவி என்பதாம். சரித்திரத் தேர்ச்சி கொள் என்பது பாரதியார் பாடிய புதிய ஆத்திசூடி. சரித்திரம் என்பது என்ன? வரலாறே அது. மழை பொழிந்தது; நீர் திரண்டது: மேட்டில் இருந்து அது பள்ளம் நோக்கிப் பாய்ந்தது: நிலத்தை அறுத்துக் கொண்டு நீர் ஒடியது; அது, ஆறு என்பதற்கு வழி என்னும் பொருள் உண்டாகியது. வையை யாறு வரும் வகையைக் கூறும் பரிபாடல். யாறு வரல் ஆறு என்கிறது. வரல் ஆறு என்னும் இரண்டு சொற்களையும் சேர்த்துச் சொன்னால் வரலாறு ஆகிவிடும் அல்லவா! ஆற்றுக்கு வரலாறு இருப்பது போல் மக்களுக்கும் வரலாறு உண்டு; நாட்டுக்கும் மொழிக்கும், இலக்கியம் இலக்கணம் முதலிய கலைகளுக்கும், அறிவியல் அரசியல் முதலிய துறைகளுக்கும் - வரலாறு உண்டு. வரலாற்று உலகம் பழமையானது; விரிவானது! என்று தோன்றியது என்று அறிய முடியாத உலக வரலாறு, எவ்வளவு பெரியது! அறிய அறியப் பெருகி விரிவதன்றோ அது! வரலாறு அல்லது சரித்திரத்தை அறிந்து ஆராய்ந்து அதில் தேர்ச்சி கொள்வது எதற்காக? அத் தேர்ச்சியால் உண்டாகும் பயன் என்ன? என்று எண்ணத் தோன்றும் நாம் வேளைதோறும் உண்கிறோம்; விரும்பியவாறு உடுக்கிறோம்; வேண்டும் பொருள்களைக் கொள்கிறோம்; வாய்ப்புகளை அடைகிறோம் - இவையெல்லாமும் நாமே உழைத்து உண்டாக்கியவையா? நாமே கண்டு பிடித்துக் கொண்டவையா? நம் உணவில் எத்தனைபேர் உழைப்பு; நம் உடையில் எத்தனை பேர் உழைப்பு? நம் வாழ்வுக்கு எத்தனை பேர்களின் அறிவும் ஆற்றலும் உழைப்பும்? ஊக்கமும் வளமும் வழிகாட்டலும் பயன்படுகின்றன அவர்களையெல்லாம் நினைத்து நன்றியறியச் செய்வது வரலாற்றுத் தேர்ச்சியேயாம். அதனால் தான். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே- அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே- இதை வந்தனை கூறி மனதில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ-இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? என்று நாட்டு வணக்கம் பாடினார் பாரதியார். சரித்திரத் தேர்ச்சி கொள்வதால் நன்றியறிதல் மட்டுமா நமக்கு உண்டாகும்! சரித்திரத்தில் தமக்கென இடம்பெற்ற மக்களைப் போல் நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்னும் வீரவழிபாடு தானே உண்டாகி விடுதல் இயற்கையாகும். இளம் பருவத்திலே காந்தியடிகளார் பார்த்த அரிச்சந்திரன் நாடகம் அவரை என்ன செய்தது! வாய்மைக்குக் காந்தியடிகளே என்று வையகமே ஏற்றுப் போற்றும் படியான வாழ்வை அது தந்து விடவில்லையா? வாய்மைக்கு உரைகல்லாக விளங்கும் சத்திய சோதனை என்னும் வாழ்வியல் நூலை உலகுக்கு அது வழங்கிவிடவில்லையா? இளம் பருவத்தில் மராட்டிய மன்னன் சிவாசி, தன் அன்னை வழியாகவும் ஆசிரியர் வழியாகவும் அறிந்த சரித்திரங்கள் தாமே அவனை அரிமாவைப் போலக் கிளரச் செய்து விடுதலை வீரனாக்கின! எதிலும் உரிமை! எங்கும் உரிமை! என்று நாம் இன்று முழங்குகிறோம்! விடுதலை விடுதலை எனக் கட்டவிழ்த்துக் களிநடம் புரியவும் செய்கிறோம்! பேச்சுரிமை எழுத்துரிமை வாக்குரிமை வாய்ப்புரிமை வழிபாட்டுரிமை எனப் பலவும் கொள்கிறோம்! ஆனால் அந்த உரிமைகள் எளிதில் நமக்கு வாய்த்தவையா? அவற்றுக்காக நம் முன்னோரால் கொடுக்கப் பட்ட விலை, மதிப்பில் அடங்குவதா? எத்தனை பேர் சிறையுற்றனர்? எத்தனை பேர் உடைமை இழந்தனர்? எத்தனை பேர் நாடு கடத்தப்பட்டனர் எண்ணிச் சொல்ல இயலுமா? விடுதலை வரலாற்றை மெய்யாக அறிந்தால் தானே, அதன் பெருமையை உணர முடியும்! அதனை நன்கு அறிந்தால் தானே, பெற்ற விடுதயைப் பேணிக் காக்க முடியும்! செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழர் - வ.உ.சிதம்பரனார் வரலாற்றை அறிவதால் அவர் ஈகமாகிய தியாகம் மட்டுமோ விளங்குகின்றது! எந்த அயலாரை எதிர்த்துக் கப்பலோட்டினாரோ, அதே அயலார்க்கே, அவர் வாங்கி ஒட்டிய கப்பலை விற்றதாகிய கொடிய வரலாறு நம்மை மீள் பார்வை பார்க்கச் சொல்கிறது அல்லவா! ஒரு மொத்த உறுதியாக நிற்க வேண்டிய நாட்டு விடுதலைப் போரிலேயே, ஒன்றுபட்டு நில்லாமை ஒரு பெருங் கேடென உணர்த்துகிறது இல்லையா? ஓரிலக்கம் ரூபாயைக் கையூட்டாகத்தந்து கப்பலோட்டாதீர் என்று அவரை வயப்படுத்த வந்தவர் உரைத்தபோது, காறி உமிழ்ந்து பணத்தைத் தூக்கி எறிந்து வரலாற்றுத் தேர்ச்சி, நம் வாழ்வில் இருக்குமானால் நாட்டில் கையூட்டுக்கு இடமிருக்குமா? ஆதலால், சரித்திரத் தேர்ச்சி கொள்க என்பது இன்று மட்டுமன்று என்றுமே நல்ல பாடம்! செய்தக்க அல்ல செயக் கெடும் என்பதையும் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதையும் மெய்யாக உணர்த்துவது- சரித்திரத் தேர்ச்சி கொள்வதேயாம்! செய்வது துணிந்து செய்க என்பது பாரதியார் பாடிய புதிய ஆத்திசூடி, துணிந்து செய்வது என்றால் நல்லது பொல்லது ஆகிய இரண்டையும் துணிந்து செய்வதா? இல்லை: நல்லது செய்வதைத் துணிந்து செய்க என்பதேயாம். gy® To É»‹wd®;m§nf brhšy¡ Tlhj brhšiy xUt® brhš»wh®.; அல்லது செய்யக் கூடாத செயலைச் செய்கிறார். பலரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்க அனைவரும்வாரார். அனைவரும் வரவில்லை என்பதற்காக உணர்வுடையர் ஒதுங்கி விடுவது இல்லை. அப்பலர் கூட்டத்தில் இருந்து ஒருவர் தனியே முன்வந்து தவற்றைத் தட்டிக் கேட்கிறார். பலரிடையில் இருந்து துணிந்து-துண்டுபட்டு-த் தட்டிக் கேட்கும் அவர் துணிவுடையவர், துணிந்தவர் எனப்படுகிறார். ஆதலால் பிறர்க்கில்லாமல் ஒருவர்க்குச் சிறப்பாக அமைந்த முற்போக்குத் தன்மையே துணிவு என்பதாம். செய்ய வேண்டிய செயலை நல்லதா அல்லதா என முதலாவதாக நன்கு ஆரய வேண்டும். செய்யக் கருதிய செயல், அச் செயலைச் செய்யும் வகை, செய்யும்போது உண்டாகும் தடை, அத்தடையை மீறி வெற்றி கொள்ளும் வகை - என்பவற்றை யெல்லாம் தெளிவாக பின்னர்ச் சோர்தல் இல்லாமல் செய்யலாமா செய்யக் கூடாதா என்னும் ஐயமில்லாமல் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்னும் தயக்கம் இல்லாமல் செய்து முடித்தல் வேண்டும். இதனைக் கருதியே, செய்வது துணிந்து செய்க என்றனர். இதனைத் திருவள்ளுவர். எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்றும் எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின் என்றும் கூறினார். துணிவு என்பது முரட்டுத் தனமன்று; முறைகேடும் அன்று; உள்ளத்தின் உறுதியே துணிவாகும்; நேர்மையே துணிவின் வழியாகும். ஒருவன் உள்ளத்தின் உறுதியோடும், நேர்மை யோடும் ஒரு செயலைச் செய்வதற்குத் துணிந்து விட்டால் பலரும் கைகொடுக்க முந்தி நிற்பர். எடுத்த செயல் வெற்றியாக முடிந்தே தீரும். ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்கிவிடுவதும், தொடங்கிய பின்னர் ஊக்கமில்லாமல் தயங்குவதும் இரு மடங்கு அழிவைத் தரும்! நீர்ப் பெருக்கைக் கண்டு நீந்திச் செல்ல முடியுமா முடியாதா எனக் கரையில் இருக்கும் போதே எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப்பாராமல் நீர்ப்பெருக்கில் விழுந்துவிட்டு அதன் பின்னர் நீந்தமுடியுமா முடியாதா எனத் தளர்ந்தால் வெள்ளத்தில் இருந்து தப்ப முடியுமா? மனத்தில் ஐயம் உண்டாகி விட்டாலே அழிவு வந்து விட்டது என்பது தானே பொருள்! யானையின் உருவம் எவ்வளவு பெரியது? அதற்குரிய கொம்புகளும் எவ்வளவு வலியவை! கோட்டையையும் இடித்து வீழ்த்தும் ஆற்றல் அந்தக் கொம்புகளுக்கு உண்டே! அத்தகைய யானையையும் அதற்குப் பாதியளவு தானும் உடல் இல்லாத புலி, கொம்பு இல்லாதபுலி - வெற்றி கொண்டு விடுகிறதே! எதனால்? உள்ளத்தின் வலிமையினால் தானே! இதனால் தான். பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் என்கிறது திருக்குறள். பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் இளைஞனாக இருந்தான்; இவன் எங்களை என்ன செய்து விடுவான் எனப் பிற வேந்தரும் குறுநில மன்னரும் இகழ்ந்து பேசினர்; இதனைப் பாண்டியன் அறிந்தான்; என்னை இளையவன்; அதனால் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்த இவ்வேந்தர்கள் எவ்வளவு வலியவர்கள் ஆனால் என்ன? எத்தனை படைப்பெருக்கம் உடையவர்களாக இருந்தால் என்ன? இவர்களை ஒரு மொத்தமாக அழியாவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்று கூறுவாராக: என்னைப் பாடும் புலவர்கள் பாடாது ஒழிவாராக; என்னிடம் ஒன்றை வேண்டுவோர்க்கு அதைக் கொடுக்க முடியாத வறுமை எனக்கு வருவதாக என வஞ்சினங் கூறிப் போருக்குச் சென்றான்; பகைவரை வென்றான்; தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அழியாப் பெயரைக் கொண்டான்; துணிவு தந்த வெற்றி தானே இது; இன்றைக்கு என்ன செய்வோம் என ஏங்கிக் கிடந்த ஏழையர் எத்தனை பேர்கள் துணிவாகத் தொழிலில் இறங்கிப் பெருஞ்செல்வராகி உள்ளனர்! எமக்குத் தாயும் தந்தையும் உதவுவாரும், இல்லையே என்ற நிலையில் இருந்தவர் எத்தனை பேர்கள். தம் இடைவிடா ஊக்கத்தால் எத்தகைய உயர்ந்த நிலைகளையெல்லாம் அடைந்துள்ளனர் இருந்த செல்வமெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் கடலில் மூழ்கியது போல் கடனில் மூழ்கிப் போக, ஊக்கத்தை இழக்காமல் பாடுபட்டு, இழந்ததனினும் பன்மடங்கு தேடி மற்றவர்கள் மூக்கிலே விரல் வைத்து நோக்குமாறு வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர்! காலும் கையும் இயக்கமற்றுப் போன நிலையிலும், கண்ணும் காதும் செயல்படா நிலையிலும், அவற்றை நன்றாக வாய்க்கப் பெற்றவர்களும் கூட அடைய முடியாத பெருமையை அடைந்தவர்களும் உலகில் இருந்தனர்; இருக்கின்றனர்; அதனால் தான், பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்றார் திருவள்ளுவர். ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க; இன்னேயும் துணிந்து செய்க எனப் பழந் தொடரை நீட்டிக் கொள்ளல் ஏற்ற செய்கையாம். செய்வது துணிந்து செய்தால் சேர்ந்தது வெற்றி யாமே கொய்வது கனியே என்றால் கொள்வது சுவையே யன்றோ உழைத்தால் உயர்வு என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். நான்கை நான்கால் பெருக்கினால் பதினாறு என்பது எப்படி மாறாத உண்மையோ, நான்கொடு நான்கைக் கூட்டினால் எட்டு என்பது எப்படி மாறாத உண்மையோ, அப்படி மாறாத உண்மை யானது உழைத்தால் உயர்வு என்பதாகும். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பது நம்மவர் மொழி. உழைப்பின் வாரா உறுதிகள் இல்லை என்னும் தேர்ச்சியால் வெளிப்பட்ட தொடர் அது. கல்வியில் மேம்பட்டு நிற்பவரா, செல்வத்தில் ஓங்கி இருப்பவரா, வாணிகத்தில் வளம் கொழிப்பவரா, புதியவை கண்டு பிடிப்பதில் புகழ் தாங்கியவரா, புனைகதைத் திறத்தில் சிறந்தவரா, ஆடல் பாடல் இசை நாடகம் சிற்பம் ஓவியம் ஆகிய கலைத் துறைகளில் மணம் பரப்புபவரா, களரிப் பயிற்சி கைவந்தவரா, ஒட்டப்பந்தயம் முதலான உலக விளையாட்டுகளில் வெற்றிக் கொடி நாட்டுபவரா நாவன்மை மிக்க நாவுக்கரசராகத் திகழ்பவரா, எவரையேனும் கண்டு, உங்கள் உயர்வுக்கும் வெற்றிக்கும் காரணம் என்ன? என்று கேட்டால், அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தமான ஒரு விடை. உழைப்பு, உழைப்பு, என்பதேயாம். முயற்சி திருவினை ஆக்கும் என்பார் திருவள்ளுவர் முயற்சி இல்லாமை இல்லாமைக்குள் தள்ளிவிடும் என்று அவரே கூறுவார். அவர் கூறும் திரு என்பது செல்வம் என்னும் அளவில் சுருங்கி விடுவது அன்று. உயர்ந்தவை, சிறந்தவை, மேலானவை, இன்றியமையாதவை என்று எவற்றையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ, அவற்றை யெல்லாம் குறிக்கும் அருமையான அழகான சொல்லே திரு என்பதாம். திருவின் பெருமையைத் திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் கொண்டது என்பார். முயற்சியாளனுக்கு- உலகமே கைக்குள் இருப்பதாகி விடும் என்பதை. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்பார் திருவள்ளுவர். முயலும் ஆமையும் போட்டியிட்டு, ஆமையினிடம் முயல் தோல்வியுற்ற கதையைக் கேளாதவர் எவர்? எது என்ன, முயல் ஆமை ஆகிய உயிரிகளைப் பற்றிய கதையா? இல்லை முயலாமைக் கேட்டை விளக்கும் கதையாகும். முயல் ஆமை என்னும் இரண்டு சொற்களையும் சேர்த்தால் முயலாமை என்பது தானே. உழைப்பு மாந்தரின் பிறவிக் கடன்! உலகவர் உழைப்பால் உண்பவர், உடுப்பவர், உறைபவர் உழைப்பைக் கடமையாகக் கொள்ளவில்லை என்றால், அவர் கடனாளி தானே. உலகப் பொதுவுக்குச் செய்தே ஆக வேண்டிய கடமையைச் செய்யாத கடன்காரன், கடன்காரருள் எல்லாம் தலையான கடன்காரன். எவ்வளவு சிறிய சிட்டுக் குருவி--அயர்ந்து கிடக்கிறதா அது? எவ்வளவு சிறிய மண்புழு-ஓய்ந்து கிடக்கிறதா அது? எவ்வளவு சிறிய எறும்பு -அதன் முயற்சிக்கு இணை உண்டா? எவ்வளவு சிறிய தேனீ - அதன் சுறுசுறுப்புக்கு இணை அது தானே? இச்சிறிய உயிரிகளின் முயற்சியையும் உழைப்பையும் கண்ணாரக் கண்டு வரும் ஆறறிவுப் பிறப்பாகிய நாம் சோம்பிக் கிடக்கலாமா? உழைப்புக்கு ஆள் வினை என்பதொரு பெயர். ஆள்வினை என்பது என்ன? ஒர் ஆளின் ஆளுமைச் செயற்பாடுதான் ஆள்வினை! ஆள் என்பது ஆணா, பெண்ணா, பிள்ளையா? இம் மூவரையும் குறிப்பதே ஆள் ஆகும். எத்தனை ஆள்கள் என எண்ணிப்பார் என்றால் ஆண், பெண், பிள்ளை ஆகிய அனைவரையும் குறிப்பது தானே சிற்றாள் வேலை எட்டாள் வேலை என்னும் பழமொழி நாம் அறியாததா? ஆதலால், ஆள்வினை என்னும் சொல்லே, நீ உழைக்கப் பிறந்தவன், உழைப்பால் உயரப் பிறந்தவன் என்பதைப் பறையறைவதாம். இச்செயலைச் செய்ய என்னால் முடியுமா? என்பது தளர்மனம்! இச்செயலைச் செய்ய என்னால் இயலாது என்பது வீழ்ச்சி மனம்! இச் செயலைச் செய்ய என்னால் முடியும் என்பது துணிவு மனம்! இச் செயல் என்ன, இதனினும் அருஞ்செயலையும் செய்வேன் என்பது வெற்றி மனம்! இவர் இவர் எல்லாம் பெற்ற வெற்றியை என்னால் ஏன் பெற முடியாது? என்று எண்ணி உறுதியாக உழைப்பவர் எவரும் உயர் நிலையை அடைந்தே தீர்வர். இதனையே, அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் என்று கூறுகிறது முப்பால் உழைப்புக்கு எதிரிடை, சோம்பல், அதற்கு இலக்கியத் தமிழ்ச் சொல் மடி என்பது. மடி என்னும் சொல், நமக்கு என்ன சொல்கின்றது? மடி என்னும் சொல், என்னை நீ கொண்டால் மடிந்து விடுவாய் மட்கி மண்ணாகிப் போவாய்! நீ மடி கொள்ளாதே! நிமிர்ந்து நில்! ஏறு நடையிட்டுச் செல்! எடுத்த செயலில் வெல்! என்று ஏவுகின்றது! மடிந்து கிடக்கும் கதரில் மணி உண்டா? மடித்துப் போன வைக்கோலை மாடு தின்னுமா? மடித்துப் போன அரிசியும் பருப்பும் ஆக்கி உண்ண உதவுமா? மடி கொண்டவன் அவனை அன்றி அவன் குடியையும் கெடுப்பவன்: குடும்பம் என்பது குத்துவிளக்கு. அக் குத்துவிளக்குத் திரியில் உள்ள கருக்கைத் தட்டாமல் விளக்கேற்ற முடியுமா! அக் கருக்கை அகற்றா விட்டால் சுடர் உண்டாகாதே? அது போல் மடியை ஒழிக்கா விட்டால் குடிநலம் உயராது! இதனையே குடிஎன்னும் குன்றா விளக்கம் மடி என்னும் மாசூர மாய்ந்து கெடும் என்கிறது வள்ளுவர் வாய்மொழி நீருள் மூழ்கியவன் வெளியேற என்ன துடிப்புத் துடிக்கிறான்? புகை மூட்டத்துள் பட்டவன் வெளியேற என்ன பாடுபடுகிறான்? அந்த முயற்சி - அந்தத் துணிவு - அந்த விரைவு உழைப்பில் உண்டானால் உயர்வு, தானே தேடி வந்து ஓடிவந்து சேரத்தானே செய்யும்? ஓரிடத்தில் குத்துச் சண்டை ஒன்று நடந்தது. அச் சண்டையில் ஈடுபட்டவர்கள் இருவரும் உலகப் புகழாளர்கள். அவர்களுள் வெற்றி பெற்றவர் எவரோ அவர் உலகக் குத்துச் சண்டை வீரருள் முதலாமவர். தோற்றவர் உலகக் குத்துச் சண்டை வீரருள் இரண்டாமவர். அவர்களின் எழுச்சி மிக்க தாக்குதலைப் பதினைந்தே வயதான ஒரு இளைஞன் கண்ணிமையால் பார்க்கின்றான். சும்மா பார்க்கிறேன் என்று இல்லாமல் சுடர்விடும் பார்வையால் பார்க்கிறான்! யான் இவர்களைப் போலக் குத்துச் சண்டை வீரன் ஆவதற்கு இன்றே என் முயற்சியைத் தொடங்குவேன். இப்பொழுது வெற்றி பெறும் உலகக் குத்துச் சண்டை வீரனை, ஒருநாள் நான் வெற்றி பெறுவேன் என உறுதி கொண்டான். உறுதியைச் சொல்லளவில் விட்டான் அல்லன் அந்த இளைஞன் அப்பொழுதே அம்முயற்சியில் இறங்கி விட்டான். குத்திப் பயிற்சி செய்வதற்கு ஒரு பை உண்டு. அப்பையின் இரண்டு பக்கங்களிலும் குத்துச் சண்டை செய்த வீரர் இருவர் படத்தையும் வரைந்தான். அவர்களொடு மாறி மாறிக் குத்துப் போர் புரிவது போலப் பயிற்சி செய்தான்; வெற்றி பெற்றவன் ஓவிம் சிதையச் சிதையக் குத்தித் தீர்த்தான். ஓராண்டு இரண்டாண்டு இல்லை ஒன்பதாம் ஆண்டில் அவன் சொல்லிய சொல்லை உறுதி செய்தான். உலகக் குத்துச் சண்டை வீரருள் முதல்வனை வென்ற முதல்வன் ஆனான்; அவன் பெயர் செக்டெம்சே என்பது; இந் நிகழ்ச்சி அமெரிக்க நாட்டில் நிகழ்ந்தது. ஆண்டு 1919 ஆகும். தெற்று வாயரான டெமாசு தனீசு எப்படி அக்குறையை வென்றார். மலைப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நீர் நிலைகளிலும் அவர் செய்த பயிற்சிகள் இவ்வளவு அவ்வளவா? அப் பயிற்சிதானே அவரைச் சொல்லின் செல்வர் ஆக்கிற்று! செலச் சொல்வாராய் வெலச் சொல்வாராய் - விளங்கச் செய்தது! எடுத்துக் கொண்ட முதல் வழக்கில் வாதாடுவதற்கு வாய்வராது, வாங்கிய தொகையையே வாய்மையால் திருப்பித் தந்த காந்தியடிகள், வாய்ச்சொல் கேட்க, வையகமே வாய்திறந்து நின்றமை உலகறி காட்சி அல்லவா! உலகத்தை ஆட்டிப் படைக்க வல்லவராகத் திகழ்ந்த சர்ச்சில் பெருமகனார் நாவை ஆட்டுவதற்கு எத்தகைய பயிற்சியை நாளும் நாளும் மேற்கொண்டார். கண்ணாடிக்கு முன்னே நின்று கையை அசைத்து, விரலை ஆட்டி, முகத்தைக் காட்டித் தம் மனம் நிறையும் அளவுக்குப் பயிற்சி செய்த பின்னர்த் தானே மேடை ஏறினார் அவர் பயிற்சித் திறம்தானே அவர்க்கு வெற்றி மேல் வெற்றி குவித்தது சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம், நடையும் நடைப் பழக்கம் என்னும் பாடலில் வரும் பழக்கம் என்பது உழைப்புப் பயிற்சியேயாகும். ஒவ்வொருவரும் அறிஞராகவும் செல்வராகவும் வர வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். அவ்வாசை அனைவர்க்கும் இயல்பானதே, ஆனால் அவற்றை உடைவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி என்ன? உழைப்பு என்ன? ஊக்கம் என்ன? முயற்சி, உழைப்பு, ஊக்ம் இல்லாமல் எப்படி அறிவும் செல்வமும் தானே வந்து குவிந்துவிடும்? என்று வினாவுகிறார் உலகப் பெருஞ் செல்வருள் ஒருவராகிய இராக் பெல்லர் மறைமலையடிகள் என்பவரைத் தமிழறிந்தோர் நன்கு அறிவர். அவர், தம் தந்தையாரை இளமையிலேயே இழந்தவர். தாயார் உதவியால் ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர், குடும்ப நிலைமையைக் கருதி, மேலே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே கற்றவர். அவர் கற்ற கல்வியை அவரே எழுதுகின்றார். எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப்பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம். கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடி முதலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. சிவஞான போதம். சிவஞான சித்தியார் என்னும் நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. இவையேயன்றி நன்னூல் விருத்தி இறையனார் அகப் பொருள் தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரிய புராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளில் பெரிதும் மூழ்கி யிருந்தும் அவற்றில் இருந்து எடுத்துப் பாடஞ் செய்த செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ் நூல்களில் எனது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். தாமே சுற்றுப் பெரும் புலமையராகத் திகழ்ந்த மறைமலையடிகள் தமிழைப் போலவே ஆங்கிலம் வடமொழி ஆகிய மொழிகளிலும் தேர்ந்து விளங்கினார். அவர் படித்த படிப்புத்தான் எத்தகையது? பட்டினப்பாலை 301 அடிகளையுடைய நூல். இவற்றுள் வஞ்சியடி 163, அகவலடி 138, இவ்வடிகளில் அமைந்த சொற்கள் 1369. இவற்றுள் வடசொல் 12. திசைச் சொல் 1. ஆகப் பிற சொல் 13. ஆதலால் நூற்றுக்கு ஒரு சொல் பிற மொழிச் சொல் எனக் கணக்கிட்டு உரைத்த கடிய உழைப்பாளர் அவர். மதுரைப் பல்கலைக் கழகத், துணைவேந்தராகத் திகழ்ந்தவர் அறிஞர் மு.வரதராசனார் அவர் முதற்கண். பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவராகவா இருந்தார். உயர்பள்ளிக் கல்வி அளவில் நின்று ஓர் அலுவலக எழுத்தராகத் தானே வாழ்வைத் தொடங்கினார். பின்னே இடைநிலை ஆசிரியராய், தமிழாசிரியராய், கல்லூரிப் பேராசிரியராய், தமிழ்த்துறைத் தலைவராய், துணை வேந்தராய்க் கல்வியில் சிறந்தும் பதவியில் ஓங்கியும் உயர்ந்தமை உழைப்பின் கொடையல்லவோ! அதே மதுரைப் பல்கலைக் கழகத்தின் இன்னொரு துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார். சிறிய வயதில் பர்மாவில் வட்டிக் கடையில் பெட்டியடிப் பையனாக அல்லவோ தொழில் வாழ்வைத் தொடங்கினார். கடைக்கு உரியவர் கடைக்குள் இருந்து கொண்டு, தாம் இல்லை என்று சொல்லுமாறு மாணிக்கரிடம் சொல்ல, பொய் சொல்ல மாட்டேன் என்ற அந்த வாய்மையால் வேலையை இழந்து தாய் மண்ணுக்கு வந்து, மகிபாலன் பட்டியில் வாழ்ந்த பண்டிதமணி கதிரேசனாரிடம் தனியே தமிழ்க் கல்வி கற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவியால் புலமை எய்தித் தமிழாசிரியராய், தமிழ்ப் பேராசிரியராய், தமிழ்த்துறைத் தலைவராய், துணை வேந்தராய்த் தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கு இலக்கியமாகித் தொட்ட துறைகளையெல்லாம் துலங்கச் செய்தவர் ஆனார்! இவர்கள் உயர்வுக்கு மூலப்பொருள், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது தானே. இதோ ஒரு செல்வர்! தொழில் நிலைச் சூழலால் உள்ள பொருளையெல்லாம் இழந்துவிட்டார். ஆனால் உள்ளதை எல்லாம் இழந்தாலும் உள்ளத்தை மட்டும் இழவாத உறுதியாளராகத் திகழ்ந்தார்! தொழில் போனாலும் தாம் பெற்ற தொழில் திறமை போய்விடவில்லை அல்லவா! புதுப் பிறவி எடுத்தவர் போலச் சிலிர்த்துச் செம்மாந்து செயலாற்றினார்! ஆலைச் செல்வர் ஆனார்! ஆலை ஒன்று, பல ஆலைகளை ஈட்டித் தந்தது! பலப்பல. மதுரை மீனாட்சி ஆலை! அவ்வுழைப்பின் உரவோர் அமரர் கருமுத்து தியாகராசர். இதோ ஓர் இளைஞர் ஒரு சிற்றூரில் வாழ்பவர், அவ்வூர்க்கு ஒரு வெள்ளைக்காரர் குதியுந்தாகிய மோட்டார் பைக்கில் வந்தார். அவரைக் காண்பதற்கு மேலாக அவர் வந்த வண்டியின் மேல் வைத்த கண் மாறாமல் பார்த்தார் இளைஞர். வண்டியை விலைக்கு வாங்குபவன் போல் பார்க்கிறாயே என்றார் ஆங்கிலர். ஆம் என்ன விலை? என்றார் இளைஞர் 200 ரூபா என்று விளையாட்டுப் போல் பேசி விட்டுப் போய் விட்டார். ஆங்கிலர். இளைஞரிடம் பணமா இருக்கிறது? எப்படியோ முயன்று தொகையைச் சேர்த்தார். அவ்வாங்கிலரைக் கண்டு தாங்கள் வண்டிக்குச் சொல்லிய தொகை இது என்று தந்தார். என்ன செய்தார்? வாக்கை மாற்றாமல் வண்டியைத் தந்தார் ஆங்கிலர். இளைஞர் அவ்வண்டியில் ஏறி ஊர்க்கு வந்தார். ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது! வந்ததும் வண்டியை உறுப்பு உறுப்பாகக் கழற்றினார். பின்னர்ப் பூட்டினார். அப்படியே மீண்டும் செய்தார். மறுநாள் இங்கே மோட்டார் பைக் பழுது பார்க்கப்படும் என ஒரு பலகையை மாட்டினார். அவரே தமிழகத்தின் இணையற்ற கண்டு பிடிப்பாளர் - தொழில் துறைத் தோன்றல் கோவை கோ. துரைசாமியார் எனப்படும் சி.டி.நாயுடு ஆவர்! அவர் உழைத்த உழைப்பு எவ்வளவு பெரியது. உழைப்பே உயர்வு என்பதனை, உயர்ந்தோர் வரலாறுகள்,பட்டயமாய் - கல்வெட்டாய்க் காட்டிக் கொண்டே உள்ளன. உழைப்பால் உயர்பவரைத் தடுக்க ஒரு தடை, உலகில் உண்டாகியதும் இல்லை; உண்டாகப் போவதும் இல்லை! விழிமின்! எழுமின்! என்றார் விவேகானந்தர். பற! பற! பற! மேலே மேலே மேலே என்றார் பாரதியார் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின் என்றார் திருவள்ளுவர். உழைத்தால் உயர்வு என்பது என்றும் அழியா உறுதிச் சொல்லாகும்! எவரொருவர்க்கும் கட்டயமாகத் துணை வேண்டும் துணையோடு வாழ்வதே மனித இயற்கையும் முறைமையும் தேவையும் ஆம். துணைகள் பலப்பல. அவை வழித்துணை, பேச்சுத் துணை, விளையாட்டுத் துணை, கல்வித் துணை, தொழில் துணை, நட்புத் துணை, வாழ்க்கைத் துணை இன்னவாறானவை. இவ்வெல்லாவாற்றிலும் மேலானது பெரியவர் துணை. நாம் அடைய வேண்டும் நலங்களுக்கெல்லாம் வழி காட்டியாக மட்டும் இல்லாமல் வழி கூட்டியாகவும் இருப்பவர் பெரியர், பெற்றோரினும் பெருந்தகையராய், ஆசிரியரினும் ஆசிரியராய் கனியினும் கனிவினராய் கண்டிப்பில் காவலராய் இருப்பவர் பெரியர். அவர் உள்ளம், உரை, செயல், மூன்றும் ஒத்து நடையிடும் ஒப்புரவாளர்; செயற்கரிய செய்யும் செம்மல்; அவர் துணை, தெய்வத் துணை! வழுக்கல் நிலத்திலே நடப்பவர்க்கு ஊன்றுகோல் எப்படி உதவியாக இருக்குமோ அப்படி உதவியாக இருப்பது பெரியவர் துணையாகும். அத் துணை, தணிந்த நடையைத் துணிந்த நடையாக்கும்; வளைந்த முதுகை நிமித்தி நேராக்கி நடக்க வைக்கும்; ஆகாத கல்லும் அறிவறிந்த சிற்பியின் கைப்பட்ட அளவில் கையெடுத்து வணங்கும் தெய்வவுருவாக மாறுவது போல் எளியவரையும் அரியவர் ஆக்கிவிடும் மனத்திற்கு ஒர் இயல்பு உண்டு. அது சமயக் கொள்கையாகவும் சொல்லப்படுவதாயிற்று. அது சார்ந்ததன் வண்ணமாதல் என்பது. நாம் எந்தச் சூழலில் வாழ்கிறோமோ அந்தச் சூழலுக்குத் தக்கவாறு நம் மனம் பழகிப் போய்விடும். நாம் எத்தகையவர் களோடு பழகி விடுகிறோமோ அவர்களுக்குத் தக்கவாறு நம் மனமும் பழகிப் போய்விடும். பழகி விட்டால் அப் பழக்கம் வழக்கமாகும். வழக்கம் ஒழுக்கமும் ஆகிப் போகும். ஆதலால் துணையைக் கொள்வதில் மிகமிக விழிப்பு வேண்டும். நல்ல துணைக்கும் மாறாக அல்ல துணை வாய்த்து விடக் கூடாதே என அறவோர்கள் நெஞ்சம் துடிக்கும்; வருந்தும்; அதனால் பெரியவரைத் துணைக்கொள்க என்று சொல்லிய அளவில் நில்லாமல் சிற்றினம் சேராதே என்றும் வலியுறுத்தினர். ஒரு நீர் நிலையில் ஒரு பழம் விழுகின்றது. அது விழுந்தவுடன் ஓர் அலை வட்டம் உண்டாகின்றது. அவ்வலை வட்டம் விரிந்து விரிந்து நீரின் எல்லையளவுக்கும் பரவுகின்றது. அப்படியே உள்ளமும் விரிந்து விரிந்து ஊராக நாடாக உலகாகப் பரவுகின்றது. அவ்விரிவை அருமையாய்ப் பாடுகின்றார் பாவேந்தர் பாரதிதாசனார். மனிதரில் நீயோர் மனிதன்? மண்ணன்று; இமைதிற; எழுந்து நன்றாய் எண்ணுவாய்; தோளை உயர்த்து; சுடர்முகம் தூக்கு; மீசையை முறுக்கி மேலே ஏற்று; விழித்த விழியில மேதினிக் கொளி செய் நகைப்பை முழுக்கு; நடத்து லோகத்தை என்ற உள்ளம் உந்தி எழும்பப் பாடுகிறார். அறிவினை விரிவுசெய் அகண்ட மாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்று ஆணையிடுகிறார் பிரிவிலை எங்கும்; பேதம் இல்லை உலகம் உண்ணஉண்; உடுத்த உடுப்பாய்; புகல்வேன் உடைடமை மக்களுக் குப்பொது; புவியை நடத்து; பொதுவில் நடத்து என்று உள்ளத் தனையது உயர்வு என்பது உறுதி செய்கிறார். நாமும் நடைமுறையில் காண்கிறோமே! வேலை தேடும் ஒர் இளைஞன் ஒரு பெட்டிக் கடைக் காரரைப் பார்க்கிறான். அவர் முதல் தொகைக் குறைவையும் முயற்சி நிறைவையும் கண்டு மகிழ்கிறான். நான் ஏன் வேலை இல்லா இளைஞன் எனத் திரிய வேண்டும். இவரை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாமே எனத் துணிகிறான். எண்ணித் துணிகிறான்; ஏற்றம் எய்துகிறான்; பெருவணிகனாகப் பெருமை சேர்க்கின்றான். கற்கும் இளைஞன் ஒருவன் என் எண்ணம் எங்கள் பள்ளி முதன்மை இல்லை; மாநில முதன்மை: முடித்துக் காட்டுவேன் என ஓங்கி எழுகின்றான்: உழைக்கின்றான் எண்ணியபடியே உணர்வை அடைகின்றான். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருகிறாள் ஒரு சிறுமி காற்று வேகமா இவள் வேகம் எனப் பாராட்டுப் பெறுகிறாள். அப்பாராட்டு ஒலிம்பிக்கு ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறச் செய்கிறது எங்கும் மழையில்லை; விளைவும் இல்லை பசியோ பசியென நாடு தவிக்கிறது. நாட்டுப் பசியெல்லாம் தமக்கே வந்து விட்டதாகத் துடிக்கிறார் ஒரு பெருமகனார். பசித்தோர் முகம் பார் எனக் குரல் எழுப்புகிறார். அடுப்பு மூட்டுகிறார். உணவுப் பொருள்கள் வண்டி வண்டியாய்க் குவிகின்றன. மூட்டிய அடுப்பு அணையாமல் மூண்ட பசி நெருப்பு அணைகின்றது. அவர் உள்ளத் துயர்வு வள்ளலார் ஆக்குகின்றது கல்வி அனையது உயர்வு இல்லையா? செல்வத்து அனையது உயர்வு இல்லையா பதவி அனையது உயர்வு இல்லையா? இவற்றுக்கும் உயர்வு உண்டுதான், ஆனால் இவற்றுக்கு மூலமும் முதலும் ஆகிய உயர்வு, உள்ளத்தனையது உயர்வு என்பதுதான் உள்ளம் உடைமை உடைமை என்பது வாய்மொழி! ஒருவர் சீரோடும் சிறப்போடும் வாழ்கிறார்; மாற்றொருவர் பேரோடும் பெருமையோடும் விளங்குகிறார்! இன்னொருவர் குடும்பம் நாடு புகழ் பாராட்டுப் பெறுகிறது. இவர்களையும் இக்குடும்பங்களையும் அறிந்தவர்கள் எண்ணம்போல் வாழ்வு என்றும், மனம்போல் வாழ்வு என்றும் பாராட்டுகின்றனர். இப்பாராட்டு, நெஞ்சில் இருந்து வரும் பாராட்டு: அரைகுறை இல்லாத நிறை பாராட்டு; போட்டி பொறாமை இல்லாத புகழ்ப்பாராட்டு. பாராட்டப்படுவாரும், பாராட்டுவாரும், பெருந்தக்க வாழ்வுக்கு உரியவர்கள். ஒருவர் மிக நல்ல பெண்மணி. குடும்பப் பாங்கு அமைந்தவர்; அறிவறிந்த சால்பினர்; அவர்க்குத் தக்க கணவன் அமைய வேண்டுமே எனப் பெற்றோர் மட்டுமல்லர்; உற்றார் உறவினரும் ஆர்வமும் அக்கறையும் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படியே நல்ல குடும்பத்தில் நல்லியல்பு அமைந்த மாப்பிளையும் கிடைத்து விடுகிறார். அத் திருமண விழாவுக்குச் சென்றவர்கள் அனைவரும் மனம் போல வாழ்வு என்றும் மனம் போல மாங்கல்யம் என்றும் வாய்குளிரப் பாராட்டுகின்றனர். நல்லவர்களையும் அவர்கள் வாழ்வின் சிறப்பையும் இணைத்துச் சொல்வதே எண்ணம் போல வாழ்வு என்பது. அதற்கு மாறான இயல்பையும் வாழ்வையும் இணைத்துச் சொல்வதற்கு இப்பழமொழியில் இடமில்லை. “v©z¤â‰F« thœî¡F« bjhl®ò c©lh? எனின், தொடர்பு உண்டு; மிக மிக உண்டு என்பது பலரும் அறிந்ததே. இதனைச் சான்றோர் நூல்களும் அறிவாளர் உரைகளும் நன்கு விளக்குகின்றன. விதைக்கும் வித்துக்கும், அதன் விளைவுக்கும் உள்ள தொடர்பு போல ஒருவர் எண்ணத்திற்கும் அவர் வாழ்வுக்கும் ஒருப்பட்ட தொடர்பு உண்டு. தேர்ந்தெடுத்த விதைகளைப் பூச்சி புழுக்கள் பற்றாமல் பாதுகாத்து, உரிய பருவத்தில், பண்படுத்திய நிலத்தில் விதைப்பது ஏன்? வித்து நன்றாக இல்லை என்றாலும், பருவமும் வாய்ப்பும் சீராக இல்லை என்றாலும் உரிய விளைவை அடைய முடியாதே பொறுக்கு மணியில் இருந்து பெருக்கமான விளைவைக் காண பிறவும் சேர்ந்து விடுகின்றனவே. மனமும் மழைநீர் போன்ற தூய்மையானதுதான். அது சார்ந்தவரையும் சார்ந்த சூழலையும் பொறுத்து அமைந்து விடுகின்றது. அதனால் தான் பெரியாரைத் துணைக் கொள்க என்று நல்வாழ்வின் நாட்டமுடையோர் அனைவரும் கூறுகின்றனர். சேராத இடந்தனிலே சேர வேண்டா என்கின்றனர். சிரிக்கத் திரிந்து சீரழிய வேண்டாமே என்பது அவர்கள் நல்லுள்ளம். உலகம் முழுவதும் தோன்றிய அறநூல்கள் அறிவு நூல்கள் வாழ்வியல் நூல்கள் ஆகியன பெரியாரைத் துணைக் கொள்க என்கின்றன. பெரியாரைத் துணைக் கொள்வதன் சிறப்பை விரித்துரைக்கின்றன. அந்த ஒன்றைப் பெற்றால் ஓராயிரம் நலங்களைப் பெறலாம் என்கினறன. அவ்வாறானால் எப்பாடு பட்டும் பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும் என்றும், அப்படிப் பெற வாய்த்த அளவில் அத்துணையைப் பொன்னினும் மேலாகப் போற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உறுதி கொள்ள வேண்டும். ஏனெனில் அருமையாய்க் கிடைத்த வாய்ப்பை எளிமையாய் இழந்து போகக் கூடாதே. அதனால், பெரியவர் வருந்துமாறு நடந்து கொள்ளுதல் ஆகாது என்பதை வலியுறுத்தப் பெரியாரைப் பிழையாமை என்றோர் அதிகாரத்தைத் திருவள்ளுவர் படைத்துக் காட்டினார். பெரியாரைத் துணைக் கொண்டால் என்ன பயன் கிட்டும் என்றால் மிக எளிமையாக அப்பெரியார் தகுதி வாய்த்துவிடும் என்பது தெளிவாகும். பெரியவர் ருந்தன்மைகள் பல. அவற்றுள் குறிப்பிட்டுக் கூறத் தக்கவை இரண்டு. ஒன்று, தம்மை நோக்கி வந்தவர் சிறுமை, குறை, அறியாமை என்பவற்றைக் கருதாது பரிவுடன் பார்த்தல், மற்றொன்று, அத்தகையரையும். தம் நிலையை அடையத் தக்க வழிகளையெல்லாம் காட்டி உயர்த்துதல் என்பது, மறைந்து போன பழமையான நூலாகிய ஆசிரியமாலை என்பதில கிடைத்த ஒரு பாடல் இதனைக் குறிப்பிடுகிறது. அப்பெரியவர் நற்குடிப்பிறப்பை உடையாக உடுத்தவர்; நூலறிவைப் பூவாகச் சூடியவர் ஒழுக்கத்தை அணிகலமாகப் பூண்டவர் வாய்மை பேசுதலை உணவாகக் கொண்டவர். தூய்மை இல்லத்தில் அறவாழ்வு வாழ்பவர், நடுவு நிலைமை என்னும் நகரில் உறைபவர் பொறாமை இல்லாமை ஆசையில்லாமை என்னும் செல்வங் களைச் சேர்த்தவர், தோல்வி இல்லாத சொல்லைச் சொல்லும் மேலோர் அவர் என்று அப்பாடல் விரித்துக் கூறுகிறது. அப்பெருமக்களோடு ஒரே ஒரு நாள் உடனாகி இருக்கும் பேறு வாய்க்குமானால் மாறி மாறி எத்தனை பிறவிகள் வேண்டு மானாலும் பிறக்கலாம் என்று முடிகிறது அப்பாடல் பெருஞ்சிந்தனையாளர் சாக்ரடீசைப் பிளேட்டோ சார்ந்தார்; அவரை அரிட்டாட்டில் சார்ந்தார்; அவரை அலெக்சாண்டர் சார்ந்தார் அனைவரும் உலகப் புகழ் பெற்றனர். இராமகிருட்ணரை விவேகானந்தர் சார்ந்தார்; அவரை நிவேதிதா சார்ந்தார் அவரைப் பாரதியார் சார்ந்தார் அனைவரும் உலகப் புகழ்பெற்றனர் வள்ளலாரைத் தொழுவூர் வேலாயுதனார் சார்ந்தார் பெரியாரை அண்ணா சார்ந்தார்--பெரும்புகழாளர்களாக விளங்குகின்றனர். வியப்பினும் வியப்பு; தாயுமானவர் மௌன குருவைச் சார்ந்தார். பேசாப் பேரடிகளாம் அவரால், சும்மா இருக்கும் அருந்திறத்தைக் கற்றுக் கொண்ட கலைமாச் செல்வர் ஆனார். பெரியாரைத் துணைக் கொள்ளும் பயனை, பருமரத்தை அண்டிய பல்லியும் பிழைக்கும் என்னும் பழமொழி எளிமையாய் விளங்கும். அந்த ஊருக்குத் தாமரைக் குளம் என்பது பெயர்; ஊர் தோன்றுவதற்கு முன் தாமரைக் குளம்தான் இருந்தது அதனைச் சார்ந்து ஊர் தோன்றியது. அதனால் அதற்கும் தாமரைக் குளம் எனப் பெயராகி விட்டது. தாமரைக் குளத்தில் உள்ள தாமரைப் பூக்கள் காலம் காலமாகப் பேசா மொழியில் பேசி வரும் செய்தி உண்டு. அந்த ஊர்த் தாமரைப் பூக்களுக்கு மட்டுமா? எந்த ஊர்த் தாமரைப் பூக்களுக்கும் இப் பேசாப் பேச்சு உண்டு! அது என்ன? நாங்கள் நேற்று மூன்றடி உயரத்தில் இருந்தோம். நேற்றுப் பெய்த மழையால் மூன்றடி அளவுக்குத் தண்ணீர் வந்தது; நாங்கள் ஆறடியாக உயர்ந்து விட்டோம். இன்று மழை பெய்து தண்ணீர் வந்தாலும் வந்த தண்ணீர் உயரத்திற்கு நாங்களும் உயர்ந்து விடுவோம். எங்கள் உயரத்தை வெள்ளமா கொண்டு வந்தது? எங்கள் உயரம் எங்கள் உள்ளேதானே இருந்தது அது போல் மனிதர்களே உங்கள் உயர்வு உங்களுக்கு உள்ளேயே உள்ளது. உங்கள் உள்ளத்திலேயே உள்ளது. உங்கள் உள்ளம் உயரட்டும் உங்கள் உயர்வு தானே வெளிப்பட்டு விடும் என்று பேசாப் பேச்சாய்க் காலமெல்லாம் பேசுகின்றன. இப் பேசாப் பேச்சைப் பேசும் பேச்சாக்கிக் காட்டினார் திருவள்ளுவர்; கேட்பார் கேட்கட்டும்; காண்பார் காணட்டும்; சிந்திப்பார் சிந்திக்கட்டும்; உயர்வார் உயரட்டும்; உண்மை உரைப்பது எம்கடன் என உரைத்தார் அவ்வுரை, வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு என்பது. உள்ளம் உயர உயரப் பறக்கும் ஒரு பறவை; எட்டா உயரத்திற்கும் ஏறிப் பறக்கும் பறவை. விழுந்து கிடந்தாலும் கிடக்கும்; எழுந்து விட்டாலோ ஏறா மேட்டிலும் ஏறும்; அதற்கு இமயம்தான் என்ன, அண்டம் கடந்த அண்டம் தான் என்ன? அதன் காலடிக்குள் வந்து விடும். அதனால்தான், ஓங்கிய முயற்சியாளிக்கு உலகமே காலடிக்குள் வந்து விடும் என்று பொய்யாமொழி புகன்றது. இதோ உள்ளத்தின் உயர்வை உரைக்கும் ஓர் எளிய பாட்டு; குருவி பறக்கும் வீட்டின்மேல் கொக்குப் பறக்கும் அதற்கு மேல் க க்கை பறக்கும் அதற்குமேல் பருந்து பறக்கும் அதற்குமேல் புறாப் பறக்கும் அதற்குமேல் எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ என்பது அவ்வுள்ள உயர்வுப் பாட்டு. தரமான விதைகளைப் பயன் படுத்துமாறு வேளாண்துறை அறிஞர்கள், உழவர்களுக்குப் பரிந்துரை செய்கின்றனர். அவ்வாறே பண்பாட்டு அறிஞர்கள். ஒவ்வொருவர் எண்ணத்திற்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்பினைக் கண்டே எண்ணம் போல வாழ்வு என்று பயன் பாராட்டுச் செய்கின்றனர். வாழ்வில் பாராட்டுதல் பண்பு கட்டாயமாக வேண்டும். பரிசு வழங்குதல் விருது வழங்குதல் என்பவற்றைப்போல் பாராட்டும் பண்பு அதற்கு உரியவரை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் நல்லவற்றைச் செய்யத் தூண்டி அவரையும் அவரைச் சாந்தவரையும் நாட்டையும் உயர்த்தத் துணையாகும். செலவு இல்லாததாய், நெஞ்ச நிறைவைக் காட்டுவதாய், பிறரை ஊக்கப் படுத்தி உயர்த்தக்கூடியதாய் உள்ள வாழ்த்துதல் பண்பை நெஞ்சாரக் கொள்ளலாமே! வாயாரப் பாராட்டலாமே! நம் முன்னவர் பண்பாட்டில் தலையாய பண்பாடாக இருந்தது. வாழ்த்துதல் பண்பாடு. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதும் வாழ்த்துதல்; பிரியும்போதும் வாழ்த்துதல்; சிறுதுயர் பெருந்துயர் என எத்துயர்ப் பொழுதிலும் வாழ்த்துதல், மனம் வெறுக்குமாறு பேசிய வரையும் அவர்க்கு அப்பேச்சால் தீமை வரக்கூடாதே என வாழ்த்துதல், ஒரு தும்மல் உண்டானால் கூட அதன் வழியாகத் தீமை எதுவும் வந்துவிடக் கூடாதே என வாழ்த்துதல், அறத்தை அரசை இறையை வாழ்த்துதல் என வாழ்த்துதல் பண்பாட்டை நம்மவர் போற்றினர். ஒர் உழவன்; சிறு குடி என்னும் ஊரில் வாழ்ந்தவன்; பசி நோய்க்கு மருத்துவனாக விளங்கியவன். அதனால் பெரு மன்னனாகிய கிள்ளிவளவன் அச்சிறு குடிக்குச் சென்றான். பண்ணனை நோக்கி யான் வாழும் நாளையும் உனக்கு தான் வழங்குகிறேன்; நீ நெடுங்காலம் வாழ்வாயாக என வாழ்த்தினான். இது நிகழ்ந்து ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பண்ணனும் கிள்ளிவளவனும் நம் காதுகளில் ஒலிக்கக் கேட்கிறோம். அவர்கள் இன்றும் சாவா உடம்பினராக புகழுடம்பினராக வாழ்வது கண்டு பூரிப்படைகிறோம்! எண்ணம் போல வாழ்வு என்பதன் சான்றானவர்கள் தாமே இவர்கள் பாரதியார் நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்; இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்று தம் வாழ்வுத் திட்டத்தை வகுத்துக் கூறினார். அத் திட்டங்களையே வாழ்வாகக் கொண்டார். சக்தியினிடம், வல்லமை தாராயோ, இந்த வையகம் பயனுற வாழ்வதற்கே என்று வரம் கேட்டார்; வாழ்ந்து காட்டினார். பாரதியார் பரம்பரை எனப் பெரியதோர் பரம்பரையை வாழும் நாளிலேயே காணவாழ்ந்தார். பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா எனக் கவிக்கு மணியாம் கவிமணி பாராட்டும் புகழ் வாழ்வு பெற்றார். எண்ணம் போல வாழ்வு என்பது ஓர் அருமையான பண்பாட்டு மதிப்பீடு ஆகும். 4. சான்றோர் சால்பு இந்திய நாட்டுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அவற்றுள் புத்தர் பெருமான் பிறந்தது தனிப்பெருமையாகும். பாரத நாடு பழம்பெரு நாடு என்று பாடினார். பாரதியார். பாரத நாட்டின் பழம் பெருமைகளுள், பூரண ஞானப் பொலிவு என்பது சிறப்பாகத் தோன்றியது பாரதியார்க்கு, அவர் பூரண ஞானியரை, முழுதுணர் அறிஞரை--எண்ணினார்; அவர்களுள் முதல் வரிசையில் முதல்வராகக் காட்சி வழங்கினார் புத்தர் பெருமான். அதனால் பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே என்று பாடிப் பரவினார். புத்தர் பூரண ஞானி -- உயர்வற உயர்ந்த பேரறிஞர் அவர் அரிதில் முயன்று பெற்ற ஞானத்தால் புத்தர் என்னும் சிறப்புப் பெற்றார் போதிமாதவர் எனவும் போதிசத்துவர் எனவும் புகழப் பெற்றார். அவர் பெற்ற போதச் சிறப்பு. எந்த மரத்தின் அடியில் இருந்து போதம் பெற்றாரோ, அந்த மரத்திற்கும் சிறப்புத் தந்தது. அரச மரம் போதிமரம் என்னும் பெருமை பெற்றது. புத்தருக்கு நிழல் தந்த பெருமையால் பெற்ற பெயர் அது என்றால்--அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பிறங்கிய நாட்டின் பெருமைக்கு அளவும் உண்டோ? ஆசிய சோதியை உலகப் பேரொளியை அறக்கதிராழி உருட்டிய அண்ணலைப் பெற்ற பெருமை இந்தியாவுக்கு ஆயிற்று. எந்த ஒன்றையும் சிக்கற ஆராய்ந்து, செம்மையாக உணர்ந்து. சீராகச் செயலாற்றுதலையே புத்தர் பெருமான் விரும்பினார். கண்மூடித்தனமாக நம்புவதைக் கடிந்தார். ஒருமுறை தம் சீடர்களுக்கு உரைத்த செய்தி இது. ஒருவர் எத்தகைய பெரியவர் ஆயினும், அவர் உரைப்பதைக் கேட்ட அளவில் அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்; வழிவழியாக வந்த கருத்து என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளா தீர்கள்; எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாகவும் ஏற்றுக கொள்ளாதீர்கள் நம்முடைய மதிப்புமிக்க நூல்களின் மாண்பான பக்கங்களில் உள்ளது என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்; உங்கள் அன்பான குருவின் உரை என்பதற்காகவும் ஏற்றுக் கொள்ளதீர்கள்; பொன்னை நன்றாகச் சுட்டும், பதனாக வெட்டியும் உரைகல்லில் தேய்த்தும் மாற்றுக் காண்பார் போல நீங்களும் ஆராய்ந்து கொள்ளுங்கள் என்றார். புத்தரின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில் சீடர்களுக்குத் தயக்கம் உண்டாகவில்லை. ஆனால், அவர் உரையையும் அலசிப்பார்த்து ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதே தயக்கமாக இருந்தது. ஆழத்துள் ஆழமாகச் சென்று ஆராய்ந்தெடுத்த முத்துப் போன்றவை புத்தர் மொழிகள். அவற்றை, மேலும் ஆராய்ந்து கொள்ள வேண்டுமா? சாரி புத்தர் என்பவர் புத்தரிடம் வினாவினார்: பெருமானே, தங்களினும் சீரியர் உளரோ? சிந்தனையாளரும் உளரோ? இதுகாறும் இருந்ததே இல்லை என்றார், இதனைக் கேட்ட புத்தர் உள்ளம் புழுங்கியது; சாரி புத்தரே, நீவிர் இதுகாறும் இருந்த புத்தர்கள் அனைவரையும் அறிவீரோ? என வினாவினார். அறியேன் என்றார் சாரி புத்தர். இனிவரும் புத்தர்களையேனும் அறிவீரோ? என மீண்டும் வினாவினார் புத்தர். அவரையும் அறியேன் என்றார் சாரி புத்தர். சரி; நீவிர் என்னையாவது முழுமையாக அறிந்து கொண்டதுண்டோ? என மேலும் வினாவினார் புத்தர். இல்லை பெருமானே என்றார் சாரிபுத்தர் இவ்வாறாகவும், சாரிபுத்தரே! உம்முடைய சொற்கள் ஏன் இவ்வளவு பகட்டாகவும் துணிவாகவும் உள்ளன என்றார் புத்தர் பெருமான். ஒரு நாள் சின்சுபாச் சோலை ஒன்றில் தங்கியிருந்தார் புத்தர். சின்சுபா மரத்தில் இருந்து சில இவைகளைப் பறித்துக் கையில் வைத்துக் கொண்டார். தம் சீடர்களை நோக்கி என் கையில் இருக்கும் இலைகள் மிகுதியா? இல்லை மரத்தில் உள்ள இலைகள் மிகுதியா? என வினாவினார். கையில் உள்ள இலைகளினும் மரத்தில் உள்ள இலைகளே மிகுதி என்றனர். உடனே புத்தர் கூறினார்; அன்பான சீடர்களே என் கையிலுள்ள இலைகளைப் போல, நான் இவ்வுலகில் தெரிந்து கொண்டவை சிலவேயாம்; தெரிந்து கொண்டவற்றுள்ளும் உங்களுக்குத் தெரிவிக்காதவை மிகுதியானவாம் என்றார். இவ்வுலகில் எப்பொழுதும் முற்றும் அறிஞராய் இருந்தவர் அவர் ஒருவரே; அறிஞராகவே பிறந்தவரும் அவரே என்று விவேகானந்தரால் பாராட்டப் பெறும் புத்தர் பெருமகனாரின் அடக்கத் தன்மை இது. அறிய அறியத்தான் இதுகாறும் அறியாதவை எவை என்பது புலப்படும் என்றார் திருவள்ளுவர். எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்; அதுவும் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் என்றார் அறிஞர் சாக்ரடீசு. மிகுதியாகப் படித்து, மிகுதியாகச் சிந்தித்த பின், நான் உணர்ந்து கொண்டது இதுதான்; தெரிந்தது எவ்வளவு கொஞ்ச மானது; தெரிய வேண்டியது எவ்வளவு மிகுதியாக இருக்கிறது என்பதுதான் என்றார் நேரு பெருமகனார். கற்றது கைம்மண் அளவு: கல்லாதது உலகளவு என்றார் ஔவையார். ஆம்! வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்கள் - வெவ்வேறு காலங்களில், வெவ்று இடங்களில் இருந்து வெவ்வேறு மொழிகளில் குரல் எழுப்பினாலும் அக்குரல்கள் ஒருமைப் பாடுடையனவாகவே திகழ்கின்றன. புத்தர் பெருமான் தம் மாணவர்களுக்குத் தாம் அறிந்த எல்லாவற்றையும் போதித்தார் அல்லர்; மறைக்கவும் அவர் விரும்பினார் அல்லர்; அவர்கள் நிலைக்குத் தக்கன எவையோ அவற்றையே உரைத்தார். ஒரு நாள் புத்தரின் மாணவர் ஒருவர் ஆன்மாவின் முடிந்த முடிவு பற்றி வினாவினார். இதற்கு நேரே விடை கூற வேண்டும்: அல்லது தெரியாது என்று கூறிவிட வேண்டும் என்றும் அடக்கமாகக் கேட்டார். அப்பொழுது புத்தர் கூறினார். ஒரு மனிதன் நஞ்சு தோய்ந்த அம்பால் தாக்கப்படுகிறான். அவன் நிலைமைக்கு இரங்கிய மருத்துவன் ஓடோடி வந்து அம்பினை மெல்ல அசைத்தெடுத்து மருந்து கட்டத் தொடங்கு கிறான், அப்பொழுது அம்பு தைக்கப் பெற்றவன் கதறி அழுது கொண்டே, வேண்டா; வேண்டா; அம்பைப் பிடுங்குவதை நிறுத்துங்கள்; அம்பை எய்தவர் ஆணா? பெண்ணா? அவர் என்ன தொழில் செய்பவர்? குள்ளமானவரா? வளர்ந்தவரா? அம்பு எதனால் செய்யப் பெற்றது? இவ்வினாக்களுக்கெல்லாம் விடை தெரிந்த பின்னரே அம்பை எடுக்க வேண்டும் என்று தடுத்தான். இவ்வினாக்களுக்கு விடைகாணும் வரை அவன் உயிரோடு இருப்பானா? இறந்து படுவான் அல்லனோ? அதுபோல் ஆன்மாவின் முடிந்த முடிவை அறியுமுன்னரே வாழ்வு முடிந்து போகும் என்றார். வீட்டுலகம் பற்றி அவரிடம் வினாக்கள் தொடுக்கப் பெற்றன. அப்பொழுதில் முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளியுலகைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ளாதோ அவ்வாறே இவ்வுலகினின்றும் விடுதலை பெறும் வரையும் அவ்வுலகை அறிந்து கொள்ள இயலாது. மெய்ப்பொருளை உணர வேண்டுமாயின் சங்கத்தைச் சார்ந்து அறத்தைக் கடைப் பிடியுங்கள் என்றார். ஒரு சமயம் புத்தரிடம் ஐந்து முனிவர்கள் சென்றனர். பெரியீர், இத்தகையன்; இதுவே இறைவனை அடையும் வுழி என எங்கள் நூல் கூறுகிறது என்றார் ஒருவர். மற்றொருவர் அவர் கூறுவது தவறு; எங்கள் நூல் இவ்வாறு கூறுகிறது. என மறுத்தார். பிறரும் இவ்வாறே கூறினர். புத்தர் இவர்களைப் பார்த்து, இறைவன் சினங்கொள்கிறான்; தீங்கு இழைக்கிறான்; தூய்மையற்றவனாக இருக்கிறான் என உங்கள் சமய நூல்களில் ஒன்றாவது உரைக்கின்றதா? என்றார். இல்லை பெருமானே; இறைவன் இனியவன்; தூயவன்; நல்லவன்; என்றே எங்கள் நூல்கள் உரைக்கின்றன என்றனர். அவ்வாறானால் அன்பர்களே, இறைவன் எத்தகையவன் என்பதைத் தெரிந்து கொள்ளுமுன் நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நல்லவர்களாகவும், தூயவர்களாகவும், இனியவர்களாகவும் வாழுங்கள் என்றார். ஆம் இவ்வுலக வாழ்வில் மாந்தர் நல்லவர்களாகவும் தூயவர் களாகவும் இனியவர்களாகவும் வாழ்வதைப் பற்றியே புத்தர் எண்ணினார். அதனையே உரைத்தார். அதற்காகவே அயராது பாடுபட்டார். உயிர்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டெனக் கொண்டார். வயிற்றுப் போக்கினால் மிக வருந்தினார் ஒரு புத்த பிட்சு. பிக்குவுக்கு வயிற்றுப் போக்குத் தொடர்ந்து ஏற்படவே அவர் உடலையும் உடையையும படுக்கையையும் அடிக்கடி தூய்மை செய்ய வேண்டியதாயிற்று. புத்தர், தாமே அதனைச் செய்தார். பிக்குகளே, எனக்குப் பணிசெய்ய எவராவது விரும்பினால், எனக்குப் பணி செய்வதே போல இப்பிணியாளருக்குப் பணி செய்யுங்கள் என ஏவினார். புத்தர் பெருமானின் தொண்டில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார் விவேகானந்த அடிகள். யான் புத்தரின் தொண்டருக்குத் தொண்டன்; அவரைப் போலத் தொண்டர் எவரே இருந்தனர்; தமக்காக ஒரு போதும் ஒன்றும் செய்து கொள்ளாதஅவ்வள்ளலார் உள்ளம் உலகை எல்லாம் அணைத்துக் கொண்டது. ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தம் உயிரையே அளிக்க வல்ல அரச குமாரரும் துறவியருமான அவருக்கு உயிர்களிடம் அவ்வளவு அருள் நிரம்பி வழிந்தது. ஒரு பெண்புலியின் பசியை ஆற்றத் தம்மையே துறக்குமளவுக்கு அவர் அன்பு இருந்தது. மனித இனத்தின் வரலாற்றிலே முதன் முதலாக விரிந்த ஒரு நெஞ்சினின்றும் அத்தகைய அன்பு பொங்கி வழிந்து மக்களுக்குப் பணி செய்வதோடு நில்லாமல் அனைத்துயிர்களுக்கும் பணி செய்வதில் ஈடுபட்டு நின்றது அச்சமயத்திலே தான் என்று பாராட்டுகிறார். தம் துயர் பொறுத்தல்; பிற உயிர்களுக்குத் துயர் செய்யாமை என்பவை தவத்தின் உருவம் என்றார் திருவள்ளுவர். இத்தவத்தின் வடிவாக விளங்கினார் புத்தர் பெருமான். காற்று மழை, வெயில் பனி, காடு மேடு, பசி பட்டினி -- ஆகிய இயற்கையோடு போராடிப் போராடி ஊற்றம் பெற்றார். இன்பத்தின் எல்லையென எவ்வளவு உண்டோ அவ்வளவும் கண்ட அப்பெருமகனார் துன்பத்தின் எல்லையென எவ்வளவு உண்டோ அவ்வளவும் தாமே விரும்பி ஏற்றார். விருப்பு வெறுப்பற்ற, இன்ப துன்பமற்ற உயர்நிலையில் ஓங்கினார். ஒரு நாள் வலுவான மழை பொழிந்தது. காற்று வெருட்டியது. குளிர் நடுங்கியது; ஒரு குடிசையின் கூரை இறைப்பிலே சுவரோடு ஒன்றி நின்றார் புத்தர். உள்ளே இருந்த குடியானவன் சன்னல் வழியே ஒருவர் நிற்பதைக் கண்டான். அங்கேயே நில்; மஞ்சள் உடையினவே. உனக்கு அந்த இடம் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பாடினான்; என் மாடுகள் வீட்டுள் வந்துவிட்டன; எரிநெருப்பு நன்றாகவே எரிகின்றது; என் இல்லாளும் இங்கேயே பாதுகாப்பாக உள்ளாள்; என் குழந்தைகளோ இன்பமாக உறங்குகின்றனர்; கருமேகங்களே நீங்கள் இரவெல்லாம் கவிந்து மழை பொழியுங்கள். வெளியே இருந்த புத்தரும் பாடினார்; என் மனம் பாதுகாப்பாக இருக்கிறது. என் புலன்கள் எல்லாம் உள்ளே. கருமுகில்களே நீங்கள் இரவுப்பொழுதெல்லாம் கவிந்து மழை பொழியுங்கள். குடியானவன் உள்ளம் உருகியது; ஓடிப்போய்க் கதவைத் திறந்தான். அவன் மனக் கதவும் திறந்தது. புத்தரின் பொன்னான அன்பருள் ஒருவன் ஆனான். புத்தர் பெருமான் தம் அனுபவத்தில் கண்டவற்றையும் ஆராய்ந்து அறிந்தவற்றையுமே தம்மை நாடியவர்களுக்குப் போதித்தார். மிக எளிமையாக ஆனால் மிக ஆழமாக ஊன்றுமாறு உரைத்தார். உவமைகளால் தம் கருத்தை விளக்குவதில் தேர்ந்த வித்தகர் புத்தர் பெருமான். ஆறுகள் கங்கை பிரம்மபுத்திரா நருமதை எனப் பல பெயர்கள் தாங்கி ஓடுகின்றன. ஆனால் அவை கடலைச் சார்ந்ததும் தம் பெயர்களை இழந்து விடுகின்றன. அவ்வாறே புத்த சங்கத்தைச் சார்ந்த எவராயினும் தம் சாதியை இழந்து விடுகின்றனர். என்பது புத்தரின் பொன் மொழிகளுள் ஒன்று. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இதனைப் பார்க்கிலும் அரியதோர் உரை வேண்டுமா? தனி மனிதர்கள் தத்தம் தனித் தன்மைகளையே போற்றிக் கொண்டிருக்கும் அளவும் பொதுமை நிலை என்னும் ஒருமைப்பாட்டு நிலை ஏற்படாது அல்லவா. ஒருவர் உள்ளார்ந்த அன்பர் பலரைக் கொண்டிருக்கிறார். k‰bwhUtnuh, ‘v‹d? என்று கேட்பதற்கும் ஒரு துணை இல்லாமல் உழன்று தவிக்கிறார். இவற்றுக்குக் காரணம் என்ன? புத்தர் பெருமான் விளக்குகிறார்; ஒரு மரத்தில் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிகின்றது. அங்கே பறவைகள் நெருங்குமோ? பண் இசைத்துப் பறக்குமோ? கூடு கட்டிக் குஞ்சும் குடியுமாக வாழுமோ? ஒருவன் மனமே தீயாக எரியுமானால் நல்ல குணங்கள் நெருங்குமோ? அன்பர்கள் அணுகுவரோ? என வினவுகிறார். சினம் பொறாமை முதலிய தீக்குணங்களை யுடையவர்களிடம் அடக்கம் அன்பு முதலிய நற்குணங்கள் சேரா; நல்லவர்களும் நெருங்கார் என்பதை வலியுறுத்துகிறார். புத்தர் உரைகளுள் மிகுந்த பேரிடம் பெற்றது தன்மம் என்னும் அறமாகும். அறம் இல்லையானால் சங்கத்தால் ஆவதென்ன? புத்தத் தன்மையால்தான் ஆவதென்ன? ஆதலால் அறத்தை மிக வலியுறுத்திய புத்தர் அறவோர் எனப் பெற்றார். அறிவியங் கிழவோன் எனவும் பெற்றார். அவர் அறத்தைப் பற்றிக் கூறுகிறார். இரும்பில் இருந்து பிறக்கும் துரு, அவ்விரும்பையே அழித்துவிடும். அதுபோல் அறத்தைக் கொல்பவனை அறமே கொன்றுவிடும். அறக்கேடு புரிவதில் ஈடுபடும் நெஞ்சம், இவ்வறவோர் உரையை ஆழப் பதித்துக் கொள்ளுமானால் அழிவுக்கு ஆட்படாது அல்லவா! தன்னையும் தன்னைச் சார்ந்தாரையும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுத்தா தல்லவா! வாழ்வில் துன்பமும் இன்பமும் தொடரும் வகையைத் துலக்குகிறார் பெருமான்; மனிதன் தீய எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரிந்தாலும் வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும் மனிதன் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரிந்தாலும் நிழல் தொடர்ந்து செல்வதுபோல் இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். ஆசையே துன்பத்துக்குக் காரணம்: ஆசை அறுமின்கள்: ஆசை அறுமின்கள் என்றவர் புத்தர் பெருமான், ஆசை ஒருவனுக்குள் புகும் வகையை அருமையாகக் கூறுகிறார். கூரை வேயப்படாத வீட்டினுள் மழைநீர் பாய்ந்து செல்வதுபோல், நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்து விடுகின்றன. ஞானியர் உறவு எவருக்குப் பயன்படுகிறது என்பதை இயம்புகிறார் புத்தர்; நாக்கு, குழம்பின் சுவையை அறிகிறது. அதுபோல் கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியுடன் பழகினாலும் அவன் அறத்தின் இயல்பை அறிந்து கொள்கிறான். அகப்பை, குழம்பின் சுவையை அறியாது, அதுபோல் அறிவிலி வாழ்நாள் முழுவதும் ஞானியுடன் பழகினும் அறத்தை அறியான். துறவிகள் ஊருள் நடமாடும் வகையை நவில்கிறார் பெருமான்: மலரில் தேன் எடுக்கும் ஈ மலருக்குக் கேடு இல்லாமல் மலரின் வண்ணமும் மணமும் சிதையாமல் தேனைக் கொண்டு செல்வதுபோல் துறவி ஊருள் நடமாட வேண்டும் இம்மொழி நாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொண்டர்களுக்கு இன்றியமையாதது. சமயத் தொண்டு செய்யச் செல்லும் சீடர்களிடம் புத்தர் பெருமான் உரையாடினார். சீடர்களே, நீங்கள் தொண்டு செய்யப் புறப்படுகிறீர்கள்: உங்களை யாரும் வரவேற்கவில்லையானால், என்ன செய்வீர்கள்? மகிழ்ச்சியடைவோம்: அவர்கள் எங்களை வரவேற்க வில்லை என்றாலும் வெறுத்துரைக்கவில்லை அல்லவா அதனால் வெறுத்தால்? வெறுத்தாலும் மகிழ்ச்சியடைவோம்: அவர்கள் எங்களை அடிக்கவில்லை அல்லவா! அடித்தால்? அப்பொழுதும் மகிழ்வோம் எங்களை அவர்கள் கொல்ல வில்லை அல்லவா!? ஒருவேளை கொன்று விட்டால்? அதுவும் நன்மையே எங்களுக்கு அவர்கள் விரைவில் விடுதலை வழங்குகிறார்கள் அல்லவா! நீங்கள் தொண்டு செய்யச் செல்லலாம் என்றார் புத்தர் பிரான் தொண்டில் புகும் அனைவருக்கும் உரிய அறை கூவல் அன்றோ இது புத்தர் உலகியலை நன்கு ஆராய்ந்தவர். அதனால் மணிமணியான கருத்துகளை வழங்கியுள்ளார். உலகோர் அமைதியாக இருப்பவனையும் பழிக்கின்றனர்; மிகுதியாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர்: குறைவாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர். இஃது இன்று தோன்றியது அன்று. பழமை தொட்டே வருவது. பழிக்கப் படாதவர் எவருமே உலகில் இலர்? முற்றிலும் பழிக்கப் பட்டவரும், முற்றிலும் புகழப்பட்டவரும் ஒருகாலும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை; இப்பேதும் இல்லை. வாழ்வில் வெற்றி கண்டவர் புத்தர். அவர் எவற்றை எவற்றால் வெல்ல வேண்டும் என்பதை விளம்புகிறார். சினத்தை அன்பால் வெல்க தீயதை நல்லவற்றால் வெல்க; கருமித்தனத்தைக் கொடையால் வெல்க; பொய்யை மெய்யால் வெல்க; ஆயிரம் பகைவரை வெல்பவனிலும் தன்னை வெல்பவனே பெருவீரன்! ஆம்! புத்தர் பெருமான் தம்மை வென்ற பெருவீரர். மாரனை வெல்லும் வீர நின்னடி! தீநெறிக் கடும்பகை துறந்தோய் நின்னடி! பிறர்க்கறம் முயலும் பெரியோர் நின்னடி! துறக்கம் வேண்டாத தொல்லோய் நின்னடி! 5.குறள் நெறி ஆலமரத்தடியில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களுள் பலர் காவியுடையுடன் காணப்பட்டனர். சிலர் வெள்ளையுடையுடனும் இருந்தனர். என்றாலும் எல்லார் கையிலும் தவறாமல் திருவோடோ, சட்டியோ சுரைக்குடுக்கையோ இருந்தன, அவர்களின் கும்மாளம் ஆலமரப் பறவைகளின் ஆரவாரத்தையும் அடக்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்களுக்கு ஒரே ஒர் வேலைதான் உண்டு. ஊர் சுற்ற வேண்டியது; வீடுகளில் சோறு வாங்கவேண்டியது; உடல் கொழுக்க உண்ண வேண்டியது உழைப்பு மிக மிக சுருங்கிப் போயிற்று அல்லவா? உடல் நோக உழைப்பது, வியர்வை கொட்டுவது ஆகியவை அவர்களுக்கு இல்லை ஏன் இல்லை? மானம் என்னும் ஒரு பொருள் அவர்களிடம் இல்லை. கால் கை இருந்தும், உடல் வலிமை இருந்தும் தான் உழைக்காது தன்னைப் போன்ற ஒருவனிடம் போய்க் கை நீட்டி ஐயா சோறு போடு: துணி கொடு: காசு தா என்று கேட்டுத் திரிவது மானக்கேடு இல்லையா? போகவிடக் கூடாத மானத்தைப் போக்கி வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? மானத்தை இழந்து இழந்து பழகிப்போன அவர்கள் மரத்துப்போன உள்ளங்களுக்குத் தோன்றுவது இல்லையே மானக்குறை. ஆனால் அப்படி மற்றவர்களுக்கும் தோன்றாது போய் விடுகின்றதா? கூட்டம் கூடியிருந்த ஆலமரத்தடியை ஒருவர் அடைந்தார். அவர் அக்கூட்டத்தை நெருங்கிய உடனே அக் கூட்டத்தினரிடம் மகிழ்ச்சி காணப்பட்டது. பிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது பெரும் புண்ணியம் என்னும் கருத்து வளர்ந்து விட்டது நம் நாடு அல்லவா! அதனால் நம்மை அழைத்துக் கொண்டு போய்ச் சோறு போடவே இப்பெரியவர் வருகிறார் என்று எண்ணி மகிழ்ச்சியை ஓரளவு அடக்கிக்கொண்டு வந்தவரை நோக்கினர். தங்கள் உண்கலங்களையும் எடுத்து வைத்துக் கொண்டனர். ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுப்பவர் வீழ்க்கை அடிப்பதை எப்படி எதிர் நோக்கி ஓடுவதற்கு இருக்கிறார்களோ அப்படி இருந்தனர் இரவலர். பெரியவர் நெருங்கினார், அவர்கள் அத்துணைப் பேருக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டார். உங்களை ஒரு செயலுக்காகத் தேடி வந்தேன். நீங்கள் அத்துணைப் பேர்களும் என் மீது இரக்கம் காட்டவேண்டும். அதுவும் இப்பொழுதே இந்த நொடியிலேயே இரக்கம் காட்டியாக வேண்டும். நான் கேட்கும் ஒன்றை நீங்கள் தருதல் வேண்டும். இரவலர்களில் சிலர் திகைப்படைந்தனர்: சிலர் தவிப் படைந்தனர். சிலர், பிறர் அறியாமல் அங்கிருந்து நழுவத் தொடங்கினர். வாய்த்துடிப்புள்ள ஒருவர் ஊர் ஊராக இரந்து திரியும் எங்களிடம் வந்து இரக்கம் காட்ட வேண்டும்; நான் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்கிறீர். இதுவரைஇரவலர் களைத்தான் நாங்கள் கண்டிருக்கிறோம். இரவலர்களிடமும் இரந்து திரியும் இரவலர்களைக் கண்டதே இல்லை. நல்ல ஆள் நீர் என்று எள்ளி நகையாடினார். இதற்குள் சிலபேர்கள் தங்கள் திருவோடு கரைக்குடுக்கைகளை மறைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். சரி! பெரியவரே! Ú® v§fËl« ïu¥gJ vJ?