இளங்குமரனார் தமிழ்வளம் 12 தகடூர் யாத்திரை இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 12 உரையாசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 200 = 216 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 135/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் தகடூர் யாத்திரை மூலமும் உரையும் ஆராய்ச்சி முன்னுரை 1 அவையடக்கம் 33 1. நீத்தார் பெருமை 37 2. ஈகை 46 3. செங்கோன்மை (1 - 2) 51 4. சொல்வன்மை 61 5. தூது - 1 - 3 64 6. நாடு 77 7. புல்லறிவாண்மை 86 8. நிரைகோடல் 88 9. நிரைமீட்சி 91 10. பகைவயிற் சேறல் - (1 - 2) 94 11. பாசறை 98 12. வஞ்சினம் - (1 - 2) 102 13. படைச் செருக்கு - (1 - 8) 107 14. எயில் காத்தல் - (1 - 2) 128 15. தானைமறம் - (1 - 9) 137 16. குதிரை மறம் 160 17. மூதில் மறம் - (1 - 4) 162 18. இரங்கல் - (1 - 2) 171 19. நூழில் 174 20. பூக்கோள் நிலை 177 21. புறத்தோன் அணங்கிய பக்கம் 181 22. தருக்க வாதம் 185 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 189 அருஞ்சொல் அகரவரிசை 190 தகடூர் யாத்திரை ஆராய்ச்சி முன்னுரை தகடூர் தகடூர் என்பது இந் நாளைச் சேலம் மாவட்டத்தில் உள்ள தருமபுரியின் பழம்பெயர் ஆகும். தகடூர் என்னும் பெயரைப் 1பதிற்றுப்பத்து வழங்குகின்றது. தகடூரின் தென் கிழக்கில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதமன் கோட்டை என்னும் ஊர் அதியமான் கோட்டை என்பதன் சிதைவே ஆகும். அதியமான் கோட்டையின் சிதைபாடுகளை இன்றும் காணலாம். கோட்டையும் சிதைந்து, கொண்ட பெயரும் சிதைந்து போய நிலைமையிலும் தன் பழவரலாற்றை நினைவூட்டும் அதியமான் கோட்டை வாழ்வதாக ! தகடூர் தகடை, தகட்டூர், தகடாபுரி என்னும் பெயர் களாலும் வழங்கியது. தகடு என்னும் சொல் பலபொருள்களைத் தரும். அவற்றுள் தகட்டு வடிவப்பொருள், பொன், பூவின் புற இதழ் ஆகிய முப்பொருள்களிலும் சங்கத்தார் ஆண்டுள்ளனர். அவற்றுள்ளும், 2கருந்தகட் டுளைப்பூ மருது 3தூத்தகட் டெதிர்மலர் 4வேங்கை மாத்தகட் டொள்வீ 5கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ 6கானப் பாதிரிக் கருந்தகட்டு எனப் பூவின் புறவிதழ் என்னும் பொருளே பயில வழக்குப் பெற்றுள்ளது. பொன்னின் வேறுபடுத்துதற்கு நாறாத்தகடு என்னும் பெயரை ஆள்கின்றது 7நாலடியார். இப் புறவிதழ் என்னும் பொருளில் ஊன்றிப் புலவர் பாண்டியனார் அகவிதழைத் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலையுடைய ஊரென்னும் பொருள்பட அதியமான் தன்னூர்க்குத் தகடூர் எனப் பெயர் வைத்தான்1 என்பார். இனித் தகடு என்பது உயரமின்றித் தகடாக அமைந்த மலையைக் குறிக்குமாகலின், அம் மலை சார்ந்த ஊர் தகடூர் எனப் பெயர் பெற்றது எனக் கொள்வது இயற்கை தழுவியதாம். இப்பொழுதும் மட்டப்பாறை, குட்டைப்பாறை, தட்டைப் பாறை, தகட்டுமலை, தணிகைமலை, மைப்பாறை, சிப்பிப்பாறை, மணற்பாறை, சாய்மலை, திண்டுக்கல், செங்குன்று, கொடுங் குன்று, அண்ணாமலை முதலாய இயற் காரணப்பெயர் தழுவிய மலைகளும் மலைசார்ந்த ஊர்களும் எண்ணற்றனவாய் இருத்தலைக் காண்பார், இப் பெயர் அமைதி அறிதல் கூடும். அதியமான்மலை குதிரைமலை ஆகும். 2ஊராதேந்திய குதிரை என்றும் 3ஊராக்குதிரை என்றும், 4நெடுநெறிக் குதிரை என்றும், 5 குதிரைக்கவான் என்றும் குதிரைமலை சங்கச் சான்றோரால் பாடுபுகழ் பெற்றது. 6குதிரை போன்ற தோற்றம் வழங்கியமையாலோ, குதிரை மிக்கிருந்தமையாலோ இப் பெயர் பெற்றதாகலாம். 7உருவக்குதிரை மழவர் எனச் சான்றோரால் பாடு புகழ் பெற்றவர் அதியர் ஆகலின், அவர் குதிரை மிக்குடையராய் இருந்தனர் என்பது வெளிப்படை. கொங்கர் ஆக்கள் மிகவுடைமையால், 8ஆகெழு கொங்கர் எனப் பெற்றமை இவண் கருதத்தக்கது. தகடூர், முல்லைவளமும் மருதவளமும் ஒருங்கே அமைந்த வாழ்வுடையது; இவற்றைப் பதிற்றுப்பத்தும் புறநானூறும் காட்டுகின்றன. மெல்லியல்பு வாய்ந்த மகளிர் அசைந்த நடையில் மருத நிலம் செல்வர்; அங்குத் தாமரை குவளை ஆகிய மலர்களைக் கொய்வர். முல்லைநிலம் சென்று தினைக்கொல்லையில் கிளிகடிவர்; பல்வேறு பயன்களையும் ஒருங்கே பெறுவர் என்பது 9பதிற்றுப் பத்து. கன்றோடு கூடிய பசுக்கூட்டம் காட்டிலே துயரின்றி வதிகின்றது; வழிநடைச் செல்வார் தாம் விரும்பும் இடத்தில் துயரின்றித் தங்கிச் செல்கின்றனர். களத்தில் நிறைந்த நெற்பொலி காவலில்லாமல் கிடக்கின்றது; அசையாச் செங்கோல் திகழ்கின்றது என்பது 1புறநானூறு. நாட்டின் வளங்கூறும் பாட்டுகளைத் தகடூர் பலவாகக் கொண்டிருந்தும். குதிரைமலையின் வளம் கூறும் பாட்டொன்றும் கொண்டிலது. அம் மலையின் தன்மை அத்தகைத் தென்க. 2 அமிழ்து விளைதீங்கனி ஔவைக் கீந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி. அவனை, 3என்னை என்றே 4பன்னியுரைத்துப் பயின்று வாழ்ந்தவர் ஔவையார். அவரும் 5பெருமலை என்றாரே அன்றிப் பிறிது வளம் கூறினார் அல்லர். அவர், ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்தத் துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை அறுகோட் டுழைமான் ஆண்குரல் ஓர்க்கும் நெறிபடு கவலை நிரம்பா நீளிடை என்று 6பாடியிருப்பதை நோக்கக் குறிஞ்சி நிலை பாட அவர் அறியார் என எவரும் கூறார். இதனால் தகடூர்நாடு சேரநாடு போன்ற குறிஞ்சி வளம் உடையதன்று என்பது விளங்கும். தகடூர், குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ மண்டலத்திற்கு உரியதாக இருந்தது. இதனை 7வதி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு பன்னிரண்டாவது நிகரிலி சோழ மண்டலத்துக் கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூர் என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். அதன் பின்னே பல்லவர் வலிமேம்பட்டனர். கோப் பெருஞ்சிங்கன் என்பான் பல்லவ வேந்தனாக விளங்கினான். அவன் அரசியல் தலைவருள் வீரசேகரக் காடவராயன் என்பான் ஒருவன். அவன் அதியமான் நாட்டின்மேல் படை கொண்டு சென்று தகடூரைப் பெயரும் இன்றி அழித்தான். கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடமாராயன் கூடலும் அதிகை மான் நாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்து அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன்1 என விருத்தாசலக் கோயில் கல்வெட்டுக் கூறுவதால் இச் செய்தி புலப்படும். காடவராயன் செய்த அழிபாட்டின் பின்னரே தகடூர் அறவே அழிந்துபட்டது. தருமபுரி (தருமாபுரி) என்னும் பெயரைத் தாங்கியது! அதியமான் வழியினர் வள்ளல்களாகத் திகழ்ந்தவர். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக விளங்கியவர். அவர்தம் வழிவழிப் பெருமையை எண்ணிய மக்கள் நாடும் நகரும் இழந்து நலிந்துபோய காலையும், தம் பீடும் பெயரும் மறக்க முடியாதவராய் அறவோர்களாகிய அவர்கள் இருந்து ஆட்சி செய்த ஊரைத் தருமபுரி என வைத்துக் கொண்டனர் என்பது சாலும். தருதல் வழியாகப் பிறந்த சொல் தருமம். 2தருமமோ டியல்வோள் என்பது காரிக்கண்ணனார் வாக்கு. 3தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம் எனத் தொடங்குகிறது இத் தகடூர் யாத்திரைப் பாடலுள் ஒன்று. 4தரும புத்திரன் என்னும் வேந்தனைக் கோதமனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உண்டு. தகடூர் அழிந்துபடினும் 5கொங்குநாட்டுத் தகடப் பாடியும், 6சேலம் நாட்டு அதிகப்பாடியும் செங்கற்பட்டு அதியமான் நல்லூரும், 7திருமுனைப்பாடி நாட்டுத் திருவதிகையும் சீரிய நினைவுச்சின்னங்களாக இலங்குகின்றன. யாத்திரை யாத்திரை என்னும் சொல் செலவு என்னும் பொருளது இந் நாளில், திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்வதே யாத்திரை எனப் பெறும். பாரதத்துத் தீர்த்த யாத்திரைச் சருக்கம் என ஒரு சருக்கமுண்மையும், தலயாத்திரை என வழக்குண்மையும் இதனைத் தெளிவிக்கும். திருக்கோயில் செலவு, யாத்திரை எனப் பெறுவது தொன்மையான தென்றே அறியக் கிடக்கிறது. கூடல் மாநகரில் இருந்து திருப்பரங்குன்றத்திற்குச் செவ்வேளை வழிபட வரும் திராளான மக்களை யாத்திரை போவாராகக் குறிக்கின்றது1 பரிபாடல். குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல் ஆர்வேலை யாத்திரை செல் யாறு என்பது அது. ஆனால், போர்மேற் செல்லுதலையும் யாத்திரைச் சொல் குறிக்கும் என்பது தகடூர் யாத்திரையால் அறியப் பெறுவதேயாம். இஃது ஆராயத்தக்கது. ஆசிரியர் தொல்காப்பியனார், போர் மேற் செல்லுதலைச் செலவு என்றே குறிப்பார். 2புடை கெடப் போகிய செலவு என்பது அவர் குறிப்பு. 3செலவு எனத் துறை வகுத்ததை அல்லாமல், 4அதரிடைச் செலவு எனத் துறையும் விளக்கமும் காட்டினார் ஐயனாரிதனார். தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் 5செலவழுங்குதலும் உண்டு என்னும் தொன் னெறியும் செலவுப் பொருள் இன்னதெனக் காட்டும். 6செங்கோன் தரைச் செலவு என்பதொரு நூல் இருந்ததாக அறியப் பெறுகிறது. இவ்வாறாகத் தகடூர்ச் செலவு என்பது பெயராய் அமையாமை மேலும் எண்ணத்தக்க தாகவே உள்ளது. இனிக் களப் போர் குறித்த ஒரு நூல் களவழி என்பதும் நோக்குதல் வேண்டும். தகடூர் யாத்திரைப் பாடல்களுள் பெரும்பாலானவற்றை நாம் இன்று அறிந்து கொள்ள உதவிய அருமை நூல் புறத் திரட்டாகும். அந் நூலில் தகடூர் யாத்திரை என்பது தகடூர் மாலை என்னும் பெயராலும் குறிக்கப் பெறுகிறது. இக் குறிப்பு மிக வலுவுடையதாகும். புறப்பொருள் பற்றிய ஒரு பழமையான நூல் ஆசிரிய மாலை என்பதாம். அதில் 17 பாடல்களைப் புறத்திரட்டு வழங்குகின்றது. புறப்பொருள் இலக்கணம் பற்றிய இடைக்கால இலக்கண நூல் புறபொருள் வெண்பாமாலை என்பது எவரும் அறிந்தது. ஆதலால் தகடூரில் நிகழ்ந்த போர் பற்றிய நூல் தகடூர் மாலை எனப் பெயர் கொண்டு இருந்தது என்பது ஏற்கத் தக்கதேயாம். இன்னும், வீரவெட்சிமாலை, உழிஞைமாலை, தானைமாலை, நொச்சிமாலை, தும்பைமாலை, காஞ்சிமாலை, வாகைமாலை, வென்றிமாலை முதலியனவாகப் புறப்பொருள் பற்றிய பிற்கால நூல்கள் சில எழுந்தமை இப் பெயரமைதிக்கு அரணாவதாம். தகடூர் யாத்திரையின் பழம்பெயர் தகடூர்மாலை எனின், அப்பெயர் எப்பொழுது மாற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் ஆராயத்தக்கதே. அதற்குப் பேராசிரியர் வரையும் அரிய குறிப்பு ஒன்று துணை செய்கின்றது. 1தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவுக்கு உரை கண்ட உரையாசிரியர் உரையொடும் பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள்மேல் வருவனவாம். அவை இராம சரிதை, பாண்டவசரிதை, முதலாயினவற்றின் மேல் வரும் செய்யுள் என்றார். பொருள் பழமையானது; உரை வடிவில் அமைந்தது; செய்யுள் புதிது யாக்கப்பெற்றது என்பது அவர் கருத்து. ஆனால் பேராசிரியர் இந் நூற்பாவிற்கு வேறொரு பொருள் காண்கிறார். தொன்மை என்பது உரைவிராஅய் பழமையாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு, அவை, பெருந் தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன என்பது அவர் உரை. இவ் வுரையையே வழி மொழிந்த நச்சினார்க்கினியர். சிலப்பதிகாரமும் அதன் பாற்படும் என இயைத்துக் கொண்டார். உரையும் பாட்டும் விராவச் செய்யப் பெறுவது தொன்மை எனப்படும் என்பதும், அதற்குத் தகடூர் யாத்திரையும், பெருந்தேவனார் பாரதமும் சான்று என்பதும் பேராசிரியர் கருத்தாதல் தெளிவாகும். பழமையவாகிய கதைப் பொருள் என்றது செய்யுளையே யாம். அதற்கு விராவச் செய்யப் பெற்றது உரையையே யாம். பெருந்தேவனார் பாரதம் என்பது பாரத வெண்பா ஆகும். அதில், உத்தியோக வீடும துரோண பருவங்களில் 830 பாடல்கள் உரையிடையிட்டு வரக் கிடைத்துள்ளன. அதன் செய்யுட் பழமையும் உரைநடைப் புதுமையும் எளிதில் புலனாவதை அதன் 1ஆராய்ச்சி முன்னுரையில் காண்க. அன்றியும் அதன் முன்னைப் 2பதிப்பாசிரியர், பாட்டுகளெல்லாம் பழைய பாட்டுகளே; வசன மட்டும் பிற்காலத்துப் புலவரொருவர் எழுதிச் சேர்த்தது என்று உரைப்பது பொருத்தமிக்கதாகும். ஆதலால் பெருந் தேவனார் பாரதம் போலவே, தகடூர் யாத்திரையும் பழைய பாடலையும் புதிய உரைநடையையும் பெற்றிருந்தது என்று கொள்வதே பொருந்தும். அவ்வுரை நடையும், பேராசிரியர், நச்சினாக்கினியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் ஆகியவர்கள் காலத்திற்கு முற்பட்டே அமைந்திருக்க வேண்டும். அவ்வுரைநடை இயற்றிய ஆசிரியரே தகடூர் மாலையைத் தகடூர் யாத்திரை என்னும் பெயரிட்டு வழங்கச் செய்தவர் ஆதல் வேண்டும். இராமாவதாரம் என்று கம்பர் இட்ட பெயர் இராமாயணமாக மாறிவிடவில்லையா! அதுபோல் என்க. மற்றும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் கங்க நாட்டில் சம்பு என்னும் ஒருவகை நூல்கள் இயற்றப்பெற்றன என்றும், அவை பாட்டும் உரையும் கலந்த கதை நூல்கள் என்றும் 3பல்லவர் வரலாறு கூறுகின்றது. அக்கால எல்லையிலேயே தகடூர் யாத்திரையின் உரைநடைப் பகுதி இயற்றப் பெற்ற தாகலாம். இஃதிவ்வாறாகத் தகடூர் யாத்திரையையே மிகப் பிற்கால நூலாகக் கருதுவார் 4பேராசிரியர் திரு வையாபுரிப் பிள்ளை. இது சரித்திர நிகழ்ச்சி பற்றிய நூலாயினும், அந் நிகழ்ச்சி நடைபெற்ற காலத்துத் தானே இயற்றப் பெற்றதன்று. மிகப் பிற்பட்ட காலத்திலே இது தோன்றியதெனக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால் இதனைப் பழையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுகின்ற தொன்மை என்பதற்கு இலக்கியமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர் என்கிறார். இக் கருத்தை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்5 தக்க முறையில் மறுத்துத் தங்கோள் நிறுவுகின்றார். தகடூர் யாத்திரை என்னும் நூலில் நமக்கு இப்போது தெரிகிற வரையில் அரிசில் கிழாரும், பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில் - பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் - இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல் களினால் தெரிகிறது. தகடூரை வென்ற பிறகு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையைப் பாடிப் பெரும்பொருள் பரிசு பெற்றதோடு. அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூற முடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது அதனைப் புறக் கணித்து மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக் கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிற போது அதனையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அன்றியும் வீரச் செய்திகளைக் கூறும் நூல்கள் அந் நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில் அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும் என்று விரித்துரைத்து மேலும் விளக்குவார். இதில் உரையாசிரியர் தவறும் இல்லை என்பதை மேலே காட்டினாம். தகடூர் யாத்திரை பற்றி முதற்கண் குறிப்பிடும் உரையாசிரியர், பேராசிரியரே ஆவர். அவர் அரிசில் கிழார் பாட்டும் பொன்முடியார் பாட்டும் தகடூர் யாத்திரையில் உண்மையும், அவர்கள் சங்கச் சான்றோர் ஆதலையும், பெருஞ் சேரல் இரும் பொறை, அதியமான் எழினி ஆகியோர் சங்ககால வேந்தர் ஆதலையும் தெள்ளிதின் அறிந்தவர். சங்கப் புலவரைச் 1சான்றோர் எனப் போற்றுபவர். ஆகலின் அவர் தகடூர் யாத்திரை பிற்கால நூல் எனக் கருதினார் என்பது பொருந்தாது. அவருரையைப் பிறழ உணர்ந்தமையே பிழையாயிற்றாம் என்க. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் இவ் வேந்தன் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்திற்கு உரியவன். இவனைப் பாடியவர் சங்கச் சான்றோர் ஆகிய அரிசில்கிழார். இவ் வேந்தர் பெருமானே, 1அறியாது முரசுக்கட்டிலில் துயின்ற புலவர் மோசிகீரனாரை வாள்வீசிச் சிதையாமல், கவரிவீசி நின்று பணி செய்த காவலன் ஆவன். பெருஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழி யாதனின் மைந்தன்; இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி; பல்வேல்தானை அதியமானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்றவன் தகடூர் எறிந்தவன் என்னும் செய்திகளைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகின்றது. அன்றியும் தன்னைப் பாடிய புலவர் அரிசில்கிழார்க்கு வழங்கிய கொடைச்சிறப்பையும் பதிகம் கூறுகின்றது. தானும் கோயிலாளும் (அரசியும்) புறம்போந்து நின்று. (அரண்மனைக்கு வெளியே வந்து நின்று) கோயிலுள்ள வெல்லாம் (அரண்மனையில் உள்ள வெல்லாம்) கொண்மின் என்று காணம் (பொன்) ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப (ஆட்சியை வழங்க) அவர் (அரிசில்கிழார்.) யான் இரப்ப இதனை ஆள்க என்று அமைச்சுப்பூண்டார் என்பது அது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு யாண்டு அரசுபுரிந்த செய்தியையும் பதிகம் கூறுகின்றது. 2குளவிக்கூட்டைக் கலைத்த இளஞ்சிறார்போலச் சேரனை எதிரிட்டோர் படும் துயரையும், 3ஊழித்தீப்போலப் பகைவரைச் சேரன் வாட்டுவதையும், 4புலியைக் கொன்று களிற்றை அழிக்கும் வயமான் போன்று அவன் விளங்குதலையும், 5பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறைகொண்டு பெயர்தலையும், 6முழு துணர்ந்த நரைமூதாளனுக்கும் அறநெறி இஃதென அறி வுறுத்தும் அறிவு மேம்பாட்டையும், 7புகார்ச் செல்வனாகவும், பூழியர் மெய்ம்மறையாகவும், கொல்லிப் பொருளனாகவும், கொடித்தேர்ப் பொறையனாகவும் பிற ருவமமாகா ஒரு பெரு வேந்தனாக 8அவன் கொடை மாண்பையும், 9நன்மகப்பேற்றையும் 10கழுவுள் என்பான் தலைமடங்குதலையும், 11தகடூர் அழிப்பையும், 12யானைப் படைப் பெருக்கத்தையும் சுட்டுகின்றார். அரிசிலார், சேரனின் பகைவர் அழிபாட்டுக்கு வருந்தித் 13தூது சென்றும் வென்றி காணாராய் உருகிய உருக்கம் ஒருபாட்டில் புலப்படுகின்றது. இச் சேரன் தகடூரை அழிக்கும் வரை பெருஞ்சேரல் இரும்பொறைப் பெயரோடே இருந்தான். தகடூர் வெற்றி அந்நாளில் ஈடும் எடுப்பும் அற்ற வெற்றியாகக் கருதப்பெற்றது; தமிழ்நாட்டு வீரர்கள் வேந்தர்கள் புலவர்கள் உள்ளங்களை யெல்லாம் கொள்ளைகொண்ட சிறப்புடையதாயிற்று. ஆதலால் அவன் ஏனை வெற்றிகளும் பெற்றானாகவும் தகடூர் வெற்றி ஒன்றனையே அவன் பெயருடன் சான்றோர் இணைத்துக் கொண்டனர். மேனிலைப் பட்டம் பெற்றார் அதிற்றாழ்ந்த பட்டங்களைப் பாராட்டாமையும் குறிக்காமையும் இந்நாள் வழக்கன்றே. அத்தகைத் தென்க, தகடூர் எறிந்த விருது. இவ்வாறே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பார் பெயர்களும் கருதுக. எறிதல் என்பது அழித்தல்; சவட்டுதல் என்பதும் அது; தகடூர் எறிதலைக் குறிக்கும் பதிற்றுப்பத்து தகடூர் நூறி என்கின்றது. நூறு என்பது துகள்; தகடூரை அழித்துப் புழுதி யாக்கியமையைப் புலப்படுத்தும் சொல் நூறி என்பதாம். அதன் காவல் திறத்தையும், காப்போர் உரத்தையும், பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பில் தகடூர் நூறி என்கின்றது1 பதிற்றுப்பத்து. சேரன் தகடூர் வெற்றியை இவ்வொரு பாட்டளவில் நிறுத்த விரும்பாத அந் நாள் புலவருலகம்; தகடூர் யாத்திரை என்னும் நூலையே பாடிப் பரவியது. அவர்கள் கொண்ட வீர வழிபாடு அது. பின்னாளைத் தமிழ்ப் புலவர் உலகமோ, அந் நூலையும் போற்றிக் காக்கும் திறந்தானும் இன்றி ஒழிந்தது ! அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி அதியர் என்பார் உதியர் என்பார்போல ஒரு குடியினர். அவர்தம் அரசராயினார், சேரர், மலையர் என்பார்தம் அரசர் சேரமான், மலையமான் எனப் பெயர் விளங்கினாற்போல் அதியமான் எனப் பெயர்பெற்றனர். எழினி என்பதும் அக் குடியின் அரசர் பலர் கொண்டிருந்த பெயரே யாம். அதியனை அதிகன் என வழங்கும் வழக்கம் பழங்காலந் தொட்டே உண்டு என்பதை, 1வெள்ளத் தானை அதிகற் கொன்று 2பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன் என்பன முதலாக வரும் சான்றோர் வாக்குகளால் அறியலாம். உதியன் என்பான் உதிகன் ஆகாமைபோல் அதியன் என்பான் அதிகன் ஆகாமைப் போற்றுதலே பொருத்தமாம். அதிகன் என்பது ஏடுபெயர்த் தெழுதியோரால் ஏற்பட்டதாகலும் கூடும். தமிழகத்தின் ஆட்சியில் பன்னூற்றாண்டுக் காலம் தனிப் பெரும் புகழுடன் உலா வந்தவர் அதியமான்கள். அவர்கள் கி. பி. 12. ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்து செயற்கரும் செயல்கள் செய்ததை அறிஞர்கள் ஆய்ந்து கூறுவர். சங்கச் சான்றோர்களால் பாடு புகழ்பெற்ற அதியமான் ஒருவன் அல்லன்; பலர் ஆவர். ஆனால், அதியமான் என்றவுடன் நமக்கு நேரே காட்சி வழங்கும் பெருமகன் ஔவையாரால் பாடு புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சி ஒருவனே யாவன் - அவன், தன் குடிப்புகழை எல்லாம் தன்புகழ் ஆக்கிக்கொண்ட பெருமையாளன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தகடூர்ப் போரில் வீழ்ந்துபட்டவன் ஔவையார் பாடல் பெற்ற அதியமானே; தகடூர் யாத்திரையில் குறிக்கப்பெறுபவன் அவனே என்று 3ஆராய்ச்சியாளர் பலரும் கூறுவர். இக் கூற்றின் உண்மையை ஆராய்தல் இன்றியமையாததாம். (1) அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடிய பாடல்கள் 22. அவையனைத்தும் புறநானூற்றைச் சேர்ந்தவை. அவர், குறுந்தொகையுள் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினியையும் (80) நற்றிணையுள் நெடுமானஞ்சி தேர் வீசு இருக்கை யையும் (381) பாடுகின்றார். இவற்றுள் எந்தப் பாடலிலும் அதியமான் தகடூர் முற்றுகைச் செய்தியோ, தகடூர்ப் போர்ச் செய்தியோ குறிக்கப்பெற்றில. (2) அதியமான் நெடுமான் அஞ்சி பொருது புண்பட்டு நின்றோனைப் பாடிய பாட்டிலேனும் (புறம். 93) அவனுக்கு இரங்கிக் கூறிய கையறு நிலைப் பாடல்களிலேனும் (231, 232, 235) தகடூர்ப் போர்ச் செய்தி குறிக்கப்பெற்றிலது. (3) அதியமான் செய்த போர்களாக ஔவையார் குறிப் பன எல்லாம், கோவலூர் முதலாகச் 1சென்று சென்று அவன் தாக்கிய போர்களே அல்லாமல், தகடூரிடை இருந்து செய்த போர் அன்று. (4) கன்றம ராயம் எனத் தொடங்கும் புறப்பாடல் (230) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடிய கையறுநிலைப் பாடலாகும். அரிசில்கிழார், தகடூர் யாத்திரைக் காலத்தில் உடனிருந்து பாடிய புலவர்களுள் ஒருவர். அவர் பாடிய கையறு நிலைப் பாடலை (230) அடுத்துவரும் பாடலும் பொதுவியல் கையறு நிலைப் பாடலே. ஆகலின், திணையும் துறையும் அவை என்னும் குறிப்புள்ளது. ஆனால் பாடினோரும் பாடப்பட்டோரும் வேறானவர் ஆகலின், அதிய மான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது எனக் குறிக்கப்படுகிறது. இஃது அவ்விருவரும் வேறானவர் என்பதை வெளிப்படுத்தும். அன்றி, அவனை அவர் பாடியது என்றுள்ள பாட வேறுபாடே பொருந்துவதாயின் 231, 232 ஆகிய புறப் பாடல்கள் இரண்டும் அரிசில்கிழார் பாடியனவாகவே அமையும். ஆனால் ஔவையார் பாடலாகவே இதுகாறும் கொள்ளப் பெறுகின்றன. (4) அதியமான் தூதுவிடத் 1தொண்டைமானுழைத் தூது சென்றவர் ஔவையார். அத்தகைய அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறை விடுப்பவந்த அரிசில்கிழார் தூதினைப் புறக் கணித்திருக்கமாட்டான். ஔவையாரும் அரிசில்கிழார் முயற்சிக்கு உறுதுணையாக நின்று ஒல்லும் வகையால் சந்து செய்திருப்பாரே அல்லாமல் ஒதுங்கிப்போய் வாளா விருக்கமாட்டார். (6) ஔவையாரால் பாடப்பெற்ற சேரவேந்தன், மாவண்கோ (மாரிவெண்கோ) என்பான். அவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னே அரசுகட்டில் ஏறிய குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் வழியில் தோன்றிய யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் பின்னே அரியணையேறிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதியை ஆட்சி செய்தவன்2 என்பர். ஆதலால் ஔவையாரால் பாடப் பெற்ற அதியமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை காலத்தான் அல்லன். (7) பதிற்றுப்பத்துப் பதிகம், கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேல் தானை அதிக மானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று என்று கூறியதை அல்லாமல், அவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனக் கூறிற்றில்லை. இவ்வாறாகவும், ஆராய்ச்சியாளர் பலரும் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்ததற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. அதற்கு அடிப்படையாக அமைந்தது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தரும் ஒரு குறிப்பேயாம். தொல்காப்பியப் புறத்திணை இயல், எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே என்னும் நூற்பாவின் (7) விளக்கத்தில், ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமல் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உள தாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தரே ஆவார் என்றுணர்க...... ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃதுழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை, அதிகமான் இருந்ததாம் என்று வரைந்தார். இதில் அதிகமான் என வந்தது கொண்டு 1அதியமான் நெடுமான் அஞ்சியே அவன் எனக் கருதினர். நச்சினார்க்கினியர் உரைத்த அதிகமான் அதியமான் தகடூர்ப் பொருதுவீழ்ந்த எழினியே எனக் கொள்ளல் சால்பாம். இனி, நச்சினார்க்கினியர் உரையால், அதியமான் நெடுமான் அஞ்சி அடைமதிற்பட்டிருந்ததாகக் கருதிக்கொண்டு அந்நிலையில் ஔவையார், உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி யுடலின் மான்கணம் உளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய இருளு முண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடக்கும் தாள்தோய் தடக்கை வழுவில் வண்கை மழவர் பெரும இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ நீகளம் புகினே என்னும் புறப்பாடலைப் பாடிப் (90) போர்க்கு ஏவினார் என வரலாறு புனைந்தாரும் உளர். இப்பாடல் தும்பைத்திணைத் தானை மறப் பாடல் என்பதையும், 87 ஆம் பாடல் முதல் 90ஆம் பாடல் முடிய அத்திணையும் அத்துறையும் அமைந்தவையே என்பதையும் அறிவார்1 அவ்வாறு கூறார். ஆகலின் தகடூர் யாத்திரையில் குறிக்கப்பெறும் அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சியின் வேறான ஒருவன் என்பது ஒருதலை. அவ் வேறுபாடு உணரு மாறே அதியமான் எழினி என்னும் பொதுப்பெயர் அளவில் நில்லாமல், அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்றார் என்க. தகடூர் வெற்றிகொண்ட சேரமானுக்குச் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனப் புகழ்ப்பெயர் சூட்டிய சான்றோரே, அத் தகடூர்ப் போரில் வீழ்ந்து பட்டானை வெளிப்படக் குறிக்க தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி எனக் குறித்தார் எனக் கொள்க. தகடூர்ப் போர் தகடூர்ப் போரைப்பற்றி அறிதற்குக் கருவியாக இருப்பவை பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தும், தகடூர் யாத்திரையில் கிடைத்துள்ள பாடல்களும், தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையுமேயாம். இவற்றால் அறியக்கிடக்கும் செய்தியும் குறிப்பால் நோக்கி உணரத்தக்கதை அன்றி வெளிப்படையான தன்றாகும். ஆயினும் சில அரிய குறிப்புகளை அவை வழங்குகின்றன. பதிற்றுப்பத்தில் கிடைத்துள்ள எட்டுப் பத்துகளிலும் தகடூர்ப் போர் 2ஒரே இடத்திலேயே சுட்டப்பெறுகின்றது. அதற்குரிய விளக்கத்தைப் 3பதிகம் தருகின்றது. சேரவேந்தர் குடியைச் சேர்ந்தவராகக் கருதுமாறே வாழ்ந்தவர் அதியர். அவர்க்குக்கீழ்க் குறுநில மன்னராகவும் படைத் தலைவராகவும் விளங்கியமையால் அவர்தம் அன்புக்கும், அரவணைப்புக்கும் உரியவராய் விளங்கினர். பனம்பூ மாலையைத் தாமும் அணிந்தனர். 4பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், 5ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும், மழவர் மெய்ம்மறை என்று சான்றோரால் புகழப்பெற்றனர். மழவர்க்கு மெய்ம் மறையாக (கவசமாக) விளங்குபவர் என்பது இதன் பொருள். இதற்கு ஏற்பவே சேரர்பால் அதியர் அன்பொடும், நண்பொடும் உரிமைக் கடனாற்றி வந்தனர். ஆதலால் பதிற்றுப்பத்தால் அறியப்பெறும் அரசர் எண்மருள் பெருஞ்சேரல் இரும்பொறை நீங்கிய எவரும் 1அதியர்மேல் படையெடுத்தாரல்லர். இவ்வாறாகவும் பெருஞ்சேரல் தகடூர் நூறியது ஏன்? பெருஞ்சேரல் இரும்பொறையை வெகுண்டெழச் செய்தவன் அவன் உடன்பிறந்தான்; இளையவன்; அவனை அழிக்கவே படைகொண்டு எழுந்தான். அதனைக் கண்ட சான்றோர் முந்தையோர் முறைகள் பலவற்றைக் கூறி அமைதிப்படுத்தினர். இச் செய்தி தகடூர் யாத்திரை ஆறாம் பாடலால் புலப்படுகின்றது. காலவெகுளிப் பொறையகேள்! நும்பியைச் சாலும் துணையும் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா; அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி என்பது. இதில் பொறையினை நோக்கி நும்பி என்று உரிமை யுரைத்த தறிக. பொறையன், தகடூர் எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை என்பவனே யாவன். பதிற்றுப்பத்துள், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஒருவரே அவனைப் பெயர் கூறி விளித்தாரல்லர். எஞ்சியோரெல்லாம் வேந்தன் பெயரை விளித்துரைத்துளர். அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும் பொறையைப், பொறைய என மூன்று பாடல்களில் (73, 75, 77) விளித்துள்ளார். அவர் தகடூர் யாத்திரை இயற்றிய புலவர்களுள் ஒருவர். ஆகலான், அம் மரபுப்படி அவரே இப் பாடலைப் பாடினார் எனலும் தகும். அதற்கு மேலே கூறப்பெறும் குறிப்புகளும் துணையாம். பொறையனிடம் நும்பிமேல் சேறல் வேண்டா என்று அரிசிலார் கூறியதை அவன் ஏற்று அமைந்தான். பின்னே நும்பி என்று உரைத்தாரே அவனிடத்துச் சென்றார். அவன் தன் உடன்பிறந்தானை எதிர்ப்பதற்காகக் களிற்றுப் படையைத் திரட்டிப் பொலிவோடும் தோன்றினான். அவனைக் கண்டு, ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே! வினவுதி யாயிற் கேண்மதி சினவா (து) ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஒருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய். வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோல் எய்தி நும்மோர்க்கு, நீதுணை யாகலு முளையே; நோதக முன்னவை வரூஉம் காலை நும்முன் நுமக்குத்துணை யாகலும் உரியன்; அதனால் தொடங்க உரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி அத்தை; அடங்கான் துணையிலன் தமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது; தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும் அனையை யாகீண் டறிந்திசி னோர்க்கே தகடூர். 7 எனப் பொருண்மொழி புகன்றார். ஒளிவிடு...... வேந்தே என இனிதுற விளித்தார்; கேண்மதி எனத் தம்பால் ஈர்த்தார்; ஒருகுடர்...... போல் உடன்பிறப்பை நயமாக மொழிந்தார்; நும்மோர்க்கு நீதுணையாகலும் உளை; நும்முன் நுமக்குத் துணையாகலும் உரியன் என உடன்பிறந்தார் உரிமைக் கடப் பாட்டை ஓதினார். அடங்கான்....... அரிது என அவன் அடங்காதவனாகவும், துணையில்லாதவனாகவும், தனித்தோ னாகவும், தக்க பாதுகாப்பற்றவனாகவும் இருப்பதைச் சிறிதும் மறையாமல் எடுத்துரைத்து வெற்றி பெறலருமையைக் கூறினார். தொடங்க வுரிய வினைபெரிதாயினும் அடங்கல் வேண்டும்; வினையின் அடங்கல் வேண்டும் என அழிபாட்டுக்குக் கழி விரக்கம் கொண்டவராய்ப் பன்னியுரைத்துப் பரிவுடன் வேண்டினார். இந்நன் மொழியையும் ஏற்றுக்கொண்டானல்லன் பொறையனின் இளையன். புலவர் புண்பட்டார். இரும்பொறை வேந்தனை வேண்டிய பான்மையையும், அவன் பொறை கொண்ட மாண்பையும் உன்னினார். தக்க பல சான்றோர்களையும் தம் துணையாகக் கொண்டு முயன்றார். எவ்வாறேனும் குடியழிவைக் கெடுத்தல் வேண்டும் என்பதே குறியாகப் பணி செய்தார். அவர்தம் முயற்சியில் தோல்வியே கண்டார். பின்னர்ப் பொறையனைக் கண்டு தம் ஆற்றாமை மீதூர, யான்சென் றுரைப்பவும் தேறார்; பிறரும் சான்றோர் உரைப்பவும் தெளிகுவர் கொல்லென ஆங்குமதி மருளக் காண்குவல் யாங்குரைப் பேனென வருந்துவல் யானே பதிற். 73 என்றார். இதனால் தகடூர்ப் போர் தாயத்தாரிடையே தோன்றியது என்பதை உணரலாம். 1பாரத வரலாறு போன்றே இந் நூலும் தாயத்தாரிடை நிகழ்ந்த போரைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவது பொருந்துவதேயாம். தாயத்தார் போர் தகடூர் அதியமானுக்குத் தாவியதைக் குறிப்பால் அறியவே முடிகின்றது. பொறையன் தம்பி, அண்ணனொடு மாறுபட்டு அதியமான் துணையையும் மற்றை வேந்தர் துணையையும் நாடியிருத்தல் வேண்டும். அதியமான் அடைக்கலம் தந்து தாங்கியிருத்தல் வேண்டும். இந் நிலையில் தாயப் போராக இருந்தது, தகடூர் அதியமான் போராக மாறித் தகடூர் அழிவுக்கு வழி செய்திருத்தல் வேண்டும். வரலாற்றுக்கண்கொண்டு நோக்கின் இவ்வாறு நிகழ்வது கூடாதது அன்று. உரிமை வேட்கையாலும் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்து உதவியமையாலும் மருதுபாண்டியர்க்கு அரணாக இருந்த காளையார் கோயில் காடும் அழிந்து அவரும் அழிந்துபட்டனர் அல்லரோ! அத்தகைத்தே தகடூர் அதியமான் அழிவு என்க. ïÅ, ‘mâakh‹ milkâš g£oUªjik ïG¡f‹nwh? என்பார் உளராயின் அதுவும் தவறாம், தகடூர்க்குப் பொறையன் படை வந்து ஊன்றுமளவும் அரண்வலுவால் உள்ளிருந்தனரே அல்லாமல் பொருதற்கு அஞ்சி அமைந்தார் அல்லர். இது குறித்தே, ஒருவன் மேற்சென்றுழி எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃதுழிஞையுள் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம் என்றார் நச்சினார்க்கினியர். பதிற்றுப் பத்தின் பழைய உரையாசிரியரும் எதிர் ஊன்றுவார் இன்மை தோன்றக் கூறிய அதனால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று (80) என்றார். தகடூர்ப் போரில் அதியமானுடன் சோழ பாண்டியர் ஆகிய இருபெரு வேந்தரும் கலந்து கொண்டனர் என்பதைப் பதிற்றுப் பத்துப் பதிகத்தால் அறியலாம். தகடூர் யாத்திரையும் இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னிர் என (33) மன்னர் பலராதலைத் தெரிவிக்கும். அவர்களை ஒருங்கு சேர்த்தற்கு உரிய முயற்சித் தாழ்வாலோ, தன் முழுமுதல் அரணத்தில் வலி மிகுதியாலோ அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் வருமளவும் அமைந்தான் என்க. இதனைப் புறத்தோன் அகத் தோன் மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத் தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுதல் என்பதற்கு (தொல். புறத். 12.) மொய்வேற் கையர் என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று. இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது என்று நச்சினார்க்கினியர் கூறுவதை நோக்க, அதியமான் மதிலினுள் இருந்தது ஆண்மைக்கு இழுக்காவதன்றாம். அதியமானால் சிறப்பெய்திய 1பெரும்பாக்கன் வீரமாண்பு, 2துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளாதன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை முதலாயவற்றைப் கற்போர் தகடூர் அதியமான்களின் வீரமாண்பை வியவாதிரார். முடி வேந்தனாகிய சேரனின் படையாண்மையே அதியமானுக்கு முடிவையும் தகடூர்க்கு அழிவையும் தந்தது என்பதை, நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும் டிதாக்கருந் தானை இரும்பொறை என்பதால் அறியலாம் (தகடூர். 45) தகடூர்ப் போர் பலநாள்கள் நடந்தது என்பதைச் சில தொடர்கள் விளக்குகின்றன. அவை. மேனாள், கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண் ............................ விடலை காப்பமைந் தனனே (26) இளையோன், இன்றுந்தன், குதிரை தோன்ற வந்துநின் றனனே (30) தொல்லை ஞான்றைச் செருவினுள் (33) என்பவையாம். தகடூர்ப் போர்க்களத்தில் அரிசில் கிழாரும் பொன்முடியாரும் இருந்து வீரப்பண் பாடினர் என்பதை நச்சினார்க்கினியர் உரையால் அறிவதுடன், மெய்ம்மலி மனத்தின் நம்மெதிர் நின்றோன் எனச் சேரமானுடன் தம்மை அரிசில்கிழார் நம் என உளப்படுத்திக் கூறியதாலும் அறியலாம். தகடூர் யாத்திரையில் தர்க்கவாதம் உண்டு என்பதைத் தக்கயாகப் பரணி உரை (131) கூறுகின்றது. அதற்கு ஓர் எடுத்துக் காட்டாக பரவை வேல்தானை என்னும் 23 ஆம் பாடல் விளங்குகின்றது. அதியமான் தாய்க்குத் தோற்றிய தீக்குறிகளை ஒரு பாடல் காட்டுகின்றது (47). பாட்டும் உரையும் தகடூர் யாத்திரை பாட்டும் உரையும் விரவியமைந்த நூல் எனப் பேராசிரியர் கூறுவதை மேலே அறிந்தோம். அவரே தகடூர் யாத்திரையில் பாட்டு வருவது சிறுபான்மை என்னும் குறிப்பையும் வழங்குகின்றார். பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்னும் செய்யுளியல் (173) நூற்பாவுக்கு உரை விரிக்கும் பேராசிரியர் பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒருபாட்டினை இடை இடை கொண்டு நிற்கும் குறிப்பினான் வருவன உரையெனப்படும். என்னை? பாட்டுவருவது சிறுபான்மையாகலின், அவை, தகடூர் யாத்திரை போல்வன என்றார். எத்துணை அரிய பாடல்களை இழந்தோமோ? என நாம் ஏங்கும் ஏக்கத்தைப் பாட்டு வருவது சிறுபான்மை என்னும் பேராசிரியர் உரை ஓரளவு தணிக்க உதவுகின்றது. ஆனால், பெரும்பான்மை உரையுள் எத்துணை அரிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிக் கிடந்தனவோ? என்னும் ஏக்கம் மிகைத் தெழுவதைத் தடுக்கச் செயலற்று ஒழிகின்றது. தகடூர் யாத்திரைப் பாடல்களாக நாம் இந் நாள் அடைந்திருக்கும் பாடல்கள் நாற்பத்தெட்டேயாம். இவற்றுள் 44 பாடல்களை வழங்கிய வண்மை புறத்திரட்டு என்னும் தொகை நூலுக்கே உண்டு; புறத்திரட்டில் காணப்பெறாத மூன்று பாடல்களையும், அரிய பல குறிப்புகளையும் உதவிய பெருமை நச்சினார்க்கினியர்க்கு உண்டு; தக்கயாகப் பரணி உரையாசிரியரும் ஒரு பாடலை வழங்கிய புகழாளராக விளங்குகின்றார். தகடூர் யாத்திரையைக் காணுதற்குத் தமிழ் யாத்திரை மேற்கொண்ட பெரும்பேராசிரியர் உ.வே.சாமிநாதையர் முயன்றார் ; அம் முயற்சிப் பயனை என் சரித்திரத்தில் எழுதுகின்றார்: (திருநெல்வேலித்) தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் என்பவர் வீட்டிற்குப் போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், நான்குனேரியில் இருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்து விட்டு இப் பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன் என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். mJ eh‹FndÇÆny cŸs bj‹w brŒâia¡ f©lJ« mjid v¥goahtJ f©L ão¡fyh« v‹W v©Â, ‘eh‹FndÇÆš fÉuha®fŸ åLfŸ ïU¡»‹wdth? என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன். இருக்கின்றன; வைணவர்களே அதிகமாகையால் வைணவ நூல்கள் கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள், இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ? என்று வினவினேன். கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள்? நீங்கள் தேடும் பத்துப்பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இதுபோல அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பிய பிரதி இங்கே இருப்பதுபோல் இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு. கிடைத்தால் நல்லது என்றேன் நான். ஆனால், பிற்காலத்தில் நான்குனேரியில் நான்குமுறை ஏடு தேடிய போதும் தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப் போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன் (பக். 876-77.) பாடிய புலவர்கள் தகடூர் யாத்திரை தொடர்நிலைச் செய்யுளாகும். பெருஞ் சேரல் இரும்பொறை தகடூர் மேற் செலவுகொள்ள நேர்ந்த அடிப்படை முதல் தகடூர் நூறி நாடுவந்து சேர்ந்த அளவும் நிகழ்ந்த செய்திகள் தொடர்நிலையாக அமைந்திருக்கும். இதில் போர்நிகழ்ச்சிகளே மிக்கிருந்திருக்கும் என்பது வெளிப்படை. இதனை ஒருவாற்றான் நச்சினார்க்கினியர் உரையாலும், புறத் திரட்டாலும் அறிந்து கொள்ள முடிகிறது. யானைநிலை, குதிரை நிலைகளை விரித்துரைக்கும் நச்சினார்க்கினியர் இனி யானைநிலைக்கும் குதிரைநிலைக்கும் துறைப் பகுதியாய் வருவனவும் கொள்க. அஃது அரசர் மேலும் படைத் தலைவர் மேலும் ஏனையோர் மேலும் யானைசேறலும், களிற்றின்மேலும் தேரின்மேலும், குதிரைசேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவும் என்றும், இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினும் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவும் கொள்க என்றும் எழுதி யுள்ளமையால் (தொல். புறத். 72.) தெளிவாம். தொடர்நிலைச் செய்யுள் பெரும்பாலும் ஒருவரால் யாக்கப் பெறுவது. 1அருகியே இதற்கு விதிவிலக்குண்டு. இத் தகடூர் யத்திரைச் செய்யுள்கள் நேருக்கு நேர் நின்று பாடியன வாகவே பெரும்பாலும் விளங்குகின்றன. புறநானூற்றுப் பாடல்களைப் போலத் தனித்தனியே பாடி, அவற்றைத் தொகுத்து அடைவு செய்திருத்தல் வேண்டும். அதில் பலர் பாடல்களை நிகழ்ச்சி ஒழுங்கு முறையில் வைக்கப் பெற்றதாக அதற்குப் பிற்காலத்தில் ஒருவர் இடைஇடையே உரைநடையில் தொடர்புபடுத்தி வரலாற்று விளக்கம் செய்திருக்க வேண்டும் என்பதைக் கருத முடிகின்றது. இப்பொழுது நாம் அறிந்து கொள்ளும் அளவில், தகடூர் யாத்திரையில் 2அரிசில்கிழார் பாடலும், பொன்முடியார் பாடலும் உண்டு என்பது தெளிவு. பிறர் பாடியவும் உளவோ இலவோ என்பதை உறுதி செய்தற்கு இல்லை. அரிசில்கிழாரும், பொன்முடியாரும் தனித்தனியே பாடுவதை அன்றி உடனிருந்து சேர்ந்து பாடிய செய்தி ஒன்றையும் நச்சினார்க்கினியர் சுட்டுகின்றார். முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம் (தொல். புறத். 