தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 19 தொல்காப்நியம் - பொருளணிகாரம் செய்ஜிஹீயல் (முதல் பகுணி) ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை: 19 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் (முதல்பகுதி) ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 600 = 616 படிகள் : 1000 விலை : உரூ. 580/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் அணிந்துரை டாக்டர். இராம. பெரியகருப்பன் மதுரைக்காமராசர் (தமிழண்ணல்) பல்கலைக்கழகம் பேராசிரியர், துறைத்தலைவர் மதுரை - 625 021 தமிழியல் துறை, 3--4--1989 இந்திய மொழிப்புலம் தொல்காப்பியம் என்னும் தமிழ் முதல்நூல் இன்னும் உலகிற்கு முறையுற உணர்த்தப்படாமலேயே இருக்கிறது. தமிழரிலும் அப்பெருநூலைக் கற்றவர்கள் விரல்விட்டு எண்ணத் தக்கவர்களாகி விட்டனர். அரிடாட்டில், பரதமுனிவர், பாணினி என்ற வரிசையில் வைத்து எண்ணத்தகுந்த இவர்தம் நூற் கருத்துக்கள் உணரப்படாமலும் உணர்த்தப்படாமலும் போவது நினைந்து இரங்குதற்குரியதாகும். பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களைக் கொண்டு தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரைவள நூல்களை, மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருவது மேற்கூறிய குறையினை அகற்றுவதற்கு மிகுதியும் பயன்படும் பணியாகும். இப்பல்கலைக் கழகத்தில் தமிழியற்புலம் என்று ஒன்று தொடங்கப்பட்ட பொழுது அதன் முதல் ஆய்வறிஞராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்தவர் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கள் இங்குப் பணிசெய்த காலத்தில் புறத்திணையியல் முதல் உவமயியல் ஈறானவற்றிற்கு மட்டுமே உரைவளம் பதிப்பை உருவாக்கினார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழத்தில் இலக்கியத் துறைத் தலைவராக அவர்கள் செல்ல நேரிட்டதால் செய்யுளியல், மரபியல் ஆகிய இரண்டும் நிறைவுறாமல் எஞ்சி நின்றன. பொருளதிகாரம் முழுமைக்கும் உரைவளம் வேண்டும் என்ற எம் விருப்பத்திற் கிசைய அன்னார் பணியினின்று சென்ற பிறகும் இதே நினைவாக இருந்து, இப்பின்னிரண்டு இயல்களையும் உரைவளப்பதிப்புக் களாக எழுதித் தந்தார்கள். பணியிலிருக்கும் பொழுதே கடமையை மறந்துவிடும் இக்காலத்தில் பணியை விடுத்துச் சென்றபிறகும் கடமையை முடித்துத் தந்த பேராசிரியரது பணி நன்றியறிதலுடன் போற்றத் தக்கதாகும். இந்நூல் வரிசை சிறந்த அமைப்புடையதாய், இளம்பூரணர் முதல் சோமசுந்தர பாரதியார் வரையிலான உரைகளை உடைய தாய்த் திகழ்கின்றது, ஒவ்வொரு நூற்பாவின் இறுதியிலும் உள்ள வெள்ளைவாரணனாரின் ஆய்வுரைக் கருத்துத் தெளிவுதந்து தொல்காப்பியக் கல்விக்கு வழிகாட்டுவதாய் அமைகிறது. மேலும், வெள்ளைவாரணனார் தாம் தந்திருக்கும் அடிக்குறிப்புக்களின்வழி மூலத்திலும் உரையிலும் கண்டிருக்கும் பிழைபாடுகளை நீக்கத் துணைபுரிகின்றார். ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இப்பதிப்புக்கள் பெரிதும் பயன்படும். மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்திற்கும், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களுக்கும் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது. இவ்வுரைவளப் பதிப்புக்களின்வழித் தொல்காப்பியக்கல்வி வளரும் வகை செய்தல் வேண்டும். அதுவே அமரராகிவிட்ட பெரும் பேராசிரியர் வெள்ளைவாரணனாருக்குத் தமிழுலகம் செய்யும் அஞ்சலியாகும். தமிழண்ணல் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகம் --- அகநானூறு ஆசாரக் --- ஆசாரக் கோவை உ. வே --- உரைவேறுபாடு ஐங்குறு --- ஐங்குறுநூறு கலி --- கலித்தொகை குறுந் --- குறுந்தொகை சிந் --- சீவகசிந்தாமணி சிலப் --- சிலப்பதிகாரம் சீவக --- சீவகசிந்தாமணி சீவகசிந் --- சீவகசிந்தாமணி சூளா --- சூளாமணி திருமுரு --- திருமுருகாற்றுப்படை நற் --- நற்றிணை நன் --- நன்னூல் நாலடி --- நாலடியார் நான்மணி --- நான்மணிக்கடிகை நெடுநல் --- நெடுநல்வாடை பத்து --- பத்துப்பாட்டு பா. வே --- பாடவேறுபாடு பு. வெ --- புறப்பொருள் வெண்பாமாலை புறம் --- புறநானூறு பெரும்பாண் --- பெரும்பாணாற்றுப்படை மலைபடு --- மலைபடுகடாம் முத்தொள் --- முத்தொள்ளாயிரம் மொழி --- மொழிமரபியல் யா. காரிகை --- யாப்பருங்கலக் காரிகை யா. வி --- யாப்பருங்கல விருத்தி வெண் --- புறப்பொருள் வெண்பாமாலை பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி. பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறைத் தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழிகாட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரையாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், துறைத் தலைவர், புலமுதன்மையர் (1977 - 79) மதுரைக்காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக்கழகம் - இலக்கியத்துறைத் தலைவர், சிறப்புநிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாயப்பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ்மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி. தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம், நன்னூல் - எழுத்ததிகாரம் (1962), (அ.நகர்) சேக்கிழார் நூல்நயம் - (1970) சென்னை. பன்னிருத்திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிருத்திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969), (தமிழக அரசு பரிசு பெற்றது). தில்லைப்பெருங்கோயில் வரலாறு (1984), சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம். திருவருட்பாச் சிந்தனை - (1986), சிதம்பரம், (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர்வரலாறு (சுருக்கம்) 1986, அரிமணம். தொல்காப்பியம் பொருளதிகாரஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்தத்தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத்திருவந்தாதி, (1970), சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982), திருப்பனந்தாள், 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973), சிதம்பரம். 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள், (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. அபதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரைக்காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்தச்செம்மல் - தூத்துக்குடிச்சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதீனம் (1971) 3. திருமுறை உரைமணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர்குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளித்தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவுப் பொற்கிழி (1986) தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் (முதல் பகுதி) தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் உரைவளம் 1. மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ யாத்த சீரே அடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை எனாஅ நோக்கே பாவே அளவியல் எனாஅ திணையே கைகோள் பொருள்வகை எனாஅ கேட்போர் களனே காலவகை எனாஅ பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ முன்னம் பொருளே துறைவகை எனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இளம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து. செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மை யெல்லாவற்றிற்கும் இஃதிடமாதலின்1 அவற்றின்பிற் கூறப்பட்டது. இதன் றலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யு ளுறுப்பெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இதன்பொருள்) மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்துநான்குஞ் செய்யுட்கு உறுப்பென்றவாறு. பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறினோடும் ஒரு நிகரன அன்மையின்.1 வேறுதொகை கொடுக்கப்பட்டது. அவை யாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும். (1) பேராசிரியம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து; செய்யுளிலக்கணம் உணர்த்தினமையான் அப்பெயர்த்தாயிற்று. எனவே ஓத்து நுதலியதூஉஞ் செய்யுளிலக்கண முணர்த்தலென்பது பெற்றாம். மேற் பாயிரத்துள், வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் (தொல். பாயிரம்) ஆராய்வலென்று புகுந்தமையால், எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன விராய்க்கூறிப் பொரு ளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிவந்தான், அப்பொருள்பற்றிச் செய்யுள் கூறுமாதலின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கணமெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்தென்பது.2 எனவே, முற்கூறிய எழுவகையோத்தும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வென்பதூஉம், இது செய்யுட்கே உரித்தென்பதூஉம் பெற்றாம். மற்றிதனை யாப்பதிகாரமென வேறோரதிகாரமாக்கி உரைப்பாரு முளர்; அங்ஙனங் கூறின் வழக்கதிகாரமெனவும் வேறு வேண்டுமென மறுக்க; அல்லதூஉம் எழுத்துஞ் சொல்லும் பொருளுமென மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகாரமொன்றற்கு ஒன்பதோத்தாகத் தந்திரஞ் செய்ததனோடு மாறுகோளாம் இதனை வேறதிகாரமென் பார்க்கென்பது1. மற்று, ஓத்துநுதலிய தெல்லாம் நுதலுவதன்றே ஓத்தினுள்வைத்த சூத்திரம்; அதனான், இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வோத்தினு ளுணர்த்தப்படுகின்ற செய்யுட் குறுப்பாவன இவையெனவே.2 அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.3 (இ-ள்.) இக்கூறப்பட்ட முப்பத்துநான்கும் பேரிசைப்புலவர்4 செயப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென அவ்வாறு செய்தல் வன்மையால் கூறினார் புலவர் (எ - று). அப்பெயர்-பெயர்; அம்முறை-முறை; அத்தொகை-தொகை. தொகை ஆறுதலையிட்ட அந்நாலைந்து மெனவும், எட்டெனவும் இருவகையால் தோன்றக் கூறியது, ஏனைய போலாமல் எட்டுறுப்பும் ஓரோர் செய்யுட்கு ஒரோவொன்றேயும் வருமென்ப தறிவித்தற்கும். அவைதாம்.1 அச்செய்யுள் பல தொடர்ந்தவழியே பெரும் பான்மையும் உறுப்பாமென்ப தறிவித்தற்கும் அவ்வாறுகூறினார் என்க. எனவே, ஒழிந்த உறுப்பிருபத்தாறும்2 ஒன்றொன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். இனி மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவையென்றவாறு.3 மாத்திரையது மாத்திரையினை ஈண்டு மாத்திரையென்றான். அது மாத்திரையளவும், (314) என்றதனாற் பெற்றாம். எழுத்தியல் வகையென்பது, மேற்கூறிய எழுத்துக்களை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.4 அசைவகை யென்பது, அசைக்கூறுபாடு;5 அவை இயலசையும் உரியசையு மென இரண்டாம். ah¤jÓbu‹gJ, (360) பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு; எனவே, அசைபல தொடர்ந்து சீராருங்கால் அவ்வசையுந் தத்தம் வகையாற் பொருள்பெற்று நிற்றலும் அவ்வாறன்றிச் சீர்முழுவதும் ஒரு சொல்லாங்கால் அவ்வசை பொருள் பெறாது நிற்றலும் அடங்கின. தேமா என்று பொருள் வேறுபெற்றன; சாத்தன் எனப் பொருள் வேறு பெறாது நின்ற அசையாற் சீர்யாத்து நின்றது. பொருள்பெற நின்ற எழுத்தும் அசையுஞ் சிறப்புடைய bt‹ghUKs®.6 அற்றன்று பொருள்பட நிற்பன எழுத்து யாண்டு மின்மையானும், பொருள் பெறநின்ற அசையானாகிய தேமாவென்னுஞ் சீரும் அவ்வசைச் சிறப்பினாற் சிறப்புடைச் சீரெனப்படாமையானும் சாத்தனெனத் தன்பொரு ளொடு தான் துணிந்து நின்றவழி அதுவுஞ் சிறப்புடைச் சீரெனவும் படுமாதலானுமென்பது.1 moba‹gJ, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு. ah¥bg‹gJ, அவ்வடிதொறும் பொருள்பெறச் செய்வதோர் செய்கை. kubg‹gJ, காலமுமிடனும் பற்றி வழக்குத் திரிந்தக்காலுந் திரிந்த வற்றுக்கேற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை. மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும் மரபியலுள் உரைப்பன வற்றுக்கும் இதற்கும் வேற்றுமையென்னை யெனின், இது செய்யுட்கே உரித்து; அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வென்பது; அல்லதூஉம் அவற்றது வேறுபாடு முன்னர் அகத்திணையியலுள் கூறிவந்தாம்2 தூக்கென்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல். bjhiltifba‹gJ, தொடைப் பகுதி பலவுமென்றவாறு : அவை வரையறையுடையனவும் வரையறையில் லனவுமென இருவகைய.3 இப்பகுதி யெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃதொக்கும்.4 neh¡bf‹gJ,kh¤âiu முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. msÉaby‹gJ, அப் பாவரையறை. âizba‹gJ, அகம் புறம் என்று அறியச் செய்தல். கைகோளென்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்; அது களவுங் கற்பும். T‰Wtifba‹gJ, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல். இவை யென்பது பாடமாயின், எண்ணிய மூன்றனையுந்தொகுத்தவாறே பிறிதில்லை.1 nf£nghbu‹gJ இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல். கள னென்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச்செய்தல். மற்றுத் தன்மை முன்னிலை படர்க்கையுமாம். fhytifba‹gJ, சிறுபொழுது பெரும்பொழு தென்னுங் காலப்பகுதி முதலாயின. gabd‹gJ, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். மெய்ப்பா டென்பது சொற் கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல். v¢rtifba‹gJ, (518) சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்: அது கூற்றினுங் குறிப்பினும் வருதலின் வகையென்றான், முன்ன மென்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோருந் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்.2 bghUbs‹gJ, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவ தோர் பொருண்மை.3 Jiwtifba‹gJ, முதலுங் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற் படுமென்று ஒரு துறைப்படுத்தற் கேதுவாகியதோர் கருவி அச்செய்யுட் குளதாகச் செய்தல்; அவையும் பலவாதலின் வகையென்றானென்பது. kh£bl‹gJ, பல்வேறு பொருட்பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர்கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல். t©zbk‹gJ, ஒருபாவின்கண்ணே நிகழும் ஓசை விகற்பம், எனாவென்பன, எண்ணிடைச் சொல். யாப்பியல்வகையின் ஆறுதலையிட்ட அந்நாலைந்து மென்பது, யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறு மென்றவாறு. இவை யாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதியவென விதந்தோதவே, இனிக் கூறும் உறுப்பெட்டும் இன்றியமையாமை இல்லை யென்றவாறு. அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ யென்பது, இக்கூறப்பட்ட எண்வகை வனப்பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறுந் தொகுப்ப முப்பத்து நான்குறுப்பா மென்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்குக் காரணம் அவற்றைக் கூறும் வழிச் (547) சொல்லுதும். நல்லிசைப் புலவர் செய்யுளென்பது, இவ்வுறுப்பனைத்துங் குறையாமற் செய்யப்படுவன நல்லிசைப் புலவர் செய்யுஞ் செய்யு ளெனப்படு மென்றவாறு. நல்லிசைப்புலவர் செய்யுள் எனவே எழுநிலத்தெழுந்த (391,476) செய்யுளுள்ளும் அடிவரையறை யுடையவற்றுக்கே இவ்விலக்கண மென்பதூஉம், திணையே கைகோளெனக் கூறும் உறுப்பு முதலாயினவெல்லாம் ஏனை அறுவகைச் செய்யுட்கும் (476-7) உறுப்பாகா வென்பதூஉம் அவையொழிந்த உறுப்பினுள் ஏற்பன பெறுமாயினும் ஆண்டு வரையறையின்மையிற் கூறானென்பதூஉம், அவை செய்தாரெல்லாம் அவற்றானே நல்லிசைப் புலவரெனப்படா ரென்பதூஉம் பெற்றாம்.1 இனி, நூலும் உரையுஞ் செய்தார் நல்லிசை யுடையரென்பது, அவற்றை நூலினான் உரையினானென இதற்கு இடையின்றி வைத் தமையிற் பெறுதுமென்பது. வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனர். நல்லிசைப் புலவரென்பது, அவற்றை நூலினான் இனி இங்ஙனங் கூறிய1 நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தார், எல்லா வற்றானும் எல்லாமமையச் செய்யுஞ் சுவடுடையராகி அவ்வத்துறை போயினார் தாழும் என்றவாறு; எனவே, இவ்வுறுப்பமையச் செய்தனவே செய்யுளெனப் படுவனவென்று சிறப்பித்தவாறு. மற்றுக் கூறி யெனவும் உரைத்தனரெனவும் இருகாற் சொல்லியதென்னையெனின்,- அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தா ரென்றவாறு; என்றார்க்குச் செய்யுட்குற்றம் ஈண்டோதாரோவெனின், ஓதல்வேண்டுமே? இவ்விலக்கணத்துப் பிறழ்த்துங் குன்றியும் வருவனவெல்லாம் வழுவென்பதறிய வைத்தானல்லனே, ஆசிரியனென்பது. மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார்; செய்யுள் யாண் டோதுபவெனின், அறியாது கடாயினாய், உறுப்பென்பன உறுப்புடைப் பொருளின் வேறெனப்படா; பொருள் எனப்படுவன உறுப்பே, அவற்ற தீட்டத்தினை முதலென வழங்குபவாகலான் உறுப்பினையே சொல்லியொழிந்தார்; முதற்பொருள திலக்கணமென உறுப்பிலக்கணத்தினையே வேறுபடுத்துக் கூறலாவதின்மையானும் உறுப்புரைப்பவே அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலாற் பெறலாமாகலானுமென்பது.2 மற்று, யாத்தசீரே யடியாப் பென்றதென்னை? தளையென் பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இருவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப, தளைத்தலிற் றளையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை, சீரின்றி அடியுமில்லையாம்பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும்போல அவை கொள்ளப்படுந் தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்;1 என்னை? அது குறளடியென வேறுறுப்பாயினமையின் என்பது; தளையென்றிதனைக் கோடுமேல் அதனைக் குறளடி யெனலாகாதென்பது, அல்லதூஉம், ஈரசை கூடி ஒரு சீராயினவாறு போல இருசீர் கூடியவழி அவ்விரண்டனையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே நாற்சீரடியினை இடைதுனித்துச் சொல்லுவதன்றி நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர் என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம், அச்சீரான் அடியானவழிச் சீரெல்லாந்துணித்துச் சொல்லப்படுமென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது.2 அற்றன்றியும், அவ்வாறு தளைகொள்வார் சீரா னடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழில்ல தின்மை யினெனின், அற்றன்று, தொடுத் தற்றொழின் மாத்திரையானே தொடை யென்றானல்லன், அவ்வடிக்கண் நின்ற எழுத்துஞ் சொல்லும் பிறபொருளாகலான் அவற்றானே தொடை கொண்டமையின் வேறுறுப்பென்றா னென்பது, அஃதேற், சீருஞ் சீரும் இயைந்தவழி அவையிடமாக நின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின், கோடுமன்றே, அதனை அடியென்னா மாயின் என முற்கூறியவாறே கூறிமறுக்க. அல்லதூஉம் அவ்விரண்டசையுங் கூடிச் சீராமன்றோ வெனின் என்பது.1 மற்று நாற்சீரடியுள் இருசீ ரியைந்தவழிக் குறளடி யென்னாமாகலின் அதனைத் தளையென்னா மோவெனின் அங்ஙனங்கொள்ளின் இருசீரடிக்கட்டளை வேண்டா தானாம்; ஆகவே, ஒருவழிக்கொண்டு ஒருவழிக்கொள்ளாமை ‘ka§f¡Twš’ (663) என்னுங் குற்றமாமென்பது2 அல்லதூஉம், அங்ஙனமன்றி வருமாயின் அடிக்கெல்லாம் பொதுவகையால் தளையுறுப்பெனப்படாது எழுத்தும் அசையும்போல யாண்டும் வருவனவெல்லாம் உறுப்பெனப்படுவன வென்றற்கு. இணைநூன் முடிபு தன்னூன் மேற்றே என்பதனாற் காக்கைபாடினியார் ஓதிய தளையிலக்கணம் ஈண்டுங் கோடல் வேண்டுமெனின், அதுவே கருத்தாயின் அவர்க்கும் இவர் முடிவே பற்றித் தளை களையல்வேண்டும். அல்லதூஉம், இவர்க்கு இளையரான காக்கைபாடினியார் தளை கொண்டில ரென்பது இதனாற் பெற்றாம். தளைவேண்டினார் பிற்காலத்து ஓராசிரிய ரென்பது. என்னை? வடக்குங் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின் எனக் கூறி வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவாற்றானே எல்லைகொண்டார் fh¡ifghoÅah®. ஒழிந்த காக்கை ghoÅa¤J, வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் (தொல்-பொருள். 650) எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தா ரல்லரென்பதூஉங், குறும்பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவ தன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, அவர் இவரோடு ஒருசாலை மாணாக்கரல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது.1 மற்றிது முறையாயவாறென்னை யெனின், மாத்திரை எழுத் தினது குணமாதலானும் அசையுஞ் சீரும் அடியுந் துக்கும் பாவும் வண்ணங்களுமென்று இன்னோரன்னவெல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவனவாதலானும் அது முன் (314) வைத்தான். அக்குணத்திற்குரிய எழுத்தினை அதன்பின் வைத்தான். அவ் வெழுத்தான் அசையும், (315) அசையாற் சீருஞ் (324) சீரான் அடியும், (346) அவ்வடி பெற்றவழி அதனை ஆக்கு மாறறியக் கூறும் யாப்பும் (390) அவ்வடியகத்தன சொல்லும் பொருளுமாகலான் அதன்பின் மரபும் (392) வைத்தான். அவ்வடியிரண்டினைத் தொடுக்குங்கால் அவற்றை ஓரடியென ஒரு தொடர்ப்படாமைத் துணிப்பது தூக்காகலான் (399) அதனைத் தொடைக்குமுன் (400) வைத்தான். அவ்வடியிரண்டு தொடுத்த வழியுங் கொள்ளப்படும் நோக்கென்பதறிவித்தற்கு (416) அதனைத் தொடைப்பின் வைத்தான். அவ்வடி இரண்டும் பலவுந் தொடர்ந்தவழி முழுவதுங் கிடப்பது பாவாகலான் அதனை அதன்பின் (417) வைத்தான். அப்பாத் துணிந்த துணிவினை (501) எண்ணுதலான் அளவினை (496) அதன்பின் வைத்தான். திணையுந் திணைக்குறுப்பாகிய (497) ஒழுகலாறும் அவ்வொழுக் கத்தவாகிய கூற்றும் (506) அதன்பின் வைத்தான். கேட்போருங் (508) கேட்கும் இடனும் (510) அதுபோலப் புலப்படாத காலமும் (514) இவற்றாற் பயனுமப் (515) பயனது பரத்துவரும்1 மெய்ப்பாடும் (516) இவற்றினெல்லாம் ஒழிந்துநின்ற எச்சமும் (518) அவ்வெச்சத்தோடுங் கூட்டி யுணரப்படும் முன்னமும் (519) அம்முறைமையான் அதன்பின் வைத்தான். அவற்றிற் கெல்லாம் பொதுவாகிய பொருளை (520) அதன்பின் வைத்தான். அப்பொருட் பிறழ்ச்சியை ஒருதுறைப்படுக்குந் துறையை அதன்பின் (521) வைத்தான். மேல் (523) எச்சமும் மாட்டு மின்றியும் வரூஉமென்பவாகலான் மாட்டினைத் துறை வகையின் பின் வைத்தான். அவற்றுள் எச்சத்தினை முன் ஓதினான் அது செய்யுட்கணின்றி வருஞ் சிறுபான்மையாதலானென்பது; வண்ணம் பாவினது பகுதியுறுப்பாதலான் அதனை அவற்றுப் பின் (547) வைத்தான், வனப்பினை (525) எல்லா வற்றுக்கும் பின் (547) வைத்தான், அவற்றை ஒன்றொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டுமின்றியுஞ் செய்யுள் செய்பவாகலினென்பது. மற்றிவ்வுறுப்பினையெல்லாம் ஆசிரியன் குறியென்றுமோ உலகு குறியென்றுமோ வெனின், அவ்விருதிறத்தானும் ஏற்பனவறிந்து கொள்ளப்படுமென்றொழிக. இவற்றை உயிருடையதனுறுப்புப் போலக் கொளின் உயிர் வேறு கூறல்வேண்டுவதாம்; அவ்வாறு கூறாமையிற் கலவையுறுப்புப்போலக் கொள்க. நச்சினார்க்கினியம் இவ்வோத்து செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையிற் செய்யுளியல் என்னும் பெயர்த்து: எனவே இவ்வோத்துநுதலியது செய்யுளிலக்கணமாயிற்று. பாயிரத்துள் வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்வல் என்றமையான் இதற்கு முன்னர்க்கூறிய அதிகாரங்களிலும் இவ்வதிகாரத்தும் எல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன கூறி, அவ்விரண்டும்பற்றிச் செய்யுள் நிகழுமாதலால் அச்செய்யுட் குரிய இலக்கணத்தையெல்லாம் இவ்வோத்தினுட்டொகுத்துக் கூறுகின்றார் என்றுணர்க. இங்ஙனங்கூறவே, முற்கூறிய ஓத்துக்களோடு இயைபுடைத்தாயிற்று. இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம்1 :- இவ்வோத்தினுள் மேற்கூறுகின்ற செய்யுட்கு உறுப்பாவன இவையென்று அவற்றது பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) மாத்திரையென்றது எழுத்திற் குரித்தாக எழுத்ததி காரத்தோதிய மாத்திரைகள் தத்தம் அளவின் இறந்து பாவின் ஓசை வேறுபாடுகளையுணர்த்தி விராஅய் நிற்கும்நிலையை: மாத்திரை யென்றது மாத்திரையளவை என்பதூஉம், எழுத்தியல் என்றது எழுத்தியல்வகையை என்பதூஉம் மேலைச்சூத்திரத்தாற்2 பெறுக. எழுத்தியல்வகையென்றது எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்கள் செய்யுட்கியலும் வகையை. அசைவகை யென்றது இயலசையும் உரியசையும் என இருவகையாம் அசைக் கூறுபாட்டினை. யாத்தசீர் என்றது பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரை: எனவே அசையும் தனித்தனியே பொருள்பெறுவனவும் தனித்தனிப் பொருளின்றிச் சீராய வழிப் பொருள் பெறுவனவும் என இருவகையாம்; தேமா, சாத்தன்3 எனவரும். அடியென்றது அச்சீர் இரண்டும்பலவுந் தொடர்ந்ததோ ருறுப்பை. யாப்பென்றது அவ்வடிதொறும் பொருளேற்றுநிற்பச் செய்வதோர் செய்கையை. மரபென்றது காலந்தோறும் இடந்தொறும் வழக்குத் திரிந்தவாற்றுக்குக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமையை. தூக்கென்றது பாக்களைத் துணித்து நிறுத்தலை. தொடைவகையென்றது எழுத்துச்சொற் பொருள்களை எதிரெதிர்நிறீஇத் தொடுக்கின்ற தொடைப்பகுதிகளை. நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களை யுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தலை. நோக்குதல் - பயன் கோடல். பாவென்றது இவ்வுறுப்புக்களையுடைத்தாய்ச் சேட் புலத்திருந்து சொல்லும் பொருளுந் தெரியாமல் ஒருவன்கூறிய வழியும், இஃது என்னசெய்யுளென்றறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோரோசையை. அளவியல் என்றது அடி வரையறையை. திணையென்றது அகத்திணையும் புறத்திணையும் அறியச்செய்தலை, கைகோள் என்றது அவ்வத்திணையொழுக்கம் அறியச் செய்தலை. கூற்றுவகையென்றது அச்செய்யுட் கேட்டோரை இது கூறுகின்றோரின்னோரென அறிவித்தலை. கூற்றிவை என்பது பாடமாயின் அஃது எண்ணிய மூன்றினையுந்1 தொகுத்ததாம். கேட்போர் என்றது இன்னார்க்குக் கூறுகின்றது இதுவெனத் தெரித்தலை. களனென்றது இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் முதலியன உணரச்செய்தலை. காலவகை யென்றது முக்காலத்தும் திணைநிகழ்ச்சிக்கண்ணே பொருணி-கழச்சியுணரக் கூறலை. பயனென்றது சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச்செய்தலை. மெய்ப்பாடென்றது சொற் கேட்டோர்க்குப் பொருள் கட்புலனாதலை.2 எச்சவகை யென்றது சொல்லப்படாத ஒழிபும் தழீஇக்கொள்ளச்செய்தலை: அது கூற்றும் குறியும்3 எனவருதலின் வகையென்றார். முன்னமென்றது கூறுவாரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பான் எல்லாரும் கருதும்படி செய்தலை. பொருள் என்றது புலவன் றான்றோற்றிக் கொண்டு செய்வதோர் பொருண்மையை.4 துறைவகை யென்றது முதலுங் கருவும் முறைபிறழ்ந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒருதுறைப்படுத்தற்கேதுவாயதோர் கருவியுளதாகச் செய்தலை. மாட்டென்றது அகன்றும் அணுகியுங் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து தொடராகக் கூட்டி முடித்தலை. வண்ண மென்றது ஒருபாவின்கண் ணிகழும் ஓசை விகற்பத்தை. எனாஅ என்ற எல்லாம் எண்ணிடைச்சொல். ஏகாரங்கள் எண்ணுப்பொருட்டு.5 யாப்பியல் வகையி னாறுதலையிட்ட அந்நாலைந்தும் என்றது யாப்பிலக்கணப் பகுதியால் அவ்வண்ணத்தொடு கூறிய இருபத்தாறும் எ-று. அம்மை ...... வகுத்துரைத்தனரே என்றது அம்மைமுதலிய எண்வகை வனப்பொடும் முற்கூறிய இருபத்தாறுந் தொகுத்து முப்பத்துநான்குறுப்பாக்கி இம்முப்பத்துநான்கும் நல்லிசைப்புலவர் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென்றுகூறி, அங்ஙனம் இலக் கணமே கூறி விடாதே அவற்றைத் தாஞ் செய்தல் வன்மையினமைந்து சுவடுபட வகுத்த1 அவ்வத்துறையெல்லாம் போயினார் v‹wthW. செய்யுளுறுப்பெனக்கூறி வல்லிதின் வகுத்துரைத்தனரென மாறுக. இருபத்தாறுஎன்றும் எட்டுஎன்றும் இருவகையாற் றொகை கூறியது. இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு ஒன்றொன்றனை இன்றியமையாவாய் வருதலும், அவ்வெட்டும் பல செய்யுட் டொடர்ந்த தொடர்நிலைச்செய்யுட்கே பெரும்பான்மையும் உறுப்பாய் வருதலும், தனிநிலைக்கண் ஒரோ வொன்றாயும் வருதலும் அறிவித்தற்கு என்க. இவ்வுறுப்புக் குறையாமற் செய்யுட் செய்வார் நல்லிசைப்புலவர் என்பதூஉம், அடிவரையறை கூறியவற்றிற்கே இவ்விலக்கணமென்பதூஉம், அடிவரையறையில்லா நூன்முதலிய ஆறற்கும் திணைமுதலிய உறுப்பு ஆகா என்பதூஉம், அவற்றுள் நூலும் உரையும் ஒழிந்த நான்கும் செய்தார் இசைப் புலவராகார் என்பதூஉம் உணர்க. இனி நூலும் உரையும் செய்தாரும் நல்லிசைப்புலவர் என்பது பின்னர் அவற்றிற் கிலக்கணம் கூறும்வழி யுணர்க. உறுப்பெனவே உறுப்புடைச் செய்யுளும் அதன்கண் அடங்கும், உறுப்பினது ஈட்டம் முதலாதலின்2. இவ்வாசிரியர் தளையை உறுப்பாகக் கொள்ளாத தென்னை-யெனின்:- தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத்தட்டு இருசீரிணைந்ததாகும்; அவ்வாறிணைந்த இரு-சீரினையும் ஆசிரியரெல்லாம் இருசீர்க்குறளடியென அடியாகவே வகுத்துக்கொண்டாராதலின் தளையென வேறோ ருறுப்பின்றாம். அன்றியும், தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ளவேண்டுவது; அங்ஙனம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன்றென்றே கொண்டார். அதனை யுறுப்பென்-பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம் தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணாக்கராகிய காக்கைபாடினியாரும் உறுப்பென்னார்; பின்றோன்றிய காக்கைபாடினியார் முதலியோர் கொள்வர்: அது பொருந்தாது. இச்சூத்திரத்துட் கூறிய முறையே முறையாமாறு வருகின்ற சூத்திரங்களின் பொருட்கிடையான் உய்த்துணர்க. வனப்பெட்டும் தனித்தனி வருமாறும் தம்முள் இயைபுடைமையும் ஆண்டுணர்க. இவ்வுறுப்பினை ஆசிரியன்குறியும் உலகத்தார்குறியுமாகக் கொள்க. இவற்றை உயிரில்லாத கலவையுறுப்புப்போற் கொள்க.1 ஆய்வுரை : முன்னர் உணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாகிய செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையால் இது செய்யுளியல் என்னும் பெயர்த்தாயிற்று. எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விரவிக் கூறிப் பொருளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண்டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள்பற்றிச் செய்யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கத் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத்துணர்த்துகின்றார். எனவே பொருளதிகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொது வென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கேயுரித்தென்பதும் நன்கு பெறப்படும். இவ்வியலில் அமைந்த சூத்திரங்களை இளம்பூரணர் 235-ஆகவும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் 243-ஆகவும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் எனவேறோர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர். அங்ஙனங்கூறின் வழக்கதிகாரம் என வேறொன்று கூறுதல் வேண்டுமாதலானும் எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் நூல் செய்த முறையோடு மாறு கொள்ளுமாதலானும் அது பொருந்தாது என மறுப்பர் பேராசிரியர். இந்நூற்பா செய்யுளுறுப்புக்கள் எல்லாவற்றையும் தொகுத்து உணர்த்துகின்றது. (இ - ள்.) மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் என வரும் யாப்பிலக்கணப்பகுதியாகிய இருபத்தாறும், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டும் ஆக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப்புலவர் கூறும் செய்யுளுக்கு உறுப்பாம் என்றவாறு. இதன்கண் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் ஒவ்வொரு செய்யுட்கும் இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் செய்யுட்கள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைப் பனுவலுக்கே பெரும்பான்மையும் உறுப்பாகவும் தனிநிலைச் செய்யுட்களில் ஒரோவொன்றாகவும் வருவன எனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தெளிவாகக் குறித்துள்ளனர். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தில் தளை என்பது தனியுறுப்பாக எடுத்துரைக்கப்படவில்லை. தளையாவது, நின்ற சீரின் ஈற்றசை யுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் தம்முள் தளைத்து (கட்டப்பட்டு) நிற்றல், சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகக் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவே கொண்டு இலக்கணங் கூறினார் தொல்காப்பியனார். இவ்வாறன்றிச் சிறுகாக்கைபாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் தளையென்பதனைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்து நிற்றல் தளையென்னுந் தனியுறுப்பாமெனக் கொள்ளின் இவ்விருசீர் இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கொள்ளுதல் பொருந்தாது. அன்றியும் தளைபல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்ளும் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்க்குத் தாம் உறுப்பெனக் கொண்ட தளையால் அடிவகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும். ஆதலால் சீரது தொழிலாகிய தளை யென்பதனைச் செய்யுளுக்குரிய தனிவேறுறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர் துணிபாகும். 