அதைச் சொல்லும்! என்று துணிச்சலான இன்னொருவர் கேட்டார். இங்குள்ள அனைவரும் இரவலராக உள்ளீர்கள். இரப்பதை உங்கள் வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டு வீட்டீர்கள். தம் சீர் சிறப்புக்களை இழந்து அடுத்தவர் வாயிலில் சென்று எமக்கு இது கொடு என்று தமக்கு இணையான அல்லது இணையும் இல்லாத ஒருவரிடம் இரந்து உயிர் வாழ்வது இழிவு இல்லையா? என்றார் பெரியவர். அது இருக்கட்டும்! நீர் எங்களுக்கு நல்லது சொல்ல வந்து விட்டீர்! நீர் உம் நிலைமையை எண்ணிப்பாரும். செல்வரிடம் இரக்கும் இழிவினும் இரப்பவரிடமே இரப்பது மிகவும் இழிவு இல்லையா? இடந்தெரிந்துகூட இரவல் தொழில் நடத்தத் தெரியாத நீர் எங்களுக்கு அறம் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது என்று குத்தலாகப் பேசினார். வாய்ப்பு இல்லாதவன்தான், இரப்பவனுக்கு இல்லை என்று சொல்வான் என்பது இல்லை. இருப்பவனும் கூட மனம் இல்லாத காரணத்தால், செல்வத்தின் மேலுள்ள பேராசையால் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவான்; பழித்தும் பேசுவான். மேலும் கேட்டுக் கொண்டு நின்றால் கழுத்தைப் பிடித்தும் வெளியே தள்ளுவான். அதனால் நீங்கள் நினைப்பது போல் உள்ளவனிடம் இரப்பதும் இழிவேதான். அவன் இல்லை என்று கூறுவதும் உண்மையேதான். அவ்வாறு இருக்க உங்கள் செயல் எவ்வாறு உயர்ந்தது ஆய்விடும்? விளக்கம் தந்தார் பெரியர். இரவலாகளாகிய எங்களிடம் இரப்பதற்கும், புரவலர் களாகிய செல்வர்களிடம் இரப்பதற்கும் வேறுபாடு இல்லை என்கிறீர். அது இருக்கட்டும் நீர் எங்களிடம் வேண்டி வந்தது என்ன? என்று கேட்டார் முதிய இரவலர் ஒருவர். நான் உங்களிடம் என்ன கேட்கப் போகின்றேன். பிறரிடம் இரப்பது இழிவு என்பது என் கொள்கை. இழிவுடைய இரப்பை ஒருவன் செய்தாலும் செய்யலாம்; கேட்டது கேட்ட அளவில் உவர்ப்புடன், மானம் குறையாத விதத்தில் கிடைப்பதாக இருந்தால். ஆனால், உங்களிடம் ஒன்றைக் கேட்டுப் பெற முடியுமா என்ற திகைப்பே இப்பொழுது உண்டாகின்றது. நீங்கள் சொல்லும் விளக்கம் இருக்கிறதே அது மேலும் என்னைத் தளரச் செய்கிறது இது என்ன ஐயா நீரே ஓடித்தேடி வந்தீர், சொல்லாமல் இப்பொழுது கதை வளர்க்கிறீர். எங்களால் முடியுமானால் உறுதியாகக் கொடுக்கிறோம் என்றார் என்னவென்று அறியும் ஆவல் உடைய ஒருவர். அது பலருக்கு முணுமுணுப்பை உண்டாக்கியது, இனி, என்ன கேட்டு விடுவாரோ என்று. பெரியவர் சொன்னார்; உங்களிடம் இரப்பது ஒன்றே ஒன்று. அந்த ஒன்றும் எனக்காக இல்லை. உங்கள் மானத்திற்காக மனித இனப் பெருமைக்காக ஐயா இதனைக் கொடு என்று எவரிடத்தும் போய் எதையாவது எப்பொழுதாவது இரந்து திரிய வேண்டா, இந்த ஒன்றையே உங்களிடம் யான் இரக்கின்றேன். சிலர் நினைக்கிறீர்கள் இரந்தால் என்ன என்று. நீங்கள் செல்வர்கள் என்றும், வள்ளல்கள் என்றும் எண்ணிப்போய் இரப்பவர்கள் உயர்ந்த பண்பு உடையவர்கள் அல்லர். சிலர் கொடுக்கலாம்; பலர் கொடுப்பது இல்லை. கொடுக்கும் பலரும் - பலமுறை தேடி அலுத்தபின் கால்கூலி தருவதுபோல் தரவே செய்வர். இன்னும் சிலரோ மனத்திரையைக் கிழித்து வீசி எறிவர். ஆதலால் அவர் தரும் எளிய பொருளை எண்ணி அருங்கலமாம் மானத்தை இழக்கக் கூடாது. உயர்ந்த மனிதப் பண்பை இழந்துவிடக் கூடாது. போய்வரும் புன்பொருளைக் கருதிப் போனால் வாராத மானத்தை இழந்து விடுவது அறிவின்மை அனைத்திலும் தலைமையான அறிவின்மை ஆகும். நீங்கள் இரந்து திரிய வேண்டா என்பதே நான் உங்களிடம் இரப்பது என்றார். கூட்டத்தில் அமைதி நிலவியது. கேள்வி கேட்டவர்களும் வாயடைத்துப் போயினர், வந்த பெரியவர் தம் கருத்தை அவர் களுக்கு இரண்டு வரியில் சொன்னார்,, இரப்பன் இரப்பாரை யெல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று பாட்டை மனப்பாடம் செய்து கொண்டனர்; பொருள் விளக்கமும் தெரிந்து கொண்டனர்- ஆனால் சிலரால் தான் இரப்புக்கலத்தைப் பலர், பழகிப்போன மானம் இழந்து மரத்துப் போன - பரம்பரை இரவலராக இருந்தனர். அவர்களுக்கும் தங்களுடன் இருந்த சிலர் திருவோட்டைத் தூக்கி எறிந்து விட்டு உழைக்க இறங்கிய செயல். மின்னற் கீற்றுப்போல் பாய்ந்து உணர்ச்சியை ஊட்டியது என்றாலும் அந்த உறுதிப்பாட்டில் நிலைத்து விட்டார்கள்அல்லர்; சில நாட்களில் உணர்ச்சி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது போல் இருக்கிறது. திருவோட்டிலேயே மீண்டும் அடைக்கலமாகி விட்டனர் மானத்தினும் உயிர்வாழ்வே உயர்ந்தது என்பவர்களிடம் உறுதிப்பாட்டை உயர்ந்த குறிக்கோள்களை-எதிர்பார்க்க முடியுமா? எல்லாரும் மானமுள்ள இரவலர்களாக இருப்பவர் களானால் அந்தக் கூட்டம் இவ்வளவு பெருகிக் கொண்டே போகுமோ? பிச்சி நாகரிக உலகில் ஒரு கலையாகப் போய் விட்டது என்பது கூட உண்மைதான். உழைப்புக்கு மதிப்புக் குறைக்க நாட்டில் காலத்தில் -உழையாத சோம்பர்க்கும் இரவலர்க்கும் திண்ணை தூங்கிகளுக்கும் மதிப்பு இருந்தே தீரும். தராசின் ஒரு தட்டுத் தாழ்ந்தால் இன்னொரு தட்டு உயராமல் என்ன செய்யும்? உழைப்புக்குப் பெருமை தரும் உலகிலே இரப்பது பெருங்குற்றமாகக் கருதப்படும்; கருதப்பட வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. அதனை நயமாகக் கூறினார். எனக் கண்டு கொண்டது நாடு. ஆனால், மானத்தின் சட்டம் - ஆணிவேர் - அது எனக்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வரவில்லை; கொண்டுவராத அளவும் ஆன்றோர் உரைமணிகள் இலக்கியமாக இருக்குமே ஒழிய, வாழ்வாக மலர முடியாது. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று இரவலர்களையெல்லாம் யான் இரந்து ஒன்று வேண்டு கின்றேன்; நீங்கள் ஒருவரிடம் போய் ஒன்றை இரப்பீர்கள். ஆனால் அவர்கள் அதைக் கொடாமல் மறைத்து விடுகிறார்கள். ஆதலால் எந்த ஒன்றையும் எவரிடமும் எப்பொழுதேனும் இரக்க வேண்டா. செல்வக் குன்றம் ஒருபால்; வறுமைப் பள்ளம் ஒரு பால் -இவை இன்றைய நேரிடைக் காட்சி மட்டுமன்று, பழைமைக் காட்சியும்தாம். சீரிய செல்வச் செழிப்பினைச் செவ்வையுற எடுத்துக் காட்டும் இலக்கியங்களில் இடையே வன்கொடுமை வறுமைக்காட்சி தலை காட்டாமல் இல்லை. வள வாழ்வு மாளிகைக்கு அருகிலேயே கழிவு உணவுகளைத் தின்று வயிற்றை நிரப்பி வளரும் நாய், உணவின்றித் துவளும் வறுங்குடிசை இருப்பதைக் காண்கிறோம். முன்றிலில் காய வைத்த நெல்லைக் கொத்தித் தின்னவரும் கோழியைக் குழை (காதணி) கொண்டு வெருட்டும் செல்வச் சிறுமியர் வாழும் தெருவகத்தே புன் கொடும் பசிக்குப் புகலற்று புதல்வர்கள் சோர்ந்து திரியக் காண்கிறோம். அக்காட்சிகளை நினைக்கும்போது பொய்யில் புலவர் மெய்யுறப் புகன்ற இரு வேறுலகத்தியல்பு புலனாம். கொடியது கொடியது வறுமை கொடியது என்று குமுறுகின்றது ஓர் மெல்லிய உள்ளம். நேற்றுக் கொன்று போட்டுச் சென்ற வறுமை இன்று வருமா? என ஏங்குகின்ற வறியவன் ஏக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது ஓர் அருள் உள்ளம். இல்லெல்லாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு என்று கனிகின்றது ஓர் ஒப்புரவு உள்ளம், வறுமையின் கொடுமை இத்தகைத்தாம். வறுமை கொடிது தான்! வறுமையில் கொடிது இல்லையோ? உண்டு, அஃதெது? அதுவே வறுமை உள்ளம். நாளைக்கு என் செய்வோம் என்று நலிபவன் கூட நிறைத்த நெஞ்சத்தவனாக - வறுமைக்கு வறுமை செய்பவனாக - இருப்பானே யானால் அவன் செல்வன் - வறுமைச் செல்வன் - ஆவன். ஓடி,ஓடி,ஓடி - தேடித் தேடித் தேடி - பிறரை வலிந்து வாட்டி வருத்திக் கோடி கோடி கோடியாகக் குவித்து வைத்து இருப்பவன் கூட இது என்ன செல்வம்! போதாதே! இன்னும் போதாதே! என்று ஏங்குவான் என்றால் அவன் வறியன் - செல்வறியன் - ஆவன் ïjid¢ ‘bršt« v‹gJ áªjiÆ‹ Ãiwnt’ v‹W« ‘tWik nghf« JŒ¡f¥ bgwhj g‰WŸs« v‹W« jÄœ¢ rh‹nwh® j¡f tifÆš TWt®, mGif¢ Rit¡FÇaJ tWik (bjhš - bghUŸ.(233) உவகைச் சுவைக்குரியது செல்வம்! (தொல் - பொருள்259) இச்சுவை நிலைக்களத்தையே மாற்றியமைத்துச் சால்புற வாழ்வார் என்றால், அச்சான்றோர் எத்தகையர்! அவரே பெரியர் - செயற்கரிய செய்வார் பெரியர் என்பது அறத்தின் முழக்கம். இனிச் சிந்தையின் நிறைவளம் செல்வம் இருக்கட்டும்! பற்றுள்ளமாம் வறுமையும் ஒரு புறம் இருக்கட்டும்! உலகியற் செல்வக் கூத்து எத்தனை? அச்செல்வக் கூத்தர் எத்தகையர்? எண்ணப் பொழுது போதா, எழுதப் பொழுதும் போதா! அத்துணைக் கூத்துக்கள் உள. பொருளுக்கென அறம் மறம் எனத் தன்மை உண்டா? இல்லை? பொருள் உடையான் தன்மை பொருள் மேல் ஏறி இருந்து இயக்குகின்றது. அவன் நல்லவன் ஆயின் அவன் பொருள்கள் நல்ல; அவன் தீயன் ஆயின் அவன் பொருள்கள் தீய. ஆட்டக்காய் யாது செய்யும்? ஆடுவோன் கருத்துக்கு ஏற்ப நகரும். வெல்லும் தோற்கும்! பொருள் பயன் படுபவது பொருளுடைய உள்ளம் உடையவனிடத்தே தான் பிறனிடம் இருப்பின் பொருளுக்கும் கேடு - பொருள் உடையானுக்குக் கேடு - இப்பேருலகுக்கோ பெருங்கேடு. நல்லோர் செல்வம் ஊருணியாய், நடுவூர்ப் பழமரமாய் நன்மருந்தாய்ப் பயன்படும். அல்லோர் செல்வம் தடியடியாய், பொய் வழக்காய் நச்சுக்காற்றாய் அணு குண்டாய் பேயுருக் கொண்டு நிற்கும். இவை பொருளின் குறை நிறைகளா? பொருளுடையான் குறை நிறைகளா? நல்லோர் செல்வம் தீமை புரியாதா? புரியாது! புரியுமாயின் அவர் நல்லவர் ஆகார். தீயோர் செல்வம் நன்மை புரியாதா? புரியாது, புரியுமாயின் அவர் தீயவர் ஆகார். நல்லவர் தீயவர் என்பதை அளந்து காட்டும் கோல். அவர் செல்வப் பயன்பாடே ஆம்- தத்தம் கருமமே கட்டளைக்கல் தீயவர் செல்வம் எய்தினால் எய்தும் கேடென்ன! நல்லவர் வறுமை உற்றால் இழப்பென்ன? அவரவர் வாழ்வு - தாழ்வு அவரவரோடு அன்றே உலகுக்கு வருவது என்ன? மன்பதைப் பொதுமை, ஒருமைப்பாடு மக்கட் சமனிலை வாழ்வு என்று நாள்தோறும் அறிந்தோ அறியாமலோ, உள்ளம் ஒன்றியோ ஒன்றாமலோ - உரையாடியும் எழுதியும் வரும் இற்றை உலகில் உலகம் - குடும்பம் என்னும் அளவில் சுருங்கி விட்ட அறிவியற் கால நிலையில் இக்கேள்விகள் எழா! தீயவர் செல்வஞ் செய்யும் கேட்டை விரித்துரைக்க வேண்டா, உவமை ஒன்று போதும் குறும்பு செய்தலில் பெயர் பெற்றது குரங்கு, அக்குரங்கை நண்டு கடித்து விட்டது. பின்னர் தேளும் தொடுத்துக் கொட்டியது. இரண்டு கடியும் பட்டுத் தடுமாறிய குரங்கு மதுக்குடம் ஒன்றைக் கண்டு நீரெனப் பருகியது. இந்நிலைமையில் வெறிப்பேய் ஒன்றும் ஏறிக் கொண்டது. தாவிச் செல்லுங்கால் காஞ் சொறிப் பொடி பரவிவந்து படிந்தது; இஞ்சியும் தின்றது. குரங்கின் குறும்பு எப்படி ஏறும்! (இந்நாட் பொருள் விலைபோல் ஏறாதா?) இக்குரங்கின் கையில் கொள்ளிக் கட்டை சிக்கினால்? குறும்புக் கொடுமையைக் குறிக்க இயலுமா? இத்தகைய கொடுமை செய்யுமாம் பல்லியர் பெற்ற செல்வம், அல்லது கொடுமை செய்வராம் செல்வம் பெற்ற புல்லியர். தத்துவப் பிரகாசர் பாடுகிறார்: குரங்குமாய் நண்டுகட்டித் தேளுங் கொட்டிக் குடியாத மதுக்குடித்துப் பேயும் ஏறி இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுத்தாற் போலத் தருங்கருணை யில்லாத புல்லர் வாழ்வில் தண்டிகையின் மீதேறிச் சம்பத்தேறிக் கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக் காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் தீயர் செல்வக் கொடுமை இத்தகைத்து; நல்லோர் வறுமையினால் உலகுக்குக் கேடு என்ன? நல்லோர் தமக்கு உற்ற வறுமையை வறுமை என்று கருதுவார் அல்லரே. பிறருக்கு உதவ முடியாத நிலைமை ஒன்று தானே அவர்கள் வறுமை. நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல். செயுநீர செய்யாதமைகலா வாறு என்பதன்றோ குறள்நெறி. இத்தகையர் தம் வறுமையையோ வறுமை எனக்கொள்வர்? அல்லல்பட்டு ஆற்றாது அழப்படுத்துகிறது புல்லியர் செல்வம். அதனை மாற்றித் தேற்றுதற்கும் ஆற்றுதற்கும் விழைகின்றது நல்லுள்ளம். அதற்குத் துணையாகா வண்ணம் வறுமை குறுக்கிட்டால் அவ்வறுமை உலகோர் வறுமை யாவதன்றி அவ்வுயர்ந்தோர் வறுமையாமோ? முதிரத்துக்கோமான் குமணன் தன் நாடு இழந்ததற்கு வருந்தினனோ? இல்லை பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது என நைந்து மொழிகின்றான். இத்தகையன் வறுமை அன்றோ உலக வறுமை; - உயர்ந்தோர் வறுமை இத்தகைய உணர்வினால் அன்றோ வான முட்டும் வளமார்ந்த அரண்மனைக்கண் இருந்தும், வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, பொன் கொழிக்கும் வளநாடாண்ட குராப்பள்ளித்துஞ்சிய பெருந் திருமாவளவனையும் பொருட்டாக எண்ணாமல். உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் என்று கூறிச் செல்லுகிறார் மாடலன் மதுரைக் குமரனார். அவர் எந்நெறியில் பேசினார்? குறள் நெறியில் பேசினார். அந்நெறியாது? நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார் கண் பட்ட திரு. என்பது,கல்லார் எவர்? நல்லது செய்யக் கல்லாரே கல்லார். பிறர் கல்லார் அல்லர் - நல்லாரே. மனிதனைக் கூடிவாழும் விலங்கு என்பர்; அவன் தனித்து வாழப் பெரும்பாலும் விரும்புவது இல்லை. அத்தன்மை ஒன்றே அரசு ஆட்சி நாடு என்பவற்றைப் படைத்து வளர்த்து வந்துள்ளது. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த பழைமை மனிதன், கூட்டம் கூட்டமாகவே அலையவும், தங்கவும் நேரிட்டது. கூடிவாழும் வாழ்வு சிறப்புறப் பொதுநல உணர்வு மிகுதலும். தன்னல உணர்வு குறைதலும் வேண்டும். எல்லாரும் தன்னலத்தைக் குறைத்துப் பொது நல விரிவாளராக ஆகிவிடுவரா? முடியாது. ஆகலின் ஒரு நெறிப்படுத்திய பொதுப்பணிகளைக் கண்காணிக்கத் தலைவன் ஒருவன் தேவைப்பட்டான். அவன் என்று கண்காணிக்கும் பொறுப்பை மக்களிடத்துப் பெற்றானோ அன்றே கட்டளை இடும் தகுதியையும் பெற்றான். அவன் கட்டளைக்கு அனைவரும் அடங்கி நிற்பதும். செயலாற்றுவதும் முறைமை ஆயின. அவன் ஆணையை மீறுவது முறையற்றது ஆயிற்று. முறையற்றது எனக் கருதப்பெறுபவற்றைச் செய்பவரை அப்படியே விட்டால் முறைமை நடைமுறைக்கு வராமலே போகிவிடும் அல்லவா. அதனால் முறைமை தவறுவோர்க்குத் தண்டனை தருதலும் தேவை ஆயிற்று. இத்தேவையே. அரசாகவும், அமைச்சாகவும், அறமன்றமாகவும், படையாகவும், சிறையாகவும் வளர்ந்தது. சிறிய ஒரு கூட்டத்தை ஆளும் தலைவன் ஒருவன் பெரு வீரனாக இருந்தான் என்றால், அவன் அச்சிறு குழுவை ஆளும் அளவுடன் நிற்க விரும்பாமல், பிற கூட்டத்தவர்களையும் தன் ஆண்மையால் அடிப்படுத்தினான்; அவர்கள் மீதும் ஆணை செலுத்தினான். அவன் ஆற்றலுக்கும் ஆண்மைக்கும் ஏற்பக் குறுநிலப் பரப்பாக்கிக் கொண்டான். இப்படியே குறுநில மன்னர்கள் பெருநில மன்னர்களாகத் தலைப்பட்டனர் என்ன உரிமை கொண்டாடினால் என்ன? ஆண்மை இல்லை என்றால், அடுத்து இருப்போர் துணை இல்லை என்றால், அவன் பரம்பரை உரிமை நிலைக்குமா? வீழ வேண்டியதுதான்! அல்லது நாட்டை விட்டு ஓட வேண்டியதுதான்! இதுதானே அரசர்கள் வரலாற்றில் பெரும்பகுதியாக உள்ளது. ஆனால், இன்று அரசன் என ஒருவன் இலன்; மக்கள் அனைவருக்கும் மன்னர் என்னும் உரிமை உண்டாயிற்று. ஆள்பவர் யார்? ஆளப்படுபவர் யார்? அவர்களுக்காகவே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆள்வர்; அவர்களே ஆளவும் படுவர்; ஆள்பவர்களும் அவர்களே; ஆளப்படுபவர்களும் அவர்களே! இத்தகைய நிலைமையில் மன்னராட்சி மக்களாட்சியாக - முடியாட்சி குடியாட்சியாக - மாற்றம் அடைந்துள்ளது என்றாலும் - இன்னும் வேறு ஒரு வகையான் ஆட்சி வருமானாலும் அரசு என்னும் ஓர் அமைப்பு இல்லாமல் தீராது. பெயர் மாறலாம்; முறை மாறலாம்; எனினும் ஆள்வோரும் ஆளப்படுவோரும் இருக்கவே செய்வர்; அரசும் இருக்கவே செய்யும். எந்நாளுக்கும் எவ்விடத்திற்கும் பொதுவானது அரசு என அறிந்தோம். அது பொதுமைத் தன்மை பெறுதற்குக் காரணம் என்ன? அது இல்லாமல் உலகம் இயங்காது என்னும் ஒன்றேயாம். அவ்வாறானால், உலகை இயக்க அது என்ன தகுதியை உடையதாக இருக்கிறது? இவ்வினாவைக் கேட்டுக் கொண்டு வள்ளுவப் பெரியாரிடம் சென்றால் அவர் வாய்த்த வகை காட்டுகிறார். அறநெறியை உயிராகக் கொண்டது அரசு குற்றங் குறைகளைக் கடிவது அரசு முறைமை அமைந்த வீரத்தால் மக்களைக் காப்பது அரசு என்று வகுத்துரைக்கிறார். அறன் இழுக்கா(து) அல்லவைநீக்கி மறன்இழுக்கா மானம் உடைய(து) அரசு என்பது அவர் தம் வாயுரை! உயிரற்ற உடல் பேரினை நீங்கிப் பிணமெனப் பேர் பெறும். அறநெறி பேணாத அரசும் தன் பேரினை நீக்கிப் பேய்ப் பெயர் கொள்ளும் பேயரசு செய்தால்? - பிணம் தின்னும் அறநெறி! ஆதலால் எடுத்த எடுப்பிலேயே - அரசியல் கூறிவந்த வள்ளுவர் - அறநெறியைக் குறிப்பிடுகிறார் அறம் என்பது என்ன? மனத்துக்கண் மாசின்மையே அறம், மனமாசு இல்லாத இடத்துப் பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல், பொய்ம்மை, கொலை என்பவை உண்டாமோ? உண்டாகா வன்றே! இவை அற்றதே அறம். இத்தகைய அறத்தை உயிரெனக் கொண்டதே அரசு எனின், அவ்வரசின் கீழ் வாழ்வார்க்குக் குறைவேதும் உண்டோ? அறம் ஆட்சி கொள்ளும் நாட்டிலே முறை கடந்த நெறி தவறிய செயல்கள் தலைகாட்டுமோ? ஆள்பவர் அறநெறி பேணுவர் என்றால் அவர்தம் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அறநெறி பேணாமல் முடியாதே. ஆள்வோர் எப்படி மக்களும் அப்படி என்பது பழமொழி. முறைதிறம்பா ஆட்சி செலுத்தும் நாட்டில் தானே முறை தவறிநடப்பார்க்கு - குற்றம் புரிபவர்க்குக் கொடுந்த தண்டனை கொடுக்கப் பெறும் நல்ல உழவன் அல்லனோ, கண்ணும் கருத்துமாக இருந்து களை பறித்து எறிபவன்? ஆதலின் அறநெறி அரசியல் ஆளும் அதிகாரிகள் இடத்தும், ஆளப்படும் மக்கள் இடத்தும் குறைகள் கிளம்பா. ஒருவேளை கிளம்பினாலும் உடனுக்குடன் களைந்தெறியப் படும். அவ்வாறு களைந்து எறிதலில் - களை பறிப்பதில் - கருத்துச் செலுத்தாத அரசு அறநெறி அரசு எனத் தன்னைக் காட்டிக் கொள்ளுமாயின் பழுத்த பொய்ந்நாடகம் நடிக்கிறது என்பதே பொருந்தும்! குறை நீக்கும் நோக்கம் ஆள்வோர்க்கு உண்டென்றால், குறை நீங்கியவர்கள் அவர்கள் என்பது ஆளப்படும் மக்களுக்குத் தெளிவாக வேண்டும். அத்தெளிவு இருந்தால் அல்லாமல் மக்கள் வெள்ளம் ஆட்சி அணைக்கு அடங்கி அமைந்து கிடப்பது இல்லை. திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழன் மனுவின் புகழ், மதுரை மாநகர் அறமன்றத்தில் பாண்டி வேந்தன் முன் பாராட்டிப் பேசப்படுகின்றது - ஏன்? இளவரசன் ஏறிச்சென்ற தேர், எதிரே வந்த இளம் பசுக்கன்றின் மேல் ஏறியது; அவ்விடத்திலேயே இறந்தது. பசுக்கன்றுதானே என்றோ, கொன்றவன் இளவரசன் என்றோ மன்னன் அறநெறி கடந்தான் அல்லன். கன்று இறந்த இடத்திலேயே, தன் பசுங்குதலை மைந்தனைக் கிடத்தித் தானே அவன்மேல் தேரைச் செலுத்திக் கொன்றான். அறம் பெரிதா? ஆட்சிக்குரிய மகன் பெரியனா? என்னும் வினாக்கள் மன்னன் முன் நின்றன. அரசுக்குரிய ஒரு மகன் இறந்தாலும் இறக்கலாம்; அவன் இருக்கவேண்டுவதே அறநெறி காப்பதற்குத் தானே, அவ்வறநெறியைக் கொன்று ஆள்பவனாக அவன் வருதலினும், அவனைக் கொன்று அறநெறியை வாழ வைப்பதே முறைமை என்றது மனச்சான்று. அவ்வாறே மைந்தன் உயிரைப் போக்கி மாறா அறத்திற்கு உயிரூட்டினான். மனுச்சோழன் என்னும் மாண்புடைய அம்மன்னன் நடுவுநிலை அறத்தை அறியார் யார்? தங்கள் குறையகற்றி வாழ்தல் தம் குடிமக்களிடத்துக் குறையகற்றி இனிது ஆள்தல். இவ்வளவுடன் அரசின் கடன் ஒழியுமா? இனிய வாழ்வைக் கெடுக்கும் இன்னாப் பகைவர் எக்காலத்தும் எவ்விடத்தும் உளரன்றோ? அவர்களை என்ன செய்வது? மண்ணாசை கொண்டோ, மாறுபாடு கொண்டோ மார் தட்டிக்கொண்டு தாக்க வரும் பகைவரைக் கண்டு பரிவு காட்டுதல் தகுமா? ஆட்சியே உயிரெனக் கருதித் தம் உழைப்பால் பெறும் பயனின் பெரும்பகுதியை ஆட்சிக்கு வரியெனத் தந்து வாழும் குடிமக்கட்குத் தக்க பாதுகாப்புச் செய்ய வேண்டாமா? மக்கள் நலங்கருதிய பொதுக் கடமைகளைப் புரிதற்கும், அச்சமின்றி இனிது வாழ்தற்கும் ஆகவன்றோ ஆட்சி ஏற்பட்டது. அதனை நிறைவு செய்யா அரசு அரசு ஆகுமா? பகைவரோடு நிற்கும் போர்க்களத்திலும் அறநெறி பேணுவதே பழந்தமிழர் வழக்கு, வஞ்சம் சூது இல்லாமல் தாக்குதல் தீயவரை வெறுக்காமல் தீய தன்மையை மட்டும் வெறுத்தல், காலமும் இடமும் குறித்துத் தாக்குதல், ஒத்த வலிமை உடையாரையே தாக்குதல், தாக்க வருவாரை மட்டுமே, தாக்க நிற்கும் வேளையில் மட்டுமே தாக்குதல். இவ்வாறாக அறப்போர் புரிந்தனர். போர்க்களத்தில் ஆற்றல் காட்டிப் போரிடுவதும், பாசறையில் அன்பு காட்டிப் பழகுவதும் அக்காலச் சூழ்நிலையில் எளிய நிகழ்ச்சிகளாகவே இருந்தன. இவ்வாறாக அறநெறிக்குப் புறம் போகாத ஒன்றே ஆண்மை என்றும், பேராண்மை என்றும், மானம் என்றும் போற்றப் பெற்றன. அறநெறியை முதலாகக் கொண்டதே அரசரது வெற்றி; அதனால் இவர் நம்முடையவர் எனக்கருதி அவர் செய்த கொடுஞ்செயலைப் பொறுத்தலும், இவர் நமக்கு அயலார் எனக் கருதி அவர் செய்த நல்ல செயல்களைப் பாராட்டா திருத்தலும் கூடா என்று பைந்தமிழ்ப் பாவலர் மதுரை மருதனிள நாகனார் வலியுறுத்தும் உரை பல்காலும் நினைக்கத்தக்கது. இவ்வுரை ஆட்சி அறததை எடுத்துக் காட்டத் தக்க சான்றாம். அரசு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் முதற்கண் தன் நாட்டு மக்களைக் காத்துக்கொள்ள வேண்டும். மக்களைக் காக்கத்தவறும் அரசு மதிகெட்ட அரசே! தன்னைப் பல்வகைச் சிக்கல்களிலும் புகுத்திப் பாழ்படுத்திக் கொள்ளலாமா தான் சாகமருந்து உண்பார் உண்டே? என்பது பழமொழி மக்களைக் காக்கத் தவறும் அரசு தான் சாக மருந்துண்ணும் அரசே யாம். உருசிய நாட்டை ஆண்டான் சார். அவன் எத்தகைய கொடுங்கோல் புரிந்தான் உழுது விதைத்து அறுப்பவர்க்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதிய பெருங் கொடுமைச் சிறையுண்டு தூக்குண்டு இறப்பது உண்டு முழுதுமொரு பேய் வனமாம் இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்தது இத்தகைய கொடுங் கூத்தாட்டுக்குக் கிடைத்த பரிசுகள் எவை? இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் சார் அரசன். இவனைச் சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சமடர் சட சட என்று சரிந்திட்டார் புயற்காற்றுச் சூறை தன்னில் திடுதிடு என மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே வீழ்ந்தான்! வினை விதைத்தவன்! வினைஅறுத்தான்! தமிழ்ப்பாட்டி உரைத்தாளே. குடியுயரக் கோலுயரும் என்று எவ்வளவு பொருள் பொதிந்த மொழி. குடிகளை அழித்தான். கோல் அழிந்தான்! - இது சார் ஆட்சிக்கு மட்டுமன்று. எவர் ஆட்சிக்கும், எந்நாட்டு ஆட்சிக்கும் எத்தகைய ஆட்சிக்கும் பொதுவானது. குடியாட்சி. எனப் பெயர் பெறும் ஆட்சிகளும், இனிப் புதிதாக எம் முறையிலேனும் தோன்றுமாயினும் அவ்வாட்சி நெறிகளும் இவ்விதிக்கு விலக்காகா. ஆதலால், இதனை அரசியல் தொடக்கத்திலேயே - எடுத்த எடுப்பிலேயே வலியுறுத்த வேண்டியது அறவோர் கடன். அக்கடப்பாட்டையே செவ்வையாக நிறைவேற்றுகிறார். நயமறிந்து உரைக்க வல்ல நாவலர் வள்ளுவர். அரசு நிலைக்க வேண்டும்; மக்கள் திளைக்க வேண்டும் என்னும் கனிந்த நெஞ்சர் அவர். அக்கனிவின் முத்திரை. அறன் இழுக்கா(து) அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடைய(து) அரசு என்பது அறநெறியில் தவறாமை. அறமல்லாதவற்றை ஒழித்தல், முறைதவறா வீரப்பேறு, இவற்றைக் கொண்டிருப்பவரே ஆள்வோர்: அவர்களால் ஆளப்படுவதே அரசு என்பது இதன் பொருள். 6. ஒரு குறள் ஒரு குறள் என்பது ஒரே ஒரு குறள் என்பதையும் குறிக்கும். ஒப்பற்ற குறள் என்பதையும் குறிக்கும். அழுக்காறு என ஒரு பாவி என்பதிலுள்ள ஒரு ஒப்பற்ற இணையில்லா, ஈடில்லா என்னும் பொருளதேயாம். ஒப்பில்லா மேன்மைக்கு ஒரு குறள் என்றால், ஒப்பில்லாக் கீழ்மைக்கு அழுக்காறு அடைமொழிதான் உயர்வுக்கும் ஆகும்; தாழ்வுக்கும் ஆகுமே! குறள் என்பது யாப்பின் பெயர். அவ் யாப்பின் பெயர், குறுவெண்பாட்டு என்பது, ஏழு எழுத்து முச்சொல். மூன்றெழுத்து ஒரு சொல்லாய்க் குறள் வடிவு எய்துகின்றது. குறளடி என்னும் பெயர் தொல்காப்பியத்தில் உண்டு. குறட்பா குறள் என்பவை ஆங்கு இல்லை. புறநானூற்றில் குறள் உண்டு, அது உடற்குறை வகையுள் ஒன்று (28) குறுவெண்பாட்டைக் குறளாக்கி, அதனை நூற் பெயராக்கி வைத்த கொடை வள்ளல், வள்ளுவரே எனல் தகும். அவரும் குறள் என்னும் செ ல்லை நூலினகத்துச் சுட்டினாரும் அல்லர். நூற் பெயராகவே அமைத்தார். அக்குறள் என்பதைப் பின்னவர் கொண்ட மதிப்பால் திருக்குறள் ஆக்கிப் பெரிது படுத்தினர். குறள் என்பது ஒரே ஒர் ஆசையால் அனது. ஆம்! ஒரே ஒரு நிரையசை. ஓரசையால் இப்படித் தமிழ்ப் பரப்பில் ஒரு நூல் உண்டோ? இல்லை ஏலாதி என்னின் மூன்றெழுத்து மூவசைச் சொல் ஆயிற்றே! பிறிதொன்று எது? குறளின் நயமும் சுருக்கமும் விரிவும் எல்லாம் குறள் என்னும் பெயரமைதியிலேயே அமைந்த திறம் இது! குறளுக்குக் குறளாகவே பாராட்டு வழங்கிய வள்ளுவமாலைப் பாட்டுகள் இரண்டு உண்டு. அவை; கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று வருவன. முறையே இடைக்காடர், ஔவையார் பெயர் களால் உள்ளவை. இரண்டும் குறள் என்பதை நிரையசையாகக் கொண்டு நிறைந்தவை. இவ்வாறே பொன்முடியார், நரிவெரூஉத் தலையார், என்பார் பெயரால் உள்ள வெண்பாக்கள் இரண்டிலும் (14,33) குறள் என்னும் முடிவுள குறட்பாவின் அளவுச் சிறுமையையும், பொருட் பெருமையையும் உட்கொண்டே கடுகுக, அணு என்பவற்றை உவமை காட்டி, அவற்றைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி வைத்ததை, ஊடே வெட்டினால் உண்டாகும் வெள்ளப் பெருக்கெனப் பொருட் பெருக்குள்ளது என்பதைக் காட்டினர். இதில் ஏழு கடல் என்றது ஏழுசீர்களைக் கருதியது. ஒவ்வொரு சீரும் ஒருகடல் போன்றது என்னும் குறிப்பினது. இனித் தினையளவு தானும் இல்லாத புன்னுனிப் பனி நீரில் நீண்ட பனையும் தெரியுமாறு போலக் குறட்பாவில் பொருள் விரிவுண்டு என்பதைத் தினையளவு போதாச் சிறுபுன்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் என்னும் வள்ளுவமாலைப் பாட்டு காட்டும் (5: கபிலர்) தொன்ம நூல்கள், திருமால் குறள் வடிவாக வந்து ஈரடியால் உலகம் அளந்த கதையைக் கூறும். அதனை உட்கொண்ட வள்ளுவ மாலைப் பாடல்கள் இரண்டுள. குறள் வடிவ உருவமும் ஈரடிப்பாவும் தூண்டி நிற்க, அவை எழுந்தனவாம்6.14; பரணர், பொன்முடியார்) ஈரடியால் உலகத்தை அடக்கிய குறள் உயர்வு உரைப்பவை அவை. அதே குறள் என்னும் பெயரிலும் கதையிலும் ஒன்றிய கம்பர் இரட்டுறல் அணிவிளங்க, ஆல் அமர்வித்தின் அருங்குறள் என்றார். ஆலமரத்தின் விதைச் சிறுமையும் உறுப்புப் பெருமையும், தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே என்னும் நறுந்தொகைப் பாட்டும்(17) சென்னை அடையாற்று ஆலமரக் காட்டும் இனிதின் உணர்த்தும். குறள் ஈரடி வெண்பா ஆகும். ஆனால் நிரம்பிய ஈரடிகளா அவை. முதலடி நாற்சீர், முடிவடி முச்சீர்! முச்சீரேனும் முழுதுண்டா? இல்லை. காசு, பிறப்பு வாய் பாட்டின் உ கரம் அளவு பெறா. நாள், மலர் என்பனவோ அசைச்சீர் பெயரால் ஏழுசீரும், அளவால் 6 1/2 சீரும் உடைய குறும் பாட்டு அல்லவோ குறட்பாட்டு குறளின் ஓரடியின் பெரிதும், மற்றோரடியின் சிறிதும் கோவைப் புலவர்களைத் தூண்டியுள்ளன. அதனால் களவுக் காதலர் இணைந்து நடையிடும் ஈரடித் தடம் போல்வன இவை என உவமை கண்டனர். அவன் காலடியொடு அவள் காலடி தொடர்வதுபோல ஈரடி இயைந்து செல்லலைக் காட்டினர். ஆனால் சிவப்பிரகாசர் அத்தடத்தின் போக்கையும் அமைவையும் நுணுக்கமாக எண்ணி ஓர் அரிய உவமை கண்டார். அம்மையப்பனாகக் கோலம் காட்டுபவன் உமை ஒருபாகன். அவன் பெண்ணுரு ஒரு திறன் ஆகியவன். அவன் காலடி பெரிது: அவள் காலடி அவன் காலடியிற் சிறிது! ஒருவனும் ஆகாமல், ஒருத்தியும் ஆகாமல் ஒருவர் ஆன அவர்தம் ஈரடிகளே - இணையடிகளே - எம் அடிகளாம் வள்ளுவப் பெருந்தகையின் குறள் அடிகள் எனப் பெருமிதம் கொண்டார். அதனால். என் அடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும் என் தலையில் இறுத்தும் இறை -திரு வெங்கைக் கலம்பகம் -42. என்றார். ஒரு தாய்க்கு இரண்டு: மூத்தவன் - பெரியவன் ஆண்: இளையவள் - சிறியவள் - பெண்: அவர்களைச் சுட்டும் பாவேந்தர். திருக்குறள் ஈரடி எம்மிரு மக்கள் எனத் தாய் வழியாகப் பேசுகின்றார். திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் எனப் பாரதியார் திருக்குறள் நயத்திலும் விரிவிலும் சொக்கியவராகக் கூறுகிறார். திருக்குறள் முதற் குறள் உவமை என்பதொரு நூல். அது கு.கோதண்டபாணியார் இயற்றியது. குறளின் ஆழமும் விரிவும் காண விரும்புவார் அந்நூலைக் காண்க. அதிலே ஒரு குறிப்பு: திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை, அதன் உண்மையான ஆழம் ஆயிரம் அடியும் அதற்கு மேலும். அது அதனை இரண்டடியாகக் காட்டி ஏமாற்றுகிறது. அடித்தளத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவழமும் பிறவும் நிரம்பக் கிடந்து மிளிர்கின்றன. இடையிலே வேறு சில பொருள்களும் மிதக்கின்றன. கோடையில் சூரிய ஒளி அடித்தளம் மட்டும் ஊடுருவிப் பாய்கிறது. அடியிலுள்ள பொன்னும் மணியும் பளபளவென்று மின்னுகின்றன. இடையில் மிதக்கின்ற சிப்பிகளும் கிளிஞ்சில் ஓடுகளும் மின்னுகின்றன. உற்று நோக்குபவர்கள் இரண்டடி ஆழந்தானே என்று கையை நீட்டுகிறார்கள். கை குட்டையானது. ஓடையின் அடித்தளம் எட்டவில்லை. துழவுகிறார்கள்; ஏதோ தட்டுப் படுகிறது. அதுதான் அடியிலுள்ள பொன்னும் மணியும் என்று எடுத்துப்பார்க்கிறார்கள். தாம் முயன்று எடுத்த பொருள் அல்லவா! தம் முயற்சியில் உள்ள மதிப்புக், கிடைத்த பொருள் பொன்னா மணியா சிப்பியா கிளிஞ்சிலா என்று ஆராய வொட்டாமல் கிடைத்த பொருளிலேயே உயர்ந்த எண்ணத்தை உண்டாக்குகிறது. மதிப்பை உயர்த்துகிறது; அப்படியே பதிய வைக்கச் செய்கிறது. கை நீளமானவர் சிலபேர், மிடுக்கோடு முக்குளிபோட்டு மூழ்கி மூழ்கித் துழாவினர். மண்ணை எடுத்து வந்தனர் சிலர்; பொன்னை எடுத்து வந்தவர் சிலர்; மணியை எடுத்து மகிழ்ந்தவர் சிலர்; இவ்வண்ணம் குறளோடையின் அடித்தளத்தில் உள்ள அரும் பெறற்பொருள்களைத் தருமர், மணக்குடவர், முதலிய நீர் மூழ்கிகள் அடித்தளம் வரையிற் சென்று அகப்பட்டதை எடுத்துக் கொண்டுவந்து பரப்பி அதன் அருமையை எடுத்துக் காட்டினர். தகுதிவியத்தல் - தண்டபாணியார் பக்.16 திருக்குறள் விடு தூது என்பதொரு புது நூல்: அது கழக ஆட்சியாளராக விளங்கிய தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்கள் மேல் பாடப்பட்ட நூல். அதில். v©Âš vGÓnu v‹gh®fŸ bkŒahf v©Âš vGÓnu v‹gjid X®th®fŸ: v©z¥ bgU»baG« v©z¤ij ahuhY« v©z‰ »iaínkh v©ikahŒ!` எண்ணரியாய்! கண்ணுட் குறும்பாவை காணும் கடலென்ன எண்ணுட் படுதற்கும் எட்டாப் பெருந்தக்காய்! நேரசையோ அன்றி நிரையரையோ உன்னிடத்தாம் ஓரசையும் ஓருலகாய் ஓங்க ஒளிர்மாண்பே! வேட்ட பொழுதில் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோளென்னும் இன்புரைக்குக் காட்டாய் இலங்கும் கவின் பொருளே! காலமெலாம் தேட்டாய்க் கொளத்தக்க தேர்ச்சித் திருத்துணையே! ஆர்வத்தால் கற்பார் அறிதோ றறியா ம நேர்வரென நேர்ந்தசீர் நின்னுரைக்கு நேர்சான்றோ! நாடி நவில்தொறும் நூல்நயம் நண்ணற்குக் கூடிச் செறிந்த குறையாத பேரேடே! மூத்த தமிழ்க் குடியின் மூவா வளச்சுடரே யாத்த அறவாழ்வே! யாண்டைக்கும் ஆம் சுரப்பே! வற்றாப் பெருக்காறே வாடாக் களஞ்சியமே! கற்றார்க் கமைந்த கருவூலக் காப்பகமே பாட்டுள் பயின்று பலகாலும் நின்றுபின் கூட்டுள் அமுதாகிக் கொஞ்சும் கொடைவாழ்வே! வாட்டும் அனற்கோடை வாழ்வை இளந்தென்றல் ஊட்டும் நிலாமுன்றில் ஆக்கும் ஒளிப்பேறே! கற்பார் தமையெல்லாம் காதல் மகவாக்கி நற்பால் நயமூட்டும் நாடறியாத் தாய்வடிவே! வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டித் தெய்வத்துள் வைக்கத் திறஞ் சொல்லும் தெய்வமே! என நீள்கிறது. திருக்குறளின் சிறப்புகள் மிகப்பல. அவற்றுள் ஒன்று அச்சுச் சட்டம் என ஒரு தடைச் சட்டம் 1835 வரை இருந்தும் அதனையும் மீறி 1812 இலேயே வெளிவந்த தமிழ் முதல் நூல் அது. அதனை வெளியிட்டவர் நெல்லை அம்பலவாணக் கவிராயர். வெளி வந்த அதே ஆண்டிலேயே எல்லிசு என்பாரின் உரைப் பதிப்பு ஒன்றும் வெளி வந்தது. சரபோசி மன்னர் கல்கத்தாவுக்குச் சென்று அந்நாள் துணையரசரைக் கண்டபோது அவர் திருக்குறள் பற்றி வினாவிய வினவே சரசுவதிமால் என்னும் சுவடிச்சாலையாகக் கிளர்ந்தது. இன்னா செய்யாமைக் கொள்கையைத் தால்சுதாய் மேற்கொள்வதற்குத் தூண்டுதலாக இருந்தது திருக்குறள் பிரெஞ்சு மொழி பெயர்ப்பே. அம் மொழிபெயர்ப்பே தால்சுதாய் காந்தியடிகளார்க்குநினைவூட்டப் பெற்று, அதன் மூல மொழியிலே பயில வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கிளப்பித் தமிழைக் கற்க அடிகளை ஏவிற்று. அம்முருகிய ஆவலே அடிகளைத் தமிழ்ப் பிறப்புப் பிறக்க வேண்டும் என்னும் அவாவையும் எழுப்பிற்று. திருக்குறள் வெள்ளித் தட்டத்தில் வைக்கப்பட்ட பொன் ஆப்பிள் என்று பாராட்டவும் தாசுமாலில் ஒரு கல்லைப் பெயர்த்து அப்பெயர்ப்புப் புலப்படாமல் வைத்தாலும் வைத்து விடலாம் ஆனால் திருக்குறளில் ஒரு சொல்லைப் பெயர்த்து அப்பெயர்ப்புப் புலப்படாமல் ஒரு சொல்லை வைத்துவிட முடியாது என்று வியந்தேத்தவும் படுவதாயிற்று. உலகப் பெருஞ் - சிந்தனையாளர் இங்கர்சால், தம் பொழிவுத் தொடக்கத்தில் எப்பெருள் யார் யார் வாய் எப்பொருள் எத்தன்மைத்து அறிவு அற்றம் காக்கும் கருவி என்னும் குறள்களை முன் வைத்துச் சொல்லத் தூண்டியதெனின் அதன் சிறப்பியல் விளங்கும். மாந்தனுக்குத் தன்னம்பிக்கையூட்டி மேலே செலுத்துவதில் திருக்குறளுக்கு ஒப்பானதொரு நூல் உலகில் இல்லை என்று பெருந்தகை ஆல்பிரட்டு சுவைட்சரும், திருக்குறள் பிறந்த மண்ணில் போல் அறநெறி ஈதென உரைப்பது தக்க தாகாது என்று பேராசிரியர் போப்பையரும் கூறிய பெருமையது. என்னைக் கவர்ந்த குறள் என்னும் தலைப்பில் ஒரு குறளைப் பற்றி எழுத என்னை வேண்டினார் ஓர் இதழாசிரியர். என்னைக் கவராத குறள் எதுவும் இல்லை என்று சொல்லி எழுதுதல் தவிர்ந்தேன். 