12.) என்பதற்குக் கலையெனப் பாய்ந்தமாவும் என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது எனக் குறிக்கிறார். இதனால் அவ்விருவரும் உடன் இருந்து உடன் பாடியமை உறுதியாம். அரிசில் கிழார் அரிசில்கிழார், பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப் பாடிய புலவர்களுள் ஒருவர் (புறம். 146.) அவருடன் அவள் காரணமாகவோ பேகனைக் கபிலரும் (புறம். 143) பரணரும் (புறம். 144-5) பெருங்குன்றூர்கிழாரும் (புறம். 147) பாடிய பாடல்கள் உண்மையால் இவர்கள் அனைவரும் உடன் காலத்தவர் என்பதை உணரலாம். இவருள் பரணர் பதிற்றுப் பத்துள் ஐந்தாம் பத்தையும், கபிலர் ஏழாம்பத்தையும், அரிசில் கிழார் எட்டாம் பத்தையும், பெருங்குன்றூர்க்கிழார் ஒன்பதாம் பத்தையும் பாடினர் என்பதும் இவண் அறியத்தக்கது. அரிசில்கிழார் பாடியனவாக அறியப்பெறுவன 18 பாடல்கள். இவற்றுள் 17 பாடல்கள் புறத்துறைப் பாடல்கள் (பதிற்றுப் பத்துள் எட்டாம் பத்து: 10 பாடல்கள்; புறநானூறு: 146, 230, 281, 285, 300, 304, 342 ஆக 7 பாடல்கள். அகத்துறைப் பாடல் குறுந்தொகை 193 ஆம் பாடல் ஒன்றுமே. அவர் பாடிய புறத்துறைகள் முறையே குறுங்கலி, கையறுநிலை, பேய்க் காஞ்சி என்பவை. இவற்றுள் பல தகடூர் யாத்திரைப் பாடல்களை நிகரனவாக இருத்தலை உரைவிளக்கத்தில் கண்டு கொள்க. பொன்முடியார். சங்கச் சான்றோர் வரிசையுள் நல்லியற் புலமை மெல்லியலாருள் பொன்முடியாரும் ஒருவர். அவர் பாடிய ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே என்னும் புறப்பாடல் (312) நாடறிந்த புகழ் வாய்ந்தது. இப் பாடலையன்றி, அவர் பாடிய பாடல்களாக இரண்டு கிடைத்துள்ளன. அவை புறநானூற்றில் (299, 310) இடம் பெற்றுள்ளன. முன்னது குதிரை மறம் என்னும் துறையையும், பின்னது நூழிலாட்டு என்னும் துறையையும் சேர்ந்தவை. அவையடக்கமும் கடவுள் வாழ்த்தும். வியத்தக்க காணுங்கால் என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை அவையடக்கம் என்னும் தலைப்பில் வழங்கியுள்ளார். அவையடக்கம் சங்கச் சான்றோர் நூல்களில் அமைந்தது இல்லை. பிற்காலச் சான்றோர்களின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் அமைந்தது இல்லை. சிந்தாமணி, குண்டகேசி, வளையாபதி இராமாயணம் முதலாய இலக்கியங்களிலும், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் முதலாய இலக்கணங்களிலும் உண்டு. சங்கச் சான்றோர் நூலாகிய தகடூர் யாத்திரையில் அவையடக்கப் பாடல் அமைந்திருப்பது வேறுபடக் கருதத் தோன்றும், ஆனால் நாம் முன்னே யுரைத்தவாறு உரை இடையிட்டு அமைத்த காலத்தே அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து, பின்னே பாடிச் சேர்க்கப் பெற்றது என்பதை அறிவோர் இக் கருத்தில் ஐயுறார். யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் அமிதசாகரர் எனப்பெறும் ஓராசிரியரால் இயற்றப் பெற்றனவே. இவற்றுள் முற்படச் செய்யப் பெற்றது யாப்பருங்கலம்; பிற்படச் செய்யப் பெற்றது யாப்பருங்கலக் காரிகை; முன்னதில் அவையடக்கம் இல்லை; பின்னதில் அவையடக்கம் உண்டு. ஆதலால் இலக்கியங்களில் சிந்தாமணியும், இலக்கணங்களில் யாப்பருங்கலக் காரிகையுமே முதன்முதல் அவையடக்கம் பெற்ற நூல் எனலாம். அக் காலத்திற்குப் பின்னரே தகடூர் யாத்திரை அவையடக்கத் துடன் உலாவந்திருக்க வேண்டும். அவ்வுலா, புறத்திரட்டுத் தொகுப்பாசிரியர்க்கு முற்பட்டே நிகழ்ந்திருக்க வேண்டும். இனிக் கடவுள் வாழ்த்துப் பற்றியும் எண்ண வேண்டியுள்ளது. தகடூர் யாத்திரையில் கடவுள் வாழ்த்து உண்டு என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தகடூர் யாத்திரைக் கடவுள் வாழ்த்தாக இஃது இருக்கக் கூடும் என்னும் ஐயுற வொன்றுளது. பதிற்றுப்பத்தின் முதற்பத்துக் கிட்டாமையால் அதன் கடவுள் வாழ்த்து இன்னதென அறியக் கூடவில்லை. ஆதலால் முதற்கண் அதனை வெளியிட்ட ஐயரவர்கள் கடவுள் வாழ்த்தென எதனையும் பதிப்பிடவில்லை. பின்னர் உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரைவிளக்கம் கண்டு பதிப்பித்த பதிற்றுப்பத்தில் எரியெள்ளு வன்ன என்னும் பாடலைக் கடவுள் வாழ்த்தாக இணைத்து உரைவிளக்கம் வரைந்துள்ளனர். அதன்கண், இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகி யிருக்கும் தொகை நூலில் காணப்பட்டிலது; ஆயினும், புறத்திணையுரையில் நச்சினார்க்கினியரால் கடவுள் வாழ்த்துக்கு எடுத்துக் காட்டப்படும் இப் பாட்டு பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாட்டாக இருக்கலாம் என அறிஞர் பலரும் கருதுகின்றனர். ஆதலின் ஈண்டுக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டு உரை கூறப்பட்டது. மேலும், ஏனைத் தொகை நூல் பல வற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். ஆதலால் இப் பாட்டும் அவர் பாடியதாக இருக்கலாம் எனப் பலரும் எண்ணுகின்றனர். இதனைப் பாடியவர் பதிற்றுப்பத்து ஆசிரியருள் ஒருவராதலுங் கூடும் என எழுதினர். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள், பதிற்றுப் பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வாழ்த்துச் செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச் செய்யுள் இதுவரையில் அகப் படாத முதற்பத்துடன் மறைந்துவிட்டது போலும். என்றும், எரியெள்ளுவன்ன. என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமோ? m§‡dkhÆ‹ mftnyhir ãiH glhjh? என்றும் எழுதினர் (இலக்கிய தீபம். 124.) ‘mt®fŸ mftnyhir ãiHglhjh? என்று எழுப்பிய ஐயம் முறையானதே. பிழைபடவே செய்யும் எனத் துணியலாம். (1) நூல் எவ்வகை யாப்பால் அமைந்திருக்கிறதோ அவ் வகை யாப்பால் கடவுள் வாழ்த்துப் பாடுதல் பெருந்தேவனார் கொள்கை என்பதை அவர் பாடிய கடவுள் வாழ்த்துகளால் அறியலாம். குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அக நானூறு, புறநானூறு என்பவை அகவல் பாவால் அமைந்தவை. ஆகவே, அகவலாலேயே கடவுள் வாழ்த்து இயற்றினார் பெருந் தேவனார். அவ்வகையில் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பொருந்தி யமையவில்லை. (2) எரியெள்ளு வன்ன என்னும் பாடலை அமரர்கண் முடியும் என்னும் நூற்பாவிற் காட்டிய (தொல். புறத். 26.) நச்சினார்க்கினியர், இது கடவுள் வாழ்த்து. தொகை களிலும் கீழ்க் கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்றார். ஆகலின், இது தொகைகளிலும், கீழ்க்கணக்கிலும் இடம்பெற்ற கடவுள் வாழ்த்து அன்று என்பது தெளிவாக விளங்கும். (3) எரியெள்ளு வன்ன என்பது மருட்பாவாகும். 1செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வரும் இலக்கணத்தது மருட்பா. ஆனால் இம் மருட்பாவோ, வெண்பா அடியாவனவும், அகவலடியாவனவும் வெண்டளை பிழையாமல் வந்தனவாம். இவ்வகை மருட்பாவால் அமைந்த பாடல்கள் தகடூர் யாத்திரைக் கண்ணேயே உள (1,9) (4) அவ்வந் நூலின் பொருட்சிறப்பு இயைபுக்கு ஏற்ப முதற் சொல் எடுத்துப் பாடுதல் கடவுள் வாழ்த்துகளில் காணக் கிடப்பது. எடுத்துக்காட்டாக அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தையும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தையும் கருதுக. இரண்டும் சிவபெருமானைப் பற்றியன; கொன்றை மாலையையும் பற்றியன. ஆனால் புறப்பாடலுக்குக் கண்ணி சிறப்புடைமையால் அதனைத் தலைச்சொல்லாகக் கொண்டு கண்ணி கார்நறுங் கொன்றை என்றார். அகப்பாடலுக்குக் காலம் சிறப்புடைமையால் கார் நறுங் கொன்றை என்றார். இவ்வகையில் சேரர் குடிவழி முதன்மையாகக் கூறப்பெறும். 2எரியைத் தொடக்கமாகக் கொண்டு இப் பாடல் இயற்றப் பெற்றதாகலாம். பதிற்றுப் பத்துப்போலவே தகடூர் யாத்திரையும் சேரர்க்குரிமை பூண்டது ஆகலானும், அந் நூலில் வரப்பெறாத மருட்பா தகடூர் யாத்திரைக் கண்ணே அமைந்திருத்தலாலும் அதற்குரியதாகக் கொள்ளுதலே பொருத்தமுடைத்தாம் என்க. பதிப்பும் உரையும் தகடூர் யாத்திரைப் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்களை யெல்லாம் ஒப்புநோக்கி இந்நூல் பதிக்கப் பெற்றதாகும். பாட வேறுபாடுகளாக அறியப்பெற்றவை ஆங்காங்குக் குறிக்கப் பெற்றுள்ளன. புறத்திரட்டில். நகையுள்ளு நல்லவை யெய்தார்பகைநலிய...................................................................... வேற்றுக் களத்தி லொருவர்தமாறாகச்சென்றாலொருவர்மேற்..........................ò©Q« படுக்கலான் தான்படான் போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று - தகடூர். 20. என்று சிதைவோடு உள்ள பாடல், mதன்bபாருளமைதிfருதி,“eifíŸS« நல்லவை எய்தார் ; பகைநலிய (ஞாட்புள்ளும் நல்லவை எய்தார் ; விழைவொடு) வேற்றுக் களத்தில் ஒருவர் தமராகச் சென்றார் ஒருவர்மேற் (செம்மாந் தடர்த்தாற்றிப்) புண்ணும் படுக்கலார்; தாம்படார் ; போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று எனப் பாடம் அமைத்துக்கொண்டதுடன், பாட வேறுபாடும் ஆங்குக் காட்டப்பெற்றுள்ளது. இதன் 32 ஆம் பாடல், அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே யறுகா வலா பந்த ரென்ன வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே என வருகின்றது. இதிலே யறுகா வலா என்பது சிதைவு என்பது வெளிப்படை. இது பயறு காவலர் எனத் திருத்திப் புறத் திரட்டில் பதிப்பிக்கப்பெற்றது. அப் பதிப்பு இந்நூலிலும் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. மற்றைப் பாட வேறுபாடுகள் ஆங்காங்குக் காட்டப்பெற்றுள. இந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தலைப்பை முதற்கண் வைத்து, அத் தலைப்புக்கு விளக்கம், தந்து அப்பாடல் இன்ன பாவகையைச் சார்ந்தது என்பதைக் குறித்து, அதன் பின்னே பாடல் காட்டப்பெற்றுளது. அப் பாடல் எந் நூல் வழியாகக் கிடைத்தது என்பதைக் காட்டி, இதன் பொருள் என்னும் தலைப்பில் பொழிப்புரையும், இதனால் கூறியது என்னும் தலைப்பில் பாடல் முழுமை தழுவிய கருத்துரையும் வழங்கப்பெற்றுள. இவற்றின் பின்னே விளக்கவுரையும் மேற் கோளாட்சியும், யாப்பமைதியும் தரப்பெற்றுள. விளக்கவுரையுள் ஒப்புமை சுட்டுதலும் சொல் விளக்கம் செய்தலும், பொருட் பொருத்தம் உரைத்தலும் விரிவாக மேற்கொள்ளப் பெற்றுள. விரிப்பிற் பெருகுமாதலின் ஆங்காங்குக் கண்டு கொள்க. இந் நூலால் அறியப்பெறும் செய்திகள் வியக்கத்தக்கது அல்லாததையும் கூறுபவர் மகிழ்ச்சியைக் கருதி அறிவிலார் போலச் சான்றோரும் வியத்தல் (அவை யடக்கம்) நீத்தார் பெருமையுணர்ந்து அவரைப் போற்றி ஒழுகுதல் (1) ஈகையின் பெருமை (2), செங்கோலின் சிறப்பு (3) அரசகுடியின் பிறத்தலின் அல்லல் (4), சொல்லத்தக்க சொல்லின் தன்மை (5), உடன்பிறந்தாரிடைக் கொள்ளத்தக்க உறவு (6,7) பகைவர் தீண்டற்காகா அரண் வலிமை, (8), நாடு எவ்வெவ் வகையால் சிறக்கவேண்டும் என நல்லோர் வாழ்த்தும் வகை (9), அறிவாளர் கூட்டத்தில் அறிவிலார் நடந்துகொள்ளும் நகைதகுசெயல் (10), வேந்தன் ஏவிய அளவில் விரிச்சி கேளாமலும் வீணாகக் கோடற்குச் செல்லுதல் (11), தம்மவரை இருட்பொழுதினும் ஆக்கள் அறிந்துகொண்டு அன்பு சொரிதல் (12), போருக்குச் செல்லுமுன் வீரர் போற்றிச் செய்யும் கொடைப்பெருக்கம் (13), கலங்கல் தந்த காவலனுக்குக் களப்போரில் தம் உயிர்தர வீரர் முந்துதல் (14), படைக்கலம் துளைத்த புண்ணோனைப் பாசறைக் கண் பஞ்சு பொதிந்து வைத்துத் துயராற்றுதல் (15), களிற்றின் முகத்தே கைவேலை விடுத்து வருதலின் இழிவு (16), இரப்பவரின் இன்மை கண்டும் இரங்காத புன்மை (17), அரசன் தலையளி பெற்றோர் ஆற்றத்தக்க கடமை (18), வேந்தன் மகிழக் கடமை புரிவார்க்கு உண்டாம் விருப்பம் (19), அத்தன்மை இல்லார்க்கு வரும் இழிவு (20), வேந்தர் பாராட்டும் சிறப்பு வீரமேம்பாட்டாலேயே உண்டாதல் (21), மூத்தார் இளையார் இவர் என வீரவகையால் பகுத்தல் (22), தன்மானமிக்க வீரனாவான் தன் ஆண்மையைப் பிறர் குறிப்பு வகையால் குறைத்து மதிப்பதையும் தாங்காமை (23), ஒருகை விலங்காம் யானையை வெல்லுதல் இருகை வீரர்க்கு இழுக்கு என வீரர் கருதுதல் (24), தன்னொத்த வீரனுக்குப் பெருமை தாராத போரை வீரனொருவன் செய்யாமை (25), சீரியவீரர் அரண்காவல் கொள்வதால் மக்கள் அச்சம் நீங்கி அகமகிழ்தல் (26), தன் முன்னோனைக் கொன்றோனைத் தான் கொல்லாமல் பின்னோன் அமையாமை (27), பகைப் படையைக் கண்ணோட்டம் விட்டு அளந்து, அதன் பெருமை கண்ட வீரர் தாமும் மகிழ்தல், (28) வேல்கொண்டு யானையை வீழ்த்தும் போரையே வீரர் பெரிதும் விரும்புதல் (29, 31, 34, 35) புண்பட்ட களிற்றின் படுகுரல் கேட்டுப் பாசறைக் கண் இருக்கும் வேந்தன் கண்ணுறக்கம் கொள்ளாது கவல்தல் (30), இறந்த வீரரின் உரிமை மகளிர் கைம்மைகொண்டு அறுத்த கூந்தலை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் (31), போர்க்களத்தில் இறந்துபடின் அவன் தாய் குளம்பொலிவுறக் குளித்தல் (36), துடியன்கொட்டும் பறை ஒலிக்கு ஏற்றவண்ணம், வெற்றி கொண்ட வீரன் ஏவும் குதிரையின் குளம்பு தாளமிட்டுச் செல்லுதல் (37), போரில் வீரன் வெட்டுண்டு இறப்பதையே மறக்குடிப் பெண் தருமமாகவும் தானமாகவும் கருதுதல் (38), தன் கணவன் களத்தில் மடியின் மறக்குடிப்பெண் தன் உயிர் கொண்டு அவனுயிர் தேடிச்செல்ல விரைதல் (39), தன் குடிக்குப் பெருமை தாராத செயலைச் செய்யின் அவனை ஈன்ற வயிற்றை அறுக்க மறக்குடிப்பெண் துணிதல் (40), களத்தில் மடிந்து சிதைந்து கிடக்கும் மைந்தனைக் கண்டுபிடிக்க மாட்டாளாய் மூதின்மகள் தேடுதல் (41), புரவலன் மாய்ந்தகாலையில் முரசு முழங்குவதையும் வீரர் வெறுத்தல் (42), இணையிலா வீரன் விழுப்புண்பட்டு வீழ்ந்த இடத்தில் நின்று மாலையணிந்து கொண்டு போர்க்குப் புறப்படுதல் தமக்கு வெற்றி தருமென வீரர் கருதுதல் (43), பகைவனே எனினும் பண்பட்ட வீரனாக விளங்கு பவனைப் பலரும் பாராட்டுதல் (44), மதிற்கண் அமைந்த பொறி வகைகள் (45), காவற்காட்டைக் கடந்து அரணுள் புகுந்து ஊர்கொள்ளும் பொழுதை முன்னரே திட்டமிட்டு, திட்ட மிட்டவாறே கொள்ளுதல் (46), தீக்கனவு பின்னேவரும் தீமையை முன்னறிவிக்கும் குறியென நம்புதல் (47), ஆகிய இன்னவும் பிறவும் இத் தகடூர் யாத்திரையால் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். நீத்தார் பெருமை, ஈகை, செங்கோன்மை, சொல்வன்மை, தூது, நாடு, புல்லறிவாண்மை, நிரைகோடல், நிரைமீட்சி, பகை வயிற் சேறல், பாசறை, வஞ்சினம், படைச்செருக்கு, எயில் காத்தல், தானைமறம், மூதில்மறம், குதிரைமறம், இரங்கல் என்னும் பொருள் வகையில் புறத்திரட்டில் அமைந்தவாறே இத் தொகை நூல் அமைந்துள்ளது. இறுதியில் உள்ள நான்கு பாடல்களும் உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ள துறைப் பெயர்களால் காட்டப்பெற்றன. இதிலமைந்துள்ள சீரிய உவமைகளும், வேறு நூல்களில் காணக்கிடைக்காத சிறப்பான செய்திகளும் பலப்பல. இவர், ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஓருயிர் போல என்று கூறும் உவமை, உடன்பிறப்பாளர் உரிமை உறவுக்கு இணையற்ற சான்றாம். இது கவைமகனார் என்னும் சங்கச் சான்றோர் பெயர்ப்பொருளையும் (குறுந். 324) ஓருயிர்ப் புள்ளின் இருதலை என்னும் மதுரை மருதனிள நாகனார் வாக்கையும் (கலி. 89.) நன்கு விளக்குதல் அறிக. கைவேல் களிற்றொடு போக்கி வருபவனைத் திருவள்ளுவர் குறிப்பார்; கைவேலைக் களிற்றொடு போக்கி, அதனைப் பறிக்காது விட்டு வருதல் மறக்குடிக்கு மாபெரும் இழுக்காம் என்பதை இரண்டு இடங்களில் குறிக்கிறது தகடூர் யாத்திரை. யானையின் மத்தகத்தில் எறிந்த வேலை விடியும் அளவுக்குள் யான் பறித்துக் கொண்டு வாரேன் எனில், என் தங்கை மணம் பூண்ட இல்லத்துச் சென்று அவள் கையை எதிர் பார்த்து வாழும் இழிநிலை யான் பெறுவேனாக என வீரன் ஒருவன் வஞ்சினம் கூறுவதும் (16), புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய நீபோந்தனையே எம்மில் செய்யா அரும்பழி செய்த கல்லாக் காளை நின்னை ஈன்ற வயிற்றை வாதுவல் (அறுப்பேன்) என மூதின் மகள் கூறுவதும் (40) பிறநூல்களில் காண்டற்கரிய செய்தியாம். எற்கண் டறிகோ! எற்கண் டறிகோ ! என்மகனாதல் எற்கண் டறிகோ! என்று ஒரு தாய் போர்க்களத்தில் சிதைந்து கிடக்கும் பிணக்குவையின் ஊடே தன் மைந்தனைத் தேடித்தேடி அலமரும் காட்சி (41) தகடூர் யாத்திரைக்குத் தன்னிகரற்ற பெருமை சேர்ப்பதாம். குதிரைமேலேறி வரும் வீரனே! வருக! வருக! அவனை எவரும் தடாதேயுங்கள்; தடாதேயுங்கள் ! இருகை மாக்கள் எவரே ஆயினும் அவர்க்கு நான் அஞ்சேன் நான்கு கைகளையுடைய மாக்களை நாட்டில் எங்கும் கண்டிலேன் அவன் என் தலையைக் கொய்தல் குறித்தே வருகின்றான்; யானும் அவனைக் கொல்லுதல் குறித்தே போகின்றேன் ஆகையால் என்னைக் கொன்று போதலும் அவனுக்கு அரிதே! அவ்வாறே அவனைக் கொன்று வருதலும் எனக்கு அரிதே! வெற்றி என்னைச் சேர்ந்த தானாலும் ஆகட்டும் அன்றி அவனைச் சேர்ந்த தானாலும் ஆகட்டும் எவ்வாறு ஆனாலும் ஆவதாக! ஊரெல்லாம் கூடி ஒலித்து நிற்க - வெதும்பிய உள்ளம் குளிர்ப்புற - நீர்ப்பெருக்குடைய குளத்தில் என் தாய் நாளை மூழ்குவாள் ஆகலாம்; அன்றி, அவன் தாய் மூழ்குவள் ஆகலாம்; அன்றி, இருவர் தாயருமே மூழ்குவர் ஆகலாம் ! என்று ஒரு வீரன் முழங்கும் முழக்கம் (36) தமிழர் தம் போர் மாண்புக்கு ஒப்பதும் மிக்கதும் இல்லாத ஒருபெருஞ்சான்றாம். இன்னவை பிறவும் நூலினுள்ளே கண்டு மகிழ்க. நன்றியுரை தகடூர் யாத்திரையின் பெரும்பகுதியை நாம் கண்டு மகிழ்வதற்கு உதவிய பெருமகனார் புறத்திரட்டுத் தொகுப்பாசிரியர் என்பதை அறிவோம். மேலும் சில பாடல்களையும் அரிய குறிப்புகள் சிலவற்றையும் வழங்கியவர்கள் ஆசிரியர் நச்சினார்க்கினியர், பேராசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் ஆகியோர் ஆவர். தகடூர் யாத்திரைப் பாடல்களை மீண்டும் 1xU தொகுப்பிலே இடம்பெறச் செய்தவர் அறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவர்கள். மறைந்துபோன நூல்களைப் பற்றிய குறிப்புகளை யெல்லாம் திரட்டி, அவற்றில் கிடைக்கும் பாடல்களையெல்லாம் நூல்வரியாகத் தொகுத்து உதவியவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். இவர்கள் அனைவரும் ஆற்றிய அருமைத் திருப்பணிகளுக்குத் தமிழுலகம் மிக்க கடப்பாடுடையது. இவர்களுக்குப் பெரு நன்றியுடையேன். தகடூர் யாத்திரை தனிநூல் வடிவுகொண்டு, உரை விளக் கத்துடன் இப்பொழுது வெளிப்படுகிறது. இவ்வாறு வெளி வருதற்கும், மறைந்துபோன நூல்வரிசையிலே வைக்கப் பட்ட காக்கைபாடினியம் முழுவடிவில் உரையுடன் வெளி வந்ததற்கும், பெரும்பொருள் விளக்கம் என்னும் நூல் விரைவில் வெளிப்படுதற்கும் அடிப்படையாக இருந்தது யான், யாப்பருங்கல விருத்தி களவியல் காரிகை புறத்திரட்டு என்னும் நூல்களைப் பதிப்பிக்கும் வாய்ப்புப் பெற்றமையேயாம். அவ்வாய்ப்பை எனக்கு உதவியவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர். ஆதலால் அவர்களுக்கும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும் உள்ளார்ந்த நன்றியுடையேன். வாய்மைக்கும் அன்புக்கும் வடிவங்களாக விளங்கிய எந்தையார் படிக்க ராமர்க்கும், எந்தாயார் வாழ வந்தம்மையார்க்கும் இத் தகடூர்மாலை உரை விளக்கத்தை நினைவுமாலையாக்கி வணங்குகிறேன். அருளகம் தமிழ்த்தொண்டன், 28.08.76 இரா. இளங்குமரன். இந்நூலில் கையாளப்பெறும் நூல்களின் குறுக்க விளக்கங்கள் அகம் - அகநானூறு நற்- நற்றிணை அவை - அவையடக்கம் நாலடி - நாலடியார் ஆரணிய - ஆரணியகாண்டம் பதிற் - பதிற்றுப்பத்து இடை - இடையியல் பால - பாலகாண்டம் கம்ப - கம்பராமாயணம் புறத் - புறத்திரட்டு கலித் - கலித்தொகை புறப், வெண் புறப்பொருள் குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு பு. வெ. வெண்பாமாலை குறுந் - குறுந்தொகை புறம் - புறநானூறு சிந்தா - சிந்தாமணி பிள்ளைச்சிறு - பிள்ளைச் சிறுவிண்ணப்பம் சிலப், சிலம்பு - சிலப்பதிகாரம் பெருங் - பெருங்கதை சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை பேரா - பேராசிரியர் செய் - செய்யுளியல் பொருநர் - பொருநராற்றுப்படை தகடூர் - தகடூர் யாத்திரை மதுரைக் - மதுரைக்காஞ்சி திருக் - திருக்குறள் மரபு - மரபியல் திருவா - திருவாசகம் மலைபடு - மலைபடுகடாம் தேவா - தேவாரம் முருகு - திருமுருகாற்றுப்படை தொல்- தொல்காப்பியம் மெய்ப் - மெய்ப்பாட்டியல் தொல் - புறத் - தொல்காப்பியம் மேற் - மேற்கோள் புறத்திணை இயல் யா. வி. யாப்பருங்கல நச்- நச்சினார்க் கினியர் விருத்தி. தகடூர் யாத்திரை அவையடக்கம் அவையடக்கமாவது, புலவர் தாம் செய்த நூலிலே குற்றம் ஏற்றாதபடி, கற்றோரை வழிபட்டுத் தம் அடக்கத்தால் அவரை அடக்கிக்கொள்வது. அவையடக் கியலே அரில்தப நாடின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்று என்பது தொல்காப்பியம். (செய். 112.) நேரிசை வெண்பா வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார் வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க அல்ல எனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர் இனிது. -புறத்திரட்டு. 10. (இதன்பொருள்) வியக்கத்தக்கவற்றைக் காணும்போது அறிவுடையார். இது வியக்கத்தக்கதே என உட்கொண்டு வியந்து பாராட்டுவர்; அவ்வாறு வியந்து பாராட்டுதற்குத் தக்க தகுதி இல்லாதவை ஆயினும் அவற்றை அறியாதார் வியந்து பாராட்டுவதுபோலவும் அறிவுடையார் வியந்து பாராட்டவும் செய்வர் என்றவாறு. இதனால் கூறியது:- அறிவுடையார் உரையை வியந்து பாராட்டுவதுபோல அறிவிலார் உரையையும் உரைத்தவரின் மகிழ்ச்சி ஒன்றையே கருதி அறிவுடையார் வியந்து பாராட்டுவர். ஆகலின், என் புல்லுரையையும் நல்லுரைபோலக் கொண்டு அறிவுடையார் பொறுத்துக்கொள்வர் என்னும் துணிவால் இந் நூலைப் பாடுவான் புகுந்தேன் என்று நூலாசிரியன் அவையடக்கம் கூறியவாறு. (விளக்கவுரை) வியக்கத்தக்கவற்றை வியத்தலே அன்றி வியக்கத்தக்க தகுதி இல்லாதவற்றையும் அறிவுடையார் வியப்பரோ? எனின், வியப்பர் என்க. புல்லா எழுத்தில் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து எனவரும் நாலடிப் பாட்டைக் கருதுக. (155) அறிவிலார் முன்னர் அறியாதார் போலவே அறிவுடையார் அமைதல் வேண்டும் என்பதை அவையறிதல் அதிகாரத்தில் ஆசிரியர் திருவள்ளுவர். ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் (714) எனக் கூறுவதால் தெளிக. அன்றியும். ஒளியர் என்றது மிக்காரையும் ஒத்தாரையும்; அது விகாரத்தால் ஒளியார் என நின்றது. ஒள்ளியர் ஆதல் - தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லரை வெளியார் என்றது வயிரம் இல் மரத்தை வெளிறு என்னும் வழக்குப் பற்றி. அவர் மதிக்கும் வகை, அவரினும் வெண்மை யுடையராக என்பார், வான் சுதை வண்ணம் கொளல் என்றார் என்னும் பரிமேலழகர் உரையையும் அறிக. இன்னும் வெண்மை, வெளிறு என்பவை அறி வின்மையைக் காட்டுதலை, வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு என்றும், அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு என்றும் வரும் குறள் மணிகளால் (844, 503) தெளிக. இராமாயணத்தில் ஒருவெள்ளை: திருமால் குறள்வடிவுடன் மாவலியிடம் சென்று மூன்றடி மண் வேண்டினான்; இசைந்தான் மாவலி; நீரட்டுக் கொடுக்குமாறு கேட்டான் குறள் வடிவத் திருமால், நீரட்டுத் தருதலால் கேடுண்டாம்; மண் தாராதே எனத் தடுத்துநின்றான் சுக்கிரன். அதனை ஏற்றுக் கொள்ளாத மாவலி. வெள்ளியை ஆதல் விளம்பின மேலோர் வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்சில இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் என்று கூறிக் கூறியவாறே கொடைபுரிந்தான். இதில் சுக்கிரனை வெள்ளி எனப் பெயரிட்டு அழைக்குமாறும், அறிவிலி என்று எள்ளியுரைக்குமாறும் இரட்டுற வைத்துள்ளமை இன்புறுத்துவதாம். பாரதத்தில் ஒருவெள்ளை : தூதன் ஒருவனை அனுப்பித் துரியோதனன் எண்ணத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்று பாண்டவரிடம் கண்ணன் பகர்ந்தான். அப்போது உடன் இருந்த பலராமன், நாட்டைத் துரியோதனனிடமிருந்து மீட்டும் கேட்க எண்ணும் தீய எண்ணம் மிகக் கொடுமையானது என்றான். பலராமன் வெண்ணிறத்தினன் பால்நிறவண்ணன் என்றும், வால்வளை மேனியன் என்றும் கூறப்பெறுபவன். ஆகையால். இளைய சாத்தகி தமையனை மிகக்கரி திதய மாயினு நாவில் விளையு மாற்றநின் திருவடி வினுமிக வெள்ளை யாகிய தென்ன என்று எள்ளியுரைத்தான். இதனைப் பாரத வெண்பா, மான மணிவரைத்தோள் வாழ்வேந்தீர் மற்றிவன்தன் மேனியிற் காட்டி வெளுத்ததே - தானோர் அறத்தினால் அன்றியே அன்பொருபால் ஓடி மறத்தினால் கட்டுரைத்த வாக்கு என்று கூறுகின்றது. அறியாமை கலந்த பார்வையை, வெள்ளமை கலந்த நோக்கு எனச் சிந்தாமணியும், அறிவின்மை இன்மையை, வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால் எனக் கம்பராமாயணமும் கூறும். 1கடல்நீர் உவர்ப்புடைய தெனினும் அதிற்பிறந்த பவழம் முத்து முதலிய அரும் பொருள்களை எவரும் வேண்டா என விலக்கார். அதுபோல் என் சொல் பழுதுடையதே எனினும் அச்சொல் வழங்கும் பொருளின் உயர்வால் இந்நூலின் அறிவினர் விலக்கார் என்றும். 2கழுவித் தூய்மை செய்தலால் மாணிக்கக் கல்லை ஒளி மிக்கது ஆக்குவர்; அதுபோல் கறைபடிந்த என் சொல்லையும் ஆன்றோர் தம் அறிவு நீரால் கழுவித் தூயதாக்கிக் கொள்வர் என்றும், 3நோயுடையார் மருந்தின் சுவை நோக்கார்; குளிர்காய நினைவார் புகைத் தீமையைக் கருதார்; அவற்றைப்போல் குற்ற மற்ற முதல்வன் புகழ் கூறும் என் சொற்குற்றத்தைக் குற்றமெனக் கொள்ளார் பெரியோர் என்றும், 4சிறுபிள்ளைகள் வீடுகட்டி விளையாடுவதைக் கண்ட சீரிய கட்டட அமைப்பாளர், இது முறையோடு அமைய வில்லை எனக் குற்றம் கூறார். அதுபோல் என் நூலிற் காணும் குற்றத்தையும் அறிவாளர் வெறுத்துக் கூறார் என்றும் பிறரும் அவையடக்கம் கூறினார். யாப்பமைதி: வியத்தக்க என்னும் சொல்லும் பொருளும் பன்முறை இவ்வெண்பாவுள் வருதலால் இது சொற்பொருள் பின் வருநிலையணியாம். முன்னிரண்டடியும் ஓரெதுகையாகவும் பின்னிரண்டடியும் ஓரெதுகையாகவும் வந்திருத்தலானும் இரண்டாம் அடியின் இறுதிச் சீர் தனிச் சொல்பெற்று முதற் சீருக்குரிய எதுகையுடன் நிற்றலானும் இஃது இருவிகற்ப நேரிசை வெண்பா ஆகும். நூல் 1. நீத்தார் பெருமை நீத்தார் பற்றற்றவர்; முற்றத் துறந்தவர்; அவராவார் தந்நலம் அறத் துறந்தவர்; அவர் பெருமை கூறுவது நீத்தார் பெருமை ஆயிற்று. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு என்றார் பொய்யாமொழியார் ஆதலின். மருட்பா 1. கிழிந்த சிதாஅர் உடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர்; தாமுண்ணின் தீயூட்டி உண்ணும் படிவத்தர்; தீயவை ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர்; துவர்மன்னும் ஆடையர்; பாடின் அருமறையர்; நீடின் உருவம் தமக்குத்தாம் ஆய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே. - புறத். 19. (இ. ள்) கிழிந்த உடையை உடுத்தியும், எளியவர்போல் பிறரிடம் கையேந்தி இரந்து பெற்று உண்டும், செறிந்த இதழ் களையுடைய தாமரை மலரன்ன சிறப்பினராகவும், தாம் அரிதின் உண்ணுங்கால் முதற்கண் தீக்கு உண்பித்த பின்னரே உண்ணும் நோன்பினராகவும், பிறர் தமக்குத் தீமைசெய்த காலையும் அதனைப் பொறுத்து அவர்செய் தீமையால் அவர்க்குக் கேடுறாவண்ணம் கழுவாய் தேடும் பெருமையினராகவும், தோல் உரிக்கப் பெற்ற, விளங்கிய, திரிந்து வளைந்த முக்கோல் உடையவராகவும், வண்ணக் காவி வனப்புற அமைந்த உடையினராகவும், அருமறையினை இனிதுற இசைப்பவராகவும், சிறந்த வடிவில் தமக்குத் தாமே இணையானவராகவும் திகழும் அந்தணர்க்குத் தீங்கெதுவும் செய்யாது தவிர்வாயாக என்றவாறு. இ - து: -இது நீத்தார் பெருமை கூறுமுகத்தான் அவர் வழி நின்று அருநலம் எய்தலாம் என்று கூறியது. (வி-ரை.) அந்தணராவார் அறவோர்; அவர்க் கமைந்த அறத்தன்மையாவது அருளே. இதனை, அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் குறளால் அறியலாம். அவ் வந்தணர் தன்மையை விரித்துக் கூறியது இத்தகடூர் யாத்திரைப் பாட்டு. சிதாஅர் என்பது கந்தையாடை. கிழிந்த சிதாஅர் என்றமையால் மிகக் கிழிந்த ஆடை என்பது போதரும். நீனிறச் சிதாஅர் களைந்து வெளிய துடீஇ என அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனாரும் (புறம். 385) அரவின் நாவுருக் கடுக்கும் என், தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப் போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ எனக் கிள்ளிவளவனை நல்லிறையனாரும் (புறம். 393.) எனதரைத், துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ எனச் சேரமான் வஞ்சனைத் திருத்தாமனாரும் (புறம். 398.) தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிகப்பெருஞ் சிறப்பின் ............ கலிங்கம் அளித்திட் டென்னரைநோக்கி” எனச் சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழாரும் (புறம். 400.) நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ எனவும் (பதிற்று. 12.) கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன பாறிய சிதாரேன் எனவும் (புறம். 150.) வருவனவற்றாலும் சிதாரின் இழிபாடும் கலிங்கம் துகில் என்பனவற்றின் மேம்பாடும் தெள்ளிதிற் புலப்படும். உடுத்திய சிதாருடை கொண்டும், உண்ட ஏற்றிரந்த உணவு கொண்டும் அந்தணர் தன்மையை அளவிட்டுக் கொள்ளற்க என்பாராய் அவர்தம் சீரிய தன்மைகளை அடுக்கிக் கூறினார். ஆடை பாதி ஆள் பாதி என்றும், மேலாடை இன்றிச் சபைபுகுந் தால்இந்த மேதினியோர் நூலா யிரம்படித் தாலும் பெரிதென் bறண்ணார்v‹W«, விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று என்றும், “பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச் சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி மல்லெலாம் அகல வோட்டி மானமென் பதனை வீட்டி இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழி வெந்த ஞான்றும் எ‹W«, கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும் என்றும் உலகியல் நிலையும் இலக்கியவழக்கும் இருத்தலால் சிதார் உடுத்து ஏற்றிரந்து உண்பார் இழிந்தவர் ஆவரோ என்பார்க்கு நீத்தார் நீர்மைச் சீர்மையைக் கூறுவாராய், நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர் என்றார். நூற்றிதழ் என்றது இதழ்ச் செறிவைக் காட்டி நின்றது. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே என்பராகலின் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர் என்றார். சேற்றிலே தோன்றி அதன்கண்ணே நிற்பினும் தன் சீரிய தன்மையில் குன்றாமையும், தெய்வம் உறையும் திருத்தகவும், நீர் ஒட்டாத நீர்மையும் பிறபிற நலங்களும் உடையது திருவளர் தாமரை ஆகலின் அத் தாமரைச் சிறப்பெல்லாம் நீத்தார்க்கும் ஏற்றிக் கொள்ளுமாறு உவமைப்படுத்தினார். பிறரும் குடிச்சிறப்புக்கு இவ்வாறே, சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரி நிரைகண் டன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோர் (புறம். 27.) என்றார். விழுத்திணை யாவது சிறந்த குடி. இதனை, விறற் புகழ், வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல் என்று குமணனைப் பெருஞ்சித்திரனார் கூறுமுகத்தான் விளக்கினார் (புறம். 159.) எத்துணையும் வேறுபாடு இன்றி, எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணி, ஒத்துரிமை உடையவராய் உதவுவதைக் கடப்பாடு எனக் கொண்டவர் நீத்தார். வாடிய பயிரைக் கண்டு வாடி நலிவதும், பசியினால் அயர்வாரைக் கண்டு பரிவு மீக்கூர்ந்து நைவதும் அவர்க்கு இயல்பு. அவ்வியல்பின் வெளிப்படு விளக்கம் அற்றார் அழிபசி தீர்த்தல் ஆகும். உயிரில்லாப் பொருளாகி எரிப்பதே இயல்பாகிய தீயிற்கும் உணவூட்டுவதைக் குறித்தார்; இவர் மற்றை உயிர்களை உண்பித்துத் தாம் உண்ணல் வெளிப்படை ஆகலின். இது, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது எனப் புல்லும் தலைகாட்டாமை கூறியமையால் மற்றையவை வளரா, வாழா எனக் குறித்தாங்குக் கொள்க. ஏற்றுண்பாராகிய நீத்தார் ஈத்துண்பரோ எனின் அதனைக் காட்டுதற் கன்றே, தாம் உண்ணின் தீமூட்டி உண்ணும் என்றார். ஒருபோதுண்பான் யோகியே என்றும், பொழுதுமறுத்துண்ணும் மங்கை என்றும், கூறுவராகலின் உண்ணின் என்றார். படிவம் என்பது வடிவம் படிந்து நிற்கும் தன்மை. இதனைத், துறந்தார் படிவத்தர் ஆகி என்பதால் (திருக். 586) அறிக. இனிப் படிவம் என்பது நோன்புமாம். நோற்றுப் பட்டினிவிட்டு உண்ணும் உணவைப் படிவ உண்டி (குறுந். 156) என்றும், அவ்வாறு உண்பவரைப் படிவ உண்டியர் என்றும், படிவ நோன்பியர் என்றும் (மணி 5: 33; 28: 224) கூறுவதால் அறியலாம். பிறர்க்குத் தீமை நினையாமை முதல் நிலை; பிறர் தமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் அதனின் உயர்நிலை தீமை செய்தார்க்கும் நன்மை செய்தலும், அவர் தீமை செய்ததன் பயனாகவரும் கேடின்றிக் கடைத்தேறும் வண்ணம் திருவருளை வேண்டிக் கிடத்தலும் அதனினும் உயர்நிலை. அந் நிலைக்கு உயர்ந்தவர் இந் நீத்தார் என்பதை உட்கொண்டு. தீயவை ஆற்றுழி ஆற்றிக் கழுவுபு தோற்றம் என்றார், இவற்றை, உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்றும், கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் என்றும், இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்றும், இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்றும் வரும் குறள் மணிகளால் (261, 312, 314, 987) அறிக. தீயவை புரிவாரை ஆற்றிப் பொறுப்பதுடன் அவர்க்காகப் பரிந்து உருகுதலை, தம்மை இகழ்ந்தாரைத் தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன் என்னும் நாலடியால் (58) அறிக. தோற்றமாவது உயர்வு. அது. நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்னும் குறளாற் (124). புலப்படும். கோல் என்பது முக்கோல்; திரிதண்டம், திரிதண்டு என்பனவும் அது. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது தொல்காப்பியத்தில் காணப்பெறும் ஒரு நூற்பா. (மரபு. 71.) குடையும் கோலும் கரகமும் உடையவராக அந்தணர் இருந்தனர் என்பதை, எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறொரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர் எனவரும் கலித்தொகையான் (9) அறியலாம். இனி, அக்கோலை ஊன்றி அந்திப்பொழுதில் அந்தணர் அருமறை நினைவர் என்பதை, பொன்மலை சுடர்சேரப் புலம்பிய இடன்நோக்கித் தன்மலைந் துலகேத்தத் தகைமதி ஏர்தரச் செக்கர்கொள் பொழுதினான் ஒலிநீவி இனநாரை முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ளும் இலங்கு நீர்த் தண்சேர்ப்ப எனவரும் கலிப்பாட்டான் (126) அறியலாம். முக்கோல் கொள்ளுதல், காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமமும் விடுத்தமைக்கு அடையாளம் என்றும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலமும் கடந்தமைக்குச் சான்று என்றும், மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணமும் ஒடுங்கியமைக்கும் காட்டு என்றும் கூறுவர். முக்கோல் - திரிதண்டம். அது மூன்றுகோல் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட தண்டு என்பது கதிர்வேல் பிள்ளை அகராதிக் குறிப்பு, முக்கோல் உடையவரை, முக்கோற் பகவர் என்பார் நாற்கவிராச நம்பியார். (நம்பியகப் பொருள். 188) அவிர்முருக்கந் தோல் உரித்த கோலர் என்பது சிறந்து விளங்கும் முருக்கின் தோல் உரிக்கப் பெற்ற கோலை உடையவர் என்றுமாம். முருக்கின்கோலைத் தண்டாகப் பயன்படுத்துதல், செம்பூமுருக்கின் நன்னார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து எனவரும் குறுந்தொகையாற் (156) புலனாம். துவர் மன்னும் ஆடையர் என்பது காவியுடையர் என்பதாம். துவர் என்பது ஒருவகைச் செந்நிறம். துவர் நிறப்பயறு துவரை என வழங்கப் பெறுதலும், செந்நிறம் உடையதும் துவர்ப்பதும், ஆகிய ஒருபொருள் துவர்ப்பு என வழங்கப் பெறுதலும், செந்நிறக் கற்பாறையும் செம்மண் மேடுமாக அமைந்த மலையும், அம் மலை சார்ந்த ஊரும் துவரங் குறிச்சி என வழங்கப் பெறுதலும் கண்டறிக. துவராடை என்பது காவிநிறம் ஏறிய அல்லது காவிநிறம் ஏற்றப்பெற்ற ஆடை. தோய்த்துப் பிழிந்து வெயிற்படாது உலர்த்தப் பெறும் ஆடை நாளடைவில் பழுப்பேறிக் காவி நிறமாதல் கண் கூடு. அந்தணர் சிவந்த ஆடை உடுத்தும் போர்த்தும் இருந்தனர் என்பதைப் பொன்மலை சுடர்சேர என்னும் கலிப்பாட்டில் நாரைக்கு அவரை ஒப்பிட்டமையால் உணரலாம். அதன் உரைக் கண், பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும் மூக்குத் தரையிலே சென்று குத்துதலானும் அதனை முக்கோலை ஊன்றி யிருந்த அந்தணரோடு ஒப்புரைத்தார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதுவது கருதத் தக்கது. பாடின் அருமறையர் என்பது அரிய மறைகளை இனிதுற இசையெழுப்பிப் பாடுபவர் என்னும் பொருளது. பண்டே தமிழில் மறைகள் உண்மை அந்தணர் மறைத்தே என்றும், இசையொடு சிவணிய நரம்பின் மறை என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுவதால் (எழுத்து 102, 33) அறிக. இன்னிசை வீணையர் யாழினர் என்பது மணிவாசகர் வாக்கு. (திருவா. 20. 4) பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார் என்பது அப்பாரடிகள் வாக்கு. (தேவா. 4: 68- 8) தமக்குத் தாம் ஆயவர் என்பதால் ஒப்பிலார் என்றார். ஈடு இணை இல்லார் இவர் என்க. உவமையைக் கூறி மறுக்காமல் தானே உவமை தனக்கு என்னும் வாய்பாட்டால் கூறியது (தண்டி. 31) இது. இருபிறப்பாவது உடற்பிறப்பு ஒன்றும், அறிவுப் பிறப்பு மற்றொன்றும். அவ்விரண்டனையும் உடையார் இருபிறப்பாளர் எனப்பெற்றார். தீது ஒரூஉகமா என்பது தீமை செய்தலைத் தவிர்க என்பதாம். மா அசைநிலை. உண்கமா கொற்கையோனே என்பதிற் போல வந்தது. மாஎன் கிளவி வியங்கோள் அசைச் சொல் என்பது தொல்காப்பியம். (இடை. 25) ஒருவுதல் என்பது விலகுதல், தவிர்தல்; மருவுதலுக்கு முரண். மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு - (திருக். 800) என்றும் யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் - (நாலடி. 213) என்றும் வருவனவற்றால் ஒருவுதல் இப் பொருட்டதாதல் புலப்படும். அந்தணர்க்குத் தீங்கு செய்யாமை அன்றிப் பேணிக் காத்தலும் கடன் என்பதை, அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்ன காத்தல்நின் கடனென்று - (சிலப். 26: 102-3) விசும்பியங்கு முனிவர் செங்குட்டுவனிடம் உரைத்ததாக இளங்கோ வடிகள் இயம்புவார். இனி, அவரை ஓம்பும் முறைமை ஒரு சேயைத் தாய் ஓம்பும் முறைமை போல்வதாம். இதனை, அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி என்னும் புறப்பாட்டால் (5) தெளியலாம். யாப்பமைதி: ஒன்பதடியான் வந்த இப் பாடலின் முதல் ஏழு அடியும் வெண்பா யாப்பும், பின்னிரண்டு அடியும் ஆசிரிய யாப்பும் உடைமையால் வெண்பா முன்னாக ஆசிரியம் பின்னாக மயங்கி அமைவதாம் மருட்பா ஆகும். இனி ஒன்பதடியும் வெண்டளை பிழையாமை வந்தமையானும், ஆசிரிய முடிவு எய்தியமையானும் வெண்டளையான் வந்த நேரிசை ஆசிரியப்பா எனினும் அமையும். ஈற்றயலடி முச்சீராக வருதல் நேரிசை ஆசிரியப்பாவின் பொது இலக்கணமாம். நீத்தார் பெருமை கூறும் இப் பாட்டு செவியுறைப் பொருளதாம். என்னை? செவியுறை தானே, பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே என்றார் ஆகலின் (தொல். செய். 113) இனிச் செவியுறைப் பொருள், மருட்பாவினால் கூறப் பெறுதல், புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றும் திண்ணிதிற் றெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப என்பதால் கொள்க. (தொல். செய். 159) (1) 2. ஈகை இல்லை என்று இரந்து வந்தவர்க்குத் தாமும் இல்லை என்று கூறாமல் கொடுத்து அவர் வறுமையும் துயரும் அகற்றுதல். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து) ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் 231. பலவிகற்பப் பஃறொடை வெண்பா 2. நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன். - புறத். 227. (இ-ள்) நூறுபேர்களுள் ஒருவரே வீரரென விளக்க முறுவர்; கற்றவர் ஆயிரம்பேர் கூடிய அவைக்கண்ணும், கேட்டவர் கேட்டவற்றுக் கெல்லாம் செவ்விய விடைதரும் ஆற்றல் உடையவனாக ஒருவனே அமைவான்: நீர் சூழ்ந்த நிலவுலகம் முழுமையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தாலும் இரப்பவர்களை இகழ்ந்து கூறாமல் கொடுக்கும் கொடையாளன் ஒருவனைக் காண்டற்கு அரிது என்றவாறு. இ - து: - போர் வலிமையினும் சொல்வலிமையும், அச் சொல்வலிமையினும் கொடைவலிமையும் ஒன்றில் ஒன்று உயர்ந்தவும், வாய்த்தற்கு அரியவும், புகழ்மீக் கூர்ந்தவும் ஆகும் என்பதாம். (வி - ரை). வில்வலிமையினும் சொல்வலிமை சீரியது என்பதை. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை - திருக். 872. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர் - திருக். 