இளங்குமரனார் தமிழ்வளம் 15 தமிழ் வளம் - சொல் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 15 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 280 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடு கிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் தமிழ் வளம் - சொல் நெஞ்சுறை 1 தமிழ் வளம் - சொல் 2 1. அக்கப்போர் 8 2. அங்கணம் 11 3. அட்டக்கரி 14 4. அட்டகாசம் 17 5. அடை 20 6. அந்தோ 27 7. அவல் 31 8. ஆமை 35 9. ஆய்தம் 38 10. ஆய்வு 41 11. இட்டவி 44 12. இரட்டை வடிவம் 47 13. இலவசம் 52 14. ஈரோடு 55 15. ஊர் 59 16. என்ன - என 62 17. ஒலிக் குறிப்பும் சொல் வடிவும் 65 18. ஒன்றில் இருந்து ஒன்று 69 19. கட்டுரை 74 20 கல்லும் கலையும் 77 21. கவி 82 22. கழிசடை 85 23. களை 88 24. களைகண் 91 25. களைதல் 94 26. காக்கை 97 27. கால்வாயும் வாய்க்காலும் 101 28. குட்டம் 104 29. குண்டு 108 30. குத்து விளக்கு 111 31. கொக்கு 114 32. கோயில் 116 33. சட்டினி 119 34. சலம் 122 35. சவளி 125 36. சுடர் 129 37. சுரம் 132 38. சுவடி - சோடி 139 39. சொல் 143 40. சொற்பொருள் விளக்கம் 147 41. தண்டு 158 42. திருவின் திரு 163 43. துணி 166 44. தோசை 169 45. நட்டணைக்கால் 172 46. நட்பும் பகையும் 176 47. நோய் வினைகள் 181 48. பல் 198 49. பற்று 204 50. பிடி 209 51. பழனி 213 52. புலவர் இறையனார் 216 53. பெருமகன் 222 54. பொழுது 224 55. முதனிலையும் முழுநிலையும் 228 56. வண்ணமும் எண்ணமும் 232 57. முறைப் பெயர் 235 58. வட்டம் 249 59. வடை 252 60. வண்டு 255 61. வலி 260 62. வள்ளல் அதியமான் 263 63. வள்ளல் ஓரி 267 64. வள்ளல் காரி 273 65. வள்ளல் பாரி 277 தமிழ் வளம் சொல் நெஞ்சுறை உள்ளுதோறும் உள்ளுதோறும் ஊற்றெடுக்கும் வள்ளுவம் என உள்ளுதோறும் உள்ளுதோறும் உவப்புறுத்தும் எம்பெற்றோர், வாழவந்தம்மை படிக்கராமர்தம் தவக் கொடையைத் தாங்கிமகிழும் நெஞ்சுறை இச் சொன்னூல் இரா. இளங்குமரன் தமிழ் வளம் - சொல் தமிழ் வளம் என்பது வளர்பொருளாய் அமைவது. உண்டியல் தொகையையோ வங்கி வைப்பையோ பண்டக சாலைப் பொருளையோ கணக்கிடுவதுபோல் அறுதியாகக் கணக்கிட்டுச் சொல்வது போன்றது அன்று அது. வான் மீனைக் கணக்கிட வல்லாரும் கடல் மீனைக் கணக்கிட மாட்டாமை போல நொடி நொடியும் வளரும் வளச்சொல் பெருக்கினது தமிழ். இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வழங்கும் சொற்கள் இன்னும் முற்றாகத் தொகுத்து முடிக்கப்படவில்லை. உருவாக்கப் பட்டுள்ள கலைச் சொற்களையும் இத்தனை ஆயிரமென அறுதியிட்டுரைக்க முடியவில்லை. வட்டார வழக்காக உள்ள சொற்களைத் தானும் தொகுத்துக் கணக்கிட வகையில்லை. நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள் கல்வெட்டுகள் சடங்குவகைச் சொற்கள், குழூஉக் குறிகள், ஆட்டக்களச் சொற்கள் இன்னவாறாக விரியும் பரப்புச் சொற்களை எண்ணிக்காண வகையில்லை. வழக்கு வீழ்ந்த சொற்கள், வழக்கில் புகும் சொற்கள் என்பனதாமும் அறுதியிடப் பெறவில்லை. தமிழ் மூலத்தின் தடம் எங்கெங்கெல்லாம் பதிவாகி எவ்வெம் மொழிவளமாய் இலங்குகின்றன. என்பதையும் உறுதிப்படுத்தும் முழுப்பணி இயலவில்லை. தமிழகம் தவிர்த்துத் தமிழர்வாழ் ஞாலப் பரப்பளவில் அவர்கள் பெருந்தக்க வாழ்வோடு வாழ்வாக வளர்ந்து வளம் பரப்பிக் கொண்டிருக்கும் சொற்களை இணைத்துக் கொள்ளும் இன்றியமையா முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வில்லை. எதனை நோக்கினும் முழுமையுறக் கணக்கிட்டு வளமாக்க மாட்டா வறுமுயற்சித் தமிழராட்சியும் தமிழறிஞர் செயற்பாடும், தமிழுக்கு உதவாத் தமிழ் நாட்டுச் செல்வர்களும் மல்கியுள்ள ஏனோ தானோத் தமிழகத்தில் தமிழ் வளம் தேனானால் என்ன, பாலானால் என்ன, தீம்பாகு ஆனால் என்ன; இருந் தொழிய வேண்டியதே! ஈடிணையில்லா வளமொழியாகத் தமிழ் வாய்த்திருந்தும், எம்மழலைப் பள்ளிக்குள்ளும் எம்மொழியை நடையிட விட மாட்டோம் என்னும் நல்ல தமிழர் நாட்டாண்மையில் நாடு வேட்டைக் காடாக இருக்கு மட்டும், தமிழ் வளம் என்பதெல்லாம் வாய்ப்பந்தலாகவே அமைந்துவிடும். ஆனால், காலம் மாறும்! அதுகாறும் காலப் பழமையொடு ஞாலமுழுப் பொருளாகத் திகழவல்ல தமிழ் வளத்தை அவரவர் திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் எழுத்தாலும் பேச்சாலும் பரப்பிக் கொண்டிருத்தல் கடமையாம். அவ்வகையில் தோன்றுவதே தமிழ் வளம் - சொல் என்னும் இச்சுவடியாம். இந்நூலளவில் தமிழ் வளம் அமையுமா? அமையும் என்பது கையளவு வைத்துள்ள இலையால், கானகப் பரப்பு இலைகளை யெல்லாம் அடக்கிவிட்டதாகக் காட்டுவது போலும் போலிமைக் காட்சியாகவே முடியும். என் எளிய முயற்சியால் இடையீடு இல்லாமல் எழுதிவைத்துள்ள தமிழ் வளத்தில் பத்தில் ஒரு பங்கு தானும் இத்தொகுப்பில் இடம் பெற்றிலதே என்னும் உண்மை ஒன்றே, நம் மொழித் தொண்டர் நிலையை வெளிப்படுத்த வல்லதாம். அக்கப்போர், அங்கணம், அட்டக்கரி, அட்டகாசம், அடை என்பன முதலாக அகர நிரலில் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள. இவையெல்லாம் பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டுத் தொகையாக்க முற்றவை. இதழ்களில் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை என்ப வற்றில் வெளிப்பட்ட கட்டுரைகளே மிகப்பல, மலர்களில் சில இடம் பெற்றன. கட்டுரைகள் எல்லாமும் சொல்லாய்வு வழிப் பட்டவை ஆகலின் தமிழ் வளம் - சொல் என்னும் பெயர் பெற்றது. இதற்குப் பின்வர வேண்டிய தமிழ்வளம் - பொருள் முன்னரே வெளிப்பட வாய்த்தது. பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள வரவேற்பு ஈதெனக் காட்டும் போலும். இச்சொல்வளக் கட்டுரைகள் இயற்கை ஒலிக் கொடையாம் உயிரிகளின் ஒலிப்பு வழியே உருப்பெற்றுத் திருப்பெற்று ஒன்று பத்தாய் நூறாய்த் திகழும் நெற் பயிர்க்கிளைப்பெனப் பெருகியவை உண்டு. வேரடிச் சொல் ஒன்றன் வழியே கிளர்ந்து மூங்கிற் பண்ணையெனப் படர்ந்து பணைத்து ஓங்கி உயர்ந்தவை பல உண்டு. தாய் மண்ணின் மணத்தொடு பிறந்து, தாய் வாயின் வளமாக வாய்த்தும், சின்னஞ்சிறு மாற்றங்களைப் புகுத்துவார் புகுத்தியமையால் புலமையாளரும் மயங்கி வேற்றுச் சொல்லெனக் கண்டும் கொண்டும் ஒதுக்கி வைத்த தமிழ்வளச் சொற்களும் உண்டு. வழூஉச் சொல்லாகத் தோன்றினும் தமிழ்வளமாகத் திகழும் சொல்லை அடையாளம் காட்டி ஆக்கப்படுத்திய ஆய்வும் உண்டு. அவ்வாறே பிழைவழக்கைச் சீராக்கும் சீர்த்தியும் உண்டு. கொத்துக் கொத்தாய்க் குலை குலையாய்த் திகழும் இயற்கைக் கொடைபோல, இயற்கை ஒலியும் இயற்கை வடிவும் இயல்நெறிப் பொருளும் கொண்டு இலங்கும் பெருவளக் குவையும் இவ்வாய்வில் உண்டு. இச்சொல்லாய்வைப் பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சான்றுகளைக் கொண்டு மெய்ப்பிப்பதுடன், பழமொழிகள் வழக்காறுகள், மரபுத் தொடர்கள், இணைச் சொற்கள், அணிகலங்கள், ஆடல்கள் புத்தாக்கங்கள் இன்னவற்றால் மெய்ப்பித்ததுண்டு. அகர முதலிகள், நிகண்டுகள், உரைகள் இன்னவற்றின் துணையால் ஆய்வைத் தட்டிக் கொட்டிப் பார்த்து நிலைப் படுத்தப் பட்டவையும் உண்டு. அடை என்பதோர் ஆய்வுக்கட்டுரை. அதில், அடை என்னும் முதனிலை, ஏவல் அளவில் ஆய்வு நிற்கவில்லை. அடைக்காய் அடைக்கத்து அடைப்பை அடைக்கலம் அடைப்பைக்காரன் அடைக்கலாங்குருவி அடைப்பைத் தொழில் அடைக்கோழி அடைவு அடைமொழி அடையாளம் அடைமண் அடைமானம் அடைமழை ஒப்படை அடைசல் முன்னடை அடை சினை முதல் பின்னடை அடையடுத்தல் அடைமொழி அடைதல் அடவி அடையலர் அடைசல் அடையலார் அடைத்தோசை அடையலார் அடைப்பு கையடை அடைப்பான் வாயடை கதவடைப்பு வளியடை கடையடைப்பு ஒட்டடை மாரடைப்பு நூலாம்படை சுமையடை பட்டடை இன்ன சொற்கள் ஆயப் பெறுகின்றன. அடகு, பட்டறை சும்மாடு - இன்ன சொற்களின் வழுக்கள் களையப் பெறுகின்றன. இவ்வகை ஆய்வு வழியே தமிழ்ச் சொல் வளம் நிலை நாட்டப் படுகின்றது. பகைக்கு வரும் சொற்கள் வழியே நட்புக்கு ஆக்கிக் கொள்ளும் சொற்பரப்புக் காண்பார் தமிழ்ச் சொல்லாக்க வாய்ப்பை எளிதில் உணர்வார். இயல்பாகக் கிடைக்கும் வாய்ப்பை ஆக்க முறையில் பயன்படுத்தினாலே எவ்வளவோ அருஞ்செயல்களை முடிக்கலாம். ஒல்லியல் மருத்துவர் ஒருவர். அவர் மதுரையைச் சார்ந்தவர். நல்ல பற்றாளர்; தனித்தமிழ்த் தேர்ச்சியர்; புலவர் த. ச. இராசாமணியார்; செல்வி மருத்துவ மனையை உருவாக்கிச் சீர்த்தியொடு வாழ்பவர். ஆண்டுதோறும் மேத் திங்கள் முதல் நாளில் தம் அன்பர் நண்பர் அனைவரையும் அழைத்துச் செவி விருந்தும் அவி விருந்தும் வழங்குவார். என் பெருங்கிழமையராகிய அவர் வேண்டுகைப்படி நோய்வினைகள் என்பதைப் பேசினேன். இலக்கியங் கூறும் மருத்துவக் கூறுகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்த இசைந்தான், நோய்வினைகளை எண்ணினேன். அது பெருக்காறு ஆயிற்று; முன்னூற்றைத் தாண்டியமை வியப்பாயிற்று. பொழிவு காற்றொடு போய் விட்டால் உழைப்பின் பயன் என்ன? அவற்றைப் பட்டியலிட்டு வளரும் தமிழ் உலக மாதிகைக்கு விடுத்தேன். முழுதுற அதில் வெளிவந்தது. நீரி என்பது சித்தர் ஒருவர் வழங்கிய கொடை அதனை எண்ணிய எண்ணம், ஊரி,யைத் தூண்டியது. கல்லூரி, அகடூரி என்பவை மின்னின. சேம அச்சு, என்னும் பழஞ்சொல் எத்தனை எத்தனை கலைச் சொற்களுக்கு மூலமாகத் திகழ்கின்றது! கல்லில் இருந்து தோன்றிய கலை ஆய்வு, சொல்லில் இருந்து சுரங்கமாகத் திகழும் மாண்பைச் சுடர் விட்டுக் காட்டுதல் எத்தகைய பேற்றினது! தொல்காப்பியனார் குறிக்கும் தொகுத்தல் ஒன்றைச் செய்தாலே தமிழ்வளம் துலங்குதல் உறுதியாம். நோய்வினைகளை எண்ணுவார், தொகுப்பு வளம் தமிழ்த் தோப்பாகத் தெரிதலைப் போற்றுவார். அதில் வரும் லகரப் புள்ளியெழுத்துகளாலேயே அச்சிடலும் அருமையாயிற்று. பிற நூல் அச்சீட்டுக்கும் சொல்லாய்வு நூல் அச்சீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அது நன்கு வெளிப்படுத்தும். அவ்வகையில் பொறுமையாகவும் பொறுப்பாகவும் அச்சிட்ட வேமன் அச்சகத்தார்க்கு நன்றியுடையேன். அச்சு அடுக்குவார். அச்சு அடிப்பார் எனத் தனித்தனி என்ன! தொழிற் குடும்பத்திலும் பொதுமைச் சுட்டுத்தானே பெருமைச் சுட்டு! அதனைத் தொண்டுக் குடும்பம் மறக்கவோ செய்யும்? தனித் தனிப் பூவாக மணக்கப் பரப்பிய இதழ்களை மறக்க முடியுமா? அவைதானே இச் சொன்மாலைத் தொகைக்கு மூல பண்டாரம்! வாராது வந்த மாமணியென ஓர் அரிய மதிப்புரை வாய்ந்தது. செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த வள்ளல் பாரி பற்றிய கட்டுரை அது. அதனைப்பார்த்த பாவாணர் நுங்கள் பாரியைப் பார்த்தேன்; முற்றும் சரிதான். என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப்போலவே சொற்பிறப்பு அமைப்பீர்கள் என்று வரைந்த அஞ்சல் தனிப்பெரும் பட்டயம் அன்றோ! அந்தமொழி ஞாயிற்றை வணங்கிப் போற்றுகிறேன். பலகாலத்துப் பல இதழ்களில் வெளிப்பட்ட இக் கட்டுரைகள் நூலாக்கம் பெறும் போது சிற்சில சொற்களும் செய்திகளும் மீளவும் தலைகாட்டல் நிகழும். அவற்றைக் கூறியது கூறல் குற்றமில்லை வேறொரு பொருளைப் பயக்குமாயின் என்னும் இலக்கணம் கொண்டு பொறுத்துக் கொள்க. சொல்லாய்வு செய்வார் அரியர்; அவ்வாறே சொல் ஆய்வு நூலைக் கற்பாரும் அரியர்; அவரினும் விலை தந்து விரும்பித் தேடிக் கற்பார் அரியர். அவ்வரிய பெரியர் செயலுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன். தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் 1. அக்கப்போர் அக்கப்போர் என்பது இந்நாள் பொது மக்கள் வழக்குச் சொல்; கல்வியறிவு அறவே இல்லாத பொதுமக்களிடத்துத் தோன்றிக் கற்றோர் முதல் அனைவரிடத்தும் ஊன்றியுள்ள சொல். உன்னோடு எப்போதும் அக்கப்போராக இருக்கிறது; உன்னோடு அக்கப்போர் செய்ய நம்மால் ஆகாது; ஓயாமல் ஒழியாமல் அக்கப் போர் பண்ணுபவனோடு என்ன செய்வது? நின்றாலும் குற்றம்; நடந்தாலும் குற்றம்; அவனோடு ஒரே அக்கப்போர். இப்படி நாளும் பொழுதும் எங்கும் எவரிடமும் கேட்கும் சொல் அக்கப்போர்! ï›t¡f¥ ngh®¡F¥ bghUŸ fhz tH¡»aiy neh¡Fjš nt©L«., கண்டு பிடிக்க அரியதும் ஆழமிக்கதுமான தேடல் வேண்டியது இல்லை. பொது மக்கள் வழக்கில் பொருந்தி வழங்கும் சொற்கள் இயல்பானவை; எளிமையானவை; நேரே பொருள் தருபவை. மயக்குதல் அற்றவை; பகட்டு அற்றவை. இந்நோக்கில் அக்கப் போரைத் தேடிப் பொருள் காண வேண்டும். அக்கப்போர் என்னும் சொல்லை, தனக்கே உரிய பெரு வழக்கம் போல் வடசொல்லாகக் காட்டுகிறது தமிழ் லெக்சிகன், தமிழ் அகராதியின் பெயர்வரவே அதன் பொருள் வரவைக் காட்டப் போதுமே! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எவ்வளவு பட்டறிவினின்று வெளிப்பட்ட சொல்! அவ்வகராதி சொல்கிறது: அக்கப்போர் 1 - கலகம், உபத்திரவம் அக்கப்போர் 2- வம்புப்பேச்சு ஆனந்த விகடன் அகராதிசொல்கிறது: கலகம், உபத்திரவம், வம்புப் பேச்சு, அலப்புதல், வருத்தம். செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகர முதலிவிளக்குகிறது: 1. கலகம் (கொ. வ) 2. தொந்தரவு, தொல்லை (கொ. வ) ம. அக்கப்போரு (ஒருகா : அக்கு = துண்டு, சிறியது. அக்கு+போர்- அக்குப் போர்=சிறுபோர், கலகம், தொந்தரவு. அக்குப்போர் - அக்கப் போர். இனி, அக்கு - அக்கம்+போர் -அக்கப்போர் என்றுமாம். அக்கக் காய் (துண்டு துண்டாக) அக் - குணிப் பிள்ளை (சிறு பிள்ளை) என்னும் வழக்குகளை நோக்குக). அக்கப்போர் சிறுபோர் என்பது பொருந்துவது அன்று. போர் போரே! சிறுபோர் ஆயினும், பெரும் போராயினும் சரியே. கலகம், கைகலப்பு, சண்டை, சச்சரவு இப்படிப் பல சொற்கள் வழக்கில் உள்ளவை. பல்வேறு நிலைகளைக் கருதியவை என்க. போர் என்பது பொரு அல்லது ஒப்பு என்பதன் வழியாக வந்த சொல். ஒத்த இருவருக்குள் ஏற்படுவதே போர், பொருநர் என்ற சொல்லும் வீரர்க்கு ஆயது அவ்வகையால் தான். இங்கு வரும் போர் சிறுபோர் பெரும் போர் எனப் பார்க்கத் தக்க கைகலப்பன்று. இந்நாளில் மறுத்துப் பேசுதலைச் சொற்போர், என்பது இல்லையா? அவ்வகையைச் சார்ந்த போர். மன உளைச்சலை உண்டாக்கும் பேச்சுப்போர், ஏச்சுப்போர்; கருவுதல் போர்! அக்கம் என்பது என்ன? அக்கம் பக்கம் என்பது இணைமொழி. இவற்றுள் அக்கம், தன் வீடும் தானிருக்கும் இடம் சார்ந்தது, பக்கம் தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும் தானிருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும். அக்கம் பக்கம் பார்த்துப் பேசு என்பது ஈரிடங்களையும் இணைக்கம் பழமொழி. பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே என்பது மற்றொரு பழமொழி. பகலிலும், அக்கம் பற்றிப் பேசுதல் கூடாது; பார்த்துப் பேசுதல், பாராது பேசுதல் இரண்டும் கூடாது. சுவரும் கேட்கும்; தோட்டமும் கேட்கும்: கேணியும் கேட்கும் முற்றமும்; கேட்கும்; மூலை முடுக்கும் கேட்கும்; எது எங்கிருந்து எப்படிக் கேட்கிறது என்று தெரியாமல் கேட்கும் அப்படிக் கேட்டால் என்ன விளைவாம்? அக்கப் போராம்! கேட்டதை வைத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளே வைவது போல வெளியாருக்கு வையலாம்; சட்டிபானை, ஆடுமாடு, வேலையாள் வேற்றாள் எவரைச் சாக்கிட்டேனும் சாடை மாடை யாகப் பேசலாம்! கேட்கப் பேசலாம்; கேட்டும் கேளாமலும் பேசலாம்! இரு வீட்டார்க்கும் - ஒட்டுக்குடி ஓரக்குடி. அண்டை அயல், என வாழும் இருசாரார்க்கும் - ஓயாத் தொல்லை! ஒழியாத் தொல்லை; அரிசிறங்கு ஓய்ந்தாலும் ஓயாத அடங்காத தொல்லை! கிண்டிக் கிளறுதலைத் தொழிலாகக் கொண்ட கோழி அதனை விடுத்தாலும், தன் இனத்தைச் சேர்ந்தது அடுத்த தெரு வழியில் வாலை மடக்கிக் கொண்டு ஓடுதலைக் கண்டு குரைத்தலை நாய் மறந்தாலும், அயர்தி மறதியால் விட்டாலும் - விடாத முணகல்! மூச்செறிவு! உருட்டல் புரட்டல்! இதைக்கண்ட ஒருவர் மனத்தை இச் செயல் வாட்டியிருக்கிறது. எந்தப் போர் இருந்தாலும் இந்தப் போர்க்கு - அக்கப் போர்க்கு - இடந்தருதல் கூடாது என எண்ணியிருப்பார். அதனை ஒரு சொல்லாக்கி உலவ விட்டிருப்பார்! அந்த அக்கப் போர் அறிவாளிகளையும் அக்கப்போர்க்கு ஆளாக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டவுறவு முட்டப்பகை என்பதை எவர் அறியார்? அடுத் திருந்து மாணாத செய்வான் பகையைச் சுட்டுகிறாரே வள்ளுவர். மடியிலே பூனையைக் கட்டிக் கொண்டு சொகினம் (சகுனம்) பார்ப்பதா? என்கிறதே ஒரு பழமொழி! பக்கத்துக் கடனோ பழிக்கடனோ என்கிறதே மற்றொரு பழமொழி! இவையெல்லாம் அக்கப் போர்க்கு இடந்தராதே அக்கப் போரை விலைக்கு வாங்கிக் கொள்ளாதே என்னும் எண்ணத்தின் வெளிப்பாடுகளே! அக்கம், க் ஒற்றுக்கெட அகம் ஆகும்; பகுக்கப்பட்டது பகம், பாகம். பாகப் பிரிவு; அதற்கு எல்லைக் கோடு இல்லாமல், இருந்தால் ஒருவரிடமாகவே இருந்திருக்கும். இவ்விளக்கங்கள் என்ன சொல்கின்றன; குடிவழியில் வேறொருவர் இருந்தாலும் அக்கப் போர் குறைவாக இருக்கும். ஒரே குடும்பத்தவர் குருதிக் கலப்புடையவர் - அக்கப்போரா நூறாண்டு வாழ்வு; நொடி நொடியும் சாவு என அக்கப்போர் ஆக்கும் என்பதை எச்சரிக்கிறதாம். 2. அங்கணம் அங்கணம் பேச்சு, எழுத்து என்னும் இருவகை வழக்குகளிலும் இன்றும் வழங்கும் சொல். அங்கணக் குழி, அங்கணத் தொட்டி, அங்கணக் கிடங்கு என உலக வழக்கிலும். அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் - (திருக். 720) ஊரங்கண நீர் - (நாலடியார். 175) என இலக்கிய வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. சமையலறையில் கலங்கள் கழுவும் நீர், கை கழுவுதல், துடைத்தல் ஆகிய நீர் - வழிவதற்காக அமைக்கப்பட்ட குழி அல்லது தொட்டி அங்கணக் குழி, அங்கணத் தொட்டி எனப்படும். சமையற் பகுதியில் அடுப்பு உயரமும், அதில் தாழ்ந்து தளமும், அத்தளத்தில் தாழ்ந்து அங்கணக் குழியும், அக்குழியில் இருந்து வழியும் நீர் வழிந்தோடும் படி சாய்க்கடையும் அல்லது வடிகாலும் அமைக்கப்படுதல் எண்ணத் தக்கது. அங்கணக்குழியில் கொட்டப்படும் நீர் வெளியேறுவதற்குத் துளையுண்டு; தூம்பும் உண்டு. துளை, புரை. சுரை, குழை, புழை, முழை, நுழை, வளை என்பவை எல்லாம் துளை என்னும் பொருள் தருவனவே. துளைக்குக் கண் என்பது ஒரு பெயர், மான் கண் போலத் துளையமைத்துக் காற்றுப் புகுவாய் அமைத்தனர் முந்தையோர். அது மான்கண் காலதர் எனப்பட்டது. கால் அதர் = காற்று வழி; கண்விடு தூம்பு என்பதோர் இசைக்கருவி. கண் என்பதால் அமைந்த பெயருடையது கண் வாய். கண்ணே நீர் வழியும் வாயாக அமைக்கப்படுதலால் கண்வாய் எனப்பட்டது. அதுவே இந்நாள் கம்மாய் என வழங்குகின்றது. மான்கண் புலிக்கண் நாழிக் கண் துடுப்புக்கண். என அக் கண்கள் அமைக்கப்பெற்றுள்ளமை காணக்கூடியவே. அங்கணக் குழியில் இருந்து நீர் செல்வதற்குக் கண் அல்லது துளை அமைக்கப்படுவது தெளிவான செய்தி. அக் கண் வெளியே புலப்பட அமைந்ததா? குழியினுள் மறைவாய் அமைந்ததா எனின், அதன் அகத்தே மறைவாக அமைக்கப் பட்டதேயாம். அகத்தே உள்ளே; அகம் என்பது அம், எனத் தொகுத்து வருதல் பெருவழக்கு. அகம்+கை=அங்கை; அகம்+ செவி== அஞ்செவி. இவற்றின் இலக்கணத்தை, அகமுனர்ச் செவிகை வரின் இடையனகெடும் என்கிறது நன்னூல். அகம் என்னும் சொல்லின் முன் செவி என்னும் சொல்லோ கை என்னுஞ் சொல்லோ வருமாயின். அகம் என்பதில் உள்ள க என்னும் எழுத்து மறைந்துவிடும்; அம் என நின்று செவியோடு அம்+செவி=அஞ்செவி என்றும், அம்+கை=அங்கை என்றும் சேரும் என்பது இந்நூற்பாவின் விளக்கம். (அங்கை, வழக்கில் உள்ளங்கை என வழங்குதலும் அறிக) இவ்விதியொடு சேரத்தக்க ஒரு சொல் கண் என்பது அகம்+கண்=அங்கண். உள்ளிடத்தே அமைந்த கண் அகங்கண் (அங்கண்), என்னும் ஒட்டினைச் சேர்த்து அகங்கண் அம் (அங்கணம்) ஆயிற்று என்க. உள்ளிடத்தே கண்ணைக் கொண்ட குழி எனப் பிற வற்றையும் ஒட்டிக்கொள்க. இதனை வேறு வகையாகப் பிரித்துக் காட்டுவார். அங்கு+அணம்=அங்கணம் t§F>m§F. அங்குதல் = சாய்தல். வளைதல். கழிவு நீர் செல்லும் சாய்க்கடை வாட்டம் சாய்வாய் இருப்பதால் அங்கணம் எனப்பட்டது என்பர். அகம் கண் அம் என்னும் இருசொல் ஒட்டு ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்பதே அங்கணம். இப்படிப் பல சொற்கள் ஒரு சொல்லாய் நிற்குமோ என அறிந்தோர் ஐயுறார்; அரிவாள் மணை முச்சொற் கூட்டு ஒரு சொல். ஒட்டு இல்லாத முழுமுழுச் சொற்கள் அவை. அரிதல் சிறிதாய் (அறுத்தல்); அரிதற்கு வாள்; அவ்வாள் அமைதற்குரிய மணை (பலகை); இம்மூன்று உறுப்புகளும் உண்மை காண்க. முகம் வாய் என்பவை ஒரு முதலும் ஒருறுப்புமாம் பெயர்களைச் சுட்டுவன; இரண்டும் சேர்ந்து முகவாய் என ஒரு சொல் தன்மையாயும் அமையும், வாய்க்குக் கீழேயுள்ள நாடியைக் குறிக்கும் போது முகவாய்க் கட்டை என முச்சொற் கூட்டாகும், முகத்தில் வாய்; வாயின் கட்டை; இவை ஒன்றின் பகுதி ஒன்றாய் அதன் பகுதி ஒன்றாய்க் குறித்தலை அறிக. அதன் கொச்சை வடிவு முகரக் கட்டை என்று வழங்குதலை எவரே அறியார். ஆதலால், அகம் கண் அம் எனப் பல சொல் இணைந்து ஒரு சொல் ஆகுமோ என ஐயுறவு வேண்டியதில்லை என்க.  3. அட்டக்கரி அட்டக்கரி அட்டக் கறுப்பு என மிகக்கறுப்பாக இருக்கும் ஒன்றைச் சுட்டுதற்கு உவமைப்படுத்திக் கூறுகிறோம். அவனா அட்டக்கரி! அதுவா? அட்டக்கறுப்பு! இப்படிச் சொல்லிவிடுதல் பெருவழக்கு. இவ்விரு வடிவங்களையும் அகரவரி நூல்கள் தந்து மிக்க கறுப்பு எனப் பொருள் தருகின்றன. அட்டக்கரி — அட்டக் கறுப்பு — சென்னைப் பல்கலைக் கழக அகராதி;  அட்டக்கரி Atta-k-kari n. ct. atta+jet Black, dence blackness; மிகக் கறுப்பு callog. m£l¡ கறுப்பு atta-k-karup pu, N. ct. idt jet Black மிகக் கறுப்பு. ( இதிலே ஒரு பெரிய கண்டுபிடிப்பு இதை வட சொற்கள் என்பது;) ஆனந்த விகடன் அகராதி ம.த.ச அகராதிச் செய்தியை அப்படியே அமைத்துக்கொண்டது. பல அகரமுதலிகளில் இச்சொற்கள் இடம் பெறவில்லை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் இச்சொற்கள் இடம் பெற்றதுடன் விளக்கமும் பெற்றுள; அட்டக்கரி att a-k-kari, பெ (n) மிகக்கருப்பு, மிகக் கருப் பானதும். அட்டக்கரி jet black, that which is jet Black. (ஒருகா. அண்டம் (அண்டங்காக்கை) போன்ற என் றிருக்கலாம். ஒ.நோ; நண்டுவாய்க் காலி நட்டு வாய்க்காலி.) அட்டக் கருப்பு alta-k-karuppu, பெ (n) மிகக்கருப்பு, மிகக் கருப்பு Jet Blaek. இங்கே அட்டக்கரியைப் பற்றியதே ஆய்வு ஆகலின் கருப்பு ஆய்வு தனியே கொள்ளலாம். அட்டம் என்னும் சொல்லுக்குப் பொருள் தெளிவாகி விட்டால் கரி, கறுப்புக்கவலையில்லை. அட்டம் என்பதற்குக் கூறிய, மிக, மிக்க என்ற பொருள்கள் சரியானவையே. ஆயினும் எப்படி அப்பொருள் தந்த தென்ற குறிப்பு இல்லை. அண்டங்காக்கையை அட்டக் காக்கை என்றாலும் அதே சிக்கல்தான். வேற்று மொழி, ஒப்பும், வழக்கொப்பேயன்றிப் பொருள் விளக்க ஒப்பு இல்லையாம். அட்டம் என்றொரு பொருள் உண்டு, அவ்வாறே கிட்டம் என்றொரு பொருளும் உண்டு. அவற்றை அறிதல் இவ்விளக்கத்திற்கு ஒளி தருபவை. ஒளியைத் தேடித்தானே போகவேண்டும்; கொல்லர் உலைக்களத்தில் கரியை உலையில் போட்டு வேகவைத்து அவ்வேக்காட்டில் இரும்பை வெதுப்புதல் எவரும் அறிந்தது. எரிந்து இறுகிப்போன கரி இறுகி அடர்ப்புற்று இரும்பெனச் செறிந்து கட்டியாகும். அதற்குக் கிட்டம் என்பது பெயர் ஒப்புமையால், என்ன இது இரும்புக் கிட்டமாக இருக்கிறது என உடைபடாப் பொருளைக் கூறுவது வழக்கு. கரியால் ஓடும் தொடர்வண்டியிலிருந்து எரிபொருளைத் தள்ளுங்கால் ஆங்கும் கிட்டம் காணலாம். கிட்டம் நிற்க, அட்டம் காண்போம். விறகு எரு முதலியவற்றால் எரியும் அடுப்பில் வைக்கப் பட்ட சமையல் கலங்கள், அக்கரிப் புகையால் கறுத்துப் போகும். அட்டபுகை அப்பிப் பற்றிக் கொள்ளும். கலத்தின் வண்ணம், எவ்வண்ணம் ஆயினும் கருவண்ணமாக்கிவிடும். பற்றிப் பிடிக்கும் அக்கரி, புறத்தே என்றால் உள்ளேயும் பற்றிப் பிடிக்கும் பொருளும் உண்டு. அதனால் பற்றுத் தேய்த்தல் என்பது ஒரு தொழிலாய் - ஒரு பிழைப்பாய் - அமைந்து விட்டது. அட்டதால் அமைந்த கரிப்பற்று என்னும் பொருள்களும் கிளர்ந்தன. அடுகலத்து ஏற்படும் கரியே அட்டக்கரி; அக்கறுப்பே அட்டக்கறுப்பு எனப்படலாயிற்று. சோற்றுப்பானை போல நிறம் கறிச்சட்டி போல நிறம் என்பவை வழங்கு மொழிகள். ஒரு நாய், பன்றி வேட்டைக்குப் போனதாம்; பன்றி ஒன்றைக்கண்டு நாய் நெருங்கியதாம்; துணிவு மிக்க பன்றி நாயைப் புரட்டிப்புரட்டிப் படாப்பாடு படுத்திவிட்டதாம்! அதனால் வேட்டைக் களத்தில் இருந்து வீட்டுக்கு வந்த நாய், கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த சோற்றுப் பானையைக் கண்டதும் தன்னைக் காட்டில் வெருட்டிய பன்றியே வீட்டில் நிற்பதாக எண்ணி ஆங்கிருந்து ஓட்டம் பிடித்ததாம். இக் கதையை உட்கொண்டு வழங்குகின்றது ஒரு பழமொழி. பன்றி வேட்டையில் பயந்து வந்த நாய், சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டமெடுத்ததாம் என்பது அது. இப்பழமொழியும் அட்டத்தைச் சுட்டுதல் அறிக. அட்டம் கரி அட்டக்கரி. அட்டம்+கறுப்பு=அட்டக்கறுப்பு. இறுக்கப் பற்றிக்கொள்ளுதல் அட்டம் எனப்பட்ட பின்னே அந்நிலை அட்டு எனப்படலாயிற்று. அட்டுப் பிடித்தவன் தலையெல்லாம் அட்டுப்பிடித்துக் கிடக்கிறது. என வழக்குகள் வந்தன. அழுக்குப் பிடித்துக் கிடத்தல் அழுக்குப் பிடித்தலால் தலையில் சிக்குப் பிடித்தல் சடையாதல் இவை யெல்லாம் பற்றாலும் பாசத்தாலும் விளைவன அல்லவா! அட்டுக்குள்ள ஒட்டுறவை இனி அகர முதலிகளில் ஏற்ற வேண்டும்.  4. அட்டகாசம் ஒரே அட்டகாசமாக இருக்கிறது என்று பாராட்டுகிறோம். அவர் அருமையாக உடுத்தும். அருமையாக ஒப்பனை செய்தும் பொலிவோடு காட்சி வழங்குகிறார்; அவரைப் பார்த்து, ஒரே அட்டகாசம் போங்கள் என்கிறோம். சிலர் வீடு தோட்டச் சூழல் ஆகியவற்றைப் பார்த்த அளவில் அட்டகாசமான வீடு என்கிறோம். இந்த அட்டகாசம் என்பதன் பொருளென்ன? சிலர் சிரிக்கும்போது பெருஞ்சிரிப்புச் சிரித்தலுண்டு. குறுநகை, அளவே நகை பெருநகை என முந்நகைப் படுத்திக் கூறுவர் பழைய உரையாசிரியர்கள். குறுகச் சிரித்தல் அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என்பவை அவை. நகை என்பதற்கே ஒளிப்பொருள் உண்டு. பல மலைகளையும் பார்த்துத் தன் எடுப்பாலும் வளத்தாலும், வனப்பாலும், ஒளியாலும் நகைக்கின்றதாம் பனிமலை. அதனால் பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை என்றார் கல்வியில் பெரியவர். பொன்னகைக்கும் புன்னகைக்கும் பொருந்திய ஒற்றுமை இருப்பதை நம் நாடு உலகுக்குப் பறையறைந்து கொண்டுதானே உள்ளது! அட்டகாசம் என்பதற்குப் பெருநகை எனப்பொருள் தருகின்றன அகர முதலிகள். பொலிவு, பெருநகை ஆகிய இவற்றை அட்டகாசம் என்னும் சொல் எப்படித் தருகிறது? அட்டாலும் பால் சுவையில் குன்றாது, சுட்டாலும் சங்கு ஒளியில் குன்றாது என்பவை ஔவையார் உரை. அடுதலும் சுடுதலும் ஒருவினை இரு சொற்களே. சுண்டக் காய்ச்சப்பட்ட பாலில் சுவையேறவே செய்யும்! சங்கு சுட்டால் வெண்மை மிகுவது சிப்பிச் சுண்ணாம்பைப் பார்த்தாலே புலப்படும். வெள்ளையடிப்புக்கென அதனைத் தேடிப்போய் வாங்குவது அதன் இணையிலா வெண்மைக்கே தான்! சுட்ட சிப்பிக்கு - சங்குக்கு - எவ்வளவு வெண்மை! சுட்டது கருக்கும், கரியாகும். இது வெளுக்கிறது; மேலும் வெளுக்கிறது. இப்படியே சுட்டால் ஒளிமிகுவதும் ஒன்றுண்மை அனை வரும் அறிந்ததே. அது தங்கம்; சுடச்சுட அதற்கு ஒளிமிகும். அதனால் திருவள்ளுவர். சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு என்றார். பொன் சுடச்சுட ஒளிவிடும்; மாந்தர் துன்பம் சுடச்சுட ஒளிவிடுவர் என்பதாம். சுட்டு உருக நிற்கும் பொன்னைப் பார்த்தால், அதன் பொலிவு, புலப்படும். பொன்னில் சிறந்த பொன் - ஆணிப் பொன். கலப்பற்ற தூய பொன் - ஆணிப் பொன். கலப்பற்ற தூய பொன் என்பதற்குச் சான்றாக உரையாணியிட்ட பொன்னே ஆணிப் பொன். ஓட விட்ட பொன் என்பதும் வழக்கு. ஓடவிடுதல் என்பது நீராக உருகி ஓடவிடல் என்பது. அஃதொன்றே இறுதியில் தங்கும். எஞ்சியவை ஆவியாய் அழிந்துபோம்; ஆதலால் அதனைத் தங்கம் என்றனர் என்பர். மாலைப் பொழுதில் கதிரோன் காட்சியைக் காணுகிறார் பாவேந்தர், தங்கத்தை உருக்கிவிட்ட வானோடை தன்னிலே ஓர் செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை என்கிறார். தங்கத் தகடு நகர்வதுபோல் - கதிர். தானே நகர்வது பார்! என்றும். தங்கத்தைக் காய்ச்சி உருக்கிடவே - அங்கே தனிப்பெரும் கொல்லரும் உள்ளனரோ எங்கேயும் பார்த்து மகிழ்ந்ததுண்டோ-இந்த ஏரியைப் போலொரு தங்கவேரி என்றும் பாடல்கள் கிளர்ந்தன. மறையும் கதிரோனைப் பெரும்பாவலர் பாரதியார். பார்; சுடர்ப்பரிதியைச் சூழவே படர் முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ என்னடி வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செம்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள். என்று வண்ணிப்பது கருதத் தக்கது. பொன், சுடர் இவற்றைப் பற்றி இவண் விரிப்பானேன்? பொன்னுக்கு ஒரு பெயர் காசு; காசுமாலை என்பது பொன்னால் செய்த மாலையே; காசுக் கடை என்பது பொற் கடையே; அல்லது தங்கக் கடையே! கிளி வேப்பம் பழத்தைச் சிவந்த அலகால் பற்றுகிறது. அதனை, ஓரழகி, பொற்காசில் நூல் நுழைப்பதற்காகத் தன் சிவந்த விரல்களின் இடையே பற்றியிருப்பதற்கு உவமை காட்டுகிறார் ஒரு புலவர் (குறுந். 67) தங்கத்தால் செய்த பணமே காசு எனப்பட்டு, அதன் பின்னர்ச் செம்பு முதலியவற்றால் செய்ததற்கும் ஆயிற்று என்பது நாணய வரலாற்றுச் செய்தி. காசு பொன், பொலம் எனவும் வழங்கும்; பொன்னில் இருந்து பொற்பு அழகு என்பவை யுண்டாம். காசு ஆகிய பொன்னின் பொலிவு உலகறிந்த செய்தி. அப்பொன் தகத்தக எனப் பளிச்சிடுதல் புலவர்களைக் கவர்ந்தது போலவே பொது மக்களையும் கவர்ந்தமையால் ஏற்பட்டதே அட்டகாசம்! அட்ட காசு சுடுபான் - சுடர்ப்பொன் - தகத்தக என ஒளிவிடும் அழகு அட்டகாசம்; காசு+அம்=காசம்! இதனொடு ஓர் ஒட்டைச் சேர்த்துப் பிரகாசம் (ப்ரகாசம்) என்றார் பிறர். இப்படியும் உண்டா? தேம் தேஎம் என்பவை தேயமாகி, தேசமாகி விளங்குதல் தெரிந்ததன்றோ? காயம் என்னும் தொல் பழந்தமிழ்ச் சொல் ஆ என்பதை ஒட்டி ஆகாயமாய் வேற்றுச் சொல்லாகிச் செந்தமிழ்ச் சொல்லை வீழ்த்தி விடவில்லையா? அட்டகாசம் சுடர்ப்பொன்! சுடச்சுடரும் சுடர்ப் பொன்! வள்ளுவர் அரைக் குறள், பொதுமக்கள் பார்வையில் அட்டகாசமாக இருக்கிறது என்பது இதனால் விளங்கும்.  5. அடை அடை என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அடை என்பதன் வழியாக வந்த சொற்களும் பலவாம். அடை என்பதற்கு இலை என்பது ஒரு பொருள். அஃது எப்படி வந்தது? ஒரு மரத்தில் அல்லது செடி கொடிகளில் மிகுதியும் நிரம்பி அல்லது அடர்ந்து இருப்பது எது? இலையே யன்றோ! அதனால் அடுத்தடுத்து நெருங்கியிருக்கும் இலை, அல்லது அடைசலாக மூடியிருக்கும் இலை, அடை எனப் பட்டது. அடகு எனினும் இலையேயாம். அடகென்று இட்டார் என்பது ஔவையார் உரை. அடையுள் ஓர் இலைக்குத் தனிச்சிறப்பு உண்டு; மங்கலத் தன்மையும் அதற்குத் தரப் படுவதுண்டு. அது வெள்ளடை எனப்படும் வெற்றிலை. இளந்தளிர், வெளுப்பு நிறமாக இருத்தலால் வெள்ளடை எனப்படுவதாயிற்று. அதற்கு வெற்றிலைப் பெயர் எப்படி வந்தது. பூவாத காயாத இலை, வெற்று இலை தானே! இனி, வெறுமனே - அவியாமல், காயப்போடாமல், கடைதல் இல்லாமல்- விரும்பித் தின்னும் இலையாக இருப்பதாலும் வெற்றிலை ஆயிற்று. தின்னும் இலையாக இருப்பதாலும் வெற்றிலை ஆயிற்று. வெறுமை இலை வெற்றிலை; சிறுமை இலை சிற்றிலை என்பது போல. வெற்றிதரும் இலை வெற்றிலை என்பது உண்டே எனின், அது வலிந்து பொருத்திக் கூறுதலாம். அடையாகிய வெற்றிலையை மட்டுமா மெல்லுகின்றனர்? அதனோடு பாக்கும் சேர்க்கப்படுகின்றது. அப்பாக்குக்கு ஒரு பெயர் அடைக்காய் என்பது. அடைக்காய் எனின் அடையும் அதனோடு சேர்க்கும் காயும் எனப் பொருளாம். அடைக்காய் எனின் பாக்கு என்றாம். முற்காலத்தில் பெருஞ் செல்வர்கள், சிற்றரசர்கள் ஆகியோர்க்கு வெற்றிலை மடித்துத் தருவதற்கு ஏவலாள்கள் வைத்திருந்தனர். அவர்களுக்கு அடைப்பைக்காரர் என்பது பெயர் அடைப்பை வெற்றிலைப் பை மடைத் தொழில் (சமையல் தொழில்) வல்லார்களைப் பணியாளர்களாகச் செல்வர்கள் அமர்த்தியிருந்தது போலவே, அடைப்பைக்காரர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்கள், நினைவூட்டத்தக்க வகையில் சுவையும் மணமும் மிக்க வெற்றிலைச் சுருள்கள் அமைத்துத்தந்தனர்; இடித்துப் பதப்படுத்தியும் தந்தனர். செல்வச் செழிப்பின் அடையாளமாகவும் மகிழ்வுக் குறியாகவும் மங்கலக் குறியாகவும் வெற்றிலை ஆயதால் அதனை வைக்கும் பெட்டி வெள்ளியாலும் பொன்னாலும் வேலைப்பாடு மிக்கதாகச் செய்யப்படுவதாயிற்று. அதற்கு; வெற்றிலைச் செல்வம் செல்லப் பெட்டி (செல்வப் பெட்டி) என்னும் வழக்கும் உண்டாயிற்று. தமனிய அடைப்பை என்பதற்குப் பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டி என்றார் அரும்பத உரைகாரர் சிலப். (14. 128). சீர்கொளச் செய்த செம்பொன் அடைப்பை என்றும் எரிமணி அடைப்பை, என்றும் சிந்தாமணி கூறிற்று. (1303, 2140). அரசர் சுற்றங்களுள் ஒன்றாக, அடைப்பைச் சுற்றத்தைச் சுட்டிற்று பெருங்கதை (1. 38. 161). அடகு என்பதற்கு இலை என்னும் பொருளுண்மையை அறிந்தோம். இந்நாளில் பல இடங்களில் அடகுக் கடை எனப் பலகைகள் தொங்கக் காண்கிறோம்? அவை கீரைக் கடைகளா? நன்றாகப் படித்தவர்கள் தாம், அக்கடைகளை வைத்துள்ளார்கள்! கீரைக் கடை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்; அங்கு வாடிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அடகுக் கடையாகத்தான் இருக்கிறது. பிழை என்று தெரிந்த வர்களாவது திருத்தி எழுதக் கூடாதோ? அதைப் பார்த்தாவது மற்றவர்கள் எழுதுவார்களே! நம் பொருள் ஒன்றை ஒப்படைத்து, ஒப்படைக்கப் பட்டவரிடமிருந்து நமக்கு வேண்டும் பொருளை வாங்கிக் கொள்வது அடைவு ஆகும். அதனைச் செய்யும் கடைகள் அடைவுக் கடைகள் தாமே! தங்கம் வெள்ளி முதலிய பொருள்களை வைத்துப் பணம் வாங்குவது அடைவு என்றால், நிலத்தை வைத்துப் பணம் வாங்குவது அடைமானம் ஆகும். நிலத்தைப் பாடுபட்டு இவ்வளவு தரவேண்டும் என ஒப்பந்தம் செய்து கொள்வது ஒப்படை எனப்படும். ஒரு வண்டியை அசையாமல் நிறுத்த வேண்டும். அதற்கு அடை வைப்பர். சக்கரத்தின் முன்னும் பின்னும் நெருக்கமாக அடுத்துக் கொடுப்பதே அடை. அது முன்னடை பின்னடை என்று இரண்டாகச் சொல்லவும் படும். வண்டிக்குக் கல்லும் கட்டையும் அடை என்றால், சொல்லுக்கும் அடை வேண்டாவா? தாமரையை வெண்டாமரை, செந்தாமரை என்று அடை தந்து சொன்னால், அதன் வகை விளக்கமாகின்றதே! செங்கோல் நாரை நனைசுவர்க்கூரை மூவரியணில். கோடுவாழ் குரங்கு என்று அடைமொழிகள் தந்தால் பொருள் விளக்கமும் நடைநயமும் அமைதல் விளங்கும். இவ்வளவு தானா அடை! அடை என்பது நெருக்கம் செறிவு அடுத்திருத்தல் என்னும் பொருள்களுக்கு உரிமையானதால் காடு அடவி எனப் பட்டது, அடர்காடு அடர்த்தியான காடு என்பன அடவிப் பொருள் விளக்குவன. இருங்காடு கருங்காடு என்பனவும் அது. அடவியார் என்பதொரு குடிப்பிரிவு; அப்பிரிவினர், ஒரு காலத்துக் குறிஞ்சி நில வாணராக இருந்தனர் என்பதற்குரிய சான்று அது, நில புலங்களில் பயிர் நிரம்பியிருந்தால் பயிர் அடைசலாகக் கிடக்கிறது என்பதும், களை நிரம்பியிருந்தால் களை அடைசலாகக் கிடக்கிறது என்பதும் உழவடைச் சொற்கள். உழவுத் தொழிலை அடுத்துத் தோன்றிய சொல் உழவடைச் சொல்தானே! அடையின் சுவையை அறியார் எவர்? அடைத் தோசையை விரும்பார் எவர்? அதற்கு அடை என எப்படிப் பெயர் வந்தது? பருப்பு வகை, தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி முதலிய பலவும் சேர்த்து ஆக்கப்படுவதுதானே அடை. அது ஒரு காலத்தில் பெரும்பாலும், கீரை வகைகளை ஆட்டிப் பருப்பு முதலியவற்றுடன் கலந்து ஆக்கியமையால் வந்த பெயர் என்பதை வெளியிடுகிறது. பல பொருள்கள் செறிந்தும் அமைந்தது. அன்றியும் அத்தோசை, மாத்தோசையிலும் கனமானதும் கூட. இலையடையாக இருந்த அடை, முட்டையடையாகவும் மாலைக் கடைகளில் சாலை வழியெல்லாம் இடம் பெறலாயிற்றே. அவ்வடை தேநீர்க் கடைகளிலெல்லாம் கூட இடம் பிடித்துக் கொண்டதே. அதிலும் மற்றைச் சுவைப் பொருள்கள் பல இடம்பிடித்துக் கொள்கின்றமை உண்பார் அறியாரா? உடைப்பு எடுத்தால் அடுத்து அடைப்பு உண்டன்றோ! அடை என்பது ஏவலாயிற்றே! மண், மணல், கல், இலை, தழை முதலியவற்றைச் செறித்து வைப்பது அடைப்பு. அணை என்பது அடைப்புச் செய்கைதானே! அண்ணுதல் நெருங்குதல், அடுத்தல். அண்ணுதல் அணை; அடுத்தல் அடை. குழந்தை புரண்டுவிடாமல் இருப்பதற்குத் தாய் என்ன செய்கிறாள்? அணையடை துணியால் அமைக்கிறாள். உடைப்பு அடைப்பு மட்டும் தானா அடைப்பு! இப் பொழுது அடைப்புப் பெருகிவருதல் கண்கூடு, மாரடைப்பு, மூக்கடைப்பு, முன்னும் பின்னும் அடைப்பு இப்படி எத்தனை அடைப்புகள்? ஆடுமாடுகளுக்கு அடைப்பான் நோய் உண்மையை எவர் அறியார்? கடையடைப்புகள், கதவடைப்புகள் ஆகியவை செய்தித் தாள் சரக்காயினவே! அடையா நெடுங்கதவு தமிழன் பண்பாட்டுச் சான்று என்பது இன்று நடை முறையாமா? கடை திறப்புப் பாடாமலே கதவு திறந்து, தோலிருக்கச் சுளை விழுங்கியது போல நிகழும் நிகழ்ச்சிகள் தமிழ் மண்ணிலும் கூடத் தவழலாயினவே! சுமக்கும் பாரத்திற்கும் தலைக்கும் இடையே அச்சுமை நேரே தலையில் அழுத்தாமல் இருக்கத் துணியைச் சுருட்டி வட்டமாக்கிச் சுமையடை வைப்பதும் வழக்கம்! சுமையும் அடையும் புரிகின்றன; சுமையடையும் தெளிவாகின்றது! ஆனால் சும்மாடு இது என்ன புதுவகை மாடா? அறியாமை உணராமை - போற்றாமை - என்பவை சும்மாட்டை மட்டும் தானா தரும்? எத்தனை எத்தனையோ மாட்டையும் தரும்! முட்டையிடுதற்குக் கோழி கத்துதல் (கேறுதல்) அடைக்கத்து எனப்படும். அக்கோழி முட்டையிட்டு அடை காக்கப் பருவம் வந்ததை அதன்மொழியால் கூறுதலே கேறுதல். அதனை உணர்ந்து அடை கட்டி வைக்கத் தவறினால், நம் வீட்டிலே தின்றும் குடித்தும், அடுத்த வீட்டிலே முட்டையிட்டுவிட்டு வந்துவிடும். அடை என்பது என்ன? கோழி குஞ்சு பொரிப்பதற்காக வைக்கப்படும் மண் ஓடு. அதில் உமியைப் பரப்பி வைத்து விட்டால் அதிலேயே முட்டையிடும்; அங்கேயே படுத்துக் கொள்ளும். தீனி தண்ணீர் கருதாமல் பல நாள்கள் அடைந்தே கிடப்பதற்குரிய இருப்பை அடை என்பது சரிதானே! காட்டுப் பறவைகள் தானே ஈனில் இழைத்துக் கொண்டால், வீட்டுப் பறவையாம் கோழிக்கு நாமே அடை வைக்கிறோம்! தாய்மைக் கோயில் அவ்வடை அன்றோ! அடை இவ்வளவுதானா? ஊர்விட்டு ஊர் போனார் விலைமதிப்பு மிக்க தம் பொருள்களைத் தக்காரிடம் பாதுகாக்கச் சொல்வது பழவழக்கு. அவ்வழக்கில் இருந்து வந்ததே அடைகலம் என்பது. கலம் அணிகலம், உண்கலம், படைக்கலம் ஆகிய இன்னவை. இவ்வழக்கே நம்பிக்கையுடையவர்களிடம் மனைவி மக்கள் முதலியவர்களை அடைக்கலமாக வைக்கும் நிலைமைக்கு வளர்ந்தது. இப்பொழுது அடைக்கலம் இன்னும் விரிந்து விட்டது. நாட்டுக்கு நாடே அடைக்கலமாகப் போய்க் கொண்டுள்ளதை வரலாறு காட்டிக் கொண்டுள்ளது. குருவிகளுள் ஒன்று அடைக்கலாங் குருவி. அது, குடிசை, கூரை, முகடு, பலகணி ஆகியவற்றில் தங்கியிருப்பது. அது அடைக்கலமாக வந்து தங்கியிருப்பதால் அதற்குக் கேடு சூழக் குடிசைவாணர் எண்ணவும் செய்யார். அடைக்கல எண்ணப் பேறு அது. அடையாளம் காணவே ஒரு துறையென்ன வகைவகைத் துறைகள் உள்ளன. தலை இப்படி: முகம் இப்படி; மச்சம் தழும்பு இப்படி இப்படி; அமைப்பு, சூழல் இப்படி இப்படி; என ஒருவரை அல்லது ஒன்றை அடைந்துள்ள குறிகளைக் கண்டு தெளிவதே அடையாளம் ஆகும். அடையாளம் ஒத்திருத்தலால் பழியோரிடம் பாவ மோரிடம் என மாறி விடுவதும் புதுமையில்லை. குற்ற வழக்கில் அடையாளம் படுத்தும்பாடு தனித் தொன்மமாம் (புராணமாம்). ஒரு சொல்லுக்கு முன்னே அடுத்து நிற்கும் ஒட்டுச்சொல் அடைமொழி எனப்படுவதும், கடலை அடையும் ஆற்றுப் பகுதி அடையாறு எனப்படுவதும், கலப்பை மண்வெட்டி குத்துக்கம்பி ஆகியவற்றை ஒட்டிய மண் அடைமண் எனப் படுவதும், கதிரோன் மறையும் பொழுது அடைபொழுது எனப்படுவதும், ஆடுமாடு மேய்ச்சல் புலம் சென்று மீள் பொழுது ஒட்டி அடையும் பொழுது எனப்படுவதும், அடைத்துக் கொண்டு பெய்யும் மழை அடைமழை எனப்படுவதும், வண்டி, தேர் முதலியவற்றை நிலையில் நிறுத்தி வைக்க உருளைகளின் முன்னே போடப்படும் கல். முண்டு ஆகியவை அடைகல் அடைமுண்டு எனப்படுவதும். இலக்கணத்தில் அடையடுத்த கருவியாகு பெயர்; அடைசினை முதல் எனப்படுவனவும் அடையியல் விளக்கும் ஆட்சிகள். ஒருவரை அடைந்து நெருங்கி இருப்பவர் நட்பர். அவ்வாறு அடையார் நட்பரல்லர். அவர் அடையார் அடையலர் இச்சொற்களுக்குப் பகைவர் என்பது பொருள். ஊரை அடைதல், அலுவலகத்தை அடைதல் என அடைதல், சேர்தல் பொருளில் வரும். அடையல் குருகே அடையலெங்கானல் என்பது சிலம்பு. அடையல், அடையாதே என்னும் பொருளது. தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து நன்கு பேணிக் காக்குமாறு சொல்லிவிடுப்பது களவியல் காட்சி. அது கையடை எனவும் ஓம்படை எனவும்படும். தயரதன் கோசி கனிடம் இராமனை ஒப்படைக்கும் கதைப் பகுதிக்குக் கையடைப் படலம் என்பது பெயர். இது கம்பராமாயணச் செய்தி. வாயடை என்பது சோறு; வளியடை என்பது கதவு. முன்னது, நாளுக்கு மூவேளை என்பது கட்டாயமா என்பார் சிலர். ஒரு வேளைக்கும் என் செய்வோம் எனத் தவிப்பார் பலர். பின்னது, வீடிருந்தால் - சொந்தவீடு என்றால் என்ன வாடகை வீடு என்றால் என்ன - கட்டாயம் உண்டு. ஆனால் கோணிச் சாக்கும் ஓலைக்கீற்றும் கூட வளியடை யாக இருத்தல் கண் கூடு. வளி - காற்று. முகடு கூரை ஆகியவற்றை ஒட்டி அடைவது ஒட்டடை அதனைப் போக்க ஒட்டடைக்கம்பு ஆக்குதலும் விற்றலும் தொழிலாகவும் வணிகமாகவும் நடைபெறுகின்றன. செய்வாரே கூவிக் கூவித் தெருவில் விற்றுத் திரிவதும் உண்டு. ஆனால், வழங்குவது எப்படி? ஒட்டடையா? இல்லை! ஒட்டறை! ஒட்டடைக் கம்பா? இல்லை! ஒட்டறைக் கம்பு! முள் மரங்களுள் ஒன்று ஒட்டடை. அது குடையெனத் தோன்றுவது. கப்பும் கிளையும் மிக ஒட்டி நெருங்கி கூடெனத் தோன்றுவதால் ஒட்டடை என்றனர். பூச்சிகளுக்கு அம் முள்ளும் செறிவும் வாய்ப்பாக இருத்தலால் வலை பின்னி ஒட்டடைக் காட்சியாகவே விளங்கும் நூலாம்படை என்பது மாறவில்லை. ஒட்டடை மாறி ஒட்டறை மரமாகச் சொல்லப் படுகின்றது. ஒட்டறங்காடாம் உடங்காடாம் எனக் கட்ட பொம்பன் நாடகப் பாட்டிலும் ஒட்டறை ஒட்டிக் கொண்டது. கொல்லர் உலைக் களம் பட்டறை எனப்படுகிறது. அது தச்சுப்பட்டறை முதலாகப் பல பட்டறைகளைக் குறிப்பதாகின்றன! பட்டறைகள் பெருகியும் வருகின்றன. அது பெருகும் அளவு, பிழையும் பெருகிக் கொண்டே உள்ளன. காயவைத்த இரும்பை வைத்து அடிக்க ஓர் உலைக்கல் உண்டு. அவ்வுலைக் கல்லைப் பட்டு அடைவது பட்டடை. அவ்வுலைக்கல் கொண்டு நடத்தப்படும் தொழில் பட்டடை, அப்பட்டடை பட்டறை யாகிப் பேராட்சி நடத்துகின்றது. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு என்பது திருக்குறள். கூடாத பண்புடையவர்; ஆனால் கூடியிருக்கிறார் ஏன்? நேரம் வருமளவும் பார்த்திருக்கிறார்; அவர் நட்பு நன்றாகச் சப்பளிக்க அடிக்கத் துணையாம் பட்டடை போன்றதாம் என்பது இக்குறளின் பொருள். பட்டடை நட்பைப் பரிமேலழகர் விளக்குகிறார்: எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி. அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான் அது பற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார் என்பது அது. பட்டறை வைத்திருப்பவர் படியாதவரா? பட்டறிவு இல்லாதவரா? உடையவர் தாம்! உணர்வும் உடையவர் என்றால் பிழையொன்று தெரிந்த பின்னராவது பட்டடை என மாற்றலாமே! அவரைக் கண்டு பலர் மாறுதற்கு அவர் ஆசிரியர் ஆவாரே. அஃதோர் அரிய வாய்ப்புத் தானே!.  6. அந்தோ அந்தோ என்னும் சொல் ஐயோ என்னும் பொருளது. தொல்காப்பியத்தில் அந்தோ என்பது அந் தீற்று ஓ என வழங்கப்பெறுகிறது. அந்தோ என்பது பழந்தமிழ் இலக்கியங்கள் முதல், இக்கால இயல் வழக்குவரை இயன்று வருகின்றது. உணர்வு வெளிப்பாட்டில் வெளிப்படும். சொற்களுள் ஒன்று அந்தோ ஆகும். அந்தோ அளியேன் வந்தனென் மன்ற (புறம். 238) அந்தோ எந்தை அடையாப் போரில் (புறம். 261) அந்தோ தானே அளியள் தாயே நொந்தழி அவலமோ டென்னா குவள்கொல் (நற். 324) உயங்கி னாளென் றுகாதிர்மற் றந்தோ மயங்கி னாளென்று மருள்திர் கலங்கன்மின் (கலித். 143) என்பவையெல்லாம் உணர்வு தட்டி யெழுப்பிய உருக்கத்தில் வெளிப்பட்டவை என்பது வெளிப்படை. அந்தோ என்னும் இவ்வுணர்வு வெளிப்பாட்டுச் சொல் ஏனை உணர்வு வெளிப்பாட்டுச் சொற்களோடு ஒப்பு, நோக்கத் தக்கதாம். அம்மை, அன்னை, ஆத்தாள், அப்பன், அச்சன், அத்தன் ஐயன், அக்கை, அண்ணன் என்பனவெல்லாம் முறைப்பெயர்கள் இவையெல்லாம் அம்மா, அன்னா, ஆத்தா, அப்பா, அச்சா, அத்தா, ஐயா, அக்கா, அண்ணா என விளிவடிவில் அமையவும் பெற்றன. அன்றியும் பல்வேறு உணர்வு வெளிப்பாட்டுச் சொற்களாகவும் இயல்கின்றன. அம்மை - அம்ம, அம்மே, அம்மோ, அம்மம்ம, அம்மம்மா, அம்மம்மே, அம்மம்மோ, அம்மனாய், அம்மனே, அம்மனோ, அம்மையே, அம்மவோ, அம்மாடியோ அன்னை - அன்னா, அன்னாய், அன்னே, அன்னோ, அன்னையே, அன்னையோ, அன்னன்னா, அன்னன்னே, அன்னன்னோ ஆத்தாள் - ஆத்தா, ஆத்தே, ஆத்தோ, ஆத்தாடி, ஆத்தாடியே, ஆத்தாடியோ, ஆத்தா ஆத்தா, ஆத்தத்தா, ஆத்தத்தே, ஆத்தத்தோ, ஆத்தாவோ அப்பன் - அப்ப, அப்பா, அப்பே, அப்போ, அப்பப்ப, அப்பப்பா, அப்பப்பே, அப்பப்போ, அப்பாடியோ அச்சன் - அச்சா, அச்சோ, அச்சச்சா, அச்சச்சோ அச்சாவோ அத்தன் - அத்தா, அத்தோ, அத்தத்தா, அத்தத்தோ, அத்தாவோ ஐயன் - ஐய, ஐயா, ஐயே, ஐயோ, ஐயகோ, ஐயவோ, ஐயாவோ ஐயோ ஐயோ, ஐயையா, ஐயையே, ஐயையோ, ஐயாடியோ அக்கை - அக்கா, அக்கோ, அக்கக்கா, அக்கக்கோ, அக்கைச்சி, அக்கடா, அக்கடே, அக்காடி, அக்கடோ, அண்ணன் - அண்ண, அண்ணா, அண்ணே, அண்ணோ, அண்ணாவோ, அண்ணாத்தே, அண்ணால் இன்னவை பிறவுமாம். இச்சொற்கள் எல்லாமும் உயிர் முதல் எழுத்தால் இயன்றவை என்பது நோக்கத்தக்கது. இச் சொற்களைப் போலவே உணர்வு வெளிப்பாட்டுச் சொல்லாக இருப்பது அந்தோ என்பது. ஆயின் அஃதொரு முறைப் பெயராக வழக்கில் இல்லை. ஆனால், அது முறைப்பெயர் வழிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என உறுதி செய்யலாம். அம்முறைப்பெயர் அ ந் தை என்பதாம். அந்தை என்னும் முறைப்பெயரழிவால் அதன் வழிப்பட்ட உணர்வுச் சொற்கள் கிளைத்திலவாம். அந்தை என்பதை நிறையெனவும் (தொல். தொகை 28 நச்.) ஒரு காலணி எனவும் (மதுரைத் தமிழ்ச் சங்க அகராதி கண்ட அறிஞர் உலகம்) அந்தையை ஒரு முறைப் பெயராகக் காண வில்லை. அந்தீற்று ஓ - (அந்தோ) அன்னீற்று ஓ (அன்னோ) என்பவற்றை இடையியலில் தொல்காப்பியர் கூறுகிறார். அன் என்பது அன்னை என்னும் முறைப் பெயரடியாகத் தோன்றியது போல, அந்தென்பது அந்தை என்னும் முறைப்பெயரடியாகத் தோன்றியிருக்க வேண்டும் எனக் குறிப்பாக அறியலாம். அந்தை முறைப் பெயர், தந்தையாய் (தம் - அந்தை) விளங்குவது தகும் என்பதை மற்றை முறைப் பெயர்கள் தெளிவிக்கின்றன. முறைப்பெயர்கள் தம் என்னும் உரிமைப் பொருட் சொல் தொடர வெளிப்படையாகவும், ஒருசார் குறிப்பாகவும் அமைந்துள, ஆய்(தம்-ஆய்) தாய் அப்பன் (தம் - அப்பன்) தமப்பன் (தகப்பன்) ஐயன் (தம் - ஐயன்) தமையன் அக்கை ( தம் - அக்கை) தமக்கை அங்கை (தம் - அங்கை) தங்கை இவற்றைப் போலவே தம்பின், (தம்பி) என்பதையும் காண்க. இவ்வுரிமைப் பொருள் இணைப்பொடு அந்தை (தம் - அந்தை) தந்தை என்றமைதலைக் காண்க. அந்துவன் செள்ளை, அந்துவன் வேண்மாள், நல்லந்துவன், அந்துவஞ் சேரல் என்னும் பண்டைப் பெயர்களையும் எண்ணுக. அந்தை என்னும் பெயருடன் தம் என்னும் உரிமை ஒட்டி ஒட்டியதால் தந்தை அமைந்தது எனக் கொண்டால், பண்டைப் பெருமக்கள் சிலரின் பெயர்ப்புணர்ப்புச் சிக்கல் அவிழ்க்கப் பெறுதல் கண்கூடாம். சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, எயினந்தை ஆந்தை, பூந்தை என்னும் பெயர்கள் முறையே சாத்தன் தந்தை சாத் தந்தை கொற்றன் தந்தை கொற்றந்தை என்பன போல மருவியதாகக் கூறுதல் ஒழிந்து, சாத்தன் அந்தை சாத்தந்தை கொற்றன் அந்தை கொற்றந்தை என்பன போலப் புணர்ப் புற்றதாகக் கூறத்தகும். முன்னதன் புணர்ச்சி முறையிற் பின்னதன் புணர்ப்பு இயல்பும் எளிது, மாதல் விளங்கும். அறிஞர்கள் ஆய்வார்களாக. இவ்வாய்வு, மேலும் சில ஆய்வுக்கு ஏந்தாக அமையும் என்பதை உணர்வார்களாக!  7. அவல் ஒரு முதுமகள்; அவள், அவுள் அவுள் என்று கூவி விற்றுக்கொண்டு வந்தாள். அவல் என்பதைத்தான் அவுள் என்கிறாள் என்பதை நினைத்ததும் என் எண்ணம் அவல் மேல் ஆவ லாய்ப் பாய்ந்தது. அவல் அருமையான உணவு; குழந்தைகளா முதியவர்களா நோயாளர்களா எவருக்கும் கேடு செய்யாத உணவு; குசேலர் கண்ணன் நட்புக்குக் குறியாய் அமைந்தது; கைத்தல நிறை கனி அப்பமொ டவல் பொரி எனக் கரிமுகன் படையலுக்கு உகந்தது; உடனடி விருந்திற்கா, வெளியூர்க் கட்டுணவுக்கா, உடனே வந்து உதவுவது! அவல் என்றால் அவல் தான்! நெல்லை நனையவைத்துப், பின்னே சிறிது உலர்த்திப் பக்குவமாகப் பொரித்து, உரலில் இட்டு இடித்து, உமி நீக்கிப் புடைத்தெடுப்பது அவல் என்பது அறிந்ததே. ஆனால். அவல் என்பதன் பெயர்க்காரணம் அறிய வேண்டுமே! அவுள் விற்ப வளைக் கேட்டுப் பயனில்லை; அவுள் இடித்தவளைக் கேட்டும் பயன்படாது! மூடை மூடையாய் ஆலையில் அவல் ஆக்கு பவர்க்கும் எட்டாது! அவல் ஆராய்ச்சி ஆலாய்ப் பறந்தது! அவல் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழக்கில் இருந்து வரும் ஒரு சிற்றுண்டி ஆகும். வேண்டுமட்டும் அவல் தின்று தண்ணிய நீரில் ஆடி மகிழ்வதைப் புறப்பாடல். பாசவல் முக்கித் தண்புன லாடல் என்கிறது (63). கரும்பும் அவலும் விரும்பி யுண்டனர் என்பதைத், தீங்கரும்பொடு அவல் வகுத்தோர் என்கிறது பொருநராற்றுப்படை (216). அவல் இடிப்பதற்கு என்றே, வயிரமேறிய வலிய உலக்கைகள் இருந்தன என்றும், அவை அவலெறி உலக்கை எனப் பெற்றன என்றும் அறிகின்றோம். அவல்எறி உலக்கை (பெரும் 226; பதிற்.29) பாசவல் இடித்த பைங்காழ் உலக்கை (குறுந். 2 8) பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை (அகம். 141.) பழம்பண்டமாம் அவல் இந்நாளிலும் வழக்கில் இருப்பதைத் தெருத் தெருவாகக் கூவி விற்கும் பொருளாக இருப்பதுடன், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தது போல அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு என்பன போன்ற பழமொழிகள் வழக்கில் உண்மையும் தெளி விக்கும். அவல் ஆக்குவதற்குரிய தவசம் தக்க பக்குவத்தோடு இருக்க வேண்டும் என்பதை முன்னோர் தெளிவாகக் கொண்டு அத்தகையவற்றையே பயன்படுத்தினர் என்பது, தோரை அவற்பதம் கொண்டன எனவரும் மலைபடுகடாத்தால் (121) விளங்கும். தோரையாவது நெல். அது மூங்கிலில் விளைவது. தினையரிசியால் அவல் செய்யப் பெற்றதையும், அவ்வரிசித் தேர்ச்சியையும், அதன் அழகையும் அருமையான உவமையால் விளக்குகிறது பொருநராற்றுப்படை. ஆய்தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பு என்பது அது. தேர்ந்துகொண்ட தினையை இடித்த அவையல் போல (குற்றல் அரிசி போல) குற்ற மற்ற விரலால் வருடும் யாழ் நரம்பு என்கிறது. இதில் குற்றலரிசி அவையல் எனப்பெறுவது நோக்கத் தக்கது. குற்றாத அரிசியை அவையா அரிசி என்கிறது பெரும்பாண் (279). அவைத்தல் என்பது இடித்தல் பொருள் தருதலையும், அவைத்த அரிசியின் சிறப்பையும், அவைப்பு மாண் அரிசி (அகம் 394) இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த அவைப்புமாண் அரிசி (சிறுபாண் 194-5) சுவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் (புறம். 215) என்பவற்றால் தெளிக. அவைக்கப் பெற்ற ஒன்றை அவையல் என்பது பொருத்தமேயன்றோ! அவிக்கப் பெற்றதும், இடிக்கப் பெற்றதும், துவைக்கப்பெற்றதும், பொரிக்கப் பெற்றதும், வறுக்கப் பெற்றதும் முறையே அவியல், இடியல், துவையல், பொரியல் என்று வழங்குவன போல அவைக்கப்பெற்றது அவையல் என அமைந்ததாம்! அவையல் அவைத்தல் என்பன குற்றிய அரிசியைப் பொதுவாகக் குறித்தலால், அதனைப் பொதுப்பொருளில் அரிசிக்குக் கொள்ளாமல் ஒரு சிற்றுணர்வுக்குக் கொண்டது பொருந்துமோ எனின், பொருந்தும். என் எனின், அவைத்த நிலையில் உண்ணப் பெறுவது அதுவே ஆகலின். ஏனை அரிசியோ பின்னர்ச் சமைத்து உண்ணப் பெறுவது ஆகலின், அடிசில், அவிழ்து, சோறு, சமையல், வாக்கல் முதலாகப் பல பெயர்களைப் பெறும். இனி அவையல் என்பது எப்படி அவலாகியது? துவைத்தலால் அமைந்த துவையல் துவயல் என ஐகாரம் கெட்டு அகரமாகி வழங்குவதில்லையா! அதுபோல் அவையல் அவயலாய்ப் பின்னர் யகரமும் கெட்டு, அவலாய் வழங்கலாயிற்றாம். சங்கச் சான்றோர் நாளிலேயே, அவையல் அவயல் என்பவை அருகி அவல் என்பதே பெருகி வழங்கிற்று எனின் அவல் என்பதன் தொல்பழைமை காண்டல் எல்லைக்கு உட்பட்டதாமோ? சங்க நாளில் அவல் என்பதற்குப் பள்ளம் என்னும் ஒரு பொருள் பெருக்கமாக வழங்கியது. அவலா கொன்றோ மிசையா கொன்றோ என்றார் ஔவையார். குண்டு குழி, பள்ளம் கேணி இன்னவையும் பிறவும் அவலாகக் குறிக்கப் பெறக் காரணம் என்ன? இந்த உணவு அவலுக்கும், இட அவலுக்கும் உள்ள இயைபு என்ன? இயைபு ஒன்றேதான்; அது தொழில் இயைபே என்க? அவலெறி உலக்கை இருந்தது போலவே, நிலனகழ்தற்குக் குந்தாலி முதலிய கருவிகள் இருந்தன. அவற்றைக் கொண்டு நிலத்தைக் குற்றிக் கேணியும் கிணறும் தோண்டினர்; பாறையைத் தகர்த்தனர்; பரல்களைப் பெயர்த்தனர்; வயல் வளம் அமைத்தனர். ஆகலின் அவைத்தலால் (இடித்தலால், குற்றலால்) அமைந்த நிலம் அவையலாய் அவலாய்ப் பெயர் பெற்றதாம்! இதன் தொன்மையும், அவல் தொன்மையே. பரலவல போழ்வில் (மலை. 198) பரலவல் படுநீர் (குறுந். 250) அவல் தொறும் தேரை தெவிட்ட (ஐங். 453) இனி அவலம் என்பதன் மூலக்கூறும் அவலில் அமைந் துள்ளதை அறிந்து மகிழலாம்! தாக்கலும் இடித்தலும் இல்லையேல் அவலம் இல்லையே! அவல என்னாள் அவலித்து இழிதலின் என்னும் இளங்கோவடிகள் கூர்ப்பு (கட். 186) இம் மூலங்கண்டுரைத்த முத்திரையே யன்றோ!  8. ஆமை அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே என்பது சூடாமணி நிகண்டு. அகம் என்னும் சொல்லுக்கு உள் என்றும் மனம் என்றும், மனை என்றும் பொருள்கள் உண்மையால் அப் பொருள்களையெல்லாம் தன்னகத்துக் கொண்ட அகப் பொருளுக்கும் அகம் என்பது குறியாயிற்று. தமிழ் என்பதன் தனிப்பொருள் அகப்பொருள் எனின் அதன் சிறப்பு நன்கு விளங்கும். அகம், மனையாம் வீட்டைக் குறித்தலால் மனையாட்சி யுடைய அகத்தாள் ஆகிய தாய் ஆத்தாள் எனப்பட்டாள். ஆத்தாளுக்கு அரிசியிடலைச் சுட்டுவார் பட்டினத்தார். ஆத்தாளையும், ஆத்தாளின் மூத்தாளையும், ஆத்தாளுக்கு ஆத்தாளையும் ஒருங்கு சுட்டுவார் காளமுகிற் புலவர். ஆத்தாள் என்பது எப்படி அமைந்தது? அகம் அத்து ஆள் என்னும் முச்சொற் கூட்டே ஆத்தாள் என அமைந்ததாம். இனி, அகத்துக் காரி ஆத்துக்காரி என்றும், அகத்துக்காரன் ஆத்துக்காரன் என்றும் வழங்குதல் அறிந்ததே. அகத்திற்கு என்பதும் மற்ற வற்றைப் போலவே ஆத்துக்கு என வழங்குகின்றதாம். மனைவியை அகத்து அடியாள் (அகத்தடியாள்) எனக் குறிக்கும் ஆவீன மழைபொழிய எனத் தொடங்கும் தனிப் பாடல். அகம் அகமெனவே நிற்கிறது அப்பாட்டில். முன்னைச் சுட்டியவற்றில் அகம் ஆம் என நின்றது. கலத்துள் இருக்கும் பொருளை அல்லது அகத்து இருக்கும் பொருளை அள்ளி எடுக்க உதவும் கருவி அகப்பை. உடலினுள் இருக்கும் பை போன்ற குடலை அகப்பை என்பதும் இலக்கிய வழக்கு. மனத்தையே பேயாக உருவகிப்பவர் அகப்பேய் என்றனர். அதனை முன்னிலைப்படுத்திப் பாடிய சித்தர் ஒருவர் அகப் பேய்ச்சித்தர் எனப்படுதல் நாடறிந்தது. காவற்காடு, அகழ், மதில் என்பவை ஒன்றனுள் ஒன்றாக அமைந்தவை. இம்மூன்றனுள் அகப்பா என்பதோர் இடம் இருந்தது. அது மதிலினுள் மேடை எனப்பட்டது. மற்றை மூன்றையும் தகர்த்தாலும் தகர்த்தற்கு அருமையுடையது அகப்பா என்பதாம். அதனை எறிந்த சேரவேந்தன் அகப்பா எறிந்தவனாகச் சீராட்டப்படுகிறான். கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிரைப்பதணத்(து) அண்ணலம் பெருங்கோட்டகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ என்பது அது (பதிற்றுப்பத்து, (22). இக்குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பான் வெற்றிலைக் கொடிக்கால்களின் ஊடுபயிராக இடப் படுவதும் வெற்றிலைக் கொடி படர்வதற்குப் பந்தலாக வாய்ப்பதும் அகத்தி மரமாம். உள்ளகத்தது ஆதலால் அகத்தி என்க. அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தி தான் என்னும் பழமொழி அகத்திக்கும் அகத்துக்கு வந்த மருகிக்கும் இரட்டுறலாம் (சிலேடையாம்) அகப்பு அல்லது அகைப்பு என்பது ஊடு துளைத்துச் செல்லும் கூர்நுனையமைந்த இரும்பு அல்லது மரமுளையாம், அதனையே ஆப்பு என வழங்குகின்றோம். அகப்பு என்பதற்கு ஆழம், தாழ்வு, உட்செலல் என்னும் பொருள்கள் உண்மை அறியின் தெளிவாம். இனி ஆகும் என்று ஏற்றுக் கொள்ளும் சொல்லை ஆம் என்பதும், ஆம் ஆம் என அடுக்குவதும் வேறு; அகம், ஆம் என வருவது வேறு - என அறிதல் வேண்டும். ஆகும் என்பது இடைக்குறையாய் அல்லது தொகுத்தலாய் ஆம் என வருகின்றது. அகம் என்பதிலுள்ள இரு குறில்களும் ஒரு நெடிலாய் மாறி ஒற்றோடு இயைந்து ஆம் என வருகின்றதாம். இவை இவற்றின் வேறுபாடு என்க. அகழ், ஆழ்; அகல், ஆல்; பகல், பால்; பகுதி, பாதி என வருவனவற்றை அறிந்தால் அகம் ஆம் என இருகுறில் ஒரு நெடிலாகி ஒற்றொடு கூடிவருதல் விதி விளக்கமாம். இம்முறையால் அகம் ஆம் ஆகி, ஐ என்பதுடன் சேர ஆமை என வருதல் வியப்பில்லை. ஆனால், அதனை அவ்வாறு பொருளுணர்ந்து பெயரிட்ட முன்னோர்களின் பொருளுணர் தேர்ச்சித் திறம் நினைதோறும் நினைதோறும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு உரியதாய் விளங்குகின்றதாம். ஆமைக்கு உறுப்படக்கி என்றும் ஒடுங்கி என்றும் பெயர்கள் உண்டு. கால்கள் நான்கு, தலை ஒன்று ஆக ஐந்து உறுப்புகளையும் தன் ஓர் ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொள்வதால் உறுப்படக்கி எனப்பட்டதாம். அவ்வைந்து உறுப்புகளையும் ஓட்டுள் ஒடுக்கிக்கொள்வதால் ஒடுங்கி என்னும் பெயர் வாய்த்ததாம். உலகையெல்லாம் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் இறையை ஒடுங்கி என்ற மெய்கண்டார் இவண் எண்ணத் தக்கார். பல்வேறு துறவோர் ஒடுக்க நிலையங்களும் எண்ணத் தக்கனவாம். அவற்றுக்கு ஒடுக்கம் என்பது பெயராக விளங்குதல் கருதத் தக்கதாம். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்றார் திருவள்ளுவர். (126). ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி என்றார் திருமூலர். (திருமந்திரம். 133) ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி என்றார் திருத்தக்க தேவர். (சீவக சிந்தாமணி. 2824) ஆமை தன் உறுப்பை உள்ளிழுத்தல் சுரித்தல் எனப்படும். ஆமை தலைபுடை சுரிப்ப என்றார் கம்பர். (பால. 63) உறுப்புகளை அகத்தே சுருக்கிக் கொள்ளும் உயிரியை (அகமையை) ஆமை என்று பெயரிட்ட அருமை பாராட்டும் பான்மையதாம்.  9. ஆய்தம் ஆய்தம் என்பது ஓர் எழுத்து. ஆயுதம் என்பது கருவி. ஆய்தமும் ஆயுதமும் வெவ்வேறு சொற்கள்; வெவ்வேறு பொருள் தருவன. ஆனால் இரண்டையும் வேறுபாடு இல்லாமல் எழுதும் வழக்கம், தொடக்கக் கல்வியாளரிடத்தேயன்றி வளர்ந்தோரிடம் கூட உள்ளது. ஆய்தத்தை ஆயுதமாகவும் எழுதுவது அன்றி, இரண்டையும் ஆயுதம் என்று எழுதுவதும் வழக்கில் ஊன்றியுள்ளது. ஆய்தம் பழந்தமிழ்ச்சொல்; ஆய்த இறுதி, ஆய்தத் தொடர், ஆய்தப்புள்ளி, ஆய்தப்பெயர், ஆய்தபகரம், ஆய்தம் என்பன தொல்காப்பியத்தில் பயில வழங்குவன. ஆயுதம் என்பதோ வடசொல்; சங்க நூல்களிலும் சங்கஞ் சார்ந்த நூல்களிலும் வாராத சொல். பிற்காலத்துப் புகுந்து, பெருக்கமாக வழங்கப் பெறும் சொல். சான்று ஆயுத பூசை. பழங்காலத்தில் போர்க்கருவிகள் படைக்கலங்கள் எனப் பெற்றன. படைக்கருவிகள் வைக்கப்பெற்ற இடங்கள் படைக் கலக்கொட்டில்கள் எனப்பெற்றன. படை என்னும் சொல் படையையும் படைக்கலத்தையும் குறித்தது. பின்னாளில் படையும், படைக்கலமும், ஆயுதம் ஆயின. படைக்கலக் கொட்டில்கள் ஆயுதசாலை ஆயிற்று; படைக்கல வழிபாடு. ஆயுத பூசை யாயிற்று; வேற்கோட்டமே படைவீடு என்பதையும் அறிக. அறியார் ஆயுத ஆய்த வேறுபாடு அறியாமல் எழுதினர் என விடலாம். அறிந்தவர்களும் ஏன் அப்படி எழுதினர்? ஆய்த எழுத்தின் வடிவத்தை முப்பாற்புள்ளி என்றார் தொல்காப்பியர் ஆய்தப் புள்ளி என்றும் சுட்டினார் (423) முப்புள்ளி வடிவை விளக்கக், கேடயம் (மெய்ம்மறை) என்னும் கருவியை உவமை காட்டினர் சிலர். கேடயத்தில் மூன்று வட்டங்கள் உண்டு. ஆகலின், வடிவ உவமைகூற அது வாய்ப்பாக இருந்தது! அக் கேடயம் அது போன்ற அமைப்புடைய எழுத்தைக் குறிக்கும் எனக்கொண்டு, கேடயம் ஓர் ஆயுதம் ஆகலின், ஆய்த எழுத்தை ஆயுதம், எனக் காரணம் காட்டினர்! கேடயத்தை மட்டுமா உவமை காட்டினர் ஆய்தத்திற்கு? அடுப்புக் கூட்டுப்போல்வதோர் எழுத்து என்று உவமை கூறினர். அடுப்புக் கூட்டும் ஆயுதம் தானோ? சமையல் செய்தற்குக் கருவியாம் ஆகலின் பொருந்தும்? என்று பொருத்தம் காட்டவும் துணிவர்போலும்; இனி இறைவன் முக்கண்ணை ஆய்த எழுத்து வடிவுக்கு உவமை காட்டினர்! வன்ன ஆய்தம் நேர் நாட்ட முற்ற வள்ளல் என்பது தணிகைப்புராணம் (நைமி. 6) மெய்யா ரணங்கள் தடவிய ஆய்த விழியினர் என்பது பாண்டித்துரைத் தேவர் நான் மணிமாலை (2). இறைவன் முக்கண்ணும் ஆயுதம் தானோ? ஆய்த எழுத்தின் வடிவத்தை வீரமா முனிவர்தாம் அமைத்தாராம். அமைத்தது மட்டுமா? அதனால் தமிழைக் கெடுத்து விட்டாராம். எப்படி? உயிர் எழுத்துக்களின் முடிவில் அடுப்புக் கட்டிகளைப்போல 3 புள்ளிகளைக் குறித்து, அதுதான் ஆயுத எழுத்து என்றும் சொல்லி விட்டார். அதுதான் அவர் செய்த பெரும் தவறு. இப்படிச் சொல்பவர் யார்? அவரே சொல்லுகிறார்: ராமலிங்கம் என்கிற தமிழ் அறிஞர் சுமார் 40 ஆண்டுகளாகத் தொல்காப்பியத்தைச் சிறப்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவருடைய உதவியால் தொல்காப்பிய நூலைத் தெளிவாகப் படித்து சத்தியகங்கையில் சுமார் 30 கட்டுரைகள் எழுதினேன் என்கிறார். இதைச் சொல்பவர் சத்திய கங்கை ஆசிரியர் திரு. பகீரதனார்தாம், 6.8.81 குமுதம் இதழில், வீரமாமுனிவரால் தான் தமிழ் கெட்டது என்னும் தலைப்பில் அவர் தந்த பேட்டி வெளியாயிற்று! பயமில்லாமல் சொல்கிறேன். வீரமாமுனிவர் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரைக்கும் தமிழ்ப் புலவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறுவது அருமையான கண்டுபிடிப்பு! தம் அருமைத் தமிழ் ஆசிரியருக்கு அன்பு மாணவர் வழங்கிய நன்றிப்படையல் இதற்கு மேலும் வேண்டுமோ? பகீரதர் குற்றச்சாட்டை மறுக்கவந்தது அன்று இக் கட்டுரை அவர் இப் பேட்டி யுரையில் ஆறு இடங்களில் ஆய்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆறு இடங்களிலும் ஆயுதம் தான் உள்ளது. ஆய்தமே இல்லை! பேட்டி தான் எனலாம்! எழுதியவர் தவறு எனலாம். இதழில் வருமுன் பேட்டிச் செய்தியைப் படித்துப் பார்த் திருப்பார்; பார்த்திருக்க வேண்டும். அப்பொழுது பார்க்க வில்லை! எனினும், வெளிவந்த பின்னராவது, ஆய்தம் என்று திருத்தம் தந்திருக்க வேண்டும்! அவர்தாம் ஆயுதக்காரர் ஆயினரே! வீரமாமுனிவர் தாம் ஆய்தத்திற்கு மூன்று புள்ளி வடிவு தந்தாரா? வீரமா முனிவர், உரையாசிரியர் நச்சினார்க்கினியருக்கு முந்தியவரா பிந்தியவரா என்பதை நன்கு அறிவார் சத்திய கங்கையார். அவர் (நச்சினார்க்கினியர்) சொல்கிறார்: ஆய்தம் என்ற ஓசைதான், அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு, ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் நடுவுவாங்கி யிட்டெழுதுப, இதற்கு வரிவடிவு கூறினார் என்றார். ஆய்வுடையார், ஆய்த முப்பாற்புள்ளி வடிவை வீர மாமுனிவர் மேல் ஏற்றுவரோ? இனி ஆய்தம் என்பதன் பொருள் என்ன? ஆசிரியர் தொல்காப்பியனரே ஆய்தம் என்பதன் பொருள் உள்ளதன் நுணுக்கம் என்று கூறியுள்ளார். ஆய்தல் - நுணுகுதல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும், உள்ளதன் நுணுக்கம் என்றார் தொல்காப்பியனாரும் என்றார் சிவ ஞானமுனிவர், (சிவஞானபாடி. 7:3). தமிழ்மொழியில் வழங்கப் பெறும் எழுத்தொலிகள் எல்லாவற்றிலும் ஆய்தம் நுணுகிய ஒலியுடையது என்பது விளங்க உள்ளதன் நுணுக்கம் என்றார் ஆசிரியர். ஆய்வு, ஆராய்வு என்பனவும் நுணுக்கப் பொருள் வழிவந்த சொற்களே! ஆயுதம் கருவி, கூத்துப்பயிலிடம், படைக்கலம் என்னும் முப்பொருள்களைத் தர, ஆய்தல் என்பது ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல், தெரிந் தெடுத்தல், நுண்மை, முன்னுள்ளதனிற் சிறியதாதல், வருந்துதல், அழகமைதல், அசைதல், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்பு களைதல், நுழைந்து பார்த்தல் என்னும் பதினான்கு பொருள்களைத் தருதல் தமிழ்ச் சொல்லகராதி வழியே அறிக. ஆய்த எழுத்தை மரபும் பொருள் நிலையும் கருதி ஆய்தம் என்றே எழுதுக! மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் என்பது தொல்காப்பியர் துணிவு! 10. ஆய்வு ஆய்வு என்னும் சொல்லைப் பற்றி ஆய்வதே இவ் ஆய்வு என்பதன் பொருள் விளக்கம் இருவகை வழக்குகளிலும் (நூல் வழக்கு, உலகியல் வழக்கு) காணக் கிடக்கின்றது. முதற்கண் உலகியல் வழக்கில் ஆய்வு என்பதற்குள்ள பொருளைக் காண்போம். காய் ஆய்தல் என்பதொரு வழக்கு, கொத்தவரை (சீனியவரை) என்னும் காயை ஒடித்தல் அறுத்தல் என்று கூறாமல் ஆய்தல், என்பதே நாட்டுப்புற வழக்கு. முற்றியது, பிஞ்சு ஆகியவற்றை விலக்கிக் கறிக்குத் தக்க பதனமைந்த காயைப் பறிப்பது காய் ஆய்தல் எனப்படும். இது பறித்தல் நிலையில் சொல்லப்படும் ஆய்தல் ஆட்சி. பின்னர், அக்காயைக் கறிவைத்தற்கும் ஆய்தல் உண்டு. அவ்வாய்தல், நுனிக்காம்பும் அடிக்காம்பும் அகற்றுதல்; முதுகு நரம்பு எடுத்தல்; அளவிட்டு ஒடித்தல் என்பவாம். பறிக்குங்கால் முற்றல் ஒருவேளை வந்து விடினும், அதனை இவ்விரண்டாம் ஆய்தலில் விலக்கி விடுவர். அதனால், வேண்டுவ கொண்டு விலக்குவ விலக்கல் ஆய்தல் எனப்படுகிறது என்பது விளங்கும். இனிக் கீரை ஆய்தல் என்பதும் வழக்கே. கீரையுள் ஒரு வகை அறுகீரை; அது அறைக்கீரை எனப்படும். அறுத்தல் என்பது அறை என்னும் பொருளில் வருதல் இருவகை வழக்கிலும் உண்டு (எ-டு) அறிவறை போதல்; அலுவலர் அறை. கீரை ஆய்தலில் பழுத்த இலை, அழுகல் இலை அகற்றல், தண்டில் நரம்பு போக்கல், மாசு தூசு விலக்கல் என்பன வெல்லாம் நிகழும், இவ்வாறு போக்குவ போக்கி ஆக்குவ ஆக்கல் ஆய்தலாம். ஆதலால் ஆய்தல் என்பது நுண்ணிதாய் நோக்கித் தள்ளுவ தள்ளிக் கொள்ளுவ கொள்ளல் என்பதாய் முடியும். இவற்றை ஆய்தல் என்னும் இக்காலச் சொல்லாட்சியுடன் ஒப்பிட்டுக்காணின் உண்மை விளங்கும். ஆய்தல் என்பதும், ஆராய்தல் என்பதும் பழநூல் ஆட்சி யுடையவை. நாடுதல் என்பதும் ஆய்தல் பொருளதே. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்ககொளல் என்பது திருக்குறள். நாடி பார்த்தலும் ஆய்தலே. அதனால், நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும், வாய்நாடி வாய்ப்பச்செயல் என்பதும் மருந்தில் இடம் பெற்ற குறளே. ஆய்தலுக்கும் ஆராய்தலுக்கும் வேறுபாடு உண்டோ. நுண்ணிதாக உண்டு. ஆர் என்பது அது. ஆர் என்பது அருமை, நுண்மை என்னும் பொருளது. ஆராய்ச்சி, ஆராய்வு என்பவை நுண்ணிய அல்லது கூரிய ஆய்வு என்பதாம். ஆய்வுக்கு நுண்மைப் பொருளுண்டோ எனின் அதனைத் தொல்காப்பியனார்க்கு முன்னை இலக்கணரும் கண்டனர் என்பது தெளிவு. தமிழ் எழுத்துக்களில் எல்லாம் நுணுகிய ஒலியுடைய எழுத்தை ஆய்தம் (ஆய்த எழுத்து) எனக் கண்டதே அதனைத் தெளிவாக்கும். அதனைத் தொல்காப்பியம், ஆய்தம் என்பது உள்ளதன் நுணுக்கம் என்று கூறும். உள்ளது - தமிழில் உள்ள எழுத்துக்கள். நுணுக்கம் அவ்வெழுத்துகளிலெல்லாம் நுண்ணிய எழுத்து. ஒலியளவு குறைந்த எழுத்துகளுக்குப் புள்ளியிட்டு வெளிப் படக் காட்டல் பண்டே வழக்காயிருந்தது. மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை; அதன் உச்சியில் புள்ளி வைத்தல் மரபு. குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை அரை மாத்திரை அளவின. அவற்றின் மேல் புள்ளி வைத்து மாத்திரைக் குறை வுடையது என வெளிப்படைக் காட்டல் முந்தை வழக்கம். மெய்யெழுத்திலும், குற்றியலுகர குற்றியலிகர எழுத்து களிலும் குறைந்த ஒலியுடைய எழுத்து ஆய்தம். அதனால் அதன் வடிவை முற்றிலும் புள்ளியாக அமைத்துக் கொண்டனர். அதனை முப்பாற்புள்ளி என்பதும் வழக்கே. ஆய்தம், அஃகேனம் அஃகன்னா எனவும் அழைக்கப் படும். அஃகுதல் குறைதல். நுணுகுதல் என்னும் பொருள் தரும் சொல். அறிவு, அஃகி அகன்ற அறிவு எனத் திருவள்ளுவரால் ஆளப்படும். இந்நுணுக்கப் பொருளை அறியாமையாலும் வடமொழி வழிப்படுத்த வேண்டும் என்னும் நினைவாலும் ஆய்தம் என்பதற்குக் கேடயம் (மெய்ம்மறை) என்னும் பொருண்மை கொண்டு, அக்கேடயத்தின் வடிவமைப்பில் மூவேட்டை இருப்பது கொண்டு - முப்புள்ளி வடிவுக்கு ஒப்பிட்டுக் காட்டுவாராயினர். ஆய்தம் வேறு; ஆயுதம் வேறு. இரண்டையும் ஒன்றாக மயங்கி பின்னோரும் கேடயத்தை ஏற்றதுடன் அடுப்புக்கூட்டில் முக்கல் அல்லது முக்குமிழ் இருத்தல் கொண்டும், அது சமையல் கருவியாக இருத்தல் கொண்டும் அடுப்புக் கூட்டுப் பொருளுக்கும் உடனாக்கிச் சென்றனர். ஆனால், இக் கருத்துகளை யெல்லாம் விலக்கி நுணுக்கப் பொருள் கொள்ளுமாறு ஆய்தம் என்பதற்கு, உள்ளதன் நுணுக்கம் என ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லியதே ஆணைச்சொல் எனக் கொள்ளல் முறைமையாம். ஆய்தலைப் பற்றியும் ஆய்தல் வேண்டும் என்பதற்கு ஆய்தமே சான்று போலும்!  11. இட்டவி தமிழ்நாட்டு உணவுகளுள் பெருவழக்குடைய ஒன்று இட்டிலி என்னும் சிற்றுணவு. வீட்டில் மட்டுமின்றி, உணவு விடுதிகளிலும் பெருவழக்குடையதே. போனவுடன், இட்டிலி இருக்கிறதா என்று கேட்டு வாங்கி, அதனை உண்டு கொண்டிருக்கும் போதே அடுத்த உணவுக்குக் கட்டளை இடுவதே பெருவழக்கு. இவ்வளவு வழக்குடைய பண்டத்தின் பெயரில் சிக்கல், பெருஞ்சிக்கலாகவே உள்ளது! இட்லி என்கின்றனர்; இட்லிக்கடை என்றே கடைப் பெயர் சொல்லவும் படுகிறது. இட்லிக்காரி என்று அழைக்கப் படுபவர்களும் உளர். இவ் விட்லி மொழியியற்படி சரியானது அன்று. இட்டிலி என்றே வழங்க வேண்டும் என்று தமிழ் கற்றோர் கூறுவர். ட் என்னும் வல்லினப் புள்ளியெழுத்தை அடுத்து அதே உயிர்மெய்யெழுத்து வருவதே இலக்கண முறைமை. வட்டம், அட்டளை, பெட்டி, வட்டு என்னும் சொற்களைக் கொண்டு இதனை அறியலாம். இட்லி என்பது தவறு; இட்டிலி என்பது சரி; என்றாலும், அச்சொல் பொருளுடையதாக இல்லை, பொருளில்லாத ஒன்று சொல்லாகாது என்பது தமிழ் இலக்கணம். இட்டிலியைச் சிலர் இட்டலி என்கின்றனர்; அதுவும் பொருளோடு பொருந்தாததே! சிலர் இட்டலியை இட்டெலி என வடிவு திரித்துச் சொல்வதும் உண்டு. அவர்கள் அதனைத் திருந்திய வடிவம் எனக் கருதியே வழங்குகின்றனர். கூழுக்கு என்ன செய்வோம் என்று குலையும் ஏழைச் சிறுமி ஒருத்தி; பாலுக்கு இனிப்புப் போதாது என ஏங்கும் செல்வச் சிறுமி ஒருத்தி. முன்னவளிடம் பின்னவள் வந்து இட்டெலி ஐந்தாறு தின்றேன் என்றாள், இட்டிலியைக் கேட்டும் அறியாதவள் ஏழைச் சிறுமி. அவள் கண்டு அறிந்ததும் வீட்டு இடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் திரியும் எலிகளையே தான். அதனால் இட்டெலி என்று செல்வச் சிறுமி கூறியது. அந்த எலிகளைத்தான் போலும் என எண்ணினாள். அதனால், இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள் ஏதும் கருணை இலீரோ? அம்மா! பட்டினி யாக இறந்திடினும் - நாங்கள் பாவம் பழிசெய்ய மாட்டோம் அம்மா! என்றாள். இட்டெலி என்பதை எலியாக எண்ணியதால் அதைத் தின்பது அருளிலாச் செயலாகவும் பழிபாவச் செயலாகவும் கூறினாள். செல்வமும் சிறுமையும் என்னும் தலைப்பில் கவிமணி பாடிய பாடல்களுள் ஒன்று இது. (மலரும் மாலையும் பக். 173) இதனால் இட்டெலி எனச் சொல்லும் வழக்கும் தெரிகின்றது. இட்டலி, இட்டிலி, இட்டெலி - இம் மூன்று வடிவங்களும் பொருளொடு பொருந்தவில்லை. அலி, இலி, எலி என்பவை இட்டொடு ஒட்டவில்லை! அறிஞர் மு. வ. கதைகளில் இட்டளி என எழுதினார். இட்டு அளிப்பது என்ற பொருளில் கருதியிருக்கலாம். இடுதல், மாவை எடுத்து இடுதல் என்று கொண்டாலும் பொருந்தவில்லை. இனிச்சிலர் இடுதளி என்பர். கோயிலுக்குத் தளி என்பது பழம் பெயர். மண்ணால் ஆய கோயில் மண்தளி (மட்டளி); கல்லால் ஆய கோயில் கல்தளி (கற்றளி); கல் வெட்டுகளில் அறியவரும் செய்தி இது. இக்கோயில்களில் வழங்கப்படும் உணவு தளிகை (தளுகை) என்பது. சிற்றூர்களில் இந்நாளிலும் தளுகை போடல், தளுகை தருதல் என்னும் வழக்குண்டு. இவற்றைக் கருதியவர் இடு தளி. இடும் உணவு என்னும் பொருளதாகக் கருதுவர். இட்டிலி இத்தனை ஈடு எடுத்தேன் என்பது வழக்கு. ஈடு என்பது தட்டைக் குறிப்பது. இட்டு வேக வைக்கும் தட்டை ஈடு என்பது வழக்கில் இருப்பதால், ஈடுதளி ஈட்டளி ஆகலாம் என்பாரும் உளர். இவையெல்லாம் நெஞ்சில் பதியுமாறு ஒட்டவில்லை என்பது வெளிப்படை. திருப்பதித் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில் இட்டவி என்னும் சொல் ஆளப்பட்டிருப்பதாகக் கல்வெட்டு அறிஞர் சி. கோவிந்தராசனார் உரைத்தார். அவியல் அறிந்தது தானே! அவிதல் அறியாததா? அவியுணவு என்பதைத் திருக்குறள் ஆள்கிறது. இட்டவியை அவியல் என்றே வழங்கும் வழக்கும் உண்டு. இட்டு அவிப்பது இட்டவி என்பது பொருந்துகின்றது! இனித், திருப்பதிக் கல்வெட்டு ஆகியவற்றையும் அறிந்தால் - அறிவித்தால் - ஆய்வு முறையாகக் கொள்ளப்படும் அன்றோ! எவரும் அறிந்த பெருவழக்குடைய ஓர் உணவின் பெயரே, இத்தனை வடிவமாற்றம் குழப்பம் ஆகியவற்றை உடையதா? என ஐயமுண்டாகலாம்! இதில் ஐயமென்ன? அப்படித்தானே இருக்கிறது!  12. இரட்டை வடிவம் இரட்டை என்பது இரண்டு. ஒற்றையா இரட்டையா என்பது விளையாட்டுகளுள் ஒன்று. இரட்டை மாட்டு வண்டியும் ஒற்றை மாட்டு வண்டியும் கண்கண்டவை. இரட்டையர் என்பார் பாவுலாக் கொண்டு பளிச்சிட்டமை தமிழறிந்தது. அசாமிய இரட்டையர், உலகில் அரிய பிறப்பாயினர். விலங்கிரட்டையும், இலையிரட்டையும் பூவிரட்டையும் இலக்கணர்களால் எடுத்துக் காட்டப்படும் இலக்கண உவமைகள். இரட்டு என்னும் துணி வகை இரட்டை நூலால் நெய்யப்பட்டது. தடித்த துணியை இரட்டுப்போல என்பது வழக்கு. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிப்பவன். இரட்டை வேடம் போடுபவன்! அவன் கவடன்! கவடு, கவட்டை என்பன இரு பிரிவுகள். உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசுதல் இரட்டை நிலை. இரட்டிப்பாகக் கிடைக்கும் என்னும் பசப்பில் ஏமாந்து இருந்த ஒன்றையும் இழப்பவர் கண்கூடு! இரட்டை வால், இரட்டைச் சுழி, இரட்டைக் கன்று இன்ன வழக்குகள் பெருக்கமுள்ளவை. இரண்டு இரட்டு என மெல்லினம் வல்லினமாக மாறியவடிவம் இது. இரண்டகம் இரண்டும் கெட்டான் இரண்டும் தெரியாது என இயல்பாக நிற்பதும் உண்டு. இரட்டையை இவ்வளவில் நிறுத்தி இரட்டை வடிவுகளில் வழங்கப்படும் சில சொற்களைப் பார்க்கலாம். கட்டடம், கட்டிடம், கோயில், கோவில், வைகை வையை சிறுவன், சிறியன் - இப்படியெல்லாம் இரண்டு வடிவங்களில் எழுதுவதும், தமிழறிந்தார் கூட, இரண்டும் சரிதான் என்பதும் இரண்டினையும் ஆராய்ந்து பாராமல் ஒவ்வொருவரும் தாம் கொண்டதே சரி என்று வலியுறுத்துவதும் நாடறிந்த - ஏடறிந்த - செய்திகள். சொன்மரபொடு - இலக்கண முறையோடு - எண்ணிப் பார்த்தால் உண்மை புலப்படும். எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும் என்பது பழமொழி. கட்டடம் - கட்டிடம் கட்டு + அடம் = கட்டடம். இது, கட்டு என்னும் முதனிலை யையும், அடம் என்னும் இறுதி நிலையையும் கொண்டது, கட்டடம் என்பது கட்டும் தொழில் வழியாக வந்த பெயர். கட்டுதல் என்பது கற்கட்டு, செங்கற்கட்டு, கட்டடவேலை முடிந்தது; பூச்சுத்தான் நடக்க வேண்டும்! வீட்டைக் கட்டிப்பார்; வீடு கட்டி விளையாடல் இவையெல்லாம் கட்டடச் சொல்லை விளக்குவன. கட்டு இடம்+கட்டிடம். கட்டடம் கட்டுதற்கெனத் தேர்ந்து கொண்ட இடம் - மனையிடம் - கட்டிடம். இடம் வாங்கி விட்டேன். என்பது கட்டிடம் வாங்கிவிட்டேன் என்னும் பொருளது. கட்டடம். இனிமேல் தான் கட்ட வேண்டும் என்னும் பொருள் கொண்டது. கட்டிடம் இடப்பெயர்; கட்டடம் தொழிற்பெயர். முன்ன தில் இடம் இடப் பெயர்; பின்னதில் அடம் தொழில் பெயர். கட்டட வேலை செய்யும் கல்வியறியார் எப்படி எழுதினாலும், பொறியியல் கற்ற அறிஞரும் இரண்டும் ஒன்றாக எழுதலாமா? ஒன்றென எண்ணலாமா? ஒப்பந்த விளம்பரங்கள், செய்தித் தாள்கள் இவற்றிலெல்லாம் இப்பிழை என்றால், அறிஞர்களும் இப்பிழையை விட்டார்களா, இரண்டும் சரிதான் என்று எத்தனை சொற்களைச் சொல்வார்களோ! எத்தனை காலம் சொல்வார்களோ? சிறுவன், சிறியன் சிறுவன் என்பது இளமையானவன் என்னும் பொருளது. சின்னத்தனமானவன், சிறு செயல் செய்பவன் என்னும் பொருளது சிறியன் என்பது. சிறுவன் என்பதற்குப் பெண்பால் சிறுமி. செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்த நூல் உரியது என்று மலரும் மாலையும் என்னும் தம் நூலைப் படையலாக்கினார் கவிமணி. ஆயிரங்களான தருமங்கள் உணர்ந்த தருமக்கோமான் சூதாடியதால் சீச்சி சிறியர் செய்கை செய்தான் என ஏசப்பட்டான் பாரதியாரால். சிறுவன், சிறியன் என்பவை இருவேறு பொருளன. பொருளறிந்தே சிறுவன், சிறியன் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். அகவை இளமை கருதியது சிறுவன். செய்கைச் சிறுமை கருதியது சிறியன். அவனுக்கு அகவைக் கட்டு இல்லை. அதனால்தான் செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்றார் திருவள்ளுவர். சீலை, சேலை சீலை, சேலை என்பவை இரண்டுமே சொல்லவும் எழுதவும் பெரு வழக்காக உள்ளன. இரண்டும் சரியாக முடியாது. ஒன்று சரியாக இருத்தலே முறை. இரண்டும் சரியான வடிவு என்றால் இரண்டு வேறு பொருள் தருவனவாக இருத்தல் வேண்டும். பொது மக்கள் வழக்கும் சொல்லியல் முறையும் நமக்குத் தெளிவூட்டுகின்றன. சீலை துணி, சீலைக்காரி, சீலையைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன், சீலைப்பேன் என்பன பொது மக்கள் வழக்கில் இன்றும் உள்ளவை. அவர்கள் சீலை என்பதைச் சேலை எனக் கூறார். கூறினால், படித்தவர்கள் கூறக் கேட்டு அவர்கள் படித்தவர்கள் பேச்சுச் சரியாக இருக்கும் என்னும் தப்புக் கணக்கால் செய்யும் பிழையாக இருக்கும். படித்தவர்களே சேலை எனப் பெருவழக்குப்படுத்தி வருகின்றனர். எழுதியும் வருகின்றனர். சீலை நெய்வாரும் விற்பாரும் கூட இதற்கு விலக்கல்லர். சீரை என்பது பழஞ்சொல். ஆடை பாதி ஆள் பாதி என்னும் பழமொழிக்கு மூலமாவது சீரை என்னும் சொல். ஒருவனுக்குச் சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. சீரை சுற்றித் திருமகள் பின் செல என்பது கம்பர் வாக்கு. சீரை என்னும் சொல் திரிந்து சீலையாக நிற்கிறது. நீர் என்பது அதன் நிறத்தால் நீல் ஆவது சொல்லியல். அதன் நீளல் தன்மையால் நீள் ஆதலும் விளக்கம். சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பியம். சீர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்ததே. சீர்த்தி, கீர்த்தி யாயமை பிற்கால வழக்கு. அதற்கு வடசொல் முத்திரை குத்தப்பட்டது அக்காலத்தே தான். சேல் என்பது மீன், கெண்டை மீன், அம்மீன் போல் பிறழ்வும் பொலிவும். உடைமையில் சேலை எனப்பட்டது என்பது பொருந்தப் பொய்த்தல் என்னும் நெறிப்பட்டதாகும். சீரம் என்பது சீரைப் பொருளதே. சீரம் அழகுப் பொருள் தருவது போல், சீலமும் அழகுப் பொருள் தரும். சிறப்புப் பொருளும் தரும். ஆதலால், சீரை சீலையாகச் சொல்லப் படுதலே பிழையற்றதாகும். சேலை பிழையுற்ற வடிவமாகும். புழுகு - புளுகு இவ்விரண்டு வடிவங்களும் இருவேறு பொருளன. ஒன்றை ஒன்றாக மயங்குவதும் இரண்டும் ஒருபொருளனவே என்பதும் பிழை. புழுகு என்பது ஒருவகைப் பூனை; நாவிப் பூனை; நாவிப் பிள்ளை என்பதும் அது, கத்தூரிப்பிள்ளை, கத்தூரிப் பூனை என்பது அதுவே. புழுகு என்னும் அதன் வழியாகப் பெறும் பொருள் புழுகு அல்லது புனுகு எனப்படும் மணப் பொருளாகும். புழுகு மெய்ச் சொக்கர் என்பது மதுரைச் சொக்கருக்குரிய புகழ் மாலைகளுள் ஒன்று. புழுகாண்டி இறைவன் பெயர். புழுக்குதலால் அப்புழுகு தந்த பொருளே புழுகு என்பது. புளுகு என்பது பொய்மைப் பொருளது. பொய்யும் புளுகும் என்பது இணைச் சொல், கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள் என்பது பொய்ப் புனைவைக் குறிப்பது வெளிப்படை. கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள் என்றால், கெட்டித்தனம் இல்லாதவன் புளுகு எத்தனை நாளைக்கு? புளுகாண்டி என்பது பொய்யனுக்குப் பட்டப்பெயர். அக்கரை - அக்கறை அக்கரை என்பது அ+கரை எனப் பிரிக்கப்பட்டு அந்தக் கரை என்பதைக் குறிக்கும். கடல் கடந்த இடம், அக்கரைச் சீமை எனப்படும். அக்கரை வங்கி அல்லது அக்கரை வைப்பகமாகும். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது பழமொழி. அக் கறை எனப் பிரிக்கப்பட்ட சொல் அந்தக் கறை (அழுக்கு, சாயம்) என்னும் பொருளது. அக்கறை என்னும் ஒரு சொல்லாகுமானால் தனியார்வம், தணியாப்பற்றுமை என்னும் பொருளது. கன்னடத்தில் இதன் வடிவம் அக்கறே என வழங்குகின்றது. பலப்பல பல்கிக் கிடந்தாலும் அவற்றுள் ஒன்றைத் தெரிந்து தேர்ந்து அதன் மேல் காட்டும் பற்றே அல்லது ஆர்வமே அக்கறை,. அஃகு அறை; அக்கு அறை; அக்கறை அஃகுதல் நுணுகுதல், சுருங்குதல், அறை, அறுத்தல். சுருக்கமாக்கிப் பற்றுக் கொள்ளுதலே அக்கறைப் பொருளாகும். அஃகம், அக்கமாதல் மொழியியல் முறை. அஃகம் சுருக்கேல் அக்கமும் காசும் சிக்கெனத் தேடு என்பவை அவ்விரு வடிவங்களுக்கும் எடுத்துக் காட்டுகள். ஊரணி - ஊருணி இவ்விரு சொற்களும் நீர் நிலையைக் குறிப்பனவே எனினும் வேறுபட்டன. ஊர் + அணி = ஊரணி, ஊர்க்கு அணித்தாக இருக்கும் நீர்நிலை. ஊர்க்கும் அணித்தே பொய்கை என்னும் குறுந்தொகை ஊரணிப் பொருளை நன்கு விளக்குகின்றது. ஊருணி என்பது ஊரவரால் உண்ணப்படும் நீரை உடையது என்னும் பொருளது. ஊருண்கேணி என்னும் குறுந்தொகை அச்சொல்லையும் பொருள் பெற விளக்கும். ஊருணி நீர் நிறைந்தற்றே என்னும் குறளும், ஊருணி நீர் நிறையவும் என்னும் கம்பர் வாக்கும் கற்றோர் அறிந்தன. குடிநீர்ப்பயன் கொள்ளும் குளம் ஒன்றும், குளித்தல் ஆடுமாடு குளிப்பாட்டல், கலங்கழுவுதல், சலவை செய்தல் என்ப வற்றுக்கெனக் - குளம் ஒன்றும் ஆக இரண்டு குளங்கள் ஊரவர் பயன்கருதிப் பண்டே அமைக்கப்பட்டன. இன்றும், செட்டி நாட்டுப் பகுதிகளில் எல்லாம் அவ்விரு வகை நீர்நிலைகளும் இருத்தல் கண்கூடு. ஊரணி, இட அணிமைப் பொருள் நிலையில் நின்றது. ஊருணி உண்ணும் வினை அடிப்படைப் பொருள் நிலையில் நின்றது. ஊரணி வேறு; ஊருணி வேறு; இவற்றை ஒன்றென மயங்குதல் பிழை. தனித்தனிப் பொருட் சிறப்புடையன இவை.  13. இலவசம் ‘ïytr« jÄHh? என்பார் உளர். இலவசம் தமிழே! இலவசம் பெருவழக்குச் சொல். இலவச வாசக சாலை; இலவச மருத்துவ மனை; இதனை வாங்கினால், இது இலவசம்; நான் என்ன இலவசமாகவா கேட்கிறேன் என்பன, எங்கும் வழங்குவன. இலவசம் - விலையின்றிப் பெறுவது அல்லது கொடுப்பது. இலவசமாய் - விலையின்றி என்று அகராதிகள் கூறுகின்றன. பொருள் வழக்குச் சரியே. எப்படி இலவசம் இப் பொருளுக்கு இசைந்து வருகின்றது? இலவசம் என்பதை இலவியம் என்பதும் உண்டு. அது பிழை வழக்கு. ஆதலால் அதனைக் கருத வேண்டியதில்லை. இலவசத்தைக் கருதலாம். இலவசம் தமிழ்ச்சொல் அன்று என்று கருதியவர்கள் இலவசப் படிப்பகம் என்பதைக் காசிலாப் படிப்பகம் என்றனர். இலவசம் என்பதை ஓசி என்பாரும் உளர். காசுக்குத்தான் கேட்கிறேன்; ஓசியாகவா கேட்டேன் என்பதில் அப்பொருள் விளங்கும். இனாம் என வழங்கும் வேற்றுச் சொல்லும் இலவச உரிமைப் பொருட்டதே. இலவசம் வந்த வகையைக் காண்போம். åL njo tªj xUt® ‘mJ juÉšiy’ ïJ ju Éšiy ‘v‹W Fiw brhšthuhdhš mij ÉU«ghj å£L¡fhu®, ‘c§fis eh§fŸ bt‰¿iy it¤jh miH¤njh«?’ v‹nwh, ‘ïiy gh¡F it¤jh miH¤njh«? என்றோ இடித்துரைப்பதை அறியாதவர்களா நாம்? இலை பாக்கு வைத்து அழைப்பது விரும்பி வரவேற்பதன் அடையாளம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு இலைபாக்கு வைத்து அழைக்கப் பெறுதல் கண்கூடு. மங்கல விழாவுக்குச் செல்பவர்கள் சுருள் வைப்பதையும், சுருள் தருவதையும் இன்றும் காணலாமே; சுருள் என்பது என்ன? வெற்றிலையைச் சுருட்டித் தருவதே சுருள்! வெறும் வெற்றிலையா இருக்கும் சுருளில்? ஊடே பணமும் இருக்கும் அன்றோ? வெற்றிலைச் சுருளில் பணம் வைத்துத் தருதலால் சுருள் என்பது அன்பளிப்புத் தொகையைக் குறிப்பதாக அமைந்தது. உற்றார் உறவினர் பலரும் ஒரே வேளையில் ஓரிடத்தில் கூட மொய்த்துச் செய்வதால் மொய் என்றொரு பெயரும் வந்தது. ஈ மொய்த்தல். எறும்பு மொய்த்தல் என்னும் வழக்குகள் நடைமுறை தானே! வேறு விழாவே இல்லாமல் மொய் விழா வென்றே ஒரு விழா நடக்கின்றதே. வெற்றிலை வழங்குதல், வரவேற்பு. வெற்றிலை வழங்குதல், மங்கலம். வெற்றிலை வழங்குதல், அமைதி. - இவை வெற்றிலைச் சிறப்பு. வெற்றிலையை இலை என்றாலே போதும். விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இலை பாக்கு என்பது பெரு வழக்கு. வெற்றிலைக்கு அடை என்பதொரு பெயர்; அடைப்பை என்பது வெற்றிலைப் பையைக் குறிக்கும். அடைக்காய் வெற்றிலையோடு போடப்படும் பாக்கு; அடைப்பைக்காரன் முன்னாளில் அரண்மனைகளில் வெற்றிலை மடித்துத் தந்த பணியாளன். இலை என்பது வெற்றிலையைக் குறிப்பது போல் அடை என்பதும் வெற்றிலையைக் குறித்தல் அறிக. மதிக்கத்தக்க பெருமக்களுக்கு இலையில் பணம் வைத்து அன்பளிப்பாக வழங்குதல் நாட்டு வழக்கம். தட்டத்தில் வெற்றிலை வைத்து அதன் மேல் பணம், பழம், உடை முதலியவை வைத்து வழங்குதலும் வழக்கமே. இவை திரும்பப் பெறும் எண்ணத்தில் தரப்படுவன அல்ல. காணிக்கை போல், தெய்வப் படையல் போல் தருவன. ஆதலால் இலைவயமாகத் தந்த அப்பொருள், இலவசமாய், திரும்பப் பெறாத அன்பளிப்புப் பொருளாய் அமைந்தது. மதிப்பாக அளித்த கொடை வழியே வந்த அச்சொல், பின்னர் இலையில் வைக்காமல் எதிர்நோக்குதல் இன்றிக் கொடுக்கும் எக்கொடையும் குறிப்பதாயிற்று. இலை வயம் என்னும் இரண்டு சொற்களும் தேய்ந்தும் மாறியும் இலவசம் என்னும் ஒரு சொல்லாகிப் பெரு வழக்காக வழங்கி வருகின்றன. இலைவயம் எவ்வளவு மதிப்பானது! இலவசத்திற்கும் தான் என்ன, மதிப்புக் குறைவா? அதனைப் பெற எவ்வளவு ஆர்வம்?  14. ஈரோடு ஓடும் இயற்கையுடையது நீர்; அதன் ஓட்டம் நீரோட்டம் எனப்படும். நீரோட்டமே குருதியோட்டத்திற்கும், தேரோட்டத் திற்கும் பிற பிற ஓட்டங்களுக்கு மெல்லாம் மூலவோட்டம்! நீரோட்டம் கண்ணுக்குத் தெரிய, மேலோட்டமாகவும் ஓடும்; கண்ணுக்குத் தெரியா, உள்ளோட்டமாகவும் ஓடும்; எப்படியும் நீரோட்ட இயற்கை, பள்ளம் நோக்கி ஓடுவதேயாம்! ஓடும் நீர் ஓடி ஓடி, ஒரு வழியை உண்டாக்கும். நீர் ஓடும்.... நிலத்து வழிக்கு என்ன பெயர்? ஓடு என்பதே முதற் பெயர். நீரோடும் நிலத்திற்கு அமைந்த ஓடு என்னும் பெயர், அதனைச் சார்ந்த ஊர்ப் பெயர்க்கும் சேர்ந்தது. எரியோடு, வெள்ளோடு, சிற்றோடு, பேரோடு, ஈரோடு என்பன ஊரோடு சேர்ந்த ஓடுகள். நீர் ஓடும் நிலவழியும், அதனைச் சார்ந்த ஊரும் மட்டும் ஓடாக அமைந்ததோ? ஓடு விரிந்தது! ஓடு ஓர் ஏவலாயிற்று, ஓட்டு என்பதும் ஏவலாயிற்று. நீர் வழிவதற்காகச் சரிவாகப் போடப்படும் செய் பொரு ளுக்கும் ஓடு என்னும் பெயர் வந்தது. முகடாக இருந்து பாதுகாக்கும் அத்தன்மையைக் கொண்டவையாம், தலையோடு, தேங்காய் ஓடு என்பவற்றுக்கும், அவற்றின் ஒப்புமையால் திருவோட்டுக்கும் பெயராயிற்று! வறை யோட்டுக்கும் வாய்த்தது! ஓடு ஓடும் சொல்லோட்டங்கள் விரிந்தன; நெஞ்ச ஓட்டம் போலப் பல்கின. ஓடு, ஐ என்னும் ஈறு பெற்று ஓடை ஆயிற்று; ஓடு பெற்ற முதற் பொருளையும் ஓடை பெறலாயிற்று. உப்போடை பாலோடை மயிலோடை செம்போடை என்பவை, ஓடைப் பெயர். ஓடைக்கு நான்கு பொருள்களை ஓட விடுகின்றது யாப்பருங்கல விருத்தி (51): ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்துங் கொடுங்குழாய்! நாடி உணர்வார்ப் பெறின் என்பது அது. கூடற்பழனத்து ஓடை - ஓடைக் கொடி கொல்லிமலைமேல் ஓடை - மலை வழி மதகளிற்று நுதல்மேல் ஓடை - யானையின் நெற்றிப்பள்ளம் கொல்லைப் புனத்து ஓடை - நீரோடை, வெள்ளம் என்பது நீர்ப் பெருக்கின் பெயர். ஏன்? வளமாகப் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாக வெண்ணிறத்தோடு வருவதால் அதன் நிறம் கருதி வெள்ளம் எனப்பட்டது. வெள்ளி (விண்மீன்) வெள்ளை(கள்), வெள்ளை (சுண்ணாம்பு: சலவை) முதலியவற்றைக் கருதுக. வெள்ளம், பால்நுரைப் போர்வை போர்த்து வருவதாகப், புலமையாளர் சுட்டுவதும் (திருவிளை. திருநாட் - 10) கருதுக. வெள்ளம், முதற்கண் புதுநீர்ப் பெருக்கைக் குறிப்பதாகத் தோன்றிப் பின்னர் நீர்ப் பெருக்கைக் குறித்து, அதன் பின் நீரைக்குறிப்பதாக விரித்தது. வெள்ளத்திற்குரிய நீர்ப் பொருளை மலையாளத்தார் சிக்கெனப்பற்றிப் போற்றிக் கொண்டுள்ளனர். நல்லவற்றை எல்லாம் கை விடுதலில் வல்ல நாமோ, வெள்ளத்தின் முதற்பொருளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டோம். அம்முதல் வெள்ளத்தை அடித்துக் கொண்டுபோகவும், பிரவாகம் வந்தது! எப்படியோ வெள்ளம் நிலைத்து விட்டது. வெள்ளோடு என்னும் பேரும் ஊரும் மாறாச் சான்றுகளாய் உள்ளன. வெள்ளப் பெருக்கின் போது மட்டும் நீரோடும் ஓடு வெள்ளோடு என்க. நீருக்கு நிறமில்லை என்பது அறிவியல்! ஆனால் நிலத்தில் பட்ட நீருக்கு நிலத்தின் நிறமே நிறமாய் ஆகிவிடுவது கண்கூடு. அன்புடைய தலைவன் தலைவியர் நெஞ்சக் கலப்பு, நிலத்தொடும் இயைந்த நீருக்கு ஒப்பாகத் தோன்றியது ஒரு புலவர்க்கு, அவர், செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே (குறுந். 40) என்றார். அவர் பெயர் இன்னதென அறியாத தமிழகம், அவரை அவர் தம் உவமையாலேயே செம்புலப் பெயல் நீரார் என நிலைபெறுத்திற்று. நிலத்தொடு நீரியைந் தன்னார் எனத் திருக்குறளும் கூறிற்று. (1323) நீரின் நிறத்தால் செங்குளம், கருங்குளம் எனக் குளப் பெயர்களும், அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஏற்பட்டுள்ளமை ஆங்காங்கு அறியக் கூடியனவே. போர்க்களத்தில் - பெருக்கெடுத்த குருதி வெள்ளம், உடைப்பட்ட முரசத்தின் உள்ளே பாய்ந்து ஓடுவது. செங் குளத்துத் தூம்பின் வழியே நீர் ஓடுவது போன்றது என்கிறது களவழி நாற்பது (4). செங்குளம் என்பது செந்நிற நீர்ப்பெயரால் பெற்ற பெயர் என்றால், ஓடைப் பெயர் ஒன்று செந்நிற நீர் ஓடுதலால் எரியோடு எனப் பெயர் பெற்றது. எரிவண்ணம் எவ்வண்ணம்? அவ்வண்ணம் செவ் வண்ணம்! எரி எள்ளுவன்ன நிறத்தன் எவன், அவன்? சிவன் எனப்படும் செம்மேனி அம்மான்! எரிமலர் இலவம் எரிமருள் தாமரை எரிமருள் வேங்கை எரி புரை எறுழம் எரியவிர் உருவின் செயலை என்பவையெல்லாம் செவ்வண்ணத்தைக் காட்டுவனவே! செவ்வோடு எரியோடு என்க. இனி, ஈரோடு பற்றி எண்ணலாம். இயற்கையை, விடுத்துச் செயற்கைப் புனைவில் தலைப் பட்ட காலம் தொன்மக்காலம்! பல்லிருகாதம் பல்லிடுக்கு முக்காதம் என்றால் ஆமாம்! Mkh«! எனத் தலையாட்டும் காலம் தொன்மக்காலம்! (தொன்மம் - புராணம்.) அக்கால நிலையில் ஈரோட்டுக்கு அமைந்த புனை கதை: ஒரு காலத்து, நான் முகன், ஐந்தலையனாக இருந்தானாம். அவன் தலை ஒன்றைச் சிவன் கிள்ளினானாம்; அத் தலையோட்டில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்த தாம்! அவ் ஈர ஓடு சிவன் கையைக்கவ்விக்கொண்டு, விடாமல் இருந்ததாம். பின்னர் விடுபட்ட இடம் ஈரோடாம்! பெயர் வந்த வகை ஈதாம்! கேழ்வரகில் நெய்யொழுகிய கதை தான் இது! உண்மை என்ன, இரண்டு ஓடுகள் உடைய இடம் ஈரோடு எனப்பட்டது. ஓரோடு சிற்றோடு! மற்றோர் ஓடு, பேரோடு. இன்னும் இரண்டும் தனித்தனியே ஓடுகளாகவும் ஊர்களாகவும் உள்ளன. அவ்வீரோடும் சார்ந்த ஊர் ஈரோடு!  15. ஊர் ஊர் என்னும் பெயர் தமிழ்நாட்டில் மிகுதி; சிற்றூர், பேரூர், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் எனபனவெல்லாம் இன்று எங்கும் கேட்கப்படுவன. ஊர், பழந்தமிழ்ச்சொல். தொல்காப்பியத்திலேயே ஊர்ப் பெயர் உண்டு. ஊரும் பேரும் இன்னும் இணை மொழி எவரும் அறிந்தது. அப்படி ஒரு நூற்பெயரும் தோன்றித் தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்களைச் சுவையாகக் கூறியது. ஊர், தமிழ்நாட்டுக் குடியிருப்புப் பெயர் எனினும் தமிழ்ச் சொல் எனினும் - உலகப் பழம் பெயராகியமையை உலக வரலாறு காட்டுகின்றது. உலகுக்குத் தமிழ் தந்த கொடை அது. அண்டை அயல் நாடுகளிலும் ஊர்ப் பெயராட்சி உண்டு. தமிழ் வழக்கு இல்லா வடநாடு, திரவிட நாடுகளிலும் ஊர்ப் பெயருண்மை எவரும் அறிந்ததே. ஊர் என்னும் பெயர் எப்படி வந்தது? மலைமேலே வீடு எழுப்பினாலும் சரி, மலையடிப் பள்ளத் தாக்கில் வீடு எழுப்பினாலும் சரி - உயரமான இடத்தைத் தெரிந்து கட்டுவதே வழக்கம். சாலையினும் வீடு மேடாக இருக்க வேண்டும் என்று திட்டப்படுத்திக் கட்டுவதும் நடைமுறை. பள்ளத்தில் தேங்குதல் நீரியல்பு. மேட்டில் இருந்து நீர் வழிந்தோடுதலும் இயல்பு. அதனால் மேட்டுக்குடி என்றாலும் சரி, வறுமைக்குடி என்றாலும் சரி, தன் குடியிருப்பை நில மட்டத்திற்கு மேல் உயர்த்திக் கட்டுவதே அறிவியலுடன் கூடிய நடைமுறை. அம்முறையை விளக்குவதாகச் சொல்லை முன்னையோர் படைத்துக் கொண்டமை அச்சொற் சிறப்புடன், அப்படைப்பாளர் சிறப்பையும் காட்டுவதாம். உயர் என்பது ஊர் ஆகியது. இரு குறில், ஒரு நெடிலாக மாறிப் பொருள் மாறாதிருத்தல் என்பது சொல்லியன் நெறி முறைகளுள் ஒன்று. அம்முறைப்படி ஆகிய பெயர்களுள் ஒன்று ஊர் என்பது. ஒப்பு நோக்குக: பெயர் பேர். பெயர்வை பேர்வை. வியர்வை வெயர்வை வேர்வை. ஊர் என்பது பொதுப் பெயர். உயர்வான இடத்தில் அமைந்தது என்னும் பொருளது. அதற்கு முன்னாகச் சிறப்புப் பெயர்கள் அமைந்தன. சிறப்புப் பெயர்கள் வேறுபடுத்திக் காட்டுவதற்கு என்க. (எ-டு) மலையூர், ஆற்றூர், சேற்றூர், நாவலூர். ஊரெனப் படுவது உறையூர் என்னும் பழமொழி அவ்வூர்ச் சிறப்பை உணர்த்துவது. உயிர் வகைகளுள் ஊர்வன என்பவை ஒரு பிரிவின. அவை பள்ளம், குண்டு, குழி, பொந்து, புடை, பொத்தல், வளை, புற்று என்பவற்றுள் இருப்பன. இவையனைத்தும் நிலத்தின் மட்டத்தின் கீழே அமைவன: இவற்றினின்று வெளியேற வேண்டுமெனின் உயர்ந்தே வரவேண்டும். ஆகலின் உயர்ந்து வருதல் ஊர்தல் (உயர்தல்) ஆயிற்று; அவற்றைச் செய்வன ஊர்வன என்றும், ஊரி என்றும் பெயர் பெற்றன. காளை, எருமை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றின் மேலும், உருளைகள் அமைந்த வண்டியின் மேலும் மாந்தன் செலவு மேற்கொண்டான். அந்நிலையில் அவை ஊர்தியாயின. ஊர்திவால்வெள் ஏறே என இறைவன் ஊர்தியைக் குறிக்கின்றது சங்கப்பாட்டு. நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் பற்றிச் சுட்டுகிறது மற்றொரு பாட்டு. கால் நடை ஊர்தி, கால் உருள் ஊர்தி என்னும் அளவில் ஊர்தி நின்று விடவில்லை. மண்ணில் ஊர்ந்து பறப்பதாக உள்ள வான ஊர்தியை அறிவோம். வான ஊர்தி என்னும் சொல் நாம் படைத்துக் கொண்ட புதுச்சொல் அன்று. பழஞ்சொல், புதிதாகக் கண்ட பொறிக்குப்பழம் பெயர் ஒன்றைத் தெரிந்து கொண்ட கலைச் சொல்லாக்கமே அது. விசும்பின் வலவன் ஏவா வானஊர்தி என்பதும் சங்கப் பாட்டே. ஆளிருந்து இயக்குதல் இன்றி வானில் இயங்கும் ஊர்தி என்கிறது அது. ஊர்தியில் ஆள் இன்றிக் கீழேயுள்ள நிலையத் தொடர்பால் இயக்கப்படும் இந்நாள் வானவூர்திக்கும் வலவன் ஏவா வானவூர்தி எனப் பெயர் தந்துள்ளமை அறிக. குருவி பறக்கும் வீட்டின் மேல் கொக்கு பறக்கும் அதற்குமேல் காக்கை பறக்கும் அதற்குமேல் புறாப் பறக்கும் அதற்குமேல் பருந்து பறக்கும் அதற்குமேல் எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ? என வினா எழுப்புவது போல், எட்டா உயரம் பறப்பது உள்ளம்! அஃதெத்தனையோ உயர்வுகளைக் காண்கிறது! உள்ளத் தனையது உயர்வு என்னும் வள்ளுவம். பேராண்மை யினும் உயர்ந்தது ஊராண்மை என்றும் அது பேசும்! அவ் வுயர்வை, ஊர்ப் பெயரைக் கண்டபோதே நம் முன்னோர் அமைத்துக் கொண்டது அருமையாம்!  16. என்ன - என உவமை உருபுகளுள் என்ன என்பதும் ஒன்று. அன்ன இன்ன என்பவை அன, இன ஆவது போல, என்ன என்பதும் என என நிற்கும். என்ன என்னும் உவமை உருபு, உலகியல் வழக்கில் என என்று நிற்பதைப் பற்றியதே இவ்வாய்வு! ஆனால் என என்று வருமிடத்தெல்லாம் உவமை உருபு நிலையில் நிற்பதில்லை. என்று என்னும் பொருள் பயப்ப நிற்பதே மிகுதி. இஃது அறியத்தக்கதாம். போவேன் எனச் சொன்னான் என்பதில் என என்பதற்கு என்று என்பது தானே பொருள்! என என்பது இவ்விரு பொருட்டாயும் வருதலை நுணுகியே அறியக்கூடும். பொக்கென வா! பொக்கெனப் போ! என்பவை நடை முறையில் உள்ளவை. பொக்கென என்பது விரைவாக என்னும் பொருள் தருதல் வெளிப்படை. பொக்கு என்பதற்கு விரைவுப் பொருள் எப்படி வந்தது? உழவடைக்களத்தில் பொலிபோடுங்கால் பொக்கு விரைந்து தள்ளிப்போய் விடுதல் கண்கூடு. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி, காற்றுள்ள போது தூற்றினால் மணிபிடித்த தவசம் நேர்கீழேவிழும், அரைமணித் தவசம் அதன் வயிறாக விழும்; கருக்காய் அதற்கும் அப்பால் எட்டத்தில் போய் விழும். இவற்றைக் கண்ட பட்டறிவுடைய பொதுமக்களே, பொக்கென வா பொட்டென வா என்றும் பொக்கெனப் போ பொட்டெனப் போ என்றும் வழங்கு வாராயினர். பொக்கும் பொட்டும் காற்றில் பறப்பதுபோல விரைந்து வா என்பதே பொருளாம், இதனால் பொக்கென, பொட்டென என்பவை பொக்குப்போல பொட்டுப் போல என்னும் பொருளாதல் அறிக. பொக்கு பொட்டு என்பனவே, பதர், பதடி என வழங்கப்படுவனவாம். பட்டென வா; போ என்பவை குறிக்கும் பட்டு என்பது என்ன? பட்டு என்பது ஒளியையும், ஒலியையும் குறிக்கும் சொல். பட்டுப் பட்டென மின்வெட்டுகிறது! பட்டொளி செய்கிறது; பட்டென்று அறைந்தான் என்பவை வழக்கில் உள்ளவை. மின்வெட்டுதற்கும், ஓர் அறை அறைதற்கும் ஆகும் பொழுதில் விரைந்து வா என்பதே பட்டெனவா என்பதன் பொருளாம். இவ்வாறே படக்கென என்பது நரம்பு சுண்டுதலையும், கடக்கென என்பது ஒன்றை ஒடித்தலையும், கடக்கென என்பது வண்டி உருளை ஒருசிறு பள்ளத்தில் விழுந்து எழுதலையும், பொசுக் கென என்பது வெதுப்பும்நிலத்தில் அல்லது தீயில் இருந்து காலடி எடுத்து வைத்தலையும் பசக்கென என்பது வழுக்கி விடுதலையும், துண்னென என்பது ஒரு நடுக்கும் நடுக்கு தலையும் ஒப்பு வகையால் சுட்டுவனவாம். இவற்றில் வரும் என என்பதும் போல என்னும் பொருள் தருவதாம். இவ்வாறே செக்கெனச் சுற்றல் என்பது விரைவின்மையையும், தடம் மாறாமையையும் உவமையால் குறிப்பதாம். தொக்கென நினைத்தல் என்பது இளைப்பாக அல்லது இளப்பமாக எண்ணலாம். தொக்கு, அரைப்பட்டது. இனிச் சிக்கெனப் பிடித்தல் என்பது சிக்கென்று பிடித்தல் எனப்பொருள் தருவதாம். சிக்கென என்பது இறுக்கமாக எனப்பொருள்தரும் சொல். சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே என்பது மணிமொழி. சிக்குடை என்பது இறுக்கவுடை; சிக்கனம் என்பது இறுக்கமாகப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ளல். குழந்தைகள் கூந்தலைச் சீருறப் பேணுதல் இல்லாமையால் சிக்கு விழுதல் எவரும் அறிந்தது. அச்சிக்கே பலர்க்குச் சடையாக - சடைசடையாகக் காட்சி வழங்கும்! அச்சடைக் கற்றை பிரிக்க முடியாவண்ணம் சிக்கிப்போய்ச் செறிந்து போய்க் கிடக்கும். அதனைக் கொண்டே சிக்கென என்னும் வழக்கு எழுந்தது. சிக்கம் என்பதற்குக் குடுமி கூந்தல் என்னும் பொருள்களும் உறி என்னும் பொருளும் வந்தது இதனால்தான். சிக்கென என்பது போன்றது கச்சென என்பதும், கிச்சென என்பதும். கச்சு என்பது மகளிர் மார்புறை. அதனை இறுக்கிக் கட்டல் உண்மையால் கச்சு என்பது இறுக்குதல் பொருள் தருவதாயிற்று. கச்சு மட்டுமா இறுக்கிக்கட்டுவதாய் உள்ளது, கச்சையும் அப்படித்தானே! கச்சை கட்டுதல் என்பது கச்சையாம் இடைவாரில் இருந்து போர்ப்பொருளும் தருவதாயிற்று. சண்டைக்குப் போவார் உடை நெகிழாமல் இருந்தால்தானே இரு கைகளையும் பொருதல் ஒன்றுக்கே பயன்படுத்த முடியும். அதனால் போருக்குப்போவார் கச்சைக் கட்டுதலைக் கொண்டு கச்சை கட்டல் என்பது போரிடல், போருக்கு அழைத்தல் எனப் பொருளாயிற்று. கச்சை என்பது மெய்ம்மறை யாம் கவசத்திற்கும் ஆயது. மெய்ம்மறையாம் ஓடுடைய ஆமை கச்சன் எனப்பட்டது. ஏறுதழுவச் செல்வார் இடுப்பில் கட்டுவது கச்சை எனப்படுவது, அன்றி, ஏற்றின் கழுத்திலும் கச்சை கட்டல் உண்டு. அதனை அவிழ்ப்பார் அவ்வேற்றின் கொம்பில் சுற்றப்பட்ட துணி மணி என்பன வெல்லாம் அவர்க்கே உரியனவாம். ஏறுதழுவுதலும் ஒருவகைப் போர்தானே! இனிக் குழந்தையரும், தொழில் செய்வாரும் கச்சை கட்டுதல் உண்டு. அது கச்சனம் எனப்படும். கச்சு - அண்- அம் என்னும் முச்சொற்கட்டே கச்சணமாம். அண் என்பதும் கச்சுப் போலவே நெருக்குதல் இறுக்குல் பொருள்தரும் சொல். இடையில். அரைஞாணில் மிக இறுக்கிக்கட்டப்படும் தாய்ச் சீலையேக் கச்சணம் எனப்படும். அதனைப் பழநாளில் குறியிறை என்றனர். இறையாவது இறுக்கிக் கட்டப்படுவது குறி என்பது வெளிப்படை. அவ்விடத்தைக் கோவணம் கௌசணம் என்பவை பற்றிக் கொண்டுள. கச்சு என்பது கச்சணம் போல ஆடவர் இடையில் இறுக்கிக் கட்டும் இலங்கோடு என்பதையும் குறிக்கும். கச்சின் ஒலித்திரிபே கிச்சென வந்ததாம்! கிச்சென்று கட்டு என்று கயிற்றை இழுத்துக் கட்டுதலைக் குறிப்பர். குப்பென வியர்த்தல் என்பது ஒருசேர முளைக்கும் முளை போல வியர்த்தலாம். நாற்றங்காலில் விதை முளைத்தலையும், குப்பல், குப்பம், குப்பை என்னும் ஆட்சிகளையும் கருதுக. இனி வெள்ளென என்பது பொழுதுவிடிய, அல்லது பொழுது புறப்பட எனப் பொருள்தரும். இவ்வென என்பது என்றமைய என்றாக என்னும் பொருள் தரும். இவ்வாறே நச்செனத் தும்மல், நக்கென வைத்தல் என்பவை ஒலிக்குறிப்பு வழியே வருவன. இவ்வாறு என என்பது, உவமை உருபாகவும், என்று என்னும் பொருளதாகவும் வருதல் ஆய்வார் அறியத் தக்கதே. கண்ணென எனவரும் உவமையும், வருகென வருதலும் நாம் அறியாதனவோ? 17. ஒலிக் குறிப்பும் சொல் வடிவும் சொற்றன்மை நிரம்பிய ஒலி சொல்லும், நிரம்பா ஒலி, ஒலிக் குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவிநிலைப் பட்டவை ஒலிக் குறிப்புக்கள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள் என்பார் பாவாணர் (முதல் தாய்மொழி. பக்.5) எம்மொழியில் மிகுதியான ஒலிக்குறிப்புகள் சொல் வடிவுற்று விரிவடைந்துள்ளனவோ அம்மொழி இயற்கை மொழி என்றும் முந்தை முதன்மொழி, என்றும் கொள்ளப் படும். மாந்தன் அறிவுநிலை பேச்சறியாக் குழந்தையின் அறிவு நிலையில் இருந்த காலத்திலே தான் ஒலிக்குறிப்புகள் சொல் வடிவு பெறுதற்குரிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது எண்ணத் தக்கது. ஒலிக்குறிப்பு வழியே சொல்லாகி விரிவுற்றவை தமிழில் மிகப்பல. அவற்றுள் ஒன்று குர் என்னும் ஒலிக்குறிப்பாகும். குர் என்பது குரங்கின் வழியே மாந்தன் பெற்ற ஒலிக் குறிப்பு. குரங்குகள் அஞ்சினாலும் சினந்தாலும் களித்தாலும் சண்டையிட்டாலும் குர் குர் என்னும் ஒலியெழுப்புதல் எவரும் அறிந்ததே. ஒலியின் வன்மை மென்மை அடுக்கு ஆகியவை வேறுபட்டாலும் ஒலிப்பு அடியாகிய குர் மாறுவதில்லை. குர்குர் எனப் பல்கால் ஒலிக்கும் ஒலியைக் கேட்ட மாந்தன் அவ்வொலி எழுப்பிய உயிர்க்குக் குரங்கு எனப் பெயரிட்டான். குரங்கை நேரில் காணா இடத்திலும் அதனைக் குறிப்பதற்குக் குர் ஒலி பயன்பட்டது. அவ்வொலி பலரிடத்தும் பரவியது. குவா குவா என்பது வாத்தைக் குறிப்பதுபோல் குர்குர் என்பது குரங்கைக் குறித்துப் பின்னே அவ்வொலி வழியே குரங்கு என்னும் பெயர் உண்டாகிப் பொதுமக்கள் ஆட்சியிலும் புலமக்கள் ஆட்சியிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். இது சொல் வளர்ச்சியின் இயல்நெறியாம். F®¡F®>F®¡F>Fu¡F>Fu§F. ஒலிக் குறிப்பால் தோன்றிய குரங்கின் பெயர் வழியே அதன் வடிவு, இயல்பு, செயல் என்பவற்றால் பல சொற்கள் கிளைத்தன. பல்லாயிரம் ஆண்டுகளாக இருவகை வழக்குகளிலும் அவை இடம் பெற்று இந்நாள் வரைக்கும் பெரு வாழ்வு வாழ்ந்து வருகின்றன. மேலும் மேலும் பெருக்க முற்றும் வருகின்றன. மீன்களுள் சுறா என்பது ஒன்று; அச்சுறா வகையுள் ஒன்று குரங்கன் சுறா; இது வடிவால் பெற்ற பெயராம். குரங்கு மூஞ்சி என்பதும் அத்தகையதே. வண்டியில் பார்க்கட்டை (போல்) நிலத்தில் படா வண்ணம் வளைவாக தாங்கு கட்டை அமைப்பது வழக்கம், அதன் வடிவு கொண்டு குரங்குக் கட்டை எனப்படுதல் உழவர் நடைமுறை. மழை இறைச்சல் வீட்டில் வராமல் இருப்பதற்குப் பல கணிமேல் அடிக்கும் வளை தட்டிக்குக் குரங்குத் தாழ் என்பது பெயர். இனிக் கொக்கி மாட்டும் தாழ்ப்பாள் குரங்குத் தாழ்ப்பாள் என்று சொல்லப்படுவதும், குரங்குவாற் பூட்டு என ஒருவகைப் பூட்டு வழக்கில் இருப்பதும் குரங்கின் வடிவு வழிப்பட்டனவே. கூரையின் கீழே சுவர் மட்டத்தில் அமைக்கப்படும் பரணி, அல்லது பரணை அதன் வளைவு கருதிக் குரங்கு மச்சு எனப் படுதல் வழக்காகும். கேழ்வரகுக் கதிர் அமைப்பு குரங்கின் இறுக்கிய கைபோல் இருத்தலைக் கண்டவர் அதற்குக் குரக்கன் எனப் பெயர் தந்தனர். மரக்கிளையில் மறைந்திருந்து வழியே செல்வாரை வருத்திப் பறிப்பவரின் இயலும் செயலும் கருதிய சங்கச் சான்றோர், குரங்கன்ன புன்குறுங் கூளியர் எனக்கூறியமை கருதத்தக்கது. (புறம். 176) குரங்குக் கைபோல் நரம்பு சுண்டி இழுத்தல் குரக்கு வலி குரக்குக் கைவலி, குரக்கைவலி, குரக்கை எனப் பல வடிவுகளில் வழங்கப்படுதல் எவரும் அறிந்ததே. பிறை நிலாவின் வளைவு குரங்கின் வளைவை ஒருவர்க்கு நினைவூட்டியமையால் குரங்கி என்றொரு பெயரைப் பெற்றது. குரங்குதல் வளைதல் ஆயபின், வளைந்தது தாழ்தலும், தாழ்ந்தது குறுகுதலும் இயற்கை யாகலின் புலவர்கள் ஆட்சியில் இப்பொருள்கள் விரிந்தன. கவி என்னும் குரங்கின் பெயர் வழியே, கவித்தல், கவிப்பு, கவிழ்த்தல், கவிழ்தல், கவிகை எனப் பல சொற்கள் விரிந்தமை இவண் ஒப்பிட்டுக் காணத் தக்கதாம். இலைசெறிந்த மரக்கிளை தாழ்தல் இயற்கை, அதனைக் குறிக்கும் சிந்தாமணி இலைப்பொழில் குரங்கின (657) என்கிறது. குதிரையின் பிடரிமயிர் வளைந்து படிவது; ஓடுங்கால் எழுந்து ஆட்டம் செய்வது. இவ்வியல் கண்ட சங்கச் சான்றோர், குரங்குளைப் புரவி என்றும் (அகம். 376). குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி என்றும் (அகம்.4) கூறினர். குரங்கு உளை என்பது வளைந்த தலையாட்டம். கரும்புப் பூவைக் கண்ட ஒரு சான்றோர், மழையில் நனைந்த கொக்குப்போல் அஃது இருப்பதாகக் கண்டார். அவர்தம் நுண்ணிய பார்வை, கொக்கு என்ற உவமையளவில் அமையாமல் நனைந்த கொக்கு என்று தெளிந்து கூறியது. கரும்புப் பூவின் வளைந்த தோற்றம், கொக்கின் கவிழ்பார்வை, கவியாம் குரங்கின் கவிழ்வு இவற்றை ஒருங்கே எண்ணி உவகை யடையுமாறு வளைய என்பதற்குக் குரங்க என்னும் சொல்லை நயமாக ஆண்டுளார். கரும்பின் கணைக்கால் வான்பூ மாரியங் குருகின் ஈரிய குரங்க என்பது அது. (அகம். 235) வளைந்த ஒன்று குறுகியதாகும் எனக் கண்டோமே; அதனைக், குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான் என்னும் கம்பர் வாக்கு தெளிவிக்கும். (பாசப். 5) குரங்குப்பிடி கடும்பிடி; விடாப்பிடி; ஆதலால், விடாப் பிடி குரங்குப் பிடி எனப்படலாயிற்று. ஓட்டு முகட்டுக்குப் போடப்படும் காரை அமுக்குக்குக் குரங்குப் பட்டை என்பது ஒரு பெயர். பனைமட்டையின் அடிப்பகுதியாய் வளைந்திருக்கும் பிடிப்புப் பகுதிக்குக் குரங்கு மட்டை என்பது பெயர். குரங்கு செயலற்று ஓய்ந்திருத்தல் அரிது. ஆதலால், அதன் ஆட்டத்தை நினைத்துக் குரங்காட்டம் எனப்படலாயிற்று. குரங்காட்டிப் பிழைக்கும் பிழைப்புக் கூட வயிற்றுப் பாட்டால் ஆங்காங்கு நிகழ்தல் கண்கூடு. குரங்கு மனம் என்பது உளவியல் தேர்ச்சி. சேடு, சேட்டை என்பவை இளமைப் பொருள் தருவன; அவை ஏடு, ஏட்டை என்பவற்றின் வழிவந்தவை. சிறுவர் குறுகுறுப்பும் துறுதுறுப்பும் பெரியவர்கள் பார்வையில் சேட்டையாகத் தோன்றலாயிற்று. அச்சேட்டையையும் குரங்குச் சேட்டை தனக்காக்கிக் கொண்டது. இனிக் குரடு, கொரடி, குரண்டி, கொரண்டி (ஒருவகை முட்செடி) என்பவற்றின் பெயரும் குரங்கின் வளைவுப் பொருளால் ஏற்பட்ட செய்பொருட் பெயரும் இயற்செடிப் பெயருமாம். குறட்டை என்பதோ எனின் அப்பெயர்க் கொடையின் மூலம் அக்குறட்டையேயாம்! குறட்டை விடுபவர்க்குத் தம் குறட்டை ஒலி தெரியாது! ஆனால், பிறர் விடும் குறட்டை உருட்டி எடுத்தலை எவரே அறியார்? ஒலிக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து, அதன் வழியே வளர்ந்து - செழித்த - சொற்களையெல்லாம் பட்டியிட்டுக் காட்டல், மொழியின் இயற்கையையும் முன்மையையும் நிலை நாட்டுதற்கு அசைக்க முடியாச் சான்றாகத் திகழும் என்பதைஇக் குர் எனும் ஒலிக் குறிப்பும் காட்டுதல் உறுதியாம்.  18. ஒன்றில் இருந்து ஒன்று தமிழ் பழமைக்குப் பழமையாம் மொழி; அதேபோல் புதுமைக்குப் புதுமையாம் மொழி; பழமையில் இருந்து புதுமை பூத்துப் பொலிவதற்காம் சொல்வளப் - பொருள் வளப் - பேறுகளையும் உடைய மொழி. நீர்வாழ்வன என்னும் ஆறெழுத்துச் சொல்லை ஒரு சித்தர் நீரி என ஈரெழுத்துச் சொல்லாக ஆக்கிப் படைத்து வழிகாட்டினார் என்றால், உடனே ஊர்வனவற்றை ஏன், ஊரி என வழங்கக் கூடாது என்னும் உணர்வை ஊட்டுவது தமிழ்வளம்! அந்த உணர்வில் அழுந்தும் போதிலே, அகடூரி என்னும் சொல் தோன்றி, நமக்கு முந்தைப் பாட்டன் ஒருவன் அச் சொற்கோட்டையைப் பிடித்து வெற்றி கொண்டிருப்பதை விளம்பி, நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் தமிழ்வளம்! அகடு ஊரி - வயிற்றால் ஊர்ந்து செல்வதாம் பாம்பு; ஊரி - ஊர்ந்து செல்வது ; அகடு - வயிறு. ஊரி அகட்டோடு ஒட்டிக் கொண்டது மட்டுமோ? தனியே நின்று சங்கு, முகில், குழந்தை என்னும் பொருளையும் தரும். ஊரும் சங்கும், படரும் முகிலும், தவழும் குழந்தையும் ஊரி எனத் தக்கவை தாமே! ஊரி புல்லுருவியையும் குறிக்கும் உருவி என்பது ஊரியாகிவிட்டது. ஒரு மரத்தின் நீரையும் உரத்தையும் உருவி உண்ணும் - வளரும் - அதனை ஊரி என்றது தகும் தானே! இனிக் கல்வி, ஈறு குன்றிக் கல்லாக நின்று, ஊரியுடன் ஒட்டிப் புதுவரவுக் கல்லூரியாகப் பெயர் காட்டித் திகழ்வது நினைவில் எழுமன்றோ? உடனே அவ்வெழுச்சியின் ஊடே சிந்தாமணி, “fy¤j‰ fhy« fšÿÇ¡ bfh£oyh..., கற்குங் காட்சியைக் கண் முன் காட்டி. நம் புது நோக்கை முது நோக்காகிக் குறுமுறுவல் கொள்ளல் விளங்குகின்றது. ஊரி நிற்க வேறொரு சொல்லைக் காணலாம். பேருந்து, சரக்குந்து, மகிழ்வுந்து, திறவையுந்து, மிதியுந்து, துள்ளுந்து என உந்து வகைகள் பல உலாவரக் காணும் நாம், அவற்றின் காலுருள்கள் (Tyres) பழுதுற்றால், உடனே பயன் கொள்வதற்காகப் பதிலிகளோடு அவை செல்வதையும் காண்கிறோம். பதிலிகளாம் அக்காலுருள்களுக்கு எப்பெயர் வைக்கலாம் என நாம் எண்ணுங்கால் புறப்பாட்டுப் புன்முறுவல் காட்டுகின்றது ஒரு புறப்பாட்டு: எருது இளையது; நுகக்கோலில் புதுவதாகப் பூட்டப் பட்டது; மேடறியாமல் பள்ளமறியாமல் இழுக்கக் கூடியது; வண்டியிலோ பாரம் மிக்குளது! வண்டியின் நிலை, என்னாகும்? வண்டியின் அச்சு முறிந்தால் வண்டியோட்டம் என்னாகும்? அச்சாணி இல்லா வண்டி முச்சாணும் ஓடாதே! அச்சிலா வண்டி அரைவிரலம் (அரை அங்குலம்) கூட அசையாதே! கடல் உப்பு அள்ளிக் கல்நாடு (மலைநாடு) செல்லும் வண்டி உரிய இடத்தை அடைய வேண்டுமே! இவற்றை எண்ணாமல் உப்பு வணிகர் புறப்பட முடியாதே! உமணராம் உப்பு வணிகர் இவற்றை எண்ணிப் பார்த்தனர். வண்டியின் பார்தாங்கும் நெடிய கீழ் மரத்தின் கீழே ஓர் அச்சினைக் கட்டிக் கொண்டு சென்றனர். அவ்வச்சை எப்பெயரிட்டு வழங்கினர்? சேம அச்சு என்பது அவர்களும் அவர்கள் தந்தையாரும் அவர்கள் முந்தையரும் வழங்கிய பெயர். சேமம் - பாதுகாப்பு; பாதுகாப்புக்காகச் சேமித்து வைக்கப்பட்ட அச்சு. உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு என்பது புறநானூற்றுத் தொடர், ஔவைப் பாட்டி அருளிய அருமைப் பாட்டில் இடம் பெற்றுள்ளது இது (102). பாட்டி வைத்த பழந்தேட்டு, வழிப்பேரர் வளமாகத் திகழ்வது போல் சேமம் பெருகிவருகின்றது. எப்படி? நாம் மேலே சுட்டிய பேருந்து முதலியவற்றின் பதிலியாம் உருள்களுக்குச் சேம உருள் (Stepney wheel) என்னும் மொழி யாக்கம் உதவுகின்றது. பாதுகாப்புக் காவல் படையை (Reserves) சேமப்படை எனவும், அவர்கள் குடியிருப்பைச் சேமப்படைக் குடியிருப்பு எனவும் வழங்க உதவுகின்றது. ஓஓ! ஔவையாரை நாம் இவ்வளவு பயன்படுத்திக் கொண்டுள்ளோமோ என்று வியப்புறும் போதே, மின்னற் கீற்றுகள் பலப்பல பளிச்சிட்டு நம் கண்களைப் பூத்துப் போகச் செய்கின்றன. சேமவில்லைச் சுட்டுகின்றது சிலம்பு (2.42). ஒரு பெருங்கரும்புவில் இரு கரும்புருவமாக என்பதற்குச் சேம வில்லையும் கூட்டி என்றார் அடியார்க்கு நல்லார். காமன் சிலை இரண்டு எனவரும் சிந்தாமணிக்குக் காமன் தன் கையில் வில்லையும் சேமவில்லையும் என்றார் நச்சினார்க்கினியர். (2065). காமனார் சேமவில் என்னும் தக்கயாகப் பரணிக்குக் காமனாருடைய சேமவில்லை ஒன்றுக்கு இரண்டுள்ளன என்று சேமப்பெருக்கைக் காட்டினார் அதன் உரையாசிரியர் (23). சேமத்தேரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார் கம்பர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் என்பது அது. தேருடன் மட்டுமோ நின்றார் கம்பர்? சேமத்தார் வில் (பால 1187) சேமத்தின் சிலை (உயுத். 2301) சேமப்படை (உயுத் 1323. சேமவில் (ஆர. 922) சேம வெம்படை (உயுத். 