7. வள்ளுவம் காட்டும் வாழ்வியல் வள்ளுவர் தனிப் பொது நெஞ்சம் யாது? செயல், செயல், செயல் சொல்லுவது செயலுக்கு வர வேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஒர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க. குறள் கற்பேன்: நிற்பேன்: நிற்கக் கற்பேன்: குறள் வாழ்வு வாழ்வேன்: வள்ளுவர் ஆணை என்று எண்ணுமின் எண்ணத் திட்பங் கொள்ளுமின் என்பவை மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் எழுதிய வள்ளுவர் நெஞ்சமாகும் (வள்ளுவம் பக் 26.34) வள்ளுவம் வழிபட எழுந்த நூல்அன்று: வழிப்பட்டு நடக்க எழுந்த நூல்.. வள்ளுவம் மேற்கோள் காட்ட எழுந்த நூல் அன்று: வாழ்வில் மேற்கொண்டு ஒழுக எழுந்த நூல். வள்ளுவம் ஒப்பிக்க எழுந்த நூல் அன்று: ஒப்பிலா ஒன்றாகக் கொண்டு ஒழுகக் கிளர்ந்த நூல். படிப்பாளியைப் படைப்பாளி நிலைக்கு உயர்த்த எழுந்த நூலைப் படிப்பு நூலாக மட்டும் கொள்ளாமல் அப்படியே காட்டும் படிவ நூலாகக் கொள்ளல் வழிபடுவார், மேற்கோள் காட்டுவார். ஒப்பிப்பார், படிப்பார் கடமையாகும். அதுவே, வள்ளுவர் நெஞ்சம் உணர்ந்த நேரிய செயலாகும். இயற்கை உலகைச் சுட்டி இயக்கும் இயவுளாம் இறைமையைக் காட்டி அவ்விறைமைப் பண்புகள் இவையென நாட்டி இறைமையை வாழ்த்துகிறார். மாந்தர் வாழ்வுக்கும் உயிர்கள் உய்வுக்கும் அடிப்படை அமிழ்தமாம் வான்சிறப்பை அருளிறையின் ஒழுக்காக நிலைப்படுத்துகிறார் வள்ளுவர். உலக இயக்கப் பண்பாடு உயர் சான்றோர் வழியது என்றும், தந்நல மற்றுப் பொது நலமுற்ற அவர்களே கண்ணேரில் நின்று உலகைக் கண்ணோட்டத்துடன் காப்பவர் என்றும் உணரச் செய்து, மனத்துக்கண் மாசிலா அறப்பயனை வலியுறுத்தத் தொடங்குகிறார். அறன் இன்னதெனக் கூற அவாவிய அவர், அறத்தால் பொருள்தேடி அப்பொருளால் இன்புறுதல் என்பதை அறியுமாறு முப்பால் வைப்பை முறையாகப் போற்றுகிறார். அறத்தை வாளா கூறாமல் வலியுறுத்திக் கூறுகிறார். ஆம் இடித்தும் கூறுகிறார்: அடித்தும் கூறுகிறார்; வாயறை அறைந்தும் கூறுகிறார். கையறை அறைந்தும் கூறுகிறார். அவ்வலியுறுத்தலை எப்பாலோர்க்கும் எந்நிலையோர்க்கும் பொருந்தவும் உரைக்கிறார்: கால இட வேறுபாடு காண ஒண்ணா வகையிலும் கூறுகிறார். வள்ளுவர் ஒரு சிறிய குடும்பத்தைக் காட்டி, கோடி கோடியாக விரிந்துள்ள வியனுலகப் பரப்புக் கெல்லாம் விரிக்கின்றார். தாம் தம் நூலை நாடக உத்தியில் தொடங்கு கிறார், ஏன்? மங்கல விழாக் கோலத்துடன் மணமேடையிலேயே தொடங்கி மணமகனுக்கும் மணமகளுக்கும் கற்றத்திற்கும் அறமாண்மைத் திறமாகக் கூறுகிறார் வள்ளுவக் கடைப்பிடியர்க்கு வாய்க்கும்பேற்றை வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என வாயுறை வாழ்த்தாகவே வழங்குகிறார். மணமகளே! மணமகளே!! இந்நற் பொழுதிலே மகிழ்வுப் பொழுதிலே மறவாமல் எண்ண வேண்டிய வாழ்வியல் செய்திகள் உண்டு. அவற்றுள் தலையாயது ஒன்று. அது உன்னைத் தந்த தந்தை, உன்னை ஆக்கிய தாய், உனக்கு உயிர்த்துணையாக இப்பொழுது உன்னோடு வந்து ஒன்றாகி உடனாகி உயிராகி இருக்கும் துணை. இம்மூவரையும் நீ வாழும் நாளெல்லாம் நிலைபெற்ற துணையாக இருந்து பேணிக் காக்க வேண்டும். உன் பெற்றோர் எத்தகையர்? உன் உயிர்க்கும் உடற்கும் உணர்வுகளுக்கும் அறிவு பண்பாட்டு நலங்களுக்கும் மூலவர்கள் அல்லரோ. அவர்கள் தாமே உன் நலங்களுக்கெல்லாம் வைப்பகமும் காப்பகமுமாக இருந்தவர்கள். அத்தொடர் நிலை வாழையடி வாழையாக வாய்ப்பதற்காகத்தானே ஒர் உயிர்த்துணை இன்று உன்னோடு இணைந்துள்ளது. அத்துணையைப் பேணிப் போற்றும் அளவு எவ்வளவு. அவ்வளவு உன் குடும்பம் உயரும்: குலம் உயரும்: உலகம் நலம் பெறும். இனிய மணமகனே, நீ நீடு வாழ வேண்டும்: நீ தும்மும் போது கூட நீடுவாழ்க என்பவள் உன் துணை தான். ஊடி நின்றாலும் கூட உனக்குத் தும்மல் வந்தால் தன்னை மறந்து உன்னில் தோய்ந்து நீடுவாழ்க என்று வாழ்த்தி நாணி நிற்பவள் அவள். உன் உயிர் தளிர்க்கச் செய்ய வாய்த்தவள்-வந்தவள் அவள். அவள் எலும்பால் தோலால் சதையால் நரம்பால் குருதியால் நீரால் அமைந்தவள் என எண்ணாதே. உன் உயிர் தளிர்க்கச் செய்யும்; அழுதால் செய்யப்பட்டவள் என்பதை அறிக. அவளே உனக்கு வேண்டுவ வேண்டுவவெல்லாம் வழங்கும் கற்பகம். அவள் சிறப்பே உனக்கு ஊர் வழங்கும் சிறப்பு. அவள் வழங்கும் இனிய கொடையே மக்கட்பேறு. அம்மக்களின் உடல்-உரை-செயல் எப்படிப் பட்டவை? அமிழ்தம் தந்த அமிழ்தம் என்றால் அதுவும் அமிழ்துதானே! அது தொடுதலும் அமிழ்து: அது மொழிதலும் அமிழ்து: அது வழங்கும் உணவும் நீரும் அமிழ்து. அமிழ்திலே திளைக்கச் செய்து ஆருயிர் தளிர்த்தோங்கச் செய்யும் அமிழ்து! அந்த அமிழ்து உன் சொத்தா? ஆம், உன் சொத்துத் தான்! அந்த மிழ்து உன் குல இன நாட்டு மொழிச் சொத்தா? ஆம், இவற்றின் சொத்தும் தான்! ஆனால் இவ்வளவில் நின்றால் என்ன பயன்? பெறுமவற்றுள் யாமறிந்த பேறு மக்கட்பேறே என வாழ்த்தி என்ன பயன்? பழிபிறங்காப் பண்பின் மக்கள் வழி வழி வர வேண்டும் என்று பாடு கிடந்து பெற்றதன் பயன் என்ன? ஆன்றோர் அவையிலும் சான்றோர் அவையிலும் வல்லாண்மையர் வளமையர் அறவர் அருளர் அவைகளிலும் முந்தியிருக்கச் செய்ததன் பயன் தான் என்ன? உன் குடியளவில் நிற்கவா? சான்றோர் புகழும் சொல்லைக் கேட்டுத் தான் மட்டும் தளிர்த்தலா தந்தையும் தாயும் ஆகிய உங்கள் கடமை? உங்கள் மக்களை உயர் அறிவர் ஓங்கிய பண்பர் ஆக்குவது உலகுக்காக அல்லவோ எதிர்கால உலகத்தின் மேதக்க பொருளையல்லவோ உங்கள் திருவயிறு வாய்க்கப் போகிறது? மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்பவற்றை எண்ணுக என்கிறார். மணமகளை நோக்கிக் கூறுகிறார். மணமகளே! மணமகளே! இல்வாழ்வான் பெற்றோர்க்குத் துணை உனக்குத் துணை என்றேன். அவ்வாறானால் அவனுக்கு நீ துணை என்பதும் தெளிவுதானே. நீ அவனுக்கு எப்படித் துணை? நீயே மனைத்தக்க மாண்புத் துணை: கணவனுக்குத் துணை: அவன் நிலை அறிந்து உதவும் வாழ்வுத் துணை! நீயே குடும்பத்துக்குக் காலத்தால் உதவும் மழை போன்றவள், வேண்டும் என்னும் போதில், வேண்டியவாறு பெய்யும் மழை போன்றவள். தன்னைக் காப்பவள் நீ! தன்னைக் கொண்டவனைக் காப்பவள் நீ! உயர் புகழுக்கு இடமானவள் நீ! கடமையிற் சோர்வில்லாத காரிகை நீ! உன்னைக் காக்கச் சிறை வேண்டுமா? உன் நிறை காவல் முன் சிறை யெல்லாம் தூள் தூள் அல்லவா? உன்னைப் போலவே உயர் குணங்கள் எல்லாமும் அமைந் தானே உன் துணை, உங்கள் வாழ்வு தானே மண்ணிலேயே விண்ணகமாகத் திகழும் வாழ்வு: உன் நடை மென் நடை! உன் நகைப்பு மெல்லிது! இனியவே கூறும் இயற்கை! விருந்தோம்பு விழுப்பம்! பழியறியாப் புகழ் வாழ்வு! மக்களைப் பெற்ற பேறுடைமையில் மகிழ்பவளா நீ! இல்லை! இல்லை!! மேலோர் புகழும் மேலாம் மக்களைப் பெறுதலும், மேலோர் பழிக்கும் செயல் புரியா மேலாம் மக்களைப் பெறுதலும் - அல்லவோ நோன்பெனக் கொண்டனை! உன் வயிறு பசித்துக் கிடக்கும் நிலையிலும், உன் வயிற்றுப் பிறந்த பிறவி, உன் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக மாறான வழியில் பொருள் தேடுவதையும் விரும்பாத மாசிலா மணி அல்லவோ நீ! பழிச் செயல் செய்யும் நிலையில் தான் பெற்ற மகன் என்று எண்ணி அதனைப் பொறுத்துக் கொள்ளாப் புகழ்ப் பிறப்புக் கொண்டவள் அல்லவோ நீ! உன்னினும் பெருமைப் பிறப்பு ஏதேனும் உண்டோ? இல்லையே! என்கிறார் இனி மக்களை நோக்கிச் சொல்கிறார் வள்ளுவர், மணவிழாவுக்குப் பெற்றோர் கூட்டம் வருவது போல மக்கள் கூட்டமும் வரத்தானே செய்யும்! மக்களே! மக்களே! நீங்கள் தாமே வருங்காலக் கணவன் மனைவியர்! நீங்கள் தாமே வருங்காலப் பெற்றோர்! கணவன் மனைவியர்க்கும் பெற்றோர்க்கும் இன்று சொல்லியவை. உங்கள் வருங்காலத்திற்கு உரியவை அல்லவா! இவ்வுயரிய மக்களைப் பெற இவர் பெற்றோர் என்ன பேறு பெற்றனரோ என்று உலகம் புகழ உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் அல்லவோ! நீங்கள் கற்பன கற்றல் வேண்டும்! குற்றமறக் கற்றல் வேண்டும் : கற்றபடி நிற்கக் கற்றல் வேண்டும்! செல்வத்திற் செல்வம் கல்விச் செல்வம் அல்லவா! தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றுப் போல ஊறுவது அல்லவோ, எந்நாடும் தம் நாடாய், எவ்வூரும் தம் ஊராய் ஆக்கும் கல்வி கல்வியைக் காலமெல்லாம் கற்கவேண்டும் அல்லவோ ஒருமுகப்பட்டு நீங்கள் கற்றால் என்றென்றும் கை கொடுத்து. உதவும் கருந்தனமாக அல்லவோ அமையும் அது! கல்லாப் பிறவி ஒரு பிறவியா? கல்லாப் பிறவி களர் நிலம் போன்ற பிறவி அல்லவா! கல்லாதார் எவ்வளவு அழகராய் இருந்தாலும் என்ன? மண்ணால் செய்த பொம்மைக்கும் கூட அழகு இல்லையா? கல்லாதவரும் கூடக் கற்றாரை அடுத்துக் கேட்கலாமே நல்ல செய்திகளை? எந்த அளவு கேட்டாலும் அந்த அளவு நலம்தானே. ஆற்றுப் பெருக்கு அற்ற நாளில் ஊற்றுச் சுரப்பு உதவுவது இல்லையா? அதுபோல் கல்வியால் பெறமுடியா அறிவையும் கேள்வியால் ஓரளவு பெற்றுக் கொள்ளலாமே, வழுக்கல் நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல் உதவுமே, உயர்ந்த கேள்விச் செல்வம் கல்விஅறிவு-கேள்வி அறிவு- உண்மையறிவு-பட்டறிவு-என்பனவெல்லாம் என்ன பயன் செய்வன? உண்மையை உணர்த்தும் தெளிவை ஆக்கும்! போன போக்கில் மனத்தைப் போகவிடாது தடுத்துக் காக்கும் அவ்வறிவுதானே, வருவதை உரைக்கும்: எதிரதாக்காக்கும்; அதிரவருதலை அகற்றும்; அஞ்சாமையை ஆக்கும்! உலகம் உவப்பச் செய்து உலகாக ஆக்கும். உள்ளம் உடைமை உடைமை என்பதை அறிவு தானே நிலைநாட்டும்! அந்த அறிவே, பிறிதின் நோயைத் தன் நோயாகக் கருதச் செய்து உதவும்! அந்த அறிவே, ஊருணி நீர். ஊருக்குப் பொதுவாக உதவுவது போல், ஒப்புரவுக்குப் பயன்படும் என்கிறார். ஒவ்வொரு குடும்பமும் இவ்வாழ்வியலைக் கடைப்பிடியாகக் கொண்டால், இவற்றின் கூட்டமைப்புத் தானே உலகம்! உலகமே வீடுபேற்று நிலையமாக - இன்ப உறையுளாகத் திகழும் அல்லவோ! 8. திருக்குறள் வாழ்வியல் உரை திருக்குறளை வாழ்வியல் நூலாகப் போற்ற வேண்டும்: அவ்வாறு கொள்ளாமல் இலக்கியமாக - மேற்கோள் நூலாக - ஆய்வு நூலாக - இன்ன பலவாகக் கொள்ளலில் எப்பயனும் இல்லை. வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பது இல்வாழ்வின் நிறைவுக் குறளாக இருக்கும் ஒன்றே இதனை மெய்ப்பிக்கும். மண்ணை விண்ணுக் கொப்பென மாற்றும் தூயன் வள்ளுவன் வண்மை நூலைத் தம்பியே வாழ்க்கைப் பேறாய்க் கொள்ளுவாய் என்பது மாணவ நிலையர்க்கு வலியுறுத்தும் வலியுறுத்தல், வள்ளுவம் பரவ வேண்டும். வாழ்வியல் துலங்க வேண்டும் என்பது கடந்த நாற்பான் ஆண்டுகளுக்கு முன் தொட்டுத் தொடர்ந்து மேடை தோறும் யான் கூறிவரும் பாட்டாகும். இவ்வுணர்வொடு, குறளாயம் கண்டவரும், குறளியம் கண்டவரும் நம்மறை நம்பியரும் ஆகிய வேலா தொடர்பால் வாழ்வியல் உரை காணவாய்ந்தது. அவ்வுரை வாழ்வியலை முன்வைத்தே வரையப் பெற்ற உரையாகும். ஒருவர் இறந்தபின் என்ன ஆவார் என்று வள்ளுவர் கூறுகிறார்? என வினாவிய ஒருவர்க்குப் பாவேந்தர், செத்தவனுக்காகத் திருவள்ளுவர் நூல் எழுதவில்லை; வாழ்பவனுக்காகவே எழுதினார் என்று மறுமொழி உரைத்தார் என்பது நினைவு கூறத்தக்கதாம். வாழ்வியல் நோக்கில், ஏறத்தாழ 130 குறள்களில் பிறபிற உரைகளொடும் சிறிதும் பெரிதுமாகப் புதுவதாம் உரை கொண்டது எம் வாழ்வியல் உரையாகும். இதனைக் குறளாயமே வெளியிட்டது ஆண்டு 1990. இவண் அவ்வுரைச் சான்றாகச் சில குறள்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முற்றிலும் புதுவது என ஒருவர் ஒரு கருத்துக்குத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளுதல் சால்பாகாது. அவ்வுரைக்குத் தூண்டுதல்களும், குறிப்புகளும், வாழ்வுச் சூழல்களும் பட்டறிவுகளும் வழிவகையாகியிருக்கும் என்பது எவர்க்கும் தெளிவே. அதனை அவையடக்கமாக வைத்து வாழ்வியல் உரை ஆய்வைத் தொடங்குகிறேன். இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்பது இல்வாழ்க்கையின் முதற்பாடல். இதிலுள்ள மூவர் மூவேந்தர் போலவோ, முத்தமிழ் முக்கனி, மும்முரசு இன்னவை போலவோ, வெளிப்பட அறியுமாறு வாய்க்கவில்லை. வள்ளுவர் நாளில் இம் மூவர் எவரும் அறிந்து கொள்ளத் தக்கவராக இருந்திருப்பார். இல்லாக்கால் அவர் இவ்வாறு விளக்கமும் சுட்டும் இல்லாமல் மூவர் என்றிரார். வளிமுதலா எண்ணிய மூன்று காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் என்றவாறு ஆட்சி புரிந்திருப்பார். இக்குறளில் இம்மூவர் இவர் என்பது வெளிப்படுமாறு இயல்புடையமூவர் என்றும் நின்றதுணை என்றும் இரட்டை ஒளிவிளக்குகளைத் தெளிவுக்காக வைத்துளார். இல்வாழ்வான் ஆகிய அவனுக்கு இயல்பான தொடர்பு உடைய மூவர் என்றும், அவர் பிறர் போல வந்தும் சென்றும் அகல்கின்ற துணையாவார் அல்லர் என்று புரிய வைக்கிறார். தொல்காப்பியந் தொட்டுத் துலங்கும் இயற்கைப் புணர்ச்சி இன்னதென அறிவார், இயல்பின், பொருளறிவார். ஒன்றுவிக்கும் பாலதாணையின் ஒன்றுவார் இயல்பும் புலப்படும். இல்வாழ்வான் இயல்பாகவும் கட்டாயமாகவும் இவர் இவரைப் போற்றல் வேண்டும். அது செய்ந்நன்றிக் கடன் என்பது. குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் என்னும் புறத்தாலும், முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் என்னும் வரலாற்றாலும், இனிது விளங்கும். இக் குரவர் என்பாரும், முதியர் என்பாரும் தாய் தந்தையர் என்பது வெளிப்படை, இவர்களைச் சேக்கிழார் அடிகள், அப்பூதியடிகள் புராணத்தில், இயல்புடைய இருவர் என்றே கட்டிக்காட்டுகிறார். அவ்விருவர் அப்பூதியடிகளாரும், அவர் துணையுமாகிய இருவருமேயாம். இனி மூன்றாமவர் எவர் என்பதை இளங்கோவடிகளார். இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் என்பதன் வழியாகச் சுட்டிக் காட்டுகிறார். இருமுது குரவர்களாகிய பெற்றோருடன், மனைவியையும் பேணல் இவ்வாழ்வான் கடன் என்பது இதனால் தெளிவுறும். இனி, பெற்றோர், மனைவி, மக்கள் என்னும் மூவர் என்பாரும் உளர் மூவர் - மூன்றுபேர். இதில் பெற்றோர் ஆகிய இருவரையும் ஒருவர் என்பது எண்ணு முறையன்று. மக்கள் என்பதும் ஒருவர் என்னும் வரம்புடையதன்று. மனைவியரும் பன்மையர் உண்டே என வினா எழுவது இயற்கை. ஆனால் வள்ளுவர் அறம் கண்டார் ஒருமையையன்றி இருமையை எண்ணார். ஏனெனில், ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்று வலியுறுத்துவது அது. கற்பு என்னும் திண்மைபோல நிறை என்பதையும் இருபாற் பெ துமையாய்ப் பேசுவது வள்ளுவம். பெற்றாற் பெறின் என்றும் வீழ்வார்க்கு வீழ்வார் என்றும் ஒருமை நடையிடும் பெருமையது அது. இனி மக்கட்பேறு பின்னே வருவது, வாழ்க்கைத் துணைவி இல்லாவிடின், அவ்வாழ்க்கை இல்வாழ்க்கை எனப்படாது அவன் தன் துணையைப் பேணுதல் போலவே, அவள் தற்கொண்டானைப் பேணுதல் வேண்டும் எனல் சுட்டப் பெறும். மூன்றாம் பாடலில் தான் என்பதையும் மறவாமல் குறிப்பார் வள்ளுவர். ஆதலால், தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரே இயல்புடைய மூவர் என்க. தாய் தந்தை தாரம் என மூவரைக் கருதியவர் ஈகப் பெருந்தோன்றல் வ.உ.சி. அவர்கள். ஆனால் அதனை உறுதிப் படுத்தாமல் இருக்கலாம் என ஐயுறவு கொண்டு வரைந்தார். இருபத்து நான்காம் அதிகாரம் புகழ். இல்வாழ்வின் இதன் நிறை நிலை ஈதெனக் காட்டுவது. இது ஐந்தாம் பாடல் நத்தம்போல்கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது என்பது. நத்தம் என்பது நந்துதல் என்பதன் வலித்தல் எனக் காட்டிய உரைகளே வெளிப்படப் பெருகின. நந்தம்என்பதன் சொற்பொருள் சங்கு சங்கு என்பது சுட்டுச் சுடரச் செய்வதொன்று சுடச் சுடரும் பொன் என்பது வள்ளுவம். கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய செவ்வண்ணம் போல என்னும் இலக்கண உரைகள் சுட்டும் கோட்டு நூறு சங்கு சுடப்பட்ட தூள் சங்கு அல்லது சிப்பிச் கண்ணமே சிறந்த வெண்ணிறத்தது என்பது உலகம் அறிந்தது. அட்டாலும் பால் சுவையில் என்னும் பாட்டு. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிலைநாட்டும், சான்றோரை வறுமை எத்துணை வாட்டிலும் அவர் சால்பு நிலையில் குன்றாராய் உயர்ந்தோங்கியே நிற்பார்; அதனைக் கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே என்று கூறுகிறது அட்டாலும் என்னும் அப்பாட்டு. அது நத்தம் போல் கேடு என்பதன் விளக்கமாகும். சங்கைச் சுடச்சுட வெண்மை பளிச்சிடல் போல் புகழ் வளரத்தக்க வறுமையும், புகழ் நிலைபெற உண்டாகும். இறப்பும் வாழ்வியல் திறம்மிக்கோர்க்கு அல்லாமல் பிறர்க்கு வாய்த்தல் இல்லை என்பது இதன் பொருளாம். ஒப்புரவினால் வரும் கேடு எனின் கெடுவாக வையாது உலகம் என்பவற்றையும், அறஞ்சாரா நல்குரவு என்பதையும் எண்ணின் புகழ் வறுமையும், பழி வறுமையும் நன்கு புலப்படும். கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414) என்பதொரு குறள் கேள்வி அதிகாரத்தில் உள்ளது. இதில் வரும் ஊற்று என்பதை ஊற்றுக்கோல் என்றே கொண்டனர். இதற்கு அடுத்த பாடலிலேயே, (415) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார் வாய்ச்சொல் என ஊற்றுக்கோல் என்பது வெளிப்பட வரக் கண்டிருந்தும் இவ்வூற்றையும் ஊற்றுக்கோல் எனப்பொருள் கண்டது வியப்புக் குரியதாகும்! இவ்வூற்று ஆற்றிலே தோண்டும் ஊற்றே ஆகும். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் சிறப்புமிகு, ஊற்றே இவண் குறிக்கப்பட்டதாம். இங்குக் குறிக்கப்படும் ஒற்கம்- வான்வறண்டு-பொய்த்துப் போன வறுமை ஒல்குதல்-குறைதல். ஓல்கி - ஒல்லி! மெலிந்து படுதல். கற்கும் கல்வி ஆற்றுப் பெருக்கு அன்னது. அப்பருவத்து அவ்வாய்ப்புப் பெறாதார். கற்றார் கூறுவன கேட்டேனும், எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும், ஆன்ற பெருமை தரும் என்பது. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து என்னும் இக்கேள்வி அதிகாரத்து மற்றொரு குறளும், செவிக்கு உணவாகிய கேள்வி விருப்புடையவர் பக்குவமான நல்ல உணவுகளைத் தேடி உண்ணும் பேருண்டியர்க்கு ஒப்பாகக் கேள்விச் செல்வத்தைக் கிடக்கும் இடத்தெல்லாம் தேடிப் பெறுவர் என்பதாம். அவி உணவு-ஆக்கிய உணவு: ஆன்றோர் - அகன்றோர். சுவையுணவைத் தேடித் தேடியுண்ணும் வாயூறியர். இதனை விடுத்து அவியுணவு வேள்வியுணவாகவும், ஆன்றோர் வேள்வியுணவுண்ணும் தேவராகவும் கொள்ளல் வாழ்வியல் வழுக்கல் உடையதாகும். உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் என்பது உட்பகைக் குறள்களுள் ஒன்று (883) இதில் வரும் மட்பகையை மட்கலம் அறுக்கக் குயவர் பயன்படுத்தும் கருவி எனப் பொருள் கண்டனர். குயக்கலத்தை உருளில் கருவி எனப் பொருள் கண்டனர். குயக்கத்தை உருளில் இருந்து பெயர்த்து எடுக்கும் அறுகருவி மட்பகை ஆகுமா? மட்பகை யாவது மண்ணே பகையாக இருப்பது, இதனைத் திருவள்ளுவரே, காலாழ் களர் என்பார். புதை சேறு என்பது நாட்டு வழக்கு புதைமணல் பகுதி புகாதீர் என்னும் எச்சரிக்கை காவிரி சார், முக்கொம்புச் சுற்றுலாப் பகுதியில் பொறித்து வைக்கப் பட்டுள்ள தற்காப்பு. மண் அணுச் செறிவு உடையது. அதனால் அண்-அண்டு-அண்டம் எனப்பட்டது. மண்திணி நிலம் மண்டிணி ஞாலம் என்பது பழைய ஆட்சிகள். அத்திணிவுடைய மண்ணெனும் எண்ணத்தையூட்டி, உள்வாங்கிக் கொண்டு உயிர்க்கு உலை வைப்பது மண்பகைதானே ஆதலால் மட்பகை, உள்வாங்கும் பகை: அடுத்தவர் அறியாமலே, தானும் தப்பிக் கொள்ள முடியாமலே, தப்புவிக்க வருவார் ஊர் எனின் அவரும் தப்ப முடியாமலே உள்வாங்க வல்ல புதை மண்ணே மட்பகையாம். இதுவே உட்பகையை விளக்க ஒப்பும் உயர்வும் இல்லா உவமையாம். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்னும் குறளில் வரும் இயற்றியான் இறைவன் என உரைகண்டனர்: அரசன் என்று கண்டாரும் உளர். உலகு இயற்றியான் என்பதை உலகைப் படைத்தவன் எனக் கொள்ளல் ஆகாது. படைத்தல் , உண்டாக்கல் என்பவை இயற்றல் ஆகா. இயற்றல் என்னும் வினை, நூல் இயற்றல் சட்டம் இயற்றல் என்பவற்றையே குறிக்கும் வினை மரபு அது. இறை வாழ்த்தில் இறைவன் பெயர்களாக - இயல்புகளாக-வள்ளுவர் குறித்தவற்றுள் இயற்றியான் என்றொரு பெயர் இல்லாமை கருதுக. அதேபொழுதில் இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்று இயற்றல் கடனாளன் ஆட்சியாளன் என்பதைத் தெளிவிக்கிறார். இதே தெளிவு ஏற்படுமானால். வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது இன்னொரு குறள் உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும் என்னும் குறளில் வரும் உண்டு, இல்லை என்பவை கடவுள் பற்றியவை இல்லை என்பதை வள்ளுவமே தெளிவித்து விடும் அது. பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அது வின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்பது, இதன் விரியே, உண்டாலம்ம இவ்வுலகம் என்னும் புறப்பாடல். ஊழுக்கு உலகத்து இயற்கை என்று வள்ளுவமே பொருள் கூறியும் ஊழ்வினை என்பாரை எப்படி நிறைவு செய்ய முடியும்? எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்னும் குறள் நெறியே நெறியாகக் கொள்ளின் உறழ்நெறிகள் எவையும் ஊன்றா! குறளுக்கு உரை குறளே தரும் என்பது தெளிவாம் 9. திருக்குறளும் தரமேம்பாடும் தரம் நமக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கப் போகிறோம். அங்காடியில் உள்ள கடைகளை யெல்லாம் கருதி, ஒரு கடைக்குள் புகுகின்றோம். நாம் விரும்பிய பொருளை அங்கேயே வாங்கி விடுவதில்லை. நான்கு கடைகள் பார்க்கிறோம். அக்கடைகளிலும், எடுத்துத் தந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விடுவ தில்லை. தட்டிக் கொட்டி உருட்டிப் புரட்டி முழுப்பார்வை பார்த்துப் பின்னர்த் தனித்தனிப் பகுதிப் ப ர்வை பார்த்து, நம் பொருள் நிலை, கலை நிலை ஆகியவற்றை அளவு கோலாக்கித் தெளிந்து முடிவு செய்கிறோம். நமக்கு நல்ல நிறைவு தந்தால் தான் வாங்குவோமே அன்றி. ஏதோ ஒன்று என வாங்க மாட்டோம். ஒரே ஒரு வேளை பயன்படுத்தும் பொருளானால் என்ன, காலமெல்லாம் வைத்துப் போற்றும் பொருளானால் என்ன நம் தரம் கருதாமல் வாங்கி விடுவதில்லை ஆதலால், தரம் என்பது ஒவ்வொருவர் தேவைக்கும் தேடுவதற்கும் உரிய பொதுப் பார்வையது என்பது புலப்படும். எவரின் விருப்புக்கும் தேடுதற்கும் உரிய தரத்தை, எவர் ஆக்கிச் சந்தைக்குக் கொண்டு வருகிறாரோ, அவர் பொருள்கள் சந்தையில் பெருங்கிராக்கியுடைய அரை விலையாகின்றன. தரக்குறைவு உடையவையோ, கட்டுக்கிடையாய்ச் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன. ஏதோ ஒன்று இந்த நொடியே வாங்கியாக வேண்டும்: அதுவும் இந்தப் பொழுதுக்கு மட்டும் ஆவது தானே என்னும் பொருளையல்லாமல், நிலைத்த பயன்பாடுடைய எந்தப் பொருளையும் தரம் பாராமல் எவரும் வாங்கி விடுவது இல்லை. ஆதலால், தரம் நிரந்தரம் என வணிகர் விளம்பரமும் பொது மக்கள் அல்லது நுகர்வோர் தேவையும் ஆயிற்றாம். தர உருவாக்கம்: இனித் தரம், பொருக்கு எப்படி வந்தது? எப்படி வரும்? பொருளை உருவாக்குபவர் உள்ளத்தில் தரம் இருந்தால் பொருளிலும் தரம் இருக்கும். ஆதலால், உருவாக்கப்படும் பொருளின் தரம் உருவாக்குபவர் உள்ளத்திலேயே கூடுகட்டி உறைகின்றதாம். இனி, உள்ளத்தில் தர நோக்கு இருந்தால் மட்டும் போதுமா? தர நோக்கு இருத்தலோடு செய் நேர்த்தியும் உருவாக்குபவர்க்கு இருத்தல் வேண்டும். செய் நேர்த்தியொடு கலைநயமும் வேண்டும் என எண்ணத்தை விரிவுபடுத்திக் கொண்டால், பொருளின் தரம் எல்லா நிலைகளிலும் சிறக்குமாம். அவை: 1. உருவாக்கும் பொருளின் தரம் உருவாக்குபவர் உள்ளத்திலேயே உள்ளது 2. உருவாக்குவார் செய் நேர்த்தி பொருளைத் தரப்படுத்துகிறது. 3. உருவாக்குவார் கலைநயம் கவர்ச்சியை ஊட்டிக் கமழ்கின்றது. இம் மூன்றும் அமைந்த நிலை ஒரு பொருளின் தரமாகின்றது. இம்மூன்றும் அமையாமை ஒரு பொருளின் தரக்குறையும் தரக்கேடுமாகின்றது. உள்ளம்: தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின் பாளையிலே இருந்து வழிவது ஒரு வகை நீர்தான். அதனைக் கனிவு உள்ளம் பதனீராக்கி நலம் செய்கின்றது. அதனை மற்றோர் காசுள்ளம் கள்ளாக்கிக் குடி கெடுக்கின்றது. (காசு-குற்றம்; பணம்) நலமாக்குவதும் குடி கெடுப்பதும், தென்னை பனை ஈந்துப் பாளைகளில் இல்லை. அவற்றின் பயன் கொள்ளும் உள்ளங்களிலேயே அவை இருந்தன என்பது புலப்படும். அறிவு உள்ளம் அணுவைக் கண்டது: ஆக்கப் பயன் பாட்டைக் கருதியே அதனைக் கண்டது. ஆனால், அழிவு உள்ளம் என்ன செய்கிறது? அழிவுக்குப் பயன் படுத்துகிறது. அணுவில் ஆக்கமோ அழிவோ இல்லை. அதனைப் பயன்படுத்தும் உள்ளத்தில் தான் ஆக்கமும் அழிவும் உள்ளன. ஆதலால், ஒவ்வோர் உருவாக்கமும் உள்ளத்தின் சாயலில் உருவாகின்றன என்பது புலப்படும் நேர்த்தி: ஒரு விருந்து! அந்த விருந்தின் சமையல் சிறப்பு இலையில் புலப்பட்டு விடும். செய்நேர்த்தி யமைந்த விருந்தில், இலையில் ஒதுக்கும் பொருள் இல்லையாய் ஒழியும். செய்நேர்த்தி இல்லாச் சமையலில், இலையில் வைத்தது வைத்தபடி கிடந்து குப்பையாய்க் குவியும். வாங்கப்பட்ட பொருளின் குறைவு இல்லை: ஆகிய செலவில் குறைவு இல்லை. செய். நேர்த்தி இல்லாமையால் அவை பாழாய்ப் போயின. செய் நேர்த்தியால் எவ்வளவு எளிய பொருளும் தரத்தில் உயர்ந்து விளங்குதலும், செய், நேர்த்தி இல்லாமையால் எவ்வளவு உயர்ந்த பொருளும் தாழ்ந்து போதலும் நாம் காண்பனவே. கலைநயம்: கால் மிதியாகக் கிடந்து தடுக்கிவிடும் கல், ஒரு கலை வல்லான் கண்பட்ட - கைபட்ட - அளவில் எப்பேறு பெற்று விடுகின்றது. மிதிக்கப்பட்ட கல்லே, அவன் கலைத் திறத்தால் மதிக்கப்பட்ட சிலையாகிச் சிறப்புறுவது நாம் காணாததா? அறிவும் பண்பும்: உள்ளம், செய்நேர்த்தி, கலைநயம் என்னும் மூன்றும் உருவாக்கப் பொருளின் தரத்தைத் தீர்மானிப்பவை என்பதை ஆய்ந்தோம், இம்மூன்றற்கும் அடிப்படையாய் - ஆணிவேராய் - இருக்கும் மாந்தர் நிலைமை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை மக்கட் பேறு கூறும் போதே கூறுகிறார் திருவள்ளுவர். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (61) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (62) என்பன அவை, ஆதலால் 1. அறிவறிந்த மக்கட் பிறப்பாக இருத்தல் 2. பழிபிறங்காப் பண்புடை மக்கட் பிறப்பாக இருத்தல் v‹git khÃy¤J k‹DÆ®¡bfšyh« ïÅait v‹wh® tŸSt®.(68) ஒப்புரவு: ஆன்றோர் சான்றோர் என்பவற்றைப் பொது மக்களும் அறிவர். புலமையாளரும் அறிவர், ஆன்றோர், அறிவறிந்தோர்: சான்றோர் பழிபிறங்காப் பண்பினர். நல்லறிவும் நற்பண்பும் உடையவரின் நயத்தக்க உருவாக்கம், தரமேம்பாடு மிக்கவை யாகவே இருக்கும் என்பதை நம்பலாம். ஏனெனில், நல்லறிவும் நற்பண்பும் தரக்கேட்டை உருவாக்கத் தலைப்படா. தம்மைப் போலவே பிறரும் நலப்பேறு பெறவிழைந்து செயலாற்றச் செய்வது நல்லறிவு தம்மைப் போலவே பிறரும் நலப்பேறு பெறவிழைந்து செயலாற்றுவது நற்பண்பு. இவை பிறர் நலம் தம் நலம் என்னும் இரண்டையும் ஒப்பக் கொள்ளும் ஒப்புரவு கொண்டவை. ஒப்புரவு உள்ளத்தின் உருவாக்கம்; ஒருநாளும் குறையும் கேடும் உடையதாக மாட்டா அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை பிறர் துயரைத் தம் துயர் போல் கருதாது செயலாற்றும் அறிவு அறிவாகாது என்றே தள்ளப்பட்டது. வள்ளுவப் பெருந்தகையால். தரமேம்பாடு: இனித், தர மேம்பாட்டுக்கு வள்ளுவர் காட்டும் வழிகள் எவையேனும் உண்டா? என எண்ணலாம். வள்ளுவத்தின் ஒட்டு மொத்த ஊடகமே, பிறர்க்கு மட்டுமன்று: பிறவுயிர்க்குத் தீமை செய்யாமை என்பதேயாம். இந்நோக்கு இல்லாமல் எதனையும் சொல்லாப் பெருநோன்பர் அவர் ஆதலால் எவ்வுயிர்க்கும் தீமையிலா நல்லாக்கமே வள்ளுவர் வழங்கும் ஆக்கமாகும். இனம்: ஒர் உருவாக்கத்தில் ஈடுபவார் ஓரினத்தராய்த் திகழ வேண்டும் என்பது வள்ளுவர் உள்ளகம். இன்+அம்=இனம், தனக்கு இன்பம் செய்வதாக அமைந்தது எதுவோ அதுவே இனமாம். அவ்வினம், வெவ்வினமாக அமைந்து அளவளாவிக் கடமை புரிந்தால் எத்தரமும் உருவாக்கத்தில் அமைதல் உறுதி. கரை இல்லாமல் ஏரி குளங்களில் நீரைத் தேக்க இயலாது. mJnghš m›tsîjh‹ ïšyhj thœÉš x£Lwî ïuhJ” v‹gJ âU¡FwŸ.(523) அளவளாவுதல் என்பதே மனக்கலப்பில் உண்டாவது. மனக்கல்ப்பு, இருமையை ஒருமையாக்கிவிடும். இரண்டற்ற ஒன்றிலே சிக்கல் தலைகாட்ட இயலாதே! அதனால், நினைத்தவை நினைத்தபடி நிறைவேறும் என்றார் திருவள்ளுவர். இனிய அளவளாவுதல், இரண்டற நிரந்து விடுதல் ஆகிய இரண்டும் கூடிய இனத்தொடும் கலந்து பேசி உருவாக்கம் புரிந்தால், அவ்வுருவாக்கத் தரம் மிக உயர்ந்ததாகவே இருக்கும் ஆதலால், தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்(462) என்றார். தரஞ்சிறக்க வழிகள்: செயல் சிறந்து தரஞ்சிறந்து விளங்க வழிவகைகளையும் காட்டுகிறார் திருவள்ளுவர். அவை: 1. எந்தச் செயலில் ஈடுபட்டாயோ, அந்தச் செயலுக்குக் கேடான எதனையும் செய்யாதே. (162) 2. எந்தச் செயலைச் செய்ய எடுத்துக் கொண்டாயோ அதனை அரைகுறையாகச் செய்யாதே (663, 674) 3. செய்யும் செயலில் தேர்ச்சி மிக்கவர் நட்பை விடாதே. (519) 4. தேர்ந்தோரினும் தேர்ந்தோர் உறவை மாறாமல் பற்றிக் கொள். (519) 5. செயலின் உட் கூறுகள் அனைத்தும் அறிந்தவன் செயல் திறத்தைப் போற்றிக் கொள். (677) 6. திறமிக்கோர் தகுதியை மதித்துத் தலைமை அறியச் செய்து சிறப்புறுத்து. (655) 7. செயலில் ஈடுபட்டவர் அனைவரும்சுற்றமாகச் சுற்றிக் கொள்ளத்தக்க தலைமை அமைவதாக! (574) 8. khªj nea« ntW: bjhÊš âw« ntW: bjhÊš âwªj kâ¥ÕL brŒjÈš ‘tÇir m¿jš’ KiwahF«.(528) 9. தக்காரை மதித்துத் தகவிலாரைத் தண்டித்தல் முறையான செயலேயாம் (549). அதற்கென நாளும் பொழுதும் கண்காணிப்புத் தவறாமை வேண்டும். (520,553, 1039) 10. தலைமைத் தகுதியே நிறுவனத் தகுதியாம் (547, 740, 750, 770) நிறுவனச் சீர்மைக்கு உரியவை இவை என எண்ணவைக்கும் திருள்ளுவர், இச்சீர்மை இல்லாக் கேட்டுக்கு வழியாவன இவை என்பதைச் கட்டாமலும் விட்டார் அல்லர். அவற்றுள் சில: 1. செய்யத் தக்கதைச் செய்யாமை, செய்யத் தகாததைச் செய்தல் 2. கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், நெட்டுறக்கம் என்பவை நாற்பெருங் கேடுகள் (605) 3. ஒன்றற்கு ஒன்று மாறான குழுக்கள், பாழ்படுத்தும் உட்பகைவர், இறையாண்மையை அழிக்கும் குறும்பர் ஆகியவர் நிறுவனக் கேடர்(735) 4. cÇa fhy¤âš cÇa tifÆš Kayhj Ka‰á, ã‹nd gy® ËW Ka‹whY« Koahjnjah«.