2. அவற்றுள், மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் மேற்கிளந் தனவே1 யென்மனார் புலவர். என்பது சூத்திரம். இளம்பூரணம் : (இ - ள்.) என்---எனின். மேற்சொல்லப்பட்டவற்றுள் மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேல் எழுத்ததிகாரத்துச் சொல்லப் பட்டன வென்று சொல்லுவர் புலவரென்றவாறு. ஈண்டு வேறுபாடில்லை யென்றவாறு.2 அவையாவன குற்றெழுத் தொருமாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரளபெடை மூன்றுமாத்திரை; குற்றிய லிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மெய்யும் ஒரோவொன்று அரைமாத்திரை; ஒற்றளபெடை ஒரு மாத்திரை; ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை; மகரக்குறுக்கங் கால்மாத்திரை; ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்களவு.3 vG¤âayhtJ---cÆbuG¤J, மெய்யெழுத்து, சார்பெழுத் தென மூவகைப்படும். உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து, அளபெடையென மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினமென மூவகைப்படும். சார்பெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தமென மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப் பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ, நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ. அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ-வல்லினம் க ச ட த ப ற. மெல்லினம் ங ஞ ண ந ம ன. இடையினம் ய ர ல வ ழ ள. குற்றியலுகரமாவது நெட்டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்த உகரம். நாகு-நாக்கு; காசு-காச்சு: காடு - காட்டு; காது - காத்து; காபு - காப்பு; காறு - காற்று என இந்நிகரன. குற்றியலிகரமாவது இவ்வுகரந்திரிந்து மகர மூர்ந்து யகர மோடியைந்து வரும். நாகியாது உகரந்திரிந்தது;கேண் மியா மகர மூர்ந்தது; பிறவு மன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடை வரும். அஃதாவது எஃகு என வரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வயலளவும் ஆய்தமும் அளபெடுக்கும். அவை மங்ங்கலம், மஞ்ஞ்சு என வரும். இனி உயிருமெய்யுங் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகரவீறாகிய இருநூற்றொருபத்தாறாம். இன்னும் ஐகாரக் குறுக்கமும் மகரக்குறுக்கமும் என்பவுமுள. ஐகாரக்குறுக்கம் அளபெடையுந் தனியு மல்லாதவழிக் குறுகும். மகரக் குறுக்கம் ணகர னகர ஒற்றின்பின் வரும். புணர்மொழிக்கண் வகரத்தின் மேனின்ற மகரங் குறுகும். இவையெல்லாம் எழுத்ததிகாரத்துட் காண்க. பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே முதற்கணின்ற மாத்திரையும் எழுத்தியலு முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மாத்திரைகள் பல தொடர்ந்து செய்யுட்கண் விராய் நிற்கும் அளவையும்,1 எழுத்துக்களியற்றப்பட்டு எழுத்ததிகாரத்தின் வேறுபட்ட தொகையுமென1 இரண்டினமும் மேல் எழுத்தோத்தினுட் கூறப்படாதனவல்ல;2 அவையே : அவற்றை ஈண்டு வேண்டு மாற்றாற் கொள்க என்பான் மேற் கிளந்தவகையிற் பிறழாமற் கொள்க என்றானென்பது. அன்னவெனவே, இம் மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் வேறென்பதூஉம், வேறாயினும் ஆண்டுக் கூறியவற் றோடு வேறுபடாமைக் கொள்க வென்பதூஉம் உரைத்தானாம். எனவே, எல்லா வழியும் வரையாது எய்தற்பாலவாகிய மாத்திரைகள் ஒரோவழி வரையப்படுமாயினும் அவை முற்கூறாத வேறு சில மாத்திரையுமல்ல, ஈண்டுப் பதினைந்து எழுத்தென்று கூறிப் பயங்கோடுமாயினும் ஆண்டை முப்பத்து மூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன சில வெழுத்துமல்லவென்பான், மேற்கிளந் தன்னவென்றா னென்பது. மாத்திரையென்றொழியாது மாத் திரையளவுமென்றதனான் அம்மாத்திரையை விராய்ச்செய்யும் அளவை ஈண்டுக் கூறினானென்பது fU¤J. மற்று, எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமாறென்னையெனின் எழுத்தோத்தினுட் குறிலுநெடிலும் உயிருமெய்யும் இனமூன்றுஞ் சார்பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்புவகையான் ஆண்டுப் படுத் தோதினான், உயிர்மெய்யும் உயிரளபெடையுந் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஔகாரம் போலிவகையாற் கூடுமாறும் யாழ்நூலகத்து ஒற்றிசை நீளுமாறும் ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே, அவை ஈண்டுக்கூறும் எழுத்தியல் வகையோடொக்குமென்று உய்த்து உணர்ந்துகொள்ள வைத்தா னென்பது. இவற்றோடு மகரக்குறுக்கமுங் கூட்டிப் பதினாறெழுத்து என்பாருமுளர்.3 அதனாற் பயனென்னையெனின் பாட்டுடைத் தலைவன் கேட்டுக்குக் காரணமாமென்பர். முற்று உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென் றிலனாகலான் ஈண்டு எழுத்தியல்வகையுள் எழுத்தாக்கி அடக்கு மாறென்னையெனின், ஈண்டு அன்னவெனவே ஆண்டு இரண் டெழுத்தின் கூட்டமெனவும் மொழியெனவும் போலியெனவுங் கூறினானாயினும் அவற்றை எழுத்தியல் வகையெனப் பெயர் கொடுப்பவே ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப் படுமென்பதாயிற்று. இதன் கருத்து, இய லென்றதனான் இயற்றிக்கொள்ளும் வகையான் எழுத்து இனையதென்றானாம். வகை யென்பதனான் முப்பத்து மூன்றினைக் குறிலும் நெடிலுமென்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டாற் பத்துவகைப்பட இயற்றுதலுங் கூட்டவகையா னிரண்டும் போலிவகையா னிரண்டும் யாழ்நூல்வேண்டும் வகையா னொன்றுமென ஐந்துவகையா னியற்றுதலுமென இரு வகையுங் கொள்ளப்படும்.1 அல்லதூஉஞ் செய்யுட்கள் அவ்வெழுத்து வகையான் இன்னோசையவாக விராய்ச்செய்தலுங் கொள்க. மற்றளபெடையை மேல் மொழி யென்றான் ஈண்டெழுத் தென்றானாகலின் இதனை ஓரெழுத்தென்று கோடுமோ இரண்டெழுத்தென்று கோடுமொவெனின், நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல்-எழுத்-மொழி. 8.) என்று கூறியவாற்றான் ஆண்டிரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயினும் முன்னர்ப் போக்கி, அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (தொல்-செய். 17) என்றவழி எழுத்து நிலைமையும் எய்துவிக்குமாகலான் எதிரது நோக்கி ஈண்டு ஓரெழுத்தென்று கோடுமென்பது.1 இனி அவற்றுட் குறிலும் நெடிலுங் குற்றுகரமும் அசைக்குறுப்பாம். மற்று, ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி (தொல்-செ. 3) என்பதனான், ஒற்றும் அசைக்குறுப்பாகாவோவெனின், அச் சூத்திரத் தானன்றே அவை குறிலும் நெடிலும் அடுத்து வந்தும் வேறுபடாது நேர்நிரையாதலெய்தியது நோக்கி அவை அசைக் குறுப்பாகா வென்றதென்க.2 மற்று இடைநின்று நிரையாதலை விலக்காவோ வெனின், அன்னதொரு விதியுண்டாயினன்றே இவை இடைபுகுந்து விலக்கவேண்டுவதென மறுக்க. நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஐகாரக்குறுக்கமும் ஔகாரக்குறுக்கமுமெனப் பத்துந் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடையிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனமே வேறு படவந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக்கோடலின் எழுத்தியல் வகை யென்றானென்பது அஃதேல் ஒற்றுங் குற்றிகரமும் ஈண்டோதிய தென்னை யெனின், ஒற்றள பெடையான் அசைநிலையுஞ் சீர்நிலையுங் கோடலின் ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றிகரமும் உயிராயினும் ஒற்றுப்போல எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படாதென்றற்குக் கூறினானென்பது.1 அஃதேல். ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (320) என்பவாகலின், அதை ஈண்டுத் தழாஅற்கவெனின், அக்கருத்தினால் அவ்வாறும் அமையுமென்பது; அற்றன்று, இதனை மேற்புள்ளிபெறு மென்றிலனாதலான் புள்ளிபெறு மென்றற்கும் ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (320) என்றானென்பது.2 இனி, ஒருசாரார் மாத்திரையென்றது எடுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர்.3 அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம். சிறுபான்மை ஒரோவழி வரினும் அத்துணை யானே அஃது இன்றியமையாத உறுப்போடு எண்ணப்படாதென மறுக்க. உறுப்பன்று என்றார்க்குக் குறிப்பிசை யாண்டுப் பெறுது மெனின், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல் - செய். 11) என்புழிப் பெறுதுமென்பது.4 இனி, எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்ப தனையும் எழுத்திலக்கணத்திற் றிரியாமற் செய்யுள் செய்க வென்றவாறென்பவெனின், அஃதே கருத்தாயிற் சொல்லோத்தி னுள்ளும் எழுத்திலக்கணமாகிய மயக்கமும் நிலையும் முதலாகிய இலக்கணத்தில் திரியாமற் சொல்லாராய்தல் வேண்டுமெனவும், இவ்வதிகாரத்துள்ளும் எழுத்தியல் வகையுஞ் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன வெனவுஞ் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க.1 மற்று, மாத்திரையளவைக்கும் இலக்கணங் கூறுமின் எனின், அதுவும், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323) என்புழி, வல்லோராறெனப் பாவொடுபொருந்தக் கூறு மென்பது; அல்லதூஉம் மாத்திரையினை அளவைப்பட நிறுத்துக என்ப தோரிலக்கணமாதலின் இங்ஙனம் வரையறை யுடைத்தாக நோக்கிச் செய்யுளுறுப்பென்றானா மென்பது.2 மற்று மாத்திரையினை அளவைப்பட நிறுத்தாக்காற் படுங் குற்றம் என்னையெனின், அற்றன்று; வரகு வரகு வரகு வரகு என்னும் அடியினைப், பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு என நிறுத்தின் அது மாத்திரைவகையாற் சிதைவுபட்டதாம். அம்ம வாழி கேளாய் தோழீ என்றாற், பின்னர்நின்ற இருசீரும் நெடிலாதல் இன்னாதென்றுந் தோழியெனப் பின்னர் நின்ற சீரைக் குறுக்கினவழி இன்னோ சைத்தாமென்றும் அவ்வாறே செய்யுள் செய்ப. பிறவுங் கொச்சகக்கலி யுள்ளும் ஒழிந்தனவற்றுள்ளும் இவ்வாறே கண்டுகொள்க. நச்சினார்க்கினியம் இது நிறுத்தமுறையானே மாத்திரையும் எழுத்தியலும் உணர்த்துகின்றது. (இ - ள்.) அவற்றுள் மாத்திரையளவும் என்பது, முற்கூறிய வற்றுள் மாத்திரையைச் செவிகருவியாக உணர்ந்துகொள்ளும் நிலையும் எழுத்தியல் வகையும் என்பது, முற்கூறிய முப்பத்து மூன்றெழுத்தும் யாப்பிலக்கணத்திற்குப் பதினைந்துபெயரவாய் நடக்குங் கூறுபாடும். மேற்கிளந்தன்ன என்மனார் புலவர் என்பது, எழுத்தோத்திற்கூறிய இலக்கணத்திற் பிறழாமை வருமென்று கூறுவர் புலவர். (எ - று.) ஈண்டு அளவென்றது எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் தத்தம் ஓசைகளைப் புலப்படுத்தி நிற்குமாறு தொடர்புபடுத்தி விராஅய் நிற்பச்செய்யும் நிலையை அளந்து கோடலை : என்றது அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் (தொல். எழுத். நூன். 33) என்னுஞ் சூத்திரத்தானும் குறுமையு நெடுமையு மளவிற் கோடலின் (தொல். எழுத். மொழி. 17) என்னுஞ் சூத்திரத்தானும் செய்யுட்குரிய ஓசைதருமெனக் கூறிய நெட்டெழுத்துக்களும் ஒற்றெழுத்துக்களும் தத்தம் பாவின் ஓசையை வேறுபடத்தந்து நிற்கும் என்றதாம். இவ்விரண்டு சூத்திரத்தோடும் மாத்திரையளவை மாட்டெறிந்தார். இவன் அளந்த அளவு நன்று என்றாற்போல, அளவு அளவுதொழின் மேனின்றது.1 இதனாலல்லது செய்யுள் வேறுபாடு உணரலா காமையிற் சிறப்புறுப்பாக ஏனையுறுப்புக்களின் முன்னே கூறினார்.2 உதாரணம்: வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி எனவும், (கலி. பாலை. 10) கடியவே கனங்குழாஅய் காடென்றா ரக்காட்டுள் (கலி. பாலை. 10) எனவும் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி (அகம். 4) பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே (கலி. பாலை. 10) எனக் குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்துக்களை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. இதுவும் எழுத்திற்சூத்திரங்களிரண்டும் ஆணைகூறிற்று. இனி எழுத்து முப்பத்துமூன்றனுட் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர்கொடுத்து அவற்றைக் குறிலும், நெடிலும், அளபெடையும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக் குறுக்கமும், ஔகாரக்குறுக்கமும் எனப் பெயர்வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும், சிலஎழுத்துக்களை மெய் என்னும் பெயர்கொடுத்து அவற்றை மெல்லினமும், வல்லினமும், இடை யினமும், ஆய்தமும், ஒற்றளபெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு ஆறாக்கியும், இவையிரண்டுங் கூடியவற்றை உயிர்மெய் என வேறோர் பெயராக்கியும் மேற் கூறியவாறே பதினைந்து பெயரவாய் ஈண்டு நடக்குமென்றதற்கு எழுத்தியல்வகை யென்றார். இவ்வெழுத்தினை எழுத்தினுட்கூறிய சூத்திரங்களோடு மாட்டெறிந்தார். அவை, ஔகார விறுவாய் (தொல். எழுத். நூன். 8) அ, இ, உ, எ (தொல். எழுத் . நூன். 3) ஆ, ஈ, ஊ, ஏ (தொல். எழுத். நூன். 4) நீட்டம் வேண்டின் (தொல். எழுத். நூன். 6) அவைதாங் குற்றியலிகரம் (தொல். எழுத். நூன். 2) ஓரள பாகு மிடனுமா ருண்டே (தொல். மொழி. 24.) வல்லெழுத்தென்ப (தொல். எழுத். 19.) மெல்லெழுத்தென்ப (தொல். எழுத். 20.) இடையெழுத்தென்ப (தொல். எழுத். 21.) உயிர்மெய்யல்லன (தொல். மொழி. 27) என்பனவாம். அளபெடையிரண்டும் எழுத்தாந்தன்மை மேலே பெறுதும். இவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக் குறுப்பாம். ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக் குறுப்பாகா : ஒற்றளபெடைக் குறுப்பாம். நெடிலும், அள பெடையிரண்டும், உயிரும், உயிர்மெய்யும், மூவினமும், ஐகார ஔகாரக் குறுக்கமும் தொடைக்குறுப்பாம். குறிலும், நெடிலும், அளபெடையிரண்டும், மூவினமும், ஆய்தமும் வண்ணத்திற் குறுப்பாம். இவற்றை இயற்கையெழுத்துஞ் சார்பெழுத்தும் என இரண்டாகவும் வகுப்பர்.1 ஆய்வுரை : இது, மேற்சூத்திரத்து நிறுத்தமுறையாலே முதற்கண் நின்ற மாத்திரையும் எழுத்தியலும் உணர்த்துகின்றது. (இ-ள்) மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் ஆகிய இரண்டும் மேல் எழுத்ததிகாரத்திற்கூறிய இலக்கணத்திற்பிறழாமற் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் ஆசிரியர். (எ-று) மாத்திரை என்பது, எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு ஆகும். மாத்திரையினது அளவு மாத்திரை யெனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய ஒலித்தற்காலஅளவாகிய மாத்திரைகள் செய்யுளில் ஓசைநலம் சிதையாதபடி தத்தம் ஓசைகளைப் புலப்படுத்தி அளவுபெற ஒலித்து நிற்றலே மாத்திரையென்னும் உறுப்பாகும். மாத்திரையளவாகிய இதனாலல்லது செய்யுட்களின் ஓசை வேறுபாடு உணரலாகாமையின் ஏனையுறுப்புக்களினும் மாத்திரையளவினைச் சிறப்புறுப்பாக முற்கூறினார். இனி, எழுத்தியல்வகை என்றது, மேல் எழுத்ததிகாரத்திற் கூறப்பட்ட எழுத்துக்களைச் செய்யுளுக்கு ஏற்புடையவாக இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. அஃதாவது மேல் எழுத்ததிகாரத்தில் தமிழுக்குரிய முப்பத்து மூன்றறெழுத்துக்களையும் உயிர், குறில், நெடில், மெய், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்புவகையாற் பத்தும் உயிர்மெய், உயிரளபெடை எனக் கூட்டவகையால் இரண்டும், ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் எனப் போலிவகையால் இரண்டும், யாழ்நூலாகிய இசைநூன் முறையால்வரும் ஒற்றிசை நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெயரளவாய்ப் பகுத்துரைத்த வகையாகும். இவற்றுடன் மகரக் குறுக்கம் ஒன்றுகூட்டிப் பதினாறெழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. 3. குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையு மென்றிசிற் பெயரே. இளம்பூரணம். என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுந் தனியே வரினும் ஒற்றொடு வரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமா மென்றவாறு. இதுவு மொரு நிரனிறை;1 முந்துற்ற நான்கு மொரு பொருளாய்ப் பின்னிரண்டாகி வரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான். கோழி வேந்தன், என நான்குநேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும். (3) பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே அசைவகை யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) குறிலும் நெடிலுந் தனித்து வந்துங் குறில்(இரண்டு) இணைந்து வந்துங் குறிற்பின்னர் நெடில் இணைந்து வந்தும் அவை ஒற்றடுத்தும் முறையானே நிரனிறை வகையானே நேரசையும் நிரையசையுமென்றாம் (எ - று). குறிலே நெடிலே ஒற்றொடு வருதலொடு எனவும். குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு எனவும், வேறு நிரனிறீஇப் பொருளுரைக்க.2 மெய்ப்பட நாடி யென்பது பொருள்பெற ஆராய்ந்து; எனவே, இப்பெயர் ஆட்சிக் காரணமேயன்றிக் குணங்காரணமாகலுமுடைய வென்றவாறு. உயிரில்லெழுத்தல்லாதன (356) தனித்து நிற்றலின் இயலசை யென்னும் பொருள்பட நேரசை ba‹whƉW.1 அவை இரண்டு நிரைதலின் ïizairba‹D« பொருள் பட நிரையசை யென்றாயிற்று.2 அல்லதூஉம் மெய்ப்பட நாடி என்றதனான் அவ்வாய்பாடே அவற்றுக்குக் காரண மென்பதூஉங் கொள்க.3 உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனால் உதாரணமுங் கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டுகொள்க : அ ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும், புகர் புகார் எனவும், பிறவும் இவ்வாறு வருவனவெல்லாங் கொள்க. மற்றுக் குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல் லாயவழி அசையாகாவோ வெனின், அவை ஒற்றொடு வருத லென்றதனானே, சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இருவாற்றானும் அசையாமென்பது4 சீரின்றன்மைக்கண் வந்தது. உள்ளார் தோழி என நேரசை நான்கும் வந்தன. வரி வரால் கலா வலின் என நிரையசை நான்கும் வந்தன. நச்சினார்க்கினியம் : இது நிறுத்த முறையானே அசை கூறுகின்றது. (இ-ள்) குறிலும் நெடிலும் தனித்து வந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிற்பின்னர் நெடிலிணைந்து வந்தும் பின்னர் இந்நான்கும் ஒற்றொடு வருதலோடே பொருள்பெற ஆராய்ந்து நிரனிறை வகையான் நேரசையும் நிரையசையும் என்று பெயர் கூறினார் ஆசிரியர். (எ-று). குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரையொவ்வாவேனும் அவற்றின் மாத்திரையை நோக்காது எழுத்தாந்தன்மை நோக்கி இரண்டற்கும் ஒரோ வோரலகு பெறுமென்றார்.1 இது குறிலிணைக்குங் குறினெடிற்கும் ஒக்கும். நேரசை நிரையசை என்ற பெயர், ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர். இரண்டெழுத்தா னாகாது ஓரெழுத்தானாதலின் நேரியதன்றே: அதனான் நேரியஅசை நேரசை என்றாயிற்று. உயிரி லெழத்து மெண்ணப் படாஅ (தொல். செய். 44) என்றலின் எண்ணப்படாத2 ஒற்றுக்கள் பயன்படாது அசைந்து நிற்றலின் அசையென்னும் பெயரும் எய்திற்று.3 இரண்டெழுத்து நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. உதாரணம் : அ, ஆ, அல், ஆல் எனவும், பல, பலா, புகர், புகார் எனவும் வரும். ஒற்றுக்கள் எழுத்தாய் நின்று அலகு பெறுதற் குரியவல்லவென்பது மொழி மரபின் கண்ணே மொழிப்படுத் திசைப்பினும் (20) என்பதன்கட் கூறியவாற்றானுணர்க.1 குறில் நெடில் என எழுத்தாக ஓதிற்றேனும் நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி (தொல். மொழி. 10) என்றதனால் நெடில் சொல்லாந்தன்மையும், குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே (தொல். மொழி. 11) என்றதனாற் குறிலும் சிறுபான்மை சொல்லாந்தன்மையும் பெறுதும்; அன்றியும் ஒற்றுக் கூறினமையானும் பெறுதும். உள்ளார் தோழி என நேரசை நான்கும் வரி வரால் கலாவலின் எனநிரையசை நான்கும் வந்தன. ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே எழுத்துக்களாலாகிய அசைகளின் கூறுபாடு உணர்த்துகின்றது. (இ - ள்) குறிலும் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் அவற்றைப் பொருள்பெற ஆராய்ந்து நேரசை யெனவும், குறிலிணையும் குறில் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் (அவற்றைப் பொருள் பெற ஆராய்ந்து) நிரையசை யெனவும் பெயர் கூறினார் ஆசிரியர். (எ - று.) குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில் என ஒரு தொடராக வைத்து எண்ணப்பட்ட நான்கனுள் எண்ணேகாரம் பெற்ற முதலிரண்டினையும் ஒரு தொகுதியாகவும், எண்ணிடைச் சொற் பெறாத ஏனை யிரண்டினையும் மற்றொரு தொகுதியாகவும் இருவகைப்படுத்து ஒற்றொடு வருதலையும் மெய்ப்பட நாடு தலையும் இவ்விரு தொகுதிகட்கும் பொதுவாக்கி, இவ்விரண்டிற்கும் முறையே நேர் எனவும் நிரை எனவும் பெயர் தந்தமையின், இச்சூத்திரம் ஒருவகை நிரல்நிறைப் பொருள்கோள் அமைந்ததாகும். குறிலேநெடிலே ஒற்றொடு வருதலொடு மெய்ப்படநாடி நேர் என்றிசின் எனவும், குறிலிணை குறில் நெடில் ஒற்றொடு வருத லொடு மெய்ப்படநாடி நிரை என்றிசின் எனவும் இரு தொடராக இயைத்துப் பொருள் கூறப்பட்டது. கோ, ழி, வேந், தன் - என நேரசை நான்கும் வெறி, சுறா, நிறம், குரால் என - நிரையசை நான்கும் வந்தன. ஒரெழுத்தான் ஆகிய நேரிய அசை நேரசையென்னும் பெயர்த்தாயிற்று. இரண்டெழுத்து நிரைந்து வருதலின் நிரையசை யென்னும் பெயர்த்தாயிற்று. நேரசையினைத் தனியசை எனவும் நிரையசையினை இணையசை யெனவும் வழங்குதலும் உண்டு. இவ்வசைகளுக்கு உறுப்பாய் நின்ற குறிலும் நெடிலும் மாத்திரை யாளவினால் தம்முள் ஒவ்வாவாயினும், எழுத்தாந்தன்மையில் ஒன்றெனவே கொண்டு எண்ணப்படுந் தகுதி நோக்கி நெடிலாயினும் குறிலாயினும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கப்பட்டன. 4. ïUtif cfunkh, oiaªjit tÇnd ne®ò Ãiuò« MF« v‹g F¿Èiz cfu« mštÊ ahd.* இளம்பூரணம் : ïJîkJ. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டசையுங் குற்றியலுகரமு மல்லாத முற்றியலுகரமும் பொருந்திவரின், நேர்பசையுநிரைபசையு மெனப்பெயராகும்; அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத விடத்தென்றவாறு.1 காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு என்பன நேர்பசை. வரகு, அரக்கு, மலாடு, பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு என்பன நிரைபசை. தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு நிரைபு என்பன தாமே யுதாரணமாம். அஃதேல் நேர்பசை நிரை பசையெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை யிரண்டசையாக்கியுரைத் தாராயினும் அதனை முடியநிறுத்தராது, வெண்பாவீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகரவீற்றான் உதாரணங் காட்டினமையானும், சீருந்தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகுபெறாதென்றமை யானும், வெண்பா வீற்றினு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமென உடன் பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க. அவை செய்யு ளீற்றின்கண் வருமாறு: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (குறள். 0) வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தர்க் கியாண்டும் இடும்பை இல (குறள் 4) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (குறள். 7) என வரும். பிறவு மன்ன, அலகிடுங்கால் நேரசை ஓரலகு; நிரையசை யிரண்டலகு; நேர்பசை மூன்றலகு; நிரைபசை நான்கலகு பெறும்.1 (4) இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபும் ஆகு மென்ப. பேராசிரியம் :- இது, சொல்லாத அசைக்கூறுஞ் சொல்லுகின்றது. (இ - ள்) இருவகை யுகர மென்பன; குற்றுகர முற்றுகரங்கள்; அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடுபட இயைந்துவரின்1 நிறுத்தமுறையானே நேரசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றி வந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரையசையோ டொன்றிவந்த குற்று கரமும் அதனோ டொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் (எ - று.) இயைந்து என்றான், இருவகை உகரமும் இருபிளவு படாது ஒன்றாகி வரல்வேண்டும். அங்ஙனம் அசையாங்காலென்றற்கு. இருவகை உகரமும் ஒரு காலத்து ஒன்றன்பின் வாரா; வேறு வேறு வருமென்பது. இருவகை உகரமும் இறுதிக்கண் நின்று அசையாக்கு மென்ப தென்னை பெறுமாறெனின், குற்றுகரம் ஈற்றுக்கணல்லது வாராமையானும், நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும் (தொல்-செய்.9) என்பதனானும் பெறுதுமென்பது; அல்லதூஉம் நுந்தை யென்னும் முதற்கட் குற்றுகரம் இறுதிக்கண் நேரசையல்லது நிரையசை அடுத்து வருதலின்மையானும் அது பெறுதுமென்பது.2 முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசை கூறி, அவற்றுப்பின் இருவகையுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்ற தேனும், அவற்றுள் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேரசை ahfhbj‹gJ, குறிலிணை யுகர மல்வழி யான (தொல்-செய்.5) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உ - ம் : வண்டு, நாகு, காம்பு எனவும்; வரகு, குரங்கு; மலாடு, மலாட்டு எனவும், இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு. இனி, முற்றுகரம் இரண்டசைப்பின்னும் வருங்காற் குறி லொற்றின் பின்னும் நெடிற் பின்னுமென நேரசைக்கு இரண்டல்ல தாகாது. நிரையசைக்கண்ணுங் குறிலிணைப் பின்னுங் குறினெடிற் பின்னுமல்லதாகாது.1 உ-ம் : மின்னு நாணு எனவும், உருமு குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின் பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின், அவை ஆகாவென்பதூஉம் இக்காட்டிய நான்குமே ஆவனவென்பதூஉம். முன்னர், நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும் (தொல். செய். 9) என்புழிச் சொல்லுதும்.2 இனி, ஒருசாரார் நேர்பசை நிரைபசை யென்பன வேண்டா வென்ப. என்னை :குற்றுகர முற்றுகரங்களை வேறாக்கி அலகிட அமையாதே ? ஞாயிறு எனக் குற்றுகரங் குறிலிணையாய் அலகு பெறுமோவெனக் குற்றங் கூறுப. முற்றுகரமுந் தேமா வென நேரசையாயிற்று மின்னு என்றவழி வேறலகுபெற அமையுமென்பது. அற்றன்று, குற்றுகரத்தினைக் குற்றெழுத்தென்ப வேறு குற்றுகரம் வேண்டாதாரும், என்றார்க்கு வேண்டினானையுங் குற்றங் கூறுவரவர்; என்னை? குற்றியலுகரம் அரைமாத்திரைத்தாகலின் ஒற்றைப்போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும். அற்றன்றேற் குற்றெழுத்தாக்கி அலகு வைக்கவே அமையுமென்பதாம் அவர் கருத்து.1 அதற்கு விடை : குற்றுகரம் ஒற்றுப்போன்று ஒடுங்கி நில்லாது; என்னை? தன்னான் ஊரப்பட்ட ஒற்றுந் தானுமாகி அரைமாத்திரைத்தாகியும் ஒடுங்கி இசையாது அகன்று இசைக்கும்; அதனால் ஒற்றென்றலுமாகாது; பின்னும் ஒரு மாத்திரைத் தாகாமையிற் குற்றெழுத்தெனலுமாகாது; மற்று அதனான் அதனை ஒற்றென அடக்கார்; குற்றெழுத்தென ஏற்று அலகு கொள்ளார், இனி அதனைச் செயற்பாலதோர் அசையாக்குத லென்பது நோக்கி நேர்பசை நிரைபசையென வேண்டினானென்பது.2 அவை வண்டு தொண்டி என ஓசை யொவ்வாமை செவி கருவியாக உணர்ந்து கொள்க. அஃதேல், ஞாயிறு வலியது என்றவழிக் குறிலிணையுகர மெனக் குற்றெழுத்தாக்குவது எற்றுக்கெனின், அளபெடையை ஓசையிற் சிதையாது நிலப்படையுள் அலகு சிதைத்தாற் போலக் குற்றுகரத்தைக் குற்றெழுத்துப்போல அலகுபெறு மென்பது இலக்கணமில்லதொரு வழுவமைதி தானாயதனை இலக்கணமாக ஓர்த்துக்கொண்டு இலக்கண வகையாற் குற்றுகர மாதலை விலக்குவாரும் உளரோவென மறுக்க.1 அஃதாக, முற்றுகரம் ஒரு மாத்திரையாதலிற் குற்றெழுத்தாக்கி நேரும் நிரையுமாகப் பெறாவோவெனிற் பெறா; என்னை? வண்டு வண்டு வண்டு வண்டு என நின்றவழிப் பிறந்த அகவலோசை. மின்னு மின்னு மின்னு மின்னு என நின்ற வழியும் பெறப்படுமாதலின், அதுவும் அது பட்டதே பட்டு அவ்வசையே பெறுமென்றா ன்னபது.2 அல்லதூஉம் வெண்பாட்டீற்றடி வண்டு எனக் குற்றுகரவீற்றான் இற்றவழிக் கோலு என முற்றுகரவீற்றான் இறுமாயினும் ஒத்தவோசையாம். இனி, உகர வீறல்லாத தேமாவென்பதனான் வெண்பா முடியாவென்பர், அதனாலுங் குற்றகரத்தின் செய்கை முற்று கரத்திற்கும் வேண்டி நேர்பு நிரைபு கொண்டானென்பது. அற்றன்றியுங் குற்றுகரஞ் சார்ந்து தோன்றுமாறுபோல இம் முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதலொப்புமை நோக்கியும் அதனைக் குற்றுகரம்போல ஓரசைக்கு உறுப்பாம் என்றானென்பது. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (தொல். செய். 48) என்பதனான் அவை அவ்வாறாதல் அறிந்துகொள்க. இவையும் ஆட்சியும் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, நிரையவ ணிற்பினேரு நேர்பும் (தொல். செய். 75) எனவும், நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும் (தொல். செய். 74) எனவும், வருமென்பது, இருவகை யுகரமும் அடைந்துவந்த இய லசையிரண்டும் நேர்பும் நிரைபு மென்றாலும், நேரும் நிரையு மென்னும் பொருண்மையவே யாகலான் அவற்றது பெயரான் இவற்றையும் பெயர் கொடுத்தான் ஆகுபெயராக்கி யென்பது. எனவே, நேர்நிரையின் பின் உகரம் வருதலின் நேர்பு நிரைபு எனக் குணங் காரணமாகவும் பெற்றாம். (4) நச்சினார்க்கினியம் :- இது கூறாத அசைக்கூறுங் கூறுகின்றது. (இ - ள்.) இருவகை உகரமொடு என்பது, குற்றுகர முற்றுகரங் களோடே. அவையியைந்துவரின் எ - து, மேற்கூறிய நேரசையும் நிரையசையும் பிளவுபடாது ஒருசொல்விழுக்காடுபட இயைந்துவரின், நேர்பும் நிரைபும் ஆகுமென்ப. எ - து, நிறுத்தமுறையே நேரசை யோடியைந்த குற்றுகரமும் அதனோடியைந்த முற்றுகரமும் நேர்பசைஎனப்படும் :நிரையசையோடுஇயைந்தகுற்றுகரமும்அதனோடியைந்தமுற்றுகரமும்நிரைபசைஎனப்படும்(எ -று.)1 நேரின்பின் உகரம்வருதலின் நேர்பு: நிரையின்பின் உகரம் வருதலின் நிரைபு என ஆட்சியும் குணமும் காரணமாகப்பெற்ற பெயராதல் மேற்கூறியவற்றுட் காண்க. உ - ம்.வண்டு, நாகு, காம்பு, மின்னு, நாணு, தீர்வு : நேரசை மூன்றன்பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசை யாயிற்று. குறிற்பின் வரும் இருவகையுகரமும் நேர்பசையாகாமை மேற்கூறுகின்றார்.1 வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்றுகரமும், நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரைபசையாயிற்று. குறினெடி லொற்றின்பின் வந்த முற்றுகரம் cளவேற்fண்க.F‰¿a லுகரமு மற்றென மொழிப (தொல். எழுத். புணரி. 3) என்ற விதியாற் குற்றுகரம் புள்ளிபெற்று நின்றும் புள்ளிபெற்ற ஒற்றுப்போன்று ஒடுங்கிநில்லாது தன்னான் ஊரப்பட்ட மெய்யுந் தானும் அரைமாத்திரைத்தாய் நின்றதேனும், அகன்றிசைத்தலின் ஒற்றென்றலுமாகாது ; ஒருமாத்திரை பெற்ற உயிர்போல அகன்றிசையாமையின் உயிரென வேறோரலகு கொடுத்தலுமாகாது. இதனைச்செயற்பாலது வேறோ ரசையாக்குதலென நோக்கி நேர்பசை நிரைபசை என வேண்டினார் ஆசிரியர். பின்னுள்ளோர் அலகு பெறுமென்று கொண்டாரேனும் அவர்க்கும் அலகுபெறா வென்றுங் கொள்ளவேண்டியவாறும், தேமா, புளிமாவொழியக் காசு, பிறப்பு எனக் குற்றுகர வீறாக வேறுதாரணங்கொள்ளவேண்டிய வாறும் உணர்க ; எனவே குற்றுகரம் அலகுபெறாவாயிற்று. வண்டு, கொண்டி என ஓசை ஒவ்வாமை செவி கருவியாக உணர்க. ஒரு மாத்திரைபெற்ற முற்றுகரம் நேர்பசை நிரைபசை யாமோ வெனின் ;-- வண்டு வண்டு வண்டு வண்டு என்புழிப் பிறந்த அகவலோசை மின்னு மின்னு மின்னு மின்னு என்புழியும் பெறப்படுதலானும், வெண்பாட்டீற்றடி வண்டு எனக் குற்றுகர வீற்றா னின்றுழியும் கோலு என முற்றுகர வீற்றா னின்றுழியும் ஒத்தவோசையவாமாகலானும்2 அவ்வசைகளாயிற்று. இஃது எழுத்தளவெஞ்சினும் ... ... ... மொழிப (செய். 43) என்ற விதியாற் பெறுதும். குறிலிணை யுகரம் அல்வழி ahd. பேராசிரியம் : இஃது, எய்திய தொருமருங்கு மறுத்ததூஉம் எய்தாத தெய்துவித்ததூஉமாம்; வழுவமைத்த தெனினும் அமையும் தனிக்குறிலானாகிய நேரசைப் பின்னும் இருவகையுகரம் வந்து நேர்பசையாதலை விலக்கினமையின் எய்தியதொரு மருங்கு மறுத்ததாம். குற்றுகரங் குற்றெழுத்துப் போன்று அலகு பெறு மென்றமையின் எய்தாததெய்துவித்து வழுவமைத்ததாம். (இ - ள்) இருவகை உகரமும் இருகுறிலாகி இணைந்த வழி நேர்பசையாகாது (எ - று). கரு, மழு என முற்றுகரம் நேர்பசையாகாது நிரையசை யாயிற்று. என்றார்க்குக், குற்றுகரம் விலக்கியதென்னை? குறிலிணை வந்தவழிக் குற்றுகரமாகாதென்பது, நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ( தொல். எழு. மொழி.3) என்றதனாற் பெறுதும் பிறவெனின், அது நோக்கிக் கூறினா னல்லன்; ஏற்புழிக்கோடல் என்பதனான், ஞாயிறு வலியது என ஓரசைப் பின்னர் வந்தவழி இது குற்றுகரமேயாமன்றே ஆண்டும் அது குறிலிணை யுகரமெனவே படுமென்பது; பட்டக் கண்ணுங் குற்றுகரமேயென வழுவமைத்தவாறு. குறிலிணையெனக் குற்றுகரத்தையும் உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனாற் குற்றெழுத்தென வேண்டினானென்பது பெற்றாம். இங்ஙனம் குற்றுகரங் குறிலிணையாகியுங் குற்றுகரமாகி எழுத்தள வெஞ்சினும் அமையுமெனவே நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரமுங் குற்றெழுத்துப் போன்று அலகுபெறும் எழுத்தள வெஞ்சினு மென்பது கொள்க.1 இஃது ‘x‹¿dKo¤j றன்னின முடித்தல் (665) என்னும் உத்திவகை. நச்சினார்க்கினியம் : இது தனிக்குறிலானாகிய நேரசைப்பின்னும் இருவகை உகரம் வந்து நேர்பசையாதலை விலக்கினமையான் எய்தியதுவிலக்-கியதூஉமாம். குற்றுகரங் குற்றெழுத்துப்போன்று அலகுபெறு-மென்றமையின் எய்தாதது எய்துவித்து வழுவமைத்ததூஉமாம். (இ-ள்.) குற்றெழுத்தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றிய லுகரமும் அல்லாதவிடத்தே முற்கூறிய நேர்பசையாவன; எனவே குற்றெழுத்தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்துழி நிரையசையாம். (எ-று.) இனி, உடம்பொடுபுணர்த்தல் என்பதனாற் குறிலிணை- யெனக் குற்றுகரத்தையும் குற்றெழுத்தென வேண்டினமை பெற்றாம்.1 உ-ம்:- ஞாயிறு வலியது என ஓரசைப்பின்னர் வருகின்ற குறிற்பின்வந்த குற்றுகரம் குற்றெழுத்துப் போன்று குறிலிணையுகரமாய் அலகுபெற்றதேனும் குற்றுகரமே யென்று இலக்கண மல்லதோர் வழுவமைத்தவாறு. இங்ஙனம் குற்றுகரம் எழுத்தளபெஞ்சுமெனவே, குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (எழுத். மொழி.34) என விதித்த நுந்தையென்னும் முதற்கட் குற்றகரம், எழுத்தள பெஞ்சிக் குற்றெழுத்துப் போன்று அலகுபெறுதலுங் கொள்க.2 கரு, மழு இவை முற்றுகரநிரையசையாம். ஆய்வுரை: இதுவும் அசைவகை யுணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டசையும், குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றினை இறுதியிற் பெற்றுப் பிளவுபடாது ஒரு சொற்றன்மையெய்திவரின், அவை முறையே நேர்பு, நிரைபு என்னும் அசைகளாகும்; (மேற்குறித்த உகரம்) குற்றெழுத்தொடு பொருந்தின குறிலிணை யுகரமாய் வாராதவழி (எ-று.) எனவே குற்றெழுத்தாகிய நேரசையின்பின் இருவகை யுகரங்களுள் ஒன்று இணைந்து வருமாயின் அவை குறிலிணை யுகரமாய் நிரையசையாவதன்றி நேர்பசையாதல் இல்லை என்பதாம். உதாரணம்: வண்டு, நாகு, பாம்பு, எனவும், மின்னு,நாணு, தீர்வு எனவும் நேரசை மூன்றின்பின்னும் முறையே குற்றுகரமும் முற்றுகரமும் வந்து நேர்பு என்னும் அசையாயின. வரகு, குரங்கு, மலாடு, பனாட்டு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்றுகரமும், இரவு, புணர்வு, உலாவு என நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரைபு அசையாயின.நேரின்பின் உகரம் நேர்பு; நிரையின்பின் உகரம் நிரைபு என இவையிரண்டும் காரணப் பெயராயின. 5. இயலசை முதலிரண் டேனவை உரியசை. இளம்பூரணம்:- என்---எனின். மேற்சொல்லப்பட்ட அசைக்குப் பிறிதோர் குறியிடுதல் நுதலிற்று. (இ - ள்.) முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசையெனக் குறிபெறும். நேர்பசையும் நிரைபசையும் உரியசையெனக் குறிபெறும் என்றவாறு.1 (5) பேராசிரியம்: இது, மேற்கூறிய அசை நான்கினையும் இருகூறு செய்து அவற்றுக்குஎய்தாத தெய்துவிக்கின்றது. இனி, ஆட்சியுங் குணனுங் காரணமாக வேறு வேறு பெயர் கொடுக்கின்றது இச்சூத்திரமெனவும் அமையும். (இ-ள்) முதற்கணின்ற நேரும் நிரையும் இயற்றிக்கொள்ளப் படாது, இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பனவாம், ஒழிந்தன விரண்டும் இயற்றிக்கொள்ளப்பட்டு இயலசையாதற்கு உரியவாம் (எ - று)1 எனவே, எய்தாத தெய்துவித்தது; இயலசை உரியசை யென்று ஆளுமாகலானும் இயற்கையால் இயறலின் இயலசை யெனவும், அவை செய்யுந் தொழில் செய்தற்கு உரியவாகலான் உரியசை யெனவும், ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெயரெய்துவித்ததூஉ மாயிற்று2 அங்ஙனம் இயற்றிக் கொள்ளுமாறு சீர்கூறும்வழிக் கூறுதும். நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய அசையை இருகூறுசெய்து3 அவற்றிற்கு எய்தாதது எய்துவிக்கின்றது. (இ - ள்.) இயலசை முதலிரண்டு, எ-து. முதற்கண்ணின்ற நேரும் நிரையும் இயற்றிக்கொள்ளப்படாது இயற்கைவகையான் நின்றாங்குநின்று தளைத்தலின் இயலசை யென்றும்: ஏனையவுரியசை எ-து, ஒழிந்த இரண்டும் இயற்றிக்கொள்ளப்பட்டுந் தொழில் செய்தற்குரியவாதலின் உரியசையென்றும் பெயராம். (எ-று.) அங்ஙனம் இயற்றுதல் சீருட் காண்க. ஆய்வுரை : இது, முற்கூறிய நான்கசைகளையும் இருவகைப்படுத்து அவ்வகைகட்குப் பெயர் கூறுகின்றது. (இ-ள்) முதலிற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டும் இயலசையெனப் பெயர் பெறும். ஏனைய நேர்பு, நிரைபு என்னும் இரண்டும் உரியசையெனப் பெயர் பெறும். நேர், நிரை என்பன சொற்கள் நின்றாங்கு நிற்ப இயற்கை வகையால் வரும் அசைகளாதலின் இயலசையெனப்பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரிய-வகையில் அமைந்தன நேர்பு, நிரைபு என்பனவாதலின் அவை உரியசையெனப்பட்டன. இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் நேர், நிரை என்னும் இயலசையுடன் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளையும் கூட்டி அசைவகை நான்கென்றாராகப் பின்வந்த யாப்பிலக்கண ஆசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளைத் தனியசைகளாகக் கொள்ளாது அவற்றை நேர்நேர், நிரைநேர் என ஈரசைச் சீர்களுள் அடக்கி நேர், நிரை என இரண்டசைகளையே கொள்வாராயினர். குற்றிய லுகரமும் அற்றென மொழிப (புணரியல் 3) என்ற நூற்பாவில் ஒற்றுப்போன்று புள்ளிபெறும் எனப்பட்ட குற்றிய- லுகரம், தன்னால் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரைமாத்திரை-யுடையதாய் நின்றதேனும் மெய்யெழுத்தினைப்போன்று ஒடுங்கியொலியாது அகன்றொலிக்கும். அதனால் அவ்வுகரத்தை ஒற்றென அடக்கி மெய்யெழுத்தினைப்போன்று அலகுபெறாது என விலக்குதல் பொருந்தாது, இனி, குற்றியலுகரமாகிய அஃது ஒருமாத்திரையளவாய் விரிந்திசைக்காமையின் அதனை உயிர்த் திறமுடைய குற்றெழுத்தெனக் கொண்டு அலகு கொள்ளுதலும் ஏற்புடையதன்று. இங்ஙனம் ஒற்றெனவும் தள்ளப்படாது உயிர் எனவும் எண்ணப்படாது இடைநிகர்த்ததாயுள்ள இக்குற்றியலு கரத்தைக் கொண்டு வேறோர் அசையாக்குதலே செய்யத்தகுவது எனத் துணிந்த பண்டைத் தமிழியல் நூலோர் இவ்வுகரத்தினைக் கருவியாகக் கொண்டு நேர்பு, நிரைபு என்னும் இருவகை உரியசைகளை வகுத்துரைத்தனர். வண்டு வண்டு வண்டு வண்டு எனக் குற்றுகரம் நின்றவழிப்பிறந்த அகவலோசை, மின்னு மின்னு மின்னு மின்னு என முற்றுகரம் ஈறாய் நின்ற வழியும் பெறப்படுத லானும், வெண்பாவின் ஈற்றடி வண்டு எனக் குற்றுகரவீறாக நின்றுழியும் கோலு என முற்றுகர வீறாக நின்றுழியும் ஒத்த ஓசையவாமாகலானும், குற்றுகரம் மொழியீற்றினைச் சார்பாகக் கொண்டு தோன்றுமாறுபோல உரியசைக்குறுப்பாகிய முற்றுகரமும் வருமொழி காரணமாகத் தோன்றுதலானும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி அதனைக் குற்றுகரம்போல நேர்பு, நிரைபு என்னும் அசைகட்கு உறுப்பாகக் கொண்டனர். இங்ஙனம் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழியல் நூலார் எழுத்தாலாகிய அசைகளின் இயல்புணர்ந்து அவற்றை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துரைத்தனராக, பிற்கால யாப்பிலக்கண நுலாசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளின் இறுதியில் நின்ற குற்றுகர முற்றுகரங்களைத் தனியசையாகப் பிரித்து, அவற்றை நேரசையென அடக்கி நேர், நிரை என்னும் இரண்டசைகளையே கொண்டனர். அன்னோர் தாம் ஈரசைச் சீர்களாகக் கொண்ட நேர்பு, நிரைபு என்பவற்றுக்குத் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டால் ஓசையூட்டின் செப்பலோசை சிதையுமென்று அஞ்சி அவற்றுக்கு முறையே காசு, பிறப்பு எனக்குற்றுகரவீற்று உதாரணங்காட்டியும், சீரும் தளையும் சிதையவருமிடத்துக் குற்றுகரம் அலகு பெறாது எனத் தனிவிதி வகுத்தும், வெண்பாவீற்றில் சிறுபான்மை முற்றுகரம் வரும் என உடன்பட்டும் இவ்வாறு பல்வேறு வரையறைகளைச் செய்து கொள்வாராயினர். 