723. என்னும் திருக்குறள்களானும், வில்லம்பு சொல்லம்பு மேதினியில் இரண்டுண்டு வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம் - வில்லம்பு பட்டதடா என்மார்பில் பார்த்திபா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல் என்னும் கம்பர்வாக்கானும் அறியலாம். வில்லாற்றலில் வலியதாம் சொல்லாற்றலினும் கொடை யாற்றலே உயர்ந்தது என்பதை, ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் உண்டாயின் உண்டென் றறு என்னும் ஔவையார் வாக்கான் அறியலாம். இவண் சொல்லப் பெற்ற முப்பொருள்களும் பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்கு நிலைக்களமானவை. இம் மூன்றனாலும் உண்டாகக் கூடிய இசை என்னும் புகழும் ஒரு நிலைக்களமே. கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். இவண் கல்வியை உரைத்தது கொண்டு சொல்வன்மையை உரைத்தாராகக் கோடல் தகுமோ எனின் தகும் என்க. என் னெனின், சொல்வன்மை இல்லார். இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார் - திருக். 650 என்றும், பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் - திருக். 728. என்றும், கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார் - திருக். 729. என்றும் பொய்யாமொழி புகலும் ஆகலின். மேலும், கற்பதே அவையஞ்சாது சொல்லும் ஆற்றல் பெறுவதற்கே என்பதும், கல்வியுடன் சொல்வன்மையும் பெற்றவரே கற்றாருள் கற்றார் எனப் பெறுவார் என்பதும் திரு வள்ளுவர் கருத்தாம். ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு - திருக். 725. என்றும், கற்றாருள் கற்றார் எனப்படுவோர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் - திருக். 722. என்றும் வரும் குறள் மணிகளை உன்னுக. இனிப் படைத்திறமும் சொற்றிறமும் பயிற்சியால் நிரம்பப் பெறுவன; ஒருவன் முயன்று முயன்று பெருக்கிக் கொள்ளக் கூடுவன; ஆனால், கொடைத்தன்மை வழிவழியாக வரும் பிறவித் தொடர்பு என்றும், உயிரிரக்கத்தான் உண்டாவது என்றும் கூறுவர். இவற்றை ஒருவாற்றான், சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ; - நித்தம் நடையும் நடைப் பழக்கம் ; நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் என்று ஔவையார் விளக்கினார். தன் உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று நின்று அங்ஙனந் தன் படையைக் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை எதிர்கொண்டு, அவன் படையை ஆற்றலொடு தாங்குதல் எருமைமறம் என்று சிறப்பித்துப் பெறும், இதனை, ஒருவனை ஒருவன் உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (தொல். புறத். 17.) இத்துறைக்கு, கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளம் தன்மேல் வர என்று சான்று காட்டினார் ஐயனாரிதனார். (புறப். வெண். 139) வேற்றானை வெள்ளம் நெரிதர ஆற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவன் என்றார் இந்நூலுடையார் (தகடூர். 22). தன் ஆள் வெள்ளம் போயிற்று; தன்மேல் பகைவர் வாள் வெள்ளம் வருகின்றது. அதனைக் கற்சிறைபோல் (அணைபோல்) நின்று தடுத்து ஆடல் கொள்ளும் ஆண்மை அரிதேயாம். இத்தகைய வீரர் விரல்விட்டு எண்ணத்தக்க அளவினரே ஆவர். இத்தகைய வீரரையும் வீறுகொண்டு எழுமாறு செய்தவர் வியத்தகு நாவன்மையாளர் என்பதை நானில வரலாறு நன்கு காட்டும். போர்க்குக் கிளம்புமுன் வேந்தரும் படைத்தலைவரும் கூறும் வஞ்சின உரை என்னும் நெடுமொழி நாவீறு காட்டும் நன்முத்திரை என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. அந் நாவீறு காப்பியப் பொருளுக்குக் கவின் செய்வதாய் அமைந்துள்ள தன்மையைப் புறநானூறு முதலாகிய வீரகாவியங்களில் கண்டு உணர்க. விரிப்பின் வரம்பின்றிப் பல்கும் எனக் கொள்க. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் - திருக். 763. என்றும் வீரமாண்பினை வெளிப்படுத்தினார் திருவள்ளுவர். காணாமல் வேணதெலாம் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி என்று சொலல்வல்லார் திறத்தினைச் சொன்னார் ஔவையார். ஆயினும் அவ்வீரரினும், சொல்லாளரினும், உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் - புறம். 141. போன்றவரும். பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி - புறம். 200 போன்றவரும், பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் - புறம். 165 என்று புகழப்பெறும் தலைக்கொடையாளி குமணன் போன்ற வரும் வரலாற்றில் காணற்கு அரியரே என்பதில் ஐயமுண்டோ? ஆதலின் அப் படிமுறை வளர்ச்சிப் படியே, வீரரையும் சொல் வன்மையரையும் வள்ளன்மையரையும் வைத்து ஓதினார் என்க. ஏசி இடலின் இடாமை நன்று என்பராகலின் எள்ளாது ஈதலை எடுத்தோதினார். காணாது ஈத்த பரிசினைக் கைக் கொள்ள விரும்பாமல் வெறுத்துச் செல்லும் பெருஞ்சித்திரனார், காணா தீத்த இப்பொருட் கியானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினைஅனைத் தாயினும் இனிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே - புறம். 208 என்றும், அவர் தகுதியை அறிந்து வரவேற்று உவகை கூராமல் வழங்கிய கொடையைப் பெற மறுத்து, பருகு வன்ன வேட்கை இல்வழி அருகில் கண்டும் அறியார் போல அகனக வாரா முகனழி பரிசில் - புறம். 207 என்று கூறி வெறுத்தும் சென்றார். இதனான் அன்றே பொய்யா மொழியார். இகழ்ந்தெள்ளா(து) ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து - குறள். 1057.) என்று கூறினார். இவற்றையெல்லாம் உள்ளடக்கித், தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன் என்றார் என்க. யாப்பமைதி: நான்கு அடியின் மிக்குப் பன்னீரடிகாறும் வருவன பஃறொடை வெண்பா ஆகும். இதனுள் முதன் மூன்று அடியும் ஓரெதுகையாகவும், பின் இரண்டு அடியும் ஓரெதுகையாகவும் வந்துள்ளமையால் பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். ஒன்றல்லது பல என்பது தமிழ்வழக்கு ஆகலின் இவ்வெண்பா மலர் என்னும் வாய்ப்பாட்டான் முடிந்தது. (உ) 3. செங்கோன்மை - 1 அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப் பட்டது- பரிமேலழகர். செவ்விதாகிய முறைசெய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. - மணக்குடவர். ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை - குறள். 541 பலவிகற்பப் பஃறொடை வெண்பா 3. இறப்பப் பெருகி இசைபடுவ தல்லால் சிறப்பிற் சிறுகுவ துண்டோ? அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை. (இ- ள்) செங்கோன் முறையால், இவர் வேண்டியவர் என்னும் பற்றும், இவர் வேண்டாதவர் என்னும் வெறுப்பும் நீக்கி, எவரிடத்தும் தீமை செய்தலை மேற்கொள்ளாத வலிய வேற்படை கொண்ட வீரவேந்தர் பகைவர்மேற் பொர எடுத்த படை எண்ணிக்கையால் பெருகியும் செய்யும் பேராண்மைச் செயலாலும் பெருகியும் புகழப் பெறுவதை அல்லாமல் புகழ்க் குறைபடுவது இல்லையாம் என்றவாறு. இ-து: - ஒருவேந்தன் படை எண்ணிக்கையால் பெருக்கம் எய்துவதும், அதன் செயல் திறத்தால் பெருக்கம் எய்துவதும் அவன் செங்கோல் மாண்பைப் பொறுத்ததேயாம் என்பது கூறியது. (வி - ரை) மற மன்னர் ஒன்னார்க்கு உயர்த்த படை, சிறப்பிற் சிறுகுவ துண்டோ? என இயைக்க. வேந்தன் செங்கோலன் அல்லன் ஆயின் உட்பகை உண்டாம் என்பதும், உட்பகை எட்பிளவு அன்ன சிறுமைத் தாயினும் கெடுத்து விடுதல் ஒருதலை என்பதும், வெளிப்பகை கோடியினும் உட்பகை ஒன்றன் கேடே பெரிதாம் என்பதும், அறக்கோல் நடாத்தும் வேந்தனுக்குத் தம் ஆருயிர் தருதலை பிறவிப் பயன் எனப் படைவீரரும் குடிமக்களும் முந்து நிற்பர் என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள் ஆகலின் இவ்வாறு கூறினார். எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை யுள்ளதாம் கேடு - திருக். 889 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு - திருக். 882. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துத் தெவ்வோர் எழுபது கோடி யுறும் - திருக். 639 புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா(டு) இரந்துகோள் தக்க துடைத்து - திருக். 780. அறக்கோல் என்பது செங்கோல்; செம்மை என்பது நேர்மை, நேர் என்னும் பொருட்டது. செங்குணக்கு, செம்பாதி என்பன நேர்கிழக்கையும் சரி பாதியையும் குறிப்பன. கொடுங்கோல் என்பது வளைந்தகோல் என்னும் பொருட்டது. வளைந்த கோலினராய் ஆமேய்த்துத் திரிவாரைக் கொடுங்கோல் கையர் என்று கூறும் முல்லைப் பாட்டு. நேர் அல்லது நேர்மை தவறுவது வளைவு ஆயிற்று. கோல் என்பது ஆகுபெயராய் ஆட்சியைக் குறித்து நின்றது. ஒருபால் கோடாது நேராக நிற்கும் சமன்கோலைச் செங்கோலுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி - திருக். 118. என்பது திருக்குறள். அரசன் ஆள்வோனே எனினும் அவனே படைத்தலைவ னாகவும், அறங்கூறு அவையத் தலைவனாகவும், புலவர் தலைவனாகவும் இருந்த காலம் உண்டு. அதனால், அவன் சான்றோர் என விளங்கினான். அவன் சமனிலை பேணினான் என்பது இதனால் கூறாமலே வெளிப்படும். ஒருபால் கோடுதற்கு அடிப்படை என்ன? விருப்பு வெறுப்பு என்பவையே ஒருபால் கோடிச் செல்லுதற்கு அடிப்படை. அவ்விரண்டு தன்மைகளும் ஒன்றற்கு ஒன்று எதிரிடையானவை. ஆகலின் இத் தன்மைகளில் எந்த ஒன்றுக்கு ஆட்பட்டவரும் நடுவுநிலை பேணார் என்பது தெளிவு. இதனால் அன்றோ, காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் என்று அறநெறிச் சாரமும் (42) வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம் என்று சிந்தாமணியும் (888) கூறின. விருப்பு வெறுப்பற்ற தன்மையே இறைமை. அது துன்ப நீக்க நிலைக்களம். வேண்டுதல் வேண்டாமை இலான் என இறைமைத் தன்மை இன்னதென விளக்கினார் திருவள்ளுவர் அதனை இத் தகடூர் யாத்திரை, ஆர்வமும் செற்றமும் நீக்கி என்று கூறிற்று. நடுவு நிலைமையாவது சமனிலை என்றாம். சமனிலை யாவது வாளால் போழினும் தாளில் வீழினும் ஒப்ப நிற்கும் ஒருநிலை. அந் நிலையினர், தமக்கோர் குறைவு உண்டா யினும் தாம் கொண்ட கொள்கைக் கொரு குறையுண்டாகப் பொறார். இதற்குப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனினும் சான்றாவார் ஒருவர் உளரோ? அறிவறை போகிய பொறியறு நெஞ்சத் (து) இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே என வாயிற்காவலனை விளிக்கு முகத்தானே, பாண்டியன் கொடுங்கோலன் என்பதையே பறையறைந்தார் கண்ணகியார். பின்னர் அரண்மனைக்குள் சென்று வேந்தனைக் கண்டதும் அவர் நிலைகண்டு, நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோநீ மடக்கொடி யோய் என வினாவினான் நிலைமாறா மன்னன் பாண்டியன். ‘ahiunah? என வினாவியவனுக்குப் புறாவுக்காகத் தன் உடலை அரிந்து தந்த அருளாளன் சிபியையும், பசுக் கன்றைக் கொன்றவன் தன் மைந்தனே என்பதையும் பாராது தேர்க்காலின் கீழ்க்கிடத்தித் தானே கொன்ற மனுவையும் கூறுமுகத்தால் அவர்கள் போற்றிய அருளையும் அறத்தையும் போற்றாத கொடுங்கோலன் என்பதைச் சான்றுடன் காட்டினார் கண்ணகியார். தான் ஏதும் தவறு செய்ததாக உணராத மன்னன் தருக்கின்றிக். கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என்று கூறிக், குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் - திருக். 549. என்று தெளிவு படுத்தினான், தேராமன்னா என்று நேரடியாகவும், சூழ்கழல் மன்னா என்னுமுகத்தால் அறிவையோ அறிஞர் அவையையோ சூழாதவன் என்று குறிப்பாகவும் கண்ணகியார் இடித்துரைத்த பின்னரும், தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி என்றான். பின்னர்ச் சிலம்பை உடைத்துக் காட்டி உண்மையை நிலை நாட்டியமை உணர்ந்ததும் ஆரியப்படை கடந்த மன்னன் அறப்படைக்கு ஆற்ற முடியாமல், யானோ அரசன்? யானே கள்வன் எனக் கூறி அரியணையில் இருந்து வீழ்ந்து ஆவி துறந்தான். அதனால் அன்றோ அவன் செய்தியை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் வழியாகக் கேள்வியுற்ற செங்கோல் வேந்தன் செங்குட்டுவன், எம்மோ ரன்ன வேந்தற் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது என்று கூறினான். இவற்றை நோக்கக், காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் - திருக். 386. என்னும் திருக்குறளுக்கு விரிவுரை என்னத் திகழ்தல் கண்டு கொள்க. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் - திருக். 564. என்று இன்னாச் செயலின்கேடும், குடிதழீஇக் கோலேச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு - திருக். 544. என்று ஆள்வோன் குடிதழுவி நின்றால் மக்கள் அவன் அடி தழுவி நிற்கும் நலனும், இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் - திருக். 547. என்று செய்வினைப் பயனே செய்தாற்கு மீண்டுவரும் பாங்கும் அறநூல் கூறிற்று ஆகலின், யார்கண்ணும் இன்னாத வேண்டா மன்னர் என்றார். குடியினர் அனைவரும் படையினர் ஆகவும், படையினர் அனைவரும் குடிகாத்தோம்பும் கொள்கை யுழவர்களாகவும் பண்டு தொட்டுப் பயின்று வந்த பான்மையினர் தமிழர் ஆகலின் குடிபடை என்னும் பொருள் பொதிந்த சொல் உண்டாயிற்று. அரசன் உறுப்பு எண்ணுமுறைக் கண்ணும். படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு - திருக். 381. என எண்ணப் படுவதாயிற்று. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே - புறம். 186, என்றும், வயிரவாள் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் - கம்ப. பால. 177 என்றும் கூறப் பெறுமாறு ஆள்வோர் நிலைமையும் ஆளப் படுவோர் நிலைமையும் அமைந்தது. அதனால் தான், கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேனாள் உற்ற செருவிற் கிவள் தன்னை யானை எறிந்து களத்தொழிந் தனனே; நெருநல் உற்ற செருவிற் கிவள்கொழுநன் பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே - புறம். 279. என்னும் நிலைமையும், கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான்என் ஏறு - புறப். வெண். 176. என்னும் நிலைமையும் நாட்டில் விளங்கக் கூடும் என்பது முற்றிலும் உண்மை. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய இத் தகடூர் யாத்திரை செங்கோல் வேந்தன் படை சிறுகாது எனச் சுருங்கக் கூறிற்று. படை சிறுகாமை இருவகைத்தாம். அவை எண்ணிக்கையால் சிறுகாமையும், எண்ணத்தால் சிறுகாமையுமாம், படையின் வெற்றிப்பாட்டில் எண்ணிக்கையினும் எண்ணத்திற்கே முதலிடமாம். உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது - திருக். 762. என எண்ணப் பெருமையையும், சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை - திருக். 769. என எண்ணிக்கையின் இன்றியமையாமையையும் எடுத்துக் கூறுகின்றது வள்ளுவம். சிறிய படையைக் கொண்டு பெரிய படையை வெற்றி கொண்டான் என்ற செய்தியை நெப்போலியனது படைச் செய்தியாளன் வெளியிட முந்தியபோது அவனைத் தடுத்து, வலியபடையைக் கொண்டு பெரியபடையை வென்றான் என்று திருத்திக் கூறிப் படையாற்றலை வெளிப்படுத்தியதுடன் படையின் மறைவுச் செய்தியையும் நெப்போலியன் காத்தான். இதனானும் படையின் எண்ணிக்கையினும் எண்ணத்திற்கே முதன்மை யுண்மை தெளிக. (3) 3. செங்கோன்மை - 2 இன்னிசை வெண்பா 4. அறம்புரிந்தன் றம்ம அரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு. - புறத். 667. (இ-ள்) தாம் தாம் பிறந்த குடியின் போர் வெற்றியின் பொருட்டாகத் துறவியாம் தன்மையொடு, மிக நெருங்கிய உறவினால் சிறந்தவர்க்கும் தாம் செய்யத் தக்க கடப்பாடுகளைச் செய்தற்கு இயலார் ஆகலின், அரசர் குடியில் பிறத்தல் என்பது அறம் புரிந்ததன் பயன் என்பதன்று என்றவாறு. இ - து:- செல்வ வாய்ப்பும், ஏவல்கொள்ளும் உரிமையும், இணையில்லா இசைமையும் உடையது ஆளும் உரிமைக் குடியில் பிறப்பது என்று உலகோர் மதிப்பாராக, அஃதின்று; அரச குடியிற் பிறப்பது அல்லல் மிக்கது என்பதை அறுதியிட்டுக் காட்டுவது இப் பாட்டு. (வி - ரை) அம்ம - இடைச் சொல். இரக்கப் பொருள் தந்து இவண் நின்றது. பல்வகை வாய்ப்புக்களும், வளங்களும் பாங்குற அமைந்து கிடக்கப் பெற்றவன் அரசன்; ஆயினும் அவன் பற்றற்றவனாக வாழுதல் வேண்டும். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுக வேண்டியவன் வேந்தன்; ஆயினும் அவன் அச் சுற்றத்திற்கெனத் தான் விரும்பும் உதவி களையெல்லாம் செய்தற்குக் கூடாதவன். ஒப்பநாடி அத்தகவு ஒறுக்க வேண்டியவன் மன்னன்; ஆயினும் பொதுநோக்கு ஒழிந்து தகுதியறிந்து தக்கோரைப் போற்றிக் கொள்ளத்தக்கவன். ஆக ஒன்றற்கு ஒன்று முரண்பாடு கொண்ட தன்மைகளை முறை திறம்பாவண்ணம் பேணிக் காக்க வேண்டியவன் காவலன் ஆகலின், அரசில் பிறத்தல் அறம்புரிந் தன்று என்றார். mj‰fhf ‘m«k! என இரங்கினார். பாண்டியன் நெடுஞ்செழியன் தான் தவறு செய்ததாக உணர்ந்ததும் அரியணையில் இருந்து வீழ்ந்து உயிர்துறந்த செய்தியைச் செங்குட்டுவன் கேட்டறிந்து கூறியதை முன்னர்க் கண்டோம். அதன் பின்னர் அரசகுடியிற் பிறத்தலின் அவலத்தை அம் மன்னர்மன்னன் விரித்துக் கூறினான்: மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக வில் - சிலப். 25: 100-4 என்பது அவன் உரை. தன்னைப் புகழ்வார் மாட்டுத் தனி அன்பு செலுத்தித் தழுவிக் கோடலும், தன்னை இகழ்வாரைப் பகைவர் எனக் கொண்டு வன்பு செலுத்தி அகற்றலும் உலகியல்பு. தன்னைப் பழிப்பாரை- தன் முன்னேயே தன்னைப் பழிப்பாரைத் - தழுவிக் கொள்ளத்தக்க நன்மனம் உண்டாயின் அம்மனம் பெருமனம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அம்மனம் பற்றற்ற பண்பு மனமே யாம். அம் மனம் ஆள்வோர்க்கு வேண்டும் என்பதைச் செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு என்னும் குறளால் குறித்தார் உள்படுகருமத் தலைவராகத் திகழ்ந்த வள்ளுவப் பெருந்தகையார். துன்னிய கேண்மையினர்க்கும் அவர் தகுதி நோக்காது கேண்மை ஒன்றே நோக்கித் தனிப்படப் பதவிச் சிறப்புத் தருதல் கூடாது என்பதைக், காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் - குறள். 507. என்றார். காதன்மை என்பது பற்றுக்கோடு - தொடர்பு - அன்பு. கந்து - காரணம். தம் உறவினரையும் நண்பரையும் அன்பரையும் பொறுப் பில் வைக்கவேண்டும் என்று கருதாமல் தக்கார் இவரெனத் தேர்ந்து அவரையே பொறுப்பில் வைத்தல்வேண்டும் என்பதும், இடித்துப் புகட்டுவோரை இனமாகக் கொள்ளல் வேண்டும் என்பதும் வள்ளுவ நெறி; இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து) அதனை அவன்கண் விடல் - குறள். 517 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் - குறள். 448 இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர் - குறள். 447. ஒரு செயலைச் செய்யுங்கால் தம் பெருமையினும் தம் குடிக்கு வரும் பெருமையே கருதத்தக்கதாம். குடிக்குப் பழி வருமாயின் தமக்கு எத்துணைப் புகழ்வருஞ் செயலாயினும் செய்தல் கூடாது என்னும் கருத்தால், பிறந்தவேல் வென்றிப் பொருட்டு என்றார். குடியின் பெருமைக்காகத் தன் பெருமையை இழக்கவும் முந்துக என ஏவுவார் திருவள்ளுவர். குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் - குறள். 1028. என்பது அவர் வாக்கு. மலையமான் திருமுடிக் காரியின் மக்களைக் கிள்ளி வளவன் யானையின் காலின்கீழ்க் கிடத்திக் கொல்லப் புகுந்தான். அந் நிலையைக் கண்ட அருளாளர் கோவூர்கிழார், நீயே புறவின் அல்லல் அன்றியும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்; களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்த புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ உடையர் கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே எனப் பாடி உய்யக்கொண்டதை உன்னுக. சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டாடுங்கால், புலவர் ஒரு வட்டினை எடுத்துக் கைக்கண் மறைத்தார். அதனைக் கண்டு உணர்ச்சி கொண்ட மாவளத்தான் வட்டுக்கொண்டு புலவரை எறிந்தான். அப்பொழுது புலவர் நீ சோழன் மகனல்லை என்று கூறினார். அதனைக் கேட்ட மாவளத்தான் தன் குடிப்பழி எனக் கொண்டு நாணினான். அப்பொழுது, ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் ; மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக் காண்டகு மொய்ம்ப காட்டினை - புறம். 43. என்று தாமப்பல் கண்ணனார் பாடியதைக் கருதுக. இவை குடிப் பெருமைபோற்ற வேண்டிய இன்றியமையாமையை வலியுறுத்தும். யாப்பமைதி: இரண்டாம் அடி இறுதிச்சீர் தனிச் சொல்லாக இன்றி ஒருவிகற்பத்தான் வந்தமையால் இப்பாட்டு ஒருவிகற்ப இன்னிசை வெண்பா ஆகும். (4) 4. சொல்வன்மை தாம் எண்ணிய எண்ணம் திண்ணிதில் விளங்குமாறு திறமாகச் சொல்லும் ஆற்றல். விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் - குறள். 648 பலவிகற்பப் பஃறொடை வெண்பா 5. சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார் பழித்தசொல் தீண்டாமல் சொல்லும், விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேல் பூக்குழலாய் நல்வயல் ஊரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது. - புறத். 756. (இ-ள்) பூக்கமழும் கூந்தலை யுடையாய்! பிறர் ஒன்றைச் சொல்லுங்கால் அவர் சொல்லிய சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ள வல்லவன், தான் பிறர் சொல்லிய சொல்லை வெற்றி கொள்ளச் சொல்லும் சொல்லையும், பலரும் பழிக்கத்தக்க சொல்லைக் கலவாமல் சொல்லும் சொல்லையும், உயர்ந்த பொருளைக் கேட்பவர்க்கு இனியவாகச் சொல்லும் சொல்லையும் சொல்லானாயின் நம் மருத நிலத்தலைவனது நறுமணந் தோய்ந்த மார்பினைத் தழுவிக் கிடத்தலினும் ஊடுதலால் விலகிக் கிடத்தலே இன்பம் பயப்பதாம் என்றவாறு. இ-து: - பிறர் சொல்லைத் தெளியும் ஒருவன் தன் சொல்லையும் தெளிந்து கூறுதல் வேண்டும் என்பதை இப் பாட்டுச் சொல்லியது. இது தலைவன் சிறைப் புறத்தானாக அவன்கேட்கும் அளவால் தலைவிக்குத் தோழி உரைத்த உரைபோலும். (வி. ரை). ஊரன் தான், சொல்லும், சொல்லும், சொல்லானேல் அகலம் புல்லலின் ஊடல் இனிது என இயைக்க. சொல்லின் இலக்கணம் பலவும் செறிய இப் பாடலைப் பாடினார். பயன் மிக்கவை கூறுதல், வெல்லும் சொல்லைக் கூறுதல் பழிச்சொல் கலவாமல் கூறுதல், இனியவை தேர்ந்து கூறுதல் என்பவை சொல்வன்மைக் கூறுகள் என்றார் என்க. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (200) பயனிச்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் (196) என்றும், சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645) சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (647) என்றும், பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் (186) துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு (188) என்றும், அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் (92) முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் (93) என்றும் முறையே இந்நான்கும் வள்ளுவத்தில் வகுத்துக் கூறப் பெற்றுள்ளமை அறிக. பயன் மிக்கவை கூறுதல், பயனிலசொல்லாமை என்னும் அதிகாரத்திலும், வெல்லும் சொல்கூறுதல், சொல்வன்மை அவையறிதல் அதிகாரங்களிலும், பழிச்சொல் கலவாது கூறுதல், புறங்கூறாமை அடக்கமுடைமை அதிகாரங்களிலும், இனியவைகூறுதல், இனியவை கூறல் என்னும் அதிகாரத்திலும் விளக்கப் பெறுதல் கண்டு கொள்க. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று வள்ளுவமும், பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே பல் உடைபடுவதும் சொல்லாலே என்று வழங்கு மொழியும் கூறுதலால் பழித்தசொல் தீண்டாமல் என்று கூறினார். விழுத்தக்க என்பது விழுப்பம் அமைந்தவற்றை. விழுப்ப மாவது மேன்மை. சொல் விழுத்தக்கதாகவும் இனிமையான தாகவும் இருத்தல்வேண்டும் என்றார். இன்சொல் என்பதன் இலக்கணமே அஃதாகலின். என்னை இலக்கணம் எனின், இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக். 91 என்பது. ஊடலாகிய உரிப்பொருட்கு உரியது மருதநிலம் ஆகலின் நல்வயல் ஊரன் என்றார். அகலம் - மார்பு. புல்லல் - தழுவுதல். புல்லுதல் காதலர்க்கு இன்பம் பயக்கும்; ஊடுதல் இன்பம் வளர்க்கும். ஊடுதல் நீடிக் கூடுதல் ஒழியுமாயின் அவ்வூடுதல் இன்ப நுகர்வுக்குக் கேடுதரும்; ஆதலால் தான், உப்பமைந் தற்றாற் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - திருக். 1302 என்றும், ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று - திருக். 1304. என்றும் திருக்குறள் கூறிற்று. இன்பம் நெடிது நிலைத்துப் பெருக ஊடுதல் துணை செய்தலால் அஃது இன்பப் பொருளாகும். இல்லாக்கால் ஊடல் இணையற்ற துன்பப் பொருளேயாம். அதனால் அன்றோ தம்நூலின் இறுதிக் குறளாக, ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் - திருக். 1330 என்று கூறினார் பெருநாவலர். புல்லலின் ஊடல் இனிது என்றது, சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை - திருக். 230. என்னும் இடத்தில் இன்னாத சாவும், ஈதற்கு இயலாத இன்னாப் போதில் இன்பம் தருவது என்றாற்போல், தழுவிக்கிடக்கும் கூடல் இன்பத்திலும் தகைமை இல்லானை விலகிக்கிடக்கும் ஊடலே இன்பம் மிக்கது என்றார் என்க. (5) 5. தூது - 1 மாறுபட்டு நின்றார் இடையே சென்று அமைதிப் படுத்தும் அமைச்சர் அறிஞர் ஆகியோர் இயல்பு கூறுவது தூதாகும். தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது - குறள். 685. இன்னிசை வெண்பா 6. கால வெகுளிப் பொறைய கேள் நும்பியைச் சாலுந் துணையும் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா; அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி. - புறத். 776. (இ.ள்) காலனே வெகுண்டு வருவதுபோல வெகுளும் சேர வேந்தே! யான் கூறுவதைக் கேட்பாயாக. நின்தம்பியைமிக்க அளவில் இடித்துரைத்துச் சிறியதோர் கோலைக்கொண்டு தாக்குதற்காக மேற் செல்லுதல் வேண்டா. அவ்வாறு செல்லாமையே அறநூல் கண்டவர் கண்ட அறமுறையாகும் என்றவாறு. இ-து: - வெகுளுதல் வேண்டா ; அமைதி கொள்க என்பதாம். (வி. ரை) பொறைய, நும்பியைக் கழறிக் கோல்கொண்டு சேறல் வேண்டா என இயைக்க. பொறையன் - சேரன். பொறை - மலை. சேரநாடு மலைநாடு ஆதலால் அந் நாட்டின் வேந்தன் பொறையன் எனப் பெற்றான். பொறையன் என்பது சேரர் குடிப்பெயருள் ஒன்றுமாம். ஈண்டுப் பொறையன் எனப்பெற்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான். அவன் அதியமானின் தகடூர்மேல் படை கொண்டு சென்று அத் தகடூரை அழித்தமையால் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனப்பெற்றான். இவன் பதிற்றுப் பத்துள் எட்டாம் பத்திற்கு உரியவன். அரிசில் கிழாராலும் மோசிகீரனாராலும் பாடப் பெற்றவன். முரசு கட்டிலில் படுத்த மோசி கீரனார்க்குக் கவரிகொண்டு வீசிய காவலன் இவனே. இவன் தம்பி அதியமான் எழினி என்பான். இவன் அண்ணன் தம்பியர் என்பது வரும் பாடலாலும் (7) புலப்படும். பொறையன் காலன்போன்ற வெகுளியன் என்றார். அதியமானைக் கூற்றத் தனையை என்று ஔவையார் (புறம். 98) கூறியது இவண் கருதத்தக்கது. காலன் வெகுண்டு வருதலை. வருங்காலன் பெருங்கால வலயம் போலும், செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம் என்றார் சேக்கிழார் அடிகள். நும்பி என்பது நும்பின் என்பதன் கடைக்குறை, நும்தம்பி என்பதன் மரூஉ என்பாரும் உளர். கழறுதல் - இடித்துரைத்தல் தலைவன் உரையை இடித்துரைக்கும் தோழன் உரையைக் கழற்றுரை என்றும், அவனைத் தலைவன் இடித்துரைத்தல் கழற்றெதிர்மறை என்றும் வரும் அகப்பொருள் துறைகள் இப்பொருளை வெளிப்படுத்தல் அறிக. இடித்துரைத்தல் இன்றியமையாதது, அதன் நோக்கம் திருந்துதற்காகக் கூறுவதாய் அமையவேண்டும், வருந்துதற்காக மட்டும் கூறுவதாய் அமைதல் கூடாது. சான்றோர் உரை முன்வகையைச் சார்ந்தது. சால்பிலார் இடித்துரை பின் வகையைச் சார்ந்தது. உடன்பிறந்தார் இடையே உறுசினமும் ஊறும் உண்டாதல் வேண்டா என்னும் உயர்பேர் எண்ணத்தால் உண்டாகிய இடித்துரை இஃது. ஒன்றுபட்டுக் குடிப்பெருமை காத்தல் வேண்டும் என்பது குறிக்கோள். கோல் கொண்டு சேறல் வேண்டா என்று கூறினும், அது தொல்பழஞ் சான்றோர் வழிமுறை என்று வலியுறுத்தினார். பிரிந்தார்ப் புணர்த்தலும், பகைவரைச் சந்து செய்தலும் சான்றோர் நெறி ஆகலின். இதனைப் புறப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுட்களும் நன்கனம் வலியுறுத்தும். இவ்வாறே சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனாரும், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் என்று கூறித் தம்கருத்துக்கு வலுவூட்டினாராதல் அறிக. சோழன் நெடுங்கிள்ளியும், நலங்கிள்ளியும் ஆகிய தாயத்தார் போர்க்களம் நண்ணிப் பொருது நின்ற காலையில் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்கச் சான்றோரும். கோப்பெருஞ்சோழன் மைந்தரொடு மாறுகொண்டு போர்க் களம் நண்ணிய காலையில் கோவூர்கிழார் என்னும் சங்கச் சான்றோரும், அதியமானொடு மாறு கொண்ட தொண்டை மானுழைச் சென்று அவன் படைக்கலக் கொட்டில் காட்டிய போழ்தில் நயமுறக் கூறிய ஔவையார் என்னும் புலவர் பெரு மாட்டியாரும் புகன்ற நல்லுரைகள் புறநானூற்றுக்குப் பொலி வூட்டுதலைக் கண்டு கொள்க. அரசியல் வாழ்விலே மட்டுமன்றிக் குடும்பவாழ்வினும், பொதுவாழ்வினும் வெகுளி கூடாது என்பதைத் திருக்குறளில் உள்ள வெகுளாமை அதிகாரத்தால் உணர்க. சான்றோர் உள்ளம் வெகுளி, வசைமொழி, அடிதடி என்பவற்றைத் தாங்கிக் கொள்ளாமல் பரிந்து உருகும் என்பதை வள்ளலார் அருட் பாடல்களில் தெள்ளிதில் கண்டுகொள்க. தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்கள் கோபம் மிகப்புகுந் தடித்தும் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ. உரத்தொரு வருக்கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால் கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில் புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங் கிலையே (6) 5. தூது -2 நேரிசை யாசிரியப்பா 7. ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே! வினவுதி யாயின் கேண்மதி சினவா (து) ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஓருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய்; வழிகெடக் கண்ணுறு பொழுதில் கைபோல் எய்தி நும்மோர்க்கு, நீதுணை ஆகலும் உளையே; நோதக முன்னவை வரூஉம் காலை நும்முன் நுமக்குத்துணை யாகலும் உரியன்; அதனால் தொடங்க உரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி அத்தை! அடங்கான் துணையிலன் தமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது; தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே. - புறத். 785. (இ - ள்) ஒளிவிடும் பசும் பொன்னால் செய்யப் பெற்ற நெற்றிப் பட்டத்தை ஓடைக்கண் சூட்டிய திண்ணிய வெண் தந்தத்தினைக் கொண்ட களிற்றினையுடைய வேந்தே, நிகழ்வது யாது என வினவுதல் உடையையாயின் யான் கூறுவதைச் சினமின்றிக் கேட்பாயாக; ஒரே குடலிற் புகுமாறு ஓர் இரையைத் தின்னும் இரண்டு தலைகளைக் கொண்ட பறவையின் ஒரே உயிர் போன்ற உடன்பிறந்தானைக் கொன்றழிக்கும் வெகுளியை அடக்கினை அல்லை; உடலிற் படவந்த அடியைக் கைபோய்த் தாங்கிக் கொள்வதுபோல், குடிவழிக்குக் கெடுநிலை உண்டாம் பொழுதில் விரைந்து சென்று நும்மவர்க்கு நீ துணை ஆதற்கும் உரியை; அவ்வாறு முற்கூறிய துயர் நுமக்கு வருங்காலை நும் முன்னோன் நுமக்குத் துணையாதற்கும் உரியன். ஆதலால், நீ செய்யத் தொடங்கிய செயல் பெரிதே எனினும் இன்னே அடங்குதல் வேண்டும்; அன்றி, அடங்காதவனாகவும், துணை யற்றவனாகவும், தமியனாகவும், வாய்த்த மிதவை இல்லாதவ னாகவும் நீர்ப் பெருக்குடைய ஆற்றை எதிர்த்து நீந்தும் ஒருவன் அதனைக் கடந்து சேறல் அன்றோ அரிது; ஆதலால் அவனொடும் ஒன்று பட்டு வாழ்தலை விரும்பினால் இப்பொழுது மேற் கொண்டுள்ள போர்வினையை ஒழிந்து அடங்குதல் வேண்டும்; நின்னை அறிந்தோர் மகிழ நீ அத் தன்மையுடைய ஆவாயாக என்றவாறு. இ- து: - தாயத்தாராகிய நீங்கள் பகை கொண்டு பொருகளத்து நிற்பது நும்குடிக்குப் பெருமை தருவது அன்று; அடங்கி அமைக என்பது. (வி- ரை) இளவலும் மூத்தவனும் ஆகிய இருவரும் பொருகளத்து நின்றனர் என்றும், அவரைச் சந்து செய்வான் வேண்டிப் புலவர் புகன்றனர் இப் பாடலை என்றும், நும்முன் என்றதால் இளையவனிடம் கூறியது இஃது என்றும் அறியலாம். அதியமான் பொருது வீழ்ந்த எழினியை நோக்கிக் கூறிய தாகலாம். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மூத்தவன் ஆகலின். இவ்விருவரும் ஒருகுடிப் பிறந்தவரே அன்றி உடன் பிறந்தார் அல்லர் என்பர். ஆனால், ஒருகுடர்ப் படுதர ஓரிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஓருயிர் போல எனவரும் உவமை உடன்பிறந்தாரே என்று கருதுமாறு வைக்கின்றது. ஓடையாவது நெற்றிப் பள்ளம்; மாடு மான் முதலிய வற்றுக்கும் ஓடை உண்டாயினும் யானையின் படலமான நெற்றியில் அமைந்த ஓடை விளக்கமாகப் புலப்படுதல் உண்மை. நிலத்தை ஊடறுத்துக் கொண்டு நீர் செல்வதால் அமைந்த ஓடை போன்றது நெற்றிப்பள்ளம் ஆகலின் காரணக் குறி ஆயிற்று. இஃது இப் பொருட்டாதலை, ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய் ! நாடி உணர்வார்ப் பெறின் என்னும் யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் (51) செய்யுளாலும் அறிக. வெளிறு - இளமை. வெளிறில் - இளமை இல்லாத ; என்றது முதிர்வை. தந்தத்திற்கு முதிர்ச்சி வன்மை ஆகலின் திண்ணிய என்றாம். யானை பிணிக்கப் பெற்ற கட்டுத் தறியை, வெளிறில் நோன்காழ் என்று கூறுகின்றது புறப்பாட்டு (23). சினம் தன்னையுடையானை அழித்தலும், அவன் இனத்தையும் அழித்தலும் உடைமையின் சினவாது கேண்மதி என்றார். சினம் தன்னையுடையானை அழித்தல். தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் - குறள். 305. என்பதனாலும், சேர்ந்தாரைக் கொல்லுதல், சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் - குறள். 306. என்பதனாலும் அறிக. தலைகள் இரண்டேனும் குடர் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும் வாய்த்த புள் ஓரிரையைத் தின்னுமாயின் அவ்விரை நச்சுத் தன்மை உடைய தாயின் எவ்வொரு தலைக்கண் அமைந்த வாயால் தின்றாலும் என்? புள்ளுக்குக் கேடும் இறந்துபாடும் ஆமன்றே என்னும் நயமிக்க உவமையால் குடிப்பிறப் பருமையும் அஃதுணராதழிவு சூழும் வெகுளிக் கெடும் விளங்கவுரைத்தார். ஆசிரியர் மதுரை மருதனிள நாகனார், தலைவி புலத்தற்கண் தலைவன் கூற்றாக, ஓருயிர்ப் புள்ளி;ன இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமா றியாது - கலித். 89. என்று கூறியதூஉம், அதற்கு நச்சினார்க்கினியர், உடலும் உயிரும் ஒன்றாய்த் தலை இரண்டாகிய புள்ளினுடைய அவ்விரண்டு தலையில் ஒருதலை மற்றத் தலையோடே போர் செய்தலை மேற்கொண்ட தன்மைத்தாக நீ இக் கொடுமைகளைக் கூறிப் புலந்தாற் பயனென்? அதனைக் கைவிட்டு, இனி என்னுடைய அரிய உயிர் நிற்கும் வழி யாது? அதனைக் கூறுவாய் என்றான் என்று உரைவகுத்ததூஉம் அறிக. இருதலை கவைத்தலை எனவும் பெறும். தலை இரண்டும் உடல் ஒன்றும் அமைந்த மகவு கவை மகவு எனப்பெறும். கவை மகவின் உவமைப்படுத்திய புலவர் பெருமகனார் கவை மகனார் என வழங்கப் பெற்றனர் (குறுந். 324). கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெருமஎன் நெஞ்சத் தானே என்பது அவர் வாக்கு. இளஞ்சிறார் கல் ஏவி விளையாடுதற்குப் பயன்படுத்தும் கவண், கவணை, கவட்டை என்னும் பெயருடைய கருவியை அறிக. ஒரு மரக்கொம்பு இரண்டாகப் பிரிவதைக் கவட்டை என்று வழங்குவதையும் இரு தொடைப் பொருத்துவாயைக் கவடு என்பதையும் கருதுக. உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்லி இருநெறிப்படச் செல்லும் தன்மை கவடு என்று வழக்கில் உண்மையைக் கண்டு தெளிக. பாம்பின் பிளவு பட்ட நா, கவைநா என இலக்கிய வழக்கில் உண்மையும் கொள்க. அழிதரு வெகுளி என்பதற்கு ஏற்பப் பறவை நஞ்சுணவு தின்றதாகக் கொள்ளப் பெற்றது. வியப்புறு பிறப்பினராகப் பிறந்த அசாமிய இரட்டையர் இறப்புச் செய்தியை எண்ணி இவ்வுவமையின் மாண்பை இனிதின் உணர்க. புள், கணந்துள் என்னும் ஒரு பறவை. (சிலப். 10: 117. அடியார்க்) இனிப் பறவைப் பொதுவுமாம். துற்றுதல் - தின்னுதல். துற்றுவ துற்றும் என்பது பரிபாடல் (20:51.) குடிநலங்காத்தல் உயர்ந்தோர் கோட்பாடு ஆகலின், வழிகெட...... எய்தி என்றார். வழியாவது குடி வழி. கைபோல் உதவுதலை, உடுக்கை இழந்தவன் கைபோல் என இயைத்துக் கொள்க. தன்மெய்க்கண் படவரும் அடியினைத் தான் சென்று காக்கும் தகைமைத்தாம் கையொடும் இணைத்துக் காண்க. இதனை, பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது என்னும் நன்னெறியால் தெளிக. முன்னவை - முன்னே கூறியவை. நின் முன்னோனுக்கு வந்தாற்போல் நினக்குத் துயர் வருமாயினும் நின் முன்னோனும் நின்னைப் போலவே விரைந்து வந்து நினக்குத் துணையாவான் என்பாராய். நோதக, முன்னவை வருஉங்காலை நும்முன் நுமக்குத் துணையாகலும் உரியன் என்றார். தொடங்கற்கு உரிய வினை நாட்டொடு நாட்டிடைப் பட்டவினை ஆகலானும், எண்ணற்றோர் அழிவுக்கு வித்து ஆகலானும், இடைகொட்க எண்ணுதற்குக் கூடாததாய்க் கடை கொட்க எண்ணிச் செயற்படற்கு உரியது ஆகலானும், தொடங்க உரியவினை பெரிது என்றார். வேந்தன் வெகுண்டு நின்றான் ஆகலின் அடக்கல் வேண்டும் என்னாராய் அடங்கல் வேண்டும் என்றார். அவன் உற்றார் உழையரை அமைதிப்படுத்த வேண்டினார் எனின் அடக்கல் வேண்டும் எனப் பிறவினை பெய்திருப்பார். அவன் அடங்குதல் ஒன்றே அவன்வழி நிற்கும் வீரர் அடங்குதற்கு வகை என்பதை உணர்ந்தார் ஆகலின் இவ்வாறு ஓதினார். மதி: வியங்கோள் ஈறு. அத்தை முன்னிலைக்கண் வரும் அசைநிலை. உடன்பிறந்தாராய இருவர்தம் வலிமையும் துணை வலிமையும் உள்ளவாறு அறிவார் ஆதலானும், இளையவன் தன் மூத்தான் ஆற்றலை முழுதறிவான் ஆதலானும் வெளிப்பட உரைக்கும் விருப்பினராய், அடங்கான், துணையிலன், தமியன், மன்னும் புணையிலன் பேர்யாறு எதிர்நீந்தும் ஒருவன் அதனைத் தாழ்தல் அன்றோ அரிது என்றார். பேரியாற்றைக் கடக்க விழைவாற்குச் சீரிய புணை வேண்டும்; புணைமட்டும் போதாது. புணையை இயக்கும் வினைத்திறம் வாய்ந்தானும் வேண்டும். அந் நிலையினும் ஊறுபாடுறுமாயின் உதவுதற்கு உழுவலன்பரும் வேண்டும். இவற்றுள் எவ்வொன்றும் இல்லான் பேர் யாற்றை நீந்திக் கரையேறுவான் கொல்? என்று வினவுவாராய் உண்மை உணர்த்தி எடுத்த வினையில் அடங்க ஏவினார். இருவரும் பொருகளத்து உற்றனராகலின் இனித் தலைப்பட்டு வாழுதற்கு ஒல்லுமோ என்னும் ஐயுறவு உண்டாம் ஆகலின், அதனை அகற்றல் வேண்டித், தலைப்படுதல் வேண்டின் பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும் என்றார். அமைந்தாரைத் தாக்குதல் ஆடவர் நெறி அன்று ஆகலானும், ஒருவர் பொறை இருவர் நட்பு ஆகலானும் அவ்வாறு கூறினார். தாமே அன்றியும் சான்றோர் பலரின் விழைவும் அதுவே என்பாராய், அறிந்திசி னோர்க்கு அனையையா கீண்டு என்றார். சான்றோர் விழைவறிந்து நடத்தல் சால்பு என்பதைப், பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ? என்று கோவலன் வாக்காக இளங்கோவடிகள் இயம்புவதால் அறியலாம் (சிலப். 16: 65-6) (7) 5. தூது - 3 நேரிசை யாசிரியப்பா 8. மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையகம் அறிய வலிதலைக் கொண்ட(து) எவ்வழி என்றி இயல்தார் மார்ப! எவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யின் உராஅய்ப் பகைவர் பைந்தலை எறிந்த மைந்துமலி தடக்கை ஆண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டற் காகாது வேந்துடை அரணே. - புறத். 