1323) என்பனவற்றையும் நிறுத்துகின்றார். சேமம் பதிலியாம் பொருள் அளவினும் விரிந்து, பாதுகாப்பு என்னும் பொருள் நிலைக்கு வளர்வதையும் நாம் காண்கின்றோம். அயலார் பார்க்கக் கூடாமல் அமைத்துக் காக்கும் திரையைச் சேமத்திரை என்கிறது பரிபாட்டு! கன்னிப்பெண்டிர்க்குக் காவலாளராய் அமைந்து, அக்காவற் கடமையைக் கருத்துடன் செய்யும், உரிமைப் பாட்டியரைச் சேம மடநடைப் பாட்டியர் என்கிறது அதே பரிபாட்டு (10). காவல் வீரர் கடமை புரிந்து பின்னர் ஓய்வு கொண்ட பொழுதைச் சேமம் மடிந்த பொழுது எனக் காட்டுகிறது குறிஞ்சிப்பாட்டு (156). பாடிவீட்டுக் காவல் கொண்டிருப்பினும்கூட யாமப் பொழுதில் உறங்க வேண்டும். உடல் நலக் கட்டாயத்தைப் பிற்கால ஔவையார் பாட்டு சேமம் புகினும் யாமத்துறங்கு என்கின்றது. இவற்றையெல்லாம் விஞ்சக் கொடிகட்டிப் பறக்கின்றார். குறுந்தொகைப் பாட்டர் ஒருவர். பனி நாளில் குளிர்நீர் பருக எவரே விரும்புவர்? வெதுவெதுப்பாம் நீர் பருக எவரே விரும்பார்? வெதிம்பிய நீரை வெதுப்பம் குறையாமல் போற்றி வைத்துக் கொள்ளவும், வேண்டும் போது அவ்வெதுப்புடனே பருகவும் வாய்ப்பாக ஒரு கலம் இருந்தால் எவ்வளவு வாய்ப்பாக இருக்கும்? Thermosflask- இன் பயன் கொள்ளும் நமக்கு அதனைக் கண்டறியாப் பழங்கால நிலமை இரங்கத் தக்கதாகவன்றோ தோன்றுகின்றது! ஆனால் குறுந்தொகையார் நம் இரங்கத் தக்க நிலைமையை உண்ண கையும் வெண்ணகையும் ஒருங்கு காட்டிச் சுட்டுகின்றார். Thermosflask என்னும் ஒரு கலத்தைப் படைத்து எவரோ தந்தார், அதற்கு ஒரு சொல்லையும் நீங்கள் படைத்தீர்கள் இல்லையே! உங்களால் முடியவில்லை என்றாலும் யான் படைத்து வைத்துள்ள சொல்லை எடுத்துப் பயன் கொள்ளவும் முடியவில்லையோ என்கிறாரே! பனி நாளிலும் லிரும்பத்தக்க வெதும்பிய தெளிந்த நீரைச் சேமித்து வைக்கும் செப்பு யாது, சேமச்செப்பு அது வெதுப்பம் வெளியே போய்விடாமல் சேமித்து வைக்கும் செப்பு ஆதலால் அப்பெயர் என்பதை. அற்சிர வெய்ய வெப்பத் தெண்ணீர் சேமச் செப்பு (277) என்கிறார். சேமப்பாதுகாப்பு எத்தனை சேமிப்புகளுக்கு இடமாகி யுள்ளது! வைப்பகங்களில் (Bank) வாடகைக்குக் கிடைக்கும் பாது காப்புப்பெட்டகம் (Safe) சேமப்பெட்டகம் ஆகலாமே! Saving Bank - சேமப்பெட்டகம் ஆகலாமே! Saving Bank Account - சேமக் கணக்கு ஆகலாமே! Ware House - சேமக்கிடங்கு ஆகலாமே! பாதுகாப்பின்றிச் சேமிப்பு நிலைக்குமா? நீடுமா? நலக் கேடின்றி அமையுமா? ஆகலின், சேமப்பாதுகாப்பு நலப்பாடும் ஆயிற்று; சேமம் சேமம் அறிய ஆவல் என அஞ்சல் வினவலும், சேமம்தானே என நேர்வினவலும் ஆயிற்று. சேமம் சேமிப்பு என்பன எத்தனை எத்தனை கலைச் சொல்லாக்கம் கொள்ள வாய்த்துள்ளன! வாய்க்கவும் உள்ளன! ஓன்றில் இருந்து ஒன்று பெருகுதல் தானே இயக்கச் சான்று! உயிர்ப்புச் சான்று!. ஒன்று ஒன்றாகக் கூடித்தானே கோடியும் கோடான கோடியும்! ஒன்று கொடுத்தாலும், கோடி என மகிழ்வது. உடைக்கு மட்டுமன்று, சொல்லுக்கும் ஆம்.  19. கட்டுரை முன்னுரை ‘f£Liu’ v‹gJ X® mUikahd brhš; mJ Äf¥ bghU£ br¿îila gH§ brhšyhF«., சிலப்பதிகாரத்தில் கட்டுரை, உரைபெறுகட்டுரை, கட்டுரை காதை என்னும் நூலின் உட்பிரிவுகள் அமைந்து உள்ளன. கட்டுரை என்னும் சொல்லும் மிகுதியாக எடுத் தாளப்பட்டுள்ளது. அதற்குப் பழைய உரையாசிரியர்கள் பொருள் பொதிந்த சொல் உறுதியுடைய சொல் எனப் பொருள் கூறியுள்ளனர். கட்டுமானம் நாம் ஒரு வீடு கட்டத் திட்டமிட்டால் முதற்கண் கட்டு மானப்படம் வரைவோம்; அதன் பின் அதில் கண்டவாறு கட்டடம் எழுப்புவோம். அதுபோலவே கட்டுரையும் திட்ட மிட்டு வரையறைப்படுத்திக் கொண்டு எழுதப்பட வேண்டும். அப்பொழுதுதான் அதன் அமைப்பும், பொருளும் தெளிவும் சிறப்பாக அமையும். கட்டழகு சிலர் உடலைப் பார்த்ததும் கட்டான உடல் என்கிறோம். ஏன்? அளவுக்கு விஞ்சி மெலிவு இல்லாமலோ, ஊதிப் போகாமலோ உரிய அளவில் பொருத்தமாக அமைந்த நல்ல உடலையே கட்டுடல் என்றும், அத்தகையவரையே கட்டழகன் கட்டழகி என்றும் கூறுகிறோம். அதற்கு ஏற்பவே கட்டுரையும் அளவாலும் அமைப்பாலும் கட்டழகு உடையதாக விளங்க வேண்டும். கட்டுவிரிதல் மொட்டு அல்லது முகையாக இருக்கும் பூவில் மணமும் தேனும் உண்டு; எனினும், அவை அவ்வளவாக வெளிப்பட்டுப் பரவுவது இல்லை; ஆனால், அது கட்டுவிரிந்து விட்டால் எங்கேயோ திரியும் வண்டும் அங்கே வந்து மொய்க்க ஆரம் பிக்கின்றது. அந்தத் தேனிலும், நறுமணத்திலும் தன்னை மறந்து இன்பமடைகின்றது. அதுபோல், உள்ளத்தில் அடங்கிக் கிடக்கும் பொருளை வெளிப்படுத்திக் கற்பவரை வயப் படுத்துவதே கட்டுரையின் வெற்றிக்கு அடையாளமாகும். கட்டுச்சோறு கட்டுச் சோறும் கற்றவித்தையும் என்பது ஒரு பழமொழி. கட்டுச்சோற்றைப் பொதி சோறு என்பர். பொதிசோறு துணி முதலியவற்றால் பொதிந்து வைக்கப்பட்ட சோறாக மட்டு மில்லாமல் சுவை பொதிந்தும், கெட்டுப்போகாத தன்மை பொதிந்தும் அமைந்த சோறாகும். அதுபோல் கட்டுரையும் நல்ல நடையால் பொதியப்பெற்று உயர்ந்த பொருள் பொதிந்ததாக விளங்க வேண்டும். கட்டு உரை கட்டுரை என்னும் சொல்லை இரண்டாகப் பிரித்தால் கட்டு உரை என இரண்டு ஏவல்கள் உண்டாகும். அவ் ஏவலை ஏற்றுத் திட்டமிட்டுக் கட்டி உரைக்கும் உரையே கட்டுரையாய்ச் சிறப்புறும். இட்டுக்கட்டுதல் கட்டுரை என்பது இட்டுக் கட்டிச் சொல்லும் உரை எனவும் பொருள் தருவதாயிற்று. பொய்யுரை புனைந்துரை ஆகியவையும் கட்டுரை எனவே சொல்லப்படும். எனினும் அவையும் கற்பவரையும் கேட்பவரையும் வயப்படுத்துவன வாகவே அமைந்தால் தான் நிலைபெறுகின்றன என்பதை மறக்கக் கூடாது. கட்டமைப்பு கட்டுரை, சிறப்பு அடைவதற்கு உவமை, பழமொழி, மரபுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும். நாம் கூறும் கருத்தை வலியுறுத்தத்தக்க மேற்கோள்களைத் தக்க இடத்தில் செய்யுளாகவும் உரைநடையாகவும் எடுத்துக் காட்டுதல் வேண்டும். நிறுத்தக் குறிகளைத் தவறாது இடுதல் வேண்டும். கையெழுத்து அழகோ கற்பவர்க்குக் காட்சியின்பம் தருவதாய் முத்துக் கோத்தால் போல விளங்க வேண்டும். கட்டு திட்டம் கட்டுரையைப் பார்த்தவுடனேயே, இன்னபொருள் பற்றி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முன்னுரையும் இக்கட்டுரையில் அமைந்துள்ள பொருள் முடிவு இதுவே என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முடிவுரையும் கொண்டிருத்தல் வேண்டும். இடையே கூறப்படும் செய்திகளும் ஏறத்தாழ ஒத்த அளவில் பத்திப் பிரிவுடன் விளங்குதல் வேண்டும். முடிவுரை இவற்றைப் போற்றி எழுதும் புலமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்வது, தேர்வில் மதிப்பெண் பெருகுவதற்கு வாய்ப்பாவதுடன் பின்னாளிலும் மதிப்புமிக்க எழுத்தாள ராவதற்கும் வகை செய்யும் என்பது உறுதி.  20. கல்லும் கலையும் கல் என்பது ஓர் ஒலிக்குறிப்பாகும். இயற்கையினிடை வாழ்ந்து இன்பங்கண்ட ஆய்வு நலமிக்க முன்னோர் ஆர வாரத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் கல் என்னும் ஒலிக்குறிப்பைப் பயன்படுத்தியுள்ளனர். படையணிச் செலவும், பாசறை நிலனும், பேரூர் மறுகும், சீறூர் மன்றமும், கார்க்கடல் அலையும், கடிப்பிணை முரசும், நீர்வழி தூம்பும், கார் - செறிவானும் - இன்ன தன்மைய பலவும் கல் என்னும் ஆரவாரத்தை உடையன என்பதை இலக்கியங் களில் பெருகக் காண்கின்றோம். கல்லென் கடல்கண்டன்ன கண்ணகன் தாளை புறம் 351 கல்லென் பாசறை ... ...... 301 கல்லென் பேரூர்... சிலம்பு 12:12 கல்லென் சீறூர் ..... ஐங்குறு 382 கல்லென் கடற்றிரை....... சீவக 097 கல்லென் முரசம்........ 1063 கல்லென் தூம்பு... . 1280. கல்லெனத் துவன்றிக் கண்கிளர்ந்ததுபோல் பெருங் 1:55:113. எனினும், படை முதலாய இவற்றின் ஒலி ஒரு வழியே கல்லென ஒலிப்பதில்லை. பலதிறப்பாடுற்றதாகும். இருப்பினும் தொல்பெரும் இலக்கியங்கள் கல்லெனும் ஒலிக் குறிப்பைப் பயன்படுத்துவதிலிருந்து அதற்கோர் தகவுடைய காரணம் இருந்தேயாகவேண்டும் என்பது உண்மையாகின்றது. உலகத் தோற்றத்தே முதலாவதாக விண்ணும், அதன் பின் முறை முறையே வளியும், தீயும், நீரும், மண்ணும் தோன்றின என்பது ஆய்வியல் முடிவு. இறுதியான மண்ணின் தோற்றத்திலும் கல் தோன்றிய பின்னரே மணலும் மண்ணும் தோன்றின என்பதும் தெளிவு. ஆதலால் கல்லே நிலத்தோற்றத்தின் தாய் எனலாம். இது இவ்வாறாக, தமிழ்க்குடியின் தொன்மை கூறவந்த ஆன்றோருள் ஒருவர், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எனக் கூறினார். இக்கூற்றுள் தமிழ்க் குடியின் தொன்மையே அன்றி நிலத்தோற்றத்தில் முறைமையும் தெளிவாக்கப் படுகின்றது. கல் தோன்றிவிட்டது; ஆனால் மண் தோன்றவில்லை என்பதனால் கல்லின்பின் மண் தோன்றியது எனப் படைப்பு முறைமையும் தெளிவு ஆக்கப்படுகின்றது. ஆனால் இங்கே காட்டப்பெற்ற கல் (மலை) தோற்றமுற்று விட்டாலும் கல் என்னும் பெயருடன் தோன்றியிருக்க முடியாது. ஒரு பொருள், தோன்றிய பின்னரே அதன் இயல்புக்கு ஏற்பப் பெயரமைப்பதும், அமைவதும் இயற்கை. அதுவே வளமிக்க மொழியும், ஆய்வுநலமிக்க அறிஞரும் கொள்ளும் நெறி. கல்தோன்றி, மண்தோன்றி, உயிர்தோன்றி, உணர்வுடைய மனிதன் தோன்றி, வாழத்தொடங்கி, உலகத்தே உருண்டு, புரண்டு, தவழ்ந்து, தாவி நடந்து பழகியும், ஆட்டி, அசைத்து, நீட்டிக் குவித்துத் தசைப் பயிற்சி செய்தும், குழறி, உளறி, சிரித்து, உரப்பி, ஒலித்துக் கருத்து வெளியிட்டும் வாழ்ந்த பின்னரே மொழியுணர்வு தோன்றியிருக்கக் கூடும். இவ்வாறு முதற்கண் தோற்றமுற்ற சொற்களும் எளிய ஓசையும், இயற்கை அமைதியும், பல்பொழுதும் கேட்டறிந்த வாய்ப்பும் உடையதாக இருந்தே தோன்றியிருக்க முடியும். இவற்றையெல்லாம் நோக்குங்கால் மாந்தன் கருத்தைக் கவர்ந்த சொற்களுள் கல்லும் ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். அன்றியும் அவன் கண்ட முதன்மைச் சொற்கள் சிலவற்றுள் ஒன்றாகவும் நின்று இருக்கலாம். கல் தோன்றிவிட்டது; மண்ணும் தோன்றிவிட்டது; உயிரும் பிறவும் தோன்றிவிட்டன. நீர் கொண்டு நெடுவான் பரவிய முகில் கடனாற்ற, இயற்கையன்னை மெய்குளிர்ந்து வண்ணப் போர்வை போர்த்து வனப்பு மிக்க கன்னியாக விளங்கினாள். வானைத்தொடும் மலையும், வானத்து மீனை நிகர்க்கும் சுனையும் பற்பல இடங்களில் இலங்கின,. இவற்றைக் கண்டு உள்ளம் பறிகொடுத்த மொழிவளம் பெறாத முதுகுடிகள் தங்களுக்குள் சுவைத்துத் திளைத்தனர். முட்டி முடுகித் தத்தித் தாவி ஆரவாரத்தோடு எழும் ஒலியில் செவியையும், காட்சியில் உள்ளத்தையும் தந்து நின்றனர். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்து பல வழிகளிலும் பொறிபுலன்களைச் செலுத்தினர். அருவி வீழும் அழகும் ஒலியும் அவர்கள் புறக்கண்ணையும் புறச்செவியையும் விட்டு அகலினும், அகக்கண்ணையும், அகச் செவியையும் விட்டு அகல்வதாக இல்லை. அவ்வருவியின் ஒலியிலே ஒன்றிய ஒரு பெருமகன் காதில் அவ்வொலி கல் என ஒலித்திருக்கவேண்டும். கல் என ஒலித்த அவ்வொலியாலேயே அவன் அருவியைக் குறிப்பதாக மாறியிருக்கக் கூடும். அதன் பின்னரே மலைக்கும் காரணம் கருதிய பெயராய் வழிவழி வளர்ந்திருக்க வேண்டும். காகா என்னும் ஒலியுடைய பறவையைக் காக்கை என்பதும், கூ கூ என்னும் ஒலியுடைய பறவையைக் கூகை என்பதும் இன்னும் வழக்கில் உளவாதலைக் காண்கின்றோம் இதுபோன்றே, கல்லெனும் ஒலியுடன் வீழும் அருவியும், அருவி சூழும் இடமும் கல்லாகக் காரணம் குறிக்கப்பெற்றது தெளிவாகும். மொழி வளமுற்ற காலத்தே கல்லலைத் தொழுகும் கல்லென அறையும் ஒல்லென் கம்பலை கல்லெனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி என இன்னவாறு கூறியோரும் பறையும் முரசும்போல முழக்கும் அருவி என்றும், அருவி தாலாட்டக் கண் துயிலும் யானை என்றும், மயிலாட்டத்திற்கு அருவி பறையடிக்கின்றது என்றும் விவரித்தோரும் உளர். கல் எனத் தத்தி நீர் விழும் மதகுக் கலிங்கில், கலிங்கு என்ற பெயர்கள் உண்மை கண்கூடு. கலிங்கில் பெயரால், பெயர்பெற்ற ஊர்களும் உண்டு. கலிங்கப்பட்டி, கலிங்கல் மேட்டுப்பட்டி என்பன அவற்றுள் சில. கல்லெனும் ஒருமை ஒலி காலம் செல்லச் செல்லப் பல் வேறுபட்ட ஒலிகளைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் பெற லாயிற்று. அது போழ்து, ஒரு சிறு மாற்றமும் பெற்றது, கல் எனும் ஒலிக்குறிப்பு, கலியாயிற்று. மிகுதி, ஆரவாரம், துள்ளல் ஆகிய பொருள்களிலெல்லாம் பின்னே வழங்குமாறான பெருமிதச் சொல்லாகக் கலிநின்றது. இதனால் கலிகெழுகடவுள், கலி கெழு கடல், கலி கெழுபாக்கம் கலி கெழுமறுகு கலி கேழ் ஊர், கலி கெழுமீமிசை என மிகு வொலியைக் குறிப்பதும் காண்க. முதல் மனிதன் இயற்கையில் அமைந்த மலைப்பிளவு குகைகளுக்கிடையே தன் வாழ்வைத் தொடங்கினான். எனினும் கொடு விலங்குகளும் பருவ வேற்றுமைகளும் அவனை வாளாவிருக்க விட்டு வைக்கவில்லை. சற்றே அவனைத் தூண்டிற்று. கல்லை உடைக்கவும், அதனைக் கூர்மையாக்கவும் பாறைகளைக் குடையவும் முயன்று வெற்றியும் கண்டான். பருவகாலத்தின் கொடுமையை அழிக்கக் கண்ட கல்வீடும். கடுவிலங்கை அழிக்கக் கண்ட கற்கருவியும் அவ்வளவோடு விடாமையால் ஓய்வு ஒழிவு நேரங்களிலெல்லாம், கல்லில் சில பல உருவங்களைத் தீட்டி உவக்கும் நிலைக்கு வளர்ந்தான். இக்காலத்தும் அவன் அருவியை மறந்தான் இல்லை; அதன் ஒலியை மறந்தான் இல்லை. கல்லினின்று செதுக்கியும், துளைத்தும் ஆக்கிய அவன் தொழிலைக் கல் என்பதன் வழியாகக் கலை என்பதாலேயே குறித்தான் கல்லின் விளைவே கலையாயிற்று. கல் தொழிலுக்கு மட்டும் கலை என்று பெயர்வைத்த அவன் வழி வழி வந்த மாந்தர், அழகும் கவர்ச்சியும் தரும் அனைத்தையும் கலை என்ற பெயராலேயே அழைக்கலாயினர். கல்லிலிருந்து கலைகண்ட மாந்தன் தோண்டிச் செய்யும் அனைத்துப் பொருளையும் கலைப் பொருளாகக் கருதினான். இதனாலேதான் அவன் ஆடையாகப் பயன்படுத்திய மரத்தோலும் விலங்குத்தோலும் கலை என்ற பெயரால் குறிக்கப் பெற்றன. ஆனால் இவ்வளவு மாற்றங்களைப் பெறுமுன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கக்கூடும். அதனால் மனிதன் அறிவும் உணர்வும் பெருகி மொழி வளமும் பெற்று உண்பதும், உடுப்பதும், உணர்வதும் அன்றி வேறு பல தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஆட்படலானான். அதன் விளைவாக அவன் சில பல பொருள்களைத் தோற்றுவிக்க முனைந்தான். இவையும் கலையழகு பெறச் செய்யப்படலாயின. இதனால் கலையழகு தவழ அவன் கண்ட பொருள்களைக் கலம் என்ற பெயரால் அழைத்தான். அவையே உண்கலம், அணிகலம், படைக்கலம், இவை வனைகலம், புனைகலம், தொடுகலம் என்றும் வழங்கப் பெற்றன. கல்லெனும் ஒலி வளர்ந்து பெருகிய வகை இவ்வாறாக, இன்று கல்வி என்பதும் தோண்டி எடுப்பது என்ற பொருளொடு தான் வழங்கப் பெறுகின்றது. கல் என்னும் தோண்டுதல் பொருளில் வழங்கிய கலைமட்டும் இப்பொழுது அழகு மல்கி, உணர்வைத் தூண்டி, அறிவை வளர்த்துச் செம்மை தரும் அத்துணை வனப்புகளுக்கும் பொதுமைப் பெயராக மாறி விட்டது. மரத்தினால் அமைந்த அளவைக் கருவி தகடாக இன்று மாறி நின்றும் மரக்கால் என்னும் பெயரே பெற்று வருவது போல் எள் நெய்யான எண்ணெய் என்னும் சொல் பொதுமையாகிக் கடலை எண்ணெய், தேங்காயெண்ணெய் என்றானாற் போல் கலையின் பொருளும் இயலும் மாறிக் கொண்டாலும் பெயர் மட்டும் மாற்றமுறாது நிற்பது வியப்புக்குரியதே.  21. கவி கவி? என்பது குனி, கவிழ் என்னும் பொருள் தரும் ஏவற் சொல். அது தலை கவிந்து அல்லது கவிழ்ந்து இருக்கும் குரங்குக்குப் பெயர்ச் சொல்லாயும் அமையும். களவு செய்து பிடிபட்டவன் ஊர்மன்றில் நிறுத்தப் பட்ட போதில் தலை கவிழ்ந்து நின்று காலால் நிலங்கிளைத்தலைக் குறிக்கிறது சங்கப்பாட்டு. களவு காதலன் தலைவியை நோக்கினான்; அவள் நிலம் நோக்கினாள். அவள் கண்ணுக்கு ஒப்பாகேன் என்று குவளை நாணிக் கவிழ்ந்தது. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று? என்பது திருக்குறள் (1114) கலங்கவிழ்தலும் கலயங்கவிழ்தலும் நாம் அறிந்தவை. அரசுகள் கவிழ்தலை இதழ்கள் வழியே எவரும் அறிவோம்! பூனைக்காலி என்னும் செடிக்கு கவி என்பதொரு பெயர். அதன் பூ கவிழ்ந்திருப்பதால் பெற்ற பெயர். கவிழ் தும்பை என்னும் செடிப் பெயரும் கவியும் பூவால் பெற்றதே. கண்ணேரில் எதிர் வெளிச்சம் தாக்குகிறது. அதனைக் கண்டு ஒதுங்கவேண்டும். இயல்பாக என்ன செய்கிறோம்? நெற்றிப்புருவத்தின் மேல் கையைக் கவித்துக் கண்ணை இடுக்கிப் பார்க்கிறோம். இப்பார்வையைச் சங்கப்பாடல் கவி கண்நோக்கு என்கிறது (புறம் 3). முகில் செறிந்து மழை பொழியும் நிலையில் தாழ்வதை வானம் கவிந்ததாகக் கூறுதல் வழக்கு. மேகங்கவிகின்றது, மழை உடனே வரும் என்பதைக் கருதுக. கவிதல் என்பது கவிகம் எனவும் கூறப்படும். குதிரையின் வாயைச் சுற்றிக் கவிந்துள்ள கடிவாளத்திற்குக் கவிகம் என்பது பெயர். குடைவமைந்த பொருள் குடை எனப்படும். குடைதல் தொழில் பழமையானது. குடைவரை கோயில்கள் அதற்குச் சான்று. இந்நாளில் தொடரிசெல்வதற்குத் தக்கவாறு, குடைவுகள் மலைகளில் உண்டாக்கப்படுகின்றன. கோலார் தங்கவயல் வளம் குடைவு வளமே. சுற்றிச் சுற்றி நீரில் நீந்தியாடுதல் குடைதல் எனப்படும். குடைவு என்பதும் கவிவு என்பதும் ஒரு பொருளதாதல் அறிக. குடைதல் வளைவு வட்டம் ஆகிய பொருள்களைத் தருத லால், நடுவுயர்ந்து சூழவும் தாழ்ந்து வளைந்துள்ள குடைக்குக் கவிகை என்பது பெயராயிற்று. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு என்றார் திருவள்ளுவர். அதிவீரராமபாண்டியன் அரண்மனை யில் குடைபிடிக்கும் ஏவலரும் பாவலராகத் திகழ்ந்தனராம். அதனால் கவிகை ஏந்தியவரும் கவிகையேந்தினர் என்றொரு வழக்கு மொழி எழுந்தது. கவித்தல் என்பது வட்டவடிவப் பொருளின் வாய்ப்புறம் தலைகீழாக வைத்தலாகும். முடிசூட்டுதலும் கவித்தலேயாம். அது முடிகவித்தல் எனப்படும். இருகை விரல்களையும் மூடி வைத்தலை இருகையும் கவிந்தமாக்கி என்னும் கந்தபுராணம் (காவிரி. 40). கவித்தம் என்பது கூத்தின் கை வகையுள் ஒன்றுமாம். கவிப்பு என்பதும் தலையில் கவிக்கும் முடியைக் குறிக்கும் குடையைக் குறித்தலும் உண்டு. வணிகர் பெற்ற சிறப்புப் பட்டங்களுள் கவிப்பர் என்பது ஒன்று. அரசரால் ஒருவகை முடி கவிக்கப்பட்ட சிறப்பால் பெற்ற பெயர் அதுவாகும். கொடுக்கும் கை கவிதல் கண்கூடு. அது வானம் கவிந்து பொழிவது போல்வது ஆதலால் கொடைக் கையை வானம் வழங்குதலோடு ஒப்பிட்டுக் காரினை வென்ற கவி கையான் என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை (9:29) கவிச்சி அல்லது கவிழ்ச்சி என்பது சுற்றிச் சுற்றி அல்லது சுழன்று சுழன்று ஓரிடத்து அல்லது ஒரு பொருளில் அடிக்கும் நாற்றத்தைக் குறிக்கும். இதனைக் கவிச்சியடித்தல் எனப் பல வடிவுகளில் வழங்குகின்றனர். இவற்றை நோக்கக் கவி என்னும் சொல்லின் வடிவும் பொருளும் தெளிவாம். அது வளர்ந்து பல சொல்லாய் விரிந்த நிலையும் விளங்கும். ஆகவே குரங்கைக் குறிக்கும் கவி என்னும் சொல் தமிழ்ச் சொல்லே என்பதும், அது கபி என்னும் வடசொல் வழிவந்ததன்று என்பதும் வெளிப்படையாம். இனிக் கவிதை என்பது எம்மொழிச் சொல் எனின் கவி என்பதன் வழியே கிளர்ந்த சொற்கள் காலந்தோறும் வளர்ந்து பெருகிய வளர்ச்சியில் பிற்காலத்தோரால் அமைத்துக் கொள்ளப்பட்டது. கவி கவிதை, கவிஞர் என்பவை என்க. கவி, கவிதை; ஒப்புநோக்குக; பழு. பழுதை. செய்யுள், பாட்டு, பா, யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் இன்னவை பழைய ஆட்சியுடையவை. அத்தகு பழமையாட்சி யின்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய தமிழ்வழிப் புத்தாக்கச்சொல் கவிதை முதலியனவாம். கற்பார் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு கவியச் செய்யும் சொல்லும் பொருளும் வாய்ந்தது கவிதை. தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம், என்றார் கம்பர்! கவிப்பா அமுதம் என்றார் பாவேந்தர்! இவை கவித்து - கவர்ந்து - இன்பஞ் செய்தலைக் குறிப்பவை.  22. கழிசடை கழிசடை என்பது வசைச் சொல்லாக வழங்குகிறது. அவன்(ள்) ஒரு கழிசடை; கழிசடைப் பயல் அந்தக் கழிசடையை ஏன் பேசுகிறாய் இப்படிக் கேட்கும் செய்திகள் நாளும் உண்டு. கழிதல், அகலுதல் பொருளது; வழிதல், வழிந்தோடுதல் என்பனவும் அவ்வழிப் பொருளவே. கழிச்சல் நோய் (பேதி) என ஒரு நோயே உண்டு. வயிற்றுப் போக்கு என்பது அதன் பொருளைக் காட்டும். கக்கல் கழிச்சல் என்பவை (வாந்தி, பேதி) சேர்ந்திருந்தால் என்னாம்? கால் கழிகட்டில் என்பது இறந்தோரைக் கிடத்தும் காலில்லாக் கட்டிலாம் (பாடை). இவண் கழிதல் இன்மையைக் குறித்தது. கழிந்தது பொழுது என்பதில் பொழுது முடிந்து போனதைச் சுட்டிற்று. பொழுதைக் கழிக்கிறான் என்பது வேலையில்லாது நாளைக் கழித்தலைக் குறித்தது. கழிவாய் கழிமுகம் உப்பங்கழி என்பவை கடல் சார்ந்தவை. நிலத்திட்டுக் கழிந்த நீர்ப்பகுதி கழிவாய் எனப் பட்டது. அக்கழியில் படகு வந்து செல்லும்துறை கழிமுகம். உப்பு எடுப்பதற்காகப் பயன்படுத்தும் நீர்ப்பகுதி உப்பங்கழி. கழிகலன்மகடூஉ என்பது முந்தையோர் உரை; கலன் கழி மகளிர் என்பதும் அப்பொருளதே, கணவனை இழந்த கைம்மை மகளிர் மங்கல அணியைக் கழைதல் வழியாக வந்த பெயர் இது. கழித்துக் கட்டுதல் என்பது தீர்த்துக் கட்டுதல். கருச்சிதைவைக் கழிப்பு என்பது சிற்றூர் வழக்கு. கருக் கலைப்பு, கருச்சிதைப்பு, கருவழிப்பு இவற்றிலெல்லாம். கரு உண்டு. கழிப்பு என்றாலே கருக்கலைப்பைக் குறிக்கும் சொல்லாக வழங்குகின்றது. அதனைச் செய்தலில் தேர்ந்தவள் கழிப்புக்காரி எனப்படுகிறாள். அக்கழிப்பைக் கொண்டு செய்வினை முதலாகச் சொல்லப்படும் தீவினை செய்பவன் கழிவினையாளன் எனப்படுகிறான். கண்ணேறு கழித்தலும் கழிப்பே. அதற்கு வெள்ளிக்கிழமைகளில் வற்றல் உப்புப்போட்டு எரியூட்டுக் கழிப்புச் செய்தல் வழக்கு. கண்டதைக் கழியதைத் தின்னாதே என்னும் வழக்கை எவர் அறியார்? கண்டது, பார்த்த பொருள்; கழியது உடலுக்கு ஆகாது, ஒவ்வாது என விலக்கப்பட்ட பொருள். சிலர் வாயடக்கம், மனவடக்கம் கொள்ளாமல் தின்று கெடுவதைத் தடுக்கும் கட்டளை இது. கழிவுப்பஞ்சும் காசாதல் தெரியுமே! கழிவு வைக்கோல் தாளும், கூரைத் தகடும் ஆக அறிவியல் வளம் உதவுகிறதே! கழிப்பறை நகரத்தில் காணப்படுமே! கட்டணக் கழிப்பறை கொடி கட்டிப் பறக்கும் காட்சியைப் பட்டணங்களில் எவர் அறியார்? வேண்டாப் பொருள்களைப் போட்டு வைக்க வீடுகளில் கழிவறை யுண்டு; செல்வர்கள் வீட்டுக் கழிவறைகளில் பல சிறு குடும்பங்களே வாழலாம்! நால்வகைக் கணக்கிலே கழித்தல் இல்லையா? கூட்டிக் கழிக்கத் தெரியாதவர்பாடு கணக்கில் என்னபாடு? கூட்டிக் கழிக்கத் தெரியாத ஒருவர், வீட்டு வேலையாளாகக் காலந்தள்ள முடியாதே! கழீஇ, கழுவி, கழூஉ என்பனவெல்லாம் அகற்றுதல், அப்பால் படுத்துதல், போக்குதல் என்னும் பொருளவே: எத்தனை பேர்கள் என்னென்ன வகைக்கெல்லாம் கைகழுவியதாகச் சொல்கிறார்கள்? கழுவாய் தேட வேண்டும் என்ற எண்ணங் கூடப் பலர்க்கு வருவதில்லையே! மாசுபோக்கி மணியாக்குதல் மணி கழுவுதல் என்றே வழங்கும். கழூஉமணி என்பது இலக்கண இலக்கிய ஆட்சிகள். கழிசடை என்பதைக் காண்போம். ஒருவரைக் கழிசடை என்றால் எவ்வளவு சினம் உண்டாகிறது? சினம் மட்டுமா? எப்படிச் சீறுகிறார்? சாய்க்கடை என்றால் எப்படி அரு வறுப்பாகக் கருதுவாரோ அப்படியன்றோ கழிசடை என்றாலும் கருதுகிறார்! கழிசடை என்பது என்ன? தலை சீவுகிறோம். சீவும் போது மயிர் சீப்புடன் வருகிறது: உதிர்கிறது; சிலர் சீவாத போதும் மயிர்தானே உதிர்ந்து கொட்டுதல் அறிந்ததே; அந்த மயிரை என்ன மதிப்பு மதிக்கிறோம்; அது தலையில் இருந்த போது எவ்வளவு மதிப்பு அதற்கு? எத்தனை எத்தனை எண்ணெய் - மணம் - சீவுதல் - அழகுறுத்தல்! எத்தனை முறை கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக் களித்தல்! எல்லாம் என்ன ஆயின? உதிர்ந்த மயிர் உடலிலோ உடையிலோ ஒட்டியிருப்பின் அருவறுப்பாய்த் தொடாமல் தொட்டெடுத்து ஊதித்தள்ளு கிறோம். இல்லையேல் விரலால் சுண்டி கீழே வீழ்த்துகிறோம். கையையும் கழுவுகிறோம். இந்த மாற்றம் ஏன்? அதன் நிலை மாற்றமே இம்மதிப்பு மாற்றத்திற்கு அடிப்படை. இதனைத் தெளிவாகத் தெரிந்த திருவள்ளுவர் கற்பவர் நெஞ்சில் படுமாறு, தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என்றார். அவர் இதற்கு எதிரிடையையும் எண்ணினார். நிலையில் திரியாதவர் அவர்: அதனால், நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்றார். திருவள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்தவரோ தெரியாதவரோ ஒருவர் கழிசடை என்றார். சடை என்பது தலை முடி; அதன் கற்றை; அதன் பின்னல்; அதில் இருந்து கழிந்த மயிர்க்கு என்ன பெயர்? கழிசடை சடையில் இருந்து கழிந்த மயிர் கழிசடை இலைநுனி நுனியிலையாக வில்லையா? இல்வாய், வாயில் ஆகவில்லையா? சடைகழி கழிசடை ஆயிற்று. இலக்கணம் தெரிந்தவர் இதனை இலக்கணப் போலி என்பர். எவரும் என்ன இலக்கணமும் சொல்லிக் கொள்ளுங்கள்; எங்களுக்குக் கவலையில்லை என்று பொது மக்கள் சொற்களைப் படைத்து விட்டு விடுகிறார்கள். அவர்கள் படைத்த சொல்லுக்கு விளக்கம் இயல்பாய் - இனிமையாய் - அதேபொழுதில் அருமையாய் இருக்கிறது! ஏனெனில் படைப்பாளியின் நோக்கம் படைப்பாக இருந்ததேயன்றிக், குறுகிய நோக்குப் புகவில்லை. விளக்கம் இருந்ததேயன்றி விருப்பு வெறுப்பு இல்லை!. ஒரு குறளின் பொருளை, ஒரு வழக்குச் சொல் கழிசடைச் சொல் தந்து விடுகிறதென்றால் பொதுமக்கள் வழக்கு எப்படி எப்படியெல்லாம் போற்றிக் கொள்ளத் தக்கது.  23. களை எங்கேயோ ஒருவரைப் பார்க்கிறோம். அவரை முன் பின் தெரியாது. நமக்கு எவ்வகைத் தொடர்புடையாரும் அல்லர். பால்வேறுபாடு உடையாரும் அல்லர். ஆயினும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறார் பன்முறை அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்து மகிழத் தூண்டி விடுகிறார். கள்ளம் கவடு இல்லாத முகம், குழந்தை முகம். பால் வழியும் முகம். பார்த்தால் பசிதீரும் முகம் என்றெல்லாம் நாம் நினைத்து உள்ளுள் மகிழச்செய்கிறார். ஓர் அழகரைக் காணுங் கால் இவ்வழகரைப் படைத்த இறைமை எத்தகு திறமையானது என மகிழவேண்டும் என்று நாலடியார் கூறுவதை மெய்ப்பிக்கும் பொலிவுடையவராகத் திகழ்கிறார். அத்தகு முகத்தைக் களையான முகம் என்றும் முகக்களை என்றும், அதனை உடைய வரைக் களையானவர் என்றும், களையான முகத்தர் என்றும் யாரும் தூண்டாமலே நமக்குள் உணர்ந்து பூரிக்கிறோம். பொலிவுக்கும் அல்லது அழகுக்கும் களைக்கும் தொடர்பு உண்டா? களை என்பது அழகாகுமா? அகர முதலியில் களை என்பதற்கு அழகு எனப் பொருள் வழங்கினாலும் ஏற்கத் தக்கது தானா? ஏற்பது எப்படி? களை என்பது பயிருக்கு இடையே முளைத்து, பயிருக்குரிய நீரையும் ஊட்டத்தையும் கொண்டு வளர்வதுடன் பயிரை நலித்தும் விளைவைக் கெடுத்தும் தீமை செய்வதன்றோ? ஏரினும் (உழவினும்) நல்லது எருவிடுதல்; எருவிடுதலினும் நல்லது களை வெட்டல் என்று திருவள்ளுவர் ஓதுகிறாரே? முளைக்கும்போதே முள்மரம் போன்ற களை களைக் களைந்து விட வேண்டும்! இல்லாவிடின் களைபவன் கையையே அழித்து விடும் களை என்கிறாரே! இக்களை அழகாகுமா? கவர்ச்சி யுடையதாகுமா? ஓடுகிறோம்; கடினமாக இடையீடு இன்றி உழைக்கிறோம். களைப்பு உண்டாகிறது! களைப்பாற வேண்டிய கட்டாயம் உண்டாகின்றது. களைப்பாறுதல், களையாறுதல், இளைப் பாறுதல், ஓய்வு எடுத்தல் என்றெல்லாம் அமைந்து களைப்பு நீங்கிப் பின்னர் ஓய்வாலும் உறக்கத்தாலும் உணவாலும் ஊக்கம் பெற்று மீண்டும் உழைப்பில் இறங்குகின்றோம். களைப்பு களை (அழகு) ஆகுமா? களை களைதல் என்பதொரு தொழில். களைதல் என்றாலே களை களைதல் தான்! எனினும் தெளிவு கருதிக் களை களைதல் எனப்படுகின்றது. அதனை எண்ணிப் பார்த்தால் களையின் அழகுப் பொருள் தெளிவுற விளங்கும். களை என்பதற்குச் சுழற்று, பிடுங்கு, போக்கு, அவிழ், அகற்று, நீக்கு, விலக்கு என ஏவற்பொருள்கள் உண்டு. களைதல் எனின், கழற்றுதல், பிடுங்குதல் முதலாக மேற்கூறியவை அமையும். களை மண்டிக் கிடக்கும் இடத்தையும் களை களைந்த இடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் களை நன்கு வெளிப்பட விளங்கும். அதற்கு, அழகு, பொலிவு, கவர்ச்சி முதலாக அமைந்த பொருள் நயம் தெளிவாகப் புலனாகும். களைதலுக்கு உரியவை எவையோ அவை களை எனப் படுதல் கண்கூடு. புல், கீரை, செடி, கொடி, மரம், குப்பை, சண்டு, சாவி, இலை, தழை, எவையெனினும் களைதற்கு உரியவை யெல்லாம் களைகளே! களைகளைக் களைந்தபின் ஏற்படுவதாம் பொலிவும் நலமும் களையே! களையெடுத்து நீர் பாய்ச்சிப் பசுமைக் கோலங் கொண்டு நிற்கும் பயிர் நிலத்தைப் பார்க்கப் பார்க்க உள்ளம் கொள்ளை கொண்ட உழவன் அதில் களையைக் கண்டான்! பாடுபட்டுக் களைத்த களைப்பையெல்லாம் களையத்தக்க களையைக் கண்டு களித்தான்! களைக்கு அழகுப் பொருளை அருளினான். அழகுக்கெனவே வளர்க்கப்படும், போற்றிக் காக்கப்படும் பூங்காவில் களைவன களையாவிடின் கவர்ச்சியுண்டா; வயலுக்குக் களையெனக் களைவனவற்றையே பூங்கா தன் பயிரெனக் கொண்டிருந்தாலும் அதனை ஒழுங்குறுத்தி, வெட்டுவ வெட்டிக், கொய்வ கொய்து, குப்பை கூளம் அகற்றிச் செப்பமுறுத்தாக்கால் பூங்கா எனப்படுமோ? கவின் பெறு வனப்பு எனக் கருதப்படுமோ? காடு எனப்படும்! கா எனப்படாது. களைதலால் ஏற்படுவது களை என்பதைப் பூங்கா தன் பொலிவால் தெளிவித்தலை எவரே அறியார். முகம் வழிக்காமல் விட்டுவிட்டால் என்ன? களை மண்டிக் கிடக்கிறது என்பதும், முடிவெட்டி முகம் வழித்தலைக் களை வெட்டுதல் என்பதும் புதுவதாக வழங்கும் வழக்குகள். முகம் வழிக்காத முகத்திற்கும், வழித்த முகத்திற்கும் உள்ள முன்னைக் களையும் பின்னைக் களையும் களைக்கு அமைந்த இருவகைப் பொருள்களையும் நன்கு விளக்கும். களைதல் என்பது களை களைதலை மட்டுமோ குறித்து நின்றது. முடி களைதல், உடை களைதல், அணி களைதல், அழுக்குக் களைதல், துயர் களைதல் இப்படி எத்தனை எத்தனை களைதல்கள் வழக்கில் உள்ளன! அழுக்கிலா முகம், அவலமிலா முகம், வஞ்சம் சூது இலா முகம், அமைய வேண்டும் அமைப்பெல்லாம் ஒருங்கமைந்த முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் முகம், மலரும் கண்ணும் மகிழும் சொல்லும் அமைந்த அழகு முகம் களை யான முகம் என்பதில் என்ன ஐயம்! முகக்களை என்பதில் தான் என்ன ஐயம்! களையின் பொருள் எதிரிடைப்பட்டதெனினும், எத்தகு நயமுடையதாக வாழ்வொடு இயைந்ததாக அமைந்துள்ளது என்பதை எண்ண எண்ணக் களைப்பு உண்டாவதில்லை! களையே உண்டாகும்; களிப்பே உண்டாகும்.  24. களைகண் விளைபயிர்க்கு இடையூறாய் வளரும் பயிர், களை என்பதாகும். களை என்பது களைதல் என்னும் தொழில் வழியாக வந்த பெயராம். அகற்றுதல் போக்குதல் நீக்குதல் கழற்றுதல் ஒதுக்குதல் முதலியவை களைதல் பொருளில் வருவனவே என்பதை அறிந்தோம். களையைக் களைதலுக்கு வந்த களைதல் பெயர், ஆடை களைதல், அழுக்கு களைதல், உமிகளைதல் எனப் பருப் பொருள்களுக்கு வருவதுடன் துயர் களைதல் எனக் கருத்துப் பொருளுக்கும் வரும் எனவும் அறிந்தோம். பிறரால் களைதற்கு உரிய துயரும் உண்டு; களைதற்கு அரிய துயரும் உண்டு; களைதற்கு முடியாத துயரும் உண்டு, களைவருந்துன்பத்தைக் காட்டுவார் கம்பர் (உயுத்த 2536) களையாத துன்பத்தைச் சுட்டுவார் இளங்கோவடிகளார், (சிலப். 19:17) களைகண் என்பது இருசொற்களே எனினும் ஒரு சொற்றன்மைப்பட்டு நின்றது. கண் என்பது ஓர் உறுப்புப் பெயர் எனினும் அவ்வுறுப்பின் பயனாம் அருள் என்னும் பொருள் கொண்டு நின்றது. களைகண் என்பது துயர் களையும் அருளுள்ளம் என்னும் பொருள்தரும் தனிச் சொல்லாகப் பழமை தொட்டும் பெருக்கமாகவும் வழங்கி வருகின்றது. வெருவந்த செய்யாமை (அஞ்சத்தக்க செயலைச் செய்யாமை) என்பதை அடுத்துக் கண்ணோட்டம் என்றோர் அதிகாரம் வள்ளுவர் வகுத்ததும் அதில் கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் என்றும், கண்ணென்னாம் கண்ணோட்ட மில்லாத கண் என்றும், கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் என்றும், கண்ணோடாக் கண் புண் என்றும், கண்ணோட்டத் துள்ளது உலகியல் என்றும் கூறிய கருத்துகள் அருளின் பாலனவாம். கண்ணோட்டமாவது கண்ணால் காணப் பட்டாரை அருளிச் செய்தல் என மணக்குடவரும் பரிப் பெருமாளும் உரைத்தனர். தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை என்றார் பரிமேலழகர். அவர் கூறியன என்பது அவர்தம் அல்லல், வறுமை என்பன உரைத்து அவற்றைத் தீர்த்தருள வேண்டுகையாம். இளையரும் மகளிரும் களைகண் காணார் வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப என்றும், எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய பொருங்கயல் போல வருந்துபு மிளிராக் களைகண் பெறாஅக் கலக்க நோக்கம் என்றும் களைகண் கிட்டாக் கலக்க நிலையைப் பெருங்கதை விளக்கும். (2. 17;86.7;2.19:101-4) உளத்துணை ஒன்றில்லாத் தனிமையும் களைகண் தேடி ஏங்கும் என்பதையும். தனிமைக் கிரங்கிக் களைகண் காணாது என்னும் அப்பெருங்கதை (1.56:30) களைகண் வாய்க்காமையால் படும் ஏக்கம் பெரிதாம். எம் பெருமான் எமைக் கைவிடிற் பினையார்களைகண் உள்ளார் என்பதில் களைகணை எதிர் நோக்கிய ஏக்கம் நன்கு விளங்கும் (கம்பர் ஆர 210). களைகண் தேடாமலே கண் முன்தோன்றிக் களைகண் அருளுமாயின் அப்பேற்றைக் கூற முடியுமா? களைகண் ஈகுவென் கையறல் ஒழிக திகழொளிக் கண்ணினன், களைகண் ணாகியோர் இளைஞர் தோன்றி என்பவை பெருங்கதைக் காட்சிகள் (5.4:30;5. 2:32-3) களைகண் ஆக எவரில்லையேனும் தோழமையாளரேனும் இருத்தல் வேண்டுமன்றோ! அவரே இல்லை எனின் எவரே களைகண் ஆவார்? களைகண் ஆகிய காதலந்தோழன் என்பது அப்பெருங்கதை (3.24:121) களைகண் என்பதன் பொருள் களைகண் தேடுவார்க்கு உரிய இன்மைகள், அதனால் அவர்கள் படும் பாடு, அதனை நீக்குதற்குரிய துடிப்பு இவற்றையெல்லாம் தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு பாடலில் நினைந்து நினைந்து இரங்க-ஏங்க-எய்க்க-இனைய இயம்புகிறார்: ஊரிலேன்: காணி யில்லை; உறவுமற் றொருவ ரில்லை; பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி! காரொளி வண்ண னே! ஓ! கண்ணனே! கதறு கின்றேன்; ஆருளர் களைகண் அம்மா? அரங்கமா நகரு ளானே! (நாலா திவ் 900) என்பது அது. துன்பந் துடைக்கவென்று இக்காலம் எழும்பும் பொது நல அமைப்புகள் பலப்பல. ஊண் உடை உறவு எல்லாம் வழங்கிக் கற்பிக்கத் துணையாம் அமைப்புகளும் உள. உடற்குறையர், ஏதிலியர் என்பாரைக் காக்கும் நிறுவனங்களும் உள. உளத்தால் உதவ முந்துறும் அவர்கள் மொழி நலமும் கருதலாம்? களை கண் இல்லம் களைகண் குடில் களைகண் அவையம் களைகண் மன்றம் எனப் பெயர்கள் சூட்டலாம்! வழிநலம் பேணும் உள்ளம் மொழி நலமும் பேணுதல் முறைமை என்பது ஏற்படுமாயின் எத்தகு நலமாக இருக்கும்! கண்ணிய யாவர்க்கும் களைகண் ஆகிய புண்ணியர் என அவரைக் கம்பர் வாக்கால் போற்றலாமே! (பால. 1338)  25. களைதல் விதைத்து வளர்வது பயிர்; விதையாமல் தோன்றி வளர்வது களை; எப்பயிர் ஆனாலும் பயிராவதும் களையாவதும் விதைப்பதும் விதையாததைப் பொறுத்தனவே. நெல், பயிர்தான்; பூங்காவில் முளைத்தால் களை! புல், களைதான்! பூங்காவில் வைத்துப் பயிரிட்டால் பயிர்! களையை அகற்றுதல் களைதல் எனப்படும். ஆனால் களைதற்குரியது களை எனப்பட்டது என்பதையே செயற்பாடு விளக்குகின்றது. களைதலைப் பற்றிய இலக்கியச் சொற்கள் பல. வழக்குச் சொற்களும் பல; வட்டார வழக்காய் இயல்வனவும் உள. களை வெட்டுதல் என்பது வேளாண்மைத் தொழில்களுள் ஒன்று. வெட்டுதற்குப் பயன்படும் கருவி மண்வெட்டி; கருவிப் பெயரிலேயுள்ள வெட்டி, களைவெட்டுத் தொழிலையும் செய்யும் என்பதற்குச் சான்றாயிற்றே! கல்லிலே வெட்டும் எழுத்து கல்வெட்டு? மண்ணை வெட்டும் கருவி மண்வெட்டி! களைவெட்டுதல் பொருள்தரும் சொல் கட்டல் கட்டுதல் என்பன களைதல் - கள்தல் - கட்டல் என்று வந்தது. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் என்பதில் களை கட்டலைச் சுட்டுகிறார் வள்ளுவர். களைதல் என்பதையும் அவர் குறிக்கிறார்! இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து என்பது அது. களை களைதலை இன்றித் துயர் களைதலையும் களைதல் குறிக்கும். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது துயர் களைவைக் கூறும் குறள். வெட்டல், கருவி வினை; கட்டல், கருவி வினையும் கைவினையும் ஆம். வழிப்பறி என்பதில் பறித்தல் தொழிலும். நாற்றுப் பிடுங்குதல் என்பதில் பிடுங்குதல் தொழிலும் பூக் கொய்தல் என்பதில் எடுத்தல் தொழிலும் உள்ளமை விளங்கும். இவை கருவி வினைகள் அல்ல. கை வினைகளேயாம். களையைச் சுரண்டுதற்கென்றே அமைந்த கருவி, களை கரண்டிகளை கரண்டியின் இலையளவு (தகட்டளவு) சிறிது. அதனினும் அகலமாக அமைந்தது களை பரண்டி. அது படர் கொடிகளைப் பரண்டும் அளவு தகடு விரிவுடையது. சுரண்டுதல் பரண்டுதல் ஆகிய தொழில்களுக்குரிய கருவி சுரண்டியும் பரண்டியும்! சுரண்டி இல்லாமலே முதுகைச் சுரண்டலும், பொருளைச் சுரண்டலும் கண்கூடு; சில உயிர்கள் காலால் பரண்டல் இயற்கை. களை குத்தல் ஒன்று; களை கொத்தல் மற்றொன்று முன்னதற்குரிய கருவி களை குத்தி; பின்னதற்குரியது. களை கொத்தி களையின் வேரைப்பார்த்து நேராகக் குத்தி எடுக்க உதவுவது களைகுத்தி; இரும்பாலும் களைகுத்தியுண்டு; மரத்தாலும் களைகுத்தியுண்டு. களையைப் படர் பகுதியுடன் கொத்தி எடுக்க உதவுவது களை கொத்தி. குத்திக்கும் கொத்திக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு! பின்னே வேறுபாடு மறைந்ததும் உண்டு. மீன் குத்தியை மீன் கொத்தி யென வழங்குதலும் உண்டே! கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து என்றார் வள்ளுவர். மண்வெட்டியுள் சிறியது கொட்டு மண் வெட்டி என்பது அதனைக் களை வெட்டுதற்குப் பயன்படுத்துவதால் களை கொட்டு, என்பர். கொட்டுதலும் களை வெட்டுதல் பொருளில் வருவதைக் காட்டுவது இது. இனி, அகழ்தல், தோண்டல், கல்லல், கிள்ளல், பறித்தல் பொருளில் வரும் சொற்களாம். இவை நான்கும் நுண்ணிய வேறுபாடுடையவை. கிள்ளலில் கல்லலும், கல்லலில் தோண்டலும், தோண்டலில் அகழ்தலும் ஒன்றில் ஒன்று நிலத்தில் ஆழமாகச் செல்பவையாம். நகத்தில் கிள்ளி எடுத்தல் என்னும் வழக்கால் விரலளவு ஆழம் கிள்ளலாம்; கிழங்கு கல்லி எடுத்தல் என்பதால் அதனின் ஆழம் கல்லல்; தோண்டுதல் மண்வெட்டி பதியும் அளவு கடந்து செல்வதால், அதனின் ஆழமானது கம்பி போட்டுக் குத்தி எடுக்கும் அளவுடையது அகழ்தலாதலால் அதனினும் ஆழமானது. அது அறுகு கிள்ளல் அன்று; கல்லல் அன்று; தோண்டல் அன்றும், அகழ்தலாம் அறுகுபோல் வேரூன்றி என்னும் வாழ்த்தே வேராழம் காட்டும். எட்டடி ஏழடிகளுக்குக் கீழும் கரிசல் நிலத்தில் அறுகின் வேரும் கிழங்கும் படிந்திருத்தல் உண்டு. கிணறு அகழ்வதுபோல் அகழ்ந்தெடுப்பதும் காணலாம். தோண்டலின் ஆழத்தை விளக்குவதொரு சொல் தோணி தொள்ளம் தோளம் என்பனவும் தோணியின் பெயர்களே. பரிய மரத்தைக் குடைந்து மிதவையாக்குதலால் தோணியாயிற்று. தோண்டி அமைக்கப்பட்டது தோண்டி, தோணி ஆயிற்று! களை வெட்டி முடித்து அக்களையைப் பறித்த இடத்திலேயே போட்டுவிட்டால் மீண்டும் முளைப்பதும் உண்டு. ஆதலால், அதனை வாரிப்போடுதற்கு ஒரு கருவியுண்டு அதற்குக் களை வாரி என்பது பெயர். களை களைதல் வினைக்குத் தமிழில் எத்தனை எத்தனை சொற்கள்? களை வெட்டல், களை கட்டல், களை கொட்டல், களை கொத்தல், களை கொய்தல், களை பறித்தல், களை எடுத்தல், களை சுரண்டல், களை பரண்டல், களை கிள்ளல், களை கல்லல், களை தோண்டல், களை அகழ்தல், களை பிடுங்கல், களை வாரல் முதலியன. இத்தகைய தமிழ்ச் சொல்வளம், தமிழின் தனிவளம் அல்லவோ!  26. காக்கை காலையில் நாம் எழுகின்றோமோ இல்லையோ காக்கை எழுந்துவிடுகின்றது! கா கா எனக் கரைந்து நம்மை எழுப்பியும் விடுகின்றது! காகம் கா கா எனத் தொடுத்துக் கரைகின்றதா? இல்லை! காக்கை ஒன்று ஓரிடத்தில் இருந்து கா என்று குரல் கொடுத்தால் இன்னோரிடத்தில் இருக்கும் காக்கையொன்று கா என்று மறு குரல் கொடுக்கும்! மாறி மாறி இவ்வாறு கேட்பது வியப்பாக இருக்கும்! ஒன்று, நான் இங்கே இருக்கிறேன் என்று குரலிட்டுக் காட்ட, மற்றொன்று நான் இங்கே இருக்கிறேன் என இடஞ் சுட்டிக் காட்டி இனஞ்சுட்டிக் கொள்ளல் வியப்பேயாம்! இவ்வியப்புணர்ந்தே கா கா என்று கரையும் அப்பறவையைக் காக்கை காக்கா, காகம் என முன்னோர் வழங்கினர். கரைதல் என்பதற்கு அழைத்தல் கூப்பிடுதல் எனப் பொருள் கண்டனர். அப்பொருளும் மக்கள் அழைப்போடு நில்லாமல், கலங்கரை விளக்கம் எனப் பெயரிட்டழைக்கவும் தூண்டலாயிற்று. கப்பல்களை அழைக்கும் விளக்கே கலங்கரை விளக்கம். காகத்திற்கு அச்சம், சினம், கிளர்ச்சி, மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகள் உண்டாகி விடுமானால் ஒரே காகம் காகா எனப் பன்முறை கத்தவும் செய்யும்? பல காகங்கள் சேர்ந்தும் இடை யீடின்றிக் காகா எனக் கத்தவும் செய்யும் இவ்வொலியைக் கேட்ட அறிவாளர், அவ்வொலியையும், அக் கூட்டத்தையும் காகளம் என்றனர். களம் இடமும் கூட்டமுமாம்! காலம் களனே என்பது நன்னூல், களவன் என்பது நிகழிடத்திருந்த சான்றாளன்; காகம் கலந்துண்ணல் திருமூலரால் பாராட்டப்படும்; காகம் கரைந்துண்ணல் திருவள்ளுவரால் சிறப்பிக்கப்படும் ஆனால் எத்தித் திருடும் காகம் என்பதைக் கண்ணாரக் காண்கிறோமே! எத்தித் திருடியதைக் கரைந்து உண்ணாது காகம்; கரந்தே உண்ணும்! எத்தித் திருடாமல் இயல்பாகக் கிடைத்ததையும், கொடையாகக் கிடைத்ததையும் உண்ணுங்கால் கரைந்தே உண்ணும்; அதனால் தான் திருவள்ளுவர், காகம் கரவா கரைந்துண்ணும் என்றார்! பொருள் வந்த வகைக்கு ஏற்ப வெளிப்படையாகவும், கரவாகவும் துய்க்கப்படுதலைக் காகம் விளக்குமோ? காகத்தை உணர்ந்த வள்ளுவர் உள்ளம் விளக்குமோ? காக்கை கரைந்துகொண்டு வீட்டைச் சுற்றினால் விருந்து வரும், என்பது மாந்தர் நம்பிக்கை! பிரிந்த தலைவன் வருவான் என்பது தலைவியின் நம்பிக்கை! இனத்தை அழைத்து இனத்தோடு உண்ணும் காக்கையின் இயல்பு இந்நம்பிக்கைக்கு மூலமாகலாம்!. பிரிந்த தலைவன் வர இருப்பதைக் காக்கை தன் கரைவால் சொல்லியதாம். அதற்கு மகிழ்ந்த தலைவி ஏழு கலங்களில் நெய்யொடு கலந்து நெற்சோறு வழங்குவாளாம்! இப்படிப் பாடிய புலவர் பெயர் நச்செள்ளையார்! பாணர் குடியினர்! அவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப்பட்டார்! காக்கை தந்த பெயர்க் கொடைதானே இது. (குறுந். 210) இவருக்குப் பின்னேயும் காக்கை பாடினியர் இருவர் இருந்துளர். அவர்கள் இலக்கணப் புலமையாளர்; பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார் என்பவை அவர்கள் பெயர்கள், பெருங் காக்கை பாடினியம், சிறு காக்கை பாடினியம் என்பவை அவர்கள் இயற்றிய நூல்கள்! காக்கையின் கொடை இவ்வளவுடன் நின்றதா? காக்கையின் மூக்குப் போன்ற மூக்கை உடையவன் காக்கை மூக்கன் மாறுகண்ணையுடையவன் காக்கைக் கண்ணன். fh¡if¡ fhš Éuš nghš tÆu¤âš mikªj tÇ ‘fh¡if¡ fhš’, ‘fhfghj«! C®ng® m¿ahkš tªJ ngh»‹wt‹ ‘fh¡f‹ ngh¡f‹! காக்கையின் உறுப்புகளாலும் இயல்பாலும் கிடைத்த கொடை இவை என்றால், அவன் வண்ணங் கொடுத்த கொடை எண்ணத் தொலையாது! காக்கட்டான் காக்கணம் - கருவிளை காக்கரை - கரிசல் நிலம் காக்கன் - கடல்வாழ் கருமீன் காக்காச் சோளம் - கருஞ்சோளம் காக்காத் தாளி, காக தாளி - கருங்காலி மரம் காகக் கரிப்பான் - கருங்கையாந்தகரை காகக் கல் - கருங்கல் காகக் குட்டம் - கருங்குட்டம் காகச் சிலை - இரும்புத்துண்டு காகச்சுக்கான் - கருஞ் சுக்கான் காக சுரம் - கரும்புள்ளி யுண்டாக்கும் சுரம் காகணம் - கருஞ்சிவப்புக் கொப்பளமாக்கும் நோய். காக தக்காளி - கருந் தக்காளி. காக துண்டம் - அகில், கருங்காலி, நீர்க்கோழி. காக துண்டி - காக்கைப் பொன் காக தும்பி - கருவண்டு காக தும்பை - கருந் தும்பை காக நாவல் - கருநாவல். காக்கையின் பண்புக் கொடையும் உண்டு. அவை, ஒருவகை: காலையில் எழுந்திருத்தல், காணாமல் புணர்தல், கூடி யுண்ணல், மாலையில் குளித்தல், கெடுதியைத் தன் இனத்துக்கு அறிவித்தல், (அகர முதலி) மற்றொரு வகை மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழு திறவாது இடம் புகுதல், மறைந்த புணர்ச்சி. (திருக்கோவை 235 உரை.) காக்கை பிடித்தல் என்பதற்கும் காக்கைக்கும் தொடர்பு உண்டா? பாவம் ! பழியோரிடம் பாவமோரிடம்! கால் கை பிடிப்பதே காக்கை பிடித்தலாம்; காக்கைவலி? கால் கை வலித்தலே காக்கை வலியாம்! இப்படியெல்லாம் நம்மவர் சிறுமைப் படுத்துவர் என்று தான் காக்கை கன்றிக் கருமையாகித் தோன்றியதோ? இனியொரு காக்கைச் சுவை! காட்சிச் சுவை! காக்காய் கறிசமைத்துக் கருவாடு மென்று தின்பர் சைவர் என்பது! நல்ல சைவர் இவர்? ஆம் நல்ல சைவரே! ஒரு சிறு காயாக இருந்தாலும் முழுமையாகக் கறியாக்கி உண்ணாமல், கால் காயை வெட்டி எடுத்து அதனைச் சமைத்து உண்பராம்? ஏன் கால் காயையும் உண்கிறாராம்? கருவாடிப் போகுமே-உயிர் போகிவிடும் -என்பதால் உண்கிறாராம்; வழக்கிலேயுள்ள இச் செய்தி, கலைவாணரால் திரைச் செய்தியாகத் திகழ்ந்தது! நல்லனவெல்லாம் கா கா என எப்பாலும் எப்போதும் பறையறையும் காக்கை தந்த சொல்வளம் நல்வளம் அல்லவோ!  27. கால்வாயும் வாய்க்காலும் ஆயிரம் காலால் நடந்து வந்தேன் என்று ஆறு கூறுவதாகக் கூறுவார் கவிமணி யாம் மாமணி. பாரத் தொடரி (Goods Train) யைப் போல ஊர்ந்து செல்லும் பூச்சியை, ஆயிரங்கால் பூச்சி என்று சிறார் உவமை கூறி மகிழ்வர். கால் என்பது பல பொருள் தரும் சொல். அப்பல பொருளுள் இடப் பொருள் என்பதும் ஒன்று! அதனால், இலக்கணர் கால் என்பதை இடப்பொருள் உருபெனவும் சுட்டுவர். ஆற்றில் இருந்து நீர் பிரியும் இடம் கால் எனப்படும். மேலக்கால், தென்கால், வடகால் என்பவை காலால் பெயர் பெற்று, ஊர்ப் பெயரும் ஆனவை. வெள்ளைக்கால் என்பதும் கால் பெயரால் வந்த ஊர்ப் பெயரே. ஆறு பிரியும் இடம். கால்! அக்கால் எங்குச் சென்று சேரும்? வாய் ஆகிய இடம் சென்று சேரும். அவ்வாய் எவ்வாய்? கண்வாய் என்பதே அது! கால், வாய்க்குச் சேரும் நீரோட்டப் பகுதி - காலும் வாயும் இணைந்த பகுதி - கால்வாய் வாயில் இருந்து நீர் வெளிப்பட்டுப் பாயும் - பயிர் நிலத்துக்குச் சென்று பாயும் - பகுதி, வாயொடு கால் இணைக்க அமைவதாம் வாய்க்கால் என்பதாம். கால்வாய், வாய்க்கால் என்பவை முறையே வாய்க்கு நீர் வரும் வழியும், வாயில் இருந்து நீர் வெளியேறும் வழியும் ஆம்! போக்கு வரவுக்கு இடனாக இருப்பது வாய். அஃது இல்லத்துக்கு ஆம் பொழுது இல்வாய் என இருந்தது. அச் சொல்லமைதி முன் பின் மாறிக் கிடந்து, வாயில் ஆகிவிட்டது! நிலை பெற்றும் போயது! இலக்கணப் போலி என இலக்கணமும் ஏற்றமைந்துவிட்டது! ஊணும் நீரும் போக்கு வரவு புரிய இடனாக இருக்கும் வாய் என்னும் உறுப்பும் நோக்கத் தக்கதே! வாய் என்பது வழி என்னும் பொருள் தருவதை இவற்றால் உணரலாம். வரும் வழி, வருவாய்! செல்லும் வழி, செல்வாய்! வாய் என்னும் நீர்நிலை இடப்பெயர், கணவாய் எனப் படுவானேன்? நீர் வெளியேறுவதற்கு மடையில் கண்கள் உண்டு! என்ன கண்கள் அவை? புலிக்கண், மான் கண், துடுப்புக் கண், நாழிக் கண் என்பவை (போன்றவை) அவை. கண்ணே, நீர் வெளிப்படுத்தும் வாயாக இருத்தலால் கண் வாய் எனப் பெயர் பெற்றது. கண் வாய் என்பதன் கொச்சை வடிவே இந்நாள் பெருக வழங்கும் கம்மாய் என்பதாம்! கண்வாய் என்பதன் உண்மை உணரா ஆய்வாளர், கம்மாய் என்பதை மெய் வடிவாய்க் கொண்டு கம் - நீர்; வாய் - இடம்; கம்மாய் - நீர் வெளியேறுமிடம் என வேற்றுச் சொல்லாகக் காட்டி விம்மிதமும் உற்றனர்! தோய்ந்த புளிப்பமைந்த மாவால் ஆக்கும் பண்ணியம், தோயை - தோசை - என ஆனதை அறியாமல், தோ-இரண்டு; சை-ஒலி இரண்டொலி தருவது என வேற்றுச் சொல்லாக்க வல்லார், கம்மாயைச் சும்மா விடுவாரா? நிற்க. கண் வாய்க்கு நீர் வரும் வழி, கால்வாய் எனப் பட்டதன்றோ! அதனை ஆகு ஆறு என்க. கண் வாயில் இருந்து நீர் செல்லும் வழி வாய்க்கால் எனப்பட்டதன்றோ! அதனைப் போகு ஆறு என்க. நீர்வரவு செலவுகளை நாம் நினைத்தால். பொருள் வரவு செலவும் புலப்படுமே! அப்புலப்பாட்டை முந்துறக் கொண்டு. மொழிந்தவர், பொய்யாமொழியார். கால்வாயில் இருந்து கண்வாய்க்கு ஒரு நாள் அல்லது இருநாள் நீர் வரலாம். வந்த நீர், பயிருக்கு எத்துணை நாள்களுக்குச் சென்று ஊட்டுகின்றது! ஒரு நாள் வரவு நீர் ஒருநாள் அளவிலேயே செலவாகிவிட்டால் என்ன பயன்? ஒருநாள் வரும் நீரை, ஒருபயிர் விளைவுக்குப் போற்றிக் காத்து விடுவதன்றோ கண்வாய்! ஆதலால், பொருள் நிலை, வரவு செலவு வகைகளைப் புகல்வது கால்வாயும் வாய்க்காலுமாம். ஒருவர்க்கு ஒரு திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! மாத ஊதியர் நிலை அதுதானே! ஒருவர்க்குப் பல திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! உழவர் ஊதிய நிலை அதுதானே! இவர்கள் எப்படி வருவாயைச் செலவிடவேண்டும்? கண்வாயில் இருந்து வாய்க்காலுக்குச் செல்லும் நீரொழுக்குப் போலச் செலவு செய்யவேண்டும்? வரவு மிகையா? குறையா? அது கவலைக்கு உரியதன்று! செலவு, வரவில் குறையா? மிகையா? என்பதே கவலைக்கு உரியது! குறைந்த வருவாய் எனினும், அதற்கும் குறைந்த அளவில் செலவு செய்தலைத் திட்டப்படுத்திக் கொள்க! நிறைந்த நன்மையாவது இதுவே! இதனைத்தான், வள்ளுவப் பெருந்தகை நயமுறக் கூறுகிறார். ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை போகாறு அகலாக் கடை என்பது அது, ஆகாறு (ஆகு, ஆறு) பொருள் வழி; இட்டிது - சுருக்கமானது; போகாறு (போகு, ஆறு) பொருள் செலவாகும் வழி; அகலாக் கடை - விரிவடையாத இடத்து! ஆகாறு போகாறுகளைக் காட்டிப் பொருளியலை நாட்டு கின்றார் வள்ளுவர்! கால்வாய் வாய்க்கால்களைக் கண்முன் காட்டிட நிலை நாட்டுகின்றது, கண்வாய்! உழவர், இக்குறிப்பை மறக்கலாமா? பிறர் பிறரும் மறக்கலாமா? காண்பார்க்கு கண்ணிடைப் பொருளியல் நெறிமை புலப்பட வேண்டுமே! அம்மட்டோ? ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை என்னும் வள்ளுவம் மின்னிட வேண்டுமே!  28. குட்டம் தொழுநோய் என்றும் பெருநோய் என்றும் வழங்கப் பெறுவது குட்ட நோயாகும். அங்கமெலாம் குறைந்து அழகு தொழுநோய் என்றார் அப்பரடிகள் 6.95:10). குட்ட நோய் நரகந் தம்முள் குளிப்பவர் இவர் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 253) உடம்பின் குறுக்கு நெடுக்காய் ஓடும் சிரைகளில் புகுந்து நாடி நரம்பு சவ்வு முதலியவைகளைத் தாக்குவதும் அல்லாமல் எலும்பு இரத்தம் ஊன் இவைகளைச் சிதைவுறச் செய்து பிறகு வெளிப்புறத்துத் தோலில் விரைந்து பரவி உடம்பில் பல வகையான தழும்புகளை எழுப்பித் தீராவலியை உண்டாக்கும். இதனால் காது உதடு மூக்கு விரல்கள் முதலியன தடித்து, உடல் மினுமினுத்துத் தோல் கடினமாகிச் சிவந்தும், வெளிர் மஞ்சளாகியும் கொப்புளங்கள் ஏற்பட்டுத் தினவு எரிச்சலுடன் புண்ணாகி ஆறாமல் குழிவிழுந்து கடைசியாக முகம் வேறுபட்டு விரல்களும் குறையும் எனக் குட்டநோய் பற்றிச் சாம்பசிவம் பிள்ளை அகராதி கூறும். நீர்க்குட்டம், வெண்குட்டம், சொறிகுட்டம், கருங்குட்டம், பெருங்குட்டம், செங்குட்டம், விரிகுட்டம், எரிகுட்டம், விரற்குறைக்குட்டம், சடைக்குட்டம், யானைக்குட்டம், திமிர்குட்டம், விரணக்குட்டம், காய்க்குட்டம், அழிக்குட்டம், கிருமிக்குட்டம், ஆறாக்குட்டம் எனத் தமிழ் மருத்துவ நூலோர் குறிப்பிடும் பதினெண் வகைக் குட்டங்களையும் அவ்வகராதியால் அறிந்து கொள்ளலாம். குட்டம் என்பதை அகராதிகளும் சரி, பொதுமக்களும் சரி, எழுத்தாளர்களும் சரி குஷ்டம் என்று வழங்கி வருதல் வெளிப் படை. மிக அரிதாகச் சிலரே குட்டம் எனக் கூறுவதும் எழுதுவதும் வழக்கமாக உள்ளது. குட்டம் என்பது குஷ்டமாக வழங்கப் பெறுகிறதா? குஷ்டம் என்பது தமிழ் மரபுப்படி குட்டமாகக் கொள்ளப்பெறுகிறதா? மூலச் சொல்லாய்வுதான் இதற்கு முடிவு காட்டவல்லது! ஒரு சொல்லின் வேரும், அதன் மூலமும் தமிழில் காணப் பெறுமாயினும், ஏனைத் திராவிட மொழிகளில் காணப்பெறு மாயினும் அது தமிழ்ச் சொல்லே என்று தெளிதல் வேண்டும். இவற்றுடன்; பழகு தமிழிலேயே அழுத்தமான சான்றுகள் முறையாகக் கிடைப்பின் அதனைத் தமிழ்ச் சொல்லென ஏற்றுப் போற்ற அறிவுடையார் சிறிதும் தயங்கார். மயங்கித் தாம் முன்னர் வழங்கியிருப்பினும், உண்மை உணரும் பொழுதில் அறிவுடையார் உவந்து வரவேற்றுப் போற்றுவர் என்பதிலும் ஐயமில்லையாம். இக் குறிப்புடன், குட்டம் என்னும் சொல்லை நோக்குவோம். குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன்இங் கில்லை என்று புலவர் ஒருவர் பாடினார். ‘F£L¥ g£lhY« nkhâu¡ ifahš F£L¥ glnt©L«’ v‹gJ« ‘F£l¡ F£l¡ FÅgtD« kila‹; FÅa¡ FÅa¡ F£LgtD« kila‹’ v‹gJ« ‘F£od F£L« F©o‰ ghŒªj j©ÙU« tUkh? என்பதும் பிறவும் பழ மொழிகள். குட்டுங் கையைக் கருதுவோம்; வளமாக வளர்ந்து வளமாய் அமைந்த விரல்களும் எப்படிக் கூனிக் குறுகிப் போகின்றன? குட்டுங் கைவடிவு குட்டத்தின் இயல்பைக் குறித்துக் காட்டவில்லையா? கையைக் குறுக்கித் தாக்குவது குட்டு; கையைக் காலைக் குறுக்கு வைக்கும் நோய் குட்டம். குட்டுங்கையும் குட்டக் கையும் சொன் மூலத்தால் ஒன்றுபடும் இடம் இது. கட்டுக் குட்டான ஆள் என்பதில் குட்டு என்பது குறுமைப் பொருள் நேரே வழங்குதல் தெளிவு. குட்டுங்கையும், குட்டக்கையும் குட்டையாகிப் போகின்றன அதனால் சிறுமைப் பொருள் குட்டைக்கு ஏற்பட்டது. கட்டை குட்டை என்பது மரபு மொழி. குட்டைப்பலா, குறும்பலா எனப்பெறும். குறும்பலாவின் பெருமை குற்றாலத் தேவாரத்தில் விளங்குகிறது. குட்டையும் குழியுமோ குளங் குட்டையுமோ நாம் கேளாதன அல்ல கைக்குட்டை என்னும் புதுச் சொல்லும் நாகரிக உலகம் படைத்துக் கொண்டதே. குட்டையனும் குட்டைச்சியும் ஊரூர்க்கு இல்லாமலா போய்விட்டனர்! பட்டப் பெயர்களால் பரிமளிப்பவர்கள் அவர்கள் அல்லரோ! வளையக் காட்சிக் (Circus) குட்டையர் வரவை எதிர்பாரார் எவர்? குட்டை மட்டுமோ சிறுமைப் பொருளில் நின்றது? குட்டி என்பது சிறுமைப் பொருள் தருகின்றது அன்றோ! ஆட்டுக் குட்டி, கன்றுக் குட்டி, மான் குட்டி, முயல் குட்டி, எலிக்குட்டி முதலிய குட்டிப் பெயர்கள் - ஏன்? யானைக் குட்டியும் கூட, தாயை நோக்கச் சிறியவைதாமே! அக்குட்டிப்பெயர், எத்தனை எத்தனை குட்டிகளைப் போட்டுள்ளது, குட்டிச்சாக்கு, குட்டிப்பை, குட்டிக் கிழங்கு, குட்டிச்சுவர், குட்டிச் சாத்தான், குட்டிப்பல், குட்டி நரை, குட்டிப் பானை, குட்டி விரல், குட்டியப்பன், குட்டிக் கலகம், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம் இப்படி எண்ணிக் கொள்ளலாமே! விலங்கின் குட்டிதானோ குட்டி? மக்களிலும் குட்டிப் பெயர் உண்டே. ‘FHªij F£o v¤jid? என்பதிலும் குட்டி குறுமான் என்பதிலும் குட்டி மகளைக் குறிக்கவில்லையா! கால் தடம் ஒன்றைக் கொண்டே மகளிர், ஆடவரில் குட்டியர் என்பதைக் கண்டுவிடலாமே! மகன் மானாதல், பெருமகன் (பெருமான்) என்பதாலே அறிய வருமே! குட்டி பெண்பால் பெயராயின், ஆண்பால் பெயர் ஒன்று இருத்தலும் பொருந்துவதுதானே. அது குட்டன் என்பதாம். குட்ட நாடாம் மலையாள நாட்டிலே குட்டன் பெயருடையார் மிகப் பலர். இங்கே, பெரியாழ்வார் குட்டனொடு மிகமிகக் கொஞ்சுகிறார். என் குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான் என்கிறார் (1.9:1). கருங் குழற்குட்டனே சப்பாணி என்கிறார் (1.6:1) கோவலக் குட்டற்கு என்கிறார் (1.2:13). என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் என்கிறார்(1.4:2). குட்டம் என்பது மிகப் பழஞ்சொல். சங்கச் சான்றோர், வாக்கிலும் பயின்ற சொல். நெடுநீர்க் குட்டம் (புறம் 243). இருமுந்நீர்க் குட்டம் (புறம். 20) நளிகடல் இருங் குட்டம் *(புறம். 26) என்று பயில வழங்கப் பெறுகின்றது. இக் குட்டச் சொல்லிற்கு ஆழம் என்பது பொருளாம். குறுகிய இடத்தில் அமைந்த நீர் நிலையைக் குறித்த குட்டம் என்னும் சொல் அதன் பின் அதன் ஆழத்திற்கு ஆகிப், பின்னே, அதனினும் விரிந்து அவ்வாழப் பெருக்குடைய கடலளவுக்கு விரிந்ததாதல் வேண்டும். இதனை நோக்க இச் சொல்லின் தொல் பழமை மிகத் துலங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் யாப்பியல் கூறுங்கால். குட்டச் சொல்லைக் குறித்தார் (1372-74). குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப என்று கூறிக், குட்டம் அளவடியில் குறுகிய அடி என்பதைக் குறித்தார். உன் குட்டை உடைக்கிறேன் பார் என்பதில் குட்டு என்பது கரவான செய்திளையக் குறிக்கிறது. குறுகி ஆழ்ந்த நீர் நிலை இருள்படிந்து புலப்படாவாறு கிடப்பதன் வழியே, கரவுப் பொருள் குறித்ததாதல் வேண்டும். குள் என்னும் வேரில் இருந்து பிறந்த சொற்களுள் ஒன்று குட்டம். அது குறுமைப் பொருளது. அப் பொருள் மாறா வகையிலேயே ஆசிரியர் தொல்காப்பியர் காலம்முதல் வழங்கி வருகின்றது. அவருக்கு முன்னரும் வழங்கியது என்பதை அவர் மறவாமல் (1372) என்பர் (1374) என்மனார் புலவர் எனக் குறிப்பிடுகிறார். இத்தகு தொல் வழக்கும், பொருள் பொருத்திய நெறிமுறை வழக்கும், சான்றுகளும் பல்கியிருத்தலின் குட்டம் என்னும் தமிழ்ச் சொல்லே குஷ்டம் என ஆய்வின்றி எழுதப் பெறுகிறது. எனக் கொள்க. வடமொழி பயிலச் சென்ற ஒருவன் வடமொழி ஷ் தமிழில் ட் ஆகும் எனத் தெரிந்த அளவில், வடமொழி பயின்றதாகத் திரும்பினானாம். ஆட்டுக் குட்டி ஒன்று வேட்டியைத் தின்னக் கண்டானாம். தன் மொழிப் புலமையைக் காட்டுவானாய், ஆஷ்டுக் குஷ்டி வேஷ்டியை திஷ்ட்றது ஓஷ்டு ஓஷ்டு என்றானாம். இவ்வாறு என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்த தவற்றின் விளைவே குஷ்டம் என்று நகைக்கவே தோன்றுகிறது! அதே பொழுதில் நம்மவர் செய்கை நலிவுறுத்தக் கூடியது என்பதைக் கூறாமல் விடுவதும் முறையில்லை என்றே தோன்றுகிறது.  