(468,535) 5. தெளிவின்றி ஒருவனை நம்புதலும், நம்பியவன் மேல் ஐயப்படுதலும் நீங்காக் கேடுகள் (510) 6. fLŠbrhš, fLKf«, Kiwnflh« j©lid v‹git jiyikia¤ jf®¡F« j‹ikfŸ.(566,567) உழைப்பாளர் சிறப்பை உரைப்பதொரு குறளைச் சுட்டி அமைத்தல் சாலும். அது: இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்கரவாது கைசெய்தூண் மாலை யவர்(1035) என்பது. உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள இக்குறள் கையால் தொழில் புரியும். அனைவரையும் தழுவிக் கொள்ளும் கருத்தினதாம். வினைமேற் சென்ற தலைவன் அதனை இனிதாக முடித்து விரைவில் திரும்பி வருதலை விரும்பிய தலைவி, வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து (1268) என்று வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி அமைவோம். 10. தன்னை உணர்விக்கும் தவக்குறள் எளியதில் எளியது எது? பிறர்குறை காணல் எளியதில் எளியது அரியதில் அரியது எது? தன்குறை காணல் அரியதில் அரியது தன்னை உணர்ந்தவன் பிறரையும் உணர்வான் தலைவனையும் உணர்வான். தன்னை உணரான் பிறரையும் உணரான்: தலைவனையும் உணரான். என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்(2366) தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்(2355) என்பவை திருமூலங்கள். தன்னை அறிதலை மெய்ப்பொருள் நூல்கள் விரியக் கூறும். அறங்கூறும் குறள். தன்னை அறிதலைத் தலையாய அறமாகக் காட்டி ஒளி விளக்கம் செய்கின்றது. மனத்துக்கண் மாசின்மையை அற மெனக் கண்டுரைத்த அறக்குறள், நன்றின்பால் உய்ப்பது அறிவு எனத் தேர்ந் துரைத்த திருக்குறள், தன்னை உணர்விக்கும் தவக்குறளும் ஆதலைக் காட்டுவது இக்கட்டுரை: நிலமிசை நீடுவாழ வேண்டும் என்பது குறள் வாழ்த்து(3) நெறிநின்றார் நீடுவாழ்வார் என வழிமுறை காட்டியது அவ்வாழ்த்து(6) பொறிவாயில் ஐந்து அவித்தல், பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல் என்பவை நீடுவாழ்தற்குக் காட்டிய வழிமுறைகள், ஐந்தறிந்து, ஐந்தன் இயல் அறிந்து, ஐந்தன் செயல் அறிந்து, பக்குவப் படுத்தி வாழவல்லை பண்பாட்டாளன் வழியிலேயே உலகம் உய்யும் நெறி உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது உயர்குறள். அது, சுவையொளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பது (27). ஐந்தவித்தானே நீத்தான், துறந்தான், உரவோன், செயற்கரிய செய்வோன், நிறைமொழியின், குணக்குன்றன், அந்தணன், அறவோன் என்றெல்லாம் கூறப்படுவன், அவித்தல் என்பது அழித்தல் அன்று, பக்குவப்படுத்துதல், ஐம்புலன் களையும் பக்குவப்படுத்தியவனே புலமையன்: புலச் செம்மல். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை என்பது அதன் விளக்கம் பொறிகளைப் படிப்பான்: பொறிகளைப் படைப்பான்: பொறிகளின் பழுது நீக்குவான்: பொறிகளை இயக்குவான்: அவன் பொறிஞன்: பொறியில் அறிஞன்: பொறியில் மேதை என்று பாராட்டப்படுவான். ஆனால், தன் பொறிகளை அடக்கிக் காக்கும் உரவோனாக அவன் விளங்குகின்றானா என்று வினாவும் தகுதிக் குறள், அவன் பொறிகளில் குறையுடையவன் ஆயினும் ஆக: அது பழியாகாது: பாவமும் ஆகாது: ஆள்வினை இன்மையே பழியும் பாவமும் என்று ஆணையிடும் ஆள்வினைக் குறள்: பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பது அது. தன்னை உணர்ந்தவன் - தன் பொறி புலன்பேறுகளை நன்கனம் அறிவான். கட்பொறி இல்லார் எத்துணைப் பேர்கள் எத்தகு வியத்தகு வினையாற்றலராக விளங்கியுள்ளனர்: விளங்குகின்றனர் செவிப்பொறியில்லார் எத்துணைச் செயல் வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர்: திகழ்கின்றனர் செவியோடு மூங்கையும் ஆகி இரு பொறி கெட்டும் எத்தகு மேம்படு செயலாண்மையர் இருந்துளர்: இருக்கின்றனர். கண்ணும் செவியும் வாயும் ஆகிய முப்பொறியும் முழுதுற முடங்கிப் போனவர்கள் வாழ்வில் முடங்காமல், அடங்காமல் அடங்கா உலகப் புகழுக்கு ஆளாகியமை வரலாறு இல்லையா? காலிரண்டும் இல்லாரும், தோட்பட்டைக்கு மேலே கைகள் இரண்டும் இல்லாரும் எத்தகு கவின் வாழ்வு வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர் இவர்கள் கொண்ட பொறியின்மைகள் இன்மைகளா? பொறிகள் எல்லாமும் குறைவறப் பெற்றிருந்தும் ஆள்வினை அறியாமல் தாழ்வினைப் பொருளாக்கிப் புன்புழுவாய்ப் பூச்சியாய்த் திரிவாரையும், வல் விலங்காய் நச்சுயிரியாய் நரிமைப் பிறவியாய் வாழ்வாரையும் கண்டு என்னே உங்கள் வாழ்வு? ஏழ்மை நோக்குமின் என்று வீறு காட்டும் வெற்றி வாழ்வன்றோ, பொறியின்மையுற்றும் தன்னை உணர்ந்த தகவால் ஆள்வினை வீறு கொண்டவர் வாழ்வு இருக்கும் அரும் பொருள் - கிடைத்த பெரும் பொருள் எவர்க்கும் எளிய பொருளாம் போலும் மயக்க உணர்வின் மாக்கேடு இது! எத்தகைய அரும்பெரும் பொருள் இவ்வுடல் இவ்வுடலனைய அரும்படைப்பு ஒன்றும் உண்டோ? உண்டோ? நாம் உள்ளிழுக்கும் மூச்சும், உட்கொள்ளும் உணவும் எத்தனை இயக்கங்களை இயல்பாகக் கொள்கின்றன. அவற்றுக்கு நம் ஆணை என்ன உண்டு? நம் முயற்சி என்ன உண்டு? வேண்டுவ கொண்டு - வேண்டாதன விலக்க - ஒழிக்க - வெளித்தள்ள இவ்வுடல் உறுப்புகள் ஆற்றும் கடன்கள் எத்தகைய அருமையுடையவை? ஊத்தாம்பை (பலூன்) ஒன்றில், கால் உருள் (டயர்) ஓன்றில் ஒரு துளை விழுந்தால் என்ன ஆகின்றது? காற்று வெளிப்போன அவற்றின் இருப்பென்ன? இல்லாமை என்ன? ஆனால் ஒன்பான் பெருந்துறைகளும் எண்ணிலா நுண்துளைகளும் உடைய இவ்வுடற்கண் காற்று நிற்கிறது: இயங்குகிறது: உலவுகிறது: உயிர்க்கிறது! ஒன்றுளே ஒன்பது கொண்ட அருமையை எவன் உணர்வான்? தன்னை உணர்வான், உணர்வான்! அவன் தன் உடலை விரும்புவான்; உடற்புறந் தூய்மை போற்றுவான்: அகந்தூய்மை போற்றுவான்: மனத்துக்கண் மாசுற ஓட்டான்: கண்ணின் மாசு தீமை எனினும் அதனினும் பன்னூறு மடங்கு தீயது மனத்துக்கண் மாசு அவனைத் தீராப் பழிக்கும் பாவத்துக்கும் பிறப்பி என ஆக்குவது மனத்துக்கண் மாசு அம் மாசு இலா மணியாகத் திகழ்வான், மணியாவான் மாமணி ஆவான் ஒரு மாமணியாவான் ஓங்கிய ஒரு மாமணியாவான். ஒரு மாமணியாய் உலகுக்கு ஓங்கிய திருமாமணியும் ஆவான் தன்னை உணரும் தவமணியாகத் திகழ விரும்புவான் தன்னைக் காதலிப்பவனாகத் திகழ்வான்! அயற்பால் காதலுக்கும் முற்படவும் முதற்படவும் செய்யத்தக்க நற்காதல், தன்னைத்தான் காதல் கொள்ளல் என்பது வள்ளுவம். அவன் உடல் மட்டுமோ காதல் பொருள்? இல்லை அவன் உயிரும் காதற்று என்பது வள்ளுவம் (940) அவ்வுயிர்க் காதல் உயிர் ஊதியக் காதலாகவும் விளங்க வேண்டும் என்பதும் வள்ளுவம் (231) தற்காதலுடையவன் என்ன செய்தல் வேண்டும்? வள்ளுவர் வாய்மொழிகிறார்; தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் என்பது அது (209) உன்னை நீ விரும்பு: உன்னை நீ விரும்பினால், தீவினைச் செயல் எதனையும் எண்ணாமல் ஒழி என்கிறார் வள்ளுவர். என்னை விரும்புதல் என்பது என்ன? எனக்குத் துன்ப நீக்கம் வேண்டும்: இன்ப ஆக்கம் வேண்டும். இவை உயிரிகளின் பொது நோக்கு. இது பொது நோக்கு எனப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்னை நான் அறிந்துகொள்ளல் வேண்டும்; அப்புரிவே என் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள உதவும்: அப்புரிவே எவ்வுயிர்நோக்கும் அதுவே என்பதைத் தெளிய உதவும். அந்நிலையே தனக்கும் பிற உயிர்களுக்குமாம் இன்னிலையும்: நின்னிலையும் தன்னை விரும்பி நிற்பான் - கடனாற்றுவான் - எவனோ அவன், தீவினை செய்தல் ஆகாது என்பதால் தன்னுயிர்க் காவல் வழியே மன்னுயிர்க் காவலைக் காட்டினார் வள்ளுவர். ஏனெனில், தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்; தீவினை என்னும் செருக்கு என்றவர் அவர். தீவினை துன்னாமை வேண்டும் என்பதைத் தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் எனவும் தெளிவித்தார். தீ, தன்னையுடையாரின் உளப்பாங்கு செயற்பாங்கு ஆகிய வற்றுக்கு ஏற்ப நலமும் செய்யும்: தீதும் செய்யும். ஆக்கத்திற்கு ஆவதும் அழிவுக்கு ஆவதும் அத்தீயினிடம் இல்லை அதனைக் கொண்டவனிடத்தே தான் உண்டு. ஆனால், தீயவை என்றும் எவரிடத்தும் ஆக்கமாவதில்லை. அழிவே ஆக்கும், தீயவை அவனுக்கேனும் ஆக்கமாகுமா? அவனுக்கே முதல் அழிவு செய்யும் - முற்றாகவும் அழிவு செய்யும். அவன் நிழல் அகலாமை போல அவன் தீமையும் அகலாது இருந்து அவனை அழித்துவிட்டே அகலும் என்றும் கூறுகிறார். அதனாலேயே தீவினையைத் தீயிற்கும் அஞ்ச வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறர் சொல்லும் வன் சொல்லும் வசையும் தன்னை வருத்துதலையும், பிறர் சொல்லும் மென்செல்லும் இசையும் தன்னை மகிழ்வித்தலையும் அறிபவன், பிறரிடத்து வன் சொல்லும் வசையும் கூறுவனோ? புண்பட்ட பட்டறிவாளன் ஒருவன் பிறனொருவனைப் புண்படுத்திக் களிப்புறக் கருதுவனோ? கருதினால் அவன் நெஞ்சறிவாம் - ஆறாம் - அருளறிவு உடையவன்தானா? பட்டான் ஒருவனே பட்டது அறியாமல் பழிவழிப் பட்டான் எனின், பட்டறியாதவன் தானா பரிவு கொண்டு உருகி நிற்பான்? இவ்வாறு எண்ணிய அருள்வள்ளல் வள்ளுவர். தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்? என்கிறார். நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்றும், எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை என்றும் விளக்குகிறார். தன் குற்றம் நீங்கிய தகவாளன் பிறர் குற்றம் கண்டு இரங்க வேண்டும்: அக் குற்றம் திருந்த வழிகாட்ட வேண்டும்: அறிவுரை கூறியும் இடித்துரைத்தும் அக் குற்றம்தான் அழிந்துபடாமல் காத்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும். தன் குற்றம் நீங்கியவனே பிறர் குற்றம் நீக்கவல்ல தகவன்: தலைவன்: வேந்தன். இதனையே தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு என்று கூறும் குறள். இறை என்பது தலைமை. குடி - குடும்பத் தலைமை என்றால் என்ன? குழு - கூட்டத் தலைமை என்றால் என்ன? தொழில் அலுவல் தலைமை ஆனால் என்ன? அரசு - கட்சி என நாடு தழுவிய தலைமை ஆனால் என்ன? சமயம் - அறநிலை என அமைப்புத் தழுவிய தலைமை ஆனால் என்ன? தன் குற்றம் நீக்கல், பிறர் குற்றம் தீர்க்க வாய்த்த முதற்றகுதியாம். அத் தகுதி இல்லாமையே பல நிலைகளிலும் பாழ்படுத்தும் காட்சி கண் கூடாதல் இற்றை நிலையாம் சான்றுகளை நினைத்துப் பார்த்துத் தெளிவார்களாக. தன்னுடற் காதலன் தன்னுயிர்க் காதலன், பிறிதுயிர்க்கும் அக்காதல் உண்மை அறிந்து போற்ற வேண்டுமே: போற்றாக்கால் அவன் தன்னையறிந்தான் என்பது எவ்வாறு மெய்யாகும் என்பதால், தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் என்றும், தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை என்றும் கூறினார். பிறிதூன் தின்னலும் பிறிதுயிர் நீக்கலும் தன்னை யுணர்ந்தான் செய்யான் எனின் அவன் தன்னைத் தானே கொல்லும் தற்கொலைச் சினத்தைக் கொள்ளவும் கொள்ளான் என்று வலியுறுத்துகிறார். அது, தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்பது சினம் காவாக்கால் தன்னையே கொல்லுமா? சினம் என்பது உள் வெதுப்பு - வேக்காடு. அது கொல்லாதா என்ன? தீக்குச்சியை எடுத்துப் பெட்டியின் மருந்தில் உராய் கிறோம். முதற்கண் எது எரிகின்றது. தீக்குச்சிதானே எரிகின்றது? பின்னே தானே பிறவற்றை எரிக்கின்றது. இதனை உணர்த்தவே. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் என்றார். தீ, சேர்ந்தாரைக் கொல்லி: நஞ்சு சேர்ந்தாரைக் கொல்லி; சினமும் சேர்ந்தாரைக் கொல்லி சினம் ஆளைக் கொல்லுமுன்னே கொல்வனவும் உண்டு, அக் கொலையும் கொலையே என்பாராய், நகையும் உவகையும் கொல்லும் சினத்திற் பகையும் உளவோ பிற என்றார். உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்பது வள்ளுவத் தவம் , உடையோ, கோலமோ, பூச்சோ, சடங்கோ தவமாகா. இவ்விரண்டே தவமென்பது இத் தவக்குறள். தவத்தன் கோலங்கொண்டான் அக் கோலத்திற்கு உரிமை யாகாதவனாக இருத்தலைக் கண்டு அதனைக் கூடா ஒழுக்கம் எனப் பெயரிட்டார் வள்ளுவர். தவக் கோலத்தன் நெஞ்சறிவஞ்சன் எனின், அவன் தவத்தோற்றம் என்ன பெருமையது? என்பாராய். வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப் படின் என்றார் (272) பொய்த் தவத்தனிடையே மெய்த்தவனும் இலனோ? உளன் என்பர். அவன் சிறப்பைத் தொழும் பிறப் பெனச் சுட்டுவாராய். தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனை மன்னுயிர் எல்லாம் தொழும் என்கிறார் (268) தன்னுயிராலும் தனக்கென ஆகாமல் பிறர்க்கும் பிற உயிர்களுக்குமே என வாழ்பவன், தன்னுயிர் தானறப் பெற்றான். அவனை உலகத்து உயிர்களெல்லாம் தொழும் என்கிறார். தன்னுயிர்க் காதலில் அரும்பிய ஒருவன், தன்னுயிர் தானறப் பெறும் உயர் நிலையே உயர்ந்த உயிர் நிலை என்று தேர்ந்து தெளிந்து கூறுவது தெய்வக்குறள் என்பது. இதன் தொகையுரை, விரிக்க விரியும் விரியின், சுருக்கத்தின் சுருக்கம் இது. 11. திருக்குறள் ஞானபீடம் திருவள்ளுவர் திருவுருவப்படம்: அதற்கு முன்னர்க் குத்து விளக்கு: அதனைச் சூழவும் செம்மலர்க் குவியல்: மலர்ப்பரப்பின் ஊடே நிறை (நெல்) மரக்கால்: மரக்கால் உச்சியில் தென்னம் பாளை விரியல் வழிபாடும் வாழ்த்தும் இசையும் ஒரு பதினைந்து நிமையங்கள்! செவ்வண்ணச் சீருடைச் செல்வியர், குமரியர், தாயர் ஏறத்தாழ எழுபத்தைவர் தாலப்பொலி ஏந்தி எறும்பு வரிசையாய் இயலினர் எல்லிய (எவர்சில்வர்) வட்டி (தாலம்). அதில் செம்பூப் பரப்பு: அதன் ஊடே ஒரு தேங்காய் முடி: அதில் எண்ணெய். திரிவிளக்கு . இது தாலப்பொலி எழுச்சி ஊர்வலத்தின் முன்னே வள்ளுவர் திருப்படம் தாலப் பொலி வரிசை: ஆடவர் பெண்டிர் தொடர்வரிசை: சண்டை சல்லரி என்னும் கருவி முழக்கம் ஏறத்தாழ ஒருகல் தொலைவு ஊர்வலம் நெளிந்து செல்லும் ஆற்றின் ஊடே விளக்கேந்திச் செல்லும் படகு வரிசை யெனச் சாலையில் சென்ற தோற்றம் வயல் பரப்பிலும் தோப்புத் தடத்திலும் சென்ற எழில் தம்மை மறந்து மயக்கச் செய்யும் காட்சி கனவுக் காட்சியா? கற்பனைக் காட்சியா? இல்லை இல்லை கண்முன் கண்ட காட்சி தமிழகத்து மண்ணிலே இப்படி ஒரு காட்சியா? தமிழகத்து மண்ணிலே தொடங்குதற்குக், கேரளத்திலே தூண்டி விட்ட காட்சி சங்கரர் காலடிக்கு ஆறுகல் தொலையில் உள்ளது காஞ்ஞூர் தட்டாம்படி அதிலே நெடுஞ்சாலையைச் சார்ந்து - வயலும் தோப்பும் வளங்காட்டும் சூழலின் இடையே - அமைந்துள்ளது பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானபீடம். அப்பீடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுள் ஒன்றே தாலப்பொலி நிகழ்ந்த நாள் 1-3-87 ஞாயிற்றுக் கிழமை. 1984இல் ஆனந்த விகடன் கிழமை இதழின் அட்டைப் படச் செய்தியொன்று வள்ளுவர் பற்றாளரைக் கவர்ந்தது. அதனை அழகாக எழுதியும் படமெடுத்தும் உதவியவர் பிசுமி என்பார். அவர்தம் குறிப்புகள் ஒரு புதிய குறளாய அமைப்பாளரு மாகிய வேலா. அரசமாணிக்கனார் தம் குடும்பத்தோடு சென்று ஞானபீடங்கண்டு களிப்புற்றார். பல்லடம் திருவள்ளுவர் மன்றத்தார் மா.ஆறுமுகனார், தென்மொழி முத்துக்குமரனார் ஆகியோரும் கண்டு களிப்புற்றனர். இவற்றின் விளைவு தட்டாம்படி ஞானபீட ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்குத் தூண்டுதல் ஆயிற்று. பல்லடம் திருவள்ளுவர் மன்றத்தார் ஏற்பாட்டின்படி ஆடவர் மகளிர் மக்கள் என ஐம்பத்தாறு பேர்கள் தனிப்பேருந்தில் செல்ல வாய்ந்தது. சென்ற அனைவரும் வள்ளுவ வாழ்வுக் குடும்பத்தார் முழுதுற ஏற்கத் தக்க பண்புக் கிழமையர் என்பது சுட்டத்தக்கதாம். சுற்றுலாக் குழுவின் வண்டி, வள்ளுவர் ஞானபீடச் சாலையை அடுத்து வரும்போதே ஓடி வந்து சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சி வெள்ளம், பேரியாற்று வெள்ளத்தை ஒப்பதாம் அவர்களின் விழாவில் கலந்து கொள்ள அல்லவோ வண்டியளவு ஆள் வந்துள்ளது: பின், வண்டியளவு மகிழ்ச்சி இராதா? வண்ணத்தாள்களும் தொங்கல்களும் வரவேற்க ஞான பீடத்தை அடைகிறோம். பீடத்திலே வள்ளுவர் திருப்படம்: அதன் பின்சுவரில் கறுப்பு வண்ணச் சதுரம்: சதுரத்தின் ஊடே செவ்வண்ண வட்டம்! வள்ளுவர் திருப்படத்தின் முன் நிலைவிளக்கு. இது கருவறை: இவ்வறைக்கு முன்னர் வழிபாட்டு மன்றம்: கீற்றுக் கொட்டகை. சூடம் காட்டல், வழிபடல், வாழ்த்துரைத்தல், சந்தனம் வழங்கல் அவ்வளவே நிகழ்ச்சிகள்! சூழல் அமைதி போலவே மக்கள் உள்ளத்தும் அமைதி! உய்யும் வழி; கைவந்த களிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தவழ்கிறது! தட்டாம்படி ஞானபீடம் போல் பன்னிரண்டு இடங்களில் ஞானபீடம் தோற்று வித்துள்ளனராம். நாற்பத்திரண்டு இடங்களில் தோற்றுவிக்கத் திட்டமாம். இப்பொழுது பத்துப் பீடங்களுக்கு, உருவாக்க அடிப்படைப் பணிகள் நிகழ்கின்றனவாம், தேவிகுளம் சார்ந்த சேனாபதி, கோட்டயம் சார்ந்த கூத்தாட்டுகுளம், ஏற்றமானூர். கனகபுழா கொட்டாங் காடு, தோக்குப் பாறை முதலிய, இடங்களில் ஞானபீடத் திருப்பணி சிறந்தோங்குகின்றனவாம். nrdhgâ PhdÕlnk Kj‰Õlkh« !தட்டாம்படி ஒன்பதாம் பீடமாம்! இப்பீடங்களைத் தோற்றுவித்த பேரருளாளர் எவர்? பெருஞ்செல்வர் எவர்? என வினா எழுகின்றது! தோற்று வித்த சிவானந்தர் தோன்றுகிறார் நம்முன்னே! ஞானபீடத்தைத் தோற்றுவித்த இவர், கல்வி வளமோ செல்வ வளமோ அறியாத - அந்த ஏழைக்கூலி உழைப்பு மக்கள் உள்ளமாம் பீடத்திலெல்லாம் அமர்ந்து உயிர்க் கோலத்தோடு திகழ்கிறார்: வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு, இப்படி இருக்க வேண்டும் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் சிவானந்தர். ஆனால் அவர்களை உய்விக்க வந்த மெய்யுணர்வாளர் அவரும் அவ்வேழை மக்களுள் ஒருவர். ஐந்து - பத்து - செண்ட்டு வீட்டு இடங்களையன்றி வேற்றிடமென ஒன்றில்லா ஏழை எளிய மக்களின் புன்முறுவலிலே சிவானந்தர் திகழ்கிறார். சிவானந்தர் புன்முறுவலிலே திருவள்ளுவர் உயிர்காட்சி வழங்குகிறார். பலசமயங்களை ஆய்ந்தார் சிவானந்தா. அவர் உள்ளத்தை அவை தொடவில்லை. எங்கெங்கும் ஏற்றத் தாழ்வுகள்! மேடு பள்ளங்கள்! நில அமைப்புப் போலவே மக்கள் நிலையிலும் ஏற்ற இறக்கங்கள்! உள்ளந்தொடாத சமயங்களில் ஒன்றுவதால் என்ன பயன்? பொய்யாக நடித்துக் கொண்டிருக்க ஒரு சமயமா? எனத் தேடினார்! தேடக் கிடைத்தது ஒரு நூல். சாந்தம் பாறையில் கிடைத்த நூல் ஒரு சாந்தம் பாறை யாகத் திகழ்ந்தது. உலகத்தைத் திருத்திய உத்தமர்கள் என்பது நூலின் பெயர். உலகைத் திருத்திய உத்தமர்கள் பதின்மூவர் அந்நூலில் ஓவியமாய் - செய்தியாய் - காட்சி வழங்கினர். அவருள் ஒருவர் திருவள்ளுவர். சிவானந்தர் திருவள்ளுவரை அதற்குமுன் கேட்டும் அறியார்: படத்தைப் பார்த்தும் அறியார். கடைக்காரர் வழியே திருவள்ளுவர் பெயரை அறிந்தார்! நூலைப் படித்தார்: அதிலே ஒன்றினார். ஒரு புதையலைப் பெற்றார்போலப் பூரித்தார்! திருவள்ளுவர் சிவானந்தரை ஆட்கொண்டார்! மலையாள மொழி பெயர்ப்பைத் தேடிப் பெற்றார் சிவானந்தர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தவக்குறனைக் கண்டு, தம்மையும் தம்மவரையும் உய்விக்கப் பிறந்தவர் திருவள்ளுவரே எனக்கொண்டார்! அவருள் ஞானபீடம் எழுந்தது! சிவானந்தர் சொல்கிறார்: பிற சமயச் செய்திகள் வேற்றுமண் தந்தவை. திருக்குறட் செய்திகள் இந்த மண்ணில், இந்த மண்ணின் மைந்தர்க்கு அருளப்பட்டவை. பிறசமய நூல்களில் சொல்லப்படும் தலைவர் பிறர் பிறர். திருக்குறளில் சொல்லப்படும் தலைவர் படிக்கும் அவரவரே! திருக்குறட் சமயம் மலர்ந்தால் தான், இப்பொழுதுள்ள சாதியும் சமயமும் அவற்றின் வேறுபாடுகளும் சின்ன பின்னமாகக் சுழியும். 1975இல் ஞானபீடம் தொடங்க நினைத்தார் சிவானந்தர்; படிப்படியே செயல்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு பீடங்களைக் கண்டுள்ளார். ஒவ்வொரு ஞானபீடத்திற்கும் ஒவ்வொரு மடபதி. அவ்வட்டாரத்து மக்களுள் திருவள்ளுவரைக் குருவாக ஏற்றுக் கொள்பவர் உறுப்பினர். ஒவ்வொரு பீடத்திலும் இருபத்தைவர் முதல் ஐம்பதின்மர்வரை உறுப்பினர் உளர். மலையாள மாதத்தின் முதல் நாள்தோறும் வழிபாடு உண்டு. அவ்வழிபாடு காலை 5மணி முதல் 7-30 மணிவரை நிகழும். பிற நாள்களில் வழிபாடு செய்ய வேண்டுமானால் ஏழுநாள்களுக்கு முன்னரே 10 1/2 உரூபா கட்டி, வேண்டிக் கொள்ளல் வேண்டும். ஞாயிறு தோறும் திருக்குறள் விளக்க வகுப்புகள் உண்டு. தட்டாம்படியில் கோபால் குருப்பு என்பார் திருக்குறள் வகுப்பு நடத்துகிறார். ஐயப்பன் என்பார் மடபதியாக உள்ளார். பூசகர்க்கும் ஞானபீட நடைமுறைக்கும் பணம் வேண்டுமே? ஒவ்வொரு குடும்பத்தினரும், திங்கள் ஒன்றுக்கு அரிசி கிலோ ஒன்றும், உரூபா ஐந்தும் தருகின்றனர். அரிசி வாய்ப்பு இல்லார் பிற தவசங்கள் தருவதையும் ஏற்கின்றனர். கோபால் குருப்பு கூறுகிறார்: குஞ்சுகுட்டி செய்ய வேண்டிய செயல்கள், கணவன் மனைவியர் நடைமுறை, அரசன் அமைச்சர் கடமை இவற்றை யெல்லாம் தெள்ளத் தெளிவாகச் சொல்வது திருக்குறள். குடும்பத்தை நல்லது ஆக்குபவளும், பொல்லாதது ஆக்குபவளும் பெண்ணே! அதனால்தான், மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்றார் திருவள்ளுவர். மடபதி தவறினால் அத்தவறு மக்களையெல்லாம் கெடுக்கும். மனைவி தவறினால் அத்தவறு குடும்பத்தையே கெடுக்கும். திருக்குறளை நாங்கள் படிக்கத் தொடங்கி விட்டோம். எங்கள் வழிவரும் மக்கள் அவ்வழியிலேயே முழுமையாக வாழ்வார்கள் என நம்புகிறோம். திருக்குறள் கள்ளுண்ணாமையைச் சொல்கின்றதே என வினா எழுப்பப்படுகின்றது. ஆம், ஞானபீடம் சார்ந்த எவரும் மதுவருந்துவது இல்லை என்று பெருமிதமாகக் கூறுகிறார். கேட்பவர்களுக்கு விம்மிதம் உண்டாகின்றது. புலால் உண்ணாமையைப் புகல்கின்றாரோ வள்ளுவர் என மீண்டும் ஒரு வினாக் கிளர்கின்றது. ஆம், ஞான பீடஞ் சார்ந்த எவரும் புலாலைத் தொடுவதும் இல்லை என்று முன்னையினும் எடுப்பாக ஒரு பெரியவர் கூறுகின்றார். கூட்டம் மும்மடங்கு பொலிந்த முகத்தொடும், இன்பக் கண்ணீர் பொழியும் நிலையொடும் திகழ்கின்றது. வள்ளுவ உயிர்ப்பு ஞானபீட வளாகத்தில் உலாக் கொள்ளத் தொடங்கி விட்டது. உலக உலாக் கொள்ளும் நாளும் தொலைவில் இல்லை என்பதை எண்ணி மகிழ்கின்றோம். திருக்குறளைப் பொய்யா மொழி என்றும் வாயுறை வாழ்த்து என்றும் முற்காலத்துச் சொன்ன பெருமக்களையும், நம்மறை என இக்காலத்து முழங்கும் பெருமக்களையும் நினைந்து நெக்குருகுகிறோம் திருக்குறள் மேல் இவ்வளவு அழுத்தம் உங்களுக்கு ஏற்படுவானேன்? என ஒரு வினாக் கிளர்க்கின்றது. சிவானந்தர் மழையெனப் பொழிந்தார்: கேரள மாநிலத்தில் தீண்டப்படாதவர் என்போர் 135 பிரிவினர்: ஏறத்தாழ 18 இலக்கம் பேர்; கோயிலுக்கு வெளியே இன்ன இன்ன பிரிவினர் இத்தனை இத்தனை முழத்திற்கு அப்பால் நிற்க வேண்டும் என்ற சுட்டு; ஈழவரினத்து முன்னேற்றத்திற்கு நாராயணகுரு செய்த தொண்டு: தீண்டப்படாத மக்களுக்கு அய்யங்காளி என்பார் செய்த தொண்டு இவற்றையெல்லாம் விரித்துரைக்கிறார். பிறப்பில் வேற்றுமை இல்லை என்னும் வள்ளுவர் சிறப்பே எங்களை அவர்பால் இழுத்தது: அவரையே ஆதி குருவாகக் கொண்டோம் என்கிறார். குஞ்சுகுட்டன் என்பார் சில செய்திகளைச் சொன்னார்: எங்களுக்குள் உள்ள பிரிவுகள் மறைந்து வருகின்றன: கலப்பு மணங்களை ஊக்கப்படுத்துகிறோம். விரைவில் எல்லாப் பிரிவுகளும் ஒழிந்துவிடும் என நம்புகிறோம். மடத்தில் கூடிய ஆள்களில் இருந்தே மடபதி தேர்ந்தெடுக்கப் படுவதாகவும், மடபதிக்குப் பயிற்சி தந்து பொறுப்புகளைத் தருவதாகவும், மடத்து நடைமுறை வழிபாடு எல்லாம் அவரைச் சார்ந்ததே என்றும், அவர்க்குத் துணை மடபதி ஒருவர் உண்டு என்றும், மடபதி இல்லாக்கால் அவர் மனைவியோ, மக்களோ கடமை புரியலாம் என்றும் ஞானபீடத்துள் நுழைய வேண்டுமெனின் ஏழு நாள்கள் நோன்பிருக்க வேண்டும் என்றும், பன்னிரு வயதுக்கு உட்பட்டோர் எவரும் தூயராகப் பால்வேறுபாடு இன்றி ஞானவழிபாடு செய்தற்கு உரியர் என்றும், திருமணச் சடங்கில் தாலி அணிவது இல்லை என்றும் பல செய்திகளை அறிய முடிந்தது. இடைப்பிறவரலாக ஒரு செய்தி: திருக்குறள், ஞானபீடத்தில் மட்டும்தான் இருக்குமாம். வீடுகளில் அதனை வைப்பதில்லையாம். நாங்கள் அனைவரும் ஏழைகள். ஓர் அறைவீடே எங்களுள் பெரும்பாலோர் உடைமை. நாங்கள் குடியும் குடித்தனமும் செய்யும் அச்சிறிய வீட்டில் வழிபாட்டுக்கெனத் தனியிடம் அமைக்க முடிவதில்லை! ஆதலால் நாங்கள் வழிபடும் மறைநூலை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை என்கின்றனர்! எத்தகைய ஆழத்தில் செல்கிறார்கள் அவர்கள்? காலை 6-45க்கு உதயகீதத் தோடு தொடங்கிய விழா, கொடியேற்றம்; ஒழுக்க வழிபாடு, புது உறுப்பினர் வரவேற்பு வழிபாடு, திருக்குறள் விரிவுரை, குழந்தைகள் நிகழ்ச்சி, தாலப் பொலி, திராவிட சமய விளக்கம், சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, கூத்து, ஓரங்க நாடகமெனப் பகல் முழுவதும் விழா! இரவும் விடிய விடிய விழா! எந்த நிகழ்ச்சியும் சோடை சொல்ல முடியாத அவ்வளவு அருமையாய் அமைந்தவை! மொழி பெயர் தேயத்திலே வள்ளுவப் பெருமகனார்க்கு இப்படியொரு விழாவை எண்ணிப் பார்க்கவே வியப்பன்றோ! அந்த எளிய மக்கள் உள்ளம் நான் எவ்வளவு பெரியது அவர்கள் பொருள் நிலைக்கு விஞ்சியே விருந்தாளர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் செய்திருந்த வாய்ப்புகள் உழைப்பு மிக்க அம்மக்கள் தம் உழைப்புக் கொடையால் எழுப்பிய மேடையும் தொங்கலும் கோலமும் கொள்ளை வனப்புகள் உள்ள முடைமை உடைமை என்னும் வள்ளுவச் சுரப்பாளர் என்னதான் செய்யார்? மேற்குடியினரும் மேட்டுக் குடியினரும் திருவள்ளுவர் ஞான பீடத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பது புலப்படாமல் இல்லை: அரசியலாளர்கள் ஒரு கண் வைத்து மயக்கக்கூடும் என்னும் அச்சம் தோன்றாமலும் இல்லை. ஆனால் தெளிவும் திறமும் கடைப்பிடி உயிர்ப்புமுடைய சிவானந்தர்முன் இவை தலைகாட்டி ஒன்றும் செய்துவிடா என்னும் நம்பிக்கையும் வீறுகின்றது. சிவானந்தர் முதல் அனைவரும் ஊர்தி வரை வந்து உலாக்குழுவினரை அனுப்புங்கால் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்னும் அருமைத் திருக்குறள்தான் நின்றது! வள்ளுவர் எவ்வளவு பெரியவர் என்பது நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்றது! 12. இலக்கியத்தில் இயற்கை இயற்கையைத் தழுவாத இலக்கியம், தமிழில் இல்லை. அப்படித் தழுவிச் செல்வதே இலக்கியம் என்பதை, வகுத்துக் காட்டிய இலக்கணத்தையுடைய மொழி தமிழ். தமிழ் இலக்கணமாக முழுதளவில் கிடைத்துள்ள நூல், தொல்காப்பியம். அதற்கு முன்னரே இலக்கணமாயினும் சரி, இலக்கியமாயினும் சரி, இயற்கையைத் தழுவியே இயல வேண்டும் என்னும், இயற்கைப் பெருநெறி உண்டாயிற்று. தமிழர் பொருளிலக்கணத்தை இரண்டாகப் பகுத்தனர். அவை அகப்பொருள், புறப் பொருள் என்பன. அகப் பொருளையும் மூன்று பகுப்பு ஆக்கினர். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. முதற், பொருள் என்பது, நிலமும் பொழுதும் அல்லது இடமும் காலமும், கருப்பொருள் என்பது, தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, இசை, தொழில் முதலியனவாகும். இனித் திணையோ ஐந்து என அகப்பொருள் கூறும். அவை, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன. இவையெல்லாம் இயற்கைதாமே! புறப்பொருள் பூவாகிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பன இயற்கை தாமே! இலக்கியப் பொருளாகி இரண்டும், இயற்கையோடு இயைந்தவை எனின், இயற்கையை ஊடும் பாவுமாகக் கொள்ளாமல், இலக்கியப் பா நெசவு தமிழில் இல்லை என்பது வெளிப்பட விளங்கும். இனி, இயற்கையின் இலக்கணம் யாது எனின், இயற்கையில் தோய்ந்து, இயற்கை முருகை எய்தி, எவரும் நலம் பெற, முருகாற்றுப்படை பாடிய ஆசிரியர் நக்கீரனார் கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்பு என்கிறார். இவ்விலக்கணத்தில் தோய்ந்த திரு.வி.க. கையால் செய்யப்படுவது செயற்கை: கையால் செய்யப்படாதது இயற்கை: மலையும். ஆறும், காடும், கடலும், எவர் கையால் ஆக்கப்பட்டன? ஞாயிறும், திங்களும், விண்மீன் களும், எவரால் செய்யப்பட்டன? புனலுக்குத் தண்மை ஈந்தவர் எவர்? நெருப்புக்கு வெம்மையூட்டினவர் யாவர்? இயல்பாக அரும்பிய இவற்றின் அழகே, கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பாகும் என்றும், செம் பொன்னை உருக்கி வார்த்தாலெனக், காட்சியளிக்கும் அந்திவான் செக்கர் அழகும், கொண்டல் கொண்டலாக ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத்தண்புனல் கற்களை அரிந்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும், அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக்கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவற்றினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழகும் மக்கள் உள்ளத்துள்ள இன்ப ஊற்றைத் திறப்பன அல்லவோ? மயிலாடும் அழகும், மான் நடக்கும் அழகும் நந்தூரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவோ என்றும் கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்னும் பொருள் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர், அறிஞர் மு.