தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 20 ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை: 20 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் (இரண்டாம் பகுதி) ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 512 = 528 படிகள் : 1000 விலை : உரூ. 495/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் அணிந்துரை டாக்டர். இராம. பெரியகருப்பன் மதுரைக் காமராசர் (தமிழண்ணல்) பல்கலைக் கழகம் பேராசிரியர், துறைத்தலைவர் மதுரை - 625 021 தமிழியல் துறை, 3--4--1989 இந்திய மொழிப்புலம் தொல்காப்பியம் என்னும் தமிழ் முதல்நூல் இன்னும் உலகிற்கு முறையுற உணர்த்தப்படாமலேயே இருக்கிறது. தமிழரிலும் அப்பெருநூலைக் கற்றவர்கள் விரல்விட்டு எண்ணத் தக்கவர்களாகி விட்டனர். அரிடாட்டில், பரதமுனிவர், பாணினி என்ற வரிசையில் வைத்து எண்ணத்தகுந்த இவர்தம் நூற் கருத்துக்கள் உணரப்படாமலும் உணர்த்தப்படாமலும் போவது நினைந்து இரங்குதற்குரியதாகும். பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களைக் கொண்டு தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரைவள நூல்களை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருவது மேற்கூறிய குறையினை அகற்றுவதற்கு மிகுதியும் பயன்படும் பணியாகும். இப்பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலம் என்று ஒன்று தொடங்கப்பட்ட பொழுது அதன் முதல் ஆய்வறிஞராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்தவர் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கள் இங்குப் பணிசெய்த காலத்தில் புறத்திணையியல் முதல் உவமயியல் ஈறானவற்றிற்கு மட்டுமே உரைவளம் பதிப்பை உருவாக்கினார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழத்தில் இலக்கியத் துறைத் தலைவராக அவர்கள் செல்ல நேரிட்டதால் செய்யுளியல், மரபியல் ஆகிய இரண்டும் நிறைவுறாமல் எஞ்சிநின்றன. பொருளதிகாரம் முழுமைக்கும் உரைவளம் வேண்டும் என்ற எம் விருப்பத்திற்கிசைய அன்னார் பணியினின்று சென்ற பிறகும் இதே நினைவாக இருந்து, இப்பின்னிரண்டு இயல்களையும் உரைவளப்பதிப்புக்களாக எழுதித் தந்தார்கள். பணியிலிருக்கும் பொழுதே கடமையை மறந்துவிடும் இக்காலத்தில், பணியை விடுத்துச் சென்றபிறகும் கடமையை முடித்துத் தந்த பேராசிரியரது பணி நன்றியறிதலுடன் போற்றத் தக்கதாகும். இந்நூல் வரிசை சிறந்த அமைப்புடையதாய், இளம்பூரணர் முதல் சோமசுந்தர பாரதியார் வரையிலான உரைகளை உடைய தாய்த் திகழ்கின்றது. ஒவ்வொரு நூற்பாவின் இறுதியிலும் உள்ள வெள்ளைவாரணரின் ஆய்வுரைக் கருத்துத் தெளிவுதந்து தொல்காப்பியக் கல்விக்கு வழிகாட்டுவதாய் அமைகிறது. மேலும், வெள்ளைவாரணனார் தாம் தந்திருக்கும் அடிக்குறிப்புக்களின்வழி மூலத்திலும் உரையிலும் கண்டிருக்கும் பிழைபாடுகளை நீக்கத் துணைபுரிகின்றார். ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இப்பதிப்புக்கள் பெரிதும் பயன்படும். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கும் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களுக்கும் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது. இவ்வுரைவளப் பதிப்புக்களின்வழித் தொல்காப்பியக்கல்வி வளரும் வகை செய்தல் வேண்டும். அதுவே அமரராகிவிட்ட பெரும் பேராசிரியர் வெள்ளைவாரணனாருக்குத் தமிழுலகம் செய்யும் அஞ்சலியாகும். தமிழண்ணல் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சிவை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகம் --- அகநானூறு ஆசாரக் --- ஆசாரக்கோவை உ. வே --- உரைவேறுபாடு ஐங்குறு --- ஐங்குறுநூறு கலி --- கலித்தொகை குறுந் --- குறுந்தொகை சிந் --- சீவகசிந்தாமணி சிலப் --- சிலப்பதிகாரம் சீவக --- சீவகசிந்தாமணி சீவகசிந் --- சீவகசிந்தாமணி சூளா --- சூளாமணி திருமுரு --- திருமுருகாற்றுப்படை நற் --- நற்றிணை நன் --- நன்னூல் நாலடி --- நாலடியார் நான்மணி --- நான்மணிக்கடிகை நெடுநல் --- நெடுநல்வாடை பத்து --- பத்துப்பாட்டு பா. வே --- பாடவேறுபாடு பு. வெ --- புறப்பொருள் வெண்பாமாலை புறம் --- புறநானூறு பெரும்பாண் --- பெரும்பாணாற்றுப்படை மலைபடு --- மலைபடுகடாம் முத்தொள் --- முத்தொள்ளாயிரம் மொழி --- மொழிமரபியல் யா. காரிகை --- யாப்பருங்கலக் காரிகை யா. வி --- யாப்பருங்கல விருத்தி வெண் --- புறப்பொருள் வெண்பாமாலை பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி. பொற்றடங்கண்ணி, மகள் திருமதி. மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறைத் தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தரபாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழிகாட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரையாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பேராசிரியர், துறைத் தலைவர், புலமுதன்மையர் (1977 - 79) மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் - சிறப்புநிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக்கழகம் - இலக்கியத்துறைத் தலைவர், சிறப்புநிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாயப் பாடம் எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ்மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற் பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல்நயம் - (1970) சென்னை பன்னிருத்திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது), தில்லைப்பெருங்கோயில் வரலாறு (1984) சிதம்பரம், மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம், (தமிழக அரசு பரிசு பெற்றது). தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமளம். தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்தச்சாத்திர வரலாறு-2002 சைவசித்தாந்தத்தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத்திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. அபதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரைக்காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்தச்செம்மல் - தூத்துக்குடிச்சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதீனம் (1971) 3. திருமுறை உரைமணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் -மதுரைக்காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர்குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளித்தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவுப்பொற்கிழி (1986) தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் (இரண்டாம் பகுதி) 113. மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டும் செந்தூக் கியல என்மனார் புலவர். இளம்பூரணம் : என்---எனின். மேற் சொல்லப்பட்டவற்றுள் மண்டிலம் குட்டம் என்பவற்றிற்குரியதோர் ஓசை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை இயல என்றவாறு. உதாரணம் முன்னர்க் காட்டுதும். இனி நான்குபாவினும் வெண்பாவுங் கலிப்பாவும் முன்னெடுத் தோதுகின்றாராதலானும்1, ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இத்துணையும் ஓதிய இலக்கணத்தான் முடித்தலானும்2 அவையிற்றிற்கு உதாரணம் ஈண்டே காட்டுதும். ஆசிரியப்பாவாவது பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் ஆசிரியத்தளையானும் அகவலோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது3. அவ்வாறாதல் மேற்கூறப்பட்ட சூத்திரங்களான் உணர்க. இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத்துணர்த் தாமையின் எல்லா வீறுமாம். எற்றுக்கு? அகவல் இசையன அகவல் மற்றவை ஏஓ ஈஆ, என் ஐ என் றிறுமே (யாப், வி. ப. 69) என்று வரைந்தோதினார் உளரால் எனின், கோள்மா கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க் கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வழுதி கூடல் அன்ன குறுந்தொடி அரிவை ஆடமை மென்றோள் நசைஇ நாடொறும் வடியமை எஃகம் வலவயின் ஏந்திக் கைபோற் காந்தட் கடிமலர் கமழும் மைதோய் வெற்பன் வைகிருள் வருமிடம் (யாப். வி. ப. 262) எனப் பிறவாற்றானும் வருதலின் ஈறு வரையறுக்கப்படா தென்று கொள்க. இனி இவ்வாசிரியப் பாவினை அடிநிலையாற் பெயரிட்டு வழங்கலாம்.1 அஃதாமாறு: ஈற்றயலடி முச்சீரான் வருவதனை நேரிசையாசிரியம் என்ப. உதாரணம் முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே (யாப். வி. ப. 122) எனவரும். இடையிடை முச்சீர் வரின் இணைக்குறளாசிரியம் என்ப. உதாரணம் நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் வாவே (யாப். வி. ப. 257) எனவரும். எல்லா அடியும் ஒத்துவருவதனை நிலைமண்டில ஆசிரியம் என்ப. இதற்கு இலக்கணம் முன்னர்க் காட்டுதும். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செல்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (குறுந். 108) எனவரும். இனி எல்லா அடியும் ஒத்துவரும் பாட்டினையே அடிமறிமண்டில ஆசிரியம் என்று வழங்குப. இதற்கிலக்கணஞ் சொல்லதிகாரத்துள் நிரனிறைசுண்ணம் (எச்சவியல். 8) என்னும் சூத்திரத்தாற் கொள்க. சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் எனினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே (யாப் வி. ப. 259) எனவரும். இதனுள் யாதானும் ஓரடியை முதலுமுடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருதலின் அடிமறியாயிற்று. இனி முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியம் அடிமயங்காசிரிய மெனவும், வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடிமயங்காசிரிய மெனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத் தினை வஞ்சி மயங்காசிரிய மெனவும் வழங்கப்படும். இதற்கு இலக்கணம் ; வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப (தொல் செய். 60) அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே (தொல் செய் 61) இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே எனவும், (தொல். செய். 95) ஆசிரிய நடைத்தே வஞ்சி (தொல். செய். 104) எனவும் ஒற்றுமைப் படுத்துதலானுங் கொள்க.1 உதாரணம் சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம். 235) இப் பதினேழடி யாசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டா மடியும் முச்சீரான் வந்தன. மூன்றாமடி முதலாக ஆறாமடி யீறாக நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சீரான் வந்தன. இரண்டா மடியும் பதினொன்றாமடியும் அறுசீரான் வந்தன. எனைய நாற்சீரான் வந்தன. இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியம் ஆயிற்று2 எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்பஅவர் தேர்சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமலர்க் கழுலுமிவ் அழுங்க லூரே (குறுந் 102) இதனுள், முதலடி இயற்சீர் வெள்ளடியாதலின் வெள்ளடி விரவிய ஆசிரிய மெனப்படும். இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட ஏமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ? அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கலனாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே (புறம். 363) இதனுள், உப்பிலாஅ அவிப்புழுக்கல் என்பது முதலாக மூன்றடியும் வஞ்சியடி. இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச்சீரானும் இருசீரடியானும் முச்சீரடியானுந் தூங்கலோசையானும் வந்து தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் இறுவது. இதற்கு இலக்கணம்: வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை யென்ப (தொல். செய். 19) தன்பா வல்வழித் தானடை வின்றே (தொல். செய் 20) வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய (தொல். செய் 21) வஞ்சி யடியே இருசீர்த் தாகும் (தொல். செய் 43) முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே (தொல். செய். 45) வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே (தொல். செய். 86) என்பனவற்றாற் கொள்க. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும். பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசமும் வயற்கம்பலைக் கயலார்ப்பவும், நாளும் மகிழின் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே (யாப்.வி.ப.336) இது குறளடியான் வந்து தனிச்சொற்பெற்று ஈற்றயலடி முச்சீரான் வந்தது.ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற இருசீரடி வஞ்சிப்பா தனிச்சொற்பெறுதல் எடுத்தோதிற்றிலராயினும் உரையிற் கோடல் என்பதனாற் கொள்க.1 கொடிவாலன கருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயில்நடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன். -புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி விடுநனி எளிதே. (யாப். வி. பக் 337) இது முச்சீரடி வஞ்சிப்பா. இனி, வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய (தொல்.செய்.21) என்றோதியவதனால் ஆசிரியவடியோடும் வெண்பாவடியோடுங் கலியடியோடும் மயங்கி வருவன கொள்க.1 பட்டினப் பாலையுள், நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் (22) என்பது ஆசிரியவடி. கோழி எறிந்த கொடுங்காற் கணங்குழை (23) என்பது வெண்பாவடி. வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து (94-5) என்பது கலியடி. இனி வெண்பா வாமாறும் கலிப்பா வாமாறும் முன்னர்க் காட்டுதும். (113) பேராசிரியம் : இது, மண்டிலமுங் குட்டமும் வருமிட னுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற்கூறிய மூன்றனையும் இன்ன பாவென்பது உணர்த்தினான்; அவற்றுள், இறுதி நின்ற மண்டிலமுங் குட்டமும் ஆசிரியப்பாவினை உறுப்பாகவுடைய (எ-று). எனவே, ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப்பாக வுடைத்தென்பது பெறுதும்; என்னை? ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே (தொல்-செய்-130) என்பவாதலான்.1 மேற்கூறிய மண்டிலவாசிரியத்தினை, நிலைமண்டிலமெனவும் அடிமறிமண்டிலமெனவும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் (யா.வி.சூ.73.4) நின்றவாறு நிற்றலும் அடிமறித்துக் கொள்ளினும் பொருள் திரியாது நிற்றலுமுடைய வென்பது போலும் அவர் கருத்து. அடிமறித்தல் பொருள்கோட்பகுதியாகலான் அஃதமையும்; அங்ஙனங்கொள்ளின் நிரனிறை முதலிய பொருள்கோட்பகுதி யானுஞ் செய்யுள் வேறுபடுமென மறுக்க. இனிக் குட்டமும் இருவகைக்தென்ப, இணைக்குறளாசிரியப்பா, நேரிசை aháÇa¥ghbtd; அவை அவ்வாறு கொள்ளின் (யா.வி.சூ 71-2) இழுக்கென்னை? குட்டமெருத்தடி யுடைத்து மாகும் (தொல்-செய்-116) என்று இருவகையாற் கூறினமையி னென்றலுமொன்று; இனி ஒன்றாக வழங்குதலே வலியுடைத்து2 குட்ட மெருத்தடி யுடைத்து மாகும் என ஒருமை கூறியவதனான் ஒழிந்தவழி இரட்டித்துக் குறைய வேண்டுமென்பது கொள்க. மற்று, ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் (தொல் செய் -115) என்றவழிக் கலிப்பா, முற்கூறியதென்னையெனின், குட்டம் ஆண்டுப் பயின்றுவருதலின் ஆசிரியத்திற்கும் அதனை முற் கூறினான்; இனி, முறையானே வெண்பாக் கூறுமென்பது குட்டமென்பது வழக்குச்சொல்லாற் செய்த செய்யுளென் பாருமுளர் நாற்சொல்லானுமன்றிச் செய்யுள் செய்யப்படாமையின் அது குட்டமென்றல் நிரம்பாது.1 ஒத்தாழிசையென்பது எல்லாச் செய்யுண் மேலுஞ் செல்லுமெனவும் உரைப்ப; பாவும் இனமுமெனப் பகுத்துரைப்பார்க்கும் அது பொருளாவதென மறுக்க: அல்லதூஉம் ஒரோவொன்றே வருவது ஒத்தாழிசை யெனப்படாவென்பது2. செந்தூக்கென்பது MáÇa¥ghbt‹wthW; பாவினைத் தூக்கெனவுஞ் சொல்லுப (87). இயல வென்பது அப்பாவானே நடக்கு மென்றவாறு. இதுவும் இன்ன செய்யுட்கு உரித்தெனப் பாவினை வரையறுத்ததாம். (117) நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய மண்டிலமுங் குட்டமும் ஆசிரியத்துக்குப் பெரும்பான்மை வருமென்கின்றது. (இ-ள்) மண்டிலங்... யிரண்டும். எ-து, மண்டிலங் குட்ட மென்று முற்கூறியவையிரண்டும். செந்தூக்...òyt®. எ-து, ஆசிரியப்பாவின் கண்ணே பயில நடக்குந்3 தன்மையையுடைய என்று கூறுவர் புலவர். எ-று. எனவே, வெண்பாவின்கண் சிறுபான்மை வருமென்றவாறா யிற்று4. இரண்டுமங்ஙனம் வருதல் சான்றோர் செய்யுளுட் காண்க. ஆய்வுரை : இது, மண்டிலமும் குட்டமும் பயிலுமிடம் உணர்த்துகின்றது. (இ-ள்) மண்டிலம் குட்டம் என மேற்கூறியவை இரண்டும் ஆசிரியப்பாவின்கண்ணே பயில நடக்குந் தன்மையன என்பர் ஆசிரியர் எ-று. 114. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோ டொத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. இளம்பூரணம் : என்---எனின். வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெடுவெண்பாட்டு முதலாக அங்கதச்செய்யுள் ஈறாகச் சொல்லப்பட்டவையும் அளவொத்தவையும்1 எல்லாம் வெண்பா யாப்பினை யுடைய என்றவாறு. வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண் டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடி யானும் வருவது. இவற்றிற்கு இலக்கணம் மேலோதப்பட்டது. ஈண்டு ஓதப் பட்டன வெல்லாம் இவ்வாறு வரும் என்றவாறு. இவையெல்லாம் ஓசையான் ஒக்குமாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் என்றுகொள்க. நெடுவெண் பாட்டாவது அளவடியி னெடிய பாட்டு குறுவெண்பாட்டாவது அளவடியிற் குறிய பாட்டு.2 கைக்கிளையென்பதூஉம் அங்கதமென்பதூஉம் பொருளானாகிய பெயர். பரிபாட்டாவது பரிந்த பாட்டாம். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது.1 ஒத்தவை என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியான் வருவன. இவ் வாசிரியர் நான்கினை அளவென்றும் ஏறினவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகலின். இவற்றுள் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண்பாட்டும் என மூவகையானும் வரும். குறுவெண்பாட்டாவது இரண்டடியானும் மூன்றடியானும் வரும். உதாரணம் :- அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானொ டூர்ந்தான் இடை. (குறள்.37) இஃது இரண்டடியும் ஒருதொடையான் வருதலின் குறள் வெண்பா என்ப. உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடைத்து. (குறள்.667) இது விகற்பத்தொடையான் வருதலின் விகற்பக்குறள் வெண்பா என்ப. மூன்றடியான் வருவதனைச் சிந்தியல் வெண்பா எனவழங்கப் படும். நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி. (யாப்.வி.பக். 226) இஃது ஒத்து ஒருதொடையான் வருதலின், இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாம். நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றம்வண் டார்ப்பப் புடைத்தாளே-பொற்றேரான் பாலைநல் வாயில் மகள் (யாப்.வி. பக். 226) எனவும், சுயாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை (யாப். வி. பக். 229) எனவும் இவை வேறுபட்ட தொடையான் வருதலின் நேரிசைச் சிந்தியல் வெண்பாவாம். இனி நான்கடியான் வருவன சமநிலை வெண்பா வெனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசை வெண்பா எனவும், ஒரூஉத்தொடை பெறாது வருவனவற்றை இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஒரூஉத்தொடை வருக்கவெதுகையாகியும் வரும். இவையெல்லாம் உரையிற் கோடல் என்பதனாற் கொள்க. அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடி.1) இது நேரிசை வெண்பா. கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை எல்லுறு போழ்தின் இனிய பழங்கைக்கொண் டொல்லை யோடு மலைநாடன் தன்கேண்மை சொல்லச் சொரியும் வளை (கைந்நிலை.7) இஃது இன்னிசை வெண்பா. வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லைக் களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல். (நாலடி.103) நான்கடியாயும் மூன்றாமடிக்கண் தனிச்சொற் பெற்று வருதலின் நேரிசைப்பாற்படும்.பிறவுமன்ன. ஐந்தடி முதற் பன்னிரண்டிகாறும் வருவன பஃறொடை வெண்பா எனப்படும்.இதனுள்ளும் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசைப் பஃறொடை எனவும். ஒரூஉத்தொடை யின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப் படும். சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேற் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றந் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே யொத்தன மாவடர் ஆற்றுக்கா லாட்டியர் கண். (யா. வ. பக். 236) இஃது இன்னிசைப் பஃறொடை பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை யெருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் (யாப் வி. பக். 237) இஃது ஆறடியான் வந்து ஒரூஉத்தொடை பெறுதலின் நேரிசைப் பஃறொடை வெண்பா. சிற்றாறு பாய்ந்துகளுஞ் சேயரிக் கண்ணினாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கு மதிலும் படுகிடங்கும் ஒப்ப வுடைத்தா ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேருந் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்துணரும் வண்ண முரைத்தி யெனக்கூறக் கட்டலர் தாமரையுள் ஏழுங் கலிமான்றேர்க் கத்திருவர் ஐவருங் காயா மரமொன்றும் பெற்றவழி தேர்ந்துண்ணும் பேயின் இருந்தலையும் வித்தாகா நெல்லின் இறுதியும் பெற்றக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப்பேர் போலென்றாள் வானவன்கை விற்பொலிந்த வெம்புருவத் தாள் (யாப் வி.பக். 237) இது பன்னிரண்டடியான் (பெருவல்லத்தைக் கூற) வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா.1 ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவற்றுள், ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே (தொல்.செய்.147) என ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானும் ஒருபொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள்வெண்பா முதலாகிய எல்லா வெண்பாக்களுங் கொச்சகக்கலிக்கு உறுப்பாய்வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாடலெனவுங் கொள்ளப்படும்.2 கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை, மேற்-சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள்மேல் வரிற் கைக்கிளை வெண்பா எனப்படும். பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்--கென்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும். (யாப். வி. பக். 62) கைக்கிளை வெண்பா யாப்பினால் வரும். எனவே, ஆசிரியப் பாவினால் வரப்பெறாதென்பதும், வந்ததேயாயினும் பாடாண் பாட்டுக் கைக்கிளை யாகுமெனவும் கொள்ளப்படும். பரிபாட்டும் அங்கதமும் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் சொல்லுதும்.1 பேராசிரியம் : இது, வெண்பாவென்னும் உறுப்பினை இன்னுழிப் பாவா மெனப் பொருளுஞ் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது. (இ - ள்.) நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக் கிளையும் பரிபாடலும் அங்கதச் செய்யுளுமென ஐந்துந் தம்மின் ஒத்து வெண்பாவென்னும் உறுப்பினானே வகுக்கப்படும் (எ-று) நெடுவெண்பாட்டென்பன : தாமுடைய பன்னீரடி உயர்பு. இழிபு ஏழடியாக வருவனவென்பது; எனவே, நாற்சீர், அளவடி யாயினாற்போல நாலடியான் வருதலே அளவிற்பட்டதாகலான் ஐந்தடி முதலாக வருவனவெல்லாம் நெடுவெண்பாட்டென்றலே வலியுடைத்து. FWbt©gh£bl‹gd: இரண்டடியான் மூன்றடியான் வருவன: குறள் வெண்பா சிந்தியல் வெண்பா வெனப்படலும் ஒன்று;1 எனவே நான்கடியான் வருவன அளவியல் வெண்பா வெனப்படும். கைக்கிளைப் பொருண்மைத்தாகலின் மருட் பாவினையுங் கைக்கிளை யென்றான்2 பரிபாட லென்பது பரிந்துவருவது: அஃதாவது கலியுறுப்புப்போலாது பலவடியும் ஏற்று வருவது3. m§fjbk‹gJ, முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பாகியும் பிறவாற்றானும் அவை பொருளாக வருவன4. ஒத்து என்பது இலக்கணத்தில் திரியாதென்றவாறு.5 இதனது பயம்: கைக்கிளை வெண்பாவினான் வரினுங் கலிப்பாவின்பாற் படுமென்பது பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையான் ஒப்புமையுடையவென்பது கொள்க. அல்லதூஉங் குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் பலவாகியும் ஒன்றாய் அடங்குமென்பதூஉமாம்.6 இனி, அல்லாதார் வெண்பாவினை ஐந்தெனவுஞ் சொல்லுப.7 அவை தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமெனவும் அவ்வாறு வருங்கால் ஈற்றடி ஒழித்து எல்லாந் தனிச்சொற்பெறுதலும் அவற்றை ஒன்றொன்றனோடு பரிமாற்றித் தனிச்சொற் கொடுத்து உறழ்வனவுமாகிப் பலவாமென்பது. அங்கதச்செய்யுளென்பது பண்புத்தொகை.1 உம்மைத் தொகையென்பார், செய்யுளென்பதும் வேறென்ப2 அதற்கு விடை முன்னர்ச் சொல்லுதும்; எல்லாம் வெண்பா யாப்பின என்பதனை, செயற்படுத்தவற்றுள் அங்கதமுங் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வருமென்பதுபடும். (118) நச்சினார்க்கினியம் : இது வெண்பாவென்னு முறுப்பினை இன்னுழியாமெனப் பொருளுஞ் செய்யுளும்பற்றி வரையறுக்கின்றது. (இ-ள்.) முற்கூறிய நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக்கிளைப் பொருண்மேல் வருஞ் செய்யுளும் பரிபாடற் செய்யுளும் வசையாகிய பொருண்மேல்வருஞ் செய்யுளுமென்ற ஐந்துந் தம்மினொத்த செய்யுளெல்லாம் வெண்பாவென்னு முறுப்பினான் யாக்கப்படுந் தன்மையையுடைய. எ-று எனவே, பெரும்பான்மை குறித்த பொருளை மறையாமற் செப்பிக் கூறலே அதற்கிலக்கணமாயிற்று.3 முன்னைய நான்கும் (தொல். பொ. அகத். 52) என்ற அகத்திணையியற் கைக்கிளையும், கடவுளும் வரையார் (தொல். பொ. புறத்-28) என்ற உம்மையாற்கொண்ட புறத்திணையியற்கைக்கிளையும்; அன்றிக் காமஞ் சாலா விளமை யோள் (தொல். பொ. அகத்-50) என்ற கைக்கிளையும், கைக்கிளை வகையோடு (தொல். பொ. புறத் - 5) என்ற கைக்கிளையுட் கடவுட்கைக்கிளை யல்லாக் கைக்கிளையும் ஆகாவென்று கொள்க1 உ-ம். அணங்குகொ லாய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு (திருக்குறள்-1081) இஃது அகப்புறக்கைக்கிளை. களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான் - றெளியாது செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தே னென்காண்பே னென்னலால் யான் (முத்தொள்ளாயிரம்) மங்குன் மனங்கடைஇ மான்மாலை நின்றேற்குப் பொங்கு மருவிப் புனனாடன் -கங்குல் வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித் தருவான்கொன் மார்பணிந்த தார் (முத்தொள்ளாயிரம்) இவை சுட்டி ஒருவர்ப் பெயர்கோடலிற் புறப்புறக்கைக்கிளை. குடுமிப் பருவத்தே கோதை புனைந்த நெடுமுத்தம் பூத னிருப்பப் படுமுத்தம் புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையாய்க் கென்னை முறைய ளிவள் இது கடவுட்கைக்கிளை. இனி முன்னைய மூன்றும் (தொ. பொ. கள-14) எனக் களவியலுட் கூறிய கைக்கிளையிலும் வருமேனும் உணர்க. இனி ஒருபொருணுதலாது திரிந்துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண்பாட்டோடு ஒருபுடை யொப்புமை யுடைமையின் அக் கலிவெண்பாட்டாக இக்காலத்தோர் கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச்செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக் கூறுதும். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங் கூறுவர்; அது துள்ளலோசைக்கே யேற்குமாறுணர்க. பரிபாடலென்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென்றுணர்க. அது மேற்காண்க. அங்கதச்செய்யுள் பண்புத் தொகை; அஃதிருவகையாதல் மேற்கூறுதும். ஆய்வுரை : இது, வெண்பாவாமாறு உணர்த்துகின்றது என இளம்பூரணரும், இது வெண்பாவுக்குரிய பா என்னும் உறுப்பினைப் பொருளும் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது எனப் பேராசிரியரும் கருத்துரைப்பர். (இ-ள்) நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச்செய்யுள் எனச் சொல்லப்பட்டனவும் அளவு ஒத்தனவும் எல்லாம் வெண்பா யாப்பின எ-று. வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடியானும் வருவது. இவையெல்லாம் ஓசையால் ஒக்குமாயினும் அளவாலுந் தொடையாலும் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார். நான்கினை அள வென்றும் நான்கின் மிக்கவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள், சிந்து என்றும் தொல்காப்பியர் வழங்குவர்ஆதலின்,. இவற்றுள் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத வெண்பாக்கள் நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் ஒத்தவையும் (சமனிலை வெண்பாட்டும்) எனமூவகையாம். நெடுவெண்பாட்டு என்பது, நான்கின் மிக்க அடிகளை யுடையதாய் வரும் வெண்பாவாகிய பாட்டாகும். ஐந்தடி முதல் பன்னிரண்டடியளவும் வரும் நெடுவெண்பாட்டைப் பிற்காலத்தார் பஃறொடை வெண்பா என வழங்குவர். ஒரூஉத் தொடை பெற்று வரும் பஃறொடை வெண்பாவினை நேரிசைப் பஃறொடை எனவும், ஒரூஉத்தொடையின்றி வரும் பஃறொடை வெண்பாவினை இன்னிசைப் பஃறொடையென்றும் வழங்குதலுண்டு. குறுவெண்பாட்டாவது, அளவிற் குறுகிய வெண்பாட்டு. இஃது இரண்டடியானும் மூன்றடியானும் வரும். இரண்டடியும் ஒரு தொடையான் வருவன குறள் வெண்பா எனவும், விகற்பத் தொடையான் வருவன விகற்பக் குறள் வெண்பா எனவும் கூறுவர். மூன்றடியும் ஒரு தொடையான் ஒத்து வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வேறுபட்ட தொடையான் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா கைக்கிளைத் திணை பொருளாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனவும், அங்கதப்பொருள் பற்றி வரும் வெண்பா அங்கத வெண்பா எனவும் வழங்கப்படும். பரிபாட்டாவது பரிந்து (பலவடிகளையும் சுமந்து) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களோடு தொடர்ந்து முற்றுப்பெறுவது. அங்கதம் என்பது வசை. அங்கதச் செய்யுள் அங்கதமாகிய செய்யுள் எனப் பண்புத்தொகையாகும். ஒத்தவை என்பன, அளவாலும் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத சமனிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியால் வருவன. இவை அளவியல் வெண்பா எனவும் வழங்கப்படுவன. ஒருபொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே (செய் - 147) என ஆசிரியர் ஓதினமையாற் புணர்தல் முதலாகிய (உரிப்) பொருள்களுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக்கலிக்கு உறுப்பாய்வரின் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரின் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். இனி ஒரு பொருள் நுதலாது திரிந்துவருங் கலிவெண்- பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண்பாட்டோடு ஒருபுடை-யொப்புமை யுடைமையின், அக்கலிவெண் பாட்டாக இக்காலத்தார் கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக் கூறுதும். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்குமாறுணர்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கற்பாலதாகும். 115. கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. இளம்பூரணம் : என்---எனின். எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினால் வருத-லின்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரும் என்றவாறு. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல், மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுந் தன்மை இன்றே (தொல். செய். 81) என ஓதினார் என்று கொள்க.1 அது, உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமங் கனல---இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிணகை வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே (பு. வெ. மா. கைக்கிளை -6) என வரும். (115) பேராசிரியம் : இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வெண்பா உறுப்பாகி வருமென்றான், அற்றன்றி வெண்பாவினோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் க்கிளை வரும் (எ - று). அங்ஙனம் வருவது மருட்பா வாகலாற் கைக்கிளைப் பொருளே மருட்பாவிற் குரித்தென்பது பெற்றாம்:2 பெறவே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா (தொல் - செய் - 110) என்புழி, விலக்கப்படாத ஆசிரியப்பாவும், வெண்பாவும் உறுப்பாக வருதலின் வாழ்த்தியல் வகையும் புறநிலைவாழ்த்து முதலாயினவும் கைக்கிளையும்) பொருளாக வரும் மருட்பா வென்பது பெற்றாம்.1 கைக்கிளை யதிகாரப் பட்டது கண்டு அதனை ஈண்டுக் கூறினான். ஒழிந்த புறநிலை வாயுறை செவியறிவுறூஉக்களும் பொருளாக மருட்பா வருமென்பது முன்னர் அளவியலுள் (செய் 160) சொல்லுதும். இவற்றுக்கெல்லாஞ் செய்யுள் ஆண்டுக் காட்டுதும். (119) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்) கைக்கிளைதான் முன்பு வெண்பாவுறுப்பாகிப் பின்பு ஆசிரியப்பா உறுப்பாக வரவும்பெறும். எ-று. இங்ஙனம் வருவது மருட்பா ஆவதூஉம், அதுதான் அகப் புறக்கைக்கிளை2 யென்பதூஉம் உணர்க. உதாரணம். திருநுதல் வேரரும்புந்... ....jz§nf” (பு. வெ. மா. கைக்கிளை) எனவரும். ஆய்வுரை : இஃது,எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்) கைக்கிளைப் பொருண்மைதான் வெண்பாவாக வருதலேயன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடை யிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரவும் பெறும் எ-று. இவ்வாறு வருவதனை மருட்பா என்பர் ஆசிரியர். இக் கருத்தினானே மருட்பா ஏனை இருசாரல்லது, தானிது வென்னுந் தன்மை யின்றே(செய்-81) என ஓதினார் என்று கொள்க. 116. பரிபா டல்லே தொகைநிலை வகையின்1 இதுபா என்னும் இயனெறி இன்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப. இளம்பூரணம் : என்---எனின். பரிபாடலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்). பரிபாடலாவது தொகைநிலை வகையாற் பா இது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கு முரித்தென்று சொல்லுவர் என்றவாறு. உம்மை எச்சவும்மை யாகலான் இலக்கணங் கூறவும்படும்2. அது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். பொதுவாய் நிற்றலாவது, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிமருட்பா (செய்யுளியல்.11) என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடைத்தாதல். (116) பேராசிரியம் : இது, பரிபாடற் காவதோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பரிபாடல் வெண்பாவுறுப்பாக வரினும் இன்னபா வென்ப துணராமைப் பொதுப்பட நிற்றற்கும் உரித்து (எ-று) மண்ணார்ந் திசைத்த முழவொடு கொண்டதோள் கண்ணோ டெனவிழூஉங் காரிகை கண்டார்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு(கடவுள் வாழ்த்து) எனப் பரிபாடல் வெண்பா உறுப்பாக வந்தது. ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலைத் தீயுமிழ் திறவொடு முடிமிசை யணவர (பரி.1) என்பது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைபடச் சொல்லவும்படுதலின், இதுபா வென்னும் இயனெறி யின்றிப் பொதுவாய் நின்றது எனப்படும். உம்மை இறந்தது தழீஇயிற்று. மற்று, இது கலிப்பாட்டிற்கும் ஒக்கும் பிறவெனின், ஒவ்வாததாகாதே1. ஆசிரியன் இவ்வாறு கூறினமையினென்பது.2 அல்லதூஉங் கலிக்கு ஓதிய இலக்கண மின்மையானும் பரிபாடலெனவே படும் பெரும்பான்மையு மென்பது. தொகுத்து விரித்த பா நான்கனுள்ளும் அடங்காது வேறாங்கால் அது வெண்பாவினான் யாக்கப்படாது பொது வகையான் யாக்கப்படுமென்றவாறு.3 நச்சினார்க்கினியம் : இது பரிபாடற்காவதோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்.) பரி...ny. எ-து, பரிபாடல் முற்கூறியவாறே வெண்பாவுறுப்பான் வருதலேயன்றி, தொகை ... ... யின், எ-து, தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள்.1 இது ....... றி. எ-து, இது பாவென்றறியப்படும் இயல்வழியின்றி, பொது... ..g. எ-து, பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரித்தென்று கூறுப. எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று.2 c-ம். மண்ணார்ந் திசைக்கு முழவொடு கொண்டதோள் கண்ணா துடன்வீழுங் காரிகை கண்டோர்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு எனப் பரிபாடல் வெண்பாவுறுப்பான் வந்தது. ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை தீயுமிழ் திறலொடு முடிமிசை யணவர எ-து, வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராஅய்த் துள்ள லோசைபடவுங்கூறப்படுதலின் இது பாவென்னு மியனெறியின்றிப் பொதுவாய்நின்றது. கலிக்கும் இதற்கும் வேறுபாடுள என்பது கலித்கோதிய இலக்கணங்கள் இதற் கின்மையானும் ஆசிரியர் இவ்வாறு வேறுகூறலானும் பெறுதும்.3 ஆய்வுரை : இது, பரிபாடற்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) பரிபாடல், முற்கூறிய வெண்பா வுறுப்பான் வருதலே யன்றித் தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள் இன்ன பா என்றறியப்டும். இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரியதாகும் என்பர் ஆசிரியர் எ-று. பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது. ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, மருட்பா என்றோதப்பட்ட எல்லாப் பாவின் உறுப்பும் உடையதாதல். 117. கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இளம்பூரணம் : என்---எனின். இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டுப் பொது வாய்நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்குந் தனக்குறுப்பாகக் காமங் கண்ணிய நிலைமையை உடைத்து என்றவாறு.1 எனவே, அறத்தினும் பொருளினும் வாராதாம். வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே (தொல்.செய். 105) எனச் சிறப்புவிதி யோதினமையால் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலிற் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும்.2 கொச்சகமென்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாகவுடைத்தாகி வெண்பாவியலாம் புலப்படத் தோன்றுவது. இதனுட், சொற்சீ ரடியும் முடுகியல் அடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும் (செய்யுளியல்.118) என வேறு ஓதுதலின், ஏனை நான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும்.1 தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே (செய்யுளியல் 148) என்றாராகலின், இவ்விலக்கணத்தானே பரிபாடலுட் கொச்சகம் வரும் வழித் தரவுஞ் சுரிதகமும் இடையிடை வருதலுங் கொள்க.2 வெண்பா வியலான் என்றதனால் தன்தளையானும் பிறதளையானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவெல்லாங் கொள்க.3 அராகமென்பது ஈரடியானும் பலவடியானுங் குற்றெழுத்து நெருங்கி வரத் தொடுப்பது. பெருமைக்கெல்லை ஆறடி. என்னை? அராகந் தாமே நான்காய் ஒரோவொன்று வீதலும் உடைய மூவிரண் டடியே, ஈரடி யாகு மிழிபிற் கெல்லை என அகத்தியனார் ஓதுதலின்.1 சுரிதகம் என்பது ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது.2 எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோ ருறுப்பு பாட்டிற்கு முகம் தரவாதலானுங் கால் சுரிதக மாதலானும் இடைநிலைப் பாட்டாகிய தாழிசையுங் கொச்சகமு மராகமுங் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க.3 தரவே எருத்த மராகங் கொச்சகம் அடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே என்பது அகத்தியமாதலின், தரவென்பதோருறுப்புங் கோடல் வேண்டு மெனின், இவ்வாசிரியர் கொச்சகம் என ஓதியவதனானே தரவும் அவ் விலக்கணத்திற் படுமென்பது ஒன்று.1 எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தரவென்பது போலும்.2 பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும். அதுதான் மலையே யாறே யூரென் றிவற்றின் நிலைபெறு மரபி னீங்கா தாகும் என்றாராகலின். இனிச் சுரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப் பெறும். கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் அடக்கிய லின்றி அடங்கவும் பெறுமே என அகத்தியனார் ஓதுதலின். (117) பேராசிரியம் : இது, மேற்கூறிய வகையாற் பரிபாடற்கேற்ற பாவுறுப் பினையெடுத்து விரிகூறி3 இத்துணை உள்ளுறுப்புடைத்தென்கின்றது4 உள்ளுறுப்பெனக் கூறவேண்டுவதென்னை, பண்புபற்றி முப்பத்து நான்குறுப்பான் எண்ணப்டாவோவெனின், அவை எல்லாச் செய்யுட்கும் பொதுவாகலான் அவற்றோடெண்ணாது இவற்றை இப்பாவிற்குறுப்பாகக் கூறினானென்பது.5 மேல்வருகின்ற கலியுறுப்பிற்கும் இஃதொக்கும். (இ-ள்) செப்பிய நான்குறுப்புங் கலிக்குறுப்பாகச் சொல்லப் பட்ட வகையானே வரும் அவை ஈண்டும் (எ-று) தனக் கென்றதனான் அவையல்லா உறுப்புமுள வென்பது முன்னர்ச் சொல்லுதும்; சொற்சீரடியும் (தொல் செய்-122) என்புழிக் காண்க. கொச்சக மென்பது ஒப்பினாகிய பெயர். ஓராடையுள் ஒரு வழியடுக்கியது bfh¢rfbkd¥gL«. அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகமெனப்பட்டது.1 குறிலிணை பயின்ற அடி muhfbkd¥gL« சுரிதமென்பது அடக்கிய- லெனப்படும். எருத்தென்பது juî. இவை நான்குறுப்பாக வருவது பரிபாடலென்றவாறு, பெரும்பான்மையும் கொச்சகவுறுப்புப் பயின்றுவருதலின் அதனை முன்வைத்தான். அராகம் எழு வாயாகாமையின் அதனை இடை வைத்தான். சுரிதகமென்பது எஞ்ஞான்றும் ஈற்றதாகலான் அதனை அதன்பின் வைத்தான். எருத்தினை ஈற்றுக்கண் வைத்தான். அதனை யின்றியும் வரும் பரிபாடலென்றற்கும் இஃது இடைவருமென்றற்கு மென்பது2 உதாரணம் : வானா ரெழிலி மழைவள நந்தத் தேனார் சிமய மலையி னிழிதந்து நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய இருந்தையூ ரமர்ந்த செல்வநின் றிருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுதே (இது தரவு) ஒருசார், அணிமலர்வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; ஒருசார், தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை வண்ண மரையிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்வீற் றிருக்குங் கயம். ஒருசார், சாறுகொ ளோதத் திசையொடு மாறுற் றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல். ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி யறத்திற் றிரியா பதி (இவை நான்குங் கொச்சகம்) ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனைமறு கொருசார் விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறார்; ஆங்க, அனையவை நல்ல நனி கூடு மின்ப மியல்கொள நண்ணி யவை (இது கொண்டுநிலை) வண்டு பொரேரென வெழ வண்டு பொரெரென வெழும் கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்புமிகு காதிற் கனங்குழை தொடர மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி நுதலார் ஊர்களிற் றன்ன செம்ம லோரும் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யோங்கிய வெண்ணுத லோரும் புலத்தோடளவிய புகழணிந்தோரும் நலத்தோடளவிய நாணணிந்தோரும் விடையோடிகலிய விறனடையோரும் நடைமட மேவிய நாணணிந் தோரும் கடனிரை திரையிற் கருநரை யோரும் சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும் மடையர் குடையர் புகையர்பூ வேந்தி இடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் இருகேழுத்தி யணிந்தவெருத்தின் வரைகெழு செல்வனகர். வண்டொடு தும்பியும் வண்டொடை யாழார்ப்ப விண்ட கடகரி மேகமொ டதிரத் தண்டா வருவியோ டிருமுழ வார்ப்ப அரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப் புரிவுண்ட பாடலோ டாடலுந் தோன்றக் கூடு நறவொடு காம முகிழ் விரியக் கூடா நறவொடு காமம் விரும்ப வினைய பிறவு மிவைபோல் வனவும் அனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர். (இவையும் கொச்சகம்) மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி யவிர்நிமிர் புகழ்கூந்தற் பிணிநெகிழ் துளையினை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரிமதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயிற் றொழிலெழி லிகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ டணிமிக வந்திறைஞ்ச வல்லிகப்பப் பிணிநீங்க நல்லவை யெல்லா மியைதருந் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர். (இது முடுகியல்) திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கும் அமிழ்து கடைய விருவயி னாணாகி மிகாஅ விருவட மாழியான் வாங்க வுகாஅ வலியி னொருதோழங் கால மறாஅ தணிந்தாருந் தாம். மிகாஅ மறலிய மேவலி யெல்லாம் புகாஅவெதிர் பூண்டாருந் தாம் மணிபுரை மாமலை ஞாறிய ஞால மணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச் செல்விடைப்பாகன் திரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி யிமயவி னாணாகித் தொல்புகழ் தந்தாருந் தாம் (இவையும் கொச்சகம்) அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி நல்லடி யேத்திநிற் பரவுதும் எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே (என்பது ஆசிரியச் சுரிதகம்) அறவோ ருள்ளா ரருமறை காப்ப என்னும் பரிபாடலுள் செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு இது, வெள்ளைச்சுரிதகத்தான் இற்றது காமங் கண்ணிய நிலைமைத் தாகும் என்பது, காமப்பொருள் குறித்து வருமென்றவாறு. கண்ணிய வென்றதனானே முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவு மெல்லாங் காமங் கண்ணியே வருமென்பது. என்னை? எல்லேம் பிரியற்க வெஞ்சுற்றமோ டொருங்கே எனத் துணைபிரியாமை காரணமாகத் தொழுதேமென்றலின். காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் றாணிழ றொழுதே (பரி.க;62-5) என்பதும் அது. இனிச் செப்பிய நான்கு என்றது, எண்ணப்பட்ட நான்கனையு மன்று; அன்னவற்றோடு மேற்கூறிய நான்கு பாவும் இடைவந்து விரவுமென்பது. அதுவும் நோக்கிப்போலும் பரிபாடல் என்றது.1 எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமிர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி விளங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை ................. ............... .............. நாவ லந்தண ரருமறைப் பொருளே (பரி 1:6-13) என ஆசிரியம் வந்தது. நின்னொக்கும் புகழ்நிழலவை (பரி. 4-55) என்பது வஞ்சித்தூக்கு; பிறவும் அன்ன காட்டுப; அது பொதுவாய் நிற்றலும் உரித்தென்றதனான் அடங்கும். இனிச், செப்பிய நான்கென்றதனான் அராகமின்றி வருதலும், கொச்சகம் ஈற்றடி குறைந்து வருதலும், அவ்வழி அசைச்சீராகி இறுதலும் மேற் கலிப்பாவிற்குச் செப்பிய சுரிதகமாதலுங் கொள்க. (121) நச்சினார்க்கினியம் : இது பரிபாடற்கேற்ற உள்ளுறுப்புக் கூறுகின்றது. இவை சிறப்புறுப்பாகிய1 முப்பத்துநான்குமன்றி இதற்கும் கலிக்கும் உறுப்பாய் வருமென்று கொள்க. (இ-ள்.) கொச்சகம் என்றது எருத்தே கொச்சகம் (தொல்) செய் 159) என்புழிக் கூறுகின்றாம். சிறப்பில்லதனைக் கொச்சை யென்று கூறும் வழக்கு நோக்கி இதனையுஞ் சிறப்பின்மையாற் கொச்சகம் என்றா ரென்பாருமுளர். குறிலிணை பயின்ற அடி அராகம்-சுரிதகம் - அடக்கியல் - எருத்து-தரவு என்ற இவற்றோடே முற்கூறிய நான்கு பாவையுந்2 தன்குறுப்பாகக்கொண்டு காமப் பொருளைக் கருதிய நிலைமைத் தாய்வரும். எ-று. தனக்கென்றதனான் அவையல்லனபிறவுறுப்புங் கொள்வது மேற்கூறுதும். கண்ணிய என்றதனாற் கடவுள்வாழ்த்தும், மலை விளையாட்டும், புனல்விளையாட்டும், பிறவு மெல்லாம் காமங்- கண்ணியே வருமென்று கொள்க. கொச்சகவுறுப்புப்பயில வருதலின் முன்வைத்தார். அராகம் இடையினல்லது வாரா. எருத்தினை ஈற்றில்வைத்தது தானன்றியும் அது (பரிபாடல்) வருதலின். வானா ரெழிலி ...... பரவுதுந் தொழுதே இது தரவு. ஒரு சாரார் ... ... இயல் கொளநண்ணியவை இது கொண்டு நிலை3 வண்டு பொரேரெனவெழ ... ... பூமுடி நாகர்நகர் இவை கொச்சகம். மணி மருடகைவகை.... .... .... குளவாயமர்ந்தானகர் இது முடுகியல். திகழொளி .... .... தொல்புகழ் தந்தாருந்தாம் இவையுங் கொச்சகம். அன்ன அணங்குடை யருந்தலையாயிரம் விரித்தமை காரண மாகக் கூறலிற் காமங் கூறிற்று. அராகம் வந்தன வந்த வழிக் காண்க. கொச்சகங்களும் வெள்ளையாதல் பெரும்பான்மை மேல். இதற்குக் கூறுகின்ற வுறுப்புக்கள் வந்துழியும் ஒக்கும், முடுகியலும் சொற் சீரடியும் வெள்ளடியொடு தொடர்ந்து வருதலின். காமரு சுற்றமொடு ... ...bjhGnj” இதுவுஞ் சுற்றத்தொடு பிரியாமை கூறலிற்காம§கண்ணிற்று. எரிமலர் சினைஇய ... ... அருமறைப் பொருளே என ஆசிரியம் வந்தது. நின்னொக்கும் புகழ்நிழலவை இது வஞ்சித் தூக்கு. பிறவுமன்ன. செப்பிய என்றதனான் அராகமின்றி வருதலும், கொச்சகம் ஈற்றடி குறையாதுவருதலும்,அவ்வழியசைச்சீராகியிறுதலும்,வெள்ளைச்Rரிதகத்தாÅறுதலும்bகாள்க.mwnth Uள்ளாuருமறைfப்பbt‹D« gரிபாடலுள், செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறு முறையானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு என வெள்ளைச் சுரிதகத்தா னிற்றது. (211) ஆய்வுரை : இது பரிபாடலின் உள்ளுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டானது, பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்கும் தனக்கு உறுப்பாகக் காமப்பொருள் குறித்து வரும் நிலையினதாகும் எ-று. காமப்பொருள் குறித்து வருவது பரிபாடல் எனவே, அறத்தினும் பொருளினும் அத்துணைப் பயின்று வாராது என்பது கருத்தாயிற்று. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே எனச் சிறப்புவிதி யோதினமையால் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலின் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும் என்பர் இளம்பூரணர். கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும், ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியினும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது எனவும். இதனுட் சொற் சீரடியும் முடுகியலடியும், அப்பா நிலைமைக் குரிய வாகும் என வேறு ஓதுதலின் ஏனை நான்கும் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். கொச்சகம் என்பது, ஒப்பினாகிய பெயர்; ஓர் ஆடையுள் ஒருவழியடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப வாகலின் அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ்செய்யுளைக் கொச்சகம் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். அராகம் என்பது, ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கிவரத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். குறிலிணை பயின்ற அடி அராகமெனப்படும் என்பர் பேராசிரியர். சுரிதகம் என்பது, ஆசிரிய வியலினாலாவது வெண்பா வியலினாலாவது பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது, இதனை அடக்கியல் எனவும் வழங்குவர். எருத்தென்பது இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும், கால் சுரிதகமாதலானும், இடைநிலைப் பட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமும் கொள்ளக் கிடத்தலின், எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் இவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். எருத்து என்பது தரவு என்பர் பேராசிரியர். 118. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும். இளம்பூரணம் : என்---எனின். இதுவுமது. (இ-ள்.) சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரிய வாகும் என்றவாறு.1 சொற்சீரடியாவது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானுங் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது. (118) பேராசிரியம் : இதுவும் பரிபாடலுறுப்பு உணர்த்துகின்றது. (இ - ள்) எண்ணப்பட்ட இரண்டும் பரிபாடற்குள்ள உறுப் பாய் வரும் (எ-று.). சொற்சீரும் முடுகியலுமென்னாது அடியென்றதனான் மேற்கூறிய அடியொடு தொடர்ந்தல்லது வாராவென்பதாம்.2 சொற்சீரடியாமாறு முன்னர்ச் சொல்லுதும். முடுகியலடியென்பது முடுகியலோடு விராய்த் தொடர்ந்தொன்றாகிய வெண்பாவடி1. அராகமென்பது தாமே வேறு சில அடியாகி வருவன.2 இவையன்றிக் குறிலிணை பயில்வன முடுகியலெனவுங் குறிலிணை விரவிவருவன அராகமெனவுஞ் சொல்லுவாரும் உளர்.3 முடுகு வண்ண- மடியிறந் தோடி யதனோ ரற்றே (தொல்-செய். 233) என்பவாகலின் மேலதே யுரை. உரிய வென்றதனான் இத்துணை பயின்றுவாரா இவ் விரண்டுங் கலிப்பாவினுளென்பது கொள்க. எனவே, அராக வுறுப்புத் தேவபாணிக்கல்லது அக்கலிக்கண் யாண்டும் வாரா தாயிற்று4 (122) நச்சினார்க்கினியம் : இதுவு மதற் குள்ளுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உள்ளுறுப்பாய் நிற்றற்குரியவாம். எ-று. அடியென்றதனான் முற்கூறியவடியோடு தொடர்ந்தல்லது தாமாக வாராவென்றுணர்த்துக. சொற்சீரடி மேற்கூறுப. முடு கியலடியாவது, வெண்பாவோடு விராய்த்தொடர்ந் தொன்றாக நிற்கும். அராகமாவது, தாமே வேறு சிலவடியாய்வரும். உரிய வெனவே கலிக்கு இத்துணையுரிய வல்லவென்றுணர்க. எனவே, அராகவுறுப்புத் தேவபாணிக்கல்லது வாரா வென்றுணர்க.1 ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) சொற்சீரடியும் முடுகியலடியும் மேற்குறித்த பரி பாடலுக்கு உரியவாகும் எ-று. சொற்சீரடியின் இலக்கணம் அடுத்த சூத்திரத்திற் கூறப்படும். முடுகியலாவது ஐந்தடியானும் ஏழடியானும் ஆறடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். முடுகியலென்பது முடுகியலொடு விராஅய்த் தொடர்ந் தொன்றாகிய வெண்பாவடி என்பர் பேராசிரியர். 119. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து முற்றடி2 யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புணர்த்துஞ்3 சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே இளம்பூரணம் : என்---எனின், சொற்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) f£LiuahtJ பாட்டின்றித் தொடுக்கப்பட்டு வருவது. v©bz‹gJ ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பல வாகியும் வருதல். பலவருதலின் எண்ணென்றார்.4 முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் என்பது நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இருசீரடியானும் வருதல்1. ஒழியசையாகியும் என்றது ஒழிந்த அசையினை யுடைத் தாகியும் என்றவாறு.2 எனவே, இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறையப் பெறும் என்றவாறாம். வழியசை òz®¤jyhtJ ஒரு சீரின்கண்ணே பிறிதொருசீர் வரத் தொடாது ஓரசைவரத் தொடுப்பது.3 சொற்சீர்த்திறுதல் என்பது சொற்றானே சீராந் தன்மையைப் பெற்று நிற்றல்.4 சொற்சீர்க் கியல்பே என்றது இப்பெற்றியை யுடைத்துச்சொற் சீரினதியல்பு என்றவாறு. இவ்விலக்கணம் பரிபாடற் செய்யுட்கண் வருமாறு: ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச் சேயுயர் பனைமிசை எழில்மேழி ஏந்திய வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை; இது தரவு. எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பில் தெரிமணி விளங்கும் பூணினை மால்வரை எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து மேவ லுட்பணிந்தமை கூறு நாவ லந்தணர் அருமறைப் பொருளே; இஃது எருத்து. இணைபிரி யணிதுணி பணியெரி புரைய விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர் நெரிகிட ரெரிபுரை தனமிகுதன முரண்மிகு கடறரு மணியொடு முத்தியா கத்தொன்றி நெறிசெறி வெறியுறு முரல்விறல் வணங்கணங்குவிற் றாரணி துணிமணிவிய லெறுமொழில் புகழலர்மார்பி னெரிவயிர் நுதியெறி படையெருத்து மலையிவர் நவையிற் றுணிபட லிலமணி வெயிலுற ழெழினக் கிமையிருள கலமுறு கிறுபுரி யொருபுரி நாண்மலர் மலரிலகினவளர் பருதியி னொளிமணி மார்பணி மிகநாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை உடுவுறு தலைநிரை யிதழணி வயிறிரிய அமரரைப் போரே ழுந்துடன் றிரைத்துரைஇய தானவர் சீரழிப் புனல்மொழி பிழந்தூர முதிர்பதி ரப்பல புலவந்தொடவமர் வென்றகணை; இவை நான்கும் அராகம். பொருவே மென்றவர் மறந்தபக் கடந்து செருமேம்பட்ட செயிர்தீர் அண்ணல் இருவர் தாதை யிலங்குமுன் மாஅன் றெருள நின்வர வறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே; இஃது ஆசிரியம். அன்ன மரபி னனையோய் நின்னை யின்னனென் றுரைத்த லெமக்கெவன் எளிது; இது பேரெண். அருமைநற் கறியினும் ஆர்வ நின்வயிற் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅது வெறாஅ தல்லியந் திருமார்ப நீயருளல் வேண்டும்; இதுவும் ஆசிரியம். விறல்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும் அறனு மார்வலர்க் கருளுநீ; திறனிலோர்த் திருத்திய தீதுதீர் கொள்கை மறனு மாற்றலர்க் கணங்கு நீ; அங்கண் வானத் தணிநிலாத் திகழ்தருந் திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ; ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனு மடங்கலும் நீ; நலமுழு தளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனு நாற்றமு நீ; வலனுயர் எழிலியும் மாக விசும்பும் நிலனு நீடிய இமயமும் நீ; இவை யாறும் பேரெண். அதனால்; தனிச்சொல். இன்னோர் அனையை இனையை யாலென அன்னோர் யாமிவட் காணா மையிற் பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய மன்னிய முதல்வனை யாகலின் நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே; இது சுரிதகம். அன்றெனின். நின்னொக் கும்புகழ் நிழலவை பொன்னொக்கு முடையவை புள்ளின் கொடியவை புரிவளை யினவை எள்ளுநர்க் கடந்திட்ட இகனேமியவை மண்ணுற்ற மணிபா யுருவினவை எண்ணிறந்த புகழவை எழின்மார் பினவை; இவை சிற்றெண்ணும், இடையெண்ணும், அளவெண்ணும். ஆங்கு; தனிச்சொல். காமரு சுற்றமொ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் தாள்நிழற் றொழுதே. இது சுரிதகம். இது கடவுள்வாழ்த்து. ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் மிக்குங் குறைந்தும் வருதல் இப்பாவிற் கியல்பென்று கொள்க. பிறவும் பரிபாடலகத்துக் கண்டுகொள்க. மாநிலந் தோன்றாமை மலிபெய னிலைஇ ஏமநீ ரெழில்வான மிகுத்தரும் பொழுதினான் நாகநீள் மணிவரை நறுமலர் பலவிரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல்; நீரணி கொண்டன்று வையை யெனவிரும்பித் தாரணி கொண்ட உவகை தலைக்கூடி ஊரணி கோலம் ஒருவர் ஒருவரிற் சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு நீரணி கொண்ட நிறையணி அங்காடி ஏரணி கொண்டார் இகல் ; கைபுனை தாரினர் கண்ணியர் ஐயெனு மாவியர் ஆடையர் நெய்யணி கூந்தலர் பித்தையர் மெய்யணி யானை மிசைக் கொண் டொய்யெனத் தங்காச் சிறப்பில் தளிரியலார் செல்லப் பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர் வையமுந் தேரும் அமைவோரும் எவ்வாயும் பொய்யாம்போ யென்னாப் புடைபடைகூட் டிப்போவார் மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக் கூடுவார் ஊட லொழிப்பார் உணர்குவார் ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார்நக் கோடுவார் ஒடித் தளர்வார்போ யுற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாருங் கல்லா தவருங் கயவரும் பெற்றாரும் பெற்றாற் பிழையாத பெண்டிரும் பொற்றேரான் தானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை; துறையாடுங் காதலர் தோள்புணை யாக மறையாடு வாரை அறியார் மயங்கிப் பிறையேர் நுதலியர் எல்லாருந் தம்முன் நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே இகல்பல செல்வம் விளைத்தவட் கண்டிப்பால் அகலல்கும் வையைத் துறை; காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி ஏதிலாள் கூந்தல் இடக்கண்டு மற்றது தாதாவென் றாட்குத் தானே புனல்தந்து வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது நோதலே செய்யேன் நுணங்கிழைய யச்செல்வி போதலுண் டாங்கொல் அறிந்து புனல்புணர்த்த தோஒ பெரிதும் வியப்பு; கயத்தகப் பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடு முயக்குக்குச் செல்வல் முலையம் முயக்கத்து நீரு மவட்குத் துணைக்கண்ணி னீர்விட்டோய் நீயு மவட்குத் துணை; பணிவில் உயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல் மணியெழில் மாமேனி முத்த முறுவல் அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர் மணியணி தம்முரிமை மைந்தரோ டாடத் தணிவின்று வையைப் புனல்; புனலூடு போவதோர் பூமாலை கொண்டை எனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை புனலூடு நாடறியப் பூமாலை அப்பி நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடியதிறங் கூடினால் ஆடாளோ வூர்க்கலர் வந்து; என வாங்கு, ஈப்பா யடுநறாக் கொண்டதிவ் வியாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு; மைந்தர் மகளிர் மணவிரை பூசிற்றென் றந்தணர் தோயலர் ஆறு; வையைத் தேமொழி வழுவழுப் புற்றன ஐயர்வாய் பூசுறார் ஆறு; விரியுரி விரைதுறை கரையழி பிழியூர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர்தருநுரை நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல்கரை புரளியசெலுமறிகடல் புகுமள வளவிய லிச்சிறை தணிவின்று வெள்ளமிகை: வரைபல புரையுயர் கயிறணி பயிறொழில் மணியணி யானைமிசை மைந்தரும் மடவாரும் நிரைநிரை குழீஇயினர் உடன்சென்று குருமணி யானை இயறேர்ப் பொருநன் திருமருத முன்றுறை முற்றங் குறுகித் தெரிமருதம் பாடும் பிணிதோள்யாழ்ப் பாணர் பாடிப் பாடிப் பாய் புனல் ஆடி யாடி யருளியவர் ஊடி யூடி யுணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபுசிதைபூச் சூடிச் சூடிக்கை தொழுது தொழுதும் இழுதொடு நின்ற புனல்வையை விழுதொகை நல்லாரு மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றதிந் நீர்குணக்குச் சான்றீர் முழுவது மிச்சிலா உண்டு; சாந்தும் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமுங் கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற் சிறிதானு நீர்நிறந் தோன்றா திவ்வையை யாறு; மழைநீர்க் குளத்து வாய்பூசி யாடுங் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலக்கல் வழிநீர வீழுநீரன்று வையை வெருவெரு கொல்லியானை வீங்குதோள் மாறன் உருகெழு கூட லவரொடும் வையை வருபுன லாடிய தன்மை பொருவுங்கால் இருமுந்நீர் வையம் பிடித்தென்னை யானூர்க் கொருநிலையு மாற்ற இயையா வருமாவில் அந்தர வான்யாற் றாயிரங் கண்ணினான் இந்திரன் ஆடுந் தகைத்து. இது காமப் பொருளாகி வரும் வெண்பா மிக்குவந்த பாட்டு. (119) பேராசிரியம் : மேலெண்ணப்பட்ட சொற்சீரடியாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) சொற்சீரடி இக்கூறிய நான்கு வகையாலும் வந்து பயிலும் (எ - று) கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்தது: வடவேங்கடந் தென்குமரி, யாயிடை (தொல்-பாயிரம்) எனவும், அஇஉ, எஒ என்னு மப்பா லைந்தும் (தொல்-எழுத்-நூன்,3) எனவும், இவை கட்டுரைக்கண் சொல்லுமாறுபோல எண்ணின மையிற் கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்தன.1 இனி, முற்றடியின்றிக் குறைவுசீர்த்தாகும் இயல்பாய் வருமாறு: நின்னொக்கும் புகழ்நிழலவை (பரி. 1-55) எனவும், கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையினவை எனவும் வரும். முற்றடியின்றி என்ற இவை தூக்குப்பட்டு முடியுமடியல்ல (எ - று).2 மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்,, ஒருசார் என்பது xÊair: என்னை? அது சீராகலின் அதனோடு சில அசை கூடியன்றி அசையெனப்படாமையின்.1 ஆங்கு எனவருந் தனிச் சொல் வழியசை யெனப்பட்டது; என்னை? அஃது அசையாய் நின்று brh‰ÓuoahfÈ‹.2 மற்றுச் சொற்சீரடியினை அசை யென்ற தென்னையெனின், இயலசை தானேயும் xÊairahŒ நிற்கு மென்றற்கென்பது. ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர் (கலி. 88) என்புழி ஒரூஉ வெனநின்ற இயலசைதானே ஒழியசையாய் நின்றது.3 உகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில் (கலி. 33) என்பது வழியசைபுணர்ந்த brh‰Óuo; என்னை? எள்ளி என நின்ற சீரின்வழித் தொகுபு என வந்தவசை உகுவதுபோலு மென்னுந் தொடையொடு பொருந்தி, உகுவது போலுமென் னெஞ்செள்ளித் தொகுபுடன் எனப் புணர்ந்து நின்றாற் போல்வதொரு சுவைமைசெய்து நின்றமையின்.4 கொச்சகம் இடைநிலைப் gh£bld¥ படாமையின், தொகுபுடன் ஆடுவ போலு மயில் என நாற்சீரடியாலும் வருவதாயிற்று, வரையறையின்மையின். இங்ஙனம் வந்தமையின் சொற்சீரடிமேல் எண்ணவும்படும்.1 இவை கலிக்கண் வருங்கால் ஒத்தாழிசைக்கண் முடுகியலடி வாராதென்பதூஉஞ், சொற்சீரடி வருஞான்றுந் தனிச் சொல்லாகி-யன்றி வாராதென்பதூஉம் உறழ்கலிக்கண்ணும் முடுகியலடி உரித்தன்றென்பதூஉங் கொள்க. சொற்சீர்த்திறுதலென்பது: ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்களெல்லாம் அடியிறுதிக்கண் அடிப்பட முடிந்து அடியாத லிலக்கணத்த அவையென்றவாறு.2 இனி, ஒழியசையினையும் வழியசையினையும் கூறினானென் னாமோவெனின்,3 சீர்கூ னாத னேரடிக் குரித்து (தொல்-செய். 49) என்றமையின் ஈண்டு அசைகூனாகாது; அல்லதூஉம் ஆண்டுக் கூனெனப்பட்டதும் ஈண்டுச் சொற்சீரடியெனப்பட்டு அடங்கு மென்பதனானு முடைத்தென்பது. இவையெல்லாம் பரிபாடற் கண்ணதே கூறினானாயினும் ஒழிந்த பாவினுட் சொற்சீரடி வருமென விதந்தவழி, அதுவே இலக்கணமாக வரும் ஆண்டு மென்பது. இயல்பு என்றதனானே யாண்டு வரினும் அஃதிலக் கணமென்பது பெற்றாம்;4 அல்லதூஉம். தொகைநிலை விரி (தொல் - செய். 120) என்ற மிகையாற் பரிபாடற்கு உரியவாகக் கண்டுகொள்க. அவை யாவையோவெனின், முடுகியலடி மேற்காட்டிய பரிபாடலுண் மணிமருடகை என்பது முதலாகக் குளவா யமர்ந்தா னகர் என்பதீறாகக் கண்டுகொள்க. (123) நச்சினார்க்கினியம் : இது மேலெண்ணிய சொற்சீரடியாமா றுணர்த்துகின்றது. (இ-ள்)கட்டு...J« எ-து புனைந்துரைவகையாற் கூறுமாறு போல எண்ணோடு கூடியும். முற் ... யும். எ-து,தூக்குப்பட்டுமுடியுமடியின்றிக்குறைவாகியசீரையுடைத்தாகியும்,ஒழி,...í« எ-து, வேறோரசையோடுகூடா தொழிந்து நிற்பதோ ரியலசை-யாகியும், வழி தும். எ-து, அவ்வாறன்றி யதனோடு பலவசை புணர்க்கப்பட்டு நின்றும். சொற் ... பே. எ-து, ஓரெழுத்தொரு-மொழி முதலிய சொற்களெல்லாந்தாமே சீர்த்தன்மைபெற ஓசைபெற்று முடிந்துநிற்றல் சொற்சீரடிக்கிலக்கணமாம். v-று. உ-ம்.வடவேங்கடந் தன்குமரி (தொல்-பாயிரம்)vdî«, அ, இ, உ, எ, ஒ bவன்னுkப்பாiலந்தும் (தொல்-எழுத்து-நூல்-2)v-« இவை யெண்ணொடு òணர்ந்தன. கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையி னவை எனத் தூக்குப்பட்டு முடியாமற் குறைந்தன. ஒரூஉக் கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற (கலி-88) ஒரூஉவென நிரையசைதானே யொழியசையாயிற்று. ஆங்கென- வருந் தனிச்சொல் வழியசைப்பாற்படும். நொந்து நகுவனபோ னந்தின கொம்பு இனைந்துள்ளி யுகுவது போலுமென் னெஞ்சு எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில்1 கையி லுகுவன போலும் வளை இவை முச்சீரடியான்வந்தனவு நாற்சீரடியான் வந்தனவுமாய் நின்றவாறுணர்தற்கு நகுவன உகுவது தொகுபுடன் உகுவன எனத் தொடைச்சுவடுபடுத்துக் கூறவே யவற்றின்-முன்னின்ற சொற்கள் வழியசைபுணர்ந்த சொற்சீரடி யாயவாறு காண்க. இவை யிடைநிலைப்பாட்டன்றிக் கொச்சகமாகலின் வரையறையின்றித் தொகுபுட னாடுவ போலு மயில் என நாற்சீரடியானும் வந்தது. இவை மேலெண்ணவும்படும். இவை கலிக்கண்வருங்கா லொத்தாழிசையினும் உறழ்கலியினும் முகிடுயல் வாராமையும், அவற்றுட் சொற்சீரடி வருங்காற் றனிச்சொல்லாயல்லது வாராமையுங் கொள்க. சீர்கூ னாத னேரடிக் குரித்து (தொல்-செய். 49) என்றமையின் ஒழியசை கூனாகவமையும். சீர் கூனாகக் கூறியவை யீண்டுச் சொற்சீரடியா னடங்குமாறு முணர்க. இவை பரிபாடற்கே யுரித்தென்றா ரேனும் இயல்பென்றதனானே யாண்டும் வருதலும் இலக்கணமென்பது பெற்றாம். அது பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் (தொல்-செய்-215) என்பதனானுமுணர்க. முடுகியலடி முற்காட்டினாம் ஆய்வுரை : இது, சொற்சீரடியாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பாட்டின்றித் தொடுக்கப்படும் கட்டுரைக்கண் சொல்லுமாறு போல எண்ணொடு கூடியும், முற்றிய நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இகு சீரடியானும் குறைவாகிய சீரையுடைய தாகியும், ஒழிந்த அசையினையுடையதாகியும், ஒருசீரின் பின்னே பிறிதொரு சீர்வரத் தொடுக்கப்படாது ஓரசை வரத் தொடுக்கப்பட்டுச் சொல் தானே சீராந்தன்மையைப் பெற்று நிற்றல் சொற்சீரடியின் இயல்பாகும் எ-று. எண்ணென்பது, ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பல வாகியும் வருதல் என இளம்பூரணரும், எண்ணுதற்பொருள் எனப் பேராசிரியரும் கொள்வர். 120. அங்கதந் தானே அரில்தபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. இளம்பூரணம் : என்---எனின். அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொரு ளெனவும், கரந்த தெனவும் இருவகைப்படும் என்றவாறு.1 அவை முன்னர்க் காட்டுதும். (120) பேராசிரியம் : இது, முறையானே அங்கதச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று (இ - ள்) அது செம்பொருள் கரந்தது என்று இரு வகைத்தாம் (எ - று). அங்கதமென்பது tir: அதனை இருவாற்றாற் கூறுகவென் பான் இது கூறினான். அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். அரிறப வென்ற தென்னையெனின், அவை புகழ்போன்று வசையாதலும்பட்டுத் தோன்றும் மயக்கமுடையவாதலின் மயக்கமறத் தெரியினென்றவாறு. நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான் (கலி. 52) என்பது புகழ்போன்று வசையாயிற்று; என்னை? கொன்றா- னாயினுங் குறங்கினகத்துத் தண்டுகொண்டு எற்றுதல் குற்றமாதலின் என்பதறிக.1 கொடைமடங்கூறுதல் வசைபோன்று புகழெனப்படும். அஃது அங்கதமாகாதென்பான் அரிறப வென்றானென்பது.2 பிறவும் அன்ன. (124) நச்சினார்க்கினியம் : இது முறையானே அங்கதங் கூறுகின்றது. (இ-ள்.) வசைச்செய்யுளைக் குற்றமற ஆராயிற் செம் பொருளங்கதமும், பழிகரப்பங்கதமும் என அவ்விருவகையினை-யுடைத்து. எ-று. அவை புகழ்போன்று வசையாதலும், வசைபோன்று புகழாதலும்பட வருமென்றற்கு அரிறப என்றார். நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திட்டானும் போன்ம் என்றது, புகழ்போன்று வசை; மாயோன் கூறவுணர்தலின் இது கரந்ததின்பாற்படும்.3 கொடைமடம் படுதலல்லது (புறம்-142) என்பது வசை போன்று புகழ். இது செம்பொருளின்பாற்படும்.1 இதனானே அங்கதமாகாதென்பது கருத்தாயிற்று. ஆய்வுரை : இஃது, அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அங்கதமாகிய வசைச் செய்யுளைக் குற்றமற ஆராயின் செம்பொருள் அங்கதமும் பழிகரப்பு அங்கதமும் என இரு வகையுடையதாகும் எ-று. 121. செம்பொரு ளாயின2 வசையெனப் படுமே. இளம்பூரணம் : என்--எனின். செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும் என்றவாறு.3 பேராசிரியம் : இது, முறையானே செம்பொருளங்கத முணர்த்துதல் நுதலிற்று.4 (இ-ள்.) வாய்காவாது சொல்லப்பட்ட வசையே செம் பொருளங்கதமெனப்படும் (எ-று). அஃது, இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்றம் மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள என்பது ஏழிற்கோவை. அவ்வை முனிந்து ghoaJ. எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே யெம்மிக ழாதவர் தம்மிக ழாரே தம்புக ழிகழ்வோ ரெம்புக ழிகழ்வோர் பாரி யோரி நள்ளி யெழினி யாஅய் பேகன் பெருந்தோண் மலையனென் றெழுவரு ளொருவனு மல்லை யதனால் நின்னை நோவ தெவனோ அட்டார்க் குதவாக் கட்டி போல நீயு முளையே நின்னன் னோர்க்கே யானு முளனே தீம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே எனவும் வரும். கலிப்பாட்டினான் வருவன வசைக்கூத்தினுட் கண்டு கொள்க.1 அறச்சுவையினன் வையெயிற்றினன் மயிர்மெய்யினன் மாசுடையினன் பொய்வாயாற் புகழ்மேவலன் மைகூர்ந்த மயலறிவினன் மேவருஞ் சிறப்பி னஞ்சி யாவரும் வெருஉ மாவிக் கோவே என்பது, வஞ்சிப்பாட்டு. இது,2 வெண்பாவினான் வருதலே பெரும்பான்மை. (125) நச்சினார்க்கினியம் : இது முறையே செம்பொருளங்கதங் கூறுகின்றது.1 (இ-ள்.) வாய்கரவாது கூறப்படும் வசை செம்பொருள்வசை யெனப்படும். எ-று. அவை வெண்பாவேயன்றிச் சிறுபான்மை மற்றைய பாக்களானும் வருமென்றுணர்க. உ---ம். இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்று நின்குற்ற- மருடேயும்2 பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள இஃது ஏழிற்கோவை ஔவையார் பாடியது.3 எம்மிகழ் வோரவர் தம்மிகழ்வோரே ... ... ... ... ... ... FU»D« வெளியோய் தேஎத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே கலிப்பாட்டான் வருவன வசைக் கூத்தினுட் காண்க. அறச்சுவையினன். ... யாவரும் bவரூஉkவிக்nகாவேïJ வஞ்சி. ஆய்வுரை : இது, செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துகின்றது. (இ-ள்) வாய் காவாது கூறப்படும் அங்கதம் வசையெனப் பெயர் பெறும். 122. மொழிகரந்து மொழியின் அது1 பழிகரப் பாகும். இளம்பூரணம் : என்---எனின், மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பெனப் பெயர்பெறும் என்றவாறு. (122) பேராசிரியம் : இது, பழிகரப்பங்கதம் உணர்த்துகின்றது. (இ - ள்) வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பங்கதம் (எ - று). மாற்றரசனையும் அவனிளங்கோவினையும் வசைகூறுமாறு போலாது தங்கோனையும் அவனிளங்கோனையும் வசைகூறுங்கால் தாங்கியுரைப்பர்;2 அவைபோலப் பழிப்பனவென்றவாறு:3 அது, நன்றாய்ந்த செங்கோலாய் நாடிய நின்னிளங்கோக் குன்றெறிந்த சேந்த னெனமதியா - வன்றிறத்து நின்றொலிக்குந் தானையோ டெல்லா நிகர்த்தார்மேல் வென்றெறியும் வேலே விடும் என வந்த வெண்டொடைச் செய்யுளுட் கண்டு கொள்க. இதனுள், வென்றெறியும் வேலே விடும் என்பது, முனையகத்துப் படையோடு மென வசைகூறுவான்4 குன்றெறிந்த சேந்தனைப் போல எறிந்தானெனப் புகழ்ந்தான் போலக் கூறினானென்பது. இன்றுள னாயி னன்றும் என்றநின் னாடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே (புறம் 53) என்பதும் அது.1 (129) நச்சினார்க்கினியம் : இது பழிபரப்பங்கதங் கூறுகின்றது.2 (இ-ள்) வசைப்பொருளினைச் செம்பொருள் படாமலிசைப்பது3 பழிகரப்பங்கதமாம். எ-று. ஈயென விரத்தல் (புறம்.204) என்னும் பாட்டினுள் தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கட லுண்ணா ராகுவர் நீர்வேட் டோரே என்றவழி நின்செல்வங் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கினிதாய் நுகரப் படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க. புறத்தினுட் பலவு மிவ்வாறே வருவன காண்க. வெண்பாவில் வருவன வந்துழிக் காண்க. ஆய்வுரை : இது மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துகின்றது. (இ-ள்) தான் மொழியும் வசைமொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பு எனப்பெயர் பெறும் எ-று. 123. செய்யுள் தாமே இரண்டென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். மேற்சொல்லப்பட்டன தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.1 (இ-ள்) ஈண்டு, தம்மாற் சொல்லப்பட்ட செய்யுள் இரண்டு வகை என்று சொல்லுவர் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். (123) பேராசிரியம் : மேற்கூறிய இரண்டனையும் இவ்வகையானும் வகுக்கப்பட மென்கின்றது.2 (இ-ள்) செம்பொருட்செவியுறை, செம்பொருளங்கதம் பழிகரப்புச் செவியுறை, பழிகரப்பங்கதமென நான்கு கூறுபடும் மேற்கூறிய அங்கதமிரண்டும் (எ-று). பாய்த்துள்,விக்குள் என்றாற்போலச் செய்யுள் என்பதூஉந் தொழிற்பெயர்; அவையாமாறும் அவற்றது வேறுபாடும் முன்னர்ச் சொல்லுதும். இனி, xUtDiu. இவற்றுள் தொகைச்சூத்திரத்துட் கைக்கிளை பரிபாட் டங்கதஞ் செய்யுள் (தொல்.செய்-118) என்று ஓதிச் செம்பொருளங்கதமுஞ் செய்யுளுமென இரண்டாக நிறுத்தான்; நிறுத்தமுறையானே அங்கதமுணர்த்திச் செய் யுளுணர்த்திய விதந்தாமுறையானே அங்கதமுணர்த்திச் செய்யுளுணர்த்திய விதந்தானென்பது; அற்றன்று, எல்லாப் பாட்டுஞ் செய்யுளெனப் படுதலின் ஒன்றனையே செய்யுளெனலாகாது; அல்லதூஉம். அங்கதச் செய்யு ளென்மனார் புலவர் (தொல்-செய்-129) என வருகின்ற சூத்திரத்து ஓதுமாதலான் இவையும் அங்கதச் செய்யுளே. மேலைச் சூத்திரத்துள்ளும் (118) அங்கதச் செய்யுளென்பதே பாடமென்பதூஉம் அதனாற் பெறுதுமென்பது. அல்லாத பாடம் ஓதினும் அங்கதச்செய்யுள் செய்கைமேலென அதனைத் தாய்க்கொலை யென்றதுபோல் இரண்டாவதன் பொருண்மைப் படுத்துக்கொள்க.1 நச்சினார்க்கினியம் : இது மேற்கூறிய இரண்டனையுமே இவ்வகையானும் பகுக்கப்படுமென்கின்றது. (இ-ள்.) முற்கூறிய செய்யுட்டாம் ஒரோவொன் றிரண்டாம். எ-று. அவை செம்பொருட்செவியுறையங்கதம். பழிகரப்புச் செவியுறையங்கதம், செம்பொருளங்கதம், பழிகரப்பங்கதம் என நான்குகூறுபடும். எ-று.2 பாய்த்துள், விக்குள் என்றாற்போலச் செய்யுளென்பதுந் தொழிற்பெயர்.1 ஆய்வுரை : இது, மேற்கூறியவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) ஈண்டு தம்மால் வேண்டப்பட்ட செய்யுள் இரண்டு வகையென்று சொல்லுவர் புலவர் எ-று. இருவகையாவன செவியுறைச் செய்யுள். அங்கதச் செய்யுள் எனக் கொண்டார் இளம்பூரணர். செம்பொருளும் பழிகரப்புமாகிய இரண்டும் செவியுறையும் அங்கதமும் என இருவகைப்படும் எனக்கொண்டு செம்பொருட்செவியுறை, செம்பொருளங்கதம், பழிகரப்புச் செவியுறை, பழிகரப்பங்கதம் என நான்கு கூறுபடும் எனப் பொருளுரைப்பர் பேராசிரியர். 124. புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்2 இளம்பூரணம் : என்---எனின். செய்யுளைப் பாகுபடுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) புகழொடும் பொருளொடும் புணரவரிற் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர் என்றவாறு. (124) பேராசிரியம் : இது, மேற்கூறிய அங்கதச்செய்யுட்பகுதி இரண்டனுள் ஒன்று கூறுகின்றது. (இ-ள்) மேற் செம்பொருளும் பழிகரப்புமெனப்பட்ட இரண்டும் அங்கதச்செய்யுளெனப்படுதலேயன்றி, அதனானே அரசர்க்குப் பொருள்வருவாயாகச் செய்தானேயெனினும் அது செவியுறையங்கதமெனவும் படும் (எ-று).1 துகளாவது : படைகுடி கூழமைச்சு நட்பரணாறும் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தல். அரசியல் என்பனவற்றானே தங்கோன் அறியாமல் வகுத்தவை2 வருமாயின் அவற்றை உள்ளவா றுரைத்தலுமொன்று. (மாற்றரசன் நமரது ஊரடுகின்ற நாட்டவர் யாதிவை நுதலியன வேதுவாகப் போய்ச் சார்ந்தவர்க்கு நாட்டழிவு கூறுதலுமொன்று) அன்ன பிறவும் அவற்கு உறுவகையாகலான் அவற்றை உள்ளவாறு உணர்த்திப் பொருள்செய அவர்க்குப் பொருள்செயல்வகை கூறினமையின் அது செவியுறைப்பாற்படு மென்பது; அது.3 அறவை யாயி னினதெனத் திறத்தன் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே (புறம் 44) என இது செம்பொருட் brÉíiw: பிறவும் அன்ன. இவை முகவிலக்கினுட் பயின்று வருமென்பது.4 இனி, மொழிகரந்து சொல்லினும் இஃதொக்கும்; இனிப், புகழொடும் பொருளொடும் என்பதூஉம் பாடமாக உரைப்ப1 புகழும் பொருளும் புணர்ப்பது அங்கதமாயின் அஃதமையும்: அற்றன்றாயின் ஈண்டாராய்ச்சியின் றென்பது; என்னை? வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயி - னங்கதச் செய்யுள் (தொல்-செய்-129) என மேலோதுமாதலின் இவனென்பது.2 (128) நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய இருவகைச் செவியுறையுங் கூறுகின்றது. (இ-ள்.) அரசன் றனக்குரிய அரசியலிற் றப்பியநிலையைக் கூறுங் கூற்றோடும், அவ்வறம்பொருளின்பம்பயக்கக் கூறுங் கூற்றோடும் ஒரு செய்யுட் கூடிவந்ததாயின் அது செம்பொருட் செவியுறையங்கதம், பழிகரப்புச் செவியுறையங்கதம் எனப் பெயர் கூறப்படும். எ - று.3 துகளாவது படை குடி கூழ் அமைச்சு நட்பு அரணென்னு மிவற்றைப் பாதுகாவாதிருத்தல். உ-ம். நளியிரு முந்நீ ரேணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு மரசெனப் படுவது நினதே பெரும வலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினு மிலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினு மந்தண் காவிரி வந்துகவர் பூட்டத் தோடுகொள் வேலின் றோற்றம் போல வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கு நாடெனப் படுவது நினதே யத்தை யாங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே நினவ கூறுவ லெனவ கேண்மதி யறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை யூன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினு மியற்கை யல்லது செயற்கையிற் றோன்றினுங் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம் அதுநற் கறிந்தனை யாயி னீயு நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் னடிபுறந் தருகுவ ரடங்கா தோரே (புறம்-35) இது இஞ்ஞாலம் இயற்கையல்லது தமது செயற்கையிற் றோன்றினுங் காவலனைப் பழிக்கும்; இதனையுமுணராதே நீ வேற்றரசர்க்குப் பெறுதற்கரிதாகிய சிறந்த நாட்டினை நினதாகப் பெற்று வைத்து அதனை யழிக்கின்றது நினக்கரசிய லன்றென்று அவனாட்டை யழித்தமை கூறுதலில், துகளொடு புணர்வும், குடிபுறந்தரின் நினக்குச் செல்வமுதலிய சிறத்தலிற் பகைவர் நின்னை வணங்குவரெனப் பொருளொடுபுணர்வும் வெளிப்படக்கூறலிற் செம்பொருட்செவியுறை யங்கத மாயிற்று.1 வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடியவென் னாது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி யோம்பா துண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே திறப்பட நண்ணார் நாண வண்ணாந் தேகி யாங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் மண்ணாள் செல்வ மெய்திய நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே (புறம்-7) இது சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர்புக்க இளந்தத்த னென்னும் புலவனைக் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தானென்று கொல்வுழி யவ்வரசர்க்கு வருகின்ற துகளினைக் கோவூர்கிழார் புலப்படாமற் செய்யுள் செய்து தமது சொல்லை யரசன் கேட்டஞ்சினனென்னும் பொருளை நிறுத்துதலிற் பழிகரப்புச் செவியுறை யங்கத மாயிற்று. இவ்வாறே புறத்தினுட் செவியுறைச் செய்யுட்கள் பலவும் வருவனவுள. அவ்வேறுபா டுணர்ந்து கொள்க. புகழொடும் பொருளொடும் என்று பாட மோதின் மேல் வசையொடும் நசையொடும் (செய்-129) என்பது பொருந்தாதாம். ஆய்வுரை : இது, மேற்குறித்த அங்கதச் செய்யுட்பகுதி யிரண்டனுள் ஒன்றாகிய, செவியுறைச் செய்யுளாமாறு கூறுகின்றது. (இ-ள்) புகழொடும் பொருளொடும் புணரவரின் செவியுறைச் செய்யுள் என்று கூறுவர் எ-று. புகழொடும் பொருளொடும் புணர்தல் வசையொடும் நசை- யொடும் புணரும் அங்கதத்திற்கு ஏற்புடைத்தன்றாதலின் துகளொடும் பொருளொடும் எனப் பாடங்கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். துகளாவது படை குடி முதலிய அரசுறுப்புக் களைப் பாதுகாவாதிருத்தல் என்பர் பேராசிரியர். 125. வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் இளம்பூரணம் : என்---எனின். இதுவுமது. (இ-ள்) வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள்-அங்கதச் செய்யுள் எனப் பெயர் பெறும் என்றவாறு.1 எனவே, இருவாற்றானும் செய்யுட் செய்யப்பெறும் என்ற வாறு. (125) பேராசிரியம் : இஃது, ஒழிந்த அங்கதச்செய்யு ளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற்கூறிய அங்கதச்செய்யுள் வசையேயன்றி அவ்வசையானே நசைதோன்றச்செய்வது செவியறிவுறை யெனப்படாது அங்கதச்செய்யுளெனவே படும் (எ - று). எனவே, இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாகச் செய்யினும் அங்கதச்செய்யுளெனப்படும் என்றவாறு.2 அவை, விலக்கியற்செய்யுளுட் கண்டுகொள்க.1 இதுவுஞ் செம்பொரு ளாகியும் பழிகரப்பாகியும் வருமென வுணர்க. எனவே கூறப்- பட்டனவெல்லாம் வெகுளியும் பொருளும் நகையும் பயப்பன-வாயின. (129) நச்சினார்க்கினியம் : இஃது ஒழிந்த அங்கதச்செய்யுள் இருவகைத்தென்கின்றது. (இ-ள்.) வசைப்பொருளொடும் அதனாற்பிறந்த நசைப் பொருளொடும்2 ஒருசெய்யுட் கூடிவருமாயின் அதனைச் செம் பொருளங்கதம் பழிகரப்பங்கதம் எனப் பெயர் கூறப்படும். எ-று. அவை இலக்கியற்செய்யுளுட்காண்க.3 முன்னர்ச் செம் பொருள் வசைக்குக் காட்டிய உதாரணங்களிலும் இவ்வேறுபாடுய்த் துணர்க. ஆய்வுரை : இஃது அங்கதச் செய்யுளாமாறு கூறுகின்றது. (இ-ள்) வசையொடும் நகையொடும் புணர்ந்துவரின் அங்கதச் செய்யுள் என்று கூறுவர் ஆசிரியர் எ-று 126. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே. இளம்பூரணம் : என்---எனின். இனிக் கலிப்பாப் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒத்தாழிசைக் கலியும் கலிவெண்பாட்டும் கொச் சகமும் உறழ்கலியும் என நான்கு வகைப்படுங் கலிப்பா என்றவாறு. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். இருவயின் ஒத்தும் ஒவ்வா இயலினுந் தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங் கலப்பே யாயினும் புலப்பே யாயினும் ஐந்திணை மரபின் அறிவுவரத் தோன்றிப் பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும் என்று அகத்தியனார் ஓதுதலின்1 கலிப்பா அகப்பொருளென வழங்கும்.2 (126) பேராசிரியம் : இது, கலிப்பா வெனப்பட்ட உறுப்பினை இத்துணைப்பகுதி யான் வருமென அது வருஞ் செய்யுள்பற்றி விரிகூறுகின்றது. (இ-ள்.) ஒத்தாழிசை --- ஒத்தாழிசையென்னும் உறுப்புடைச் செய்யுள்; ஒத்து ஆழ் இசையை ஒத்தாழிசை யென்றான்; அது வினைத்தொகையாகலின் மருவிய வகையான் முடியுமென்பது: தாழிசை யென்பது தானுடைய துள்ளலோசைத்தாம்; இது முறைமையிற் பெற்ற பெயர்;3 எனவே தரவுவேறுபடினும், வேறுபடா தென்பதூஉங், கொச்சகக் கலிபோல்வனவற்று வரும் இடைநிலைப் பாட்டுக்கள் அவ்வாறு தாழமுடையவன்றியும் வருமென்பதூஉங் கொள்க. இது பன்மைபற்றிப் பெற்ற பெயர்; தாழிசையின்றியும் ஒத்தாழிசை சிறுபான்மை வருதலின்.1 இனி, ஒழிந்த உறுப்புநோக்கத் தாழிசை சிறந்தமையின் தலைமையாற் பெற்ற பெயரெனவும் அமையும்.2 வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர் அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி (கலி 4) என்பது தாழ்ந்த ஓசைத்தன்றி ஒத்தாழிசைக் கலியுள் தரவு வந்தது. எனவே, இவ்வேறுபாடு கட்டளைக்கலி3 அல்லாதவழி யென்பது பெற்றாம். அதுவன்றே இதன் றாழிசையுள்ளும் நேரீற்றியற்சீரும் வந்ததென்பது; என்னை? காழ்விரி வகையார மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமன் முயங்கியு மமையாரென் றாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வதை யெவன்கொ லறியே னென்னும் (கலி-4) என்புழி அறியே னென்னும் என ஆண்டைத் தாழிசை தோறும் இரண்டு நேரீற்றியற்சீரும் வந்தன. பிறவும் அன்ன. நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே; இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்க ணீர்நில் லாவே vd¡ bfh¢rf¡fÈíŸ ïilÃiy¥gh£L¤ jhÊirÆ‹¿ tªjJ!1 பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டு ---கலிப்பாவாகிய வெண்பாட்டு. இது பண்புத்தொகையானே முன்மொழிப் பொருட்டாயிற்று2 கொச்சகமென்பதும் உறுப்பினாற் பெற்ற பெயர்.3 உறழ்கலி யென்பது பொருள்பற்றி வந்த பெயர்.4 x¤jhÊirba‹gJ தம்மினொத்துவருதற் கட்டளையுடைமையானுங்,5 கலிப்பாவிற்குச் சிறந்து வருமாகலானும் முன்வைத்தான்; என்னை இது கலிப்பாவிற்குச் சிறந்தவாறெனின்; நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசை அறுபத்தொட்டு வந்தனவாகலின் அது பெருவரவின எனப்பட்டுச் சிறப்புடைத்தாயிற்று. அதுநோக்கி முன்வைத்தான்;இது பா வென்னும் உறுப்பிலக்கணங் கூறுகின்ற இடமாகலின் கலிவெண்பாட்டினை ஒத்தாழிசைக்குங் கொச்சகத்திற்கும் இடைவைத்தான், அதுபோல உறுப்புடைத் தாகியும் வருமென்றற்கு. அதன்பின் கொச்சகப்பா வைத்தான்; அது தரவும் போக்குஞ் சிறுபான்மையின்றியும் வருதலின். எல்லாவற்றுப்பின்னும் உறழ்கலி வைத்தான்; அவைபோலாது சுரிதகமின்றி வருதலே பெரும்பான்மை யாகலானென்பது1 அஃதேல், உறழ்கலியுங் கொச்சகக்கலியுள் அடங்காதே அதுவும் அடக் கியலின்றியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடைத்தாய் வருமாலெனின்,2 அற்றன்று; அடக்கியலின்றி வரின் அடி நிமிர்தலும் ஒழுகிசைத்தலும் வேண்டும்; உறழ்கலியாயின் அடிநிமிராதும் ஒழுகிசையின்றியும் வருமென்பது.3 அத்துணை யான் இதனை வேறென்பதென்னை? ஒன்றாக ஓதுக வெனின்.4 அற்றன்று; மேற்கூறி வருகின்ற செய்யுளெல்லாஞ் சீரும் அடியும் பாவும் பொருளுமெனச் சிலவுறுப்பு வகையான் வேறுபடுகின்ற தன்றிப் பிறிதின்மையின் அவற்றின் வேறுபாடுஞ் சிலவாக நோக்கி ஒன்றென்னாமாகலின் அது கடாவன்றென்பது,5 அல்லதூஉம் நூல் செய்யுங்கான் மரபென்பது வேண்டும்; என்னை? மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூல்தா மிருவகை யியல (தொல். மர. 93) என்பதனான், முதனூற்காயினும் மரபுவேண்டுதலின். அது வன்றே நிலம் நீர் தீ வளி விசும்பென்னும் ஐம்பெரும் பூதங்களும் அவற்ற தியைபாகிய பொருள்களும் அஃறிணையான் வழங்கினும் பொருளின் இயைபாகிய மக்களுந் (644) தேவரும் முதலாயினாரை உயர்திணைவாய்பாட்டான் வேறுபடுத்து வழங்குகின்றதென்பது. மற்று உறழ்கலியென்னும் வழக்குண்டாயினன்றே மரபொடு மாறுபடுவதெனின்; மரபென ஆசிரியர் வழக்கும் அடங்குமாகலின் அது கூறினான்; அல்லாக்கால் ஒழிந்த செய்யுளும் வேறுபாடிலவா மன்றோ வென்பது.1 இனிப், பரிபாடலுங் கலிப்பாவினுள் ml§Fbk‹ghU« உளர். கலியும் பரிபாடலுமென எட்டுத் தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின் அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதாரென்பது; அல்லதூஉம், அராகவுறுப்பில்லாத முடுகியலடியுங் கொச்சகக் கலியல்லாத கலிப்பாவினுள் உண்டா வதாலுங் கொச்சகக் கலியுறழ்ந்து வருதலும் உடையவாம் அவ்வாறு கூறினான் என மறுக்க.2 (130) நச்சினார்க்கினியம் : இது கலிப்பாவென்னும் உறுப்பினை இத்துணைப்பகுதி யினான் வருமென வகுத்து வருஞ் செய்யுள்பற்றி விரிவு கூறுகின்றது. (இ - ள்.) ஒத்தாழிசைக்கலியும், கலிவெண்பாவும், கொச்சக் கலியும், உறழ்கலியுமெனக் கலி நான்கு கூறுபடும். எ-று. ஒத்தாழிசையென்னு முறுப்புடையது ஒத்தாழிசைச்செய்யுள். அது ஒத்தாழிசையென வினைத்தொகையாம் தாழிசை யென்றது கட்டளைக் கலிக்குத் தரவு மிகத்துள்ளாது வரத்தாழிசை யதனிற் றாழம்பட்டு வருதலிற் பெற்ற பெயர். இங்ஙனம் வருவது கட்டளைக்கலியே. இப்பெயர் பன்மையாற் பெற்ற பெயர். இனி ஒழிந்த வுறுப்பிற் றாழிசை சிறத்தலிற் றலைமையாற் பெற்ற பெயருமாம். இனிச் சீர்வகையான் வருங்கலிக்குத் தரவு மிகத் துள்ளிவரும்; இதற்குத் தாழிசையோசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருதலுங் கொள்க. எனவே கொச்சகத்திற்காயிற் றாழிசை நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே (கலி 7) எனத் தாழம்பட்ட வோசையின்றி வரும். இனிக் கலிவெண்பாட்டுக் கலியாகிய வெண்பாட்டு; இது முன்மொழி நிலையல். கொச்சகம் உறுப்பினாற்பெற்ற பெயர். உறழ்கலி பொருளினாற் பெற்ற பெயர். தம்மினொத்து வருதலானும் சிறப்புடைமையானும் ஒத்தாழிசை முற்கூறிற்று. நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலி அறுபத்தெட்டு வந்தது. இதற்குங் கொச்சகத்திற்கு மிடையே கலிவெண்பாக் கூறிற்று. அதுவும் இவை போலவுறுப்புக்களுடைத் தாயும் வருமென்றற்கு. தரவும் போக்குஞ் சிறுபான்மை யன்றியும் வருதலிற் கொச்சகம் அதன்பின்னதாயிற்று. அடக்கியலின்றியும், அடிநிமிர்ந்தும், ஒழுகிசை யின்றியும் வருதலின் அதன்பின்னது உறழ்கலியா யிற்று. பரிபாடலுங் கலியாகாவோவெனின், கலியும், பரிபாடலுமென வேறாக இரண்டு தொகை வழங்குதலானும், உறுப்பின் வேறுபாட்டானும் வேறென்றுணர்க.1 ஆய்வுரை : இது, கலிப்பாவின் வகையுணர்த்துகின்றது. (இ-ள்). ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம். உறழ் கலி எனப் கலிப்பா நான்கு வகையினை யுடையது எ-று, 127. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும். இளம்பூரணம் : என்--எனின். ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும் என்றவாறு அவை முன்னர்க் காட்டுதும். (127) பேராசிரியம் : இது, முறையானே ஒத்தாழிசைக்கலி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒத்தாழிசைக்கலி இரண்டு கூற்றதாம் (எ - று). இதனது பயம்:- அவை இரண்டுந் தம்முட்பகுதியுடைய வென்பது;2 அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். (121) நச்சினார்க்கினியம் : இது முறையே ஒத்தாழிசைப்பகுதி கூறுகின்றது.3 (இ-ள்.)4 ஆய்வுரை : இஃது ஒத்தாழிசைக் கலியின்வfகூறுகின்றது. (இ.ள்) கலிப்பாவின் நால்வகைகளுள் ஒன்றாகிய ஒத் தாழிசைக்கலி இரண்டு வகைப்படும். இருவகையாவன : அகநிலையொத்தாழிசையும், தேவர்ப் பராவியதும். 128. இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப1 இளம்பூரணம் : என்---எனின். ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தாழிசையுந் தரவுஞ் சுரிதகமும் அசைநிலைக் கிளவியும் என நான்கு உறுப்பினை யுடைத்து ஒத்தாழிசைக்கலி என்றவாறு.2 தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடக்கை முறையாற் கூறாது தாழிசை முற்கூறிய வகையான் இப்பாவிற்கும் ஒத்தாழிசை சிறந்ததாதலின் முற்கூறினார். முற்கூறுகின்றவழியும் இடைநிலைப் பாட்டே எனக்கூறுதலின் முந்துற்றது தரவு என்றவாறாம்3. இடை நிலைப்பாட் டெனினும் தாழிசையெனினும் ஒக்கும். போக்கெனினும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினு மொக்கும். அடை எனினும் தனிச்சொல் எனினும் ஒக்கும். தனிச்சொல்லைப் பின் எண்ணியவதனான் தாழிசைதோறுந் தனிச்சொல் வரவும் பெறும் என்று கொள்க. (128) பேராசிரியம் : (இ-ள்) மேற்கூறிய ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையுந் தரவுஞ் சுரிதகமுந் தனிச்சொலுமென நான்கு உறுப்பாகப் பயின்றுவரும் (எ-று). பயின்றுவரும் எனவே1 இவ்வாறன்றிப் பயிலாது வருவனவும் இதன் பகுதியாய டங்குவனவும், உளவென்பது. அவை தாழிசைப் பின்னர் எண்ணுறுப்பு வருங்கால் ஐந்துறுப்புப் பெறுதலும் அவற்றிடை அராகம் பெறின் ஆறுறுப்பு வருதலுமென இவை யென்ப;2 அற்றன்று, நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலியின் அராகவுறுப்பும் m«nghju§fîW¥ò« பெற்றுவருவன இன்மையின் அவைபொருளன்றென்பது.3 மற்று நடைநவின்றொழுகு மென்றதென்னை யெனின் இத்துணை பயின்றுவாராது ஏனையொன்றும் என்றற்கென்பது.1 தாழிசையினை இடைநிலைப்பாட்டென்பவோ வெனின், -அவ்வாறுஞ் சொல்லுப; அச்செய்யுள் இடைநிற்றலானென்பது.2 இனி ïilÃiy¥gh£bl‹gJ தாழிசையினை neh¡fhJ; என்னை? தாழம்பட்ட வோசையல்லாதனவும் இடைநிலைப்பாட்டாய் வருமாதலினென்பது.3அது:- காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே (கலி 123) என்பது, தாழிசையெனவும் இடைநிலைப்பாட்டெனவும் படும்.4 இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பால் பின்னொடு கெழீஇய தடவர வல்குல் நுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ (கலி.125) என்றாற்போல்வன தாழிசையல்லாத ïilÃiy¥gh£L.1 இவ்விரு பகுதியுங்கூட்டித் தாழிசையென்னாது இடைநிலைப்பாட்டென்பது இங்ஙனந் தம்முட் பகுதியுடைமையானு மாயிற்று2 ஒத்தாழிசைக் கலி இருவகைத் தென்றற்குப் பயனாந் தோற்றுவாய் செய்து போந்ததென்பது. தரவு என்றதன் பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவதென்ப; அதனை எருத்தெனவுஞ் சொல்லுப; என்னை? உடம்புந் தலையுமென வேறுபடுத்து வழங்கும் வழக்குவகையான் உடம்பிற்கு முதல் எருத்தென்பதாகலின். இனி, இசைநூலாரும் இத் தரவு முதலாயினவற்றை முகம் நிலை கொச்சகம் KÇbad வேண்டுப.3 கூத்தநூலார் கொச்சக முள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரியென மூன்றாக வேண்டுப. அவரும் இக்கருத்திற்கேற்ப முகத்திற்படுந் தரவினை முகமெனவும், இடை நிற்பனைவற்றை இடைநிலை யெனவும் இறுதிக்கண் முரிந்துமாறுஞ் சுரிதகத்தினை முரியெனவுங் கூறினாரென்பது. செந்துறைச் செய்யுள் அடைநிலை பயப்ப தின்மையின் அது சிறந்த தின்றென்று அடக்கி மொழிப.4 உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்குமியல்பிற்றாகலின் அடக்கிய லெனவுங் குறித்த பொருளை முடித்துப் போக்குதலிற் போக் கெனவும் அவையெல்லாம் போதந்து வைத்தலின் it¥bgdî§ கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் thubkdî« எல்லாம் ஒன்றொன்றனை ஒத்தே பெயராயின.1 அடைநிலை யென்பது முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை அடைந்தன்றி வாராது; அது, தனிநின்று சீராதலின் தனிச்சொல்லெனவும்படும்.2 இடைநிலை யுறுப் பென்னாது gh£’bl‹w தென்னையெனின், அவை தாமே பாட்டாயும் வருமிடனுடைய; வருங்கால் அவை ஒன்றும் இரண்டும் பலவுமாய் வருமென்பது.3 இடைநிலைப் பாட்டினைத் தரவிற்கு முற்கூறினான்; அது பெயர் பெறுதலின்; எனவே தரவு முன்வைத்தலே மரபாயிற்று.4 ஒத்தாழிசை கூறிய முறையானே தரவு தாழிசை போக்கென்னும் மூன்றுறுப்பானுஞ் சிறுபான்மை வந்து தனிச்சொலின்றி வருதலின் தனிச்சொல்லினை இறுதிக்கண் வைத்தானென்பது.5 இவை போக்கிச் சொல்லுதும். (123) நச்சினார்க்கினியம் : இது மேற்கூறிய ஒத்தாழிசையிரண்டினுள் ஒன்று தாழிசையுந்1 தரவுஞ் சுரிதகமும் தனிச்சொல்லும் என நான்குறுப்பாகப் பயின்று வருமென்று கூறுவர் புலவர். எ-று. அவ்வாறு பயின்று வருமெனவே இத்துணை ஏனையொன்றும் பயிலாது வருமென்பதாம். செய்யுளிடையே நிற்றலானும், தாழம்பட்ட வோசையன்றியும் வருவனவுங் கோடற்குத் தாழிசையென்னாது பொதுவாக இடைநிலையென்றார். அவை தாமே பாட்டாயும்வருதலும்,அங்ஙனம் வருங்கால் ஒன்றும் பலவுமாயும் வருதலுங் கோடற்குப்பாட்டென்றார். இதனைத் தரவிற்கு முற்கூறினார் ஒத்தாழிசைக்கலியென இதனாற் பெயர் பெறுதலின். இவ்வேறுபட்ட உதாரணங்கள் மேற்காட்டுதும், முகத்துத் தரப்படுதலிற் றரவும் உடம்பு தலையும் வேறு பாடாக வழங்கும் வகையான் உடம்பிற்குக் கழுத்துப்போல் இது முன்னிற்றலின் எருத்தென்றும் பெயர் கூறுப. போக்கிற் கிலக்கணம் மேற்கூறுதும். முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை யடைய நிற்றலின் அடைநிலை. அது தனிநின்றுஞ் சீராகலிற் றனிச்சொல் எனவும்படும். எனவே தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் முறையேவருதல் மரபாம். சிறுபான்மை தனிச்சொலின்றியும் வருதலிற் றனிச்சொல்லை யீற்றிற் கூறினார். ஆய்வுரை : இஃது ஒத்தாழிசைக்கலிவகையுள் ஒன்றாகிய அகநிலை யொத்தாழிசைக் கலியாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறிய ஒத்தாழிசைக் கலியிரண்டனுள் முதற்கண்ணதாகிய ஒன்று, இடைநிலைப்பாட்டு (தாழிசை), தரவு, போக்கு (சுரிதகம்), அடைநிலைக்கிளவி (தனிச்சொல்) என்னும் நான்குறுப்புடையதாகப் பயின்று வரும் எ-று. இங்கு சிறப்புடைமை கருதித் தாழிசை முற்கூறினாரெனும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என இம்முறையால் வருதலே ஒத்தாழிசைக் கலியின் அமைப்பென அறிக. 129. தரவே தானும் நாலடி யிழிபாய் ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே1 இளம்பூரணம் : என்---எனின். தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). தரவு நாலடி யிழிபாகப் பன்னிரண்டடி யுயர்பாக இடைவரும் அடியெல்லாவற்றானும் வரப் பெறும் என்று கொள்க. (129) பேராசிரியம் : இது, தரவின் அடியளவுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்ட தரவுதானும் நான்கடி முதலாய்ப் பன்னிரண்டடிகாறும் வரப்பெறும் (எ-று). எனவே. ஒன்பதுநிலம் பெறுந் தரவென்றவாறாயிற்று.2 உயர்பென் றறையவும் பெறும் என்றதனாற் பன்னிரண்டடியின் இகந்துவரவும் பெறும் சிறு பான்மையெனக்கொள்க. இதனை எடுத்தோதாது இலேசினாற் கொண்டான்;1 பன்னிரண்டடியின் இகந்தன துள்ளலோசையான் வாராமையின்; அது:--- நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார் (கலி-75) என்னும் மருதத்திணைக் கலிப்பாட்டினுட் கண்டுகொள்க. (122) நச்சினார்க்கினியம் : இது தரவிற்கு அளவு2 கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய தரவிற்கு அளவுதான் நான்கடிமுதலாகப் பன்னிரண்டடிகாறும் வரப்பெறும். எ-று. எனவே ஒன்பதுநிலம் பெற்றதாம். உம்மையாற் சிறுபான்மை பன்னிரண்டடியி னுயரவும் பெறும். அது நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொய்ம்மார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு மோரை மகளி ரோதை வெரீஇ யார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க ருயர்மர மேறி யமர்க்கண் மகளி ரலப்பிய விந்நோய் தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று முயர்ந்த போர்வி னொலிநல் லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நாளால் வைகலு மஃதியா னோவேன் றோழி நோவாய் நீயென வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென (கலி-75) இது பதின்மூன்றடியான் வந்தது. ஆய்வுரை : இஃது, ஒத்தாழிசைக் கலியில் வரும் தரவுக்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் தரவாவது, நாலடி சிற்றெல்லையாகப் பன்னிரண்டடி பேரெல்லையாக இடைப்பட்ட எல்லாவடியாலும் வரப்பெறும் எ-று. இழிபு - குறைவு ; சிற்றெல்லை. உயர்பு - நிறைவு ; பேரெல்லை. பாட்டின் முகத்துத் தரப்படுதலின், தரவு என்பது பெய- ராயிற்று. இதனை எருத்து எனவும் வழங்குப. முகத்தில் தரப்படுந் தரவினை முகம் எனவும், இடை நிற்பனவற்றை இடை- நிலையெனவும், இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரிநிலை எனவும் வழங்குவர் கூத்த நூலார். 130. இடைநிலைப் பாட்டே தரவகப் பட்ட மரபின என்ப.1 இளம்பூரணம் : என்---எனின், தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாழிசைகள் தரவிற் சுருங்கிவரும் என்றவாறு.2 தரவகப் பட்ட மரபின என்றதனால் தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாதென்பதூஉம் மூன்றடியானும் இரண்டடி-யானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் ஒத்து மூன்றாகு மொத்தா ழிசையே (செய்யு-137) எனக் கூறுதலானும் இப்பாவினை ஒத்தாழிசைக்கலி யெனக் கூறுதலானுந் தாழிசை ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க. (130) பேராசிரியம் : இது, தரவிற்குச் சுருங்கியன்றித் தாழிசை வாராதென்ப- துணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தரவின் அகப்பட்டது தாழிசை (எ - று). அகப்படுதல் என்பது அகம்புறமென் றிருகூறு செய்தவழி முற்கூற்றினுட் படுதல்1. முன்னென இடவகையுங் காலவகையும் பற்றிய இருகூற்றினுள் யாதானுமொன்று கொள்க. எனவே பதினோரடி முதல் இரண்டடிகாறும் இழிந்துவரப்பெறும் என்ற வாறாயிற்று;2 அது, கருங்கோட்டு நறும்புன்னை மலர்ச்சினை மிசைதொறும் சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற் பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்; காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே; கொல்லேற்றுச் சுறவினங் கடிகொண்ட மருண்மாலை யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மடநெஞ்சே; வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினாற் செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனைநீ யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே; எனவாங்கு, என்லையு மிரவுந் துயிறுறந்து பல்லூழ் அரும்பட ரவலநோய் செய்தான்கட் பெறனசைஇ யிருங்கழி யோதம்போற் றடுமாறி வருந்தினை யளியையென் மடங்கெழு நெஞ்சே (கலி-123) என இது தரவகப்பட்ட மரபிற்றாகித் தாழிசை வந்தது. தரவிற் சுருங்குமென்னாது அகப்படுமென்றான், தரவோடு ஒத்துவருந் தாழிசையென்பதூஉங் கோடற்கு; என்னை? மக்களகத்துப் பிறந்தானென்றவழி அச்சாதியோடொக்கப் பிறந்தானென்பது படுமாகலின்.1 ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடையேபோற் றகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; ஊரல ரெடுத்தார்ப்ப வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண் மற் றுணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி யணிவனப் பிழந்ததன் அணைமென்றோ ளல்லாக்கால்; இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல மிழந்தினி நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்; அதனால், பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளைக் கலிமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே (கலி-124) எனவரும். பன்னிரண்டடியின் இகந்த தரவிற்கும் இவ்வாறே தாழிசை கொள்ளப்படும். மற்று மேற்கூறிய வரையறையில் தாழிசை கூறுகவெனின், ஆண்டு முறைபிறழ வைத்தற்குக் காரணங் கூறிப் போந்தாமென விடுக்க. இனிவருஞ் சூத்திரத்திற்கும் இதுவே விடை; மரபின வென்றதனான் மேலைக்கொண்டும் அடிப்பட வந்த மரபினாற் சுருங்குமென்பது. எனவே, நான்கடியின் உயர வாராவென்பது கொள்க. இன்னும் மரபின வென்றதனாற் சிறுபான்மை ஐந்தடியானும் வருவனவும் உள. அரிதே தோழி நாணிறுப்பா மென்றுணர்தல் என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டினுள், நகைமுத லாக நட்பினு ளெழுந்த தகைமையி னலித லல்ல தவர்நம்மை வகைமையி னெழுந்த தொன்முரண் முதலாகப் பகைமையி னலிதலோ விலர்ம னாயிழை பகைமையிற் கடிதவர் தகைமையி னலியுநோய் (கலி-137) என ஐந்தடியால் தாழிசை வந்தது. ஆறடியான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. மற்று நான் கடியின் இழிந் தோரடியானுந் தாழிசை வருமாலெனின் வாரா தன்றே, இடைநிலைப் பாட்டே என்றாராகலின்; என்னை? பாட்டெனப்படுவன ஓரடியான் வாராமையின்.1 (134) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இ-ள்.) தாழிசையாவது தரவிற் சுருங்கின முறைமையினை-யுடையது. எ-று. அகப்படுதலென்பது அகம், புறமென் றிருகூறு செய்தவழி முற்கூற்றினுடம்படுதல்2 முன், காலமுன்னாம். எனவே ஆறடி முதல் இரண்டடிகாறும் வரப்பெறுமென்று கொள்க.3 மரபின் என்றதனான் நான்கடித்தரவிற்கு நான்கடித் தாழிசைவருதலுங் கொள்க. இவற்றிற் குதாரணம் மேற்காட்டுதும். இதனானே பன்னீரடியிகந்த நீரார் செறுவின் (கலி-75) என்ற தரவிற்கும் எல்லினை வருதி யெவன்குறித் தனையெனச் சொல்லா திருப்பே னாயி னொல்லென விரியுளைக் கலிமான் றேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறைப்ப லென்றும் (கலி-75) எனத் தரவகப்பட்ட தாழிசை வருதல்கொள்க. ஆய்வுரை : இது, தாழிசைக்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்) தாழிசைகள் தரவென்னும் உறுப்பிற் சுருங்கிய அடியினவாய் வரும் எ-று. தாழிசை தரவகப்பட்ட மரபின என்றதனால் தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாது மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதும், ஒத்து மூன்றாகும் ஒத்தாழி சையே எனப் பின்னர்க் கூறுதலால் தாழிசை ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் என்பதும் பெறப்படும். 131. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகும் ஆங்கென மொழிப.1 இளம்பூரணம் : என்---எனின். தனிச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல்2 தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகும் எனச் சொல்லுவர் என்ற வாறு. ஆங்கு அசை தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகு மெனவே, தாழிசைக்கு முன்னர் வருதலும் சிறுபான்மை உளதென்று கொள்க. (131) பேராசிரியம் : இஃது ஆங்கென்னுஞ் சொல் தனிச்சொல் லெனப்படு மென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தாழிசைப் பின்னர் ஆங்கு, தனிச்சொல்லாய் நின்று பயிலும் (எ - று).3 ஆங்கென்னுஞ் சொல்லினை எடுத்தோதினான், அது நடை நவின்றொழுகுமாகலின். ஆங்கென்னுஞ் சொல் பயின்று வரு மெனவே அல்லா தனவும் உள இத்துணைப் பயிலாதனவென்பது கொள்க. ஆங்கு என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் தோன்ற நின்ற சொல்லாகலின் அஃதெல்லாச் செய்யுட்கண்ணுந் தன் பொருண்மைக்கேற்பச் செய்யல்வேண்டும் பிறவெனின், அற்றன்று; அதனை அசைநிலையாகக் கொள்க; அல்லதூஉம், எல்லாச் செய்யுளும் இதன் பொருண்மைக்கேற்பச் செய்யவேண்டு மென்றானை மிகைகூறிப் பயந்ததின்மையானென்பது. அசை நிலைபெய்து செய்யுள் செய்தன் மரபாகலின் அஃதமையுமென்பது. நடைநவிலாதன பொருள்பெற வருமென்பது;1 அவை முன்னர்க் காட்டுதும். (135) நச்சினார்க்கினியம் : இது தனிச்சொற் கிடங் கூறுகின்றது. (இ-ள்.) ஆங்கென்னு மசைச்சொல்லாய் அடைநிலையாகிய சொல் தாழிசையின் பின்னே பயின்றுவரும். எ-று.2 ஆங்கென்னு மசைச்சொல் பயிலுமெனவே அல்லாதன நடை நவிலாதன பொருள்பெற வருதல் பெற்றாம். ஆங்கென ஏழனுருபாய் இடப்பொரு ளுணர்த்திற்றேல் யாண்டும் பொருளுணர்த் தல் வேண்டும்3. அங்ஙனம் நில்லாமையின் அசைநிலையாயிற்று. உதாரண மேற்காட்டுதும். ஆய்வுரை : இது, தனிச்சொல்லாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்று வரும் எ-று. அடைநிலை யென்பது, முன்னும் பின்னும் உள்ள பிறவுறுப்-புக்களை அடைந்தன்றி வாராது ; அது தனிநின்று சீராதலின் தனிச்சொல் எனவும் வழங்கப்படும். கலியில் வருந் தனிச்சொல் ஆங்கு என்னும் அசையாயிருத்தல் வேண்டுமென்பதில்லை ; ஏதேனும் ஒருசொல் தனிச்சொல்லாய் வரலாம் என்ற கருத்தில் அடைநிலைக்கிளவி தாழிசைப்பின்னர் ஆங்கு நடைநவின் றொழுகும், எனப்பொருளுரைத்தற்கும் இடமுண்டு. 132. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே தரவியல் ஒத்தும் அதனகப் படுமே புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே.1 இளம்பூரணம் : என்---எனின். சுரிதக மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்). சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். அது தரவோ டொத்த அளவிற்றாகியும் அதனிற் குறைந்த அளவிற்றாகியும் குற்றந்தீர்ந்த பாட்டி னிறுதிநிலையை உரைத்ததென்றவாறு. தரவியலொத்தலாவது சிறுமை நான்கடி யாகியும் பெருமை பன்னிரண்டி யாகியும் வருதல். அதனகப்படுதலாவது சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல். இச்சூத்திரங்கள் ஓதின முறையானே பாட்டு வருமென்று கொள்க.2 மேல் துள்ளலோசைத்-தாகியும், நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் மிக்கும், சுரிதகம் ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல் வருமெனவுங் கூறிய இலக்கணங்களும் அறிந்து கொள்க. உதாரணம் பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர ஆடெழில் அழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கால் நினைப்பதொன் றுடையேன்மன் அதுவுந்தான்; இது தரவு. தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார் துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை உருப்பறக் கனைதுளி சிதறென இன்னிசை யெழிலியை யிரப்பவும் இயைவதோ; புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய ஆரிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ; ஒளியிழாய் ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின் அளியொரீஇக் காதலர் அகன்றேகு மாரிடை முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ; இவை தாழிசை. எனவாங்கு, தனிச்சொல். செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட்டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமரல் தேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினாள் நிறனோடிப் பசப்பூர்த லுண்டென அறனோடி விலங்கின்றவர் ஆள்வினைத் திறத்தே (கலி. 16) இது சுரிதகம். இது நான்கடித்தரவும் நான்கடியான் மூன்று தாழிசையுந் தனிச்சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் வந்த ஒத்தாழிசைக் கலிப்பா. இதனை நேரிசை யொத்தாழிசைச் கலிப்பா என்ப.1 வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தான் நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந் தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன் ஏனையான் அளிப்பான்போல் இகலிருள் மதிசீப்பக் குடைநிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருண்மாலை; இது தரவு. மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தஎன் எழினலம் எள்ளுவாய் ஆய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போல் தளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலம் கடிகல்லாய்; மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்; இவை தாழிசை. ஆங்க. தனிச்சொல். மாலையு மலரு நோனா தெம்வயின் நெஞ்சமும் எஞ்சுமற் றில்ல எஞ்சி உள்ளா தமைந்தோர் உள்ளும் உள்ளில் உள்ளம் உள்ளுள் உவந்தே. (கலி-118) இது சுரிதகம். இது தாழிசைதோறுந் தனிச்சொற் பெற்றுவந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. வயக்குறு மண்டிலம் என்னும் (கலி.25) கலிப்பாவில் தரவு பன்னிரண்டடியான் வந்தது. இலங்கொளி மருப்பிற் கைம்மா என்னுங் (கலி. 23) கலிப்பாவினுள் இரண்டடியால் தாழிசை வந்தன. உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனும் என்னுங் (கலி. 22) கலிப்பாவில் தாழிசை மூன்றடியான் வந்தன. ஆறறியந்தணர் என்னும் கடவுட்பாட்டினுள்1 மூன்றடிச்-சுரிதகம் வந்தது. இனி, ஏனையடிகளால் வரும் தரவுந் தாழிசையும் சுரிதகமும் கலித் தொகையுட் கண்டு கொள்க.2 (132) பேராசிரியம் : போக்கியல் வகையே வைப்பெனப் படுமே. இஃது, ஒழிந்த சுரிதகம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) போக்கின திலக்கணப்பகுதி வைப்பென்று சொல்லப்படும் (எ - று.) இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியலெனவும் வார மெனவுஞ் சொல்லுப. அடக்கியல் வாரந் தரவோ டொக்கும் என்பவாகலின்; என்ற தென்னோக்கி யெனின், --- போக்குதலும் வைத்தலு மென்னும் இரண்டிலக்கணமுடைத்து, வாரம்எனச் சொல்லின் முடியுமிலக் கணமே கூறுவான்போலப் போக்கினிலக்கணப் பகுதி வைப் பென்றதனைச் சுட்டிக் கூறப்படுமாகலின்.3 (139) நச்சினார்க்கினியம் : இஃது ஒழிந்த சுரிதகம் உணர்த்திற்று. (இ-ள்.) போக்கினதிலக்கணப்பகுதி வைப்பென்று கூறப்படும். எ-று. என்றது போக்குதலும் வைத்தலுமென்னும் இரண்டிலக்கணமுடைத்து. எ-று. செய்யுள் பிறிதொன்றினை யவாவாமற் கடைபோகச்செய், தலிற் போக்கெனவும், முற்கூறிய தரவு தாழிசைகளிற் பொருள்களைக் கொண்டு தொகுத்துவைத்தலின் வைப்பெனவும்படும். எ-று.1 இதனை அடக்கிய லென்றும், வாரமென்று மேற்கூறுவார்; ஆண்டு அப்பொருள்களுமுணர்க. பேராசிரியர் : தரவிய லொத்தும் அதனகப் படுமே புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே. (இதுவுஞ்) சுரிதக முணர்த்துகின்றது. (இ-ள்.) தரவியலொத்தும் அதனகப்படும்---சிறுபான்மை தரவுகளோ டொத்தும் உம்மையான் ஏறியே வருமாயினும் பெரும் பான்மை தரவின்பாகம் பெறுதலை இலக்கணமாக வுடைத்து மேற்கூறிய சுரிதகம். அகப்படும் என்று அதற்கும் உம்மை கொடுத்தமையின்,2 அஃதிலக்கணமாயிற்று; ஆகவே அவ்விலக்கணத்திற் கேற்ற தரவின்கண்ணே ஒத்தலும் உயர்தலும் கொள்க. சுருங்கியவெல்லை, ஆசிரியத்திற்கு இழிந்த வெல்லையாகிய மூன்றடிச்சிறு மையிற் கூறாமையிற் சுருங்காது வருவதாயிற்று.1 ஈண்டும் அகப்படு மெனவே பன்னீரடித்தரவின் பாகமாகிய2 ஆறடியே சுரிதகத்திற்கு உயர்விற்கு எல்லை என்பதூஉம் இழிந்த வெல்லை கூறாமையிற் பன்னீரடித் தரவிற்காய் ஈற்று மூன்றடிச் சுரிதகம் வருதலும், ஒழிந்த கலி நாலிற்கும்3 அவ்வாறே வருதலுங் கூறினானென்பது. இனி, வெள்ளைச் சுரிதகத்துக்கும் இஃதெல்லா மொக்கும். புரைதீர் இறுதிநிலை உரைத்தன்றே என்பது, இடைநிலைப்-பாட்டுப் பொருளினை முடிபுகாட்டியே நிற்கும் அதுதான் என்ற வாறு. இனித் தரவியலொத்தல் ஈற்றயலடி முச்சீராகாது மண்டிலமாகி வருதலுஞ் சிறுபான்மையெனக் கொள்க. இறுதி நிலை யென்பதனை நுனிவிரல் என்றாற்போலக் கொள்க.4 இடைநிலையெனப்பட்டது இடைநிலைப்பாட்டு. அதனிறுதியைக் கூறு மெனவே அவற்றுப் பொருளினை முடித்துவிடுக்கு மென்பதாம்.5 போக்கியல் வகையே வைப்பெனப் படும் என்றவழி உள்ளுறுப்பின் பொருளினைத் தன்கண் வைக்கப்படுவது சுரிதகமென்றதன்றி இன்ன உறுப்பின் பொருள் வைக்கப்படு மென்றிலாதான் முற்கூறியது பொதுவிதி மாத்திரையே யன்றி இடைநிலைப்பாட்டின் பொருளே பெரும்பான்மையும் வைக்கப்படு மென்பதூஉம் பொதுவிதியாற் சிறுபான்மை தரவின் பொருண்மை வைத்தலு முடைத்தென்பதூஉங் கூறினான். தரவியல் என்றதனால் தரவோடொத்த பொருட்கேற்றனவுங் கொள்க.1 நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் (கலி-8) என்பது, தாழிசைப் பொருண்முடிவு தன்பால் வைக்கப்படுதலின் இறுதியுரைத்தது.2 புரைதீ ரிறுதி யென்றதனான் அத்தாழிசைப் பொருளையன்றி அவற்றோடு போக்கியற் பொருள் வந்தக்கால் அவ்விரண்டினையும் புரைபடாமற் பொருந்தச் செய்கவென்பது3 அது, தன்னகர் விழையக் கூடின் (கலி8) எனப் போக்கியற் பொருளோடு புரைதீர்ந்திற்றது; பிறவும் அன்ன. இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன் (கலி-38) என்னுங் குறிஞ்சித்திணைப் பாட்டினுட் கோடுபுய்க் கல்லா துழக்கு நாடன் என்று உள்ளுறையுவமத்தால் தலைவியது விழுமங் கூறினமையின் அதனையு முட்கொண்டு போந்து, சுரிதகத்து, நின்னுறு விழுமங் கூறக் கேட்டு வருமே தோழி நன்மலை நாடன் என வைத்தமையின் அது தரவியலொத்ததாயிற்று; இனி, ஞாலமூன் றடித்தாய (கலி 124) என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டு அளவியலாற் சுரிதக மொத்தது. கருங்கோட்டு நறும்புன்னை (கலி-123) என்பது, தரவிற்கு அடியைந்தாகச் சுரிதகம் நான்கடியாய்ச் சுருங்கி வந்தது; அஃதேல் தரவகப்பட்டதெனச் சுருங்குதலன்றி ஒத்தற் பொருளும் படுமாயின் தரவகப்படும் போக்கென்னாது தரவிய லொத்தும் என்றதென்னையெனின், தரவுமென்ற உம்மையாற் சிறுபான்மை மிக்கு வரவும்பெறும் போக்கென்பது கொள்க.1 பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்க னினைப்பதொன் றுடையேன்மன்ன துவுந்தான் (கலி-16) என்னும் பாலைப்பாட்டுத் தரவுந் தாழிசையும் நான்கடியாகி ஒத்தவழிச், செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வர்மாட் டினையன தெய்வத்துத் திறநோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென அறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே (137) எனச் சுரிதகம் ஐந்தடி யாயிற்று. நச்சினார்க்கினியம் : இதுவுஞ் சுரிதகத்தெல்லை கூறுகின்றது. (இ-ள்) சிறுபான்மை தரவுகளோடொத்தும், உம்மையான் ஏறியும் வருமாயினும் பெரும்பான்மை தரவின்பாகம்பெறுதலை யிலக்கணமாக வுடைத்தாய் வரும். அங்ஙனம் வருமிடத்துப் பெரும்பான்மையும் இடைநிலைப்பாட்டின் பொருளை முடிவு காட்டியே நிற்கும். எ-று. இயலென்றதனாற் றரவின்பொருள்கொண்டு முடியவும் பெறுமென்று கொள்க. சிறுமைக் கெல்லைகூறாமையின் ஆசிரியத்திற்குக்கூறிய மூன்றடியே சிறுமையாம். அகப்படு மெனவே தரவின்பாகமாகிய ஆறடியே உயர்விற்கெல்லை யென்பதூஉம், இழிவிற்கெல்லை கூறாமையிற் பன்னீரடித் தரவிற்காயினு மூன்றடியான்வருமென்பதூஉம், அடிவரையறை யிறந்த தரவிற்கும் இவ்வாறே வருமென்பதூஉங் கொள்க. வெள்ளைச் சுரிதகத்திற்கும் இஃதொக்கும். ஒத்து மென்றலின் ஆசிரியம் மண்டிலமாய் வருதலுங்கொள்க. இறுதியென்றது இடைநிலைப்பாட்டை.1 தரவு மிகத்துள்ளாமற் றாழிசை தாழம்பட்டுவந்த கட்டளைக்கலி வந்துழிக்காண்க. வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றாமை வில்லர் சுரிவளர் பித்தைய மற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி; காழ்விரி சுவையாரம் மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமை முயங்கியு மமையாரென் றாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வகை யெவன்கொ லறியே னென்னும்; முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென் னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்; நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் னொண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுத லெவன்கொ லறியே னென்னும்; ஆங்கு கழிபெரு நல்கலொன் ளுடைத்தென வென்றோழி யழிவொடு கலங்கிய வெவ்வத்த ளொருநாணீர் பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ வொழிகினிப் பெருமநின் பொருட்பிணிச் செலவே (கலி-4) இது மிகவுந் துள்ளிவந்த எட்டடித்தரவுந், தாழம்பட்ட வோசைபெற்றுத் தரவகப்பட்ட மரபினதாகிய நான்கடித் தாழிசை மூன்றும், ஆங்கென்னு மசைநிலைத் தனிச்சொல்லும், தரவின் பாகம்பெற்று நான்கடியா யிறுதிநிலையுரைத்த சுரிதகமும்1 பெற்றுத் தரவினுந் தாழிசையின் நேரீற்றியற்சீரும் பெற்றுவந்த ஒத்தாழிசைக் கலி. நேரீற்றியற்சீர் கட்டளைக்கு வாராமை யுணர்க. ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் துணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்துநீ யணிவனப் பிழந்தத னணைமென்றோ னல்லாக்கால்; இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல னிழந்துநீ நின்றநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்; அதனால் பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தசொல் லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளை நெடுமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே (கலி-124) இது நாலடி யிழிபாகிய நான்கடித்தரவிற்கு மரபென்ற இலேசாற் கொண்ட நான்கடித்தாழிசை தம்முள் அளவொத்து வந்து, நடைநவிலாது பொருள் பெற்ற தனிச்சொல்லும்பெற்றுத் தரவிய லொத்து இறுதிநிலையுரைத்த சுரிதகமும்பெற்ற வொத்தாழிசைக் கலிப்பா. பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறதர் பட்ட வாறுமயங் கருஞ்சுர மிறந்துநீர் செய்யும் பொருளினும் யாமுமக்குக் சிறந்தன மாத லறிந்தனி ராயி னீளிரு முந்நீர் வளிகலன் வௌவலி னாள்வினைக் கழிந்தோர் போற லல்லதைக் கேள்பெருந் தகையோ டெவன்பல மொழிகுவ னாளுங் கோண்மீன் றகைத்தலுந் தகைமே; கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ; ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாளோ; ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ; எனவாங்கு பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளருவம்பெற லுயிரே (கலி-5) இது சிறுமைக்கெல்லைகூறிய ஈரடித்தாழிசையும், ஆசிரியத்திற்குக் கூறிய சிறுமையான் வந்த மூன்றடிச்சுரிதகமும் பெற்றது. இமயவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக வையிரு தலையி னரக்கர் கோமான் றொடிபொலி தடக்கையிற் கைபுகுத் தம்மலை யெடுக்கல் செல்லா துழப்பவன் போல வுறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை நீடிரு விடரகஞ் சிலம்பக் கூஉய்த்தன் கோடுபுய்க் கல்லா துழக்கு நாடகேள் (கலி-38) என்றவிதன் உள்ளுறை உவமத்தாற்றலைவி விழுமங் கூறியதனையு முடன்கொண்டு, சுரிதகத்து நின்னுறு விழுமங் கூறக் கேட்டு வருமே தோழி நன்மலை நாடன் வேங்கை விரிவிட நோக்கி வீங்கிறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே (கலி-38) எனக் கூறுதலின் இயலென்ற இலேசாற் றாவின் பொருள் கொண்டிற்ற சுரிதகம் வந்தது. பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான் என்னு நான்கடித்தரவிற்குச் (கலி-16) செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே (கலி-16) எனச் சுரிதகம் ஐந்தடியான் மிக்குவந்தது. இது ஒத்தும் என்ற வும்மையாற் கொண்டது. அரிதே தோழிநா ணிறுப்பாமென் றுணர்தல் பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே பலவே யாமம் பையுளு முடைய சிலவே யெம்மோ டுசாவு மன்றி யழலவிர் வயங்கிழை யொலிப்ப வலமந் தெழிலெஞ்சு மயிலி னடுங்கிச் சேக்கையு ளழலாகின்றவர் நக்கதன் பயனே; மெல்லிய நெஞ்சு பையுள்கூ ரத்தஞ் சொல்லினா னெய்தமை யல்ல தவர்நம்மை வல்லவன் றைஇய வாக்கமை கடுவிசை வில்லினா னெய்தலோ விலர்ம னாயிழை வில்லினுங் கடிதவர் சொல்லினுட் பிறந்தநோய்; நகைமுத லாக நட்பினு ளெழுந்த தகைமையி னலித லல்ல தவர்நம்மை வகைமையி னெழுந்த தொன்முரண் முதலாகப் பகைமையி னலிதலோ லிலர்ம னாயிழை பகைமையிற் கடிதவர் தகைமையி னலியுநோய்; நீயல னென்றென்னை யன்பினிற் பிணித்துத்தஞ் சாயலிற் சுடுத லல்ல தவர்நம்மைப் பாயிரு ளறநீக்கு நோய்தபு நெடுஞ்சுடர்த் தீயினாற் சுடுவதோ லிலர்ம னாயிழை தீயினுங் கடிதவர் சாயலிற் கனலுநோய்; ஆங்கு அன்னர் காதல ராக வவர்நமக் கின்னுயிர் போத்தரு மருத்துவ ராயின் யாங்கா வதுகொ றோழி யெனையதூஉந் தாங்குதல் வலித்தன் றாயி னீங்கரி துற்றன்றவ ருறீஇய நோயே (கலி-17) இது இடைநிலைப்பாட்டென்றதனாற் றாழம்பட்ட வோசையின்றி வந்த இடைநிலைப்பாட்டு ஐந்தடியான்வந்தது. ஆறடியான்வருவன வந்தவழிக் காண்க. இன்னரிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற் பின்னொடு கெழீஇய தடவர லல்கு னுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ (கலி. 125) இதுவுந் தாழிசையல்லா இடைநிலைப்பாட்டு. காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சசே (கலி.123) இது தாழிசையெனவும், இடைநிலைப்பாட்டெனவும்படும். இடைநிலைப் பாட்டாய்த் தனியேவருவன கொச்சகமென்றுணர்க. வெள்ளைச்சுரிதகத்தான் முடிவனவும் வந்துழிக்காண்க. புரை தீ ரென்றதனாற் றாழிசைப்பொருளேயன்றி அவற்றோடு போக்கியற் பொருளுங்கொண்டு புடைபடாது1 வருவனவுங் கொள்க. அது அரசினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவரோ (கலி.8) என முடித்தலின் நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று (கலி-8) எனத் தாழிசைப்பொருளைக் கொண்டு, பின்பு மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பி நன்னகர் விழையக் கூடி னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே (கலி-8) எனப் போக்கியற் பொருளையும்1 கொண்டிற்றது. பிறவுமன்ன. ஆய்வுரை : இது, சுரிதகம் ஆமாறுணர்த்துகின்றது. (இ-ள்) போக்கியல் வகையாகிய சுரிதகம் வைப்பு எனவும் வழங்கப்படும். அது தரவோடு ஒத்த (அடி) அளவினதாகியும் அதனிற் குறைந்த (அடி) அளவினதாகியும் குற்றந்தீர்ந்த பாட்டின் முடிந்தபொருள் நிலையை யுரைத்துவரும் எ-று. தரவியல் ஒத்தலாவது, சிறுமை நான்கடி, பெருமை பன்னிரண்டடியாகி வருதல். அதன் அகப்படுதலாவது சிறுமை மூன்றடியாலும் இரண்டடியாலும் வருதல். சுரிதகமாவது, உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கிக் கூறுதலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், அவையெல்லாம் தன்கண் வைக்கப்படுதலின் வைப்பு எனவும் முற்கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் வழங்கப்படும். 133 ஏனை யொன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே. இளம்பூரணம் : என்---எனின். சொல்லாதொழிந்த ஒத்தாழிசைக்கலிப்பா உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) ஒத்தாழிசைக்கலிப்பா முன்னிலையிடத்துப் தேவரைத் பரவும் பொருண்மைத்து என்றவாறு.1 (133) பேராசிரியம் : இஃது, ஒழிந்த ஒத்தாழிசை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து (எ-று). எனவே, இஃது அகநிலைச்செய்யுளாகாதென்றான்: இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை யெனப்படும்.2 மற்றிது, வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே (தொல்.செய்.109) என்றவழிச் சொல்லப்பட்டதாமெனின், அஃது உறழ்கலிக்கும் வெண்கலிக்குங் கொச்சகக்கலிக்கும் பொதுவாகலின் அவற்றுக்குத் தேவபாணி விலக்கினானென்பது. மற்று முன்னிலைக்கணென்ற தென்னையெனின்;-தெய்வத் தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டனவன்றி அல்லன தேவ பாணியெனத் தகாவென்பது; என்னை? யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வமென்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி நின்னைக் காப்பேன்; நீ வாழிய வெனத் தெய்வஞ் சொல்லிற்றாகச் செய்யுள் செய்தலும் ஆகாது, வாழ்த்தினுள் அவ்வா றுண்டாயி- னென்பது இதனானே படர்க்கையும் விலக்கினானாம். ஆகவே, தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலைவாழ்த்தாவதன்றித் தேவர்ப்பராயிற்றாகாது பாட்டுடைத் தலைவனோடு கூட்டிச் சொல்லினு மென்றானாம். இங்ஙனங் கூறவே, பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாக்காலுந் தேவர்ப்பராயிற்றேயாம், முன்னிலையாயினென்பது பெற்றாம்.1 மற்றிவை பாடல்சான்ற புலனெறிவழக்கிற்கன்றித் தேவர்ப்பராயதற்கும் உரியவோ வெனின், ஆண்டு அகப்பொருட்குரிமையுடையன கலியும் பரிபாடலுமென்ற தனானே அத்துணையன்றிக் கடவுள்வாழ்த்துப் பொருள்படவும் வருமென்பது ஈண்டுக் கூறினானாமென்பது அதுவன்றே ஏனையது எனச் சிறுமைதோன்றப் பிற்கூறிய தென்பது.2 (138) நச்சினார்க்கினியம் : இஃது ஒழிந்த ஒத்தாழிசை கூறுகின்றது. (இ-ள்.) ஒழிந்த வொத்தாழிசை முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து. எ-று. எனவே, இது அகநிலைச் செய்யுளாகாதென்பதூஉம், முன்னையது அகநிலைச் செய்யுளாமென்பதூஉம் பெறுதும். முன்னிலைக்கண் வருமெனவே முன் நாற்பாவிற்குமுரித்தென்ற வாழ்த்தியல் நான்குகலிக்கு மெய்திற்றேனும் அவை தேவபாணி யாகவாயிற்று. அங்ஙனம் பராவினும் படர்க்கையாயவழிப் புறநிலைவாழ்த்தேயாம். பாட்டுடைத் தலைவனைக் கூறினு மென்பது பெறுதும்;1 எனவே பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாவிடினுந் தேவர்ப்பராயிற்றேயாம்; முன்னிலை யென்பது பெற்றாம்.2 கலிப்பாப்புலனெறி வழக்கேயன்றிச் சிறுபான்மை கடவுட்பராஅய பொருளானும் வருமென்றற்கிதனைப் பிற்கூறினார். தெய்வந்தானே நின்னை யான்காப்பேனெனக்கூறும் உலகவழக்கம் ஆகாதென்றுணர்க.3 ஆய்வுரை : இது, முற்குறித்த ஒத்தாழிசைக் கலிவகை யிரண்டினுள் ஏனையொன்றாகிய இரண்டாம் வகையாமாறு இதுவெனவுணர்த்து கின்றது. (இ-ள்) ஒத்தாழிசைக் கலிவகை இரண்டனுள், இரண்டாம் வகையினதாகிய செய்யுள், முன்னிலை யிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மையினை யுடையது எ-று. எனவே, இஃது அகநிலை யொத்தாழிசை யாகாதெனவும், முற்கூறிய ஒன்றே அகநிலை யொத்தாழிசை யெனப்படும் எனவும் கூறுவர் பேராசிரியர். தேவரைப் பராவும் பொருண்மைத்தாகிய இது, முன்னிலைக்கண் வருமெனவே, முன் வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே யெனச் சொல்லப்பட்ட வாழ்த்தியல் கலிப்பாவகை நான்கிற்கும் எய்திற்றேனும் அவை தெய்வத்தை முன்னிலையாகச் சொல்லப்பட்டன அன்மையின் தேவபாணி ஆகாவாயின. யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்னதெய்வம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி, நின்னைக் காப்பேன்; நீ வாழிய எனத் தெய்வஞ் சொல்லியதாகச் செய்யுள் செய்தலும் ஆகாது. தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தாவதன்றித் தேவர்ப்பராயிற்றாகாது. இங்ஙனம் கூறவே அகநிலை யொத்தாழிசைக் கலியல்லாத ஒழிந்த ஒத்தாழிசைக்கலி முன்னிலைக்கண் வரு வதாயின் தேவர்ப்பராவுதலாகிய பொருளிலேயே வரும் என்பது பெறப்படும். 134 அதுவே, வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே. இளம்பூரணம் : என்---எனின். மேற்சொல்லப்பட்ட முன்னிலைப் பரவலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தேவரிடத்து முன்னிலைப்பரவ லாகிய அதுதான் வண்ணகமெனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும் என்ற வாறு.1 (134) பேராசிரியம் : இஃது அதன்வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏனையொன் றெனப்பட்ட ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசையெனவும் ஒருபோகெனவும் இரண்டாம் (எ-று) இதன் பயன்:- ஒத்தாழிசை யெனப்படாது இவற்றுளொன்- றென்பது அறிவித்தவாறாயிற்று: அஃதென்னை பெறுமாறெனின், மேல் ஒத்தாழிசைக்கலி இருவகைத்தாகுமென்றான்; பின்னர் அவ்விரண்டனுள் ஒன்றற்கு வண்ணகம் ஒருபோகென வேறு பெயர் கூறவே முன்னரதே ஒருதலையாக ஒத்தாழிசைக்கலி யெனப்படுவ தென உய்த்துணர வைத்தமையானும், ஏனையொன் றென வேறுபடுத்தமையானும் அப்பெயரும் உடன்கூறாது போதந்து வைத்தமையானும் அதனோடு ஓரினத்தவல்லவென்பது பல வாற்றானுங் கொள்ளவைத்தானென்பது;2 அஃதேல், வண்ணகமும் ஒத்தாழிசை யெனப்படாதாம் பிறவெனின், -அது மாற்றுதற்கனறே வண்ணகம் முற்கூறிய அதிகாரம்பட வைப்பானாயிற்றென்பது.1 இக்காலத்தார் ஒருபோகினையும் ஒத்தாழிசையென்று தாழிசை பெய்து காட்டுப.2 எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் ணடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (தொல். செய். 153) என்புழித் தாழிசையுறுப்பு ஓதாமையின் அது பொருந்தாது (139) நச்சினார்க்கினியம் : இஃது ஏனையொன்றென்ற பெயர்த்தாழிசை.3 வண்ணக- வொத்தாழிசையெனவும், ஒருபோகெனவு மிரண்டாம். எ-று. இதன்பயன் :- இவற்றுள் ஒருபோகு ஒத்தாழிசையெனப் பெயர்கூறப் பெறாதென்பதாம். அது அகநிலையொத்தாழிசையை முற்கூறிப் பின் சிறுபான்மைதோன்ற ஏனையொன்றெனவுங்கூறிப் பின்னரு முற்கூறிய வொத்தாழிசையைச்சேர வண்ணகத்தை வைத்துப் பின் ஒருபோகென வேறுபட வைத்ததனாலும், அதனிலக்கணங்கூறுகின்ற எருத்தே கொச்சகம் (செய்-153) என்னுஞ்சூத்திரத்துத் தாழிசையுறுப்புப் பெறுமெனக் கூறாமையானு முணர்க. இக்காலத்தார் ஒருபோகினையும் ஒத்தாழிசையென்னுந் தாழிசை பெய்துகாட்டுவர்; அது தொல்காப்பியனார் கருத்தன்மை யுணர்க.4 ஆய்வுரை : இது, தேவர்ப்பராயதன் வகையுணர்த்துகின்றது. (இ-ள்) தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான் வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும் எ-று. தரவினாலே தெய்வத்தினை முன்னிலையாக அழைத்து நிறுத்தித் தாழிசையாலே வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் என்னும் பெயர்த்தாயிற்று. 135. வண்ணகம் தானே தரவே தாழிசை எண்ணே வாரமென் றந்நால் வகையில் தோன்று மென்ப. இளம்பூரணம் : என்-எனின். வண்ணக வொத்தாழிசைக்கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணக ஒத்தாழிசையாவது தரவும் தாழிசையும் எண்ணும் சுரிதகமும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுப்பினையும் உடைத்து என்றவாறு.1 (135) பேராசிரியம் : இது, முறையானே வண்ணக வொத்தாழிசை யுணர்த்து கின்றது. (இ-ள்) தரவுந் தாழிசையும் எண்ணும் வாரமுமென்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணக வொத்தாழிசையாம் (எ-து). அது, முதற்றொடை பெருகிச் சுருங்குமன் னெண்ணே (தொல்-செய்-145) என்றவழிக் காட்டுதும், வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப்படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலை யாகத் தந்து நிறீஇப் பின்னர்அத் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின் ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினுஞ் சிறந்தஉறப்பு இதுவென்க;1 எனவே, அகநிலைச் செய்யுட்டாழிசை வண்ணித்து வாராவென்பதாம். எண்ணுறுப்பாமாறு முன்னர்ச் சொல்லுதும். அவ்வெண்ணுறுப்புத் தான் நீர்த்திரைபோல வரவரச் சுருங்கிவருதலின் அம்போதரங்க மெனவும் அமையுமாகலின் அதனை அம்போதரங்க வொத் தாழிசைக் கலிப்பா வெனவுஞ் சொல்லுப.2 இனி t©zfbk‹gJ, muhfbkd உரைத்து அவ்வுறுப் படையன வண்ணகவொத்தாழிசை யெனவுஞ் சொல்லு வாரும் உளர்.3 எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது முன்னூலாதலின் இவரொடு மாறுபடுதல் மரபன்றென kW¡f.4 இசை நூலுள்ளும் மாறுபடின் அஃது அவர்க்கும் மரபன்றென்பது. மற்று இதற்குத் தனிச் சொல்லோதிய தில்லையாலெனின் அதனை அதிகாரத்தாற் கொள்க1 நச்சினார்க்கினியம் : இது முறையானே வண்ணகங்கூறுகின்றது. (இ-ள்) வண்ணகவொத்தாழிசைதான் தரவுந் தாழிசையும் எண்ணுறுப்பும் சுரிதகமுமென் றெண்ணிய நான்குமுறைமையாற் றோன்றும். எ-று. தனிச்சொல்லையும் அதிகாரத்தாற்கொள்க. தரவினாற் றெய்வத்தை முன்னிலையாகநிறுத்தித் தாழிசையாற் றெய்வத்தை வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகமாயிற்று. ஒழிந்தவுறுப்பான் வண்ணிப்பினும் அதற்குச் சிறந்தவுறுப் பிதுவேயாம்; எனவே அகநிலைச்செய்யுளுட் டாழிசை வண்ணித்துவாராவாயிற்று. எண்ணுறுப்பு மேற்கூறுப. உதாரணமு மேற்காட்டுதும். அவ்வுறுப்பு2 நீர்த்திரைபோன் முறையே சுருங்கிவருதலின் அதனை யம்போதரங்க வொத்தாழிசையென்றும், வண்ணக மென்றதனை அராகவுறுப்பாக்கி யவ்வுறுப்புடையது வண்ணகவொத்தாழிசையென்றுங் கூறு வாருமுளர். இது3 பின்னுள்ளோர் கூறிய நூற்கெல்லா முதனூதலின், தொல்காப்பியனாரை மாறுபடுதல் மரபென்றென்க. ஆய்வுரை : இது, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா ஆமாறுணர்த்து கின்றது. (இ-ள்) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, தரவு, தாழிசை எண், வாரம் எனச் சொல்லப்பட்ட அந்நான்குறுப்பினையுடை யதாகத் தோன்றும் எ-று. எண்ணுறுப்பு என்பது நீரின்கண் எழும் அலைபோன்று வரவரச் சுருங்கி வருதலின் அதனை அம்போதரங்கம் எனவும் கூறுவர். 136. தரவே தானும், நான்கும் ஆறும் எட்டும் என்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். இளம்பூரணம் : என்---எனின். தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குத் தரவு நான்கும் ஆறும் எட்டுமாகிய அளவடியினாலே வரும் என்றவாறு. ஈண்டு நேரடி என்றது கொச்சகத்தரவுபோல வாராமைக்கு என்று கொள்க. சொல்லப்பட்ட ஒன்பதடியினும் மூன்றடியே இதற்கு வருவ தென்றவாறாயிற்று.1 (136) பேராசிரியம் : இஃது, ஒத்தாழிசையுள் ஏனையொன்றற்குத் தரவு வேறு பட்ட இலக்கணத்திற்றாகலான் அது கூறுகின்றது. (இ-ள்) இது நான்கு முதல் பன்னிரண்டடி யீறாக வாராது. தேவபாணிக்காயின் எட்டும் ஆறும் நான்குந் தரவடியாம் (எ-று) இதனானே தலையளவும் இடையளவுங் கடையளவு மென் பன கூறினானாம்.2 இங்ஙனங் கூறவே ஒழிந்தவுறுப்பிற்குந்3 தலையிடை கடையென்பது கொள்ளப்படும் நேரடி பற்றிய நிலைமைத் தாகும் என்பதனை அளவடியான் வருமென்றற்குக் T¿dhdhbk‹ ghUKs®; அற்றன்று; பிற அடி மயங்குவனவும் அளவடி யுரியவென்பதும் முன்னர்க் கூறப்பட்டமையின்; மற்றென்னை கருதியதெனின்,---சமநிலையின்றி வியநிலை வாராவென்பது.1 இனிப் பற்றிய வென்ற மிகையானே முற்கூறிய தரவுந் தாழிசையும் அளவடியான் வருதலில்லையென்பது கொள்க.2 வருகின்ற ஒத்தாழிசைக்கும் பேரெண்ணிற்குஞ் சிற்றெண்ணிற்கும் இஃதொக்கும்.3 (141) நச்சினார்க்கினியம் : இஃது ஏனையொன்றற்குத் தரவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) தரவுதானும் நான்குமுதற் பன்னிரண்டடியிறுதி யாகவாராது; தேவபாணிக்காயின் எட்டும் ஆறும் நான்கு மென்ற சமநிலையைப்பற்றிய நிலைமைத்தாய் வரும். எ-று. இதனாற் றலையளவு, இடையளவு, கடையளவுகளாம். ஒழிந்தவுறுப்பிற்கு மிகைகொள்க. நேரடிபற்றியவென்றதற்கு அளவடியென்ப தீண்டுக் கூறவேண்டாமையிற் சமநிலையானன்றி வியனிலையான்வாராவென்பதே பொருளாயிற்று4 ஆய்வுரை : இது, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவில் வரும் தரவிற்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்) வண்ணகத்திற்குரிய தரவு, நான்கும் ஆறும் எட்டும் என நேர்ந்த அளவடிபற்றிய நிலைமையினை யுடையதாகும் எ-று. ஈண்டு நேரடி என்றது, நான்கு, ஆறு, எட்டு என இவ்வாறு இரட்டைப்படவரும் அடியினை. இவ்வாறு இரட்டைப்பட ஒத்து வருவனவற்றைச் சமனிலை யெனவும் ஒற்றைப்பட்டு ஒப்பின்றி வருவனவற்றை வியனிலை யெனவும் வழங்குவர். எனவே வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவுக்குரிய தரவு நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப்பட வரும் அடிகளால் வரும் என்பதும் ஐந்து, ஏழு, ஒன்பது என இவ்வாறு ஒற்றைப்படவரும் அடிகளால் வாராது என்பதும் பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்தாகும். 137. ஒத்துமூன் றாகும் ஒத்தா ழிசையே தரவிற் சுருங்கித் தோன்று மென்ப.1 இளம்பூரணம் : என்---எனின். தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. இச்சூத்திரம் இறந்தது காத்தது என்று கொள்க.2 (இ-ள்.) தாழிசையுந் தம்முள் அளவு ஒத்து மூன்றாகி வரும். அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்றவாறு. (137) பேராசிரியம் : ஒத்துமூன் றாகு மொத்தா Êirna. இது, முறையானே ஒத்தாழிசை உணர்த்துகின்றது. (இ-ள்.) தம்மின் ஒத்த அளவினவாகலும் ஒத்த பொருள வாகலுமுடைய தேவபாணிக்கண் மூன்றாக வரும் ஒத்தாழிசை (எ-று). இவை பொருள் ஒக்குமெனவே, முன்னை அகநிலையொத் தாழிசைக்கண் வரும் இடைநிலைப்பாட்டிற் பொருள் ஒவ்வாது வருதலுஞ் சிறுபான்மை யுண்டென வறிக; அவை, கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் புவ்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ (கலி-5) என இடத்தியல் பொருளொழிய இடப்பொருளோடு உவமங் கூறினான்.1 ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ என இடப்பொருளொழிய இடத்தியல் பொருளோடு2 உவமங் கூறினமையின் வேறுபட்டன. ஒத்து வருவன முன்னர்க் காட்டினாம். (142) தரவிற் சுருங்கித் njh‹Wbk‹g. பேராசிரியம் : இஃது, ஐயம் அறுத்தது; அகநிலை யொத்தாழிசைகட்குப் போலத் தரவோடொத்து வருங்கொலென் றையுறாமைத் தரவிற் சுருங்கித்தோன்று மென்றமையின். (இ-ள்.) மூவகை வண்ணகத்தின்3 தாழிசையுஞ் சமநிலைத் தரவிற் சுருங்கித் தோன்றும்(எ-று) வாளாதே தரவென்றமையின் இடையளவின்மேற் செல்லும்; அடியென்றவழி, அளவடிமேற்றாயது போலவென்பது1 தோன்று மென்பதனான் இடைநிலையாகிய நான்கடியானும் மூன்றடி யானுமன்றி ஐந்தடியானாகாதென்பது கொள்க.2 எண்ணோடு தொடர்தலின் இரண்டடியாகாதென்பது பெற்றாம்.3 இடை- யளவு தரவிற் சுருங்குமெனவே கடையளவு தரவினுந் தாழிசை சுருங்குமென்பது உய்த்துணரப்படும்.4 இங்ஙனங் கூறாக்கால் ஓரடி முதலாகத் தாழிசைகோடல் வேண்டுமஃதன்றோவென்பது. தோன்றுமென்றதனாற் கடையளவினை ஒழித்து மற்றைத் தரவு இரண்டளவாகக் கொள்வாமெனக் கொள்க.5 (143) நச்சினார்க்கினியம் : இஃது தாழிசை கூறுகின்றது. (இ-ள்.) பொருளும் அளவுந் தம்முளொத்து மூன்றாய்வருந் தேவபாணிக்கண் வருந் தாழிசை. எ-று. இவை பொருளொக்குமெனவே அகநிலையொத்தாழிசைக் கண் வருந்தாழிசை சிறுபான்மை பொருளொவ்வாது வருதல் பெற்றாம். கல்லெனக் கவின்பெற்ற (கலி-5) என்னுந்தாழிசையை இடப்பொருளோடு உவமைகூறி உ-ம். ஓரிரா வைகலுள் (கலி-5) என்னுந் தாழிசையை இடத்தியல் பொருளோ டுவமை கூறிய-வாறுணர்க.1 நச்சினார்க்கினியம் : ஈது முன்னர்வந்த வொத்தாழிசைபோற் றாழிசை தர-வோடொத்து வாராவென ஐயமகற்றியது. (இ-ள்) எட்டும் ஆறும் நான்குமென்ற வண்ணத்தின்2 றாழிசையுஞ் சமநிலைத்தரவிற் சுருங்கித்தோன்றும். எ-று. வாளாதே சுருங்குமென்றாரேனும் தோன்றுமென்றதனாற் றரவின் பாதியாகிய நான்கடியு மூன்றடியுமே தனக்குப் பெருமைக்குஞ் சிறுமைக்கு மெல்லையென்றுகொள்க. ஈரடியிரண்டும் வந்து தொடர்தலின்3 நான்கடித்தரவின் பாகமாகிய ஈரடித்தாழிசை யாகாதாயிற்று. இங்ஙனங் கூறாக்கால் ஏழடிப் பெருமையாகத் தாழிசை கோடல்வேண்டும். இதனாற் கூறிய நான்கடியானு மூன்றடியானுமன்றி ஐந்தடியானு மிரண்டடியானும் வாரா தென்பதாயிற்று. ஆய்வுரை : இஃது ஒத்தாழிசைக்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்) தேவபாணிக்கண் மூன்றாக அடுக்கிவரும் ஒத்தாழிசை தம்முள் ஒத்த அளவினவாதலும் ஒத்த பொருளினவாதலும் உடைய. அவை தரவிற் சுருங்கித் தோன்றும் எ-று. இதனை இரண்டு சூத்திரமாகக் கொண்டு உரைவரைந்தார் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 138. அடக்கியல் வாரம் தரவோ டொக்கும். இளம்பூரணம் : என்---எனின். சுரிதகம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அடக்கியலாகிய சுரிதகம் தரவோடொத்த இலக்- கணத்த தென்றவாறு.1 (138) பேராசிரியம் : இது, சுரிதக விலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தரவொடு ஒத்துவரும் அடக்கியல்வாரம் (எ-று). அடக்கியல் வாரமென்பது அடக்கும் இயல்பிற்றாகிய வார மென்றவாறு.2 நிறுத்த முறையானே எண்ணுறுப்புணர்த்தாது மயங்கக் கூறியவதனானே தனிச்சொல் வருஞான்று எண்ணீற்றினுஞ் சுரிதகத்து முன்னும் புணர்க்க.3 அடக்கியலென்றான், முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத் தடக்கி நிற்றலின்.4 வாரமென்றான், தெய்வக்கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலினென்பது.5 (144) நச்சினார்க்கினியம் : இது சுரிதகத்தெல்லை கூறுகின்றது. (இ-ள்.) அடக்கியல்பிற்றாகிய சுரிதகந் தரவோடொக்கும். எ-று. முன்னர்ப் பல்வகையாற் புகழ்ந்த தெய்வத்தினை யொரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியலாயிற்று. தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் வாரமாயிற்று.1 நிறுத்தமுறையானே எண்ணுறுப்புணர்த்தாது மயங்கக் கூறியவதனானே தனிச்சொல்வருங்கால் எண்ணீற்றுப்-பின்னுஞ் சுரிதகத்தின் முன்னும் புணர்க்க. ஆய்வுரை : இஃது, சுரிதகம் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அடக்கியலாகிய வாரம் தரவோடு ஒத்த இலக்-கணத்தது எ-று. அடக்கும் இயல்பிற்றாகிய வாரம் என்றது சுரிதகத்தினை. முன்னர்ப் பல வகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் எனவும், தெய்வத்தைப் புகழ்ந்த அடிகளைவிட மக்களைப் புகழ்ந்த அடிகள் மிகுமாதலின் வாரம் எனவும் சுரிதகத்திற்கு ஆசிரியர் பெயர் கூறினார் என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 139. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. இளம்பூரணம் : என் - எனின். எண்ணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப் பின்றொடுக்கும் உறுப்புச் சுருங்கிவரும் என்றவாறு.2 அதனை இரண்டடியான் வருவன இரண்டும், ஓரடியான் வருவன நான்கும், சிந்தடியான் வருவன எட்டும், குறளடியான் வருவன பதினாறும் எனப் பிறநூலாசிரியர் உரைப்பர்1 இவ் வாசிரியர்க்கு வரையறையிலவாம். (139) பேராசிரியம் : இஃது, எண்ணுறுப்பாமா றுணர்த்துகின்றது. (இ - ள்.) முதல் பெருகியவழி முதலெண் (எ - று).2 தொடை யென்றதனால் தலையெண் இரண்டு அளவடி யான் ஒரு தொடையாகி வருமெனவும் பெருகி யென்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்ட அதுவே பற்றி முதல் பெருகிய வென்றதனான் ஒழிந்த எண்ணுத்தொடை பெறுதலும் நேர்ந்-தானாம்.3 இதனை முதலெனவே வழிமுறை வருவனவும் எண்ணளவென்பது பெற்றாம்.4 அவை இத்துணையென்பது அறியு மாறென்பதென்னை? முதற்றொடை பெருகி யென்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்டி, அதுவே பற்றிச் சுருங்கு மென்றமையின் ஈரடியிற் சுருங்கி ஓரடியாதலும், ஒரடியிற் சுருங்கி இருசீராதலும், இருசீரிற் சுருங்கி ஒருசீராதலும் கொள்ளப்படும்.5 முதலடி இன்ன தென்றிலனாயினும் அளவடியே கொள்ளப்படும்; நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (தொல்-செய். 32) என்றானாகலின்.1 ஆகவே, இருசீரெனப்பட்டது குறளடியாயினும் இவை இரண்டு தொடர்ந்தன்றி எதுகையாய், அமையாமையிற் குறளடியென்னானாயினா னென்பது ஒருசீர்க்கும் அளவடிப்- படுத்துத் தொடைகோடலொக்கும்; என்னை? போரவுணர்க் கடந்தோய் நீ புணர்மருதம் பிளந்தோய்நீ நீரகல மளந்தோய்நீ நிழறிகழைம் படையோய்நீ எனவும், ஊழிநீ; யுலகுநீ; யுருவுநீ; யருவுநீ; யாழிநீ; யருளுநீ; யறமுநீ; மறமுநீ; (பக்கம். 333) எனவும் அளவடிப்படுத்தே தொடை கொள்பவாகலின்.2 அஃதேல், ஒருசீரினுஞ் சுருங்கப்பெறாதோவெனின் கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாராவாகலின் இவனும், பிறநூன் முடிந்தது தானுடம் படுதல் என்னும் உத்திவகையான் ஒருசீரிற்சுருங்குதல் நேரானென்பது.3 மற்று வழிமுறையாற் பாகஞ் சுருங்குதல் பெறுமாறென்னை யெனின், வகார மிசையு மகாரங் குறுகும் (தொல்-எழுத்.புள்ளி.35) என்றாற்போல மேலைக்கொண்டும் வருகின்றவாற்றாற் பாகமே சுருங்குதல் பெறலாமென்பது.1 மன்னென்பது, ஆக்கத்தின்கண்ணும் வந்ததாகலிற் சுருங்கிப் பலவாமென்பது கொள்க.2 எனவே, இரண்டடி யிரண்டும், ஓரடி நான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகி எண் பல்குமென்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்;3 ஆகவே, ஒழிந்த எண் மூன்றும்4 தலையெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணு மென மூன்றுங் கூடியே எண்ணென்றறற்குரியவாயின. இது நோக்கிப் போலும் எண்ணென்று அடக்காது. சின்ன மல்லாக் காலை (தொல்-செய்-146) என ஒருசீரினை வேறுபடுத்து மேற்கூறுகின்றதென்பது.5 இனி, அளவடியினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்குமென்றமையின், அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோ வழிச் சின்னமெனப்படும். இனி, அல்லாதார் ஈரடியிரண்டினைப் பேரெண்ணெனவும், ஓரடி நான்கினைச் சிற்றெண்ணெனவும், கடையெண்ணினை இடையெண்ணெனவும், ஒருசீரான் வருவனவற்றை அளவெண்ணெனவுஞ் சொல்லுப.6 அளவடியாக நோக்கிப் பேரெண் சிற்றெண்ணென்றலுஞ் சின்னம்பட்டவழி இடை நின்றது இடையெண்ணாதலும் எல்லை யளவைத்தாகிய சின்னம் அளவெண்ணாதலும் அமையும். அவற்றுள் இருசீரினை முச்சீராகவும், ஒருசீரினை இருசீராகவும் அலகுவைப்பினும் அதனை, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல்.சொல்.11) என்பதனான் மறுக்க.1 இதற்குச் செய்யுண் முன்னர்க் காட்டுதும். (145) நச்சினார்க்கினியம் : இஃது எண்ணுறுப்பாமாறுணர்த்துகின்றது. (இ-ள்.) எண்ணாவது முற்படப்பெருகிய2 வழிமுறையாற் சுருங்கிவரப்பெறும்.3 எ-று. தொடையென்றதனான் ஒழிந்த எண்களுந் தொடை பெறுதலும் நோக்காராயிற்று.4 முற்படவெனவே பிற்படச் சில வருமென்பது பெற்றாம் பெருகி யென்றதனான் ஈரடியானிரண்டை நாட்டி, வழிமுறை சுருங்கி வருமெனவே ஈரடியிற்சுருங்கி யோரடியாய், ஓரடியிற்சுருங்கி யிருசீராயும், இருசீரிற் சுருங்கி யொருசீராயும் ஒன்றற்கொன்று பாகமே சுருங்குதல் கொள்க. நாற்சீர்கொண்ட தடியெனப்படும் (செய்-32) என்றலின் அளவடியேகொள்க. இருசீரான்வருவன இரண்டிணைந்து அளவடியாதற் கேற்பத் தொடை கொண்டு சுவடுபட நிற்றலானும், ஒருசீரான்வருவனவும் நான்கிணைந்து அளவடியாதற்கேற்பத் தொடைகொண்டு சுவடுபடநிற்றலானும் அவையும் அளவடிக்க ணடங்கிற்று. மன் ஆக்கமாதலிற் சுருங்கியும் பலவாதல் கொள்க. ஈரடியும் ஓரடியும் இருசீரும் ஒருசீருமாய்ச் சுருங்கிவாராநிற்கவும் இரண்டிற்கு நான்கும், நான்கிற்கு எட்டும், எட்டிற்குப் பதினாறுமாய் ஒன்றற்கொன்று உறுப்புவகையான் இரட்டிக்கு மெனக்கொள்க. இருசீர்வருவன குறளடியெனப்படுதலின் மேற் சின்னமென்பன அடியினடங்காவொரு சீரேயாயிற்று. ஆகவே இதனையொழிந்தஎண் மூன்றும் நான்குமாய்த்1 தலையெண், இடையெண், கடையெண் எனவும்படுதல் நோக்கி மேல் எண்ணுஞ் சின்னமும் எனப் பிரித்தோதுப. இருசீரும் ஒருவழிச் சின்னமெனவும்படும். இனி ஈரடியிரண்டினைப் பேரெண்ணெனவும், ஓரடி யதனிற்குறைதலிற் சிற்றெண்ணெனவும், இவற்றிற்கும், பின்வருஞ்சின்னத்திற்கும் இடையேநிற்றலின் இருசீரை இரண்டிடையெண்ணெனவும்.2 முடிவிற்கு அளவாய்நிற்குஞ் சின்னத்தினை அளவெண்ணெனவும் பெயர்கூறினுமமையும். இருசீரினை முச்சீராக்கியும் ஒருசீரினையிருசீராக்கியும் அலகு வைப்பின் அதற்கசையுஞ் சீரும் இசையொடு சேராமையுணர்க. ஆய்வுரை : இஃது எண் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) எண் என்பது, முதலில் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின்னர்த் தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வருவது எ-று. எனவே, இரண்டடியிரண்டும் ஓரடி நான்கும், இருசீர் எட்டும் ஒருசீர் பதினாறும் ஆகி எண் பல்கும் என்பது, இருசீர் குறளடி யெனவுங் கூறப்படுதலின் ஒருசீரான் வருவன சிற்றெண் எனவே கூறப்படும். ஆகவே ஒருசீரல்லாத ஏனை எண்கள் மூன்றும் முறையே தலையெண், இடையெண், கடையெண் என ஒருங்கு எண்ணப்பெற்றன. இது நோக்கியே ஒருசீரினைச் சின்னம் என வேறுபடுத்துரைப்பர் ஆசிரியர். இனி அளவடியினை அடிப் படையாகக் கொண்டே அதனிற் சுருங்கி வரும் எண்ணுறுப்புக் கொள்ளப்படுதலின் அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்னம் என்பர் பேராசிரியர். சின்னம்- சிறியது; சிற்றெண். 140. எண்ணிடை ஒழிதல் ஏதம் இன்றே சின்னம் அல்லாக் காலை யான. இளம்பூரணம் : என்--எனின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட எண் ஒரோவொன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது. தனிச்சொல் இல்லாத வழி யென்றவாறு.1 எனவே, சொல்லப்பட்ட உறுப்புக்கள் தனிச்சொல் வருவழி இடை யொழியாமல் வருதல் வேண்டுமென்றவாறு. தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்புடைத்தாயிற்று. இனித் தனிச்சொல்லின்றி எண்ணிடையிட்டவழி ஒரு போகெனப் பெயர் பெறும்.2 உதாரணம் கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு சுனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய அழல்வளை சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்; இது தரவு. முரசதிர் வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோட் போர்மலைந்த மறமன்னர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலம்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; கலியொலி வியனுலகங் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்பொடு மறம்பிதிர எதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்தலின் சினமாமோ; படுமணி இனநிரை பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவில் இறுத்ததுநின் இகலாமோ; இவை மூன்றுங் தாழிசை. இலங்கொளி மரகதம் எழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம்; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை; இவை பேரெண். கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுடர் உறுபகை தணித்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய அடியினை; இவை அளவெண், போரவுணர்க் கடந்தோய் நீஇ புணர்மருதம் பிளந்தோய் நீஇ நீரகலம் அளந்தோய் நீஇ நிழல் திகழ்ஐம் படையோய் நீஇ இவை இடையெண். ஊழிநீஇ, உலகுநீஇ, உருவுநீஇ, அருவுநீஇ. ஆழிநீஇ, அருளும்நீஇ, அறமும்நீஇ மறமும்நீஇ; இவை சிற்றெண். எனவாங்கு. தனிச்சொல். அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வேல் அச்சுதன் தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோ னெனவே. இது ஆறடிச் சுரிதகம். இவ்வாறு வருவதனை ஒருசாராசிரியர் அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவெனக் கூறுப, (140) பேராசிரியம் : இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று; சின்னவெண்ணொன்று மொழிந்து நில்லாவிடத்து (எ-று). எனவே, சின்னவெண்ணொழியாது மூவகையெண்ணும் ஒழிதலுஞ், சின்னவெண்ணொழிய மூவகையெண்ணும் பெறுதல் பெரிதும் சுவையுடைத்தென்றவாறாயிற்று. இதனானே எண்ணொழி- தல் என்னாது. இடை யென்றதனால் தலையெண்ணும் இடையெண்ணு மல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியுங் குறைந்து வருமென்பதுங் கொள்க. மூவகையெண்ணுஞ் சின்னமும் பெற்று வருதல் சிறப்புடைமை, ஏதுமின் றென்றதனாற் பெறுதும்.1 அவை வருமாறு:- (உ-ம்) மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப் பணிதயங்கு நேமியும் பானிறத்த சுரிசங்கும் இருசுடர்போ லிருகரத்தி லேந்தியமர் மாயோனும் பங்கயத்தி லுறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர் செந்தழற்கண் ணுதலோனுந் தேருங்கா னீயென்பார்க் கவரவர்த முள்ளத்து ளவ்வுருவா யல்லாத பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயாய் அளப்பரிய நான்மறையா னுணர்த்துதற் கரியோனே (எட்டடித்தரவு.) எவ்வுயிர்க்கு முயிரேயா யியங்குதனின் றொழிலாகி யவ்வுயிர்க்க ணடங்கியே யருளாது நிற்றலினால் வெவ்வினைசெய் தவையிழந்து வெம்பிறவிக் கடலழுந்த அவ்வினையை யகற்றாம னிற்பதுநின் னருளன்றே; பல்லுயிரும் படைப்பதுநின் பண்பென்றே பகலினால் வல்வினையின் வலைப்பட்டு வருத்தங்கூ ருயிர்தம்மை நல்வினையே யயில்வித்து நடுக்கஞ்செய் தவைநீக்கி அல்லல்வா யழுந்தாம லகற்றுவது மருளன்றே; அழிப்பதுநின் றொழிலென்றே யறைந்தாலு முயிரெல்லா மொழித்தவற்றுள் ளுணர்வுகளை யொருவாம லுடனிருத்திப் பழிப்பின்றிப் பலகாலு மிப்பரிசே பயிற்றுகலின் அழிப்பதுவு மில்லையா லாங்கதுவு மருளன்றே (நான்கடித்தாழிசை.) வேழ்வி யாற்றி விதிவழி யொழுகிய தாழ்வி லந்தணர் தம்வினை யாயினை; வினையி னீங்கி விழுத்தவஞ் செய்யு முனைவர் தமக்கு முத்தி யாயினை (ஈரடியிரண்டு.) இலனென விகழ்ந்தோர்க் கில்லையு மாயினை; யுளனென வுணர்ந்தோர்க் குளையு மாயினை; அருவுரு வென்போர்க் கவையு மாயினை; பொருவற விளங்கிய போத மாயினை; (ஓரடிநான்கு) பானிற வண்ணனீ; பனிமதிக் கடவுணீ; நீனிற வுருவுநீ; நிறமிகு கனலிநீ; யறுமுக வொருவனீ; யானிழற் கடவுணீ; பெறுதிரு வுருவுநீ; பெட்பன வருவுநீ (இருசீரெட்டு) மண்ணுநீ; விண்ணுநீ, மலையுநீ கடலுநீ; எண்ணுநீ; எழுத்துநீ; இரவுநீ; பகலுநீ; பண்ணுநீ; பாவுநீ; பாட்டுநீ; தொடருநீ; அண்ணனீ; அமலனீ; அருளுநீ; பொருளுநீ (ஒருசீர்பதினாறு) ஆங்க (தனிச்சொல்) இனியை யாகிய விறைவனின் னடியிணை சென்னியின் வாங்கிப் பன்னாள் பரவுதும் மலர்தலை யுலகின் மன்னுயிர்க் கெல்லாம் நிலவிய பிறவியை நீத்தல் வேண்டி முற்றிய பற்றொடு செற்ற நீக்கி முனிமை யாக்கிய மூவா முத்தியை மயலற வளித்தநின் மலரடி அரிய வென்னா யுரிதினிற் பெறவே (சுரிதகம்) இஃது, எட்டடித்தரவும், தரவின் பாகம்பற்றிய நான்கடித் தாழிசை மூன்றும், ஈரடியிரண்டும், ஓரடிநான்கும், இருசீரெட்டும் ஒருசீர் பதினாறுமாகிய நால்வகையெண்ணுந், தனிச்சொல்லும் எட்டடிச்சுரிதகமும் பெற்ற தலையளவு வண்ணகப் பெருந் njtghÂ. பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்திப் புலியுரிமேற் பைத்தலைதாழ் பூங்கச்சை விரித்தமைத்துக் கண்கவருந் திருமேனி வெண்ணூலின் கவின்பகைப்பத் தண்கமழ்பூந் தாரிதழித் தலைமலைந்து பிறைதயங்க மொழிவலத்தான் மயங்காதே முறுவலாற் றோலாதே விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுணர்வழியக் கலிகெழு கடற்கச்சிக் கமழிளந் தேமாவி னொலிதளிரு முலைச்சுவடுமுடன்பிறப்ப வுலவுங்கால் (எட்டடித்தரவு) நீறேறுந் திருமேனி நெடும்பகலே நிலவெறிப்ப ஏறேறிக் கடைதோறு மிடுபலிக்கு வருதிரால் ஏறேறி யிடுபலிக்கு வரும்பொழுது மிடைபிரியாக் கூறேறும் பசும்பாகங் கொள்ளுமோ கொள்ளாதோ; நாணாக மடந்தையர்பாற் பலிக்கென்று நடந்தக்காற் பூணாகந் தழீஇக்கொளினும் பொங்காது போலுமாற் பூணாகந் தழீஇக்கொளினும் புகையுயிர்த்துப் பொங்காத கோணாகம் யாந்தருபால் குடிக்குமோ குடியாதோ; பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீர்வருங்காற் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ (இது தரவின் பாகம்பற்றிய நான்கடித்தாழிசை) எரிகல னிமைக்கு மிடவயிற் றொடிக்கை பரிகல மேந்தும் பரிசிறந் ததுகொல்; உமையவள் விலக்கவு மொலிகட னஞ்ச மிமையவர் தம்மை யிரந்துகொண் டதுகொல் (ஈரடி இரண்டு) இடையெழு பொழில்கட்கு மிமைப்பளவிற் கொல்லேறே; கடைதொறு மவைநிற்பக் கற்பித்த வாறென்கொல்; இரப்புநீர் வேட்டதுகேட் டிமையவரென் பட்டனரே; பரப்புநீர்க் கங்கையே படர்சடையிற் கரந்ததே (ஓரடிநான்கு) பூண்டன வென்பு; புனைவது தும்பை; ஆண்டன பூதம்; அறைவது வேதம்; இசைப்பன பல்பேய்: எழீஇயது வீணை; அசைப்பன வேணி; அதிர்வன பொற்கழல் (இருசீரெட்டு) எனவாங்கு (தனிச்சொல்) எல்வளை மகளி ரிடுபலி நசைஇப் பல்கடை திரிதருஞ் செல்வநிற் பரவுதுங் கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப வடதிசை வாகை சூடித் தென்றிசை வென்றி வாய்த்த வன்றாள் வளவன் இமிழிசை வேங்கடம் போலத் தமிழகத்து நாவலொடு பெயரிய ஞாலங் காவல் போற்றி வாழிய நெடிதே (சுரிதகம்) இஃது எட்டடித் தரவுந் தரவிற்சுருங்கிய ஒத்தாழிசை மூன்றுஞ் சின்னமல்லா மூவகை எண்ணுந் தனிச்சொல்லுந் தரவோடொத்த அடக்கியல் வாரமும் பெற்று வந்தது. ஆயிரங் கதிராழி யொருபுறத்தோன் றகலத்தான் மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த மனக்கமல மலரினையு மலர்த்துவான் றானாதல் இனக்கமல முணர்த்துவபோன் றெவ்வாயும் வாய்திறப்பக் குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக் கடவுளர்த முறங்காத கண்மலரே கரிபோக வாரிருளும் புலப்படுப்பா னவனேயென் றுலகறியப் பாருலகத் திருள்பருகும் பருதியஞ் செல்வகேள் (தரவு) மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய் விண்டலத்திற் கடவுளரை வெவ்வேறு வழிபடுவா ராங்குலக முழுதுபோர்த் திருவுருவி னொன்றாக்கி யாங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்; மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய் நின்னுருவத் தொடுங்குதலா னெடுவிசும்பிற் காணாதா ரெம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவா யம்மீனை வெளிப்படுப்பாய் நீயேயென் றறியாரால்; தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைக டலைத்தேய்ந் துவாமதிய நின்னொடுவந் தொன்றாகு மென்றுணரார் தண்மதியி னின்னொளிபுக் கிருளகற்றாத் தவற்றாற்கொ லம்மதியம் படைத்தாயு நீயேயென் றறியாரால்; (தாழிசை) நீராகி நிலம்படைத்தனை நெருப்பாகி நீர்பயந்தனை ஊழியிற் காற்றெழுவினை ஒளிகாட்டி வெளிகாட்டினை (இருசீர் நான்கு) கருவாயினை விடராயினை கதியாயினை விதியாயினை உருவாயினை அருவாயினை ஒன்றாயினை பலவாயினை (ஒரு சீரெட்டு) என வாங்கு (தனிச்சொல்) விரிதிரைப் பெருங்கட லமிழ்தத் தன்ன வொருமுதற் கடவுணிற் பரவுதுந் திருவொடு சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித் துன்பந் தொடரா வின்ப மெய்திக் கூற்றுத் தலைபனிக்கு மாற்றல் சான்று கழிபெருஞ் சிறப்பின் வழிவழி பெருகி நன்றறி புலவர் நாப்பண் வென்றியொடு விளங்கி மிகுகம்யா மெனவே. (சுரிதகம்) என்பது, எட்டடித்தரவுந் தாழிசையும் இருவகைச் சின்னமுந்1 தனிச்சொல்லுந் தரவோடொத்த சுரிதகமும் பெற்றுவந்த தலையளவு வண்ணகப் bgUªnjtghÂ.2 சின்னமெனவே இருசீரெட்டும் ஒருசீர் பதினாறும் அடங்கு மென்றாராகலின், இது சின்னமல்லாக்கால் எண்ணிடையிட்டு வந்த t©zfbth¤jhÊirahƉW. இனி, இருசீருமன்றி ஒருசீர் பதினாறாகிய சின்னவெண் பெற்று வருமது வருமாறு: உறைபதியி னுடனயனை யுந்தியாற் படைத்தோயு மறைகடல்சூழ் நிலமுதலா யனைத்துலகும் புரப்போயுந் திருநிறமே கரிபோகத் திருமேகம் பயந்தோயு மொருநிறமே நிறமாக வொள்ளெரியை யுயிர்த்தோயு மறுவத்து மார்பென்ன மலர்மகளை வைத்தோயு நிறத்தோடு நெஞ்சொத்த நிலமடந்தை கணவனுநீ (தரவு) பின்னமா யொன்றாகும் பெருமாயை யியற்றுவா யின்னமா யந்தெளிய வெமக்கருளி யிமையவர்க்கு மன்னமாய் முன்னொருகா லறம்பயந்த வரனுநீ; குறியாதும் பிழையாத குலமறைய மதன்மயக்கி வெறியாதி மலரோற்கு வெளிப்படுத்து வேறுபடுத் தறியாத மறையெமக்கு மறிவித்த வறிவனீ மாணாத மதிகொடுத்து வானவரை மயக்கியுங் கோணாத மதிவாங்கிக் கொடுத்தருளி யடியவர்க்குக் காணாத மதிகாட்டுங் கருணைகூர் காட்சியைநீ; (மூன்றுந் தாழிசை) வானுநீ; நிலனுநீ; மதியுநீ; விதியுநீ; தேனுநீ; அமிழ்துநீ; திருவுநீ; அருவுநீ; அன்புநீ; அருளுநீ; ஆதிநீ; அந்தநீ; இன்பநீ; துன்பநீ; இன்மைநீ; உண்மைநீ; (ஒரு சீர்ச்சின்னம்) என வாங்கு, (தனிச்சொல்) நால்வகை யுருவிற் பால்வே றாகிய கால முதல்வநிற் பரவுது ஞாலத்து நல்லவை யல்லவை யெல்லா நினாஅது செல்வ நோக்கி னெய்தி(ய) வல்லிதிற் றுயரொடு தொல்வினை நீங்கிப் பெயராச் சுற்றம் பெறுகம்யா மெனவே (சுரிதகம்) எனவரும். இதனுள் தரவுந் தாழிசையும் ஒருசீர்ச் சின்னமுந் தனிச் சொல்லுஞ் சுரிதகமும் வந்தவாறு கண்டுகொள்க. கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் ... ... ... ... ... ... ... ... ... ... .... ... ஒன்றுபு திகிரி யுருட்டுவோ னெனவே (சுரிதகம்) (விளக்கத்ததனார் பாடல்1) இது நால்வகை எண்ணினுள்2 இறுதிநின்ற எண்ணிரண்டுஞ் சுருங்கிவந்தது. பிறவும் அன்ன. (146) நச்சினார்க்கினியம் : இஃது மேலதற்கோர் புறனடை. இ-ள். முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று, சின்ன வெண்ணொன்று நில்லாதவிடத்து.3 எ-று எனவே, சின்னவெண்ணொழியாது மூவகையெண்ணும் ஒழிதலும், சின்னவெண்ணொழியுமிடத்து மூவகையெண்ணும் ஒழியாதுவருதலுஞ் சுவையுடைத்தாயிற்று. இடையென்றதனாற் றலையெண்ணு மிடையெண்ணுமல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியுங் குறைந்துவருதலுங் கொள்க. மூவகை யெண்ணுஞ் சின்னமும் பெற்றுவருதல் சிறப்புடைமை ஏதமின் றென்பதனாற் பெறுதும். உ-ம் மணிவிளங்கு திருமார்பின் மாமலரான் வீற்றிருப்ப ... ... ... ... ... ... யரிய வென்னா யரிதினிற் பெறவே4 இஃது எட்டடித்தரவுந் தரவின்பாகம்பற்றிய நான்கடித்தாழிசை மூன்றும், ஈரடியிரண்டும், ஓரடிநான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகிய நால்வகையெண்ணுந் தனிச்சொல்லும், எட்டடிச்சுரிதகமும்பெற்ற தலையளவு வண்ணகப் பெருந் தேவபாணி. பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்தி .. ... ... ... ... காவல் போற்றி வாழிய நெடிதே1 இஃது ஒருசீர்ச்சின்ன மொன்றுமொழித் தல்லனவெல்லா முற் கூறியவுதாரணம் போல வந்தன. ஆயிரங் கதிராழி யொருபுறந்தோன் றகலத்தான் ... ... ... ... வென்றியொடும் விளக்கி Äகுகம்யாbமனவே2ïJ குறைந்த இருவகைச்சின்னமும்பெற்று ஒழிந்த எண்ணிடையிட்டு அவ்வாறே வந்தது. உறைபதியி னுடனயனை யுந்தியினாற் படைத்தோயும் ... ... ... ... ... ... ... ... ... ... பெயராச் சுற்றம் பெறுகம்யா மெனவே3 இது ஆறடித்தரவும், மூன்றடித்தாழிசை மூன்றும், ஒருசீர்ச் சின்னம் பதினாறும், தனிச்சொல்லும், ஆறடிச்சுரிதகமும் பெற்றுவந்த இடையளவு வண்ணகத்தேவபாணி. கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்த ... ... ... ... ... ... ... x‹WòÇ திகிரி யுருட்டுவோ னெனவே4 இது இருசீர் நான்கும் ஒருசீரெட்டும்பெற்று வந்தது. இதனுட் போரவுணர்க் கடந்தோய்நீ யென்பதனை முச்சீராக்கியும், ஊழிநீ யென்பதனை யிருசீராக்கியும் பின்னுள்ளோர் காட்டுதல் பொருந்தாமையுணர்க. ஆய்வுரை : இஃது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட எண்கள் (அம்போதரங்க வுறுப்புக்கள்) ஒரோவொன்று இடையில் இல்லாது ஒழிதல் குற்றமாகாது. சின்னம் என்பதொன்றும் ஒழிந்து நில்லாத பொழுது எ-று. எண் ஒழிதல் என்னாது, இடையொழிதல் என்றதனால், தலையெண்ணும் இடையெண்ணும் அல்லாதன எட்டு நான் காகியும் பதினாறு எட்டாகியும் குறைந்து வருதல் கொள்க. மூவகை யெண்ணும் சின்னமும் வருதல் சிறப்புடைமை ஏதம் இன்று என்பதனாற் பெறப்படும். வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவில் எண் என்னும் உறுப்பினை யடுத்துச் சின்னம் என்ற உறுப்பு இல்லாதொழியின் அது வண்ணக வொத்தாழிசை யெனப்படாது; எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றியும் (செய்-) எனப் பின்னர்க் கூறுமாறு கொச்சகவொருபோகு எனப்பெயர் பெறும் என்பது இதனாற் புலனாகும். இங்குச் சின்னம் என்றதனைத் தனிச்சொல் எனக் கொள்வர் இளம்பூரணர். ஒருசீர் இருசீர் ஆகவரும் எண் எனக் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 141. ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும். இளம்பூரணம் : என்---எனின். ஒருபோகு பாகுபடுமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு போகென்னும் கலி இரண்டு வகைப்படும் என்றவாறு.1 (141) பேராசிரியம் : இஃது ஒத்தாழிசை இரண்டனுள்1 ஏனையொன்றனை வண்ணக வொத்தாழிசை ஒருபோகென இருவகைத் தென்றான்2 அவற்றுள் ஒருபோகின்வகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒருபோகும் இருவகைத்தாகும் (எ-று). உம்மை, இறந்ததுதழீஇய எச்சவும்மை3 இதனது பயம்; ஓருறுப்பு இழத்தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும் நிகழ்கின்ற உறுப்புத் தம்மின் வேறாதல் அறிவித்தலென்பது;4 அது முன்னர்ச் சொல்லுதும். (147) நச்சினார்க்கினியம் : இஃது ஒத்தாழிசையிரண்டனுள் ஏனையொன்றனை வண்ணகம், ஒருபோகென இருவகைத்தென்றது; அவற்றுள் ஒருபோகும் இருவகைத்தா மென்கின்றது. உம்மை யிறந்ததுதழீஇய எச்சவும்மை.5 இ-ள். ஒருபோகின் இயல்பும் இரண்டுகூறாம். எ-று. இதன்பயன் ஒருபோகின்றிக் கொச்சகம் அம்போதரங்க மென்னும் பெயர்வழங்கினு மமையுமென்றவாறாயிற்று.6 ஆய்வுரை : இஃது ஒருபோகின் வகை உணர்த்துகின்றது. (இ-ள்) ஒத்தாழிசை யிரண்டனுள் இரண்டாவதாகிய ஏனை யொன்றினை வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் பகுத் துரைக்கப்பட்ட இரண்டனுள் ஒருபோகும் இருவகைத்தாகும் எ-று. ஒருபோகு என்ற தொடர், ஓர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள்படுவதாகும். ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குக் கூறிய உறுப்புக்களுள் ஓருறுப்பு இழந்தமையால் ஒருபோகு எனப்பெயராயிற்று. ஓருறுப்பு இழத்தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும் எனப் பேராசிரியர் கூறுதலால் இதன் பெயர்க் காரணம் ஒருவாறு புலனாகும். கொச்சகம் ஒருவழிவாராதது கொச்சகவொருபோகு எனவும், வண்ணகப் பகுதிக்குரிய எண்ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒருவழி இல்லாதது அம்போதரங்கவொருபோகு எனவும் பெயர் எய்தின. 142. கொச்சக ஒருபோ கம்போ தரங்கமென் றொப்ப நாடி உணர்தல் வேண்டும். இளம்பூரணர் : என் --எனின் என்பதுமது. (இ - ள்.) ஒரு போகென்னும் கலி கொச்சகவொருபோகு எனவும் அம்போதரங்க மெனவும் பொருந்த நாடியறிதல் வேண்டும் என்றவாறு.1 பேராசிரியம் : இது, மேல்வகுக்கப்பட்ட இரண்டற்கும் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ - ள்.) கொச்சகவொருபோகும் அம்போதரங்கவொரு போகுமென இரண்டாக உணரப்படும் அவை (எ-று). கொச்சகம் இழத்தலிற் கொச்சக வொருபோகாயிற்று. வண்ணக மொருபோ கென்றவழி ஒன்றேயாகி நின்ற கொச்சகம் ஒருவழி வாராமையின், அது கொச்சக வொருபோகாம்.1 இனி ஏனையொன்றெனப்பட்ட ஒன்றனுள் வண்ணகப்பகுதிக் குரிய எண்ணுறுப்பு ஒருவழியின்றியெனப் பிறந்த அன்மொழித்தொகை.2 அம்போதரங்க வொருபோகு என்பதுமது;3 ஒருபோகென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி. இடையீடில்லாத நிலத்தினை xUnghbf‹gthfÈ‹ அஃது ஒப்பினாகிய பெயர்.4 ஒருபோ கென்பதனைத் திரிகோட்டவெளி யென்றது போலக் கொள்க.5 (148) நச்சினார்க்கினியம் : இஃது மேல் வகுத்த இரண்டற்கும் பெயரும் முறையுங் கூறுகின்றது. இ-ள். கொச்சகவொருபோகு அம்போதரங்கவொருபோகு என்றிரண்டாகப் பெயர்கொடுத்துப் பொருந்த ஆராய்ந்துணரப் படும். அவை.எ-று. கொச்சக வுடை போலப் பெரும்பான்மையுந் திரண்டுவருவது கொச்சகமெனவும், பல வுறுப்புக்களு முறையே சுருங்கியும், ஒரோவழிப் பெருகியும், முடுகியுங் கடைக்கண் விரிந்து நீர்த்- தரங்கம்போறலின் அம்போதரங்க மெனவுங் கூறினார். இவையும் ஒத்தாழிசைப் பகுதி யென்பார் போக்கிய வொத்தாழிசை யானே ஒருபோகென்றாரெனக் கொள்க.1 அம்போதரங்கவொருபோ கென்பது மது. ஒருபோகென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி.2 இடை யீடில்லா நிலத்தினை யொருபோ கென்ப வாகலின்அது ஒப்பினாகியபெயர். ஒருபோகென்ற தனைத் திரிகோட்டவெளி என்றது போலக் கொள்க. (139) ஆய்வுரை : இது, மேல்வகுக்கப்பட்ட இரண்டற்கும் பெயரும் முறையும் கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்த ஒருபோகினைக் கொச்சகவொரு போகு எனவும் அம்போதரங்கவொருபோகு எனவும் பொருந்த ஆராய்ந்து உணர்தல் வேண்டும். எ-று. 143. தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகும் என்ப. இளம்பூரணம் : என்--எனின், நிறுத்த முறையானே கொச்சகவொருபோகு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது - தரவு முதலாயின உறுப்புக்களுள், தரவின்றித் தாழிசை முதலிய வுறுப்புக்கள் பெற்றும் என்றவாறு. தாழிசை பெற்றும் என்றதனால் தரவுதாமே வரினும் கொச்சக வொருபோகு ஆகுமென்று கொள்க.1 தாழிசையின்றித் தரவுடைத்தாகியும் என்பது---தாழிசையின்றித் தரவு முதலியன உடைத்தாகியும் என்றவாறு. தரவுடைத்தாகியும் என்றதனால் தாழிசை தானேவரினும் என்று கொள்க.2 எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் என்பது - எண்ணாகிய உறுப்புக் களையிடையிட்டுத் தனிச்சொல் வாராதொழியினும் என்றவாறு. சின்னம் என்றதனால் எண்ணின்கண் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் என்றுமாம்.3 அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது---சுரிதக-மின்றித் தரவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும் என்றவாறு யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது---ஒத்தாழிசையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்குரித்தாக ஓதப்பட்ட கடவுள் வாழ்த்துப் பொருண்மையின்றிக் காமப் பொருளாக வரினும் என்றவாறு.4 கொச்சக வொருபோகாகும் என்ப என்பது --- இவ்வகையினாற் சொல்லப்பட்டன கொச்சக வொருபோகெனக் குறிபெறும் என்றவாறு. எனவே, ஒத்தாழிசைக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர்பெறும் என்று கொள்க.1 அவற்றுள் தரவின்றாகித் தாழிசை பெற்று வந்ததற்குச் செய்யுள்:- நிரைதிமில் களிறாகத் திரையொலி பறையாகக் கரைசேர் புள்ளினத் தஞ்சிறை படையாக அரைசுகால் கிளர்ந்தன்ன வுரவுநீர்ச் சேர்ப்பகேள்; இது நான்கடியாகி வாராமையின் தாழிசை யாயிற்று. கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன் எச்சத்துள் ஆயினுமஃ தெறியாது விடாதேகாண்; கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமாற் சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன் வாள்வாய்நன் றாயினும்அஃ தெறியாது விடாதேகாண்; இவை யிரண்டும் தாழிசை. ஆங்கு, தனிச்சொல். அனைத்தினிப் பெரும அதனிலை நினைத்துக்காண் சினைஇய வேந்தன் எயிற்புறத் திறுத்த வினைவரு பருவரல் போலத் துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே (கலி-149) இது சுரிதகம். என வரும். தாழிசை தாமேயும் வரும். தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்குச் செய்யுள்; செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுர முள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற வினி; இது தரவு. செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர் அவலம் படுதலும் உண்டு. (கலி. 19) இது சுரிதகம். தாழிசையுந் தனிச்சொல்லு மில்லை. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியவதற்குச் செய்யுள்: மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்அல்குந் துறைவகேள்; இது தரவு. ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; இவை எண். ஆங்கதை அறிந்தனிர் ஆயினென் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் நின்தலை வருந்தியாள் துயரஞ் சென்றனை களைமோ புண்கநின் தேரே (கலி. 133) இது சுரிதகம். அடக்கிய லின்றி யடிநிமிர்ந்தொழுகல் வருமாறு: பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் அருளில் சொல்லும் நீசொல் லினையே நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி நின்னிற் பிரியலென் அஞ்சலோம் பென்னும் நன்னர் மொழியும் நீமொழிந் தனையே அவற்றுள், யாவோ வாயின மாஅன் மகனே கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும் அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாள் மடவோள் அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே (கலி 21) எனவரும். (143) பேராசிரியம் : இது, முறையானே கொச்சகவொருபோ குணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணிய இந்நாற்பகுதியான் வந்தும் அமையாது பின்னரும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைத்தாகி வருவது கொச்சகவொருபோகாம் (எ-று). தரவின் றாகித் தாழிசை பெற்றும் என்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசைபெற்று மென்றவாறு. அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி முதலாயின எனக்கொள்க என்றார்க்கு, அவை தாழிசையாயன்றி வாராமையின் தாழிசையாயு மென்றெழுதுஞ் சூத்திரமெனின் அங்ஙனங் கூறில் தரவொடுவருந் தாழிசையிலக்கணத்தவாம் இவையுமென்றஞ்சித் தரவொடுபட்ட தாழிசையன்றிப் புறத்துள்ளன என்றற்கு அது விலக்கினானென்பது;1 எனவே, இவை ஒத்துமூன்றாதலும் ஒரு பொருண்மேல் வருதலுங் தாழம்பட்ட ஓசையவேயாதலும் பயிலுமென்பதூஉஞ் சொல்லினானாயிற்று. அங்ஙனஞ் சொல்லிய வதனானே பரணியுளெல்லாம் இரண்டடி யானே தாழம்பட்ட ஓசை விராய்வருதலும் முடுகிவருதலும் பெறுதும். இனித் தாழிசை மூன்றாகியவழி மூன்றடியானும் நான்கடி யானும் வரும். இனிப், பத்தும் பன்னிரண்டுமாகி ஒரு பொருண் மேல்வரும் பதினான் கடியின் ஏறாது வருதலும்2 அங்ஙனம் வருங்கால் தாழ்ந்த ஓசை பெற்றும் பெறாதும் வருதலும், அவையும் இருசீர் முதலாக எண்சீரளவும் வருதலுமென்றின்னோரன்ன பகுதி யெல்லொம் அவ்வரையறையின்றித் தழுவப்பட்டன. அஃதேல் அவற்றைத் தாழிசையென்ற தென்னை யெனின், பெரும்பாலும் தாழம்பட்ட ஓசைய வாகலினென்பது; என்றார்க்குத் தரவு விலக்கியதனான் எண்ணுஞ் சுரிதகமும் விலக்குண்ணாவாம் பிறவெனின்,---அற்றன்று; தாழிசைப்பேறு விதந்தோதவே ஒழிந்தன விலக்குண்ணுமென்பது1 மற்றுத் தாழிசை பெறுவதி யாதோ வெனின், --- கொச்சக வொருபோகெனப் பொதுவகையாற் செய்யுளெனக் கொள்க. அது நோக்கிப் போலும் பலவுமெண்ணி, யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது, என்று ஒருமை கூறுவானாயிற்றென்றுணர்க; அஃதேல், இரண்டடி யான் வருந் தாழிசை பேரெண் ணாகாவோவெனின், அது வன்றே முதற்றொடை பெருகினன்றி எண்ணெனலாகாமையினென்பது. இவை வருமாறு ; உளையாழி யோரெழு மொருசெலுவி னொடுங்குதலான் விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே என்றாற்போலப் பரணிச்செய்யுளுட் பயின்று வருமென்பது. இவ்வாறு பல தாழிசை தொடர்பொருளவாகலின், அவற்றைப் பல அடுக்கிவரினுந் தாழிசையாமெனவே, இதற்கு வாராவெனப்பட்ட கொச்சகந் தாழிசையின்றி வெண்பாவாகி வருமென்பது உய்த்துணரப்படும்.2 என்னை ? வெண்பாவினான் (வஞ்சி) பரிபாடலுட் கொச்சகம் வருமென்றமையின்.3 பஃறாழி சைக் bfh¢rfbkdî« அமையும். அவை சிலவருவன சிஃறாழிசைக் bfh¢rfbkd¥gL« ; பிறவும் அன்ன. மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய்வருதலின், அது தேவபாணியாமென்ற தென்னையெனின்4, அவையெல்லாங் காடுகெழூ செல்விக்குப் பரணிநாட்கூழூந் துணங்கையுங் கொடுத்து வழிபடுவதொரு வழக்குப்பற்றி அதனுட் பாட்டுடைத்தலைவனைப் பெய்து சொல்லப்படுவனவாதலான் அவையெல்லாவற்றானுந் தேவபாணியேயாமென்பது;1 என்றார்க்கு, ஒரு தாழிசையோ பலதொடர்ந்த வழியோ கொச்சகவொருபோ காவதெனின், வரையறையின்மையின் இருவாற்றானுமாமென்பது.2 இனித் தாழிசை மூன்றடுக்கியவழி மூன்றடியான் வருமாறு: கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ னெல்லிநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப்-ஆய்ச்சியர் குரவை) எனவரும். இனி, நான்கடியான் வருதல் சிறுபான்மை. அவை வந்த வழிக் கண்டுகொள்க. தாழிசையின்றித் தரவுடைத்தாயும் என்பது, மேற்கூறிய தாழிசையின்றித் தரவேபெற்று வருதலுமென்றவாறு போது வகையானின்ற கொச்சகவொருபோகு இரண்டு தரவுடைத்-தெனப்பட்டது.1 மேல் தரவின்றாகி யென்றதுபோல ஈண்டுந், தாழிசையின்றி யென்றதனால் தாழிசையொடுபட்ட தரவிலக்கணத்தில் திரிந்துவரும் இத்தரவெனக் கொள்க.2 அது தரவுசொச்சகமுந் தரவிணைக்கொச்சகமுமென இரண்டாய் வருதலும் நான்கும் ஆறும் எட்டுமாய் வருதல் கடப்பாடின் றென்பதூஉங் கொள்க.3 உடைத்து எனப்பட்டது தரவெனவே ஒழிந்த உறுப்பு விலக்குண்டன. ஆகியு மென்ற மிகையான் இரண்டு வருதலே பெரும்பான்மையெனவுந், தரவோடொக்கு மெனப்பட்ட சுரிதகம் பெரும்பான்மையும் பெறுஞான்று பெறுவது அதுவே யெனவுங் கொள்க. சுரிதகம் பெறுவன சுரிதகத்தரவிணை யென்று வழங்குப. மேல் தனிச்சொற்கு வரையறையின்மையின் அது பெற்றும் பெறாதும் வருமென்பது.4 மற்றுத் தரவிலக்கணம் இழந்ததாயின் அதனைத் தரவென்று பயந்ததென்னையெனின், ---தாழம்பட்ட ஓசையின்றி அது வருதல் பெரும் பான்மை யென்றற்கென்பது; எனவே, யாண்டுந் தரவென்பது தாழம்பட்ட ஓசைக்கு ஒரு தலைமையின்றி வருமென்பது நேர்ந்த வாறாயிற்று;5 அது, நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்ததுபோற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையோ குறிசெய்ய வேறணிந்த சுவடெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த வேறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே என்பது தரவுக் கொச்சகம். பூணாக வென்பணிந்தான் பூதத்தான் வேதத்தான் கோணாகக் கச்சையான் கோடேந்து கொல்லேற்றான் மாணாக வெண்ணூலான் வாணுதலாள் பாகத்தான் ஊணாரும் பிச்சையா னுண்ணாத நஞ்சுண்டான் வானாறு தோய்ந்த சடையான் மழுவலத்தான் யானார்வஞ் செய்யு மிறை; எனவாங்குப் பாடி யிறைஞ்சுவோர்க் கெல்லாம் வினைமாசு தீரும் விளக்காகுந் தோற்றத் தனையோய் மறலிக்கு மச்சம் பயந்த புனைபூங் கழற்கான்மேற் பூவொடு நீர்தூஉ மனைமாண்ட பாக முளப்பட வாழ்த்தி யெனைநாளு மேத்துது மெந்தையே நின்னை நினையா தொழியற்க நெஞ்சு என்பது தரவிணைக் bfh¢rf«. இது சுரிதகம் பெற்று வருவனவுந் தனிச்சொற் பெற்று வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. மற்றுத் தேவபாணியல்லாத தொடர்பொருட்செய்யுட்கண் தரவின்றித் தாழிசை வந்ததென்றுமோ தாழிசையின்றித் தர வுடைத்தாய தென்றுமோவெனின்,---அவை, யாப்பினும் பொருளினும்வேற்றுமை யுடையது என்றதனானே ஒன்றற்கொன்று தரவெனப்பட்டுத் தரவு கொச் rfkhbk‹gJ; என்னை? ஆறும் எட்டுமெனப்பட்டு வாரா மையானும், மூன்றடித்தாழிசையாய் வாராமையானுந் தாழிசை யெனப்படாமையின். அவை தம்பொருளொடு தாம் முடியாமையின் தரவுக் கொச்சகமாயின.1 இனி, அத்தொடர்நிலையின் முதற்கண்நின்ற தேவபாணி தன்பொருளொடு தான்முடிதலின் அது விதந்தோதிய தரவு கொச்சகமாம் என்னை? எருத்தென்பது உடம்பிற்கு முதலா கலினென்பது.2 எண் இடையிட்டுச் சின்னங்குன்றியும் என்பது, வண்ணகத்திற்கு ஓதிய எண்ணுஞ் சின்னமுமின்றி ஒழிந்ததாம்3 தரவு தாழிசை தனிச்சொற் RÇjfbk‹D« நான்கு உறுப்புடையதுங் கொச்சகவொரு போகாமென்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பே கூறி, உள்ளது கூறிலன், அல்லாத உறுப்பினை-யெல்லாம் அவற்றானே நிற்றலை வேண்டியென்பது :4 உ-ம்:--- ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி; படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ; மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணை மென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ ; கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் (சுவல் புளத் தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கால் முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ; என வாங்கு; பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை மாணிழை யரிவை காப்ப வாணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி --கலி-கடவுள் வாழ்த்து. என வரும். இஃது, ஏனையொன்று எனப்பட்ட தேவபாணி ஓத்தா ழிசையாகலான் உறுப்பொன்றியும் முதனிலை யொத்தாழிசை யாகாது; ஏனை ஒத்தாழிசையில் உறுப்பிழத்தல் பற்றி,1 ஒப்ப நாடி யுணர்தல் வேண்டும் (தொல் செய்-148) என்பதனாற், சின்ன எண் நிற்பவும் எண் இழந்ததெனப்பட்ட அம்போதரங்க வொருபோகுபோலக், கொச்சகமேயன்றி எண்ணுறுப்பு இழந்ததூஉங் கொச்சகவொருபோ கெனப்பட்ட ஒரு போகாமென்றானென்பது.1 அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகியும் என்பது அடக்கும் இயல்பிற்றல்லாத ஈற்றதாகி ஒருதொடை யான் அடிநிமிர்ந்தொழுகியும் என்றவாறு. ஒழுகும் எனவே அற்றுவாராது ஒன்றேயாகி வருமென்பது. அடிநிமிருமென்றது என்பது, அடக்கும் இயல்பிற்றல்லாத ஈற்றதாகி ஒருதொடை யான் அடிநிமிர்ந் தொழுகியும், என்றவாறு. ஒழுகும் எனவே அற்றுவாராது ஒன்றேயாகி வருமென்பது. அடிநிமிரு மென்றதனான் மேல் அடிவரையறுத்துச் சொல்லப்பட்ட தரவு தாழிசை முதலிய உறுப்பு இதற்கில்லையென்றவாறாம்.2 அடக்கியல் வாரத்தினை அடக்கும் இயல்பின்றெனவே இதற்கு வாரம் நேர்ந்தானா மாகலின், ஒழுகுமென்றதனோடு மாறு கொள்ளும் பிறவெனின், அங்ஙனம் படுமாயினும் ஒருகாரணம் நோக்கி அவ்வாறு நேர்ந்தானென்பது; என்னை? அடி நிமிர்ந்தொழுகுங்கால் எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே (செய் 76) எனவும், வெண்பா வியலினும் பண்புற முடியும் (மேற்படி 77) எனவும் ஓதியவாற்றானே இறுதிநிற்ப ஏனையடியெல்லாங் கலியடியாகி ஒழுகி வாரம்பட்டு நிற்குமென்று கோடற்கென்பது:3 ஈதறியாதார். வெண்பா வியலாற் பண்புற முடிந்த கலியடி யுடையதனை வெண்கலியென்ப1. வெண்கலியாமாறு முன்னர்ச் சொல்லுதும். உ-ம்:- மழைதுளைத்துப் புறப்பட்ட மதியமு ஞாயிறும்போ லுழை முழங்கு வலம்புரியுந் திகிரியு மொளிசிறப்பப் பச்சென்ன வானிட்ட வில்லேபோற் பசுந்துழாய் கச்சென்னக் கனல்கின்ற கதிர்முலைமேற் கவின்செய்ய வம்மேகத் திடைப்பிறந்த நரையுருமே றதிசயிப்ப மைம்மேனி மருங்கதிர நகத்தரியே வால்புடைப்ப விண்டோயு மணிநீல வெற்பினிடை வேய்மிடைந்தாங் கெண்டோளு மிடுநீழ லிளங்கிளிகள் களிகூரக் கொதியாது கொதித்தெறிந்த கோடெருமைத் தலையின்மிசை மதியாத சீறடி மிதித்தன போற்றோன்றத் தாங்கிய புகர்வாளும் கேடகமுந் தனித்தனி வாங்கிய கோளரவு மதியமும் போன்றிலங்க மைதொடுத்த கடற்புறஞ்சூழ் மலையென்ன மணியல்குல் கொய்துடுத்த பொற்றுகிலின் கொழுஞ்சோதி கொழுந் (தோட்ட நீனின்ற படிவத்தா னெடியோனை முதற்பயந்த தாயென்று முதுமறை பரவினும் யாயென் றல்ல தியாந்துணி யலமே என வரும். வெண்பாவினான் முடியுங் கொச்சகவொருபோகு தேவபாணியாய் வந்தது கண்டுகொள்க. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது எனவே, யாப்பின் வேறுபடுவனவும் பொருளின் வேறுபடுவன வுமென இரண்டாம். அவற்றுள், யாப்பின் வேறுபடுதலென்பது மேற்சொல்லின வாறும், இனி வருகின்றவாறுமின்றி யாப்பிலக்கணத்தின் வேறு- படுதல் அவை இருசீர்முதலாக எண்சீர்காறும் வந்த அடி மேற் கூறியவாறன்றி நந்நான்கே பெற்றுவருதலும். அவற்றுட் பிற அடி விராய்வருதலும் , பாமயங்கிவருதலும், இரண்டும் மூன்றும் நான்கும் ஆகிய அடியுள் ஈற்றடி குறைதலுங், குறையாதவழி இயலசைச் சீர்வருதலும், மூன்றடியாயிற் குறையாது வருதலும், நான்கடிச் செய்யுண் முடியவும் அடியிரண்டு மிகுதலும் இனவியலின் வேறுபடுதலுங், கடவுட்டொடர் நிலைகள் பல தரவுந் தாழிசையுமாகி இடையிடைச் செய்வனவும், அடக்கியலின்றி அடிப்பட நிமிர்ந்தொழுகுதலுமெனப்பட்ட அடக்கியலுடைத் தாகலுமென்று இன்னோரன்ன பலபகுதியுங் கொள்ளப்படும். இப்பகுதி யெல்லாம் பொருள் வேறுபட்ட வழியும் நிகழுமென்பது, இரண்டனையும் உடன்வைத்தோதியதனாற் கொள்ளப்படும்;1 என்றார்க்கு வரையறையின்மையிற் களம்பாடு பொருநர் கட்டுரையுந் தச்சுவினைமாக்கள் சொற்றொடரும் ஏற்று இக் காலத்து உரை நிகழ்ந்தனவும், ஓலைப்பாயிரமும் முதலாயினவெல்லாங் கொச்சக மாகற்கு இழுக்கென்னையெனின், --- அவையே அடி வரையறை யில்லன ஆறென்றவழி உரையெனப் பகுத்தோதார்க் கன்றே அது கடாவாவதென மறுக்க.1 இவ்வாறுவந்த கொச்சகங்களை ஒரு வரையறைப்படுத்துப் பாத்தோறும் இனஞ்சேர்த்தும் பண்ணிற்குத் திறம்போலப் பன்னிரு பகுதியவாமென்பர் உரைக்குமாறு; விருத்தந் JiwjhÊirbad மூன்றனையும் நான்கு செய்யுளொடும் உறழ்ந்துரைப்பப் பன்னிரண்டாமென்பது மருட்பாவும் பரிபாடலு மோவெனின்,--- அவற்றுக்கு அஃதாராய்ச்சியன்றெனவும் அவற்றை ஒப்பன வெல்லாம் ஒப்பென மொழிய அடங்கு மென்பதூஉம் அவர் கருத்து. இனி, நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலுமெனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள் ஒன்றனை யில்லை யென்றார்; அஃதிக்காலத்தினும் வீழ்ந்ததின்மையின் அவரிலக் கணத்தினை வழுப்படுத்ததென்பது.2 இனி, விருத்தமுந் துறையுந் தாழிசையுமன்றி ஒப்புந் திறனு மென்றாற்போல்வன சிலகூட்டி அறுவகைச் செய்யுளோடுறழ K¥gjh«; இனி, அவற்றை விகற்பித்துநோக்க எண்ணிறந்த பகுதியவாம்; என்னை? சீரும் அடியுந் தொடையும் பாவும் முதலாயவற்றோடு குறளடி முதலாயவற்றை வைத்துறழவும் அவ்வடி தம்மொடு தம்மைப் பரிமாற்றவுந் தம்மொடு பிறவற்றை மயக்கவும் பல்குமாகலின்1. கொன்றை வேய்ந்த செல்வ னடியினை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்-காப்பு) என்பது இரண்டடியாகலின் வெண்பாவினுள் ஒருசாரனவற்றுக் குங் கலியுள் ஒரு சாரனவற்றுக்கும் இனமென்பது படும். இனிச் சீருந் தளையும் நோக்க ஆசிரியத்திற் கினமெனப்படும். இங்ஙனம் பலவற்றுக்கினமாயினும் இரண்டடியானே ஒரு செய்யுள் வருவது வெண்பாவென்பது நோக்கி அதற்கினமாக்கி வெண்செந்துறை யென்ப. இரண்டடியும் ஒத்துவருதலானும் ஒழிந்த காரணங்களான் நேர்ந்த பாக்கட்கினமாகலை விலக்குதல் அரிதாகலானும் அங்ஙனம் இனஞ்சேர்த்துதற்கு வரையறை யின்றென்பது. இனிச், சந்தஞ் சிதைந்தனவும் புன்பொருளவாய் வருவனவுஞ் செய்யுளென்பார், அவற்றைத் தாழிசை யென்ப; அதற்குக் காரணமின்றென்பது; அல்லதூஉந் தாழ்ந்த ஓசையல்லா ஒன்றைத் தாழிசையெனில் தரவு தாழிசைகளுள் தாழிசையுஞ் சந்தமும் அழியல் வேண்டுமென்பது. இனி விழுமிய பொரு ளல்லாதனவற்றைத் தாழிசை யென்றற்கு என்னை காரணமெனவும் மறுக்க; அல்லதூஉங், கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமேல வன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப்-ஆய்ச்சியர் குரவை) என மூன்றும் மூன்றடியான் முடிந்ததனை ஆசிரியத்தாழிசை யெனின் அதனுட்கிடந்த வெண்டளை அதற்கொன்றாதென்னு மென்பது.1 இனி இதுவே நான்காகி வரிற் கலிவிருந்த மென்ப. அது, நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த மார னருப்புக் கணையா னடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே என்றவழி, இது நான்கடியாசிரியத்திற்குத் தாழிசையாங்கால் இழுக்கென்னையெனவுங், வெண்டளைதட்டது வெண்டாழி சையாதற்கு இழுக்கென்னை யெனவுங், கலித்தளையில்லது கலிப்பாவிற் கினமாயவா றென்னையெனவுங் கூறி மறுக்க. இனிக், குறளடியானுஞ் சிந்தடியானும் வருவனவற்றை வஞ்சிப்பாவிற்கு இனமாமென்ப. சீரளவொப்பினும் அடி நான் காதலானும், வருஞ்சீர் இயற்சீராதலானும், பாவேறு படுதலானும் அதற்கிவை இனமாகாவென்பது, இனிக் குறளடிச்செய் யுண் மூன்றுவரின் தாழிசையெனவுஞ் சிந்தடிச்செய்யுண் மூன்று வாராவெனவுங் கூறின் அதற்கும் ஒரு காரணங்கூறல் அரிதென்க. ஒழிந்தனவும் இவ்வாறே இனஞ்சேர்த்திற் பிறிதொரு காரணத்தாற் பிற பாவிற்கும் அவையே இனமாதல் கூட்டி மறுக்க; என்றார்க்கு இங்ஙனம் ஒன்றற்கு இனஞ்சேர்த்தல் அரியனவற்றைக் கலிப்பா வென்ற தென்னையெனின், பெரும்பான்மையுங் கலிப்பாவிற்கேற்ற ஓசையவாகலின் அவையெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங் கொடுத்துச் சூத்திரத்தினுள் அடக்கினான் இவ்வாசிரியன், முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (தொல்-பாயிரம்) என்பது. இது மேலைக்கொண்டும் அடிப்படவந்த மரபு. இவை யெல்லாம் நான்கடியுள் வருதலே பெரும்பான்மையெனக் கொள்க. எனவே, சிறுபான்மை பாவைப்பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவனவாயின. இனி, அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியது ஒழித்து, ஒழிந்த கொச்சக வொருபோகு முப்பகுதியுந் தம்முறுப்புவகை யானே அளவை கொள்ளப்படும்.1 இப்பகுதி பலவாயினும் மரபு பட்டு வந்த வகையானே செய்யுள் செய்யப்படும்; இனி அவற்றுட் சில வருமாறு; நெய்யொடு தீயொக்கச் செய்யானைச் சேர்வார்க்குப் பொய்யாத வுள்ளமே மெய்யாகல் வேண்டுமே எனக் குறளடி நான்காக வந்தது. இது குட்டம்பட்டு வாரா தென்பது மேற் கூறப்பட்டது.2 மையணி கண்டனை வானோர் ஐயனை யாயிரம் பேழ்வாய்ப் பையர வம்பல பூணு மெய்யனை மேயது வீடே என்பது முச்சீரடியான் வந்த கொச்சகம். இஃது இயலசைச் சீராகி வந்த வழியுங் கண்டு கொள்க. பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே (யா.வி.ப. 331) என்பது, சிறுபான்மை மூன்றடியான் வந்து இடையடி குட்டம் பட்டது; இது கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கி நான்கடி யாதலும் ஈற்றடி ஒருசீர் மிகுதலு முடைததென்பது.1 ஒரு வான்யா றொடூச லாடவிப் பெரு நாகமே பூணும் பெருமா னரு வாயினா னாயினு மன்பர்க் குரு வாயினா னுள்ளத்தி னுள்ளே என்பது நிரையசைச்சீர் முதற்கண் வந்த அளவடி நான்கான் வந்தது; அசைச்சீரின்றி அளவடி நான்கான் வருவதுந் தாழிசையின்றித் தரவுடைத்தாகியு மென்றவழித் தரவுகொச்சகமா யடங்குமென்பது. வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போற் பண்டணி யாகப் பலர்தொழுங்கங்கைநீர் வைத்தா னுண்டணி கொண்ட நஞ்சுண்பார்க் கமிழ்தாமே என நாற்சீரடியிரண்டுமாய் ஐஞ்சீரடியிரண்டுமாய் வந்தது. இனி, அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே (தொல்-செய்.64) என்றதுபோல இலக்கணங்கள் கொச்சக வொருபோகிற்கே உரித்தாகவும் இன்னும் வேறுபட்டதாகவும் வரும்; அது, கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கல்வித் துறைபயந்த காமர் காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத் தானை யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாதார்க் கெல்லாந் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர் எனவரும். இவ்வாறே ஒழிந்தனவெல்லாம் பரிமாற்றுப்படுப்பப் பலவாகி வரும் ; அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, நான்கடியும் ஒத்தவழி மயங்கி வருமாறு ; தடந்தாட்கொத்த தமனியச் சிலம்பு படந்தாழ் கச்சைப் பாம்பொடு தழீஇ வென்றாடு திருத்தாதை வியந்துகைத் துடிகொட்ட நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே என வரும். புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்த னிணையடி பரவுதும் யாம் என்பது இரண்டடியான் ஈற்றடி குறைந்து வந்தது. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்) என்பது, இரண்டடியுள் ஈற்றடி குறையாது அடிதோறும் மயங்கச் சீர் இயலசையான் வந்தது. ஒழிந்த மூன்றடியும் நான்கடியும் ஈற்றடியுங் குறைதலுங் குறையாதவழி இயலசைச் சீராதலுங் கண்டுகொள்க. வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிறைகழ றொழுதனம் (யா. வி. ப. 264) என்பது, மூன்றடியால் தரவு வாராமையின் யாப்பு வேறுபட்ட bfh¢rfkhƉW. கடாமுங் குருதியுங் கால்வீழ்ந்த பச்சைப் படாமும் புலித்தோலுஞ் சாத்தும் பரம னிடாமுண்ட நெற்றியா னெஞ்ஞான்றுங் கங்கை விடாமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந்தோன் மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை யையுறு நெஞ்சில்லை யாகாத தொன்றில்லை என நான்கடியும் முடிந்த வழி இரண்டடி வேறு வந்த கொச்சகம். ஒழிந்தனவும் பிற வேறுபாட்டான் வருவனவு மெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. இச் சொல்லப்பட்டனவெல்லாந் தரவு கொச் சகத்தின்பாற் சார்த்திக் கொள்ளப்படுவன bt‹g; வேறும் உள; அவையும் அவ்வாறாத லறிந்துகொள்க. மற்று அங்ஙனங் கூறின் இரண்டடியான் வருவன தாழிசை யாகலின், கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்) எனவும், ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி) எனவும், வருவன தாழிசையாம் பிறவெனின், தாழிசை இலக்கணஞ் சிதையவரினுந் தாழிசைக் கொச்சகமெனவே படுமன்றே? தரவிலக்கணம், அழிந்து தரவிரட்டித்துச் சுரிதகம் பெற்றதூஉந் தரவு கொச்சகமாயிற்றுப்போல வென்பது;1 அல்லதூஉம், ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை என்பது, இரண்டடியின்றி முதுமொழி யாகலானும், ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் என்பது, பலவற்றுக்கும் பொதுவாகலானும் அஃது இரண்டடி வரையறையுடைய பாட்டெனப்படாது.2 கொன்றை வேய்ந்த செல்வ னடி என்பது, கந்திருவ மார்க்கமாதலின் ஈண்டையிலக்கணமெல்லாம் பெறுதல் சிறுபான்மையெனக் கொள்க. இனிப், பொருளினும் வேற்றுமையென்பது, முற்கூறிய வகையானும், மரபு வேற்றுமையானும் ஏற்றவகையான் வந்து பொருள்வேறுபடுதல்; அஃதாவது, தேவரை முன்னிலையாக்கி நிறீஇச் சொல்லாது படர்க்கையாகச் சொல்லுதலும், மக்களை நாட்டி வெட்சிமுதற் பாடாண்டிணை இறுதியாகிய புறப்- பொருளான் வந்து அதனுக்குரித்தென்று கூறப்பட்ட பொருளின் வேறுபடுதலுமெனக் கொள்க. ஏற்றவகையாற் பொருள் வேறுபாடு கொள்கவெனவே முன்னிலை படர்க்கையான் வரும் பொருள்வேறுபாடே இஃது ஓதிய நான்கு மாமாறு வேறுபட்டவற்றுக்குமெல்லாம் பொது வொழிந்த வெட்சி முதற் பாடாண்டிணை இறுதியாகிய பொருள் வேறுபாடு வரையறையுடைய வென்பது.1 என்னை? எடுத்தோதிய நான்கனுள், எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகியும் வரும் பகுதியொழிந்து வருமாகலின்; இப் பொருள்வேறுபாடு பரணிச்செய்யுளுள் இடையிடை விரவி வரினல்லது வேறு வாரா தெனக் கொள்க. இவ்வாற்றாற் கொச்சகக்கலிப்பாவினை வரைந்தோதவே ஆசிரியப்பாவும் வெண்பாவும் ஒருபொருண்மேற் பலதொடர்ந்தவழி மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதுமாகி வருதலும் பிறவாற்றான் வருதலும் வரையறையிலவாயின.2 தேவபாணியல்லாத தொடர்நிலைச் செய்யுளெல்லாம் யாப்பு வேறுபாட்டோடு பொருள்வேறுபாடுமுடைய எனக் கொள்க. அவையெல்லாம் அவ்வச்செய்யுளுட் காணப்படும். புகலிரும் பனிச்சோலைப் பொன்மலைபோற் பொலிந்- திலங்கி யகல்விசும்பிற் சுடர்மாட்டி யைம்பூத மகத்தடக்கி மண்ணக மிருணீங்க மன்னுயிர் படைத்தக்கா லண்ணலேற் றெழிலூர்தி யருமறை முதல்வனுந் தண்ணறுங் கமழ்துழாய்த் தாமரைக் கண்ணனும் வண்ணம்வே றுடம் பொன்றாய் வானவில் லனையரே எனப் படர்க்கையவாய்த் தெய்வம் பராஅதலிற் பொருள் வேறு பட்டது. வெண்பலிச் சாந்த முழுமெய்யு மேற்பூசி யுண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக் கண்பலிக் கென்று புகுந்த கபாலிமுன் னென்பலித் தாளிவள் யாதுவாய் வாளே என்பது. காமப் பகுதி கடவுளும் வரையார் (தொல். புறத் 28) எனப்பட்ட பாடாண்டிணையாகலிற் பொருள் வேறுபட்டது. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் என்பதோவெனின், அது முல்லை நிலத்துக்குத் தெய்வமாக லானும் முல்லை நிலத்தார் தந்தெய்வத்தினை அவ்வாறு அன்பு செய்து முன்னிலைப் புறமொழியாகக் கூறுதலானும் அது கைக்கிளை யெனப்படாதென்பது; ஒழிந்தனவும் இவ்வாறு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. மற்று இவற்றையெல்லாங் கொச்சக வொருபோகென்ற தென்னை? மற்றையுறுப்புப் பலவிழந்தனவாலெனின்,---அங்ஙனமாயினுங் கொச்சகவொருபோகென்னும் பொதுவிதி விலக்குண்ணாமையின் இது பொதுவகையானெய்திய பெயரெல்லாம் அவற்றுக்குமாகு மென்று எய்துவித்தானென்பது. இனிக், கொச்சக வொருபோகென்னாது ஆகு மென்றதனான் ஒருபோ கென்னாது கொச்சகமென்றே வழங்கினும் அமையுஞ் சிறுபான்மை யென்பது கொள்க.1 நச்சினார்க்கினியர் : இஃது முறையே கொச்சக வொருபோகு கூறுகின்றது. (இ-ள்.) தரவின் றாகித் தாழிசை பெற்றும் என்பது, தனக்கினமாகிய வண்ணகத்திற்கோதிய தரவின்றித் தாழிசையே பெற்றும், அவை பரணிப் பாட்டாகிய தேவபாணி முதலியன. இது தரவோடுபட்ட தாழிசையிலக்கணமின்றி வேறாய் வருமென்றற்குத் தரவின்றாகி யெனத் தரவை விலக்கினார். எனவே இவை ஒத்து மூன்றாதலுந் தரவிற்சுருங்கி நான்கும் மூன்றும் அடி பெறுதலும், ஒருபொருண்மேல் வருதலும். தாழம்பட்ட வோசையவே யாதலும், கடப்பாடின்று என்றவாறாம். அங்ஙனங் கூறியவதனானே பரணியுளெல்லாம் ஈரடியானேவருதலும் தாழம்பட்ட வோசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும், இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வருவழி ஈரடி முதலிய பலவடியான்வருதலும், இனிப் பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி ஒருபொருண்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாது வருதலும், அங்ஙனம் வருங்காற் றாழ்ந்தவோசை பெற்றும் பெறாதும் வருதலும், அவை யிருசீரெண் முதல் எண் சீரளவும்வருதலும் என்பது2; இன்னோரன்ன பல பகுதியெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட்டன. இவ்வேறு பாடெல்லா முளவேனுந் தாழம் பட்டவோசை பெரும்பான்மைய வாதலிற் றாழிசை யென்றார். இங்ஙனந் தாழிசைப்பேறு விதந்தோதவே யொழிந்த வுறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்றாம். தாழிசையுறுப்புப் பெறுவதியாதெனிற் கொச்சகவொருபோ கெனப் பொதுவகையானின்ற செய்யுளாம். அதுநோக்கியாயிற்றுப் பலவுமெண்ணி வேற்றுமையுடையது என்று ஒருமையாற் கூறியது. முதற்றொடை பெருகிச் சுருங்குமாறு எண்ணின்றித் தனியே யெண்ணலாகாமையானும், ஓசை வேறாதலானும் ஈரடித்தாழிசை பேரெண்ணாகா. உ-ம். உளையாழி யோரேழு மொருசெலுவி னொடுங்குதலான் விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே .......v‹wh‰nghštd பரணிச்செய்யுளுட் பயின்றுவரும். இவ்வாறு பல தொடர்ந்துவரிற் பஃறாழிசைக் கொச்சகமென்றும், மூன்றுதாழிrவரி‰சிஃறாழிசை¡கொச்சகமென்று§கூறவுமமையும். மற்றுப் பரணியாவது காடுகெழு செல்விக்குப்பரணிநாட் கூழுந் துணங்கையுங் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப்பற்றியது. அது பாட்டுடைத் தலைவனைப் பெய்துகூறலிற் புறத்திணை பலவும்விராயிற்றேனுªதேவபாÂயேயாம். கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் ... ...njhæ” “பh«ò கயிறாக் கடல்கடைந்தமாயவன்........njhæ” கொல்லையஞ் சாரற் Fருந்தொசித்தkயவன்......... தோழீ (சிலப். ஆய்ச்சியர் குரவை) இது படர்க்கைப்பரவலாய் மூன்றடுக்கியவழி மூன்றடியான் வந்தது. இது கந்திருவமார்க்கத்தா லிடைமடக்கி நான்கடியாமாறு முணர்க. யானைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கானத் தெருமைக் கருத்தலைமே னின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமே னின்றாயால் அரியரன்பூ மேலோ னகமலர்மேன் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; சங்கமும் சக்கரமுந் தாமரைக் கையேந்திச் செங்க ணரிமான் சினவிடைமே னின்றாயாற் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை யுருவாய் மறைபோற்ற வேநிற்பாய் (சிலப். வேட்டுவவரி) இவை முன்னிலைப்பரவலாய் மூன்றடுக்கி நான்கடியான் வந்தன. பதிகப்பாட்டிற்கு ஈண்டுக்கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி திருப்பாட்டுத் திருவாசகம் என்கின்ற கொச்சகவொருபோகுகளிற் காண்க. அவை உலக வழக்கன்மையிற் காட்டா மாயினாம். ஆகி யென்றதனான் ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவருதலுந் தேவ பாணியின்றி யாப்பினும் வேறுபட்டு1 வருவனவற்றின் கூறாய் அங்ஙனம் மூன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்குமுதற் பலவு மடுக்கிவருதலுந் தனிச்சொற்பெற்று வருதலுந் தாழம்பட்ட வோசையின்றி மூன்றடுக்கிவருதலுஞ் சுட்டியொருவர் பெயர் கொண்டு அவர்களையுந் தெய்வமென்றே பரவலும், அடுக்கிவந்து அடக்கியலான் முடிதலும், பிறவுந் கொள்க. உ-ம். சுடரொடு திரிதரு முனிவரு மமரரும் இடர்கெட வருளுநின் னிணையடி தொழுதேம் அடல்வலி யெயினர்நின் னடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறறரு விலையே; அணிமுடி யமரர்த மரசொடு பணிதரு மணியுரு வினைநின் மலரடி தொழுதேங் கணநிரை பெறுவிற லெயினிடு கடனிது நிணனுகு குருதிகொ ணிகரடு விலையே; துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய வெடிபட வருபவ ரெயினர்க ளரையிருள் அடுபுலி யனையவர் குமரிநி னடிதொடு படுகட னிதுவுகு பலிமுக மடையே (சிலப். வேட்டுவவரி) இவை மூன்றடுக்கி முடுகியலாய் வந்த தாழிசைக் கொச்சக-வொருபோகு. என்றிவை சொல்லி யழுவாள் கணவன்றன் பொன்றுஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றா னெழுந்து நிறைமதி வாண்முகங் கன்றிய தென்றுகண் ணீர்கையின் மாற்றிடபின். அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் றொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான் எழுதெழின் மலருண்க ணிருந்தைக்க வெனப்போனான். மாயங்கொன் மற்றென்கொன் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுவேன் பொருளுரையோ விதுவன்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் றனைக்கண்டு திறங்கேட்பல் யானென்றாள். என்றா ளெழுந்தா ளிடருற்ற தீக்கனா நின்றா ணினைந்தா ணெடுங்கயற்க ணீர்சோர நின்றா ணினைந்தா ணெடுங்கயற்க ணீர்துடையாச் சென்றா ளரசன் செழுங்கோயில் வாயில்வாய் (சிலப். ஊர்சூழ்) இவை தொடர்ந்தபொருளாய் நான்கடுக்கின. சொன்னது, அரசுறை கோயி லணியார் ஞெகிழங் கரையாமல் வாங்கிய கள்வனா மென்றே குரைகழன் மாக்கள் கொலைகுறித் தனரே எனப் பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப வழுதாடன் கேள்வனை யெங்கணாஅ வென்னா வினைந்தேங்கி மாழ்குவாள் (சிலப்.துன்ப மாலை) இவை தனிச்சொற்பெற்றுத் தனிவந்தன. இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் லானிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர்சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன; முருந்தே ரிளநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த நிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்பச் சொன்ன கணிமுன்றி னிறைந்தன; கயமல ருண்கண்ணாய் காணாய் நின்னையர் அயலூ ரலற வெறிந்தநல் லானிரைகள் நயனின் மொழியி னரைமுது தாடி யெயின ரெயிற்றியர் முன்றி னிறைந்தன (சிலப்.வேட்டுவரி) இவை தாழிசை யோசையின்றி யடுக்கிவந்தன. கோவா மலையாரங் கோத்த கடலாரந் தேவர்கோன் பூணாரந் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்; முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் மன்னர்கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவிறறோ ளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால் (சிலப். ஆய்ச்சியர்குரவை) இவை அரசரைத் தெய்வமென்றே பரவியன. குன்றக்-குரவையுள் சீர்கெழு செந்தில் என்னுந் தாழிசைமுதற் பலவடுக்கிவந்து பின்னர் என்றியாம்பாடக் ... ... கேட்டு என்று அடக்கியற் பொருள்பெற்று முடிந்தவாறு காண்க. இன்னுஞ் சிலப்பதிகாரத்துள் வரும் வேறுபாடெல்லாம் இவ்விலேசான் முடித்துக் கொள்க. தாழிசையின்றித் தரவுடைத்தாகியு மென்பது, மேற்கூறிய தாழிசையின்றித் தரவேபெற்றுவருதலும். எ---று. ஈண்டுந் தரவோசைபெறுவது1 பொதுவாய்நின்ற கொச்சகவொரு-போகென்னுஞ் செய்யுள். அது தாழிசையோடுபட்ட தரவிலக் கணத்தில் திரிந்து வருமென்றற்குத் தாழிசையின்றியென விலக்கினார். அது தொடர்நிலைச் செய்யுளாய்வருந் தேவபாணியுந் தரவிணைக் கொச்சகமாய்வருவது நான்கும் ஆறும் எட்டும் அடியாய்வருதல் கடப்பா டின்றென்பதூஉங் கொள்க. தரவென் னும் உறுப்பைச் செய்யுளுடைத்தெனவே ஒழிந்தவுறுப்பு விலக்குண்டன. ஆகியு மென்றதனாற்றனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றும் பெறாதும் வருதலும், பெரும்பான்மை யிரண்டிணை தலுங் கொள்க. அவை தனிச்சொல்லுஞ் சுரிதகமும்பெற்ற தரவு கொச்சகந் தரவிணைக் கொச்சக மெனப் பெயர் கூறப்படும். இதனாற் றரவிலக்கண மிழந்ததேனும் பெரும்பான்மை தாழம் பட்டவோசைக் குரித்தன்றென்பது நேர்ந்தவாறாயிற்று. உ-ம். பூணாக வென்பணிந்தான் பூதத்தான் வேதத்தான் கோணாகக் கச்சையான் கோடேந்து கொல்லேற்றான் மாணாக வெண்ணூலான் வாணுதலோர் பாகங்கொண் டூணாகும் பிச்சையா னுண்ணாத நஞ்சுண்டான் வான்யாறு தாழ்ந்த சடையான் மழுவலத்தான் யானார்வஞ் செய்யு மிறை; எனவாங்குப் பாடி யிறைஞ்சுவோர்க் கெல்லாம் வினைமாசு தீர விளக்காகுந் தோற்றத் தனையோய் மறலிக்கு மச்சம் பயந்த புனைபூங் கழற்கான்மேற் பூவோடு நீர்தூஉய் மனைமாண்ட பாக முளப்பட வாழ்த்தி யெனைநாளு மேத்துது மெந்தையே நின்னை நினையா தொழியற்க நெஞ்சு ... ... இது தரவிணைக்கொச்சகம். தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றன வந்துழிக்காண்க. இதனானே தொடர்நிலைச் செய்யுளின் முதற்கணின்ற தேவபாணி தன்பொருளோடு தான். முடிந்தன தனித்தரவு கொச்சகமாம். உ--ம். உலக மூன்று மொருங்குட னேத்துமண் டிலக மாய திறலறி வன்னடி வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந் தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான் (வளையாபதி) மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே (சிந்தா. கடவுள் வாழ்த்து-1) எனவரும். இவ்வளையாபதி முதலியவற்றுள் தேவபாணியல்லாத தொடர் பொருட்செய்யுட்களை யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது என்றதனாற் றரவுகொச்சகமென்று கொள்க. அவை தம் பொருளோடு தாமுடியாமையின். எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது, வண்ணகத்திற்-கோதிய எண்ணுஞ் சின்னமுமின்றி ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொல் சுரிதக மென்னும் நான் குறுப்புடையதுங் கொச்சக வொருபோகாம். எ-று. இதற்கு இல்லா ஆறுறுப்பையே1 கூறிற்று உள்ளது நிற்றலை வேண்டி. உ-ம். ஆறறி யந்தணர்க் கருமறை ... ... அமர்ந்தனையாடி (கலி. கடவுள் வாழ்த்து) இது நான்குறுப்பான் வந்ததேனுந் தேவபாணியாய் வருதலின் முதனிலை யொத்தாழிசை யாகாது. ஏனையொன்றே யென்ற ஒத்தாழிசையே யாமாயினும் அவற்றிற்குரிய எண்ணுஞ் சின்னமும் இழத்தலிற் கொச்சக வொரு போகாயிற்று. அடக்கியலின்றி யடிநிமிர்ந் தொழுகியு மென்பது, அடக்கியல் தனித்து வருதலின்றி யவ்வடக்கியலோடு ஒரு செய்யுளாய் அடிபரந்தொழுகியும்; அடக்குமியல்பின் றென்றது முற்கூறிய வுறுப்புக்களைத் தனியேவந்து அடக்கிநிற்கும் இலக்கணமின்றியே வரும். எ-று. எனவே எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே (செய். 76) வெண்பா வியலினும் பண்புற முடியும் (செய். 77) என்ற விதியாற் பெற்ற இறுதி ஒருதொடராய் இற்றுநிற்றலும்,அடி நிமிரும் என்றதனான் முற்கூறியவற்றின் அடிவரையறையை யிகத்தலும், ஒழுகும் என்றதனான் எழுசீரிறுதி யல்லாத எல்லா- வடியுங் கலியேயா யொழுகிவருதலும் பெற்றாம். உ-ம். மழைநுழைந்து புறப்பட்ட மதியமு ஞாயிறும்போல் ... ... ... ... ... ... ... ... ... யாயென் றல்ல தியாந்துணி யலமே எனவரும். தேவபாணியான வெண்பாவியலான் முடிந்தது வந்துழிக்காண்க. இக்கருத்தறியாதார் வெண்பாவியலாற் பண்புறமுடிந்த கலியடி யுடையதனை வெண்கலிப்பா வென்பர். யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையதென்பது மேற்கூறிய வாறும் இனி வருகின்றவாறுமின்றி யாப்பின் வேறுபடுதலும் பொருளின் வேறுபடுதலும். எ---று. அவை இருசீர்முதல் எண்-சீர்காறும் வந்து முற்கூறிய வாறன்றி அடிக்கண் நந்நான்காய்வரும். சில பிறவடி விராயும்வருவனவும், பலவடிவந்தும், நான்கடி வந்தும் பாமயங்கி வருவனவும், இனி யீரடியான் வருவன வற்றுள்ஈற்றடி மிக்குங் குறைந்தும் குறையாதும் வந்து இயலசைச்சீர் பெற்று வருவனவும், ஓசையும் பொருளுமினிதாகாது வருவனவு அவ்விரண்டடிச் செய்யுண் முடிந்து நிற்கவும், ஈற்றடி யொன்றும் இரண்டும் மிக்கு வருவனவும் பிறவாறாய் வருவனவும், இனி மூவடியான் வருவனவற்றுள் ஈற்றடி குறைந்தும் முதலடி மிக்கும் இடையடி குறைந்தும் இறுதியடி மிக்கும் முன்றடியிற் குறையாதும் பிறவாறாயும் வருவனவும், இம்மூவடி யிற்றபின் ஈற்றடி யொன்றும் இரண்டும் மிக்கு வருவனவும், பிறவாய் வருவனவும், இனி நான்கடியாய் வருவனவற்றுன் முதலிடைகடையிற் குறைந்து வருவனவும், அம் முதலிடை கடைக்கண்ணே யோரடியு மீரடியுஞ் சீர்மிக்கு வருவனவும், பிறவாறாய் வருவனவும், அந்நான்கடி யிற்றபின் ஈற்றடி யொன்றும் இரண்டும் மிக்குவருவனவும், இங்ஙனம் மிக்கு ஒருபொருண்மேன் மூன்றடுக்கி வருவனவும், பத்தடுக்கி வருவனவும், அளவியலின் வேறுபடுவனவும், இனி யைந்தடியான் வருவனவற்றுள் ஈற்றடிகுறைந்து வருவனவும், அவ்வைந்தடியிற்றபின் ஓரடியும் ஈரடியும் மிக்கு வருவனவும், முச்சீரான் இற்றுச் சிலசீர் மிக்குவருவனவும், இனி ஆறு முதலிய வடிகளான் வருவனவும்,இவ்விலக்கணமெல்லாம் பெற்றுவருதலுங் கடவுட் பொருட்டொடர்நிலைகள் பல தரவுந் தாழிசையுமாகி யிடைமிடையச் செய்வனவும் அடக்கியலின்றி யடிநிமிர்ந்து அடக்கியல் பெற்றுவருதலும் இன்னோரன்ன பலபகுதிகளுங் கொள்ளப்படும். பொருள்வேறுபடுமென்றலிற் புறப்பொருளான் வருவனவுங் கொள்க. இவற்றுட் சில கந்திரவமார்க்கத்தான் இடைமடக்கி வருவனவுங் கொள்க. உ---ம் நெய்யொடு தீயொக்க........ மெய்யதால் வேண்டும் இது குறளடி நான்கான் வந்தது. இது குட்டம்படாது. மையணி கண்டனைவானோர்............bkŒaid மேயது வீடே இது சிந்தடி நான்கான் வந்தது. இவ்வா றியலசைச்சீரான்வருவது வந்துழிக்காண்க. நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்ததுபோற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையேர் குறிசெய்ய வேறணிந்த சுடரெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த ஏறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே வென்றான் வினையின் றொகையாய் விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார் (சூளா-காப்பு) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாணமுழுது... வே (சூளா - துறவு-) இது கொச்சகம்போல அடுக்கிவாராது தாழம்பட்ட வோசைத் தரவுக் கொச்சகம். ஒருவான்யா றோடுச டாடவி ... ... உள்ளத்தினுள்ளே இது அளவடி நான்காய் நிரையசைச் சீராகிய சொற்கண் வந்து பிறவடி விராஅயிற்று. அசைச்சீரின்றி யிங்ஙனம் வருவன தரவுக் கொச்சகமாம். முழங்குதிரைக் கொற்கைவேந்தன் ...... வேறாபவே இது பிறபொருளான் அளவொவ்வாது பலவடி வந்து பா மயங்கிற்று. தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு ...... வினையிலரே இது நான்கடியுமொத்துப் பாமயங்கிவந்தது. கங்கை சூடிய காபலிநின் னடியிணை தங்கு நெஞ்சினர் தளர்வுறு பிறவியை நீப்பர் இது ஈரடியா யீற்றடிமிக்கது. புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்தன் இணையடி பரவுதும் யாம் இது ஈரடியா யீற்றடி குறைந்தது. கொன்றை வேய்ந்த செல்வ னடியை யென்று மேத்தித் தொழுவோ நாமே இது ஈற்றடி முற்குறையாது இயலசைச்சீர் அடிதோறும் வந்தது. அறுவர்க் கறுவரைப் பெற்றுங் ... ... ரே இது ஓசையும் பொருளு மினிதாகவந்தது.1 கொன்றைசேர் சடைமுடியோன் கொந்தழல்போன் மேனியோ னொன்றிய பெண்களை யோவாதே யுள்ளுக செல்கதி யின்றிச் சிவகதி சேர்வதோர் நல்லறி வெய்துது நாமே இது ஈரடி யிற்றதன்மே லீற்றடி யிரண்டு மிக்குவந்து ஒன்றுட் பட்டது. நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யா ரன்பு வேண்டு பவர் இது மூன்றடியான் வந்து ஈற்றடிகுறைந்து அசைச் சீரா னிற்றது. தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்ந்து விடும்பிலிற்றி யாங்கே இது முதலடி மிக்கது. பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடுமே நீண்ட சடையா னாடுமென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே இது இடையடி குட்டம்பட்டு இறுதியடி மிக்கது. கந்திருவ மார்க்கத்தான் இடைமடக்கி நான்கடியுமாம். வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிறைகழல் தொழுதனம் இது மூன்றடியிற் குறையாதது. பிறையணிந்த கடைமுடியோன் பிஞ்ஞகன் பெம்மான் கறையணிந்த கண்டத்தான் கையிலங்கு சூலத் திறையணிந்த நெஞ்சினோர்க் கின்றாம் பிறவி; இம்மைப் பிணியு மியலும் பசியொடு தம்மைத் துறந்திடுந் தாவில் புகழுளதாம் இது மூன்றடி யிற்றதன்மே லீரடி மிக்குவந்தது. சதுர்முக வொருவ நின்சர ணடைந்தே முதிர்மிகு நீரு ளழுந்துமிவ் வங்கநாவாய் திருவுறு நிலைமைத்தாய்ப் போதெனக் கூறிநிற்பா ரதிர்வன ரிருகையு மாற்றுறக் கூப்பிநிற்பார் இது நான்கடியாய் முதலடி குறைந்தது. தனுவெழ வரிவையைத் தகுமணம் புணர்ப்பின் முனிவுறு தொழிலினை மூளா ணனிதவிர்த் திலர்க்கிடு நாடொறு நாடொறுங் கனியென வினியண்முன் கலந்தமற் றவற்கே இது இரண்டாமடி குறைந்துவந்தது. கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கல்வித் துறைபயந்த காமர்காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை யெல்லாரு மேத்தப் படுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாதார்க் கெல்லாந் துயரல்ல தில்லைத் தொழுமின் கண்டீர் இது ஈற்றயலடி குறைந்து, சீரடியாசிரியத்தான் நேரடி முன்னிறுமென்ற விலக்கணக் கொச்சகம் வந்தும் பாவின் வேறு-பட்டதாம். வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போலப் பண்டணி யாகப் பலர்தொழுங் கங்கைநீர் வைத்தா னுண்டணி கொண்டநஞ் சுண்பார்க் கமிழ்தாகுமே இது அளவடியிரண்டு மைஞ்சீரடியிரண்டும் வந்தது. கண்டெழப் பாவை தனிக்கரம் பிடிப்ப ராயிற் கொண்டவற் பேணிக் குடிக்கு விளக்காகும் நெண்டெழி னெடுமனை தன்னை நீங்கிப்போய் ... ... ... மற்றொரு குழகன் றன்னையே இது முதலடிமிக்கது. போதுறு முக்குடைப் பொன்னெயி லொருவன் றாதுறு தாமரை யடியே தாதுறு தாமரை யடியடைந் தாரெனிற் றீதுறு தீவினை யிலரே இது சிலவடிகுறைந் திடைமடக்கிப் பிறவாறாயிற்று. இவை யளவடியின் வேறுபட்டவாறுங் காண்க. கடாமுங் குருதியுங் கால்வீழ்த்த பச்சைப் படாமும் புலித்தோலுஞ் சாத்தும் பரம னிடாமுண்ட நெற்றியா னெஞ்ஞான்றுங் கங்கை விடாமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந்தான் மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை யையுறு நெஞ்சில்லை யாகாத தொன்றில்லை வேயே திரண்மென்றோள் வில்லே கொடும்புருவம் வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி நோயே முலைசுமப்ப வென்றோர்க் கருகிருந்தா ரேயோ விவளொருத்தி பேடியோ வென்றார் எரிமணிப்பூண் மேகலையார் பேடியோ வென்றார் (சிந்தா-623) இவை நான்கடிச்செய்யுளிற்றபின் ஈற்றடி யிரண்டும், ஒன்றும் மிக்கு வந்தன. மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணம் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணுந் திருவடியுங் கையுங் கனிவாயுஞ் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சங் கடந்தானை நூற்றுவர்பா னாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நாராய ணாவென்னா நாவென்ன நாவே (சிலப்-ஆய்ச்சியர் குரவை) இவை படர்க்கைப் பரவலாய் ஒருபொருண்மேன் மூன்றடுக்கி நான்கடியிற்றபின் ஓரடிமிக்குவந்தன. இவ்வாறே பத்தடுக்கி யொருபொருண்மேற் பதிகப்பாட்டாய் வருவனவும் இதனா னமைக்க. வெறியுறு கமழ்கண்ணி வே . பின் இது சிந்தடியான்வந்து ஈற்றடி குட்டம்பட்டது. வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொரு ணீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ வென்கணவன் கள்வனோ வல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல் (சிலப்-துன்ப மாலை) இது ஐந்தடிச் செய்யுண்முடிந்தபின் ஈரடிமிக்கது. கோழியுங் கூவின ... ... வாய் இது ஐந்தடியான்வந்து ஈற்றடி முச்சீரான் இற்று அடியீற்றின் கண் இரு சீர்மிக்கது. திருவெம்பாவை யெட்டடியான் வந்திவ்வாறிற்றன இக்காலத்து ஒருபோகுகளிற் றரவுந் தாழிசையும் இடைமிடைந்து வருமாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க. இவையெல்லாங் கொச்சகமாமென்று கூறுவர் புலவர் எ-று இனி யிவ்வாறு வந்த கொச்சகங்களையெல்லா மொரு வரையறைப்படுத்துப் பாத்தோறு மினஞ்சேர்த்திப் பண்ணிற்குத் திறம்போலப் பின்னுள்ள ஆசிரிய ரடக்குவர்; அதனை அகத்தியமுந் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தங் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வா றடக்காமைக்குக் காரணங் கூறுவர். அவர் கூறுமாறு. கொன்றை வேய்ந்த செல்வ னடியை ... ... நாமே ஈரடியான் வருதலின் வெண்செந்துறை யென்பார்க்கு ஒருசீர் குறைவின்றி வருதலின் வெண்பாவிற்கு இனமாகாது கலிப்பாவி னொரு கூற்றிற்கு இனமாதலுஞ் சீரானுந் தளையானும் ஆசிரியத்திற் கினமாதலுமுடைத்தென்றுமறுப்பர். இனிச் சந்தஞ் சிதைந்து புன்பொருளாய் வருவனவற்றைத் தாழிசை யெனிற் றாழம்பட்ட வோசையும் விழுமிய பொருளுமில்லன வற்றிற்கு அப்பெயர் கூறின் முதற்கூறிய தாழிசைகட்குஞ் சந்தஞ் சிதைந்து புன்பொருளாய் வருதலுரித்துமாம். அதனான் அப்பெய ராகாதெனவு மறுப்பர். கன்று குணிலா (சிலப்-ஆய்ச்சி) இது வெண்டளையான் வருதலின் ஆசிரியத்திற்கினமாகாதென மறுப்பர். இனி இது நான்கடியான் வருமேற் கலிவிருத்தமா மென்பார்க்கு நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த காம னருப்புக் கணையா னடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே என்றதுகாட்ட வெண்டளை தட்டலின் வெண்டாழிசைக்கு இழுக்கின்மையுங் கலித்தளை யின்மையிற் கலிக்கு இனமாகாமையும் கூறிமறுப்பர். இனிக் குறளடியானுஞ் சிந்தடியானும் வருவன- வற்றைச் சீரளவான் வஞ்சிக் கினமென்பார்க்கு அவை நான்கடியான் வருதலானும், பா வேறுபடுதலானுஞ் சீர் இயற் சீராகலானும் ஆகாதென்ப. குறளடிச்செய்யுள் மூன்றுவரிற் றாழிசையெனவுஞ் சிந்தடிச் செய்யுண் மூன்று வாரா வெனவுங் கூறின் அதற்குமோர் காரணங்கூற லரிதென மறுப்பர்; பிறவு மிவ்வாறு ஒன்றற்கினமாயது ஒன்றற்கினமாயும் வருதலின் இனஞ்சேர்த்தலாகாதென மறுப்பர்.1 இங்ஙனம் இனஞ்சேர்த்துதற் கரியவற்றைக் கலிப்பாவென அடக்கியது பெரும்பான்மை கலிக்கேற்ற வோசையே பெற்று வருதலின். இத் தொல்காப்பியம் முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (தொல்-பாயிரம்) நூல் செய்தலின் எல்லாவற்றிற்கு மொரு பரிகாரங் கொடுத்துக் கொச்சகத்துளடக்கினார் அது மேற்றொட்டு வந்த மரபு இனிப் பொருள் வேறுபடுதலாவன, தேவரைப் படர்க்கையாக்கிக் கூறலுஞ் சுட்டியொருவர்ப்பெயர் கொளப்படுதலும், புறப்பொருளொடு தொடர்தலும், முற்கூறிய பொருள்கள் பிறவாறு வருதலுமாம். இங்ஙனம் பொருள் வேறு-படுதலின் இதனுள் ஓதிய நான்கற்கும் யாப்பு வேறுபட்டவற்றிற்கும் பொது வெட்சி முதற் பாடாண்டிணை யீறாகிய பொருள்வேறுபாடு வரையறை; என்னை; அவை முற்கூறிய இரண்டற்கும் உரித்தாகலின்; அது பெரும்பான்மை பரணிச் செய்யுட்கு இடைவிராய்வரும் இவ்வாறு கொச்சகத்தினை வரைந்தோதவே ஆசிரியமும் வெண்பாவும் ஒருபொருண்மேற்பல மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்துமாகி வருதலும், பிறவாறாய் வருதலும் வரையறையிலவாயின. அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம். கீழ்க்கணக்கு முதலியவற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காண்க. தேவபாணியில்லாச் செய்யுளெல்லாம் யாப்பும் பொருளுஞ் சேர வேறுபடுமென் றுணர்க. அது முற்கூறியவற்றுட் காண்க. வெண்பலிச் சாந்த முழுமெய்யு மெய்பூசி யுண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக் கண்பலிக் கென்று புகுந்த கபாலிமு னெண்பலித் தாளிவள் யாதுவாய் வாளே இது காமப்பகுதி கடவுளும் வரையார் (தொல் புறத். 28) என்ற பாடாண்டிணையாகலின் பொருள் வேறுபட்டது. கன்று குணிலா (சிலப்-ஆய்ச்சி) என்பது அந்நிலத்திற்குரிய தெய்வத்தை அவர் பராவுதலிற் கைக்கிளையன்று. இவை பலவுறுப்பிழந்தனவேனுங் கொச்சகவொருபோகென்னும் பொது விலக்குண்ணாமையிற் பொதுப்பெய ரெல்லாவற்றிற்கு மாகுமென்று எய்துவித்தார்1. ஆகுமென்றதனான் ஒருபோகென்னாது சிறுபான்மை கொச்சக மென்று வழங்குதலாமென்று கொள்க. ஆய்வுரை : இது, கொச்சக வொருபோகாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தரவு முதலாயின வுறுப்புக்களுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலாயின வுடையதாகியும், எண்ணாகிய வுறுப்புக்களை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக் குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவுதானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக்குரிய யாப்பினும் பொருளினும் வேறுபாடுடையதாகி வருவது கொச்சகவொருபோகு ஆகும் என்பர் ஆசிரியர். எ-று. எனவே, ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சகவொருபோகெனப் பெயர் பெறுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். இனி, கொச்சக வொருபோகாகிய இதன் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியரும் நச்சிர்க்கினியரும் ஆராய்ந்து கூறிய விளக்கங்கள் அவரவருரைகளிலும் அவைபற்றிய அடிக்- குறிப்புக்களிலும் கண்டு தெளியத்தக்கனவாம். இனி, ஒருபோகு என்பது குறித்து யாப்பருங்கலவிருத்தி யாசிரியர் பின்வருமாறு கூறுவர் :- இனி, ஒருசார் கொச்சகங்களை ஒருபோகு என்று வழங்குவாருமுளர். மயேச்சுவரராற் சொல்லப்பட்ட அம்போ தரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவபாணியுந் திரிந்து, தரவொழித்து அல்லாவுறுப்புப் பெறினும்,அம்போதரங்கத்துள் ஓதப்பட்ட மூவகை யெண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை யெண்ணும் நீங்கினும், நீங்கிய வுறுப் பொழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒரு போகு எனப்படும். அவை, அம்போதரங்க வுறுப்புத் தழீஇயின அம்போதரங்க வொருபோகு எனவும் வண்ணகவுறுப்புத் தழீஇயன வண்ணக வொருபோகு எனவும்படும். என்னை? கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித் தேறிய விரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை யொழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப வுணர்ந்திசி னோரே என்றார் மயேச்சுவரர் எனவரும் இவ்வுரைப்பகுதி இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும். 144. ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே. இளம்பூரணம் : என்---எனின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). மேற் சொல்லப்பட்ட சொச்சகவொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் என்றவாறு.1 (144) பேராசிரியம் : இஃது, அதிகாரத்தான் மேல்நின்ற நான்கனுள்2 இறுதி நின்ற கொச்சகவொருபோகிற்கு அளவுணர்த்துகின்றது;3 ஒழிந்தவற்றுக்கெல்லாம் உள்ளுறுப்புப்பற்றி இரண்டளவை4 கூறி அங்ஙனங் கூறப்படாததற்கும் அவற்றோடு இனம்பற்றி ஈண்டை அளவு கூறினமையின். (இ-ள்.) பத்தடியிற் சுருங்காது இருபதடியி னேறாது வரும்; அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகுமெனப்பட்ட கொச்சகவொரு போகு (எ - று). முன்னர் நால்வகையாற் பகுத்து நிறீஇ, அதற்கிடையின்றி அது வென்று ஒருமையாற் சுட்டிக்கூறினமையானும், மேல் நிமிர்ந்தொழுகும் என்றக்கால் அடி எத்துணையும் பலவா மென்று ஐயுறுதலை விலக்கல் வேண்டுவதாகலானும் ஏற்புழிக் கோடல் என்பதனானுமெல்லாம் அதுவே கொள்ளப்பட்டது.1 அவற்றுக்குச் செய்யுள் : தடங்கடற் பூத்த தாமரை மலராகி யடங்காத முரற்சியா னருமறை வண்டிசைப்ப ஆயிர வாராழி யவிரிதழின் வெளிப்பட்ட சேயிழை யெனத்தோன்றுஞ் செழும்பகலி னிரவகற்றிப் படுபனிப் பகைநீங்கப் பருவத்து மழையானே விடுமழை மறுத்திடினு மென்மலரின் மதுமழையா னெடுநிலங் குளிர்கூர நீர்மைசா னிழனாறி அண்டங்கள் பலபயந்த வயன்முதலா மிமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாகலின் ஓங்குயர் பருதியஞ் செல்வநின் னீங்கா வுள்ள நீங்கன்மா ரெமக்கே என்பது, பத்தடியிற் சுருங்காது இருபதடியினேறாது வரும் அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகும் (தொல்-செய். 149) எனப்பட்ட இருபதடியான் வருவது வந்தவழிக் கண்டுகொள்க. (150) நச்சினார்க்கினியம் : இது, அதிகாரத்தானின்ற நான்கினுள் இறுதிநின்ற அடக் கியலின்றியடிநிமிர்ந்த கொச்சகவொருபோகிற்கு அளவுகூறு கின்றது. (இ-ள்.) ஒழிந்தகலிக்கெல்லாம் உள்ளுறுப்புப்பற்றி யளவு கூறினார். பத்தடியிற் சுருங்காது இருபதடியினேறாதுவரும்; அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகுமென்ற கொச்சகவொரு போகு. எ-று.1 இது முன் அடிநிமிர்ந்தொழுகுமென்றதற்கோர் வரையறை கூறி ஐயமகற்றியது. இஃது ஏற்புழிக்கோடலென்பதனானும் அது வென்ற ஒருமையானுங் கொண்டது. உ---ம் தடங்கடற் பூத்த தாமரை மலராகி ... ... ... ... ... ... Ú§fh வுள்ள நீங்கன்மா ரெமக்கே இது பத்தடியிற்சுருங்காது அடக்கியலின்றி யடிநிமிர்ந்-தொழுகியது. மேலிருபதடி வந்துழிக்காண்க. ஆய்வுரை : இது, மேற்குறித்த கொச்சகவொருபோகின் வகைகளுள் இறுதியிற் கூறப்பட்ட அடக்கியலின்றி அடி நிமிர்ந்தொழுகிய கொச்சக வொருபோகிற்கு அடியளவு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட கொச்சக வொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் எ-று. 145. அம்போத ரங்கம் அறுபதிற் றடித்தே செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. இளம்பூரணம் : என்---எனின். அம்போதரங்க வொருபோகுக்கு அடிவரை-யறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அப்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம்; நடுவாகிய நிலை சிறுமைக்கெல்லையாம் என்ற வாறு. செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம்; முப்பதடிச் சிறுமை என்றவாறு.1 (145) பேராசிரியம் : மேனின்ற அதிகாரத்தான் இதுவுங் கடவுள்வாழ்த்துப் பொருட்டாகிய அம்போதரங்க வொருபோகிற்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்.) அம்போதரங்கவொருபோகுந் தன் உறுப்பெல்லாங்கூடிஅறுபதடித்தாகியும்,அதன்செம்பாலாகியமுப்பதடித்தாகியும்,அதன்வாரமாகியபதினைந்தடியாகியுஞ்சிற்றெல்லைபெறும்(எ-று.)2 எனவே, இது தலையள வம்போதரங்கவொருபோகும் இடையள வம்போதரங்க வொருபோகுங் கடையள வம்போதரங்க வொருபோகுமென மூன்றற்குஞ் சிற்றெல்லை கூறியவாறாயிற்று. அவற்றுக்குப் பேரெல்லை கூறுமாறென்னையெனின், அறுபதிற்றடித்தெனத் தலையளவிற்கு வேறு கூறி, அவ்வளவைப் பற்றி mதன்bசம்பாலும்mதன்tரமுமெனப்gகஞ்செய்துtந்தானாகலாற்,கடையளtம்போதரங்கத்திற்குச்áற்றெல்லைgதினைந்தாம்.filas வம்போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாகியவழிப் பேரெல்லை Kப்பதின்காறும்cயருமெனவும்,ïடையளவிற்குச் áற்றெல்லைKப்பதாகியவழிப்nபரெல்லைmறுபதின்காறும்cயருமெனவும்,jலையளவிற்குச்áற்றெல்லைmறுபதாகியவழிmதனையும்ïவ்வாறேïரட்டிப்பmதன்nபரெல்லைüற்றிருபதாமெனவும்bகாள்ளவைத்தானென்பது.1mங்ஙனம்üற்றிருபதாங்கான்nமனின்றmதிகாரத்தால்jரவிற்bகல்லைïருபஃதாகவும்mதனோடொப்பவருதலிலக்கணத்ததாகியmடக்கியல்ïருபதடியாகவும்eற்பதடிbபறப்படும்.2ïÅ¢, சிற்றெண் பதினாறும் அராகவடி நான்குமாக இருபதடி. பெறப்படுங் கொச்சகம் இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபது அடிபெறுமென்றவாறாயிற்று.3 இனிப் பதினைந்தாங்கால் தரவு இரண்டடியும், கொச்சகம் மூன்றாகி ஆறடியும், அராகவடி ஒன்றும், சிற்றெண் நான்கும், அடக்கியல் இரண்டுமெனப் பதினைந்தடியாம் ஒழிந்த இடையளவிற்குந் தலையளவிற்கும் இவ்வாறே வருமென் றறிந்துகொள்க. இவ்வுறுப்புக் கண் மேற்கூறுகின்றானாகலின் ஈண்டு அளவை கூறினானென்பது. கலிப்பாவின் உள்ளுறுப்பிற்கெல்லாம் ஈண்டே வேறுவேறளவை கூறி வருகின்றானாகலின் இவற்றுக்கும் அவ்வாறே ஈண்டளவை கூறினான் அளவியலுட் கூறாதென்பது.4 சூத்திரத் துப்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே (தொல்-மர.103) என்பதனான் இதனுள்ளுறுப்பிற்கு அடிவரையறை உய்த்துணர்ந்து காட்டினா னாமென்பது. (151) நச்சினார்க்கினியம் : இது மேனின்ற அதிகாரத்தாற் கடவுள்வாழ்த்தாகிய அம்போதரங்க வொருபோகிற்கும் அடிவரையறை கூறுகின்றது. அம்போதரங்கவொருபோகு, தன்னுறுப்பெல்லாங்கூடி யறுபதடித்தா யொவ்வொருபதத்திற்கு இரண்டடியாகிய1 நூற்றிருபதடியை யுடைத்தாயும் வரும். சிறுமைக் கெல்லை கூறுமிடத்து அவ்வறுபதிற் செம்பாகமாகிய முப்பதடியிற் பாகமாகிய பதினைந்தடியான் வரும் எ-று. ஏகாரம்- எதிர்மறை. அறுபதிற்செம்பால் முப்பதில்வாரம் பதினைந்தென்றுணர்க. எனவே, இடையள வறுபதும், தலையளவு அதனிரட்டியாகிய நூற்றிருபதும், கடையளவு பதினைந்துமாயிற்று. இனி அறுபதும், முப்பதும், பதினைந்தும் எனச் சிற்றெல்லைக்கே தலையளவு இடையளவு கூறிற்றெனக்கொண்டு இவற்றிற் கடையளவாகிய சிற்றெல்லைக்குப் பேரெல்லை யறுபதுமெனப் பொருளுரைக்கிற் றலையளவிற் சிற்றெல்லைக்கும் இடையளவிற் பேரெல்லைக்கும் வேறுபாடின்றியும் இடையளவிற் சிற்றெல்லைக்கும் கடையளவிற்கும் வேறுபாடின்றியும் நிற்குமென மறுக்க. அங்ஙனம் நூற்றிருபது தரவிற்கெல்லை மேனின்ற அதிகாரத்தான் இருபதாகவும் அதனோடொத்து வருதலிலக்கணத்தவாகிய (அடக்கியல்) இருபதடியாகவும், நாற்பதடி பெறப்படும். சிற்றெண்பதினாறும் அராகம்நான்குமாக இருபதடிபெறப்படும்; கொச்சகம் இரு மூன்றாகி ஒன்றுபத்தடிபெற்று அறுபதடியாம். இனிப் பதினைந்தடி யான் வருவன நெடுங்கொச்சகம் இருமூன்றாகி; ஆறும்.2 அராகம் ஒன்றுஞ் சிற்றெண் நான்கும் அடக்கியலிரண்டுமாகப் பதினைந் தடியாம். இடையளவிற்கும் இவ்வாறே வருமாறறிக. மேல்அளவு கூறும்வழிக்கூறாது மேற் கூறுகின்ற பாவிற்கு ஈண்டளவு கூறினார் அதிகாரம்பற்றி. ஆய்வுரை : இஃது, கடவுள் வாழ்த்துப் பொருட்டாகிய அம்போதரங்க வொருபோகிற்கு அடிவரையறை கூறுகின்றது. (இ-ள்) அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக்கு எல்லையாகும்; அதன்செம்பாதியிற் பாதி (பதினைந்தடி) சிறுமைக்கு எல்லையாம் எ-று. செம்பால்-சரிபாதி, வாரம்-காற்கூறு. 146. எருத்தேகொச்சகம் அராகஞ்சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே. இளம்பூரணம் : என்---எனின். அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஈண்டு எருத்து என்பது தரவும் கொச்சகமும் அராகமும் மேற்சொல்லப்பட்டன. எண்ணினுட் பேரெண்ணிற் சிற்றெண் வரப்பெறுமாயினும் இனிச் சொல்லப்பட்ட உறுப்பு முறையான் வருதலும் மயங்கி வருதலுங் கொள்க.1 பரிபாடற்கும் இவைதாமே உறுப்பாயின் அதனோடிதனிடை வேறுபாடு என்னையெனில் அறுபதிற்றடியிற் குறைந்துவரின் முறை பிறழ்ந்து வருமெனவும் ஒத்துவரின் அறுபதின் மிக்கு வருமெனவுங் கொள்ளப்படும்.2 உதாரணம் கண்ணகன் இருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற தண்நறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும் வண்ணவண் தோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும் அன்னவை பிறவும் பன்மலர் துதையத் தழையுங் கோதையும் இழையும் என்றிவை தையினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி யாயத் தவருள் இவள்யார் உடம்போ டென்னுயிர் புக்கவ ளின்று; இது தரவு. ஓஒ இவள், பொருபுகல் நல்லேறு கொள்பவ ரல்லால் திருமாமெய் தீண்டலர் என்று கருமமா எல்லாருங் கேட்ப அறைந்தறைந் தெப்பொழுதுஞ் சொல்லால் தரப்பட் டவள்; சொல்லுக, பாணியேம் என்றார் அறைகென்றார் பாரித்தார் மாணிழை யாறாகச் சாறு; சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லாம் மிடைபெறின் நேராத் தகைத்து; இவை கொச்சகம். தகைவகை மிசைமிசைப் பாய்மார் ஆர்த்துடன் எதிரெதிர் சென்றார் பலர்; கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந் துருத்தெழுந் தோடின்று மேல்; இவை அராகம். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்; இவை சிற்றெண். அவருள், மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றி வருத்தினான் மன்றஅவ் வேறு; இது முடுகியலடி வந்த கொச்சகம். ஏறெவ்வங் காணா எழுந்தார் எவன்கொலோ? வேறுடை நல்லார் பகை; மடவரே நல்லாயர் மக்கள் நெருநல் அடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்று முடலேறு கோட்சாற்று வார்; இவையுங் கொச்சகம். ஆங்கினி, தனிச்சொல். தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித் திண்தோள் திறலொளி மாயப்போர் மாமேனி அந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த முறுவலாள் மென்றோள்பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்த துரை (கலி. 102) இது சுரிதகம். பிறவும் இந்நிகரன கொள்க. யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகவொரு போகை அதன்பி னோதினமையால் இதற்குங் காமப் பொருளே பெறப்பட்டது.1 (146) பேராசிரியம் : இஃது, முன்னர்க் கூறிய அபோதரங்கவுறுப்பு இவை ஐந்து மெனக் கூறியவாறு. (இ-ள்.) தரவும், கொச்சகமும், அராகமும், சிற்றெண்ணும், அடக்கியல்வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்க வொருபோகு (எ-று). தரவெனினும் எருத்தெனினு மொக்கும். இனிக், கொச்சகமென்பது ஒப்பினாகிய பெயர்; என்னை? பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் bfh¢rfbk‹g: அதுபோலச் சிறியவும் பெரியவும் விராயடுக்கியுந் தம்முளொப்ப அடுக்கியுஞ் செய்யப்படும் பாட்டுக்களைக் கொச்சகமென்றா னாகலினென்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியுங் bfhŒrfbk‹W சிதைத்தும் வழங்குப.1 இவை வெண்பாவாகல் பெரும்பான்மை; வழிமுறை சுருங்கியும் வரையறையெண்ணுப்பெறும் எண்போலது பாவினுந் தளையினும் வேறுபட்டுப் பலவாகியும் வருங்கொச்சகமென்பது.2 muhfbk‹gJ அறாது fL»¢nrwš; பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டுந்துணைச் செய்யதாகிய பொன்னினை அராகித்த தென்பவாகலின், அதுவும் ஒப்பினாகிய பெயராயிற்று; என்னை? மாத்திரை நீண்டுந் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின்.3 சிற்றெண் என்பது நால்வகை யெண்ணினும் இறுதியெண் ணானமையின் அப்பெயர்த்தாயிற்று.1 அவ்வுறுப்புக்களிற் கூறிய பொருளை அடக்குமியல்பிற்று வாரமாகலின் அதனை அடக்கியல் வாரமென்றான்;2 அதற்குச் செய்யுள்: செஞ்சுடர் வடமேரு விருமருங்கின் திரிகின்ற வெஞ்சுடரு மதியமும்போல் வேலொடுகே டகஞ்சுழல மாயிரு மணிப்பீலி மயிலெருத்திற் றோன்றுங்காற் சேயொளி கடற்பிறந்த செந்தீயிற் சிறந்தெறிப்ப மறுவருந்தம் மனத்துவகைக் கலுழ்ச்சியான் வளர்த்தெடுத்த அறுவருந்தம் முலைசுரந் தகடிருந்தூ றமுதூட்ட ஆருருவத் தெயின்மூன்று மொருங்கவித்தோன் வியப்பெய்த ஈருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல் வெய்யோய் (தரவு) ஆங்க, வினையொழி காலத்து வெவ்வெயிற் கோலத் தனைவரும் தத்த மறம்புரிந் தாங்கு முனையடு கொற்றத்து முந்நான் குருவிற் கனைகடல் சுட்டன கண்; தேவரு மக்களுஞ் சீற்றத்தா னஞ்சாமைக் காவல் புரியுங் கதிர்மதி போலுமே மூவிரு தோன்றன் முகம்; மடமகள் வள்ளி மணிக்கம் பலம்போல விடையிடை சுற்றுத லின்றுந் தவிரா தொடையமை தார்க்கடம்பன் றோள்; அவ்வழி, அடியிணை சேரா தவுணர் நுங்கிப் பொடிபொடி யாகிய போர்ப்பொடு மாய விடியுமிழ் வானத் திடைநின்றுங் கூஉங் கொடியணி கோழிக் குரல் விழுச்சீ ரமரர் விசும்பிடைத் தோன்றிப் பழிச்சிநின் றார்த்தார் பலர்; (தாழிசை) உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்; பெருகள வருமறை பெறுநெடு மொழியொடு பொருகள வழியிசை புகல்வன சிலகுறள்; (அராகம்) சிவந்தன திசை --- ஆர்த்தனமறை சிலம்பினமலை --- ஆடினர்பலர் நிவந்தனதலை --- போர்த்தனதுகள் நிரம்பினகுறை --- பொழிந்தனமலர்; (சிற்றெண்) ஆங்கனந் தோற்றிய வடுபோர் வென்றியின் வீங்கிருந் தொடித்தோள் விடலை நினக்கே யாமறி யளவையிற் றமிழ்புனைந் தேத்துகம் நின்னீதக்க தாயினு நின்னெதிர் நாணில மாகல் வேண்டும் யாணர்க் கடம்புங் களிமயிற் பீலியுந் தடஞ்சுனை நீரோடு நின்வயின் அமர்ந்த வாராப் புலமை வருகமா ரெமக்கே (அடக்கியல்) என்பது இடையளவம்போதரங்க bthUnghF. இவ்வுறுப்புக்களின் அளவு வேறுவேறு கூறானாயினும் அவற்றுக்கு ஏற்றவாறறிந்து செய்யப்படும். இது, நாற்பத்து நான் கடியான் வந்தது. ஒழிந்தனவும் இவ்வாறே வரும். இவையெல்லாம் இக்காலத்து வீழ்ந்தன போலும். மற்றுக் கொச்சகவொருபோகினை முற்கூறி அதற்கு அளவைப் பிற்கூறினான், இதற்காயின் அளவை முற்கூறியதென்னை யெனின்,-அங்ஙனம் அளவை பெற்ற அம்போதரங்கவொரு போகின் அளவை இனிக் கூறாது நின்ற கலிப்பா மூன்றற்கும் அளவென்ப தறிவித்தற்கென்பது.1 அஃதேல் இதனையும் அம் போதரங்கத்திற்கள வென வரைந்தோதிய தென்னையெனின்,--- அது தலை இடை கடையென மூன்றளவு பெறுமென்றற்கென்பது.2 இவ்வதிகாரத்தான் வருகின்றவற்றோடு இதற்கு வேற்றுமை யிலக்கணம் ஒப்பன அறிந்துகொள்க.3 வருகின்ற கலிவெண் பாட்டிற்கு, வெள்ளடி யியலாற் றிரிபின்றி வரும் (தொல்-செய். 143) என்றமையின் அதற்கு இவ்வளவை ஒவ்வாதென்பது.4 (152) நச்சினார்க்கினியம் : இது முன்னர்க் கூறிய அம்போதரங்கவுறுப்பு இவையைந்து மெனக் கூறியவாறு. (இ-ள்.) தரவுங் கொச்சகமும் அராகமுஞ் சிற்றெண்ணும் அடக்கியல் வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்க-வொருபோகு எ-று தரவெனினும் எருத்தமெனினும் ஒக்கும். பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகமென்பவாகலின், அது போலச் சிறியவும் பெரியவும் விராஅயடுக்கியுந் தம்மு ளொப்ப வடுக்கியும் வருஞ்செய்யுளைக் கொச்சக மென்றார்; இது ஒப்பினாகிய பெயர். இக்காலத்து இது மகளிர்க்குரியதாய்க் கொய்சகமென்று வழங்கிற்று. இது முறையே சுருங்கிவரும் எண்ணுப்போலாது அடியுஞ் சீருந் தளையும் வேறுபட்டு வருமென்றுணர்க. வெண்பாவாகிற் பெரும்பான்மை1 அராகமாயது அறாதுகடுகிச்சேறல்; பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டுந்துணைச் செய்யதாகிய பொன்னை அராகித்த தென்பவாகலின் இதுவும் ஒப்பினாகிய பெயர்; மாத்திரை நீண்டுந் துணிந்தும் வராது குற்றெழுத்துப்பயின்று உருண்டுவருதலின். சிற்றெண்ணாவது; நால்வகையெண்ணினும் இறுதிநின்ற எண். வாரம் முற்கூறிற்று. உ---ம். செஞ்சுடர் வடமேரு விருமருங்குந் திரிகின்ற ... ... ... ... ... ... ... ... ... ... ... thuh¥ புலமை வருகமா ரெமக்கே என்பது இடையளவம்போதரங்கவொருபோகு. ïவ்வுறுப்புக்களில் அளவு கூறாமையின் ஏற்றவாறறிந்து கூறப்படும். இது நாற்பத்து நான்கடியான் வந்தது. இவை யிக்காலத்து மிகவழங்காது. ஒருபோகுபோலன்றி இதற்களவை முற்கூறியது, அம்போதரங்கவொரு போகின் அளவே மேற்கூறுகின்ற மூன்று பாக்கட்கும்2 அளவென்றற்கு. இவ்வதிகாரத்தான் வருகின்றவற்றோடு இதற்கு உறுப்பிலக்கணம் ஏற்பன வறிந்துகொள்க. வெள்ளடியியலாற் றிரிவின்றிவரு மென்றலின். அவ்வளவை மேல்வருகின்ற கலிவெண்பாட்டிற்கு இன்றென்றுணர்க. ஆய்வுரை : இஃது, அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) அம்போதரங்க வொருபோகாகிய அச்செய்யுள் எருத்து, கொச்சகம்,அராகம், சிற்றெண், அடக்கியல் வாரம் என ஐந்துறுப்புக்களையுடையதாகும் எ-று. ஈண்டு எருத்து என்பது தரவு என்பர் இளம்பூரணர். அடக்கியல் வாரம் என்பது சுரிதகம். சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப்பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது என்பர் இளம்பூரணர். எருத்து முதலாகச் சொல்லப்பட்ட இவ்வுறுப்புக்களே பரிபாடற்கும் உறுப்பாம் எனினும், இங்குத் தரவு முதலாக வாரம் ஈறாக எண்ணப்பட்ட இவ்வுறுப்புக்கள் இங்கு எண்ணிய முறையே வரின் அம்போதரங்க வொருபோகாம் எனவும், அறுபதடியிற் குறைந்து முறைபிறழ்ந்து வருவனவும், அறுபதடியின் மிக்கு வருவனவும், பரிபாடல் எனக் கொள்ளத்தக்கன எனவும் இவற்றிடையே வேறுபாட்டினை விளக்குவர் இளம்பூரணர். 147. ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால் திரிபின்றி முடிவது1 கலிவெண் பாட்டே. இளம்பூரணம் : என்--எனின். கலிவெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈற்றடியளவும் ஒருபொருளைக் குறித்து வெள் ளடியியலாற்2 றிரிபின்றி முடிவது கலிவெண்பாட்டாம் என்றவாறு. கலிவெண் பாட்டெனினும் வெண்கலிப் பாட்டெனினும் ஒக்கும். வெள்ளடியியலா னென்றமையான் வெண்டளையான் வந்து ஈற்றடி மூச்சீரான் வருவனவும் பிறதளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவுங் கொள்க. மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் என்னீர் அறியாதீர் போல இவைகூறின் நின்னீர் அல்ல நெடுந்தகாய் எம்மையும் அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடின் அதுவல்ல தின்பமும் உண்டோ எமக்கு (கலி. 6) என வரும். இஃது வெண்டளையான் வந்த வெண்கலிப்பா. அஃதேல் இது நெடுவெண்பாட்டிற்கு ஓதிய இலக்கணத்தான் வருதலிற் பஃறொடை வெண்பாவாம்; வெண்கலிப்பா வென்ற தென்னை யெனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவுங் கைக்கிளை பெருந்திணை யெனவுஞ் சொல்லப்பட்ட பொருளேழனுள்ளும் யாதானு மொருபொருளைக் குறித்து ஏனைக் கலிப்பாக்கள் போலத் தரவுந் தாழிசையுந் தனித்தனி பொருளாக்கிச் சுரிதகத்தாற் றொகுத்து வருநிலைமைத்தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலி வெண்பாவெனவும், புறப் பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடைவெண்பா வெனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாட லெனவும், கொச்சகக் கலிப்பாவிற் குறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாவைக் கொச்சகக் கலிப்பாவெனவும் கூறுதல் இவ்வாசிரியர் கருத்தென்று கொள்க. அன்னதாதல் நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே (செய்யுளியல் 114) என யாப்பினாலே வேறுபடுத்தாராகிக் கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுள் எனப் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்தோதினமையானுங் கொள்க. தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி இருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் தையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன் (கலி 119) என்னும் முல்லைக்கலி அயற்றளையான் வந்த கலிவெண்பா. (147) பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே கலிவெண்பா வாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருளைக்கருதி மற்றொரு பொருள்படவுஞ் சொற்றொடர்ந்து கிடப்பத்1 தொடுக்கப்பட்ட வெள்ளையடியால் திரிபின்றி வருவது கலிவெண்பாட்டாம் (எ-று)2 இயல் என்றதனான் வெண்பாவிலக்கணஞ் சிதையாதவற் றுக்கே ஒருபொருள் நுதல வேண்டுவதெனவும் அவ்வாறன்றித் திரிந்து வருவனவெல்லாம் ஒருபொருள் நுதலாவென்னுங் கலி bt©ghthbkdî§ கூறியவாறு. bt©ghÉy¡fzbk‹gJ கட்டளையாகி வருதலுந் தளைவகையொன்றி வருதலும் பன்னிரண்டடியின் இகந்து வாராமையுமென இவையென்பது மேற்கூறினாம். அவ்வாறன்றித் திரிந்து வருங்கால் வாளாதே அசையுஞ் சீரு மிசையொடு சேராதன (11) பாவகை சிதைந்து கலித்தளையோசை எனப்படும். அற்றன்றியும் தனக்கோதிய சீருந் தளையுஞ் சிதைந்தவழியும் பன்னிரண்டடியின் இகந்தவழியுங் கலிவெண்பாவாதற்கு வரைந்து கூறல்வேண்டுவதன்றென்பதூஉம் அவை ஒருபொருள் நுதலாது வரினுங் கலிவெண்பாட்டாமெனவுங் கூறினானாம்; என்னை? ஒருபொருள் நுதலியதனைத் திரிபின்றி முடிந்த கலிவெண்பாட்டெனவே ஒருபொருணுதலியும் நுதலாதும் ஈண்டுக் கூறிய வேறுபாட்டான் வருவனவெல்லாந் திரிபின்றி முடியாதாகலின் வெண்பாட்டென்பதுகொள்ள வைத்தமை யினென்பது.1 இன்னுந் திரிபின்றி முடியும் என்றதனானே ஒரு பொருளன்றிப் பலவுறுப்புடைத்தாகித் திரிபுடையதூஉங் கலிவெண்பாட்டுளதென்று கொள்ள வைத்தானாம்; அது முன்னர்க் சொல்லுதும்.2 (உ-ம்.) அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறைசூழா»யைaவிரும்புÚயென்றேhளெழுதிaதொய்யிலு«யாழநி‹மைந்துlமார்பி‰சுணங்கு. நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் tளமைÉழைதக்கJ©டோவுsநாsரோஒகைத«முட்டæஇaரோஒகைaன்றன்கூறhடையுLப்பவரேயhயினுkன்றினார்வhழ்க்கையேவhழ்க்கையÇதரோrன்றவிsமைதuற்கு (fÈ-18) என்பது பன்னிரண்டடியான் வந்து பல பொருணுதலி வந்தமை தலிற் fÈbt©gh£lhƉW.1 ஒருபொருள் நுதலிய எனவே சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைத் தென்பதூஉம் பெற்றாம். என்னை? இப்பாட்டினுட் பெண்டன்மைக்கேலாத நுண்பொருளினைத் தலைமகனெதிர்நின்று உணர்த்துவாள் செவ்வனஞ் சொல்லாது தலைமகன் பண்டு கூறியன சிலவற்றை வாங்கிக்கொண்டு சொல்லி அவன் மறந்தானென்பது உணர்த்துகின்ற பொருண்மை கருதி உணரவைத்தமையின் அவ்வாறாயிற்று. ஒழிந்த பாக்களும் அவ்வாறு ஒருபொருணுதலு மாயினும் அங்ஙனம் நுதலிய பொருள்பற்றிச் செய்யுள் வேறுபடாமையின் ஆண்டாராய்ச்சியின்றென்பது.2 வெண்பாவிற் குறித்த பொருளினை மறைத்துச் சொல்லாது செப்பிக்கூறல் வேண்டுமாகலானும், இஃது அன்னதன்றி, ஒருபொருணுதலித் துள்ளினமையானுங் கலிவெண்பாட்டெனப்பட்டதென்பது.3 மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு முழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு (கலி 6) என்பது, பதினோரடியான் ஒருபொருணுதலிவந்த கலிவெண் பாட்டு. நூற்றைம்பது கலியுள்ளுங் கலிவெண்பாட்டு எட்டாகலின் அவற்றுள் ஒருபொரு ணுதலி வருவன பிறவும் உள. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க.1 இனி, பன்னிரண்டடியின் இகந்து ஒருபொரு ணுதலாது வருமாறு: தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் ..... ....... ....... ........ ........... ........... ....... nehí§ களைகுவை மன் (கலி 111) என வரும். பிறவும் அன்ன, இனி, பாவகை சிதைந்தனவுந் தளைவகை சிதைந்தனவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாங் காமப்பொருண் மேலனவாம்.2 எனவே, கட்டளைவகையானுந், தளைவகை யொன்றியும் வரும் வெண்பாவாயிற் காமத்திற்கே உரியவெனப்படா வாயின3 பிறவும் அன்ன. இனி, அம்போதரங்கவொருபோகிற்கு இடையின்றிக் கலிவெண்பாட்டு வைத்தமையான், வானூர் மதியம் போலும் ஒருசார்த் தேவபாணியுங் கலிவெண்பாட்டேயாம், ஒருபொருணுதலி வரினென்பது; இதனுள், ஆட்சிய னாக வென்கோ என்பது வியங்கோளாயினும் அரசன் வாழ்க்கையும் அரங்கிற்கும் ஆடற்கும் இடையூறின்மையுஞ் சொல்லுவாயாகவென்று தெய்வத்தினை வினாஅய் வாய்ப்புள் வேண்டி நின்றமையின் அது குறித்துணரப்பட்டு ஒருபொருணுதலியதாயிற்று.1 கந்திருவ மார்க்கத்து வரியுஞ் சிற்றிசையும் பேரிசையும் முதலாயினபோலச் செந்துறைப்பகுதிக்கே உரியவாகி tUtdî§,T¤jüYŸ வெண்டுறையும் அராகத்திற்கேயுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள்போல வேறுபாடப்பெறும் வழக்கியல் என்பது கருத்து. இக்கருத்தானே அவற்றை இப்பொழுதும் இசைப்பா வென வேறுபெயர் கொடுத்து வழங்குப.2 இனி, யாப்பிலக்கணத்திற் கொப்பவே இசைநூலுட் சொல்லப் பட்ட செய்யுளும் உள; என்னை? வெண்பா வியலான் விரவுறுப் பின்றித் தன்பா வகையொடு பொருந்திய பொருளே யொன்றுவிளைந் திற்ற விறுதித் தாகும் என்றவழி, விரவுறுப்பின்றியென வேண்டாகூறி விரவுறுப்புடையது பொருளொன்று விளையாதெனவும், விரவுறுப்பில்லாது பொரு ளொன்று விளைந்திற்ற இறுதித்தாகு மெனவுங் கூறினமையின்.1 எனவே, ஈண்டு ஒரு பொருணுதலி வருமெனப்பட்ட கலி வெண்பாட்டுப் பொருள் வெளிப்படாதெனவும் விரவுறுப்புடையது வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் பொருட்டெனவும் நேர்ந்தானாம்.2 அது நோக்கியன்றே வருகின்ற சூத்திரத்து வெண்பா வியலான் வெளிப்படத்தோன்று (154) மெனக் கலிவெண் பாட்டினையே கருதி ஓதுவானாயிற்று என்பது. (153) நச்சினார்க்கினியம் : இது முறையே கலிவெண்பாக் கூறுகின்றது. ஒருபொருளைக் கருதி வாராநிற்ப வேறுமொரு பொருளே படவுஞ் சொற்றொடர்ந்து கிடப்பத் தொடுக்கப்பட்ட வெள்ளை யடியாற் றிரிவின்றி வருவது கலிவெண்பாட்டாம். எ-று. இயலென்றதனாற் கட்டளையடியாய் வருதலுந் தனக்குரிய வெண்டளையான்வருதலும் பன்னீரடியான்வருதலும் பிறவுமாகிய இலக்கணஞ் சிதையாதனவற்றுக்கே ஒருபொருணுதலிவர வேண்டுவது. அவ்வாறன்றித் தீர்ந்துவருவன1 ஒருபொருணுதலாக் கலிவெண்பாவாம். எ-று. அவ்விலக்கணத்திற்றிரிந்துஞ் சீருந் தளையுஞ் சிதைந்தும் அடியிகந்தும் பாவகை சிதைந்தும் ஒரு பொருணுதலியும் வெண்பாவியலான் வந்தனவுங் கலியோசையா மென்றுணர்க. இதனான் ஒருபொருணுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும் ஒருபொருணுதலாதது சீர்வகையாய்த் திரிவுடைத்தாய் வருமெனவுங் கூறிற்றாம். உ-ம். அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் கணங்கு நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லார் இளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு (கலி.18) இது, பன்னீரடியான்வந்து ஒருபொருணுதலிய கட்டளைக் கலிவெண்பா, இதனுட் பெண்டன்மைக்கு ஏலா நுண்பொருளினைத் தலைவனெதிர் நின்றுணர்த்துவான் செவ்வன் கூறாது. தலைவன் பண்டுகூறின சிலவற்றை வாங்கிக்கொண்டு கூறுங் கூற்று, நீ மறந்தாயென்பது யாம் உணரக் கூறுகின்றாள் இவளென்பதுபட நின்றமையின் ஒருபொருணுதலிற்றாயிற்று. அது அகப்பொருளேயா மாறும் ஒழிந்த பாக்களும் அவ்வாறு வருமேனும் அங்ஙனம் நுதலிய பொருளான செய்யுள் வேறுபடாமையின் ஆண்டு ஆராய்ச்சியின்று. இது வெண்பாவாயிற் குறித்தபொருளை மறைத்துக்கூறாது செப்பிக்கூறல் வேண்டும். இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானுந் துள்ளி வருதலானுங் கலிவெண்பாட்டாயிற்று. மரையா மரல்கவர (கலி 6) என்னும் பாட்டுப் பதினோராடியான் ஒருபொரு ணுதலிற்று. நூற்றைம்பது கலியுட் கலிவெண்பாட்டு எட்டு. அவற்றுள் ஒரு பொருணுதலிவருவனவற்றின் பொருள் வல்லார்வாய்க் கேட்டுணர்க. இன்னும் இயலென்றதனாற் பன்னீரடியி னிகந்து ஒரு பொருணுதலி வருவனவும் அங்ஙனம் வந்து தளை விரவி வருவனவுங் கொள்க. சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடும் (கலி. 51) என்னும் பாட்டு அடியிகந்து ஒருபொருணுதலியது. கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் வயமா னடித்தேர் வான்போலத் தொடைமாண்ட கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந் தவன்வயிற் சேயேன்மன் யானுந் துயருப்பே னாயிடைக் கண்ணின்று கூறுத லாற்றா னவனாயிற் பெண்ணன் றுரைத்தல் நமக்காயி னின்னதூஉங் காணான் கழிதலு முண்டென் றொருநாளென் தோணெகிழ் புற்ற துயராற் றுணிதந்தோர் நாணின்மை செய்தே னறுநுதால் ஏனல் இனக்கிளி யாங்கடிந் தோம்பும் புனத்தயல் ஊசலூர்ந் தாட வொருஞான்று வந்தானை ஐய சிறிதென்னை யூக்கி யெனக்கூறத் தையால் நன்றென் றவனூக்கக் கைநெகிழ்பு பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின் வாயாச்செத் தொய்யென வாங்கே யெடுத்தனன் கொண்டன்மேன் மெய்யறியா தேன்போற் கிடந்தேன்மன் னாயிடை மெய்யறிந் தேற்றெழுவே னாயின்மற் றொய்யென ஒண்குழாய் செல்கெனக் கூறி விடும்பண்பின் அங்க ணுடைய னவன் (கலி. 37) இஃது தையால்நன்றென்று என மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாமற் றோழி தலைவிக்குரைத்தது. இதுகேட்டுத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கருதினாள் போலுமெனத் தலைவி கருதுமாற்றாற் றோழி கூறியவாறும் இதனானே தலைவி யினிக் கரந்தொழுகி உடம்படுக்குமென்பதூஉம் ஒருபொருளாயிற்று. இது அறக்கழிவுடையன (தொல். பொருள். 24) என்னும் பொருளியற் சூத்திரத்தில் வழுவமைத்தவாறுங் காண்க. தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் .... ..... .... ... ...... ..... .... ..... .... நோயுங் களைகுவை மன் (கலி. 111) இது தளைவிரவி ஐஞ்சீரடியும் வந்து ஒருபொரு ணுதலாதது. இடுமு ணெடுவேலி (கலி.12) என்னும் பாட்டுத் தளைவிரவி யவ்வாறு வந்தது. பாவகை சிதைந்தன வந்துழிக்காண்க.ஒன்றென முடித்தலாற் பொருள்வகை சிதைதலுங் கொள்க. அவ்விரண்டுஞ் சேரச் சிதைந்தன இக்காலத்தார் கூறுகின்ற உலாச்செய்யுளாம். இனி யிக்காலத்தார் கூறும் மடற்செய்யுளும் பாவகை சிதைவின்றேனும் ஏறிய மடற்றிறம் ஆகிய பெருந்திணைப் பொருளாகலின் அதனைக் கலிவெண்பாட்டென்று கோடும். மேலிச் சூத்திரத்தாற்1 கூறுங் கலிவெண்பாட்டுக்களும் பெருந்திணையாயும் வருதலின்; இதனை வெண்பாவெனிற் றொல்காப்பியனார்2 கலிவெண்பாப் பெருந்திணைப் பொருளின் வாராதென்றுகொள்க. வெண்பா விதியான் விரவுறுப் பின்றித் தன்பா வகையொடு பொருந்திய பொருளே யொன்றுவிளைந் திற்ற விறுதித் தாகும் என்று இசைநூலினும் இவ்வாறேயோதிக் கொச்சகச் செய்யுளு முளவென்றார். இதனுள் விரவுறுப்பின்றியென வேண்டாது கூறியதனால் விரவுறுப்புடையது வேறுபொருள் விளையாதெனவும், விரவுறுப் பில்லது வேறுபொருள்விளைத்து இறுமெனவும் அவ்வாறே விரவுறுப்பில்லாக் கலிவெண்பாட்டும் வேறுபொருள் விளைக்குமெனவும் ஈண்டுக் கூறி, விரவுறுப்புடையது வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று மென்று மேலைச் சூத்திரத்தாற் கூறுகின்றார். ஆய்வுரை : இஃது, நிறுத்த முறையானே கலிவெண்பாவாமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப்பட்ட வெள்ளடியியலால் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டாகும் எ-று. வெள்ளடியால் என்னாது வெள்ளடியியலான் என்ற மையால், வெண்டளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும், பிற தளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள்மேல் வெள்ளடியால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் சிறப்புடையன என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும் என்பர் யாப்பருங்கல விருத்தி யாசிரியர். ஒருபொருள் நுதலிய எனவே, சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைத்தென்பது பெற்றாம். இயல் என்றதனான் வெண்பாவிலக்கணஞ் சிதையாதவற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவதெனவும், அவ்வாறன்றித் திரிந்து வருவனவெல்லாம் ஒருபொருள் நுதலாக் கலிவெண்பாவாம் எனவும் கூறியவாறு எனப் பேராசிரியரும், இதனான் ஒரு பொருள் நுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும், ஒருபொருள் நுதலாதது சீர்வகையாய்த் திரிவுடைத்தாய் வருமெனவும் கூறிற்றாம்.... வெண்பாவாயின் குறித்த பொருளை மறைத்துக் கூறாது செப்பிக் கூறல் வேண்டும். இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானும் துள்ளிவருதலானும் கலிவெண் பாட்டாயிற்று என நச்சினார்க்கினியரும் கூறிய விளக்கங்கள் இங்கு நினைக்கத்தக்கனவாகும். இனி, கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடையடி வெண்பா முடியுமாறு போல முச்சீரடியால் முடிவது கலிவெண்பா என்பர் யாப்பருங்கல ஆசிரியர். தன்றளை யோசை தழுவிநின் றீற்றடி வெண்பா லியல்வது கலிவெண் பாவே (யா-செய். 85) என்பது யாப்பருங்கலம். வெண்டளையால் வந்த செய்யுள் வெண்கலிப்பா எனவும் அயற்றளையால் வந்த செய்யுள் கலி வெண்பா எனவும் இளம்பூரணருரையிற் குறிக்கப்பட்டுள்ளமை இங்குக் கருதற்குரியதாகும். கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி முச்சீரான் முடிவதனை வெண்கலிப்பா என்றும், வெண்டளைதட்டு வெள்ளோசை தழுவி ஒருபொருள்மேல் வருவதனைக் கலிவெண்பா என்றும் வழங்குவர் குணசாகரர். வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா என்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறு படுத்துச் சொல்வாரும் உளர் என்பர் யாப்பருங்கலவிருத்தி யாசிரியர். இவ்வுரைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் வெண்டளை யான் வந்ததனைக் கலிவெண்பா எனவும் பிற தளையான் வந்ததனை வெண்கலிப்பா எனவும் வழங்கும் பெயர் வழக்கே பொருத்தமுடைய தெனத் தெரிகிறது. 148. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே.1 இளம்பூரணம் : என்---எனின். கொச்சகக்கலியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்). தரவும் ngh¡F«1 இடையிடை மிடைந்தும் என்பது--தரவாகிய உறுப்புஞ் சுரிதகமாகிய உறுப்பு முதலு முடிவும் வருதலின்றி இடையிடைவந்து தோன்றியு மென்றவாறு. உம்மையால் இயற்கை வழாமற் றோன்றியு மென்று கொள்ளப்படும். ஐஞ்சீரடுக்கியும் என்பது - ஐஞ்சீரடி பலவந்தும் என்றவாறு. உம்மையால் வாராதுமென்று கொள்க. MWbkŒbg‰W«2 என்பது--தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகஞ் சொற்சீரடி முடுகியலடி யென்னும் ஆறுறுப்பினையும் பெற்றும் என்றவாறு. உம்மையாற் பெறாதுமென்று கொள்க. வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும்3 பாநிலைவகை என்பது - மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களை யுடைத்தாகியும் இலதாகியும் வெண்பாவினியல்பினாற் புலப்படத் தோன்றும் பாநிலைவகை யென்றவாறு. புலப்படத் தோன்றுதலாவது ஏனையுறுப்புக்களில் வெண்பா மிகுதல். இன்னும் அதனானே பிற பாவடிகளும் வந்து வெண்பா வியலான் முடிதலுங் கொள்க. கொச்சகக்.. அறைந்தனரே என்பது கொச்சகக் கலிப்பா-வென்று இலக்கணமறிந்த புலவர் கூறினாரென்றவாறு. ஆறுமெய் பெற்றும் என்பதற்கு அராகமென்னும் உறுப்பைக் கூட்டி முடுகியலென்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் ஒன்று. உதாரணம் குறிஞ்சிக் கலியுள், காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால் நீள்நாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே; இது தரவு: இதனுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்குங் கானக நாடன் மகன்; இதனுள் முதற்கணின்றது கூன். சிறுகுடி யீரே சிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்; இதன் முதல் ஆசிரியவடி. காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்தோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; இவை மூன்றுங் கொச்சகம். எனவாங்கு, தனிச்சொல். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; இது வெள்ளைச் சுரிதகமாகி இடை வந்தது. அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; இவை யிரண்டுங் கொச்சகம். நல்லாய், தனிச்சொல். நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; இது பேரெண் புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ; விண்டோய்கன் னாடனும் நீயும் வதுவையும் பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ; பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; இவை யிரண்டுந் தாழிசை. மைதவழ் வெற்பன் மணஅணி காணாமற் கையாற் புதைபெறூஉங் கண்களும் கண்களோ; இது பேரெண். என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான் நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண்மணி; இதுவுங் கொச்சகம். எனவாங்கு, தனிச்சொல். நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவர் இனமாக வேய்புரை மென்றோட் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே. (கலி. 36) இது சுரிதகம். இதனுள் முதலடி அறுசீர் முடுகியல்; இரண்டாவது ஐஞ்சீர் முடுகியல். இவ்வாறு வருவன கொச்சகக்கலிப்பா வெனப்படும். ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்குவந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க.1 இனி ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் குறைந்தும் மயங்கியும் மிக்கும் வரப்பெறும். அவை கலித்தொகையுட் கண்டுகொள்க. (148) பேராசிரியம் : தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும். இது, மேல் வெளிப்படு பொருட் டெனப்பட்ட வெண்கலி விரவுறுப்புடைமையின் அதனை வேறு கூறுகின்றது.2 (இ-ள்). தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும்1 என்பது, தரவிற்கும் போக்கிற்கும் இடையின்றிப் பாட்டாகிப் பயின்று வருதலும்; எ-று. எனவே, தரவும் போக்கும் முன்னர் ஓதிய வகையானே முன்னும் பின்னும் நிற்குமென்பதூஉஞ், கரிதகமாயின் வெள்ளையும் அகவலுமாய்ப் பாவோடு வந்துழிப் போலத் தனிச்சொற்பெற்றும் பெறாதும் வருமென்பதூஉங் கொள்க. தரவும் போக்கு மெனப் பாட்டிறுதி நின்ற போக்கினைமுன்வைத்தான், அவை ஓரினத்த வாகலின் ; என்னை? தரவிறுதி, சீரான் இறுமாறு போல வெள்ளைச் சுரிதகவிறுதியும் ஒரோவழிச் சீரானே இறுதலின். அது, தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய கோதை பரிபாடக் காண்கும் (கலி-80) என நான்கசையானுமின்றித் தேமாவா னிற்றது. இனிப், பாட்டினைப் போக்கின்பின் வைத்தனாற் போக்குப் போல நாற்சீரான் இறுவனவும் அப்பாட்டுள் சிறுபான்மை யென்பது; அது, கரந்தாங்கே யின்னாதோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு (கலி 141) என்றாற்போல வரும். இங்ஙனம் வைப்பலே வருகின்ற ஐஞ்சீரடுக்கலும் ஆறுமெய் பெறுதலும்(153) அவற்றுக்கன்றி ஏலாவாயின; அல்லதூஉம். இதனை இறுதி வைத்தான். இதனோடொக்குமென முற்கூறப்படுங் கொச்சகம், தரவும் போக்குமின்றிப் பாட்டு மிடைந்தே வருமென்பது இவ்வதிகாரத்தாற் கோடற்கென்பது. அது முன்னர்க் காட்டுதும். ஐஞ்சீரடுக்கியும் என்பது வேறுநின்றதொரு சீரினை அளவடி யுடன் அடுக்கிச் சொல்ல ஐஞ்சீராகியும், எ-று.1 ஆறு மெய்பெற்றும் என்பது அவ்வாறே இருசீரடுக்கி ஆறுசீர்பெற்றும், எ-று. மெய் யென்றதனான் அடுக்குஞ்சீர் முதலும் இறுதியும் வருமென்பது கொள்க.2 வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் என்பது வெண்பாவென்னும் உறுப்பினியற்கை சிதையாமற் பொருள் புலப்படத்தோன்றும். எ-று. இயற்கை சிதையாமல் தோன்றுமெனவே கட்டளையும் கட்டளையல்லதும் எனப்பட்ட வெண்பாவிலக்கணம் இரண்டுஞ் சிதையாமை வருமென்றானாம்;3 தரவும் போக்குமென நின்ற உம்மை எண்ணும்மை. பாட்டிடை மிடைந்தும் என்பது முதலாக வந்த உம்மை மூன்றும் இறந்தது தழீஇய எச்சவும்மை; என்னை? மேற்கூறிய தனிநிலை வெண்பாட்டேயன்றித் தரவுறுப்பாகவும் என்றமையின்.4 இவ்வாறன்றி, அவ்வனைத்தும் எண்ணும்மை கொள்ளின் உறுப்பினையே எண்ணல் வேண்டும்; அல்லாக்கால் வினையொடு பெயரெண்ணின் அதன் உறுப்பினையே எண்ணினானாகலா னென்பது. அல்லதூஉந் தரவும் போக்கும் முதல் வந்தும் இறுதிவந்து மென அவையும் தம்வினையான் எண்ணவும் படுமன்றோவென மறுக்க.5 அவற்றுக்குச் செய்யுள் கூறுங்கால், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து தோன்றும்; அதுவே ஐஞ்சீரடுக்குப் பெற்ற தொன்றும், அறுசீரடுக்குப் பெற்றதொன்றும், அவையிரண்டும் உடன்பெற்ற தொன்றுமென்றும் இங்ஙனம் விகற்பித்துக் கூறப்படு மென்பது.1 அவை கட்டளை வெண்பாவான் வருதலும் ஒழிந்த வெண்பாவான் வருதலுமென விகற்பிக்கப் படாவோவெனின், அவ்விகற்பம் அடிக்கல்லது பாவிற்கின்மையானும் ஈண்டுப் பா வேறுபடாமையானும் அங்ஙனம் பகுத்ததனாற் பயந்ததென்னை யென மறுக்க; வரலாறு: சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பேன் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன் தானையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா. அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்தவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே (கலி-139) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச்சுரிதகத்தான் வந்தது. இனி, வெள்ளைச் சுரிதகத்தான் வந்தனவும், கண்டுகொள்க. கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே பண்டறியா தீர்போல நோக்குவீர் கொண்டது மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி நெடியோன் மகனயந்து தந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச மிடிய விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக் கடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி னன்னே னொருவனேன் யான்; என்னானும், பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக நன்னுத லீத்தவிம் மா; திங்க ளரவுறின் தீர்க்கல ராயினுந் தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய லொண்டொடி நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாதிவ் வூர்; தாங்காச் சினத்தொடு காட்டி யுயிர்செகுக்கும் பாம்பு மவைப்படி லுய்யுமாம் பூங்கண் வணர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம முணர்ந்து முணராதிவ் வூர்; வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா ரஞ்ச லென்றாலு முயிர்ப்புண்டா மஞ்சீர்ச் செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம மறிந்து மறியாதிவ் வூர்; ஆங்க, என்க ணிடும்பை யறீஇயினெ னுங்கட் டெருளுற நோக்கித் தெரியுங்கா லின்ன மருளுறு நோயொடு மம்ம ரகல விருளுறு கூந்தலா ளென்னை அருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே (கலி 140) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச்சுரிதகத்தா விற்றதாகலின், இதனுள், என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே என்னும் அடி ஐஞ்சீரடுக்கினுள் வந்தது; என்னை? பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ என்னும் அளவடியிரண்டும் எதுகையாய் அமைந்தவழி என்னானும் என வேறு நின்ற சீரொடுங் கூடி ஐஞ்சீரடுக்கினமையின் இதனுள் ஆங்க வெனத் தனிச்சொல் வந்தது. காராரப் பெய்த (கலி109) என்னும் முல்லைப்பாட்டு ஐஞ்சீரடுக்கி வெள்ளைச்சுரிதகத் தானிற்றது. அரிதினிற் றோன்றிய யாக்கை புரிபுதாம் வேட்டவை செய்தாங்குக் காட்டிமற் றாங்கே யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன் றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன் றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் பாடி வரற்கு; ஒரொருகா லுள்வழிய ளாகி நிறைமதி நீரு ணிழற்போற் கொளற்கரியள் போரு ளடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன் மன்றம் படாவித் தவள்; வாழி சான்றீர், பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பை செய்தாள்; அம்ம சான்றீர். கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு; இடியுமிழ் வானத் திரவிருள் போழுங் கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டியவள்; வாழி சான்றீர்; என்றாங்கே, வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை போலக் கொடுத்தார் தமர் (கலி. 141) என்பதனுள், வாழி சான்றீர் அம்ம சான்றீர் என ஐஞ்சீரடுக் கியாங்கு அடுக்கிச் சொல்ல அறுசீராயின. இதற்கும் ஐஞ்சீர் அடுக்கியுமென்றதுபோல அறுசீரடுக்கியுமென்று அடுக்குதற்றொழில் கொள்ளப்படும். ஈண்டு இரண்டளவடி தொடைப்படச் செய்தமையினென்க. இதனுள்ளும் என்றாங்கே என்பது தனிச்சொல். புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது (கலி. 142) என்பதனுள், இனைந்துநோந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள் எனவும். இயற்சீர் நிரையொன்றியும் பா வேறுபடாமையின் இதுவும் கலிவெண்பாட்டாயிற்றென்பது கொள்க. இங்ஙனம் பா வேறுபடாமையினன்றே, உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅய் வாழியென் னெஞ்சு (குறள். 1200) என்பதனை வெண்பா என்பாமாயிற்றென்பது1 இனி, எல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல (கலி. 142) என வெள்ளைச் சுரிதகத்துள் ஐஞ்சீரடியும் வந்தது. வெண்பா விற்கு முன்னர், வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முள (தொல்-செய்-61) என்றானாகலின். மேற்கூனெனவுஞ் சொற்சீரெனவுங் கூறப்பட்டனவே ஈண்டு ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றுங் கூறுபட்டன என வுணர்க. இதற்கு ஐஞ்சீரும் அறுசீரும் விதந்தோதவே, மேற் சிறுபான்மை பொதுவகையாற் கலிக்கு நேரப்பட்ட சொற்சீரடி ஒத்தாழிசைக்கும் முற்கூறிய கலிவெண்பாட்டிற்கு மாயின் எஞ்ஞான்றும் வாராதென்பதூஉம், அது தானும் இதற்கு வருங்கால் இருசீரின் இகந்துவாராதென்பதூஉங் கூறினானாம்.1 இங்ஙனஞ் சொற்சீரடி விலக்கவே அதற்கினமாகிய முடுகியலடியும் ஒத்தாழிசைக்கு வாராதென்பதாம்.2 அது வெண்கலிக்கோ வெனின், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் (154) எனவே விலக்குண்டதன்றோ வென்க.3 இனித், தரவிற்கும் போக்கிற்கும் பாட்டிற்கும் இவ்வளவைத் தென்பது அம்போதரங்கத்திற்கு ஓதிய வகையாற் கோடு மென்றமையின்4 அதற்கேற்ற வகையான் வருவதன்றி வேறு வேறு வரையறை யிலவென்க. பாட்டிடை மிடையின் என்றமையின் ஈண்டுப் பாட்டென்றது கொச்சகத்திற்கே யுரித்தென்பது; மற்று, வெண்டளை தன்றளை யியற்றளை விரவியும் வெண்பா வுடையது வெண்கலி யாகும் எனத் தளைவிரவியும் வெண்பாச் சிதையாதவழிக் கலிவெண் பாட்டாமென்று ஒரு சூத்திரஞ் செய்யாரோ பலவுறுப்பு வந்த வழியும் இது புறனடையாக வெனின்,1 அற்றன்று; வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் எனவே இவையெல்லாம் அடங்குதலின் அது வேறு கூறானென்பது. இனிப் பலவுறுப்பின்றி அவ்வாறு ஒருபாட்டே வரின் அதனை வெண்கலி யென்பாரும் உளர். நூற்றைம்பது கலியுள்ளும் அன்ன தொரு கலிவெண்பாட் டின்மையின் அது சான்றோர் செய்யுளோடு மாறுகோளாமென மறுக்க.2 மற்றுப், பாட்டிடை மிடைந்தென்றவழிப் பாட்டெனப் பட்டது, இடைநிலைப்பாட்டென்றுமோ சொச்சகமென்றுமோ வெனின், எஞ்ஞான்றுந் தாழம்பட வாராமையின் இடைநிலைப் பாட்டென்னாம். துள்ளலுஞ் செப்பலுமென்னும் இருவகைக் கொச்சகமும் ஒருங்குவாராமையிற் கொச்சகமென்னாம். கொச்சக மென்னும் பொதுப் பெயரான் அது கூறாராயினும், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்றதனான் வெள்ளைக்கொச்சக மெனப்படும் அவையென்பது;3 அஃதேற் bfh¢rfbk‹W ஓதுகவெனின்,- அங்ஙனம் ஓதின் இது bfh¢rf¡fÈahbk‹W கருதினுங் கருதற்கவென்பான் வாளாதே பாட்டு என்றான். இதனாலும் பெற்றாம் இது கொச்சக்கலி யல்லாமை.1 (154) நச்சினார்க்கினியம் : இஃது மேல் வெளிப்படுபொருட்டெனப்பட்ட கலிவெண்பா விரவுறுப்புடைமையின் வேறுவேறு கூறுகின்றது. (இ-ள்) தரவு .... தும் எ---து தரவிற்கும் போக்கிற்கும் இடையன பாட்டாகிய பயின்றும். ஐஞ் ......í« எ து, வேறு நின்றவொருசீரிdயளவடியோடடக்கிக்கூwஐஞ்சீராகியும்,ஆW..... றும் எ---துஅவ்வாwயிருசீரடுக்fஆறுசீ®பெற்றும். வெண் ...... றும் எ---து வெண்பா வெனப் பட்டவுறுப்பினியற்கை சிதையாமற் பொருள் புலப்படத் தோன்றும். எ---று. எனவே தரவும் போக்கும் முற்கூறியவாறே முன்னும் பின்னும் நிற்றலும் சுரிதகமாயின் அகவலும் வெள்ளையுமாகி வருதலும் அவை தனிச்சொற்பெற்றும் பெறாதும் Ãற்றலுங்bகாள்க.gh£oWâÉF« போக்கினைத் தரவோடு முற்கூறியது தரவிறுதி சீரா னிறுமாறுபோல வெள்ளைச் சுரிதகமும் ஒரோவழிச் சீரானிறுமென்றற்கு. உ---ம். நயந்தலை மாறுவர் (கலி 80) என்னும் மருதக்கலியுள் ஐயவெங் காதிற் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும் போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையா மேதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பிற் றாதுதேர் வண்டின் கிளைபடத் தைஇய கோதை பரிபாடக் காண்கும் எனத் தேமாவா னிற்றது. இனிப் பாட்டினைப் போக்கின்பின் வைத்ததனாற் போக்குப்போல் நாற்சீரா னிறும்பாட்டும் வருஞ் சிறுபான்மையென்று கொள்க. உ-ம். கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு (கலி. 141) எனவரும். இங்ஙனம் வைப்பவே வருகின்ற ஐஞ்சீரடுக்கலும் ஆறுமெய் பெறுதலும் இப்பாட்டின்கணன்றி யேலாவாயின. இதனை யீற்றுக்கண் வைத்ததனானே மேற்கூறுங் கொச்சகமுந் தரவும் போக்குமின்றி யிப்பாட்டு மிடைந்தும் வருமென்பதூஉம் இவ்வதிகாரத்தாற் கொள்க. மெய்யென்றதனான் அடுக்குஞ்சீர் அதன் முதலினும் இறுதியினும் வருமென்று கொள்க. இயற்கை சிதையாமற் றோன்றுமெனவே கட்டளையுங் கட்டளையல்லது மென்ற வெண்பாவிலக்கணமிரண்டுஞ் சிதையாமை வருமென்- றாராம். வெளிப்படவென்றதனாற் றளைவிரவி வருதலுங் கொள்க. தரவும் போக்குமென்ற உம்மைகள் எண்ணும்மைகள். ஒழிந்த மூன்றும் இறந்ததுதழீஇய எச்சவும்மை. கலிவெண்பாட்டுத் தனிநிலையின்றி விரவுறுப்பாயும் வருமென்றலின், சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் ... ... ... ... ... ... ... ... ... துயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே (கலி. 140) இது தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச் சுரிதகத்தான் வந்தது. இவ்வாறே வெள்ளைச் சுரிதகத்தான் வருவனவுங் கொள்க. கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே ... ... ... ... ... ... ... ... ... mUSw¢ செயினுமக் கறனுமா ரதுவே (கலி. 10) இது பாடெனி லென்றும, ஆடெனி லென்றும் எதுகை யியைந்த அளவடி என்னானும் எனவேறு நின்ற சீரொடுங்கூடி ஐஞ்சீரடுக்கிற்று. இதனுள் ஆங்க எனத் தனிச்சொல் வந்தது. காராரப் பெய்த (கலி 106) என்னும் முல்லைப்பாட்டு இவடான் றிருந்தாச் சுமட்டின ளேனைத் தோள்வீசி வரிக்கூழ் வட்டி தழீஇ யரிக்குழை யாடற் றகையள் கழுத்தினும் வாலிதி னுண்ணிதாத் தோன்று நுசுப்பு என ஐஞ்சீரடுக்கியும், இவடான் வருந்தநோய் செய்திறப்பி னல்லான் மருந்தல்லள் யார்க்கு மணங்காதல் சான்றாளென் றூர்ப்பெண்டிர் மாங்காய் நறுங்கடி கூட்டுவேம் யாங்கு மெழுநின் கிளையொடு போவென்று தத்தங் கொழுநரைப் போகாமற் காத்து முழுநாளும் வாயி லடைப்ப வரும் என ஐஞ்சீரடுக்கிய சுரிதகத்தானும் வந்தது. அரிதி னிற்றோன்றிய யாக்கை புரிபுதாம் ... ... ... போலக் கொடுத்தார் தமர் (கலி. 141) இதனுள் வாழி சான்றீர், அம்ம சான்றீர் என ஈற்றுக் கண்வந்த சீர்களை முதலடிக்கட் பொருள்முடியுமாறு கூட்டி ஐஞ்சீரடுக்கியாங்கு அடுக்க அறுசீரான் அவ்வாறுவந்ததாம். இதற்கும் அறுசீரடுக்கியும் எனக்கூட்டிப் பொருளுரைக்க. என்றாங்கு. தனிச்சொல். புரிவுண்ட (கலி. 142) என்னும் நெய்நற்கலியுள் புரிவுண்டபுணர்ச்சியுள் எனக் கலித்தளையும் வந்து புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கண் எனவும் இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள் எனவும் இயற்சீர்நிரையாயன்றியும் பாவேறுபட்டு எல்லையு மிரவுங் கழிந்தனவென் றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல என ஐஞ்சீரடிவந்த வெள்ளைச் சுரிதகமும் பெற்ற கலிவெண்-பாட்டு. முற்கூறிய சொற்சீரடியே ஈண்டு ஐஞ்சீரும் அறுசீருமா யடுக்கின என்றுணர்க.1 இதற்கு இசைச்சீர்களை விதந்தோதவே கலிக்கு நேர்ந்த சொற்சீரடி ஒத்தாழிசைக்கும் இதன்முற்கூறிய கலிவெண்பாட்டிற்கும் வாராவென்றுணர்க. இதற்கினமாகிய முடுகியலும் அவ்விரண்டிற்கும் வாராமை கொள்க.2 இவற்றிற்கு வரையறை அம்போதரங்கத்திற் கோதிய வரையறையே வேறின்றென வுணர்க. இனிப் பலவுறுப்பின்றி யவ்வாறு ஒரு பாட்டே வரின் அதனை வெண்கலியென்பாரு முளர். நூற்றைம்பது கலியுள் அவ்வாறுவருவன இன்மையின் அது சான்றோர் செய்யுளொடு மாறுகொள்ளுமென மறுக்க. தாழம்படாமையின் இடைநிலைப் பாட்டென்னாதேயுந் துள்ளலுஞ் செப்பலும் என்னு மிருவகைக் கொச்சகமும் ஒருங்கு வாராமையிற் கொச்சக மென்னும் பேர் கொடாதும் பாட்டென்றார்; அதனை வெண்பா வியலான் வெளிப்படவருமெனவே வெள்ளைக்கொச்சகமெனப்படும். எ று. பேராசிரியம் : பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே. இது, நிறுத்தமுறையானே, அகநிலைக் கொச்சகக்கலி யுணர்த்துகின்றது. பாநிலைவகை யென்பது உம்மைத்தொகை; பாநிலையும் வகையுமென விரியும். பாநிலை யென்பது, ஆறாம் வேற்றுமைத்தொகை. (இ - ள்) மேற் பாவிநின்ற1 வகையானே கொச்சகக்கலியா மென்று நூலாசிரியர் கூறித் துணித்தனர். (எ - று) அறைதலெனினுந் துணித்தலெனினும் ஒக்கும், என்னை? துணித்த கரும்பினை. அறைக் கரும்பு (பொருந. 193) என்பவாகலின். பாநிலை யென்றது, யாதனை நோக்கியெனின் இது கொச்சகமாதலான் அதுவும் மேலே ஒருபோகெனக் கூறப் பட்ட கொச்சகப்பாநிலை யெனக்கொள்க. அதனைத் துணித் தனரென்றதனால், தரவின் றாகித் தாழிசை பெற்று (தொல்-செய்-149) வருமென்ற கொச்சகத்தினை இதற்கு இயைபின்றாக முன்வைத்துச் சேட்படுத்தமையின் அஃதொன்றனையுந் துணித்து மாற்றி அல்லாத கொச்சகம் பாவிநின்ற வகையான் இவ்வகநிலைப் பாட்டுப்போல அகநிலைக் கொச்சகம் வாராவென்றானாம்.2 வகை யென்றதனால் அதிகாரத்தானின்ற வெண்கலிப்பாவினது பா நிலையுங் கொள்ளப்- படும். அஃதேல், அதனைப் பாநிலை யென்னாது வகை யென்ப தெற்றுக்கெனின்,---வெண்கலிப்பாத், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து ... ... ... ... ... ... வெண்பா Éயலான்bவளிப்படத்nதான்றும் (தொல்-செய்-154)v‹wjdh‹ வெண்பாவிற் சிதையாது வருமென்று உறுத்துக் கூறினானென்பது. எனவே பாவொழிந்த உறுப்பெல்லாம் பொருணுதலாது1 வெளிப்படத் தோன்றுங் கலிவெண்பாட்டின் உறுப்புவகையான் வருதலும் உடைத்தென்றவாறு. அங்ஙனம் வருங்கால் இடைநின்ற கொச்சகங்களை, ஐஞ்சீ ரடுக்கலும் (தொல்-செய்-154) என்ற கலிவெண்பாவிற்கு ஓதியவாறே கொள்க. மற்று நூலறி புலவர் என வேண்டியதென்னையெனின், தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒரு தரவே கொச்சகமாதலுந், தரவிணைந்தவழிச் சுரிதகம் பெறுதலும், அவை தனிச்சொல்லுஞ் சுரிதகமும் உடன்பெறுதலுமெல்லாம், யாப்பின் வேறுபட்டன வென்றலும், ஒத்தாழிசை மூன்றடுக்கினும் இவற்றினை வேறுபாடறிந்து கொச்சகமெனக் கோடலுந் தேவபாணியாகாதவழிக் காமப்பொருளே பற்றி வாராது, அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கும் பற்றிப் பொருள் வேறுபட வருதலும், பா வேறுபட வருதலும் பற்றிக் bfh¢rf¡fÈba‹W உணர்வோர் நூலறி புலவரெனவும் அல்லாதது2 புலனாகா தென்பது எல்லாம் அறிவித்தற்கு,--- நூலறி புலவர் நுவன்றறைந் தனர் என்றானென்பது. எனவே கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை இனமென்று வேண்டுவாருளராயின் அவை அவ்வப்பாவின் இனங் கட்கு இவ்வகையே கொச்சகமென வேறுபடுமென்றவாராயிற்று.3 (உ-ம்.) செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு ... ... ... மகனல்லை மன்ற வினி (கலி 19) எனவும், செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி ... ... அவலம் படுதலு முண்டு (கலி-19) எனவுந் தரவிரண்டு அடுக்குதலின் தரவிணைக் கொச்சக மெனப்படும். இது நூற்றைம்பது கலியுளொன்றாகலின் வெண் பாவாகியுந் தனித்து வரும். வருங்காற் fÈbt©gh£bl‹ றாயிற்று. ஒரு பொருணுதலி இவ்வாறு வரினும் இஃதொக்கும். இது தாழிசையோடு கோடாத் தரவாகலின் வெண்பாவாகியும் வந்தது.1 மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் ... ... ... சென்றனை களைமோ பூண்கநின் தேரே (கலி-133) என்பது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம் பெற்ற தரவிணைக் bfh¢rf«. மின்னொளி ரவிரற விடை போழும் பெயலேபோல் ... யேழைத் தன்மையோ வில்லை தோழி (கலி. 55) இது, தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவிணைக் bfh¢rf«. இனிப், பல அடுக்கிய பொருட்டொடராய் வருந் தரவுக் கொச்சகங்களும் பொருட்டொடர் நிலையுள் அறம் பொருளின்பம் விராய்வருந் தரவுக்கொச்சகங்களும் வந்தவழிக் கண்டுகொள்க. வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தான். (கலி-188) இது, தரவுந் தாழிசையும் போக்கும் முறையானே வந்த தாயினும், அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி (தொல்-செய்-135) என்னும் இலக்கணஞ் சிதையத் தாழிசைகடோறுஞ் சொற்சீர் பல வருதலான் ஒத்தாழிசை யெனப்படாது அதன் வகைத்தாய் எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றிய கொச்சகமென்பதூஉமாயிற்று. அருடீர்ந்த காட்சியா னறநோக்கா னயஞ்செய்யான் (கலி-120) நயனும் வாய்மையு நன்னர் நடுவும் (கலி-130) என அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியதுபோலுங் கொச்சகம் வருங்கால் ஒத்தாழிசையும் வண்ணகமும் போலத் தனிச் சொற்பெற்றும் பெறாதும் வரும் நெய்தற்றிணைப் பாட்டுக்கும் இஃதொக்கும். அஃது வருமாறு:1 கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதை (கலி-54) என்னுங் கலியுள் அதனானெனத் தனிச்சொற் பெற்று அடக்கிய லில்லாச் RÇjf¤njhL அடிநிமிர்ந்தோடிற்று. பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி ... ... ... அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே (கலி-21) என்னும் கலிப்பாட்டுத் தனிச்சொல்லும் அடக்கியலுமின்றி அடிநிமிர்ந்தொழுகிற்று. எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போல் (கலி-32) என்னும் பாலைப்பாட்டும். அகன்ஞாலம் விளக்குந்தன் பல்கதிர் வாயாக (கலி-119) என்னும் நெய்தற்றிணைப்பாட்டும் அங்ஙனமாமாறு கண்டு கொள்க. இனி, யாப்பின் வேறுபட்ட கொச்சகவொருபோகோ டொப்பனவற்றுட் சில வருமாறு:1 மன்று பார்த்து நின்று தாயைக் கன்று பார்க்கு மின்றும் வாரார் (செய்-ஆ 63 பேராசிரியம்) என்பது. இருசீர் நான்கடித் தரவுக் bfh¢rf«. தஞ்சொல் வாய்மை தேற்றி யஞ்ச லோம்பென் றகன்ற வஞ்சர் வாரா ராயி னெஞ்ச நில்லா தேதான் என்பது முச்சீர் eh‹fo¤juî¡bfh¢rf«. நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல் வாரல ராகி யவரோ வலித்தமைந்தார் ஆரலார் நாரைகா ளன்றில்கா ளன்னங்காள் ஊரலர் தூற்றயா னுள்ள முகுவேனே என்பது நாற்சீர் நான்கடித்தரவுக் bfh¢rf«. கன்னி ஞாழற் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றோ ரில்லை போலுமான் மன்னன் காக்கு மண்மேற் கூற்றம் வரவஞ்சி யின்ன தொன்று படைத்த தாயி னெவன் செய்கோ. இஃது ஐஞ்சீர் நான்கடித்தரவு bfh¢rf«. இனி, கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற்படுத்துச் செப்பினும் அவையேயாம்.1 காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பா லாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவா நிற்ப ஆண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே என்பது, அறுசீர் நாலடித்தரவுக் bfh¢rf«. பிறவும் அன்ன. இலங்கொளி வெண்மருப்பி னிட்டகை தூங்கவோ ரேந்தல் யானை கலங்கஞ ரெய்திக் கைகுலையக் கதூஉங்கவளம் கடை வாய்சோரச் சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய். இஃது, அறுசீர் மூன்றடித்தரவுக் bfh¢rf«. தண்ணந் துறைவன் றார்மேற் போன வண்ண வண்டு வாரா தற்றே வண்ண வண்டு வாரா தாயிற் கண்ணீர் நில்லா தேகாண் என்பது, நான்காசிரிய வடியுள் இறுதியடி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டது. நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள் ளோப்புத றலைக் கீடாகக் கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையி னேந்தி மணங்கமழ் பூங்கானன் மன்னிமற் றாண்டோர் அணங்குறையு மென்ப தறியே னறிவேனே லடையேன் மன்னே (சிலப்-கானல்.9) என்பது இடையடி குறைந்து வந்தது இஃது, அறுசீ ரடியே யாசிரியத் தளை யொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே (தொல்-செய்.64) என்றோதப்பட்டதாயினும் பாமயங்கி வரும் பகுதிபற்றி வேறு காட்டப்பட்டது. புன்னை நீழ னின்றார் யார்கொ லன்னை காணின் வாழாள் தோழி எனவும், மல்ல லூரா விவ்வி லன்றாற் பல்பூங் கோதை யில் எனவும், இவை இரண்டடியான் ஈற்றடி குறையாதுங் குறைந்தும் வந்தன. இன்னும் மேற்கூறிய கொச்சக வொருபோகின் பகுதியுள் ஒழிந்தனவும் இவ்வாற்றான் வருவனவெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. இனி, வகை யென்றதனான் வெண்கலியுறுப்பு நிலைஒத்துப் பாவேறுபடும் கொச்சகம்1 வருமாறு : ஒன்று, இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் ... ... ... மற்றவன் மேஎவழி nமவாய்bநஞ்சே(கலி-47)v‹gJ, தரவுக் கொச்சகமுஞ் சுரிதகமும் முறையானே வந்து ஆசிரியச்சுரிதகத்தான் இற்றது. இதனுள் ஒன்று எனவும் அவனை எனவுஞ் சொற்சீருந் தனிச்சொல்லும் வந்தன. இப்பாட்டு மூன்றனுளொன்று ஓரடிமிக்கு மற்றைய நான்கடியாயே வருதலின் மூன்றும் ஒருபொருண்மேல் வரினும் நூலறிபுலவரான் ஒத்தாழிசை யெனப்படாக் கொச்சகமாயிற்று. பிறவும் இன்னோரன்னவற்றாற் கலியோடு இதனிடை வேறுபாடு தெரிந்து உணரப்படும்; அஃதறியாதார்க்கு ஒன்றுபோலக் காட்டினுமென்பது. வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு ... ... ... முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே (கலி-7) என்னும் பாட்டுத், தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்து ஐஞ்சீரடுக்கி வந்தது. இதனுள் தரவடி நான்கும் வெண்பாவாயினும் அச்செய்யுண் முழுதும் வெண்பாவன்மையிற் கொச்சகமாயிற்று. இனி, அறுசீரான் வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் (கலி.39) என்னுங் கொச்சகக் கலியுள், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன் என இடைநின்ற கொச்சகம் ஈற்றடி குறைந்தது. புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ எனக் கொச்சகம் ஈற்றடி குறையாது வந்தது. இவை யிரண்டும் வெண்பா. இதனுள் ஒழிந்தபா மயங்கியவாறு கண்டுகொள்க. கொடுமிட னாஞ்சிலான் றார்போன் மராத்து (கலி.36) என்னும் பாட்டினுள், பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் என முற்றடியின்றிக் குறைவுசீர்த்தாகிய சொற்சீரடி வந்தது. மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் (கலி. 104) என்னும் முல்லைப்பாட்டினுள், இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர் நீங்க வரிபரி பிறுபிறபு குடல்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை எனவும், தாளெழு துணிபிணி யிசைதவிர் பின்றித் தலைச்சென்று எனவும் KL»ayo வந்தது. இவற்றுளெல்லாஞ் சொற்சீரடி வந்தன. ஒழிந்த கொச்சகப் பகுதியும் இவ்வாறே வந்தவழிக் கண்டுகொள்க. இனித், தரவும் போக்குமின்றிக் கொச்சகம் பல தொடர்ந் திற்றது வருமாறு : காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு (கலி.85) என்னும் மருதக்கலி உறழ்பொருட்டு அன்மையிற் கொச்சகக்கலி யாயிற்று. இவையெல்லாம் பாநிலையெனப்பட்ட கொச்சகமா மெனின்,---அற்றன்று; அம்போ தரங்கம் அறுதிற் றடித்து (151 செய்.) என்றவழி, அளவை முற்கூறிய மயக்கினான் இனியெல்லாந் தன்னளவெனப்படுமென்று புகுந்தமையின் இதற்குக் கொச்சக வொருபோகின் அளவை கொள்ளப்படாது, பாநிலைவகைத் தென்னாமையின்; பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டெனக் கூறிய உறுப்புடைக் கலி வெண்பாட்டும் ஈண்டுப் பாநிலையெனப்பட்ட கொச்சகப்பகுதியு மென இரண்டுங் கொச்சகவுறுப் புடைமையிற் கொச்சகக்கலியென ஒன்றேயாமென மேலைச்சூத்திரத்தோடு இதனை ஒன்றாக வகுப்ப;1 அற்றன்று, மேல் ஒருபொருள் கரந்து வெளிப்படத் தோன்றின் ஒருபொருணுதலியதுபோலக் கலிவெண்பாட்டாகா மைக்கும் வாளாது கலிப்பாவாதற்கும் காரணமென்னையெனின்,-பிறி தொரு (கூற்றாற்) பொருள் கூறுவது கலிவெண்பாட்டென்றதற்கு இடையின்றியே, வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் (தொல்-செய்-154) கரந்த பொருட்டன்று இது என்றமையின் இதுவும் வெண் கலியாம் ; அல்லதூஉம். வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என வேறொரு பாவினை உறுப்பாகக் கூறுதன் மற்றொரு பாவிற்கேதுவாகக் கூறுதலாமோவென மறுக்க. ஒரு பொருணுதலிய வெண்பாட்டாயின் ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டென மற்றைய வற்றோடொத்த பரப்புடையதுபோல உடனோதானாகலின் இதுவும் அவ்வாறு பரப்புடைத்தாகல் வேண்டுமாகலானும் அஃதமையா தென்பது.1 இங்ஙனம் மயங்குவாரை நோக்கியன்றே நூனவின்றோர்க்கே இவ்வேறுபாடு ணரலாவதென்று ஆசிரியன் ஓதுவானாயிற்றென்பது. மற்று இதற்கு அளவை கொள்ளுமாறென்னை? மேற் கொச்சகவொருபோகின் அளவு இன்னதென்றிலனாலெனின்.1 அற்றன்று; வண்ணகத்திற்கு ஓதிய உறுப்பு அமையவராமையின் அது கொச்சகமே யாமெனவும் எண்ணுஞ் சின்னமும் இழந்ததே பற்றி அதுவும் ஒருபோகே யாமெனவும், அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தோடியது வெண்பாவும் ஆசிரியமுமாகி இறுதலின் அடக்கியலில்லாச் சுரிதகம் பெற்றுத் தரவுபோல வருமெனவும், இவ்வாறன்றி ஒப்பழிய வருமெனவும் மேற்கூறினானன்றே? அங்ஙனங் கூறவே அவ் வுறுப்புக்கள் அவ்வவ் வளவினவென்பதூஉம், அவற்றிற் சிறிய வேறுபட்டு வருமென்பதூஉம் அங்ஙனம் வேறுபடுங்கால் அடிநிமிர்ந்தோடியதன் இழிந்த வெல்லையின் ஒன்றிற்றென்பதூஉங் தெரித்தானாம்; என்னை? அடிநிமிர்ந்தோடியதற்கு இழிந்த எல்லை பத்து அடியென்றமையின். இனி, அடிநிமிர்ந்தோடிய தொவ்வாமையின் அதற்களவை இத்துணையென்று, ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பு (தொல்-செய்-150) என விதந்தோதினான். இங்ஙனம் பல்வேறு வகைப்பட்ட அளவின் வேறுபட்டவற்றையும் யாப்பின் வேறுபட்டு வருமென்றான், எனவே ஈரடியானே தாழிசைக் கொச்சகம் வருமெனவும் அடிநிமிர்ந் தோடியதன் சிற்றெல்லையாகிய பத்தடியளவும் பாவைப்பாடலும் அம்மனைப்பாடலும் போலுந் தரவு கொச்சகம் வருமெனவும், அவையும் இரண்டடியின் இழியாவெனவும், எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியது வேறுபட்டு ஏழடியும் ஐந்தடியுமாகித் தரவுவரினும் வருமெனவும், எட்டடிப் பாகமாகிய நான்கடியின் உயரா தாழிசை யெனவும் எல்லாம் ஆண்டே கொள்ளப்படு மாகலின் அவற்றுக்கு அளவை கூறியதிலனென்று கடாவருவ தென்னையென மறுக்க. அஃதேல், தாழிசைக் கொச்சகமாகிய பரணிச்செய்யுளும் தரவுக் கொச்சகமாகிய தொடர்நிலைச் செய்யுளும் முழுவதும் ஒன்றாக நோக்கியக்கால் உயர்ந்த எல்லை கூறாரோவெனின்,-அஃது அடிவரையறையின் ஒருசெய்யுளாக்கியே அளவை கூறினான், அவை கொச்சகமாயினுந் தரவுக் கொச்சகமெனப் பெயர்பெறுதலாயினமையி னென்பது;1 அஃதேல் அகநிலைக் கொச்சகத்திற்கும் அவையே அளவாம் பிறவெனின்,- அற்றன்று; அம்போ தரங்கம் அறுபதிற் றடித்து (151) என்றவழி, அளவை முற்கூறிய மயக்கினான் இனிக் கூறும் உறுப்புடைக் கலிப்பாவிற் கெல்லாம் அதனள வெனப்படுமென்று புகுந்தமையின் இதற்குக் கொச்சக வொருபோகின் அளவை கொள்ளப்படாது; பாநிலைவகைத் தென்னாமையின் இவற்றைத் தொகைநிலையளவின் அடியுடைய வென்பது, தொகுநிலை யளவி னடியில (தொல்-செய். 160) என்புழிச் சொல்லுதும். அஃதேல், பாநிலை வகையே கொச்சகக் கலி யென்றவழிக் கொச்சக வொருபோகொடு ஒப்பது அள வொழித்தே யென்பதும் வரைந்தோதுக வெனின்,--- இருவழி யொப்பனவும் உளவாகலின் அங்ஙனங் கூறினானென்பது, அவை இரண்டடி முதலாகப் பத்தடியளவும் வருவன தரவுக் கொச்சகமென மேற்காட்டிய செய்யுளுட் காணப்படும். (155) நச்சினார்க்கினியம் : இஃது நிறுத்தமுறையே அகநிலைச் கொச்சகக்கலி கூறுகின்றது. (இ-ள்) மேற்பாவிநின்ற நிலைவகையான் கொச்சகக்கலியா மென்று நூலறிந்த ஆசிரியர் கூறித்துணிந்தனர். எ-று. அறை-துணித்தல் அறைக்கரும்பு (பொருந. 133) போல. பாநிலை யென்றது மேல் ஒருபோகெனக்கூறிய கொச்சகப்பா நிலையை நோக்கிற்று. அதுவுங் கொச்சகமாதலின். துணித்தன ரென்றதனால் அதிகாரத்தாற் சேட்படக்கூறிய தரவின் றாகித் தாழிசை பெற்றும் (செய்.149) என்ற தொன்றனையுமே துணிந்து மாற்றி யொழிந்தன. பாவிநின்ற வகையான் இவ்வகநிலைக் கொச்சகமும் வருமென்றுணர்க. எனவே பரணிப்பாட்டுப்போல வெளிப்பட்டு அகநிலைக் கொச்சகம்வாரா வென்றாராம். வகையென்றதனான் அதிகாரத்தானின்ற கலிவெண்பாவினது பாநிலையுங் கொள்ளப்படும். அது கொள்ளுங்கால் முன்னிற் சூத்திரத்திற்கூறிய நிலையெல்லாங் கொள்ளப்படும். ஒரு பொருணுதலிய (செய்.154) என்னுஞ் சூத்திரத்தினிலை கொள்ள லாகாதென் றுணர்க. எனவே ஒருபொருணுதலாது வெளிப்படத் தோன்றுங் கலிப்பாட்டி னுறுப்பொத்துத் தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாயும் அவை யைஞ்சீரும் அறுசீருமடுக்கி வருதலுமெல்லாங் கொள்ளப்படும். இவ்வாறு வந்தன வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொருளும் வேறாகலிற் கொச்சகமென்றார். தரவிணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒருதரவே வந்தாற் கொச்சகமென்றலுந் தர விணைந்துழிச் சுரிதகம் பெறுதலும் வேறாகலிற் கொச்சகமென்றார். தரவிணைந்து தனிச்சொல்லுஞ் சுரிதகமு முடன்பெறுதலும் எல்லாம் யாப்பின் வேறுபட்ட கொச்சக மென்றலும்,ஒத்தாழிசை மூன்றடுக்கியலு மவற்றின் வேறுபாடறிந்து கொச்சகமென்றலும், தேவபாணி யாகாதவழிக் காமப்பொருள்பற்றி வாராது அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கும் பற்றிப் பொருள் வேறுபடவந்தன கொச்சக மென்றலும், பா வேறுபட்டன கொச்சகமென்றலும், பிறவும் உணர்வோரே நூலறிபுலவர் ; அல்லாதார் நூலுணரா ரென்பதறி வித்தற்கு நூனவில் புலவ ரென்றார். எனவே, கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை இனமென்பார்க்கு அவை அவ்வப்பாக்களுள் வரின் இவ்வகையே கொச்சகமெனல் வேண்டும். அது பொருந்தா தென்றவாறாயிற்று. உ-ம். செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வின; செல்லினச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி யன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை யென்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோ ரவலம் படுதலு முண்டு (கலி.19) இது தரவிணைக்கொச்சகம். கொச்சகம் வெண்பாவாயும் வருதலானுந் தாழிசையொடு தொடராது வருதலானும் இவை கொச்சகமாயிற்று. ஒரு பொருணுதலி யிவ்வாறு வரினுங் கொச்சகமென்றுணர்க. மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகத லன்பெனப் படுவது தன்கிளை செறாமை யறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாமை நிறைவெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்டவர் கொள்கலம் வரைதலி னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றவை களைமோ பூண்கநின் றேரே (கலி, 133) இது தனிச்சொல்லின்றி யாசிரியச்சுரிதகம் பெற்றதரவிணைக் கொச்சகம். மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற் பொன்னகைத் தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் பொழிலிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி; நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ யைதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயுமன் றன்று மலையு மன்று பூவுமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று; எனவாங்கு அனையன பலபா ராட்டிப் பையென வலையர் போலச் சோர்பத னொற்றியென் னெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணுஉப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் றொழூஉந் தொடூஉமவன் றன்மை யேழைத் தன்மையோ வில்லை தோழீ (கலி.55) இது தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவிணை. வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா னல்லாற்றி னுயிர்க்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்- தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர வானாது கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ னேனையா னளிப்பான்போ லிகலிருண் மதிசீப்பக் குடைநிழ லாண்டாற்கு மாளிய வருவாற்கு மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை; மாலைநீ தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா யாய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; மாலைநீ தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலங் கடிகல்லாய்; மாலைநீ தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்; எனவாங்கு மாலையு மலரு நோனா தெம்வயி னெஞ்சமு மெஞ்சுமற் றில்லை வெஞ்சி யுள்ளா தமைந்தோ ருள்ளு முள்ளி லுள்ள முள்ளு ளுவந்தே (கலி-118) இது நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி (செய்-135) என்னுமிலக்கணஞ் சிதைய இடையிடை சொற்சீரடி பலவருதலின் ஒத்தாழிசை யாகாது எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றிய கொச்சகமாயிற்று. இனி அகன் ஞாலம்... ... மயங் கியோரே (கலி.113) எஃகிடை தொட்டகார் (கலி.32) இவையும் இவ்வாறே வந்தன. இனி யாப்பின் வேறுபடவந்த அருடீர்ந்த காட்சி (கலி.120) நயனும் வாய்மையும் (கலி.130) என்பனவும் ஒக்கும். இனிப் பலவடுக்கிப் பொருட்டொடராய அறம் பொரு ளின்பம் வீடென்பன விராய்ப் பொருள் வேறு படவருந் தரவுக் கொச்சகம் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம். கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலந்கோதை தொடிசெறி யாப்பமை யரிமுன்கைப் பணைத்தோளா யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறைச் சுற்றி மோக்கலு மோந்தன னறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போது கொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருதியி னுயிர்த்தலு முயிர்த்தனன் றொய்யி லிளமுலை யினிய தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால் அல்லல் களைந்தனன் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூழ்வ றோழி நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே (கலி-54) அதனால் எனத் தனிச்சொற்பெற்று அடக்கிய லில்லாச் சுரிதகத்தோடு அடிநிமிர்ந் தோடிற்று. பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி யீர்நறுங் கமழ்கடாத் தினம்பிரி யொருத்த லாறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னு மருளில் சொல்லு நீசொல் லினையே நன்னர் நறுநுத னயந்தனை நீவி நின்னிற் பிரியலெ னஞ்சலோம் பென்னு நன்னர் மொழியு நீமொழிந் தனையே அவற்றுள் யாவோ வாயன மாஅன் மகனே கிழவ ரின்னோ ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையு மன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாண் மடவோ ளமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே (கலி. 21) அவற்றுள் என ஐஞ்சீரடிவந்து தனிச்சொல்லும் அடக்கியலுமின்றிச் சுரிதகம் பெற்று அடிநிமிர்ந்தோடிற்று; அகன்ஞாலம் விளக்கும் (கலி. 119) கொச்சகவொருபோகோடு-ஒப்பாமாறு. மன்றுபார்த்து...thuh®” இஃது இருசீர்நான்கடித்தரவுக் கொச்சகம் தஞ்சொல் வாய்மை ...fh©” இஃது முச்சீர் நான்கடித்தரவுக் கொச்சகம். நீரலர் தூற்றத் ... உகுவேனோ இது நாற்சீர்நான்கடித் தரவுக் கொச்சகம். கன்னி ஞாழற் ... எவன்செய்கோ இஃதைஞ்சீர்நான்கடியான்வந்தது. இனி நூனவில்புலவ ரென்றதனான் இதனைக் கோவையாக்கி யெழுத்தெண்ணி யளவியற்படுத்துச் செய்வனவுந்தரவுக் கொச்சகம். அவற்றுள் நேரெழுத்து வருவனவுங் கொச்சகமாம். உ-ம். திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் FU.............கின்wnj” (திருச்சிற்ற. 1) போதோ விசும்போ... பதியே (மேற்படி 2) இவை பதினேழும் பதினாறுமாய்வந்த தரவுக் கொச்சகம். குயிலைச் சிலம்படிக் கொம்பினை ... ... ... பளிக்கறையே (மேற்படி. 30) காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் ÓuÂ............மூâank” (திருச்சிற்ற. 400) இவை யொரோ வெழுத்து மிக்க தரவுக் கொச்சகம் காண்பா னவாவினாற் ... ... பதிபோன் றன்றே இஃது அறுசீர் நான்கடித்தரவுக் கொச்சகம். பிறவு மன்ன. இலங்கொளி வெண்மருப்பின் ... ... அன்னாய் இஃது அறுசீர் மூன்றடிக் கொச்சகம். தண்ணந் துறைவன் ... நில்லாதேகாண் இஃது நான்கடி யாசிரியத்துள் இறுதி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டது. நிணங்கொள் புலாலுணங்கல் ... ... அடையேன் மன்னோ (சிலப்-கானல்வரி) இஃது ஈற்றயலடி குறைந்தது. இதனைப் பாமயக்கத்துக்கும் ஏற்று நிற்றலின் ஈண்டுக் காட்டிற்று, அறுசீ ரடியே (செல்-46) என்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றேனுமென்பது. இஃது ஒரு பொருண் மேன் மூன்றடுக்கி வருதலுங் கொள்க. கோடல்விண்டு கோபமூர்ந்த கொல்லைவாய் மாடுநின்ற கொன்றையேறி மௌவல்பூத்த பாங்கெலா மாடுமஞ்ஞை யன்னசாய லாயவஞ்சொன் மாதரா யாடன்மைந்தர் தேரும்வந்து தோன்றுமே இஃது நடுவீரடி மிக்கது. இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி லரங்க மணிபொழிலா வாடுமாயின் மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில் வண்டுளர் பூந்தார் வளங்கொன்றைத் தாரன்றே முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்க்குந் தொத்தரும்பு கானற் றுறையேந் துறைவந் தெமது தொன்னலமு நாணு நிறைவளையும் வௌவி நிறையற்றா னஞ்சேர்ப்பன் இவை அடியும் அசையுஞ் சீரும் இடைமடக்கிச் சிலவடி குறைந்தன. இவை யசையுஞ் சீரும் அடிமடக்கியும் வரும். புன்னை நீழ னின்றார் யார்கொ லன்னை காணின் வாழாளே தோழி மல்ல லூர வில்வி லன்றாற் பல்பூங் கோதை யில் இவை ஈரடியாய் ஈற்றடி குறையாதும் குறைந்தும் வந்தன. கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டின் இது ஈரடியா யீற்றடிமிக்கது. இதுவும் ஒருபொருண்மேன் மூன்றடுக்குதலுங் கொள்க. இன்னும் முற்கூறிய கொச்சகவொரு-போகின் பகுதியாய் வேறுபட்டுவருவன வந்துழிக்காண்க. வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங் கொடிபடு வரைமார்பிற் கோழியார் கோமானே; துணைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலந் தொடர்புண்டாங் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே; அதனாற் செவ்வாய்ப் பேதை யிவடிறத் தெவ்வா றாங்கொலி தெண்ணிய வாறே இது தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றுப் பொருள் வேறு பட்ட தரவிணை. இனிக் கலிவெண்பா வுறுப்பொத்துப் பா வேறுபடுவன வருமாறு: ஒன்று இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட் டோன்று மடக்கமு முடையன் இல்லோர் புன்க ணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன் அன்னா னொருவன்றன் னாண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் பன்மாணும்; நின்னின்றி யமையலேன் யானென்னு மவனாயி னன்னான்சொ னம்புண்டல் யார்க்குமிங் கரிதாயி னென்னுற்ற பிறர்க்குமாங் குளகொல்லோ நறுநுதால்; அறியாய்நீ வருந்துவல் யானென்னு மவனாயிற் றமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கு மரிதாயி னளியரோ வெம்போல வீங்கிவன் வலைப்பட்டார்; வாழலேன் யானென்னு நீநீப்பி னவனாயி னேழைய ரெனப்பலர் கூறுஞ் சொற் பழியாயிற் சூழுங்கா னினைப்பதொன் றறிகிலன் வருந்துவல் சூழுங்கா னறுநுதா னம்முளே சூழ்குவம்; அவனை நாணடப் பெயர்த்த னமக்குமாங் கொல்லாது பேணின ரெனப்படுதல் பெண்மையு மன்றவன் வௌவினன் முயங்கு மாத்திரை வாவெனக் கூறுவேன் போலக் காட்டி மற்றவன் மேஎவழி மேவாய் நெஞ்சே (கலி-47) இஃது ஒன்றெனவும் அவனெனவுஞ் சொற்சீருந் தனிச் சொல்லும் வந்து இடைநிலைப்பாட்டினுள் ஒன்றோரடிமிக்கு ஒருபொருண்மேல் மூன்று வருதலின் ஒத்தாழிசையாகாது கொச்சகமாய்க் கலிவெண்பாட்டின் வேறாயிற்று. வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்குவாங் கானங் கடத்தி ரெனக்கேட்பின் யானொன் றுசாவுகோ வைய சிறிது; நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின் கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே இவட்கே செய்வுறு மண்டில மையாப் பதுபோன் மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே; நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புணைமாண் மரீஇய வம்பு தெரிதியே; இவட்கே சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ னினைநோக் குண்க ணீர்நில் லாவே; நீயே புலம்பி லுள்ளமொடு பொருள்வயிற் செலீஇய வலம்படு திகிரி வாய்நீ வுதியே; இவட்கே யலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோ லிலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே; எனநின் சென்னவை யரவத்து மினையவ ணீநீப்பிற் றன்னலங் கடைகொளப் படுதலின் மற்றிவ ளின்னுயிர் தருதலு மாற்றுமோ முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே (கலி-7) இது கலிவெண்பாவிற் கோதிய வுறுப்புப் பெற்றதேனுந் தரவு வெண்பாவாய் ஒழிந்தன வெண்பாவன்மையிற் கொச்சகமாயிற்று. காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா டாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தா னகலகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே; அவனுந்தான் ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்; சிறுகுடியீரே சிறுகுடியீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்ந ரல்ல புரிந்தொழுக லான்; காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றன்னையரும் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; எனவாங்கு அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்ந்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வ முவப்ப வுவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; நல்லாய் நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ; விண்டோய்கன் னாடனு நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ; கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ மைதவழ் வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉங் கண்களுங் கண்களோ; என்னைமன் நின்கண்ணாற் காண்பென்மன் யான்; நெய்த லிதழுண்கண் ணின்கண்ணா கென்கண்மணி; எனவாங்கு நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை .............. வினியே (கலி-39) இதனுள் ஏனலிதணத்து என்பது முதலிய கொச்சகங்கள் வெண்பாவாய்ப் புனவேங்கை முதலியன துள்ளலோசை விராய்த் தளையொன்றிய கொச்சகமாய் ஒழிந்த பாவு மயங்கிச் சுரிதகமும் முடுகிவருதலின் இது கொச்சகமாயிற்று. கொடுமிடனாஞ்சிலான் (கலி 36) என்னும் பாட்டுள், பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் என முற்றடியின்றிக் குறைவுசீர்த்தாகிய சொற்சீரடி வருதலின் இதுவுங் கொச்சகமாயிற்று. மலிதிரையூர்ந்து (கலி-104) என்னும் முல்லைப் பாட்டுள் இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க தாளெழு துணிபிணி யிசைதவிர் வின்றி எனவும் முடுகுதலிற் கொச்சகமாயிற்று. இவற்றுட் கலிவெண்- பாப்போலச் சொற்சீரடியும் வந்தன. பிறவுமன்ன. மேலைச்-சூத்திரத்துள் இதற்கு அதிகாரம்பட இடைநிலைப்பாட்டினை யீற்றின் வைத்தமையிற் றரவும் போக்குமின்றி யிடைநிலைப் பாட்டே வருதலுங் கொச்சகமாம். உ-ம். காலவை சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு பொடியழற் புறந்தந்த செய்யுறு கிண்கிணி உடுத்தவை கைவினைப் பொலிந்த சாசமை பொலங்காழ்மேன் மையில் செந்துகிர்க் கோவை யவற்றின்மேற் றைஇய பூந்துகி லைதுகழ லொருசிறை; கையதை யலவன் கண்பெற வடங்கச் சுற்றிய பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி; பூண்டவை யெறியா வாளு மெற்றா மழுவுஞ் செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிலின் மையற விளங்கிய வானேற் றவிர்பூண்; சூடின இருங்கடன் முத்தும் பன்மணி பிறவு மொருங்குடன் கோத்த வுருளமை முக்காழ்மேற் சுரும்பார் கண்ணிக்குச் சூடழநூ லாக அரும்பவிழ் நீலத் தாயிதழ் நாணச் சுரும்பாற்றுப் படுத்த மணிமருண் மாலை; ஆங்க அவ்வும் பிறவு மணிக்கணி யாகநின் செய்வுறு திண்டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப் பைபயத் தூங்குநின் மெல்விரற் சீறடி நோதலு முண்டீங் கென்கை வந்தீ செம்மானின் பாலுண் ணிய; பொய்போர்த்துப் பாண்டலை யிட்ட பலவல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கித்தாம் வேண்டியார் நெஞ்சம் பிணித்த றொழிலாத் திரிதரு நுந்தைபா லுண்டி சில; நுந்தைவாய் மாயச்சூள் தேறி மயங்குநோய் கைமிகப் பூவெழி லுண்கண் பனிபரப்பக் கண்படா ஞாயர்பா லுண்டி சில ; அன்னையோ யாயெம் மகனைப்பா ராட்டக் கதுமெனத் தாம்வந்தார் தாம்பா லவரொடு தம்மை வருகென்றார் யார்கொலோ வீங்கு; என்பாலல் பாராட் டுவந்தோய் குடியுண் டீத்தை; என் பாராட்டைப் பாலோ சில செருக் குறித்தாரை யுவகைக்கூ த்தாட்டும் வரிசைப்பெரும் பாட்டொ டெல்லாம் பருகீத்தைத் தண்டுவென் ஞாயர்மாட்டைப்பால் (கலி-85) என இப்பாட்டு இடைநிலைப்பாட்டே முழுதும் வந்தது. இஃது உறழ்பொருட்டன்மையிற் கொச்சகம். எருத்தேகொச்சகம் (செய் 153) என்னுஞ் சூத்திரத்தே அம்போதரங்கத்திற்குக் கூறிய வளவே மேல்வருகின்ற மூன்று பாக்கட்கு மளவென்று கூறிப்போந்ததனான் அளவுமுணர்க. இனிக் கொச்சக வொருபோகுடன் மாட்டேறெறி தலின் அதனளவு இதற்கும் அளவாமெனின் ஆகா, வண்ணத்திற் கோதிய1 வுறுப்பமைய வாராதது கொச்சகமாதலின் அதற்கோதிய அளவே கொச்சகவொரு போகிற்கு அளவாயுஞ் சிறிது வேறு பட்டும் வரும். இது அங்ஙனம் வாராதென்றுகொள்க. இதற்கு இரண்டடிமுதற் பத்தடியளவும் வருவன தரவுகொச்சகமாமாறு உதாரணத்திற் காண்க. ஆய்வுரை : இஃது, நிறுத்தமுறையானே கொச்சகக்கலியாமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) தரவாகிய உறுப்பும் சரிதகமாகிய உறுப்பும் இடை-யிடையே வந்து தோன்றியும், ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பாவின் இயல்பினாற் புலப்படத் தோன்றும் பாவினது நிலைமைபற்றிய கூறுபாடே கொச்சகக்கலியாம் என்று யாப்பியல் நூல் பயின்றுணர்ந்த ஆசிரியர்கள் கருதி வகைப்படுத்தினர் எ-று. ஆறுமெய்-ஆறு உறுப்புக்கள். அவையாவன :- தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகியலடி என்பன என்பர் இளம்பூரணர். ஒத்தாழிசைக் (கலிக்)குத் தாழிசையாகிய வுறுப்பு மிக்கு வந்தாற் போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வருமென்று கொள்க என்பர் இளம்பூரணர். எனவே, ஒத்தாழிசைக் கலியின் வகையாய்க் கலியோசை தழுவி வரும் கொச்சகவொருபோகும், வெண்பாவியலால் வெளிப்பட முடியும் கொச்சகக்கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்ந்து கொள்க என்றாராயிற்று. இனி, இதற்கு இவ்வாறுபொருள் கொள்ளாது இதன் முதல் மூன்றடியும் ஒருசூத்திரமாகவும், பின்னிரண்டடியும் மற்றொரு சூத்திரமாகவும் கொண்டு, அவற்றுள் முன்னையது வெளிப்படு பொருளினதாய் விரவுறுப்புடைய வெண்கலியின் இயல்புணர்த்திய தென்றும், பின்னையது மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப்பாநிலை வகையான அகநிலைக் கொச்சகக் கலியின் இயல்புணர்த்திற்றென்றும் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பகுத்து உரைகூறி விளக்கியுள்ளனர். அன்னோர் கருதுமாறு, வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் என்னும் பயனிலைக்கு, வெளிப்படு பொருட்டாகிய வெண்கலிப்பா என்பது எழுவாயாக வந்து இயைந்தது என்பதற்கு ஏற்ப அவ்வெழுவாய் முன்னைய சூத்திரங்களில் தெளிவாக இடம்பெறாமையானும், பாநிலை வகையே கொச்சகக்கலி என்புழிப் பாநிலை வகையென்றது, இன்ன பாவினது நிலையும் வகையும் என்பது விளங்கும் வகையில் அத்தொடர்ப் பொருளை அறிந்து கொள்ளுதல் இயலாதாகலானும், கலிப்பாவினை நால் வகைப்பட விரித்துரைக்கும் தொல்காப்பியனார் நிறுத்தமுறை-யானே நான்காம் வகையாகிய கொச்சகத்தின் இலக்கணம் இது-வென்று உணர்ந்துகொள்ள இயலாதவாறு பாநிலை வகையே கொச்சகக்கலி என விளங்கா நிலையிற் சூத்திரஞ் செய்தாராத லானும் இளம்பூரணர் கொண்ட வண்ணம் இதனை ஒரு சூத்திரமாகக் கொண்டு, கொச்சகக்கலியாமாறு உணர்த்திற்று என்று கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். 149. கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே. இளம்பூரணம் : இஃது உறழ்கலி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). உறழ்கலிப்பாவிற்கு இலக்கணம் கூற்றும் மாற்றமும் விரவிவந்து சுரிதகமின்றி முடித லென்றவாறு. இதனைக் கொச்சகக்கலியின்பின் வைத்தமையான் அக்கொச் சகவுறுப்பினொப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும்.1 உதாரணம் யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு; இது தலைமகள் கூற்று. என்னிவை ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தாற்றாப் புலவல்நீ கூறினென் ஆருயிர் நிற்குமா றியாது; இது தலைவன் கூற்று. ஏஎ, தெளிந்தேம்யாங் காயாதி எல்லாம்வல் வல்லா பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு வருந்தல்நின் வஞ்ச முரைத்து; இது தலைமகள் கூற்று. மருந்தின்று. மன்னவன் சீறில் தவறுண்டோ நீ நயந்த இன்னகை தீதோ இலேன்; இது தலைமகன் கூற்று. மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎம் எனநெருங்கில் தப்பினேன். என்றடி சேர்தலும் உண்டு. (கலி. 89) இப்பாட்டுச் சுரிதகமின்றி வந்தவாறு கண்டுகொள்க. எற்றிற்கு? இறுதியின்கண் வந்தது சுரிதக மாகாதோவெனின், சுரிதகமாகாது. சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப் பாட்டினுமுள்ளபொருளைத் தொகுத்து முடிப்பது. இஃது அன்ன தன்றென்க.1 (149) பேராசிரியம் : இது, முறையானே உறழ்கலி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் நின்றது உறழ்கலி (எ - று). போக்கின்று1 எனவே தரவுபெறுதலும், பாட்டிடைமடை தலும், ஐஞ்சீரடுக்கலும், ஆறு மெய்பெறுதலும், ஒழிந்த சொற்சீரடி பெறுதலும், பா மயங்கி வருதலும், அம்போதரங்கத்திற் கோதிய அளவை பெறுதலுமெல்லாம் வெண்கலிப்பாட்டிற்குப் போல மேனின்ற அதிகாரத்தாற் பெறப்படுவதாயிற்று. போக்கின்றாகல் இயல்பு எனவே இயல்பின்றி விகாரவகையாற் சில போக்குடையவுமா மென்றானாம்; அதுவும்,2 பல்பொருட் கேற்பி னல்லதுகோடல் (மரபியல் 110) என்பதனான் வெள்ளைச்சுரிதகம் ஒழித்து ஆசிரியச்சுரிதகமே கொள்ளப்படும்; என்னை? வெள்ளைக் கொச்சகம் பல வந்தவழி ஒன்றனைச் சுரிதகமென லாகாமையானும், அச்சுரிதகம் இரண்டும், போக்கியல் வகையே வைப்பெனப் படும் (தொல்-செய், 136) எனக் கூறப்பட்ட இலக்கணத்த அல்லவாயினும், எழுசீ ரிறுதி யாசிரியங் கலியென (தொல் செய். 76) நின்றவழி அப்பாட்டு முடிந்து காட்டி நிற்றலானும் அதுவே கொண்டாஞ் சிறுபான்மை யென்பது.3 மற்றுத் தரவின்றி வருவனவும் உளவாலெனின், இதற்குத் தரவு முதலாயின உறுப்பு விதந்தோதியதிலனாகலின் அஃது ஆராய்ச்சியின்றென்பது; அற்றன்று. தரவும் போக்கும் உடன் கூறியதனாற் போக்கும் பாட்டிடை மிடைந்தும் என்னும் அதிகாரம் பற்றி ஈண்டுப் போக்கு விலக்கினமையின் அது பொருந்தாது; மற்றென்னை கருதியதெனின், ---இதற்கு அதிகாரம் பட நிறீஇய கலிவெண்பாட்டு ஓதிய சூத்திரத்திற் பாட்டினை இடைகூறாது தரவும் போக்கும் உடன் கூறியதனாற் போக்கின் இலக்கணத்தனவும் பெறுமென்றானாம்; அதனானே ஈண்டு விலக்குண்ட போக்குப் போலச் சிறுபான்மை தரவின்றியும் வருமென்பது. இக்கருத்தினான்றே, இதனைப் பாநிலையோடு கூறாது தரவு வகைப்படுங் கொச்சகத்தின் பின்னர் வைப்பானா யிற்றென்பது.1 இனிப், போக்குடையன தரவின்றி வாரா, அவை ஓரின மென்று ஓதப்பட்டமையினென்பது2 மற்று இதற்குப் போக்கின்மையும் இலக்கணமாகலின் அது பற்றியும் பெயர்கொள்ளாமோவெனின்.3- போக்கின்மை சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரிமையின் அவ்வகை யுரியதோர் இலக்கணம் பற்றிப் பெயர் கூறானென்பது.4 மற்றிதனையுங் கொச்சகமென்றக்கால் இழுக்கென்னையெனின், -ehlf¢ செய்யுட் போல வேறுவேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும் இது bghUsâfhukhjyh‰ பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமைபற்றியும் வேறு செய்யுளென்றானென்பது. என்னை? மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான (தொல் மர-90) எனவும், மரபியலுள் ஓதுகின்றமையினென்பது. அல்லாக்காற் கைக்கிளையுஞ் செவியறிவுறூஉம் வாயுறையும் புறநிலையுமென்னும் நான்கு மருட்பாவும் ஒன்றேயாகிய செல்லுமன்றோவென மறுக்க.1 அவற்றுக்குச் செய்யுள் : அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் (கலி.91) என்னும் பாட்டினுள், தரவும் பாட்டும் உடைத்தாகிய பாட்டுத் தாம் ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்து போக்கின்ற நின்று முடிந்தது. என்றார்க்குக், காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல் (கலி.91) என்பது, வெள்ளைச் சுரிதகமாகாதோவெனின்,---ஆகாதன்றே? போக்கியல் வகையே வைப்பெனப் படும் (தெல்-செய். 