29. குண்டு குர், குல், குள், குண் முதலாம் வேர்களின் வழியாகப் பிறக்கும் சொற்கள் வட்டம், வளையம், உருட்சி, திரட்சி முதலிய பொருள்களைத் தரும். கோலிக் குண்டையும் துமுக்கிக் குண்டையும் (துமுக்கி -துப்பாக்கி) பார்த்த அளவான் குண்டின் அமைப்புப் புலப்படுமே. குண்டு மல்லிகை குண்டின் வடிவ மணமும் பரப்புவதன்றோ! குண்டு எறிதல் என்னும் விளையாட்டுக் கருவி நாம் அறியாததா? அணுக்குண்டுக் கொடுமை சொல்ல வேண்டுமா? அக் குண்டுமாரி பொழியவும் துடிக்கும் வெறியர் உண்டென்பது உலகம் காணாததா? குண்டின் வழியாகக் குண்டடித்தல் விளையாட்டு மட்டுமா வெளிப்படுகிறது! குண்டடித்தல் என்பதற்குத் தோல்விப் பொருளும் தந்து விட்டதே! கொடுமைக்குக் களமாகக் குண்டு போடும் தீமை, வரவேற்புக்கும் மகிழ்வுக்கும் கூட உலகளாவிய சான்றாக விளங்குகின்றதே! குண்டு குண்டாக எழுதுதல் பாராட்டுக்குரியதன்றோ! குண்டுச் சட்டி, குண்டுச் செம்பு (உருண்டைச் செம்பு; உருளி என்பதும் அது) குண்டா, குண்டான், குண்டாஞ்சட்டி, குண்டு வட்டில் (கும்பா) என்பன வழக்கில் உள்ள உண்கல வகைகள். குண்டாவின் பருமை அண்டா குண்டா என்பதால் புலப்படும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டல் என்பது பழமொழி. குண்டிகை என்பது கமண்டலம்; குண்டி, குண்டிக்காய் என்பன உறுப்புகள். குண்டூசியும் குண்டாணியும் வழக்கில் உள்ள செய்பொருள்கள். குண்டெழுத்தாணி பண்டு வழக்கில் இருந்த எழுத் தாணிகளுள் ஒன்று; அதன் தலையில் குண்டு அமைப்பு இருக்கும் குண்டு அரமும் உண்டு. அதன் பெயர் குண்டரம். கட்டட வேலைக்குப் பயன்படுவது நூல்குண்டு, குண்டுமணி என்பது உருண்டு திரண்டமணி; குன்றிமணியைக் குண்டுமணி, குண்டுமுத்து என்பது பிழைவழக்கு. வளைந்து சுருளும் சுருட்டைப் பாம்புக்குக் குண்டலி என்பது பெயர்; ஆல வட்டமெனத் தோகை விரித்தாடும் மயிலுக்கும் குண்டலிப் பெயர் உண்டு. உருண்டு திரண்ட குதிரை, காளை ஆகியவற்றைக் குண்டை எனப்படுதல் இலக்கிய வழக்கு. உருண்டு திரண்ட குறும் பூதம் குண்டைப் பதம் எனப்படும். குண்டோதரன் புகழ், திருவிளையாடல் கண்டது. குண்டம் - பெருந்தாழி, ஆழ்குழி. உதரம் - வயிறு; பெருங்குழி எப்படிப் போட்ட பொருள்களையெல்லாம் வாங்கிக் கொள்ளுமோ அப்படி வாங்கிக் கொள்ளும் பெருவயிறன்! இது பொருந்தப் புனைந்த புனைவுப் பெயர். குண்டலம் அண்மைக் காலம் வரை வழக்கில் இருந்த காதணி. குண்டல கேசி என்பாள் சுருட்டைக் கூந்தலள் அல்லது சுரிகுழலி! அவள் பெயர் அவளைப் பற்றிய நூற்பெயராகித் தமிழன்னையின் குண்டலமெனவும் புனைந்துரைக்கப்படுவ தாயிற்று. காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் என்பது. அப்பாட்டின் தொடக்கம் குண்டுக் கடுக்கன், அல்லது கடுக்கன் குண்டு சிறுவர் காதணியாக இன்றுமுண்டு! குண்டுக் கட்டு; குறுந்தாட்டு என்பது இலக்கண மேற்கோள். கட்டு - கண்ணையுடையது; தாட்டு - தாளை (காலை) உடையது; உருண்டைக் கண்ணையும் குட்டைக் காலையும் உடையதைக் குறிப்பது இத்தொடர். குண்டுகட்பாலி யாதனார் என்பார் சங்கப் புலவருள் ஒருவர். குண்டு என்பது ஆழம் என்றும், குழி என்றும், நன்செய் நிலம் என்றும் பொருள் தரும். மேலைக்குண்டு, கீழைக் குண்டு என வயல் நிலம் சுட்டப்படுவதும், குண்டும் குழியுமாகக் கிடக்கிறது எனக் கூறப்படுவதும் அறியத் தக்கன. குண்டம் பாய்தல் என்பது பூக்குழியில் இறங்குதல். கதிரோன் பெயராலும் திங்களின் பெயராலும் விளங்கிய நீர்த்துறைகள் முறையே சூரிய குண்டம், சோம குண்டம் என வழங்கப்பட்டமை சிலம்பால் அறிய வரும் செய்தி. குண்டு நீர் இலஞ்சி, குண்டுக்கண் அகழி குண்டு நீர் குண்டகழ், குண்டுக் கயம் என்பன சங்கத்தார் ஆட்சிகள். எருமைமேல் இருக்கும் சிறுவன் ஒருவனைக் குண்டுக்கல் மேல் குந்தியிருக்கும் குரங்குக் காட்சியாக்குகிறது சங்கப் பாட்டொன்று. குண்டையூர் கிழார் புகழைத் திருத் தொண்டர் புராணம் விரித்துரைக்கிறது. குண்டூர்க் கூற்றம் பண்டைச் சேரநாட்டின் ஒரு பகுதி, குண்டக்கல் குண்டாழஞ்சேரி என்னும் பெயர் களையும் கடமலைக் குண்டு, கூத்தியார் குண்டு, வெற்றிலை (வத்தல)க் குண்டு, குண்டத்தூர் முதலாக வழங்கும் பெயர் களையும் எண்ணுக. குண்டெல்லாம் மருதநில ஊர்களாகவும், பள்ளத் தாக்கினவாகவும் இருத்தல் பெயரீட்டுச் சிறப்பை நன்கு விளக்குவதாம். குண்டு கட்டாகத் தூக்குதல் என்பது காலையும் கையையும் மடக்கித் திரட்டித் தூக்குதல்; சிறைப்படுத்துதல் போல்வது. குண்டக்க மண்டக்கப் படுத்தல் என்பது பொது மக்கள் வழக்கு. கால்மாறித் தலைமாறி உருண்டு புரண்டு கிடக்கும் படுக்கை நிலை அது. வம்பப்பரத்தை என்னும் தொடருக்கு இடங்கழி காமத்த ளாகிய குண்டக்கணிகை என்று பொருள் எழுதுகிறார் அடி யார்க்கு நல்லார் (சிலப். (10:219). ஓடியாடும் சிறுவர்களைக் குண்டை என வழங்குவதையும் சிலப்பதிகாரம் குறிக்கிறது (2 :88). குண்டன் என்பதற்கு, இவற்றையெல்லாம் திரட்டி உருட்டிய பொருள் போல் அடிமை, அடித்தொண்டு செய்பவன், முறை கேடாம் வழியில் பிறந்தவன், முறைகேடன், சிறு குணத்தன், முரடன், கொடியன் கொடுமைக்கு அஞ்சாதவன், வன்பன், தடியன் எனப் பல பொருள்களை அகராதிகள் வழங்கு கின்றன. குண்டர் தடைச் சட்டம் என ஒரு சட்டம் உண்மை நாடறிந்த செய்தி தானே!  30. குத்து விளக்கு தமிழர் வாழ்வில் குத்து விளக்குக்குத் தனிச் சிறப்பாம் இடம் உண்டு. ஒளியேற்றும் பயன்பொருளாக இருப்பதுடன் மங்கலப் பொருளாகவும், கலைப் பொருளாகவும், தெய்வப் பொருளாகவும் திகழ்கின்றது குத்துவிளக்கு! அழைப்பிதழில் குத்துவிளக்குப்படம் போட்டுவிட்டால் திருமணவிழா என்றோ, புதுமனை புகுவிழா என்றோ எவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் பழகிப்போய்விட்டது. குடும்பம் ஒரு குத்து விளக்கு என்பது நம்மவர் பழமொழி. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி என்பது பாவை பாடிய பாவைப்பாட்டு (19). குத்து விளக்கு என்பதிலுள்ள குத்துக்குப் பொருளென்ன? குத்துக்கும் விளக்குக்கும் உள்ள நேரடித் தொடர்பு விளக்கமாக வில்லையே! குத்தைப் பற்றி ஆய்ந்தே முடிவுக்கு வர வேண்டும்! குத்துதலால் பெயர்பெற்றது குத்தூசி. முள் குத்தினால் முள்ளால் குத்தி அதை எடுப்பது காட்டுப்புறத்தில் இந்நாளிலும் காணும் நிகழ்வு! வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கற்றாழை முள்ளுக் கொத்தோடு குத்திற்றாம்! என்பது பெருகவழங்கும் பழமொழி. மேல்மண் கீழ்மண் கலக்குமாறு உழும் கலப்பையில் குத்தி உண்டு. அதற்குக் கலப்பைக் குத்தி என்பது பெயர். குத்தி உழுதலால் பெற்ற பெயர் அது, களையைக் குத்தி எடுப்பதற்குக் கூர்ப்புடைய குச்சியையோ, கம்பியையோ பயன்படுத்துவர். அதற்குக் களைக்குத்தி என்பது பெயர். மண்ணை ஆழமாகத் தோண்டுவார் குத்துக்கம்பியாம் கடப்பாறையைப் பயன் படுத்துவர். கிணற்றில் நீர் இறைப்பதற்குக் கருவிகள் சிலவேண்டும். அவற்றுள் கீழ் குத்துக்கால் பத்தற்கல்லில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். மேற்குத்துக்கால் பட்டடைச் சட்டத்தில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். கூனை அல்லது சால் சுவரில் தட்டாமல் வருவதற்குரிய உள்வளைவை ஆக்கி உதவுவவை இவ்விருவகைக் குத்துக்கால்களே! குத்துக் கால்கள் போல் ஊன்றி உட்காருதலே குத்துக் காலில் உட்காருதல் என்பதாம். தேங்காய் நெற்றை உரிப்பதற்குரிய கருவி குத்துத் தரம் என்பது. ஒரு கட்டையில் ஊன்றி இறுக்கி வைக்கப் பட்ட கூர்நுனைக் கம்பியே குத்தி உரிப்பதற்குப் பயன்படுவது. யானைப் பாகர்கள் கையில் குத்துக்கோல் வைத்திருப்பர். கன்னம் போடுதற்கெனவும் குத்துக்கோல் உண்டு. பாம்பு பிடிப்பவர் குத்துத்தடி கொண்டிருப்பர். போர்க் கருவியாகவும் குத்துத்தடி. பயன்பட்டதுண்டு. குத்துக் கருவி இல்லாமலே கைவிரல்களை மடக்கிக் குத்துச் சண்டை செய்வதும் உண்டு. அச்சண்டை செய்பவர் குத்திப் பயில்வான் எனப்பட்டனர். ஓதுவது ஒழியாத ஓதுவார் போலக் குத்துப்பயிற்சியை விடாப் பயிற்சியர் குத்திப் பயில்வான் எனப்பட்டனர். அவர்கள் குதிப் பைல்வான் என்னும் பெயரால் இக்கால் உலாவரு கின்றனர். மூக்கில் குத்தி அணியப்பெறும் அணிகலம் மூக்குத்தி (மூக்குக் குத்தி)! காது குத்து வைத்துப் பலபேர் காது குத்துதல் சில குடிவழிகளில் பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. காதணி அணியாவிட்டாலும், குத்துவாய் காது குத்தைக் காட்டிக் கொண்டிருத்தல் ஆடவர் பலரிடத்தும் இன்றும் காணலாகும். புலிகுத்தி யானைகுத்தி என்பவை பழங்காலத்தில் வீரர்கள் பெற்ற பராட்டுகள். பட்ட கல்லில் புலிகுத்திச் செய்தியுண்டு! பட்ட கல் நட்ட கல்லாய் வீர வழிபாடு ஏற்பட்டமை தொல்பழவழக்கு. மீனைக் குத்தி எடுக்கும் பறவை மீன்குத்தி (மீன் கொத்தி). மரத்தைக் குத்தி மகிழும் பறவை மரங்குத்தி (மரங்கொத்தி). குத்துதலால் குத்திப் பெயர் பெற்ற பறவைகள் இவை. கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து என்றார் திருவள்ளுவர். ஓரிடத்து ஊன்றுகையாகிய குத்துகையே குத்தகையாக வழங்கப்படுகின்றது. குத்தகைக் கால எல்லைக்கு முன்னர் ஒருவரை வெளியேற்றிவிட முடியாதே! இப்படிக் குத்துச் சொல் பெருக வழங்குகின்றது. ஆனால், குத்து விளக்கில் குத்துக்கு என்ன பொருள்? அங்கே குத்து இல்லையே! ஊர்ப்புறக்கோயில், பெருங்கோயில் ஆகியவற்றில் விளக்குகள் எப்படியுள்ளன என்பதைக் கூர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். ஊன்றிய கற்றூணின் உச்சியில் உள்ள குழியில் எண் ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும்; அல்லது, ஊன்றிய கம்பியின் மேல் உள்ள தகட்டுச் சிட்டிகளில் எண்ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும். அவ் விளக்குகள் நிலத்தில் குத்தி வைக்கப் பட்டமையால் குத்து விளக்கு எனப்பட்டன; பின்னர், வெண்கலம் பித்தளை வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட நிலைவிளக்கு குத்துவிளக்கு எனப்பெயர் பெற்றது. தகட்டால் அளவைக்கருவி ஆய பின்னரும் மரங்கால் எனவும், தங்கத்தால் காதணி ஆயபின்னரும் தோடு எனவும் வழங்குகின்றன அல்லவா! அவற்றைப் போல் என்க. குடும்பம் குத்து விளக்கு எனக் கூறும் தமிழகம் வாழ்க்கைத் துணைவியை விளக்கேற்ற வந்தவள் என்பது மரபு கருதிய வழக்காம்! சொன்மரபு, வாழ்வியல் மரபு காட்டும் என்பதற்குச் சீரிய எடுத்துக்காட்டு குத்துவிளக்கு என்க.  31. கொக்கு பறவைகள் சில ஒன்று கூடுகின்றன. மகிழ்ச்சியாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன; அந்நிலைகளில் அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்த மாந்தன் காதால் கேட்கின்றான். அவ்வொலி, கொக் கொக் என்பதாக அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அப் பறவைக்குக் கொக்கு எனப் பெயர் வைக்கின்றான். பின்னர் அப்பெயரை அவனும் தொடர்ந்து வழங்கினான். அதனைக் கேட்ட பிறரும் தொடர்ந்து வழங்கினர். ஒலி வழியால் வந்த அச்சொற் செல்வம் இந்நாள் வரை தொடர்கின்றது. கொக் கொக் என ஒலிக்கும் ஒலியால் வந்த அப்பெயர், கொக்கைக் காணாத இடத்தில் சொன்னாலும் அதன் வடிவத்தை நினைவூட்டுவதாக நிலைபெற்றது அதனால் அச்சொல் வளர்ந்தது. மொழிவளத்திற்கும் உதவியது. கொல்லு வேலை செய்பவர், ஒரு கம்பியை எடுத்து வளைவாகச் செய்தனர். அவர்க்குக் கொக்கின் வடிவம் நினைவில் நின்றது. கொக்குப்போல் வளைத்துள்ள அக்கம்பியைக் கொக்கி என்றார். கொக்கியில், கொக்கு வடிவம் அமைந்த அளவில் நில்லாமல், அதன் பெயரும் இணைந்த சிறப்பு இந்நாள் வரை மாறாமல் உள்ளதை நாம் அறிகிறோம். பொன்னால் ஒரு தொடர் (சங்கிலி) செய்தார் ஒருவர். ஒரு முனையை மறுமுனையில் பூட்டிக் கழற்றப் பூட்டுவாய் அமைத்தார். அப்பூட்டுவாய் அமைப்புக்குக் கொக்கின் கழுத்தும் வாயமைப்பும் துணையாயின. அமைப்புக்குத் துணையாய, அது, பெயர்க்கும் துணையாயது. அதனால் கொக்குவாய் என்னும் பெயர் அமைந்தது. தொடர்ந்து நிலைபெற்றது. கொக்குவாய் கொக்கில், கொக்கி எனவும் வழக்கில் நின்றது. ஒரு புழு நெளிந்து வளைந்து சென்றது. அதன் வளைவை அறிந்த ஒருவன் அப்புழுவின் வளைவுடன் கொக்கின் வளைவை ஒப்பிட்டுப் பார்த்தான். அதன் விளைவாகக் கொக்கிப் புழு எனப்பெயரிட்டான். தமிழுலகம் அப்பெயரைப் போற்றி ஏற்றுக் கொண்டது. ஒரு கொக்கு ஒலியெழுப்பிக் கொண்டும், தலையைத் தூக்கிக் கொண்டும் மற்றொரு கொக்குடன் மோதச் செல்லும் காட்சியை ஒருவன் உற்றுக் கண்டும் கேட்டும் சிந்தித்தான். அதன் ஒலியும் எடுத்த தோற்றமும் அவனை வயப்படுத்தின. அதனால் அவன் எண்ணத்தில் கொக்கரிப்பு அப்பறவைகளின் செருக்கிய செயலுக்கு ஆகி அதன் பின்னே மாந்தர் செருக்கைச் சுட்டுவ தாகவும் வளர்ந்தது. உன் கொக்கரிப்புக்கு நான் அஞ்சிய ஆளா என்று எதிரிட்டுக் கொக்கரிக்கும் காட்சி நாம் அறியாத தன்றே! கோழி கொக்கரிக்கும் என்பதும் நாம் கேளாத தன்றே! கொக்கு + அரி = கொக்கரி; அரி என்பதன் பொருள் ஒலி, சிலம்பு முதலியவற்றில் ஒலியுண்டாகப் போடப்படும். முத்து, மணி, கல் முதலியவை அரி எனப்படும். பாண்டியன் முத்துடை அரியே என்றதும், கண்ணகியார் மணியுடையரியே என்றதும் சிலம்புச் செய்தி. அரிக் குரல் கிண்கிணி என்பது மழலையர் காலணி. அரிக்கூடு இன்னியம் என்பது இசைக் கருவி. கொக்கின் ஒலி போல் ஒலிக்க ஓர் இசைக்கருவி படைத்தான் இசைவல்லான் ஒருவன். அவன் அதற்குக் கொக்கரி என்றும் கொக்கரை என்றும் பெயரிட்டான் கரடி போல் ஒலிப்பதைக் கரடிகை என்றும் சல்சல் என ஒலிப்பதைச் சல்லிகை என்றும் பெயர் வைத்தவன் அவன். ஆதலால், கொக்கரி அமைத்தல் அவனுக்கு இயல்பாயிற்று. கொக்கின் உயரமான காலில் ஒருவன் உள்ளம் தோய்ந்தது. அதன் உடலுக்கும் காலுக்கும் உள்ள பொருந்தாப் பொருத்தம் அவனை வயப்படுத்திற்று; ஒல்கி (ஒல்லி) யாய் நெடிதுயர்ந்த நெடுங்காலனை. நெட்டைக் கொக்கன் என்றும், கொக்கன் என்றும், கொக்குக் காலன். என்றும் பட்டப் பெயர் சூட்ட ஏவிற்று. அப் பட்டப் பெயரே பெயராய் அமைந்தாரும் நாம் அறியாதவர். அல்லரே!. அக்கால் அவ்வளவுடன் நின்றதா? மூன்றுகால் இருக்கை முக்காலியாய், நான்கு கால் இருக்கை நாற்காலியாய் அமைந்தது வெளிப்படை. அவ்வாறு இருக்கை ஆகாமல் கால் நீண்டதாய் ஒட்டடை தட்டவும், அட்டளைப் பொருள் எடுக்கவும், கட்டட வேலைக்குப் பயன்படுத்தவும் அமைந்த நெடுங்காலியாம் செய் பொருளுக்குக் கொக்குக் காலி எனப் பெயரிடச் செய்தது. கொக்குக் காலியே. கொக்கு காலியாய் கோக்காலியாய் வழக்கில் உள்ளதாம். கொக்கின் வளைவென்க, கொக்குச் சொல்லாய்வும் வளையமிடுவதைத் தொடர்வோம். 32. கோயில் கோயில் என்பதா? கோவில் என்பதா? இருவகையாலும் சொல்லுகின்றனரே. கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் கூட இரு வகையாலும் எழுதுகின்றனரே, எது சரியானது? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்று பள்ளிப் பிள்ளைகளுக்கும் சொல்லி வைத்தார் பாட்டி. கோயில் இல்லா ஊரே தமிழகத்தில் இல்லை என்பதும் உண்மை! அக் கோயில்களிலேயும், அதன் விளம்பரத்திலேயும் கூடக் கோயிலும், கோவிலும் மாறிமாறித் தலைகாட்டி மயக்குகின்றனவே; கோயில் பெயரிலே கோயிலுக்கே குழப்பம் வரலாமா? கோயில் ஊர்களிலே குழப்பம் வரலாமா? கோ என்பது ஓர் எழுத்து ஒரு சொல். இதற்கு நாற்பதிற்கு மேற்பட்ட பொருள்கள் உளவாயினும், அரசன், தலைவன், இறைவன் என்னும் பொருள்களின் அடிப்படையிலேயே கோயில் என்பது வந்தது, கோஇல் என்னும் இரு சொற்களின் இணைப்பே கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. கோ-அரசன்; அவன் கோமகன், கோமான், கோவேந்தன் என்றும் வழங்கப்பெற்றான். அரசி கோமகள், கோமாள், கோப் பெருந்தேவி, கோயிலாள் என வழங்கப் பெற்றாள். இருவர்க்கும் தனித்தனி அரண்மனைப் பகுதிகள் இருந்தன. அரசுறை கோயில் 1. அரசன் செழுங்கோயில், 2. கோமகன் கோயில், 3. என்றும் கோப்பெருந்தேவி கோயில், 4. கொங்கவிழ் குழலாள் கோயில் என்றும் வருவனவற்றால் அறியலாம். இனிப் பொதுவகையால், கோயில் என்று வருவன இரண்டன் பகுதிகளையும் உட்கொண்ட அரண்மனைகளையும் காவல் மிக்க மாளிகை இடங்களையும் குறிப்பனவாம். சோழன் கோயில் 6. ஆஅய் கோயில், 7. காவல் வெண்குடை மன்னவன் கோயில், 8. மாலை வெண்குடை மன்னவன் கோயில், 9. மறத் துறை விளங்கிய மன்னவன் கோயில்,10. பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயில், 11. வேறுபட்ட வினை யோவத்து வெண்கோயில், 12. என இவ்வாறு வருவனவற்றால் விளங்கும். கோயிலில் பணிபுரிந்தவர்கள் கோயின் மாக்கள், கோயிலார் எனப் பெற்றனர். அரண்மனைத் தொடர்பால் பெற்ற பெயர்கள் இவை என்பது வெளிப்படை. காவல் கடமை புரிந்த வேந்தனைக் கடவுளாக மக்கள் மதித்தனர்; வழிப்பட்டனர். மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என வாழ்ந்தனர். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என அறநூல் கூறும் அளவுக்கு அரசர் செல்வாக்கு இருந்தது. அவர் தம் அரண்மனைக்குள்ளே இறைவனும் கோயில் கொண்டான்; அவன் கோயில் கொண்ட இடமும் கோயில் ஆயிற்று. அரசர்க்குரிய விழாக்களும் சிறப்புக்களும் கோயில்களுக்கு உரியவையாயின. இந்நிலையில் அரசன் கோயிலும் இறைவன் கோயிலும் ஒன்றாகியும், வேறாகியும் விளங்கின. இதனை, அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் 13 என்றும், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் 14 என்றும் இளங்கோவடிகளார் இயம்புகின்றார். அரண்மனை, பெருமாளிகை, இறைவன் குடிகொண்ட இடம் ஆகியவை கோயில் என வழங்கப்பெற்றன என்பதை நாம் தெளிவாக அறிகின்றோம். இவற்றுள் எந்த ஓர் இடமும் - எந்த நூலிலும் - கோயில் என்பதை அன்றிக் கோவில் எனக் குறிக்கப் பெற்றதே இல்லை. பழந்தமிழ்ச் சான்றோர் காலம் தொட்டு ஔவைப்பாட்டி காலம் வரைக்கும் கூட கோயில் மாறவில்லை. இடைக்கால பிற்காலங்களில் எழுந்த கோயில் திருவாய் மொழி, கோயில் நான்மணிமாலை, கோயில் கலம்பகம்; கோயில் புராணம், கோயில் திரு அகவல், கோயில், திருப்பணியர் விருத்தம் என்பவற்றிலும் கோயில் செவ்வையாகவே இருந்தது. கோயில் ஒழுகு என்னும் நூலும் தன் ஒழுகு தவறாமலே இலங்கியது. ஆனால்! இன்று கோயிலும் கோவிலும் குழம்பிக் குலாவுகின்றன, அகர வரிசை நூல்கள் கோயிலொடு கோவிலுக்கும் இடம் தந்துவிட்டன. ஆனால் நிகண்டு நூல்களில் கோவில் புகுந்திலது. ஆசிரியர் தொல்காப்பியனார் உயிர் மயங்கியலில், இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் (91) என்றார். அதற்கு. ஓகாரவீற்றுக்கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும் என உரை கூறிக் கோயில் என எடுத்துக்காட்டுத் தந்தார் இளம்பூரணர். ஆனால், இதே உரையைத் தழுவிக் கொண்ட நச்சினார்க்கினியர் உரை கோவில் என எடுத்துக் காட்டுத் தருகின்றது. இஃது ஏடு எழுதியவர் தவறாகவோ; பெயர்த்தவர் தவறாகவோ அமைதலும் கூடும்! கோவூர், கோவியன் வீதி என்பன சங்கச் சான்றோர் நாளிலேயே வழங்கப் பெற்றனவே எனச் சிலர் எண்ணவும் கூடும். கோவூர் என்பது வகர உடம்படு மெய் பெற்று நின்றது. மற்றது, கோவியன் வீதி எனப் பிரிந்து வியன் என்னும் அகற்சிப் பொருள் தரும் உரிச்சொல்லாக நின்றது. இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை, உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும், உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும் 15 என்று நன்னூலார் உடம்படு மெய்க்கு விதித்த விதி கோயிலுக்குப் பொருந்தாது. அதனால் அன்றே, உரைகாரர் கோவில் எனக் காட்டார் ஆயினர். காட்டினும், இலக்கிய வழக்கொடு முரணுவது என்று தள்ளுவதே முறையாம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது தொன்னெறி. அம் மரபு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை போற்றப் பெற்றது. மரபு நிலை திரியின் பிறிதுபிறி தாகும் என உணர்ந்து கோயில் எனச் சொல்லுதலும் எழுதுதலும் கடமையாம். 16, 17. 1. சிலப். 18: 25;2. சிலப், 19:75; 3, சிலப், 22:14; மணி 7:64 4. சிலப் 16 - 139; 5. மணி 23; 38; 6. புறம், 378: 7. புறம். 127;8 சிலப். 3.1 8;9 சிலப் 5: 173; 10. சிலப். 14; 12; 11. சிலப். 13: 138; 12. பட். 50: 13; 13. சிலப் 13: 137-8; 14 சிலப், 5. 169: 173; 15 நன்னூல் 162; 16. கோயில் எனவழங்கும் இடங்கள் வரம்பிலவாக இருத்தலின் அவற்றை யெல்லாம் காட்டாது சிலவே சுட்டப் பெற்றன. 17 பிற்காலப் புலவர்கள், அறிஞர்கள் ஆகியோர் மரபு நிலை மாறாமலும், மயங்கியும் எழுதியவற்றைக் கற்பார் கண்டு கொள்வர் எனச் சுட்டிக்காட்டப் பெற்றில.  33. சட்டினி சட்னி என்பது பெருவழக்குச் சொல். இட்டவி தோசை இருக்கும் இடங்களிலெல்லாம் இருப்பது சட்னி, இதனைத் தமிழ் மரபில் சட்டினி என எழுதுவர். இட்லியை இட்டிலி என எழுதுவது போல என்க. சட்னி தமிழ்ச் சொல்லே என ஆர்வத்தால் சொல்பவர்கள் சட்டுணி என வடிவமைத்துக்கொள்வர். சட்டு என்பது விரைவுக் குறிப்புச் சொல். சட்டெனவா சட்டென்று எதையும் செய்யமாட்டாள் என்பவை வழக்கில் உள்ளவை. சட்டுப்புட்டு என்று பார்த்துவிட்டு வா என இணைச் சொல்லாகியும் விரைவுக் குறிப்பு உணர்த்தும். ஆதலால், சட்டென விரைவாக உண்பதற்குத் துணையாவது சட்டுணி எனப் பொருத்தம் காட்டினர். இது, தமிழ்ச் சொல்லாக்கிக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடேயன்றி, இச்சொல் தமிழ்ச்சொல் அன்றாம். ரதா என ஒரு சொல் வந்தது. விளைவு என்ன ஆனது? எந்தக் குப்பை எனினும் புதிது என்றால் உடனே பற்றிக் கொள்ளும் வழக்கே வழக்காக்கிக் கொண்டுவரும் போலித் தன்மையில் திளைக்கும் தமிழர், எத்தனை சொற்களைக் கைவிட்டனர்? ஆறு, நெறி, வழி, பாதை, தடம், தடி, சாலை, பெருவழி, நெடுவழி, தனிவழி, பொது வழி முதலாம் தமிழ்ச் சொற்களை ஓங்கி உதைத்து ஒழித்துக் கட்டிவிட்டதை வரலாற்றுலகம் நன்கு அறியும். இது கண்ணேரில் காணும் காட்சி! சாலை முதலிய சொற்கள் ஒரு ரதாவால் இப்படிப் போயினவே என வருந்தியவர்கள், மங்கம்மாள் சாலை மறந்து விடாதே சோலை என்பது போன்ற பழமொழி, பொதுமக்கள் வழக்கு ஆகியவற்றை எண்ணிச் சாலையைத் தலை காட்ட வைத்தனர். ஆனாலும் மேலும் என்ன ஆனது? ஆங்கில ரோடு வந்தது. நாடெல்லாம் பரவியது. தமிழ்ச் சாலைக்கு மூடுவிழாவைத் தமிழரே முனைந்து நடத்திவிட்டனர்! இப்படித்தான் சட்னியின் ஆட்சி நிகழ்ந்தது. சட்னி என்பது உருதுச்சொல். அச்சொல் வருமுன் தமிழில் வழங்கிய சொல் துவையல். ஒரு துவையலா வழக்கில் இருந்தது? இருக்கின்றது? மிளகாய்த் துவையல், பொரிகடலைத் துவையல் தேங்காய்த் துவையல், கறிவேப்பிலைத் துவையல், பயற்றுத் துவையல், மல்லித் துவையல், புதினாத் துவையல் என்பன நாம் அறியாதனவா? துவையலின் சுவை விளங்கக் காரத்துவையல், உறைப்புத் துவையல், புளித்துவையல், எனவும், அதன் இறுக்கநிலை, நெகிழ்நிலை ஆகியவை விளங்கக் கட்டித் துவையல், கரை துவையல் எனவும் வழங்குகின்றது. அம்மியில் வைத்துத் துவைத்து (அடித்துத் தட்டி) ஆக்கு வதால் துவையல் ஆயிற்று. துணி சலவை செய்வதைத் துவைத்தல் என்பது அறிக. துவையல் போலவே பொரியல், அவியல், வறையல், வற்றல், கூட்டு, குழம்பு முதலானவை தொழில் வழிவந்த பெயர்களே. துவையல் வழக்கு முற்றாக அழிந்து விடவில்லை. இட்லி தோசையொடு கூடுகின்ற நிலையில்தான் அழிந்துவிட்டது. சோற்றுணவுடன் சேரும்போது தன் ஆட்சியை விடாமல் வைத்துக் கொண்டுள்ளது. கட்டித் துவையல் சோற்றுக்கு என்றால், கரை துவையல் தோசை இட்டவிக்கு! கரைதுவையலின் தலையில் கைவைத்த சட்னி கட்டித் துவையலையாவது விட்டதா? கட்டிச்சட்னி என்னும் பெயரால் அதன் தலையையும் தடவி விட்டது! இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் என்பதும், ஊசி நுழைய இடம் தந்தால் ஒட்டகம் நுழைந்துவிடும் என்பதும் பழ மொழிகள். ஒரு ரசம் வந்தது; மிளகுச் சாறு, மிளகுத் தண்ணீர், மிளகு நீர் என்பவை அழிந்தன. புளிச்சாறு என்பதும் அவ்வகையினதே. புளிக்குழம்பு கட்டியானது அதுவேறு. புளிச் சாறு வேறு, ஆங்கிலவரும் மிளகு தண்ணியைக் கொண்டனர். நம் தமிழரோ இரசத்தில் திளைக்கின்றனர். சாற்றின் இடத்தை இரசம் பற்றிக் கொண்டது என்பதால் பயன் என்ன? பழச்சாறு கனிச்சாறு எனப் பளிச்சிடும் எழுத்தில் புத்தம் புதுவணிக நிலையங்களில் காண்பது இல்லையா! அந்த உணர்வு வந்துவிட்டால் பொது வழக்காகி விடும். áy® JªJ eilKiw¡F¡ bfh©L tªjhš, gyU« V‰F« Ãiy f£lha« V‰g£nl ÔU«! நாம் சட்னி என்பதை யாழ்ப்பாணத்தார் பச்சணி என்கின்றனர். ஏன்? பச்சைமிளகாய், பச்சைத் தேங்காய் (அவிக்காத, காயவைக்காத, பொரிக்காத தேங்காய்) இத்தகைய பொருள்களை அரைத்து ஆக்கும் துவையலைப் பச்சணி என்பது தக்கதே. நாம் பச்சடி என ஒரு வகைக் கறியமைத்துக் கொள்வது இல்லையா? பச்சணி, அரைத்து ஆக்குவது; பச்சடி, சமைத்து ஆக்குவது; முன்னது, சிற்றுணவுத் துணை; பின்னது, பேருணவுத் துணை. இனிக் கிச்சடி என்பதொரு சொல் உண்டு. அது கோயில் திருவுணவுள் ஒன்றெனக் கோயிலொழுகு கூறும்; கிச்சடி சென்னைப் பகுதியில் ஒருவகைச் சிற்றுணவு; நெல்லைப் பகுதியில் சட்டினிக்கு ஒரு பெயர் கிச்சடி என்பது. இக்கிச்சடியும் தமிழ்ச் சொல் அன்று. மராட்டிச் சொல் என்பர். நாம் சட்டினியை யாழ்ப்பாணத்தார் வழங்குவதுபோல் பச்சணி எனலாம். அல்லது பழைய வழக்காகிய கரை துவை யலை ஆட்சிக்குக் கொண்டுவரலாம். மொழிக்காவல் என்பது சொற்காவல்! புதுச்சொல்லாக்கம்; பழஞ்சொல்லாட்சியைப் புதுக்கல் என்பவை சொற்காவல் வழிகளில் தலையாயவை. உறங்கியவன் கன்று கடாக் கன்று என்பது பழமொழி. பருப்புக் குழம்பின் இடத்தைச் சாம்பார் பறித்துக் கொண்டது! அதனை எளிமையாகத் தனித் தமிழ்ப் பற்றுடையவர்களாலும் மீட்டுக் கொள்ள முடிகிறதா? சட்டினி இடத்திலே பச்சணி வருமா? கரைதுவையல் வருமா? இரண்டுமே வருமா? வழக்குக்குக் கொண்டுவரும் உணர்வாளர்களைப் பொறுத்தது அது. உணவு விடுதிக்காரர் எவர்க்கேனும் மொழிக்காவல் உணர்வு உண்டாகாதோ? உண்டாகிவிட்டால், ஓராயிரம் தமிழ்க் காவலர்களின் ஒரு மொத்த வடிவாக அவர் தொண்டாற்ற முடியும்!  34. சலம் வாய்க்காலில் நீர் ஓடுகின்றது. அதில் ஒருவன் தன் கையை வைத்து நில் நில் எனத்தடுக்கின்றான். நீர், நில்லாமல் சலசல என்னும் ஒலியுடன் ஓடுகின்றது. கையை வைத்து நீரைத் தடுத்தவனுக்கு, தான் தடுத்து நிறுத்தியதற்கு நீர் அழுவது போலத் தோன்றுகிறது! அதனால், இரைந்ததென் அழுவையோ செல்! செல்! என விடுத்தான். இது மனோன்மணிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி. நீர் இரைச்சலிட்டுச் செல்வது எவரும் அறிந்தது. நீரின் இரைச்சல் ஒலி வெவ்வேறு வகையாகக் கேட்கும். அதனால் அருவி, முழவம் போல் ஒலிக்கிறது என்றும், கல்லெனக் கரைந்து வீழ்கிறது என்றும், ஒல்லெனத் தவழ்கிறது என்றும், சலசல என்று ஓடுகின்றது என்றும் ஒலிக்குறிப்போடு சொல்வது வழக்காயிற்று. இவ்வொலிக் குறிப்புகளில் ஒன்றே சல், சல், சல, சல, சலம் என அமைந்ததாம். நீர் சல சல என்னும் ஒலியுடன் ஓடுவதால் சலம் என்னும் பெயர் பெற்றது. சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்றார் அப்பரடிகள். சல சல மும்மதம் சொரிய, என்பதும் ஒரு தமிழ்ப் பாடல் அடியே! (சீவக. 82) சலம் ஆகிய நீர் சமையலுக்குக் கட்டாயம் வேண்டும். அச்சமையல் அறையிலேதான் கலங்களைத் தேய்த்தல். கழுவிக் கொட்டல், வடித்தல் ஆகியன நிகழும். ஆதலால், அவ்வறைக்குள் வடிக்கப்பட்ட நீர் புறம்போதற்கு வாய்ப்பாக குழியும் குழையும் அமைப்பர். அவ்வமைப்பின் பெயர். சலக் கால் புரை என்பதாம். அதுவே சலக்காப்புரை, கலக்கப் புரை என வழங்கப்படுகின்றதாம். சலம் நீர்; கால் வழி; புரை துளை. சலக் கால் புரைக்கு இன்னொரு பெயர் அங்கணம் என்பது. அங்கணக்குழி என்பதும் அதுவே, அகம்+கண்+அம் = அங்கணம் எனப்பட்டதென்க. அங்கணத்துள் உக்க அமிழ்தைக் கூறும் திருக்குறள். ஊரங்கண நீரை உரைக்கும் நாலடியார். அங்கணம் சலதாரை எனவும் வழங்கும். நீர் ஒழுகுமிடமே சலதாரை என்க. நீர் பள்ளம் நோக்கி நீண்டு செல்வது. ஆதலால், அது தார் என்றும், தாரை என்றும் வழங்கப்படும். தாரை வார்த்தல் என்பது நீர் வார்த்தல் தானே! ஓடை ஆறு முதலியவற்றில் ஓடும் நீர், இறுதியில் கடலில் கூடுதல் இயற்கை. சலம் கூடும் இடத்திற்கு - கடலுக்குச் சலதி என்பது ஒரு பெயர். தமிழெனும் அளப்பருஞ் சலதி என்பார் கம்பர். (தாடகை 38) பல கிண்ணங்களில் பல்வேறு அளவுகளில் நீர் விட்டு ஒலிக்கும் இசைக்கருவி சலதரங்கம் எனப்படுவதும், கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்று அம்போ தரங்கம் எனப் படுவதும் எண்ணத் தக்கன. கடல் நீர் அலைதல் இடையீடு இல்லாதது. அலை ஓய்வது எப்பொழுது? தலை முழுகுவதும் எப்பொழுது? என்னும் பழமொழியே அலையின் இடையீடற்ற அலைவைத் தெரிவிக்கும். அவ்வலைபோல அலைபாயும் உள்ளமும் சலம் எனப்படும். அவ்வுள்ள முடையான் சலவன் என்றும் அவ்வுள்ள முடையாள் சலதி என்றும் கூறப்படுவர். சலம்புணர் கொள்கைச் சலதி என்றார் இளங்கோவடிகளார். சலம் என்பது வஞ்சகம் என்னும் பொருளையும், சலதி என்பது வஞ்சகி என்னும் பொருளையும் தருவனவாம். சலவர் என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர் களையும் குறிக்கும் சலங்குக்காரர் என்பவரும் முத்துக் குளிப்பவரே. சலாபம் என்பதும் முத்துக் குளித்தலையே குறிக்கும். நீராடுவாரைச் சலங்குடைவர் என்னும் பரிபாடல் (10 90) சலகை என்பது தோணியையும், சலஞ் சலம் என்பது வலம்புரிச் சங்கையும் (சீவக. 184) சலம்புகன்று என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக். 112) குறித்தல் அறியத் தக்கன. நீரில் தோய்த்து வெளுக்கும் தொழில் சலவை எனப் படுவதும், வெளுக்கப்பட்ட துணி சலவைத் துணி எனப் படுவதும், புத்தம் புதுப் பணத்தாள் சலவைத்தாள், எனப் படுவதும், சலவைத்தூள், சலவைக்கட்டி எனச் சவர்க்கார வகைகள் வழங்கப்படுவதும் நீர் ததும்பி வழிதலும் ஓயாது பேசுதலும் சலம்புதல் எனப்படுவதும் வழக்கில் உள்ளமை அறிந்தால். சலம் என்னும் பொருட் பெருக்கம் நன்கு விளங்கும். ஒரு சொல்லில், வேற்றெழுத்து ஒன்றை அமைத்து எழுதி விட்டால் மட்டும் வேற்றுச்சொல் ஆகிவிடாது என்பதும், ஒரு வேரடியில் வந்த பலசொற்கள் கிடைக்குமாயின் அச்சொல்லின் மூலம் அம்மொழிக் குரியதே என்பதும், குறிப்பாக ஒலிக்குறிப்பு வழிவந்த சொல் ஒன்றற்கு ஒன்று வேறுபட்ட இரு மொழி களிலும் கூட இடம் பெறக் கூடுமென்றும் அறிதல் வேண்டும். நீர், புனல் முதலிய சொற்கள் பெரு வழக்கில் இருந்தமையால் சலம் என்பது அருகிக் காணப்படுவது கொண்டும், ஜலம் என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பார் கருத்துக் கொண்டும் அடிப்படைக் கரணியம் தெளிவாக அமைந்துள்ள சொல்லை வேற்றுச் சொல்லென விலக்க வேண்டுவதில்லை எனத் தெளிக. பெட்டியும், பெட்டியில் உள்ள பொருளும் நம்முடையவை யாய் இருக்க, எவரோ ஒருவர் பெட்டி மேல் வைத்த பொட்டு ஒன்றால் மட்டும் அவர் பெட்டியும் அவர் பொருளும் ஆகிவிடும் எனலாமா?  35. சவளி பெருநகரங்களில் எல்லாம் வண்ண வண்ண எழுத்துகளில் ஜவுளிக் கடைகள் காணப்பெறுகின்றன. உள்ளே இருக்கும் வண்ணத் துணிகளை யெல்லாம் வெளிப் படுத்திக் காட்டுவது போல், பட்டொளி செய்யும் பலவண்ண மின் விளக்குகள் இலங்குகின்றன. ஆனால், ஜவுளி என்பதோ, பெயர்ப் பலகையில் மொழிக் கொலைக்கு முன்னோடியாய் இருக்கின்றது. வணிகப் பெருமக்கள் உள்ளம் வண்டமிழ்ப் பக்கம் சாரவில்லையே என்ற வருத்தத்தால் பாவேந்தர். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்றார். உரிமம் பெறுதற்குக் கட்டாயமாகத் தமிழிலும் விளம்பரப் பலகை இருக்கவேண்டும் என்று, அரசு ஆணை பிறப்பித்தபின், வேண்டா வெறுப்பாய் ஓரஞ் சாரங்களில் ஒட்டுக்குடித்தனம் போல் வைக்கப் பெற்ற தமிழ் விளம்பரப் பலகையிலேயாவது பிழையில்லாத் தமிழ் இருக்கச் செய்ய, எண்ணம் வரக் கூடாதா? ஆங்கிலத்திலே பலகை எழுத வேண்டுமானால் அதில் தெளிவுடையவர்களிடம் கேட்டு எழுதுகின்றனர். பிழை ஏற் பட்டுவிடுமானால் நாணுகின்றனர்! ஆனால் தமிழைக் கெடுப்பதற்கு மட்டும் மொத்தக் குத்தகை எடுத்தவர்கள் போல் தாமும் அறியாமல் அறிந்தவரிடமும் கேளாமல் தவறாமல் பிழை செய்கின்றனர்! தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகளுக்கு அவளை இழிவு செய்வதற்கு உரிமை இல்லையா என்ன? பாலாடையோ நூலாடையோ என்று ஐயுறுமாறு ஆடை நெய்தார்களாம்! புகைபோலவும் நுரைபோலவும் பாம்பின் உரி போலவும் ஆடை இருந்ததாம்! மூங்கிலின் உள்ளே உள்ள வெண்படலம் போலவும் ஆடை இருந்ததாம்! அத்தகைய நாகரிகம் வளர்ந்த நாட்டிலே, அவற்றை விற்கும் கடைக்கு ஒரு பெயர் இல்லாமலா போயிற்று? மடிமடியாக அடுக்கி வைத்து நறுமணம் ஊட்டப் பெற்ற கடைகள் நிரம்பிய வீதியே மதுரையில் இருந்ததாமே! நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதி என்று கூறுகிறாரே இளங்கோவடிகள் இவ்வறுவை வீதி, துணிக்கடைகளே இருந்த பெருந் தெருத்தானே! அறுவைக் கடை துணிக்கடை புடவைக் கடை என்னும் பெயர்களைத் தாம் தம் கடைகளுக்கு வைக்க வில்லை! பிழையில்லாத் தமிழிலாவது பெயரிடவேண்டாவா? ஜவுளிக் கடையினர், இப்பெயரை விரும்பி விரும்பி வைப்பதன் மயக்கம் ஒரு போலி மயக்கம்! ஜவுளி என்பது வடசொல் எனக் கொண்ட மயக்கம் அது. சவளி என்பது, தூய தமிழ்ச் சொல்லாகும். சவட்டுதல் என்பது பழந்தமிழ்ச் சொல். அழித்தல், துன் புறுத்தல், வருத்தல், சிதைத்தல், அறைதல், வாட்டுதல் முதலிய பொருள்களில் அது வரும். பல்கால் மெல்லுதலும் சவட்டுதல் ஆகும்; பல்கால் மிதித்தலும் அவ்வாறு சவட்டுதலே ஆகும். மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப என்று பதிற்றுப் பத்தும் (84) வம்பவடுகர் பைந்தலை சவட்டி என்று அகமும் (375) அறைக்கல் இறுவரைமேல் பரம்பு சவட்டி என்று கார்நாற்பதும் (17) பஞ்சாய்க் கோரைபல்லிற் சவட்டி என்று பெரும்பாணும் கூறுகின்றன. மழை சவட்டிவிட்டது என்றும், நோய் ஊரையே வளைத்துச் சவட்டி விட்டது என்றும், கதிரைச் சவள மிதிக்க வேண்டும் என்றும், வெற்றிலையை ஓயாமல் மென்று, சவக்களித்து விட்டது என்றும் பெரிதும் வழக்கத்தில் உள்ளன. சோர்ந்தவன், மெலிந்தவன், மழுங்கியவன் ஆகியவனைச் சவங்கல் என்றும், சவண்டபயல் என்றும் பழிப்பதும் வழக்கே. சவளை (சவலை)யை அறியார் எவர்? சவலை வெண்பா என ஒரு பாவகை இலக்கணத்தில் இடம் பெற்று விட்டதே! படாப்பாடு படுத்துதல் சவட்டுதல் என்றும், படாப்பாடு படுதல் சவளுதல் என்றும் மேலே கூறிய இருவகை வழக்குகளாலும் அறியலாம். நீர், முட்டி மோதி அலைத்துக் குலைத்து அள்ளிவந்து போடப்பெற்ற மண் சவடு என்று வழங்கப் பெறுவதும், அச்சவட்டு மண், பானை முதலியவை செய்தற்கும். செங்கல் ஆக்குவதற்கும் பயன்படுவதும் யாவரும் அறிந்ததே. சவட்டு மண் கொண்டு மிதித்து நைத்துப் பானை வனைவாரைச் சவளைக் காரர் என்பதும் வழக்கே. அன்றிப், பஞ்சு நூலைப் பாவில் இட்டு அடித்துப் பசையேற்றித் துணி நெய்வாரைச் சில பகுதிகளில் சவளைக் காரர் என்பதும் அறியத் தக்கதே. பொன்ன உருக்கி ஒழுகவிட்டுக் கம்பியாக இழுத்துப் பின்னல் வேலை செய்யும் ஓர் அணிக்குச் சவடி என்னும் பெயர் வெளிப்படையே. நெருப்பிலிட்டு ஒன்றை வாட்டச் சவளையாகும் - (துவளும்) என்றும், நோயடிப்பட்டு நொய்ந்த பிள்ளை (சவளை) என்றும், சவ்வுச் சவ்வென வளைவதைச் சவளல் என்றும், சவளும் வளாரையுடைய புளிய மரத்தைச் சவள மரம் என்றும், மிதிவண்டியைச் சில இடங்களில் சவட்டு வண்டி என்றும், கடலினை அடுத்து முகவாயிற் கிடக்கும் கருங்குறு மணலைச் சவளை என்றும், தோணி செலுத்துங் கோலைச் சவளைக் கோல் (துடுப்பு) என்றும் வழங்கும் வழக்காறுகள் யாவும் நோக்கத் தக்கன. இனிப் பருத்திக்குப் பன்னல் என்றொரு பெயர் உண்டு என்பதை இலக்கியவழி அறியலாம். பன்னல்வேலிப் பணைநல் லூரே என்பது புறப்பாட்டு (345); பன்னல் வேலி இன்னது என விளக்குவது போலப் பருத்திவேலி என்றும் புறப்பாடல்கள் (299, 324) கூறும். பன்னல் தரும் பஞ்சியும், நூலும் பனுவல் எனப் பெற்றன. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாக என்று ஆடை நூல்போல, ஆய்வு நூலை உருவகித் துரைத்தலும் வழக்காயது. சவளி என்பது, பன்னல் என்பதுபோல் பருத்திக்குரிய பெயர்களுள் ஒன்று என்பதை. மருத்துவக் கலைச் சொல், விளக்கம் செய்கின்றது. பருத்தி இலையை நைத்து எடுக்கப் பெற்ற சாற்றைச் சவளை என்பதும் மருத்துவ நூலோர் வழக்கே! சவளியாம் பருத்தியினின்று எடுத்த பஞ்சி நூலால் செய்யப் பெற்றதும், சவட்டிச் சவட்டிப் பணி செய்யப் பெற்று உண் டாயதும் ஆகிய ஒன்றைப் பொருள் பொருந்தச் சவளி என்று முந்தையோர் பெயரிட்டனர். அச் சவளிப் பெயரைச் சவுளி யாக்கி, அதன் பின்னர் ஜவுளி யாக்கிப் பண்டமாற்று வேலை செய்யப் பழகிப்போன பெருமக்கள். எழுத்துமாற்று வேலையைத் தொடர்ந்து நோக்கிய இடத்தெல்லாம் நீக்கமறச் செய்து வருகின்றனர். தமிழ் உணர்வுடைய - தெளிவுடைய சிலர் சவளிக் கடை எனத் திருத்தி வாடிக்கையாக்கிவிட்டால், அதனைப் பார்த்தேனும் ஒருவர் ஒருவராய் உண்மை உணர்ந்து எங்கும் சவளிக்கடைகளாய்க் காண வாய்க்கும். துணி எப்படிச் சவட்டப்படுகிறது என்று விளக்க வேண்டியது இல்லை! பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் யான்படும் பாடு பஞ்சுதான் படுமோ? என்பன பட்டறிவால் சொல்லிய பருவரல் மொழிகள். பஞ்சு படும்பாடு படாப்பாடுதானே! மணையில் இட்டுக் கொட்டை பிரித்தெடுத்த பஞ்சு வில்லால் புடைக்கப்பட்டு மட்டையால் உருட்டப்பட்டு, நூலாய் இழைக்கப்பட்டு, நூலைப் பாவாய் இழுக்கப்பட்டு, பசையூட்டப்பட்டு, மொத்தும் அடியும் தரப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு நெய்யப் பட்டுப், பின்னும் பின்னும் அழுக்குப் போக அறைபட்டு நைபட்டு - எத்தனை பட்டுப் பட்டாய்க்; கிழிபட்டுப் போகின்றது! சவட்டப் பெற வில்லையா, எத்துணையோ வகைகளில், நிலைகளில்? அதனைச் சவளி என்பது சரி தானே!  36. சுடர் சுடர், சுடரோன் என்பன கதிரோனைக் குறிக்கும். அது தோன்றும் போது செந்நிறத்தோடு விளங்குவதால் செஞ்சுடர், செங்கதிர், செஞ்ஞாயிறு செய்யோன் எனப் பட்டன; அதன் வெப்பத்தால் வெஞ்சுடர், வெய்யோன் எனப்பட்டன; வெண்ணிறத்தால் வெண்சுடர் வெண்கதிர் எனப்பட்டன. இவ்வாறே கதிர், ஆழி, பருதி, பரிதி முதலாம் பெயர்களும் வெவ்வேறு காரணங்களால் அதற்கு அமைந்தன. சுடரின் நீங்காத் தன்மை சுடுதலும், சுடர்தலுமாம், தீ சுடும்; தீ, சுடரவும் செய்யும். அதனால் தீச்சுடர் என்பது பெயர் ஆயிற்று. இறந்தோரை எரிக்கும் அல்லது சுடும் இடம் சுடுகாடு; சுடலை என்பதும் அது. சுடலைக்கான் என்பது சிலம்பு. இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ என்பது புறநானூறு. இடுதலால் அமைந்த பெயர் இடுகாடு! சுடுதலால் அமைந்த பெயர் சுடுகாடு! இந்நாள் உலகம் மின்னுலகம்; எதிலும் மின்; எங்கும் மின். அம்மின்னாற்றல் நீரில் இருந்து வருவது, கரியில் இருந்து வருவது எனப்பல திறத்தன. எவ்வகையில் வரினும் சுடர் விடுவன. நீரில் இருந்து ஆம் தண்ணீரில் இருந்து வந்தாலும் சுடர்விடும். அது, சுடுதல் உடையதே; சூடு உடையதே. சுடுதல் இல்லாமல் சுடர் இல்லை! திங்கள் முதலாம் கோள்கள் சுடர்கின்றனவே அவை சுடுவதில்லையே! என்னும் வினாவும் கிளரும்! கோள் என்னும் பெயரீடே இவ்வினவத்திற்கு விடை தருகின்றதே! தன்னொளி உடைய தன்று கோள்; பிறி தொன்றினிடம் இருந்து கொண்ட ஒளியுடையது அது. கொண்டதால். கொள்வதால் - பெற்ற பெயரே கோள். எரியும் தீ கண்ணாடியில் தெரியும்போது அது சுடுமா? சுடரே தெரியும். இக்காட்சியை எண்ணுக. மின் குமிழ்விளக்கா? குழைவிளக்கா? குழையாவி விளக்கா? சுடாதிருக்கிறதா? சுடவே செய்கின்றது; சுடரும் அது சுடு கின்றது. சூடு பிறக்கிறது; சுடுபடுகிறது; சுடர் விடுகிறது. இஃது இயற்கையியல்; அல்லது இயற்கை நியதி. இவ் விளக்கங்களை யெல்லாம் இரண்டே சொற்களால் இணைத்துச் சொல்லி விடுகிறார் முதற்பாவலராம் திருவள்ளுவர். அது, சுடச்சுடரும் என்பது. முழுக்குறளும் இதோ: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு துன்பம் வாட்ட வாட்ட, வருத்த- அதனைத் தாங்கிக் கடனாற்ற வல்லார்க்கு அவ்வாட்டுதலும் வருத்துதலும் என்ன செய்யும்? சுடச்சுடச் சுடர்பெருகும் பொன்போல் ஒளியைத் தரும்; புகழைத் தரும்; ஆற்றலைத் தரும்; பட்டுப் பட்டுப் பட்டொளி செய்யத்தரும்! உலக வரலாற்றை ஒரு மேலோட்டப் பார்வை பார்த்தால் புரியுமே! சுடர்ந்த பெருமக்களெல்லாரும் சுடப் பட்டனரா- வருத்தப்பட்டனரா - இலரா? ஒரு காந்தியடிகளை எடுத்துக் கொண்டாலே உண்மை புரிந்துவிடுமே; உலகப் புகழ்வாய்ந்த இலிங்கனார், மார்க்கசார், இலெனினார் இன்னோர் பட்ட பாடுகள் இவ்வளவா? அவ்வளவா? கலில்கிப்பரான் என்பார் கூறினார், கோதுமை மணியை அடித்து - நொறுக்கி - அரைத்து - ஆட்டி - பிசைந்து - சுட்டு - வாட்டி - வதக்கியதால் அல்லவா அதற்கு அச்சுவை உண்டாயிற்று; பக்குவம் உண்டாயிற்று! இல்லாக்கால் அது உணவாம் சிறப்புறுமா? தங்கம் படும்பாட்டைக் காணவேண்டுமா? நாடு கடந்து நாடு, கடல் கடந்து கடல் வரை - காண வேண்டுவதில்லை. தங்க வயலுக்குச் சென்று கண்டால் போதும்! எவ்வளவு ஆழமாகக் குடைந்து, பாறையை உடைத்து அத்தங்கப் பாறையைத் தவிடு பொடியாக்கி, அதனை அரைத்துக் கூழாக்கி, கூழில் இருந்து தங்கவடிவைப் பிரித்து, அவ்வடிவைத் திரட்டிக் கட்டியாக்கி முத்திரையிட்ட அளவில் முடிகின்றதா? தங்கத்தில் செம்பைச் சேர்க்க உருக்க வேண்டாவா? உருக்கிச் சேர்த்த சேர்மானத்தை நூலாக இழுத்து இழுத்து ஆக்குவதால் தானே அணிகலத்திற்கு இழை என்பது பெயர், நூலுக்கும் இழை! நூல் போலும் தங்கக் கம்பியால் செய்த அணிக்கும் இழை! அதனை அணிபவளுக்கும் இழை! ஆம்; ஆயிழை, சேயிழை, ஒள்ளிழை, ஒளியிழை, மாணிழை இன்னன. பொன் பொலிவு! பொன், பொலம்! பொன், பொற்பு; பொலிவு, பொலம், பொற்பு என்பனவெல்லாம் அழகு! சுடர்! சுடல் தீயால் மட்டுமா, வாயால் சுடல் இல்லையா? மனத்தால் சுடல் இல்லையா? கண்ணால் சுடல் இல்லையா? இன்னும் இன்னும் எத்தனை சுடல்கள் வாழ்வில்! சுடலுக்கு சருகு எரியும்; மரம் எரியும்! அறிவுடைய மாந்தனும் எரியலாமா? சுடலைச் சுடரேற்ற வந்த வாய்ப்பாகக் கொள்பவன் உலகுக்கு ஒரு சுடராகத் திகழ்கின்றாள். தமிழ்ச் சொல் தரும் வாழ்வியல் செய்தி ஈது!  37. சுரம் xUtU¡F¡ fhŒ¢rš nehŒ tªjhš mtÇl« ‘#&u« v¥go ïU¡»wJ? என்று வினவுவதும், அதற்கு அவர் ஜுரம் இறங்கிவிட்டது என்றோ ஜுரம் இன்னும் வாட்டுகிறது என்றோ மறுமொழி கூறுவதும் நாம் கேட்பனவே. காய்ச்சல் என்பதுபோலவே சுரம் என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே! எனினும் ஜுரம் என்றே எவரும் சொல்லியும் எழுதியும் வருதலால், அது வடசொல் என்ற முடிவிலேயே தெளிவுடையவரும் அமைந்துவிட்டனர், சுரம் என்று எழுது பவரையும் அயல் எழுத்தை விலக்கித் தமிழ் இயல்புக்கு ஏற்றவாறு எழுதுபவராகவே எண்ணி, ஒரு புறப்பார்வையோ ஓர் அகப்பார்வையோ பார்க்கின்றனர். சுரம் என்னும் செந்தமிழ்ச் சொல், எப்படி வட சொல்லாகக் காட்சி வழங்குகிறது? நம் வீட்டுக் குழந்தைக்கு மாற்றுச் சட்டை மாட்டி, வேற்றுக் கோலம் புனைந்து வேறொருவர் ஏய்த்தது போல, ஓர் எழுத்தை மாற்றி வேற்றெழுத்தைப் புகுத்தியதன் விளைவால் நேர்ந்ததேயாம். இந்த ஜுரம் தமிழ்மொழிக்குச் சுரமாகவல்லவோ அமைந்துவிட்டது! நோய்ச் சுரத்தை மருந்தால் ஒழிக்கலாம். இந்த ஜுரத்தைத் தெளிந்த அறிவினால் அன்றி ஒழிக்க முடியாதே! ஆயும் அறிவுக்கு, அழுத்தமான திரையும் அல்லவோ வழிவழியாகப் போடப்பெற்று வந்திருக்கிறது! சுரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. தொகை நூல்களிலும் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. சுரத்து உய்த்தல், சுரநடை, சுரத்திடை அழுங்கல், சுரத்திடைக் கண்டோர் கூறல் இன்னபல துறைகளை அகத் தொகை நூல்களும் பிற்காலக் கோவை நூல்களும் கூறும். சுரம் என்பதற்குப் பழம் பொருள் பாலைநிலம் என்பதும், பாலைநிலவழி என்பதுமாம். இச்சுரம் என்பது சுரன் என வழங்கப்பெறுதலும் வழக்காறே. நலம், நிலம், அறம், வரம் என்பன முறையே, நலன், நிலன், அறன், வரன் என வழங்கப் பெறுதல் போல்வதே அது. நீரின்மை, நிழலின்மை, எரிபரவுதல், ஓரறிவுயிரும் உய்யாமை என்பனவாம் அவலங்களும் புலவர்களால் பாடு புகழ் பெற்றன. பற்றி எரியும் சுரமே எனினும் புலமைப் பாடல் பெற்ற அளவில், அவண் பயில்வார்க்குத் தண்ணிதாய் அமைந்து விடுவதை இலக்கியக் கலைஞர். நன்கனம் அறிவர். சுடர் சுட்ட சுரம் என்கிறது புறம் (136). அழலன்ன வெம்மை என்கிறது கலி. நிழலுறு விழந்த வேனிற் சுரத்தை விளக்குகின்றது மதுரைக்காஞ்சி (313-4). நினைத்தாலும் சொன்னாலும் குறித்தாலும் நடுக்கம் உண்டாம் என்பதைச் சுட்டினும் பனிக்கும் சுரம் என்று சுட்டி அமைகின்றது மலைபடுகடாம் (398). இம்மலைபடுகடாத்தின் குறிப்பை. வாங்கிக்கொண்ட கம்பர், நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம் (வனம்புகு. 38) என்பதுடன், எரிசுடர்க் கடவுளும் கருதின் வேம் (தாடகை. 5) என்றும் கூறினார். இனிச் செயங்கொண்டாரோ, தாம் புனைந்துரைக்கும் பாலையின் ஒரோ ஒரு மணலை எடுத்து அதனைக் கடலில் போட்டிருந்தால் இராமன் கடலில் அணைகட்ட வேண்டியதே இருந்திராது; கடல் நீர் முழுவதையும் அவ்வொரு மணலே உறிஞ்சி வற்ற வைத்திருக்கும் என்று புனைந்தார். சுரம் என்னும் சொல் வெப்பத்தைக் குறிப்பது எப்படி? அதை அறிந்தால்தானே, காய்ச்சலை அச்சொல் குறிக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்! சுள் என்று வெயில் அடிப்பதை எவரே அறியார்? வெயிலடிப்பு மட்டுமா சுள் என்று அடிக்கிறது! வளாறு, தடி முதலியவற்றால் அடிப்பதும் சுள் என்றும், சுளீர் என்றும், சுள்ளாப்பாக என்றும் சொல்லப்பெறுவதாயிற்றே தினவு எடுத்தோ, உடல் எரிவுண்டோ, செந்தட்டி முதலியவை பட்டோ எரியுண்டானால் சுள்ளுச் சுள்ளு என்று எரிகின்றது என்று கூறுவதை இன்றும் நாட்டுப் புறங்களில் கேட்கக் கூடுமே! வெயில் உறைத்தல்போல உறைக்கும் மிளகாய்க்கும், மிளகு ஆகியவை கலந்த பொருளுக்கும் சுள்ளாப்பு என்னும் பெயர் வழக்கில் உண்டு. மதுக்குடியர் வெறிக்குத் துணை யுறுத்தும் துணைப்பொருள் அல்லது கறிப்புப் பொருளுக்குச் சுள்ளாப்பு என்னும் பெயருண்மை அகர முதலிகளிலும் இடம் பெற்றதேயாம். அம்மட்டோ? மதுவெறி சுள்ளென்று ஏறுவதாகக் குடிவேட்கையர் கூறிக் குளிர்கின்றனரல்லரோ! வெயில் வாட்டுதலால் காய்ந்துபோன குச்சி, பச்சை மரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தால்கூடச் சுள்ளி என்றன்றோ பெயர் பெறுகின்றது! முதிர்ந்த புளிய மரத்தின் பட்டையுலர்ந்து பக்குவிட்டதற்கும் சுள்ளி என்பது பெயரே சுள்ளல் என்பதும் சுள்ளியேயாம். உடனே பற்றவைத்துச் சமைத்தற்குச் சுள்ளி பொறுக்குதல் சிற்றூர்ச் சிறார் பணிகளில் தலையாய ஒன்றாம். சுள்ளெனக் கடித்துத் துன்புறுத்தும் சில உயிரிகள் கள்ளுப் பூச்சி, சுள்ளெறும்பு, சுள்ளாஞ் சுருக்கு, சுள்ளிடுவான் என்னும் பெயர்களால் வழங்கப்பெறுகின்றன. வெப்பம், உறைப்பு, வலி முதலிய பொருள் தந்த சுள் என்னும் சொல் மேலும் பொருளால் விரிந்து சினம் என்பதையும் சுட்டுவதாயிற்று. சுள்ளம் என்பதும் சினம் என்னும் பொருள் தருவதாயிற்று. சுள்ளாப்பித்தல் என்பதற்கு அடித்தல், உறைத்தல், எரித்தல், சூடு காட்டல், சுருக்கேற்றல் முதலிய பொருள்கள் பின்னே கிளைத்தன. சுள்ளென்று உறைக்கப் பற்றிப் பிடிக்குமாறு அறையப் பெறும் மரத்து ஆணி சுள்ளாணி எனப் பெயர் பெறும். கைம்மரத்தில் சுள்ளாணிக் குச்சி உண்டு. கதவு நிலைகளின் பூட்டு வாய்ப் பொருத்துகளுக்குச் சுள்ளாணி வைத்து இறுக்கி இழைப்பதைத் தச்சுத் தொழிலில் காணலாம். சுள்ளாணியாகப் பெரும்பாலும் கல் மூங்கில் பிளாச்சுகளையே பயன் படுத்துவர். மூங்கிலுக்குச் சுண்டகம் என்னும் பெயர் உண்மை கருதத்தக்கது. சுள் வழியாகத் தோன்றிய ஒரு சொல் சுளுந்து ஆகும். அது சூந்து என்றும் இடைக் குறைந்து முதனீண்டு வழங்கும். காய்ந்த அல்லது உலர்ந்த தட்டைகளையும் சுள்ளிகளையும் சேர்த்துக் கட்டித் தீமூட்டிச் சுழற்றும் ஒருவகை விளையாட்டே சுளுந்து ஆகும். கார்த்திகைத் திருவிழா, பொங்கல் விழா, விளக்கு வரிசை விழா (தீபாவளி) ஆகிய விழாக்களின் போது சுளுந்து விளையாடுதலைச் சிற்றூர்களில் இப்பொழுதும் காணலாம். தீமூட்டிச் சூடேற்றிப் பொருள்களை உண்டாக்கும் பழம்பணிக்களங்கள் சுள்ளை என வழங்கப் பெற்றன. அவை பானைச்சுள்ளை, செங்கல் சுள்ளை, சுண்ணாம்புச் சுள்ளை என்பன சுள்ளை என்பது சூளை என்றும் வழங்கப்பெறும். சூளைப் பெயராலேயே அமைந்த ஊர்களும் குடியிருப்புகளும் உண்மை முந்து அவை சூளையாயிருந்தமையைப் புலப்படுத்தும் சான்றுகளாம். காய்ந்து உலரும் பொருள் சுருங்குதல் கண்கூடு. ஆதலால் சுள்ளல் என்பதற்குச் சிறுமைப் பொருளும் உண்டாயிற்று. அதனால், அகர முதலிகள் சுள்ளல் என்பதற்கு வளமை யற்றது என்றும், சுள்ளலி என்பதற்கு உயரத்திற்குத் தக்க பருமை யற்றது என்றும் பொருள் கூறுகின்றன. சுள் என்பது சுள்ளு என்றாகிச் சுண்டு என்றும் மாறும். அப்பொழுதும் அதன் அடிப்பொருளான வெப்பம் சினம் சிறுமை முதலியவும் தொடரும். கல்லையும் கிளிஞ்சில் முதலிய வற்றையும் சுட்டெரித்து நீறாக்குவதால் கிடைப்பது சுண்ணம், சுண்ணாம்பு என்பன. சுண்ணாம்பின் பயன் நாடறிந்தது. சுண்ண வெண்ணீறு, இறைமைப் பொருளாயிற்று. சுண்ணமிடித்தல் கலைத்திறம், திருத்தக்க தேவராலும் ஆளுடைய அடிகளாராலும் பாடு புகழ் பெற்றது. உலர்ந்து வற்றலாகிப் பயன்படும் ஒருவகைக் காயைத் தரும் செடி சுண்டைச் செடி எனப்பெறுவதும், அதன் காய். சுண்டைக் காய் எனப் பெறுவதும் அதன் வற்றல், சுண்டைவற்றல் எனப் பெறுவதும், மீண்டும் சுடவைத்த கறியும் குழம்பும் சுண்டைக்கறி சுண்டைக்குழம்பு எனப் பெறுவதும் வற்றக் காய்ச்சுதல் சுண்டக் காய்ச்சுதல் எனப் பெறுவதும் வழக்காறே. சுண்டற் கடலையை அறியார் எவர்? சுண்டல் கிடைக்கும் என்று கூடக் கோயில்களில் கூடும் கூட்டமும் உண்டன்றோ! நீரை மிகுதியும் இஞ்சி (இழுத்து) வாளிப்பாக வளர்தலால் இஞ்சிப் பெயர்பெற்ற மூலப்பொருள். உலர்ந்து சுண்டிப் போதலால் சுண்டி என்றும், சுண்டியம் என்றும் பெயர் பெறும். சுக்கு என்பதும் அதன் பெயரே. சுக்கல் என்பது காய்தல். சுக்கல் சுக்கல், சுக்கான் பாறை, சுக்கானீறு (சுண்ணாம்புக் கல்நீறு) சுக்கான் கீரை (புளிக் கீரை, புளிச்சக் கீரை) என்பவற்றைக் கருதுக. சுண்டு என்பதற்குச் சிறுமைப் பொருள் உண்மையைச் சுண்டெலி, சுண்டுவிரல், சுண்டுவில், சுண்டு கயிறு, சுண்டன் (மூஞ்சூறு), சுண்டாங்கி (சிறிது) சுண்டிகை (உள்நாக்கு) என்ப வற்றால் கண்டுகொள்க. கதிரோன் வெப்பத்தின் வழியே பிறந்த சுள் என்னும் சொல், தீயின் வெப்பத்திற்கு மாறுங்கால் சுர் என்னும் ஒலிக் குறிப்புச் சொல்லாகி மிகப்பல சொற்களாக விரிந்துள தாம். சுர் வழியே வரும் சொற்களைக் காணின் சுரத்தின் மூலம் மிகமிகத் தெளிவாகும். சுர் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களுள் ஒன்று சுருக்கு என்பது அது வலியையும், விரைவையும் குறிக்கும். சுருக்கென முள் தைத்தது? என்பது கேள்விப் படுவதே. உடலில் சில பகுதிகளில் ஏற்படும் குத்தல்களைச் சுருக்குச் சுருக்கெனக் குத்துவதாகக் கூறுவர், சுள்ளாஞ் சுருக்கு என ஓர் உயிரியுண்மை நாம் முன்னரே அறிந்ததே. சுருக்காக வா என்னார் எவர்? சுர் என்பது சுருசுரு என இரட்டைச் சொல்லாய் விரிந்து எரிவையும், ஊர்தலையும் குறிக்கும். தேட்கடி, பூரான்கடி, நட்டுவாய்க்காலியின் கடி, பாம்பின் கடி முதலியவற்றைச் சுருசுரு என்று வலி ஏறுகின்றது என்பது வழக்கே. தீ, சுருசுரு எனப் பிடித்து எரிவதாகக் கூறுவதும் வழக்கே. சுடுபடும் பொருள் அல்லது காயும் பொருள் சுருங்குவது இயல்பு. இலை வாடிச் சுருங்குவதும், சுருக்கம் நிமிராமல் சுருண்டு போவதும் கண்கூடு, உடல்வாளிப்பும் குருதி வளமும் குன்றும் போது, தோற் சுருக்கம் உயிரிகளுக்கு உண்டாகி விடுகிறது. பழுத்த பழங்களும், வெயிலடிபட்ட காய்களும், சூடுபட்ட கிழங்கு களும் பிறவும் சுருங்கிப் போகின்றன. ஆதலால் வெதுப்பத்தால் பொருள்கள் சுருங்குவதைத் தெரிந்து கொள்ளலாம். வெப்பக் கரணியம் கருதி இடப்பெற்ற இச்சுருளல் பெயர், பின்னே பொருளால் விரிந்து சுருள்பவற்றுக்கெல்லாம் ஆயிற்று. சிலருக்குக் குடுமியும் கூந்தலும் சுருட்டையாக விளங்குவதும், சுருட்டை சோறு போடும் எனப் பழமொழி வழங்குவதும் அறிந்தனவே. சுருட்டைக்கு அழகுண்மை, சுருளா நிமிர் முடியரும் தம் முடியைச் சுருட்டிச் சுருட்டி வளைத்து விடுவதால் அறியக் கிடக்கிறது. சுருட்டையின் புகழ் ஒன்றா? இரண்டா? சுருட்டைப் பாம்பு உண்டு; சுருட்டை விரியன் என்னும் பாம்பும் உண்டு; சுருட்டை என்னும் ஒருவகை இலைநோயும் உண்டு; சுருள்பவை எல்லாம் சுருட்டைகள்தாமே! பழமையான சுருளலும் சுருட்டையும், புதுமைக் கோலமும் கொண்டன. சுருட்டு என்னும் பெயரில் புகைப் பொருள் ஒன்று உண்டன்றோ! புனை சுருட்டு என்னும் பொய்ப்பழிச் சொல்லுக்கும் மூலமன்றோ சுருள்! பிறர் பொருளைக் கவர்வதைச், சுருட்டிக் கொண்டு போதல் என்றும், இறந்து போதலைச், சுருட்டிக் கொண்டு போய் விட்டது என்றும் கூறுவதும் வழக்கேயன்றோ! சுருட்டல், அல் மங்கலப் (அமங்கலப்) பொருளில் மட்டும் நின்றுவிடவில்லை வெற்றிலையையும் ஓலையையும் சுருள் என்று பெயர் சொல்ல வைத்தது. திருமண அழைப்புக்குச் சுருள்வைத்து அழைத்தலும், திருமணப் பரிசு வழங்குதற்குச் சுருள் வைத்தலும் வழக்கே. சுருள் என்பது சுருட்டி வைத்த வெற்றிலையாகலின், அவ் வெற்றிலையை வைத்து அழைத்தலும் அவ்வெற்றிலையொடு பணம் வைத்துத் தருதலும் சுருள் என்னும் பெயர் பெற்றன. சுருள் வைத்து அழைத்துவிட்டால் பகை மறந்து உரிமையால் ஒன்றுபடுதல் வேண்டும் என்பது நம்மவர் கொள்கை. சுருள் வழியே பிறந்த கருணை என்னும் சொல்லுக்கும் ஓலைச் சுருள், வெற்றிலைச் சுருள் என்னும் பொருள்களும் உண்டு. இவற்றுடன் சுருள் வாளையும் சுருணை என்பது குறிக்கும். யானைத் தோட்டி வளைவுடையதாகலின் அதனையும் சுருணை என்பர். சுருட்டி என்பது ஓர் அராகம் (இராகம்) சுழலும் இசை யமைதியால் பெற்ற பெயர் அது. சுருட்டி என்னும் பொது அராகத்தில் செஞ்சுருட்டி என்பது ஒரு சிறப்பு அராகம். கூத் தரங்கில் பயன்படுத்தப்பெறும் திரைக்குச் சுருட்டி என்பது ஒரு பெயர். வேட்டியைச் சுருட்டிக் கட்டிக்கொண்டால் விரைந்து நடக்கலாம் என்பதை நடையர் நன்கு அறிவர். சுருட்டிக் கட்டிய வழக்கே, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை ஆகியவற்றுக் கெல்லாம் முன்னோடி! உலக முழுவதும் பண்டு வழங்கிய அரசர் உடைகளை ஆய்ந்தால் இது தெளிவாகும். சுருட்டி மடக்கவும், விரிக்கவும் தக்க வகையில் அமைந்த சிவிறிக்குச் (விசிறிக்குச்) சுருட்டி என்பதும் பெயர். சுருங்கி என்பது ஒரு செடி; தொட்டாற் சுருங்கி என்பதும், தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்பனவும் அதன் விளக்கப் பெயர்கள். ஆமை, சுருக்கி என்னும் பெயரால் குறிக்கப்பெறும். அச்சம் நேரும் பொழுதில் கால்களையும் தலையையும் சுருக்கிக் கொள்வதால் சுருக்கிப் பெயர் பெற்றது அது. அறுகீரையாம் அறைக்கீரை, அறுத்தறுத்துச் சுருக்கமுறுவதால் அதனையும் சுருக்கி என்பர். வயிற்றையும் சுருக்கி, வாயையும் சுருக்கி, வரிமை வனப்புகளையும் சுருக்கி, அருமை பெருமைகளையும் சுருக்கும் வறுமையைச் சுருக்கி என்பது தேர்ந்த தெளிவால், நேர்ந்தளித்த கொடையேயாகும். இனிச் சுருக்குதல் கணக்கையும், சுருக்கி எழுதும் மொழிப் பயிற்சியையும், சுருங்கச் சொல்லும் மொழியழகையும் கற்றோர் எவரும் அறிவர். சுருக்குப் பையில் பணம் போட்டு இடையில் கட்டிக் கொள்ளுதல் முந்தையர் வழக்கு. சுருக்குப் போட்டுச் சாதலும் சாகடித்தலும் உலகெங்கும் வழங்கும் பொது வழக்கே. சுர் என்பதனுடன் ஐகார ஈறு சேர்தலால் சுரையாகும். சுரையாவது துளை என்னும் பொருள் உடையது. அத் துளையும் புறத்துறையன்று; உட்டுளையாம். உட்டுளையுடைய கொடி களைக் குறித்த சுரைப் பெயர், ஒருவகைத் தனிக் கொடிக்கு வழங்குவது பொதுச் சிறப்புப் பெயராம். மா என்பது விலங்கு என்னும் பொதுப் பெயர்க்குரியது. ஆயினும் யானைக்குப் பொதுச் சிறப்புப் பெயராய் வழங்குவது போன்றது இது. புறத்தே மூடி உள்ளே துளையுடைய ஒன்று உள்வெதுப்ப முடைமை தெளிவு. பொந்து, துளை, வளை, பொத்தல், பத்தல் என்பனவெல்லாம் சுரைப்பொருள் சார்ந்த சொற்களே. இவை யெல்லாம் உள்வெதுப்பமுடையவை என்பது கருதுக. சுரங்கம் என்னும் சொல்லையும் கருதுக. சுரை என்பது உள் வெதுப்பத்தின்மூலங் கொண்டு பிறந்த சொல்லாயினும், துளை என்னும் பொதுப்பொருளில் வழங்குவ தாயிற்று. அதனால் காதணி, மூக்கணி, காலணி, தோளணி, கையணி முதலியவற்றின் பூட்டுவாய்ப் பொருத்துகளுக்குச் சுரை என்னும் பெயர் உண்டாயிற்று. சுரை இருந்தால், அதனைப் பூட்டி வைத்தற்கு ஆணி வேண்டுமே! அது சுரையாணி என்னும் பெயர் பெற்றது. திருகாணி, ஓடாணி, பூட்டாணி, பொதுக்காணி என்பவை சுரையாணி வகைகளாம். சுர் என்பதில் இருந்து நாம் குறித்த இச் சொற்களும், குறித்துக் காட்டாத இன்னும் பல சொற்களும் பகுதி பகுதியாய்த் தொகுதி தொகுதியாய் இருந்தும், அடிக்கரணியம் திட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தும் சுரச் சொல்லை வட சொல்லாய் - வன்படியாய்க் - கையாள்வது நெஞ்சறிந்து செய்யும் வஞ்சமேயாம்! தமிழ்ப் பற்றாளரேனும் விழித்தால் அன்றி, இச் சூழ்ச்சிகள் ஒரு நாளும் ஒழியா!  