6. தனிக்குறில் முதலசை மொழிசிதைந் தாகாது. இளம்பூரணம் : என்---எனின். இதுவும் அசைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொடர்மொழிக்கண் மொழி சிதைந்து தனிக்குறில் நேரசை யாகா தென்றவாறு.1 மொழிசிதைத்தலாவது - ஒற்றுமைப் பட்டிருக்கின்றதனைப் பிரித்தல். அஃதாவது புளிமா என்றவழி நிரைநேராக அலகிடாது முதனின்றதனை நேரசையாக்கி யிடை நின்றதூஉ மிறுதி நின்றதூஉம் நிரையசையாதல். அவ்வழிப் புளி யென்னுஞ் சொல்லைப் பிரிக்கவேண்டுதலின் நிரையசை யாகவே கோடல்வேண்டு மென்றவாறு. இனி, மொழி சிதையாக்கால் நேரசையாம். அது விட்டிசைத்து நிற்றல். அஉ மறியா ... னாட்டைநீ (யாப்.வி.பக். 142) எனவும், அஆஇழந்தானென் றெண்ணப்படும் (நாலடி. 9) எனவும் வருவன முதலெழுத்து நேரசையாம். (6) பேராசிரியம் : இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தனுதலிற்று; உகிரி மயிரி என நின்றவழிக் குறிலிணையேயன்றி மூன்றெழுத்து நிறைந் தமையின் நிரையசையாகா, தனித்தனி நேரசையாகலும் மூன்று குற்றெழுத்தினுள் இரண்டு குறிலிணையாக ஒன்று நேரசையாவதும் முதற்கண்ணே கொல்லோவெனவும் எய்தியதனை விலக்கி விட்டிசைத்த வழித் தனிக்குறில் நேரசையாமென்பது எய்துவித் தமையின். (இ-ள்) தனிக்குறிலானாகிய நேரசை முதற்கண் மொழி சிதைத்துச் செய்யப்படாது (எ-று). இங்ஙனம் முதற்கண் வரையறுப்பவே இடையும் இறுதியும் மேலோதியவாற்றான் நேரசையாமென்பது. மொழிசிதைத்த லென்பது விட்டிசையாத மொழியை விட்டிசைத்து மொழிதல்;1 எனவே, விட்டிசைத்த மொழியாயின் அது மொழிசிதைத்த தெனப்படாது இயல்பாமென்பது பெற்றாம். கரு மழு என முதற்கண் மொழி சிதைத்து நேரசையாகாமையுங் குறிலிணை யெனப்பட்டு நிரையசையாயினவாறுங் கண்டு கொள்க. அ ஆ விழந்தான் (நாலடி.1-9) எனவும், அ உ வறியா வறிவி லிடைமகனே நொ அலைய னின்னாட்டை நீ எனவும், இவை விட்டிசைத்தலின் மொழிசிதையாது தனிக்குறில் முதற்கண் நேரசையாயினவாறும் அவை குறினெடிலுங் குறிலிணையு மெனப்பட்டு நிரையசை யாகாதவாறுங் கண்டு கொள்க. இனி, விட்டு இசைக்கும் இடந்தான் மூன்றென்பது உரையிற் கொள்க.1 அவை, அ ஆ விழந்தான் எனக் குறிப்பின்கண் வருதலும் அ உ வறியா எனச் சுட்டின்கண் வருதலும் நொ அலையல் என ஏவற்கண் வருதலுமென விட்டிசைக்குமிடந்தான் மூன்றெனப்பட்டது. முதலசை யென்பது நேரசை ba‹ghUKs®. அது விதந்தோதல் வேண்டா, தனிக்குறிலான் அசையாமெனப்பட்டது நேரசையே யென்பது பெறுதுமாகலான்.2 மற்றும், இ உக்குறுக்கம் (நேமிநாதம்-5) என்றவழி விட்டிசைத்து மொழி சிதையாதாகலான் அவ்விரண் டெழுத்துங்கூட்டி நேர்பசை யென்னாமோவெனின், அவை பிளவுபட நிற்றலின் இயைந்திலவென மறுக்க.1 (7) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ - ள்.) மொழி சிதைத்து எ-து பொருடந்து ஒற்றுமைப்பட்டு நிற்பதோர் சொல்லைப் பொருளைக்கெடுத்து : (முதல்) தனிக்குறில் - முதல் நின்ற எழுத்தைத் தனிக்குறிலாக்கின்: முதலசையாகாது எ-து அது நேரசையாகாது2 எ - று. எனவே, பொருள்தந்து ஒற்றுமைப்பட்டு நில்லாது விட்டிசைத்து நின்றுழி நேரசையாம் என்றவாறாயிற்று. புளிமா என்றவழிப் புளியென்று ஒற்றுமைப்பட்டுநின்ற சொல்லைச் சிதைத்து முதல்நின்ற பகர உகரத்தை நேரசையாக அலகிடப்படாது. இனி விட்டிசைத்து நேரசையாங்கால் ஏவல், குறிப்பு, தற்சுட்டு, வினா, சுட்டு என ஐந்து பொருளின்கண் விட்டிசைத்து நேரசையாம். உதாரணம் :- வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளு மறிமுலை யுண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை அ உ வறியா வறிவி லிடைமகனே நொஅலைய னின்னாட்டை நீ என்பது ஏவல் அ உ என்பது அகரந் தன்னையே சுட்டுதலிற் றற்சுட்டு. அ ஆ விழந்தானென் றெண்ணப் படும் (நாலடி. 9) என்பது அருட்குறிப்பு. அ அவனும், இ இவனும், உ உவனும் என்பது சுட்டு, எ எவன் என்பது வினா. உரையிற்கோடல் என்பதனான் ஐந்திடத்தும் விட்டிசைத்தல் கொள்க.1 அ இ உ, எ ஒ என்னுமப்பா லைந்தும் (தொல். எழுத். நூன். 3) எனவரும். இவை மொழிசிதைத்துத் தனிக்குறிலாய் நேரசை யாயினவாறு காண்க. ஆய்வுரை : இஃது, ஒற்றடாத குற்றெழுத்துத் தனித்து நேரசையாகாது என்கின்றது. (இ-ள்) இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழியின்கண் உள்ள குற்றெழுத்து மொழிசிதைத்து நேரசையெனக் கொள்ளப் படாது எ-று. மொழி சிதைத்தலாவது, குறிலிணையாகவும் குறினெடி- லாகவும் ஒற்றுமைப்பட்டு இயைந்த குற்றெழுத்தினை மொழி முதற்கண் தனிக்குறிலாகப் பிரித்து அசைத்தல். முதலசை என்றது இயலசையிரண்டனுள் முதலில் வைத்து எண்ணப்படும் நேரசையினை. மொழி சிதைத்துத் தனிக்குறில் நேரசையாகாது. எனவே, அதுபின்னுள்ள குறிலோடும் நெடிலோடும் இணைந்து குறிலிணையாகவும் குறினெடிலாகவும் நிரையசையாம் எனவும் மொழி சிதையாதவழி நேரசையாம் எனவும் கொள்க. ஈண்டு மொழியென்றது இரண்டிறந்திசைக்குந் தொடர்மொழியினை. 7. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். இளம்பூரணம் : என்---எனின். இதுவுமது. (இ-ள்.) குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயல்பிற்று என்றவாறு.1 அடியினதிடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேரசை என்று ...... எனவே அலகுபெறாதென்றவாறாம். பேதைமை யென்ப தியாதென வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல். இதன்கட் குற்றியலிகரம் அலகு பெறாதவாறு காண்க.2 (7) பேராசிரியம் : இஃது, எய்தாத தெய்துவித்து ஐயம் அறுத்தது. (இ - ள்) மேற்கூறிய எழுத்திலக்கண வகையானும் ஈண் டோதும் அசைக்குறுப்பா மாற்றானும் எல்லாங் குற்றியலிகரம் ஒற்றெழுத்தியற்றேயாம் (எ-று). தேற்றேகார மடுத்துக் கூறியவாறு.1 எனவே எழுத் தோத்தினுள், மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (தொல்-எழுத்-புண-2) எனக் கூறிக், குற்றிய லுகரமு மற்றென மொழிப (தொல்-எழுத்-புண-3) எனக் குற்றுகரத்திற்குப் புள்ளிபெறுதலுங் கூறினான்; அது போலக் குற்றிகரமும் புள்ளிபெற்று நிற்றல் உடைத்தெனவும் ஈண்டுக் குற்றுகரம் நேர்பும் நிரைபுமாகியவாறு போலத் தானும் ஓர் அசையாகுங் கொல்லென்று ஐயுறுவது வேண்டா,ஒற்றுநின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும் ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையு முடைத்து என்றவாறுமாயிற்று2. எனவே, ஒற்றெழுத்தியற்றதாயினுங் குற்றுகரம் இகரக்குறுக்கம் போலாது செய்யுட்கு உபகாரப்பட்டதோர் அசை வேறுபாடு தோன்ற நிற்குமென்றவாறாயிற்று.3 மற்று எண்ணப்படாதென்றது ஈண்டுக் கூறல்வேண்டுமே? உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ (தொல்-செய்.44) என்புழிப் பெறுதுமாலெனின், அது குற்றுகரத்திற்கே கூறிய தென்பது ஆண்டுச் சொல்லுதும். உதாரணம்: மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும் (தொல்.சொல்.இடைச்-26) எனவும், அருளல்ல தியாதெனிற் கொல்லாமை (குறள்.254) எனவும் இவை இயலசை சார்ந்து ஒற்றியற்றாகிக் குற்றிகரம் வந்தவாறு. நாகியாது வரகியாது எனக் குற்றிகரம் உரியசை சார்ந்து ஒற்றியற்றாகி வந்தவாறு. அது நிரையும் நிரைபுஞ் சார்ந்து ஒற்றியற்றாமாறு இல்லைபோலும் (மியாயிக என்பது மாதிரி; அருளல்லதியாது என்பதும் நாகியாது என்பதும் போரேறாம்; வரகியாது என்பது கடியாறாம். பிறவும் அன்ன) இவற்றை யெல்லாம் ஒற்றெழுத் தியற்றே யென்பதனாற் புள்ளியிட்டெழுதுக.1 இது சொல்லிய காரணங்,குற்றுகரம் அரைமாத்திரைத்தாகியும் ஒற்றியற்றாகாது நேர்பும் நிரைபும் ஆகியவாறுபோல அதற்கு இனமாகிய குற்றிகரமும் அரைமாத்திரைத்தாகி வேறோரசையாகுங் கொல்லென்று ஐயுறாமற் காத்தவாறு. மற்று ஆய்தத்தினையும் ஒற்றியற்றென்னாமோ வெனின், அஃது எழுத்தோத்தினுள், எழுத்தோ ரன்ன (தொல்-எழுத்.நூல்-2) என்பதனாற் பெற்றாமென்பது. மற்று, முந்தியாய் பெய்த வளைகழலும் (யா.வி.ப.43) எனவும், நினக்கியான் சொல்லிய தின்ன தின்று எனவும் இவை ஒற்றியற்றாகாது எழுத்தியற்றாயினவென்று காட்டுவாருமுளர். முந்தியாய் என்பது இகரவீறுமாமாகலின் அது காட்டல் நிரம்பாது. அல்லதூஉம் அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க. இனி, ஒற்றும் எழுத்துமென உம்மையோடெண்ணலுமாகாது; இவ்வோத்தினுள், உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ (தொல்.செய்.44) என ஒற்றினையும் எழுத்தென்றானாகலின்.1 நச்சினார்க்கினியம்: இது குற்றியலிகரம் அலகுபெற்றும் அலகுபெறாதும் வரும் என்கிறது. (இ-ள்.) குற்றியலிகரம் ஒற்றியற்று எழுத்தியற்று எ-து, குற்றியலிகரமாவது ஒற்றியல்பினையுடைத்து; அதுவேயன்றி, எழுத்தியல்பினையும் உடைத்து. எ-று. என்றது அலகுபெறாதவழி ஒற்றாம்;அலகுபெற்றவழி யெழுத்தாம் என்றவாறு.உ-ம்:--- குழலினி தியாழினி தென்ப (திருக்குறள் 66) என ஆசிரியத்தளையாயும் அருளல்ல தியாதெனின் (திருக்குறள் 256) எனக் கலித்தளையாயும் வருதலிற் குற்றியலிகரம் அலகுபெறாது ஒற்றியற்றாயிற்று. நினக்கி யாரே மாகுது மென்று வனப்பு நினக்கியா னுரைப்பக் கேண்மதி என இக்குற்றியலிகரங்கள் அலகுபெறுதலின் எழுத்தியற்றாயிற்று. இங்ஙனம் சான்றோர் செய்யுள் வருதல் பெருவரவிற்று.2 ஒற்றினையும் எழுத்தென்று ஓரோரிடத்துக் கூறினாரேனும், ஈண்டு ஒற்று எழுத்து எனக்கூறலின் ஒற்றல்லா வெழுத்தை யுணர்த்திற்று.1 ஆய்வுரை: இஃது அசைகொள்ளுந்திறத்தில் முற்கூறப்படாத குற்றிய லிகரத்தின் நிலை உணர்த்துகின்றது. (இ-ள்) குற்றியலிகரம் ஒற்றெழுத்தின் இயல்பினது என்பர் ஆசிரியர் எ-று. எனவே, சார்பெழுத்துள் ஒன்றாகிய குற்றியலிகரம் ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்துவருதலும், ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையும் ஆகிய இருநிலைமையும் ஒருங்குடையது என்பது பெறப்படும். குற்றியலிகரம், குழலினி தியாழின தென்ப (திருக்குறள் 66) என ஒற்றின் தன்மையதாய் நின்று அலகு பெறாமையும், மற்றியா னென்னுளேன் கொல்லோ (திருக். 1206) என உயிரெழுத்தின் இயல்பினதாய் நின்று அலகு பெறுதலும் என இருநிலைமையுமுடையதாய் இலக்கியங்களிற் பயின்று வருதலைக் கண்ட நச்சினார்க்கினியர் குற்றியலுகரம் ஒற்றியல் பிற்றாயும் ஒற்றல்லா உயிரெழுத்தியல்பிற்றாயும் வரும் என இச்சூத்திரத்திற்குப் புதியதோர் உரைவிளக்கம் கூறியுள்ளமை, இலக்கியங்கண்டதற் கிலக்கணம் வகுக்கும் அவரது நுண்மாணுழை புலத்தினை இனிது புலப்படுத்துவதாகும். 8. முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும். இளம்பூரணம்: என்---எனின். முற்றியலுகரத்திற் குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்றிய லுகரமு மொழிசிதைந்து நேர்பசை நிரை பசை யென்றுரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கிற்றனியசையாகி நிற்றலும் இன்றென்றவாறு. எனவே, அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின் கண் நேர்பசை நிரைபசையெனக் காட்டப்படாது. அது ஈற்றடி மருங்கிற்றனியசையாகி நில்லா வென்பதூஉம், ஒற்றுமைப்படாத சொல்லின்கண் தனியசையாமென்பதூஉம், ஈற்றடிக்கண் எவ் வழியானுந் தனியசை யாகாதென்பதூஉம் உணர்த்தியவாறாம்.1 அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென (அகத்திணை.பக். 20) என்றவழி அரவென்பது மொழிசிதையாமையின் நிரைபசை யாயிற்று. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி.200) என்றவழிப் பெரு முன்னர்க் குறித்துச் சீராக்க வேண்டுமாயின் ஈண்டு மொழிசிதைத்தலின் நிரைபசை யாகாதாயிற்று. இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு (யாப்.வி. பக். 209) மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவாட் கருளு (யாப். வி. பக். 219) என்பதனாற்கொள்ளற்க.1 இவை புல்லு அருளு என வருமாலெனின்: நிற்றலின்றே யீற்றடி மருங்கினும் என்பதனான் ஈற்றடியிறுதியினு மிடையடியிறுதியினு முற்றியலுகரம் நில்லா தெனவும் பொருளாம்; இதனானே அவ்வாறு வருதலுங்கொள்க. முற்றியலுகரமு மென்றவும்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. பேராசிரியம் : இதுவும், ஐயம் அறுத்தது; இருவகையுகரமொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபுமாமென்றான், அவற்றுண் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ் சொல் உலகத்து அரியவாயின வாதலின் புணர்ச்சிக்கண் வந்த உகரமே ஈண்டு நேர்பும் நிரைபுமாவனவெனவும், புணர்ச்சிக்கண்ணும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும், நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப்படுவன வெனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்றுநிலை மொழியாகிய நேர்பு நிரைபிற்கு உறுப்பாவன கண்டு வருமொழியுகரம் ஈண்டும் அதுபோல அவற்றிற்குறுப்பாங்கொல் லென்று ஐயுற்றானை ஐயுறற்கவெனவுங் கூறினமையின். (இ-ள்.) முற்றியலுகரம் மொழி áij¤J¡bfhshm---ïUtifífuK மியைந்தவை வருங்கால் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்று வாங்கிக் கொடுக்கப்படா; நிற்றலின்றே யீற்றடி மருங்கினும்---அங்ஙனம் வாங்கிக் கொடுக் காப்படாவாயின், நேரசை நிரையசைப் பின்னர் முற்றுகரம் ஈறாகி வருஞ்சொல்லும் cyf¤jÇathÆ‹ முற்றுகரத்தால் நேர்பும் நிரைபும் ஆமாறென்னை யென்றார்க்கு அடியிறுதிக்கணல்லது முற்றுகரம் புணர்ச்சிவகையான் இடைநில்லாதன வாயின கண்டாயென்ப துணர்த்தியவாறு. இன்று என ஒருமை கூறினமையின் எடுத்தோதிய முற்றுகரமே கொண்டு இலேசினாற் றழீஇய குற்றுகரங் கொள்ளற்க. மற்றிதனை இலேசினாற் கொண்டதென்னையெனின், நுந்தை யென்னும் ஒருமொழிக்கணன்றி வாராமையின் அதன் சிறுவரவு நோக்கி உம்மையாற் கொண்டானென்பது.1 முற்றுகரம் மொழிசிதைத்துக் கொளாவெனவே ஒற்றூர்ந்துவரினுந் தனித்து வரினும் உடன் விலக்குண்ணு மென்பது. நாணுடை யரிவை (அகம்.34) என்றவழி, நாண் என்னும் நேரசைப் பின்னர், உடையரிவை யெனத் தனித்துவந்த உகரம் நேர்பசையாகாது. வார்முரசு என்றவழி வார்என்னும் நேரசைப்பின்னர் முரசென மகரம் ஊர்ந்து வந்த உகரமும் நேர்பசையாகாது. வற்றுறுசெய்தி எனவும், பரன்முரம்பு எனவும், வந்தவழி வற்றெனவும் பரலெனவும் நின்ற நேரசை நிரையசைப் பின்னர் உறுசெய்தி யெனவும் முரம்பெனவும் வந்த உகரங்களும் நேர்பசையாகா, சின்னுந்தை இராநுந்தை எனக் குற்றுகரம் வந்தவழியும் நேர்பசை நிரைபசையாகா வென்ற வாறு,1 நாணுத் தளையாக வைகி (அகம். 29) என்றவழி ணகாரவீறு புணர்ச்சிவகையாற் பெற்ற உகரம் நிலைமொழித் தொழிலாகலான் அது நாகு என்னுங் குற்றுகரம்போல் ஒற்றுமைப்பட்டு நேர்பசையாயிற்று. விழவுத் தலைக்கொண்ட (அகம்.17) என்றக்காலும் அவ்வாறே ஆகாரவீறும் உகரம்பெற்று நிரைபசை யாயிற்று. மின்னு மிளிர்ந்தன்ன கனங்குழை (அகம்.158) எனவும், முழவு முகம் புலரா (அகம்.206)நற்றிணை,200) எனவும் வருவனவும் அவை. நாணுத்தலை என்றாற்போல வரும் ஒற்றுப்பேறு முன்னர்ச் சொல்லுதும். நீர்க்கு நிழற்கு என்ற உருபும் நிலைமொழித் தொழிலாதலான் அவையும் நேர்பசை நிரைபசையாமென்பது இதனாற் பெற்றாம்.1 நிற்றலின்று என ஒருமைகூறி முற்றுகரமே கொண்டமையிற் குற்றுகரமாயின் இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபுமாம் என்றவாறாம். அவை, ஆட்டுத்தாள் சேற்றுக்கால் எனவும், எய்போற் கிடந்தானென் னேறு (பு.வெ.வாகை.22) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் நேர்பசையாயிற்று. களிற்றுத்தாள் எனவும், வேலாண் முகத்த களிறு (திருக்குறள்.500) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் நிரைபசையாயினவாறு. மருங்கினுமென்ற உம்மையான் அடியீற்றேயன்றி மொழி யீற்றும் அவற்றிறுதி கெடநின்ற மொழிக்கண் இடைநின்ற உகரம் இறுதியாகி உரியசையாகுவனவும் உளவென்பது கொள்க. அவை, மேவுசீர் எனவுங் கோலுகடல் எனவும், உலவுகடல் எனவும், விரவுகொடி எனவுங், கலனளவு நலனளவு எனவுஞ், சுரும்புலவு நறுந்தொடையலள் எனவும் வரும். இவை ஈற்றுநின்ற மகரங்கெட்டு உகரவீறாயின. இவற்றுள் நிரைபசை யுகரங்களை ஆகாரவீற்றுப்புணர்ச்சி யுகரமென்னா மோவெனின், என்னாமென்றே; வருமொழியொற்று மிகாமையி னென்பது. உலவுக்கடல் விரவுத்தளை யெனின், அவ்வாறே யமையுமென்பது. மருங்கென்றதனான் ஈற்றடிக்கண்ணும் இறுதிக்கண்ணே முற்றுகரம் விலக்குண்ட தெனக்கொள்க. என்றார்க்குப், புனைமலர்த் தாரகலம் புல்லு (யா. வி. ப. 58) எனவுங், கண்ணாரக் காணக் கதவு (முத்தொள்ளாயிரம். 