வ. அவர், இலக்கியத்தில் இயற்கை பெறும் இடத்தை இனிதின் இயம்புகிறார். இயற்கை இயல், விருந்து இயல் ஆகிய இரண்டும், சங்க இலக்கியத்தின் பண்புகளாக உள்ளன. வோர்ட் வொர்த்தைப் போல வானோங்கு மலை, பொங்கிவீழ் அருவி, நிறைந்தொளிரும் நீர் நிலை, நெளிந்தோடும் ஆறு ஆகியவற்றை எழில் ததும்பும் ஒவியங்களாகத் தீட்டிக் காட்டும் கவிஞர்கள். சங்க காலத்தில் உண்டு. ஆனால் அவர்கள் வோர்ட் வொர்த்தைப் போல இதுகாண் இயற்கை என்று எடுத்துக் கூறி விளம்பரப் படுத்துவது இல்லை. சர் வால்ட்டர் காட்டின் நுண்ணிய நோக்கம் படர, எத்துணையோ இயற்கைக் காட்சிகள், மிக நுட்பமான விவரங்களோடு, அவர்களின் இலக்கியங்களிலே சொல்லோ வியங்களாக ஒளிர்கின்றன. இயற்கைக் காட்சிகளை வருணித்துக் கூறுவதில் காட்டைப் போன்ற புலவர்களும், சங்க காலத்தில் உண்டு. அவர்களுடைய நுண்ணிய காட்சியறிவு இன்றைய பயிர் நூல் வல்லாரின் ஆராய்ச்சிக்கும் உதவக் கூடியது. தமிழகத்துப் பயிர் பச்சைகளைப் பற்றிய விவரங்களை அறிய விரும்பும் பயிர் நூல் வல்லார் சங்க இலக்கியப் பாடல்களை முழு நம்பிக்கையோடு பயிலலாம். நாடி நரம்புகளைத் தூண்டிக் கிளர்ந்தெழச் செய்யும் கீட் போன்ற கவிஞர்களும் அக்காலத்தில் இருந்தனர். அவர் களுக்கு அமைந்திருந்த நுட்பமான புலனுணர்வு. அளவிறந்த சிறப்புடையது. மலரீட்டங்களின் மாயவண்ணங்களை, அவர்களின் காட்சிப் புலன் ஊடுருவிச் செல்லும். அசைந்தாடும் பூங்கொடியின் அருமைப் பாடலிலே. அவர்களின் செவிப் புலன் கிளைக்கும். விரிந்த மலர்களின் பட்டிதழ்களின் மென்மையைத் தொடாமல் தொட்டுணரும். அவர்கள் பொறியும் புலனும், கனிகளின் மணத்திலே மலர்களின் மணத்திலே, இன்னும் இயற்கை அன்னை வழங்கும் எண்ணற்ற இன்ப விருந்துகளிலே கிளைக்கும் அவர்களின் புலமை நெஞ்சம். மனித இனத்தின் பேராற்றல் களாகிய காதல் வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு, இயற்கையினிடத்து அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர். பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்துத் தெளிவுபடுத்துதற்காகவே இயற்கையைப் பயன்படுத்தினர் என்கிறார். குறிஞ்சியைப் பாடுதலில் பெருந்திறம் பெற்றவர் கபிலர். அவர் பாடிய குறிஞ்சிப் பாட்டு, பத்துப் பாட்டுள் ஓன்று. அப்பாட்டில் தலைவி மலர் பறிக்கும் காட்சி வருகின்றது. என்னென்ன பூக்களைப் பறிக்கிறாள் என்பதை. ஒரு பெரும் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அப்பட்டியலில் உள்ள பூக்கள் பத்தா பதினைந்தா? தொண்ணூற்று ஒன்பது. காட்டிலேயே வாழ்வாரும். கானியல் ஆய்வாளரும் கூட அப்பூக்களை யெல்லாம் இன்று கண்டு காட்டல் அரிது. நாம் இயற்கையை விட்டு அவ்வளவு ஒதுங்கி விட்டோம். பலவற்றை அழிய விட்டு விட்டோம் அவற்றின் பெயர்களையும் அறியாமல் விலகி விட்டோம்! குறிஞ்சிக் கபிலர் அகப்பாடல் ஒன்றை அறியலாம்: ஒரு பெருமலை, அதற்குப் பக்க மலை ஒன்று: அம்மலையில் இருந்து வெள்ளி யுருக்கு வீழ்வதுபோல அருவிகள் வீழ்கின்றன. பஞ்சுத் துய்யைத் தூவிவிட்டாற் போலத் தூவானம் தவழ்கின்றது. வெண் தூவானம் கருமுகிலுடன் கலந்து வானப் போர்வையாய் வனப்புச் செய்கின்றது. ஓங்கி உயர்ந்த மூங்கில்கள் அரங்கமாய் அமைந்து அழகு செய்கின்றன. அவ்வரங்கிலே ஆடுகள் விறலிபோல ஆடுகின்றது. மயில். ஆட்டம் மட்டும் கூத்தாகி விடுமா? பாட்டும் வேண்டுமே பின்னணி இசை வேண்டுமே பார்வையாளரும் வேண்டுமே! கழையாகிய மூங்கிலிலே துளைபோட்டுள்ளது வண்டு. அத்துளையுள் புகுந்து முட்டி வெளிப்படுகின்றது மேல் காற்று. அது குழலிசையாகி இன்பஞ் சேர்க்கின்றது. இஃது இயற்கை வழங்கிய துளைக்கருவி பாறையில் குதித்துப் பரவி வீழ்கின்றன அருவிகள். அவை இரண்டா மூன்றா? பல அவை முழங்கி வீழ்ந்து கழங்காடுபவை. அவை, மயிலின் ஆட்டத்திற்குவாய்த்த முழவுகள் - மத்தளங்கள் இயற்கை வழங்கியதோற் கருவிகள் அவை. மலைச் சாரல்: மான்களுக்கு விருப்பமான இடம்: அருவிச் சூழல்: அவற்றுக்கு நீரும் நிழலும் தளிப்புல்லும் தந்து இன்பம் பெருக்கும். ஆதலின் ஆங்குக் கூடிய மான் கூட்டம் சேர்ந்து ஒலிக்கின்றது. அது வங்கியம். ஊது கொம்பு - என்னும் இசைக் கருவியை இசைத்தாற் போல ஒலிக்கின்றது. இஃது இயற்கை வழங்கிய கஞ்சக் கருவி. பூத்துக் கிடக்கும் பொதும்பராக விளங்கும் அவ்விடத்தில் வண்டுகள் பாடித் திரிகின்றன. அவை யாழிசையாய் இனிக்கின்றன. இஃது இயற்கை அருளிய இணையிலா நரம்புக் கருவி குழலிசை, முழவிசை, தூம்பிசை, யாழிசை ஆகிய இசைகள் விம்ம மயிலி ஆடுகிறாள். அவள் ஆட்டத்தைப் பார்க்க மந்தியார் பார்வையாளராக உள்ளார். தம் ஆட்டம் பாட்டம் குறும்பு குதிப்பு எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கி முடக்கி வைத்துவிட்டுக் குந்திக் கொண்டு பார்க்கிறார் மந்தியார். அவர் கலைக் காதலராம் நல்ல மந்தியார் ஆடல் பாடல் பின்னணி இசை எல்லாமும் ஒன்றை ஒன்று விஞ்சி, அழகு சேர்ப்பதால், மந்தியார் மையலொடு பார்க்கிறார். கபிலர் தீட்டிய இயற்கை ஒவியப்பாட்டு இது: ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை அவ்வளி குழலிசை யாக, பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக், கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக. இன்பல் இமிழிசை கேட்டுக் களிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத்து இயலியாடும் மயில், விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன் நாட்டு வளம் சொல்லவா இதனைப் பாடினார்? நாட்டுக்கு உரியவன் என்று பாராட்டிக் கலைவளமிக்க அவனைக் கண்டார். பலராகவும், யான் மட்டுமே அவளை நினைத்து உறக்க மில்லாமல் உருகிக் கிடக்கின்றேன் என்று தலைவி தோழியிடம் கூறுகின்றாள். இதன் பொருள் எங்கள் காதலை நிறைவேற்றிவை என்பதாம்! கபிலர் தீட்டிய இப்பாட்டு, எத்தனை எத்தனை! பாவலர்களின் பாடல்களுக்குக் கருவும் முளையும் ஆயிற்று என்பது வியப்பானது. இதோ மணிமேகலைச் சாத்தனார். வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் என்கிறாரே! மதுரைப் பகுதியில் உள்ள கடமலைக் குண்டு என்னும் மலைச் சுழலில் மயிலாடும் பாறை என்றும் மந்திச் சுனை என்றும் ஆலந்தளி என்றும் ஊரும் பேருமாக இருப்பவை பழந்தமிழரின் இயற்கையொடும் இயைந்த வாழ்வை முழங்குவன அல்லவோ? இதோ கம்பர், தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகரயாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ? என்று பாடுகிறாரே! மலையிலே கண்ட கபிலர் காட்சி. கம்பரிடத்தில் மருத நிலக் காட்சியாகி விடுகின்றதே அதற்குத் தக்கவாறு அரங்கமைப்பு விரிகின்றதே: வேறு வேறு ஆகின்றவே: ஆயினும் ஆடல் மயில் மட்டும் பாடல் பொருளாகத் தவற வில்லையல்லவா! தாமரை விளக்காம்: மேகங்கள் முழவமாம்: குவளை மலர் பார்வையாளராம்: ஆற்றின் அலை திரையாம்: வண்டின் இசை மகரயாழாம்: வண்ணமிகு வீற்றிருக்கையில் மருதவேந்து வீற்றிருக்கிறதாம். மலைக் காட்சி மருதக் காட்சியாயது இது என்றால், காவிரிக் காட்சி எப்படி? மலையில் மலைவைத்துக் கடலில் கால் வைத்து வளஞ்சுரக்கும் வண்மைக் காட்சியல்லவா அது! அதன் வளந்தான் எண்ணத் தொலையுமா? 301 அடிகளையுடைய பட்டினப் பாலையில் காவிரி வளம் தானே தலைப்பட்டது. அக் காவிரி வளம் போலவே கரிகால் சோழன் அந்நூலுக்கு 16 இலக்கம் பொன் பரிசு வழங்கினானே காவிரி பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்; அதன் வளத்திலே தோய்ந்து தோய்ந்து எப்படிப் பாடுகிறார்? சுக்கிரன் என்னும் வெள்ளிமீன் கிழக்கேயிருந்து மேற்கே சென்றால் மழை பெய்யுமாம். அது திசைமாறினால் மழை பெய்யாதாம்! ஆனால் காவிரிக்கு மட்டும் அந்நிலை இலையாம். வானம்பாடிப் பறவை நீர் இல்லாமல் வாடினும் காவிரி, நீர் இல்லாமல் வாடுதல் இல்லையாம்! மலைத்தலைய கடற் காவிரியாம் வான் பொய்ப்பினும் தான் பொய்யாதாம் புனல் பரக்கும் பொன்னியாம் அவர் பாடுகிறார்: வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும், தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன்கொழிக்கும்: விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத், தீத்தெறுவிற் கவின்வாடி, நீர்சிசெறுவின் நீள்நெய்தல், பூச்சாம்பும் புலத்தாங்கண், காய்ச்செந்நெற் கதிரருந்தி, மோட்டெருமை முழுக்குழவி, கூட்டுநிழல் துயில்வதியும், கோட்டெங்கில் குலைவாழைக், காய்க்கமுகிற் கமழ்மஞ்சள், இனமாவின் இணர்ப் பெண்ணை, முதற்சேம்பின் முறையிஞ்சி ஓரிலக்கம் பொன்னுக்குரிய இயற்கைப் பரிசு இது கதிரோனைப் பற்றி தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தால் பல்லாயிரம் இருக்கும்: திங்களைப்பற்றிய தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தாலும் அப்படிப் பல்லாயிரம் இருக்கும். இலக்கியப் புலவர்களுள் எவரும் இவற்றைப் பாடாதிரார். ஆனால் கதிரோன் மறைவுக்கும் திங்கள் வரவுக்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றிப் பாடினோர் அரியர். கலித்தொகையோ அதனைப் பலபடப் பாடுகின்றது. அக்கலி நெய்தற் கலி: அதனை நெய்தவர் நல்லந்துவனார். பகை வென்று புகழ் கொண்ட வேந்தன்: அவன் தன்னுயிர் போல் மன்னுயிர் பேணுபவன்: அறவழியில் ஆட்சி நடத்துபவன்: அவன் நற்பயன் துய்க்க வீடு பேறுற்றான்: அது போல் கதிர் களைச் சுருக்கிக் கொண்டு மலைப்பால் மறைந்தான். அவன் மறைவால் மக்கள் கொண்ட துயரம் பெரிது அவலம் பெரிது: அல்லல் பெரிது: அந்நிலையை ஒரளவு மாற்றுவான் போல ஒரு வேந்தன் எய்தினான்: அது போன்றது திங்களின் தோற்றம். ஆண்ட வேந்தனுக்கும் ஆளவரும் வேந்தனுக்கும் இடைப் பட்ட இருட்காலம், கதிரோன் மறைவுக்கும் திங்கள் தோற்றத் திற்கும் இடைப்பட்ட இருட்காலம் போன்றது, அப்பொழுதில், கண்ணை மூடி உறங்குவதுபோல் குவிந்தது தாமரை. தம்புகழைத் தம் முன்னை கூறக் கேட்ட சான்றோர் தலை தாழ்வது போல் மரங்கள் தலை சாய்த்து உறங்கின. பல்லைக்காட்டி நகைப்பது போலப் புதர்ச் செடிகள் மலர்ந்தன. குழலிசை போல வண்டுகள் இம்மென ஒலித்தன. பறவைகள் குஞ்சை நினைத்துக் கூட்டுக்கு வந்தன. கறவைகள் கன்றை நினைத்து வீட்டுக்கு வந்தன. மற்றை மற்றை விலங்குகளும் தாம் தங்குமிடம் சேர்ந்தன. இவ்வாறு விரிய விரியக் கூறுகின்றது கலித்தொகை. இயற்கையினிடையே இயற்கை வாழ்வு வாழ்ந்தவர் சங்கச் சான்றோர். அவர்களின் பாடல்கள் இயற்கைக் களஞ்சியம்: இயற்கைக் கருவூலம்: இயற்கைப் பெட்டகம்: இயற்கை மணி மாலை: இயற்கை வான்: இயற்கைத் தேன் எல்லாம். எல்லாம் இயற்கை இயக்கம். அவ்வியற்கைப் பண்ணிசையில் உள்ளத்தையும் பறி கொடுத்த தோன்றல் இளங்கோவடிகள். இயற்கை இசைப்பாடல்களை வரிப்பாடல்களைப் பாடிப் பாடித் திளைத்தவர். அவர் இயற்கையைத் துய்த்த அளவில் நில்லாமல், இயற்கையையே இறைமையாகக் கண்டும் கொண்டும் வழிபட்டார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று ஒளியும் வெளியும் வளியும் நீரும் ஆகியவற்றைப் பாராட்டிப் போற்றியதுடன், நிலத்தையும், பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் என்றும் பாடினார். நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும் என்பர். நிலமாவது நன்செய். அதில் நெற்பயிர் வளர்ந்து கருக் கொண்டது. அக் கருத் தோற்றம், பச்சைப் பாம்பாகத் தோன்றுகின்றது. கரு வெளி வந்து கதிர் நிமிர்ந்து நிற்கிறது. அது மேன்மைக் குணமில்லாதவர் செல்வச் செருக்கைப் போல் உள்ளது: அக்கதிர், மணி பிடித்து முதிர்ந்து தலை தாழ்கின்றது: அது, கல்வியறிவு மிக்க சான்றோர் பணிவுக்கு ஒப்பாக உள்ளது. இவ்வாறு பாடுகின்றார் சிந்தாமணித் திருத்தக்க தேவர். இதோ, அந்நெற் கதிரை இறையடியார் காட்சியாகக் காண்கிறார் தொண்டர்சீர் பரவுவாராம் தோன்றல் சேக்கிழாரடிகள். நெற்கதிர் தாழ்ந்து காற்றில் தலையாட்டுகின்றது. அது அடியார் ஒருவரைக் கண்ட அடியார் தலைவணங்குவது போல் உள்ளது. அக்கதிர்க்கு முன்னே உள் கதிரும் தாழ்ந்து தலையாட்டுகின்றது. அது வணங்கிய அடியாரை வணங்கும் அடியாராகத் திகழ்கின்றது என்கிறார். இதோ தென்றலை ஆய்வுப் பெருமகனாகக் காண்கிறார் பரஞ்சோதியார். காற்று சோலையுள் புகுகின்றது: குளத்தில் தவழ்கின்றது: மலர்களில் நுழைந்து தழுவுகினறது: மலர்ப் பந்தல்களில் தாவுகின்றது: குளிர்ச்சியும் நறுமணமும் மென்மையும் கொண்டு உலாவுகின்றது: இது அறிஞர்கள் அறிவைத் தேடுவதற்காக ஆய்வரங்கம் கருத்தரங்கம் நூலகம் படிப்பகம் எனச் சென்று சென்று அறிவைத் தேடுவது போல் உள்ளது என்கிறார். பாவலர் தாம் காணும் காட்சி கொண்டு மக்களுக்கு வேண்டும் பண்பாடுகளைப் படைத்துக் காட்டுதல் இவற்றால் புலப்படுமே! வம்பார் குன்றம் வளர்வேங்கை நீடுயர் சாரல் கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம். என்று நாயனார் பாடினால், வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல்பீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்று ஆழ்வார் பாடுகின்றாரே! இவையன்ன பாடல்கள் தாம் எத்தனை? எத்தனை? கோடையிலே இளைப்பற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே, மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும்பயனே, ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்ததண் ணீரிடைமலர்ந்த சுகந்தமண மலரே என இறைவனைக் கூவிக் கூவிக் குரல்தந்து கொஞ்சுகிறாரே வள்ளலார், அவர்தாம் எத்தகைய இயற்கைக் காதலர்! எத்தகைய இறைமைக் காதலர்! ஆனால் ஒர் இயற்கைக் காவலரும் இம்மண்ணிலே தாயுமானவர் என்னும் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார் என்பதை இம்மண் இன்னும் அறிந்தும் உணர்ந்தும் போற்றவில்லை. வெறுஞ் சொல்லாக அவர் சொல்லைக் கொண்டதே அல்லாமல், பெருஞ் சொல்லாக - பேரரூட் சொல்லாகக் கொள்ளவில்லை இறைவா உன்னை நெஞ்சார வாழ்த்துகிறேன்: நேயப் பிழம்பாக நின்று வாழ்த்த விரும்புகிறேன்: மற்றவர்களைப் போல உன்னை ஒர் உருவமாக நினைத்து மலர் பறித்து உனக்குச் சார்த்தியும் தூவியும் வழிபட நான் விரும்பவில்லை ஏனெனில் அம்மலராகி நிற்பவன் நீயே. அதன் மலர்ச்சியாய் மணமாய் தேனாய் வித்தாய் விளைவாய் நிற்பவன் நீயே. உன்னைப் பறித்து உன் காலடியில் இட்டு வழிபடுவது விரும்பும் செயலன்றே. ஆதலால் பனிதோய்ந்த மலரைப் பறித்து உன் மலரடியில் இட்டு வணங்கமாட்டேன்! பண்ணேன் உனக்கான பூசை, ஒருவடிவிலே பாவித்திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் என்கிறார். தாயுமானாரின் இயற்கைக் காப்பு இந்த மண்ணிலே பரப்பப்பட்டிருந்தால் காடு காடாக அழிக்கும் கொடுமை நிகழுமா? வான் வறண்டு போகவும் வளம் வறண்டு போகவும் நேருமா? குயில் பாட்டுப் பாடிய குயில்பாரதியார். இயற்கையில் குதிகொண்ட குடிகொண்ட பாவலர் அவர். கதிரோன் காட்சியைப் பாஞ்சாலி சபதத்தில் பாடுகின்றார். காட்டிலே திரிந்தாலும் களிப்பிலே குறையாமல் பாஞ்சாலிக்குப் பார்த்தன் சுட்டிக் காட்டிச் சுடரழகைச் சொல்கின்றான்: பார் சுடர்ப் பருதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ! என்னடீ இந்த வண்ணத் தியல்புகள் எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மைதோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ! நீலப் பொய்கைகள் - அடடா நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடி! எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம் நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்! காணடி ஆங்கு தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல் ஆகா! எங்குநோக் கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம் இயற்கையின் எழுச்சிகளை யெல்லாம் அழகின் சிரிப்பெனக் கண்ட அருமைப் பாவலர், பாவேந்தர்! அவர் எங்கெங்கு அழகைக் கண்டு களிதுளும்புகிறார்: காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்திச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகுகின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்! திசைகண்டேன்: வான்கண்டேன்: உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன்: யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன்: மற்றும் அழகுதனைக் கண்டேன் நல் இன்பங் கண்டேன்! பசையுள்ள பொருளிலெலாம் பசையவன்காண்: பழமையினால் சாகாத இளையவள்காண்! நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை! எங்கெங்கும் இயற்கை எழில்! துன்பம் தொலைய வேண்டுமா? இயற்கை வசப்படு! இன்பநிலைக்களம் அதுவே என்று வழிகாட்டுகிறார்! ஒளியும் காட்டுகிறார் பாவேந்தர். கவிமணி தேசிய விநாயகர் ஊர் தேரூர்! இரதபுரி என்பதும் அது. அதனைப் பாடுகிறார். தித்திக்கும் முக்கனிகள் எத்திக்கும் உதிர்கின்ற செறிமரச் சோலை சூழும், தென்னிரத புரி சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற செய்யகம் சூழும் ஊராம், தென்னிரதபுரி தென்னையே புன்னையே மன்னிவளர் சோலை எத் திக்கினும் குழும் ஊராம், தென்னிரதபுரி தேங்கா மரத்திலே மாங்காய் பறிக்கவொரு சினைமந்தி கொக்கை நோக்கும், தென்னிரதபுரி என்று தம் ஊரைச் சொல்லிச் சொல்லித் தாலாட்டுகிறாரே! பிறந்த மண்ணின் பற்றுமைதான் எத்தகைய பெருமையது! கதிரோனைக் காண்கிறோம்! நிலவைக் காண்கிறோம்! இடியைக் கேட்கிறோம்! மின்னலைப் பார்க்கிறோம்! மழை கண்டு மகிழ்கிறோம்! அவற்றுக்கு மூலப் பொருள் ஒன்று உண்டு என்று உணர் கிறோமோ? அது பொதுமைக்கெல்லாம் பொதுமையானது என்று புரிகிறோமா? புரிந்து கொண்டால், பகையுண்டா போருண்டா? இல்லையே. இதோ புரிந்து கொண்டவர், புரியவைக்கப் பாடுகிறார். அவர் நாமக்கல்லார்: சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவதும் எவராலே? காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் தெரிவன அவையென்ன? பேரிடி மின்னல் எவராலே பெருமழை பெய்வதும் எவராலே? யாரிதற்கொல்லாம் அதிகாரி அதைநாம் எண்ணிட வேண்டாமோ? அல்லா என்பார் சிலபேர்கள்: அரன் அரி என்பார் சிலபேர்கள்: வல்லான் அவன்பர மண்டலத்தில் வாழும் தந்தை என்பார்கள்; சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்; எல்லாம் இப்படிப் பலபேசும், ஏதோ ஒருபொருள் இருக்கிறதே! அந்தப் பொருளை நாம் நினைந்து, அனைவரும் ஒன்றாய் வணங்கிடுவோம் எந்தப் படியாய் எவர தனை எப்படித் தொழுதால் நமக்கென்ன? நிந்தை பிறரைப் பேசாமல் வந்திப் போமதை வணங்கிடுவோம் வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம் இனி நாடகம் இலக்கியம் இல்லையா? இசைப்பாடல் இலக்கியம் இல்லையா? திரைப்பாடலும், தொலைக்காட்சிப் பாடலும், வானொலிப் பாடலும் ஒலி இழைப் பாடலும் இலக்கியங்கள் இல்லையா? ஏன் புதுப்பாவும் உரைப்பாவும் உரைநடையும், துணுக்குகளும், பழமொழியும் விடுகதையும் ஆகியனவெல்லாம் இலக்கியங்கள் இல்லையா? குறிக்கோளை இயம்பும் எல்லாமே இலக்கியங்களே. அவற்றிலெல்லாம் இயற்கை இழையோடாமல் இருப்பது இல்லை! நம் வாழ்வை இலக்கியமாக்க வேண்டுமானால் இயற்கையோடு இயைந்த வாழ்வு, இறைமையோடு இயைந்த வாழ்வு நம் வாழ்வாதல் வேண்டும்! அவ்வாழ்வு கொண்டோர் அமர வாழ்வு பெற்றோர்! இயற்கைத் தாயின் இனிய குழந்தையாக வாழ்வோர்க்கு நரையில்லை! திரையில்லை! _¥ãšiy !முணகல் இல்லை! எங்கும் என்றும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை! அவ்வின்ப வாழ்வை அமர நிலையை அடைதலைக் குறிக்கொள்வோமாக. 13. சங்க இலக்கிய இயற்கை வாழ்வியல் சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டது தொல்காப்பியம், வாழ்வியல் இலக்கியமாகிய பொருளதிகாரத்தைக் கொண்டது அது. அப்பொருளும் அம்மரபும் அவர்க்கு முற்படவே இம்மண்ணின் வளமாக இலங்கியவை என்பது, கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்னும் பொருளதிகார முதல் நூற்பாவிலேயே சுட்டப் பட்டு விடுகின்றது. முதல் கரு உரியென்னும் முப்பொருள்களும் பாடலுட் பயின்று முறை சிறந்திருந்தமையை, மூன்றாம் நூற்பாவே முழங்கு கின்றது. இயற்கையோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனையில் வைப்பகமும் கருவூலமும் களஞ்சியமும் சங்கத் தொகை நூல்களும் பாட்டுகளுமே யாம் என்பதை விரிக்க வேண்டாமலே விளக்கவல்லவை இவை. இம் முப்பொருள்களும் விரவியும் பயின்றும் வாரா அகப்பாட்டை அகப்பாட்டு என்பாரார். அத்தகும் அகப்பாட்டு தமிழில் ஒன்றா இரண்டா? 1862- என்க. தமிழ் என்பதன் பொருளே அகத்திணை என்பதாக இருந்ததோர் காலத்தை எண்ணின் இயற்கையோடியைந்த வாழ்வின் சிறப்பு இயல்பாகவே விளங்கும் வாழ்வியல் இயக்கமா, கல்வியா, கலையை எல்லாம் எல்லாம் இயற்கையாலேயே கண்டு கொண்டவன் மாந்தன். அவனுக்கு வழி காட்டியாக அமைந்து சொல்லாமல் சொல்லிச் சுடரச் செய்த பல்லான்ற திறக்குருவன், இயற்கையே என்பதை மேலோட்டமாக நோக்குவாரும் அறிவர். இயற்கையோடியைந்த வாழ்வின் கொடையே மொழி. அவன் ஒலிக்கும் உயிரொலிக் குறுக்க நீட்டங்கள் எல்லாம் உயிரிகளின் ஒலிகள் தாமே இயற்கை இயக்கங்களின் கொடையாக வாய்த்த வளங்களை எல்லாம் அளவிட முடியுமா? அ ஆஇ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஐ ஔ அஃகு என்பவை உயிருணர்வு ஒலிகள் அல்லவோ? சல் சல் சல சல ஓல் கல் இன்னவாறாம் ஒலிக் குறிப்புச் சொற்களின் வழியாக உண்டாகிய பொருட்சொற்கள் எத்தனை? எத்தனை? ஒரு சான்று: எவரும் அறிந்த ஒன்று: காகா எனக் கரையும் காக்கையை எவரும் ஒலிக் குறிப்புப் பெயரென அறிவார். அதனைக் காணலினும் சற்றே கூர்ஞ்செவியுண்டாயின் கொக் கொக் என்பதால், கொக்கும்: குர்க் குர்க் என்பதால் குரக்கும் பெயர் பெற்றன என்பதை அறியக் கூடுமே. கொக் கொக் என்னும் ஒலிக்குறிப்பு கொக்கு என்னும் பறவைப் பெயரை மட்டுமோ தந்தது கொக்கின் தோற்றம் பழம் புலவர்களை மிகக் கவர்ந்துள்ளது. அதனால், கொக்கின் வெண்ணிறம் மழையில் நனைந்த சுண்ணாம்புச் சுவர் போன்றது என்றார் ஒரு புலவர் (அகம் 346). இன்னொருவர் கொக்கின் வெண்ணிற இறகை, முழுதுற நரைத்த முதுமகள் ஒருத்தியின் நரைத்தலைக்கு ஒப்பிட்டார்(புறம் 277) மீனைக் கவர்வதற்கு நிற்கும் கொக்கு திருவள்ளுவரைக் கவர்ந்தது. அவர், ஒருவர் எடுத்துக் கொண்ட செயல் நிறைவேறாது என்னும் பொழுதில் கொக்கைப் போல் அமைதியாகப் பொழுதை எதிர் நோக்கிக் கொண்டு இருக்க வேண்டும்: செயலை நிறைவேற்றத் தக்க பொழுது வாய்த்ததும். கொக்கு மீனைக் குத்தி எடுப்பதுபோல் செயலை விரைந்து செய்துவிட வேண்டும் என்கிறார்(490) கொக்கின் கால்கள் நீண்டவை: குச்சி போன்றவை: அவற்றின் நெடுமையைக் கருதிப் பைங்காற் கொக்கு, என்றனர். (நெடுநல் 15: புறம் 342). நெடு நெடு என வளர்ந்தவனைக் கொக்கன் என்றும் நெடிய கால்களையுடையவனைக் கொக்குக் காலன் என்றும் கூறுவது வழக்காகும். கொக்கின் பார்வை, கூர்மையும் வன்மையும் மிக்கது என்பதைக் கூர்மையாய் நோக்கிய புலவர் ஒருவர் பார்வல் கொக்கு என்றார் (பதிற் 21) கொக்கின் கழுத்தும் வாயமைப்பும் பண்டைப் பொது மக்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாகத் தொழிற்றிறம் வல்லவர் களை வயப்படுத்தியுள்ளன. அவ்வமைப்புகளைப் பயன்படுத்திச் சங்கிலிப்பூட்டு வாய்களும் பொருத்து வாய்களும் அமைத்தனர். தம் அமைப்பு முறையை மறவாமல் கொக்கி, கொக்கில், கொக்குவாய் எனப் பெயர்களும் சூட்டினர். நாமும் அப்பெயர் களால் அவற்றை வழங்குவோம் எனினும், கொக்கை மறந்து போனோம். கொக்கோ, நம்மைப் பயன்படுத்துவார் மறந்தாலும் நாம் மறக்க மாட்டோம் என்று நிலை நாட்டிக் கொண்டுள்ளது. கொக்கிற்கும் குளத்திற்கும் உள்ள தொடர்பு பெரியது. அதனால் கொக்கு குளம், கொக்கர் குளம் கொக்குளம், கொக்காஞ்சேரி எனப் பல ஊர்கள் உள்ளன. கொக்கிற்கு சென்னியுடையன் கண்டாய் என்று நாவுக்கசரசரும், கொக்கிற்குபாடி என்று மணிவாசகரும் இறையோடு இயைத்தனர். ஓர் இனிய கொக்குக் குடும்பம்: சேவற்கொக்கு ஒன்று பேடைக் கொக்கு ஒன்று: பிள்ளைக் கொக்கு ஒன்று: எண்ணிக்கையால் குறைந்த இக்கொக்குக் குடும்பம், எண்ணத்தால் சிறந்தது. ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு ஒன்று ஒன்றுக்காக வாழும் பெருநிலையுடையது. கொக்குக் குடும்பத்தில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், மாந்தக் குடும்பச் சிறுவர்களால் கொக்குக் குடும்பத்திற்குச் சிக்கல் உண்டாகி விட்டது. ஆண் கொக்காம் குடுமிக் கொக்கு விடியற்பொழுதிலேயே இரைதேடப் புறப்பட்டது. தனக்காக மட்டுமோ இரைதேடச் சென்றது பெண்டு பிள்ளைகளைப் பேணிக் காத்தல் அதன் கடனாயிற்றே! அதனால் சென்றது. சேறும் நீரும் மிக்க ஓரிடத்தை அடைந்தது கொக்கு, அதன் கூரிய பார்வையையும் மறைக்கும் திறமாக வேட்டைச் சிறுவர் கண்ணிமாட்டியிருந்தனர். அவர்கள் இளமை நீங்காப் புன்றலைச் சிறார் எனினும் ஆறாம் அறிவினர் அல்லரோ! காலையில் பிரிந்து சென்ற குடுமிக் கொக்கு, பொழுது மறைந்தும் இருப்பிடத்திற்குத் திரும்பி வரவில்லை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தன பெட்டையும் குஞ்சும். பெட்டையும் அழுதது: பிள்ளையும் அழுதது: அடக்க முடியாமல் அழுது வழிந்தன: பலநாள் ஊண் இருத்தலால் பசியால் அவை அழுதன அல்ல! ஊணிருந்தும் அதனை உண்ணாமல் பிரிவாலும் அழுது வழிந்தன? அரற்றுத லோடேயே அன்றை இரவு கழிந்தது! கொக்குக் குடும்பத்தின் அவலத்தை எவரே அறிவார்? கொக்குறை என்னும் பெயரமைந்த பனைமட்டையும், அதனிடை இருந்த கூடும். அம்மரமும், உருக்க மிக்க உணர்வால் உயிர்கலந்தொன்றிய அப்புலவர் பெருமான் நக்கீரனாரும் அறிவர். அவர் பாடிய அப்பாடல் பகுதி: குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை இருஞ்சேற் றள்ளல் நாள்புலம் போகிய கொழுமின் வல்சிப் புன்றலைச் சிறாஅர் நுண் ஞாண் அவ்வலச் சேவல் பட்டென அல்குறு பொழுதின் மெல்கிரை மிசையாது பைதற் பிள்ளை தழீஇ ஒய்யென அங்கட் பெண்ணைஅன்புற நரலும்(அகம்-290) குடும்பங்களில் நிகழும் குத்து வெட்டு கொலைச் செய்திகளே செய்திகளாய் வரும் இற்றை உலகியலில் கொக்குக் குடும்பச் சீர்மை புலப்படுமா? புலப்பட்டால் வீட்டுக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை: இதனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார் இயற்கையில் இயைந்த இனிய நெஞ்சம் நக்கீரனார். சங்கச் சான்றோர் வளமான சொல்லாட்சியர். அவர்கள் ஆண் யானையைக் களிறு என்றனர் பெண் யானையைப் பிடி என்றனர்: இளங்ககன்றைக் கயந்தலை என்றனர். மக்களுள் ஆண் பெண் குழந்தைகளுக்குத் தனித்தனிச் சொற்கள் இருப்பது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடத் தனித் தனிச் சொற்களைப் படைத்துப் போற்றினர். களிறும் பிடியும் கயந்தலையுமாகக் காட்டிலே திரிய வேட்டையாளர் விடுவரோ அவற்றை வீழ்த்த ஆழ் குழி தோண்டிப் பொய்யாக மறைக்க யானைக் குடும்பம் விரும்பித் தின்னும் இலை தழைகளைப் பெய்து மூடியுள்ளனர். சூழ்ச்சி அறியாப் பிடி இலையுண்ணப் போய்க் குலைபதறக் குழிக்குள் வீழ்ந்தது. பிடி வீழ்ந்துபட்ட கொடுமையைக் களிறு கண்டது: கலங்கியது: அக்கலக்கத்திலே அறிவை இழந்து விடவில்லை: மின் தாக்குதலுக்கு ஆட்பட்டவரைக் கட்டிப் பிடித்து விடுவிக்க முடியுமா? மின் துண்டிப்பு அன்றோ உடனே வேண்டும்? காடே அதிரப் பிளிறியது களிறு. யானைகள் கூட்டம் கூட்டமாக ஒடிவந்தன. குறை தீர்ப்பதற்கு ஒன்றை ஒன்று முந்தி நின்றன. காட்டுயானையின் இத்தன்மை நாட்டு மாந்தர்க்கு உண்டாகிவிட்டால் அஃதன்றோ மண்ணுலகே, விண்ணுலகாய மாண்பாகும் கூடிய யானைகள் மண்ணைச் சரித்தன: மரங்களைப் பெயர்த்தன: குழி மூடியது,வழி பிறந்தது: பிடியைப் பற்றியுயணைத்துக் களிறு களிப்புடனே வெளியேறியது. களிறும் பிடியும் கண்ட களிப்பு, நொடிப் பொழுதில் ஒழிந்தது. எங்கே அந்தக் கயந்தலை? பிடியின் கதறல். களிற்றின் பிளிறல், காட்டு யானைகளின் ஒட்டம். அமளிகுமளிப் பேரொலி முழக்கம் இன்னவை யெல்லாம் என்னவெனப் புரியாக் கயந்தலை அச்சத்தால் வெகுண்டு காட்டை விட்டே ஓடிப் போய்விட்டது: ஆயர் குடியிருப்பொன்றை அடைந்து விட்டது! இளமை மாறாமைச் சான்றாக ஓடிய சிவந்தவாய்க் கயந்தலையை, ஆயச் சிறார் அலைக்கழித்தார் அல்லர்: முதியர் பிடித்தார் அல்லர்: காவல் நாய் கலக்கிற்றில்லை. எரு நிரம்பிய தெருவிலே கட்டிக்கிடக்கும் காரெருமைகளின் ஊடே களிப்போடு விளையாடித் திரிகிறது. கயந்தலை, அவ்வெருமைகளின் காம்பிலே சுரந்த பாலைக் கன்றுகளோடு கன்றாக நின்று பருகித் திளைக்கிறது. சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! ஈன்ற குழவி வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டு கொல்? என்று வினாவப்பட்ட வினாவுக்கு, முந்துறவே விடை தந்தாற் போலக் கயந்தலைக் கன்றைக் கான் ஊட்டி மகிழ்ந்தது. காட்டுக் காதலரைக் காக்க ஒரு கூட்டம்! கலங்கி ஒடிய கயந்தலையைக் காக்க ஒரு கூட்டம்! இத்தகைய காட்டரசும் நாட்டரசும் கூட்டரசாக விளங்க விரும்பினார் சங்கப் புலவர் ஒருவர். அவர் பெயரை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அவர் பாடிய பாட்டேனும் அகப்பாட்டதே என மகிழ்கின்றோம். அகப்பட்டபாட்டு ஒர் அகப்பாட்டே ஆகும் (165). அது கயந்தலை மடப்பிடி பயமபிற் பட்டெனக் களிறு விளிப்படுத்த கம்பலை பெரீஇ ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூர் ஆங்கண் எருமை நல்லான் பெருமலை மாந்தும் என்பது. செறிவுமிக்க ஒரு காடு: அங்கேயுள்ளதொரு பன்றி: காட்டுப்பன்றி: அச்செறிந்த காட்டிலும் வேட்டை நாய்களுடன் நுழைந்து விட்டனர் வேடர்: வேட்டை நாய்களின் பார்வை அப்பன்றியின் பெட்டை மேல் சென்றது. இரண்டு பார்வை களையும் கண்டு கொண்டது காட்டுப் பன்றி.. குட்டிகள் இளையவை: வலியவை: ஆனால் நாயின் சூழ்ச்சித் திறம் அறியாதவை. நாய்கள் குட்டிகளை வெருட்டி வெருட்டி அலைத்தன. குட்டிகள் ஓடி ஓடிக் களைத்தன: தான் வாழும் காட்டில் வேட்டை நாய்கள்புகுந்து படுத்தும் பாட்டைக் கண்டு சிலிர்த்தெழுந்த பன்றி, அந்நாய்கள் அலற அலற அறைந்து தாக்கியது. நாய்கள் கந்து கந்தாக ஓடி ஒளிந்தன. குட்டிகளைக் காத்த ஆண், பெண் பன்றி மீது பார்வையைச் செலுத்தியது. அதன் மேல் வேடர் கொடிய வில்லை வளைத்துக் கூரிய அம்பைக் கோத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மாறி மாறி அறைந்தது. கூட்டோடு குடும்பத்தைக் கெடுக்க வந்த கொடுமையை ஒழித்த வீறுடன் பெருமிதமாகப் பெட்டைக் குட்டிகளுடன் நடையிட்டது ஆண் பன்றி. தானைத் தலைவன் ஒருவன் தறுகண் நடையிடுவ தெனத் தோற்றம் தந்தது அது. நின்ற காட்டில் இருந்து அயல் காட்டுக்குச் செல்லக் குடும்பத்துடன் நடையிடுகிறது ஆண் பன்றி. இடையே இடுக்குவெளி; இட்டிடை வழி; அதில் வந்து நின்று, இப்பாலும் அப்பாலும் பல்வேறு ஊர்திகள் ஓடும் சாலையைக் கடப்பதற்குப் பார்க்கும் பார்வைபோல் பார்த்து விட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றது. பன்றியின் வீறுமிக்க பேரையும். குடும்பம் காக்கும் காவல் கடமையையும் தலைமையின் திறத்தையும் கண்டு கண்டு வியந்தான் ஒருவன்! அவன் கண்முன்னே அவன் தலைவன் வீறு தோன்றியது! படைகள் எல்லாம் தோற்று ஓடும் போதும் தான் ஒருவனே எதிரிட்டு நின்று எதிர்ப்படையை அழித்த அப்பெருமைக்குரியவன் போன்ற தன்றோ இப்பன்றியின் வீறு என வியந்தான். எம் பெருவிறல் போன்றது எனப் பாராட்டினான். எய்யக்கோத்த அம்பை எடுத்து வைத்துக் கொண்டு வியந்தான்! வீட்டுக்காவலும் நாட்டுக் காவலும் கைகோத்து நடக்கப் பாட்டோவியம் தீட்டிய பாவலர் குறிஞ்சிக் கபிலர்! இயற்கையோடு இயைந்த மாந்த வாழ்வுச் சிந்தனைதானே இது. வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நான் முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து அரும்புழை முக்கர் ஆட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பில்தன் படைசெலச் செல்லாது அருவழி விலக்கும்எம் பெருவிறல் போன்மென எய்யாது பெயரும் குன்ற நாடன். (அகம்-248) கரிய நாவற்கனி ஒன்று வெண்மணல்மேல் பரவிக் கிடந்தது. அது பொற்றட்டில் மணி பதித்ததெனக் காட்சி வழங்கியது. நன்றாகப் பழுத்துக் கருநிறங் கொண்ட அக்கனியைக் கருவண்டோ என்று மயங்கியது ஒரு கருவண்டு. அதனால் நெருங்கிச் சென்றது. உணர்வால் நெருங்கிய கருவண்டோடு, உணவு வேட்கையால் நெருங்கிய நண்டு ஒன்று எதிரிவிட்டு நின்றது. போர்ப்பொருள் நாவற்கனி! போரிடுவன வண்டும் நண்டும்! வண்டு கனியை எடுக்க முனைகிறது: நண்டு அதனை இழுக்க முற்படுகிறது. வண்டு மெலியது: நண்டு வலியது. வலியது வெல்லும்; மெலியது தோற்கும்; இயற்கை இது. வலியார்முன் தன்னை நினைக்கத்; தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து என்பதை அறிவாளரும் காற்றில் தூற்றிப் பறக்க விடும் போது நண்டுக்குத் தானா நல்லுணர்வு வரும்? நண்டு வலிமையால் கவர்ந்து கொள்ளப் போகிறது: வண்டு தன் ஆற்றலெல்லாம் கூட்டி பற்றி இழுக்கிறது! இரை கின்றது: ஆர்க்கின்றது: அரற்றுகின்றது. அதன் ஆர்த்தலும் அரற்றலும் வன்மையானவையோ? யாழை மீட்டும் கலைத்திறம் அறியா ஒருவன் மீட்டிய யாழிசை எப்படி இருக்கும், அப்படி இசைத்தது அது. நண்டு, நன்று அன்று என்று மென்மைக்கு இரங்கிவிட்டு விடுமோ? மென்மை இரங்கி அழிய வன்மை ஓங்கி ஓங்கி அழிக்க உலகியல் ஆகிவிட்டால் அறம் என்பதுதான் என்ன? அருள் என்பது தான் என்ன? ஆட்சி என்பதுதான் என்ன? xU ehiu gwªJ tU»‹wJ, ‘ïiu VnjD« »£Lnkh? என்னும் பார்வையில் பறந்து வரும் நாரை அது. அதன் பார்வையில் வண்டும் பட்டது! நண்டும் பட்டது! அவ்வளவு தான்! என்ன வியப்பு! வலிய நண்டு கனியை விட்டு விட்டுத் தன் வளைக்குள் ஓடி ஒளிந்தது; வண்டும் பறந்து போய்விட்டது. போரும் ஒழிந்தது; புலம்பலும் அகன்றது! போரிலா உலகம் உண்டோ? எங்கும் எந்நாளும் போர் நிகழ்ந்து கொண்டே உள்ளது. போரை ஒழிக்கவும் போரிடவே வேண்டியுள்ளது. போர் எவ்வகையால் எக்கரணியத்தால் நிகழ்ந்ததால் என்ன? விளைவு அழிவு அழிவு அழிவே! அழிவிலாப் போரை நாரை வழியே படைத்துக் காட்ட விரும்பினார் அம்மூவனார். அவர் தீட்டிய பாட்டோவியம் நற்றிணையில் மின்னுகின்றது (35) பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோட் கூர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்தி விடுக்கும் என்பது அது. ஆண்குரங்கு கடுவன்: பெண் குரங்கு மந்தி: கடுவன் ஒருநாள் மந்தியைக் கண்டது: அதன் அழகில் மயங்கியது: இயலிலும் செயலிலும் வயமிழந்தது, மந்தியும் அவ்வாறே கடுவன் மேல் மையல் கொண்டது. தீராக் காதலராகத் திகழ்ந்தனர் கடுவனாரும், மந்தியாரும். T£l¤â‹ ïilna fLtD« kªâí« ïUªjd: jŤj fhjš ïŤjJ: ïu©L« eakhf eGÉd!