38. சுவடி - சோடி இரண்டு என்பதைக் குறிக்க இரட்டு, இரட்டை, இணை, துணை, பிணை முதலிய இனிய தமிழ்ச்சொற்கள் இலக்கிய வழக்கு உலகியல் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் பயில வழங்குகின்றன. இவற்றொடு சோடி என்னுமொரு சொல்லும் பெருக வழங்குகின்றது. இதனை, ஜோடி என்று எழுதாமல் சோடி என்று எழுதினால் வடமொழி வெறுப்பர் என்று சொல்வாரும் உளர். அச் சொல்லின் உண்மைப் பிறப்பு, உறுதிப் பட்டால் அன்றித் தமிழரும் ஏற்றுக்கொள்ளார். ஏனெனில், அவர்களுள் பலரும் ஜோடி யைத்தானே ஜோடித்து மகிழ்கிறார்கள்! பழங்காலத்தில் எழுது பொருளாக ஓலை இருந்ததென்பது வெளிப்படை. ஓலையொடு ஏடு என்பதும் அதற்கொரு பெயர். புல்வகை உறுப்புகளைச் சொல்ல வந்த ஆசிரியர் தொல் காப்பியனார். தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடும் வருமெனச் சொல்லினர் புலவர் என்று அவர்க்கு முந்தைப் புலவர் வழங்கிய மரபினைக் குறிப் பிடுகிறார். ஏட்டில் எழுதுவார் தம் விருப்புக்கு ஏற்ற அளவில் நெடிய ஓலையில் ஓர் ஒழுங்குற முறித்தோ, நறுக்கியோ, கிள்ளியோ ஏடு எடுப்பர். ஆகலின் ஏடு, முறி என்றும், நறுக்கு என்றும், கிள்ளாக்கு என்றும் பெயர் பெற்றது. ஓர் ஏட்டிலேயே ஒருவர் எடுத்துக்கொண்ட நூல் முற்றுப் பெறுவதில்லை. ஆதலால், பல ஏடுகளை ஓரளவில் எடுத்துத் தொகுக்க வேண்டியதாயிற்று. ஓர் ஏட்டுடன் ஒப்பிட்டு ஓரளவில் எடுப்பதைச் சுவடி சேர்த்தல் என்பது வழக்கு. ஒன்றோடு ஒன்றை, ஒப்பான அளவாக்கி நறுக்கிச் சேர்ப்பதால், இரண்டைச் சுவடி என்னும் வழக்கம் ஏற்பட்டது. சுவடி என்னும் சொல் தோன்றிய வரலாறு இது. சுவடி என்பதற்கு இணை, இரண்டு, இரட்டை என்பதே பொருள். உருவமும் பருவமும் ஒத்த இரண்டு பிள்ளைகளைச் சுவடிப் பிள்ளைகள் என்பதும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு இணை சேர்க்கும் காளைகளைச் சுவடிக் காளைகள் என்பதும் நாடறிந்த செய்தியே. இச்சுவடிகள் இணைப்பொருள் தருவனவேயாம். நாட்டுக்கு நாட்டு மட்டம் - நாமிரண்டும் சோடி மட்டம் என்பதொரு நாட்டுப் புறப்பாட்டு! இவ்வாறு இரண்டு என்னும் பொருள்தரும் சுவடியாம் சோடி ஒரு சோடி செருப்பு ஒரு சோடி வேட்டி எனப் பேச்சு வழக்கிலும் வழங்குகின்றது. சுவடியில் இருந்து பிறந்தது சுவடு என்னும் சொல். எப்படி? இரண்டு கால்கள் நிலத்தில் படியும் - பதியும் - படிவை அல்லது பதிவைச், சுவடு என்பது இலக்கிய வழக்கு. பிரிவு மேற்கொண்ட தலைவியைப், பிரிவு மேற்கொண்ட செவிலித் தாய் தேடிவரும்போது, சுவடு கண்டு இரங்கல் என்பதோரு துறையில் புலவர்கள் பாட்டியற்றல் அகப்பொருள் இலக்கணச் செய்தி. சுவடுகண்டு என்பது, தலைவியின் கால் தடம் கண்டு என்னும் பொருள் தருவதாம். மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது என்பது அப்பரடிகள் வாக்கு (4:3:1). இதில், சுவடு கால் தடத்தைத் குறிக்கும். கால் தடத்தைக் குறிக்கும் சுவடு குதிரையில் ஏறுதற்குக் கால் வைக்கும் அங்க வடியையும் குறிக்கலாயிற்று. மயிலேறி விளையாடும் மகிழ் முருகனுக்குக் குதிரை மயில்தானே! அம் மயிலேறும் பக்கரையையும் சுவடாகக் கொண்டனர். அதனால் அகரவரிசையாளர், சுவட்டுக்கு அங்கவடி, பக்கரைகளையும் இணைத்தனர். இனிச், சுவடி சோடி யானது போலச், சுவடு சோடு ஆகியது. காலுக்குச் சோடில்லை என்பது புலவர் ஒருவரின் பெருங்கவலை. சோட்டால் அடிப்பேன் என்பது சினத்தான் செருக்குரை. ஒப்பினைப் பொருளாம் சுவடியில் இருந்து, சுவடித்தல், சுவடிப்பு, சுவடணை என்னும் தொழிற்பெயர்கள் பிறந்தன. தேர், பல்லக்கு, அரங்கம், ஆட்டக்களம், மன்றம், மாளிகை முதலியன அழகுறுத்தப் பெறும்போது, இப்பாலும் அப்பாலும் ஒப்பு நோக்கி, இணை இணையாய்ச் செய்தலுடைமையால் அவ் வழக்குறுத்தும் கலைச் செயல் இப் பெயர்களைப் பெற்றது. இவையே பின்னர்ச் சோடித்தல், சோடிப்பு, சோடணை என்றாயிற்று. இவற்றையும் வடமொழித் தாக்கர் விடுவரா? ஜோடித்தல் ஜோடிப்பு, ஜோடணையாக்கி மகிழ்ந்தனர். ஒப்பிணைப் பொருளால் வளர்ந்த சுவடு இரு பதிவாம் தடங்களைக் குறித்ததில் இருந்து வளர்ந்தது. நடந்தும் ஓடியும் அழுந்தித் தடம் பட்டுப்போன வழியையும், பெருவழியையும் குறிக்கலாயிற்று. தேரின் சுவடு நோக்குவர் என்று குறிக்கும் கம்பர். (அயோ. தைல. 82) மண்ணின் மேலவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து விண்ணின் ஓங்கியது என்று முடித்தார். (ஆரண். சடா - 165) மண்ணின் தடத்தை விடுத்து விண்ணின் தடத்துக்கும் எழும்பினார் ஆளுடைய அரசர். அண்டங் கடந்த சுவடும் உண்டோ அனலங்கை ஏந்திய ஆடலுண்டோ என்பது அவர் வாக்கு (தேவா. 6:97:1). இவண் சுவடு அடை யாளப் பொருட்டது. சுவடு தன் பொருளில் மேலும் வளர்ந்தது; நீர் ஒழுகும் தடம், புண், தழும்பு இவற்றையும் குறிப்பதாயிற்று. யானையின் மதம்பாய் தடம் மதம் பாய் சுவடு என்றும் யானைச் சுவடு என்றும் வழங்கலாயிற்று. குருதி கொட்டிய தடத்தைச் செம்புனற் சுவடு நோக்கி இது நெறி என்று சுட்டுகிறார். கம்பர் (உயுத். மகரக். 29) ஏனைய புண்ணும் தழும்பும் வெளிப்படை. அழுந்திய தடத்தில் இருந்து சுவடு, அழுந்திய மரபு சுட்டும் சொல்லாகவும் கொங்கு வேளிரால் கொண்டாடப் பெறுவதாயிற்று. சொல்லினன் வினவும் சுவடுதனக் கின்மையின் என்றார் அவர் (பெருங் உஞ். 24:79). இங்குச் சுவடு மரபு அல்லது அடிப்படை வழக்கினைக் குறிக்கிறது. வழித் தடத்தில் இருந்து வாழ்வுத் தடத்துக்கு வந்த வழி இது. சுவடி, சுவடு என்னும் தனித் தமிழ்ச் சொற்களின் வழிவந்த சோடி, சோடு சோடித்தல், சோடிப்பு, சோடணை என்னுஞ் சொற்களை, இனியேனும், ஜோடி, ஜோடு, ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணை என வேற்றெழுத்தால் எழுதும் இழிவினைத் தமிழர் ஒழிப்பாராக! எழுத்து ஏமாற்றம் என்றும் நிலைக்காது என்றும், என்றேனும் உண்மை ஆய்வால் வெளிப் பட்டே தீரும் என்றும் , அறிஞர்கள் ஆய்ந்து தெளிவுறு வார்களாக!  39. சொல் சொல் என்பது பலபொருள் ஒரு சொல். அதற்குரிய பல பொருள்களுள் நெல் என்பதும் ஒன்றாம். நெல்லில் பால் பிடியாப் பதர் அல்லது பதடியை எவரும் நெல் என்னார்; பால்பிடித்து மணிதிரளாத அரைக் காயை நெல் என்னார்; மணி திரண்டும் கறுத்துச் சிறுத்த கருக்காயை நெல் என்னார்! மணி திரண்டதையே நெல் என்பார்! அந்நெல்லே சொல்லின் பொருளை உவமை வகையால் விளக்க வல்லதாம். பொருளற்றது சொல்லன்றாம். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியம். சொல் (நெல்) சூல், பசும் பாம்பாய்த் தோன்றுதலையும், அது மணி பிடிக்குமுன் தகவிலாச் செல்வர்போல் தலை நிமிர்ந்து நிற்றலையும், மணி முதிர்ந்த பின்னே கல்விதேர் மாந்தர் போல் தலை தாழ்ந்து வளைதலையும் உவமையால் சுட்டினார் திருத்தக்க தேவர். பயனிலாச் சொல்லைச் சொல்வானையும், அதனைக் கேட்பானையும் அதனை நன்றென நயந்து பாராட்டுவானையும் ஒருங்கே பதடி எனச் சுட்டினார் பொய்யாமொழியார். பயனற்ற நாளைப், பதடி வைகல் என்ற சான்றோர் பெயரே, பதடி வைகலார் ஆயது! பயனில சொல்லாமை சுட்டிய வள்ளுவரே, சொல்வன்மை கூறியது சொற்பயன் கருதியதேயாம். ஆதலால் சொல் என்பது மணிபோன்றது என்பதும், உள்ளீடு உடையது என்பதும், விளங்கும். சொல்லையும் நெல்லையும் ஒப்பக்குறிக்கும், சொல் என்பதாலே, முன்னோர்சொல்லிய பொருளும் விளக்கமும் இவையாம்! சொல்லாகிய நெல்மணியால் உணவுக்குச் சொன்றி என்பது பெயர். சோறு என்பதும் சொல் என்பதன் வழியாக வந்த பெயரே. நெல்லால் ஆக்கப் பட்டதையே குறித்த சோறு என்னும் சிறப்புப் பெயர், பின்னர் எத்தவசத்தால் ஆக்கிய உணவையும் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக விரிந்தது. அவ்வளவிலும் நில்லாமல், கள்ளிச் சோறு, கற்றாழஞ்சோறு என்றும் விரிந்தது! சோற்றுக் கற்றாழை என்னும் பெயரையும் வழங்கியது! சொல் வழி வந்த சோற்றின் ஆட்சிகள் இவை. சொல்லுதல் வகைகளைக் குறிக்க, ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பாவாணர் (பண்டைத் தமிழர் பண்பாடும் நாகரிகமும் பக் : 27-8) சொல்லின் ஆட்சி எப்படியெல்லாம் திகழ்கின்றது! அவரைப் பார்த்தேன்; வாய்திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை; அவ்வளவு செருக்கு என்று பழிசொல்வது இல்லையா? இதனால், பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும். நீங்கள் ஒரு சொல் சொன்னால் போதும்; கட்டாயம் நடந்துவிடும் என்பதில் சொல்வாக்கின் செல்வாக்கு வெளிப் படுகின்றதே! ஒரு சொல் சொல்லி வைக்கவும் என்பதில் சொல் கண்டிப்புப் பொருளாகின்றதே! எச்சரிக்கை அன்றோ இது! ஒரு சொல்லுக்குச் சொன்னேன் என்பதில் சொல் சும்மா வாளா என்னும் பொருளிலேயல்லவோ விளங்குகின்றது! பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல்லுடைபடுவதும் சொல்லாலே என்பதில் பெருமை சிறுமைகளுக்கு மூலம் சொல்லே, என்பது தெளிவாகின்றதே! சொற்றுணை மிக உயர்ந்த துணையாம்! தன்னந் தனியே காட்டுவழி போகின்றவனுக்குச் சொற்றுணைபோல எந்தத் துணையும் உதவுவதில்லையே! அவன் பாடிச் சொல்லும் சொல்லே, அவனுக்குத் துணையாவது அருமை அல்லவோ! சொற்றுணை என்பது பேச்சுத் துணைதானே, அது தானே, நாத்துணை வாய்த்துணை, என்பனவும்! சொற்கோ, சொல்லின் வேந்தர், நாவுக்கரசர், வாக்கின் வேந்தர் என்றெலாம் சொல்லப்படும் அப்பரடிகள், இறைவனைச் சொற்றுணை வேதியனாக அல்லவோ கண்டார்! அருணகிரியார்க்குச் சந்தச் சொல் சொட்டச் சொட்டவந்ததால் அல்லவோ, வாக்கிற்கு அருணகிரி ஆனார். ஒருத்திக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத்துணை கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய அகவை யினளாகவும் வேண்டும்; அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வேண்டும். இவ்வெல்லாம் அமைந்தவள் தன் கொழுநன் உடன் பிறந்த தங்கை என்பது எவ்வளவு பொருத்தம்! அவளுக்கு ஒரு பெயர் நாத்துணையாள் என்பதே! இது, இந்நாளில் நாத்துனாள் என்று வழங்குகின்றது. இளங்கோவடிகளார் இதனை, நாத்தூண் நங்கை என்பர். உள்ளங் கலந்து உரையாடும் துணை உண்டு; உற்றுழி உதவி உவகை யூட்டும் துணையும் உண்டு. அத்துணைகள் முறையே உசாத்துணை, அசாத்துணை எனப்படும். இவை பழமையான சொல்லாட்சிகள். நூலுக்கு அழகுகள் இவையெனப் பத்துக் கூறுவர்; நூலுக்குக் குறையெனவும் பத்துக் கூறுவர். முன்னை அழகுகளுள் தலையாயது சுருங்கச் சொல்லல்; பின்னைக் குறைகளுள் முதன்மையானது கூறியது கூறல். நூலழகே சொல்லழகு என்பது குறிப்பாம். பாட்டியல் நூல்களிலே ஆனந்தக் குற்றம் என ஒன்று சொல்லப்படும். ஆனந்தக் குற்றங்களுள் சொல்லானந்தம் என்பது சொற்குற்றமேயாம். மட்டு, தேறல், ஊறல், குடி, கள், மது இப்படி எத்தனை பெயர்கள் இருந்தாலும், தண்ணீர் வெள்ளைக் குதிரை என எத்தனை மாற்றுப் பெயர்கள் இருந்தாலும் கட்குடியர் வழக்கமாக இலக்கண நூல்களில் சொல்லப்படுவது சொல் விளம்பி என்பதாம். குடியர்கள் ஏன், மயக்கும் கள்ளைச் சொல்விளம்பி என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்? குடித்தவன் தன் வாயில் வந்ததை எல்லாம் உளறி விடுவான் அல்லனோ! மறைக்க வேண்டியது - சொல்லக் கூடாதது - என அடக்கிக் கொள்ள மாட்டாமல் அவிழ்த்து விட்டுவிடுவான் அல்லவோ! அதனை வெளிப்படுத்தும் பொருட்பெயரே சொல் விளம்பி என்க! சொல் என்பதற்குக் கள் என்பதும் ஒரு பொருள் தன் பிள்ளையை ஊரார் மெச்சி விட்டால் கள் வெறி ஏறும் என்பது நாமறியாத பாட்டா? குடிக்காமலே, சொல் வெறியில் எத்தனை பேர்கள், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடக் கண்ணேரில் காண்கின்றோம் அல்லவோ! தென்னுண் தேனின் செஞ்சொல் என்றார் கல்வியில் பெரியவர். அவரே, சொல்லொக்கும் கடிய வேகச் சுடு சரத்தையும், சொல்லலங்காரப் பண்பாகச் செல்லும் அம்புகளையும் புனைந்தார். வில்லம்பிற் சொல்லம்பேமேல், என்று அவர் பாடிய தனிப் பாட்டொன்றும் காட்டும்! வள்ளுவரோ, சொல் வல்லாளரைச் சொல் லேருழ வராகச் சுட்டினார்; உழவு பாடிய கிழவர் அவரல்லரோ! சும்மா இரு, சொல்லற என்பதும், சொல்லால் முழக்கிலோ சுகமில்லை என்பதும் - சொல்லிச் சொல்லித் தழும் பேறியவர்கள். சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, அமைந்த நிறைநிலை! அதற்கும் கூட, சொல்லே வேண்டி வந்தது! இவை சொல்லின் பெருமை என்பதையன்றி வேறென்ன? அதனால் தான். சொல்லாத சொல் - மறைச் சொல் என அகர முதலிகள் சொல்கின்றன. சொல்லின்வகைகளைச் சொல்லிமுடியாது! வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது சொல்லுக்கும் பொருந்துவதே! சொல்லை எண்ணி எப்படிக் கணக்கிட்டுவிட முடியும்? விண்ணக மீனை எண்ணுவது போன்ற முடிவுற்ற வேலையாகவே முடியும்?  40. சொற்பொருள் விளக்கம் 1. அட்டூழியம் அட்டூழியம் என்பதற்குத் தீம்பு என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி. மதுரைத் தமிழ்ச்சங்க அகராதியும் அதையே கூறுகிறது. கொடுந்தீம்பு என்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலி; அவன் பண்ணிய அட்டூழியத் திற்கு அளவில்லை என எடுத்துக் காட்டுத் தந்து, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இச்சொல்லாட்சி யுண்மையையும் சொல்கிறது. அட்டூழியம் வந்த வகை என்ன? அட்டூழியத்திற்குத் தீம்பு என எப்படிப் பொருள் வந்தது? தீம்பு என்பதற்குத் தீமை என்பதைக் காட்டி. குறும்பு, கேடு என்னும் பொருள்களைத் தருகிறது செ. ப. க. அகராதி. அட்டூழியம் செய்பவன், தலைவனாக - பெரியவனாக- ஆணையிடத்தக்க தகுதியோ முறையோ உரிமையோ உடையவனாக இருக்க மாட்டான். அவன் செய்கின்ற வேண்டாத தலையீடுகள் முறைகேடுகள் குறுக்கீடுகள் ஆகியவையே அட்டூழியம் எனப்படுகின்றதாம். இதனை எண்ணிப் பார்த்துக்கொண்டே சொல்லமைப்பை நோக்குதல் வேண்டும். அட்டு என்பது ஊழியம் என்பது ஆகிய இருசொல் இணைப்பே அட்டூழியம் என்பது வெளிப்படை. இதில் அட்டு என்பதன் பொருள் தெளிவாகி விட்டால் ஊழியத்தின் பொருள் தெளிவாகிவிடும். அடு என்பதன் வழிவரும் சொல் அட்டு. அடுதல் என்பது சுடுதல் வாட்டுதல் வறுத்தல் பொரித்தல் சமைத்தல் கொல்லுதல் போரிடல் துன்புறுத்துதல் முதலிய பொருள்களைத் தரும். இங்கே அட்டூழியம் மனத்தைச் சுடுதல், வாட்டுதல், துன்புறுத்துதல் ஆகிய பொருள்களில் இடம்பெறுகிறது. மனவெதுப்பு, மனவுளைவு செய்வதே அட்டூழியமாம்; அதுவும் அதிகாரத்தோடு - அதிகாரம் இல்லாத அதிகாரத்தோடு - இருக்கும் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏவியதைக் கேட்டு நடக்க வேண்டியவன், நம்மை வேண்டா வகையில் ஏவியும் மனவுளைச்சல் தந்தும் தன் தோற்றத்தை மிகுத்துக் கொள்ளும் போதே உன் அட்டூழியத்தை நிறுத்து என்றோ, உன் அட்டூழியம் அளவுக்கு விஞ்சியது என்றோ சொல்லும் வழக்கு நேர்கின்றது. ஊழியம் செய்பவர்கள் தங்கள் ஊழியத்தை ஒழுங்காகச் செய்யாமல் அவ்வூழியத்தையும் அழித்து, பிறர் ஊழியத்தையும் கெடுத்து, ஊழியத்தை ஒழுங்குறுத்தும் அலுவலர்க்கும் வேண்டாக் குறுக்கீடும் தடையுமாய் நிற்கும் எதிரிடைச் செயல்களைச் செய்தல் அட்டூழியம் என்க. அடும் பகை நிலையிலும் இல்லை; ஊழியம் பார்க்கும் நிலையிலும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை. உள்ளத்திற்கு ஒட்டிய நிலையும் இல்லை; உள்ளத்திற்கு வெட்டிய நிலையும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை! அழிப்பவனாக இருந்தால் எச்சரிக்கையாக இருந் திருக்கலாம்; அணைப்பவனாக வந்து அழிப்பவனாக உள்ளம் கொண்டிருப்பவனால் அலைக் கழிவு இல்லாமல் தீருமா? வாள்போல் பகைவர்; கேள்போல் பகைவர் என இரு வேறு வகையர் பகைவர். இவரோ கேள்போல் பகைவர்! காவலுக்கும் ஏற்படுத்தப்பட்டவரே களவாளியாக இருந்து சுரண்டினால் எஞ்சுமா? பயிரை ஆடுமாடு மேயாமல் காக்க அமைத்தது வேலி! அதுவே பயிரை மேய்ந்தால் பயிர் இருக்குமா? அழுகையை அமர்த்த அமர்த்தப்பட்டவளே உறங்கும் பிள்ளையைக் கிள்ளி விடுபவளாக இருந்தால் சொல்லறியாக் குழந்தை என்னாம்? அவளைக் கண்டாலே அழுமே! அவளைப் பார்த்தாலே ஒவ்வாமையாகிவிடுமே! அட்டூழியம் - அழிவுவேலை; ஊழியம் செய்து காக்க வேண்டியவரே அழிக்கும் வேலை. அவ்வேலையை வைத்துக் கொள்ள வேண்டா என்பது போலச் சொல்லமைதி அமைந் துள்ளமை அறிந்துகொள்ளத் தக்கது. 2. அக்கறை ஒன்றன்மேல் அளவிலா ஈடுபாடு காட்டுவதும், அதே நோக்காக இருந்து முயல்வதும் அக்கறைப் பொருள் என எவரும் அறிவர். அக்கரை என்பதை இக்கரை என்னும் அண்மைச் சுட்டுக்கு அப்பாலான சேய்மைச்சுட்டாம்; அந்தக் கரையை - அக்கரையைக் காட்டுவதாம் (Over Seas) என்பதை அக்கரை என அருமையாக மொழியாக்கம் செய்வார் பாவாணர். அக்கரைச் சீமை என்பது கடல் கடந்த நாடு என்பது எவரும் அறிந்தது. அக்கறை என்பதை அக்கரை என எழுதுவாரும் உளர். அதுபோல், அப்படி எழுதி இருவடிவும் காட்டும் அகராதியும் உண்டு! இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால், இவற்றைப் படியெடுத்தோரின் பிழையெனத் தள்ளிவிடலாம்; இரு வழக்காகவும் எழுதப்படுதல் கருதி இருவழக்கையும் அகராதியில் ஏற்றினார் என்றும் தள்ளிவிடலாம். அக்கறை என்பது இரட்டைச் சொல்லால் ஆய ஒற்றைச் சொல். அறிவறை (அறிவு அறை) என்றும் (சிலம்பு) குறையறை (குறை அறை) என்றும் (மலை) வழங்கப்படுதல் போல அக்கு அறை எனப் பிரிக்கப்படும் சொல் அக்கறை. இதனை அக்கு குறை எனப் பிரித்துக் காணல் பொருந்துவதன்று. அவ்வாறாயின் அக்குக் குறை என்றே சொல்லாட்சி அமைய இடம் உண்டு. இல்லையாயினும், அக்குறை என்றே திரியும். அதன் பொருள் அந்தக் குறை எனப் பொருட் பிறழ்வுக்கு இடமாகிவிடும். அக்கு என்பது அஃகு என்னும் பழவடிவினது. அஃகுதல் குறைதல், சுருங்குதல் எனப் பொருள் தருவது. அஃகி அகன்ற அறிவு (நுணுகி விரிந்த அறிவு) எனத் திருக்குறளில் ஆட்சி பெறும். அஃகாமை என அதன் எதிரிடையாய்ச் சுருங்காமையைக் காட்டியும் திருக்குறளில் ஆட்சிபெறும். அஃகு என்பதிலுள்ள ஆய்த எழுத்து, நுணுக்கம் என்னும் பொருள் தருவது மொழியியல் அறிந்தாரும் தொல்காப்பியம் கற்றாரும் தெளிவாக அறிந்த செய்தி, அச்சொல் அக்கு என்றாகியும் அப்பொருள் தரும். அஃகம் என்னும் தவசப் பெயர்ச் சொல், அக்கம் என்று ஆகியும் அப்பொருள் தரும். அஃகசாலை என்பது நாணயம் அடிக்கும் சாலை. அது, அக்கசாலை என வழங்குதல் பெருவழக்கு. அக்க சாலை என்பதோர் ஊர் கொற்கை- ஏரலை- அடுத்துள்ளது. அங்கே அக்கசாலை ஈசுவரர் கோயில் உள்ளது: அதிலே அவ்வாறு கல்லெழுத்தும் உள்ளது; திருநெல்வேலியில் அக்கசாலைத் தெரு உண்டு. அஃகம் அக்கமானதற்குச் சான்றாக அமைவன இவை. அறை என்பதன் பொருள் அறுத்தல், அறுக்கப்படுதல் என்னும் பொருளது. வீட்டின் அறை, கண்ணறை, (குளத்துமடை) அறைக்கீரை, மூக்கறை; காதறை என்பவற்றில் உள்ள அறையின் பொருள் காண்க. அறை போகு குடிகள் (ஊரைவிட்டு அற்றுப் போகும் குடிகள்) என்பது சிலம்பு. அறிவு அறை போதல், அறிவு அற்றுப்போதல் குறையறை குறையற்றுப் போதல் என்னும் பொருளன என்பதை எண்ணுக. ஆயின் அக்கறை என்பதன் பொருள் என்ன? அக்கு என்பதற்குக் கண்ட பொருளையும், அறை என்பதற்குக் கண்ட பொருளையும் சேர்த்தால் அக்கறைப் பொருள் வந்துவிடும்) சுருக்கம் அற்றுப் போதல் அக்கறை என்க. ஒன்றன் மேல் பெருக்கமான ஈடுபாடு, பெருக்கமான ஆர்வம், பெருக்கமான உழைப்பு, பெருக்கமான உந்துதல் இருத்தல் தானே அக்கறை! அப்பொருள் தானே இவ் விரட்டைச் சொல் இணைவாம். ஒற்றைச் சொற் பொருள். 3. பகட்டு பலபேரிடையே ஒருவர் இருக்கிறார். அவர் நடை உடை, பேச்சு ஆகியவற்றில் பிறர்க்கு இல்லாத - இயல்பொடு பொருந்தாத - ஒரு போலித்தோற்றம் இருக்கக் காண்கிறோம். அந் நிலையில் அவரைப் பகட்டுபவராகச் சொல்கிறோம். அவர் செய்கை அல்லது தன்மை பகட்டெனக் கருதப்படுகின்றது. இயல்பொடு பொருந்தியிருப்பதைப் பகட்டென்பது இல்லை. மிக அருமையான உடையெனின் பளிச்சு என்றிருக்கிறது என்பர். பகட்டாக இருக்கிறது என்னும் வழக்கம் இல்லை. உயரிய அணிகலங்களை அணிதல் பகட்டெனச் சொல்லப்படுவது இல்லை. எடுப்பாக இருக்கிறது என்றே சொல்லப்படுகிறது. போலி அழகே - பிறரினும் தனித்துத் தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்யும் செய்கையே பகட்டென விளங்குகின்றது. பகட்டுதலுக்கு ஆடம்பரங் காட்டுதல், போலிப் பிரகாசங் காட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல், மயக்குதல், வஞ்சித்தல். கவர்ச்சி ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. அனைத்தும் இயல்பல்லா வகை இயல்புகளாக இருத்தல் அறியத் தக்கது. பிறரினின்று தன்னைத் தனியே எடுத்துக் காட்டுதற்காகத் தானே விரும்பிச் செய்வது பகட்டு என்பதை அறியும் நாம் அப் பொருளையே அச்சொல் விளக்குதல் அறிந்து மகிழத்தக்கதாம். பக - பிளக்க; பகவு - பிளவு; பகை - பிரிவு; பகல் - பகுக்கப்பட்டது என்பனபோல வரும் சொற்களில் உள்ள பக பகட்டில் இருக்கக் காணலாம். எட்பகவு என்பார் திருவள்ளுவர். எள்ளின் பிளவு என்பது பொருள், எள்ளுக்காய் வெடித்தல் போல எனச் சரியான பங்கீட்டுக்குச் சொல்லப்படுதல் நடைமுறைச் செய்தி. எள் மிகச் சிறிது. எள்ளளவு என்பது சிற்றளவைக் குறி. அவ்வெள்ளும் இரு பிளவொன்றிய வித்தேயாம். அதனால் எட்பிளவு எட்பகவு எனப்பட்டதாம். பகச் சொல்லிக் கேளிர்ப்பிரிப்பர் என்பதும் திருக்குறளே. பக+அட்டு = பகட்டு. பிறரின் வேறுபடுத்திக் காட்ட - பிரித்துக் காட்ட அமைத்துக் கொள்வது பகட்டு என்க. அட்டுதல் - அமைத்தல். எல்லாம் பகட்டுக் காண் என்னும் திருநெடுந் தாண்டகமும் (28:236) படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப் பகட்ட என்னும் தேவாரமும் (676:2) இச்சொல்லாட்சி வழக்கைக் காட்டுவதுடன் பொருளாட்சியையும் காட்டும். பொதுமக்கள் வழக்கில் ஊன்றியுள்ள சொல் எனினும் அது புலமக்களால் போற்றப்பட்டமையும், அச்சொல் பொருள் பொருந்த அமைந்திருக்கும் சீர்மையும் எண்ணத் தக்கவையாம். பகடு என்பதன் வழிவரும் பகட்டு என்பது வேறு சொல்லாம். உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் உருபேற்கும் நிலையில் பகட்டு என வருதல் கருதுக. வயிறுவலி, வயிற்று வலியும், பயறுநெற்று பயற்று நெற்றும் ஆவது போல ஆங்குப் பகடு பகட்டு ஆயதென்க. அப்பு அப்பு என்பது அப்பாவைக் குறிக்கும் முறைப்பெயர், அஃது அன்புப் பொதுச் சொல்லாகப் பலருக்கும் வழங்குவது உண்டு. அப்பா ஐயா அம்மா என்பவை முறைப் பெயர் எனினும் பொதுப் பெயராகவும் வழங்குவது இல்லையா? அதுபோல் என்க. அப்பு விளிவடிவமாகவும் வழங்குகின்றது. ‘m¥ò eykh?’ ‘m¥ò v§nf ngh»Ö®fŸ? என்று இளையர் முதியர் வேறு பாடு இன்றியும் வழங்குதல் நடைமுறை. அப்பு, என்பது ஏவல் வடிவிலும் வரும். ஒன்றோடு ஒன்றை இணைத்தல் அப்புதல் எனப்படும். அதனால் சுவரில் சாந்தை அப்பு; நான் தேய்க்கிறேன் என்பதும், எருவைத் தூணில் அப்பு என்பதும் நாம் கேட்பவை. இவை ஏவல் வடிவுகள். ஓர் அப்பு அப்பினான் பார் என்பதில் அப்புதல் அடித்தல் அல்லது அறைதல் தருகிறது. ஒன்றை ஒன்றில் அப்புதல் என்பது அடித்தல் தானே! சோற்றை ஓர் அப்பு அப்பினான் என்றால் வயிறு முட்ட உண்டான் என்பது பொருள். அப்புச் சுவர் என்பது ஒட்டுச் சுவர். இயல்பாக அமைந்த சுவரில் பழுதுண்டானால் அதற்கு வலுவமையுமாறு சாந்து, மண் அப்பி வைக்கும் சுவர் அப்புச் சுவராகும். பழைய சுவருடன் அப்புச் சுவரும் சேர்ந்த போது அச்சுவர் கனமுடையதாக இருக்கும் அதனால் கனம், தடி என்னும் பொருள்களும் அப்புதலுக்கும் உண்டாயின. இதனால் அப்புதல் என்பதற்குப் பூசுதல், ஒற்றுதல், தாக்குதல், கவ்வுதல், சார்த்துதல், திணித்தல், உண்ணுதல் ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. எருத்தட்டுவார் சாணத்தை உருட்டித் தட்டி வட்டமாகச் செய்வதைக் காணலாம். அவ்வாறு செய்வது அப்பளித்தலாகும். அப்பளித்தல் வேறு, சப்பளித்தல் வேறு. அப்பளித்தல் வட்ட வடிவானது. r¥gˤjš v›toÉY« mikí«., இவ்வப் பளித்தல் போல் மாவைப் பிசைந்து உருட்டி வட்டமாகத்தட்டிச் செய்யப்படுவது அப்படம். அப்பளாம் என்பது பிழைவழக்கு. இனி அப்பம், ஊது அப்பம் (ஊத்தப்பம்) என்பனவும் அப்பளித்தல் வழியாக வந்தனவே. அப்பட்டம் என்பது பெருவழக்குச் சொல். அப்பட்டமான பொய் என்பது எங்கும் கேட்கக் கூடியது. அப்பு அட்டம் அப்பட்டம் ஆயது. அப்புதல் அமைந்தது என்பது பொருள். அப்புதலாவது இட்டுக்கட்டியுரைத்தல்; புனைந்துரைத்தல்; இட்டுக்கட்டிய பொய்; புனைந்து கூறிய பொய் என்பது இதன் பொருளாம். அப்பழுக்கு இல்லாதானை என்பதில் உள்ள அப்பழுக்கும் பெரு வழக்குச் சொல்லே. அப்பு அழுக்கு அப்பழுக்கு, அழுக்கு மாசு, குற்றம், குறை, கறை, அப்பிய அழுக்கு எதுவும் இல்லாதது தூயது. அத்தன்மையுடையவன் தூயன் என்க. உடலிலே அப்பு அழுக்கும் உடையிலே அப்பு அழுக்கும் நீரால் போகும். உள்ளத்திலே அப்பும் அழுக்கை எதனால் போக்குவது? கங்கை ஆடிலென்? fhÉÇ Moby‹? உள்ளத்து அழுக்குப் போகாதே! அதனால், புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்றார் திருவள்ளுவர். அப்புக்குட்டி என்பதொரு பெயர். தாயை விட்டுப் பிரியாது ஒட்டித் திரியும் ஆட்டுக் குட்டியை அப்புக்குட்டி என்பர். அப்பெயர் மக்கட் பெயராகவும் வழங்கலாயிற்று. பார்ப்பு என்னும் பறவைக் குஞ்சின் பெயர் பாப்பு பாப்பா எனக் குழந்தை பெயராகவும் வழங்குவது போன்றது அது. ஆடுமாடுகளின் அரத்தத்தை (இரத்தத்தை) உறிஞ்சி உண்ணும் ஓர் உயிரி உண்ணி எனப்படும். அவ்வுண்ணிக்கு அப்புண்ணி என்பதொரு பெயர். அதன் ஒட்டுதலை விளக்குவது ஒட்டுண்ணி என்னும் அதன் மற்றொரு பெயர். நெருங்கியவர் உடையிலும், நெருங்கிய உடலிலும் ஒட்டும் புல் ஒன்றுண்டு. அதற்கு ஒட்டுப்புல் என்பதொரு பெயர். அப்புப்புல் என்பது மற்றொரு பெயர். அப்பு மேலும் அப்புவதே! இவ்வளவில் அமைவோம்: அட்டமணியம் வட்டம் சுற்றி வழியே போ என்றால் அட்டத்தில் பாய்ந்து விட்டான் என்பது வழக்குச் சொல். அட்டம் என்பது குறுக்கே என்னும் பொருளது. நட்டணைக்கால் என்பது நிலத்தில் ஊன்றிய கால்: அட்டணைக்கால் என்பது நட்டணைக்கால்மேல் குறுக்காகத் தூக்கிப் போட்ட கால். வட்டம் முழுச் சுற்று; அட்டம் குறுக்கு. அட்டமணியம் என்னும் சொற்றொடரில் அட்டம் என்பதற்குக் குறுக்கு என்னும் பொருள் தெளிவாகிறது. மணியம் என்பதன் பொருள் என்ன? நாட்டாட்சியின் சிறிய அளவு ஊராட்சி. பல்லாயிரம் ஊராட்சிகளின் தொகுப்பே நாட்டாட்சி. ஊராட்சி செய்பவர் ஊர் மணியம் (கிராமமணியம்). அவரே ஊரின் ஆட்சியாளர். ஆங்கிலர் ஆட்சியில் இந்தியப்பரப்புக்குத் துணையரசர் (Vice Ray) இருந்தார். மாநில ஆட்சிக்கு ஆளுநர் (Covernar) இருந்தார். அவ்வாறே மாவட்ட ஆட்சியில் இருந்து ஊராட்சி வரை ஆட்சியாளர் இருந்தனர். அந்நடைமுறை இந்நாள் வரை தொடரல் கண்கூடு. ஊர் அலுவலர் (Village officer) என்னும் பெயரால் இன்று உள்ளனர். ஊராட்சி பார்த்தவர். ஊர்மணியம் எனப்பட்டார். அவர் வைத்தது வரிசை: செய்தது சட்டம்; வரிவாங்குதலா, தண்டத் தீர்வை விதித்தலா, ஊர்வழக்கை முடித்தலா, பிறப்பு இறப்புக் குறிப்பா அவ்வளவுக்கும் அவரே பொறுப்பாளர். மேலாட்சி யாளர் எவர்வரினும் ஊர்மணியத்தைப் பார்த்துத்தான் எதுவும் செய்வார். மணியம் சொன்னதுதான், அரசு சொன்னது. அவர் சொன்னதே காவல்துறை, நீதித்துறைச் சான்றுகள். மணியம் ஊரில் மணிபோன்றவர் எனப்பட்டவர்தாம். ஆயினும் ஓட்டை உடைசல் கீறல் மணிகள் இல்லாமல் போவது இல்லையே! முறை செய்ய வேண்டிய அவர், முறை கேடராக அமைவதும் தவிர்க்க முடியாததுதானே! அதனால் மணியம் என்பதற்குரிய பொருள் அதிகாரம் செய்தல், முறைகேடாக செய்தல் என்பனவாய் அமைந்தன. அதனால் இந்த மணியமெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே உன்னை யார் மணியத்திற்கு வைத்தது? என்பன போன்ற வழக்குகள் உண்டாயின. இவ்வகையில் வந்த ஒன்றே அட்ட மணியம் என்பது. ஒரு வேலையை மேற்பார்க்க ஓர் அலுவலன் உள்ளான். அவனே கெடுபிடிக்காரன்; ஈவு இரக்கமில்லாமல் நடப்பவன். அவன் இல்லாப் பொழுதில் அல்லது இருக்கும் பொழுதில் கூட, அவனுக்கும் கெடுபிடி செய்பவனாக ஒருவன் தலைப்பட்டால், அவன் செய்யும் கெடுபிடி எரிச்சலில் பிறந்தது அட்டமணியம். அவன் செய்யும் மணியத்தைப் பொறுத்தாலும் இவன் செய்யும் அட்டமணியத்தைப் பொறுக்க முடியவில்லை என்று வெதும்பி யுரைப்பது வழக்காயிற்று. அட்டமணியம் என்பது குறுக்கே குறுக்கே புகுந்து வேண்டாத வகையில் - ஏன்? வெறுக்கும் வகையில் அதிகாரம் செய்வதாம். ஊரின் மணியெனப்பட்ட பெருமை, வெட்டி அதிகாரப் பொருளுக்கு இறங்கிய இறங்கு நிலைப் பொருள் இது. ஊர் மணியம் பார்த்தவர் மணியகாரர் எனப்பட்டனர் அது குடிவழிப் பெயராய் - ஒரு சாதிப் பெயராய் - இந்நாளில் வழங்குகின்றது. கணக்கு எழுதிய குடிவழியினர் கருணீகர் எனப்பட்டது போன்றது இது. சிற்றூர் கோயில் மடம் முதலியவற்றின் மேலாண்மை செய்பவர் மணியம் மணியக்காரன் என்று கூறுகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. இம்மணியத்தின் துடிப்பு விளக்கு மாறு, துடி மணியக்காரர் என்கிறது விறலி விடுதூது (1055) மணியத்தின் அடாவடித்தனம் புலப்படுமாறு துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் என்கிறது அறப்பளீசுரர் சதகம் (49). அட்டமணியம் பாராட்டால் வெளிப்பட்டது அன்று, பொறுக்கமாட்டா எரிச்சலால் வெளிப்பட்டது. பதவிப் பெயர், பழிப்பெயராயதற்கு இஃதொரு சான்று. தத்தை தத்து+ஐ = தந்தை, தத்திச்சொல்வது தத்தை. தத்தை கிளி விட்டில் வகையுள் பருத்த ஒன்று. தத்தித் தத்திச் செல்வதாலும், கிளி போலும் பசுமை நிறம் உடைமையாலும் தத்துக்கிளி எனப்படுகிறது. தத்திச் செல்லுதல் ஒரு விளையாட்டு தாவு தலுக்கு முன்னிலை தத்துதல். தத்தித் தாவி என்பது இணை மொழி. தத்து தத்துவாய்மடை என்பவை உழவடைச்சொல். நீர் தத்திச்செல்வதற்கு அமைக்கப்பட்ட அமைப்பு அது. தவளை தவழும் இயல்புடையது தவளை தவளையின் செலவைத் தத்துதல் என்பது வழக்கு. தவளை தத்துதல் என்பதொரு விளையாட்டு. குழந்தை தவழும்போது அதன் கை கால் அமைதி அதன் செல்லுமுறை தவழ்நிலையைத் தெரிவிக்கும். தோற்றத்தால் தவளை அமைதியைக் காட்டும். ளகரம் ழகரம் ஆதலால் பொருள் வேறுபாடு இல்லாமை காள், காழ் என்பதில் காண்க. இரண்டும் கருமைப் பொருளவே. தேரை தேர் அமைப்பில் தோன்றும் மணல்மேடு தேரி என வழங்கப்படும். கடற்கரைப் பகுதிகளில் தேரியை மிகக் காணலாம். சமநிலமாக இருந்த மணற்படுக்கை ஒரு கடுங் காற்றால் பனையின் கழுத்துக்கு உயர்ந்து தேரியாதலும், இன்னொரு காற்றால் அத்தேரி பழைய நிலையை அடைதலும் இயற்கை. தேரி, மணல்மேடு என்னும் பொருள் தந்தபின் அம்மணல் நிறத்தவளை தேரை எனப்பட்டது, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் தவளை, வெளிப்படக் கிடப்பினும் மணல் நிறத்திலேயே இருக்கும். அது மணற்றவளை எனவும் படும். மணலில் வாழ்வதுடன் சார்ந்ததன் வண்ணமாம் நிறமும் பெற்றிருக்கும். நுணல் தேரைக்கு நுணல் என்பது ஒரு பெயர். மணலுள் மறைந்து கிடக்கும் நுணல். எனச் சுட்டுவ தொரு பாட்டு. நுணல் என்பதொரு மரம். நுணா என்பது அதன் பெயர். அதன் காய் போல் இருத்தலால் தவளை - மணல் தவளை - நுணல் எனப்பட்டது. நுணாமரம் தணக்கு என வழக்கில் உள்ளது. தணக்கங்குளம் என ஓர் ஊர் மதுரையை அடுத்து உண்டு. பல்லி பல்+இ = பல்லி. தனிக்குறில் முன் வந்த மெய் அதற்கு முன் உயிர் எழுத்து வர இரண்டாகும் என்னும் விதிப்படி பல்+ல்+இ = பல்லி யாயது. பல்லியின் நீளத்தையும் அதன் பருமையையும் பார்த்து அவற்றுடன். பல்லின் பருமை நீளம் ஆகியவற்றையும் ஒப்பிட்டுக் கண்டால் எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்து இப்பெயரிட்டுள்ளனர் என்பது விளங்கும். வியப்பும் தோன்றும். பல்லன் பல்லாயி என்னும் பட்டப்பெயர் வழக்கும் நோக்குக. பாச்சை பாய்ச்சை - பாச்சை, பாய்ச்சல், பாய்ந்து செல்லுதல், தத்துதலினும் தாவு தலினும் விரைந்தது பாய்ச்சல். பாய்ச்சை செல்லும் விரைவைப் பார்த்தால் பெயர்ப்பொருத்தம் விளங்கும். பெருக்கு மிக்க நீர், நிலத்தில் படியுங்கால் விரைந்து பரவும். அதற்கும் பாய்ச்சல் என்பதே பெயர். மூடி விழிக்கு முன் பார் பாய்ந்து விடும். அவ்வளவு பரவிப் பாய்வது அது. பாய்ந்து தாக்கும் மாடு பாய்ச்சைக் காளை (பாச்சைக் காளை) எனப் படும். பாய்ச்சல் காட்டாதே என்பதும் உன்பாய்ச்சலை என்னிடம் வைத்துக்கொள்ளாதே என்பதும், அவன் பாய்ச்சல் (பாச்சா) பலிக்கவில்லை என்பதும் வழக்குத் தொடர்கள். தாரை மடித்துக் கட்டுதல் தார்ப் பாய்ச்சுதல் எனப்படும். தார் நீளம்; நீண்ட உடையை (காலளவும் தாழ்ந்து கிடந்த உடையை) முட்டளவுக்கு மேலே கொண்டு வந்து கட்டுதல். பாய்ந்து ஓடுவதற்கு வாய்ப்பானது ஆதலால், அதற்குத் தக்கவாறு கட்டுதல் பாச்சை எனப்பட்டது. விட்டில் ÉL>É£L+ïš = விட்டில். இடைவெளிப்பட விட்டுத் தாவுதலால். அவ்வியல் கண் டோர் அவ்வுயிரிக்கு விட்டில், பெயர் தந்தனர். கூடு விட்டு ஆவிபோதல் வேலையை விட்டு விலகல் என்பவற்றில் விட்டு என்பது விடுபாடு அகலுதல் விலகுதல் பொருள் தருதல் அறிக. புழுப்பூச்சிபோல் ஊர்ந்து செல்லாமல் இடைவெளிப்படத் தாவிச்செல்வதால் விட்டில் எனப்பட்டது. விடை விடை என்பது காளை என்னும் பொருளது. விடைத்தல் என்பது நிமிர்ந்து எழுதல் பொருளது. விடைக் கோழி என்பது உண்டு. சேவலோடு சேர்தற்குக் கத்தும் பருவப் பெட்டையின் பெயரே விடைக்கோழியாம். கோழி விடை என்பதும் வழக்கே. ஊக்கமாகச் செயலாற்றும் இளைஞனை விடைப்பான பையன்; என்பதும் வழக்கு. விடைப்பு வெடிப்பு எனவும் வழங்கும். வெடிப்பானபையன் என்பது அது. வெடி வெடிப்பதுபோல் துடிப்பானவன் என்னும் பொருளது அது.  41. தண்டு கீரைவகையுள் ஒன்று தண்டங்கீரை, அல்லது தண்டுக் கீரை. அதனைக் கீரைத் தண்டு என்பதும் வழக்கே. அது, தண்டை மட்டும் குறிப்பதாம். சிறுகீரை, அறுகீரை (அறைக்கீரை) வேளைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை என்பவற்றுள் கீரை பொதுப் பெயராயும், முன்சொல் சிறப்புப் பெயராயும் இருத்தல் தெளிவு. அவ்வாறு நோக்கத், தண்டுக் கீரையின் முதற் சொல்லே சிறப்புப் பெயர் என்பது விளங்கும் தண்டு என்பது எது? அதன் வேரற்ற தூரே தண்டென்க. சிறுகீரையும் அறுகீரையும் கொடிவகை; தண்டுடையன அல்ல, அவற்றை விலக்கித் தண்டுக்கீரை தன்தூர்த்தடிப்பைச் சிறப்பாகக் கொண்டதாம். தண்டி தடி அன்றோ! தண்டுக் கிரைக்கு மட்டுமோ தண்டு நின்றது, தாமரை தண்டு, அல்லித்தண்டு என நீர்க்கொடிக்கு வளர்ந்தது. தண்டங்கோரை எனக் கோரையுள் ஒன்றற்கு விரிந்தது. மூங்கில் தண்டு, நாணல்தண்டு, வாழைத்தண்டு எனப் பெருகியது. தண்டு விளக்கு (Tube light) எனப்புத்தாட்சியும் பெற்றது அம்மட்டோ? மூக்காந்தண்டு, காதுத்தண்டு, முள்ளந்தண்டு என்று உடல் உறுப்புகளுக்கும் தாவியது. காதில் போடும் தண்டொட்டி, யொடும்கூட ஒட்டிக் கொண்டது. நிலைத் திணையின் (தாவரத்தின்) அடிப்பகுதியாம் தண்டு, தண்டி என்னும் கனப்பொருளும் தந்தது; தடி என இடைக்குறையாகி வேப்பந்தடி, தேக்கந்தடி எனவும் வழங்கலாயிற்று. ஊன்தடி என்றும் ஊன்றியது, தடி. தடிப்பு என வளர்ந்தது. தோல் தடிப்பு வலுத்து உள்ளத் தடிப்புக்கும் இடந்தந்தது. தடிமன், தடுமன், தடுமம் என மூக்குத் தடிப்பு நோய்ப்பெயரும் ஆயிற்று தடி, தடியன் தடிச்சி என உவமையால் குறியீட்டுப் பெயரும் ஆயது. தடி, தடிதல் (வெட்டுதல்) அகற்றுதல் என்னும் வினைக்கு மூலமும் ஆயது, தண்டு தட்டு ஆகித் தட்டையும் ஆயிற்று. தடி இவ்வளவில் நிற்கத், தண்டுக்குச் செல்வோம். தண்டு, தடி அல்லது கோல் என்னும் பொருளில் வளர்ந்தது அன்றோ! தளர்நடைமுதியர் தண்டூன்றிச் செல்லுதல் வழக்காயிற்று. தண்டுகால் ஊன்றிச் செல்லும் முதியனை மணிமேகலை உரைக்கும். தொடித்தலை விழுத் தண்டினைப் புறப் பாடல் விளக்கும். தொடியாவது வளைவு; வளையலுக்குத் தொடி என்னும் பெயரும் வளையல் தொடுத்தல் என்னும் வழக்கும் உண்மை அறிக. தொடுவை என்னும் கருவி வைக்கோல் திரட்டுதற்காகக் களப்பணியாளர் கையகத் திருப்பதும் அறிக. வளைந்த தலையை அல்லது உச்சியை உடைய தண்டு (கம்பு) தொடித்தலைத் தண்டாம். அது கால்போல் பயன்தந்து தளர்ச்சி நீக்கும் தகவு நோக்கி விழுத்தண்டு (சிறந்ததண்டு) எனப்பட்டதாம். தொடித்தலை விழுத்தண்டு என்று ஆட்சி செய்த புலவர் பெயரை ஒழியவிட்ட புலவர் உலகம். அவர்தம் சொல்லாட்சி கொண்டே அவர்க்குப் பெயர் சூட்டிப்போற்றி வைத்தமையால் தொடித்தலை விழுத்தண்டினார் என்றொரு புலவரை நாம் அறிய வாய்த்ததாம். தண்டு (கோல்) கொண்டு போருக்குச் செல்வது பண்டை வழக்கு ஆதலால், தண்டுக்குப் படை என்னும் பொருள் உண்டாயிற்று. படைத்தலைவர் தண்டநாயகர் எனப்பட்டார். தண்டடித்தல் என்பது படைஞர் பாளைய மிறங்குதலாயிற்று. போரின்மேல் தண்டெடுக்க என்பதும் (382) தண்ட நாயகர் காக்கும் என்பதும் (386) கலிங்கத்துப்பரணி. இனி, வரிவாங்கச் செல்வார் தண்டு கொண்டு சென்றனர். தண்டு கொண்டு வரிவாங்கியதால் வரிதண்டுதல் என வழக் காயிற்று. அதனை வாங்குபவர் தண்டலர், தண்டற்காரர் எனப்பட்டனர். அவர்கள் தலைவர், தண்டல் நாயகர் ஆனார். தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன் என்னும் பழமொழியும் தண்டல் நாயகர் என்னும் கல்வெட்டு மொழியும், மாவட்ட ஆட்சியாளரைத் தண்டல்நாயகர் என வழங்கும் மொழியாக்கமும் கருதத்தக்கன. வரி தண்டு தற்கு ஆள்வருகிறது; அவரவர் வரியைச் செலுத்துக - என்பதற்கு அடையாளமாக அறையப்பட்ட பறை தண்டோர் தண்டோரா எனப்பட்டது. என்ன தண்டோராப் போடுகிறாய்? என்பது இன்றும் வழங்கு மொழி. வரிகட்டுதற்கு மறுத்தாலோ, குற்றம் செய்து எதிரிட்டாலோ அவரைத் தண்டால் (கோலால்) மாட்டுவது (அடிப்பது) வழக்கமாக விருந்தது. அதன் வழி வந்ததே தண்டனை! பின்னர்ச் சிறையடைப்பும், பொருட்பறிப்பும் பிறபிறவும் தண்டனைப் பொருளில் வளர்ந்தன. கடுமொழியும் கையிகந்த தண்டமும் என்பது திருக்குறள் (567) தண்டமும் தணிதி பண்டையிற் பெரிதே என்பது புறம் (10) தண்டு எடுத்தவனின் கொடுமைக்கு அஞ்சிக் கொடுத்த கொடுமை தண்டத்துக்கு அழுதல் ஆயிற்று! தடியனுக்குப் போடும் வெட்டிச் சோறு - போடா விட்டால் எதுவும் செய்வானே அதனால் - தண்டச்சோறு எனப்பட்டது. தடியனுக்கு அஞ்சி வணங்கியதே தண்டனிடுதலாய்த் தெண்டனிடுதலாய் வழங்கி. இறைவழி பாட்டுக்கும் ஏறியது. தடியன் என்பான் தடியுடையவனும், தடித்தவனும் தானே. தடி என்பது ஊன் ஆதல் ஊன் தடி பிறப்பினும் எனவரும் புறப்பாட்டால் புலப்படும் (74). தண்டி என்பதோர் பெயர்! தண்டித்தவர் பெயரே தண்டியாயிற்று. அவரே தண்டியடிகள் நாயனார் என்பார். தந்தை தாளறத் தண்டித்தவர் அவர். தாளறத் தண்டித்த தண்டி என்பது சிவரகசியம். (பாயிரம். 7) தண்டு கொண்டவன் தண்டன் எனப்பட்டான். அப் பெயராலே மாந்தர் பலர் இன்றும் உளர். தண்டும் அதனொடு வேலும் கூடிய படைக்கலம் தண்டு, தண்டம் எனவும் பட்டது. தண்டாயுதம் என்பது தென்மொழி வட மொழியாம் இரு மொழிப் பிறப்பி! அவற்றின் வழிப் பட்டனவே தண்டாயுதன், தண்டபாணி என்னும் முருகன் பெயர்கள். தண்டுமாரி என்னும் அம்மை பெயரே அதன் பொருள் விளக்கம் புரிவிக்கும். அப்படியே தண்டு விநாயகர் என்பதும். தண்டு படைக்கருவியாக மட்டும் நின்றுவிடவில்லை. தண்டுவலித்தல் படகுக்கு உண்டன்றோ! தண்டு தானே குயக் கலம் செய்தற்குச் சுழற்றுகோல்! தேர் உந்துதற்கு ஆகும் சவள மரம் தண்டு கோல் எனப்படுவதே. வில்தண்டு, வீணைத்தண்டு, சமன்கோல் (தராசுத்) தண்டு, காவடித் தண்டு என்பவை பல்வேறு பயன்தண்டுகள். ஆணுறுப்பும் தண்டென வழக்கில் நின்றது. இரட்டை (மிதுனம்) என்னும் விண்மீன் தோற்றம் தண்டுபோல் இருத்தலால் அது தண்டு எனப்படும். மூங்கில் தண்டு முகத்தல் அளவு கருவியாகவும் ஒருகால் பயன்படுத்தப்பட்டது. ஒரு கணுவுக்கு அடியிலும் அதன் மேற் கணுவுக்கு அடியிலும் அறுத்துத் தூக்கு ஆக்குவதும் பழவழக்கு. அத்தண்டு, கூழும் கஞ்சியும் கொண்டு செல்லப் பயன்படுத்திய வழக்குண்டு. மதுப்பெய் தண்டும் இலக்கிய ஆட்சியில் உண்டு. மூங்கில் தண்டு கொண்டு செய்யப்பட்ட ஊர்தி தண்டிகை யாயது. அது, வள்ளுவர் காலத்தில் சிவிகை எனப்பட்டது. தண்டிகைக் கனகராயன் பள்ளு என்பதொரு சிற்றிலக்கியம். தண்டிகை செல்வச் செருக்கர் ஊர்தியாக இருந்ததும், துறவு மடத்தர் ஊர்தியாக இருந்ததும் இந் நூற்றாண்டின் தொடக்கத் திலும் கண்டது. கம்புப் பொருளில் இருந்த தண்டு, கம்பிப் பொருளும் தருவதாய் விரிந்தது. அப்பொழுது கரும்பொன், செம்பொன், வெண்பொன் முதலிய கனிமக் கம்பியும் தண்டாகவும், தண்டின் திரிபாகவும் வழக்கில் ஊன்றியது விளக்குத் தண்டு பழமையானதே. வள்ளுவர் வாய்மொழியை விளக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது வள்ளுவமாலைப் பாட்டொன்று. அறம். தகளி; பொருள், திரி, இன்பு, நெய், சொல், தீ; குறட்பா. தண்டு என்கிறது அது. திருகிப் பொன்னெடுந் தண்டில் திரண்டவால் என்னும் கம்பர் தொடரால் பொற்கம்பி தண்டெனப்பட்டதை அறியலாம். (சுந். 1193) கோட்டை வாயில்களின் உட்காப்பாகப் பரிய தடிகளைக் குறுக்கிட வைப்பது பண்டைவழக்கு. துளையிட்ட பரிய தூண்கள் இருபாலும் நிறுத்தி, அதன் துளைக்குள் தடியைச் செருகி வைத்த அந்நடை முறையே இந்நாள் கதவுகளில் அமைக்கும் அடிதண்டாவுக்கு மூலம். இரும்புப் பட்டை தானே அடி தண்டா! நெடிதாகவும் வலிதாகவும் செய்யப்படுவதும், தொடர் வண்டி யோடுதற்கு வழியாய் அமைக்கப்படுவதும் ஆகியது தண்டவாளம் தண்டவாலம் என்னும் பெயரே தண்டவாளம் ஆயிற்றாம். வாலம் - நீளம்; வால் - நெடியது, நெடிய கிழிவு வாலமாகக் கிழிந்ததெனக் கூறப்படும். நீண்டு குறுகிய நிலம் வாலம் எனப்படும். குரங்கு முதலியவற்றின் வாலையும், வாலி என்னும் பெயரையும் கருதுக. குழந்தைகளுக்கு மெல்லிய கம்பி வளையத்தைக் காலில் போடுவதும், சற்றே பெரிய குழந்தை ஆனபின் அதனைக் கழற்றி விட்டுத் தண்டை போடுவதும் அறிக. பருப்பொருளால் விரிந்த தண்டு, கருத்துப்பொருளாம் நுண்பொருளாயும் விரிந்தது. தண்டின் செயல் அலைத்தலும் அலைக்கழித்தலுமாகலின் தண்டுக்கு அப்பொருள்கள் உளவாயின. பராரை வேவை பருகெனத் தண்டி என்பது பொரு நராற்றுப்படை. இதில் வரும் தண்டி என்பதற்குப் பல்கால் அலைத்து எனப்பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ என்னும் மலைபடுகடாத்தின் தண்டிக்கும் அப்பொருளே அவர் கூறினார். தண்டுதலாம் அலைத்தலால் நீங்குதல் உண்டாம். அதனால் யான் தண்டவும் தான் தண்டான் என்னும் புற நானூற்றின் தண்டுதல் நீங்கல் பொருளில் வந்தது (384). தண்டாநோய் என்பது இப்பொருளில் வந்த திருக்குறள் (1171). தண்டுடன் தண்டு மோதுங்கால் அது போர்தானே! ஆதலால், போர்ப் பொருளும், போரிடுவார் பகைவர் ஆதலால் பகைப்பொருளும் உண்டாயின. தண்ட லில்லாது உடன்கூட்டல் என்பது கூர்ம புராணம் (சூத 33). தாள்நிழல் நீங்கிய தண்டலர் என்பது சேதுபுராணம் (மங்கல. 8) தண்டாது இரப்பினும் என்று தொல்காப்பியர் கூறியது போல் (பொருள். 99). தண்டாது பெருகுவது தண்டுபோலும்! 42. திருவின் திரு பெயர்ச் சுட்டு வேண்டாப் பெருஞ்சுட்டுப் பேராசிரியப் பெருமகனார் ஒருவர் முன்பு திகழ்ந்தார்! பேராசிரியர் என்பதே அவர்தம் பெயர். அப்பேராசிரியப் பெருந்தகை, இணையற்ற பேராசிரிய ராகவே திகழ்ந்தார். அத்திகழ்வு, முற்றிலும் நம் கையகத் தகப் படாதொழிந்தன வெனிலும், கிடைத்தவை அவர் பேராசிரியரே என்பதை நிறுவவல்லவையாம்! அவை எவை? தொல்காப்பியப் பின்னான்கியல்களாம் மெய்ப் பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என்பவற்றுக்கு அவர் விரித்த உரை; திருக்கோவையார்க்கு அவர் அருளிய உரை என்பவை அவை! பெறலரும் அப்பேராசிரியப் பெருந்தகை தரும் திரு விளக்கம் பெரு விளக்கம்! அருவிளக்கம்! அப்படியொரு விளக்கம் அப்பேராசிரியரையன்றி எவரே அருளினார்? திருவென்பது பொருள் உடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலும் இன்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி அது வினையுள் உடைமை எனப்படும் என்பது தொல்காப்பியத்தில் வரும் விளக்கம். (பொருள். 273) திரு என்பது செல்வம் என அமையாமல், திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி என்கிறாரே பேராசிரியர்! செல்வம் என்பது சிந்தையில் நிறைவே என்னும் குமர குருபர அடிகள் தெளிவுக்கு மூலவர் இப்பேராசிரியரோ? வினையுள் உடைமை என்பது என்ன செறிவு! என்ன செட்டு என்ன செழுமை! தீவினையால் இன்மை எய்தினும் உடையவன் போல் இருக்கும் ஒள்ளிய உள்ள நிலையே அஃ தன்றோ! எண்ண எண்ண விரியுமே-இனிக்குமே- பேராசிரியரின் இத்திருவுரை! இனிக் கோவையாரில் வரும் திருவுரைதான் என்ன? திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு; இஃது என் சொல்லியவாறோ? எனின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப்பொருள்மேல் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு! அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல்! அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகை யானும் பிறிது ஒன்றற்கு இல்லாமையால் திருவென்றது அழகுக்கே பெயராயிற்று! அங்ஙனம் ஆயின் இது செய்யுளின் ஒழிய வழக்கினும் வருவது உண்டோ? எனின், உண்டு; கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும். அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத் தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது ஆதலானும் திரு வென்பது அழகு என்றே அறிக. அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மைநோக்கமோ என்பது அது. திருவளர் தாமரை என்பதில் வரும் திரு விளக்கம் இது! திருமகள் வளர்கின்ற தாமரை என்ற அளவில் பொருள் கொள் வாரைத் தெளிவிக்க உரைக்கும் தேர்ச்சியுரை இது. கண்டாரால் விரும்பப் பெறும் பேறாம் தன்மை யாங்குண்டோ ஆங்குண்டு திரு என்றாராம்! இனி அகரவரிகள் திருவுக்கு என்ன பொருள்களைத் தருகின்றன? அழகு, ஒளி, கணி (சோதிடம்), சிறப்பு, செல்வம், தலையில் சூடப்படும் ஓரணி, தாலி, திருமகள், தெய்வத் தன்மை, பெண், பேறு, பொலிவு, நல்வினை, மங்கல மொழியுள் ஒன்று - என்பவை அவை தரும் பொருள்களாம். இத்தகு வளத்திருவைக் கண்டோர் வாளாவிடுவரோ? திருவைக் கொஞ்சிக் கொஞ்சிக் குலவினர்; கொண்டாடினர்! திரு இருவகை வழக்குகளிலும் பெறும் சிறப்புகளைக் காண்க: சொல்வகை எடுத்துக்காட்டு திருமுன்னடைச் சிறப்புச் சொல் : திருமிகு, திருத்தகு. திரு பின்னடைச் சிற்ப்புச் சொல் : உயர்திரு, தவத்திரு. திரு முன்னும் பின்னுமாம் : : திருப்பெருந்திரு, அடைச்சிறப்புச் சொல் : திருவார்திரு. திருப்பெற்ற இறைமைப்பெயர் : திருமகன், திருமகள், திருப்பெற்ற மாந்தர் பெயர் : திருவள்ளுவர், திருநாவுக்கரசர். திருப்பெற்ற உடற்பெயர் : திருமெய், திருமேனி. திருப்பெற்ற உறுப்புப்பெயர் : திருமுடி, திருவடி, திருப்பெற்ற குடிச்சிறப்புப்பெயர் : திருமாவளவன், திருமாறன் திருப்பெற்ற கூட்டப்பெயர் : திருத்தொண்டர், திருக்குலத்தார் திருப்பெற்ற பதவிப்பெயர் : திருவாய்க்கேள்வி, திருமந்திர ஓலை. திருப்பெற்ற ஊர்ப்பெயர் : திருப்பதி, திருவாரூர். திருப்பெற்ற இடப்பெயர் : திருக்கோயில், திருமலை, திருப்பெற்ற பொருட்பெயர் ; திருவிளக்கு, திருமலர். திருப்பெற்ற நாட்பெயர் : திருவாதிரை, திருவோணம். திருப்பெற்ற நிகழ்வுப்பெயர் : திருவுலா: திருப்பூட்டு. திருப்பெற்ற பண்புப்பெயர் : திருவருள், திருவறம். திருப்பெற்ற நூற்பெயர் : திருவருட்பா, திருவாய் மொழி. திருப்பெற்ற பாவகைப் பெயர் : திருநேரிசை, திருத் தாண்டகம். திருப்பெற்ற தொழிற்பெயர் : திருமெழுக்கு, திருமுழுக்கு திருப்பெற்ற வாழ்த்து : திருவுறுக, திருவாழ்க. இன்னும் பகுத்துரைப்பின் எத்தனை வகைத் திருக்களாம்?  43. துணி துணி என்பதன் பொருள் தமிழறிந்தார் எவரும் அறிந்தது. நெடிய பாவில் இருந்து துணிக்கப்படுவது துணி, எனப்படுகின்றது. அத்துணியினும் சிறிதாகத் துண்டிக்கப் பட்டது துண்டு எனப்படுகின்றது. துண்டு துணி என்றோ, துணி துண்டு என்றோ வழங்கும் இணைச்சொல் இவற்றின் நெருக்கத்தைக் காட்டும். இங்குத் துணியை மட்டும் காண்போம். துணி என்பதன் பொருள் அறிந்தோம். அதன் வழியாக ஏற்பட்ட ஒரு சொல், துணிவு என்பதாம். ஒருவனைத் துணிந்தவன் என்று சொல்கின்றோம். அவனைத் துணிந்தவன் என்பதற்குக் காரணம் என்ன? பிறர் பிறர்க்கு இல்லாத தனித்தன்மை அவனுக்கு இருத்தலால் அன்றோ துணிந்தவன் என்கிறோம்! துணிவு. துணிந்தவன், துணிவாளன், துணிவாளி, துணுக்கு, துணுக்கை இன்ன வற்றுக்கெல்லாம் துணி என்பதுதானே, அடிச்சொல்? இது எப்படிப் பொருளொடு பொருந்துகின்றது? பெரும்போர் ஒன்றில் ஈடுபட்ட வீரருள் பலரும் நிற்க, ஒருவன் மட்டும் தனிநின்று வீறுகாட்டி வெற்றிகொள்ளல் துணிச்சலாகப் பாராட்டப்படுகிறது. பரிசு பாராட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒரு வேளை அவ்வமரில் அவன் உயிர் துறப்பின், அவன் அமரன் எனப் போற்றப்படுகிறான். சிறப்பொடு பூசனைக்கு உரிமையாளனும் ஆகின்றான். ஓரிடத்தில் முறைகேடான செயல் ஒன்று நடக்கின்றது. அல்லது ஒருவர் முறை கேடாகத் தாக்கப்படுகின்றார். அந் நிலையில் அதனைப் பார்க்கின்றவர்களுக்கு அது கொடுமை என்பது புலப்பட்டாலும், அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்னும் உணர்வு இயல்பாக எழுந்தாலும் துணிவாக முன்வந்து தடுக்க முனைவார் அரியர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பவரும் இப்படி நடக்கிறதே என்று வருந்திக் கொண்டு போகின்றவரும் நமக்கென்ன என்று நழுவுகின்றவரும் தாமே மிகப்பலர். ஆனால் எல்லாருமே அப்படி இருந்து விடுகின்றனரா எனில், இல்லையே! எவரோ ஒருவர் அக்கூட்டத்தை விடுத்துத் துணிந்து சொல்கிறார். துணிந்து என்றால், கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) சொல்லுதல் என்பதைக் குறித்து, அது அவர்தம் தன்மையைக் குறிப்பதாயிற்று. அவ்வாறு சென்றவர் பின் விளைவு என்ன என்பதைக்கூடக் கருதாமல் தட்டிக் கேட்கிறார். துணிச்சலாகச் செயலாற்றுகிறார். கூட்டத்தோடு கூட்டமாக அமைந்துவிடாமல், நூற்றொடு நூற்று ஒன்றாக நின்றுவிடாமல் தனியொருவராகத் துணிந்து செல்வதால் அவர் தன்மை துணிவு ஆயிற்று. அவர் துணிவாளர் என்றும், துணிச்சல்காரர் என்றும் பாராட்டப்படுபவர் ஆனார். கோடி, கோடி மக்கள் இருந்தாலும் வல்லாண்மை மிக்க ஆங்கில வணிகரை எதிரிட்டுக் கப்பலோட்ட எத்துணைப் பேர்க்குத் துணிவு வந்தது? அவருள் துணிந்த ஒருவர் வ. உ. சி. ஆனார். இனித் துணிவு என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. அது முடிவு செய்தல் என்பது. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு என்பதும் சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் என்பதும், எண்ணித்துணி என்பதும் இப்பொருளில் வருவன. இத்துணிவுக்கு முடிவு செய்தல் என்னும் பொருள் எப்படி வந்தது? ஒன்றைப்பற்றி ஆராயுங்கால் பலப்பல கருத்துகள் அடுத்தும் தொடுத்தும் உண்டாகின்றன. அவற்றுள் ஒவ்வொன்றாக ஆய்ந்து விலக்குவ விலக்கித் தக்கதைத் தேர்ந்து முடிவாகக் கொள்வதே அத் துணிவு ஆகும். பலவற்றை ஆய்ந்து விலக்கி ஒன்றைத் தக்கதெனத் தனித்து அல்லது துணித்து எடுத்துக் கொண்டமையால் அது துணிவு எனப்படுகின்றதாம். அதனால் துணிவுக்கு உறுதிப்பொருள் என்பதும் உளதாயிற்று. ஒருவர் வரலாற்றில் அமைந்த ஒரு சிறு நிகழ்ச்சியை அல்லது ஒரு நூலின் ஒருசிறு பகுதியைத் தனித்துக் காட்டுதல் துணுக்கு எனப்படுகின்றது. துணுக்குச் செய்தி இடம் பெறாத நாளிதழும் இல்லை என்றால், கிழமை இதழ், திங்களிதழ், மலர் என்பவற்றைச் சொல்ல வேண்டுவது இல்லை. துணுக்கைப் படித்த அளவானே இதழை மூடிவைப்பாரும் உளர் என்பதால் துணுக்கின் சுவை புலப்படும். இதுகால், துணுக்கு எழுத்தாளர் எனத் தம்மைக் கூறிப் பெருமைப்படுவாரும் உளர். ஆனால் அவர் எழுதுவதே துணுக்குச் செய்திதான். ஒரு பெருநூலில் அல்லது வரலாற்றில் எடுக்கப்பட்ட துணுக்கு அன்று என்பதே வேறு பாடாம். துணுக்கம் துணுக்குறுதல் என்பன நடுக்கம் என்னும் பொருள் தருவன. அவை துண் என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக வந்தனவாம்.  44. தோசை தோசை என்னும் சிற்றுண்டியைத் தமிழ்நாடு நன்கு அறியும். தோசையில் பல வகைகள் இன்று காண்கிறோம். விறலிவிடு தூது என்னும் நூலில் தோசை வகைகள் என்னும் தொடர் உள்ளது. ஆதலால் அது முன்னரே வகை வகையாய்ச் செய்யப் பட்டதை அறியலாம். காஞ்சிபுரம் தேவராசர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில், தோசை செய்து படைப்பதற்கு அறக்கட்டளை நிறுவிய செய்தி கூறப்பட்டுள்ளது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தாம் அக்கல்வெட்டு. திருக்கோயிலின் படையற்பொருள் நாட்டுப்பொருளாகவும், பழமையாக வழங்கிவந்ததாகவும், புதிதாகப் புகுத்தப்படாததாகவும் இருத்தல் வேண்டும் என்பது தெளிவான செய்தி. இனித் தோசை என்ற சொல் தமிழில் மட்டுமின்றித் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வழக்கில் உள்ளது. ஆதலால் தோசை என்ற சொல்லைத் தனித்தமிழ்ச் சொல் என்று கொள்வதில் ஐயமில்லை. இக்கருத்துகளை, 1956இல் கோவைகிழார் இராமச் சந்திரனார் ஒரு கட்டுரையாக விரித்து எழுதினார். பிறர் அத்தோசைச் சொல்லுக்குப் பொருள் கூறுவதையும் அக் கட்டுரையிலேயே விளக்கினார். தோ - ஓசை - தோசை என்றும், தோ - சொய்- தோசை என்றும் கூறுவார்கள். தோ என்றது தூவி என்ற வட மொழியின் திரிபு என்றும், அதற்கு இரண்டு என்ற பொருள் என்றும் கூறி, இருமுறை சொய் என்ற ஓசை அது சுடும்போது உண்டாகிறபடியால் அப்பொருள் என்று பெயர் பெற்றது என்பர். துபாஷி - துவி - பாஷி - இரண்டு மொழிகள் பேசுபவன் என்பது இதைப் போன்ற ஒரு சொல். தோசை வேற்றுச்சொல் என்பதைக் காட்டுபவர் கூறும் சொல்லாய்வுச் செய்தியைக் குறிப்பிடும் அவர், இதைக் குறித்த கதை வருமாறு என ஒருகதையையும் குறிப்பிடுகிறார். ஒருவன் கணியம் (சோதிடம்) கற்கப் புறப்பட்டானாம் அவனுக்குப் போகும். வழியில் சொகினத்தடை (சகுனத்தடை) உண்டாயிற்றாம். அவன் திரும்பி வந்து தன் மனைவியறியாமல் அட்டளையில் ஏறி மறைந்து கொண்டானாம் (அட்டளை என்பது அடுப்பறையில் விறகு வைப்பதற்காக அமைக்கப்பட்ட மேல் முகட்டுத் தடுப்பு ஆகும்). மனைவி, தோசை வார்க்கும் போது, அதன் ஒலிகளை எண்ணி 32 வர, அவள் அறியப் பின்னர் வெளிப்பட்டு இன்று 16 தோசை போட்டுள்ளாய் என்றானாம். அவனுடைய கணியத்திறம் கைம்மேல் பலிக்கக் கண்டு அவள் வியந்து போனாளாம். இதன்படி தோசை என்றால் இரண்டு ஒலிகள் என்று பொருள்படும். ஆகவே இச்சொல் வடநாட்டுச் சொல் ஆகின்றது. அது சரியா? என வினா எழுப்பினார். முடிவாக இச்சொல் எவ்வாறு உண்டாயிற்று? வேறு இலக்கியங்களில் வந்ததா? என்பவற்றைப் பற்றி நண்பர்கள் தெரிவிப்பார்களாக என்றார். இச்செய்தியைத் தாங்கிய தோசைக் கட்டுரை செந் தமிழ்ச் செல்வி சிலம்பு 31. பரல் 4 பக்கம் 168 - 170 இல் வெளி வந்தது (1956 திசம்பர்) இக்கட்டுரையைக் கண்ட பாவாணர், தோசைக்கு விளக்கம் வரைந்தார். இட்டிலி போன்றே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் சிற்றுண்டி வகையாகும். தோசை என்னுஞ்சொல் தோய் என்னும் பகுதியடியாகப் பிறந்ததாகும். உறைதல், திரைதல், புளித்தல், தோயும் வெண்டயிர் (கம்பரா. நாட்டுப். 28) இட்டிலி மாவிலும் தோசைமா மிகப்புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால் சட்டியில் எழும்பாது, எளிதாய் வேகாது; சுவையாயுமிராது. தோய் - தோயை - தோசை. ய-ச போலி. இன்றும் நாட்டுப்புறத்தார் சிலர் தோயை என்றே வழங்குவர். தோசை என்ற தூய தமிழ்ச் சொல் மலையாளத்தில், தோச என்றும், கன்னட தெலுங்கு மொழிகளில் தோசை என்றும் வழங்குகின்றது. இவ்விளக்கம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 31 பரல் 6 பக்கம் 270 இல் வெளிவந்தது (1957 பிப்ரவரி.) தோசை சுவையானதுபோல், தோசை ஆய்வும் சுவை யானதேயன்றோ!  45. நட்டணைக்கால் அட்டணங்கால் அட்டணைக்கால் நட்டணைக்கால் என்பவை பற்றி ஆய்வது இக்கட்டுரை. மதுரைத் தமிழ்ச் சங்கச் சொல்லகராதி: அட்டணங்கால் - அட்டணைக்கால் அட்டணைக்கால் - ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே அணைத்து வைக்கப்பட்ட கால். (அடு:அணை; கால்.) நட்டணை - 1 ஆகடியம், பரிகாசம். 