42) எனவும் வருமாலெனின் அவை மரூஉ வழக்கென்க. 9 நச்சினார்க்கினியம் : இது குற்றியலுகரத்திற் கினமாகிய முற்றுகரத்திற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) முற்றிய.............bfhshm எ-து முற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்றும் வாங்கிக் கொடுக்கப்படா: எனவே நிலைமொழித் தொழிலாகிய உகரமும்1 நிலைமொழியீறு கெடநின்ற உகரமுமே2 கொள்க எ-று. நிற்ற........ மருங்கினும் எ-து அது தான் இடையினன்றி ஈற்றடி யிடத்திலும் இயலசையாய் நிற்றலின்று; எனவே உரியசையாயே நிற்கும். எ-று. நாணுடை யரிவை (அகம்-34) என்புழி வருமொழியின் உகரம் வந்தேறியது முற்றுகரமாகாதென்றுணர்க. இனி நாணுத்தளை aகiவகி‘இரவுத்துயின்kடிந்தjனை(அகம்-24)‘சுறவுக்bகாடி(சிந்-முத்-493)‘விழவுத்தலைக்bகாண்ட(அகம்-17)‘மின்னுநிமிர்ந்தன்ன(நற்றிணை-51)ïவைÃலைமொழித்bதாழிலாகியcகரம்bபற்றன.Ú®¡F, நிழற்கு எனநின்ற நான்கனுருபு நிலைமொழித் தொழிலுகரமாம். உலவுகடல், விரவுகொடி எனின் அதுவாம். சுரும்புலவு நறுந்தொடையலள், கலனளவு நலனளவு இவை நிலைமொழியீற்று மகரங்கெட நின்ற உகரம் முற்றுகரமாயின. இனி இனத்துள்ளதாகு மறிவு (திருக்குறள்-494) இன்னா தினியார்ப் பிரிவு (திருக்குறள்-1158) கருமமே கல்லார்கட் டீர்வு பேரறிவாளர் துணிவு பாடறியாதானையிரவு போற்றாதார் முன்னர்ச்செலவு (நான்மணி-10) புன்கணுடைத்தாற் புணர்வு (திருக்குறள்-1152) புனைமலர்த்தாரகலம் புல்லு அஞ்சொன் மடவார்க்கருளு கோலு இவை யடியிறுதிக்கண் உரியசையாய் நின்றவாறு காண்க. நிற்றலின்றே என்றதற்கு ஈற்றடிக்கண் நிற்றலில்லையென்று கூறின் அவை முடியாவாம். இவை அசைக்கும் ஓசைக்கும் உறுப்பாம். உகரமும் என்ற உம்மையாற் குற்றுகரமும் சேற்றுக் கானீலம் எனப் பிரித்துக் கொடாமனின்றவாறும்1எய்போற் கிடந்தானென்னேறு (வெண்-வாகை-22) என இறுதிக்கண் உரியசையாய் நின்றவாறுங் காண்க. நாகுண்டு என்பது குற்று கரமாகாது.2 ஆய்வுரை : இது முற்றியலுகரத்திற்குரிய வேறுபாடுணர்த்துகின்றது. (இ-ள்) முற்றியலுகரமும் மொழி சிதைத்து நேர்பசை நிரைபசையென்று உரைக்கப்படாது; அஃது ஈற்றடிமருங்கில் தனியசையாகி நிற்றலும் இல்லை எ-று. அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென என்றவழி அரவு என்பது மொழி சிதையாமையின் நிரைபு அசை யாயிற்று. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் என்றவழிப் பெரு-முத்தரையர் என்பதனைப் பெருமத் தரையர் எனப்பிரித்துச் சீராக்கின் மொழி சிதைதலின் நிரைபசை யாகாதாயிற்று என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். இருவகையுகரமொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபும் ஆம் என்றார் ஆசிரியர். அவற்றுள் முற்றுகரம் ஈறாகிநிற்குஞ்சொல் உலகத்து அரியவாயின ஆதலின் புணர்ச்சி வகையால் ஈற்றின்கண் தோன்றிய உகரமே ஈண்டு நேர்பும் நிரைபும் ஆவன எனவும், அப்புணர்ச்சிக்கண்ணும் நாணு என்றாங்கு வரும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும், விழவு என்றாங்குவரும் நிலைமொழி யீறுகெட்டுநின்ற உகரமுமே கொள்ளப்படுவன எனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று, நாணுத் தளையாக விழவுத்தலைக் கொண்ட என்றாங்கு நேர்பு நிரைபுகட்கு உறுப்பாதல் போன்று நாண் உடை அரிவை நாணுடையரிவை என்றாங்குவரும் வருமொழி முதலுகரம் இவ்வுரியசைகட்கு உறுப்பாகுமோ? என ஐயுற்றார்க்கு வருமொழி முதலுகரம் அங்ஙனம் உறுப்பாகாதெனவும், நீர்க்கு நிழற்கு எனவரும் வேற்றுமையுருபு நிலைமொழித் தொழிலாதலால் அவ்வுறுப்பு நேர்பசை நிரைபசைகட்கு உறுப்பாமென்பது இதனாற் பெறப்படும் எனவும், குற்றுகரமாயின் ஆட்டுத்தாள் சேற்றுக்கால் எய்போற் கிடந்தானென் னேறு வேலாண் முகத்தகளிறு என இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபும் ஆமெனவும் இச்சூத்திரவுரையிற் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு மீண்டும் நினைவுகூர்தற்குரியதாகும். 9. குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. இளம்பூரணம்: என்---எனின். எய்தியது விலக்கல் நுதலிற்று. (இ-ள்.) இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனி யசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு.1 உம்மை யிறந்தது தழீஇயிற்று.2 உதாரணம்: படுகிளி யாவும் பசுங்குரல் ஏனல் கடிதின் மறப்பித்தா யாயின் இனிநீ நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும். (கலித்.50) இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடுவருதலான் நேரசையாயிற்று. கண்ணும் படுமோ என்றிசின் யானே. (நற்றிணை. 61) இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசை யாயிற்று. (9) பேராசிரியம்:- இஃது, எய்தாதது எய்துவித்தது; இயலசைகளை, ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி (தொல்.செய்.3) என்றான், உரியசைக்கு அது கூறாதான் ஈண்டுக் கூறுகின்றமையின்.1 (இ-ள்.) மேற்கூறி வருகின்ற குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும்; அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாயின் (எ-று). எனவே, நிலைமொழி ஒற்றுடையவாயின் அவை நேர்பும் நிரையுமாகா. வருமொழி வல்லெழுத்துமிகினே யாவதென்றவாறு. அஃதென்னை பெறுமாறெனின், வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருமொழி (தொல்.எழுத்.குற்றிய.4) என்றதனான். முன்னர் நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரம் வருமெனக் கூறிய அதிகாரத்தானே ஒற்றுத் தோன்றினென்றானா கலானும் பெறுதும்; நிலைமொழியுகரம் பெற்று வருமொழி ஒற்றெய்துவது கண்டானாகலானென்பது.2 உ-ம்: சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல் (யா.வி.ப.236) எனவும், நாணுத் தளையாக வைகி (அகம்.29) எனவும், நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை (புறம்.125) எனவும், கனவுக்கொ னீகண்டது (கலி.90) எனவும் இவை இருவகையுகரமும் ஒற்றடுத்துரியசையாயினவாறு. உம்மை, எதிர்மறையாகலான் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை. இங்ஙனம் வருமொழி யொற்றுமிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபுமா மெனவே, உண்ணும் எனவும், நடக்கும் எனவும், நிலைமொழியொற்று நின்றவழித் தேமாவும் புளிமாவு மாவதல்லது நேர்பசையும் நிரைபசையு மாகாதென்பதாம். விக்குள், கடவுள் என்பனவும் அவை. (10) நச்சினார்க்கினியம்: இது உரியசைகள் ஒற்றுப்பெற்று நிற்குமென எய்தாத தெய்து வித்தது. இ-ள். குற்றியலுகரமும் முற்றியலுகரமும் எ-து முற்கூறிய குற்றியலுகரமும் முற்றியலுகரமும். ஒற்றொடு... ... ... பெறுமே எ-து வருமொழி வல்லெழுத்து வரும்வழி வல்லொற்றொடு தோன்றி நிற்கவும் பெறும் எ-று. உதாரணம்:- சேற்றுக்கானீலம், நாணுத்தளையாகவைகி, நெருப்புச் சினந்தணிந்த, கனவுக்கொ னீகண்டது என இருவகை உகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு காண்க. உம்மை எதிர்மறையாதலின் ஒற்றடாது வருதலே பெரும்பான்மை யென்றுணர்க.1 நிலைமொழி ஒற்று மிக்கு உண்ணும், நடக்கும் என்பன தேமா புளிமாவாயே நிற்கும்; விக்குள், கடவுள் என்பனவும் அவை. ஆய்வுரை : இஃது உரியசைக்கு எய்தாதது எய்துவிக்கின்றது. (இ-ள்) உரியசைக்கு உறுப்பாய் வருமெனப்பட்ட குற்றிய லுகரமும் முற்றியலுகரமும் தம்பின்னர் ஒற்றொடுகூடி நிற்றலையும் பெறும்: (அவ்வொற்று வருமொழிப் புணர்ச்சியால் நிலை மொழிக் கண் தோன்றிய ஒற்றாயின்) எ-று. ஒற்றொடு நிற்கப் பெறும் என்னாது ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறும் என்றமையால் அவ்வுகரங்களின் பின்வரும் ஒற்று நிலைமொழியீற்றின் இயல்பாகவுள்ள ஒற்று அன்றென்பதும், வருமொழி வல்லெழுத்து மிக்குத் தோன்றிய ஒற்றென்பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. உ-ம். சேற்றுக்கால், நாணுத்தளை, நெருப்புச்சினம், கனவுக் கொல்-என இருவகையுகரமும் ஒற்றோடு தோன்றி நேர்பும் நிரைபுமாய் நின்றன. கூறும், கிடக்கும் என இயல்பாகிய ஒற்றீறாயவழி அவை முறையே தேமா, புளிமா என இயற்சீராவதல்லது நேர்பும் நிரைபும் ஆகா என்பதாம். நிற்கவும் பெறுமே என்புழி உம்மை எதிர்மறையாதலால் நேர்பு, நிரைபு என்னும் இவ்வுரியசைகள் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை யென்றார் பேராசிரியர். 10. அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல்* வல்லோர் ஆறே. இளம்பூரணம் : என்---எனின். வகையுளி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அசையையுஞ் சீரையும் ஓசையோடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள்நெறி யென்றவாறு. அஃதாவது பொருளொடு சொல்லை யறுத்தவழித் தளையுஞ் சீருஞ் சிதையின் அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக என்றவாறு. அது வருமாறு : மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3) என்றவழி வாழ்வாரெனப் பொருணோக்கிச் சீராமாயின் ஓசை கெடும். அதன்கண் வாழ் என்பதனை முதனின்ற சீரோ டொட்டக் கெடாதாம்.1 பிறவு மன்ன. இத்துணையும் கூறப்பட்டது அசைவகை.2 (10) பேராசிரியம் : இது, மேற் கூறப்பட்டனவற்றுக்கும் இனிவருஞ் சீர்க்கு மெல்லாம் புறனடை. (இ-ள்.) அசைகளையுஞ் சீர்களையும் ஓசையொடு சேர்த்தி வேறுபடுத்து உணர்த்துவித்தலும் அச்செய்யுளிலக்கணத் துறை போயினாரது நெறி (எ-று). மேல் (செய்-1) மாத்திரை யென்பதோர் உறுப்புரைத்தான்; அதனான் அசை சீர்களது ஓசையை அளந்து கூறுபடுத்து இன் னோசையும் இன்னாவோசையு முணர்த்துக. எழுத்தியல் வகைக்கும் இஃதொக்கும்.1 குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு (யா. வி. ப. 33. 181) எனின், வெண்பாவீற்றடி இன்னோசைத்தன்றாம். கருப்புக் கொழுந்து கவர்ந்து என முடிக்கின், இன்னோசைத்தாய் வெறுத்திசையின்றா மென்பது. நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3) இதனுள், வாழ்வார் என்னும் மொழியை வகுத்து, வாரென நேரசைச் சீராக்கி வகுப்பவே அசையினை இசையொடு சேர்த்திற்றாம். இனி, நீடுகொடி என்பதனை மாவருவாய் என்று அசையுஞ்சீரும் இசையிற்சேர்த்துக வென்பாருமுளர்.2 இவற்றைப் பிறநூலார் வகையுளியென்ப;3 இச்சூத்திரத்துள், வகுத்தன ருணர்த்தல் என்றமையின். இனி, வெண்பாவினுள் வெண்சீரொன்றி வந்தவழியும் வேற் றுத்தளை விரவும் இடனுடைய; அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக. மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்பது, பன்னிரண்டெழுத்தடி; மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய் என்பது, பதின்மூன்றெழுத்தடி; மாசேர்வாய் மாவருவாய் மாசேர்வாய் மாவருவாய் என்பது, பதினான்கெழுத்தடி;இவை மூன்றும், அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய (தொல்-செய். 58) என வெண்பாவிற்கு ஓதிய அளவடியேயாயினும் இக்காட்டிய அலகிடுகையாற் கலித்தளை தட்டுத் துள்ளலோசையும் பிறக்கும். மாசேர்வாய் மாசேர்வாய் பாதிரி பாதிரி எனவும், மாசேர்வாய் பாதிரி பாதிரி காருரும எனவும், மாசேர்வாய் பாதிரி காருருமு காருருமு எனவும், முன்காட்டிய மூன்றனையுமே இவ்வாறு அலகிட்டு ஓசையூட்டக் கலித்தளை தட்டாது வெண்பாவடியேயாம். இவ்விரு கூறும் ஓசையொடு சேர்த்துணர்த்துக. பதினான்கெழுத்தின் இறந்த பதினைந்துநிலனும் பதினாறுநிலனும் பதினேழுநிலனுமென இம்மூன்றும் வெண்சீர்வந் தொன்றியக்காலும் இயற்சீர்வந் தொன்றாக்காலும் ஒரு ஞான்றுஞ் செப்பலோசை பிறவா; அவையும் ஓசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக; அவை வருமாறு: புலிவருவாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய் எனவும், மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் எனவும், புலிவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் எனவும், இவை வெண்சீரொன்றியுங் கலித்தளை தட்டின; இனி இவற்றை இயற்சீர்கொடுத்துச் சொல்லுங்காலுஞ் செப்பலோசை சிதையும்; என்னை? காருருமு காருருமு காருருமு பாதிரி எனவும், காருருமு காருருமு காருருமு காருருமு எனவும், நரையுருமு காருருமு காருருமு காருருமு எனவும், இவை இயற்சீரான் வந்தும் வேறொரு சந்தப்பட்டுச் செப்பலோசை சிதையநிற்கு மென்பது, அசையுஞ் சீரும் இசையோடு சேர்த்தி வகுத்துணர்த்துக. இன்னோரன்ன பிறவும் பெரிதும் எஃகுசெவியும் நுண்ணுணர்வும் உடையார்க்கன்றி உணரலாகா.1 ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய் என்றக்கால், ஞாயிறு புலிவருவாயென இயற்சீரின்பின்னர் நிரை யசை வந்து, சீரியை மருங்கி னோரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும் (தொல்-செய். 56) என்பதனான். ஆசிரியத்தளையாயினும் அஃது ஆண்டுக் கலித் தளைப்பாற் படுமென்பது. அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி என்பதனான் உணரப்படும். இனி, ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய் என்புழிப், புலிசேர்வாய் மாசேர்வாயென நேரொன்றிய தேனும் அது கலித்தளையென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி என்பதனான் உணரப்படும். இன்னோரன்ன பலவுமுள; அவை யெல்லாம் வரையறுத்து இலக்கணங் கூறப்படா; அவற்றை அவ்வாறு வேறுபடுத்துணர்த்துதல் அவ்வத் துறைபோயினார் கடனென அடங்கக் கூறல்வேண்டி, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே என்றானென்பது. உம்மையான் அடியினை வகுத்துணர்த்துதலுங் கொள்க.1 அது, நுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே (அகம்-கடவுள் வாழ்த்து) என்புழி, இகலட்டு என்னுஞ்சீர் எழுத்து முதலாக ஈண்டிய வடியிற் குறித்த பொருளை முடியநாட்டப் பின் வந்ததாகலின் யாப்பென்னும் உறுப்பினுள் அடங்காது இகலட்டுக் கையதென மேலடியோடு பொருள் கூடியும், இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தியதேயாம். இன்னும் இவ்விலேசானே எழுத்தல்லோசையும்2 அசையொடுஞ் சீரொடுஞ் சேர்த்தி வகுத்துணர்த்தலுங் கொள்க. அவை, சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை என்றாற்போல்வன. இனி, அகவலோசை மூன்றெனவுஞ் செப்பலோசை மூன்றெனவும் அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்தி யென வகுத்துணர்த்துவாருமுளர்.3 அவை இயலசைமயங்கிய இயற்சீரும் உரியசைமயங்கிய இயற்சீரும் வெண்சீரும்பற்றி ஓசை வேறுபட்டுத் தோன்றுமென்க. அங்ஙனமாயினும் அவை மும்மூன்றாக்கி வரை யறுக்கப் படாமையின் ஈண்டவை கூறானென்பது. இனி, ஒருசாரார் அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தலென்பதனை இவ்வாறுமுரைப்ப. என்னை? ஒரு செய்யுளுட்கிடந்த அசை சீர்களை ஈண்டுக் காட்டிய தேமா புளிமாவென்பன முதலாகிய உதாரணங்களோடு சேர்த்தி அவ் விரண்டனையும் ஒக்கும் வகையான் ஓசையூட்டிக் காட்டுப; அற்றன்று, இவ்வுதாரணஞ் சீரென்று வலித்திருந்தார்க்காம் அது செய்துகாட்டல் வேண்டுவது. எல்லாச் சொல்லிற்கும் ஏற்ற வாற்றான் அசையுஞ்சீரும் இசையோடெனப் பொதுவகையாற் கூறினமையின் அதுகாட்டல் நிரம்பாதென்பது.1 இனிக், கடியாறு கடியாறு கடியாறு கடியாறு என்பதனைத் துள்ளலாகச் சொல்லிக் கலியடியெனவுங், கடியாறு என்பது நேர்பீறாமென்பதாயினும், அது வெண்சீரே ஈற்றசை நிரையியற்றாய் நின்றதெனச் சொல்லி அதற்கு இலக்கணம். வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (தொல்-செய்-29) எனப் பொருளுரைத்து, மற்றதனைக் fȤjisbadî§ காட்டுப. அற்றன்று; கடியாறு என்னுஞ் சீரின் உறழ்ந்த ஆசிரியவடியும் அதுவே வாய்பாடாக வருமாகலின், மற்றதன்கண் துள்ளலோசை பிறந்ததாலெனின், அவற்றுக்கண் ஒரோமாத்திரை கொடுப்பத் துள்ளலோசை பிறந்ததாயினும், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்திச் சொல்லுக வெனவே அங்ஙனம் மாத்திரை நீட்டிச்சொல்லாது அகவலோசைப்படச் சொல்லுகவென்பது இதனாற் பெற்றாமாகலின் அது பொருளன் றென்பது.1 (11) நச்சினார்க்கினியம்:- இது முற்கூறியவற்றிற்கும் இனி வருஞ்சீர்க்குமெல்லாம் புறனடை. (இ-ள்)அசை......nr®¤â எ-துஅசைகளையு«சீர்களையு«ஓசையோLசேர்த்தி. வகுத்......uhnw எ-து வேறுபாடுணர்வித்தலும் செய்யுளிலக்கணத் துறைபோயினாரது நெறி எ-று. முற்கூறிய மாத்திரையென்னு முறுப்பின் ஓசையை யளந்து இன்னோசையும், இன்னாவோசையும் அறிந்து உணர்த்துக. எ-று. உ-ம். தருக்கிப் புணர்ந்து தணந்த தமது பொருப்புப் புடைத்துப் புடைத்து என்றால் வெண்பாவீற்றடி இன்னோசைத்தாகாமையிற் பொருப்புத் jழைந்தbபாழிந்துvனbமல்லினவோசைnசர்க்கïன்னோசைத்jயிற்று‘நிலமிசைÚடுவாழ்tர்(திருக்குறள்-3)ïதனுள்tழ்வாரென்னும்Xசையைtகுத்துவார்vனnநரசைக்Óராக்கmசையான்ïன்னோசைத்தாயிற்று.