136) என்ற இலக்கணத்தான் முற்கூறியவற்றையெல்லாந் தொகுத்து இதன்கண் வைத்திலாமையினென்பது; அல்லதூஉம், அவ்வாறு முடிதலேயன்றி இன்னும் ஒரு கொச்சகம் பெய்து சொல்லி உறழ்ந்தவழியும் அஃதேற்பதாகலான் அஃது ஒருதலையாக அமைந்ததெனப்படாது; என்னை ? அன்னதே யாயினு மாகமற் றாயிழாய் நின்னகை யுண்க முயங்குவாய்--நின்னெஞ்ச மென்னொடு நின்ற தெனின் என்றாற்போலப் பின்னுமொன்று தலைமகன் உரைத்தற்கு இடம்பட்டு நின்றமையின் அது, போக்கியல் வகைத்தாகிய வைப்பெனப்படாது என்க.1 இனி, அவ்வாறன்றி ஆசிரியச்சுரிதகம் வந்தவழி அக்கலிப் பாட்டு முடிந்து காட்டுதலின் அதுவும் அடக்கியலன்றாயினும் அதனைச் சிறுபான்மை நேர்ந்தான் இது வழிநூலாகலின் முதனூல்பற்றி யென்பது.2 நலமிக நந்திய நயவரு தடமென்றோள் (கலி 113) என்னும் முல்லைக்கலி போக்கிலக்கணமில்லாத ஆசிரியச் சுரிதகம் பெற்றுவந்த உறழ்கலியாயிற்று. வாரி நெரிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த (கலி 114) என்னும் முல்லைப்பாட்டும், சுணங்கணி வனமுலைச் சுடர்கொண்ட (கலி 60) என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணும் கடை ; தெரியிழாய் ... ... பனியானாப் பாடில்கண் பாயல் கொள (கலி 87) என்பது தரவும் போக்குமின்றி வந்த உறழ்கலி. இவற்றுள் ஐஞ்சீரும் அறுசீரும் வந்தன, ஒழிந்த சொற்சீரடி வந்தன, பிறவுங் கண்டு கொள்க. (156) நச்சினார்க்கினியம் : இது முறையானே உறழ்கலி கூறுகின்றது. (இ-ள்.) ஒருவர் ஒன்றுகூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் அவற்றையடக்குவதோர் சுரிதகமின்றி முடிவது உறழ்கலியாம். எ - று. போக்கின்றெனவே ஒழிந்தவுறுப்புக்களெல்லாங் கலிவெண் பாட்டிற்கு ஓதியவாறே வருமென்பதூஉம், பா மயங்கிவரு மென்பதூஉம். அம்போதரங்கத்தினளவே யளவென்பதூஉம் மேனின்ற வதிகாரத்தாற் பெற்றாம். இயல்பெனவே இயல்பன்றி விகாரவகையாற் சிலபோக்குடையவாதலும் அவைதாம் ஆசிரியமே யாகலும் சில தரவும் போக்குமின்றி வருதலுஞ் சிறுபான்மை கொள்க. போக்குடையன தரவின்றி வாராமையுங் கொள்க. வெள்ளைக் கொச்சகம் பலவந்து அவற்றுள் ஒன்றைச் சுரிதகமெனின் அதற்குப் போக்கியற் பொருண்மையின்மையான் அதனைநீக்கிப் போக்கியற் பொருண்மையின்றேனும் ஆசிரியம் வந்துழி அப்பாட்டிற்கோர் முடிவுகாட்டிநிற்றலின் ஆசிரியமே போக்கியலாமெனக் கொண்டாம். நாடகச் செய்யுட்போல வேறுவேறு துணிபொருளவாகிய பலதொடர்ந்த வேறுபாடு நோக்கியும் பொருள்வேறுபாடு நோக்கியும் வரலாற்று முறைமை நோக்கியும் அதற்குரியதோர் இலக்கணத்தால் உறழ்கலியென வேறோர் செய்யுளென்றார். கொச்சகத்தின் அடங்காமையின் மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப்பட்ட சொல்லினான (மரபியல் 90) எனமரபுகூறலின். உ-ம். அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோ டார்ந்த தெரிமலர்க் கண்ணியுந் தாரு நயந்தார் பொருமுரண் சீறச் சிதைந்து நெருநையி னின்று நன்றென்னை யணி; அணைமென்றோளாய் செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவன் ஐயத்தா லென்னைக் கதியாதீ தீதின்மை தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு; மற்றஃது அறிவல்யா னின்சூ ளனைத்தாக நல்லார் செறிதொடி யுற்ற வடுவுங் குறிபொய்த்தார் கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின் றாருந் ததர்பட்ட சாந்தமுஞ் சேரி யரிமத ருண்கண்ணா ராராக் கவவிற் பரிசழிந் தியாழநின் மேனிகண் யடியானுஞ் செருவொழிந்தேன் சென்றீ யினி; தெரியிழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை யாற்றி னிறுப்பல் பணிந்து; அன்னதே யாற்றல் காண் வேறுபட் டாங்கே கலுழ்தி யகப்படின் மாறுபட் டாங்கே மயங்குதி யாதொன்றுங் கூறி யுணர்த்தலும் வேண்டாது மற்றுநீ மாணா செயினு மறுத்தாங்கே நின்வயிற் காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல் (கலி.92) இது தரவும் பாட்டு முடைத்தாய் ஐஞ்சீரடுக்கியும் ஆறு மெய்பெற்றும் வந்தும் போக்கின்றியுற்ற உறழ்கலி. முற்கூறிய பொருளைத் தொகுத்துக் கூறாமையி னிறுதிநின்ற பேணாய்நீ பெட்பச் செயல் என்றது வெள்ளைச் சுரிதகமாகாதாம். அது அன்னதே யாயினு மாகவற் றாயிழாய் நின்னகை யுண்க முயங்குவாய் நின்னெஞ்ச மென்னொடு நின்ற தெனின் (செய். பேராசிரியம்) எனப்பின்னுமொன்று தலைவன் கூறற்கும் உடம்பட்டு நிற்றலின். இவ்வாறன்றி யாசிரியச் செய்யுளை முடித்துக்காட்டுதலின் அதனைச் சிறுபான்மை கொண்டார். நலமிக நந்திய நயவரு தடமென்றோ ளலமர லமருண்க ணந்நல்லாய் நீயுறீஇய வுலமர லுயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல்; பேரேமுற் றார்போல முன்னின்று விலக்குவா யாரெல்லா நின்னை யறிந்ததூ மில்வழி; தளரியா லென்னறிதல் வேண்டிற் பகையஞ்சாப் புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்; ஒக்கும் புல்லினத் தாயனைநீ யாயிற் குடஞ்சுட்டு நல்லினத் தாய ரெமர்; எல்லா நின்னொடு சொல்லி னேதமோ வில்லைமன்; ஏதமன் றென்னை வருவான் விடு; விடேன் உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு மெல்லிய வாத லறியினு மெல்லியால் நின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழி- கொண் டென்னெஞ்ச மேவல் செயின்; நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க் செஞ்சிய காதல்கொள் காமங் கலக்குற வேதிலார் பொய்ம்மொழி தேறுவ தென்; தெளிந்தேன் றெரியிழாய் யான்; பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி லல்க லகலறை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சி வேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னங் கழிப்பி யரவுற் றுருமி னதிருங் குரல்போற் பொருமர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே (கலி 113) இது போக்கிலக்கண மில்வழி யாசிரியச்சுரிதகம்பெற்ற உறழ்கலி. வாரி நெறிப்பட்டு (கலி. 114) என்னும் முல்லைப் பாட்டும் சுணங்கணி வனமுலை (கலி. 90) என்னுங் குறிஞ்சிப் பாட்டும் அது,1 ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணுங் கடை; தெரியிழாய் செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் மெய்பிரிந் தன்னவர் மாட்டு; ஏடா நினக்குத் தவறுண்டோ நீவிடு பெற்றா யிமைப்பி னிதழ்மறை பாங்கே கெடுதி நிலைப்பா லறியினு நின்னொத்து நின்னைப் புலப்பா ருடையர் தவறு: அணைத்தோளாய் தீயாரைப் போலத் திறனின் றுடற்றுதி காயுந் தவறிலேன் யான்; மானோக்கி நீயழ நீத்தவ னானாது நாணில னாயி னலிதந் தவன்வயி னூடுத லென்னோ வினி; இனி யாதுமீக் கூற்ற நாமில மென்னும் தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனியானாப் பாடில்கண் பாயல் கொள (கலி. 87) இது தரவும் போக்குமின்றி வந்த உறழ்கலி. இவற்றுள் ஐஞ்சீரும் அறுசீரும் வந்தன. சொற்சீரடி வந்தன வந்துழிக் காண்க. பிறவு மன்ன, ஆய்வுரை : இஃது, உறழ்கலியாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒருவர் ஒன்றைக் கூறுதலாகிய கூற்றும், அதுகேட்ட மற்றவர் அதற்கு மறுமொழி கூறுதலாகிய மாற்றமும், விரவி வந்து சுரிதகமின்றி முடிவது உறழ்கலிப்பாவின் இயல்பாகும் எ-று. எனவே ஒருவர் ஒன்று கூற, அதுகேட்ட மற்றவர் அதற்கு மறுமொழி கூற, இவ்வாறு இருவரிடையே நிகழும் உரையாடல் களாகத் தொடர்ந்து சென்று பின்னர் அவ்விருவர் கூற்றையுந் தொகுத்து முடிப்பதோர் சுரிதகமின்றி அவருள் ஒருவர் கூற்றாகவே முடிதல் உறழ்கலியின் இலக்கணம் என்பது இனிது புலனாம். இதனைக் கொச்சகக்கலியின் பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். உறழ்கலியாகிய இது, நாடகச் செய்யுட் போன்று வேறுவேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறு பாடுடைமை நோக்கியும், இது பொருளதிகார மாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் இதனைக் கொச்சகக்கலியுள் அடக்காது வேறு செய்யுள் வகையாகப் பிரித்து இலக்கணங் கூறினார் தொல்காப்பியனார். 150 ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபுமூன் றடியே. இளம்பூரணம் : என்---எனின். ஆசிரியப்பாவிற்கு எல்லை கூறுதல் நுதலிற்று (இ-ள்.) ஆசிரியப்பாவின் அளவிற்கு எல்லையாவது: சுருங் கினது மூன்றடி; பெருமை ஆயிரமடியாக இடைப்பட்டன எல்லா வடியானும் வரப்பெறும் என்றவாறு. சுருங்கின பாட்டிற்கு உதாரண மேற் காட்டப்பட்டன. பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும் மணிமேகலை யுள்ளுங் கண்டு கொள்க. ஆசிரிய நடைத்தே வஞ்சி (செய்யுளியல். 104) என்றதனான் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமையாகக் கொள்ளப்படும்.1 (150) பேராசிரியம் : இத்துணையும் பாவுறுப்புக் கூறி, இனி அப்பாவினுள் உள்ளுறுப்பாகிய அடியளவைக் கூறுவானெழுந்தான், அம்முறை யானே ஆசிரியப்பாவிற்கு அளவு கூறுகின்றானென்பது, (இ-ள்) ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கெல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்கெல்லை மூன்று அடி (எ-று). நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு-கடவுள் வாழ்த்து) என்னும் ஆசிரியப்பா மூன்றடியால் வந்தது. மாயோன் மார்பி னாரம் போல என்பது, நான்கடியான் வந்தது. வேரல் வேலி வேர்க்கோட் பலவின் ... ... bgUªnj னிழைக்கு நாடனொடு நட்பே (குறுந். 18) என்பது, ஐந்தடியான் வந்தது. தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைக லெய்தின்றா லுலகே (குறுந்-கடவுள் வாழ்த்து) என்பது, ஆறடியான் வந்தது. மாநிலஞ் சேவடியாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே (நற்றிணை-கடவுள் வாழ்த்து) என்பது ஏழடியான் வந்தது. பிறவும் அன்ன. ஆயிரம் அடியான் வருவனவும் உளவேற் கண்டுகொள்க. ஆசிரியப் பாட்டி னெல்லையென்னாது அளவு என்றதனான் அதனியற்றாகிய1 வஞ்சிப்பாவிற்கும் இவ்வாறே கொள்ளப்படும் இனி, வெண்பா நெறித்தாகிய கலியளவை அதனின் வேறுபடுதலின் அதற்கு வேறு விதந்து கூறுமென்பது. (157) நச்சினார்க்கினியம் : இது நிறுத்தமுறையே ஆசிரியத்திற்கு அளவியல் கூறுகின்றது. (இ-ள்.) ஆசிரியப்பாவின் பெருக்கத்துக்கு எல்லை யாயிர- மாகும். சுருக்கத்திற்கெல்லை மூன்றடியாகும் எ-று. உ-ம் நீல மேனி வாலிழை பாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு-வாழ்த்து) இது சுருக்கத்திற்கெல்லை கூத்தாராற்றுப்படை தலையள விற்கெல்லை. மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் ஒழிந்த பாட்டேழும், பரிபாடலுங், கலியும் ஒழிந்த தொகைஆறும் இடையளவிற் கெல்லை பாட்டினெல்லை யென்னாது அளவென்றதனான் அதனியற்றாகிய வஞ்சிக்கும் இவ்வாறே கொள்க. செங்கண்மேதி கரும்புழக்கி யங்கணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ் செங்கழுநீர் நல்வயற் கழனி யூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே இது சிற்றெல்லை பட்டினப்பாலை யிடையளவிற் கெல்லை, மதுரைக் காஞ்சி தலையளவிற் கெல்லை. ஆய்வுரை : இஃது, ஆசிரியப்பாவின் அடியளவு கூறுகின்றது. (இ-ள்) ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடியாகும் சுருக்கத்திற்கு எல்லை மூன்றடியாம் எ-று. ஈண்டு அளவு என்றது பேரெல்லையாகிய பெருக்கத்தைச் சுட்டி நின்றது. இழிபு - சுருக்கம், ஆசிரிய நடைத்தேவஞ்சி என்றமையால், வஞ்சிப்பாவிற்கும் ஆயிரம் அடி பேரெல்லையாகக் கொள்ளப்படும் என்றார் இளம்பூரணர். 151 நெடு வெண் பாட்டே முந்நான் கடித்தே குறுவெண் பாட்டிற் களவேழ் சீரே.1 இளம்பூரணம் : என் -- எனின் வெண்பாவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண்பாட்டிற்கு அடி அளவடியுஞ் சிந்தடியுமாகிய இரண்டடியும் என்றவாறு.2 எனவே, இடையுள்ள அடிகளுக்கெல்லாம் உரிய உதாரண மேற் காட்டப்பட்டது. (151) பேராசிரியம் : இஃது, முறையானே வெண்பாவின் அடியளவு கூறுகின்றது. (இ-ள்). வெண்பாவிற்கு இரண்டும் பன்னிரண்டும் இழிபும் ஏற்றமுமாம் (எ-று). மற்று இவற்றையும், ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை (தொல்-செய்-157) என்றாற்போலக் கூறாது, குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டு மெனப் பெயர் கொடுத்ததனாற் பயந்ததென்னையெனின்,---குறுமையும் நெடுமையும் அளவியலோடு படுத்துக் கொள்ளப் படுதலின் அளவியல் வெண்பாட்டும் உளவென்பதூஉம், அதுவே சிறப்புடையதென்றற்கும் அங்ஙனங் கூறினானென்பது1 இனி அவற்றைத் தத்தம் வகையாற் சுருக்கப் பெருக்கம் உணருங்கால் உய்த்துக்கொண்டுணர்தல் என்பதனான் உணரப்படும்; என்னை ? நெடுவெண்பாட்டிற்கு உயர்ந்த அளவை பன்னிரண்டடி யெனவே, அதன் பாகமாய ஆறு அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்த வெல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவிற்கு இழிந்த வெல்லை நான்கடியெனவும் கொள்ள வைத்தமையினென்பது.2 இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதனோக்கிப் பதினெண்கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியி னேறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோருமெனக் கொள்க ; இக்கருத்தினானே, அம்மை தானே யடிநிமிர் பின்று (தொல்-செய்-335) எனக்கூறிய நெடுவெண்பாட்டு நேர்ந்திலன் ஆசிரியன் அதற் கென்பது;1 அஃதேல், அவ்வளவியல் வெண்பாவுள்ளும் ஆறடியானும் ஐந்தடியானும் வருதல் சிறுவரவினவாலெனின், ---அங்ஙனமே செப்பிக்கூறிய மரபிற்றாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல்பன்றாகலின் அவற்றுள்ளுஞ் சுருங்கிய நான் கடியே சிறந்ததென்று அதனையேபற்றிப் பெரும்பான்மையுஞ் செய்யுள் செய்தாராவரென்பது அஃதேல், குறளடி வெண்பா அதனினுஞ் சிறந்ததாம் பிறவெனின்,- அற்றன்று: செப்பிக்கூறுங் கால் தெரியக் கூறல்வேண்டுமாகலின் அளவியல் வெண்பாவே பயின்றவென்பது நெடுவெண்பாட்டுப்போலச் சிறப்பின்றாங் குறுவெண்பாட்டுமெனின் :--- சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல் என்பதனான், அவ்விரண்டினுள்ளும் அதனைப் பிற்கூறியது அச் சிறப்பு நோக்கியன்றோவென்பது:2 உ-ம்: அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள்-259) எனவும், அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் சிறந்தார் செறிந்தமை யாராய்ந்து கொண்டு (யா. வி. ப. 226) எனவும், இவை குறுவெண்பாட்டு. துகடீர் பெருஞ் செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்கால் போல வரும் (நாலடி-1-2) எனவும், நாண்ஞாயி லுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய்க் குருதி களிறுழக்கத்-தான்மாய்ந்து முன்பக லெல்லாங் குழம்பாகிப்-பின்பகற் றுப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து, (களவழி 1) எனவும், நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த விடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைந் தூறெறிந் தற்றே யெரிமணிப்பூ ணேந்தெழின் மார்பத் தியறிண்டேர்ச் செம்பியன்றெவ் வேந்தரை யட்ட களத்து (களவழி-6) எனவும், இவை அளவியல் வெண்பாட்டு. பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவின் என்பதும் அது, நெடுவெண்பாட்டு வந்தவழிக் கண்டுகொள்க. (158) நச்சினார்க்கினியம் : இது முறையே வெண்பாவின் அடியளவைக் கூறுகின்றது. (இ-ள்). நெடுவெண்பாப் பேரெல்லை பன்னீரடியையுடைத்து. குறுவெண்பாச் சிற்றெல்லை யீரடியையுடைத்து. எ-று. இதனை வெண்பாட்டளவிற் கெல்லையென்னாது குறு வெண்பாட்டு நெடுவெண்பாட்டெனப் பெயர் கொடுத்துக் குறுமையும் நெடுமையும் அளவியலோடு படுத்துக் கொள்ளப் படுதலின் அளவியல் வெண்பாட்டு முளவென்பதூஉம், அது சிறப்புடைத்தென்பதூஉம் பெறுதும். எனவே, நெடுவெண்பாவின் பன்னீரடியிற் பாகமாகிய ஆறடியே யளவியல் வெண்பாவுக்குப் பேரெல்லையாகவும், அதன்பாகமாகிய மூன்றடியே குறுவெண்-பாவிற்குப் பேரெல்லையாகவுங் கோடும். அங்ஙனங் கொள்ளவே நெடுவெண்பாவிற் கிழிந்த வெல்லை யேழடியாகவும் அளவியல் வெண்பாவுக்கு இழிந்தவெல்லை நான்கடியாகவுங் கொள்ளப்படும். இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைமை நோக்கி யாசிரியர் அம்மை தானே யடிநிமிர் வின்றே (செய். 2) என்று நெடுவெண்பா நேர்ந்திலர். அடிநிமிர் வின்றென்றது ஆறடியின் மிகாமையை; உரையிற் கோடலென்பதனாற் செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனக் கொள்க சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல் என்பதனாற் குறுவெண்பாவுஞ் சிறப்புடைமை பெறுதும். இக்கருத்தானே கீழ்க்கணக்கில் நான்கடியும் ஈரடியுமே மிக வந்தவாறும் முத்தொள்ளாயிரத்து நான்கடியே மிக வந்தவாறுங் காண்க.1 உ--ம் யாதானு நாடாமல் (திருக். 397) இருதேவர் பார்ப்பா ரிடை (ஆசாரக். 31) துகடீர் பெருஞ் செல்வம் (நாலடி. செல்வ) இனிதுண்பா னென்பா னுயிர்கொல்லா துண்பான் முனிதக்கா னென்பான் முகனொழிந்து வாழ்வான் றனிய னெனப்படுவான் செய்தநன் றில்லா னினிய னெனப்படுவான் யார்யார்க்கே யானு முனியா வொழுக்கத் தவன் (நான்மணி. 60) ஆரெயின் மூன்று மழித்தா னடியேத்தி யாரிடத்துத் தானறிந்த மாத்திரையா னாசாரம் யாரு மறிவ தறனாக மற்றவற்றை யாசாரக் கோவை யெனத்தொகுத்தான் றீராத் திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியென் பான் (ஆசாரக். காப்பு) என இவை முறையே வந்தன. ஒழிந்த நெடுவெண்பாட்டு வந்துழிக் காண்க. ஆய்வுரை : இஃது வெண்பாவிற்கு அடியளவு கூறுகின்றது. (இ-ள்) நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண்பாட்டிற்கு அளவு, அளவடியும் சிந்தடியும் சேர்ந்த மைந்த எழுசீராம் எ-று. குறுமை நெடுமை என்ற வேறுபாடு அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தொன்றினை அளவாகக் கொண்டே வகுத்துரைக்கப் படுதலின் குறுவெண்பாட்டிற்கும் நெடுவெண்பாட்டிற்கும் இடைப்பட்ட அளவியல் வெண்பாட்டும் உளவென்பதும் அதுவே பெரும்பான்மையும் பலராலும் இயற்றப்படுவதென்பதும் பெறப்படும். நெடுவெண்பாட்டிற்குப் பேரெல்லை பன்னிரண்டடி யெனவே அதனிற் பாதியாகிய ஆறடி அளவியல் வெண்பாவின் உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண் பாட்டின் சிற்றெல்லை ஏழடி யெனவும், அளவியல் வெண்பாவின் சிற்றெல்லை நான் கடியெனவும் கொள்ளவைத்தாராயிற்று. அளவியல்வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியின் மிகாமற் செய்யுள் செய்தனர். அம்மை யென்னும் வனப்புடைய செய்யுட்கு நெடுவெண்பாட்டு ஏற்புடையதன்றென்பது, அம்மை தானே அடிநிமிர் பின்றே (செய்-227) எனவரும் தொல்காப்பிய நூற்பாவால் இனிது புலனாம். செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத் தெனவும், சிறப்புடைப் பொருளைப் பிற்படக்கிளத்தல் என்பதனால் குறுவெண்பாட்டும் சிறப்புடைமை பெறுதும் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். நெடுவெண்பாட்டினைப் பஃறொடை வெண்பா எனவும், இரண்டடியானாகிய குறுவெண்பாட்டினைக் குறள் எனவும், மூன்றடியானாகிய வெண்பாவினைச் சிந்தியல் வெண்பா எனவும், நாலடி முதல் வரும் அளவியல் வெண்பாக்களும் இரண்டாம் அடியில் தனிச்சொற் பெற்று ஓரெதுகையாகவும் ஈரெதுகையாகவும் வரும் வெண்பாவினை நேரிசை வெண்பா வெனவும், நேரிசை வெண்பா விற் சிறிது வேறுபடவரும் வெண்பாவினை இன்னிசை வெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் பிற்கால யாப்பிலக்கண நூலார். 152. அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும்.1 இளம்பூரணம் : என்--எனின். அங்கதப் பாட்டிற்கு அளவுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டி என்றவாறு.2 உதாரணம் சில காட்டப்பட்டன; ஏனைய வந்தவழிக் கண்டு கொள்க. (152) பேராசிரியம் : அங்கதப் பாட்டிற்கும் வெண்பாவே உறுப்பாகலான் ஈண்டு வைத்தான். இதுவும் மேற்கூறிய இரண்டெல்லையும்3 பெறு மென்றவாறு. இருடீர் விளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள என்பது, நான்கடியான் வந்த அங்கதம்: பிறவும் அன்ன. இது, மந்திரத்தின் வேறுபட்டு அடிவரைத்தாயினமையின் இதுவும் வெண்பாட்டுப் போன்று அமைத்து வரல்வேண்டு மென்றற்கும், இது வேறு பாட்டெனப்படாமையின் அடிவரை யின்றுகொலென்னும் ஐயந்தீர்த்தற்கும் இதற்கே ஈண்டு அளவை கூறி, அதனோடும், கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுள் (தொல் - செய்-118) என்று ஓதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும் அவற்றுக்கு அளவையும் வெண்பாவின் அளவேயென்று அடக்கினானென்பது.1 நூற்பாவாக அடிவரைப் படுவன உளவாயினவற்றுக்கும் இஃதொக்குமென்பது மேற் கூறுதும். (159) நச்சினார்க்கினியம் : இஃது வசைப்பாட்டெல்லை கூறுகின்றது. (இ-ள்.) வசைப்பாட்டி னெல்லை2 முற்கூறியவைபோல ஈரடிச்சிறுமையும் பன்னீரடிப் பெருமையுமாய் வரும். எ-று. உ-ம். இருடீர் மணிவிளக்கத் தேழிலார் இது நான்கடியான் வந்தது. பிறவு மன்ன. ஆய்வுரை : இஃது அங்கதப்பாட்டிற்கு அடியளவு கூறுகின்றது. (இ-ள்) அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு அடியளவு முற்கூறியவாறு சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி எனக் குறுவெண்பாட்டிற்கும் நெடுவெண்பாட்டிற்கும் கூறிய அளவே யாகும் எ-று. அங்கதப் பாட்டு வசைப் பொருட்டாகிய மந்திரம் போல்வ தாகலின் அடிவரையறையில்லாத ஆறனுள் ஒன்றாகிய மந்திரம் போன்று அதற்கும் அடிவரையில்லையோ? என்று ஐயுற்ற மாணவனை நோக்கிப் பாட்டாய் வருதலின் அதுவும் அடிவரையறை யுடையதாயிற்று என ஐயமகற்றியவாறு. 153. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை என்றிவை தொகைநிலை மரபின் அடியில என்ப.1 இளம்பூரணம் : என்--எனின். அடியளவு வரையறையில்லாத செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). கலிவெண் பாட்டும், கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாவும். செவியுறை வாழ்த்து, வாயுறைவாழ்த்து, புறநிலை வாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களுக்கும் அளவு வரையறுக்கப்படா; பொருள் முடியுங்காறும் வேண்டிய அடி வரப்பெறும் உன்றவாறு.2 (153) பேராசிரியம் : இஃது, எய்தாததெய்வித்தது: அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின்3 (இ-ள்.) இவை ஐந்தும் பெருமைக்கெல்லை இத்துணை யெனத் தொகுத்துக் கூறுந் தன்மையுடைய அளவால் வரும் அடியையுடைய அல்ல (எ-று). fÈbt©gh£bl‹gJ ஒருபொருணுதலுதலால் திரிபின்றி நடப்பதன்றிப் பன்னிரண்டடியின் இகந்துவந்து, தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து (466) வாராது ஒன்றேயாகி வருவதெனக் கொள்க. கைக்கிளைச் செய்யுளென்பது கைக்கிளைப்பொருட்கு உரித் தாய்வரும் மருட்பா வென்றவாறு அஃதேல், ஈண்டோதிய கலிவெண்பாட்டு மொழிந்த கைக்கிளைப் பொருண்மேல் வாராவோ வெனின், ---வருமென்பது, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் (தொல்-அகத்-58) என்புழிக் கொண்டாமென்பது. எனவே, வெண்பாட்டல்லா தன கலிப்பாட்டுக்கள் கைக்கிளைப்பொருண்மேல் வந்தவழியும் அவற்றுக்கு அளவை மேற்கூறியவாற்றானே அடங்குமென்ப தாயிற்று. செவியறி வாயுறை புறநிலையென்பன மேற், கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ (தொல்-செய்-110) எனவே, ஒழிந்த பாவான் வருமெனப்பட்ட பொருண்மேல் வருஞ் செய்யுள். ஆண்டோதியவற்றிற்கு ஈண்டு அளவை கூறானோ வெனின்,-அஃது ஆசிரியமும் வெண்பாவுமாகி வேறு வருதலின் முற்கூறிய வகையானே அடங்குமென்பது. மற்றுக் கொச்சக வொருபோகாகியுந் தொடர்நிலைச்செய்யுட்கண் வருமால் அவையடக்கெனின்,1 அஃது, யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய (தொல்-செய்-149) கொச்சக வொருபோகென் றொழிக. தொகுநிலை யளவின் அடியில என்பது, விரவுறுப்புடைய வெண்கலியுங் கொச்சகக்கலியும் உறழ் fÈíbk‹¿t‰¿‰F மேல் அம்போதரங்கம் பெற்ற அளவினை முதலாக நாட்டிக்கொண்ட தொகுநிலை யளவெனப்பட்ட அடி மேல் அடியிகந்தோடா வென்றவாறு. தொகுநிலையள வென்பது தலையளவு இடையளவு கடையள வெனப்பட்ட அம்போதரங்கம் மூன்றற்கும் பெருகிய வெல்லையாகி அளவின் விரியாது அவற்றுக்குச் சுருங்கிய வெள்ளையாகி அறுபதும் முப்பதும் பதினைந்து மெனத் தொக்குநிற்கும் அளவினவாகிய அடி மேலேறா வென்றவாறு. தொகுமளவென்னாது தொகுதிநிலை யென்றான் மூன்று தொகையினும் முப்பஃதாகிய இடை நிலைத்தொகையே கோடற் கென்பது. இன்னென்னும் ஐந்தாமுருபு நீக்கத்தின்கண் வந்தமையின் முப்பஃதடியின் இகந்துவரும் அடி இல வென்றவாறு. இனி, அம்முப்பஃதாகிய தொகுநிலை இவ்வைந்தற்கும்1 நீண்ட வடிக் கெல்லை யாதலின் தொகுநிலை யென்னாது அளவு என்றானென்பது, நீண்டதனை அளவுடைத் தென்பவாகலின்.2 மற்றிங்ஙனம் இவை முப்பஃதடியின்மேல் வாராவென்று பெருக்கத்திற் கெல்லை கூறவே, சுருக்கத்திற் கெல்லை வரையறையிலவென்றானாம்; ஆகவே, இரண்டடியானும் வருமென்றானாம் பிறவெனின், --அற்றன்று; ஒரு பொருணுதலிவருங் கலிவெண்பாட்டாயிற் பன்னீரடி இகவாதென்பது, திரிபின்றி வருவது கலிவெண் பாட்டு (தொல் செய்-153) என்றவழிப் போதுமாகலின், ஈண்டு ஓதிய கலிவெண் பாட்டுப்3 பதின்மூன்றடியிற் சுருங்கா தென்பது பெற்றாம். இது கைக்கிளைப் பொருண்மேல் வந்ததாயினும் ஒக்கும்.4 ஒழிந்த நான்கும் மருட் பாவாதலான், வெண்பா வாகி யாசிரிய வியலான் முடியவும் பெறும் (தொல்-செய்-119) என்றானாகலானும், வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் என வருகின்ற சூத்திரத்தானும், அவ்விரண்டு பாவின் கூட்டம்5 இரண்டடியால் வாரா வாகலானும் அவையும் நான்கடியிற் சுருங்காவென்பது உய்த்துக்கொண் டுணர it¤jhbd‹gJ; என்னை ? கைக்கிளைப் gly¤JŸ:6 போற்றி வெண்பா வாகி மற்றத னிறுதி யைஞ்சீ ராசிரி யம்மே என்றாராகலின். மற்று மூன்றடியிற் சுருங்காது ஆசிரியமாத லானும் இரண்டடியிற் சுருங்காது வெண்பாவாதலானும் இவ் வைந்தடியிற் சுருங்காவென்று கொள்க.1 இது, பண்புற முடியும் பாவின (தொல்-செய் 161) என மேற்சொல்லும். அவற்றுக்குச் செய்யுள்; நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர் (கலி-24) என்பது, பதினேழடியான் வந்த கலிவெண்பாட்டு. சுடர்த்தொடீ கோளாய் (கலி-51) என்பது, ஒரு பொருணுதலிப் பதினாறடியான் வந்தது. திருந்திழாய் கேளாய் (கலி-65) என்பது, இருபத்தொன்பதடியான் வந்த கலிவெண்பாட்டு. ஒழிந்தனவும் அன்ன; நூற்றைம்பது கலியுள்ளுங் கைக்கிளை பற்றி இவ்வாறு வருங் கலிவெண்பாட்டுக் காரணமாயினமையிற் காட்டாமாயினாம். இலக்கணமுண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கண்டுகொள்க.1 கனவினிற் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலக்கு நாணு மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று (முத்தொள்ளாயிரம் :69) இது, கைக்கிளைபற்றி வந்த கலிவெண்பாட்டென்னாமோ? வெனின், என்னாமன்றே, அது பாடாண்டிணைப் புறப்பொரு ளாகலானும் ஒருபொருணுதலுதல் Iªâiz¡f©znjahf லானும் பன்னிரண்டடியின் இகந்ததன்றாகலானும் வெண்பா வேயாமென்பது.2 இப் பொருட்பகுதி யுணராதாரும் இது மரபென்ப தறியாதாரும், நூற்றைம்பது கலியுள்ளும் இவை கோப் புண்டன வென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருணுதலியன ஒழிந்தன வெல்லாம் வெண்பா வென்று அடிவரை கூறா தொழிப. அங்ஙனம் மரபழியக் கூறின் ஒரு சாத்தனை நாட்டி அவனைக் காமுற்று இவள் இன்னவா றாயினளென ஆசிரியத்தானும் வஞ்சியானும் பொருள் வேற்றுமையுடைய ஒருசார்க் கொச்சக மல்லாத கனிப்பாவினானுஞ் செய்யுள் செய்தலும், இனி அதனிலையாகிய ஆண்பாற் கைக்கிளை ஆசிரியத்தானும் வஞ்சியானும் வருதலும் பிறவும் இன்னோரன்னவெல்லாம் புலனெறி வழக்கினுட் காட்டல் வேண்டுமென மறுக்க1 என்றார்க்கு வரைவுகடாதற்கண்னுந் தலைவனை அன்பிலனாகச் சொல்லுவன பாடாண்டிணைக் கைக்கிளை யாகாவோவெனின்,- அவை சுட்டி யொருவர்ப் பெயர் (தொல்-அகத்-54) கொள்ளாமையின் ஆகாவென்பது. அஃதேல், விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை (கலி 45) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், கால்பொர நுடங்கல் கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை எனவும், நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் (கலி-99) என்னும் மருதப்பாட்டினுள், அறனிழ லெனக்கொண்டா யாய்க்குடை யக்குடைப் புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை எனவும் இவை சுட்டியொருவர்ப் பெயர் கொள்ளாக் கைக்கிளை வந்தனவாலெனின், அற்றன்று; தலைமக னன்பின்மையே மெய் யாயினன்றே அன்னதாவது; இவை அன்னவின்றி வரைவு கடாவலும் ஊடலுங் காரணமாக அன்பிலனென்று இல்லது சொல்லினமையின் அவை ஒருதலையன்பாகா வென்பது2 மற்று. என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே ... ... ... உமணர் வெரூஉந் துறையன் னன்னே (புறம்-84) என்னும் புறநானூற்றுப் பாட்டும் பெண்பாற் கைக்கிளையாதலின் அதனை ஆசிரியத்தான் வாராதென்ற தென்னையெனின் - ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின (தொல்-செய்-118) என்புழிச், சிறுபான்மை தலைவி கூற்றாகியே வருவன அமையு மென்று போதந்தாமாகலின் அதுவே பெருவிதியாகாதென்பது.1 இனிக் கைக்கிளை வருமாறு: திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலஞ் சேவடியுந் தோயு - மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே (புற வெ மாலை-கை- 8) இஃது, நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லினது; நற்காம மன்றா மாகலின்.2 இக்கருத்தினானே; இதனைப் புறத்திணையுட் கொண்டாருங் கைகிக்ளைப் gly¤J, நெஞ்சிற் குரைத்தலுங் கேட்போ ரின்றி யந்தர மருங்கிற் கூறலு மல்லது சொல்லலுங் கேட்டலு மில்லை யாக வகத்திணை மருங்கி னைவகை யானு மிகத்த லென்ப விவ்வயி னான என்றாரெனக் கொள்க. பாடாண் கைக்கிளைக்கும் ஈண்டே அளவு கூறுகவெனின் கலிவெண்பாட்டினைக் கைக்கிளை யென்னாமாயினன்றே அது கடாவாவது.1 மருட்பாவிற்குக் கைக்கிளைப்பகுதி வரைந்தோதல் வேண்டுவதின்மையின் அதற்கும் இதுவே அளவாமென்பது. ஒழிந்த மருட்பா மூன்றற்கும் உதாரணம் மேற்காட்டுதும்.2 இக்காலத்தார் ஏறிய மடற்றிற (51) மென்னும் பெருந்திணைப் பொருண்மேலுங் காமஞ்சாலா விளமையோளை ஒழிந்த மகளிரொடுங் கூட்டி யுரைக்குங் கைக்கிளைப்பொருண்மேலுங் கலிவெண்பாட்டெனப் பெயர்கொடுத்துச் செய்யுள் செய்பவால் அவை அவ்வாறு செய்தற்கும் அவை முப்பதிற்றடியின் இகந்து எத்துணை யடியினும் ஏற்கு மென்றற்கும் என்னை ஓத்தெனின், அவ்வாறு வருமென்பது இந்நூலுட் பெற்றிலமாயினும் இருபதின்சீர்க் கழிநெடிலடி யானும் இது பொழுது செய்யுள் செய்யுமாறுபோலக் காட்டலான் அமையும். அவை புலனெறி வழக்கிற்குச் சிறந்திலவாகலிற் சிறுவரவினவென் றொழிக.3 (160) நச்சினார்க்கினியம் : இஃது ஒருபொரு ணுதலிய (செய். 154) என்னுஞ் சூத்திரத்திற் சீர்வகைக் கலிவெண்பாவிற்கும், நால்வகை மருட்பாவிற்கும் அடிவரையறை யின்மை கூறுகின்றது. (இ-ள்) fÈ...றிit எ-து கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், புறநிலைவாழ்த்துப் பொருண்மேல் வருஞ்செய்யுள், வாயுறை வாழ்த்துப் பொருண்மேல் வருஞ்செய்யுள், செவியறிவுறூஉப் பொருண்மேல்வருஞ் செய்யுள் என்றிவ் வைந்தும்.தொகு...g எ-து பெருமைக் கெல்லை யித்துணையெனத் தொகுத்துக்கூறுந்தன்மையையுடைaஅளவால்வரு«அடியையுடைaவல்லவென்Wகூறுவ®புலவர். எ-று. உ-ம். சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடும் (கலி. 51) இது ஒருபொருணுதலிப் பதினா றடியான் வந்தது. திருந் திழாய் கேளாய் (கலி. 65) என்பது இருபத்தொன்பதடியான் வந்தது. இதனைக் கைக்கிளையோ டெண்ணுதலிற் கைக்கிளைப் பொருளொடுங் கலிவெண்பாட்டு வருதல் கொள்க. அது கலித் தொகைக்கணின்மையிற் காட்டாமாயினாம். ஒழிந்த வுறுப்போடு கூடிய கலிவெண்பாட்டுக்கள் பெற்ற அடிவரையறையும் அவ் வுதாரணங்களுட் காண்க. இனிக் கனவினிற் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலங்கு நாணு-மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல்tடுப்படுப்பச்bசன்று (முத்தொள்.)இது புறப்புறக் கைக்கிளை. இதனைக் கைக்கிளைப் பொருண் மேல் வந்த கலிவெண்பாட்டெனின் இஃது சுட்டி யொருவர்ப் பெயர்க்கொண்ட பாடாண்டினைப் புறப்பொருளாகலானுங் கலிவெண்பாட்டு அப்பொருண்மேல் வருதல் சிறுபான்மையாத-லானும் இது பன்னீரடியி னிகவாது வருதலானும் வெண்பாவேயாம். இவ்வாறு புறப்பொருளான் வந்து இரண்டுறுப்பாயும் ஓருறுப்பாயும் பாவும் பொருளும் வேறுபட்டு வெள்ளடியினிகந்துவரும் கலிவெண்பாவாகிய உலாச்செய்யுள் அடிவரையறையன்றி வருமாறும் பெருந்திணைப் பொருண்மேல்வரும் மடற்செய்யுளும் ஓருறுப்பாய் அடியிகந்து வருமாறும் இக்காலத்துக் கூறுகின்ற வற்றுட் காண்க. அது âUîyh¥òw¤JŸS« வாமான வீசன் வரும் (ஆதியுலா.) எனமுடித்து மேல் வேறோருறுப்பாயவாறும் ஒழிந்த உலாக்களுள் வஞ்சியுரிச்சீர் புகுந்தவாறும் அடிவரையறை யின்மையுமாம். அகப்புறமும் புறப்புறமுமாய மருட்பாவாய்க் கைக்கிளை யடிவரையறையின்றி வந்தன வந்துழிக் காண்க. காமஞ்சாலா இளமையோன்வயின் வந்த கைக்கிளையுங் காட்சி முதலிய கைக்கிளையும் ஆசிரியத்தினும் வஞ்சியினும் வாரா. எனவே யொழிந்தபாவினுள் எல்லாக்கைக்கிளையும் வருமாயிற்று. என்னை புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்க ணேமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉந் துறையன் னனே (புறம். 84) இது சுட்டி யொருவர்ப் பெயர்க்கொள்ளாத பாடாண்டிணைக் கைக்கிளை. விடியல் வெங்கதிர் (கலி. 45) என்னுங் குறிஞ்சிப் பாட்டினுள், கால்பொர நுடங்கலிற் கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனை மலரெய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை என்பதூஉம் நறவினை வரைந்தார்க்கும் (கலி. 96) என்னும் மருதப் பாட்டினுள் அறநிழ லெனக்கொண்டாய் நின்குடை யக்குடை புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை என்பதூஉம் சுட்டியொருவர்ப் பெயர்க்கொள்ளாத கைக்கிளை யாமெனின் இவை தலைவ னன்பின்மை மெய்யாயினன்றே கைக்கிளையாவது; அவ்1வரைவு கடாவலும் ஊடலுங் காரணமாக அன்பிலனென்றலி னொருதலைக் காமமன்று. ஒழிந்த அடி வரையறையின்றி வருமாறு மேற்கொள்க. ஆய்வுரை : இஃது அளவை கூறாதனவற்றுக்கு அளவை கூறுகின்றது. (இ-ள்) கலிவெண்பாட்டும் கைக்கிளைப் பொருள் பற்றிய பாவும் செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் இத்துணை அடி யுடையன எனத் தொகுத்து வரையறுத்துக் கூறும் அடி வரையறை யில்லாதன எ-று. எனவே சொல்லக் கருதிய பொருள் முடியுமளவும் வேண்டிய அடிகளைப் பெற்று வருவன என்பதாம். ஈண்டுக் கைக்கிளைச் செய்யுள் என்றது கைக்கிளைப் பொருட்கு உரித்தாய் வரும் மருட்பாவை. 154. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதில் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப. இளம்பூரணம் : என்---எனின். மேலனவற்றுட் சிலபொருட்குரிய வேறு பாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புறநிலை வாழ்த்தும் வாயுறைவாழ்த்துஞ் செவி றிவுறூஉவும் மருட்பாவினால் வரப்பெறும் என்றவாறு.1 எனவே, மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறா தாயிற்று.2 உதாரணம் வந்தவழிக் காண்க. (154) பேராசிரியம் : இது, கைக்கிளை மருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போல வெண்பா முதலாக ஆசிரியம் பின்வந்து முடியுமென்று ஈண்டு அவற்றுக்கு இடம்பட்டது கண்டு கூறியவாறு; என்னை? மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே (தொல்-செய். 85) என்றவழி, ஆசிரியம் முன்னர் நிறீஇப் பின்னர் வெண்பாவினைக் கூறி, வெண்பா வியலினும் மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின (473) என்றமையின்.1 இங்ஙனம் எண்ணப்பட்ட மூன்று பொருட்கும் இலக்கணம் முன்னர்ப் பாவிரியோத்தினுட் கூறினவற்றுக்கு இன்ன வாறு செய்யுள் செய்க வென்றற்கு இது கூறினானென்பது.2 (இ-ள்) இம்மூன்றும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வரும் (எ-று). திறநிலை மூன்று என்றான். முற்கூறியனவெல்லாம் அகத் âizahfÈ‹. இவை òw¤âizísšyJ வாராவென்றற் கென்பது.3 திண்ணிதிற் றெரியினென்பது இவை மூன்றுங் கைக்கிளை மருட்பாப்போல் ஆண்பாற் கைக்கிளையும் பெண் பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒரு தலையாகவே புறத்திணையென்று தெரியப்படுவன வென்றவாறு. இதன் பயம்: கைக்கிளை மருட்பாப் புறத்திணையானும் வருமென்பது4 இயல் என இருகாற் சொல்லியவதனான் இயற்சீர் வெள்ளடியான் வெண்பா வருதல் சிறந்ததெனவும் அதற்கேற்ற வகையான் ஆசிரியம், இயற்சீரான் வருதல் சிறந்த தெனவுங் கொள்க.1 பண்புற முடிதல் என்பது மேற் சிறுமைக்கெல்லை கூறாமையின் வெண்பாவிற் கிழிபாகிய எழுசீரன்றி எண்சீரான் வரினும், ஆசிரியத்திற் கிழிபாகிய மூன்றடி வரினும் எருத்தடி குட்டமாகி வரினும் அங்ஙனம் மூன்றடி வந்தவழி வெண்பா நான்கு முதல் பன்னிரண்டளவும் உயரினும் அவை யெல்லாம் பண்பெனப்படுவன வெனவும், அல்லன சிறப்பிலவெனவுஞ் சொல்லினவாறு. இக்கருத்தினான் வெண்பாவடி வரையிலவாயினும் ஆசிரியவடி மூன்றிகவாவென்பது கைக்கிளைப் படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்னை ? முச்சீ ரெருத்திற் றாகிமுட் டின்றி யெச்சீ ரானு மேகாரத் திறுமே (கடியநன்னியார், யா. வி. ப. 204) என்றாராகலின். பாவின வென்றதனான் இவ்விரு பகுதியுந் தத்தம் பாக்கள் வேறு வேறு பெற நிகழுமென்பது.2 எனவே இயற்சீர் வெள்ளடி யாசிரியந் தொடுக்குங்கால், எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறி (குறுந் - 12) எனப் பாவினை ஒன்றாகத் தொடுத்தாற்போலத்3 தொடுத்தல் ஈண்டு அமையாதென்றானாம். இவை மூன்றற்கும் உதாரணங் காட்டுங்கால் மேற் காட்டாது நின்ற பாடாண்டிணைக் கைக்கிளை மருட்பாவிற்கு உதாரணங் காட்டியே காட்டப்படும். (161) நச்சினார்க்கினியம் : இது கைக்கிளை மருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போல வருமென்றற்கு4 உடம்பட்டமைகண்டு ஈண்டுக் கூறுகின்றது. (இ-ள்.) இம் மூன்றும் முன்பு வெண்பாவும் பின்பு ஆசிரியமுமாய் வரும். எ-று. மருட்பா வேனை யிருசா ரல்லது (செய். 85) என்ற வழி இன்னவாறு வரு மென்னாமையின் இது கைக்கிளை மருட்பாப் போல வருமென்றற்கு முன்பு வெண்பா வியலினும் பின்பு ஆசிரிய வியலிலும் முடியுமென்று அவை வருமுறை கூறினார். முன்னர் இம்மூன்று பொருட்கும் இலக்கணங் கூறிப் போந்தவற்றிற்கு இன்னவாறுஞ் செய்யுட் செய்த லுரித்தென்று ஈண்டு ஓர் செய்யுள் வேறுபாடு கூறினார். இது புறத்திணையுளல்லது வாரா வென்றற்குத் திண்ணிதி னென்றார். எனவே இவை கைக்கிளை மருட்பாப்போல் ஆண்பாற் கைக்கிளையும் பெண்பாற் கைக்கிளையுமாய் அகனும் புறனும் பற்றி வாராவென்பது பெற்றாம்.1 இயலென்று இருகாற் கூறியவதனான் இரண்டுபாவும் இயற்சீரான் வருதல் சிறப்புடைத் தென்க. பண்புற என்றதனான் வெண்பாவி னிழிபாகிய எழுசீரா னன்றி யெண்சீரான் வருதலும். ஆசிரியத்தி னிழிபாகிய மூன்றடிவரினும் எருத்தடி குட்டம்பட்டு வருதலும் வெண்பா பலவடி வரினுமாசிரிய மூன்றி னிகவா வென்றுங் கொள்க. பாவின வென்றதனான் இவ்விரு பகுதியுந் தத்தம் பாக்கள் வேறுவேறு நிகழுமென்று கொள்க. எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந். 12) என்னும் பாட்டுப்போல வோசை கலந்து வாரா. உ---ம். தென்ற லிடைபோழ்ந்த தேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றா னிற்காப்ப வென்றுந் தீராநண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே இது புறநிலை. இஃது அடியிகந்தது வந்துழிக் காண்க. பலமுறையு மோம்பப் படுவன கேண்மின் சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னாண்ட நிகரில்லார் மாட்டுஞ் சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா விலங்கு மெறிபடையு மாற்றலு மன்புங் கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறி னாலும் விலங்கிவருங் கூற்ற நீக்கலு மாகா தனைத்தாத னீயிருங் காண்டிர்-நினைத்தக்க கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே இது வாயுறை. பல்யானை மன்னர் முருங்க வமருழந்து கொல்யானைத் தேரொடுங் கோட்டந்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞ ரடுகளம் வேட்டோன் மருக வடுதிற லாழி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்று மீர முடையையா யென்வாய்ச்சொற் கேட்டி யுடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யன் மழவ ரிமைக்கும் வரைகா ணிதியீட்டங் காட்டு மமைச்சரை யாற்றத் தெளிய லடைத்த வரும்பொரு ளாறன்றி வௌவலி னத்தை பெரும்பொரு ளாசையாற் சென்று பெருங்குழிசி மன்ற மறுக வகழாதி யென்று மறப்புற மாகி மதுரையா ரோம்பு மறப்புற மாசைப் பாடேற்க வறத்தா லவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிதையாதி யொட்டார் செவிபுதைக்குந் தீய கடுஞ்சொற் கவிபடைத்தாய் கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை யாக்குதி யற்ற மறிந்த வறிவினாய் மற்று மிவையிவை நீவா தொழுகி னிலையாப் பொருகட லாடை நிலமக ளொருகுடை நீழற் றுஞ்சுவன் மன்னே இது செவியுறை. ஆய்வுரை : இது, மருட்பாவின்கண் இடம்பெறும் பொருள் வகையும் அமைப்பும் உணர்த்துகின்றது. (இ-ள்) புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவி-யறிவுறூஉவும் எனப் புறத்திணைக்கண் நிலைபெற்ற திறத்தின வாகிய மூன்று பொருள்களையும் உறுதிப்படத் தெரிந்துரைப்பின் முறையே வெண்பாவின் இயல்பும் ஆசிரியப்பாவின் இயல்பும் ஆக இருதிறப் பண்பும் தம்மிற் பொருந்த முடியும் பாவாகிய மருட்பாவினிடத்தன எ-று. பண்புற முடிதலாவது வெண்பா, ஆசிரியம் என்னும் இரு வகைப்பாவின் பண்பும் தத்தம் இயல்பு வழாது பொருந்தி முடிதல். பாவின--பாவின் இடத்தன எனக் குறிப்பு முற்றாகக் கொள்க. மருட்பா முதற் சூத்திரத்திற் குறித்த கைக்கிளைப் பொருளுடன் இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉவும் ஆக நான்கு பொருளினல்லது வாராதென்பதாம். 155. பரிபா டல்லே* நாலீ ரைம்ப துயர்படி யாக ஐயைந் தாகும் இழிபடிக் கெல்லை. இளம்பூரணம் : என்-எனின். பரிபாடற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பரிபாடற் செய்யுள் நானூறடி யுயர்பாக இருபத் தைந்தடி இழிபாக வரும் என்றவாறு1 எனவே, இடையெல்லா அடியானும் வரப்பெறும் என்ற வாறு. கலிப்பாவினுள் ஒத்தாழிசைக்கு அளவு மேற்கூறப்பட்டது.2 கலிவெண்பாட்டுக்கு வரையறை யில்லை யெனப்பட்டது.1 கொச்சகக்கலிக்கு வரையறை கூறாமையாற் பொருண் முடியுங் காறும் வரப்பெறும் என்று கொள்க. அவ்வழிப் பலவுறுப்பாகி வருதலின் அதற்குறுப்பாகிய செய்யுளளவிற்றாதல் வேண்டும். உறழ்கலியுங் கொச்சகக் கலிப்பாற்படும்.2 பேராசிரியம் : இது, பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறுகின்றது. (இ - ள்.) பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பாவுக்கு நானூறடி பெருக்கத்திற் கெல்லை யாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற்-கெல்லை யாகவும் பெறும் (எ-று)3 அவை பரிபாடலுட் கண்டுகொள்க. (162) நச்சினார்க்கினியம் : இஃது முறையே பரிபாடற் கெல்லை கூறுகின்றது. (இ-ள்.) பரிபாடற் குறுப்பாகிய வெண்பாவும், பொதுப்பாவும் நானூறடி பெருக்கத்திற் கெல்லையாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற் கெல்லையாகவும் பெறும்.4 எ-று. அவை தொகையுட் காண்க. ஆய்வுரை : இது, பரிபாடற்கு அடியளவு கூறுகின்றது. (இ-ள்) பரிபாடல் என்னுஞ் செய்யுள், நானூறடி உயர்ந்த எல்லையாகவும் இருபத்தைந்தடி குறைந்த எல்லையாகவும் வரும் எ-று. 156. அளவியல் வகையே அனைவகைப் படுமே. இளம்பூரணம் : என்---எனின். மேற்சொல்லப்பட்டவை தொகுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இவ்வதிகாரத்துள் ஈண்டு அதிகரிக்கப்பட்ட அளவியல் ஈண்டுச் சொன்ன வகைபெறும் என்றவாறு.1 (156) பேராசிரியம் : இஃது, மேற்கூறிய அளவினை வரையறுக்கின்றது. (இ-ள்.) இத்துணையும் அளவியலான்2 ஒரு கூறே சொல் லப்பட்டது (எ - று). எழுநிலத்தெழுந்த செய்யுள் (476) களுள் அடிவரையறை யுடையனவற்றுக்குக் கூறினான் ஆண்டில்லாதன அடிவரையறை யின்றி வரும் இலக்கணத்த வென்பதூஉம் இனிக் கூறுதுமென்பதாம் இதனது பயன்.3 (563) நச்சினார்க்கினியம் : இஃது பிறன்கோட் கூறல்.1 (இ-ள்) யான் கூறிய அளவியலின் கூறுபாடு அத்துணைப் பகுதிப்படும் எ-று. என்றது யான் சிறப்புடைத்தெனக் கூறிய பெருமைக் கெல்லை அத்துணைப் படுமெனவே பிறர் பெருமைக்கெல்லை கொள்ளாதது சிறப்பின் றென்றவா றாயிற்று. ஆய்வுரை : இது, மேற்குறித்த அளவியலைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) செய்யுட்களின் அளவியல் வகை மேற்குறித்த கூறு-பாட்டினை யுடையதாகும். எ-று. அடிவரையறை யுடையன வாகிய செய்யுளுக்குரிய அளவியல் என்னும் அவை மேற்குறித்த அவ்வகையினவே என ஈண்டு முடித்துக் கூறியதன் பயன், அடிவரையறை யில்லாதன வற்றுக்கு இனிக்கூறப்படும் எனப் புலப்படச் செய்தல் எனக் கொள்வர் பேராசிரியர். 157. எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப. இளம்பூரணம் : என் --- எனின். அடிவரையறை யில்லாதன வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு.2 (157) பேராசிரியம் : மேலைச் சூத்திரத்தான் அளவியல் வகையை வரையறைப் படுத்தான்; அடிவரையறை யின்மையும் அளவியலென்பதுங் குறிப்புக் கருதா இலக்கணமாகிய செய்யுள் கூறினான் இச்சூத்திரத்தானென்பது.1 (இ - ள்) அகமும் புறமுமாகிய எழுநிலத்துந்2 தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையறையின்றி வரும் இலக்கணத் தளவும் ஆறாம் (எ - று). இதனானே ஆறென்பதூஉம் ஓரளவியலாயிற்று3. (164) நச்சினார்க்கினியம் : இஃது நான்குபாவிற்கு மளவு முற்கூறிய4 அளவிற் படாதன கூறுகின்றது. (இ ள்.) அகமும் புறமுமாகிய எழுநிலத்திலுந் தோன்றிய செய்யுளை யாராயின் அடிவரையறையின்றி வரும் இலக்கணத்தன ஆறென்று கூறுவர் புலவர். எ-று. எழுநில மென்றதற்குப் பாட்டு உரைநூல் முதலியனவுமாம்.5 ஆய்வுரை : இஃது அடிவரையறையில்லாத செய்யுட்கள் இவையென வரையறுத்துணர்த்துகின்றது. (இ-ள்) எழுவகை நிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையறையில்லாதன ஆறு என்று கூறுவர் ஆசிரியர் எ-று. இங்குக் குறிக்கப்பட்ட எழுநிலம் என்பன அடுத்து வரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்; அகமும் புறமுமாகிய எழுவகைத்திணைகள் என்பர் பேராசிரியர். 158. அவைதாம் நூலி னான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான1 ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. இளம்பூரணம் : என்---எனின். மேற்சொல்லப்பட்ட அறுவகையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள் ) வாய்மொழி யெனினும் மந்திர மெனினும் ஒக்கும்.2 அங்கதமாவது செம்பொருள் கரந்ததென விருவகைத்தே (செய்யுளியல்-320) என்றதனாற் கரந்த வங்கதமெனினுஞ் சொற் குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (358) பேராசிரியம் : இது மேற்கூறிய (476) நிறுத்த ஆறற்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) அவைதாமென்பது, அடிவரையில்லன ஆறெனப் பட்டவைதாம் 1நூலின் கண்ணவும் 2உரையின் கண்ணவும் 3நொடிதன் மாத்திரையாகிய பிசியின்கண்ணவும்4, ஒருமொழிக் கேதுவாகி வரும் முதுமொழிக்கண்ணவும் 5, மறைத்துச்சொல்லுஞ் சொல்லாற் கிளந்த மந்திரத்தின் கண்ணவுஞ்6,சொல்லுகின்ற பொருளை இடைகரந்து சொல்லுங் குறிப்பின்கண்ணவு மென அறுவகைப்படும் (எ - று) அவற்றுக்கிலக்கணம் போக்கிச் சொல்லுதும்2 நூலின் கண்ணவுமென்றது சூத்திரச்செய்யுளை நோக்கிக் கூறியவாறு. அதனுள்ளும் அடிவரையுடைய ஆசிரியம்போல் அளவைபெற்று மேலே அடங்குமென்பது.3 இனி அச்சூத்திரப் பொருளும் உரையின் கண்ணதாகி வருவதூஉம் ஒரு செய்யுளாம். அதனது விகற்பம் முன்னர்க் கூறுதும் 1நொடியொடு புணர்ந்த பிசியும், 2ஏது நுதலிய முது மொழியும், 3மறைமொழிகிளந்த மந்திரமுங், 4கூற்றிடை வைத்த குறிப்புமென நான்கும் வழக்குமொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யுளையே கோடற்கு அவற்றுக்கு அளவில் வென்றானென்பது.5 இவை இத்துணையெனவே மேலைச்சூத்திரமும் அளவியலே கூறியவாறாயிற்று.1 இனி அவைபடும் பகுதி யாவையுங் கூறுகின்றான், நொடியொடு புணர்ந்த வென்ற மிகையான் இதுவன்றி இதுபோல்வது பண்ணத்தி யென்பதும் ஒன்று உண்டென்பது கொள்க.2 அது முன்னர்ச் (492) சொல்லுதும். (561) நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய ஆறற்கும் பெயரும் முறையும் உணர்த்திற்று. (இ-ள்). முற்கூறிய அடிவரை யில்லாதனதாம் நூலின்கண் ணா வனவும், உரையின்கண் ணாவனவும், நொடியின்மாத்திரையவாகிய பிசியின்கண் ணாவனவும், ஒருமொழிக் கேதுவாகி வரும் முதுமொழிக்கண் ணாவனவும், மறைத்துக்கூறுஞ் சொல்லாற் கூறிய மந்திரத்தின்க ணாவனவும். கூறுகின்ற பொருளை யிடைக் கரந்து கூறுங் குறிப்பின்கண் ணாவனவுமென ஆறுவகைப்படும். எ-று. நூலினான எ-து சூத்திரச் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அளவை பெறாதனவற்றை நோக்கிற்று.1 அச்சூத்திரத்தை நோக்கி வருமுரையும் ஒரு செய்யுளாம். ஒழிந்தன வழக்கின் கண்ணுஞ் செய்யுட்கண்ணும் வரினும் ஈண்டுச் செய்யுளை நோக்குதற்கு அவற்றுக்கண்ண வென்றார். இவையும் அளவிகந்து வருவனவே. அளவு முற் கூறிற்றாம். ஆய்வுரை : இஃது அடிவரையில்லனவாக மேற்குறித்த அறுவகை-யினையும் விரித்துரைக்கின்றது. (இ-ள்) அவையாவன நூல், உரை, நொடியொடு புணர்ந்த பிசி ஏது நுதலிய முதுமொழி, மறைமொழி கிளந்த மந்திரம், கூற்றிடைவைத்த குறிப்பு என்னும் அறுவகையுமாம் எ-று. நொடியொடு புணர்ந்த பிசி என்பதற்கு நொடிதல் மாத்-திரையாகிய பிசி எனப் பொருள் கொள்வர் பேராசிரியர். நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படும். நொடியொடு புணர்ந்த பிசி எனவே பிசிக்கு நிலைக்களம், நொடியென்பது பெறப்படும். பிசியும் முதுமொழியும் மந்திரமும் குறிப்பும் ஆகிய நான்கும் வழக்கு மொழியாகியும் செய்யுள் மொழியாகியும் பயின்று வருதலால் அவற்றுட் செய்யுளையே கொள்ளுதற்கு அடிவரை யில்லனவாகிய செய்யுட்களுள் சேர்த்து எண்ணினார். 159. அவற்றுள், நூலெனெப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து* நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே.1 இளம்பூரணம் : என்--எனின். நூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் விரிந்த வுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு. அகன்றவுரையோடு பொருந்துத லாவது சொல்லாத பொருண்மை யெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லாம் இடனுண்டாதல். (156) பேராசிரியம் : இது, நூலினது பொதுவிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நூலென்று சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறுபடாது தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி அடங்கிநின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டுப் பருப் பொருட்டாகாது நுண்பொருட்டாகப் பொருள்விளக்கல். அதற்கிலக்கணம் அது (எ - று). இதன் அகலம் உரையிற் கொள்க.2 (166) நச்சினார்க்கினியம் : இஃது அந்நூல்கள திலக்கணங் கூறுகின்றது1 (இ-ள்.) நூ..F எ-துநூலென்Wசிறப்பித்து¢சொல்லப்படுவது. Kj..ன்றி எ-று. முன்னும் பின்னுமாறுபடாது. தொகை... காட்டி எ-து தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி. உண்...ªâ எ-து தன்னுள்ளேயடங்கிநின்று விரிந்த வுரையோடு பொருந்தப்பட்டு. நுண் பு எ-து gருப்பொருட்டாகாதுEண்பொருட்டாகப்bபாருள்Éளக்கலாகியmவ்விலக்கணம்mதனிலக்கணம்.v-W. அது எழுத்து முப்பத்து மூன்றெனத் தொகுத்ததனைப் பின்னர்க்குறிலும் நெடிலும் மூவினமுஞ் சார்பிற்றோற்றமுமென வகுத்தாற்போல்வனவும் பிறவுமென்றுணர்க. சாதிபற்றிப் படுதவனெ ஒருமையாற் கூறினார். ஆய்வுரை : இஃது, நூலின் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) அவற்றுள், நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபாடின்றி யமையக் கருதிய பொருளைத் தொகுத்தும் வகுத்துங் காட்டித் தன்கண் அடங்கிய பொருள்களை விரித்துரைத்தற்கு ஏற்ற சொல்லமைப் போடு பொருந்தி நுண்ணுணர்வு பொருந்த விளக்குதலாகிய அது அதற்குரிய இலக்கணமாகும் எ-று. அதன் பண்பு நுண்ணிதின் விளக்கல் அது என இயையும். இச்சூத்திரம் முதற்கணுள்ள அவற்றுள் என்னும் சொற்சீரடியின்றி, நுதலிய பொருளை முதலிற்கூறி என்பதனை இரண்டாமடியாகப் பெற்று இறையனார் களவியலுரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றுள்ளது. 160. அதுவே தானும் ஒருநால் வகைத்தே.1 இளம்பூரணம் : என்---எனின். நூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட நூல் நான்கு வகையை யுடைத்து என்றவாறு. அவையாமாறு முன்னர்க் கூறப்படும் (160) பேராசிரியம் : அதன் வகை உணர்த்துகின்றது. (இ-ள்) அந்நூற்பகுதி நான்குவகையாம் (எ-று). அவை முன்னர்ச் சொல்லுதும்.2 இதனது பயம்: மேல் தொகையினும் வகையினும் (478) என்றதனானே தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு (452) என்னும் நால் வகை யாப்பிற்குந், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டுதல் ஒக்குமென அவையிரண்டும் நான்காதலுமுடைய வென்பது.3 அவை எழுத்து முப்பத்துமூன்றெனத் தொகுத்தவழிக் குறிலும் நெடிலும் மெய்ம் மூவினமுஞ் சார்ந்துவரும் மூன்றுமென வகுத்தலும், இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறு (தொல்-எழுத்-புணர் : 1) என வகுத்தலுமென்றாற்போல்வன. உயர்திணை அஃறிணை யெனத் தொகுத்து ஐம்பாலென வகுத்தலும் அது. ஒழிந்த மூவகை நூலிற்கும் இவ்வாறே ஒருவழித் தொகுத்தலும் வகுத்தலுங் கொள்க. (167) நச்சினார்க்கினியம் : இஃது அந்நூற்பகுதி நான்காமென்கின்றது. (இ-ள்). அந்நூற்பகுதி நான்காம்1 எ-று. ஆய்வுரை : இது நூலின் பாகுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த நூல்தான் நால்வகைப்படும் எ-று. 161. ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஓத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கனை மரபின் இயலும் என்ப. இளம்பூரணம் : என்---எனின். மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது--- ஆசிரியன் யாதானு மொருபொருளைக் குறித்துக் கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு. இனமொழி கிளந்த ஓத்தினானும் என்பது---இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு. பொதுமொழி கிளந்த gly¤jhD«--v‹gJ---nk‰ சொல்லப் பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு. மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது---இம்மூன்ற னையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு. ஆங்கனை மரபின் இயலு மென்ப என்பது--அம்மரபினான் இயலும் நூலென்ப என்றவாறு.1 அவற்றிற்கு இலக்கண முன்னர்க் கூறப்படும். (161) பேராசிரியம் : இஃது, அந்நான்கினுக்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) நூலுள் ஒருபொருளையே நுதலிவருவதுசூத்திர-மெனவும்,இனமாகியபொருளினையேதொகுப்பதுஓத்தெனவும்,பலபொருட்கும்பொதுவாகியஇலக்கணங்கூறுவதுபடலமெனவும்,மூன்றுறுப்பினையுமுடையதுபிண்டமெனவுங்கூறியமரபினான்இயலும்நூல்(எ-று.)2 (168) நச்சினார்க்கினியம் : இது அந்நான்கற்கும் பெயரும் முறையு முணர்த்திற்று. (இ-ள்). ஒரு........D« எ-துஅந்நூல்ஒருபொருளேகருதிவருஞ்சூத்திரத்தானும்,இன ......D«எ-துஇனமhயபொருளைக்கூ¿யவோத்தினானு«,பெhது... ... தானும்எ-Jபyபொருட்கு¥பொதுவாகிaஇலக்கணங்களை¡கூறிaபடலத்தானும். மூன்று ......D« எ-து மூன்றுறுப்பை யடக்கிவரும் பிண்டத்தானும். என் ... ... ப எ-து என்று கூறிய அத்தன்மைத்தாகிய மரபினான் நடக்கு மென்று கூறுவர் புலவர். எ-று. ஆங்கென்ற மிகையாற் பிண்மேயன்றிப் பிண்டியென்பதும் ஒன்றுளதென்று கொள்க.1 ஆய்வுரை : இஃது மேற்குறித்தநால்வகையாமாWஇவையெdஉணர்த்Jகின்றது. (இ-ள்) ஒரு பொருளையே நுதலிவரும் சூத்திரமும், ஓரினப் பொருள்களையே தொகுத்துரைப்பதாகிய ஓத்தும், பல பொருட்கும் பொதுவாகிய இலக்கணம் கூறும் படலமும், இங்கு எண்ணப்பட்ட இம்மூன்றுறுப்புக்களையும் தன்னகத்தே கொண்ட பிண்டமும் என இந்நான்கு வகையால் நடக்கும் என்பர் ஆசிரியர் எ-று. சூத்திரம் என்னும் ஓருறுப்பால் இயன்றது இறையனார் களவியல். சூத்திரம், ஓத்து என்னும் இரண்டுறுப்புக்களையுடைய தாய் இயன்றது பன்னிருபடலம். சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்களையடக்கிய பிண்டமாக அமைந்தது இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம். இவை முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் என எண்ணப்படும். இனி, அகத்தியம் என்பது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றிற்கும் முறையே இலக்கணங்கூறும். மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய üலாதலின்‘அதுãண்டத்தினைaடக்கியnவறோர்ãண்டம்vன்பர்e¢ádh®¡»Åa®. 162. அவற்றுள், சூத்திரம் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனிவிளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே. இளம்பூரணம் : என் - எனின். சூத்திரத்திற்கு இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சூத்திரமாவது கண்ணாடியி னிழற்போல விளங்கத் தோன்றி ஆராயாமற் பொருள் நனிவிளங்குமாறு யாப்பின் கண்ணே nதான்றahப்பj‹wthW. ஆடிநிழலி னறியத் njh‹WtjhtJ---N¤âu« படித்த வளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு nதாற்றல்.ehLjÈ‹¿¥ பொருணனி விளங்க யாத்தலாவது---அதன் கண்யாக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமற் புலப்படத் nதான்றுமாறுaத்தல்.1cjhuz« வேற்றுமை தாமே ஏழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே (தொல். வேற்றுமையியல் 1) என்றவழி யாப்பின்கண்ணே பொருடோன்ற யாத்தவாறுங் கண்ணாடி நிழற்போலக் கருதிய பொருளுந் தோற்றியவாறுங் கண்டுகொள்க. (162) பேராசிரியம் : இது, முறையானே சூத்திர இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல் ஓதியவற்றுள் ஒருபொருணுதலிய எனப்பட்ட சூத்திரம் பொருள் நுதலுங்கால் ஆடி சிறிதாயினும் அது அகன்று பட்ட பொருளையும் அறிவித்தல்போலத் தேர்தல்வேண்டாமை1 அகன்றபொருள் அடங்குமாற்றான் அச்செய்யுளுள் தோன்றச்செய்து முடிக்கப்படுவது (எ - று). (169) நச்சினார்க்கினியம் : இது முறையே சூத்திரவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) mt‰.......ன்றி எ-து அந்நான்கனுள் ஒருபொருணுதலுஞ் சூத்திரமாவது. ஒருபொருணுதலுங்காற் கண்ணாடி சிறிதாயினும் அகன்றுபட்ட பொருளை யறிவித்தாங்கு அறியத் தோன்றி நாடு ... ... ங்க எ-து தெரிதல் வேண்டாதபடி2 அவ்வகன்ற பொருளை மிகவும் விளங்குமாற்றால். யாப்.....gJnt எ-து செய்யுளட் டோன்றச்செய்து முடிக்கப்படுவது. எ-று. ஆய்வுரை : இது, சூத்திரத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட நூல்வகை நான்கனுட் சூத்திரம் என்பது, கண்ணாடியானது தன்னெதிர்ப்பட்ட பொருள் மலை போன்று பெரிதாயினும் தன்கண் நுண்ணிதாய் அடங்கி வெளிப் பட்டுத் தோன்றப் புலப்படக் காட்டுதல் போன்று ஆசிரியன் சொல்லக் கருதிய பொருள் கற்போர் யாவர்க்கும் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டும்வண்ணம் குறித்த யாப்பில் அப்பொருள் இனிது விளங்கித் தோன்றுமாறு சொற்சுருக்கமும் பொருள் தெளிவும் உடையதாய் இயற்றப்பெறுவதாகும். எ-று. ஆடி என்றது, முகம் பார்க்கும் கண்ணாடியினை. ஆடி நிழலின் அறியத் தோன்றுதலாவது,கண்ணாடியில்எதிர்ப்பட்டபொருளின்நிழலுருவம்தெளிவாகப்புலப்பட்டுத்தோன்றுமாறுபோன்றுஆசிரியன்அச்சூத்திரத்தாற்சொல்லக் fருதியbபாருள்Kழுவதும்fற்பார்க்குÉளங்கித்nதான்றுதல்.ehLjš-MuhŒjš. ஆராய்தல் இன்றிப் பொருள் இனிது விளங்க யாத்தலாவது, சூத்திரத்திலுள்ள இச்சொல்லுக்குப் பொருள் யாதோ எனக் கற்போர் ஆராய வேண்டாது உலக வழக்கில் எளிதிற் பொருளுணர்த்தும் இயற்சொற்களால் இயற்றப்பெறுதல் சூத்திரத்தின் இலக்கணம் உணர்த்தும் இச்சூத்திரமே அதற்குச் சிறந்த இலக்கியமாகவும் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும். 163. நேரின மணியைநிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர். இளம்பூரணம் : என்-எனின் ஓத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒத்தவினத்ததாகிய மணியை ஒருங்கே கோவைப் பட வைத்தாற்போல ஓரோரினமாக வரும்பொருளை ஓரிடத்தே சேரவைத்தல் ஓத்தென்ற பெயராம் என்றவாறு.1 எனவே, அவ்வினமாகிச் சேர்ந்தநிலைக்கு ஓத்தென்று பெயராயிற்று. அது, வேற்றுமையோத்து என்பதனானறிக (163) பேராசிரியம் : இஃது ஓத்திலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல், இனமொழி கிளந்த ஓத்து என்றான், அங்ஙனம் இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்துகிடப்பப் பல ஓத்தாகச் செய்யாது நேரினமணியை நிரலே வைத்தாற்போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தாவது (எ - று). நேரினமணியெனவே, ஒருசாதியாயினுந் தம்மின் ஒத்தனவே கூறல்வேண்டு மென்பதாம். வேற்றுமையோத்தும் வேற்றுமை மயங்கிலும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரினமென்று ஓரோத்தாக வையாது வேறு வேறு வைக்கப்படு மென்பது.2 உயர்மொழிப் புலவரென்பது, அங்ஙனம் நூல்செய்தல். உயர்ந்தோர் கடனென்றவாறு. (170) நச்சினார்க்கினியம் : இஃது ஓத்திலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்துகிடப்பப் பல வோத்தாகச் செய்யாது, மணியை நிரல்படவைத்தாற்போல ஓரினப்பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தென்று கூறுவர் சிறந்த சொற்புலவர். (எ-று). நேரினமணியெனவே யொருசாதியினுந் தம்மி னொத்தனவே கூறல்வேண்டும் எ-று. வேற்றுமையோத்தும் வேற்றுமைமயங்- கியலும் விளிமரபும் என மூன்றன்பொருளையும் ஒன்றாக வேற்றுமையோத்தென்னாது வேறுவேறு வைத்தவாறு காண்க.1 ஆய்வுரை : இஃது ஓத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ - ள்.) ஒத்த இனத்தவாகிய மணிகளை ஒருவரிசைப்பட வைத்தாற் போன்று ஓரினத்தவாகிய பொருள்களை ஓரிடத்தே சேரத் தொகுத்து உணர்த்துவதனை ஓத்து என்ற பெயராற் கூறுவர் மொழித்திறத்தால் உயர்ந்த ஆசிரியர் எ - று. நேர்தல் - ஒத்தல். ஓத்து - இயல். நிரல்பட வைத்தல்வரிசைப்பட அமைத்தல். 164. ஒருநெறி இன்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும். இளம்பூரணம் : என்---எனின். படலத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஓரினமாகிய நெறியின்றிப் பல நெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற்1 றொடர்வுபடின் அது படல மெனப் பெயராம் என்றவாறு. அது கிளவியாக்க முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்பதோத்தினும் வேறுபாடுடையவாயினும், சொல்லிலக்கணம் உணர்த்தினமையாற் சொல்லதிகாரம் எனப் பெயர் பெறுதல். அதிகாரம் எனினும் படலமெனினும் ஒக்கும். (166) பேராசிரியம் : இஃது, மேல் (161) பொதுமொழி கிளந்த படல மெனப் பட்டதற்கு இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருநெறியவன்றிப் பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங்கூற நுதலின் அவற்றுக்குப் பொதுவாகி வருவது படலம் (எ-று) பொதுமொழி கிளந்த படலம் என்றவழி ஒரு நெறிப் பொருட்குப் பொதுவாகப்பட்டதனை விலக்கி ஈண்டு விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதே படலமென்றா னென்பது.2 அவை அதிகாரங்களாமெனக் கொள்க. (171) நச்சினார்க்கினியம் : இஃது முறையே படலங் கூறுகின்றது. (இ-ள்). ஒருபொருள்நெறியன்றிப் பலவேறுவகைப்பட்ட பொருளெல்லாவற்றிற்கும் வேறுவேறிலக்கணங்கூறக்கருதி யவற்றுக்குப் பொதுமொழியாகத் தொடர்ந்துவரின் அது படலமாம். எ-று. பொதுமொழி கிளந்த படலம் எனவே யொருநெறிப் பட்ட பொருட்குப் பொதுவாய் வருதலையும் விலக்கி விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவது படலமாயிற்று.1 படலமாவது அதிகாரமாம். ஆய்வுரை : இது, பொதுமொழி கிளந்த படலம் என்பதன் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ - ள்.) ஒருநெறிப்பட்ட பொருளையன்றிப் பலவேறு வகைப்பட்ட பொருளெல்லாவற்றுக்கும் வேறுவேறு இலக்கணங் கூற வெண்ணி அவற்றுக்குப் பொதுவாக அமைந்த பொது மொழியாகத் தொடர்ந்து அமைக்கப்பெறின் அது படலம் எனப்படும் எ-று. பொது மொழியாவது, ஒருநெறிப்பட்ட ஒருவகைப் பொருளை மட்டும் உணர்த்துவதன்றிப் பலவேறுவகைப்பட விரவிய எல்லாப் பொருட்கும் பொதுவாக அமைந்த பொருளைக் குறித்து வழங்குவதாகிய பொதுச் சொல்லாகும். அவையாவன : எழுத்து, சொல், பொருள் என்றாற் போன்று பலவேறுவகைப் பொருள்களையும் உள்ளடக்கி நிற்கும் பொதுச் சொற்களாகும். படலம் - அதிகாரம். 165. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர் அது பிண்டம் என்ப இளம்பூரணம் : என்---எனின். பிண்டமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). மூன்றுறுப்பினையும்2 அடக்கின தன்மைத்தாயின் அதனைப் பிண்டமென்று சொல்லுவர் என்றவாறு. மூன்றுறுப்படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஓத்தும் படலமுமின்றாகி வரினும் ஓத்துப் பலவுண்டாகிப் படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும், அதற்குப் பிண்டமென்று பெயராம் என்றவாறு. அவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம். அதிகாரத்தாற் பிண்டமாயிற்று இந்நூலென்று கொள்க. இவற்றைச் சிறுநூல் இடைநூல் பெருநூல் என்பர். (165) பேராசிரியம் : இஃது பிண்டங் கூறுகின்றது. வாளாதே மூன்றுறுப்படக்கிய பிண்ட மென்றான் மேல்; (தொல்.செய்-168.) ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமுங் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனையும் அடக்கிநிற்பது பிண்டமென்கின்றானென்பது. (இ-ள்.) அம்மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் (எ-று). அம்மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பதாம் உறுப்பினவென்பது பெற்றாம். bjhšfh¥ãabk‹gJ, பிண்டம்; அதனுள், எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம் பொருளதிகாரமென்பன படலம் எனப்படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் ஒழிந்த இருகூறு மெனப்படும். தோன்றுமொழிப் புலவர் அது பிண்ட மென்ப என்றதனாற் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டமுள தென்பது, அது முதனூலாகிய அகத்தியமேபோலும் ; என்னை? அஃது இயற்றமிழ் அடக்கி நிற்றலின்.1 (172) நச்சினார்க்கினியம் : இஃது பிண்டங் கூறுகின்றது. (இ-ள்.) N¤âuK« X¤J« glyKbk‹»‹w _‹WW¥ ãidí« cŸsl¡»a j‹ik¤jhŒtÇ‹ És§»a bkhÊia íilaòyt ujid¥ ã©lbk‹W bga® TWt®.(v-W) அம்மூன்றனையும் உறுப்பெனவே பிண்டமென்பது உறுப்பி யென்பதும் பெற்றாம் தொல்காப்பிய மென்பது பிண்டம். அதனுள் எழுத்துச் brh‰bghUbs‹gJ படலம். ஓத்துஞ் சூத்திரமு மொழிந்த விருகூறுமாம். தோன்றுமொழிப் புலவரென்றதனாற்1 பிண்டத்தினையுமடக்கிநிற்பது வேறு பிண்டி யெனப்படும். m~J முதனூலாகிய அகத்தியம் என்னை? இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். ஆய்வுரை : இஃது, பிண்டம் ஆமாறு இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) மேற்குறித்த சூத்திரம், ஓத்து,படலம் என்னும் மூன்று உறுப்புக்களையும் தன்னகத்தே உள்ளடக்கியதாய் வருமாயின் அந்நூலினைப்பிண்டம் எனப் பெயரிட்டு வழங்குவர் புலவர் (எ-று.) தாம் கூறக்கருதிய பொருள் கேட்பார்க்கு எளிதிற் புலனாகச் சொல்லுதல் வல்ல புலமையுடையார் என்பார் தோன்று மொழிப் புலவர் என்றார். தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ்நூல் மூன்றுறுப்படக்கிய பிண்டம் எனப்படும். எழுத்து, சொல், பொருள் என்பன படலங்கள். நூல்மரபு முதல் மரபியல் ஈறாகவுள்ள இருபத்தேழும் ஓத்து என்னும் பெயருடைய இயல்களாகும். அவற்றுள், எழுத்தெனப்படுப என்றாற் போல்வன சூத்திரங் களாகும். 166. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்1 பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். உரை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாட்டிடை வைத்த F¿¥ghtJ-gh£oÅil வைக்கப்பட்ட பொருட்குறிப்பினானும் உரையாம் என்றவாறு. பலசொல் தொடர்ந்து பொருள்காட்டுவனவற்றுள் ஓசைதழீ இயவற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுட்டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது.2 அவ்வகையுமன்றிவரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப்- பட்டது. அவையாமாறு : ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் என்னுங்குறிஞ்சிக்கலியுள், இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து (கலித். 59) என்றது உரைக்குறிப்பு. ஒரூஉ, கொடியியல் நல்லார் என்னும் மருதக்கலியுள், கடியர் தமக் கியார்சொலத் தக்கார் மற்று (கலித் 88) என்றதுமது. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள், கயலெழுதிய இமயநெற்றியின், அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பார்அர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலுட் காலை முரசம் கனைகுரல் இயம்புமாதலின் நெய்ம்முறை நமக்கின் றாகுமென ஐயைதன் மகளைக்கூஉய்க் கடைகயிறு மத்துங்கொண் டிடைமுதுமகள் வந்துதோன்றுமன் (சிலப்-ஆய்ச்சியர் குரவை) என்றதுமது. பாவின்றெழுந்த கிளவியானும் என்பது--- பாக்களை யொழியத் தோற்றிய சொல்வகையானும் உரையாம் என்றவாறு. அஃதாவது, வழக்கின்கண் ஒருபொருளைக் குறித்து வினவு வாருஞ் செப்புவாருங் கூறுங் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒருபொருளைக் குறித்துச் செய்யப் படுதலானுஞ் செய்யுளாம். இதனைக் குறித்தன்றே1 செப்பும் வினாவும் வழாஅ லோம்பல் (bjhš.கிsÉah¡f«. 13) என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க. பொருள்மரபில்லாப் பொய்ம் மொழியானும் என்பது--- பொருளியல் பில்லாப் பொய்ம்மொழியானும் உரைவரும் என்றவாறு. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது ---பொருளைப் பொருந்திய நகைவழிமொழியாய் வருகின்றது என்றவாறு. eifbkhÊahtJ--nk‰brhšy¥g£l உரை பொருந்தா தென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொரு ளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும் உரை வருமென்றார்.2 என்று உரைவகைநடையே நான்கென மொழிப என்பது---இவ்வகையினானவுரை நான்கு வகைப்படும் என்றவாறு. (166) பேராசிரியம் : இஃது, உரையாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உரைப்பகுதிவழக்கு இந்நான்காகு மென்று சொல்லுவர் புலவர் (எ-று). பாட்டிடைவைத்த குறிப்பினானு மென்பது, ஒரு பாட்டு இடையிடை கொண்டுநிற்குங் குறிப்பினான் வருவனவெனப்படும்; என்னை? பாட்டுவருவது சிறுபான்மையாகலின்.1 அவை தகடூர் யாத்திரை போல்வன. மற்றுப் பிறபாடைவிரவியும் வருவனவோவெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின எல்லாம் பாட்டிடைவைத்த குறிப்பு என ஈண்டடங்கும், பிறபாடைக்காயின் ஈண்டு ஆராய்ச்சியின் றென்பது. பாவின் றெழுந்த கிளவி யானும் என்பது, பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் gh£bld¥glhnthbtÅ‹, படா; பாட்டும் உரையும் நூலுமென (391) வேறோதினமையின்.2 அல்லாத சூத்திரத்தாற் சொல்லாத பொருளினை உரையாற் சொல்லித் தொடர்புபடுப்பது பாட்டிடைவைத்த F¿¥ghtJ.3 இஃது அன்னதன்று, வேறொருவன் சூத்திரத்திற் கூறிய பொருளையே மற்றொருவன் கூறுகின்றானாதலானென்பது. ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே பொருளெழுதின் அஃதொக்கும். அவை பாரதம், பருப்பதம் முதலாயின. பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் என்பது, ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்வன.1 அவை ஓர் யானையுங் குரீஇயுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கியையாப் பொருள்படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் tU»‹wd. பொருளொடு புணர்ந்த நகைமொழியானுமென்பது, பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கேதுவாகுங் தொடர் நிலை.2 அதுவும் உரையெனப்படும். அவையாவன. சிறுகுரீஇ யுரையும். தந்திரவாக்கியமும் போல்வனவெனக்கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது. உலகியலாகிய நகை தோன்றுமென்பது இவ்வகையான் உரை நான்கெனப்படு மென்றவாறு. உரைநடை யென்னாது வகை யென்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிதும் ஒன்றுண்டு அது மரபியலுட் பகுத்துச் சொல்லுதும்.3 (317) நச்சினார்க்கினியம் : இஃது நூலினான வுரையினான (செய் 165) என நிறுத்த முறையே நூலுணர்த்தி உரைகூறுகின்றது. (இ-ள்.) பாட்டிடை வைத்த குறிப்பினானும் எ-து ஒரு பாட்டினை யிடையிடை கொண்டுநிற்குங் கருத்தினான் வருவனவும் எ-று. அவை தகடூர் யாத்திரையும், சிலப்பதிகாரமும் போல்வன. ஆண்டுப் பிறபாடை தழுவி வருவன தமிழுரை யாகாமையின் ஈண் டாராய்ச்சி யின்றாம்.1 அதன்கட் டமிழுரை யுள்ளன ஈண் டடங்கும். பாவின் றெழுந்த கிளவி யானும் எ-து பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவனபோல்வன. சூத்திரம் பாட்டெனப்படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதலின். அன்றியுஞ் சூத்திரங் கருதிய பொருளையன்றி யுரையான் வேறோர் பொருள்கூறி அதனைக் தொடர்புபடுத்திக் கூறாமையின்: ஆண்டும் ஒருவன் கூறியதற்கு ஒருவன் பொருள் கூறுகின்றானாம். ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே உரை கூறுவனவுமொக்கும். பொருளொடு புணராப் பொய்ம் மொழியானும் எ-து பொருண்முறைமையின்றிப் பொய் யாகத் தொடர்ந்து கூறுவன எ-று. அவை ஓர் யானையுங்குதிரையுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன வென்று அவற்றுக்கியையாப் பொருள்பட்டதோர் தொடர்நிலையாய் ஒருவனுழையொருவன்கற்று வரலாற்று முறைமையான் வருகின்றன. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் எ-து பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டு நகுதற்கேதுவாகுந் தொடர் நிலையானும் எ---று. இவை சிறுக்குரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வன. இவை பொய்யெனப்படாது உலகியலாகிய நகைதோன்றுதலின்; என் றுரைவகை நடையே நான்கென மொழிப எ-து என்றுரைப்பகுதி வழக்கு இந்நான்கு மென்றுரைப்பர் புலவர் எ-று. வகையென்றதனான் உரைப்பகுதி பிறிது முள. அவை மரபியலுட் கூறுப.2 ஆய்வுரை : இஃது, நிறுத்தமுறையானே உரைவகையாமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப் பினால் வருவனவும், பாட்டின்றி வழக்கின்கண் உரையளவாய் வருவனவும், பொருள்மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றிப் பொய்யே புனைந்துரைக்கும் முறையில் வருவனவும் பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாய் வருவனவும் என உரைவகைநடை நான்காகும் என்பர் ஆசிரியர் எ-று. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதி- காரத்தில் இடையிடையே வரும் உரைநடை பாட்டிடை வைத்த குறிப்பு எனப்படும். உலக வழக்கில் பாநடையிலன்றித் தனியே வழங்கும் உரைநடை பாவின் றெழுந்த கிளவி எனப்படும். யானையும் குருவியும் போலும் மொழித்திறம் பெறாத அஃறிணையுயிர்கள் தம்முள் நண்புகொண்டு இன்னவிடத்தில் இன்னவாறு செய்தன என்றாங்கு அவற்றின் இயல்புக்கு ஏலாத வகையிற் புனைந்துரைக்கப் பட்டுக் கதையளவாய் வழங்கும் உரைநடை பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி எனப்படும். முழுவதும் பொய் என்று ஒதுக்கப்படும் நிலையிலன்றி உலகியலாகிய உண்மை நிலையினை ஒருவாற்றால் அறிவுறுத்து வனவாய்க் கேட்போர்க்கு நகைச்சுவை விளைக்கும் உரைநடை பொருளொடு புணர்ந்த நகைமொழி எனப்படும். பஞ்ச தந்திரக் கதைபோல்வன இவ்வகையில் அடங்குவன. 167. அதுவே தானும் இருவகைத் தாகும்.1 இளம்பூரணம் : (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு. அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவு மாம்.1 (167) பேராசிரியம் : இஃது அவற்றின் தொகை கூறுகின்றது. (இ-ள்) அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய இரண்டும் ஒன்றாகவுந் தொகுக்கப்படும் அவ்வாற்றாற் பயங்கொள்ளுங்கால் (எ-று).2 அவையாவன கூறுகின்றான். (174) நச்சினார்க்கினியம் : இஃது அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய விரண்டும் ஒன்றாகவும் தொடுக்கப்படும்; அவற்றால் பயன் கொள்ளுங்காலத்து.3 எ-று. ஆய்வுரை : இது மேற்கூறப்பட்ட உரைநடையினை மேலும் பகுத்துரைக் கின்றது. (இ-ள்) மேல் நால்வகைப்பட வகுத்த அவ்வுரைவகையும் மற்றொரு திறத்தால் இரண்டாகப் பகுத்துரைக்கப்படும் எ-று. அவையாவன, மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவும் என இருவகையாம் என்பர் இளம்பூரணர்.முற்குறித்த உரைவகை நான்கனுள் பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்றெழுந்த கிளவி என்னும் முன்னைய விரண்டும் ஒரு கூறாகவும் பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்னும் பின்னைய விரண்டும் மற்றொரு கூறாகவும் இரு வகைப்படும் என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 168. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. இளம்பூரணம் : என்---எனின். மேல் இருவகைப்படும் என்ற உரையை யுரைத்தற்குரியாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகளிர்க்கு உரைக்குமுரை செவிலிக்குரித்து. மைந் தர்க்கு உரைக்குமுரை யெல்லார்க்கு முரித்தென்றவாறு. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்ற வுரையும், பாட்டி லுரைக்கின்ற வுரையும் கூறுவளோவெனின், அவ்விடங்களில் வரும் உரைப் பொருள்பற்றி வருதலின் அப்பொருள் கூறுவளென்க.1 அன்றியும் அதுவே தானும் என்பது பொருளொடு புணர்ந்த நகைமொழியைச் சுட்டிற்றாக்கி அம்மொழியிரண்டு கூறுபடு மெனப் பொருளுரைப்பினும் அமையும்.2 (168) பேராசிரியம் : இஃது அவற்றது இயல்புணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இஃது, மேனின்ற அதிகாரத்தான் இறுதி நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கே உரித்து. ஒழிந்த இரண்டனுமாகிய ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து எனவுங் கூறியவாறு.1 தலைமகளை வற்புறுத்துஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியரென்பது இதன்கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற சான்றோருஞ், செம்முது செவிலியர் பைந்தொடி பகர என்றாரென்பது; பிறவும் அன்ன. மற்றும் என்றதனான் அவையன்றி வருகின்ற பிசியுஞ் செவிலியர்க்கு உரித்தென்பது கொள்க. இனி, பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் (தொல். 485) யாருக்கும் வரைவின்றி வருமாறு அவ்வச்செய்யுளுட் காணப்படும். (175) நச்சினார்க்கினியம் : இஃது மேனின்ற அதிகாரத்தான் இறுதிநின்ற இரண்டன் பகுதியுமாகிய ஒன்று செவிலிக்கே யுரித்து, ஒழிந்த இரண்டனானாகிய ஒன்றும் வரைவின்றி எல்லார்க்கு முரித்து. எ-று. தலைவியை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுதுபோக்குதற் குரியர் எ-து. இக்கருத்தானே சான்றோர், செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவு நெடியவு முரைபல பயிற்றி யின்னே வருகுவ ரின்றுணை யோரென முகத்தவை மொழியவு மொல்லாள் (நெடுநல். 15) என்றார் gh£oDŸ. பிறசான்றோரும் செம்முகச் செவிலியர் பொய்ந் நொடி பகர என்றார். மற்றும் என்றதனான் இவையே யன்றி வருகின்ற பிசியுஞ் செவிலிக் குரித்தென்க. இனிப் பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் வரையறையின்றி வருமாறு பலவற்றுள்ளுங் காண்க.1 ஆய்வுரை : இஃது, மேல் இருவகைப்படும் என்ற உரை நிகழ்த்துதற் குரியார் இவரெனக் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் ஒன்று செவிலிக்கு உரியது; மற்றொன்று எல்லார்க்கும் உரியதாகும் எ-று. அவற்றுள், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியும், பொருளொடு புணர்ந்த நகைமொழியும் ஆகிய பிற்கூறு செவிலிக்குரியதெனவும், பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் ஆகிய முற்கூறு வரையறையின்றி எல்லார்க்கும் உரித்து எனவும் கொள்ளுதல் பொருந்தும். இங்ஙனங் கொள்ளவே, தலைமகளை வளர்க்குஞ் செவிலியர் குடும்பத்திற் பிரிவினாலுளதாகும் வருத்தத்தினைப் போக்கும் நோக்குடன் புனைந்துரைத்து நடுவித்துப் பொழுது போக்குதற் குரியர் என்பது நன்கு புலனாம். இக்கருத்தினால் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி (நெடுநல்-153-154) என நக்கீரனாரும், செம்முகச்செவிலியர்......... தன்னிணையாம் பன்னொடிபகர (பெருங்-1-54-25-32) எனக் கொங்குவேளிரும் இவ்வுரைவகையினைச் செவிலிக்கு உரியனவாக இயைத்துக் கூறியுள்ளமை காணலாம். 169 ஒப்பொடு புணர்ந்த உவமத் தானுந் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே.2 இளம்பூரணம் : என்--எனின். பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒப்போடேòணர்ந்தcவமைÃiலயானும்பிáயாம்;jன்றுவதனைச்rன்னதுÂÉனானும்பிசிaம்என்wவாறு.1 அ¢R¥nghny பூப்பூக்கும். அமலையென்னக் காய்காய்க்கும் என்பது பிசி. இஃது உவமைபற்றி வந்தது.2 பேராசிரியம் : இஃது, முறையானே பிசி இரண்டெனப்படு மென்கின்றது. (இ-ள்). ஒப்பொடு புணர்ந்த வுவமமென்பது தன்கட்கிடந்த ஒப்புமைக் குணத்தோடு பொருந்திவரும் உவமப்பொருளானும்; மற்று இனி ஒன்று சொல்ல ஒன்று தோன்றுந் துணி விற்றாகச் சொல்லுஞ் சொல்லானுமென்று3 இவ்விரு கூற்றதாகும் பிசி கூறுபடும் நிலைமை (எ-று). அவை பிறைகல்வி மலைநடக்கும் என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம். இஃது யானையென்றாவது,1 முத்துப்போற் பூத்து முதிரிற் களாவண்ண நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு வித்துதிர்த்து என்பதுமது; இஃது, கமுகின் மேற்று. நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னீராடி லூராடு நீரிற்காக் கை என்பது, தோன்றுவது கிளந்த துணிவினான் வந்தது. இஃது நெருப் பென்றாவது. வகைநிலை யென்ற மிகையான் இவையுஞ் செவிலிக் குரித்தென்பது கொள்க. (76) நச்சினார்க்கினியம் : இஃது முறையே பிசி யிரண்டென்கின்றது. தன்கட் கிடந்த வொப்புமைக் குணத்தொடு பொருந்திவரு மாற்றை யுவமப் பொருளானும், இனி யொன்றுகூற வொன்று தோன்றுந் துணிவிற்றாகக் கூறுங் கூற்றானும் என் றிருகூற்றதாகும் பிசி கூறுபடு நிலைமை. (எ-று.) அவை, பிறை கல்வி மலை நடக்கும் இஃது ஒப்பொடு புணர்ந்தவுவமம். இஃது யானையென்றாம். முத்துப் போற் பூத்து முகிழிற் கிளிவண்ண நெய்த் தோர்க் குருதி நிறங்கொண்டு வித்துதிர்த்து என்பதுமது. இஃது கமுகின் மேற்று. நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னீராடி னூராடு நீரிற்காக்கை இஃது தோன்றுவது கிளந்த துணிவு. இது நெருப்பென்றாம். வகையென்றதனால் இஃது செவிலிக்கே யுரித்தென்க.1 ஆய்வுரை : இஃது, பிசியாமாறு உணர்த்துகின்றது. (ï-Ÿ) x¥òik¤ j‹ikbahL bghUªâa ctk¥ bghUS«, x‹W brhšy k‰bwh‹W njh‹Wª JÂî¥gl tU« brhšÃiyí« vd¥ ãá v‹gJ ïUtif¥gL«.(v-W.) யானை நடக்கும் என வெளிப்படக் கூறாது, பிறை கல்வி மலை நடக்கும் என உவமானத்தாற் கருதிய பொருள் குறிப்பிற் புலப்பட வைத்தல் ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசி வகையாகும். நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடின் ஊராடும் நீரிற்காக் கை என்பது நெருப்பு என்னும் பொருள் குறிப்பிற் புலப்பட அமைந்த சொற்றொடர் நிலையாகும். இஃது தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசிவகைக்கு எடுத்துக்காட்டாகும். பிசி வகையாகிய இவற்றை இக்காலத்தார் பிதிர் (புதிர்) எனவும் விடுகதை யெனவும் வழங்குவர். 170. நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியு முடைமையும்2 மென்மையும்3 என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி4 யென்ப. இளம்பூரணம் : என்---எனின். முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோ ரன்ன விளங்கவும் தோன்றிக் கருதினபொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழியென்று சொல்லுவர் என்றவாறு. (170) பேராசிரியம் : இஃது, முதுமொழி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) கூரிதாய்ச் சுருங்கி விழுமிதா யெளிதாகி இயற்றப் பட்டுக் குறித்த பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண்முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழியென்ப புலவர் (எ-று) உழுத வுழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால்-வழுதியைக் *கண்டன கண்க ளிருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு (பழமொழி) என்றவழி, மற்று வழுதியைக் கண்ட கண் இருப்பத் தோள் பசந்தன என்றக்கால் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்த தென்புழிக் குறித்தபொரு ளியைபின்மை கூறுதலாயிற்று. அதனைச் சொற் றொடர் இனிதுவிளக்கின்றாயினும் முற்கூறிய முதுமொழி முடித்ததென்பது; என்னை? அதன் கண்ணே அது முடித்தற்கேதுவாகிய இயைபின்மை கிடந்தமையினென்பது.1 இது பருப்பொருட்டன்றி நுண்ணிதாகிச் சொற்சுருக்க முடைத்தாய் விழுமிதாகி எளிதிற் பொருடோன்றியவாறு கண்டுகொள்க. எனவே, இதுவும் அந்நாற் பகுதித் தென்றவாறு.1 (177) நச்சினார்க்கினியம் : இஃது முதுமொழி கூறுகின்றது. (இ-ள்.) நுண்மையுஞ்........njh‹¿ எ-துகூர்மையும்,சொ‰சுருங்கியிருத்தலும்,விழுப்பமும்,எளிதி‰பொருள்தெரிதலு«என்wஇந்நான்கு«விளங்கத்தோன்றி.குறித்த....t%c« எ-து அறம் பொரு ளின்பமென்னு மூன்றனுள் ஒன்றை முடித்தற்கு வருமாயின். எது..... என்ப எது அங்ஙனம் வந்ததனை அப்பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதிவரும் முதுமொழி யென்பர் புலவர். எ-று. உழுத வுழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றே-வழுதியைக் கண்ட கருங்க ணிருப்பப் bபரும்பணைத்தோள்bfண்டனம‹னோபr¥ò” இதனுள் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்ததெனக் குறித்து அப்பொருளியைபின்மை கூறியதனைச் சொற்றொடரினிது விளங்காதேனும்2 முற்கூறிய முதுமொழிக்கண்ணேயப்பொருளை முடித்தற்கேதுவாகிய இயைபின்மை கிடந்து முடிந்தவாறு காண்க. இதனுள் நுண்மை முதலிய நான்குங் காண்க. பழமொழியிவ் விலக்கணம் பற்றிச் செய்தது.3 ஆய்வுரை : இஃது, முதுமொழியாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) அறிவின் கூர்மையும், சொற்சுருக்கமும், விழுமிய பொருளை விளக்கும் ஒளியுடைமையும், எளிதிற் பொருள் விளக்கும் எளிமையும் என்னும் இந்நான்கும் விளங்கத் தோன்றிக் கருதிய பொருளை முடித்தற்கு வேண்டும் காரணத்துடன் பொருந்தி வருவது முதுமொழி என்பர் ஆசிரியர் எ-று. முதுசொல், முதுமொழி, மூதுரை, பழமொழி என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். சென்ற காலத்து வாழ்ந்த பெருமக்கள் வாழ்க்கையிற் புலப்பட்டுத் தோன்றிய நுண்ணறிவு, சொல்வன்மை, உயர்ந்த நோக்கம், நல்வாழ்க்கை நிலையில் அன்னோர் பெற்றிருந்த சிறந்த அனுபவவுணர்வு ஆகிய எல்லாவற்றையும் திரட்டித் தருதல் இம்முதுமொழியின் இயல் பென்பது, முதுமொழி யென்னும் செய்யுள்வகை பற்றிய இவ்விலக்கணத்தால் இனிது விளங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி நானூறும் திருநாவுக்கரசர் அருளிய பழமொழித் திருப்பதிகமும் ஏது நுதலிய முதுமொழி என்னும் இச்செய்யுள் வகைக்குச் சிறந்த இலக்கியங்களாகும். 171. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1 மறைமொழி தானே மந்திரம் என்ப. இளம்பூரணம் : என் - எனின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாவ தென்றவாறு. அஃது வல்லார்வாய்க் கேட்டுணர்க.2 (171) பேராசிரியர் : இஃது. மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவார். ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும். (எ-று)1 அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. தானேயென்று பிரித்தான் இவை தமிழ்மந்திர மென்றற்கும் பாட்டாகி அங்கதமெனப் படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க.2 அவை, ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா எனவும், முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா எனவும், இவை தெற்கண் வாயில்திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் m§fj¥gh£lhÆd. மேற் பாட்டுஉரை நூல் என்புழி அங்கத மென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்ன வாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டாகலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தேபற்றிப்3 பிறரும்4 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள் 28) என்றாரென்க. அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை. அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும் என மேற்கூறினானென்பது. (178) நச்சினார்க்கினியம் : இஃது மந்திரச் செய்யுள் கூறுகின்றது. (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்று பயக்கச் சொல்லு மாற்றலுடையார் அவ்வாணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திரமெனப்படும். எ-று. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க தானேயென்று பிரித்தார், இவை தமிழ்மந்திரமென்றற்கும் மந்திரந்தான் பாட்டாகி யங்கத மெனப்படுவன வுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க. அவை, ஆரியநன்று ... ... தீர்க்க சுவாகா முரணில் பொதியின் ... ... ஆனந்தம் சேர்க்க சுவாகா இவை தெற்கில் வாயில்திறவாத பட்டிமண்டபத்தோர் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாகவெனச் சவித்தற் பொருட்டாய்வந்த மந்திரம் பாட்டாய்வருதலின் அங்கத மாயிற்று. இதனான் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (திருக். 28) என்றார்.1 ஆய்வுரை : இஃது, மந்திரம் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நிறைமொழி மாந்தராகிய பெரியோர் இவ்வாறு ஆகுக எனத் தமது ஆணையிற் கூறப்பட்டு அவ்வாற்ற லனைத்தும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் என்று கூறுவர் பெரியோர் எ-று. நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி என்பர் பரிமேலழகர் நிறைமொழி மாந்தராவார், யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் நீக்கி ஐம்புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையோராய் வாழும் செம்புலச் செல்வராவர். ஆணையிற் கிளத்தலாவது இஃது இவ்வாறு ஆகுக எனத்தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். மறைமொழி யென்பது புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர் என்பர் பேராசிரியர். இனி, மறைமொழி யென்பதற்கு, நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும், இங்ஙனம் சான்றோர் எண்ணிய வண்ணம் செயற்படுதற்குரிய ஆற்றல் முழுவதும் தன்கண் வாய்க்கப்பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார் இதனை வாய்மொழி (செய் 75) என்ற பெயரால் தொல்காப்பியனார் முன்னர்க் கூறிப்போந்தார். இத்தொல்காப்பிய நூற்பாவின் சொல்லையும் பொருளையும் அடியொற்றியமைந்தது, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் எனவரும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாய்மொழியாகும். இறைவன் திருவருள் பெற்ற திருஞானசம்பந்தப்பிள்ளையார், எந்தை நனிபள்ளியுள்க வினைகெடுதலாணை நமதே (2--84--11) எனவும், ஆனசொன்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணைநமதே (2--85--11) எனவும் தம்மேல் ஆணையிட்டும், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் (1-16-1) என இறைவனது திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டும் ஓதிய திருப்பதிகங்களும் அப்பூதியடிகளார் மூத்த மைந்தன் அரவுதீண்டி இறந்தானாக அவனை உயிர்ப்பிக்கும் அருட்குறிப்புடன் ஒன்றுகொலாம் (4-18-1-10) எனப் பாடிய திருப்பதிகமும் நிறைமொழி மாந்தர் ஆணையின் ஆற்றலை நன்கு புலப்படுத்துவனவாகும். வாய் மொழி என்பது மந்திரத்திற்கு வழங்கும் மற்றொரு பெயர் திருவாய்மொழி, திருமொழி, திருவாசகம் என்ற பெயர்கள் வாய்மொழி என்ற பெயர் வழக்கத்தை அடியொற்றியமைந்தனவாகும். ஆரியம் நன்று ... ... செந்தமிழே தீர்க்க சுவாகா எனவும், முரணில் பொதியின் ... ... ஆனந்தஞ் சேர்க சுவாகா எனவும், இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின எனப் பேராசிரியர் காட்டிய அங்கதப் பாடல்கள் ஆணையிற்கிளந்த மறைமொழியின் பாற்படுவன. இவை, தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள. அங்கதப்பாட்டு அல்லாத மறை மொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித்துரைக்கப்படும் என்றற்கும் மறைமொழி தானே எனப் பிரித்துரைத்தார் ஆசிரியர். எனவே, சபித்தற்பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டெனவும் வசைப்பொருட்டாகாது உலகநலங் குறித்து வரும் மறைமொழி யினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு புலனாம். திருமூலநாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலை தொல்காப்பியனார் கூறிய இலக்கணத்தின் படி அமைந்த தமிழ்மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் உணர்ந்து போற்றத்தகுவதாகும். 172. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே1 இளம்பூரணம் : என்---எனின். குறிப்புமொழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிச் சொல்லினா னுணரப்படும் பொருளின் புறத்ததுவே குறிப்புமொழி என்றவாறு. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி யென்றதனான் இச்சொல் வசைகுறித்து வருமென்றுகொள்க. புகழ்குறித்து வந்தாற் குற்றமென்னையெனின், அதனை வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாற் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப்படும்.2 (172) பேராசிரியம் : இஃது, முறையானே ‘T‰¿ilit¤j F¿¥òz®¤Jjš’ நுதலிற்று. (இ-ள்) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொல் தொடர்ந்த வாற்றானும் சொற்படு பொருளானுஞ் செவ்வன் பொருளறிய லாகாமையின், எழுத்தொடுஞ் சொல்லோடும் புணராது பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்பாவது (எ-று). இதனைப் பாட்டுரை நூல் என்ற வழி வாய்மொழி என் றோதினான், கவியாற் பொருள் தோன்றாது பின்னர் இன்னதிது வெனச் சொல்லி உணர்த்தப்படுதலின். இனி, அதனை இதன் தொகைச் சூத்திரத்துக் கூற்றிடை வைத்த குறிப்பென்று (477) ஓதினான் பாட்டிடைப் படுபொருள் பெரிதாகி அதனிடையே குறித்துக்கொண் டுணரினல்லது மெய்ப்படா தென்றற்கென்பது. பிறர் அவற்றைப் பொருளிசையென்று சொல்லுப.1 குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கின ராம். என வரும். இதனுட் குடமே தலையாகப் பிறந்தாரெனவுங் கொம்பெழுந்த வாயின ரெனவுங் கையுட்கொண்ட மூக்கின ரெனவுங் கூறியக்கால் எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பில-வாதலுங் குறிப்பினான் அதனைக் கஞ்சரமென்று கொண்ட வாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. மற்றிது பிசியெனப் படாதோ வெனின் இது பாட்டுவடிவிற் றாகலின் அற்றன்றென்பது, அஃதேற் பாட்டெனப்படாதோ வெனின்,-குறித்த பொருண் முடிய நாட்டாமையின் யாப்பழிந்து, நாற்சொல்லியலான் யாப்புவழிப் படாமையின் மரபும் அழிந்து, பிறவுறுப்புப் பலவுங் கொண்டமையிற் பாட்டெனவும் படாதென்பது. இஃது எழுத்து முதலாக ஈண்டிய அடியெனப் படாமையின் அதனையும் அடிவரையில்லனவற்றோடு ஓதினா னென்பது.2 அல்லாதார் குறிப்பிசைவந்த செய்யுளெல்லாங்1 குறிப்பெனப்படு மென்ப. அங்ஙனங் கூறிற் குறிப்பிசையுடைய பாட்டினுள் வாராவாகிய செல்லுமென மறுக்க (179) நச்சினார்க்கினியம் : இஃது முறையே கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொற் றொடர்ந்த வாற்றானுஞ் சொற்படுபொருளானுஞ் செவ்வன் பொருளறிய வரிதாகிப் பொருட்புறத்தே பொருளுடைத்தாயும் நிற்பது குறிப்பு மொழியாவது. (எ-று). உ-ம். குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கினர் தாம் இஃது குஞ்சரமென்ப துணர்த்திற்று. இது கூறுகின்ற பொரு ளைக்கரந்து கூறப்பட்டு ஏது முதலியவற்றோடு புணராது நின்றது. இஃது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலுமாகாது குறித்த பொருளை முடிய நாட்டினாற் சொல்லியலான்2 யாப்புவழிப்படா மையின் மரபழிந்து பிறவுங்குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று. அதனான் இது அடிவரையறை யின்றாயிற்று.3 ஆய்வுரை : இஃது, குறிப்புமொழி ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சி யாலும் புலப்படாது, சொல்லினால் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடையதாய் வருவது குறிப்புமொழி என்பர் (எ-று) மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி என்றதனான் இச்சொல் வசைகுறித்து வருமென்று கொள்க என்பர் இளம்பூரணர். கவியாற் பொருள் தோன்றாது, பின்னர் இன்னது இது, எனக் குறிப்பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின், இஃது குறிப்புமொழி எனப்பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக்கொண்டு உணரினல்லது இக்குறிப்புப் புலனாகாதென்பார், இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு (செய்-158) என்றார் தொல்காப்பியனார். இதனைப் பொருளிசை என வழங்குவர் ஒருசாராசிரியர். குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம் எனவரும். இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும், கொம்பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட மூக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல் பிலவாதலும் குறிப்பினான் அதனைக் குஞ்சரம் எனக் கொண்ட வாறும் கண்டுகொள்க எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கனவாகும். இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலும் ஆகாது; குறித்த பொருளை நாட்டி நாற்சொல்லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவும் குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று அதனால் இஃது அடிவரையறையின்றாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். 173. பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத் திய்யே1 இளம்பூரணம் : என்---எனின். பண்ணத்தி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் இத்துணையும் பாவும் பாவின்றி வழங்கு வனவும் எடுத்தோதினார். இனிப் பிறநூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவின மாமாறு உணர்த்துதலின்2இஃது...gh£oil¡ கலந்த பொருளவாகி என்பது---பாட்டின்கட் கலந்த பொருளையுடைத்தா»யென்றவாறு. எனவே, அவ்வடி பாவிற்குரிய பொருள் கொள்ளப்படும். பாட்டினியல பண்ணத்திய்யே என்பது---பாட்டுக்களின் இயல்பையுடையவா«பண்ணை¤தோற்றுவிக்குŠசெய்யுட்கŸஎன்றவாறு. பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தியென்றார்.1 அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஓதப்படுவன.2 அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (173) பேராசிரியம் : இஃது, பண்ணத்தி கூறுகின்றது. (இ-ள்)- பழம்பாட்டினூடு கலந்த பொருளோடுதனக்குப்பொருளாகப்பாட்டும்cரையும்போலச்bசய்யப்படுவனgண்ணத்தி(எ-று).bkŒtH¡fšyhj புறவழக்கினைப்gண்ணத்தியென்ப.ï~J vழுதும்gயிற்சியில்லாதòறவுறுப்புப்bபாருள்களைப்gண்ணத்திbயன்பவென்பது.mitahtd நாடகச்செய்யுளாகிய gட்டும்kடையும்tஞ்சிப்பாட்டும்nமாதிரப்பாட்டுங்fடகண்டும்KjyhÆd. அவற்றை மேலதேபோலப் பாட்டென்னா ராயினார், நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது. அவை (645) வல்லார் வாய்க் கேட்டுணர்க3 (180) நச்சினார்க்கினியம் :- 1 ஆய்வுரை : இஃது, இசைநூலின் பாவினமாகிய பண்ணத்தி என்பதன் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) பாட்டின்கண் கலந்த பொருளையுடையனவாகிப் பாட்டுக்களின் இயல்பையுடையன பண்ணத்தியெனப்படும் (எ-று) பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்றார்; அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஓதப்படுவன என்பர் இளம்பூரணர். பாட்டிடைக் கலந்த பொருளவாகி என ஆசிரியர் கூறுதலால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாகச் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட் களாகிய இவ்விசைப் பாடல்களுக்கும் உரியன என்பதும், பாட்டு எனக் கூறாது பாட்டின் இயல என்றமையால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாக முற்கூறப்பட்ட நோக்கு முதலிய செய்யுளுறுப்புக்கள் சிலவற்றை இவ்விசைப் பாடல்கள் பெற்றே வருதல் வேண்டும் என்னும் வரையறையில்லை யென்பதும் நன்கு விளங்கும். பண்ணத்தி என்பது, எழுத்து வடிவம் பெறாது நாட்டிற் பொதுமக்களிடையே வழங்கும் நாடகச் செய்யுள் வகையெனப் பேராசிரியர் தரும் விளக்கம் கூர்ந்துணரத்தகுவதாகும். 174. அதுவே தானும் பிசியொடு மானும். இளம்பூரணம் : என்---எனின். மேற்சொல்லப்பட்டதனுள் ஓர் உதாரணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்.) மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடொத்த அளவிற்று என்றவாறு. பிசியென்பது இரண்டடி அளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப்படும்.1 உதாரணம் கொன்றை வேய்ந்த செல்வன் அடியை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே இஃது பிசியோடு ஒத்தவளவிற்றாகிப் பாலையாழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமையிற் பண்ணத் தியாயிற்று.2 பிறவு மன்ன. (174) பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்.) மேற்கூறப்பட்ட பண்ணத்தி பிசியோடொக்கும் (எ-று). அதனை ஒத்தலென்பது அதுவுஞ் செவிலிக்குரித்தென்றவாறு, பிசியொடும் என்ற உம்மையால். பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும் பொருளொடு புணர்ந்த நகையோடும் (தொல்-செய்-173) ஒக்குமென்றுணர்க.1 தானும் என்ற மிகையாற் பாட்டுமடை வசைக் கூத்திற்கே உரித்தென்பது கொள்க.2 (181) ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல்பினது எ-று. பிசியோடு ஒத்த இயல்பாவது, பிசி போன்று இரண்டடிச் சிற்றெல்லையாய் வருதல் என்பர் இளம்பூரணர்; செவிலிக்கு உரித்தாதல் என்பர் பேராசிரியர். 175. அடிநிமிர் கிளவி ஈரா றாகும் அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே3 இளம்பூரணம் : என்-எனின். இதுவும் பண்ணத்தியின் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பண்ணத்தி யெனினும் பாவினமெனினு மொக்கும். நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செய்யுளில், 13) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க.4 (இ-ள்.) நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு1 இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லாவடிகளானு மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம். பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசைதுறை விருத்த மென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம்.2 அவற்றுள் தாழிசையாவது:- ஆசிரியத்தாழிசை, வஞ்சித் தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது:- ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது:- ஆசிரிய விருத்தம், வஞ்சிவிருத்தம், வெளி விருத்தம், கலிவிருத்தம் என நான்காம். அவற்றுள் ஆசிரியத் தாழிசையாவது மூன்றடி யொத்து வருவது. நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி நிறைமலர்சாந் தொடுபுகையும் நீரு மேந்தி வீடற்குந் தன்மையின் விரைந்து சென்று விண்ணோடு மண்ணிடை நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்குந் தக்க தொல்சீர்ப் பகவன்ற னடியிரண்டும் பணிது நாமே என tU«.3 (யாப். வி. ப 264) அவ்வழி ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைத் தென ஒரு சாரார் உதாரணங் காட்டுமாறு :- கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ. (சிலப். ஆய்ச்சி.) இவை மூன்றடியான் மூன்றடுக்கிவந்த ஆசிரியத் தாழிசை யென்றவாறு. இவை அளவடியான் வருதலானும் ஒத்து மூன்றாகி வரு தலானும் இவ்வாசிரியர் மதத்தால் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சக வொருபோ கெனப்படும். மேற்காட்டியதே ஆசிரியத்தாழிசை.1 இனி, வஞ்சித்தாழிசையாவது குறளடி நான்கினால் ஒரு பொருள்மேன் மூன்றடுக்கி வரும்.2 மடப்பிடியை மதவேழந் தடக்கையால் வெயில் மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்; இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்; பேடையை இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண் (யாப் வி. ப. 341) என வரும். அஃதேல் இவை மூன்றடுக்கி வருதலிற் கொச்சக வொரு-போகாதல் வேண்டுமெனின், அளவடியான் வாராமையான் ஆகாதென்க.1 இனி, வெண்டாழிசையாவது மூன்றடியான் வந்து வெண்பாப் போல இறும். அது, நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர் (யாப். வி. ப. 244) என வரும். சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவ தனை வெள்ளொத்தாழிசை யென்ப. அது, அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்; ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்; பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல் (யாப். வி. ப. 244) என வரும். கலித்தாழிசையாவது அடிவரையின்றி ஒத்துவந்து ஈற்றடி சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது. அது, வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியியெங் கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்திங்காள் கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள் (யாப். வி. ப. 330) என வரும். இத்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவரினுங் கொச்சக வொருபோ கெனப்படா; கலித்தாழிசை யெனப்படும், ஈற்றடி மிக்குவருதலான். இனி ஆசிரியத்துறையாவது நான்கடியாய் இடையிடை சீர் குறைந்து வரும் அது, கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்உள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கை வேலஞ்சு நும்மை வரையர மங்கையர் வௌவுதல் அஞ்சுதும் வாரலையோ (யாப். வி ப. 265) என வரும். வஞ்சித்துறையாவது குறளடி நான்கினால் தனித்துவரும். அது, முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் குருந்தீன்றன மல்லல்வான் மழைமுழங்கின செல்வர்தேர் வரவுகாண்குமே (யாப். வி. ப. 341) என வரும். இனி, வெண்டுறையாவது மூன்றடிச் சிறுமையாக ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்துவரும். குழலிசைய வண்டினங்கள் கோளிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன் (யாப். வி. ப. 246) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. கலித்துறையாவது நெடிலடி நான்கினான் வருவது. அஃதாவது, ஐஞ்சீரான் வருவதும், பதினாறும் பதினேழும் எழுத்துப்பெற்று நான்கடியான் வருவனவுமாம். யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையும் எல்லாங் கரியன்றே (யாப். வி. ப. 332) நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுர மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை. 20) இது நேரசை முதலாகிப் பதினாறெழுத்தான் வந்தது. கனிய நினைவொடு நாடொறுங் காதல் செயுமடியார்க் கினிய னவனொரு வின்னாங் கிலமெவ ரும்வணங்கப் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை. 6) இது நிரையசை முதலாகிப் பதினேழெழுத்தான் வந்தது. இனி, ஆசிரியவிருத்தமாவது அறுசீரடி முதலாகிய மிக்க அடியினான் நான்கடியு மொத்துவரும். அது இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ நுரைக்க ளென்னுமக் குழம்புகொண் டெதிர்ந்தெழ நுடங்கிய விலயத்தால் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே (சூளாமணி. கல்யாண. 51) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. இனி வஞ்சிவிருத்தமாவது முச்சீரடி நான்காகி வரும் அது இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேல்தடங் கையினாய் (சூளாமணி. சீயவதை. 