786. (இ-ள்) கவின்மிக்க மாலையணிந்த மார்பினையுடையாய்! பறவைகள் மொய்த்து வருமாறு வேற்படை ஏந்திய கையினை யுடைய வீரர் முரசம் அறைந்து விரைந்து உலகோர் அறியுமாறு வலிமையில் மீக்கூர்ந்தது எவ் வழியால் என்று வினவுகின்றனை; அஃது எவ்வகையால் ஆயினும் அவ்வகையில் விளங்கித் திண்ணிய கூரிய வேலைக்கொண்ட பகைவீரரைக் கண்டால் விழுப்புண் கூர்ந்த உடலுடன் பெயர்ந்துசென்று அவரின் செவ்விய தலையை வீழ்த்திய வீரமிக்க பெருங்கையினை யுடைய ஆண்மை செறிந்த மறவர் பெருகிக் காத்தலால் வேந்தனது அரண் பிறரால் தீண்டுதற்கு இயலாது என்பதை அறிவாயாக என்றவாறு. இ- து:- எம் வீரரை எளியரென எண்ணிப் பட்டழியாது முற்றுகை ஒழிந்து உய்க என்பது. (வி -ரை) உழிஞை மாலை சூடிப் பகைவரின் மதிலைத் தாக்க நிற்கும் படைத்தலைவனை நோக்கி இயல்தார் மார்ப என விளித்துக் கூறினார். இத் தூதுரை களத்திடைக் கண்டு நேரிடைக் கழறியதாம். இதில் வயவர் என்றது உழிஞை யாரையும், மறவர் என்றது நொச்சியாரையும் ஆகும். இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது என்பார் நச்சினார்க்கினியர். போரிடைப் பயிலும் வேல் ஆகலின் புலவு நாற்றம் உடைய தாயிற்று. அப் புலவினை வேட்டுப் பருந்து காகம் முதலாய பறவைக் கூட்டம் மொய்த்துச் செல்வன ஆகலின், மொய் வேற்கையர் என்றார். இனி, வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த வேல் என்று பொருள் கொள்ளின் என் எனின், அவ் வேல் போரிடைப் பயின்றறியாப் புன்மைக்கு உரியதாய் வைத்திருந்தார்க்கும் வந்தெதிர்ந்து தாக்குவார்க்கும் பெருமை சேர்க்காத புன்மைப்பாடு உடையதாய் இழியும். ஆகலின் வண்டு மொய்த்தல் என்பது பொருந்தாது என்க. இதனை, இவ்வே, பீலியணிந்து மாலைசூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய்யணிந்து கடியுடை வியனக ரவ்வே என்று தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் அருளிய வாக்கால் தெளிக. எழுச்சி யுண்டாகும் வண்ணம் முரசு அறைந்து ஏறு நடையிட்டு ஆர்த்துச் செல்வது வீரர் இயல்பாகலின் முரசெறிந்து ஒய்யென என்றார். ஒய் என்பது விரைவுக் குறிப்பு. எய் என்பதும் அத்தகு குறிப்பே. உலகெலாம் தலைவணங்கி நிற்கச் செய்யவல்லது போர் ஆற்றல் ஒன்றே என்று உழிஞை சூடி நின்ற வீரன் கூறினான் ஆகலின் அதனை உட்கொண்டவராக, வையகம் அறிய வலிதலைக் கொண்டது எவ்வழி என்றி என்றார். எவ்வழி ஆயினும் ஆகுக; அஃது இப்பொழுது ஆராய்ச்சிக்கு உரிய பொருளன்று; அதனால், வெற்றி கொள்வதற்கு இயலுமோ என்பதே ஆராய்வுக்கு உரியது என்பாராய் எவ்வழி ஆயினும் என்றார். தீக் கடை கோலைத் தேய்க்கப் பெறாக்கால் தண்ணிதாய் அமைந்து கிடக்கும்; தேய்த்த காலையில் தோன்றும் தீ; தொட்டதை எல்லாம் பற்றி எரித்துப் பாழாக்கும். அத்தகு வீரர் நொச்சியார். ஆகலின் நின் திண்ணிய வலிய வேற்படை வீரரைக் காணுங்கால் அவர் நிலை யாதாம் என்பதை அறியாயாய் அடங்கி அமைந்து நிற்கும் நிலை ஒன்றுமே எண்ணினையாய் எதிரிட்டு நின்றனை என்பாராய், வயவர்க்காணின் என்றார். நாளும் பொழுதும் போர்க்களமே புகழ்க் களமாகப் புகுந்து செம்மாந்து திரிவார் ஆகலின் தழும்பு என்னாராய்ப் புண்கூர்மெய் என்றார். முன்னரும் பசும்புண் என்பார். (46) மெய்யாவது உடல். யாக்கை, உடல், உடம்பு என்னாராய்ப் பொய்யாய் ஒழியும் உடல் எனினும் தன்னையுடையான் புகழுக்கு இடனாகி உலகு ஒழியினும் ஒழியா நிலைபேற்றை வழங்கி நிலை பெறுத்தும் மாண்பு கருதி மெய் என்றார். பைந்தலை - செவ்வியதலை; வளமிக்க தலையுமாம். எறிதல் - தடிதல்; வெட்டிவீழ்த்துதல். மைந்து என்பது வீரம். மைந்து உடையான் யாவனோ அவன் மைந்தன் என்க. பண்டை நாள் மன்பதைக் கடமைகள் அனைத்தும் வீரத்தின் நிலைக்களம் கொண்டே அமையப் பெற்றனவாகலின் வீரம் உடையானே மைந்தன் எனவும், வினையாண்மை மீக் கூர்ந்தவனே ஆண் எனவும், இடுக்கணை எள்ளி நகைத்து வெற்றி காண்பவனே ஆடவன் எனவும் பொருள்பொதிந்த குறியீடுகள் அமைத்துப் பேணிக் காத்தனர் என்க. மதில் சுட்ட கல்லானும், உடை கல்லானும் இட்டி கையானும் கட்டப்பெற்று, அறிவரிய பொறிகளைத் தன்னகத்துக் கொண்டதாக அமைந்த சுவரே எனினும் அதனைக் கன்னி எனவும் குமரி எனவும் கொண்டு பண்டை வேந்தர் போற்றிக் காத்தனர். இதனை, கருதாதார் மதிற் குமரிமேல் ஒருதானாகி இகன் மிகுத்தன்று (107) என்றும், வணங்காதார் மதிற் குமரியொடு மணங் கூடிய மலிபுரைத் தன்று (122) என்றும் புறப்பொருள் வெண்பாமாலையால் அறியலாம். இதனால் மதிலைத் தீண்டுதல் என்பது தொடுதற்கு உரிமையிலாக் குமரி மகளிரைத் தொடும் குற்றத்துக்கு ஒப்பக் கொண்டு ஓம்பினர் ஆகலின், பிறர் தீண்டற்கு ஆகாது வேந்துடை அரணே என்றார். வலிதில் மகளைப் பற்றிச் செல்ல வருவார் உளரேல் வாளா இருப்பரோ? உயிரையும் பொருட்டாக எண்ணாது ஊக்கி நின்று தாக்குவார் என்பது இருவகை வழக்கினும் காண்டற்குரியதேயாம். இனிப் பகைவரால் தீண்டுதற்கு ஆகாத முள்வேலியை, குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலி என்றதுவும் (புறம். 301) இவண் கருதத் தக்கது. தீண்டுதல் - தொடுதல். பற்றுதல், கவர்ந்து கோடல் ஆகலின் அதனைக் குறிக்காது நெருங்கும் நிலையும் நேராது என்றார். நொச்சிவீரர் காட்டிய திறம் அறிந்து நுவன்றது இஃது என்க. (மேற்கோள்.) இப் பாடலைத் தொல். புறத்திணை இயல் 12 ஆம் நூற்பாவில் உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்பட என்பதற்கு மேற்கோள் காட்டி இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழு அரண் கூறுதலில் செல்வத்துள் அடங்காதாயிற்று; இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது என எழுதுகின்றார் நச்சினார்க்கினியர். (8) 6. நாடு நாடு - விரும்பு. உறைவாரும் பிறரும் விரும்புதற்கு உரிய தாகப் பல்வகை நலங்களும் பாங்குற அமைந்து, பதியெழு வறியாப் பண்புமேம்பட்ட பான்மையது நாடு என்பதாம். நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. - குறள். 739 மருட்பா பெருநீரால் வாரி சிறக்க; இருநிலத் (து) இட்டவித் தெஞ்சாமை நாறுக ; நாறார முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க; அக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன; அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம்நிறைக; அக்களத்துப் போரெலாம் காவாது வைகுக; போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையொடு நாரை இரியும் விளைவயல் யாணர்த் தாகவவன் அகன்தலை நாடே. - புறத். 844. (இ-ள்) எம்வேந்தனது அகன்ற இடத்தையுடைய நாடு, பெருகி வரும் நீரால் ஏரி, குளம் நிரம்பிச் சிறப்பதாக; பரந்த நிலத்தில் இடப்பெற்ற வித்து குறையாமல் முளைப்பதாக; முளைத்த நாற்றுச் செழித்து வளருமாறு முட்டுப்பாடு இல்லாமல் மழைபொழிவதாக; பொழிந்த பின்னர்ப் பயிர் பக்கம் விரிந்து தூறு செறிவதாக; அத் தூறுகள் எல்லாம், பால் பிடித்துத் தலைசாய்த்துக் கதிர் ஈனுவதாக; அக் கதிர் ஏர்வளம் சிறக்கும் உழவர்களத்தில் நிறைவதாக; அக் களத்தில் நெற்போர்கள் காவல் செய்வார் இன்றிக் கிடப்பதாக; நெற்போர், வைக்கோல் போர் ஆகியவற்றில் பொலியிடல், கடாவிடல் முதலாகச் செய்யப்படும் வினைகளால் உண்டாம் ஒலியால் அஞ்சி நாரை தன் பெட்டையொடும் அகன்று செல்லும் விளைவுமிக்க வயலின் புது வருவாய் உடையதாவதாக என்றவாறு. இ - து:- நீர்வளம் சிறப்பின் நீர்மையும் சிறக்கும் என்பதாம். (வி. ரை) வாரி என்பது கடல், நீர், வெள்ளம், மடை, வருவாய், வழி, வாயில், மதில், குழி முதலிய பொருள்களைத் தருவது ஆயினும் இவண் குளம், ஏரி, அணை முதலிய நீர்த் தேக்கங்களைக் குறித்து நின்றது. பெருநீர்ப் பெருக்கால் சிறப்புப் பெற்று, அந் நீரால் வேளாண்மை செய்வார்க்குப் பயன் படுதலின். யாணர்த்தாக விளைவயல் திகழ வேண்டுமாயின், வாரி சிறக்க வேண்டும் என வலியுறுத்தினார். சங்கச் சான்றோர் நாளிலேயே குளந்தொட்டு வளம் பெருக்குதல் கொற்றவர் கடமைகளுள் தலையாயதாகக் கொள்ளப் பெற்றது. கரிகாலன் கல்லணை கட்டியதும், அவன், காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி னான் எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் (283-4) கூறியதும் கருதத்தக்கன. நீர்வளத்தால்தான் அறம் பொருள் இன்பம் ஆகிய மும் முதற் பொருளும் பெறுதற்குக் கூடும் என்பது சங்கச் சான்றோர் தெளிவு. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் குடபுலவியனார் ஆழ்ந்து பள்ளமான இடங்களில் எல்லாம் நீரைத் தேக்கித் தடுத்து வைத்துக் கொண்டவர்களே அறம் பொருள் இன்பங்களையும் போகாமல் தடுத்து வைத்துக் கொண்டவர்கள். அவ்வாறு நீரைத் தடுத்து வைத்துக் கொள்ளாதவர் அம் முப் பொருள்களையும் தடுத்துவைத்துக் கொள்ளாதவரே என்றார். இதனை, நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோர்இவண் தள்ளா தோரே - புறம். 18. என்று கூறினார். (தட்டோர் - தடுத்தோர்; தள்ளாதோர் - தடாதோர்) உழவினார் கைம்மடங்காமல் உழைத்து உலகோம்ப வேண்டுமாயின், நீர்நிலைகள் அமைத்துப் பேணிக் காத்தல் காவலர் தம் முதன்மையான கடமையாம். ஆகலின் அதனை முதற்கண் வைத்தார். இருநிலம் - பெருநிலம் ; சிறந்த நிலமுமாம். இருந்தமிழே உன்னால் இருந்தேன் என்பதை நோக்குக. எஞ்சாமை - ஒழியாமை. எஞ்சாமை நாறுதல் - இட்ட வித்தில் எதுவும் வறிதுபடாது முளைத்தல். நாறு - நாற்று. விளைவில் பொறுக்கி எடுத்து உலர்த்திப் பேணிக் காத்து வைக்கப் பெறுவது வித்து. ஒன்று, நூறு பன்னூறு, எனப் பயன் தருவது ஆகலின் வித்தே உழவர் கைம்முதல். எத்துணை வறுமை சூழினும் வித்தட்டு உண்பார் அரியர். அவ்வாறு உண்பார் உளராயின் அவர் எதிரது காக்கும் ஏற்றம் இல்லாதவர் எனக் கருதி எள்ளவும் பெற்றனர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்த காலையில் ஆடுதுறை மாசாத்தனார் கூற்றுவனை விளித்து, நனிபே தையே நயனில் கூற்றும் விரகின் மையின் வித்தட் டுண்டனை - புறம். 227. என்றும், இத் தகடூர் யாத்திரைப் பாட்டுக்குரிய அதிய மான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியைப் பாடிய அரிசில் கிழார் அக் கூற்றுவனை விளித்து, அறனில் கூற்றம் வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான் வீழ்குடி யுழவன் வித்துண் டாங்கு ஒருவன் ஆருயிர் உண்டனை என்றும் பாடியதை நோக்க வித்தின் மாண்பும், அதனை அட்டுண்ணல் கேடும் புலப்படும். அத்தகைய வித்து நாறாக்கால் அதனால் ஆகும் பயனென்னை? ஆதலால், இரு நிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக என்றார். வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற் கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப் பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக் களைகால் கழாலிற் றோடொலிபு நந்தி மென்மயிற் புனிற்றுப் பெடைகடுப்ப நீடிக் கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து வாலிதின் விளைந்த புதுவரகு என்பது இவண் நோக்கத் தக்கது (புறம். 120.) மேனீராகிய மழைநீர் இல்லாக்கால் ஊற்று நீரோ, ஆற்று நீரோ இல்லை. அன்றியும் மழைநீர் இன்றி ஊற்றையும் ஆற்றையும் நம்பிப் பாடுபடினும் நோக்கும் பயன் கிட்டாது. வளமாக நீர்பெருக்கி வைத்துப் பாடுபடும் பயிருக்கும் மழை பொழிதல் இன்றேல் நோயும் வெதுப்பும் தாக்கி வளமை குன்றும். ஆகலின் நாறார முட்டாது வந்து மழைபெய்க என்றார். முட்டாது - குறையாது. நட்டோர் உவப்ப நடைப்பரி கார முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளி என்பது சிறுபாண் (104 - 7) அரிதின் முயன்று பெற்ற நீரால் விதைத்துப் பின்னை, வானை நோக்கும் நிலம் புன்புலம் ஆகும். அஃது எவ்வளவு பரப்புடையதாக இருந்தும் பயன் என்ன? முயற்சிக்கு ஏற்ற பயன் தராது. ஆதலால் அன்றோ, வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்குத வாதே - புறம். 18. என்று குடபுலவியனார் விளக்கினார். நிலமும் நீரும் இயைந்ததன் பயன் என்னை? பயிர் பக்கம் விரிந்து கிளைத்தல் வேண்டும். பக்கம் விரிந்து கிளைத்தலைப் பண்ணை என்பர். மூங்கில்தூறு, கரும்புத்தூறு, நெற்பயிர் ஆகியவை பக்கம் செறிந்து பல்குவதைப் பண்ணை என்னும் வழக்குண்மை இன்றும் நாட்டுப்புறங்களில் அறியலாம். மகளிர் கூட்டமாகச் சேர்ந்து விளையாடும் விளையாட்டைப் பண்ணை, என்பதும், விரிந்து பரந்த நிலமுடையாரைப் பண்ணையார் என்பதும் கருதத்தக்கன. நிலவளம் நீர்வளம் சிறந்து, மழையும் முட்டாது பொழியின் பயிரின் பக்கம் விரிதல் ஒருதலை. அப்பொழுது நிலத்தைக் காணமுடியாவாறு பயிர் அடர்ந்து தோன்றுமாகலின், ஒட்டாது வந்து கிளைபயில்க என்றார். ஒட்டிய பயிர் வலுவற்றுக் கதிர் ஈனாதொழியும் ஆகலின் அவ்வாறு கூறினார். பயிர்ச் செறிவினாலும், கதிர்வளமையாலும் அன்றோ, தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய - மதுரைக். 11. என்றும், வேலி ஆயிரம் விளையுட் டாக - பொருநர். 246-7. என்றும், வேலி ஆயிரம் விளைகநின் வயலே - புறம். 391. என்றும், ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் - புறம். 40. என்றும் சங்கச் சான்றோர் இயம்பினர். கருக்கொண்டிருந்த நெற்பயிர் கதிர் ஈனும்; அப்பொழுது நிமிர்ந்து கதிர் நிற்கும். அதில் பொட்டு நிரம்பி இருக்கும். அப்பொழுது மழை பொழியின் பொட்டு அழிந்து மணிபிடியாப் பதர் ஆகிவிடும். ஆதலால் மழைபொழிதலை முன்னே கூறினார்; பால் பிடித்தலைப் பின்னே கூறினார். ஈன்ற கதிரில் பால் பிடிக்கும்; பின்னே அப் பால் திரண்டு முதிரும்; திண்ணிதாகி மணியுருப் பெறும். அப்பொழுது நிமிர்ந்து நின்ற கதிர் சிறிது சிறிதாகத் தலை தாழ்ந்து படியும். இவ் வியல்புகளை யெல்லாம் அக்கிளை பால்வார்பு இறைஞ்சிக் கதிர் ஈன என்பதில் செறிய யாத்தார். இறைஞ்சுதல் - தலை தாழ்தல். இக் காட்சியைச், சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே என்று நயமுற விரித்துக் கூறினார் திருத்தக்க தேவர் (சிந்தா. 63) ஏர்கெழு செல்வர் - உழவர் ; ஏரினால் எய்திய வளமை யுடையவர் ஆகலின் இவ்வாறு கூறினார். ஏர் - உழுபடையும், எருதுமாம். நெல் களநிறைந்து கிடத்தலையும், திரட்டிக் குவித் திருத்தலையும், களமலி நெல்லின் குப்பை - புறம். 171. குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு - புறம். 353. என்றார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். இடந் தோறும் நெற்கூடு இருத்தலை, மாமாவின் வயின்வயின்நெற் றாழ்தாழைத் தண்தண்டலைக் கூடு கெழீஇய குடி - பொருநர். 180-2 என்று முடத்தாமக் கண்ணியாரும், ஏணியும் எட்டா உயரத்தில் கூடு இருத்தலை, ஏணி எய்தா நீணெடு மார்பின் முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற் குமரி மூத்த கூடு - பெரும் 245-7 என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் கூறுவர். ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு - குறள். 1038 என்பது வள்ளுவம். உழுதல், எருவிடுதல், களை வெட்டுதல், நீர்ப்பாய்ச்சுதல், காவல்புரிதல் ஆகியவை ஒன்றின் ஒன்று உயர்வாகப் போற்றத் தக்கவை என்பது திருவள்ளுவர் கருத்து. ஆனால், இத் தகடூர் யாத்திரைப் பாடலாசிரியரோ, களத்துப் போரெலாம் காவாது வைகுக என்றார். பயிரைக் காத்தல் கடமை; இன்றியமையாக் கடமை. நோய் நொடிகளாலும், தத்துப் பூச்சி வெட்டுக் கிளி முதலியவற்றாலும் ஆடு மாடுகளாலும் பிறவாற்றாலும் பயிர்க்குக் கேடுண்டாம் ஆகலின் நாடு காவல் ஒப்பக் காடு காவலும் கழனி காவலும் வேண்டுவனவே. ஆனால், களங்காவல் அத்தகைய தன்று. கரவாலும் காரறிவாண்மையாலும் மாந்தர் களவு மேற்கொள்வர். அக் களவு உள்ளத்தால் உள்ளலும் தீது; ஆயினும் பிறன்பொருளைக் கள்ளத்தால் கொள்ள நினைத்தல் கயமையேயாம். அக்கயமை ஒழிந்த - இல்லாத - நாடே நாடு. அவ்வாறு ஒழித்து வாழ்ந்தவரே மாந்தர் ; அவ்வாறு ஒழிக்கும் நிலையில் நடாத்தப் பெறுவதே செங்கோல். ஆகலின், அக்களத்துப் போரெலாம் காவாது வைகுக என்றார். காவல் வேண்டாமை எப்பொழுது உண்டாம்? கள்வார் இல்லையேல் காப்பார் இரார் என்க. கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை என்பது கம்பன் வாக்கு. காவல் இல்லாமலே அனைத்திடங்களும் இருந்தனவோ எனின், அருங்கடிப் பெருங்காப்புச் செய்யப்பெற்றதையும், ஆறலை கள்வர் அலைக் கழிவையும், கட்போர் உளரெனின் கடுப்பத் தலையேற்றும் பூதக்கதையையும் இலக்கிய வழியே வெளிப்படக் காணலால், காவல் இருந்தமை தெளிவாம். ஆனால், அவை அரண்மனை சார் காவலும். வணிக நிலைசார் காவலுமாம்! உழவர் பணிபுரியும் ஏர்க்களக் காவல் இல்லையாம். அண்மைக் காலம் வரை நாட்டுப்புறச் சிற்றூர்களில் களத்துப் போர் காவாது வைகியமை கண்கூடு. உழவரிடையே தோன்றாத பண்பாடு வேறு எங்கே அமையும்? ஆகலின் உழவர் களத்தை உரைத்து நாட்டு நாகரிகத்தை நவின்றார். வீடுகளுக்குக் கதவு இருந்தாலும் அக் கதவுகளை அடைத்துக் காவல் செய்யவேண்டிய கடமை உழவர்க்கு இருந்தது இல்லை; அவர்கள் கதவு, அடையா நெடுங்கதவு என்று பாராட்டப் பெற்றது. கலைவாழ்வுடைய மகளிர் காட்டு வழிச்செல்லுங்கால், தென்றற் காற்றால் அவர் கூந்தலில் வைத்த பூவும், கூந்தலும் அசைந்து அல்லலுற்றதை அன்றி வேறு அல்லல் அவர் அடைந்தது இல்லை எனக் காட்டு நாட்டவர் நாகரிகம் பேணிய தன்மை இலக்கிய வாழ்வுடைய தாயிற்று. சோறாக்குங்கால் உண்டாகும் வெப்பமும், ஞாயிறு ஒளி விடுங்கால் வரும் வெதுப்பமும் அன்றி வேறு வெப்பம் அறியார்; திருவில்லை அன்றிக் கொலைவில்லை அறியார்; கலப்பையை அன்றிப் படைக் கருவியை அறியார்; நின் நாட்டில் வாழ்வோர் என்று பாராட்டும் நயத்தக்க நாகரிகம் காணப்பெற்றது. இந் நிலை இந் நாட்டிலே வருமேயோ என உணர்வுடையாரை ஏங்கச் செய்தல் ஒருதலை! அவ் வார்வத்தை வாழ்த்துகிறார் ஆசிரியர். அதனால், போரெலாம் காவாது வைகுக என்றார். இவ்வாறே அரிசில் கிழாரும் தகடூர் பொருது வீழ்ந்த எழினியைக் கையறு நிலைபாடுங்கால், கன்றமர் ஆயம் கானத் தல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் களமலி குப்பை காப்பில வைகவும் விலங்குபவை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள் பொய்யா எழினி - புறம். 230 என்றார். இத்தகைய உளநலம் போற்றும் நாட்டிலேயும் ஒருதுயர் உண்டு என்பதைக் காட்டுகிறார் மேலே. கதிர் அடித்தல், கடாவிடல், பொலிதூற்றல், போர் அடித்தல், அளத்ததல், வண்டியில் ஏற்றிக் கொணர்தல் முதலாய களப் பணிகளால் களம் பேராரவாரம் உடையதாக இருக்கு மன்றே! அவ் வாரவாரத்தால் களத்துப்போரின் மேலும், கழனியிலும், களஞ்சார் தோப்புகளிலும், இருந்த நாரை தன் பெட்டையுடன் அஞ்சிச் செல்லும் ! இதனைப், போரின், உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு, நாரை இரியும் என்றார். நாரை போரின்கண் வைகுதலை, பொய்கை நாரை போர்விற் சேக்கும் - புறம். 209. என்றும், கயலார் நாரை போர்விற் சேக்கும் - புறம் 24; ஐங். 9. என்றும் வருவனவற்றால் அறிக. இரிதல் - அகன்று செல்லுதல். யாணர்த்தாக - புது வருவாய் உடையதாக. பெருவிறல் யாணர்த்தாகி என்பது புறப்பாட்டு (42) அகன்றலை நாடு சிறக்க; நாறுக; பெய்க; பயில்க; ஈன; நிறைக; வைகுக; யாணர்த்தாக என இயைத்துக் கொள்க. இவ்வாறு வாழ்த்துதலை, நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க (1) விளைக வயலே வருக இரவலர் (2) பால்பல ஊறுக பகடுபல சிறக்க (3) பசிஇல் லாகுக பிணிசேண் நீங்குக (5) அறம்நனி சிறக்க அல்லது கெடுக (7) அரசு முறைசெய்க களவில் லாகுக (8) நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக (9) மாரி வாய்க்க வளநனி சிறக்க (10) என ஐங்குறு நூற்று வேட்கைப் பத்து விளக்கும். யாப்பமைதி: இப்பாடலின் அடிபலவும் அந்தாதியாகி அழகுபெற நின்றன. இதனைச் செந்நடைச் சீரந்தாதி என்பார் யாப்பருங்கல விருத்தியுடையார். அவர் தரும் பாட்டு வருமாறு: முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி; இப்பி ஈன்ற இயங்குகதிர் நித்திலம்; நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்; எக்கர் இட்ட எறிமீன் உணங்கல்; உணங்கல் கவரும் ஒய்தாள் அன்னம்; அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர்; மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை; தாழை அயலது வீழ்குலைக் கண்டல்; கண்டல் அயலது முண்டகக் கானல்; கானல் அயலது காமரு நெடுங்கழி; நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம்; பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி; பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் இடவ குடவ தடவ ஞாழலும் இணர துணர்புணர் புன்னையும் கண்டலும் கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித் தீரா நோயினள் நடுங்கி வாராள் அம்ம வருந்துயர் பெரிதே - யா. வி. 52 மேற். 7. புல்லறிவாண்மை (9) தான் சிற்றறிவினனாக இருந்து கொண்டு தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் உரையை உளங் கொளாமை புல்லறி வாண்மையாகும். புல்லிய அறிவை ஆளும் தன்மை புல்லறி வாண்மை என்க. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு - திருக். 844 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் - திருக். 848. நேரிசை வெண்பா 10. அரும்பொன்அன் னார்கோட்டி ஆர்வுற்றக் கண்ணும் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிய ஒன்றோ துயில்மடிப அல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா இருந்து. (இ- ள்) தங்கமே அனையவர் கூடிய அவையில் கூடி இருக்கும் வாய்ப்புப் பெறினும் கூர்த்த அறிவில்லாதவர் கரும்பு தின்பவர்முன் நாய்போல் வாளா இருப்பர்; அம்மட்டோ? உறங்கியும் கிடப்பர் ; அன்றேல் தாம் கேட்டவற்றை வேறிடத் திருந்து மறுதலைப்படக் கூறி மகழ்வர் என்றவாறு. இ - து: - கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன், சொல்லா திருக்கப் பெறின் என்பதாம். - திருக். 403. (வி -ரை) கல்வி கருந்தனம் எனப்படும் ஆகலின் அக் கல்வியில் தேர்ந்தவர் அரும்பொன் அன்னார் எனப்பெற்றனர். அத்தகையவர் கூடிய சங்கத்தை, தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் - பிள்ளைச்சிறு. 21. என்பார் வள்ளலார். சங்கம் செய்வதைத் தங்கம் செய்யாது என்னும் பழமொழியும் சங்கத்தின் மாண்பைச் சாற்றும். கோட்டி - கூட்டம், கோட்டம் - வளைவு; வளைந்திருத்தல். சுற்றுமதில் கோட்டை எனப் பெறுவதும், கோட்டையுள் அமைந்த கோயில் கோட்டம் எனப்பெறுவதும், கூட்டம் சேர்த்துவரவும், அறிவுத் திரிவு அமையவும் ஆகியவன் கோட்டி எனப்பெறுவதும் கருதுக. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் (401) என்பது திருக்குறள். ஆர்வுறுதல் - அமைந்திருத்தல். கரும்புலவர் - கல்லாதவர். அவரைப் புலவர் என்றது அங்கதம் ; வஞ்சப் புகழ்ச்சி என்பதும் அது. நல்லறிவாளர் கரும்பு தின்பார்க்கும், புல்லறிவாளர் நாய்க்கும் உவமை ஆயினர். கரும்பினைக் கடித்து மென்று சுவைத்துச் சாற்றைக் குடித்துச் சக்கையைத் துப்புவர். சாறு, கரும்பைத் தின்பார் உடற்குள், சேர, சக்கை வெளியே துப்பப் பெறும். அதனை நாய் தின்னல் இல்லை; ஆயினும் தின்பாரை நோக்கி ஏதேனும் கிட்டும் என வாளா இருந்து, துப்பியதைப் பயன்படுத்தவும் மாட்டாமல் ஒழியும். அதுபோல் புல்லறி வாளரும் கற்றார் உரையில் பயன் கொள்ளார் என உவமையை விரித்துக் கொள்க. துயில் - உறக்கம்; மடி - சோம்பர். துயில்மடிதல் - உறங்கிச் சோம்பிக் கிடத்தல். விண்டு உரைத்தல் - மறுதலைப் படப் பிளந்துரைத்தல். மடி, துயில், பிணக்கு முதலியவை கற்கத் தகாதவர் தன்மை என்ப. (நன். 39.) இத் தகடூர் யாத்திரைப் பாட்டுடன் கீழ்வருவனவற்றை ஒப்பிட்டுக் காண்க: கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு பொழுந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழிந்தவை தாம்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல்தேர்வு கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி பற்றாது தன்நெஞ்சு உதைத்தலால் - மற்றுமோர் தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு - நாலடியார் 254, 257, 259, 260, 322. (10) 8. நிரைகோடல் பகைவர் நாட்டின்மேல் படையெடுக்கக் கருதுவார் அதற்கு அடையாளமாக அவர்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருதல் நிரைகோடலாம். நிரை - பசு; கோடல் - கொள்ளுதல் இச் செயலுக்குச் செல்வார் வெட்சிப்பூச் சூடிச் செல்வர் ஆகலின், இது வெட்சி எனப்பெறும் ஆகோள், நிரைகவர்தல், ஆதந் தோம்பல் என்பனவும் இது. வெட்சி நிரைகவர்தல் என்பது இலக்கணம். 11. நாளும் புள்ளும் கேளா வூக்கமோ டெங்கோன் ஏயினன் ஆதலின் யாமத்துச் செங்கால் வெட்சியும் தினையும் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுகள் அவிப்ப விரிச்சி ஓர்தல் வேண்டா எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. - புறத். 1241. (இ. ள்) நன்னாள் இதுவெனக் கணியன் வழிக் கேட்டும், புள்ளின் நற்குரல் தெளிந்தும் ஊக்கமிக்கு எம் தலைவன் எம்மை நிரைகோடற்கு ஏவினன் ஆதலின், இவ் யாமப் பொழுதில் மன்றத்தின் பூழ்தியை அடங்கச் செய்யுமாறு, செம்மறிக் கடாவை வெட்டி வீழ்த்திய குருதியால் நனைத்து, செவ்விய திரண்ட அடியையுடைய வெட்சியின் மலரையும், தினையையும் தூவி வீணே விரிச்சி கேட்டு நிற்றல் வேண்டா; பகைவர் நாட்டின்கண் உள்ள ஆநிரையை யாம் நம் மதிற்புறத்துக் கொணர்ந்து தருதும் என்றவாறு. இ - து: - யாம் பகைவர் ஆநிரையைக் கொணர்ந்து நிறுத்துதும் என்பது. (வி. ரை) இது நிரைகோடற்கு எழுந்த வெட்சி மறவன் கூற்றாகும். நாளும் புள்ளும் கேட்டு நல்ல செயலில் ஈடுபடுதல் தொல்பழ வழக்கு. நாள் கேட்டுச் செல்லுதலை வாள் நாட்கோள், குடை நாட்கோள் ஆகிய புறத்துறைகள் காட்டும். புள்ளொலி யறிந்து சேறலை, புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின் - மலைபடு. 448. என்பதால் அறியலாம். நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப் பாடான் றிரங்கும் அருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே என்னும் கபிலர் பாட்டால் இவ்விரண்டும் ஒருங்கே வருதல் அறிக. புள்ளொலி கேட்டு வருவது உரைப்பதைப் பிள்ளை வழக்கு என்று கூறும் புறப்பொருள் வெண்பாமாலை, பிள்ளை, கரும்பிள்ளை என்னும் பறவை. நாளும் புள்ளும் பார்த்தலே அன்றிப் பல்லிஒலி கேட்டுத் தெளிதலும் பண்டை வழக்காகும். பன்மாண், ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்ற (9) தலைவியையும், பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி (88) வருதிறத்தையும் அகப்பாடல்கள் காட்டுகின்றன. அன்றியும், பல்லி நல்ல கூறவேண்டும் என வேண்டுபவர், பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறென நடுங்கினர் (289) எனவும், பல்லி தடுக்குமாயின் செல்லாது தவிர்தலை, முதுவாய்ப் பல்லி, சிறிய தெற்றுவ தாயிற் பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்றாங்குப் பெயரும் (387) எனவும் அகப் பாடல்கள் கூறாநிற்கும். அவ் வழியிலே தான் பிற்காலச் சத்திமுற்றப் புலவர், பல்லிபாடு பார்த்திருக்கும் எம்மனைவி என்றதூஉம் என்க. இனி விரிச்சி என்பது நற்சொல் ஆகும். உருவிலி (அசரீரி) என்பதுவும் அது. விரிச்சியின் இலக்கணத்தை, வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு ஈண்டிருள் மாலைச் சொல்லோர்ந் தன்று என்று கூறும் புறப்பொருள் வெண்பாமாலை. மாலை இருளில் வீரர் தெருவில் நிற்கின்றனர். அப் பொழுதில் ஒருவன், குடக்கள் நீ கொண்டுவா என்றான். அவ் வொலியைக் கேட்டதும் வெற்றி பெற்றேம் என்று உவகை கூர்ந்தனர்; இது புறப்பொருள் வெண்பாமாலை தரும் விரிச்சி. எழுவணி சீறூர் இருள்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கள்நீ கொண்டுவா என்றான் குனிவில் தடக்கையாய் வென்றி தரும் - பு. வெ. 4. இனி முல்லைப்பாட்டிலே, இன்னே வருகுவர் தாயர் என்பவள் மொழியை, நன்னர் நன்மொழி என்பதுவும் அது. விரிச்சி கேட்டு நிற்பவர் மறிவெட்டுதலும், வெட்சி மலரும் தினையும் தூவுதலும் ஆகிய வழக்குண்மையையும், விரிச்சி இருட்போதில் கேட்டலையும் இப் பாடலில் எடுத்தோதினார். நெல்லெறிந்தும், முல்லை அலரிப் பூக்களைத் தூவியும் விரிச்சி கேட்பார் என்பதை, நென்னீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் - புறம். 280. என்றும், நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப - முல்லை. 8-11. என்றும் வருவனவற்றால் அறியலாம். வினைமேற்கொண்ட வெட்சிமறவன் தன்வீறு விளக்க முறும் வண்ணம், விரிச்சி ஓர்தல் வேண்டா எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே என்றான். மறிக்குரல் குருதி - ஆட்டின் கழுத்தை அறுத்து ஒழுக விட்ட குருதி. விரிச்சி கேட்பாரே அன்றி வெறியாடுவாரும் இவ்வாறு செய்வர் என்பதை. மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ - குறுந். 263. என்பதால் காணலாம். விரிச்சியூர் என ஓர் ஊர் பாண்டி நாட்டகத்துண்மையும், அங்கே நன்னாகனார் என்னும் சங்கச் சான்றோர் ஒருவர் இருந்தமையும் இவண் கருதத் தக்கதாம். மேற்கோள்: இத் தகடூர் யாத்திரையை மேற்கோள் காட்டி விரிச்சி விலக்கிய வீரக் குறிப்பு என்பார் நச். (புறத். 3) (11) 9. நிரைமீட்சி வெட்சி மறவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல். கரந்தைப் பூவைச் சூடிக்கொண்டு. பசுக்களை மீட்கச் செல்லுவார் ஆகலின் இது கரந்தை எனப்படும். ஆபெயர்த்துத் தருதல் என்பதும் இது. மீட்டல் கரந்தையாம் என்பது நிரைமீட்சியின் இலக்கணம். நேரிசை யாசிரியப்பா 12. இருநில மருங்கின் எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே; இரவின் ஆகோள் மள்ளரும் அளவாக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாம்தம் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே. - புறத். 1251. (இ- ள்) பரந்த உலகின்கண் எந்தப் பிறப்பே எனினும் தொடர்புடையவரைக் கூடும் தொடர்ச்சி, இன்பம் பயப்பதாம். நள்ளிருளில் நம் ஆக்களைக்கொண்டு சென்ற வெட்சி வீரரும் நெருங்குதற்கு அரிய காட்டில் நாம் சென்று புறத்துத் தங்கினேம் ஆக, அவண் நின்ற நம் ஆக்கள் தத்தம் இளங்கன்றின் ஒலி கேட்டதைப் போலத் தம் செவிகளை எடுத்து நம் ஒலிகேட்டு மகிழ்ந்தன என்றவாறு. இ-து:- அளவாக் கானத்தும் ஆக்களின் அன்பால் மீட்டுதல் எளிதாயிற்று என்பது. (வி.ரை) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது மாந்தரைச் சுட்டிய பொதுமைநிலை. உயிர்களின் அறிவுநிலை அமைதியைக் கொண்டு அறுவகையாக முந்தையோர் அறுதி யிட்டு உரைத்தனர் ஆகலின் எப்பிறப் பாயினும் என்றார். அவ்வறுவகைப் பிறப்புப் பகுப்பு, ஒரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என்பன. இதனை, ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கற வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே - மரபு - 27. என்பார் தொல்காப்பியனார். இவ்வாறறிவுயிர்களுள் ஆக்கள் ஐயறிவுயிராம். மாவும் மாக்களும் ஐயறி வினவே - மரபு. 32. என்பதும் அவர் வாக்கேயாம். ஐயறிவுடைய ஆக்கள் அயனாட்டு அளவாக் காட்டில் சென்றும் தம்மைத் தெளிவாகக் கண்டு கொண்டதை வியப் பாராய், எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே என்றார். மருவுஇன் - தொடர்புடையாரை அளவளாவும் இன்பம். மாலை - தொடர்ச்சி. மருவுதல் - தழுவுதல்; அளவளாவுதல். ஆகோள் மள்ளர் - வெட்சியார். அவரே அவர்தம் காட்டில் சென்று மீளமுடியாக் காடு என்றமையால் காட்டின் கடத்தற்கு அருமை கூறினார். புறத்து இறுத்தல் - புறத்தே தங்குதல். இது புறத்திறை என்னும் புறத்துறைப் பாற்படும். வெட்சியார் கரந்தையார் ஆகிய இருதிறத்தார்க்கும் புறத்திறைத் துறை ஒக்கும். இது, நோக்கருங் குறும்பின் நூழையும் வாயிலும் போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று - பு. வெ. 6. என்பது. கறவை கன்றை எண்ணிக் கசிந்து உருகுதலை, கன்றமர் கறவை மான என்பதனாலும் (புறம். 275), தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் ஆபோல் என்பதனாலும் (கலி. 81.) ஈற்றா விருப்பிற் போற்றுபு நோக்கி என்பதனாலும் (பொருந 151). கற்றாவின் மனம்போலக் கசிந்துருக என்பதனாலும் (திருவா. திருப்புலம்பல் 3) அறிக. குரல் கேட்டு ஆ செவியெடுத்து நிற்றல், கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே என்பதனால் அறிக (பெரி. திருமொழி. 6:8) மேற்கோள்: இத் தகடூர் யாத்திரைப் பாட்டை வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை என்பதற்கு இதனை எடுத்துக்காட்டி இது மறவர் கூற்று என்பார் நச் (புறத். 3) ஆங்கு அளவா என்பது அருள்வர எனவும், செவியேற்றன என்பது செவியோர்த்தன எனவும் பாடவேறுபாடு கொண்டுள்ளன. (கஉ) 10. பகைவயிற் சேறல் - 1 பகைவருடைய நாட்டைக் கொள்ளக் கருதிப் போர் செய்தற்கு அவர் நாட்டின் மேற்செல்லுதல். வயின்-இடம். சேறல் - செல்லுதல். இச் செயலுக்கு வஞ்சிப்பூச் சூடிச் செல்லுதலின் இது வஞ்சி எனப் பெயர் பெறும். வட்கார்மேற் செல்லுதல் வஞ்சி என்பது இதன் இலக்கணம். நேரிசை வெண்பா 13. வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ? - பாத்திப் புடைக்கல மான்தேர் உடனீத்தான் ஈத்த படைக்கலத்திற் சாலப் பல. -புறத். 1257 (இ-ள்) பகைவேந்தனொடு பொருவதற்குப் படை கொண்டு செல்லுபவன், போரில் வெற்றிக்கொண்டு மீண்டு வந்த பின்றைத் தன்னை வாழ்த்தியவர்க்கு வேண்டுவ தருவன் என்று எண்ணுவனோ? முன்னே வீரர்க்கு வழங்கிய படைக் கலத்தினும் மிகப் பலவாகப் பகுக்கப் பெற்ற திரண்ட அணிகலம் பூட்டப் பெற்ற குதிரையொடு தேரும் வழங்கினான் என்றவாறு. இ-து:- படையாண்மை, கொடையாண்மை ஆகிய இரண்டையும் இரு கண்ணெனத் தலைவன் கருதினன் என்பது. (வி-ரை) செல்வான் எண்ணுமோ? படைக்கலத்திற் சாலப் பல மான்தேர் உடனீந்தான் என இயைக்க. வேந்து- வேத்து என வலித்தல் வேறுபாடு பெற்றது. மேற்செல்லுதல் - பகைவயிற் சேறல், மீண்டு வருதல் - போர்க்கண் வென்று மீண்டுவருதல்; பொருதுமடிதல் ஒன்று; அன்றி வென்று வருதல்; என்னும் இரண்டுள் ஒன்றன்றி வேறின்று வீரர்க்கு ஆகலின், வென்று வருதல் என்றாம். பாத்தி - பகுக்கப் பெற்ற. பழியஞ்சிப் பாத்தூண் உடைத் தாயின் என்னும் குறளைக் கருதுக. புடை - திரட்சி. பலவாகப் பகுக்கப் பெற்ற திரண்ட அணிகலம். மான் - குதிரை. வஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்றான கொடுத்தல் எய்திய கொடைமை இஃதாகும். வேந்தன் போர்க்குச் செல்லு முன் கொடைவழங்குதல். தன்தலை, மணிமருள் மாலை சூட்டி அவன் தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே - புறம். 291 என்பதனாலும் வெளிப்படும். வேந்தர் தேர்வழங்கி இருத்தல் தேர்வீசு இருக்கை எனச் சான்றோரால் கூறப் பெறும். (புறம். 69. 114) மேற்கோள்: இத் தகடூர் யாத்திரையில் கொடுத்தல் எய்திய கொடைமை என்பதற்கு (தொல். புறத். 8) நச்சினார்க்கினியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. 10. பகைவயிற் சேறல் - 2 நேரிசை வெண்பா 14. உண்டியின் முந்தான் உடனுண்டான் தண்தேறல் மண்டி வழங்கி வழீ இயதற்கோ- கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடார் ஓர்ந்து. - புறத். 1258. (இ-ள்) உண்ணுங்கால் தான் தனித்து முன்னே உண்ணாமல் வீரரை உடன்வைத்து உண்டான். தண்ணிய மதுவின் கலங்கலை வழங்கிப் பிழை செய்தான். இப் பிழைக்காகவோ பகைவயிற் செல்லும் வீரர் தம் வேந்தனுக்கு உறவில்லாதவர் ஆகி, இரக்கம் என்பதையும் எண்ணாமல் தம் உயிரைக் கூற்றுவனுக்கு உவந்து தந்தார் என்றவாறு. இ- து:- வீரர்கள் தம் வீறு விளங்க வேந்தற்குச் செஞ் சோற்றுக்கடன் கழித்தனர் என்பது. (வி. ரை) வழங்கி வழீஇயதற்கோ மறவர் உயிர்நேர்ந்தார் என இயைக்க. உண்டியின் முந்தாது உடனுண்ணல் பெருஞ் சோற்றுடனிலை எனப்படும். இதனைப் பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார் (புறத் 8) திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று என்பார் ஐயனாரிதனார். (பு. வெ. 58) சோறு வழங்குவதுடன் வீரர்க்கு வேந்தன் மதுவும் வழங்குவான். அந்த மதுவிலும் களிப்புக் குறைவுடைய தெளிவைத்தான் அருந்திக்கொண்டு வீரர்க்குக் களிப்பு மிகத் தரும் கலங்கல் மதுவை வேண்டுமட்டும் வழங்குவான். ஆதலால் தண்டேறல் மண்டி வழங்கி என்றார். இதனை, எமக்கே கலங்கல் தருமே; தானே தேறல் உண்ணு மன்னே என ஒரு வீரன் கூற்றாகச் சங்கச் சான்றோர் ஆவியார் கூறினார் (புறம். 298). கலங்கலாவது மண்டி என்க. மதுக்குடத்துத் தெளிந்து மேலே நிற்பது தெளிவு; கீழே கலங்கலாக இருப்பது கலங்கல் - மண்டி. தெளிவினும் கலங்கல் களிப்பு மிக்கூட்டுவது என்பது இதனால் புலப்படும். வழு - குற்றம். வழீஇயதற்கோ - தவறு செய்ததற்காகவோ என்றது பழிப்பதுபோலப் புகழ்ந்தது. இத் தவறுக்காகவோ உயிர்நேர்ந்தார் என்றது வியப்பு. கொண்டி - கொள்ளை. கொண்டி மறவராவார் பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதலில் தேர்ந்த வீரர். தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக என்றார் பேரி சாத்தனார் (புறம். 198) மறலிக்கு உயிர் நேர்ந்தார் ஆகலின் மன்னர்க்கு உறவிலர் என்றும் கண்ணோடார் என்றும் அங்கத வாய்பாட்டால் புகழ்ந்தார். வீரருள் தன்னை மேம்படுத்து உடனுண்டு, மண்டி வழங்கிய மன்னன் செயலுக்கு நன்றி மறவாமைப் பொருட்டு மறலிக்கு உயிர்நேர்ந்தது உறவின்மையும் கண்ணோடாமையும் ஆமோ எனின் ஆகாது, அவன் பெரும்பிறிது உற்றான் ஆகலின் அவன் செஞ்சோற்றுக் கடன் கழிப்பினை இவ்வாறு நயமுறப் பாராட்டினார் என்க. வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்தார் பலராகப் பின்னே வந்த கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் என்பார். புலவுதி மாதோ நீயே - (புறம். 219) என்று தம்மை நொந்து மொழிந்ததையும், பாரி தம்மை விடுத்துப் பெரும் பிறிது உற்றானாகக் கபிலர், மலைகெழு நாட மாவண் பாரி கலந்த கேண்மைக் கொவ்வாய் நீஎற் புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்(கு) ஒல்லா(து) ஒருங்குவரல் விடாஅ தொழிகெனக் கூறி இனையை யாதலின் நினக்கு மற்றியான் மேயினேன் அன்மை யானே என்று உருகி நின்று உரைத்தமை உறவின்மை என்பதன் நயப்பொருளை நன்கு வலியுறுத்தும். இனித் தன்னைப் புரந்த தலைவன் போருக்கு முந்துக என ஏவாமையால் இன்னான் என வீரனால் கருதப்பெறுவான் என்பதை, எமக்கே கலங்கல் தருமே; தானே, தேறல் உண்ணு மன்னே; நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே, நேரார் ஆரெயில் முற்றி, வாய்மடித்துரறிநீ முந்தென்னானே என்பதனால் தெளிக (புறம். 298) வேந்தர்க்கு வீரர் உயிர் வழங்குதலைப் பிறவிப்பேறாகக் கருதிப் பேருவகை யுற்றமை பெருவழக்காகும். கொன்னுஞ் சாதல் வெய்யோன் - புறம் 291. புட்பகைக் கேவான் ஆகலின் சாவேம்யாம் - புறம். 68. என்பனவும், உறின் உயிர் அஞ்சா மறவர் - திருக் 778. புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோள் தக்க துடைத்து - திருக். 780. என்பனவும் கருதத்தக்கன. சிற்றிளமைப் பருவத்தும் கொற்றவற்கு உயிர் கொடுத்தவனே பெருமூதாளன்; கொற்றவனுக்கு உற்றபோது உயிர்தாராதார் பெருமூதாளராயினும் சிற்றிளையரே என்று மேலே இவர் வலியுறுத்துவார் (23). ஆண்டுக் காண்க. மேற்கோள்: பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை (தொல். புறத். 8) என்பதற்கு உரை விரித்த நச்சினார்க்கினியர் கள்ளும் பாகும் முதலியனவும் அப்பாற்படும் என்று கூறி இப் பாட்டை எடுத்துக் காட்டினார். மறவர் மறமிக்கு என்பது அவர் கொண்ட பாடம். (14) 11. பாசறை வேந்தனும் வீரரும் தங்குதற் கெனக் களத்தின் அருகில் அமைக்கப் பெறும் குடியிருப்பு பாசறை எனப்படும். கட்டூர், பாடி என்பனவும் இது. பாசறை அமைதியை முல்லைப் பாட்டினுள் விரியக் காண்க. நேரிசை யாசிரியப்பா 15. குழிபல ஆயினும் சால்பா னாதே; முழைபடு முதுமரம் போலெவ் வாயும் மடைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்றல் ஆனாது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கடன் ஆற்றிய வேந்தர்க்குப் படைக்கடன் ஆற்றிய புகழோன் புண்ணே. - புறத். 1274. (இ-ள்) குற்றமின்றிக் கொடைக் கடமையைக் குறையாமல் செய்து முடித்த வேந்தர்க்குத் தான் செய்யத்தக்க படைக் கடமையைப் பண்போடு முடித்துக் காட்டிய புகழ்வாய்ந்த வீரன் எய்திய போர்ப்புண், குழிபலவாகிக் காண்போர்க்கு இனி இனிமை செய்யா தொழியினும் அதன் சீர்த்திக்கு ஓர் எல்லை இல்லையாய் உயர்ந்ததாகும். நெடுங்காலம் வளர்ந்து பொந்து விழுந்துபட்ட மரம்போல உடலின் எவ்விடத்தும் படைக்கலம் துளைத்து ஊடறுத்துச் சென்று தோன்றும் அகன்ற புகய்ப் புண்களில் மருந்துநெய் நில்லாது வறிதே கழிகின்றது. ஆதலின் மெல்லென மெழுகினால் செய்யப்பெற்ற பாவையைத் துணியால் பொதிந்து வைப்பதுபோல மிகுந்த துணிகளைக் கொண்டு உடல் முழுவதையும் பொதிந்து மூடுதல் வேண்டும் என்றவாறு. இ- து: - வேந்தன் தலையளி செய்தமைக்குக் குறையா வண்ணம் வீரன் கடமை புரிந்தான் என்பது. (வி- ரை) பொருது புண்பட்ட வீரனைப் பாசறைக்கண் சேர்ப்பித்துப் புண்ணைப் பரிகரித்த வீரர், அவன் மேம்பாடு தோன்ற விளம்பியது இது. வேந்தன் கொடைக் கடனையும், வீரன் படைக் கடனையும் நினைவார்க்குப் புலவர் பொன்முடியார் பாடிய. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே புறம்.312 என்னும் மூதின் முல்லைப்பாட்டு நினைவுக்கு வருதல் ஒருதலை. அஞ்சாது பொரும் வீரர் உடலில் கரும்புண்ணும் செம்புண்ணும் வடுவும் குழியும் மேடும் விளங்கும். அத் தோற்றத்தை, மருந்து கொள் மரத்தின் வாள்வடு மயங்கி என மதுரைக் குமரனார் பாடுவர் (புறம். 180.) வீரன் உடல் அழகின்றிக் காணினும், அவன் வீரப் புகழ் கேட்பார்க்கு மிக அழகுடையதாகும். இத் தன்மையையும் மதுரைக் குமரனார் ஏனாதி திருக்கிள்ளியைப் பாடுங்கால். நீயே, அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர் நிற்றலின் வாஅள்வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின்னாயே; அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் ஊறறியா மெய்யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின்னாரே அதனால், நீயும்ஒன் றினியை அவருமொன் றினியர் என நயமுறப் பாடினார். ஆகலின், குழிபல ஆயினும் சால்பா னாதே என்றார். முதிய மரத்தில் பொந்துகள் உண்மையை, நிலம்பக வீழ்ந்த அலங்கற் பல்வேர் முதுமரப் பொத்து - புறம். 364 என்றார் கூகைக் கோழியார். முதுமரம் புளியும், ஆலும் போல்வனவாம். புளி ஆயிரம் பொந்து ஆயிரம் என்னும் பழமொழியும், தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன எனவரும் சிந்தாமணிப் பாட்டும் (498) கருதுக. படை - மூட்டுவாய்; துளையுமாம். பிடிகாறும் உட்புகுந்து அறுத்துச் சேறலின் மடை நுழைந்து அறுத்த இடனுடை விழுப்புண் என்றார். விழுமம் - சிறப்பு. விழுமம் புண் என்பது விகாரப்பட்டு விழுப்புண் என நின்றது. விழுத்திணை என்பது போல (புறம். 24) விழுப்பத்திற்கு இடனாகிய புண் விழுப்புண் என்க. இதனை, முகத்தினும் மார்பினும் பட்ட புண் என்பர் (திருக். 