ïjid வகையுளி என வேறோருறுப்பாக்குவாருமுளர். இனிக் கட்டளையடியையும் சீர்வகையடியையும் இசையொடுசேர்த்தி இன்னோசையுணர்க. அஃது அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய (செய்-58) என்ற பதினான்கெழுத்தளவும்வருங் கட்டளை வெண்பாவும் வெண் சீரேயொன்றிற் கலித்தளைதட்டு இன்னோசை பெறாதாம். மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்றாற் றுள்ளலோசையும் பிறக்கும். இதனை மாசேர்வாய் பாதிரி காருருமு காருருமு எனின் இன்னோசைத்தாய்ச் செப்பலோசை பிறந்தது. இனிச் சீர்வகையடிக்கும் யாதானு நாடாமா லூராமால் யாதோதான் என்றாற் சீர்வகைத் துள்ளலோசையும், என்னொருவன் என்றாற் சீர்வகைச் செப்பலோசையும் பிறக்குமாறு இசையொடு சேர்த்தியுணர்க. இனி ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய் என்றால் ஞாயிறு என்ற இயற்சீர்ப்பின் நிரையொன்றி ஆசிரியத்தளையா யிற்றேனும் கலித்தளைப்பாற்படுதலும்: ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய் என்றவழிப் புலிசேர்வாய் மாசேர் வாயென நேரொன்றிற்றேனும் கலித்தளைப்பாற்படுதலும் இசையொடு சேர்த்தியுணர்க. இவ்வாறே பிறவும் வகுத்துணர்த்துதல் அத் துறைபோயினார்க்கே தெரிவதாம். இனி உம்மையான் அடியுமிவ்வாறே வகுத்துணர்த்துக. நுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே (அகம்-கடவுள் வாழ்த்து) என்புழி இகலட்டு என்னுஞ்சீர் குறித்தபொருளை முடியநாட்டும் யாப்பென்னும் உறுப்பினுள் அடங்காது இகலட்டுக்கையது என மேலடியோடு பொருள் கூடிற்றேனும் இசையொடு சேர்த்தி வகுத்ததாயிற்று. இன்னும் அதனானே எழுத்தல் கிளவியாகிய சுஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை என்பதனை அசையொடுஞ் சீரொடுஞ் சேர்த்துணர்த்தலுங் கொள்க. இனி அகவன் முதலிய நான்கோசையினையும் ஒன்று மூன்றாக்கி வகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்றாயிற்று; என்னை? இயலசை மயங்கிய இயற்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும், வெண்சீரும் பற்றி யோசை வேறுபடத் தோன்றலின் அவை பன்னிரண்டென்னும் வரையுளடங்காவென்பதுபற்றி இன்னும் இசையொடு சேர்த்தி என்றதனானே ஓரள பாகு மிடனுமா ருண்டே (தொல்-மொழி மரபு-2) என்ற ஐகாரமும் பொருள்சிதைந் திசையொடு சேர்தல் கொள்க. வண்கொன் றையைமருட்டுங் காண் புகழ்த லானாப்பெருவண் மையனே இவை முதலிடைகடைகளிற் சிதைந்தும் வருமென்று கொள்க.1 ஆய்வுரை : இது, முற்கூறிய அசை வகைக்கும் இனிக்கூறும் சீர்வகைக்கும் ஆவதோர் நெறியுணர்த்துகின்றது. (இ-ள்.) அசைகளையும் சீர்களையும் ஓசையோடு சேர்த்தி அவற்றை வகைப்படுத்து உணரச் செய்தலும் செய்யுளிலக்கணத் துறையில் வல்லவர்களது நெறியாகும் எ-று. செய்யுட்குரிய உறுப்புக்களாகிய அசையினையும் சீரினையும் மாத்திரையாகிய அளவினால் அளந்து இஃது இன்ன அசை, இஃது இன்ன சீர் என ஓசையுடன் சேர்த்திப் பாவுக்குரிய இனிய ஓசை இதுவெனவும் இன்னா ஓசை இதுவெனவும் செவி கருவியாக உணர்ந்து அசையினையும் சீரினையும் பகுத்துணர்த்துக என்பதாம். ஆடுநடைப் புரவி அரசர் கோமகன் எனவரும் அகவலடியின் முதற்சீரின் அசைகளை ஆடு-நடைப் (நேர்பு-நிரை) என இரண்டாகப் பகுத்து ஆசிரியவுரிச்சீராக இயைத்துக் கூறுங்கால் அசையும் சீரும் இசையொடு பொருந்தி இனிய ஓசையுடையதாக அமைதலும், இவ்வாறன்றி ஆ-டுந-டைப் (நேர்-நிரை-நேர்) என மூவசைச் சீராகப் பகுத்துக் கூறுங்கால் இன்னா ஓசையினதாதலும் செவி கருவியாகக் கூர்ந்துணர்வார்க்கு இனிது புலனாம். பிறவிப் பொருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் எனவரும் குறள்வெண்பாவின் இரண்டாமடியினை இறைவ! னடிசேரா! தார் என மூன்று சீர்களாகப் பிரித்து இசையொடு சேர்த்துங்கால் அவ்வடி வெண்பாவின் இறுதியடியாகிய முச்சீரடியாய் இனிய ஓசையுடையதாதலும், அவ்வாறன்றி இறைவனடி! சேராதார் எனச் சொற்கிடந்தாங்கே பிரித்தால் வெண்பாவின் ஈற்றடிக்குரிய முச்சீரடியாகாது இருசீரடியாய்ச் சீர்குன்றி இன்னா ஓசைத்தாதலும் காணலாம். சொற்களின் பொருள் ஒன்றைமட்டும் நோக்கி அசையும் சீரும் பகுக்காது பாவுக்குரிய இன்னோசையினையே நோக்கி இறைவ! னடிசேரா! தார் என இவ்வாறு அசையும் சீரும் பகுத்துரைக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் வகையுளி என வழங்குவர். வகையுளி என்பது, முன்னும் பின்னும் அசை முதலாய் உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமல் ஓசையறுத்தல் ... ... ... அருள்நோக்கு நீரார் அசைசீ ரடிக்கண் பொருள்நோக்கா தோசையே நோக்கி --- மருள்நீக்கிக் கூம்பவும் கூம்பா தலரவுங் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு இதனை விரித்து உரைத்துக் கொள்க எனவரும் யாப்பருங் கலவிருத்தியும் மேற்கோளும் இங்குக் கருதத்தக்கனவாகும். வகுத்தனர் உணர்த்தல் என்ற தொடரும் வதையுளிஎனும் பெயர்க்கு ஆதாரமாதல் காண்க. 11. ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ்* சீரியைந் திற்றது சீரெனப் படுமே. இளம்பூரணம் : என்---எனின். நிறுத்தமுறையானே சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டசைகொண்டு புணர்த்தும், மூன்றசை கொண்டு புணர்த்தும், ஓசை பொருந்தி யிற்றது சீரெனப்படும் என்றவாறு. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள் வாழ்த்து) என்றவழி நான்குசொல்லாகி ஓசை யற்றுநின்றவாறு கண்டு கொள்க.1 எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110) என்றவழி மூன்றசையினாற் சீராகியவாறும் அவ்வளவினான் ஓசையற்றுநின்றவாறுங் கண்டுகொள்க.1 பேராசிரியம் : இது, முறையானே அசையுணர்த்திச் சீராமாறுணர்த்துவான் தொடங்கி அவை இத்துணைப் பகுதியவென்பதூஉம் அவற்றுப் பொதுவிலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டசையானும் மூன்றசையானும் ஓரொரு சொற்கள் சீரியைந்திறுவன சீரென்று சொல்லப்படும். (எ - று) சீரியைந் திறுதல் என்பது வழக்கியல் செய்யுளாமாற்றால் யாப்பினும் பொருள் பெறப் பகுத்துப் பதமாகியவற்றுச் சேறல். உ - ம்: சாத்தன் கொற்றன் எனவும், உண்டான் தின்றான் எனவும் இரண்டசை கொண்டு சீராயின. கானப்பேர் சாய்க்கானம் கூதாளி எனவும், உண்ணாதன தின்னாதன எனவும், இவை மூவசை புணர்ந்து சீராயின. இவை செய்யுளுள் வருமாறு; உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (பத்துப். திருமுரு. 1,2) என ஈரசைச்சீர்கள் வந்தன. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானூட யானுணர்த்தத் தானுணர்ந்தான் (முத்தொள்ளாயிரம். 104) எனவும், வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும் (பத்துப். பட்டின. 1,2) எனவும் இவை மூவசைச்சீர் வந்தன. பிறவுமன்ன. மற்றுச் சீரென்ற தென்னையெனின், பாணிபோன்று இலயம் பட நிற்றலான் அது சீரெனத் தொழிற்பெயராம்.1 என்னை? சொற்சீர்த் திறுதல் (தொல். செய். 123) என்புழித் தொழிற்படுத்தோதினமையின். இனி இயைதல் என்பது அசைவகை ஒன்றொன்றனோடு தொடர்ந்தவழி யல்லாற் சீர்க்கு அலகுபெற லாகாதென்றவாறு; எனவே, அவ்வாறு இலயம்பட நின்றனவாயினும் புணர்ச்சியெய்து மென்பதாம். மற்று, இற்றது என்றதென்னை? சீரென்பது தொழிற் பெயராதலால் அது, சீரியைந்து எனவே, பெறுதுமெனின், அங்ஙனங் கொள்ளிற் சீரியைந்த தொடரெல்லாங் கூடி ஒரு சீராவான் செல்லுமாகலின் இடையிடை இற்றுவரல்வேண்டு மென்றற்கு அங்ஙனங் கூறினானென்பது;1 இதனானே2 ஒரோவழிப் புணர்ச்சிவிகாரம் எய்தாமையுங் கூறினானாம்.3 வண்டுபடத் ததைந்த கண்ணி (அகம். 1) என்புழி, வல்லெழுத்துமிக்க புணர்ச்சிவகையானே சீரியைந்தன. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து என்றவழி ஒன்றோடொன்று தொடர்ந்ததேனும் இற்றதென்பதனான் இறுதிபட நின்றமையின். எல்லா விறுதியும் உகர நிறையும் (தொல். எழுத். 408) என்றதனாற் குற்றுகர முற்றுகரமாகாது நாலெழுத்தடியாயிற்று. இதனை, எழுத்தடியென்றலே வலியுடைத்து; வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தால் நாலெழுத்தடி வேறுண்மையின். ஈரசை கொண்டும் எனவும், மூவசை புணர்ந்தும் எனவுங், கூறினமையான் ஒருசீர் பலசொல் தொடர்ந்துவரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்றவாறாம். எனவே, உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமன்றி வாராவென்பது பெற்றாம். இதனானே ஒருசொல்லைப் பகுத்துச் சீர்க்குவேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையானே வேறு சொல்லிலக்கணம் பெறுமென்பதுங் கொள்க. அது, மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே (அகம். 56) என்புழி, நின்றது என்னுஞ்சீர் குற்றுகரவீற்றுச் சொல்லன்றே, அதனைப் பிரித்து அதுவேயென வேறு சீராக்கவே, அது முற்று கரமாகி வேறுபடுதல் கண்கூடாக் கண்டுகொள்க:1 என்றார்க்கு, எனப்படு மென்ற தென்னையெனின், ஓரசையே சீர்நிலை பெறு மென்று மாயினும் அவை சீரென முன்னோதப்படாவென்றற் கென்பது.2 மற்று நாலசையானும் ஐந்தசையானும் உண்ணா நின்றன. அலங்கரியா நின்றான் எனச் சொல் வருவன உளவாலெனின், அங்ஙனம் வருஞ் சொற்கள் சிலவாகலானும் அவை தாமும் இரண்டுசொல் விழுக் காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும் அவை சீராக வருஞ் செய்யுள் இன்மை யானும் என மறுக்க.3 இனி வஞ்சிப்பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச் சீர் காட்டல் வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை தூங்கலோசையிலவாகலானும் அவை சீரியைந்திறுத லின்மை யானுங் கொள்ளானென்பது. ஈண்டு எனப்படு மென்பதே பற்றி நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலமென்க.4 நச்சினார்க்கினியம் : இது நிறுத்தமுறையானே சீருணர்த்துவான் றொடங்கி அவற்றின் பகுதியும் அவற்றது பொதுவிலக்கணமும் உணர்த்திற்று. (இ - ள்.) ஈரசை யியைந்துகொண்டும் எ-து ஈரசை தன்னில் இயைந்து பொருள்கொண்டும். மூவசை யியைந்துகொண்டும் எ-து மூவசை தன்னிலியைந்து பொருள்கொண்டும். இற்றது சீரெனப்படும் எ-து அற்று நிற்பது சீரென்று சிறப்பித்துச் சொல்லப்படும். சீர்புணர்த்தும்1 சீரெனப்படும் எ-து அவ்வாறன்றி அச்சீர்தான் ஒருசீரோடொருசீர் தொடரப் பிறர் கூட்டப்பட்டு நின்றாலுஞ் சீரென்று சொல்லப்படும் என்றுங் கொள்க. எ-று. இயைந்து என்றதனையும் கொண்டு என்றதனையும் ஈரசைக்கும் மூவசைக்குங் கூட்டிக், கொண்டு என்பதற்குப் பொருள்கொண்டு என்று பொருளுரைக்க. நடுவுநின்ற சீர் என்றதனைப் புணர்த்தும் என்றதனோடு மாறிக்கூட்டுக. இயைந்து என்றதனான்2 ஒருசீர்க்கட் பலசொற்றொடர்ந்து வரினும் அவையொன்றுபட்டுநிற்றல் வேண்டுமென்றுணர்க. எனவே, சொல்லெல்லாம் ஈரசையும் மூவசையுமாயல்லது வாராவென்பதூஉம், இனிப் புணர்த்து என்றதனான் அச்சீர்கள் அவ்வா றற்று நிற்கு மேனும்3 பிறர் தொடர்புபடுத்தும்வழிப் புணர்ச்சி விகாரமெய்தாமற் றம்முட்டொடர்ந்து நிற்றலும் புணர்ச்சி விகாரமெய்தியுந் தொடர்ந்து நிற்றலுமுடைய என்பதூஉங் கொள்க. உ-ம் பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து மதனுடை நெஞ்சுமொடு நடுநா ளென்னாது இவை1 புணர்ச்சி விகாரமெய்தாமல் இசையற்றுத் தொடர்ந்தன. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இது வல்லெழுத்துப் புணர்ச்சியெய்திற்று. இன்னும் அதனானே ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றான் வேறு சீராக்கிய வழியும் அச்சீர்வகையான் வேறு சொல்லிலக்கணம் பெறுதும். அது மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே என்புழி நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து அதுவே என வேறொரு சீராக்க, முற்றுகரமாகி வேறுபடுதல் கொள்க. எனப்படும் என்று சிறப்பித்த வதனான் இவை சிறப்புடைய என்பதூஉம், ஓரசைச்சீர் இவைபோலச் சிறப்பில என்பதூஉம் உணர்த்திற்று. உண்ணாநின்றான் என நாலசையாலும் வருமாலெனின், அவை பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும், அவை சீராகவருஞ்செய்யு ளின்மை யானும், வஞ்சியுள் நேரிழை மகளி ருணங்குணாக் கவரும் (பட்டினப்பாலை) என்ற ஆசிரியவடியினை நாலசைச்சீர் காட்டவேண்டுவார் இருசீரடியாகவுரைப்பினும் அவற்றிற்குத் தூங்கலோசையின்றா கலானும், சீர் தம்முட் புணர்ந்திறுதலின்மையானும், வஞ்சிச்சீர் அறுபது காட்டுகின்றவழி யாண்டும் நேர்பசை நிரைபசைகள் அலகுபெறாமையானும் தொல்காப்பியனார் கொள்ளார். உ---ம் சாத்தன், கொற்றன், தேமா ஈரசைச்சீர் கொண்டன2. கானப்பேர், சாய்க்கானம், தேமாங்காய் எனவும் உண்ணாதன, தின்னாதன, தேமாங்கனி எனவும் இவை மூவசை கொண்டன. பிறர் தொடர்பு படுத்தின செய்யுள் உலகமுவப்ப வலனேர்பு (திருமுருகாற்றுப்படை) யாதானு நாடாமால் எனவும் வசையில்புகழ் வயங்குவெண்மீன் (பட்டினப்பாலை) எனவும் ஈரசைச்சீரும் மூவசைச்சீரும் வந்தன. ஆய்வுரை : இது, சீரின் பொதுவிலக்கணமும் அதன் வகையும் உணர்த்து கின்றது (இ-ள்) இரண்டசை கொண்டு புணர்த்தும் மூவசைகொண்டு புணர்த்தும் ஓசைபொருந்தித் தாள அறுதிப்பட நிற்பது சீர் என்று கூறப்படும் எ-று. சீரியைந்து இறுதல் என்பது, வழக்குநடை செய்யுள் நடை யாகும்படி யாப்பினுட் பொருள்பெறப் பகுத்துச் சொல்லாகிய வற்றுட் செல்லுதல். உ-ம்: வேந்தன் எனவும் வந்தான் எனவும் இரண்டசை புணர்ந்து சீராயின. வானத்தார் எனவும் நில்லாதன எனவும் மூவசை புணர்ந்து சீராயின. இனிச் செய்யுளுள், தாமரை புரையுங் காமர் சேவடி என்றவழி ஈரசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஓசை அறுதிப்பட நின்றவாறும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை என்றவழி மூவசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஓசை அறுதிப்பட நின்றவாறும் காணலாம். ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ் சீர் இயைந்து இற்றது சீர் என்றமையால், ஒருசீர் பலசொல் தொடர்ந்துவரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்பதும், எனவே உலகில் வழங்கும் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமல்லது வாரா என்பதும் பெறப்படும். ஒரு சொல்லைப் பகுத்துச் சீருக்கு ஏற்றவாறு வேறு சீராக ஆக்கிய நிலையிலும் அச்சீர்வகையால் வேறு சொல்லிலக்கணம் பெறப்படும். மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே எனவரும் அடியில் நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைத் தொழுதுநின்-றதுவே எனப்பிரித்து வேறொரு சீராக்கியவழி குற்றுகரம் முற்றுகரமாகி உடம்படுமெய்யாகிய வகரம் பெற்று வேறுபடுதல் காண்க. சீரெனப்படுமே எனச் சிறப்பித்தவதனால் ஈரசைச் சீரும் மூவசைச் சீரும் ஆகிய இவை சிறப்புடைய என்பதும் ஓரசைச்சீர் இவைபோலச் சிறப்பில என்பதும் பெறப்படும். ஈண்டு எனப்படும் (எனச் சிறப்பித்துரைக்கப்படும்) என்பதேபற்றி இத்துணைச் சிறப்பிலதாகிய நாலசைச் சீரும் கொள்ளப்படும் என்ற கருத்தால் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் நாலசைச் சீர் கொண்டனர். அவர்கள் நாலசைச் சீர்க்கு உதாரணமாக உலக வழக்கினுள் காட்டும் உண்ணாநின்றன முதலிய சொற்கள் இருசொற் றன்மையவாய்ப் பிளவுபட்டு நிற்றலின் அவை ஒரு சீரெனக் கொள்ளப்படாவாதலானும் அவற்றை ஒருசீராகக் கொண்டுவரும் செய்யுள் யாண்டும் இல்லாமையானும் அவர்கள் நாலசைச் சீர் காட்டல்வேண்டி வஞ்சிப்பாவினுள் வந்த நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் என்ற ஆசிரிய அடியினை இருசீரடியாக வுரைப்பினும் அதற்குத் தூங்கலோசை வாராமையானும், வஞ்சிச்சீர் அறுபது காட்டும் நிலையில் நேர்பசை நிரைபசைகள் யாண்டும் அலகு பெறாமையானும் நாலசைச்சீர் கொள்ளுதல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 12. இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். இளம்பூரணம் : என்-எனின். ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீர் எனப்படும்; உரியசை மயங்கிவந்தன ஆசிரியவுரிச்சீ ரெனப்படும் என்றவாறு.1 மயங்குதலாவது ஒருங்குவருதல். நேர் நிரை நேர்பு நிரைபு என்னு நான்கினையுந் தம்மினுறழப் பதினாறு அசைச்சீராம்.1 அவற்றுள் இயலசையாகிய நேரும் நிரையுந் தம்மின் உறழ நான்கு சீராம் அவை இயற்சீர் எனப்படும். உதாரணம் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என வரும். இனி உரியசையாகிய நேர்பு நிரைபு மென்றவற்றைத் தம்மினுறழ நான்குசீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும்.1 உதாரணம் ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு என வரும். (12) பேராசிரியம்: இது, நிறுத்தமுறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச்சீ ருணர்த்துகின்றது. (இ-ள்.) 1நேர்நேர் 2நிரைநேர் 3நிரைநிரை 4நேர்நிரை என்பன நான்கும் இயற்சீர்; 1நேர்புநேர்பு 2நிரைபுநேர்பு 3நிரைபு நிரைபு 4நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரியவுரிச்சீர் (எ-று). இவற்றுள் இயற்சீரைத் 1தேமா 2புளிமா 3கணவிரி 4பாதிரி எனவும், 1வாய்க்கால் 2வாய்த்தலை 3துலைவாய் 4துலைமுகம் எனவும் (யா.வி.ப.66) பிறவும் இன்னோரன்ன வேறு வேறு காட்டுப.இனி, வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஆசிரிய வுரிச்சீரை 1வீடுபேறு 2வரகுசோறு 3தடவுமருது 4பாறுகுருகு எனவுங் காட்டுப. அவற்றுக்குச் செய்யுள்: அவரே,கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே (குறுந்.216) என்புழிக் கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை1 என நான்கியற் சீரும் வந்தன. வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப2 (புறம்.35) எனவும், வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்3 (பத்துப். திருமுரு.106) எனவும், பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்4 எனவும், நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து5 (அகம்.96) எனவும் வரும் இவற்றுள் வீற்று வீற்று எனவும், வசிந்து வாங்கு எனவும், பூண்டுகிடந்து எனவும், இறவுக்கலித்து எனவும் நான் காசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. பிறவு மன்ன. இஃது, ஆட்சியுங் குணனுங் காரணமாகப்பெற்ற பெயர். ஆட்சி: இயற்சீ ரிறுதிமு னேரவ ணிற்பின் (தொல்.செய்.19) எனவும் பிறாண்டும் ஆளுப. குணம்: இயற்சீராகலானும் நான்குபாவிற்கும் இயன்று வருதலானுங் குணங் காரணமாயிற்று. இயல்பு வகையான் ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும் நான்குபாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும்,இயலசையான் வரும் ஈரசைச் சீராகலானும், இவற்றை ஒருபாவிற் குரிமைகூறுதல் அரிதாகலானும் இவற்றை இயற்சீரென்றான். vdnt,brhšÈ‹ முடியும் இலக்கணத்தால் நான்குபாவிற்கும் உரியவென்பதூஉம் ஈண்டுப் பெற்றாம். அல்லதூஉம் அவற்றைத் தளைகூறும்வழி மூன்றுபாவிற்கும் உரிமைகூறிக் கலிப்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் நேரீற்றியற்சீர் வாராவென, ஒழிந்தசீர் வருமென்பதுடன்பட்டமையானும் நான்கு பாவிற்கும் இயன்றுவருமென்பது பெற்றாம்.1 ஆசிரியவுரிச்சீர் என்றதூஉம் அவ்வாறே ஆட்சியும் குணனும் நோக்கிய பெயர். ஆட்சி, வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் (335) எனவும் பிறாண்டும் ஆளுப. உரியசை மயக்கமாகலானும் ஆசிரியத்திற் குரிமையானும் இக்குறி குணங் காரணமாயிற்று.2 மற்றிவை இயற்சீர்போல ஓரோர் சொல்லாய் யாண்டும் நிற்ற லில்லை பிறவெனின், அற்றன்று, தோன்றுவாக்கு இரங்குவாக்கு என்றாற்போல்வன உளவென்பது. இனி,இவ்வியற்சீர்தாமும் இரண்டுசொற் கூடியும் ஒன்றாகிய வழியே சீரெனப்படும்; அது போல இவையும், எல்லாத் தொகையு மொருசொன் னடைய (தொல்.