170) என வரும். இனி, வெளிவிருத்தமாவது நான்கடியானாயினும் மூன்றடி யானாயினும் அடிதொறுந் தனிச்சொற் பெற்றுவரும். அது, ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார் கூ கூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார் என வரும். இஃது நான்கடியான் வந்தது. மூன்றடியான் வருவது வந்தவழிக் காண்க. இனிக் கலிவிருத்தமாவது நாற்சீரடி நான்கினால் வரும். தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா வேம்பழுத் தளித்தன சுளையும் வேரியம் மாம்பழக் கனிகளு மறுத்தண் டீட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே என வரும். (சூளாமணி. நகர. 14) இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனானும் பிறநூல் முடிந்தது தானுடம்படுத லென்பதனானுங் கொள்க.1 (175) அடிநிமிர் கிளவி யீரா றாகும் பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்) அப்பண்ணத்தியின் அடிப்பெருக்கங் கிளக்குங்காற் பன்னிரண்டாம் (எ-று). ஆகும் என்றதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறுமென்பது.1 ஈராறாகும் என்றதனான் இது நெடுவெண்பாட்டாகி வருமெனவும் அதுபோல ஆறடியின் இழிந்து வாராதெனவுங் கொள்க.2 (186) அடியிகந்து வரினுங் கடிவரை Æ‹nw. பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்) அது முழுதும் அடியாகி வராது இடையிடை ஓரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும் (எ-று).3 அவை, முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையிற் fh£lhkhÆdh«. இக்காலத்துள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியங் காணாமாயினும் அமையு bk‹gJ. (183) ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) பண்ணத்தி யென்னும் இசைத்தமிழ்ப் பாடல்களின் அடிப்பெருக்கம் பன்னிரண்டாகும். அவை நாற்சீரின் எல்லை-யினைக் கடந்து மிக்கும் குறைந்தும் வரினும் நீக்கப்படுதல் இல்லை எ-று. இதனால், இசைப்பாடல்களின் அடிப்பெருக்கம் பன்னிரண்டடி யெனவும், பாட்டு முழுவதும் உள்ள அடிகள் சீர்வகையால் ஒத்து வருதலின்றி மிக்கும் குறைந்தும் வருதலும் உண்டெனவும் கொள்ளப்படும். இனி, இச்சூத்திரத்திற்கு, நாற்சீரடியின் மிக்கு வரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்,வடியின் வேறுபட்டு வருவனவும் கொள்ளப்படும். எனப்பொருள் கொண்டு, இதனாற் சொல்லியது, இருசீரடி முதலிய எல்லா அடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறு எனவும், பன்னிரண்டாவன: ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடும் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம் எனவும், இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனாலும் பிறநூன் முடிந்தது தானுடம்படுதல் என்பதனாலும் கொள்க எனவும் விளக்கங் கூறுவர் இளம்பூரணர். அவ்வாசிரியர் அடியிகந்து (நாற்சீரின்மிக்கு) வருவனவாகக் கூறிய பாவினங்கள் பன்னிரண்டனுள், வெள்ளொத்தாழிசை, கலித்தாழிசை என்பன பெரும்பாலும் நாற்சீரடியால் இயன்று வருதலாலும், கலிவிருத்தம் யாண்டும் நாற்சீரடியேயாய் வருதலாலும், அவை அவர் கருத்துப்படி அடிநிமிர்கிளவி யெனப்படா வாதலாலும், நான்கு பாவினோடும் தாழிசை துறை விருத்தம் என்னும் மூன்றனையும் உறழ்ந்து காணப் பாவினம் பன்னிரண்டாம் என்ற பாகுபாடு இச்சூத்திரத்தில் இடம்பெறாமையாலும், இங்குச் சொல்லப்பட்ட தாழிசை, துறை விருத்தம் என்னும் மூவினப் பெயர்களுள் தாழிசை என்பது ஒன்றுமட்டுமே ஆசிரியர் தொல்காப்பியனாரால் கலிவுறுப்புகளுள் ஒன்றாக வைத்துரைக்கப்படுவதன்றித் துறை, விருத்தம் என்பன செய்யுள் வகையாகத் தொல்காப்பியத்திற் குறிக்கப் படாமை யாலும் இச்சூத்திரவுரையுள் இளம்பூரணர் வகுத்துக்காட்டிய பாவினப்பாகுபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதன்றென்பது நன்கு தெளியப்படும். அன்றியும் இசைத் தமிழ்ப் பாடல் வகையாகிய பண்ணத்தியினைத் தழுவிப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்களால் வகுத்துரைக்கப் பெற்றதே பாவினப் பாகுபாடென்பதும் அதனையே இளம்பூரணவடிகளும் பிறநூன் முடிந்தது தானுடம் படுதலாக உரையிற் கோடல் என்னும் உத்தியால் இங்கு விரித்துக் கூறியுள்ளார் என்பதும், பிற்கால யாப்பிலக்கண நூலார் வகுத்துக் கூறிய பாவினப் பாகுபாடு அன்னோர் கருதுமாறு இயற்றமிழுக்குரியதன்றி இசைத்தமிழுக்கே யுரிய தென்பதும் பண்ணத்தி யெனினும் பாவினம் எனினும் ஒக்கும் எனவரும் இளம்பூரணருரைத் தொடரால் நன்கு துணியப்படும். 176. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே அனைவகைப் படுமே இளம்பூரணம் : என்--- எனின். மேற்சொல்லப்பட்டன தொகுத்து உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) ஈண்டுச் சொன்ன வகையினாற் சொல்லப்பட்டன வற்றை யாராயுங்காலத்து அவ்வியல்வகை யத்துணைப் பாகுபடும் என்றவாறு.1 இதனாற் சொல்லியது செய்யுளாவது அடிவரை யுள்ளனவும் அடிவரை யில்லனவுமென இருவகைப்படுமென்பதூஉம் அடிவரை யுள்ளன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனவும்; தாழிசை, துறை, விருத்தமெனவும்; அடிவரையில்லன, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி என அறுவகைப் படுமென்பதூஉம் உணர்த்தியவாறு. அஃதேல், மேல் அளவியல் வகையே அனைவகைப் படுமே என்ற சூத்திர மிகையாதல் வேண்டுமெனின், அது பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது; இது செய்யுள் இனைத்தென வரையறுத்துணர்த்திற்று.2 (174) பேராசிரியம் : இதுவும் மேலவற்றுக்கெல்லாம் புறனடை. (இ-ள்). எடுத்தோதிய வகையாற் சொல்லியன ஆராயின் அளவியற் பகுதி அக்கூற்றதாம் (எ-று)1 எடுத்தோதிய வகையானென்பது நூலும் உரையும் நந்நான் கெனவும், பிசி இரண்டெனவும், முதுமொழியும் மந்திரமுங் கூற்றிடை வைத்த குறிப்பும் ஒரோவொன்றெனவுங் கூறிவந்த வகையான் அவற்றை இனைத்தென் றெண்ணி அளந்த பகுதியும் அளவியலேயா மாகலின் அவ்வளவியல் அடிவரையறை கூறிய வாற்றானும் அடி வரையறையிலவற்றுக்குக் கூறியவாற்றானும் இரு வகைப்படும் அளவியலென்றவாறு2 (184) ஆய்வுரை : இது, மேற்கூறப்பட்டனவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) மேல் எடுத்துக் கூறிய வகையாற் சொல்லப்பட்டன-வற்றை ஆராயின் அளவியலாகிய பகுதி மேற்குறித்த வகையினை யுடையதாகும் எ-று. மேற்குறித்த வகையென்றது, அடிவரையறையுடையதும் அடிவரையறையில்லாததும் ஆகிய இருவகையினை. இவ்வியலில் வரும் அளவியல் வகையே அனைவகைப் படுமே என்னும் 156-ஆம் சூத்திரம் அடிவரையறையுடைய பாவிற்குக் கூறப்பட்ட அடிவரையறையாகிய அளவியலைத் தொகுத்துணர்த்து வதெனவும், கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் எனவரும் இச்சூத்திரம் எழுநிலத்தெழுந்த செய்யுள் இவையென வரையறுத்து உணர்த்துவ-தெனவும் எனவே இது கூறியது கூறலாகாதெனவும் இளம்பூரணர் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத் தகுவதாகும். 177. கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும்1 முதற்கிளந் தனவே முறையி னான2 இளம்பூரணம் : என்--எனின். நிறுத்தமுறையானே திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) திணையாவது கைக்கிளை முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் பெருந்திணை யென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு. முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண்பாட்டினைக் கைக்கிளைப்புறமெனவும், வஞ்சியை முல்லைப்புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற் புறமெனவும், காஞ்சியைப் பெருந்திணைப்புறமெனவும் ஓதிய நெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகி யடங்குமாயின.3 (177) பேராசிரியம் : இது, பதின்மூன்றாம் முறைமைக்கணின்ற திணையுறுப் புணர்த்து (313) கின்றது. (இ - ள் ) கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன. (எ-று.) முறைநெறி வகையான் என்பது அவற்றுக்கு முறைமையாற் புறமெனப்பட்ட வெட்சி முதல் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொதுவாகிய முறையாற் கரந்தையுள்ளிட்டுப் பதினைந்து திணையுள் ஒன்று செய்யுட்குறுப்பாகி வரல் வேண்டுமெனவும், முன்னோதியவாறே கொள்ளப்படுமெனவுஞ் சொல்லினானாம்; இது சொல்லாக்கால் அவை வரினும் வரும், வாராதொழியவும் பெறுமென்பது படுமென்பது. இது மேல்வருகின்ற கைகோண் முதலியனவற்றுக்கும் ஒக்கும்.1 (185) நச்சினார்க்கினியம் : இஃது நிறுத்தமுறையே திணை யென்னும் உறுப்புக் கூறு- கின்றது. (இ-ள் ) கைக்கிளைத் திணையும் எ-து, கைக்கிளை முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை யென்ற எழு நிலனும். முறை... ...tifÆ‹ எ-து,அவற்றிற்Fமுறைkவழியா‰புறமெdஅடைத்jவெட்சிமுத‰பாடா©பகுâயீறாகிaஎழுபகுதியோlகூட்ட. முற்.......nt எ-து, முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட் குறுப்பாய் நிற்கும். எ-று. எனவே, அகமேழும் புறமேழும் அவ்விரண்டற்கும் பொது-வாகிய கரந்தை யொன்றுமாகப் பதினைந்தனுள் ஒன்று செய்யுட் குறுப்பாயல்லது வேறுறுப்பின் றென்றவாறாயிற்று.2 ஆய்வுரை : இஃது âணையாமாறுïதுவெனîணர்த்துகின்றது.brŒí£ குரிய உறுப்புக்களுள் ஒன்றாகிய திணையென்பது, செய்யுளிற் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுபடுத்து அறிதற்குரிய கருவியாகும். (இ-ள்) கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை எனக் கைக்கிளை Kதலாகப்bgருந்திணையீwகவுள்ளஏGதிiணகளும்முiறயேkற்சொல்லப்பட்டனஎ-று. முiwikÆdh‰ சொல்லுதலாவது, பாடாண்திணை கைக்கிளைப்புறம், வஞ்சி முல்லைப்புறம், வெட்சி குறிஞ்சிப்புறம், வாகை பாலைப்புறம், உழிஞை மருதப்புறம், தும்பை நெய்தற்புறம், காஞ்சி பெருந்திணைப்புறம் என முன்கூறிய வகையே கொள்ளுதல். இங்ஙனம் அகமும் புறமும் எனத்திணைகளை ஒன்றுபடுத்தவே பதினான்கு திணையும் ஏழு திணைகளாகியடங்கின. 178. காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்1 பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென் றாங்குநால் வகையினும் அடைந்த சார்வொடு2 மறையென மொழிதல் மறையோர் ஆறே. இளம்பூரணம் : என்---எனின். கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கற்கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்குவகையானும் அவற்றைச் சார்ந்துவருகின்ற கிளவியானும் வருவன களவென்று கூறுதல் வேதம் அறிவோர் நெறி என்றவாறு.3 இதனுள் களவென்னாது மறையென்றதனான் இது தீமை பயக்குங் களவன்மை கொள்க.4 இன் - ஆன் பொருள்பட வந்தது. ஒடு--எண். (178) பேராசிரியம் : களவு கற்பென்பன காமத்திணையின் ஒழுகலாறு ஆகலான் ஆண்டுப் பரந்து பட்டனவெல்லாந் தொகுத்துக் கூறுகின்றான். அவை செய்யுட் குறுப்பாயடங்கலின், அவற்றுள் இது களவென்னுங் கைகோளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) 1காமப்புணர்ச்சியும், அது நிகழ்ந்தபின்னர் 2இடந் தலைப்பாடும். அதற்குப் பின்னர்ப் 3பாங்கற்குச் சொல்லி அவனாற் கூடுதலும், அதன்பின்னர்த் 4தோழியைப் பின்னின்று குறை முடித்துக் கோடலுமென அந் நாற்பகுதிக் கண்ணும் பொருந்திய சார்பினாற் களவொழுக்கம் இதுவென்று கருதுமாற்றாற் செய்யுள் செய்தல் கந்திருவ வழக்கம் (எ-று). கந்திருவ வழக்கம் முறையோ ரொழுகிய நெறியதுவாகலான் மறையோராறு என்றானென்பது.1 எனவென்பது, வினையெச்சம். எனவே, பாங்கனுந் தோழியும் உணர்ந்தவழியும் அது மறையோர் வழித்தென்றவாறு காமப்புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந்தலைப்பாடு நிகழாதெனவும் அவ்விடந்தலைப்பாடு பிற்பயத்தலரிதென்பது அவள் ஆயத்தொடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலுந் தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறைமுடித்துக் கோடலுமென இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம்2 (எ - று). வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல் ஆக்கஞ் செப்ப னாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை... . (தொல்-கள: 9) என்பனவுங் கைகோ ளாகாவோவெனின். ... ஆகா; கைகோ ளென்பது ஒழுகலாறாகலான். அவை அவற்றுட் பிறந்த உள்ள நிகழ்ச்சி ஒன்றொன்றனிற் சிறந்து பெருகியக்கால் அவ்வப்பகுதி யாகுமெனக் கொள்க. மற்றுக் fsÉaYŸ, ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் கறிதலைப் பெயலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலும் (இறையனார் :3) எனப் பாங்கற்கூட்டம் முற்கூறியதாலெனின்;--- இது கைகோள் கூறிய இடமன்மையின் முற்கூறினும் அமையுமென்பது. மற்று; இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகனைப் பாங்கன் கண்டு இவ்வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினாவுமன்றே? அதனாற் பாங்கற்கூட்டம் நிகழ்ந்த பின்னரன்றி இடந்தலைப் பாடு நிகழாதாம் பிறவெனின்,- அற்றன்று; யாழோர் கூட்டம் உலகிய லாகாதாதலான் இல்லதன்றாமாகவே உலகத்தார் நிறையுடை யாராகி மறை வெளிப்படாமல் ஒழுகுவாரும் மறைவெளிப் படுத்து விளம்பும் பாங்கனையுடையாரும், இல்லாதாருமெனப் பல வகையராதலின் வினாதல் ஒரு தலையன்றென்பது: அல்லதூம் இடந்தலைப்பாடு நிகழாதாயினன்றே துணைவேண்டுமென்பது. என்னை? துணையின்றி நிகழுங் களவு சிறப்புடைத்தாகலானும் பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத்தொழுகு மாகலானு மென்பது. களவொழுக்கமெல்லாம் இந்நான்கு வகையானும் அடங்கும். அவற்றுக்குச் செய்யுள், கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே (குறுந்: 2) என்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல நண்ணா ராண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோள முடையவா லணங்கே என்பது, இடந்தலைப்பாடு. (நற்றிணை: 39) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே (குறுந்:58) என்பது பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது. தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி னாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை செவ்வரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே (குறுந்:22) என்பது, தோழியிற் கூட்டம். பிறவும் அன்ன. (186) நச்சினார்க்கினியம் : இது முறையே கைகோட் செய்யுட் குறுப்பாமாறு கூறுகின்றது. கைகோளாவன களவு, கற்பு. அவைதாங் காமத்தின்கண் ணெழுதலான் அவற்றுட்பிறந்த வுள்ளநிகழ்ச்சி யிடைவிடாது மேற்சிறந்து பெருகி யகலாப்பகுதியெனக் கொள்க. அவற்றைத் தொகுத்தவை செய்யுட் குறுப்பென்றார். (இ-ள்) காமப் ......òz®î« எ-து இயற்கைப்புணர்ச்சியும் அதன் பின்னரிடந்தலைப்பாடும்,அதன்பின்ன®அவன்வயி‰பாங்காகிaபாங்கற்கு¡கூ¿யவனா‰கூடுதலும்,அதன்பின்ன®அவள்வயி‰பாங்காகிaதோழிaயிரந்Jகுறைமுடித்து¡கோடலும். என்று .......... சார்பொடு எ-து என்ற அந் நாற்பகுதிக் கண்ணும் பொருந்திய சார்பினால். மறை ... ... ராறே எ-து களவொழுக்கம் இதுவென்று பிறர்கருதச் செய்யுள் செய்தல் கந்திருவவழக்கம். எ-று. கந்திருவர்க்கு மறையோர் ஓதியநெறி அதுவாகலின் மறை யோராறென்றார். என வினையெச்சம். vனவேghங்கனுந்jழியுமுzர்ந்துழியுங்கsவென்றல்மiறயோர்வழக்கு.எ-W. இக்களவு இல்லதன்றி யுலகியலாதலின்1 நிறையுடையார் மறைவெளிப்படாதொழுகலிற் றாமேசென்று இடந்தலைப் பாட்டிற் கூடுதலும், அது Ãகழாவழியுங்Tட்டநிகழ்ந்துmtள்ஆaத்திடைநி‹றவழியும்அtளருமையறிந்துபh§கனையுட«படு¤திக்கூடுjலும்அவ‹தேhழியைப்போலக்கூட்Lந்தன்iம-யிலdதலிற்றேhழியாற்கூடுjலுமெனமுwமைகூறிdர்.களî இந்நான்கு பகுதியானு மடங்கும். உ-ம். கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை (குறுந்தொகை-62) இது இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தது. உறுதோறுயிர் ... ... தோள் (திருக்குறள்-1106) சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் (நற்றிணை 39) வேட்ட பொழுதின ... ... டோள் (திருக்குறள்-1150) இவற்றைக் களவியலிற்கண்டுகொள்க. ஆய்வுரை : இது களவும் கற்பும் என முன் வகைப்படுத்திய கைகோள் இரண்டனுள் களவாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) காமப்புணர்ச்சி (இயற்கைப் புணர்ச்சி), இடந்-தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் எனச் சொல்லப்பட்ட அந்நான்கு வகையாலும் அவற்றைச் சார்ந்து வரும் கிளவியாலும் வருவன களவென்னும் கைகோள் எனக் கூறுதல் மறையுணர்ந்தோர் நெறியாகும் எ-று. திணையொழுக்க வகையாகிய களவு, கற்பு என்னும் இப்பாகு பாட்டினை யுணரும் முறையிற் செய்யுள் செய்தல் கைகோள் என்னும் செய்யுளுறுப்பாகும். கைகோள்-களவும் கற்புமாகிய ஒழுகலாறு. 179. மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும்1 இவைமுத லாகிய இயனெறி திரியாது2 மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்3 பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. இளம்பூரணம் : என்--எனின். கைகோள்வகையிற் கற்பாகிய கைகோள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) களவொழுக்கம் வெளிப்படுதலுங் களவொழுக்க மின்றித் தமரானே பெறுதலுமென்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியிற் றப்பாது மகிழ்தலும் புலத்தலும் ஊடலும் ஊடல் தீர்தலும் பிரிதலுமென்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடிவருவது கற்பென்று சொல்லப்படுவது என்றவாறு. இயனெறி என்றதனாற் கரணத்தின் அமைதல் இன்றியமை யாதென்று கொள்க. (179) பேராசிரியம் : இஃது, கற்பென்னுங் கைகோளுணர்த்துத னுதலிற்று. (இ-ள்.) மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும் அதன்பின் தமர் கொடுப்பத் தான் அவ்வகையாற் பெறுதலு மென்னும் இவ்விரண்டும் முதலாகிய வழக்குநெறி திரியாது மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் உணர்தலு மென்னும் நான்குடன் பிரிவுளப்பட ஐந்தும் புணர்ந்தது கற்பென்னுங் கைகோளாம் (எ-று). இவை முதலாகிய வென்றதனால், கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான (தொல்-கற்: 2) என்றவழிக் கூடிய வதுவைபோல்வன கொள்க. அவைதாங் கற்பெனப்படுவதல்லது ஒழுகலாறெனப்படா ; என்னை? இவ ரொழுக்கமன்றி வேள்வியாசான் முதலாயினார் செய்விக்கும் ஒழுக்கமாகலான், அங்ஙனமாயினும் அவற்றையுங் கைகோளின் பாற் சார்த்தியுணரப்படுமென்றற்கு ஈண்டுக் கூறினானென்பது.1 இனிக் கூறும் ஐந்துந், தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். முன்னைய இரண்டும் போலப் பிறர் கொடுக்கப்பட்டன அல்லவென்பது.2 kÈjby‹gJ, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய வற்றான் மகிழ்தல். òyÉba‹gJ புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. Clby‹gJ உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழி யானன்றிக் கூற்றுமொழியானுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய பொருளின்மை யுணர்வித்தல் cz®btd¥gL«. இல்லது கடுத்த மயக்கந்தீர உணர்த்துதலால் cz®¤Jjbydî« அதனை உணர்தலால் cz®btdî«gL« : புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா, அது குளிப்பக் கூறலுந் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின் அம்முறையானே கூறி அவற்றுப்பின் பிரிதல் கூறினான். அஃது இவை நான்கனோடும் வேறுபடுதலின் : அதனை ஊடலோடு வைக்கவே அவ்வூடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற் படுமென்பதூஉங் கொள்க ; என்னை? காட்டக் காணாது கரந்து மாறுதலின்.1 இவற்றுக்குச் செய்யுள்; எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம் 194) என்பது kiwbtË¥ghL. தமர்தர-வோரிற் கூடி யுடன்புணர் கங்குல் (அகம் 86) என்பது தமரிற் bgWjš. கேள்கே டூன்ற என்னும் (93) அகப்பாட்டினுள் நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே என்பது kÈjš. நாணுக்கடுங் குரைய ளாகிப் புலவி வெய்யள்யா முயங்குங் காலே என்பது òyÉ. நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின் (கலி-77) என்பது Clš. விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவும் அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி (கலி 75) என்பது cz®jš. திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி 86) என்பது JÅ. துனித்த வென்பது வெறுத்தல். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும். அவை மேற்காட்டப்பட்டன. (187) நச்சினார்க்கினியம் : இது கற்பென்னுங் கைகோள்கூறுகின்றது. (இ-ள்.) மறை.... ....லும்எ-துமறைந்தொழுகும்ஒழுகலாறுவெளிப்படுதலும்,தமர்கொடுப்பக்காரணவகையாற்பெறுதலும்,இரு....துஎ-துஎன்Dம்இவ்விரண்டுமுதÈயஆசான்முதலியேhர்செய்விக்Fம்வழக்குeறிதிரியாJ. மலிந்தது எ-து மகிழ்ச்சியும், புலத்தலும், ஊடலும், உணர்த்தலும் நான்கும் பிரிவுளப்பட்ட ஐந்தும் புணர்ந்தது. கற் மே எ-து fற்பெனப்படும்.v-W. மலிவு Kதலியiவந்துங்iககோளின்பாற்rர்த்தித்jலைவனுந்தலைவியும்xழுகும்xழுகலாறெனவேgடும்.K‹id மறைவெளிப்படுதலுந் தமரிற்பெறுதலுமென்னும் இரண்டும் பிறரோடு பட்ட bவாழுகலாறெனப்படும்.mit ஆசான் முதலியோர் செய்வித்தலின். மலிதலென்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியு முதலியவற்றான் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சி யான்வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக்கொண் டுய்ப்பதோர் உள்ளநிகழ்ச்சி, ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியா னன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி யதற்கேதுவாகிய காரியமின்மை உணர்வித்த லெனப்படும், இல்லது நடுக்க மயக்கந்தீர1 வுணர்த்துதலான் உணர்த்துத லெனவும் அதனை உணர்தலான் உணர்வெனவும்படும். புலவியாயி னுணர்த்தாது குளிப்பக்கூறித் தளிர்ப்ப முயங்குதன் முதலியவற்றா னீங்கும். பிரிவு இந்நான்கற்கும் வேறுபடுதலிற் பின்வைத்தார். அதனை யூடலொடு வைப்பவே யவ்வூடலுட் பிறந்த துனியும் பிரிவின்பாற்படும். அது காட்டக் காணாது கரந்து மாறுதலின். (உ-ம்.) எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம்-195) இது மறைவெளிப்பாடு. பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர வோரிற் கூடிய வுடன்புணர் கங்குல் (அகம்-86) என்பது தமரிற் பெறுதல். விரிதிரைப் பெருங்கடல் (குறுந்-101) இது மலிதல். நாணுக் கடுங்குரைய sகிப்òலவிbவய்யணாKயங்குங்fலேïJ புலவிநோய். நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண bனம்மனைÚசேர்ந்தÉல்வினாய்thராமைgறுகற்பின் (fலி77) இஃது ஊடல் விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி (கலி 75) இஃது உணர்தல். திறனல்ல யான்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி-8) இது துனி. துனித்தல். வெறுத்தல். பிரிவெனவே ஆறுமடங்கும். அவை முன்னர்க் காட்டினாம். ஆய்வுரை : இஃது, கற்பென்னும் கைகோளாமாறு கூறுகின்றது. (இ-ள்) (ஒத்த அன்பினராகிய தலைவன் தலைவி இருவரும்) மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு வெளிப்படுதலும், தலைவியின் சுற்றத்தார் கொடுப்பத் தலைவியைத் தலைவன் கரணவகையாற் பெறுதலும் என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தவறாது மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவற்றுடன் கூடி வருவது கற்பு என்னும் ஒழுகலாறாகும் எ-று. மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் என முற்கூறிய இரண்டும் ஆசான் முதலியோர் செய்வித்தலின் பிறரொடுபட்ட ஒழுகலாறெனப்படும். மலிவு முதலிய ஐந்தும் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனும் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே கொள்ளப்படும். மலிதல் என்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய மனைவாழ்க்கை நிகழ்ச்சிகளால் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங் கருதிக் கொண்டு உய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியாலன்றிக் கூற்றுமொழியால் உரைப்பது. உணர்வு என்பது. அங்ஙனம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்குக் காரணமாகிய நிகழ்வு எதுவும் இல்லை யென்பதனைத் தலைவி உணரும்படிச் செய்தல். இல்லாததனை உண்டோ? எனத் தலைவி ஐயுற்ற மயக்கந்தீரத் தலைவன் உணர்த்துதலால் உணர்த்துதல் எனவும், அதனைத் தலைவி உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப்படும். புலவியாயின் தலைவியது உள்ளங்குளிர இன்னுரை பகர்தலும் அவளது உடல் தளிர்ப்ப அணைத்தலும் முதலாயவற்றால் நீங்குதலின் புலவிக்கு உணர்த்துதல் வேண்டா என்பர். பிரிவு என்பது, இவை நான்கினோடும் வேறுபடுதலின் பிற்கூறினார். இதனை ஊடலொடு சேர்த்துக் கூறவே ஊடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற்படு மென்று கொள்ளப்படும். துனித்தல் என்பது வெறுத்தல். அஃதாவது தலைவன் தன்பால் தவறின்மையினைப் பல்வேறு வகையினால் எடுத்துக்காட்டவும் அதனை ஏற்றுக் கொள்ளாது மறைந்து மாறும் இயல்பினதாகும். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும் என்பர் பேராசிரியர். 180. மெய்பெறும் அவையே1 கைகோள் வகையே. இளம்பூரணம் : என்--எனின். மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பொருள்பெற வந்த மேற்சொல்லப்பட்ட களவு கற்பென்னும் இருவகையே கைகோள் வகையாவன என்றவாறு. ஏகாரந் தேற்றம். (810) பேராசிரியம் : இஃது, புறத்திணைக் கைகோ ளுணர்த்துகின்றது. (இ-ள்.) பொருள்கள் பெற்ற கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே (எ-று). கைகோளென்பது, xG¡f§nfhlš; எனவே, அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறுவகைப் படக் கூறப்படா; பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடுமென இரண்டாகி அடங்கும் அவையு மென்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காட்டப்பட்டன.2 (188) நச்சினார்க்கினியம் : இது புறத்திணைக் கைகோள் கூறுகின்றது. (இ-ள்). மெய்பெறக் கைகோள் வகை யவையே எ-து பொருள் பெறவரும் கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே.1 எ-று. எனவே அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக் கைகோள் அவ்வாறு வேறுவகைப்படக் கூறப்படாப் பொதுவகையானே மறைந்த வொழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாய் அடங்கும். எ-று. அவை வெட்சித் திணையுள்ளும், ஒழிந்த திணை யுள்ளுங் காண்க. ஆய்வுரை : இஃது, மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) பொருள் பெற மேற்கூறப்பட்ட களவும் கற்பும் ஆகிய அவ்விரண்டுமே கைகோள் வகையாகும் எ-று. எனவே அகத்திற்குப் புறனாயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா. பொது வகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி யடங்கும் என்றார் பேராசிரியர். 181. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு அளவியல் மரபின் அறுவகை யோருங் களவிற்1 கிளவிக் குரியர் என்ப. இளம்பூரணம் : என்---எனின். இனிக்கூறப்படுவாரை உணர்த்துவார் களவின் கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) பார்ப்பான் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு.2 ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க. பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன். பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன். (181) பேராசிரியம் : இஃது, கூற்றென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) எண்ணப்பட்ட அறுவருங் களவொழுக்கினுள் (107) நிகழ்ந்தன கூறினாராகவல்லது ஒழிந்தோர், கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறார் (எ-று). (1)gh®¥ghbd‹gh‹, நன்றுந் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவா னெனப்படும். (2)gh§f னென்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின்றொழுகி வருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (3)njhÊ அவன் போன்றும் பெண்பாலாகலின் அவளைப் பின் வைத்தான். (4)brÉÈkh‰wŠ சிறுவரவிற் றாதலின் அவளை அவளின்பின் வைத்தான். அவரிற் சிறந்தமையிற் சீர்த்தகு சிறப்பிற் (5)»Htidí§ (6)»H¤âiaí« அவர்பின் வைத்தான். அவ்விருவருள்ளுந் தலைமகளது கூற்றே பெரு வரவினதாகலின் அவளை ஈற்றுக்கண் வைத்தானென்பது.1 உ-ம் சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை ... ... தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி:9) என்பது, பார்ப்பான் T‰W. காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புன் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே (குறுந்; 204) என்பது. பாங்கன் T‰W. ஏனல் காவ லிவளு மல்லள் ... ... சொல்லு மாடுப கண்ணி னானே என்பது, தோழி T‰W. பெயர்த்தெனன் முயங்கயான் வியர்த்தன னென்றனள் . ஆம்பன் மலரினும் தான்றண் ணியளே (குறுந் ;84) என்பது, செவிலி T‰W. பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி (அகம் :48) என்பதும், அது. கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் ... ... அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (குறுந் ; 280) என்பது, கிழவன் T‰W. விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே (அகம் ; 58) என்பது. கிழத்தி T‰W. பிறவும் அன்ன. (186) நச்சினார்க்கினியம் : இது கூற்றென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) பார்ப்பான் முதலாகக் கிழவன் கிழத்தியோ டெண்ணப்பட்ட கூற்றிற்கு எல்லையாக நடந்த முறைமையை-யுடைய அறுவருங் களவொழுக்கத்து நிகழ்ந்தன கூறினாராக வல்லது ஒழிந்தோராகச்1 செய்யுள் செய்யப்பெறார். எ-று. நன்றுந் தீது மாராய்ந்து உறுதிகூறுதலிற் பார்ப்பானை முற்கூறித் தலைவன்வழி நின்றொழுகும் பாங்கனைப் பிற்கூறினார். தோழி கூற்றிற் செவிலி கூற்றுச் சிறுபான்மை வருதலின் அதனைப் பின்வைத்தார். சிறப்புடையன பிற்கூறினார். அவ்விரண்டும் ஒன்றற்கொன்று சிறப்புடைமையு முணர்க. உ-ம். சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி-9) இது பார்ப்பான் கூற்று. காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் ... ... ... ... தோளோயே (குறுந் 214) இது பாங்கன் கூற்று. ஏனைய முன்னர்க் காட்டினாம். ஆய்வுரை : இது, நிறுத்த முறையானே கூற்று என்னும் உறுப்புணர்த் தத்தொடங்கிக் களவினுள் கூற்று நிகழ்த்துதற் குரியாரைக் கூறுகின்றது. (இ-ள்) பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன் தலைவி எனச் சொல்லப்பட்ட அன்பினால் அளவளாவும் மரபினை யுடைய அறுவகையோரும் களவு என்னும் ஒழுகலாற்றிற் கூற்று நிகழ்த்துதற்கு உரியராவர் எ-று. நன்றுந் தீதும் ஆராய்ந்து தலைமகற்கு உறுதி கூறுவான் பார்ப்பான் எனவும், அவ்வாறன்றித் தலைமகன்வழி ஒழுகுவான் பாங்கன் எனவும் இவ்விருவரிடையே யமைந்த வேறுபாட்டினைக் குறிப்பிடுவர் பேராசிரியர். 182. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு1 தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். இளம்பூரணம் : என்--எனின். கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவருங்கூடப் பன்னிரு வருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு2 தொன்னெறி மரபிற் கற்பு என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க. (182) பேராசிரியம் : இதுவுமது (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட எல்லாருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் (எ-று). முன்னுறக் கிளந்த கிளவி யென்பது, பொருணோக்கிற்று. இசையின் பின்னரது நாடகமாகலிற் ghz©ã‹ கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின் வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன்பின் வைத்தும். பொருட்குச் சிறந்தாராகலின் நற்பொருள் உணரும் அறிவரை அவர்பின் வைத்தும், ஏதிலராகிய கண்டோரை அவர்க்குப் பின் வைத்துங் கூறினானென்பது. இவ்வாற்றான் இவரோடு முன்னர்க் களவொழுக்கத்திற் கூறிய அறுவருங் கூறப் பெறுவரென்ற வாறு. தொன்னெறி மரபின் என்றதனாற் பாகனுந் தூதனுங் கூறவும் அமையும். அவை புறப்பொருட்குச் சிறந்துவரும்;1 அவற்றுக்குச் செய்யுள்: செல்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்நிறுத் தவர்திறஞ் செல்கவெனக் கண்டனென் யானே என்பது, பாணன் T‰W. (அகம் 14) ஆடலிற் பயன்றனை யென்னா தென்னுரை யூடலிற் றெளிதல் வேண்டும் என்பது, கூத்தன் T‰W. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து ... ... ... நறுங்கண் ணியன்கொ னோகோ யானே (நற்றிணை: 394) என்னும் நற்றிணைப்பாட்டுக் கண்டோர் கூற்று. விதையர் கொன்ற முதையற் பூமி ... ... ... மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர்ந் தோயே (நற்றிணை: 121) என்னும் நற்றிணைப்பாட்டுப் பாகன் கூற்று. ஒழிந்தனவுங் கற்பியலுட் கூறியவாற்றான் அறிக. (160) நச்சினார்க்கினியம் : இதுவுமது அவ்வெண்ணப்பட்ட வறுவரும் பார்ப்பார் முதலாக முற் கூறிய அறுவரோடேகூடத் தொகுத்து இப்பன்னிருவருங் கூரிய கூற்றாகச் செய்யுள் செய்யப் பெறுங் கற்பினுள். எ-று. கிளவியென்னுஞ்சொல் ஈண்டுப் பொருண்மேற்று.1 இசைப் பின்னரது நாடகமாதலின் பாணன்பின் கூத்தனும், பெண் பாலாகலின் விறல்படஆடும் விறலி அவர் பின்னும், அவ்வினத்துப் பரத்தை அவர்பின்னும், அகப்பொருட்குச் சிறவாமையின் அறம் பொருள்கூறும் அறிவர் அவர்பின்னும், ஏதிலாராகிய கண்டோர் அவர்பின்னும் வைத்தார். தொன்னெறிமரபின் என்றதனால் பாகனும் தூதுகூறலு மமையும் அவை புறப்பொருட்குச் சிறந்தன. செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே (அகம்-14) இது பாணன் கூற்று. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத் தலந்தலை ஞெமயத் திருந்த குடினஞ பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர் வன்பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந்தண் ணியளா நோகோ யானே (நற்றிணை-394) இது கண்டோர் கூற்று. விதையர் கொன்ற முதையற் பூழி யிடுமுறை நிரம்பிய வீரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை யரலை யங்காட் டிரலையொடு வதியும் புறவிற் றம்மநீ நயந்தோ ளூரே யெல்லி விட்டன்று வேந்தெனச் சொல்லுபு பரியல் வாழ்கநின் கண்ணி காண்வர விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க வேறித் தண்பெயல் கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய வெவ்விருந் தயரு மனைவி மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே (நற்றிணை-121) இது பாகன் கூற்று. ஒழிந்தன கற்பியலுட் காண்க. ஆய்வுரை : இஃது, கற்பின்கண் கூற்று நிகழ்த்துதற்குரியாரைக் கூறுகின்றது. (இ-ள்) பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அன்பு நிறைந்த அறிவர், கண்டோர், பேணிப் பாதுகாக்கத் தகும் சிறப்புடைய பார்ப்பான் முதலாக முன்னர்ச் சொல்லப்பட்ட அறுவரும் ஆக இப்பன்னிருவரும் தொன்று தொட்டுவரும் நெறிமுறைமை-யினையுடைய கற்பு என்னும் ஒழுகலாற்றின்கண் கூற்று நிகழ்த்துதற்கு உரியராவர் எ-று. ஆணம் - நேயம்; அன்பு. 183. ஊரும் அயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும். இளம்பூரணம் : என்---எனின். மேற்சொல்லப்பட்ட இருவகைக் கைகோளிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்). ஊரிலுள்ளாருஞ் சேரியிலுள்ளாருஞ் அயன் மனை யுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினா லறிவாருந் தந்தையுந் தமையனும் இருவகைக் கைகோளினும் பட்ட தனையுட் கொண்டு பிறிதொன்றை யெடுத்துமொழியினல்லது பட்டாங்குக் கூறுதலின்மை1 வலியுறுத்தத் தோன்றும்2 என்றவாறு. எனவே, வலியில்வழிச் சிறுபான்மை நிகழவும் பெறும்.3 எந்தையும், நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும் (அகம், 12) இது தந்தை யுட்கொண்டு கூறியது. பிறவுமன்ன. (183) பேராசிரியம் : (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட அறுவகையோருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறார் (எ-று) இவை, களவிற்குங் கற்பிற்கும் பொது. கொண்டெடுத்து மொழியப்படுதலல்ல தென்பது இவர் கூற்றாகப் பிறர் சொல்லினல்லது இவர் தாங் கூறாரென்றவாறு.1 அவை, ஊஉ ரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி வன்னை (குறுந்.262) எனவும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் ... ... ...rhŒ¤jh® தலை (கலி;39) எனவும் வருவன போல்வன. யாப்புறத் தோன்றும் என்றதனான் அகத்திணைக்கண் இவ்வாறு நிலைபெற்ற தென்பது; எனவே, புறத்திணைக்கண் அலர் கூறவும் பெறுமென்பது இது நோக்கிப்போலுங். கூறாதாரையுங் கூறுவாராயிற் றென்பது நோய்மருங் கறிநரை இடைவைத்தான் முன்னைய மூன்றும் பெண்பாலெனவும் ஒழிந்தன ஆண்பாலெனவும் அறிவித்தற்கென்பது. எனவே, நோய் மருங்கறிநர் பெண்பாலும் ஆண்பாலு மாயினாரென்பது.2 (191) நச்சினார்க்கினியம் : இது பெரும்பான்மையுங் கூறப்படாதோரைக் கூறப்படு கின்றது. இது fளவிற்கும்fற்பிற்கும்bபாது.c-«. ஊ உரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி லன்னை (குறுந்-262) தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் ... ... ... சாய்த்தார் தலை (கலி-39) எந்தையு நிலனுற ... ... ... யென்னும் (அகம்-12) என்றாற்போல்வன கொள்க. துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய் (ஐங்குறு-393) இது அயலோர் கூற்றுச் சிறுபான்மை வந்தது. அகத்திணைக் கண் இங்ஙனம் வருமெனவே புறத்திணைக்கண் அலர்கூறவும் பெறுமென்பது. இது நோக்கிப் பெரும்பான்மை கூறாதாரையுங் கூறினார். முன்னைய மூன்றும் பெண்பாலும் நோய்மருங்கறிநர் இருபாலும், ஒழிந்தார் ஆண்பாலுமாமென்றுணர்க.1 ஆய்வுரை : இஃது இவ்விருவகை யொழுகலாற்றிலும் கலந்து நின்று கூற்று நிகழ்த்துதற்கு உரியராகச் செய்யுளில் இடம்பெறாதாரைத் தொகுத்து உணர்த்துகின்றது. (இ-ள்) தலைமகள் வாழும் ஒரே ஊரில் வாழ்பவர்கள், அவளது அயல் வீட்டில் உள்ளவர்கள், அவளது தெருவில் உள்ளவர்கள், அவளது நோயின் கூறுபாட்டினைக் குறிப்பினால் அறிவோர், அவளுடைய தந்தை, தமையன் ஆகிய இன்னோர் கூற்றாகத் தோழி முதலியோர் கொண்டு கூறினல்லது இவர்கள் தாமே கூறினாராகச் செய்யுள் செய்தல் இல்லை எ-று 184. கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. இளம்பூரணம் : என்---எனின் நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ ள்.) தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத் தோன்றாது என்றவாறு 1 எனவே, ஏனையோர்க்கே கூறும் என்றவாறாம். உதாரணம் வந்துழிக் காண்க. (184) பேராசிரியம் : இஃது எய்தாத தெய்வித்தது; விலக்கியல் வகையால் விதித்ததெனவும் அமையும். (இ ள்) கிழவனோடுங் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத்தோன்றாது (எ-று). நற்றாய் என்று ஒருமை கூறியவதனால் தலைமகள் தாயையே கொள்ளப்படும். இதனானே தந்தை தன்னையரென்பன போல்வனவற்றுக்கும் இஃதொக்கும். முற்ற வென்றதனால் தானே தலைவனாதலால் தலைவன் தமர் யாவருங் கூறார்; முற்கூறப்பட்டார் அல்லரென்பது கொள்க2 முற்றாதென்னாது தோன்றாது என்ற தனாற் புறத்திணைக்கண் இவை வரைவின்றி வழக்கினொடு பொருந்து மாற்றாற் கொள்ளப் படுமென்பது. கிழவன் றன்னொடும் கிழத்தி தன்னொடும் கூறாள் எனவே, அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாயென்பதாம்; அஃது, எம்வெங் காம மியைவ தாயின் செறிந்த சேரிச் செம்மன் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல ... ... ... ... ... ... ... ... ... மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே (அகம்: 15) எனவரும். (261) நச்சினார்க்கினியம் : இஃது எய்தாததெய்துவித்தது. (இ-ள்). கிழவனோடும் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத்தோன்றாது. எனவே அல்லுழிக் கூறப்பெறும் நற்றாயும். எ-று. உ-ம். செறிந்த சேரிச் செம்மன் மூதூ ரறிந்த மாக்கட் டாகுக தில்ல (அகம்-15) இது நற்றாய் அல்லுழிக்கூறியது. தாயென ஒருமையாற் கூறவே தலைவியுடைய நற்றாயாயிற்று.தந்தை தன்னையர்க்கும் இஃது ஒக்கும். முற்றவென்றதனால், தலைவன் றமர் யாவருங் கூறாரென வுணர்க. தோன்றா தென்றதனானே புறத்திணைக்கண் வரைவின்றி வழக்கிற்குப் பொருந்துமாறு கொள்க.1 ஆய்வுரை: இஃது, நற்றாய்க்குரிய மரபு கூறுகின்றது. (இ-ள்) தலைவனொடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற) நற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கம் இல்லை எ-று. முற்றத்தோன்றாது - அறவே தோன்றாது. எனவே நற்றாய் தலவைனும் தலைவியும் அல்லாத செவிலி தோழி முதலியோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். 185. ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இளம்பூரணம் : என்---எனின். கண்டோர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலியும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது1 என்றவாறு. எனவே, ஏனையோர் கேட்பக்கூறிற்றில்லை என்றவாறாம்2 (185) பேராசிரியம் : (இ-ள்) தலைமகனோடும் தலைமகளோடும் இடைச்சுரத்துக் கண்டோர் மொழிதல் (40) அறியப்பட்டது (எ-று). ஒண்டொடி மாதர் கிழவன் எனவே அவ்விருவர் கூட்டத் துக்கண்ணுமன்றி அவ்விருவரோடும் தனித்துக் கூற்றில்லை யென்றவாறு3 கண்டது என்ற மிகையான் இடைச்சுரத்துக் கண்டோர் செவிலிக்குரைப்பனவுங் கொள்க. அவை, இளையண் மெல்லியண் மடந்தை யரிய சேய பெருங்கான் யாறே (சிற்றெட்டகம்) எனவும், அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே எனவும் வரும். இதனுள், ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந் தோன்றக் கூறியது தலைமகனை யாதலின், வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே (குறுந்: 7) என்பது செவிலிக்குக் கண்டோர் கூறியது. (193) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இ-ள்.) ஒள்ளிய தொடியினையுடைய செவிலியோடும், தலைவனோடும், தலைவியோடும் இடைச்சுரத்துக் கண்டோர்- மொழிந்தன முதனூலிற் கண்டது எ-று.1 ஒண்டொடிமாதரென்றார் செல்வச்சிறப்புடைமை தோன்ற-கண்டதென மிகைபடக்கூறியவதனால், தலைவி நடைமெலிந்து அசைந்தமை கண்டாரல்லது சேர்ந்தனை கெல்லென்னார் என்றும் அவ்விருவர் கூட்டத்தன்றி, தனித்துழிக் கூறாரென்றுங் கொள்க உதாரணம் முற்காட்டினாம். ஆய்வுரை : இது, கண்டோர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒள்ளிய தொடியினையணிந்த செவிலியோடும் தலைவனொடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலிற் கண்ட வழக்கமாகும் என்பர் ஆசிரியர் எ-று. ஒண்தொடி மாதர்-ஒள்ளிய தொடியினையணிந்த பெண்டிர்; என்றது நற்றாயையும் செவிலியையும் தோழியையும் என்பர் இளம்பூரணர். ஒண்டொடி மாதர் என்பதனைத் தலைவிக்கு அடைமொழியாகக் கொள்வர் பேராசிரியர். ஒண்டொடி மாதர் என்றது செவிலியை எனக்கொள்வர் நச்சினார்க்கினியர். கண்டோர் வழியிடையே எதிர்ப்பட்டோர். 186. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையிற் கிளத்தற்கும் உரியன். இளம்பூரணம் : என்---எனின். இது தலைவற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள் ) தலைவியை யுடன்கொண்டுபோம் இடைச்சுரத்தின் கண் தலைவியைத் தலைவன் வழக்குநெறி யாணையானே கூறுதற்குரியன்1 என்றவாறு. உம்மை எதிர்மறை.2 ஆணையென்பது ஆக்கினை. வட மொழித் திரிபு. மெல்லியகாமம் நிகழுமிடத்து ஆக்கினை கூறப் பெறானாயினும் அவ்விடத்து வேண்டுமென்பது எடுத்தோதப் பட்டது.3 உதாரணம் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே (நற்றிணை. 362) என்பதனுட் கண்டுகொள்க. மெல்லிய மகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழு வமைத்தவாறு. (186) பேராசிரியம் : இதுவும் கூற்றுவிகற்பமே கூறுகின்றது. (இ-ள்.) இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடும் கிழவன் நீதிநூல் வகையாற் கிளத்தற்கு முரியன் (எ-று). நீதிநூல் வகையாற் கிளத்தலென்பது கிழத்தி தன் தமர் இடைச்சுரத்துக்குக் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் வழக்கியல் கூறுதலுமுரியனென்பது. வழக்கிய லாணை யென்றதனான் நீதிநூல்விதிபிறழக்கூறின் அஃது இராக்கதம் போன்று காட்டுமென்பது.1 உம்மையாற் கிழத்தியோடு வழக்கிய லாணையானன்றி மருட்டிக்கூறவும் பெறுமென்பது. அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே (நற்றிணை: 9) என்பதனுள், வருந்தா தேகுமதி யெனவே, வழிபடு தெய்வங் கட்கண்டால் விடுவார் இல்லாததுபோல நின்னை விடுதல் எனக்கு அறனன்றெனக்கூறி மெல்லெனச் செல்கவென மருட்டிக் கூறியவாறு காண்க. (194) நச்சினார்க்கினியம் : இதுவுங் கூற்றுவிகற்பங் கூறுகின்றது. (இ-ள்). இடைச்சுரத்தி லுடன்போய்க் கிழத்தியொடுங் கிழவன் நீதி நூல்வழியாற் கிளத்தற்கும் உரியன். எ-று அது தலைவி தமர் இடைச்சுரத்திற் கண்ணுறின் அவர்கேட்க அவட்குக் கூறுவானாய் வழக்கியல் கூறலும் உரியனென்க. நீதி நூல் பிறழக்கூறின் இராக்கதமாம். உ-ம். நுமர்வரி னோர்ப்பி னல்லது தமர்வரின் முந்நீர் மண்டல முழுது மாற்றா தெரிகணை விடுத்தலோ விலனே யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனோ1 உம்மையான் அவ்வாறன்றி மருட்டிக் கூறவும் பெறும். உ-ம். அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர .... மாறே (நற்றிணை 9) இஃது தெய்வம்போல விடுந்தன்மையினை யல்லையென மருட்டினான். ஆய்வுரை : இஃது, தலைவற்குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) தலைவியை உடன்கொண்டு போகும் இடைச் சுரத்தின்கண்ணே தலைமகன் உலகியல் நெறியினை மனத்திற் கொண்டு தனது ஆற்றல் தோன்ற ஆணை மொழியினை எடுத்துரைத்தற்கும் உரியன் எ-று. கிளத்தற்கும் உரியன் எனவே, மெல்லிய காமம் நிகழுமிடத்து வன்மொழியாகிய ஆணையினைத் தலைமகளிடம் கூறுதல் ஏற்புடைத்தன்றாயினும் உலகியல் கருதித் தலைவன் அவ்வாறு ஆணை கூறுதல் தவறாகாது என அறிவுறுத்தாராயிற்று. 187. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தின் எடுத்தே. இளம்பூரணம் : என்--எனின். இது தலைமகனுந் தலைமகளும் அல்லாதார்க் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மரும்1 அத் தலைவனொடுந் தலைவியொடுஞ் சொல்லிப்போந்த மரபினாற் சொல்லப்பெறுவர் ; இடமுங் காலமுங் குறித்து என்றவாறு. மொழிந்தாங்கு என்பதனை வழக்கியலாணை யெனினு மமையும். முன்னமாவது :--- இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரித்தென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது (தொல்-செய்யுளியல். 199) எடுத்தென்பது அறம்பொருளின்பங்கட்குத் தகாத சொற்களை யெடுத்துக்கூறுதல். அஃதாவது தலைவனைப் பார்ப்பானும் பாங்கனும் கழறலும், தோழி இயற்பழித்தலும், தலைவியைச் செவிலி யலைத்தலும், பாணர் கூத்தர் பாசறையிற் சென்று கூறுதலும், தோழி தலைமகனை வற்புறுத்தலும் முதலாயின. (187) பேராசிரியம் : இஃது கண்டோர் கூற்று. (இ-ள்) மேலைச்சூத்திரத்துக் கூறிய தலைமகனையுந் தலை மகளையும் ஒழித்து ஒழிந்தோ ரெனப்படுவார் கண்டோரெனப் படுப. அவர் கூற்றுங் கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு வழக்கி யலாணை (506)யிற் கிளத்தற்கும் உரியர் என்பான் முன்னத்தினெடுத்துக் கூறுப என்றா னென்பது. முன்னத்தி னெடுத்த லென்பது அதிகாரத்தான் அறநூற்குத்தக ஓத்தினானெடுத்துரைப்ப வென்றவாறு;2 அவை, பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி: 9) என்றாற் போல்வன. இவ்வாறு வழக்கி யலாணையாற் கிளவாது (40) வாளாதே அவரைக் கண்டனமெனவும் அவரின்னுழிப் புகுவரெனவுஞ் சொல்லுவன, கண்டோர் மொழிதல் கண்ட தென்ப (தொல்-செய்: 193) என்புழிக் கூறினாம்.1 (159) நச்சினார்க்கினியம் : இஃது கண்டோர் கூற்று. (இ-ள்.) கண்டோர் கூறுங் கூற்றும் தலைவன் தலைவியொடு மொழிந்தாற்போல வழக்கியலாணையாற் கிளத்தற்குரியர். எ-று தலைவனுந் தலைவியும் ஒழிந்தோராவார் கண்டோர். அவர் வழக்கியலாணையாற் கிளத்தற்கு உரியர் என்பார் முன்னத்தி னெடுத்துக்கூறுப என்றார். அதிகாரத்தான் அறநூற் கருத்தான் உரைப்பரென்க. பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி.9) எனவரும். இங்ஙனம் வழக்கிய லாணையாற் கிளவாதன கண் டோர் மொழிதல் கண்டது (அகத். 40) என்பதனாற் கூறிற்று. ஆய்வுரை : இஃது, தலைவனும் தலைவியும் அல்லாத ஏனையோர்க்குரிய தோர் மரபுகூறுகின்றது. (இ-ள்) தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைப் பதின் மரும் தலைவனும் தலைவியும் ஆகிய இருவரோடும் மேற்கூறிப் போந்த மரபினால் இடமுங் காலமுங் கருதி உரை நிகழ்த்துதற்கு உரியராவர் எ-று. முன்னத்தின் எடுத்து மொழிந்தாங்கு உரியர் என இயைத்துப் பொருள் கொள்க. முன்னம்---குறிப்பு. 188. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குநர் அவரே.1 இளம்பூரணம் : என்---எனின். இதுவு மது. (இ-ள்.) தலைவியுந் தலைவனுங் கூறக் கேட்போர் மேற் சொல்லப்பட்ட பதின்மரும் என்றவாறு. இஃது முதலாகக் கேட்போரைக் கூறுகின்றது.2 (188) பேராசிரியம் : இஃது, nf£nghbu‹D« உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) முன்னர்க் கூற்றிற்குரிய ரெனப்பட்ட பன்னிரு ருட் கேட்டற்குரியார் தலைமகனுந் தலைமகளும் ஒழித்து ஒழிந்த பதின்மரும் (எ-று). அவர் கேட்பனவும் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கேளாரெனவுங் கூறியவாறு. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு மென்பதனை மேற்போயின கூற்றிற்குங் கூட்டி யுரைக்க. உரைக்கவே கூறுவனவுங் கேட்பனவு மெல்லாம் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கூறவுங் கேட்கவும் பெறாரெனவுங் கூறியவாறாயிற்று3. இங்ஙனம் விலக்கப்பட்டன வற்றுள் வேறுபட வருவனவும் மேற்கூறுகின்றாம். மற்றுக் கூற்றுக்கு உரியரெனப்படுவார், அவ்வயின் தலைவியுந் தலைவனுங் கூறக் கேளாரோ வெனின், அவை தங்கிளவியாகலின் தாங்கேட்டல் விதந்தோத வேண்டுவ தன்றென்பது. நினையுங்காலை யென்றதனால் தலைமகள் சொல்லக் கேட் போருந் தலைமகன் சொல்லக் கேட்போருந் தலைவனுந் தலைவியுந் தம்முட் கேட்டனவற்றுக் குரியனவும் ஆராய்ந்து கொள்ளப்படும். மேற்கூறிய வகையானென்பது; எனவே,தலைமகன் கூறப் பரத்தை கேட்டலுந் தலைமகள் கூறப் பரத்தை கேட்டலும் முதலாயின புலனெறி வழக்கிற் கெய்தாதன விலக்கப்பட்டன.1 ஒழிந்தனவற்றுட் சில வருமாறு: விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைத்தலி னினிதா கின்றே (அகம்: 58) என்னுந் தலைமகள் கூற்றுத் தலைமகன் கேட்டது. வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே (நற்: 9) என்பது, தலைமகன் கூற்று, தலைமகள் கேட்டது. நின்கேள், புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி (கலி: 24) எனவும், மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண (அகம்: 4) எனவும், உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ (அகம்: 17) எனவும், ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே (குறுந்: 362) எனவும், எல்லீரு மென்செய்நீ ரென்னை நகுதிரே (கலி: 42) எனவும் இன்னோரன்னவெல்லாந் (1)தோழியும் (2)பாணனுஞ் (3)செவிலியுங் (4)கண்டோரும் (5)அறிவருங் கேட்பத் தலைமகள் கூற்று வந்தன. பிறவும் அன்ன. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக ... ... ... பரந்தன் றிந்தோய் நோன்றுகொளற் கரிதே (குறுந்: 58) எனவும், எலுவ சிறாஅ ரேமுறு நண்ப ... ... ... புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே (குறுந்: 129) எனவும், ஊர்க பாக வொருவினை கழிய (அகம்: 44) எனவும், பேரமர் மழைக்கணின் றோழி யுறீஇய ஆரஞ ரெவ்வங் களையா யோவென எனவும், சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் (கலி: 139) எனவும் இவை (1)பார்ப்பானும் (2)பாங்கனும் (3)பாகனுந் (4)தோழியுங் (5)கண்டோரும் கேட்போராகத்தலைமகன் கூற்று நிகழ்ந்தன. பிறவும் அன்ன; இனி, ஒன்றித் தோன்றுந் தோழி (தொல்-அகத்:39) என்றமையின், தோழி கூற்றுத் தலைமகள் (225) கூற்றையா மென்பது. (491) நச்சினார்க்கினியம் : இது கேட்போரென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ-ள்). முன்னர்க் கூற்றிற்குரியர் என்ற பன்னிருவருள், தலைவி கிளவியையும் தலைவன் கிளவியையும் கேட்டற்குரியர் அவ்விருவரையும் ஒழிந்த பதின்மரும். எ-று மனையோள்கிளவியுங் கிழவன் கிளவியும் என்பதனை மேற் போயின கூற்றிற்கும் கூட்டுக. கூட்டவே, அவ்விருவர் கிளவி மேற்கூறுவனவும் கேட்பனவும் எனவும், தத்தம்கிளவி கூறவும் கேட்கவும் பெறாரெனவும் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கியவற்றுள் வேறுபட வருவன மேற்கூறுகின்றார். தத்தங் கிளவியைத் தம்மிற்றாம் கேட்ப ரென்றலை விதந்தோத வேண்டாமையின், தலைவனுந் தலைவியுங் கேட்ப ரென்னாரா யினார். நினையுங்காலை என்றதனால் தலைவனுந் தலைவியும் தனித்தனிக்கூற அவற்றைக் கேட்ட பதின்மரும் தாங்கேட்ட கூற்றிற்குச் செய்யத் தகுவன தம்முளாய்ந்து கோடற்கு உரியர் என்று கொள்க. எனவே தலைவன் கூறப் பரத்தை கேட்டலுந் தலைவி கூறப் பரத்தை கேட்டலு முதலியவற்றுள், புலனெறி வழக்கிற்கு ஏலாதன விலக்கப்பட்டன. உ-ம். விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே (அகம். 58) இது தலைவி கூற்று. தலைவன் கேட்டது. வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே (நற்றிணை. 9) இது தலைவன் கூற்று. தலைவி கேட்டது. நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவென் றுடைத்தென வெண்ணி யதுதேர (கலி. 24) எனவும், மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவன்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்வேன் (அகம் 14) எனவும், உயங்கின் றன்னையென் மெய்யன் றசைஇ (அகம். 17) எனவும், தண்டா ரகலமு முண்ணுமோ பலியே (குறுந். 362) எனவும், எல்லீரும் என்செய்தீர் என்னை நகுதிரோ (கலி. 142) எனவும் இவை தோழியும் பாணனும் செவிலியும் அறிவருங் கேட்பத் தலைவி கூற்று வந்தது. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக (குறுந்தொகை. 58) எனவும், எலுவ சிறாஅ ரேமுறு நண்ப (குறுந்தொகை. 12) எனவும், ஊர்க பாக வொருவினை கழிய (அகம். 44) எனவும், பேரமர் மழைக்கண் ணின்றோழி செய்த வாரஞர் வருத்தங் களையா யோவென எனவும், சான்றவிர் வாழியோ சான்றவிர் (கலி. 136) எனவும், இவை பார்ப்பானும் பாங்கனும் பாகனும் தோழியும் கண்டோரும் கேட்பத் தலைவன் கூற்று நிகழ்ந்தன. ஒன்றித் தோன்றும் தோழி மேன (அகத்) என்றலின், தோழிகூற்றும் தலைவி கூற்றேயாம்.1 ஆய்வுரை : இது, கேட்பார் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) தலைமகள் கூற்றினையும் தலைமகன் கூற்றினையும் கேட்போர் யார்? என நினையுங்கால் கூற்று நிகழ்த்தற் குரியராக முன்னர்க் கூறப்பட்ட பன்னிருவருள் தலைவன் தலைவியல்லாத ஏனைப் பதின்மரும் எ-று. தலைவன் தலைவி இருவரும் ஒருவருக்கொருவர் கூறுவன தம் கூற்றேயாதலின் அக்கூற்றினைத் தாம் கேட்பர் என விதந்து கூறவேண்டிய இன்றியமையாமையில்லை. கேட்போர் என்னும் உறுப்பாவது, இக்கூற்றினைக் கேட்போர் இன்னார் எனச் செய்யுளுட் புலப்பட நின்ற அமைப்பாகும். 189. பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இளம்பூரணம் : என்-எனின். பார்ப்பாரும் அறிவருங் கூறுங் கூற்றுக் கேட் போரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பார்ப்பார் அறிவரென்று சொல்லப்பட்ட இருவர் கூற்றும் எல்லாருங் கேட்கப்பெறுவ ரென்றவாறு.1 (189) பேராசிரியம் : இஃது, (இ-ள்.) இஃது மேற்கூறிய பார்ப்பாரும் அறிவரும் கூறிய கூற்றுக் கேட்போரை இன்னாரென்று வரையப்படாது (எ-று) என்றவழி, யார்க்கும் என்றது அகத்திணையோர்க்கும் புறத்திணையோர்க்கு மென்றவாறு. யார்க்கும் வரையா, ரென்ற தனை, எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படுமென்பது கொள்க.2 என்னை? பார்ப்பார் கூற்று, தலைமகனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது பிறர் கேட்டற்கேலா, அறிவர் கூற்று, தலைமகளுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற்குரியர். புறத்திணைக்கண்ணும் பொதுவியற்கரந்தையோர்க்கும் (185) பார்ப்பார் கிளவி ஏலாவெனவும் அறிவர் கிளவி ஏற்குமெனவும், பிறவு மின்னோரன்ன கொள்க.1 யாப்பொடு புணர்ந்து என்பது அகப்பொருளும் புறப் பொருளுமாக யாக்கப்படுஞ் செய்யுளெல்லாவற்றோடும் பொருந்து மென்றவாறு. இவர் கிளவி வரையப்படாதெனவே அவர் வாயிலாகிய வழித் தலைமகள் வாயின் மறுத்தலிலளென்பதூஉம் புறத்திணைத் தலைவர்க்கும் அவ்வாறே வழிநிற்றல் வேண்டு மென்பதூஉங் கூறியவாறாயிற்று; என்னை? அறிவரெனப்படுவார் மூன்று காலமுந் தோன்ற நன்குணர்ந்தோரும் புலனன் குணர்ந்த புலமையோரு (647) மாகலானும், இனிப் பார்ப்பாரும் அவ்வாறே áw¥òilauhfyhD«,2 அவர்வழி நிற்றல் அவர்க்குக் கடனா கலானுமென்பது. (197) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இ-ள்.) பார்ப்பாரும் அறிவரு மென்கின்ற இருவர்கூற்றும் அகமும் புறமுமாக யார்க்குஞ் செய்யு ளென்றவற்றோடும் பொருந்தி வருதலின் அகத்திணையோர்க்கும் புறத்திணை யோர்க்குங் கேட்டவை வரையார்.1 எ-று. இனி வரையாரென்றதனை யெச்சப்படுத்துச்2 சிலர்க்கு வரையப்படு மென்று கொள்க. அவை பார்ப்பார் கூற்றுந் தலைவனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது பிறர்கேட்டற் கேலாமையும். இவர்3 கூற்றுந் தலைவனுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற்குரிமையும் புறத்திணைக்கண்ணும் பொது வியற்கரந்தையோர்க்கும் பார்ப்பார் கிளவி யேலாது அறிவர் கிளவி யேற்குமென்றலும் பிறவுமாம். எனவே தலைவி அறிவர்வாயிலாயவழி மறாமையும் புறத்திணைத் தலைவர்க்கு மவ்வாறே அவர்வழி4 நிற்றல்வேண்டு மென்பதூங் கூறிற்று. அறிவராவார் முக்காலமு முணர்ந்தோரும் புலநன்குணர்ந்த புலமையோரும். உ-ம். கூறிய வற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காண்க. ஆய்வுரை : இது, பார்ப்பார், அறிவர் கூற்றினைக் கேட்போர் இன்னார் என்கின்றது. (இ-ள்) பார்ப்பார், அறிவர் என்போர் கூறுங்கூற்று கேட்போர் இன்னார் என்று வரையப்படுதல் இல்லை. அகமும் புறமும் என யாக்கப்படும் செய்யுள் எல்லாவற்றொடும் பொருந்தும் எ-று. பார்ப்பார் அறிவர் என்னும் இவ்விருதிறத்தார் கூறும் கூற்றினையும் அகத்திணை மாந்தர், புறத்திணை மாந்தராகிய எல்லோருங் கேட்டற்குரியர் என்பதாம். 190 பரத்தை வாயில் எனவிரு வீற்றுங்1 கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே. இளம்பூரணம் : என்---எனின். இதுவு மொருசார் கூற்றிற்குரியா ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). பரத்தையென்று சொல்லப்படும் வேறுபாட்டினும் வாயிலென்று சொல்லப்படும் வேறுபாட்டினுந் தலைமகளைச் சுட்டாத கூற்றுப் பயனில்லை என்றவாறு2 (190) பேராசிரியம் : இது, பயனில் கூற்றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பரத்தையும் வாயில்களுமென்னும் இரண்டு வேறுபாட்டின்கண்ணும்3 எழுந்த கிளவி கிழத்தி கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்காற் பயனில (எ-று). கிழத்தியைச் சுட்டுதலெனவே பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையுமென்பதாயிற்று. செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவ ணுவமந்து வருகஞ் சென்மோ தோழி (அகம்:106) என்றக்கால் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக்கூறல் வேண்டு மென்பது. வாயில்களுந் தலைமகளை ஊடல் காப்ப அல்லது சொல்லாராகலான் தலைமகள் கேட்பாளாகச் சொல்லவேண்டு மென்பது. சுட்டாக் கிளப்புப் பயனில வென்றதனான் வாயில்கள் கூறுவனவுங் கிழத்திக்குப் பாங்காயின தோழி கேட்பச் சொல்லினும் அமையும். அவற்றுக்குச் செய்யுள். ஓருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனள் மன்னே என்பது கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது; தோழி கேட்பச் சொல்லியதூஉமாம். (199) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இ-ள்) பரத்தையும் வாயில்களும் என்னும் இரண்டு வேறு பாட்டின் கண்ணும் கிழத்தி கேட்பாளாகக் கருதிக் கூறாத கூற்றுப் பயமில, எ-று. கிழத்தியைச் சுட்டாவெனத்1 தலைவி பாங்காயினார் கேட்பக் கூறுதலு மமையும். உ--ம். ஓருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனண் மன்னே இது வாயில்கள் கூறத் தலைவி கேட்டலும், தோழி கேட்டலுமாம். ஆய்வுரை : இஃது ஒருசாரார் தமக்குக் கூறிக்கொள்ளும் கூற்றுப் பயனற்றது என்கின்றது. (இ-ள்) பரத்தையும் வாயில்களும் என்னும் இருவேறு நிலைமைக் கண்ணும் நிகழும் கூற்றுக்கள் தலைமகள் கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்கால் பயன்படுவன அல்ல எ-று. கிளப்பு-கிளத்தல், கூறுதல்; ஈண்டுக் கூறப்படும் மொழிமேல் நின்றது. பரத்தையும் வாயில்களும் ஆகிய ஈரிடத்தும் நிகழும் உரையாடல்கள் கேட்பவள் தலைமகள் எனக்கருதிக் கூறாக்கால் பயனற்றவை. எனவே அம்மொழி தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லின் பயனுடையவாம் என்பது பெறப்படும். 191 வாயில் உசாவே தம்மு ளுரிய1 இளம்பூரணம் : என்---எனின். வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வாயில்கள் உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முள் உசாவுதலுரித்து என்றவாறு. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (161) பேராசிரியம் : இதுவுமது. (இ-ள்.) மேனின்ற அதிகாரத்தால் தலைமகளைச் சுட்டி ஒருவர்க் குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும், அவையுந் தலைமகள் கேட்பன (எ-று) அதற்குச் செய்யுள் : தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே (குறு :9) என்பது, பாடினி ghz®¡Fiu¤jJ. தம்முளும் என்ற உம்மை எதிர்மறை யாகலான், கேட்குநர் அவரெனப்பட்டவாறன்றித் தம்முள் தாங் கேட்டல் சிறுபான்மை யெனக்கொள்க.2 (200) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இ-ள்). முற்கூறிய அதிகாரத்தாற் றலைவியைச் சுட்டி யொருவரொருவர்க் குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும். எ-று. அவையுந் தலைவிகேட்பவென1 தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் கரப்பா டும்மே (குறுந் 6) இது பாடினி பாணர்க்குரைத்தது. மலரைப் பொறாவடி மானுந் தமியண்மன் னன்னொருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த வலரைப் பொறாதென் றழல்விழித் தோனம் பலம்வணங்காக் கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே (திருச்சிற்-367) இது போல்வன பிறவும் வாயில்கள் தம்முட்கூறின. உம்மை யெதிர்மறையாகலின் கேட்குந ரவரெனப்பட்டவரன்றித் தம்முட் டாங்கேட்டல் சிறுபான்மையாம். ஆய்வுரை : இது, வாயில்கட் குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) பாணன் முதலாக முன்னர்க் கூறப்பட்ட வாயில்கள் தம்முள் உரையாடுமிடத்துத் தலைமகளை நோக்கிக் கூறாது தமக்குள் உரையாடிக் கேட்டலும் உரிய எ-று. உதாரணம் பேராசிரியருரையிற் காண்க. உசாவுதல் உரை யாடுதல். தம்முளும் என்புழி உம்மை எதிர்மறையால் தமக்குள்தாம் உரையாடுதல் சிறுபான்மை என்பதாம். 192. ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மானே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவு நுதலிய1 நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர். இளம்பூரணம் : என் எனின். இதுவுங் கேட்டற் பொருண்மைக்கண் வருவதோர் மரபு வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஞாயிறு முதலாக நெஞ்சு ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் அத்தன்மைய பிறவுமாகிய மக்களல்லாத பொருள்கள் தாங் கருதிய நெறியினானே சொல்லுவன போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியமையப்பெறும் என்றவாறு. ஆங்கு - அசை. பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தேனென் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று. (கலித். 143) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேற் காதலை வாழி மதி. (குறள். 1118) உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை (நற்றிணை. 284) தேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே. (சிலப். கானல்) இதனுட் கடலுங் கானலும் புள்ளு மரனுங் கூறப்பட்டது. மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தோம் பக்கம்பா ராட்டுவாய் (108) வருந்தினை வாழிய நெஞ்சே (அகம். 79) பிறவு மென்றதனான். மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ மென்தோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற (கலித். 124) எனவும் இந்நிகரன கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது கேட்போ ரியல்பு. (192) பேராசிரியம் : இது, கேளாதென சில பொருள், கேட்பனவாகப் பொருளிலுயல் (196) வழுவமைக்கப்பட்டனவற்றை இலக்கணவகையாற் கூறுவனவும் கேட்குநவும் ஆகற்கண்ணும் ஆராய்கின்றானென்பது. (இ-ள்.) ஞாயிறுந் திங்களும் அறிவும் நாணுங் கடலுங் கானலும் விலங்கும் மரனும் பொழுதும் புள்ளும் நெஞ்சும் இன்னோரன்ன பிறவும் மேற் bghUËaYŸ, செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும், (தொல். பொரு:2) என்று பொதுவகையாற் கூறியவற்றான் அவைதாஞ் சொல்லுவன போலவுங் கேட்பன போலவுஞ் சொல்ல அமையும் (எ-று) ஈண்டுக் கூற்றும் உடன் கூறினான் மேலிவற்றை வரையறுத்துக் கூற்றிற்கு உரிய வென்றில னாகலின்1 புலம்புறு பொழுதென்பது மாலையும் யாமமும் எற்பாடும் காரும் கூதிரும் பனியும் இள வேனிலும் போல்வன. பிறவு மென்றதனால் புல் புதல் முதலியன கொள்க. அவற்றுட் சில வருமாறு: கதிர்பாகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ (கலி:142) என்றாற் போல்வன கண்டுகொள்க. (201) நச்சினார்க்கினியம் : இது கேட்போருங் கூற்றும் வேறுபட வருமாறு கூறுகின்றது. அவை பொருளியலுள் வழுவமைதி கூறுவனவுங் கேட்குநவுமாய் ஈண்டு வருதலின் ஆராய்கின்றார். (இ-ள்). ஞாயிறுமுதல்நெஞ்சீறாக் கூறியனவும் அவை போல் வன பிறவும் மேற் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் (பொருளியல்-2) எனப் பொருளியலுட் பொதுவகையாற் கூறிய வாற்றான் அவைதாங் கூறுவன போலவுங் கேட்பன போலவுங் கூறுமாறமையு மென்று கூறுவர் புலவர் எ-று. கூற்றும் உடன்கூறினார் மேற்கூற்றிற்குரியன இவையென் வரையறாமையின். பொழுதாவன: மாலையும், யாமமும், எற்பாடும், காரும், கூதிரும், பனியும், இளவேனிலும் போல்வன. பிறவுமென்றதனால் புல்லும் புதலும் முதலியனவுங்கொள்க. உ-ம். கதிர்பகர் ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவையாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ (கலி 142) வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள் உறுதி தூக்கத் தூங்கிய வறிவே (நற்றிணை-184) நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டே ரூர்ந்த வழிசிதைய வூர்கின்ற வோதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடு மன்னமே யீர்ந்தண் டுறையே யிதுதகா தென்னீரே (சிலப். கானல்வரி) பொங்கிரு முந்நீ ரகமெலா நோக்குபு திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயா லெங்கே ளிதனகத் துள்வழிக் காட்டீமோ (கலி-144) காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ ... ... ... ... மாலை (கலி-120) நீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே (கலி-123) எனவரும். புள்ளெனவே வண்டு முதலியனவும் அடங்கும். அம்மெ னிணர வடம்புகா ளன்னங்காள் (சிலப்-கானல்) ஒழிந்தன வந்துழிக்காண்க. ஆய்வுரை : இது, கேட்டற் பொருண்மைக்கண் வருவதோர் மரவு வழு அமைக்கின்றது. (இ-ள்) ஞாயிறு திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், என்பனவும் தனிமையுணர்வு மிகுதிப்படும் பொழுது, பறவை நெஞ்சம் எனச் சொல்லப்பட்டனவும் ஆகிய பதினொன்றும் ஒன்றைக் கூறுதலும் கேட்டலும் இல்லாத அவை போல்வன பிறவும் தாம் கருதிய நெறியினால் ஒன்றைச் சொல்லுவன போலவும் கேட்பன் போலவும் சொல்லி அமையப் பெறும் என்பர் புலவர் எ-று. ஏகாரம் எண்ணுதற் பொருளில் இடையிட்டு வந்தமை காண்க. கேளாதன சில பொருள்கள் கேட்பனவாகவும் மறுத்துரைப் பனவாகவும் செய்யுந் திறமில்லாதன செய்வனவாகவும் பொருளியலுள் வழுவமைக்கப்பட்டன. அவற்றுட் சில இலக்கண வகையாற் கூறுவனவும் கேட்பனவுமாகச் செய்யுள் செய்தலும் புலனெறி வழக்கமாம் என்பதுணர்த்துவார். நுதலிய நெறியாற் சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர் என்றார் ஆசிரியர். உதாரணம் முன்னுரைகளிற் காட்டப்பெற்றன. 193. ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங் கரும நிகழ்ச்சி இடமென மொழிப. இளம்பூரணம் : என்---எனின். நிறுத்த முறையானே இடமாமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர் என்றவாறு.1 நிகழ்ச்சி, நிகழ்ந்தவிடம். ஒருநெறிப் gLjyhtJ---mfkhÆD« புறமாயினும் ஒரு பொருண்மேல் வருதல். ஓரியல் KojyhtJ---mf¤â‹f£ களவென்றானும் கற் பென்றானும் அவற்றின் விரிவகையில் ஒன்றானும் பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானு மீட்டலானு மேற்செலவானும் எயில் வளைத்தலானும் யாதானுமோ ரியல்புபற்றி வருதல். கரும ÃfœjyhtJ---m¥bghUis¥g‰¿ யாதானு மொரு வினை நிகழுமிடம் இன்னுங் கருமநிகழ்ச்சி என்றதனால் தன்மை முன்னிலை படர்க்கை யென்பனவுங் கொள்ளப்படும். செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை (குறள் 951) என்றவழிப் பிரிவுப் பொருண்மை நிகழும் இடமாயிற்று. முன் னின்றானைக் கூறுதலின் முன்னிலை யென்னும் இடமாயிற்று யாதானுமோர் கருமம்நிகழ்வுழி அதற்காகும் இடத்தொடுங் கூட நிகழ்தல் வேண்டுமென்று இப்பொருள் கூறப்பட்டது. ஒருநெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம். அஃதாவது, தலைமகளொடு புணர்தல்வேண்டித் தோழியை யிரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்கவுரை கூறாது தன்னாற்றலும் பிறவுங் கூறுதல். மெல்லியல் நல்லாருள் மென்மை அதுவிறந் தொன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை யெல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல். (நாலடி. 188) இதனானு மறிக. அன்றியும், நெடும்புனலுள் வெல்லு முதலை அடும்புனலுள் நீங்கி னதனைப் பிற (குறள். 495) இதுவும் இடனறிதல். உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். (குறள். 922) இது தன்மையானையும் முன்னின்றானையும் ஒழித்துப் படர்க்கையானைத் தொழிற்படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச்சொல் படர்க்கைப் பெயரொடு முடிந்தது. பிறவு மன்ன. (193) பேராசிரியம் : இஃது, களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை இடமென்று கூறுப (எ-று). இடமெனினுங் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுட்கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற்கேதுவாகிய தோர் உறுப்பினை இடமென்றானென்பது. ஒரு நெறிப்படுதலென்பது, ஒருவழிப் பலவுந் தொகுதல்; ஓரியலென்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணமொன்றாதல்: அஃதாவது, காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுமென்று இன்னோ ரன்ன எல்லாம் ஒரு நெறிப்பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சி யென்பது காமப்புணர்ச்சி யென்னுஞ் செயப்படு பொருணிகழ்ச்சி அஃது இடமெனப்பட்டது.1 இது வினைசெய்யிடம் நிலமாயின முன்னர்த் திணையெனப்பட்டது. காலம் முன்னர்ச் சொல்லுதும் எலுவ சிறாஅ ரேமுறு நண்ப (குறுந்:129) என்னும் பாட்டும், கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் னெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சில் லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. (குறுந்:280) v‹D« gh£L« gh§f‰T£lnk ïldhfxUtÊ¥ g£ld; v‹id?நின் வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினவிய பாங்கற்கு இதனினானாயிற்றென்று உரைத்ததூஉம் அதற்குப் பாங்கன் கழறினானை எதிர்மறுத்ததூஉமென இரண்டும் பாங்கற் கூட்டத்துப்பட்டு ஓரியலான் முடிந்தன. அவை மேற்கூறிய வகையானே கண்டுகொள்க. (198) நச்சினார்க்கினியம் : இஃது களமெனப்பட்ட வுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) பலவும் ஒருவழித் தொக்கவற்றுக்கெல்லாம் ஓரிலக் கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை யிடமென்று கூறுப. எ-று. களமெனினும் இடமெனினு மொக்கும். அது ஒருசெய்யுட் கேட்டால் இது இன்ன இடத்து நிகழ்ந்ததென் றறிதற்கு ஏதுவாயதோ ருறுப்பு. அது காட்சியும், ஐயமுந் துணிவும், புணர்ச்சியும் நயப்பும் பிரிவேக்கமும் வன்புறையும் இன்னோரன்னவும் ஒரு நெறிப்பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத்தான் முடியு மென்பது. கரும நிகழ்ச்சியென்பது காமப்புணர்ச்சியென்னுஞ் செயப்படுபொருணிகழ்ச்சி. இது வினைசெயிடம். எலுவ சிறாஅர் (குறுந்-129) கேளிர் வாழியோ (குறுந்-280) என்பன பாங்கற் கூட்டமிடனாக ஒருவழிப்பட்டன. பிறவு மன்ன. இது புறத்திணைக்கு மொக்கும்.1 ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே செய்யுட்குரிய களன் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒருநெறிப்பட்டு ஓரியல்பாக முடியும் கரும நிகழ்ச்சி இடம் எனப்படும் எ-று. ஒரு செய்யுளைக் கூறக்கேட்டால் இதன்கண் கூறப்படும் பொருள் நிகழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது என அறிந்து கொள்ளுதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும் இடமெனினும் களம் எனினும் ஒக்கும். ஒருநெறிப்படுதலாவது, அகத்திணை புறத்திணை என்ப வற்றுள் ஏதேனும் ஒருதிணைக்கண் வருதல். ஓரியல் முடிதலாவது, அகத்திணைக்கண் களவு கற்பு என்பவற்றுள் ஒன்றைப் பற்றியோ அல்லது அவற்றின் விரியாகிய இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ இனி, புறத்திணைக்கண் நிரைகோடல், மீட்டல், மேற்சேறல் முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ வருதல் கருமநிகழ்ச்சியாவது, மேற்கூறிய அகமும் புறமும் ஆகிய பொருட்பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப்பற்றி நிகழும் வினைநிகழ்ச்சி. இது வினைசெய்இடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற்சொல்லப்பட்ட நிலப்பகுதிகள் முன்னர்த் திணையென அடக்கப்பட்டன ஆதலால் ஈண்டு இட மென்றது வினைசெய் இடத்தையே யென்பது நன்கு புலனாம். இனி, கருமநிகழ்ச்சி யென்றதனால் அந்நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை முன்னிலை படர்க்கை என்பனவும் இடமெனக் கொள்ளப்படும். 194. இறப்பே நிகழ்வே எதிர தென்னுந் திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப்1 பொருள்நிகழ வுரைப்பது கால மாகும். இளம்பூரணம் : என்---எனின். நிறுத்தமுறையானே காலமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமெனக் கூறப் பட்டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்குமாறு பொரு ணிகழ்ச்சியைக் கூறுவது காலமாகும் என்றவாறு. முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே இஃது இறந்த காலத்தின்கட் புணர்ச்சியுண்மை தோன்ற வந்தது.2 இனி. அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர (நற்றிணை 10) என்றவழி நிகழ்காலம் இளமைப் பருவமென்பது தோன்ற வந்தது.1 இதனுள், நீத்தலோம்புமதி யென்பது எதிர்காலங் குறித்து நின்றது2 இவ்வகையினாற் காலமுமிடமும் எல்லாச் செய்யுளின் கண்ணும் வருமென்று கொள்க. (194) பேராசிரியம் : இது, கால முணர்த்துகின்றது. (இ-ள்) மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச் செய்யுளுட் டோன்றச் செய்யிற் காலமென்னும் உறுப்பாம் (எ-று) பொருணிகழ்ச்சியைக் காலமென்றதென்னை? காலமென வேறு பொருள் இல்லதுபோலவெனின்3 அஃது ஈண்டாராய்ச்சி யின்று நியாய நூலாராய்ச்சி யென்க4 வில்லோன் காலன கழலே தொடியோள் ... ... வேய்பயி லழுவம் முன்னி யோரோ (குறுந். 7) என்னும் பாட்டினுள் வில்லொனுந் தொடியோளும் பொரு ளெனப்படும்; வேய்பயி லழுவம் முன்னி யோரே என்பது அப் பொருணிகழ்ச்சியான் இறந்தகால மெனப்படும். அப் பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினா ரென்பது. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே (குறுந்; 71) என்பது, நிகழ்காலம்; பகலும் பெறுவையிவ டடமென் றோளே (கலி: 49) என்பது, எதிர்காலம். புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையா தென்பது. பெரும் பொழுது சிறுபொழு தென்பன ஈண்டுத் திணையெனப்பட் டடங்கின; என்னை? முதலும் கருவும் உரிப்பொருளுங் கூட்டித் âizahfÈ‹. (202) நச்சினார்க்கினியம் : இது காலமென்னுமுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்). இறப்........J எ-து. இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் முன்று காலத்தே. இயல்... மருங்கில் எ-து எல்லாத் திணையும் நிகழ்கின்ற நிகழ்ச்சிக்கண்ணே பொருணிகழ்வுணரத் தெரிந்துணரவுரைப்பது காலமாகும். என்பது பொருணிகழ்ச்சி யுணரத் தெரிந்தனரா யுரைப்பது காலமென்னும் உறுப்பாம் எ-று. உ-ம். வில்லோன் காலனகழலே.....K‹Ånahnu” (குறுந்: 7) இதனுள் வில்லோன் தொடியோளென்பன பொருள் முன்னியோர் எ-து, தம்பொருள் நிகழ்ச்சியாகலின் இஃதிறந்த- காலமெனப்படும். இதற்குச் சிறந்தாரவர்களாதலின் அவர்களே பொருளாயினார். மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பேயரும்பிaசுணங்»னம்பக£டிளமுலைப் பெருந்jணுணுகியநுசு¥பிற் கல்bகழுகாdவர்நšகுறுமகnள (குWந்:71) இது நிகழ்காலம். பகலும் பெறுவையிவ டடமென் றோளே (கலி 36) இஃதெதிர்காலம். புறத்திற்கு மிவ்வாறே யின்றியமையாதென்பது; பெரும் பொழுதுஞ் சிறுபொழுதும் Kjš,கரு.உரி¥bghUnshL கூடித் திணையாகலின் இக்காலம் அவற்றின்வேறாம்.1 ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே காலம் என்னும் உறுப்பு உணர்த்து கின்றது. (இ-ள்) இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் கூறப்பட்டு இயலும் மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சியினை ஆராய்ந்து உணருமாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அது காலம் என்னும் உறுப்பாகும எ-று. பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகிய பருவ காலங்கள் முதல், கரு, உரிப்பொருள் என்பவற்றோடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேறாகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுச் செய்யுட்குரிய காலம் என்னும் உறுப்பாகக் கொண்டார் ஆசிரியர். 195. இதுநனி பயக்கும் இதன்மா றென்னுந்2 தொகுநிலைக் கிளவி3 பயனெனப் படுமே. இளம்பூரணம் : என்---எனின் நிறுத்தமுறையானே பயனாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதன் பின்பு மிதனைப்பயக்கு மென விரித்துக்கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக்கூறுதல் பயனெனப்படும் என்றவாறு. சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே இதனாற் பயன் வரைந்து கோடல் வேண்டும் என்பது ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (குறள் 323) இதனாற் பயன் நன்மை வேண்டுவார் இவ்வாறு செய்தல் வேண்டு மென்றல். இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன் படக்கூறல் வேண்டு மென்பது கருதிப் பயனென ஒருபொருள் கூறினார். (195) பேராசிரியம் : இது, முறையானே பயனென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயனென்னும் உறுப்பாம் (எ-று). மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே என்னும் பாட்டு, தோழியைத் தூதுவிடுவாளாதற் பயன்பட வந்தது. இவ்வாறெல்லாப் பாட்டும் பயனுறுப்பாகவன்றி1 வாராவென்க. இவை புறத்திற்கும் ஒக்கும். (203) நச்சினார்க்கினியம் : இது பயனென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துக் கூறப்படும் பொருளும் பயனென்னு முறுப்பாம். எ-று. உ-ம். மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியாம் வாழு மாறே இது தோழியைத் தூதுவிடுதல் பயனாகவந்தது. இது புறத்திற்கு மொக்கும். இங்ஙனம் பயனுறுப்பாகவே செய்யுள் வருமாறுணர்க1 ஆய்வுரை : இது, பயன் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணரவைத்தல் பயன் என்னும் உறுப்பாம் எ-று. எனவே சொல்லிய சொல்லாற் பிறிதொன்று பயப்பச்செய்தல் பயன் என்னும் உறுப்பு என்பது பெறப்படும். இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன்படக் கூறல் வேண்டும் என்பது கருதிப் பயன் என ஒருபொருள் கூறினார் என்பர் இளம்பூரணர். 196. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்2 மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். இளம்பூரணம் : என்-எனின். நிறுத்தமுறையானே மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) யாதானுமொன்றைக் கூறியவழி யதன்கட் பொருண்மையை விசாரித்துணர்தலன்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப் பாடென்னும் உறுப்பாம் என்றவாறு. ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. (புறம். 255) இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறு கண்டு கொள்க. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டு மென்பது கருத்து. (196) பேராசிரியம் : இது, bkŒ¥gh£LW¥òz®¤J»‹wJ. (இ - ள்.) உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்துச் சொல்லப்படும் பொருள் தானே வெளிப்பட்டாங்குக் f©ÙuU«g‹ மெய்ம்- மயிர் சிலர்த்தன் முதலாகிய சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் (எ-று). கவிப்பொருளுணர்ந்தால் அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென்றான், அது தேவருலகங் கூறினும் அதனைக் கண்டாங்கறியச்செய்தல் செய்யுளுறுப்பாம்1 என்றவாறு. அவை, மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன் மெய்பெறா மழலையில் விளங்குபூ ணனைத்தர (கலி: 81) என்றாற்போல வருவன. தலைவரு பொருளா னெனவே நோக்குறுப்பால், உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் கவி கண் காட்டும் எனவுஞ் சொல்லுப.1 (204) நச்சினார்க்கினியம் : இது மெய்ப்பாடென்னும் உறுப்புக் கூறுகின்றது. அஃதாவது உலகத்தார் உள்ளநிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல். உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்து வந்த பொருளானே கண்ணீரரும்பல், மெய்ம்மயிர்சிலிர்த்தன் முதலிய சத்துவம் படுமாறு வெளிப்படச்செய்வது மெய்ப்பாடென்னு முறுப்பாம். எ-று. அது தேவருலக முதலியவற்றைக் கூறினுங் கண்டாங்கறியச் செய்யுள் செய்தல் செய்யுளுறுப்பென்றார். உ-ம் மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை யுருள்கல நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகி லரிபொலி கிண்கிணி யார்ப்போவா தடிதட்பப் பாலோ டலர்ந்த முலைமுறந்து முற்றத்தக் கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா வாலமர் செல்வ னணிகால் பெருவிறல் போல வருமென் னுயிர் (கலி-81) இவை போல்வனவற்றுள் அவ்வாறு காண்க. தலைவரு பொருளான் எனவே நோக்குறுப்பானுணர்ந்த பொருட்பிழம் பினைக் காட்டுவது மெய்ப்பாடாமென்றுகொள்க1 ஆய்வுரை : இது, செய்யுட்குரிய மெய்ப்பாடு என்னும் உறுப்பு உணர்த்து கின்றது. (இ-ள்) யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்ந்-துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்த அப்பொருள் தானே வெளிப் பட்டுத் தோன்றினாற் போன்று கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்றுமாற்றால் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடு என்னும் உறுப்பாகும் எ-று. செய்யுளின் பொருளை உணர்ந்தால் அதனாலே சொல்லப் -படும் பொருள் கற்போர்க்கு எதிரே தோன்றினாற் போன்று அறிவதனை மெய்ப்பாடு என்றார் ஆசிரியர். அஃதாவது தேவருலகத்தைக் குறித்துக் கூறினாலும் அதனை நேரே கண்டாற் போன்று அறியச் செய்தல் மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப் பாகும் எனவும், நோக்கு என்னும் செய்யுளுறுப்பினால் உணர்ந்த பொருளின் வடிவத்தைக் கற்போர் முன்னிலையிற் காட்டுவது மெய்ப்பாடு எனவும், அதுகுறித்தே கவி கண்காட்டும் என அறிஞர் கூறுவர் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு உளங்கொளத் தகுவதாகும். 197. எண்வகை இயனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே. இளம்பூரணம் : என்--எனின். மெய்ப்பாடாவது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது நகை முதலாகிய எட்டு மெய்ப்பாட்டு நெறி யையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடைத்து என்றவாறு.2 அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க. (197) பேராசிரியம் : இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ-ள்) இதுவும் மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே; பிறி திலக்கணத்தனவென்று கொள்ளற்க (எ-று).1 எனவே, நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை (தொல்-மெய்ப்: 3) என அவை நந்நான்காமெனவும் மெய்ப்பாட்டியலுட் கூறியவா றெல்லாம் பிறவாற்றான் வேறுபடுவனவுங் கொள்ளப்படுமென்ற வாறு. (205) நச்சினார்க்கினியம் : இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை கிடைத்திலது. இவ்வியலிற் பேராசிரியர் உரையினையே நச்சினார்க்கினியர் பெரிதுந் தழுவி உரை வரைந்திருத்தலால் இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் வரைந்த வுரையே நச்சினார்க்கனியர்க்கும் உடம்பாடானதென்று கொள்க. ஆய்வுரை : இது, முன்னர் மெய்ப்பாட்டியலிற் கூறிய மெய்ப்பாட்டின் இலக்கணம் இகந்துபடாமைக் காக்கின்றது. (இ ள்) முற்கூறிய மெய்ப்பாடாகிய அது, நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டு நெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தையுடையதாகும். எ-று முன்னுறக் கிளந்த முடிவினது என்றது முன் மெய்ப்பாட்டியலிற் கூறப்பட்ட இலக்கணத்திற் பிறழாது வருதலை. முடிவினது அது என்பதனை அது, முடிவினது எனமாறிக் கூட்டுக. அது என்றது, முற்கூறிய மெய்ப்பாடென்னும் உறுப்பினை. 198. சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சம் ஆகும். இளம்பூரணம் : என்--எனின். நிறுத்தமுறையானே எச்சவகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்) பிறிதோர் சொல்லொடும் பிறிதோர் குறிப்பொடும் முடிவுகொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும் என்றவாறு. எனவே, சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகையாயின. அது எச்சவியலுட் பிரிநிலை வினை யென்னுஞ் சூத்திரத்துள் (தொல், சொல். எச்ச. 34) பிரிநிலையென்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகை யானும் வருவன சொல்லெச்சமாம். குறிப்பென்றோதப் பட்டது குறிப்பெச்சமாம்.1 (198) பேராசிரியம் : இஃது, எச்சங் கூறுகின்றது. (இ-ள்) கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தோடு பொருந்திய கிளவி, எச்சமென்னும் உறுப்பாம் (எ-று). முடிவுகொள் இயற்கை யெனவே செய்யுளின்கண்ணதன்றிப் பின்கொணர்ந்து முடிக்கப்படுமென்பது பெற்றாம்.2 (உ-ம்) செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந்: 1) எனச் செய்யுண் முடிந்தவழியும், இவற்றான் யாங்குறை-யுடையேம் அல்லேமென்று தலைவற்குச் சொன்னாளேல் அது T‰bw¢rkh«. என்னை? அவ்வாறு கூறவுஞ் சிதைந்ததின்மையின்1 தலைமகட்குச் சொன்னாளேல் அது F¿¥bg¢r«: என்னை? அது காண்பாயாகிற் காணெனத் தலைமகளை இடத்துய்த்து நீக்கிய குறிப்பினளாக்கி அதுதான் கூறாளாகலினென்பது.2 (206) நச்சினார்க்கினியம் : இது முறையே யெச்சமென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ ள்). கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்-கணத்தொடு பொருந்திய கிளவி யெச்சமென்னு முறுப்பாம். எ-று முடிவுகொளியற்கையெனவே செய்யுட்கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடித்தல் பெற்றாம். உ-ம். செங்களம் படக்கொன்ற ..Fiy¡fhªதட்டே” (குறுª -1)இக்காந்தளாšயா§குறையுடையமல்லமென¤தலைவற்கு¡கூறி‰கூற்றெச்சமாம். அக்கூற்றுஞ் செய்யுட்குச் சிதைவின்மையின் அதுகாண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி யிடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம். அவனைக் கூடுகவெனத்தான் கூறாளாகலின.3 ஆய்வுரை : இஃது எச்சம் உணர்த்துகின்றது. (இ-ள்) கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி நின்று பின்னர்க் கொணர்ந்து முடிக்கப்படும் ïyக்கணத்தொடுgருந்தியதுஎ¢சம்எ‹னும்உWப்பாகும்எ-று. எdnt கூற்றெச்சம் குறிப்பெச்சம் என எச்சம் இருவகைப் படும் என்பதாயிற்று. இவ்விருவகை யெச்சத்திற்கும் செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த (குறுந்-1) எனவரும் குறுந்தொகைப் பாடலை உதாரணமாகக் காட்டிப் பேராசிரியர் தந்த விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். 199. இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது1 முன்னம். இளம்பூரணம் : என்-எனின். நிறுத்தமுறையானே முன்னமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத்-தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை யுரைப்பது முன்னமாம் என்றவாறு. எனவே, இடமுங் காலமு முணர்ந்து கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலுஞ் செய்யுளுறுப்பாம் என்றவாறு.2 வந்ததுகொண்டு வாராதது முடித்த லென்பதனாற் காலமுங் கொள்க.3 (199) பேராசிரியம் : இது, முன்னமென்று கூறப்பட்ட உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) யாதோரிடத்தானும் யாதானுமொரு மொழி தோன்றியக்கால் இம்மொழி சொல்லுதற்குரியாருங் கேட்டற் குரியாரும் இன்னாரென்று அறியுமாற்றான் அங்ஙனம் அறிதற்கு ஓரிடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்குங் கேட்பார்க்கு மேற்றசெய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் (எ-று). இவரிவர்க் குரியவென்று அறிவான், செய்யுட் கேட்டா னெனவும், அவ்விடத் தவரவர்க் குரைக்கவென்றான் ஆசிரியனெனவுங் கொள்க.1 என்றென்பது எனவென்பதுபோலச் சொல்லினெச்ச மாதலும் வினையெச்சமாதலும் உடைமையின் இஃது, எனவெ னெச்சம் வினையொடு முடிமே (தொல்-சொல் எச்: 42) என்பதொரு வினையெஞ்சி நிற்கும். அவ்வினைதான் எச்சமாகலான் உரைப்பதென்னும் வினைகொண்டு முடியுமென்பது. யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி :89) என்றக்கால் இம்மாற்றஞ் சொல்லுகின்றாள் தலைவி யெனவுஞ், சொல்லப்பட்டான் தலைமகனெனவும் முன்னத்தான் அறியப் படுத்தலின் இது முன்னவுறுப்பாயிற்று2 ஒழிந்தனவற்றிக்கும் இஃதொக்கும். இவையெல்லாம், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றானென்பது.3 (207) நச்சினார்க்கினியம் : இது முன்னமென்கின்ற உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரி யோருங் கேட்டற்குரியோரும் இன்னாரென்று அச்செய்யுட்கட் டோன்றின் அறியாமற் றானங்ஙன மறிதற் குரித்தாக நாட்டிய தோரிடத்தே கூறுவோர்க்குங் கேட்போருக்கும் ஏற்றயுரையாகச் செய்யுளுட் கிடத்திக் கூறுவது முன்னம்1 எ-று. இவரிவர்க்குரிய வென்றறிவான் செய்யுட் கேட்போனெனவும் அவ்விடத் தவரவர்க் குரைக்க வென்றார் ஆசிரியரெனவுங் கொள்க. என்றென்பது ஈண்டுவினையெச்சம் ; சொல்லெச்சமன்று, அறியவென வொருவினை வருவிக்க. அது உரைப்பதையென்னும் வினைப்பெயரோடு முடியும். (உ-ம்) யாரிவ னெங்கூந்த கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி-89) என்றக்கால் இது கூறுகின்றாள் தலைவி யென்பதூஉங் கூறப் பட்டான் தலைவனென்பதூஉம் முன்னத்தான் உணரப்பட்டவாறு காண்க. இவை அகம் புற மென்னும் இரண்டற்கும் பொது. ஆய்வுரை : இது முன்னம் என்னும் உறுப்பாமாறு கூறுகின்றது. (இ-ள்) இவ்விடத்துத் தோன்றிய இக் கூற்றினைச் சொல்லுதற் குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னார் என்று அறியுமாற்றால் அவ்வாறு அறிதற்கு ஓர் இடம் நாட்டி அவ்விடத்துக கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் என்னும் உறுப்பாகும் எ-று. யார்இவன் என்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக்கு ஒத்த படிறுடைத்து (கலித்-89) என்றக்கால், இதனைக் கூறுகின்றாள் தலைவியென்பதும் இங்ஙனங் கூறப்பட்டான் தலைவன் என்பதும் குறிப்பினால் அறிய வைத்தலின் இது முன்னம் என்னும் உறுப்பாயிற்று. 200. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னாது1 பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப. இளம்பூரணம் : என் -- எனின் நிறுத்தமுறையானே பொருள்வகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இன்பமுந் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு மென்று சொல்லப்பட்டவை வழுவுநெறியின்றி இத்திணைக்குரிய பொருள் இப்பொருளென்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு.2 (200) பேராசிரியம் : இது, பொருள்வகை கூறுகின்றது. (இ-ள்.) இன்பமுந் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமுமெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத்திணைக்கு இது பொருளென்று ஆசிரியனோதிய உரிப்பொருளன்றி அவற்றுக் கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும் (எ - று).3 வகையென்றதனாற் புலவன்றான் வகைத்ததே பொருளென்று கொள்க. அஃதன்றிச் செய்யுள் செய்தலாகாதென்பது இதன் கருத்து.1 அவை, கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே (அகம். 9) என்றாற்போலச் செய்யுள் செய்தவன் தானே வகுப்பன வெல் லாங்கோடல்; இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும் முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமை என்பது எல்லா வுரிப்பொருட்கும் ஏற்கப் பல்வேறு வகையாற் செய்தல். (208) நச்சினார்க்கினியம் : இது பொருளென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) ï‹...ன்றி, எ-து இன்பமுந் துன்பமும்புணர்தலும்பிரிதலும்உலகவொழுக்கமுமெனப்பட்டஇவைதப்பும்வழியின்றி,இது...J எ-துஇத்திணைக்குரியபொUளிதுவாகவென்றுஆசிÇயரோதியபொருள‹றி,பொJ..g எ.து அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும். எ-று. இன்பதுன்பங் கூறுதலிற் புறத்திற்குங் கொள்க.2 ஒழுக்கம் இரண்டற்குங் கொள்க. வகையென்றதனாற் புலவன்றான் வகைத்ததே bபாருளென்றுbகாள்க.mJÉ‹¿¢ செய்யுள் செய்தலாகாதென்பது கருத்து. உ-ம். கைகவியாச் bசன்றுfண்புதையாக்Fறுகிப்ãடிக்கைaன்னப்ãன்னகந்Ôண்டித்bதாடிக்கைiதவரத்nதாய்ந்தன்றுbகால்லோeணொடுÄடைந்தfற்பின்tணுதyந்தீங்»ளவிக்Fறுமகண்bமன்றோள்bபறநசைஇச்bசன்றவென்bனஞ்சே (அகம்- 9)v‹wh‰nghy¥ புலவன் வகுப்பனவாம். இப்பாட்டுப் பாலை யேனும் முல்லை முதலியனவற்றிற்கும் இப்பொருள் பொதுவாம். பொதுமையென்றது எல்லாவுரிப்பொருட்கு மேற்றுப் பலவேறு வகையாகச் செய்தல். இவ்வாறு வருவன புறப்பொருள் கூறிய வற்றுள்ளுங்காண்க. ஆய்வுரை : இது, பொருள்வகையாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்) இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத நெறியால் இத்திணைக்கு இது பொருள் என ஓதிய உரிப்பொருளன்றி எல்லாவுரிப் பொருட்கும் ஏற்பப் (புலவரால் தோற்றிக் கொள்ளப்பட்டுப்) பொதுவாகி நிற்கும் பொருளினைப் பொருள்வகை யென்பர் ஆசிரியர் எ-று. செய்யுள் செய்யும் புலவன் தன் புலமைத் திறத்தால் தானே வகுத்துக் கூறும் பொருட்கூறு அனைத்தும் பொருள்வகை யென்னும் இவ்வுறுப்பின்பாற் பட்டு அடங்கும் என்பது பேராசிரியர் கருத்தாகும். 201. அவ்வவ மாக்களும்1 விலங்கும் அன்றிப் பிறவவண் வரினுங் திறவதின் நாடித்2 தத்தம் இயலான்1 மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே. இளம்பூரணம் : எனின்--எனின். நிறுத்தமுறையானே துறையாமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) அகப்பொருளாலாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப்-பொருளாகிய ஏழு பெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்துபட்ட மாவும் புள்ளும், உம்மையால் மரமுதலாயினவும், பிறவவண் வரினுமென்றதனால் நிலம் நீர்தீ வளி முதலாயினவும் செய்யுட்கண் வருமிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்போடும் பொருந்திய மரபோடும் முடியின், அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் என்றவாறு. (201) பேராசிரியம் : இது, துறையென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) ஐவகை நிலத்திற்கும் உரியனவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறன்றிப் படைத்துச் செயினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்க-மெனப்படும் (எ-று). மார்க்கமெனினும் துறையெனினும் ஒக்கும். ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்கால் (கலி 56) என்னுங் கலியினுள், கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை என, நெய்தற் றலைமகள்போலக் கூறி அவளை மருதநிலத்துக் கண்டான்போல, ஊர்க்கா னிவந்த பொதும்பருள் எனவுஞ் சொல்லிப் பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தலுரிப் பொருளான் முடித்தான்; இவ்வாறு மயங்கச் செய்யினுங் குறிஞ்சித் துறைப்பாற்படச் செய்தமையின் அத்துறையுறுப்பான் வந்ததென்பது. இதுவும் மேலைப் பொருள்வகைபோலப் புலவராற் செய்து கொள்ளப்படுவதாகலான் அதற்குப்பின் வைத்தானென்பது. மற்று, எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் (தொல்-அகத்: 19) என்றதனான், இது முடியாதோவெனின், அது கருப்பொருண் மயங்குதற்குக் கூறினான், இது மக்களேயன்றித் தலைவனுந் தலைவியும் மயங்குமாறும் நான்கு திணையும் ஒன்றொன்றனோடு மயங்குமாறுங் கூறி அது புலவராற் செய்து கொள்ளுவதோர் உறுப்பெனவும் ஓதிவந்த இலக்கணத்த தன்றாயினும் அது பெறு மெனவும் கூறினானென்பது.1 நச்சினார்க்கினியம் : இது துறையென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) m›t...றி எ-து ஐவகை நிலத்திற்கு முரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறன்றி, பிறதிறவதின் நாடியவண் வரினும் எ-து பிறவற்றைத் திறவிதாக ஆராய்ந்த செய்யுட்கண்ணே புலவன் படைத்துச் செய்யினும் ஒக்கும்.2 உ-ம். ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லா ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்சொ லாண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ளீங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலி - 5) இதனுள் ஞாழல் முடித்தாளென நெய்தற் றலைவி போலக்கூறி ஊர்க்கா னிவந்த பொதும்பருள் என்றதனான் மருதத்துக்-கண்டான்போலக்கூறிப் பின் குறிஞ்சிப்பொருளாகிய புணர்தல் நிமிர்த்தம் உரிப்பொருளாக முடித்தான்.1 இவ்வாறு மயங்கலுங் குறிஞ்சித்துறைப்பாற்பட்ட துறையுறுப்பான் வந்ததென்க. இது ஓதிய இலக்கணமன்றாயினும் முற்கூறிய பொருள்வகைபோற் புலவர் செய்ததோருறுப்பு. இதுவுங் கொள்ளப்பெறுமென்றார். இது புறத்திற்கும் ஒக்கும். ஆய்வுரை : இது, துறையாமாறு இதுவென வுணர்த்துகின்றது. (இ-ள்) ஐவகை நிலத்திற்கும் உரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் விலங்கு பறவை முதலியவும் தம்மில் மயங்கிவரினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல் ஒருதுறையின்பாற்படச் செய்தல் துறை யென்னும் உறுப்பாம் எ-று. எனவே, திணைக்குரிய முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒருதுறைப்பட வகுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச்செய்யுட்கு உளதாக அமைத்தல் துறை யென்னும் உறுப்பாம் என்றாராயிற்று. 202. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் இளம்பூரணம் என்--எனின். நிறுத்தமுறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று.1 (220) பேராசிரியம் : இது, மாட்டென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ-ள்) பொருள் கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும் இருவகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தலை மாட்டென்னும் உறுப்பென்று சொல்லுவர் செய்யுள் வழக்கின் (எ-று.) இதுவும் நால்வகைப் பொருள்கோ ளன்றிப் புலவரது வேறு செய்கை; அது, முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே (பத்துப்-பட்டின: (218-20) என நின்றது. பின்னர். வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே (பத்துப்.பட்டின : 300.301) எனச் சேய்த்தாகச் சென்று பொருள்கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருண்முடியத் தந்து உரைத்ததாம்.2 திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு (முத்தொள்ளாயிரம்:642) என்பது, அணுகிய நிலையெனப்படும்; பிறவும் அன்ன; மாட்டுத லென்பது கொண்டுவந்து கொளுத்துதல்.1 நச்சினார்க்கினியம் : இது மாட்டென்னும் உறுப்புக் கூறுகின்றது. மாட்டுதலாவது கொண்டு வந்து கொளுத்துதல். (இ-ள்.) அகன்-னும். எ-து பொருள்கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும், அணுகிக்கிடப்பச் செய்யினும் இயன்-தல் எ-து இவ்விருவகையானுஞ் சென்று பொருண்முடி-யுமாற்றாற் கொண்டுவந்து கூட்டி யுரைப்பச்செய்தல் மாட்கின் எ-து மாட்டென்னும் உறுப்பென்று கூறுவர் செய்யுள் வழக்கினுள். எ-று. இது மொழிமாற்றுப்பொருள்கோளன்றிப் புலவர் வேறு செய்வதோர் செய்கை. இது பலபொருட்டொடராற் பலவடியான் வரும் ஒருசெய்யுட்கண்ணும், பலசெய்யுளைப் பலபொருட் டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும். உ-ம். திருமுருகாற்றுப்படையுள் மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் கிளைக்கவின் றெருழுத கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ் நுறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரம்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ... ... பார் முதிர் பனிக்கடல் (திருமருகாற்றுப்படை) இதனுள் அடிமுதல் மேனியீறா யுள்ளவற்றையுடைய சூரர மகளிர் பலருடனே கிள்ளி, இடையிடுபு, வைத்து, பண்ணி, செரீஇ, இட்டு. வளைஇ, திளைப்ப, கொட்டி, அப்பி, தெறியா, ஏத்திப், பாடி, ஆடும் வெற்பில் அடுக்கத்துச் சோலையிற் காந்தட்கண்ணி மலைந்த சென்னியனென அகன்றும் அணுகியும் மாட்டியவாறுணர்க. இப்பாட்டும் பிறபாட்டுக்களும் இவ்வாறே மாட்டுறுப்பு வருமாறுணர்க. ஆரிய மன்னர் பறையின் என்பதுமது. இனிப் பல செய்யுட்கண் வருமாறு சிந்தாமணியுள் யாங்கூறிய வுரைகள் பலவற்றானு Kz®f1. அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்த சொற்றொடர்ந்து பொருள் தருவதோ ரின்பம் நோக்கிச் சான்றோர் இம்மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மைவரச் செய்யுள் செய்தலிற் பின்தொடர் நிலைச்செய்யுள் செய்தவர்களும் இம்மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார். இதுவும் பொருள்வகைபோற் புலவர் செய்துகொண்டதாயிற்று. ஆய்வுரை : இது, மாட்டு என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) செய்யுளிடத்தே கூறப்படும் பொருள் சேய்மைக் கண்ணே கிடப்பினும் அன்றி அணுகிய நிலையில் நிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும்படி கொண்டுவந்து இயைத்துணர வைத்தல் மாட்டு என்னும் உறுப்பென்று சொல்வர் செய்யுள் வழக்குணர்ந்த அறிஞர் எ-று. செய்யுளிடத்தே அகன்றும் அணுகியும் கிடந்த பொருள் களைக் கொண்டுவந்து ஒரு தொடராகக் கூட்டி முடித்தல் மாட்டு என்னும் உறுப்பாகும் என்பதாகும். மாட்டுதலாவது, தனித்து நிற்பதனை முன்னும் பின்னும் இயைபுடையதாயுள்ள பிறிதொன்றனோடு கொண்டுவந்து கூட்டி முடித்தல். இது, பலபொருட்டொடராற் பலவடியான் வரும் ஒரு செய்யுட்கண்ணும், பல செய்யுளைப் பலபொருட் டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும் எனவும், அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்தசொல் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றோர் இம்மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மையும் வரச் செய்யுள் செய்தார் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். உதாரணம் முன்னுரைகளிற் காண்க. 203. மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி உடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே1 இளம்பூரணம் : இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும் (203) பேராசிரியம் : இது, மேற்கூறியவற்றுள் ஒருசாரனவற்றுக்குப் புறனடை. (இ - ள்.) மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் அச் செய்யுளுட் கிடந்தவாறே அமையச் செய்யவும்பெறுஞ் செய்யுள் (எ - று).2 எச்சமும் மாட்டும் என்னாது மாட்டு முற்கூறியதென்னை யெனின் எச்சம் முதலாகிய ஐந்து உறுப்பும் இவ்விதி பெறுமென்று கோடற்கு எதிர் சென்று தழீஇயினானென்பது.3 (உ - ம்) வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையொடு என்னா யினள்கொ லென்னா தோரே என்பது, v¢rÄ‹¿ வந்தது. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந்: கடவுள் வாழ்த்து) என்பது, முன்னமின்றி வந்தது. மருந்தெனின் மருந்தே (குறுந்: 71) என்பது, bghUË‹¿ வந்தது. ஈயற்புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகம்: 8) என்பது, JiwtifÆ‹¿ வந்தது. யானே யீண்டையேனே (குறுந்: 54) என்பது, மாட்டின்றி வந்தது. இடைநின்ற மூன்றினை இலேசினாற் கொண்டு இரண்டினை1 எடுத்தோதினான். இவை இரண்டும் அவற்றதுதுணை இன்றியமையாச் சிறப்பினவல்ல என்றற் கென்பது. (211) நச்சினார்க்கினியம் :- இது எய்தியதுவிலக்கிற்று. (இ-ள்). தொடர்நிலையென்பது முற்கூறிய இருவகைத் தொடர்நிலைச் செய்யுள். மாட்டு(-)றி எ-து முற்கூறிய மாட்டும் எச்சங்களும் நிறுத்தலின்றி உடனிலைமொழியினும் பெறும் எ-து. அச்செய்யுட் கிடந்தவாறே யமையச் செய்யினுஞ் செய்யுட்டன்மையைப் பெறும். எ-று. உ-ம். முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே அகன்று கிடந்து மாட்டின்றிவந்தது. யானே யீண்டையேனே (குறுந்-5) என்னும் பாட்டு அணுகி மாட்டின்றி வந்தது. áªjhkÂíŸ மாட்டும் எச்சமுமின்றி யுடனிலையா யமைந்தன பலவும யாம் கூறியவுரையானுணர்க. எச்சமும் மாட்டும் என்னாத முறைபிறழ்ச் சியானே எச்சமுதலிய நான்குறுப்பு மின்றி அச்செய்யுள் வரப் பெறும் என்று கொள்க.1 வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர்நிலைப் பைம்போ துளரிப் புதல நீலம் பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையோ டென்னா யினள்கொ லென்னா தோரே (குறுந்- 110) இது எச்சமின்றி வந்தது. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந்-கடவுள்வாழ்த்து) இப்பாட்டு முன்னமின்றி வந்தது. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே (குறுந் 71) இப்பாட்டுப் பொருளின்றிவந்தது. ஈயற்புற்றத்து (அகம் 7) என்னும் பாட்டுத் துறைவகையின்றி வந்தது. மாட்டும் எச்சமு மெடுத்தோதினார் முன்னமும் பொருளுந் துறைவகையும்போல இன்றியமையாச் சிறப்பினவல்ல வென்றற்கு.1 ஆய்வுரை : இது, மேற்கூறியவற்றுள் ஒருசாரனவற்றுக்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய மாட்டு, எச்சம் என்னும் இவ்வுறுப்புக்கள் மேற்கூறிய மாத்திரை முதலிய ஏனை யுறுப்புக்கள் போன்று அத்துணை இன்றியமையாதன அல்ல என்பது பெறப்படும். உடனிலை மொழிதலாவது, அகன்றும் அணுகியும் உள்ள சொற்களைக் கொண்டுவந்து கூட்டவேண்டாது அவைதாமே ஒருங்கு இயைந்து நின்று பொருள் தரும்படி ஒருங்கு இணைந்து கிடக்கும்படி செய்யுள் செய்தல். நிறுத்தமுறையானே எச்சமும் மாட்டும் என்னாது மாட்டும் எச்சமும் என மாட்டு என்பதனை முற்கூறிய அதனால் மாட்டு முதல் அதற்குமுன்னர்க் கூறப்பட்ட எச்சம் என்பது இறுதியாகவுள்ள ஐந்துறுப்புக்களுள், இடையே எண்ணப்பட்டுள்ள துறை, பொருள்வகை, முன்னம் என்னும் மூன்றுறுப்புக்களும் செய்யுட்கு இன்றியமையாதன அல்ல என்பது இலேசினாற் கொள்ளப்படும் எனவும் இவ்வைந்தனுள் மாட்டு எச்சம் என்னும் இரண்டையும் ஆசிரியர் எடுத்தோதினமையால் இடைநின்ற மூன்றுறுப்புக்களைப் போன்று இவையிரண்டும் அத்துணை இன்றியமையாச் சிறப்பின அல்ல எனவும் கருத்துரை வரைவர் பேராசிரியர். 204. வண்ணந் தாமே நாலைந் தென்ப,2 இளம்பூரணம் : என்-எனின். இனி நிறுத்தமுறையானே வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணமாவன இருபதாம் என்றவாறு. அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (204) பேராசிரியம் : இது, முறையானே ஈற்றுநின்ற வண்ணம் இத்துணைப் பகுதித் தென்கின்றது. (இ-ள்). வண்ணம் இருபது வகைப்படும் (எ-று). வண்ணமென்பது, சந்தவேறுபாடு. நூறும் பலவுமாகி வேறுபடினும் அவை ஈண்டடங்குமென்பதூஉம், அவ்வேறு பாட்டானெல்லாஞ் சந்தவேற்றுமை செய்யா வென்பதூஉங் கூறிய வாறு. அது நுண்ணுணர்வுடையார்க்குப் புலனாமென்பது.1 (212) நச்சினார்க்கினியம் : இது முறையே வண்ணம் இத்தனைப் பகுதித்தென்கின்றது. (இ-ள்). வண்ணந்தாம் இருபதென்று கூறுவர் புலவர். (எ-று) தானேயென்றார், அவை நூறும் பலவுமாக வேறுபடக்கொள்ளினும் இவ்விருபதின்கண்ணே யடங்கும் வேறு சந்தவேற்றுமை வெய்யா வென்றற்கு. அது நுண்ணுணர்வுடையோர்க்குப் புலனாமென்றுர்க.2 ஆய்வுரை : இது, வண்ணம் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) வண்ணமாவன இருபது வகைப்படும் என்பர் ஆசிரியர். எ-று. வண்ணம் என்பது, பாவின்கண்ணே நிகழும் ஓசை விகற்பமாகிய சந்தவேறுபாடு. அவை பின்வரும் சூத்திரங்களில் விரித்துரைக்கப்படும். 205. அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று ஆங்கென மொழிப1 அறிந்திசி னோரே. இளம்பூரணம் : என்-எனின். வண்ணத்திற்குப் பெயர் கூறுதல் நுதலிற்று. இதுவுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (205) பேராசிரியம் : இது, மேற்கூறப்பட்ட வண்ணங்களது பெயர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லிய நாலைந்து வண்ணமும் இவ்விருபது பெயர் வேறுபாட்டினவென்று சொல்லுப அவற்றை உணர்ந்த ஆசிரியர் (எ-று). இது,முறையாயினவாறென்னையெனின், இது, வரலாற்று முறைமையென்றற்கு ஆங்ஙனம்2 மொழிப அறிந்திசினோ- ரென்றானென்பது. அவையாமாறு சொல்லுகின்றான். (213) நச்சினார்க்கினியம் :- இது மேற்கூறப்பட்ட வண்ணங்களினது பெயர்வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்).முற்கூறியநாலைந்தும்அவ்விருபதுபெயர்வேறு...1 ஆய்வுரை : இது, மேற்குறித்த வண்ணங்களின் பெயர்களை விரித்துக் கூறுகின்றது. (இ-ள்) வண்ணமாவன பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், bநடுஞ்சீர்tண்ணம்,Fறுஞ்சீர்tண்ணம்,áத்திரtண்ணம்,eலிபுtண்ணம்,mகப்பாட்டுtண்ணம்,òறப்பாட்டுtண்ணம்,xGகுவ©ணம்,ஒ%உவ©ணம்,எ©ணுவ©ணம்.அif¥ò வண்ணம், முடுகு வண்ணம் என மேற்குறித்த அவை என்று கூறுவர் வண்ணத்தியல்பறிந்த ஆசிரியர் எ-று. ஆங்கு என மொழிப- மேற்குறித்த அவையென்று கூறுவர். 206 அவற்றுட் பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் இளம்பூரணம் : என்-எனின். பா வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பாஅ வண்ணமாவது சொற்சீரடியாகி நூலின்கட் பயின்றுவரும் என்றவாறு.2 அஇஉ அம்மூன்றுஞ் சுட்டு, (தொல். எழுத். நூன்மரபு.51) கொல்லே ஐயம் எல்லே இலக்கம் (தொல்.சொல் இடை (20) என வரும். (240) பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே பாஅவண்ண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பாஅவண்ணமென்பது, நூற்பாவண்ணம் (எ-று) எற்றுக்கு? நூற்பாற்பயிலு மென்றமையின்.1 இது சொற்சீரடித்தாகி வருமென்பது. இதனுட் பயிலு மெனவே அந்நூற் பாவினுளல்லது அகவலுள் இத்துணைப் பயிலாதென்பது;2 இது, வடவேங்கடந் தென்குமரி (தொல்: பாயிரம்) எனவும், எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப (தொல்.எழுத்து-நூன்: 1) எனவும், அவற்றுள், அஇஉ, எஒ என்னு மப்பா லைந்தும் (தொல்-எழுத்-நூன் :3) என்பது சொற்சீராகி அகவலுட் பயிலாது வந்தது. சொற்சீரடி யென்னாது சொற்சீர் என்றான் அடியோடு தொடராதுஞ் சொற்சீர் வருமாதலினென்பது, அவை, நன்றுபெரி தாகும் (தொல்-சொல்.உரிச்: 45) என்றாற்போல வேறாகி நிற்பன. கலியுள்ளும் பரிபாடலுள்ளுஞ் சொற்சீர்வருமென மேற்கூறினானாகலின் அவற்றுள்ளுஞ் சந்த வேற்றுமைப்பட்டன பாஅவண்ணமேயா மென்பது. (214) நச்சினார்க்கினியம் : 206 முதல் 210 வரை ஐந்து சூத்திரங்கட்கு உரையில்லை ஆய்வுரை : இது, பாஅவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள், பாஅவண்ணம் என்பது சொற்சீரடியினை யுடையதாகி நூற்பாவாகிய சூத்திரத்தின்கண் பயின்று வரும் எ-று. ஈண்டு நூல் என்றது, இலக்கணச் சூத்திரமாகிய நூற்பா வினையுணர்த்தி நின்றது. வண்ணங்களுக்குரிய உதாரணங்கள் முன்னைய உரைகளிற் காட்டப்பெற்றன. 207 தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும். இளம்பூரணம்: என்--எனின். தாஅவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு.1 உதாரணம் தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் கலுழ வாடா அவ்வரி ததைஇப் பசலையும் வைக றோறும் பைபையப் பெருக நீடார் இவணென நீமனங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழீ வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே (யாப்.வி.ப. 381) என்னும் பாட்டு. (207) பேராசிரியம்: (இ-ள்) இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் (எ-று) அவை பொழிப்பும் ஒரூஉவு மாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது.1 அடியிடையிட்டு வருவது தொடை வேற்று மையாவதல்லது வண்ணவேற்றுமை யாகாதென்பது. ஒரு செய்யுளுட் பலஅடிவந்தால் அவை எல்லாம் இடையிட்டுத்தொடுத்தல் வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅ வண்ண மெனப்படுமென்பது:2 எனவே, இவ்வண்ண வகைகளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக்கிடந்தனவல்ல; இவற்றை உறுப்பென்ற தன்மையாற் கந்திருவ நூலார் வண்ணங் கூறியவாறுபோல ஒரு செய்யுளுட்பலவும் வரப்பெறுமென்பதாம்.3 அவை, உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுரு:1) எனவும், உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை(ஐங்குறு-ப:456) எனவும் வரும். பிறவும் அன்ன. (315) ஆய்வுரை: இது, தாஅவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) தாஅவண்ணம் என்பது, எதுகை இடையிட்டு வரத் தொடுக்கப்படுவதாகும் எ-று. ஒன்றிடையிட்டு வருதல் தாவுதலாதலின் இடையிட்டு வந்த எதுகையினை யுடையது தாஅவண்ணம் ஆயிற்று. 208. வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே.1 இளம்பூரணம் : என்--எனின். வல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வல்லெழுத்து மிக்குவருவது வல்லிசை வண்ணமாம் என்றவாறு. பட்டொட்டி யன்ன தொடர்புமுடப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத் தொட்டிட்டுக் கொள்ளுங் கடற்சேர்ப்பன் நின்னொடு பட்டொட்டி யுள்ளம் விடாது நினையுமேன் விட்டொட்டி நீங்காதே ஒட்டு (யாப். வி. ப. 382) (208) பேராசிரியம் : (இ-ள்) வல்லிசைவண்ணம் வல்லெழுத்துப் பயின்று வரும் (எ-று.) வல்லெழுத்துப் பயின்று வருதலால் அப்பெயர்த்தாயிற்று.2 முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பத்துப்-பட்டினப்:21) எனவும், முட்டாட் டாமரைத் துஞ்சி (பத்துப் திருமுருகு: 73) எனவும் வரும், பிறவும். அன்ன. (216) ஆய்வுரை :- இது, வல்லிசை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) வல்லொற்று மிக்கு வருவது வல்லிசை வண்ணமாகும் எ-று. 209 மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. இளம்பூரணம் : என்--எனின். மெல்லிசை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து மிக்கது மெல்லிசை வண்ணமாம் என்றவாறு.1 பொன்னின் அன்ன புன்னை நுண்தாது மணியின் அன்ன நெய்தலங் கழனி மனவென உதிரு மாநீர்ச் சேர்ப்ப மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய மம்மர் மாலை வாநீ நன்மா மேனி நயந்தனை எனினே (யாப்.வி.ப.312) எனவரும். (209) பேராசிரியம்: (இ-ள்.) மெல்லெழுத்து மிகுவது மெல்லிசை வண்ணம் (எ-று.) ஒரு செய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச்செய்தால் இன்னாதாதலின் இவை உறுப்பெனப்பட்டு இடையிட்டு வருமென்றானென்பது.2 அவ்வாறு செய்யின் அவை மிறைக்கவி யெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும்3 பொன்னி னன்ன புன்னை நுண்டாது (யா. வி.ப: 352) என மெல்லெழுத்துப் பயின்றவாறு; ஆய்வுரை : இது, மெல்லிசை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) மெல்லொற்று மிக்கு வருவது மெல்லிசை வண்ணமாகும் எ-று. 210. இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. இளம்பூரணம் : என்-எனின். இயைபு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று1. (இ-ள்) இடையெழுத்துமிக்கு வருவது இயைபுவண்ணமாம் என்றவாறு. வால்வெள் ளருவி வரைமிசை இழியவும் கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும் வாளுகிர் உளியம் வரையகம் இசைப்பவும் வேலொளி விளக்கிநீ வரினே யாரோ தோழி வாழ்கிற் போரோ (யாப். வி.ப 383) என வரும். (210) பேராசிரியம் : (இ-ள்) இடையெழுத்து மிகுவது இயைபு வண்ணம் (எ-று). அரவி னதிர வுரீஇய வரகுகதிரின் என இடையெழுத்து மிக்கு வந்தமையின் இயைபு வண்ணமாயிற்று. மென்மை வன்மைக்கு இடை நிகரவாகிய எழுத்தான் வருதலின் இயைபுவண்ண மென்றார்.2 (382) ஆய்வுரை : இஃது இயைபு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) இடையின வொற்று மிக்கு வருவது இயைபு வண்ணமாகும் (எ-று) 211. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். இளம்பூரணம் : என்-எனின். அளபெடை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்.) அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் என்றவாறு.1 தாஅட் டாஅ மரைமலர் உழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஒட் டெருமை (யாப் வி.ப. 158) என வரும். (211) பேராசிரியம் : (இ-ள்). இரண்டளபெடையும்2 பயிலச் செய்வன அள பெடைவண்ணமாம் (எ-று). மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் (அகம் : 99) என்பது அளபெடைவண்ணம். கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (பத்துப்-மலைபடு; 352) என்பதும் அது. (219) நச்சினார்க்கினியம் : (இ-ள்.) இரண்டளபெடையும் பயிலச் செய்வது. எ று3 உ-ம். மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் எனவரும். தாஅம் படுநர்க்குத் தண்ணீ ருளகொல்லோ வாஅம் பல்விழி யன்பனை யறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒ நுவலுமிவ் வூர் இஃதளபெடைத் தொடையாம். ஆய்வுரை : இஃது, அளபெடை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்). அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாகும் எ-று. 212 நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். இளம்பூரணம் : என்--எனின். நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.)நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு.1 நீரூர்பானhயாwகாlநீலூ®காயா¥பூåயாtகாரூ®பானhமாtயாdயாரேhதாkவாழhமோuஊரூ®பாகhதேuபீரூ®தோளாŸபே%ராளே”(யாப். வி. ப. 383) என வரும். (212) பேராசிரியம் :(இ-ள்) நெட்டெழுத்துப் பயின்றுவருவது bநடுஞ்சீர்tண்ணம்(எ-று)mJ, மாவா ராதே மாவா ராதே (புறம் : 273) என்பது, நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது.1 (220) நச்சினார்க்கினியம் : இது bநடுஞ்சீர்வண்ணங்Tறுகின்றது.(ï-Ÿ.) bநடுஞ்சீர்வண்ணமாவது நெட்டெழுத்துப் பயின்று வரும். எ-று உ-ம். மாவா ராதே மாவா uதேvdtU«. நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாப் பூவீ யாதே யூரூர் பாகா தேரே பீரூர் தோளாள் சீறூ ரோளே இதுவு மிறைக்கவியாம்.2 ஆய்வுரை : இது, நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும் எ-று. நெட்டெழுத்துப் பயின்று வருஞ்சீர் நெடுஞ்சீர் எனப்பட்டது. 213 குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். இளம்பூரணம் : என்--எனின் குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு.1 உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி அவரை பொரிதளை யவிழக் குறிவரு பருவம் இதுவென மறுகுபு செறிதொடி நலமிலை யழியல் அறியலை அரிவை கருதிய பொருளே (யாப். வி. ப. 384) என வரும். (213) பேராசிரியம் :- (இ-ள்) குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர்வண்ணம் (எ-று). குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி (அகம் :4) எனவரும்.2 (22) நச்சினார்க்கினியம் : இது குறுஞ்சீர்வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) குறுஞ்சீர்வண்ணமாவது குற்றெழுத்து மிக்குவரும் எ-று. குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி (அகம்-4) எனவரும். உறுபெய லெழிலி...fUâa பொருளே இதுவும் மிறைக்கவியாம்.1 ஆய்வுரை : இது, குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணம் எனப்படும் எ-று. குறுஞ்சீர் -குற்றெழுத்துப் பயின்று வருஞ்சீர் 214. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே. இளம்பூரணம் :-v‹--vÅ‹. சித்திர tண்ணம்Mமாறுczர்த்துதல்நுjலிற்று (ï-Ÿ) சித்திர வண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்துவரும் என்றவாறு.2 ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் (குறுந். 231) என வரும். (124) பேராசிரியம் :- (இ-ள்) சித்திரவண்ணம் நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது (எ-று,) அது, சார னாட நீவர லாறே என வரும். சித்திரவண்ணமென்பது பலவண்ணம்படச் செய்வதாகலின் அப்பெயர்த்தாயிற்று.1 (222) நச்சினார்க்கினியம் : இது சித்திரவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) சித்திரவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்பவிராய்ச் செய்வது. எ-று. சார னாட நீவர லாறே எனவரும்.2 ஊர்வழியூர் தெரிதார் வாசி பேரச் சேரி சார்வரி தொல்லாதிப் பீர்தீர் தோழி தோளே இதுவும் மிறைக்கவியாம்.3 பல்வண்ணம் படுதலின் இதனைச் சித்திர வண்ணமென்றார். ஆய்வுரை :- இது, சித்திர வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) சித்திர வண்ணமாவது நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவதாகும் எ-று. 215. நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். இளம்பூரணம் :- என்--எனின். நலிபுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஆய்தம் பயின்றுவருவது நலிபுவண்ணமாம் என்றவாறு.1 அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (குறள். 178) என வரும். (215) பேராசிரியம் :- (இ-ள்). ஆய்தம் பயின்று வருவது நலிபுவண்ணமாம் (எ-று) அஃது, அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை (குறள் 178) எனவும், னஃகான் றஃகா னான்க னுருபிற்கு (தொல்-எழுத்-புணர் 21) எனவும் வரும். நலிபென்பது ஆய்தம்2 (223) நச்சினார்க்கினியம் :- இது நலிபுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) நலிபுவண்ணம் ஆய்தம் பயின்று வரும். எ-று. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (திருக்-378) னஃகான் றஃகா னான்கனுரு பிற்கு (தொல், எழுத்-12) எனவரும். நலிபென்பது ஆய்தம்.1 எஃகோ டவன்கேட்ப வேமறந்தாள் போதென்றா பஃகுநீர்க் கான்யாற் றவிர்மண லெக்கர்மேல் என்றாற் றொடைப்பாற்படும். ஆய்வுரை :- இஃது, நலிபு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆய்தவெழுத்துப் பயின்று வருவது நலிபு வண்ணமாகும் எ-று. ஆய்தம் நலிந்து கூறும் ஓசையாதலின் ஆய்தம் பயின்ற செய்யுள் நலிபு வண்ணத்திற்கு இலக்கியமாயிற்று. 216 அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே இளம்பூரணம் :- என்--எனின். அகப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அகப்பாட்டு வண்ணமாவது முடியாத்தன்மையான் முடிந்ததன் மேலதென்றவாறு.2 பன்மீன் உணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண்தாது நம்மொடு தொடுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி தோழி நீங்காமை சூளில் தேற்றியும் மணந்ததற் கொவ்வான் தணந்து புறமாறி இனைய னாகி ஈங்குனைத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலங்கொடி மகளிர் கோடுயர் வெண்மணல் ஏறி ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி (யாப். வி. ப. 385) என வரும். (216) பேராசிரியம் :- (இ-ள்.) அகப்பாட்டு வண்ணமென்பது இறுதியடி இடையடி போன்று நிற்பது (எ-று). அவையாவன: முடித்துக் காட்டும் ஈற்றசை ஏகாரத்தானன்றி, ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன; அவை - தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன (தொல்-மர; 5) எனவும், உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய் (ஐங்குறு; 21) எனவும், கோடுயர் வெண்மண லேறி யோடுகலன் எண்ணுந் துறைவன் றோழி; எனவும், ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி (கலி. கடவுள் வாழ்த்து) எனவும், சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே (அகம்-46) எனவும், இவை ஆசிரிய ஈற்றன. குளிறு குரலருவிக் குன்றத் திதன்மேற் களிறு வருவது கண்டு--வெளிலென்ன லாயினான் பின்னை யணங்கிற் குயிரளித்துப் போயினான் யாண்டையான் போன்ம் என இதனுள் இறுதியடி முடியாத்தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. கொடி யுவணத் தவணரோ எனக் கலிப்பாவுள் அரோவந்து பின் முடியாத்தன்மையின் முடிந்தது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பனவற்றான் ஆசிரியம் இறுமென tiuaW¥ghU©ikÆ‹ அவ்வச் சொல்லானே அவை முடிந்தன வென்று கொள்வலெனின்--அங்ஙனம் வரையறையில வென்பது மேற்காட்டிய உதாரணங்களால் அறிந்தாமாகலின் அக்கடா வண்ணமென வரையறுப்பார் மேற்றென விடுக்க.1 நச்சினார்க்கினியம் : இஃது அகப்பாட்டுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்). அகப்பாட்டுவண்ணமாவது முடித்துக்காட்டாத் தன்மையாலே முடிந்ததன்மேலே நிற்பதாம் எ-று.2 அது தன்னை முடித்தற்குரிய ஈற்றசை யேகாரத்தான் வாராது இறுதி இடையடிபோன்று நிற்பது. பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண்டாது நம்மொடு தொகுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியு மணந்ததற் கொவ்வான் றணந்துபுற மாறி யினைய யனாகி யீங்குத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலந்தொடி மகளிர் கோடுயர் வெண்மண லேறி யோடுகல னெண்ணுந் துறைவன் றோழி ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி எனவரும். ஆய்வுரை : இஃது, அகப்பாட்டு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) அகப்பாட்டு வண்ணம் என்பது, செய்யுள் ஓசை முடிவு பெறாதது போன்ற தன்மையதாய்ப் பொருள் முடிந்து வருவது எ-று. அஃதாவது, பாட்டினது முடிபினை விளக்கி வரும் ஈற்றசை யேகாரம் முதலியவற்றால் முடியாது ஒழிந்த மெய்யீற்றாலும் உயிரீற்றாலும் முடிந்து நிற்பது அகப்பாட்டு வண்ணம் என்பதாம். பன் மீனுணங்கற் படுபுள் ளோப்பியும் என இளம்பூரணருரையிற் காட்டப்படும் மேற்கோட் செய்யுளில் இனையனாகி யீங்குத் துறந்தோன் ... ... ... ஓடுகல னெண்ணுந் துறைவன் தோழி எனவரும் இறுதிப்பகுதி, பாட்டு முடியாதது போன்ற ஓசையினதாய்ப் பாட்டிற் கூறப்படும் பொருள் முற்றி நிற்கும் நிலையிற் செய்யுள் முடிந்த தன்மையதாய் வருதலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. 217 புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். இளம்பூரணம் :- என்--எனின் புறப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). புறப்பாட்டுவண்ணமாவது முடிந்தது போன்று முடியாதாகிவரும் என்றவாறு.1 உ--ம் நிலவுமண லகன்துறை வலவ னேவலின் எரிமணிப் புள்ளின மொய்ப்ப நெருநலும் வந்தன்று கொண்கன் தேரே இன்றும் வருகுவ தாயின் சென்று சென்று தோன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு தண்பொழில் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அல்கலும் படர்மலி உள்ளமொடு மடல்மா வேறி உறுதுயர் உலகுட னறியநம் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே (யாப். வி. ப. 385) என வரும். (217) பேராசிரியம் : (இ-ள்) புறப்பாட்டு வண்ணமென்பது, இறுதியடிப் புறத்ததாகவுந் தான் முடிந்தது போல நிற்றல்.1 (எ-று). இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே (புதம். 363) என்புழி ஈற்றயலடி முன்னிய வினையே யென முடிந்தது போன்று முடியாதாயிற்று.2 (225) நச்சினார்க்கினியம் : இது புறப்பாட்டு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) புறப்பாட்டு வண்ணமாவது இறுதியடிப் புறத்த-தாகவுந் தான் முடிந்ததுபோன்று நிற்றல். எ-று.3 இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே (புறம்-363) முன்னியவினையே முடிந்ததுபோன்று முடியாதாயிற்று. ஆய்வுரை : இது, புறப்பாட்டு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) புறப்பாட்டு வண்ணமாவது முடிந்தது போன்று முடியாததாகி வருவது எ-று. அஃதாவது பாட்டின் முடிபினை யுணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்கவும் அதற்கு முன்னுள்ள இடையடி முடிந்தது போன்ற ஓசையினதாய் நிற்பது புறப்பாட்டு வண்ணமாகும் என்பதாம். இருங்கட லுடுத்தஇப் பெருங்கண் மாநிலம் (புறம்-363) எனவரும் புறப்பாடலில், இன்னாவைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் றுறந்தே என்புழி, ஈற்றயலடி முன்னிய வினையே என முடிந்தது போன்று நிற்பினும், முடிவு பெறாது முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே என ஈற்றடியைக் கொண்டு பொருள் முடிவுபெற வேண்டுதலின், இது முடிந்தது போன்று முடியாதாகிய புறப்பாட்டு வண்ணத்திற்கு உதாரணமாயிற்று. 218. ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும். இளம்பூரணம் : என்--எனின். ஒழுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓசையான் ஒழுகிக்கிடப்பது ஒழுகுவண்ணமாம் என்றவாறு.1 உ-ம் அம்ம வாழி தோழி காதலர் இன்முன் பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நலிய உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே செய்ய வல்ல இன்னளி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே. (யாப். வி. ப. 386) எனவரும். (281) பேராசிரியம் : (இ-ள்) முற்கூறிய வகையானன்றி ஒழுகிய லோசையாற் செல்வது ஒழுகுவண்ணம் (எ-று). ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறுவே றிலக்கண முடையன என்பது1 அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவள் (யா. வி.ப. 638) (226) எனவரும். நச்சினார்க்கினியம் : இஃது ஒழுகுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறியவாறன்றி யொழுகிய வோசையாற் செய்வது ஒழுகு வண்ணம். எ-று. ஒழிந்தனவும் ஒழுகுமேனும் அவற்றின் வேறிலக்கணமுடைய.2 அம்ம வாழி தோழி காதல ரின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவளென் றுணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே சேய வல்ல வின்னினி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே எனவரும். ஆய்வுரை: இஃது ஒழுகுவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒழுகு வண்ணமாவது (யாற்றொழுக்குப் போன்று தொடர்ந்து) ஒழுகிய ஓசையால் இயன்றதாகும் எ-று. உ-ம். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா எனவரும். 219. ஒரூஉ வண்ணம் ஒரூஉத்தொடை தொடுக்கும்1 இளம்பூரணம்: என்--எனின் .ஒரூஉ வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரூஉ வண்ணமாவது நீங்கின தொடையாகித் தொடுப்பது என்றவாறு. அது செந்தொடையாம்.2 உ-ம் தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய முள்ளிற் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா லிளமழை துவைப்ப மணிநிலா விரியுங் குன்றுகிழ வோற்கே (யாப்.வி.ப.386) (219) எனவரும். பேராசிரியம் : (இ-ள்.) யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉவண்ணம்1 (எ-று). ஒரீஇத்தொடுத்தலென்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால் தொடுத்தலென்பாரும் உளர். செந்தொடையுந் தொடையாகலான் அற்றன்றென்பது;2 அது, யானே யீண்டை யேனே யென்னலனே யானா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே (குறுந்:97) எனவரும். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம்:235) என்பதும் அது. யாப்புப் பொருணோக்கியவாறுபோல இது பொருணோக் காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப் பெனப்படாது.3 (227) நச்சினார்க்கினியம் : இஃது ஒரூஉ வண்ணங் கூறுகின்றது. (இ-ள்) ஒரூஉவண்ணமாவது யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றினை யவாவாமை அறுத்துச் செய்வது. எ-று. யானேயீண்டை யேனே யென் னலனே யானா நோயொடு .... ... ... மன்றத் தஃதே (குறுந்-97) எனவரும். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெயரிகட் பெறினே (புறம்-235) என்பதுமது. இஃது யாப்புப்போலப் பொருணோக் கோசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. இனியெல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையாற்றொடுப்பது ஒரூஉவண்ணமெனக்கூறிப் பூத்த வேங்கை என்பது உதாரணங் காட்டுவது தொடைப்பகுதியாம்.1 ஆய்வுரை : இது ஒரூஉ வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒரூஉ வண்ணமாவது ஒரூஉத் தொடை தொகுத்து வருவதாகும் எ-று. ஒரூஉத் தொடையாவது நடு இருசீர்க்கண்ணும் இன்றி முதற்சீர்க்கண்ணும் நாலாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பதாகும். இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப (செய்யுள் 95) என்பது தொல்காப்பியம். (உ-ம்.) அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி என்றாற்போன்று ஒரூஉத் தொடை யமைய வருவது ஒரூஉவண்ணமாகும். இனி, ஒரூஉத்தொடை என்பதற்கு நீங்கிய தொடை அஃதாவது செந்தொடை எனப் பொருள் கொள்வர் இளம்பூரணர். ஒரூஉ வண்ணம் ஒரீஇத்தொடுக்கும் எனப் பாடங்கொண்டு, யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணம் எனப்பொருள் வரைந்தார் பேராசிரியர். ஒரீஇத்தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் ஒரீஇ (நீங்கி)ச் செந்தொடையால் தொடுத்தல் எனப்பொருள் கொண்டாரும் உளர். செந்தொடையும் தொடை யாகலால் அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பேராசிரியர். யானே யீண்டை யேனே, யென்னலனே ஆனா நோயொடு கான லஃதே என இங்ஙனம் பிறிதொன்றனை யவாவாது அறுத்துச் செல்லும் ஓசையுடையது ஒரூஉ வண்ணமாம் என்பது பேராசிரியர் கருத்தாகும். 220 எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். இளம்பூரணம் : என் எனின். எண்ணுவண்ணம் உணர்த்துதல் நுதலிற்று (இ-ள்) எண்ணுப் பயின்றுவருவது எண்ணுவண்ணமாம் என்றவாறு1 உ-ம் நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை (பதிற்றுப். 14) எனவரும். (220) பேராசிரியம் : (இ-ள்) எண்ணுப் பயில்வது எண்ணுவண்ணம் (எ-று) இஃது அடியெண்ணுப் பயிறலான்2 எண்ணுவண்ணமெனக் காரணப்பெயராயிற்று. அவை, நன்னன் ஏற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம்: 44) என்றாற் போல்வன. நுதலுந் தோளுந் திதலை யல்குலும் (அகம் : 119) என்பதும் அது (228) நச்சினார்க்கினியம் :- இது எண்ணுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) எண்ணு வண்ணமாவது அடிக்கண்ணே பயின்று வருவது. எ-று.1 இது காரணப்பெயர் நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் பொன்றுறை யென்றாங்கு (அகம் 44) எனவரும். நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் (பதிற்று-இரண்டு-14) நுதலுந் தோளுந் திதலை யல்குலும் (அகம்-119) என்பதுமது. ஆய்வுரை : இஃது, எண்ணு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) எண்ணுதற் பொருண்மை பயின்று வருவது எண்ணு வண்ணம் எனப்படும் எ-று.(உ-ம்.) நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் எனவரும். (திருவாசகம்) 221 அகைப்பு வண்ணம் அறத்தறுத் தொழூகும். இளம்பூரணம் : என்--எனின். அகைப்பு வண்ணம் cணர்த்துதல்Eதலிற்று.(இ-ள்) mறுத்தறுத்âaலுவதுஅiகப்புவ©zமாம்என்wthW.1 (உ-ம்) “bதாடுத்தnவம்பின்மிசைத்Jiதந்தgந்தையிடை அiசத்தவhரமலைப்ப£டூர©ணலென்பான் இaன்றrனைமுரசிuங்குந்தhனையெதிர் முaன்றtந்தருயிர்முUக்கும்tலினவன்(aப்.வி. ப. 387) (221) எனவரும். பேராசிரியம் : (இ-ள்) அறத்தறுத்துப் பயில்வது அகைப்புவண்ணம் எ-று. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்புவண்ணமென்னும் பெயர் பெற்றது. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி (குறுந்-110) என்புழி, ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத்தொழுகிய அகைப்புவண்ணமாம்2 (221) நச்சினார்க்கினியம் : இஃது அகைப்புவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) அகைப்புவண்ணமாவது விட்டுவிட்டுச் சொல்லும் ஓசையையுடையது. எ-று. அகைத்தல் அறுத்தலாதலிற் காரணப்பெயர். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில்பயின்றும் அற்றும் வருவது. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி (குறுந்-110) எனவரும். தொடுத்தவேம் பின்மிசைத் துதைபோந் தையிடை யடுத்தவ ரருமலை யட்டுண் டுண்ண லென்பா னியன்ற வேனை முயற்சி யர்விசும்பு தானை யெதிர்முயன்ற வேந்த ருயிர்முடிக்கும் வேலின் னவன்1 என்பதுமது. ஆய்வுரை : இஃது, அகைப்பு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) அறுத்தறுத்தொழுகும் ஓசையினதாய் வருவது அகைப்பு வண்ணமாகும் எ-று. அறுத்தறுத்தொழுகலாவது, விட்டுவிட்டுச் செல்லுதல். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பாகும். 222. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். இளம்பூரணம் : என்--எனின். தூங்கல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தூங்கல் வண்ணமாவது வஞ்சியுரிச்சீர் பயின்று வரும் என்றவாறு.1 (உ-ம்) வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் (பட்டினப். 1) எனவரும். (222) பேராசிரியம் : (இ-ள்). தூங்கல்வண்ணந் தூங்கலோசைத்தாகி வருவது (எ-று). வஞ்சியென்பது, வஞ்சித்தூக்குப்போல இதுவும் அற்றுச் சேறலுடைத்தென்பது.2 அது, யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணர்ந்தான் (முத்தொள்ளாயிரம்:104) என நின்ற தொடர்நிலைக்கண்ணே அத்தூங்கல் கண்டுகொள்க. இக்கருத்தறியாதார் கலிப்பாவினுள் வஞ்சிப்பாப் பிறக்குமெனவும் வஞ்சியுட் கலிப்பாப் பிறக்குமெனவும் ka§Fg.1 (230) நச்சினார்க்கினியம் : இது தூங்கல்வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) தூங்கல்வண்ணமாவது தூங்கலோசைத்தாகி வரும் எ-று2 அது வஞ்சிபோ லற்றுச் சேறல்.3 யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் றேனூடும் (முத்தொள்.) எனத்தூங்கல் வண்ணம் வந்தது. ஆய்வுரை : இது, தூங்கல் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) தூங்கல் வண்ணமாவது வஞ்சிப்பாவிற்குரிய வஞ்சியுரிச்சீர் பயின்று வருவதாகும் எ-று. 223. ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். இளம்பூரணம் : என்---எனின். ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் என்றவாறு.4 உதாரணம் உ-ம் கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங்-கூடல் அரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு (யாப். வி. ப. 288) (223) என வரும். (232) பேராசிரியம் : (இ-ள்) சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணம் (எ-று).1 ஏந்தலென்பது, மிகுதல்; ஒரு சொல்லே மிக்கு வருதலின் ஏந்தல் வண்ண மென்றாயிற்று. அது, வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் (நாலடி 4-9) எனவரும். (231) நச்சினார்க்கினியம் : (இது) ஏந்தல் வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) ஏந்தல் வண்ணமாவது ஒருகாற் சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்தல். எ-று2 ஏந்தல் ஒருசொன்மிகுதல். உ-ம் வைகலும் வைகல் ...... துணரா தார் (நாலடி 93) கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலிலே கூடலுங் -கூட லரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு எனவரும்1 ஆய்வுரை : இஃது ஏந்தல் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏந்தல் வண்ணமாவது, சொல்லிய சொல்லினாலே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வதாகும். எ-று. ஏந்தல்-மிகுதல். ஒரு சொல்லே மிக்கு அடுக்கி வருதலின் ஏந்தல் வண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. ஏந்தல் வண்ணத்திற்கு இலக்கணம் கூறும் இந்நூற்பாவே அதற்குரிய இலக்கியமாகவும் அமைந்திருத்தல் அறியத்தகுவதாகும். 224. உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும். இளம்பூரணம் : என்---எனின். உருட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் என்றவாறு.2 உ-ம் தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில் (யாப். வி. ப. 294) எனவரும். பேராசிரியம் : (இ ள்.) உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகந் தொடுப்பது உருட்டு வண்ணமாம் (எ-று). உருமுரறு கருவிய பெருமழை தலைஇய (அகம் 158) எனவும், எரியுரு வுறழ விலவ மலர. (கலி 33) எனவும் வரும் இது நெகிழாது உருண்டவோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டுவண்ணமெனப்படு மென்பது.1 (232) நச்சினார்க்கினியம் : இஃது உருட்டுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்) உருட்டுவண்ணமாவது அராகந்தொடுக்குமது எ-று.2 உருட்டிச் சொல்லப்படுவது அராகமாதலின், ஞெகிழா துருண்ட வோசைத்தாகலின், இது குறுஞ்சீர்வண்ணத்தின் வேறாம். உ-ம் உருகெழு முருகிய வுருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில் எனவரும்.3 ஆய்வுரை : இஃது, உருட்டு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) உருட்டு வண்ணமாவது அராகம் தொடுக்கப் பெறுவதாகும் எ-று. நெகிழாது உருண்ட வோசையாகலிற் குறுஞ்சீர் வண்ண மெனப்படாது. உருட்டு வண்ணம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். 225. முடுகு வண்ண முடிவறி யாமல் அடியிறந் தொழுகி அதனோர் அற்றே.4 இளம்பூரணம் : என்--எனின். முடுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்! முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் என்றவாறு.1 உதாரணம் உ-ம் நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (கலித். 3. 9) (225) பேராசிரியம் : (இ-ள்) முடுகுவண்ணமென்பது, நாற்சீரடியின் மிக்கு ஓரடி2 அராகத்தோடொக்கும்3 (எ-று) அது, நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும் (கலி: 39) எனவரும். இவற்றைக் கொச்சகம் அராகம் (செய் 121) எனவும், சொற்சீரடியும் முடுகியலடியும் (செய் 122) எனவும் பரிபாடற்கு வேறுபடுத்தோதினான் இவ்வேறுபாடு நோக்கியென்பது. (233) நச்சினார்க்கினியம் : இது முடுகுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்) முடுகுவண்ணமாவது முடுகியல்தொடுத்த அடியோடு பிறவடி வேறுபடத் தொடர்ந்தோடுவது. எ-று. உ-ம். நெறியறி செறிகுறி புறிதிரிபு (கலி-39) என்னுஞ் சுரிதகமும், இரிபெழு பதிர்பதிர் பிகந்து (கலி-104) என்பது முதலியனவுமாம். இவை வேறுபாடு நோக்கி1 யிதனைச் சொற்சீரடியும் முடுகியலடியுமெனப் பரிபாடற்கு விதந்தோதினார். ஆய்வுரை : இது, முடுகு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) நாற்சீரடியின்மிக்கு ஓடி உருட்டு வண்ணத்தை யொத்து அராகந் தொடுத்து வருவது முடுகு வண்ணம் எனப்படும் எ-று. உதாரணம் முன்னைய உரைகளிற் காட்டப்பெற்றது. 226 வண்ணந் தாமே அவையென மொழிப.2 இளம்பூரணம் : என்--எனின். மேற்கூறப்பட்ட வண்ணமெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணங்களாவன மேற்சொல்லப்பட்டன என்றவாறு1 இதனாற் பெற்றது என்னை? இப்பொருண்மை மேலே பெறப்பட்டதால் எனின், ஒருபயன் கருதிக் கூறினார் என்க. வண்ணம் பாகுபடுகின்றது தொடையினான் அன்றே; இன்னும் வேறொருவாற்றாற் பாகுபடுப்பப் பலவாம் என்பது அறிவித்தல் அது குறில்,நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என நிறுத்து அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனொடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடுறழ நூறாம். அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற் றூங்கிசை வண்ணம் என ஒரு சாராசிரியர் பெயரிட்டு வழங்குப. (226) பேராசிரியம் : இது புறனடை. (இ-ள்.) வண்ணமென்பன சந்தமாதலான் அச்சந்த வேற்றுமை செய்வன இவையல்லதில்லை (எ-று)2 எனவே, என்சொல்லப்பட்டதாம்; நான்கு பாவினோடும்3 இவற்றை வைத்துறழவும் அவைமயங்கிய பொதுப்பா இரண்டினோடும்4 உறழவும் நூற்றிருபதாகலும், உயிர்மெய் வருக்க மெல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் சில பெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயினும் இவ்விருபது வகை யானல்லது சந்தவேற்றுமை விளங்காதென்பது கருத்து. (234) நச்சினார்க்கினியம் : இது புறனடை. (இ-ள்). சந்தவேற்றுமை செய்வன இவையல்லது வேறில்லை எ-று வண்ணமாவது சந்தம். தாமேயென அவற்றின் சிறப்புக் கூறிற்று. இதன்கருத்துப் பாக்களோடும் பிறவற்றோடும் உறழ அது பலவகைப்படுத்தினால் வரையறையின்றா மாயினும் அவை யெல்லாம் இருபதின் கூறாகிய சந்தவேற்றுமை யாவதல்லது சந்தவேற்றுமை விளங்காவாறாயிற்று.1 ஆய்வுரை : இது, வண்ணத்திற்குரிய புறனடை. (இ-ள்) வண்ணங்களாவன இவையே எனக்கூறுவர் ஆசிரியர் எ-று. இவை என்றது பாஅவண்ணம் முதலாக முடுகு வண்ண மீறாக மேற்கூறிய இருபது வண்ணங்களையும். வண்ணம் என்பன சந்த ஓசையாதலால் அவ்வோசை வேற்றுமை செய்வன மேற் கூறிய வண்ணங்கள் இருபதுமேயன்றி வேறு இல்லை என்பது இச்சூத்திரத்தின் கருத்தாகக் கொள்வர் பேராசிரியர். வண்ணம் இருபது என்னும் இப்பொருண்மை மேலே பெறப்பட்டதாயினும் இன்னும் தொடையினாற் பாகுபடுக்க வண்ணம் பலவாய் விரியும் என்பது அறிவித்தல் இச்சூத்திரத்தின் பயன் எனக் கொண்டு, பிற்கால யாப்பிலக்கண நூலார் பெருக்கிக் கூறும் நூறு வண்ணங்களையும் குறிப்பிடுவார் இளம்பூரணர். குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என முதற்கண் நிறுத்தி அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்னும் நான்கினோடும் உறழ இருபதாகும். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடு உறழ நூறாகும். அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற்றூங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டு வழங்குப என இளம்பூரணர் கூறும் விளக்கம் பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றியமைந்ததாகும். தூங்கேந் தடுக்கல் பிரிதல் மயங்கிசை வைத்துப்பின்னும் அங்கே யகவல் ஒழுகிசை வன்மையு மென்மையுமா ஆங்கே குறில்நெடில் வல்லிசை மெல்லிசை யொடிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே எனவரும் யாப்பருங்கலக்காரிகையும், தூங்கிசை வண்ணம், ஏந்திசைவண்ணம் அடுக்கிசை வண்ணம், பிரிந்திசைவண்ணம், மயங்கிசைவண்ணம், என இவ்வைந்திணையும்; அகவல்வண்ணம், ஒழுகல்வண்ணம், வல்லிசைவண்ணம், மெல்லிசைவண்ணம் என்று இந்நான்கினையும்;குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்துவண்ணம். வல்லெழுத்துவண்ணம். மெல்லெழுத்துவண்ணம், இடையெழுத்துவண்ணம் என இவ்வைந்தினையுங் கூட்டிக் குறிலகவற்றூங்கிசைவண்ணம். நெடிலகவற்றூங்கிசை வண்ணம். வலியகவற் றூங்கிசை வண்ணம், மெலியவகற்றூங்கிசைவண்ணம், இடையகவற் றூங்கிசைவண்ணம் என்று இவ்வாறெல்லாம் உறழ்ந்து கொள்ள நூறுவண்ண விகற்பமாம் எனவரும் யாப்பருங்கலவிருத்தியுரையும் இங்கு நோக்கத்தக்கன. நான்கு பாவினோடும் இவற்றை (இருபது வண்ணங்களையும்) வைத்து உறழவும், பொதுப்பா இரண்டினோடு உறழவும். நூற்றிருபதாகலும் உயிர்மெய் வருக்கம் எல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் சிலபெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறை யிலவாகலும் உடையவாயினும் இவ்விருபது வகையான் அல்லது சந்த வேற்றுமை விளங்காதென்பது கருத்து எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் வண்ணம் இருபதே எனவரையறுத்த ஆசிரியர் தொல்காப்பினார் கருத்தினை நன்கு புலப்படுத்துவதாகும். 227 சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் வின்றே.1 இளம்பூரணம் : என்-எனின். நிறுத்தமுறையானே அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக் கப்பட்ட அடிநிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு.1 உ-ம் அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை (குறள். 315) எனவரும். (227) பேராசிரியம் : இது தொகைச் சூத்திரத்துள், ஆறுதலை யிட்ட வந்நா லைந்து (தொல்-செய்;1) எனக் கூறு செய்து நிறீஇப், பின்னர் எட்டுறுப்புக் கூறினானன்றே? இவை அவற்றோடொத்த இலக்கணத்த அன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஓதிய உறுப்பாகலானும், இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெண்பாவகையும் பற்றித் தொடுக்கப்படுமெனக் கூறப்பட்டதாகலானுமென்பது. இவற்றை வனப்பென்று கூறப்படுமாறென்னை? அச்சூத்திரத்துப் பெற்றிலமாலெனின், வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந்திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்பதென்பது.2 அஃதேல், இவ்வெட்டுந் தனிவருஞ் செய்யுட்கண் வந்தால் அழகு செய்யாவோ வெனின், அவைபோல் இவை தனிவரும் செய்யுட்குமாகும் என்றற்கன்றே அவ்விருபத்தாறுறுப் போடும் இவற்றை ஓரினப்படுத்து ஓதியதென்பது.1 அஃது இயைபிற்கொப்ப வாராதென்பது முன்னர்ச் (55) சொல்லுதும். இதனானே முன்னை யுறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பதூஉங் கொள்க. அல்லாக்கால் மாத்திரை முதலாகிய ஒரோவுறுப்பான் அழகு பிறவாதாகிய செல்லும் இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளினென்பது.2 இங்ஙனம் இருபத்தாறும் எட்டுமென வகுப்பவே அவை அகமென்பன, தனிநிலைச் செய்யுட்கு முற்கூறப்படா, இத்தொடர்நிலைச் செய்யுட்கு முற்கூறுமென்பது,3 இனி, இவற்றைச் சூத்திரத்தான் வனப்பென்னுங் குறியெய்துவிக்கவேண்டுவானாகச் சூத்திரத்தை வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின் என்பது பாடமாக உரைத்தானென்க;4 அதுவும் அறிந்தவாறே கொள்க. (இ-ள்.) சிலவாய மெல்லியவாய சொல்லொடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம்மையாம் (எ-று.) அடிநிமிராதெனவே அம்மையென்பது முழுவதும் ஒரு செய்யுளாகல் வேண்டும்: வேண்டவே, அஃது உறுப்பன்றாகியச் செல்லும்; அதனை உறுப்பெனல் வேண்டுமாதலான் அடிநிமி ராதெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளாமென்பது.1 சிலவாகவென்பது, எண்ணுச் சுருங்குதல், மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடிநிமிராதென்றது. ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாயபனுவலோடென்றது. அறம்பொருளின்பமென்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுப (போன்று) வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச்செல்வதென்றவாறு, அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம்பொருளின்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்றுவருமாறுங் கார்நாற்பது, களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல் (குறள்:675) என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான். மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று (குறள்: 1112) என இஃது இலக்கியமாகலாற் றாயபனுவ லெனப்பட்டது. இவை தனித்துவரினும் அவ் வனப்பெனப்படும், தாவுதலென்பது, இடையிடுதல். இவ்விருவகையுஞ் செய்யுளெனப்படும்.2 அம்மை யென்பது குணப்பெயர். அமைதிப் பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற்று. அதனுள் உறுப்பாகிய பாட்டுக் கடோறும் மாத்திரை யுறுப்பு முதலாகிய உறுப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும், இவ்வனப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும் அறிந்துகொள்க. (253) நச்சினார்க்கினியம் : இதன் தொகைச் சூத்திரத்துள் ஆறு தலையிட்ட வந்நாலைந்து மெனக் கூறுபடுத்தி வேறுநிறீஇப் பின்னரெட்டுறுப்பெனக்கூறிய தென்னையெனின் அவை யொரோ செய்யுட்கோதிய வுறுப்பென் பதூஉம் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெட்டுறுப்பும் பற்றித் தொகுக்கப்படு மென்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க. இவற்றை வனப்பென்று பெயர் கூறிற்றுப் பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோ ரழகாதலின். இப்பெயர் சூத்திரத்தாற் பெறவேண்டுவார் வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியால் எனப்பாடமோதுப.1 இது பெரும்பான்மை பல செய்யுளுறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைக்குப் பெறுவதோ ரழகென்பதூம், சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ளவேண்டு மென்பதூம், இருபத்தாறுறுப்பும் அங்ஙனந் திரண்டசெய்யுட்கு முரித்தென்பதூம் உணர்த்துதற்குத் தொகைச் சூத்திரத்தைப் பிரித்தோதிப் பின்னும் ஓரினப்படுத்தி யொருசூத்திரமாகவே யோதினா ரென்றுணர்க. இவ்வனப்பை யோரோசெய்யுளுட் கொள்ளின் மாத்திரை முதலியவற்றின் அழகு பிறவாதாம். இங்ஙனம் வகுப்பவே தனிநிலைச் செய்யுளுந் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யு ளிரண்டாயிற்று. இனிக் கூறுகின்றன தொடர்நிலைச்செய்யுளென் றுணர்க. இது முறையே அம்மை கூறுகின்றது. அம்மை குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையாயிற்று. (இ-ள்).சின்..ahš எ-துசின்மையாய்மெல்லியவாயசொல்லானும்தாய...gDtÈ‹எ-Jஇடையிட்Lவந்jபனுவšஇலக்கணத்தானும்,அடிநிமி®வின்றுதா‹அம்kஎ.Jஅடிநிமிர்வின்றாŒவருவதுதா‹அம்kயெனப்படு«எ-று. அடிநிமிராதென்றது ஆறடியின் ஏறாமையை சிலவாதல் சொல்லெண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல் சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தான் வருதல். தாயபனுவலின் என்பது அறம் பொருளின்ப மென்னு மூன்றற்கு மிலக்கணங் கூறுவன போன்றும் இடையிடையே அன்றாயுந் தாவிச் செல்வ தென்றவாறு. அங்ஙனம் வந்தது பதினெண்கீழ்க் கணக்கு. அதனுள் இரண்டடியானும் ஐந்தடி யானுஞ் சிறுபான்மை யாறடியானு மொரோசெய்யுள் வந்தவாறும் அவை சின்மென் மொழியாய் வந்தவாறும் அறம்பொருளின்பத்திலக்கணங்கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார்நாற்பதுங் களவழி நாற்பது முதலியன வந்தவாறுங் காண்க. உள்ளுறுப்பாய்ப் பதினெட்டையும் வனப்பெனப் படுமென்றுங் கொள்க. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல் (திருக்-675) இஃது இலக்கணங் கூறலிற் பனுவலினென்றார். மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பவர்காணும் பூவொக்கு மென்று (திருக்-1112) இஃது இலக்கிய மாதலில் தாயவென்றார். தாவுதல் இடையிடுதல் அத னுள்ளுறுப்பாகிய பாட்டுக்கடோறும் மாத்திரை முதலிய வுறுப்புக்க ளேற்பன பலவும் வருமாறும் இவ்வனப்பெட்டனுள் ஏற்பன பலவும் வருமாறு முணர்க. ஆசாரக்கோவையுள் ஆரெயின் மூன்றும் (தற்சிறப்புப்) ஆறடியாற் சிறுபான்மைவந்தது. ஆய்வுரை : செய்யுளுறுப்புக்கள் பலவுந் திரண்டவழிப் பெறுவதோர் அழகினை ஈண்டு வனப்பு என்றார். அஃது அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எண் வகைப்படும். செய்யுட்கள் பலவும் திரண்டவழி அவற்றின் கண் அமைந்த சொற்பொருள் அழகினை முற்கூறிய எட்டுறுப்பும் பற்றி வகுத்துணர்த்துதல் மரபாதலின் இவை வனப்பெனப்பட்டன. மாத்திரை முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தாறும் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். அம்மை முதலாகிய எட்டும் செய்யுட்கள் பலவாகத் தொடர்ந்தமைந்த தொடர்நிலைச் செய்யுட்கே பெரும்பான்மையும் வருவன. சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வகை வனப்புக்கள் உரியனவாகும். இங்ஙனம் செய்யுளுறுப்புக்கள் முப்பத்து நான்கினையும் இருபத்தாறும் எட்டும் என இருதிறமாக வகுக்கவே இவற்றை யுறுப்பாகக் கொண்ட செய்யுட்கள் தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இருவகையாகப் பகுக்கப்படும் என்றாராயிற்று. இச்சூத்திரம், எண்வகை வனப்பினுள் அம்மையென்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) சிலவாய் மெல்லியவாய சொற்களால் தொடுக்கப் பட்ட அடிநிமிர்வு இல்லாத செய்யுள் அம்மை யென்னும் வனப்புடையதாகும் எ-று. அம்மை என்பது குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற்று என்பர் பேராசிரியர். அடி நிமிராமை ஆறடியின் மேற்படாமை. சிலவாதல், சுருங்கிய எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல். மெல்லியவாதல் சிலவாகிய அச்சொற்களும் பலவவெழுத்துக்களால் இயன்று விரிந்தனவாகாமல் சிலவெழுத்துக்களால் அமைந்து சுருங்கி நிற்றல். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணங்கூறுவன போன்றும் அன்றாகியும் இடையிட்டு நிற்கும் இயல்பினது என்பார். தாஅய பனுவல் என்றார். தாவுதல்-இடையிடுதல். அம்மை என்னும் இவ்வனப்பிற்கு, அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை (315) எனவரும் திருக்குறளை உதாரணமாகக் காட்டினார் இளம்பூரணர். அங்ஙனம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு, அதனுள் இரண்டடியாயினும் ஐந்தடியாயினும் சிறுபான்மை ஆறடியாயினும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சின்மென்மொழியால் வந்தவாறும், அறம்பொருளின்பத் திலக்கணங்கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார் நாற்பது. களவழி நாற்பது முதலியன வந்தவாறும் காண்க என நச்சினார்க்கினியர் விளக்குதலால், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அம்மையென்னும் வனப்பமைந்த இலக்கியங்கள் என்பது நன்கு புலனாம். 228. செய்யுள் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே. இளம்பூரணம் : என்---எனின் நிறுத்தமுறையானே அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுட்குரிய சொல்லினாற் சீரைப்புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு எனப்படும் என்றவாறு.1 துணியிரும் பரப்பகங் குறைய வாங்கி மணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென இழிதருங் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே (யாப்.வி.ப.371) எனவரும். (228) பேராசிரியம் : இஃது, இரண்டா மெண்ணுமுறைமைக்க ணின்ற அழகுணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) திரிசொற் பயிலாது செய்யுளுட் பயின்று வரும் மொழிகளாற் சீரறுத்துப் பொலிவுபட்ட யாப்பின் பொருள் அழகு2 (எ-று). அவ்வகை யென்றதனால் அவை வேறு வேறு வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றவாறு. அவையாவன. நெடுந் தொகை முதலாகிய தொகையெட்டு மென்றவாறு. அழகு செய்யுண் மொழி யென்ற தென்னையெனின், அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழியானே இடைச்சங்கத்தாருங் கடைச்சங்கத் தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார்; இக்காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடிமுப்பது முதலாயின அம்மை யெனப்படுமோ அழகெனப்படுமோ வெனின்,-தாயபனு வலின்மையின் அம்மையெனப்படாவென்பது1 இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்ற வகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தன வற்றிற்கும் இஃதொக்கும். (236) நச்சினார்க்கினியம் இது முறையே அழகு கூறுகின்றது. இ-ள். வழக்குச்சொற்பயிலாமற் செய்யுளுட் பயின்றுவருஞ் சொல்லானே சீர்த்துப் பொலிவுபெறப் பாடின் அப்பகுதி அழகெனப்படும். எ-று.2 அவ்வகை யென்றதனான் அவை வேறுவேறாக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுணர்க. அவை நெடுந்தொகை முதலிய தொகையெட்டுமாம். அது jiy¢r§f¤jhiubahʪnjh® சிறுபான்மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட்சொல்லுமாக இவ்விலக்கணத்தாற் செய்தவாறே இக்காலத்துச் செய்யினுமாம். எ-று. தாய பனுவலின்மையின் மூவடிமுப்பது முதலியனவும் அழகின்பாற்படும். இவற்றுள்ளும் ஒரோசெய்யுட்கண் மாத்திரை முதலியவுறுப்பும் இவையும் ஏற்ற வகையான் வருமாறு காண்க. ஆய்வுரை : இஃது அழகென்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) செய்யுளுட் பயின்று வரும் சிறந்த சொற்களால் ஓசையினிதாகச் சீர்பெற யாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகு என்னும் வனப்பாகும் எ-று. இவ்விலக்கணத்தால் அமைந்தவை அகநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களாகும். 229 தொன்மை தானே சொல்லுங் காலை1 உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. இளம்பூரணம் : என்--எனின். நிறுத்தமுறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராம சரிதமும், பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வருஞ்செய்யுள்,2 பேராசிரியம் : இது, bjh‹ikíz®¤Jjš நுதலிற்று. (இ-ள்) தொன்மையென்பது உரைவிராஅய்ப் பழைமைய வாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது (எ-று).3 அவை பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. நச்சினார்க்கினியம் : இது தொன்மை கூறுகின்றது. இ-ள். தொன்மையாவது உரைவிராஅய்ப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவன. எ-று.1 அவை பெருந்தேவனார் செய்த பாரதமும். தகடூர்யாத் திரையும் போல்வன. சிலப்பதிகாரம் அதன்பாற்படும். தொன்றுபட வரூஉந் தொன்மைத்தாகலின் (சிலப்-ஊர்காண் 45) எனவும், நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ (சிலப்-ஊர்காண் 49) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களும், தொன்றுபட வரூஉம் தொன்மைத்து-அடிப்பட்டு வருகின்ற பழைமைத்து எனவும், நெடுமொழி பெருவார்த்தை. பழைதாகப் போதுகின்ற வார்த்தை யென்றுமாம் எனவும் வரும் அரும்பதவுரையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. இனி, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையொடு புணர்ந்த எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு உரைநடையுடன் விரவிய எனப்பொருள்கொண்டு, பெருந்தேவனாராற் பாடப்பெற்ற பாரதமும் தகடூர் யாத்திரையும் போல அமைந்த உரையிடையிட்ட செய்யுட்களைத் தொன்மை என்னும் வனப்புக்கு உதாரணமாகக் குறித்துள்ளார்கள். எவ்வாறாயினும் நாட்டில் வழங்கும் பழைய (புராணக்) கதைகளையும் வரலாறுகளையும் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் தொடர்நிலைச் செய்யுள்கள் தொன்மை யென்னும் வனப்பமைந்த இலக்கியங்கள் எனக் கொள்ளுதலில் தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரும் ஒத்தக்கருத்தினர் என்பது இங்கு மனங்கொளத் தகுவதாகும். ஆய்வுரை : இது, தொன்மை யென்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) உரையோடு புணர்ந்த பழமை பொருளாக வருவது தொன்மை என்னும் வனப்பாகும் எ-று. உரையொடு புணர்தலாவது, நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல் பழமை-பழங்கதை. பழமைத்தாகிய பொருள்மேல் வருவன, இராம சரிதை, பாண்டவ சரிதை முதலாயனவற்றின் மேல் வருஞ் செய்யுள் என்பர் இளம்பூரணர். தொன்மை என்னும் இச்சொல்லை இப்பொருளில் இளங்கோவடிகளும் எடுத்தாண்டுள்ளார். 230. இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்னெறிப் புலவர்.1 இளம்பூரணம் : என்---எனின். நிறுத்தமுறையானே தோலாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இழுமென்மொழியால் விழுமிய பொருளைக் கூறினும் பரந்த மொழியினால் அடி நிமிர்ந்து ஒழுகினும் தோல் என்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உ-ம். பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின் இம்மை யில்லை மறுமை யில்லை நன்மை யில்லைத் தீமை யில்லைச் செய்வோ ரில்லைச் செய்பொரு ளில்லை அறிவோர் யாரஃ திறுவழி இறுகென (மார்க்கண்டேயனார் காஞ்சி) என்றது இழுமென் மொழியால் விழுமியது நுவல வந்தது. திருமழை தலைஇய இருள்நிற விசும்பு (மலைபடுகடாம். 1) என்னுந் கூத்தராற்றுப்படை பரந்தமொழியான் அடிநிமிர்ந்து வந்தது. (230) பேராசிரியம் : இது, முறையானே தோலென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்; கொச்சகக்கலியானும் ஆசிரியத் தானுஞ் செய்யப்படுவன. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது என்றவழித் தேவபாணியுங் காமமும் பொருளாக வன்றியுங் கொச்சகக்கலி வருமென்றானாகலான் அவை மேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது. (இ-ள்) இழுமென் மொழியான் விழுமியது நுவலினும். மெல்லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச் செய்வன; அவை செய்த காலத்துள்ளன கண்டிலம்; பிற்காலத்து வந்தன கண்டுகொள்க. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும்-ஆசிரியப் பாட்டான் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்டன; அவை பொருட்டொடர்நிலை. தோல் என மொழிப தொன்மொழிப் புலவர்- தோலென்று சொல்லுப புலவர் (எ-று). தொன்மொழி யென்றார் பழைய கதையைச் செய்தல் பற்றி; இது முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும். (238) நச்சினார்க்கினியம் : இது தோல் கூறுகின்றது. அஃது இருவகைய கொச்சகத் தானும் அகவலானுஞ் செய்யப்படுவனவாம். (இ-ள்.) இழுமென்னு மோசையையுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொரு ளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், ஆசிரியப்பாட்டான் ஒருகதைமேற் றொடுப்பினுந் தோலென்று கூறுவர் பழநெறியை யறிந்த புலவர் எ-று.1 யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (செய் 1) என்றவழிப் பொருள்வேறுபட்டுக் கொச்சகத்தாற் செய்யப்படுவன தோலாம். எ-று. இவை பொருட்டொடர். அவை சிந்தாமணி KjÈad. அவை பாவிற்கினமாகிய துறையும் விருத்தமும் பற்றிச் செய்தன வென்பார்க்கு அப்புலவர் செய்யுட்செய்கின்ற காலத்திற்கு நூல் தொல்காப்பியமாயவாறும் அவர் இனங் கொள்ளாதவாறும் அவ்வினங்கடாம் இலக்கணக் குறைபாடுடைய வாறுங் கொச்சகம் போற் சிறப்பின்மையும் முன்னர் விளங்கக் கூறியவற்றைக்கொண்டும் பின்பு செய்த நூல்கள் முன்பு செய்த செய்யுட்கு விதியாகாதவாறுங் கொண்டு மறுக்க2 பின்னோர் தாஞ்செய்த நூல்கட்கு அவை உதாரணமாகக் காட்டலின் அச்செய்யுள் அந்நூல்கட்கு முன்னாயவாறு முணர்க. இனித் தொல்காப்பியனாரை யொழிந்த ஆசிரியர் பதினொருவருட் சிலர் இனமுங்கொண்டார். அதுபற்றி யாப்பருங்கல முதலியவற்றிலும் இனங்கொண்டா ரென்பார்க்கு அவர்கள் அகத்தியனார்க்கு மாறாக நூல் செய்தவராவர். அவை வழிநூ லெனப்படா வென்று மறுக்க. இனி யாசிரியப்பாவான் அடிநிமிர்ந்து வந்தன தேசிகப்பா முதலியன. ஆய்வுரை: இது, தோல் என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) இழுமென்னும் ஓசையையுடைய மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வரத்தொடுப்பினும் தோல் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் தொன்மை நெறியுணர்ந்த புலவர் எ-று. எனவே தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்பதாயிற்று. பாயிரும் பரப்பகம் என்ற முதற்குறிப்புடைய செய்யுள் இழுமென் மொழியால் விழுமியது நுவன்றது எனவும், திருமழை தலைஇய எனத்தொடங்கும் கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வந்தது எனவும் உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சீவகசிந்தாமணி போன்ற தொடர் நிலைச்செய்யுட்கள் இழுமென் மொழியால் விழுமியது நுவன்ற தோல் என்னும் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப்பாட்டால் ஒருகதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் பரந்த மொழியால் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வகையின் பாற்படுவன எனவும் நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் கூறிய விளக்கம் இங்கு நோக்குதற் பாலனவாகும். செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமுமென நான்கி னீக்கிய பாவினைத் தொகை வரையறையால் இரண்டென அடக்கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம்பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணமென்று கூறியவர். இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் என்பதனால் குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத்தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனங் கூறிய தொடர்நிலை யெனவுணர்க எனச் சிலப்பதிகார உரைப் பாயிரத்தே அடியார்க்கு நல்லார் இச்சூத்திரப் பொருளைத் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் தொல்காப்பியனார் கூறிய தோல் என்னும் வனப்புக்குரிய இருவகை யியல்பும் ஒருசேரப்பெற்ற தொடர் நிலைச் செய்யுள் சிலப்பதிகாரம் என்பது நன்கு புலனாதல் காணலாம். 231. விருந்தே தானும் புதுவது புனைந்த1 யாப்பின் மேற்றே இளம்பூரணம் : என்--எனின். நிறுத்தமுறையானே விருந்தென்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு. புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல்2 அது வந்தவழிக் காண்க. இது பெரும்பான்மையும் ஆசிரியப்பாவைக் குறித்தது. (231) பேராசிரியம் : (இ-ள்) ÉUªJjhD« புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர் நிலை மேற்று (எ-று.) தானுமென்ற உம்மையான் முன்னைத் தோலெனப்பட்ட தூஉம் பழைய கதையைப் புதியதாகச் brhšÈajhƉW.1 இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறைந்தது தழீஇயினானென்பது. புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றதென்னையெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் brŒíSbkd உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் brhšYg. (239) நச்சினார்க்கினியம் : இது விருந்து கூறுகின்றது. (இ-ள்) விருந்தென்று கூறப்படுவதுதானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலைச் செய்யுளின்மேற்று எ-று.2 தானுமென்றவும்மை இறந்ததுதழீஇயிற்று. முற்கூறிய தோல் பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், இது பழையதும் புதியதுமாகிய கதை மேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்நிலைச் செய்யுள் செய்வதென்றும் பொருள் தருதலின் அவை முத்தொள்ளாயிரம் பின்னுள்ளார் பாட்டியன்மரபிற்கூறிய கலம்பகச்செய்யுள் முதலியவற்றைப் பாடுதலுமாயிற்று.3 ஆய்வுரை : இது, விருந்து என்னும் செய்யுள் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) விருந்தென்பது, புதிதாகச் சொன்ன யாப்பின் மேலதாம் எ-று. புதிதாகப் புனைதலாவது. ஒருவன் சொன்ன நிழல் வழியன்றித் தானே தோற்றுவித்தல் என்பர் இளம்பூரணர். புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றது புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச்செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பக முதலாயினவுஞ் சொல்லுப என விளக்குவர் பேராசிரியர். முற்கூறிய தோல் என்பது பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருந்தென்பது பழையதும் புதியது-மாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்நிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விருவகை வனப்பிற்கு மிடையேயுள்ள வேறுபாட்டினை விளக்குவர் நச்சினார்க்கினியர். 232. ஞகார முதலா னகார ஈற்றுப்1 புள்ளி இறுதி இயைபெனப் படுமே. இளம்பூரணம் : என்--எனின். நிறுத்தமுறையானே இயைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உதாரணம் வந்தவழிக் காண்க2 (232) பேராசிரியம் : இஃது, இயைபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள வென்னும் பதினெரு புள்ளியீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யுஞ் செய்யுள் பொருட்டொடராகவுஞ், சொற்றொடராகவுஞ் செய்வது இயைபெனப்படும் (எ-று.) இயைபென்றதனான் பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையுங் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச்செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டிலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தனபோலும்.1 பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோலோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அவை உயிரீற்றவாதல் பெரும்பான்மை யாகலான் வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலு முடைய வென்பது,2 சொற்றொடரென்பது, அந்தாதி யெனப்படுவது; என்றதனான், உயிரீற்றுச் சொற்றொடர் சிறு பான்மை யென்பது கொள்க.3 நச்சினார்க்கினியம் : இஃது இயைபு கூறுகின்றது. (இ-ள்) ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை யீறாகக்கொண்டு செய்யுளைப் பொருட் டொடராகச் செய்வது இயைபெனப்படும் எ-று.1 இயை பென்றதனானே பொருளியைதல் பெற்றாம். பரந்த மொழியா லடிநிமிர்ந்த தோல் உயிரீற்றவாயே வரும். னகரவீற்றா, னிற்றுப் பொருடொடர்ந்தன மணிமேகலையும், உதயணன்கதையும், ஒழிந்த வொற்றுக்களுக்கும் இலக்கண முண்மையின் இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும். எனப்படுவதென்றதனான் இக் காலத்தார் கூறும் அந்தாதிச்சொற் றொடருங் கொள்க.2 ஆய்வுரை : இஃது, இயைபு என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஞண நமன யரல வழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பர் ஆசிரியர் எ-று. இயைபு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது கருத்து. சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன. அவை னகார வீற்றான் இற்றன மற்றை யீற்றான் வருவனவற்றுக்கும் இலக்கியம் பெற்ற வழிக் கொள்க. பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்றவாய் வருதலும், இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்றதாய் வருதலும் தம்முள் வேற்றுமை சொற்றொடர் என்பன அந்தாதி எனப்படுவது என்றதனால் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க என்பர் நச்சினார்க் கினியர். 233. தெரிந்த மொழியாற்1 செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது2 குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. இளம்பூரணம் : என் எனின். நிறுத்தமுறையானே புலன் என்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. (உ-ம்) பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்சொறி முரசின் முழங்கி ஒன்னார் மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச் சென்றவள் திருமுகங் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி பாக உதுக்காண் மாவொடு புணர்ந்த மாஅல் போல இரும்பிடி யுடைய தாகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே (யாப் வி ப. 379) எனவரும். (233) பேராசிரியம் : இது புலனாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) சேரிமொழியென்பது ghokh‰w§fŸ.3 அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப்4 பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் (எ-று). அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டு கொள்க.1 (241) நச்சினார்க்கினியம் : இது புலன் கூறுகின்றது. (இ-ள்). பாடி மாற்றங்களானே செவ்விதாகக் கூறப்பட்டு ஆராய்ந்து காணாமை பொருள் தானே தோன்றச்செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். எ-று.2 அவை விளக்கத்தார்கூத்து முதலிய வெண்டுறைச்செய்யுளென்று கொள்க. ஆய்வுரை : இது, புலன் என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இதுவேன ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள் எ-று. அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பர் போரசிரியர். 234 ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது3 குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின்1 இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். இளம்பூரணம் : என் - எனின் நிறுத்தமுறையானே இழைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்தடக்காது ஆசிரியப் பாவிற் கோதப்பட்ட நாலெழுத்தாதியாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு என்னும் செய்யுளாம் என்றவாறு. c.ம் பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய் ஊதை வீச ஊர வாய மதியோர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னல் லூர அமையேர் வளைத்தோள் அம்பரி நெடுங்கண் இணையீர் ஓதி ஏந்திள வனமுலை இரும்பன் மலரிடை எழுந்த மாவின் நறுந்தழை துயல்வருஞ் செறிந்தேந் தல்குல் அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின் மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடையலள் கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்ப ஒழிகுவ தன்றே (யாப். வி. ப. 380) என வரும். (234) பேராசிரியம் : இஃது இறுதிநின்ற இழைபிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது ஒற்றடுத்த வல்லெழுத்துப்பயிலாது;1 குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து2 இருசீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து: ஒப்பித்தலென்பது, பெரும்பான்மைமையான் நாற்சீரடி படுக்கப்பட்டென்றவாறு;3 ஓங்கிய மொழியான்4 நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஓசை எழும் மெல்லெழுத்தும் லகரா ளகாரங்களும் உடைய சொல்லான்: ஆங்ஙனம் ஒழுகின்5 இவையும். சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது (513) பொருள் புலப்படச் சென்று நடப்பின்; இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது (எ-று) அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறைமார்க்கத்தன வென்பது. இவற்றுக்குக் காரணந் தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டு மென்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கியென்பது6 மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்குமுன் வைப்பி னென்னெனின். இஃதிசைப் பாட்டாகலின் இனி வருகின்றது இசைத்தமிழாகலின் அதற்குபகாரப்பட இதனை, இறுதிக்கண் வைத்தானென்பது.1 (242) நச்சினார்க்கினியம் இஃது இறுதிநின்ற இழைபு கூறுகின்றது.2 (இ-ள்)ஒற்...J எ-துவல்லொற்றடுத்தவல்லெழுத்துப்பயிலாமல்குறள்...J எ.து இருசீர்முதல் எழுசீரடியளவும் அவ் வைந்தடியினையும் ஒப்பித்து. X§»...ன் எ-து நெட்டெழுத்துப் போல் ஓசைதரும். மெல்லெழுத்தும் லகார ளகாரங்களுமுடைய சொல்லானே முற்கூறியவாறே தெரிந்த மொழியாற் கிளந்து ஓதல்வேண்டாமற்3 பொருள் புலப்படச் செய்யும். இழை...F« இழைபினது இலக்கணம் பொருந்திற்றாம். எ-று. கழிநெடிலடியானும் வருமென்றாரேனும் எழுசீரின் மிகாதென்று கொள்க. ஒப்பித் தென்றதனாற் பெரும்பான்மை நாற்சீரடியான் வருஞ் செய்யுட்கண்ணே யொழிந்த நான்கடியும் வருமென்று கொள்க.4 அவ்வாறு வருவன கலியும் பரிபாடலும் போலு மிசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றுணர்க. இவ்வைப்பு ïனத்திற்குரியவாதலிற்5nறர்தல்nவண்டாதுbபாருள்nதான்றச்bசய்கவென்றார்.ï¤bjhšfh¥ãadh® மேற்கூறியது இசைத்தமிழாகலின் அதற்கு அதிகாரம்பட இதனை ஈற்றுக்கண் வைத்தார். இனி யாப்பருங்கல முதலியவற்றிற்கூரிய சித்திரகவி யினையும் ஈண்டுச் சேரக் கூறுகவெனின் யந்திரமு மந்திரமுமாய்த் தெய்வத்திற்கே யுரியவாகக்கூறும் மிறைக்கவி இம்முப்பத்துனான் குறுப்பும்போல அகனைந்திற்குரிய சான்றோர் செய்யுட்குறுப்பாய் வாரா வென்றும் அத்திணைக்குரிய மரபு விழுவிற்றென்றுங் கருதித் தொல்காப்பியனார் கூறாமையானும் அவற்ற திலக்கணங்கூறிய ஆசிரியரும் அவற்றிற்கு இலக்கியஞ் சான்றோர் செய்யுட்களுட் காணாமையின் வடவெழுத்தொரீஇய எழுத்தொடு புணர்ந்த சொல் லானன்றி வடவெழுத்தாற் பெரும்பான்மைவரச் செய்யுள் தாமே செய்து இலக்கியமாகக் காட்டினா ராதலானும் யாமும் இம்மிறைக்கவி யிலக்கணம் ஈண்டுக் கூறாமாயினாம்.1 ஆய்வுரை : இஃது இழைபு என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல் ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்யின் அச்செய்யுள் இழைபு என்னும் வனப்பினது இயல்பினைப் பொருந்தியதாகும் எ-று. ஆங்ஙனம் மொழிதலாவது, முற்சூத்திரத்திற் கூறியவாறு பொருள் புலப்படச் செய்தல். நாலெழுத்து முதல் இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தின் ஐவகையடியும் முறையானே வரத் தொடுக்கப்பட்ட போந்து போந்து என்னும் முதற்குறிப்புடைய ஆசிரியப்பாவினை இழைபு என்னும் வனப்புக்கு இலக்கியமாகக் காட்டினர் இளம்பூரணர். இச்சூத்திரத்திலுள்ள குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து என்னுந்தொடர்க்கு இருசீரடி முதலாக ஏழுசீ ரடியளவும் வந்த அடி ஐந்தினையும் பெரும்பான்மையும் நாற்சீரடி படுக்கப்பட்டு எனப்பொருள் வரைந்து, அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன எனவும், தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் இசைப் பாட்டாகிய இழைபு என்னும் வனப்பினை நாடகச் செய்யுளாகிய புலன் என்னும் வனப்பிற்கு முன்னர் வைத்தல் முறையாயினும் முத்தமிழுக்கும் இலக்கணங் கூறுங்கால் இயற்றமிழை அடுத்து இனிக் கூறுதற்குரியது இசைத்தமிழாதலின் இசைப் பாட்டாகிய இழைபின் இலக்கணம் இசைத்தமி ழிலக்கணத்தை யொட்டி இயற்றமிழ்ச் செய்யுளின் இறுதிக்கண் வைக்கப்பட்டது எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்குக் கூர்ந்து நோக்கத் தகுவதாகும். 235 செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம் பிழைத்தன போல வருவன உளவெனும்1 வந்தவற் றியலால் திரிபின்றி2 முடித்தல் தெள்ளியோர் கடனே. இளம்பூரணம் : என்-எனின், யாப்பிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (235) பேராசிரியம் : இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரம் செய்யப்பட்ட இலக்கணத்தின் வழீஇயின போன்று பின் தோன்றுவன வுளவேல் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு திரியாமல் முடித்துக் கோடல் அறிவுடையோரது கடன் (எ-று). அவை எண்சீர் முதலாயின வரிற் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும், ஏது நுதலிய முதுமொழியோடு, பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர் படுப்பனவும் யாப்பென்னும் உறுப்பின்பாற் கோடலும், பிறவும் ஈண்டோதாதன உளவெனின் அவையு மெல்லாஞ் செய்யுளிலக்கண முடிபாகு மென்றவாறு1. (243) நச்சினார்க்கினியம் : இது இவ்வோத்திற் கூறிய யாப்பிலக்கணத்திற் கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) செய்யுண்மருங்கின் மெய்பெறநாடி யிழைத்த இலக்கணம். எ-து செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரஞ்செய்யப்பட்ட2 இலக்கணத்தில், பிழைத்தனபோல வருபவுள வேனும், எ-து வழீஇயின போன்று பின்னொன்று வருவனவுளவேனும். வந்தவற்றியலாற் றிரிபின்றி முடித்தல் தெள்ளியோர்கடன். எ.து முற்கூறிய இலக்கணத்தோடு திரியாமன் முடித்துக்கோடல் அறிவுடையோர் கடன். எ-று அவை யெண்சீரின் மிக்கனவற்றைக் கழிநெடிலடிப்பாற்சார்த்துவனவும் வெண்பாவாயே வந்து கொச்சகமா யடங்கு எனவும் ஆசிரியம் அவ்வாறு வருவனவுங் கொச்சகங்களின் வேறுபாடுந்தொடை வேறுபாடுகளும் பிறவுமாம். ஆய்வுரை : இது, செய்யுளியலுக்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து நுண்ணிதின் வகுத்துரைக்கப்பட்ட இலக்கணத்தின் வழுவியன போன்று தோன்றுவன உளவாயின் அவற்றையும் முற்கூறப்பட்ட இலக்கணத் தோடு மாறுபடாமல் முடித்துக் கொள்ளுதல் தெளிந்த அறிஞர்களது கடனாகும் எ-று. இப்புறனடைச் சூத்திரத்தினைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்வியலிற் கூறப்பட்டுள்ள தமிழ்ச் செய்யுளிலக்கண அமைப்புக்கள் யாவும் ஆசிரியர் நூல் செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின் காலந்தோறும் புதியனவாகத் தோன்றி விரிவு பெறுவதற்குரிய செய்யுள் வகைகள் அனைத்திற்கும் அடிப்படையாய் இடந்தந்து அமையும்வண்ணம் ஒல்காப் புலமைத்தொல்காப்பியனாரால் நுண்ணிதின் ஆராய்ந்து வகுத்துணர்த்தப்பட்டன என்பது நன்கு விளங்கும்.  தொல்காப்பிய நூற்பா இரண்டாம் பாகம் எண் நூற்பா உரைகள் பக்க எண் நூற்பா எண் 113. மண்டிலங் குட்டம் ... 1 113 114. நெடுவெண் பாட்டே ... 11 114 115. கைக்கிளைதானே... 22 115 116. பரிபா டல்லே... 25 116 117. கொச்சகம்அராகŠ... 28 117 118. சொற்சீ ரடியும்... 10 118 119. கட்டுரைவகையான்... 42 119 120.அங்கதந் தானே...55 120 121. செம்பொரு ளாயின் ... 57 121 122. மொழிகரந்துமொழியின்... 60 122 123. செய்யுள்தாமே... 62 123 124. புகழொடும்பொருளொடும்... 64 124 125. வசையொடும் நசையொடும் ... 69 125 126. ஒத்தா ழிசைக்கலி ... 70 126 127. அவற்றுள்,ஒத்தா...77127128. இடைநிலைப்பாட்l... 78 128 129. தரவே தானும்... 84 129 130. இடைநிலைப்பாட்டே... 86 130 131. அடைநிலைக்கிளவி... 91 131 132. அ. போக்கியல்வகையே... 93 132 ஆ. தரவியல் ஒத்தும்... 93 132 133. ஏனையொன்w... 108 133 134. அதுவே, வண்ணகம்...111 134135. வண்ணகம்தானே... 113 135 136. தரவே தானும்... 116 136 137. அ. ஒத்துமூன் றாகும்... 118 137 138.அடக்கியல்வாரம்... 121 138 139. முதற்றொடை பெருகிச் ... 123 139 140. எண்ணிடை ஒழிதல் ... 129 140 141. ஒருபோ கியற்கையும்... 140 141 142. கொச்சக ஒருபோ ... 142 142 143.தரவின் றாகித்...144 143144. ஒருபான் சிறுமை...185 144 145. அம்போத uங்கம்...187 145 146. எருத்தேகொச்சகம்... 191 146 147. ஒருபொருள் நுதலிய... 199 147 148.தரவு«போக்கு«... 211 148 149. கூற்றும் மாற்றமும்... 256 149 150. ஆசிரியப் பாட்டின்... 266 150 151. நெடுவெண்பாட்டே... 269 151 152.அங்கதப்பாட்டள... 275 152 153. கலிவெண்பாட்டே...277 153 154. புறநிலை வாயுறை... 287 154 155. பரிபா டல்லே... 292 155 156.அளவியல்வகையே... 294 156 157. எழுநிலத்தெழுந்த... 295 157 158. அவைதாம் நூலி... 299 158 159.அவற்றுள்நூலெனப்... 300 159 160.அதுவேதானும்... 302 160 161. ஒருபொருள்நுதலிய... 303 161 162. அவற்றுள், சூத்திரம்... 306162 163. நேரினமணியைநிரல்பட ...308163 164. ஒருநெறி இன்றி... 309 164 165. மூன்றுறுப் படக்கிய... 311 165 166. பாட்டிடை வைத்த... 313 166 167. அதுவே தானும்... 319 167 168. ஒன்றே மற்றுஞ்... 321 168 169. ஒப்பொடுபுணர்ந்த...323 169 170.E©ikíŠ சுருக்கமும்...326 170171. நிறைமொழிமாந்தர்... 329 171 172. எழுத்தொடுஞ் சொல்லொடும்... 334 172 173. பாட்டிடைக் கலந்த ... 337 173 174.அதுவேதானும்... 340 174 175. அ. அடிநிமிர்கிளவி... 341 175 ஆ. அடியிகந்து வரினுங்... 341 ---- 176. »ளரியல்tகையிற்... 351176 177. கைக்கிளை முதலா ...353 177 178. காமப் òணர்ச்சியும்...355 178 179. மறைவெளிப்படுதலுந்...360 179 180. மெய்பெறும் அவையே... 366 180 181.பார்ப்பான்பாங்கன்... 368 181 182. பாணன் கூத்தன்... 371 182 183.ஊரு«அயலுŠ... 375 183 184.கிழவன்தன்னொடுங்... 377 184 185. ஒண்தொடி மாதர் ... 379 185 186.இடைச்சுரமருங்கிற்... 381 186 187.ஒழிந்தோர்கிளவி... 384 187 188. மனையோள் கிளவியுங்... 387 188 189. பார்ப்பார் அறிவர்... 392 189 190. பரத்தைவாயில்... 395 190 191. வாயில்உசாவே...397 191192. ஞாயிறு திங்கள் ...398 192 193. ஒருநெறிப்பட்டாங்... 403 193 194. இறப்பே நிகழ்வே... 407 194 195. இது நனி பயக்கும்... 410 195 196. உய்த்துணர்வின்றித்... 412 196 197. எண்வகைஇயனெறி... 415 197 198. சொல்லொடுங் குறிப்பொடும்... 417 198 199.இவ்விட¤திம்மொÊ... 419 199 200. இன்பமும் இடும்பையும் ... 422 200 201. அவ்வவ மாக்களும் ... 424 201 202. அகன்று பொருள் கிடப்பினும்... 428 202 203. மாட்டும்எச்சமும்...432 203204. tண்ணந் தாமே...435 204 205. அவைதாம்பாஅ... 437 205 206. அவற்றுட் பாஅ... 438 206 207. தாஅ வண்ணம்... 440 207 208. வல்லிசை வண்ணம் ... 442 208 209. மெல்லிசைவண்ண«... 443 209 210. இயைபுவண்ணம்... 444 210 211. அளபெடை வண்ணம்... 445 211 212.நெடுஞ்சீர்வண்ணம்... 446 212 213. குறுஞ்சீர் வண்ணங்... 448 213214. சித்திரவண்ண«... 449 214 215. நலிபு வண்ணம்... 451 215 216. அfப்பாட்டு வண்ணம்... 452 216 217. புறப்பாட்டுவண்ணம்... 455 217 218. ஒழுகுவண்ணம்... 457 218 219. ஒரூஉவண்ணம்... 459 219 220. எண்ணு வண்ணம்... 462 220 221. அகைப்புவண்ண«... 464221 222. தூங்கல்வண்ணம்... 466 222 223. ஏந்தல்வண்ணம்... 467 223 224. உருட்டு வண்ணம்...469224 225. முடுகு வண்ண...470 225226. வண்ணத் தாமே...472 226 227. சின்மென் மொழியாற்... 475 227 228. செய்யுண் மொழியாற்... 482 228 229. தொன்மை தானே ... 484 229 230. இழுமென்மொழியாš... 486 230 231. விருந்தேதானும்... 490 231 232. ஞகாரமுதலா... 492 232 233. தெரிந்த மொழியாற்... 495 233 234. ஒற்றொடுபுணர்ந்த...496 234235. செய்யுள் மருங்கின்... 501 235  பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு :14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம்வித்துவான்- (1930- 1935);அறிஞர்கா.சுப்பிரமணியபிள்ளை,சுவாமிவிபுலானந்தர்,நாவலர்சோமசுந்தரபாரதியார்ஆகியோர்ஆசிரியர்கள்.ஆய்வு kணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரையாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986)  1. வெண்டளைவிரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீரடியும் உளவென மொழிப எனவும், அறுசீரடியே ஆசிரியத்தளையொடு நெறிபெற்றியலும் நேரடி முன்னே எனவும்வரும் சூத்திரங்களால் வெண்பாவடிமயங்கியும் முச்சீரடி முதலாக அறுசீரடியீறாக ஆசிரிய வடிமயங்கியும் ஆசிரியப்பா வரும் என்பது உணர்த்தப்பெற்றது. ஆசிரிய நடைத்தே வஞ்சி என ஆசிரியப்பாவொடு வஞ்சிப்பாவை ஒற்றுமைப்படுத்துரைத்தலால், ஆசிரியப்பாவின்கண் வஞ்சியடிமயங்கி வரும் என்பதும் புலப்படுத்தப்பெற்றது. வெண்பாவடிமயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியம் எனவும் முச்சீரடி முதலாக அறுசீரடியீறாக அடிமயங்காசிரியத்தினை அடிமயங்காசிரியம் எனவும் வஞ்சியடிமயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசிரியம் எனவும் பெயரிட்டு வழங்குவர் பிற்காலத்தார். 2. இளம்பூரணர் கூறுமாறு இப்புறநானூற்றுப்பாடலைப் பதினேழடியாசிரியமாகக் கொள்ளுமிடத்து. 1. சிறியகட் பெறினேயெமக்கீயுமன்னே 2. பெரியகட்பெறினே யாம் பாடத்தான் மகிழ்ந்துண்ணுமன்னே முன் பக்கத் தொடர்ச்சி 3. சிறுசோற்றானும் நனிபலகலத்தன் மன்னே 4. பெருஞ்சோற்றானும் நனிபலகலத்தன் மன்னே 5. என்பொடுதடிபடு வழியெலாம் எமக்கீயுமன்னே 6. அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்குமன்னே 7. நரந்தநாறுந் தன்கையாற், 8. புலவுநாறு மென்றலை தைவருமன்னே 9. அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ 10. இரப்போர் கையுளும் போகிப்புரப்போர் புன்கண் பாவைசோர 11. அஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர்நாவிற் சென்றுவீழ்ந்தன்றவன் 12. அருநிறத்தியங்கியவேலே 13. ஆசாகெந்தையாண்டுளன்கொல்லோ? 14. இனிப்பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன்றீகுநருமில்லைப் 15. பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் 16. சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் 17. றீயாது வீயு முயிர்தவப்பலவே. என அடிகளைப்பகுத்துரைக்கலாம். இங்ஙனம் பகுக்குமிடத்துப் பத்தாமடியின் முன்னும் பின்னுமுள்ள அடிகள்யாவும் இளம்பூரணர்குறித்த வண்ணமே சீர் பெற்று அமைகின்றன. பத்தாமடி மட்டும் இரப்போர்கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர என நாற்சீரின் மிக்குவந்துள்ளது. எனவே இப்பாடலில் இவ்விடத்து இளம்பூரணர் கொண்டபாடம் வேறாக இருத்தல் வேண்டுமெனக் கருத வேண்டியுள்ளது. பதினேழடியாசிரியம் என இளம்பூரணர் குறித்த இப்புறப்பாடல் புறநானூற்றுப் பதிப்பில் இருபதடியாசிரியமாக அச்சிடப்பெற்றுள்ளது. 1. தொல்காப்பியம் செய்யுளியல் 16,20,21,43,45,48 ஆம் சூத்திரங்களில் வஞ்சிப்பாவின் இலக்கணம் உணர்த்தப்பெற்றது. வஞ்சியுரிச் சீரானும் ஏனைச்சீரானும் இருசீரடியானும் முச்சீரடியானுந் தூங்கலோசையானும் வந்து தனிச்சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிவது வஞ்சிப்பாவாகும். இப்பா இருசீரடிவஞ்சிப்பா, முச்சீரடிவஞ்சிப்பா என இருவகைப்படும். ஆசிரியச் சுரிதகத்தால் முடியும் குறளடிவஞ்சிப்பா தனிச்சொற்பெறுதல் தொல்காப்பியராற் கூறப்படாது போயினும் உரையிற்கோடலாற் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 1. வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய (தொல். செய், 21) எனத் தொல்காப்பியர் கூறுதலால் வஞ்சிப்பா ஆசிரிய வடியோடும் வெண்பாவடியோடும் கலியடியோடும் மயங்கிவரப் பெறும் என்பது புலனாம். பட்டினப்பாலையென்னும் வஞ்சிநெடும்பாட்டினுள் இவ்வடிகள் மயங்கி வருதல் காணலாகும். 1. மண்டிலமும் குட்டமும் ஆசிரியப்பாவினையுறுப்பாகவுடையவெனவே ஒத்தாழிசைக்கலியாயின் கலிப்பாவினையுறுப்பாகவுடையதென்பது பெறப்படும். 2. இணைக்குறளாசிரியப்பா, நேரிசையாசிரியப்பா என்னும் இரண்டினையும் குட்டச்செந்தூக்கு என ஒன்றாக வழங்குதலே வலியுடையதாகும். 1. இனிக் குட்டம் என்பது வழக்குச் சொல்லாற் செய்யப்பட்ட செய்யுள் என்பாரு முளர். செய்யுளீட்டச்சொல் எனப்படும் நாற்சொல்லாலுமன்றி வழக்குச்சொல் ஒன்றே பற்றிச் செய்யுள் செய்யப்படாமையின் வழக்குச்சொல்லால் இயன்ற அதனைக் குட்டம் என்றல் நிறைவுடைய இலக்கணமாகாது. 2. ஒத்தாழிசை என்பது நால்வகைச்செய்யுள்மேலும் செல்லும் என்பாருமுளர். அக்கூற்றும் பாவும் இனமும் பகுத்துரைப்பார்க்கே பொருந்தும். பாவினப்பகுப்பில்லாத இயற்றமிழ்ச்செய்யுட்கு அது பொருந்ததென மறுக்க. அன்றியும் ஒவ்வொன்றாய் வருவன ஒத்தாழிசையெனப்படும். ஒருபொருள்மேல் மூன்றடுக்கிவரும் கலிப்பாவின் உறுப்பே ஒத்தாழிசையெனப்படும் என்பது ஒத்துமூன் றாகும் ஒத்தா ழிசையே (செய். 142) எனவரும் சூத்திரத்தால் இனிது விளங்கும். 3. பயில நடத்தலாவது, பெரும்பான்மையாய் நடத்தல். 4. ஆசிரியத்திற் பெரும்பான்மையாய் நடக்கும். எனவே, வெண்பாவின்கண் சிறுபான்மை வருமென்றவாறாயிற்று. 1. இங்கு, அளவு என்றது, நான்கு அடியினை; நாற்சீரான் இயன்றது அளவடி யென்றாற்போன்று நாலடியான் இயன்றபாட்டும் அளவெனப்பட்டது. 2. உரையில் அளவடியினெடியபாட்டு அளவடியிற்குறியபாட்டு என்பன முறையே அளவினெடியபாட்டு அளவிற்குறியபாட்டு என்றிருத்தல் பொருத்தமாகும். 1. பரிந்தபாட்டு பரிபாட்டு எனப்பட்டது. பரிதல்-சுமத்தல்; வெண்பாவாகிப் பலவுறுப்புக்களையும் தாங்கிவருதலின் பரிபாட்டென்னும் பெயர்த்தாயிற்று. 1. இரண்டடியாய் ஓரெதுகைத்தொடையால் வருவது குறள்வெண்பா எனவும், எதுகையின்றி விகற்பத்தொடையால் வருவது விகற்பக்குறள்எனவும் வழங்கப்படும். மூன்றடியாய் வருவது சிந்தியல் வெண்பா. அவற்றுள் ஒத்து ஒருதொடையால் வருவது இன்னிசைச் சிந்தியல்வெண்பா எனவும், வேறுபட்ட தொடையால் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனவும் வழங்கப்படும். நான்கடியாய் வருவது சமனிலை வெண்பா. அவற்றுள் இரண்டாமடியின் இறுதியில் ஒரூஉத்தொடை (தனிச்சொல்) பெற்றுவருவது நேரிசைவெண்பா எனவும், ஒரூஉத் தொடை (தனிச்சொல்) பெறாது வருவது இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை வருவன பஃறொடைவெண்பா. இவற்றுள் ஒரூஉத்தொடை( தனிச்சொல்) பெற்றுவருவன நேரிசைப் பஃறொடை எனவும், ஒரூஉத்தொடை (தனிச்சொல்) இன்றிவருவன இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும். 2. யாதானும் ஒருபொருளைக்குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பா கலிவெண்பா எனக் கலிப்பாவகையுள் வைத்து எண்ணப்பெறும் என்பது! ஒருபொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே (செய் -147) என இவ்வியலிற் பின்வரும் சூத்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது. இங்குக் கூறப்பட்ட குறள்வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக் கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 1. கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகிய ஒழுகலாறு. இப்பொருள்பற்றி மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் வரின் அவை கைக்கிளை வெண்பா என வழங்கப்படும். கைக்கிளைப் பொருண்மை வெண்பா யாப்பினால் வரும் என எடுத்தோதவே , அப்பொருண்மை ஆசிரியப்பாவினால் வரப்பெறாதென்பதும், ஒருக்கால்வரின் அது பாடாண்பாட்டுக்கைக்கிளை யெனப்படும் எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர். 1. நாற்சீர் அளவடியானாற்போல நாலடியான் வருவதே அளவிற்பட்ட செய்யுளாதலின் வெண்பா என்னும் உறுப்பமைந்த செய்யுட்களுள் நாலடியால் வருவன அளவியல் வெண்பாவாகும். நாலடியின்மேல் ஐந்தடிமுதலாக வருவன வெல்லாம் நெடுவெண்பாட்டெனப்படும். நாலடியிற்குறைந்து மூன்றடியாலும் இரண்டடியாலும் வருவன குறுவெண்பாட்டெனப்படும். மூன்றடியால் வரும் குறுவெண்பாட்டினைச் சிந்தியல் வெண்பா எனவும், இரண்டடியால் வரும் குறுவெண்பாட்டினைக் குறள்வெண்பா எனவும் வழங்குவர். 2. கைக்கிளைப் பொருண்மைத்தாகிய மருட்பாவினைக் கைக்கிளை யெனப் பொருள்வகையாற் பெயர் கொடுத்தார். 3. பரிபாடல் என்பது கலியுறுப்புப்போலன்றிப் பலவடிகளையும் ஏற்று வரும் பாடலாகும். 4. அங்கதம் என்பது முகவிலக்கு முதலிய விலக்குறுப்பாகியும் பிறவாற்றானும் வசைபொருளாகி வருவன எனத் திருத்துக 5. ஒத்தவையெல்லாம் என்புழி ஒத்தல் என்றது, வெண்பா என்னும் பாவுறுப்பிற் றிரியாமை இலக்கணத்தால் ஒத்தமைதலை. 6. கைக்கிளைச் செய்யுள் வெண்பாவுறுப்பினால் வரினும் பொருள் வகையாற் கலிப்பாவின் பாற்படும் என்பதும், பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையால் வெண்பாவுறுப்பினோடு ஒப்புமையுடைய வென்பதும், குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் பலவாகி வந்து ஒருபாட்டாய் அடங்கும் என்பதும் இச்சூத்திரத்தின் பயன் என்பர் பேராசிரியர். 7. அல்லாதார் என்றது, தொல்காப்பியனார்க்குக் காலத்தாற்பிற்பட்ட யாப்பிலக்கண நூலாசிரியரை. குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடைவெண்பா என வெண்பா ஐந்துவகைப்படும் என்பர் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள். முன் பக்க தொடர்ச்சி குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை எனவைந் தாகும் வெண்பாத் தானே (58) என்பது யாப்பருங்கலம், குறள் வெண்பாவினை ஓரடிமுக்கால் என்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்கால் என்றும், நேரிசை வெண்பாவினை நேரிசை மூவடி முக்கால் என்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் என்றும். பஃறொடைவெண்பாவினைப் பலவடி முக்கால் என்றும் வழங்குவர் ஒருசாராசிரியர். செப்பலோசையிற் சிதைந்த பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா வெனவும் அல்லாத வெண்பாக்களது சிதைவினை ஒருபுடையொப்புமை நோக்கித் தத்தம் இனமாகவும் வழங்கப்படும் எனவும் கூறுவர் யாப்பருங்கலவுரையாசிரியர். 1. அங்கதமாகிய செய்யுள் என விரியும். அங்கதம் - வசை. 2. உம்மைத்தொகையாகக்கொண்டு அங்கதமும் செய்யுளும் என உம்மை விரித்துரைப்போர் செய்யுள் என்பதனை ஒருவகைச் செய்யுள் வகையினைக் குறித்த பெயராகக் கொள்வர். 3. அதற்கு - வெண்பா என்னும் பாவுறுப்பிற்கு. 1. வெண்பா யாப்பிற்குரியனவாகச் சொல்லப்படும் கைக்கிளைப் பொருளாவன முன்னைய நான்கும் (52) என அகத்திணையியலிற் கூறப்படும் அகப்புறக் கைக்கிளைப் பொருண்மையும், புறத்திணையியலிற் காமப்பகுதி கடவுளும் வரையார் என்றவும்மையாற் கொள்ளப்படும் புறப்புறக் கைக்கிளைப் பொருண்மையும், கடவுள்மாட்டுக் கொண்ட கைக்கிளைப் பொருண்மையுமாகும். இவையன்றி அகத்திணையியலிற் காமஞ் சாலா விளமை யோள் வழி (அகத் - 50) கொள்ளப்படும் கைக்கிளையும், புறத்திணையியலிற் கைக்கிளைவகை எனக் குறிக்கப்பட்டவற்றுட் கடவுண்மாட்டுக் கொள்ளப்படும் கைக்கிளையல்லாத கைக்கிளைப் பொருண்மையும் வெண்பா யாப்பிற்கு உரியவாகா எனக் கொள்க என்பதாம். 1. வெண்பா முன்வந்து ஆசிரியம் பின்னாகி முடிவது மருட்பா என்பதனை மருட்பா ஏனை இருசா ரல்லது தானிது வென்னுந் தன்மை யின்றே (செய். 81) என்ற சூத்திரத்தால் ஆசிரியர் முன்னர் விளக்கியுள்ளார் என்பதாம். 2. வெண்பா வுறுப்பாகிக் கைக்கிளைப்பொருள் வருமென மேலைச்சூத்திரத்திற் கூறிய ஆசிரியர், வெண்பாவினோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் கைக்கிளை வரும் என ஈண்டுக்கூறியதனால் அங்ஙனம் வெண்பா முன்வந்து அகவல் பின்னாகி முடிவது மருட் பாவாதலின் மருட்பா கைக்கிளைப் பொருள்பற்றிவரும் என்பது பெறப்படும். 1. புறநிலை முதலிய வாழ்த்துதற் பொருண்மை கலிப்பா வஞ்சிப்பா இரண்டிற்கு மட்டுமே விலக்கப்பட்டமையின் அங்ஙனம் விலக்கப்படாத ஆசிரியப்பாவும் வெண்பாவும் உறுப்பாகவரும் மருட்பா, புறநிலைவாழ்த்து வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை என்பன பொருளாகவரும் என்பது பெறப்படும். 2. அகப்புறக் கைக்கிளை என்றத, அகனைந்திணையின் முன்னர் நிகழ்தற் பாலதாகிய ஒருதலைக்காமமாகிய கைக்கிளைப் பொருண்மையினை. 1. தொகை நிலைவிரியின் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. தனக்கெனவரைந்து கூறப்படும் பாவுறுப்பின்றி ஆசிரியம், வஞ்சி வெண்பா, கலி என்னும் நால்வகைப்பாவினது ஓசையும் பெற்று வருவது பரிபாடல் என்பார், தொகை நிலைவகையின் இது பா என்னும் இயல்நெறியின்றி என்றார். பொதுவாய் நிற்றற்கும் என்புழிஉம்மை, எதிரது தழீஇய எச்சவும்மையாதலால், அடுத்துவரும் சூத்திரத்தில் உள்ளவாறு சிறப்புமுறையில் இலக்கணங்கூறவும் பெறும் என்பதாம். 1. ஒவ்வாததாகாதே - ஒக்குமல்லவா? இரண்டெதிர்மறை ஓருடன்பாட்டினை யுணர்த்தியது. 2. பொதுவாய் நிற்றற்கும் உரித்து என்று கூறினமையின் 3. முற்கூறியவாறு பரிபாடல் வெண்பாவுறுப்பாக வரினும் அஃது ஆசிரியம் வெண்பா என இரண்டாகத் தொகுத்தும் ஆசிரிய நடைத்து வஞ்சி, வெண்பா நடையது கலி என விரித்தும் கூறிய பா நான்கனுள்ளும் அடங்காது வேறாய் எண்ணப்படுமிடத்து வெண்பாவொன்றினால் மட்டுமே யாக்கப்படாது வெண்பா ஆசிரியம் இரண்டற்கும் பொதுவகையால் யாக்கப்படும் என்பதாம். 1. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்னும் நால்வகைப் பாக்களையும் ஆசிரியம் வஞ்சி என இரண்டாகத் தொகுத்தும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, மருட்பா, பரிபாடல் என ஆறாக விரித்தும் கூறுவராதலின் தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பாநான்கனுள் என்றார். 2. பரிபாடல் முற்கூறியபடி வெண்பா யாப்பிற்குச் சிறப்புரிமை யுடையதாக நிற்றலேயன்றி மேற்கூறிய நால்வகைப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கும் உரித்து என்றாராதலின் பொதுவாய் நிற்றற்கும் என்ற உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மையாயிற்று. 3. கலிப்பாவிற்கு ஓதிய இலக்கணங்கள் பரிபாடற்கு இல்லாமையாலும் தொல் காப்பியனார் பரிபாடலைக் கலிப்பாவின் வேறு பிரித்துக் கூறுதலாலும் கலிப்பாவிற்கும் பரிபாடற்கும் வேறுபாடு உள்ளன என்பது பெறப்படும். 1. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்பனவற்றைத் தனக்குரிய உறுப்புக் களாகப் பெற்றுக் காமப்பொருண்மை குறித்து வருதல் பரிபாடற்குரிய சிறப்பியல்பாகும் என்றவாறு. 2. அறமுதலாகிய மும்முதற்பொருள்களுள் காமங்கண்ணிய நிலைமைத்தாய் வருவது பரிபாடல். எனவே, ஏனைய அறம் பற்றியும் பொருள்பற்றியும் வாராதென்பதாயிற்று. எனினும், வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே என ஆசிரியர் சிறப்பு விதி கூறினமையாலும் நான்குபாவினும் பரிபாடல் வெண்பாயாப்பிற்றாதலானும் பரிபாடல் கடவுள்வாழ்த்தாகியும் வரப்பெறும் என விளக்கந் தந்தார் இளம்பூரணர். இவ்விளக்கம் சங்கச்செய்யுட்களாகிய எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலை யுளங்கொண்டு எழுதப்பெற்றதெனத் தெரிகிறது. காமங் கண்ணிய நிலைமைத் தாகும் என்றதொடர் உலகியலில் அகத்திணையொழுகலாறாகிய காமப்பொருண்மையுடன். காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினுமென்மனார் புலவர் (தொல். புறத். 23) எனப் பாடாண்பகுதி பற்றிய காமப்பொருண்மையினையும் ஒருங்குசுட்டி நிற்றலால், எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலும் கடவுள்வாழ்த்தாகவும் காமங்கண்ணிய நிலைமைத்தாகவும் தொல்காப்பியனார் கூறிய பரிபாடல் இலக்கணத்திற்கு ஒத்த இலக்கியமாக அமைந்துள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். 1. ஏனை நான்காவன: ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி என்பன. இந்நால்வகையடிகளே கொச்சகப்பாவின் அமைப்புக்குச் சிறப்புமுறையில் உரியவாகக் கொள்ளப்படும் என்பதாம். 2. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் (செய்யுளியல்-148) எனக்கொச்சகக் கலிக்குக்கூறிய இவ்விலக்கணத்தினால், பரிபாடலுள் கொச்சகம் வருமிடத்துத் தரவும் கொச்சகமும் இடையிடையே வருதலுங் கொள்ளப்படும் என்பதாம். 3. வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலைவகையே சொச்சகக்கலி என ஆசிரியர் கூறுதலால், வெண்டளையானும் பிறதளை யானும் வந்து ஈற்றடி முச்சீரால் முடியும் கொச்சகம் எல்லாம் பரிபாடற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பதாம். 1. இரண்டடியாலும் பலவடியாலும் குற்றெழுத்து நெருங்கிவரத்தொடுப்பது அராகம் என்னும் உறுப்பாகும். அதன் அடிவரையறை இரண்டடிசிற்றெல்லையாகவும் ஆறடி பேரெல்லையாகவும் அமையும் என்பதற்கு அகத்தியனார் கூறிய இலக்கணச் சூத்திரங்களை இளம்பூரணர் தம்முரையில் இடையிடையே எடுத்துக் காட்டுதலால் அவர் காலத்தில் முந்துநூலாகிய அகத்தியம் முற்றிலும் இயைந்தொழியாது சில சூத்திரங்களவிலேனும் வழங்கி வந்ததென்பது நன்கு புலனாகும். 2. ஆசிரியப்பாவின் இயல்பினாலாவது வெண்பாவின் இயல்பினாலாவது பாட்டிற் கூறிய பொருளை முடித்துக்கூறுவது சுரிதகம் என்னும் உறுப்பாகும். 3. எருத்து என்னும் உறுப்பு இரண்டடிச்சிற்றெல்லையாகப் பத்தடிப் பேரெல்லையாக வரும். தரவு என்னும் உறுப்பு பாட்டிற்கு முகமாகவும் சுரிதகம் அதன் காலாகவும் இடைநிலைப் பாட்டாகிய தாழிசை கொச்சகம் அராகம் என்பன இடையிலுள்ள ஏனையுறுப்புக்களாகவும் அமைந்து கிடத்தலானும் எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராதலானும் இங்குக் கூறப்படும் எருத்து என்னும் உறுப்பு முகமாகிய தரவினைச்சார்ந்து அதன்பின் அமைதல் வேண்டும் எனக்கொண்டார் இளம்பூரணர். 1. இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற அகத்தியச்சூத்திரத்தில் கொச்சகத்தின் வேறாகத் தரவு என்பதோ ருறுப்புக் கூறப்பட்டதாயினும் ஆசிரியர் தொல்காப்பியனார் முதலுறுப்பாகக் கொச்சகத்தினைக் கூறியவதனால் முதலுறுப்பாகியதரவும் கொச்சகத்துள் அடங்கும் என அமைதி கூறலும் ஒன்று என்பதாம். 2. எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தரவென்பதுபோலும் என இளம்பூரணருரையிற் காணப்படும். இத்தொடர், எருத்து என்பது இது என அவர் முன்னர் விளக்கிக் கூறிய விளக்கத்திற்கு முரணாய் ஐயம் விளைவித்தலின், இத்தொடர் பின்னர் ஏடெழுதுவோராற் சேர்த்தெழுதப்பெற்றதோ? எனக் கருதவேண்டியுளது, 3. பரிபாடற்கேற்ற பாவுறுப்பாவன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்குமாகும். 4. உள்ளுறுப்பென்பன கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என இச்சூத்திரத்தில் எடுத்துரைக்கப்பட்டவை. 5. பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மேற்குறித்த பாவுறுப்பு எல்லாச் செய்யுட்கும் பொதுவாகலான் அவற்றோடெண்ணாது கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் உள்ளுறுப்பாகிய இவற்றைப் பரிபாடற்குரிய சிறப்புறுப்பாக ஆசிரியர் எண்ணினார். 1. ஓராடியுள் ஓரிடத்து மடித்து அடுக்கியல் அடுக்கு கொய்சகம் என வழங்கப்படும். அதுபோல ஒருசெய்யுளுட்பலகுறள் அடுக்கி வருவது கொச்சகம் என்னும் உறுப்பாகும். எனவே இது ஒப்பினாகிய பெயர் என்றார். 2. பரிபாடலிற் பெரும்பான்மையும் பயின்று வருவது கொச்சகவுறுப்பாதலின் அது முன்னர் வைக்கப்பெற்றது. அராகம் என்னும் உறுப்பு தொடக்கத்தின்கண் வாராது இடையே வருவதாதலின் இடையே வைக்கப்பெற்றது. பாடற்பொருளை முடித்துக்கூறும் நிலையில் இறுதிக்கண் வருவது சுரிதகமாதலின் அராகத்தினை அடுத்துக் கூறப்பட்டது. எருத்து என்னும் உறுப்பில்லாமலும் பரிபாடல் அமைதல் பற்றியும் இடையில் வருவது அவ்வுறுப்பென்பது பற்றியும் அஃது இறுதியிற் கூறப்பட்டது. 1. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு செப்பிய நான்கு என்றதனால், இச்சூத்திரத்தில் வந்த நான்கு என்னுந்தொகை இங்கு எண்ணப்பட்ட கொச்சகமுதலிய நான்கினைக்குறியாது முன்னர்க் கூறப்பட்ட ஆசிரியப்பா வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்னும் பாவுறுப்பு நான்கினையுங்குறிப்பதாம் எனக் கொண்டார் பேராசிரியர். எனவே இங்குக் கொச்சகம் முதலாகச் சொல்லப்பட்ட உள்ளுறுப்பு நான்கினோடு முற்கூறப்பட்ட பாவுறுப்பு நான்கும் பரிபாடலில் விரவிவரும் என்பதும் இவ்வாறு பலபாக்களின் அடிகளையும் தன்னகத்தே ஏற்றுச் சுமந்து வருதலால் இப்பா பரிபாடல் என்னும் பெயர்த்தாயிற்று என்பதும் இங்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும். 1. சிறப்புறுப்பாகிய என்பது சிறப்புறுப்பாகி என்றிருத்தல் பொருத்தம். முப்பத்து நான்குமன்றி என்ற தொடரில் முப்பத்துநான்கு எனச் சுட்டப்பட்டவை எல்லாச் செய்யுளுக்கும் உரியனவாக மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட பொது வுறுப்புக்களை. 2. ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி எனமுற்கூறிய நான்கு பாக்களையும். 3. கொண்டுநிலை...xUt®T‰¿id ஒருவர் கொண்டு கூறும் நிலையிற் பாடப்பெறுஞ் செய்யுள். 1. அப்பா என்புழி அ என்னுஞ்சுட்டு, மேற் குறித்த பரிபாடலைச் சுட்டி நின்றது. 2. சொற்சீர், முடுகியல் என்ற அளவிற் கூறாது சொற்சீரடியும் முடுகியலடியும் என அடியொடு சார்த்திக் கூறினமையால், சொற்சீராதலும் முடுகியலாதலும் ஆகிய இவை மேற்குறித்த அடியொடு கூடியல்லது தனித்துவாரா என்பதாம். 1. சொற்சீரடி யென்பது வருகின்ற சூத்திரத்துட் கூறப்படும். முடுகியற்றன் மையொடு கலந்து ஒன்றாகிய வெண்பாவடி இங்கு முடுகியலடி எனப்பட்டது. 2. முடுகுவண்ணம் என்பது நாற்சீரடியின் மிக்கு ஓடி அராகந்தொடுத்து வருவது. 3. நாற்சீரடியுட் குற்றெழுத்துப் பயின்று வருவது அராகம் எனவும், நாற்சீரடியின் மிக்குக் குற்றெழுத்துப்பயின்று வருவது முடுகியல் எனவும் எனவும் கொள்ளப்படும். இவ்வுறுப்புக்கள் வண்ணவகையால் முறையே உருட்டுவண்ணம் முடுகுவண்ணம் எனவும் வழங்கப்படுமென்பது, உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும் (செய். 231) எனவும், முடுகுவண்ணம் அடியிறந் தோடி யதனோரற்றே (செய். 232) எனவும் வரும் இவ்வியற் சூத்திரங்களால் அறியப்படும். எனவே குறிலிணை பயில் வன முடுகியலெனவும் குறிலிணை விரவி வருவன அராகமெனவும் கூறுவார் கூற்று, ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணானதாதல் புலனாம். 4. சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரிமையுடையன. எனவே, கலிப்பாவில் அத்துணை பயின்றுவாரா எனவும் அராகவுறுப்பு கலிப்பாவின்கண் தேவபாணிக்கல்லது அக்கலிக்கண்யாண்டும் வாராவெனவும் கூறுவர் பேராசிரியர். 1. பேராசிரியர் உரையை அடியொற்றியது. 