2, வெறுப்பு (1, 2. வழக்) குறிப்பு : நட்டணைக்கால் பற்றிச் செய்தி இல்லை. சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி: அட்டணங்கால் attanai - kal, n See அட்டணைக்கால். அட்டணைக்கால் attanai - K. Kal, N < அட்டம் +. 1. Folded legs in sitting Gross - legged குறுக்காக - மடக்கி வைக்குங் கால். 2. one leg Placed Over the other in sitting Gross legged கால் மேலிடுங்கால் Loe. நட்டணம் நட்டணைகளுக்குக் கூத்து, கோமாளிக் கூத்து, கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை, நடிப்பு கொடுமை என்னும் பொருள்களும், நட்டணைக்காரன் என்பதற்குக் கருவங்கொண்டவன் என்னும் பொருளும் தரப்பட்டுள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: அட்டணங்கால் அட்டணைக்கால் பார்க்க. அட்டணை குறுக்கே (அட்டம் அணை) அட்டணைக்கால் . உட்கார்கையில் கால்மேல் காலாகக் குறுக்காக மடக்கி வைக்கும் கால். 2. கால்மேல் குறுக்காக இடுங்கால். அட்டம் + அணை + கால். அட்டம் குறுக்கு. அணை = அணைக்கை, தழுவுகை, சேர்க்கை. 3. அட்டகாரு. (ஆங்கிலக் குறிப்பு செ. ப. க. அகரமுதலியில் உள்ளதே) அட் டணைக்கால் போட்டிரு - த்தல் attanai.K. kal - Pottru, செ.கு.வி (vi) நாற்காலி போன்ற இருக்கைகளில் கால் மேல் காலிட்டு அமைந்திருத்தல்; to sit cross, legged especially on araised seatlike a stool, Chair or bench. (அட்டம் குறுக்கு அணை அணைக்கை, தழுவுகை, சேர்க்கை. அட்டம் + அணை = அட்டணை) ( ஒரு நாற்காலிமேல் அட்டணைக்கால் போட்டிருத்தல் படமுண்டு) அட்டம் என்பதற்குக் குறுக்கு எனப்பொருளுண்மையை அகரமுதலிகள் மூன்றும் சுட்டுகின்றன. பிறவற்றிலும் உள, வட்டத்தில் ஓடச் சொன்னால் அட்டத்தில் பாய்கிறான் என்பது பழமொழி. அட்டணைக்கால் போடுதல், நட்டணைக்கால் போடுதல் - சிற்றூர் வழக்கு. நாற்காலி, மொட்டான் (Stool) சாய்விருக்கை, மிசைப்பலகை இன்னன பயிலாத நாட்டுப்புற மக்கள் ஆடுமாடு மேய்த்தல் வேளாண்மை செய்தல் கூலி வேலை இன்னனவற்றில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் வழக்கு. அங்கே நாற்காலி இருக்கை பெருஞ்செல்வப் பண்ணையார்க்கும் இல்லை; திண்டு உண்டு; திண்ணை உண்டு. கணக்கர் பலகையுண்டு; விஞ்சிப் போனால் ஊஞ்சல் கட்டில் ஊஞ்சல் பலகை என்பவையுண்டு. அவர்களுள் வீற்றிருப்பார் எவர்? வீற்றிருக்கப் பொழுது ஏது? வாய்ப்பும் ஏது? சம்மணம் கூட்டுதல் அல்லது சப்பணம் கூட்டுதல் அல்லது சபைக்கு இருத்தல் என்பவை ஒருவகை; ஒரு கட்டுக்குள் அமைந்தவை. உட்கார்தல், குந்துதல் அல்லது குத்தவைத்தல், குத்துக் கால் போட்டிருத்தல், அட்டணைக்கால் போட்டிருத்தல், நட்டணைக்கால் போட்டிருத்தல் என்பவை ஒன்றில் ஒன்று சிறிய சிறிய வேறுபாடுகளையுடையவை. இவை அவர்கள் வாழ்வில் தொன்று தொட்டவை. ஆங்கில மக்கள் முதலாம் அயலார் வரவும், அலுவலக அமைவும் ஏற்பட்ட பின்னர் வழங்கும் இருக்கைகளைக் கொண்டு, முந்தைப்பழக்கத்தையும் சொல்லாட்சியையும் ஆய்தல் தெளிவாகாது; முறையும் ஆகாது. நகரத்தார் ஊர்களில் எத்தகு பெருஞ் செல்வர் வளமனையிலும் திண்டும் அணையும் திகழ்வதே இன்றும் கண்கூடாதல் தெளிவு; வடநாட்டுச் சேட்டுகளின் வட்டிக் கடைக் காட்சியும் அத் தகைத்தாதல் அறிக. சம்மணம், சப்பணம் சபைக்கு இருத்தல் என்பவை கால் மடக்கிக் கைகட்டி இருக்கும் கட்டுப்பாட்டு நிலை; கால் மடக்கி இருத்தல் அளவும் அத்தகைத்தே. காலை நிலத்தோடு நிலமாகப் படியவைத்து இருத்தல் என்பது அது. காலைத் தூக்குதல், குத்தவைத்தல், கால்மேல் கால்போடல் என்பவை இல்லாத அடக்க ஒடுக்க அமர்வே இவை ; சபை - அவை - ஊர்க்கூட்டம். ஊர்க்கூட்டத்தில் எப்படி ஊர்க்கு வணக்கமாக அடங்கி ஒடுங்கி உட்கார வேண்டுமோ அப்படி உட்கார்தல் சபைக்கு இருத்தல். உட்கு என்பது வலி; ஆர்தல் - அமைதல் ; களைப்பும் வலியும் போக வாய்ப்புப்போல் இருத்தல் உட்கார்தல்; சாய்ந் திருத்தல், கால்நீட்டி யிருத்தல் என்பன கால் நிலத்தில் படிந் திருக்க இருப்பு எழும்பியிருத்தலாம்; குத்துக்கால் போட்டிருத்தல் என்பது குத்தவைத்தல் போல் சுவர் தூண் முதலியவற்றில் சாய்ந்து இருத்தல் அட்டணைக்கால் போட்டிருத்தல் என்பது ஒரு கால் மடக்கி உட்கார்ந்து அக்காலின் மேல் ஒரு காலைக் குறுக்காக மடக்கிப் போட்டிருத்தல்; நட்டணைக்கால் குறுக்காக அக்காலின் மேல் ஊன்றியிருத்தல். சுவரில் சாய்ந்து கொண்டும் நட்டணைக் காலில் நிற்றல் உண்டு. கொக்கு ஒரு காலை ஊன்றி ஒரு காலை எடுத்து மடக்கி நிற்றலை ஓராற்றான் நட்டணைக் காலுக்கு ஒப்பிடலாம். எடுத்த காலை அடுத்த காலொடு பொருத்தி நில்லாமை ஒன்றே சொக்கின் ஒற்றைக்கால் நிலைக்கும் நட்டணைக் கால் நிலைக்கும் உள்ள வேறுபாடாம். ஒற்றைக்காலில் நிற்றல் என்பது கெடுபிடியாக நின்று, நினைத்ததை நிறை வேற்றிக் கொள்ளச் செய்யும் நட வடிக்கையாகக் கருதப்படும். கொடுத்தே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வாங்கிவிட்டான் என்பது வழங்குமுறை. இதில் இருந்து நட்டணை என்பதற்குக் கெடுபிடியாக நிறை வேற்றல், முறைகேடு, வன்புக்கு நிற்றல் எனப் பொருள்கள் உண்டாயின. நட்டணை செய்யாதே; சொன்னால்கேள் என்னும் கட்டளையில் இருந்தே நட்டணை, சொல்லுக்குக் கட்டுப் படாதது என்னும் பொருள் தருவதாயிற்றே. கால் மேல் கால்போடுதல் அவைக்குப் பொருந்தா நிகழ்ச்சி எனப்படுவதுடன் செருக்குக்கு அடையாளமாகவும் நாட்டுப்புற மக்களால் இன்றும் கருதப்படுகிறது. வள்ளலார் அஞ்சியவற்றுள் ஒன்று கால்மேல் கால் வைத்திருத்தல்: காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்; காலின்மேல்கால் வைக்கப் பயந்தேன்; பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்; பஞ்சணை படுக்கவும் பயந்தேன்; நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக்கால் கீழே நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்! வள்ளலார் பாடிய பிள்ளைச் சிறு விண்ணப்பத்துள் ஒன்று இது.  46. நட்பும் பகையும் நட்பு பகை என்பவை எதிரிடைகள். நள் என்பதன் அடியாக நட்பும், பக்கு பகு என்பதன் அடியாகப் பகையும் பிறக்கின்றன. முன்னது இணைதல் கருத்திலும் பின்னது பிரிதல் கருத்திலும் வருவன. பகை என்பதற்குத் தமிழில் மிகப்பல சொற்கள் காணக் கிடக்கின்றன. அனைத்தையும் திரட்டவில்லை எனினும், அரிதின் முயன்று ஐம்பது சொற்கள் அளவு திரட்டிக் காட்டிய அகர முதலிகள் உள. ஆயின் இன்னும் அவ்வெண்ணிக்கையளவுள்ள சொற்கள் இணைக்கத் தக்கனவாக எஞ்சியுள்ளன. பகை இவ்வாறாக, நட்பு என்பதற்கோ அவ் விரிந்த அகர முதலிகளும் கேண்மை, கேள், தொடர்பு எனச் சொல்லி அமைந்தன. இச் சுட்டும் சொல்லும் நண்பர்கள் வாய்த்தலின் சுருக்கப் பாட்டையும், பகைவர்கள் கிளர்தலின் பெருக்கப் பாட்டையும் சொல்லளவால் சுட்டுவனவாம்! தமிழில் அமைந்துள்ள எதிர்ச் சொற்கள் பெரும்பாலும் அடியொற்றி அமைவன. ஆதலால் பகைச்சொல் கொண்டு நகைச் சொல் அல்லது நட்புச் சொல்லைக் கண்டுகொள்ளக் கூடுவதாம். நட்பியலைக் கருதினால் நெருங்குதல், பொருந்துதல், கலத்தல், ஒன்றுதல், நிலைத்தல் என்னும் படிமான வளர்ச்சியைக் காண இயலும். நெருங்குதலால் பொருந்துதலும், பொருந்துதலால் கலத்தலும், கலத்தலால் ஒன்றுதலும், ஒன்றுதலால் நிலைத்தலும் நிகழ்வனவாம். இவ்வண்ணமே, பகையியலில் நெருங்காமை, பொருந்தாமை, கலவாமை, ஒன்றாமை, நிலையாமை என்பவை ஏற்படுதலை அறியக்கூடும். நெருங்காமையால் பொருந்தாமையும், பொருந்தாமையால் கலவாமையும், கலவாமையால் ஒன்றாமையும் ஒன்றாமையால் நிலையாமையும் ஏற்படுதல் வெளிப்படையே. நட்பியல் பகையியல் என்பவற்றை ஏரண முறையில் அல்லது இயற்கையொடு பொருந்திய அறிவியல் முறையில் ஆய்ந்து முந்தையோர் குறியீடு செய்துள்ளமை கொள்ளை மகிழ்வு தருவதாம். இதனை அறிந்து மகிழுமாறு நட்புப் பொருட் சொற்களையும் பகைப் பொருட் சொற்களையும் பட்டியலிட்டு இவண் சுட்டப்படுகின்றனவாம். தமிழிற் சொற்பஞ்சம் இல்லை! அவற்றைத் திரட்டி ஒழுங் குறுத்திப் போற்றாப் பஞ்சமே வழிவழி வாடாமல் வாய்த்துக் கொண்டிருக்கின்றது. சருக்கரை ஆலையாளனுக்குச் சருக்கரை நோய் வந்ததைப் போல்வது இது! நண்பர் பகைவர் அகத்தர் - புறத்தர் அகம்பர் - புறம்பர் அகர் - பரர் அகவர் - புறவர் அடங்கினார் - அடங்கார் அடுத்தார் - அடுக்கார், அடாதார் அடைந்தார் - அடையலர், அடையார் அண்டினார் - அண்டார் அணுக்கர், அணுகினார் - அணுகார், அணுகலர் அமர்ந்தார் - அமரார் அரியலர் - அரிகள், அறிஞர் அருகர் - அருகலர் இகலார், இகலிலர் - இகலினார், இகலோர் இசைந்தார், இசையுநர் - இசையார், இசைவிலார் இணைந்தார் - இணையார், இரிஞர் இயலுநர், இயன்றார் - இயலார், இயலாதார் இனியர் - இன்னார் உள்ளுநர் - உள்ளார், உள்ளாதார் எண்ணுநர் - எண்ணலர், எண்ணார் எதிரார் - எதிர்ந்தார், எதிரர், எதிரி ஏலுநர், ஏன்றார் - ஏலார், ஏற்கார் ஒட்டுநர் - ஓட்டலர், ஓட்டார் ஒப்புநர் - ஒப்பலர், ஒப்பார் ஓல்லுநர் - ஒல்லார் ஒவ்வுநர் - ஒவ்வலர், ஒவ்வார், ஒவ்வாதார் ஒன்றுநர் - ஒன்றலர், ஒன்றார், ஒன்னலர், ஒன்னார் கருதுநர் - கருதலர், கருதார் குறுகுநர் - குறுகலர், குறுகார் கூடுநர் - கூடலர், கூடார் கேளிர் - கேளார் கொள்ளுநர். கொள்வார் - கொள்ளலர், கொள்ளார் சாருநர், சார்ந்தார் - சார்பிலார், சாரலர், சாரார் சினமிலர், சினமிலி - சினத்தர், சினவர் செறார் - செறுநர் செற்றமிலார் - செற்றார் சேக்காளி, சேர்த்தாளி - சேராதார், சேரார் சேர்ந்தார், சேர்ப்பாளர் - சேரலார், சேராதவர் தம்மோர் - அயலர் தரியர், தரிஞர் - தரியலர், தரியார் திருந்தினார் - திருந்தலர், திருந்தார் துன்னினார் - துன்னலர், துன்னார் தெரிந்தார். தெரியுநர் - தெரியலர், தெரியார் தெவ்விலர் - தெவ்வர், தெவ்வார், தெவ்வினர். தெறார் - தெறுநர், தெறுவர் தேறுநர், தேறுவார் - தேறலர், தேறார் தொடர்பார் - தொடர்பிலார் தொடருநர் - தொடரார் தொடுத்தார் - தொடுக்கார் தொடுப்பர் - தொடுக்கிலார், தொடுப்பிலர் நகைவர் - பகைவர் நசைவர் - நகையிலி நட்டார், நட்பர், நட்பாளர் - நள்ளார், நட்பிலி நண்ணுநர் - நண்ணலர், நண்ணார் நண்பாளர் - நண்பிலார், நண்பிலி நணியர் - சேயர் நணுகுநர் - நணுகலர், நணுகார் நயத்தார், நயவர் - நயனிலி, நயவார் நள்ளுநர் - நள்ளார், நள்ளாதார் நிகரர் - நிகரார், நிகரலர் நேர்நேர். நேரர் - நேரலர், நேரார், நேராதார் நோலுநர் - நோலார், நோனார் பகையார், பகையிலி - பகைஞர் பசையுநர் - பசையார், பசையிலி பற்றுநர் - பற்றலர், பற்றிலி புல்லினார் - புல்லார், புல்லாதார் பேசுநர் - பேசார், பேசலர், பேச்சிலார் பேணுநர் - பேணலர், பேணார் பொருந்துநர் - பொருந்தலர், பொருந்தார் பொருவுநர் - பொருவார் மருவுநர் - மருவலர், மருவார் மன்னுநர் - மன்னலர், மன்னாதார் மாண்பர், மாணர் - மாணலர், மாணார் மாறிலர், மாறிலி - மாற்றலர், மாற்றார் முட்டார் - முட்டுநர் முரண்டார், முரணார் - முரண்டர், முரணர் முனியலர் - முனிந்தார் முனைவிலர் - முனைந்தார் மேவுநர் - மேவார், மோதுநர் வட்கிலர் - வட்கார் வணங்குநர் - வணங்கலர், வணங்கார் வீடலர் - விட்டார், விடுநர் வேண்டுநர் - வேண்டலர், வேண்டார். பகைமை, பகைவர் சுட்டிய சொற்களுக்கெல்லாம் பெரும்பாலும் பழஞ்சொல் ஆட்சியுண்மை கழக நூற் பயிற்சியாளர் காணத் தக்கனவே. அரிதாக வழக்குச் சொற்களும் இயைக்கப் பெற்றுள. (எ-டு) சேக்காளி, சேர்த்தாளி, பேசார், தொடுப்பர்.  47. நோய் வினைகள் நோய் வினைகள் தனி நூலாதற்குரியன. நோய் - பெயர்க் கரணியம் - விளக்கம் - எடுத்துக்காட்டு - வழக்கு இன்னவை யெல்லாம் விரிக்க வேண்டும். சொல்லை விரிக்கவே தனி நூலாகும். எனின் மருத்துவத்துறை வல்லார் மனங்கொண்டால் எத்துணை விரிவுறும்! தமிழ் மருத்துவர் உள்ளம், தமிழும், மருந்தும் மருத்துவமும் பின்னிப் பிணைந்து செயல்படுங்கால் சொல்லாய்வாளர்க்குச் சுரங்கமாக அது திகழும் என்பது உறுதியாம்! சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் என்பதைச் சொற்பொழிவாளியரும் கருதவில்லையானால் அவர்தம் சொற்பொழிவாலாம் பயன்தான் என்ன? நோய்வினைச் சொல்வளப் பட்டியும் அதன் குறுவிளக்கமும் அகர முறையில் வருமாறு: அச்சம், அஞ்சுதல்: நோயச்சம், பேயச்சம், இருளுக்கு அஞ்சுதல். அஞ்சி அஞ்சிச் சாவார் : இவர் அஞ்சாத பொருளில்லை. அசைதல், அசைவு : பல்லசைதல், பல்லசைவு, மூட்டசைதல், மூட்டசைவு. அடி, அடித்தல் : மண்டையடி, காய்ச்சல் அடித்தல். அடைத்தல், அடைப்பு : மூச்சடைத்தல், மாரடைப்பு. முன்னும் பின்னும் அடைத்தல் அயர்தல். அயர்வு : அயர்வு - சோர்வு, அயர்வு அயதி அசதி அசத்தி அச்சலாத்தி. அரட்டி, அரளல் : பேயரட்டி, அரண்டுபோதல். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். அரற்றுதல் (புலம்பல்) : அழுது அரற்றுதல். அரித்தல் (அரிப்பு) : தோல் அரிப்பு, குடல் அரிப்பு. அரிசினத்தால் அலறுதல் : அஞ்சி அழுதல், வாய் வெருவல். அலுப்பு : உழைப்பால் உண்டாகும் வலி. அலுப்பு மருந்து அவிதல் : கண்ணவிதல். அழலுதல் (அழற்சி) : குடல் அழற்சி. அறைதல் : பேயறைதல், பிசாசறைதல். அனத்தல், அணத்தல் : வலி தாங்காமல் முணகுதல். ஆட்டம், ஆடுதல் : பல் ஆட்டம், பல் ஆடுதல். அறுபதில் ஆட்டம் ஆதல் : வாந்தி ஆதல், கழிச்சல் ஆதல் (பேதியாதல்.) ஆவலித்தல் : கொட்டாவிவிடுதல். இசிவு (இழப்பு) : நரம்பு இசிவு. இடக்குதல் : இடர் செய்தல், எதிர் முட்டல். இடக்கி முடக்கி இடித்தல், இடி : தலையிடித்தல் மண்டையிடித்தல் இருமல் : துரத்துதல், குன்னிருமல். இருமல் பெருமல் செய்கிறது இரைதல், இரைச்சல் : குடல் இரைதல், வயிற்றிரைச்சல். இழுத்தல், இழுவை : நரம்பு இழுத்தல், நரம்பு இழுவை சுண்டி இழுத்தல் (சுண்டு வாதம்) இளைப்பு : தகைப்பு இளைப்பு, மூச்சிரைப்பு. மெலிதல். இறக்கம் : குடல் இறக்கம், மூட்டு இறக்கம் இனைதல் : நைதல் (இனைதல்), வருந்துதல். இனைந்தேங்கி அழுவாள் உடைதல் : பல் உடைதல், எலும்பு உடைதல். மூக்கை உடைத்துவிட்டான் உதிர்தல் : பல் உதிர்தல், மயிர் உதிர்தல். உப்புதல் : வயிறு உப்புதல் (வீங்குதல்) உப்புசம். உமட்டுதல் : வாந்தி எடுத்தல், குடலைப் புரட்டுதல். உயிர்த்தல் : பெருமூச்சு விடல், நெட்டுயிர்த்தல். உருட்டல் : தலையுருட்டல், ஆளை உருட்டிவிடும் உலுக்கல் : வலியாய் வலித்துப் புரட்டுதல், எலும்பு தசைகளை ஆட்டி அசைத்தல். உலைதல் : நிலைமாறச் செய்தல், உளைச்சலாதல். உவர்த்தல் : வாழ்க்கை வெறுத்தல், வாயில் உப்புக் கரித்தல். உளறுதல் : வாய் வெருவுதல், அச்சத்தால் ஒன்றிருக்க ஒன்று கூறுதல். உளைதல், உளைச்சல் (வலித்தல்): கால், கை உளைச்சல். ஊறுதல் : எச்சில் ஊறுதல், அடிக்கடியும் மிகைபடவும் உமிழ்நீர் சுரத்தல். எடுத்தல் : ஏப்பம் எடுத்தல், வளித்தொல்லையால் (வாதம்) ஏப்பம் உண்டாதல் ஏப்பம் விட்டால் ஏழூர்க்குக் கேட்கும் தினவெடுத்தல். வாந்தி எடுத்தல் முனைப் பெடுத்தல் (மொனை எடுத்தல்) எதிர்க் கழித்தல் : உண்டது மேலே எதிரிட்டு வருதல். எரிச்சல், எரிதல், எரிவு : கண்ணெரிச்சல், புண் எரிச்சல். எழுச்சி, வெளிச்சி : (புறப்படலால் எழுச்சி, வெண்ணிறத்தால் வெளிச்சி) காதில் உண்டாகும் புறப்பாடு. எறிதல் : தேக்கெறிதல். உண்டது குடர்தாங்காது எழுந்தேறல். தேக்கெறிய உண்டு ஏறல், ஏறுதல், ஏற்றம் : பித்தேறல், குடலேறுதல் குடலேற்றம், புரை ஏறுதல். ஒட்டுதல் : நோய் பற்றுதல். ஒட்டுவார் ஒட்டி நோய் தொற்று நோய். ஒடிதல், ஒடிவு : கால் ஒடிதல், கை ஒடிவு. ஒடுக்குதல் : மெலிதல், இளைத்துப் போதல். ஒடுங்கி விட்டான் ஒழுக்கு, ஒழுகுதல் : மூக்கொழுக்கு, அரத்தம் ஒழுகுதல், சீயொழுகுதல், நீரொழுக்கு. ஓக்கழித்தல், ஓங்காரித்தல் : வாந்தியெடுத்தல். ஓட்டம் : வயிற்றோட்டம், வாயோட்டம் (கழிச்சல், கக்கல்) கக்கல் : வாந்தியாதல், கக்குவான். கக்கல் கழிச்சல் கசகசத்தல் : வியர்வைப் பெருக்கால் பிசுபிசுத்து நாறல். கசத்தல் : வாய் கசத்தல். காயலுக்குப் பின்னர்க் கசத்தல் (காயல் - காய்ச்சல்) கட்டல், கட்டு : தொண்டை கட்டல், கோழைகட்டல், தொண்டைக்கட்டு. கட்டி : மக்கட்டி, வேனற்கட்டி, சிலந்தி, அரையாப்புத் திரட்சி. கடி : தேட்கடி, பூரான்கடி, பூச்சிக்கடி. கடுத்தல், கடுப்பு : நீர்க்கடுப்பு, வயிற்றுக்கடுப்பு கணகணப்பு (காய்ச்சல், வெதுப்பு):உடல் கணகணக்கிறது கசிவு : நீர்க்கசிவு, குருதி கசிதல். கப்புதல் : தொண்டை கப்புதல் (தொண்டைக்கட்டு) கம்முதல் : ஒலி கம்முதல், தொண்டை கம்முதல். கமறுதல் : தொண்டை கமறுதல். ஒவ்வாததை உண்பதாலும் பதன்கெட்டதை உண்பதாலும் கமறுதல். கரகரத்தல் : தொண்டை கரகரத்தல். கரித்தல் : வாயில் உப்புக் கரித்தல். கருத்தல் : நோய், வெயில், பனி ஆகியவற்றால் நிறம் மாறல். கலக்கம் : உள்ளம் ஒருப்படாது கலங்குதல். உண்டது ஒட்டாது கலங்குதல். வயிற்றைக் கலக்கிவிட்டது கவற்றல் : கவலைப்படல். கழறல் : பல் கழறல். பல்லைக் கழற்றி விடுவேன் கழிச்சல் : வயிற்றுப்போக்கு கன்னல் (கன்றல்) : அடிபட்டுக் கன்றிப்போதல், கன்றல், கருத்தல். கனத்தல் : தலை கனத்தல். கனவுதல் : கனவு கண்டு வெருவுதல். காந்தல் : கண் காந்தல், மூக்குக் காந்தல், காந்தல் - எரிதல். காய்த்தல் : இடையீடற்ற கடிய உழைப்பால் காய்த்துப் போதல் கை காய்த்தல், கோடரி போடுவார், கம்பி குற்றுவார் அகங்கைகள் காய்த்துக் கற்போல் அமைந்திருக்கும். காய்தல் : காய்ச்சல் அடித்தல், பட்டினி கிடத்தல், காயப்போட்டால் தான் சரிவரும்: காயப்போடுதல் கருமருந்து கிட்டல் : பல் கிட்டல். கிட்டல் - நெருங்கல். பல்கிட்டி போட்டது போல் ஒட்டிக் கொள்ளுதல். கிழிதல் : உதடு கிழிதல், வாய் கிழிதல், பேசினால் வாயைக் கிழித்து விடுவேன். கிறக்கம் : உண்ணாமையால் ஏற்படும் சோர்வு. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. உண்ணாத கிறக்கம் எல்லோருக்கும் உண்டு. கீறல் : பல்கீறல், புண்ணைக் கீறிவிடுதல். குக்கல் (குறுகிப்போதல்) : நோயில் குக்கிப் போனான். குடைதல் : கால் குடைதல். காது குடைதல், வயிறு குடைதல். குணங்கல்; : தலையெடுப்பின்றிச் சோர்ந்து கிடத்தல். பிள்ளை குணங்கிப் போனது குத்தல்; குத்து : தலைக்குத்தல், மூச்சுக் குத்து. குதுகுதுப்பு : குளிர் காய்ச்சல், குதுகுதுப்பாக வருகிறது. குப்புறல் : மயக்கமுற்றுக் குப்புற வீழல். கும்புதல் : செரிமானம் இல்லாதிருத்தல். குமட்டுதல் : ஒவ்வாமையால் குடலிலுள்ள பொருள் வெளியேற எழுதல். குலக்கல் : குளிரால் உடல் புரட்டிப் புரட்டி எடுத்தல் குழம்பல், குழப்பம், குழறுதல் ; ஒரு நிலைப்படாத மன நிலை; அச்சத்தால் வாய் வெருவுதல். குளிர்தல் : உடல் குளிரிட்டுப்போதல், குளிர் நளுக்குதல், குளிர் காய்ச்சல். குறுகுறுத்தல் : நரம்புகள் துடித்தல், கண்ணிமை பல்கால் துடித்தல். குன்னுதல் : குன்றுதல், ஓடவோ நடக்கவோ இயலாமல் குன்றிப்போய்க் குந்துதல், குன்னிருமல். கூம்புதல் : முகம் சுருங்குதல், மகிழ்வற்றிருத்தல். கொட்டல் : தேள் கொட்டல், மயிர் கொட்டல். கொடுகுதல் : குளிரால் நடுங்குதல், புளிப்புணவால் கொடுகுதல். புளித்துக் கொடுகுகிறது . கொட கொடப்பு : வயிற்றிரைச்சல், வயிற்றோட்டம். கொடு கொடுப்பு : வாயில் புளிப்பேறி நீர் சுரத்தல். கொதித்தல் : காய்ச்சலடித்தல். கொள்ளல் : நீர்க் கொள்ளல். கொன்னல் : திக்குதல், கொன்னவாய் கோத்தல், கோவை : நீர் கோத்தல், நீர்க்கோவை. சிக்கல் : மலச்சிக்கல். சிணுங்கல் : அழுதல். சில்லிடல் : குளிர்ந்து போதல். சிவத்தல், சேத்தல் : அடிபட்டோ, நச்சுயிரி முகர்ந்து பார்த்தோ உடல் சிவத்தல்; அடிக்கடி மூக்குச் சிந்துதலால் சிவத்தல். சிறாய்த்தல் : தோல் வழிதல். சீந்தல் : தடிமத்தால் மூக்குச் சீந்தல். சுண்டுதல் : நரம்பு சுண்டுதல், சுண்டி இழுத்தல், சுண்டு வாதம். சுரண்டல் : உடல் தினவு போக நகத்தாலோ தகடுபோன்றவற்றாலோ சுரண்டுதல். சுற்றல் : தலை சுற்றல். சூம்புதல் : கையும் காலும் சூம்பிப்போதல்; சிறுத்துச் செயலற்றுப் போதல். செருமுதல் : இருமுதல். செயலறல் : சோர்ந்து கிடத்தல். சொக்குதல் : சுறுசுறுப்பின்றி மயக்க நிலையில் கிடத்தல் சொட்டுதல், சொட்டை : தலைமயிர் சொட்டுதல், பகுதி பகுதியாய் மயிர் இல்லாது போதல். சொடுக்கல் : நரம்பு விரைப்பை நெகிழ்விக்கச் சுடக்குப் போடுதல். சொத்தை : பல் சொத்தையாகப் போதல். சொரிதல் : தினவு நீங்கச் சுரண்டல். சொருகுதல் : தொண்டைக்குள் உணவு ஒட்டிக் கீழே இறங்காது இருத்தல், கண்ணிமையைத் திறக்க இயலாமல் மயக்க நிலையில் இருத்தல். சோர்வு : அயர்வாக இருத்தல் அயர்வு - கிளர்ச்சியின்மை. தகதகப்பு, தகிப்பு : எரிபோல் உடல் வெதும்பல். தகை, தகைப்பு : நீர் வேட்கையாயிருத்தல், தொண்டை வறண்டு கிடத்தல். தட்டல் : முட்டி தட்டல். தடித்தல், தடிப்பு, தடிமம் : புறப்பாட்டால் தோல் தடித்தல், தடிமம் - நீர்க்கொள்ளல். தடுங்கல் : கால் தள்ளாட்டம். தடுமாறல் : கால் தள்ளாடி வீழ்தல். தள்ளல் : படபடப்பால் வீழ்தல். தள்ளாடல், தள்ளமாடல் : கால் இடறுதல், மூப்பால் தள்ளமாடுதல். திக்கல் : வாய் பேசத் திணறல். திக்குத் திக்கெனல் : பதறி வெருவுதல், நாடித்துடிப்பு விரைந்து அடித்தல். திடுக்கிடல், திடுக்கீடு : அச்சத்தால் நடுங்குதல். திணறுதல் : மூச்சுத் திணறுதல், மூச்சுவிட முடியாமல் முட்டுதல். திரளல் : கட்டி திரளல், கட்டி பழுத்தல். திரும்புதல் : எலும்பு மூட்டில் இருந்து விலகி மாறிக் கிடத்தல். தினவெடுத்தல் : அரித்தல், அரிப்பு. தீதல், தீய்தல் : கரிந்து போதல். துடித்தல், துடிப்பு : வலம் இடம் துடித்தல். துள்ளல் : நாடி விரைந்து துடித்தல். துளைத்தல் : பொதுத்துச் செல்லல். தேம்புதல் : அழுது அரற்றுதல், விம்மியழுதல். தேம்பியழும் குழந்தை தேய்தல் : பல் தேய்தல், எலும்பு தேய்தல். தொக்கம் : உண்டது தொண்டைக் குழிக்குள் தொங்குதல் தொக்கம் எடுத்தல் தொற்றல் (தொத்தல்) : தொற்று நோய், இயல மாட்டாமை. நசநசத்தல் : வியர்வையால் புழுங்கி நசநசப்பாதல், நசநசத்தல், நீரால் பிசுபிசித்தல். நசிதல் : அடிபட்டு நைந்து போதல், எழும்பமாட்டாமல் சோர்ந்து கிடத்தல். நசுங்குதல், நைதல் : விரல் நசுங்குதல், விரல் நைதல். நடுங்குதல், நடுக்கம் : குளிர், அச்சம், இழப்பு முதலியவற்றால் உடல் நடுங்கல், உரை நடுங்கல். நமநமத்தல், நமைச்சல் : மூக்குக் காந்தல், எரிச்சலுண்டாதல். தோல் நமைச்சல் மூக்கு நமநமக்கிறது. நலிதல் : மெலிந்து போதல். நலுங்குதல் : ஆடிப்போதல், ஒடுங்கிப் போதல். நளுக்குதல் : குளிரால் நடுங்குதல், மலம் போவதுபோல் போக்குக் காட்டிப் போகாது இடர் செய்தல். நறநறப்பு : பற்கடிப்பு. நறநறவெனப் பல்லைக் கடிக்கிறான். நறுங்குதல் : வளர்ச்சியின்றிக் குன்றிப்போதல். நாச்செற்றல் : பேச வராது நா ஒடுங்குதல். நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நாறுதல் : நாற்றமுண்டாதல், வாய்நாறல். நுரைத்தல் : அச்சத்தாலும் பற்கடிப்பாலும் நுரை தள்ளுதல். நெக்குருகுதல் : உள்ளம் நெகிழ்ந்து உருகுதல். நைதல் : வருந்துதல், நைந்து போதல். நொ : வருந்துதல் நொ, து வாம் குறில் ஓரெழுத்து மொழி நொடி, நொடிதல் : நோய் நெடி நொம்பலம் : நோவு நொம்பலம் நொய்தல் : குறுநொய்போல் நலிந்து போதல். நோவு, நோதல், நோவுறல் : துன்புறல் நோவுண்டாதல். தலை நோவு; நோக்காட்டில் போவான். பக்குவிடல் : வெடித்தல், புண்ணின் பொறுக்கு எழும்புதல். பசத்தல் பசலை : ஏக்கத்தால் சாம்பல் பூத்து நிறம் மாறல். பசலை நோய், பசப்பு. பஞ்சடைதல் : பார்வை தெளிவற்றிருத்தல். கண் பஞ்சடையு முன்னே படபடப்பு : நெஞ்சப் படபடப்பு; பித்தப் படபடப்பு. படக்குப் படக்கென மார்புத்துடிப்பு அடித்தல். படர், படர்தல் : தோல் நோய் விரிதல். தேமல் படர்தல், கண்ணில் மாசு படர்தல். பரண்டுதல் : வயிறு பரண்டுதல், சொறியால் தோல் பரண்டுதல். பருத்தல் : பரு உண்டாதல். பழுத்தல் : சிலந்தி சிறங்கு ஆகியவை நீர்கோத்து முதிர்தல். கண்படலத்திரை முதிர்தலும் பழுத்தலாம். பளபளத்தல் : பழுத்த கட்டி நீர் கோத்தலால் பளபளப் போடு தோன்றுதல். பற்று : படை உண்டாதல், நோய் தொற்றுதல். பற்றும் படையும் பற்று பத்து. பற்றுப் போடுதல். பாரித்தல் : நீலம் பாரித்தல், நீல நிறமாகப் படர்தல். நஞ்சு குருதியில் படர்தலால் உண்டாகும் நிறமாற்றம். பிசுபிசுத்தல் : வியர்வை கொட்டலால் ஈரப்பதனும் நெடியும் இருத்தல். பிடித்தல், பிடிப்பு : தடிமம் பிடித்தல், சுளுக்குப் பிடித்தல், பேய் பிடித்தல். பேய் பிடித்திடு தூதரே இடுப்புப் பிடித்தல், சே என்றானாம் இடுப்புப் பிடித்துக் கொண்டதாம். பிடுங்கல் : பாம்பு பிடுங்கல், பல்லைப் பிடுங்கல். பிதற்றல் : சஞ்சலத்தால் ஒன்றிருக்க ஒன்று கூறல். பிளத்தல் : வெயில் மண்டையைப் பிளக்கிறது தலைவலி மண்டையைப் பிளக்கிறது. பிளவையை அறுத்தல். பினாத்துதல் : புலம்புதல். பினைதல் : குடலைப் புரட்டல், செயலற்றுக்கை பினைதல் பினைதல் - பிசைதல். பீச்சல் : வயிற்றோட்டம். வயிறு பீச்சிவிட்டது பீடித்தல் : பற்றிக்கொள்ளல். பிடித்தல் பீடித்தல். பீறல் : கிழிந்து படல், வயிற்றோட்டம், குருதிக் குழல் வெடித்துப் பீறுதல். புடைத்தல் : கட்டி திரளல், புடைப்பாதல். புரட்டல் : குடலைப் புரட்டல், தலை புரட்டல். புரையோடல் : குழிப்புண்ணாகிச் சீயொழுகுதல் புலம்பல், புலப்பம் : தனித்துத் துன்புறல். புளைபடல் : புண்படல் புறப்படல், புறப்பாடு : கட்டி தோன்றுதல். பூத்தல் : கண் பூத்துப்போதல், பார்வை மழுங்குதல், நீலம் பூத்தல். மஞ்சள் பூத்தல் பூதித்தல் : பருத்தல், கால் பூதித்து விட்டது பொங்குதல் : கண் பொங்குதல், பீளைவுண்டாதல். பொடித்தல் : மெய்ம்மயிர் பொடித்தல், மயிர்க்கூச் செறிதல். பொடுபொடுத்தல் : முன்கோபத்தால் செயலாற்றல். பொடுக்கட்டி பட்டப் பெயர், பொடுக்குப் பொடுக்கென வலித்தது. பொத்தல் : பொத்துப் போதல், வாய் பொத்துப் போதல், கால், கை பொத்துப் போதல், பொத்தல் - துளையாதல். பொத்து வழிகிறது பொத்து பொத்து. பொதுத்தல் : துளைத்துச் செல்லுதல். முள் பொதுத்தது பொரிதல் : மேல் சுடல், பொரிக்கிளம்பல். மேல் பொரிகிறது போக்கு : வயிற்றுப் போக்கு, அரத்தப்போக்கு. போதல் : வயிற்றாலே போதல் (கழிச்சல்) மங்கல் : கண் மங்கல், காது மங்கல். மடங்குதல் (மடக்குதல்) : கை கால் மடங்கிவிட்டது மடங்குதல் முடங்குதல். மதத்தல் : மதம் பிடித்தல், வெறி கொள்ளல். மதமதப்பு : பூச்சிக் கடியால் உண்டாகும் நமைச்சல். மதார் பிடித்தல் : கிறுக்காதல், அமைந்து செயலற்றுக் கிடத்தல். மந்தம் : சுறுசுறுப்பு இல்லாமை, காது கேளாமை அல்லது குறைதல். காது மந்தம், செரிமானம் ஆகாமை. மந்திப்பு : செரிமானம் ஆகாமை. மயக்கம் : உருமாறித் தெரிதல், கண்ணொளி குன்றல், மயக்கமடைதல், ஒன்றைத் துணியாத ஐய நிலை. மரத்தல் : உணர்வற்றுப் போதல், உணர்வு குன்றல், மரத்துப் போதல் மலங்கல் : மயங்கி விழித்தல். மலைத்தல் : மலைப்பு அடைதல், ஆற்றாமை உணர்ந்து ஒடுங்குதல். மழுக்கை : தலைமுடி உதிர்ந்து போதல், மழுக்கை வழுக்கை. வழுக்கைத்தலை மழித்தலும் நீட்டலும் வேண்டா மழுங்குதல் : ஒளி மழுங்குதல், கூர்மை குறைதல். மழுமழுத்தல் : வாய் மழுமழுத்தல், சுவை தோன்றாமை. மாந்தம் : மாந்தியது (உண்டது) செரியாமை. மாந்தம் (தொக்கம்) எடுத்தல் முக்கல் : மூச்சு முட்டித் திணறல். முடக்குதல் : கால் கை செயலறல், முடமாதல். இரு கை முடவன் கால் முடம்; கைம்முடம் முணகல், முணங்கல் : வெறுப்பால் பொருளற்ற சொற்களைச் சொல்லுதல். முட்டல் : மூச்சு முட்டல், மூச்சுத் திணறல். முரிதல், முரிவு : கால், கை முரிதல். எலும்பு முரிவு. மூடல் : கண்ணை மூடுதல், கண்ணை மூடிக்கொள்ளல், இறத்தல். மெலிதல் : ஒல்கியாதல், வலிமை குன்றல். மொடுமொடுத்தல் : வயிறு மொடுமொடுத்தல், இரைச்சலிடல். வடிதல் : சீழ் - சீய் -சீ - வடிதல், நீர் வடிதல். வலி - வலிப்பு : கால் - கை - வலி, வலிப்பு. கால் கை வலிப்பு காக்கை வலிப்பு (கொச்சை) வலித்தல் - இழுத்தல், வெட்டல். வழிதல் வழிப்பு : தோல் சிறாய்த்தல். வாங்குதல் : மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல், மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது விக்கலுண்டாதல், நீர்வேட்கையால் விக்கல், விக்குள் - வறட்சியால் விக்குதல். விக்கல் நோய். விக்கி இருமாமுன் விசும்புதல் : அழுதல். விடல் : பூட்டு விடல், மூட்டு விடல். விதிர்தல் : நடுங்குதல். வியர்த்தல், வேர்த்தல் : வியர்த்துக் கொட்டும் ஒரு நோய். விரிவு : பித்த விரிவு, பித்த வெடிவு. விரிவு வெடிவு, வெடிப்பு. விருவிருப்பு : பூச்சிக் கடியால் விருவிருப்பேறுதல், வேர்த்து விருவிருத்தல். விரைத்தல் : குளிரால் கால் கை விரைத்துப்போதல். உணர்வற்றுப்போதல். விழுதல் : பூவிழுதல் (கண் படல மறைப்பு); பல் விழுதல். வீங்குதல் : கட்டியாதல், புடைத்தல், பருத்தல். வெட்டு, வெட்டுதல் : புழுவெட்டு, நரம்பு வெட்டுதல், வெட்டி இழுத்தல். வெட்டை : வெள்ளை வெட்டை; வெண்ணிறமாதல். வெண்ணிற நீரொழுக்குதல். வெடவெடப்பு : நடுங்கல், குளிராட்டம். வெடிப்பு வெடிவு : பித்த வெடிப்பு, பித்த வெடிவு, பித்த விரிவு. வெதுப்பம், வெப்பம் : வெப்பத்தால் உண்டாகும் எரிவு நோய். வெதுவெதுப்பு : காய்ச்சல். உடல் வெதும்புகிறது வெதுவெதுப்பாக இருக்கிறது. வெலவெலத்தல் : நடுங்குதல். வெளுத்தல் : அரத்தம் குன்றி நிறமாறிப்போதல். வேக்காடு : வெதுப்பம், வெப்பம். வேதல் : சுடுபடுதல், வேர்த்துக்கொட்டல். வெயில் கொளுத்தல், காற்றில்லாமையால் உண்டாகும் புழுக்கம்.  48. பல் பற்று என்பது பல் என்பதன் வழியாக வந்த சொல் பல் என்பதன் பொருள் என்ன? பல் என்பது வெண்மை குறித்த சொல். பல பல என விடிந்தது என்னும் வழக்கிலும், பால் என்னும் சொல்லிலும் வெண்மைப் பொருள் உளதாதல் அறிக. பல், பால் என்பவை போலக், கல், கால் என்பவை கருமைப் பொருள் தருதலையும் ஒப்பிட்டுக் காண்க. பல் என்பது பள் எனத் திரிந்தும் வெண்மைப் பொருள் தருதலைப் பளபள, பளப்பளப்பு, பளிச்சிடல் என்பவற்றிலும் பளிக்கு, பளிங்கு என்பவற்றிலும் காண்க. இவ்வாறே கல் என்பது கள் எனத் திரிந்து கருமைப் பொருள் தருதலைக் களம், களவு, களர், கள்ளம், கள்வன் முதலிய சொற்களைக் கொண்டு தெளிவு செய்து ஒப்பிட்டுக் கொள்க. வெண்மைப் பொருள் தரும் பல் பின்னர்ப் பன்மைப் பொருள் தருவதாய் விரிந்தது. எப்படி, உடற் பொறிகளை மெய், வாய், கண், மூக்கு, செவியென எண்ணுவர், இவற்றுள் வாயின் உள்ளுறுப்புகளில் ஒன்றாகியது பல். இதனைப் பெருக்கல் வாய்பாடுபோல, எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி என்கிறது ஒரு தனிப்பாட்டு. கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; ஆனால் பற்களோ முப்பத்திரண்டு. அமையும், கண்கள் காதுகள் போலத் தனித் தனி நின்றன அல்ல, தொடுத்துப் பத்தியாய் அமைந்துள்ளன. முல்லையரும்பையோ முத்தையோ கோத்து வைத்த கோவை என்ன உவமைத் தொடைபடக் கூறப்படுவனவாயின. இப் பல்லின் வரிசையே பல வென்பதை அல்லது பன்மையை வழங்கும் குறியாயிற்றாம். உழவுக் கருவிகளுள் ஒன்று பலகுச் சட்டம்; அதனைப் பயிரூடு அடித்தலைப் பல கடித்தல் என்பர். பலகு பலுகு எனவும் வழங்கும். களை குத்திபோல் பல் பல்லாகிய முளை களையுடையது அப் பலகு என்பதை அறிபவர், அதன் பெயர்ப் பொருளைத் தெளிவாக அறிவர். பலகடித்தலைப் பல்லி யாடுதல் என்பது பண்டையோர் வழக்கு. பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடிய என்பது புறப்பாட்டு (120). பல்லியாடுதலைத் தாளியடித்தல் என்பார் புற நானூற்று உரைகாரர். ஊடடித்தல் என்பது இக்கால வழக்கு. பலகு அமைப்பைத் தலை சீவும் சீப்புடன் ஒப்பிட்டு வடிவமைப்புக் காண்க. சீப்புப் பல் பல்போன சீப்பு என்னும் வழக்குகளையும் கருதுக. கொழுவொடு சேர்க்கப் பட்டதும் பற்கள் உள்ளதுமான பலகையோடு அமைந்த கலப்பை, பல்லுக் கலப்பை எனப்படுதலையும், செங்கல் கட்டட மேல் தளத்தில் ஒன்றுவிட்டு ஒன்று வெளியே நீட்டி வைக்கப் பெறும் செங்கல் வரிசை பல்லு வரி எனப்படுதலையும் எண்ணலாம். ஈரவெண்காயம், வெள்ளைப் பூண்டு, ஆகிய இவற்றின் பிளவுகள் அல்லது கப்புகள் பற்கள் என்றே வழக்கில் இன்றும் உள்ளன. பல் பல்லாக எடுத்தே நடவு செய்தலும் கண்கூடானதே. சிற்றூர்ப் பல சரக்குக் கடைகளில் பூடு ஒரு பல்லுக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குதல் அண்மைக் காலம் வரை நடை முறையில் இருந்ததேயாம்! இவற்றிலெல்லாம் பல் தன் மூலமாம் ஒளிப் பொருளையும் பன்மைப் பொருளையும் இழந்து ஒருமை சுட்டி வந்ததாம். முப்பழம், வாழை, மா, பலா என்பவை. இவற்றுள் பலா, சுளை எனப்படும், கனியிடை ஏறிய சுளை என்னும் பாவேந்தர் வாக்கில் வந்த கனி பலாக்கனி என்பது எவரும் அறிந்ததே. பலாக் கொட்டையின் வடிவை ஊன்றிக் காண்பார் வண்ணமும் வடிவமும் பல்லொடு ஒத்திருப்பதைக் காண்பர். அதன் பெய ரீட்டையும் அறிந்து கொள்வர் பல் போன்ற கொட்டையுடையதும், இவற்றையும் பலவாகக் கொண்டதும் பலா எனப்பட்டதாம். பர், பல் பலா என வரல் உண்மையால் அதற்குப் பருமைப் பொருளும் உண்டாம். பலாச் சுளை என்பது போலவே, பருத்திச் சுளை என்பதும் வழக்கே. பருத்தி சுளைத் திருக்கிறது என்பது பருத்தி வெடிப்பைக் குறிக்கும். பருத்திச் சுளை எடுப்பார்க்குப் பருத்தியே கூறிட்டுக் கூலியாகத் தருதல் வழக்கம் பருத்தி எடுக்கப் பட்ட கொலுக்கு பல் பல்லாக இருக்கும். முள்ளைப் போல் குத்தவும் செய்யும். அதனை உணர்ந்து பருத்திக்குப் பல் எனப் பெயர் வைத்தனர். அது பன் எனவும் பன்னல் எனவும் இலக்கண இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல என்பது தொல்காப்பியம் (345). பன்னல் வேலிப் பணைநல் லூரே என்பது புறநானூறு (345) பருத்தி, வேலிப் பயிரோ என்பாராயின், பருத்தி வேலிச் சீறூர் என்னும் புறநானூறு தெளிவிக்கும் (299). இந்நாளில் வேலிப் பருத்தி என ஒரு பருத்தி வேலிப் புறங்களில் இருத்தல் அறிக. பன் ஆகிய பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட நூல் பனுவல் எனப்பட்டது பின்னர். அவ் ஆடை நூலைக் குறித்த பனுவல், அறிவு நூலைக் குறித்தது. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு என்று பனுவலை ஒப்பிட்டுப் பகர்கின்றது நன்னூல். (24). பல் பன் ஆகுமா? கல் கன் ஆனதே! கன்மாப் பலகை. எனச் சங்கப் பலகை வழங்கப் பெற்றதே! பல் பல்லாய் அமைந்த அறுவாள் பன்னறு வாள் எனப் படுவதையும், அதன் பற்களைக் கூராக்குவதைப் பன்னு வைத்தல் எனப்படுவதையும் நாட்டுப் புறங்களில் நன்கு அறியலாம். பலமொழி வல்லார் பன்மொழிப் புலவர் எனப் படுதலையும் பல்கால் சொல்லியதையே சொல்லுதல், பன்னுதல் பன்னிப் பன்னிப் பேசுதல் என்று வழங்கப் படுதலையும் தெளிக. பனை என்னும் தொல்புகழ் மரத்தை அறிவோம். தென்னை, புன்னை என்பவை போலப் பன்னை என்பதே. அதன் மூத்த பெயராக இருந்து இடைக்குறை எய்தியிருக்க வேண்டும். குமரிக்கண்ட நாளிலேயே, ஏழ்பனை நாடு பேசப்படுதலாலும், பனைக் கொடியும் பனம்பூமாலையும் சேரர்க்குரியவை ஆதலாலும் அவற்றைத் தொல்காப்பியமும் சுட்டுதலாலும் பனை என்னும் வடிவம் மிகப் பழமையே வந்துவிட்டது என்பதைக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் கடந்தாலும் சில அடி மூலங்கள் உண்மையை விளக்கி உறுதி செய்து விடுகின்றனவாம்! பதனீரை வடித்தற்குப் பயன்படுவது பன்னாடை. அது பனை மடலைச் சூழ்ந்து வலை போல் இருக்கும் நார் ஆடையைக் கூட்டிப் பிடித்து அமைத்ததாம். பன் ஆடை பன்னாடை ஆயிற்று. இழை கலக்கமான உடையையும் நெய்யரியையும் பன்னாடை என்பதும் வழக்கம்! பன்னாடையில் அமைந்துள்ள பன், பன்னை என்பதன் முந்தை மூலம் காட்டுவதாம். தென்னை ஓலை தென்னோலை ஆனாற் போலப் பன்னை ஆடை பன்னாடை ஆயிற்றாம். தென்னவன் கூடலில் ஒரு தெரு தென்னோலைக் காரத்தெரு என்பது. பனைக்கும் பல்லுக்கும் என்ன தொடர்பு? பனையின் அடிமரப் பரப்பெல்லாம் பல்பல்லாய் - செறும்பு உடைய தாய் - இருப்பது பொருள் விளக்கம் செய்வதாம். இரும்பனஞ் செறும்பு, என்னும் அகநானூறு (277) செறும்பு சிறாம்பு என வழக்கில் உள்ளது. சிம்பு என்பது கொச்சை வழக்கு. பல் தொடர்பால் பல்லி பெயர் பெற்றது போலவே, பன்றி என்பதும் தொடர்பால் பெயர் பெற்றதேயாம். பல் + தி = பன்றி. கடைவாய் ஓரங்களில் நெடும் பல் அல்லது கோரைப் பல் இருந்த காலத்தில் அதற்குச் சூட்டப் பெற்ற பெயர் பன்றி. கோரையின் குருத்து நீளல் இயற்கையை நோக்கிக் காண்பார். கோரைப்பல் என்னும் பெயரீட்டு விளக்கமும் காண்பார். யானையின் நெடும் பல்லாம் கொம்பு தேயாமல் நிலைத்தது. பன்றிக்கோ தேய்ந் தொழிந்தது. கோரைப் பல், மாந்தர்க்கும் முந்தையுடைமையாக இருந்ததைப் பழஞ் சிற்பங்கள் பறையறையவில்லையா! பன்றிக்கு வல்லுளி என்னும் பெயர் உண்மையையும், யானையைக் குறிக்கும் கோட்டுமா என்னும் பெயர் பன்றியையும் குறித்தலையும் அறியின், பெயரின் பொருள் விளக்கமாம். பல் என்பது பத்தின் மூலமாம், பல் + து = பஃது; பத்து ஆயிற்று. பல் பன் என ஆகியும் பத்தைக் குறிக்கும். இருகை விரல்களையும் எண்ணத் தெரிந்து கொண்ட காலத்தில் அதுவே பலவற்றுள் உச்ச எண்ணாகக் கருதி வைக்கப்பெற்ற பெயராம். பஃது, பத்து என்னும் இருவகை ஆட்சிகளும் பண்டை நூல்களிலே இடம் பெற்றிருத்தலும் பன்னிரண்டு என்பதிலே பன் என்னும் வடிவே பத்தினைக் குறித்து நிற்றலும் எண்ணுக. இனிப் பன்னொருவர், எனப் பரிபாடல் கூறுவதும் (8) பன்னொன்று என அருகலாக வழக்கில் உள்ளதும் இணைத்துக் காணலாம். இனிப் பஃது பத்து ஆகுமோ? என்பார் உளரெனின், அஃகுள், அக்குள்; அஃகம் அக்கம் என வருவனவற்றைக் கருதுவாராக. பெருநீர்ப் பெருக்குடைய குமரிக் கண்டத்தோர் ஆறு பஃறுளி என வழங்கப் பெற்றது அறிஞர் அறிந்தது. பல துழி என்பதே பஃறுளி என்பதும், பல துளி பெரு வெள்ளம் என்பதும் எவரே அறியார்? பல துளி பஃறுளியானது போலவே, பல தாழிசை பஃறாழிசையாகவும், சில தாழிசை, சிஃறாழிசையாகவும் கொச்சகக் கலிப்பா வகையில் இடம் பெற்றமை யாப்பியல் வல்லார் கோப்புற அறிந்தவையாம். பஃறி என்பது படகைக் குறிக்கும் சொல். ஆனால், ஒரு படகைக் குறிக்காமல் பல படகுகளைக் குறிக்கும் தொகுதிச் சொல் என்பது பஃறி. என்பதன் வேர் புலப்படுத்துகின்றது. பல் + தி = பஃறி. பல படகுகளைக் குறிப்பது பஃறி என்பதற்குச் சான்று உண்டோ எனின் உண்டு என்பதாம். கழக இலக்கியங்களில் பட்டினப்பாலையில் மட்டும் ஒரோ ஓர் இடத்தில் (3) ஆளப் பட்டுள்ள சொல் பஃறி அது. கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும் என்பது. பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப் பிணிக்குமாறு போலச்சார்ந்த தறிகளிலே பிணிக்கும் என்கிறார் நச்சினார்க்கினியர். வணிகப் படகுகள் பலவாகச் செல்லுதலும் மீண்டு வருதலும் வழக்கம் என்பதை வரலாற்று வழி அறிந்தோர் பஃறியின் மெய்ப் பொருள் தெளிவர். அக்காலச் சாத்துகள் வணிகர் கூண்டு வண்டிகள் வரிசையாகச் சென்று வணிகம் செய்து திரும்பிய செய்தியும் ஒப்பிட்டுக் காணத் தக்கதே. தோல் என்பது கிடுகு படை அல்லது பரிசை எனப் படும். கேடயம் என்பதும் அது. பல வீரர்களும் ஒருங்கே தோல் பிடித்துப் போர்க்களத்து நிற்றலைப் பஃறோல் என்பர். அதனை மழை முகிலுக்கு ஒப்பிட்டுக் காட்டுதல் பெருவழக்கு. மழை மருள் பஃறோல் - மலைபடு. 377 பஃறோல் போலச் சென்மழை - நற். 197 மழையென மருளும் பஃறோல் - புறம் 17 என்பவற்றைக் காண்க. பல்லடியாகக் கிளைத்த சொற்கள் இவைதாமோ? இன்னும் பலவாகலாம். அறிஞர்கள் எண்ணுவார்களாக.  49. பற்று பல்+து=பற்று. பல்லால் இறுக்கிப் பிடித்தல். பற்றுதல் எனப்பட்டது. கொல் + து - கொற்று; புல் + து - புற்று என்பவை எண்ணத்தக்கன. பற்பிடிப்பாலும் பற்கடிப்பாலும் அமைந்த பற்று என்னும் சொல், ஒரு பெரிய தாய் ; அவள் பெற்ற பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மிகப் பலர், அவள் இன்னும் பெற்றுப் பெருவாழ்வு கொள்ளும் பேரரசியாகவே விளங்கி வருகிறாள்; மேலும் விளங்கியும் வருவாள். உடும்பைப் பிடித்து அதன் வாலை வாய்க்குள் தந்து விட்டால் விடாமல் பற்றிக் கொண்டு ஒரு வளையம்போல் கிடக்கும். அப்படிக்கிடக்கும் பல உடும்புகளை ஒரு கோலில் போட்டுத் தூக்கிக்கொண்டு வருதல் வேட்டைக்காரர் வழக்கம். தன் சிறுவடிவுக்கு ஒவ்வாத பெரும் பல்லுடைமையால் பெயர் பெற்றது பல்லி; பல் நீண்டவரைப் பல்லன், பல்லாயி என வழங்குவது இல்லையா! 14-7-78 இல் இரவு 7.55 க்கு இரண்டு பல்லிகள் போரிடத் தொடங்கின! அவற்றின் போர் மூன்றாம் பல்லி ஒன்றன் முனைந்த தாக்குதலால் 9.25 க்கு வெற்றி தோல்வியின்றி முடிந்தது! பல்லியின் பற்போர், எருதுப்போர், கடாப்போர், சேவற்போர் ஆகியவற்றுக்குச் சற்றும் இளைத்த தன்று. புலி முதலிய கொடுவிலங்குகள் பற்றுதலும் அலைத்தலும் தொலைத்தலும் செய்ய வாய்த்த கருவி பல் தானே; பல் இல்லையேல் பற்றுதல் ஏது? பற்றின் மூலம் பல் என்பதை இவையெலாம் விளக்கும்! அம்மட்டோ! நாயும் பூனையும் குட்டிகளை வாயால் பற்றிக்கொண்டு செல்லுதலைப் பாரார் எவர்? மாந்தரும் பல்லால் பற்றுதலும் இழுத்தலும் கடித் தலும் பிடுங்குதலும் விலங்கு போலக் கடித்துக் குதறுதலும் இல்லையா! பல்லால் பிடித்தலே பற்றாய் இருந்து பின்னே, இறுக்கிப் பிடிப்பவை எல்லாம் பற்றாய்ப் பொருள் விரிவாயிற்று. அடுகலத்தில் (சமையற் கலத்தில்) ஒட்டிக்கிடக்கும் பிடிப்புக்கும் பற்று என்பது பெயர். அது வெப்பத்தால் வண்ணம் மாறிக் கருநிறமாய் இருத்தலால் கரிப்பற்று என்றும் கருப்பற்று என்றும் (பற்று, பத்தாக) வழங்குகின்றது. வளமிக்க வாழ்வினர் பற்றுத்தேய்ப்புக் கென வேலையாள் வைத்திருத்தல் நடைமுறை. பற்று, கையால் தேய்த்து அகற்ற இயலாமல் இறுகிக் கிடத்தலால் அதனைச் சுரண்டி எடுக்கத்தகடும் சிப்பியும் உண்டு, அத் தகடும் சிப்பியும் பற்றகற்றி என வழங்கப்படும். சுரண்டி என்பதும் அதற்கொரு பெயர் அதனின் வேறுபடுத்து தற்காகக், களைவெட்டும் கருவியைக் களைசுரண்டி என்பர். பற்றிக் கிடக்கும் களையைச் சுரண்டி எடுப்பதுதானே களை சுரண்டி. பற்றை என்பது களைகளுக்கும் சிறு தூறுகளுக்கும் பெயர் என்பதும் எண்ணத்தக்கது. நீர் கட்டிக் கிடத்தலால் உண்டாகும் வழுக்கல் பாசிக்குப் பற்று என்னும் பெயருண்மையும் கருதலாம். தலைவலி, பல்வலி முதலிய வலிகளுக்கும் அடிபட்ட வீக்கம் அதைப்பு முதலியவற்றுக்கும் பற்றுப்போடுதல் பண்டுவ முறை. பச்சிலை முதலியவற்றை அரைத்து அப்பி வைத்தலைப் பற்றுப் போடுதல் என்பது சரிதானே! பாய்ச்சல் காட்டுறியே என்ன? பற்றுப் போடணுமா! என்பது வழங்கு மொழி. குளம், கிணறு, கால்வாய், ஆறு முதலிய நீர்நிலைகளை அடுத்திருக்கும் நிலம் வளமிக்கது; வாளிப்பாகப் பயிரை வளர்த்து வளம் செய்வது இவற்றைப் பற்றிய நிலம், பற்று என வழங்கப்பெறும். முறையே குளத்துப்பற்று, கிணற்றுப் பற்று, கால்வாய்ப் பற்று. ஆற்றுப்பற்று என்று சொல்லப்படும். பற்று என்பதே நன்செய் நீரருகே சேர்ந்த நிலம் என்பர். நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் என்பர்; நிலம் என்பதே நன்செய்யைக் குறிக்கும் என்பதை நன்செய் புன்செய் என்பவற்றைச் சுட்டும். நிலபுலம் என்னும் இணைமொழியால் இனிதுணரலாம். நன்செய் நிலத்திற்கு அல்லது மருதநிலத்திற்கு உரிய பற்று என்னும் பெயர். அந்நிலத்து அமைந்த ஊர்க்கும் பெயராக வழங்கலாயிற்று, பற்று என்பது வீடுகள் நெருங்க நெருங்க அமைந்த மருதநிலச் சிற்றூராம். பற்று என்பது பத்து என்றும் பட்டு என்றும் பின்னே திரிந்து வழங்கலாயிற்று. மதுரையை அடுத்த அச்சன்பற்று, அச்சம்பத்தாகவும் பிராட்டிபற்று, பிராட்டிப்பத்தாகவும் வழங்குதல் பற்று, பத்து ஆயதற்குச் சான்று; செங் கழுநீர்ப்பற்று, செங் கழுநீர்ப்பட்டாய் மாறிச் செங்கற்பட்டாய்ச் சிதைந்தது. பற்று ஆயதற்குச் சான்று. சித்தூர் நாட்டுப் பூத்தலைப் பற்றும், ஆர்க்காட்டுத் தெள்ளாற்றுப் பற்றும் முறையே பூதலப்பட்டாகவும் தெள் ளாரப்பட்டாகவும் மருவி வழங்குவதைத், தமிழகம் ஊரும் பேரும் சான்றுடன் உரைக்கும் (பக் 26, 27). அரத்த (இரத்த)த் தொடர்புடை குடிவழியினரை ஒட்டுப் பற்று என்பதும், அத்தொடர்புடைய கூட்டத்தைப் பற்றாயம் என்பதும் அத்தகு வாய்ப்பில்லானை ஒட்டுப் பற்று இல்லாத வன் என்பதும் நாடறிந்த செய்தி. அன்பு கொண்டு ஆரத் தழுவி நட்புற்று இருப்பாரைப் பற்றாளர் என்பதும் அத்தகையர் இல்லாரைப் பற்றிலி என்பதும், பகைவரைப் பற்றார், பற்றலர் என்பதும் இலக்கிய வழக்குகள். முன்னதொன்றும் உலகியல் பெருவழக்கமாம். மதிலை முற்றிவிடாது இருத்தலைப் பற்றாற்றல்; என்பது புறப்பொருள் இலக்கணக் குறியாம். கோல் காலாகக் கொள்வார்க்கு உதவும் ஊன்றுகோல், பற்றுக்கோல் எனப்படும். கொல்லுலைக் களத்தில் பற்றி எடுக்க உதவும் கருவி, பற்றிரும்பு, பற்றுக்குறடு, பற்றுக் கோல் என வழங்கும். இரண்டு இரும்புத்துண்டங்களை ஒன்றாய் இணைத் தற்கு அவற்றின் இடையே ஒரு சிறு துண்டு இரும்பு வைத்துப் பொடி தூவித் தட்டி இணைப்பது வழக்கம். அதற்குப் பற்றாசு என்பது தொழில் முறைப் பெயர். ஆசிடை எதுகையைப் பாற்றாசு என்பதை எடுத்துக்காட்டி விளக்குவது இலக்கண நூன்முறை. பற்றிரும்பு என்பது அள்ளு என்னும் பொருளையும் தரும். அள்ளாவது கதவை மூடிச் சாத்துதற்கு உதவும் கம்பியை யும் தாழ்ப்பாளையும் மாட்டி வைக்கும் கொண்டியாம். பிறி தோரிடத்து இணைப்பைத் தன்னிடத்துக்கொண்டிருப்பதால் கொண்டியாயிற்று. பகைவர் நாட்டைக் கொள்ளையிட்டுக் கொண்டு வருதலைக் கொண்டி என்றதும், அந்நாட்டில் இருந்து கொண்டு வந்த மகளிரைக் கொண்டி மகளிர் என்றதும் கருதத் தக்கன. படர் கொடிகள் பற்றிச் செல்லுதற்கு இயற்கை உதவிய கால்கள் சுருள் சிப்புகளாம். அவை மரம், செடி, பந்தர், முதலியவற்றைப் பற்றிக்கொண்டிருப்பதால் பற்றுக் கோடுகளாக மரம் முதலியவை விளங்குகின்றன. அக் கொடிகளுக்கு அமைந்த கொழு கொம்பு போலக், கொடியிடை மெல்லியல் நல்லார்க்குக் கொழுநர் பற்றுக் கோடாக விளங்குதலைப் பலரும் கூறுவர். ஒத்த உரிமைக்கு இவ்வுவமை பொருந்தாது என உரிமைப் பெண் உரத்து மொழிந்தாலும் மொழிதல் தக்கதே! ஆயின் சொல்லாட்சியைச் சுட்டல் முறைமை அல்லவோ! தீப் பற்ற வைத்தல் நல் வழியிலும் உண்டு! அல்வழியிலும் உண்டு! இது பற்றாது அது பற்றாது என்பதோ வண்டமிழ் நாட்டின் வைப்பு நிதி! வையகம் அறிந்த வளநிதி! பற்றாக் குறைத் திட்டத்தை வகுத்து வகுத்துப் பண்பட்டுப்போன நம்மவர் வீட்டு நிலையையும் நாட்டு நிலையையும் நானிலம் நாளும் நன்கு அறிந்து கொண்டு தானே உள்ளது! ஈயம் பூசப்படாத பித்தளைக் கலம் களிம்பேறி உணவைக் கெடுத்தலையும், அஃதுண்ட உடலைக் கெடுத்தலையும் அறிந்ததே. அதனால் அல்லவோ, ஈயப் பற்று வைப்பார் தெருத்தோறும் கூவிக் கூவி வருகின்றனர். கம்பு கட்டும் கயிற்றை முற்காலத்தவர் பற்றாக்கை என்றனர். இக்காலத்தார் கூரையை வரிச்சுடன் இறுக்கிக் கட்டுதற்கு உதவும் புளிய வளார், கருவேல் வளார், கற்றாழை நார் முதலியவற்றைப் பற்றாக்கை என்பர். பற்று ஆக்கை என்பதே அது. ஆக்கை, யாக்கை, யாப்பு முதலியவை ஆர்த்தலாகிய கட்டுதல் வழியாக வந்தவை. எலும்பு, நரம்பு, தோல் முதலியவை இணைத்துக் கட்டப் பெற்ற யாக்கையையும், எழுத்து அசை, சீர்முதலியவற்றால் கட்டப்பெற்ற யாப்பு வகைகளையும் கருதுக. தேடி வைத்த பொருளை எளிதில் விட்டுவிட எவரும் இசைவரோ? உடை அவிழ அல்லது நெகிழவிடாது போற்றுவது போல் போற்றுதலால்தானே உடைமை என்று சொல்லப் படுகிறது. உடையாந் தன்மையுடையது உடமை யாம்! அவ் வுடைமையாம் செல்வத்திற்கு ஒரு பெயர் பற்று என்பது! பற்றிக்கொண்டு விடுதற்கு அருமையுடையது ஆகிய அப் பற்றையும், நற்குடிப் பிறந்தார் தம் இயற்கைப் பெரு நலத்தால் பொருட்டாக எண்ணார் என்பதைச் சுட்டுவார் திருவள்ளுவர். பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள என்பது அது. தேடித் தேடித் தேர்ந்து கொள்ளவேண்டிய அறிவைப் பற்று என்று கூறும் பரிபாடல். அறிவறியாளைப் பற்றாள் என்னும் அது. ஒன்றைப் பற்றி ஆராய்தலும், ஒருவரைப் பற்றிப் பேசுதலும், ஒருவழியைப் பற்றி நடத்தலும் பற்றி எவரே அறியார்? சிற்றில் நற்றூண் பற்றி நின்ற காவற் பெண்டைப்பற்றிப், புறப்பாடல் மொழிகின்றது என்றால் நாம் எதை எதைப் பற்றியெல்லாம், எவரெவரைப் பற்றி யெல்லாம் நிற்கிறோம்! சிங்கள அரசும் படையும் காவல் துறையும் வெறியரும் தமிழர் வீடெல்லாம் கூடெல்லாம் பற்றி எரித்தாலும் அதனை அறிந்த உணர்வுடையார் நெஞ்சமெல்லாம் பற்றி யெரிந்தாலும் கொஞ்சமும் அதனைப் பற்றிக் கவலைப்படாத மரத்துப்போன மாந்தரும் உள்ளனரே! பற்றி எரிய வைப்பதும் பற்று என்பதுதானே வெறியர் முடிவு! இந் நாட்டின் மேலும் இந் நாட்டு மொழியின் மேலும் இந்நாட்டு மக்கள் மேலும் கொள்ளும் பற்றினை வெறியாட்டம் என்று சொல்லும் தந்நல வெறியாளர் இங்கேயே இல்லையா? அவர்கள் பற்றுமைப் பசப்பு நும்மது நம்மது நம்மது ஏஏ என்று ஊற்றைப் பல் காட்டும் பசப்பேயாம்! பற்று வரவு திறமையாக எழுதத் தெரியாத வணிகன் செல்வம் சேர்த்ததுண்டா? பற்றுச்சீட்டு வாங்காமல் சொல்லும் கணக்கை முறைமன்றமோ வரியாயமோ ஏற்றுக் கொள்கின்றதா? இத்துணைப் பற்றுகளையும் விடுக என்பது எளிதோ? அற்றது பற்றெனில் உற்றது வீடு என்றார் நம்மாழ்வார். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்றார் திருவள்ளுவர். பல்வழி வந்த பற்று என்னும் சொல்வழியே எத்தனை எத்தனை பற்றுகள் விரிந்துள்ளன! தமிழ் வளம் தமிழனிடத்து உண்டோ இல்லையோ! ஆனால் தமிழில் கொள்ளை கொள்ளையாய் உண்டு! வெள்ள வெள்ள வரவாய் உண்டு.  50. பிடி முடிசார்ந்தவர் என்றால் என்ன, அவர் அடி சார்ந்தவர். என்றால் என்ன? முடிவில் பிடி சாம்பலாதல் உறுதி; அல்லது பிடி மண் தள்ளப்போதல் உறுதி! பிடிசோறு வழங்குதல் பேரறமாகப் பேசப்படும். அதுவும் குழவிக்குப் பிடி சோறு என்றால் எவரும் இல்லை எனச் சொல்வதே இல்லை. அதனைக் குழலி பலி எனக் கூறுதல் அறநூல் முறை. இறைவனுக்கு நீர்ப்பலி, பூப்பலி, ஊண்பலி படைத்தல் போன்ற பெருமையது குழவிக்குச் சோறுதரும் குழவிபலி! அதனைப் பொருளறியாப் புன்மையரும் கொலைவெறியராம் கொடியரும் குழவிப் பலி யாக்கிக், காக்கவேண்டும் குழந்தையையே காவு கொடுத்தனர்! அவர்கள் கயமை அது! பிடி என்பது பிடித்து அள்ளும் அளவைக் குறித்தது. இது, விளக்கமாகக் கைப்பிடி எனவும் படும். ஒரு பிடி மண்ணை அள்ளிக் கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு எனக்காட்டிய ஔவையார் பாட்டு தனிப் பாட்டில் உண்டு. கையைக் கூட்டிப்பிடித்து, இவ்வளவேனும் அன்னம் இட்டுண் மின் என்று கூறிய பாட்டும் அவர் தனிப்பாட்டில் ஒன்றே! தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்னும் குறளில் வரும் பிடித்து என்பது பிடியளவைக் குறிப்ப தாம். இங்குச் சுட்டப்பெற்ற பிடி, முகத்தல் அளவு. உழவர் தம் மாடுகளைப் பிடி என்னும் அளவால் அள விட்டுக் கூறுதல் வழக்கம். நால்விரல் மடித்துப் பெருவிரல் அல்லது கட்டைவிரல் ஒன்று நிமிர்த்திய உயரம், பிடியாம்; விரல்கொண்டே அடியளவு கண்டனர் என்பது அங்குலம் என்பதால் விளங்கும். அங்குலி என்பது விரல்! அதனை விரலம் என்பார் பாவாணர்! அடி என்பது என்ன? காலடி தந்த அளவே! இது நீட்டல் அளவைப்பிடி. தாம்பணிகளில் (தாம்பு - கயிறு; அணி - வரிசை; இரு முளைகளையடித்து அதில் கயிற்றைக் கட்டி; அக்கயிற்றில் வரிசையாக மாடுகளைக் கட்டுவதால் இப்பெயர் பெற்றது; இது தாவணி எனச் சிதைந்து வழங்குகின்றது) மாடு விற்பவரும் வாங்குபவரும், துண்டைப் போட்டுக் கையை மூடி மறைத்துக் கொண்டு, கைவிரல்களைப் பிடித்து விலைபேசுவது வழக்கம் பிடி என்பது ஐந்தைக்குறிக்கும்! கைக்கு ஐந்து விரல்கள் அல்லவா! அது, ஐந்நூறு, ஐயாயிரம் என்பதையும் குறிக்கும்! இத்தனை பச்சை நோட்டு, இத்தனை கடுவாய்நோட்டு என்றால் இத்தனை நூறு, இத்தனை ஆயிரம் என்பதாம். வட்டாரம் தோறும் வெவ்வேறு குறிப்புச் சொற்களைத் தரகர் பயன் படுத்துவதுண்டு. இஃது எண்ணல் அளவைப்பிடி. கோழி முதலியவற்றைச் சிலர் கையால் தூக்கிப், பிடித்துப் பார்த்த அளவில் இத்தனை பலம் என்பது உண்டு. அவர்கள் தேர்ச்சி அத்தகையது. பார்வையில்லாத ஒருவர், கோழியைத் தூக்கிப் பார்த்து இருபத்திரண்டே கால் பலம் என்றால் கால் பலம், அரைப்பலம் வேறுபாடு கூட இல்லாது இருந்ததை என் இளந்தைப் பருவத்தில் பலமுறை கண்டுளேன். இஃது நிறுத்தல் அளவைப்பிடி. பிடி என்னும் அளவைப்பெயர் பிடித்தல் என்னும் தொழில் பெயர்க்கு மூலமாகி விரிவடைந்தது. பிடித்தல் என்பது பற்றுதல், அகப்படுத்தல் ஆகிய பொருள் தந்தது. பிடித்தாலும் பிடித்தாய் புளியங்கொம்பைப் பிடித்தாய் என்றுவரும் பழ மொழியில் பற்றுதல் பொருள் வந்தது. ஏறு தழுவுதல் என்பது மாடு பிடி யாக அல்லது சல்லிகட்டாக அல்லது மஞ்சு விரட்டாக வந்தது. மாடுபிடிக்கும் கயிற்றுக்குப் பிடி கயிறு என்பது தானே பெயர். தாயினிடம் எடுத்துக்கொண்டு போய்ப் பாலூட்டு குட்டி, பிடிகுட்டி எனப்படுகிறது. அதற்கு மடுவையும் பிடித்து ஊட்ட வேண்டும்! மீன் பிடிக்குமாறு நீர்வற்றிய குளம் பிடிகுளம் என வழங்கப்படுகிறது. பிள்ளை பிடித்தல் அச்சம், பெற்றோர்க்கு என்றும் உண்டு போலும்! பேய்பிடித்திடு தூதரே என்பது வெங்கைக் கலம்பகத்தில் மறம் பாடல்! தூதரே பேய்பிடித்து ஆட்டம் போடுதலும் உடுக்கடித்து ஓட்டலும் நாட்டில் முற்றாக ஒழிந்துவிடவில்லை! பாம்பு பிடித்தல் வருவாய்த் தொழிலாக நிகழ்கிறதே! முதற்கலப்பை உழவு, அடிசால்; அடுத்து வரும் கலப்பை உழவு பிடிசால்! நீர்க்கசிவுடைய நிலம் நீர்ப்படி! சிலம் பாட்டத்திலும் மல்லாட்டத்திலும் பிடியின் ஆட்சியே ஆட்சி! உடும்புப்பிடியும் குரங்குப்பிடியும் ஊரறிந்த செய்திகள். அடி பிடி சண்டை இல்லாத இடம் உண்டா? எடுபிடி ஆள் இல்லாத இடம் உண்டா? இடுப்புப் பிடித்துக் கொண்டது என்றோ, தடுமம் பிடித்து விட்டது என்றோ சொல்லாதவர் உளரா! வேது பிடித்தல் சித்தமருத்துவத்தில் ஒரு முறை யில்லையா? ஈரவிறகில் தீப்பிடிக்கவில்லை எனக் கவலை ஒரு பக்கம்; தீப்பிடித்தால் அணைத்தற்குத் துறை ஒருபக்கம். மண்வெட்டி, கோடரி, அரிவாள், அறுவாள் முதலிய வற்றைப் பிடி இல்லாமல் பயன்படுத்த முடியாதே! பிடித்துக் கொட்டுவது கொட்டுப்பிடி எனப்பட்டு இக்காலத்தில் கொட்டாப்புளியாகச் சொல்லப்படவில்லையா? தூக்கு, செம்பு, கெண்டி முதலியவற்றுக்குப் பிடி இல்லாமல் எடுப்பது வாய்ப்பாக இராதே! கைபிடிச் சுவர் இல்லாத இடம், ஒரு வேளை இல்லாவிட்டாலும் ஒரு வேளை இடர் செய்துவிடும்! கைபிடித்துத் தருவதுதானே மணவிழாவின் நிறைவுச் சடங்கு! ஓடிப்பிடித்தலும் ஒளிந்து பிடித்தலும் விளையாட்டு அல்லவோ! பிடிப்பாகச் சட்டை இருத்தல் வேண்டும் என்பதிலே ஆர்வந்தான் பலர்க்கும் எவ்வளவு! பிடித்தாவது குற்றக் கூண்டில் நிறுத்துதல் இந்நாட்டில் வியப்பில்லையே! இந்தப் பிடிப்பு இன்னும் வளர்ந்து, பிடிமானம் சிக்கனம் ஆயிற்றே! பிடிபணம் அல்லது பிடிபாடு என்பது கழிவு (கமிசன்) ஆயிற்றே! பொறுக்கப் பிடித்தல் என்பது வயிறு முட்ட உண்ணல் ஆயிற்றே! சீட்டுப் பிடித்தல் சிறு தொழிலில் தலைத்தொழில் ஆகவல்லவோ நடக்கிறது! புகைபிடியாதீர் என்னும் பலகைக்குக் கீழே இருந்து கொண்டே புகை பிடித்தல் நம் நாட்டு ஒழுக்கம் ஆயிற்றே! அறிவில் படாமை, புலப்படாமை, தெளிவில்லாமை இவற்றைப் பிடி படவில்லை என்பது விளக்குதல் கண்கூடு. கண்டு பிடிக்க முடியவில்லையே என்னும் கைவிரிப்பு ஒவ்வொருவர் வாழ்விலும் இல்லையா! உங்களுக்கு இது பிடிக்குமா? ‘ão¡fhjh? என விருந்தில் கேட்பது இயல்பில்லையா! இந்தப் பை பிடிக்காது; இந்தப் பை பிடிக்கும் எனக் கொள்மானம் ஆயிற்றே பிடி! இந்தப் பிடி இன்னும் எங்கே தாவுகின்றது? எண்ணத்திற்கு அல்லது மனத்திற்குத் தாவுகின்றதே! மனப்பிடித்தம் தானே, மணப்பிடித்தம், மற்றைப் பிடித்தம் எல்லாமே என்ன ஐயா என்பது இந்த மாப்பிள்ளைக் கொடை (வரதட்சணை) அறமாகிவிட்ட நாளிலும் அங்கொருவரும் இங்கொருவரும் பேசும் செய்தியாயிற்றே! பிடித்தவர் நண்பர்; பிடியாதவர் பகைவர்; இல்லையா! இன்னும் பிடிவளர்கின்றதே! ஆணின் அன்புப் பிடியிலும் அரவணைப்புப் பிடியிலும் சிக்கிய பெட்டைக்குப் பிடி என்பது பெயர் அல்லவோ! பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிற்றைப் பேசுகின்றதே கலித்தொகை! ஏறும் இன்ப ஓசையால் ஏறும் ஏற்றின் (களிற்றின்) பிடிக்குள் அகப்படுவதும், பின்னே அவ் வின்ப மயக்குத் தீரப் பிடித்துத் தூக்கி விடப்படுவதும் ஆகிய பிடியின் பெயரே பின்னே பெண்மைப் பொதுப் பெயராய்ப் பொலிவாயிற்றே! பிடியில்லாதது வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாமலும் வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாத ஒட்டுச்சுவர் வீழ்வதைக் கேட்க வேண்டுவது இல்லையே! ஆதலால், வாழ்வுக்கு வேண்டும் பிடிப்பின் மூலவைப்பகம் பெண்ணே என்பதைத் தெளிந்தே கையுடைய களிற்றிற்கு மட்டும் பிடியைச் சொல்லி நிறுத்தாமல் மற்றவற்றுக்கும் பிடியை வைத்தார் தொல்காப்பியனார். விடுமின் விடுமின் என்று காதலனைக் காதலி சொன்னால், பிடிமின் பிடிமின் என்பது பொருள் எனக் கலிங்கத்துப்பரணி கூறும். மனைவி இயல்நுட்பம் பிடி என்னும் பெண்பால் பெயர் சொல்வதாம்! பிடிமுதல் நீண்டு பீடி ஆகிவிட்டதா? பிடித்தல் என்பது பீடித்தல் பொருள் தருவது அன்றோ! நோயும் பிணியும் பீடித்தலாகச் சொல்லும் வழக்கு ஊன்றிவிட்டதே! அதன் வழியே பீடையும் பற்றிக் கொண்டுள்ளதோ! ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் எனக் கூறும் வயல் வளம் வாய்த்தால், அயல்வளம் எல்லாம் தேடிவருதல் உறுதியேயல்லவோ!  51. பழனி ஒரு செய்தி : பழனித் திருக்கோயில் மூலவரை வலுப்படுத்த அறிஞர் குழு அமைக்கப்படும். பூசகர்கள், சிற்பர்கள் கூடி, அடியார்கள் விரும்பிய வண்ணம் பல்வேறு முழுக்காட்டுகள் நடத்துதலால், பழனித் திருக்கோயில் மூலவர் திருவுருவப் படிமம் தேய்மானம் மிக்குளது. இச் சிதைவினின்று காத்தற்குக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். குழு அமைக்கப் பட்டது: மூலவர் படிமம் ஆயப்பட்டது; முழுக்காட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்யத்தக்க செயல் இது. படிவம் கெடாமல் சிதையாமல் போற்றிக் காத்தல், அரசுக்கும் அறங் காவலர்க்கும் பூசகர்க்கும் பிறர்க்கும் கடமையே! இறையடியார்கள் அக்கடைப்பிடியைப் பேணி நடத்தல் முறைமையே! இவ்வாறு, மொழிச் சிதைவை - அழிபாட்டை - கேட்டைத் - தடுக்க அறைகூவல் உண்டா? அறிஞர் அமைப்பு உண்டா? அரசு ஆணை உண்டா? நடை முறைக்கட்டுப்பாடு உண்டா, இல்லை! இல்லை! இல்லவே இல்லையே! ஏன் இந்த ஓரப் பார்வையும், ஒட்டுப் பார்வையும் ஒதுக்குப் பார்வையும்? பழனியைப் பழனி என்பதா? பழநி என்பதா? பழனியைப் பழநி ஆக்கல் மொழிக்கேடு என்று அறிந்தால்- அதைத் திருத்தியமைக்க அரசு முன்வர வேண்டுமே! அறிஞர்கள் முன்வரவேண்டுமே! அறங்காவலர் முன்வர வேண்டுமே! moah®fS«, tÈíW¤jî« if¡bfhŸsî« nt©Lnk! மொழியா? எக்கேடும் கெடட்டும் என்று விட்டுவிட்டால், இவர்கள் செயல் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணமும் வைப்பது அன்றி வேறன்றே! செய்தக்க அல்ல செயக்கெடும் என்பதை உணர்பவர், செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்பதையும் உணரவேண்டும் அல்லவோ! பழனி முன்னாள் ஊரா? பின்னாள் ஊரா? மலையூர் என்றால் அதன் பழமையைச் சுட்ட வேண்டியது இல்லையே! சங்கப் புலவர்கள் பாடு புகழுக்கு இடனாகிய ஊர் பழனி! சங்க நாள் வேந்தர் ஆட்சியில் தழைத்தது அது. அகப்பாடல்கள் இரண்டில் அகப்பட்டுக் கிடக்கிறது பழனி; எப்படி? நெடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி இப் பொதினியே பழனி யாயது. பொதினி, யாருக்குரியதாகப் பழநாளில் இருந்தது, ஆவி யர்க்கு இருந்ததாகச் சொல்கின்றனவே சுட்டப்பட்ட பாடல்கள் இரண்டுமே (அகம். 1, 61). பண்டைத் தமிழகத்தில் குறுநில மன்னர்களாக விளங்கிப் பெரும் புகழ் கொண்ட குடிகளுள் ஒன்று ஆவியர் குடி. அக்குடி முதல்வன், நெடுவேள் ஆவி; அவன் முதல்வனாக, அவன் வழி வந்தோர் ஆட்சி புரிந்தது பொதினி; பொதினியை ஆவியர் குடியினர் ஆளுங்கால் புகழொடும் விளங்கியவன், பேகன் என்பான். உடுத்தாததும், போர்த்தாததும் ஆகிய மயிலுக்குப் போர்வை வழங்கிப் புகழ் கொண்டானே பேகன்; அவனைப் பற்றிப் புறப்பட்ட புறப்பாட்டுகள் ஏழு (புறம் 141-7) அவற்றில் அவன் ஆவியர்கோ எனப்படுவான். அவன் பெயரோ வையாவிக் கோப்பெரும் பேகன் எனப்படும். இன்றும் அவன் வையாவி, பழனிக்கு அருகே உண்டு. அதன் இக்காலப் பெயரோ வையாபுரி என்பது! ஆவியர் ஆட்சி செய்த பொதினிக்கு ஆவிநன்குடி என்ப தொரு பெயர். திருவொடு சேர்ந்து திருவாவிநன்குடி என்றாயிற்று. திருவாவின்நன்குடியைச் சொட்டச் சொட்டப் பாடுகின்றார் அருணகிரியார். அவர் பாடல்களில் பழநி தலை காட்டுகிறது. பதிப்பார், பதிப்புப்பாங்கு ஆகலாம்; எப்படி? மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடல் தொகுப்பைத் தொகுத்து வெளி யிட்டவர் பழநி சாமியார்; அவர் பதிப்பில் பழனியைப் பார்க்க இயலுமா? என்னதான் பழநி இருப்பினும் பழனாபுரியை மாற்ற முடியவில்லை! அஃது, உண்மையை நிலைப்படுத்தி விடுகின்றது. வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் பாடினார் பழனித் திருவாயிரம். அதில் எங்கும் பழனி! எல்லாம் பழனி! பழநி தலைகாட்டவில்லை! பாடினோரும் பதிப்பாளரும் ஒரு குடியர்! ஒரு நிலையர்! அதனால் பழனியே கமழ்கிறது. பழநீ என்பது பழநி ஆய கதை இருக்கட்டும். அப்படி ஒரு சொற்புணர்ச்சி தமிழில் உண்டா? அப்படி ஒரு சொல் லிணைப்பைக் காட்டி, ஊர்ப்பெயரை நாட்ட இயலுமா? கழனி, துழளி உண்டு: அழனம் பழனம் உண்டு; அழன், புழன் உண்டு; எழினி, இழுனி உண்டு, தொழுனையும் உண்டு. ஆனால் பழநிப் புணர்ச்சி ஒன்றும் இல்லையாம். சங்கநாள் பொதினியைக் கற்பார் பழநியைப் பார்க்கும் போது அதன் பழமைச் சீர்மையையும் வரலாற்று மாண்பையும் உணர்வார்! அதனைப் பெயர் மாற்றத்தால் மறைக்க வேண்டுவது என்ன? நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்றைச் சிலம்பில் படிப்பார், அழகர் மலையில் சிலம்பாறு எனப் பெயரிருக்கக் கண்டால் வரலாறு உணர்ந்து மகிழ்வர் அன்றோ! அதனை நூபுர கங்கை என மாற்றி யமைத்த ஏமாற்று ஆற்றுப் பெயருக்கு மட்டுமா ஏமாற்று? தமிழர் வரலாற்றுக்கே ஏமாற்று இல்லையா? வன் கொலையினும் கொலை வரலாற்றுக் கொலையன்றோ? பழனித் திருப்படிவம் தேய்மானம் இன்றி இருக்க வேண்டாம் என எவ்வளவு தேட்டம் உண்டோ அவ்வளவு தேட்டம், அதன் திருப் பெயர் மாறாதிருக்கவும் வேண்டும் அன்றோ? பொதினி என மாற்றாவிட்டாலும் பழனி என மாறிய அளவிலாவது பேணவேண்டுமே! திருப்படிவத்தை மாற்றாமல், தேய்மான அளவிலாவது வைத்துப் போற்ற வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லமோ!  52. புலவர் இறையனார் கொங்குதேர் வாழ்க்கை என்பதொரு பாட்டு எவரும் கேட்டது. அது குறுந்தொகைப்பாட்டு என்பதால் அறியப் பட்ட அளவினும் தருமி கதைக்கு மூலமான பாட்டு என்னும் திரு விளையாடல் திரைப்படத்தால் தெரு விளையாட்டாளரும் தெரிந்து கொண்ட பாட்டாயிற்று. கொங்குதேர் வாழ்க்கைப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனார் என்பதே! அவர் இறைவனா ராக எப்படி ஆனார்? இறையனார், இறைவனார் என்னும் பெயர்களில் உள்ள வேறுபாட்டை அறியாதவர் இணைத்த இணைப்பாக இஃது இருக்கவேண்டும். அல்லது வேண்டுமென்றே இறைமைப் படுத்த எண்ணியவர் முனைப்பாக இருக்கவேண்டும். இவற்றுள் பின்னதே கொள்ளத் தக்கதாம். ஏனெனில் இவ்விணைப்பைப் படைத்தவர்கள் புலமை இல்லார் அல்லரே! அறிவுப் புலத்தில் தலைப்பட்டவர் என்னத் தக்கவர் ஆவரே. இறையனார் பெயர், கொங்குதேர் வாழ்க்கைப் பாடலுக்கு மட்டும் தானா இறைவனாருடன் திரிக்கப்பட்டது! இல்லை! இறையனார் அகப்பொருள் என்றும், இறையனார் களவியல் என்றும் வழங்கப்பட்டு வரும் நூலுக்கும் இறைவனோடு தொடர்பு உண்டாக்கி அதற்கேற்பப் புனைவுகளும் புகுத்தி வைக்கப்பட்டன! இறையனை இறைவனாக எத்துணைப் புனைந்தும் பெயர்கள் மட்டும் இறையனாகவே நின்று விட்டமையே மெய்ந்நிலை காட்ட வாய்ப்பாயிற்றாம். இறையன் என்பதும் இறைவன் என்பதும் ஒரு பொருள் தரும் சொற்களா? எங்கேனும் இறையனை, இறைவன் என்றும், இறைவனை, இறையன் என்றும் போலி முறையாக வேனும் காண்பது உண்டா? இல்லாமலும், கட்டும் ஒட்டும் இது காறும் விட்ட பாடில்லையே! குறுந்தொகை முதற்பதிப்பு, சௌரிப்பெருமான் அரங்க னார் பதிப்பு. அது 1915இல் வெளிப்பட்டது. கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலின் தலைப்பில் இறையனார் பாடியது எனப் பொறித்துள்ளார். பாடினோர் பெயர்ப் பட்டியலில் இறையனார் எனப் பெயரிட்டதுடன், அடைப்புக் குறிக்குள் கூடன் மேவிய ஆடன் மேவினார் எனவும் பதித்தார். மேலும், அதில், இப்பாட்டு இறையனார் தருமிக்கு இயற்றித் தந்தது; இறையனார் ஆலவாயடிகள் என்று விளக்கமும், திருவிளையாடல் கதையும் செறிக்கப்பட்டன. பாடலிலோ, அதன் திணை துறையமைப்புகளிலோ திருவிளையாடல் செய்திக்கு இடமுண்டா? இது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன் நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றாற் கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டல் என்பது பாடல் துறைக்குறிப்பு. இக்குறிப்பு பழம்புலவர் ஒருவரால் குறிக்கப்பட்டது. பாடலுக்கு உரிய உரை விளக்கம் காண்பதற்கு ஒளிச் சுடராக இருப்பது இது. இதில், தருமி இல்லை! இறைவனும் இல்லை! இயற்கைப் புணர்ச்சியும், தலைவனும் நலம் பாராட்டலுமே உள! இவ்வாறாகப் பழமரபில் வழுவி உரை வளர்த்துப்போக நேர்வானேன் என ஐயம் கிளைத்தல் இயற்கை! நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி, நற்கனகக் கிழி தருமிக் கருளினோன்காண் என்பது அப்பரடிகள் வாக்கு! அதனைக் கொண்டும் பிற புனைவுகளைக் கொண்டும் திரு விளையாடலில் தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் கிளர்ந்தது. இப் பின்னை நூல்கள் பின்னுவதை முன்னை நூலில் முடிபோட்டு விட்டனர்! அதற்கு வாய்ப்பாக இருந்தது பெயரிலமைந்த ஓரெழுத்தல்லாப் பிறவெழுத்துகளின் பொருத்தம்! அரங்கனார் பதிப்பில் மட்டும் தானா, இக்கதை யிணைப்பு? 1937 இல் வெளிப்பட்ட முனைவர் உ. வே. சாமிநாதர் பதிப்பு, 1946 இல் வெளிப்பட்ட பெரும் பேராசிரியர் இரா. இராகவர் பதிப்பு, 1985 இல் வெளிப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு ஆகிய எல்லாவற்றிலும் இறையனார் பெயர் உண்டு. இறைவனார் திருவிளையாடலும் உண்டு! அகப்பாட்டுக்குச் சில தனி ஒழுங்குகள் உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று. மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் என்பது (தொல். அகத் 54) அகப்பாடலில் தலைவன் தலைவி எனப்பெயர் ஆளப் படுதல் அன்றி, அவர் பெயர், இன்னதென ஆளப்பெறுதல் வழக்கில்லையாம். இந்நுட்பமும் நாகரிகமும் பண்பாடும் வியந்து வியந்து போற்றத்தக்க விழுப்பமுடையதாம். இவ்வாறாகலின், குறிப்பாக விருப்பமுடையதாய். இவ்வாறாகலின், குறிப்பாகத் தலைவன் தலைவியர் பெயர் உரைத்தலும், சார்த்தியுரைத்தலும் ஆகிய முறைகளை அறவே கடிந்து அறமுறை நிலைபெறுத்தி வந்தனர். இப்பெயர்ச்சுட்டு நூற்பாவும், இதன் தொடர்பான ஆய்வுகளும் மிக விரிவுடையவாகலின் இவ்வளவில் அமைவாம். கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் குறுந் தொகைப் பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது; நலம் புனைந் துரைத்தல் துறையது; ஆக, அகனைந்திணையில் தலைப்பட்ட பாடலில் குறிப்பாகவேனும் பாண்டியனும், அவன் தன் துணை பற்றிய கூந்த லாய்வும் இடம் பெறுத்த எண்ணார். இடம் பெறுத்த எண்ணின், குறுந்தொகை நானூற்றில் ஒன்றாக எண்ணவும் எண்ணார்! ஆகலின் பின்னைப் புனைவை முன்னை நூலுக்கு ஏற்றியுரைத்தல் முறை கேடாம். சங்கச் சான்றோருள் ஒருவர் நல்லிறையனார் என்பார். அவர் பாடிய பாடல் புறம் 393. அவர் பெயரை நல்லிறைவனாகக் காட்டாமல் அப்படியே அமைய எப்படியோ விட்டு விட்டமை, இவ்வாய்வுக்கு இனிய வாய்ப்பாயிற்று. அவர் பாடிய பாட்டுக்கு ஏற்பப் புனைகதை ஒன்று புகாமையும் நல் என்னும் அடையொன்று முன்னின்று தடையொன்று செய்தமையும், அப்பாடல் பாடாண்தினைக் கடைநிலைப் புறப்பாடலாய்ச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடியது ஆகலானும் திரிப்புக்கு இடமின்றி உய்ந்ததாம். குறுந்தொகை 394 ஆம் பாடலை இயற்றியவர் குறி யிறையார் எனப்படுகிறார். அவர் தம் பாட்டில் இளஞ்சிறார் களைக் குறிக்குங்கால் குறியிறைப் புதல்வர் என்கிறார். இத் தொடரில் நயமுணர்ந்த சான்றோர், பெயரறிவாரா அப்புலவர் தமக்கொரு பெயர் சூட்டுவிழா நிகழ்த்தி நிலை பெறுத்தினார்! குறியிறையா ராகவே இன்றும் காட்சி வழங்குகின்றார். இனி, இறையன் இறைவன் என்னும் பெயர்களைக் கருதுவோம். இறைவன் என்னும் சொல் தொல்காப்பியத்தில், அரசன் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இறைவன் வீழ்ந்தென (தொல். புறத். 17) என்பது அது, திருக்குறளில் அச்சொல் ஈரிடங்களில் கடவுளையும் (5. 10) மூன்றிடங்களில் அரசனையும் (690, 733, 778) குறித்து வந்துளது. ஆக இறைவன் என்பது ஆளும் அரசனையும், ஆண்டவனையும் குறித்து வருவது புலப்படும். ஆண்டவன் என்பது ஆண்ட (ஆட்சி செய்த) அரசனையும் ஆண்டவனையும் குறித்தல் இயல்பு நடைமுறையே! ஆண்டை என்பதும் அடிமை என்பதும் இன்றும் ஒழிந்தனவோ? ஆண்டவனும் ஆள்பவனும் இறைவன் எனப்பட்டனரே யன்றி, இறையன் எனப் பெற்றனர் அல்லர் என்பது இவற்றால் தெளிவாம். இனி இறையவன் இறையோன் எனச் சங்க நூல் சார்ந்த சிலம்பு மேகலைகளில் இடம் பெற்றுள. அவை: இளம்பிறை குடிய இறையவன் சிலம்பு. 28:87 நுதல் விழி நாட்டத் திறையோன் சிலம்பு. 9:30 இறையோன் கூறும் சிலம்பு. 15:162 இறையோன் கேட்டு சிலம்பு. 27:142 இறையோன் செவ்வி சிலம்பு. 27:148 இறையோன் செவி சிலம்பு. 28:188 நுதல்விழி நாட்டத் திறையோன் மணிமே. :54 என்பன. துணையன் துணைவன் என்பவற்றில் யகர வகர வேறுபாடு மட்டும் தானே! ஆனால் எவனும் ஒருவர்க்குத் துணையன் ஆகலாம்! ஆனாலும் எவனும் ஒருவர்க்குத் துணைவனாக முடியுமா? இவ்வாறே துறையன் துறைவன் நிறையன் நிறைவன் தலையன் தலைவன் என்பவற்றையும், கணயன் கணவன் கலயன் கலவன் புலயன் புலவன் என்பவற்றையும் எண்ணின் எத்தகு பொருள் வேறுபாடு? ஓர் எழுத்துத் திரிபு வருதலே பொருள் திரிபு குறிப்பதற்காகத்தானே! இறையனுக்கும் இறைவனுக்கும் உள்ள பெயர்ப்பொருள் வேறுபாடு என்ன? இறையன் என்பது, இயற்பெயர் இறைவன் என்பது, பொறுப்பால் அல்லது நிலையால் அமைந்த பெயர். இறையன் என்பது சிறப்புப்பெயர்; அதாவது ஒருவருக்கே உரிய பெயர். இறைவன் என்பது, பொதுப்பெயர்: அதாவது அரசராவார் எவர்க்கும், ஆண்டவராகக் கருதப்படுவார் எவர்க்கும், உரிய பொதுப்பெயர். இறையன் என்பது, தனித்து நின்று இன்னார் எனத் தெரிவிக்கும் பெயர். இறைவன் என்பது, முன்னடை பின்னடை செய்தி ஆகியவை கொண்டு இன்னார் எனத் தெரிவிக்கும் பெயர். இறையன் என்பது பெயர் வழிப்பட்டபெயர்; இறைவன் என்பது வினைவழிப்பட்ட பெயர். இறை தண்டுவான் எவனும் இறைவனே! இறை கூர்தல் (எங்கும் தங்குதல்) உடையான் எவனும் இறைவனே! இப்பொதுக் கரணியம் கருதாத தனித்தன்மை கருதிய கரணிப்பெயர் இறையனாம். ஆயின் இறையன் என்னும் பெயர்க்குப் பொருள் என்ன என்னும் வினா எழுதல். இயற்கையாம். இறை என்பது உயர்வு என்னும் தன்மைப் பொருளது. ஏந்துகொடி இறைப்புரிசை என்பது புறப்பாட்டு (17). பகைவர் எடுத்த கொடியை உடைய உயர்ந்த மதில் என்பது இதன் பழையவுரை. இறையர் என்பதற்கு உயர்ந்தவர், உயர்புகழாளர் என்பது பொருளாம். திருவள்ளுவமாலையில் அசரீரி, நாமகள் பாடல்களை அடுத்து, உக்கிரப் பெருவழுதியார் முதலிய புலவர்களின் பாடல்களுக்குத் தலைமைப்பாடலாக இறையனார் பாடல் உண்மை இதனைத் தெளிவிக்கும். அவர் புலவர் தலைவராக இருந்தவர் என்பதையும் தெளிவிக்கும்.  53. பெருமகன் பெருமகன், பெருமகள் என்னும் சொற்களின் பெருமை நின்றவாறே நிற்க, மகன் மகள் என்பவை மான் என்றும், மாள் என்றும் திரிதல் உண்டு. அந்நிலையில் பெருமான் என்றும் பெருமாள் என்றுமாகும். பெருமகன் பெருமான் எனத் திரிதலை வெளிப்பட அறிபவர், பெருமகள் பெருமாள் என்று திரியும் என்பதை ஏற்கத் தயங்குவர். ஏனெனில், பெருமாள் என்னும் பெயருடைய இறையும், மக்களும் ஆண்களாகவே பெரிதும் இருப்பதால் என்க. பெருமகள் பெருமாள் ஆதலை விளக்குவது போல் பெண்பெருமாள் என்ற பெயருடைய ஒருவரின் விரிந்த செய்திகள் விநோத ரச மஞ்சரியில் உண்டு. இன்றும், மகளிர் சிலர் பெருமாள் என்னும் பெயரில் உளர். பெருமாளம்மாள் என்பார் பெயரில் சரக்குந்து ஒன்று ஓடுவதும் கண்கூடு. பெருமாள் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுப் பெயராக அமைவது எப்படி என்னும் திகைப்பு அல்லது வியப்பு ஏற்படவே செய்யும். பெருமகள் பெருமாள் ஆயது பெண்பால் வழி. பெரும் ஆள் (நெடிய ஆள்; நெடுமால் பெருமாள் ஆயது ஆண்பால் வழி. நீர்செல நிமிர்ந்த மாஅல் என அளபெடை தந்து பெருமாள் ஆக்குகிறார் நப்பூதனார். (முல்லைப் பாட்டு 3). பெருமகன், பெருமான் எனத் திரிதலால் மகன் மான் என ஆதல் தெளிவாம். இத்திரிபால் கோமகன் கோமான். என்றும், திருமகன் திருமான் என்றும், சீர்மகன் சீமான் என்றும் வேள்மகன் வேண்மான் என்றும், பூமகன், பூமான் என்றும், இன்னவாறு அமைந்து விட்டது. வேள் மகள் வேண்மாள் என்று அமைந்தமை பெண்பால் திரிபுக்குச் சான்று. கோமகள், கோமாள், கோமாட்டி, பெருமாட்டி என்பன இவ்வழி வந்தவை. பெருமகன் பெருமான் ஆய அளவில் திரிபு நிற்கவில்லை. அது பெம்மான் என்றும் திரிந்தது. மக்களுக்கு அமைந்த பெருமகன் இறைவனுக்கும் ஆகித் திரிபுகளையும் கொண்டது. பிரமாபுரம் மேனிய பெம்மான் இவனன்றே என்பது தேவாரம். பெரும் மகன் பெருமான் பெம்மான் ஆகிய அளவிலேனும் நின்றதா? இல்லை. மேலும் திரிந்தது. பிரான் ஆகியது. சிவபெருமான் சிவபிரான் எனப்படுவது இல்லையா? பிரான் பெருமான் போலவே பெருவழக்காயிற்று தம்பிரான் நம்பிரான் எம்பிரான் என உரிமையடை பெய்தும் சொல்லப் படுவதாயிற்று. இவரலா திலரோ பிரானார்? எனத் தம்பிரான் தோழர் நம்பிரான் சுந்தரரால் அசதியாடிச் சொல்லவும் பட்டது! பிரானுக்குத் தகப் பிராட்டி தம்பிராட்டி எம்பிராட்டி முதலியன வந்தன. சொல்லின் திரிபு ஆய்வு சுவை மிக்கது மட்டுமன்று; மொழி வரலாற்றுக்கும் காலத் தெளிவுக்கும் அரிய கருவியாகவும் உதவும் என்பது அறியத்தக்கது. மலையில் இருந்து கானாற்றில் அடித்துக்கொண்டு வரப்பட்டு, முல்லைக் காட்டில் உருண்டு புரண்டு வரும் கல் எத்தகைய தேய்மானத்தை அடைகின்றது என்பதையும், அம் முறையான தேய்மானம் எத்தகைய வனப்பை உண்டாக்கி விடுகின்றது என்பதையும் அறிபவர், கால ஆறு தேய்க்கும் தேய்ப்பில் சொற்றேய் மானம் நிகழ்தலைக் கண்டு கொள்வர். அதே பொழுதில் கல்லின் வடிவு மாறினாலும் அதன் அடி மூலமும் வண்ணமும் மாறாமை போலச், சொல்லின் திரிபிலும் அதன் அடி மூலமும் பொருட்பேறும் மாறாமை கண்டு போற்றிக் கொள்வர்.  54. பொழுது பொழுது போகவில்லையே என்று வெதும்புவாரைப் பற்றிப் புகலவில்லை! பொழுது போதவில்லையே என்று வெதும்புவாரைப் பற்றி விளம்பவில்லை! பொழுதில் நல்லதும் அல்லதும் பகுத்துக் கொள்வாரைக் குறித்தும் கூறவில்லை! பொழுதுப் பெயர்கள் தாம் தமிழில் எத்தனை! எத்தனை! என்று எண்ணியது இப்பொழுது! அசைப்பு - கண்ணிமைக்கும் பொழுது அந்தி - கதிர்மறையும் பொழுது அந்திக்கருக்கல் - கதிர்மறைந்து இருளும்பொழுது அமையம் - அமைந்த நல்லபொழுது அரையிருள்யாமம் - நடுயாமப் பொழுது அல் - பகல் அல்லாத இரவுப் பொழுது அல்கல் - ஒளி சுருங்கி வரும் மாலைப் பொழுது இமைப்பு - கண்ணிமைக்கும் பொழுது இரவு, இரா - இருட்பொழுது இருண்மாலை - இருள் கப்பி வரும் மாலைப் பொழுது உச்சி - கதிர் உச்சியில் நிற்கும்பொழுது உருமம் - உச்சிக் கடுவெயிற்பொழுது உவா - நிறைபொழுது: 15 நாள் கொண்ட காலப் பொழுது எல் - கதிர் ஒளி செய்யும் பகற்பொழுது எற்பாடு - கதிர்மறையும் பொழுது எல்லி - கதிர் மறைந்த பொழுது எல்வை - கதிர் தங்கியுள்ள பகற்பொழுது ஓரை - நாளும் கோளும் ஒன்றியபொழுது கங்குல் - இரவுப்பொழுது கடி - மங்கலப் பொழுது கடிகை - மங்கல நிகழ்வுக்காம் பொழுது கணம் - கண்ணிமைப் பொழுது கருக்கல் - இருண்டுள்ள காலைப்பொழுது கலை - நொடி எட்டுக் கொண்ட பொழுது காட்டை- நொடி அறுபத்து நான்கு கொண்ட பொழுது காருவா - முழுதிருள் இரவுப்பொழுது கால், காலை - கதிர் காலூன்றும் பொழுது கிழமை - ஏழுநாள் கொண்ட பொழுது கொன் - அச்சமிக்க இருட்பொழுது கோதூளி - ஊர்க்காலி திரும்பும் மாலைப்பொழுது சந்தி - காலை தொடங்கும் பொழுது சந்திருக்கருக்கல் - காலைக்கு முற்பட்ட இருட்பொழுது சமையம் - தேர்ந்தமைந்த பொழுது சாயல் - கதிர் சாயும்பொழுது சாயுங்காலம் - கதிர்மறையும் மாலைப்பொழுது செக்கர் - மாலைச் செவ்வானப்பொழுது செவ்வி - செவ்விய பொழுது சொடக்கு - சொடக்குப் போடுதற்காம் பொழுது துடி - நாடி துடித்தற்காம்பொழுது நடுப்பகல் - பகலின் நடுப்பொழுது நடு இரவு - இரவின் நடுப்பொழுது நடு யாமம் - இரவின் இடையாமப்பொழுது நண்பகல் - நடுப்பகல் பொழுது நரை இருள் - நிலவொளி இல்லாத இளவொளிப் பொழுது நள்ளிரவு - நடு இரவுப்பொழுது நாள் - பகற்பொழுது; ஒரு பொழுது நிமிட்டு - விரலை நிமிட்டும் பொழுது நிமையம் - கண்ணிமைக்கும்பொழுது நிலை - வரம்பிட்ட பொழுது நுட்பம் - கால அடிப்படை அலகுப்பொழுது நேரம் - நேர்ந்துகொண்ட பொழுது நொடி - கைவிரலை நொடிக்கும் பொழுது பகல் - கதிருள்ள பொழுது படு ஞாயிறு - கதிர் மறையும் பொழுது பதம் - பக்குவமான பொழுது பருவம் - இயற்கை திரண்டு நிற்கும்பொழுது பாணி - இனிய பொழுது பால் - பகல் பொழுது பானாள் - நடு இரவுப்பொழுது, நடுப்பகற் பொழுது, பாதி நாட்பொழுது பிதிர் - கையுதிர்க்கும் பொழுது பிற்பகல் - உச்சிக்குப் பிற்பட்டபொழுது பின்னந்தி - அந்திக்குப் பிற்பட்ட பொழுது பின்னிரவு - நடுயாமத்துக்குப் பிற்பட்ட பொழுது புலர் காலை - விடிகாலைப் பொழுது புலரி - விடியும் பொழுது பொழுது - பொதுமை சுட்டும் பொழுது போது, போழ்து - பூமலர்தலால் குறிப்பிட்டபொழுது மங்குல் - மங்கிவரும் மாலைப்பொழுது மருண்மாலை - இருள் பெருகி வரும் மாலைப்பொழுது முழுத்தம் - முழுமதிப்பொழுது, மணப்பொழுது முற்பகல் - உச்சிக்கு முற்பட்ட பொழுது முன்னந்தி - அந்திக்கு முற்பட்ட பொழுது முன்னிரவு - நடுயாமத்துக்கு முற்பட்ட பொழுது யாமம் - நள்ளிரவுப் பொழுது வாரம் - ஏழுநாள் கொண்ட பொழுது விடியல் - இருள் விலகும் காலைப் பொழுது விடியற்காலை - இருள் விலகிக் கதிர் காலூன்றும் பொழுது வெள்ளந்தி - கதிர் கிளர்ந்து ஒளி செய்யும் காலைப் பொழுது வெள்ளுவா - முழுமதிப்பொழுது வெள்ளென - கதிர் வெளுக்கும் பொழுது வேலை - விரிந்தபொழுது வேளை - விரும்பும்பொழுது வைகல் - இருள் தங்கியுள்ள காலைப் பொழுது வைகுறுவிடியல் - விடியலுக்கு முந்திய கருக்கல் பொழுது. வைகறை - இருளை அறுத்த காலைப் பொழுது வைகுபுலரி - விடிபொழுதுக்கு முன்னிருள் பொழுது வைகுபுலர் காலை - வைகுபுலரிக்கும், காலைக்கும், இடைப் பட்டபொழுது.  55. முதனிலையும் முழுநிலையும் ஒரு சொல்லின் முதனிலை தனிச்சிறப்பினது. அது. முதல் இடத்தில் நிற்பதுடன் முதன்மை பெற்றதுமாம் கல்லூரி முதல்வர், மாநில முதல்வர் என்னும் பதவிச் சிறப்புகள் முதலானதுடன் முதன்மைச் சிறப்பும் காட்டுவனவாம். முதலாம் தன்மையே முதன்மை என்க. முதனிலை அளவில் அமைந்ததும் சொல்லாம் எனின், அச்சொல்லின் முழுநிலைச் சிறப்பு அம்முதனிலையிலே அடங்கியிருத்தல் கூடும் அன்றோ! முதல் என்பதற்குரிய பொருள் என்னும் பொருளும் முதலின் முதன்மைச் சிறப்பை வெளிப்படுத்தும். முதலாளி என்பது வழக்குச் சொல். முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்பது வள்ளுவம். ஊதியம் இல்லை யாயினும் ஒழியட்டும்; முதல் ஒழிந்து விடக் கூடாது என்பது சிந்தாமணி. உள்ளம், உயிர் என்பன முதன்மையானவையே. எனினும், இவற்றினும் முதன்மையானது உடல். அவ்வுடல் இல்லாக்கால் உள்ளம் எங்கே? உயிரின் உறைவு எங்கே? ஆதலால் உடல், முதல் எனப்படும். முதலும் சினையும் என்பது தொல் காப்பியம் (சொல். 89) சினையாவது உறுப்பு. மரம் செடி கொடிகளின் வாழ்வும் வளமும், வேரைக் கொண்டதே. அவ்வேர், முதல் எனப்படும். கிழங்கும் முதல் எனப்படும். அம்மட்டோ! உலகம் தோன்றுவதற்கு முதலாம் இயற்கை அல்லது இறையும் முதல் எனவேபடும்! மூவா முதலா என்பன சிந்தாமணியும், திருவாசகமும் (கடவுள் ; 27, 10) சொல் முதலாம் முதனிலையில் சொல்லின் முழுநிலை இருப்பதை இனிக் காண்போம். கேளிர்: இச்சொல், பழஞ்சொல்; பழகிப்போன சொல்லும் கூட! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனார் உரை இக்கால் மிகப் பரப் பானதே, கேளிர் என்பதில் முதல் நிலை எது, கேள் என்பதே முதல்நிலை, இக் கேள் என்பதிலே கேளிர் என்பதன் சிறந்த பொருள் அடங்கிக் கிடக்கிறது. கேள் என்று ஏவுகின்றது முதல்நிலை! எதைக் கேட்க ஏவுகின்றது! இன்பத்தைக் கேட்கவா? துன்பத்தைக் கேட்கவா? இன்பத்தைக் கேட்க எவரும் விரும்புவர்; துன்பத்தைக் கேட்பதற்குச் செவி சாய்ப்பவரே அரியர். ஆதலால் பிறர் கூறும் இன்பு துன்புகளைக் கேள் எனப் பொதுப்பொருள் தரும் எனினும், துன்பினைக் கேட்டலே கேள் என்பதன் ஏவற்பொருளாம். கேளும் கிளையும் கொட்டார்க்கில் என்பதன்றோ முதுமொழி. கெட்டகாலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை என்பதன்றோ பெருங்கதை? கேட்டிலும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் என்பதன்றோ வள்ளுவம்! ஒருவர் துயருற்றோ தொல்லையுற்றோ இழப்புற்றோ இழிப்புற்றோ வந்து தம் நிலைமையைச் சொல்லத் தவிக்கின்றார். அவர் அல்லலை மாற்றுவதும் மாற்றாததும் ஆய்வுக் குரியவே எனினும், அவர் சொல்வதைக் காது கொடுத்தாவது கேட்க வேண்டும் அன்றோ! அக் கேட்புத் தானே அதனைக் கூறுபவர்க்கு வாய்க்கும் முதல் ஆறுதல்! ஆதலால், அல்லல் பட்டு ஆற்றாது உரைப்பார் உரையைக் காது கொடுத்துக் கேட்பவர் எவரோ அவர் கேள்: கேளிர்; காது கொடுத்துக் கேளாதவர் எவரேயாயினும் அவர் கேளார்! (கேளிர் - உறவினர்; கேளார் - உறவிலார். ஒட்டு உறவு, கொண்டோர் கொடுத்தோர் என்பார் கேளல்லர். அவரே ஆயினும் சரி, அவரல்லா அயலாரே ஆயினும் சரி, புண்பட்டு வந்தவர் புகல்வுக்குக் காது கொடுத்துக் கேட்பவரே கேளிராம். காதுகொடுத்துக் கேட்டால் மட்டும் போதுமா? என வினாவுவார் உளர் எனின், காது கொடுத்துக் கேட்கவும் மாட்டாதவர் தாமா, ஓடி வந்து கை கொடுத்து உதவுவார் என மறுவினா வினாவுக! அண்மைக் காலத்தில் வாழ்ந்த சருக்கரைப் புலவர் என்பார், ஒருவர் சொல்வதைக் காசு கொடுத்துக் கூடக் கேட்க வேண்டாம்; காது கொடுத்துமா கேட்கக் கூடாது? என்பார். சொல்வதைக் கேட்க ஒருவர் இருந்தால் சொல்பவருக்கு ஓர் ஆறுதல் கிடைக்கும்! அவ்வாய்ப்பு இல்லாதுபோனால், வெந்த புண்ணில் வேல் துளைத்ததெனத் துயரேமிகும்! அதனால்தான், துயருக்கு ஆட்பட்டு வந்தவர் கேட்கப் பொறுக்காக் கடுஞ்சொல்லே சொன்னாலும் பண்புடைய அரசன் செவி கொடுத்துக் கேட்கவேண்டும்; அவ்வாறு கேட்பானாயின் அவன் ஆட்சியின் கீழ் உலகமெலாம் இனிது தங்கும் என்றார் திருவள்ளுவர். செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு என்பது திருக்குறள். அடியவர் கூறும் ஆற்றாமை உரையைக் கேட்டு அருள்பவன் இறைவன். ஆகலின் அவனை அப்பரடிகள் சொற்றுணை என்றார். நற்றுணை என்றும் நவின்றார். முன்னை நாளினும் இன்றை நாளில் மனநோயர் பெருகி வருவது கண்கூடு! அதிலும் முதுமையில் - செல்வாக்கு மிக்க பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற முதுமையில் - மன நோயராக உழல்வார் பெருகி வருகின்றனர்! அந்நிலை பெருகாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் கேளிராம் தன்மையால் பெரிதும் கூடுவதாம்! மனம்விட்டுப் பேச ஒருவர் இல்லையே! என்று மறுகுவார் எத்தனைபேர்கள்! இவர்கள் மனநோயர் ஆகாமல் தடுக்க வேண்டின் கேளிர், பெருக வேண்டும். இதனைக் கேட்பார் எத்துணையர்? துணிவு : துணிவு என்று பலரும் சொல்கிறோம். துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்று பழமொழி கூறுகிறோம். துணிவு என்பது யாது? துணிவு என்பதன் பொருளை, அதன் முதனிலையே தெளிவாக்குகிறது. அதன் முதனிலை எது? துணி என்பதே முதனிலை. ஒரு நெடும்பாவு ஓடுகின்றது ; அதில் துணித்து எடுப்பதே துணி எனப்படுகிறது. அறுத்து எடுப்பதால் அறுவை எனப் படுவதுபோலத் துணித்து எடுப்பதால் துணி எனப்படுகிறது. துண்டிக்கப்படுபவை துண்டு, துண்டம் எனப்படுவதும் கருதுக. துணிக்கப்பட்டது துணியாவதுபோல், துணித்து வந்தது துணிவு எனப்படுகிறது. மக்கள் பல்லாயிரவர் ஒருங்கு திரண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் நாம் துணிவினர் என்பது இல்லை. ஒருவர் இருவரையே துணிவினர் என்கிறோம்; பாராட்டுகிறோம்: சிறப்பிக்கிறோம். ஏன்? நடக்கக்கூடாத கொடுமை அல்லது தீமை நடக்கின்றது. அதைக் கூட்டமெல்லாம் கூடிக்கூடிப் பேசுகின்றது. ஆனால், அதனைத் தடுக்கும் துணிவு அவரெல்லார்க்கும் வந்து விடுவ தில்லை! எவரோ ஒருவர் அக்கூட்டத்தை விடுத்துத் துணிந்து (துண்டுபட்டு) செல்கிறார்; தட்டிக் கேட்கிறார். தடுத்து நிறுத்து கிறார்! அவரைத் துணிவானவர் என்று கூட்டமே சொல்கின்றது! தம்மில் இருந்து துணிந்துபோய்த் தாம் செய்ய முடியாததைச் செய்பவர் எவரோ, அவரைத் துணிவினர் என்பதும், அவர் தன்மையைத் துணிவு என்பதும் தக்கவை தாமே! கோடி கோடிப்பேர்கள் இருந்தாலும் ஆங்கிலவரை எதிர்த்துக் கப்பலோட்டுதற்குக் கிளர்ந்தவர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதற்கண் தனி ஒருவராகக் கிளர்ந்தவர் - வ. உ. சிதம்பரனாரே! அவர், கூட்டத்தோடு கூட்டமாக அமைந்து விடவில்லை! கூட்டத்தைத் துணிந்து வெளிப்பட்டார்! துணிவாளர்; எனப்பட்டார். நக்கீரத் தன்மை எத்துணைப் பேர்க்கு வாய்க்கும்! தமிழ்ச் சங்கப் பேரவையில் குற்றம் குற்றமே என்று துணிந்துகூற அவர் ஒருவர் தாமே முன் வந்தார்! பின்னை புனைவுச் செய்தியே ஆயினும், துணிவுச் சான்றாக அன்றோ நிலைபெறுகின்றது! கூட்டத்தோடு கூட்டமாக நின்றுவிடாத தனித்தன்மையே துணிவு என்பதை அதன் முதனிலை செவ்விதாகச் சொல்கின்றதே! ஒருவர் துணிந்து சொல்ல அல்லது செய்ய முற்பட்டு விட்டாரா? அவரைத் தொடர்ந்து ஒருவர் இருவரெனத் துணிந்து வருதல் கண்கூடு! முதற்றுணிவர் தலைவராகி விடுவார்! வழிந்துணிவர் துணிவுக்குழுவராகி விடுவார்: கிளர்ச்சி, புரட்சி, எழுச்சி என்பவற்றின் மூலவர் ஒரு துணிவர் தாமே! அத்துணிவர்க்கு மூலம் துணி தானே!  56. வண்ணமும் எண்ணமும் வண்ணம் பாடுதலில் சிறந்த ஒருவர் வண்ணச் சரபம் என வழங்கப்பட்டார். அவர் தண்டபாணி அடிகள். இன்னொரு புலவர் வண்ணக்களஞ்சியம் என வழங்கப் பட்டார். இவர்கள் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். வண்ணம் பாடுதலில் இணையற்று விளங்கிய ஒருவர் அருணகிரியார், அவர் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர். கம்பர் பாடிய வண்ணம் தொண்ணூற்றாறு என்பர். வண்ணத்தின் தனிச் சிறப்பு ஒலியொப்பு: மற்றொன்று அள வொப்பு! வண்ணத்தின் வரவு இவர்கள் காலத்தது அன்று! காரிகை, கலம் ஆகியவை காலத்ததன்று; தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்ட வரவினது. தொல்காப்பியர் தழிழ்வண்ணங்களை இருபதெனத் தெளிவாக வகுத்துக் காட்டி இலக்கணமும் தந்தார். அவர்க்கு முற்படவே அவ்வண்ணம் உண்டு என்பதையும் செவ்வண்ணம் சுட்டினார், அவ்வண்ணங்களுள் இரண்டு: வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்பன. வல்லெழுத்து மெல்லெழுத்து என்பன உயிர்மெய் யெழுத்தை அல்லவாம். மெய்யெழுத்தை அல்லது ஒற் றெழுத்தை என்க, அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. இப்பாடல் முப்பாலில் மூன்றாம்பாலின் முதற்பாடல். தலைவியைக் கண்ட தலைவன் ஐயுற்று எண்ணுகின்ற மயக்க மனநிலை. அதற்கு ஏற்ப மூன்று இடைவெளியாக மூன்றசை நிலைகள் (கொல்). வல்லொற்று ஒன்றும் வாராமையுடன் மெல்லொற்று மிகவுடைமை; அணங்கு: கணங்குழை; என் ; நெஞ்சு. இப்பாடலுக்கு அடுத்தது. அவன் பார்த்தான்; அவளும் பார்த்தாள்! இருவரும் பார்த்த பார்வை போராட்டமாயின. போராட்டத் தாக்குதல் பாட்டின் எழுத்திலேயே படிந்து கிடக்கப் படிப்பார் அறியப் பாடுகிறார் வள்ளுவர். நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைகொண் டன்ன துடைத்து எத்தனை வல்லொற்று; மூன்று நோக்கு; ஒரு தாக்கு; உடைத்து; முதற் பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் ஏன் இந்த ஒலி வேறுபாடு? எண்ண வேறுபாடு என்பதை வண்ண வேறுபாடாகக் காட்டுகிற உத்தியன்றோ இது! பொருளறிந்து - உணர்வறிந்து - சொல்லின் ஒலி வடிவு காட்டுதல் தேர்ந்த புலவர்க்கெல்லாம் நேர்ந்த வழக்கு ஆனால் பொது மக்கள் வழக்கு? புலவர் வழக்குக்குக் கொடைஞர் பொதுமக்களே என்பதை எண்ணுவார் எவரும் திண்ணமாய் அறிவர். நாட்டுப்பாடல்களிலே காண முடியா உணர்வும் சுவையுமோ ஏட்டுப்புலவர்களிடம் இருந்தன? பாட்டிலே வண்ணமென்ன வண்ணம்? முறையுரிமைப் பெயரிலேயே வண்ணம் காட்டி வனப்புத் தீட்டியதைப் பெற்றோர் பெயரே காட்டி நிற்கின்றனவே! அம்மை அம்மா அம்மே அம்மோ என்பவை இயல் வடிவும் விளிவடிவுமாய் வழங்கும் தாயின் பெயர். ஈதொன்று தானா? அன்னை அன்னா அன்னே அன்னோ அஞ்ஞை அஞ்ஞை அஞ்ஞே அஞ்ஞோ என்பனவும் தாய்க்குரிய இயல் வடிவும் விளிவடிவுமாக வழங்கும் பெயர்கள். அஞ்ஞை இந்நாள் வழக்கென எண்ணம் வருகிறதா? அஞ்ஞை, நீ, ஏங்கி அழல் என்பது சிலப்பதிகாரம். தந்தைக்கு வழங்கும் பெயர்கள்: அப்பன் (ர்) அப்பா அப்பே அப்போ அச்சன் அச்சா அச்சே; அச்சோ அத்தன் அத்தா அத்தே அத்தோ இவை தந்தைக்கு இயல்வடிவும் விளிவடிவுமாய் வழங்கும் பெயர்கள். இப் பெயர்களுள் சில அருகிய வழக்கின. இலக்கிய ஆட்சியில் மட்டும் உள்ளனவும் உள. ஆயின், நம் ஆய்வுக்கு அருகிய வழக்கும் பெருகிய வழக்கும் தடையாவதில்லை. அச்சன்.... அச்சோ தமிழ் வழக்கா என ஐயமா? மாணிக்கவாசகர் அச் சோப் பதிகம் சான்றில்லையா? முன்னவை மூன்றும் அம்மையைப் பற்றியவை: மெல்லி னத்தியல்பவை. பின்னவை மூன்றும் அப்பனைப் பற்றியவை: வல்லினத் தியல்பவை. அம்மை அப்பனை இப்படித் திட்டமிட்டு வைத்தாற் போல் மெல்லினமாகவும், வல்லினமாகவும் அமைப்பானேன்? பெண்மை ஆண்மை இயல்களை ஒலியலகால் - வண்ண வகையால் - சொல்ல எண்ணம் கிளர்ந்த தெனலாமோ?  57. முறைப் பெயர் தமிழில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப்பெயர்கள் உண்டு என்று ஓரன்பர் வினவினார். அவர் பன்மொழிப் புலமையாளர்; பட்டறிவும் வாய்ந்தவர்; புதியன கண்டு போற்றுதலில் பூரிப்பவர்; அவர் வினாவுதல் மகிழ்வு தந்தது. ஆனால், யான் அதற்கு நேர்விடை கூறாமல் வினாஎதிர் வினா என்னும் முறைப்படி, ஆங்கிலத்தில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப் பெயர் வழங்குகின்றது என்றேன். தந்தை, மகன், தாய், மகள் என்று இரு பரம்பரைக்கே உண்டு. அதற்கு முன்பின் உள்ள பரம்பரைக்கு அவற்றின் ஒட்டுப் பெயர்களே உண்டு. தனிப்பெயர் இல்லை என்றார். நன்றி; மகிழ்ச்சி என்று கூறிய யான், தமிழில் எத்தனை பரம்பரைக்கு முறைப்பெயர் உண்டு என்பது நீங்கள் அறிந்தது தானே! அவை மிகுதியானவை அல்லவா? என்றேன். ஆம்! ஐந்து பரம்பரைக்கு உண்டு என்று நினைக்கிறேன் என்று கூறிய அவர் அவற்றைச் சுட்டினார். இவ்வளவு தானா? இன்னும் உண்டா என்றார் மீண்டும்! ஒன்பது பரம்பரைக்குத் தமிழில் முறைப்பெயர் உண்டு என்று யான் கூறவும் அவர், தம் கண்களை அகல விரித்து வியப்புடன் தம் கையைத் தலைமேல் வைத்துக் கொண்டு ஓ! flîns m›tsî brh‰fŸ c©lh? என்றார். அதன் பின்னே தமிழிலுள்ள முறைப்பெயர்களைப் பற்றி உரையாடினோம். அவருக்கு வியப்பான செய்திகள் பல எனக்குப் புதியதோர் ஆய்வுத் தலைப்பாட்டு வாய்ப்பு! எந்த ஒரு தூண்டலும் துலக்கத்திற்கு உண்டாவனவே என்னும் கடைப் பிடியைக் கொண்டால் ஆய்வுத் துறைகள் புதிது புதிதாக வந்துகொண்டே இருத்தல் உறுதியாம்; உண்மையுமாம்! முறைப்பெயர் ஆய்வு பழமையானது. ஆசிரியர் தொல் காப்பியனார் முறைப்பெயரை நன்கு ஆய்கிறார். அது விளி யேற்கும் முறையே விரித்துரைக்கிறார். முறைப் பெயர்க்கு வரும் எழுத்துகளையும் இயம்புகின்றார். முறைப் பெயர் என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் அருமையானது. பிறப்பு முறைபற்றிய பெயரே முறைப் பெயர் என்பது அவர்கள் தரும் விளக்கமாம். பிறப்பு முறையால் தானே தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேர்த்தி என்பனவெல்லாம் இயல்கின்றன. முறைப்பெயர்கள் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களில் ஏற்ப வேறுபடுதல் தனிச்சிறப்புக்கு உரியதாம். என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? என்னும் பொருளமைய குறுந் தொகைப் பாட்டொன்று வருகின்றது. அது, யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? என்பது. இதில் யாய், ஞாய்; எந்தை, நுந்தை எனத் தன்மை முன்னிலை இடங்களுக்கு ஏற்ப முறைப்பெயர் வருதலை அறிகின்றோம். ஆனால், தொல், சொல், உரையாசிரியர் தெய்வச் சிலையார் மூவிடங்களிலும் வரும் முறைப் பெயர்களை விளக்குகிறார். தந்தை, நுந்தை, எந்தை எனவும், தாய், ஞாய், யாய் எனவும் தம்முன், நும்முன், எம்முன் எனவும், தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன் பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருண் முகத்தால் தம்மையும் பிறரையும் உணர்த்துவான் என்கிறார். முறை என்பது பிறப்பொடு வந்த முறைமையல்லவோ? அதனால் உற்றார் உறவினரை முறை வைத்துக் கூப்பிடுவர் அதனை முறைமையாகப் போற்றுவர். முறையாவது நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, நடைமுறை என்னும் பொருள்களை யெல்லாம் தரும் சொல். முறை மாப்பிள்ளை முறைப் பெண் என்பவை இன்றும் உள்ளவையே. முறை கேடாக நடப்பவர் முறைகேடர் எனப்படுவார். முறை தவறிப் பார்த்தாலும், முறைத்துப் பேசுவராகவும் இகழப்படும். KiwnfL elªJ É£lhš ‘Kiwnah? என்று முறையீடு செய்வதும் வழக்கம். முறை செய்து காப்பவனே இறை என்பது அறமுறை! இப்படி முறைமுறையே சொல்ல இன்னும் எத்தனை எத்தனையோ முறைகள் இருக்கின்றன! இருந்தும் முறையே முகத்திலே அறைந்து தள்ளி, அதன் முதுகின்மேல் பாந்தத்துவம் (பாந் துவம்) ஏறிக்கொண்டு உலா வருகின்றதைக் காண்கிறோம். தமிழில் முறைப் பெயர் ஒன்றா இரண்டா? நூற்றுக்கு மேலுண்டு! அப்பா அம்மாவுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? பாட்டன் பாட்டிக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? அண்ணிக்கு ஒரு பெயர் மட்டுமா? ஊரூர்க்கு எத்தனை பெயர்கள்? ஒவ்வோர் இனத்திலும் ஏன்? குடியிலும் எத்தனை பெயர்கள்? இவற்றையெல்லாம் எண்ணினோமா எண்ணித் தொகுத்தோமா? தொகுத்து எழுதினோமா? எல்லை காண வில்லை என்றாலும் இயன்றதையாவது முயன்று திரட்டினோமா? இல்லையே? முறைப்பெயர், வாழ்வுக்கு அப்பாற்பட்டது இல்லையே! வாழ்வோடும் ஒன்றி உடனாகி இருப்பதுதானே! அரும்பாடு பட்டு மண்டையை உடைத்துத் தேடவேண்டியதும் இல்லையே. பக்கம் பக்கமாக நூலைத் திருப்பிப் பார்க்க வேண்டியதும் இல்லையே! அங்கங்கு அப்படி அப்படி வழங்கும் மூறைப் பெயர்களைப் பெருங்குணத்தோடும் - மொழித்தொண்டு என்னும் எண்ணத்தோடும் - வரலாற்றுத் தொகுப்பு என்னும் உணர்வோடும் ஈடுபட்டால் - ஒவ்வொரு வரும் தாம் தாம் அறிந்த - தமக்குத் தொடர்புடைய முதுவர் வழியாக அறிந்த சொற்களை அவற்றின் விளக்கத்தோடு வரைந்தால் எவ்வளவு பெரும்பணியாகத் திகழும்! எத்தனையோ அருமையான இனிமையான - அதே பொழுதில் தனித் தமிழுக்கு ஊற்றமான சொற்கள் கிட்டுமே! அகராதிகளிலும். புனைவு நூல்களிலும் புதிய ஆய்வுளிலும் இடம் பெறுமே! ஒரு வட்டாரத்தின் அளவில் - ஓர் இனத்தின் அளவில் - ஒரு குடும்பத்தின் அளவில் அமைந்து கிடக்கும் முறைப்பெயர்கள் மக்கள் பொதுச் சொத்தாகப் பயன்படுமே! வருங்கால வழி முறையினர் எங்கள் முந்தையர் தந்த செந்தமிழ்வளம் என்று சிறப்பித்துப் பயன் கொள்ள வாய்ப்பாகுமே! அன்பர்களே, ஆர்வலர்களே, ஆய்வுத் தலைப்பாடு உடையவர்களே, உங்கள் உங்கள் உள்ளுள் ஆட்சி செய்யும் முறைப் பெயர்களை விளக்கத்துடன் எழுதுதல் முறை சிறக்க உதவும். எத்தனை எத்தனையோ நூறாயிரம் சொற்களை வழங்கிய தமிழுக்கு, நாமறிந்த சொற்களையாவது அழியாமல் காக்கும் நன்றிக்கடன் செலுத்துதல் முறைமையன்றோ. தொல்காப்பியத்தில் நூன்மரபு, மொழிமரபு, முதலியவை உண்டு. மரபியல் என்னும் பெயராலே ஓர் இயலும் உண்டு. மரபின் சிறப்பினை இவை தெரிவிக்கும். மரபு என்பது யாது? முன்னவர் எந்தச் சொல்லை எந்தப் பொருளில் வழங்கினார்களோ அந்தச் சொல்லை அந்தப் பொருளில் வழங்குவதே மரபாகும். ஆதலால் மரபு மயங்கா மரபு என்றும் மாறா மரபு என்றும் சுட்டப் பெறும். மேலும், மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் என்றும், மரபுநிலை திரியின் மான மில்லை என்றும் சொல்லவும் படும். மொஷீ மரபுக்குளீய ஹிவ்ஜீலக்கணம் குடிமரபு அல்லது வஷீ மரபுக்கும் பொருந்துவதாம். மரபு என்னும் சொல்வழக்கு எவ்வாறு வந்தது, ஒரு மரத்தின் வித்து அதே மரத்தை மீண்டும் தோற்றுவிக்கின்றது. அதன் தன்மையும் அப்படியே அமைகின்றது. அதனால்தான் தொல்காப்பியர் குறித்த புளியும் மாவும் அவர் சொல்லிய சுவையை நாம் இன்றும் சுவைத்து அறியுமாறும், அப்பெயர்ப் பொருத்தத்தை உணருமாறும் வாய்க்கின்றனவாம். நாளும் பொழுதும் அவை மாறும் இயல்புடையவையாயின் அவர் சொல்லியவை, நமக்குப் பொருந்தாமலே போயிருக்கும். கோடு வாழ் குரங்கு மூவரி அணில், மாயிருந் தூவி மயில் என்றும் ஆல்வேல் என்றும் அவர் சொல்லியவற்றை இன்றும் நாம் அப்படியே போற்ற முடிகின்றதாம். மாறா இயல்பினதாம் ஒன்றை, மரத்தைக் கொண்டு உவமை வகையால் சுட்டியதே மரபு ஆயிற்றாம். ஏனைச் செடி கொடி விலங்கு பறவைகளும் மரபு நிலை மாறாதவையே எனினும், ஒன்றை எடுத்துக்காட்டால் விளக்க முயல்வார் கொள்வனவற்றுள். நிலைத் திணைக்கே முன்னுரிமை தருதல் முறைமையாம். இயங்கு திணையோ, நிலைத்திணையின் வழிப் பட்டதேயாம். ஆதலால் மரம் என்பதைக் கொண்டே மரபு எடுத்துக்காட்டப்பட்டதாம். இனிக் கொடிவழி எனவும் மரபு சொல்லப்படுவதுண்டு. அதுவும் நிலைத் திணையாதல் கருதுக. ஒரு கொடியின் வேர் ஓரிடத்து இருந்தாலும் அது கொடியாய்த் தளிர்த்துப் படர்ந்து ஓடி ஆங்காங்குக் கிளைவேர் ஊன்றிப் பூத்துக் காய்க்கும். ஆயினும் அதன் ஒரு கொடித்தன்மை மாறாமை தெளிவாம். ஆதலால், கொடி வழி என்பதும் குடி வழி என்பதும் ஒன்றாய் அமைந்தன. மாந்தர் அனைவரும் ஒரு குலம்; அவருள் தமிழராவோர் ஓர் இனம்; அவருள் சேரர் சோழர் பாண்டியர் வேளிர் பல்லவர் கங்கர் எனப்பட்டோர் தனித்தனிக்குடியினர். சோழர் இருவர் போரில் எதிர்த்து நின்றபோது குடிப்பொருள் அன்று நும்செய்தி என்று கூறும் புலவர் வாக்கும், பழங்குடி என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை விளக்கமும் குடி என்பதை நன்கு விளக்கும். குலம் வேறு குடிவேறு என்பதும் விளங்கும். குலம் பெரும் பிரிவுக்கும், குடி அதன் உட்பிரிவுக்கும் உரியது என்பதும் தெளிவாம். இதனைக் குலமும் ஒன்றே குடியும் ஒன்றே எனவரும் கபிலர் அகவல் தெளிவிக்கும். இடைக் காலத்தே குடிப்பெருமையைக் குலப் பெருமையாகச் சுட்டினர். குலமுறை கிளத்து படலங்களும் வகுத்துப் பாடினர். நிற்க. மரபு, கொடிவழி, குடிவழி, வழிவழி, வழிமுறை, தலை முறை, பரம்பரை என்பனவெல்லாம் ஒரு பொருளனவாய் வழங்குவன. இவற்றுள் பரம்பரை என்னும் ஆட்சி பிற்காலத்த தாம். ஆனால். அதன் பொருளமைதி முற்பட்டதாம். பரம் என்பது இறைவன்; பரை என்பது இறைவி; இறைவன் இறைவி முதலாக வருவது பரம்பரை என்பதாம். இக்காலத்துப் பலப்பல குடியினரும் தங்கள் குடி முதல்வனைத் தெய்வநிலைக்கு ஏற்றிச் சொல்லுதல் அறியத்தக்கதாம் முன்பும் சேரர் செந்தீயையும், சோழர் செங்கதிரையும், பாண்டியர் வெண்டிங்களையும் தங்கள் குலமுதலாகக் கொண்டமையும் கருதத்தக்கதாம். அம் முறையில் முதுபழந்தலைவனும், முதுபழந்தலைவியும், சேயோன் என்றும் பழையோள் என்றும் சுட்டப்பெற்றனர். சேயோன் என்னும் முதுவன்பெயரே சிய்யான் என இந்நாளில் வழங்கு கின்றதாம். சோயோன் என்னும் தொல்பழமுதியன் பெயர், செந்நிறங் கரணியத்தால் தன்மைப் பெயராயும் வழங்கிற்றாம். சிவன் என்பதும் அரன் என்பதும் செந்தீவண்ணன், சிவந்தவன் என்னும் பொருளவேயாம். அவன் மனைவியாம் முதுமகள் பழையோள் என்று முந்து நூல்களில் சுட்டப் பெறுதல், பழையோள் கணவ, என்பதால் புலப்படும். சேய் என்பதற்கு மகன் எனப் பொருள் கண்ட புனைவு உலகே, சிவனுக்குச் சேயாகச் செவ்வேளைப் படைத்துக் கொண்டதாம். பழையோனாம் பாண்டியனைச் சேய் என்று கழக நூல்கள் குறித்தனவாம். முதுமுதல்வன் முது முதல்வி பெயர்கள் இவ்வாறு அமைந்த முறையில் இருந்து பரம்பரை ஆட்சி சொல்லப்படுகின்றது என்க. உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒன்பது பரம்பரைக்கு வரும் என வழங்கும் பழமொழி ஒன்பது பரம்பரையைச் சுட்டும். அவை: ஆண்பால் பெண்பால் 1. சேயோன் பழையோன் 2. ஓட்டன் ஓட்டி 3. பூட்டன் பூட்டி 4. பாட்டன் பாட்டி 5. தந்தை தாய் 6. மகன் மகள் 7. பேரன் பேர்த்தி 8. கொள்ளுப்பேரன் கொள்ளுப் பேர்த்தி 9. எள்ளுப் பேரன் எள்ளுப் பேர்த்தி இவ்வொன்பான் தலைமுறைப் பெயர்கள் இவ்வொழுங்கில் அமையினும், இக்கால வழக்கில், மாறியும் திரிந்தும் கிடத்தல் உலகியலை நோக்க நன்கு அறியப்பெறும். தாயும் தந்தையுமாம் இருவரும் பெற்றோர் எனப் படுகின்றனர். கல்வி செல்வம் வீரம் வினையாற்றல் இன்ன பலவற்றை அவர்கள் பெற்றிருந்தாலும். அவற்றைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் பெற்றோர் எனப்படுவதில்லை. மக்களைப் பெற்றதனாலேயே பெற்றோர் எனப்படுகின்றனர். மக்களைப் பெறுவதைப் பேறு என்பதும், அவர்களைப் பெற்றெடுக்கும் காலத்தைப் பேறு காலம் என்பதும் கருதத் தக்கனவாம். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்றார் திருவள்ளுவர். பெற்றோன் என்பது தந்தையையும், பெற்றோள் என்பது தாயையும், பெற்றோர் என்பது இருவரையும் குறித்தல் எவரும் அறிந்ததே. இப்பெயர்களை ஆழ்ந்து நோக்கினால் சில சிக்கல்கள் உண்டாம். தாயைப் பெற்றோள்! என்பது தகும்; தந்தையைப் பெற்றோன் என்பது தகுமோ என்பது முதலாவதாக எழும் சிக்கல். பெறுதல் என்னும் மூலப்பொருளை ஆய்ந்தால் சிக்கல் தீரும்! ஒருவன் ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகின்றான். அதனை ஒருவன் பெற்றால் அவன் பெற்றவன் ஆகின்றான். உலகியலில் உள்ள தருதல் பெறுதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும் தந்தை என்னும் பெயர்க்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாம். மகவைத் தந்தவன் தந்தையானான்! அதனைப் பெற்றுக் கொண்டவள் பெற்றோள் ஆனாள். ஆனால் தந்தையைப் பெற்றோன் என்பது பொருந்தாதே என்னும் ஐயம் எழும். முந்தை இலக்கண முறையை அறிந்தவர் ஐயுறார்; இலக்கியச் சான்று கண்டு மகிழ்வர். தலைவி ஒருத்தியைத் தலைவனிடம் ஒப்படைக்கும் மங்கல விழா மகட்கொடை எனப் பண்டு வழங்கப்பட்டது. கொடுப் போரும் அடுப்போரும் இருந்து மகட்கொடை நிகழ்த்திய நிகழ்வையும், கொடுப்போர் இன்றி அயலாரே கொடைநேர்ந்து உதவிய நிகழ்வையும் இலக்கண இலக்கியங்கள் விரிந்த அளவில் சுட்டுகின்றன. மகட்கொடையை ஏற்பவன் என்ன பெயர் பெறுவான்? பெற்றோன் ஆவன் அல்லனோ? ஆதலால், தலைவி யொருத்தி பெற்றோள் என்னும் பேற்றைப் பெறுமுன் தலைவனே அத்தலைவியைப் பெற்றுக் கொள்ளுதலால் பெற்றோன் என்னும் பேறு பெற்றுவிட்டான் என்க. இதனை விளக்கு முகத்தான். பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு (அகம். 86) என்று மங்கல மகளிர் மணவிழாவில் வாழ்த்தும் திறத்தை அகப்பாட்டுக் கூறுகின்றது. ஆகலின், தலைவியைப் பெற்றமையால் தலைவன் பெற்றோனாதலும், அத் தலைவன் தருதலால் மகவைப் பெறும் தலைவி பெற்றோள், ஆதலும், இருவரும் இக் கரணியங்களால் இணைந்து பெற்றோர் ஆதலும் விளக்கமாம். மேலும் ஒரு கருத்தும் இணைந்து நோக்கத் தக்கதாம். தாய், மகவை ஈன்று புறந்தருகின்றாள். அதனைப் பெற்றுப் பெரு நிலைப்படுத்துதலில் தந்தையின் பங்கு முதன்மையுடையதாய் முந்து இருந்தது இதனை, வீறுசால்புதல்வற் பெற்றனை இவணர்க்கு எனவரும் பதிற்றுப்பத்து விளக்கும் (74) தந்தையோடு கல்வி போம் என்பதும் சுட்டும். கணவனுக்குக் கொண்டான் என்னும் பெயருண்மையும், கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்னும் பாட்டுண்மையும் இதனை மேலும் விளக்கும். பெற்றோன், பெற்றோள் என்பவை அடிப்படைப் பொருள் கருதாமல் தந்தை, தாய் என்னும் பொருளில் வழங்கலான பின்னர், ஈன்றோன், ஈன்றோள் என்பவை ஈனுதல் நிலையாலும், பயந்தோன், பயந்தோள் என்பவை மக்களின் பயன்பாட்டு நிலையாலும் வழக்கில் ஊன்றினவாம். ஈன்ற பொழுதிலும் சான்றோன் எனக் கேட்டபொழுது ஈன்றாளுக்கு இன்பந்தருதலைப் பழ நூல்கள் பலவும் பாரித் துரைக்கும். ஈனில் இழைத்து (முட்டை இட்டுக் குஞ்சு பொரித் தற்காகக் கூடு அமைத்து) இன்புறும் பறவையை அகப்பாட்டுத் தெரிவிக்கும். கணவர் உவப்பப் புதல்வர் பயந்ததை மதுரைக் காஞ்சி தெளிவிக்கும். ஆகலின் காலமுறையால் தலைவன் தலைவியர் முதற்கண் பெற்றோர் ஆதலும், பின்னர் ஈன்றோர் ஆதலும், நிறைவில் பயந்தோர் ஆதலும் முறையாய் விளங்கும். இம் முப்பெயர்க்குப் பின்னே குறைவிலா நிறை பெயராய் வருவது குரவர் என்னும் பெயராம். குரவராவார் உள்ளொளி வாய்ந்த ஒள்ளியர் என்க. இனிப், பெற்றோரைக் குரவர் என்பதும், முதுகுரவர் என்பதும் இருமுது குரவர் என்பதும் புதுவதன்று; பழைய வழக்காறேயாம். இவற்றுள் முன்னை இரண்டு, பெற்றோர் எனத் தாய் தந்தை அளவில் நிற்கப் பின்னைவரும் இருமுதுகுரவர், என்பதோ தலைவன் தலைவியர் ஆகிய இருபால் குடும்பத்து இருபெரும் பெற்றோர்களையும் சுட்டும் சீர்மையது என்பதை எண்ணின் இனிக்கும் செய்தியாம். இருமுதுகுரவர், ஏவலும் பிழைத்தேன் என்பது கண்ணகி முன்னர்க் கோவலன் கலங்கியும் கனிந்தும், கண்ணீர் வார்ந்து முரைக்கும் உரை என்பதைக் கருதலும் தகும்! ஆதலின் பயந் தோரினும் உயர்முதுநிலை குரவர்நிலை என்பதைக் கொள்ளுதல் ஏற்புடையதாம். தலைவன் - தலைவி, கிழவன் - கிழத்தி என்பவை திருமணத் திற்கு முன்பு சுட்டப் பெறும் பெயர்கள். மணமகன் மணமகள் எனவும், பின்னர்த் திருமணத்தின் போழ்தில். கணவன் மனைவி எனவும், துணைவன் துணைவி எனவும் ஆளன் ஆட்டி எனவும் வழங்கப்பெற்றனர். இவையெல்லாம் பெற்றோர் என்னும் பெரு நிலை எய்துதற்கு முன்னவை. ஆனால், பெற்றோர் முதலாகச் சுட்டப் பெற்றவையோ மகப்பேறு தொட்டுப் பின்னே வருபவையாம். இன்னும் ஒரு குறிப்பே இவண் நோக்குதல் நலமாம். மகப்பேற்றின் முன்னர்த் தலைவன் தலைவி, கணவன் மனைவி எனத் தலைவனுக்கு முதன்மையும், மகப்பேற்றின். பின்னர்த் தாய் தந்தை, அம்மையப்பன் எனத் தலைவிக்கு முதன்மையும் வழங்குதல் மரபாகக் கொள்ளப்பெறுதல் என்பதாம். இப் பேறு குலம் தருதல் என்பதால் மகளிர்க்கு வாய்த்ததாம். குலம் தருதலாவது, புதல்வற் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல் என்பதாம். (சீவக. 2141 நச்) தாய் என்னும் முறைப்பெயரைக் காணலாம். தன்மை முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவாக அமைந்த முறைப்பெயர் ஆய் என்பதாம். அப்பெயர் தன்மையில், எம் ஆய் எனவும், முன்னிலையில் நும் ஆய் எனவும், படர்க்கையில் தம் ஆய் எனவும் வழங்கின. ஆய்க்கு அமைந்த இம் மூவிட முறைப் பெயர்களே பின்னர் முறையேயாய், ஞாய், தாய் என ஆயின. இவ்வாட்சி பழங்காலத்தில் மாறாமல் வழங்கின என்பது பழைய இலக்கியங்களால் அறியப்படுகின்றன. ஆனால், ஆய் என்பதன் இடத்தைத் தாய்பற்றிக் கொண்டதால் எம்தாய் நும்தாய், தம்தாய் என இக் காலத்தில் வழங்குகின்றன. ஆய் என்பது ஆயி என இகர இறுதி ஏற்று வழங்குவதும் உண்டு. ஆய் என்பது போலவே ஓய் என்பதும் பெற்றோள் பெயராக முன்பு வழங்கியது. ஆரண மறையோன் எந்தை அருந்ததிக் கற்பின் எம்மோய் என்பது கம்பர் வாக்கு. “MŒ XŒ v‹W V‹ f¤J»whŒ? என்னும் வழக்கு, ஓய் என்பதன் ஆட்சி இருந்தமையை வலியுறுத்தும். எம்மோய், நும்மோய், தம்மோய் என்பன முறையே மூவிடங்களுக்கும் முறைமை பூண்டு இருந்தனவாம். முறைப் பெயர்களாக வழங்குவனவற்றுள் பெரும்பாலனவும் விளிப் பெயர்களே! அம்மா, அப்பா, அக்கா, மாமா, தாத்தா முதலிய முறைப் பெயர்கள் விளிவடிவாகவே இருத்தல் அறிக. அடிக்கடி அழைத்து, அழைத்த பெயரே பெயராக அமைந்து விட்டமையால் முறைப்பெயர்கள் விளிப் பெயராக அமைந் துள்ளனவாம். அம்மை, அம்மு, அம்மன் என்பவை தாயைக் குறிக்கும் பெயர்கள். இவை அம்மா என்னும் விளிவடிவாய் நின்றன. அம்ம என்பது அண்மை விளியாம் அது, யான் சொல்வதைக் கேட்க என்னும் பொருளில் வழங்கலாயிற்று. அதனால், அம்ம கேட்பிக்கும் என இலக்கணம் வகுத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். குறவஞ்சி நூல்களில் அம்மே என்னும் விளிப்பெயர் பெருக வழங்கும். உலக வழக்கிலும் பெருக வழங்குவதே. அம்மோ என்பதும் வழக்கில் ஊன்றியதேயாம். ஏ அம்மே என்பது எம்மேங் என்றும், ஏ அம்மோ என்பது எம்மோ என்றும் வழங்கப் பெறுதலும் எவரும் அறிந்ததே. அம்மை என்பது அம்மா என ஆயினாற்போல, அன்னை என்னும் பெயரும் அன்னா என வழங்கும். அம்மே என்பது போல அன்னே எனவும் வழங்கும் ஐ என்னும் ஈறு ஆய் என்னும் ஈறாகும் என்பதன்படி, அன்னாய் எனவும் வழங்கும். பழநூல்களில் இது பெரிதும் வழங்கப்படுவதாம். அம்மோ என்பது போல அன்னோ என வழங்குதலும் உண்டு. அன்னோ என்பது அந்தோ என்னும் பொருளில் வருதலும் வழக்கு, அன்னே என விளியாதல், அன்னே உன்னை யல்லால் ஆரை நினைச்சேனே என்னும் தேவாரத்தால் தெளிவாம். அஞ்ஞை என்பது தாயைக் குறிக்கும் முறைப்பெயரேயாம். இது அஞ்ஞா என விளிவடிவுபெறும். அஞ்ஞை என்பது அண்மை விளியாக அமைதல் அஞ்ஞை நீ ஏங்கி அழல் எனவரும் சிலப்பதிகாரத்தால் விளக்கமாம். அஞ்ஞை என்னும் பழந்தமிழ்ச் சொல் இக்காலத்தில் ஓரினத்தில் பெருபவழக் குடையதாய், அதுவே அவ்வினத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றன் பெயராய் வழங்கி வருதல் அறியத்தக்கதாம். அம்மை, அன்னை, அஞ்ஞை என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த மெல்லினமாய் அமைதலையும், அப்பன், அச்சன், அத்தன் என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த வல்லினமாய் அமைதலையும் நோக்குவார் ஒலியியலால் பண்பியலை விளக்கிய முந்தையோர் திறத்தை இனிதின் அறிவார். தாயைக் குறிக்கும் பெயர்களுள் ஆத்தாள் என்பதும் ஒன்றாம். அஃது இருவகை வழக்கிலும் ஒன்றியதேயாம். ஆத் தாளையும் ஆத்தாளின் ஆத்தாளையும், ஆத்தாளின் மூத்தாளையும் ஒரு பாடலில் குறிப்பார் காளமேகப்புலவர். ஆத்தாளை அபிராம வல்லியை என்பது அபிராமி அந்தாதி. ஆத்தாளுக்கு அரிசிபோட்டு, எரியூட்டலுக்கு உருகுவார் பட்டினத்தார். அகத்துரிமை யுடையவள் யாவள்? அவள் அகத்தாளாய் பின்னர் ஆத்தாளாய் ஆனாள். அகப்பை ஆப்பையாய், தொகுப்பு தோப்பாய், உவகை ஓகையாய், அமைந்ததாற் போல அகத்தாள் ஆத்தாள் ஆனாள். அகத்துக்காரி என்பவள் ஆத்துக் காரியாய் வழங்கப்படுதலை ஒப்பிட்டுக் காண்க. அகத்துக் காரியாக இருப்பவளே ஆத்தாளாகவும் அமைகிறாள் என்பதையும் கருதுக. ஆத்தாள் என்பது ஆத்தா ஆத்தே ஆத்தோ என விளியாகும் ஏ ஆத்தே என்பதும் ஏ ஆத்தோ என்பதும் ஏத்தே, ஏத்தோ என வழங்கும். தெளவை, ஔவை என்பன அம்மையைக் குறித்தல் மூத்தவள் பெரியவள் என்பதாலேயாம். தெளவை என்பது அக் கையையும் ஔவை என்பது தாயைப் பெற்ற தாயையும் குறிக்கும் முறைப் பெயர்களாம். சில குடும்பச் சூழல்களில் அவர்கள் தாய் நிலையையும் ஏற்க நேர்ந்த நேர்வால் இப்பெயர்கள் தாய்க்கு உரியனவாயின. தாயைக் குறிக்கும் அம்மா, ஆத்தா என்னும் பெயர்களை பொதுவாக விளிப் பெயர்களாய் அகவை நோக்குதலும் இல்லாமல் - வழங்குதல் அறியத்தக்கது. வாங்க அம்மா வா அம்மா என்பன போன்ற வழக்குகளை எண்ணுக. காளியம்மா, மாரியாத்தா என்பன போன்ற பெயர்களில் அம்மா ஆத்தா என்பவை பெயரொட்டாக அமைந்தமையும் தெளிக. இனி, அம்மையின் மூத்தாள் இளையாள் ஆகியவர்கள் பெரியம்மா, பெரியாத்தா, சின்னம்மா சின்னாத்தா, சிற்றவ்வை, சிற்றன்னை, சித்தி என வழங்குதல் எவரும் அறிந்ததே. அம்மாவின் உடன் பிறந்த இளையாள் அல்லது சிற்றன்னை நல்லம்மா, நல்லாத்தா, நல்லாயி என வழங்குதல் பழங்காலத்து வழக்கில் இருந்த நற்றாய் என்பதன் எச்சம் ஆகலாம். அம்மா, அம்மம்மா, அம்மம்மோ, அம்மாடியோ அத் தத்தா, ஆத்தா, ஆத்தாடி, ஆத்தாடியோ என வழக்கில் உள்ள உணர்ச்சிச் சொற்கள் அம்மையின் அரவணைப்பு, அணுக்கம், உருக்கம், உரிமை இன்னனபற்றி வழக்கில் ஒன்றியனவாம். அடித்தபோதும் அன்னா என்று அழும் குழவியையும், தடித்ததோர் மகனைத் தந்தையீண்டடித்தால் தாய் அணைத் திடுதலையும் எவரே அறியார்? தந்தை என்னும் பெயர்க் காரணம், முந்து கண்டோம். தந்தையை அப்பா என வழங்குவது இந்நாளில் பெரு வழக்கு. அப்பன், அப்பர், அப்பு, அப்பச்சி என்பவற்றின் விளிவடிவு, அப்பா என்பதாம். அவ் விளி வடிவே அப்பா அழைக்கிறார்; அப்பாவுடன் போகிறேன் எனப் பெயர் வடிவாகவே வழங்குகின்றது. அப்பே, அப்போ என்பவையும் விளி வடிவுகளே. ஏ அப்பே என்பதும் அப்போ என்பதும்ஏப்பே, எப்பே, ஏப்போ, எப்போ என வழங்குகின்றன. அப்பன் என்பது அப்பனார் என வழங்குவதும் உண்டு. அது, ஐயன் ஐயனார் என வழங்குவது போன்றது. முறைப்பெயராக வழங்கும் இப்பெயர் பிறரை மதித்து வழங்கும் பெயர்களாகவும் அமைகின்றன. தன்னில் முப்பரையும், இறையரையும்கூட இச்சொற்களுடன் உறவமைத்து அழைப்ப துண்டு. அப்பச்சி வாங்க; அப்பு வாங்க, வாங்க அப்பா, வா அப்பச்சி, வா அப்பு; வா அப்பா (வாப்பா) என்று வாங்க வா என முதுமை இளமை கருதிய அமைப்பு அன்றிப், பெயரில் வேறுபாடு இல்லாமை அறிக. ஐ, ஐயன், ஐயர், ஐயனார் என்பனவும் தந்தையைக் குறிக்கும். ஐயர் என்பது இவற்றின் விளி! ஐயர் என்பது சில இடங்களில் தந்தையைப் பெற்றவர் பெயராகவும் வழங்கும் அப்பா என்பதைத் தந்தைக்கும், ஐயா என்பதை அவரைப் பெற்றவர்க்கும் முறையாக வழங்குகின்றனர். அப்பசாமி, அப்புசாமி, ஐயாசாமி என்பன போல முறைப் பெயர், பெயர்வடிவில் நிற்றலும் வழக்கு. செல்லப்பன், செல்லப்பா, செல்லையா என்பன போலப் பெயரடையாக இவை நிற்றலும் கண்கூடு. அப்பன் போல வழங்கும் ஒரு சொல் அச்சன் என்பதாம். மலையாள நாட்டில் அச்சன் என்னும் பெயர் பெரு வழக்கிலுள்ளது. தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பெரு வழக்காக இருந்ததே, மலையாளம் தனிமொழித் தன்மையடைந்த காலத்துப் பெரு வழக்காகக் கொண்டிருக்கக் கரணியமாம். எழுத்தச்சன் என்பான் மலையாள எழுத்தை அமைத்துப் போற்றி வளர்த்த தந்தை ஆவான். கண்ணச்சன் முதலியோர் சிறப்புப் பெற்றவர். அச்சன் பற்று, அச்சன் புதூர் என்பவை தமிழகம், மலையாளம் தழுவிய ஊர்ப் பெயர்கள். இவை, அச்சன் என்னும் சொல் தமிழகத்தில் முற்றாக மறையவில்லை என்பதைக் காட்டும். மாணிக்கவாசகர் அருளிய அச்சோப்பத்து அச்சன் வழக்கின் எச்சமாம். அதன் ஒவ்வொரு பாடல் இறுதியிலும், அச்சோவே என்னும் முடிநிலை அமைந்திருத்தல் அறிக. இனி, அச்சச்சா அச்சச்சோ என்னும் உணர்வுக்குறிப்புகள் இந்நாளில் பெருவழக்குடையவை. அச்சச்சா அச்சச்சோ என்பவை அப் பப்பா, அப்பப்போ, அத்தத்தோ, ஐயையா, ஐயையோ என்பவை போன்றவை. அச்சன் போலவே அத்தன் என்பதும் தந்தையைக் குறிக்கும் பெயரே. அத்தா! உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே என்பது தேவாரம். அத்தன் என்னும் தந்தை பெயரே அவர் உடன் பிறந்தவளை அத்தை என்று முறை சொல்ல வைத்ததாம். அத்தையின் மகனை அத்தான் என்று அழைக்கவும் ஏளியதாம். அம்மையின் உடன்பிறந்தவனை அம்மான் என அழைக்கும் வழக்கை அறிவோம் அல்லவோ! அந்த அம்மான் சேய் தானே அம்மாஞ்சியாக விழிக்கிறான்! குடும்பத்தலைவனாகிய அப்பன், ஐயன், அச்சன், அத்தன், தந்தை ஆகிய பெயர்களை உலகத் தலைவனாம் இறைவனைக் குறிப்பதாக வழங்குதல் உலகெல்லாம் தழுவிய ஒரு பெரு வழக்காம். பாடும் புலவன் அல்லது வழிபடும் அடியன் தன்னை மகன்மை முறையிலும், இறைவனைத் தந்தைமை முறையிலும் கொள்ளும் அடிப்படையில் வந்த வழக்கமே இஃதாம். சுத்த சன்மார்க்க வேண்டுகோள் பகுதியில் வள்ளலார் இறைவனை, அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஐயா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் என்று தந்தையின் முறைப்பெயர்கள் நான்கை வழங்கியதுடன் அண்ணாநான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும் என்றும் வழங்கினார். சில குடும்பங்களில் அரிதாக அப்பாவை அண்ணா என அழைக்கும் வழக்கையும் கருதலாம். தந்தை என்பது படர்க்கைப் பெயர். தாய் என்பது போல, அவர் அப்பா என்னும் பொருள் தருவதாம். என் தந்தையும், எம் தந்தையும் எந்தையாம்; நின் தந்தையும் நும் தந்தையும் நுந்தையாம்; நின் என்பது நுன் எனவும் உன் எனவும் வழங்கும். நும் என்பது உம் எனவும் வழங்கும். ஆதலால் உன் தந்தையும் உம் தந்தையும் உந்தையாம். உம் எம் என்பனவும், தம் நம் என்பனவும் உங்கள் எங்கள் தங்கள் நங்கள் என வருதல் பன்மைமேல் பன்மையாகிய சிறப்புப் பன்மையாம். அப்பாவுக்கு முன் பிறந்தவரும் அம்மாவுக்கு மூத்த பெண்களை மணங்கொண்டவரும் பெரியப்பா, பெரிய ஐயா என வழங்கப்படுதலும், அப்பாவுக்குப் பின் பிறந்தவரும், அம்மாவுக்குப் பின் பிறந்த பெண்களை மணங்கொண்ட வரும் சிற்றப்பா, சின்னையா என வழங்கப்படுதலும் எவரும் அறிந்த செய்தி. சிற்றப்பாவை நல்லப்பன் என்பதும் உண்டு. அவரைக் குட்டியப்பா என்பதும் இளமை கருதிய பெயரே. குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டிப் பாலர் வகுப்பு என்னும் வழக்குகளால் குட்டிக்குரிய சிறியது என்னும் பொருள் விளக்கமாம்.  