776. பரிமே.) குழிப் புண்ணை ஆற்றுதற்கு மருந்து எண்ணெய் தோய்த்த துணியையும் பஞ்சையும் புண்வாயிற் பொதிந்து வைப்பர். அவ்வாறு தனித்தனியே வைக்க இயலாமையும், வைப்பின் நில்லாமையும், ஆழ்ந்து அழன்று இருத்தலாலும் உடல் முழுவதும் கிழியால் பொதியல் வேண்டும் என்றார். பொதிதல் மூடுதலும், கட்டுப்போடுதலும் ஆகும். மெழுகு - அரக்கு. அரக்கால் அமைந்த கருவில் செய்யப் பெற்ற பதுமை. இதனை, மெழுகு ஆன்று. ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி - குறுந். 155. என்பதனாலும் அதன் உரையாலும் அறிக. இனி மெழுகால் செய்யப் பெற்ற பாவை எனினும் ஆம். மெழுகுசெய் படம் என்றும் (நெடுநல். 159) மெழுகுசெய் பாவை என்றும் (பெருங் 2: 17. 115) மெழுகினாற் புனைந்த பாவை என்றும் (சீவக 1386) வருவன காண்க. கருவில் பொதிந்து பாவை செய்தல்போல இவற்குப் பொதிந்து புண்ணைப் பரிகரித்தல் வேண்டும் என்றார் என்க. பஞ்சியுங் களையாப் புண்ணர் - புறம். 353 என்றும், நெய்க்கிழி வைக்கப் பட்டார் - சீவக. 818 என்றும் சான்றோர் கூறுவனவும், விழுப்புண், நெய்யிடைப் பஞ்சு சேர்த்தி என்று இந் நூலுடையார் மேலே கூறுவதும் (28) புண்ணுக்கு நெய்த்துணி பொதிந்து வைத்தலைக் காட்டும். புண்ணுடையாற்கு நெய்க்கிழி வைத்துப் பேணிக் காப்பதுடன் புள்ளும், நரியும் பேயும் நெருங்காது காக்கும் கடமையும் மேற் கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின் ; யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென் என்றும் (புறம். 291) தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மைவிழு திழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காத்தல் வம்மோ காதலம் தோழி வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே என்றும் (புறம். 281) வருவனவற்றால் அறிக. (15) 12. வஞ்சினம் - 1 இன்ன செயலைச் செய்து முடியேனேல் யான் இன்ன தன்மையன் ஆவேன் எனச் சூளுரைத்தல். இன்னது பிழைப்பின் இதுவா கியர்எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம் -தொல். புறத். 24. நேரிசை வெண்பா 16. செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கெளவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட இல்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து. - புறத். 1301. (இ-ள்) போர்ச்செவ்வி அமைந்த ஆண் யானையின் திரண்ட மத்தகத்தில் யான் எறிந்த. பகைவரைக் கலக்கவல்ல நீண்டவேலை, நாளை விடியும் அளவில் சென்று பறித்துக் கொண்டு வராதொழிவேனேல், எம் தங்கை மணங்கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்று, அவள் கையை எதிர்பார்த்து வாழ்வேன் ஆவேனாக என்றவாறு. இ-து:- யானையின் நெற்றியில் பாய்ச்சப் பெற்ற என் வேலைப் பறித்து வாராது விடேன் என்பது. (வி-ரை) முதனாள் மூண்டெழுந்த போரில் ஒருவீரன் தன் கைவேலை யானையைக் குறிவைத்து ஏவ. அவ்வேல் யானையின் நெற்றிக்கண்பட்டு வீழாது குத்தி நின்றது. அஞ்சிய களிறு போர்க்களத்தினின்று வெருண்டோடி; ஒளிந்தது; காரிருள் கப்பிக்கொண்ட பொழுது ஆகலின் களிற்றைக் காணற்கியலாமல் கதுவிய சினத்தால் அவ் வீரன் விடிவளவில் சென்று வேலைப் பறிப்பேன் எனச் சூள் உரைத்தது இது. வேல் சிறந்த படைக்கலமாகச் சான்றோரால் கொள்ளப் பெற்றமை. வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே என்பதனாலும், வேலால் யானையை வீழ்த்துதலை தகவு என்பது, களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்பதனாலும், கானமுயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது - திருக். 772. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் - திருக். 774. என்பவற்றாலும் புலனாம். வேலைக் களிற்றின் முகத்தில் ஏவுதலைச் செம்மத்தகத்து என்றார். வேலோ, பெருங்களிற்று முகத்தினும் செலவானாதே என்றார் புறத்தினும் (332) கடாக்களிற்றின்மேல் ஏவப்பெற்ற வேலைப் பறிக்காது விட்டுவருதல் குடிப்பழியாகும் செயலென்று மறக்குடி மக்கள் கருதினர் என்பது இத் தகடூர் யாத்திரையால் விளங்கும். மேலே, புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே; எம்மில் செய்யா அரும்பழி செய்தனை என்று தன் மைந்தன் செயலுக்கு நாணி மறக்குடி மங்கை உரைத்ததும் (41) இக் கருத்தை வலியுறுத்தும். ஆகலின் தம்மில் செய்யாப் பழியைத் தான் செய்ததாகா வண்ணம், கெளவை நெடுவேல் கொணர்வேன் என்றான். நினைத்தவர்க்குக் கலக்கத்தை ஊட்டுதலின் கெளவை நெடுவேல் என்றான். இனிக் குடிப்பழிக்கு இடஞ் செய்தது என வருந்திக் கெளவை நெடுவேல் என்றானுமாம். நெடியவேலாய் இருந்தும் பயன் என்னை? குடிப்பழிக்கு இடனாயிற்றே என்ற உளைவினால் கூறினானாம். கெளவை - பழிச்சொல். எவ்வை என்பது முறைப்பெயர். எம் தங்கை என்பது. தவ்வை மூத்தாளையும், அவ்வை அன்னையையும் குறித்தல் போன்ற முறைப்பெயர். எவ்வை எம்வயின் வருதல் வேண்டுதும் எவ்வைக் கெவன்பெரிதளிக்கும் என்ப என்பவற்றை (ஐங்குறு. 88, 89) அறிக. தாள்தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல் ஆகலானும், பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருணைச் சோறார்வர் கயவர் ஆகலானும் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் இழிவு என உட்கொண்டு சூளுரைத்தான் ஆகலின், கைபார்த் திருப்பன் என்றான். தன் தங்கையை வாழ்க்கைப் படுத்திய இல்லத்திற்குத் தான் உற்றுழி உதவுதல் தன் கடனாக இருக்கவும் அதனை விடுத்து, அவள் கையையும், அவளைக் கொண்டான் முதலியவர் கைகளையும் எதிர்பார்த்து வாழ்தலை இரத்தலினும் இழி வெனக் கருதினான் ஆகலின் எவ்வை கடிபட்ட இல்லகத்து என்றான். கடிபடுதல் திருமணம் கொள்ளுதல். கடி - மணமும், காவலுமாம். பொழுதுபோகாமைச் செய்வோன் என்பானாய் விடி வளவில் சென்று விரைந்து என்றான். கங்குல் கனைசுடர் கால்சீயாமுன் கோவலன் கூடற்கு எழுந்தது போல்வது என்க. இனி, ஒற்றாய்ந் துரைப்பார் நள்ளிருள் போதின்கண் வந்து சொல்வராகலின் அதனைக் கேட்டுச் செல்வான் விடிவளவில் சென்று என்றானுமாம். ஒற்றார் நள்ளிருளில் வந்து கூறுதலை, நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற சிலையும் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் நமர் - பு. வெ. 6 என்பதனால் அறிக. (16) 12. வஞ்சினம் - 2 நேரிசை ஆசிரியப்பா 17. கலிமா னோயே! கலிமா னோயே! நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே! வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎன் ஆயின் உள்ள(து) இரப்போன் இன்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே. -புறத். 1304 (இ-ள்) மனஞ்செருக்கிய குதிரை வீரனே, மனஞ் செருக்கிய குதிரை வீரனே, பாம்புபோன்ற நல்ல நீண்ட பெரிய கையினையும் வெவ்விய சினத்தையும் கொண்ட யானையையுடைய மனஞ் செருக்கிய குதிரை வீரனே, புதுவெள்ளப் பெருக்குப் போன்ற படையை உடைய நும் வேந்தனுக்கு ஒப்பான வீரன் முன்னே படையின் உள்ளே ஊடறுத்துக் கொண்டு புகாமல் ஒழி வேனேயானால் தன்னிடத்தில் உள்ள ஒன்றை (,) இரப்பவனது இல்லாமையைக் கண்கூடாக் கண்டும் அதனை ஈயாமல் மறைப் பவனது இழிவை யான் உறுவேனாக என்றவாறு. இ- து:- ஊடறுத்துக் கொண்டு படையின் உள்ளேயான் புகுவது உறுதி என்பது. (வி - ரை) கலிமானோயே புகேஎனாயின் சிறுமை யான் உறுகவ்வே என இயைக்க. fÈkh‹ - Fâiu; Fâiu nkÈU¡F« åuid¡ ‘fÈkhndhna! என விளித்தான். கலிமான் என்பது யாண்டும் யானையைச் சுட்டிற்றில்லை யாகலின் யானைப் பாகன் எனக் கொள்ளாமல் யானையையுடைய மனஞ்செருக்கிய குதிரை வீரனே என்றாம். கடாஅ யானைக் கலிமான் பேகன் எனச் சான்றோர் கூறிய தறிக. (புறம். 141, 145) இனிக் கலிமானோயே என்றது குதிரை வாதுவனைக் குறித்தது எனினும் ஆம். கலிமானோயே என்பது வாயிலோயே என்பதுபோல் விளியேற்று நின்றது. (சிலப். 26. 24) மீகான் என்பது போலக் கலிமான் என்பது இயக்குவோன் என்னும் பொருட்டதாயின், யானைவாதுவன் என்பது இயல்பாய் அமையும். என்க. யானையின் கை பாம்பன்னது என்பதை. வேழத்துப், பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை -முல்லை. 69-70 என்றார் நப்பூதனார். தடக்கை - பெரியகை; இனி எழுந்தாடும் பாம்பு போன்ற கையுமாம். தட என்னும் உரிச்சொல் பெருமையும் வளைவும் தருமாறு அறிக. (தொல். உரி. 22, 23) வெள்ளத்தானை- வெள்ளப்பெருக்குப் போல் பெருகி வரும் படை. இதனை, ஆளமர் வெள்ளம் என்றார் ஐயனாரிதனார். (பு. வெ. 32) வேற்றானை வெள்ளம் என்றார் இந் நூலுடை யாரும் (21). படைத்தலைவனையோ, தறுகண்மை மிக்க வீரனையோ வேந்தனொடு ஒப்பிடுதல் வழக்கு ஆதலின் வேந்து ஒப்பான் முன் என்றான். சோழன் படைத்தலைவனாம் கருணாகரன் கொண்ட கலிங்க வென்றியைக் கருதிச் செயங்கொண்டார் கலிங்கம் எறிந்த கருணாகரன் என்றதைக் கருதுக. உள் அழித்துப் புகுதல் என்பது உட்புகவிடாது எதிரிட்டு நிற்கும் படையை அறுத்துக் கொண்டு உள்ளே சென்று அதரி திரித்தலாகும். படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம் -தொல். புறத். 17. என்பது பகைவர் படைக்கலங்களை அழித்து வெற்றி கொள்ளும் வலிமையாவதுடன், படையை ஊடறுத்துச் சென்று காட்டும் வலிமையையும் குறிக்குமாறு இரட்டுற நின்றமை இத் தகடூர் யாத்திரையால் புலப்படும். படையாண்மை மீக்கூர்ந்தவனாகிய இவ் வீரன் கொடை யாண்மையும் மீக்கூர்ந்து விளங்கியவன் என்பதை இவன் கூறும் வஞ்சினம் நன்கனம் காட்டும். ஈத்துவக்கும் இன்பம் எய்துமாறு ஒருபொருளை வைத் துள்ளான். அப் பொருளை இல்லாதவன் - இன்றியமையாது வேண்டியவன் - இழிவு எனக் கருதாது வந்து இரக்கின்றான். அவன் நிலைமையைச் செவ்விதிற் றான் கண்டுவைத்தும் ஈயாது இவறுகின்றான். இவனுக்கு எய்துவது சிறுமையே அன்றோ! அவன் எய்தும் சிறுமையைப் படையை உள்ளழித்துப்புகேஎன் ஆயின் யானும் உறுவேனாக என்று சூளுரைக்கு முகத்தால், உள்ளழித்துப் புகேஎன் ஆயின் உள்ளது இரப்போன் இன்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே என்றான், ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று -புறம். 204 என்பதால் கரப்போன் எய்தும் சிறுமையும், புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையான் உறவே -புறம். 72. என்பதால் ஈயாமை இழிவென வஞ்சினங் கூறும் வழக்குண்மையும் கொள்க. ஈயாமை இழிவு என்பதை, தொலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவென மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இளிவெனக் கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ? இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? எனவரும் கலித்தாழிசை மும்மடி வலியுறுத்துமாறு அறிக. (கலித். 1) உறுகவே என்பது உறுகவ்வே என ஒற்று விரிந்து நின்றது. நெல்விளையும்மே பழமூழ்க்கும்மே என்பவற்றிற் போல (புறம். 109). யாப்பமைதி: கலிமானோயே...... கலிமானோயே என்பது பல்சான்றீரே....... பல்சான்றீரே என்பது போன்ற யாப்புறவில் நின்றது. (புறம். 195, 246, 301) இத் தகடூர் யாத்திரையுள்ளும் மேலே இவ்வாறு வருவனவும் காண்க. (27, 41) (17) 13. படைச் செருக்கு - 1 படையினது வீர மிகுதியையும் வெற்றிச் சிறப்பினையும் கூறுதல். படைவீரர் செருக்கிக் கூறுதலுமாம். பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு - திருக். 773. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் -திருக். 771 ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா 18. கூற்றுறழ் முன்பின் இறைதலை வைத்தபின் ஆற்றி அவனை அடுதல்; அடாக்காலை ஏற்றுக் களத்தே விளிதல்; விளியாக்கால் மாற்ற மளவும் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து. -புறத். 1314. (இ- ள்) வேந்தன் தலையளி செய்தபின்னை, கூற்றையும் எதிரிட்டு நிற்கும் ஆற்றலுடன் தன்னை எதிர்த்தவனை அழிக்க; அவ்வாறு அழிக்க முடியாப் பொழுதில் அவன் தாக்குதலை ஏற்றுப் போர்க்களத்தே இறக்க; அவ்வாறு இறவாக்கால் வீரர்தம் பீடும் பெருமையும் இழந்து சொல்லளவால்கூட பெருமை தருவரோ? தாரார் என்றவாறு. (இ - ள்) பகைவென்று வருதல், அல்லது களத்தில் பட்டழிதல் ஆகிய இரண்டுள் ஒன்றே வீரர்க்குப் பெருமையும் பாராட்டும் தருவது என்பது. (வி - ரை) கூற்றுறழ் முன்பு - கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றல். வீரற்கே அன்றி இறையொடு இயைப்பினும் ஆம். தலைவைத்தல் - தலையளி செய்தல். உடனிருத்தல், சோறளித்தல், படைக்கலம் வழங்கல், பாராட்டெடுத்தல், பரிசு வழங்கல் முதலியன. தலைவைத்தல் - தலைவனாக வைத்தலுமாம். தலையளி கருதி வீரர் கடனாற்றுதலை முன்னே கண்டாம். (14, 15) ஆற்றியவன் - எதிர்த்துத் தாங்கியவன். ஏற்று - தாக்குதலைத் தான் ஏற்று. விளிதல் - இறத்தல். வேந்தன் கூற்று ஒத்தலை, கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் -புறம். 56 கூற்றத் தன்ன மாற்றரு முன்பு -புறம். 362 என்றும் சான்றோர் கூறினர். வீரன் கூற்றொத்தலை, கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும் ஆற்ற லதுவே படை (765) என்றார் திருவள்ளுவர். வீரர்கள் போர்க்களத்தில் சாக விரும்புதலை, மறவர் மறலிக்குயிர் நேர்ந்தார் என்பதனாலும் (தக. 14) புட்பகைக் கேவான் ஆகலிற் சாவேம் (புறம். 68) என்பதனாலும் உறின் உயிர் அஞ்சா மறவர் (திருக். 778) என்பதனாலும், மூப்பிலும் பிணியிலும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம் பெறுவர் (தொல். அகத். 44. நச்) என்பதனாலும் அறிக. பிறரை அடுதலாலும், தான் விளிதலாலும் வீரற்கு வரும் புகழையும் பேற்றையும் வரும் பாடலில் கூறுவார் (19) வீறுடன் பொருது வீழ்ந்த வீரனைப் பகைவீரரும் பரிந்தேத்துவர்; பண்ணிசைத்துப் பாராட்டுவர். இதனை, ஆளுங் குரிசில் உவகைக் களவென்னாம்? கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து என்பதனால் அறிக. (தொல். புறத். 17. மேற். நச்.) இனி, வீரவழிபாட்டைக், காட்சி கால்கோள், நீர்ப்படை நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்னும் புறத்துறைகளின் வழியாகவும் (தொல். புறத். 5) போர்க்களத்தில் பொருது மாண்டோரே அமரர் எனப் பெற்றனர் என்னும் சொல்லமைதி வழியாகவும் அறியலாம். நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் எனவரும் அகப்பாட்டடிகளால் (67) வீரர் பெயரும் பீடும் நடுகல்லில் எழுதியமையும், பெருவழியில் அதனை நாட்டியமையும், படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே - புறம். 260 பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியோ டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லும் - புறம். 264 நடுகற் பீலி சூட்டி நாரரி சிறுகலத் துகுப்பவும் - புறம். 232. ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தனெக் கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலவே - புறம். 335. எனவரும் புறப்பாட்டிகளால் நடுகல்லுக்குப் பந்தரிட்டதுவும், கண்ணிபீலி முதலியவை சூட்டியதுவும், கள்ளைப் படைய லிட்டதுவும், பரவியதுவும் தெளிவாகும். இனி உயிர்ப் பலியூட்டினர் என்பதும் துடிப்பறை கொட்டினர் என்பதும், வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் என்பதால் விளங்கும் (அகம். 35) மாற்றம் - சொல். மாற்ற மளவும் - சொல்லளவில் கூட. வியத்தக்க, அல்ல எனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்பர் என (தக. அவை) அறிவுக்களத்தின்கண் சான்றோர் சால்பு அமையுமாயினும், அமர்க்களத்தின்கண் அஃதின்று என்பாராய், சான்றோர் தம் தோற்றமும் தேசும் இழந்து மாற்றமளவும் கொடுப்பவோ? என்றார். தோற்றம் - பெருமிதமான காட்சி. தேசு - ஒளி; அஃதாவது பிறர்க்கு அச்சமுண்டாவதற்குக் காரணமான நன்மதிப்பு என்பார் பரிமேலழகர். (திருக். 698). இறைதலை வைத்தபின் அடுதல்; அடாக்காலை விளிதல்; விளியாக்கால் சான்றோர் தோற்றமும் தேசும் இழந்து மாற்றமளவும் கொடுப்பவோ? என இயைக்க. (18) 13. படைச் செருக்கு - 2 பலவிகற்பப் பஃறொடை வெண்பா 19. தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாமவற் கொற்கத் துதவினான் ஆகுமால் - பிற்பிற் பலரேத்தும் செம்மல் உடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர் மேன்மை இழப்பப் பழிவருப செய்பவோ தாமேயும் போகும் உயிர்க்கு. - புறத். 1313. (இ-ள்) உயிர் வாளா தானேயும் போய் ஒழியும்: அவ்வுயிர்க்குத் தன்னை அன்பால் ஆண்டுகொண்ட பெருவீறு படைத்த வேந்தன் மகிழுமாறு உற்றபொழுதில் ஓடிப்போய் உதவினார் என்னும் பேறுஉண்டாம்; அன்றியும் பின்னரும் பெரும் பாராட்டும் பெருமிதமும் உண்டாம்; பலரும் தொழுது ஏத்தும் அமர வாழ்வும் அமையும்; அத்தகைய பெறற்கரும் பேறுகளை இழக்குமாறு ஒழியாப் பழிவரும் செயலைச் சான்றோர் செய்வரோ? செய்யார் என்றவாறு. இ- து: - பொருகளத்தில் உயிர்விடுதலே புகழ்ச்சாவு; மற்றையவை புன்மைச் சாவு என்பது மறக்குடி மாண்பு. (வி-ரை) தற்கொள் பெருவிறல் வேந்து - தன்னைத் தலையளி செய்துகொண்ட வேந்தன். ஓற்கம்- தளர்ச்சி. வறுமைப் பொருளும் தருவதாயினும் வேந்தன் ஆகலின் அப்பொருள் பொருந்தாதாம். ஒல்குதல் அடியாகப் பிறந்த சொல் ஓற்கம். கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஓற்கத்தின் ஊற்றாம் துணை - திருக். 414 என்பதனால் ஒற்கம் இப்பொருட்டதாதல் கொள்க. காலத்தினால் செய்யும் உதவியே ஞாலத்திற் பெரிது ஆகலின் ஒற்கத்துதவுதலின்சிறப்பு, தானே போதரும். கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன் எச்சத்துள் ஆயினும்அஃ தெறியாது விடாதே காண் என்னும் கலித்தாழிசையால் (149) ஒற்கத்துதவுதல் மாண்பும், உதவாமையால் வரும் கேடும் விளங்கும். வேந்து உவப்ப ஒற்கத்து உதவிய ஒருவனைப் பற்றிய, தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியம் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலம் தோழி வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே என்னும் புறப்பாட்டு (281) உன்னுந்தோறும் உருக்குவதாதல் அறிக. உற்றுழி உதவியும் என்னும் தொடரும் (புறம். 183) அதற்குத் தன்னாசிரியர்க்கு ஓர் ஊறுபாடு உற்றவிடத்து அது தீர்த்தற்கு வந்து உதவியும் என்னும் பழைய உரையும் கருதற்குரியன. பலரேத்தும் செம்மலும், வானுறை வாழ்க்கை இயைதலும் முன்னும் கண்டாம் (18). செம்மல் - தலைமை; திறப்பட, நண்ணார் நாண அண்ணாந் தேகி ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே - புறம். 47. என்பதை நோக்குக. சான்றோர் பழிவருப செய்யாமையை, பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் - புறம். 182 என்பதும், உறையார் விசும்பின் உவாமதி போல நிறையா நிலவுதல் அன்றிக் - குறையாத வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வான்மையார் சால்பு - பு. வெ. 185 என்பதும், மானம் என்னும் அதிகாரத் தொடக்கத்தில், (திருக். அதி. 97) இனி, குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி முதற்கண் மானம் கூறுகின்றார். அஃதாவது எஞ் ஞான்றும் தம் நிலையில் தாழாமையும் தெய்வத்தால் (ஊழால்) தாழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாம். இஃது அக்குடிச் சிறப்பினை நிறுத்துதல் உடைமையின் அச் சிறப்புப் பற்றி முன்வைக்கப்பட்டது எனப் பரிமேலழகர் குறிப்பதுவும் வலியுறுத்தும். குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு - திருக். 333 ஆகலானும். நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான் - நாலடி. 29 என்பது உலகியல் ஆகலானும், உரிகளை அரவம் மானத் தானே அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே - புறம். 260 என்னும் மெய்யுணர்வு, பழஞ்சான்றோர்க்கு இருந்தது ஆக லானும், தாமேயும் போகும் உயிர்க்கு என்றார். வறுமொழி கூறலும், பயனில கூறலும் பழியெனக் கருதிக் கடிந்துரைத்த சான்றோர் வறிதே ஒழியும் உயிர்வாழ்வை ஏற்பரோ? ஏற்கார் என்க. தம்புகழ் நிறீஇத் தாம் மாய்வதையே (புறம். 165) வாழ்வெனக் கொண்டார் ஆகலின், தானை யானை என்னும் புறத்திணையியல் நூற்பாவில் (17) போர்த்தொழிலால் தானைநிலை என்பதற்கு இத் தகடூர் யாத்திரையை மேற்கோள் காட்டினார் நச். இளம்பூரணரும் இதனை இந் நூற்பாவில் மேற்கோள் காட்டி, இஃது ஒருவீரன் கூற்று என்றார். (19) 13. படைச் செருக்கு - 3 பலவிகற்பப் பஃறொடை வெண்பா 20. நகையுள்ளும் நல்லவை எய்தார் ; பகைநலிய (ஞாட்புள்ளும் நல்லவை எய்தார்; விழைவொடு) வேற்றுக் களத்தில் *ஒருவர் தமராகச் 1சென்றார் ஒருவர்மேற் (செம்மாந் தடர்த்தாற்றிப்) புண்ணும் படுக்கலார்; தாம்படார்; போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று. - புறத். 1316 (இ-ள்) மகிழ்ந்து பாராட் டெடுக்கும் இடத்தும் நற்புகழைப் பெறார்; பகையை அழித்தமையால் போர்க்களத்திலும் நற்பேறு பெறார்; விருப்புடன் வேறொருவர்க்கமைந்த போர்க்களத்தில் ஒருவர்க்குத் துப்பாகச் சென்றால் ஒப்பற்ற வீரர்மேல் தலைமை தோன்றத் தாக்கி விழுப்புண் படுத்தார்; தாமும் விழுப்புண்பட்டு மாயார்; இந்நிலையில் களத்தில் இருந்து மீண்டார் கவலையால் தம் கண்ணையும் மூடி உறங்குவரோ என்றவாறு. இ-து :- போர்க்குறிக் காயமே புகழின் காயம் என்பது. காயம் முன்னது புண்ணும், பின்னது உடலுமாம். (வி. ரை) எய்தாராய், எய்தாராய், படுக்கலாராய், படாராய் - போந்தார் கண்ணும் படுங்கொல் எனத் தொடுப்பினும் ஆம். நகை - மகிழ்ச்சி. இவண் மகிழ்ந்து பாராட்டுதலைக் குறித்தது. இனி நகை என்பது மற்போர் முதலிய ஆடல் நிகழும் களங்களுமாம். மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானுமோர் ஆடுகள மகளே; என் கைக் கோடீர் இலங்குவளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே என்பது குறுந்தொகை (31). இதனால் ஆடுகளத்தில் ஆடவர் எய்தும் பெருமை குறித்தமை அறிக. ஞாட்பு - போர்க்களம். போர்க்களம் புக்கு வீறுகாட்டி னார்க்குப் பீடும் பெருமையும் உண்டாதலை முன்னும் கண்டாம்; மேலும் வரும். வேற்றுக் களத்தில் ஒருவர் தமராகச் செல்லுதல் துப்பாகச் செல்லுதல். துப்பு - வலிமை. வீயாத்திருவின் விறல்கெழு தானை மூவருள் ஒருவன் துப்பா கியரென ஏத்தினர் தரூஉம் கூழே நும்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே - புறம். 122 என்பதால் மூவேந்தருக்கும் ஓரொருகால் மலையமான் திரு முடிக்காரி துப்பாகச் சென்றதும், அதற்கெனப் பொருள் பெற்றதும் தெளிவாம். மேலும், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடிய புறப் பாட்டினாலும் (125) முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் என்னும் குறுந்தொகையினாலும் (312) இது விளக்கமுறும். புண்ணும் படுக்கலார்; தாம்படார் இழிவுறுதலை, ஆற்றி யவனை அடுதல்; அடாக்காலை ஏற்றக் களத்தே விளிதல்; விளியாக்கால் மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து என்று முன்னே இந் நூலுடையார் கூறியமையாலும் (18) தெளிக. கவலையால் கண்ணுறக்கங் கொள்ளாமையை, நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே என்றார் கோவூரார் (புறம். 31). படுங்கொல் - படுதலும் கூடுமோ என எள்ளியது. படைச் செருக்குடைய வீரன் ஒருவன் விழுப்புண் படாது தம் நாளை வழுக்கினுள் வைத்து வறிதே யொழிவாரை நோக்கி, அவர்கள் நொய்மையை எள்ளித் தன் வீறு தோன்ற நுவன்றது இது. (20) 13. படைச் செருக்கு - 4 பலவிகற்பப் பஃறொடை வெண்பா 21. வேற்றானை வெள்ளம் நெறிதர - ஆற்றுக் கடும்புனற் கற்சிறை போல - நடுக்காது நிற்பவற் கல்லால் எளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுநர் என்னும் செருக்கு. - புறத். 1317 (இ-ள்) அழகமைந்த தளிரும் இலையும் மிடைந்த கண்ணி சூடிய பறையன்ன பருத்த தோளுடைய மன்னரால் அறியப் பெறுநர் என்னும் பெருமிதம், வேற்படை வீரராகிய வெள்ளம் பெருக்கெடுத்து மோதிவர, ஆற்றிற் கடுகிவரும் வெள்ளத்தைத் கற்சிறை தடுக்குமாப் போலத் தடுத்து நடுங்காது நிற்பவற்கு அல்லாமல் பிறர்க்கு எளிதாமோ? என்றவாறு. இ- து:- பகை வெள்ளத்தைத் தடுத்துக் கற்சிறைபோல் நிற்பவற்கே அரசறியும் பெருமை யுண்டாம் என்பது. (வி-ரை) இதுவும் பெருமிதம் அமைந்த வீரன் ஒருவன் கூற்றேயாம். அன்றிச் சான்றோர் கூற்று எனினும் அமையும். நாட்டுப் பற்றூட்டுதலும், கடனாற்ற ஏவுதலும், இசை மேம்படு வழி இயம்புதலும் அன்னார் கடைப்பிடியாகக் கொண் டிருந்தன ஆகலின் என்க. பொற்பு - பொலிவு, அழகு. முறி- தளிர். முறியிலை என்பது முறியாகிய இலை என்றும், முறியும் இலையும் என்றும் பொருளாம். கண்ணி - சூடும்பூ; ஆடவர் தலையில் சூடுவது. கண்ணி கார்நறும் கொன்றை: காமர் வண்ண மார்பில் தாருங் கொன்றை - புறம் - 1 என்பது பெருந்தேவனார் வாக்கு. தளிரும் இலையும் கொடியும் பூவும் மிடைந்து கண்ணியாகச் சூடப் பெறுதல் உண்டு என்பதை, மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி - புறம். 76 என்பதால் கொள்க. வீரரும் வேந்தரும் ஆடற்பயிற்சி மீக்கூர்ந்து அகன்ற மார்பும் திண்ணிய தோளும் படைத்து உருவெழுதிக் கொள்ளும் வண்ணம் திகழ்ந்தனர் ஆகலின் முழவுத்தோள் மன்னர் என்றார். அதியமானை, கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழவுமேம் பட்ட நற்போர் முழவுத்தோள் என்னை - புறம். 88 என்று ஔவையார் குறித்தது நினைவு கூரற்குரியது. வேந்தர் அறிந்து பாராட்டும் விழுப்புகழை வீரர் அவா வினர் என்பதை. தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தாமவற் கொற்கத் துதவினான் ஆகுமால் (19) என்று முன்னர் இந்நூலுடையார் உரைத்தமையாலும், பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் (22) என்று மேலே உரைப்பதாலும் கொள்க. இதனால், மன்னர் அறியுநர் என்னும் செருக்கு கற்சிலை போல நிற்பவர்க்கு அல்லால் எளியவோ? என்றார். செருக்கு - பெருமிதம். படைச் செருக்கு என்பதையும் உன்னுக. போர் வெள்ளத்தையும், புனல் வெள்ளத்தையும் வெளிப் படுப்பான் தானை வெள்ளம் என்றார்; அவ் வெள்ளம் நீந்து தலினும் அருமைப்பாட்டைக் காட்ட வேல் தானை வெள்ளம் என்றார். என்ற அளவே போதுமாக நெரிதர என மிகுதியும் ஆற்றலும் வெளிப்படுத்தார். நெரிதர - மேலே மேலே வர. (குறிஞ்சிப். 132) வேல் தானை வெள்ளம் என்பதற்கு ஏற்ப ஆற்றுக் கடும் புனல் வெள்ளம் என்றார். உவமையடையும் பொருளடையும் ஒப்ப நிறுத்தும் உயர்பு பற்றி. பொருதல் ஒப்பு ஆகலின். கற்சிறை என்பது கல்லால் கட்டப்பெற்ற அணை. கடுகி வரும் நீரைக் கல்லணை தாங்கினாற் போலப் பெருகிவரும் படையைத் தடுத்து நிறுத்துவான் கற்சிறை எனக் காரணக் குறி பெற்றான். அது செயற்கருஞ் செயல் ஆகலின் ஆசிரியர் தொல்காப்பியனார் அதனைப் பெருமை என ஆண்டார். ஐயனாரிதனார் ஒரு தனி நிலை என்றார். வருவிசைப் புனலைக் கற்சிலை போல ஒருவன் தாங்கிய பெருமை - தொல். புறத். 8. பொருபடையுட் கற்சிறைபோன்(று) ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று - பு. வெ. 54. ஒருதனி நிலை தான் நடுங்காமையும், பிறரை நடுக்குதலும் நிகழும் ஆகலின் நடுங்காது நிற்பவற்கு என்றார். ஊக்கமுடைமையில், சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பா டூன்றும் களிறு - திருக். 597 என்று பொய்யாமொழி கூறுவது பொருத்தி நோக்கத்தக்கது. கடல்போல் படைப்பெருக்குவரினும் தானொருவனே நின்று தன்னாற்றலே துணையாக வென்றி கொள்வோனைக் கடற்கு ஆழி அனையன் என்பர் மதுரைக் கணக்காயனார். அவர் பாட்டு இத் தகடூர் யாத்திரைக்கு விளக்கம் போல்வதாதல் காண்க: வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் (கு) ஆழி அனையன் மாதோ; என்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வன்மை யோனே - புறம். 330 (21) 1 3ஙு. படைச் செருக்கு - 5 நேரிசை வெண்பா 22. பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணும் இளையரே தம்கோமாற் குற்றுழிச் சாவா தவர். - புறத். 1318 (இ - ள்) மிகத் தண்ணிய மாலையணிந்த மன்னர்க்காகத் தம் உடலை உவப்போடு வழங்கியவர் மிக இளமையுடையரே எனினும் முதியவரேயாவர்; தம்மைப் புரந்த தலைவற்கு உதவியாம் பொழுதில் தம் உயிரைத் தராதவர் அகவையால் முதியரே ஆயினும் இளையவரே ஆவர் என்றவாறு. இ-து :- அகவையைப் பொறுத்தது அன்று இளையர் முதியர் என்பன; நாட்டுக்காக அவர் செய்யும் செயலைப் பொறுத்தவை அவை என்பது. (வி-ரை) பிறந்த பொழுதேயும் என்றார் மிக இளமை என்றற்கு. முற்றுழிக் கண்ணும் இளையரே என்பதை நோக்கப் போதரும். இளமையிலே அருஞ்செயல் ஆற்றல் வருமோ எனின் அவரை அன்றோ சிறுப்பெரியார் என்றும், சிறுமுதுக் குறைவி என்றும் அழைத்தனர். ஒன்றற்கு ஒன்று மறுதலைப்பட்ட தன்மையை உலகு விரும்பிப் பாராட்டுதல் கண்கூடு. இளமையில் மூதறிவும், முதுமையில் குழந்தையுள்ளமும் வாய்ப்பதை வியக்கின்றோம் அல்லமோ? இளையர் முதியர் எனவிருபால் பற்றி விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தான் உளன் என்று வீடுமனை வியந்து பாராட்டுகின்றது பெரும்பொருள் விளக்கம். (புறத்திரட்டு. 542). அன்றியும், குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் - புறம். 74 தமிழ்த் தொல் குடியினர் என்பதும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுத்ததும் (279), மீனுண் கொக்கின் தூவி யன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே என்றதும் (277), ஆகியவை மூதின் மகளிரின் இளஞ்சிறார் மாண்புகள் என அறிவதும், கிண்கிணி களைந்த காலில் கழல் தொட்டும், குடுமி களைந்த தலையிலே கண்ணி சூடியும், ஐம் படைத் தாலி களையாதும், பால் பருகுதல் நீத்து அன்றே சோறு உண்டும், தேரேறி நின்று போர்நோக்கிச் சென்ற தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆற்றலையும் அறிவையும் இடைக் குன்றூர்கிழார் வியந்து பாராட்டுவதும் (புறம். 77) அறிந்தோர் வாளா உரைத்ததாகக் கொள்ளார் என்க. உடம்பு கொடுத்தல் என்றது உடம்பாலாம் பயன்களை யெல்லாம் கொடுத்தார் என்பது. இவர் உடல் உடைமை உயிர் ஆகிய அனைத்தும் நாட்டுக்கு நல்கிய நல்லோர் என்க. உடம்பொடு முற்றுழிக் கண்ணும் என்றது உடலால் முதுமையும், அகவையால் முதுமையும் ஆகிய இரண்டும் இயைந்த போதும் என்பது. மூத்தாலும் மூவாதாரும், மூவாதும் மூத்தாரும் ஆகிய இருதிறத்தாரையும் உவமையால் விளக்கும் சிறுபஞ்ச மூலம்: பூத்தாலும் காயா மரமுமுள நன்றறியார் மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் - பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக் குரைத்தாலும் செல்லா துணர்வு. (23) பூவாது காய்க்கு மரமுமுள நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார்- தாவா விதையாமை நாறுவ வித்துள மேதைக் குரையாமை செல்லும் உணர்வு (22) உற்றுழி - உற்ற இடத்து. முன்னே (20) ஒற்கத் துதவினான் ஆகுமால் என்றதையும், அதன் விளக்கத்தையும் அறிக. உரிய பொழுதில் செய்யாத எவ்வினை தான் உயர்வுடைய தாகும்? ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் (484) என்பது வள்ளுவம். (22) 13ஙு. படைச் செருக்கு - 6 நேரிசை வெண்பா 23. பரவைவேல் தானைப் பகலஞ்சு வேனா இரவே எறியென்றாய் என்னை - விரைவிரைந்து வேந்தனீ ஆயினாய் அன்றிப் புகுவதோ போந்தென்னைச் சொல்லிய நா. - புறத். 1319 (இ-ள்) கடல்போல் விரிந்த வேற்படையைக் கண்டு பகற்பொழுதில் அழித்தற்கு அஞ்சுவேனாகக் கருதி இரவுப் பொழுதில் மிக விரைந்துபோய் அழிக்க என்று எனக்குக் கட்டளை இட்டனை; இவ்வாறு கட்டளை இட்ட வேந்தன் ஆயினை; அல்லையேல் இவ்வாறு கட்டளை இட்ட நின் நா, வாயின் உள்ளே புகுந்திருக்கவும் கூடுமோ? அறுத்திருப்பேன் என்றவாறு. இ-து:- பகைவர் அறியாமல் இரவில்போய் அவரை அழித்துவருவது வீரர்க்கு இழிவு என்பது. (வி-ரை) வேந்தன் என்றது இவண் படைத் தலைவனை என்க. படைத்தலைவன் தன் படைவீரன் ஒருவனைநோக்கி, இரவில் போய்ப் பகைவரை அழித்து வருக என்று ஏவினான். அவ்வேவுதல் கேட்ட அளவில் தன் ஆண்மைக்கோர் அசைவு நேரிட்டதாக எண்ணிய வீரன் வெகுண்டுரைத்த செருக்குரை இது. இதனால் அவன்றன் மறமாண்பு நன்கு போதரும். வேற்படையை முன்னே வெள்ளம் (23) என்றார்; இவண் பரவை என்றார். பரவை - கடல். கட்பார்வையைக் கடந்து பரந்துகிடப்பது ஆகலின் பரவை காரணப்பொருட்டு. கடல் என்பதும் அது. நோக்கைக் கடந்தது என்பது. பகலஞ்சுவேனா? என்றது, வெளிப்படச் சென்று வீரம் விளைத்தற்கு மாட்டேன் என்னும் நினைவோ? யான் அஞ்சுவேன் என்பதை யாங்ஙனம் உணர்ந்தனை? அஞ்சியதற்குச் சான்றும் உண்டுகொல்? என்று உருத்து நின்று வினாவிய வினாவிது. அத் தலைவன் பகலில் எறி என்றானோ? இல்லை. இரவே எறி என்றான். அதன் பொருள் என்னை? பகல் எறியேன் என்பதன்றோ! ஆகலின் குறிப்பால் ஐயுறுதல் கூடத் தன் ஆண்மைக்கு இழுக்காமெனக் கொண்டு கொதிப் புற்றுக் கூறினான். வீரரை நோக்கிப் பொதுவிற் கூறிய உரையெனினும் பொறுக்க ஒண்ணாதது ஆக அத்துணைப்போர்க்கும் இடையே அச்சம் என்னும் ஒரு பொருள் உண்மையையே அறியாத என்னை நோக்கிக் கூறினை என்பானாக நொந்து, இரவே எறிஎன்றாய் என்னை என்றான். விரை விரைந்து என்றது கடுகடுத்து, நடுநடுங்கி என்பது போன்றதோர் இரட்டைச் சொல், கலங்கி என்னும் பொருட்டு. துணிந்து ஏவ மாட்டாமையால் விதிர்விதிர்ப்புற்று இரவே எறி என்றது கண்டு விரைவிரைந்து என்று உண்ணகைத் துரைத்தான். உள்ளம் எள்ளிய மடவோனை என் செய்வது; அவன் தலைவன் ஆயினனே; ஆகலின் வேந்தன் ஆயினாய் என்றான். நீ வேந்தனாக மட்டும் இராமல் இவ்வாணையை இட்டிருந்தால் என்பானாய் அன்றி என்றான். ntªj‹ mšyhjtdhf Ú ïUªjhš ‘òFtnjh? எனத் தன் உந்தும் உணர்வையெல்லாம் ஒருங்கு கூட்டி வினாவினான். ‘vJ òFtnjh? என ஐயுறவைத்து அறைந்தான்; வெளிப் பட்டு என்னை இரவே எறி என்று ஏவிய நா என்று முடித்தான். போந்து - வெளிப்போந்து. போந்து என்னைச் சொல்லிய நா புகுவதோ என இயைக்க. புகுவதோ என்பதால் புகாமை, அறுக்கப்பட்டிருக்கும் என்பதாம். அறுக்கப் படாமைக்கு ஏது, வேந்தன் நீ ஆயினாய் என்பது மட்டும் அன்று; விரை விரைந்து (நடுங்கி) உரைத்தனை ஆகலின்; அந்நாவை அறுத்த லும் என் ஆண்மைக்கு இழுக்காம் என விடுத்தனன் கண்டாய் என்றான் என்க. வெகுளிச் சுவையின் நிலைக்களம் நான்கனுள் குடிகோள் பற்றி வந்த வெகுளி இது, தன் மறக்குடிக்குத் தகவில்லாக் கட்டளையாகலின். அவ் வெகுளி மற்றொரு நிலைக்களமாம் உறுப்பறை செய்ய ஏவியது. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (மெய்ப். 10). உறுப்பறை என்பது கைகுறைத்தலும், கண் குறைத்தலும் முதலாயின. குடிகோள் என்பது தாரமும் சுற்றமும் குடிப் பிறப்பும் முதலாயினவற்றுக்கட் கேடு சூழ்தல் என்றார் பேராசிரியர். தண்டிக்கக் கருதுவார் கை குறைத்தல், கண்குறைத்தல் என்பதுடன் கால் குறைத்தல், தலை குறைத்தல், காது குறைத்தல், மூக்குக் குறைத்தல், நாக் குறைத்தல் என்பனவும் உண்டு என்பதை இலக்கிய வழக்கிலும், உலகியல் வழக்காம் நிகழ்ச்சிகளிலும் காணக் கூடியவே. ஆக்கரிய மூக்குங்கை அரியுண்டாள் என்றாரை நாக்கரியுந் தயமுகனார் நாகரிகர் அல்லாமை மூக்கரிந்து நுங்குலத்தை முதலரிந்தீ ரினியுமக்கும் போக்கரிதிவ் வழகையெல்லாம் புல்லிடையில் உகுத்தீரே (23) - ஆரணிய. 349. என்னும் கம்பன் கவியைக் கருதுக. 13ஙு. படைச் செருக்கு -7 நேரிசை வெண்பா 24. வான்வணக்கி அன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையில் எஃகமால் - தானும் விலங்கால் ஒருகைத்தால் வெல்கை நன்றென்னும்! நலங்காணேன் நாணுத் தரும். -புறத். 1320. (இ -ள்) வானத்தை வளைத்தற்கு எடுத்தாற் போன்ற வலிமையமைந்த நீண்ட பெரிய கையையுடைய இவ் யானைக்கு இதோ, என் கையில் உள்ள வேல் தகும். ஆனால், இவ் யானை தானும் ஒரு விலங்கே; ஒரோ ஒரு கையை உடையதே; ஆகலின் இதனை வெல்லுதலால் நன்று என்னும் பெருமை எய்தேன்; மாறாக எனக்கு இழிவே தரும்; என்றவாறு: இ-து :- ஒரு கையுடைய யானையை வெல்லுதல் இருகை மாந்தர்க்கு வெற்றிப் பெருமை ஆகாது என்பது. (வி-ரை) தறிகெட்டு வெறிகொண்டு தன்னைத் தாக்கு வதற்காகக் கைநிமிர்த்திவரும் களிற்றை நோக்கிய வீரன் ஒருவன் தன் பீடும் பெருமிதமும் தோன்ற வீரரிடையே உரைத்த உரை இஃதாகும்! வெற்றிவேற்கையனாகிய இவன் இதோ வீழ்த்தி விடுவான் என உடன் வீரர் எதிர்நோக்கியிருக்க, இவ்வுரையால் பேராண்மைக்கும் பேராண்மை உண்மையைக் காட்டி வியப்பித்தான். வணக்குதல் - வளைத்தல். வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி (285) என்றார் நற்றிணையிலும். களிற்றின் கை எழுச்சியையும் ஆற்றலையும் உயர்வு நவிற்சியால், வான்வணக்கி அன்ன என்றார். வானத்தை வில்லாக வளைப்பான் மணலைக் கயிறாகத் திரிப்பான் என்னும் வழங்கு மொழியையும். செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை - புறம். 38. என்றதையும் எண்ணுக. யானையின் கைவன்மை காட்டுதற்கு வலிதரு நீள் தடக்கை என்றார்; வலிமையும் நெடுமையும் பருமையும் காட்டிய அடை மொழிகள். வலிகெழு தடக்கை என்றும் (மதுரை. 720; பதிற். 90) வலிதுஞ்சு தடக்கை என்றும் (புறம் 54, 394) பிறர் கூறினாராக, இவர் நெடுமையையும் இயைத்துக் கொண்டார் வான்வணக்கி அன்ன நிமிர்ந்து வருதலின். எஃகம் - வேல். வேலுக்குக் கூர்மை நெடுமை திண்மை அடை இன்றாயினும் என்கை எஃகம் என்றதே சாலும் என அமைந்தான், வலிதரு நீள்தடவேல் ஒன்றுமே தன்கைக் கொள்ளப் பெறும் ஆகலின். யானைக் கையை நோக்கியவன் பின் தன் கையை நோக்கி, அதன்பின் தன் கைவேலை நோக்கினான் ஆகலின் ஈது என்கை எஃகமால் என்றான். இது என்னும் சுட்டு நீண்டது. தானும் என்றது யானையை. காலாள், குதிரை, தேர் ஆகிய போர்களினும் யானைப்போர், வீறுடையதாம். யானை காலால் உழக்கியும், கையால் பற்றியும், உடலால் தேய்த்தும் களத்தைக் கலக்கும் ஆகலின் என்க. அதனால் அன்றே, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி என்னும் பாட்டுடைப் புகழும் சூட்டப்பெற்றனர்.! ஆயினும் இவ்விணையிலா வீரன் அதனை நோக்கினான் அல்லன்! வலிதரு நீள் தடக்கை ஆயினும் அஃது ஒரு விலங்கே அல்லவா! விலங்கு, நிமிர்ந்து நடக்காது குறுக்கிட்டு நடப்பது. மாந்தனோ நிமிர்ந்து நடப்பவன். அவன் நிமிர்ந்து நடவாத விலங்கை வெற்றி கொள்வது பாராட்டும் வெற்றிதானோ? என எண்ணினான். அதனால், தானும் விலங்கால் என்றான்; அம் மட்டோ! ஐயறிவுடைய விலங்கை ஆறறிவுடைய ஆடவன் வேறல் அழகும் ஆமோ? என எண்ணினான்; நாணுத்தரும் வீரமாக அவனுக்குத் தோன்றியது. ஒரு வேலைத் தூக்கிய தன் கைகளை நினைந்தான். இரு கைகளால் எடுத்து எறிந்து ஏவி எதைத் தாக்குவது? ஒரு கையுடைய யானையை அன்றோ என எண்ணினான். அதனால் ஒரு கைத்தால் என அமைந்து ஆழ்ந்து எண்ணினான். வெற்றி பெறுவதில் ஐயுறவில்லை. ஆனால் பெருமிதமான வெற்றியாகுமா? என முடிவுசெய்து, வெல்கை நன்றென்னும் நலம் காணேன்; நாணுத் தரும் என மொழிந்து வேலோச்சுதலை விடுத்தான். கருமத்தால் நாணுதல் தானே நாணுதல். - திருக். 1011 களிற்றுப்போர் வெற்றி கவின் மிக்கதாக இருந்தும், அதனை வேறலும் தனக்குப் பெருமை தருவதன்று; சிறுமையே தரும் என்று வீரன் கூறினன் ஆகலின் படைச் செருக்கு என்பது ஆயிற்று. பிறரிடைக் காணாப் பெருநிலையன்றோ பெருமிதம் என்பது. தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை எறிதல் இளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன் -தொல். புறத். 5 நச். மேற். என்பது இவண் ஒப்புநோக்கி இன்புறத்தக்கது. (24) 13. படைச் செருக்கு - 8 நேரிசை வெண்பா 25. காலாளாய்க் காலாள் எறியான் களிற்றெருத்தின் மேலாள் எறியான் மிகநாணக் - காளை கருத்தினதே என்று களிறுஎறியான்; அம்ம தருக்கினனே சான்றோர் மகன். - புறத். 1421 (இ-ள்) வீரன் மகனாம் இவ்வீரன் தன்னொடும் ஒத்த காலாளாகக் கருதிக் காலாள் வீரனை வெட்டி வீழ்த்தான்; மிக நாணங்கொள்வனே என்னும் பரிவால் களிற்றின் பிடர்மேல் இருக்கும் வீரனை வெட்டி வீழ்த்தான்; காளைபோலும் வீரனது கட்டளையையே தன் செயலாகக் கொண்டதே களிறு என்று அதனையும் வெட்டி வீழ்த்தான். அம்ம! இவன் மிகப் பெருமிதம் உடையனே காண்! என்றவாறு. இ-து :- சொல்லளவால் கூடத் தன் பேராண்மைக்குக் குறைவருதல் கூடாது என்று மூதின் மாந்தர் கருதுவர் என்பது. (வி-ரை) காலாளையும், களிற்றின் மேலாளையும், களிற்றையும் வெட்டி வீழ்த்தாது விலகிச்சென்ற வீரனை வினாவினாற்கு அவன் உரைத்ததையும் நிகழ்த்தியதையும் அறிந்தான் ஒருவீரன், அப் பெருமிதம் தோன்றப் பிறர்க்கு உரைத்தது இது. வாழையடி வாழையெனச் சான்றோர் வழிவந்தவன் ஆகலின் சான்றோர் மகன் என்றார். சான்றோர் - வீரர். அறிவாலும் பண்பாலும் நிறைந்தாரும், மறமாண்புடையாரும் சான்றோர் எனினும் இவண் மறமாண்பினையுடையாரையே சான்றோர் என்ற தென்க. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே - புறம். 312 என்பதும், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் - திருக். 69 என்பதும், அவ்வாறே, களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே - புறம். 277 என்றும், சிதைந்து வேறாகிய, படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனனே - புறம். 278 என்றும் வருவனவும் சான்றோர் என்பது மறக்குடியினராதலை விளக்கிப் போதரும். வீரர் வழிவழியே வந்து மாண்புறுதலை, இவற்கீத் துண்மதி கள்ளே; சினப்போர் இனக்களிற் றியானை இயல்தேர்க் குருசில் நுந்தை தந்தைக் கிவன்தந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பின் இமையான் தச்சன் அடுத்தெறி குறட்டின் நின்றுமாய்ந் தனனே; மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே - புறம். 