செறி மரக்காடும் நிறை கொடிப் பந்தரும் மல்கிய குறிஞ்சியில் தானா கூடுமிடப் பஞ்சம்? ஓங்கிய அடுக்கம் அதன்மேல் ஓங்கிய மரக் கூட்டம்: மரம் மறையப் போர்த்த மிளகுக் கொடிப்புதை; இவ்வியற்கைக் குடியிருப்புக்குள்ளே கனவுக் காதலில் கலந்தன கடுவனும் மந்தியும். கடுவன் தழுவிய தழுவலில், மந்தியின் உச்சி மயிர் கலைந்து உலைந்து போய்விட்டது; தங்கள் மறைவொழுக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுமே கலைந்த தலை! இருட்பந்தலுக்குள் போகும் போது வாராத திகைப்பு. வெளிச்சத்திற்கு வரும் போது - கூட்டத்தை நினைக்கும் போது - தோன்றியது. இயல்பாகவே சிவந்த மந்தியின் முகம் நாணத்தால் மேலும் சிவந்தது! கூனுடல் மந்தி தன் மனக்குலைவால், மேலும் குறுகித் தாழ்ந்தது! தலை நிமிர்ந்து கூட்டத்தோடு சேர வேண்டுமானால், தலையின் குலைவைச் சரி செய்ய வேண்டும் எனத் தெளிந்தது. அறிவு நலங்கனிந்த அந்த மந்தியின் கண்ணில் அழகிய வேங்கை ஒன்று நின்றது. அது கொல்லும் கொடுவாய் வேங்கை அன்று: வெல்லும் கோடுவாய் வேங்கை. அதன் ஓரம் ஒரு நீர் நிலை, தாழ்கிளையில் ஏறித் தலை தாழ்ந்து நீர்ப்பளிங்கிலே பார்த்து தலை வகிட்டைச் சரி செய்தது. அப்பா! கவலை விட்டது என்று கிளையோடு சேர மரக்கிளை விட்டு நடையிட்டது மந்தி! இளநாகனார் என்பார் தீட்டிய பாட்டோவியம் இது, பண்பட்ட நாகரிக உள்ளத்தில் இருந்து பாடுபுகழ் பெற்றது இக்காட்சி. மந்தியின் மானக் காட்சியால், மாந்தர்மானக் காட்சியைப் போற்றி வாழக் கற்பித்த கவின்கலைக் காட்சி இது. அகப் பொருளை அகப்பொருளாகப் போற்ற வேண்டும் என்பதை ஆயிரம் கதைகளிலா சொல்ல வேண்டும்? இக் காட்சி ஒன்று போதாதா? கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் கறிவளர் அடுக்கத்தில் களவில் புணர்ந்த செம்முக மந்தி செல்குறி கருங்கால் பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன் புன்றலைப் பாறுமயிர் திருத்தும் (நற் 151) முதல் கருவுரியெனும் முப்பொருளையும் தன்னகத்துக், கொண்ட அகப் பொருளுக்கு மட்டுமோ இயற்கையோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனை? புறப் பொருளுக்கும் உண்டு என்பதை வெளிப்படுத்தும் பாடல்கள் உண்டு. அவ்வகைக்கு ஒரு சான்று: ஒரு தலைவரை அவர் தம் துணைவியர், அவர் மண வீட்டுக்குச் சென்றால் மணமகள் போல மகிழ்வுடன் தோன்றுவார்: இறப்பு வீட்டுக்குச் சென்றால், இறப்புக் கொடுத்தவர் இவரே என்னக் கவலையுடன் இருப்பார் என்றார். சங்க இலக்கிய இயற்கையும் சுளித்தால் களிப்பனவாய், கவன்றால் கவல்வனவாய் நெஞ்சப் பாங்கு காட்டுதலை விளக்குவது கண்கூடு. அதற்கொரு பாட்டு: முல்லையே பூத்ததும் பூத்தாயே! இன்றா பூப்பது? பூக்கும் காலத்தே பூவாமல், பூவாகக் காலத்துப் பூத்துப் பிறவிப் பயனை இழக்கின்றாயே ஈதென்ன? இளைய காளையர் உன்னைப் பறித்துச் சூடுவரா? இளைய தம் காதலிக்குத்தாம் உன்னைப் பறித்துச் சூட்டுவரா? வளையணிந்த மகளிர்தாம் சூடவேண்டிப் பறிப்பரா? எட்டாமலர் என்று பாணர்தாம், தம்மெல்லிய யாழின் நரம்பு கெடா வகையில் மெல்லென வளைத்துப் பறிப்பரா? அந்தோ! இன்று மலர்ந்தாயே! ஆண்மைத் திறமெல்லாம் வெளிப்பட வீரர்களையெல்லாம் வெற்றி கொண்ட வள்ளல்சாத்தன் இயற்கை எய்திய நாளாயிற்றே இன்று! என் செய்தனை என்று மலர்ந்த முல்லையை நோக்கிப் பாடுகிறார் குடவாயிற் கீரத்தனார்! இது ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடிய பாட்டாசுப் புறப்பட்ட புறப்பாட்டு இது (24) ஓரறிவு உயிரியின் மேல் ஆறறிவு உயிரி, தன் உணர்வை ஏற்றி உரைத்த உணர்வுப் பதிவு தானே இது! சங்க இலக்கியத்தில் மல்கும் ஒருபொருள், இயற்கை யோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனை எனின், அதனை விரிக்க விரியும்: சுருக்கச் சுருங்கும்: அது புலவரைக் கடந்தது எனப் புகலல் அமையும். 14. அன்னை நெஞ்சம் அன்னையின் நெஞ்சம், தூயது: தீயது சிறிதும் கலவாதது: தன்னலம் அற்றது: பொதுநலம் உற்றது: உலகெல்லாம் இனிது வாழவேண்டும் என்னும் இயல்பிலே ஊறியது. தமிழுக்குச் சிறப்புத் தருவது பொருள் இலக்கணம். அதில் தனிச் சிறப்புடையது அகப்பொருள். அவ்வகப்பொருளில் தாய்க்குரிய இடம் அளவால் சிறியது; ஆனால் அருமையால் பெரியது: கடுகு சிறுத்தாலும் காரம் போகாதது போல. அன்னை, அகப்பொருளில் நற்றாய் எனப்படுவாள். இந் நாளில் நல்லம்மை, நல்லம்மாள், நல்லாத்தாள், நல்லாயி என அன்னை வழங்கப் பெறுதல் பண்டை வழக்கத்தின் முத்திரைகளே. நெஞ்சின் ஓட்டம், சொல்லால் புலப்படும். ஆதலால், நெஞ்சின் ஊர்தி சொல்லாகும். சொற்குதிரை மேல் நெஞ்சம் உலாவருவதே கவிதை, கதை, காவியம், கட்டுரை, நாடகம் என்பவை. இதனைத் தெளிவாக உணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார். அகப்பொருள் உறுப்பினர் நெஞ்சப் பான்மையைக் கூற்றுவகையால் விளக்கினார். சங்கச் சான்றோர் அதனைப் போற்றி ஒழுகினார். ஒரு தாய். இரவுப் பொழுதில், தன் மகள் வீட்டின் புறத்தே போய் நிற்கக் காண்கிறாள். ஓர் ஆண் மகனையும் ஆங்குக் காண்கிறாள்: அன்னை கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்ட மகள், அச்சமும் நாணமும் அலைக்க, மெல்ல மறைந்து இல்லுள் நுழைகிறாள். தாய் தலை நிமிர்ந்து பார்த்தாள்: மகள் தலைகவிழ்ந்தாள்; அத்தகவுடைய தாய், நீ மிகவும் நல்லவள் என்று சொல்லி நகைத்துக் கொண்டு போய்விட்டாள். தாயின் நெஞ்சம் தனிப்பெரு நெஞ்சம். இணையில்லா இரக்க நெஞ்சம். இடித்துரைக்க வில்லை: ஏசவில்லை: உரைக் கூட்டவில்லை: உதறி எறியவில்லை: சொன்னவாய் மணக்க கேட்ட நெஞ்சம் உருகக் கூறினாள். இக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கபிலர் பெருமான். நல்லை மன்னென் நகூஉவுப் பெயர்ந்தோனே என்பது அவர் வாக்கு. இன்னொரு தாய், நுண்ணிய உணர்வுடையவள்: காதல் ஒழுக்கம் தூயது என மதிப்பவள்: தன் மகள் தவறு செய்தறியாத தவமகள் என்பதை உணர்ந்தவள். தம்மகள் காதலைத் தான் அறிந்து கொண்டதைக் குறிப்பால் உரைக்கிறாள். இது வரை இல்லாத நறுமணம் நின் கூந்தலில் உள்ளது என்கிறாள். தலைவன் தனக்குப் புதுப் பூச் சூட்டியதைத் தாய் அறிந்து கொண்டாள் என்பதை அறிந்த மகள், கற்பு வழியில் தலைப் படுகிறாள். இதனைக் கண்ணகாரன் கொற்றனார் நற்றிணையில் நவில்கிறார். நறிய நாறும்நின் கதுப்பென்றேனே என்பது அவர் வாக்கு. ஊரார் பழிச்சொல் கேட்ட ஓரன்னை, மகிழ்வாள் ஆயினும் மகிழட்டும்: மாறுபடுவாள். ஆயினும் மாறுபடட்டும்: அது பெற்றவள் பாடு: பிறந்தவள் பாடு என்று எண்ணாமல் பழிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனரே: அவர்கள் ஊரறியச் சொல்லியதன்றி யானறியவும் கூறுகின்றனரே என்று வருந்துகின்றாள். மற்றோர் அன்னை, சிலரும் பலருமாகக் கூடிக் கண்ணும் கண்ணும் பேசி, மூக்கின் உச்சியில் சுட்டு விரலைச் சேர்த்துப் பழிக்கின்றனரே என்று பதைக்கின்றாள். ஊர் வாயோ, உரிமை மகளை ஊரைவிட்டு ஓட வைத்து விடுகிறது. கூட்டை விட்டுப் பறக்கும் பறவை போல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் மகள்: தாய் என்ன பாடுபடுவாள்? தீம்பாலில் தேனைக் கலந்து பொற்கிண்ணத்தில் வைத்து யான் ஊட்டுவேன்:அப்பாலையும் பருகாமல் இப்பாலும் அப்பாலும் ஓடிய என்மகள் அப்பாலை நிலத்தை எப்படிக் கடந்தாளோ? என்று வியப்போடு வெதும்புகிறாள். மற்றோர் அன்னை, தான் மகளுக்குக் குறிப்பாக உரைத்ததையும் புன்முறுவல் செய்ததையும் கூடத் தன் குற்றமாக எண்ணி வருந்துகிறாள். நான் அறியாமல் தவறு செய்து விட்டேன்; அவள் தந்தைக்கும் உடன்பிறந்தார்க்கும் நயமாய்ச் சொல்லி நான் மணமுடித்து வைத்தேன் இல்லையே என்று புலம்புகின்றாள். அறநெறி இதுவென அறிந்து கொண்ட என் மகள் போகிய காடு இனிதாய் அமைவதாக என வேண்டுகிறாள் ஒரு தாய். அவள் போகும் வழியிலே, அறிந்தவர்கள் இருந்து விருந்து செய்வார்களாக என்று வேண்டுகிறாள் மற்றொரு தாய். என் மகள் பிரிந்து போனதற்காக, நான் உண்மையில் அவளை வெறுக்கவில்லை என்பதைத் தெளிவாக்க, நானே அவள் வரும் வழியை எதிர்பார்த்திருந்து, விருந்து செய்யும் பேற்றைப் பெறமாட்டேனோ? என ஏங்குகிறாள் இன்னாரு தாய். மற்றொரு தாய். தெய்வங்களே என் செல்வ மகள் மேல் அவள் காதல் தலைவன் அளவிலா அன்பு செலுத்த நீங்கள் அருள்வீர்களாக என்று வேண்டுகிறாள். என் மகள் மீண்டு வருவதற்குக் காகமே! நீ கரைந்தருள வேண்டும்: அவ்வாறு செய்தால் பொற்கலத்தில் உனக்கு ஊனும் சோறும் படைப்பேன் என்று கெஞ்சுகிறாள் பிறிதொரு தாய். மகளைப் பிரிந்த அன்னை, அவள் பயன்படுத்திய பொருள்களைக் கண்டு கண்டு கண்ணீர் வடிக்கிறாள். அவளாகவே அவற்றைத் தழுவிக் கொண்டு அழுகின்றாள். இதுஎன் பாவைக்கு இனிய நன்பாவை: இதுஎன் பைங்கிளி எடுத்த பைங்கிளி: இது என் பூவைக்கு இனிய சொற்பூவை: என்று அலமருகின்ற அன்னையை ஒவியமாகத் நீட்டிக் காட்டு கிறார் ஓதலாந்தையார். மகளோடு விளையாடிய மகளிரைக் கண்டு கரைந்து உருகுகின்றாள் ஓரன்னை. அம்மகள் வளர்த்த வயலைக் கொடி நீரின்றி வாடியதைக் கண்டு இனி உனக்கு நீர் விட்டு வளர்ப்பார் யாரோ? நீ இரக்கத்திற்கு உரியை என்கிறாள். அவ்விரக்கத் திற்குரிய அன்னை. பூந்தொட்டியில் தன் மகள் வளர்த்த குவளைக் கொடியின் வாடுமலரைப் பறித்து, அவள் ஆடிய பாவைக்குச் சூட்டி, அப்பாவையை மகளே! மகளே! என்று தழுவி மனம் பதைத்துப் பேதலிக்கிறாள் ஒரன்னை அவள் நிலை கண்டோர் வருந்துகின்றனர். ஒருவர் அம்மா நின் கவலையை விடு; உன் கண்மணி வந்து விடுவாள் என்று தேற்றுகிறார். ஆனால் அப் பெற்றமனம், ஒரு மகளை உடையேன்; அவளும் பெருமலை வழியே நேற்றுச் சென்றாள்: நீ தாங்கிக்கொள் என்கிறீர். எப்படி என்னால் முடியும்? என் கண்ணின் மணியே நடைசுற்று நடந்தது போல் நடந்து போய்விட்டாளேஎன்கிறாள். மகளின் பிரிவுக்கு வருந்தும் அன்னை நெஞ்சம் அவள் காதலனையும் நினைத்துக் கொள்கிறது அவன் எம் மனைக்கு முதற்கண் அழைத்துக் கொண்டு செல்வானா? என்று குறி சொல்பவனிடம் கேட்கிறது. திருமணத்திற்கு முன்னே செய்யும் சிலம்பு கழித்தல் என்னும் சடங்கைத் தலைவன் தன் வீட்டில் செய்தாலும், நம் வீட்டுக்கு வந்து திருமணச் சடங்காவது செய்துகொள்ள மாட்டானா? இதனைத் தலைவன் பெற்றோர்க்கு எவரேனும் சொல்ல மாட்டார்களா? v‹W ?ஏங்குகிறதுஎன்னை மறந்தாலும் யான் மறவேன் என்பதே அன்னை நெஞ்சம்! அங்கே வெறுப்பு இல்லை; வெடிப்பும் இல்லையாம்! வீட்டை விட்டு வெளியேறாத அன்னை வீதி கடந்து ஊர் கடந்து மகளைத் தேடவும் துணிகிறாள். செவிலியை விடுத்துத் தேடவும் ஏவுகிறாள். மகள் நன்றாக இருக்கிறாள் என்னும் நற்சொல்லைக் கேட்டு எங்கிருந்தாலும் இனிது வாழ்க என்று வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்னை நெஞ்சம். அந் நெஞ்சம் வாழ்வதாக! 15. தோழியின் அருமை தோழன் தோழி என்னும் சொற்கள் இந்நாளில் புதுமைப் பொலிவோடு விளஙகுகின்றன. ஆனால் இவை அகப்பொருள் இலக்கண இலக்கியங்களில் மிகப் பழகிப் போன சொற்களாகும் தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. ஆனால் தோழி என்பதோ 550 இடங்களில் வருகிறது. இதுவே, இலக்கியத்தில் தோழிக்கு உரிய சிறந்த இடத்தை விளக்கும். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர்: ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலரே! பாங்கள் ஒரு துறை அளவில் வந்து போய்விடுகிறான்: பாணன் சில பொழுது வருகிறான்: தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை; தலைவனது தந்தை உடன் பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்லலாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர்: கற்பியலில் வரும் மழலை மகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்: தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரியது என்கிறது தமிழ்க் காதல். மேலும், சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியின்றி கூட்டம் என்னும் ஒரு வகைக்கே வருவன. இதனால், அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள் இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக் குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம் என விளங்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப் பகுதியில் முப்பத்து இரண்டும், கற்புப் பகுதியில் இருபத்து ஒன்றும் ஆக ஐம்பத்து மூன்று எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கப் பெண்ணியல்பு என்று சொல்லப் பெறும் பெருமைக் குணங்கள் எல்லாம் ஒருருக் கொண்டு முழுமையாக அமைந்த ஒர் அரிய படைப்பே தோழி என்பது தெளிவாகும். தோழிக்கும் தலைவிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை: அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவளும் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள் இவளைத் தோழி என்கிறாள்: இவள் அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஓத்த உரிமையே தோழமையின் நிலைக்களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. அவர்கள் தோழமை! தோழி, தலைவியை அன்னை என்று உள்ளன்பால் அழைப்பாள்: நம் தாய். நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர் தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை ஒரு தோழி சொல்கிறாள்: தாயோ தன் கண்ணைவிட இவளை மேலாக விரும்பு கிறாள்: தந்தையோ, இவள் கால் நிலத்தில்படுவதையும் பொறுக் காதவனாய் உன் சிற்றடி சிவக்குமாறு எங்குச் செல்கிறாய் என்று தடுப்பான். நானும் இவளுமோ பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால், இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! தலைவியும் தோழியும் இரண்டு தலைகளையுடைய ஒரு பறவையாம்! ஓர் உயிராம்! எத்தகைய அரிய உவமை! இதைக் கருதித்தான் தொல்காப்பியனார் தாங்கருஞ்சிறப்பின் தோழி என்றார் போலும், தோழி சொன்னது இது. இனித் தலைவன் சொல்கிறான். தோழி எதைச் செய் கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி! மிதப்பின் தலைப் பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத்தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள்: மிதப்பின் அடிப்பக்கத்தையே தோழி பிடித்தால், தலைவியும் அப்பக்கத்தையே பிடிக்கிறாள்: மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால் தலைவியும் போய் விடுவாள் போலும்! தோழியும் தலைவியும் புதுத் தொடர்பினர் அல்லர், தோழியின் தாய், தலைவியின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே: தோழியின் தாய்க்குத் தாயும், தலைவியின் தாயின் தாய்க்குத் தோழியாக இருந்தவளே. இம்மட்டோ? தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயும் ஆவள். ஆதலால், வாழையடி வாழையாக வருவது தலைவி தோழி தொடர்பாகும். பழங்கால அமைந்த வாழ்வு. இவ்வுரிமைக்கு இடந்தந்து நின்றது. ஒரு தலைவியைக் கண்டு காதல் கொண்ட தலைவன். அவளை அடைவதற்கு அவள் தோழியின் துணையை நாடுகிறான். அவள், இவர்கள் காதலைக் குறிப்பாக அறிந்து கொண்டவளே ஆயினும் அறியாதவள் போலவே நடந்து கொள்கிறாள். தலைவன் அடுத்தும் தொடுத்தும் பன்முறை வேண்டிக் கொண்டும், அதனைத் தட்டிக் கழிக்கவே தோழி முயல்கிறாள். தலைவன் தகுதியானவன் என்றும். அவன், இவளை இல்லாமல் வாழான் என்றும் இவள் அவனை இல்லாமல் வாழாள் என்றும் தெளிவாக அறிந்து உறுதிப் படுத்திக்கொண்ட பின்னரே அவர்கள் காதலுக்குத் துணையாகிறாள். தோழியின் நினைவு, செயல் சொல் எல்லாம் அவர்கள் களவுக் காதல், கற்பு மணமாகித் திகழவேண்டும் என்பதேயாம். இதற்காக அவள் எடுத்துக் கொள்ளும் நன்முயற்சிகள் பொன்னிற் பதித்த மணியெனப் போற்றத் தக்கனவாம். தலைவனும் தலைவியும் உணர்ச்சி வழியில் செல்பவர்கள். அவர்களை அறிவுத் திறந்தால் இயக்கி அறவாழ்வில் நிலை பெறுத்தும் அருமைப் பொறுப்பாளியாக விளங்குபவள் தோழியே! ஆதலால் அவள் அன்னை போல் அரவணைப்பாள்: தந்தைபோல் கண்டிப்பாள்: ஆசான் போல் இடித்துரைப்ள்; தோழியாய்த் துணை நிற்பாள்: இவை யெல்லாம் அவளுக்குக் கைவந்த திறங்கள்: நாவீறு படைத்த நங்கை அவள்: சொல்லாற்றல் மிக்க சுடர்ப் படைப்பு தோழி! தலைவன் தலைவியைக் காணுதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருபவள் தோழியே. அவள், தலைவளைப் பகலில் வரச் சொல்வாள்: பிறிதொரு நாள், இரவில் வரச் சொல்வாள்: பின்னொரு நாள், பகலிலும் வரவேண்டா: இரவிலும் வரவேண்டா என்பாள், இரவுப் பொழுதில் காட்டு வழியே வருவதால் உண்டாகும் இடையூறுகளையெல்லாம் விரித்துரைப்பாள்: பகலில் வருவதால் உண்டாகும் பழிகளை யெல்லாம் எடுத்துரைப்பாள். தலைவன் காணாமல், தலைவியை மறைத்து வைப்பாள். அவள் நோக்கமெல்லாம் தலைவன் தலைவியர் அன்பைப் பெருக்கி ஆக்கப் படுத்த வேண்டும் என்பதேயாம். ஒரு மலையடிவாரம்: தினைக்கொல்லை: தினைக் காவலுக்குத் தலைவியும் தோழியும் செல்கின்றனர். அங்கே தலைவன் வருகிறான். அவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியினிடம் சொல்கிறாள்: தோழி! கதிர் கொய்வதற்கு முன்பே கொய்தது போல் தட்டை உள்ளது. கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போகின்றன. நீ அணிந்துள்ள மாலை அசையுமாறு அடிக்கடி எழுந்து ஒலியெழுப்பி அங்கும் இங்கும் சென்று கிளிகளை ஓட்டா விட்டால் நம் அன்னை இவள் கிளியோட்ட அறியாள் என எண்ணி வேறு யாரையாவது காவலுக்கு அனுப்பி விடுவாள். அவ்வாறானால் நம் அன்புத் தலைவரைக் காண்பதற்கு அரிதாகும் என்று கூறுகிறாள். இதனால் தலைவன் நினைத்த போதெல்லாம் தலைவியைக் காணல் அரிது என்பதைக் கூறி விரைவில் மணம் செய்து கொள்ளுமாறு தூண்டுகிறாள் தோழி. ஒரு நாள் இரவுப் பொழுதில் தலைவியைக் காணத் தலைவன் வந்தான். அவன் வந்துள்ளதற்கு உரிய அடையாளம் செய்தான். தோழி விழிப்பாக இருந்து அறிந்து கொண்டாள். அப்படியே அன்னை முதலியவர்களும் விழித்திருந்தால் வெளியேற முடியாதே. அதனால் ஒரு சூழ்ச்சி செய்தாள். அன்னையே, வாழ்வாயாக! நான் சொல்வதைக் கேட்பாயாக! நம் தோட்டத்தில் உள்ள கூதாளஞ் செடியின் மீது அருவி விழும் ஒலி கேட்டாயோ? என்றாள். அன்னை மறுமொழி தந்திலள். தோழி மீண்டும் கூறினாள்: அன்னையே வாழ்வாயாக! நம் தோட்டத்தில் உள்ள அசோகின் அடிமரம் ஒடியுமாறு இடிவிழுந்தது கேட்டாயோ? என்றாள். இதற்கும் அன்னை மறுமொழி தந்திலள். ஆகவே, அவள் நன்றாக உறங்குகிறாள்: மற்றவர்களும் உறங்குகிறார்கள்: தக்க பொழுது இதுவே என்று தலைவியை அழைத்துச் செல்கிறாள். இதனைத் தலைவன் கேட்கவும் சொல்கிறாள். காலம் நீளாமல் கடிமணம் செய்ய வேண்டும் என்பதே அவள் கருத்தாம். தலைவன் பொருளே குறியாக இருக்கிறான். வாழ்வுக்குப் பொருள் வேண்டும் என்பது தோழிக்கு நன்றாகவே தெரியும். பொருள் இருந்தால் அறத்திற்கு அளிக்கலாம். வறியோர்க்கு வழங்கலாம். விருந்தினரைப் பேணலாம்: சுற்றத்திற்கு உதவலாம்: வேண்டும் நுகர்ச்சி தேடுவதையே, தொழிலாகக் கொண்டு இனிய இல்லற வாழ்வைத் தலைவன் பாழாக்கிக் கொள்வதை அவள் விரும்பவில்லை. ஆதலால் அறிவறிந்த தலைவனும் அறியுமாறு நயமாகக் கூறுகிறாள். தலைவ, செல்வாக்குடன் வாழ்வதும், விரைந்து செல்லும் ஊர்திகளில் போவதும் செல்வம் என்று சொல்லப் படுபவை அல்ல. அவை, அவ்வலர் செயல் திறனால் அமைபவை; உயர்ந்த பெருமக்கள் செல்வம் என்று சொல்வது தன்னைச் சேர்ந்தவர் களைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கனிவு ஒன்றுமேயாம் என்றாள். வாழ்வாவது யாது என்பதையும் விளக்குகிறாள் தோழி, ஒரே ஓர் உடையே உடையவராய், அவ்வுடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்பவராக இருந்தால் கூட, பிரிவும் பிணக்கும் இல்லாமல் ஒன்று பட்டு வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கையாம், ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை சிறு வயதிலே எத்தகைய பேரறிவு தோழிக்கு! தோழி சிறுப் பெருமகள் என்னும் பாராட்டுக்கு உரியவள். தலைவன் ஒருவன் பிரிகிறான்: தலைவி ஆற்றாமல் வருந்துகிறாள். அவளை ஆற்றித் தேற்றும் பொறுப்பு தோழிக்கு உண்டாகிறது. அந்நிலையில், தலைவன் நல்லியல்புகளை யெல்லாம் சொல்லித் தலைவியை மகிழ்விக்கிறாள்: கவலையை மாற்றுகிறாள். தோழி! தலைவர் நெடுந்தொலை சென்றிருப்பது உண்மைதான். ஆயினும் அவர் மிகப் பேரன்பினர் என்பதை மறக்கமுடியுமோ? கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் குறித்துச் சென்ற பொழுது தவறாமல் வந்தே தீர்வார். தோழி! நம் தலைவர் நம்மை விட்டுப் பிரியக் கூடியவரோ? பிரிந்தாலும் கவலை இன்றித் தங்கக் கூடியவரோ? நாம் படும் துயரினும் அவர் படும் துயர் பெரிதாகி ஓடி வருவார். இதோ பார்! நாம் தலைவரை நினைக்கும் போதெல்லாம் தவறாமல் பல்லி நல்ல சொல் சொல்வது கேட்கவில்லையா? நீ கவலை ஒழிக என்கிறாள். இப்பொழுது தோழி ஒரு நல்ல மருத்துவி! காட்டையும் காட்டாற்றையும் கடந்து அஞ்சாமல் நள்ளிரவில் தலைவன் வருகிறான். அவன் வரும் வழியை நினைத்து அஞ்சி அஞ்சித் துன்புறுகிறாள் தலைவி! இவ்விருவர்க்கும் இடையே தவிக்கிறாள் தோழி! அவள் தவிப்பைக் கேட்டு நாமும் தவிக்கிறோம்! தலைவனே, நீ வழியச்சம் பாராது வருகிறாய்! இவளோ தன் பெண்மையால் உனக்கு என்ன நேருமோ என அஞ்சுகிறாள்! தான் பெற்ற இரட்டைப் பிள்ளைகளும் ஒரே வேளையில் நஞ்சுண்டதைக் கண்டு தவிக்கும் தாய்போல உங்களைக் கண்டு நான் தவிக்கிறேன். தோழியின் தாய்மை ததும்பும் இடம் இது. தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரு பிணக்கு. தலைவன் வீட்டுக்கு வருவது இல்லை. தலைவி அவன் மேல் கொண்ட சினம் ஆறுவது இல்லை. இந்நிலையில் மிக நொந்து போகிறாள் தோழி. அன்னி என்பவனுக்கும் பெரியன் என்பவனுக்கும் ஒரு போர்: அப்போரில் ஒரு புன்னை மரம் வெட்டப்பட்டது. அது வெட்டுப்பட்ட அளவில் போர் ஓய்ந்தது. அதுபோல் உங்கள் இருவருக்கும் உள்ள பகை யான் இறந்து போனால் என்னோடு ஒழிந்து போகும் போலும் என்றாள்! தன்னுயிர் தந்தும் அவர்கள் நலமாக வாழ வேண்டும் என்னும் பெருந்தகைத் தோழி உள்ளம் தெய்வ உள்ளமேயாம். பிறருக்கெனவே வாழும் தோழிக்கு அத்தனை தொல்லை களுக்கு இடையேயும் ஒரு மகிழ்ச்சி: அது தலைவியின் புகழ்ச்சியாகும். தோழி, தலைவன் குடி நன்கு உடையன்: கூடுநர்ப் பிரியலன்: கெடுநாமொழியலன்: அன்பினன் என்று சொல்லி நாங்கள் மணந்து கொள்ளுதற்கு வேண்டுவன வெல்லாம் செய்தாய், உண்மையாகவே அவன் நல்லவன்: இனியன்; இன்பமூட்டும் இசையினும் இனியன்; இசைக்கு அமைந்த தாளத்தினும் இனியன்; திருமண நாளினும் இனியன்; என் காதல் தோழியே நீ மிகவும் நல்லவள்; வல்லவள்; என்று தலைவி பாராட்டுகின்றாள். இது தலைவி தோழிக்குச் செய்யும் மலர் வழிபாடாகும். 16. இரவே வாழ்க அகப்பொருள் இலக்கண நூல்கள், பொருளை மூன்று வகையாகப் பகுத்து விரித்துக் கூறுகின்றன. அவை முதற் பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்பவை. அவற்றுள் முதலாவதாக உள்ள முதற்பொருள் என்பது இடமும் காலமும் ஆகும். இடமும் காலமுமே மற்றைப் பொருள்களெல்லாம் கருக் கொள்ளவும், உரிமை உணர்வு பூண்டொழுகவும், நிலைக்களம் ஆகலின் முதற்பொருள் எனப் பெற்றன. காலமாகிய முதற்பொருளும் பெரும்பொழுது சிறு பொழுது என இரண்டாகும். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் என்னும் ஆறும் பெரும் பொழுதுகள். இவை ஆவணித் திங்கள் முதல் இரண்டு இரண்டு திங்களாக எண்ணப் பெறும். சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல் என ஐவகைப்படும். இவற்றுள் யாமம் என்று கூறப்பெற்ற சிறுபொழுதே நள்ளிரவாகும். நள் என்பது நடு என்னும் பொருள் தருவது. நண்பகல் என்பது பகலின் நடுப்பொழுதினைக் குறிப்பது போல, இரவின் நடுப்பொழுதினைக் குறிப்பது நள்ளிரவு ஆகும். இந்நள்ளிரவுப் பொழுதினைப் புலவர் பெருமக்கள் தம் புலமைத் திறம் விளங்க எவ்வாறு படைத்துள்ளனர் என்பதைக் காண்போம்: பூக்கள் மலர்வதைக் கொண்டு, நம் முன்னோர் பொழுதறிந்த துண்டு. ஆதலால், பொழுதில் முகமலர் உடையது பூவே என்றார் பவணந்திமுனிவர். கவிமணி தேசிக விநாயகர் இதனை மிக நயமாகக் கூறுகின்றார். ஓர் ஏழைச் சிறுமி: தனக்குக் கடிகாரம் வேண்டும் என்று தன் தாயிடம் கேட்கின்றாள். தாய் தன் வறுமையை வெளிப்படையாய்க் கூறாமல் வகையாக மறுத்துக் கூறுகின்றாள். செங்கதிர் பொங்கி வருவதுண்டு-நல்ல செந்தா மரைகள் மலர்வதுண்டு மங்கையே! காலைப் பொழுதை உணர்ந்திட மற்றும் கடிகாரம் வேண்டுமோடி? முல்லை யரும்பு விரிவதுண்டு--ஆம்பலின் மொட்டுகள் மெள்ள அவிழ்வதுண்டு மெல்லியலே! மாலைவேளை அறிந்திட வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி? கம்மென வாசம் கமழ்பாரி சாதம் --இக் காவில் மலர்ந்து சொரிவதுண்டு அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி? பாரிசாதம் மலர்வதைக் கொண்டு நள்ளிரவை அறிந்து கொள்ளலாம் என்கிறார் கவிமணி. கபிலர் தாம் பாடிய குறிஞ்சிப் பாட்டில் நள்ளிருள் நாறி என்னும் ஒரு மலரைக் குறிப்பிடுகின்றார். நள்ளிருளில் மலர்ந்து மணம் பரப்பும் பூ என்பது அதன் பொருள். அந் நள்ளிருள் நாறி என்பது இருள் வாசியாகும் அப்பூவே இருவாட்சி என வழங்கப் பெறுகின்றது. இமை என்னும் அரங்கில் எழிலுற நடிக்கும் நங்கை, உறக்கம் என்னும் மங்கை. அவள் செங்கோலாட்சி சிறப்பாகச் செய்யும் பொழுது. நள்ளிரவே ஆகும். ஆதலால், பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமம் என்றார் ஒரு புலவர். கடல் மீன் துஞ்சும் நள்ளிருள் யாமம் என்றார் இன்னொரு புலவர். நள்ளிரவு கனவுக்கு நல்லிரவாகும். இதனை இலக்கியங்கள் விரித்துக் கூறுகின்றன. ஒருத்தி தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். கண்ணைத் திறக்குமாறு அவள் செவிலித்தாய் எவ்வளவோ வேண்டினாள்: மன்றாடினாள்: கடிந்தும் உரைத்தாள். ஆனால் அவளோ கண்ணைத் திறக்காமல் கையாலும் இறுக்கமாக மூடிக் கொண்டாள். என் உயிரைப் போக்கினாலும் சரி; என் எண்ணைத் திறவேன்: என் கனவில், பாண்டியன் தன் யானையுடன் என் கண்ணுள் புகுந்துள்ளான்: கண்ணைத் திறந்தேனோ என்னை விட்டுத் தப்பிப் போய்விடுவான் என்றாள் காதல் களி மயக்கத்தில் உளறும் இதனை முத்தொள்ளாயிரப் பாட்டொன்று காட்டுகின்றது. பகுத்தறிவுடைய மக்களை யன்றிப் பறவைகளும் விலங்குகளும் கூடக் கனவு கண்ட நிகழ்ச்சிகளைப் புலவர்கள் படைத்துள்ளனர். தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் தன் பெட்டையுடன் தங்கிய கடற்காக்கை வெண்ணிற இறால் மீனைத்தான் பற்றித் தின்பதாகக் கனவு காண்பதை வெண்ணாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். கனைப்பூவில் தேனுண்ட வண்டு காந்தள் பூவில் கண்ணுறங்கி யானையின் கன்னத்தில் ஒழுகும் மத நீரை அருந்துவதாகக் கனவுச் செய்தியைத் தாயங்கண்ணனார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார். களவு செய்யக் கருதுவார்க்கு நள்ளிரவுப் பொழுது மிகக் கொண்டாட்டமானது. களவு போகாமல் காக்க முனைவார்க்கு இந்நள்ளிரவு மிகத் திண்டாட்டமானது. பொருட்களவு செய்வாரை அன்றிக் காதற்களவுக்கும் கவின் பொழுது நள்ளிரவே ஆகும். களவையும் பிற கடமைகளையும் நாட்டில் ஒடுக்குதல் காவலர் கடமை. ஆதலால் பண்டை வேந்தர்கள் தாமே மாறுகோலம் பூண்டு மறுகில் திரிந்து காவல் புரிந்தனர். இதற்குப் பொற்கைப் பாண்டியன் வரலாறு சான்றாகும். நாட்டை நல்வழியில் நடத்தினால் மட்டும் போதுமா? வேற்று நாட்டவர் தாக்குதல் நேருங்கால் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டியதும் ஆள்வோர் கடமையாம். அவ்வேளை களில் வீரர்கள் கண்படை கொண்டாலும் வேந்தர் கண்படை கொள்ளாது கடமை ஆற்றினர். நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளாது பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறைக்கண் பணி செய்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் புலவர் நக்கீரனார். வாடைக் காற்று வன்மையாக அடிக்கின்றது. பாண்டில் என்னும் ஒருவகை விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு ஏவலர் வருகின்றனர்: படைத் தலைவன், வேப்பம்பூ மாலை சூட்டிய வேலைத் தாங்கி, வேந்தன் முன்னே செல்கின்றான். குதிரை, தன் மேல் பட்ட மழைத்துளியை உதறிக் கொண்டு நடக்கின்றது: பாண்டியனின் இடத்தோளில் கிடந்த மேலாடை. சிறிது நழுவுகின்றது. அதனைக் கையால் அணைத்துத் தழுவிக் கொள் கிறான்; வாளேந்திய வீரன் ஒருவனின் தோள் மேல் தன் வலக்கையை வைத்துக் கொள்கிறான். போரிலே விழுப்புண் பட்ட வீரர்களைத் தனித்தனியே கண்டு அளவளாவுகின்றான்: அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்கின்றான்: அவர்கள் பட்ட புண்ணைத்தான் பட்டதாக உணர்ந்து வருந்துகின்றான்; இன்மொழியும் புன்முறுவலும் இலங்கப் பணி செய்து மகிழ்விக்கின்றான்; வேந்தன் அரவணைப்பில் வீரர் விம்மிதம் அடைகின்றனர். நெடுநல்வாடை காட்டும் நள்ளிரவுக் காட்சி இது. கலித்தொகை காட்டும் ஒரு காட்சியைக் காண்போம். ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவுப் பொழுது: ஒரு முதியவன்: முடவன்: மழுக்கைத் தலைவன்; குட்ட நோயால் காலும் கையும் குறைந்தவன்: ஒரு தெருக்கோடியில நின்றான். அங்கே அழகிய நங்கை ஒருத்தி தன் காதலன் குறிப்பித்தபடி அவனைக் காண்டற்கு வந்தாள். அங்கு நின்ற முதியவன். மகளிர் நிற்கும் காலம் அன்றாக இவ்விடத்து நிற்கும் நீ யார்? என்று வினாவினான் சிறியவளே என்னாலே அசுப்படுத்திக் கொள்ளப் பட்டாய் என்று நெருங்கினான். வைக்கோலைக் கண்ட கிழ எருது போலப் பக்கத்தில்இருந்து போகாமல் நின்றான். தையலே தம்பலந்தின் என்று கூறி வெற்றிலைப் பையைத் திறந்து எடுத்துக் கொள் என்றான். நங்கை ஒன்றும் பேசாமல் துணிந்து நின்றாள். அவன் அஞ்சினான் அவளைப் பேய் என எண்ணினான். ஆதலால் விலகி நின்று நான் ஆண் பேய்: பெண்பேய் ஆகிய நீ எனக்கு அருள் செய்வாயாக. அவ்வாறு செய்யா தொழியின் இவ்வூரார் இடும்பலியை நீ பெறாமல் நானே எடுத்துக் கெள்வேன் என்றான். தன்னைப் பெண் பேய் எனக் கருதி அவன் நடுங்குவதைக் கண்ட நங்கை தன் கையால் மணலை வாரி இறைத்தாள். அதனால் அவன் கடுமையாகக் கதறிப் புலம்பி ஊர்க்கெல்லாம் கேட்குமாறு கத்தினான. இச்செயல் அவள் தலைவனைச் காணுதற்குத் தடையாயிற்று. வலிய புலிக்கென அமைக்கப் பெற்ற வலையிலே சிறு நரி அகப்பட்டது போல நகைப்பிற்கு இடமான நிகழ்ச்சியாயிற்று. நள்ளிரவிற் பெய்யுமழை பயிர்களுக்கு மிக நன்மையாம் எனச் சங்கப் பாட்டென்று சாற்றுகின்றது. ஏரி குளங்கள் வறண்டு போயின: நெற்பயிர் சுருக்கொண்டு வாட்டமாய் நிற்கின்றது: அந் நிலையில் நள்ளிரவில் நல்ல மழை பொழிகின்றது: அம் மழைப் பொழிவு, பிரிந்து சென்ற கணவன் மீண்டும் வந்து தலைவியொடு கூடிய இன்பத்திற்கு ஒப்பானது என்று கூறுகின்றது அது. நள்ளிரவு அமைதிப் பொழுதே ஆயினும் யாமங்காவலர் உலாவி வருவர்: நாய் குரைத்துத் திரியும்; அன்றிற் பறவை ஒலியெழுப்பிப் பிரிந்தவர்க்குப் பெருந்துயரூட்டும்; சேற்றிலே நின்ற எருமை அதனை வெறுத்து ஐ யெனக் கரையும்: வீட்டெலியாகிய உணவைத் தேடும் கூகை குழறும் - இவை நள்ளிரவின் நாட்டுக் காட்சிகளுள் சில. மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் பாம்பு இரை தேடும்: ஈயற்புற்றில் இருக்கும் புற்றாஞ் சோற்றைத் தின்னக் கரடி கைந் நீட்டும்: ஆங்குக் குடியிருந்த பாம்பு கரடியின் கைபட்டு அழியும், புற்றின் மேல் இருந்த மின் மினிகள் பறக்கும்; களிற்றிரை தப்பிய புலி கடுக உலவும் - இவை காட்டுக் காட்சிகளுள் சில. நள்ளிரவுப் பொழுதில் ஒரு சேவல் கூவுகின்றது: அதனைக் கேட்ட தலைவிக்கு உண்டாகிய சீற்றத்திற்கு அளவே இல்லை. நெடுநாள் பிரிந்து அன்று வந்த தலைவன் அன்பை நெடும் பொழுது பெறாமல், கெடும்படி செய்த சேவலின் கொடுமையை எண்ணிக் குமைந்தாள். சிவந்த கொண்டையை உடைய சேவலே! இனிய உறக்கத்தில் இருந்த என்னை எழுப்பினை நீ! ஆதலால் நள்ளிரவில் வீட்டு எலியைத் தின்னுதற்குத் திரியும் காட்டுப் பூனையின் குட்டிக்கு இரையாகித் துன்பப் படுவாயாக என்றாள். தன் இன்பத்திற்கு இடையூறு செய்ததற்காகச் சேவல் இறந்தொழிய வேண்டுமாம்! என்ன கடுமையான சாபம். நள்ளிரவு தந்த வன்மொழி இது! மென் மொழி ஒன்றைக் கேட்போம்! தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வருகின்றான். அவன் வரும் வழியில் காரிருள் கப்பிக் கிடக்கிறது: கடுமழை பொழிகிறது; காட்டாறு குறுக்கிடுகிறது: களிறு முதலியவை பிளிறித் திரிகின்றன; கரடி முதலிய கடுவிலங்குகள் உலாவு கின்றன; கரடு முரடான வழி அது: ஆதலின் தலைவி தன் தோழியிடம் சொல்கின்றாள்; தோழி! யானை முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பு போன்ற சிறிய மலை வழியில் நள்ளிருளில் தலைவன் வருகிறான். ஆதலால் அவன் திருவடிகளைத் தாங்கித் தாங்கிச் சென்றது என் நெஞ்சு! இஃது என்னையோ! தலைவன் திருவடிகளைத் தாங்கும் தாமரைத் திருமலராகத் தலைவி நெஞ்சைப் படைத்துக் கூறும் அருமை, மிக அருமையாம். இத்தகு அருமை உணர்வுகளை வழங்கும் நள்ளிரவை, வாழிய இரவே, வாழிய ஊழி உழியில் வுலகின் மேவியே என வாழ்த்தும் பரிதிமாற் கலைஞருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோமாக. 17. ஓதாக் கல்வி வள்ளலார் வரலாற்றையும் வாக்கையும் படித்தவர்கள் ஓதாக் கல்வி என்னும் செய்தியை அறிவர். ஓதாக் கல்வி என்பது என்ன? Xjhkny - gÆyhkny - xUt® ngh¿it¥ bg‰W Él Koíkh?முடியும் எனின், கற்றுணர்ந்த - கற்பித்த - பெரு மக்களுக்குப் பெருமை சேர்க்குமா? படிக்காமலே ஒருவர் பேரறிவு பெற்றார் என்பது அவர் தமக்குமே பெருமை சேர்க்குமா படிப்பின்மையைக் கருதிக் கூறுவதேயன்றி அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் என ஒருதலையாகக் கூறுவதன்றே. தனியே எவ்வளவு படித்தனர், பட்டறிவுற்றனர்! வள்ளலார் பாக்களிலும் உரைநடை நூல்களிலும் பொதுவில் நிற்கும் முந்தையோர் நூற்குறிப்புகள் எத்துணை எத்துணை! வரலாற்றுக் குறிப்புகள் எத்துணை எத்துணை! இலக்கண இலக்கிய மேற்கோள் செய்திகள் தாம் எத்துணை எத்துணை! திருக்குறளை வள்ளலார்போல முழுது முழுதாகப் பொன்னேபோல் போற்றிக் கொண்டவர் தமிழுலகில் அரியர்! முதல் திருமுறையிலுள்ள நெஞ்சறிவுறுத்தல் ஒன்று சாலுமே! நால்வர் நான்மணி மாலையின் நனி சிறப்பென்ன? நால்வர் வாக்குகளிலே தேக்கிய பிழிவின் வழிவாக்கன்றோ பெருக் கெடுத்தது அது? சிவப்பிரகாச அடிகள், நால்வர் அருண்மொழி களைப் பயிலாமல் நால்வர் நான்மணி மாலை இயற்றியிருப்பரோ? வள்ளலார் அருளிய ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை ஆகியவற்றைக் கற்போர், வள்ளல் பெருமகனார் உள்ளம், அந் நால்வர் பாடல்களில் தேக்கெறியத் தெவிட்டியமையே பாவெள்ளமெனப் பெருக்கெடுத்த தென்பதை மறுக்கவும் துணிவரோ? தாயுமானவர், பட்டினத்தார், சேக்கிழார், திருமூலர் இன்னோர் திருப்பாடல் குறிப்புகள், செய்திகள், வரலாற்றடைவுகள், திருக்கோயில் வைப்புகள், அடியார் அருள் விளக்கங்கள் இன்னவற்றையெல்லாம் ஓரோட்டமாய்க் கற்பாரும், செம்பொருட்பேரேட்டு நூல்களிலே வள்ளலார் தோய்விலர் எனத் துணிவரோ? அன்பர்களுக்கு விடுத்த முடங்கல்களிலேயுள்ள மருத்துவக் குறிப்புகளைக் காண்பார், வள்ளலார் சித்த மருத்துவ நூல்களிலே நுழைபுலம் இல்லார் எனச் சொல்வரோ? மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்தடிகளார்க்கு விடுத்த முடங்கலையும் தமிழ் என்னும் சொல் குறித்த விளக்கவுரையையும் கற்போர் வள்ளல் பெருமகனார் வளமான இலக்கணத் தேர்ச்சியில் ஐயுறவும் கொள்வரோ? எத்துணை ய ப்பு வகைகளையும் வண்ண வகைகளையும் வள்ளலார் வளப்படுத்தியுள்ளார்! எத்துணை அகத்துறைகளை வனப்புறுத்தியுள்ளார்! பிற்கால இசை வகைகளில் எத்துணை ஏற்றங் காண்பித்துள்ளார்! இவை யெல்லாம் ஏடெடுத்துப் படியாமல் வந்தனவோ? ஏடறியேன் எழுத்தறியேன்! பாடறியேன் படிப்பறியேன்; என்பது போலக் கற்றறியாத மெட்டுப் பாவலர் அவரல்லர். அவர் கற்றறிந்த கல்விச் சால்பினரே. ஆனால் அவர் கற்ற கல்வி, ஓதிக் கற்ற கல்வியன்று. ஓதாது கற்ற கல்வியேயாம். சொல்லாய்வு ஒன்றே சொற்பொருள் விளக்கத்தைத் தெள்ளிதில் காட்டவல்லது. ஓதுதல், ஓதாமை என்பவை எவை? கடலுக்கும் கடல் அலைக்கும் ஓதம் என்பது ஒரு பெயர். அப்பெயர் வந்தது எதனால்? இடைவிடாது ஒலித்துக் கொண்டிருத்தலால் ஓதம் என்னும் பெயரை அவை பெற்றன. ஓதம் என்பது ஓதையாய், ஒசையாய் ஒலி ஒலிப்பொருளும் தருவதாயிற்று. இடையீடில்லாது தெய்வத் திருக்கோயிலில் பண்ணிசைத்துப் பாடுபவர் எவர்? அவர் ஓதுவார் அல்லரோ? ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது இறைபுகழேயன்றோ! ஆதலின் அவற்றை இசைப்பார் ஓதுவார் ஆயினர். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்றாரே வள்ளுவர். அவ்வோத்து, ஓதப்படும் மறையேயன்றோ! இடைவிடாது பயிலும் பயிற்சியுடைய மற்போர் வீரர்க்குப்பயில்வான் என்னும் பெயருண்மை நோக்கியும் ஓதுவார் பெயர்ப் பொருளைத் தெளியலாமே! ஓதுவது ஒழியேல் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா; நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும் என்பவை நாம் அறியாதவையோ? பாம்பு ஏறினும்-படைஏறினும்-ஏடது கை விடேல் என்பதும் புதுவதோ? பொது அறிவினார்க்குப் பல்கால் ஓதி அழுந்தப் பதித்து வைத்தால் தான் பதிவாகி நிற்கும்! ஆனால் கருவிலே திருவுடையார்க்கு ஒருகால் கேட்ட-படித்த அளவானே அழுந்தப் பதிவாகி விடும். அவர்கள் பொது மக்களெனப் பல்கால் வருந்திப் பயில வேண்டுவதில்லையாம். ஆகலின், அவர்கள் கற்ற கல்வி ஓதாக் கல்வி என்னும் ஒரு பெருஞ் சிறப்புக்குரிய தாயிற்றாம். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் ஒரு பாடலை ஒருமுறை கேட்ட அளவானே ஒப்பித்ததை வரலாறு கூறுகின்றது ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் எனத் தம் வரலாற்றை அந்தகக்கவி வீரராகவர் குறிப்பிடு கின்றார். வெண்பா இருகாலில் எல்லானை வெள்ளோலை. கண்பார்க்க கையால் எழுதானைப் பெண்பாவி பெற்றாளே பெற்றாளே பிறர் நகைக்கப் பெற்றாளே என்று ஔவையார் தனிப்பாடல் எள்ளி நகையாடுகிறது. இக்காலத்தும் மதுரையில் திகழும் பண்ணிசை வல்லார் திருப்பதியார் ஒரு பாடலை இருமுறை கேட்ட அளவானே அருமையாக இசையுடன் பாடுதலை நேரிடையில் ஆய்ந்து கண்டுள்ளோம்! திருக்குறள் எண்கவனர் கோயில்பட்டி இராமையனார் நினைவாற்றல் திறம் சொல்வார் சொல்லிறந்து செல்லும் தகைத்தாய்த் திகழ்கின்றது. இவையெல்லாம், நெஞ்சில் குத்தி உருப்போட்டு வரப்படுத்திக் கொள்வனவாய் அமைவன வல்ல! வள்ளலார் திறம், ஒருமுறை படித்தாலே-கேட்டாலே- பச்சை மரத்தில் பதியும் ஆணியெனப் பதிந்ததாகலின் அக்கல்வி ஓதாக்கல்வி எனப் பெற்றதாய். இன்னும் தெளிவு வேண்டுமோ? தேன்படிக்கும் அமுதாம் நின் திருப்பாட்டைக் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன்: நாவொன்றோ ஊண்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே! தான் படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே. வான் கலந்த மாணிக் வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன் கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. இப்பாடல்களை நோக்குக. தம்மை மறந்து தாமே நூலாகி ஊனும், உளமும் உயிரும், உயிருக்கு உயிரும் ஒன்றியும், கலந்தும் பாடிப் பெற்ற ஒருமைப்பாட்டுக் கல்வியை அறிவோர் , வள்ளலார் பெற்ற ஓதாக் கல்வியைத்தெளிவர் அல்லரோ! 18. சித்தர்-திருமூலர் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்துளர்: எந்த மண்ணிலும் இருந்துளர்: தமிழகத்தில் இருந்த சித்தர்களாகப் பதினெண்மரை எண்ணியுள்ளனர். அவ்வெண்ணிக்கைக்கு உட்படாத சித்தர்களும் இருந்துளர். சித்தர் என்பார் கள்ளம் களங்கம் கறை குறை இல்லாத தூய உள்ளத்தால் குழந்தை போன்றவர். ஓடி ஓடித் தேடிப்போய்த் தொண்டு செய்தலால் தாய் போன்றவர். உடல்நலப் பணிகளோடு உயிர்நலப் பணிகளும் செய்தலால் உயிர்ப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தவர். உலகததுக்காகத் தங்களைத் தருவதில் ஒப்பிலா வள்ளல் களாக ஒங்கியவர். சித்தத்தின் சீரிய செம்மையால் சித்தர் எனப்பட்டவர்கள். அவர்கள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்பார் வள்ளுவர். அத்தகைய மன மாசில்லாத அறவோரே சித்தர்களாக விளங்கினர். இதனையே மணிவாசகர் சித்தமல் அறுவித்துச் சிவமாக்கி என்கிறார். மலம் எனப்படும் மாசு நீங்கிய மணி களாக விளங்கியவர்களே இறைமை நிலையை எய்திய சித்தர்கள் எனப்பட்டனர் திருமூலர் வரலாறு சித்தர் தன்மையைச் சிறந்த படமாக்கிக் காட்டுவதாகும். மூலன் என்னும் ஆயன் தன் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும்போதே அவற்றின் முன்னேயே சாய்ந்து இறந்து விடுகிறான். தங்களுக்கு உணவும் நீரும் காவலும் வழங்கிய அவ்வாயன் இறப்பைத் தாங்கிக் கொள்ளமாட்டாத அம்மாடுகள், கலங்கிக் கண்ணீர் வடித்தன. அவனைச் சுற்றிச் சூழ்ந்து நின்றனவே அல்லாமல், மேய்தலையும் விட்டொழிந்தன. ஐயறிவுடைய அம்மாடுகள் தங்களைப் பேணிய அவ்வாயன் மேல், எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தால் இவ்வாறு கண்ணீர் வடித்துக் கலங்கி நிற்கும் என அவ்வழியே சென்ற சுந்தரனார் என்னும் பெயருடைய சித்தர் உருகி நின்றார். மாட்டின் இயல்புக்காகவும் ஆயன் இயல்புக்காகவும் உருகி நின்ற சித்தர், அம்மாடுகள் வீடு சேர வேண்டுமே என்னும் அருள் இரக்கத்தால், இறந்துபோன மூலன் கூட்டுள் தம்முயிரைச் செலுத்தினார். செலுத்திய அளவில் உயிர் பெற்று எழுந்த மூலனைக் கண்ட மாடுகள், களிப்புற்றன. வழக்கம் போல் செல்லும் வழியே சென்று வீடு சேர்ந்தன: உரிய இடத்தை மாடுகள் சேர்ந்து விட்டதை அறிந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சுந்தரனாம் மூலர் மகிழ்ந்தார். இங்கே கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது, ஓருயிரின் துடிப்புக்காக மற்றோர் உயிர் துடித்து, அதுவும் தானும் வேறில்லை: ஒன்றே: என்று மெய்ப்பிக்கின்ற நிலையேயாம். இதனையே கம்பர் மாறிப்புகுதல் என்பார். முல்லைக் கொடி ஆடுவதைக் கண்டான் பாரி: அதன் ஆட்டம் அவன் உள்ளத்தை ஆட்டியது; முல்லைக் கொடியே தானாகி நின்ற நிலையே அவன் கொடையாகும். மேகம் கண்டு ஆடிய மயிலைக் கண்ட பேகன், அது நடுங்குவதாக எண்ணினான்; அம்மயிலாகவே அவன் மாறி விட்டான். அதுவே மயிலுக்குத் தான் போர்த்தியிருந்த போர்வையை அளிக்க வைத்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், அப்பயிர் வாட்டம் போலவே தாமும் வாடினார் வள்ளலார். வீடுதோறும் இரந்தும் பசி நீங்காது உழல்வாரைக் கண்டு தாமே பசிக்கு ஆட்பட்டார் போல் வருந்தினார் அவ்வள்ளலார். இவ்வுயர் தன்மைகள் எல்லாம் ஓருயிர்க்காக ஓருயிர் துடித்து உதவி செய்தலாகிய கூடு விட்டுக் கூடு பாய்தலேயாம். இவ்வியல்பு பெருகப் பெருக உலகம் உய்யும்; உயிர்கள் நலம் எய்தும்; மண்ணிலேயே விண்ணுலக இன்பத்தைக் கண்ட பேறு வாய்க்கும். ஆதலால் சித்தர்களை எண்ணியும், அவர் நூல்களை ஆய்ந்தும் அவர் வழிகளைக் கடைப் பிடித்து வாழ்ந்து வருதலால், உலகை அலைக் கழிக்கும் வன்முறைகள் தன்னலங்கள் ஆகிய எல்லாமும் நீங்கி, இனிமையும் பொதுமையும் ஓங்கி நலம் செய்யும். ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தை நன்றாகப் பேணிக் கொள்ள வேண்டும் என்று திருமூலர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். உடம்பார் அழியின் உயிரார் அழிவர்: அதுமட்டுமா? அடைய வேண்டிய உயர்ந்த மெய்ப்பொருள் மாண்பையும் அடைய மாட்டார். ஆதலால் உடலை நன்றாகப் பேணிக் கொள்ளத் தக்க வழிகளை யெல்லாம் கண்டு, அவ்வழிகளிலேயே பேணிவருகின்றேன் என்கிறார். மேலும், உடல் இழிவானது என்று ஒருகாலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். உடல் நிலையற்றது என்றும், மலம் நீர் கோழை சளி முதலியவற்றுக்கு இடமாக இருப்பது என்றும் இருபதிலே எழுச்சி, முப்பதிலே முறுக்கு என்றிருக்கும் உடல், நாற்பதிலே நழுவலாய், ஐம்பதிலே அசதியாய், அறுபதிலே ஆட்டமாய் எழுபதிலே ஏக்கமாய், எண்பதிலே தூக்கமாய் நிலைமாறுகிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த உடம்பினுள்ளே காணுதற்கு அரிய கடவுட்பொருள் கோயில் கொண்டிருக்கும் அருமைப் பாட்டை உணர்ந்து கொண்டேன். அதன் பின்னே இவ்வுடல் கிடைத்த பேறும் பெருமையும் அருமையும் அரிது எனக் கொண்டு நன்றாகப் பேணிவருகிறேன் என்கிறார். உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே என்பது அது: ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முழங்கியவர் திருமூலர். யாதும் ஊரே யாவரும் கேளிர். யாதானும் நாடாமல் ஊராமால் என்னும் கணியன் பூங்குன்றனார் திருவள்ளுவர் ஆகிய சான்றோர்களின் உலகளாவிய பார்வைபோல விரிந்தது திருமூலர் பார்வை. நாட்டாலோ இனத்தாலோ மொழியாலோ நிறத்தாலோ பழக்க வழக்கங்கள் நடையுடைகள் ஆகியவற்றாலோ நமக்குள் வேறுபாடுகள் இருக்கக் கூடும். அவையெல்லாம், நம்மைப் பிரித்து வைக்கும் மாறுபாடுகள் இல்லை. நாமெல்லாம் மாந்தர் எனப்படும் ஒரே ஒரு குலத்தைச் சேர்ந்தவரே; அதுபோல் நம் கடவுளின் பெயர்களும் சடங்கு முறைகளும் நூல்களும் வேறு வேறாக இருக்கக் கூடும். எனினும், அவை யெல்லாம் மாறு பாடானவை அல்ல; ஒரே கடவுளைப் பற்றிக் கூறுவனவே எனத் தெளிவாக்குகிறார். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் இம்முழக்கமே விரிநீர் வியனுலகத்து மக்களை யெல்லாம் ஒருகுடிப் பிறந்த மக்களாகக் கருதி மதிக்கின்ற பேற்றைத் தருவதாம். சமயங்கள் பல பெயர்களோடு இருத்தலைப் பற்றியும் திருமூலர் கருதுகிறார்; ஒரு பெரிய ஊர் இருக்கிறது: அவ்வூர்க்குச் செல்லும் வழியென்ன ஒன்றா இரண்டா? திசைதோறும் வழிகள் இருக்கத்தானே செய்கின்றன. அவ்வழிகளில் அவரவர்க்கு வாய்ப்பான பழக்கமான வழிகளில் வருகின்றனர். எவ்வழியில் வந்தாலும் அப்பெரிய ஊர்க்கு வருவதுதானே அவர்கள் நோக்கம். அவ்ழிகளில் இது உயர்ந்த வழி, இது தாழ்ந்த வழி, இது நல்ல வழி, இது அல்ல வழி என்று சொல்லுவானேன் என உலகச் சமய ஒருமைப்பாட்டை விளக்கிக் கூறுகிறார் திருமூலர்: எல்லாச் சமயத்தினரும் ஏற்றுப் போற்ற வேண்டிய செய்தி ஈதாகும். ஒன்றது பேரூர் வழி அதற்கு ஆறுள என்கிறார். உலகம் உய்வதற்கு வழி காட்டிய திருமூலர், தனித்தனி மாந்தரும் உய்வதற்கு நன்னெறி காட்டியுள்ளார். ஒவ்வொரு இடத்திற்கும் நடந்து போய் வருவதற்கு நெறி இருக்கிறது. நெறியை அடுத்தே நெருஞ்சில் முள்ளும் கிடக்கிறது. நெருஞ்சில் முள் குத்தாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? நெறிப்படியே செல்ல வேண்டும் என்பது தானே முறைமை, அதனைப் போற்றிக் கொள்வது தானே கட்டாயமாகச் செய்ய வேண்டியது என்கிறார். நெறியைப் படைத்தான் நெருஞ்சிலும் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில்முட் பாயகிலாவே நினைப்பு சொல் செயல் எனப்படும் மூன்றும் ஒன்று பட்டிருக்கும் ஒரு நிலையே உயர் நிலை. இறைவன் விரும்பும் நிலை என்பதை, வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் என்கிறார். இதனையே திருவள்ளுவர் உள்ளத்தால் பொய்யா தொழுகல் என்று கூறுவார். இறைவன் மேல் அன்பு செலுத்துதலோ, உயிர்களின் மேல் அருள் செலுத்துதலோ தம்மொத்த மக்களுக்கு உதவுதலோ முடியாதவையோ கடினமானவையோ இல்லை என்பதையும் திருமூலர் மிக அருமையாகச் சொல்கிறார். இறைவனை வழிபடுவதற்குத் தேரும் திருவிழாவும் மாலையும் தொங்கலும் புகையும் போற்றியும் செய்தால் தான் முடியும் என்பதா? செய்வார் செய்யட்டும். நீ ஒரு பச்சிலையை எடுத்து அவனை நெஞ்சார நினைந்து தூவினாலே போதுந்தானே என்கிறார். பெரிய பெரிய தொழுவங்களை உண்டாக்கிப் பசுக்களைக் காக்கும் அறத்தைச் செய்வார் செய்யட்டும்; நீ ஒரு கைப் பிடியளவு புல்லைப் பறித்துமா கொடுக்க முடியாது: அதுவும் உயிர்களைக் காக்கும் அறச் செயல் தானே என்கிறார். சத்திரம் சாவடி அறக்கட்டளை என்றெல்லாம் ஏற்படுத்தி நற்பேறு பெறுவார் பெறட்டும்; நீ பசித்தோர் முகம் பார்த்து, அவர்க்கு நீ உண்ணும் உணவில் ஒரு கைப்பிடியளவு தந்து உண்பதும் போதுமான கொடைச் செயல் தானே என்கிறார். இலையும் புல்லும் சோறும் எடுத்துத் தருவதற்குமா உனக்கு முடியாது? அவை முடியாது போயினும் வாயால் ஒரு நல்ல சொல்லுமா சொல்லுவதற்கு முடியாது? எவரெவரிடத்தும் இனிய சொற்களைச் சொல்லி உன் வாய்க்கு மணந்தந்து. அவர் செவிக்கும் மணம் தந்து இருபாலும் இன்பத்தை எளிமையாய்க் கொள்ளலாமே என்கிறார். அன்பு என்பது பண்பு மட்டுமன்று: அதுவே கடவுட் பண்பு: அதுவே கடவுள் என்று அழுத்தமாகக் கூறியவர் திருமூலர். அன்பும் சிவமும் இரண்டல்ல; ஒன்றே என்று கூறும் அவர் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்கிறார். அதன் முதிர்ச்சியே அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே என்னும் தாயுமானவர் வாக்காகும். பிறர்க்கென வாழும் புகழாளர்கள், பெருநலத் தொண்டர்கள் அருங்கொடையாளர்கள் அழியா வாழ்வினர் என்றும், சாவா உடம்பினர் என்றும் சாற்றப்படுவர் அவ்வகையில் சித்தராக வாழ்ந்த பெருமக்கள் தங்கள் உயிரிரக்கச் சான்றாகக் கண்டதும், உயிர் கலந்து ஒன்றி உரிமையால் எப்பயனும் எதிர்நோக்காமல் செய்த சித்த மருத்துவப்பணியும் அவர்களை அழியா வாழ்வினர் ஆக்கியுள்ளது. அவ்வரிசையில் மூலர் என்னும் பெயரோடு மூலராக விளங்கிய திருமூலர் பங்கு பெரிதாகும். இனிய வ ழ்க்கையா, நல்லறச் செயலா, மருத்துவத் திறமா, மூச்சுப் பயிற்சியா, இறைமை ஆய்வா எல்லாம் எல்லாம் உலகம் உய்வதற்காகத் திருமந்திரம் மூவாயிரம் படைத்ததுடன் முந்நூறு முப்பது என்னும் நூல்களும் அருளிய அத்தெய்வ வாழ்வினர் வாழ்வார் நெஞ்சகத்தெல்லாம் நீடு வாழும் பெருவாழ்வினராம். 19. பேரும் பெருமையும் பெயர் என்பது பேர் என்று மாறுதல் சொல் வழக்கு. இரண்டும் வடிவில் மாற்றம் பெற்றாலும், பொருள் ஒன்றனை ஒன்று தழுவியே நிற்கும். பெயரன், பேரன் எனப்படுவதும், பெயர்த்தி பேர்த்தி எனப்படுவதும், பெயர் பெற்றவர். பேர் பெற்றவர் எனப்படுவதும் வழக்கில் உள்ளவையே. ஊர்ப் பெயர்களை ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு நூல் ஊரும் பேரும் எனப்பட்டது. சொல்லின் செல்வர் இரா.பி.சேது அவர்கள் எழுதிய அருமையான நூல் அது. ஊர் என்பதற்குத் தக்க எதுமையாய்ப் பேர் என்பது அமைந்தது என்பது இல்லை. உயர் எனப்பட்டதே ஊர் ஆனதாம். எந்த இடத்தில் வீட்டைக் கட்டினாலும் நிலத்து மட்டத்திற்கு உயர்வாகக் கட்டுதலே என்றும் உள்ள வழக்கம். மலைப் பள்ளத் தாக்கில் அமைந்த ஊர் எனினும், அப்பள்ளத்தாக்கில் உயரமான இடமாகவே தேர்ந்து அமைப்பர். இல்லையானால் நீர் சூழ்ந்து தீவு ஆகிவிடுமே! உயர் என்பது ஊர் ஆனது, பெயர் என்து பேர் ஆனது போன்றதே! ஊர்ப் பெயரும் சரி, ஆள்களின் பெயரும் சரி, சிலர்க்கு மிக மிகப் பொருத்தமாக அமைந்து விடும். இயற்கையாக அமைந்த பெயர் எனினும் எதிர்காலச் சிறப்பெல்லாம் ஒருங்கே கொண்டது போன்ற பெருமையை உடையதாக அமைந்து விடும். அப்படிச் சீரும் சிறப்பும் உணர்த்தும் வகையில் பேரும் பெருமையும் கொண்டவர்களுள் குமர குருபரர் ஒருவர். குருபரர் என்றாலே இறைவருக்கும் குருவானவர் என்னும் பொருள் தரும். அதுவே முருகள் பெயர் என்பது காட்டும். இனிக் குமரன் என்பதும் முருகன் பெயரே, ஆதலால் முருகனின் இரட்டைப் பெயரும் ஒற்றை ஒரு பெயராய் இணைந்த பெருமைக்குரியது இப்பெயர். குமரன் திரண்டவன்: குரு-ஒளியுடையவன்; பரன்-அப்பரம் பொருளாம்இறைவன் இம் முச் சொற்களும் தனிச் தமிழ்ச் சொற்களாய்த் - தனிப் புகழ்ச் சொற்களாய்ப் - புணர்ந்து கலந்து ஒன்றாகி நின்ற பெருமையுடையன. தொன்ம (புராண) முறைப்படி: திருமுருகன் திருத்தந்தை சிவபெருமான். அவன் திருக்கயிலை நாயகன். நம் குமர குருபரர் திருத்தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர். அவர் ஊர்ப் பெயர் தானும் கயிலாயப் பெயர் கொண்ட திருப்பதியாகும். அது திரு வைகுண்டத்தின் வடபாற் பகுதியாகும். உமையம்மைக்கு ஒரு பெயர் சிவகாமி; சிவகாம சுந்தரி என்பதும் அது. குமர குருபரர் அன்னையார் பெயரும் அப்பெயரே. சண்முக சிகாமணியாரும் சிவகாம சுந்தரியாரும் மகப் பேறு பெற்றும் மகிழ்வுப் பேறு இன்றிப் பிறந்த மகன் பேச வேண்டுமென்று திருமுருகன் படைவீடுகளுள் ஒன்றாகிய செந்திலில் பாடுகிடந்தனர்: குருபரன் பேச வேண்டுமென்று குருபரனிடமே பாடுகிடந்தனர். பேசும் வாய் கேட்கக் கிட்டியதோ பாடும் வாய்! அவ்வாய் என்ன பாடியது? கந்தர் கவிவெண்பாப் பாடியது! சிவநெறிச் சீரெல்லாம் திரட்டிச் செந்தேனாய்க் கொந்தவிழு மலர் வீசிக் குளிர் கெழுமுத்தெடுத்திறைத்து என்றது போலவே கொழித்தது. பேறுற்ற பெருமையைப் பாடினால் பிறந்த மண்ணின் பெருமையையும் பாடவேண்டுமே! கயிலைக் கவம்பகம் பாடினார்! பிறந்த ஊர் கயிலை என்பதன்றோ! பெரும் பெயர் இறைவனைப் பாடியவர் அப்பெரும் பெயர் இறைவியைப் பாடாது விடுவாரா? மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடிப் பிள்ளைத் தமிழ்களிலேயே கொள்ளைத் தமிழ் கொஞ்சுவது அது என்று நிலைப்படுத்தினார். குமரப் புலவர் குழந்தையர் கல்வியை மறக்கலாமா? மறப்பாரா? குழந்தையர் நன்னெறிக் கல்விக் கெனவே அவர் பாடியது நீதி நெறிவிளக்கம்! குருவர் ஒருவரைக் குமர குருபரர் தேடியலைந்தார். அக்குருவரைத் தரக் காத்திருந்தது தருமபுரம்! தருவது தானே தரு! தருவது தானே தருமம்! பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் எனப் பயன் மிகு பழத் தரு தருவதை உரைத்தாரே திருவர் வள்ளுவர்! தருமபுரம் குருபரர்க்குக் குருவைத்தரக் காத்திருந்தது! குருவர் இயல்பு என்ன? மனத்துக்கண் மாசு இலராய்க், கசடறக் கற்பிக்கும் திறவோராய், உள்ளொளி எழுப்பும் உரவோராய் இருத்தல் அன்றோ! அப்படி ஒரு குருமணி, தருமணி, தருமபுரமணி - மாசிலாமணி குருபரர்க்குக் குருவானார்! குருவரிடம் துறவு வேண்டி நின்ற குருபரர்க்குப் பேரம்பலப் பெரும் பொருளை விளக்குதற்குச் சிற்றம் பலத்தைக் காட்டினார். சிற்றம்பலம் கண்டு களித்த அவர் செய்யுட் பொருள் சிவமே என்பார் போல் சிதம்பரச் செய்யுட் கோவை பாடினார்; சிற்றம்பலத்து அன்னை பெயரைப் பெற்ற அன்னை பெயர். தம்மைப் பெற்ற அன்னை பெயர் என்பது எவ்வளவு மகிழ்வு செய்திருக்கும்! சிதம்பர மும்மணிக் கோவையும் ஆங்கு இயற்றினார். தருமபுரத்தில் இருந்து தில்லைக்கு வரும் வழியில் இடைப் பட்டது புள்ளிருக்கு வேளூர். அதுவே இந்நாள் வைத்தீசுவரன் கோயில். ஆங்குக் குமரவேள் பெயர் முத்துக் குமரன். குமர குருபரர் முத்துக் குமரனை முத்து முத்துப் பாடல்களால் முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். மெய்க்குருவர் மாசிலாமணியாரை வாளாவிட வாய்வருமா? அவர்மேல் பண்டார மும்மணிக் கோவை பாடிப்பரவினார். மணிக்கு ஏற்றது. மணிக் கோவை தானே! ஒருவரை வயப்படுத்துவதற்கு அவர் மொழியில் பேசுவது போல வேறொன்று இல்லை. உருதுமொழி கற்றுச் சிறந்து அந்நாள் தில்லிப்பாதுசாவினிடம் உரையாடினார். அப்பயிற்சியில் சிறக்கக் கலைத் தலைவியாம் கலைமகளை வழிபட்டுச் சகலகலாவல்லி மாலை பாடினார். பாதுசா உதவியால் காசியில் இடம் பெற்றுக் குமாரசாமி மடம் கட்டினார். காசியின் பெருமை விளங்கக் காசிக் கலம்பகம் பாடினார். தாம் தடம் பதித்த மண்ணை யெல்லாம் தமிழ் மணங்கமழும் தண்மண்ணாக்கிய தவத்தோன்றல் குமரகுருபரர் அவர் பேரும் பெருமையும் தமிழொடு கலந்து ஒன்றி உடனாகி என்றும் திகழ்வதாகும். வாழிய கொஞ்சு தமிழ்க் குமர குருபரர் திருப்பெயர்! 20. வாழிய வையகம் நாம் நன்றாக வாழ வேண்டும் என்னும் எண்ணமுடைய எவர் வாயும் முழங்க வேண்டிய முழக்கம். வாழிய வையகம் என்பதாம். உலகம் நன்றாக வாழாமல் ஒருவர் நன்றாக வாழ முடியுமா? ஒரு நாள் வேண்டியது இல்லை: ஒரு நொடிப்பொழுது வாழ்வும் உண்மையை உணர்த்தி விடும்! ஒரு பிடி சோறுதானா? பசிப்பிணி மருந்து: ஆருயிர் வளர்க்கும் அமிழ்து: இயக்கம் அருளும் இறை: உலகவர் கொடை! அளவால் ஒரு பிடி சோறுதான்! அதற்கு உழைத்தவர் எவர்? எவர்? உழுதவர்-விதைத்தவர்-உரமிட்டவர்-களை எடுத்தவர்-நீர் விட்டவர்-அறுத்தவர்-அடித்தவர்-அவித்தவர்-அரைத்தவர்-ஆக்கியவர் இப்படி எத்தனை பேர்? இத் தொழில்களைச் செய்வதற்குக் கருவிகள் எவை எவை? இடு பொருள்கள் எவை எவை? சோறாக்கும் கலங்கள் எவை எவை? இவற்றை உருவாக்கித் தந்த உழைப்பாளர் எவர் எவர்? எண்ண முடியுமா? ஒரு பிடி சோறுக்கும், குழம்பு கூட்டு சாறு தொடுகறி என எத்தனை பொருள்கள்? இவற்றை எத்தனை இடங்களில் எத்தனை பேர்கள் உண்டாக்கி உலகுக்கு வழங்குகின்றனர்? கடுகு, மல்லி, சீரகம், பூண்டு மிளகு, உப்பு, பருப்பு, எண்ணெய், எரிபொருள் என எத்தனை பொருள்கள்: இவற்றை உலகம் பெற உதவியவர்கள் ஒருவரா? இருவரா? அன்னை ஆக்கித் தந்தால், அவர் ஆக்குவதற்கு அன்னை அனையவர் எத்தனை பேர்கள் பங்களிப்புச் செய்துளர்? ஒரு பிடி சோற்றுக்குள் உலகம் இப்படி ஒன்றாகி நிற்கிறது என்றால் அவ்வுலகத்தை மறந்து அதன் கொடையை மறந்து-வாழ்ந்தால் அப்பிறவி வாழும் பிறவியாகுமா? எந்நன்றியை மறப்பினும் செய்த நன்றியை மறத்தல் ஆகாதே! நன்றி மறத்தலைக் கொலைக் கொடுமைக்கு ஒப்பாக அல்லவா உயர்ந்தோர் கூறினார். அதனால் அல்லவோ, எந் நன்றி கொன்றார்க்கும் என்ற பொய்யா மொழியார், செய்ந் நன்றி கொன்ற என்றார். உலகத்தின் -நன்றியை மறந்தவர்-உயர்ந்த பிறவியர் ஆகார். அவர் வாழும் பிறவியர் அல்லர்; பாழும் பிறவியர்! வாங்கிய கடனைச் செலுத்தாப் பிறவி, பிறவியா? அப்பிறவி கடமை மறந்த கடனாளிப் பிறவிதானே! அப்படிக் கடனாளிப் பிறப்பாக இருந்து கடனாளிப் பிறவியாகவா, உலகம் பழிக்க முடிவது பழிப்பிறவி தானே! உலகம் செய்யும் உதவியை மறவாமல், தம்மால் இயலும் கடமையை முழுமையாகச் செய்து, என் கடமையை அரைகுறையாகச் செய்தேன் இல்லை முழுதுறு நிறைவாக என் கடமைகளை ஆற்றினேன் என்னும் நிறை மன வாழ்வே உலகக் கொடை வாழ்வாம் அக் கொடை வாழ்வு பெருகட்டும் என்னும் பேருளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் உண்மை வாழ்த்தே வாழிய வையகம் என்பதாம். தெரு முழக்கம் இல்லை இது-தெய்வத் திரு முழக்கம் இது. உணர்ந்து ஓதும் இம் முழக்கம், உலகம் காக்கும் உயிர் முழக்கமாக--உணர்வு முழக்கமாகத் திகழ்வதாக! வாழிய வையகம். 