58. வட்டம் வட்டம் என்பது ஒரு வடிவப் பெயர். வட்டம் சுற்றி வழியே போ என்பது வழிநடைக்கும் வாழ்வு நடைக்கும் பொருந்திய பழமொழி. வட்டம் என்பதற்குரிய வடிவப் பொருள் விளங்க, வட்டமிடுதல் என்னும் வழக்குத் தொடர் வழங்கு கின்றது. பருந்து வட்டமிடுதல் நாம் பாராததா? வட்ட மிடுதலைக் கண்ட அளவில் கோழி தன் குஞ்சுகளைக் கூவி யழைத்துச் சிறகுக்குள் ஒடுக்கிக் காப்பது நாம் நோக்காததா? இன்று இல்லையானாலும், நாம் என்றோ வட்டத்திரி ஆடியிருப்போம். வட்டப்பாலை, வட்டணை என்பவை நம் பழங்கலைச் சொற்கள், வட்டத் தலைப்பா, வட்டத் தாமரை, வட்டத் துத்தி, வட்டச்சீட்டு, வட்டக் குடில் என்பவை வட்டத் தொடர்புப் பெயர்கள். வட்டாரம் என்பது சுற்றுப் புறமாக அல்லது சூழலாக அமைந்த நிலப்பகுதியைக் குறிப்பது. இந்நாளில் பெரு வழக்காக உள்ள வட்டம், மாவட்டம் என்பவற்றின் முற்பட்ட வழக்குச் சொல். வட்டமரம் என்பது. ஆலமரம். வட்டமாக விரிதலைக் கருதிய பெயர் அது. வடமரம் என்பது இடைக்குறையாய் ஆலமரத்தைக் குறிப்பதே. குளம், கேடயம், சக்கரம், திரிகை, கடல், நீர்ச்சால், பரிவேடம், கடகம், விசிறி, முதலியவை வட்ட வடிவ முடையவை யாதலால் இவை வட்டம் என்னும் பெயரால் வழங்கப் படுதலை அகர முதலிகளிலும், இலக்கியங்களிலும் காணலாம். மண்ணில் அமைக்கும் பீடத்திற்கும், விண்ணில் தோன்றும் பரிவேடத்திற்கும் வட்டப்பெயர் உண்மை, வடிவு கருதியதே. குழந்தை விளையாட்டுக் கருவியாம் கிலுகிலுப்பையும், வீரர் சுழற்றியடிக்கும் கருவியாம் வளை தடியும் வட்டம் எனப்படுவனவே. வட்டமாக வளைந்துள்ள நிலத்திற்கு வட்டகை என்பது பெயர். கறி வைக்கும் கிண்ணமும் சோறு வைக்கும் தட்டும் வட்டகைப் பெயர் பெறுதல் உண்டு. வட்டை என்பதும் அது, வடிவு நோக்கிச் சிறுவட்டை பெருவட்டை எனவும் வழங்கும். வட்டை, வட்டா எனத் திரிதல் தவறான வடிவாகும். வட்டத் தட்டு, வட்டக் கலங்களையே அது குறிக்கின்றது. வட்டி என்பது கூடை, பூந்தட்டு, கடகம் என்பவற்றைக் குறிக்கும். வட்டில் என்பது வட்டவடிவான உண்கலம், கிண்ணம், கூடை, கணைப்புட்டில் முதலியவற்றைக் குறிக்கும். வட்டித்தல் என்பது வளைந்து வருதல், திரும்பத் திரும்ப வருதல், சுற்றிச் சுழன்று வருதல், பரிமாறுதல் என்னும் பொருள் தருவது. வட்டியை - அதன் வரவை - வட்டித்தல் தெளிவாக விளக்குகிறது அல்லவா! முதலும் வட்டியும் வாங்குவேன் என்பதற்குப் பதில், வட்டியும் முதலும் வாங்குவேன் என்பது தெளிவாக்கி விடுகின்றதே. வட்டிவாசி என்பது இணைச்சொல் இன்ன காலத்திற்கு இத்தொகைக்கு இவ்வளவு என்று பேசி வாங்குவது வட்டி; அது சில காலம் கொடுக்கப்படாமல் இருந்தால் அவ்வட்டிக்கு வட்டி போடுவது வழக்கம்; அதனைக் குறிப்பதே வாசி. வட்டியும்; வட்டிக்கு வட்டியும் வாங்குதலைக் குறிப்பது வட்டிவாசி என்க. வட்டிகை என்பதும் கூடை, வட்டம் ஆகியவற்றைக் குறிக்கும். சூதாட்டத்தில் வைக்கும் பணையப் பொருளுக்கும் வட்டிகைப் பொருள் உண்டு. வட்டு - வட்ட வடிவமான பல பொருள்களைக் குறிக்கும். கருப்புக் கட்டியை வட்டு எனல் பெருவழக்கு. வட்டுக் கருப்புக் கட்டி எனல், சில்லுக் கருப்புக் கட்டி உள்ளமையால் வந்த ஒரு பெயர். கரும்பை ஆட்டிக் காய்ச்சிக் கட்டி எடுத்தலால், கருப் பட்டி என்பதும் (கருப்பு, அட்டி) கருப்புக் கட்டி என்பதும் தகவே, அதனை முன்னோர் அட்டு என்றனர். பனாட்டு (பனை அட்டு); கட்டி என்றனர் (கட்டி பூசிக் கடுத்தீற்றல்). வட்டு என்றும் வழங்கினர். வேம்பார் வட்டு பெரிய வட்டு சில்லு வட்டு சிறுவட்டு என்பனவெல்லாம் இடமும் வடிவும் குறித்து வருவன. சூதாடும் காய் வட்டுக்காய்; அது வட்ட வடிவினது. அதனால் சூதாட்டப்பணம் வட்டிகை ஆயது. அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டிக்கொளல் என்றார் திருவள்ளுவர். வட்டுக்காய், உருளாயம் எனவும் சொல்லப்படும். அதன் வடிவு விளக்கப் பெயரே அது சுற்றிச் சுற்றி வருதலால் சூழ்து என்பதே இடைகெட்டுச் சூது ஆயிற்று. உருட்டித் திரட்டிச் செய்வதும், உருண்டு திரண்டதும் வட்டு எனப் படுதலாய் உருட்டித்திரட்டிக் கட்டும் உடை வட்டுடை என்க. பண்டைப் போர் வீரர் உடை வட்டுடை என வழங்கப்பட்டது. வட்ட வடிவில் அமைந்த கைப்பைக்கு வட்டுவம் என்பது பெயர். வண்டிச் சக்கரத்தில் வளைவாய் அமைந்து பட்டைக்கு அகப்பட இருக்கும் கட்டைக்கு வட்டக் கட்டை என்பது பெயர். வட்டம் என்பதன் சுழற்சி. ‘v¤jid t£l« brhš»wJ?’ ‘v¤jid t£l« nf£»wJ?, போன வட்டம் என்ன சொன்னாய்? என முறை அல்லது தடவை எனப் பொருள் தருவதாக வளர்ந்தது. வட்டம் வாட்டியும் ஆயிற்று. போன வாட்டி என்பதில்லையா. வட்டு வண்டு ஆதலை அடுத்துத் தொடர்வோம்.  59. வடை வடையின் சுவை தமிழகம் நன்கறிந்தது. வடை என்னும் சொல்லின் ஆய்வும் சுவையாகவே அமைந்தது ஒரு கோயிலில் ஒரு தமிழன்பர் வழிபாட்டுக்குச் சென்றார். வடமொழி தானே கடவுளுக்குத் தெரியும்! தமிழ்நாட்டுக் கடவுள்களுக்குத் தமிழ் தெரியாது என்றல்லவோ அக்கடவுள் தலையில் கையடித்து உறுதி சொல்கின்றனர்! அதனால் வட மொழி மந்திரம் ஓதினார் பூசகர்! தமிழன்பர், வடவாடை வீசுகின்றதே என்றார். ஆமாம் வடைதான் படையலிட்டோம் (நெய்வேத்தியம் செய்தோம்) என்றார் பூசகர்; வடவாடை (வடமொழி வாடை) வட வாடையாவது நல்ல அதிரடி அன்றோ! ஓர் உணவு விடுதிக்குச் சென்ற ஒருவர் வடை வாங்கினார்; வடையைப் பிளந்தார்; பிளந்ததும், ஊசியிருக்கிறது என்று முகத்தைச் சுழித்தார். பக்கத்தில் இருந்தவர் ஊசி மட்டுமா இருக்கிறது? நூலும் இருக்கிறது என்றார். அடுத்திருந்தவர் வெளியே கையேந்திக் கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டித் தையலுக்கு ஆகும் என்றார்; ஊசியும் நூலும் இருந்தால் தையலுக்கு ஆகத்தானே செய்யும்! வடை பழையதானால் ஊசிப்போகும். ஆனால் தமிழ் இரட்டுறல் (சிலேடை) எவ் வளவு பழையதானாலும் ஊசிப் போகாது. வடையுள் ஒன்று ஆமை வடை; அதன் அமைப்பைப் பார்த்தவர் ஆமையுடன் ஒப்புமை கண்டு பெயரிட்டனர். ஆம வடை எனப்பட்டாலும் கூட அதன் உவமையை வெளிப்படுத்தி விடுகிறது! வடையுள் இன்னொன்று, தவல் வடை. தவலுக்கும் அந்த வடைக்கும் தொடர்பில்லை! தவலைக்கும் கூடத் தொடர் பில்லை, அதன் வடிவமைப்பு தவளை போலத் திருகி வளைந் திருப்பதைக் கண்டவர் தவளை வடை என்றார்! தவளையே தவக்களையாக வடிவெடுக்க அதற்குத் தவக் களை (தவத்தின் அழகு) எனப் பொருள் விரிக்கவும் அமையும்போது, தவளை வடை தவல்வடையாவது விந்தையாகுமா! வடையுள் இன்னொன்று பக்காவடை.. பகு - பகுப்பு - பக்கு என்பவை பிதிர்த்து விடுதல், பிரிந்து விடுதல், பிளத்தல் ஆகிய பொருள்களில் வரும். பிசைந்த மாவை எடுத்துப் பிதிர்த்து விட்டு வேகவைத்த வடை பக்குவடை எனப்பட்டு, பக்கா வடையாம், பக்கோடா பகோடா என வழங்குகின்றதாம்! பகோடா படோ என ஆனாலும் வியப்பில்லையே! வடமொழி என்பதை விளக்க வேண்டியதில்லை, அப் படியே தென்மொழி என்பதையும் விளக்கவேண்டியதில்லை. ஒருவர் வடு அல்லாத மொழி - வட மொழி என்று கயிறு உருட்டுகிறார்; அவருக்கு, அவர்தம் இலக்கணப் பேராசிரியர் இந்த உருட்டும் வித்தையைக் காட்டினாராம்! இனி வடநாடு வடவேங்கடம், வடபெண்ணை இவையெல்லாம் வடு அல்லா தவை எனப் பூரிக்கலாம்! தயிர்வடை, பருப்பு (சாம்பார்) வடை, மிளகுநீர் (இரச) வடை, கீரைவடை, வெந்தயவடை, மிளகுவடை, கற்கண்டு வடை எனப் பலபல வடைகள் வழக்கில் இருப்பவை அவ்வப் பொருட் சேர்மானத்தை விளக்குதல் வெளிப்படை. வடை என்னும் சொல்லைச் சிலர் ஆய்ந்தனர். அவர்கள் கண்ணில் உளுந்து வடை பட்டது. அவ்வடையின் ஊடே ஓட்டை இருப்பதைக் கண்டதும், ஆ! ஆ! வடையின் கரணியம் கண்டு விட்டோம் என்று மகிழ்ந்தனர்! ஊடே வடு இருப்பதால் (ஓட்டை இருப்ப தால்) வடு உள்ளது வடையாயிற்று என்றனர்! வடு என்ப,தற்கு ஓட்டை அல்லது துளை என்னும் பொருள் அவர் கண்டு விட்டதை வாளா விட்டு விடலாமா? அகராதியிலேயே இணைத்துவிட வேண்டியதுதான்! வடை என்பதன் பொருளை ஆராய்ந்து நாற்பது ஆண்டு களுக்கு முன்னரே வெளியிட்டார் பாவாணர். வட்டையில் மாவை வைத்து வட்டமாகத் தட்டிப் போட்டு வேகவைப்பது தானே வடை. வட்டை என்பதன் இடையே நின்ற புள்ளியெழுத்து மறைந்துவிட வடையாயிற்று என்பது அவர் கூறும் செய்தி. உளுந்து வடை, ஆமை வடை ஆகியவை வட்டையில் வைத்துத் தட்டிப் போடுவதையும், வட்டமாக இருப்பதையும் பார்த்தால் தெளிவாகும்! பெட்டை என்பது பெடை என்று வழங்குகின்றதே! பூண்டு என்பது பூடு என்று வழங்குகின்றதே! இவற்றைக் கொண்டு வட்டை வடை யாவதைத் தெளிய லாமே! வட்டை என்பது வடை என மாறியதற்குக் கரணியம் உண்டு. வண்டிக்கு வட்டைக் கட்டையுண்டு, உண்கலமாக வட்டை வட்டில் என்பவையுண்டு. கருப்புக் கட்டி வட்டு உண்டு! வட்டு எறிதல் ஆட்டமுமுண்டு! வட்டம் வட்டி ஆகியவை உண்டு! இன்னும் இதன் திரிபுகள் பல உண்டு! பொருளின் தெளிவுக்காகச் சொல் திரிபடைதல் என்னும் சொல்லியல் நெறி முறைப்படி வட்டை வடை என ஆயிற்றாம்! இனித் தவளை வடையும், பக்கு வடையும் வட்டமாக இல்லையே; அவற்றை வடை எனலாமா? என நினைக்கலாம்! வடைபோட்டு முடித்துக் குறைந்த அளவு மாவு இருக்கும் போது பிதிர்த்து விட்டும், எப்படியோ தட்டிப் போட்டும் வேக வைத்த வடைகளே பக்கு வடை தவளை வடை என அறிந் தார்க்கு அப்பெயர்ப் பொருத்தம் விளங்குவதே! பொழுதைச் சுருக்கி விரைந்து வேலையை முடிக்க வந்த வடைகள் இவை ஆனால், பின்னர்த் தனிக் கொடி பிடித்துக் கொண்டு ஆட்சி நடத்துகின்றன!  60. வண்டு வட்டு வளைந்த வளைவை, முன்னே பார்த்தோம். வண்டு வளையும் வளைவைக் காண்போம். காட்டு வேலைக்குக் கஞ்சி கொண்டு போவர், அக்கல யத்திற்கு வண்டு கட்டிச் செல்வது வழக்கம். கலயத்தின் வாயை ஒரு துணியால் மூடிபோல் வளைத்துக் கட்டுதலே, வண்டு கட்டுதலாகும். இனிப்போ, நெய்யோ, எண்ணெயோ கலத்தில் இருந்தால், எறும்போ ஈயோ போய்விடாமல் இருக்க வண்டு கட்டிவைத்தல் நாட்டுப்புற வழக்கே. தலையில் சுமை வைத்துச் செல்பவர் சுமை தலையில் அழுத்தாமல் இருப்பதற்குச் சுமையடை வைப்பது கண்கூடு. துணியைப் புரிபோல் சுருட்டி வட்டமாக்கும். அதனை வண்டு என்பதும் உண்டு. அவ்வாறே, வைக்கோலைக் கட்டுவதற்கு விடப்படும் புரியை வட்டமாய் உருட்டித் திரட்டி வைக்கும் பந்துக்கு வண்டு என்னும் பெயரும் உண்டு. தண்ணீர்ப்பானை முதலியவற்றிற்கு அணைசாக வைக்கப்படும் புரிமணையை வண்டு என வழங்குதலும் உண்டு. இவையெல்லாம் வண்டு என்பதன் வளைவு வடிவச் சான்றுகள். பூக்கள்தோறும் வளைந்தும் சுழன்றும், சுற்றியும் சூழ்ந்தும் வரும் தேனீ முதலிய பூச்சிகளை வண்டு என்பது, அவற்றின் வளைவியல் கொண்டேயாம். மகளிர் அணியாம் வளையலை வண்டு எனல் இலக்கியப் பேராட்சி. வளைவுடையதும் வளையல் செய்தற்குப் பயன்படுவதுமாம் சங்கு, வண்டு என்றும் வழங்கப்படும். மகளிர் விளையாடும் விளையாடல்களுள் ஒன்று வண்டல் இழைத்தல் என்பது. அவர்கள் சிறுவீடு கட்டிச் சிறுபாவை செய்து விளையாடும் விளையாட்டே வண்டல் இழைத்தலாம். ஆற்றில் உருட்டியும் சுருட்டியும் கொண்டு வரப்பட்டுத் திட்டாக ஒதுங்கும் மண் வண்டல்; அவ் வண்டல் கொண்டு செய்யப்படுவது வண்டற்பாவை! இந் நாளிலும் களிமண்ணால் பிள்ளையார் செய்தலும், வண்டல் எனப்படும் சவட்டு மண்ணால் பானை சட்டி குடம் முதலிய கலங்கள் வனைதலும் காணக் கூடியனவே. இவ்வண்டல் மண்ணும், வண்டல் பாவை வடிவும், வண்டல் இழைத்தல் ஆட்டமும் வளைவு தந்த வளமேயாம். வண்டல் மண் வண்டலம் எனப் படுதலும் இலக்கிய ஆட்சி. வட்டு, வட்டி, வட்டை என்பன வளைவடியாக வந்தது போல், வண்டி, வண்டில், வண்டை முதலியனவும் வளைவு வழி வந்த சொற்களே! வண்டி என்பது சக்கரம் (ஆழி, உருளை) ஆகும். அச் சக்கரமே வண்டியின் கால்! அதன் உருளலே வண்டிச் செலவு ஆதலால், சக்கரம் என்னும் பொருள் தரும் வண்டி என்பதே, கட்டை வண்டி, உந்துவண்டி, தொடர்வண்டி என்பனவற்றில் வரும் வண்டிப் பொருள் மூலம்! சக்கரத்தைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே, மாந்தன் போக்குவரவு வளர்ச்சிச் சிறப்புக்கெல்லாம் தொடக்கம்! அச்சக்கரமே, உழவர் தொழிலுக்கும் அடிப்படை! கமலை வண்டி, உருளை, கட்டை வண்டி என்பன இல்லாமல் உழவர் தொழில் நடைபெறுமா? முழுமையும் மாறிப் பொறியாக வளர்ந்துவிட்டாலும் உழுபொறி, இறைவைப் பொறி, இழுவைப் பொறி இன்னவெல்லாம் வண்டியில்லாமல் நடப்பனவா? ஓடுவனவா? குழந்தையின் வண்டி ஆனால் என்ன? வளர்ந்தவர் வண்டியானால் என்ன? வண்டியில்லையேல் இயக்கமில்லையே! வண்டில் எனினும் வண்டிப் பொருளே தரும். விட்டில் என்பது விட்டி என்பது போல! வண்டு இல்; இல் சொல் லீறு. வட்டி, வட்டில் ஒப்பு நோக்குக. வண்டை என்பது வளைவு வடிவச் செடியொன்றின் பெயர். வண்டை என்பது ஊர்ப்பெயராகவும் வழங்கும். வண்டை வளம்பதி வண்டையர் கோன் தொண்டைமான் என்பவை கலிங்கத்துப் பரணி. வண்டை என்பதன் விரி வண்டலூர் என்பது, சென்னை திருச்சி நெடுஞ்சாலை - தொடர் வண்டிச் சாலை வழியில் உள்ளதோர் ஊர், வண்டல் வழியாகப் பெற்ற பெயர் அது. இன்றும், வண்டியூர், வண்டிப்பாளையம் வண்டிப் பாக்கம் முதலியனவும் வண்டி வழி வந்த ஊர்ப் பெயர்களே! வண்டியின் வளைவு, வணக்கத்திற்கும் உதவியது. வணங்குதல் என்பது தலையை வளைத்து நிற்றல்: அவ் வேளையில், முதுகும் வளைதல் இயற்கை. அதனால் வணக்கத்திற்கு உரிய வளைவு, வில் வளைவுக்கும் ஆகியது; சொல் வளைவுக்கும் ஆகியது. அவ் வில் வணக்கமும், சொல் வணக்கமும் ஒப்பாக விளங்குதல் சில இடங்களில் உண்டு என்பதை ஒப்பிட்டுக் காட்டி உய்யுநெறி தந்தார் பெரு நாவலர்! சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க; வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் என்பது அது. வணக்கல் என்பது வளைத்தல் பொருளது. வளையாத் தலை வணங்காமுடி. முன்னே வணங்காமுடி என்பது மன்னர் சிறப்பு! சீப்புக்குப் படியாத் தலை, இந்நாள் வணங்காமுடிச் சிறப்பு! வணர்தல் என்பதும் வளைதலே. யாழின் வளைவு எவரறியார்? அதன் கோட்டை வணர்கோடு என்பர். கொடிபோல் இடையொடு தழுவி, ஓராடல் மகள் யாழை எடுத்துச் செல்கிறாள். அதன் வனப்பை, வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ என்றார் மோசிகீரனார் என்னும் சங்கப் புலவர் (புறம் 155). வட்டிலும், வண்டிலும் உள்ள வளைவு, வளைவில் இல்லாமலா போய் விடும்? வள் என்னும் வேரில் இருந்து வட்டு வண்டு என்பன தோன்றி வளைவுப் பொருள் தந்ததை அறிந்தோம். வளை என்பதன் வழியாக வரும் சொற்களில் வளைவுப் பொருள் உண்மை மிக வெளிப்படை. வள்+ஐ - வளை: வளைவமைந்தது வளை எனப்படுகிறது, கைவளை, கால்வளை, விரல்வளை என்பன காப்பு. ஆழி (மோதிரம், கங்கணம், கடகம்) என்பவற்றைக் குறிப்பன. எலியின் குடியிருப்பு, நண்டின் பொந்து ஆகியவை வளை எனப்படும். நுழைவிடத்தில் இருந்து நேரே செல்லாமல் வளைந்து வளைந்து செல்வதால் உண்டாகிய பெயர் அது எலிவளை, நண்டுவளை என்பன பெருவழக்கு. எலிவளை ஆனாலும் தனிவளை என்பதொரு பழமொழி. இவ்வளை சின்னஞ் சிறுவீடு என்னும் பொருளது. எலிவளை போல் சிறியதாக இருந்தால் கூடத் தமக்கெனத் தனி வீடாக இருக்க வேண்டும் என்னும் கருத்தினது. மூங்கில் எப்படி வளைக்கவும் வாய்ந்தது; வளையவும் கூடியது. அதனால், அதற்கு வளை என்பதும் பெயராயிற்று. வளைக்க வளைகின்ற வேய் (மூங்கில்) மன்னர் மாமுடியின் மேலாம்; வளையாத வேய் கூத்தர் கால் மிதி படக் கீழாம் என்னும் பாடல் அறிந்ததே. மூங்கில் கழிகளையே, கூரை வீட்டுச் சுவர்ச் சரமாக அமைத்தனர்; ஊடும் முகடும் கொண்டனர். அதனால், அம் மூங்கில் பெயராகிய வளை என்பது அவற்றுக்கு அமைந்து விட்டது. இப்பொழுது, எந்த மரத்தைச் சரமாக அமைத்தாலும் அவ் வளை என்னும் பெயரே நின்று விட்டது. வளை என்பதற்குச் சக்கரம் என்னும் பொருள் உண்டு. ஆழிப்படை (சக்கராயுதம்) என்பதும் அது. வளை என்பது படைக் கருவியாதல் வளை எறிந்த திருவிளையாடலால் விளங்கும். சங்கு வளைவுடையது. அதனால் வளை என்பது சங்கைக் குறித்தது. சங்கு வளையலும் வளையே; புற்றுக்கும் வளை என்பதொரு பெயர். எலி வளை, நண்டு வளை என்பவற்றின் பின் வளர்ச்சியாக எழுந்தது அது. வளைக்க என்னும் ஏவலும் வளை யாதல் அறிக; வளைந்துள்ள அகழுக்கு ஒரு பெயர் வளை என்பதாம். வளை போழ்தல் சங்கறுத்தல். வளைவு, வளைதல், வளைசல் (வளசல்), வளைப்பு, வளையம், வளையல், வளைகுடா, வளைமணி, வளைவிற் பொறி, வளைதடி, வளைகம் (தூண்டில்) வளைதல் (கோணல்), வளையாபதி இன்னவையெல்லாம் வளை கலழி வந்த சொற்பெருக்கங்கள். வளைகாப்பு ஒரு மங்கலச் சடங்காக ஊன்றியமை பெருவழக்காறு. வளைவு என்பதற்குப் பணிவு, வணக்கம் என்னும் பொருள்கள் உண்டாதல் வளைந்து நிற்றலும் குனிதலும், பற்றி வந்தவை, வளையும் இயல்புடைய நாணல்! என்பதன் பெயர், முகம் கவிழ்ந்து நாணி நிற்கும் தன்மைக்கும் - நாணத்திற்கும் - பெயராதல் அறிக. அவ்வாறே வில்லின் இரு நுனைகளையும் வளைத்து இறுக்கும் கயிற்றுக்கு நாண் என்னும். பெயராதலும், இடுப்பைச் சுற்றிக் கட்டும் கயிற்றை அரைஞாண் என்றும், அரைநாண் என்றும் வழங்குதலும் ஒப்பிட்டறிக. வளைதல் சுற்றிச் சுழலுதலுக்கும் நீரில் வளைந்து நீத்தடித் தலுக்கும், பகையை வளைத்துக்கொள்ளலுக்கும் வளைதலுக்கும் ஆதல் காணக் கூடியவே. வீட்டைச் சுற்றியுள்ள ஒரு குடிச் சுற்றமும் சூழலும், வளைசல் என்பதும், விட்டைச் சுற்றிக் கட்டிய வேலி வளைவு. வளைசல், வளைப்பு எனப்படுதலும் நடை முறையில் உள்ளவை. வளைகுடா, விரிகுடாவுக்கு எதிரிடை. கடல் நீர் குடைந்து சென்ற நிலப்பகுதி வளைகுடா, விரிபகுதி, விரிகுடா, வங்காள விரிகுடா என்பது பெருவழக்கு. வளைதடி என்பதும் வளரி என்பதும் வளைகோல் என்பதும் ஒன்றே. வளைவாகச் சென்று தாக்கும் தன்மையது அது. வளைவிற் பொறியைச் சிலம்பு குறிக்கின்றது. அது மதிலகத்தமைந்த பொறிகளுள் ஒன்று (சிலப் - 15 - 207). வளைப்பு என்பதும் மதிலையும், காவலையும், வளைத்துத் தடுத்தலையும் குறிக்கும். சூழ்ந்து கொண்டிருத்தலும் வளைப்பேயாம். வளையம் என்பது வட்ட வடிவமைப்பைக் குறிப்பதுடன் எல்லை. குளம், வட்டம், வளையல் என்பவற்றையும் குறிக்கும். வளைசல் (வளசல்) என்பது இடத்தைக் குறிப்பதுடன் உற்றார் உறவுப் பொருளும் தகும் எங்கள் வளைசலில் அப்படி யெல்லாம் நடவாது எங்கள் வளைசல் காரரெல்லாம் ஒன்று சொன்னால் ஒன்றுதான் என்பவை வளைசல் பெருமை. கடல் சூழ்ந்த நிலப்பகுதியை வளாகம் எனல் பண்டை வழக்கு. தென்கடல் வளாகம் என்பது புறநானூறு. வளாகம் என்பது மடவார் வளாகம் (மடார் வளாகம்) என ஊர்ப்பகுதிப் பெயராக வழங்கி வருகின்றது. எ - டு: திருவில்லிபுத்தூர், மடவார்வளாகம். இதுகால் வளாகம் என்பது வீட்டுச் சுற்றுச் சுவர்க்கு வழக்காகி நிற்கின்றது. காற்று என்னும் பொருள் தரும் சொல் வளி என்பது வளைந்து எழுதலால் அமைந்த பொருட் பெயர் அது. சூறாவளி, சூறைவளி என்பதும், சூறாவளிக் காற்று என்பதும் அறிக. வளிதிரிதரு திசை என்பது புறப்பாடல். இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவர் இயற்றிய இலக்கண விளக்க மறுப்பு அல்லது கண்டன நூல். வளாவுதல் என்பது வெந்நீரில் தண்ணீர் விட்டு அளவாகக் கலத்தலைக் குறிக்கும், வளாகம் வளா என்னும் அளவில் நிற்றல் குளவளா என்னும் குறளால் விளங்கும் (523). வளையின் வளைவு இவ்வளவு தானா? தொகுக்கத் தொகுக்க விரிவதைத் தொகுப்ப தெப்படி?  61. வலி உட்கார்ந்தே இருந்தவர் நடக்கப்பழகுகிறார். தொடர்ந்து நடக்கிறார்; அந் நடையால் வலி உண்டாகின்றது: மூட்டு வலிக்கிறது; கால் சோர்கிறது; அவரே ஓட்டமும் பயில்கிறார்; ஓடி ஓடி இளைக்கிறார்; வியர்க்கிறது! நாடித் துடிப்பு ஏறுகிறது; உடலெங்கும் உளைகிறது, வலி உண்டாகிறது: தடவிக் கொடுக்கிறார்; வெந்நீர் ஒற்றடம் வைக்கிறார்! வலிநீக்கி மருந்துண்டானால் தடவுகிறார்! ஆனால், நடையை விட வில்லை! ஓட்டத்தையும் விடவில்லை; என்ன நிகழ்கின்றது? முன்னைப்போல் சோர்வு இல்லை; இளைப்பு இல்லை; வலியும் இல்லை! இயல்பான பழக்கமாகி விட்டன! நடையும் ஓட்டமும்! எப்படி இயல்பாயின? வலியைத் தாங்கித் தாங்கி, வலிமை உண்டாகி விட்டது! வலி இல்லாமல் - வலி ஏற்படாமல் - வலிமை உண்டாவதில்லை! இது தமிழ்ச் சொல்லின் வேர் வழியாகக் கிட்டும் விளக்கம்; சொல், சொல்தானா? வாழ்வா? மண்வெட்டி, கோடரி, கடப்பாறை, சம்மட்டி ஆகிய வற்றைப்பயன் படுத்தத் தொடங்கிய நாளில், சிறிது நேரத்தில் அவர் கை வலித்தது: கையில் கொப்புளம் கண்டது; அக் கொப்பளம் உடைந்தது; புண்ணானது; ஆறியது: மீண்டும் மீண்டும் இதே தொடர்! என்ன ஆனது? தொடக்கத்தே இருந்த வலிபோனது; வலிமை ஆனது? எட்டு மணிநேரம் பத்து மணி நேரம் என இக்கருவிகளைக் கொண்டு கடுமையான வேலை செய்ய முடிகின்றது! வலி கண்டு கண்டு கை காய்த்துப் போனது! காய்த்த பின்னே பழுப்பது இல்லை! நீர்க்கோப்பது இல்லை! உடைவது இல்லை) ஆம்; மனமும் உடைவது இல்லை! கையில் வலி போய், மனத்திலும் வலி போய், வலிமை உண்டாகி விட்டது. அக் கருவிப்பணி, இனி வேலை இல்லை! விளையாட்டு! வலியை வலிமையாக்கும் வழி, வலிக்க வலிக்க விடாப் பயிற்சியே! அதனால் தான் வல் என்பது வலிக்கும் மூலம்! வலிமைக்கும் மூலம்! வலன் ஆகிய வெற்றிக்கும் மூலம்! வல்லுநர்க்கும் மூலம்! வல் விரைவுக்கும் மூலம்! இப்படி அப்படி மூலம் கடல் மேலே அலை! அலை மேலே மிதவை! மலை மேலே போகிறதா? ஆழ்பள்ளத்துள் வீழ்கிறதா? நொடிக்கு நொடி மலையேறிப் பள்ளத்துள் பாய்கிறதே மிதவை! அஞ்சுகிறானா பரதவன்? காற்றால் அலையும், அலையால் மிதவையும் என்னென்ன அலைக்கழிப்பு! அவன் உடல் அலைகின்றது! ஆடுகின்றது! ஆனால், அவன் உள்ளம் அலைகின்றதா? அலைந்தால். அலையின் தலையில் மிதிமிதி என்று மிதித்து வெற்றி கொள்வானா? அவன் படகோட்டுதலுக்கு என்ன பெயர்? படகு வலித்தல் என்பது பெயர்? படகு வலிப்பு அவனுக்கு, எத்தனை வலிப்பை உண்டாக்கி உண்டாக்கி, வலிமையாக்கி விட்டது? இயற்கையன்னை, தன்னையடைந்த இயற்கைச் செல்வங்களை தன்னை நம்பி வாழ்தற்கு வந்த உழைப்புச் செய்வர்களை வலிமையாளராக்காமல் விடுவதில்லை! அவ் வலிமையாளர் ஆக்குதற்குப் பயிற்சியாக வலி தாராமல் இருப்பதும் இல்லை! நம் கைகள் இரண்டனுள் ஒன்றற்கு என்ன பெயர்? மிக மிகப்பயன்படுத்திப் பழக்கி விட்டோமே அக்கைக்கு என்ன பெயர்? வலக்கை என்பது பெயர். வலம் என்பதன் பொருள் வலிமை; அதற்கு, வலிமை எப்படி உண்டாகியது? வலிக்க வலிக்கப் பழக்கப் படுத்திப் பழக்கப்படுத்தி, விடாமல் வலிக்கச் செய்ததால் வலம் பெற்று விட்டது! வலம் என்பதற்கு வலப்பக்கம், வலிமை. இவை தான் பொருளா? இல்லை பொருள் வளர்ந்தது! வெற்றி என்னும் பொருளும் வந்து விட்டது! அப்பொருள் வரவு உண்டாகியது இன்றா நேற்றா? சங்கச் சான்றோர் காலத்திலேயே பெரு வழக்குச் சொல்லாகி விட்டது. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் ஒரே ஒரு குறளில் எத்தனை வலிகள்? இவ்வலிகள் அனைத்தும் வலிகளா? வலிமைகளா? ஊழிற் பெருவலியையும் தருகிறாரே வாழ நூல் செய்த வள்ளுவப் பெருந்தகை! வள்ளுவர் அறநூலுக்கு வரைபடம் போட்டுத்தந்த ஆசிரியர் தொல் காப்பியர் வயவலியாகும் என்று பொருள் விளக்கம் புரி கின்றாரே! எள்ளில் இருந்து எண்ணெய்! இலக்கியத்தில் இருந்து இலக்கணம்! தொல்காப்பியம் இலக்கணம் அதற்கு முன்னரே வலி இலக்கியமாக இருந்தது என்பது விளங்க வில்லையா? ஆமாம்! இலக்கண ஆட்சி மட்டும் தானா? பொது மக்கள் ஆட்சியில்லையா? பொதுமக்கள் ஆட்சியில் இல்லாததா வலக்கை வலியன், வலியான், வல்லூறு என வழங்கப்பட்டு வருகின்றதே ஒரு பறவை! அது தான், வால் நீண்ட கரிக்குருவி! கரிச்சான்! கரும்பிள்ளை! கரும்புள் என்பன வெல்லாம்! சிறுத்த கிளியை புறாவைக் காகத்தை மட்டுமல்ல பருத்த பருந்தையும் படுத்தும் பாட்டைப் பார்த்தவர் அதன் வலிமையை அறிவார்! அதன் பெயர்ப் பொருத்தமும் அறிவார்! அதற்குப் பெயர் அதுவேயா வைத்துக் கொண்டது? அதன் இயல்பறிந்து தானே மக்கள் பெயர் வைத்தனர்! வண்ணத்தில் தோய்ந்தவனிடம் வண்ணம் பட்டது! வலிமையில் தோய்ந்தவனிடம் வலிமை தோய்ந்தது! எண்ணத்தின் சாயல் தானே பெயரீடு; வல்லாரை ஒரு வகைக் கீரை! சித்த மருத்துவ நூல்களைப் பார்த்தால் வல்லாரைச் சிறப்புப் புலப்படும்! வல்லியம் புலி - வேங்கைப் புலி! கனவிலே கூட கரிமாவை அச்சுறுத்தி வேங்கை மரத்தையே வேங்கைப் புலியெனத் தாக்க வைக்கும் வல்லியம் அது! சங்க இலக்கியத்தில் எத்தனை சான்றுகள்? வலி உண்டாகி விட்டதா (தலைவலி!)? வரட்டும் வரட்டும்! வலி வந்தால் தானே வலிமை வரும்!  62. வள்ளல் அதியமான் அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்து அழியாப் புகழ்கொண்ட வள்ளல் அதியமான். அவன் பெயர் அகர முதலிகள், ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றில் அதியமான் என்றும், அதிகமான் என்றும் ஒப்ப வழக்குப் பெற்றுத் தொடர்ந்து வருகின்றது. இப் பெயர்களுள் முறைமையானது எதுவெனக் காண்பதே இவ்வாய்வு. அதியமான் முழுப்பெயர், அதியமான் நெடுமான் அஞ்சி என்பது எழினி என்றும், அஞ்சி என்றும், நெடுமான் என்றும், நெடுமிடல் என்றும் மழவர் பெருமான் என்றும், அதியர்கோமான் என்றும், பிறவாறும் சுட்டப்பெறுகிறான். இப்பெருமகனைப்பற்றிய விரிவான செய்திகள் புற நானூற்றில் பொதுளியுள்ளன. இவனைப் பெருகப் பாடிய புலவர் பெருமாட்டியர் ஔவையார் என்பதைச் சுட்ட வேண்டியதில்லை. புறநானூற்றுப் பாடல்களில், ஆர்கலி நறவின் அதியர் கோமான் (91) அணிபூண் அணிந்தயானை இயல்தேர் அதியமான் (101) மதியேர் வெண்குடை அதியர் கோமான் (392) எனப் பராட்டப்பட்டுள்ளான். இவற்றுள் முதற்கண் உள்ள ஆர்கலி நறவின் அதியர் கோமான் என்பதில் மட்டும் பாடவேறுபாடுகள் காட்டப் பட்டுள்ளன. அவை, அதிகர் கோமான், உதியர் கோமான் என்பவை. இப்பாடவேறுபாடுகள் தவறானவை என்பதை அதன் பழைய உரையே தெள்ளிதின் நிறுவுகின்றது. ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர் கோமான் என்பது அவ்வுரை. அன்றியும், அவ்வுரையின், முடிநிலையும், அதியர் கோமான்! அஞ்சி! பெரும! மன்னுக எனக்கூட்டி வினைமுடிவு செய்க என்றேயுள்ளது. ஆகலின் ஒரு காலைக்கு இரு காலை அப்பாடலின் பாடம் அதியன் என்பதே என அதன் பண்டையுரையாசிரியர் எழுத்தே வலியுறுத்துகின்றது. மேலும், உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பாட வேறுபாடு உண்மை எனின், அவர் பாட வேறுபாட்டைக் காட்டாது இரார். இவ்வாறு பாடவேறுபாட்டைச் சுட்டிச் செல்வதும் அதற்குத்தக உரை கூறுவதும் அவர் வழக்காறாம். அவ்வாறு சுட்டாமை ஒன்றே அப்பாட வேறுபாடு உரையாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டது என்பதைத் தெளிவிக்கும். உரையாசிரியர் காலத்திற்கு முற்படவே திணை துறை வகுக்கப்பெற்று நிகழ்வும் பொறித்து வைத்த திறவோர் குறிப்பில் அதியமான் பெயராட்சியுண்மை பெரிதும் கருதத்தக்கது. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது (87) அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது (97) அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது (100) அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது (103) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஔவையார் பாடியது (206) இவ்வாறே 208, 231, 235, 391, 392 ஆகிய பாடல் குறிப்புகளிலும் அதியமான் என்றே குறிப்பிடுகிறார். இப் பத்திடங்களுள் ஒரோ ஓர் இடத்தில் மட்டும் அதிகமான் நெடுமான் வஞ்சி எனப்பாட வேறுபாடு காணப்பட்டுள்ளது. வஞ்சி என்றுள்ள பாடம் கொண்டே அப் படியெடுப்பாளர் கருத்தின்மையறியக் கூடுமன்றோ! இனி 158 ஆம் புறப்பாடலில் வள்ளல் எழுவர் பெயரும் தொடர்ந்து கூறுமிடத்துப் பெருஞ்சித்திரனார், எழினி என்றாராக, உரையாசிரியர் எழினி அதியமானும் என்று விரித்து எழுதியமை நோக்குதற்குரியதாம். பண்டைப் பாவலர்களும், புறநானூற்று உரையாசிரியரும் அதியமான் என்னும் பெயரைச் செவ்விதிற் குறித்துப் போற்றினாராகப், பிற்காலப் படியெடுப்பாளர்களுக்கும் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதியமானுக்கும் அதிகமானுக்கும் வேறுபாடின்மை கொண்டு எழுதுவாராயினர். அதன் விளைவே பழம் புலவர் பாடல்களிலும் உரைகளிலும் அதிகமான் என்று குறிக்கப்பெறலாயிற்றாம், பின்னாளைத் தனிப் பாடல்கள் ஒன்றிரண்டில் அதிகன் அதிகா என்று குறிக்கும் நிலையுடன் அதிகைக்கும் அதிகனுக்கும் சொல்லொப்புக் காட்டி, அதியரின் முன்னோர் ஊர் அதிகை யாகலாம் என்று ஆயவும் தூண்டியதாம்! எழுத்து மாற்றத்திற்கு வயப்பட்ட ஏமாற்றங்கள் இவை என்க. புறம் 158 போலவே, சிறுபாணாற்றுப்படையும், வள்ளல் எழுவர் பெயரை வரிசைப் படுத்துகின்றது. அங்கு அரவக் கடற் றானை அதிகன் எனப் பாடம் உள்ளது. நச்சினார்க்கினியர் உரையும் அதிகன் என்றே சொல்கின்றது. அதே நச்சினார்க்கினியர் தொல். புறத்திணை. 7 ஆம் பாடல் உரையில் ஒருவன் மேற் சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன்மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம். என்றுள்ளது. அவ்விடத்தில் அதிகமான் என்னும் பாடவேறு பாடும் உண்டு. குறுந்தொகை 393ஆம் பாடலில் பாண்டியன் வினைவல் அதிகன் என்று வரும் இடத்தில் அதிகன் என்பது பிழையாதலைப் பேராசிரியர் கந்தசாமியார் திருத்தியுள்ளார். அவர் இராமசாமி புரம் மூவரையர் வண்ணம் பாடிய பூண்டியப்பப் புலவர் ஏடு பார்த்துத் திருந்தியது என்று குறித்துள்ளார். எழினி எழுதிய புலவர் பாண்டியனார், சேரன் சேரமான், மலையன் மலையமான், தொண்டையன் தொண்டைமான் என்றாற்போலவே அதியன் அதியமான் என வழங்கும். இவ்விரண்டனையும் அதிகன் அதிகமான், எனவும் வழங்கும்; அதியன் மரபினர் அதியர் என்றார். எடுத்துக்காட்டுடன் அதியனை விளக்கிய அவர், பிறர் கோட்கூறி அதியன் மரபினர் அதியர் எனத் தம் கோள் நாட்டினார் ஆதல் தெளிவு. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூரார் யாண்டும் அதியமான் என்றே கொண்டார். அதியன் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமை பற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளில் காணப்படுவதுபற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும் ஒரு காலத்தில் இவர் அதிகையென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேர நாட்டில் குடியேறியிருத்தல் வேண்டும் என்றும் இதனால் அதிகையராகிய இவர் அதியர் எனப்படுவாரானார் என்றும் அறிஞர் கருதுகின்றனர் என்றார் உரை வேந்தர் ஔவை அவர்கள். முற்படக்கூறியதே ஔவை கருத்து என்பது வெளிப் படை. ஆயினும் பிறர் கருத்துப் பிறிதொன்றுண்மையைச் சுட்டுவதே அவர் கருத்தாகலின், அக்கருத்து அவர்க்கு இன்மை தெளிவாம். அன்றியும் அவர்தம் உரையுள்யாண்டும் அதியமானை அதிகமான் என்று குறித்தார் அல்லர் என்பது சான்றாம். அதிகை என்னும் பாடுபுகழ் ஊர் உண்மையும், அதிகமான் என்னும் பாட வேறுபாடு உண்மையும் போட்ட முடியே அதியமானை அதிகைக்குக் கொண்டு சென்றதாம்; உதியர் உதிகர் ஆகாமைபோல, அதியர் அதிகர், ஆகார்; ஏனெனில் இரண்டும் குடிப்பெயர்கள் ஆகலின், அதியம் விண்ணத்தனார் என்னும் புலவர் (அகம். 301) அதியர் குடியினர் ஆகலின்; இப்பெயர் பெற்றார் என்பது எண்ணத்தக்கது. இனி, அதியமான் அதிகை சார்ந்தவனாக இருந் திருப்பனேல் அவன் பேரும் பெற்றியும் சீரும் சிறப்பும் ஊரும் உறவும் பலப்பல பயில விரித்துப் பாடும் புலவர், அதிகையைச் சுட்டாது ஒழியார். மேலும் சேரர், சோழர், பாண்டியர், சாளுக்கியர்; பல்லவர், விசயநகர வேந்தர், நாயக்கமன்னர் என்னப் பல்வேறு கால ஆட்சியர் கல்வெட்டுகளைப் பெற்ற அதிகை, தன் மண்ணுக்குத் தனிப்புகழ் சேர்த்த வள்ளல் அதியனைச் சுட்டாது ஒழியாது. ஆதலால் அதியனுக்கும் அதிகைக்கும் தொடர்பு இல்லையாம். பெருக வழங்கும் பாடற் சான்றையும், உரைச் சான்றையும். மொழியியற் சான்றையும் வலுவாக விலக்கிப், பாட வேறு பாட்டையும் பிற்கால மயக்க உன்னிப்பையும் பொருட்டாக்கி அதியனை அதிகன் என்று வழங்குவது பேனைப் பெருமாள் ஆக்குவதாம்.  63. வள்ளல் ஓரி பண்டைத் தண்டமிழ் வாணர்களால் வள்ளல்களாகச் சிறப்பிக்கப்பெற்ற எண்மருள் ஒருவன் ஓரி; அவன் கொல்லி மலைக் கோமான்; வில்லாண்மைச் சிறப்பால் வல்வில் ஓரி என வழங்கப்பெற்றவன்; ஆதன் ஓரி என்று சுட்டப்பெற்றவன்; படைகொண்டு வந்த முள்ளூர் மன்னன் காரியோடும் பொருது புகழுடம் பெய்தியவன். இவனுக்கமைந்த ஓரிப் பெயர்க் கரணியம் காண்போம். ஓர் என்னும் முதனிலையுடன் இ என்னும் இறுதி நிலை இணைந்த பெயரே இது. ஒன்று என்பது ஓர் என்றும் ஒரு என்றும் வருதல் தொல்பழ வழக்கே. (தொல் எழுத். 437, 438). ஒன்று என்பது ஒன்று என்னும் கண்ணுப் பெயராவதுடன், ஒரு பேராற்றலைக் குறிப்பதாகவும் வழங்கி வருகின்றது. உலகத்தை ஒன்று இயக்குகிறது என்பது உலகளாவிய கொள்கை. அந்த ஒன்றற்கு உருவம் தர விரும்பியவர்கள் ஒருவன் ஆக்கினர். ஒருவன் துணை, ஒருவனே தேவன், ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்னும் இருவகை வழக்குகளையும் கருதுவார் ஒருவன் எனப் பெறுபவன் இறைவன் என்பதை அறிவர். ஒன்று எனப்பெறும் எண், முதல் எண்; ஆதி எண் என்பதும் அது; ஆதலால் இறைவன் முதல் முதல்வன் ஆதிபகவன் ஆதி என வழங்கவும் பெற்றான். மேலும் நான், நீ, என்னும் தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும் ஒழிந்த, படர்க்கை ஒருமைப் பெயராகிய அவன் என்பது, வழிநிலைப் பெயர்ச் சொல்லாக வாராக்கால், இறைவனையே குறித்தலும் வழக்கு. அவன் இருக்கிறான் அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு ஆவதைச் செய்யுங்கள் என்பனவெல்லாம் வழக்கில் உள்ளனவே. அவனன்றி அணுவும் அசையாது என்று சொல்லா தவர் இல்லை. ஒன்று என்பது ஒன்றுவிக்கும் ஊழைக் குறிப்பது தொல் காப்பியத்தால் அறியப்பெறும். தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்தும் ஊழ், தலைப்பட்டுச் செயலாற்றுகிறது அதனை, ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண் என்பார். (தொல், பொருள், களவு. 2) ஒன்று, தனி ஆழி (சிலப். 27. 136) உருவப் பல்பூ ஒரு கொடி வளைஇ (நெடுநல். 113) ஆனின் னகரமும் அதனோர் அற்றே (தொல். எழுத். 12) ஒருதானாகிப் பொருதுகளத் தடலே (புறம். 76) ஓர் என்பதன் வழியாக ஓர்தல், ஓர்ப்பு, ஓர்வு, ஓரம், ஓரை முதலியனவும் ஓரி என்பதும் பிறக்கும். ஓர்தல் என்பது ஆராய்தல், கூர்ந்துகேட்டல் ஆகிய பொருள்களைத் தரும். ஒருமுகப்பட்ட கூர்ப்பின் அடிப்படையில் ஆய்வு உண்டாகுமே அன்றிப் பலவகையாகச் சிதறிய புலனால் அறிவும் கேள்வியும் தலைப்படா. ஓர்தல் என்பது கருத் தின்றிக் கேட்டலைக் குறியாமல் கூர்ந்து செவியைத் தீட்டிக் கேட்டலையே குறிக்கும்; ஓர்வு என்பதும் ஓர்தல் போன்றதே யாம். திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும் (பட். 254) மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் (நற். 244) நறஞ்சே றாடிய வறுந்தலை யானை நெடுநகர் வரைப்பில் படுமுழா வோர்க்கும் (புறம். 68) ஓர்ப்பு என்பது ஆடவர் இயல்நலம் நான்கனுள் ஒன்று. மற்றையவை அறிவு. நிறை, கடைப்பிடி என்பன: ஓர்ப்பாவது மனத்திடன்; ஓர்மம், ஒர்மை, ஓர்மிப்பு என்பனவும் இதுவே. ஐம் புலனும் ஒன்றாகச் செலுத்த வல்லார்க்கல்லது மனத்திடன் வாராதே! ஐம்புலனும் வென்றான் தன் வீரமே வீரமாம் என்பதை நோக்குக. ஓரம், நடுநிலைச் செல்லாது ஓரஞ் செல்லுதலும் ஓரமாம்; அஃதாவது ஒருபால் கோடல். நடைவழிக்கு உரியது நடுவு நிலை வழிக்கும் ஆகியது. ஓரஞ் செல்லல் சாலை விதி; ஓரஞ் சொல்லல் சால்பாளர் பழிக்கும் விதி. ஒரு மரத்திரு கவடாய் வந்தது ஓரச் சொல். ஓரக்கண், ஓரப்பார்வை, ஒருசிறை, ஒருச்சாய்தல் என்பனவும் ஓரப் பொருளில் வருவனவே. ஓரை என்பது மகளிர் விளையாட்டும், விளையாடும் இடமும், விளையாடும் மகளிரும், விளையாடற்காம் பொருளும் முதலியவற்றைக் குறிக்கும். ஒத்த பருவத்து ஓருணர்வொன்றிய மகளிர் உவகைப் பெருக்கால் ஒன்றுபட்டு ஆடும் ஆடற் குறிப்பால் ஓரையாயிற்று. விளையாடும் மகளிரை, ஓரை மகளிர் என்றும் (குறுந். 316), அவர்கள் கூட்டத்தை ஓரை ஆயம் என்றும் (குறு. 48) கூறுவர். ஓரை மகளிரின் ஒப்பாந்தன்மையை, உடன் பிறந்து உடன் வளர்ந்து. நீர் உடனாடிச் சீர் உடன்பெருகி, ஓர் உடனாட்டப்பால் உடன் உண்டு. பல் உடன் எழுந்து, சொல் உடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார் என்னும் களவியல் உரையால் நன்கு அறியலாம் (2). ஓரை என்னும் மற்றொரு பொருள் பொதிந்த சொல்லும் உண்டு; நாளும் கோளும் நல்லனவாகவும் எல்லா நலங்களும் இனிது இயைப்பனவாகவும் கணியரால் தேர்ந்துகொள்ளப் பெறும் முழுத்தமே ஓரை என்பதாம். இதனால், ஓரை முழு நிறை பொருள்பொதி செந்தமிழ்ச் சொல்லாதல் கொள்க. முழுத்தம் என்னும் வழக்கு இன்றும் வழக்கில் இருக்கவும் முகூர்த்தத்தில் முழுக்காடும் மக்கள் தமிழறிந்தோர் ஆகார். இனி ஓரி என்பதைக் காண்போம். ஓரி என்பது ஒன்று என்பதையும், தனித்துத் திரியும் விலங்கையும், ஒரு பெற்றோர்க்குப் பிறந்த தனிமகவையும், ஒரு தானாக ஓங்கிய ஒரு திறலோனையும் குறிக்கும். இவற்றின் வழியே பலபல பொருள்களும் கிளைத்துப் பெருகும். ஓரிப் புதல்வன் என்னும் கலியையும் (114) ஓரி மாங்காய் என்னும் குழந்தைப் பாட்டையும், ஓரி, ஈரி என எண்ணும் சிறார் விளையாட்டையும் எண்ணுக. ஒரு குடிக்கு ஒரு மகவாகப் பிறந்தார்க்கு ஓரி எனப் பெயர் சூட்டல் வழக்குண்மையும் கருதுக. கூட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு கோட்பாட்டால் தனித் துறையும் குரங்கு, நரி முதலியவற்றையும், பொதுவாக விலங்கின் ஆணையும், ஓரியென்னும் வழக்குண்மை அறிக. அழல்வாய் ஓரியோ டறுகை பம்பி (பட். 257) வெவ்வாய் ஓரி முழவாக (சீவக.) என்பன நரியையும், அணிநிற ஓரி (புறம். 109) புன்றலை ஓரி (குறுந். 221) நீனிற ஓரி (மலை. 524) என்பன குரங்கையும் குறிப்பன. பாய்ந்தும் தாவியும் செல்லுதலில் வல்ல குரங்கும் நரியும் ஓரி என்றாற் போலவே. குதிரை என்பதற்கும் ஓரிப் பெயர் இருந்திருக்க வேண்டும்! அவ் விலங்குகளினின்று குதிரையாம் ஓரியைத் தனித்துக் காட்டற்கே ஓரிக் குதிரை (சிறு. 111) என்றார் போலும் எனக் கருத நேர்கின்றது. தனித்த ஆண் விலங்கைக் குறிக்கும் ஓரி என்னும் சொல் பின்னர் ஆண் மக்கள், ஆண் விலங்கு இவற்றின் மயிரையும் குறிக்கலாயிற்று. ஊட்டுளை துயல்வர ஓரி நுடங்க (பொருந. 164) மேல்பால் உரைத்த ஓரி (பெரும். 172) இனி, ஓரி என்பான் கொடையாண்மை, மழவர் பெருமகன் மாவள் ஓரி (நற். 52) மாரி வண்மகிழ் ஓரி (நற். 265) திண்தேர்க் கைவன் ஓரி (குறுந். 199) கருவி வானம் போல வரையாது வழங்கும் வள்ளியோய் (புறம். 204) என்பன வற்றால் புலப்படும் இத்தன்மையால் ஓரி உலவாக் கொடை வள்ளல்களுள் ஒருவன் ஆனான். ஆனால், அவன் படையாண்மை யாலேயே ஓரிப் பெயர் பெற்றான். வல்வில் ஓரி (நற். 6; குறுந். 100; அகம். 109) புறம். 158. (பழம் விறல் ஓரி (நற். 320) அடுபோர் ஆனா ஆதன் ஓரி (புறம். 153) இவை ஓரியின் படையாண்மைக் குறிப்புகள். ஆயின் இவற்றால் அவன் ஒப்பற்றவன் என்று உறுதி செய்தற்கு இல்லை! என்னெனின், இவ்வாண்மை வேந்தர்க்குப் பொதுத் தன்மையேயாம். ஓரிக்கெனச் சொல்லும் சிறப்பாண்மை அன்றாம். அவனுக்கென அமைந்த, அவன் ஒருவனுக்கே அமைந்த தனிச்சிறப்பாண்மையை நேரில் கண்டு நெகிழ்ந்து போய் உரைக்கிறார் புலவர் வன்பரணர். வேழம் வீழ்த்த விழுத்தொடைப்பகழிபேழ்வாய்உழுவையைப்பெரும்பிறிதுறீஇப்புழற்றலைப்புகர்க்கலைஉருட்டிஉரற்றலைக் கேழற்பன்றிவீழஅயலதுஆழற்புற்றத்துடும்பிற்செற்றும்ல்வில்வேட்டம்வலம்படுத்திருந்தோன்............................................................................XÇ கொல்லோ அல்லன் கொல்லோ(புறம். 152) யானையை வீழ்த்திய அம்பு, புலியின் பெரிய வாயுள் புகுந்து அதனை வீழ்த்திப், பின்னர் ஒரு புள்ளிமானையும் பன்றியையும் வீழச்செய்த, அடுத்திருந்த புற்றிற் கிடந்த உடும்பில் தைத்து நின்றது! ஓரியின் இவ்வொப்பற்றதிறனுக்Fஈடாக¥பண்டையோ®பாட‰சான்Wஒன்று«இன்றாம்! பிற்காலப் புனைந்துரைப் பாடல்கள் அலையுருவக் கடலுருவ மேருவை உருவு மென்றால், விண்கடந்தேகுமென்றால் (கம்பர்) என வருபவற்றை ஒப்பிடுதல் ஆய்வுக்கு உரியதன்றாம். வில்லுக்கு ஒருவனாக விளங்கிய ஏந்தலின், வலிய வில்லாண்மையைச் சுட்டு முகத்தான் ஓரி என்றும், அதனை விளக்கு முகத்தான் வல்வில் ஓரி என்றும் பண்டையோர் பெயர்சூட்டி மகிழ்ந்தனர் எனக் கொள்க. வில்லாண்மையில் சிறந்தமை வீறுபெற்று விளங்கிய பிற்காலத் தன்றே, பேறு பெற்ற காலத்தன்றோ பெயர் சூட்டுவது, பிற்காலத்தே இவன் இன்னவாறிருப்பன் என்பதை உணர்ந்தோ பெயர் சூட்டினர் என்று மறுப்பார் உளராயின, நாம் பயில வழங்கும் பண்டையோர் பெயர்களுள் பலவும் பிறந்த நாளிட்ட பெயரன்று; சிறப்பாலும் சீர்மையாலும் வீற்றாலும் விழுப்பத்தாலும் பெற்ற பெயர்களே என்றும், இந்நாளிலும் துறவுப் பெயர், முடிசூட்டுப் பெயர், தூநீர் முழுக்குப் பெயர், பட்டப் பெயர் இன்னவாறெல்லாம் இருத்தலைக் காண்கிறோமே என்றும் அமைக. கங்கை கொண்டான், கடாரங்கொண்டான், ஈழந்திறை கொண்டான், கொல்லங் கொண்டான், முடிவணங்கான், தகடூர் எறிந்தான், கருவூர் ஏறினான் என்பன போல்வனவற்றை எண்ணுக. வில்லாண்மையில் ஒப்பிலாது ‘ஒருkhமணியாய்ஓ§கியதிUமாமணிXரி எdக்fள்க.தÄH®j« th¡»ன்வலுவி‹மையும்,மடிkயும்குடிkத்தாழ்¢சியாய்,வில்Yக்குஓரி என்னு«விழுப்g¤தைத்தாராJஒழிந்தjம்என்பjஎண்ணுக.  64. வள்ளல் காரி காரி என்னும் வள்ளலின் புகழ் நாடறிந்தது. அவன் புகழ் பரப்பும் பாடல்கள், rங்கச்rன்றோரால்gடப்bபற்றgட்டுbதாகைகளில்cண்டு.mt‹ புகழ் விளக்கும் ஊர்களும் பல உள்ளன. காரி என்னும் பெயர் இவ் வள்ளல் காலத்தும், இவனுக்குப் பின்னரும் பயில வழங்குகின்றது. காரிக் கிழார், காரிக் கண்ணனார் சங்கச் சான்றோர். காரியாசான் சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர். காரி மாரனார் நம்மாழ்வார்; காரி நாயனார் அறுபான் மூவருள் ஒருவர்; காரி ஆறும், காரி நாடும் பண்டு விளங்கின. கர், கார், கால், காள், காழ் இவற்றின் வழியாகப் பிறந்த சொற்கள் நூற்றுக்கணக்கில் உள. தமிழ்ச் சொற் பரப்பைக் காட்டும் மூலங்களுள் கர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவையெல்லாம் கருமை என்னும் பொருள் வழியே வருதல் விளங்கும். காரி என்னும் பெயரின் மூலம் கார் என்பதே. கார் என்பது கருமையாய், கருமுகிலாய், மழையாய், மழைக் காலமாய், மழைக்கால விளை பயிராய், விளை பயிரின் பயனாய்ப் படிப்படியே பொருளால் விரிந்து தமிழ் வளத்தைக் காட்டு கின்றமை அறிந்து மகிழத் தக்கது! காரி கரு நிறத்தால் பெயர் பெற்றானா? அவன் கரியன் ஆயினும் ஆகலாம்; செய்யன் ஆயினும் ஆகலாம்! அவை, அவன் புகழுக்குரியவை அல்ல. வண்ணத்தைக் கொண்டு பெயரமைதல் வழக்கே. ஆனால் அவ் வண்ணப்பெயர் மறுதலையாகப் பொருள் தருவதும் வழக்கே! வெள்ளையப்பன் கறுப்பையாவாக இருப்பது இல்லையா? கறுப்பாயி சிவப் பாயியாக இருப்பது இல்லையா? காரியின் நிறத்தைப்பற்றிய குறிப்பு அறியக்கூடவில்லை. அவன் வண்மையும் வன்மையும் செம்மையும் சீர்மையும் அவனைப் பற்றிய பாடல்களால் அறியவருகின்றன. காரி மலையமானாட்டின் மன்னன்; அவன் முள்ளூர் மலைக்குரியவன்; அவன் தலைநகர் கோவல் என்னும் திருக் கோவலூர்! அவனொரு குறுநில மன்னன்! மூவேந்தருக்கும் உற்றுழி உதவும் உரவோன்! அவன், கழல்தொடிக் காரி, கழல்புனை திருந்தடிக் காரி, கழல்தொடி தடக்கைக் காரி, நெடுந்தேர்க் காரி, ஒள்வேல் மலையன், செவ்வேல் மலையன், மாரியீகை மறப்போர் மலையன், தேர்வண்ண மலையன், கோவல் கோமான் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவன். காரியின் குதிரை புகழ் வாய்ந்தது. அது கரு நிறமானது. காரிக் குதிரை என்று வழங்கப்பெற்றது. காரிக் குதிரையால் காரியும், காரியால் காரிக் குதிரையும் சான்றோர்களால் பாடும் புகழ் பெற்றனர். காரிக் குதிரைக் காரி! என்று தன் ஊர்தியால் பெயர் பெற்ற பேற்றாளன் காரி! காரிக் காளை என்று இந் நாள் வழங்கப்பெறுவது இல்லையா! காரி என்னும் பெயர். முள்ளூர் மன்னன், கோவல் கோமான், தேர்வண் மலையனுக்கு எப்படி வாய்த்தது? காரி என்னும் சொல்லின் பொருளையும் இம் மன்னன் தனித் தன்மையையும் அறியின் புலப்படும்! காரியின் நாட்டைக், கடலும் கொள்ளாதாம்; பகைவரும் பற்றிக் கொள்ள நினையாராம்: அவன் வலிமை அத்தகைத்து (புறம். 122) மூவேந்தருள் எவனேனும் ஒருவன், எனக்குப் போர்த் துணையாக வர வேண்டும் என்று முந்தி வந்து, காரியை வேண்டித் துணையாக்கிக் கொள்வான் (புறம். 122) யானையும் அரசும் களத்தில் படப் பகையழிக்கும் வல்லாளன் காரி (புறம், 26) இவை, காரியின் வீர மாண்புகள். இவை பிறர்க்கும் உரியவை எனலாம். ஆனால் காரியின் தனி வீறு ஒன்று. அது, வெற்றி பெற்றவனும் புகழ்வானாம் காரியை; தோல்வி யுற்றவனும் புகழ்வானாம் காரியை! எனக்குத் துணையாக வந்து வெற்றி வாய்ப்பைத் தந்தவன் நீயே என்று வென்றவன் புகழ்வான்! எனக்குத் துணையாக வாராமையால் யான் தோல்வி கண்டேன் என்று தோற்றவன் புகழ்வான். காரிக்கு இருபால் புகழும் உண்டு! கடந்தட்டு வென்றோனு நிற்கூறும்மே, வெலீஇயோன் இவனென தோற்றோன் தானுநிற் கூறும்மே தொலைஇயோன் இவனென வென்றவனும் தோற்றவனும் ஒருங்கே புகழ வாய்க்கும் பேறும் வீறும் பொதுவாக எவருக்கும் வாய்ப்பனவோ? ஆகலின், இப் பெருமிதத்தைக் கூறும் பெருஞ் சாத்தனார், ஒரு நீயாயினை பெரும என வியந்தார் (புறம். 125). காரியின் ஒருதானாய வீறே அவனுக்குக் காரிப் பெயரைத் தந்ததாம். காரி என்பதொரு புள்; கரும்புள், கரும்பிள்ளை என்பனவும் அது கரிக்குருவி, கரிச்சான் என்பனவும் அது. வலியன், வல்லூறு, வலுசாறு என்பனவும் அதுவே. வலியன், வயன் என இலக்கியத்தில் இடமும் பெறும்! காரி எவ்வாறு ஒரு தானாய வீரன் எனச் சாத்தனார் குறிக்கின்றாரோ, அது போலவே புள் என்றாலே கரும்புள்ளாய காரிக் குருவியையே குறிக்கும். அக் குறிப்பு இக் காரியைப் பற்றிக் கபிலர் பாடும் பாட்டிலேயும் இடம் பெற்றுள்ளது. நாளன்று போகிப் புள்ளிடை தட்ப என்றார் அவர். பறவையின் வேந்தென வளையமிடுவது இராசாளிப் பறவை. அவ்வரசாளியை ஆட்டி வைப்பது காரிப் பறவையாம் கரிச்சான்! உடலால் கிறியது; உரத்தால் அரியது; ஆதலால் பெரியவையும் அறைபட்டு அலறும்! அஞ்சி ஓடும். இக் காட்சியை நாம் கண்டது இல்லையோ? வலிய காரிப் பறவை மிகப் பழங்காலந் தொட்டே சொகினம் (சகுனம்) காட்டும் பறவையென்னும் குறிப்புண்டு. அது தடுத்தால் தோல்வி என்றும், வழி விட்டால் வெற்றி யென்றும் வீரர்கள் குறிக்கொண்டனர். புலரி விடியல் புள்ளோர்த்துக் கழிமின் என்பது மலைபடுகடாம். நாளும் புள்ளும் கேளா ஊக்கம் என்பது தகடூர் யாத்திரை. வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் போனால் கால் நடையாய்ப் போனவர்கள் கனகதண்டி ஏறுவார்கள். என்பது இன்றும் வழங்கும் பழமொழி. காரிக்குருவி சொகினம் காட்டாது தடுத்தால், எத்தகைய வீரனுக்கும் தோல்வியே ஏற்படும்! அது சொகினம் காட்டின் வெற்றி உறுதியாகக் கிட்டும்! வெற்றிக்கும் தோல்விக்கும் காரிக் குருவியின் குறிப்பே அடிப்படை! அதுபோல் மூவேந்தர் வெற்றிக்கும் தோல்விக்கும் காரியே மூலவன். இக் கருத்தாலேயே கோவற் கோமான் முள்ளூர் மன்னன், தேர்வண் மலையன் காரி ஆனான். வென்றோர் வெலீஇயோன் எனவும், தோற்றோர் தொலை இயோன் இவன் எனவும் கூறிக் கூறிப்புகழ் விளக்க மாகிய பின்னர்க் காரிப்பெயர் பெற்றான் என்றும், அப்பெயரே அவன் பெயர்கள் அனைத்தையும் வென்று விளக்கமும் வீறும் கொண்டு இலங்குகின்ற தென்றும் கொள்ளலாம்!  65. வள்ளல் பாரி உயிர்க்கு ஊதியமாவன ஈதலும் இசைபட வாழ்தலும் என்றார் பொய்யா - மொழியார். இப்மொழிக்கு ஏற்பச் சங்க நாளில் வாழ்ந்த பெருமக்களை எண்மர் என எண்ணிக் கணக் கிட்டனர். அவருள் தலைமையாளன் பாரி பாரியின் புகழ் முல்லைக்குத் தேர் ஈந்தது என்பதை நாடறியும் இப்பாரியொடும் சேர்த்து, இணைத்து எண்ணப் பெறுபவன் பேகன்; அவன் மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளியோன். ஏனை அறுவரினும் இவ்விருவர் புகழும் புலவர்களால் பெரிதும் போற்றப் பெறுதல் கண்கூடு. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் (பழமொழி. 74; புறப். வெண்பா. 194) எண்மருள் பாரியும், பேகனும் எடுத்தோதிச் சிறப்பிக்கப் பெறுவது ஏன்? முல்லையும் மயிலும் மொழித்திறம் அறியா உயிரிகள். அவை தேடி வந்து பாடிப் பரிசு வேண்டியன அல்ல. அவற்றைத் தாமே கண்டு, தண்ணளியால் வழங்கப்பெற்றன தேரும், பேர்வையும்! தேடிவந்து பாடிநின்ற புலவர்க்கும் கூத்தர்க்கும் பிறர்க்கும் வழங்கும் கொடைகளினும், இவற்றுக்கு வழங்கிய கொடை அளப்பரும் வளப்பெருமை வாய்ந்தது; ஆகலின் தனிச் சிறப்புற்றன. பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம். 200) என்றும், உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் (புறம். 14) என்றும் புறப் பாடல்களால் பாராட்டப் பெறுகின்றன. இவற்றைப் பாடியவர்களோ முறையே, கபிலபரணர் என்று சான்றோரால் சிறப்பிக்கப்பெறும் சீர்த்தியர். முல்லை, மயில் ஆகியவற்றுள்ளும் முல்லை ஓரறிவுயிரி; மயிலைப் போல் இடம் பெயர்தல் அறியாதது; அன்றியும் ஐயறிவு மயிலைப் போல் களிப்பும் கவலையும் பிறவும் வெளிப் படக் காட்ட அறியாதது; உணர்வு நிலையில் மிகக் குறைந்தது. இருந்தும் தான் உணர்ந்த உணர்வே உருவாய் உருகி நின்று. அப்பேரருள் பெருக்கத்தால் அதற்குத் தேர் தந்த பெருமகன் பாரிவேள் ஆகலின் பேகனினும் அவன் முதன்மையுற்றான். பாரியின் சிறப்பு முல்லைக்குத் தேரளித்த அளவில் நின்று விடவில்லை. தனக்கு உரிமையாக இருந்த முந்நூறு ஊர்களையுமே முழுமையாகப் பரிசிலர்க்கு வாரி வழங்கி விட்டான். அவன் வழங்காமல் வைத்திருந்தது பறம்பு மலை ஒன்றுமட்டுமே! அன்றியும், தன்னையும், தன் உயிரன்புப் புலவர் கபிலரையும் பிறர்க்கென வழங்கினான் அல்லன். இதனைக் கபிலர் பெருமானே, முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (புறம். 110) என்று பாடுவதால் அறியலாம். இத்தகு மேதக்க கொடையாளன் பாரி என்னும் பலர் புகழ் பெயர் தாங்கிய பெற்றியை அறிதல், பெருகிய இன்பம் பயப்பதுடன் முந்தையோர் பெயர் சூட்டும் திறத்தை அறிந்து மகிழ்தற்கும் வாய்ப்பாம். பார் என்னும் சொல்லுடன் இ என்னும் இறுதி நிலை இணைந்து பாரி என்னும் பெயர் அமைந்ததாம், காரி ஓரி என்னும் பெயர்களும் இவ்வாறு அமைந்தனவே. பார் என்பது பரவுதல் பண்பால் அமைந்த பெயர், அனைத்துப் பொருள்களையும் நீர்ப்பரப்பையும் அடக்கிப் பரந்து கிடக்கும் உலகம் பார்; வண்டி, தேர் ஆகியவற்றின் அச்சின்மேல் பரவிக்கிடக்கும் பலகைப் பரப்பு, பார்; நீர் பாய்ச்சுதற்காக நெடிதகன்ற பரப்புடையதாகச் செய்யப் பெற்ற தும் பல பாத்திகளைத் தன்னகத்துக் கொண்டதும் ஆகிய நிலப்பரப்பு, பார்; அகன்று விரிந்த கல்லும், கல் நிலமும் பார்; ஆழ்ந்து நோக்குதல் இன்றி அகன்று நோக்குதலே பார்த்தல். இனிப், பாரி என்னும் சொல்லும் பரவுதல் பண்பாலேயே கட்டில், கடல், உடற்பருமை, உடை, பூந்துகள், புவி ஆகிய வற்றைக் குறிக்கும்: புகழ் பரப்பும் இல்லாளைப் பாரி என்பதும் இக்கரணியம் கொண்டேயாம். புகழ் புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை என்பது திருக்குறள். (59) பாரித்தல் என்பது விரித்துரைத்தல், பரப்புதல், வளர்த் தல், மிகுதல் முதலிய அகன்மைப் பொருளிலேயே வரும். அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும் திங்கள் (நாலடி. 151) பகல்செல் மண்டிலம் பாரித் தாங்கு (பெரும். 442) தந்நலம் பாரிப் பார் (திருக். 116) பயனில பாரித் துரைக்கும் உரை (திருக். 193) பாரிய பராரை வேம்பு (நற். 218) என்பவற்றை நோக்குக ஓங்கு தாங்காக உள்ள மரம் பாரியான மரம் என்றும், ஓங்கு தாங்காக உள்ளவர் பாரியானவர் என்றும் இன்றும் வழங்கப் பெறுவதை அறிக. இவற்றை நோக்குவார், பாரி என்னும் பெயர்ப் பொருளின் நயம் நன்கறிந்து மகிழ்வர். பாரி, உடலால் பரியவன்; உருவால் உயர்ந்தவன்; பரந்தகன்ற மார்பினன்; தடநெடுங்கையினன்; பரந்தோங்கு புகழாளன். இவற்றைக், கூர்வேல் குவைஇய மொய்ம்பில் தேர்வண் பாரி (புறம். 118) தேர் வீசிருக்கை நெடியோன் (புறம். 114) நெடுமாப் பாரி (புறம். 201) மலர்ந்த மார்பின் மாவண் பாரி (பதிற். 61) இலங்குதொடித் தடக்கைப் பாரி (புறம். 307) பரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம். 200) என வருவன தெளிவித்தல் அறிக. பரந்து விரிந்த உலகினும், பரந்து விரிந்தது புகழ் என்பதை, மண் தேய்த்த புகழ் என்னும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 1. 36) அதற்குப் பூமி சிறுகும்படி வளர்ந்த புகழ் என்று அரும்பதவுரை யாசிரியரும், மண்ணைத் தொலைத்த புகழினையுடையான்; புகழ் வளரப் பூமி சிறுகலான் என்று அடியார்க்கு நல்லாரும் வகுக்கும் உரைகளாலும் கண்டுகொள்க. பரவிய புகழுக்கு ஒருவனாகப் பாரி திகழ்ந்தான் என்பதைப், பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வார் செந்நாப் புலவர் (புறம். 107) என்று கபிலர் குறிப்பதால் அறிக! பண்டைத் தமிழ் வேந்தரும், புலவர் பெருமக்களும், பொதுமக்களும் தம் மக்களுக்குப் பொருள் நலம் சிறந்த பெயர்களைச் சூட்டித் தமிழ்வாணராகத் திகழ்ந்த சிறப்பை அறிந்து மகிழ்க! அம் முறைமையைப் போற்றி முத்தமிழ் வளர்க்க! 