290. எனவரும் அருமைத் திருப்பாட்டு இயம்புதலை இனிதுணர்க. காலாளை எறியாமைக்குக் காரணம் காட்டுவானாய்க் காலாளாய்க் காலாள் எறியான் என்றான். தன்னை ஒத் தானொடு பொருவதே போர் ஆயினும், ஒப்பானவனை வெல்லுதலால் உளதாம் பெருமை ஒன்று வீரற்கு உண்டோ என்று கருதினவனாய். இதனைக் கூறினான். அவனும் காலாள். தானும் காலாள்; ஒரு காலாள் மற்றொரு காலாளை வெல்லு தலால் காணும் பெருமை யாது என்னும் துணிவால் உரைத்தான் என்க. அன்றியும் தன்னொடு ஒப்பப் போரிடத்தக்க முழுஆள் ஆகக் கருத மாட்டாமல், கால் ஆள் ஆகக் கருதினான் ஆகலின் எறியான் என்றுமாம். இனிக் களிற்றெருத்தின் மேலாளை ஏன் எறிந்திலன் என்பதைக் காட்டுவானாய் மிகநாண என்றான். தான் காலாளாக இருந்து கொண்டு, களிற்றின்மேல் இருப்பானை வெட்டி வீழ்த்தினால் அவனுக்கு எத்தகைய இழிவு உண்டாம்? அவ் விழிவுக்கு - நாணுதலுக்கு - அவனை இடமாக்கிக் கொள்ளும் வெற்றியைச் சான்றோர் மதியார்; ஆகலின், மிகநாணக் களிற்றெருத்தின் மேலாள் எறியான் என்றான். இனி யானையையேனும் வீழ்த்தலாமே எனின், அவ்யானை தன் கருத்தின்படி என்னைத் தாக்க வருகின்றதோ எனின் இன்று; அவ் யானை எருத்தின்மேல் இருந்து ஏவுவான் கருத்தின் படியே என்மேல் வருகின்றது; ஆகலின் ஏவுவானை விடுத்து அம்பை நோவதுபோல இவனை விடுத்து இக் களிற்றை எறிதல் பொருந்தாது என்பானாகக், காளை, கருத்தினதே என்று களிறு எறியான் என்றான். இவை ஒன்றின் ஒன்று உயர்ந்த வீறுகோள் ஆகும். சான்றோர் மகனாம் சான்றோன் ஆகிய இவனுக்கு அன்றிப் பிறர்க்கு இஃது இயையாமையின் படைச் செருக்கு ஆயிற்று என்க. அம்ம : வியப்புப் பொருள் தரும் ஓர் இடைச் சொல். இதோ ஒரு வியப்பைக் கேளுங்கள் என்றுமாம். அம்ம கேட்பிக்கும் என்றாராகலின் தொல். இடை. 28. களிற்றை எறியாமையை முன்னைப் பாட்டுடன் (25) பொருத்திக் கண்டு கொள்க. 14. எயில் காத்தல் - 1 பகைவர் மதிலை முற்றுகை இட்ட காலத்து, அம்மதிலுக்கு உரியவர் மதில் சிதையாவாறும், அதனுள் பகைவர் புகாவாறும் காத்தல் எயில் காத்தலாம். எயில் - மதில். மதிலைக் காப்பவர் நொச்சிப்பூச் சூடுவராகலின் இது நொச்சி எனப்பெறும். நொச்சி மதில் காத்தல் நேரிசை யாசிரியப்பா 26. பல்சான் றீரே பல்சான் றீரே வீழ்ந்த புரிசை சேர்ந்த ஞாயில் கணையில் தூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லல் மூதூர்ப் பல்சான் றீரே; பலநாள் வருந்தி இளையரும் முதியரும் நன்னுதல் மகளிரும் இன்னுங்கண் டுவப்ப, யாமங் கொள்பரும் ஒழிய, மேனாள் கொல்படை மொய்த்த குன்றுயிர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த திருந்துவேல் விடலை, காப்பமைந் தனனே. -புறத். 1342. (இ -ள்) பல அமைந்த குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்களை யுடையீர், பகைவரால் வீழ்ந்துபட்ட மதிலைச் சேர்ந்த ஞாயிலையும், கணையால் மேடுபட்டுக் கன்று மேய் விடமாகிய அகழையும் உடைய வளமான பழைய ஊரின் பல அமைந்த குணங்களை யுடையீர், பலநாட்களாக வருந்தி இளையவரும் முதியவரும் நல்ல நெற்றியையுடைய மகளிரும் இப்பொழுதும் கண்டு மகிழுமாறு யாமக்காவல் புரிவாரும் அக்காவல் ஒழிய, முன்னாள் போரில், கொல்லும் படைக் கலன்கள் மொய்த்தலால் அமைந்த குன்றமென்ன உயர்ந்த புகழ்வாய்ந்த போர்ப்புண்ணை, நெய் தோய்க்கப்பெற்ற பஞ்சினால் புதைத்து மூடி, மெல்லெனக் கரிய கொத்துகளையுடைய நொச்சிமாலையை அணிந்த செவ்விய வேற்படையைக் கொண்ட காளை, காவல் கடன் நீங்கானாக அமைந்தனன் என்றவாறு. இ - து: - விடலை காப்பு அமைந்தான்; அதனால் அஞ்சு தக்கதொன்றும் இன்று என்று அவன் காவன் மாண்பு உரைத்தது. (வி-ரை) சால்பு, அமைந்த குணங்களை யுடைமை. பல அமைந்த குணங்களை யுடையராகலின் பல்சான்றீர் என்றார். சான்றோர்க்கமைந்த அருங்குணங்கள் அளவிறந்தன ஆயினும், அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் ஐந்தனையும் சிறப்பாகக் குறிப்பார்; இவற்றுள் ஏனைய பலவும் இயைந்து நடக்குமாகலின். அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் பூன்றிய தூண் -திருக்.983 என்பது வள்ளுவம். பல்சான் றீரே! பல்சான்றீரே என்பது விளியடுக்கு. புறத்தினும் இவ்வாறு கூறினார் (195, 246, 301) புரிசையாவது மதில். புரியாவது நகர்; அதனைச் சூழ்ந்த மதில் புரிசை ஆயிற்று. ஞாயில் என்பது சூட்டு. அஃது அம்பு எய்து மறைந்து கோடற்கு வாய்ப்பாக மதிற்கண் செய்து வைக்கப் பெற்ற ஓர் உறுப்பு. ஏப்புழை என்பது அம்பு செலுத்தும் துளை; அம்பைச் செலுத்தி மறைந்துகொள்ளும் உறுப்பு சூட்டு. இதனை ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையும் சூட்டென்பார் நச்சினார்க்கினியர். (சீவ. 105 குருவித்தலை என்பார் அடியார்க்கு நல்லார். (சிலப். 15: 217) அவரே, இதனை ஏவறை என்பாரும் உளர் என்பார். புரிசையொடு ஞாயில் பொருந்தியமையும் கிடங்கு சூழ்ந்தமையும், கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிரைஞாயில் அம்புடை ஆரெயில் - பதிற் 20 என்றும், உயர்ந்தோங்கிய நிரைப்புதவின் நெடுமதில் நிரைஞாயில் அம்புமிழ் அயிலருப்பத்து - மதுரைக். 65 -7 என்றும் வரூஉம் சங்கச் சான்றோர் வாக்குகளால் அறியலாம். ஞாயில் எண்ணற்றிருந்தன என்பதை நிரைஞாயில் என இம் மேற்கோள் பாக்கள் சுட்டுதலானும், வான்தோய் வன்ன புரிசை விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில் - புறம். 21 எனக் கானப்பேரெயில் கூறப்பெறுதலானும் கொள்க. கணைகள் மாரியெனப் பொழிந்து தாக்குதலால் மதில் சிதைந்து வீழ்ந்துபட்டுக் கிடங்கு (அகழ்) தூர்ந்துபட்டது. அதன்கண் புன்முளைத்துக் கன்று மேய்வனவாயின. ஆகலின், கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கு என்றார். ï¤Jiz mÊghLf£»ilnaí« j‹ åW« tsik í« F‹whJ ËW áw¤jÈ‹ “kšyš _ö®! என்றார். இஃது எள்ளலாக அமையும் எனின், பல்சான்றோரை விளித்துக் கூறியமையானும், திருந்துவேல் விடலை காப்பின் மீப்புகழ் கூறலானும் வீறு வெளிப்படக் கூறலன்றி எள்ளலன்றாம். கண்டுவப்ப என்பதை இளையரும், முதியரும், மகளிரும் என்பாரொடும் கூட்டுக. இளையர் இவண் இளைஞராய புதல்வரைக் குறித்தது. என்னெனின், பொருகளம் சேறற்கியலா முதியருடனும், மகளிருடனும் இணைத்துக் கூறினார் ஆகலின். மற்று யான் கண்டனையர் என் இளையரும் என்பார் போன்றவர் எனின், அவரும் பொருகளம் சேறற்கு முந்துவர் எனவும், வானரைக் கூந்தல் முதியோள் சிறுவனும் (புறம். 277) முளரி மருங்கின் முதியோள் சிறுவனும் (புறம். 278) படையழித்துப் பாழி கொண்ட பெருமைக்குரிய எனவும், தெளிந்து வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇச் செருமுகம் நோக்கிச் செல்க என விடுக்கத்தக்க (புறம். 279) நிலையும் வாராக் குறியிறைப் புதல்வர் (குறுந். 394) இவர் என்க. யாமங் கொள்பவராவார் யாமங்காவலர். அவர் இராக் காவற்கு நெருக்கமாக விளக்குகளை நெடுகிலும் நாட்டுவர் என்றும் (அகம். 114) யாமந்தோறும் பறையறைவர் என்றும் (குறுந். 375) வாயில்களைக் காவல் ஓம்புக என்று மணி நா ஓங்கி அசைப்பர் என்றும் (நற். 132) விளக்கினைக் கைக்கண் கொண்டு சுற்றிவருவர் என்றும் (புறம். 37) சான்றோர் கூறுவர். கண்ணுறங்காக் கடப்பாடு மேற்கொண்ட அவ் யாமங்காவலரும், விடலை காப்பமைந்த சீர்மை யறிந்து தம் காவற்கடைக்கு ஊறு இன்று என்னும் துணிவால் கடனோய்ந்தனர் என்பாராய். யாமங் கொள்பரும் ஒழிய என்றார். படையின் ஊற்றமும், ஏவியோன் ஆற்றலும் ஒருங்குணரு மாறு கொல்படை என்றார். திண்ணம் அழிந்து பாடுறுத்தும் என்னும் தெளிவுடைமையால். அப்படைக்கும் அழியா அட லாண்மை யுடையான் விடலை என அவன் வீறுகோள் விளம்பினார். கொல்படையும் ஒன்று இரண்டு என விரல்விட்டு எண்ணுமாறு இல்லாமல் ஒருபொழுதில் எண்ணற்றுத்தைத்தன ஆகலின் மொய்த்த என்றார். விழுப்புண் ஆவது விழுப்பத்திற்கு இடமாய புண், விழுப்ப மாவது அழிந்துபடாப் புகழ். அதன் பெருமையை எல்லை யிட்டுக் காட்டுவாராய்க் குன்றுயர் விழுப்புண் என்றார், மாணப் பெருமைக்கு மலையை உவமைப்படுத்துவராகலானும், மலைமேல் இட்ட விளக்கென நாடறிந்த பெருமையது ஆகலானும்! புண்ணை ஆற்றுதற்கு மருந்துநெய் தோய்த்த பஞ்சை மெல்லெனச் சேர்த்திக் கட்டுதல் உண்மையின், நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையென என்றார். இதன் விளக்கத்தையும் மேற்கோளையும் இத் தகடூர் யாத்திரைப் பதினைந்தாம் பாடல் உரைக்கண் கண்டு கொள்க. கருங்குரல் நொச்சி, கரிய கொத்துக்களையுடைய நொச்சி, யாறு, கால் முதலிய நீர்வளப் பகுதிகளில் செழிப்புற வளரும் ஆகலின், நீர் அற வறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சி என்றார் புறத்தினும்; (271) எயில் காப்பார் சூடும் பூ அஃது ஆகலின் நொச்சி மிலைந்த என்றார். விடலை, காளைப் பருவத்தினன். விடலை படைமடம் படாப் பண்பினன் ஆகலின் அவன் வேலைத் திருந்துவேல் என்றார். படைமடம் படாமை யாவது போர் நெறி தவறாது பொருதல் என்க. இதனை, ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என அறத்தாறு நுவலும் பூட்கை என்னும் புறப்பாடலாலும் (9), படைமடம் என்றது வீரர் அல்லாதார் மேலும், முது கிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார் மேலும் செல்லுதல் என்னும் புறநானூற்றுப் பழைய உரையாலும் (142) அறிக. பல்சான்றீரே விடலை இன்னுங் கண்டு உவப்ப, ஒழிய, காப்பமைந்தனன் என்று இயைக்க. யாப்பமைதி பல்சான் றீரே பல்சான் றீரே என ஓரடிக்கண் இருகால் அடுக்கி விளித்தலும், மீண்டும் விளக்கியுரைத்து அவரை விளித்தலும் ஒருவகை யாப்புறவாகும். பல்சான் றீரே பல்சான் றீரே கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள் பயனில் மூப்பின் பல்சான் றீரே (195) என்றும், பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே (246) என்றும், பல்சான் றீரே பல்சான் றீரே குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே (301) என்றும் புறப்பாடல்களில் இவ்வமைதி போற்றப்பட்டிருத்தல் காண்க. இத் தகடூர் யாத்திரையுள், அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே (33) எற்கண் டறிகோ எற்கண் டறிகோ (42) கலிமா னோயே கலிமா னோயே (18) வாதுவல் வயிறே வாதுவல் வயிறே (41) வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் (37) என்று - இவ்வியாப்புறவினும், வேறுபட்டும் - அடுக்கி வந்தமையை அறிந்து கொள்க. 14. எயில் காத்தல் - 2 நேரிசை ஆசிரியப்பா 27. இவனே, பொறிவரி அன்ன பொங்குளை வயமான் மேலோன்; யாரென வினவின் தோலா உரனுடை யுள்ளத்(து) ஒன்னார் உட்கும் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே; அவனே யெம்மிறை; ஈதவன் மாவே; கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே யாவரும், குறுகல் ஓம்புமின் குறைநாள் மறவீர்! நெருநல் எல்லி நிரைவரு கடுந்திறற் பருமத யானை பதைக்க நூறி அடுகளத் தொழிந்தோன் தம்பி; தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை அச்சம் அறியான் ஆரணங் கினனே. - புறத். 1343 (இ. Ÿ) ït‹fh©: òŸËfisíila t©Lngh‹w vGªJ mirí« ãliuíila FâiuÆ‹ nknyh‹; ‘ït‹ aht‹? என வினவினீர் ஆயின், தோல்வி கண்டறியாத வலிமையமைந்த உள்ளத்தனாய்ப், பகைவர் அஞ்சும் சுரை அமைந்த நெடியவேற்படையை ஒளிமிக்க அணிகலம் எனக் கொண்டோன்; அவனே காண்; எம் தலைவன்; இஃது அவன் குதிரையாம்; செற்றம் அமைந்த உள்ளம் பற்றுதலால் இவண் வந்தனன். வாணாள் குறைந்த வீரர்களே, நுங்களுள் எவரும் அவனைத் தலைப்படாது அகலுங்கள்; நேற்றைப் பகலில் முறைமுறையே வந்த கடிய வலிமை யமைந்த மனம் செருக்கி பெரிய யானைகள் பதைப்புண்ணுமாறு அழித்து, அக் களத் திலே இறந்த வீரன் தம்பின்; தொடுத்த கழலையும், அணிந்த நொச்சிமாலையையும் உடைய பீடுடையாளன் அச்சம் என்னும் ஒருபொருள் உண்டாதலை அறியான்; எவரும் உய்ந்து போகா வண்ணம் ஒழிப்பான் காண் என்றவாறு. இ - து: - மறவீர், இவனே, மேலோன்; சுடர்ப்பூணோன்; அவனே எம்மிறை; கதுவ வந்தனன்; அச்சம் அறியான்; ஆரணங்கினன்; குறுகல் ஓம்புமின் என்பது. ( வி. ரை) முன்னைநாட் போரிலே தன் முன்னோனை இழந்தானாகிய தலைமை வீரனைக் கண்டு அவன் படைவீரன் ஒருவன் பகைப்படைவீரர் கேட்குமாறு உரைத்தது. தம் தலைவனுக்குப் பகையாகிய வீரனுக்கு அணித்தே நின்று இஃதுரைத்தனர் ஆகலின் இவனே என்றார். தம் தலைவனை போர்நோக்கி விரைந்து தொலைநின்று வரக் கண்டார். ஆகலின் பிற்பட அவனே என்றார். அவ்வாறு சொல்லளவில் வல்விரைந்து வரக்கண்டனர் ஆகலின் அவன் இவர்ந்த குதிரையை ஈதே என்றார். இதனால் அவன்றன் கறுவும், கடுவிரைவும் குறித்தவாறு. குதிரையின் விரைவுக்குக் காற்றையும் கணையையும் கூறுவர். இவர் வண்டினைக் கூறினார். பொறி வரி யாவது புள்ளிகளையுடைய வண்டு. இனிப் பொறி விளக்கமும் ஆம். (சிந். நாமகள். 15. நச்.) பொறிவரிக்கு ஒப்பிட்டார் எனினும் ஆம், வண்டு தேன் தேர்ந்து உண்ணுங்கால் எழுந்தும் படிந்தும் இமிரும் ஆகலின். குருகு பறந்துன்ன வெள்ளை என்பது ஒரு பழம் பாட்டு (புறத்திரட்டு. 1387). இவனே என அப்படைத்தலைவன் வீரர் இடையே அவனைப்பற்றி விரித்துரைத்தல் தகுமோ எனின் தகும் என்க. தான் முந்தைநாட் கண்ட காட்சியும், இன்று அதன் விளைவாக நிகழவிருக்கும் மாட்சியும் தேர்ந்து உரைக்கும் வீறு தன்கண் உண்மையால் உரைத்தான். மாறுகொண்ட இருவர் நிலையை உரைக்குங்கால் இம் மரபுண்டு என்பதைப் புறப்பாடல்கள் தெளிவிக்கின்றன. முன்னிலையானை நீயே என விளித்து, அவனியல்புரைத்துப் பின்னே யாமே என்றோ அவனே என்றோ அவரே என்றோ கிளத்தலை ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், காரிக்கண்ணனார், மதுரைக் குமரனார் ஆயோர் முறையே கிள்ளி வளவனையும் (40, 46) சோழன் குராப் பள்ளித்துஞ்சிய பெருந் திருமாவளவனையும் (58) ஏனாதி திருக்கிள்ளியையும் (167) பாடிய பாடல்களால் அறிக. தோலா- தோலாத (தோற்காத) என்பதன் தொகுத்தல் பிறர்க்குத் தோல்வி கண்டறியாத வலிமையைத் தோலாஉரன் என்றார். சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் என்பதும். அந் நூற்கண், தோலா நாவிற் சுச்சுதன் (308) ஆர்க்குந் தோலாதாய் (1473) தோலா மனமலர்ந்திலங்கு செய்கை (1790) என மூன்றிடங்களில் ஆளப்பட்டுள்ள அருந்தொடர்களும் நோக்கத்தக்கன. வேற்கு, ஒன்னார் உட்கும் சுரை அமைநெடு என்பவை அடைமொழிகள். ஒன்னார் என்பார் தன் இயல்போடு ஒன்றா தார்; அவராவார் பகைவர். ஒன்றியவர் உட்கும் வேலாயின் கொடுங்கோல் வழிப்பட்டதாம். உட்கும் - அச்சத்தால் நடுங்கச் செய்யும். உருஉட்காகும் என்பது தொல்காப்பியம்; (785). நடுக்கும் வலியும் தளர்வும் நீக்குவான் அமர்ந்திருத்தலை உட் கார்தல் (உட்கு ஆர்தல்) என்று வழங்குதலுண்மை கருதுக. சுரையாவது உள்துளை. அது கோலுக்கும் கருவிக்கும் இடைப் பட இரும்பால் அமைக்கப் பெற்ற பொருத்துவாய். நெடுவேல் ஆகலின் குறிப்பால் அஃதுடையானின் நெடுமை அறிவுறுத்தார். சுடர்ப்பூண்- ஒளிமிக்க அணிகலம். இனி வேல் என்பதை வேல்பட்ட புண்ணுக்கு ஆகுபெயராக்கி விழுப்புண்ணை அணி கலமாகக் கொண்டோன் என்று பொருள் கூறினும் ஆம். புண்ணோ புகழின் கண்ணே என்றும் (மனோன்.) விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள், வைக்கும் தன் நாளை எடுத்து என்றும் (திருக். 776) வருவனவற்றால் வீரர் விழுப் புண்ணை விரும்புதல் அறிக. எல்லாத் தகுதிகளிலும் தமக்குத் தலைவனாம் தகுதியே சிறந்து நிற்றலின் எம்இறை என ஆர்வத்தால் முந்துரைத்தான். அவன் குறிப்பறிந்து கடனாற்றுதல் வல்ல மாவாகலின் ஈதவன் மாவே என்றான். அவன் வந்த விரைவுக்குக் காரணம் காட்டு வானாகக், கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே என்றான். கொல்லுதற்குக் கறுவிய நெஞ்சம் கறுவுகொள் நெஞ்சம்; இதனைச், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சம் என்பார் நக்கீரனார். (திருமுருகு. 99 -100) குறைநாள் மறவீர், குறுகல் ஓம்புமின் என இயைக்க. குறுகல் ஓம்புமின் போகாதேயுங்கள். கறுவினைக் கூறிக் குறுகல் ஓம்புமின் என்றான், அனைவர் நோக்கையும் தன்பால் ஈர்க்கும் சொல்வன்மையால். குறுகின் வாழ்நாள் இன்னே முடிதல் உறுதியாகலின் குறைநாள் மறவீர் என்று விளித்தான். வருபவன் கொண்ட கறுவினை விளக்குவானாக, நேற்றைப் பகலில் கூட்டமாக வந்த பெருவலி வாய்ந்த பருத்துச் செருக்கிய யானைகள் துடிக்க அழிபாடு செய்து, அக்களத்திலேயே தன் ஆருயிரை விட்டோன் ஆகிய வீரனின் தம்பி என்பதை, நெருநல் எல்லி நிரைவரு கடுந்திறல் பருமத யானை பதைக்க நூறி அடுகளத் தொழிந்தோன் தம்பி என்றான். இவனும் தன்னுயிர் போற்றி அமையானாய்க் களம்புக்கு எதிர்த்தோரை எல்லாம் கலக்கி அழிப்பான் என்று உரைத் தானாம். நூறி- அழித்து (பதிற். 69,88) நூறு படச் செய்தலும் - துகளாக்குதலும் ஆம். நீறு என்பது நீற்றப்படுவது. நூறு என்பது நொறுக்கப் படுவது. கோட்டுநூறு திருநீறு என்பவை அறிக. தெரியல் - மாலை. தெரிந்தெடுத்த மலர்களால் கட்டப்பெற்றது ஆகலின்; காரணப்பொருட்டு. அச்சமே கீழ்களது ஆசாரம் ஆகலின் இம் மேலோன் அச்சம் அறியான் எனப்பெற்றான். அழிவு நேர்தல் உறுதிப் பாடு ஆகலின், ஆரணங்கினன் என எதிர்காலத்தை இறந்த காலமாகக் குறித்தான். (27) 15. தானைமறம் - 1 தானையாவது படை; படை வீரர்தம் ஆண்மைச் செயலைக் கூறுவது தானைமறம் ஆகும். பொரஎதிர்ந்த இருவகைப் படைகளும் பொருது ஒருங்கே மடியாமை விலக்கிய உயர்வையும், நிலங்காவல்கொண்ட வேந்தற்கு உறுதிகூறும் தன்மையையும், பகைவர் அழிவு பாட்டுக்கு நொந்து உரைக்கும் இரங்குதலையும் இத் தானை மறம் கூறும் என்பார் புறப்பொருள் வெண்பாமாலையுடையார் (129-131). இவற்றுள் இறுதிப் பொருளை உறுதிப் பொருளாகக் கூறுவது வரும் யாத்திரைப் பாட்டு. பலவிகற்பப் பஃறொடை வெண்பா 28. கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி ஏர்தரும் தோள்நோக்கித் - தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும். - புறத். 1370 (இ-ள்) கறுத்து விளங்கும் இளந்தாடியினனும், இடுக்கணுக்கு அஞ்சாதவனும் ஆகிய வீரன் தன் மாலையைத் தழுவி அழகு தரும் தோள்களை நோக்கி, தூசிப்படைக்குப் பின்னே களத்துள் நிற்கும் யானைத்திரளை நோக்கி, யானைத்திரளின் பின்னே நிற்கும் தேர்த்திரளை நோக்கி அதன்மேல் தான் இவர்ந்துள்ள தன் குதிரையினை நோக்கி, தன்மேல் படவரும் கூர்மையான கணையை நோக்கி, தன் கையகத்து ஒளிரும் வேலைநோக்கி, இறுதியாகக் கிணைப்பறை கொட்டுவானை நோக்கி நகை செய்வான் என்றவாறு. இ-து :- அஞ்சாத வீரன், பகையை அழித்துக் கொள்ளை கொண்ட பொருளைக் கிணைப் பறை கொட்டுவோனுக்கு வழங்குவேன் என மகிழ்வான் என்பது. (வி-ரை) காளை, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி, நோக்கி நகும் என இயைக்க. தோளாண்மையே வேலாண்மை, வாளாண்மை முதலிய வற்றுக்கு உறையுள் ஆகலின் முதற்கண் தோள் நோக்கினான். தன்னை எதிர்த்து நிற்பார் யானைப்படை வீரரும், தேர்ப்படை வீரரும் ஆகலின் அவரை நோக்கிய அவ்வளவில் தான் ஏறி யிருந்த அடல்மிக்க குதிரையை நோக்கினான். மெய்ம்மறை துளைக்க மாட்டாமல் பகைவரால் ஏவப்பட்டு அழியும் கணையை நோக்கியவன், தான் ஏவும் வேலுக்கு எவனும் தப்பான் என்னும் துணிவால் அதனை நோக்கினான். இறுதிக்கண் கிணைவனை நோக்கினான், இன்று இக் களத்தில் நீ பெற விருக்கும் கொண்டி (கொள்ளை) பெரிது என்பதைக் குறித் தானாக. பொருகளம் சேருமுன்னரே இவற்கு இன்னது தருவேன் என்று கூறி அவ்வாறே களத்திடை வென்று தரும் வழக்குண்மையால் கிணைவனுக்கு தரக்குறித்தது தருவன் என்பது நேர நகைத்தான் என்க. இதனை மேல், கடிகமழ் உவகைக் கைவல் காட்சியெம் துடியவற் கவனரை அறுவை ஈந்தனனே என வருவதால் (36) தெளிக. அணல் - தாடி; தாடி என்பதனை, இரலை மருப்பில் திரிந்து மறிந்து வீழ்தாடி எனக் கலித்தொகை (15) கூறுவதால் மீசையைக் குறிக்கும் என்பதை உணரலாம். அதன் கருமையையும் இளந்தன்மையையும் பிறரும் மையணல் புல்லணல் என்று விளக்கினார். (புறம். 83, 258, 310). நாட்பு - போர்க்களம். ஞாட்பு என்பதும் அது. ஞாட்பு என்னும் சொல்லைக் களவழி நாற்பது பயில வழங்கும் (2, 11, 17, 28, 34, 39) ஞயம் நயம் என்றும் ஞமலி நமலி என்றும் ஞமன் நமன் என்றும் திரிந்து வழங்கினாற்போல ஞாட்பு நாட்பு ஆயிற்று என்க. இத்திரிபும் தொன்மையது என்பதை, விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின் என்னும் பதிற்றுப் பத்தால் (45) உணரலாம். முதற்கண் வந்த தார் மாலையையும், பின்னைவந்த தார் தூசிப்படை (முற்படை) யையும் குறிக்கும். தார் - மார்பில் அணிந்த மாலை. கண்ணி - தலையிற் சூடும் பூ. கண்ணி கார் நறும் கொன்றை காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை என்னும் பாரதம் பாடிய பெருந்தேவனார் வாக்கான் (புறம். கடவுள் வாழ்த்து) இதனை அறிக. முன்னோனைக் கொன்றவனைப் பின்னோன் தான் கொல்லச் சூள் கொண்டு வருதலை, நெருநை, எம்முற் றப்பியோன் தம்பியோ டொராங்கு, நாளைச் செய்குவன் அமரெனக் கூறிப் புன்வயி றருத்தலும் செல்லான் பன்மான் கடவும் என்ப பெரிதே என்னும் அரிசில்கிழார் பாட்டால் அறியலாம் (புறம். 304) இஃது ஒரு வீரன் செயல் மாண்பைக் கண்டோர் வியந்து உரைத்ததாகும். நகைவகை நான்கனுள் இஃது எள்ளல் நகையாம். மேற்கோள்: - இத் தகடூர் யாத்திரையை வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை என்பதற்கு (தொல். புறத். *8) மேற்கோள் காட்டுகிறார் நச்சினார்க்கினியர். அன்றியும் இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது என்னும் அரிய குறிப்பு ஒன்றையும் பொறித்துள்ளர். அதனால் இப் பாட்டை அருளியவர் பொன்முடியார் என்பது போதரும். ஆங்கவனைக் கண்டு என்பதில் விளக்கம் இன்று எனினும், பொருளின்று உய்த்த பேராண்பக்கம் என்னும் இதற்கு முற்படி வந்த துறைக்கு மெய்ம்மலி மனத்தின் என்னும் தகடூர் யாத்திரைப் பாடலை மேற்கோள் காட்டி, இஃது அதியமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்று எழுதியிருப்பதால் ஆங்கு அவன் என்னும் சுட்டு சேரமானைக் குறிக்கும் என்பது போதரும். இச் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்க. (28) 15. தானை மறம் - 2 நேரிசை ஆசிரியப்பா இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மறவிர் கண்ணிமைப் பளவில் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென வேந்தூர் யானைக் கல்லது ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே. - புறத். 1371 (இ -ள்) புகழ் நிரம்பிய வீரர்களே, எள்ளுதலை ஒழிமின் ; கண்ணை இமைக்கும் பொழுதுக்குள் ஏவிய கணை கடிது செல்லுமாப் போலப் பண்ணுதல் அமைந்த குதிரையின் சிறந்த போர்த் தன்மையைப் புகழ்ந்து இரவுப் பொழுதின்கண் இவண் வந்தோன் ஆரவாரம் மிகத் தன் விளங்கிய இலைவடிவ வேலை வேந்தன் ஏறி இவர்ந்து வரும் யானையின் மேலே அல்லாமல் பிற யானைகள் மேல் ஏவுதற்கு ஏந்தான் போலும் என்றவாறு. இ-து :- மறவிர், படர்தந்தோன் வேந்தன் ஊரும் யானை மேல் வேல் ஏவுதலையே குறிக் கொண்டான் என்பது. (வி-ரை) இதுவும் மானவீரன் ஒருவனின் மாண்பினைக் கண்டோர் உரைத்ததேயாம். மறவிர், எல்லிடைப் படர் தந்தோன், வேல், வேந்தூர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான் என இயைக்க. இவனால் என்ன செய்தற்கு இயலும் என்று மறவர்கள் இகழ்ந்தனர் ஆகலின் இகழ்தலை ஓம்புமின் என்றான். நீங்கள் புகழ்மீக் கூர்ந்தவர்களே ஆயினும் கூட, ஒருவன் உண்மை யாற்றலை உணராமல் உரைப்பது தகவன்றாம் என உட் கொண்டு, மறவர்க்குப் புகழ்சால் என அடைமொழி வழங் கினான். ஔவையார், போற்றுமின் மறவிர் சாற்றுது நும்மை ஊர்க்குறு மக்கள் ஆடக் கலங்கும் தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத் தன்ன என்னை நுண்பல் கருமம் நினையா(து) இளையனென் றிகழிற் பெறலரி தாமே என்று அதியமான் ஆற்றலை உணரார்முன் உணர உரைத்தமை இவண் நோக்கத் தக்கதாம். கண்ணை இமைத்து மூடுமுன் குறியிற்றைக்கும் அம்பு போல விரையும் குதிரை ஆகலின், கண்ணிமைப் பளவில் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவி என்றான். பண்ணமை என்றது பண்ணுதல் அமைந்த என்பது. அஃதாவது பக்கரை (சுவடு) கலணை (பருமம்) கலினம் (வாய்க்கருவி) குசைக்கயிறு, சம்மட்டி, குஞ்சம் முதலியவற்றை அமைத்தல். பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்ட நடை என்பார் அருணகிரியார். படர்தருதல், படர்தல்; புரவிப் பண்பு பாராட்டுதல் - சூதிரையின் போர்ப் பண்புகளைப் புகழ்ந்து பாராட்டுதல். எல்லிடைப் படர் தந்தோன் - இரவுப்பொழுது ஆயிற்று. ஆகலின் போர் ஒழிந்து இவண்வந்து தங்கியோன் என்றான் வேந்தன் ஏறி இவர்ந்த யானையை வீழ்த்துதலே குறியாகக் கொண்டனன் ஆகலின், வேந்தூர் யானைக்கு அல்லது ஏந்துவன் போலான் என்றான். இந் நூலுடையார் இதனை, ஒட்டிய, தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமின் அவன் பிறிதெறி யலனே என்று மேலே கூறுவதையும் (31) கறையடி யானைக் கல்லது உறைகழிப் பழியா வேலோன் என்றும், சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் வேந்தூர் யானை ஏந்துமுகத் ததுவே என்றும் புறப்பாடல்கள் கூறுவதையும் (323, 308) காண்க அன்றியும் இத் தகடூர் யாத்திரைப் பாட்டுடன், பலமென் றிகழ்தல் ஓம்புமின்; உதுக்காண் நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்லது ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே என்னும் ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டுப் பகுதி (301) ஒப்பிட்டு நோக்கி உவகை கூரத்தக்கதாம். வேலின் குத்துவாய்ப்புறம் ஆல், அரசு, மா முதலிய இலை வடிவில் செய்யப் பெறுவது ஆகலானும், ஒளியுடையது ஆகலானும் இலங்கிலை வேல் என்றான். களத்துச் சென்று பயி லாமையால் ஒளியுடைய தாயிற்றன்று; கூர்மைப் படுத்துதற்குக் களத்திடைப் பட்ட களிற்றின் தந்தத்தைத் தீட்டு பலகையாகக் கொண்டு தீட்டுவது வீரர்தம் ஆண்மைச் செயல் ஆகலின் அவ்வாறு செய்தமையாற் போலும் இலங்குவதாயிற்று என்க. ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்து தலைப் புறப்பாட்டும் (284) எஃகம், யானை மணி மருப்பிடையிட்டு விண்ணிடம் மள்ளர் கொள்ள மிறைக் கொளீ இத் திருத்துதலைச் சிந்தாமணியும் (284) செப்பும். குறிக்கோள் ஒன்று உடையன் ஆகலின் வேந்தூர் யானையை வீழ்த்துவதே நோக்காகச் செல்வான். பிறரும் அவர்தம் யானை, குதிரை பிறவும் அழிந்துபடச் செய்யான் என்று அவன் ஒரு நோக்கை உரைத்தான். யானையை வீழ்த்துதல் குறிப்பாகலின் அவ் யானைமேல் இவர்ந்த வேந்தனை வீழ்த்து தல் கூறாமலே அமையும். (29) 15. தானை மறம் - 3 நேரிசை ஆசிரியப்பா அதிராது அற்றம் நோக்கு ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவின் இளையோன் இன்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே; அவன்கை ஒண்படை இகழ்தல் ஓம்புமின்; விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகினன்; இவன்கைத் திண்கூர் எஃகம் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டே. - புறத். 1372 (இ-ள்) அதிர்ச்சி சிறிதும் இன்றி, வாய்த்த பொழுதினை நோக்கும் ஞாயிலின் உள்ளிடத்தே பாயும் ஞாயிற்று ஒளியெனச் சுடர்விட்டு விளங்கும் ஒளிமிக்க வேலொடு நெருநல் எதிரிட்ட வீரத்திருவினையுடைய இளைய வீரன், இன்றும் தன் குதிரை விளக்கமெய்த வந்து நின்றனன்; இவன் கையின் வலிய வேல் திறந்து மடைசெய்தலால் புண்கூர்ந்த யானை ஒழியாது அரற்றும் ஒலியினைக் கேட்டு, விழுமிய சிறப்பமைந்த விண்ணளாவும் நெடுங்குடையுடைய வேந்தனும் கண்ணிமை மூடானாக இரவெல்லாம் உழன்றனன்; ஆகலின் இவன் கையின்கண் உள்ள ஒளிமிக்க வேற்படையின் இகழாது ஒழிமின் என்றவாறு. இ-து:- நெருநல் நம் யானையைப் புண்படுத்திய இளைய வீரன் இன்றும் வந்தனன்; இகழேற்க என்று அவன் வீர மேம்பாடு சொல்லியது. (வி-ரை) வேற்படை வீரன் ஒருவன் மேம்பாட்டைக் கண்டோர், தம் படையிடைக் கூறியது. அற்றம் - பொழுது. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு என்னும் வள்ளுவர் வாக்கும். அற்றத்தில் வெல்வானாக என்னும் சேக்கிழார் வாக்கும் இப் பொருட்டாதல் அறிக. ஞாயில் என்பது எய்துமறையும் சூட்டு ஆகலின் அதிர் வின்றி அம்பு ஏவும் திறலர் என்பதை வெளிப்படுப்பான், அதிராது சுற்றம் நோக்கு ஞாயில் என்றார். ஞாயிலுள்ளே பாயும் கதிர் ஒளியென விளங்கும் வேல் ஆகலின், ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் என்றார். ஒளியாலும் நெடுமையாலும் கதிர், வேலுக்கு ஒப்பாம். இல்நுழை கதிரின் துன்அணுப் புரைய என்று கதிரொளி புகுதலைக் காட்டினார் மணிவாசகர். சுடரின் - இன்: ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள் உருபு. இன், உவமை உருபு எனினும் ஆம். இன்றும் எனவந்த உம்மையால் நெருநலும் என வருவித்துக் கொள்ளப் பெற்றது. நெருநலும், குதிரை தோன்ற வெள்வேலுடன் வந்து நின்றன னாதலும் கொள்க. வீரன் தொலைவின் கண்ணே வரும்பொழுதே சுட்டிக் காட்டினன் ஆகலின், அவன் எனச் சேய்மைச் சுட்டால் குறித்தான். குறிக்கும் அளவையில் விரைந்து வந்து குறுகினன் ஆகலின் இவன் என்றான். இச்சுட்டு விகற்பம் விரைவு காட்ட வேண்டிற்றாம். mt‹if x©gil ïfœjš X«òÄ‹ vd K‰gl, ‘v‹id? என எதிர்நோக்கும் நோக்கமைத்துப், பிற்படக் கரணியம் எடுத்துரைத்தான். சிற்றரவின் குருளையும் பரிய யானையை வருத்தும் கோளுடைத் தாயினாற்போல, இவ்விளைய வீரன் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாமையைச் செய்தனன் என்றான். வேந்தன் விழுப்புண்பட்ட வீரரையும், விலங்கையும் எண்ணிக் கண்படை பெறாது உறைதலை, மின்னவிர், ஓடையொடு பொலிந்த வினை நவில்யானைநீள்திரள்தடக்கைநிலமிசைப்புரளக்களிறுகளம்படுத்தபெருஞ்செய்ஆடவர்ஒளிறுவாள்விழுப்புண்காணியபுறம்போந்து.... நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே என்னும் நெடுநல்வாடையான் அறிந்து கொள்க. யானை புண்ணுற்றுக் குருதி ஒழுக்கிப் பெருகுதலையும், அக் குருதி நீர் மணிநிறக் கழிநீரின் நிறத்தைக் குங்குமக் கலவையாய் மாற்றுதலும், செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல என்னும் பதிற்றுப் பத்தால் (11) விளக்கப் பெறும். யானை புண்ணுறு துன்பம் பொறுக்கலாற்றா நிலையாற் பல்கால் நைந்து பிளிறுதலின் நவில்குரல் என்றார். நவிலல் - கூறியடிப்படல். நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி என்றார் மணிமேகலையினும் (13 : 24). இவண் அடிக்கடி அயாவுயிர்த் தாற்றுதலைக் கொள்க. அதிரா தற்ற நோக்கு மென்றமையால் தன் வீரர் மாண் பும், திருவின் இளையோன் என்றமையால் கண்டாரால் விரும்பப் படும் தோற்றப் பொலிவும் இளமை எழிலும் வீறுமேம்பாடும் உடையான் என எதிரிடுவோன் மாண்பும், வேந்தன் கண்படை பெறாஅன் என்றமையால் மறமீக்கூர்ந்த மன்னன் உள்ளத்தில் அறமீக்கூர்ந்த அருள் விளங்கும் ஏற்றமும் இன்ன பிறவும் குறித்தான். இகழ்தல் - நகைத்து இகழ்தலாம் ; இளமை கரணிய மாக நகை பிறத்தல் கூடுமாகலின், திருவின் இளையோன் எனச் சுட்டி நகை ஒழித்து இகழாமைப் படுத்தான், இளையன் இவனென உளையக் கூறுதல் வீரர்க் குண்மையாகலின் (புறம். 72) (30) 15. தானை மறம் - 4 நேரிசை ஆசிரியப்பா 31. கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே; கையது வேலே; சுட்டி யதுவும் களிறே; ஒட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. - புறத். 1373. (இ-ள்) கரும் புள் போன்ற காரிக் குதிரையின் மேலே இவர்ந்த இவ்வீரன், காலில் கட்டியது கழல் ஒன்றுமேயாம்; கையில் எடுத்தது வேல் ஒன்றுமேயாம்; விரலால் சுட்டிக் காட்டியதும் வேந்தன் ஊரும் யானை ஒன்றுமேயாம்; ஆகலின் மறவீர், செறிந்துள்ள படையனைத்தையும் காத்தலை விடுத்து நம் வேந்தனூரும் யானை ஒன்றனையுமே காத்துக்கொள்ளுங்கள்; அவன் பிறிதொன்றையும் எறியான். இ-து:- வீரன் யானையை அன்றிப் பிறிது எறியலன்; ஆகலின் அதனைக் காமின் எனச் சொல்லியது. (வி-ரை) எதிரிட்டு வரும் வீரன் ஒருவனைக் கண்டு தன் படைவீரர் அஞ்சிக் களமெல்லாம் அடர்த்து நின்றாராக அவரை நோக்கி ஒரு வீரன் உரைத்தது இது. காரியாவது காரிக் குதிரை. கருநிறக் குதிரையும், காளையும் காரி எனப் பெறும். காரிக் குதிரைக்காரி - சிறுபாண். 110 காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையன் கரும்புள்ளொடு காரிக்குதிரை வண்ணத்திற்கும், விரைந்து தாக்கி வெல்லுதற்கும் உவமையாம். கரும் புள்ளாவது கரிக்குருவி. அது வலிய பருந்தினையும் தாக்கி வெல்லுதல் கண்கூடு பகைவர்க்குக் கட்டி போன்ற என்றுமாம். கட்டி - கருநிறக் கட்டி எனக் கொள்ளின் அத்துணைச் சிறப்பின்றாம். காரியின் இடையே புள்ளிகள் வாய்ந்து எழிலூட்டும் அழகை மேலே (35) சிந்தியன்ன சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி என்பார். காலில்தொட்டது, கைக்கண் எடுத்தது எல்லாம் பிற ரொப்பவே செய்தான் எனினும் சுட்டியதில் அம்மவோ! இவன் ஒரு தனி வீறுகோளாளனேயாம் என்பாராய், தொட்டது கழலே, கையது வேலே சுட்டியதுவும் களிறே என்றார். இவ்வாறு யானைக் கன்றி வீரன் வேலை ஓச்சாமை கறையடி யானைக் கல்லது உறைகழிப் பறியா வேலோன் என்னும் புறப்பாட்டால் ஏற்படும் (323). அவ் யானை பொது வாய் ஒழியாமல் வேந்தூர் யானையே யாமோ எனின் ஆம் என்க. அவன் வீழ்ந்து படின் அன்றே போர் ஒழிவது ஆகலின் வேந்தூர் யானையே என்க. இதனை, வேந்தூர் யானைக் கல்லது ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே என மற்றொரு புறப்பாட்டு (301) தெளிவித்தல் காண்க. (31) 15. தானை மறம் - 5 நேரிசை ஆசிரியப்பா 32. அஞ்சுதக் கனளே; அஞ்சுதக் கனளே; 1பயறு காவலர் பந்தர் அன்ன அலறுதலை முதியாள் அஞ்சுதக் கனளே; வெஞ்சமத்து, என்செய் கென்னும் வேந்தற்கு அஞ்சல் என்பதோர் களிறீன் றனளே. - புறத். 1374 (இ-ள்) அஞ்சத் தகையளே காண்; அஞ்சத் தகையனே காண்; கானத்தே பயற்றுக் கொடியைக் காப்பவர் இட்டுவைத்த பந்தர் போல அலந்துபோன தலையினையுடைய முதியவள் அஞ்சத் தகையளே காண்; எதிர்ந்த கொடும் போரிடையே என்செய்வேன் என்று திகைத்திருந்த வேந்தற்கு அஞ்சன்மின் என்றுரைத்து முந்துநிற்கும் ஒப்பற்ற களிற்றை ஈன்றவளாகிய அவள்! என்றவாறு. இ - து:- முதியள் வேந்தற்கு அஞ்சல் என்பதோர் களிறு ஈன்றனள்; அஞ்சுதக்கனள் அவள் என்பது சொல்லியது. (வி - ரை) அஞ்சுதக்கனள் என முதியோளைக் கூறியது அங்கதமாம்; வஞ்சப் புகழ்ச்சி என்பதும் அது; அஞ்சு தக்கனள் என்பதன் வழியே அஞ்சல் என்பதோர் களிறீன்ற திருவயிற்று மாண்புரைத்து மூதிற்பெருமை வெளிப்படுத்தாராகலின். முதியாள் இக்கால் பிற்படு முதியளாதல் அன்றி களிறீன்ற காலையும் முற்படு முதியளாதல் கொள்க. என்னெனின், அவளுக்குத் தாம் நெடிது சென்று ஈன்ற ஒரு மகன்மேல் பேராக் காதல் பெருகிநிற்கும் ஆகலின். ஆயினும் மறக்குடி மாண்பால் வேல்கைக் கொடுத்து வென்று வருக என விடுப்பள் ஆதல் தமிழ் நெறியாம். இதனை, மீனுண் கொக்கின் தூவி யன்ன வானரை கூந்தல் முதியோள் சிறுவன் என்பதனாலும், ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே என்பதனாலும் அறிக. தன் குடிப்பெருமை பேணும் அவள், தன் நாட்டு நலம் பேணும் அவள், தன்னைப் பேணுதலைப் பொருட்டெனக் கொண்டிலள் ஆகலின் அலறுதலை என்றார். அலறுதலை, பேணாமல், முடியாமல் காடெனக் கிடக்கும் தலை என்க. முதியரும் பேணிக் கோடலால் அலறுதலை இல்லாமை பெறக் கூடும் ஆகலின். படர்ந்து தானே எழுந்து வீழும்தலை, அலறுதலை, காய்ந்த தலையையுடைய ஓமைமரத்தினை அலறுதலை ஓமை என்றார் ஐங்குறு நூற்றினும் (321). அத் தலைக்கு உவமை கூறுவாராய்ப் பயறு காவலர் பந்தரைக் கூறினார். மழைக்குத் தாங்கலாய் வேயும் கூரைபோலல்லாமல் வாய்த்த கொம்புகளை நட்டு இலை தழைகளைப் போட்டு, கைத்திறமோ, ஒழுங்கோ காட்டப்படாது வேயப்பெறும் பான்மையது பந்தர் ஆகலின் அதற்குத் தக்க உவமையாயிற்றாம். பயறு காய்த்துப் பறிக்கும் சில்கால எல்லைக்குரிமை யுடையதாகலின், கருதிக் கவினுறச் செய்யார் என்க. வேந்தன் பகை நடுக்குறூஉம் பான்மையனே எனினும் பகைவர் பலராய் வலியராய் வந்தடர்த்த காலை என் செய்வேம் என்னும் சிறு துணுக்கம் உண்டாதலும் இயல்பாகலின், என் செய்கு என்னும் வேந்தன் என்றார். அவன் பறையறைந்து வருக என்றோ, ஆணையிட்டு அழைத்தோ முதியோள் ஈன்ற காளை வந்திலன் ஆகலின், அஞ்சல் என்பதோர் களிறு என்றார். வேந்தற்கு அஞ்சல் எனல் முறைமை அன்றாயினும், பொது நீக்கித் தனக்குச் செய்த சிறப்பும், தன்குடிச் சிறப்பும், தன்வீறும், சூழ்ந்த பகைவர் நிலையும் ஒருங்கு மூட்டிய கிளர்ச்சியான், தன்வீறும், சூழ்ந்த பகைவர் நிலையும் ஒருங்கு மூட்டிய கிளர்ச்சி யான் அஞ்சல் என்றான் என்க. தலைவன் தலைவிக்குத் தலை யளிசெய்தற் கண்ணும் வரும் அஞ்சல் என்பதைக் களிறு கூறினான் ஆகலின் அமைதிகண்டு கொள்க. இது முதியோள் சிறுவன் இயலும் சொல்லும் இனிதின் உணர்ந்த முதியோர் தம்முள் உரைத்த மொழியாம். (32) 15. தானை மறம் - 6 நேரிசை ஆசிரியப்பா 33. வல்லோன் செய்த வகையமை வனப்பிற் கொல்வினை முடியக் குருதிக் கூரிலை வெல்வேல் கைவலன் ஏந்திக் கொள்ளெனில் கொள்ளுங் காலும் மாவேண் டானே; மேலோன், அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக் கழற்கால் இளையோன் அழற்றிகழ் வெகுளி இகழ்தல் ஓம்புமின் புகழ்சால் மன்னிர்! தொல்லை ஞான்றைச் செருவினுள் இவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கம் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே; அதனால், வல்லோர் பூழை நின்மின்; கல்லென வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின் அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோன் நிலையே! - புறத். 1375 (இ-ள்) வினைத் தேர்ச்சியாளன் செய்த பல்வேறு வகைப்பட்ட வனப்பினதாய்க் கொல்லுத் தொழில் முற்றுப் பெற்ற குருதிபடிந்த கூரிய இலைவடிவிற்றாய வெற்றிதரும் வேலினைக் கையிற் செம்மாந்து ஏந்திக் கொள்க என்று வழங்கியும் களங்கொள்ளும் அளவும் களிற்றைக் கொள்ளான் இம் மேம்பாட்டாளன். புகழ்மீக் கூர்ந்த மன்னர்களே, அறிவொடும் அமைந்த போர்முறை தேர்ந்த புரவியை மேற்கொண்ட கழலணிந்த காலின் இவ்விளைய வீரனின் அழலென்ன வெதுப்பும் வெகுளியை எள்ளுதலை ஒழிமின்! மேலை நாட்போரில் இவன் வேலிடைப் பட்ட வீரர்தம் பெண்டிர் கைம்மை யுற்றமையால் அறுத்த கூந்தற் பாரத்தை வண்டிகள் பலவும் பொறுக்கலாற்றாமல் முரிந்தன; அதனால் வலிமை வாய்ந்தோர் முழுமுதல் அரணத்தின் நுழை வாயிற்கண் நின்று காமின்; கொடிய போர்க்களம் கல் என ஒலிக்க அமைதலின் இவ் வீரமேம்பாடுடையான் ஆற்றல் அஞ்சத் தக்க தன்மை யுடையதாம் என்றவாறு. இ-து:- மன்னிர், இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; பூழை நின்மின்; அஞ்சுதகவுடைத்து ஆற்றலோன் நிலை என்பது இது சொல்லியது. (வி-ரை) கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பும் உண்டாகலின், வேலின் செயற்கை நலந்தோன்ற, வல்லோன் செய்த வகையமை வனப்பு என்றார். வல்லோன் - வினைத்தேர்ச்சியாளன். அவன் வினைத் தேர்ச்சியுடன் உடல்வலுவும் வாய்ந்தவனாதல் வல்லோன் என்பதனால் பெறுதும். கொல்லுத் தொழில் வல்லாரைக், கருங்கைக் கொல்லர் என்று கூறுதல் சான்றோர் வழக்காகலின். வேலுக்கு வனப்பாவது கூர்மையுடைமையும், வளைந்து கெடாமையும், பக்கம் சிதையாமையும், பிடிகேடில்லாச் சுரையமைதி யுடைமையுமாம். இதனால் அன்றே, கண்திரள் நோன் காழ் என்றும், வைந் நுதிவேல் என்றும் ஔவையார் குறித்தார் என்க. வலன் ஏந்துதல் செம்மாந்து ஏந்துதல்; வலக்கையில் ஏந்துதல் எனின் கண்ணால் கண்டான் என்பதுபோல் பயனற நின்றதாய் அமைந்து சிறவாமை அறிக. வேந்தன் யானையைத் தந்தும், களங்கொண்டால் அல்லது களிறு கொள்ளேன் எனத் தன் பரியிலை போந்தனன் ஆகலின், கொள்ளெனிற் கொள்ளுங்காலும் மாவேண்டலனே என்றார். செஞ்சோற்றுக் கடன் கழிக்க விரும்புவார் வேந்தன் தரும் கலங்கலையும் கருதாது களம் புகுவர் என்பதை மேலுங் குறிப்பார், (34) இளையோன் வெகுளி அழல்போல் அழிப்பது ஆகலின் அழற்றிகழ் வெகுளி என்றார். எரிமுன்னர் வைத்தூறு என்றும், சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றும் வள்ளுவனார் கூறுவன அறிக. இகழ்தல் ஓம்புமின் என முன்னுங் குறித்தார் (29, 30). எதிரிட்டு நின்ற மன்னர் பலர் ஆகலின் மன்னிர் எனப் பன்மையால் விளித்தார். புகழ்சால் என்றது பலர்கூடி ஒருவனை எதிர்க்கும் புகழ் அன்மையை வெளிப்படுத்தி நின்றது. வீழ்ந்தோர் - இறந்து பட்டோர். இவன் ஒருவன் கை வேலால் பலரும் வீழ்ந்தனர் என்பாராய் இவன் கைவேல் என்றார். கணவன் இறக்கக் கழிகல மகடூஉவாய்க் கைம்மை கொள்வார் தலைமழித்தல் உண்டாகலின், கைம்மையின் அறுத்த கூந்தல் என்றார். கைம்மை கொள்வார் கூந்தல் களைதலை, கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி என்றும், வென்வேல் விடலை இன்மையிற் புலம்பிக் கொய்மழி தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉ என்றும், ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர அவிர் அறல் கடுக்கும் அம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே என்றும் வரும் புறப்பாடல்களால் (250, 261, 25) கண்டுகொள்க. நொய்தாய கூந்தல் எனினும் மகளிர் பலராகலின் பிறக்கம் (பெரும்பாரம்) ஆயிற்று. அதனை ஏற்றிய சகடம் தாங்காமல் முரிந்தன என்றார், பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்பது கண்கூடு ஆகலின். பூழை யாவது வாயில். புழை என்பது நீண்டு நின்று அப்பொருள் தந்தது. பூழை - கோட்டை வாயிற்கதவில் இட்டுப் புகும் வழி. குரைப்பு - ஒலிப்பு. ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை என்றார் தொல்காப்பியனார். மன்னிர், மேலோன் மாவேண்டான்; இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; இவன் வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கூந்தற் பிறக்கம் பொறுத்தல் ஆற்றாது சகடம் பல முரிந்தன, பூழை நின்மின்; ஆற்றலோன் நிலை அஞ்சுதகவுடைத்து என இயைக்க. (33) 15. தானை மறம் - 7 நேரிசை ஆசிரியப்பா 34. உண்டது, கள்ளுமன்று களிப்பட் டனனே; ஊர்ந்தது, புள்ளுமன்று பறந்தியங் கும்மே; மேலோர், தெய்வமல்லன் மகனே; நொய்தாங்குத் தெரியலர் எடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோனே; வேலே, பைய நிமிர்ந்து பருந்தின் ஓடிக் கழிந்தார்த் தன்றவன் எறிந்ததை; கழல்தொட்டு ஏந்துவரை இவரும் புலிபோல் வேந்தவந் தூரும் வெஞ்சினக் களிறே. - புறத். 1376 (இ-ள்) இவ்வீரன் உண்டது கள்ளும், அன்று; ஆயினும் கள்ளுண்டான் போலக் களிப்புற்றுள்ளான். இவன் ஏறி ஊர்ந்து வந்தது பறக்க வல்லதோர் பறவையும் அன்று; ஆயினும் இவன் ஏறிய குதிரை பறவையெனத் தாவி உலாக் கொள்கின்றது; அன்றி இவன் மேதகைய ஒப்பற்ற தெய்வ மகனும் அல்லன்; ஒரு மறக்குடி மங்கை பெற்ற மைந்தனேயாம்; மிக எண்மையாகப் பகைவர் எடுத்தணிந்த பச்சிலைக் கண்ணியாம் சூடும்பூ வாடத் தக்க வேலையுடையான்; இவன் வேலோ, மெள்ள நிமிர்ந்து பருந்துபோலக் கூர்ந்து விரைந்தோடிக் கழலணிந்து உயர்ந்த மலைமேல் ஏறிவரும் புலியென, வேந்தன் ஏறிவந்த கடுஞ்சினக் களிற்றின்மேல் தைத்து ஊடுருவி வீழ்த்தி, பூசல் (ஆரவாரம்) கொண்டது என்றவாறு. இ-து:- இவன் மகனே காண்; தெய்வமல்லன்; இவன் வேல் பருந்தெனச் சென்று வேந்தன் ஊரும் யானையை ஊடுருவி வீழ்த்தி ஆரவாரம் கொண்டது என்பது சொல்லியது. (வி- ரை) வேந்தன் ஏறிவந்த யானையை வேலால் வீழ்த்திய வீரன் ஒருவன் மாண்பைக் கண்டோர் கூறியது இது. கள் குடித்தலும் பருகுதலும் மரபாக, உண்டது என்றது மரபு வழு அன்றோ எனின், உணவு ஒழித்துக் கள்ளையே வேணவாத் தீரப் பருகுவார் உளராகலின் உண்டது என்றார், உணவாகவே அமையும் அளவு கருதி. இவ்வாறே வள்ளுவனாரும், உண்டார்கண் அல்லது அடுநறா என்றும், உண்ணற்க கள்ளை என்றும் கூறியது காண்க. இனி, நறவுடன் நஞ்சும் இயைத்து, எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் என்று இயம்பியதும் கருதுக. இனிப் பின்னூல்களில் உண்டாட்டுப் படலம் என்று வகுத்துக்கொண்டு பாடியது கள்ளுண்டு களித்தாடுதலையே எனவுங் கொள்க. கள் பருகாமலே களிப் புண்டாமோ எனின், காமம் கண்டார் மகிழ்செய்தல் (திருக். 1090) உண்மையான் அதனைப் போல் களம் வீரனுக்கு மகிழ் செய்ததென்க. குதிரை புள்ளெனப் பறந்து சேறலைக், கட்டியன்ன காரி என்றதால் (31) அறிக. எதிரிட்டோர் அனைவரும் தோற்றத்தாலும், தொழில் மாண்பாலும் தம்மை மறந்து விழித்து நின்றார் ஆகலின் இவன் தெய்வம் அல்லன்; மகனே எனத் தெளிவுபடுத்தினார். தெய்வம் என்றது, சூர்மருங் கருத்த சுடர் வேலனை என்க. இளமை யாலும், எழிலாலும், வேல் தாங்கலாலும் சவட்டலாலும் முருகு ஒப்பான் என அமைக. தெரியலர் ஆவார் பகைவர். அவர் எதிரிடுவார் திறம் தெரிந்து போர்க்களம் குறுகார் ஆகலின் இவ்வாறே கருதலர், ஒன்னலர், மருவலர், பொருதலர் என்பனவும் கொள்க. தெரியலர் கண்ணி வெருவுதல், அவர் வெருவுதலைக் குறித்தது. அச்ச மீக்கூர்ந்து வெதும்புதலால் கண்ணி வாடியதைக் கருதியதுமாம். வேல் மிக நிமிர்ந்ததாயின் மேலே ஏறிச் செல்லும் ஆகலானும், நிமிராது நேரே செல்லினும், தாழச் செல்லினும் தான் ஏறியுள்ள பரியினும் உயரிய யானையைத் தாக்குதல் சிறக்காதாகலானும் பைய நிமிர்ந்து என்றார், குறிவைக்கும் கூர்த்த திறத்தை வெளிப்படுத்துதற்கு. அவ்வேல் வைத்த குறிவாங்காது சென்று தாக்குதலைக் குறிப்பான் பருந்தின் ஓடி என்றார். பெடையும், சேவலும் பிறரும் காப்பினும் குறிதவறாது குஞ்சைத் தூக்கிச் செல்லும் பருந்தின் குறிவைப்பைக் கருதுக. கழிதல் - ஊடுருவிச் சேறல். ஆர்த்தல் - பூசலிடல். வேந்தன் வந்தூரும் வெஞ்சினக் களிறு வீழ்ந்துபட்டது ஆகலின் களம் கல்லெனப் பூசலிட்டது. வென்றார்க்குக் களிப்பும் தோற்றார்க்கு அவலமும் ஒருங்கு தோன்றுமாகலின். வரைமேல் இவரும் புலியெனக் கரிமேல் இவரும் வேந்தனைக் குறித்தார். எறித்தோடை இலங்குநடைக் களிற்றின் மேற்கொண்டு இரைவேட்ட பெரும்புலிபோல் இகன்மேற் செல்ல என்னும் சயங்கொண்டார் வாக்கு இவண் கருதத் தக்கது. (கலிங். 366). (34) 15. தானை மறம் - 8 நேரிசை ஆசிரியப்பா 35. நிலையமை நெடுந்திணை ஏறி *நல்லோள் இலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன், தெள்ளிதின் உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே; குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம் அணிநல் யானைக் கூறளக் கும்மே. (இ-ள்) நிலையுதல் அமைந்த பழங்குடிக்கண் சிறந்து, நல்லியல் அன்பின் மனையாள் தன் கணவனோடு ஊடல் மிகக் கொண்டு இலைத் தொழிலால் பொலிவுறச் செய்யப் பெற்ற புதிய அணிகலங்களைச் சிதறி எறிந்தாற் போன்ற செறிந்தமைந்த வனப்புடைய புள்ளிகளைக் கொண்ட காரிக் குதிரையின் மேலே இவர்ந்தோன், உறுதியாக நினைத்தாலும் நெஞ்சம் நடுங்கப் பண்ணும் ஒப்பற்ற வேலுடையனே காண். அவன், ஆழ்ந்த நீர்க் கயத்தில் கெண்டைமீனைக் குத்துதற்குப் பார்க்கும் நீனிறச் சிறிய சிரல்போல நம் பூட்டப் பெற்ற நல்ல யானைத் தொகுதிகளை அளந்து பார்க்கின்றனன். ஆகலின் களிற்றுக்கணத்தை ஒருங்கு எறிதல் உறுதி காண் என்றவாறு. இ-து:- காரிமேலோன், களிறு அளக்கும்; அவை அழிந்துபடல் உறுதி என்பது சொல்லியது. (வி - ரை) காரிமேலோனாய மறவன்குடி நீண்ட நெடும் சால்பும் பழைமையும் அமைந்ததாகலின் நிலைமை நெடுந் திணை என்றார். திணையாவது குடி. விழுத்திணை (புறம். 24, 27, 159), விளங்குதிணை. (புறம். 373), மூதில் (புறம். 19), பழங்குடி (திருக். 955), தொல்குடி (புறம். 202) என்பன வெல்லாம் அது. கணவனொடும் ஊடிச் சிந்திய புதுப்பூண் அன்ன வனப் பமைந்த புள்ளிகளையுடைய காரிக் குதிரை என்றார். புள்ளிகளுக்கு அணிகலங்கள் உவமையாம். பரக்கச் சிதறிக் கிடத்தலாலும், ஒன்று போல் ஒன்று அமையாத் தன்மையாலும், கண்ணைக் கவரும் கவின் உடைமையாலும் அணிகள் புள்ளியொடு பொருந்துவனவாம். ஊடல் மிகுதலால் அணிகளைக் கழற்றி எறிதல் மகளிர் இயலாதல் இராமாயணம் முதலிய பின்னூல்களில் பெருவர விற்றான செய்தியாம். அவ்வணிகலங்கள் தெருவிற் பரவிக் கிடத்தலால் காரான் முதலியவை காற்குளம்பிடைப் பட்டுத் துன்புறல் கூடாவே என ஒதுங்கிச் செல்லுமாற்றையும் கற்பனை நயஞ்செறியக் கவிபுனைதலும் வழக்காயிற்று. நல்லோள், ஊடி, பூண் சிந்தியன்ன புள்ளி என இயைக்க; ஏறி, காரி மேலோன் எனவும் இயைக்க. சிந்தியன்ன என்பது சிந்தினாற்போன்ற என்னும் பொருட்டு. இட்டாற்போன்ற, இட்டு வைத்தாற் போன்ற, மேலிட்டு வைத்தாற்போன்ற என்னும் வழக்கு உண்மையும் அறிக. அசோகின் தளிரை அரக்கு ஊட்டினாற் போன்றது என்பதை. ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை என நயமுறப் பாடிய சங்கச் சான்றோர், ஊட்டியார் எனப் பெயர் பெற்றமை இவண் உன்னத்தக்கதாம் (அகம். 68) மேலும் காரியைக், கட்டியன்ன காரி என்றார் (31) ஒவ்வொரு புள்ளியும் தனித்தனி வனப்பினதாய் அமைந்த எழில் நோக்கிச் சேடுபடு வனப்பு என்றார். சேடுபடுதல், செறிவுடையதாதல். இஃது இப்பொருட்டதாதலை, ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின் சேடு என்னும் அகப் பாட்டால் அறிக (331). இனிச் சேடு என்னுமிடத்துத் தோடு என்னும் பாட முண்மையும் கருதின் அஃதிப் பொருட்டாதலும் விளக்கமாம். தோடு - தொகுதி. இலை என்பது இலைத்தொழில். அஃதாவது செய்த அணிகலத்தை ஒளிப்படச் செய்தல். இலைகொள் பூண் என்றார் சிந்தாமணியிலும் (1371). நினைக்கவே நடுக்கும் வேல் எனலால் நேர்ப்படின் ஆம் விளைவு பெரிதென்க. இற்செறிக்கப்பட்ட தலைவியைத் தோழி தலைவனிடத்து, உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் என்று கூறுவது (நற். 253) இஃதொரு வாய்பாடாதல் விளக்கும். குண்டு நீர்க்கிடங்கு- ஆழ்ந்த நீர்நிலை. அதன்கண் உள்ள கெண்டையைக் குத்தி எடுத்தற்குச் சிச்சிலி (சிரல்) கூரிதிற் பார்க்குமாப்போல யானைக்கூறு பார்ப்பன். சிறுசிரல் எனினும் கெண்டையைப் பற்றுதல் வாயானாற்போல, யானைக்கூறும் இவ் வீரன் வாய்ப்பட்டழிதல் உறுதி என்றார். யானைக்கூறு அளவிடலால் ஒருங்கு அழித்தல் குறித்தார். சிரலின் இளநலங் குறித்துச் சிறுசிரல் என்றார், முதுசிரல் பறக்கு மாற்றலும், பற்றிக்கொள்ளும் ஆற்றலும் முதுமையால் முறைமுறையே குறைந்து போயொழிதலின். அதனை, எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப் பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன் வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப் பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்கும் என்பதனால் (அகம். 106) அறிக. இதனுள் தாமரைப் பழனத்துப் பொரிச்சிறு மீனைப் பற்றுதற்குப் பைப்பய அசைதலையும் பறைதபு நிலை உற்றதையும் முதுசிரலுக்குரைத்தமை தெளிக. இனி, இறாஅல் அருந்திய சிறுசிரல் என்றும் (அகம். 286) நிலையிரும் குட்டம் நோக்கி நெடிதிருந்து புலவுக்கயல் எடுத்த பொன்வாய் மணிச்சிரல் - (சிறுபாண். 180-81) என்றும் வருவனவற்றால் ஆழ்ந்த நீரில் பரியமீன் தேர்ந்து சிறுசிரல் கொள்வது கொள்க. மணிச்சிரல் - சிறுசிரல். மணி, சிறுமைப்பொருட்டாதலை மணிக்கயிறு, மணிக்குடல், மணித் தக்காளி என்பனவற்றால் காண்க. சிரல் நீருள்மூழ்கி மீனைக் குத்தி எடுத்து உண்டலை, மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி - பதிற். 42 என உவமைப் படுத்தியுள்ள நயம் உன்னுதோறின்பம் பயப்ப தாம், சிரல் என ஒரு மதிற்பொறி இருந்ததும், அது மாற்றார் மேற்சென்று கண்ணைக் குத்தும் சிச்சிலிப் பொறி என்பதும் சிலப்பதிகாரத்தால் அறியப் பெறும் செய்தியாம் (15: 214). வேலோன் யானைக் கூறு அளந்ததே, கூறுபடுத்தும் ஆற்றல் வெளிப்பாட்டை விளக்கும் என்பாராய்க் கூறளக்கும்மே என அமைந்தார். அளக்குமே என்பது சீர்நிலை கருதி அளக்கும்மே என விரித்தல் விகற்பம் பெற்றது. இவ்வாறே நெல்விளையும்மே பழமூழ்க்கும்மே கிழங்குவீழ்க் கும்மே தேன் சொரியும்மே என்று கபிலரும் பாடினார் (புறம். 109). இந்நூலுடையாரும் மேலே (34) பறந்தியங்கும்மே என்றார். பகைப் படையின் களிற்றுத் தொகுதியை அளவிட்டுக் கண்டு ஆர்த்து வந்தானொரு வீரனைக் கண்ட பகைப்படை வீரருள் ஒருவன் தன் வீரரை நோக்கிக் கூறியது இது. (35) 15. தானை மறம் - 9 நேரிசை ஆசிரியப்பா 36. வருக ! வருக ! தாங்கன்மின்! தாங்கன்மின்! உருவக் குதிரை ஒருவே லோனே; இருகை மாக்களை யானஞ் சலனே; நாற்கை மாக்களிந் நாட்டகத் தில்லை; அவனும், தாரொடு துயல்வரும் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை எற்குறித் தனனே; யானும், கடிகமழ் உவகைக் கைவல் காட்சியென் துடியவற் கவனரை அறுவை ஈந்தனனே; அதனால், என்ன தாகினும் ஆக; முந்நீர் நீர்கொள் பெருங்குளம் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சம் குளிர்ப்ப அவன்தாய் மூழ்குவள் ஒன்றோ; அன்றேல் என்யாய் மூழ்குவள் ஒன்றோ; அன்றியவன் தாயும் யாயும் உடன்மூழ் குபவே. - புறத். 1378 (இ-ள்) வருக ! வருக ! தடாதே ஒழியுங்கள்; தடாதே ஒழியுங்கள்; மின்னென விரையும் செலவமைந்த குதிரையை யுடைய ஒப்பற்ற வேற்படை வீரனே காண்; இரண்டு கைகளை யுடைய மாந்தர் எவரேயாயினும் அவர்க்கு அஞ்சுவேன் அல்லேன்; நான்கு கைகளையுடைய மாந்தர் எவரும் இம் மாநிலத்தில் தோன்றியது இல்லை. எதிரிட்டுவரும் அவனும் மாலையொடும் அசைந்து விளங்கும் மணி இழைத்த சிறந்த அணிகலங்கள் அணிந்த மார்பினையுடைய எனது பெரிய தலை ஒன்றனையுமே குறியாகக் கொண்டனன்; யானும் மிகப் பெருகிய மகிழ்வமைந்த கைத்தேர்ச்சி மிக்க அறிவுவாய்ந்த என் துடிகொட்டு வோற்கு அவன் இடையிற் கட்டிய உடையை வழங்கிவிட்டேன். ஆகலின் என்னைக் கொன்று மீள்தல் அவனுக்கும் மிக அரி தேயாம். அவ் வண்ணமே அவனைக் கொன்று மீள்வதும் எனக்கும் மிக அரிதேயாம். ஆதலால், வெற்றி எத்தகைய தாயினும் ஆகுக; கடல்நீர்ப் பெருக்கென விளங்கும் பெரிய குடம் பொலிவுறுமாறு துயரங் கப்பிக்கொண்ட நெஞ்சம் குளிருமாறு நாளை அவன்தாய் மூழ்குவதொருநிலையும் ஆகலாம்; அல்லா மல் என் தாயே மூழ்குவதொரு நிலையும் ஆகலாம்; அல்லாமல் அவன் தாயும் என்தாயும் ஒருங்கே மூழ்குவதொரு நிலையும் ஆகலாம் என்றவாறு. இ-து:- வேலோன் என்தலை குறித்தனன்; யான் அவனரை அறுவை ஈந்தனன்; என்னை வெல்லலும் அவற்கு அரிது; அவனை வெல்லலும் எனக்கு அரிது; இருவரும் களத்து ஒருங்கே வீழ்ந்து படலும் கூடும் என்பது சொல்லியது. (வி-ரை) வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் என்பவை இரண்டும் ஆர்வமும் விரைவும் அமைந்த அடுக்குகள். வருகதில் வல்லே வருகதில் வல்லே எனத் தொடங்குவதொரு புறப்பாட்டு (284) உருத்தோற்றத்தை மட்டும் வாளா குறிக்காமல் அஞ்சுதகவந்த ஆற்றலையும் விரைவையும் செருக்கையும் கருதி நின்றதாம். உரு உட்காகும் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். உருவக்குதிரை மழவர் என்றார் அகத்தினும் (1). மாக்கள் - மக்கள். இரந்து செல்வாரை இரவன் மாக்கள் என்பது பெருவரவிற்றாய சங்கச் சான்றோர் வழக் காகும். இவண் சான்றோராம் வீரரைக் குறித்து நின்றது. இரண்டு கையுடையார்க்கு அஞ்சேன் என்றவன், இரண்டு கைக்கு மேம்பட்டுக் கொண்டிருந்தாரை மாந்தருள் கண்டறியேன் என்றான்; ஆகலின் எவருக்கும் அஞ்சுவேன் அல்லேன் என்பது குறிப்பாம். எதிரிட்டு வருவோன் நோக்கு என் தலைமேலதே அன்றி இப் பறந்தலை மேலதன்று என்பானாய், கருந்தலை எற்குறித்தனனே என்றான். என் குறிப்பும் அவனை எறிதல் அன்றி வேறொன்று அன்று என்பானாய், அவனரை அறுவை என் துடியவற்கு ஈந்தனன் என்றான். உடுத்த அறுவையை எடுத்து உதவுதல் உயிரொழிந்தக் காலையன்றே கூடும். ஆகலின் அவனை எறிந்து படுத்தலைக் குறித்தான். தன் உறுதிப்பாடு விளங்க ஈந்தனன் என இறந்த காலத்தால் குறித்தான். போரிடத் தொடங்கு முன்னரே போரில் வெற்றி கொண்டதாகக் கூறு தலைக் கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் என்பது எனக் காட்டி, இராமன் இலங்கைபுகு முன்னரே வீடணற்கு முடி வழங்கியமையைக் குறிப்பார் நச்சினார்க்கினியர் (தொல். புறத். 12) வாழையடி வாழையாய்த் தாய் மகள் முறைவழியே தோழியர் வருமாப்போலத் தந்தை மகன் முறைவழியே துடி கொட்டுவோர் வருவர் ஆகலின் அக் கெழுதகை முழுதுறத் தழுவித் துடியற்கு ஈந்தான், இதனை, முந்தை முதல்வர் துடியர் இவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை இவனெனக்கு- வந்த குடியொடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு என்பதனால் தெள்ளிதிற் கொள்க. (புறப். வெண். 19) தன்னாண்மை ஒன்றனையே கருதுவான் அல்லாமல் எதிரிடுவான் ஏற்றத்தையும் உணர்ந்து போற்றுவான் இப் புகழ் வீரன் ஆகலின், என்னெறிந்து பெயர்தல் அவற்குமாங் கரிதே அவனெறிந்து பெயர்தல் எனக்குமாங் கரிதே என்றான். இருவருள் எவர் வெற்றியும் தெளிவுபடக் கிடந்தது அன்றாம் ஆகலின், என்னது ஆகினும் ஆக என்றான். இரு வருள் எவர் வெற்றி கொள்ளினும் இருவர்க்கும் வெற்றியே என்பானாய் இவ்வாறு கருதினான், ஒருவரை ஒருவர் விஞ்சிய உரவோர் ஆகலின். பெருங்குளம் எனினும் அதன் நீர்ப்பெருக்கை விரிப் பானாய், முந்நீர் நீர்கொள் பெருங்குளம் என்றான். நீர் பொங்கித் ததும்பி அலையோலிட வளம் பெருக்கி நிற்றலே குளத்திற்கு எழில் ஆகலின் அதனைக் குறித்தான். அக் குளத்திற்கு மேலும் பொலிவாதலை விளக்குவானாய், இருபொரு வேந்தரும், இரு திறவீரரும், மூதிற் பெண்டிரும், பேரிற்சிறாரும் ஒருங்கு சூழ்ந்து நின்று உவகைக் கலுழ்ச்சி அரும்பத் தாயர் நீராடுதலைக் குறித்தான். மகனை இழந்தேன் என்பதால் தாயர்க்கு நோய் பொதிதலும் சான்றோனை ஈன்றேன் என்பதால் நெஞ்சம் குளிர்தலும் உண்டாம் என்க. இதனை, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே என்னும் சான்றோர் உரைகளுடன் இயைத்துக் கண்டுகொள்க. அவன் தாய் குளத்தில் மூழ்குதல் கூடும்; அன்றி என்தாய் மூழ்குதலும் கூடும் என்றமையால், எம்முள் எவரும் வீழ்ந்துபட நேரும் என்பதை யுரைத்தான். இதுகாறும் தம்முள் ஒருவர் வீழ்ந்துபடுதலையே குறித்த அவன் - ஏன் - இருவருமே ஒருங்கு வீழ்ந்து படுதலும் கூடும் என முத்தாய்ப்பு வைத்து முடித்தான். இதனையே, அவன்தாயும் யாயும் உடன்மூழ் குபவே என்றான். ஆய் என்பது பொதுப்பெயராக அன்னையைக் குறிக்கும். தாய் எனவரின் அவன் தாய் என்பதையும், யாய் எனவரின் என் தாய் என்பதையும், ஞாய் எனவரின் நின்தாய் என்பதையும் சுட்டும். இவண் தாய் என்பது அவன் தாய் என்பதையும் யாய் என்பது என் தாய் என்பதையும் குறித்தலைக் கருதுக. அவ்வாறே, யாயும் ஞாயும் யாரா கியரோ எனவரும் குறுந்தொகைப் பாட்டில் யாய் என்பது என்தாய் என்பதையும் ஞாய் என்பது நின்தாய் என்பதையும் குறித்தலை ஓர்க. இவ்வாறாகத் தாய் எனப் பொதுப்பெயர்நிலை கொண்டமை சங்கச் சான்றோர் காலத்திற்குப் பின்வந்த பெரு வழக்காயிற்று. இத் தகடூர் யாத்திரை சங்கச் சான்றோர் காலத்ததாகலின் அந்நெறி பிழையாமை அமைந்து நின்றது என்க. இனித் தாய் என்பதே அன்றித் தந்தை, முன்னோன், பின்னோன் ஆயோரையும் இந்நெறி பிறழா வழக்கொடு வழங்கினர் என்பதைத் தெய்வச்சிலையார் தெள்ளிதின் விளக்கிப் போந்தார் (தொல். சொல். எச். 14) மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும்; தம்முன், நும்முன், எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் என அவர் தரும் விளக்கம் கண்டு மகிழ்க. தமிழ் வீரர்தம் தகைமாண்ட போராண்மைக்கு எடுத்துக் காட்டாய் இலங்கும் இப் பாடலின் பொருண்மாண்பும் உணர்வு மாண்பும் உன்னுதோறும் உன்னுதோறும் கழி பேரின்பம் பயப்பதாம். இத்தகைய தகடூர் யாத்திரை நூலையும் யாத்திரை விட்ட தமிழர்தம் பேதைமையும், பெருமடியும், தாய்மொழி பேணாக் கீழ்மையும் நினையுந்தோறும் நினையுந் தோறும் நெஞ்சம் புண்ணாக்குவதாம்! (36) 16. குதிரை மறம் போர்க்கலையிற் சிறந்த குதிரையின் திறப்பாட்டைக் கூறுவது குதிரை மறம் எனப்பெறும். எறிபடையான் இகலமருள் செறிபடைமான் திறம்கிளந்தன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை (133). பலவிகற்பப் பஃறொடை வெண்பா 37. அடுதிறல் முன்பினன் ஆற்ற முருக்கிப் படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவன் ஊர்ந்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்கும் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டும் குளம்பு. - புறத். 1382 (இ-ள்) எதிரிட்டாரைக் கொல்லும் குறிப்புடையவன் பகைவரை அறத் தொலைத்துப்பட்ட தலைகளைப் பருந் துண்ணுமாறு சிதைத்துக் கூரிய இலைவடிவில் செய்யப்பெற்ற வேலை வெற்றிக்களிப்பால் வீசிக்கொண்டு திரும்புபவன், ஊர்ந்துவரும் குதிரை நடைக்குற்றம் சிறிதும் இல்லாமல், நாட் காலையில் மதுப்பருகித் திளைக்கும் துடியன், தன் துடியைக் கொட்டும் தாளத்திற்குத் தகத் தன் குடம்பொலிபடத் தாளமிடும் என்றவாறு. இ-து:- வெற்றிக் களிப்பால் மீள்பவன் ஏறிய குதிரையும் வெற்றிக்களியால் துடியொலி ஒப்பத் தாளமிட்டு நடைபோடும் என்பது சொல்லியது. (வி-ரை) முன்பு - வீரம்; குறிக்கோள். ஆற்றமுருக்குதல் - அறத்தொலைத்தல்; எவ்வளவு இயலுமோ அவ்வளவும் செய்து முடித்தல். படுதலை - பட்டு வீழ்ந்த தலை. இனிப் பறந்தலை என்பது போலக் களம் என்பதைச் சுட்டி நின்றதுமாம். பாறு - பருந்து. பாறு களம்விட்டு அகலாது உறைதலைப் பாறிறை கொண்ட பறந்தலை என்றார் புறத்தினும் (360) நூறுதல் - வெட்டுதல். இவண் சிதைய வெட்டுதல் குறித்தது, அருஞ்சமம் ததைய நூறி என்பதுபோல் (புறம். 93) என்க, வெற்றி பெற்றோன் வேலை அதரி திரித்து வருதலும் வாளை வீசி எறிந்து ஆடுதலும் பிறவும் வழக்காறாம். இது நூழில் என்னும் புறத்துறையைச் சார்ந்ததாம். இதற்கு, கழல் வேந்தன் படைவிலங்கி அழல் வேல்திரித் தாட்டமர்ந்தன்று என்று இலக்கணமும், ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடம் சூடல் மலைந்த சுழல்கட்பேய் - மீடன் மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் திறந்தவேல் கையில் திரித்து என்று எடுத்துக் காட்டும் கூறி விளக்கும் புறப்பொருள் வெண்பா மாலை (141) குதிரை குளம்பு கொட்டுதலைத் துடிகொட்டுதலுடன் இணைத்தது போலவே, ஆன் தாவுதலைத் தெய்வம் ஏறியவள் தாவுதலுடன் ஒரு புறப்பாட்டு இணைத்துக் கூறும் (259). முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன் என்பது அது. இவர் கூறியாங்கே பாணி நடைப்புரவி என்றார். வெண்பாமாலை யுடையார் (112). நாள்மகிழ் தூங்கும் - நாட்காலையில் மதுவுண்டு மகிழும் நாட்காலை மது பெருமகிழ்வும் கடுப்பும் ஊட்டும் என்பதை, நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின் என்பதனாலும் (புறம். 123), துளங்கு, தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவீர் (37) என்பதனாலும் (மலைபடு 463-4) புலப்படும். 17. மூதில் மறம் - 1 பழைமையான வீரர்குடியில் பிறந்த ஆடவர்க்கே அன்றி அக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறுவது. அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரல் மகளிர்க்கு மறமிகுத் தன்று என இதன் இலக்கணமும், வந்த படைநோனான் வாயில் முலைபறித்து வெந்திறல் எஃக மிறைக்கொளீஇ-முந்தை முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு என இதற்கு எடுத்துக்காட்டும் கூறுகிறது புறப்பொருள் வெண்பாமாலை (175). நேரிசை வெண்பா 38. தருமமும் ஈதேயாம்; தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற் கோள்வாய் மறவர் தலைதுமிய என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின். - புறத். 1404. (இ-ள்) போர்க்களத்தின்கண் கொள்கை நலம் வாய்ந்து வந்த மறவர்தம் தலைகள் துண்டம்பட, என்மகன் அவர்கள் வாள் வாய்ப்பட்டுத் தழுவிக்கிடக்கப் பெறுவனாயின் என் குடிக்கு அறமாவதும் ஈதொன்றேயாம்; கொடையாவதும் ஈதொன்றேயாம்; கடப்பாடாவது, ஆராயுங்கால் ஈதொன்றே யாம் என்றவாறு. இ-து :- மறக்குடி மைந்தர் மறக்களம் புக்குப் புண்பட்டு இறத்தலே தருமம், தானம், எல்லாம் என்பது சொல்லியது. (வி-ரை) மூதின் மகள் தன் மைந்தன் மறமாண்புகளை ஒவ்வொன்றாக உணர்ந்து, உன்னிப் பெருமிதப்பட்டமையால் மும்முறை ஈதேயாம் என்றாள். அவன் பெருமையைத் தன் குடிப்பெருமையாக்கிக் குடிக்குத் தருமமும் ஈதேயாம் என்பன போலக் கொள்க. இது மறக்குடி மகள் கூற்று. வறிதே களத்தில் வாள் வாய்ப்பட்டான் என்பது குடிப் பெருமை அன்றாகலின், செருமுனையில் கோள்வாய் மறவர் தலைதுமிய என்றாள். போர்க்களத்தில் புண்படுதல் என்றும், எண்மையவாம் மறவரிடைப் புண்படாமல் கோள்வாய் மறவர் வாள்வாய் முயங்கப்படுதல் என்றும், கோள்வாய் மறவரின் தலைதுமியச் செய்து என்றும் மூவடைமொழிகளால் முது குடிச் சிறப்பு அனைத்தும் கெழும உரைத்தாள். வாள்வாய் முயங்கல் வாளின் வாயால் முயங்கப் பெறுதல்; எறிந்துபடுதல் குறித்தாள். எறிந்துபடுதல், இறத்தல், பிறிதாதல் என எச்சொல்லும் சுட்டாமல் வாள்வாய் முயங்குதல் என்றாள், அத்தகைய இறந்துபாடு இன்பமே பயந்து என்றும் நிலை பெறலாலும், பீடும் பெயரும் எழுதிய பிறங்கு நிலை நடுகல்லாய்ப் பீலியும் மலரும் சாத்திப் பிறபிறர் வழிபடும் அமரர் நிலை ஆக்கும் ஆகலானும், அதனான் அன்றே, களி றெறிந்து பட்டனன் என்பதை அறிந்து ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தாள் என்றும், அவள் வார்த்த உவகைக்கண்ணீர் நோன்கழைப் பொழிந்த மழைத்துளியினும் சாலப்பல என்றும் பிறரும் கூறினார். இக் கருத்தானன்றே மறக்குடி மைந்தன் களத்தில் பட்டகாலை அவன் மனையாள் கண்டு தழுவுதலை இரங்குதல், கையறுநிலை, கையாறு, கையறவு என்றெல்லாம் கூறாமல் உவகைக்கலுழ்ச்சி என்று புறப்பொருள் இலக்கணம் கூறியதூஉம் என்க. வாள்வாய் முயங்கிய மைந்தனை - அவன் விழுப் புண்ணைத் தான் முயங்குதல் தனக்குத் தருமமும், தானமும், கருமமும் ஆம் என விரித்துரைத்தும் கொள்க. வாய்வாள் எனின் தப்பாத வாளையும், வாள்வாய் எனின் வாளின் வாய்ப்புறத்தையும் குறித்தல் கொள்க (புறம். 91;50) (38) 17. மூதில் மறம் - 2 நேரிசை வெண்பா 39. இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ; அன்பின் உயிர்மறக்கும் ஆரணங்கு - தன் கணவன் அல்லாமை உட்கொள்ளும் அச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண். (இ-ள்) பொய்யாய் ஒழியும் உடலைக்கொண்டு இன்பம் அடைவீர்களே பொருந்தாதார் ஆகிய பகைவர் வேல் தைத்துத் தன் கணவன் மெய்யைச் சிதைத்ததால் உளதாகிய விழுப்புண், அவன் அல்லாமல் தனித்துண்டு வாழும் கைம்மை யச்சத்தைத் தந்ததாம்; ஆகலின் அவன் அன்பினையே கருதித் தன் உயிர் வாழ்வையே மறந்துவிடும் மூதின் மகளைக் காண்மின்கள் ! என்றவாறு. இ-து:- கணவன் போர்க்களத்தில் புண்ணுற்று மடிந்த காலை, மூதின்மகள் கைம்மை கொண்டு வாழாள், தானும் உயிர் நீப்பாள் என்பது சொல்லியது. (வி-ரை) உடம்பு கொண்டு இன்பம் எய்துவதை எண்ணாத மூதின்மகளின் மாண்பைக் கூறுகின்றார் ஆகலின், இன்பம் உடம்புகொண் டெய்துவீர் காண்மினோ என விளித்துக் கூறினார். ஐம்புல நுகர்வும் உடல்கொண்டு நுகரப்பெறுவன ஆகலின் உடம்புகொண்டு இன்பம் எய்துதல் வெளிப்படையாம். ஆனால் அவ்வின்பத்தினும், நினைவால் எய்தும் இன்பமும், உயிரால் எய்தும் இன்பமும் படிப்படியே உயர்ந்தனவாம். முடிநிலை இன்பமாம் உயிரின்பம் நாடிய மூதின்மகள் உடம்புகொண்டு இன்பம் எய்துதலை எண்ணு வளோ? எண்ணாள் என்க. அன்பு, கணவன்மேல் கொண்ட அன்பு; அவன் தன்மேல் கொண்டிருந்த அன்புமாம். அவ்வன்பால் தன்னை - தன் உயிர் வாழ்வை - மறந்தாள். அன்பின் வழியது உயிர்நிலை ஆகலின் அவ்வழி நின்றாள். மூதின்மகளுக்கு அச்சம் தோன்றுவது இல்லை. அவள் குடிச்சிறப்பு அது. ஆனால், தன் கணவன்பட்ட விழுப்புண் அச்சத்தை அவளுக்கு ஊட்டியது. ஏன்? அவனை இழந்து கைம்மை நிலையில் வைத்தது ஆகலின். அதனால் அவ் வச்சத்தை ஆட்சி நடாத்துமாறு விட்டுவைக்க விரும்பாதவளாய்த் தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச்சென்றாள் என்க. இறப்பில் இணைவாரை அச்சம் அடர்க்கவல்லதோ? பொருகளத்தில் புண்பட்டு மறக்குடி மைந்தன் மாண்டானாக, அவன் மனையாள் அவனைத் தழுவிக்கிடந்த தன்னுயிர் நீப்பாளைக் கண்ட முதியோர் கூற்று இது. கணவன் அல்லாமையால் அச்சம் நிகழ்தலைச் சங்கப் பாடல்கள் விரித்துக் கூறும். அவை கூந்தல் கொய்தலும், குறுந்தொடி நீக்கலும், அல்லி அரிசி அருந்தலும், அணிநலம் சிதைத்தலும், பாயின்று வதிதலும் பழஞ்சோறுண்ணலும் பிறவுமாம். இவற்றைச் சான்றோர் செய்யுளுள் விரியக் கண்டு கொள்க. (புறம். 25, 248, 249, 250, 253, 254, 261, 280). (39) 17. மூதில் மறம் - 3 நிலைமண்டில ஆசிரியப்பா 40. வாதுவல் வயிறே! வாதுவல் வயிறே! நோலா அதனகத் துன்னீன் றனனே; பொருந்தா மன்னர் அருஞ்சமம் முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய்; மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே; எம்மில் செய்யா அரும்பழி செய்த வென்வேல் விடலையை ஈன்ற வயிறே. - புறத். 1407 (இ.ள்) வயிற்றை அறுப்பன்; வயிற்றை அறுப்பன்; மறக் குடிக்கு வாய்த்த வீரநோன்பினைக் கொள்ளாத நின்னை அவ்வயிற்றிடத்தே கொண்டு ஈன்றனன்; கூடாமன்னர் கூடிநின்ற வெலற்கரிய போர்க்களத்தில் அவர்களைச் சவட்டி அக் களத்தின் கண்ணே ஒழியாது நீ ஒழிந்தனை; மிகப் பலவாய புள்ளிகளைக் கொண்ட யானையின்மேல் எறிந்த வேல் அதன் முகத்தே தங்கி ஒழியவும் நீ அதனைப் பறியாதே விடுத்த இவண் வந்தனை; ஆகலின் எம் மறக்குடியினர் செய்தறியாத பெரும் பழிசெய்த வெற்றிவேலைக் கொண்ட காளையைப் பெற்ற வயிறே! என்றவாறு. இ-து:- யானையின்மேல் ஏவிய வேல் அதனோடு தங்கி விட அதனைப் பறியாமல் களத்தில் இருந்து மீளல் மறக் குடிமைந்தர்க்கு மாயாப் பழியாம் என்பது சொல்லியது. (வி-ரை) இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ என்று பெருமை தரும் வயிறே பழிக்கு இடமான மைந்தனை வைத்திருந்ததாகலின், மைந்தன் செய்த பழிச் செயற்கு அடிப்படையாக அமைந்த தன் வயிற்றை நொந்து வாதுவல் வயிறே; வாதுவல் வயிறே என்றும், ஈன்ற வயிறே என்றும் கூறினாள். மன்னு புகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே என ஆழ்வார் அருளுதல் இவண் எண்ணி மகிழத்தக்கதாம். மைந்தன் செய்த குற்றத்திற்கு அவனை நோவாமல் அவனைப் பெற்ற தன் வயிற்றை நொந்துகொண்டமை முந்நூறுநாள் சுமந்து திரிந்த காலத்தும், முழுமகவாய்ப் பிறந்து வளர்ந்த காலத்தும் முதுகுடிப் பண்புக்கு ஏற்ப வளர்த்து வழிகாட்டாமை தன் குற்றமென முற்றுங் கருதியமை குறித் தென்க. களத்தில் வீழ்ந்துபட்டிருந்தாலும் களிப்புறுவேன்; ஆனால் களிற்றின் முகத்தில் வேலை விடுத்து அதனைப் பறிக்காமல் திரும்பிய பழியே என்னால் தாங்க வொண்ணா மானக்கேடு என்பாளாய், ஆங்கொழிதல் செய்யாய் என வெறுத்துக் கூறினாள். கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்பது பொதுநெறி ஆயினும் மறக்குடிக்குரிய மாண்பு அவ்வளவில் அமைவது இன்றி; யானை முகத்தில் ஆழ்ந்து போழினும் அவ்வேலைப் பறிக்காமல் விட்டுவருதல் இழிவெனவேபடும். ஆகலின் மூதின் மகள் அச்செயலைக் கேட்கவும் ஒண்ணாள். சாவு என்பதைக் கேட்டும் களிப்புறும் அவள், சால்பிழந்தான் என்பதைக் கேட்கப் பொறாள். ஆகலின் தன் குடியில் பிறந்தவன் என்று பெயரளவிலும் கொள்ளக் கருதாளாய் நம்மில் என்றோ நும்மில் என்றோ கூறாளாய் எம்மில் செய்யா அரும்பழி என்றாள். விடலை கொண்டுசென்ற வேல் இப்பொழுது அரும் பழிக்கு ஆளாகியதை அன்றி முன் எக்காலத்தும் ஆளாகியது இல்லை; என்றும் வழிவழியாக வெற்றிகொண்டு விளங்கிய வேல் என்பாளாய் வென்வேல் என்றாள். அவ்வேலுக்கும் இழிவு நேரக் களிற்றின் முகத்தில் விடுத்து மீண்டனன் என்பது குறிப்பு. மூதின்மகள் கொண்ட மானவீரம் மண்ணுக்குத் தனிப் பெரும் புகழ் சேர்க்கும் வீரச் செய்தி என்பதில் எட்டுணையும் ஐயமின்றாம். என்னே அவள் குலத்தில் குன்றாக் கொழுங்குடி மாண்பு! செல்லாய், எஃகம் புகர்முகத் தொழியப்போந்தனை; நின்னீன்றனன்; வாதுவல் வயிறே என இயைக்க. இத் தகடூர் யாத்திரை கரியிடை வேல் ஒழியப் போந்ததற்குத் தாய்தப வந்த தலைப்பெயனிலை என்பார் நச். (தொல். பொருள். 79) தப - இறந்துபட. தாய் இறந்துபடுமாறு மைந்தன் இறத்தல் தாய்தபவந்த தலைப்பெயனிலை யாகும். இன்கதிர் முறுவற் பாலகன் என்னும் தன்கடன் இறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று என்றும், இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே தடம்பெருங்கட் பாலகன் என்னும் - கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய் என்றும் இதன் இலக்கணமும் இலக்கியமும் காட்டும் புறப் பொருள் வெண்பாமாலை (258). (40) 17. மூதில் மறம் - 4 நிலைமண்டில ஆசிரியப்பா 41. எற்கண்ட டறிகோ? எற்கண் டறிகோ? என்மகன் ஆதல் எற்கண் டறிகோ கண்ணே, கணைமூழ் கினவே; தலையே, வண்ண மாலை வாள்விடக் குறைந்தன; வாயே, பொருநுனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந் தாவ நாழிகை அம்புசெறித் தற்றே; நெஞ்சே, வெஞ்சரங் கடந்தன; குறங்கே நிறங்கரந்து பல்சரம் நிறைத்தன; அதனால் அவிழ்பூ அப்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே. - புறத் 1406 (இ-ள்) எதனைக் கண்டு அறிவேனோ? எதனைக் கண்டு அறிவேனோ? என்மகன் ஆவன் இவன் என்பதை எதனைக் கண்டு அறிவேனோ? கண்ணைக் கண்டு அறிவேன் எனின், கணைகள் கண்ணில் மூழ்கி உருவழித்தன; தலையைக் கண்டு அறிவேன் எனின், ஒளியுறச் சுழலும் வாள் தொகுதிகள் ஒருங்கு படுதலால் சிதைவுகள் மிக்கன; வாயைக் கண்டு அறிவேன் எனின், வரிய நுனைவாய்ந்த அம்பு மூழ்குதலால் ஊனும் குருதியும் வழிந்து கணைப்புட்டிற்கண் கணை செறிந்திருந்தாற் போன்றது; மார்பினைக் கண்டு அறிவேன் எனின், வெவ்விய கணைகள் துளைத்துச் சென்று உருவழித்தன; இனித் தொடை களைக் கண்டு அறிவேன் எனின், அவற்றின் உண்மை நிறம் ஒழிந்துபட்டுப் பலப்பல அம்புகள் நிறைந்து நின்றன; ஆகலின் விரிமலர்ப்பூப் போன்ற அம்புப் படுக்கையில் கிடந்த காளை, கவிழ்ந்த பூக்களையுடைய வலிய கழற்காயைப் போன் றமைந்தனன்; இத்தன்மை இருந்தவாறு என்னே! என்றவாறு. இ-து:- கண்ணும், தலையும், வாயும், மார்பும், தொடையும் சிதைந்து பட்டனன்; அம்பணையிற் கிடந்தனன்; இவனை என்மகன் என எதனைக்கொண்டு அறிவேன் என மூதிற்பெண்டு அரற்றுதல் சொல்லியது. (வி-ரை) தன்மகன் பட்டழிந்து கிடத்தலைக் கண்ட மூதின் மகள் ஒவ்வோர் உறுப்பின் சிதைப்பாட்டையும் கூறிக் கூறி அரற்றியது. அவலம் மீதூரப் பெற்றனள் ஆகலின் எற் கண்டறிகோ என அடுக்கிக் கூறினாள். கண்ணே மணியே எனச் சீராட்டி வளர்த்தனன் ஆகலானும் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை ஆகலானும் முதற்கண் கண்ணழிந்து பாட்டை உரைத்தாள். கண்ணேயன்றி முகமும் உச்சியும் கழுத்தும் வாளால் போழப்பட்டுக் கிடத்தலின் தலையே வண்ண மாலை வாள்விடக் குறைந்தன என்றாள். குறைந்தன எனும் பன்மை வெட்டுண்ட புண்களின் பன்மை சுட்டி நின்றது. வண்ணம் - ஒளி; மாலை - தொகுதி. பல்லோர் கூடி நின்று தன் ஒருமகனைத் தாக்கினராகலின் மாலை என்றாள். இனி அழகிய மாலை யணிந்தவன் எனின் வாளுக்கோ, வீரனுக்கோ பெருமையின்றாகலின் பொருளன்மை உணர்க. ஆவநாழிகை - கணைப்புட்டில். வாய்க்குள் கணைகள் செறிந்து தைத்துக் குத்திட்டு நின்றன ஆகலின் கணைகள் நிரம்பியுள்ள கணைப்புட்டில் போலக் காட்சி வழங்கியமை குறித்தாள். வெஞ்சரம் கடத்தல் ஊடுருவிப் போதல். வீரர்க்கு நிறப் புண் படுதல் அன்றிப் புறப்புண் பாடு இன்று. ஆயின் நிறத் துப்பட்ட அம்பும் வேலும் புறத்து வெளிப்பட்டன்றே, பிறர் புறப்புண்ணென எள்ளுவர் என எண்ணி வெண்ணிப் பறந் தலையில் சோழன் கரிகாலனொடு பொருத சேரமான் வடக்கிருந்து உயிர்துறந்தான். அத்தகு புண்ணுற்றான் இவ் வீரன் என்க. எதிரிட்டார் அனைவரும் விற்போர் வீரர் ஆகலின் அவன் உடலெங்கும் அம்பே துளைத்தன. கணை, பகழி, அம்பு, சரம் என்பன ஒரு பொருட் கிளவிகள். ஒரு சொல்லையே ஆளாமல் அப் பொருள் குறித்த பல சொற்களைக் கையாண்டது நயமிக்கதாம். உடலெல்லாம் அம்பு குத்திட்டுக் கிடந்த வீரனுக்கு உவமை கூறுவாராய்க் கழற்காயைக் குறித்தார். சூழவும் முள்ளைக் கொண்ட காய்க்கு அம்பணையிற் கிடந்தானை உவமை காட்டுதல் நனிபெரும் சிறப்பினதாம். வீடுமன் அம் பணையில் கிடந்ததும், அவற்கு அணையாக அருச்சுனன் அம்பு ஏவி நிறுத்திவைத்ததும் பாரத வெண்பா உள்ளம் உருகும் வண்ணம் உரைத்தல் இவண் நோக்கத்தக்கதாம். அம்பணை அப்பணையாயது வலித்தல் வேறுபாடாம். மார்பில் வேல்கள்பட்டுச் சூழ நிற்றலை வண்டிக் குறட்டில் (குடத்தில்) ஆர்க்கால் நிற்பதற்குப் ஒப்பிட்டுக் காட்டினார் சங்கச் சான்றோர். ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத் திங்க (புறம். 283) என்றும், நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின் (மதுரைக். 742) என்றும் கூறினார். இனி வேல் பாய்ந்து நிற்கும் உடலைக் கறுக்கு மட்டையுடன் நிற்கும் பனைமரத்திற்கு ஒப்பிட்டும் கூறினர். நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே (புறம். 297) என்பது அது. வாளின்மேல் கிடந்த வீரன் ஒருவனை, விழுநவி பாய்ந்த மரத்தின் வாள்மிசைக் கிடந்தான் என ஒரு புறப்பாட்டுக் கூறும் (300). ஆனால் அம்பணையில் கிடந்த வீரனைத் தகடூர் யாத்திரை கூறுமாறே, மொய்படு சரங்கள்மூழ்கமுளையெயிற்றாளிபோலஅப்பணைக்கிடந்தமைந்தன்.................... பொலங்கழற் காயு மொத்தான் எனச் சிந்தாமணி கூறுவது (2287) ஒப்பிட்டு மகிழத்தக்கதாம். இன்னும், கதிரவன் காதல் மைந்தன் கழலிளம் பசுங்காய் என்ன எதிரெதிர் பகழி தைத்த யாக்கையன் என இராமாயணம் கூறுவதும் (நாக. 200) உன்னி மகிழ்க. கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா வகை என்னும் புறத்துறைக்கு (தொல். புறத். 16) வாய்த்த புகழ்மிக்க எடுத்துக்காட்டு இத் தகடூர் யாத்திரைப் பாட்டாகும். மேற். இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை என்பார் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 79) இதனால் நெடுங் கோளன் என்பான் பெருவீரன் என்பதும், அவன் தகடூர்ப் போரிடைப்பட்டு வீழ்ந்து அமரன் ஆனான் என்பதும், அவன் தாய் தானும் இறந்துபட்டாள் என்பதும் விளக்கமாம். (41) 18. இரங்கல் - 1 மண்ணவர் மயங்க Éண்ணுலகுbசன்றவன்gண்பினைப்òகழ்ந்துbநாந்தtருந்தியது.ifaW நிலை vன்பதும்ïது.ïjid, வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று என்றும் (31) “வியலிடம்kருளÉண்படர்ந்தோன்ïயல்பேத்திmழிபிரங்»ன்றுv‹W« (80) புறப்பொருள் வெண்பாமாலை கூறும். நேரிசை வெண்பா 42. இரவலர் வம்மின் எனவிசைத்தல் இன்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் nகட்டடங்காnதாற்கண்ணnபாலுத்Jடி.- புறத். 1438. (இ-ள்) இரவலர்களே வருக என்று அழைத்தல் இல்லா மல் இரவலர்க்குப் புரவலனாக அமைந்தவன் இறந்த பொழுதும் முன்னைப் போலவே முழங்கும்; வாய்ச்சொல் வெளிப் படாமல் அடங்கி ஒழிய வேல்போன்ற கண்ணையுடைய உரிமை மகளி ரின் கொடிய அரற்றொலி கேட்டும் அடங்காத தோற்கண்களை யுடையனவே போலும் இத் துடிப்பறைகள் என்றவாறு. இ-து:- தலைவன் இறந்த தாழாத் துயரைத் துடியின் மேல் வைத்துச் சொல்லியது. (வி-ரை) முரசு போர்முரசு, மணமுரசு, கொடைமுரசு என முத்தொழில் வகைக்கும் முழங்கும் மூவகைத்து, அது, கொடை வழங்குதற்குரியான் இருந்தபோது இசைத்தவாறே இரங்கலின்றி இசைத்ததாகலின், இத் துடியின் கண்கள் அருட்கண்கள் அல்லைகாண்; தோற்கண்களே; அருட் கண்ணவாயின் அழுங்கல் இன்றி ஆரவாரிக்குமோ? என்றான் என்க. அருட்கண் என்பது பிறர்துயர் கண்டுழி ஆற்றாமைப் பாடும், அரிதின் உதவுதலும் அன்றே; ஆற்றாது அழுவார் இடையும் உணர்வின்றி ஓயாது முழங்கும் இஃது என்னே என அவ்வொலி கேட்டு இரங்கினான் ஒருவன் அதன்மேல் வைத்துத் தன் அவலம் உரைத்ததாகும். துடியின்கண் கோல் தாக்குறும் இடம் கண்ணெனப் படும். அக் கண் இருபுறத்தும் உண்டாகலின் இணைக் கண்களுக்கு உவமையாயிற்று. பெயரளவால் தேங்காய்க் கண், நுங்குக்கண், மூங்கிற்கண், தோகைக்கண், சிலந்திக்கண், வேற்கண், கோற்கண், என்பனபோலத் தோற்கண் எனப் பேசப்படுவதன்றிப் பெருந் தக்க செயல் இல்லை என இகழ்ந்தானாம். மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச் சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப உழவர் ஓதை மறப்ப விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்பப் (புறம். 65) புரவலன் மடியவும், தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே; ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே (புறம். 238) என்றிரங்கத் தலைவன் பெரும்பிறிதாகவும் இரங்காத கண்ணைத் தோற்கண் என்பதல்லது வேறென்ன சொல்வேன் என்று இரங்கினான் என்க. தன் ஆற்றாமையைத் துடிமேல் ஏற்றி யுரைத்த நயம் பாராட்டற்குரிய தாம். இளையோர் சூடார் வளையோர் கொய்யார் என்னும் புறப்பாட்டியல் (242) முல்லையும் பூத்தியோ என முல்லையின்மேல் வைத்துத் தன் கையறு நிலையை உரைத்தது உணர்ந்து மகிழத்தக்கதாம். (42) 18. இரங்கல் - 2 நேரிசை ஆசிரியப்பா 43. இழுமென முழங்கும் முரசமொடு குழுமிய ஒன்னா மள்ளர்த் தந்த முன்னூர்ச் சிறையில் விலங்கிச் செவ்வேல் ஏந்தி யாண்டுப்பட் டனனே நெடுந்தகை ஈண்டுநின் றம்ம அணியிற்பெரும் புகழே. - புறத். 1454. (இ-ள்) இழும் என்னும் ஒலியுடன் முழங்கும் முரசுடன் கூடிவந்த பகை வீரர்களால் தரப்பெற்ற ஊர்ப்புறத்து முற்றுகையைத் தடுத்துச் செவ்விய வேலை மார்பிலே ஏந்தியவாறே பட்டுச் சிறந்தனன் பேராண்மையாளன். அவன் பட்ட இவ்விடத்தே நின்று மாலை சூட்டிக் கொள்வேமெனின் போரில் பெரிய வெற்றிப் புகழாம் என்றவாறு. இ-து:- வேல்பட்டு மாய்ந்த வீரன் நடுகல் முன்னே போர்மாலை சூடிப் போகின் வெற்றி எளிதில் வாய்க்கும் என்பது சொல்லியது. (வி-ரை) இழும்: ஒலிக்குறிப்பு ஏம முரசம் இழுமென முழங்க என்றார் இரும்பிடர்த் தலையார் (புறம். 3) ஒன்னா மள்ளர்- பகைமறவர். குழுமிய மள்ளரை ஒருதானாக நின்று சிறையில் தடுத்துச் செவ்வேல் ஏந்திப் பட்டனன் எனலால் வீரமேம்பாடு விளக்கமாம். முன்னூர் - ஊர் முன்; இலக்கணப் போலி. சிறையில் விலங்குதல் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தினாற்போல் தடுத்து நிறுத்துதல். இதனை, வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை என்பார் தொல்காப்பியனார் (தொல். புறத். 7) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றோர்க்(கு) ஆழி எனப்படு வார் என்னும் குறளும் (989), வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்(கு) ஆழி அனையவன் என்னும் புறப்பாட்டும் (330) இவண் கருதத்தக்கனவாம். ஈண்டு நின்று அணியில் என்றது வீரன்பட்ட மண்ணின் மாண்பைக் கருதியதாம். வீர வழிபாட்டின் வேர் இஃதென விளங்குமாறு அறிக. அமரிடைப்பட்டு மாய்ந்தவரே அமரர் எனப் பெற்றனர் என்னும் கருத்தும் இவண் நோக்கத்தக்கதாம். இது, நடுகல் கண்டு கூறினான் ஒரு வீரன் கூற்று. (43) 19. நூழில் பகைவர் படையைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுதல் நூழில் எனப் பெறும். கழல் வேந்தர் படை விலங்கி அழல்வேல் திரித் தாட்டமர்ந் தன்று ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடர் சூடல் மலைந்த சுழல்கட்பேய் - மீடன் மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் திறந்தவேல் கையில் திரித்து என இதன் இலக்கணமும் இலக்கியமும் கூறும் புறப் பொருள் வெண்பாமாலை (141). இனி நூழிலாட்டு என்பதோ எனின் தன் மார்பம் திறந்த வேலைப் பறித்து எறிந்தது ஆகலின் அதனின் இது வேறானதாம். நேரிசை ஆசிரியப்பா 44. மெய்ம்மலி மனத்தின் நம்மெதிர் நின்றோன், அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமரும் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி இளையோன் சீறின், விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறும் கடாஅம் உமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை எறிதல் ஒன்றோ; மெய்ம்மலி உவகையன் நம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடியன் உண்கண் நோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேல்திரித் திட்டு நகுதலும் நகுமே. (இ-ள்) பூரிப்பு மிக்க உள்ளத்தனாக நம் எதிரே நிற்கும் இவன், கலைத்திறம் செறிந்து விளங்கி ஒளிவிடும் தேர்த்தட்டின் ஒருசார் இருந்து, விரும்பத்தக்க அழகிய கழுத்தினையுடைய குதிரையைக் கொண்ட முகையவிழ்ந்த கண்ணியினைப் புனைந்த இளையவீரன்; இவன் சீறுவனாயின் வானளாவி எழுந்த உயர்ந்த மலையில் பொழியும் மழைபோலத் தண்ணிய நறிய மதநீரைப் பொழிந்த வெள்ளிய தந்தத்தையுடைய பெருமித மிக்க யானையைக் கொல்லுதல் ஒன்றுமட்டுமோ? மீக்கூர்ந்த மகிழ்வுடையவனாக நம்மிடத்தே வருதலொடு, நறுமையும் வெறியும் அமைந்த கள்ளுண்ட கலைத் தேர்ச்சிமிக்க துடிப்பறைக் கிணைவனின் ஒளி மிக்க கண்ணை நோக்கிச் சிறிதே கொலைத்தொழில் இன்னதெனக் கூறுமாப்போல மின்னல் பிதிர்ந்ததொப்பத் தன் வேலைப் பக்கம் சுழற்றி நகுதலும் செய்வன் என்றவாறு. இ-து :- இளையோன் சீறின் யானையை எறிவதுடன், துடியனை நோக்கி நின்று தன் வேலைத் திரித்து நகையும் புரிவன் என்பது சொல்லியது. (வி-ரை) மெய்ம்மலி மனம் - உடலை விரியச் செய்யுமாறு மகிழ்வுகூர்ந்த மனம். சிலை செல மலர்ந்த மார்பு எனின் வில்லை வளைத்து அம்பு ஏவுங்கால் இருபுறமும் விரிய மார்பு அகலுதல் போல உவகையால் விரிந்தது என்க. மேல், மெய்ம்மலி உவகை என வருவதற்கும் இதனைக் கொள்க. நின்றோன், இளையோன் என இயைக்க; இளையோன் சீறின், யானை எறிதல் ஒன்றோ; வேல் திரித்திட்டு நகுதலும் நகுமே எனவும் இயைக்க அடர் வினை - கலைத் தொழிற்செறிவு. பாண்டில் - தேர்த்தட்டு; இவண் தேரைக் குறித்து நின்றது அதன் ஓரத்தே உவகை பெருக நின்றனன் ஆகலின் கைஇகந்து என்றார். அமரும் - விரும்பும். அணல் - தாடி; இவண் கழுத்துத் தொங்கலைக் குறித்தது. புயல் - மழை; மழையென ஒழுக்கும் கடாஅம் (மதம்) என யானையின் செருக்குக் கூறியவாறு. கடாஅம் மணமுடையதென்பதை, கமழ் கடாஅம் (புறம். 3) தேன் சிதைந்த வரைபோல, ஞிமிறார்க்கும் கமழ் கடாஅம் (புறம். 22) என வருவனவற்றால் அறிக. களிறு கடாமுற்ற காலையில் அதனை நெருங்குதல் அரிது என்பதைத் துன்னரும் கடாஅம் என்பதனால் (புறம். 94) கொள்க. கடி என்னும் உரிச்சொல் மணத்தையும் வெறியையும் ஒருங்குணர்த்தியது. இன்கடுங்கள் என்றும் தேக்கட்டேறல் என்றும், தேட்கடுப்பன்ன நாட்படு தேறல் என்றும், பாம்பு வெகுண்டன்ன தேறல் என்றும் சான்றோர் கூறுமாற்றான் இதனை உணர்க. துடியன் உண்கண்ணை நோக்குதல் அவன் பறை முழக்கத் திற்கு இயைய வேல் திரித்து ஆடுதற்கு. இன்றும் ஆடுவார், குழலூதுவானையும் கொட்டடிப்பானையும் நோக்கிக்கொண்டு குறிப்பொருங்குபட ஆடுதல் கண் கூடாகும். மின்னுச் சிதர்தல் - மின்னல் வெட்டுதல். வேலின் ஒளியும், திரிக்கும் திறமும் ஒருங்கு விளங்க உவமை கூறினார். கொலை மொழி என்றது பகைவர் குடரைச் சரித்து மாலையெனச் சூடிக் கொண்டு ஆடுதல் கொலையை வெளிப்படுத்திக் கூறுவது ஆயிற்று. நகுதலும் நகுமே என்றது வருதலும் வருமே என்பதுபோல நின்றது. பிறரும், நீடலும் நீடும் என்பனபோல உரைத்தார் (மணிமே. 3: 113) இஃது அதியமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்பார் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். புற,.8). பெருபாக்கன் என்பான் படைத்தலைவருள் ஒருவன் என்பதும், அவன் வீரமாண்பால் அதியமானால் சிறப்பு எய்தினான் என்பதும் ஆயினும் அவனைப் பொருட்டாக எண்ணாமல் சேரமான் போர்க் களத்தில் எதிரிட்டு நின்றான் என்பதும், அவனைக் கண்டு சான்றோர் அரிசில்கிழார் இத் தகடூர் யாத்திரையைப் பாடினார் என்பதும் புலப்படுகின்றன. அதியமான் என்பான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பதும், சேரமான் என்பான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பதும் பெயராலே தெள்ளிதின் அறியப்பெறும். மேற். தொல். பொருள். 63. நச். (44) 20. பூக்கோள் நிலை படைஞர் பகைவரொடு போருக்குச் செல்லுதற்கு அரசன் கொடுக்கும் பூவை அணிந்து கொள்ளுதல். காரெதிரிய கடற்றானை போரெதிரிய பூக்கொண்டன்று என்பது இதன் இலக்கணம் (புறப்பொருள் வெண்பாமாலை 70). பருதிசெவ் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ என்பது இதற்கு எடுத்துக் காட்டு. நேரிசை ஆசிரியப்பா 45. மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி அப்பியெவ் வாயும் எந்திரப் பறவை இயற்றின நிறீஇக் கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும் வில்லும் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும் என்றிவை பலவும் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை இயற்றிப் பின்றை எய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை இரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே. (இ-ள்) வலிமையமைந்த வீரர்கள் மேலே ஏறுதற்கு இட மாகாதவாறு, நெய்யுடன் கடுகுவழியும் அப்பி எவ்விடத்தும் பறவைப் பொறிகளைத் தக்காங்கு நிறுத்தி வைத்துக், கல்லும் கல்லையேவும் கவணையும், கடிய செலவமைந்த பொறிகளும், வில்லும் அம்பும் எனப் பலவகைப்படப் பரப்பிவைத்துப், பந்து பாவை பசிய வரிகள் அமைந்த பேழை எனப்பட்டவற்றை, ஆங்காங்குப் போய்ப்போய் வீசி எறியும் கலையான் முதிர்ந்த மகளிர் வடிவப் புனைபொறிகளையும் செய்து, பின்னும், தானே சென்று தைக்கும் அம்புப்பொறியை வாயிற்கண் தூக்கி, மதிப் பிட்டுரைக்கும். எல்லை கடந்ததாயினும் வளையச் சூழ்ந்து இறந்துபட்ட வீரரொடு முடிவான தீக்கண்பாயும் மகளிரின் சிறந்த கற்புநலம் விளங்கக், காண்பார் காண்பார் எல்லாம் நோவுற்றுச் செயலற்றுப் போய் நடுக்கமுறுவர்; எதிரிட்டுத் தாக்குவார் நிற்றற்கரிய படையையுடைய இரும்பொறையின் பூக்கோணிலை புலப்படுத்தும் தண்ணுமைக்குரலைக் கேட்குந் தோறும் கண்ணீர் வடித்தே என்றவாறு. இ- து:- இரும் பொறையின் பூக்கோணிலைத் தண்ணுமைக் குரல், நோக்குநர் நோக்குநர் நோவுற்றுக் கலுழச் செய்யும் என்பது சொல்லியது. (வி-ரை) இது பொன்முடியார் பாட்டு என்பார் நச்சினார்க் கினியர். ஏறுதல்- முழுமுதல் அரணத்தைப் பற்றி மேலே ஏறுதல், அவ்வாறு ஏறாமைக்காக மதிலின் உள்ளிருப்பார் செய்து வைத்த தடைகளையும் பொறிகளையும் விரித்து விளக்குவாராய் நெய்யோடு ஐயவி அப்பி என்பது முதலாகத் தொடர்ந்தார். நெய் - எண்ணெய் முதலிய பசைப்பொருள்கள். ஐயவி - கடுகு. கடுகை அரைத்துச் சேர்த்த விழுது ஐயவி என்க. இவை, அரணில் ஏறுவாரை வழுக்கிவிட்டு வீழ்ந்துபடச் செய்யுமாகலின் நெய்யோடு ஐயவி அப்பினர். வழுக்குமரப் போட்டி வைப்பார் விளக்கெண்ணெய் முதலிய பசைப் பொருள்களை அதன்கண் தடவி வைத்தல் கண்கூடு. எந்திரப் பறவை - பறவை வடிவில் செய்யப்பெற்ற பொறி வகைகள், கல், கவண், கடுவிசைப்பொறிவில், கணை, பகழி என்பன வெல்லாம் தாமே சென்று தாக்கும் வண்ணம் மதிற்கண் அமைக்கப்பெற்ற பொறிவகைகளாம். மதிற்கண் அரும்பொறிகள் பல அமைத்தல் உண்மையைச் சங்கச்சான்றோர் பாடல்களாலும், சிலப்பதிகாரம் முதலாய காவியங்களாலும் செவ்விதின் அறியலாம். சான்றாக, மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் என்று இளங்கோவடிகளார் கூறுவதையும் (சிலப். 15: 206-16) பிறவும் என்றதனால், சதக்கினி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என அடியார்க்கு நல்லார் உரைப்பதும் இவண் அறியத்தக்கனவாம். மகளிர் என்பது மகளிர் பொறியை. அப்பொறி பந்து, பாவை, புட்டில் முதலியவற்றைத் தோன்றித் தோன்றி எறிந்து விளையாடும் பொறி என்க. அப்பொறியை அமைத்தல் பகை வீரரை இழிவு படுத்துதற்குச் செய்வது என்பது முருகாற்றுப் படையானும், நச்சினார்க்கினியர் வரைந்த உரையானும் நன்கு விளங்கும். செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில் என்னும் முருகாற்றுப்படை வரிகளுக்கு உரைகூறி, பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின என்றவாறு என நச். விளக்கம் எழுதுவதை அறிக. இனிப் பந்தும் பாவையும் புட்டிலும் தூக்குதல் அன்றிச் சிலம்பும், தழையும் தூக்குதலும் உண்டு என்பது பதிற்றுப் பத்தான் விளங்கும். செம்பொறிச் சிலம்போ டணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் - (பதிற். 53) என்பதையும், சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின என்றது, ஈண்டுப் பொருவீர் உளீரேல் நும்காலில் கழலினையும், அரையில் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச் சிலம்பினையும் தழையினையும் அணிமின் என அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க என்னும் பழைய உரையையும் கண்டு தெளிக. தகடூர் யாத்திரையின் இவ்வடிகள், பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கும் முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றூக்கி எனத் தணிகைப் புராணத்தில் பொன்னேபோற் போற்றப் பெற்றிருத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். சுட்டல்- மதித்தல். இவண் இனைத்தென மதிப்பிட்டுக் கூறுதல். சூழநின்று அழலிடைப் பாய்வார் ஆகலின் வட்டத் தீப்பாய் மகளிர் என்றார். இவர் காதலன் இறப்பக் கனைஎரி மூழ்குவார் என்க. திகழ்நலம் பேர்தல் - விளக்கமிக்க எழிலுரு அழிந்து படுதல். மகளிர் தீப்பாய்தலைக் காணுதல் கண்ணராவிக் காட்சி யாகலின், நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும் என்றார். கைவிதிர்த்தல் - நடுங்குதல். தாக்க அரும் தானை - பகைவரால் தாக்குதற்கு அரிதான படை. எண்ணவே நடுக்கங்கொள்ளுவார் எதிரிட்டுத் தாக்க வொண்ணுமோ என உட்கொண்டாராய்த் தாக்கருந் தானை என்றார். இரும்பொறை என்பது வேந்தன் பெயர்; அவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்க. தண்ணுமை ஒரு தோற்பறை; அத் தண்ணுமை முழக்கும் கரணியம் வெளிப்படுப்பாராய்ப் பூக்கோட்டண்ணுமை என்றார். இது புறத் துறையுள் பூக்கோணிலை எனப்படும். பூக்கோள் தண்ணுமை என்பது பூக்கோள் ஏய தண்ணுமை என்பதாம். பூக்கோள் தண்ணுமை முழங்குதலை, பூக்கோள் இன்றென் றறையும் மடிவாய்த் தண்ணுமை என்றும் (புறம். 289), பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே என்றும் (புறம். 241), இருபெரு வேந்தர் மாறுகோள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை என்றும் (அகம். 175) வருவனவற்றால் அறிக. இரும்பொறையின் அரணத்தை விரித்து, அவனை எதிர்த்தோர் மகளிர் தீப்பாய்தலைப் பூக்கோட் டண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்து நொந்துகை விதிர்க்கும் என்றார் ஆகலின் அவன் வீறு மேம்பாட்டை விளம்பினார் என்க. கண்சிவக்க வாள்சிவந்த தெனக் கூறுமாறு போலத் தண்ணுமை கேட்ட அளவிலே தீப்பாய் மகளிரை நோக்கிச் சான்றோர் உள்ளம் கனன்று கலுழ்ந்தனர் என்றார். பகைவர் அமைதலும் இரும்பொறை அருள்தலும் அமையின் உய்வுண்டாம் என்பது புலவர் பேரருள் விளக்கமாம். மேற். தொல். புறத். 12. நச். இதனைத் தொல் எயிற்கு இவர்தல் என்னும் புறத்துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார். (45) 21. புறத்தோன் அணங்கிய பக்கம் மாறுபட்டு வந்த புறத்தோனை அகத்தோன் தன் ஆற்றலால் வருந்தச் செய்தல் புறத்தோன் அணங்கிய பக்கம். அணங்குதல் - வருத்துதல். புறத்தோன் வருந்தினன் ஆகலின் வருத்தியோன் அகத்தோன் என்க. அவ்வாறு வருத்தியபோது, ஆற்றல் மீக்கூர்ந்து அடிக்கும் கோலைத் தாங்கி ஆர்த்தெழும் ஆடரவம் போலப் புறத்தோன் எழுந்து அடர்ப்பன் என்பது இத் துறையான் விளங்கும் (தொல். புறத். 12) புறத்தோன். அடர்த்தெழுதலை முற்றுமுதிர்வு என்பார் ஐயனாரிதனார். அகத்தோன் காலை அதிர்முர சியம்பப் புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத் தன்று என்பது அவர் வாக்கு (புறப். வெண். 117) நேரிசை ஆசிரியப்பா 46. கலையெனப் பாய்ந்த மாவும் மலையென மயங்கமர் உழந்த யானையும் இயம்படச் சிலையலைத் துய்ந்த வயவரும் என்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுரைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கில் தூற்றயற் கிடப்பக் களையாக் கழற்கால் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் செறுத்தனர் ஆர்ப்ப மிளைபோய் இன்று நாளை நாமே உருமிசை கொண்ட மயிர்க்கண் திருமுர(சு) இரங்க ஊர்கொள் குவமே. (இ.ள்) முசுக்கலையெனப் பாய்ந்த குதிரையும், மலையென மயங்கச் செய்யும் தோற்றமுடையதாய்ப் போரில் அழுந்திய யானையும், பல்வேறு இசைக்கருவிகள் முழங்க வில்லால் பகைவரை அழித்துச் சிறப்புடன் மீண்ட வீரரும் எனப்பட்ட இவை பலவற்றை மேனாளில் புறங்கண்டோராய நின் வீரர்; போரில் பகைவர் புறமிட்டோடுதலையே கண்ட என்றும் ஆறாத புண்களையுடைய வேந்தனே, இனி இப் போரில், பரிய யானையால் உதைக்கப் பெற்றுக் கணைகள் தைத்து ஊன்றி யிருக்கும் வீரரின் வளமான தலைகள் வெட்டுவாய் அறுக்கப் பட்ட நுங்குக்காயைப்போல் புதற்புறங்களில் கிடக்குமாறு, அவிழ்க்கப்பெறாத கழலையுடைய காலையும், கரிய கண்ணையும் உடைய மறவர்கள், பொங்கி எழும் வெகுளியினராய், மனக் கறுவினராய் ஆரவாரம் கொள்ள இன்று காவற்காட்டைக் கடந்து போக நாளைப்பொழுதில் நாம் இடியொலியைத் தனதாகக் கொண்ட மயிர் சீவாதொழிந்த வீரத் திருவுறையும் முரசு முழங்க ஊரைப்பற்றிக் கொள்வோம். இ-து :- வேந்தே, முன்னாள் பலபுறங்கண்டோர்; இன்று மிளைகொள்வர், நாளை நாம் ஊர் கொள்குவம் என்பது சொல்லியது. (வி-ரை) இது சேரமான் பொன்முடியாரையும், அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படை பட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது என்பார் நச்சினார்க்கினியர் (தொல். புறத். 12). இதனால் சேரமான் மதிற்புறத்து இருந்த வேந்தன் என்பதும், அவன் படைகளை மதிற்குள் இருந்தோன் படை அலறத் தாக்கிற்று என்பதும், தன் படைகள் படும்பாட்டையும், உள்ளிருப்போன் படை படுத்தும்பாட்டையும் எண்ணிய சேரமான் அதனை அரிசில்கிழாரிடத்தும் பொன்முடியாரிடத்தும் கூறினான் என்பதும், அதனைக் கேட்ட அவர்கள் இன்று காவற்காட்டைக் கடந்து உள்ளே போவதும், நாளை நாம் ஊரைப் பற்றிக்கொள்வதுமே உறுதி என்று கூறினார் என்பதும் புலப்படும். கேட்டோற்கு- கேட்ட சேரமானுக்கு. அவர் - அரிசில்கிழாரும் பொன்முடியாரும். இனிப் பகைவர் மதிற்பொறிகளும், அவர் தம் வீர மாண்பும், எதிரிடுவாரை நாணுறுத்துமாறும் (45) பொன் முடியார் பாடிய பாட்டு ஒன்று உளதாகலின், இஃது அரிசில் கிழார் பாடிய பாட்டு எனினும் ஏற்புடையதேயாம். கலை எனப் பாய்ந்த மா என்றார் குதிரையை. கலை இவண் மான் கலை அன்றாம்; முசுக்கலையாம். பாய்தலைச் சுட்டினார் ஆகலின் மான்கலை விலக்கப் பெற்றதாம். இயம் - இசைக் கருவிகள். அவை பலவாகச் செறிந்தவற்றைப் பல்லியம் என்றது அறிக. இவர் அடிப்பட்ட வீரர் என்பாராய்ப் பலபுறங் கண்டோர் என்றார், பலபுறங் கண்டோர் அமர் செய்தலை ஆடல் எனக் கருதிக் களிகூர்வராகலின். புறங்கண்டான் என்பது பகைவர் பல்காலும் அஞ்சி ஓடக் கண்டவன் என்பதால் அவர் வலியிலாப் பகைவரோ என எண்ணுவார் உளராயின் அவரை மறுத்தற்குப் பசும்புண் என்னும் அடைமொழி தந்தார். அவர் வன்மையாகத் தாக்கிப் புண்பாடு செய்யவல்ல பொருநரே என்பது குறிப்பு. அம்புகள் தைத்து மூழ்கிக்கிடந்த வீரர் தலைகளை மதக் களிறு எற்றித் தள்ளுகிறது. அத் தலை மூக்கறுபட்டுக் கட் குழியும், வாய்ப்புழையும் தோன்றக்கிடத்தலை மூக்கறு நுங்குக்கு ஒப்பிட்ட இயற்கைப் புனைவு, அருமைப்பாடு உடையதாம். தலை கருமைக்கும், புழை எண்ணிக்கைக்கும், மூக்கறு பாட்டுக்கும் பொருந்திய செப்பம் உடையது. நுங்கிற் காயின் மூக்கு அறுவாய் அல்லது வெட்டுவாய் என்க. பாளையொடு கூடிய பக்கம் அது. மூக்கு முன்புறமாதலை, புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து (குறள். 277) என்னும் குறளால் ஆய்ந்து கொள்க. இடையீடறப் பொருகளம் சேறலை விளக்குதற்குக் களை யாக் கழற்கால் என்றார். மிளையாவது காவற்காடு. காவற் காட்டைக் கடந்து ஆடவர் இன்று போவது உறுதி என்றார். போர்வீரர் அல்லராகிய தம்மை உள்ளடக்கி, இன்றி நாமே மிளைபோய் என்னாராய், ஆடவர்க்கு உரைத்தார். நாம் நாளை ஊர் கொள்குவம் என்பதில் தம்மையும் அடக்கிக் கொண்டனர். வென்ற வேந்தன், இருந்த வேந்தன் திருவோலக்கத்தில் சிறப் போடு எழுந்தருளுதலும் வீரர்க்கும், புலவர்க்கும், கூத்தர் பாணர் முதலாயினார்க்கும் தலையளி செய்தலும் வழக்காகலின். நாளை ஊர்கொள்குவம் எனத் துணிந்து கூறினார் சேர மானையும், அவன் படையையும் தெள்ளிதின் அறிந்த திறவோர் ஆகலின். இனிப் படைவீரர், மதிற்புறத்தே இருந்து அகப்பை துடுப்பு முதலியவற்றை மதிலுள் எறிந்து ஊர்கொண்டாலன்றி உண்ணோம் என்றும், ஊர்கொண்ட பின்னரே அதனுள் அட்டுண்போம் என்றும் வஞ்சினம் மொழியும் வழக்கும் உண்மை புறத்துறைப் பாடல்களால் புலனாம். காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்- மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு என்பது புறப்பொருள் வெண்பாமாலை (117). மூழை- அகப்பை. புலியைக் கொன்று வெற்றி கொண்ட ஏறு இறந்தபோது அதன் தோலை மயிர் சீவாமல் போர்த்த முரசம் ஆகலின், மயிர்க்கண் திருமுரசு என்றார். இதனை, புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு. என்னை? புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுரல் உருமுச் சீற்றக் கதழ்விடை உரிவை போர்த்த துனைகுரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான் நனைமலர் அலங்கற் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான் எனவும், கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த மயிர்க்கண் முரசம் ஓவில கறங்க எனவும் சொன்னார் பிறரும் என்னும் அடியார்க்கு நல்லார் உரையால் நன்கு தெளிக. (சிலப். 5: 76. 88) மேற்: தொல். புறத். 12. நச். (46) 22. தருக்க வாதம் வஞ்சி இடையிட்ட நேரிசை ஆசிரியப்பா 47. கனவே போலவும் நனவே போலவும் முன்னிய தன்றியென் உள்ளகம் நடுங்குறக் கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும் இருவகை உயர்திணைக் கேந்திய கொடியொடும் வெருவந்த தோற்றத்தால் உருவின பலகூளிக் கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும் பறையன்ன விழித்தகண்ணாள் பிறையன்ன பேரெயிற்றாள் *குடையன்ன பெருமுலையாள் இடைகரந்த பெருமோட்டாள் இடியன்ன பெருங்குரலாள் தடிவாயிற் றசைப்புறத்தாள் கடலன்ன பெருமேனியாள் காண்பின்னாக் கமழ்கோதையாள் சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய அகலல்குலாள் மழையுமஞ்சும் வளியும்போலும் செலவினாளொரு பெண்டாட்டி தலைவிரித்துத் தடக்கைநாற்றி மறனெறிந்து மாறுகொண்டறியா அறிவுக்கிம் முறை *நாள் இவ்வளவென்றே பூவிரல்காட்டி நீறுபொங் கத்தன் கைகளால் நிலனடித் தூரையிடஞ் செய்து காடு †òFjš கண்டேன் என்னும் கவலை நெஞ்சமொ டவலம் நீந்தினாள் அன்றது மன்றவ் வதிகமான் ‡jhŒ¡nf. (இ- ள்) கனவே போலும் என்னுமாறும், இல்லை நனவே போலும் என்னுமாறும் தோன்றிய தல்லாமல், எனது உள்ளம் நடுக்கமுறுமாறு கருநிறக் காக்கையும், வெளிறிய நிறக் கூகையும் அரசர் அமரர் என்னும் இருவகைப்பட்ட உயர் திணையினர்க்கும் எடுக்கப்பெற்ற கொடிகளொடும், கண்டோர் அஞ்சத்தக்க தோற்றத்தோடு வெளிப்பட்ட பல பேய்க் கூட்டங்கள் குருதி யொழுகும் மண்டைகளைச் சுமந்துகொண்டு ஆடவும், பறை போன்று விழித்த கண்ணினளும், பிறைநிலாப் போன்ற பெரிய பல்லினளும், குடைபோன்ற தடமார்பினளும், இடையை இல்லையாகச் செய்த பெரியவயிற்றினளும், இடி போன்ற பேரொலியினளும், தடித்தவாயின் கடையின்கண் தசை தொங்க அமைந்தவளும், கடல்போன்ற கறுத்த பெரிய உடலினளும் காண்பவர்க்குக் கடுங் காட்சி வழங்கும் மணங் கமழும் கூந்தலையுடையவளும் வில்லன்ன புருவத்தினளும், அகன்று உயர்ந்த பேரல்குலினளும், மழை முகிலும் மஞ்சி மூட்டமும் காற்றும் செல்வதுபோன்ற விரைந்ந செலவுடையவளும் ஆகிய ஒரு பெண்மகள் தன் தலையை விரித்துப்போட்டு வலிய கையைத் தொங்கவிட்டு, தீமையைக் களைந்து எதிரிட்டுரைப்பாரும் மாறுபாடற ஏற்றுக் கொள்ளத்தக்க மதிவலியாளனுக்கு இத்தகைய சீரிய வாணாள் இத்துணையே யாம் என்று தன் பூப்போன்ற விரலை நீட்டிக் காட்டிப் புழுதி எழும்பத் தன் கைகளால் நிலத்தில் அறைந்து ஊரை இடமாகச் சுற்றி நன்காடு புகுவதைக் கண்டேன்! என்னும் கவலை கூர்ந்த நெஞ்சத்துடன் நீங்காத் துன்பவெள்ளத்தில் தத்தளித்தாள் அன்று. அஃதுறுதியாகி விடும்போலும் அதியமான் தாய்க்கே. இ-து கனவுபோலவும் நனவுபோலவும் ஒரு பெண்டாட்டி இம் முறைநாள் இவ்வளவு என்று கூறி அன்று ஊரை இடம் போகக் கண்டாள்; அஃதுறுதியாகி விடும்போலும் அதியமான் தாய்க்கு என்பது சொல்லியது. (வி-ரை) இக்காட்சி கண்ணுறக்கத்தில் கண்டது ஆகலின் கனவெனுமாறும், ஆனால் கண்ணேராகத் தெளியக் காண்பது போல் இருந்ததாகலின் நனவெனுமாறும் இருந்தமையின் கனவே போலவும் நனவே போலவும் என்றார். அதியமான் தாய்கண்ட காட்சியை அறிந்தார் ஒருவர் அதன் முடிவு யாதாம் என எண்ணி நொந்து உண்மையாம் போலும் என உறுதி கொண்டு உரைத்தார் கூற்றாகலின் அது மன்ற அவ் வதியன் தாய்க்கே என்றார். என் உள்ளகம் நடுக்குற என்றது அதியமான் அன்னையார் தாம் கண்ட காட்சியை உட்படுத்திக் கூறியது. உயர்திணை இருவகை என்பதை ஆடவர் பெண்டிர் எனக் கோடலாமோ எனின் அன்று; இருவகை உயர்திணைக் கொடிகள் எடுத்தல் என்னும் வழக்கு இன்மையான். மற்று வேந்தர்க்கெனவும்,, தெய்வங்களுக்கெனவும் இருவகைக் கொடிகள் எடுக்கும் வழக்குண்மையால் அதனைக் குறித்தாம் என்க. இனி வேந்தர் எடுத்த கொடியும் வீரர் எடுத்த கொடியும் எனினும் ஆம். கூளிக் கணங்கள்- பேய்க்கூட்டங்கள். அவை குருதி மண்டை சுமந்தாடின என்க. குருதிமண்டை - குருதி ஒழுகும் மண்டை. அன்றிக் குருதி இருக்கும் மண்டைப் பாத்திரம் எனினும் ஆம். கருமணிக்கும் வெண்படலத்திற்கும், அகற்சிக்கும் பறை கண்ணொடும் உவமையாம், மூடாப்பறையை விழித்த கண்ணுக்குத் தகக் கொள்க. குடையன்ன என்பதற்குக் குவடும், கூடும் பாடங்கள் உண்மையான் அவற்றுக்கு மலையும், மறியடைக்கு குடிலும் கொள்க. இடைகரத்தல் - இடை இல்லையெனச் செய்தல். அது சுருக்கம் இல்லாமல் பொதியெனப் பருத்துத் தோன்றுதல். மோடு - வயிறு. முகடு என்னும் வழக்குக் காண்க. காண்பு- காண்டற்கு. இன்னா - இனிமை தராத காட்சி. இன்னாச்சொல் என்பது போன்ற பொருளது இன்னாக்காட்சி. செலவு - செல்லுதல். மழை - நீர்கொண்ட மேகம். மஞ்சு- வறந்த மேகம். பெண்டாட்டி- பெண். பெண்டன்மையை ஆள்பவள். இன்றும் இச்சொல் இப் பொருளில் நாட்டுப்புற வழக்கில் உள்ளதாம். கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்பது திரிகடுகம் (96) ஒன்றை உறுதிப்படக் கூறுவார் நிலந்தொட்டுக் கூறுதலும் தலையில் அடித்தும் நூல்தொட்டும் கூறுதலும் வழக்கமாம். இதனை நீறு பொங்கத் தன் கைகளால் நிலனடித்துக் கூறியதாக உரைத்தார். பரிபாடலில் திருமுருகன் உறையும் திருப்பரங்குன்ற மலையின் அடிதொட்டுக் கூறிய செய்தி யுண்மை காண்க. வலம் போதல் நலந்தரும் என்னும் துணிவால், இடம் போதல் கேடுதரும் என்பதை உணர்ந்து, இடஞ்செய்து காடு புகுதல் கண்டேன் என்றாள். கனவேபோலவும் என்பது தொடங்கிக் காடு புகுதல் கண்டேன் என்பதுகாறும் அதியன் தாய் கூற்றாகப் பாவலர் உரைத்ததாம். இறுதி ஈரடிகளும் பாவலர் தாம் இரங்கிக் கூறியதாம். அன்றது மன்றவ் வதிகமான் தாய்க்கு என்பதே பாடம் ஆயின் ஆசிரியவீறு ஏகாரத்தான் முடிதலே பாட்டிலும் தொகையிலும் கண்டதாகலின் தாய்க்கே எனப் பெற்றது; பாடல் பொருள் முடிந்து நின்றதறிக. 47 இப் பாடல் தக்கயாகப்பரணி உரையாசிரியரால் 397 ஆம் தாழிசை உரையில் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ளது. இது தகடூர் யாத்திரை என்பதைக் காட்டியுள்ளார். மேலும் தகடூர் யாத்திரையில் தர்க்கவாதம் உண்டு என்னும் செய்தியையும் அவர் கூறுகிறார் (தாழிசை 131). தகடூர் யாத்திரை முழுமையுறக் கிட்டாது ஒழியினும் தருக்கவாதம் உண்மைக்குக் கிடைத்துள்ள பாடல்களிலேயே சான்று உண்டென்பதை இப் பாடலினும் ஆராய்ச்சி முன்னுரையினும் கண்டு கொள்க. தகடூர் யாத்திரைப் பாடல்கள் எனத் தெளிவாகத் தெரிந்த நாற்பத்தெட்டுப் பாடல்களுக்கும் புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய உரைவிளக்கம் முற்றும். செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண்: செய்யுளெண்) அஞ்சுதக் கனளே 25 குழிபல வாயினும் அடுதிறன் முன்பின் கூற்றுறழ் முன்பின் 26 அதிரா தற்ற செவ்விக் கடா 27 அரும் பொன் அன்னார் சொல்லுங்கால் 28 அறம் புரிந்தன் றம்ம தருமமும் ஈதே 29 இகழ்தல் ஓம்புமின் தற்கொள் பெருவிறல் 30 இரவலர் வம்மின் நகையுள்ளும் 31 இருநில மருங்கின் நாளும் புள்ளும் 32 இவனே, பொறிவரி நிலையமை நெடுந்திணை 33 இழுமென முழங்கும் நூற்றுவரில் 34 இறப்பப் பெருகி பரவை வேற்றானை 35 இன்பமுடம்பு கொண் பல்சான்றீரே 36 உண்டது கள்ளும் 13 பிறந்த பொழுதேயும் 37 உண்டியின் முந்தான் 14 பெருநீரால் வாரி 38 எற்கண் டறிகோ 15 மறனுடை மறவர் 38 ஒளிவிடு பசும் பொன் 16 மெய்ம்மலி மனத்தின் 39 கட்டி யன்ன 17 மொய்வேற் கையர் 40 கலிமா னோயே 18 வருக வருக 41 கலையெனப் பாய்ந்த 19 வல்லோன் செய்த 42 கனவே போலவும் 20 வாதுவல் வயிறே 43 கார்த்தரும் புல் 21 வான் வணக்கி 44 கால வெகுளி22வியத்தக்க(அவைய.) காலாளாய்க் காலாள் 23 வேத்தமர் செய்தற்கு 46 கிழிந்த சிதாஅர் 24 வேற்றானை வெள்ளம் 47 அருஞ்சொல் அகரவரிசை (எண்: செய்யுளெண்) அகலம் 5 அகன்றலை 9 அச்சம் 27 அஞ்சல் 32 அஞ்சு தக்கனள் 32,33 அடங்கல் வேண்டுமதி 7 அடர் வினை 44 அடுக்கி வருதல் 17,26,32,36 அடுகளம் 27 அடுதல் 27 அண்ணல் யானை 44 அணங்கு 39,40,41 அணங்குதல் 27 அணல் 28,44 அத்தை 7 அப்பணையில் வீரன்கிடத்தல் கழற்காய் 41 அம்பு 41 அம்ம 4,43 அமர் 13,46 அமர் புறங்காணல் 46 அரசில் பிறத்தல் 4 அருஞ்சமம் 40 அருமறை 1 அரை 36 அலறுதலை 32 அவலம் 47 mவிர் 1 அÉœ¤jš 11 அவிழ்பூ 41mit 2 அழற்றிகழ் வெகுளி 33 அழிதரு வெகுளி 7 அற்றம் 30 அறக் கோல் 3 அறிந்திசினோர் 7 அறியாதார் வியத்தல் (அவைய)m¿ÉdU« அறியார்போல் வியத்தல்(அவைய.) அறிவொடு புணர்ந்த நெறி 33 அறுவை 36 அனையையாக 7 ஆடவர் 46 ஆண்டகை 8 ஆண்டு 43 ஆயிரவர் 2 ஆர்வம் 3 ஆவநாழிகை 41 ஆற்ற 2 ஆற்றி 3 ஆற்றியான் 18 இகல் வேல் 3 இசை 3 இசைத்தல் 42 இடம் செய்தல் 47 இடி X குரல் 47 இமைப் பளவு 29 இயம் 46 இயல்தார் 8 இரங்காக்கண் X துடிப்பறையின்கண் 42 இரப்பாரை எள்ளாமகன் 2 இரப்போன் 17 இரவலர் 42 இருகைமாக்கள் 36 இருதலைப்புள் 7 இருபிறப்பாளர் 1 இரும்பொறை 45 இரிதல் 9 இலங்கிலை வேல் 29 இலைபொலி புதுப்பூண் 35 இலைவேல் 31 இவரும் 34 இழும் என 43 இளையர் 22,26 இளையோன் 30,33,44 இற்பழி 40 இறைஞ்சி 9 இனியவாக் கூறல் 5 ஈகை 2 ஈண்டு 43 ஈது 38 ஈன்றவயிறு 40 உட்கும் 27 உடம்பு கொண்டு இன்பம் எய்துதல் 39 உடம்பு கொடுத்தார் 22 உயர் திணை 47 உயிர் மறக்கும் அணங்கு 39 உராஅய் 8 உருகெழு மோதை 9 உருகெழு வெகுளி 46 உரும் X முரசின்ஒலி 46 உருவக் குதிரை 36 உருவின 47 உரையழுங்க 42 உவகை 36 உள்ளினும் பனிக்கும் 35 உளை 27 உற்றுழி 22 உறழ் 17 ஊடல் 5,35 ஊர் 43,47 ஊர் கொள்ளல் 46 ஊரன் 5 எஃகம் 8,24,30,40 எஞ்சாமை 9 எந்திரப் பாவை 45 எயில் 11 எயில் காத்தல் 26,27 எருத்து 25 எல் 29 எல்லி 27 எவ்வை 16 எறிதல் 23,25,31,36 என்றி 8 ஏத்தினர் 13 ஏத்தும் 19 ஏர் 28 ஏர்க்களம் 9 ஏர்கெழு செல்வர் 9 ஏற்றிரந் துண்ணல் 1 ஐயவி 45 ஒரூஉகமா 1 ஒய்யென 8 ஒற்கம் 19 ஒன்னார் 3,27,43 ஓடை 7 ஓதை 9 ஓம்புமின் 27,29,30,33 கட்டி 31 கடல் X மேனி 47 கடா அம் 44 கடாக் களிறு 16 கடிகமழ் உவகை 36 கடிபட்ட இல் 16 கடியமைகள் 44 கடுப்ப 44 கண்கணை மூழ்கல் 41 கண்ணல் 21 கண்ணஞ்சா 28 கண்ணி 21,34,44 கண்ணிமைப்பு 30 கண்ணுறு பொழுது 7 கண்ணோடார் 14 கண் படுதல் 20 கண் படை 30 கணம் 47 கணவன் 35,39 கணை 26,29,41,45,46 கணைசேர் தலை X மூக்கறு நுங்கு 46 கதிர் 30 கதுவ 27 கமழ் கோதை 47 கரப்போன் 17 கருங்கண் 46 கருங்குரல் நொச்சி 26 கருந்தலை 36 கரும்புதின்பார் 10 கரும் புலவர் 11 கருமம் 38 கல் 29,33,45 கலிமான் 17 கலுழ்தல் 45 கலை 46 கவண் 45 கவலை நெஞ்சம் 47 கழல் 27,31,33,34 கழற்காய் 41 கழற் கால் 46 கழறுதல் 6 கழுவுபு 1 கள் 34,44 கள்ளின்றிக் களித்தல் 34 களம் 40 களிறு 7,16,25,31,32,34,46 கற்சிறை 21 கறுவு 27 கன்று 26 கனவு 47 காட்சி 36 காண்பின்னா 47 காமின் 31 காய் 33 கார் 28 காரிக் குதிரை X கட்டி 31 காரிக் குதிரை X பூணசிந்துதல் 35 கால வெகுளி 6 காலாள் 25 காளை 25,28,41 கானம் 12 கிடங்கு 26,35 கிணைவன் 28 கிழி 15 கிளை 9 குஞ்சரம் 40 குடிப்பழி 40 குடை 30 குடை X முலை 47 குண்டு நீர் 35 குதிரை 30,35 குருதி 33 குளம் 36 குறங்கு 41 குறுகல் 27 குறை நாள் 27 குன்றுயர்வு X விழுப்புண் 26 கூகை 47 கூடு X முலை 47 கூந்தற் பிறக்கம் 33 கூரிலை வேல் 33 கூளிக் கணம் 47 கூற்று 18 கெண்டை 35 கேண்மதி 7 கைநாற்றி 47 கைபோல் உதவுதல் 7 கைம்மை 33 கையால் நிலனடித்தல் 47 கைவல் காட்சி 36,44 கைவலன் 33 கைவிதிர்க்கும் 45 கொடி 47 கொடும்பூண் 36 கொடைக்கடன் 15 கொல்படை 26 கொல்வினை 33 கோட்டி 10 கோடு 44 கோமான் 22 கோல் 3,11 கோள்வாய்மறவர் 38 கெளவை 16 சகடம் 33 சமம் 32,33,40 சரம் 41 சால்பு 15 சாலும் துணை 6 சான்றீர் 26 சான்றோர் 18,19,26 சான்றோர் மகன் 25 சிதா அர் 1 சிந்தியன்ன சேடுபடு வனப்பு 35 சிரல் 35 சிலை 46 சிலை X புருவம் 47 சிறப்பில் சிறுகுதல் 3 சிறுகோல் 6 சிறை 43 சுட்டுதல் 31 சுடர் 30,27,44 சுரை 27 சுழிந்து 34 செங்கோன்மை 3,4 செம்மல் 19 செம்மாந்து 20 செரு 33 செருமுனை 38 செலவு X மழை 47 செலவு X மஞ்சு 47 செலவு X வளி 47 செவ்வேல் 43 செற்றம் 3 சென்றெறியும் பொறி 45 சேடுபடுவனப்பு 35 சேறல் 6 சொல்வன்மை 5 ஞாட்பு 20,28 ஞாயில் 26,30 ஞான்று 33 தடக்கை 8 தடவாய் 47 தண்ணுமை 45 தம்பி 27 தமக்குத்தாம் ஆயவர் 1 தமர் 20 தமியன் 7 தயங்கு 36 தருமம் 38 தலை 36,37,38,41,46 தலைகுறைந்தன 41 தலைப்படுதல் 7 தலையெறிதல் 8 தலைவிரித்தல் 47 தலைவைத்தல் 18 தறுகண்ணர் 2 தாக்கருந்தானை 45 தாமரை யன்ன சிறப்பு 1 தாமே தமக்கு உவமை 1 தாமே போகும் உயிர் 21 தாய் 36 தார் 22,28,36 தாழ்தல் 7 தானம் 38 தானை 17,21,23,31,45 தானை மறம் 30,28,36 திணை 35 திரு 30 தினை 11 தீண்டல் 8 தீது ஒரூஉகமா 1 தீப்பாய் மகளிர் 45 தீயூட்டி யுண்ணும் 1 துகள் 11 துடி 42 துடிகொட்டும் பாணி X குதிரை குளம்பு கொட்டல் 37 துடியன் 36,37,44 துணையிலன் 7 துமிய 38 துயல் வரும் 36 துயில் மடிதல் 10 துவராடை 1 துற்றும் 7 துறந்த தொடர்பு 4 துன்னிய கேண்மை 4 தூங்கும் 37 தூது 6,7,8 தூர்தல் 26 தூறு 46 தெய்வம் 34 தெரியல் 27 தெரியலர் 34 தேசு 18 தேயாவுரன் 28 தேர் 13,28 தேர்க்குழாம் 28 தேரினும் 2 தேற்றம் 2 தேறல் 14 தையணல் புரவி 44 தொடுகழல் 27 தொல்லை ஞான்று 33 தோள் நோக்கல் 28 தோற்றம் 1,18,47 நகை 20 நறுஞ்சாந்து 5 நறை 47 நன்னுதல் 26 நாகம் 17 நாடு 9 நாணு 24 நாய் 10 நாரை 9 நாள்மகிழ் 37 நாளும் புள்ளும் கேட்டல் 11 நாற்கை மாக்கள் 36 நாறுக 9 நிரை 27 நிரை கோடல் 11 நிரை மீட்டி 12 நீத்தார் இயல்பு 1 நீறு 47 நுங்கு 46 நும்பி 6 நும்முன் 7 நும்மோர் 7 நூல் கண்டார் நெறி 6 நூற்றிதழ்த் தாமரை 1 நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர் 2 நூறி 27,37 நெஞ்சம் 36 நெஞ்சு 41 நெடுந்தகை 27,43 நெய் 15,26,45 நெருநல் 27 நேர்தல் 14 நொச்சி 26,27 நொய்து 34 நோக்குநர் 45 நோதக 7 நோய் பொதி நெஞ்சம் 36 நோலா 40 பகழி 41,45 பகைப்புலம் 11 பகைவயிற் சேறல் 13,14 பசும் புண் 46 பசுவரிப்புட்டில் 45 பஞ்சு 26 படர் தந்தோன் 29 படிவத்தர் 1 படுதர 7 படுதலை 37 படை 26,30 படைக் கடன் 15 படைக்கலம் 13 படைச் செருக்கு 18,25 படையழித்துப் புகுதல் 17 பண்ணமை புரவி 29 பந்தர் 32 பந்து 45 பயறுகாவலர் 32 பயிலுதல் 9 பரப்புநீர் 2 பரவை 23 பருந்து 34 பல்சான்றீர் 26 பழிச் சொல் தீண்டாமைச் சொல்லல் 4 பறைக் கண் X பேய்க்கண் 47 பனிக்கும் 35 பாசறை 15 பாசிலை 34 பாடு செயலீயார் 4 பாண்டில் 44 பாத்தி 13 பால் வார்பு 9 பாவை 15,45 பாறு 37 பிறக்கம் 33 பிறந்த வேல் வென்றி 4 பிறை X எயிறு 47 புகழ் 33 புட்டில் 45 புடை 13 புண் 15,20,26,30,39,46 புண் கூர்மெய் 7 புணை 8 புயல் 44 புரவலன் 42 புரவி 29,33,44 புரிசை 26 புல்லணல் 28 புல்லல் 5 புல்லறி வாண்மை 10 புல்லார் 39 புலி 34 புள் 11,34 புள்ளிக் காரி 35 புறத்திறுத்தல் 12 பூக்கோட்டண்ணுமை 45 பூசல் 42 பூண் 27,35,36 பூழை 33 பெடை 9 பெண்டாட்டி 47 பெண்டிர் கைம்மை நோற்றல் 33 பெண்பேய்க் கண் X பறைக்கண் 47 பெருவிறல் 19 பேய் ஆடுதல் 47 பைந்தலை 8,46 பைய 34 பையென 15,26 பொதியல் 6 பொறி 45 பொறிவரி 27 பொறையன் 6 போர் 8 போலான் 30 மகளிர் 26,45 மகன் 34 மடி 10 மடை 15 மண்டி 14 மண்டை 47 மணி 36 மணிநிறச் சிரல் 35 மணி முகக் குஞ்சரம் 40 மத்தகம் 16 மதம் 27 மயிர்க்கண் முரசு 46 மருங்கு 12 மருவின் மாலை 12 மல்லல் 26 மறலி 14 மறமன்னர் 3 மறவர் 8,14,27,29,38,45 மறிக்குரல் 11 மன்று 11 மன்னர் 14,21,40 மன்னீர் 33 மா 27,33,37,46 மாய்தல் 42 மார்பு 36 மாமேல் இருந்து வேல் வீசல் 37 மாற்றம் 2,18 மான் X குதிரை 13 மிளை 46 மின்னுச்சிதர் X வேல்திரித்தல் 44 முட்டாது 9 முதியர் 26 முதியள் 32 முதுமரம் 15 முந்நீர் 36 முயங்குதல் 38 முரசு 8,43 முருக்கி 37,40 முழவு X தோள் 21 முழை 15 முறியிலை 21 முன்பு 17,37 முன்னியது 47 மூக்கறுநுங்கு X சிதைந்ததலை 46 மூத்தார் 22 மூதின் மகள் வருத்தம் 40 மூதூர் 26 மூழ்குதல் 36 மெய்ம் மலி மனம் 44 மெழுகு செய்பாவை 15 மேனாள் 26 மைத்துனர் கையை எதிர்பார்த்தல் இழிவு 16 மைந்துமலி தடக்கை 8 மோடு 47 யாணர் 9 யாமம் 11,26 யாய் 36 யானை 17,23,28,29,30,31,35,44,46 யானை X மலை 46 யானைக் கணம் 28 யானைக் குரல் 30 யானைக் கூறு அளத்தல் X சிரல் கெண்டையைப் பார்த்தல் 35 யானைக்கை 23 வகையமை வனப்பு 33 வஞ்சினம் 16,17 வடியிலை வேல் 37 வண்ண மாலை 41 வயமான் 27 வயவர் 8,46 வரை 34 வரை இவரும் புலி X களிற்று மேல் வேந்து 34 வல்லோன் 33 வலிதலைக் கொண்டது 8 வழிகெடும் பொழுது 7 வறிதே உயிர்விடாமை 19 வனப்பு 33,35 வாதுவல் 40 வாய 41 வாயிலில் பகழி தூக்கல் 45 வாயில் கணைசெறிதல் X கணைப்புட்டில் 41 வாரி 9 வாழ்த்து வகை 9 வாள் 38,41 வாள் வாய் முயங்கல் 38 வானுறை வாழ்க்கை 19 விடலை 26,40 விண்டு 10 விண்ணுயர் நெடுவரை 44 விண்பொரு நெடுங்குடை 30 வித்து 9 வியத்தக்க (அவைய.) வியத்தக்க அல்ல (அவைய.) விரல் 47 விரை விரைந்து 23 வில் 45 விலங்கி 43 விலங்கு 24 விழுச்சீர் 30 விழுத்தக்க 5 விழுப்புண் 15,26 விளிதல் 18 வினைபெரிது 7 வினையின் அடங்கல் 7 வீரன் இறந்த பின் தாய் குளத்தில் மூழ்குதல் 36 வீரன் பட்ட இடத்தில் மாலை சூடுதல் 43 வெகுளி 33 வெஞ்சமர் 32,33 வெஞ்சரம் 41 bவட்சி 11 வண்மையில் தீர்ந்தார் (அவைய.)வெருவந்த தோற்றம் 47 வெலச் சொல்லல் 5 வெள்ளம் 17,21 வெள்ளம் X படை 21 வெளிறில் வெண்கோடு 7 வென் வேல் 40 nவத்து 13,46 வந்தன் 23,30,32 வேந்து 17,19,29,34 வேல் 16,21,23,26,27,28,29,30, 31,33,34,35,36,37,39,40,43,44 வேல் செல்லுதல் X பருந்து பாய்தல் 34 வேல் திரித்து நகுதல் 44 வேல் வாய் வீழ்ந்தோர் 33 வேல் வீசுதல் 37 வேலோன் 36 வேற்கண்ணியர் 42 வையகம் 8  1. பாடல். 78 2. முருகு. 27 3. நற். 52 4. புறம். 202 5. ஐங்குறு. 219 6. அகம். 261 7. பாடல். 266 1. எழினி.பக். 12 2. புறம். 158 3. புறம். 168 4. அகம். 372 5. அகம். 143 6. குதிரை முகம்போலக் காட்சியளிக்கும் மலைமுடியைக் குதிரைமலை என்றனர் என்றும், பொதுமக்கள் குதிரை மூக்குமலை (Gudramuku)” என்றே வழங்குகின்றனர். கடலில் இருந்து காண்போர்க்குக் குதிரை முகம்போல் காட்சியளித்தலால் இப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். - சேரமன்னர் வரலாறு பக். 14, 15. 7. அகம். 1 8. பதிற். 22 9. பாட்டு. 78 1. பாட்டு. 230 2. சிறுபாண். 101 3. எம் தலைவன் 4. புறம். 88, 89, 95, 96, 104 5. புறம். 91 6. அகம். 147 7. S.I.I. Vol. VII No. 534 1. தகடூர் அதியமான்கள் - பேராசிரியர் ஔவை சு.து. 2. புறம். 353 3. தகடூர். 38 4. புறம். 366 5. எழினி பக். 13 6. ஊரும்பேரும் பக். 90 7. எழினி பக். 14-15 1. பாடல் 19: 15-18 2. தொல். புறத் 3. 3. புறப்பொருள் வெ. மா. 5 4. புறப்பொருள் வெ.மா. 24 5. தொல். பொருள். கற். 44 6. மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவாரால் 1909இல் பதிப்பிக்கப் பெற்றது. ஏழு பாடல்களும் உரையும் கொண்டது. 1. தொல். செய். 237 1. பெருந்தேவனார் பாரதம் (கழக வெளியீடு) ஆராய்ச்சி முன்னுரை. பக். 20-23. 2. திரு. அ. கோபாலையர். 3. பல்லவர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார் பக். 396.7 4. புறத்திரட்டு முகவுரை. XIV 5. மறைந்துபோன தமிழ் நூல்கள் பக். 54-56 1. அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க. செய் 8. 1. புறம் 50 2. பதிற். 71 3. பதிற். 72 4. பதிற். 75 5. பதிற். 71 6. பதிற். 74 7. பதிற். 73 8. பதிற். 76 9. பதிற். 74 10. பதிற். 71 11. பதிற். 78 12. பதிற். 77 13. பதிற். 73 1. பதிற். 78 1. அகம். 142 2. குறுந். 393 3. திரு.புலவர் பாண்டியனார் தாம் இயற்றிய எழினி என்னும் நூலில், அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும், அதியமான் நெடுமான் அஞ்சி எழினியும் ஒருவன் அல்லர் என்பாராயினும், அதியமான் நெடுமான் அஞ்சியால் கொல்லப்பட்டவன் வேறோர் எழினி என்பார். பக்.26 - 30. அதியமான் நெடுமாய் அஞ்சியின் மகன் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்பார் திரு. மயிலை சீனி.வேங்கடசாமி, - மறைந்துபோன தமிழ் நூல்கள் பக்.53. 1. புறம். 91. ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் 92. கடிமதில் அரண்பல கடந்த நெடுமானஞ்சி 93. சென்றமர் கடத்தல் யாவது? 97. உடன்றவர் காப்புடை மதிலழித்தலின் குறும்படைந்த அரண் கடந்து எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர் 98. முனைத் தெவ்வர் முரணவிய 99. சென்றமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய கோவலூர் நூறி 103. பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி 1. புறம். 95. 2. பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு. பக். 293. 1. பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலிற் செறாஅ தோச்சிய சிறுகோல் அஞ்சியொடு என்னும், பொன்முடியார் புறப்பாட்டில் (310) வரும் அஞ்சி என்பதையே அதியமான் நெடுமான் அஞ்சியாகக் கொண்டாருளர். சிறுகோலுக்கு அஞ்சுபவன் சிறுகோல் அஞ்சி எனப் பெற்றான் என்க. இஃததியமான் நெடுமானஞ்சியின் புகழ் மயக்கமே என்க. 1. இவ்விடத்தில் சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து, அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடிய பாடலை (புறம். 44) ஒப்பிட்டுக் கண்டு வேறுபாடு அறிதல் தக்கது. 2. பதிற். 78. 3. பதிற். எட்டாம் பதிகம். 4. பதிற். 21:24. 5. பதிற். 55 :8. 5. 32-10. நெடுமிடல் சாய என்பதில் நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயர் என்பார் அரும்பத உரையாசிரியர். ஆராயத் தக்கது. 1. புறத்திரட்டு - முகவுரை திரு. வையாபுரிப்பிள்ளை; கலைக் களஞ்சியம். 1. தகடூர். 44. 2. தகடூர். 41. 1. சீகாளத்திப் புராணத்தில் பத்துச் சருக்கங்கள் உள. அவற்றுள் நக்கீரச் சருக்கமும் கண்ணப்பச் சருக்கமும் சிவப்பிரகாசர் பாடினார். கன்னியர் சருக்கமும் சிலந்தி முதல் முற்கதைச் சருக்கமும் அவர் தம்பியார் கருணைப் பிரகாசர் பாடினார். மற்றைச் சருக்கங்களை அவர் தம்பியார் ஞானப் பிரகாசர் பாடினார். இவ்வாறே உரையமைந்த நூல்களும் அரிதிலுண்டு. 2. தொல். புறத். 8, 12 நச்சினார்க்கினியர் உரை. 1. தொல். செய். 85 பேரா. 2. சோழர் குடிக்கு ஞாயிற்றையும், பாண்டியர் குடிக்குத் திங்களையும் சேரர் குடிக்கு எரியையும் வழிமுதலாகக் கூறுதல் வழக்கு. 1. பெருந்தொகை. 1. சிந்தாமணி 3. குண்டலகேசி. 2. சிந்தாமணி 4. கம்பராமாயணம். பாடம் : *. ஓருவர்த மாறாகச். *1. சென்றால். 1. பா.வே. யறுகா வலா * (gh.ம்) நல்லோரின். * (பா-ம்) குவடன்ன ; கூடன்ன. * (பா-ம்) நான் இவ்வளவன்றே. † புகுதகக். ‡ தாய்க்கு.