2. முட்டடி என்பது பேராசிரியருரையிற் கண்டபாடம். 3. புணர்ந்தும் எனப் பாடங் கொள்வர் பேராசிரியர். 4. எண் என்னும் இவ்வுறுப்பு அம்போதரங்கம் எனவும் வழங்கப்பெறும். ஈரடியால் இரண்டும், ஓரடியால் நான்கும், முச்சீரால் எட்டும், இருசீராற் பதினாறும் என இவ்வாறு எண்ணப்பெற்று அமைதலின் எண் என்னும் பெயர்த்தாயிற்று. 1. முற்றடி என்றது நாற்சீரடியினை. குறைவுசீர்த்தாகி வருதலாவது நாற்சீரிற் குறைந்து முச்சீரடியாகவும் இருசீரடியாகவும் வருதல். 2. ஒழியசையாகியும் என்றது, இறுதிச்சீர் ஓரசையோ ஈரசையோ குறைந்து வருதல். 3. வழியசைபுணர்த்தலாவது ஒருசீர்வருமிடத்தே பிறிதொருசீர்வரத் தொடுக்காது ஓத்தசீராய் ஒரசையொத்து வரத் தொடுத்தல். 4. சொற்சீர்த்து இறுதல்-சொல்தானே சீராந்தன்மையைப் பெற்று முடிதல். 1. வடவேங்கடந், தென்குமரி ஆயிடை என்றாற்போன்று கட்டுரைக்கட் சொல்லப் பட்டுவருவது கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடியாகும். 2. முட்டடி-முற்றடி. முற்றடி யெனவே பாடங்கொண்டார் இளம்பூரணர். முற்றடி யின்றிக்குறைவுசீர்த்தாகி என்றது. தூக்கு என்னும் உறுப்பினால் தனியடியாகத் துணிக்கப்பெற்று முடிதலின்றி; நின்னொக்கும் புகழ்நிழலவை கறையணி மிடற்றினவை என்றாங்குக் குறைந்த சீருடையதாய அடியினை. 1. ஒருசார் என்றாற்போன்று தான்சீராய் நின்றும் தன்னோடு சில அசை கூடியன்றி அடியெனப்படாதது ஒழியசை எனப்படும் சொற்சீரடியாகும். 2. அசையெனப்படாமையின் என்பதனை அடியெனப்படாமையின் எனத் திருத்திக்கொள்க. ஆங்கு என்றாற்போன்று வரும் தனிச்சொல் அசையாய் நின்று சொற்சீரடியாமாதலின் வழியசை யெனப்பட்டது. 3. ஒரூஉ என்றாங்கு இயலசைதானேயாயும் ஒழியசையாய் நிற்கும் என்றற்குச் சொற்சீரடியினை அசையென்றார். 4. தொகுபு என வந்த அசை முதற்கண்ணுள்ள உகுவதுபோலும் என்னுந் தொடையொடு புணர்ந்து நின்றாற் போல்வதொரு சுவைத்தன்மையினை விளைந்து நின்றமையின் வழியசைபுணர்ந்த சொற்சீரடியாயிற்று. 1. கொச்சகமாகிய உறுப்பு ஓசையொத்துத் தாழ்ந்திசைக்கும் தாழிசை யென்னும் இடைநிலைப்பாட்டெனப்படாமையின் உகுவதுபோலும் எனவரும் இவ்வடியின் இறுதியிலுள்ள தொகுபுடன் என்னுஞ் சொற்சீரடி மேல்வரும் ஆடுவபோலுமயில் என்னும்அடியொடு சென்றியைந்து தொகுபுடன் ஆடுவபோலுமயில் என நாற்சீரடியாகவும் வருவதாயிற்று என்பதாம். 2. சொற்சீர்த்திறுதலாவது, ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்களெல்லாம் சீராய்நின்று அடியறுதிப்பட முடிதல். 3. இத்தொடர் இனி, ஒழியசையினையும் வழியசையினையும் கூனென்னாமோ வெனன் என்றிருத்தல் வேண்டும். கூறினானென்னாமோ வெனின் என முன்னுள்ள பதிப்புக்களிற் காணப்படும் பாடம் பிழையாகும். இதனைக் கணேசஐயர் தம்பதிப்பிற் குறிப்பிட்டிருப்பது பாராட்டத்தகுவதாகும். 4 . இதுவே இலக்கணமாக ஆண்டும் வருமென்பது இயல்பு என்றதனானே யாண்டுவரினும் இஃதிலக்கணமென்பது பெற்றாம்- என இத்தொடரைத் திருத்தி வாசிப்பின் பொருள் இனிது புலனாம். 1. தொகுபுடன் எனவரும் சொற்சீரடியைத் தனித்து நிறுத்தாது பின்வரும் முச்சீரடியுடன் இயைத்துத் தொகுபுடன் ஆடுவ போலு மயில் என நாற்சீரடியால் வந்ததெனக் கொள்ளுதலும் பொருந்தும். 1. அங்கதம் - அங்கதச் செய்யுள். அரில்தப-குற்றம் கெட. தெரிதல்ஆராய்தல். செம்பொருள் - செம்பொருளங்கதம் கரந்தது - பழிகரப்பங்கதம். 1. நூற்றுவர்க்குத் தலைவனாகிய துரியோதனனொடு போர்செய்த வீமன் துரியோதனனது தொடையில் தண்டுகொண்டு தாக்கிக்கொன்றான் என்பது பாரதங்கூறும் போர்ச் செய்தியாகும். இதனை உவமையாகக் கூறுவதே நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான் எனவரும் கலித்தொகைத் தொடராகும். இது வீமனைப் புகழ்வது போன்று காணப்படினும், ஒருவனது தொடையில் தண்டுகொண்டு தாக்குதல் போரறமன்று குற்றமே என்பதனைப் புலப்படுத்தி வீமனைப் புகழ்வது போன்று அவனது வசையினைப் புலப்படுத்து வதாக அமைந்தமையின் அங்கதமாயிற்று. 2. பழிப்பதுபோலப் புகழ்தல் அங்கதமாகாது என்பார் அரில்தப (மயக்கமற) த் தெரியின் என்றார். 3. இது கரந்ததின்பாற்படும் என்பதே பிழையற்ற பழைய பாடம். கரந்தத்தின் பாற்படும் என்பதுபிழை 1. புறம். 142-ஆம் பாடலில் கொடைமடம்படுதலல்லது படைமடம்படான் என்றது வசை போன்று புகழெனப்படும் ஆதலின், அப்பாடல் அங்கதத்திற்கு உதாரணமாகக் கொள்ளத்தக்கதன்று என்பதாம். எனவே இது செம்பொருளின்பாற்படும் என உரையிடையே காணப்படுந் தொடர் நச்சினார்க்கினியர் எழுதியதன்று என்பதும் பிற்காலத்தில் ஏடெழுதினோராற் சேர்க்கப்பட்டதென்பதும் உய்த்துணரப்படும். 2.. செம்பொருளாயின் எனப்பாடங் கொள்ளுதலும் உண்டு. 3. செம்பொருளாயின-வெளிப்படையான பொருளையுடையன. வசை -பழித்துரை. 4. செம்பொருள் அங்கதமாவது வெளிப்படையாக இகழ்ந்துரைக்கும் பாடல். 1. வசைக்கூத்து என்பது உலகியலில் ஆள்வோர் ஆளப்படுவோர்ஆகிaஇUதிறத்தார்பாலு«காணப்படு«தவறுகளை¢சுட்oஇகழ்ந்துரைத்து¤திருத்து«நிலையிšநடிக்கப்படு«நாடகமாகும். 2. இது என்றது, செம்பொருளங்கதத்தினை. 1. செம்பொருளாயின என்ற பாடமே இளம்பூரணருரையிலும் பேராசிரியருரையிலும் காணப்படுகின்றது. செம்பொருளாவன என்ற பாடம் நச்சினார்க் கினியருரையிற் காணப்படு கின்றது. உரையில் ‘வாய்காவாதுvன்பது‘வாய்கரtதுvனவும்gடிக்கப்படும்.2. மருடீர்ந்த என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம். 3. இப்பாட்டுத் தமிழ் நாவலர் சரிதையில் ஔவையார் ஒருவனைப் பாடி அவன் இகழ்ச்சி சொல்ல அப்போது பாடிய அங்கத அகவல் என்று கூறப்பட்டுள்ளது. 1. மொழிகரந்து சொல்லினது என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம். மொழி கரந்து மொழிதலாவது, புகழ்வதுபோலப்பழித்தல். 2. பகைமன்னனையும் பகைநாட்டு இளவரசனையும் வெளிப்படையாகப் பழித்துக் கூறும் செம்பொருளங்கதம்போலன்றித் தன்னாட்டரசனையும் இளவரசனையும் பழித்துரைக்குங் கால் அதனை வெளிப்படக்கூறாது அவனைப் பொறுத்து மறைத்துக் கூறுவது பழிகரப்பங்கதம் எனப்படும். 3. அவை (புகழ்வன) போலப் பழிப்பன என்றிருத்தல் வேண்டும். 4. முனைமுகத்து நின்று தன்னையெதிர்ப்பார் ஒருவர்மேற் குறித்து எறிதற்குரிய வேற்படையைக் குறியாது முனையகத்து நிற்பார் பலர்மேலும் ஏவியது குற்றமாதலின், மலையைக் குறியாகவைத்து எய்த சேந்தனைப் போன்று பகைவர் பலரையும் குறிப்பின்றிப் பொதுப்பட எய்தான் எனப் புகழ்வதுபோன்று இகழ்ந்தமையின் இது பழிகரப்பங்கதமாயிற்று. 1. சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது இப்புறப்பாடலாகும். இதன்கண் செறுத்த செய்யுட் செய்செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுளனாயின் நன்று என மாந்தரஞ்சேரலிரும்பொறை கூறினானாக, அதுகேட்ட இளங்கீரனார் நின்ஆடுகொள்வரிசைக்கொப்பப், பாடுவன் மன்னாற் பகைவரைக்கடப்பே எனப்பாடியுள்ளார். இப்பாடல் புகழ்வதுபோலப் பழித்தல் என்னும் பழிகரப்பங்கதத்திற்குப் பேராசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. இதனைக் கூர்ந்து நோக்குங்கால் மாந்தரஞ்சேரல் தன்போர்த்திறத்தினைத் தானே வியந்து, கபிலர் இருந்தால் இவ்வெற்றியை நன்றாகப்பாடியிருப்பார் எனக் கூறியது தற் புகழ்ச்சியாகிய குற்றமாமாதலின். அவனுக்கு மறுமொழி கூறும் நிலையில் நினது வென்றிகொண்ட சிறப்பிற்குப் பொருந்த நீபகைவரைவென்ற வெற்றியை யானும் பாடுவேன் எனக் கூறியது புகழ்வதுபோலப் பழித்தற்குறிப்புடையதாம் என்பது பேராசிரியர் கருத்தென எண்ணவேண்டியுள்ளது. 2. சொல்லினது என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம். 3. செம்பொருள் படாமல் இசைத்தலாவது தாம்கூறுவது வசை யென்பது வெளிப்பட்டுத் தோன்றாதவாறு மறைத்துக் கூறுதல். 1. இது, மேல்தொகுத்துணர்த்தப்பட்ட செய்யுள் பொருளறிவுறுத்தம் முறையால் இருவகைப்படும் என்றுணர்த்துகின்றது. இருவகையாவன: செவியுறைச் செய்யுள் அங்கதச் செய்யுள் என்பன. 2. மேற்குறித்த செம்பொருளங்கதம், பழிகரப்பங்கதம் என்னும் இரண்டும் இனிக் கூறும் வகையாலும் இருதிறப்பட்டு நால்வகையாம் என்கின்றது. நால் வகையான: செம்பொருட்செவியுறை, செம்பொருளங்கதம், பழிகரப்புச் செவியுறை, பழிகரப்பங்கதம் என்பன. 1. இனி, இவ்வியல் 118-ஆம் சூத்திரத்து இரண்டாமடியை, கைக்கிளை பரிபாட்டங்கதஞ் செய்யுளோடு எனப் பாடங்கொண்டு கைக்கிளையும் பரிபாடலும் அங்கதமும் செய்யுளும் என எண்ணி நிறுத்த முறையானே மேல் அங்கதம் உணர்த்தி இச்சூத்திரத்திற் செய்யுளுணர்த்துகின்றார் என உரைகூறுவர் ஓராசிரியர். அங்கதச் செய்யுள் என்பதே பாடம் என்பது முன்னும் பின்னும் சூத்திரங்களில் அப்பாடமே பயின்று வருதலால் துணியப்படும். எல்லாப் பாட்டுஞ் செய்யுள் எனப்படுதலின் செய்யுள் என்ற சிறப்புப் பெயருடையதொரு செய்யுளுண்டெனக் கொள்ளுதற்கிடமில்லை. அங்கதஞ் செய்யுள் என்ற பாடங் கொண்டாலும் அங்கதம்படச் செய்தல் எனப்பொருள் கொள்ளுதலே பொருத்த முடையதாகும். 2. இவ்வுரை பேராசிரியருரையைத் தழுவியமைந்தது. 1. செய்யுள் - செய்தல்; தொழிற்பெயர். எனவே இச்சூத்திரத்தில் வந்த செய்யுள்தாமே இரண்டு என்பதற்கு அங்கதப்பாடலைச் செய்தல் தொழில்தாம் இருவகைய எனப்பொருள் கொள்ளப்பெற்றதெனக் கருதவேண்டியுளது. 2. துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்றாயிற் செவியுறைச் செய்யுளது வெனமொழிப என்பது பேராசிரியருரையிலும் நச்சினார்க்கினியருரையிலும் காணப்படும் பாடமாகும். செவியுறைச்செய்யுளாவது, செவியறிவுறுத்தற்பொருளிற் பாடப்படுஞ் செய்யுளாகும். 1. பொழிப்புரையாகிய இதனுள் துகளொடும் என்ற சொல்லுக்குரிய பொருள் இடம் பெறவில்லை. 2. துகள் - குற்றம்; அஃதாவது தங்கோனாகிய அரசன் படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தலும் அரசியலில் அறியாமையால் வகுத்த செயலும் ஆகிய குற்றம். பொருளாவது தன்வேந்தர்க்குப் பொருள் வருவாய் தரும் செயல்முறை. 3. இவ்வாறு தங்கோனுடைய குற்றங்களை எடுத்துரைத்து விலக்கி அவனுக்கு நற்பொருள் தருவனவற்றையெடுத்துரைத்தல் செவியுறைப்பாற்படும். 4. முகவிலக்கு என்பது மேனின்று மெய்கூறுங்கேளிராய் ஒருவர் முன்னின்று அவரது குற்றத்தையெடுத்துரைத்துத் தீமையினின்றும் விலக்கும் கருத்துடன் பாடப்படும் பாடல், இது செவியுறையின்பாற்படும். 1. புகழொடும் பொருளொடும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். 2. புகழொடும் பொருளொடும் என்ற பாடம் வசையொடும் நகையொடும் புணர்ந்தது அங்கதச் செய்யுள் எனப் பின்வருஞ் சூத்திரத்து ஆசிரியர் கூறுதலால் பொருந்தாதாகும். எனவே அப்பாடம் பொருத்தமின்று என்பதாம். 3. இவ்வுரைப்பகுதி கொண்டு பேராசிரியருரையில் விடுபட்ட தொடரை நிரப்பிக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 1. இவ்வுரைப்பகுதி கொண்டு பேராசிரியருரையில் விடுபட்ட தொடரை நிரப்பிக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 1. அங்கதச்செய்யுளாவது குற்றங்காட்டி இடித்துரைத்து நல்வழிப்படுத்தலை விரும்பிப் பாடப்படுஞ் செய்யுளாகும். ஒருவனைக் குற்றங்காட்டாது புகழ்ந்து பொருளொடும் நிலவுக என அறிவுறுத்துவது செவியுறைச் செய்யுள் என்பதும் குற்றங்காட்டி இடித்துரைத்து நல்வழிப்படுத்துவது அங்கதச்செய்யுள் என்பதும் இவ்வாற்றால் செய்யுள் இரு வகைப்படும் என்பதும் இளம்பூரணர் கூறும் பொருளாகும். 2. எனவே இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாகச் செய்யினும் அங்கதச் செய்யுளெனப்படும் எ-று எனவும், எனவே கூறப்பட்டனவெல்லாம் வெகுளியும் பொருளும் நகையும் பயப்பனவாயின எனவும் பின்வரும் உரைத் தொடர்களைக் கூர்ந்து நோக்கும் வழி, மேற்கூறிய அங்கதச் செய்யுள் வசையேயன்றி அவ்வசையானே நகைதோன்றச் செய்வது செவியுறை யெனப்படாது அங்கதச் செய்யுளெனவேபடும் என இவ்வுரைத் தொடரமைந் திருத்தல் வேண்டுமென்பது நன்குபுலனாம். 1. ஒருவர் குற்றங்களை எடுத்துக்கூறிக் கண்டித்து அவரைத் தீநெறியினின்றும் விலக்கும் முறையிற் பாடப்படுஞ்செய்யுள் விலக்கியற் செய்யுள் எனப்படும். 2. நகைப்பொருளொடும் என்றிருத்தல் வேண்டுமென்பது பேராசிரியருரையின் அடிக்குறிப்பிற் கூறப்பட்டுள்ளது. 3. அவை இலக்கியச்செய்யுளுட் காண்க என்பது பிழை. 1. அகத்தியனார் ஓதியதாக இங்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டிய சூத்திரம் முந்துநூலாகிய அகத்தியத்தினைச் சார்ந்ததாதல் வேண்டும். காதலர் இருவர்பாலும் அன்பு ஒத்த அன்பினைந்திணையொழுகலாற்றிலும் அவ்விருவருள் ஒருவர் அன்புடையராக மற்றவரது அன்பு ஒவ்வாநிலையில் அன்பி னைந் திணையைச் சார்ந்த கைக்கிளை பெருந்திணைகளாகிய ஏனை அகத்திணை யொழுக லாறுகளிலும் ஆராய்ந்து இயற்றப்பெற்ற அணிகலன்களையணிந்த இளமகளிரொடு மைந்தரிடையே யுளதாம் கூட்டமேயாயினும் பிரிவுபற்றிய புலத்தலேயாயினும் அன்பினைந் திணையொழுகலாற்றின் உணர்வுபுலப்படத்தோன்றி மகிழ்ச்சிப் பொலிவுடன் பொருந்திய அகப்பொருட்டிறம் அமையப் பாடப்பெறும் பா கலியெனச் சிறப்பித்து ரைக்கப்படுந் தோற்றத்தின, தாகும் என்பது இவ்வகத்தியச்சூத்திரத்தின் பொருளாகும். 2. இவ்வாறு அகப்பொருட்குச் சிறப்புரிமை வாய்ந்த பா கலிப்பா என்பது புலப்படுத்துவார், கலிப்பா அகப்பொருள் என வழங்கும் என்றார் இளம்பூரணர். 3. ஒத்துத் தாழ் இசையை ஒத்தாழிசையென்றான்; அது வினைத்தொகை யாகலின் மருவிய வகையான் முடியுமென்பது. தாழிசையென்பது தாழமுடைய துள்ளலோசைத்தாம்; இது முறைமையிற் பெற்றபெயர் என இவ்வுரைத் தொடரைத் திருத்தி வாசித்தல் இதன் பின்வரும் உரைப்பகுதியுடன் பொருட் பொருத்தமுடையதாகும். ஒத்துத் தாழ் இசை என்பது ஒத்தாழிசை முன்பக்கத்தொடர்ச்சி யென மருவி வழங்கியதென்பார், மருவிய வகையான் முடியும் என்றார். தானுடைய துள்ளலோசைத்தாம் என்ற தொடர், தாழமுடைய துள்ளலோசைத்தாம் என்றிருத்தல் வேண்டுமென்பது, அவ்வாறு தாழமுடையதன்றியும் வரும் எனப் பின்வரும் தொடர்வழக்கால் உய்த்துணரப்படும். 1. தாழிசையின்றியும் ஒத்தாழிசை சிறுபான்மை வருதலின், இது பன்மை பற்றிப் பெற்ற பெயர் என இயையும். இங்குத் தாழிசை யென்றது தாழம் பட்ட ஓசையினை. 2. ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குரிய தரவு முதலிய ஏனைய உறுப்புக்களினும் தாழிசையென்னும் உறுப்பே சிறந்தமையின் ஒத்தாழிசைக்கலியென்பது தலைமையாற் பெற்ற பெயர் எனக்கூறுதலும் பொருத்தமடையதாகும். 3. இங்குக் கட்டளைக்கலியென்றது, எழுத்தெண்ணிக் கொள்ளப்பெற்ற அடிகளாலாகிய கலிப்பாவினை. 1. இடைநிலைப்பாட்டு என்பது, கலிப்பாவுக்குரிய தரவு முதலியவுறுப்புக்களுள் இடையே நிற்பதாகிய தாழிசையாகும். இது,தாழம்பட்டவோசையின்றியும்வருதலுண்டுஎன்பார்நீயே...Úyhnt’ என்னும் கொச்சகக் கலியுள் இடைநிலைப்பாட்டுத் தாழிசையின்றி வந்தது என்றார். 2. கலிவெண்பாட்டு என்பது கலியாகிய வெண்பாட்டு என விரிதலின் பண்புத் தொகையாகும். இதன்கண் கலி என்னும் முன்மொழிக்கண் பொருள் சிறந்து நின்றது. 3. ஒத்தாழிசைக்கலி என்றாற்போன்று கொச்சகக்கலியென்பதும் உறுப்பினாற் பெற்றபெயர் என்பார், கொச்சகம் என்பதும் உறுப்பினாற்பெற்ற பெயர் என்றார். 4. உறழ்தல் என்பது ஒருவரோடொருவர் உறழ்ந்து (வாதிட்டுப்) பேசுதல். உறழ்தற் பொருள்பற்றி வருதலின் உறழ்கலி யென்பது பொருள்பற்றி வந்த காரணப்பெயர். 5. தம்மின் ஒத்துவருதற் கட்டளையுடைமையாவது ஓசையும் பொருளும் ஒத்துஒருபொருள்மேல்மூன்றடுக்கிtருதல்.1. கலித்தொகையில் உள்ள நூற்றைம்பது கலிப்பாக்களிலும் ஒத்தாழிசைக் கலி mறுபத்தெட்டு,ïவ்வாறுáறப்புடைத்தாய்ப்bபருவரவிற்றாய்tருதலின்xத்தாழிசைக்கலிKன்வைக்கப்பட்டது.ïJ பாவென்னும் உறுப்பிலக்கணம் கூறுமிடமாதலின் ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் இடையே கலிவெண்பா வைக்கப்பட்டது. அதுபோலத் தரவும் போக்கும் சிறுபான்மையின்றியும் வரும் என்றற்குக் கொச்சகப்பா அதன்பின் வைக்கப்பெற்றது. ஒத்தாழிசைக்கலி முதலியபோலாது பெரும்பான்மையும் சுரிதகமின்றி வருதலே உறழ் கலியினியல் பாதலின் அவையெல்லாவற்றின் பின்னும் உறழ்கலி வைக்கப்பெற்றது. 2. உறழ்கலி, அடக்கியலாகிய சுரிதகமின்றியும் யாயினும் பொருளினும் வேற்றுமை யுடையதாய் வருதலின் கொச்சகக்கலியுள் அடங்காதோ என்பது வினா. 3. கொச்சகக்கலிபோன்று அடக்கியலின்றிவரின் (மிக்க அடியினையுடையதாய்) அடி நிமிர்தலும் ஒழுகிசையினையுடைய தாகலும் வேண்டும். உறழ்கலியாயின் அடிநிமிராதும் ஒழுகிசையின்றியும் வரும். ஆதலின் உறழ்கலி கொச்சகக்கலியுள் அடங்காது என்பது மேற்குறித்தவினாவுக்குரிய விடையாகும். 4. அச்சிறிய வேற்றுமைகருதி உறழ்கலியினைக் கொச்சகக் கலியின் வேறாகக் கொள்வதெதற்கு? இரண்டையும் ஒன்றாகக் கூறலாமே எனின் என்பது தடை. 5. மேற்கூறிவருகின்ற செய்யுள் வகையெல்லாம் சீர், அடி, பா, பொருள் முதலிய சிலவுறுப்புவகையான் வேறுபடுவதன்றிச் செய்யுள் வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதின்மையின் அவ்வேறுபாடுஞ் சிலவாதல் நோக்கித் தம்முள் வேறுபாடுடையவற்றை ஒன்றெனக் கூறமாட்டோமாதலால் மேற்குறித்த வினா ஏற்புடையதன்று என்பது அத்தடைக்குரிய விடையாகும். 1. அன்றியும் நூல் செய்யுங்கால் முன்னோர் வழங்கிய மரபு என்பது மேற் கொள்ளப்படுதல் வேண்டும். முதனூற்கும் இத்தகைய மரபு இன்றியமையாததாகும். ஐம்பெரும்பூதங்களும் அவற்றது கலப்பாகிய உலகப் பொருள்களும் அஃறிணையான் வழங்கினும் மக்களுந்தேவரும் முதலாயினோரை உயர்திணை வாய்பாட்டால் வழங்குதல் மரபாகும். அதுபோன்று உறழ்கலி என நூலாசிரியர் வழங்கிய பெயர் வழக்கமும் மரபெனக் கொள்ளப்படும். இவ்வாறு சிறுசிறு வேற்றுமையினையும் உளங்கொண்டு செய்யுளை வகைப்படுத்துக் கொள்ளாக்கால் ஏனையசெய்யுட்களும் தம்முள் வேறுபாடின்றி ஒன்றெனக் கொள்ளவேண்டிய நிலையேற்படும். 2. பரிபாடலும் கலிப்பாவினுள் அடங்குமென்பார் பிற்கால யாப்பிலக்கண நூலார். சங்கத்துச் சான்றோர்களால் செய்யுளிலக் கணமறிந்து தொகுக்கப்பெற்ற எட்டுத்தொகையுள் கலியும் பரிபாடலும் தம்மின் வேறுபட்ட இருவகைச் செய்யுட்களாகக் கொள்ளப்பெற்றமையின், பரிபாடல் கலியுளடங்குமென்பார் தமிழ்ச் செய்யுளிலக்கணம் அறியாதாரே. அன்றியும் அராகவுறுப்பில்லாத முடுகியலடி பரிபாடற்குரியது. அவ்வடி கொச்சகக் கலியல்லாத ஒத்தாழிசைக்கலிப்பா முதலியவற்றுள் வருதலில்லை. பரிபாடற்குரிய கொச்சகம் என்னும் உறுப்பு உறழ்கலிக்கு வாராது. பரிபாடலும் கலியும் ஒன்றெனக்கூறினால் அராகவுறுப்பில்லாத முடுகியலடி கொச்சகக் கலியல்லாத கலிப்பாவினுள் வருதல் வேண்டும். கொச்சகவுறுப்பு உறழ்கலியுள் வருதல் வேண்டும். இவை அவ்வாறு வாராமையின் பரிபாடலும் கலியும் ஒன்றல்ல. இரு வேறு பாக்களே யெனக் கூறி மறுக்க என்றவாறு. 1. இச்சூத்திரத்திற்கு வினாவும் விடையும் தடையும் விடையுமாக அமைந்த பேராசிரியர் உரைப்பகுதியின் சுருக்கமாக அமைந்தது நச்சினார்க்கினியர் வரைந்த இவ்வுரைப்பகுதியாகும். 1. அவை-ஒத்தாழிசைக்கலியின் இருவகை, முன்னர்-பின்னர். 2. ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும் என இச்சூத்திரத்தால் வகுத்துக் கூறியதன்பயன்: அவையிரண்டும் தம்முட் பகுத்துக் கூறப்படும் உட்பிரிவினை யுடையன என அறிவுறுத்தலாகும். 3. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும் என்பது இளம்பூரணருரையிலும், பேராசிரியருரையிலும் உள்ள பாடம். நச்சினார்க்கினியர் உரையில் அவற்றுள் என்னுந் தனிச்சொல் ஏடெழுதுவோரால் விடுபட்டிருத்தல் வேண்டும். 4. சூத்திரப்பொருள் விடுபட்டது. பேராசிரியர் உரையிற் காணப்படும் சூத்திரப் பொருளும் விளக்கமும் இங்கு இடம் பெறத்தக்கன. 1. இடைநிலைப்பாட்டொடு என்பது பேராசிரியர் கொண்ட பாடமாகும். 2. ஒன்று-ஒத்தாழிசைக்கலியிருவகையுள் முதலாவது. ஒன்று, தரவு இடைநிலைப்பாட்டு அடை போக்கு என நடைநவின்று ஒழுகும், என மொழிப எனக்கிடைக்கை முறையால் இயைத்துப் பொருள்கொள்ளுதல் வேண்டும் என்பது, இவற்றின் இயல்புரைக்கும் நிலையில் பின்வருஞ் சூத்திரங்களால் உய்த்துணரப்படும். 3. இடைநிலைப்பாட்டு என்ற பெயரே இடையிலுள்ள இப்பாட்டிற்குமுன் முந்துற்றதோ ருறுப்பு உண்டு என்பதனையும் அதுவே அடுத்த சூத்திரத்தில் முன்வைத்து இலக்கணங்கூறப்படும் தரவு என்னும் உறுப்பாம் என்பதனையும் நன்கு புலப்படுத்தும் என்பதாம். 1. நடைநவின்றொழுகும் என இளம்பூரணர் கொண்ட பாடமே பேராசிரியருங் கொண்டு நவின்றொழுகும் என்பதற்குப் பயின்று, வரும் என உரை வரைந்தார். பயின்று வரும் எனவே என்றது தாம் கூறிய உரைப் பொருளை எடுத்துக்கூறும் பகுதியாகும். நடைநவின்றொழுகும் என்பதே பேராசிரியர் கொண்டபாடம் என்பது, மற்று நடைநவின் றொழுகுமென்ற தென்னையெனின் எனப் பின்வரும் உரைத் தொடரால் இனிது புலனாம். எனவே இச்சூத்திரத்தில் நடைபயின்றொழுகும் எனப் புதியதொரு பாடங் கொள்ளுதல் பொருந்தாது. 2. தொல்காப்பியனார் கூறிய ஒத்தாழிசைக்கலியினையே நேரிசை யொத் தாழிசைக்கலி, அம்போதரங்க வொத்தாழிசைக்கலி, வண்ணகவொத்தாழிசைக்கலி என மூவகையாகப் பகுத்துரைப்பர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். நேரிசை அம்போ தரங்கம் வண்ணகமென் றோதிய மூன்றே ஒத்தா ழிசைக்கலி. (யாப்பருங்கலம் 80) தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த் தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச் சுரிதகம் சொன்ன விரண்டினு ளொன்றாய் நிகழ்வது நேரிசை யொத்தா ழிசையே, (யாப்பருங்கலம் 82) முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போதரங்க வொத் தாழிசைக் கலியே, (யாப்பருங்கலம் 83) அவற்றொடு முடுகிய லடியுடை யராகம். மடுப்பது வண்ணக வொத்தா ழிசைக்கலி. (யாப்பருங்கலம் 84) என்றார் யாப்பருங்கல நூலாசிரியர். 3. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்குறுப்புடையது நேரிசை யொத்தாழிசைக்கலியெனவும், தரவு, தாழிசை, அம்போதரங்கம். தனிச்சொல் சுரிதகம் என்னும் முன் பக்க தொடர்ச்சி ஐந்துறுப்புடையது அம்போதரங்கவொத்தாழி சைக்கலியெனவும், தரவு, தாழிசை, அராகம் அம்போதரங்கம், தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்புடையது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவெனவும் பிற்கால யாப்பிலக்கண நூலார் கொண்டனர் என்பது மேற்காட்டிய யாப்பருங்கலச் சூத்திரங்களாற் புலனாம். கடைச் சங்கத்துச் சான்றோர் தொகுத்துள்ள நூற்றைம்பது கலிப்பாக்களிலும் அராகவுறுப்பும் அம்போதரங்க வுறுப்பும் பெற்றுவரும் ஒத்தாழிசைக்கலி ஒன்று மில்லாமையால் ஒத்தாழிசைக்கலி மூன்று எனப் பிற்காலத்தார் கூறும் பகுப்புப் பொருளற்றது என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. ஒத்தாழிசைக்கலியின் இருவகையினுள் முதலாவதாகச் சொல்லப்பட்ட ஒன்று இவ்வாறு பெருவரவிற்றாய்ப் பயின்றுவரும். எனவே, இனிக்கூறப்படும் ஏனை யொன்றாகிய தேவர்ப்பராஅய கலிவகை இத்துணைப் பெருவரவிற்றாய்ப் பயின்று வாராது என்பதாம். 2. ஒத்தாழிசைக்கலி யுறுப்புக்களுள் இடையே நிற்கும் உறுப்பு தாழிசையாதலின் அஃது இடைநிலைப்பாட்டு எனவும் வழங்கப்படும். 3. ஒத்தாழிசைக்கலியின் இடைநிற்பன எல்லாம் தாழிசையெனப்படா, தாழம்பட்ட ஓசையுடையனவே தாழிசை யெனப்படும். அல்லதான இடைநிலைப் பாட்டெனவே படும் என்பதாம். 4. இப்பாடல் தாழம்பட்ட ஓசையினதாய் இடையே நிற்றலின் இது தாழிசையெனவும் இடைநிலைப்பாட்டெனவும் கூறப்படும். 1. இதன்கண் தாழம்பட்ட ஓசையில்லாமையால் தாழிசையல்லாத இடை நிலைப் பாட்டு என்றார். 2. இவ்வாறு இடைவரும் இவ்வுறுப்புத்தாழம்பட்ட வோசையுடையதாகியும் அவ் வோசையின்றியும் வருதலின் இவ்விருவகை யினையும் குறிக்கும் நிலையில் இடைநிலைப் பாட்டு எனப் பொதுப் பெயராற் கூறப்பட்டது. 3. பாட்டின் முகத்துத் தரப்படுதலின் தரவு என்பது பெயராயிற்று. இதனை எருத்து எனவுஞ் சொல்லுவர். இசைத்தமிழ்நூலார் தரவு தாழிசை கொச்சகம் சுரிதகம் என்பவற்றை முறையே, முகம், நிலை, கொச்சகம், முரி என நான்காகப் பகுத்துரைப்பர். இனி, கூத்தநூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலை என்பதனுள் அடக்கி, முகத்திற்படுந்தரவினை முகமெனவும் இடைநிற்பனவற்றை இடைநிலையெனவும் இறுதிக்கண் முரிந்துமாறுஞ்சுரிதகத் தினை முரியெனவுங் கூறுவர். முகத்திற்படுந்தரவினை முகநிலை யெனவும் இடை நிற்பனவற்றை இடைநிலையெனவும் இறுதியினிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற்பொருண்மையாற் பெயர் கொடுத்தார் செய்யுளியலின்கண்ணும். இனி இசைத்தமிழில் வருங்கால் முகம், நிலை, கொச்சகம், முரியென்ப ஒருசாராசிரியர் (சிலப். கடலாடு 35) எனவரும் அடியார்க்கு நல்லாருரை இங்கு ஒப்புநோக்கி, யுணரத்தகுவதாகும். 4. செந்துறையாகிய இசைப்பாட்டு தனிச்சொல்லாற் பொருள் பயப்பதின்மையின் அது (தனிச்சொல்) சிறப்புடையதன்றென்று அதனை அடக்கியலுள் அடக்குவர். 1. சுரிதகம் என்பது தரவு, இடைநிலைப்பாட்டு முதலாகிய உள்ளுறுப்பின் பொருளெல்லாவற்றையும் அடக்குமியல்பினது ஆதலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், மேற்குறித்த பொருளெல்லாவற்றையும் தன்கண் போதந்து வைத்தலின் வைப்பு எனவும், கூறிய பொருட்பகுதியையே பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் பல்வேறு காரணப்பெயர்களால் வழங்கப்படுவதாயிற்று. 2. அடைநிலை என்பது தனிச்சொல். அது முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை அடைந்தன்றி (சார்ந்தன்றி) வாராமையின் அடைநிலையெனவும் தனிநின்று சீராதலின் தனிச்சொல் எனவும் வழங்கப்படும். 3. இடைநிலையுறுப் பென்னாது இடைநிலைப்பாட்டு என்றதனால், கலிக்கு உறுப்பாய் வருதலேயன்றி இவை தாமே ஒன்றும் பலவும் பாட்டாகவும் வரும் இடனுடைய என்பதாம். 4. ஒத்தாழிசைக்கலிக்குரிய உறுப்புக்களுள் தரவு முற்பட்டதாயினும் தாழிசையாற் பெயர் பெறுஞ் சிறப்பு நோக்கி இடைநிலைப்பாட்டு தரவிற்கு முன் கூறப்பட்டது. ஆயினும் அஃது இடைநிலைப்பாட்டு எனப்பெயர்பெறுதலின் செய்யுளமைப்பில் தரவினை அதன்முன் வைத்தலே மரபாயிற்று. 5. ஒத்தாழிசைக்கலிப்பா சிறுபான்மை தனிச்சொல்லின்றியும் வருதலின் தனிச் சொல் என்னும் உறுப்பினை இறுதிக்கண் கூறினார். 1. இடைநிலைப்பாட்டொடு எனப் பேராசிரியர் கொண்ட பாடமே நச்சினார்க்கினியர் உரைக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது. ஒன்று இடைநிலைப்பாட்டொடு தரவு போக்கு அடையென நடைநவின்றொழுகும் என இயைத்துப் பொருள் வரையப் பட்டமை காண்க. நடைநவின்று ஒழுகும் என்னும் பயனிலைக்கு எழுவாயாகிய ஒன்று என்பது, மேலைச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட ஒத்தாழிசைக்கலி இரண்டினுள் முதற்கண்ணதாகிய அகநிலை யொத்தாழிசைக் கலிப் பாவினைக் குறித்து நின்றது. இங்கு, இழிபு உயர்பு என்பன அடிகளின் சிற்றெல்லையினையும் பேரெல்லை யினையுங் குறித்துநின்றன. 1. இச்சூத்திரத்திற்கு, தரவே தானும் நாலடி யிழிபா யாறிரண் டுயர்பென் றறையவும் பெறுமே எனப் பேராசிரியருரையிலும் தரவே தானும் நாலடி யிழிபா வாறிரண் டுயர்பேறவும் பெறுமே என நச்சினார்க்கினியருரையிலும் பாட வேறுபாடுகள் உள்ளன. 2. ஒன்பதுநிலம் என்றது, நாலடி முதல் பன்னிரண்டடிவரையமைந்த ஒன்பதடிகளை. 1. அறையவும் பெறும் என்றதனால் ஒத்தாழிசைக்கலியின் தரவு சிறுபான்மை பன்னிரண்டடியின் இகந்துவரம்வு பெறும் என இலேசினாற் கொண்டார். கலித்தொகை 75-ஆம் பாடலின் தரவு பதின்மூன்றடியால் வந்தது. இவ்வாறு பன்னிரண் டடியினைக் கடந்து வரும் தரவு துள்ளலோசையால் வாராமையின் இலேசினாற் கொள்ளப்பட்டது. 2. அளவு என்றது, அடியளவினை. 1. தரவகப் பட்ட மரபின தென்ப. என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். ஒத்து மூன்றடுக்கி வருவன ஒத்தாழிசையாதலின் மரபின என்றபாடமே சிறப்புடையது. 2. இடைநிலைப்பாட்டு ஆவன தாழிசைகள். அகப்படுதல் - உள்ளடங்குதல்; தரவுக்குக் கூறப்பட்ட அடிவரம்புக்குள் சுருங்கிவருதல். 1. அகப்படுதல் - உள்ளடங்குதல். தரவுக்கு அகப்படுதலாவது அதற்குரிய முற்கூறாகிய நாலடிமுதல் பிற்கூறாகிய பன்னிரண்டடிவரையுள்ள இருகூறுகளில் ஒன்றற்கு உள்ளடங்குதல். 2. எனவே நான்கடிமுதல் இரண்டடிவரைத் தரவிற் சுருங்கித் தாழிசைவரு மென்பதாயிற்று என்றிருத்தல் வேண்டும். 1. மக்களகத்துப் பிறந்தான் என்றவழி மக்கட்சாதியோடு ஒக்கப்பிறந்தான் என அகம் என்ற சொல் ஒத்தல் என்ற பொருளில் வழங்குதலால் இங்குத் தரவகப்பட்ட மரபினது என்பதற்குத் தரவோடு ஒத்தமரபினது எனப்பொருள்கொண்டு தரவோடு ஒத்து வரும் தாழிசையெனக் கூறுதலும் பொருந்தும். இங்கெடுத்துக்காட்டிய 124-ஆம் கலியினுற் நாலடித்தரவினையொத்துத் தாழிசையும் நாலடியால் வந்துள்ளமை காணலாம். 1. தாழிசையை இடைநிலைப்பாட்டு என ஆசிரியர் கூறுதலானும், பாட்டு என்பது ஈரடியிற்குறைந்து ஓரடியால் வாராமையானும் தாழிசை ஈரடியிற் குறைந்து வாரா. நான்கடியின் உயர்ந்து வருங்கால் தாழம்பட்ட ஓசையமையாமையின் நான்கடியின் உயரவாராவெனக் கொள்க என்றார் பேராசிரியர். 2. முற்கூற்றினுட்படுதல் எனத்திருத்துக. 3. இவ்வியல் 132-ஆம் சூத்திரமுதல் 137-ஆம்சூத்திரமுடிய அகநிலை யொத் தாழிசைக்கலியின் உறுப்புக்களின் அடியளவு கூறுகின்றார் ஆசிரியர். இவ்வொத்தாழிசைக் கலியின் நான்கடியின் மேற்பட்ட தாழிசைகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆறடிமுதல் இரண்டடிகாறும் (தாழிசை) வரப்பெறும் என்று கொள்க என்ற விளக்கம் பொருத்த முடையதாகத் தோன்றவில்லை. 1. ஆங்கென்கிளவி என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. முக்கூறப்பட்ட கலியுறுப்புக்களின் பொருளைத் தனக்குரிய அடையாகக் கொண்டு அப்பொருளைச் சார்த்திவருவது தனிச்சொல்லாதலின் அடைநிலைக் கிளவி யென்னும் பெயர்த்தாயிற்று. 3. அடைநிலைக்கிளவி - தனிச்சொல். 1. ஆங்கு என்னுஞ்சொல் அசையாய் நடைநவின்று ஒழுகும் (பயின்றுவரும்). எனவே, நடைநவிலாதனவாய் வரும் தனிச்சொற்கள் பொருள் பயந்து வரும் என்பதாம். 2. ஆங்கெனமொழிப எனப் பாடங் கொண்டார் இளம்பூரணர். ஆங்கென்கிளவி எனப் பாடங் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 3. யாண்டுமப் பொருளுணர்த்தல் வேண்டும் என்றிருத்தல் பொருத்தம். 1. இதன் முதலடியினை ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடிகளை மற்றொரு சூத்திரமாகவும் கொள்வர் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும். 2. தரவு, இடைநிலைப்பாட்டு, அடைநிலைக்கிளவி, போக்கியல் என மேலைச் சூத்திரங்களில் இலக்கணங்கூறிய இம்முறையிலே நான்குறுப்புக்களும் அமைந்து வருவது ஒத்தாழிசைக்கலிப்பாவாம் என்றவாறு. 1. இதனை நேரிசை யொத்தாழிசைக்கலிப்பா என வழங்குவர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். 1. கடவுட்பாட்டு என்றது, கலித்தொகையின் முதற்கண் கடவுள் வாழ்த்தாக அமைந்த ஆறறியந்தணர்க்கு என்னும் முதற்குறிப்புடைய ஒத்தாழிசைக் கலிப்பாவினை. 2. ஒத்தாழிசைக் கலிப்பாவின் இருவகைகளுள் முதல்வகையான இது அகநிலை யொத்தாழிசைக் கலிப்பா எனவும் வழங்கப்பெறும். 3. கலியின் உள்ளுறுப்புப் பொருள்களை முடிவுபோகச் சொல்லி முடித்தலும் அப் பொருட்பகுதியினைத் தொகுத்து வைக்கப்பெறுதலும் ஆகிய இரண்டிலக் கணமுடையது முன்பக்கதொடர்ச்சி சுரிதகம் என்பார், போக்கியல் வகையே வைப்பெனப் படும் என்றார்; அடக்கியல் வாரத் தரவோ டொக்கும் என்புழி முற்கூறிய உள்ளுறுப் பின் பொருள்களைத் தன்கண் அடக்கியதாய் அப்பொருளையே மீண்டும் கூறுவதாய் அமைந்தது கரிதகம் என்பதனை அடக்கியல் வாரம் எனச்சொல்லின் முடியும் இலக்கணமே கூறினாற் போல இங்கும்போக்கு, வைப்பு எனச்சொல்லின் முடியும் இலக்கணத்தால் சுரிதகத்தின் இருவகையிலக்கணமும் ஒருங்குணர்த்தினார் ஆசிரியர் என்பதாம். 1. போக்கு, வைப்பு என்பன சுரிதகத்திற்கு வழங்கும் காரணப் பெயர்கள். பிறிதோருறுப்பினை அவாவாமற் சொல்லக் கருதிய பொருளைக் கடைபோகச் சொல்லி முடித்தலாற் போக்கு என்பது காரணப்பெயர். முன்னுள்ள தரவு தாழிசைகளிற் கூறப்பட்ட பொருட்பகுதியை முடிவில் தொகுத்து வைக்கப் பெறுதலின் வைப்பு என்பதும் காரணப்பெயர். 2. தரவியல் ஒத்தும் அதன்அகப்படும் என்று அதற்கு உம்மை கொடுத்தமையின் என இத்தொடரைத் திருத்திப் பொருள்காண்க. 1. சுருங்கிய வெல்லை கூறாமையின் ஆசிரியத்தின் இழிந்த வெல்லையாகிய மூன்றடிச் சிறுமையிற் சுருங்காது வருவதாயிற்று என இவ்வுரைத் தொடரை அமைத்துக் கொள்ளுதல் பொருட்பொருத்த முடையதாகும். 2. பாகம் - பாதி. 3. ஒழிந்த கலி நான்கு என்றது, இங்குக் கூறப்படும் அகநிலையொத் தாழிசைக் கலியல்லாத ஏனையொன்றெனப் பட்ட ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி என்னும் நான்கினையும். 4. நுனிவிரல் என்பதனை விரல்நுனி என இயைத்தாற்போன்று இறுதி நிலையுரைத்தன்று எனவரும் இச்சூத்திரத்தொடரை நிலைஇறுதி உரைத்தன்று எனமொழி மாற்றிப் பொருள்கொள்க, என்றார் பேராசிரியர். 5. இங்ஙனம் கொள்ளுங்கால் இங்கு நிலை என்றது இடைநிலைப்பாட்டாகிய உறுப்பினை. அதன் இறுதியைக் கூறுவது சுரிதக. எனவே இடைநிலைப் பாட்டின் பொருளை முடித்துக்கூறுதல் சுரிதகத்தின் இலக்கணம் என்பதாயிற்று. 1. போக்கியல் வகையே வைப்பெனப்படும் என்னும் மேலைச்சூத்திரம் உள்ளுறுப்பின் பொருளைத் தன்கண் வைக்கப்படுவது சுரிதகம் என அதன் பொது விதி மாத்திரையே கூறிற்று. சுரிதகத்தில் வைக்கப்படுவது இன்னவுறுப்பின் பொருள் என்னும் சிறப்புவிதி அச்சூத்திரத்தில் இடம்பெறவில்லை. இடைநிலைப்பாட்டின் பொருளே சுரிதகத்தில் பெரும்பான்மையும் வைக்கப்படும் என்பதூஉம் பொது விதியாற் சிறுபான்மை தரவின் பொருளும் சுரிதகத்தில் வைக்கப்படும் என்பதூஉம், தரவியல் ஒத்தல் என்றதனால் தாவோடொத்த பொருட்கு ஏற்றனவும் கொள்ளப்படும் என்பதூஉம் பேராசிரியர் தரும் விளக்கமாகும். 2. நிலையிறுதியுரைத்தது என்றிருத்தல் வேண்டும். 3. புரைதீர் இறுதி என அடைகொடுத்தோதினமையால் நிலையெனப்படும் தாழிசைப்பொருளோடு போக்கியலாகிய சுரிதகத்தின் பொருளும் தனித்தனியாக வருமானால் அவ்விரண்டினையும் தம்முள் மாறுபடாமற் பொருந்தச் செய்தல் வேண்டும் என்பதாம். 1. அஃதேல் தரவகப்பட்டதெனச் சுருங்குதலன்றி, ஒத்தற்பொருளும்படுமாயின் தரவகப்படும்போக்கு என்னாது, தரவியலொத்து மதனகப்படும் என்றதென்னையெனின் - ஒத்துமென்ற உம்மையாற் சிறுபான்மை மிக்குவரவும் பெறும் போக்கென்பது கொள்க என இவ்வுரைப் பகுதியினைத் திருத்திப் பொருள் காண்க. 1. நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையினைத் தழுவியே இச்சூத்திரத்திற்குப் பொருள் வரைந்திருத்தலால், பேராசிரியர் கருத்துக்கிணங்க நிலையென்றது, இடை நிலைப்பாட்டை என இவ்வுரைத்தொடர் இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது. 1. இனி, இறுதிநிலையுரைத்த சுரிதகமும் என வரும் இவ்வுரைத் தொடரைக் கூர்ந்து நோக்கின் ஈண்டு இறுதிநிலை என்பது சுரிதகத்தால் கடைபோகச் சொல்லும் முடிந்த பொருளுக்கு நிலைக்களமாகவுள்ள தாழிசையினைக் குறித்துநின்றது எனக்கருதுதற்கும் இடமுண்டு. 1. புரைபாடது என்ற பாடமே சூத்திரச் சொல்லமைப்புடன் இயைந்ததாகும். 1. சுரிதகத்தால் முடித்துக் கூறப்படும் பொருள். 1. ஏனையொன்று என்றது, ஒத்தாழிசைக்கலியின் இருவகையாக முற்குறித்த இரண்டனுள் இரண்டாவது வகையாக அமைந்தது. அது தேவர்ப்பராஅய ஒத்தாழிசைக் கலியெனப்படும். 2. ஏனையொன்று எனப்பட்ட ஒத்தாழிசை முன்னிலையிடமாகத் தேவரைப் பரவும் பொருண்மைத்து. எனவே இஃது அகத்திணையொழுகலாறு பற்றிய ஒத்தாழிசையாகா தென்பதூஉம், எனவே ஒன்றெனப்பட்ட முன்னையது அகநிலையொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும் என்பதூஉம் உய்த்துணரப்படும். 1. தேவரைப்பராவுதலாகிய இது, முன்னிலைக்கண் வருமெனவே, முன் வாழ்த்தியல் வகையே நாற்பாக்குமுரித்தே யென்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கும் எய்திற்றேனும் அவை தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டன அன்மையின் தேவபாணி ஆகாவாயின. யான் இன்னபெருஞ்சிறப்பின் தெய்வம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி, நின்னைக் காப்பேன்; நீ வாழிய எனத் தெய்வம் சொல்லியதாகச் செய்யுள் செய்தலும் ஆகாது; தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலைவாழ்த்தாவதன்றித் தேவர்ப் பராயிற்றாகாது. இங்ஙனம் கூறவே அகநிலை யொத்தாழிசைக் கலி யல்லாத ஒழிந்த ஒத்தாழிசைக்கலி முன்னிலைக்கண் வருவதாயின் தேவர்ப்பராவுதலாகிய பொருளிலேயே வரும் என்பது நன்கு பெறப்படும். 2. நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறிவழக்கம், கலியே பரிபாட் டாயிருபாவினும் உரியதாகும் (தொல் அகத் 53) என்புழிக் கலியும் பரிபாடலும் அகப்பொருட்குரிமையுடையன எனக்கூறிய தொல்காப்பியனார், அத்துணையன்றிக் கடவுள் வாழ்த்துப் பொருள்படவும் சிறுபான்மை கலிப்பாவரும் என்பதனை இச்சூத்திரந்தாற் கூறினார் என்பது, ஏனையொன்றே எனச் சிறுபான்மையென்பது படப் பிற்கூறியதனாற் புலனாம். 1. (தெய்வம்) படர்க்கையாயவழிப் பாட்டுடைத் தலைவனைக் கூட்டிக் கூறினும் புறநிலை வாழ்த்தேயாம் என்பது பெறுதும். 2. எனவே முன்னிலையாயின் பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாவிடினும் தேவர்ப்பராயிற்றேயாம் என்பது பெற்றாம். 3. தெய்வம் தன்னை வழிபாடு செய்யும் ஒருவர்பால் ஆவேசித்து நின்று நின்னை யான் காப்பேன் எனக்கூறுதல் உலக வழக்கில் ஒருசில இடங்களில் நிகழ்வதாயினும், அங்ஙனம் தன்மையில் தெய்வங் கூறியதாகச் செய்யுள் செய்தல் தேவபாணி இலக்கணத்திற்கு ஒவ்வாது என்பதாம். 1. முன்னிலையிடமாகத் தேவர்ப்பராய இவ்வொத்தாழிசைக் கலிப்பா வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும். 2. இருவகையொத்தாழிசைக்கலியுள் முன்னதே ஒத்தாழிசைக் கலியெனப்படும் எனவும் ஏனையொன்று எனப் பின்னர்க்கூறப்பட்டது. ஒத்தாழிசைக்கலியென்ற பெயர்க் குறியதன்றென்பது. அதனை வண்ணகம் ஒருபோகு என வேறுபெயராற் கூறினமையால் உய்த்துணரப்படும் எனவும் கூறுவர் பேராசிரியர். 1. இனி ஏனையொன்றின் வகையாகிய வண்ணகம் என்பது முற்கூறிய ஒத் தாழிசைக்கலியென வழங்கப்படும் என்பது ஒத்தாழிசைக்கலி யதிகாரம்பட முன் வைத்தமையாற்புலனாம். 2. ஒருபோகினை ஒத்தாழிசையென்று பெயர்கூறித் தாழிசைபெய்து காட்டுவோர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர் முதலியோர். ஆசிரியர் தொல்காப்பியனார் ஒருபோகிற்குத் தாழிசையுறுப்பு ஓதாமையின் அங்ஙனம் தாழிசைபெய்து காட்டுதல் பொருந்தாது என்பதாம். 3. ஏனையொன்று என்ற ஒத்தாழிசை என்றிருத்தல் வேண்டும். 4. பேராசிரியர் உரையை அடியொற்றியது இவ்வுரை. 1. வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா என்பது தரவு, தாழிசை, எண், சுரிதகம் என்னும் நான்குறுப்பினையுடையது. எண் என்பது அம்போதரங்கம் என்னும் உறுப்பாகும். வாரம் என்பது சுரிகதம். 1. தரவினாலே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறுத்திப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையாலே வண்ணித்துப்புகழ்தலின் வண்ணகம் எனப் பெயர் பெற்றது என்றார் பேராசிரியர். ஏனையுறுப்பால் வண்ணஞ்செய்தல் உண்டாயினும் வண்ணித்தற்குச் சிறந்த வுறுப்பு தாழிசையே என்பர். எனவே அகநிலையொத்தாழிசையுள் வரும் தாழிசை இங்ஙனம் வண்ணித்து வாரா என்பதாம். 2. எண்ணுறுப்பு என்பது, நீரிற்றோன்றும் அலைபோல வரவரச்சுருங்கி வருதலின் அம்போதரங்கம் எனவும் கூறப்பெறுதலின், எண்ணுறுப்புப்பெற்றுவரும் ஒத்தாழிசைக் கலியினை அம்பேதரங்கவொத்தாழிசைக்கலிப்பா எனவும் கூறுவர். 3. இங்ஙனங் கூறுவார் யாப்பருங்கல ஆசிரியர். அவற்றொடு முடுகியல் அடியுடையராகம் மடுப்பது வண்ணக வொத்தாழிசைக்கலி (யாப். 84) என்பது யாப்பருங்கலம். மேற்சொல்லப்பட்ட தரவும் தாழிசையும் அம்போதரங்க வுறுப்பும், தனிச்சொல்லும் சுரிதகமும் என்றிவற்றோடும் ஒருங்கு கடுகி நடக்கும் அடியையுடைய அராகவுறுப்பும் தாழிசைப் பின்னர்க் கூட்டிச் சொல்லப்பெறுவது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவாம் என்பது இதன் பொருளாகும். 4. பிற்காலத்திற் காக்கைபாடினியார் முதலாயுள்ள எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இத்தொல்காப்பியம் முதனூலாதலின், தொல்காப்பியனாரொடு மாறுபடுதல் மரபன்றாதலின் யாப்பருங்கல ஆசிரியர் முதலியோர் வண்ணக வொத்தாழிசைக்குக் கூறும் இலக்கணம் பொருந்தாதென மறுக்க என்றார் பேராசிரியர். 1. வண்ணகவொத்தாழிசைக்குத் தனிச்சொல் உண்டென்பது இதன்கண் கூறப்படவில்லையாயினும், மேல் அகநிலையொத்தாழிசைக்கு ஓதிய அதிகாரத்தால் இதற்குங் கொள்ளப்படும் என்பர் பேராசிரியர். 2. அவ்வுறுப்பு என்றது எண் என்னும் உறுப்பினை. 3. இது - தொல்காப்பியமாகிய இந்நூல். 1. இங்கு நேரடி என்றது, நான்கடி ஆறடி எட்டடி என இவ்வாறு இரட்டைப்படவரும் அடியமைப்பினை. கொச்சகத்தரவு என்றது கொச்சகச் கலியில் வரும் தரவு. அஃது ஐந்து ஏழு. ஒன்பது, பதினொன்று என ஒற்றைப்பட்ட அடிகளாலும் வருதலுண்டு; அதுபோலன்றி இது இரட்டைப்பட்ட அடிகளாலேவரும் நான்கடிமுதல் பன்னிரண்டடிவரை இரட்டைப்பட்ட அடிகளாலேவரும் என மேற்குறித்த ஆசிரியர் தரவுக்குரியவாகச் சொல்லப்பட்ட நாலடி முதல் பன்னிரண்டடிவரையுள்ள ஒன்பதடிகளுள் நான்கடி, ஆறடி, எட்டடி என்னும் இம்மூன்றடிகளே வண்ணகவொத்தாழிசைக் கலிப்பாவிற்குரிய தரவில் வரும் என்பதாம். 2. எட்டடி தலையளவு. ஆறடி இடையளவு. நான்கடி கடையளவு. 3. ஒழிந்தவுறுப்பென்பன தரவல்லாத தாழிசை, எண் (அம்போதரங்கம்) முதலாக வண்ணகவொத்தாழிசைக்குச் சொல்லப்பட்ட உறுப்புக்கள். 1. இச்சூத்திரத்தில் நேரடிபற்றிய நிலைமைத்தாகும் என்ற தொடர்க்கு அளவடியால் வரும் எனப் பொருளுரைத்தார் இளம்பூரணர். சமநிலையின்றி வியநிலைவாரா எனப் பொருளுரைத்தனர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். சமநிலையாவது இரட்டைப்பட்ட அடிகளையுடையதாதல். வியநிலையாவது ஒற்றைப்பட்ட அடிகளையுடையதாதல். எனவே வண்ணகவொத்தாழிசைக்குரிய தரவு, நான்கடி, ஆறடி, எட்டடி யென இவ்வாறு இரட்டைப்பட்ட அடிகளையுடையதாய் வருதலன்றி ஐந்தடி, ஏழடி, ஒன்பதடி யென இவ்வாறு ஒற்றைப்பட்ட அடிகளையுடையதாய் வாராதென்பதாம். 2. எனவே, முன்னர் அகநிலையொத்தாழிசைக்குக்கூறிய தரவும் தாழிசையும் இங்ஙனம் இரட்டைப்பட்ட அடிகளையுடையனவாய் வருதல்வேண்டுமென்னும் வரையறையில வென்பது கொள்க. இத்தொடரில் அளவடி என்றது நாற்சீரடியென்ற பொருளில் ஆளப்பெற்றதன்று. சூத்திரத்திற்குறித்த நேரடி (இரட்டைப் பட்ட அடி) என்ற பொருளில் ஆளப்பெற்றதாகும். 3. அடுத்துக் கூறப்படும் ஒத்தாழிசைக்கும் அம்போதரங்கவுறுப்பாகிய பேரெண், சிற்றெண் என்பவற்றிற்கும் நேரடி பற்றிய (இரட்டைப்பட்ட அடிகளால் வருதலாகிய) இந்நிலைமை ஒக்கும் என்பதாம். 4. இரட்டைப்பட்ட அடிகளையுடையது சமநிலையெனவும் ஒற்றைப்பட்ட அடிகளை யுடையது வியநிலையெனவும் பேராசிரியர் கூறியமுறையே அடிகளை நச்சினார்க்கினியருங் கொண்டார். 1. இதனை இரண்டு சூத்திரங்களாகப் பகுத்துப் பொருள் வரைவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 2. இறந்தது காத்தலாவது, முன்னர்க்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தால் அமைத்து அதன் இலக்கணத்தைக்காத்தல். மேல் இடைநிலைப்பாட்டாகிய தாழிசையின் அடிவரையறை முதலிய இலக்கணங்களைக் கூறிய தொல்காப்பியனார் அத்தாழிசைகள் ஒருபொருள்மேல் மூன்றடுக்கிவருதலாகிய இயல்பினைக் கூறாதுவிட்டார். கூறாப்படாத அவ்வியல்பினை ஒத்துமூன்றாகும் ஓத்தாழிசையே என இச்சூத்திரத்தாற் கூறிக்காத்தார். ஆதலின் இஃது இறந்ததுகாத்தல் என்னும் உத்தியாயிற்று. 1. இங்கு இடப்பொருள் என்றது, விழாநீங்கியபின் பொலிவு நீங்கியகளம். 2. இங்கு இடத்தியல்பொருள் என்றது, தாமரைப்பொய்கை யுள் நீர் நீத்தமலரினை 3. மூவகை வண்ணகம் என்பன முறையே எட்டடியும் ஆறடியும் நான்கடியும் உடைய தரவினைப் பெற்று முறையே தலையளவு, இடையளவு, கடையளவு ஆகிவருவன. 1. சமநிலைத்தரவு என்றது, இடையளவாகிய ஆறடித்தரவினை. 2. தரவுக்குரிய ஆறடியின் இடைநிலையாகிய நான்கடியானும் மூன்றடியானுமன்றி ஐந்தடியால் தாழிசைவாராது என்பதாம். 3. தாழிசை இரண்டடியானாகிய அம்போதரங்கவுறுப்பொடு தொடர்ந்து முன்னிற்றலின் இவ்விடத்து இரண்டடியால் வாராதென்பது பெற்றாம். 4. தரவிற்சுருங்கும் எனப் பொதுப்படக்கூறவே கடையளவு தரவினுந் தாழிசை சுருங்கும் என்பது உய்த்துணரப்படும். 5. இச்சூத்திரத்தில் தரவெனப்பட்டது இடையளவு தரவாகிய ஆறடித்தரவு எனக்கொண்டு தாழிசை அதனிற் சுருங்குதலாவது நான்கடியாலும் மூன்றடியாலும் வருதல் எனக் கூறாக்கால் ஓரடி முதலாகத் தாழிசை வருமெனக் கொள்ளவேண்டிய நிலையேற்படும். அந்நிலை யேற்படாமைப்பொருட்டு ஈண்டுத் தரவின் சுருங்கித் தோன்றுமென்றது, கடையளவினையொழித்துத் தலையளவுத் தரவுக்குரிய எட்டடியினும் இடையளவுத்தரவுக்குரிய ஆறடியினும் சுருங்கி அவற்றின் பாதியாய் முறையே நான்கடியாகியும் மூன்றடியாகியும் தாழிசை வரப்பெறும் எனக்கொள்க என்பார், தோன்றும் என்றதனாற் கடையளவினை ஒழித்து மற்றைத் தரவு இரண்டு அளவாகக் கொள்வாம் எனக் கொள்க என்றார். 1. பேராசிரியர் உரையை அடியொற்றியது இவ்வுரை விளக்கமாகும். 2. வண்ணகத்தின் என்றிருத்தல் வேண்டும். 3. ஈரடியிரண்டும் எண்ணொடு தொடர்தலின் என்றிருத்தல் வேண்டும். 1. அடக்கியலாகிய வாரம் எனவிரியும், அடக்கியல், வாரம் என்பன சுரிதகத்திற்குரிய பெயர்களாகும். தரவோடு ஒத்தலாவது, தரவுக்குரிய அடிவரைறையைப்பெற்று வருதல். 2. தரவு முதலியவுறுப்பிக்களிற் சொல்லப்பட்ட பொருள்களைத் தன்கண் அடக்கி வைத்துக்கொள்ளும் இயல்பினது சுரிதகம் எனஅறிவுறுத்துவார், அதன் இயல்பினை அடக்கியல்வாரம் என விரித்துக்கூறினார். 3. தரவே தாழிசை எண்ணே வாரம் (செ. 140) என மேல் நிறுத்த முறையானே தாழிசைக்குப்பின் எண்ணுறுப்பாகிய அம்போதரங்கத்தினைக் கூறாது சுரிதகத்தினை முறையன்றி மயங்கக் கூறினமையான், அடைநிலைக்கிளவியாகிய தனிச்சொல்வரும்பொழுது அதனை அம்போதரங்கத்தின் பின்னும் சுரிதகத்தின் முன்னும் அமைக்க என்றார். 4. முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியல் என்பது சுரிதகத்திற்குப் பெயராயிற்று. 5. வாரம் பாடல் என்றது, முற்கூறாகிய பாடற்பகுதியையடியொற்றிப் பிற்கூறு பாடுதலாகும். வாரம் என்ற சொல் மிகுதியெனவும் பொருள்படும். தெய்வத்தைப்பாடிய பகுதியில் மக்களைப்புகழ்ந்த அடிமிக்குவரும் பகுதி சுரிதகம் ஆதலின் அது வாரம் எனவும் பெயர் பெறுவதாயிற்று என்பதாம். 1. தெய்வத்தைப் புகழ்ந்த அடியினும் மக்களைப் புகழ்ந்த அடிகள் மிக்கு வருதலின் வாரம் என்னும் பெயர்த்தாயிற்று என்பதாம். வாரம் - மிகுதி. 2. சுருங்கி வரும் எண் என்றவாறு, என்றிருத்தல் வேண்டும். எண் முதற் றொடைபெருகிச் சுருங்கும் எனமுடியும். மன்-அசை. எண்-அம்போதரங்கம், முதற்றொடை என்றது, முதலிற்றொடுக்கப்பெற்ற அம்போதரங்கவுறுப்பினை. நாற்சீர், ஈரடியாய் விரிந்து வருதல். சுருங்குதல் என்றது முச்சீரடியாகவும் இரு சீரடியாகவும் சுருங்கிவருதல். 1. பிற நூலாசிரியர் என்றது சிறுகாக்கை பாடினியார், மயேச்சுரர் அமிதசாகரர் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களை. 2. இத்தொடர், இச்சூத்திரத்தின் பொழிப்புரையாக அமையாது பொழிப் புரையினாற் போந்த பொருளாகவே அமைந்துள்ளது. எண் என்பது, முதல்தொடுத்த உறுப்புப்பெருகிப் பின்தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வரும் என்பது இதன்பொருள். 3. முதல் எண்ணினைத் தொடையெனக்குறித்தமையால் தலையெண்ணாகிய அது அளவடியிரண்டால் ஒரு தொடையாகிவரும் எனவும்; பெருகி, என்றமையால் அது இரண்டாய் வரும் எனவும், முதல்பெருகிய என்றதனால், முதலெண் அல்லாத இடையெண் கடையெண் என்பன தொடையமைதி பெற்று வருதலும் ஆசிரியர் உடன்பட்டாரெனவும் கொள்வர் பேராசிரியர். 4. இதனைமுதல் எனவே வழிமுறைவருவனவும் எண்ணுளவென்பது பெற்றாம் எனத்திருத்திப் படிக்க. 5. முதற்றொடைபெருகி எனவரும் என்றமையால், இரண்டடியால் ஆய முதலெண் இரண்டு முதற்கண்ணும், சுருங்கும் என்றமையால் ஈரடியிற்சுருங்கி ஓரடியாலாகிய எண்களும் ஓரடியிற்சுருங்கி இருசீராலாகிய எண்களும் இருசீரிற் சுருங்கி ஒரு சீராலாகிய எண்களும் கொள்ளப்படும். 1. நாற்சீர் கொண்டது அடி என்றாராகலின் முதலெண்ணுக்குரிய அடி அளவடி யெனவே கொள்ளப்படும். 2. இருசீரால் வரும் எண்களும் ஒருசீரால்வரும் எண்களும் தொடை கொள்ளுங்கால் அளவடிப்படுத்தே தொடைகொள்ளப்படும். 3. கந்தருவ நூல்-இசைநூல்.இசைநூலில் கண்ணும் ஒருசீரிற்சுருங்கி வரும் செய்யுளுறுப்பில்லாமையால் இயற்றமிழ் நூலாசிரியராகிய தொல்காப்பியனாரும் பிறநூன் முடிந்ததுதானுடம்படுதல் என்னும் உத்திவகையால் ஒருசீரிற் சுருங்கினவற்றை எண்ணுறுப்பாக உடன்பட்டிலர். 1. பாகம்-பாதி. இவ்வாறு ஒவ்வொன்றிற் பாதியாய்க்குறைதல் என்ற பொருளிலேயே சுருங்குதல் என்பதனைத் தொல்காப்பியனார் நூலின்தொடக்கத்திலிருந்து ஆண்டுள்ளார் என்பது, வகாரமிசையும் மகாரங்குறுகும் (தொல். எழுத். புள்ளி 35) என்றாற்போலும் சூத்திரங்களாற்புலனாம். 2. சுருங்குமன் எண்ணே என்புழி மன் என்பது ஆக்கங்குறித்து நின்றமையின் எண் சுருங்கிப் பலவாகிப் பல்கிவரும் என்பது கொள்ளப்படும். 3. இருசீராய்வரும் எண் குறளடியெனவும் கூறப்படுமாதலின் ஒருசீரால் வரும் எண்களே சிற்றெண் எனப்பெயர் பெறுவன. 4. ஒழிந்த எண் மூன்றாவன: ஈரடியால் இரண்டும் ஓரடியால் நான்கும் இருசீரால் எட்டுமாகி வருவன. இவை முறையே தலையெண், இடையெண், கடையெண் எனப்படுவன. 5. ஒருசீரால் வரும் சிற்றெண் இம்மூன்றும் அடங்காது வேறுபடுத்துரைக்கப்படும். இது பற்றியே ஒருசீரால் வரும் இதனை எண்ணென்று அடக்காது சின்னமல்லாக்காலை (தொல். செய். 146) என அடுத்துவரும் சூத்திரத்து ஆசிரியர் சின்னம் என்ற பெயரால் வேறுபடுத்துக் கூறுவர். 6. இங்ஙனம் கூறுபவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். 1. அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்தி என்பதனால், அவற்றுள் இருசீரினை முச்சீராகவும் ஒருசீரினை இருசீராகவும் அலகுவைப்பினும் அளவடியாக நோக்கிப் பேரெண் சிற்றெண் ணென்றலும் சின்னம்பட்டவழி இடைநின்றது இடை யெண்ணாதலும் எல்லையளவைத்தாகிய சின்னம் அளவெண்ணாதலும் அமையும் (என) அதனை மறுக்க என இவ்வுரைத்தொடரை இயைத்துப் பொருள் கொள்க. இரண்டியான்வருவன இரண்டும் ஓரடியான் வருவன நான்கும் சிந்தடியான் வருவன எட்டும் குறளடியான் வருவன பதினாறும் எனப்பிறநூலாசிரியர் உரைப்பர். இவ்வாசிரியர்க்கு அவ்வரையறையில்லை யென்றவாறாம் எனவரும் இளம்பூரணருரையின் பகுதி இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 2. முற்படப்பெருகி என்றிருத்தல் வேண்டும். 3. வழிமுறையாற் சுருங்கி வருதலாவது, ஈரடியாகவும் ஓரடியாகவும் இருசீராகவும் ஒருசீராகவும் சுருங்கி வருதல். 4. நேர்ந்தாராயிற்று எனத் திருத்துக. 1. நான்குமாய்த் என்பதனை நீக்குக. 2. இருசீரை யிடையெண்ணெனவும் என்றிருத்தல் வேண்டும். 1. சின்னம் என்பது தனிச்சொல் எனக் கொண்டார் இளம்பூரணர். 2. தனிச்சொற்பெறாத நிலையில் எண்ணாகிய அம்போதரங்க வுறுப்புக்கள் ஒரோவொன்று இடையிற்குறைந்துவருதல் குற்றமில்லையெனவே, தனிச்சொற் பெற்ற நிலையில் அம்போதரங்கவுறுப்புக்கள் (ஈரடியால் இரண்டும் ஓரடியால் நான்கும் முச்சீரால் எட்டும் இருசீராற் பதினாறும் என) இடையே குறைதலின்றி வருதல் வேண்டும் என்பதும் தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்புடையது வண்ணக வொத்தாழிசையென்பதும் தனிச் சொற்பெறாது அம்போதரங்கவுறுப்புக்கள் இடையிற்குறைந்துவருவது ஒருபோகு எனப்பெயர்பெறும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும். 1. சின்ன எண்ணொன்றும் ஒழிந்து நில்லாவிடத்து முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்குக்குற்றமின்று. எனவே சின்ன எண்-உள்ளவிடத்திலேயே ஏனைய மூவகை எண்களும் இடையொழிதல் கூடுமென்பதும் ஏனையமூவகையெண்ணும் உள்ளவிடத்துச் முன்பக்க தொடர்ச்சி சின்னவெண் இன்றிவருதல் உண்டென்பதும், எண்ணொழிதல் என்னாது எண் இடை யொழிதல் என்றதனால் எட்டாய்வருதற்குரிய இருசீர் நான்காகியும் பதினாறாய் வருதற்குரிய ஒருசீர் எட்டாகியும் குறைந்துவரும் என்பதும் கொள்ளப்படும். இவ்வாறு எண்இடையொழிதல் ஏதுமின்று எனவே மூவகையெண்ணும் சின்னமும் பெற்றுவருதல் சிறப்புடைத்தென்பது பெறப்படும். 1. இருவகைச் சின்னம் என்பன இருசீரும் ஒருசீருமாய் வருவன. 2. இப் பெருந்தேவபாணியைப் பாடியவன் ஞாயிற்றுமரபினனாகிய சோழ மன்னன் ஒருவன் எனக்கருதுதல் பொருந்தும். 1. இப்பாடலின் முழுவடிவத்தினை இளம்பூரணருரையிற் காண்க. 2. நால்வகை எண்ணாவன முறையே ஈரடியாலும் ஓரடியாலும் இருசீராலும் வரும் அம்போதரங்கவுறுப்புக்கள். 3. சின்னவெண்ணொன்றும் ஒழிந்து நில்லாதவிடத்து என்றிருத்தல் வேண்டும். 4. இப்பாடலின் முழுவமைப்பினைப் பேராசிரியருரையிற் காண்க. 1,2. இப்பாடல்களின் முழுவமைப்பினைப் பேராசிரியருரையிற் காண்க. 3. இப்பாடலில் முழுவமைப்பினையும் பேராசிரியருரையிற்காண்க. 4. இதன்முழுவடிவத்தையும் இளம்பூரணருரையிற் காண்க. இப்பாடலைப் பாடியவர் விளக்கத்தனார் என்னும் புலவராவர். 1. ஒத்தாழிசைக்கலி இருவகைப்படுமாறு போலவே அதன் இரண்டாவதன் வகையாகிய ஒருபோகும் இருவகைப்படும் என்பார், ஒருபோகியற்கையும் என உம்மை கொடுத்தோதினராதலின் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மையாகும். உரையில் உம்மை விடுபட்டது. 1. ஒத்தாழிசை இரண்டாவன: அகநிலையொத்தாழிசையும் முன்னிலை யிடமாகத் தேவர்ப்பராஅயதும் ஆகும். 2. ஏனையொன்று என்றது, தேவர்ப்பராஅயது. அது வண்ணகமும் ஒருபோகும் என இரண்டு வகைப்படும் என்றார். 3. ஏனையொன்றெனப்பட்ட தேவர்ப்பராஅயது வண்ணகமும் ஒருபோகும் என இருவகைத்ததால் போன்று, அவ்விருவகையுள் ஒன்றாகிய ஒருபோகும் இருவகைப்படும் என்றமையின், ஒருபோகியற்கையும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மையாகும். 4. ஒருபோகு என்பதற்கு ஓருறுப்புப்போகியது (இழந்தது) என்பது பொருள். ஓருறுப்பு இழத்தல் இருவகை ஒருபோகிற்கும் ஒக்குமாயினும் இருவகைச் செய்யுட்களிலும் போகாது நிகழ்கின்ற உறுப்பு தம்மில் வேறாகும் என அறிவித்தல் இச்சூத்திரத்தினாற் போந்தபயன் என்பது பேராசிரியர் கருத்தாகும். 5. ஏனையொன்று எனப்பட்ட ஒத்தாழிசை வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படுமாறு போன்று அதன்வகையாகிய ஒருபோகும் இருவகைப்படும் என்றலின் ஒருபோகியற்கையும் என்புழி உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மையென்றார். 6. ஒருபோகு இருவகைப்படும். எனவே அதனை ஒருபோகு என்ற பொதுப்பெயரால் வழங்காது அதன் வகைப்பெயர்களாகிய கொச்சகம் எனவும் அம்போதரங்கம் எனவும் வழங்குதலும் ஏற்புடையதே யென்பது இச்சூத்திரத்தாற் போந்த பயன் என்பர் நச்சினார்க்கினியர். 1. கலியின்வகையாகிய ஒருபோகு, கொச்சகவொருபோகு எனவும் அம் போதரங்க வொருபோகு எனவும் இருவகைப்படும் என்றவாறு. 1. கொச்சகமாகிய ஓருறுப்புப் போகியது (இழந்தது) கொச்சகவொரு போகாகும். 2. இவ்வுரைத்தொடரின் பொருள் இனிது விளங்கவில்லை. 3. வண்ணகப்பகுதிக்குரிய எண்ணுறுப்பு ஒருவழியில்லாதது அம்போதரங்க வொருபோகாகும். 4. ஒருபோகு என்பது, ஒன்றாகிய போகிய வுறுப்பு என விரிதலின் பண்புத் தொகையாகும். இனி ஒருபோகு என்பதற்கு, ஒன்றாகிய வுறுப்பாய் நீண்டது எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். இடையீடில்லாது ஒன்றாய் நீண்டு தொடர்ந்து கிடக்கும் நிலத்தினை ஒருபோகு என வழங்குவர். ஒருபோகு என வழங்கப்படும் அந்த நிலத்தினைப் போன்று ஒத்தாழிசைக்கலிக்குரிய உறுப்புக்களுள் பிற வுறுப்பெதுவும் இடைவிரவுதலின்றி ஓருறுப்பாய்த் தொடர்ந்து நீண்டதனை ஒருபோகு என வழங்குதல் ஒப்பினாகிய பெயர். 5. இத்தொடர் திரிகோட்டவெளி எனவும் திரிதோட்டவெணி எனவும் திரி கோட்டவேணி எனவும் பதிப்புக்களில் பலவாறாகத் திரிந்து காணப்படுதலின் இதன்பொருள் இதுவெனத் துணிந்துரைத்தற் கியலவில்லை. 1. போக்கிய ஒத்தாழிசை-இழந்த உறுப்பாகிய ஓத்தாழிசை. 136-ஆம் சூத்திரவுரை நோக்குக. 2. இதனைப் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழியாக விரித்துரைக்குமாறு இதுவென விளங்கவில்லை. ஒருபோகு - ஒன்றாகிய போகிய உறுப்பினையுடைய செய்யுள் எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழியாயிற்று எனக்கொள்ளினும் அமையும்- 1. தாழிசைபெற்றும் என்றதனால் தாழிசைபெறாது தரவுதானே வரினும் கொச்சக வொருபோகாம். 2. தரவுடைத்தாகியும் என்றதனால் தரவின்றித் தாழிசைதானேவரினும் கொச்சக வொருபோகாம். 3. சின்னம் என்பது தனிச்சொல். இச்சொல் அம்போதரங்கவுறுப்புக்களுள் இடையெண் சிற்றெண்களையும் குறித்தலுண்டு என்பார். சின்னம் குன்றியும் என்பதற்கு எண்ணின்கண் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் எனினுமாம் எனப்பொருள் வரைந்தார். 4. யாப்பு என்றது, ஒத்தாழிசைக்கலிக் குரியவாகக் கூறப்பட்ட யாப்பினை. பொருள் என்றது, தேவர்ப்பரா அய ஒத்தாழிசைக்கு ஓதப்பட்ட கடவுள்வாழ்த்துப் பொருண்மையினை. 1. ஒத்தாழிசைக்கு உறுப்பாக முன்னர்க் கூறப்பட்டவற்றுள் ஒன்றும்பலவும் குறைந்து வருவன கொச்சகவொருபோகு எனப் பெயர்பெறும் என்பதாம். 1. இங்கே கூறப்படுந் தாழிசையென்பது தரவென்னும் உறுப்பொடுகூடி வருந்தாழிசையன்று; ஒத்தாழிசைக்கலிக்கு உள்ளுறுப்பாய் வருதலின்றிப் புறத்தே வரும் தாழிசையாம் என்பார், தரவின்றாகித் தாழிசையாம் என்னாது தரவின்றாகிடத் தாழிசை பெற்றும் என்றார். 2. இனிப் பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி ஒருபொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாது வருதலும் என இவ்வுரைத்தொடர் இருத்தல் வேண்டு மென்பது, நச்சினார்க்கினியர் உரையால் உய்த்துணரப்படும். 1. தாழிசைபெற்றும் எனத்தாழிசையுறுப்பினை விதந்துகூறவே பெருகிய முதற்றொடையினைத் தொடர்ந்து ஏனையவெண்கள் சுருங்கிப் பல்கிவருவனவே எண்ணெனப்படுவன. தம்மிற் சுருங்கிவரும் எண்கள் பின்தொடராதநிலையில் இரண்டடியால் வருவன தாழிசையெனவேபடும். 2. தரவு இன்றாகித் தாழிசை பெற்றும் எனவே இதற்கும் வாராவென விலக்கப்பட்ட தரவு கொச்சகம் தாழம்பட்டவோசையின்றி வெண்பாவாகிவரும் என்பது உய்த்துணரப்படும். 3. என்னை? வெண்பாவினான் கலி பரிபாடலுட் கொச்சகம் வரும் என்றமையின் என இத்தொடரைத் திருத்திக்கொள்ளுதல் பொருட் பொருத்தமுடையதாகும். 4. பரணியிலக்கியத்துட் போர்த்துறைபற்றிய புறத்திணைப் பகுதிகள் பலவாய் வருதலின் அப்பனுவலைத் தேவபாணியெனக் கூறுதல் பொருந்துமா? என்பது வினா. 1. புறத்திணைப்பகுதிகளாகிப் பரணியுட் கூறப்படுவனவெல்லாம் காடுகிழாளாகிய காளிக்குப் பரணிநாளிலே கூழ்சமைத்துத் துணங்கைக்கூத்தாடிவழிபடும் வழக்கினை அடியொற்றியெழுந்த அப்பனுவலும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்திக் கூறப்படுவன. அவைபுறத்திணைப்பகுதிகளாதலின் அவையெல்லாவற்றானும் வெற்றிவெல்போர்க் கொற்றவையைப்பரவிப் போற்றுதலே பனுவலின் நோக்கமாதலின் அவையெல்லாந் தேவபாணியேயாம் என்பது அவ்வினாவுக்குரிய விடையாகும். 2. தாழிசை தனித்துவரினும் பலவாய்த் தொடர்ந்துவரினும் இருவாற்றானும் கொச்சகவொருபோகெனவே பெயர்பெறும் என்பதாம். 1. பொதுவகையானின்ற கொச்சகவொருபோ கீண்டுத் தரவுடைத் தெனப்பட்டது எனக் கனகசபாபதிப்பிள்ளையவர்கள் பதிப்பிற்காணப்படும் பாடவேறுபாடு பொருட் பொருத்தமுடையதாகும். இங்குப் பொதுவகையான் நின்றகொச்சகவொருபோகு என்றது, தரவின்றாகித் தாழிசைபெறுவது, தாழிசையின்றித் தரவுடைத்தாய் வருவது, எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியது, அடக்கியலின்றியடிநிமிர்ந்தொழுகியது என்னும் பகுப்புடையதாய் யாப்பினும் பொருளினும் வேறுபட்டு வரும் எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பொதுவாய் நிற்கும் கொச்சகவொருபோகு எனப்படும் பாவினை. 2. தாழிசையொடுபட்ட தரவிலக்கணத்தில் இத்தரவு திரிந்து வரும் எனக்கொள்க. என இயையும் 3. அது தரவுக்கொச்சகமும் தரவிணைக் கொச்சகமும் என இரண்டாக வரு மென்பதூஉம், நான்கும், ஆறும், எட்டும் (ஆகிய நேரடிபற்றிய நிலைமையது) ஆய்வருதல் கடப்பாட்டின்றென்பதூஉங் கொள்க என இவ்வுரைத் தொடரை விரித்துப்பொருள் காண்க. 4. தேவர்ப்பராஅய கொச்சக வொருபோகாய் வருங்கால் தரவு இரண்டாய் இணைந்து வரும் எனவும் அவ்வாறு தரவிணைந்து வருதல் பெரும்பாலும் தர வோடொத்துச் சுரிதகம் பெற்றுவருங்காலத்து எனவும் அவ்வாறு வருவதனைச் சுரிதகத்தரவிணையென்று வழங்குதல் மரபெனவும் இங்குத் தனிச் சொற்கு வரையறையின்மையின் தனிச்சொற்பெற்றும் பெறாதும் வருமெனவும் விளக்கந்தருவர் பேராசிரியர். 5. தரவிலக்கணம் இழந்த செய்யுளைத் தரவு என்ற பெயரால் வழங்குவதாற் பயன்யாது? என்பது வினா. அது தரவிலக்கணத்திற்குறையினும் தாழம்பட்ட ஒசையின்றி முன்பக்க தொடர்ச்சி வருதல் பெரும்பான்மையென்பது அறிவித்தல் பயன் என்பது அதற்குரிய விடையாகும். எனவே தரவு என்பது எவ்விடத்து வந்தாலும் தாழம்பட்ட ஓசைக்கு ஓர் முதன்மைதராது வரும் என்பதனை ஆசிரியர் உடன்பட்டுரைத்தாராயிற்று. 1. தொடர்நிலைச்செய்யுளாகிய காப்பியத்தின்கண் பயின்ற கொச்சக வொருபோகினைத் தரவின்றித் தாழிசையாகிய கொச்சகவொருபோகு என்று கூறுவோமா? அன்றித் தாழிசையின்றித் தரவுடைத்தாகிய கொச்சக வொருபோகு என்று கூறுவோமா? என்பது வினா. யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது கொச்சகவொருபோகு என அவை ஒன்றற்கொன்று (பின்னுள்ளவற்றுக்கு முன்னுள்ளன) தரவெனப்பட்டுத் தரவுக் கொச்சகம் என வழங்கப்படும். அவை ஆறடியும் எட்டடியும் என நேரடி பற்றிய நிலைமையான் வாராமையின் தரவு எனப்படா; மூன்றடித்தாழிசையாய் வாராமையின் தாழிசை யெனவும் கூறப்படா. அவை (தனிநிலைச்செய்யுளாய்த்) தம்பொருளொடு தாம் முடியாமையின் தரவுக் கொச்சகம் எனவே வழங்கப்படும் என்பது மேற்குறித்த வினாவுக்குரிய விடையாகும். 2. எருத்தென்பது உடம்பிற்கு முதன்மையுடையவுறுப்பாதலின் தொடர் நிலையாகிய காப்பியத்தின் முதற்கனின்ற தெய்வ வணக்கச்செய்யுள் தன்பொருளொடு தான் முடிதலின் இங்கு விதந்தோதப்பட்ட தரவுக் கொச்சகமாகும். 3. ஒழிந்ததாம் என்பதனை ஒழிந்த எனப் பெயரெச்சமாகத்திரித்து, ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம் என்னும் நான்குறுப்புடையதுங் கொச்சக வொருபோகாம் என முடிக்க. 4. அல்லாத வுறுப்பினையெல்லாம் அவற்றானே நிற்றலை வேண்டி இதற்கு இல்லாத வுறுப்பேகூறி உள்ளது கூறிலன் என இயையும். இல்லாதவுறுப்பு என்றது, எண்ணும் சின்னமும். உள்ளது என்றது தரவு, இடைநிலைப்பாட்டு, தனிச்சொல், சுரிதகம் ஆகிய வுறுப்பினை. 1. ஏனையொன்றே எனப் பொருள்வகையாற் பிரித்துரைக்கப்பட்ட தேவபாணி, ஒத்தாழிசையின் வகையாதலால், முற்குறித்த ஒத்தாழிசைக்கலியொடு உறுப்பினால் ஒத்தும், ஏனையொன்றெனப்பட்ட தேவர்ப்பராஅய ஒத்தாழிசைக் கலிக்குரிய உறுப்பாகிய எண்ணும் சின்னமுமாகிய உறுப்பிழத்தல் பற்றிக் கொச்சகவொருபோகு எனப்படுவதன்றி அகனிலையொத்தாழிசையாகாதென்பார், ஒப்ப நாடியுணர்தல் வேண்டும் (செய்யுளியல். 148) என்றார் ஆசிரியர். 1. சின்ன எண் நிற்பவும் ஏனையபேரெண் முதலியன இழந்தமையால் அம்போதரங்க வொருபோகு எனப் பெயர்பெற்றாற்போன்று, கொச்சகமேயன்றி எண் (அம்போதரங்கம்) ஆகிய உறுப்பு இழந்ததூஉம் கொச்சகவொருபோகு எனப் பெயர் பெறும் என்பார் எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும் என்றார். 2. அடக்கியல் இன்றி என்றது, மேலுள்ள தரவுதாழிசைகளிற் சொல்லப்பட்ட பொருட்பகுதிகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டு நிற்பதாகிய சுரிதகம் என்னும் இறுதிப்பகுதி பிரிந்து தோன்றுதலின்றி என்பதாம். அடிநிமிர்ந் தொழுகல் என்றது, மேல் அடிவரை யறுக்கப்பட்ட தரவு தாழிசை முதலியவுறுப்புக்களாகப் பிரிந்து இடையறவுபடாது அடிகள் மிக்கு ஒன்றேயாகி வருதல். எனவே தரவு தாழிசை முதலியவுறுப்பு இக்கொச்சகவொருபோகிற்கு இல்லை யென்றாராயிற்று. 3. அடக்கும் இயல்பினதாகிய வாரம் இன்றி என்னாது அடக்கும் இயல்பு இன்றி யென அதனியல்பினை மட்டும் விலக்கவே அவ்வியல்பினதாகிய வாரம் என்றவுறுப்பினை ஆசிரியர் இதற்கு உடன்பட்டாராகலின் அடிநிமிர்ந்தொழுகும் என்பதனோடு இவ்விலக்கணம் மாறுகொள்ளும் என்பது இங்கு எழுந் தடையாகும். முன்பக்க தொடர்ச்சி அவ்வாறு அடிநிமிர்ந்தொழுகுங்கால் வாரம் வந்து சிறிது இடையறவுபடு மாயினும் எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே (செய். 75) எனவும் வெண்பாவியலினும் பண்புற முடியும் (செய். 76) எனவும் முறையே ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் கலிப்பாமுடியும். எனவே, முதற்கணுள்ள அடிகளெல்லாங் கலியடியாகி இடையறவுபடாது ஒழுகி முடிவில் வாரம்பட்டு (ச் சுரிதகஇறுதியாய்) முடியும் என்னும் ஒரு காரணம் பற்றி வாரத்தினையும் இங்குக் கொச்சகவொருபோகிற்குரியதாக ஆசிரியர் உடன்பட்டார் என்பது முற்குறித்த தடைக்குரிய விடையாகும். 1. இவ்வாறு அடிநிமிர்ந்தொழுகிய கொச்சகவொருபோகு அடக்குமியல் பில்லாத ஆசிரியவடியாலும் வெண்பாவடியாலும் முடியும் என்னும் தொல்காப்பியனார் கருத்தினை யறியாதார் வெண்பாவியலாற் பண்புற முடிந்த கொச்சகவொருபோகினை வெண்கலி யெனப் பிழைபடக்கூறுவர் என்பதாம். கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடையடி வெண்பா இறுமாறேபோல முச்சீரடியால் முடிவது கலிவெண்பா அல்லது வெண்கலிப்பா எனப்படும் எனவும், வெள்ளோசை யினால் வருவதனைக்கலிவெண்பா என்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்திச் சொல்வாரும் உளர் எனவும் கூறுவர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 1. இவ்வாறு யாப்பினும் பொருளினும் வேறுபடவந்த கொச்சகவகைகளை இச்சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி விளக்கியுள்ளமை காணலாம். யாப்பின் வேறுபாடுகளாக இங்கெடுத்துக்காட்டிய பகுதியெல்லாம் பொருள்வேறுபட்ட வழியும் நிகழும் என்பது யாப்பினும் பொருளினும் என இரண்டனையும் உடன்வைத்துக் கூறினமையாற் கொள்ளப்படும். 1. ஏர்க்களம் பாடும் பொருநர் வாழ்த்திக்கூறும் கட்டுரையினையும் மரங்கொல் தச்சர் முதலிய தொழில் செய்வோர் தம் தொழிலின் கடுமையினைக் குறைத்துக்கொள்ளும் நிலையிற் கூறும் சொற்றொடர்களையும் ஏற்று இக்காலத்தார் இசைபடக்கூறும் உரைத் தொடர்களும் ஒருவர் ஒருவர்க்குக் கடிதம் எழுதும் முறையில் அமைந்த சீட்டுக்கவிகளும் முதலியனவெல்லாம் கொச்சகம்ஆம் எனக் கொண்டால் வரும் குற்றம் யாது? என்பது இங்குத் தோன்றும் வினாவாகும். பாட்டுரைநூலே என எண்ணப்படும் எழுவகைச் செய்யுட்களில் அடிவரை யில்லன ஆறனுள் உரையும் ஒன்றெனப்பகுத்தோதார்க்கே இவ்வுரைவகைபற்றிய ஐயம் தோன்றும். அடி வரையில்லன உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என ஆறு எனப் பகுத்துரைப்பார்க்கு இவையாவும் உரைவகையென அடங்குமாதலின் இத்தகைய ஐயந்தோன்றுதற்கு இடமில்லையென்பதாம். 2. மருட்பாவும் பரிபாடலும் அவற்றை ஒப்பனவெல்லாம் ஒப்பு என அடங்கும் என்பார். நூற்றைம்பதுகலியும் எழுபதுபரிபாடலும் எனச்சங்கத்தார் தொகுத்த செய்யுள் வகைகளுள் பரிபாடலாகிய செய்யுளமைப்பினை இல்லை யென்றார்; பரிபாடலாகிய செய்யுளமைப்பு இக்காலத்திலும் வழங்குதலால் இவ்வழக்கு அவர்கூறும் செய்யுளிலக்கணத்தினை வழுப்படுத்துவதாகும். 1. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனம் வகுத்துப்பெருக்கப் பாவினங்கள் பன்னிரண்டாம் என்பர் பிற்கால யாப்பிலக்கண நூலார். அவர் கூறிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவினத்தோடு மட்டுமன்றி ஒப்பு, திறன் என்பவற்றையும் சேர்த்து ஐந்தாக்கி, ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்னும் அறுவகைச் செய்யுளோடும் பெருக்க முப்பதாகும். மேலும் அவற்றைச் சீரும் அடியும் தொடையும் பாவும் முதலாய செய்யுளுறுப்புக்களோடு குறளடி முதலியவற்றை வைத்துப் பெருக்கவும் வந்த அடிகளோடு அவ்வடிகளையும் அவற்றோடு பிறவற்றையும் வைத்துப் பெருக்கவும் மேலும் பலவகையினவாய்ப் பெருகுமாதலின் இப்பாவினப் பகுப்பு வரையறை யிலவாய் விரியும். எனவே இங்ஙனம் வரையறையில்லனவற்றுக்கு வரையறை கூறப்புகுதல் நூனெறியன்றாதலின் பிற்காலத்தார் வகுத்த பாவினப்பகுப்பு நிரம்பிய இலக்கணமாகாதென்பதாம். 1. அதனுட்கிடந்த வெண்டளை அதற்கு என்னும் ஒன்றாது-அப்பாவினுளமைந்த வெண்டளை ஆசிரியப்பாவின் இனமாதற்குச் சிறிதும் பொருந்தாது. என்னும்-சிறிதும். 1. கொச்சகவொருபோகின்வகை நான்கனுள் அடக்கியலின்றியடிநிமிர்ந் தொழுகியது ஒழிந்து ஒழிந்த முப்பகுதியாவன: தரவின்றாகித் தாழிசை பெறுவது, தாழிசையின்றித் தரவுடைத்தாயது, எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றியது என்னும் இம்மூன்றுமாகும். இவை தமக்குரிய உறுப்பு வகையால் அடிவரையறையாகிய அளவு கொள்ளப்படும். 2. குட்டம்படுதல்-அடிக்குரிய சீர் முதலியன குறைதல். 1. கந்திருவமார்க்கம்-இசைப்பாடல்நெறி. 1. தரவிலக்கணம் அழிந்து தரவிரட்டித்துச் சுரிதகம் பெற்றதூஉந் தரவு கொச்சகமாயிற்றுப்போலத் தாழிசை யிலக்கணஞ் சிதையவரினுந் தாழிசைக் கொச்சகமெனவே படுமன்றேயென்பது என இயைத்துப் பொருள் கொள்க. 2. ஆர்கலியு லகத்து மக்கட் கெல்லாம் ஒதலிற் சிறந்தன்றொழுக்க முடைமை என்பதில் முதற்கணுள்ள ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் என்ற அடி, பின்வருவன வற்றுக் கெல்லாம் பொதுவாய்ப் பிரிந்து நிற்பதாகலின் அதனை ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை என்ற முதுமொழியுடன் கூட்டி இரண்டடித்தாழிசையெனல் பொருந்தாது; அம்முதுமொழி ஈண்டு அடிவரையறையுடைய பாட்டெனப்படாது ஆதலின் என்க. 1. ஏற்ற வகையாற் பொருள்வேறுபாடு கொள்க எனவே முன்னிலை, படர்க்கை யான்வரும் பொருள்வேறுபாடே இஃது, ஓதிய நான்குமாமாறு வேறுபட்ட வற்றுக்குமெல்லாம் பொது, ஒழிந்தவெட்சிமுதற் பாடாண்டிணையிறுதியாகிய பொருள் வேறுபாடு வரையறையுடைய வென்பது என இவ்வுரைப்பகுதியைப் பகுத்துப்பொருள் கொள்ளுதல் வேண்டும். இங்கு ஓதியநான்காவன; தரவின்றாகித் தாழிசை பெறுதல், தாழிசையின்றித் தரவுடைத்தாதல், அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகல், எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றுதல் என்பன. 2. வருதலும் என வரையறையிலவாயின என எனவென்னும் சொல்-வருவித்துப்பொருள்கொள்க. 1. யாப்பினும் பொருளினும் வேறுபட்டுவரும் இவையெல்லாம் தமக்குரிய மற்றையுறுப்புக்கள் பல இழந்தனவாதலின் இவற்றைக் கொச்சகவொருபோகு என்ற பெயரால் மட்டும் வழங்குவது என்னை? என்பது இங்கு எழுப்பப்படும் வினா. இவை தமக்குரிய மற்றையுறுப்புப் பல இழந்தனவாயினும் இவற்றுக்குக் கொச்சகவொரு போகு என்னும் பொதுவிதி விலக்கப்படாமையின் பொது வகையான் எய்திய கொச்சகவொருபோகு என்னும் பெயரே ஏனைய உறுப்பு இழந்தனவற்றுக்கும் பொருந்தும் என்னும் கருத்தால் ஆசிரியர் அப்பெயரெய்து வித்தார் என்பது அவ்வினாவுக்குரிய விடையாகும். இனி கொச்சக வொருபோகு என்ற அளவிலமையாது கொச்சகவொருபோகு ஆகும் என ஆக்கச்சொற் புணர்த்தோதினமையால் இங்ஙனம் வருவனவற்றைச் சிறுபான்மை கொச்சகம், என்ற பெயரால் வழங்கினும் பொருந்தும் என்றார் பேராசிரியர். 2. இருசீர்முதல் எண்சீரளவும் என்றிருத்தல்வேண்டும் 1. யாப்பினும் பொருளினும் வேறுபட்டு எனத்திருத்துக. 1. ஈண்டுந் தரவே பெறுவது என்றிருத்தல்பொருந்தும். 1. இல்லாதவுறுப்பையே என்றிருத்தல் வேண்டும். 1. ஓசையும் பொருளும் இனிதாகாது வந்தது எனத்திருத்துக. 1. என்றது, தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரை வரைந்த பேராசிரியரை. 1. கொச்சகவொருபோகிற்கு உதாரணமாக இங்கெடுத்துக்காட்டிய இவை ஓருறுப்பேயன்றிப் பலவுறுப்பு இழந்து வந்தனவாயினும் கொச்சகம் என்னும் பொதுத்தன்மை விலக்குண்ணாமையின் கொச்சக வொருபோகு என்னும் பெயர் இவையெல்லாவற்றிற்கும் ஆகும் என்று எய்துவித்தார் ஆசிரியர். 1. ஒருபான்-ஒருபஃது; பத்து. இதன் இரட்டி-இருபான். சிறுமை - சிற்றெல்லை. உயர்பு - பேரெல்லை. 2. மேல் நின்ற நான்காவன: தரவின்றாகித் தாழிசை பெற்றது தாழிசையின்றித் தரவுடைத்தாயது, அடக்கியலின்றி யடிநிமிர்ந்தொழுகியது, எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியது என்பது. 3. எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றிய கொச்சகவொருபோகிற்கு அடியளவு கூறுகின்றது. 4. இரண்டளவையாவன; பேரெல்லை, சிற்றெல்லை என்பன. 1. இச்சூத்திரத்திலுள்ள அது என்னும் ஒருமைச்சுட்டு மேற்குறித்த கொச்சக வொருபோகு நான்கனுள் இறுதியிலுள்ள அடக்கியலின்றியடி நிமிர்ந்தொழுகும் என்பதனையே சுட்டி நின்றதாகலானும், அடிநிமிர்ந்தொழுகும் என்றால் எத்துணை யடிகள் உயர்ந்து வரும்? என்னும் ஐயத்தை விலக்குதல் வேண்டுமாதலானும், ஏற்புழிக்கோடல் என்னும் நூற்புணர்ப்பாலும் இச்சூத்திரம் அடக்கியலின்றி யடி நிமிர்ந்தொழுகும் எனப்பட்ட கொச்சகவொருபோகிற்கே அளவுணர்த்துவதாகக் கொண்டார் பேராசிரியர். 1. முன்னைச் சூத்திரத்திற் கூறப்பட்ட நான்கனுள் அடக்கியலின்றி அடிநிமிர்ந்து ஒழுகும் என இறுதிக்கண்நின்ற கொச்சகவொருபோகு பத்தடியிற் சுருங்காது, இருபதடியின்மிகாது வரும் என அடி வரையறை கூறி ஐயமகற்றியது இச்சூத்திரம் என்பதாம். 1. அம்போதரங்கம் - அம்போதரங்கவொருபோகு. அறுபதிற்றடித்து - அறுபதடிகளையுடையது. செம்பால்வாரம் என்பதற்கு நடுவாகியநிலை எனவும் செம்பாதி (சரிபாதி) எனவும் பொருள்கொள்வர் இளம்பூரணர். 2. செம்பால் - சமபங்கு; வாரம் - காற்கூறு. 1. தலையளவு அம்போதரங்கத்திற்கு அறுபதடியும் இடையளவு அம்போதரங்கத்திற்கு முப்பதடியும் கடையளவு அம்போதரங்கத்திற்குப் பதினைந்தடியும் சிறுமைக்கு எல்லை. எனவே, இவற்றின் பேரெல்லை முறையே நூற்றிருபதடியும் அறுபதடியும் முப்பதடியும் எனக்கொண்டார் பேராசிரியர். 2. அவ்வாறு தலையளவு அம்போதரங்கத்திற்குச் சிற்றெல்லை அறுபதடியாகு மிடத்து ஒருபான்சிறுமை இரட்டியதன் உயர்பே என மேனின்ற அதிகாரப்படி தரவிற்கு எல்லை இருபதடியாகவும் அதனோ டொத்துவரு மியல்பினதாய சுரிதகத்திற்கு இருபதடியாவும் நாற்பதடி பெறும். 3. இனி இவற்றுடன் சிற்றெண் பதினாறும் அராகவடி நான்குமாக இருபதடி சேர்க்க அறுபதடி பெறும் என்பதாம். இருமூன்றாகிய பத்து - அறுபது. 4. கலிப்பாவிற்குரிய உள்ளுறுப்புக்களை வேறு வேறளவினவாக ஆசிரியர் அளவை கூறிவருதலால் அம்போதரங்கவுறுப்புக்களாகிய இவற்றுக்குரிய அளவினை அவ் வுறுப்புக்களின் இயல்புணர்த்தும் இவ்விடத்திலேயே கூறினார். 1. ஒவ்வொருபத்திற்கும் இரட்டியாகிய என்றிருத்தல் ண்டும். 2. தரவு இரண்டடியும் கொச்சகம் இருமூன்றாகி ஆறும் என இயைத்துப் படிக்க. 1. எண்ணினுட்பேரெண்ணிற் சிற்றெண் வரப்பெறுதல் என்றது, அம்போதரங்க வுறுப்புக்களிற் பேரெண்வருமிடத்திற் சிற்றெண் வருதலை. 2. எருத்து (தரவு), கொச்சகம், அராகம், சிற்றெண், வாரம் என்பன பரிபாடற்கும் அம்போதரங்க வொருபோகிற்கும் பொதுப்படவுரியனவாயின் இவற்றிடையேயமைந்த வேறுபாடு யாது? என்பது இங்குத் தோன்றும் வினாவாகும். பரிபாடல் அறுபதடியிற்குறைந்து வருமாயின், மேற்சொல்லப்பட்ட உறுப்புக்கள் முறைபிறழ்ந்து வரும் எனவும், அம்போதரங்க ஒரு போகினையொத்து மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்கள் முறை பிறழாது வருமாயின அம்போதரங்க வொருபோகுக்குக் கூறப்பட்ட அறுபதடியின் மேற்பட்ட அடிகளைப்பெற்றுப் பரிபாடல் வரும் எனவும் மேற்குறித்த இவ்வினாவிற்கு விடைகூறும் முறையில் அமைந்தது இவ்வுரைப் பகுதியாகும். 1. யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகவொருபோகை இதன் முன் ஓதினமையால் இதற்கும் (அம்போதரங்கவொருபோகிற்கும்) காமப்பொருளே பெறப்பட்டது என்பதாம். இத்தொடரிற் பின் என்றது காலவகையால் முன் என்ற பொருளில் வழங்கப் பெற்றதாகும். 1. பலகோடு-பலமடிப்பு. பலமடிப்பமைய அடுக்கியுடுக்கும் கொச்சகவுடைபோன்று சிறியவும் பெரியவுமாகக் கலந்து அடுக்கியும் தம்முள் ஒப்பவடுக்கியும் வந்த பாட்டுக்களைக் கொச்சகம் என வழங்குதல் பாவைபோல்வாளைப் பாவை யென்றாற் போன்று ஒப்பினாகிய பெயராகும். 2. கொச்சகம் பெரும்பாலும் வெண்பாவமைப்பினதாய் வரும். நாற்சீரடி இருசீரடி என்றாங்குப் பின்வரும் அடிகள் முறையே சுருங்கியும் வரையறையெண்ணுடைய வாய் வரும் அம்போதரங்கவுறுப்புப் போலன்றிப் பாவென்னும் ஓசையினுந் தளையினும் வேறுபட்டுப் பலவாய்வருவது கொச்சகமாகிய உறுப்பாகும். 3. அராகம் என்பது அறாது (இடையறவுபட்டு நில்லாது) கடுகிச் செல்லுதல். செம்பு முதலிய பிறிதொன்றனைக் கலந்து உருவாக்கும் அளவுக்கு உருகியோடும் செம்மையுடைய தாகிய தூய பொன்னை அராகித்தது என வழங்குதல் போன்று, மாத்திரை நீண்டுந்துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று விரைந்து செல்லும் நடையினதாகிய உறுப்பினை அராகம் என வழங்குதல் ஒப்பினாகிய பெயராகும். 1. அம்போதரங்கவொத்தாழிசைக் கலிக்குரிய நால்வகை எண்ணுறுப்புக்களுள் இறுதியெண்ணாய்ச் சிறுகிவரும் எண் சிற்றெண் எனப்படும். இது சின்னம் எனவும் வழங்கப்படும். 2. தரவுமுதலாக முன்னுள்ள வுறுப்புக்களில் விரித்துக்கூறிய பொருளை யெல்லாம் அடக்கும் (முடித்துக்கூறும்) இயல்பினது இறுதியிலுள்ள வாரமென்னும் சுரிதக மாதலின் அடக்கியல் வாரம் எனப்பட்டது. அடக்கியலாகிய வாரம் என விரியும். அடக்கியல் வாரம் என்பன சுரிதகத்திற்குரிய பெயர்களாகும். சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப்பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது என்றார் இளம்பூரணர். 1. கொச்சகவொருபோகினை முதற்கண் கூறி அதற்குரிய அளவினைப் பின்னர்க் கூறிய தொல்காப்பியனார், அம்போதரங்கவொத்தாழிசைக்கலியின் அளவினை முதற்கண் கூறியது, இனிக் கூறப்படும் கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி ஆகிய மூன்றற்கும் இதுவே அளவு என்பதனை அறிவித்தற்கு என்பதாம். 2. அம்போதரங்கம், கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி என்னும் நான்கற்கும் உரிய அளவினை அம்போதரங்கத்திற்கே வரைந்து ஓதியதன் நோக்கம் அம்போதரங்கம் தலை, இடை, கடையென மூவகையளவினையும் பெறும் என அறிவித்தற் பொருட்டாம். 3. பாவுறுப்புணர்த்தும் இவ்வதிகாரத்தால் அளவினால் ஒத்த அம்போதரங்க ஒத்தாழிசைக்கலியாகிய இதற்கும் இனிக்கூறப்படும் மூவகைக் கலிக்கும் உள்ள வேற்றுமை யிலக்கணங்களுள் ஒப்பன அறிந்து கொள்க என மாணாக்கர்க்கு உய்த்துணர்வு பெருக்கும் முறையில் அமைந்தது இவ்வுரைத் தொடராகும். 4. வருகின்ற கலிவெண்பாட்டு ஒருபொருள் நுதலிய வெள்ளடியியலால் திரிபின்றி வருவதாகலின் அதற்கு இவ்வளவு ஒவ்வாதென்பதும், ஒருபொருள் நுதலியும் நுதலாதும் வெண்பாவிலக்கணத்திற் சிதைந்து திரிபுடையவாய் வரும் கலிவெண்பாட்டிற்கே இவ்வளவை பொருந்தும் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். 1. கொச்சகமாகிய இவ்வுறுப்புக்கள் பெரும்பான்மையும் வெண்பாவாய் வருவன. 2. மேற்கூறுகின்ற மூன்று பாக்களாவன கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி என்பன. 1. வருவது என்பது பேராசிரியருரையிலும் நச்சினார்க்கினியருரையிலும் காணப்படும் பாடம். 2. வெள்ளடியான் என்னாது வெள்ளடியியலான் என்றமையால் வெண்டளையால் வந்து ஈற்றடிமுச்சீரால் வருவனவும் பிறதளையால் வந்து ஈற்றடி முச்சீரால் வருவனவும் கலிவெண்பாட்டாம் எனவும், அவற்றுள் வெண்டளையால் வந்ததனை வெண்கலிப்பா எனவும் அயற்றளையால் வந்ததனைக் கலிவெண்பா எனவும் குறிப்பிடுவர் இளம்பூரணர். 1. நுதலுதல் - கருதுதல். ஒருபொருள் நுதலிய எனவே ஒருபொருளைக் கருதியதாய் மற்றொருபொருள் வெளிப்படச் சொல்தொடர்ந்து கிடப்ப வெண்பாவடியினால் திரிபின்றி வருவது கலி வெண்பாட்டு என்பதாம். வெளிப்படச் சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் கருத்துப்பொருளைத் தன்னகத்தே கொண்டது ஒருபொருள் நுதலிய கலிவெண்பாட்டு என்பதாம். 2. வெள்ளடி - வெண்பாவடி. வெள்ளடியால் என்னாது வெள்ளடியியலால் எனச் சொற்பொருள் விளங்க விரித்துக்கூறினமையின் வெண்பா விலக்கணம் சிதையாத கலிக்கே ஒருபொருள் நுதலும் இலக்கணம் உரியதெனவும், கட்டளையாகி வருதலும் தளைவகை யொன்றி வருதலும் பன்னிரண்டடியின் இகவாமையும் ஆகிய வெண்பா விலக்கணத்தில் திரிந்து ஒருபொருள் நுதலியும் நுதலாதும் வேறுபட்டு வருவனவெல்லாம் திரிபின்றி முடியாத கலிவெண்பாட்டாகும் எனவும் கொள்ளவைத்தார் ஆசிரியர் என்பதாம். 1. திரிபின்றி முடியாத கலிவெண்பாட்டென்பது எனத் திருத்துக. 2. திரிபின்றி முடியும் என்றதனால் ஒரு பொருளன்றிப் பலவுறுப் புடைத்தாகித் திரிபுடைய கலிவெண்பாட்டுளதென்று கொள்ளவைத்தார் ஆசிரியர், அதனை அடுத்துவரும் சூத்திரவுரையுட் கூறுவோம். 1. இது, பன்னீரடியான் வந்து ஒருபொருள் நுதலிய கட்டளைக்கலி வெண்பா என வரும் நச்சினார்க்கியனியர் உரைகொண்டு பன்னிரண்டடி யான்வந்து ஒருபொருள் நுதலி வந்தமையின் கலிவெண்பாட்டாயிற்று என இவ்வுரையை திருத்துக. 2. கலிவெண்பாட்டல்லாத பிறபாக்களும் வெளிப்படச் சொல்லும் பொருளின் வேறாய்க் கருதியுணரப்படும் ஒருபொருளை நுதலிவருமாயினும் அவ்வாறு நுதலும் பொருள் பற்றிப் பாவென்னும் உறுப்பு வேறுபடாமையின் அங்கு இதுபற்றிய ஆராய்ச்சிக்கு இடமில்லை. 3. ஒருபொருள் நுதலிவரும் இப்பாடல் வெண்பாவமைதியுடையதாயினும் குறித்த பொருளை வெளிப்படச் செப்பிக்கூறும் வெண்பாவிலக்கணத்திற்கு வேறுபட்டு மறைத்துக் கூறும் பொருளினதாய் ஒருபொருள் நுதலித் துள்ளலோசையினதாய் வந்தமையின் கலிவெண்பாட்டு என்னும் பெயர்த்தாயிற்று. 1. கலித்தொகையிலுள்ள நூற்றைம்பது கலிப்பாக்களிலும் ஒருபொருள் நுதலிவரும் கலி வெண்பாக்கள் எட்டு, அவற்றுள் ஒருபொருள் நுதலிவரும் கலிவெண்பாட்டுக்கள் இன்னின்ன பாடல்கள் என்பதனைச் செய்யுளுறுப்புணர வல்லாராகிய நல்லறிஞர்பாற் கேட்டுணர்க என இவ்வுரையினைக் கற்போருக்கு அறிவுறுத்தும் முறையிலமைந்தது இவ்வுரைத்தொடராகும். 2. ஒருபொருள் நுதலிய கலி வெண்பாட்டுக்களாகிய இவையெல்லாம் காமப் பொருள்பற்றி வருவன. 3. கட்டளைவகையானுந் தளைவகைபற்றியும் வரும்வெண்பாவாயின் காமப் பொருளொன்றேபற்றி வருதல் வேண்டும் என்னும் நியதியுடைய வல்ல; அறம்பொருள் இன்பமெனப்படும் மும்முதற்பொருட்கும் உரியனவாம். 1. வானூர்மதியம் என்னும் முதற்குறிப்புடையதாய் ஒருபொருள் நுதலி வரும் ஒருசார்த்தேவபாணியும் கலிவெண்பாட்டேயாம் எனவும், இதனுள் ஆட்சியனாக வென்கோ என்பது வியங்கோளாக நிற்பினும் அரசன் வாழ்க்கையும் நாடக அரங்கிற்கும் அங்கு நிகழவிருக்கும் கூத்துக்கும் இடையீடில்லாமையும் சொல்வாயாக எனத் தெய்வத்தினை வினவி நற்சொல் வேண்டி நின்றமையின் அப்பொருள் குறித்துணரப்பட்டு ஒருபொருள் நுதலியதாயிற்று எனவும், ஒருபொருள் நுதலிய கலி வெண்பாட்டான் வந்த தேவபாணியொன்றின் தொடக்கத் தினையும் முடிவினையும் இங்கு எடுத்துக்காட்டியுள்ளார் பேராசிரியர். கலிவெண்பாட்டால் அமைந்த அப்பாடல் முழுதும் நமக்குக் கிடைக்கவில்லை. இங்குப் பேராசிரியர் குறித்த வானூர் மதியம் என்பது சந்திரனைப் பரவிய தேவபாணியென்பதும் இப்பாடல் இளங்கோவடிகள் காலத்திலேயே நாடக அரங்கிற் பாடப்பெற்று வந்த தொன்மைவாய்ந்ததென்பதும், வானூர் மதியமும்பாடி (சிலப். கடலாடு. 37) எனவரும் சிலப்பதிகாரத் தொடராலும் வானூர் மதியம்-சந்திரனைப்பாடுந்தேவபாணி எனவரும் அரும்பதவுரைக்குறிப்பாலும் உய்த்துணரப்படும். 2. இசைத்தமிழில் வழங்கும் வரிப்பாடலும் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போல இசைத்துறைக்கேயுரியவாகி வரும் இசைப்பாடல்களும் வெண்டுறையும் அராகமும் போலக் கூத்துத்துறைக்கேயுரியவாகி வரும் இசைப் பாடல்களும் இவ்வியற்றமிழிற் கூறப்பட்ட செய்யுள் வகைபோல வேறுபாடப்பெற்று உலகவழக்கில் வழங்குவன எனவும் அத்தகைய பாடல்களை இக்காலத்தும் இசைப்பா என வேறு பெயர் கொடுத்து வழங்குவர் எனவும் பேராசிரியர் இங்குக் குறித்துள்ளமை அவர்காலத்து இயற்றமிழ்ச் செய்யுள்வகை போன்று இசைத் தமிழ்ப்பாடல் வகையும் பலவாய்த் தமிழ்நாட்டில் விரிந்து வழங்கிய திறத்தைப் புலப்படுத்துவதாகும். 1. இயற்றமிழ் யாப்பிலக்கணத்திற்கு ஒப்பவே இசைத்தமிழிலும் செய்யுட்கள் அமைதலுண்டு என்பதற்குப் பேராசிரியர் உரையிற் காணப்படும் வெண்பாவியலான் விரவுறுப்பின்றி எனவரும் இசைநூல் மேற்கோட்சூத்திரம் சான்றாக அமைந்துள்ளது. இஃது, ஒருபொருள்நுதலிய வெள்ளடியியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே எனவரும் இயற்றமிழ்க் கலிவெண்பாட்டின் இலக்கணத்தினை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். இதன் கண் விரவுறுப்பின்றி என்னும் மிகையால், விரவியவுறுப்புடைய பாடல் ஒரு பொருள் நுதலாது எனவும், விரவுறுப்பில்லாத பாடலே ஒருபொருள் நுதலி முடியும் இறுதியினை யுடையதெனவும் குறித்துணர வைத்துள்ளமை அறியத்தகுவதாகும். 2. எனவே இங்கு ஒருபொருள் நுதலிவரும் எனக்கூறப்பட்ட கலிவெண்பாட்டின் பொருள் வெளிப்படாது மறைந்து நிற்கும் எனவும், விரவுறுப்புடைய கலிவெண்பாட்டு வெளிப்படத்தோன்றும் பொருளுடையது எனவும் ஆசிரியர் உடன்பட்டுரைத்தாராயிற்று. 1. இப்பாட்டினுட் பெண்டன்மைக்கேலாத நுண்பொருளினைத் தலைமகனெதிர் நின்று உணர்த்துவாள் செவ்வனஞ் சொல்லாது, தலைமகன் பண்டுகூறியதனை வாங்கிக்கொண்டுசொல்லி, அவன் மறந்தான் என்பது உணர்த்துகின்ற பொருண்மை கருதியுணர வைத்தமையின் எனவரும் பேராசிரியர் உரைப்பகுதிகொண்டு மேற்குறித்த நச்சினார்க்கினியருரைப் பகுதியினைப் பின்வருமாறு திருத்திக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்:- இதனுட், பெண்டன்மைக்கு ஏலா நுண்பொருளினைத் தலைவனெதிர் நின்றுணர்த்து வாள், செவ்வன் கூறாது தலைவன் பண்டு கூறின சிலவற்றை வாங்கிக்கொண்டு கூறுங்கூற்று, நீமறந்தாய் என்பது யாம் உணரக்கூறுகின்றாள் இவள் என்பது (தலைமகன் உள்ளத்திற்குப்) பட நின்றமையின் ஒருபொருள் நுதலிற்றாயிற்று. 1. என்றது, அடுத்து வரும் சூத்திரத்திற் கூறப்படும் விரவுறுப்புடைய கலி வெண்பாட்டுகளை. 2. இவ்வுரைப்பகுதி சிதைவுற்றமையால் உரையாசிரியர் சொல்லக் கருதிய பொருள் இதுவென விளங்கவில்லை. 1. இச்சூத்திரத்தை முதன் மூன்றடியும் ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடியும் மற்றொரு சூத்திரமாகவும் பகுத்துப் பொருள் வரைவர், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். பாட்டிடைமிடைந்தும் என்பது அவ்விருவரும் கொண்ட பாடம். 1. போக்கு - சுரிதகம், 2. ஆறுமெய்-ஆறுறுப்புக்கள்; அவையாவன தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகியலடி என்பன. இவற்றுள் முடுகியல் என்பதனை நீக்கி அராகம் என்பதனைக் கூட்டி ஆறுமெய் எனக் கொள்ளலும் உண்டு. 3. வெளிப்படத்தோன்றுதல்-புலப்படத்தோன்றுதல்; அஃதாவது ஏனை யுறுப்புக்களிலும் வெண்பாமிக்குவருதல். 1. ஒத்தாழிசைக்கலியுள் தாழிசையாகிய வுறுப்பு மிக்கு வரும். கொச்சகக் கலியுள் வெண்பாவாகிய வுறுப்பு மிக்கு வரும். 2. ஒருபொருள் நுதலிய வென்ளடியியலான் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டு என மேலைச்சூத்திரத்தில் திரிபின்றி முடியும் என்றதனானே, ஒருபொருளன்றிப் பலவுறுப்புடைத்தாகித் திரிபுடையதூஉம் கலிவெண்பாட்டு உளது என்று ஆசிரியர் கொள்ள முன்பக்கத் தொடர்ச்சி வைத்தார் எனக்கொண்ட பேராசிரியர், கொச்சக்கலியின் இலக்கணமுணர்த்துவதாய் அடுத்துவரும் ஐந்தடிச் சூத்திரத்தை முதல்மூன்றடியினை ஒரு சூத்திரமாகவும், பின்னிரண்டடி யினை மற்றொரு சூத்திரமாகவும் பகுத்து, முன்னது வெளிப்படுபொருளினதாகிய வெண்கலியின் இலக்கணம் உணர்த்திற்றெனவும், பின்னது அகநிலைக் கொச்சகக்கலியின் இலக்கணமுணர்த்திற்றெனவும் கருத்துரை வரைந்துள்ளமை சிந்திக்கத்தகுவதாகும். 1. தரவும் போக்கும் இடையிடைமிடைந்தும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் என்பது பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். இங்குத் தரவு என்பது பாட்டின் முதற்கண் உள்ள உறுப்பு. போக்கு என்பது பாட்டின் இறுதிக் கண்ணதாகிய சுரிதகம். பாட்டு என்றது, தரவுக்கும் போக்குக்கும் இடையில் வரும் கொச்சகத்தினை. 1. ஐஞ்சீரடுக்குதல் என்பது, தனித்து நின்ற சீரினை அளவடியுடன் இயைக்க ஐஞ்சீராதல். 2. ஆறுமெய்பெறுதல் என்பது, அளவடியுடன் இருசீரினை இயைக்க அறுசீரடியாதல். 3. எழுத்தெண்ணிக்கொள்ளப்பட்ட கட்டளையடியும் எழுத்தெண்ணப்பெறாத சீர்வகையடியும் எனப்பட்ட வெண்பாவிலக்கணம் இரண்டும் சிதையாமல் வருவது வெளிப்படு பொருட்டாகிய வெண்கலி என்பதாம். 4. பாட்டிடைமிடைந்தும் ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய்பெற்றும் மேற்கூறிய தனிநிலை வெண்பாட்டேயன்றித் தரவு முதலியவுறுப்பாகவும் வரும் என்றமையின் மிடைந்தும் அடுக்கியும் பெற்றும் எனவரும் உம்மை மூன்றும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாகும். 5. இவ்வுரைப்பகுதி குறித்தபொருளைத் தெளியவிளக்கும் நிலையில் அமையாமை ஏடெழுதுவோராற் பிழைபட்டுளதென எண்ணவேண்டியுளது. (பெயருடன் எண்ணப்படும் எண்ணும்மையும் வினையுடன் கலந்துவரும் எச்சவும்மையும் வேறுவேறாக வருதலின்றி அவைதம்முள் ஒன்றிவருதல் இல்லையாதலின்) 1. அவற்றுக்குச் செய்யுள் கூறுங்கால், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்த தொன்றும், அதுவே ஐஞ்சீரடுக்குப்பெற்றதொன்றும், அறுசீரடுக்குப் பெற்ற தொன்றும், அவையிரண்டும் உடன்பெற்றதொன்றுமென்றும் இங்ஙனம் (நால்வகையாக) விகற்பித்துக் கூறப்படும் என்பது என்றிருத்தல் பொருத்தமாகும். 1. இயற்சீர் நிரையொன்றியும் பாவேறுபடாமையின் இதுவும் கலிவெண்பாட்டா யிற்றென்பது கொள்க. இங்ஙனம் பாவேறுபடாமையினன்றே, உறாஅஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழியென் னெஞ்சு என்பதனை வெண்பா என்பாமாயிற்றென்பது என்றிருத்தல் பொருத்தமாகும். 1. மேற்சிறுபான்மை பொதுவகையாற் கலிக்கு வருமெனப்பட்ட சொற்சீரடி அகநிலை ஒத்தாழிசைக்கும் முற்கூறிய ஒருபொருள் நுதலிய வெள்ளடியியலால் திரிபின்றி முடியும் கலிவெண்பாட்டிற்கும் எக்காலத்தும் வாராது என்பதும், அச்சொற்சீரடிதானும் வெளிப்படு பொருட்டாய் விரவுறுப்படைய இவ் வெண்கலிக்கு வருங்கால் ஐஞ்சீர், அறுசீர் என்னும் இவ்விரு சீரினைக் கடந்து வாராதென்பதும் கூறியவாறு. 2. அகநிலை ஒத்தாழிசைக்குச் சொற்சீரடி விலக்கவே, அதற்கினமாகிய முடுகியலும் வாராதாயிற்று. 3. வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என வெண்கலிக்கு முடுகியலும் விலக்கப்பட்டது. 4. கோடுமென்றமையின் - கொள்வோமென்றமையால் 1. தளைவிரவியும் பலவுறுப்புவந்தவழியும் வெண்பாச்சிதையாவழிக் கலி வெண் பாட்டாமென்று இதுபுறனடையாக, வெண்டளை தன்றளை யியற்றளை விரவியும் வெண்பா வுடையது வெண்கலி யாகும். என ஒரு சூத்திரஞ் செய்யாரோ வெனின் என இவ்வுரைப்பகுதியை இயைத்துப் பொருள் காண்க. 2. பலவுறுப்பு இன்றித் தளைவிரவி ஒருபாட்டாய் வரின் அதனை வெண்கலியெனப் பெயரிட்டு வழங்குவர் பிற்கால யாப்பிலக்கணவாசிரியர்கள். அன்னோர் கூறும் வெண்கலிப்பா விலக்கணம் சங்கத்தொகை நூலாகிய கலித்தொகையில் உள்ள நூற்றைம்பது கலியுள்ளும் காணப்படாமையின் அது பண்டைச் சான்றோர் செய்யுளிலக்கணத்தொடு மாறுபடுவதாம் என மறுப்பர் பேராசிரியர். 3. பாட்டிடைமிடைந்து என்றவழிப் பாட்டு என்றது, தாழம்பட்ட ஓசையின்மையின் இடைநிலைப்பாட்டு (தாழிசை) ஆகாது; துள்ளலும் செப்பலும் என்னும் இருவகைச் கொச்சகமும் ஒருங்கு வாராமையின் சொச்சகம் என்னும் பேர் கூறப்படாது; வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்றதனால் வெள்ளைக் கொச்சகம் எனப்படும் என்பர் பேராசிரியர். 1. கொச்சகம் என்று ஓதின் இது கொச்சகக்கலியாமென்று கருதுதற்கும் இடமுண்டாதலின், அவ்வாறு கருதற்க என்பார். அடைமொழியின்றிப் பாட்டு எனப் பொதுப்படக்கூறினார் ஆசிரியர். கொச்சகம் என்னாது பாட்டு எனப் பெதுப்படக்கூறிய இதனாலும் இச்சூத்திரத்தொடர் கொச்சகக்கலியின் இலக்கணங்கூறுவதன்று; வெளிப்படு பொருளதாகிய வெண்கலியின் இயல்புரைப்பதே யெனக் கொண்டனர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 1. இதற்கு இச்சீர்களை விதந்தோதவே என்றிருத்தல் வேண்டும். இதற்கு விரவுறுப்புடைய கலிவெண்பாவிற்கு இச்சீர்களாவன ஐஞ்சீரும் அறுசீரும். 2. இதற்கு ஐஞ்சீரும் அறுசீரும் விதந்தோதவே, மேற்சிறுபான்மை பொது வகையாற் கலிக்கு நேரப்பட்ட சொற்சீரடி ஒத்தாழிசைக்கும் முற்கூறிய கலி வெண்பாட்டிற்குமாயின் எஞ்ஞான்றும் வாராதென்பதூஉம் அதுதானும் இதற்கு வருங்கால் இருசீரின் இகந்து வாராதென்பதூஉம் கூறினானாம். இங்ஙனம் சொற்சீரடி விலக்கவே முடுகியலடியும் ஒத்தாழிசைக்கு வாராதென்பதாம் எனவரும் பேராசிரியர் உரைப்பகுதியை நச்சினார்க்கினியர் இங்குச் சுருக்கமாக விளக்கியுள்ளமை ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும். 1. பாவென்பது, பரந்துபட்டுச் செல்தோர் ஓசை யென்னும் பொருளில் வழங்கப் பெறுவதாகலின் பாவினின்ற என்ற பாடத்திலும் பாவி நின்ற என்ற பாடமே கொள்ளத்தகுவதாகும். 2. தரவின்றாகித் தாழிசைபெற்று (செய் 149)) வருமென்ற கொச்சகத்தினை இதற்கு இயைபின்றாகச் சேட்படுத்தமையின் அஃதொன்றனையுந் துணித்து மாற்றி, அல்லாத கொச்சகம் பாவிநின்றவகையான் இவ்வகநிலைக் கொச்சகமும் வருமென்றுணர்க. எனவே, பரணிப்பாட்டுப்போல அகநிலைக் கொச்சகம் வாரா என்றானாம் என இவ்வுரைப்பகுதியினைத் திருத்திப் பொருள் கொள்ளுதல் வேண்டும் என்பது பேராசிரியருரையினை யடியொற்றியமைந்த நச்சினார்க்கினியருரைப்பகுதியால் நன்கு விளங்கும். 1. ஒருபொருணுதலாது என்றிருத்தல் வேண்டும். 2. அல்லாதார்க்கது என்றிருத்தல் பொருத்தம். 3. கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை இனமென்று கொள்வார்க்கு அவை அவ்வப்பாவின் இனங்கட்கு ஏற்ப இவ்வகையே கொச்சகமென வேறுபட்டு வழங்குதல் வேண்டும். கலியல்லாத ஏனைப்பாக்களுக்கும் கொச்சகம் என்னும் வகையின்மையின் அன்னோர்கூறும் பாவினப்பகுப்பு பொருந்தாது என்பதாம். 1. இது, நூற்றைம்பது கலியுளொன்றாகலின் வெண்பாவாகியும் தனித்து வரும். வருங்காற் கலிவெண்பாட்டன்றாயிற்று. ஒருபொருள் நுதலி இவ்வாறுவரினும் இஃதொக்கும். இது, தாழிசையொடு தொடராத் தரவாகலின் வெண்பாவாகியும் வந்தது என இவ்வுரைப்பகுதி திருத்தம் பெறுதல் வேண்டும். கொச்சகம் வெண்பாவாகியும் வருதலானுந் தாழிசையோடு தொடராது வருதலானும் இவை சொச்சகமாயிற்று. ஒருபொருள்நுதலி யிவ்வாறு வரினுங் கொச்சகமென்றுணர்க என இச்சூத்திரவுரையிலும் கொச்சகம் வெண்பாவாய் வருதலானுந் தாழிசையொடு தொடராது வருதலானும் இவை தரவிணைக் கொக்சகம். இரண்டும் ஒருபொருணுதலி யிவ்வாறு வரினுங் கொச்சகமேயாம். இது, பாநிலைவகையே என்னுஞ் சூத்திரவிதியாம் (கலித் 19) எனக்கலித்தொகையுரையிலும் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் மேற்குறித்த திருத்தத்திற்கு ஆதாரமாகும். 1. அதுவருமாறு, என்னும் இவ்வுரைத்தொடர் தொடர்பின்றி நிற்றலின் இதனை நீக்கிவிடலாம். 1. தேவர்ப்பராய ஒத்தாழிசைக் கலியின் வகையாக மேற்கூறப்பட்ட கொச்சக வொருபோகினுள் தரவின்றாகித் தாழிசைபெற்றுவரும் ஒருவகையினை மட்டும் விலக்கி ஒழிந்தவகையின் பாநிலைமையினையுடையதாய்ப் பாவொழிந்த ஏனைய உறுப்பெல்லாம் ஒருபொருணுதலாது வெளிப்படத்தோன்றும் கலி வெண்பாட்டின் உறுப்பு வகையான் ஒத்த வருவது அகநிலைக் கொச்சகக்கலியென்பது பேராசிரியர் கருத்தாதலின் கொச்சக வொருபோகோடொப்பன தரவுக் கொச்சகம் எனக்குறித்துள்ளார். 1. கோவையாக்கி எழுத்தெண்ணி யளவியற்படுத்துச் செய்வனவும் தரவு க் கொச்சகமாம். திருவளர்தாமரை (திருக்கோவை - 1) போதோவிசும்போ (திருக்கோவை 2) இவை பதினேழும் பதினாறுமாய் வந்த தரவுக் கொச்சகம் எனவரும் நச்சினார்க்கினியருரை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 1. பாநிலையென்றதனால் கொச்சகவொருபோகின்பாநிலையுடையதாய் வரும் கொச்சகமும், வகை யென்றதனால் வெண்கலியுறுப்போடொத்துப் பாவேறுபடும் கொச்சகமும் எனக் கொச்சகக்கலி இருவகைப்படும் என்பது, இனி யெனவரும் இவ்வுரைப்பகுதியால் உய்த்துணரப்படும். 1. தரவும்போக்கும்... நுவன்றறைந்தனரே என ஐந்தடிகளையும் ஒரு சூத்திரமாகக் கொண்டு இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். எனினும், கலிவெண்பாட்டெனக் கூறிய முன்பக்கத் தொடர்ச்சி உறுப்புடைக் கலிவெண்பாட்டும் ஈண்டுப் பாநிலையெனப்பட்ட கொச்சகப்பகுதியும் என இரண்டும் கொச்சகவுறுப்புடைமையிற் கொச்சகக்கலியென ஒன்றேயாம் என்னும் இப்பொருள் இளம்பூரணருரையில் இடம் பெறவில்லை. எனவே இங்குப் பேராசிரியராற் குறிக்கப்பட்டவுரை வேறோர் ஆசிரியரால் எழுதப் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருதவேண்டியுளது. அவ்வுரைப்பகுதி இப்பொழுது கிடைத்திலது. 1. வெளிப்படத்தோன்றின், ஒருபொருணுதலியதுபோலக் கலிவெண் பாட்டா காமைக்கும், வாளாது கலிப்பாவாதற்கும் காரணம், பிறிதுபொருள் கூறுவது கலிவெண்பாட்டு என்பதும், வெண்கலியாகி இது கரந்த பொருட்டன்றி வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் என்பதும் ஆகிய வேறுபாடேயாகும். இவ்வேறுபாடு விளங்கக் கலிவெண்பாட்டினைத் தொடர்ந்தே வெண்கலிப்பாவிற்கும் இலக்கணம் கூறினார் ஆசிரியர். அன்றியும் வெண் கலியின் இலக்கணங் கூறிய ஆசிரியர் அதனை மற்றொரு பாவாகிய கொச்சகக் கலிக்கு ஏதுவாகக் கூறமாட்டார். கலிப்பாவகை நான்கனுள் ஒத்தாழிசைக் கலி விரிந்த பரப்புடைய தாதல் போன்று கலிவெண்பாட்டும் விரிந்த பரப்புடையதாதல் விளங்க ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டு என உடனோதினார். அங்ஙனம் ஒதவே கலி வெண்பாட்டும் ஒருபொருள்நுதலித் திரிபின்றி முடிவது எனவும். விரவுறுப்புடையதாகி வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றுவ தெனவும் வகையின் பரப்புடைய தாதல் வேண்டும். ஆகவே, தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் முன்பக்கத்தொடர்ச்சி என்பதனை வெண்கலியின் இயல்புணர்த்திய தனிச்சூத்திரமாகக்கொள்ளுதலே ஏற்புடையதாகும். எனவே இதனையும் கொச்சகக்கலியின் இலக்கணங் கூறும் பாநிலை வகையே கொச்சகக்கலியென நூனவில்புலவர் நுவன்றறைந்தனரே என்பதனையும் ஒரு சூத்திரமாகக் கொள்ளுதல் பொருந்தாதென்பது பேராசிரியர் கருத்தாகும். கலிப்பாவகை நான்கனுள் ஒத்தாழிசைக் கலியினையடுத்துக் கலி வெண்பா எண்ணப்பெற்றமையால் அதுவும் ஒத்தாழிசைக் கலிபோன்று வரிந்த பரப்புடையதாதல் வேண்டும் என்னும் நியதியில்லை. கலிப்பாவகை நான்கனுள் ஒன்றாக வைத்து எண்ணப்படும் உறழ்கலிக்கு ஒத்தாழிசைக் கலிபோன்றும் கொச்சகக்கலிபோன்றும் விரிந்தபரப்புடைமையாகிய வகையில்லாமையும் இங்குக் கருதத் தகுவதாகும். எனவே பேராசிரியர் கூறும் மறுப்பு பொருந்துமா? என்பது ஆராயத் தகுவதாகும். 1. மேற்கொச்சகவொருபோகின் அளவு இன்னதென்றிலனால் மற்று இதற்கு அளவை கொள்ளுமாறு என்னையெனின்? என இயைத்துப் பொருள் கொள்க. 1. தாழிசைக்கொச்சகமாகிய பரணிச் செய்யுளும் தரவுக் கொச்சகமாகிய தொடர் நிலைச் செய்யுளுள் ஆகிய அவை கொச்சகம் எனப் பெயர்பெறுதலாயின மையின் அடிவரையறையின்றி ஒருசெய்யுளாக்கியே அளவை கூறினார். இரண்டடி முதலாகப் பத்தடியளவும் வருவன தரவுக் கொச்சகம் என்பது மேற்காட்டிய உதாரணச் செய்யுளுட் காணப்படும். 1. வண்ணகத்திற்கோதிய என்றிருத்தல் வேண்டும். 1. கொச்சகக்கலியினையடுத்து உறழ்கலிவைத்தமையால் கொச்சகவுறுப்பில் ஒப்பன உறழ்கலிக்கும் உறுப்பாகக் கொள்ளப்படும். 1. ஆதிப்பாட்டாகிய தரவினும் இடைநிலைப்பாட்டாகிய தாழிசையினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது சுரிதகம் என்னும் உறுப்பாகும். யாரிவன் என்னும் கலியின் இறுதிக்கண் வந்த பகுதி அங்ஙனந்தொகுத்து முடிக்காமையின் சுரிதகம் ஆகாது. எனவே இப்பாட்டு சுரிதகமின்றி வந்தது என்றார். 1. போக்கு இன்றாதல் - சுரிதம் இன்றிவருதல். உறழ்கலி சுரிதகம் இன்றி வரும் எனவே தரவுபெறுதல், பாட்டு இடைமிடைதல் முதலாக வெண்கலிப்பாட்டிற்கு ஓதியன பெறுதலும் அம்போதரங்கத்திற்கு ஓதிய அளவு பெறுதலும் மேனின்ற அதிகாரத்தாற் பெறப்படும். 2. அதுவும் - இயல்பின்றி விகாரவகையாற் கொள்ளப்படும் சுரிதகமும். 3. அவ்வாசிரியச் சுரிதகமே சிறுபான்மை உறழ்கலிக்கு வருமெனக் கொண்டோம். 1. உறழ்கலியாகிய இதற்குத் தரவு முதலியவுறுப்பு விதந்தோதப்படவில்லை. எனவே தரவின்றி வருவனவும் உள்ளனவே என்னும் ஆராய்ச்சிக்கு இடமில்லையென்று அமைதிகூறுவது பொருந்தாது. தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்தும், எனவரும் அதிகாரம் பற்றி ஆசிரியர் இங்குப் போக்கினை மட்டும் விலக்கினமையின் தரவினை யுடன்பட்டாராவர். எனவே தரவின்றிவருவனவும் உளவால் என்னும் ஆராய்ச்சிக்கு இங்கு இடமுண்டு. வெளிப்படு பொருட்டாகிய கலிவெண்பாட்டு ஓதிய சூத்திரத்தில் அவைநின்ற முறையே தரவு பாட்டு போக்கு எனக்கொச்சகப்பாட்டினை இடைவைத்துக்கூறாது தரவும் போக்கும் உடன் கூறினமையால் நாற்சீரால் முடியும் கொச்சகப்பாட்டும் போக்கின் இலக்கணத்தவாய் முடியும்என உய்த்துணரவைத்தார். அதனாலே இச்சூத்திரத்தில் விலக்குண்ட போக்குப் போலச் சிறுபான்மை தரவின்றியும் உறழ்கலிவரும் என்பதும் கொள்ள வைத்தார். உறழ்கலிக்குத் தரவு உண்டு என்னும் இக்கருத்தினாலேயே இதனை ஒருபோகெனப்பட்ட பாநிலையொடு கூறாது தரவுவகைப்படும் கொச்சகக்கலியின்பின் வைத்தார் ஆசிரியர். 2. தரவும்போக்கும் ஆகிய அவ்வுறுப்புக்கள் ஒருங்குவருந் தன்மையனவாக ஓதப்பட்டமையின் போக்கு என்னும் இறுதி உறுப்புடைய கலிப்பாக்கள் தரவு என்னும் முதலுறுப்பின்றி வாரா என்பதாம். 3. உறழ்கலியாகிய இதற்குப் போக்கு என்னும் உறுப்பின்மையும் ஓரிலக்கண மாதலின் அக்காரணம் பற்றியும் பெயர்வைத்தல் கூடாதோ? என்பது இங்கு வரும் வினா. 4. போக்கு இன்மையாகிய இவ்வியல்பு சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரிமையுடையதாதலால் பிறிதொரு வகைககும் உரியதோர் பொதுவியல்பினை ஒன்றற்கேயுரிய சிறப்பியல்பாகக்கொண்டு பெயரமைத்தல் கூடாது என்பது மேற்குறித்த வினாவுக்குரிய விடையாகும். 1. போக்கின்மை இதற்கும் கொச்சகத்திற்கும் ஒத்ததாதல் கருதி இதனைக் கொச்சகம் எனப்பெயர் கூறலாகாதோ? என்பது அடுத்துத் தோன்றும் வினா. நாடகச் செய்யுட் போல வேறுவேறு துணிந்த பொருட்பகுதிகளை யுடையவாய்ப் பலவாய்த் தொடர்ந்து செல்லுந்தன்மையால் இது கொச்சகத்திற் பெரிதும் வேறு பாடுடைமைநோக்கியும் இது பொருளதிகாரமாதலாற் பொருள்வேறுபாடு பற்றியும் செய்யுட்குப் பெயரிடுதல் பொருந்துமாதலின் உறழ்தற்பொருள் பற்றியும் வரலாற்று முறைமைமாகிய மரபுபற்றியும் இஃது உறழ்கலியென்னும் பெயர்த்தாயிற்று என்பது மேற்குறித்த வினாவுக்குரிய விடையாகும். இவ்வாறு பொருள் பற்றிச் செய்யுட்கு வழங்கும் மரபுப்பெயர் வழக்கினை ஏற்றுக் கொள்ளாது விட்டால் கைக்கிளை, செவியறிவுறூஉ, வாயுறை, புறநிலை என்னும் பொருள் மேறுபாடுகுறித்த நான்கு மருட்பாவும் ஒன்றெனவே கூற வேண்டியநிலையேற்படும் எனக் கூறி மறுக்க என்பதாம். 1. காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச்செயல் என்னும் இறுதிப்பகுதி முற்கூறியவற்றையெல்லாந் தன்கண் தொகுத்து வைத்திலாமையானும், அதன்பின் அன்னதேயாயினு ............. நின்றதெனின் என்றாற்போன்று மேலும் ஒரு கொச்சகம் புதிதாகச் சேர்த்து உறழ்ந்தாலும் அஃது அவ்வுறழ்கலியின் இறுதிப்பகுதியாகக் கொள்ள நிற்றலானும் வெள்ளைக் கொச்சகமாகிய அஃது உறுதியாகச் சுரிதகமாகாது என்பதாம். 2. இவ்வாறு உறழ்கலியின் முடிவு வெள்ளைக்கொச்சகமாகாது ஆசிரியச் சுரிதகம் வந்தவழி அக்கலிப்பாட்டு முடிந்து காட்டுதலின், அஃது அடக்கியலன்றாயினும் அதனை அகத்தியத்தினை முதல்நூலாகக்கொண்டு வழிநூல் செய்த தொல்காப்பியனார் முதனூல் பற்றிச் சிறுபான்மை உடன்பட்டுரைத்தார் என்பதாம். 1. பேராசிரியர் உரையைத் தழுவியது இவ்வுரைப்பகுதி. 1. ஆசிரியப்பா மூன்றடிச்சிற்றெல்லையும் ஆயிரவடிப்பேரெல்லையும் உடையது. எனவே, ஆசிரிய நடையினையுடையதாகிய வஞ்சிப்பாவும் ஆயிரவடிப் பேரெல்லையுடையதாகக் கொள்ளப்படும். 1. அதனியற்றாகிய - அவ்வாசிரியத்தின் இயல்பினதாகிய. 2. இவ்வுரைத்தொடரும் பேராசிரியர் உரையை அடியொற்றியதேயாகும். 1. நெடுவண் பாட்டே முந்நா லடித்தே குறுவெண் பாட்டி னளவெழு சீரே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. நெடுவெண்பாட்டினைப் பஃறொடை வெண்பாவெனவும் குறுவெண்பாட்டினைக் குறள்வெண்பா எனவும் வழங்குவர் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள். குறுவெண்பாட்டிற்கு அளவு எழுசீர் என்றமையால் இரண்டடிப்பாட்டாகிய அது முதலடி நாற்சீரடியாகவும் இறுதியடி முச்சீரடியாகவும் வரும் என்பதாம். 1. குறுவெண்பாட்டு நெடுவெண்பாட்டு எனக் குறுமையும் நெடுமையும் அளவியலுடன் வைத்துப் பெயர் கூறியதனால் அவற்றுக்கு நடுவெல்லையாகிய அளவியல் வெண்பாட்டும் உண்டென்பதும் அதுவே சிறப்புடையதென்பதும் உய்த்துணர வைத்தார் ஆசிரியர். 2. நெடுவெண்பாட்டு - பஃறொடைவெண்பா. அதன் உயர்ந்த அளவு பன்னிரண்டடி யெனவே அதன் சரிபாதியாகிய ஆறடி அளவில் வெண்பாவுக்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்த எல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவுக்கு இழிந்த எல்லை நான்கடியெனவும் கொள்ளவைத்தமையின் இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தியாகும். 1. இக்கருத்தினானே அம்மைதானே யடிநிமிர்பின்று எனக்கூறிய ஆசிரியன் அதற்கு நெடுவெண்பாட்டு நேர்ந்திலன் என்பது என இயைத்துரைக்க. 2. செப்பிக் கூறிய மரபினவாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல் பன்றாகலின் அளவியல் வெண்பாவிற் சுருங்கிய நான்கடியே சிறந்ததென்று கொண்டு பெரும்பாலும் செய்யுள் செய்தனர். அங்ஙனம் செப்பிக் கூறும்பொழுதும் கேட்போர்க்குப் பொருள் தெரியக்கூறல் வேண்டுமாதலின் அளவியல் வெண்பாவே பயின்றன. நெடுவெண்பாட்டு குறுவெண்பாட்டு என்னும் இரண்டினுள்ளும் சிறப்புடையது குறுவெண்பாட்டேயாதலின் சிறப்புடைமை தோன்றப் பிற்கூறப்பட்டது. 1. இச்சூத்திரவுரை பேராசிரியருரையின் சுருக்கமாகும். 1. அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. செம்பொருளாகவும் பழிகரப்பாகவும் அமைந்த அங்கதப்பாட்டாகிய வெண்பா. மேற்குறித்த குறுவெண்பாட்டிற்குரிய இரண்டடிமுதல் நெடுவெண் பாட்டிற்குரிய பேரெல்லையாகிய பன்னிரண்டடியளவும் பெற்றுவரும் என்பதாம். 3. மேற்கூறிய இரண்டெல்லையாவன : ஆறடியுயர்பும் நான்கடியிழிபும் ஆகிய எல்லை. 1. அங்கதப்பாட்டாகிய இது மந்திரத்தின் வேறுபட்டு அடிவரையுடைய தாயினமையின் வெண்பாப்போன்று அடிவரையுடையதாய் வரல்வேண்டும் என்றற்கும், மந்திரத்தின் தன்மையுடைய அங்கதத்திற்கு மந்திரத்திற்குப்போன்று அடிவரையறையில்லைகொல் என்னும் ஐயத்தினை நீக்குதற்கும் இச்சூத்திரத்தால் அளவை கூறி, கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுள் என இதனுடன் ஓதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட்போலப் பலவாய்வரினும் அவற்றுக்கு அளவையும் வெண்பாவின் அளவேயென்று அடக்கினார் தொல்காப்பியனார். 