தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை 21 தொல்காப்பியம் - பொருளதிகாரம் மரபியல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 21 தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 256 = 264 படிகள் : 1000 விலை : உரு. 250/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் சுருக்க விளக்கம் அகத்திணை --- அகத்திணையியல் அகம் --- அகநானூறு இ-ள் --- இதன் பொருள் உரி --- உரியியல் உவம, --- உவமவியல் எ--று --- என்றவாறு ஐங்குறு. --- ஐங்குறுநூறு கலி. --- கலித்தொகை கிளவி --- கிளவியாக்கம் குறள் --- திருக்குறள் சிலம் --- சிலப்பதிகாரம் சிறுபாண் --- சிறுபாணாற்றுப்படை செய் --- செய்யுளியல் சொல் --- சொல்லதிகாரம் தண்டி --- தண்டியலங்காரம் திருமுரு --- திருமுருகாற்றுப்படை தொல் --- தொல்காப்பியம் நற் --- நற்றிணை நாலடி --- நாலடியார் பட்டினப் --- பட்டினப்பாலை பரிபா. --- பரிபாடல் பா. வே. --- பாட வேறுபாடு புறம் --- புறநானூறு பெரும்பாண் --- பெரும்பாணாற்றுப்படை பொருந --- பொருநராற்றுப்படை பொருள் --- பொருளதிகாரம் மணி மே --- மணிமேகலை மலைபடு --- மலைபடுகடாம் முத்தொள் --- முத்தொள்ளாயிரம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். தொல்காப்பியம் பொருளதிகாரம் - மரபியல் தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளம் மரபியல் 1. kh‰wUŠ áw¥ã‹ kuãaš »s¥ã‰ gh®¥ò« gwG« F£oí« FUisí« f‹W« ãŸisí« kfî« k¿íbk‹ bwh‹gJ« FHÉbah osik¥ bganu.* இளம்பூரணம் : இவ்வோத்து இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு1 உணர்த்தினமையான், மரபியல் என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் இளமைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று.2 (இ-ள்) குழவியொடு இவ்வொன்பதும் இளமைப் பெயராம் என்றவாறு.3 இதன் பொருள் மேல் விரிக்கின்றார்.1 பேராசிரியம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் மரபிய லென்னும் பெயர்த்து. இதனானே ஓத்து நுதலியதூஉம் மரபு உணர்த்துதலென்பது பெற்றாம். மரபென்ற பொருண்மை என்னையெனின், கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளியலுண் (செய்யுளியல் 1-உரை) மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவு மன்றி, இருதிணைப் பொருட்குணனாகிய இளைமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவைபற்றிவரும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவையெல்லாம் மரபெனப்படுமென்பது. மற்றுப் பொருள்களின் இளைமைபற்றி வரும் மரபு கூறினான் மூப்புப்பற்றி வரும் மரபு கூறானோவெனின், அது வரையறையின்மையிற் கூறானென்பது.2 மற்று, மேலை ஓத்தினோடு இவ்வோத்திடை இயை பென்னை யெனின், முன்னர் வழக்கிலக்கணங் கூறியதன்பின் செய்யுளிலக்கணஞ் செய்யுளியலுட் கூறினான், அவ்விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளிய லொடு இயைபு உடைத்தாயிற்று. மற்று, வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இங்ஙனம் இரண்டற்கும் பொதுவாகிய மரபினையுஞ் செய்யுளியலின்முன் வைக்கவெனின், அவ்வாறு வழக்குஞ் செய்யுளுமென்ற இரண்டுமல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வோத்தின் முதற்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் எல்லாப் பொருளின்கண்ணும் இளைமைக்குணம் பற்றி நிகழுஞ் சொல் இவையென்று வரையறுத்துக் கூறுகின்றது. (இ-ள்) : மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்1 -விலக் கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணங்கூறின்; பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதுங் குழவியோடு இளமைப்பெயர்---குழவியோடு இவை யொன்பதும் இளமைப்பெயர் (எ-று). மேலன எட்டுங் குழவியுமென இளமைப்பெயர் ஒன்ப தாயின. குழவியோடொன்பதென்னாது ஒன்பதுங் குழவியோ டென மயங்கக் கூறியதனாற் போத்தென்பதும் இளமைப் பெயரெனவும் பிறவும் வருவன உளவாயினுங் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல்வரையறுத்து இன்ன பொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது சொல்லும். மாற்றருஞ் சிறப்பின் என்றதனானே இவை ஒரு தலையாகத் தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படுமென்பதூஉம். ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடுபட்ட மரபு பிறழவுஞ் செய்யுளின்பம் படின் அவ்வாறு செய்பவென்பதூஉங் கூறியவாறாயிற்று. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண்: 12) எனவும், நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது நலனே (நற்றிணை: 172) எனவும் வரும். அவற்றுள் பரிதியஞ் செல்வனைப் பருகும் காலும் என்றலும், புன்னைமரத்தினை நுவ்வை யென்றலும் மரபன்மையின் வழக்கினுண் மாற்றுதற்கு உரியவாமென்பது கருத்து. நிலவுக் குவித்தன்ன வெண்மணல் (குறுந் : 12) எனவும், *இருடுணிந் தன்ன வேனங் காணின் (பத்துப்-மலை : 247) எனவும், இருள்நூற் றன்ன விரும்பல் கூந்தல் எனவும் வருவனவும் அவை. ஆய்வுரை : உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நெடுங்காலமாக வழங்கி வரும் சொற்பொருள் மரபு உணர்த்தினமையின் இது மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வதிகாரத்திற் கூறப் பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து என்றார் இளம்பூரணர். மரபென்ற பொருண்மை என்னையெனின், ---கிளவி யாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலுள் மரபென்று ஓதப்பட்டனவும் அன்றி, இருதிணைப் பொருட் குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவைபற்றி வரும் உலகியல் மரபும், நூல்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படுமென்பது. முன்னர் வழக்கிலக்கணங் கூறி அதன்பின் செய்யுளிலக்கணங் கூறினான், அவ்விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது, செய்யுளியலோடு இயைபுடைத்தாயிற்று. ... ... ... வழக்குஞ்செய்யுளும் என்று இரண்டுமல்லாத நூலிற்கும் ஈண்டு மரபுணர்த்தினமையின் இது செய்யுயளிலின் பின் வைக்கப்பட்டது சொல்லோத்தினுள் கூறிய மரபும், மரபியலுள் உரைப்பனவும் ஆகிய அவை வழக்கிற்கும் செய்யுட்கும் பொது. (செய்யுளியலுட் கூறப்படும்) இது செய்யுட் கேயுரித்து. மரபு என்னும் இச்சொல், இலக்கணம் என்ற பொருளிலும் தொன்று தொட்டுப் பொருட்குரியனவாய் வழங்கி வரும் சொல் மரபு என்ற பொருளிலும் நெடுங்காலமாக வழங்கி வருகின்றது. எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன்னூல்---பொதுவியல் : 37) எனவரும் நூற்பா, மரபாவது இதுவென்பதனை நன்கு புலப் படுத்துவதாகும். மரபு என்னும் சொல் உயர்திணை நான்கு சாதியையும் குறித்து வழங்குதல் தொல்காப்பியனார் காலத்திற்கு மிகமிகப் பிற்பட்ட வழக்காகும். மரபியலில் மரபு என்ற சொல்லால் வழங்கப்படுவன இருதிணைப் பொருட்குணனாகிய இளமை ஆண்மை பெண்மையென்பன பற்றி நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபுகளேயெனக் கொள்ளுதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்குப் பெரிதும் ஏற்புடைய தாகும். முதற்சூத்திரம் இளமைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) : விலக்குதற்கு அரிய சிறப்பினையுடைய மரபுச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுமிடத்து பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என வரும் ஒன்பதும் இளமைப்பண்பு பற்றிய மரபுப் பெயர்களாம் எ-று. குழவியொடு ஒன்பதும் இளமைப் பெயரே என இயைத்துப் பொருள்கொள்க. இப்பெயர்கள் தொன்று தொட்டு வழங்கும் மரபுப் பெயர்களாதலின் இவை எவ்வாற்றானும் மாற்றி வழங்கப்படா என்பது அறிவுறுத்துவார் மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என்றார். (1) 2. எருதும்1 ஏற்றையும் ஒருத்தலுங் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும் மோத்தையுந் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப இளம்பூரணம் : இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் ஆண்பாற் பெயர் உணர்த்துதல் நுதலிற்று (இ--ள்) ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் பிறவுமாம் என்றவாறு.2 பிறவும் என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவன போல்வன கொள்க.3 பேராசிரியம் : (இ-ள்) ஆண்பாற் பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் (எ - று). பிறவும் என்றதனான் ஆணென்றும் விடையென்றும் வருவன போல்வனவுங் கொள்க. இவற்றை வரையறை கூறும்வழி (589-605) உதாரணங் காட்டுதும். யாத்த ஆண்பாற்பெயர் என்றதனாற் போத் தென்பது இளைமைப் பெயராமாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது அதற்கென்பது கொள்க.1 ஆய்வுரை : இஃது ஆண்மைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்னும் பதினைந்தும் பிறவும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர்கள் என்பர் ஆசிரியர் எ-று. பிறவும் என்றதனால், ஆண், விடை, கிடாய் என வருவன போல்வனவும் ஆண்மைப் பெயராகக் கொள்ளப்படும். இச் சூத்திரத்திற் கூறப்பட்ட போத்து என்பது இளமை குறித்த மரபுப் பெயராக வழங்கப்பெறினும் ஆண்பாற்குச் சிறந்து வருமாறு போன்று இளமைக்குச் சிறந்து வராது என்பர் பேராசிரியர். (2) 3. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகுங் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. இளம்பூரணம் : இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் பெண்பாற் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : இக்கூறப்பட்ட பதின்மூன்றும் பெண்பாற் பெயராம் என்றவாறு.2 பேராசிரியம் : (இ-ள்) : கூறப்பட்ட பதின்மூன்று பெயரும் பெண்மைப் பெயர் (எ-று). கடமையென்பதோர் சாதிப்பெயர் உண்டேனும் அதுவன்று, ஈண்டெண்ணப்பட்டது பெண்மை மேற்றென்று கொள்க.1 அந்தஞ் சான்ற என்பது, முடிபமைந்தன இவையென்ற வாறு.2 எனவே, ஆ என்பது பெண் பெயராதலும் பெண் ஆணென்பன ஒருசார்புல்லிற்கும் நேர்தலுங் கொள்க; என்னை? ஆனேறென்பது ஆவினுள் ஏறெனப்படுதலின், ஆவென்பது ஆண்பாற்கும் பொதுவாகலின், அது முடிபமையாதெனப் பட்டது; அது மேற்காட்டுதும். ஆண்மை பெண்மை புல்லிற்கின்மையின் அவையும் முடி புடையன ஆகாவாயினுங், காயாப்பனையை ஆண்பனை யென்றுங் காய்ப்பனவற்றைப் பெண்பனையென்றும் வழங்குப3 இவையெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்து கொள்ளப்படும். இவற்றுக்குமேல் வரையறை கூறும்வழி (606-22) உதாரணங்காட்டுதும். ஆய்வுரை : இது, பெண்மைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு கடமை, அளகு, மந்தி, பாட்டி பிணை, பிணவு, பிடி எனக் கூறப்பட்ட பதின்மூன்று பெயர்களும் பெண்மை குறித்த மரபுப் பெயர்கள் எ-று. இங்குக் குறித்த கடமை என்னும் பெண்மைப் பெயர் வேறு; விலங்கினத்துள் ஓரினத்தையுணர்த்தும் கடமை யென்னும் சாதிப் பெயர் வேறு எனப் பகுத்துணர்தல் வேண்டும். அந்தம் என்பது, அழகு என்னும் பொருளில் வழங்கும் தமிழ்ச்சொல் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். அந்தஞ்சான்ற பிடி---அழகு நிறைந்த பெண்யானை. மாதர் மடப்பிடி என்பது சம்பந்தர் தேவாரம். (3) 4. அவற்றுள்,* பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ்1 சிறப்பு விதியுடையன இச்சூத்திர முதலாக வருகின்ற சூத்திரங்களாற் கூறப்படுகின்றன. (இ-ள்) மேற் சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளை யென்னும் இரண்டும் பறவையி னிளமைப் பெயர் என்றவாறு. இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவனவற்றிற்கு உரையெழுதுகின்றிலம். பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே இளமைப்பெயருண் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமை கண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது. (இ-ள்) : இவ்விரண்டும் புள்ளிளமைக்குரிய.2 (எ-று). இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலிற் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; அல்லன வழக்கின்மேற் காட்டுதும். 1மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு (அகம் : 31) எனவும், 2இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும் (குறுந் : 46) எனவும், 3பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு (குறுந். 139) எனவும் இவை 1பருந்தும்2 ஊர்க்குருவியும்3 கிளியுமென்னும் பறவைமேல் வந்தன; பிறவும் அன்ன. புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் மரபு எத்துணையும் பலவாத னோக்கி முதற் சூத்திரத்துட் பார்ப்பினை முற்கூறினானென்பது.2 ஆய்வுரை : முற்கூறப்பட்ட இளமை, ஆண்மை, பெண்மையென்னும் மூவகைப் பெயர்கட்கும் உரிய சிறப்பு விதிகள் இதுமுதல் 26--- ஆம் சூத்திரம் முடியவருகின்ற சூத்திரங்களால் முறையே கூறப்படு கின்றன. (இ-ள்) பார்ப்பு, பிள்ளை யென்பன இரண்டும் பறவை யினத்தின் இளமையினை உணர்த்தும் பெயர்களாகும் எ-று. (4) 5. தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன. இளம்பூரணம் : (இ-ள்) என்றது ஊர்வனவற்றிற்கு மேற் சொல்லப்பட்ட இருவகை3 இளமைப் பெயரும் ஆம் என்றவாறு பேராசிரியம் : (இ-ள்) பார்ப்பும் பிள்ளையுந் தவழ்பவற்றிற்கும் உரிய (எ-று). அவை ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலாயின. ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தியங்குங் கால் தவழ்பவை1 யெனப்படும். (உ - ம்). யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே (குறுந் : 152) எனவும் தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை (ஐங்குறு : 41) எனவும் தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர் (ஐங்குறு : 24) எனவும் வரும். தாமும் என்றதனான் ஊர்வன நடப்பனவுஞ் சிறு பான்மை பிள்ளைப்பெயர்க்கு உரியன கொள்க. அது, பிள்ளைப் பாம்பென ஊர்வன மேல் வந்தது. பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி (குறுந்: 107) என நடப்பனமேல் வந்தது. மூங்காப்பிள்ளை என்பதும் ஈண்டே கொள்ளப்படும். பார்ப்பும் அவ்வாறே வருவன உளவேற் கொள்க. இதுவுந் தவழுஞ் சாதிக்கெல்லாம் பொதுவாகிய பரப்புடைமையின் இரண்டாவது வைத்தானென்பது. ஆய்வுரை : (இ-ள்) ஊர்வனவற்றுக்கும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பு, பிள்ளை என்னும் இளமைப்பெயர் இரண்டும் உரியனவாகும் எ-று. தவழ்பவை --- ஊர்வன. 6. மூங்கா வெருகெலி மூவரி அணிலொடு1 ஆங்கவை நான்குங் குட்டிக் குரிய. இளம்பூரணம் : (இ-ள்) என்றது, இவை நான்குங் குட்டி என்று சொல்லப் படும் என்றவாறு. மூங்கா என்பது கீரி. பேராசிரியம் : இது, மேல் எடுத்தோத்தானும் இலேசானும்2 அதிகாரப் பட்ட தவழ்வனவும், நடப்பனவும் பற்றிக் குட்டியென்னும் பெயரினையு முறையன்றிக் கூறுகின்றது. (இ-ள்) குட்டியெனப்படுவன இவை நான்கும் (எ-று). அவை, மூங்காக்குட்டி, வெருகுக்குட்டி, எலிக்குட்டி, அணிற்குட்டி யெனவரும். மூவரியணிலென்றதனான் ஒழிந்த மூன்றுந் தம்முள் ஒரு பிறப்பினவாம்: இவை யொருநிகரனவே என்பது கொள்க.3 ஆங்கவை நான்கும் என்றதனால் தத்துவனவற்றுக்கும் குட்டிப்பெயர் கொடுக்கப்படும்; தவளைக்குட்டி யெனவரும் மேல் ஊர்வனவற்றுக்குந் தவழ்வனவற்றிலக்கணம் எய்து வித்தமையாற் பாம்புக்குட்டி யென்பதுங் கொள்க. மற்றுக் கீரியும் நாவியும்1 போல்பவற்றையுங் குட்டி யென்னாரோ வெனின், என்னார் அவற்றைப் பிள்ளை யென்றலே பெரும் பான்மையாகலின். உரிய வென்றதனாற் சிறுபான்மை குட்டி யென்பதுங் கொள்க. மூங்காவின் விகற்ப மென்பாருமுளர். ஆய்வுரை : (இ-ள்) *மூங்கா, வெருகு, எலி, (முதுகின்மேல்) மூன்று கோடுகளையுடைய அணில் என்னும் இவை நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயர்க்குரியன எ-று. ஆங்கவை நான்கும் என்றதனால் தத்துமியல்பினவாகிய தவளை முதலியவற்றிற்கும் குட்டி என்னும் இளமைப் பெயர் உரியதாகும் என்பர் பேராசிரியர். (6) 7. பறழெனப் படினும் உறழாண் டில்லை இளம்பூரணம் : (இ-ள்) என்றது, மேற்கூறப்பட்ட நால்வகை உயிர்க்கும் இளமைப்பெயர் பறழ் எனினும் உறழ்ச்சியில்லை என்றவாறு. எனவே, இரண்டுமாம் என்றவாறாம். இரண்டு என்றது பறழ், குட்டி என்னும் இளமைப்பெயர் இரண்டினையும். பேராசிரியம் : (இ-ள்) : மேற்கூறிய நான்கும் பறழெனவும்படும் (எ--று). இவை இக்காலத்து வீழ்ந்தன. மற்று முற்கூறிய நான் கினையும்2 இப்பெயரானே முற்கூறுக. முதற்சூத்திரத்துள் ஓதிய முறைமைக் கேற்பவெனின்-அற்றன்று; அவற்றுக்கு இப்பெயர் சிறுபான்மை யென்பான் பிற்கூறினானென்பது. உறழாண்1 டில்லை யென்ற மிகையானே, கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி (குறுந் :69) என்பதுங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) : மேற்குறித்த மூங்கா, வெருகு, எலி, அணில் என்னும் நான்கினையும் பறழ் என்னும் இளமைப் பெயரால் வழங்கினும் முரண்பாடு இல்லை எ-று. (7) உறழ் --- உறழ்ச்சி; முரண். 8. நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை என்ப. இளம்பூரணம் : (இ-ள்) என்றது நாய்முதலாகச் சொல்லப்பட்ட நான்கின் இளமைப்பெயர் குருளை யென்று வழங்கும் என்றவாறு.2 பேராசிரியம் : இது, முறையானே நான்காம் எண்ணு முறைமைக்கணின்ற குருளையாமா3 உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) நாயும் பன்றியும் புலியும் முயலும் என நான்குங் குருளையென்று சொல்லப்படும் (எ-று). திறவாக் கண்ண சாய்செவிக் குருளை (சிறுபாண் : 130) எனவும், விழியாக் குருளை மென்முலை சுவைப்பக் குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி எனவும், இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை (குறுந் : 47) எனவும், குருளை கோட்பட லஞ்சிக் குறுமுயல் வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப எனவும் வரும். ஆயுங்காலை1 யென்றதனால், சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந் : 119) என்பதுங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) நாய், பன்றி, புலி, முயல் என்னும் நான்கும் ஆராயுங்காலத்துக் குருளையென்னும் இளமைப் பெயரால் வழங்குதற்கு உரியன என்பர் ஆசிரியர் எ---று. ஆயுங்காலை என்றதனால் ஊர்வனவாகிய பாம்புக்கும் குருளை என்னும் இளமைப்பெயர் வழங்குதல் கொள்வர் பேராசிரியர். (8) 9. நரியும் அற்றே நாடினர் கொளினே இளம்பூரணம் : (இ-ள்) என்றது, நரியின் இளமைப்பெயரும் ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் என்றவாறு. இது மேலனவற்றோடு ஒரு நிகரனவாக ஓதாமையிற் சிறு பான்மை வருமென்று கொள்க. பேராசிரியம் : (இ - ள்.) நரியுங் குருளை யெனப்படும் ( எ - று). பிணந்தின் பெண்டிர்க்குக் குருளை காட்டிப் புறங்காட் டோரி புலவுத்தசை பெறூஉம் எனவரும். நாடினர் கொளினே1 யென்றதனானே வெயிலாடு முசுவின் குருளை உருட்டுங் குன்ற நாடன் கேண்மை (குறுந் 38) என்றாற் போல முசுவிற்குங் குருளைப்பெயர் கொடுக்க. ஆய்வுரை : (இ-ள்.) குருளையென்னும் இவ்விளமைப்பெயரை ஆராய்ந்து மனங்கொள்ளுங்கால் நரியும் குருளையென வழங்கும் அத்தன்மையதாகும் எ-று. நாடினர் கொளின் நரியும் அற்றே என இயையும். அற்று அத்தன்மைத்து; குருளை என்னும் இளமைப்பெயரால் வழங்கும் அவ்வியல்பினையுடையது. மேலைச் சூத்திரத்தோடு ஒருங்கு கூறாமையால் நரிக்குருளை யென வழங்குதல் சிறுபான்மை வழக்கெனக் கொள்வர் உரையாசிரியர். அற்று---அத்தன்மைத்து. (9) 10. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார் இளம்பூரணம் : இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் எய்தாததெய்து வித்தல் நுதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட ஐவகை உயிர்க்குங் குட்டி பறழ் என்பனவும் ஆம் என்றவாறு. மேற்சொல்லப்பட்ட ஐவகை உயிர்கள் ஆவன நாய், பன்றி, புலி, முயல், நரி என்பன. இவற்றுக்குக் குருளை என்பதோடு குட்டி, பறழ் என்பனவும் இளமைப் பெயர்களாக வழங்கப்படும் என்பதாம். பேராசிரியம் : (இ-ள்) மேற்கூறிய ஐந்தினையுங் குட்டியென்றும் பறழென்றுங் கூறுதல் வரையார் (எ-று). அவை 1நாய்க்குட்டி 2பன்றிக்குட்டி 3புலிக்குட்டி 4முயற் குட்டி 5நரிக்குட்டி என வழக்கினுள் வந்தன. பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய் (அகம் : 336) எனவும். வயநா யெறிந்து வன்பறழ் தழீஇ ... ... ... தறுகட் பன்றி (அகம் :248) எனவும், புலிப்பற ழன்ன பூஞ்சினை வேங்கை எனவும், பதவுமேயல் பற்றி முயற்பற ழோம்புஞ் சீறூ ரோளே நன்னுதல் எனவும், நரிப்பறழ் கவர நாய்முதல் சுரக்கும் எனவும் முறையானே வந்தன. நாயெனச், செந்நாய், நீர்நாய் முதலாயினவும் அடங்கு மென்பது. மூவரியணிலென்றவழிச்(561)* சொல்லப்பட் டவாறும் உய்த்துணர்க. பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட நாய், பன்றி, புலி, முயல், நரி என்னும் ஐந்தினையும் அவ்விடத்துக் குட்டி, பறழ் என்னும் இளமைப்பெயராற் கூறுதலை விலக்கார் ஆசிரியர் எ-று. அவண் கூற்று வரையார்---அவ்விடத்துக் கூறுதலை நீக்கார். அவண் --- அவ்விடம்; என்றது மேற்குறித்த நாய் முதலிய ஐந்திடங் களையும் சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடம் ஆதலின் அவண் என்றார். சீவகசிந்தாமணி 364-ஆம் பாடலுரையில், சிங்கக் குட்டியும் போன்று குட்டியும் பறழும் கூற்றவண் வரை யார் என்றதனுள், கூற்று என்றதனால் புலிமுதலியவற்றிற்குக் கூறிய இளமைப் பெயர் சிங்கத்திற்கும் கொண்டார் எனக் குறிப்பிடுவர் நச்சினார்க்கினியர். (10) 11. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுமது (இ - ள்.) மேற்கூறியவற்றுள் நாயன்றி ஒழிந்தவை பிள்ளை என்னும் இளமைப் பெயர்க்கு உரிய என்றவாறு.1 பன்றிக்குருளை, பன்றிக்குட்டி, பன்றிப்பறழ், பன்றிப் பிள்ளை எனவுமாம். ஏனையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. பேராசிரியம் : (இ-ள்) மேற்கூறிய ஐந்து சாதியுள்ளும் நாயொழித்து ஒழிந்த நான்கற்கும் பிள்ளையென்னும் பெயர்க்கொடையும் உரித்து (எ-று). இவை செய்யுட்கண் வருவன கண்டுகொள்க. கொள்ளுங் காலை யென்றதனான் முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி1 நரிப்பிள்ளை யென்பதே கோடலும் ஒன்று. ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) மேற்கூறப்பட்ட ஐந்தனுள் இளமைப் பெயர் கொள்ளுங்கால், நாயல்லாத ஏனை நான்கிற்கும் பிள்ளை என்னும் இளமைப் பெயர் கூறுதலும் அங்குத் தவறாகாது எ-று. கொள்ளுங்காலை நாய் அலங்கடை பிள்ளைப் பெயரும் ஆண்டுப் பிழைப்பு இல்லை, என இயையும். பிழைப்பு - குற்றம். அல் + கடை யெனற்பாலது அலங்கடை யென்றாயிற்று. அலங் கடை --- அல்லாத விடத்து. 12. யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு.1 நவ்வி --- புள்ளிமான்.2 பேராசிரியம் : (இ-ள்) : இவ்வைந்து சாதியின் இளமைப் பெயர் மறி யெனப்படும் (எ-று). அவை, மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற விடையன் (அகம்: 94) எனவும், உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி (அகம் : 104) எனவும் யாட்டின்மேல் வந்தன. மறிக்குதிரையெனவும் மறி நூக்கிற்றெனவுஞ் சொல்லுதலின் இது குதிரைக்கும் உரித்தாயிற்று. நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும் (குறுந் 282) எனவும், மறியாடு மருங்கின்மடப்பிணையருத்தித் தெள்ளறல்தழீஇய..... (அகம் : 34) எனவும், தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந்:213) எனவும் இவை, நவ்வியும் உழையும் புல்வாயும் முறையானே மறியென்னும் பெயர் எய்தியவாறு அவ்வச்செய்யுளுட் கண்டு கொள்க. e›Éí« ciHí« òšthíŸ ml§Fk‹nwh mt‰iw _‹whf Xâabj‹id?1 நாயென்றதுபோல mடங்fதோவெனின்,kவென்பது,Fதிரையும்ahனையும்புÈயுஞ்சி§கமும்முjலியவற்றுக்கெல்லாம்gயராகலின்அ›வாறுஓjனென்பது.XL« புல்வாயென்றதனானே மடனடையன நவ்வியெனவும் இடைநிகரன உழையெனவுங் கொள்க. எட்டாம் முறைமைக்கண் ஓதிய மறியினை ஐந்தாம்வழிக் கூறியவதனானே, செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி (குறுந் : 187) என்றது போல்வன கொள்க. ஆய்வுரை : (இ-ள்) ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் எனக் கூறப்பட்ட ஐந்துயிர் வகைகளும் மறி என்னும் இளமைப் பெயர் பெறுவன எ-று. உழை என்ற இடத்தில் முழை என்னும் பாடமும் முழா என்னும் பொருளும் இளம்பூரணருரையிற் காணப்படுகின்றன. உழை எனப்பாடங் கொண்டார் பேராசிரியர். ஓடும் புல்வாய்-துள்ளியோடும் இயல்புடைய புல்வாய் என்னும் மானினம். மடனுடையன நவ்வி எனவும் இடைநிகரன உழை எனவும் கொள்க என்பர் பேராசிரியர். எனவே பல்வாய் என்பது மிகவும் இளமையுடையதெனக் கருதவேண்டி உளது. நவ்வி என்பது புள்ளிமான் என்பாரு முளர். (12) 13. கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுப1 இளம்பூரணம் : (இ-ள்) கோடுவாழ் குரங்கென்பது ஊகமு முசுவுங் கொள்ளப்படும். உம்மை எதிரதுதழீஇய எச்சவும்மை2 பேராசிரியம் : (இ-ள்) கோட்டினையே வாழ்க்கையாகவுடைய குரங்குங் குட்டியென்று கூறப்படும் (எ-று). கோடுவாழ் குரங்கு3 எனவே குரங்கின் பிறப்புப் பகுதி யெல்லாங் கொள்க. அவை குரங்குக்குட்டி, முசுக்குட்டி, ஊகக் குட்டியென்பன. உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் மேற் கூறிய யாடு முதலாகிய ஐந்துசாதிக்குங் குட்டியென்னும் பெயர் கூறப்படுமென்பது. அவை யாட்டுக்குட்டி, குதிரைக்குட்டி, நவ்விக்குட்டி உழைமான்குட்டி புல்வாய்க்குட்டி எனவரும். ஆய்வுரை : (இ-ள்) மரக்கிளையினையே வாழும் இடமாகக் கொண்ட குரங்கினையும் குட்டி யென்ற இளமைப்பெயராற் கூறுவர் ஆசிரியர் எ-று. கோடு வாழ்குரங்கு எனவே அதன் இனமாகிய ஊகமும் முசுவும் குட்டியென்னும் இளமைப் பெயராலும் வழங்கப் பெறும் என்றார் இளம்பூரணர். குட்டியும் கூறுப என்புழி உம்மை, இங்குக் கூறப்பட்ட குட்டியென்னும் இளமைப் பெயரேயன்றி அடுத்த நூற்பாவிற் கூறப்படும் மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் இளமைப் பெயர்களையும் தழுவி நின்றமையின் எதிரது தழீஇய எச்சவும்மை என்றார் இளம்பூரணர். கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப எனப்பாடங் கொண்ட பேராசிரியர், குரங்கும் என்புழி உம்மையை இறந்தது தழீஇய எச்சவும்மையாக்கி யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என மேற்சூத்திரத்திற் கூறப்பட்ட ஐவகை உயிரினத்திற்கும் குட்டி என்னும் இவ்விளமைப்பெயர் வழக்கம் உண்டென்பதனைத் தழுவி எடுத்துக்காட்டுத் தந்துள்ளமை நினைத்தற்குரியதாகும். (13) 14. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுங் குரங்குக் குரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மகவு முதலாகிய நான்குங் குரங்குச்சாதி இளமைப் பெயராம் என்றவாறு. குரங்குக்குட்டி, குரங்குமகவு, குரங்குப்பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப்பார்ப்பு. பேராசிரியம் : (இ - ள்) மேலைச் சூத்திரத்தெடுத்தோதிய குரங்கிற்குக் குட்டியென்னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர்போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம் (எ-று). உயர்கோட்டு மகவுடைமந்தி போல (குறுந் : 29) எனவும், குரங்குப் பிள்ளை எனவும், வரையாடு வன்பறழ்த் தந்தை (குறுந் : 26) எனவும், ஏற்பன வேற்பன வுண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே (குறுந் : 278) எனவும் வரும். அன்ன வென்பதனான் முன்னையவற்றொ டொக்கும். மிகுதி குறைவு இலவென்பதாம். வெயிலாடு முசுவின் குருளை உருட்டும் (குறுந் : 38) என(564)* இலேசினாற் கூறிப்போந்தமையின் ஈண்டு அது கூறானாயினான்; அன்றி, அஃது இத்துணைப் பயிலாமையானு மென்க.1 ஏழாமுறை நின்ற மகவினை ஈண்டு வைத்தான் அதிகாரப்பட்ட பெயர்க்குரிமையானென்பது. ஆய்வுரை : (இ-ள்) இதுவும் குரங்கிற்குரிய இளமைப்பெயர்கள் கூறுகின்றது. மேற்குறித்த குட்டிஎன்னும் பெயரேயன்றிமகவு, பிள்ளை பறழ், பார்ப்பு எனவரும் அவ்விளமைப்பெயர்களும் குரங்கின் பகுதிக்கு உரியவாகும் எ-று. அப்பால் --- அப்பகுதி (14) 15. யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும் மானோ டைந்துங் கன்றென்ற் குரிய இளம்பூரணம் : (இ-ள்) என்றது யானை முதலாக மானீறாகச் சொல்லப் பட்ட ஐந்தினது இளமைப்பெயர் கன்று என்று வரும் என்ற வாறு.1 பேராசிரியம் : (இ-ள்) ஐந்தாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற கன் றென்னும் பெயர்க்கு இவை உரிய (எ-று) அவை, யானைக்கன்று குதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக்கன்று ஆன்கன்று என வரும். கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும் (அகம் : 68) என்பது, யானைக்கன்று. கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி (அகம் : 9) என்பது ஆன்கன்று.2 பிறவும் அன்ன உளவேற் கொள்க. இனி, உரியவென்றதனானே மான்கன்று, குதிரைக்குட்டி யென்பனவுஞ் சொல்லுப. ஆய்வுரை : (இ-ள்) யானை, குதிரை, கழுதை, கடமை, மான் என்னும் ஐந்தும் கன்று என்னும் இளமைப் பெயரால் வழங்குதற்குரியன எ--று. ஆன் என்பது பேராசிரியர் கொண்டபாடம். இளைய ஆன்கன்று (பெரிய - திருநகரச்சிறப்பு : 31) என்பது பெரிய புராணம் மான்று கன்று துள் என்பது தேவாரம். (15) 16. எருமையும் மரையும் வரையார் ஆண்டே. இளம்பூரணம் : (இ-ள்) என்றது, கன்றெனக் கூறும் இளமைப்பெயர் எருமைக்கும் மரைக்கும் உரித்து என்றவாறு.1 பேராசிரியம் : (இ-ள்) எருமையும் மரையுங் கன்றெனப்படும் (எ-று) அவை, எருமைக்கன்று, மரையான்கன்று என்பனவழக்கு. கன்றுடை மரையா துஞ்சம் (குறுந்: 115) கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் ... ... ... குன்ற நாடற் கண்டவெங் கண்ணே (குறுந்: 241) எனவரும். வரையா2 ரெனவே அவையெல்லாம்போலாது சிறு வரவின என்பது bபற்றாம்.MŒîiu : (இ-ள்) எருமைக்கும் மரைக்கும் கன்று என வழங்கும் இளமைப்பெயரினை நீக்காமல் ஏற்று வழங்குவர் எ-று. (16) 17. கவரியும் கராகமும்3 நிகரவற் றுள்ளே. இளம்பூரணம் : (இ-ள்) என்றது கவரி என்று சொல்லப்படுவதும் கராக மென்று சொல்லப்படுவதும் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு.4 கராகமென்பது கரடி.5 பேராசிரியம் : இஃது அவற்றொடு மாட்டெறிந்தது. (இ-ள்) கவரியுங் கராமுங்1 கன்றெனப்படும் (எ-று). கவரிமான்கன்று கராக்கன்று. எனவரும். அவற்றுள்ளே யென்பது முற்கூறிய ஏழனுண் முதனின்ற யானையோடொக்கு மென்றவாறு. இதன் பயம், குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை (தொல்-மர : 19) என வருகின்ற பெயரும் இவற்றுக் கெய்துவித்தலாயிற்று. அது முன்னர்ச் சொல்லும்.2 இவையெல்லாந் தம்மினொத்த வரவின அன்மையின் வேறுவேறு சூத்திரஞ் செய்கின்றவாறாயிற்று. ஆய்வுரை : (இ-ள்) கவரி என்று சொல்லப்படுவது கராகம் என்று சொல்லப்படும் அவ்வுயிர்களுள் கன்று என்னும் இளமைப் பெயர் பெறுவதில் ஒத்த தன்மையன எ-று. கராகம் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம் கராம் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். கராகம்---கரடி. கராம்--- முதலையுள் ஒரு சாதி (17) 18. ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்1 இளம்பூரணம் : (இ-ள்) என்றது ஒட்டகமென்று சொல்லப்படுவதுங் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு, பேராசிரியம் : (இ-ள்) சிறுபான்மை ஒட்டகமுங் கன்றெனப்படும் (எ-று). அஃது, ஒட்டகக்கன்று எனவரும். ஒருவழி2 யென்றனானே, எவற்றினும் இது சிறுபான்மை யெனவுணர்க. ஆய்வுரை : (இ - ள்) (யானை, குதிரை, கழுதை, கடமை, எருமை, கவரி, கராகம் என மேற்குறித்த) அவற்றுள்ளே ஒட்டகமும் சிறுபான்மை கன்று என்னும் இளமைப் பெயரால் வழங்குவதில் ஒத்த தன்மையதாகும் எ-று. (18) 19. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை3 இளம்பூரணம் : (இ - ள்) என்றது, குழவியென்னும் இளமைப் பெயர் யானை பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) ஒழிந்துநின்ற குழவிப்பெயர் குஞ்சரத்திற்கு உரியது (எ - று) அது, ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி (அகம்: 165) எனவரும். நிகரவற்றுள்ளென மேற் குஞ்சரத்தொடொக்கு மெனப்பட்ட கராத்தின் குழவியுங் கவரிக் குழவியும் வந்த வழிக் கண்டுகொள்க1 ஆய்வுரை : (இ - ள்) யானை என்பது குழவி என்னும் இளமைப் பெயர் கொடுத்து வழங்குதலைப் பெறும் எ - று குஞ்சரம் --- யானை. குஞ்சரம் குழவிப் பெயர்க்கொடை பெறும் என இயையும். கொடை கொடுக்கப்படுதல். படு சொல் தொக்குநின்றது. (19) 20. ஆவும் எருமையும் அதுசொலப் படுமே.2 இளம்பூரணம் : (இ-ள்) என்றது, ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) ஆவும் எருமையும் அவைபோலக் குழவிப் பெயர் கொடைபெறும் (எ - று). குஞ்சரம், ஆணும் பெண்ணுமென இருகூற்றனவாகலான் அவையென்றான். மக்கண்மேல் வருங்காலும் இஃதொக்கும். மடக்கட் குழவி1 யணவந் தன்ன நோயே மாகுத லறிந்துஞ் சேயர் தோழி சேய்நாட் டோரே (குறுந்: 64) என்பது ஆன்குழவி. மோட்டெருமை முழக்குழவி கூட்டுநிழற் றுயில்வதியும் (பத்துப்-பட்டி) என்பது எருமைக்குழவி. ஆய்வுரை : (இ---ள்) ஆவும் எருமையும் குழவியென்னும் அவ்விளமைப் பெயரால் வழங்குதலைப் பெறும் எ - று. ஆ---பசு; ஆண் பெண் இரண்டற்கும் உரிய பொதுப்பெயர்) அது என்னும் சுட்டு மேற்சூத்திரத்திலுள்ள குழவி என்னும் இளமைப் பெயரைச் சுட்டிநின்றது. (20) 21. கடமையும் மரையு முதனிலை ஒன்றும். இளம்பூரணம் : (இ-ள்) என்றது, கடமாவும்2 மரையுங் குழவி எனப் பொருந்தும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) இவையும் அப்பெயர்க்கு உரிய (எ-று). குஞ்சரம்போலக்குழவிப்பெயர் பெறுமென்பான் முதனிலை3 யொன்று மென்றானென்பது. அவை வந்துழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : (இ-ள்) கடமையும் மரையும் முற்கூறிய குழவி என்னும் இளமைப் பெயருக்குப் பொருத்தமுடையதாகும் எ - று. முதல்நிலை---முற்குறித்த குழவி என்னும் பெயர். ஒன்றும்---பொருந்தும். (21) 22. குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய இளம்பூரணம் : (இ-ள்.) என்றது, குரங்கு முதலிய மூன்றும்3 ஆராயுங் காலத்துக் குழவிப்பெயர்க்குரிய என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) இம்மூன்றுங் குழவியென்னும் பெயர்க்கு உரிய (எ-று). நிரம்ப நாடின் என்பது, மூன்றுபெயரும் ஒருபிறப்பின் பகுதியாகலின் அம்மூன்றற்கும் ஒப்பவருமென்றவாறு. இக்கருத்தானே கோடுவாழ் குரங்கு (தொல்-மர: 13) என்றவழி இம்மூன்றுங் கொண்டாமென்பது. இவற்றுக்கு உதாரணங் காணாமையிற் காட்டாமாயினாம். இலக்கணம் உண்மையின் அமையுமென்பது.2 ஆய்வுரை : (இ-ள்) குரங்கு, முசு, ஊகம் என்னும் மூன்றும் முழுதும் ஆராயின் குழவி என்னும் இளமைப்பெயருக்கு உரியன. எ--று. இங்குக் குறித்த மூவகையினமும் குரங்குகளில் ஒத்தபிறப்பின என்பது அவற்றை ஆராயின் இனிது விளங்கும் என்பார் நிரம்ப நாடின் என்றார். (22) 23. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே இளம்பூரணம் : (இ-ள்) என்றது, குழவி மகவென்று சொல்லப்பட்ட இரண்டு1 இளமைப்பெயரு மல்லாத ஏனையவை மக்கட்குரிய வல்ல என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) குழவியும் மகவுமென்னும் இரண்டுமல்லது மக்கட் கணின்ற இளைமை தமக்கு வேறுபெயருடையவல்ல (எ-று). ஆணிளைமையும் பெண்ணிளைமையுமென இரண்டாக லின் அல்லவையெனப் பன்மை கூறினான். காவல், குழவி கொள்பவரி னோம்புமதி (புறம் : 5) எனவும், மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி (பத்துப்-பெரும்பாண் : 89) எனவும் வரும். கிழவ வல்ல2 என்ற மிகையானே ஆண்பிள்ளை பெண் பிள்ளையெனப் பிள்ளைப்பெயரும் மக்கட்பாற்படுவனகொள்க. ஆய்வுரை : (இளமை பற்றிய மரபுப் பெயர்களாக மேற்குறித்த) பார்ப்பு முதலிய ஒன்பது பெயர்களுள் குழவி, மகவு என்னும் இரு பெயர்களையன்றி ஏனயைபெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப்பெறா எ-று. மக்கட்கண்ணே கிழவ அல்ல---மக்களிடத்தே உரியனவாக வழங்குவன அல்ல. இளமைப் பெயர்களாகிய இவை ஆணிளமைக்கும் பெண்ணிளமைக்கும் ஒப்பவுரியன. கிழவ அல்ல என்ற மிகையால் ஆண் பிள்ளை, பெண்பிள்ளை எனப் பிள்ளைப் பெயரும் மக்கட்பாற் படுவன கொள்க என்பர் பேராசிரியர். மடியகத் திட்டாள் மகவை (சிலப் : 9.22) எனவரும் சிலப்பதிகாரத்தொடருரையில் குழவியு மகவும் ஆயிரண்டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே எனவரும் இச்சூத்திரத்தை மேற் கோளாகக் காட்டுவர் அடியார்க்கு நல்லார். (23) 24. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் 1கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே. இளம்பூரணம் : (இ-ள்) என்றது ஓரறிவுயிராகிய2 புல்லும் மரனும் இளமைப் பெயர் பிள்ளை முதலாகக் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் என்றவாறு. உம்மை எதிர்மறையாகலான் கன்றென்றதே பெரும் பான்மை. பேராசிரியம் : (இ-ள்) பிள்ளை, குழவி, கன்று, போத்தென்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளைமைப் பெயர் (எ-று). ஓரறிவுயிரென்பன முன்னர்ச் (583) சொல்லப்படும் ஓரறிவுயிரென்பது, பண்புத்தொகை. கமுகம்பிள்ளை, தெங்கம்பிள்ளை எனவும், வீழி றாழைக் குழவித் தீநீர் (பத்துப்-பெரும்பாண்:357) எனவும், பூங்கன்று எனவும், போத்துக்கால் எனவும் வரும். வீழிறாழை யெனப்பட்டது தெங்கு போத்துக்காலென்பது கரும்பு. ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும்; அவை, குழவிவேனில் (கலி:36) எனவும், குழவித்திங்கள் (கலி 103. சிலப்-2: 38) எனவும், குழவிஞாயிறு (பெருங்-133: 29) எனவும், பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து (அகம்:36) எனவும், புலிப்போத் தன்ன புல்லணற்காளை (பெரும்பாண்:138) எனவும் இவையும் இளைமைக்குறிப்பினவாகலிற் காணப்பட்டன. மற்று, ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியதென்னையெனின், குழவிப் பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும் மரனும்1 உயிரெனப்படுமோவெனின், ---அவற்றையுயி ரென்றன் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், மரம் உய்ந்த தென்பவாகலின். ஆய்வுரை : (இ-ள்) புல், மரம் எனப் பகுத்துரைக்கப்படும் ஓரறிவுயிராகிய தாவரங்கட்குப் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இளமைப்பெயர் நான்கும் (இளமை குறித்த) பெயர்களாகக் கொள்ளுதலும் பொருந்தும் எ-று. கொள்ளவும் என்புழி உம்மை எதிர்மறையாகலால் இவற்றுள் கன்று என்ற பெயரே பெரும்பான்மை என்பர் இளம் பூரணர். ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் எச்சவும்மையாகக் கொண்டு இளமை பற்றிய இப்பெயர்கள் பிற விடங்களிலும் கொள்ளப்படும் எனவும், ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியது குழவி என்னும் இளமைப்பெயர் அதிகாரப்பட்டமையான் எனவும் கூறுவர் பேராசிரியர். பிள்ளைவெண்பிறை (சீவக-2390) எனவரும் சீவகசிந்தாமணிப் பாடலுரையில், பிள்ளைப்பிறை யென்பது, பிள்ளை குழவி (தொல்-மரபியல்-24) என்னுஞ் சூத்திரத்து உம்மையை எச்சப்படுத்தி அதனாற் கொள்க என்றார் நச்சினார்க்கினியரும். ஓரறிவுயிருக்குரியதாக இங்குக் கூறப்பட்ட போத்து என்னும் இளமைப்பெயரும், ஏறும ஏற்றையும் (மரபியல்-2) என்னும் சூத்திரத்துக் கூறப்பட்ட போத்து என்னும் ஆண்மைப் பெயரும் தம்முள் வேறெனவுணர்க. (24) 25. நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் எய்தியது விலக்கல் நுத லிற்று. (இ-ள்) மேற்கூறப்பட்ட நான்கின் இளமைப் பெயரும் கொள்ளார் நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்க்கு என்றவாறு1 உம்மை எதிர்மறையாதலின் மேற்சொல்லப்பட்ட இளமைப் பெயர் கூறப்பெறார் என்றவாறு. பேராசிரியம் : இஃது, எய்தியது விலக்குகின்றது. (இ-ள்) அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல்லப்படா (எ-று). மற்றுப், புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல்-மர : 85) எனுமாகலான் மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும்! பிறவெனின், அற்றன்று; புல்லென்பது பல பொருளொரு சொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் புல்லென்பது (புறம் : 248) உணவின்மேற் கொள்க.1 ஆய்வுரை : இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) மேற்குறித்த இளமைப்பெயர் நான்கினையும் நெல், புல் என்னும் ஓரறிவுயிர்க்குரியனவாக உடன்பட்டு வழங்க மாட்டார்கள் அறிஞர் எ-று புல் என்பது பல பொருளொருசொல். அது உணவுப் பயிராகிய நெல்லைச் சார்த்திக் கூறப்பட்டமையால் புல் என்பது ஈண்டு உணவுவகையாகிய கூலப்பயிரைக் குறித்து நின்றது. புறத்தே வயிரமுடைய தாவரத்தைக் குறித்த புல் என்பது இதனின் வேறெனக் கொள்க. நேர்தல் --- உடன்படுதல். (25) 26. சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் இளமைப்பெயரை வரை யறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சொல்லிப்போந்த மரபுடையனவன்றிச் சொல்ல வேண்டு மரபுடையனவற்றிற்குஞ் சொல்லுமிடத்து இவைதாமே இளமைப்பெயர் என்றவாறு. என்பது என்சொன்னவாறோ வெனின், பரந்துபட்டவுயிர்த் தன்மை யெல்லாம் ஈண்டு ஓதப்பட்டனவல்ல, எடுத் தோதாதன வற்றிற்கு ஈண்டு ஓதப்பட்ட இளமைப் பெயரல்லது பிற பெயரின்மையின், இவற்றுள் ஏற்பனவற்றோடு கூட்டியுரைக்க என்றவாறாம். இத்துணையும் கூறப்பட்ட சூத்திரத்திற்கு, உதாரணம் : பறவைதம் பார்ப்புள்ள (கலித்: 119) வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே யாமைப் பார்ப்பின் அன்ன (குறுந்: 152) தன்பார்ப்புத் தின்னும் பண்பின் முதலை (ஐங்குறு: 41) பார்ப்பு, பிள்ளை பிறவும் பறப்பன ஊர்வனவெல்லாம் இவ்வகையினாற் கூறுப, நடப்பனவற்றுள், மூங்காக்குட்டி, மூங்காப்பறழ், வெருகுக் குட்டி, வெருகுப்பறழ்; எலிக்குட்டி, எலிப் பறழ்; அணிற்குட்டி, அணிற்பறழ், நாய்க்குட்டி, நாய்க்குருளை, நரிக்குட்டி, நரிக்குருளை, நரிப்பறழ், நரிப்பிள்ளை; பன்றிக்குட்டி பன்றிக்குருளை, பன்றிப்பறழ், பன்றிப்பிள்ளை; புலிக்குட்டி, புலிக்குருளை, புலிப்பறழ், புலிப்பிள்ளை குரக்குக்குட்டி, குரக்குமக, குரக்குக்பிள்ளை, குரக்குப் பார்ப்பு குரக்குப்பறழ், குரக்குக்குழவி; ஊக முசுவென்பனவும் இவ்வாறே கொள்க. யாட்டுமறி; குதிரை மறி, குதிரைக்கன்று; நவ்விமறி; உழைமறி; புல்வாய்மறி; யானைக் கன்று, யானைக்குழவி; கழுதைக்கன்று; கடமைக்கன்று, கடமைக் குழவி; ஆன்கன்று; ஆன்குழவி; எருமைக்கன்று, எருமைக்குழவி; மரைக்கன்று, மரைக்குழவி; கவரிக்கன்று; கராகக்கன்று; ஒட்டகக் கன்று; மக்கட்குழவி, மக்கண்மக; தெங்கம்பிள்ளை ; கமுகங்கன்று; கருப்பம்போத்து. ஓரறிவுயிர்க்கட் குழவியென்பது வந்தவழிக் கண்டுகொள்க. இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின், ஒன்றற் குரியவற்றை ஓன்றற்குரித்தாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும். கழுதை மறியென்பனவும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி, (குறுந்: 17) என்றாற் போலவும் சான்றோர் செய் யுளகத்து வருவன கடியப்படா வென்றவாறு எடுத்தோதாதது பெரும்பான்மை.1 இனி எடுத்தோதாதன சிங்கம் புலிப்பாற்படும் உடும்பு, ஓந்தி, பல்லி அணிற் பாற்படும்; நாவியென்பது மூங்கா; வின் பாற்படும்; பிறவும்இவ்வகையின் ஏற்பன கொள்க. பேராசிரியம் : இது, புறனடைச் சூத்திரம். (இ-ள்) சொல்லிய மரபின் இளைமை2. பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல்-அகத்: 3) எனவும், பாடல் சான்ற புலனெறி வழக்கு (தொல்-அகத்: 53) எனவும், அகத்திணையியலுட் கூறிய புலனெறி வழக்கிற்றாகிய இளமை சொல்லுங்காலை அவையல இல---அவற்றுக்கு இலக் கணங் கூறுங்கால், வேறு பலவின்றி வரும்; இங்ஙனம் வரையறைப் பட்டன இன்றி (எ-று). இளைமையும் அவையல இலவெனவே அதற்கு மறுதலை யாகிய முதுமையாயின் அவையல திலவென்பதோர் வரையரைப் படுத்து இலக்கணங் கூறப்படாவென்பது கருத்து. சொல்லுங்காலை யென்றதனாற் சொல்லாத இளமைப் பெயருங் கொள்க, அவை, நன்னாட் பூத்த நாகிள வேங்கை (அகம்: 85) எனவும், நாகிளவளை (புறம்: 266) எனவும், கணைக் கோட்டுவாளைக் கமஞ்சூன் மடநாகு (குறுந்: 164) எனவும், எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (பத்துப்-பெரும்பாண் : 165) எனவும் வரும், இவற்றுள் ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிரளவும் நாகென்னும் இளைமைப்பெயர்1 வரையறையின்றிச் சென்றது; வண்டென்பதற்கும் ஒக்கும், அது விரவுப் பெயராகலின். ஆய்வுரை : இச்சூத்திரம் இளமைப்பெயர் பற்றிய அதிகாரத்தை முடித்துக் கூறுகின்றது. (இ-ள்) இங்கு எடுத்துக்கூறிய இளமை பற்றிய மரபுப் பெயர்களை மேலும் விரித்துச் சொல்லுங்கால் மேல் எடுத்துக் கூறிய அப்பெயர்களன்றி வேறு இல்லை எ-று. பரந்துபட்ட உயிர்த்தன்மையெல்லாம் ஈண்டு (விரித்து) ஓதப்பட்டன அல்ல; எடுத்து ஓதாதனவற்றுக்கு ஈண்டு ஓதப்பட்ட இளமைப்பெயரல்லது பிறபெயர் இன்மையின் இவற்றுள் ஏற்பன வற்றோடு கூட்டியுரைக்க என்றவாறாம் எனக் கருத் துரைப்பார் இளம்பூரணர். சொல்லுங்காலை யென்றதனான் சொல்லாத நாகு என்னும் இளமைப்பெயரும் தழுவிக் கொள்வர் பேராசிரியர். அவையல்லது பிறவில்லை என்றமையின் ஒன்றற்குரிய வற்றை ஒன்றற்குரியவாக்கி வழங்குவனவும் கொள்ளப்படும். இனி, எடுத்தோதாதனவற்றுள் புலிக்குரிய மரபுப்பெயர் சிங்கத்திற் குரியவாகவும், அணிலுக்குரிய மரபுப்பெயர் உடும்பு, ஓந்தி, பல்லி என்பவற்றுக்குரியதாகவும் இவ்வாறே பிறவும் இவ்வகையின் ஏற்பனவும் கொள்ளப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். சொல்லுங்காலை என்றதனால் நாகு என்னும் பெயர் பெண்மையேயன்றி நாகுமுதிர் நுணவம் (சிறுபாண்---51) என இளமையையும் உணர்த்திற்று என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் நச்சினார்க்கினியர். (26) 27. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே ஆறறி வதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும், வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தினானும் அறிவது, இவ்வகையினான் உயிர் ஆறுவகையினான் ஆயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம், வன்மைமென்மை அறியும். நாவினாற் கைப்பு, காழ்ப்பு,1 துவர்ப்பு உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற்றம், தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும், செவியினால் ஓசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும். மனத்தினாலறியப்படுவது இது போல்வன வேண்டு மெனவும், இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மை யெனவும் அனுமானித்தல், அனுமானமாவது புகை கண்ட வழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும். பேராசிரியம் : இது, மேல் அதிகாரப்பட்ட ஓரறிவுயிர் உணர்த்தும்வழி அவ்வினத்தனவெல்லாங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றறிவதென்பது ஒன்றனையறிவது; அஃதாவது உற்றறிவதென்பதும்; இரண்டறிவதென்பது அம்மெய் யுணர் வினோடு நாவுணர்வுடையதெனவும், மூன்றறிவுடையது அவற்றோடு நாற்றவுணர்வுடையதெனவும், நான்கறிவுடையது அவற்றோடு கண்ணுணர்வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற்றோடு செவியுணர்வுடையதெனவும், ஆறறிவுடையது அவற்றோடு மனவுணர்வுடையதெனவும், அம்முறையானே நுண்ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் (எ-று). இது முறையாதற்குக் காரணமென்னையெனின்,---எண்ணு முறையாற் கூறினாரென்பது; அல்லதூஉம், எல்லா உயிர்க்கும் இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுக ளென்றற்கு அம்முறையாற் கூறினாரென்பது; என்னை அது பெறுமாறெனின். --- நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தின ரென்பதனாற் பெறுதும்.1 மற்று, ஒன்றுமுதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியதென்னையெனின்,---ஓரறிவுயிர்க்கு மனமின்மையின் அங்ஙனங் கூறினாரென்பது, அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோவெனின், ---உயிருடையவாகிய நந்து முதலாகியவற்றுக்குச் செவி முதலாய பொறியின்மை கண்டிலையோவென்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மன வுணர்வில்லை2 யென்பாரும் மனமுண்டென்பாருமென இருபகுதியர். அவையெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. அல்லதூஉம் பொறியுணர்வென்ப தாமே உணரும் உணர்ச்சி; அங்ஙனம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ்சென்று கொள்ளுமென்பதென்னையெனின், மனம் ஒன்றினை நினையாநிற்க மற்றொன்று கட்புலனாயக்கால் அதனைப் பொறியுணர்வுகொள்ள அதன்வழியே மனந்திரிந்து செல்லுமாகலின்; என்னை? மனனுணர்வு மற்றோர் பொருட்கண் நின்றகாலத்துப் பிறபொருட்கட் சென்றதெனப் படாதன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர்வாகலான் அவை தம்மின் வேற்றுமையுடையன வென்பது. அல்லதூஉந் தேனெய்யினை நாவின்பொறி உணர்ந்தவழி இன்புற்றுங், கண்ணுள் வார்த்து மெய்யுணர்வுணர்ந்தவழித்துன் புற்றும், நறிதாயின் மான்மதத்தினை மூக்குணர்வுணர்ந்தவழி இன்புற்றுங், கண்ணுணர்வுணர்ந்தவழி இன்பங்கொள்ளாமையும் வருதலின் அவை பொறியுணர்வெனப்படும். மனவுணர்வும் ஒரு தன்மைத்தாதல் வேண்டுமாலெனின், ---ஐயுணர்வின்றிக் கனாப் போலத்தானே யுணர்வது மனவுணர்வெனப்படும்.1 பொறி யுணர்வு மனமின்றிப் பிறவாதெனின், - முற்பிறந்தது மனவுணர் வாமாகவே பொறியுணர்வென்பது ஓரறிவின்றாகியே சொல்லு மென்பது. அற்றன்றியும் ஒருவனுறுப்பிரண்டு தீண்டியவழீ அவ் விரண்டும் படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப் பிரண்டற்கும் ஊற்றுணர்வு கெடாது கவர்ப்பவாங்கிக் கைக் கொண்டு மீளுமென்பது காட்டலாகாமையானும் அஃதமையா தென்பது2. ஆய்வுரை : மேல் இளமைப்பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஓரறிவு உயிர் என்னும் உயிர்ப்பாகுபாடு அதிகாரப்பட்டமையால், அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகைப்படுத்தி இவ்வியல் 27 முதல் 34 வரையுள்ள சூத்திரங்களால் விரித்துக் கூறுகின்றார் ஆசிரியர். அவற்றுள் இச்சூத்திரம் அறுவகையுயிர்ப்பாகுபாடு பற்றித் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) : ஓரறிவுயிராவது, உடம்பினால் உற்றுணரும் ஓரறிவினையுடையது; ஈரறிவுயிராவது, உற்றறியும் அவ்வறிவுடன் நாவினாற் சுவைத்தறியும் அறிவினையுடையது. மூவறிவுயி ராவது உடம்பினால் உற்றறிதலும் நாவினாற் சுவைத்தறிதலும் அவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலும் ஆகிய மூன்றறிவினை யுடையது; நாலறிவுயிராவது, உடம்பினாலும் நாவினாலும் மூக்கினாலும் அறியப்படும் அம்மூன்றுடன் கண்ணினாற் கண்டறிதலும் ஆகிய நான்கறிவினையுடையது; ஐயறிவுயிராவது உடம்பினால் உற்றறிதல் நாவினாற் சுவைத் தறிதல் மூக்கினால் முகர்ந்தறிதல், கண்ணினாற் கண்டறிதல் ஆகியவற்றுடன் செவியினாற் கேட்டறிதலும் ஆகிய ஐந்தறிவினை யுடையது; ஆறறிவுயிராவது மேற்குறித்த ஐம்பொறிகளால் அறியும் ஐம்புலவுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினையும் ஒருசேரவுடையது என நுண்ணுணர் வினால் அவற்றின் உணர்வினைக் கண்டுணர்ந்தோர் உயிர்களை யெல்லாம் ஆறுவகையினவாக முறைப்படுத் துணர்த்தினர் எ-று. இவ்வாறு உலகில் வாழும் எல்லாவுயிர்களையும் அவற்றின் உடம்பில் அமைந்துள்ள அறிகருவிகளாகிய ஐம்பொறிகளையும் உய்த்துணரும் உட்கருவியாகிய மனத்தினையும் வாயிலாகக் கொண்டு அவ்வுயிர்கள் முறையே ஓரறிவு முதல் ஆறறிவீறாகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினைத் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே வாழ்ந்த நுண்ணுணர் வுடைய தமிழ்ச்சான்றோர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர் என்பார். நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்றார் ஆசிரியர். உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகவும் அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் ஐம்புலவுணர்வுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று ஓரறிவுயிர்முதல் ஆறறிவுயிரீறாக அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுனித்துணர்ந்து அவற்றை அறுவகை யுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப் பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். இஃது ஒருசிலர் கூறுவது போன்று ஒரு சமயக்கோட் பாட்டிற்பட்டதன்று. மனவுணர்வினராகிய மக்களையும் தேவர் முதலியோரையும் விலங்கு, பறவை முதலியவற்றையும் ஐயறி வுயிர்களுள் அடக்குதல் சமணசமயக் கோட்பாடாகும். இதனை யுளங்கொண்டே வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதி செவியறிவோ டையறிவுயிரே (நன்னூல் - உரியியல்-8) என்றார் பவணந்திமுனிவர். ஐவகைப்பட்ட பொறியுணர்வுகட்கும் அடிப்படையாய் விளங்குவது மனவுணர்வாகும். மனமாகிய அகக்கருவியினை வாயிலாகக் கொண்டே நன்றிது தீதிதுவெனப் பகுத்துணரும் அறிவாற்றல் மக்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படும் ஒரு சார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்பட்டு விளங்குதலால். மக்கள் தாமே ஆறறிவுயிரே என்றார் தொல்காப்பியனார். மனம் ஒரு பொருளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பொருள் கண்ணெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனந்திரிந்து அக்காட்சியில் ஈடுபடுதல் இயல்பு. புறத்தே தோன்றும் பொருள்களின் தோற்றத்தை மனத்திற்கு அறிவித்தது பொறியுணர்வாதலின், உடம்பின் புறத்தே செயற்படும் பொறியுணர்வும் அவற்றுக்குச் சார்பாக நின்று அகத்தே செயற்படும் மனவுணர்வும் தம்முள் வேற்றுமை யுடையன என்பது புலனாகும். தேனாகிய சுவைப் பொருளை நாவென்னும் பொறிவழியாக உணர்ந்த நிலையில் மனம் இன்புறுதலும், அத்தேனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த நிலையில் மனம் துன்புறுதலும்; கத்தூரியாகிய நறுமணப் பொருளை மூக்கென்னும் பொறியால் உணர்ந்த வழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள்ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர் வெனப்படும். மனமானது கனவு நிலையிற் போன்று நனவு நிலையிலும் ஐம்பொறிகளின் உணர்வு வேண்டாது உலகப்பொருள்களின் நலந்தீங்குகளைப்பகுத்துணரும் ஆற்றலுடைய தென்பர் அறிஞர். அங்ஙனம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம் தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர்வெனப்படும். இவற்றுள் ஐம்பொறியுணர்வுகட்கும் அடிப் படையாய் அமைந்ததுமன வுணர்வாகும். ஆகவேபொறியுணர்வென்பது இப்பொழுது ன்ன பொருளை நுகர்கின்றோம் என எண்ணும் தன்னுணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகட்குஅமைந்துள்ள பழக்கவுணர்வு எனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப்பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு நினைவுகூர்தற்குரியதாகும். (27) 28. புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : (இ - ள்) : ஒரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிறஆவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன.1 புல்லென்பது புறவயிர்ப்பு உடையன; மரமென்பது அக வயிர்ப்புடையன. அவையாமாறு முன்னர்க் கூறப்படும். பேராசிரியம் : இது முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மரனும் ஓரறிவுடைய; பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன (எ-று). கிளைப்பிறப்பென்பது கிளையும் பிறப்புமென்றவாறு,2 கிளையென்பன; புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடியும் போல்வன, பிறப்பென்பன, மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி ஓரறிவின் ஆகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவேயாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க. மற்று இவற்றுக்கு அறிவில்லை பிறவெனின், பயிலத் தொடுங்காற் புலருமாகலின் ஓரறிவுடையவென வழக்கு நோக்கிக் கூறினான், இது வழக்குநூலாதலின், அஃதேல், இவை உணர்ச்சி யாயின் இன்பதுன்பங் கொள்ளுமோவெனின் அதற்கு மனமின்மையின் அது கடாவன்றென்பது. ஆய்வுரை : ஒரறிவுயிராமாறு கூறுகின்றது. (இ-ள்) : புறத்தே வயிரமுடைய புல்லும் உள்ளே வயிரமுடைய மாமும் என்னும் இருவகைத் தாவரங்களும் உடம்பினால் உற்றறிதலாகிய ஓரறிவுடைய உயிர்களாகும் எ-று. காழ்-வயிரம்; திண்மை, அக்கிளைப்பிறப்பு பிறவும் உள-அவ்வினப்பிறப்பு பிறவும் உள்ளன. கிளைப்பிறப்பு என்ற தொடரைக் கிளையும் பிறப்பும் என உம்மைத்தொகையாக விரித்துரைப்பர் பேராசிரியர். கிளை-இனம். இங்குக் கிளை என்றன புறவயிரமும் உள்வயிரமும் இன்றி ஓரறிவுயிர்க்கு இனமாகக் கூறப்படும் புதல், கொடி முதலிய தாவரங்களை பிறப்பு என்றன. மக்களாகவோ அன்றி விலங்கு பறவை முதலியனவாகவோ பிறப்பினால் வேறுபடினும் ஓரறிவின் நிலையினதாகிய குழந்தைப் பருவத்து உயிர்களும், எக்காலத்தும் ஓரறிவாகவுள்ள ஏனைய உயிர்களும் ஆகும். ‘òšku Kjyî‰w¿ínkh u¿îÆ®’ (e‹}š N.-445) என்றார் பவணந்திமுனிவரும். இனி, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்பதற்கு, புல்லும் மரமும் என இங்குச் சொல்லப்பட்ட ஓரறிவுயிர்க்குப் பிற அறிவும் உள எனப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். கலித்தொகை 44-ஆம் பாடலில்வரும் கரிபொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின்வாடி என்ற தொடரின் உரையில், புல்லும் மரனும் ஓரறிவினவே, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (மரபியல் : 28) இதனுட் பிற அறிவும் உள என்று கூறினார்; அதனாற் பாவத்திற்கு அஞ்சி மரம் கவின் வாடிற்று என்றார் என நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு எழுதிய புதிய உரை விளக்கம் இலக்கியம் உள்வழி அதற்குரிய இலக்கண அமைதியினை நுண்ணிதின் உணர்ந்து எடுத்துக் காட்டும் அவர்தம் புலமைத் திறத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இதனுள் பிறவும் உள என்ற தொடர்க்குப் பிற அறிவும் உள என்று கொண்டார் நச்சினார்க்கினியர். இங்கு ஓரறிவுடைய உயிர்களாகக் கூறப்பட்ட தாவரங்களுள் பிற அறிவுடையனவும் உள்ளன என்பது அவர் கருத்தெனக் கொள்ள வேண்டியுள்ளது. இந்நுட்பம், கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின் வாடி (கலி-34) என்னுங் கலித்தொகைத் தொடர்ப் பொருளை விளக்கும் நிலையில், புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல்-மரபியல் 28) இதனுட் பிறஅறிவும் உளவென்று கூறினார்; அதனாற் பாவத்திற்கு அஞ்சி மரம் கவின் வாடிற்று என்றார் என நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கத்தால் நன்கு புலனாதல் காணலாம். (28) 29. நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள1 ஈரறிவுயி ரென்றவாறு. நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க, பேராசிரியம் : இது, முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுத லிற்று. (இ-ள்). நந்தும் முரளும் ஈரறிவாகிய ஊற்றுணர்வும் நாவுணர்வுமுடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள (எ-று) இரை சுவைகோடலும் பிறிதொன்று தாக்கியவழி அறிதலுமுடைமையின் மெய்யுணர்வோடு நாவுணர்வு முடையன வென்றவாறு. இவற்றுக்குக் கிளையென்பன கிளிஞ்சிலும் முற்றிலும் (மட்டிச்சுண்ணாம்பு) முதலாகிய சுடல்வாழ் சாதியும் பிறவுமெனக் கொள்க1. பிறப்பென்பன முற்கூறியவாறே கொள்ளப்படும். ஆய்வுரை : ஈரறிவுயிர் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நத்தையும் முரளும் ஊற்றுணர்வும், நாவுணர்வும் என இரண்டறிவுடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன எ-று. நந்து---நத்தை, முரள்---இப்பிவகை. இவை பிறிதொன்று தாக்கியவழி உற்றறியும் பரிசவுணர்வும், இரையின் சுவை கொள்ளுதலால் நாவுணர்வும் ஆகிய இரண்டறிவுடையன. இவற்றுக் கிளை (உறவு) ஆவன கிளிஞ்சிலும் முற்றிலும் முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவும் என்பர் பேராசிரியர். முரள் நந்தாதி நாவறிவோடீரறிவுயிர்(நன்னூல்-சூ-446) என்றார் பவணந்தி முனிவர். (29) 30. சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சிதலும், எறும்பும் மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு2. பிற ஆவன அட்டை முதலாயின. பேராசிரியம் : இது, மூவறிவின கூறுகின்றது. (இ-ள்) சிதலும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வுமுடைய; அவற்றுக் கிளையும் பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய (எ-று). இவை உற்றுணர்ந்து மீடலும் நாச்சுவை கோடலும் நெய்யுள் வழி மோந்தறிதலுமென மூன்றறிவினை யுடையவாறு கண்டு கொள்க. இவற்றுக்குக் கண்ணுஞ் செவியுமின்மை எற்றால் அறிதுமெனின் ஒன்று தாக்கியவழியன்றி அறியாமையிற் கண்ணில வென்பதறிதும், உரப்பியவழி ஓடாமையிற் செவியில வென்பதறிதும் இவற்றின் கிளையென்பன ஈயன்மூதாய் (அகம் :14) போல்வன.1 பிறப்பென்பன, முற்கூறியவாறே மக்கட் குழவியும் விலங்கின்குழவியும் இம்மூன்றுணர்வாகிய பருவத் தனவும் அட்டை முதலாகியவுமெல்லாங் கொள்க. ஆய்வுரை : மூவறிவுயிராவன இவையென்கின்றது. (இ-ள்) கறையானும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வும் ஆகிய மூவறிவினையுடைய உயிர்களாகும். அவற்றுக் கிளையும்பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய பிறவும். உள எ-று. சிதல்---செல்; கறையான் இவை ஒன்றையொன்று தாக்கிய வழி அறியாமையினால் இவற்றுக்குக் கண்ணுணர்வு இல்லை என்பதும் இவற்றை அதட்டிய வழி ஓடாமையால் இவற்றுக்குச் செவியுணர்வு இல்லை என்பதும் புலனாம் என்பர் பேராசிரியர். சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர் (நன்னூல்-447) என்றார் பவணந்தியார். (30) 31. நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். நாலறிவுயிராமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) நண்டும், தும்பியும்1 நாலறிவையுடைய; அக் கிளைப்பிறப்பு பிறவு முள என்றவாறு. பிறவுமென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க. பேராசிரியம் : நண்டுந் தும்பியும் நான்கறிவினவெனவும், அந்நாலறி வினையுடைய கிளையும் பிறப்பும் வேறுளவென்பதூஉங் கூறியவாறு. (இ-ள்.) நண்டிக்ற்குந் தும்பிக்குஞ் செவியுணர்வொழித்து ஒழிந்த நான்கு உணர்வும் உள; அவற்றுக் கிளையும் பிறப்பும் பிறவும் உள எ-று. மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நாவுணர்வும், நாற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையிற் கண்ணுணர்வுமுடையவாயின. நண்டிற்கு மூக்குண்டோ வெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம். இவற்றுக்குக் கிளையென்பன வண்டுந் தேனீயுங் குழவியும் முதலாயின. பிறப்பென்னநான்கறிவுடைய பிறசாதிகளென முற்கூறியவாறே கொள்க. ஆய்வுரை : நாலறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நண்டு தும்பி என்பன மெய்யறிவுணர்தலாகிய ஊற்றுணர்வும் இரையுண்ணுதலால் நாவுணர்வும் நாற்றம் உணர்தலால் மூக்குணுர்வும் கண்ணுடைமையால் காட்சியுணர்வும் என நான்கறிவுடையன. அவற்றுக்கு இனமும் பிறப்பும் பிறவும் உள எ-று. நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வொழித்து ஒழிந்த நான்குணர்வும் உள என்பது இச்சூத்திரத்தால் உணர்த்தப் பட்டது. பெரும்பாணாற்றுப்படையில், பல்காற் பறவை கிளை செத்தோர்க்கும் என்ற அடிக்கு, வண்டுகளை தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிச் செவிகொடுத்துக் கேட்கும் என உரையும்: நண்டுந்தும்பியும் (மரபியல் 39) என்னுஞ் சூத்திரத்திற் செவிப் பொறியான் இவை உணர்தல் கூறினாம்என விளக்கமும் கூறினர் நச்சினார்க்கினியர். இங்கே குறித்த வண்ணம் தொல் காப்பியமரபியலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய வுரை இப்பொழுது கிடைத்திலது. சீவகசிந்தாமணி 892, 893---ஆம் பாடல்களுக்குநச்சினார்க்கினியர் எழுதிய உரையில் மேற்குறித்த மரபியற் சூத்திரவுரைக்குரிய விளக்கம் பின்வருமாறு இடம் பெற்றுள்ளமை காணலாம். நண்டுந் தும்பியும் பிறப்பே (தொல்---மரபியல்:31) என்று தும்பிக்குச் செவியின்று எனவே, (தும்பியின் இனமாகிய சுரும்பு, வண், மிஞிறு ஆகிய) இவற்றிற்கும் செவியின்றாம் ஆதலாலேவருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று; இவை ஈண்டு வந்து கரிபோதல் இல; கேள்வியில்லன வருதலென்னை? என்பது கடா; அதற்கு விடை: ஆசிரியர், நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின்வைத்தது, மேல் வருஞ்சூத்திரத்தின் மாவும் மாக்களும் ஐயறிவென்ப (தொல் மரபியல் 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க; இதனை வாராததனால் வந்தது முடித்தல் என்னும் தந்திரவுத்தியாற் கொள்க என்று ஆண்டு உரைகூறிப் போந்தாம்: அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோர் உணர்ந்தன்றே, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த, தாதுண் பறவை பேதுறலஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன்(அகநா.4 :10-12) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக்கருத்தான் இவரும் (திருத்தக்க தேவரும் வண்டு, தும்பி முதலியவற்றுக்குச்) செவியுணர்வுண்டென்று கூறினார் எனச் சீவகசிந்தாமணி 892-3 ஆம் செய்யுட்களில் இம்மரபியற் சூத்திரப் பொருளை விளக்கியுள்ளமை இங்கு மனங்கொளத் தகுவதாகும். பெரும் பாணாற்றுப்படையுரையில் நச்சினார்கினியர் கூறிய விளக்கம் இம்மரபியற் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரையினைத் தெளிவுபடுத்தல் காணலாம். (31) 32. மாவும்1 புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் ஐயறிவுயிராமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும், நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.2 பேராசிரியம் : இஃது ஐயறிவுடையன கூறுகின்றது. (இ-ள்) ஐயறிவுடையன விலங்கும் அவை போல்வன ஒருசார் மானிடங்களுமாம். அக்கிளைப்பிறப்புப் பிறவும் உள (எ-று). மாவென்பன - நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் --- மனவுணர்ச்சியில்லாதார். கிளையென்பன-எண்கால்வருடையுங் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கிளையாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளையாயிற்று. பிறப்பென்பன கிளியும் பாம்பும் முதலாயின. மற்றுப் பாம்பிற்குச் செவியுங் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவி யெனப்படுமாதலின் ஐயறிவில்லை பிறவெனின் - பொறியென்பன வடிவுநோக்கின அல்லவாகலின் ஒன்றே இரண்டுணர்விற்கும் பொறியாமென்பது. கிளயென்பது பறவையாகலின் அதனை வேறோதுகவெனின், முன்னைய வற்றிற்கும் பறவையென்றோதிய திலனாகலான் அவ்வச் சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது. மற்றுப் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பெடுத் தோதி ஒழிந்தனவற்றையெல்லாம் பிறவுமுளவெனப் புறனடுத்த தென்னையெனின், அவை வரையறையிலவாகலின் அங்ஙனங் கூறினான்; அல்லதூஉம், மக்களும் புள்ளும் விலங்கும் முதலாயின ஓரறிவினவென்றும் ஈரறிவினவென்றும் எண்ணி வரையறுக்கப் படாமையாலும் அவ்வாறு கூறினானென்பது.1 ஆய்வுரை : இஃது ஐயறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நாற்கால் விலங்கும் அவைபோன்று உய்த்துணர் வில்லாத சில மக்களும் ஐம்பொறிகளின் அறிவுடையன. அக்கிளைப் பிறப்புப் பிறவும் உள எ-று. மாவும் புள்ளும் ஐயறிவினவே என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். மாவும் மாக்களும் ஐயறிவினவே என்பது பேராசிரியர் கொண்ட பாடம். மா---விலங்கு. புள்---பறவை. மேலைச் சூத்திரத்துத் தும்பி என்றது சிறு பறவையினை. மேலைச் சூத்திரத்திற்குறித்த தும்பி முதலாயின நாலறிவின எனக் கூறப்படினும் பறவையினத்துள் ஐயறிவுடைய பெரும் பறவைகளும் இருத்தலால் மாவும் புள்ளும் ஐயறிவின எனப் பாடங் கொண்டார் இளம்பூரணர். ஆறாவதறிவாகிய மனவுணர்வு படைத்த மக்கள்யாக்கையிற் பிறந்தும் தமக்கெனத் தனி நின்றுணரும் உணர்வின்றி வெறும் ஐம்புல அறிவினராய் வாழ்வோரும் உளராதலின் மாவும் மாக்களும் ஐயறிவினவே எனப் பாடங் கொண்டார் பேராசிரியர். இங்கு மாக்கள் எனப் பட்டார் நன்றுந்தீதும் பகுத்துணரும் மனவுணர்வு வாய்க்கப் பெறாது மக்கள் வடிவிற் காணப்படுவோரை. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் (120) எனவரும் திருக்குறளும் இக்கருத்தை வலியுறுத்தும் இக்கருத்துப்பற்றியே. தக்க இன்ன தகாதன இன்னவென்று ஒக்க உன்னலராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே (கம்ப-கிட்கிந்தை-வாலிவதை-120) என்றார் கம்பரும். (32) 33. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். ஆறறிவுயிராமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு. பிறவாவன தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்1 பிறப்புக்கள், பேராசிரியம் இஃது ஆறறிவுயிர் கூறுகின்றது. (இ-ள்) மக்களெனப்படுவோர் ஐம்பொறியுணர்வேயன்றி மனமென்பதோர் அறிவும் உடையர், அக்கிளைப் பிறப்பு வேறும் உள (எ-று). முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவோடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்களெனப்படும். அவ்வாறு உணர்விலுங் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத் திரங்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக்கொள்ள வைத்தானென்பது.2 அவை, ஊமுஞ் செவிடும் குருடும் போல் வன. கிளையெனப்படுவார் தேவருந் தானவரும் முதலாயினார். பிறப்பென்றதனாற், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின், அவையும் ஈண்டு ஆறறிவுயிரா யடங்குமென்பது. தாமே யெனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்க. ஆய்வுரை : இஃது ஆறறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மக்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவோர் ஐம் பொறியுணர்வுகளுடன் மனத்தான் உய்த்துணரும் உணர்வாகிய ஆறாவது அறிவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர்கள். அக்கிளைப் பிறப்பு வேறும் உள எ-று. பிறவாவது. தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர் என இளம்பூரணரும். கிளையெனப்படுவோர் தேவரும் தான வரு முதலாயினோர். பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிரா யடங்கும் எனப் பேராசிரியரும் விளக்கம் கூறுவர். எனவே விலங்கும் பறவையும் என மேற்கூறப்பட்ட ஐயறிவுயிர்களுள் குரங்கு, யானை, கிளி முதலியவற்றுள் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என்பது புலனாகும். இக்கருத்தினையுளங் கொண்டே, மனுவின்நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (கம்ப--வாலிவதை - 120) என்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பரும். இங்கு எடுத்துக் காட்டப் பெற்ற ஐயறிவுயிர் ஆறறிவுயிர் பற்றிய கருத்துக்கள் யாவும் மரபியல் 32, 33-ஆம் சூத்திரங்களால் நன்கு புலப்படுத்தப் பெற்றமையால், இவற்றின் பின் இளம்பூரண ருரையில் மட்டும் 34-ஆம் சூத்திரமாகக் காணப்படும் ஒரு சார் விலங்கும் உளவென மொழிப என்ற நூற்பா தொல்காப்பியச் சூத்திரம் அன்றெனவும் இங்குக் குறித்த தொல்காப்பியச் சூத்திரங்களின் பொருளை அடியொற்றிப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட பழஞ்சூத்திரமாதல் கூடும் எனவும் கருத வேண்டியுள்ளது. (33) 34. ஒருசார் விலங்கும் உளவென மொழிப. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுமது. (இ-ள்) விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிரா மென்றவாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. மேல் ஓரறிவுயிரெனத் தோற்றுவித்தார்; அதனானே இச்சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன1. பேராசிரியம் : இச்சூத்திரம் பேராசிரியர் உரையில் இல்லை. ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் எ-று அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின இச்சூத்திரம் பேராசிரியர் உரையில் இல்லாமை இங்குக் குறிப்பிடத் தகுவதாகும். மேல் நிறுத்தமுறையானே இளமைபற்றிய மரபுப்பெயர்களில் இன்னின்ன இன்னின்னவற்றிற் குரியன எனக் கூறிவந்த நிலையில் ஓரறிவுயிர் என்னும் உயிர்ப்பாகுபாடு இடையே தோன்றினமையால், ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாகவுள்ள உயிர்ப்பாகுபாட்டினை இடையில் விரித்துக் கூறவேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. இனி நிறுத்த முறையானே அடுத்த சூத்திர முதலாக இவ்வியல் 51-ஆம் சூத்திரம்முடிய ஆண்மை பற்றிய மரபுப்பெயர் இன்னின்ன வற்றுக் குரியன என்பது வகுத்துணர்த்தப்படுகின்றது. (34) 35. ntH¡ FǤnj ÉjªJfË bw‹wš.* இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் நிறுத்த முறையானே ஆண் பாற் பெயர்கூறுதல் நுதலிற்று, இச்சூத்திர முதலாயின. (இ-ள்) களிறென்று விதந்துகூறுதல் யானைக்குரித்து என்றவாறு. 46. கேழற் கண்ணுங் கடிவரை இன்றே*. இளம்பூரணம் : (இ-ள்) பன்றியின்கண்ணும் ஆண்பாலைக் களிறென்றல் கடியப்படா தென்றவாறு. பேராசிரியம் : மக்கடாமே ஆறறிவுயி ரெனப் பிரித்துக கூறினமையால் ஆண்பால் அதிகாரப்பட்டதுகண்டு1 மற்றை விலங்கினுள் ஆண் பாற்குரியன கூறிய தொடங்கியவாறு. நிறுத்தமுறையாற் கூறாது களிற்றினை முற்கூறினான் அப்பொருள் விலங்கினுட் சிறந்தமை யானென்பது2. ஏறும் ஏற்றையும் பயின்ற வர வினவாகலின் முதற்சூத்திரத்துண் (566) முற்கூறினானென்பது.3 (இ-ள்.) யானைக்கு விதந்து களிறென்றலுரித்து; கேழற் கண்ணுஞ் சிறுபான்மைவரும் (எ-று). விதந்தென்ற விதப்பினாற் களிறென்பது சாதிப்பெயர் போலவும் நிற்குமென்பது; அஃதாவது. யானையென்னுஞ் சாதிப்பெயரினைக் களிறென்னும் பெயர்வந்து குறிப்பித்தாற் கடுங்களிற் றொருத்தல் (கலி: 2) என்றும் ஆகுமென்பது. இரலைமா னேறு என்பதும் அதனாற் கொள்க. பன்றிக்கும் அவ்வாறு வருவனவுளவேற் கொள்க. கேழற் பன்றி (புறம்: 152) என்பதனைக் களிற்றுப்பன்றி யென்றுஞ் சொல்லுப. ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே ஆண்பாற்குரிய மரபுப்பெயரினை வகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) களிறு என்னும் ஆண்மைப்பெயரால் சிறப்பித்துக் கூறப்படுதல் யானைக்கு உரித்து எ-று. (35) ஆய்வுரை : இதுவும் அது. (இ - ள்) பன்றியினத்துள்ளும் ஆணைக் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கப்படுதல் இல்லை எ-று. இவ்விரு சூத்திரங்களையும் ஒருசூத்திரமாகக் கொண்டார் பேராசிரியர். விதந்து என்றதனால் களிறு என்னும் இம்மரபுப் பெயர் யானையினத்துள் ஆண்பாலுக்குரிய இயற்பெயர் போலவும் வழங்குதல் உண்டு என்பதாம். (36) 37. புல்வாய் புலிஉழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும். இளம்பூரணம் : (இ-ள்) புல்வாய் முதலாயின அறுவகையுயிரும் ஒருத்தலென்ன ஆண் பெயர் ஒன்றும் என்றவாறு.1 38. வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன1 இளம்பூரணம் : (இ-ள்) யானையும் பன்றியும் ஒருத்தலெனப்படு மென்றவாறு. 39. ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும் இளம்பூரணம் : (இ-ள்) எருமையினும் ஆணினை ஒருத்தலென்று கூறப்படும் என்றவாறு.2 பேராசிரியம் : இவை, உரையியைபுநோக்கி உடனெழுதப்பட்டன.3 (இ-ள்) இவை, ஒன்பது பெயரும் ஒருத்தலென்னும் பெயருக்கு ஒன்றும் (எ-று) இவற்றைப் பெரும்பான்மை சிறுபான்மைபற்றி மூன்று சூத்திரத்தான் ஓதினானென்பது. உதாரணம். காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் (அகம் : 65) என யானை ஒருத்தலென்றாயிற்று. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : (இ-ள்) புல்வாய், புலி, உழை, மரை, கவரி என்பனவும் முற்குறித்த கராம் என்பதனோடு அறுவகை உயிர்களுக்கும் ஒருத்தல் என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர் உரியதாகும் எ-று. (37) (இ-ள்) நீண்ட தந்தத்தினையுடைய யானையும் பன்றியும் ஒருத்தல் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயரால் வழங்கப் பெறும் அத்தன்மையின எ-று. ஆண்யானைக்கும் பெண்யானைக்கும் உரிய வேறுபாடு விளங்க வார்கோட்டியானை என ஆண்யானைக்கு அடை மொழி புணர்த்துக் கூறினார். இவ்அடைமொழி பன்றியுள் ஆணிற்கும் உரியதாகும். (38) (இ-ள்) எருமையினத்தும் ஆண் எருமையை ஒருத்தல் என வழங்குதல் பொருந்தும் எ-று. புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்னும் இவ் ஒன்பது இனத்துள்ளும் ஆணினை ஒருத்தல் என்னும் பெயரால் வழங்குதல் பொருந்தும் என்பதாம். இம்மூன்று சூத்திரங்களையும் இயைபுநோக்கி ஒருங்கே உரை உதாரணங் காட்டினார் பேராசிரியர். (39) 40. பன்றி புல்வாய் உழையே கவரி1 என்றிவை நான்கும் ஏறெனற் குரிய இளம்பூரணம் : (இ-ள்) பன்றி முதலாகிய நான்கும் ஆணினை ஏறென்று கூறலாமென்றவாறு. 41. எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.2 இளம்பூரணம் : சூத்திரத்தாற் பொருள் விளங்கும். 42. கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே.3 இளம்பூரணம் : (இ--ள்) கடல்வாழ் சுறாவின் ஆணினையும் ஏறெனலாகு மென்றவாறு. பேராசிரியம் : இம்மூன்று சூத்திரத்தான் ஓதிய எட்டுச்சாதியின்1 ஆண் பாலும் ஏறெனப்படும் (எ-று) காற்றுச்சுவ டொற்றுக் கடிபுனங் கவரு மேற்றிளம் பன்றியி னிருளை வெரூஉம் எனவும், வெருளேறு பயிரு மாங்கண் (அகம் : 121) எனவும், பொரிமலர்ந்தன்ன *பொறியமை மடமான் திரிமருப் பேறொடு தேரறேர்க் கோட (கலி: 13) எனவும், ஏற்றிளங் கவரி யெரியென வெருவப் பூத்த விலவத்துப் பொங்க ரேறி எனவும், ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு (கலி: 103) எனவும், வரிமரற் பாவை மரையேறு கறிக்கும் எனவும், புலம்பயி ரருந்த வண்ண னல்லேறு (குறுந் : 344) எனவும், சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள் (கலி : 84) எனவும் வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பன்றி, புல்வாய், உழை, கவரி என்னும் நான்கின ஆண்களும் ஏறு என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதற்கு உரியன எ-று. (40) (இ-ள்) எருமை, மரை, பெற்றம் என்பனவும் ஏறு என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதற்குரியன எ-று. (41) (இ-ள்) கடலில் வாழும் சுறாமீனும் ஏறு என வழங்கப்படும் எ-று. பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம் சுறா என்னும் இவ்வினத்துள் ஆணினை ஏறு என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதல் உண்டு என்பது, மேற் குறித்த மூன்று சூத்திரங்களாலும் உணர்த்தப்பட்டது. (42) 43. பெற்றம் எருமை புலிமரை புல்வாய் மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே இளம்பூரணம் : (இ-ள்) பெற்ற முதலாகிய ஐந்துள் ஆணினையும் போத் தெனலாகு மென்றவாறு. 44. *நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய1 இளம்பூரணம் : (இ-ள்) நீருள் வாழும் முதலை முதலாயினவற்றுள் ஆண் பால் போத்தெனக் கூறுதற்குரிய என்றவாறு. 45. மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும். இளம்பூரணம் : (இ-ள்.) மயிலுள்ளும் எழாலுள்ளும் ஆணினைப் போத் தென்றல் பெரும்பான்மை என்றவாறு2. பேராசிரியம் : (இ-ள்) போத்தென்னும் பெயர் இப் பதின்மூன்று சாதியின் ஆண்பாற்கு முரியது (எ-று) போத்து---ஆண்மைப் பெயர். நீர் வாழ்சாதி---நீருள் வாழும் முதலை முதலியன. மற்றிவை யெல்லா மென்றதனாற் பன்றியும் ஓந்தியும் முதலாயினவுங் கொள்ளப்படும். நீர்வாழ்சாதியுள் அறுபிறப் பென்பன 1சுறாவும் 2முதலையும் 3இடங்கருங் 4கராமும் 5வராலும் 6வாளையுமென இவை.1 பயிலத் தோன்று மென்றதனானே நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத்தோன்றுமெனிற் சூத்திரம் வேறு செய்ததென்னை? முதற்சூத்திரத்துள் எண்ணுக பிறவெனின், இவை பறவையுட் பயிலத்தோன்றுமாகலின் வேறோதினானென்க.2 எறிபோத்து உழுபோத்து, எருமைப் போத்து எனவும், புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பத்துப், பெரும்பாண் : 138) எனவும், மரைப்போத்து எனவும், கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி ... ... ... தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகும் (குறுந் : 213) எனவும் வரும். எல்லா மென்றதனாற் பன்றிப்போத்தெனவும் வரும் முதலைப் போத்து முழுமீ னாரும் (ஐங்குறு : 5) எனவும், பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து (அகம் : 36) எனவும், வாளை வெண்போத் துணீஇய (அகம் : 276) எனவும், நீர்வாழ்சாதியுட் சில வரும். மயிற்போத் தூர்ந்த வயிற்படை நெடுவேள் எனவும், போத்தொடு வழங்கா மயிலு மெழாலும் எனவும் வந்தவாறு. பயில என்றதனால், நாரை நிரைபோத் தயிரை யாரும் (குறுந் : 166) எனவும், ஒழிந்தனவும் இவ்வாறே கண்டு கொள்க. மற்று முதலையும் இடங்கருங் கராமுந் தம்மின் வேறெனப்படுமோ வெனின், கராஅங் கலித்த குண்டுகண் ணகழி யிடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி1 (புறம் : 37) எனவே றெனக் கூறப்பட்டனவென்பது. இனிச், செம்போத்தென்பதும் ஈண்டுக் கொள்ளாமோ வெனின், அது பெண்பாற்கும் பெயராகலின் ஒரு பெயரே; பண்புகொள் பெயரன்2 றென்பதுணர்க. ஆய்வுரை : (இ-ள்) பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் என்னும் இவ் ஐந்து இனமும் போத்து என்னும் ஆண்மைபற்றிய மரபுப் பெயர் பெறும் எ-று. (43) (இ-ள்) நீரில் வாழும் இன மாகிய முதலை முதலாயினவும் (ஆண்மை பற்றிய போத்து என்னும்) அம்மரபுப் பெயரினைப் பெறுதற்கு உரியன எ-று. அது என்றது, போத்து என மேற்குறித்த மரபுப் பெயரினை. நீர்வாழ் சாதியுள் அறுபிறப் புரிய எனப் பாடங் கொண்டார் பேராசிரியர். அப்பாடத்திற் கேற்ப நீர்வாழ் சாதியுள் அறுவகைப் பிறப்பினவாகிய ஆண்களும் (போத்து என்னும் அம்மரபுப் பெயரைப் பெறுதற்கு) உரியன எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். (44) (இ-ள்) மயில் இனத்துள்ளும் எழால் என்னும் பறவையினத் துள்ளும் போத்து என்னும் ஆண்மைப் பெயர் பெரும்பான் மையாய் வழங்கும் எ-று. இவை பறவையினத்துள் பயின்று வழங்குதலின் வேறு கூறினர் என்பர் போரசிரியர். எழால்---வல்லூறு என்னும் பறவை. புல்லூறு எனவும் கூறுவர். சவளான் இராசாளி என்பது வழக்கு என்பது, முன்பதிப்பில் மன்னார்குடி இயற்றமிழாசிரியர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய அடிக்குறிப்பு. விலங்கு, நீர்வாழ்வன. பறவை என்னும் மூவேறு இனங்களும் போத்து என்னும் ஆண்பாற் பெயர் கொள்வன என்பார் இனம்பற்றி மூன்று சூத்திரங்களாற் கூறினார். (45) 46. இரலையும் கலையும் புல்வாய்க் குரிய. இளம்பூரணம் : (இ-ள்) இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெயரும் புல்வாயில் ஆண்பாற்குரிய என்றவாறு. 47. கலையென் காட்சி உழைக்கும் உரித்தே நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்.1 இளம்பூரணம் : (இ-ள்) கலை என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரித்தென்றவாறு. பேராசிரியம் : இவை மூன்று1 சூத்திரமும் எண்ணிய மூன்று சாதிக்கும் இரலையுங் கலையுமென்னும் ஆண்பாற் பெயர் இன்னவாறுரிய வென்கின்றன. (இ-ள்) இரலையுங் கலையுமென்பன புல்வாய்க்குரிய; அவற்றுட் கலையென்பது உழைக்குமுரித்து; அக்கலையென்பது முசுவிற்கு வருங்கால் உழைக்குப்போலச் சிறுவரவிற்றன்றி வரும் (எ-று). புல்வா யிரலை நெற்றி யன்ன (புறம் : 374) எனவும், கவைத்தலை முதுகலை காலி னொற்றி (குறுந் : 213) எனவும், கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம் : 97) எனவும், மைபட் டன்ன மாமுக முசுக்கலை எனவும் வரும். முசுவிற்கு நிலைபெற்றதெனவே அத்துணை நிலை பேறின்றிக் குரங்கிற்கு வருவனவுங் கொள்க அது, கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென (குறுந் : 69) என வருமாற்றான் அறிக. ஆய்வுரை : (இ-ள்) இரலை, கலை என்னும் மரபுப் பெயர்கள் இரண்டும் புல்வாய் இனத்துள் ஆண்பாற்கு உரியன எ-று. (46) (இ-ள்) கலை என்னும் மரபுப் பெயர் உழையினத்துள் ஆணுக்குரியதாய் வழங்கும். அம்மரபுப் பெயர் முசுஎன்னும் குரங்கினத்துள் நிலைபெற்று வழங்குவதாகும். எ-று. புல்வாய், உழை, முசு என்னும் மூவினத்துள்ளும் ஆண்மை பற்றிய கலை என்னும் மரபுப்பெயர்நிலை வழங்கும் என்பது இவ்விரு சூத்திரங்களாலும் பகுத்துரைக்கப்பட்டது. (47) 48. மோத்தையுந் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே. இளம்பூரணம் : (இ-ள்) மோத்தை முதலாகச் சொல்லப்பட்டன யாட்டில் ஆணிற்குரிய வென்றவாறு.1 பேராசிரியம் : (இ-ள்.) இக்கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய (எ-று). அவை, வெள்யாட்டு மோத்தை எனவும், தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த (அகம்:101) எனவும், உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் (பெரும்பாண்: 151-2) எனவும் வரும். அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்ததுபோலும்.1 யாத்தவென்றதனாற் கடாவென்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க.2 அது, நிலைக்கோட்டுவெள்ளை நரல்செவிக் கடாஅய் (அகம்: 155) இனிக் குரங்கினை அப்பரென்றலுங் கொள்க3 ஆய்வுரை : (இ-ள்) மோத்தை, தகர், உதள், அப்பர் என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர்கள் நான்கும் ஆட்டினத்தின் கண்ணே மிகவும் இயைபுடையனவாய் வழங்குவன என்பர் ஆசிரியர். எ-று. யாத்தல்---மிகவும் பொருட்பிணிப்புடையதாதல். இதனால் கிடாய் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயரும் ஆட்டினத்திற் குரியதாய் வழங்கும் வழக்கு எனக்கொண்டார் பேராசிரியர். அப்பர் என்னும் பெயர் யாட்டினத்துள் ஆணுக்குரியதாய் வழங்கும் வழக்கு பிற்காலத்தில் வீழ்ந்தது என்றார் பேராசிரியர். (48) 49. சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே இளம்பூரணம் : (இ---ள்.) மயிலல்லாத புள்ளின்கண் ஆண்பெயர் சேவலென்று கூறப்படு மென்றவாறு. சிறகு என்றது ஆகுபெயர்1. பேராசிரியம் : (இ-ள்) பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாம் சேவற் பெயர் உரித்து, அவற்றுண் மயிற்காயின் அஃதாகாது (எ-று.) காமர் சேவ லேமஞ் செப்ப (அகம் : 103) எனவும், வளைக்கட் சேவல் வாளாது மடியின் (அகம் : 122) எனவும், தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் (குறுந் : 107) எனவும், கானங் கோழிக் கவர்குரற் சேவல் (குறுந் : 242. புறம் : 395, மலைபடு : 510) எனவும், உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் (குறுந் : 85) எனவும் வரும், பிறவும் அன்ன. மாயிருந் தூவி மயில்2 என்றதனான் அவை தோகை யுடையவாகிப் பெண்பால் போலுஞ் சாயலவாகலான் ஆண் பாற்றன்மை இலவென்பது கொள்க. எனவே, செவ்வேள்1 ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்பது. ஆய்வுரை : (இ-ள்) : சேவல் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயர் சிறகுகளுடன் பொருந்திய பறவையினத்துள் ஆண்பாற்கெல்லாம் ஒப்பவுரியதாகும்; கரிய பெரிய தோகையினையுடைய மயில் அல்லாத விடத்து எ-று. இங்குச் சிறகு என்றது, சிறகினையுடைய பறவையினத் தினைக் குறித்து நின்றது; சினையாகுபெயர். மாயிருந்தூவி மயில் என அடைபுணர்த் தோதினமையால், விரிந்த தோகையினை யுடைய ஆண்மயில்கள் பெண்மைக்குரிய சாயலினைப் பெற்றமையால், அவை தோற்றத்தால் ஆண்மையினின்றும் வேறுபட்டுக் காணப்படுதலால் சேவல் என்னும் ஆண்மை குறித்த மரபுப்பெயரால் வழங்கப் பெறாவாயின என்பார் மாயிருந்தூவி மயிலலங் கடையே என்றார் ஆசிரியர். அல் + கடை என்பது அலங்கடை யென்றாயிற்று. அல்கடை---அல்லாத விடத்து. மாயிருந்தூவி மயில் என்றதனான், அவை தோகை யுடையவாகிப் பெண்போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இல என்பதுகொள்க என்றார் பேராசிரியர். செவ்வேள் ஊர்ந்த மயிற்கு ஆயின் அது(சேவல் என்ற பெயர்) நேரவும் படும் எனப் பேராசிரியர் கூறும் அமைதி பிற்கால இலக்கியவழக் கினைத் தழுவிக்கொள்ளும் கருத்தினதாகும். (49) 50. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப. இளம்பூரணம் : (இ-ள்) ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றை2 யென்னும் பெயர் உரித்தென்றவாறு. ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக் கண்ணும் கொள்ளப்படும்.1 பேராசிரியம் : (இ--ள்) ஏற்றையென்னுஞ் சொல் ஆற்றலொடு கூடிய ஆண்பாற்கெல்லாம் உரித்து (எ--று). அவை, குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை (ஐங்குறு : 216 : நற் 36 : குறுந் 141) எனவும், செந்நா யேற்றை கம்மென வீர்ப்ப (அகம் : 111) எனவும், கொடுந்தாண் முதலைக் கோள்வ லேற்றை (குறுந் : 324) எனவும் வரும், பிணர்மோட்டு நந்தின் பேழ்வா யேற்றை (அகம் : 246) எனவும், புன்றாள் வெள்ளெலி மோவாயேற்றை (அகம் : 133) எனவுங் கூறினார். அவையும் அப்பெயரானே வழங்குதல் ஆற்றலுடையவாகத் தோன்றும். எல்லா மென்றதனாற் சிறுபான்மை ஆற்றல் இல் லாதனவுங் கொள்க. இடுகாட்டு ளேற்றைப் பனை என்பது போன்று வருவன; பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) ஆற்றல்மிக்க ஆண்பாலாகிய உயிரினத்துக் கெல்லாம் ஏற்றை என்னும் ஆண்மைப்பெயர் பொதுவாக வழங்குதற்கு உரியதாகும் எ-று1 பிறப்பினால் ஆண்பாலாயினும் ஆற்றலொடு கூடிய உயிரினத்துக்கே ஏற்றை என்னும் ஆண்மைப்பெயர் சிறப்புரிமை யுடையது என வற்புறுத்துவார் ஆற்றலொடு புணர்ந்த ஆண் பாற்கெல்லாம் என அடைபுணர்த்தோதினார். பன்னாள், குழிநிறுத் தோம்பிய கொடுந்தாள் ஏற்றை (பெரும்பாண் : 343,344) (பன்றி) ஆற்லொடுபுணர்ந்த ஆண் பாலாதலின் ஏற்றை என்றார், எனவும் ஏற்றை அரிமான் (சீவக---432) ஏறும் ஏற்றையும் (தொல்---மரபு:2) என்றலின் ஏற்றையும்பெயர் எனவும் இச்சூத்திரத்தை எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். எனவே ஏறு என்பதும் ஏற்றை என்பதும் ஆண்மை குறித்த இருவேறு மரபுப்பெயர் என்பது புலனாம். பரற்றவ ழுடும்பின் கொடுந்தாள் ஏற்றை (மலைபடு---508) எனவும் முறையே நாயும் உடும்பும் ஏற்றை என்னும் ஆண்மைப் பெயர் பெற்றுள்ளமை காண்க. (50) 51. ஆண்பால் எல்லாம் ஆணெனற்குரிய பெண்பால் எல்லாம் பெண்ணெனற்குரிய காண்பவை அவையவை அப்பா லான. இளம்பூரணம் : (இ-ள்) ஆண்பா லுயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்; பெண்பாலுயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்; அவ்விரு வகைக்கும் அறிகுறி காண்டலான் என்றவாறு. வேழக்குரித்தென்னும் சூத்திர (35) முதலாக இத்துணையும் ஆண் பெயர் கூறினார். இனிப் பெண்பெயர் கூறுகின்றாராகலின் அதிகாரப்பட்ட பொருள் சே. கடுவன், கண்டி என்பன சிறப்புச் சூத்திரத்தாகலின் அதற்குரியவெனக் கூறிற்றிலராலெனின்; அவற்றுள் கடுவனும் கண்டியும் முன்னரெடுத்தோதப்படும். சே என்பது ஆவினுள் ஆணையே குறித்து வழங்கலின் ஓதாராயினார். ஈண்டு ஓதப்பட்டன பலபொருள் ஒருசொல்லும் ஒருபொருட் பல சொல்லும் என்று கொள்க.1 இத்துணையுங் கூறப்பட்டது; வேழத்துள் ஆண், களிறு, ஒருத்தல், ஏற்றை எனப்படும்; பன்றியுள் ஆண் ஒருத்தல், ஏற்றை எனப்படும்; புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போது, இரலை, கலை எனப்படும்; புலியுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை எனப்படும்; மரையுள் ஆண் ஒருத்தல், ஏறு, போத்து, ஏற்றை எனப்படும்; கவரியுள் ஆண் ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; எருமையுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை, கண்டிஎனப்படும்; சுறவில் ஆண் ஏற்றை எனப்படும்; பெற்றத்துள் ஆண், போத்து, ஏறு, ஏற்றை எனப்படும்; எருது காலுறாதிளையர் கொன்ற என வருதலின் எருதும் ஆம் ; அதிகாரப் புறனடையாற் கொள்க. நீர்வாழ் சாதியுள் ஆண், வராற்போத்து, வாளைப் போத்து என வரும். முசுவில் ஆண் கலை எனப்படும்; குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும்; கடுவன் எனவும் வரும். புள்ளினுள் மயிலாண் ஆண் எழால், சேவல், போத்து, ஏற்றை எனப்படும்; புள்ளினுள் ஆணெல்லாவற்றிலும் மயிலல்லாதன வெல்லாம் சேவல். ஏற்றை எனப்படும்; ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை, ஆண்பனை எனவரும். பேராசிரியம் : இது, மேற்கூறிய ஆண்பாற் பெயர்க்கும் இனிவரும் பெண் பாற் பெயர்க்கும் புறனடை. (இ-ள்.) ஆணென்னுஞ் சொல் எல்லாச் சாதியுள்ளும் ஆண்பாற்கு உரித்து; பெண்ணென்னுஞ்சொல் எல்லாச் சாதியுள்ளும் பெண்பாற்கு உரித்து; வழக்கினுள் அவ்வாறு காணப்படும் அவை (எ-று). அவை ஆண்யானை, பெண்யானை, ஆண்குரங்கு, பெண் குரங்கு, ஆண்குருவி, பெண்குருவி என்றாற்போல்வன இவை காணப்படும். எனவே, இத்துணை விளங்கவாராது சிறுவர வினான் வருவனவுமுள இருபாலு மல்லாதனவென்பது. ஆணலி, பெண்ணலி எனவும், ஆண்பனை, பெண்பனை எனவும் வரும்;1 பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) ஆண்பால் உயிர்களெல்லாம் ஆண் எனப் பெயர் பெறுவன; பெண்பால் உயிர்களெல்லாம் பெண் எனப் பெயர் பெறுவன; அவ்விருவகைக்கும் உரிய வடிவ வேற்றுமை காணப்படுதலால் எ-று. இச்சூத்திரத்தில் ஆண், பெண் என்பன அஃறிணைக்கு உரியவாகக் கூறப்பட்டன. மரபியல் 35 முதல் 51 முடிய ஆண்மை பற்றிய மரபுப் பெயர்களை வகுத்துரைத்தார். சே.கடுவன், கண்டி என்பன ஆண்பெயர். அவற்றுள் சே என்பது பசுவினுள் ஆணினையே குறித்து வழங்குதலின் அதனைத் தனியே கூறிற்றிலர். ஏனையிரண்டும் இவ்வியல் அதிகாரப்புறனடையில் (சூ---69) விரித்துரைக்கப்படும். (51) 52. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இளம்பூரணம் : இனிப் பெண்பெயர் உணர்த்துகின்றார் இச்சூத்திர முதலாக. (இ-ள்) பிடி என்னும் பெண்பெயர் ஆனையின் மேலது என்றவாறு. பேராசிரியம் : இது முறையானே மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற பெண்மைப்பெயர் கூறிய தொடங்கி ஆண்பாலிற் களிறு முற் கூறியவாறு போலப், பிடியிணை முற்கூறியது1. (இ-ள்) பிடியென்னும் பெயர் யானைக் கண்ணது(எ-று) பிடிபடி முருக்கிய பெருமரப் பூசல் (அகம் :8) என வரும். பெய ரென்றதென்னை யெனின், அவை தொடங்கு கின்றதென்பது அறிவித்தற்கென்பது. ஆய்வுரை : இதுமுதல் 68 முடியவுள்ள சூத்திரங்களால் பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறுகின்றார். (இ-ள்) பிடி என்னும் பெண்பாற் பெயர் யானையினத்துக்கு உரியதாகும் எ-று. இனி, பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறத் தொடங்கு கின்றாம் எனப் புலப்படுத்துவார். பிடி யென்னாது பிடியென் பெண்பெயர் என விரித்துக் கூறினார். (52) 53. ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய இளம்பூரணம் : (இ-ள்) பெட்டை1 என்னும் பெயர் ஒட்டக முதலாகச் சொல்லப்பட்ட நான்குக்கும் பெண்பாற்குப் பெயராம் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) ஒட்டகமுங் குதிரையுங் கழுதையும் மரையாவும் பெட்டையென்னும் பெயர்பெறும் (எ-று). ஒட்டகப்பெட்டை, குதிரைப்பெட்டை, கழுதைப்பெட்டை மரையான்பெட்டை என வரும். ஆய்வுரை : (இ-ள்) பெட்டை என்னும் பெண்மைப் பெயர் ஒட்டகம் குதிரை, கழுதை, மரை என்னும் இவை நான்கிற்கும் உரியதாகும் எ-று. எழுந்து விண்படரும் சிங்கப் பெட்டைமேல் இவர்ந்து (752) எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளுரையில், ஒட்டகம்... .... பெட்டையென்னும் பெயர்க்கொடைக்குரிய (தொல்---மரபு---52) என்பதனுள் கொடை என்றதனால் சிங்கத்துக்கும் பெட்டை கொண்டவாறு காண்க எனவும், சிங்கவேறு தன் துணைப் பெட்டையோடு தான்புறப்பட்ட தொத்தான் (சீவக.1084) பெட்டையென்றற்கு எழுந்து விண்படரும் (சீவக.752) என்னுங் கவியிலே கூறினாம் எனவும் நச்சினார்க்கினியர் தரும்விளக்கம் இங்கு நினைவுகூரத் தகுவதாகும். (53) 54. புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப. இளம்பூரணம் : (இ-ள்) பெட்டை என்னும் பெயருக்குப் புள்ளிற் பெண்பாலு முரிய என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) எல்லாம் புள்ளுப்பெட்டை யென்னும் பெயரான் வழங்குதற்குரிய1 (எ-று.) அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை யென வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பெட்டை என்னும் அப்பெண்மைப் பெயர்க்குப் பறவையும் உரியனவாம் எ-று. (54) 55. பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்2 இளம்பூரணம் : (இ-ள்) பேடை என்னும் சொல்லும் பெடை என்னும் சொல்லும் ஆராயுமிடத்துப் பெட்டை என்பதனோடு ஒன்றும் என்றவாறு. புள் பறவை இது புள்ளின் வைத்தமையாற் புள்ளின்பின் வருதல் பெரும்பான்மை. பேராசிரியம் : (இ-ள்) பேடையும் பெடையுமென்னும் இரண்டும் முன்னர் நின்ற புள்ளிற்கு ஒன்றும் (எ-று). அவை குயிற்பேடை அன்னப்பெடை, என வரும். நாடின் என்றதனாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலாவென்பது.1 ஆய்வுரை : (இ-ள்) பேடை என்னும் பெயரும் பெடை என்னும் பெயரும் ஆராயுமிடத்துப் பெட்டை என்ற பெண்மைப் பெயர் போன்று (பறவையினங்கட்கு உரியனவாகப்) பொருந்தி வழங்கும் எ-று. இச்சூத்திரம் பறவைக்குரிய மரபுப்பெயர் கூறும் சூத்திரத்தின் பின் வைத்தமையால் பெடை, பேடை என்னும் பெண்மை பற்றிய மரபுப்பெயர்கள் பறவைகட்கு உரியனவாய் வழங்குதல் பெரும் பான்மை என்பர் இளம்பூரணர். நாடின் என்றதனால் பெட்டை என்பது வழக்கினுட் பயிலா என்றார் பேராசிரியர். கலித்தொகை 114-ஆம் பாடலில் வரும் எருமைப் பெடை யோடு எனவரும் தொடருரையில் எருமைப் பெடையென்றது, பேடையும் பெடையும் (தொல்---மரபு--- 55) என்னுஞ் சூத்திரத்து நாடின் என்பதனால் அமைத்தாம் என்பர் நச்சினார்க்கினியர் எனவே அவர் தொல்காப்பிய மரபியலுக்கு உரையெழுதியுள்ளமை நன்கு தெளியப்படும். (55) 56. கோழி கூகை ஆயிரண் டல்லவை சூழுங் காலை அளகெனல் அமையா. இளம்பூரணம் : (இ-ள்) கோழியுங் கூகையும் அளகெனப்படும். 57. பெண்பா லான அப்பெயர்க்1 கிழமை மயிற்கு முரித்தே. இளம்பூரணம் : (இ-ள்) அளகென்னும் பெண்பாற் பெயர் மயிலுக்குப் பெண்பாற்கும் உரித்து என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) கோழியுங் கூகையும் மயிலுமென்பனவற்றுக்கு அளகென்னும் பெயர் உரியது2 (எ---று). மனைவாழ் அளகின் வாட்டோடு பெறுகுவிர் (பெரும்பாண் :256) என்பது, கோழி, பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) கோழி, கூகை ஆகிய அவ்விரண்டுமல்லாத பறவைகள் ஆராயுங்கால் அளகு என்னும் பெண்மைப் பெயரால் வழங்கப்பெறா; எனவே கோழி கூகை என்பனவே அளகு என்றபெண்மைப் பெயரால் வழங்கப்பெறும் எ-று. அளகுசேவலோடாடி (சீவக---1778) எனவரும் பாடலுரை யில், அளகு---கூகை; காட்டுக்கோழியும் ஆம் என்றார் நச்சினார்க்கினியர். (இ-ள்)அளகு1 என்னும் பெண்மைப் பெயரால் வழங்கப் பெறும் உரிமை ஒரோவழி மயிலுக்கும் உரியதாகும் எ-று. (57) 58. புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே. இளம்பூரணம் : (இ-ள்) புல் வாய் முதலாகிய நான்கிற்கும் பிணை2 என்னும் பெண்மைப்பெயர் வழங்குதற்குரித்து என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) பிணையென்னும் பெண்பெயர்க்குரியன இவை நான்கும் (எ-று). அலங்கல் வான்கழை யுதிர்நென் னோக்கிக் கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண் (அகம் : 129) எனவும், சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறம் : 2) எனவும், சிறுதலை நவ்விப் பிணையிற் றிரிந்த நெறிகோட்டு இரலை மான் (குறுந் : 183) எனவும், கவரி மான்பிணை நரத்தங் கனவும் (பதிற்-11) எனவும் வரும். சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே என்பது பிணையென்னுஞ் சொற்பொருளினை உண்மை நோக்கிற் பிரியாது பிணையும் பிற சாதிக்குஞ் சேவற்குஞ் செல்லுமாயினும், மரபுநோக்கப் பிணையென்றதற்குச் சிறப் புடையன இவை என்றவாறு1. ஆய்வுரை : (இ-ள்) புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்கிற்கும் சொற்பொருளமைப்பினை ஆராய்ந்தால் பிணையென்னும் பெண்மைப்பெயர் உரியதாகும் எ-று. சொல்வாய் நாடுதலாவது, சொல்லில் இடம் பெற்றுள்ள பொருட்பகுதியை ஆராய்தல். பிணையென்னும் மரபுப்பெயரின் (உட்பொருளை உள்ளவாறு ஆராய்ந்தால், தானே தனித்துப் பிரிந்து செல்லாது தன் துணையாகிய ஆணுடன் பிணைந்து கூடிச்) செல்லும் பெற்றினையுடைய பெண்மைப் பெயராக வழங்கும் மரபு புலனாதலின் சொல்வாய் நாடிற்பிணையெனப் படுமே என்றார் ஆசிரியர். (58) 59. பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை. இளம்பூரணம் : (இ-ள்) பன்றி முதலாகிய மூன்றிற்கும் பெண்பாற்குப் பிணவு2 என்னும் பெயர் பொருந்திற்று என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) இவை மூன்று சாதியும் பிணவென்னும் பெயர்க் குரியன (எ-று). நெடுந்தாட் செந்தினைக் கெழுந்த கேழல் குறுந்தாட் பிணவொடு குறுகல் செல்லாது எனவும், குறியிறைக் குரம்பைக் குறத்தி யோம்பிய மடநடைப் பிணவொடு கவர்கோட் டிரலை எனவும், நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை எனவும், மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பசுங்கட் செந்நா யேற்றைக் கேழ றாக்க (அகம் : 21) எனவும் வரும். ஒன்றிய1 என்றதனான். ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய (அகம் : 72) எனப் புலிக்குங் கொள்க; பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பன்றி, புல்வாய், நாய் என்னும் விலங்கினம் மூன்றும் பிணவு என வழங்கும் பெண்மைப் பெயருக்கும் பொருத்த முடையன என்பர் ஆசிரியர் எ-று. பிணவு என்னும் பெண்மைப்பெயர் யானைக்கும் (பரிபாடல் 10,5), கரடிக்கும் (மணிமேகலை 16 : 68), குரங்குக்கும் (மணி மேகலை 19 : 72), வழங்குதல் தொல்காப்பியனார் காலத்திற்குப் பிற்பட்ட இலக்கிய மரபாகும். பன்மயிர்ப் பிணவொடு கேழலுகள (மதுரை-174) என வரும் மதுரைக் காஞ்சியடிக்குப் பல மயிரினையுடைய பெண்பன்றி யுடனே ஆண் பன்றி ஓடித்திரிய என உரைவரைந்த நச்சினார்க் கினியர், பிண என்னும் அகரவீற்றுச் சொல் வகரவுடம்படுமெய் பெற்றது; பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை (தொல்-மரபு-58) என்றார் என இச்சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவர் கருத்துப் படி இத்தொடரிற் பெண் பன்றியைக் குறித்த இளமைபற்றிய, மரபுப்பெயர் பிண என்னும் அகரவீற்றுச் சொல் எனக் கொள்ள வேண்டும். எனினும் பெண்ணும் பிணாவும் பிள்ளையும் அவையே என்னும் சூத்திரத்தில் பிணா என்னும் ஆகாரவிறுதி (வருமொழி) வன்கண மன்மையின் குறியதன் இறதிசினைகெட்டு உகரம்பெறாது நின்றது எனப் பேராசிரியர் குறித்துள்ளார். எனவே பெண்மை பற்றிய மரபுப் பெயர்களுள் ஒன்றாகிய பிணா என்பது ஆகார இறுதியாகவும், குறியதன் இறதிச் சினைகெட்டுப் பிண என அகர இறுதியாகவும், குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெற்றுப் பிணவு என உகர இறுதியாகவும் நிற்கும் என்பது பெற்றாம். (59) 60. பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. இளம்பூரணம் : (இ-ள்) பிணவல்1 என்று சொல்லினும் மேற்சொல்லப் பட்ட வற்றின் மேல என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) பிணவல் என்பதூஉம் அம்மூன்றற்கும்2 உரித்து. இரியற் பிணவற்றீண்டலின் (அகம் : 21) என்பது பன்றி. நான்முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து (அகம் : 248) என்பதுவும் அது; ஒழிந்தனவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பிணவல் என்ற பெண்மைப் பெயரும் மேற்குறித்த பன்றி, புல்வாய், நாய் என்னும் அம்மூன்றிற்கும் உரியதாகும். எ-று. (60) 61. பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. இளம்பூரணம் : (இ-ள்) ஆ1 என்னும் பெண்பெயர் பெற்றம் முதலாகிய மூன்றிற்கு முரித்து என்றவாறு. பேராசிரியம் : இது, மேல் அந்தஞ் சான்ற (558) வென்னும்2 இலேசினா னே ஆவென்பது தழீஇக்கொண்டமையின் அஃது இன்னுழி (அல்லது) ஆகாது என்கின்றது. (இ-ள்) ஆவென்னும் பெயர் பெற்றமும் மரையும் எருமையும் (எ - று). அவை, புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம் : 56) எனவும், சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் (அகம்: 46, குறுந்: 261) எனவும், மரையா மரல்கவர மாரி வறப்ப (கலி : 6) எனவும் வரும். ஆய்வுரை : (இ-ள்) ஆ என்னும் பெண்மைப்பெயர் பெற்றம் (பசு) எருமை, மரை என்னும் மூவின உயிர்கட்கும் உரியதாகும் எ-று. ஆ என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர்களுள் ஒன்றாக இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்து எடுத்துரைக்கப் படா விடினும், அச்சூத்திரத்தில் அந்தஞ்சான்ற என்ற இலேசினால் தழுவிக் கொள்ளப்பட்டது. அங்ஙனம் தழுவிக் கொண்டமை பற்றியே அம்மரபுப் பெயரினை ஆசிரியர் இங்கு வகுத்துரைக் கின்றார் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். (61) 62. பெண்ணும் பிணவு மக்கட் குரிய. இளம்பூரணம் : (இ-ள்) பெண்ணென்னும் பெயரும் பிணவு என்னும் பெயரும் மக்களிற் பெண்பாற் குரித்து என்றவாறு. பேராசிரியம் : (இ ள்) பெண்ணும் பிணாவும் உயர்திணைப் பெண்மைக் குரிய1 (எ-று). பெண்ணென்பது, பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய (தொல். மர : 50) என்றமையின், ஈண்டுக் கூறுதலின் மிகையாம் பிறவெனின், அற்றன்று; அச்சூத்திரம் அஃறிணை யதிகாரமாகலின், ஈண்டு விதந்தோதினானென்பது. ஓன்றென முடித்த (665) லென்பதனான், உயர்திணை ஆணென்பதும் ஈண்டே கொள்ளப்படும். பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி (அகம் : 112) எனவும், ஈன்பிண வொழியப் போகி1 (பெரும்பாண் : 90) எனவும் வரும். ஆண்கட னாகலிற் பாண்கட னாற்றிய (புறம் : 201) என ஆணென்பது உயர்திணைக்கண் வந்தது. பிறவும் அன்ன. பிணாவென்னும் ஆகாரவிறுதி வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம்பெறாது நின்றது. மக்கட்குரிய வெனவே, உரியவன்றித் துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தென (அகம் : 146) எனப் புலி முதலியன வற்றிற்குங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) பெண் என்னும் பெயரும் பிணவு என்னும் பெயரும் மக்களினத்திற் பெண்பாற்குரிய மரபுப் பெயர்களாம் எ - று. பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய என்ற பாடம் கொண்டார் பேராசிரியர். பிணா என்னும் ஆகாரவிகுதி (வருமொழி) வன்கண மன்மையின் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது பிணா என) நின்றது எனப் பேராசிரியர் தரும் விளக்கம், பிணா என்னும் ஆகாரவீற்றுச் சொல்லே குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெற்றுப் பிணவு எனவும் வழங்கும் என்பதனைச் சுட்டி நிற்றலால், இளம்பூரணர் உரையிற் காணப்படும் பிணவு என்ற பாடமும் பேராசிரியர் உரையிற் காணப்படும் பிணா என்ற பாடமும் ஒரு பெயரின் இருவேறு நிலையே என்பது நன்கு தெளியப்படும். கோயிற் பிணாப்பிள்ளைகாள் (திருவெம்பாவை) எனத் திருவாசகத்தில் பிணா என்னும் பெண்மைப்பெயர் மக்கட் குரியதாக வழங்கியுள்ளமை காண்க. (62) 63. எருமையும் மரையும் பெற்றமும் நாகே. இளம்பூரணம் : (இ-ள்) எருமை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றிற்கும் நாகு1 என்னும் பெண்பெயர் உரித்து என்றவாறு. 64. நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. இளம்பூரணம் : (இ-ள்) நீர்வாழ்வனவற்றுள் நந்தென்பதூஉம்2 நாகு என்னும் பெண்பெயர் பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) இந்நான்கற்கும்3 நாகெனும் பெயர் உரித்து (எ-று). எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (பெரும்பாண் : 165) எனவும், உடனிலை வேட்கையின மடநாகு தழீஇ யூர்வயிற் பெரும் பொழுதின் (அகம்: 64) எனவும், நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் (புறம் : 266) எனவும் வரும். ஆய்வுரை : (இ-ள்) நாகு என்னும் பெண்மைப்பெயர் எருமை, மரை பெற்றம் என்னும் மூன்றினத்திற்கும் உரியதாகும். எருமையும் பெற்றமுந் தெரிப்பும் நாகே எனப் பாடங் கொண்டு, தெரிப்பென்பது நிலத்தினும் நீரினும் வாழுந் தாரா வென்பர் இளம்பூரணர் எனப் பேராசிரியர் உரையின் அடிக் குறிப்பாக ம.நா. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் குறிப் பிட்டுள்ளார். வ. உ. சி. அவர்கள் பதிப்பித்த இளம்பூரணர் உரையில் இப்பாடமும் விளக்கமும் இடம் பெறவில்லை. (63) (இ-ள்) நீர்வாழ்உயிரினத்துள் நந்து என்பதும் நாகு என்னும் பெண்மைப்பெயர் பெறும் எ-று. (64) 65. மூடுங் கடமையும் யாடல பெறாஅ. இளம்பூரணம் : (இ-ள்) மூடும்கடமையும்1 ஆட்டின் பெண்பால தென்ற வாறு பேராசிரியம் : (இ-ள்) இவ்விரு பெயரும் யாட்டிற்கேயுரிய பெண்மைப் பெயர் எ-று. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய2 ஆய்வுரை : (இ-ள்) மூடு, கடமை என்ற பெண்மை பற்றிய மரபுப் பெயர் இரண்டினையும் ஆடல்லாத மற்றைய உயிரினங்கள் பெற்று வழங்கா. எனவே இவ்விரு பெயர்களும் யாட்டிற்கே உரியன. எ--று. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய என்றார் பேராசிரியர். இச்சூத்திரத்திற் கடமை என்றது, பெண்மை பற்றிய மரபுப் பெயரினை, கடமை என்ற பெயர் ஒரு சாதி விலங்கினைக் குறித்த பெயராகவும் இவ்வியல் 21--ஆம் சூத்திரத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது. எனவே கடமை என்பதனைப் பலபொருளொரு சொல்லாகக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். (65) 66. பாட்டிஎன்ப பன்றியும் நாயும் இளம்பூரணம் : (இ-ள்) பாட்டி3 என்னும் பெயர் பன்றியினதூஉம் நாயி னதூஉம் பெண்பெயர்க்குரிய என்றவாறு. 67. நரியும் அற்றே4 நாடினர் கொளினே. இளம்பூரணம் : (இ---ள்) நரியும் பெண்பாற்குப் பாட்டி பெயர் பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) பாட்டியென்று சொல்லப்படுவன பன்றியும் நாயும் நரியும்1 (எ-று) பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ--ள்) பாட்டி என்னும் பெண்மைப்பெயர் பன்றிக்கும் நாய்க்கும் உரியதாய் வழங்கும் எ-று. பாட்டி நாய் போல நின்று (4 78--3) என்பது அப்பர் தேவாரம். பாட்டி என்னும் இப்பெண்மைப் பெயர் இவ்வியலில் எடுத்துரைக்கப்படாத முதமையையும் குறிப்பினால் உணர்த்தி நின்றமை ஓர்க. (66) (இ-ள்) ஆராய்ந்து கொள்ளுங்கால் நரியும் பாட்டி என்னும் பெண்மைப்பெயர் பெறுதற்கு உரியதாகும். (எ-று) (67) 68. குரங்கு முசுவும் ஊகமும் மந்தி. இளம்பூரணம் : (இ-ள்) குரங்கு முதலாயின மூன்றும் பெண்பால் மந்தி2 என்னும் பெயர்பெறும் என்றவாறு. இத்துணையுங் கூறப்பட்டன பெண்பாற் பெயராவன ; யானையுட் பெண்-பிடி; ஒட்டகம்-பெட்டை; குதிரை-பெட்டை; கழுதை-பெட்டை; மரை-பெட்டை; நாகு, ஆ, பள்ளு-பெட்டை பேடை, பெடை; கோழி-அளகு; கூகை, மயில்-அளகு; புல்வாய்-பிணை. பிணா, பிணவு, பிணவல்; நவ்வி-பிணை; உழை, கவரி-பிணை; பன்றி-பிணவு. பிணவல் பாட்டி; நாய்-பிணவு, பிணவல், பாட்டி; பெற்றம். ஆ, நாகு; எருமை-ஆ, நாகு; மக்கள்-பெண், பிணவு; நந்து-நாகு; ஆடு-மூடு, கடமை; நரி-பாட்டி; குரங்கு-முசு, ஊகம், மந்தி எனவரும். இதனுள் எடுத்தோதான சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க. வழக்கினுள்ளும் வந்தவாறு கண்டுகொள்க. பேராசிரியம் : (இ-ள்) இம்மூன்று1 சாதிப் பெண்பாலும் மந்தியென்னும் பெயர் பெறும் (எ-று) கைம்மை யுய்யாக் காமர் மந்தி (குறுந் : 69) எனவும், கருமுக மந்தி செம்பி னேற்றை எனவும் வரும். ஊகத்துக்கும் இஃதொக்கும். ஆய்வுரை : (இ-ள்) குரங்கு, முசு, ஊகம் என்னும் மூவகை யினத்திற்கும் மந்தி என்னும் பெண்மைப்பெயர் உரியதாகும் எ-று. (68) 69. *குரங்கினுள் ஏற்றைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த வழக்கின் உண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. இளம்பூரணம் : இது அதிகாரப் பறனடை. (இ-ள்) குரங்கு முதலாகச் சொல்லப்பட்டவற்றை இப் பெயரான் உலகத்தார் வழங்குதலின், ஈண்டோதிய இலக்கணத்தின் மாறுபட்டு வருவன வழக்கினுஞ் செய்யுளினும் அடிப்பட்டுவரின் வழுவென்று கடியப்படா வென்றவாறு. பேராசிரியம் : இது, மரீஇவந்து முடிந்த மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஆண் குரங்கினைக் கடுவனென்றலும்.1 மரப் பொதும்பினுள் வாழுங் கூகையைக் கோட்டானென்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தையென்றலும், வெருகினைப் பூசை யென்றலும், ஆண் குதிரையைச் சேவலென்றலும்,2 இருணிறப் பன்றியை ஏனமென்றலும், எருமையேற்றினைக் கண்டியென்றலும், அவ்வாறு முடிந்த வழக்குண்மையிற் கடியப்படா கடப்பாடு அறிந்தோர்க்கு (எ-று). கடுவனு மறியுமக் கொடியோ னையே (குறுந் : 26) ஆண்குரங்கு இதனைக் கடியலாகாதெனப்பட்ட இழுக் கென்னையெனின் - மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றனபோலுமாதலின். கூகையைக் கோட்டானென்றலும் வழக்காகலான் அமையும்; மரம்பயில் கூகையென்ற தென்னை யெனின், மரக்கோடு விடாமையிற் கோட்டானென்னும் பெயர் பெற்றதென்றற்கு. தத்தையென்பது பெருங்கிளியாதலின் சிறு கிளிக்கும் அப்பெயர் கொடுத்த லமையுமென்றவாறு. செவ் வாய்க்கிளியென்றதனைச் சிறுகிளிமேற் கொள்க. வெவ்வாய் வெரு கென்றதனாற் படப்பை வேலியும் புதலும் பற்றி, விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும் வெருகினை, இல்லுறை பூசையின் பெயர்கொடுத்துச் சொல்லலும் (புறம் : 117, 326) அமையுமென்றவாறு. குதிரையைச் சேவலென்றல் இக்காலத் தரிதாயிற்று. அதுவுஞ் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பது போலச் சொல்லுதல் அமையுமென்பது கருத்து. எருமை யேற்றினையுங் கண்டி யென்பபோலும்; அது காணலாயிற்றில்லை; அதனை, இலக்கணைவகையா னுடைய பெயரென்றலுமாம்; இதுபொழு தின்றென்பது. கடனறிந்தோ, ரென்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகா தென்றவாறு. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரணமென்றலும் வெருகினை விடையென்றலும் போல்வன பலவும் கொள்க. அவை, கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே (புறம் : 52) எனவும், வாரணக் கொடியொடு வயிற்படநிறீஇ (திருமுரு : 219) எனவும், வெருக்கு விடையன்ன வெருகணோக்குக் கயந்தலை (புறம் : 324) எனவும் வரும். ஆய்வுரை : இஃது, உலக வழக்கினுள் மருவி யிடம்பெற்றுள்ள மரபுப் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) ஆண்குரங்கினைக் கடுவன் என்றுகூறுதலும், மரப்பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்று கூறுதலும், சிவந்த வாயினையுடைய கிளியைத் தத்தையென்று கூறுதலும், வெவ்விய வாயினையுடைய வெருகினை (காட்டுப் பூனையினை)ப் பூசையென்று கூறுதலும், ஆண் குதிரையைச் சேவல் என்று கூறுதலும், இருளின் நிறம் வாய்ந்த பன்றியை ஏனம் என்று கூறுதலும், எருமையேற்றினைக் கண்டியென்று கூறுதலும் இவ்வாறு உலக வழக்கினுள் மரபுப் பெயர்களையே இனப்பெயர்களாக ஒன்றுபடுத்தி வழங்கப்படும். அவ்வழக்கு காணப்படுதலால் வழக்கியல் முறையுணர்ந்தோரால் மேற்குறித்த மரபுகள் விலக்கப்படா எ-று. கடுவன் என்பது ஆண்மைகுறித்த மரபுப்பெயர். இது குரங்கினத்துள் ஆணுக்குரியதாகும். கூகை --- ஆந்தையில் ஒரு வகை; இது, மரக்கிளையில் வாழும் இயல்பினதாதலின் கோட்டான் எனப் பெயர் பெறுவதாயிற்று என்பார், மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் என்றார். கோடு --- மரக்கிளை. தத்தை என்பது பெருங்கிளியென்றும், செவ்வாய்க்கிளி என்பது சிறுகிளியென்றும் கூறுவர் பேராசிரியர். படப்பை வேலியும் புகலும் ஆகிய இடங்களில் மறைந்திருந்து ஊனுணவுக்குப் பிறவுயிர்களைக் கவர்ந்து உண்ணும் இயல்புடையது வெருகு எனப்படும் காட்டுப்பூனை. பூசை என்பது வீடுகளில் வாழும் பூனை. இல்லுறை பூனைக்குரிய பூசை என்னும் பெயரினைக் காட்டுப் பூனையாகிய வெருகிற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்பட்டதாகும். பூசை பூஞை எனவும் வழங்கும். சேவல் என்னும் ஆண்பாற்பெயர் சிறகொடு பொருந்திய பறவைக்கே சிறப்புடைய தாயினும், பறவை வானத்திற் பறப்பது போன்று மேலே துள்ளி விரைந்தோடும் இயல்புடையது. உள்ளம் போலஉற, வளியுதவும் புள்ளியற்கலிமா (தொல் - கற்பியல் - 53) எனப்படும் குதிரை யாதலின், குதிரையுள் ஆணினைச் சேவல் என வழங்கும் வழக்கு நாட்டில் நிலை பெறுவதாயிற்று. அவ் வழக்கு இக்காலத்து அரிதாயிற்று என்றார் பேராசிரியர். ஆண் எருமையினைக் கண்டி என வழங்கும் வழக்கமும் இக்காலத்து அரிதாயிற்று. கடனறிந் தோர்க்குக் கடியலாகா என்ற இப்பரிகாரத்தானே, கோழியை வாரணம் என்றலும், வெருகினை விடை என்றலும் போல்வன பலவும் கொள்ளப்படும். என்றார் பேராசிரியர். இவ்வுரைத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் விடை என்பது போல வாரணம் என்பதும் ஆண்மை பற்றிய மரபுப் பெயராதல் வேண்டும் என்பது புலனாகின்றது. முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கும் புறஞ்சிறை வாரணம் (சிலப். - நாடுகாண்) எனவரும் சிலப்பதிகாரத் தொடரும் இக்கருத்துக்கு அரண் செய்தல் காணலாம். (69) 70. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. இளம்பூரணம் : (இ-ள்) பெண்ணும், ஆணும், பிள்ளையும் பற்றிவருஞ் சொல் மேலெடுத்தோதினவை என்றவாறு. இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர்க் குரியன கூறப்படு கின்றது. பேராசிரியம் : இதுமது, பெண் ஆணென்பன இருதிணைப்பெண்மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன முற்கூறினான்1 ; மேல் ஒன்றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்காயவழியுங் கடியலாகாதென நின்ற அதிகாரத்தான் இவையும் அவ்வாறே திரியினுங் கடியலாகாதென்றவாறு. (இ-ள்) பெண்ணும் ஆணும் பிள்ளையுமென வாளாது சொல்லியவழி உயர்திணைக்கேற்றன மரீஇ வந்த மரபு (எ-று). மக, குழவி யென்பனவோவெனின்,- அவை அத்துணைப் பயின்றில உயர்திணைக்கென்பது; எடுத்தோதிய மூன்றும் ஆயின. வாளாதே பெண் வந்த தென்றவழி அஃறிணைப் பொரு ளென்பது உணரலாகாது; பெண்குரங்கு வந்தது எனவிதந்தே கூறல் வேண்டுமென்பது. பெண்பிறந்தது ஆண்பிறந்தது. பிள்ளை பிறந்தது என அடையடாது சொல்லியவழி உயர் திணைக்கேயாம். அஃறிணைக்காயின் அற்றன்றென்பது. ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) பெண், ஆண், பிள்ளை என்பன (இருதிணைக்கும் உரிய பொதுப் பெயராயினும்) உயர்திணைக்குரியனவாய் வழங்குதல் நாட்டில் தொன்றுதொட்டுப் பயின்றுவரும் மரபெனப்படும் எ-று. பெண், ஆண் என்பன இருதிணைப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன (மரபியல் 51) முற்கூறினான், மேல் ஒன்றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்கு ஆய வழியும் கடியலாகாது என நின்ற அதிகாரத்தால், (இருதிணை விரவுப்பெயராகிய) இவையும் அவ்வாறே (ஒரு திணைக்குரியவாகத்) திரியினும் கடியலாகாது என இச்சூத்திரத்துக்குக் கருத்துரைப்பர் பேராசிரியர். ஆண்பாலெல்லாம் ஆணெனற்குரிய, பெண் பாலெல்லாம் பெண்ணெனற்குரிய (தொல்-மரபு-51) என அஃறிணைக்கு ஓதியவற்றையே, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே ,370) எனக் கிளந்து கூறாத வழி உயர்திணையை யுணர்த்தும் என்று மரபியலுட் கூறினார் (தொல் -சொல்-57) எனவும், ஆணணிபுகுதலும் : ஆண்பாலெல்லாம் ஆணெனற்குரிய என்று (கூறிப் பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என்றதனால் ஆண் என்பது ஆண்பாலையே யுணர்த்துமேனும் அணிபுகுதல் என்றதனால் ஈண்டு வீரரையுணர்த்திற்று. (சிறுபாண் 211) எனவும் நச்சினார்க்கினியர் கூறிய உரைவிளக்கம், இச்சூத்திரத்திற்கு அவர் வரைந்துள்ள உரையினை நன்கு தெளிவுபடுத்துதல் அறியத் தகுவதாகும். (70) 71. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. இளம்பூரணம் : (இ--ள்) நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு. பேராசிரியம் : இஃது உயர்திணை நான்குசாதியும் பற்றிய மரபு உணர்த்து வான், முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டுவருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) முந்நூலுங் குண்டிகையும் முக்கோலும் யாமை மணையும் போல்வன அந்தணர்க்கு உரிய (எ-று) ஆயுங்காலை யென்றதனாற் குடையுஞ் செருப்பும் முதலா யினவும் ஒப்பன அறிந்துகொள்க. உதாரணம் : எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு ரைசான்ற முக்கோலும் (கலி : 6) எனவும், தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே (குறுந் : 156) எனவும் வரும். இன்னும் ஆயுங்காலை யென்றதனான், ஒருகோலுடையார் இருவருளர்; அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது.1 முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது.2 மற்று அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலின் ஈண்டு வரைந்தோதினதென்னையெனின், - ஒருகோலுடையான் நூல் களைவானாகலின் அவனுஞ் சிறுபான்மை அந்தணனெனப்படு மென்பது கோடற்குங் கரகமும் மணையும் உடைய னென்றற்கு மென்பது. நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுஞ் சிறப்பு முறையானுமென்பது. இனிக் குடுமியுங் குசையும் போல்வன கூறிற்றிலன், அது முன்னரும் பின்னரும் வருதலானும் மன்னரும் வணிகரும் பெறுதலானுமென்பது. ஆய்வுரை : இவ்வியல் 71-முதல் 85-வரையுள்ள சூத்திரங்கள் பதினைந்தும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன1. அவற்றுள் இச்சூத்திரம் அந்தணர்க்குரியன கூறுகின்றது. (71) (இ-ள்) நூல், கரகம், முக்கோல், மணை என்பன ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரியனவாகும் எ-று. 72. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய இளம்பூரணம் : (இ--ள்) படை--கருவி, படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் சுழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு. பேராசிரியம் : இது, முறையானே அரசர்ச்குரியன கூறுகின்றது. (இ-ள்) கொடிப்படையுங் கொடியுங் குடையும் முரசுங் குதிரையும் யானையுந் தேருந் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய (எ-று). பிறவும் என்றதனாற் கவரியும் அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க; தெரிவுகொள் செங்கோல் அரச ரென்றதனானே செங்கோல் கொளப்பட்டது.1 தாரெனவே போர்ப்பூவுந்தார்ப்பூவும் அடங்கின2. படை யென்புழி நடைநவில் புரவியுங்3 களிறுந் தேரும் அடங்காவோ வெனின் --- அடங்கும். அவைநோக்கிக் கூறினானல்லன்; அவை பட்டஞ்சாத்தியவாதல் நோக்கிக் கூறப்பட்டன. m~njš, nj® T¿abj‹idbaÅ‹.---mJî« அவைபோல அரசர்க் கேயுரிய தென்றுளதென்றற்கும், அது பூண்ட குதிரையும் அவர்க்கே யுரிய வென்றுள வென்றற்குங் கூறினானென்பது, இக்கருத்தினாற் போலும் நடைநவில் புரவியெனச் சிறப்பித்து அதனை முற்கூறிய தென்பது. எல்லாவற்றினுஞ் சிறந்ததாதலான் முடிபிற் கூறப்பட்டது தெரிவுகொள் செங்கோல் அரசரென்பதனான் அரசரெல்லாம் தந்நாட்டு நன்றுந் தீதும் ஆராய்ந்து அதற்குத் தக்க தண்டஞ் செய்தற்கு உரிமையும் அதுவெனக் கொள்க. ஆய்வுரை : இஃது அரசர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்) சேனையும் கொடியும் வெண்கொற்றக் குடையும் முரசும் நடைபழகிய குதிரையும் யானையும் தேரும் தாரும் முடியும் ஆகிய ஒன்பதும். (அரசியலாட்சிக்குப்) பொருந்துவன பிறவும், நாட்டில் நிகழும் நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஆராய்ந்து முறைசெய்யும் ஆற்றலைக் கொண்ட செங்கோன் முறைமையை யுடைய அரசர்க்குரியனவாகும் எ-று. பிறவும் என்றதனால், ஆரமும் கழலும் எல்லாம் அரசர்க்கு உரிய என்றார் இளம்பூரணர். பிறவும் என்றதனால் கவரியும் (வெண்சாமரையும்) அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க, என்றார் பேராசிரியர். செங்கோலைத் தனித்து எண்ணாமல் தெரிவுகொள் செங்கோலரசர் என அரசர்க்கு அடை மொழியாக உடம்பொடு புணர்த்தோதினமையால் மேற்குறித்த அங்கங்கள் எல்லாவற்றினுந் தலைமை வாய்ந்தது முறை செய்தலாகிய செங்கோன்மையென்பது வலியுறுத்தப் பட்டது. தார் எனவே கண்ணியும் அடங்கிற்று. தார் என்றது பனம் பூ, வேப்பம் பூ, ஆத்திப் பூ என அவ்வேந்தர் குடிக்குரிய அடையாள மாலையினை. கண்ணி என்றது, போர்த்தொழில் குறித்து முடிமேல் அணிதற்குரிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய போர்ப் பூக்களொடுமிடைந்த முடிமாலையினை. இவை அனைத்தும் அரசர்க்கேயுரியன எனத்தேற்றேகாரம் வருவித்துரைக்க. (72) 73. அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. இளம்பூரணம் : (இ ள்) அவை நாலுதொழில்; ஈதல், வேட்டல், வேட் பித்தல், ஓதல். பேராசிரியம் : இது மேலதற்கோர் புறனடை (இ-ள்) அந்தணாளர்க்கு உரியவென மேல் (625) ஒதப் பட்டனவற்றுள் முந்நூலும் மணையும்போல்வன அரசசாதிக் குரியவாகியும்1 வரும் (எ-று) பொருளுமாருள வென்றதனான், அந்தணாளர்க்குரியன வற்றுள் வேள்விக்கலப்பை யொன்றிவருதற் பெரும்பான்மையென உணர்க; ஈண்டு அவற்றை விதந்தோதினான் ஒழிந்த புலனெறி வழக்கினுட் பயிலாமையினென்பது.1 அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மாபி னேனோர் பக்கமும் (தொல்-புறத்: 20) பற்றி வாகைப்பொருள் பிறத்தலின் அவற்றைப் புறத்திணையியலுட் கூறினானாயினும் ஈண்டுத் தழீஇக்கொள்ளப்படும் மரபு வகையானென்பது; என்போலவெனின், அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு (தொல்-எழுத்-நூன் : 31) என நூன்மரபினுள் ஓதிய மூவகைச்சுட்டினை இடைச் சொலோத்தினுள் ஓதானாயினான், அதுபோலவென்பது.2 கொன்றுகளம் வேட்ட ஞான்றை (அகம் : 36) எனவும். அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய (புறம் : 26) எனவும் அரசர்க்கு வேள்வி கூறினவாறு3 ; பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, அந்தணர்க்கு ஓதப்பட்டன சில அரசர்க்கும் உரிய என்கின்றது. (இ--ள்) அந்தணாளர்க்குரியன என மேற்கூறப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்திவரும் பொருள்களும் உள எ-று. அவை நாலுதொழில் : ஈதல், வேட்டல், வேட்பித்தல், ஓதல் என்பர் இளம்பூரணர். அந்தணாளர்க்குரியவென மேல் ஓதப்பட்டனவற்றுள் முந்நூலும் மணையும் போல்வன என்பர் பேராசிரியர். தமிழ வேந்தர்கள் முந்நூலணிந்ததாகச் சங்க இலக்கியங்களிற் சான்றில்லை. (73) 74. *பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே. இளம்பூரணம் : (இ-ள்) இப்பொருண்மையும் அரசர்க்குமுரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு. பேராசிரியம் : இஃது ஐயம் அறுத்தது; அந்தணாளர்க்குரியன அரசர்க்கு முரியன உளவெனக் கேட்ட மாணாக்கன் அரசர்க்குரியனவும் அந்தணர்க்குரியகொல்லென்று ஐயுறாமற் காத்தமையின் இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதியெனினும் அமையும்; என்னை? ஈண்டு ஓதப்பட்டவை அரசர்க்குரியவென்பது கொள்ள வைத்தமையின்.1 (இ-ள்) பரிசில்-பரிசில்கடாநிலையும், பரிசில்விடையும் போல் வன; பாடாண்டிணைத்துறைக்கிழமைப்பெயர்-பாடாண்டிணைக் குரிய கைக்கிளைப் பொருள்பற்றியுங் கொடைத்தொழில் பற்றியும் பெறும் பெயர்; அவை காளை இளையோன் என்பன போல்வன. (அவையு)(வு)ம், நெடுந்தகை செம்மலென்பன முதலாயினவும், இவைபோல்வன பிறவும் புனைந்துரைவகையாற் சொல்லினல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க்குரித்தன்று (எ-று). பரிசில்கடாநிலையும் பரிசில்விடையும் போல்வன கூறியுங், கைக்கிளைப்பொருள் கூறியுங், கொடைத்தொழில் கூறியும், அவற்றுக்கேற்ப எடுத்தோதிய பெயர்கூறியும், அந்தணரைத் தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறாவென்பது கருத்து. புனைந்துரை வகையான் அவையாமாறு : எண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ்பரப்பியும் (புறம் : 166) என வரும். கொடுத்தற்றொழில் வேள்விக்காலத்ததென வரையறுத் தலிற் பொருந்தக் கூறுதல் அவர்க்குரித்தன்றென்றானென்பது. பாடாண்டிணைத் துறைப்பெயரென்னாது, கிழமைப் பெயரென்ற தென்னையெனின், --- அவை, ஐந்திணைப்பெயராகி வருங்காலும் அவர்க்குரியவல்லவென்றற்கு;1 எனவே, அரசர்க் காயின் இவையெல்லாம் உரியவென்பவாயிற்று. மற்றுப் பாடாண்டிணைக்குரியவல்லவென மற்றைத் திணைக் கிழமைப்பெயர் உரியவாம் பிறவெனின், --- அஃது, இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறா அர்2 (தொல்-மர-76) என மேற்கூறி விலக்குமென்பது. ஆய்வுரை : அந்தணாளர்க்குரியன சில அரசர்க்கும் உரிய எனக் கூறக் கேட்ட மாணாக்கன், அரசர்க்குரியனவும் அந்தணர்க்கு உள்ளனவோ என ஐயுறாமைக்காப்பது இச்சூத்திரமாதலின் இஃது ஐயம் அறுத்தது எனக் கருத்துரை வரைந்தார் பேராசிரியர். (இ-ள்) பரிசில் கடாநிலையும், பரிசில் விடையும்போல் வனவும் பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள்பற்றியும் கொடைத் தொழில்பற்றியும் பெறும் பெயர்களும் நெடுந்தகை செம்மல் முதலாயினவும் பொருந்தக் கூறுதல் அவ்வந்தணாளர்க் குரியதன்று எ-று. நெடுந்தகை செம்மல் என்பன முதலாயினவும் இவை போல்வன பிறவும் புனைந்துரை வகையாற் கூறினல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க்கு உரித்தன்று எனவும், பரிசில் பாடாண்டிணைக் கிழமைப் பெயர் என்றதனால் அவை ஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரியவல்ல எனவும் கூறுவர் பேராசிரியர். இப்பொருண்மையும் அரசர்க்கும் உரித்து அந்தணர்க்கும் உரித்து என்றவாறு என இளம்பூரணருரையில் அமைந்த உரைத்தொடர் பொருட் பொருத்தமுடையதாகத் தோன்ற வில்லை. இதன்கண் உரித்தன்று என்பது உரியது என்ற பொருளைத் தாராமையானும், பரிசில்கடாநிலையும் பரிசில் விடையும்போல்வன கூறியும் கைக்கிளைப் பொருள் கூறியும் கொடைத்தொழில் கூறியும். அவற்றுக்கேற்ப எடுத்தோதிய பெயர் கூறியும் அந்தணரைத் தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறா என்பது கருத்து எனப் பேராசிரியர் கருத்துரை வரைந்துள்ளமையாலும் இச்சூத்திரத்திற்கு இளம்பூரணருரையிற் காணப்படும் உரைத் தொடர் இதன் முன்னுள்ள சூத்திரத்தினைச் சார்ந்ததாதல் கூடும் எனக் கருதவேண்டியுளது. (74) 75. ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவி1 யும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே. இளம்பூரணம் : (இ-ள்) நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப்பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவையவை வருதல் பெறும் என்றவாறு. பேராசிரியம் : இது, மேற்கூறிய அந்தணர்க்கும் அரசர்க்கும் உரியன வற்றொடு ஒழிந்த சாதியோர்க்கும் ஒப்பன உடன் கூறுகின்றது. (இ-ள்) நான்கு சாதியாரும் பிறந்த ஊரும், அவர்தம் பெயரும், அவர் சாதிக்கு உரித்தென்றற்கேற்ற கருவியும், யாருஞ் சார்த்தப்பட்டு அவை பெறுப (எ--று). இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க்கும் ஒப்பச்செல்லுமென்பது கருத்து;1 எற்றுக்கு? இவை சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின். ஊரும் பெயரு மென்பன. உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகன், கடியலூருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க் குரியன; உறையூர்ச்சோழன். மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியன; காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க் குரியன; அம்பர்கிழான் நாகன், வல்லங் கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன. இனி, உடைத்தொழிற் கருவி யென்பன, அந்தணாளர்க்குச் சுருவையுஞ் சமிதைகுறைக்குங் கருவியும் முதலாயின; அரசர்க்கு குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும்முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலுஞ் சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. அவை யெல்லாம் அவரவர் செய்யுட்குரிய வென்பது. ஆய்வுரை : இது, மக்கள் எல்லலோர்க்கும் சார்த்திக் கூறத்தக்கன யென் கின்றது. (இ-ள்) அவரவர் பிறந்த ஊரும், அவரவர்க்குரிய இயற் பெயரும், அவரவர் மேற்கொண்ட தொழிலும், அத்தொழினுக்குரிய கருவியும் அவையவை எல்லா மக்களோடும் சார்த்திக் கூறப்படும் எ-று. இங்கு எடுத்துரைக்கப்பட்ட பொருள்கள் எல்லார்க்கும் ஒப்பச் சொல்லப்படும் என்பதாம். உதாரணம் பேராசிரியருரையிற் காண்க. (75) 76. தலைமைக் குணச்சொலுந்1 தத்தமக் குரியதோர் நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப. இளம்பூரணம் : (இ-ள்) தலைமைக்குணமுடையராகக் கூறுதலும் தத்தமக்கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு. எனவே, இறப்பவுயர்தல் இறப்பவிழிதல் ஆகாதென்ற வாறாம். பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்) அந்நான்கு சாதியார் தலைமைக்குணம்படச் சொல்லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கேற்ப நிகழ்ந்தவும் படும் (எ-று). அந்தணர் தலைமைக்குணங் கூறுங்காற் பிரமனோடு கூறியும், அரசரை மாயனோடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனோடு கூறியும், வேளாண்மாந்தரை வருணனோடு கூறியுந் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும்2. அவை யெல்லாம் அவரவர் செய்யுளுட் கண்டு கொள்க. ஆய்வுரை : இதுவும் அது (இ-ள்) அவரவர்க்குரிய தலைமைப் பண்புகளைக் குறிக்கும் (நெடுந்தகை, செம்மல் முதலாக) உயர்த்துக் கூறப்படும் சொற்களும் அவரவர்கள் பெற்றுள்ள சிறப்பு நிலைகட்கு ஏற்றவாறு நிகழ்த்துவர் (புலவர்) என்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே உலகியலில் ஒருவர் பெற்றுள்ள சிறப்பு நிலைகட்கு மேல் அவரை அளவுகடந்து உயர்த்துக் கூறுதலும், ஒருவருடைய குற்றங்களைக் கூறுங்கால் அவரை வரம்பு கடந்து இழித்துக் கூறுதலும் பொருத்தமுடையன ஆகா என்பதாம். பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே (புறநானூறு) எனவரும் கணியன் பூங்குன்றனார் வாய்மொழி இங்கு உளங்கொளத் தகுவதாகும். (76) 77. இடையிரு வகையோர்1 அல்லது நாடிற் படைவகை பெறாஅர் என்மனார் புலவர். இளம்பூரணம் : (இ-ள்) அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக் கலவகை கூறப்பெறார் என்றவாறு. பேராசிரியம் : மேல் நான்கு வருணத்தாரையும் உடன் கூறிவந்தான், இது முதலும் கடையும் ஒழித்து இடைநின்ற இருவருணத்தார்க்கும் ஆவதோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) அரசரும் வணிகருமல்ல துபடைப்பகுதி பெறார்1 (எ-று). படைப்பகுதியெள்பன: வேலும் வாளும் வில்லும் முதலாயின. நாடினென்பதனான், ஒருசார் அந்தணரும் படைக்குரியா ரென்பது கொள்க. அவர் இயமதங்கியாருந் துரோணனும் கிருபனும் முதலாயினாரெனக் கொள்க. வேளாண்மாந்தர்க்கும் இஃதொக்கும். இவை விகாரமெனவும் எடுத்தோதிய வருணங் கட்கே இஃதியல்பெனவுங் கொள்க. ஆய்வுரை : இது, போர்த்தொழிற்குரிய படைப்பகுதி பெறாதார் இன்னின்னார் என்கின்றது. (இ-ள்) அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனக் கூறப்படும் நால்வகை வருணத்தாருள் இடையில் வைத்து எண்ணப்படும் அரசரும் வணிகரும் அல்லது, அவர்க்கு முன்னும் பின்னும் வைத்து எண்ணப்படும் அந்தணரும் வேளாளரும் போர்க் கருவியாகிய படைப்பகுதியினைப் பெற்றவராகக் கூறப்பெறார் எ-று. 78. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. இளம்பூரணம் : (இ-ள்) வைசிகன்2 வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு. பேராசிரியம் : இது, வணிகர் மரபு கூறுகின்றது. (இ-ள்) வணிகர்க்குத் தொழிலாகிய வாணிகவாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையுமாம் (எ-று). அவையும் அவர்செய்யுளிற் காணப்படுமாறு அறிந்து கொள்க. ஆய்வுரை : இது, வணிகர்க்குரிய வாழ்வியல் கூறுகின்றது. (இ-ள்) வைசிகன் வணிகத்தொழில் புரிந்து வாழும் வாழ்க்கையைப் பெறுவான் எ-று வைசிகன்---வணிகன் வணிகரைக் குறித்த வைசிகன்என்னும் இவ்வடமொழிச் சொல் பழைய தமிழ் நூல்களிற் காணப் படவில்லை. (78) 79. மெய்திரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான. இளம்பூரணம் : (இ-ள்) எண் வகை உணவாவன: நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை1. இவையிற்றை உண்டாக்குகின்ற உழவுத்தொழிலும் வாணிகர்க்கு வரையா ரென்றவாறு. பேராசிரியம் : இன்னும் வணிகர்க்கே உரிய தொழில் கூறுகின்றது2. (இ-ள்) பொருள் தெரிந்த வகையான் எண்வகைக் கூலமுஞ் செய்யில் விளைத்தலும் அவர் கடன் (எ-று). அவையும் அவர் பண்டத்தோடு உபகாரப்படுமாகலின் வரையப்படாதென்றானென்பது. எண்வகையுணவென்பன 1பயறும் 2உழுந்துங் 3கடுகுங் 4கடலையும் 5எள்ளுங் 6கொள்ளும் 7அவரையுந் 8துவரையுமாம். ஆய்வுரை : இது, வணிகர்க்கேயுரிய தொழில் கூறுகின்றது. (இ-ள்) பொருள் தெரிந்த கூறுபாட்டால் எண்வகை கூலங்களாகிய உணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத் தொழிலும் வணிகராகிய அவர்க்கு விலக்குதற்குரியதன்று எ-று. உணவுப்பொருள் முதலாயினவற்றைக் கொண்டுவிற்குந் தொழிலேயன்றி அவ்வுணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத் தொழிலும் வணிகர்க்கு உரியது என்பதாம். செய்தி-தொழில் என்றது இங்கு உழவுத்தொழிலை, எண்வகை உணா ஆவன; நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை என இளம்பூரணரும், பயறு, உழுந்து, கடுகு கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரை எனப் பேராசிரியரும் குறிப்பிடுவர். கூலம் எண்வகைத்து; அவை : நெல்லு புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பர் அடியார்க்குநல்லார். (சிலப்-பதிகம் : 88) (79) 80. கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே. இளம்பூரணம் : (இ-ள்) வைசிகருக்கும் கண்ணியுந் தாரும்1 சொல்லப் பெறுமென்றவாறு. பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்) இவையும் வணிகர் திறத்தன (எ-று) கண்ணியென்பது, சூடும்பூ, தாரென்பது ஒருகுடிப் பிறந்தார்க்குரித்தென வரையறுக்கப் படுவதாயிற்று1 எண்ணப் படுமெனவே அவரவர்க்குரியவாற்றாற் பலவாகி வரும்; அவை வந்த வழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : இதுவும் வணிகர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்) சூடும் பூவாகிய கண்ணியும் குடிப்பிறந்தார்க்குரிய மாலையாகிய தாரும் ஆகிய அவற்றை வணிகர்க்குரியனவாக எண்ணினர் புலவர் எ---று. அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், நல்லானொடு பகடோம்பியும்,(பட்டினப்பாலை---200, 201) வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை மெய்தெரி வகையின் எண்வகை யுணவின், செய்தியும் வரையார் அப்பாலான என்பதனால் வாணிகர்கட்கு உழவுத் தொழிலுரித்தாகலின் பகடோம்பியும் என்றார். யாகத்திற்குப் பகடோம்பியும் என்றார் எனவும், மெய்தெரி வகையின் எண்வகை யுணவின், எனவும் கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டேஎனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுதுபயன்கோடலும், அரசன் கொடுத்த சிறப்புகளுமன்றித் தன் புதல்வராதலின், அரசாட்சி முதலியன கொடுப்ப அவர்தாமும் தம் வழித்தோன்றினோரும் ஆள் வரென்றுணர்கஎனவும் இம்மரபிற் சூத்திரங்களை மேற்கோள் காட்டி நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரைப்பகுதிகள் வணிகர்க்கு நாட்டினையாளும் தொழிலும் உண்டென்பதனைப் புலப்படுத்துவனவாகும். மதுரை வணிகராகிய மூர்த்தி நாயனாரை மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் என அரசாட்சி யுரிமையுடையவராக நம் பியாரூரர் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். (80) 81. *வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. இளம்பூரணம் : (இ-ள்) என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு. பேராசிரியம் : இது, வேளாண் மாந்தர்க்குக் கூறப்படுந் தொழில் கூறு கின்றது. (இ-ள்) வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதன் மரபு (எ-று). உழுதுண்டு வாழ்வார் (குறள்:1033) என்பது, இதன் பொருளாயிற்று. மற்றுப் பார்ப்பியன் முதலாகிய நால்வகைத் தொழிலும் வாகையுட் கூறினமையின் இச் சூத்திரமும் மேலைச் சூத்திரங்களும் மிகையாம் பிறவெனின்,1 அற்றன்று; பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத்தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமுமென்பன அவற்றின் ஒத்த சிறப் பினவன்றி அவற்றுள்ளும் ஒரோவென்று ஒரோவருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினானென்பது.1 நிரைகாவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண் மாந்தர்க்குச் சிறுவரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவர விற்றெனவும், எண்வகைக் கூலத்தோடு பட்டதே பெருவர விற்றெனவுங் கூறினான்; இச்சூத்திரங்களானென்பது.2 இதனது பயம்;புலனெறிவழக்கினுள் இவர்க்கு இவை சிறந்த மர பென்றலாயிற்று. ஆய்வுரை : இது வேளாண் மாந்தர்க்குரிய தொழில் கூறுகின்றது. (இ-ள்) வேளாண் மாந்தர்க்கு உழவுத்தொழிலைச் செய்து உலகமக்களுக்கு உணவினை விளைவித்தலன்றிப் பிறவகைத் தொழில்கள் இல்லையென்று கூறுவர் அறிஞர் எ-று. வேளாண்மாந்தர் நிலத்தை உழுது பயிரிடும் நிலக்கிழார். நிலவுடைமையாளராகிய இவர்கள் உலகோரது பசிநோயினைத் தணிவிக்கும் தன்னுரிமைத் தொழிலாகிய உழவினையன்றிப் பிறதொழில்களின் ஈடுபடுதல் அறமாகாது என வற்புறுத்தும் முறையில் அமைந்தது இச்சூத்திரமாகும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்(திருக்குறள்-1033) என்றார் திருவள்ளுவரும். (81) 82. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே. இளம்பூரணம் : எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்) வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தர்க்கும்1 உளதாகு மென்றவாறு. பேராசிரியம் : இது, நான்காம் வருணத்தார்க்கோர் புறனடை. (இ-ள்) வேந்தர் கொடுப்பின் வேளாண்மாந்தர்க்குப் படைக்கலமுங் கண்ணியும் பெறும்பொருளாகச் சொல்லப்படும்2 (எ-று). வேந்து விடுதொழி லென்பது, வேந்தனாற் கொடுக்கப்படுந் தண்டத் தலைமையாகிய சிறப்புக்காரணத்தா னென்றவாறு; அகத்திணையியலுள், உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான என்புழிக் கூறப்பட்டதெனின், வேளாளரை யொழித்து ஒழிந்தோரை நோக்கிற்று அச்சூத்திரமென்பது.3 மேற்கூறியவற்றையும் மரபுபற்றி ஈண்டு வரையறை கூறுகின்ற வாறெனக் கொள்க. அவையும் அவரவர் பாட்டுக்களுட் கண்டு கொள்க. ஆய்வுரை : இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. (இ-ள்) நாடாளும் வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினாலே படைக்கலமும் போர்ப்பூவாகிய முடிக் கண்ணியும் அவ் வேளாண் மாந்தர் தாம்பெறும் பொருளாகக் கொண்டனர் என்று கூறுவர் எ-று. வேந்துவிடு தொழிலாவது, வேந்தனால் பகைவர்மேற் போர் குறித்து ஏவப் பெறும் படைத் தலைமைத் தொழில் (82) 83. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே1 இளம்பூரணம் : (இ-ள்) அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும்பெற்ற அந்தணர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு. அஃதாவது மந்திரி புரோகிதனாகிய வழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற்பெற்று அவரோடு ஒருதன்மையராகி யிருத்தல். பேராசிரியம் : இஃது எல்லாவற்றிலுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க்குரியவாகலின் ஈண்டுப் போதந்து கூறுகின்றது. (இ-ள்) அரசர் இவ்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது (எ---று). மக்களைத் தின்ற மன்னவர்க்குப் பின்னர் மறையோரான் அரசு தோற்றப்பட்டாற்போலக் கொள்க.1 ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) அந்தணாளர்க்கு அரசாளும் உரிமை விலக்கத் தக்கதன்று எ-று. அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரும் முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒருதலைமையராகி யிருத்தல் என்பர் இளம்பூரணர். (83) 84. வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் ஆரமுந்2 தேரு மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்3 குரிய. இளம்பூரணம் : (இ-ள்) வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்கு முரிய என்றவாறு. பேராசிரியம் : இது, முடியுடை வேந்தரல்லாக் குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்) இவ்வெண்ணப்பட்டனவெல்லாங் குறுநில மன்னர்க்கும் உரியன (எ-று). மன்பெறுமரபின் ஏனோ ரெனப்படுவார் அரசுபெறு பிற்மரபுகுறுநிலமன்னர் எனக் கொள்க அவை பெரும் பாணாற்1றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும். ஆய்வுரை : இது, மன்பெறு மரபின் ஏனோரெனப்படும் குறுநில மன்னர்க்கு உரியன கூறுகின்றது. (இ-ள்) வில், வேல், வீரக்கழல், போர்ப்பூவாகிய முடிக் கண்ணி, அடையாளப்பூ, மாலை, தேர், (யானை, குதிரை ஆகிய) ஊர்தி என எண்ணப்பட்டனவெல்லாம் முடிவேந்தராற் சிறப்பிக்கப் பெறும் குறுநில மன்னர்க்கு உரியனவாம் எ-று. இங்கு மூவேந்தர்க்குரிய முடியொன்றும் குறுநில மன்னர்க்குக் கூறப்படாமை கருதற்குரியதாகும். (84) 85. அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை. இளம்பூரணம் : (இ-ள்) அன்னர்தா மிழிந்தோராயினும் மேற்சொல்லப் பட்ட மன்னனால் வில்லு முதலாயின பெற்ற மரபினராயினும், நான்கு குலத்திலும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப் படா வென்றவாறு. எனவே, அவரவர்க் குரியவாற்றால் கூறப் பெறு மென்றவாறு. பேராசிரியம் : இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ-ள்) மன்னவர் போலுஞ் செல்வத்தாராகிய இழிகுலத் தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது (எ-று). மன்பெறு மரபி னேனோர் (தொல்-மர : 83) எனவே, அரசர் வைசியரன்றிக் கீழ் அமையாவாயிற்று.1 இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.. (இ-ள்) மன்னரையொத்த சிறப்புடையராய் நாடாளும் ஆற்றல் படைத்தோராயினும், செங்கோன்மையாகிய நீதி நெறியினின்றும் வழுவித் தாழ்ந்தோர்க்கு மேற்குறித்த சிறப்புக்கள் உளவாகப் புலவர் பெருமக்களாற் போற்றப் பெறுதல் இல்லை எ-று. நன்னன் மருக னன்றியும் நீயும் முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப் பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை அணங்குசா லடுக்கம் பொழியுநும் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே (புறநா : 151) எனப் பெண் கொலைபுரிந்த நன்னன் மரபினனாகிய இளவிச்சிக் கோவைப் பெருந்தலைச் சாத்தனார் அன்புடன் தழுவிக் கொள்ளாமைக்குக் காரணம் கூறுவதாக அமைந்த பாடல் இங்குக்கருதத்தகுவதாகும். (85) 86. புறக்கா ழனவே புல்லெனப் படுமே. இளம்பூரணம் : (இ-ள்) ஓரறிவுடையன புறவயிர்ப்புடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் என்றவாறு. அவையாவன: தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின. 87. அகக்கா ழனவே மரமெனப் படுமே.3 இளம்பூரணம் : (இ-ள்) உள்வயிர்ப்1 புடையனவற்றை மரமெனப்படு மென்ற வாறு. பேராசிரியம் : இது, மக்களை வழங்குமாற்றுக்கண் மரபுகூறி இனி ஓரறிவுயிர்க்கு இன்னவாறு சொல்லுதன் மரபென்ப துணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) புறத்துக் காழ்ப்புடையனவற்றைப் புல்லெனவும் அகத்துக்காழ்ப்புடையனவற்றை மரமெனவுஞ் சொல்லுப (எ-று). புறக்காழன வெனவே. அல்வழி வெளிறென்பதறியப்படும் அவை பனையுந் தெங்குங் கமுகும் முதலாயின புல்லெனப்படும். இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும்; இங்ஙனம் வரையறைகூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத்துங் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின்மரன் போல்வன இடையிடை பொய்பட்டும்2 புல்லும் மரனும் வருவன உளவாலெனின்,-இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையானும் எனமொழிப என்று இருவழியுஞ் சிறப்பித்து விதந்தமை யானுஞ் சிறுபான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்கு மென்பது. இரும்பனம் புல்லின் பசுந்தோட்டுக் குடம்பை எனவும், யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவின் (குறுந் : 198) எனவும் வரும். நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை (அகம் : 200) எனப் புறக்காழும் அகக்காழும் அல்லன புல்லெனப் பட்டன வென்பது. அது பனையோலையுமாகலிற் புறக்காழுடைய பனையுமாமென்பது. உதிமரக்1 கிளவியுமாமென்பது சிறுபான்மை பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, ஓரறிவுயிர்களாகிய தாவரங்களுக்குரிய மரபுப் பெயர் கூறுகின்றது. (இ-ள்) உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரம் வாய்ந்தன வற்றைப் புல் என வழங்குவர் எ-று. புல் என்ற வகையைச் சார்ந்தன தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன காழ்---வயிரம்; திண்ணிதாந் தன்மை. தாலப் புல்லின் வால்வெண் தோட்டு (சிலப்-16 :) புறக்காழனவே புல்லென மொழிப (மரபியல்--86) என்றாராகலின் (தாலத்தை--பனையைப்) புல் என்றார் என்பர் அடியார்க்கு நல்லார். (86) இதுவும் அது. (இ-ள்) அகத்தே வயிரமுடைய தாவரத்தை மரம் என்று வழங்குவர் எ-று. மரன்---மரம்; னகரமகரப் போலி. மரம் எனப்படுவன விள, பலா முதலியன. புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பு (வயிரம்) இன்றியும், அகில்மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் (பொந்துடையனவாகியும்) வரினும், சிறுபான்மை அவையும் புல்லும் மரனும் என அங்கும் என்றார் பேராசிரியர். (87) 88. தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும் புல்லோடு வருமெனச் சொல்லினர் புலவர்*. இளம்பூரணம் : (இ-ள்) தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின்கண்ணே வருமென்றவாறு. இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்புமில்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வகைப்பட்ட உறுப்புப்பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் என்றவாறு. அவையாவன : வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன. பேராசிரியம் : இது, முறையானே புறக்காழனவற்றுறுப்பினைச் சொல்லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணப்பட்ட வாய்பாடும் பிறவும் புல்லுறுப் பினைச் சொல்லும் வாய்பாடு (எ-று) பிறவு மென்றதனாற் குரும்பை நுங்கு நுகும்பு1 போந்தை யென்றற் றொடக்கத்தனவுங் கொள்க. இரும்பனை வெண்டோடு 2மிலைந்தோ னல்லன் (புறம்:45) எனவும், மாவென மடலு மூர்ப (குறுந் : 17) எனவும், துகடபு காட்சியவையத்தா ரோலை (கலி : 94) எனவும் வரும். ஒழிந்தனவுங் கொள்க. வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க (பத்துப்-நெடுநல் : 22) என்பதும் அது. நேர்ந்தன பிறவும் என்பது கேட்டாரை உடம்படுவிப் பன பிறவுமென்றவாறு. வண்கோட் பெண்ணை வளர்ந்த நுங்கின் (சிறுபாண் : 27) எனவும், பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலோடு (புறம் : 249) எனவும் வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : இது, புறத்தே வயிரமுடைய தாவர உறுப்புகளின் மரபுப் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்தன பிறவும் புல் என்ற வகையைச் சார்ந்துவரும் எனக் கூறினர் புலவர் எ-று. புறத்திண்மையும் அகத்திண்மையும் இல்லாதவற்றுள் வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் முதலியன ஒருசாரன இவ்வகைப் பட்ட உறுப்புகளின் பெயர்களையுடையவாகிப் புல் என்ற வகையில் சேர்த்துரைக்கப்படுவன என்பது இளம்பூரணர் கருத்தாகும். நேர்ந்தன பிறவும் என்றதனால், குரும்பை, நுங்கு, நுகும்பு, போந்தை யென்றற் றொடக்கத்தனவும் புல்லின் உறுப்பாகக் கொள்ளப்படும். நுகும்பு-மடல் விரியாதகுருத்து. (புறநா-249). nghªij---fU¡F., மூக்கறு நுங்கின் என்பது தகடூர்யாத்திரை. (88) 89. இலையே முறியே தளிரே தோடே சினையே குழையே பூவே அரும்பே நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்1 மரனொடு வரூஉங் கிளவி என்ப*. இளம்பூரணம் : (இ-ள்) இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப் பெயர்2 மரத்துக்கு அங்கமாம் என்றவாறு. இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வுறுப்புப்பெயர் உடையன மரமெனப்படுமென்று கொள்க. அவையாவன: முருக்கு தணக்கு முதலாயின. பேராசிரியம் : இஃது அகக்காழனவற் றுறுப்பினைச் சொல்லும் மர புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணப்பட்டனவும் பிறவுமெல்லாம் மரத்துறுப் பினைச் சொல்லும் வாய்பாடு (எ-று). அனையவை யெல்லாம் என்ற புறநடையானே புல்லுந் தலையும் பொங்கரும் முதலாயின கொள்க. அவை, தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇ (பெரும்பாண் : 104) எனவும், முறிமே யாக்கை (பத்துப்-மலைபடு : 313) எனவும், யாஅ வொண்டளி ரரக்கு விதிர்த்தன்ன (அகம் : 166) எனவும், தோடுதோய் மலிர்நிறை யாடி யோரே (அகம் : 166) எனவும், மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை (குறுந் : 26) எனவும், கொய்சுழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர (கலி : 74) எனவும், நனைத்த செருந்தி (அகம் : 150) எனவும், அண்டர்மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல (அகம் : 59) என்றாற்போல வருவனவுமெல்லாங் கொள்க. மேலைச் சூத்திரத்துப் புல்லொடு வருமெனச் சொல்லினர் (641) எனவும், இச்சூத்திரத்து மரனொடு வரூஉங் கிளவி (642) யெனவும் மிகைபடக் கூறியதென்னையெனின்,-அம்மிகையானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றொடு தழீஇக்கொள்ளப்படுவனவுமெல்லாம் இவற்றுக் குரிய வென்பது கொள்க. அவை, ஊகம்புல்லுஞ் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும்; புழற்கால் ஆம்பல் முதலியனவும் புல்லெனப் பட்டங்கியவற்றின் பெயரும் பெறுமென்பது. பிடாவுங் காயாமுதலிய புதலும். பிரம்புமுதலாகிய கொடியும், மரமெனப் பட்டவற்று உறுப்பின் பெயர் பெறுமென்பது. அவை ஊசந்தோடு சீழகந்தோடு எனவும் பிடவிலை காயாம்பூ முல்லைப்பூ எனவும் வரும். பிறவும் அன்ன. மற்றுப் பிறப்பு முறையால் தளிர் முற்கூறாது இலை முற்கூறியதென்னையெனின், - புல்லினுள் ஒருசாரன இலை யெனவும் பூவெனவும் படுமென அதிகாரங்கோடற்கென்க. அவை, ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை (பெரும்பாண் : 88) எனவும், ஆம்பலிலை, தாமரையிலை எனவும் ஆம்பற்பூ, தாமரைப்பூ எனவும் வரும், பிறவும் அன்ன கொள்க. இன்னும் இவ்விலேசானே புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவுங் கொள்க ; அவை, ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும் (கலி : 32) என ஈர்க்கென்பது மாவிலைமேல் வந்தது1. பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, அகத்தேவயிரமுடைய தாவரவுறுப்புக்களின் மரபுப் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ---ள்) இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அருப்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அவைபோல் வனபிறவும் மரவகையைச் சார்ந்துள்ள உறுப்புக்களைக் குறிக்கும் மரபுப் பெயர்களாகும் எ-று. புறத்தேவயிரமும் அகத்தேவயிரமும் இல்லாத தாவரங்களுள் முருக்கு, தணக்கு, முதலிய ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயருடையன மரம் எனப் பெயர் கூறப்படுவன. புல்லினுள் ஒரு சாரன மரத்திற்குச் சொல்லப்பட்ட இலை, பூ முதலிய உறுப்பின் பெயர்களைப் பெறுவனவும், புல்லிற்குச் சொல்லப்பட்ட ஈர்க்கு முதலிய உறுப்பின் பெயர்கள் சில மரத்திற்கு உரியனவாய் வருவனவும் வழக்குநோக்கி உணர்ந்து கொள்ளத்தக்கனவாம். (89) 90. காயே பழமே தோலே செதிளே வீழோ டென்றாங் கலையும் அன்ன. இளம்பூரணம் : (இ--ள்) இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறலிற்காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப்பெயர் அவ்விரு வகைக்கும் பொதுவெனப்படு1 மென்றவாறு. தாழை பூவுடைத் தாகலானும் கோடுடைத் தாகலானும் புறவயிர்ப் பின்மையானும் மரமெனப்படு மாயினும் புல் என்றல் பெரும்பான்மை. பேராசிரியம் : இது மேற்கூறிய இரண்டற்கும் பொதுவுறுப்புணர்த்துதல் நுதலிற்று2. (இ-ள்) : இவையும் அவ்விருதிறத்தோடொக்கும் (எ று). உதாரணம் : தெங்கங்காய் கமுகங்காய் எனவும், வேப்பங் காய் மருதங்காய் எனவுங், காயென்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்பதற்கும் இஃ தொக்கும். பனந்தோல் வேப்பந் தோல், பனஞ்செதிள் வேப்பஞ்செதிள், தாழைவீழ் இத்திவீழ் என இவையும் இருபாற்குமுரியவாயின. மற்று இவையெல்லாம் வரையறையின்றிச் செல்லுமாயிற் புறக்காழன அகக்காழனவென வரையறுத்துப் பயந்ததென்னை யெனின் அவ்விருபகுதியுள் அடங்கக் கூறியவெல்லாம் புல் லெனவும் மரமெனவும் படாவென்றற்கும் அவற்றுறுப்பு ஓதியவாற்றாற் புல்லின் கண்ணும் மரத்தின் கண்ணும் பெருவர வினவா மென்றற்குமென்பது. ஆய்வுரை : இது, புல்மரம் என்னும் இருவகைத்தாவரங்கட்கும் பொதுவாக வழங்கும் உறுப்புக்களின் மரபுப்பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) : காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல்லும் மரமும் ஆகிய இருவகைத் தாவரங்கட்கும் பொதுமையின் உரியனவாகும் எ-று. தாழை பூவுடைத்தாகலானும் கோடுடைத்தாகலானும் புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்றார் இளம்பூரணர். (90) 91. நிலம் தீ நீர்வளி விசும்பொ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் இதுவுமோர் மரபு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் என்றவாறு.1 கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற்போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றாதல் போறல். உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும் உலகமாவது முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம் நீர் தீவளி ஆகாயம் என விரவிநிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானாற்போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடைத்தாகவிற் கலந்த மயக்கமென்றார். இப்பொழுது எல்லாவுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான் மேற் கூறிப்போந்த முறையினான் வேறுபடுத்து இருதிணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம். சாத்தன் சோற்றை உண்டான் என்பது. இது உண்டற் குரியானெனக் கூறுதலின் மரபாயிற்று. அஃதேல் வழாமை தழால் வேண்டுமெனக் கருதியபொருள் முடியும்; திரிபில்சொல் என்றது மிகையெனின், ஒக்கும். குழவி என்பது உயர்திணைக்கண் வரின் அதற்குரிய பாலாற் கூறாது அஃறிணைக்குரிய பாலாற் கூறப்படுதலின் அவ்வகையான் வருவன வழுவாயினும் திரிபில் சொல் என்றதனான் இதுவும் அடக்கிக் கூறினார். பேராசிரியம் : இஃது உலகிலெல்லாம் மரபிற்றிரியாமையின் அதன் சிறப்புணர்த்தி அதற்குக் காரணமுங் கூறுகின்றது. (இ-ள்) நிலனுந் தீயும் நீருங் காற்றும் ஆகாயமுமென்னும் ஐம்பெரும் பூதமுங் கலந்த கலவையல்லது உலகமென்பது பிறி தில்லாமையின் அவற்றைச் செல்லுமாறு சொல்லாது இரு திணைப்பொருளென வேறுபடுத்தும் ஐம்பாலென வேறுபடுத்தும் வழங்குகின்ற வழக்கெல்லாம் மரபில் திரியாத சொல்லொடு தழீஇ வரல்வேண்டும் (எ-று). இதன் கருத்து; நிலம்வலிது, தீவெய்து, நீர் தண்ணென்றது, வளியெறிந்தது, விசும்பு அகலியது என அஃறிணைவழக்கினவாயினும் இவை கலந்த வழியும் அவ்வாய்பாட்டான் வழங்காது உயர்திணை வாய்பாடு வேறாகவும், அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவைதம்முட் பகுதியாகிய ஐந்துபாற்சொல்லும் வெவ்வேறாகவும் வழங்குகின்ற வழக்கிற்குக் காரணம் மரபல்லது பிறிதில்லை யென்றவாறு; எனவே மரபினை வலியுறுத்தவாறு. மற்று, நிலம் நீர் தீ வளி ஆகாயமென ஒன்று ஒன்றனுள் அடங்குமுறையாற் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியதென்னை யெனின்,---அவை கலக்குங்கால் ஒரோபொருளின் கண்ணும் அம்முறையானே நிற்குங்கொலென்று கருதினுங் கருதற்க; மயங்கிநிற்குமென்றற்கு1 அவ்வாறு கூறினானென்பது. ஆய்வுரை : இஃது உலக வழக்கில் மரபுச் சொற்களைத் திரிபின்றி வழங்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றது. (இ-ள்) நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களும் தனித்தனியே கலந்தும் ஒன்றாக மயங்கியும் கூடிய திரட்சி உலகமாதலின் மேற்கூறப்பட்ட பொருள்களை உயர் திணை அஃறிணையென்னும் இருதிணையும், ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்துபால்களும் வழுவாமல் அவை திரிபுபடாத மரபுச் சொற்களால் இணைத்து வழங்குதல் வேண்டும். (எ-று) உலகம் என்ற சொல் உலகத் திரட்சியாகிய புறஅமைப் பினையும் உலகினுள்ளே பிரிக்கவொண்ணாது ஒன்றாய் மயங்கிக் கிடக்கும் உட்பொருள்களையும் உணர்த்துமெனவும், அவ்விரு வகைப் பொருள்களையும் ஒருங்குடையதாதல் பற்றிக் கலந்த மயக்கம் உலகம், என்றார் எனவும், கலத்தல் என்றது முத்தும் பவளமும், நீலமும், மாணிக்கமும் விரவினாற் போன்று தனித் தனியே விரவுதல் எனவும், மயக்கம் என்றது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றாதல் போன்று ஒன்றாகக் கலத்தல் எனவும் விளக்கம் கூறுவர் இளம்பூரணர். உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களின் திரட்சியாயினும் உயர்திணை முப்பால் வாய்பாடுகள் வேறாகவும் அஃறிணை இருபால் வாய்பாடுகள் வேறாகவும் இயலும் நெறிமுறைமைக்குக் காரணம் பண்டையோர் வகுத்து வழங்கிய சொல் மரபல்லது பிறிதில்லை யெனவும் வற்புறுத்துவது இச்சூத்திரமாகும். (91) 92. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான.2 இளம்பூரணம் : என்னுதலிற்றோ---எனின் செய்யுட் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). ஈண்டுச் சொல்லப்பட்ட மரபுநிலையிற் றிரிதல் செய்யுட்கில்லை; மரபு வழிப்பட்ட சொல்லினாற் செய்ய வேண்டுதலின் என்றவாறு. எனவே, யாதானும் ஒரு செய்யுளும் ஈண்டோதிய மரபினாற் செய்யவேண்டும் என்றவாறாம். செய்யுட்கில்லை எனவே, வழக்கினுட் சில திரியவும் பெறும். அவை வழக்கினுள் ஆணினைப் போத்தென்றல் போல்வன. பேராசிரியம் : இது, மரபினையே வற்புறீஇயது. (இ-ள்) வழக்கினகத்து வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்கது, மற்றுச் செய்யுள்செய்த சான்றோர் அதற்கேற்ற வகையாற் செய்யப்பெறுவராகலின் (எ-று). அவர்க்கு இம்மரபு வேண்டுவதன்றுகொலென்று கருதினுங் கருதற்க. மரபே தானு, நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன (தொல் செய்; 80) என்றதனான், மரபுவழிப்படுங்காலென்பான், மரபு வழிப்பட்ட சொல்லி னான1 என்றானென்பது ஆண்டுக் கூறிய மரபு உலகியலாகலான் அவ்வுலகியல் அவ்வாறாதற்குக் காரணம் ஈண்டுக் கூறிச் செய் யுட்கும் அதுவே காரணமெனக் கூறினானென்பது. இதனது பயன்: செஞ்ஞாயிறென்பது வழக்கன்றாயினும் உண்மை நோக்கி அதனைச் செய்யுள் செய்யுஞ் சான்றோர் (புறம்-38) அவ்வாறு வழங்கினாற் போல உயர்திணைப் பொருளையும் ஐமபெரும்பூதங்கள் அஃறிணையான் வழங்குதலுண்மை நோக்கி அவ்வாறுஞ் சொல்லப் பெறுபகொலென்று ஐயுற்றாணை ஐயம் அறுத்தவாறு அஃறிணைப் பாற்கும் இஃதொக்கும்; அல்லதூஉம் இன்ன செய்யுட்கு இன்ன பொரு ளுரித்தெனவும், இனைப் பகுதியாற் பெயர்பெறுமெனவும் மரபுபற்றியே சொல்லப்படு மென்றற்கும், இனி நிறைமொழி மாந்தர் மறைமொழி போல் வன சிலமிறைக் கவி பாடினாருளரென்பதே பற்றி அல்லாதாரும் அவ்வாறு செய்தன் மரபன்றென்றற்கும் இது கூறினானென்பது; அவை; சக்கரஞ், சுழிகுளங், கோமூத்திரிகை, ஏகபாதம் எழுகூற்றிருக்கை, மாலைமாற்று என்றாற்போல்வன.1 இவை மந்திரவகையானன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகனைந்திணைக்கும் மரபன் றென்பது கருத்து. அல்லாதார் வற்றை எல்லார்க்குஞ் செய்தற் குரியவென இழியக் கருதி அன்ன வகையான் வேறு சில பெய்து கொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணையென்று வரையறுக்கலாகா; என்னை? ஒற்றை இரட்டை புத்தி வித்தார மென்றாற்போல் வன பலவுங் கட்டிக்கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின், அவற்றிற்கு வரையறைவகையான் இலக்கணங் கூறலாகாவென்பது,2 ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னைம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையால் எனவுங், கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை யாடா வடகினுளுங் காணேன் (திணை நூற் : 4) எனவுஞ் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரை யறை யின்மையின், அவற்றுக்கு இலக்கணங் கூறார் பண்ணத்திப்பாற் (492) படுப்பினல்லதென்பது. ஆய்வுரை : இது, செய்யுளிலும் மரபுச்சொற்கள் வழுவாது அமைதல் வேண்டும் என வற்புறுத்துகின்றது. (இ---ள்) : இங்குக் கூறப்பட்ட மரபுநிலையிற் பிறழ்ந்து வருதல் செய்யுட்கு இல்லை; உலகியல் மரபினை அடியொற்றிய சொற்களாற் பொருள்களையுணர்த்த வேண்டுதலின் எ-று. செய்யுளுறுப்புகளுள் ஒன்றாகிய மரபு என்பதனைக் குறித்து, மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்பு வழிப்பட்டன்று (செய்யுளியல் 76) என்றார் தொல்காப்பியனார். அங்குக் குறித்த மரபு என்பது உலகியல் வழக்குப் பற்றியது. அம்மரபு சொய்யுளின் உறுப்பாதற் குரிய காரணத்தினை இச்சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர் என்பது இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும். உலகவழக்காவது வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்க தாதலின், அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட் களும் மேற்குறித்த மரபுநிலையில் திரியாது அமைதல் வேண்டும் என இச்சூத்திரத்தால் ஆசிரியர் வற்புறுத்தினாராயிற்று. (92) 93. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும். இளம்பூரணம் : (இ-ள்) மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகு மென்றவாறு.1 எனவே, வழுவென்றவாறாம். பேராசிரியம் : இது, மேற்போன வழக்கிற்குஞ் செய்யுட்கும் வருகின்ற இலக்கணத்திற்கும் பொது. (இ-ள்) மரபினை நிலைதிரித்துச் சொல்லுபவெனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிதுபிறிதாகும் (எ-று). செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாய பொருளுணர்வ தெல்லாம் மரபுபற்றாக அல்லது மற்றில்லை யென்றவாறு.2 ஆய்வுரை : இது, மரபுநிலை திரிதலால் உளவாம் வழுவுணர்த்துகின்றது. (இ-ள்) பன்னெடுங் காலமாக உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தொடர்ந்து நிலைபெற்று வரும் சொற்பொருள் மரபுநிலை திரிந்து வேறுபடுமானால் உலகத்து வழங்கும் சொற்களில் ஒன்றற்குரியன பிறிதொன்றற்குரியனவாய்ப் பொருள் வேறுபட்டுச் சிதைவுறும் (எ-று). 94. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின், ஐயமறுத்தலை நுதலிற்று. (இ-ள்) வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் மேலது; நூலின் நிகழ்ச்சி அவர்மாட்டாதலான் என்றவாறு. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லையெனவும், அதனானே வழக்கிற் சிறுபான்மை வருமெனவும், செய்யுள் மரபு ஒழியவரின் அது வழுவாமெனவும் கூறினராயிற் பாயிரத்துள் வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என்றதனோடு மாறுகொள்ளு மோவென ஐயுற்றார்க்கு, ஆண்டு வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழக்கெனப்படா தெனவும் கூறியவாறு.1 பேராசிரியம் : இது, வழக்கினுண் மரபினைப் பிழைத்துக் கூறுவனவும் உளவென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே; என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின் (எ-று) அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு2; எனவே உயர்ந்தோரெனப் படுவார் (509) அந்தணரும் அவர்போலும் அறிவுடையோரு மாயினாரென்பது. ஆய்வுரை : உலகத்துக் கற்றோர் கல்லாதார் என்னும் இருதிறத்தாராலும் வழங்கப்பெறும் வழங்கப் பெற்றுவரும் சொற் பரப்பினுள் எவருடைய சொல் வழக்கினை மரபாக ஏற்றுக் கொள்வது? என்னும் ஐயத்தினை நீக்குவது இச்சூத்திரமாதலின், ஐயம் அறுத்தலை நுதலிற்று எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர். (இ-ள்) உலக நிகழ்ச்சிகள் எல்லாம் (பொருள் வெளிப் பாட்டுக்குக் கருவியாகிய மொழியினைக் கற்று) உயர்ந்த பெரியோர் வழங்கும் சொற்பொருளமைப்பாகிய வழக்கினைச் சார்பாகக் கொண்டு நிகழ்தலால், செய்யுட்கு அடிப்படையாயுள்ள உலக வழக்கு எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது கல்வி யறிவினாலுயர்ந்த உயர்ந்தோர் வழக்கேயாகும் (எ-று). இங்கு, உயர்ந்தோர் என்றது, பொருள் புலப்பாட்டிற்குக் கருவியாகிய வழக்கும் செய்யுளும் என்னும் இருவகை மொழி வழக்கினையும் குற்றந்தீரக் கற்றுச் சொற்பொருள் ஒழுகலாறு மாறுபடாமல் மொழிவளர்ச்சிக்கும் அதன்வழி நடைபெறும் உலகியலொழுக லாற்றிற்கும் அரண்செய்து வாழ்வோராகிய புலத்துறை முற்றிய சான்றோர்களை. எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன்னூல் - பொதுவியல் --- 37) எனப் பவணந்தி முனிவர் கூறும் மரபிலக்கணம் இம்மரபியற் சூத்திரப் பொருளை விரித்துரைத்தல் காணலாம். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் நெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைக் குற்றமறப் புலப்படுத்தும் முறையில் அமைந்தன எனவும், இச்சொற்களின் பொருள்நிலை மாறுபடாமல் உயர்ந்தோர் வழக்கினை அடியொற்றி உலகவழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்குகளையும் போற்றிக் காத்தல் மொழி வளர்ச்சிக்கு அரண்செய்வதாம் எனவும் இம்மரபியற் சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியதிறம் தமிழ் வளர்ச்சியிற் கருத்துடையோர் அனைவரும் உணர்ந்து போற்றத் தகுவதாகும். (94) 95. *மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை நிலைய முதலும் வழியுமென நுதலிய நெறியின இளம்பூரணம் : என்னுதலிற்றோ---எனின் மேற் செய்யுளியலுள் தோற்றுவாய் செய்த நூலை இலக்கண வகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. உரைக்கவென்பது விகாரத்தால் தொக்கது அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப சார்புநூல் என்பதும் ஒன்றுண்டாலெனின், அஃது இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழி நூலென அடங்கும். எதிர்நூல் என்பதும் ஒன்றுண்டு. அதுவும் ஒரு முனைவனாற் செய்யப்படின் முதனூலாம்; பிறர் செய்யின் வழங்காது. பேராசிரியம் : இது, மேற்கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக்கணஞ் செய்வார்க்கும் வேண்டுமெனவும் அவ்விலக்கணம் இனைப் பகுதித் தெனவுங் கூறுகின்றது.1 தொல்-மரபியல் - 95 முதல் 112 முடியவுள்ள சூத்திரங் களைப் பற்றிய அடிக்குறிப்பு (இ-ள்) மரபுநிலையில் திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாரானும் உரைக்கப்படும் நூல் இரண்டிலக் கணத்தவாகும்; முதனூலெனவும், வழிநூலெனவும் கருதிக் கொள்ளும் அடிப்பாட்டான் (எ-று). மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும் (தொல்-மர : 91) என்பதனை இதற்குமேல் எய்துவித்தானன்றே அதனான் மரபு நிலை திரியாமையே தமக்குத் தகுதியாவதெனவும் இவ்விருவாற் றானம் ஒன்றனாற் செய்தலே மரபெனவுங் கூறியவாறு. நுதலியநெறி (648) யென்றதென்னையெனின்,-இன்னதே முதனூல், இன்னதே வழிநூலென்பதோர் யாப்புறவில்லை; ஒரு நூல்பற்றி ஒருவன் வழிநூல் செய்தவழி அவ் வழிநூல்பற்றிப் பின்னொருகாலத்து ஒருநூல் பிறந்ததாயின் அது வழிநூலெனப் பட்டு முன்னை வழிநூலே முதனூலெனப்படுமென்றற்கென்பது.2 இதனைச் சார்புநூலென்னாமோவெனின், வழிநூலுஞ் சார்பு நூலுமாகலின் அங்ஙனங் கூறானாயினான், எற்றுக்கு? சார்பு நூலினைப் பற்றி ஒருநூல் பிறந்தவழிச் சார்பின் சார்பெனக் கூறல் வேண்டுவதாகலானும் அதனைச் சார்ந்து தோன்றிற் சார்பென்னுஞ் சொல்லை மும்முறை சொல்லியும் அதன்பின் தோன்றிய நூற்கு நான்முறை சொல்லியும் எண்ணிகந்தோடுதலானு மென்பது.1 மற்று இரண்டாமெண்ணுமுறைமைக்கணின்ற நூலினையே வழிநூலெனக் கொண்டு மூன்றாவது தோன்றிய நூலே சார்பு நூலாகவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறாரெனவும் கொள்ளாமோ லெனின், முதனூலிற் கிடந்த பொருளை ஓர் உபகாரப்பட வழிநூல் செய்த ஆசிரியன் செய்தக்காற் சார்பு நூலெனப் பின்னர் ஓர் ஆசிரியன் நூல் செய்ததனாற் பயந்த தென்னை யென்க. என்றார்க்கு, வழிநூலும் பிற்காலத்தரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்தலன்றே இதனாற் பயந்ததெனின், அதுதானும் பின்னொருகாலத்து அரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்வானல்லனோ வென்று மறுக்க2 இவ்வாராய்ச்சி வேண்டா வென்றற்கன்றே இவ்விருவகையானும் வருதலே மரபென்பானாயிற் றென்றொழிக. ஒன்றன்வழியேயன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானும் நூல் செய்யப் பெறாரோவெனின்,-அது-மரபன்று: அது நோக்கியன்றே. மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும் (646) என்றவிதி நூலிற்கும் எய்துவித்துப் புகுந்ததென்பது; என்னை? பிறிதுபிறி தாகுமாறெனின்,-ஒரு பொருட்கண்ணே மாறுபட்ட இலக்கணங் கூறின் அவ்விரண்டும் அதற்கிலக்கண மாகாது; என் போல? மாணிக்க மணியினைச் செவ்வண்ணம் முதலாயின சில இலக்கணங்கூறிய நூல் கிடப்பக் கருவண்ண முதலா யினவும் அதற்கிலக்கணமென்று ஒருவன் எதிர் நூலென்ப தோர் நூல் பிற்காலத்துச் செய்யுமாயின் அஃது அதன் இலக்கணமெனப் படாதாகலானென்பது.1 மற்றுக் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்கு நூலும் வேறுபட அமையும்பிற எனின்.2 வழக்கெனப் படுவ துயர்ந்தோர்மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான (தொல்-மர:92) என்றமையானும் அங்ஙனம் காலந்தோறும் ஒரோர்நூல் செய்யின் வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின்றாகிய செல்லுமாகலானும் அது பொருந்தாதென்பது. அல்லதூஉம், நற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைபவாயினன்றே பிற்காலத்துப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீஇக்கொள்வதென்க. இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்குஞ் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென்பது.1 இக் கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஒத்தென்ப. அல்லதூஉம் இந்நூலிலக்கணம் வழக்கிற்குஞ் செய்யுட்கு மேயன்றி அங்ஙனமாகப் பொருண்மேவும் பண்டம் முதலாய வற்றிற்கு இலக்கணஞ் செய்யுங்காலும் நியாயஞ் செய்யினுந் தமிழ் நூலதற்கிலக்கணம் எவ்வாற்றானும் இதுவே யென்றற்கும் ஈண்டுக் கூறினானென்பது. எனவே, பிறபாடை நூல்களாயின் இம்மரபு வேண்டுவதன்றாயிற்று. மற்று முதனூலினை இன்னதென்பது துணிந்து உரையாரோவெனின் அதுவன்றே இனிக்கூறுகின்றதென்பது. ஆய்வுரை : இது, மேற் செய்யுளியலில் அடிவரையில் எனப்பட்ட ஆறனுள் நூலுக்குரிய மரபு உணர்த்தத்தொடங்கி நூலின் வகையுணர்த்துகின்றது. (இ-ள்) நூலுக்கு இன்றியமையாத இயல்பாகிய மரபு நிலை மாறுபடாத மாண்பினையுடையவாகி ஆசிரியனால் உரைக்கப்படும் இலக்கண நூல்கள்தாம் அவையமைந்த நெறி முறைமையின் முதல்நூல், வழிநூல் எனக் கூறப்பட்ட இருவகை இயல்பிற்பட்டு அடங்குவனவாகும் (எ-று) உரைக்கப்படும் எனற்பாலது, உரைபடும் என விகாரத்தால் தொக்கிநின்றது. இறையனார் களவியலுரையாசிரியர் நூல்தான் மூன்று வகைப்படும். முதல்நூலும் வழிநூலும் சார்புநூலும் என; என்னை? முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் என்றாராகலின் (இறையனார் களவியலுரை. சூ-1) என நூல்களை மூவகைப்படக் குறித்துள்ளார். முதலில்தோன்றிய நூலினை முதல்நூல் எனவும், அதனையொட்டி இரண்டவதாகத் தோன்றிய முதனூலிற்கிடந்த பொருளை ஓர் உபகாரப்பட ஓர் ஆசிரியன் வழிநூல் செய்த பின்னர்ப் பின்னர். ஓர் ஆசிரியன் சார்புநூல் செய்ததனாற் பயன்யாது? என மறுப்பார்க்கு, வழிநூலும் பிற் காலத்து உணர்தற் கரும்பொருளதாயின் அதனையும் எளிதாக்கிக் கொடுத்தல் சார்புநூலாற் பெற்ற பயன் என விடை கூறுவர், அத்தகைய சார்புநூலாற் பின்னொரு காலத்து உணர்தற்கரிதாயின் தோன்றிய நூலினைச் சார்புநூல் எனவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறார் எனவும் கொள்ளாமோ? என வினவினார்க்கு, நூலினை வழிநூல் எனவும், அதனை யொட்டி மூன்றாவதாக அதனையும் எளிமையுடையதாக்கிப் பிற்காலத்தொருவர் நூல்செய்தல் அந்நூல் மேற்குறித்த மூவகை நூல்களில் எதன் பாற்படும் என்ற வினா எழும், சார்பு நூலைப் பற்றி ஒரு நூல் பிறந்தவழி வழிச்சார்பின் சார்பு எனவும் அதனைப் பின்பற்றித் தோன்றிய நூலினைச் சார்பின் சார்பின் சார்பு எனவும் இவ்வாறு வெவ்வேறு நூற் பெயர்களைப் படைத்துக் கூறிக்கொண்டே சென்றால் வரம்பின்றியோடுதல் என்னுங் குற்றந்தங்குமாதலின் அவ்வாறு நூற்பெயர்களை மேன்மேலும் பெருக்கிக்கொண்டே போகாமல் எல்லா நூல் களையும் முதல்நூல், வழிநூல் என்னும் இரு வகையிலேயே அடக்கிக் கூறுதல் மரபு என அறிவித்தற் பொருட்டே உரைபடு நூல்தாம் முதலும் வழியும் என நுதலிய நெறியின் இருவகையியல, என்றார் ஆசிரியர் எனப்பேராசிரியர் தரும் விளக்கம். இங்கு நினைவுகூரத் தகுவதாகும் இனி, சார்பு நூல் இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டுவருதலின் அதுவும் வழிநூல் என அடங்கும் என்றார் இளம்பூரணர். (95) 96. வினையின் நீங்கி1 விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ---எனின்2 நிறுத்தமுறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். பேராசிரியம் : மேல் ஒன்றற்கு முதனூலாகியும் ஒன்றற்கு வழிநூலாகியும் வந்து தடுமாறுமென்றான், இனி அவ்வாறன்றி ஒன்றே முதனூலாகவுஞ் சிறுபான்மை உண்டென்கின்றது.1 (இ-ள்) செய்வினையின் பயன் துவ்வாது மெய்யுணர் வுடையனாகிய முன்னோனாற் செய்யப்பட்டதே ஒருதலையாக முதனூலாவது (எ-று) எனவே, மேலைச்சூத்திரத்து முதனூலும் வழிநூலுமெனப் பட்டன முதலுஞ் சினையும் போலத் தடுமாறுமென்பதூஉம் இதுவாயின் தடுமாறாது எஞ்ஞான்றும் முதனூலாமென்பதூஉம் பெற்றாம். வினையென்பன இருவினை இன் நீக்கத்துக்கண் வந்தது2 விளங்கிய அறி வென்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவி. னென நின்ற இன் சாரியை. இன்ன அறிவினொடுகூடிய முனைவன் அறிவின் முனைவனெனப்படும். முன்னோனை முனைவனென்பது ஓர்சொல் விழுக்காடாம். முன்னென்பதனை முனையென்பவாகலின். மற்று வினையினென்ற வேற்றுமை, நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமுங் கூறுமாகலின் ஒருகாலத்து வினையின் கணின்று ஒருகாலத்து நீங்கினான்போலக் கூறியதென்னை யெனின் அற்றன்று; வினைப்பயந் தொடரற்பாற்றுள்ளம் இலனென்பதன்றி அவர்க்குச் சில செய்கையுளவென்பது பல்லோர்க்கும் உடம்பாடாகலின், அவ்வினைக்கணின்றே; போகமும் பாவமும் மெய்யுணர்வு பற்றித் தெறப்பட்ட வித்துப் போலப், பிறப்பில் பெற்றியனாகி நீங்குமாகலின் அவ்வாறு கூறல் அமையுமென்பது என்னை? குற்றங் கெடுத்து முற்ற உணர்ந் தோருங், கெடுப்பதோர் குற்றமின்றி முழுதுணர்ந்தோரும் எல்லாம் பிறர்க்குறுதியாகிய ஆகமஞ் செய்யினுந் துறக்கம் முதலாகிய பயன்றுய்ப்பா ரல்லராகலின். இனி முனைவனாற் செய்யப்படுவதோர் நூலில்லையென் பார் அவன்வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங் கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல்செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து. வழிநூலுஞ் சார்புநூலுமெனப் பலவும் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப் படா; அல்லதூஉம் அவை தமிழ்நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது.1 மற்று, மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமா மெனவே எல்லார்க்கும் முதல்வனாயின் செய்தது முதனூலேயாமென்பது பெறுதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறிய தென்னையெனின்- தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிப்பட்டுத் தலைவராயினாரும் பலராகலின் தாமே தலைவ ராயினார் நூல் செய்யின் முதனூலாவ தெனின், அற்றன்று; தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலராகலின், தலைவர் வழிநின்றுதலைவனாகிய அகத்தியனாற் செய்யப்பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற், காலத்தானும் முதனூலாவ தென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் வினையினீங்கி விளங்கிய அறிவினான் முதனூல் செய்தானென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம் அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்பதூஉம் பெற்றாம். என்றார்க்கு முந்துநூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தனவெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் அவற்று வழிநூல் செய்தாரென்றக்கால் இழுக்கென்னை யெனின், அது வேத வழக்கொடு மாறுகொள்வர் இக்காலத்துச் சொல்லினும் இறந்தகாலத்துப் பிற பாசாண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தொடு பட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச் சங்கத்தார்க்குங்கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அதுகூறிக் கரிபோக்கினாராகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராகலாற் போய் கூறாராகலானு மென்பது இங்ஙனம் கூறாக்கால் இதுவும் மரபுவழுவென்று அஞ்சி அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறு பவென்பது; எங்ஙனமோ வெனின்,- கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தினை முதனூ லெனவும், அவர்வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமையுடையாரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனாரெனவும், பன்னிரு படலத்துப் புனைந்துரைவகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது. இனிப், பன்னிருபடலம் முதனூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனா ரிதனாரும் இது கூறினார்: என்னை? மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையினென்பது. இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூ லென்பதூஉந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அது தானும் பனம்பாரனார், வடவெங்கடந் தென்குமரி (தொல் : பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ்செய்தமையிற் சகரர் வேள்விக்குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னைய தென்பதூஉம், அவ்வழக்குநூல் பற்றியல்லது ஈண்டு மூன்று வகைச் சங்கத்தாருஞ் செய்யுள் செய்திலரென்பதூஉம், ஆசிரியரும் அவர்போல்வாரும் அவர்வழி ஆசிரியருஞ் செய்யுள் செய்த சான்றோருஞ் சொல்லாதன சொல்லப் படாவென்பதூஉம் அவருடம்படாதன சொல் உளவென்று எதிர் நூலென ஒருவன் பிற்காலத்து நூல்செய்யுமாயின் தமிழ் வழக்கமாகிய மரபினோடுந் தமிழ் நூலொடும் மாறுபட நூல் செய்தானாகுமென்பதூஉம், இனித் தமிழ்நூலுள்ளுந் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறி வந்த வகையான் அறியப்படு மென்பதூஉம், பாட்டுந் தொகையும் அல்லாதன சிலநாட்டிக் கொண்டு மற்று அவையுஞ் சான்றோர் செய்யுளாயின; வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத்துள்ளும் ஒருசாரார்க் கல்லது அவர் சான்றோரெனப் படாரென்பதூஉம் இங்ஙனங் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபடவந்த அழிவழக்கும் இழிசினர் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கண மெல்லாம் எல்லைப்படாது இகந் தோடு மென்பதூஉம். இறந்தகாலத்து நூலெல்லாம் பிறந்த வழக்குப்பற்றிக் குன்றக்கூற லென்னுங் குற்றந்தங்குமென்பதூஉம், ஒன்றாகப் புறனடுத்து ஒரு சூத்திரமே செய்துபோத அமை யினன்றிஒழிந்தசூத்திரங்களெல்லாம் மிகையாமென்பதூஉ மெல்லாம் படுமென்பது.1 ஆய்வுரை : இது, முதனூலாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) வினைத்தொடர்பினின்றும் இயல்பாகவே நீங்கி விளங்கிய முழுதுணர்வுடைய முதல்வனாற் செய்யப்பட்டது முதல்நூலாகும் எ-று. வினையென்பது, வேண்டுதல் வேண்டாமை காரணமாகச் செய்யப்படும் நன்றுந் தீதுமாகிய வினைத்தொடர்பு. வினையின் நீங்கி என்புழி இன் என்னும் ஐந்தாம் வேற்றுமையுருபு நீக்கப் பொருளில் வந்தது! நீங்கி விளங்கிய அறிவின் என்புழி நீங்கி என்னும் செய்தென்வாய்பாட்டு வினையெச்சம் மழை பெய்து நெல் விளைந்தது என்புழிப்போன்று ஏதுப்பொருளில் வந்தது விளங்கிய அறிவு என்றது இயல்பாகவே பாசங்களின் நீங்கின மையால் பிறர் உணர்த்த வேண்டாது தானே எல்லாப் பொருள்களையும் ஒருசேர அறியவல்ல முற்றுணர்வினை. முனைவன்---முதல்வன்; என்றது உலக முதல்வனாகிய இறைவனைக் காணுதல்---செய்தல், இயற்றுதல். முதல் நூலாவது, வரம்பிலறிவன் பயந்ததாகும். என்னை? வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும் (தொல் - மரபியல் 66) எனவும், முதல்நூற்குப் பிறன்கோள் கூறாது எனவும், தந்திரம் சூத்திரம் விருத்தி மூன்றற்கும் முந்துநூ லில்லது முதனூ லாகும் எனவும் சொன்னாராகலின் (இறையனார் களவியல்-சூ-1 உரை) என்இறையனார் களவியலுரையாசிரியர் இம்மரபியற் சூத்திரத்தினையும், வேறிரண்டு பழஞ் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். (96) 97. வழியெனப் படுவ ததன்வழித் தாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ---எனின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல் வழியே செய்வது என்றவாறு.1 அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். பேராசிரியம் : இது, வழிநூலாமா றுணர்த்துகின்றது. (இ-ள்) நுதலிய நெறியானன்றி வழிநூலென்றற்குச் சிறப்புடையது அம்முதனூல்வழிப் பிறந்த வழிநூல் (எ-று). அது தொல்காப்பியம். மற்றுப் பல்காப்பியம்2 முதலியன வோவெனின்,-அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றின வென்பது; என்னை? கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காயனார் முதலாயினாரை அவ்வாறு கூறாராகலானுமென்பது; என் றார்க்குத், தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல்செய்ததெற்றுக்கெனின், அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளுமெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனை இவ்வாசிரியர்சுருங்கச் செய்தலின் அருமைநோக்கிப் பகுத்துக் கூறினாராகலானும் அவர் தந்திரத்துக்கேற்ப முதனூலொடு பொருந்த நூல் செய்தா ராகலானும் அமையு மென்பது. பிற்காலத்துக் காக்கைபாடினியாருந் தொல் காப்பியரோடு பொருந்தவே நூல் செய்தாரென்பது; மற்று,1 வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச்2 சிறுகாக்கைபாடினியார் செய்த நூலினையும் அதன் வழி நூலென்னுமோவெனின்,-ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவுமாற்றாற் செய்தாராயின்-அது வழிநூலாதற்கு இழுக் கென்னையென்க. இனிச், சில குன்றக்கூறினார் தொகுத்து நூல்செய்தாராகலினென்பாரும் உளர். ஒழிபொருளவாயினது தொகையெனப்படாமையின் அங்ஙனங் கூறுதல் வழிநூலிலக் கணமன்றென்பது. ஆய்வுரை : இது, வழி நூலாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) வழிநூல் எனப்படுவது வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாகிய முதல்வன் அருளிய, அம்முதல் நூலினை அடியொற்றி இயற்றப் பெறுவதாகும் எ-று. இனி, அந்நூலோடு (முதல் நூலோடு) ஒத்தமரபிற்றாய், ஆசிரியமதவிகற்பம்படக் கிளப்பது வழிநூல் எனப்படும். என்னை? முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூலாகும் (இறையனார்களவியல் உரை மேற்கோள்) என்றாராகலின் எனவிளக்குவர் இறையனார் களவியலுரை யாசிரியர். (97) 98. வழியின் நெறியே1 நால்வகைத் தாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் வழிநூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும் என்றவாறு.2 அது முன்னர்க் கூறுதும். பேராசிரியம் : இது வழிநூல் இனைத்துவகைத் தென்கின்றது. (இ-ள்) : மேல், வழி நூலெனப்பட்டது நான்குவகையாற் செய்யப்படும் (எ-று). இதன் பயன்; ஒருநூலுள் ஒன்றல்லது பல வாராவெனவும். அதனானே நான்குவகைய வழிநூலெனவும், முதனூலாயின் ஒன்றேயாமெனவுங் கூறியவாறாயிற்று. அவையாவன மேற்கூறுப ஆய்வுரை : இது, வழிநூல் செய்யும் முறை இத்தனை வகைப்படும் என்கின்றது. (இ-ள்) வழிநூல் இயற்றப்படும் முறை நால்வகைப்படும் (எ-று). அவ்வகை அடுத்த சூத்திரத்தில் விரித்துரைக்கப்படும். (98) 99. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே. இளம்பூரணம் : என்னுதலிற்றே --- எனின். வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதனூலாசிரியன் விரித்துச்செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும் அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும் வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துச் தமிழ் மொழியாற் செய்தலும் என்றவாறு. இது வழிநூலானாய பயன். பேராசிரியம் : இந்நான்கு வகையுங் காரணமாக மேற் கூறிய நால்வகை வழி நூலும் பெறலாம் என்றவாறு. தொகுத்தலென்பது முதனூலுள் விரிந்தனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக்கூறல், விரித்த லென்பது முதனூலில் தொகுத்துக் கூறுபட்டு விளங்காது நின்றதனை விளங்குமாற்றான் விரித்துக்கூறல், தொகைவிரி யென்பது அவ்விருவாறும்பற்றித் தொகுத்து முன்னிறீஇ அந் நிறுத்த முறையானே பின்விரித்துக் கூறுதல். மொழிபெயர்த் தென்பது பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வது அதுவுந் தமிழ்நூலுள் வழிநூற்கு மரபாமென்றவாறு. அதர்ப்படவென்பது , நெறிப்பட வென்றவாறு; நெறிப்படுதலென்பது அவ்வாறு மொழி பெயர்த்துச் செய்யுங் கால் அதுகிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத்தும் விரித்துந் தொகை விரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லைத், தமிழாக்கும் ஆரியர்க்குமென்பது. மொழிபெயர்த் தெனவே, பொருள் பிறழாமை பெற்றாம். வழக்கு நூலுள்ளும் மொழி பெயர்த்து யாக்கப்படுவன உளவோவெனின் - அற்றன்று; அது வேண்டுமே? வேதப்பொருண்மையும் ஆகமப் பொருண்மையும் நியாயநூற்பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங் கால் அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த் தலையும் இவற்றுக்கட் கூறினானென்பது.1 இனிப், படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணமென்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்றெனக் கொள்க.2 ஆய்வுரை : இது, வழிநூல் வகையினை விரித்துரைக்கின்றது. (இ-ள்) முதல்நூலில் விரிந்துபரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்ட வற்றை விரித்து விளக்குவதும், தொகுத்துரைத்தலும், (வடமொழி முதலிய) பிறமொழி நூல்களை அடியொற்றி அதன்வழியே மொழிபெயர்த்துரைப்பதும் என வழிநூல் நான்குவகைப்படும் எ-று. இம்மரபியற் சூத்திரத்தினை அடியொற்றியமைந்தது. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டாகும்(நன்னூல்-பாயிரம் 49) என நன்னூலுரையில் மயிலைநாதர் மேற்கோளாக எடுத்துக் காட்டிய பழஞ்சூத்திரமாகும். (99) 100. ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்1 இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். நூற்கு இலக்கணம் உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) இனி, ஒத்த சூத்திரத்தானும், காண்டிகையானும் பொருண்மேற் கூறிய வகையுடைத்தாகிப், பத்துக்குற்றமும் இன்றி, நுண்ணிதாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தந்திரவுத்தி யோடு புணருமாயின் நூலெனச் சொல்லுவர் புலவர் என்றவாறு. உரைப்பின் என்பதனை முன்னே கூட்டி நூலுரைப்பின் எனப்பொருளுரைக்க. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். பேராசிரியம் : இஃது, எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டின வழிப் பிறந்த காண்டிகையும், அக்காண்டிகையானும் விளங்காத காலத்து அதனையும் விளங்கக்கூறும் உரைவிகற்பத்ததுமாகிப், பத்துவகைக் குற்றமுமின்றி, நுண்பொருளவாகிய முப்பத்திருவகை உத்தியோடு பொருந்திவரின் அதனை நூலென்று சொல்லுப நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் புலவர் (எ-று). ஒத்த சூத்திர மென்றதனான் நூலின் வேறாகிய இரு வகைப் பாயிரமுஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்த வென்பது கொள்க. உரைப்பி னென்றதனான். உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி (தொல் .செய் : 166) வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளியலுட் கூறிப் போந்தாம் ; அங்ஙனம் வேறாகிப் பொருந்திவரு மெனப்பட்ட உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம் 1 இதனது பயம்; உரையுங் காண்டிகையுமின்றிச் சூத்திரத் தானே சொற்படுபொருள் உரைத்தலுமுண்டு, அஃது அவற்றை யொழிய ஆகா இக்காலத் தென்றலாயிற்று. உரைப்பினென்னும் வினையெச்சங் கிளத்தலென்பத னோடு முடியும். வகையென்றதனான் உரையெனப்பட்டது தானும் அக்காண்டிகையின் மெய்ப்படக்கிளந்ததே யாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிவந்த உரைவிகற்பமே யென்பதுணர்த்தியவாறு. அஃதேற் காண்டிகையென்றாற் போல இதற்குப் பெயர் வேறு கூறானோவெனின், வேண்டியார் வேண்டியவாறு. மறுதலைக்கடாஅ மாற்றமும் (தொல்-மர : 104) எல்லையின்றி இகந்துவருவனவெல்லாம் உரையுள் எழுதப் படாமையின், அதுவுங் காண்டிகைப் பகுதியேயென்பது அறிவித்தற்கு வேறுபெயர் கூறாது மெய்ப்படக் கிளந்த வகை யென்றே போயினானென்பது. மற்று இல்லதற்கும் இலக்கணஞ் சொற்லுவார்போல ஈரைங்குற்றமுமின்றி யென்றதென்னையெனின் அவற்றை எதிர் மறுத்துக்கொள்ளும் பத்துவகைக் குணமுங் கோடற்குத் தந்து கூறினானென்பது. அவை, எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவையே (தொல்-மர : 109) என்புழிச் சொல்லுதும். அல்லதூஉம் இவை கூறியவதனானே பிறிதொரு பொருள் கொள்ளப்படும் இடங்களும் உள; அவை நோக்கி அங்ஙனங் கொள்ளாதனவுந் தொகுத்து உடன்கூறினா னென்பது. அவையும் அவற்று விரிச்சூத்திரத்துட் கூறுதும். ஈரைங்குற்றமு மென்ற உம்மையை எச்சப்படுத்துப் பிறவுங் குற்றம் உளவென்பதுங் கொள்க. அவை முதனூலோடு மாறுகோடலும் யாப்பினுட் சிதைதலும் போல்வன. அவை முன்னர்ச் சொல்லும். நேரிதினென்றதனான் முதல்வன் செய்த நூலாயினும் வழி நூலாயினும் அவ் வழிநூலின் முழுவதூஉந் தெரிந் துணரும் நுண்ணுணர்வினார்க்கே முப்பத்திருவகை உத்தியும் புலனாவ தெனக் கொள்க. அவையும் முன்னர்ச் சொல்லும். வகையதாகி யென்பது புணரினென்பதனோடு முடிந்தது. (புணரினென்பது மொழிபவென்பதனோடு முடிந்தது.) ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டிற் காண்டிகைப் பொருளினை விளங்கச் சொல்லும் உரைவிகற்பத்ததாகியெனவே 1சூத்திரமுங்2காண்டிகையும்3உரையுமென மூன்றும் அவற்றோடு 4குற்றமின்மையும் 5உத்திவகையுங் கூட்ட நூலிலக்கணம் ஐந்தாயின. இதனது பயம்; இவற்றது விரிசூத்திரங்களான் உய்த்துணர் வான் எடுத்தோதித் தொகுத்துக் காட்டலாயிற்று. மற்றுக் குற்றத்தினை இடைவைத்து உத்திவகையினை ஈற்றுக்கண் வைத்த தென்னையெனின், ஈரைங்குற்றமுமின்றி வரும் இலக்கணம் முதனூற்கண் இல்லையென்பது முதல்வன் கண் (தொல்-மர: 106) என்புழிச் சொல்லுமாகலின், அவை போல முதனூற்கண் உத்திவகையும் வாரா, சிறுவரவின வென்றற் கென்பது. இனி, ஒத்தவென்றதனாற் பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமும் சூத்திரமுந் தம்மின்வேறென்றலும், அவ்விருவகைப் பாயிரவுரையுஞ் சூத்திரவுரையும் வேறெழுதப்படுமென்றலுஞ், சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கிவருவன உளவென்றலும், அவ் விருவகை யுரைக்கும் வேறாயினும் அவ்வுரைசெய்தான் பெயர் கூறுதல் முதலாகிய பாயிரவுரை கூற அமையுமென்றலுஞ் சூத்திரந்தானே பாயிரமில்லாதவழிப் பாயிரம்போல நூன்முகத்து நிற்கு மென்றலும், அங்ஙனம் நின்றவழிப் பொதுப் பாயிரமும்; சிறப்புப்பாயிரமும் உரைவகைத்தாற் பெய்துரைத்தலும், அவ்விருவகைப் பாயிரமுஞ் செய்தார் இன்னாரென்றலு மென்று இன்னோரன்ன கோடலாயிற்று. இவையெல்லாஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணமேயாதலின் ஒத்தவென்னும் மாட்டேற்றானடங்கின. அவை வருமாறு : வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரமும், வடவேங்கடந் தென்குமரி (தொல் : பாயிரம்) என்னுஞ் சிறப்புப்பாயிரமும், ஒழிந்த சூத்திரங்கள்போல நூற்பாவகவலாகி நூலின்வேறாகி இன்றியமையாவாயின. அவற்றிற்குச் சூத்திரவுரையோடு மயங்காமல் வேறுரையும் ஆண் டெழுதப்பட்டன. எழுத்தெனப் படுப (தொல்--எழுத் : 1) என்னுஞ் சூத்திரத்தினை நிறீஇ, என்பது சூத்திரமெனவும், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனவும், இவ்வதிகாரம் யாதனை நுதலியதெனவும், அவற்றிற்கு விடைகூறலும், இவ்வதிகாரம் எனைப்பகுதியான் உணர்த்தினானெனவுங்கூறி ஒழிந்த ஓத்திற்கும் இவ்வாறே சூத்திரவுரையோடு பாயிரவுரை மயங்கச் சொல்லியவாறும் அவற்றவற்றுட் கண்டுகொள்க. இனி, இவ்வுரைசெய்தார் யாரோ (வெனின்) - வென்றவழி மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரென உரை யெழுதினான் பெயர் கூறுதலுஞ் சூத்திரஞ்செய்தான் பெயர் கூறுதலோடு ஒத்த இலக்கணத்ததாயிற்று. அன்பி னைந்திணைக் களவெனப் படுவ தந்தண ரருமறை மன்ற லெட்டனுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர் (இறையனார் : 1) என்பது பாயிரமின்றித் தானே நூன்முகத்துநின்று இருவகைப் பாயிரவுரையும் பெய்து உரைக்கப்பட்டது. வடவேங்கடந் தென்குமரி என்னுஞ் சிறப்புப்பாயிரஞ் செய்தார் பனம்பாரனாரெனவும், வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான் ஆத்திரையன் பேரா சிரியனெனவும் பாயிரஞ்செய்தான் பெயர் கூறியவாறு. என்பது பாயிரம். என்னுதலிற்றோ (வெனின்)வெனப் பாயிர வுரைக்கு முகவுரை வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன. ஆய்வுரை : இது, நூலின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) பொருளின் தொடர்ச்சியால் ஒத்தமைந்த சூத்திரத்தின் பொருளை விரித்துரைக்குமிடத்துக் காண்டிகை யுரையும் அதனை மேலும் விளங்க விரித்துரைக்கும் விரிவுரையும் உடைய தாகிப் பத்து வகைக் குற்றமும் இன்றி நுண்பொருளின வாகிய முப்பத்திரண்டு வகை உத்திகளொடும் பொருந்தி வருவதனை நூல் எனச் சிறப்பித்துக் கூறுவர் நுண்பொருள்களை ஆராய்ந்து உணர்த்தவல்ல புலவர் பெருமக்கள் எ-று. ஒத்த சூத்திரம் என்றதனால் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரங்களோடும் உரைப்பாயிரத்தோடும் தொடர்புடையன நூலிற் கூறப்படும் இலக்கணங்கள் எனவும், சூத்திரம்காண்டிகை. உரை என மூன்றும் அவற்றோடு குற்ற மின்மையும், உத்திவகையும் சேர்க்க நூலின் இலக்கணம் ஐந்தாம் எனவும் விளக்குவர் பேராசிரியர். என்பது பாயிரம், என்னுதலிற்றோவெனின் என்பதூஉம் ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் உணர்த்துதல் நுதலிற்று என்பதூஉம், பாயிரங்கேட்டலாற் பயன் இதுவென்பதூஉம், இப்பாயிரஞ்செய்தார் இவர் என்பதூஉம் போல்வன பாயிரத் துக்குப்பாயிரம் எனக்கொள்க. இவையெல்லாம் ஒத்த சூத்திரம் உரைப்பின் (தொல்--மரபியல் : 100) என்புழி ஒத்த என்பதனாற் கொள்ளப்படும் (தொல்காப்பியப் பாயிரவிருத்தி) எனச் சிவ ஞான முனிவர்தரும் விளக்கம் இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் தந்த விளக்கத்தினை அடியொற்றியமைந்ததாகும். (100) 101. உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விதித்தலும் விலக்கலும் எனவிரு வகையொடு புணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே. இளம்பூரணம் : இதுவுமது. (இ-ள்) சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்துஞ். சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்கு மிடத்தும் ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல்வேண்டுமென விதித்தலும், இப்பொருள் இவ்வாறு கூறப்பெறானென விலக்கலுமாகிய இருவகையோடே கூடப் பொருந்தினவவை ஆராய்ந்து புணர்க்கவும் ஆம் என்றவாறு. இதனாற் சொல்லியது ஆசிரியன் சொன்ன சூத்திரத்தினைக் குறைபடக் கூறினானென்றல் அமையாமையானும், அவன் கூறுகின்ற பொருளினை நிலைபெறுத்தற்குப் பிறிதொன்றை விரித்தோதிய நெறியை விலக்கியும் பொருள் உரைத்துக் கொள்ளப்படுமென்றவாறு. செய்யுளியலுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே (செய்யுளியல் 159) என்று கூறுதலின் இதுவும் இலக்கணமாகக் கொள்க. பேராசிரியம் : இஃது, ஐயம் அறுத்தனுதலிற்று; என்னை? மேற்கூறிய சூத்திரம் உரைபெறுங்காற் காண்டிகையும் உரையும் வேறு வேறு பிறக்கக்கண்ட மாணாக்கள் ஒழிந்தனவும் ஒன்றொன்றனை ஒழித்துவருங்கொலென்று ஐயுற்றாற்குக் காண்டிகையும் உரையுமே கண்டாய் ஒன்று ஒன்றனை, ஒழிந்துவருவன வென்று ஐயம் அறுத்தமையின், மேலதற்கே புறனடையெனவும் அமையும். (இ-ள்) உரையெடுத்து அதன்முன் யாப்பினும்-காண்டிகையினை விளக்குங் கருத்தினாலும் அக்கருத்தின்றியும் அச்சூத்திரத்திற்கு உரைதொடர்ந்தெழுதினும் : சூத்திரத்தினை அதுவென்று சுட்டினான். முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்து (தொல்-சொல் :கிள: 39) என்பதனா னெனவுணர்க. சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்-அச்சூத்திரத்திற்கு இடையின்றிக் காண்டிகை பொருந்தச் செய்யினும் புரைதப என்பதனான் மேல் இடைபுகு மெனப்பட்ட பாயிரவுரையின்றிச் செய்த காண்டிகைக்கும் பெரும்பான்மை யெனக் கொள்க. உடன்பட என்பதனாற் காண்டிகையல்லாத முகவுரைக்கண்ணே முன்னும் பின்னுங் காண்டிகை பெய்து உரைத்தலுங் கொள்க. கொள்ளவே, முற்கூறிய ஐந்தும் ஒருங்கு வருதலும் இவ்வாறே பெற்றாம். விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு---கடாவிற்கு விடைகூறுவாரும் போலி மறுப்பாருஞ் சொல்லுஞ் சொற்பகுதியோடு: வகை யென்றதனான் அவ்விருபகுதியுங் காண்டிகைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ள வருமெனவும் உரைக்கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவருமெனவும் கொள்க.1 அஃதேற் கூற்றினாற் கோடன், மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய் (தொல்- மர : 104) என வருகின்ற சூத்திரத்திற் பெறுதுமெனின், அற்றன்று; அது பிறன்கோள் பற்றி மறுதலைக்கடாஅ மாற்றமுங் கூறுதற்குச் சொல்லினான்; இஃது அன்னதன்றி அறியாது வினாவுந் துணையே யாகலின் வேறென்பன. விடுத்தலெனவே வினாவினை விடுத்தல் பெற்றாம். விலக்கலெனவே அஃதல்லாப் போலியை விலக்குதலென்பது பெற்றாம். புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே --- காண்டிகை யிரண்டும் உரையிரண்டுமென்று வருகின்ற நான்கன்கண்ணும் இடை அந்தரமின்றிப் புணர்க்கவும்படும் அவ்விருபகுதியும் (எ-று). அஃதாவது, காண்டிகைப்பகுதி இரண்டற்கும் விடுத்தலும் விலக்கலும் உடையோர் குறிப்பினாற் கொள்ளவைத்தலும், ஒழிந்த உரையிரண்டன்கண்ணும் அவை கூற்றினாற் கொள்ள வைத்தலுமென உணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? காண்டிகையும் உரையும் ஒன்று ஒன்றனை ஒழித்தும் வருமென்றமையின் ஒழியாதுவருதல் உடன்பட வென்றதனால் தழுவப்பட்டது. இவற்றிற்கு உதாரணமாமாறு தத்தம் விரிச்சூத்திரத்துட் சொல்லுதும். ஆய்வுரை : (இ-ள்) : சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்தும் சூத்திரப் பொருளை யாவரும் குற்றமற ஏற்றுக் கொள்ளும் முறையில் சூத்திரப்பொருள் விளங்கக் காண்டிகை யுரையினை இயைத்துரைக்குமிடத்தும் இப்பொருளை இவ்வாறு கூறவேண்டுமென விதித்தலும், இவ்வாறு கூறலாகாது என் விலக்குதலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவன ஆராய்ந்து கூட்டியுரைக்கப் பெறுதலும் நூலின் இலக்கணமாம் எ-று. நூலெனப் படுவது நுதலிய பொருளை ஆதிக் கண்ணே அறியச் சுட்டி ஓத்துமுறை நிறுத்துச் சூத்திரம் நிரைஇ முதல்வழி சார்பென மூவகை மரபின் தொகைவகை விரியின் வசையறத் தெரிந்து ஞாபகம் செம்பொருள் ஆயிருவகையின் பாவமைந் தொழுகும் பண்பிற் றாகிப் புணர்ச்சியின் அமைந்து பொருளகத் தடக்கித் தனக்குவரம் பாகித் தான்முடி வதுவே, எனவும் சொன்னாராகலின், அன்றியும், நூலெனப் படுவது நுதலிய பொருளை முதலிற்கூறி, முதல்நடு இறுதி மாறுகோள் இன்றித், தொகைவகை விரியிற் பொருள்வைத்துப். பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்னும் உரையில் பொருள் விளங்கும் நுண்மை வரம்பாக நோக்குடையது; என்னை? நூலெனப் படுவது நுவலுங் காலை நுதலிய பொருளை முதலிற்கூறி முதல்நடு விறுதி மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றமைந்த உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே என்றாராகலின்; இவ்வகை சொல்லப்பட்டது நூலென்ப (இறையனார் களவியல் சூத்திரம்1) எனக் களவியலுரையாசிரியர் நூலின் இலக்கணத்தை விரித்துரைப்பர். அவர் இவ்வுரையில் இரண்டாவதாக எடுத்துக்காட்டிய நூற்பா தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் சூத்திரத்தின் பாடவேறுபாடுடைய வேறு வடிவமாக அமைந்துள்ளமை காணலாம். இம்மரபியற் சூத்திரத்திற்குறிக்கப்பட்ட காண்டிகை யென்னும் உரைக்குரிய பெயர் தமிழிலக்கண நூல்களில் மட்டுமே பயின்று வழங்குகின்றது. இச்சூத்திரத்தின் மூன்றாமடிக்கு, விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு எனப் பாடங் கொண்ட பேராசிரியர் கடாவிற்கு விடைகூறுவாரும் போலி மறுப்பாரும் சொல்லும்சொற் பகுதியொடு என உரைவரைந்தார் வகை என்றதனான், அவ்விரு பகுதியும் காண்டிகைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ளவரும் எனவும், (விருத்தி) உரைக் கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவரும் எனவும் கொள்க எனவும், இவ்வியல் 109)--ஆம் சூத்திரத்து மறுதலைக்கடாஅ மாற்றமும் உடைத்தாய் என்றது பிறன்கோள் கூறல் பற்றியது, எனவும், இச் சூத்திரத்து விடுத்தலும் விலக்கலும் உடையோர் என்றது, அன்னதன்றி அறியாது வினாவுதலும் உண்மையல்லாப் போலியை விலக்குதலுமாய்ச் சூத்திரப் பொருளை விளக்குதற்கு வந்தது எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு உளங் கொளத்தக்கதாகும். நூலாவது மூவகைத்தாய், மூவரின் நடைபெற்று, நால் வகைப் பயத்ததாய், எழுவகை ஆசிரியமதவிகற்பத்ததாய், பத்து வகைக்குற்றத்திற்றீர்ந்து பத்துவகை மாண்பிற்றாய் பதின்மூன்று வகையான வரைபெற்று முப்பத்திரண்டு தந்திரவுத்தியொடு புணர்ந்து வருவது. அவற்றுள் மூன்று வகையாவன தந்திரம், சூத்திரம், விருத்தி என இவை. மூவரின் நடைபெறலாவது, அம்மூன்றும் நடத்துவார் மூவர் ஆசிரியர் எனக் கொள்க. நால்வகைப் பயனாவன அறம் பொருள் இன்பம் வீடு என்பன. எழுவகை ஆசிரியர் மதவிகற்பமாவன: உடன்படல், மறுத்தல் என்பன முதலாகவுடையன எனக் கொள்க. பத்துவகைக் குற்றமாவன: குன்றக்கூறல் முதலாகவுடைய எனக் கொள்க. பத்துவகை மாண்பாவன, சுருங்க வைத்தல் முதலாகவுடையன எனக் கொள்க. பதின்மூன்றுவகை உரையாவன: சூத்திரம் தோற்றல் முதலாகவுடையன எனக் கொள்க. முப்பத்திரண்டு தந்திர வுத்தியாவன,நுதலிப்புகுதல்...........cŒ¤Jzuit¤jš’எdஇtபாடலனா®உரை”என்பJயாப்பருங்கலவிருத்âயாசிரியர்தUம்நூலைப்பற்¿யவிளக்கமாகு«. (101) 102. மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளோடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித் துளக்கல் ஆகாத் துணைமை யெய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகை aனும்gயன்தெரிòiடயது சூ¤திரத்திaல்பெனயhத்தனர்புyt®. என்னுதலிற்றோ எனின், நூற்கு அங்கமாகிய சூத்திரத் திலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என நால்வகையினும் சொல்லப் பட்ட பொருளோடு, சிலவெழுத்தினான் இயன்ற செய்யுட்டாகி உரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்னகத் தடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்க முடைத்தாகி, கெடுக்கலாகாத துணைச்சூத்திரங்களை யுடைத்தாகி வரையறுக்கப்படாத அரிய பொருளையுடைத்தாகிப் பல வாற்றானும் பயனை யாராய்தல் உடையது சூத்திரம் எனக் கூறினார் புலவர் என்றவாறு. அளக்கலாகா அரும்பொருளாவது பலமுகத்தானும் பொருள் கொள்ளக்கிடத்தல். செய்யுளியலுள், சூத்திரந் தானே ஆடிநிழலின் அறியத்தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்கி யாப்பினுள் தோன்றயாத்தமைப் பதுவே. (செய்யுளியல். 