2. வசைப்பாட்டு என்றது, அங்கதப்பாட்டினை. 1. தொகுநிலை யளவி னடியில வென்ப என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிலுள்ள பாடமாகும். 2. தொகைநிலை மரபின் அடியில எனவே பொருள் முடியுங்காறும் வேண்டிய அடிவரப் பெறும் என்றார். 3. அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின் இஃது எய்தாதது எய்து வித்தது. 1. மற்று, அவையடக்கு கொச்சகவொருபோகாகியும் தொடர்நிலைச் செய்யுட்கண் வருமாலெனின் என இயையும். 1. கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலைவாழ்த்து என்னும் இவ்வைந்தற்கும். 2. அளவு என்னுஞ்சொல் நீட்சி என்னும் பொருளில் ஆளப்பெற்றது. 3. ஈண்டோதிய கலிவெண்பாட்டு என்றது, ஒருபொருள் நுதலாது வரும் கலிவெண் பாட்டினை. 4. பதின்மூன்றடியிற் சுருங்காமையாகிய இவ்வளவு, கைக்கிளைப்பொருள் பற்றி வரும் கலிவெண்பாவுக்கும். 5. வெண்பாவும் ஆசிரியமுமாய் வரும் அவ்விரண்டுபாவின் கூட்டமாகிய மருட்பா. 6. கைக்கிளைப்படலம் என்றது, பன்னிரு படலத்தின் பகுதியாகிய கைக்கிளைப் படலத்தினைக் குறித்ததாகும். 1. வெண்பா இரண்டடியிற் சுருங்காமையும் ஆசிரியம் மூன்றடியிற் சுருங்காமையும் உடையவாதலின் அவ்விரண்டுங்கூடிய கூட்டமாகிய மருட்பா ஐந்தடியிற் சுருங்கி வாராது என்றார். 1. கலித்தொகையிலுள்ள நூற்றைம்பது கலிப்பாவுள்ளும் கைக்கிளைப் பொருளிலமைந்த கலிவெண்பா காணப்படாமையின் அதற்கு உதாரணங் காட்டப்பெறவில்லை; கைக்கிளைப் பொருள்பற்றிக் கலிவெண்பா வருதலுண்டு என்னும் இலக்கணமுண்மையால், அதற்குரிய இலக்கியம் வந்தவழி அதனை உதாரணமாகக்கொள்க என்பதாம். 2. இங்குக் காட்டப்பெற்ற முத்தொள்ளாயிரப்பாடல் பாடாண்டிணைப் புறப் பொருளாதலானும், கலிவெண்பா ஒருபொருள் நுதலிவருதல் என்பது அன்பின் ஐந்திணை பற்றியதாதலானும், கைக்கிளைப்பொருள் பற்றிவரும் கலிவெண்பா பன்னிரண்டடியின் மிக்குவருமாதலானும் இது கலிவெண்பாவாகாது. நான்கடியால் வந்த இது அளவியல் வெண்பாவேயாம். 1. பொருட்பகுதியமைந்த செய்யுட்களின் மரபு பற்றிய இவ்வியல் பறியாதார் ஒருபொருள் நுதலிவரும் கலிவெண்பா வொழிந்தன வெண்பா என்று அடிவரையறை கூறாதொழிவர். இவ்வாறு மரபுகெடக்கூறின் ஒருவனைத் தலைமகனாய்ப் பெயர்கூறி நிறுத்தி அவனைக் காதலித்து இவள் இவ்வாறாயினாள் என ஆசிரியத்தாலும் வஞ்சிப்பாவாலும் பொருள்வேறுபட்ட ஒருசார்க் கொச்சகக்கலிப்பாவாலும் செய்யுள் செய்தலும் இனி, அதனிலையாகிய ஆண்பாற்கைக்கிளை ஆசிரியத்தாலும் வஞ்சியாலும் வருதலும் பிறவும் இத்தகைய மரபு மாற்றங்கள் புலநெறி வழக்கிற் காட்டுதல் வேண்டும். மரபுக்கு மாறுபட்ட இவை சங்கச் செய்யுட்களில் இல்லாமையால் அன்னோர் கூற்றுப் பொருந்தாதென மறுக்க என்றவாறு. 2. ஒருதலையன்பு-ஒருபாற் கேண்மையாகிய கைக்கிளை. 1. ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின என்ற சூத்திரவுரையில் அங்கதமும் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வரும் என்பது படும் எனப் பெண்பாற்கைக்கிளை சிறுபான்மை ஆசிரியம் முதலிய மற்றைப் பாக்களால் வருவன அமையும் எனக் கூறிப்போந்தாம், அதுவே பெரும்பான்மை பற்றிய விதியாகாது என்பதாம். 2. நற்காமம் என்றது, அன்பினைந்திணையொழுகலாற்றை. ஒருபாற்கேண்மை கைக்கிளையாதலின் அதனை நற்காமம் அன்று என்றார். 1. கைக்கிளை கலிவெண்பாட்டாகவும் வருதலின் கலிவெண்பாட்டிற்குரிய அளவே பாடாண் கைக்கிளைக்கும் அளவாகக் கொள்ளப்படும் என்பதாம். 2. கைக்கிளையொழிந்த புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ என்னும் மருட்பா மூன்றற்கும் அடுத்த சூத்திரத்துள் உதாரணங்காட்டுவோம். 3. பிற்காலத்தார் செய்த உலாச் செய்யுளாகிய அவை தொல்காப்பியனார் கூறிய அன்பி னைந்திணை யொழுகலாறு பற்றிய புலனெறி வழக்கிற்குச் சிறந்தனவாகாமையின் அவை சிறுபான்மையாய்ச் செய்யுள் வழக்கில் இடம்பெறுவனவாயின வெனக்கொள்க. 1. அவை என்று திருத்துக. 1. வெண்பா வியலினும் ஆசிரிய வியலினும், பண்புற முடியும் பா என்றது மருட்பாவினை. வெண்பா முதல் வந்து அகவல்பின்னாக விளையுமென்றால், வண்பான் மொழிமடவாய் மருட்பா வென்னும் வையகமே எனவரும் யாப்பருங்கலக் காரிகை மேற்குறித்த தொல்காப்பியத் தொடரை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். திறநிலைமூன்றும் என்னும் எழுவாய் பாவின என்னும் வினைக் குறிப்பினைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தது. 2. மருட்பா, புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவியுறிவுறூஉ, கைக்கிளை யென்னும் இந்நான்குபொருள் பற்றியல்லது வாராது என்பதாம். 1. செய்யுளியல் 85-ஆம் சூத்திரத்து, ஆசிரியமும் வெண்பாவுமாகிய இருகூறு மல்லது மருட்பாவுக்குத் தனது ஓசையிது வெனக் காட்டுந் தனி நிலையில்லை யென்றவழி ஆசிரியத்தினை முன்னும் வெண்பாவினைப் பின்னுங்கூறினாராயினும் அவ்விருபாவின் கூறுகளும் மருட்பாவின் அமைந்து நிற்கும் நிலை வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னும் என்பது இங்கு விளங்கக் கூறப்பட்டது. 2. புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ என்பன மூன்றும் இவ்வியலிற் பாவுறுப்பினை விரித்துக்கூறும் பகுதியில் விளக்கப்பெற்றன. மேற்குறித்த பொருள்கள் பற்றிய செய்யுள் இன்னவாறு அமையும் என்பது இச்சூத்திரத்தால் விளக்கப்பெற்றது. 3. புறநிலைவாழ்த்து முதலிய இவை மூன்றும் புறத்திணையு ளல்லது வாரா என்பார் திறநிலை மூன்றும் என்றார். 4. இவைமூன்றும் கைக்கிளை மருட்பாப் போன்று அகமும் புறமும் பற்றி வாராது ஒருதலையாகப் புறத்திணையென்று தெரியப்படுவன என்பார் திண்ணிதின்தெரியின் என்றார். இவ்வாறு கூறியதனாற்பயன் கைக்கிளை மருட்பாப் புறத்திணைக்கண்ணும் வரும் என்பதாம். 1. வெண்பாவியல், ஆசிரியவியல் என இயல் என்பதனை ஈரிடத்தும் சேர்த்துரைத் தமையால் வெண்பா இயற்சீர் வெள்ளடியாலும் ஆசிரியம் இயற்சீராலும் வருதல் சிறந்தது என்பதாம். 2. வெண்பாவும் ஆசிரியமும் ஆகிய இவ்விருபகுதியும் தத்தம் பாவென்னும் உறுப்பு வேறுவேறாகப் புலனாகுமாறு அமைவது மருட்பா என்றவாறு. 3. ஒன்றாகத் தொடுத்தலாவது இயற்சீர் வெண்டளையும் ஆசிரியத்தளையும் ஒருங்கு கலந்து ஒருபாவென வருமாறுபோன்று ஒருபாவாகி விரவச் செய்யுள் செய்தல். 4. அதுவேபோல வருதலாவது, வெண்பா முதலாக ஆசிரியம் பின்வந்து முடிதல். 1. பேராசிரியர் கருத்தைக் கொண்டு கூறியது. *gÇgh£blšiy எனப்பாடங்கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 1. பரிபாடல் அடிக்கு எல்லை உயர்பு நாலீரைம்பது அடியாக இழிபு ஐயைந்தாகும் என முடியும். உயர்பு-பேரெல்லை. நாலீரைம்பது, நானூறு. இழிபு-சிற்றெல்லை. ஐயைந்து-இருபத்தைந்து, 2. ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு அளவு இவ்வியல் 145-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டது. 1. கலிவெண்பாட்டுக்கு அடிவரையறை யில்லை யென்பது. 154-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டது. 2. 148-ஆம் சூத்திரத்திற் கொச்சகக்கலிக்கு ஆசிரியர் அடிவரையறை கூறாமையின் பொருள் முடியுங்காறும் வேண்டும் அடிகளைப் பெற்றுவரும். அங்ஙனம் வருங்கால் பல வுறுப்புக்களைப் பெற்று வருதலின் அதற் குறுப்பாகிய செய்யுள் அளவிற்றாய அடிகளா லியன்று வரும். உறழ்கலியும் கொச்சகக்கலிபோன்று பல வுறுப்பாகி வருதலின் அதற் குறுப்பாகிய செய்யுள ளவிற்றாய் வரும். 3. பரிபாட்டிற்கு அடியுயர்பு எல்லை நாலீரைம்பதடியாக அடி இழிபுக்கு எல்லை ஐயைந்து ஆகும் என இயையும். நாலீரைம்பது - நானூறு - ஐயைந்து-இருபத்தைந்து. இங்குப் பரிபாட்டு என்பதற்குப் பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பா எனப்பொருள் கொண்டார் பேராசிரியர். இதுமுறையே பரிபாடற்கு எல்லை கூறுகின்றது. எனக் கருத்துரை வரைந்தார் நச்சினார்க்கினியர். 4. பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறுகின்றது எனக்கருத்-துரைத்தார் பேராசிரியர். பரிபாடற் குறுப்பாகிய வெண்பாவும் பொதுப்பாவும் கலந்து வரும் முழுமை நிலையிற் பரிபாடற்கு எல்லை கூறுகின்றது என நச்சினார்க்கினியர் கருத்துரை வரைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். 1. இவ்வியல் 150-ஆம் சூத்திரமுதல் இதுகாறுஞ்சொல்லப்பட்டவை செய்யுளுக்- குரிய அடிவரையறை யாகிய அளவியல் பற்றிய விதியாகும் என்பதாம். 2. அளவியலா என்றிருத்தல் வேண்டும். 3. இதுகாறும் அடிவரையறை யுடையவற்றுக்கு அளவு கூறப்பட்டது. கூறப்படாது எஞ்சியன அடிவரையின்றி வரும் இயல்பின. அவை இனிக்கூறப்படும் என்பது இச் சூத்திரத்தின் பயனாகும். 1. இங்குச் செய்யுட்குக் கூறிய அளவியலின் கூறுபாடு அத்துணைப்படும் என இந்நூலில் வரையறுத்துக் கூறுமாறு போன்று பிறர் வரையறை கூறிற்றிலர் எனப் பிறநூற்பொருளைச் சுட்டியது இச்சூத்திரம் எனக்கொண்டு இது பிறன்கோட்கூறல் என்றார் நச்சினார்க்கினியர். 2. எழுநிலத்தெழுந்த செய்யுள்வகையாவன, பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஏனைய ஆறும் அடிவரையறை யில்லாதன என்பது இளம்பூரணர் கொண்ட பொருள். 1. இத்தொடரின் அமைப்பு தெளிவாக இல்லை. 2. எழுநிலம் என்றது அகமும் புறமும் என எழுவகைக்கூறுபட அமைந்த திணை களை. 3. எழுநிலத்துத்தோன்றிய செய்யுட்களுள் அடிவரையில்லாதன ஆறு எனக்கூறிய இவ்விதியும் அளவியல் என்னும் செய்யுளுறுப்பின்பாற்படும் என்பதாம். 4. முற்கூறி என்றிருத்தல் பொருத்தம். 5. இங்ஙனம் கொள்வோர் இளம்பூரணர். 1. இத்தொடர்க்கு நொடித்தல் மாத்திரையாகிய பிசி எனப்பொருள் கொள்வர் பேராசிரியர். நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படுவது. நொடியொடு புணர்ந்தபிசி. எனவே, பிசிக்கு நிலைக்களம் நொடியென்பது பெறப்படும். 2. அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைத் தருதற்குரிய ஆற்றல் மந்திரத்திற் குண்மையின் அத்தகைய ஆற்றல் வாய்க்கப் பெற்ற மொழி வாய் மொழியெனப் பெயர் பெற்றது. 1. போக்கிச் சொல்லுதும்-பின்னர்க் கூறுவோம். 2. நூலினுள்ளும் அடிவரையறையுடையன ஆசிரியப்பாப் போன்று அளவை பெற்று மேற்குறித்த இலக்கணத்துள் அடங்கும். 3. பிசி, முதுமொழி, மந்திரம், கூற்றிடைவைத்த குறிப்பு என்பன நான்கும் உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் ஒப்ப வழங்குவனவாதலின், அவற்றுள் இங்குச் செய்யுள் வழக்கையே கொள்வதற்கு அவற்றுக்கு அளவில் என்றார் ஆசிரியர். 4. அடிவரையில்லாத இவை ஆறு. எனவே, மேலைச் சூத்திரமும் அளவியலே கூறியதாயிற்று. 5. பிசி, என வாளா கூறாது நொடியொடு புணர்ந்த பிசி என அடைமொழி புணர்த்துக்கூறிய மிகையால் இங்ஙனம் நொடித்தலொடு வரும் பிசியன்று, இதுபோல்வது பண்ணத்தி யென்னும் செய்யுளும் ஒன்றுண்டென்பது கொள்ளப்படும். 1. நூலினான என்றது, சூத்திரமாய்வரும் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அடிவரை பெறாதவற்றை நோக்கிற்று. இத்தகைய சூத்திரங்களை நூற்பா என வழங்குதல் மரபு. பிற்கால நூலாசிரியர்கள் நூற்பா நடையிலன்றி வெண்பா கட்டளைக் கலித்துறை முதலான பாக்களால் இலக்கணநூல் இயற்றியுள்ளாராதலின் அடிவரையுடைய செய்யுள் வகையில் இயற்றப்பட்ட அவை அடிவரை யில்லனவெனப்படா; ஆசிரியமாய் வந்து அடிவரை பெறாதனவே ஈண்டு நூலினாக எனவரும் நூற்பா என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். * பொருத்தி என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 1. இந்நூற்பா முதற்கண் உள்ள அவற்றுள் என்னுஞ்சொற்சீரடியின்றி நுதலிய பொருளை முதலிற்கூறி என்பதனை இரண்டாமடியாகப் பெற்று இறையனார் களவியலுரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுளது 2. உரையிற்கோடல் என்னும் உத்தியால் இதன் விரிந்த பொருளை உய்த்துணர்ந்து கொள்க என்பதாம். 1. நூலெனப்படுவது நுவலுங்காலை என்பது இளம்பூரணர் கொண்டபாடம். 2. தொகுதிபற்றி நூல் என ஒருமையிற் கூறினாராயினும் எல்லா நூல்களுக்கும் இதுவே இலக்கணம் என்பார் இஃது நூல்களது இலக்கணம் கூறுகின்றது எனக் கருத்துரை வரைந்தார். நூல் என்றது, நூல் போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னையெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளையெல்லாம் கைவன்மகடூஉத் தூய்மையும் நுண்மையும் உடையவாக ஓரிழைப்படுத்தினாற்போல வினையினீங்கி விளங்கிய அறிவனாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களையெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின் றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைக்குற்றமுமின்றி, ஈரைந் தழகுபெற, முப்பத்திரண்டு தந்திரவுத்தியொடு புணரவும் ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஓத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் ஒருநெறிப்படப் புணர்க்கப்படுந் தன்மையுடையான் என்க, எனத் தொல்காப்பியம் எழுத்ததிகார முதற்சூத்திர வுரையில் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 1. அதுவே தானும் ஈரிரு வகைத்தே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். அது என்பது மேற்குறித்த நூலைச் சுட்டிநின்றது. நால்வகையாவன சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்பன. 2. அவை நான்கினையும் அடுத்த சூத்திரத்துட் கூறுவோம். 3. மேலே குறிக்கப்பட்ட தொகைவகையிரண்டினும் பொருண்மை காட்டுதல் தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்னும் நால்வகையாப்புக்கும் ஒக்கும் என்பது இதனாற்போந்த பயனாகும். 1. நான்கும் பின்வரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும். 1. சூத்திரம் என்பது ஒருபொருள் நுதலியது. ஓத்து என்பது, இனமாகிய பலபொருள்கள் சொல்லப்படுதற்கு இடனாய் அமைந்தது. படலம் என்பது மேற்சொல்லப்பட்ட இனமாகிய பலபொருள்களையும் விளக்கும் இயல்களுக்கு இடனாயமைந்தது. பிண்டம் என்பது சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்களையும் ஒருங்கேயடக்கியது. அனைமரபின்-அம்மரபினால், 2. ஒருபொருளையே நுதலிவருவது சூத்திரம். ஓரினப் பொருளையே தொகுத் துரைப்பது ஓத்து. பலபொருட்கும் பொதுவாகிய இலக்கணங்கூறுவது படலம். இம்மூன்றுறுப்பினையும் ஒருங்கேயுடையது பிண்டம். 1. பிண்டத்தையடக்கி நிற்பது பிண்டி எனப்படும். இயற்றமிழிலக்கணமாகிய தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நின்றமையின் மூன்றுறுப்படக்கிய பிண்டம் எனப்பட்டது. இங்ஙனம் அமைந்த இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிண்டங்களையும் தன்னகத்தே அடக்கி நிற்பது அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம் என்பவாதலின் அந்நூல் பிண்டத்தினை யடக்கிய பிண்டி யெனப்படும். இவ்வியல் 172-ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும். 1. ஆடி-கண்ணாடி. அறியத்தோன்றுதல்-எல்லோர்க்கும் புலனாக விளங்கத் தோன்றுதல். நாடுதல்-ஆராய்தல், 1. தேர்தல் வேண்டாது - இதனுட்குறித்த பொருள் யாது? எனத் தேர்ந்து ஆராய வேண்டாது; 2. நுணுகி ஆராய்தல் வேண்டாது. 1. நேர் இனமணி-ஒத்த இனத்ததாகிய மணி; ஓத்து-இயல். 2. நேர் இனமணி என்றது, ஒன்பான்வகை மணிகளுள் ஓரினத்தவாய் நிறத்தால் ஒத்துள்ள மணிகளை. எனவே, ஒருசாதிப்பொருளாயினும் தம்மின் ஒத்தனவற்றுக்குரிய இலக்கணங்கூறும் பகுதியே ஓத்து என்னும் உறுப்பாகும் என்பதாம். சொல்லதிகாரத்துள் வேற்றுமையிலக்கணம் உணர்த்தப்போந்த தொல்காப்பியனார் அதனை ஓரியலாகக்கூறாது வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு என மூன்றியல்களாக வைத்தது, ஓரினப்பொருளை ஒருவழிவைத்தல், என்னும் ஓத்திலக்கணம் பற்றியேயெனப் பேராசிரியர் தரும் விளக்கம் பெரிதும் பொருத்தமுடையதாகும். 1. பேராசிரியர் உரை நோக்குக. 1. பொதுமொழி என்றது, பல்வேறு நெறிகளாற் கூறப்படும் இலக்கணங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொருளைக் குறித்த எழுத்து, சொல் என்றாற் போலும் பொதுச்சொல். படலம்-அதிகாரம். 2. பொதுமொழிகிளந்தபடலம் என்றவழி ஒரு நெறிப்பட்ட பொருளுக்குப் பொதுவாய் வரும் இலக்கணத்தினை விலக்கிப் பலவாய் விரவிய பொருட்கட்குப் பொதுவாகிய இலக்கணங்களைக் கூறுவதே படலம் என்னும் அதிகாரமாம் எனக்கொள்க. 1. ஒருநெறிப்பட்ட இனப்பொருட்குப் பொதுவாய் அமைவது ஓத்து என மேற்சூத்திரத்திற் கூறிய ஆசிரியர் அங்ஙனம் பலவாகவிரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதே படலம் என்றார் என்பதாம். 2. மூன்றுறுப்பாவன; சூத்திரம், ஓத்து, படலம் என்பன, பிண்டம் என்பது தொகுதி. 1. சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றினையும் உறுப்பு எனக் கூறவே அம்மூன்றினையும் உறுப்பாகக் கொண்டது. பிண்டம் என்னும் நூல் என்பது பெறப்படும். பிண்டமாக அமைந்தது தொல்காப்பியம். இதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்பாகும். நூன்மரபு முதலியன ஓத்து என்னும் உறுப்பாகும். எழுத்தெனப்படுவ அகரமுத னகரவிறுவாய் என்றாற்போல்வன சூத்திரம் என்னும் உறுப்பாகும். பிண்டமாகிய தொல்காப்பியம் இயற்றமிழ் நூல். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கிநிற்பது முத்தமிழிலக்கணமாகிய அகத்தியமாதலின் அது பிண்டத்தினையடக்கிய பிண்டம் எனப்பட்டது. 1. தாம்கூறக்கருதிய பொருள் தானே வெளிப்படத் தோன்றும் மொழியினால் நூல் செய்யவல்ல புலவர் என்பார் தோன்று மொழிப்புலவர் என்றார் ஆசிரியர். 1. பொருளொடு புணராப்பொய்ம்மொழியானும் என்பது பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் கொண்ட பாடம். 2. ஓசை தழீஇ வருவன பாட்டென்றும் ஓசையின்றிச் செய்யுளின் தன்மையாய் வருவது நூலென்றும், ஓசையும் செய்யுட்டன்மையுமின்றிவருவது உரை என்றும் இளம்பூரணர் தரும் இவ்விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும். 1. இதனை என்றது, பாவின்றெழுந்த கிளவியாகிய உரைநடையினை. 2. பொருத்தமில்லாத உரையினை நகைச்சுவைப்படமறுத்து உண்மைப் பொருளுணர்த்தும் உரைநடை பொருளொடுபுணர்ந்த நகைமொழியாம் என்பது இளம்பூரணர்க் கருத்தெனத் தெரிகிறது. 1. பாட்டினை இடையிடையே கொண்டு நிற்கும் குறிப்பினால் வரும் உரைவகை பாட்டிடைவைத்தகுறிப்பு என வழங்கப்படும். இதன்கண் உரைநடைப் பகுதிபெரும் பான்மையாகவும் பாட்டுக்கள் சிறுபான்மையாகவும் வருவன என்பது பேராசிரியர் கருத்தாகும். இவ்வாறன்றிப் பாட்டுக்கள் மிகுதியாகவும் உரைப் பகுதி சிறுபான்மையாகவும் வருவன உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள், எனப்படும். இவற்றிற்கு முறையே தகடூர் யாத்திரையையும் சிலப்பதிகாரத்தையும் உதாரணமாகக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 2. பாட்டின்றிச் சூத்திரத்திற்கு எழுதப்படும் உரைபோல்வன பாவின்றெழுந்த கிளவி எனப்படும். பாட்டு, உரை, நூல் என்பன தம்முள் வேறென ஆசிரியர் பகுத்துரைத்தலின் சூத்திரம் பாட்டெனப்படா. 3. சூத்திரமல்லாத பாட்டினால் விளக்கப்படாதபொருளை அவ்வாசிரியனே உரையாற் சொல்லித்தொடர்புபடுப்பது பாட்டிடைவைத்த குறிப்பாகும். பாவின்றெழுந்த கிளவியாகிய இது, நூலாசிரியன் சூத்திரத்துட்கூறிய பொருளை உரையாசிரியன் விரித்துரைப்பதாகும். எனவே இவையிரண்டுந் தம்முள்வேறாகும். 1. மெய்ம்மையான் நிகழாதனவற்றை நிகழ்ந்தனவாகப்பொய்யே புனைந்துரைக்கும் முறையில் அமைந்த உரைநடை பொருளொடு புணராப் பொய்ம் மொழி எனப்படும். 2. உலகியல் வாழ்வுக்கு ஒவ்வாத பொய்யென ஒதுக்கப்படுதலின்றி மெய்யெனக் கொள்ளப்படும் பொருண்மையினைத் தன்பா கொண்டு நகைச்சுவையினை விளைக்கும் நிலையில் அமைந்த உரைநடை பொருளொடுபுணர் ந்தநனைமொழி எனப்படும். ஈண்டுப் பொருளொடு புணர்தல் என்றது, உலகியல் வாழ்வுக்கு ஒத்தவுண்மைகளோடு பொருந்தியமை தலை. 3. ஒத்த சூத்திரமுரைப்பிற்காண்டிகை மெய்ப்படக்கிளந்த வகையதாகி எனவரும் மரபியற்சூத்திரத்தில் உரைப்பின் என்றதனால், உண்ணின்றகன்றவுரையொடு பொருந்தி (செய். 166) வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளியலுட்கூறிப் போந்தாம்; அங்ஙனம் வேறாகிப் பொருந்திவரும் எனப்பட்ட உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம். இதனது பயம் ; உரையுங்காண்டிகையுமின்றிச் சூத்திரத்தானே உரை நிகழ்ந்தகாலமும் உண்டு, அஃது அவற்றை யொழிய ஆகா இக்காலத்து என்றாயிற்று உரைப்பின் என்னும் வினையெச்சம் கிளத்தல் என்பதனோடு முடியும். வகையென்றதனான் உரையெனப்பட்டதுதானும் அக்காண்டிகையின் மெய்ப்படக்கிளந்ததேயாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிந்போந்த உரைவிகற்பமே யென்பது உணர்த்தியவாறு என இவ்வுரைப் பகுதியினைப்பகுத்துக்கூறியுள்ளமை இங்கு இயைத்துணரத்தகுவதாகும். 1. இக்குறிப்பு நச்சினார்க்கினியர் மணிப்பிரவாள உரைநடையினை மனங் கொண்டுவரைந்த ரெனத் தோற்றுகின்றது. 2. வகை யென்றதனான் உரைப்பகுதி பிறிதுமுள. அவை மரபியலுட் கூறுப என நச்சினார்க்கினியர் கூறும் கூற்று, உரைநடை யென்னாது வகை யென்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிது மொன்றுண்டு, அது மரபியலுட்பகுத்துச் சொல்லுதும் எனவரும் பேராசிரியருரையினை உளங்கொண்டு கூறியதாகும். 1. அதுவேதானும் ஓரிருவகைத்தே என்பது பேராசிரியர் கொண்டபாடம். அதுவேதானும் ஈரிருவகைத்தே என நச்சினார்க்கினியர் உரையிற் காணும் பாடம். ஏடெழுதினோரால் நிகழ்ந்த மாற்றமாகும், முன்பக்கத் தொடர்ச்சி அதுவே என்றது மேற்கூறப்பட்ட உரைவகையினை. இருவகையென்றது, மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவுமாகிய இருதிறத்தினை, 1. இனி, இச்சூத்திரத்திலுள்ள அதுவே என்னும் சுட்டு மேற்குறித்த நால் வகையுரை நடையுள் பிற்கூறப்பட்ட பொருளொடுபுணர்ந்த நகைமொழியை, சுட்டியதாகக் கொண்டு, அது மகளிர்க்குரைப்பனவும் மைந்தர்க்குரைப்பனவும் என இருவகைப்படும் எனப் பொருளுரைத்தலும் பொருந்தும் என்பது, இதனை அடுத்துவரும் நூற்பாவுக்கமைந்த இளம்பூரணர் உரைவிளக்கத்தால் இனிது புலனாகும். 2. மேற்குறித்த உரைவகை நான்கனுள், பாட்டிடைவைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் ஆகியவிரண்டும் ஒருபகுதியாகவும் பொருளொடுபுணராப் பொய்ம் மொழியும் பொருளொடுபுணர்ந்த நகைமொழியும் என்னும் இரண்டும் மற்றொரு பகுதியாகவும் இருவகைப்படும் என்பதாம். 3. இது, பேராசிரியர் உரையைத் தழுவியமைந்தது. 1. மேற்குறித்த உரைவகை நடை நான்கனுள் பாட்டிடை வைத்த குறிப்பும், பாவின் றெழுந்த கிளவியும் என இவ்விலக்கண வமைப்பில் செவிலி உரை நிகழ்த்தாளாயினும் இவ்விடங்களில் வரும்பொருள் பற்றிக் கூற்று நிகழ்த்துவள் என்பது கருத்து. 2. இவ்வுரைவிளக்கம்மேலைச் சூத்திரத்திரத்தினைக் குறித்து எழுதப்பெற்றதாகும். செவிலிக்கேயுரியது என்றும் அவ்வரையறையின்றி ஆண்பெண் இருபாலார்க்கும் ஒப்பவுரியது என்றும் உரைவகை நடையினை இருதிறமாகப் பகுத்துரைத்தல் மரபு என்பது பட ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே, ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே, என்றார் எனினும் பொருந்தும். 1. உரைநடை நான்கனையும் இருபகுதியாகக் கொள்ளுங்கால் இறுதியிலுள்ள பொருளொடுபுணராப் பொய்ம்மொழியும் பொருளொடுபுணர்ந்த நகைமொழியுமாகிய ஒருபகுதி செவிலிக்குரியது எனவும், பாட்டிடைவைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியுமாகிய ஒரு பகுதி வரைவின்றி எல்லார்க்கும் உரியது எனவும் கொள்க. 1. இச்சூத்திரவுரையும் பேராசிரியருரையினை அவ்வாறே அடியொற்றி யமைந் திருத்தல் காண்க. 2. பிசிவகைநிலையே என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் காணப்படும் பாடமாகும். 1. சொல்லவேண்டிய பொருளை வெளிப்படக் கூறாது. உவமையொடு புணர்த்துக் கூறி அதுகொண்டு உவமேயப் பொருளை உய்த்துணர வைத்தல். 2. யானைசெல்லும், என வெளிப்படச் சொல்ல வேண்டிய நிலையில் அவ்வாறு கூறாது பிறை கவ்வி மலை நடக்கும் என உவமானத்தாற் குறிப்பிற் புலப்பட வைத்தல் ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாகும். இவ்வாறு ஒப்பொடு புணர்ந்த உவமானத்தாற் கூறாமல் தாம் சொல்லக் கருதியதனைமறைத்துக் கூற்றிடையே இவர் கூறுவது இதுதான் எனக் குறிப்பிற் புலப்பட்டுத் தோன்றுமாறு செய்தல் தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசிவகையாகும், இதற்கு எடுத்துக்காட்டாக அச்சுப் போலே பூப்பூக்கும்; அமலேயென்னக் காய்காய்க்கும் என்பதனைக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இஃது உவமைபற்றி வந்தது என்னும் உரைத்தொடர்க்குரிய பிறைகல்வி மலை நடக்கும் என்னும் எடுத்துக்காட்டு ஏடெழுதுவோரால் விடுபட்டிருத்தல் வேண்டும். 3. தன்கண் அமைந்த ஒப்புமைக் குணத்தோடு பொருந்திவரும் உவமப்பொருளொடு புணர்த்திச் சொல்ல அதனோடொத்த உவமேயப்பொருள் இதுவெனப் புலப்பட்டுத் தோன்றும் நிலையில் அமைந்தது, ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாகும். பிறை என்னும் உவமத்தால் யானையின் தந்தமும் மலையென்னும் உவமத்தால் யானையும் புலனாதல் காண்க. எண்ணார்முத்தமீன்று மரகதம் போற்காய்த்துக்கண்ணார் கமுகு பவளம் பழுக்குங்கலிக்காழி, எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தொடரில் கண்ணார் கமுகு என்னும் எழுவாயைக் கூறாதுமறைந்த நிலையில் அஃது ஒப்பொடுபுணர்ந்த உவமத்தானாகிய பிசியாதல் காணலாம். 1. ஒன்றுசொல்ல ஒன்று தோன்றுந் துணிவினதாகச் சொல்லும் சொல் என்றது, நெருப்பு எனச்சொல்ல எண்ணி, அதனை வெளிப்படக்கூறாது நிறஞ் செய்யானாய பார்ப்பான். எக்காலத்தும் நீராடும் பழக்கமுடையானல்லன். அவன் ஒருகால் நீராடும் நிலையேற்பட்டால் ஊரிலே பறந்து திரியும் நீர்க்காக்கை போற் கரிய நிறத்தின னாவான், தான் நினைத்தபொருள் கேட்பார்க்குந் தெளிவாகத் தோன்றும்படி துணிந்து கூறும் பிசிவகை தோன்றுவது கிளந்த துணிவு எனப்படும். மேற்குறித்த பிசிவகையாகிய உரையாடலை இக்காலத்தார் புதிர் (பிதிர்) எனவும் விடுகதையெனவும் வழங்குவர். 1. பேராசிரியர் உரையைத் தழுவியது. 2. ஒளியுடைமையும், 3. எண்மையும் என்பன பேராசிரியர் கொண்ட பாடங்கள். 4. தாம சொல்லக்கருதிய பொருளைக் காரணங்காட்டி உறுதிப்படுத்தும் முறையில் அமைவது இப்பழமொழி என்பார். ஏதுநுதலிய முதுமொழி (செய்-158) என அடை புணர்த்தோதினார். ஏதுநுதலுதல்-காரணமாய் நின்று சொல்லியதனை உறுதிப்படுத்தல். முதுமொழி-பழமொழி. 1. முதுமொழி - பழமொழி, பாண்டியனைக் காமுற்றுக் காணுதலாகிய பிழையைச் செய்த கண்கள் வருத்தமின்றி யிருக்க அத்தகைய பிழைசெய்யாத தோள்கள் பசலை பரந்து வருத்தமுற்றன. இந்நிலை, உழுதவயலிலுள்ள உழுந்து பயிரை ஊரிலுள்ள கன்றுக்குட்டி மேய்ந்து அழித்தலைச் செய்ய, அதற்குத் தண்டனையாக ஒரு தீமையும் புரியாத கழுதையின் செவியினை அரிந்தாற் போலுந் தன்மையது; என்பது மேற்காட்டிய பழமொழிப்பாடலின் பொருளாகும் கண்கள் செய்த வினையின் பயனை ஒருகுற்றமுஞ்செய்யாத தோள்கள் நுகர்ந்தன என்புழிக் குறித்த பொருள்; வினைசெய்தார்க்கும் அதன் பயனை நுகர்வார்க்கும் இடையேயுள்ள இயைபின்மையினைக் கூறுதலாகும். இக்கருத்தினை வழுதியைக் கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு என்னுஞ் சொற்றொடர் முன்பக்கத் தொடர்ச்சி தெளிவாக விளக்கவில்லையாயினும் உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந்தற்று என்னும் பழமொழி தன்கண் கிடந்த இயைபின்மை யேதுவாக அதனை முடித்து வைத்தமை அறியத் தகுவதாகும். 1. முதுமொழியாகிய இது பருமையாக வெளிப்படத் தோன்றும் பொருட்டன்றிக் கூர்ந்துணரும் நுண்பொருளை யுடையதாதல், சொற்சுருக்க முடைமை, விழுமிய பொருளினதாதல், எளிதிற் பொருள் புலப்படுதல் என்னும் அந்நான்கு பகுதி யினையுடையது என்பதாம். 2. விளக்காதேனும் என்றிருத்தல் பொருத்தம் 3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய பழமொழி நானூறு தொல் காப்பியனார் கூறிய ஏதுநுதலிய முதுமொழிக்கு இலக்கியமாக இயற்றப் பெற்றது என்பதாம். 1. கிளந்த என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. அது வல்லார் என்றது, நிறைமொழிமாந்தர்கூறிய மறைமொழியாகிய மந்திரத்தினைப் பயின்று வல்லவர்களை. இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியமைந்தது. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (28) எனவரும் திருக்குறளாகும். 1. நிறைமொழி மாந்தராவார், அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பிறழாது எய்துவிக்கும் மொழியினையுடைய தவவலிமிக்க சான்றோர். 2. இங்குச் கூறப்படுவன தமிழ்மந்திரம் என்பதனை வற்புறுத்தற்கும், இவை பாட்டுப்பெற்று அங்கதம் என்ற பெயரால் வழங்கப்பெறுதலும் உண்டென்பதற்கும் மறைமொழி தானே என ஏகாரத்தாற் பிரித்துரைத்தார். 3. இங்கெடுத்துக்காட்டிய இரண்டு வெண்பாக்களும் மதுரையில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி என்றும்போல் இயல்பாக நிகழாதவாறு தெற்கண்வாயில் திறவாத பட்டி முன்பக்கத்தொடர்ச்சி மண்டபத்தாரைத் திருத்தற்பொருட்டுச் சங்கப்புலவராகிய நக்கீரனார் தமிழை அவமதித்தும் வடமொழியை உயர்த்தியும் பேசிய வேட்கோக் குயக்கோடன் சாவவும் மீண்டும் உயிர்பெற்று வாழவும் பாடிய பாடல்களாகும். இவ்விரு பாடல்களுள் முரணில் பொதியின் என்ற பாடல் தமிழை இகழ்ந்த வோட்கோக் குயக்கோடன் உடனே சாமாறு சபித்துப்பாடிய அங்கதப்பாட்டாகும். ஆரிய நன்று என்ற முதற்குறிப்புடைய பாடல், அறியாமையால் தவறு இழைத்து இறந்த குயக்கோடன் மீண்டும் உயிர்பெற்று வாழுமாறு பாடப்பெற்ற தமிழ் மந்திரப் பாடலாகும். 4. பாட்டுரைநூலே (செய். 79) என்னும் சூத்திரத்து இத் தமிழ் மந்திரத்தை அங்கதம் எனக் குறித்தார் தொல்காப்பியர். இது பெரும்பான்மையும் சபித்தற்பொருட்டு வருதலின் அங்கதம் என்னும் பெயர்த்தாயிற்று. 1. பேராசிரியர் உரை நோக்குக. 1. குறிப்புமொழியென்ப என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் கண்டபாடமாகும். 2. மேல் அடிவரையறை யுள்ள பாட்டில் பழிகரந்து மொழிதலாகிய அங்கதப்பொருள் வரும் எனக்கூறி இங்குக் குறிப்புமொழி எனக் குறித்தமையால் இங்கே குறிப்புமொழி, என்பது வசை குறித்து வருவது எனக்கொண்டார் இளம்பூரணர். எனவே, பாட்டாய் வரும் வசை அங்கதம் எனவும் உரையாய் வரும் வசை குறிப்பு மொழி எனவும் வழங்கப்படும் என்பதாம். 3. புகழ் குறித்ததாயின், அதனை வெளிப்படக்கூறின் கேட்டார்க்கும் தனக்கும் இன்பம் பயக்குமாதலின் அதனைக் குறிப்பினாற் கூறுதல் பயனின்றாமாதலின், வசைகுறித்து வருவதனையே குறிப்புமொழி என்றார் ஆசிரியர் என்பதும் இவ்வுரை விளக்கங்களாற் புலனாம். 1. எழுத்து முடிந்த முறையாலும் சொல்தொடர்ந்த நெறியாலும்சொல்லின் கண் தோன்றும் பொருளாலும் நேரேபொருளுணர முடியாதவாறு எழுத்தொடுஞ் சொல்லொடும் தொடராது பொருட்குப்புறத்தே தோன்றும் பொருளுடையதாய் நிற்பது குறிப்புமொழியாகும். இஃது, கவியாற்பொருள் தோன்றாது பின்னர் இன்னபொருளுடையது இத்தொடர் என வாய் மொழியாற் சொல்லியுணர்த்தப்படுதலின், பாட்டுரைநூல் என்னுஞ் சூத்திரத்தில் இதனை வாய்மொழி என்ற பெயராற் குறித்தார் தொல்காப்பியனார். இனி இக்குறிப்பு மொழியினையே அடிவரையறையில்லன ஆறையுந் தொகுத்துக்கூறும் செய்யுளியல் 145-ஆம் சூத்திரத்துக் கூற்றிடைவைத்த குறிப்பு எனக் கூறினார். பாட்டின்கண்ணே தோன்றும் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக்கொண்டுணர்ந்தாலல்லது அக்குறிப்பு வெளிப்படா தென்றற்குக் கூற்றிடைவைத்தகுறிப்பு என்றார், ஆசிரியர். இக்குறிப்பினைப் பிற நூலாசிரியர் பொருளிசை யென்பர். 2. இக்குறிப்புமொழி பாட்டு வடிவினதாதலின் பிசியெனக் கூறப்படாது. குறித்த பொருளை முடிய நாட்டாமையின் யாப்பு என்னும் உறுப்பழிந்தும். நாற் சொல்லியலால் யாப்பு வழிப்படாமையின் மரபு என்னும் உறுப்பழிந்தும் பிறவுறுப் புப்பலவுங் கொண்டமையாற் பாட்டெனவுங் கூறப்படாது. இஃது எழுத்து முதலா ஈண்டிய அடியளவினை யுடையது. அன்மையின் இதனையும் அடிவரையில்லாத செய்யுட்களோடும் சேர்த்துரைத்தார் ஆசிரியர். 1. குறிப்பிசை வந்த செய்யுளெல்லாம் குறிப்பு என வழங்கப்படும் என்பர் ஒருசாரார். அவ்வாறுகூறின் குறிப்பிசையுடைய பகுதிகள் அடிவரையறையுடைய பாட்டினுள் வருதலில்லை யென்பது ஏற்படுமாதலின் அவர் கூற்றுப்பொருந்தாது என மறுப்பர் பேராசிரியர். 2. நாற்சொல்லியலான், என்றிருத்தல் வேண்டும். 3. இவ்வுரை பேராசிரியர் உரையின் சுருக்கமாக அமைந்துள்ளது. 1. பண்ணத்தி யியல்பே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. இங்குப் பிறநூலாசிரியர் என்றது, இயற்றமிழ் நூலாசிரிய ரல்லாத இசைத்தமிழ் நூலாசிரியரை. முன்பக்கத் தொடர்ச்சி இசைத்தமிழ் நூலார் கூறும் பண்ணத்தியென்றும் இசைப்பாடல்களையே பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் நால்வகைப் பாக்களுக்கும் உரியவகையில் தாழிசை துறை விருத்தம் எனப் பாவினமாகப் பகுத்துரைத்தனம் என்பார் இனிப்பிறநூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவினமாமாறு உணர்த்துதலின் என்றார். 1. பண் நத்தி-பண்ணத்தியென்றாயிற்று. நத்துதல்-விரும்புதல். பண்ணினை விரும்பிப் பாடப்பெற்ற இசைத்தமிழ்ச் செய்யுட்கள் என்பது பொருள், இயற்றமிழ்ப் பாடல்கள் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரியவாதல் போலவே பண்ணத்தியும் பாட்டின்கண் கலந்த அம்முப்பொருள்களையே பொருளாகக் கொண்டு அமைவன என்பது புலப்படுத்துவார், பாட்டின் இயல என்றார். 2. இசைத்தமிழில் ஓதப்படும் சிற்றிசை பேரிசை என்பவற்றின் அமைப்பு இவை யெனத் தெளிவாகப் புலனாகவில்லை. 3. நல்லிசைப்புலவர் செய்யுள் வழக்கிற் பயிலுதலின்றி நாட்டுப்புறத்தே பொது மக்களிடையே எழுத்துருப்பெறாது வழங்கிவரும் பாடல்களைப் பண்ணத்தி யென வழங்குதல் முன்பக்கத் தொடர்ச்சி மரபு. எழுதும் பயிற்சி பெறாது நாட்டுப்புறத்தே செவிவழியாக வழங்கிவரும் பண்ணத்திப் பாவாவன நாடகச்செய்யுளாகிய பாட்டுமடை முதலாயின. செய்யுளுக்கு இன்றியமையாத நோக்கு முதலிய சிறப்புறுப்புக்கள் அமையப்பெறாமையின் இவற்றைப் பாட்டு என்ற பெயரால் ஆசிரியர் குறித்திலர், மேற்குறித்த பண்ணத்தியாக நாட்டுப்புறப்பாடல்களில் பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு என்பன நாடகத்தில் இடம்பெறும் இசைப் பாடல் வகையெனக் கருதவேண்டியுளது. பேராசிரியர் தம்காலத்து வழங்கிய பண்ணத்தியின் வகைகளாகத் தாம் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை அவைவல்லார் வாய்க்கேட்டுணர்க எனக்கூறுதலின் அவர் காலத்தும் அப்பாடல்கள் எழுத்துருப்பெறாது நாடகத்துறையில் வல்ல ஒருசிலரால் மட்டும் பாடப்பெற்று வந்தன எனத் தெரிகிறது. அவை மக்களால் மறக்கப்பட்டு வழக்கிழந்த இக்காலத்தில் அவற்றின் இயல்புகளை உள்ளவாறு பகுத்துக்காணும் வாய்ப்பு இல்லாது போனது தமிழ் மக்களுக்கு மொழித்திறத்தில் நேர்ந்த ஒரு பெருங்குறையே யென்பதில் சிறிதும் ஐயமில்லை. 1. இச்சூத்திரங்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை கிடைக்கவில்லை. இவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரைப்பகுதிகள் பேராசிரியர் உரையினையே பெரும்பாலும் அடியொற்றி யமைந்திருத்தல் வேண்டும். 1. பிசி என்பது இரண்டடியான்வருவது என்பது தம்காலத்து எல்லார்க்கும் புலனாதலின் பண்ணத்தியும் பிசிபோன்று இரண்டடிச் சிற்றெல்லையதாய் வரும் என்பர், அதுவே தானும் பிசியொடு மானும் என்றார். அது என்றது மேற்குறித்த பண்ணத்தியை, மானும் -ஒக்கும். 2. ஔவையார் பாடிய கொன்றைவேய்ந்த செல்வன் என்னும் இப்பாடல், அவர் இயற்றும் நீதிநூலுக்குரிய கடவுள்வாழ்த்தாய்ப் பாலையாழ் என்னும் பண்ணின் இசை யமைப்பினைப் புலப்படுத்தும் இலக்கண கீதமாகவும் அமைந்தமையின் பண்ணத்திக்குரிய இலக்கிய மாயிற்று. 1. மானும்-ஒக்கும். பிசியோடு ஓத்தலாவது செவிலிக்குரியவாதலும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி, பொருளொடுபுணர்ந்த நகைமொழி எனச் செவிலிக்குரிய உரைப்பகுதியினை யடியொற்றி வருதலுமாகும். 2. நாடகச் செய்யுள் வகையுள் ஒன்றாகிய பாட்டுமடையென்பது புகழ்க் கூத்து, வசைக்கூத்து என்னும் கூத்து வகைகளுள் வசைக்கூத்திற்கேயுரியதாகும். 3. இதன் முதலடியினை ஒருசூத்திரமாகவும் இரண்டாமடியினை மற்றொரு சூத்திரமாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 4. அடி என்றது ஈண்டு நாற்சீரடியை. நிமிர்தலாவது நாற்சீரின் மிக்குவருதல். 1. கிளவி என்னுஞ்சொல் இங்குப் பாட்டு என்னும் பொருள்பட நின்றது. அடி இகந்து வருதலாவது. நாற்சீரடியின் வேறுபட்டு வருதல். 2. நால்வகைப்பாக்களின் பாவுறுப்புடன் ஒத்த தன்மையவாய்த் தாழிசை துறை விருத்தம் என மூவகைப்படவருதலின் பண்ணத்தியெனப்படும். பாவினங்கள் பண்ணி ரண்டாயின என்பது இளம்பூரணர் கருத்தாகும். 3. மூன்றடி ஒத்து வருவது ஆசிரியத் தாழிசையெனப்படும். 1. இவை மூன்றடியான் மூன்றடுக்கி அளவடியான்ஒத்து மூன்றாகிவரும் நிலையில் தொல்காப்பியனார் கொள்கைப்படித் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சகவொருபோகெனக் கொள்ளப்படும். நீடற்கவினையென்று என்ற முதற் குறிப்புடைய பாடலே பாவினத்துள் ஒன்றாய ஆசிரியத் தாழிசையாகும். என்பர் இளம்பூரணர். 2. குறளடி நான்கினால் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசையாகும். 1. மடப்பிடியை இரும்பிடியை பேடையை எனவரும் இவை அளவடியான் வாராமையின் கொச்சகவொருபோகு ஆகாவாயின என்பர் இளம்பூரணர், 1. மூன்றடியான் வந்து வெண்பாப்போல முடிவது வெண்டாழிசையாகும். சிந்தியல் வெண்பா ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவரின் வெள்ளொத்தாழிசையென்பர். அடிவரையறையின்றிச் சிலசீர் மிக்குங்குறைந்தும் வருவது கலித்தாழிசையெனப்படும். இத்தாழிசை ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவரினும் ஈற்றடிமிக்கு வருதலால் கொச்சகவொரு போகெனப்படா கலித்தாழிசையெனப்படும் என்றார் இளம்பூரணர். குறளடி நான்கினால் தனித்துவருவது வஞ்சித்துறையெனப்படும். மூன்றடிச் சிறுமையாக ஏழடிப்பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது வெண்டுறையாகும். நெடிலடி (ஐஞ்சீரடி) நான்கினால் வருவது கலித்துறையாகும். ஐஞ்சீரடி நான்கினால் வருவதனைக் கலித்துறையெனவும் நெடிலடிநான்காய் நேரசை முதலாகப் பதினாறெழுத்தும் நிரையசை முதலாகப் பதினே ழெழுத்தும் பெற்று வருவதனைக் கட்டளைக்கலித்துறை யெனவும் வழங்குதல் மரபு. அறுசீரடி முதலாகிய கழிநெடிலடியினால் நான்கடியும் அளவொத்துவருவது ஆசிரிய விருத்தம் ஆகும். முச்சீரடி நான்கினால் வருவது வஞ்சிவிருத்தம் ஆகும். நான்கடியினாலாவது மூன்றடியினாலாவது அடிதோறுந் தனிச் சொற்பெற்று வருவது வெளிவிருத்தமாகும். நாற்சீரடி நான்கினால் வருவது கலிவிருத்தம் எனப்படும். இவையெல்லாம் இரண்டெனத் தொடுத்தும் நான்கென வகுத்தும் ஆறெனவிரித்தும் கூறிய இயற்றமிழ்ப்பாக்களின் இலக்கணத்திற்சிதைந்து மேற்குறித்தபாக்களின் இயல்பினவாய் இசைத்திறத்திற் குரியவாகிவருதலின் பண்ணத்தியெனப்படும் பாவினம் ஆயின என்பதும், பாவினம் பற்றிய இவ்விளக்கங்கள் உரையிற்கோடல் என்னும் உத்தியானும் பிறநூன் முடிந்ததுதானுடம்படுதல் என்னும் உத்தியாலும் இவ்வியற்றமிழ் நூலில் இளம்பூரண அடிகளால் தந்துரைக்கப்பட்டன என்பதும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும். பாட்டின் இயலபண்ணத்தி எனத்தொல்காப்பியனார் ஓதுதலின். இயற்றமிழிற் கூறப்படும் பாட்டு வேறுஎன்பதும். அவற்றின் இயல்பினை ஒருவாற்றாற் பெற்றுவரும் இசைத்தமிழ்ப் பாட்டாகிய பண்ணத்தி வேறுஎன்பதும் இனிது புலனாதலறிக. 1. அடிநிமிர்கிளவி-அடியின் பெருக்கம். எனவே ஈராறு என்னும் தொகை அடியளவினைக் குறித்ததாகக் கொண்டார் பேராசிரியர். 2. நெடுவெண்பாட்டு - பஃறொடைவெண்பா. நெடுவெண்பாட்டு வடிவில் வரும் பண்ணத்தி ஆறடியிற் குறைந்து வாராது என்பதாம். 3. அடியிகந்து வருதலாவது, பாட்டுமுழுவதும் அடியமைப்புப் பெற்று வாராது இடையிடையே அடியாம் உறுப்பினைப் பெற்றும் அல்லாதவிடங்களிளெல்லாம் அடிவரம்பினைக் கடந்து பரந்துபட்ட உரைத்தொடர்களாகியும் வருதல். அவ்வியல்புடைய பாடல்கள் முற்காலத்துள்ளார் செய்யுட்களிற்காணப்படாமையின் இங்கு அவற்றுக்கு உதாரணம் காட்டப்பெறவில்லை. இக்காலத்துள்ளனவேல் அவற்றை இதற்குரிய உதாரணமாகக்கொள்க. அத்தகைய பாடல்களுக்குத் தொல்காப்பியமாகிய இந்நூலில் இலக்கணம் உண்மையால் இலக்கியங்காணாது போயினும் அவ்வாறு மீண்டும் படைத்துக்கொள்ளப்பெறின் இலக்கியமாக அமையும் என்பதாம். 1. கிளரியல் வகையாவது ஒன்றினொன்று கிளைத்துத் தோன்றி இயலும் கூறுபாடு. கிளந்தன-மேற்கூறப்பட்டன. தெரியின்-ஆராயின். 2. இவ்வியலில், அளவியல் வகையே யனைவகைப் படுமே என முன்னர் வந்த 145-ஆம் சூத்திரம் பாவிற்கு அடிவரையறுத்துக் கூறியது. 176-ஆம் சூத்திரமாகிய இது, எழுநிலத்தெழுந்த செய்யுள் இனைத்தென வரையறுத்துணர்த்திற்று.. ஆதலின் அது மிகையன்று என்பதாம். 1. கிளரியல்வகை - எடுத்துக்கூறியவகை. கிளந்தன - கூறப்பட்டன. தெரிதல்-ஆராய்தல். அளவியல்வகை-அளவியலாகிய பகுதி. அனைவகைப்படும்-மேற்குறித்தவாறு இருகூற்றதாகும். 2. மேற்குறித்த அளவியல் அடிவரையறையுடைய பகுதியும், அடிவரையறையில்லாத பகுதியும் என இருவகைப்படும். 1. எழுபெருந்திணையின் எனவும், 2. முறைநெறிவகையின் எனவும் பாடங்கொள்வர் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும். 3. கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணையுமே இங்குக் கிளந்துரைத் தாராயினும் முறையே அவற்றின் புறமாகிய பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை காஞ்சி யென்னும் புறத்திணையேழும் சேரப்பதினான்கு திணையும் இங்குக்கூறிய எழுதிணையாயடங்கும் என்பதாம். 1. அகமும் புறமுமாகிய திணையென்பன முன்னர்க்கூறப்பட்டனவாயினும் செய்யுட்கு இன்றியமையாதவுறுப்பு இவையென இங்குக் கூறாக்கால் திணையுறுப்புகளாகிய அவை செய்யுளுள் வந்தாலும் வரலாம், வாராது போயினும் போகலாம் என்ற நிலையேற்படும். அதுபற்றியே திணையென்பது மீண்டும் கூறப்படுகிறது. இவ்விளக்கம் பின்னர்க்கூறப்படும். கைகோள் முதலிய உறுப்புக்களுக்கும் பொருந்தும் என்பதாம். 2. பேராசிரியர் உரையைத் தழுவியது. 1. இடந்தலைப்பாடு, எனவும், 2. சார்பொடு, எனவும் பாடங்கொள்வர் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் 3. காமப்புணர்ச்சி - இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்படல் - இடந்தலைப்பாடு பாங்கொடுதழாஅல் - பாங்கற்கூட்டம் தோழியிற்புணர்வு - தோழியிற்கூட்டம். 4. மறை-களவொழுக்கம். களவு என்றசொல்லாற்குறிப்பிடாது மறை எனக் குறிப்பிடுதலால் களவாகிய இவ்வொழுகலாறு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாகிய களவு போன்று தீமை பயப்பதன்று என்பது புலனாம். களவென்னுஞ்சொற் கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமமென்னுஞ் சொற்கேட்டுக் காமந்தீதென்பதூஉ மன்று; மற்றவை நல்லாமாறுமுண்டு; என்னை? ஒரு பெண்டாட்டி தமரோடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் முன்பக்கத் தொடர்ச்சி என்னும் உள்ளத்தளாய், நஞ்சுகூட்டி வைத்து, விலக்குவாரில்லாத போழ்து உண்பல் என்று நின்றவிடத்து, அருளுடையானொருவன் அதனைக்கண்டு அவளைக் காணாமே கொண்டுபோய் உருத்திட்டான்; அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள். அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவளை அக்களவினான் உய்யக்கொண்டமையான் நல்லுழிச் செல்லுமென்பது. மற்று மிதுபோல்வன களவாகா; நன்மைபயக்கு மென்பது எனவரும் இறையனார் களவியலுரையை யடியொற்றியது இளம்பூரணர் தரும் இவ்வுரைத் தொடராகும். 1. மறையோர் ஒழுகிய நெறி கந்தருவமாதலின் அது மறையோராறு எனப்பட்டது என்றார் பேராசிரியர். இங்கு மறை என்றது கந்தருவ வழக்கத்தைக் குறியாது கள வொழுக்கத்தையே குறித்ததாதலின் இவ்விளக்கம் பொருத்த முடையதாகத் தெரியவில்லை. 2. இறையனார்களவியலுரை நோக்குக. 1. களவொழுக்கம் இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது என்னும் இறையனார் களவியலுரையினை மறுத்து இஃது உலகியலின் உண்மையான ஒழுக்கமே என வற்புறுத்துவார் இக்களவு இல்லதன்றி உலகியலாதலின் என்றார் நச்சினார்க்கினியர். யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்லது அன்றாம் எனவரும் பேராசிரியர் உரைத்தொடரும் இங்கு நினைத்தற்குரியதாகும். 1. மறை-களவு. தமரிற் பெறுதல்-சுற்றத்தாரால் மணஞ் செய்து கொடுக்கப் பெறுதல். 2. இரு முதலாகிய என்பது நச்சினார்க்கினியர் உரையிற் கண்ட பாடம். 3. மலிவு-மகிழ்ச்சி. புலவி-காதலரிருவரிடையே சிறிதுநேரம் அன்பினால் நிகழும் பிணக்கம், ஊடல்-காலம் நீட்டித்து நிற்கும் பிணக்கம். 1. மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும் ஆகியன தலைவன் தலைவி யென்னும் இவரொழுக் கமன்றிச் சுற்றத்தாரும் வேள்வியாசான் முதலாயினாரும் செய்விக்கும் ஒழுக்கமாயினும் அவற்றையும் காதலர் இருவர்க்குரிய ஒழுகலாற்றிற் சார்த்தியுணரப்படும் என்பதற்கு இவ்வியலிற்கூறினார் தொல்காப்பியனார். 2. இனிக்கூறும் ஐந்தாவன: மலிவு, புலவி, ஊடல், உணர்தல், துனி என்பன. முன்னைய இரண்டாவன: மறை வெளிப்படுதல், தமரிற் பெறுதல். 1. அதற்கு ஏதுவாகிய பொருள் இன்மை உணர்வித்தல் - தலைமகள் தன்ளோடு ஊடுதற்குக் காரணமாகிய செயல்கள் தன்னால் நிகழ்த்தப்படவில்லை என்பதனைத் தலைமகள் மனங்கொள்ளும்படித் தலைவன் தலைவிக்கு உணர்த்துதலும் தலைவி அதனை மனத்துட்கோடலும் உணர்வெனப்படும். புலவி-சிறுபிணக்கம். குளிப்பக்கூறல்-தலைவியின் மனம் குளிரும்படி இன்னுரை மொழிதல். தளிர்ப்ப முயங்கல் - அவளது மேனியில் வாட்டம் தவிர்ந்து குளிர்ச்சியடைந்து பொலிவுபெறுமாறு அவளைத் தழுவிக்கொள்ளுதல். துனி என்பது ஊடலின் முற்றிய பிணக்கம். தன்கண் தவறில்லை யென்பதற்குத் தலைவன் பல்வேறு காரணங்களைக் காட்டவும் அவன் தன்னைக் காணாதவாறு தலைமகள் அவன் முன்னின்றி இடம்பெயர்ந்து மறைதலின் பிரிவின் பாற்படும் என்றார் பேராசிரியர். 1. இவ்வுரைத்தொடரை இல்லது கடுத்த மயக்கந்தீர எனப் பேராசிரியர் உரை நோக்கித் திருத்துக. இல்லது கடுத்தலாவது தலைவன்பால் இல்லாத குற்றத்தை உள்ளதாகக்கொண்டு தலைவி ஐயுறுதல். அதனால் அவளதுள்ளத்து மயக்கம் தோன்றியது. அம்மயக்கந் தீரும்படிச் செய்தல் தலைவனது கடமையாயிற்று. 1. மெய்பெறு வகையே எனப் பேராசிரியரும் மெய்பெறவவையே என நச்சினார்க் கினியரும் பாடங் கொள்வர். மெய்பெறுதல் - பொருள்பெற வருதல், அவையென்றது களவுகற்பு என்னும் இரண்டினை. கைகோள்-ஒழுகலாறு. 2. புறத்திணை அகத்திற்குப் புறனாயினும் அவற்றுக்குக் கைகோள் வகைப்பட வேறு கூறப்படுதல் இல்லை. மறைந்த வொழுக்கம் வெட்சியெனவும் வெளிப்படுசெயல் ஒழிந்த திணைகள் எனவும் இரண்டாகி அடங்கும். 1. மெய்பெறும் அவையே கைகோள் வகையே எனவரும் சூத்திரத்தை, மெய்பெறும் கைகோள் வகை அவையே எனமொழிமாற்றிப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். பொருள்பெறவரும் என்னும் உரைப்பகுதியைக் கூர்ந்து நோக்குங்கால் மெய்பெறும் என இளம்பூரணர் கொண்ட பாடமே நச்சினார்க் கினியரும் கொண்டார் என்பது நன்கு புலனாகும். ஆயினும் இச்சூத்திரம் பேராசிரியர் கருதுமாறு புறத்திணைக் கைகோள் கூறுவதாகக் கொண்டு. பொருள் பெறவரும் கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே என உரைவரைந்துள்ளார். ஈண்டு அவை என்னும் சுட்டுப்பெயர் முற்கூறிய களவும் கற்பும் ஆகிய அகத்திணைக் கைகோளைச் சுட்டிநின்றது. களவு கற்பு என்னும் இருவகை யொழுகலாறுகளும் முறையே காமப்புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலிய வகைகளையும் பெற்று வகைபட வருவன அகத்திணைக் கைகோளே எனப் பிரிநிலையேகாரத்தாற் கூறவே, இவ்வகத்திணைகளின் புறனாகிய புறத்திணைக் கைகோள் இவ்வாறு பல்வேறு வகைப்படக் கூறப்படா; பொது வகையால் மறைந்த ஒழுகலாறும் வெளிப்பட்ட ஒழுகலாறும் என இரண்டாய் அடங்கும் எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உய்த்துணர்ந்து பொருள் கூறியுள்ளமை கற்போர் மனங்கொளத் தகுவதாகும். 1. களவினிற் கிளவிக்குரியர். என்பதும் பாடம். 2. அளவியல் மரபாவது மனைவாழ்க்கையில் கணவன் மனைவி ஆகிய இருவரிடத்தும் அன்பினால் உரையாடிப் பழகும் இயல்பு. களவொழுக்கத்திற் கூற்று நிகழ்த்தற்குரிய அறுவகையோருள் தலைவன்பால் அறிவுரிமை பூண்டொழுகும் தோழன் பார்ப்பான் எனவும், அன்புரிமை பூண்டொழுகுந் தோழன் பாங்கன் எனவும் கொள்ளுதல்ஏற்புடையதாகும். 1. களவிற்கூற்று நிகழ்த்தற்குரியராகக் கூறப்பட்ட அறுவரும் அன்பினால் உள்ளம் ஒன்றித் தம்முள் உடனுரையாடுதற்குரிய நட்பினர் என்பதுபுலப்படுத்துவார் அளவியல் மரபின் அறுவகையோர் என்றார் ஆசிரியர். 1. ஓழிந்தோர் கூறினாராகச் என்றிருத்தல் வேண்டும். 1. கிளவியொடு என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. அன்புடையராய் மனைவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள எல்லோர்க்கும் அன்பினால் அறிவுரை பகர்ந்து நன்னெறிப் படுத்தும் அன்புடைய பெருமக்களே அறிவர் எனப் போற்றப் பெறுவர் என்பார். யாணஞ்சான்ற அறிவர் என அடை புணர்த்தோதினர் தொல்காப்பியனார். ஆணம்-அன்பு. ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி எனவருங் கலித் தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆணம் என்பது நேயம் என்னும் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க. முன்பக்கத் தொடர்ச்சி யாவராலும் ஆதரித்துப் பாதுகாக்கத்தக்க கல்விச்சிறப்புடன் விளங்கியவனே பார்ப்பான் என்பது புலப்படுத்துவார் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் என்றார் மணம்புரிந்து மனையறம் நிகழ்த்தும் ஆணும் பெண்ணுமாகிய காதலர் இருவரிடையே வழிவழியாக நிலைபெற்றுவரும் கலங்கா நிலைமையாகிய ஒருமை வழிப்பட்ட மனத்திண்மையே கற்பு எனப்படும் என்பார் தொன்னெறி மரபிற் கற்பு என்றார். களவிற்குரிய பாணன் முதலிய அறுவரோடு பார்ப்பான் முதலிய அறுவரும் கூடக் கற்பின்கண் கூற்று நிகழ்த்தற்குரிய வாயில்கள் பன்னிருவர் என்பதாம். 1. கற்பியல் வாழ்விற் கூற்று நிகழ்த்தற்குரியராகத் தொல்காப்பியனார் குறித்த பன்னிருவரோடு பாகன், தூதன் என்போரும் கற்பியலில் ஒரோவழி கூற்று நிகழ்த்துதற் குரியரென்பதும் அவர்தம் கூற்றுப் புறப்பொருட்குச் சிறந்து வரும் என்பதும், இச்சூத்திரத்தில் தொன்னெறி மரபின் கற்பு எனவரும் அடைமொழியாற்கொள்ளப்படும். 1. முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇ எனப்பேராசிரியர் உரையிற் காணப்படும் பாடத்தினையே நச்சினார்க்கினியரும் பாடமாகக் கொண்டார் என்பது இவ்வுரைத் தொடராற் புலனாகும். ஈண்டுக் கிளவி என்பது கொல் என்ற பொருளிலன்றி அச்சொல்லாற் குறிக்கப்படும் பொருளாகிய அறுவரையும் உணர்த்தியது என்பார், கிளவி யென்னுஞ்சொல் ஈண்டுப் பொருள் மேற்று என்றார். முன்னுறக்கிளந்தகிளவி என்பது பொருள் நோக்கிற்று என இப்பாடத்திற்குப் பேராசிரியர் தரும் விளக்கம் இவ்வுரைத் தொடருடன் ஒப்பு நோக்குதற் குரியதாகும். 1. கொண்டெடுத்துமொழியப்படுதல் என்பதற்குத் தாம்சொல்லக்கருதி யதனைப் பட்டாங்கு வெளிப்படக்கூறாது அப்பொருள் குறிப்பிற்புலனாகப் பிறி தொன்றனையெடுத்துக் கூறுதல் என இளம்பூரணர் பொருள்கொண்டுள்ளார் என்பது இவ்வுரைப்பகுதியாற் புலனாம். 2. வலியுற்றுத் தோன்றும் ரா. இராகவையங்கார் பதிப்பிலுள்ளபாடம். 3. எனவே-பெறும் எனவரும் இத்தொடர், உரைக்கும் உதாரணத்திற்கும் தொடர்பற்ற நிலையில் இடையே கிடத்தலால் வலியுற்றுத்தோன்றும் என்னும் உரைப்பகுதிக்கு விளக்கமாக ஏடெழுதுவோராற் பிற்காலத்திற் சேர்க்கப் பெற்றதெனக் கருதவேண்டி யுளது. 1. ஊர், அயல், சேரியோர், நோய்மருங்கறிநர், தந்தை, தன்னை என இங்கு எண்ணப்பட்ட அறுவரும் களவிலும் கற்பிலும் கூற்றுநிகழ்த்துவோராக இடம்பெறுதல் இல்லை. இவர்தம் கூற்றுக்கள் தோழி முதலிய பிறர்வாயிலாகக் கொண்டு எடுத்துக் கூறப்படுதல் உண்டு என்பதாம். 2. மேற்குறித்த அறுவருள் ஊர், அயல், சேரியோர் ஆகிய மூவரும் பெண் பாலார் எனவும் தந்தை, தன்னை என்னும் இருவரும் ஆண்பாலார் எனவும் அறிவித்தற்குப் பெண்பாலும் ஆண்பாலும் ஆயினாராகிய நோய்மருங்கறிநரை இடையே வைத்து எண்ணினார் ஆசிரியர். 1. பேராசிரியர் உரையைத் தழுவியமைந்தது. 1. முற்றத்தோன்றாது-அறவே தோன்றாது. 2. நற்றாய் என்றது, தலைமகள் தாயையே குறித்ததாதலின் தந்தை, தன்னை என்பனவும், தலைமகள் தந்தையையும் தன்னையரையும் குறித்தன. தலைமகன் தன தொழுகலாற்றுக்குத் தானே தலைவனாதலால் முற்கூறப்பட்டார் அவனுடைய தந்தை, தன்னை முதலிய சுற்றத்தாரல்லார் என்பது கொள்க. என்பதாம். 1. இதுவும் பேராசிரியர் உரையைத் தழுவியதே 1. கண்டது-(உலகியலிற்) காணப்பட்டது. 2. கண்டோர் கூறுதல் காணப்பட்டது. எனவே கண்டோர்கூற்று தலைவன் தலைவியல்லாத ஏனையோர் கேட்ப நிகழ்தலில்லை என்பதாம். 3. ஒண்டொடி மாதர் கிழவன் என்பதனை ஒருபெயராக்கி ஒளிதங்கிய தொடியினை யணிந்தாளாகிய தலைவிக் குரியனாகிய தலைவன் எனப் பேராசிரியர் பொருள் கொண்டார் என்பது இதனுள் ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந்தோன்றக் கூறியது தலைமகனை எனவரும் அவருரையாற் புலனாம். கிழவன் கிழத்தியொடு, என அவ்விருவரையும் இணைத்துக் கூறுதலால், அவ்விருவரும் ஒருங்கிருந்த கூட்டத்துக்கண் அவ்விருவரையும் நோக்கியல்லது கண்டோர் அவருள் ஒருவரை நோக்கித் தனித்துக்கூறுதல் இல்லை என்பதாம். 1. ஒண்டொடி மாதராவார் நற்றாயும் தோழியும் செவிலியும் என்றார் இளம்பூரணர். நற்றாயும் தோழியும் தலைமகளைத் தேடிப் புறத்தே செல்லாராதலின் ஒண்டொடிமாதர், என்றது செவிலியையே யெனக்கொண்டு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை முன்னிவருரையினும் சிறப்புடையதாக அமைந்துளது. கிழத்தியொடு எனப் பின்னுள்ள ஒடுவுருபினை ஒண்டொடி மாதரொடு, கிழவனொடு என முன்னரும் விரித்துப் பொருள் வரையப்பட்டது. 1. கூறுதற்கும் உரியன் என்றிருத்தல் வேண்டும். 2. உம்மை எதிர்மறை என்றமையால் கூறாமையே பெரும்பான்மை என்றாராயிற்று. 3. அன்புடைய தலைவியின் உள்ளத்திலே மலரினும் மென்மையின தாகிய காமவுணர்வு நிகழுமிடத்து வன்சொல்லாகிய ஆணைமொழியினைத் தான்கூறுதல் முறையன்றாயினும் அவளது மனக்கலக்கத்தினைப் போக்குதல்வேண்டி இவ்விடத்து வன்சொல்லாசிய ஆணைமொழியினைத் தலைவன் கூறுதற்கும் உரியன் என்பது இச்சூத்திரத்தால் எடுத்தோதப்பட்டது. 1. வழக்கியல் - நீதிநூல். தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுந் தலைவன், இடைச்சுரத்தே தலைமகளுடைய சுற்றத்தார் இடைமறித்தவழி நீதிநூல்விதி பிறழக்கூறின் அச்செயல் இராக்கத மணமெனப்படு மாதலின் செல்வன் என்பதாம், வழக்கிய லாணையிற் கிளத்தற்கும் உரியன் என்றவும்மையால் அங்ஙனம் ஆணைகூறாது தலைமகளைத் தன் அன்பின் திறத்தால் வியந்து மருளும்படி இன்னுரை பகர்ந்து அழைத்துச் செல்லுதற்கும் உரியன் என்பதாம். 1. இது தலைவன் இடைச்சுரத்தில் உடன்போகிய தலைவியோடு வழக்கிய லாணையாற் கூறியது. 1. ஒழிந்தோர் என்பதற்குத் தலைவனையுந் தலைவியையும் ஒழிந்தபதின்மர் என இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். வாயில்கள் பன்னிருவருள் இளம்பூரணர் குறித்த பதின்மர் இன்னாரென்பது தெளிவாகத் தெரியவில்லை. 2. முன்னத்தின் எடுத்தல் என்பது, முன்னைச் சூத்திரத்திற்கூறிய முறையானே வழக்கியலாணையாகிய நீதி நூல் விதியினை எடுத்துக் கூறுதல். முன்னம் என்றது ஈண்டு அறநூற்குறிப்பினை. 1. வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே,, (குறுந். 7) எனச் செவிலிக்குக் கண்டோர் கூறியது முன்னைச் சூத்திரவுரையிற் காட்டப் பெற்றமையறிக. 2. பேராசிரியருரையைப் பின்பற்றியமைந்தது. 1. அவர் என்றது, மேற்குறித்த பதின்மரைச் சுட்டி நின்றது. 2. 181 முதல் 187 முடியவுள்ள சூத்திரங்களால் கூற்று நிகழ்த்துவோரியல்புரைத்த ஆசிரியர் 188-ம் சூத்திரமுதலாகக் கேட்போரைக் கூறுகின்றார். எனவே இச்சூத்திரத்திற்கு இதுவுமது என்னும் கருத்துரை பொருத்த முடையதாகத் தோன்றவில்லை. 3. வாயில்கள் பன்னிருவருள் தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைய பதின்மரும் கேட்பன தலைவன் தலைவி யென்னும் இருவர் கூற்றுமே. எனவே அப் பதின்மருள் தம்முள் தாமே கேட்டார் என்பதுபடச் செய்யுள் செய்யப் பெறார் என்பதாம். 1. நினையுங்காலை - கூறுவோறும் கேட்போரும் ஆகிய இவ்விருதிறத்தார் தகுதியினையும் ஆராயுங்காலத்து, எனவே, தலைமகன் கூறப் பரத்தை கேட்டாள் என்றலும் தலைவி கூறப் பரத்தை கேட்டாள் என்றலும் எனத் தலைமைப் பண்புசிதைய வருவன புலனெறிவழக்கிற்கு ஒவ்வாதன என விலக்கப்பட்டன என்பது பெறப்படும். 1. இதுவும் பேராசிரியருரையினை யடியொற்றி யமைந்துளது. 1. பார்ப்பார் அறிவர் என்னும் இருவர் கூற்றுக்களையும் எல்லோருங் கேட்கப் பெறுவர் என்பதாம். 2. யார்க்கும் வரையார் என்புழி முற்றும்மையை எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படும் எனக் கொண்டார் பேராசிரியர். 1. பார்ப்பார் கூற்று அகத்தினை மாந்தருள் தலைமகனுஞ் செவிலியும் நற்றாயும் கேட்பினல்லது பிறர் கேட்டற்கு ஏலா எனவும், அறிவர் கூற்று தலைவியுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயும் கேட்டற்குரியர் எனவும், புறத்திணையிலும் பொதுவியற்கரந்தையோர்க்குப் பார்ப்பார் கிளவி ஏலாவெனவும் அறிவர் கிளவி ஏற்குமெனவும் பேராசிரியர் கூறும் வரையறை, சங்கவிலக்கிய மரபினையும், அதன்கண் கூறப்படும் பண்டைத் தமிழர் வாழ்வியலமைப் பினையும் அடிறொற்றி யமைந்தமை நுணுகி நோக்கத்தகுவதாகும். தமிழ் மக்களது அகத்திணை வாழ்விலும் புறத்திணை வாழ்விலும் முழுவதுங் கலவாது ஓரளவு ஒதுங்கி நிற்கும் அயன்மையாளராகப் பார்ப்பாரும், தமிழ்மக்களது அகவாழ்விலும் புறவாழ்விலும் நீக்கமின்றிக் கலந்து நின்று அவர்தம் வாழ்வினைச் செம்மை செய்யும் கடமையாளராக அறிவரும் குறிக்கப்பெற்றுள்ளமை பேராசிரியர் தரும் இவ்வுரை விளக்கத்தால் இனிது புலனாம். 2. அறிவரது இயல்பினை விளக்கி அவர்வழி நிற்றல் அகத்திணை புறத்திணை மாந்தர் அனைவர்க்குரியகடமையாமெனவும், இனிப் பார்ப்பாரும் அவ்வாறே சிறப்புடையர் எனவும் பேராசிரியர் தரும் உரைவிளக்கம், முறையே ஆணஞ்சான்ற அறிவர், பேணுதகு சிறப்பின்பார்ப்பான் (செய்-190) என வரும் தொல்காப்பியனார் வாய்மொழியினை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம். நாட்டுமக்கள் எல்லோரிடத்தும் நிறைந்த பேரன்புடையராய் அவர்களது நல்வாழ்வுக்குத் தமது அறிவின் திறத்தால் அரண்செய்து காக்கும் பெருமக்களே அறிவர் எனப்படுவர், என்பர் ஆணஞ்சான்ற அறிவர் எனவும் இனிப்பார்ப்பார் எனப்படுவார், கல்வித்திறத்தால் நன்கு மதிக்கப்படும் பெருமையினராய்த் தாமே தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வன்மையின்றி, ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் நும்மரண்சேர்மின் (புறம்.) என்றாங்கு நாட்டுமக்களாற் பேணிக் காத்தற்குரிய இயல்பினர் என்பார் பேணுதகு சிறப்பிற்பார்ப்பான் எனவும், தொல்காப்பியனார் கூறியுள்ளமை மேற்குறித்த பேராசிரியர் உரைவிளக்கத்திற்கு அரண்செய்வதாகும். ஆணம்-அன்பு. 1. பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யாப்பொடு புணர்ந்து யார்க்கும் வரையார் - என இயைத்துப் பொருள் வரையப்பட்டது. எனவே பார்ப்பாரும் அறிவரும் என்ற இருவர் கூற்றும் அகமும் புறமுமாக யாக்கப்படுஞ் செய்யு ளெல்லாவற்றோடும் பொருந்தி வருதலின் அகத்திணையோர்க்கும் புறத்திணையோர்க்கும் கேட்டலை வரையார் என இவ்வுரைப்பகுதி அமைந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். யாப்பொடு புணர்ந்து - யாப்பொடு புணர்தலால்; செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஈண்டு ஏதுப்பொருட்டாய் நின்றது. யார்க்கும் - அகத்திணையோர்க்கும் புறத்திணையோர்க்கும். 2. யார்க்கும் வரையா ரென்றதனை என்றிருத்தல் வேண்டும். 3. அறிவர்கூற்று என்றிருத்தல் வேண்டும். 4. அவர்வழி - அறிவர்வழி 1. எனவிருகூற்றும் என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம். 2. பரத்தையிற் பிரிவு வாயில்களின் கூற்று என்னும் இரு நிலைமைக்கண்ணும் தலைமகளைக் குறிப்பிடாத உரையாடல்கள் பயனற்றன என்பதாம். கிளப்புகிளத்தல்- கூறுதல். 3. தம்முளும் என்புழி உம்மை எதிர்மறையாதலால் கிழத்திகேட்கக் கூறுதலே பெரும்பான்மை யெனவும் தம்முள் தாம்கேட்டல் சிறுபான்மையெனவும் கொள்க. 1. கிழத்தியைச் சுட்டாவெனவே என்றிருத்தல் வேண்டும். 1. தம்முளுமுரிய என்பது பேராசிரியர் கொண்டபாடம். உசாவுதல்-வினவியறிதல். 2. கேட்போர் என்னும் உறுப்புணர்த்தும் இச்சூத்திரத்தில் செல்லுநபோலவும் எனவும் கூற்று என்னும் உறுப்பினையும் உடன் கூறினார். கூறுந்திறமில்லாதன கூறுவனவாகக் கூற்றிற்குரிய என்பது மேற்கூறப்படாமையின் அதனையும் கேட்போர் என்னும் உறுப்புடன் இயைத்துக் கூறினார் ஆசிரியர் என்பதாம். 1. வாயில்கள் தம்முட் கூறவும் பெறும் அவையும் தலைவி கேட்ப எ-று என இத்தொடரைச் சூத்திரப்பொருளொடு கூட்டுக. 1. நுவலிய என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம் கானல்-கடற்கரைச்சோலை, புள்-பறவை, புலம்புறு பொழுது -தனிமைத்துயரை விளைக்கும் மாலைக்காலம். 1. காட்சி, ஐயம், துணிவு, புணர்ச்சி, நயப்பு, பிரிவு, பிரிவச்சம், வன்புறை எனத் தம்முள் தொடர்புடையனவாய் ஒத்த இலக்கணத்தன பலவும் ஓரிடத்துத் தொக்கு நிகழ்தற்கு இடனாயது காமப்புணர்ச்சியாதலின், வினைசெய் யிடமாகிய அஃது இயற்கைப் புணர்ச்சியென ஓரிடமாயிற்று. பாங்கற் கூட்டம் முதலியவற்றுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். ஞாயிறு திங்கள் என்னும் சூத்திரத்தின் பின்னர் அமையவேண்டிய இச்சூத்திரம் பேராசிரியருரைப் பதிப்பில் பரத்தைவாயில் என்னும் சூத்திரத்திற்குமுன் முறைபிறழ முன்பக்கத் தொடர்ச்சி வைக்கப்பட்டுள்ளது. பரத்தைவாயில், வாயிலுசாவே, ஞாயிறு திங்கள் என்னும் முதற் குறிப்புடைய மூன்றும் கூற்று, கேட்போர் என்னும் செய்யுட்களைப் பற்றிய விதிகளாதலின், அவை கூறிமுடிந்த பின்னரே களன் என்னும் உறுப்புப்பற்றிய சூத்திரம் அமைதல் முறை. அம்முறையிலேயே இளம்பூரணருரையிலும் நச்சினார்க்கினியருரையிலும் களன் என்னும் உறுப்புணர்த்தும் சூத்திரம் இடம் பெற்றிருத்தலால், அம்முறையே இப்பதிப்பிலும் மேற் கொள்ளப் பெற்றது. கேளாதன சிலபொருள் கேட்பனவாகப் பொருளியலுள் வழுவகைக்கப் பட்டனவற்றை இலக்கண வகையாற் கூறுவனவும் கேட்குநவும் ஆகற்கண்ணும் ஆராய்கின்றான்என இச்சூத்திரத் திற்குப் பேராசிரியர் வரைந்துள்ள கருத்துரையின் துணைகொண்டு இவ்வுரைப்பகுதியின் பொருள் அறியற் பாலதாகும். 1. அகம்புறம் என்பவற்றுள் ஒருபொருள்மேல் பொருந்தியதொரு நெறியினைப் பற்றி யாதானும் ஒருசெயல் நிகழுங்கால் அதற்காகும் இடத்தோடும்கூட நிகழ்தலைப் புலப்படுத்தலே இடமென்னும் செய்யுளுறுப்பாம் என்றவாறு. 1. பரத்தையும் வாயில்களு மென்னும் இரண்டு வேறுபாட்டினும் எனவரும் பேராசிரியருரை கொண்டு, அவர் கொண்டபாடம் பரத்தைவாயில் எனவிரு வீற்றும் என இளம்பூரணருரையிற் கண்டபாடமே என்பதும் எனவிருகூற்றும் என்ற பாடம் பிழைபட்ட தென்பதும் நன்கு தெளியப்படும். 1. பேராசிரியர் உரையுடன் ஒப்புநோக்குக. 1. தெரிந்தனருள்ளப் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. முதுக்குறைந்தனள் என்ற இறந்தகாலச் சொல் புணர்ச்சியுண்மை தோன்ற நின்றமை காலம் என்னும் செய்யுளுறுப்பாம். 1. அண்ணாந்தேந்தியவனமுலை, பொன்னேர்மேனி, நன்னெடுங்கூந்தல் என்ற தொடர்கள் நிகழ்காலம் இளமைப் பருவம் என்பது புலப்பட வந்தன. 2. நீத்தலோம்புமதி என்பது இவளை எக்காலத்தும் கைவிடாது பாதுகாப்பாயாக எனப் பொருள் தந்தமையின் எதிர்காலங் குறித்துநின்றது. 3. காலமென வேறுபொருள் இல்லதுபோலப் பொருள் நிகழ்ச்சியைக் காலம் என்றது என்னையெனின் என இயைத்து வினவுக. 4. காலம் என்பதனை உள்பொருளாகவே தொல்காப்பியார் கொண்டார் என்பது, காலம் உலகம் (தொல். கிளவி (58) எனவும் வினையெனப்படுவது வேற்றுமைகொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும் (தொல். வினை-1) எனவும் வரும் அவரது வாய்மொழியால் இனிது புலனாம். 1. பேராசிரியருரையைப் பின்பற்றியமைந்தது. 2. இதனானென்னும் எனவும் 3. தொகைநிலைக் கிளவி எனவும் பாடங்கொள்வர் பேராசிரியர். இதன்மாறு-இதன்பின்பு; எனப்பொருள் வரையப்பெற்றுளது. இதன்மாறு இதனால் எனப்பொருன் கொள்ளுதல் மாறு என்னும் பொருத்தமாகும், இதனான் எனவே பாடங் கொண்டார் பேராசிரியர். மாறு என்னும் இவ்விடைச்சொல் சிறந்தோன் பெயரன்பிறந்தமாறே (புறம்) என ஏதுப்பொருளிற் பயின்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணர்தற் பாலதாகும். இதன்மாறென்னும் என்பது இளம்பூரணர்கொண்ட பாடம். நச்சினார்க்-கினியருரையிலும் இப்பாடமே காணப்படுதலால் பேராசிரியர் கொண்ட பாடமும் இதுவே யெனக் கொள்ளுதல் பொருத்தமாகும். இதன்மாறு-இதனான்; மாறு என்பது ஏதுப்பொருட்டாய இடைச்சொல். நெடுமானஞ்சி நீயருளன்மாறே (புறம்-12) என இச்சொல் இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காண்க. 1. பயனுறுப்பாகவன்றி-பயனை உறுப்பாகக் கொண்டன்றி. 1. இதுவும் பேராசிரியருரையை அடியொற்றியதே. இதன்மாறு என இளம் பூரணருரையிலுள்ள பாடமே நச்சினார்க்கினியருரையிலும் உள்ளது. இதன்மாறு-இதனான்; மாறு என்பது காரணப் பொருளிற் பயிலும் இடைச்சொல். சோறுபட நடத்தி நீ துஞ்சாய் மாறே (புறம் 22) என இச்சொல் இப்பொருளிற் பயின்றமை காண்க. 2. தலைவருபொருளான் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். உய்த்துணர்தல்-விசாரித்தறிதல். தலை-இடம். மெய்ப்பட-மெய்ப்பாடுதோன்ற. 1. செய்யுளின் பொருளையுணர்ந்தால் அப்பொருளுணர்ச்சியாலே செய்யுளிற் கூறப்படும் பொருள் வேறுகட்புலனாகக் கண்டாற்போன்று அறிதலை மெய்ப்பாடு என்னும் உறுப்பு என்றார் ஆசிரியர். உலகமக்களாற் காணப்படாத வானோருலகினைப் புலவன் கூறினாலும் அவ்வுலகினைக் கட்புலனாகக் கண்டாற்போன்று அறியச்செய்தல் மெய்ப்பாடு என்னும் உறுப்பாகும் என்பதாம். 1. தலைவருபொருள் - செய்யுளிடத்தே சொல்லப்படும் பொருள். அஃதாவது நோக்கு என்னும் உறுப்பால் உணர்ந்த பொருளின் வடிவத்தினைக் கட்புலனாமாறு காட்டுவது மெய்ப்பாடு என்னும் கருத்தில் வழங்குவது, கவிகண்காட்டும் என்னும் பழமொழியாகும். 1. இது பேராசிரியருரையிற் காணப்படும் உரை விளக்கமாகும். 2. எண்வகை இயல்நெறியாவது, நகைமுதல் உவகையீறாக மெய்ப்பாட்டியலிற் கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் இலக்கணமுறைமை, 1. செய்யுட்கு உறுப்பாக இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு முன் மெய்ப்பாட்டியியலிற் கூறப்பட்ட அவ்விலக்கணத்ததேயன்றி அதற்குப் பிறிதான இலக்கணத்ததன்று என்பதாம். 1. செய்யுளுறுப்பாகிய எச்சம் என்பது, சொல்லெச்சம் குறிப்பெச்சம் என இரு திறப்படும். பிரிநிலைவினையே என்புழிச் சொல்லதிகாரம் எச்சவியலிற் கூறப்பட்ட பத்துவகை யெச்சங்களுள் பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம் எனவெனெச்சம், சொல்லெச்சம் எனவரும் எட்டும் சொல்லெச்சங்களாகும், அச்சூத்திரத்திற் குறிப்பு என்று ஓதப்பட்ட ஒன்றுமே குறிப்பெச்சம் எனப்படும். 2. முடித்தலைக்கொள்ளும் இயல்பு எனவே, செய்யுளின் வேறாகச் சொல்லும் குறிப்பும் எச்சமாய் நின்று பின்னர்க் கொணர்ந்து முடிக்கப் பெறும் என்பதாம். 1. செங்களம்பட (1) என்னும் குறுந்தொகைப்பாடலில் முருகனதுகுன்றம் கொத்தாக அலர்ந்த செங்காந்தட்பூவின் குலையினையுடையது. எனவே, இப்பூக்கலாள்யாம் குறையுடையோம் அல்லோம் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறுதல் கையுறைமறுத்தல் என்னுந் துறையின்பாற் படுதலால் இங்ஙனம் தோழி வெளிப்படக் கூறினாளென்றல் குற்றமாகாமையின் இது கூற்றெச்சமெனப்படும். 2. இங்ஙனம் தோழி தலைவியை நோக்கிக் கூறினாள் எனக்கொள்ளின், செல்வேள் குன்றம் குலையாக மலர்ந்த செங்காந்தட்பூக்களாற் பொலிவு பெற்றுளது. அக்காட்சியைக் காண விரும்பினை யாயின் ஆண்டுச் சென்று காண்பாயாக எனத் தலைமகளைக் குறியிடத்து உய்த்தல் என்னுந் துறையில் தனது குறிப்பினைப் புலப்படுத்துதலால் அது குறிப்பெச்ச மெனப்படும். 3. இவ்வுரைப்பகுதி பேராசிரியர் உரையினையே முழுவதும் அடியொற்றியமைந் துள்ளமை காண்க. 1. அவரவர்க்குரைப்பதை என்பது நச்சினார்க்கினியருரையிற் கண்டபாடம். 2. செய்யுளைக் கேட்போர் அதன்கண் கூறப்படும் கூற்று இவ்விடத்து இன்னார் இன்னார்க்குக் கூறியது என இடமுங் காலமும் உணர்ந்து கொள்ளுமாறு அமைத்தல் முன்னம் என்னும் உறுப்பாகும். 3. இவ்விடத்து என வந்தது கொண்டு இக்காலத்து என வாராதது ஆகிய காலமுங் கொள்க என்பதாம். 1. இம்மொழியினைக் கூறுதற்குரியார் இவர், இம்மொழியினைக் கேட்டற்குரியார் இவர் என உய்த்துணர்ந்து அறிபவன் செய்யுளைக் கேட்டவன் எனவும் அங்ஙனம் அறிந்து கொள்ளுதற்கோர் இடத்தினை யமைத்துச் கூற்று நிகழ்த்துவார்க்கும் அதனைக் கேட்போர்க்கும் உரியவற்றை உரைக்க எனச் செய்யுள் செய்வார்க்கு அறிவுறுத்தியவர் இந்நூலாசிரியர் எனவும் இச்சூத்திரத் தொடரைப் பகுத்துப்பொருள் கொள்க என்பதாம். 2. இதனைக் கூறுகின்றார் இவர், கேட்கின்றார் இவர் என்பதனை முன்னியுணர அறிவுறுத்துவது முன்னம் என்னும் உறுப்பாகும். முன்னம் குறித்துணரப்படுவது. 3. இடம், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம் எனப்படும் செய்யுளுறுப்புக் களாகிய இவையாவும் அகத்திணைச் செய்யுட்கும் புறத்திணைச் செய்யுட்கும் பொதுவாகக் கூறுகின்றார் தொல்காப்பியனார். 1. (இ-ள்) இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னார் என்று அச்செய்யுட்கண் அறியுமாற்றான் அங்ஙனமறிதற் குரித்தாக நாட்டியதோ ரிடத்தே கூறுவோர்க்கும் கேட்போர்க்கும் ஏற்ற உரையாகச் செய்யுளுட்கிடத்திக் கூறுவது முன்னம் எ-று என இவ்வுரை அமைந்திருத்தல் வேண்டும். இதன்கண் தோன்றின் அறியாமற்றான் என்றிருப்பது ஏடெழுது வோரால் நேர்ந்த பிழை. அறியாமற்றான் என்பதனை அறியுமாற்றான் எனத் திருத்துக. 1. எனாது என்பதும் பாடம். 2. இத்திணைக்குரிய பொருள் இதுவெனச் சுட்டிக்கூறுதலன்றி எல்லாத்திணைக் குரிய பொருள்களுக்கும் பொதுவாக நிற்கும் வண்ணம் புலவனால் அமைத்துக் கொள்ளப்படும் பொருட்பகுதி பொருள்வகை என்னும் உறுப்பாகும் என்பதாம். 3. ஆசிரியன் கூறிய உரிப்பொருளேயன்றி அவற்றுக்கெல்லாம் பொதுமையின் உரியவாகப் புலவனால் வகுத்துரைக்கப்படும் பொருளமைப்பு பொருள்வகை, என்னும் செய்யுளுறுப்பாகும். 1. பொருள் என்னாது பொருள்வகை என விரித்துரைத்தமையால் செய்யுள் செய்யும் புலவன் தானே வகுத்தமைத்தது பொருள்வகையெனப்படும். புலவனது படைப்பாற்றலைப் புலப்படுத்தும் பொருள்வகை எனப்படும் உறுப்பின்றிச் செய்யுள் செய்தல் புலமையாகாது என்பது கருத்து. வகைந்ததுவகுத்துக்கூறியது. 2. இன்பமும் துன்பமும் கூறுதலால் இப்பொருள் வகையினை அகத்திற்கேயன்றிப் புறத்திற்கும் கொள்க என்றார். ஒழுக்கம் இரண்டாவன களவும் கற்பும் ஆகிய இருவகை ஒழுகலாறுகள். 1. அவ்வவமாக்களும் என்பது பழைய அச்சுப்புத்தகத்திலுள்ள பாடம். அவ்வம்மாக்களும் என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம். அவ்வம்மக்களும் என்பதே இளம்பூரணர் கொண்டபாடம் என்பது ஏழு பெருந்திணைக்குரிய மாந்தரும் எனவரும் உரைத்தொடரால் புலனாம். 2. திறவதின் நாடுதலாவது, பல்வேறு கூறுபாடுடையதாகப் பகுத்து ஆராய்தல். 1. தத்தமியலின் என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம். 1. ஐவகை நிலத்திற்கும் உரியவாகக் கூறப்படும் கருப்பொருள்களுள் மக்களேயன்றித் தலைவனும் தலைவியும் நிலம்பெயர்ந்து மயங்குமாறும் முல்லை முதலாகப் பகுத்துரைக்கப்பட்ட நான்கு திணையும் ஒன்றோடொன்று மயங்குமாறும் கூறி இவ்வாறு முன்னர்க்கூறிய இலக்கணத்தில் அடங்காததாய்ப் புலவர்களால் செய்துகொள்ளப்படுவது துறை யென்னும் செய்யுளுறுப்பாகும் எனவுணர்த்துவது இச்சூத்திரமாகும். ஆகவே இவ்விதி, கருப்பொருள் மயக்கங்கூறும் எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் (தொல் அகத்திணை. 107) என்னுஞ் சூத்திரத்தால் முடியாது. ஆதலின் இதனைத் தனியே எடுத்துரைத்தார் ஆசிரியர். 2. அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்கமெனப்படும் என்றவாறு எனவரும் பேராசிரியர் உரைத்தொடரைச் சுட்டி இச்சூத்திரப்பொருளை நிறைவு செய்து கொள்க. 1. ஊர்க்கானிவந்த என்ற கலித்தொகைப் பாடலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை விளக்கம் பேராசிரியர் உரையை அடியொற்றியமைந்தமை காண்க. 1. செய்யுளிடத்தே கூறப்படும் பொருள்கள், தொடர்நிலைகளால் சேய்மையிடத்தே நின்ற நிலையினும் அணுகிய நிலையினும் அவை தம்முள்இயைந்து பொருள்முடியும் வண்ணம் இயைத்துக் கூட்டி முடிக்கும்படி யமைவது மாட்டு என்னும் செய்யுளுறுப்பாகும் என்பது இதன் பொருளாகும். 2. பட்டினப்பாலையென்னும் வஞ்சிநெடும்பாட்டினுள் நாம் சென்று பொருளீட்டுங்கால் முட்டாச் சிறப்பிற் பட்டினமே கிடைத்தாலும் வாரிருங் கூந்தல் வயங்கிழையாகிய தலைமகள் முன்பக்கத் தொடர்ச்சி மனையிடத்தாளாக அவளைப் பிரிந்து பொருள் தேடுதற்பொருட்டு நின்னுடன் வரமாட்டேன் நெஞ்சமே வாழ்வாயாக எனத் தன்னெஞ்சினை நோக்கிக்கூறும் நிலையில் அமைந்த 218-220 ஆம் அடிகளாகிய தொடரோடு அங்ஙனம் தான் தலைமகளை விட்டுப் பிரிந்துவாராமைக்குக் காரணம் கூறுவதாகிய திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்யகானம் அவன் கோலினுந் தண்ணிய தடமென்றோளே எனவரும் 299-301 ஆம் அடிகளாகிய தொடர் சேய்மைக்கண் கிடப்பினும் இயன்று பொருள் முடியச் செய்தமையின், இஃது அகன்று பொருள் கிடப்பஅமைந்த மாட்டு என்னும் உறுப்பாயிற்று. 1.. நான்கடியான் இயன்ற இப்பாடலில் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக்கதவு திறந்திடுமின் எனத் திறந்திடுமின் என முதலடியிலுள்ள வினை நான்க மடியின் இறுதியிலுள்ள கதவு என்னும் செயப்படுபொருளோடு இயன்று முடியச் செய்தமையின் இஃது அணுகிய நிலையில் அமைந்த மாட்டு என்னும் உறுப்பாயிற்று. 1. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களுக்கு உரையெழுதியபின் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார் என்பது இவ்வுரைத்தொடரால் இனிது புலனாதல் காணலாம். 1. தொடர்நிலை பெறுமே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். உடனிலை மொழிதலாவது சொல் தொடர்ந்தவாறே அமைய வெளிப்படச் செய்யுள் செய்தல். 2. உடனிலைமொழிதலாவது, செய்யுளிலமைந்த தொடர்கள் தம்முள் பொருளியை புடையனவாய்த் தொடர்ந்து கிடப்பச் செய்யுள் செய்தல். 3. சய்யுளியல் முதற்சூத்திரத்துள் எண்ணியவாறு முதற்கண்ணுள்ள எச்சத்தை இங்கு முற்கூறாது இறுதியிலுள்ள மாடடு என்னும் உறுப்பை ஆசிரியர் முற்கூறியது இச்சூத்திர விதியினை முற்கூறிய எச்சம், முன்னம், பொருள், துறை. மாட்டு என்னும் ஐந்துறுப்பும் பெறும் என அறிவித்தற்பொருட்டாம் என்பர் பேராசிரியர். 1. இடைநின்ற மூன்றாவன: முன்னம், பொருள், துறை என்பன, இரண்டாவன எச்சம், மாட்டு என்பன. 1. செய்யுளியல் முதற்சூத்திரத்து எண்ணிய முறையே எச்சத்தினை முற்கூறாது மாட்டு என்னும் உறுப்பினை முற்கூறிய பிறழ்ச்சியாலே எடுத்தோதிய மாட்டிற்கும் எச்சத்திற்கும் இடையே யெண்ணப்பட்ட முன்னம். பொருள், துறைவகை என்னும் உறுப்புக்க ளில்லாமலும் செய்யுள் வரப்பெறும் vன்பதாம்.1. முன்னம், பொருள், துறைவகை என்னும் மூவகை யுறுப்புக்களையும் கிளந்து கூறாது மாட்டு, எச்சம் என்னும் இரண்டினையுமே ஆசிரியர் எடுத்தோதினமையால் அவை மூன்றும் மாட்டு எச்சம் என்னும் இரண்டினைப்போல அத்துணை இன்றியமையாச் சிறப்பின அல்ல என்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். 2. வண்ணந்தானே என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் காணப்படும் பாடம். வண்ணமாவது-எழுத்துவகையான் அமையும் சந்தக் கூறுபாடு. நாலைந்து-இருபது. 1. வண்ணம் நூறும் அதற்குமேலும் என்போர் யாப்பருங்கலவாசிரியர் முதலியோர். அன்னோர்கூறும் வண்ணங்கள் யாவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இருபது வண்ணங்களுள் அடங்கும். அன்றியும் அன்னோர் கூறும் வண்ணங்கள் இவ்விருபது வண்ணங்களைப் போன்று சந்தவேறுபாடு செய்யமாட்டாவாதலின் அவர் கூறும் வண்ணப் பகுப்பினாற் பயன் சிறிதுமில்லை யென்பது நுண்ணுணர்வுடையார்க்கு நன்கு புலனாம் என்பதாம். 2. பேராசிரியர் கருத்தும் இதுவே என்பது முன்னர் விளக்கப்பட்டது. 1. ஆங்ஙனமொழிப எனப் பேராசிரியரும், ஆங்ஙனமறிப, என நச்சினார்க் கினியரும் பாடங்கொள்வர். ஆங்கு-அத்தன்மைய. அறிந்திசினோர்-அறிந்தோர். 2. ஆங்ஙனம்-அம்முறைப்படி; வரலாற்றுமுறைப்படி. ஆங்கென என்பது இளம் பூரணருரையிலுள்ள பாடமாகும். 1. இச்சூத்திரவுரை சிதைந்துள்ளது. 2. சொற்சீர்த்துஆகி-சொற்சீரடிகளையுடையதாகி. நூல்-சூத்திரயாப்பான் இயற்றப்படும் இலக்கணநூல். தொல்காப்பியமாகிய இந்நூல் இங்குக்கூறிய பாஅவண்ணத் திற்குரிய இலக்கியமாகத் திகழ்தல் காணலாம். 1. நூற்பாப்பயிலும் என்றமையால் ஈண்டுப் பா என்றது, சூத்திரமாகிய நூற்பாவினை. நூற்பாப்பயிலும் என்பதே பேராசிரியர் கொண்ட பாடம் எனக்கருத வேண்டியுளது. 2. பயிலுதல் - பெரும்பான்மையாய் வருதல். நூற்பாவிற் சொற்சீர்த்தாகிப் பயிலும். எனவே ஆசிரியப் பாவில் சொற்சீர் அத்துணைப் பயிலாது என்பதாம். 1. தவளை பாய்ந்தாற்போன்று ஓரடிவிட்டு ஓரடியில் தாவியமைந்த எதுகை-யையுடையது தாஅ வண்ணம் என்பதாம். தாவுதல்-இடைவெளியுளதாகத் தாவிக்குதித்தல். 1. இடையிட்டுவருதல் எனவே ஓரடிக்குள் பொழிப்பும் ஒரூஉவுமாகி வருதல் எதுகைக்குரிய தனிச் சிறப்பாதலின் எதுகைத்தாகும் என எதுகைத் தொடையை விதந்து கூறினார். 2. அடியிடையிட்டு வருதல் தொடைவேற்றுமை யாவதன்றி வண்ண வேற்றுமையாகாது. ஒருசெய்யுளுட் பல அடி வந்தால் அவையாவும் இடையிட்டுத் தொடுக்கப்பெறுதல் வேண்டு மென்னும் நியதியில்லை. இடையிட்டுத் தொடுத்தவழி அது தாஅவண்ணம் எனப்படும் என்பதாம். 3. வண்ணவகையாவும் செய்யுள் முழுவதுமே பெறக் கிடைப்பன அல்ல; இசை நூலார் வண்ணங் கூறியவாறுபோல ஒரு செய்யுளுள்ளே வண்ணங்கள் பலவருதலும் உண்டு என்பதாம். 1. வல்லெழுத்துப் பயிலும் எனப் பாடங் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும். வல்லிசை - வல்லோசை. 2. வல்லெழுத்துப்பயின்று வருதலால் வல்லிசை வண்ணம் என்னும் பெயருடைய தாயிற்று. 1. மெல்லிசை-மெல்லோசை. 2. ஒரு செய்யுள் முழுவதும் ஓரினத் தெழுத்தே பயின்று வரச் செய்தல் கேட்போர்க்கு இன்னாவோசைத்தாமாதலின், அங்ஙனம் ஓரினத்தெழுத்தே முழுதும் வாராது உறுப்பாய எழுத்துக்கள் இடையிடையே மிக்குப் பலவாய் வரும் என்றார் ஆசிரியர். 3. இவ்வியல்பு ஏனையவண்ணங்களின் உறுப்பாய எழுத்துக்களுக்கும் ஒக்கும். 1. வன்மைக்கும் மென்மைக்கும் இடைநிகர்த்த ஓசையினைப் பெற்று வருவது இயைபு வண்ணமாகும். 2. ஈண்டு இயைபு என்றது, மென்மைக்கும் வன்மைக்கும் இடை நிகர்த்தாம் தன்மையினை. 1. மாத்திரைமிக்கொலிக்கும் அளபெடை பெற்றுவருவது அளபெடை வண்ணமாகும். 2. உயிரளபெடை, ஒற்றளபெடை என்னும் இரண்டளபெடையும். 3. அளபெடை எனப் பொதுப்படக் கூறினாராயினும் உயிரளபெடை. ஒற்றளபெடை இரண்டையும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 1. நெடுஞ்சீர் என்றது, நீரூர், பானா என்றாற்போன்று நெட்டெழுத்துக் களாலியன்ற சீர்களை. 1. நெட்டெழுத்தாலியன்ற சீர் நெடுஞ்சீர் எனப்பட்டது. 2. மிறைக்கவி - சித்திரகவி. இப்பாடல், நீருர் பானா யாறே காடே நீலூர் காயாம் பூவீ யாதே காரூர் பானா மாலே யானே யாரோ தாமே வாழா மோரே ஊரூர் பாகா தேரே பீரூர் தோளாள் பேரூ ராளே என ஆறடிகளால் இயன்றதாக யாப்பருங்கலவிருத்தியில் நெடுஞ்சீர் வண்ணத்திற்கு உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது. 1. குறுஞ்சீர் என்றது உறுபெயல், எழிலி யென்றாற்போன்று குற்றெழுத் துக்களாலி யன்ற சீர்களை. 2. குற்றெழுத்தால் இயன்றசீர் குறுஞ்சீர் எனப்பட்டது. 1. குறுஞ்சீர்வண்ணம் பயின்று வரும் செய்யுளும் சித்திரகவியாகும் எனக் கொள்வர் நச்சினார்க்கினியர். 2. சேரி, ஆர என்றாற் போன்று நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒத்து வருஞ் சீர்களால் இயன்றது சித்திரவண்ணமாகும். 1. சித்திரம்-ஓவியம். ஓவியம் போன்று பலவண்ணம் பொருந்தச் செய்யப்படுதலின் சித்திரவண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. நேர்தல்-தம்முள் ஒத்தமைதல். 2. சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே எனவரும் பாடல் சித்திரவண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகும். 3. இச்செய்யுளின் திருந்தியவடிவம் புலனாகவில்லை. ஊர வாழி ஊர தேர தார வாரி பேர சேரி கார வேரி பாய வாரி பீர நீர தோழி தோளே என யாப்பருங்கலவிருத்தியிற் சித்திரவண்ணத்திற்கு உதாரணமாகக் காட்டப்பட்ட பாடல் இச்செய்யுளின் திருந்திய வடிவமாகக் கொள்ளத்தகுவதாகும். 1. ஆய்தம் பெற்று நுணுகிய ஓசையினதாய் வருவது நலிபுவண்ணம் எனப்படும். 2. குற்றெழுத்திற்கும் உயிரொடுபுணர்ந்த வல்லெழுத்திற்கும் இடையே சுருங்கிய ஓசையதாய் நலிவுற்றொலிப்பது ஆய்தமாதலின் அவ்வெழுத்துப் பயின்ற பாடலின் ஓசை நலிபு வண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. 1. பேராசிரியரும் இவ்வாறே பொருள் கொண்டார். 2. சொல்லக்கருதியபொருள் முற்றுப்பெற்ற நிலையில் செய்யுள் முடியாதது போன்று அமைந்த ஒசைத்திறம் அகப்பாட்டு வண்ணமாகும். செய்யுளின் எல்லைக்குள் அகப்பட்டு ஒடுங்கிய பொருளையுடையதாய்ச் செய்யுள் முடியாதுபோன்றமைந்த ஓசைத்திறம் அகப்பாட்டுவண்ணமாகும். அகப்படுதல்-கூறக்கருதிய பொருள் செய்யுளில் அடங்குதல். 1. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பனவற்றால் ஆசிரியப்பா முடியும் என்னும் வரையறை பொருந்தாதென்பது இவ்வுரையில் எடுத்துக்காட்டிய ஆசிரியப்பாக்களாற் புலனாகும், ஆகவே ஆ ஈ ஊ ஏ ஐ ஒ என்னும் ஈற்றால் ஆசிரியம் முடியும் என்னும் அவ்வரையறை பொருந்துமா? என்னும் வினா வண்ணத்தை வரையறுப்போர் கேட்டற்குரிய எதிர் வினாவாகும் என்பதாம். 2. செய்யுளின் இறுதியடிபோலும் முற்றோசை பெறாது இடையடிபோல மேலுந் தொடரு மோசையினதாய் நிற்றல் அகப்பாட்டு வண்ணம் என்பது கருத்து. 1. செய்யுள்முடிந்த நிலையிலும் அதனாற் சொல்லக்கருதிய பொருள் செய்யுளின் புறத்தேயும் விரிந்துநிற்பது போன்று அமைந்த ஒசைத்திறம் புறப்பாட்டு வண்ணமாகும். புறப்படுதல்-கூற எடுத்துக்கொண்டபொருள் கூறி முடித்த நிலையிலும் செய்யுள் முடியாததுபோன்று முடிந்துநிற்கும் ஓசைத்திறம். 1. இறுதியடியிலுள்ள அடி பாட்டு முடிந்ததுபோன்ற ஓசையினதாதல். 2. செய்ந்நீ முன்னிய வினையே எனவரும் ஈற்றயலடி செய்யுள் முடிந்தது போன்று காட்டினும் அதன் முடிபாகிய ஓசைத்திறம் முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே என அதன்புறத்தே இறுதியடியில் அமைந்து கிடத்தலின் இது புறப்பாட்டு வண்ணமாயிற்று. 3. பாட்டினை முடிக்கும் இறுதியடி பின்தொடரும் நிலையிலும் அதற்கு முன்னுள்ள அடி முடிந்தது போன்று முற்றிய ஓசையினதாய் வருவது புறப்பாட்டு வண்ணம் என்பதாம். 1. ஆற்றொழுக்கினைப்போன்று இடையீடின்றித் தொடர்ந்து செல்லும் ஓசைத்திறம் ஒழுகுவண்ணம் எனப்படும். 1. ஒழுகியலோசையாற் செல்லுதல் பிற வண்ணங்கட்கும் ஒக்குமாயினும் அவை தமக்கென வேறுவேறு இலக்கணமுடையனவாதலின் அவற்றால் வேறுவேறு பெயர் பெறுவனவாயின என்பதாம். 2. இது, பேராசிரியர் தரும் விளக்கத்தை அடியொற்றியது. யாற்றொழுக்குப் போல ஒழுகும் ஓசையினையுடையது ஓழுகு வண்ணம் எனக்கொள்க. 1. ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் எனப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பாடங்கொண்டனர். ஒரூஉதல்-நீங்குதல், செய்யுட்குரிய மோனையெதுகை முதலியன நீங்கிய நிலையில் தொடுக்கப்படும் ஓசைத்திறம் ஒரூஉ வண்ணம் எனப்படும். 2. செந்தொடையால் வருவது ஒரூஉவண்ணமாம் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 1. ஒரீஇத் தொடுத்தல் என்பது செய்யுளிற் சொல்லிய தொடர்ப்பொருள்கள் பிறிதொன்றனை யவாவாது தனித்தனியே முடிய ஆற்றொழுக்குப்போல அறுதிப்பட்டுச் செல்லுதல். 2. ஒருதொடையும் அமையப்பெறாதது செந்தொடையென்பது பிற்காலயாப்பிலக்கண நூலார் கொள்கை. செயற்கையாகப் பறித்துத் தொடுக்கப்படும் மாலைபோலாது கொன்றையும் கடம்பும்போலத் தன்னியல்பில் அமைந்த தொடை செந்தொடையென்பது தொல்காப்பியனார் கருத்தாகும். ஆகவே ஒரீஇத்தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் நீக்கித் தொடுத்தல் செந்தொடை யென்றல் பொருந்தாது என்பதாம். 3. முற்கூறிய செய்யுளுறுப்புக்களுள் யாப்பு என்னும் உறுப்பு செய்யுளுட் கூறப்படும் பொருளை நோக்கியதாய் அடிவரம்பினதாய் அமையும். வண்ணமாகிய இவ்வுறுப் புப்பொருளை நோக்காது ஓசையையே கொண்டுநிற்கும். அவ்வோசை அடியினைக் கடந்தும் கொள்ளப்படும். எனவே யாப்பு வேறு, வண்ணம்வேறு, வண்ணம் யாப்பெனப்படாது என்பதாம். 1. இங்ஙனம் காட்டுபவர் பிற்கால யாப்பிலக்கண வுரையாசிரியர்கள், செந்தொடை என்பது தொடைப்பகுதியாதலின் அதனை வண்ணத்திற்கு உதாரணங் காட்டுதல் பொருந்தாது என்பதாம். 1. எண்ணுவண்ணம் என்பது எண்ணுதற் பொருளில் வரும் ஓசைத்திறமாகும். 2. அடியெண்ணுப் பயிறலாவது, நிலநீர்நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் என்றாங்கு அடிதோறும் எண்ணுதற்பொருள் பயின்று வருதல். எண் என்னும் ணகர வீற்றுப் பெயர். உகரச் சாரியை பெற்று எண்ணு என வழங்கப்பெற்றது. 1. எண்ணுவண்ணமாவது அடிக்கண்ணே எண்ணுப் பயின்று வருவது எ-று என்றிருத்தல் வேண்டும். எண்ணுவண்ணம் என்பது, செவ்வெண்ணினாலும் உம்மை யெண்ணினாலும் எனவெண்ணினாலும் என்றா வெண்ணினாலும் பிறவும் யாதானுமோர் எண்ணினாலும் வருவது என்பர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். 1. அகைத்தல்-தொடர்ந்துசெல்லும் ஓசையினை இடையிடையே துணித்து நிறுத்தல். 2. அகைத்தல்-பிளவுபட அறுத்தல்; வாராராயினும் என ஒருவழி நெடில் பயின்றும், வரினும் என ஒருவழிக் குறில் பயின்றும் ஓசையறுத்து நிற்றலின் இஃது அகைப்பு வண்ணமாயிற்று. 1. இச்செய்யுள் யாப்பருங்கலவிருத்தியிற் பின்வருமாறு காணப்படுகிறது. தொடுத்த வேம்பின் மிசைத்துதைந்த போந்தை அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர் அண்ணல் என்போன் இயன்ற சேனை முரசிரங்கும் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலினன் னவன் எனவரும். இங்ஙனம் அமைந்த செய்யுளமைப்பில் அறுத்தறுத்துச் சொல்லு மோசையாகிய அகைப்பு வண்ணம் புலப்படவில்லை. எனவே இச்செய்யுள் வடிவம் ஏடெழுதுவேரால் அடிபிறழ்ந்து வாசிக்கப்பெற்றதெனக் கருதவேண்டியுள்ளது. யாப்பருங்கல விருத்தியிலும் நச்சினார்க்கினிய ருரையிலும் காணப்படும் இச்செய்யுளடிகளை ஒப்புநோக்கி, தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை அடுத்தவ ரருமலை யட்டுண் டுண்ண ஆர்மலைப் பாட்டூர் அண்ண லென்பான் இயன்ற சேனைமுர சிரங்குந் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முடிக்கும் வேலின்னவன் என அடிவரையறை செய்யின் இச்செய்யுள், விட்டுவிட்டுச்செல்லும் ஓசையாகிய அகைப்பு வண்ணத்திற்கு இலக்கியமாதல் நன்கு புலனாம். 1. வஞ்சிப்பாவிற்குரிய தூங்கலோசையமையவரும் ஓசைத்திறம் தூங்கல் வண்ணமாகும். 2. இங்கு வஞ்சியென்றது, வஞ்சிப்பாவினையன்றி வஞ்சிப்பாவுக்குரிய தூங்கலோசை யினை யுணர்த்தியதாகக் கொண்டார் பேராசிரியர். 1. இங்ஙனம் மயங்கிக் கூறுவார் இன்னாரென்பது நன்கு புலப்படவில்லை. 2. தூங்கல் வண்ணம் என்பது, பெரும்பான்மையும் வஞ்சி பயின்று வருவது என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர். 3. இங்கு வஞ்சி என்றது, வஞ்சிப்பாவினைமட்டுங் குறிப்பதன்று; வஞ்சித் தூக்குப் போன்று அற்றுச் செல்லும் ஒசையினைக் குறிப்பதாகும். 4. சொல்லியசொற்களை மேலும்மேலும் தாங்கிநிற்றலால் ஓசை ஏந்தல் வண்ணமாகும். ஏந்தல் வண்ணத்திற்கு இத்தொல்காப்பியச் சூத்திரமே இலக்கியமாக அமைந்துள்ளமை காண்க. 1. சொல்லிய சொல்லினாலே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணம். எனவே, அதன்கண் முன்னர்ச் சொல்லப்பட்ட ஒரு சொல்லே பலவாக மிக்குவரும் எனக் கொண்டனர் உரையாசிரியர்கள். 2. ஏந்தல்வண்ணம் என்பது, சொல்லிய சொல்லிற் சிறந்து வருவது, என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 1. யாப்பருங்கலவிருத்தி மேற்கோள். 2. அராகம்-முடுகியல். முடுகியலாகவும் நெகிழாது உருண்ட ஓசையினதாகவும் வருவது உருட்டு வண்ணமாகும். 1. குற்றெழுத்துப்பயின்று வருதல் குறுஞ்சீர் வண்ணத்திற்கும் அராகத்திற்கும் ஒக்குமாயினும் குறுஞ்சீர் வண்ணம் நெகிழ்ந்த ஒசையதாய் வரும். அதுபோல் இடையறவுபட நெகிழ்தலின்றி விரைந்து உருள்வதுபோலும் ஓசையினதாகலின் அராகந்தொடுத்து வருவதாகிய இது உருட்டு வண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. 2. உருட்டுவண்ணம் என்பது, அராகத்தொடைமேல் வருவது என்பர் யாப்பருங்கல வுரையாசிரியர். 3. இங்கு எடுத்துக்காட்டிய அராகவுறுப்பு இவ்வியல் 125-ஆம் சூத்திரவுரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ள செஞ்சுடர் வடமேரு என்னும் முதற்குறிப்புடைய இடையளவு அம்போதரங்க ஒருபோகிற்கு உரியதாகும். 4. முடுகு வண்ணம் என்பது அடியிறந்தோடிய ததனோரற்றே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். இச்சூத்திரத்தின் முதலடியிலுள்ள முடிவறியாமல், என்ற தொடருக்குரிய விளக்கம் இளம்பூரண ருரையிற் காணப்படாமையாலும் இப்பாடம் ஏனைய உரையாசிரியர்களாற் குறிக்கப்படாமையாலும் இத்தொடர் பிற்காலத்தில் ஏடெழுதுவோராற் சேர்க்கப் பெற்றதெனவே கொள்ளவேண்டியுளது. 1. இங்கு அடி என்றது நாற்சீரடியினை. இறந்து ஓடுதல்-நாற்சீரெல்லைமிக்கு ஐஞ்சீர் முதலாக நீண்டு செல்லுதல். அதனோரற்று-மேற்குறித்த அவ்வராகத்தினையொத்து முடுகிச் சொல்லும் அத்தன்மையதாகும். 2. அடியிறந்தோடி என்பதற்கு ஏற்ப நாற்சீரடியின் மிக்கு ஓடி என உரைப்பகுதியைத் திருத்துக. அடியென்றது நாற்சீரடியினை இறந்து ஓடுதலாவது, நாற்சீரடியினைக் கடந்து மிக்க சீர்களையுடைய அடியினதாய் விரைந்து செல்லும் ஓசையினதாதல். 3. அதனோரற்று - (மேற்குறித்த) அராகத்தோடு ஒக்கும். எனவே நாற்சீரடியுட்பட்டு உருண்ட ஓசையினதாய் வருவது உருட்டு வண்ணம் எனவும், நாற்சீரடியினைக் கடந்து விரைந்த ஓசையினதாய் வருவது முடுகுவண்ணம் எனவும் இவ்விரண்டற்குமுள்ள வேறு பாட்டினை விளங்கயுணர்த்தியவாறு நன்கு பெறப்படும். அராகந்தொடுத்த அடியொடு பிறவடி தொடர்ந்தோடுவது எனவும் பாடம் உண்டு. முடுகுவண்ணம் என்பது, அடியற்ற வழி அறியலாகாதாய் நீண்ட அடித்தாய் அராகம் தொடுத்து வருவது என்னை? முடுகு வண்ணம் முடிவறி யாமல் அடியிறந் தொழுகு மதனோ ரற்றே என்றாராகலின் என வரும் யாப்பருங்கலவிருத்தியுரையில் இத்தொல்காப்பியச் சூத்திரம் பாடவேறுபாட்டுடன் எடுத்தாளப் பெற்றுள்ளமை ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும். 1. இவ்வேறுபாடு நோக்கி என்றிருத்தல் வேண்டும். 2. வண்ணந் தாமே யிவையென மொழிப எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டனர். 1. இயற்றமிழில் வண்ணம் என்பன இவ்விருபதுக்குமேல் இல்லையென முன்னோர் முடித்துக் கூறினர் என்பார் வண்ணந்தாமே அவையென மொழிப என்றார். அவை மேற்கூறப்பட்ட அவ்விருபதும். 2. வண்ணந் தாம் இவையேயெனமொழிப என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டிப்பாட்டின்கண்ணே ஓசை வேற்றுமை செய்வனவாகிய வண்ணங்கள் மேற்கூறிய இருபதுமன்றிப் பிறிதில்லையென்பார் சந்தவேற்றுமை செய்வன இவையல்லதில்லை எனப் பொருள் வரைந்தார் பேராசிரியர். 3. நான்கு பா ஆவன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்பன. 4. அவை மயங்கிய பொதுப்பா என்பன மருட்பா, பரிபாடற்பா என்னும் இரண்டு மாகும். உறழ்தல்-பெருக்குதல். 1. பேராசிரியர் உரையினை அடியொற்றியமைந்தது. 1. வனப்பியல் தானே வகுக்குங் காலை, சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. எனப்பாடங்கொள்வர் பேராசிரியர். சில்மொழி மென்மொழி எனத்தனித்தனி இயையும். அடிநிமிர்வு இன்று-அடிகள் ஏறி (மிக்கு) வருதல் இல்லை. 1. சின்மென்மொழியாற் சீர்புனைந்து யாக்கப்பெற்று அடிநிமிர்வின்றி வருஞ் செய்யுள் அம்மையென்னும் வனப்புடையதாகும் என்பதாம். 2. செய்யுளியல் முதற்சூத்திரத்தில் மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட இருபத்தாறுறுப்புக்களும் ஒவ்வொரு செய்யுட்கும் இன்றியமையாதமைய வேண்டிய உறுப்புக்களாகும். அச்சூத்திரத்தில் அம்மை முதலாகப் பிற்கூறப்பட்ட எண்வகை யுறுப்புக்களும் பல செய்யுளுந் திரண்டவழித் தொகுக்கப்படும் அழகியலுறுப்புக்களாகும். இவை பெரும்பாலும் பலவுறுப்புந் திரண்டவழியமைதலின் பலசெய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய நிலைக்கண் வருதலின் வனப்பெனப் பெயர் பெற்றன. 1. தனிச் செய்யுட்குரிய இருபத்தா றுறுப்போடும் எண்வகை வனப்பினையும் இயைத்துக் கூறியது இவை தனிவரும் செய்யுட்கும் பொருந்தும் என்னும் கருத்தினாலேயாம். 2. முற்கூறிய இருபத்தாறுறுப்புக்களும் இவைபோலன்றித் தனிச்செய்யுட்கும் தொடர்நிலைச் செய்யுட்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். 3. இவ்வாறு செய்யுட் குரிய வுறுப்புக்களை இருபத்தாறும் எட்டும் என வகுப்பவே வனப்பென்பன தனிநிலைச் செய்யுண் முற்கூறப்படா, இத்தொடர்நிலைச் செய்யுட்கு முற்கூறப்படும் என்பதாம். 4. அம்மை முதலாக எண்ணப்பட்ட இவ்வெட்டிற்கும் வனப்பு என்னும் பெயர் எய்துவித்தற்பொருட்டு ஆசிரியர் தொல்காப்பியனார், வனப்பியல் தானே வகுக்குங் காலை என இச்சூத்திரத்துத் தோற்றுவாயாக முன்மொழிந்தார் என்பதாம். இவ்வடி இளம்பூரணருரையில் இடம் பெறவில்லை. 1. அடிநிமிர் வில்லது என ஒருமையாற் கூறினும் அங்ஙனம் அடிநிமிர்வின்றிவரும் செய்யுள் உறுப்பாக அச்செய்யுட்கள் பல தொடர்ந்துவரும் தொடர் நிலைக்கண் அமைந்ததே அம்மையென்னும் வனப்பாமெனக் கொள்க. 2. இருவகையாவன: அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுதல் போன்று அமைதலும் அவையன்றி வேறிடையிடையே இலக்கியங்கூறுதல் போன்று அமைதலும் என இருவகை. 1. இங்ஙனம் பாடங் கொண்டோர் இளம்பூரணரும் பேராசிரியரும். அம்மையாவது, சிலவாய் மெல்லியவாய சொற்களால் ஒள்ளியவாய பொருண்மேற் சிலவடியாற் சொல்லப்படுவது என்பார் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 1. செய்யுள்மொழியாவன இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. 2. பொலிவுபட யாப்பின் (அப்) பொருள் (வகை) அழகு. எ-று என இவ்வுரைத் தொடர் அமைதல் பொருத்தமுடையதாகும். 1. மூவடிமுப்பது என்பது இன்ன நூலெனத் தெரியவில்லை. அது மூன்றடிகளால் இயன்ற முப்பது பாடல்களைப் பெற்றமையால் மூவடி முப்பது என்னும் பெயர்த்தாயிற்றுப் போலும். அது இடையிட்டுத் தாவிச் செல்லும் பொருள்வகை பற்றிய இலக்கியமாக அமையாமையின் அம்மை யெனப்படா எனவும் செய்யுள் மொழியாற் சீர் புனைந்தியாத்தமையின் அழகெனப்படும் எனவும் வேண்டுந் தொடர்களை வருவித்து இவ்வுரைப்பகுதியினை யமைத்துக்கொள்ளுதல் பேராசிரியர் கருத்தாக இருக்குமோ என்பது சிந்தித்தற்குரியதாகும். 2. அழகாவது செய்யுட் சொல்லாகிய திரிசொல்லினால் ஓசை இனியதாக நன்கியாக்கப்படுவது என்பர் யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர். 1. சொல்லுங்காலை என்ற தொடர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளில் இல்லை. 2. நெடுங்காலத்துக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பெறும் இலக்கியம் தொன்மை யென்னும் வனப்புடையதாகும் என்பது இளம்பூரணர் கருத்தெனத் தெரிகிறது. 3. தொன்மை - பழமை; என்றது பழைய வரலாற்றைப் பொருளாகக் கொண்டு உரையும் பாட்டும் விரவிய நடையில் இயற்றப்பெற்ற நூலாகும். 1. தொன்மையாவது, பழைமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவனவற்றின் மேற்று என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர். 1. தொன்மொழிப்புலவர் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். இழுமென்மொழியாவது இழும் என்னும் இன்னோசையுடைய மெல்லென்ற சொல்லானாயது. பரந்தமொழியாவது விரிந்து பரவிய சொற்களானாயது. தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்பதாம். 1. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயப்பமெல்லெனும் இனிய சொல்லமையக் கொச்சகக் கலியினாற் செய்தலும் பரந்து விரிந்த சொல்லமையை ஆசிரியப்பாட்டாற் செய்தலும் எனத் தோல் என்னும் வனப்புடைய பொருட்டொடர் நிலை இருவகைப்படும் என்பதாம். 1. தோல் என்பது. இழுமென்று மெல்லியவாய சொற்களால் விழுமியவாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களோடுங் கூடிய பலவடியை உடையனவாய்க் கிடப்பனவும் என இரண்டு வகைப்படும் என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமுமென நான்கினீக்கிய பாவினைத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும் விரிவரையறையான் ஆறென விரித்தும் அவற்றை அறம் பொரு ளின்பத்தாற் கூறுக வென்றுங் கூறிப்பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணமென்று கூறியவர். இழுமென்மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகினும்; (தொல்-செய்-218) என்பதனால் குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப ஒருகதைமேற் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா, வெண்கலிப் பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக வென்றமையால், இத்தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனங் கூறிய தொடர்நிலை யெனவுணர்க என அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்திற் கூறிய விளக்கம் எண்வகை வனப்பினுள் தோல் என்னும் வனப்பின் இயல்பினை இனிது புலப்படுத்துதல் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். 2. செய்யுளியல் 149-ஆம் சூத்திரவுரை நோக்குக. 1. கிளந்த என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையிலுள்ள பாடம்லிருந்து-புதுமை; புதுமையான் இயன்ற யாப்பிற்கு ஆகுபெயர். 2. ஒருவன்சொன்னநிழல் என்றது, புலவனொருவன் இயற்றிய யாப்பின் சாயலை, நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல் என்பது, பிறறொருவர் செய்த யாப்பினை அடியொற்றிச் செய்தலன்றித் தானே புதியதொரு யாப்பினை அமைத்துக் கொண்டு செய்தல். திருஞானசம்பந்தப்பிள்ளையார் முதலிய அருளாசிரியர்கள் தாமே புதுவது புனைந்த சொன்மாலை விருந்து என்னும் வனப்புக்குரிய இலக்கியமாகும். விருந்தாய சொன்மாலை என்பது ஆளுடையபிள்ளையார் அருளிச் செயல். 1. விருந்து-புதுமை; என்றது புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலைச் செய்யுளை; விருந்தேதானும் என்னும் உம்மை முற்கூறிய தோலே யன்றி விருந்தும் என இறந்தது தழீஇ நிற்றலின் தோல் என்பது பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதெனவும் இங்குக் கூறப்படும். விருந்து என்பது பொருள் பழயை தாயினும் புலவன் தான்விரும்பிய புதிய யாப்புவகையாற் பல செய்யுளுந்தொடர்ந்து வரச் செய்வது எனவும் விளக்குவர் பேராசிரியர். 2. விருந்து என்பது, புதியவாயினவற்றின்மேற்று. அவை இப்பொழுதுள்ளாரைப் பாடும் என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 3. பேராசிரியர் உரையினை அடியொற்றி யமைந்தது இவ்விளக்கம். 1. ஞகாரை முதலா னகாரை யீற்றுப் என்பது பேராசிரியரும் ஞகாரைமுதலா ளகாரை வீற்றுப் என நச்சினார்க்கினியரும் பாடங் கொள்வர். 2. என் என முடியும் இறுதியையுடைய மணிமேகலைப் பாட்டுக்களை இயைபு என்னும் வனப்புக்குரிய இலக்கியமாகக் கொள்ளலாம். 1. ஞணநமன, யரலவழள என்னும் பதினொரு மெய்களுள் னகர வீற்றான் முடிவன வாகிய தொடர்நிலைச்செய்யுள் மணிமேகலையும் கொங்குவேண்மாக்கதையும் ஆகும். ஏனைய பத்து மெய்யீறுகளால் முடிவனவாகிய தொடர்நிலைச் செய்யுட்கள் கிடைக்கவில்லை. அவை இக்காலத்து வழக்கு வீழ்ந்தன போலும் எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அவர் காலத்திலேயே அவை கிடைக்கவில்லை யென்பது நன்கு புலனாம். 2. பரந்தமொழியான் அடிநிமிர்ந் தொழுகிய தோல் என்னுந் தொடர்நிலை உயிரீற்றவாதல் பெரும்பான்மை. இயைபு என்னும் இத்தொடர்நிலை ஞகர முதலிய பதினொரு புள்ளிகளுள் ஒன்றால் முடிவன. இவைதம்முள் வேற்றுமை. 3. சொற்றொடர் என்பது அந்தாதி எனப்படுவது என்றதனான் உயிரீற்றுச் சொற்றொடர் சிறுபான்மையென்பது கொள்க என இவ்வுரைத் தொடரைப் பிரித்துப் படித்தல் வேண்டும். 1. இயைபு என்பது, ஞணநமன யரலவழள எனப்பட்ட பதினொரு புள்ளியீறாய் வந்த பாட்டெல்லாம் என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர். 2. இவ்விளக்கம் பேராசிரியர் உரையை அடியொற்றியது. 1. சேரிமொழியாற் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். ஓதல்வேண்டாது என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். 2. தெரிந்தமொழி-எல்லார்க்கும் பொருள்தெரிந்த வழக்குச்சொல். தேர்தல் ஆராய்தல், குறித்தது-புலவன் மனத்துட்குறித்த பொருள். 3. பாடிமாற்றங்கள் - சிற்றூர்ப்பேச்சு வழக்கு; இதனைக் கிராமிய வழக்கு என்பர் இக்காலத்தார். 4. ஆராய்ந்து காணாமற் பொருள் எளிதில் விளங்கும்படி. 1. விளக்கத்தார் கூத்து என்பது பேராசிரியர் காலத்து வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாகும். இது எல்லார்க்கும் பொருள் இனிது புலனாக நாடகத் தமிழுக்குரிய வெண்டுறைச் செய்யுட்களால் இயன்றமையின் புலன் என்னும் வனப்பிற்கு இலக்கியமாயிற்று. 2. புலன் என்பது, இயற்சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 3. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது என்றமையான் ஒற்றொடு புணராத வல்லெழுத்து வருமென்றாராயிற்று. 1. ஆங்கனமொழுகின் எனப் பேராசிரியரும் ஆங்ஙனமொழுகின் என நச்சினார்க் கினியரும் பாடங் கொள்வர். 1. ஒற்றொடுபுணர்ந்த வல்லெழுத்துப் பயின்றுவருதல் இசைநுட்பத்திற்குத் தடை வாராதாகலின் ஒற்றொடுபுணர்ந்த வல்லெழுத்தடக்காது என்றார். அடக்குதல்-தன் கண் பலவாகச் செறித்தல். 2. இருசீரடி, முச்சீரடி, நாற்சீரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐந்தடிகள். 3. ஒப்பித்தலாவது நாற்சீரடியுடன் ஒத்து அமையுமாறு செய்தல். 4. ஓங்கிய மொழியாவது இசையினை வளர்த்துப் பாடும் முறையில் நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஓசையெழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல். 5. ஆங்ஙனம் ஒழுகுதலாவது இவ்விசைப்பாடல்களும் முற்கூறிய நாடகச் செய்யுள் போன்று வழக்குச் சொற்களாலே பொருள் விளங்கும்படி அமைந்தொழுகுதல். 6. செந்துறைமார்க்கத்தன-இசைப்பாடல் நெறியில் அமைந்தன. இவைமெய்ப்பாடு தோன்றப் பாடுதற்குரியவாதல் நோக்கி ஆராய்தல் வேண்டாது பொருள் இனிது விளங்க அமைதல் வேண்டும் என்றார் ஆசிரியர். 1. இசைத்தமிழ் நெறிக்குரிய இழைபு என்னும் வனப்பாகிய இதனை நாடகத்தமிழ் நெறிக்குரிய புலன் என்னும் வனப்பாகிய வெண்டுறைச் செய்யுளுக்கு முன் வைத்தல் முறையாயினும் இயற்றமிழிலக்கணத்தின்பின் இனிக் கூறத்தகுவது இசைத் தமிழிலக் கணமாதலால் அதற்கு உபகாரப்படுதல் கருதி இதனை இறுதிக்கண் வைத்தார் தொல்காப்பியனார் என்பதாம். 2. இழைபு என்பது, வல்லொற்று யாதுந் தீண்டாது செய்யுளியலுடையாரால் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலியவாய்ப் பதினேழ்நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 3. தேர்தல் வேண்டாமற் என்றிருத்தல் வேண்டும். 4. எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலாகவுள்ள ஐந்தடிகளும் நாற் சீரடியினை நிலைக்களமாகக் கொண்டனவாதலின் ஒழிந்த நான்கடி என்பன குறளடி, சிந்தடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் நான்குமாகும். 5. இவை யவிநயத்திற்குரியவாதலிற் என்றிருத்தல் வேண்டும். 1. யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் முதலியோர் கூறிய சித்திரகவிகள் யந்திரமும் மந்திரமுமாய்த் தெய்வத்திற்கேயுரியவாகக் கூறப்படுதலானும் மாத்திரை முதலிய முப்பத்து நான்குறுப்புப்போல அகனைந்திணைக்குரிய சான்றோர் செய்யுட்கு உறுப்பாய் வாராமையானும் திணைக்குரிய மரபு வழுவிற்றென்று கருதி ஆசிரியர் தொல்காப்பியனாராற் கூறப்படாமை யானும் அன்னோர் வடவெழுத்தொரீஇய சொல்லானன்றி வடவெழுத்தாற் பெரும்பான்மை வரச் செய்யுள் தாமேசெய்து இலக்கியமாகக் காட்டினாராதலானும் தமிழிலக்கண மரபொடு பொருந்தாத மிறைக்கவிக்கு இலக்கணம் இங்குக் கூறாது விடுத்தோம் என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம், தமிழ் மரபிற் சிதையாதனவே சான்றோராற் செய்யுளெனக் கொள்ளத்தக்கன என்னும் அவரது உள்ளக் கருத்தைத் தெள்ளிதிற் புலப்படுத்தல் காணலாம். 1. வருவ வுளவெனினும் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். வருப வுளவேனும் என்பது நச்சினார்க்கினியருரையிலுள்ள பாடம். மெய்பெறநாடி பொருள் பெற ஆராய்ந்து. வருவ-இனித்தோன்றுவன. 2. திரிவின்றி எனவும் பாடம். 1. பிழைத்ததுபோல என்பது இளம்பூரணருரையிற்கண்ட பாடம். பிழைத்தனபோல என்பது பேராசிரியர் நச்சினார்க்கினிய ருரைகளிற் கண்ட பாடம். வருவன வுளவெனும் என்பது இளம்பூரணருரையிற் கண்ட பாடம். வருபவுளவெனினும். வருப வுளவேனும் என்பன பேராசிரியருரைப் பதிப்பிலும், நச்சினார்க்கினிய ருரையிலும் காணப்படும் பாடங்களாகும். இந்நூலிற் கூறப்பட்ட எழுசீரடியின் மிக்கு எண்சீர் முதலாயின வரின் அவற்றைக் கழிநெடிலடியின்பாற் சார்த்திக் கொள்ளுதலும் ஏது நுதலிய முதுமொழியோடு பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர்புபடுக்குந் தொடர்கள் வரின் அவற்றையும் எழுத்து முதலா ஈண்டிய அடியிற் குறித்த பொருளை முடியநாட்டும் யாப்பு என்னும் உறுப்பின்பால் அடக்கிக் கொள்ளுதலும் பிறவும் ஆக இந்நூலில் விரித்தோதப்படாதன வுளவெனின் அவையெல்லாமும் செய்யுளியலக் கணமுடிபாகும் என்பது இப்புறனடையாற் கொள்ளப்படும் என்றவாறு. 2. தந்திரஞ்செய்யப்பட்ட-நூலாக இயற்றப்பட்ட. தந்திரம்-நூல்.