162) என்பதூஉம் இதற்கிலக்கணம். பேராசிரியம் : இது, நிறுத்தமுறையானே சூத்திரமாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் கிளந்து எடுத்த யாப்பின் உட்பொருளோடு சூத்திரந்தானே, ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே (தொல்-செய்: 169) என மேற் செய்யுளியலுள் விதந்தோதிய இலக்கண முடைத்தாய். எனவே, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்து முதற் கண்ணே வினையியலுட் கூறப்படும் இலக்கணத்தினை ஆண்டு ஓர் உபகாரப்படக் கூறியதுபோல, அடிவரையின்மைக்கு ஆண்டுக் கூறியதல்லது இச் சொல்லப்பட்ட இலக்கணம், ஈண்டு இனிக் கூறுகின்ற இலக்கணத்தோடு கூடி மரபெனவேபடும் என்றானாம்.1 ஆண்டுப் பொதுவகையாற் கூறிய நூலிற்கும் இஃதொக்கும். என்னை? பல சூத்திரந் தொடர்ந்து நூலாகி ஈண்டே மரபு கூறப்படுதலின். உரையாயின் அன்னதன்றி நால்வகையுரையுள் ஏற்பது பகுதி வேறுபடும் மரபு கூறுகின்றமையின் அது செய்யுளியலுட் கூறியவாறு போலாது வேறெனவேபடும் ஈண்டென்பது இனி, முற்கூறிய பாயிரஇலக்கணத்தினை இன்றியமையாது சூத்திரமென்றற்கும் இதுவே ஓத்தாகக் கொள்க; என்னை? மேற் புறத்தினின்று மேற்கிளந் தெடுத்த யாப்பெனவே படுமாகலினென்பது. இதனது பயம்; பாயிர இலக்கணங்களோடு பொருந்தச் சூத்திரஞ் செய்த லென்பதாயிற்று: இஃது ஒப்பக்கூற (665) லென்னும் உத்திவகை. மேற்கிளந்தெடுத்த இலக்கணமாவது, ஆடி நிழற்போல் பொருளானுந் தேர்தல்வேண்டாமற் பொருட்பெற்றி உணர் கின்றாங்குச் சூத்திரத்தொடருள் இலக்கியமின்றாயினும் அதனை இதுகேட்டான் காணுமாற்றாற் செய்தலாயிற்று. இனி, மேற்கிளந்தெடுத்த பாயிர இலக்கணம் சூத்திரத் தோடு பொருந்துங்காற் பொதுப்பாயிர இலக்கணம் பொருந்தா, சிறப்புப்பாயிர இலக்கணம் எட்டுமே பொருந்துவனவெனக் கொள்க. அஃதென்னை பெறுமாறெனின், மேற்கிளந்த யாப் பென்னாது எடுத்த யாப்பென்றதனானே ஒரு நூற்குச் சிறப்புவகை யான் இன்றியமையாதாகி எடுத்துக்கொள்ளப்படுவது. வடவேங்கடந் தென்குமரி (பாயிரம்) என்றாற்போலும் சிறப்புப்பாயிரமாகலானும், பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுமென்றற்கும் அங்ஙனங் கூறப்பட்டது. சில்வகை எழுத்தின் செய்யுட்டாகி ஆடிலிநிழன் அறியச் செய்யுங்கால் அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடை கிடப்பச் செய்யப்படாது பொருட்கு வேண்டுஞ் சில சொல்லாற் செய்யுஞ் செய்கைத்தாகி; செய்யுளென்றான் அடிவரைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட் டிற்றாகிய அடிவரைப் பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும்; வெண்பாவானும் செய்யவும்படுஞ் சூத்திரமென்றற்கென்பது என்னை? மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தமையானுஞ், சின்மென் மொழியிற் றாய பனுவல் வெண்பாட் டாகி வருமாத லானு மென்பது. சொல்லுங் காலை உரையகத்து அடக்கி --- பொருளானும் போலியானுஞ் சொல்லுவார் சொல்லுங்கால் அவ்வுரை யெல்லாந் தன்னகத் தடக்கி; நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி --- பருப் பொருட்டாகிய பாயிரம் போலாது நுண்பொருட்டாகிய பொருள்கேட்டார்க்கு வெள்ளிதன்றி உள்ளுடைத்தாகி; துளக்க லாகாத் துணைமை எய்தி --- முன்னும் பின்னுங் கிடந்த சூத்திரங்களானே தன்னுட் பொருள் இன்றியமையாதாகலெய்தி; எனவே, ஒன்றொன்றனை இன்றியமையாத உறுப்புப்போலச் செய்யல் வேண்டுமென்றவா றாயிற்று. அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி அளத்தற்கரிய பெரும் பொருட்டாகி; பல்வகையானும் பயன்தெரி புடையது --- பலவாற்றானும் பொருள் விளங்க வருவது; சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர் --- இவையெல்லாஞ் சூத்திரத்திலக்கணமென்று முதனூல்செய்த ஆசிரியராற் சொல்லப்பட்டன (எ --- று) இஃதியல்பெனவே இவற்றிற் சிறிய வேறுபட்டன விகார மென்றானாம். உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை (தொல்-எழுத்து-தொகை : 21) என்றவழி, யகரமும் உயிரும் வருவழியெனவே இது நிலைமொழித் தொழிலென்பது, ஆடி நிழலின் அறியத் தோன்றிற்று. இனி, நிலைமொழித்தொழில் வேறு கூறினமையின். மயங்கா மரபி னெழுத்துமுறைகாட்டி (தொல்-பாயிரம்) எனப் பாயிர இலக்கணத்துடன் பொருந்துவதாயிற்று. இனி, எண்வகையாற் பரந்துபட்ட புள்ளியீற்றுச் சொல்லினையெல்லாம் உகரமொடு புணரும் புள்ளியென அடக்கினமையிற் சில்வகை யெழுத்தின் செய்யுளுமாயிற்று. யகரமும் உயிரும் வருவழிஇயற்கையெனவருமொழிப் பரப்பெல்லாம் அடக்கினமையின் அதற்கும் இஃதொக்கும்; இதனைப்பற்றி யெழுந்த பொய்ப்பொருளும் மெய்ப்பொருளும் பலவாகலின் உரையகத் தடக்கலும் உடைத்தாயிற்று. தொகைமரபி னுள்ளும் உயிர்மயங்கியலி னுள்ளும் புள்ளிமயங்கியலி னுள்ளும் குற்றியலுகரப் புணரியலினுள் ளும் பரந்துபட்ட பொருளினை நுழைந்து வாங்கிக்கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததூஉ மாயிற்று. இச் சூத்திரம் பொருளுரைத்தவழியும் வெள்ளிதன்றி உள்ளுடைத் தாகலின் நுண்மையுடைத்தெனவும் பட்டது. குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் (தொல்-எழுத்து தொகை : 18) என்பதூஉம் ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் (தொல்-எழுத்து புள்ளி : 1) என்பதூஉம் முதலாயவற்றிற்கும் இஃது இன்றியமையாதாகலும் இதற்கு அவை இன்றியமையாவாகலும் உடைமையின், துளக்கலாகாத் துணைமையெய்தியதூஉமாயிற்று. இருபத்து நான்கீறும் இருபத்திரண்டு முதலும்பற்றி எழுந்த மொழி களெல்லாம் வேற்றுமைக் கண்ணும் அல்வழிக்கண்ணும் இருமொழித்தொழிலும் ஒருவகையால் தொகுத்துக் கூறினமையின் அளக்கலாகா அரும் பொருட்டாதலும் பெற்றாம். இங்ஙனம் வருதல் இயல்பெனவே சிறிய வேறுபட்டு வருவன உளவாயின் அவையும் அமையுமென்றானாம். அவை: அந்நா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே (தொல்-சொல்-வினை : 11) என்றாற்போல்வனவும் பிறவும் இலேசுச் சொல்லும் இயல்பின்றி விகாரமெனப்படும். ஆய்வுரை : இது, நூலுருபாகிய சூத்திரம் ஆமாறு உணர்த்துகின்றது (இ-ள்) மேற்கூறப்பட்ட தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழிபெயர்ப்பு என்னும் நால்வகையினும் கூறப்பட்ட பொருளோடு, சிலவெழுத்தினால் இயன்ற யாப்பினதாய் அதன் பொருளை விரித்துரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல் லாந் தன்னகத்தடக்கி, நுண்ணிய பொருண்மையுடன் பொருந்திய விளக்கமுடையதாகி யாவராலும் அசைக்கவொண்ணாத (மறுக்க வொண்ணாத) துணையொடு (நூற்சான்றுகளோடு) பொருந்தி, இவ்அளவினது என அளக்கவொண்ணாத அரிய பொருள்களை யுடையதாகிப் பலவகையாலும் பயனை ஆய்ந்து தெளிதற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இலக்கணமாகும் என வற்புறுத்துக் கூறுவர் ஆசிரியர் எ-று. (102) 103. பழிப்பில் சூத்திரம்பட்ட பண்பிற்ப கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். காண்டிகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று (இ-ள்) குற்றமில்லாத சூத்திரஞ்சொன்ன இயல்பினான் மறைவின்றி விளக்குவது காண்டிகையாமென்றவாறு. பேராசிரியம் : இது, முறையானே காண்டிகையாமாறுணர்த்துதல் நுதலிற்று; (இ-ள்) குற்றமில்லாத சூத்திரந் தனதுட்பட்ட இலக் கணத்துள் ஒன்றுங் கரவாது முடியச்செய்வது காண்டிகையாம், (எ-று). பழிப்பில் சூத்திர மென்றதனாற் காண்டிகை செய்யத்தகா தென்று இகழ்ச்சிப்படப் பரந்தன உளவாயின் மறுத்துச்செய்க வென்பதாம். இதனை வருகின்ற காண்டிகைக்கும் அகலவுரைக்கும் ஏற்பித்துக் கொள்க. உதாரணம் : எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன அகரமுத னகரவிறுவாய் முப்பஃது என்று சொல்லுவார் ஆசிரியர், சார்ந்து வரவிலக்கணத்த மூன்று மல்லாத இடத்து (தொல். எழுத்து. சூ : 1) எனவரும், பிறவும் அன்ன. இனி மறுத்துச் செய்யுங்கால். வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் (தொல்-புறத் : 5) என்பது தெய்வச்சிறப்பினை அறியுஞ் சிறப்போடு வெவ் வாயுடைய வேலனது வெறியாட்டினை ஆடிய காந்தளுமென்றாற் போல வருவன பலவுங் கொள்க. இங்ஙனங் கூறிய உதாரணங் காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்களென்பது கருத்து. அஃதேல், உதாரணத்தோடு வருங் காண்டிகையிலவோ வெனின்,--- அது வருகின்ற சூத்திரத்துட் சொல்லுதும். கரப்பில்ல தென்னாது1 முடிவதென்றான், அதனாற் பரந்துபட்ட சூத்திரத்தினை அங்ஙனம் மறுத்துச் செய்யாது தொகுத்துக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்கா மற் கரந்துசெய்தலும் உண்டென்பது கொள்க ; அது, வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் (தொல்-புறத் : 5) என்பது முதலாக இக்கூறப்பட்ட இருபத்தொரு துறையுங் கரந்தை யெனப்படுமென்றாற்போல மாட்டென்னுஞ் செய்யுளு றுப்பினைத் தோற்றுவாய் செய்துவிடுதல். பிறவும் அன்ன. ஆய்வுரை : இது காண்டிகையாவது இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) குற்றமில்லாத சூத்திரம் சொன்ன இயல்பினால் மறைப்பின்றிப் பொருளை விளக்குவது காண்டிகையாகும் எ-று) (103) 104. விட்டகல்வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்ந்தெறித் ததுவே. இளம்பூரணம் : இதுவுமது (இ-ள்) சூத்திரத்திற்படுஞ் சொற்பொருளை விட்டு நீங்குதலின்றி விரிவோடே பொருந்திக் குறித்த சூத்திர முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக் காட்டினானும் பொருந்தியாங்கமையும் பொருணெறியை யுடைத்துக் காண்டிகையென்றவாறு. விட்டகல்வின்றிவிரிவொடு பொருந்தலாவது மிக அகலாமை இம்மனை நெருப்புடைத் தென்றது சூத்திரப்பொருள்; புகையுடைத் தாதலானென்பது ஏது? அடுக்களைபோலவென்பது எடுத்துக் காட்டு. இவ்வகையினாற் சூத்திரப் பொருளுரைக்க வென்றவாறு. பேராசிரியம் : இது, மேலதற்கொரு புறனடை; எய்தியதன்மேற் சிறப்பு விதியுமாம் என்னை? காண்டிகையை மேலதனோடு இருவகைய என்றமையின். (இ-ள்) : விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தி1 சொற்படு பொருள் சொல்லுங்கால் தொடர்மொழிகளைத் தொகைநிலை பயனிலை முதலாயவற்றாற் பகுத்துக்கூறாது பகுத்துக்கூறும் உரைவிகற்பம் போன்று மற்றப்பொருள் தோன்றி; விடுத்த லென்பது, கண்ணழிவு; அக்கண்ணழிவான் அகன்றுபடுதலின்றி விட்டகல்வெனப் பட்டது. அங்ஙனம் அகன்றுபடுதலின்றி யெனவே, இஃது இன்ன வேற்றமைத்தொடர் இஃது இன்ன பயனிலைத்தொட ரென்றாற்போலச் சொன்னிகழ்ச்சியுடைத் தாயின் அஃது உரையெனப்படுமென்றானாம். சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா ---இது நியமச் சூத்திரம் அதிகாரச்சூத்திர மென்றாற்போல முதற்கட் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வாறாகி முடிந்த முடிபு சொல்லுதல் பொருட்டாக; ஏது நடையினும் ---நியமச் சூத்திர மென்றானும் பிறிதொன்றென்றானும் மேற்கொண்டக்கால் இன்னது காரணத்தினெனக் காரணங் கூறும் வழக்கினானும், எடுத்துக் காட்டினும் --- அங்ஙனங் காரணங் கூறியக்கால் அதற் கேற்பது ஒன்றாயினும் உதாரணமாயினும் வழிநூற்காயின் முதனூல் எடுத்துக் காட்டுதலாயினும் ஒன்று பற்றியும்; மேவாங்கமைந்த மெய்ந்நெறித்து அதுவே சூத்திரஞ் செய்த ஆசிரியன் வேண்டியதே சொல்லிவிடும் பொருளிலக்கணத்திற்று மேற்கூறி வருகின்ற காண்டிகை (எ-று). இது, மெய்ந்நெறி யென்பது சூத்திரத்துச் சொல்லிற் கருதிய பொருளிலக்கணம். அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பினல்லது சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல்லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் அறிய வேண்டுவன வெல்லாஞ் சொல்லாரென்பதுகருத்து. இதனை ஈற்றுக்கண் வைத்ததனானே வருகின்ற உரையும் இங்ஙனம் விட்ட கல்வின்றி வருதலுடைத்தெனக் கொள்க. உதாரணம் : இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல்-சொல்-கிள : 19) என்பது தன்றன்மையான் நிகழ்பொருளை இன்னதன்மைத்தென்று சொல்லுக வென்றவாறு. அது நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி யுளரும் என்றாற் போல்வன இதற்குக் கருத்தோதுதல் பாயிரவகையாற் பெறுமென்பது. உரைப்பிற் காண்டிகை (தொல்-மர : 98) என்புழிக் கூறிவந்தாம். மற்று, உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட்டின்கண், அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற்றுக்கண் அவ்விருதிணைப் பொருண் மேலும் இசைக்குஞ் சொல்லினை (தொல். சொல்: 1) யென்றக்காலும், வேற்றுமை யெனப்பட்ட பொருள் ஏழு என்றக்காலும் உதாரணம் காட்டுமாறென்னை அவற்றவற்றுப் பின் வேறு சூத்திரங்களான. ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி எனவும், ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று (தொல்-சொல்-கிள : 3) எனவும், அவைதாம், பெயர்ஐ யொடுகு இன்அது கண் (தொல்-சொல்-வேற் : 3) எனவும் உதாரணங் கூறலாமெனின், --- அவை துளக்கலாகாத் துணைமை யெய்தி நின்றமையின் அவ்வாறு உதாரணம் ஆண்டுக் காட்டாக்காலும் அமையும், அவற்றைப் பிற்கூறுமா கலினென்பது: அல்லதூஉம் எதிரது நோக்கி உயர்திணைச்சொன் மூன்றும் அஃறிணைச்சொல் இரண்டுங் காட்டியக்காலும் இழுக்கன்றென்பது, ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். ஆய்வுரை : இது, மேற்குறித்த காண்டிகைக்கு எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) சூத்திரத்திலமைந்த தொடர்மொழிப் பொருளைக் கண்ணழிவு செய்து தொகைநிலை பயனிலை முதலியவற்றாற் பகுத்துச் சூத்திரப்பொருளை விரித்துரையாமல், அதே நிலையிற் பகுத்து விரித்துக்கூறும் உரைவிகற்பம் போன்று சூத்திரப் பொருள் விரிந்து தோன்றும்படியாத்தசூத்திரப் பொருளை முடித்து நிறுத்துதற் பொருட்டுக் காரணத் தொடரை எடுத்துக் கூறும் நெறியாலும் அதற்குரிய எடுத்துக் காட்டாகிய உதாரணத்தாலும் சூத்திரஞ் செய்த ஆசிரியன் தான்விரும்பிய வண்ணம் பொருந்தியமைந்த பொருள் நெறியையுடையது அக்காண்டிகை எ-று. விட்டு அகல்வு என்றது, பதப்பொருளைத் தொகைநிலை, பயனிலை முதலியவற்றாற்பகுத்து, இஃது இன்ன வேற்றுமைத் தொடர், இஃது இன்ன பயனிலைத்தொடர் என்றாற் போலச் சூத்திரச் சொற்பொருளை விரித்துக் கூறும் முறையில் அமைந்த அகலவுரையினை, அவ்வுரையின் இயல்பு அடுத்த நூற்பாவில் விரித்துரைக்கப்படும். இங்குக் கூற எடுத்துக்கொண்ட அகலவுரை போன்று பொருள்தானே விரிந்து தோன்றும்படி தொடர்ப் பொருளைப் பகுத்துரைக்கும் தன்மையது என்பார், (விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி என்றார்.) விடுதல் --- பதப்பொருளைப் பிரித்துரைத்தல். இது கண்ணழித்தல் எனவும் வழங்கப்படும். அகல்வு---பொருள் அகலமுடையதாய் விரிந்தமைதல். விட்டகல்வு இன்றி எனவே, சூத்திரம் கூறும் பொருளைத் தொகுத்துக்கூறி முடிப்பதல்லது சூத்திரத்திலுள்ள சொல்லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் முதலாக அறிய வேண்டுவன வெல்லாம் இக்காண்டிகையில் இடம் பெறா என்றாராயிற்று. இங்குக் காண்டிகை என்றது, சூத்திரத்து உட்பொருளைக் கற்போர் எளிதிற் கண்டுணரும் முறையில் வரையப்படும் பொழிப்புரை இது, பிண்டப் பொழிப்பும் கண்ணழித்துரைக்கும் பொழிப்பும் என இருவகைப்படும். அவற்றுள் பிண்டப் பொழிப் பாவது சூத்திரப்பொருளைத் தொகுத்து வரைவது, கண்ணழித் துரைக்கும் பொழிப்பாவது சூத்திரப் பொருளைத் தொகுத்து வரைவது, கண்ணழித்துரைக்கும் பொழிப்பாவது பொருள் நிற்கும் சொற்றொடரைப் பொருள் வகையாற் பகுத்தெடுத்துப் பொருள் கூறுவது இதனை வார்த்திகம் என்பர் வடநூலார். மெய்கண்டார் தாம் இயற்றிய சிவஞான போதத்திற்கு வார்த்திகம் என்னும் இப்பொழிப் புரையினை வரைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இங்ஙனம் (பிண்டப் பொழிப்பும் வார்த்திகப் பொழிப்பும் எனப்) பொழிப்புரை இருவகைப்படும் என்பது, பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்ட மாக்க கொண்டுரைப் பதுவே எனவும், பாடங் கண்ணழிவு காரண மென்றிவை நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே எனவும், ஓதியவாற்றான் அறிக (சிவஞான பாடியம் சூ-1) எனச் சிவஞான முனிவர் தரும் விளக்கம், தொல்காப்பியம் மரபியல் 103, 104 -ஆம் சூத்திரங்களுக்குப் பேராசிரியர் வரைந் துள்ள உரைப்பகுதியைத் தழுவியமைந்ததாகும். (104) 105. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே. இளம்பூரணம் : உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றியமையாதன வெல்லாங் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு. பேராசிரியம் : இது மேல், ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளர்ந்த வகைய தாகி (தொல்-மர: 98) என நிறுத்தமுறையானே காண்டிகையினை மெய்ப்படக் கிளந்தவகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேல், பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின் (தொல்-மர: 101) வருதலும், அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும்1 உடைத்தாகி வருதலுமென இருவகையும் உடைத்தென்றான்; இனிச் சூத்திரத் துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது. பொருந்துவனவெல்லாம் அதனோடு கூட்டிச் சொல்லுதல் உரையெனப்படும் (எ--று), அவை. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல்-சொல்-கிள : 19) என்றவழி எடுத்தோத்தின்றி நிலம் வலிதாயிற்றென்னும் வழுவமைதி கோடலும், ஒத்த சூத்திரம் (653) என்றவழிப், பாயிரம் ஒத்த சூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க. எல்லாமென்றதனாற் சூத்திரப்பொருளேயன்றி எழுத்துஞ் சொல்லும்பற்றி ஆராயும் பகுதியுடையவாதல் வேண்டும் அவ்வுரையென்பது கொள்க. இனி, மேற் காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற் கேற்பனவெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை 1ஏதுவும் 2நடையும் 3எடுத்துக் காட்டுஞ் 4சூத்திரமுஞ் சுட்டுதலு மென்று இன்னோரன்ன கொள்க. இவையெல்லாந் தழுவுதற்குப் போலும், இன்றி யமையா தியைபவை யெல்லாம் என்று எடுத்தோதுவானாயிற்றென்பது. ஆய்வுரை : இஃது உரையின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) சூத்திரத்திற் கூறப்படும் பொருளை விளக்குமளவில் நின்று விடாமல் அப்பொருளொடு தொடர்புற இன்றியமையாது அவ்விடத்திற் கொணர்ந்து உரைக்கத்தக்கனவெல்லாம் சூத்திரப் பொருளொடு பொருந்தக் கூட்டியுரைப்பது உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும் எ-று. குற்றமில்லாத சூத்திரப் பொருளைத் தனக்குரிய இலக்கணத்துள் ஒன்றும் மறையாது முடித்துக் கூறுவதும், அதனையே ஏதுவும் எடுத்துக் காட்டும் தந்து விளக்குவதும் எனக் காண்டிகை இருவகைப்படும் என முன்னுள்ள இருசூத்திரங்களாற் புலப்படுத்திய ஆசிரியர், அவ்விருவகையுடன் சூத்திரப் பொருளொடு தொடர்புடையனவாய் இன்றியமையாது கொணர்ந்துரைத்தற்குரிய எல்லாப் பொருள்களையும் கூட்டி யுரைப்பது உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும் என்பதனை இச்சூத்திரத்தால் தெளியவிளக்கினார். எனவே, சூத்திரப் பொருளை விளக்குமளவில் நின்று விடாமல் அப்பொருளொடு தொடர்புடைய எல்லாப் பொருள்களையும் கொணர்ந்துரைக்கும் உரையே அகலவுரையெனப்படும் என்பது புலனாம். எழுத்தும் சொல்லும் பற்றி ஆராயும் ஆராய்ச்சியும் இவ்வுரையில் இடம் பெறும் என்பார், இன்றியமையாது இயைபவையெல்லாம் ஒன்றவுரைப்பது உரையெனப்படும் என்றார். இவ்வுரை அகலவுரை எனவும் விருத்தியுரை யெனவும் வழங்கப்பெறும். (105) 106. மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூ லானும் ஐயமு மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். இளம்பூரணம் : இதுவுமது. (இ-ள்) உரையாவது, மறுதலைக்கடாஅ மாற்றமு முடைத்தாக, ஐயப்பட்டு நிற்றலு மருண்டு நிற்றலு நீக்கி, தன்னூலானாதல், அப்பொருண் முடிவுறக்கூறின நூலானாதல் தெளியவொரு பொருளை யொற்றுமைப்படுத்து, இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு. மாற்றமுமுடைத்தாகி யென்றவும்மையால் விடையுமுடைத் தாகி யென்க. பேராசிரியம் : இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத்தென்பது அறியுமாற்றான் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்---மறுதலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை கூறுதலும் உடைத்தாய்: தன் நூலானும் --- உரையெழுதுவானாற் கூறப்படுகின்ற உரை தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும், இதனானே உரையின்றிச் சூத்திரமே நூலெனப்படுவதூஉ மாயிற்று; முடிந்த நூலானும் அதன் முதனூலானும்; முடிந்தநூலென்பது இணைநூலென்பாரும் உளர்: இணைவன கூறத் தான் கூறானாயின் அது குன்றக் கூறலென மறுக்க. அங்ஙனங் கொள்ளும் பொருண்மையுளவாயின் அவை, சூத்திரத் துட்பொரு ளன்றியும் என்பதனான் அடங்கும். மற்று, முதனூலாற் கூறிய பொருள் சில குன்றக்கூறினான் போல முடிந்த நூலாற் கொள்க. என்றதென்னையெனின் அற்றன்று; இப்பொருண்மை முடிந்த நூலினும் உண்டென்று எடுத்துக் காட்டப்படுமென்றா னென்பது; இது, மேல்; ஏது நடையினு மெடுத்துக் காட்டினும் (தொல்-மர: 102) என்றவழிப் பெறுதுமாயினும் முதனூலல்லது எடுத்துக் காட்டப் பெறாஅரென்றற்கு ஈண்டு வரைந்து கூறினானென்பது; எனவே, இணைநூலும் அவற்று வழிநூலும் எடுத்துக் காட்டுங்கால் தனக்கு முதல்வராயினாரை நாட்டி அவர் கருத்தே பற்றிப் பிறர் செய்தாரெனினல்லது பிறர்மேல் தலைமைநிறீஇ அவர் கருத்துப்பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ஙனங் கூறின் அவர் நூற்கே உரையெழுதுவா னல்லனோவென மறுக்க. இனி, வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவ (தொல்-மர : 94) னாற் செய்யப்பட்ட முதனூற்காயின் முடிந்தநூல் எடுத்துக் காட்டுத லென்னும் இவ்விலக்கணமின்றென்பது கொள்க; ஒரு தலையன்மையென்னும் உத்திவகைபற்றி யென்பது. ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீங்கி---ஐயவுணர்வும் பொய்யுணர்வுஞ் செம்பொருளினான் நீக்கி; தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ---அச்செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றெனவும் இரட்டுறுதனீக்கி ஒற்றுமை கொளுத்தியும்; துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்---கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்து மாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரையிலக் கணம் (எ-று). மறுதலையும் மாற்றமுமென்பது கடா விடை; ஐயமும் மருட்கையுஞ் செவ்விதினீக்கல் ஒருபுடை யொப்புமையுடைய போலியும், அதற்கு ஒன்றும் இயைபில்லாத பொய்ப்பொருளு மெனப்படும். பிறிது பிறிதேற்றலு முருபுதொக வருதலும் (தொல்-சொல்-வேற். ம : 21) என்றவழிப் பிறிதென்று ஒருகாற் சொல்ல ஆறாமுரு பெனவும், பின்னொருகாற் பிறிதென ஒழிந்த உருபெல்லாந் தழுவு மெனவுஞ் சொல்லுதல் போலியெனப்படும்; என்னை? அவ்வாறாவதனோடு ஏழாமுருபும் பிற்வுருபேற்கும் வழக்குள்வழி ஒன்றனைக் கொண்டமையின் அஃது ஓருபுடை யொப்புமை யுடைத்தாகி அப்பொருளன்றெனவும்படாது மற்றொன்றினைக் கோடல் பொருளெனத் துணியவும்படாது ஐயவுணர்வு செய்தமையின், அது போலியாயிற்று. இனிப் பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் என்னும் இரண்டும்மையும் பொருளிலவென்று பிறிது பிறி தேற்றலும் உருபுதொக வருவதற்கண்ணேன்று பொருள் கூறுதல் போல்வன, சூத்திரத்தின் கருத்தறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கை யெனப்படும். இவ்விரண்டனையும் நீக்கி உண்மை உணர்த்துதல் உரையெனப்படுவதாயிற்று. நிற்றலென்பது நிற்க அவ்வுரை யென்றவாறு. தன் நூலானும் முதனூலானும் ஐயமும் மருட்கையும் நீங்குங்கால் அவற்றுட் கிடந்த செம் பொருளானே நீக்கப்படுமென்பது இரண்டு கண்ணானுங் கூர்மையாற் பார்த்தா னென்பது போலக் கொள்க. ஆய்வுரை : இஃது, எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) சூத்திரப் பொருளை இடைமறித்து வினவும் வினாவும் அவ்வினாவிற்கு மறுமொழியாகிய விடையும் உடையதாய்த் தான் உரை செய்தற்குரிய நூலின் சூத்திரத்தாலும் அந்நூலின் பொருண்மை முற்ற முடிந்த நூலாகிய முதனூலாலும் ஐயவுணர்வையும் திரிபுணர்வையும் அறவே நீக்கிக் கவர்படு பொருளின்றித் தெளிவாக ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து இதற்கு இதுவே பொருள் எனத்துணிந்துரைக்க என அறி வுறுத்துவர் புலவர் எ---று. மறுதலைக் கடாஅ .. இடைமறித்துத் தடை செய்வதாகிய வினா. மாற்றம் --- அவ்வினாவிற்கு மறுமொழியாகிய விடை. தன்னூல் என்றது, உரையாசிரியன் தான் உரையெழுதத் தேர்ந்து எடுத்துக் கொண்ட நூலினை, முடிந்த நூல் என்றது, தனது நூலின் பொருண்மையினை முற்ற முடித்துக் கூறுவதாகிய முதல் நூலினை. ஐயமாவது, இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என ஒன்றினுந் துணிவுபிறவாத நிலையிலுள்ள பல தலையாய உணர்வு. மருட்கை---மயக்கம்; என்றது ஒன்றை மற்றொன்றாகக் கொள்ளும் திரிபுணர்வினை. செவ்விதின் நீக்கலாவது, இதற்கு இதுவே பொருள் எனயாவரும் நேரிதின் ஏற்றுக் கொள்ளும்படி ஐயத்தினையும் மயக்கத்தினையும் அறவே களைதல், தெற்றென ---தெளிவாக, ஒருபொருள் ஒற்றுமை கொளுவுதலாவது, இதுவும் பொருந்தும் அதுவும் பொருந்தும் எனக் கவர்படச் சொல்லாமல், இதற்கு இதுவே பொருள் எனப்பொருளொற்றுமை காட்டித் தணிந்துரைத்தல். (106) 107. சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலை யாயின் மற்றது சிதைவே. இளம்பூரணம் : (இ-ள்) மேலவற்றிற் கோதலான நூற்குரியதோர் மரபு முதனூலாயிற் சிதைவில்லை யென்றவாறு, என்னை ஆவன கூறியது விரியகலாதன சிதைவது வழி நூலென்றவாறாம். பேராசிரியம் : இது, வழிநூற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ ள்) மேற்கூறிய சூத்திரமுங், காண்டிகையும், உரையு மென்னும் மூன்றற்குஞ் சொல்லப்பட்ட இலக்கணமெல்லாஞ் சிதையாது மாட்சிமைப்படினும், முதனூலொடு மாறு கொள்ளின் அவற்றான் எல்லாஞ் சிதைந்ததெனவே படும் அந்நூல் எ-று. மறுதலையாயினு மென்ற உம்மை எதிரதுதழீஇயிற்று; மேற்கூறும் பத்துவகைக் குற்றமுமே (653) யன்றி வழிநூற்கு இதுவுங் குற்றமாமென்றமையின்1 ஈரைங்குற்றமுமின்றி என்பதனை நோக்க இறந்தது தழீஇயற்றுமாம். இதனானே, பிற் காலத்து நூல்செய்வார் நூலிலக்கணம் பிறழாமற்செய்யினும் முற்காலத்து நூலொடு பொருண் மாறுபடச் செய்யின் அது மரபன்று வழிநூற்கென விலக்கியவாறாயிற்று. எனவே, முதனூற் காயின் இவ்வாராய்ச்சியின்றென்பது கருத்து; என்னை? முதல்வனூன் மாறுபடுவதற்கு அதன் முன்னையதோர் நூல் இன்மையினென்பது. அல்லதூஉம் மற்றது என்று ஒருமை கூறினமையானும் இது வழிநூற்கே விலக்கிற்றென்பது கொள்க.2 மற்று மேல், முதலும் வழியுமென நுதலிய நெறியின (தொல். மர : 39) எனவே, முதனூலின் வழித்து வழிநூலென்பதூஉம், மறுதலை யாயிற் சிதைவென்பதூஉம் பெறுதுமாதலின் இச்சூத்திரம் மிகையாம் பிறவெனின், - அற்றன்று; முதல்வழியென்பன முன்னும் பின்னும் காட்டி னன்றி மாறுபடாமைக் கூறல்வேண்டு மென்பதூஉம் பெறுதுமாகலின் அது கூறல்வேண்டுமென்பது பெறாமாகலின் இது கூறல்வேண்டுமென்பது. அல்லாக்கால், முன்னோர் நூலின்முடிபுஒருங் கொவ்வாமைப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுவான் செல்லுமென்பது.3 ஆய்வுரை : இது வழிநூற்கே யாவதோர் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட இலக்கணமெல்லாம் சிதையாமல் மாட்சிமைப்படினும் முதனூலொடு மாறுபடவரினும் அந்நூல் சிதைவுடையதெனவே படும் எ-று. மறுதலையாதல் --- முதல்நூல்பொருளொடு மாறுபடுதல் சிதைவு --- குற்றம். மேற்கூறப்படும் கூறியது கூறல் முதலாகிய பத்துக் குற்றங்களுடன் இங்ஙனம் முதனூலொடு மாறுகொள்ள வரினும் அதுவும் குற்றமாகவே கொள்ளப்படும் என அறி வுறுத்துவார். மறுதலையாயினும் மற்றது சிதைவே என்றார் ஆயினும் என்புழி உம்மை மேற்கூறப்படும் கூறியது கூறல் முதலாகிய குற்றப்பட வருதலேயன்றி இவ்வாறு முதனூலொடு மாறுபடவரின் குற்றமாம் என எதிரது தழீஇ வந்தமையின் எதிரது தழீஇய எச்சவும்மையாகும் எனக் கொண்டார் பேராசிரியர். இனி, மறுதலையாயின் என்ற பாடம் இளம்பூரணர் உரைப்பதிப்பிற் காணப்படுகிறது. (107) 108. சிதைவில என்ப முதல்வன் கண்ணே பேராசிரியம் : இது மேற்கூறிய வழிநூற்குப்போல முதனூற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற் பொதுவகையாற் கூறப்பட்ட நூலிலக்கணம் ஐந்தனுள் ஈரைங்குற்றமுமின்றியென முன்னே ஓதிய இலக்கணம் ஒன்று: முதனூற்காயின் அம்மரபின இலக்கணம் வேண்டுவதன்று1 (எ-று). சிதைவிலக்கணத்தைச் சிதைவென்று ஓதினான் ஆகு பெயரானென உணர்க. மற்று, வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவற்கு (649) சிதைவிலவென்பது அறிவானே உணர்வலெனின், எடுத்தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லதூஉம் முதனூற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப் பெறினன்றே முதல்வன்றான் நூலிலக்கணஞ் செய்வது. மற்று அன்னதோர் நூலின் அவை செய்யாத நூலிலக்கணம் யான் செய்தேனெனவும் அவற்றுச் சிதைவினையே முதனூற்கண் இல்லையென்றதூஉம், ஒழிந்த நான்கும் முதல்வனூற்கண்ணே உளவாகலின் அவற்றை இலக்கணங் கூறினான் எனவும், இனிக் குற்றங்களும் பிற்றோன்றுங்கொலென்று அஞ்சி இங்ஙனம் அவற்றை வரையறுத்து யான் பாதுகாக்கின்றேனெனவும், அங்ஙனம் பாதுகாத்து இவ்விலக்கணங்கள் ஓதிற்றும் அவன் முதனூலே இலக்கியமாகப் பெற்றனவுங் கூறியது கூறல் (663) போல்வன வேறோர் பொருள் விளக்குமாயிற் குற்றமன்றென்ப தனையும் யானே கூறியதன்றி முதல்வனாயிற் சில்வகையெழுத்தின் செய்யுட்டாகவே அவற்றை வேறுவேறு விதித்துப் பரந்து படச் செய்யுமெனவும், இவையெல்லாம் அறிவித்தற்குச், சிதைவில வென்ப முதல்வன் கண் (661) என்றானென்பது. மற்று, முதல்வன்யாப்பே கூறுமாயின் அந்நூற்குத் தந்திரவுத்தியும் வேண்டுவதென்றாம் பிறவெனின் அங்ஙனமே, முதனூற்காயின் முப்பத்திருவகையுத்தி வாராது சிறுபான்மையான் வருமென்றற்கன்றே, ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணர்ந்தது (653) என ஈண்டு விலக்கப்பட்ட குற்றத்தின் பின்னர் அவ்வுத்தியை வைத்த கருத்தென்பது ஆண்டுங் கூறுவாமாயிற்றென்பது. மற்று, முதனூலினால் நூல் இலக்கணங் கூறானோவெனின், கூறினானே யன்றோ? தான் ஒருவகையான் நூல்செய்து மற்று அதுவே நூலிலக்கணமெனப் பிற்காலத்தார்க்கு அறியவைத் தமையினென்பது.1 மற்றுச் சிதைவிலவென்பார் யாரோவெனின் நிகழ்காலத்தாசிரியரும் எதிர்காலத்தாசிரியருமென உணர்க. ஆய்வுரை : இது முதனூற்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ள்) : முதல்வன் செய்த நூலின்கண்ணே கூறியது கூறல் முதலிய குற்றமுடைய இலக்கணங்கள் உளவாகா என்பர் பெரியோர் எ-று. முதல்நூல் செய்தவன் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் ஆதலானும், அவன் நூல்செய்தற்குமுன் அதற்கு முதனூலாகப் பிறிதொரு நூல் இன்மையானும் முதல்வன் கண் சிதைவு இல என்ப என்றார் சிதைவு - குற்றம்; சிதைவுடைய இலக்கணத்தைச் சிதைவு என்றார். இந்நூற்பாவுக்கு இளம்பூரணருரை கிடைக்கவில்லை. (108) 109. முதல்வழி யானும் யாப்பினுட்சிதையும் வல்லோன் புனையா வாரம் போன்றே. இளம்பூரணம் : வழிநூற் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்) முதனூலின் வழிச்செய்யினும் அந்நூல் யாப்பினுட் சிதையும் வல்லவன் புனையாத வாரம்போல வென்றவாறு. பேராசிரியம் : இது, முதனூலொடு மறுதலைப்படுதல் வழிநூற்குக் குற்ற மென்கின்றது. (இ-ள்) முதல்வழியாயினும் யாப்பினுட்சிதையும் --- அதிகாரத்தானே முதனூலினைக் குற்றமின்றி வருவதென்று ஈண்டு இலக்கணங்கூறல் வேண்டுவதன்றென்றான் இனி அம்முதனூலினை மாறுபடாமல் ஆண்டோதிய பொருண்மை கூறுமாயினும், நால்வகை யாப்பினுண் முதனின்ற மூன்றும்பற்றி வழி நூற்குக் குற்றம் பிறக்கும்; மற்று மொழிபெயர்த்தலொழியக் கொள்ளுமாறென்னை யெனின், யாப்பினுட் சிதையு மென்று இடமும் இடத்தியல் பொருளுமாக ஓதினாகலின் அஃதொழிக்கப் படும். மற்று அஃதொழிக்குமாறென்னை யெனின், --- தமிழ் நாட்டு வழக்கிற்கு முதனூலாகிய அகத்தியத்துண் மொழி பெயர்த்துச் செய்யவேண்டும் பொருளிலவாகலானும், பிற பாடைக்கும் பொதுவாயின பொருளவாயின் அவையுந் தமிழ் வழக்கு நோக்கியே இலக்கணஞ் செய்யப்படுமாகலானும், அவர்க்கும் மொழிபெயர்த்தல் வேண்டுவதன்றாகலின் அதுவே ஒழிக்கப்படும். இக்கருத்தினானன்றே, வழியி னெறியே நால்வகைத் தாகும் (தொல். மர : 96) என வழிநூலையே விரித்து நால்வகை யாப்பிற்கும் உரிமை கூறியதென்பது.1 அங்ஙனம் முதனூற்கு மொழிபெயர்த்தலின் மையின் யாப்பொன்றும்பற்றிச் சிதைவுபிறவாது, ஒழிந்தன பற்றி வழிநூற்குச் சிதைவுண்டாமென்பது கருத்து. வல்லோன் புணரா வாரம் போன்றே - வாரம் புணர்ப்பான் வேறொருவனாயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற்றோடு பொருந்தச் செய்யாதவாறுபோல (எ-று). வாரமென்பது கூறு; என்னை? ஒரு பாட்டினைப் பிற் கூறுசொல்லுவாரை. வாரம் பாடுந் தோரிய மகளிரும் (சிலப் 14: 155) என்பவாகலின், யாப்பினுட் சிதைதலென்பது2 முதனூலும் வழக்கு நூலாயின் இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோவெனக் கூட்டி விரித்து யாத்துச்செய்யினும். அழான் புழான் (தொல். எழுத்து : 316) என்பன போல்வன இக்காலத்திலவென்று களைந்து தொகுத்து யாத்துச்செய்யினுந், தொகைவிரியும் மயங்குமாற்றான் விரிந்தது தொகுத்தலென்னும் நூற்புணர்ப்பினைத் தொகைவிரியெனும் யாப்பெனக் கூறியதல்லாதவழித்தொகுத்து யாத்தே செய்தலும், இம்மூவகை யாப்பினொடு மெய்த்திறங் கூறுவலென மொழி பெயர்த்தலை மயக்கிக் கூறுதலுமெல்லாம் யாப்பினுட் சிதைவேயாம். அது பண்ணும் பாணியும் முதலாயின ஒப்பினும் வல்லோன் புணர்த்த இன்னிசையதன் நீர்மைப்படக் காட்டா; வாரம் புணர்ப்பான் புறநீரதாகிய இசைபடப் புணர்த்தல் போல்வதாயிற்று. மற்றுஇழிந்தோர் வழக்கினைப் பிற்காலத்து உயர்ந்தோருந் தகுதிபற்றி வழங்குபவாகலான் அவையும் அமையாவோவெனின் அவை சான்றோர் செய்யுட்குதவாது; கற்றுணர்ந்தாரும் கற்றுணராதாரும் மற்று அவை கேட்டே மனமகிழ்வாரைப்பற்றி நிகழ்ந்தனவாயினும், ஒற்றுமைப்பட்டு ஒருவகை நில்லா, பெற்ற காலந்தோறும் பிறிதுபிறிதாகிக் கட்டளைப்படுத்து நூல் செய் வார்க்குங் கையிகந்து, வரையறை யின்றாமாகலின் அஃது இலக்கணமெனப்படாதென்பது.1 ஆய்வுரை : இது, வழிநூற்கு ஆவதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ள்) முதனூலையே அடியொற்றி மாறுபடாமை அங்கு ஓதிய பொருளையே வழிநூல் கூறுமாயினும், இசைவல்லவனாற் புணர்க்கப்படாத வார இசை போன்று, (தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்னும்) யாப்புவகை காரணமாக வழிநூலில் இலக்கணச் சிதைவு ஏற்படுதல் உண்டு. (அத்தகைய சிதைவு நேராதவாறு வழிநூல் செய்க) எ-று. யாப்பு என்றது, வழி நூலின் அமைப்பு முறையாகிய தொகுத்தல் முதலிய நால்வகையாப்பினை. முதனூலாசிரியன் கூறிய பொருண்மையினை அடியொற்றி வழிநூல் செய்யுங்கால் தொகுத்துரைக்கத்தக்கன இவை, விரித்துரைக்கத் தக்கன இவை, இவ்விருதிறமும் அமையக் கூறத்தக்கன இவையென்று ஆராய்ந் துணர்ந்து, அவற்றை அம்முறையில் யாத்தமைத்தல் கற்றுத் துறைபோயினார்க் கல்லது ஏனையோர்க்கு அத்துணை எளிதன் றாகலின் முதல்வழியாயினும் யாப்பினுட் சிதையும் என்றார். வல்லோன் என்றது. இசைத் துறையில் வல்லவனை. வாரம் என்பது, இசைப்பாடலில் முற்கூறு பாடுவார்க்குரிய இசையுடன் பொருந்தப் பிற்கூறுபாடுவோர்க்குரியதாக அமைக்கப்பெறும் இசையமைப்பினை, இசைத்துறையில் வல்லவன் அல்லாதவனால் அமைக்கப்படும் வார இசை முற்கூற்றினுடன் இணைதலின்றி வழுப்படுதல் போன்று, நூற்புணர்ப் பறியாதான் செய்த வழி நூல் யாப்பு வகையால் முதனூலொடு மாறுகொண்டு வழுப்படும் என்பதாம். முதனூலின் சொற்பொருளமைப்பினை அடியொற்றி அதன் வழியில் பொருள்பிறழாமை மொழி பெயர்த்தல் வேண்டும் என்பதனை மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என முன்னர்க் கூறினாராதலின் மொழிபெயர்ப்பு யாப்பு ஒன்று நீங்கலாக ஏனைய தொகுத்தல் முதலிய மூன்றுயாப்பினை இச்சூத்திரம் சுட்டியதாகக் கொள்வர் பேராசிரியர். (109) 110. சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். இளம்பூரணம் : மேலதிகாரப்பட்ட ஈரைங் குற்றமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) கூறியது கூறலாவது ஒருகாற் கூறியதனைப் பின்னுங்கூறல். மாறுகொளக் கூறலாவது ஒருகாற் கூறிய பொருளோடு மாறு கொள்ளுமாறு பின்கூறல் அஃதாவது தவம்நன்று என்றவன்றான் தவந் தீதென்று கூறல். குன்றக் கூறலாவது தானதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல். மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிற பொருளுங் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவா னெடுத்துக் கொண்டான் வடமொழியிலக்கணமும் கூறல். பொருளில கூறலாவது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக் கொப்பின்றிப் பயனில்லாதன கூறல். மயங்கக் கூறலாவது கேட்டார்க்குப் பொருள் விளங்கு மாறின்றிக் கூறல். கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதலென்பது பொருள் யாக்கப்பட்ட சூத்திரஞ் சந்தவின்பமின்றி யிருத்தல். பழித்தமொழியான் இழுக்கக் கூறலாவது தானொரு பொருளை யொருவாய்பாட்டாற் றிரித்துப் பிறிதொரு வாய் பாட்டாற் கூறுதல். அக்குறிப்பு உலகவழக் கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனால் அதுவுங் குற்றமாயிற்று. என்னவகையினும் மனங்கோள் இன்மையாவது எழுத்தி னாலுஞ் சொல்லினானும் பொருளினானும் மனங்கொள்ளுமாறு கூறாமை. பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே ஈரைங் குற்றமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்) சிதைவு எனப்படுபவை வசையற நாடின் குற்ற மென்றற்குச் சிறப்புடையனவற்றைக் குற்றந்தீர ஆராயின் இவற்றை எனப்படுபவென்பதென்? குற்றமாதற்குச் சிறந்திலவாம் பிறவெனின்,---இவ்வாசிரியர் எஞ்ஞான்றுங் குற்றத்திற்கு இலக்கணங் கூறாராகலான் இலக்கணத்தோடு கூறுந்துணைப் பயம்படுதலும் ஒருவாற்றாற் சிறப்பெனவேபடுமென்பது; அல்லதூஉம் ஒழிந்த செய்யுட்காயின் இவையனைத்தும் ஆகாவென்பது ஈண்டே தழாஅல் வேண்டுமாகலானுஞ் செய்யுட் காயின் அவை அமையாச் சிறப்பு உடைமையானும் இது வழக்குஞ் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபடவுஞ் செய்யப்படும் நூலிலக்கணமாகலானும் எழுவகை வழுப்போல அமைவனவே கூறாது நூலுள் வரப்பெறாதனவும் வரைந்து கூறினானென்பது அமைவனவற் றினஞ்சார்த்தி ஒழிந்தனவுங் கூறினான்; அல்லாக்கால், அவையே குற்றமாகி ஒழிந்தன புகுதப் பெறுவான் செல்லு மென்றஞ்சியென்பது. வசையற நாடின் என்றதனான் இங்ஙனங் குற்றமென்று வரையப்பட்டனவற்றைக்கொண்டு புகுந்து மற்றொரு பொருள் கொள்ளின் அவை வசையற்றனவாமென்பது. அவை 1கூறியது கூறன், 2மாறுகொளக்கூறல், 3மிகைபடக்கூறல், 4பொருளின் மொழிதன் 5மயங்கக்கூறல் என்னும் ஐந்துமாயின. 1கூறியதுகூறல் முன்னொருகாற் சொல்லிய பொருள் பின்னுமொருகாற் சொல்லுதல்; அது, உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்து (தொல்-புறத்: 1) எனவும், வந்தவீரேழ் வகையிற் றாகும் (தொல்-புறத்: 3) எனவும் இருகாற்சொல்லி ஒருகாற் பயன்கொண்டவாறு. 2மாறுகொளக்கூறல் மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை (தொல்-எழுத்-குற்: 10) என்றவழிப் புல்லினையும் மரமென அடக்குதல். இக் கருத்து நோக்கி (யும்) (யே) போலும் ; ஆண்டு ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்பதனாற் புல்லினையும் மரமென்று தழீஇயின அக்கருத் தென்பது 3குன்றக்கூறல் சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப்போதல் ; இஃதோர் பயன்படாக்குற்றம். 4மிகைபடக்கூறல் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகச் செய்யாது சூத்திரத்துட் சிலசொன் மிகையாகச் செய்தல் போல்வன ; அவை, ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டு (தொல்-எழுத்-புண: 5) என்றாற்போல்வன. இங்ஙனம் மிகைபடச் செய்யுங்கான் முன்னின்ற சொல்லிற்கு ஒன்றும் இயைபில்லன கூறலாகா; என்னை? முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. (தொல்-எழுத்-நூன் 2) என்றவழி, அவைதாம் முப்பாற் புள்ளியு மெனப் பயனிலை கொண்டு மாறிப் பின்னர் எழுத்தோரன்ன என்றது ஆண்டு இயைபில்லதோர் சொல்லென்று இலேசுபடாது தான் சொல்லுகின்ற பொருட்கும் இயைபுபடச் சொல்லியே மிகைப் படுத்தல் வேண்டுமென்பது : என்னை? எழுத்தெனப்படுப (தொல்-எழுத்-1) என்பதனுண் மூன்றுமே சிறப்புடையவென்பது கொண்டானாயிற் பின்னர் அம்மூன்றினையுஞ் சிறப்பில்லா முப்பதினோடும் ஒக்குமென உவமிக்கலாகாதெனவும், மாட்டேற்றுச் சூத்திரங்களா னெல்லாம் ஒப்புமை பெறுவதல்லது சிறப்பின்மை காட்டப் படாதாகலானும் முப்பஃதுமே சிறந்தனவென்னுங் கருத் தினானாயின் மூன்றுஞ் சிறப்பிலவென்பது முதற்சூத்திரத்துட் பெறப்படுமாகலின், பின்னர் இவ்விலேசு கூறிச் சிறப்பழித்தல் வேண்டா வாகலானும் பலபொருட்கேற்பினல்லது கோடல ன்றி ஐயுறற்றோறுஞ் சூத்திரஞ் செய்யானாகலானும், எழுத்தோ ரன்ன (தொல்-எழுத்து : 2) வென்பது ஆண்டு இயைபில்லதோர் சொல்லென்றதனை ஆண்டுப் பெய்து இலேசு கொண்டானெனல் ஆகாதென்பது. 5பொருளிலமொழிதல் - நூனுதலிய பொருளன்றி, என்மனார் புலவர் என்றாற் போல வழிநூல்வாய்பாட்டு மாத்திரையே பயனாகச் செய்வன. 6மயங்கக்கூறல் - நிறுத்தமுறையானன்றி. அத்தி னகர மகரமுனை யில்லை (தொல்-எழுத்-புண : 23) என மயங்கக்கூறிப் பிறிதொன்றுகோடல் : 7கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதல்-சூத்திரச்செய்யுள் கேட்போர்க்கு இன்னாதிசைப்பச் செய்தல். 8பழித்தமொழியான் இழுக்கங்கூறல் --- முடிவல்லாத சொல்லானும் இழிந்த சொல்லானும் எடுத்து முடிப்பனவற்றை மறு முடிபுபற்றி இழுக்கங் கூறலாயிற்று. 9தன்னானொருபொருள் கருதிக்கூறல் -- முன்னோராற் கூறவும் படாது வழக்கினுள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒரு பொருள் படைத்துக் கூறுதல்; (தன்) ஆனென்பது ஒரு சொல்லெனத் தானென்பதோர் சொற்றாய் மெய்யினுள் உணர நின்றது. தன்னாற் றானொருபொருள்படைத்துக்குறுகச் செய்தன் மூன்றாவதெனினும் இழுக்காது. என்னை? நுதலிக்கூறலென்னும் பயனிலைக்குத் தானென்னும் பெயர் வெளிப்படா நின்றது வெளிப்படுத்துக்கொளப் பெறுதுமாகலின். 10என்னவகையினு மனங்கோளின்மை---எவ்வாற்றானும் பொருளறிதற்கு அரிதாகச் செய்தல் இவைநான்குங்குன்றக் கூறலொடு கூட்ட ஐந்தும் எஞ்ஞான்றும் பயன்படாதனவாயின. அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும் - அவைபோல்வன பிறவும் ஈரைங்குற்றமெனப்பட்ட தொகை எண்ணிற்கு அவ்வாறு தொகுத்தற்கேற்ற விரியெண்ணாம், இவையும் இவைபோல்வன பிறவும் (எ-று). விரிந்தது தொகுத்த லென்பதனான் எதிரதுநோக்கி ஆண்டுத் தொகுத்தானாதலின் ஈண்டு அவற்றைத் தொகை கூறாது விரித்தெண்ணினா னென்பது. பிறவும் என்றதனான் வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை என்றாற்போல்வன கொள்க. இவை மேல் ஈரைங் குற்றமுமென உம்மையால் தழுவியவற்று விரியாயன. முதனூலொடு மாறுதலும் யாப்பினுட் சிதைதலும் இவைபோல ஒரோ வழி வாரா அந்நூலின் முழுவதூஉங் கொள்ளக்கிடந்தமையின் ஈண்டவை புறனடையால் தழுவப்பட்டவாறென்பது. இவை யெல்லாங் குற்றமென்று களையப்படுவனவாயினும் ஈரைங் குற்றமுமின்றியென முதற்சூத்திரத்துள் ஓதிப்புகுந்தான். அல்லாக்கால் இவற்றுட்சில நூலுட் புகுதுமாறும் அவற்றாற் பயன்கொள்ளுமாறும். இன்மையினென்பது. பயன்கொள்ளப் படுவன ஐந்தென்பது மேற்காட்டினாம். இனி, அப்பதினான்குங் குற்றமேயாகி வருமாறு: தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யெனாஅ எனவும், உருவக முவமை வழிநிலை மடக்கே விரிசுடர் விளக்கென மரீஇ வருவன எனவுஞ் சில சூத்திரங்களை முதனிறீஇப் பின்னரும் அவ்வாய் பாட்டானே, தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யென்றாங் கெண்வகையியவ செய்யுட் கணியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே என்றாற்போலப் பின்னரும் அவ்வாறே சூத்திரஞ்செய்தல் 1கூறியது கூறலாய்ப் பயன்படாதாயிற்று. என்னை? இவற்றது வேறுபாடு தொகைச் சூத்திரத்துத் துணிந்தெண்ணியதனானே பெற்றவழிப் பின்னும் அவ்வாறே மற்றோர் சூத்திரஞ் செய்ததனாற் பயந்ததின்மையினென்பது. அன்றென வொருதலை துணிந்த குற்ற நன்றறி புலவர் நாட்டுதற்குரிய என்றாற்போல்வன வரையாது குற்றமென்றதனையே சான்றோர்க் காயிற் குற்றமாகாதென்றல் 2மாறுகொளக் கூறலாம், செய்யுட் கெல்லாம் அணியிலக்கணங் கூறுவான் குற்றங் கூறும் வழி வரைந்து கூறுதலின். செய்யுட்குரிய பொருட்படை யெல்லாவற்றுள்ளும் நல்லனவுந் தீயனவும் இவையென்று சொல்லப்புகுந்தான் அவற்றுட்சில சொல்லியொழிதலும், வழக்கொடு மெய்ப் பொருளும் ஆராய்வ லென்று புகுந்தான் அவற்றுள் வழக்கிற்கு வேண்டுவ கூறி மெய்ப்பொருள்ஆராய்ச்சி முழுவதூஉஞ் சொல்லாதுநெகிழ்ந்து போதலும், எடுத்துக்கொண்ட நூலுட் காட்டும் இலக்கியங்களைச் சூத்திரத்தான் அடிவரை செய்வனென்று புகுந்து சில மறுத்துச் செய்து சிலவற்றுக்குச் செய்யாது போதல் போல்வனவுங் 3குன்றக்கூறலாம். அவை முடிந்த நூலிற் கண்டு கொள்க. இடையிடை திரியா தியனெறி மரபி னுடைய கருப்பொரு ளொரோவழித் துவன்றவு மியற்கை மரபி னுரிப்பொரு டோன்றவும் பன்னிரு காலமும் நால்வகை யிடத்தொடுந் தொன்னெறி மரபிற் றேரன்றினர் செயலே எனச் சூத்திரஞ்செய்து நாற்பத்தெட்டினும் நாற்பத்தெட்டுக் காலமுந் தொக்க சூத்திரத்தால். துடைப்பன துடைத்துச் செயற்கை போல வழியிட னொழித்துக் காலங் கூறுவல் என்று புகுந்து அக்காலத்துள்ளுஞ் சிறுபொழுது கூறாது இட இலக்கணமே கூறி, இடத்திற்குச் சுருங்க வேறு சூத்திரஞ்செய்தவாறு போலாது அதற்கு இன்றியமையாதனவெல்லாங் குன்றாமற் கூறாது, சென்றுபட்ட பரப்பிற்றாகச் சூத்திரஞ்செய்தல் போல் வன 4மிகைபடக்கூறலாம். அஃதாவது இன்னிளவேணிலென்பது, தண்ணிழ லறல்பாற் றடைகரைத் துறைதெரறு மிலங்கு முலைக்க ணேய்ப்பக்கோங் கவிழ்ந்து வண்டுதா தூதுந் தண்டளிர்க் காவிற் பருமல ருதிர்ந்து முருகுகமழ் பரப்பின் மண்வயிறு குளிர்க்குந் தண்ணறுங் கயத்து நிழலிருள் நடுவ ணழலவிர் தாமரைத் தாள்கறித் தருந்தும் வாளெயிற் றிளமீன் புள்ளுக வெறிய வெள்ளென்று பிறழும் பளிங்கு நெகிழ்ந்தன்ன துளங்காத் தெண்ணீர் தளிர்குடைந்து தெவிட்டிய குயில்குனிந்து குடிப்ப மரவந் தாழ்ந்த கரைமரச் சாரற் றேனாறு தேறல் வேனிற் கண்ணும் வாரார் கொல்லென நீர்வார் கண்ணொடு புலம்புடை மகடூஉக் கலங்கஞ ரெய்த யாறுங் குளனுங் காவுமாடி யோருயிர் மைந்தரு மகளிருங் களிப்பக் காமவிழவொடு கன்னியர் நோற்ப நிலவுஞ் சாந்தும் பலவயிற் பயன்பட துன்பக் காலந் துடைத்தனர் பெறூஉ மின்பக் கால மென்மனார் புலவர். என்றாற்போலப் பற்றிக்கூறிப் பெருஞ்சூத்திரஞ் செய்த வழியும் பருவத்திற்கு வரையறையிலக்கணம் போதுதலின்றி விடுதலாயிற்று. இனி, அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே (தொல்-சொல்-இடை : 4) எனவும், அப்பா லெட்டே யும்மைச் சொல்லே (தொல்-சொல்-இடை: 7) எனவும், ஆயீ ரைந்தொடு பிறவுமன்ன எனவும் இன்னோரன்ன பலவும் மிகைபடச் செய்தார் இவ் வாசிரியராகவிற் பிற்காலத்து நூல்செய்தார்க்கும் மிகைபடச் செய்தல் அமையுமென்பாருமுளர். அற்றன்று, யாவயின் வரினுந் தொகையின் றியலா (தொல் சொல்-இடை : 42) எனப்பட்ட எண்ணாகலின் தொகை, கூறினமையானும் வழக்காதலானும், அதுமுதலாக அல்லது சூத்திரச் செய்யுளுஞ் செய்யாராகலானும், அங்ஙனந் தொகைதொடராக்கால் இரண்டாக்கப்பட்டு விகாரவகையால் தொகுத்தானாமெனவும் அவை பல சொல்லாகலால் தொகுக்கப்படுவனவல்ல வெனவுஞ் சொல்லி மறுக்க அல்லதூஉம். மன்னென்பது ஓர் இடைச்சொல், அது தானடைந்த சொற்பொருளன்றித் தனக்கு வேறு பொருளின் மையிற் பொருள் பற்றி மூன்றெனலாகாது, பலபொருளொரு சொல் எனப்படுவ தன்றி, அதனான் அதனைநோக்கி மூன் றென்றானல்லன், அஃது அடுத்த சொல்லினை மன்னைச் சொல்லென்றான், அவை மூன்றன்றி எத்துணையும்பலவாயினும் ஒன்றாயினும் மூன்று பகுதிப்படுமென்று கோடற்கென்பது. ஒழிந்த இடைச்சொல்லாயினும் அவற்றிற்கும் இஃதொக்கும் மன்னைச் சொல்லென்பது வேற்றுமைத்தொகையேயன்றிப் பண்புத்தொகையாகலுமுடைத்து. மன்னடுத்த சொல்லினையும் மன்னென ஆகுபெயராற் கூறினானென்பது. வழக்கு வழிப்பட்ட சொல்லீறு திரியினும் படைத்துக் கொண்ட சொல்லொடு சிவணித் திரிசொல் லென்றே செப்பினர் புலவர் விரிவளைப் பணைத்தோண் மடநல் லோயே என்றாற் போல இயைபில்லன கூறுதல் 5பொருளிலமொழி தலாம். இவை ஒழிந்த செய்யுட்காயின் தடங்கண்ணாயென்றாற் போல் வரப்பெறுமென்றற்கு ஓத்தென்னையெனின், அது செய்யுள் செய்வார் வேண்டியவாறு செய்பவாகலின் ஈண்டுச் சில்வகை யெழுத்தின் (655) செய்யுட்டாகச் செய்யுநூற்கே இது விலக்கினமையின் அதன் திறத்துக் கடாவின்றென மறுக்க. 6மயங்கக்கூறலென்பது. மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டுவல் (பாயிரம்) என்று புகுந்தாற்போல, இன்னது சொல்லுவதென்று புகுந்தான் மெய்ந்நூலும் வழக்குநூலும் உடனாராய்தலும், ஆசிரியமுந் தமிழும் போல்வன உடனாராய்தலும் போல்வன. 7கேட்போர்க்கின்னாயாப்பாவது, கதந பம சஞயவ உயிர்முன் பின்வல்லினம் லரயந்தா மென என்றாற்போலச் சூத்திரச்சுருக்கமும், மொழிக்கு முதலா மெழுத்தும் ஈறாமெழுத்தும் பொதுவகையான் அடங்க ஓதுதற் பயனோக்கி இங்ஙனம் இன்னாவோசைத்தாகச் சூத்திரஞ் செய்தல் போல்வன. 8பழித்தமொழியா னிழுக்கங்கூறல், விளாமெ னிறுதி பழமொடு புணரிற் றளாவியற் றன்றி யியற்கை யாகும் என்றாற்போல விளாமென்பதோர் வழுச்சொல்லாற் சூத்திரஞ் செய்தல். ஒன்றற்கொன்றென்பதனை, ஒன்றினுக் கொன்று எனச் சூத்திரஞ் செய்தலும் அது. 9தன்னானொருபொருள் கருதிக் கூறலென்பது, மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற் காலத்தானொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், பதமுடிப் பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் (நன்னூல்) போல்வன. 10என்ன வகையினு மனங்கோளின்மை வருமாறு : இருதிணைப் பிறந்த வைம்பாற் கிளவிக்கும் (தொல்-சொல்-பெயர்: 7) என்னுஞ் சூத்திரத்திற்கும், எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி (தொல்-எழுத்-புணர்: 26) என்பதற்கும் வேறுபொருள் உரைப்பாருரைக்குமாற்றான் அறியப்படும். 11இனி மற்றொன்று விரித்தலென்பது. ஆறுறுப்பும் பாவினமுங் கூறுவலென்று புகுந்து பொருளாராயச்சி பலவுங் கூறுதல். இதுவும் இன்னோரன்னவும் மிகைபடக் கூறலாய் அடங்குமெனினும் அமையும். 12நின்றுபயனின்மை யென்பது. பிற்காலத்துத் தோன்றிய வழக்கேபற்றி அவற்றிற்குங் குற்றந்தீர இலக்கணங் காட்டியவழி, அது சான்றோர் செய்யுட்குப் பயன்படாது தம்மோரன்ன செய்யுட்குப் பயன்பட்டொழியச் செய்தல். அவை வந்தவழிக் கண்டுகொள்க. பாட்டியன் மரபெனக் காட்டுவனவும்அவை. 13இனி வெற்றெனத் தொடுத்த லென்பது. கேட்போர்க் கின்னா யாப்பின்பாற் பட்டு அடங்கும். 14சென்றுதேய்ந்திறுத லென்பது. சொல்லப்புகுந்ததொரு பொருள் எல்லாவிடத்துஞ் சொல்லப் படுவதாகவும் ஈற்றுக்கண் மாய்ந்து மாறுவது, அதுவுங் குன்றக் கூறலாய் அடங்கும் ஒழிந்தனவும் அன்ன. மற்றுக் கூறியதுகூறன் முன்வைத்ததென்னையெனின் --அது நூலுட்போலச் செய்யுட்கண்ணும் பயன்படவரின் அமையு மென்றற் கென்பது. அவை: வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் (நாலடி-4: 9) எனவும், வஞ்சியாய் வஞ்சியார் கோ (யா-வி-ப; 230) எனவுஞ் சொல்வகையான் இரட்டித்தவாறு, இனியமைவன வற்றிடையே குன்றக்கூறல் வைத்தான் அவற்றுத்துணைச் சிறப்பிலவென்று ஐயுறாமை யென்பது. இவ்வாசிரியர் யாண்டும் இலக்கணமே கூறி இவ்விலக் கணத்திற் பிறழவருதலைக் குற்றமென்று கொள்ள லைப்பினன்றி இல்லாத குற்றங்கட்கு இலக்கணங் கூறாதார்1 இது கூறினார். எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவை (664) என வருகின்ற சூத்திரத்தான் இவையும் இலக்கணத்திற்கு உபகாரப்படுதலி னென்பது2. ஆய்வுரை : இஃது ஈரைங்குற்றம் (பத்துக் குற்றங்கள்) இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) நூற்குச் சிதைவெனக் கூறப்படும் குற்றங்களைப் பழிதீர ஆராயின், கூறியதுகூறல், மாறுகொளக்கூறல், குன்றக் கூறல், மிகைபடக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக்கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல், என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் அவை போல்வன பிறவும் ஈரைங் குற்றம் என முன்னர்த் தொகுத் துரைக்கப்பட்ட அக்குற்றங்களின் விரியாகும் எ-று. (110) 111. எதிர்மறுத் துணரினத் திறத்தவும் அவையே. இளம்பூரணம் : இதுவுமது. நூற்குற்றம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எதிர்மறுத்து உணர்வராயின், அத்திறத்தவும் குற்றமா மென்றவாறு. பாவஞ் செய்தான் நிரையம் புகுமெனக் கருதிக் கூறுவான் தவஞ்செய்வான் சுவர்க்கம் புகுமென்றல். இவ்வாறு கூறிச் சுவர்க்கம் பெறுமென்னும் பொருட் ... நிரையம்புகுமென்ற பொருள் தோன்றாமையிற் குற்றமாயிற்று. பேராசிரியம் : இது, மேற் குற்றம் பத்துங் கூறி இனிக் குணமும் பத்துள வென்கின்றது. மேலெல்லாம் இவ்வாசிரியன் இலக்கண வழக்கினையே விதந்தோதி அதனிற்பிறழ்ந்தது குற்றமென்று கொள்ள வைத்தான்; இவ்வோத்தினுள் ஈரைங்குற்றமு மென்பன சில குற்றங் கூறினான்1 ; இது மாறுகொளக் கூறலாங் கொல்லோ வெனின் அற்றன்று; இவையும் இலக்கணமே கூறினனென்பான் இவற்றை யெதிர்மறுத்துக் கொள்ள வென்றானென்பது. இதனது பயன்; உள்ளது சொல்லுதலேயன்றி இல்லது சொல்லுதலும் நூலிலக்கணமென்றறிவித்த லாயிற்று; அவை பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா (தொல்-சொல்-வேற் : 9) எனவும், வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது (தொல்-சொல்-வினை: 1) எனவும் வரும். எனவே, கூறியது கூறாமையும் மாறு கொளக் கூறாமையுங் குன்றக்கூறாமையும் போல்வனவும் பத்து உள நூலிலக்கணமென்றானாம். மேல், ஈரைங் குற்றமுமின்றி என்றதல்லது அவற்றை நாட்டிக்கொண்டு எதிர்மறுத்துக் கோடல் பெறாமையின் இது கூறினானென்பது. ஆய்வுரை : இது நூலுக்குரிய குணங்களாமாறு கூறுகின்றது. (இ--ள்) மேற்குறித்த பத்துக் குற்றங்களையும் எதிர் மறுத்து உணர்ந்து கொள்ளுதற்குரிய குணங்கள் பத்தும் மேற் குறித்த நூலுக்குரிய இலக்கணங்களாம் எ-று. நூலுக்கு அமைய வேண்டியனவாகவுள்ளனவற்றை எடுத்துக் கூறுதலோடு, நூலுட் புகுதற்கு உரியனவற்றை எடுத்துக் கூறுதலும் நூற்குரியதோர் இலக்கணமே என்பதனை அறிவுறுத் துவார் நூலில் இடம் பெறாத குற்றங்களையும் எடுத்துக் கூறினார். ஆசிரியர். எனவே, முற்கூறிய பத்துக் குற்றங்களை எதிர் மறுத்துக் கொள்ளப்படும் பத்துக் குணங்களும் நூலுக்குரிய இலக்கணமாம் என்பார் எதிர் மறுத்துணரின் திறத்தவும் அவையே என்றார். மேற்குறித்த குற்றங்களையெதிர் மறுத்துக் கொள்ளுதலாவது, கூறியது கூறாமை, மாறுகொளக் கூறாமை குன்றக் கூறாமை, மிகைபடக் கூறாமை, பொருளில மொழி யாமை, மயங்கக்கூறாமை, கேட்போர்க்கு இன்னா யாப்பினை யுடையதாகாமை, பழித்த மொழியான் இழுக்கம் கூறாமை, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறாமை, என்னவகையினும் மனங் கோளின்மையில்லாமை என இவ்வாறு கொள்ளுதல். சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல் முறையில் வைப்பே உலகமலையாமை விழுமியது பயத்தல் விளங்குதாரணத்த தாகுதல் நூலிற் கழகெனும் பத்தே என வரும் நன்னூல்-பாயிரம்-மயிலை நாதர் உரைமேற் கோட் சூத்திரம் நூலுக்குரிய குணங்களாகிய பத்தழகினையும் விரித்துக் கூறுவதாகும். (111) 112. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்றவைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவாம் என்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின்நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை யிடுதல் எதிர்பொருள உணர்த்தல் சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிறவவண்வரினும் சொல்லிய வகையாற் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. இளம்பூரணம் : தந்திரவுத்தி யாமா றுணர்த்துதல் நுதலிற்று. இதன் பொழிப்பு : நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப் பட்டனவும் அத்தன்மைய பிறவுந் தந்திர உத்தியாம் என்றவாறு. தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வட மொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது. (இ-ள்.) ஒத்த காட்சி உத்திவகை விரிப்பினென்பது நூற்குப் பொருந்திய காட்சியினா னுரைக்கும் உத்திவகையை விரிக்குங்காலத் தென்றவாறு. நுதலியதறிதலாவது --- சூத்திரத்திற் சொற்ற பொருளுணர்த் தலன்றி, இதன்கருத் திதுவென உணர்த்தல். அஃதாவது எழுத்தெனப்படுப (நூன்மரபு : 1) என்னுஞ் சூத்திரத்துள் எழுத்து இனைத்தென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று என்றல். அதிகார முறையாவது முன்னம் பலபொருளை யதிகரித்த வழிப் பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல். அஃதாவது, உயர்திணை யஃறிணையென அதிகரித்து ஆடூஉ வறிசொல் (கிளவியாக்கம் - 2) என்னுஞ் சூத்திரத்தான் நிறுத்தமுறை பிறழாமல் உயர்திணைகூறல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துள் ஓதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தல். அஃதாவது அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் (உயிர்மயங்கியல்-1) என்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றி னெனவோதி வினையெஞ்சு கிளவியு, (உயிர்மங்கியல் - 2) மென்னுஞ் சூத்திரத்துள் ஓதிற்றில ராயினும். அதிகயாரமுறைமையினான் வல்லெழுத்துவருவழி யென வுரைத்தல் தொகுத்துக் கூறலாவது---வகைபெறக் கூறல் வேண்டு மாயினும் அதனைத் தொகுத்துக் கூறல். எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய்முப்பஃ தென்ப (நூன் மரபு, 1) என்றாற்போல்வன இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத்துணையுங் கூறப்பட்டதிது வெனக் கூறலுமாம். தூக்கியல் வகையே யாங்கென மொழிப (செய்யுளியல்-83) என்பதனாற் கொள்க. வகுத்து மெய்ந்நிறுத் தலாவது---தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல். அது அ, இ, உ, எ, ஒ (நூன்மரபு, 3) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. இன்னுமதனானே தொகைபடச் சூத்திரஞ்செய்த வழி அவற்றுள் ஒரோவொன்று பொதுவிலக்கணத்தான் முடியாதவழிப் பெரும்பான்மை சிறுபான்மைகொண்டு வகுத்துப் பொருளுரைத் தலுமாம். இன்னுமதனானே தொகைபடக் கூறியதனை வகுத்துப் பொருளுரைத்தலுமாம். மொழிந்த பொருளோடொன்றவைத்த லாவது --- சூத்திரத்துட்பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத் திற்கொக்கும் பொருளுரைத்தல். அன்றியும் முற்பட்ட சூத்திரத்தினான் ஒருபொருளோதிய வழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடொன்றவைத்தலுமாம். மொழியா ததனை முட்டின்றி முடித்தலாவது---எடுத் தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை உரையிற்கோடல் என்ப. இக்கருத்தினானே, சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புறவு இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே. (மரபியல்-105) என ஓதுவாராயிற்றென்க வாரா ததனான் வந்தது முடித்த லாவது---ஒருங்கெண் ணப்பட்ட பொருளொன்றனைப் பகுத்துக் கூறியவழி ஆண்டு வாராததற்கோதிய விலக்கணத்தை இதன்கண்ணும் வருவித் துணர்த்துதல். வந்ததுகொண்டு வாராதது முடித்தலாவது---ஒருங் கெண்ணப்பட்டவற்றுளொன்றைப் பகுத்து இலக்கணங் கூறிய வழி வாராததன்கண்ணும் இவ்விலக்கணத்தைக் கூட்டிமுடித்தல். முந்து மொழிந்ததன் தலைதடுமாற் றாவது --- முற்பட அதிகரித்த பொருளை யவ்வகையினாற் கூறாது முறைபிறழக் கூறுதல். இவ்வாறு கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல் வேண்டும் அது புள்ளிமயங்கியலுட் கண்டுகொள்க. ஒப்பக்கூறலென்பது---ஒரு பொருளெடுத்து இலக்கணங் கூறிய வழி அதுபோல்வனவற்றையு மிலக்கணத்தான் முடித்தல். ஒருதலைமொழியாவது---ஏகாக்கர மென்னும் வட மொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுளொன்றனைத் துணிந்து கூறல். தன்கோட் கூறலாவது --- பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன்கோட்பாட்டால் கூறுதல். அது வேற்றுமை எட்டென்றல். உடம்பொடு புணர்த்தலாவது --- இலக்கண வகையான் ஓதுதலன்றி யாசிரியனுக்கின்றிச் சூத்திரத்தின்கண்ணே யொரு சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல். ஒற்றீற்றுச் சொல்லை யுகரங்கொடுத்துக் கூறுகவென விலக்கணங் கூறிற்றிலராயினும் ஆரும் அருவும் ஈரொடு சிவணும் விளி மரபு (21) என ஓதுதலின், ஆர் என்பது ஆரும் என உகரம் பெற்றது. இதனைப் பிறாண்டுங் கோடல். பிறனுடம் பட்டது தானுடம்படுதலாவது --- பிற நூலாசிரி யன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல். அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட் கண் வருமெனப் பாணினியார் ஓதினார் ; அஃது இவர்க்கும் உடம்பாடு. இறந்தது காத்தலாவது --- மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தா னமைத்தல். எதிரது போற்றலாவது --- முன் கூறப்பட்ட சூத்திரத் தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல். மொழிவாமென்றலாவது --- சில பொருளைக் கூறி அவற்றுளொன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென வுரைத்தல். புணரிய னிலையிடைக் குறுகலும் (மொழிமரபு. 2) என்பதனாற் கொள்க. கூறிற்றென்றலாவது --- பல பொருளா யதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லப்பட்டனவென்றல். மாத்திரை வகையும் எழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன (செய்யுளியல்.2) என்றதனாற் கொள்க. தான்குறியிடுதலாவது --- உலகின்கண் வழக்கின்றி யொரு பொருட்கு ஆசிரியன்றான் குறியிடல். அஃது உயர்திணை யஃறிணையென்பன. ஒருதலையன்மை முடிந்தது காட்டலாவது ஒரு பொருளை யோதிய வழிச் சொல்லுவதற்கே யுரித்தன்றிப் பிற பொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல். ஆணை கூறலாவது --- ஒரு பொருளைக் கூறும்வழி ஏதுவினாற் கூறலன்றித் தன் னாணையாற் கூறல். வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறினமையின் அவர் விளியை முதல்வேற்றுமையி லடக்கினார். அதற்குத் திரிபுகூறாது அதனை எட்டாம் வேற்றுமையென்றல் ஆண்டுக் கடாவப்படா. பல்பொருட் கேற்பின் நல்லது கோடலாவது---ஒரு சூத்திரம் பலபொருட் கேற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல். தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடலாவது---தொகுத்துக் கூறிய சொல் தன்னானே பிறிதுமொரு பொருள் வகுத்துக்காட்டல். அது குற்றியலுகா முறைப்பெயர் மருங்கின் (விளிமரபு, 9) என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங் கோடல். சொல்லின் முடிபின் அப்பொருண் முடித்தலென்பதுமது. மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தலாவது---பிற நூலாசிரியன் கூறின பொருண்மையைக் கெடுத்துத் தன்றுணிவு கூறுதல். அஃதாவது நெட்டெழுத்தேழ் அளபெடையென்பன குற் றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்து வேறோரெழுத்தாக வோதுதல். பிறன்கோட் கூறலாவது---பிற நூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல். அது வேற்றுமை தாமே யேழென மொழிப (வேற்றுமை யியல். 1) என்றல். அறியா துடம்படலாவது---தானறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றா னுடம்படுதல். அது ஏழாநரகம் இத்தன்மைத் தென வொருவன் கூறியவழி அது புலனாகாதாதலின் அவன் சொன்னதற் குடம்படுதல்; இது வழிநூலாசிரியர்க் குரித்து. பொருளிடை யிடுதலாவது---ஒருபொருளை யோதிய வழியதற்கினமாகிய பொருளைச் சேரக்கூறாது இடையீடுபடக் கூறுதல். அது பெண்மை சுட்டிய (பெயரியல். 24) வென்னுஞ் சூத்திரமோதி அதன் பகுதியாகிய ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி யென்பதனை இடையிட்டு வைத்தல் போல்வன. எதிர்பொரு ளுணர்த்தலாவது --- இனிக் கூறவேண்டுவதிது வெனவுணர்த்தல். சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தலென்பது --- பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடல். தந்துபுணர்ந்துரைத்தலாவது --- முன்னாயினும் பின்னா யினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தினுங் கொணர்ந்து புணர்ந்துரைத்தல். ஞாபகங் கூறலாவது --- இரட்டுறமொழிந்து இரண்டு சொற்கும் பொருள்கோடல். உய்த்துக்கொண்டுணர்தலாவது --- ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தாமை யுளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல் பனியென்னுஞ் சொல்லுக்கு அத்தும் இன்னுஞ் சாரியையா மென்றாராயினும் (உயிர்மயங்கியல் 39) அவற்றுள் எற்ப தொன்றாதலின் இன்னீற்றாயவாறு வருவன வுய்த்துணர்தலாம். இவை முப்பத்திரண்டுந் தந்திரவுத்தியாவன. மெய்ப்பட............üby‹gJ மேற்சொல்லப்பட்டவற்றோடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய வல்லாதனவாகிய பிறவவண்வரினுஞ் சொல்லிய நெறியினாற்சுருங்கவாராய்ந்Jமனத்தினானோர்ந்Jகுற்றமறத்தெரிந்Jசொல்லிaவினத்தோLபாகுபடுத்துரைத்தšவேண்டுமJநுண்மைதக¥புலவ®கூறிaநூலிdயென்றவாறு, பிறவாறுகொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னின முடித்தலென்பன. இவற்றுள் மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலு மென்றல் அஃதாவது உகர Éறுதிmகரவியற்றே(cயிர்மaங்கியல்52)என வரு«. செh‰bghUŸ விரித்தலாவது --- பதந்தோறும் பொருள் விரித்துக் கடாவும் விடையுங் கூறுதல், ன்றென முடித்தல் தன்னின முடித்தலென்பது சொல்லப்பட்டவாற்றான்வருமுத்திரமேயாகத்தொகைப்படமுடியும்இனவுஞ்சிலவாசிரியர்மதம்பலவுத்திக்கும்ஏற்கும்ஒருசூத்திரம்இந்நூலகத்துள்............bghUŸ கொண்டாமாயினும் ஈண்டுரைத்த பாகுபாடெல்லாவற்றிற்கும் இந்நூலகத் துதாரணமே fண்டுbகாள்க.ï‹DŠ சொல்லியவல்ல . ah‰bwG¡F mÇkனோக்குதtளைப்பாய்த்துŸபருந்து விழுக்காlன்னுஞ்Nத்திரத்கிடக்கைíம்ஆதிவிs. தீபம்இறுâ. . bபாருŸகோணிலைí.hள்ளப்படு«.யாற்றெhழுக்காவதுகருதிabghUis tGthk‰. ஒழுங்குபlக்கிளத்தல்,அரிமாdக்காவதுமுன்னும்ãன்னுங்Tறுகின்ற விரண்டுNத்திரத்âனையுமிடைநின்wசூத்திரம் நோக்குjல்.தவளைப்ghŒ¤JshtJ இடையறுத்தோடுதல். பருந்து விழுக் காடாவது அவ்வதிகாரத்துட் . பொருள் யாதானு மொருகாரணத்தால் இடைவருதல். . சூத்திரத்தினால் Mâயின்அமைத்தbபாருள் அந்தத்தsவுமோLதல்.மத்திkதீபமாவது இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதிவிளக்காவது இறுதி நின்றபொருள் இடையு முதலு நோக்குதல். போரசிரியம் : இது, முறையானே இறுதிக்கணின்ற முப்பத்திருவகை யுத்தியுங் கூறி மற்றும் இந்நூலுள் அதிகாரம் மூன்றற்கும் வேண்டும் புறனடையுங் கூறுதனுதலிற்று. (இ-ள்) : ஒத்தகாட்சி யுத்திவகை விரிப்பின்---முற்கூறிய குற்றங்களோடு ஒப்பத்தோன்றுந் தோற்றத்தினை உடையவாகிய உத்திக் கூற்றினை விரித்துச் சொல்லின். பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்துவருமெனவே இவையும் நூற்கணன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும். முற்கூறிய குற்றம்போல இவையும் வேறு சில பொருள் படைத்தலுமுடையவாயின. காட்சியுத்தி யென்று இவற்றைக் கூறியவதனான் நூலுட் காணப்படுமென்ற ஐந்து குற்றத்தோடும் ஒத்தல் கொள்ளப்படும்; அவ்வந்நூற்குப் பயம்படவரும் பகுதியானென்பது. உத்தி யென்பது, நூல்செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் செவ்வனஞ் சொல்லுதல் ஒண்மை யுடைத்தன்றாம் பிறவெனின் அற்றன்று; அவ்வாறு செய்தக்கால், நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகல் வேண்டும் (655) என்பது முன்னர்ச்சொல்லினான். ஈண்டுச் செவ்வனஞ் சொல்லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடைய வாமென்பது கருத்து; என்றார்க்குச் செவ்வனஞ் செய்தலை உத்தியென்னானோ வெனின்-அது சொல்லாமை முடிந்ததாகலி னன்றே உத்தி யென்னாது இவற்றை உத்திவகையென்பானாயிற் றென்பது; அஃதேல், இவற்றை முன் தொகுத்தான்போல விரிப்பினென்ற தென்னையெனின் முன்னர் எதிரதுநோக்கி (மரபியல் :98) முப்பத்திரண்டெனத் தொகைகூறிப்பின்னர், மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற்சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் என்கின்றானாகலான், அங்ஙனம் இனம்பற்றி அவற்றோடு அடங்குவனவெல்லாம் அவற்று விரியாதுமென்னுங் கருத்தினாற் கூறினானென்பது. அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான்யா நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே (தொல் சொல்-பெயர் :8) என்பதனுள், ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் எனத் தொகுத்துக் கூறியவழி அது மிகைபடக் கூறலாகாது; என்னை? உம்மையெண்ணாகலின் தொகையின்றியுஞ் சில்வகை யெழுத்திற் செய்யுட்டாக வழக்கியலானே சுருங்கச்செய்வதோர் ஆறுளதாயினும் அப்பதினைந்துமெனத் தொகுத்துக் கூறல் உத்திவகையான் அமையுமாகலினென்பது கருத்து. இங்ஙனந் தொகைகூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகல்; அவை, பதினைந்து பெயருமே ஒருநிகரனவென்பது அறியலாகுமென்பது. இனி, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே (தொல்-செய் :101) என்னுஞ் சூத்திரம்போல்வன பிறிதொருபொருள் பயக்கு மென்றலும் அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது. இவ்வாற்றான் இவ்வுத்திவகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின. மற்று, வகையெனப்படாது செவ்வனஞ்செய்யும் உத்தி யாவன யாவையென்னின். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல்-சொல்-கிள :19) என்றாற்போலச் சொல்லியொழிவன, பிறவும் அன்ன. விரிப்பி னென்ற வினையெச்சஞ் சேர்த்தி யுணர்த்தல் வேண்டு மென்ற முற்றுவினைகொண்டு முடிந்தது. மெய்ப்பட நாடி யென்பன போல்வனவற்றுக்கும் இதுவே முடிபு; அதற்கு நூலென்னும் பெயர்கொடுத்து முடிக்க, நூலையென்று ஐகாரம் விரிப்பின், வேண்டுமென்பது தன்பாலானும் பிறன்பாலானும் பெற்றதோர் பெயர்கொண்டு முடியும். (1) நுதலியதறிதல்---சூத்திரத்துள் ஓதிய பொருளாற் சொல்லப்படும் பயன் இல்லதுபோலச் சொல்லியதனானே அதற்கேற்றவகையாற் கருதியுணரப்படுபொருள் இன்னதென்று கொள்ள வைத்தல்: அது, வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார் (தொல்-சொல்-கிளவி :46) எனவும், சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் (தொல்-சொல்-கிளவி :41) எனவும் இவை வழுவற்க வழுவமைக்க என்னும் இருபகுதியுள் வழுவமைத்தற்கெழுந்தனவென்பது கருதினான் ஆசிரியனென்பது அறியவந்தன. இதனை முதற்கண் வைத்துப்போய் இறுதிக் கண்ணே உய்த்துக்கொண்டுணர்தலை வைத்தான் இதுவும் அதுபோல் உய்த்துக்கொண்டுணர்தல் ஒருவகையானுடைத் தாயினும் அதனாற் பெற்ற பயன் பிறிதுமொன்று உளதாதல் வேற்றுமை யுடைமையினென்பது; அது முன்னர்ச்சொல்லுதும். இனி, மூவகைத் தமிழ்வழக்கமும் நுதலியதும் அவற்றுள் இயற்றமிழே நுதலியதும், அதிகாரம்நுதலியதும், அதிகாரத்துள் ஒத்து நுதலியதும், ஓத்தினுட் சூத்திரம் நுதலியதுமெனவும் இவை நுதலியதறிதற் பகுதியாய் அடங்குமென்பான் மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் என்கின்றானென்பது, மேல்வருகின்றவற்றுக்குமொக்கும். அஃதேல் இதனை ஆண்டுவைத்து மற்றதனை ஈண்டு வைப்பினும் இஃதொக்கும் பிறவெனின், அற்றன்று; நூலின்வேறாகிய பாயிரத்துள்ளாயினும் இந்நுதலியதறிதல் வருதலும் உத்தி யென்றற்கு இதனை முன்வைத்தானென்பது. 2) அதிகா ரமுறைமை --- என்பது முன்னின்ற சூத்திரப் பொருண்மை பின்வருஞ் சூத்திரத்திற்கும் பெறற்பாலன பெற வைத்தல்;அவை, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல்-சொல்-கிள :19) என்றவழி இற்றெனக் கிளத்த லுரிமைபூண்ட தன்றே, அதனைச் செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல் (தொல்-சொல்-கிள:20) என்புழியுங் கொள்ள வைத்தலும், குற்றிய லிகர நிற்றல்வேண்டும் (தொல்-எழுத்-மொழி 1) என்பதனைக், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்து (தொல்-எழுத்-மொழி 3) நிற்றல் வேண்டும் என்று கொள்ள வைத்தலும் போல்வன. இனி, வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய் யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச்செய்யுளின்றி அமையாத இசையிலக்கணம் இசைத்தமி ழெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப் பட்டதெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணங் கூறிய நாடகத் தமிழ் அவற்றுப் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்; இனி இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத் தோடு சொல்லதிகாரத்திற்குஞ் சொல்லதிகாரத்தோடு பொருளதி காரத்திற்கும் இயையு கூறுதலும் அதிகாரத்துள் ஓத்துப்பல வாகலின் அவை ஒன்றன்பின்னொன்று வைத்தற்கு இயைபு கூறுதலும் அவ்வாறே சூத்திரத்திற்கு இயைபு கூறுதலு மெல்லாம் அதிகார முறைமைக்கு இனமென்று சேர்த்தி யுணரப்படும். பிறவும் அன்ன அதிகாரமென்ற பொருண்மை யென்னையெனின், முறைமை யெனவும், இடமெனவுங், கிழமையெனவுங் கொள்ளப்படும். அவற்றுள், ஈண்டு அதிகாரமென்றொழியாது முறைமை யெனவுங் கூறினமையின் அதிகாரமென்பது முறைமைப் பொருட்டன்றி முன் ஓரிடத்து நிறுத்தி அதன் வழிமுறையாற் பொருள் கோடல் கொள்க; என்னை? முன்னும் பின்னும் நின்ற சூத்திரம் இரண்டனையும் ஓரிடத்தனவாகக் கருதல் வேண்டும்; அங்ஙனங் கருதலியைபுகொண்டன்றி ஒன்றன் பொருண்மை ஒன்றற்கு வருவித்தல் அரிதாகலானும் அங்ஙனம் இடம் பற்றாக்கால் ஒருவன் செய்த நூலொடு பிறதொருநூற்கு இயைபு கூறாதவாறுபோல எழுத்ததிகாரத்தோடு சொல்லதிகாரத்திடை இயைபு கூறல்வேண்டு வதன்றாவான் செல்லுமாதலானு மென்பது. எனவே, இடமெனப்பட்டதுதானே முறைமைப் பொருளும் படுமாயினும் இச்சூத்திரத்துள் அதிகாரமெனவும் முறைமையெனவுங் கூறினமையின் ஈண்டு இடமுறைமை யென்பதே கருத்தாயிற்று. இதனானே உடன் பிறந்தாருள் ஒருவற்குரியது வழித்தோன்றினார்க்கும் ஒருவழி உரியவாறுபோல முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படுமென்பது உத்திவகையாயிற்று. இனியொருசாரார், இங்ஙனம் வரைந்துகொண்ட இடத்துள்ளே யாற்றொழுக்குப் போலவன்றி இடையிடையும் பெறு மென்பது நோக்கி அரிமா நோக்குந், தேரைப் பாய்த்துளும், பருந்து விழுக்காடும் ஆகி வருமெனவுஞ் சொல்லுப; அவையும் இனத்திற் சேர்த்தி யுணர்த்தவேபடுவமென்பது. (3) தொகுத்துத் கூறல் --- தொகுத்தியாத்த நூலுள்ளுந் தொகுத்துக்கூறுதல் : அவையாவன : எழுத்து முப்பத்துமூன்று, சொல்லிரண்டு, பொருளிரண்டு எனஆசிரியன்றானே தொகை கூறுதல் போல் வன இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் (தொல்-சொல்-கிளவி : 10) எனப் பல சூத்திரத்து விரிந்தன தொகுத்தலும், ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயர் (தொல்-சொல்-பெய : 8) என ஒரு சூத்திரத்து விரித்துத் தொகுத்தலும் போல்வனவும் அதன் பகுதியாய் அடங்கும். (4) வகுத்து மெய்ந்நிறுத்தல் அங்ஙனந் தொகுத்துக்கூறிய வழி எழுத்து முப்பத்துமூன்றென்ற தொகையினைக் குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமு மென்றாற் போலவும் உயர்திணை அஃறிணை யென்ற தொகையினை ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்றாற் போலவும் வகுத்தல்: உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும் (தொல்-சொல்-பெய: 6) எனவும், இயற்சொ றிரிசொ றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே (தொல்-சொல்-எச்: 1) எனவும் வருவனவும் அவை இவற்றுள் இருதிணையெனக் கூறிப் பெயர் மூன்று, வினை மூன்றென்றலும்; இனி அகத்திணை புறத்திணையெனக்கூறி, அகம்புறமெனக் கோடலும் இன மென்றது; அவை குற்றெழுத்து நெட்டெழுத்தென முற்கூறி யனவே மற்றொரு பெயர் பெற்றாற்போலாது சொல்வகையான் மூன்றாவதோர் சொல் வேறு பெற்றமையினென்பது. இங்ஙனங் கொள்ளாக்கால் இருதிணைப் பெயரும் வினையும் மும்மூன் றெனல் ஆகாதன்றோவென்பது சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே (தொல்.சொல்-பெய: 4) என்றவழி, இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப என வகுத்தலும், இனி ஆராய்ந்த இயற்சொல்லொடு வேறு மூன்று சொற்கூட்டி நான்கென்றலும் அவ்வாறே இனமெனப் படும். என்னை? ஒழிந்த மூன்று சொல்லும் இயற்சொல்லின் வேறுபட்டமை கூறுமாகலி னென்பது. அஃதேல், எழுத்து முப்பத்துமூன்றெனக் கூறிப் பின்னர் இருநூற்றொருபத் தாறுயிர் மெய்க் குப்பை கோடலும் வேற்றெழுத்தாகி வரு மென்பது வகுத்து மெய்ந்நிறுத்தலென்பதனாற் கொள்ளாமோ வெனின் கோடுமன்றே; புள்ளி யில்லா வெல்லா மெய்யும் என்புழி, உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும் என ஆசிரியன் இரண்டெழுத்தின் கூட்டமாகச் சூத்திரஞ் செய்திலானாயினென்பது. மெய்யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயற்சீர்பத்தெனவும் ஆசிரியவுரிச்சீராறெனவும் வகுத்தவற்றை, இயற்சீ ரிறுதி நேரவ ணிற்பி னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப (தொல்.செய்: 19) என இயலசைமயக்கமாகிய நான்கனையே இயற்சீரெனவும், வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (தொல்-செய்: 23) என்றவழி, ஆசிரியவுரிச்சீர் ஆறனுள் இரண்டனை ஒழித்து உரியசை மயக்கமாகிய நான்கனையே ஆசிரியவுரிச்சீரெனவும் வகுத்து நின்றமையினென்பது. மெய் யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயலசை மயக்க மியற்சீ ரேனை யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர் (தொல்-செய் : 13) என்று பகுத்தோதியவாற்றானென்பது; அக்கருத்தினானன்றே ஒழிந்த இரண்டனையுங், கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல்-செய் : 24) என இறந்ததுதழீஇ உரைப்பானாயிற்றென்பது. (5) மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் --- எடுத்தோதிய பொருண்மைக்கு ஏற்ற வகையான் அப்பொருண்மைக்கட் சொல்லாததொன்று கொள்ளவைத்தல். முட்டின்றி முடித்தலென்றதனான் எடுத்தோதாதும் எடுத்தோதியதனோடு ஒக்குஞ் சிறப்பிற்றென்றவாறாம். அது போல்வன அதற்கு இனமெனப்படும் மற்று இதனை அருத்தாபத்தி யென்னாமோவெனின், என்னாமன்றே : பிறசீ ருள்வழித் தன்றளை வேண்டுப என்னும் பொருட்டன்றித் தன்சீரொடு இயற்சீர் வந்து தளை கொள்ளுமென மொழியாதோர் பொருள்கோடலினென்க, இனி, ரஃகா னொற்றும் பகர விறுதியும் (தொல்-சொல் : 7) என்றவழி ஒழிந்த நான்கெழுத்தும் ஈற்றினிற்குமென்று கோடல் போல்வனவும் அதன் இனமெனப்படும். என்னை? ஒன்றென முடித்த றன்னின முடித்த லெனினும் இழுக்காது. இனிச், சீரியை மருங்கி னோரசை யொப்பின் (தொல்-சொல் : 56) என்றவழி, ஒன்றாதது இயற்சீர்வெண்டளை யென்றுகோடல் அருத்தாபத்தியாகி, எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்து (தொல்-செய் : 61) என்ற வழக்கியலானே வழுவன்றி அடங்குமென்பது. (6) வாராததனான் வந்தது முடித்தல்---ஒரு பொருண் மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததோர் சூத்திரத் தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச்செய்தல்; அது, தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே (தொல்-எழுத்-உயிர் : 12) என அதற்குக் கேடு வாராத சூத்திரத்தானே லகரம் றகர வொற்றாய் வருமெனப் பிரித்துத் திரிபு கூறியதே பற்றாக லகரம் ஆண்டு நில்லாது கெடுமென்று கொள்ளவைத்ததனானே சிற்சில வித்திப் பற்பல கொண்டாரென்று வந்த புணர்ச்சி முடித்தவாறு கண்டுகொள்க. எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் (தொல்-எழுத்-உரு : 17) என்றவழி, எல்லாமென்னும் விரவுப்பெயருள் உயர்திணை கூறிவற்றுச்சாரியை பெறாமையான் அது பெற்றுவந்த அஃறிணைக் கூறே முடித்தலும் அது; பிறவும் அன்ன. இனி, இங்ஙனம் முடிபுகோடலன்றி ஆண்டுக் குறியிடுதலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்குநிகழ்ந்தது பின்னர் ஆட்சிக் கண் வாராமையும் வந்தவழிப் பிறவற்றோடு கூறுதலும் அதற்கு இனமெனப்படும். அவை, அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொல்-சொல்-வினை : 31) என முடிந்ததனை மீண்டும், நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி (தொல்-சொல்-எச்ச : 34) எனக் குறியிடுதல் எச்சவியலுள் வந்ததாயினும் முன்னர் அக் குறியீடு வந்ததின்மையின் அது வாராததெனப்படுமாகலின் அஃது ஈண்டுக் குறியிடுதலாயிற்று. வினையியலுட் பெயரெச்ச மென்று ஆளுதலும் அது. வண்ணச் சினைச்சொல் முற்றுச்சொல் என்பனவுங் குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது. இனிப், புள்ளியென மேல் ஆளவாராததனைப் புள்ளி யென்று ஆள்வனவற்றொடு மயக்கங் கூறுதலென்பது, அவைதாங், குற்றிய விகரங் குற்றிய லுகர மாய்த மென்று முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொல்-எழுத்-நூன் : 2) என்புழிக் குற்றியவிகரம் புள்ளியென்று யாண்டும் ஆளவாரா மையாலும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன்கூறுதலாயிற்று. இங்ஙனம் உடன்கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம்பெறுதல் வேண்டுவதாவான் செல்லு மென்பது; இனி ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா (தொல்-எழுத்-நூன்: 32) எனவும், மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும் (தொல்-எழுத்-உயிர்: 88) எனவுங் கூறுவனவும் அவை. என்னை? இடைச்சொல்லோத் தினுள் வினாவென்றோதாத ஆகாரம் வாராததுடன் ஆண்டு வினாவென்று ஓதிய ஏகார ஓகாரங்கள் ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா என்று உடன் கூறினமையானும், அவ்வாறு இடைச்சொல் லோத்தினுள் எடுத்தோதாத மாறுகொளெச்சத்தொடும் ஐயத் தோடும் ஆண்டோதிய வினாவினையும் எண்ணினையும் எழுத்தோத்தினுள் விதந்துடன் கூறினமையானுமென்பது; இது நோக்கிப் போலும். ஈற்றசை யிவ்வைந் தேகாரம் (தொல்-சொல்-இடை: 9) என இடைச்சொல்லினை எழுத்துச்சாரியை பெய்தோதிய கருத் தானே இப்பொருண்மைகொள்ள வைப்பானாயிற்று மென்பது. மற்று இவை எதிரதுபோற்றலாகாவோவெனின்,--- அது பொருட்படைக் கண்ணதெனவும் இவை ஆட்சியுங் குறியீடும் பற்றியதோர் பகுதி யெனவும் கூறி விடுக்க. அஃதேற், குறி யீட்டால் ஈண்டாராயானோவெனின்,--- இவை உத்திவகை யாகலானும் அது தானே உத்தியெனப் படுமாதலானும் அதனை ஈண்டு ஆராயானென்பது. (7) வந்ததுகொண்டு வாராததுணர்த்தல் --- பின்னொரு வழி வந்ததுகொண்டு முன்வாராததோர் பொருள் அறிய வைத்தல்; அது, ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும் (தொல்.எழுத்-உயிர்: 2) என்பது. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப (தொல்.எழுத்-எச்ச: 43) என, வந்தது கொண்டு மேற்கூறப்பட்ட ஏழெச்சத்திற்கும் மேல் வந்து முடிக்குஞ் சொல் வாராததனை வருமென்றுணர்ந்து கொள்ளவைத்தமையின் இதுவும் அதுவேயாயிற்று. ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (தொல்-சொல்-கிள : 1) என்றவழித் திணையென்னும் பெயர் எப்பொருட்கும் எய்துவித்தல் ஒரு சூத்திரத்துள்ளே கோடலின் அதனை அதற்கு இனமென்று கொள்ளப்படும்; பிறவும் அன்ன. (8) முந்து மொழிந்ததன் றலைதடுமாற்று---முன்னொரு காற் கூறிய முறையன்றிப் பின்னொருகால் தலை தடுமாறாகக் கூறுதல்; அது, பன்னீ ருயிருமொழிமுத லாகும் (தொல்-எழுத்-மொழி : 26) எனவும், உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா (தொல்-எழுத்-மொழி : 27) எனவும், உயிரும் மெய்யும் நிறுத்தமுறையானன்றிக், கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் (தொல்-எழுத்-மொழி : 28) எனவும் மெய்பற்றி வரையறை கூறுதலும், எல்லா மொழிக்கு மிறுதியு முதலு மெய்யே யுயிரென் றாயீ ரியல (தொல்-எழுத்-புண : 1) என முற்கூறியமுறை பிறழக் கூறுதலுமாயின. மெய்யும் உயிரும் பற்றி விதந்து வரையறுப்பினும் அஃது இரண்டற்குஞ் செல்லுமென்று கோடற்கும், இனி இயல்புவகை யான் ஈறாக ஒருதலையாக உடையன மெய்யென்றற்கும் அவ்வாறு கூறினானென்னாமோவெனின், அங்ஙனமே அக் கருத்தினானன்றே ஒத்தகாட்சியெனக் குற்றத்தோடு ஒப்புமை கூறி பற்றுப் பொருள் பயத்தலின் அமையுமென்று கொள்வாமா யிற்றென்பது. இனி, மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின் (தொல்-எழுத் - புண : 1) என்றாற்போல்வன இன மெனப்படும். புள்ளி யில்லா வெல்லா மெய்யும் (தொல்-எழுத்-நூன் : 17) என்பது மெய் முற்கூறினமையின் இதுவும் இதற்கு உதாரண மெனப்படும். மற்று, மயக்கங்கூறலோடு இதனிடை வேற்றுமையென்னை யெனின், --- அஃது இன்னே வற்றே (தொல்-எழுத்-புண : 17) என நிறுத்தமுறையாற் கூறாது மற்றதுவே பற்றாக மற்றொரு பொருள் கொள்ளப்படும். இஃது இன்னதன்றி இங்ஙனம் மயங்கக் கூறல்வேண்டும். பொருண்மைத்தாகி வருமென்பது; அஃதேல், இது மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாகாவோ வெனின், --- ஆகாது; என்னை? இது முற்கூறிய பொருளை மாறுபடாமை யானும் நிறுத்தமுறை தலைதடுமாற வைக்குந் துணையாகலானு மென்பது. (9) ஒப்பக்கூறல் : ஒன்று கூறுங்கால் இருபொருட் குறித்த தென்று இரட்டுறச்செய்தல். அது, இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும் (தொல்-எழுத்-புண : 18) என்றாற்போல்வன. வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும், (தொல்-எழுத்-உயிர் : 2) எனவும், அன்ன வென்னு முவமக் கிளவியும் (தொல்-எழுத்-உயர் : 8) எனவும் இனமல்லனவற்றை உடனெண்ணுதலும், மாமரக் கிளவியு மாவு மாவும் (தொல்-எழுத்-உயிர், 29) என மாட்டெறியுங்கால் வேறுவேறு விதியுடையனவற்றை ஒருங்கு மாட்டெறிதலும், ஆண்டு ஆறு வல்லெழுத்தினையும் உடன் கோடலும், நிலைமொழித்தொழிலொடு வருமொழித் தொழிலும் ஒப்புக்கொண்டு மாட்டெறிதலும் போல்வன ஒப்பக்கூறலென்னும் பகுதியாய் அடங்குமென்பது. (10) ஒருதலை மொழிதல்---ஓர் அதிகாரத்திற் சொல்லற் பாலதனை வேறு அதிகாரத்துச் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டுங் கொள்ளவைத்தல்; அது, அ இ உ அம்மூன்றும் சுட்டு (தொல்-எழுத்-நூன் : 31) எனவும், ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை (தொல்-எழுத்-புள்ளி : 8) எனவும் இவை எழுத்ததிகாரத்துக் கூறியவாற்றானே சொல்லதி காரத்துள்ளும் அவ்விலக்கணங் கொள்ள வைத்தமையின் அப்பெயர்த்தாயிற்று. உடம்பொடுபுணர்த்துச் சொல்லுவன அதற்கு இன மெனப்படும். என்னை? விதியல்லாதது விதிபோல மற்றொரு வழிச் சேறலின். (11) தன்கோட்கூறல்---சொல்லாதன பிறவுளவாயினும் அந்நூற்கு வேண்டுவதே கொள்வலென்றல்; அது, அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே (தொல்-எழுத்-பிறப் : 20) எனவும், சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐஔவெனு மூன்றலங் கடையே (தொல்-எழுத்-மொழி : 29) எனவும், குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே (தொல்-எழுத்-மொழி : 11) எனவும், பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல்-அகத் : 3) எனவும் வரும். இவ்வாற்றானே. அளபிற் கோட லந்தணர் மறைத்து (தொல்-எழுத்-பிறப் : 20) ஆயினும் அது கூறினேனெனவும், இயற்சொல்லிற்கல்லது நிலை மொழியாக்கங் கூறேனெனவும், வழக்குஞ் செய்யுளும் ஆராய்வல் என்று புகுந்தான் பாடலுட் பயின்ற வழக்கே கூறுவலெனவுங் கூறுதலின் அவை தன்கோட்கூறுதலாம். இனி, ஒன்பது மயக்கத்துண் மெய்ம்மயக்கங்கூறி ஒழிந்தன கூறாமையும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் எடுத்தோதி முடியாமையும், நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல்-அகத் : 53) பற்றிப் பொருளிலக்கணங் கூறுவலென்றலும், பெரும்பான்மை இலக்கண வழக்கென்ப என்றலும், அதனானே சிறுபான்மையை மயக்கமென்றலும், அம் ஆம் எம் ஏம் என்பன முதலாயவற்றை அங்ஙனம் பகுத்தோதுதற்பயனும், அவை வினையின்றி அவ் வினை செய்தான்மேல் நிகழ்கின்ற கூறாதலுமே பற்றி, வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் (தொல்-சொல்-இடை : 2) என்று இடைச்சொல்லொடு ஓதுதலும் போல்வன அதற்கு இனமெனப்படும்; என்னை? இவைதாங் கூறுவலென்று புகுந்த வற்றுள்ளும் ஒரு பொருளானவற்றை வரைந்து கொண்டமையின் அவற்றுள் விரியெனப்பட்டன. (12) முறைபிறழாமை --- காரணமின்றித் தான் சில பொருள் எண்ணி நிறுத்தியபின்னர் அம்முறை பிறழ்ந்தாலுங் குற்றமில் வழியும் அம் முறையினையே இலக்கணமாகச் சொல்லுதல் அது. பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி யென்னு மீற்ற (தொல்-சொல்-வேற் : 3) என நிறுத்தமுறையாற்பற்றி எழுவாய்வேற்றுமை இரண்டாவது மூன்றாவதெனப் பெயர்கொடுத்தல். அகரமுத னகர விறுவாய் (தொல்-எழுத்-நூன் : 1) எனவுங், கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல்-அகத் : 1) எனவும், வழக்கியலானும் இலக்கண வகையானும் உள்பொருளை விதந்தே எண்ணி நிறுத்தாத வழியும், அவற்றுள், அ இ உ எ ஓ எனவும், அவற்றுள் நடுவணைந்திணை நடுவண தொழிய (தொல்-அகத்: 2) எனவும் முறைபிறழாமற் கோடல் அதற்கு இனமெனப்படும். (13) பிறனுடம்பட்டது தானுடம்படுதல்---உள் பொருள் அன்றாயினும் வழக்கியலாற் கொள்பொருள் இதுவெனக் கூறுதல்; அது, பண்டியன் மருங்கின்மரீ இயமரபு (தொல்-சொல்-வேற்.ம: 7) என்றாற் போல்வனவற்றான் அறிக. இனி, மீயென மரீஇய விடம்வரை கிளவியும் (தொல்-எழுத்-உயிர் : 48) என்புழி மேலென்பது இலக்கணமென்று எடுத்தோதியதனை மரூஉவென்றமையின் அதுவும் அதன்பாற்படும். என்னை? முதனூலுட்கொண்டவாறறிந்து மற்று அதனைத்தான் இச்சொல் இன்னவாறாயிற்றென்று இலக்கணங்கூறாது உடம்படுதலின். மற்று அதனை இனமென்பதெற்றுக்கு? இதுதானே பிறனுடம் பட்டது தானுடம்பட்டதாகாதோ முதனூலாசிரியன் உடம்பட்டதாகலினெனின்---அற்றன்று; முதனூலாசிரியனைப் பிறனென்னாமையானும், முதனூலின் வழித்தாகிய நூலுள் அவன் உடம்பட்ட தொன்று உடம்படுமென்று உத்திவகையாற் கொள்ளாது முழுவதூஉங் கொள்ளுமாகலானும் அவ்வாய்பாடு கூறலாகாதென்பது. இனி, முதனூலுள் மேலென்பது மீயென மரீஇயிற்றென்று விதந்தோதப்பட்டதனை அங்ஙனங் கூறாது மீயென மரீஇயிற் றென்று வாளாது கூறினமையின், அதனை இனமென்று கொண் டாமென்பது; எனவே, ஈண்டுப் பிறனென்றது வழக்கினுள் ளோரை நோக்கியாயிற்று; என்றாற்கு ஒழிந்த வழிநூலாசிரி யரைப் பிறனென்றானென்னாமோவெனின், அவருடம்பட்டது உடம்பட்டதனாற் பயந்ததென்னை? முதனூலிற் பிறழாமை நூல்செய்யுமாயினென மறுக்க. அல்லதூஉம் இசைநூலுங் கூத்தநூலும்பற்றிப் பிறன் கோட் கூறலென்பதனாற் பிறனென்னினன்றி இயற்றமிழ்க் கண்ணே முதனூலாசிரியனைத் பிறனென்னானென்பது ; அஃதேல் வழக்குநூல், செய்வான் அவ்வழக்கினை வழங்கு வாரைப் பிறனென்ணுமோவெனின், இலக்கணமும் வழக்குமென இரண்டனுள் இஃதிலக்கணமாதலின் அவ்வழக்கினுள் வழங்கு வாரைப் பிறனென்றால் அமையுமன்றோவென்பது ; என்றாற்கு அவருடம்பட்டது உடம்படுதல் உத்திவகையென்ப தெற்றுக்கு? அஃது இயல்பேயன்றோவெனின்,- அங்ஙனம் --- மரீஇயினும் இலக்கணமென்பது திரிபில்லாதாகலிற் றிரிபுபடும் வழக்கினை உடம்படுதல் இலக்கண மேயாமென்பது கருத்து ; அல்லாக்கால் எள்ளேபோல எட்குப் பையுந் தன் தன்மையான் உள் பொருளாகலும் வேண்டு மன்றே வென்பது. (14) இறந்தது காத்தல்---என்பது, முற்கூறியவோர் சூத்திரப் பொருண்மையைப் பின்னொரு சூத்திரத்தான் விலக்குதல்) அது, பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே (தொல்-பொரு:5) எனக் கூறிய பின்னர், நட்பி னடக்கை யாங்கலங் கடையே (தொல்-பொரு: 6) என்றாற்போல விலக்குதல், நூற்புறனடையும் ஓத்துப்புறனடையும் அதிகாரப் புறனடையும் போல்வன அதற்கு இனமெனப்படும். அவை, ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லா மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே (தொல்-எழுத்-தொகை : 29) எனவும், புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் (தொல்-எழுத்-உரு : 30) எனவும் வருவனபோல்வன. (15) எதிரது போற்றல்---வருகின்ற சூத்திரப்பொருண்மைக் கேற்ப வேறொருபொருண் முற்கூறுதல்; அது, ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் (தொல்-எழுத்-தொகை : 19) என வருகின்றதனை நோக்கி, ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் (தொல்-எழுத்-புண : 18) எனக் கூறுதலும், பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை (தொல்-சொல்-வினை : 30) என வருகின்றதனை நேக்கித், தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் (தொல்-சொல்-கிளவி : 43) என வழுவமைத்தலும் போல்வன. இனி, ஒரு சூத்திரத்துள்ளே, ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் (தொல்-எழுத்-தொகை : 19) என வருவதனை நோக்கிக் கூறிய, குற்றொற் றிரட்ட லில்லை தொல்-எழுத்-தொகை :19) என்றல் அதற்கு இனமெனப்படும். (16) மொழிவாமென்றல்---ஒரு பயனோக்கி முற்கூறுது மென்றல்; அவை, உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் (தொல்-எழுத்-மொ :2) எனவும், கடப்பா டறிந்த புணரிய லான (தொல்-எழுத்-மொழி :4) எனவும், அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப (தொல்-சொல்.விளி :2) எனவும் வரும். இங்ஙனங் கூறியதனாற் பயன் : குற்றுகர வீற்றுக்கணன்றிப் புணர்மொழிக் குற்றிகர மின்றென்பதூஉம், இனிப் புணர் மொழிக் குற்றிகரம் பெருவரவிற்றென்பதூஉம் அறிவித்த லாயிற்று. அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப என்பதூஉம், * அவ்விளியேலா என்றதூஉம் அவ்விளியிலக்கண மென்றற் பயம் பட வந்தது. ஈற்றுப் பொதுவினால் விளியேற்குமென்று ஓதப்பட்ட பெயருள் இவை விளியேலாவென விளிவிலக்கல் வேண்டுதலானும், நீ வாராயென்பது இயல்புவிளியன்றென விலக்குதலும் விளியிலக்கணமே யாதலானு மென்பது. இனி, மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு மைகார வேற்றுமைத் திரிபென மொழிப எனவும், மெல்வெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே (தொல்-எழுத்- தொகை :1) எனவும் வருவன அதன்பாற்படும்;என்னை? அவையும் முன்னர்ப் போய் மொழிவனவற்றை அவாவி நின்றமையி னென்பது. (17) கூறிற்றென்றல்---முற்கூறியதோர் இலக்கணத்தினை மற்றொரு பொருட்கும் விதிக்கவேண்டிய வழி, அவ்விலக்கணத் தினை மீட்டுங் கூறாது மேற்கூறியவாற்றானே கொள்க வென்பான் அவை கூறினாமென்று நெகிழ்ந்து போதல் அவை, கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு முற்கிளந் தனவே முறைநெறி வகையின் (தொல்-செய் :185) எனவும், எண்வகை யியனெறி பிழையாதாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே (தொல்-செய் :205) எனவும் வரும். இவை அகப்பொருட்கும் புறப்பொருட்கும் ஓதிய இலக்கணஞ் செய்யுளுள்ளும் அவ்வாறெய்துவித்த வாறாயிற்று. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே (தொல்-அகத்:17) எனவும், மெய்பெறு வகையே கைகோள் வகையே (தொல்-செய்: 188) எனவும், மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர் (தொல்-செய் : 2) எனவும் வருவன அதற்கு இனமெனப்படும்; என்னை? கைக்கிளை பெருந்திணைக்கும் இவையே முதலென்றானுந், திணையுங் கைகோளும் போல்வன புறப்பொருட்குங் கோடற் பயன்பட வைத்தமையானும், முற்கூறிய மாத்திரையும் எழுத்தும் பிறவாற்றாற் செய்யுட்குப் பயன்படுமாற்றான் வேறுபட்டதல்லது அவை மேற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்றமையானு மென்பது. (18) தான் குறியிடுதல்---உலகு குறியின்றித் தன்னூலுள்ளே வேறு குறியிட்டாளல் :அவை, உயர்திணை அஃறிணையெனவும், கைக்கிளை பெருந்திணையெனவும், சொல்லிற்கும் பொருளிற்கும் வழக்கிய லானன்றி ஆசிரியன்தானே குறியிடுதல் வண்ணச்சினைச் சொன்முற்று வினைச்சொல் லென ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவும் வினையெஞ்சுகிளவியும் பெயரெஞ்சு கிளவியுமென்று ஆண்டு, ...Mp ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி (தொல்-சொல்-எ¢:34) எனக் குறியிடுதலும் அது. இரண்டா குவதே யையெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல்-சொல்-வேற் :10) எனவும், மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி (தொல்-சொல்-வேற்.ம ;9) எனவும் பெயர் கொடுத்தல் அதற்கு இனமெனப்படும். (19) ஒருதலையன்மை--- வேற்றுமை யாயின் வல்வெழுத்து மிகும் (தொல்-எழுத்-உயிர் : 33) என விரித்தாற் போலாது இலக்கணங் கூறி ஒழிதல் : அது, குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவன் லாறன் மிசைத்தே (தொல்-எழுத்- மொழி :5) என்றக்கால் யாண்டும் ஒருதலையாக வாராது, வருஞான்று வருவது ஆண்டென்று கொள்ளவைத்தல், இனிச், சொல்லோத்தினுள் வேற்றுமையென்று ஓதப்பட்ட எட்டனுள் எழுவாய்வேற்றுமையினையும் விளி வேற்றுமையினையும் வேற்றுமையென்னாது எழுத்தோத்தினுள் அல்வழியென்றல் போல்வன அதற்கு இனமெனப்படும். (20) முடிந்தது காட்டல் --- சொல்லுகின்ற பொருட்கு வேண்டுவனவெல்லாஞ் சொல்லாது தொல்லாசிரியர் கூறினா ரென்று சொல்லுதல். அஃது ஒன்றறிவது உற்றறிவ தென்றற்கும், இரண்டறிவது உற்றுஞ் சுவைத்தும் அறிவது என்றற்கும் முறைமையாற் சூத்திரஞ் செய்வான் அவை அவ்வாறாதற்குக் காரணங் கூறாது, நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (தொல்-மர :27) என முடிந்தது காட்டல். நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறே (தொல்-எழுத்-நூன் :7) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். (21) ஆணை கூறல்---இவ்வாசிரியன் கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல் :அது, அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும் (தொல்-எழுத்-புண : 27) எனத் கருவியோத்தினுட் சாரியை மகரம் பகரவருமொழிக் கண் திரியாதென்று போய்ச் செய்கையுள் வல்வெழுத்தினது இயற்கை மெல்லெழுத்தாதல் அறிவித்தற்கு அல்வழி யெல்லா மெல்லெழுத்தாகு மெனச் சொல்லுதல் போல்வன. ஙஞந ஆதற்கும் இஃதொக்கும். ஓம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர் (தொல்-சொல்-உரிச் 98) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். மற்றுத் தன்கோட்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், அது தந்திரஞ்செய்யும் பகுதிக்கண்ணது; இஃது அன்னதன்றிப் புணர்ச்சிக்கட் சிறப்புடைய நிலைமொழி வருமொழிக்குத் திரிபுபோலாதென்று கருவியாகிய இடைச் சொற்காயின் இத்துணை யமையுமென்று ஆணை செய்தலின் அப்பெயர்த்தாயிற்று. (22) பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் --- ஒரு சூத்திரத்துட் பயந்த சொற்றொடர் பலபொருட் கேற்றதாயினும் நல்லது கொள்கின்றாரெனக் கருதி அவ்வாறு செய்தல்: அவை, ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை (தொல்-சொல்-பெய :37) என்றவழி, ஒருவரென்பதொரு சொல் தன்கண்ணே இரு பாலாரையுந் தழீஇ நிற்குமெனவும், அது கருவியாக இரு பாலாரையுஞ் சொல்லப்படுமெனவும் கவர்ந்தவழி, தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும் (தொல்-சொல்-பெய :38) என்பதனோடு படுத்துநோக்க இருபாலாரையும் ஒருசொல் தன்கட்டழீஇ நிற்றலே நல்லதென்று கொள்ளவைத்தல். நும்மெ னிறுதி யியற்கை யாகும் (தொல்-எழுத்- உரு :15) என்புழி, எழுத்து விகாரமுடையதனைக் களைந்து சாரியைக் கண்ணே இயற்கை கோடலும் அதன்பாற்படும். இதனை ஏற்புழிக் கோடலெனவும் ஒருபுடைச் சேறலெனவுஞ் சொல்லுப. (23) தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்---ஒரு வாய்பாடு எடுத்தோதப் பலவாய்பாடு அதற்கு வந்து பூணுமென்று வகுத்துக் கொள்ளவைத்தல் :அது, செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொல்-சொல்-வினை :31) எனவும், காப்பி னோப்பி னூர்தியி னிழையின் (தொல்-சொல்-வேற் : 11) எனவும் ஒரு வாய்பாடு தொகுத்து ஓதியவாற்றானே பல வாய்பாடு வகுத்துக் கொள்ளவைப்பதென்பது, செய்தென் பதனை நக்கு வந்து கண்டு நின்று பாடிப் போய் எனப் பலவாக்குதலும் முற்றுவாய்பாடு பலவுமாக்குதலும், இனிக் காப்பி னென்றவழிப் புரத்தல் புறந்தர லோம்புதல் போற்றல் எனப் பலவாக வகுத்தலுங் கண்டுகொள்க. உருவென மொழியினும் (தொல்-சொல்-கிளவி :24) என்றலும், இதன திதுவிற்று (தொல்-சொல்-வேற்-ம :27) என்றலும் போல்வன அதற்கு இனமெனப்படும். (24) மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல்---ஒரு பொருளினை ஒருவன் வேறுபடக்கொள்வதோர் உணர்வு தோன்றியக்கால் அவ் வேறுபாட்டினை மாற்றித் தான் துணிந்தவாறு அவற்கும் அறிவுறுத்தல். இது மறுதலை சிதைத்தலுடைமையின் வாளாது தன்கோட் கூறலின் அடங்காதாயிற்று. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே (தொல்-எழுத்- நூன் :5) எனவும், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொல்-எழுத் -நூன் : 6) எனவும், குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் (தொல்-எழுத்- மொழி :8) எனவும், மூன்று மாத்திரையான் ஓரெழுத்து உண்டென்பாரை விலக்கி வழக்கியலான் இல்லையென்று தன்றுணிபு உரைத்த வாறு. உயிர்மெய் வேறெழுத்தன்றென்பான், புள்ளி யில்லா வெல்லா மெய்யு முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் (தொல்-எழுத்-நூன் :17) எனவும், மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே (தொல்-எழுத்-நூன் :18) எனவும், வேறுபடாது கூறுதலும் அது. வழக்கினுள் அறியாதார்மாட்டு ஒன்றுபோல் இசைப்பன வாயினும் அன்றென்று கூட்டமுணர்த்தினமையின், மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு மெழுத்திய றிரியா (தொல்-எழுத்-மொழி : 20) என்றலும் அதன்பாற் சார்த்தியுணரப்படும்; பிறவும் அன்ன. (25) பிறன்கோட்கூறல் --- தன்னூலே பற்றாகப் பிற நூற்கு வருவதோர் இலக்கணங் கொள்ளுமாறு கூறுதல் அது, அரையளபு குறுகன் மகர முடைத்தே யிசையிட னருகுந் தெரியுங் காலை (தொல்-எழுத்-நூன் :13) எனவும், * அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் ... ... ... ... . நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல்-எழுத்-நூன் :33) எனவும், பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப (தொல்-மெய்ப் :1 எனவும் இவை அவ்வந்நூலுட் கொள்ளுமாற்றான் அமையு மென்றவாறாயின. அளபிற் கோட லந்தணர் மறைத்து (தொல்-எழுத்-பிறப் :20) என்பது அதற்கு இனமெனப்படும். என்னை? அவர் மதம் பற்றி இவர் கொள்வதொரு பயனின்றாகலி னென்பது. (26) அறியா துடம்படல் --- தானோதிய இலக்கணத்தின் வேறுபட வருவன தான் அறிந்திலானாகக் கூறி அதன்புறத்துச் செய்வதொரு புறனடை; அவை கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே (தொல்-சொல்-வேற்-ம :35) எனவும், வருவ வுளவெனினும் வந்தவற் றியலாற் றிரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே (தொல்-செய் :243) எனவும் வரும். இறந்தது காத்தலோடு இதனிடை வேற்றுமையென்னை யெனின், இறந்ததென்பது தான் துணிந்து சொல்லப்பட்ட பொருளாகல் வேண்டும். இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருண்மேற்றாகி அதுவுந் தான் துணியப்படாத பொருளாகித் தான் நூல்செய்த காலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினுங் கொள்கவென்பான், வேறுபிற தோன்றினும் எனவும்; வருபவுளவெனினும் எனவுந் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந்தாற் கல்லது பழுதறச் சொல்லலாகாமையின் அஃது அவையடக்கியல் போல்வதோர் உத்தியெனக் கொள்க. குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலு மறியத் தோன்றிய நெறியிய லென்ப (தொல்-எழுத்-தொகை :18) எனவும், செல்வழி யறிதல் வழக்கத் தானே (தொல்-எழுத்- புள் :17) எனவும் வருவன அதற்கு இனமென வுணர்க. (27) பொருளிடையிடுதல் --- வேற்றுமைப் பொருளினைச் சொல்கின்ற பொருண்மைக்கிடையே பெய்துசொல்லுதலும், சொல்கின்ற பொருட்கு இயைபுடையதனை ஆண்டுச் சொல்லாது இடையிட்டுப்போய்ப் பிறிதொருவழிச் சொல்லுதலும் போல்வன அவை : முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே (தொல்-சொல்-விளி : 19) என்றாற்போலச் சொல்கின்ற உயர்திணைப் பெயரிடை விரவுப் பெயர் பெய்துரைத்தலும் போல்வன, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்துள் ஓதாது எச்சவியலுட் போக்கி, அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (தொல்-சொல்-எச் :46) எனச் சொல்லுதலும் போல்வன. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே (தொல்-சொல்-விளி :20) என்றவழித், தானென்னும் விரவுப் பெயரினை இடைப்பெய்து விலக்குதலும் வேற்றுமைக் கிளவியோத்தினுட் கூறாது எஞ்சிநின்ற வேற்றுமைத் தொகை முதலிய எச்சங்களை எச்சவியலுட் சொல்லுதலும் போல்வனவும் அதன்பாற் சார்த்தியுணர்க. (28) எதிர்பொரு ளுணர்த்தல்---தான் கூறிய இலக் கணத்திற் சில பிற்காலத்துத் திரிபுபடினும் படுமென்பது, முதற் கால முதனூலுங் கொண்டுணர்ந்த ஆசிரியன் எதிர்காலத்து வருவது நோக்கி அதற்கேற்றதோர் இலக்கணங் கூறிப்போதல் : மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகறக் கிளந்த வஃறிணை மேன தொல்-எழுத்-மொழி : 49) என்று ஓதிய இலக்கணத்துச் சில பிற்காலத்துக் குறையவருதல் எதிர்பொருளெனப்படும். அதனைத் தான் உணர்ந்து. கடிசொ லில்லைக் காலத்துப் படினே (தொல்-சொல்-எச் : 26) என்று கூறவே முற்கூறிய பொருளினை வற்புறுத்தலாம். அது வென்பது. இங்ஙனந் திரிபுபடுதல் அறிந்தே கூறுதலானும் எதிர் பொருளாகலானும் இஃதறியாது உடம்படுதலினடங்காதாயிற்று. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரணம் (தொல்-கற் : 4) (29) சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் சொல்லினாற்றலாற் பெறப்படும் பொருளினையும் எடுத்தோதி யாங்குக் கொள்ளவைத்தல் : அஃது, எஞ்சிய வெல்லா மெஞ்சுத லில (தொல்-எழுத்-மொழி : 44) என்புழி, எல்லா மென்பதனை எச்சப்படுத்தற்காகாதன இருபத் தாறு கொண்ட வழியும் அதனை எடுத்தோதிற் சிறப்பின்றென்று கொள்ளற்க என்பது இதன் கருத்து. எச்சவியலுட் கூறிய பொருள் அகத்தோத்துக் கூறிய பொருளோடு ஒப்பக் கூறுதலும் அதன்பாற்படும். மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழி யாததனை முட்டின்று முடித்தலொடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அஃது எடுத்தோதப்பட்ட பொருட்கண்ண தெனவும், இஃது எடுத்தோத்தினோடு ஒப்ப எச்சப்பட வைத்துக் கொள்ளும் இலக்கணம் எனவும் அதனோ டிதனிடை வேற்றுமை யுணர்க. (30) தந்து புணர்ந்துரைத்தல்---உள்பொருளல்லதனை உளபோலத் தந்து கூட உணர்த்தல்; அவை அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (தொல்-செய் : 17) எனவும், மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் (தொல்-எழுத்-புண : 37) எனவும் மேற்கூறிய புள்ளியினையே ஒருபயனோக்கி மீட்டும் புள்ளி பெறுமெனக் கூறுதல் அதற்கு இனமெனப்படும். குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல (தொல்-எழுத்-மொழி : 17) என்பதே பற்றி, நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும் (தொல்-எழுத்-தொகை : 18) என்புழித் தொடர்மொழியை நெட்டெழுத்தாக்கிக் கோடலும் அது. (31) ஞாபகங்கூறல் --- சூத்திரஞ் செய்யுங்கால் அதற்கு ஓதிய இலக்கண வகையானே சில்வகையெழுத்தின் செய் யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருணனி விளங்கவுஞ் செய்யாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றும் அதனானே வேறுபல பொருளுணர்த்தல்; அது, மெய்பெறு மரபிற்றொடைவகைதாமே...cz®ªâá னோரே (தொல்-செய் : 101) என வருதல். இதனாற்கொண்ட பொருண்மையெல்லாஞ் செய்யுளியலுட் காட்டப்பட்டன எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே (தொல்-எழுத்-புண : 26) என்றாற் nபால்வனmதற்குïனமெனப்படும்; ãறவும்mன்ன(32) உய்த்துக்கொண்டுணர்தல்---ஒருவழி ஒரு பொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளினையுங் கொணர்ந்து கொண்டறியுமாறு தோன்றச்செய்தல் : அவை; நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் tல்லாùர்ந்தே(தொல்-எழுத்-மொழி: 3)vd இடனும் பற்றுக்கோடும் கூறி அதனான் ஈறு ஆக்கங் கோடலுங், குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல்-எழுத்-மொழி : 34) என முதலாக்கங் கூறியதனானே இடனும் பற்றுக்கோடும் அதுவே யெனக் கோடலும் போல்வன. பெயர்வினைக்கு ஓதிய இலக்கணம் ஒழிந்த சொற்குஞ் செவ்வானஞ் செல்லுமென்று கோடல் அதற்கு இனமெனப் படும் பிறவும் அன்ன. மற்று நுதலியதறிதலொடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், ---அது வாளாது பயமில கூறியதுபோலக் கூறியவழி இவ்வாறு கூறியது இன்ன கருத்துப் போலு மென்று அறியவைத்தலும், உரைவகையானும் நுதலியதறியச் சொல்லுதலுமாம்; இஃது அன்னதன்றி அச்சூத்திரந் தன்னான் ஒருபொருள் பயந்ததன்றலையும் பின்னொருபொருள் பெற வருதலின் இதுவேறென்பது. மற்று ஞாபகங் கூறலொடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின்,---பயமில்லது போலவும் அரிதும் பெரிதுமாகவும் இயற்றி எளிதுஞ் சிறிதுமாக இயற்றாது சூத்திரஞ் செய்தல் வேறுபாடே நிமித்தமாகத் தோன்றிக் கொள்வதொரு பொருள் பெற வைத்தலின் இதுவும் வேறெனப்படுமென்பது. மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்லபிற அவண் வரினும் --- உய்த்துக்கொண்டுணர்தலொடு மேற்கூறிய முப்பத் திரண்டும் இச்சூத்திரத்துள் எடுத்தோதிய பொருள்வகையான் ஆராய்ந்து சொல்லப்பட்டனவன்றே? அங்ஙனஞ் சொல்லாதன பிறவும் இந்நூலுள் வரினும்; சொல்லியவகையாற் சுருங்க நாடி---உத்திவகையென வகுத்துக்கொண்டு ஓதிய முப்பத்திரண்டு பகுதியான் அடங்குமாறு ஆராய்ந்து; மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு---ஓதப்பட்ட உத்தி பலவும் ஒருங்குவரினும் உள்ளத்தால் தெள்ளிதின் ஆராய்ந்து மயக்கந்தீர வேறுவேறு தெரிந்து வாங்கிக்கொண்டு; இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்---முப்பத்திரண்டாகும் ஏற்றவகையான் இனஞ்சார்த்தி மற்றவற்றை இன்னதிதுவெனப் பெயர் கூறல் வேண்டும்; அங்ஙனந் தொகநின்ற வழியும் வேறுவேறு கொண்டு; நுனித்தகு புலவர் கூறிய நூலே---தலைமை சான்ற ஆசிரியராற் கூறப்பட்ட நூல் (எ---று), எண்ணிய முப்பத்திரண்டுமல்லன தோன்றினும் அவற்றுள் அடக்கி, அவைதாம் ஒருங்குவரினும் வேறு தெரிந்து இனந் தோறுஞ் சேர்த்துதலை அவாவி நிற்கும் ஈண்டு ஓதிய நூலென்பது கருத்து. சொல்லிய அல்ல பிற அவண் வருமாறும், அவை சொல்லியவகையாற் சுருங்க நாடி இனத்திற் சேர்த்துமாறும் மேற் காட்டப்பட்டன. இனி, ஒருங்கு பலவுத்தி வந்தவழி உள்ளத்தால் தெள்ளிதி னெண்ணித்தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்துதல் வருமாறு: அன்னபிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்டல் இயன்ற மருங்கி னெனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைபிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர் (தொல்-சொல்-உரி : 98) என்றவழி, அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன் மறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல் என்பது, இறந்தது காத்தலாம்; என்னை? இசையுங் குறிப்பும் பண்புமேயன்றிச் சீர்த்தியும் புனிறும் போல்வன வேறும் உள எடுத்தோதப் பட்டன எனவும், எடுத்தோதாது இசையுங் குறிப்பும் பண்புமன்றிச் சேணென்றுந் தொறுவென்றும் வருவன உளவென்றுங் கூறினமையின். வரம்புதமக் கின்மையின் என்பது எதிர்பொரு ளுணர்த்தலும் அறியாதுடன்படலுமாம். ஓம்படை யாணை என்பது ஆணை கூறலாம். இங்ஙனம் ஒரு சூத்திரத்துட் பல வந்தவழி ஒன்றே உத்தியென்றுணராது மனத்தினெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இவ்வாற்றான் இனத்திற் சேர்த்துக என்றான் ஆசிரியனென்பது. மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை நிலைய (தொல்-மர. 93) என்பது முதலாக இத்துணையும் வழக்கு நூலிலக்கணங் கூறினான். எழுநிலத்தெழுந்த செய்யுளின் (476) இதுவும் ஒன்றாகலின் இதனைச் செய்யுளியலிற் கூறினான், ஈண்டு மரபு கூறும் வழி ஒழிந்த செய்யுட்குப் போலாது, நூலிற்குப் பொருட்படை (யாகிய யாப்புக் குற்றங்களும் உத்திவகையுங் கூறல் வேண்டுதலிற் கூறினானென்பது அங்ஙனங் கூறாக்காற் பாட்டின் மரபு கட்டுரை போலவுங் கட்டளை அரங்கின்றி வட்டா டியது* போலவும் வரம்பின்றி வேண்டியவாறு நூல் செய்தல் விலக்கின்றா வான் செல்லும்; செல்லவே, எழுசீரானாகிய முடுகியலடியானும் எத்துணையும் நீண்டதொரு வஞ்சிப்பாட்டானும் பிறவும் வேண்டியவாறுஞ் சூத்திரஞ் செய்தலும், ஒருவன் பெயரினை அவ்வச் சூத்திரச் செய்யுளுட் சார்த்துவகையாற் பெய்து கூறலும், உணர்த்தப்படும் பொருளினை முதனூலுட் கிடந்தவாறு போலாது மரபு நிலை திரியச் செய்தலும், நால்வகை யாப்பொடு மாறுபடச் செய்தலும், வேண்டியவர் வேண்டியவாற்றாற் சில செய்தலும், வேண்டியவர் வேண்டியவாற்றாற் சில பொருள்களை வேறு தோற்றிக்கொண்டு நூல் செய்தலும் விலக்கின்றாகல் படுமென்பது. இனி உத்திவகையும் அவ்வாறே இன்றியமையாதனவெனப் படும். என்னை? உணர்த்தப்படும் பொருள் இதுவென்று அறிவித்தலும், எழுத்துச் சொற்பொருளெனப் பகுத்துக் கொண்டு அதிகாரஞ் செய்தலும், உணர்வு புலங்கொள்ளுமாற்றால் தொகுத்துக் காட்டலும், மற்று அவற்றை வகுத்துக் காட்டிய வழிப் பயமில் கூறலென்று கருதாமல் அது தன்னானொரு பயம்படச் செய்தலும், முதனூலாயின வெல்லாம் நூற் பொருளுணர்தற்குக் கருவியா கலுஞ் சூத்திரச்சுருக்கத்துக் கேதுவாகலும் உடைமையின் அவையும் வேண்டப்பட்டன வென்பது. இனி, அவற்றை இத்துணையென வரையறாக்கால் எத் துணையும் பலவாகி இகந்தோடுதலும், வழிநூன் முதனூல் வழித்தன்றாகலும் படும். முப்பத்து மூன்றெழுத் தென்றானாயினும் அப்பெற்றித்தன்றி அறுபத்தாறாகக் கொள்ளவைத்தானென்று உத்திகூறுதலும் உடம்படுவானாதல் செல்லுமென மறுக்க. இனி, நுனித்தகு புலவர் கூறிய நூல் என்றதனானே; பாயிரச்செய்யுளுஞ் சூத்திரச்செய்யுளும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் பெற்று வருதலும், அவ் விருபாவும் பெற்று வருதலும், பாட்டுப்போல எல்லாவுறுப்பும் பெறுதற்குச் செல்லா வென்பதூஉம், மாத்திரை முதலாகப் பாவீறாக வந்த பதினொன்றும் வண்ணங்களுள் ஏற்பன கொள்ளினுங் கொள்ளுமெனவும் யாப்புறுப்புக் கொள்ளுங்கால் ஈண்டொதிய மரபுங்கொள்ளப்படுமெனவுங் கொள்க. உரைக்குங் காண்டிகைக்கும் இவற்றுள்ளும் ஏற்பன அறிந்து கொள்க. இன்னும் நுனித்தகு புலவர் என்றதனானே * தந்திரமுஞ் சூத்திரமும் விருத்தியுமென மூன்றும் ஒருவரேயன்றி ஒன்று ஒருவர் செய்தலும், இரண்டு செய்தலும் பெறப்படுமென்றலும், ஒருசாலை மாணாக்கருந் தம்மிடை நூல் கேட்ட மாணாக்கரும் பாயிரஞ் செய்யப்பெறுப வென்றலும், பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமுமென அப்பாயிரந்தாம் இரண்டாமென்றலும், ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன்றன் மையுங் கோடன்மரபுமென்ற நான்குறுப்புடையது பொதுப் பாயிரமென்றலும், அதன்வழியே கூறப்படுஞ் சிறப்புப்பாயிரந் தான் எட்டிலக்கண முடைத்தென்றலும், அவை ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளுங் கேட்போரும் பயனு (நன்னூல் : 47) மெனப்படு மென்றலும், அவை தாம் நூற்கின்றியமையாவெனக் கொள்ளப் படுதலுங் கூறி முடிக்க. சிறப்புப்பாயிரத்தானே நூலிலக்கணம் ஒரு வகையான் உணரப்படும்; பொதுப்பாயிரத்தானே ஆசிரியரும் மாணாக்கரும் நூலுரைத்தலும் நூல்கேட்டலும் மாசறவறிந்து உரைநடாத்து வாராக அதனானே இவை நூன்முகத்தினின்று நிலாவு மென்பது. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுது மெழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே ஆய்வுரை : இலக்கண நூலாசிரியன் தான்கூற எடுத்துக்கொண்ட பொருளைச் சூத்திரத்தாற் புலப்படுத்த மேற்கொண்டுஉணர்த்தும் முறைமையே உத்தி எனப்படும், இது தந்திரவுத்தி என அடை புணர்த்து வழங்கப்பெறும். தந்திரம்---நூல். உத்தி---யுத்தி. தந்திர மெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்திற்கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது என விளக்குவர் இளம்பூரணர். உத்தியினை நூற் புணர்ப்பு என வழங்குதலும் உண்டு. உத்தி இன்ன தென்பதனை விளக்கும் முறையில் அமைந்தது. நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக்காட்டி ஏற்புழி யறிந்திதற் சிவ்வகை யாமெனத் தரும்வகை செலுத்துதல் தந்திரவுத்தி (நன்னூல்---பாயிரம் சூத்---15) எனவரும் நூற்பாவாகும். எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணம் உணர்த்துவதாக அமைந்தது. ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர் (108) எனவரும் தொல்காப்பிய மரபியற் சூத்திரமாகும். சூத்திரத்தின் பொருளை விரித்துரைக்குமிடத்துக் காண்டிகையுரையும், அவ்வுரையாலும் விளங்காக் காலத்து அதனையும் விளங்க விரித்துரைக்கும் உரைவகையும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமும் இன்றி நுண்பொருளவாகியமுப்பத்திருவகையுத்தி யொடு பொருந்தி வருவது நூலாகும் என்று நுண்ணறிவுடைய புலவர்கள் நூலுக்கு இலக்கணங் கூறுவர் என்பது இச் சூத்திரத்தின் பொருளாகும். இதன்கண் முப்பத்திருவகையுத்தி எனத்தொகுத்துரைக்கப்பட்ட உத்திகளை விரித்துக் கூறித் தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங் கட்கும் வேண்டும் புறனடையுங் கூறுவது. ஒத்த காட்சி யுத்திவகை யுரைப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனால் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்போடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவா மென்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடையிடுதல் எதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகங் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே (தொல்-மரபு-112) எனவருவது தொல்காப்பிய மரபியலின் இறுதிச் சூத்திரமாகும். இதற்கு இளம்பூரணரும் பேராசிரியரும் சில விடங்களில் வெவ் வேறு பாடங்கொண்டு உரை வரைந்துள்ளனர். இச்சூத்திரத்தில் ஒத்த காட்சி உத்தி என அடை கொடுத் தோதினமையால் முன்னைச் சூத்திரத்திற் கூறப்பட்ட பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்து நோக்கும் நிலையது உத்தி எனவும் உத்தி என்றமையாது உத்திவகை எனத் தெரித்துணர்த்தின மையால் நூலாசிரியன் நுண்ணுணர்வின் திறத்தால் இயல்பாக அமையும் நூற்புணர்ப்பு முறையே உத்தி எனப்படும் எனவும், இந் நூற்பாவில் நுதலியதறிதல் முதலாக எடுத்துரைக்கப்படுவன நூலாசிரியன் தன் கருத்துப்படி செயற்கையாக அமைத்துக் கொள்ளும் முறைமையாதலின் உத்திவகை எனப்பட்ட எனவும், உத்திவகைவிரிப்பின் எனவே இங்குக் கூறப்படும் உத்திவகை ஒவ்வொன்றினும் இனமாக அடக்கப்படுவன உள எனவும் கொள்வர் பேராசிரியர், பத்து வகைக் குற்றத்தோடும் ஒத்துவரும் எனவே இவை நூற்கள் அன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும், முற்கூறிய குற்றம்போல இவையும் வேறுசில பொருள் படைத்தலுடையவாயின. காட்சி யுத்தி என்று இவற்றைக் கூறியவதனான் நூலுட் காணப்படும். ஐந்து குற்றத்தோடும் (கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைப்படக் கூறல். (பொருளில் மொழிதல், மயங்கக் கூறல் என்னும் ஐந்தும் மற்றொருபொருள் கொள்ளின் அவை வசையற்றன வாதல் போல அவ்வந்நூற்குப் பயன்படவரும் பகுதியான்) ஒத்தல் கொள்ளப்படும் என்பர் பேராசிரியர். உக்தியென்பது செயற்கை வகையாகிய நூற் புணர்ப்பாயின் நூல் செய்யுங்கால் இயல்பு வகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் சொல்லுதல் ஒண்மையுடையதன்று எனின், அவ்வாறு செவ்வனம் (இயல்பு வகையாற்) சொல்லுதல் நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாதல் வேண்டும் என்பது (ஆசிரியன்) முன்னர்ச் சொல்லினானாம். எனவே அங்ஙனம் ஒண்மையுடையதாதலே உத்தி என்பது தானே விளங்கும். செவ்வனஞ் சொல்லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடையவாம் என்பது இச்சூத்திரத்தின் கருத்தாகும். எனவே செவ்வனஞ் செய்தலே உத்தி எனவும் நுதலியதறிதல் முதலாக இங்குச் சொல்லப்பட்டவை உத்தி வகையெனவும் கொள்வர் பேராசிரியர். முன்னர் (மரபியல்-98) எதிரது நோக்கி முப்பத்திரு வகையுத்தி எனத் தொகை கூறிப் பின்னர் (இச்சூத்திரத்தில்) மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண் டினத்திற் சேர்த்தியுணர்த்தல் வேண்டும் என்கின்றாராகலான் அங்ஙனம் இனம்பற்றி அவற்றோடு அடங்குவனவெல்லாம் அவற்றுவிரியாகும் என்னுங் கருத்தினால் உத்தி வகை விரிப்பின் என்றார் ஆசிரியர். அவனிவ னுவனென வரூஉம் பெயரும் (சொல்-164) என்பதனுள், தொகையின்றியுஞ் சுருங்கச் செய்வதோர் ஆறு (உபாயம்) உளதாயினும் அவை பதினைந்து பெயருமே ஒரு நிகரனவென்பது அறியலாகும் வண்ணம் அப்பதினைந்தும் எனத் தொகை கூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகவே யமைதலின் தொகுத்துக் கூறல் உத்திவகையான் அமையும் எனவும், இனி மெய்பெறு மரபிற்றொடைவகை தாமே (செய்-101) என்னுஞ் சூத்திரம் போல்வன பிறிதொரு பொருள் பயக்குமென்றலும் அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது எனவும் இவ்வாற்றால் இவ்வுத்தி வகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின எனவும் கூறுவர் பேராசிரியர். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (சொல்-19) என்றாற் போலச் சொல்லிச் செல்வன செவ்வனஞ் செய்யும் உத்தியாகலின் அவை உத்திவகையெனப்படா உத்தியென வேபடும் என்பது பேராசிரியர் கருத்தாகும். இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட முப்பத்திரண்டு உத்திவகை இவையெனவும் அவ்வகைக்கு இனமாக விரித்துக் கொள்ளப்படுவன இவை யெனவும் பேராசிரியர் உதாரணங் காட்டி விளக்கியுள்ளார். எண்ணிய முப்பதிரண்டுமல்லன தோற்றினும் அவற்றுள் அடக்கி அவைதாம் ஒருங்குவரினும் வேறு தெரிந்து நூல் சொல்லிய அல்ல பிறவருமாறும் அவை சொல்லிய வகையாற் சுருங்கநாடி இனத்திற் சேர்த்துமாறும் பேராசிரியருரையிற் காட்டப்பட்டன. இவ்வுத்திவகை பற்றி இளம்பூரணரும் பேராசிரியரும் கொண்ட பாடங்கள் உத்திவகையின் பெயர்களிற் சில மாற்றத்தைக் குறிப்பனவாகும். மொழிந்த பொருளோடொன்ற வைத்தல், மொழியாத தனை முட்டின்றி முடித்தல் என இளம்பூரணர் கொண்ட இரண்டுத்திகளையும் மொழிந்த பொருளொடொன்ற அவ் வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் என ஒரே உத்தியாகக் கொண்டார் பேராசிரியர். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என இளம் பூரணரும் வாராததுணர்த்தல் எனப் பேராசிரியரும் பாடங் கொண்டனர். தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் என இளம்பூரணரும் தன்கோட்கூறல் முறைபிழைமை எனப் பேராசிரியரும் பாடங் கொண்டனர். ஒருதலையன்மை முடிந்தது காட்டல் என்பதனை இளம் பூரணர் ஒரே உத்தியாகக் கொண்டார், பேராசிரியர் ஒருதலை யன்மை எனவும் முடிந்ததுகாட்டல் எனவும் இரண்டாகக் கொண்டார், பிறனுடம்பட்டது தானுடம்படுதல் என்பதற்குப் பிறனூன் முடிந்தது தானுடம்படுதல் எனவும் மூல பாடம் காணப்படுதலால், பிறநூன் முடிந்தது தானுடம்படுதல் என யாப்பருங்கல விருத்தியினும் நன்னூல் மயிலை நாதருரையிலும் காணப்படும் உத்தியும் இதுவும் ஒன்றேயென்பது நன்கு தெளியப் படும். மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது, எடுத் தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை உரையிற்கோடல் என்ப என்பர் இளம்பூரணர். வாராததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்னும் உத்திகள் சொல்லமைப்பில் நன்னூலில் இடம் பெறவில்லை. நன்னூலில் வரும் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பது ஓருத்தி இதனை இரண்டுத்திகளாகக் கொண்டு உய்த்துணரவைப்பு என்பதனை உத்திகட்கெல்லாம் அடைமொழியாக்குதலும் உண்டு. வாராதது கொண்டு வந்தது முடித்தலை ஒன்றின முடித்தல் எனவும், வந்தது கொண்டு வாராதது முடித்தலைத் தன்னின முடித்தல் எனவும் கொள்ளுதற்கும் இடமுண்டு. முந்துமொழிந்ததன் தலை தடுமாற்றம் என்பதனைத் தலைதடுமாற்றந் தந்து புணர்ந்துரைத்தல் என்பதோர் உத்தி என்பர் காரிகை யுரையாசிரியர். ஒப்பக்கூறல் என்பது ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல் என நன்னூலில் வரும் உத்திகளோடு சொல்லாலும் பொருளாலும் ஒத்துள ஒன்று கூறுங்கால் இது பொருட் குறித்த தென்று இரட்டுறச் செய்தல், எனப் பேராசிரியர் விளக்குதலால் இஃது இரட்டுற மொழிதல் என்னும் உத்தி என்பது அவர் கருத்தெனத் தெரிகிறது. ஒருதலைமொழியாவது ஏகாக்கரமென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுள் ஒன்றினைத் துணந்து கூறல் என்பர். இளம் பூரணர். ஒரு தலை மொழிதல் என்பதனை நன்னூலில் வரும் ஒருதலை துணிதல் என்னும் உத்தியாகக் கொள்ளலாம். தன் கோட் கூறல் உடம்பொடுபுணர்த்தல் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். நன்னூலிலும் இவ்வாறே காணப்படுகிறது. தன்கோட் கூறல் முறைபிறழாமை எனப் பாடங் கொள்வர் பேராசிரியர். 14, 15. இறந்தது காத்தல் எதிரது போற்றல் என்னும் இரண்டும் யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் இறந்தது விலக்கல் எதிரது போற்றல் என ஆளப்பெற்றன. காத்தல் என்றது குற்றமே காக்க (திருக்குறள்-434) என்புழிப்போல விலக்குதல் என்ற பொருளில் ஆளப்பெற்றது. 16. மொழிவாம் என்றல் என்பது இவ்விருநூல்களிலும் உரைத்தும் என்றல் எனக் குறிக்கப் பெற்றது. 17. கூறிற்றென்றல் என்பது, நன்னூலில் உரைத்தாம் என்றல் எனக் குறிக்கப்பெற்றது. 18. தான் குறியிடுதல் என்பது யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் தன் குறி வழக்கம் மிகவெடுத்துரைத்தல் எனக் காணப்படுகிறது. 19. ஒருதலையன்மை முடிந்தது காட்டல் என்பதனை ஓருத்தியாகக் கொண்டு ஒருபொருளையோதியவழிச் சொல்லு தற்கே யுரித்தன்றிப் பிற பொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல் என விளக்கம் தந்தார் இளம்பூரணர். 19,20. ஒரு தலையன்மை என்பது இரண்டு மொழிதல் எனவும் முடிந்தது காட்டல் என்பது முடிவிடங்கூறல் எனவும் யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூலிலும் கூறப்பட்டுள்ள உத்திகளாகக் கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியதாகும். 21. ஆணை கூறல் என்பது யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூலிலும் காணப்பட்வில்லை. 22. பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் இதனை ஏற்புழிக்கோடல் எனவும் ஒருபுடைச் சேறல் எனவும் சொல்லுப என்பர் பேராசிரியர். எடுத்த மொழியின் எய்தவைத்தல் என்றுநன்னூலில் வரும் உத்தி இங்குக் கருதத்தக்கது. 23. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் (நன்னூல்) என்பதும் அது என்பர் இளம்பூரணர். 24. மறுதலை சிதைத்துத் தன்றுணிபுரைத்தல் என்பது யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் இடம்பெறவில்லை. 25, 26. பிறன்கோட் கூறல் என்பதனையும் அறியாதுடம் படல் என்பதனையும் யாப்பருங்கலவிருத்தியும் நன்னூலுரையும் பிறனூன் முடிந்தது தானுடம்படுதல் என்ற சொல்லமைப்பிலேயே அடக்கியிருத்தல் கூடும். 27. பொருளிடையிடுதல் என்பது ஒரு பொருளை யோதிய வழி, அதற்கினமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல் என்பர் இளம்பூரணர். நன்னூலிலுள்ள முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் என்னும் இரண்டு உத்திகளும் இதன்கண் அடங்கும். 28. எதிர்பொருளுணர்த்தல் என்பது நன்னூலில் வரும் எதிரது போற்றல் என்ற உத்தியிலோ அல்லது முடிவிடங் கூறல் என்ற உத்தியிலோ அடங்கும். 29. சொல்லினெச்சம் சொல்லியாங்குணர்த்தல் என்பது யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் வரும் எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் என்னும் உத்தியாதல் கூடும். 30. தந்துபுணர்ந் துரைத்தல் என்பது, நன்னூலில் வரும் ஏதுவின் முடித்தல் என்னும் உத்தியாதல் கூடும். 31. ஞாபகங்கூறலாவது, இரண்டுறமொழிந்து இரண்டு சொற்களும் பொருள்கோடல் என்பது இளம்பூரணர். சூத்திரம் செய்யுங்கால் அரிதும் பெரிதுமாகச் செய்து மற்றும் அதனாலே வேறு பல பொருளுணர்த்தல் என்பர் பேராசிரியர். 32. உய்த்துக் கொண்டுணர்தல் --- இஃது உய்த்துரை வைப்பு என யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூலிலும் இடம் பெற்றுள்ளது. யாப்பருங்கலவிருத்தி முப்பத்திரண்டு தந்திரவுத்தியாவன : நுதலிப்புகுதல்1 ஓத்துமுறை வைத்தல்2 தொகுத்துச் சுட்டல்3 வகுத்துக் காட்டல்4 முடிவிடங் கூறல்5 முடித்துக் காட்டல்6 தானெடுத்து மொழிதல்7 பிறன்கோட் கூறல்8 சொற்பொருள் விரித்தல்9 இரண்டுறமொழிதல்10 ஏதுவின் முடித்தல்11 எடுத்த மொழியின் எய்த வைத்தல்12 இன்ன தல்ல திதுவென மொழிதல்13 தன்னின முடித்தல்14 எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்15 மாட்டெறிந்தொழிதல்16 பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்17 தன்குறி வழக்க மிகவெடுத்துரைத்தல்18 இறந்தது விலக்கல்19 எதிரது போற்றல்20 முன்மேற் கோடல்21 பின்னது நிறுத்தல்22 எடுத்துக்காட்டல்23 முடிந்தது முடித்தல்24 சொல்லின் முடிவினப்பொருண் முடித்தல்25 தொடர்ச்சொற் புணர்த்தல்26 யாப்புறுத் தமைத்தல் உரைத்துமென்றல்28 லிகற்பத்து முடித்தல்29, தொகுத்துடன் முடித்தல்30 ஒருதலைதுணிதல்,31 உய்த்துணர வைத்தல்32 என இவை பாடலனார் உரை. என எடுத்துக் காட்டுவர் யாப்பருங்கல வுரையாசிரியர். நன்னூல் நுதலிப்புகுதல்1 ஓத்து முறை வைப்பே2 தொகுத்துச் சுட்டல்3 வகுத்துக் காட்டல்4 முடித்துக் காட்டல்5 முடிவிடங் கூறல்6 தானெடுத்து மொழிதல்7 பிறன்கோட் கூறல்8 சொற்பொருள் விரித்தல்9 தொடர்ச்சொற்புணர்த்தல்10 இரட்டு மொழிதல்11 ஏதுவின் முடித்தல்12 ஒப்பின் முடித்தல்13 மாட்டெறிந்தொழுகல்14 இறந்தது விலக்கல்15 எதிரது போற்றல்16 முன்மொழிந்து கோடல்17 பின்னது நிறுத்தல்18 விகற்பத்தின் முடித்தல்19 முடிந்தவை முடித்தல்20 உரைத்துமென்றல்21 உரைத்தாமென்றல்22 ஒருதலைதுணிதல்23 எடுத்துக்காட்டல்24 எடுத்தமொழியின் எய்தவைத்தல்25 இன்ன தில்ல திதுவென மொழிதல்26 எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்27 பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்28 தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்29 சொல்லின் முடிவி னப்பொருள் முடித்தல்30 ஒன்றின முடித்த றன்னின முடித்தல்31 உய்த்துணர வைப்பென யுத்தியெண் ணான்கே. (இ-ள்) இவை முப்பத்திரண்டும் தந்திரவுத்தியாவன, இவற்றுட் சிலவற்றை மாற்றிச் சொல்லுவாரும் முப்பத்திரண்டின் மேலும் பல வென்பாருமுளர். அவையும் அறிந்து கொள்க என்பர் நன்னூலுரையாசிரியர் மயிலைநாதர். தொல்காப்பிய மரபியல் கூறும் முப்பத்திரண்டுத்திக்குள் நுதலியதறிதலை நுதலிப்புகுதல் எனவும், அதிகார முறைமையினை ஓத்துமுறை வைப்பு எனவும், தொகுத்துக் கூறலைத் தொகுத்துச் சுட்டல் எனவும், வகுத்து மெய்ந்நிறுத்தலை வகுத்துக் காட்டல் எனவும், ஒப்பக்கூறலை இரட்டுற மொழிதல் எனவும் ஒப்பின் முடித்தல் எனவும் ஒருதலை மொழிதலை ஒருதலை துணிதல் எனவும், பிறனுடம் பட்டது தானுடம் படுதலைப் பிறநூன் முடிந்தது தானுடன்படுதல் எனவும், இறந்தது காத்தலை இறந்தது விலக்கல் எனவும் எதிரது போற்றலை எதிரது போற்றல் எனவும் மொழிவாமென்றலை உரைத்துமென்றல் எனவும், கூறிற்றென்றலை உரைத்தாமென்றல் எனவும், தான் குறியிடுதலைத் தன்குறிவழக்க மிக வெடுத் துரைத்தல் எனவும் முடிந்தது காட்டலை, முடிவிடங்கூறல் எனவும் பிறன்கோட் கூறலைப் பிறன் கோட் கூறல் எனவும், சொல்லினெச்சம் சொல்லியாங்குணர்த்தல் என்பதனை எஞ்சிய சொல்லின் எய்தக்கூறல் எனவும் கொள்ளலாம். பல்பொருட்கேற்பின் நல்லது கோடலை ஏற்புழிக்கோடல் என்பர் உரையாசிரியர்கள். மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்றி முடித்தல் என்பதனை உரையிற் கோடல் என்பர் இளம்பூரணர். யாப்பருங்கல விருத்தியாசிரியர் இவை பாடலனார் உரையெனக் குறித்த 32 தந்திரஉத்திகளுள் முடித்துக்காட்டல், தானெடுத்து மொழிதல், சொற்பொருள் விரித்தல், ஏதுவின் முடித்தல் எடுத்த மொழியின் எய்தவைத்தல், இன்னதல்ல திதுவென மொழிதல், ஒன்றின முடித்தல், தன்னின முடித்தல், பாட்டெறிந் தொழுகல், முன்மேற் கோடல், பின்னது நிறுத்தல், எடுத்துக் காட்டல், முடிந்தது முடித்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், தொடர்ச் சொற் புணர்த்தல், யாப்புறுத்தமைத்தல், விகற்பத்துமுடித்தல், தொகுத்துடன் முடித்தல் எனும் 17 உத்திகள் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இவற்றுள் யாப்புறுத் தமைத்தல் தொகுத்துடன் முடித்தல் எனும் இரண்டும் நீங்கலாக ஏனைய பதினைந்தும் நன்னூலில் உள்ளன. தொல்காப்பியனார், பாடலனார் நன்னூலார் கூறிய உத்திவகையுளடங்காத வேறு சில உத்திகளும் பழையவுரைகளில் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக் காரிகையுரையாசிரியர் தலை தடுமாற்றந் தந்து புணர்ந்துரைத்தல் என்னும் ஓர் உத்தியைத் தம்முரையிற் குறித்துள்ளார். தொல்காப்பிய வுரையாசிரியர்களும் நன்னூலுரையாசிரியர்களும் தத்தம் உரைகளிற் குறிப்பிடும் உத்தியின் பெயர்களும் அவற்றுக்குரிய விளக்கங்களும் எடுத்துக் காட்டுக்களும் ஒப்புநோக்கி ஆராய்ந்து வரையறுக்கத் தக்கனவாகும். தொல்காப்பியத்தின் இறுதிப்பகுதியாகிய மரபியல் பிற் காலத்திற் பல மாற்றங்களைப் பெற்றுள்ளதென்பது, வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள்மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடுநாள் எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியால் உய்த்துணரப்படும் இம்மரபியலிற் கூறப்பட்டுள்ள முப்பத்திரண்டுத்திகளும் கௌடலீய அர்த்தசாத்திரத்திலுள்ள முப்பத்திரண்டு உத்தி களோடு ஒத்துக் காணப்படுகின்றன என்பர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள். (தமிழ் வரலாறு --- பக்கம் 318). தொல்காப்பிய மரபியலிற் காணப்படும் முப்பத்திரண்டுத்தி களுக்கும் கௌடலீயத்திலுள்ள முப்பத்திரண்டுத்திகளுக்கும் சொல்வகையாலும் கருத்து வகையாலும் வேறுபாடுகள் உள்ளன. இறந்தது காத்தல், எதிரது போற்றல்,மொழிவாமென்றல், அறியாதுடன் படல் எனத் தொல்காப்பியத்திலுள்ள உத்திகளுக்கு ஒத்த வடமொழிப் பெயர்களைத் தேடிக்காண முடிவில்லை. முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம் என்றதனை அபவர்க்கம் என்றும், கூறிற்றென்றலைப் பிரதேசம் என்றும், பல்பொருட் கேற்பின் நல்லது கோடலை விகற்பம் என்றும், பிறன் கோட் கூறலைப் பூருவபக்கம் என்றும், எதிர்பொருணர்த் தலை வியர்யயம் என்றும், ஞாபகங் கூறலை அபதேசம் என்றும், அவர்கள் குறிப்பிட்டிருப்பது அவ்வுத்திகளின் பொருளியைபுக்கு முற்றிலும் மாறுபடுகிறது. எனவே இவ்வுத்திகளிற் பெரும்பாலான ஒத்திருப் பனவாக மகாவித்துவான் இராகவையங்காரவர்கள் கூறியிருப்பது அத்துணைப் பொருத்தமுடையதாகத் தோன்ற வில்லை. தொல்காப்பிய மரபியலிலும் கௌடலீய அர்த்த சாத்திரத்திலும் இடம் பெற்றுள்ள உத்திகள் முப்பத்தி ரண்டுத்தி என்னும் தொகையளவில் ஒத்தனவாயினும் அவற்றின் இலக்கண அமைப்பில் வேறுபட்டனவாகவேயுள்ளன. இவ் வேறுபாட்டினையுளங் கொண்ட மகாவித்துவான் ஐயங் காரவர்கள் இவ்வுத்திகள் வடமொழி நூலைப் பின்பற்றியே அமைந்திருத்தல் வேண்டும் என்றும் தமது கொள்கையை வற்புறுத்தும் கருத்தினாய் இவ்வுத்திவகையில் தொல்காப் பியர்க்கும் கௌடலீயர்க்கும் ஒத்தமுதனூல் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லையென்றும் ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன் எனப்பாயிரங் கூறுதலால் அவ்வைந்திரத்தேனும் அதன் வழித்தாகிய பிறிதொரு நூலிலேனும் இவ்வுத்திகள் உள்ளன வென்று நினைக்கப்படும் என்றும் ஐயுறுகின்றார். உத்தி என்னும் சொல் வட சொல்லாயினும் தொல்காப்பிய மரபியலில் உத்தியென்னுஞ் சொல்லாற் குறிக்கப்படும் நூற்புணர்ப்பாகிய முறைமைத் தமிழிலக்கண நூல்களுக்குரிய சிறப்புடையதாதலின் இதற்கு முதனூலாக வடநூல் ஒன்று இருத்தல் வேண்டும் என ஊகிப்பதும் அவ்வூகத்தினையடிப்படையாகக்கொண்டு தொல் காப்பியர் காலத்தை உறுதிப்படுத்த எண்ணுவதும் பொருத்த முடையன அல்ல. அர்த்த சாத்திரம் இயற்றிய கௌடலீயர் தமிழ் நாட்டிற் காஞ்சிநகரத்து வாழ்ந்தவராதலின், அவர் காலத்துக்கு முற்பட்ட தொல்காப்பிய மரபியலிலுள்ள உத்திகள் முப்பத்திரண்டினை யுளங்கொண்டு தாமியற்றும் பொருள் நூலமைப்புக்கு ஏற்ற வகையில் தாம் செய்த அர்த்தசாத்திரத்திலும் முப்பத்திரண்டு உத்திகளை வகுத்துக் கூறியுள்ளார் எனக் கொள்வதே தொல்காப்பியர் கௌடலீயர் ஆகிய இவ்விருவர் வரலாற்றுக்கும் கால அமைதிக்கும் ஏற்புடையதாகும் எனத் தெளிதல் எளிதாகும். தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் உரைவளம் முற்றிற்று. * * * பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிர மணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986) * குழவியோ டிளைமைப் பெயரே என்பது பேராசிரியர் பாடம், பேராசிரியர் எல்லாவிடத்தும் இளைமை என்றே குறிப்பிடுவார். 1. பொருட்கு மரபாவன பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருட்பெற்றி குறித்துத் தொன்றுதொட்டு வழங்கி வரும் மரபுப் பெயர்கள். 2. இருதிணைப் பொருளும் பற்றி வரும் இளமைப்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. உ.வே. 3. பார்ப்பு முதலாகக் குழவியீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் இளமைப் பெயர் என்றவாறு. குழவியொடு ஒன்பதும் என மொழிமாற்றுக. 1. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும். உ.வே. இத்தொல்காப்பியச் சூத்திரத்தை, பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் குழவியும் என்றிவை இளமைப்பெயரே (இ. வி. 910) என எடுத்தாளவர் வைத்தியநாத நாவலர். 2. பொருள்களின் இளமைபற்றிய மரபுப் பெயர்களை எடுத்தோதிய தொல் காப்பியனார் அவற்றின் முதுமை பற்றிய மரபுப் பெயர்களை எடுத்தோதாதது அவற்றுக்கு வரையறையின் மை பற்றியேயாம். 1. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என்றதனால், இவ்வியலிற் கூறப்படும் மரபுப் பெயர்கள் எக்காலத்தும் தத்தம் மரபிற் பிறழாமல் செய்யுள் செய்யப்படும் என்பதும், இவ்வியலிற் கூறப்படாத மரபுகளாயின் அவை செய்யுளின்பம் வேண்டி வழக்கொடு பொருந்திய மரபிற் பிறழவும் செய்யுள் செய்யப்பெறும். எனவே, அவை மாற்றுதற்கு உரியவாதலும் கூடும் என்பதும் கூறியவாறு, * இருடுணித்தன்ன 1. ஏறும் ஏற்றையும் என்பதே தொல்காப்பியனார் கூறிய மூலபாடம். இந்நுட்பம் இவ்வியல் 40, 42-ஆம் நூற்பாக்களால் நன்கு துணியப்படும். எருதும் ஏற்றையும் என இளம்பூரணர் உரைப் பதிப்பிலுள்ள பாடம் பிற்காலத்தவரால் திரிக்கப்பட்டதாகும். 2. ஏறு முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் ஆண்பாற் பெயர் என்றவாறு. உ.வே. 3. ஆண், விடை என்பன, விலங்குகளுள் ஆண்மை பற்றி வழங்கும் மரபுப் பெயர்களாகும். இந்நூற்பா இலக்கண விளக்கத்தில் 916-ஆம் சூத்திரமாக எடுத்தாளப் பெற்றுள்ளது. அப்பர் என்ற சொல் பிற்காலத்தில் வழக்கு வீழ்ந்தது. அதுபற்றியே மூன்றாமடியில் உதளும் அப்பரும் என்பதனை உதளும் உம்பலும் என மாற்றினர் இலக்கண விளக்க ஆசிரியர். 1. இங்கு ஆண்மை பற்றிய மரபுப் பெயர்களுள் ஒன்றாக எடுத்துரைக்கப்பட்ட போத்து என்பது சில விடங்களில் இளமை குறித்த பெயராகவும் வழங்குமாயினும் ஆண்மைக்குச் சிறந்து வருமாறுபோல இளமைக்கு அத்துணைச் சிறந்து வருதல் இல்லை. 2. அந்தஞ் சான்றவென்பது வழக்கின்கண் முடியவமைத்ததென்றவாறு. உ.வே. 1. கடமை என்பது மானினத்துள் ஒரு சாதியைக் குறித்த பெயராகவும் வழங்குதலுண்டு. ஆயினும் இச்சூத்திரத்தில் எடுத்தோதப்பட்டது, பெண்மை பற்றிய மரபுப் பெயரெனக் கொள்க. 2. அந்தம் -- முடிபு. அந்தஞ்சான்ற -- முடித்துக் கூறப்பட்ட எனவே, இவ்வாறு பெண்மை பற்றிய பெயர் என உறுதியாகக் கூறப்படாத ஆ என்பது ஒருகால் பெண்மைப் பெயராக வழங்கப்பெறுதலும், ஆண், பெண் என்னும் மரபுப் பெயர்கள் புறத்தே வயிரமுடைய புல்லுக்குரியனவாக வழங்கப் பெறுதலும் கொள்ளப்படும். ஆனேறு என்பது ஆனினத்துள் ஏறு எனப்பொருள் தருதலின் இங்கு ஆ என்பது பெண்மை பற்றிய பெயராகாது பொதுவாகப் பசு என்னும் இனம் பற்றிய பெயராக வழங்கப்படுதலின் இப்பெயர் அந்தஞ்சான்ற பெண்பெயராகாமை நன்கு தெளியப்படும். 3. குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் ஆண்பனையைப் பெண்பனையா கென்னும் எனவரும் வழக்கு நோக்குக. * அவற்றுட் என்பது பேராசிரியர் பாடம். 1. மூவகைப் பெயராவன : இளமைப் பெயர். ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் என்பன. 2. புள்ளிளமை-- பறவையுள் இளமை. 1. புள்ளிளமை-- பறவையுள் இளமை. 2. பறவையினம் பலவாதல் பற்றி அவ்வினத்திற்குச் சிறப்புரிமையுடைய பார்ப்பு என்னும் இளமைப் பெயரை இங்கு முதற்கண் எடுத்துரைத்தார் தொல் காப்பியனார். 3. இருவகை இளமைப் பெயர் ஆவன பார்ப்பு, பிள்ளை. 1. தவழ்பவை - நிலத்தில் ஊர்ந்து செல்வனவாகிய உடும்பு, ஓந்தி முதலிய உயிரினங்கள். ஆமையும், முதலையும் நீரில் வாழும் உயிரினங்களாயினும் அவை நிலத்தில் ஊர்ந்து செல்லுங்கால் தவழ்பவை எனப்படும். 1. வெருகு -- காட்டுப்பூனை. முதுகின் புறத்தே மூன்று கோடுகளையுடைய அணில் என அதன் உருவ இயல்பினைப் புலப்படுத்துவார். மூவரி அணில் என அடை கொடுத்து ஓதினார். வரி--கோடு. 2. எடுத்தோத்து என்பது, கூற எடுத்துக்கொண்ட இலக்கண விதியினைப் பெறுதற்குரியன இவையென அவற்றை எடுத்துக் கூறும் சிறப்புவிதி. இலேசு என்பது, அவ்விதியினைக் கூறும் சொற்றொடரமைப்பால் புலப்படுத்தப்பெறுவது. தாமும் என்றதனால் ஊர்வனவும் நடப்பனவும் சிறுபான்மை பிள்ளைப் பெயருக்கு உரிய எனக் கொள்க என்றது இலேசு. 3. மூங்கா, வெருகு, எலி என்னும் இம்மூன்றின் வேறாக அணிலை மூவரியணில் என அடைமொழிபுணர்த்துக் கூறினமையால் முன்னர்க் கூறிய மூன்றும் பிறப்பு வகையால் ஒத்த தன்மையன என்பது பேராசிரியர் கருத்து. 1. கீரியும் நாவியும் மூங்கா என்பதன் இனமென்று கூறுவாரு முளர். நாவி-புனுகுப்பூனை. * மூங்கா -- கீரி, வெருகு -- காட்டுப்பூனை. 2. முற்கூறிய நான்கு ஆவன மேலைச் சூத்திரத்திற் கூறப்பட்ட மூங்கா, வெருகு, எலி, அணில் என்பன. முதற்சூத்திரத்து ஓதிய முறைமை என்றது இவ்வியல் முதற்சூத்திரத்தில் பார்ப்பு என்னும் பெயரையடுத்துப் பறழ் இரண்டாவதாக எண்ணப்பெற்றுள்ள வரிசைமுறை. 1. உறழ் -- உறழ்ச்சி; முரண்பாடு என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. 2. குருளை என்னும் இளமைப்பெயர் நாய், பன்றி, புலி, முயல் என்னும் நான்கிற்கும் உரியதாகும். 3. இவ்வியல் முதற்சூத்திரத்து நான்காவதாகக் குருளை என்ற பெயர் எண்ணப்பட்ட முறைமை. 1. ஆளிநன்மாண் அணங்குடைக்குருளை (பொருந 139) நாயேபன்றி (தொல்--மரபியல்--8) என்னுஞ் சூத்திரத்து ஆயுங்காலை என்றதனான் முடித்தாம் என்பர் நச்சினார்க்கினியர். 1. நாடினர் கொளினே என்றதனால் முசுவிற்கும் குருளைப் பெயர் கொண்டார் பேராசிரியர். * இந்த எண் தொல்காப்பியம்மூலம் முழுமையையும் குறிக்கும் வரிசையில் அமைந்த நூற்பா எண்ணாம். இது மரபியல் 6-ஆம் நூற்பாவைக் குறிக்கும். 1. பிள்ளையென்னும் இளமைப் பெயர். நாயொழிந்த நான்கு உயிர்க்கண்ணும் கூறுங் காலை குற்றமிலை என்றவாற. உ.வே. பிழைப்பு - குற்றம். 1. நாயலங்கடையே என்ற தொடரால் முற்கூறிய (மரபு 8) நாய் முதலிய நான்கனையும் விலக்கி நரிப்பிள்ளை என நரி என்பதற்கு மட்டுமே பிள்ளைப் பெயர் கொள்ளுதலும் ஒன்று. 2. விரைந்தோடும் இயல்புடையது மானின் இனமாகிய புல்வாய் என்பது புலப்படுத்து வார். ஓடும் புல்வாய் என்றார். 3. நவ்வியென்பது புள்ளிமான், முழையென்பது முழா. உ.வே. 1. நாய் என்றுகூறிய அளவில் அதன் இனமாகிய நீர் நாய் முதலாயினவும் அடங்குமாறுபோல, நவ்வியும் உழையும் புல்வாய் என்ற இனத்துள் அடங்குமல்லவா? என்பது இங்கு எழும் வினா. புல்வாய் -- மான், மா(ன்) என்பது குதிரையும் யானையும் புலியும் சிங்கமும் முதலாயவற்றுக்கெல்லாம் (விலங்கு கட்கெல்லாம்) பெயராகலின் அவ்வாறு ஓதான் என்பது அதற்குரியவிடையாகும். 1. கோடு வாழக் குரங்குங் குட்டி கூறுப. பா. வே. 2. குட்டியும் என்புழி உம்மை பின்வரும் மகவு முதலிய இளமைப் பெயர்களையும் தழுவி நிற்றலின் எதிரது தழீஇய எச்சவும்மையாயிற்று. 3. கோடுவாழ்குரங்கு குட்டியுங் கூறுப என இளம்பூரணரும் கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப எனப் பேராசிரியரும் பாடங்கொண்டனர். குட்டியும் என்புழி உம்மை பின்னர்க் கூறுமாறு மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் இளமைப் பெயர்களாற் கூறுதலேயன்றிக் குட்டி என்ற பெயராலும் வழங்கப்பெறும்எனப்பொருள் தருதலின், உம்மை எதிரது தழி இய எச்சவும்மை என்றார் இளம்பூரணர். குரங்கும் எனப் பாடங்கொண்ட பேராசிரியர், இச்சூத்திரத்திற்குறித்த குரங்கேயன்றி முற்கூறிய யாடு முதலியன ஐந்துசாதிக்கும் குட்டி யென்ற பெயர் கூறப்படும் எனப்பொருள் கொண்டாராதலின் குரங்கும் என்புழி உம்மை இறந்தது தழீஇயிற்று என்றார். * இவ்வெண் தொல்காப்பியம்மூலம் முழுமையையும் குறிக்கும். வரிசையில் அமைந்த நூற்பா எண்ணாகும் இது மரபியல் 9-ஆம் நூற்பாவைக் குறிக்கும். 1. நரியும் அற்றே நாடினர் கொளினே (மரபியல்-9) என்ற நூற்பாவில் நாடினர் கொளினே என்ற இலேசினானே முசுவிற்குங் குருளைப்பெயர் கொள்ள வைத்தமையின் குரங்கிற்குரிய இளமைப்பெயர் கூறும் இச்சூத்திரத்தில் குருளை யென்னும் பெயரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். 1. யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன் என்னும் ஐந்தற்கும் கன்று என்னும் இளமைப் பெயர் உரியதாகும். 2. இளைய ஆன்கன்று (பெரிய-திருநகரச்சிறப்பு) என்பது பெரியபுராணம். 1. ஆண்டு--கன்று என்னும் இளமைப்பெயர் பெறும் நிலையில்; எருமையும் மரையும் வரையார்-எருமையினையும் மரைமா வினையும் விலக்காது ஏற்றுக் கொள்வர். 2. வரையார்--நீக்கார் வரைதல்--நீக்குதல். 3. கராமும்--பா. வே. 1. கவரியென்றும் கராமென்றுஞ் சொல்லப்படுவதூஉம் கன்றென்னும் பெயர் பெறும், எ-று உ.வே. 2. கராமென்பது கரடி -- உ.வே. 3. கராகம் எனப் பாடங்கொண்டு கரடி எனப் பொருள் கூறுவர் இளம்பூரணர். கராக்கன்று--முதலைப்பார்ப்பு. 4. அது முன்னர்ச் சொல்லுதும் என்று இவ்வுரைத் தொடரைத் திருத்துக. மரபியல் 19-ஆம் சூத்திரவுரை நோக்குக. 1. ஒட்டகமவற்றினோ டொருவழி நிலையும். பா. வே. 2. ஒரு வழி -- சிறுபான்மை. 3. குஞ்சரம் - யானை, குஞ்சரம் குழவிப்பெயர்க் கொடை பெறும என இயையும். 1. மரபியல் 17 -- ஆம் சூத்திரத்துள் கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே என்றமையால் பின்னர்க் குஞ்சரத்திற்கு (யானைக்கு) உரியதாகக் கூறப்படும் குழவி என்னும் இளமைப் பெயரும் கராக்குழவி, கவரிக்குழவி என வழங்குதல் இவ்விரண்டற்கும் எனக் கொண்டார் பேராசிரியர். 2. அவை சொலப்படுமே என்பது பேராசிரியர் கொண்ட பாடம். அது சொலப்படுமே என்பது இளம்பூரணருரையிற் கண்ட பாடம். அது என்றது குழவி என்னும் இளமைப் பெயரினை. அவை சொலப்படுமே எனப்பாடங் கொண்டார் பேராசிரியர். அவையென்றது, ஆணும்பெண்ணும் ஆகிய யானைகளை. குஞ்சரம் -- யானை. குஞ்சரம், ஆ, எருமை என்பன ஆணும் பெண்ணும் என இருகூற்றனவாதலால் அவையெனப் பன்மையாற் சுட்டினார் ஆசிரியர். 1. குழவி என்னும் இவ்விளமைப்பெயர் மக்களுக்கு வழங்குங் காலத்தும் ஆணும் பெண்ணும் ஆகிய இரு கூற்றினையும் குறிக்கும். 2. கடமையும் -- உ.வே 3. முதனிலை -- முற்குறித்த குழவிப் பெயர். 1. மூன்றுயிரும் உ.வே. 2. இலக்கணம் கூறப்பட்டிருத்தலால் அதற்குரிய இலக்கியமும் இருத்தல் வேண்டும் எனக்கொள்ளப்படும். 1. சொல்லப்பட்டவிரண்டின் உ.வே. 2. கிழவ அல்ல--உரிமையுடையன அல்ல. கிழமை-உரிமை. 1. கொள்ளவும் அமையும் ஓரறிவுயிர்க்கே எண்புழிக் கொள்ளவும் என்ற உம்மையை இவ்வாறே எச்சப்படுத்தி, ஓரறிவு யிரல்லாத பிறவும் பிள்ளை குழவிகன்று முதலிய இளமைப் பெயர் பெற்று வருதலைக் கொள்வர் நச்சினார்க்கினியர். (சீவகசிந்தாமணி 1267, 2390 - ஆம்பாடல்களின் உரையினையும் தொல் - சொல் சூ - 57 - நச். உரையினையும் நோக்குக.) 2. புல்லுமரனுமாகிய 1. புல், மரம் என்பவற்றை உயிரென்றல் மரபுபட்ட வழக்காதலின் அம்மரபுங் கோடற்குப் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்பன ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் படும் என்றார் ஆசிரியர். 1. நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்கள் மேற்சொல்லப்பட்ட இளமைப்பெயர் கூறப்பெறா வென்றவாறு உ.வே. 1. இச்சூத்திரத்திற் புல் என்றது. புறத்தே வயிரமுடையனவாகிய கமுகு, தெங்கு முதலியவற்றைக் குறித்ததன்று. புல் என்பது பலபொருளொரு சொல். அது நெல் என்னும் இனத்தானே புல் என்னும் உணவாகிய தாவரத்தைக் குறித்தது. அல்லிப் படூஉம் புல்லாயினவே (புறநானூறு-248) என்புழிப் புல் என்பது புல்லரிசியினை விளைக்கும் ஓரறிவுயிராகிய தாவரத்தைக் குறித்து நிற்றல் காண்க. இனி, நெல் என்பது நெற்பயிராகிய ஓரறிவுயிரைக் குறித்தல் போன்று, அதனுடன் எண்ணப்பட்ட புல் என்பது, புற்பயிராகிய தாவரத்தைக் குறித்ததெனக் கொள்ளுதலும் பொருந்தும். நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் (மூதுரை-10) என்ற பாடலில் நெல்லும் புல்லுமாகிய ஒரறிவுயிர் ஒருங்கே குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. 1. இத்தொடர் எடுத்தோத்து பெரும்பான்மை என்றிருத்தல் வேண்டும். பெரும்பான்மை பற்றி மரபுப்பெயர்கள் பெறுவன பலவற்றை ஆசிரியர் எடுத்தோதினார். எடுத்தோதாதன சிங்கம், உடும்பு, ஓந்தி, பல்லி, நாவி முதலியனவும் சிலவுள்ளன. அவற்றுள் ஏற்பனவற்றை இங்கு எடுத்துக் கூறப்பட்டவற்றுடன் இணைத்து அடக்கிக் கொள்க என்பதாம். 2. சொல்லிய மரபின் இளமை - அகத்திணையியலுட் கூறிய புலனெறிவழக்கிற்றாகிய இளமைப்பெயர்; சொல்லுங்காலை -- இலக்கணங்கூறுங்கால்; அவையல இல-இங்ஙனம் வரையறைப்படுத்திக் கூறிய அவையன்றி, வரையறை கூறாதவேறுபல இன்றி வரும். எனவே இளமைக்கு மறுதலையாகிய முதுமைப் பெயராயின் அவையல இல என்பதோர் வரையறைப்படுத்து இலக்கணங் கூறப்படா எனச் கருத்துரைவரைவர் பேராசிரியர். 1. நாகுபுன்னைபூத்தன (சீவக : 74) என்பதன் உரையில் சொல்லுங்காலை (மரபியல் - 26) என்றதனால் நாகு பெண்மையேயன்றி இளமையும் உணர்த்திற்று. நாகுமுதிர் நுணவம் (சிறுபாண் : 51) என்றார் பிறரும் எனப்பேராசிரியர் உரையை அடியொற்றி நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுத்தந்தார். 1. கார்ப்பு எனத் திருத்திக் கொள்க. 1. ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அவ்வவற்றுக்கோதிய அறிவுகள், மெய்யினால் உற்றறிதல், அதனோடு நாவினாற் சுவைத்தறிதல், அவற்றொடு மூக்கினால் முகர்ந்தறிதல், அவற்றொடு கண்ணினாற் கண்டறிதல், அவற்றொடு செவியினாற்கேட்டறிதல், அவற்றொடு மனத்தால் சிந்தித்தறிதல் என இவ்வாறு எண்ணிய முறையானே பிறக்கும் என்பார், நேரிதினுணர்ந்தோர் நெறிப் படுத்தினரே என்றார். 2. உயிருடைய வாகிய நந்து முதலாயவற்றுக்குச்செவி முதலாகிய பொறி யுணர் வில்லாமை போன்றே ஓரறிவுயிர்க்கு மனவுணர் வில்லையென்பது கொள்ளப்படும். 1. ஐம்பொறிகளின் துணை வேண்டாது கனாப்போலத் தானேயுணர்வது மனவுணர்வு. பொறியுணர்வுக்கு முன் பிறந்தது மனவுணர்வு. அதன்வழித்தாகிய பொறியுணர் வென்பது தனக் கென அறிவின்றிப் பயிற்சி வயத்தால் நிகழ்வதாதலின் மனத்தின் வழியே செயற்படுவதாகும். 2. மனம் ஒருகணத்துள் ஒருபொருளையே யுணர்வதாகலின் ஐவகையாகப்பிரிந்து செல்லும்பொறியுணர்வும் அவையெல்லாவற்றிற்கும் ஒன்றாய் நின்று செயற்படும் மனவுணர்வும் தம் முள் வேற்றுமையுடையன என்பது நன்கு தெளியப்படும். 1. இவை புறத்தே வயிரடிடைய புல் என்ற பகுப்பிலும் அகத்தே வயிரமுடைய மரம் என்ற பகுப்பிலும் அடங்காமையால் பிற எனப்பட்டன. 2. கிளைப்பிறப்பு என்பதனைக் கிளையும் பிறப்பும் என விரித்து உம்மைத் தொகையாகக் கொண்டார் பேராசிரியர். கிளை என்பன புல்போன்று புறவயிரமும் மரம்போன்று உள் வயிரமும் இன்றிப் புதலும் கொடியும் போன்றுள்ள தாவரங்கள் பிறப்பு என்பன தாவரத்தின் வேறுபட்ட பிறப்பினவாய் மக்களிலும் விலங்குகளிலும் ஈன்ற குழவி ஓரறிவினவாய் விளங்கும் பருவமும், எக்காலத்திலும் ஓரறிவினவாகியே விளங்கும் என்பில்லாத புழுவும் ஆகிய இவை என்பர் பேராசிரியர். 1. பிற என்றது, இந்நூற்பாவில் எடுத்தோதப் படாத ஈரறிவுடைய பிறவற்றை. 1. உண்ட இரையின் சுவை கொள்ளுதலால் நாவுணர்வும், பிறி தொன்று தம் மேல் தாக்கியவழி அறிதலால் ஊற்றுணர்வும் ஆகிய ஈரறிவுடையன. நந்து--நத்தை. முரள்--முற்றில். என்பன கடல்வாழ் சாதியாகிய சிப்பிவகைகள். 2. சிதல்--கறையான். அட்டை என்பது நிலத்திலும் நீரிலும் வாழும் மூவறிவுயிர். 1. ஈயல் மூதாய் -- தம்பலப் பூச்சி 1. நண்டு என்பது நீரில் வாழும் உயிர், தும்பி என்பது மலர்களில் நுகரும் சிறு பறவை. 1. மாவுமாக்களும் ஐயறிவினவே என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. நிலத்தில் ஊர்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீர் வாழ்வனவற்றுள் மீன், முதலை, ஆமை முதலாயினவும் ஐம்பொறி யுணர்வுடையனவாதலின் அவையும் அடங்கப் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்றார் ஆசிரியர். 1. அறுவகையுயிர்களுள் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பினை எடுத்தோதிய ஆசிரியர், அவற்றுள் சேர்க்கத்தக்கனவற்றைப் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே எனப் புறனடையாக எடுத்துக் கூறியதன் கருத்து அவற்றுக்கு வரையறையில்லை என்பதனைப் புலப்படுத்தலேயாகும். 1. உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே தொல் -கிளவி-1)என்றதொல்காப்பியனார்தெய்வஞ்சுட்டியபெயர்நிலைக்கிளவியும்.....ca®âiz மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்) தொல்-கிளவி:4 என்றாராகலின், பிறவாவது தேவர் அசுரர். இயக்கர் முதலாயினோர் என விளக்கந்தந்தா®இளம்பூரணர். இவ்வுரை விளக்கத்தை அடியொற்றியதே. மக்கள் தேவர் நரகர் உயர்திணை எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 2. அவ் ஆறு உணர்விலும் குறைவு பட்டாரைக் குறைந்த வகைஅறிந்துமுற்கூறியசூத்திரங்களானேஅவ்வப்பிறப்பினுள்nசர்த்துக்bகாள்ளiவத்தான்vனïத்தொடரைப்ãரித்துப்bபாருள்bகாள்க.1. இவ்வியல் 24-ஆம் நூற்பாவில் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இளமைப்பெயர்கள் ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்றார். அச் சூத்திரத்தில் ஓரறிவுயிர் தோற்றுவாய் செய்யப்பெற்றமையால் அதனைத் தொடர்ந்து ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையுயிர் பற்றிய நூற்பாக்கள் ஈண்டுக் கூறப்பட்டன என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். வேழம் -- யானை களிறு என்பது ஆண்மைப்பெயர். கேழல்--பன்றி * இவ்விரு சூத்திரங்களையும் ஒன்றாகக் கொண்டார் பேராசிரியர். 1. மக்கள் என்பது ஆண் பெண் இருபாற்கும் உரியதாயினும் ஆண்பாற்குச் சிறப்புரிமையுடையதாய் வழங்குதலின் ஆண்பால் அதிகாரப்பட்டது என்றார். 2. விலங்கினுள் யானை சிறந்ததாதலின் அதற்குச் சிறப்புரிமை யுடைய ஆண்பாற் பெயராகிய களிற்றை முற்கூறினார். 3. ஆண்பாற் பெயர்களுள் ஏறு, ஏற்றை என்பன பெரும்பான்மையாக வழங்குவன வாதலின் இவ்வியல் இரண்டாஞ் சூத்திரத்துள் ஆண்பாற் பெயர்களுள் முற்கூறப்பட்டன. 1. ஒருத்தல் -- ஆண்மைப் பெயர் 1. அன்ன-அத்தன்மையன. புல்வாய் முதலியனபோல் ஒருத்தல் என்னும் ஆண்மைப் பெயரைப் பெறுதற்குரியன. 2. எருமைக் கண்ணும் ஆணினை ஒருத்தல் என்றல் ஏற்புடைத்து என்பர். 3. புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை இவை ஒன்பதும் ஒருத்தல் என்னும் ஆண்பாற் பெயர் பெறுவன. இவற்றை ஒருங்குகூறாது மூன்று சூத்திரத்தாற் கூறியது பெரும்பான்மை சிறுபான்மைபற்றி என்பர் பேராசிரியர். 1. ஏறு - ஆண்மைப் பெயர். புல்வாய், உழை என்பன மானின் வகையைச் சார்ந்தன. கவரி-கவரிமான். 2. மரை - மரை என்னும் ஆ (காட்டுப்பசு). பசு அன்ன - புல்வாய் முதலியன போல ஏறு என்னும் ஆண்மைப் பெயருக்கு உரியன. 3. கடலில் வாழும் பெருமீனாகிய சுறாவின் ஆண், ஏறு என்னும் ஆண்மைப் பெயரால் வழங்கப்படும் என்பதாகும். 1. எட்டுச்சாதி எனப்பட்டன பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், கடல்வாழ்சுறவு என்பன. இவை ஏறு என்னும் ஆண்பாற் பெயருக்கு உரியன. (பாடம்) * பொறிய மடமான் 1. அது பெறற்கு உரிய--போத்து என்னும் அவ் ஆண்மைப் பெயரைப் பெறுதற்கு உரியன. * நீர்வாழ் சாதியுள் அறுபிறப் புரிய எனப் பாடங்கொண்டார் பேராசிரியர். 2. ஆணினைப் போத்து என வழங்குதல் மயிலுள்ளும் எழாலுள்ளும் பெரும்பான்மை என்பதாம். எழால்-வல்லூறு. 1. இங்கே குறிக்கப்பட்ட அறுபிறப்பாவன நீரில் வாழும் உயிரினங்களாகிய சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்பன இவற்றுள் முன்னுள்ள நான்கும் முதலை வகை; பின்னுள்ள இரண்டும் மீன்வகை. 2. போத்து என்னும் ஆண்பாற்பெயர் பறவையினத்துள் பலவிடத்தும் பயின்று வழங்குவதாதலின் இதனைத் தனித்த சூத்திரத்தால் வேறு கூறினார் ஆசிரியர். 1. கராம், இடங்கர், முதலை என்பன தம்முள் வேறு என்பது இங்கு எடுத்துக் காட்டிய புறநானூறு 37-ம் பாடலாற் புலனாதலறிக. 2. செம்போத்து, என்பது ஒரு பெயர். அது ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய்ப் பறவையினத்தைக் குறிப்பது; எருமை போத்து, முதலைப் போத்து, மயிற்போத்து என்றாற் போன்று ஆண்பாற்குரிய மரபுப் பெயரொடு ஒட்டிய பண்பு கொள் பெயரன்று. 1. இதனை இரண்டு சூத்திரமாகக் கொண்டார் பேராசிரியர் முசு -- குரங்கு. 1. (1) இரலையும் கலையும் புல்வாய்க்குரிய, (2) கலையென்காட்சி உழைக்கும் உரித்தே. (3) நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும் எனவரும் இம்மூன்று சூத்திரங்களும் இரலை, கலை என்னும் ஆண்பாற்பெயர் புல்வாய், உழை, முசு என எண்ணிய மூன்று சாதிக்கும் உரியன எனக்கூறுவன என்பர் பேராசிரியர். இவற்றுள் பின்னிரெண்டு சூத்திரங்கள் இளம் பூரணருரையில் ஒரே சூத்திரமாக அமைந்துள்ளமை காணலாம். 1. மோத்தை, தகர், உதள், அப்பர் என்பன ஆண்மைப் பெயர்கள். இவை யாட்டில் ஆணிற்கு உரியவாகும். 1. யாட்டுக்கு வழங்கும் ஆண்பாற் பெயர்களுள் அப்பர் என்பது பேராசிரியர் காலத்திலேயே வழக்கு வீழ்ந்தது. 2. யாத்த என்றதனாற் கடா என்பதனை யாட்டிற்குரிய ஆண்பாற் பெயராகக் கொண்டு, நிலைக்கோட்டுவெள்ளை நால்செவிக்கடா (அகநாநூறு-155) என்பதனை உதாரணமாகக் காட்டுவர் பேராசிரியர். கடா என்னும் ஆண்பாற் பெயர் சங்கச் செய்யுட்களில் கிடாய் எனத்திரிந்து வழங்குகின்றது. 3. குரங்கினுள் ஆணினை அப்பர் எனவழங்கும் வழக்கு பேராசிரியர் காலத்து நிலைபெற்றிருந்தமை இவ்வுரைத் தொடராற் புலனாம். 1. சிறகு என்னும் சினைப்பெயர் சிறகினையுடைய பறவைக்கு ஆனமையால் ஆகுபெயர் என்றார். 2. சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயில் என்றது தோகை யினையுடைய ஆண் மயிலினை. இம்மயில் ஆண்பாற் பறவையாயினும் தான் இயல்பாகப் பெற்றுள்ள நீலநிறத் தோகையின் வனப்பால் பெண் போலும் சாயலினைப் பெற்றதாதலின் அத்தகைய மயிலுக்கு ஆண்பாலுக்குரிய சேவல் என்னும் பெயர் பொருந்தாது என்பது தொல்காப்பியனார் கருத்தாகும். எனவே இவ்வியலில் விரித் துரைக்கப்படும் இளமை, ஆண்மை, பெண்மை பற்றிய மரபுப் பெயர்கள் தாம் குறித்த பொருளின் பண்புடன் நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு புலனாகும். 1. செவ்வேளாகிய முருகப்பெருமான் ஊர்ந்து நடத்தும் மயிலாகிய ஊர்தி தோற்றத்தாற் பெண்பால் போலும் சாயலுடையதாயினும் போரில் மீதூர்ந்து செல்லும் பேராண்மையுடையதாதலின் அதற்குச் சேவல் என்னும் ஆண்பாற்பெயர் பொருத்த முடையதாம் என்பார், செவ்வேளூர்ந்த மயிற்கு ஆயின் அதுவும் (சேவற்பெயரும்) நேரவும் படும் என்றார் பேராசிரியர். 2. ஏற்றை--ஆண்மைப்பெயர், 1. ஏற்புழிக் கோடல் என்பதனான் அஃறிணைக்கண் கொள்ளப்படும் என இத்தொடர் இருத்தல் பொருத்தமாகும். இவ்வியல் 35 முதல் 50 வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைக்குரிய ஆண்மைப் பெயர்களே கூறப்படுதலின் இங்குக் கூறப்பட்ட விதிகள் ஏற்புழிக்கோடல் என்பதனால் அஃறிணைக் கண் கொள்ளப்படும். 1. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம், ஏற்றை என்னும் மரபுப்பெயர் உரியதாய் வழங்கும் என்பதனை, பன்னாள், குழிநிறுத் தோம்பிய குறுந்தாளேற்றை (பெரும்பாண்-342) எனப் பன்றிக்கும், ஏற்றை அரிமான் இடிபோல இயம்பி னானே (சீவக - 432) எனச் சிங்கத்திற்கும், கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை (பட்டினப்-140) என வேட்டை நாய்க்கும் பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை (மலைபடு - 508) என உடும்பிற்கும் வழங்கப்படும் இலக்கியச் சான்றுகளுடன் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமை காணலாம். கூருகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை (பட்டினப்--140) எனவும், 1. இவ்வுரைப் பகுதியுட் சில சொற்கள் விடுபட்டமையால் இதன் கண் அமைந்த விளக்கத்தினையும் வினாவையும் விடையையும் தெளிவாகப் புரிந்து கொள்ளஇயல வில்லை. சே, கடுவன், கண்டி என்னும் ஆண்மைப் பெயர்கள் அதிகாரப் புறனடையாகிய சிறப்புச் சூத்திரத்துள் கூறப்படும். இங்கு எடுத்தோதப்பட்ட மரபுப் பெயர்கள் பலபொருள் ஒரு சொல்லும் ஒருபொருட் பல சொல்லும் ஆக வழங்கப் பெறுகின்றன என்பதாம். 1. காய் ஈனாத பனையினை ஆண்பனையென்றும், காய் ஈனும் பனையினைப் பெண்பனையென்றும், ஆண் பெண் என்னும் இரும்பாலுமல்லாத பால்திரி பெயரினை பாலின் மிகுதி குறைவு பற்றி ஆணலி பெண்ணலி யென்றும் வழங்குதல் மரபு என்பது இவ்வுரைத் தொடராற் புலனாகும். இவ்வியல் 52 முதல் 68 வரையுள்ள சூத்திரங்களால் பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறுகின்றார். பெண்பெயர் -- பெண்மை குறித்த மரபுப்பெயர். 1. விலங்குகளிற் சிறந்தது யானை. அதற்குரிய களிறு என்னும் ஆண்பாற் பெயரை முன்னர்க் கூறியவாறு போன்று, அதற்குரிய பெண்பாற் பெயராகிய பிடி என்பதனையும் முன்னெடுத்து மொழிந்தார் ஆசிரியர். 1. பெட்டை என்பது பெண்பாற்குரிய மரபுப்பெயர். எழுந்து விண்படரும் சிங்கப் பெட்டைமேல் இவர்ந்து (சீவக. 752) என்பதன் உரையில், இதனுள் கொடை என்றதனால் சிங்கத்திற்கும் பெட்டை கொண்டவாறு காண்க. என இம் மரபியற் சூத்திரத்தை எடுத்துக்காட்டி விளக்கினார் நச்சினார்க்கினியர். 1. எல்லாப் பறவையினத்துள்ளும் பெண்பறவைகள் பெட்டை என்னும் பெயரால் வழங்குதற்குரியன 2. இச்சூத்திரம் புள்ளும் உரிய அப்பா லான என்ற சூத்திரத்தின் பின் வைத்தமையால் பெண்மை பற்றிய பேடை, பெடை என்னும் மரபுப் பெயர்கள் பெரும்பான்மையும் பறவையினத்துக்கு உரியவாய் வழங்குவன என்பதாம். 1. நாடின் என்றதனால், பெட்டை, பெடை, பேடை என்னும் பெண்மை பற்றிய மரபுப் பெயர்களுள் பெடை பேடை என்பனவே பயிலவழங்கும் எனவும் பெட்டை என்ற பெயர் உலக வழக்கினுள் பயின்று வழங்காது எனவும் கொள்வர் பேராசிரியர். தடமண்டு தாமரையின் தாதா டலவன் இடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நாடாயினா னூர் (யாவி--ப. 232) என நண்டிற்குப் பெடை வந்தது. எருமைப் பேடையோ டெமரீங் கயரும் (கலி 144) எருமைப்பேடையென்றது. பேடையும் பெடையும் நாடினொன்றும் என்பதனால் அமைத்தாம் (சீவக. 1778) என இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் இங்குக் குறிக்கத் தகுவதாகும். 1. அப்பெயரென்றது அளகு என்னும் பெயரை. 2. இவ்விரு சூத்திரங்கட்கும் பொருளியைபு நோக்கி ஒன்றாக உரை வரைந்தார் பேராசிரியர். 1. அளகுடைச் சேவல் (பதிற்றுப்பத்து. 35) ஈண்டுப்பருந்து என்றார் பழையவுரை யாசிரியர் பெரியபுராணம் திரு நாளைப் போவார்புராணம் 7 - ஆம்பாடலிலும் திருவிளையாடல் அருச்சனைப் படலம் 34 ஆம் பாடலிலும் அளகு என்னும் பெயர் ஆண்கோழியைக் குறித்து வழங்கியுள்ளது. எனவே அளகு என்பது பிற் காலத்தில் பலபொரு ளொரு சொல்லாய் வழங்குவதாயிற்று எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். மரபியல் 57-ஆம் சூத்திரத்தில் முதலடியாகப் பெண்பாலான என்ற தொடர் இளம்பூரணருரையிற் காணப்படுகின்றது. இத்தொடர் பேராசிரியருரையில் இல்லாமை குறிப்பிடத்தக்கது. 2. பிணை என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். 1. பிணை என்னும் பெயர் பிரியாது பிணைந்து செல்லும் இயல் புடையபிற சாதியுயிர்கட்கும் சேவற்கும்செல்லுமாயினும் வழக்கியல் மரபு நோக்க இப்பெயர் புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் இவற்றிற்குச் சிறப்புரிமையுடையன என்பதாம். 2. பிணவு என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். 1. ஒன்றிய என்பதனான் பிணவு என்னும் பெயர், ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய (அகநானூறு-72) எனப்புலிக்கும், பரிபாடல் 10-ஆம் பாடலில் யானைக்கும் மணி மேகலை 19-ஆம் காதையில் குரங்குக்கும் உரியதாய் வருதல் கொள்க. 1. பிணவல் என்பது பெண்மை பற்றிய மரபுப் பெயர். 2. அம் மூன்றற்கும்--பன்றி, புல்வாய், நாய் என மேற்குறித்த மூன்றினுக்கும், பிணவல் என்னும் பெயர் உரியதாகும். 1. ஆ என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். பசு என்னும் பொருளில் வழங்கும் ஆ என்னும் பெயரும் பெண்மை பற்றிய ஆ என்னும் மரபுப் பெயரும் தம்முள் வேறெனவுணர்க. 2. பெண்மை பற்றிய மரபுப் பெயர்களைத் தொகுத்துரைக்கும் சூத்திரத்தில் ஆ என்பது பெண்மைப் பெயராக எடுத்துரைக்கப் பெறாவிடினும் அச்சூத்திரத்தில் அந்தஞ்சான்ற என்ற இலேசினானே தழுவிக் கொள்ளப்பட்டது. அங்ஙனம் இலேசினாற் கொள்ளப்பட்ட ஆ என்னும் பெயர் இன்னவிடத்துவரும் எனவுணர்த்துவது இச்சூத்திரமாகும் என்றார் பேராசிரியர். 1. இவ்வியல் 51-ஆம் சூத்திரத்தில் எடுத்துரைக்கப்பட்ட பெண், ஆண் என்பன அஃறிணைப்பெயர். இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட பெண், பிணா என்பன பெண்கோளொழுக்கமும் கண்கொள நோக்கி (அகநானூறு 112) எனவும். கோயிற்பிணாப் பிள்ளைகாள் (திருவாசகம், திருவெம்பாவை) எனவும் உயர்திணைக்கண் வந்தன. 1. ஈன்பிண வொழியட் போகி (பெரும்பாண்-90) என்புழிப் பிணா என்னும் ஆகாரவீற்றுச்சொல் வருமொழி வன்கணமன்மையிற் குறியதன் இறதிச் சினை கெட்டு உகரம் பெறாது பிண என அகரவீற்றாய் நின்றது. 1. நாகு என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். 2. நந்து -- நத்தை. 3. எருமை, மரை, பெற்றம், நந்து என்னும் இந்நான்கற்கும் நாகு என்னும் பெண்பாற் பெயர் உரியதாகும். 1. மூடு, கடமை என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்கள். 2. யாட்டிற்குரியவாய் வழங்கிய மூடு, கடமை என்னும் பெண்மைப் பெயர்கள் பேராசிரியர் காலத்திலேயே வழக்கினுள் அரியவாயின எனத் தெரிகிறது. 3. பாட்டி என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். 4. அற்றே -- அத்தன்மையதே. பாட்டி என்னும் பெண்மை பற்றிய பரபுப்பெயரைப் பெறுந் தன்மையதே. 1. இவ்விரு சூத்திரங்கட்கும் பொருளியைபு நோக்கி ஒன்றாய் உரைவரைந்தனர் பேராசிரியர். பன்றி, நாய், நரி என்பன பாட்டியென்னும் பெண்பாற்குரியன என்பதாம். 2. மந்தி என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். இது குரங்கின் இனத்துக்கே சிறப்புரிமையுடைய பெண் பெயராகும். 1. குரங்கு, முசு, ஊகம் என்பன மூன்றும் குரங்கினத்தின் வகையாகும். இம்மூன்று சாதிப்பெண்பாலும் மந்தி என்னும் பெண்மைப் பெயர் பெறும் என்பதாம். * இதுவும் அடுத்த சூத்திரமும் ஆண்மை பெண்மை குறித்தமரபுப் பெயர் பற்றிய அதிகாரத்துக்குப் புறனடையாய் அமைந்தன. 1. கடுவன் என்னும் பெயர், அக்காலத்து மக்கட்பெயராயிருந்து பின்னர்க் குரங்கினுள் ஆணுக்குரியதாயிற்று எனவும், வெருகு என்ற பெயரும் முன்னர் மக்கட் பெயராயிருந்து பின்னர்ப் பூனைக்குரியதாயிற்று எனவும், மரத்தின் கிளையைத் தான் வாழுமிடமாகக் கொண்டது கூகையாதலின் கோட்டான் என்ற பெயர்க்குரியதாயிற்று எனவும், தத்தை என்ற சொல் பெருங்கிளியையும் செவ்வாய்க்கிளி என்ற சொல் சிறுகிளியையையும் குறிக்குமெனவும் தோட்டங்களிலும் வேலியிலும் மறைந்திருந்து வேற்றுயிர்களின் மாமிசத்தை உண்ணுதற்றொழிலுடைமையால் வெருகு (காட்டுப்பூனை) வெவ்வாய் வெருகு எனக் கூறப்பட்டதெனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் மனங்கொளத் தருவதாகும். 2. கடுவிசையாற் பறப்பது போன்று விரைந்து செல்லுமியல் பினையுடையது குதிரையாதலின் அது சிறகுடைய சேவல் என்னும் பெயர்க்குரியதாயிற்று. 1. ஆண், பெண் என்பன இருதிணைக்குமுரிய விரவுப்பெயர்கள் ஆகும். ஆண் பாலெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்பவை யவையவை யப்பாலான (தொல்-மரபியல்-50) என்ற சூத்திரம் அஃறிணைக்குரிய ஆண், பெண் என்பவற்றை உணர்த்தியது. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே (70) எனவரும் இச்சூத்திரம் உயர் திணைக்குரிய ஆண், பெண், பிள்ளையென்னும் இப்பெயர்கள் போன்று மக, குழவி என்னும் பெயர்கள் உயர்திணைக்கேயுரியவாய்ப் பயின்று வழங்கவில்லை. ஆண்பிறந்தது, பெண்பிறந்தது என அடைமொழி சேர்க்காது கூறிய நிலையில் ஆண், பெண், பிள்ளை என்பன உயர்திணைக்கே யுரியவாயின. இவை அஃறிணையைக் குறிக்கும் நிலையில் ஆண் குரங்கு பிறந்தது. பெண்குரங்கு பிறந்தது என அடைமொழிபுணர்த்தே வழங்கப் பெறும் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். கரகம்--கமண்டலம். முக்கோல்--முத்தொழில்களைச் செய்யும் அயன், அரி, அரன் என்னும் மூவரும் ஒருவரே என்னும் உண்மையினை வற்புறுத்தும் அடையாளமாகவுள்ளது முக்கோல்களாகும். இவ்வுண்மை, உரைசான்ற முக்கோலும் எனவரும் கலித்தொகை தொடருக்கு, அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவரென்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோலையும் என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் இனிது புலனாதல் காணலாம். மணை--ஆசனம். ஒரு கோலுடையார் என்றது, ஏகதண்ட சந்நியாசிகளை அப்பிரிவினர் முற்காலத்தில் தமிழகத்தில் இல்லாமையால் இங்குக் குறிக்கப்படவில்லை. 2..முக்கோலுடைய அந்கணர்கள்ஊர்தோறும்பிச்சையேற்றுஉண்பவரும்ஓரிடத்திலிருந்துதாம்ஈட்டியபொருளையுண்டுவாழ்வாரும்எனஇருதிறத்தர்என்பர் nபராசிரியர். நூல்-- முப்புரிநுல். கரகம் -- கமண்டலம். மணை--அமர்தற்குரிய ஆசனமாகிய யாமை மணை. ஆயுங்காலைஎன்றதனாšகுடை,செருப்òமுதலாயினவு«கொள்ளப்படும். எனவும், ஒருகோலுடையார் இருவருளர்; அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படார் என்பது. முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண்டு (பிறவிடங்களில்) இருந்து தனது உண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே (இச்சூத்திரத்து) ஆசிரியன் வரைந்தோனாதின் என்பது எனவும் தம் காலத்து வாழ்ந்த அந்தணர் வகையினை விளக்குவர் பேராசிரியர். ï¢சூத்திரத்து முக்கோலே கூறப்பட்டி ருத்தலாலும் ‘உறித்தாழ்ந்தfரகமும்cரைசான்றK¡கோலும் (fலித்-9)எdக்கȤதெhகையில்முக்nகாலந்தணர்களேகுறி¡கப்பட்oருத்தலாலும்சங்fகாலத்திலும்அத‰குமுன்dரும்ஒரு கேhலேந்தியஅந்jzளர்ஆகிய துறவிfள்தமிழfத்தில்இலர் என்பJபுலனhகும்.முக்fYilah® பிள்சையெடுத்து உண்டு வாழ்பவரும் தாம் விரும்பிய இடத்திலிருந்து தமது முயற்சியால் கிடைத்த உணவினை உண்டு வாழ்பவரும் ஆக இருவகையினர் இருந்தனர் எனப் பேராசிரியர் குறித்துள்ளார். இவ்விருதிறத்தார் பற்றிய தமிழிலக்கியச் சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே இப்பகுப்பு பேராசிரியர் காலத்தில் வழங்கிய வடமொழி மிருதி நூல் பற்றியதென எண்ண வேண்டியுளது. மக்களை நில வகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகையாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல் காப்பியனார் மக்களுக்குரிய ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிட வேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத் துணர்த்தும் முறையிலேயே ஆசிரியர் இம்மரபியலை அமைத்துள்ளார். இதன்கண் 1 முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே முன்பக்கத்தொடர்ச்சி தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந்துள்ளன. இயல்பாக அமைந்த இத்தொடர்பு இடையறவுபட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் இவ்வியலில் 71-முதல் 85-வரையுள்ள எண்ணுடையனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன. 1. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய தலைமக்களை வகைப்படுத்துக் கூறிய நிலையிலும், புறத்திணையொழுகலாற்றில் வாகைத்திணைப் பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி, அவர்களை வேளாண்மாந்தரென்றோ வைசியரென்றோ இவ்வாறு வருணம் பற்றித் தொல்காப்பியர் யாண்டும் குறிப்பிடவேயில்லை. மரபியலில் இடம் பெற்றுள்ள வைசியன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்படாத பிற்காலச் சொல்லாகும். வருணம் நான்கு என்ற தொகை தொல்காப்பியத்தில் யாண்டும் சுட்டப்படவில்லை. அந்நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் இடையிருவகையோர் என ஆசிரியர் இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும், இங்குக் குறிக்கப்பட்ட அரசரும், வணிகரும் அல்லாத பிறர்க்குப் படைப்பகுதி கூறுதல் இல்லை எனக்கூறும் இவ்வியல் 77-ஆம் சூத்திரவிதி பின்வரும் 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்கச் செய்யுட்களிற் காணப்படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டுள்ளது. வேளாண் மாந்தர் என்றொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னுள்ள இயல்களிற் குறிக்கப் பெறவில்லை. உரிப்பொருள் ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள், முதல் கரு உரி என்னும் பொருட்பகுதிகளை விளக்கும் அகத்திணையியல், புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் குறிக்கத்தக்கனவே யன்றி, மரபுப் பெயர்களில் வழக்குப் முன்பக்கத்தொடர்ச்சி பயிற்சியைக் கூறுதற்கமைந்த இம்மரபியலில் இடம்பெறத் தக்கன அல்ல. ஆகவே 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் நால்வகை வருணப் பாகுபாடு தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கிய பிற் காலத்திலே இம்மரபியலில் இடைச் செருகலாக நுழைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் எனக்கருத வேண்டியுள்ளது. பிற்றை நாளில் தமிழரொடு தொடர்பில்லாத களப்பிரர் முதலிய அயல்மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லலுற்ற காலத்திலே தமிழ்மக்களது உரிமை யுணர்வினைச் சிதைக்கும் நோக்கத்துடன் இத்தகைய அடிமைக் கருத்துகள் தமிழ்நூல்களிலும் ஆங்காங்கே இடம் பெறலாயின. அவ்வகையிலேயே தொல்காப்பிய மரபியலிலும் இவ்வருணப் பாகுபாடு இடைச் செருகலாக நுழைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது, வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள் மரபு விட்டியதால் (குலோத்துங்கச் சோழன்பிள்ளைத்தமிழ்) எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியால் உய்த்துணரப்படும் நால்வகை வருணப் பாகுபாடு தமிழகத்திம் வேரூன்றிய காலத்தில் வாழ்ந்தவர்கள் இளம்பூரணர், நச்சி னார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள். ஆதலால் மரபியலின் இடையிலும் கடையிலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழியாகவே எண்ணி உரையெழுதியுள்ளார்கள் எனக் கருதவேண்டியுள்ளது. படை--வேல், வாள் முதலிய படைக்கருவிகள். 1. தெரிவுகொள் செங்கோல் அரசர் என உடம்பொடுபுணர்த்து ஓதினமையால் அரசர்க்குச் செங்கோலுண்மை கூறப்பட்டது. 2. தார்--மாலை. போர்ப்பூ--போரின்கண் சூடப்படும் வஞ்சி, வாகை முதலிய பூக்கள். தார்ப்பூ--அவ்வவ்வேந்தர்குடியினைக் குறிக்கும் பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ முதலிய அடையாளப் பூக்கள். 3. அரசர்க்குரிய குதிரைகன் அவ்வவ் வேந்தர்க்குரிய பட்டஞ் சாத்திக் கூறப்படுதல் உண்டு என்பார் நடை நவில் புரவி எனச் சிறப்பித்துக் கூறினார். பாண்டியனுக்குரிய குதிரை கோரம் எனவும் சோழனுக்குரிய குதிரை கனவட்டம் எனவும் பிற்காலத்திற்பேசப்படுதல் இம்மரபினை அடியொற்றியதாகும். ஒன்றிய வரூஉம் பொருளுமார் உள-பொருந்தவரும் பொருள்கள் உள்ளன. ஆர் - அசை. 1. அந்தணாளர்க்கு உரியவற்றுள் முந்நூலும் மணையும் போல்வன அரசர்க் குரியனவாகப் பண்டைத்தமிழிலக்கியங்களிற் கூறப்படவில்லை. 1. முந்நூல் முதலாயின அரசர்க்குரியனவாயின் புலனெறிவழக்கிற் புலவர்களாற் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை புலனெறிவழக்கிற் பயிலாமையின் எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அரசர் பூணூலணியும் பழக்கம் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் இடம்பெறவில்லையென்பது தெளிவு. 2. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு (தொல் - எழுத். 31) என நூன்மரபில் ஓதிய மூவகைச் சுட்டினை இடைச்சொல்லோத்தினுள் ஓதாமை போன்று அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் ஐவகை மரபின் அரசர் பக்கம் இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் என்பவற்றை இம்மரபியலில் ஆசிரியர் கூறாது போயினார். அவை இங்கு மரபுவகையால் தழீஇக்கொள்ளப்படும் என்றார் பேராசிரியர். 3. இங்கு அரசர்க்குரியதாகக் கூறப்பட்ட வேள்வி மறக்கள வேள்வியாகும். * பரிசில் பாடாண் திணைத்துறைக்கிழமைப் பெயர் என்பதே பிழையற்ற பாடம். இதன் மூன்றாமடியின் இறுதியில் அவர்க்கு முரித்தென்ப என்ற பாடமே இளம்பூரணருரைப் பகுதியொடு ஒத்து வருகின்றது. 1. அந்தணாளர்க்குரியன அரசர்க்கும் உரியனவாய் அமைதலுண்டு எனக் கூறக் கேட்ட மாணவன், இவ்வாறு அரசர்க்கு உரியனவும் அந்தணாளர்க்கு உரியனவாதலுண்டோ என ஐயுற்று வினவினனாக அவனது ஐயத்தை நீக்கும் நிலையில் அமைந்தது இச் சூத்திரமாகும். பரிசில்கடா நிலையும் பரிசில் விடையும் பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள்பற்றியும் கொடைத்தொழில் பற்றியும் பெறும் சிறப்புடைப் பெயர்களும், நெடுந்தகை, செம்மல் முதலிய பெயர்களும் கூறிப் பாடப் பெறுதல் புனைந்துரை வகையாலல்லது சாதிவகையால் அந்தணர்க்கு உரியதன்று என இச்சூத்திரத்திற்குப் பொருள் கொண்டார் பேராசிரியர். 1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்று கூறாமல் பாடாண் திணைக் கிழமைப் பெயர் என்றதனால் அகன் ஐந்திணைத் தலைவராகி வருதலும் அந்தணர்க்கு இல்லை என்பதாம். 2. இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறார் (மரபியல் - 7) என்றமையால் பார்ப்பார்க்குப் படைதாங்கிப் போர்புரியும் புறத்திணை யொழுகலாறும் இல்லை என்றாராயிற்று. 1. உடைத்தொழிற் கருவிஎன்பன மக்கட்பிரிவினர் தத்தமக்குரிய தொழிலிற்கேற்ப கைக்கொள்ளும் கருவிகள். அவையாவன புத்தகம், செங்கோல், தராசு கலப்பை முதலியன. 1. ஊர், பெயர், தத்தம் தொழிலுக்குரிய கருவி ஆகிய இவை சாதிபற்றி வேறுபடாப் பொருள்களாகலின் எல்லாச்சாதியார்க்கும் ஒப்பச் சொல்லப்படும் என்பதாம். 1. தலைமைக் குணச்சொல் ஆவன மக்கட் பிரிவினர் தத்தம் தொழில் வகையாலும் பண்பினாலும் உயர்த்துக் கூறப்படும். புகழுரை. தத்தம் நிலைக்கேற்ப நிகழ்த்துதலாவது உலகியலில் அவரவர்க்கு இயல்பாயமைந்துள்ள தகுதி நிலையிற் பிறழாதவாறு உயர்த்துப் புகழப்படுதல். 2. அந்தணரைப் பிரமனோடு ஒப்பிட்டும் அரசரைத் திருமாலுடன் ஒப்பிட்டும் வணிகரை நிதியின் கிழவனோடு ஒப்பிட்டும் வேளாண்மாந்தரை வருணனொடு ஒப்பிட்டும் அவரவர் தம் நிலைமைக்கேற்பத் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும் என்பதாம். 1. இடையிரு வகையோர் என்றது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனக் கூறப்படும் நால்வகைப் பிரிவினருள் நடுவில் வைத்து எண்ணப்படும் அரசரையும் வணிகரையும். இங்குக் குறித்த நால்வருணப் பகுப்பு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்குப்பின் கடைச்சங்க காலத்தும் இல்லாமையால், நால்வருணப் பாகுபாடுபற்றிய இச்சூத்திரங்கள் தொல்காப்பிய மரபியலில் பிற்காலத்திற் சேர்க்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. அன்றியும் இச்சூத்திரம் வேந்து விடுதொழிற்படையும் கண்ணியும் வேளாண் மாந்தர்க்கு விதிக்கும் இவ்வியல் 82-ஆம் சூத்திரத்தோடு மாறுபட்டுள்ளமையும் குறிக்கத்தகுவதாகும். 1. இடையிருவகையோர் என்றது, நால்வகை வருணத்தாருள் நடுவேவைத்து எண்ணப்படும் அரசரையும் வணிகரையும் இவ்விருவகையோரல்லது படைக்கலம் தாங்கிப் போர் செய்யப் பெறார் என்னும் இவ்விதி தமிழியல் வழக்கிற்கு ஏற்புடையதன்று. வேளாண்மாந்தர் படைவகை பெறுதல் இலக்கிய வழக்கிலும் உலகியல் வழக்கிலும் காணப்படும் வாழ்வியலுண்மையாகும். 2. வைசிகன் என்ற இச்சொல் சங்க காலத்திலும், அதற்கு முன்னரும் தமிழகத்தில் வழங்காத பிற்கால ஆரியச் சொல் வழக்காகும். 1. இவை எண்வகைக் கூலம் எனவும் வழங்கப்படும். 2. எண்வகைக்கூலமும் உழவர்க்கு மிகுக என்றதனால் எண்வகைக் கூலங்களையும் விளைவித்தல் உழவர்தொழில் ஆதலின், இதனை வணிகர்க் கேயுரிய தொழில் எனக்கூறுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. ஆண்டு--அங்கு; என்றது செய்யுளாகிய இடத்திணை. 1. கண்ணி என்பது முடியிற் சூடும் மாலை. தார் என்பது மார்பில் அணிந்து கொள்ளும் மாலை. இந்நுட்பம் கண்ணி கார்நறுங் கொன்றை காமர், வண்ணமார்பில் தாருங் கொன்றை (புறம்-1) என வரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் இனிது புலனாதல் காணலாம். இனி, கண்ணி என்பது, வெட்சி, வஞ்சி முதலிய தொழில்பற்றிச் சூடும் பூ எனவும் தார் என்பது போந்தை, வேம்பு, ஆத்தி முதலாக ஒவ்வொரு குடியிற் பிறந்தார்க்குமுரிய அடையாளப்பூ எனவும் கொள்வர் பேராசிரியர். 1. கண்ணி--மேற்கொண்ட ஒழுகலாறு குறித்துச் சூடும் பூ தார்--குடிவகை குறித்து அணிதற்குரியமாலை. மெய்தெரி வகையின் எண்வகை யுணவின் (மரபியல் 76) எனவும், கண்ணியுந் தாரும் எண்ணின ராண்டே (320) எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுது பயன்கோடலும், அரசன் கொடுத்த சிறப்புகளுமன்றித் தன் புதல்வராதலின் அரசாட்சி முதலியனகொடுப்ப அவர் தாமும் தம்வழித் தோன்றினாரும் ஆள்வர் என்றுணர்க எனவும் அமரர்ப் பேணியும் ஆவு தியருத்தியும், நல்லானொடு பகடோம்பியும் (பட்டினப்பாலை--200) என்பதன் உரையில் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை மெய்தெரிவகையின் எண்வகை யுணவின், செய்தியும் வரையார் அப்பா லான என்பதனான் வாணிகர்க்கு உழவுத் தொழிலுரித்தாகலின் பகடோம்பியும் என்றார் எனவும் நச்சினார்க்கினியர் கூறும் உரைவிளக்கம் வணிகர்க்கும் உழவுத்தொழில் உண்டு என்பதனை உணர்த்தல் காணலாம். * வேளாண் மாந்தர்க்கு உழுது உண்ணுதல் அல்லது பிற வகை நிகழ்ச்சியில்லை யெனவே வேளாளர் பிறரைத் தொழுது அடிமைத் தொழில் செய்யார் என்பதும் உடன் கூறியவாறு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் (திருக்குறள் -- 1033) என்றார் தெய்வப் புலவரும். 1. பார்ப்பியல் முதலாகிய நால்வகைத் தொழிலும், புறத்திணையியல் வாகைத் திணையிற் கூறினமையால், இம்மரபியலில் நால்வகை வருணத்தாரைப் பற்றிய சூத்திரங்கள் மிகையாகும் அல்லவா? என்பது இங்குக் கேட்கப்படும் வினாவாகும். 1. பார்ப்பியல், அரசியல், வாணிகத் தொழிலுமாகி மூன்று வருணத்தார்க்கும் பொதுப்பட நின்ற ஓதல், வேட்டல், ஈதல் என்பன இம்மூவர்க்கும் ஓத்த சிறப்பின எனவும், வேளாளர்க்கும் வாணிகர்க்கும் உரிய நிரைகாத்தலும் வாணிகமும் ஒத்தன சிறப்பினவாகாமல் ஒரோவொன்று ஒரோ வருணத்தார்க்கு உரியனவாம் ஆதலானும், இம்மரபியலில் அவற்றை ஆசிரியர் விதந்து கூறினார் என்பது மேற்குறித்த வினாவுக்குப் பேராசிரியர் தரும் விடையாகும். 2. நிரைகாவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியவாய் வருதல் போலாது, வாணிக வாழ்க்கை வேளாளர்க்கும் உழுதுண்டல் வணிகர்க்கும் சிறுபான்மையாய் வரும் எனவும் எண்வகைக் கூலங்களை விற்றலே வணிகர்க்குப் பெரும்பான்மையாய் வரும் எனவும் இச் சூத்திரங்களால் ஆசிரியர் கூறினார் என்பர் பேராசிரியர். நால்வகை வருணப் பாகுபாட்டினை அடியொற்றியுரை யெழுதிய பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தமிழகச் சமுதாய நிலையை அடியொற்றியுரை கூறுமிடத்து வணிகரையும் வேளாண் மாந்தரையும்ஒத்த இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத் தகுவதாகும். 1. வேந்து விடு தொழிலால் படையும் கண்ணியும் வேளாண் மாந்தர் பெறுவர் என விதிக்கும் இச்சூத்திரம் முன்னுள்ள 77-ஆம் சூத்திரத்தோடு முரண்படுதல் காண்க. இவ்வியல் 84-ஆம் நூற்பாவிலேயே இச்சூத்திர விதி அடங்கியுள்ளமை காண்க. 2. வேளாண் மாந்தர்க்குப் படையும் கண்ணியும் விதிக்கும் இச் சூத்திரம், இடையிருவகையோரல்லதை நாடிற், படைவகை பெறாஅர் என்மனார் புலவர் (மரபியல்-77) என முன்னர்க் கூறிய சூத்திரத்திற்கு முரணாக அமைந்துள்ளமை காணலாம். 3. உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான (தொல் - அகத் - 34) என வரும் அகத்திணையியற் சூத்திரத்திற்குமுன் நால்வகை வருணப் பாகுபாடு கூறப் முன்பக்கத்தொடர்ச்சி படாமையின், வேளாளரை ஒழித்து ஒழிந்தோரை நோக்கிற்று அச்சூத்திரம் எனப் பேராசிரியர் கூறும் கூற்று ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 1. அந்தணரை வீரர் என்றார்; அந்த ணாளர்க்கரசுவரையின்றே என்றதனால். (சீவக - 2547) -ஆம் பாடல் உரை) என நச்சினார்க்கினியர் இச் சூத்திரத்தை எடுத்தாண்டுள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும். 1. சூரிய வமிசத்துப் பிறந்த மித்செகன் என்னும் கல்மாஷபாதன் புதல்வரை இழந்த பின்னர் வடநாட்டில் அந்தணரால் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்பதனை இவ்வுரைத் தொடர் உணர்த்துகின்றதோ என ஐயுற வேண்டியுளது. 2. ஆரம் என்றது, பொன்னினும் முத்தினும் மணியினும் இயன்ற மாலையினை. 3. ஏனோர் என்றது வணிகரையும் வேளாளரையும் என இளம்பூரணர் கூறும் இவ்வுரை பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. மன் பெறுமரபின் ஏனோர் என்றது குறுநில மன்னரை எனப் பேராசிரியர் கூறும் உரையே பொருத்த முடையதாகும் என்பது தன்னொடு சிவணிய ஏனோர் (அகத்திணையியல் 29) மேவிய சிறப்பின் ஏனோர் (20) எனவரும் தொல்காப்பியத் தொடர்களால் நன்கு தெளியப்படும். 1. பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன், சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய ஓய்மானாட்டு நல்லியக்கோடன், மலைபடுகடாத்துப் பாட்டுடைத் தலைவனாகிய செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் முதலியோர் முடியுடை வேந்தரால் அரசு பெறும் மரபினராகிய குறுநில மன்னர் என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. மன்பெறுமரபின் ஏனோர் என்றது, வேந்தர்களாற் சிறப்புச் செய்யப்பெற்ற வேளிரையாதலானும், வேந்தர்க்கு மகட் கொடைக் குரியோர் வேளாளர் என்பது தமிழக வரலாற்றால் நன்கு புலனாகும். ஆதலானும் மன்பெறுமரபின் ஏனோர் எனவே, அரசர் வைசியரன்றிக் கீழ் அமையாவாயிற்று என வரும் உரைத்தொடர் தமிழர் வரலாற்றுக்கு ஒத்ததாகத் தோன்றவில்லை. 2. புறவயிர்ப்புடையன--புறத்தே வயிரம் (திண்ணிய பட்டை) உடையன. 3. இவ்விரு சூத்திரங்களையும் ஒரு சூத்திரமாகக் கொண்டார் பேராசிரியர். புல்லென மொழிப மரமெனமைழிப என்பன பேராசிரியர் கொண்ட பாடங்கள். 1. அகவயிர்ப்புடையன-உள்ளே வயிரம் (திண்மை) உடையன. 2. பொய்படுதல்--பொத்துப்படுதல்; பொந்துடையதாய்ப் புரைபடுதல் 1. உதி என்பது புறத்தும் அகத்தும் திண்மையற்றதாயினும் சிறுபான்மை மரமென்னும் இனத்திற் சேர்த்துரைக்கப்படுவதாயிற்று. உதிமரக் கிளவி மெல் லெழுத்து மிகுமே (தொல் - எழுத்ததிகாரம்) என்றார் தொல்காப்பியனாரும். * இச்சூத்திரம் புறத்தே வயிரமுடைய தெங்கு பனை முதலியவற்றின் உறுப்புக்களின் மரபுப் பெயர்களை உணர்த்துகின்றது. 1. நுகும்பு -- மடல் விரியாத குருத்து. புறம் - 249 - ஆம்பாடல் உரை நோக்குக. போந்தை -- கருக்கு. 2. தாலப் புல்லின், வால்வெண் டோட்டு : புறக்கா ழனவே புல்லெனமொழிப என்றாராகலின் புல்லென்றார் (சிலப்-16) என்றார் அடியார்க்கு நல்லார். “ïU«gd« nghªij¤ njhL«” njhnl klny’ v‹D« N¤âu¤J¥ ‘ãwî«’ v‹wjdhš ‘nghªij’ Ko¤jh«” (bghUeuh‰W¥gil.-- 143) என்றார் நச்சினார்க்கினியரும். * இச்சூத்திரம் அகத்தே வயிரமுடைய மரவுறுப்புக்களின் மரபுப் பெயர்களை உணர்த்துகின்றது. 1. நனையுள்ளுறுத்த அனையவை யெல்லாம் --என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம். 2. பிறப்புமுறையால் தளிரை முற்கூறாது இலையை முற்கூறியது புல்லினுள் ஒரு சாரன இலையெனவும் பூவெனவும் வழங்கும் என அதிகாரங்கோடற்கு என்பர் பேராசிரியர். 1. புல்லிற்குரிய ஈர்க்கு என்னும் உறுப்பு ஈன்றவன் தி தலைபோல் ஈர் பெய்யுந்தளிரொடும் (கலி-32) என மாவிலைமேல் வந்தது. 1. புல், மரம் ஆகிய இரு வகைக்கும் பொதுவாகிய உறுப்புகளின் மரபுப்பெயர்களை உணர்த்துகின்றது. 2. புல், மரம் என்பவற்றின் உறுப்பு ஓதியவாற்றால் இவை புல்லின்கண்ணும் மரத்தின்கண்ணும் பெருவரவினவாய் வருதலில் இவ்வுறுப்புக்கள் புல், மரம் என்னும் அவ்விரண்டற்கும் பொதுவென்பதாம். 1. இருதிணை, ஐம்பால் இயல்நெறி வழாது திரிபில்லா மரபுச் சொற்களால் உலகப்பொருள்களை உணர்த்துதலின் இன்றி யமையாமையினை வற்புறுத்துகின்றது. 1. நீலம் நீர் தீ வளி விசும்பு என அவை ஒன்றினுள் ஒன்று அடங்குமுறையிற்கூறாது, நிலந்தீ நீர்வளி விசும்போடைந்தும் என மயங்கக்கூறியது, ஐம்பெரும் பூதங்களாகிய அவை தனித்தனியே பிரிந்து நிற்றலின்றி ஒவ்வொரு பொருளினும் மயங்கிக் கலந்து நிற்கும் என்பது அறிவித்தற்கு என்பது பேராசிரியர் கருத்தாகும். 2. இச்சூத்திரம் மரபுநிலை திரியாச் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும் என்கின்றது. 1. செய்யுளியல் 80-ஆம் சூத்திரத்திற் சுட்டப்பட்ட மரபு என்பது உலகியலில் பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களால் வழங்கப்படும் உலகியல் மரபாகும். அதனையே செய்யுட்குரிய மரபாகக்கூறிய ஆசிரியர், உலகியல் மரபு அவ்வாறாதற் காரணம் மரபுவழிப்பட்ட சொல்லினான என்ற தொடரால் இங்குக் கூறினார். எனவே செய்யுட்கும் இம்மரபே காரணம் என்பதனையும் உடன் கூறினாராயிற்று. 1. மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், கோமூத்திரிகை என்றாற் போல்வன மந்திரவகையால் தெய்வத்தைப் பரவிப் போற்றும் மிறைக்கவிகள் ஆகும். இவை மக்களைக் குறித்துச் செய்யுள் செய்வார்க்கும் அகனைந்திணைக்கும் உரியவாகா. இத்தகைய மிறைக்கவிகள் எல்லோரையும் பாடுதற்குரியன என்று கொண்டு, இவற்றுடன் வேறுபலவற்றையும் சேர்த்து சித்திரங்களாக்கி இலக்கணம் கூறுவர் பிற்காலத்து வடநூல்வழித் தமிழாசிரியர். (யாப்பருங்கலவிருத்தி, ஒழிபியல் 3-ஆம் சூத்திரவுரை) 2. சித்திரக்கவிகள் எனப்படும் இவற்றை இவ்வளவின என்று வரையறுக் கலாகாமையானும் இவர்கள் கூறிய இவற்றோடு ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்றாற்போல மேலும் பல கூட்டிக்கொண்டு செய்யுள் செய்யினும் அவற்றை விலக்குதலியலாமையானும் ஓர் வரையறையுளடங்காத இவற்றிற்கு இலக்கணம் கூறார் ஆசிரியர் என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. மரபுநிலை திரிதலாலுளதாம் வழுவுணர்த்துகின்றது. 2. செவிப்புலனாகிய ஓசையைக் கேட்டு அது கருவியாகக் கட்புலனாய பொருளையுணர்ந்து கொள்ளுதல் என்பது உலகியலில் வழங்கும் சொல் மரபினைத் துணையாகப் பற்றியல்லது பிறிதில்லை. எனவே சொல்மரபு நிலை திரியுமாயின் அதனால் உணர்த்தப்படும் பொருளும் வேறுபட்டு நிலை திரியும் என முற் கூறப்பட்ட உலக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும், இனிக் கூறும் நூலின் இலக்கணத்திற்கும் பொதுவாயமைந்தது இச்சூத்திரம். 1. உலகியல் மரபாவது இதுவென உணர்த்துகின்றது. 2. உலக நிகழ்ச்சிகள் யாவும் அறிவு திரு ஆற்றல்களால் உயர்ந்த சான்றோரது ஆணையால் நிகழ்வனவாதலின், இங்குக் கூறும் சொற்பொருள் மரபு பற்றிய உலகவழக்கென்பது, அத்தகைய உயர்ந்தோர் வழக்கினையே குறிப்பதாகும் என்பதாம். * 95 முதல்110 வரையுள்ள நூற்பாக்கள் நூலின் இலக்கண மரபு உணர்த்து கின்றன. தொல்--மரபியல்-- 95 முதல் 112 முடியவுள்ள சூத்திரங்களைப் பற்றிய அடிக்குறிப்பு நன்னூலிற் பொதுப்பாயிரமாக அமைந்த சூத்திரங்கள் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டன அல்ல என்பது. நன்னூலுரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட மயிலை நாதர் அச்சூத்திரங்களைப் பவணந்தி முனிவர் செய்தனவாகக் கொள்ளாமல் மலர்தலையுலகின் எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரவுரையின்முன் பழஞ் சூத்திரங்களாகத் தந்து, பின்னர்ச் சிறப்புப் பாயிரத்திற்கு உரை வரைந்துள்ளார். இங்ஙனமாகவும் பின் வந்த உரையாசிரியர்களாகிய சங்கர நமச்சிவாயப் புலவர் முதலியோர், இப்பொதுப்பாயிரச் சூத்திரங்களும் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டனவே எனக் கொண்டு உரை வரைந்துள்ளனர். நூலாசிரியர் எல்லோரும் எல்லா நூலுக்குமுரிய பொதுப்பாயிர இலக் கணத்தைத் தம் நூலிற் சொல்ல வேண்டும் என்னும் இன்றியமையாமையில்லை. ஆகவே அப்பகுதி பவணந்தி முனிவர் வாக்கென உறுதியாகக் கொள்ளுதற்கில்லை. அதுபோலவே சொற்பொருள் மரபுணர்த்தும் தொல்காப்பிய மரபியலிற் காணப்படும் இலக்கண நூல் மரபு பற்றிய இச்சூத்திரங்கள் பண்டைநாளில் மரபியலுரையில் எடுத்தாளப்பட்ட பழஞ் சூத்திரங்களாதல் கூடும் எனக் கருதவேண்டியுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியலில் நூலைப்பற்றியும் சூத்திரத்தைக் குறித்தும் தொல்காப்பியனார் கூறிய மொழி நடைக்கும் அவைபற்றி மரபியலிற் காணப்படும் மொழிநடைக்கும் வேறுபாடு மிகுதியும் உண்மை இங்கு நினைத்தற்குரியதாகும். 1. மரபுநிலை திரித்துச் சொல்லுவராயின் உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து வேறுபடும் என்பதனை மேல் இவ்வியல் 91-ஆம் சூத்திரத்தால் இலக்கண நூலுக்கும் எய்துவித்த ஆசிரியர், அங்ஙனம் மரபுநிலை திரியாமையே நூல்கட்குத் தகுதியாமெனவும் அங்ஙனம் இயற்றப்படும் நூல் முதனூல், வழிநூல் என இருவகைப்படுமெனவும் இச்சூத்திரத்தாற் கூறினார். இச் சூத்திர முதலாக இலக்கண நூலின் மரபு கூறப்படுகின்றது. 2. ஒரு நூலை முதலாகக் கொண்டு ஒருவன் வழிநூல் செய்யின் அவ்வழிநூல் பற்றிப் பின்னொரு காலத்து ஒரு நூல் தோன்றிய தாயில் அங்ஙனம் தோன்றிய நூல் வழிநூலாகவும் அதற்கு முதலாகவுள்ள வழிநூலே முதல் நூலாகவும் வழங்கப்பெறும் என்றற்கு, நுதலிய நெறியின் உரைபடு நூல்தாம் முதலும் வழியும் என இருவகை இயல என்றார் ஆசிரியர். 1. பின் தோன்றிய வழிநூலே தன் முதலாகக்கொண்டு வழிநூற்கு முன்னுள்ள முதல் நூலை நோக்கச் சார்புநூலுமாம் ஆகலின் இன்னதே முதல்நூல், இன்னதே வழிநூல் என்னும் வரையறையின்மையின் சார்புநூல் என்பதோர் வகையினை ஆசிரியர் கூறாராயினார். சார்புநூல் என்பதனை நூலின் வகையாகக் கொண்டால், அதன்வழித் தோன்றிய நூலைச் சார்பிற் சார்பு எனவும், அதன்வழி வந்ததனைச் சார்பிற் சார்பிற் சார்பிற் சார்பு எனவும் இவ்வாறு எண்ணிறந்து செல்லுமாதலின் அவையெல்லாம் அடங்க முதல்நூல் வழி நூல் என்னும் இருவகையினையே ஆசிரியர் குறிப்பிடுவாராயினர். 2. முதல் நூலிற் கூறப்பட்டபொருளைப் பின்னர் ஓர் உபகாரப் படஓர் ஆசிரியன்வழி நூல் செய்தக்கால் அதனையடியொற்றிச் சார்புநூல் என ஒருவன் நூல் செய்ததனாற் பயன்யாது? என வினவினார்க்கு, வழிநூலும் பிற்காலத்து அருமையுடைய தாயின் அதனையும் எளிதாகச் செய்தலே பயன் என விடை கூறுவர் பேராசிரியர். 1. எதிர்நூல் என்பதும் ஒன்றுண்டு. அதுயாரோ முதனூலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழவைத்தால், அதனைக் கருவியால் திரிவு காட்டி ஒருவாகை வைத்ததற்கு ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப்படுவது; என்னை? தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுப்பது எதிர்நூல் என்பர் ஒருசாராரே என்றாராதலின் எனவரும் இறையனார் களவியலுரை இங்கு நினைக்கத்தக்கதாகும். 2. காலந்தோறும் வழக்கு வேறுபட ஓரோர் நூல் செய்யின் அது நிலையுடைய வழக்காகாது மாறுபடும் அவ்விலக் கணத்தாற் பயனில்லை ஆதலால், காலந்தோறும் வழக்கு வேறு படுதலின், வழக்கு நூலும் வேறுபட அமையும் என்பார் கூற்றுப் பொருந்தாது என்பதாம். 1. வழக்கும் செய்யுளும் என்று விதந்து கூறத்தொடங்கிய இரண்டின் இலக்கணமும் கூறி முடித்தபின் அவ்விரண்டிலக் கணங்களையும் நூலின் இலக்கணம் கூறலாகாமையின் நூலின் இலக்கணத்தினை மரபியலின் இறுதிக்கண் வைத்தார் ஆசிரியர். 1. வினையின் நீங்கிய (பா.வே.) 2. இயல்பாகவே வினைத்தொடர்பினின்றும் நீங்கி எல்லாவற்றையும் தானே உணரும் முற்றறிவுடையவனாகி விளங்கும் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றதே முதனூல் எனப்படும் என்பது இச்சூத்திரத்தின் பொருள். கண்டது--செய்தது. காணுதல்--செய்தல் 1. மேலைச் சூத்திரத்து முதலும் வழியும் என இருவகைப்படக் கூறப்பட்ட நூல்கள் பின்வந்ததனை நோக்க முதல்நூலாகியும், முன்னுள்ளதனை நோக்க வழி நூலாகியும் பேசப்படும் இயல்புடையன என்பது கூறப்பட்டது. அவ்வாறன்றித் தனக்கு முதல்நூல் என்பது இன்றித் தான் ஒன்றே முதல் நூலாகவும் திகழும் நூல் சிறுபான்மை உண்டு என்பதனை அறிவுறுத்துவது இச்சூத்திரம் என இங்குக் கருத்துரை வரைந்தார் பேராசிரியர். 2. வினையின் நீங்கி, என்புழி ஐந்தாம் வேற்றுமையுருபாகிய இன் என்பது, இருளின் நீங்கி என்றாற்போல, வினைக் கண் நிற்பதன் நிலையும் வினையை விட்டு நீங்குவதன் நீக்கமும் கூறும். எனவே, முனைவனாகிய இறைவனை ஒரு காலத்து வினைத் தொடர்புடையனாகக் கட்டுப்பட்டிருந்து, ஒரு காலத்து அவ்வினைப் பிணிப்பினின்றும் விடுபட்டு நீங்கினான் போலக்கூறுவது பொருந்துமா? என்பது இங்குக் கேட்கப்படும் வினாவாகும். முனைவனாகிய இறைவன் வினைத் தொடர்பிற்குக் காரணமாகத் தனக்கென ஒரு பொருளை விரும்புதலும், ஒன்றனை வேண்டா என வெறுத்தலுமாகிய விருப்பு வெறுப்புகள் உடையன் அல்லன் என்பதேவினையின்நீங்கிவிளங்கிய......Kidt‹, என்ப, தற்குரியகருத்தாகும். அம்முதல்வனுக்கும் உலகெலாம் படைத்துக் காத்த ஒடுக்குதல் முதலிய செயல்கள் உள்ளன என்பது கடவுட் கொள்கையுடையார் பலர்க்கும் உடம்பாடாகலின், தனக்கேயுரிய அருளின் வழிப்பட்ட செயல்களாகிய mவ்வினைக்fண்<டுபட்டிருக்கும்Ãiலயிலேயேஅ›வினையினாலடைதற்குரியgகநுfர்ச்சியும்அªநுகர்ச்சிப‰றியுளவாம்விU¥புவெWப்புக்களாகியவிdத்தொடர்பும் மு‹g¡fbjhl®¢á தன்னைப் பற்றாது விலகும் படி பிறப்பிறப்பில்லாப் பெற்றியனாகத் திகழ்வோன் இறைவன் ஆதலின், அம்முதல்வனை வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் எனக் கூறியது அமைவுடையதே என்பதும், தம்பாலுள்ள குற்றங்களை நீக்கி முழுதுணர் ஞானம் பெற்ற தவச்செல்வர்களும், நீக்குதற்குரிய குற்றங்கள் எவையுமின்றி இயல்பாகவே முழுதுணரும் மெய்யுணர்வுடையோரும் பிறர்க்கு உறுதி பயத்தல் கருதி நூல் செய்வாராயின் அத்தகைய நல்வினை பற்றித் துறக்கம் முதலிய வினைப் பயன்களை அன்னோர் துய்ப்பதில்லை என்பதும், எனவே அன்னோர் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் எனவே போற்றத்தக்கவர் என்பதும் மேற் குறித்த வினாவுக்கும் பேராசிரியர் கூறும் விடையாகும். 1. இங்ஙனம் கூறுவோர் கூற்று, வேதம் ஆகமம் என்னும் வட மொழி நூல்களைப்பற்றிய தாதலின், தமிழ் நூல்களைப் பற்றிச் சிந்திக்கும் இவ்விடத்து அவை பற்றிய ஆராய்ச்சி வேண்டற்பாலது அன்று என்பதாம். 1. முனைவனாகிய இறைவனது அருள் வழி நின்ற முனை வனாகிய அகத்தியனாற் செய்யப்பட்ட அகத்தியமும் தமிழ் முதல்நூல் என்பதும், ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் அருளியல் பிற்காலத்து தாயினும் அதுவும் முதல்நூலே என்பதும், அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதும் தொல் காப்பியம் அதன் வழிநூல் என்பதும், தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழவும் முன்பக்கத்தொடர்ச்சி வழிநூல் செய்தார் என்பார் கூற்று முன்னோர் கொள்கைக்கு முரண் பட்டதாம் என்பதும், தமிழ்நூலுள்ளும் தமது மதத்துக்கு ஏற்பன முதல்நூல் உளவென்று சிலர் பிற்காலத்துச் செய்து காட்டினாராயினும் அவை முற்காலத்து இல்லாதன என்பதும், காலந்தோறும் வேறுபடவந்த அழிவழக்கும் கீழ் மக்கள் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் இலக்கண நூல் செய்யின் அவற்றின் இலக்கணம் ஓர் வரம்பில் அடங்கா என்பதும் ஆகியவுண்மைகளைப் பேராசிரியர் இவ்வுரைப்பகுதியில் வலியுறுத்திக் கூறியுள்ளமை தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களால் உளங்கொளத் தகுவதாகும். 1. வழிநூல் என்பது முதனூற் பொருளை அடியொற்றி அதன் வழிப் பின்னர்ச் செய்யப் பெறும் நூலாகும். 2. பல்காப்பியம் என்பது தொல்காப்பியத்தின் வழிநூல். தொல்காப்பியம் இருக்கவும் பல்காப்பியனார் நூல் செய்தது, செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்ததனைத் தொல்காப்பியர் சுருங்கச் செய்தலின் அருமை நோக்கிப் பல்காப்பியனார் முதனூலொடு பொருந்தப்படுத்துக் கூறினார். 1. தொல்காப்பியர்க்கு இளையராக அவர் காலத்தையொட்டி வாழ்ந்த காக்கைபாடினியாரும் தொல்காப்பியர் கூறுமாற்றால் நூல் செய்தாராகலின் அவர் நூலினை வழிநூல் எனக் கூறுதல் தவறாகாது. 2. குமரியாறு கடல் கொள்ளப்பட்ட பிற்காலத்தில் வாழ்ந்த சிறுகாக்கைபாடினியார் செய்தநூல் முழுவதும் பேராசிரியர் காலத்துக் கிடைக்கவில்லையென்பது இவ்வுரைப் பகுதியாற் புலனாகின்றது. 1. வழியின் நெறி -- வழிநூல் செய்யும்முறை 2. வழிநூல் நால்வகைப்படும். எனவே, இங்குக் குறித்த நால்வகையுள் ஒன்றாய் வரினல்லது பலவகையாய் வாரா எனவும், முதனூலாயின் இங்ஙனம் நால்வகைப் படாது ஒன்றாகவே அமையும் எனவும் கூறியவாறாயிற்று. மொழி பெயர்த்து அதர்ப்படயாத்தல் -- பிறமொழி நூற்பொருளை அம் மொழியினின்றும் பெயர்த்து அவ்வழியில் தமிழ் மொழியால் அமைத்துக் கூறுதல். 1. வேதப்பொருண்மையும் ஆகமப்பொருண்மையும் நியாயநூற் பொருண்மையும் பற்றித் தமிழ் நூல் செய்யுமிடத்து அங்ஙனம் தமிழ்ப்படுக்கப்படும் நூல்கட்கும் இதுவே இலக்கணம் என்று அறிவித்தற்கு மொழிபெயர்த்து அதர்ப்படயாத் தலையும் வழிநூல் வகைகளுள் ஒன்றாகக் குறித்தார் ஆசிரியர். 2. பரந்துபட்ட தமிழியற் பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் முதலிய தமிழிலக்கண நூல்கள் தொல்காப்பியனார் காலத்தோடு ஒத்தகாலத்தில் இயற்றப் பெற்றனவாயினும், அவை சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின், எல்லோர்க்கும் எளிதிற் பயன்படுமாறு தொகுத்துச் செய்யப்பட்ட வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்க காலம் முதலாக இன்றளவும் மக்களாற் பயிலப்படுவதாயிற்று என்பதாம். 1. தொல் செய்யுளியல் 159 முதல் 165 வரையுள்ள சூத்திரங்களில் ஆசிரியர் தொல்காப்பியனார் நூலின் இலக்கணங்களை விரித்துக் கூறியுள்ளார் அவ்விலக்கணத்தினையே இங்கு மரபியலிலும் கூறினாரென்றால் பொருந்துமா? ஆராய்க. எனவே தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்னர் இயற்றப் பெற்றவையாதல் வேண்டும். 1. உள்நின்றகன்ற வுரையொடு பொருந்திவருதலை நூலின் இலக்கணமாகச் செய்யுளியலிற் குறித்தார் தொல்காப்பியர் சூத்திரத்தின் பொருள் விளங்க உரை செய்யுங்காலத்துப் பிறந்த காண்டிகையும் அதனாலும் பொருள் தெளிவுபட விளங்காத காலத்து விரித்துரைக்கப்படும் உரையும் இலக்கண நூலுக்குரிய அங்கங்களாக இச்சூத்திரத்திற் கூறப்பட்டன இதனால். இங்ஙனம் நூலுக்கு அங்கமாய் வேறாப் பொருந்தி வரப்பட்ட உரையேயில்லாமல் சூத்திரத்தினாலேயே பொருள் விளங்கிக் கொள்ளும் காலமும் இருந்தது என்பதும் அந் நிலைமை இக்காலத்துக்கு ஏற்புடையதன்று என்பதும் பேராசிரியர் கருத்தாகும். 1. சூத்திரப்பொருளை மட்டும் விளக்குவதும் சூத்திரப் பொருளுடன் உதாரணமும் காட்டி விளக்குவதும் எனக் காண்டிகை இருவகைப்படும் இவற்றின் இலக் கணத்தினை இவ்வியல் 103, 104-ஆம் சூத்திரங்களில் விரித்துக் கூறுவர் ஆசிரியர். பதப்பொருளைத் தொகைநிலை பயனிலை முதலியவற்றாற்படுத்து, இஃது இன்ன வேற்றுமைத் தொடர் என்றாற் போல சொற்பொருளை முன்பக்கத்தொடர்ச்சி விரித்துக்கூறும் முறையில் அமைந்தது உரையெனப்படும். இதனை இக்காலத்தார் விரிவுரையெனவும் விருத்தியெனவும் வழங்குவர். இவ்வுரையும் இருவகைப்படும் என்பதனை இவ்வியல் 105, 106-ஆம் சூத்திரவுரைகளில் விளக்குவர் பேராசிரியர். 1. வினையியலிற் கூறப்படும் இலக்கணத்தினை ஓர் உபகாரப்படக் கிளவியாக்கத்து முதற்கண்ணே கூறியதுபோல மரபியலிற் கூறப்படும் சூத்திரத்தின் இலக்கணத்தினை அடிவரையின்மைக்குச் செய்யுளியலில் ஓர் உபகாரப்பட எடுத்துக் கூறினார். சூத்திரத் தியல்பினை நூலின் மரபுபற்றி இங்கு விரித்துக் கூறியதன்றிக் கூறியது கூறல் என்னும் குற்றப்பட ஈண்டுக் கூறினாரல்லர். இவ்வாறே இங்குச் சொல்லுதற்குரிய நூலின் இலக்கணம் அடிவரையில்லனவாகிய அறுவகையாப்பு வகையுள் ஒன்றாகச் செய்யுளியலிற் பொதுப்படக் கூறப்பட்டது எனப் பேராசிரியர் கூறிய அமைதி இங்குச் சிந்தனைக்குரியதாகும். 1. கரப்பில்லது என்னாது, கரப்பின்றி முடிவது எனக் கூறிய அதனால் பரந்துபட்ட சூத்திரத்தினைத் தொடர்தோறும் கண்ணழிவு செய்து பிரித்துப் பொருள் வரையாமல், வெறியறி சிறப்பின வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பது முதலாக இக்கூறப்பட்ட இருபத்தொரு துறையும் கரந்தை யெனப்படும் என்றாற்போலத் தோற்றுவாய் செய்து விடுதல் எனக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்து செய்தலும் உண்டென்று கொள்ளப்படும். 1. விட்டு அகல்வு இன்றி என்புழி விடுத்தல் என்பது கண்ணழிவு செய்தல். அகல்வு-அக்கண்ணழிவால் சூத்திரப்பொருள் அகன்றுபடுதல். பதம்பிரித்துப் பொருள் உரைத்தலால் சூத்திரப் பொருள் விளங்கித் தோன்றுதல் விட்டகல்வு எனப்பட்டது 1. சூத்திரப் பொருளை விளக்குமளவில் நின்று விடாது, காரணமாகிய ஏதுவும், வழக்காகிய நடையும், உதாரணமாகிய எடுத்துக் காட்டும் சூத்திரம் சுட்டுதலும் என்று இவ்விலக் கணங்களையெல்லாம் தழுவிக்கொள்ளும் நிலையில் இன்றிய மையாது இயைபவையெல்லாம் ஒன்றவுரைப்பது உரையெனப்படுமே என்றார் ஆசிரியர். 1. பின்னர்க்கூறப்படும் குன்றக்கூறல் முதலிய பத்துக்குற்றங்களேயன்றி முதனூலொடு மாறுகொள்ளவரின் அதுவும் குற்றமாம் என்பார் மறுதலை ஆயினும் மற்றது சிதைவே என்றார். ஆயினும் என்புழி உம்மை. பின்னர்க்கூறப்படும் குற்றங்களைத் தழுவி நிற்றலின் எதிரது கழீஇய எச்சவும்மையாயிற்று. இனி முன்னர்க்குறித்த ஈரைக்குற்றமேயன்றி என்பதனைத் தழுவியதெனின் இறந்தது தழீஇய எச்சவும்மையும் ஆகும். 2. பிற்காலத்து வழிநூல்செய்வார் முதனூலொடு மாறுபடச் செய்யின். அது நூன்மரபுக்கு மாறுபட்டதாய் வழுப்படும் என்பதாம். முதனூலுக்கு முன்னையதோர் நூலின்மையின் அதுபற்றி மாறுபாடு கருதற்கு இடமின்மையின் இவ்விதி வழிநூலை நோக்கிக் கூறியதாகும். 3. முன்னோர் நூலின் முடிபு ஒருங்குஒத்துப் பின்னோன் வேண்டும். விகற்பம் கூறுதலும் வழிநூலுக்குரியதென்பார் உளராகலின், முதல்நூலொடு மாறுபடாமைக் கூறல்வேண்டும் என்னும் விதி கூறுதல் இன்றியமையாததாயிற்று. 1. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாகிய முதனூலாசிரியன்பால் எத்தகைய குற்றங்களும் இல்லையாதலால் மேல் ஈரைங்குற்றமுமின்றி என வழிநூற்குச் சொன்ன இலக்கணம் முதனூலுக்காயின் வேண்டற்பாலதன்று; என்பதாம். 1. முதனூலாசிரியன், தான் நூல் செய்து அந்நூலின் அமைப்பே நூலின் இலக்கணம் எனப் பிற்காலத்தார்க்கு அறிய வைத்தானாகலின் அவனும் நூலின் இலக்கணம் கூறினானெனவே கொள்ளப்படும். 1. தமிழகத்தில் வழக்குஞ் செய்யுளுமாகிய இருவகை வழக்கிற்கும் முதனூலாகிய அகத்தியத்துள் வடமொழி முதலிய பிறமொழிகளினின்றும் மொழி பெயர்த்துச் சேர்க்க வேண்டிய பொருள் எவையும் இல்லையாதலாலும் பிறமொழிகட்குப் பொதுவாயின மொழியிலக்கணங்களாயின் அவையும் தமிழ் வழக்கு நோக்கியே இலக்கணம் கூறப்படும் ஆதலாலும் முதனூலாசிரியராகிய அகத்தியர்க்கு மொழிபெயர்த்தல் வேண்டுவதன்று. எனவே மொழி பெயர்த்தல் யாப்பு முதனூலாசிரியர்க்கு இல்லை. இக்கருத்துப் பற்றியே வழிநூலையே நால்வகை யாப்பிற்கும் உரியதாகக் குறித்தார் ஆசிரியர். முதனூலுக்கு மொழி பெயர்த்தல் யாப்பு இல்லாமையால், மேற் குறித்த யாப்பு வகைபற்றிச் சிதைவுண்டாதல் இல்லை. முதனூலின் வழி இயற்றப்படும் வழிநூலுக்கே இத்தகைய யாப்புப்பற்றிச் சிதைவுண்டாதல் கூடும் என்பது பேராசிரியர் கருத்தாகும். 2. யாப்பினுட் சிதைதல் என்பன. முதல் நூலும் வழக்குநூலாயின், இழிந்தோர் வழக்கும் வழக்கெனக் கூட்டியுரைத்தல், அழான் புழான் முதலிய சொல்வழக்குகள் முன்பக்கத்தொடர்ச்சி இக்காலத்தில்லையென்று அவற்றை நீக்கித் தொகுத்தல், தொகையும் விரியும் விரவிக் கூறும் நிலையில் விரிந்தது தொகுத்தல் என்னும் நூற்புணர்ப் பினைத் தொகுத்தே யாத்தல், இம்மூவகை யாப்புடன் நூலின் மெய்த்திறத்தினையும் கூறுவேன் எனத் தொடங்கி மொழி பெயர்த்தலையும் விரவிக் கூறுதல் போல்வன. 1. இழிந்தோர் வழக்கு சான்றோர் செய்யுட்கு உதவாது. கற்றுணர்ந்த சான்றோரும் கல்லாத பொதுமக்களும் அவ்வழக்கினைக் கேட்டு நகையாடுதற் பொருட்டு நிகழ்ந்தனவாயினும் அவ்விழி வழக்குகள் எல்லா மக்களிடத்தும் ஒற்றுமைப்பட்டு நிற்பன அல்ல. அவை காலந்தோறும் இடந்தோறும் வேறு வேறாகித் திரிபுடையன வாதலின் அவற்றையெல்லாம் ஓர் ஒழுங்குபடுத்து நூல் செய்வார்க்கும் வரையறைப்படுத்தல் இயலாதநிலையில் அவை வரம்பிகந்தனவாம். ஆதலின் அத்தகைய இழிவழக்கு இலக்கணமென ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனப்பேராசிரியர் தரும் இவ்விளக்கம், இடம் பெயர்ந்தும் காலங்கடந்தும் அழியாநிலையிலுள்ள தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமைததாகும். 1. இவ்வாசிரியர் எக்காலத்தும் குற்றத்துக்கு இலக்கணங் கூற மாட்டார். இலக்கணத்தோடு இயைத்துக் கூறுமளவுக்கு இக்குற்றங்கள் பயன்படுதலின் ஈண்டுக் கூறினார். செய்யுளுக்கு ஆயின் இக்குற்றங்கள் பொருந்தாச் சிறப்பின. இங்குக் கூற எடுத்துக்கொண்டது, வழக்கும் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபட வரும் நூலின் இலக்கணமாதலானும் திணை, பால், மரபு, வினா, செப்பு, இடம், காலம் என்பனபற்றி வரும் எழுவகை வழுக்களும் அமைத்துக் கொள்ளப்படுமாறு போன்று இக்குற்றங்களுட் சில அமைத்துக் கொள்ளப்படும் எனவும், அங்ஙனம் அமைத்துக் கோடற்குரிய குற்றங்களை இனஞ்சார்த்தியும், ஒழிந்தனவற்றை வேறுபட வைத்தும் வரையறுத்துக் கூறினார் ஆசிரியர். சிதைவு-குற்றம். சிதைவெனப்படுவனவற்றை வசையற நாடின் என்றதனால், இவ்வாறு குற்றம் என்று வரையப்பட்டவற்றைக் கருவியாகக் கொண்டு புகுந்து அவற்றாற் புலனாகும் மற்றொரு பொருளை ஆராய்வோமானால், அக்குற்றங்களுள் வசை யற்றனவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் உள. அங்ஙனம் பொருள் பயப்பனவாக அமைத்துக்கொள்ளப்படுவன கூறியது கூறல், மாறுகொளக் கூறல் மிகை படக்கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல் என்னும் இவ்வைந்துமாம் எனவும் கூறி இச்சூத்திரவுரையில் பேராசிரியர் உதாரணங்காட்டி விளக்கியுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். 2. ஆசிரியர் தொல்காப்பியனார் யாண்டும் இலக்கணமே கூறி, இலக்கணத்திற் பிறழ்தலைக் குற்றம் என்று கொள்ள வைப்பதல்லது நூலுக்கு இல்லாத குற்றங்கட்கு இலக்கணம் கூறும் வழக்கமுடையாரல்லர். அவ்வியல்பினராசிரியர் ஈரைங்குற்றங்களை இச்சூத்திரத்தில் எடுத்துக் கூறியது எதிர்மறுத்துணரின் திறத்தவும் அவை என வருகின்ற சூத்திரத்தால் இவையும் உபகாரப் படுதல் நோக்கி என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். 1. மேல் இலக்கணவழக்கினையே விதந்து கூறி, அதற்கு மாறுபட்டது குற்றம்எனக் கொள்ளவைத்த ஆசிரியர், இவ்வியலில் ஈரைங்குற்றம் எனச் சிலகுற்றங் கூறினார்; இவையும் இலக்கணமே கூறினன் என்பார் எதிர்மறுத்துணரின் திறத்தவும் அவையே என அக்குற்றங்களை எதிர்மறுத்துக் கொள்ளும் முறையில் நூற்குரிய குணங்கள் பத்தினையும் குறிப்பிற் புலப்பட வைத்தார். அக் குணங்களாவன கூறியது கூறாமையும், மாறுகொளக் கூறாமையும், குன்றக்கூறாமையும் முதலியனவாம். இம்மரபியற் சூத்திரப்பொருளை அடியொற்றிக் கூறும் முறையில் அமைந்தது, முன்பக்கத்தொடர்ச்சி சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், முறையின் வைப்பே உலகமலை யாமை, விழுமியது பயத்தல், விளங்குதாரணத்த தாகுதல் நூலிற் கழகெனும்பத்தே (நன்னூல்--13) எனவரும் சூத்திரமாகும். * ஏனை உயிரே உயர்திணை மருங்கில் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (தொல்-சொல்-விளி : 7) (பாடம்) * அளவிறந்திசைத்தலும் * அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் (திருக்குறள் : 410) * தந்திரம் சூத்திரம் விருத்தி மூன்றற்கும். முந்துநூ லில்லது முதநூலாகும் (இறையனார் களவியல் முதற் சூத்திரஉரை)