சொல்.எச்ச.14) என்பதனான் ஒரு சொல்லாயினவெனினும் அமையும். மற்று ஒழிந்த இயற்சீருங் கூறாது1 ஆசிரியவுரிச்சீர் ஈண்டுவைத்த தென்னை யெனின், இவ் விருபகுதியவற்றை இயற்சீரென்றும் (331) ஆசிரியவுரிச்சீரென்றும் (335) ஆளுமாகலின் என்றவாறு.2 நச்சினார்க்கினியம்: இது முறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச்சீர் உணர்த்திற்று. இ-ள். இயலசை மயங்கினவற்றை இயற்சீரென்றும் உரியசை மயங்கினவற்றை ஆசிரியவுரிச்சீரென்றும் கூறுப.எ-று. மயக்கம் என்றது தம்மொடு தாமயங்குதலும் தம்மொடு பிறிது மயங்குதலுமாம். உ-ம். நேர்நேர், நிரைநிரை எனத் தம் மொடுதாமயங்கின; இரண்டினையும் பிரித்து நேர்நிரை நிரைநேர் எனப் பிறிதொடுமயக்க இந்நான்கும் இயற்சீராயிற்று. இந்நான்கு வழியுமல்லது வேறுகூட்டமின்மையும் உணர்க. இவற்றைத் தேமா, புளிமா, பாதிரி, கணவிரி எனவும் கருவிளம் கூவிளம் எனவும் காட்டுப; பிறவாறுங்காட்டுப. நேர்புநேர்பு நிரைபுநிரைபு எனத் தம்மொடு தாமயங்கின. இரண்டினையும் பிரித்து நேர்புநிரைபு, நிரைபுநேர்பு எனப் பிறிதொடுமயக்க இந்நான்கும் ஆசிரியவுரிச் சீராயிற்று. இவற்றை வீடுபேறு தடவுமருது, பாறுகுருகு, வரகுசோறு எனக்காட்டுப. செய்யுள்: அவரே கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை(குறுந்தொகை. 216) என நான்கியற்சீரும் வந்தன. வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப எனவும் நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து (அகம்-96) எனவும் பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன் எனவும் வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் (திருமுருகாற்றுப்படை) எனவும் வந்தவற்றுள் வீற்றுவீற்று எனவும் இறவுக்கலித்து எனவும் பூண்டுகிடந்து எனவும் வசிந்துவாங்கு எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தன.1 நான்கு பாவிற்கும் இயற்றலானும், இயல்புவகையான் ஒரோசொல்லாய் வருதல் பெரும்பான்மை யாகலானும் இயற் சீரெனவும், ஆசிரியத்திற்கு உரிமையான் உரிச்சீரெனவும் ஆட்சியுங்குணமுங் காரணமாகப் பெற்றபெயர். இயற்சீ ரிறுதிமுன் (செய்- 16) எனவும் வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் (செய்.23) எனவும் பிறாண்டும் ஆள்ப. ஆய்வுரை: இஃது இயலசையிரண்டு தம்முட் கூடியும் உரியசையிரண்டு தம்முட் கூடியும் இருவகை ஈரசைச் சீர்களாமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீரெனப்படும். உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச்சீர் எனப்படும் எ-று. நேர் நிரை நேர்பு நிரைபு என்னும் நான்கு அசைகளையும் முதலசைகளாக நிறுத்தி அவற்றின்முன் அந்நான்கசைகளையும் இரண்டாம் அசைகளாக வருவித்து ஒன்றோடொன்று கூட்டிப் பெருக்க ஈரசைச் சீர்கள் பதினாறாகும்.அவற்றுள் நேர், நிரை என்னும் இயலசையிரண்டனையும் பெருக்கப் பிறந்த ஈரசைச் சீர்கள் நான்கும் இயற்சீர் எனப் பெயர்பெறும். அவை தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன. நேர்பு, நிரைபு என்னும் உரியசை யிரண்டனையும் பெருக்கப் பிறந்த ஈரசைச் சீர்கள் நான்கும் ஆசிரியவுரிச்சீர் எனப் பெயர்பெறும். அவை ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு,வரகுசோறு, வரகுதவிடு என்பனவாகும். 13 முன்நிரை இறினும்1 அன்ன வாகும். இளம்பூரணம்: என்-எனின். இதுவும் ஆசிரியவுரிச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நேர்பசை நிரைபசைப்பின், நிரை யிறுதியும் ஆசிரியவுரிச்சீரா மென்றவாறு.2 உதாரணம் யாற்றுமடை, குளத்துமடை என வரும். பேராசிரியம்: இஃது, இயலசையும் உரியசையும் மயங்கிவருவன கூறு கின்றது. (இ-ள்.) உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர் (தொல்.செய்.13) என மேனின்ற அதிகாரத்தான் அவ்வுரியசைப் பின்னர் நிரை யசையுறினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராம் (எ-று).1 அவை, 1நேர்புநிரை, 2நிரைபுநிரை என வரும். இவற்றை 1நீடுகொடி 2நாணுத்தளை 3களிறுபுலி 4விரவுக்கொடி எனவும் பிறவாற்றானுங் காட்டுப. அவையெல்லாம் அறிந்து கொள்க. மற்று, இயலசையும் உரியசையும் இயற்சீராவன இலவோவெனின் உள; அவையன்றே மேற்சொல்கின்றனவென்பது. அஃதேல், இவ்விரண்டும் இயற்சீராகாவோவெனின், அன்ன வென்று மாட்டெறிந்த கருத்தினான் அதுவும் அமையுமென்பது; என்றார்க்கு; இவற்றை ஆசிரியவுரிச்சீரென்றல் குற்றமாம் பிறவெனின், பெரும்பான்மையும் ஆசிரியத்திற்கும் அதற்கினமாகிய வஞ்சிக்கும் உரியவாகலானும், ஒழிந்த இரண்டு பாவின் கண்ணுஞ் சிறுவரவின லாகலானும், வெண்பாவினுட் கட்டளையடிக்கண் வாராவென்பது, கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல்.செய்.24) என வரைந்தமையாற் பெறுதுமாகலானும் இவற்றை ஆசிரியவுரிச்சீ ரென்றலே வலியுடைத்தென்பது2 அன்னவென்பதனை இயற்சீரொடு மாட்டுங்கால் ஈற்றது அதிகாரம்பட இறுதிநின்ற நிரையீற்றியற்சீ ரிரண்டனோடுங் கொள்ளப்படும்; கொள்ளவே, அம்முறையானே நீடுகொடி என்பதனைப் பாதிரி போலவுங் குளிறுபுலி என்பதனைக் கணவிரி போலவுந் தளைகொள்ளப்படுமென்பதாம்.1 அவை செய்யுளுள் வருமாறு: ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புறம்.55) எனவும், உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறம்.3) எனவும், ஓங்குதிரை வியன்பரப்பின் (பத்துப்.மதுரை 1) எனவும், நிலவுமணல் வியன்கானல் (புறம்.17) எனவும் இவை ஆசிரியத்துள்ளும் வஞ்சியுள்ளும் வந்தவாறு. தூங்குதிரை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டே எனவும், ஏடுகொடி யாக வெழுதுகோ (முத்தொள்.50) எனவும் இவை வெண்பாவினுட் கட்டளையடியல்லாதவழிச் சிறு பான்மையான் வந்தன.2 மற்றிவையுங் கட்டளையடி யென்னாமோ வெனின் அற்றன்று; அது தளைவகை கொள்ளுந்துணை இன்னோசைத்தன்றென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல். செய். 11) என்பதனானுணர்க. இப்பகுதி யறியாதார் அடியுறழ்ந்ததனாற் பயனென்னை யென்றிகழ்ப. (14) நச்சினார்க்கினியம் : இஃது இயலசையும் உரியசையும் மயங்கிச் சீராமாறு கூறு கின்றது. இ-ள். உரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர் (செய்-13) என்றஅதிகாரத்தான் அவ்வுரியசைமுன்னர் நிரையசைவரினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராம். எ-று. அவை நேர்புநிரை, நிரைபுநிரை. உ-ம். நீடுகொடி நாணுத் தளை, உரவுபுலி விரவுகொடி எனவரும். செய்யுள் : ஒங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புறம்-55) நாணுத்தளை யாக வைகி மாண்வினைக்கு களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை (புறம்-64) உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறம்-3) ஒங்குதிரை வியன்பரப்பின் (மதுரைக்காஞ்சி) பன்னுதமிழ்ப் பாவலர்க்கு களிற்றுநிணத் துகிலுடுத்த பிணர்மோட்டுப் பேய்மகளிர் நிலவுமணல் வியன்கானல் எனவும்1 ஆசிரியத்திலும் வஞ்சியிலும் வந்தன. தூங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டு எனவும் ஏடுகொடி யாக வெழுதுகோ எனவும் வெண்பாவினுட் கட்டளையடியல்வழிச் சிறுபான்மை வந்தன. கட்டளைபடி யன்மை இசையொடு சேர்த்தியுணர்க. இவை இயலசையோடு மயங்கினமையிற் பாதிரி கணவிரிபோலக் கொள்க.1 ஆய்வுரை : இஃது இயலசையும் உரியசையும் மயங்கி ஈரசைச் சீராமாறு கூறுகின்றது. (இ-ள்) நேர்பசை நிரைபசைகளின்பின் நிரையசை இறுதியாய் வரின் அவையும் ஆசிரியவுரிச்சீரெனப்படும். உதாரணம்: ஆற்றுமடை, குளத்துமடை எனவரும். 14 நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால. இளம்பூரணம் : என்---எனின். இது இயற்சீர்க் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உரியசைப் பின்னர் நேரசை வரின், அது இயற்சீ ரென வருமென்றவாறு.2 உதாரணம் ஆற்றுக்கால், குளத்துக்கால் என வரும். (14) பேராசிரியம் : இஃது இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண் டியற்சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) முன்னர் உரியசைப் பின்னர் நிரையசைவரின் ஆசிரியவுரிச் சீராமென்றான். அவ்வதிகாரத்தால் உரியசையிரண்டன் பின்னும் நேரசை வரின் அவையிரண்டும் ஆசிரியப் பாலவாம் (எ-று) அவை நேர்புநேர், நிரைபுநேர் என வரும். உ-ம் 1சேற்றுக்கால் 2வேணுக்கோல் 3களிற்றுத்தாள் 4முழவுத் தோள் என வரும். 1நீத்துநீர் 2குளத்துநீர் 3போதுபூ 4விறகுதீ எனவுங் காட்டுப. பிறவு மன்ன. இவை இயற்சீர் நான்கினுள்ளும் எப்பாற்படுமெனின், அதிகாரத்தால் நீடுகொடி குளிறுபுலி என்பனபோலஇறுதியினின்ற பாதிரி கணவிரிப்பாற்படும் முறையானென்பது. எனவே, போதுபூ பாதிரியாகவும், விறகுதீ கணவிரியாகவும் இயற்றப்படு மென்பது. இவ்வாறு கூறவே, இவை பாதிரி கணவிரிபோல அசை திரிந்து நிரையாமென்பது கொள்ளற்க. நேர்பு நிரைபு முதலாக நிரை யீறாகிய சீர் தளைகொண்டாங்குக் கொள்ளப்படும் இவை யுமென்பதாம். தளைகொளொக்கும் எனவே, ஏழு தளையுள்ளும் இவற்றை ஒன்றொன்றனுள் அடங்கு மென்று அடக்கற்க. என்னை? இவை வேறுவேறு பட்ட அசையான் வேறு வேறு சீராயினமையினென்பது.1 அசைச் சீர்க்கு உரிச்சீரிலக் கணமின்மையின் இதற்கு இஃதொப்ப வாராதென்றுணர்க.2 நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர் என்புழிப் போதுபூவும் விறகுதீயும் வந்தவாறு கண்டுகொள்க. இவற்றை ஆசிரியவுரிச்சீர்ப்பின் வைத்ததென்னையெனின், இவையும் அவைபோல ஈண்டொருங்கியைதல் பெரும்பான்மை யென்பது அறிவித்தற்கென வுணர்க.1 (15) நச்சினார்க்கினியம்:- இஃது இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண்டியற் சீருணர்த்திற்று. இ-ள். அவண் நேர்நிற்பின் இயற்சீர்ப்பால எ-து மேனின்ற அதிகாரத்தான் உரியசையிரண்டன்பின்னும் நேரசைவரின் அவையிரண்டும் இயற்சீர்ப்பாலவாம்2 எ-று. அவை நேர்புநேர், நிரைபுநேர்; உ-ம். சேற்றுக்கால் வேணுக் கோல், களிற்றுத்தாள், முழவுத்தோள் எனவரும்; நீத்துநீர், குளத்துநீர் எனவும் போதுபூ, மேவுசீர், விறகுதீ, உருமுதீ எனவும் கண்டு கொள்க. இவையெல்லாம் பாதிரிகணவிரி என்னும் இயற்சீர்ப்பாற்படும். போதுபூ, விறகுதீ என்னுமிரண்டன்கட் குற்றுகரம் மேல்வரும் நெடிலோடிணைந்து நிரையாய்ப் பாதிரி கணவிரிபோல நிரையாமோவெனின்; ஆகா:- அக் குற்றுகரம் நேர்பு நிரையுமா யேநின்று நேருநிரையு முதலாய் நிரையீறாகிய சீர் தளை கொண்டாங்குத் தட்கும்.3 செய்யுள்- நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர் எனப் போதுபூவும், விறகுதீயும் வந்தன. ஆய்வுரை: இதுவும் அது. (இ-ள்) நேர்பசை நிரையசைகளின்பின் நேரசை நிற்பின் இயற்சீராம் எ-று. உ-ம். ஆற்றுக்கால், குளத்துக்கால் எனவரும். 15 இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே நிரையசை இயல ஆகு மென்ப. இளம்பூரணம்: (இ-ள்.) இயலசைப் பின்னர் உரியசைவரின், நிரையசை வந்தாற்போலக் கொள்க வென்றவாறு. எனவே இவையும் இயற்சீ ரென்றவாறாம். உதாரணம் மாங்காடு, களங்காடு, பாங்குரங்கு, கடிகுரங்கு என வரும்1 இத்துணையுங் கூறப்பட்டது ஈரசைச்சீர் பதினாறினும் இயற்சீர் பத்தும் ஆசிரிய வுரிச்சீர் ஆறுமா மென்றவாறு2 பேராசிரியம் : இது, மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் இயலசை உரியசை மயக்கத்துள் ஒழிந்து நின்ற நான்கு இயற்சீரு3 முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயலசை இரண்டின்பின்னும் உரியசை இரண்டும் ஒன்று இரண்டு செய்து மயங்கி நான்காகுங்கால் அவ்விரண்டு உரியசையும் இயலசை மயக்கமாகிய இயற்சீர்நான்கனுள் நிறையீற்றுப் பாதிரியுங் கணவிரியும் போல வருஞ்சீரொடு தட்கும் (எ - று). அவை 1நேர்நேர்பு 2நேர்நிரைபு 3நிரைநேர்பு 4நிரை நிரைபு எனவரும். வருங்கால் நேர்முதற்சீர் இரண்டும் பாதிரி போலவும் நிரைமுதற்சீர் இரண்டுங் கணவிரிபோலவுங் கொள்ளப்படு மென்றவாறு.3 எனவே, இச்சூத்திரமுஞ் சீராமாறேயன்றிச் சீர்தளைக்குமாறுங் கூறியவாறாயிற்று.4 இவற்றைப் 1போரேறு 2பூமருது 3கடியாறு 4மழகளிறு எனினும் இழுக்காது. (16) நச்சினார்க்கினியம் : இது மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் உரியசை இயலசை மயக்கத்துள் ஒழிந்துநின்ற நான்கியற்சீரும் உணர்த்திற்று. (இ - ள்.)இயலசை......tÇnd எ-து இயலசையிரண்டன் பின்னும் உரியசையிரண்டும் ஒன்றிரண்டுசெய்து மயங்கி நான் காங்கால்அவ்விரண்டுரியசையும்;நிரை..........bk‹g எ-து இயலசை மயக்கமாகியஇயற்சீ®நான்கனுŸநிரையீற்று¥பாதிரியு«கணவிரியு«போyவருஞ்சீரொLதட்கும். எ-று1 அவை நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு எனவருங்கால் நேர் முதலிரண்டும் பாதிரி போலவும் நிரை முதலிரண்டும் கணவிரி போலவும் கொள்க. இச்சூத்திரமும் தளைக்குமாறு கூறிற்றாம். உ-ம். போரேறு நன்னாணு, பூமருது காருருமு, கடியாறு பெருநாணு, மழகளிறு நரையுருமு எனவரும். ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) இயலசைப்பின் உரியசைவரின் நிரையசை வந்தாற் போல, இயற்சீரெனக் கொள்ளப்படும் எ-று. உ-ம்: மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு எனவரும். 16. அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. இளம்பூரணம் : என்---எனின். சீர்க்கண் உயிரளபெடைக்குரியதோர் மரபுணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் என்ற வாறு.1 உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை.2 உதாரணம் கடாஅ உருவொடு... ...tšynj ஒற்று. (குறள். 585) இது அளபெடை யலகுபெற்றது. இடைநுடங்க வீர்ங்கோதை பின்தாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்த - கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு. இதன்கண் அளபெடை யசைநிலையாகி யலகுபெறாதாயிற்று. 16) பேராசிரியம் :ï~J, எய்தியதன்மேற் சிறப்புவிதி; மேல் எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட அளபெடையை Mண்டுbமாழியெனக்T¿னான்,அ›வாற்றானேஅiவgரும்பான்மையும்ஈ©டும்ஈuசைச்சீuகலின்ஈ©டுச்சீ®கூறியவாற்றான்எŒதிநின்றனவ‰றைஎGத்துநிiலமைப்படுத்துஅiசநிலையும்tண்டினமையின். (ï - ள்.) அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையே யன்றி ஓரசையாய் நிற்றலும் உரித்து (எ - று).1 உம்மையாற் சீர்நிலையெய்தலே வலியுடைத்து.2 நிலை யென்றதனான் எழுத்து நிலைமையும் நேர்ந்தானாம்; என்னை? அசையது நிலையைக் குறிலும் நெடிலுங் குறிலிணையுமென எழுத்தான் வகுத்தமையின்3 அவை மேற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள்ளும் என்ன சீர்ப்பாற்பட்டன வெனின் ஆசிரியவுரிச் சீராறும் போதுபூ விறகுதீ என்னும் இரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்தவியற்சீர் எட்டுமாம். அங்ஙனமாதல் ஒருமொழியகத்தே உடையவென்பது. ஆஅ எனத் தேமாவாயிற்று. கடாஅ (குறள்- 585) எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறாம்; என்னை? கடாஅ என்புழி அளபெடையதாகாரம் பிரித்துக் குறினெடி வாயினாற்போல ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணையெனப்பட்டமையின் என்பது1. (317) ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். ஆஅழி என்பது மூவெழுத்துப் பாதிரியாம். வடாஅ என மூவெழுத்துப் புளிமாவாம். படா அகை என நாலெழுத்துக் கணவிரியாம். ஆஅங்கு என ஈரெழுத்துப் போரேறாம். ஆஅவது மூவெழுத்துப் பூமருது. புகாஅர்த்து என்பது கடியாறு. விராஅயது என்பது மழகளிறு. இவை ஓரோர் சொல்லாகிநின்று எட்டியற் சீரானும் அளபெடை வந்தவாறு. தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒரி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவலர் அடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே என இதனுள் இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்குமாகி அளபெடை வந்தன. ஒழிந்த இயற்சீரும் மேல் நான்கனுள் அடங்குமாகலின் அளபெடை நான்கென்பாருமுளர். அவை தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை எனப்படுமென்ப2. ஒழிந்த இயற்சீரான் அளபெடைவந்த செய்யுளுங் கண்டுகொள்க. வாஅழ்க என மூவசைச்சீரான் வரும் அளபெடை மொழியுமுள. மற்றுப் படாஅகை யெனவும், ஆஅழியெனவும் இவை மூவசைச் சீராகாவோவெனின், ஆகா; தனிக்குறின் முதலசை மொழிசிதைந் தாகாது (தொல் செய்.6) என்புழி, முதற்கணல்லது விட்டிசைத்தல் நேர்ந்திலனாகலானுங் குறிலிணைந்தனவும் குறினெடிலிணைந்தனவும் நிரையாமென்றா னாகலானுமென்பது; என்றார்க்குத், தூஉமணி கெழூஉமணி என, நேர்நிரைப்பின் முற்றுகரம் வந்து நேர்பும் நிரைபுமாமாகலின் அவற்றையும் ஆசிரியவுரிச்சீரென்னாமோவெனின், என்னாதவாறு: அங்ஙனம் அளபெடையான் நேர்பசை நிரைபசை கொள்வாரும் அளபெழுந்த குற்றெழுத்து வருமெழுத்தொடு கூட்டி, முதனிலை யளபெடை நேர்நே ரியற்றே யிடைநிலை யளபெடை நிரைநே ரியற்றே எனபவாகலின், அளபெழுந்த மொழி நேர்பும் நிரைபுமாகா வென்பது.1 அவ்வாறாயினும் ஓரோர்கால் அளபெடையுகரத் தைக்கூட்டி நேர்பு நிரைபுமென்னாமோ, காசு பிறப்பென்பன தேமா புளிமா வாயினவாறுபோல வெனின், அவை தேமா புளிமா வாகாமையுந் தளைவகையொக்குமத்துணை யென்பதூஉம் மேற் கூறப்பட்டதாகலின், அவைபோல இவையும் நேர்பசை நிரைபசை யாகாதென்பது.2 அல்லதூஉம், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொல்-எழுத்-நூன். 6) எனப்பட்டது அளபெடையாகலானும், நாணுத்தளை (அகம். 29) என்பதுபோலாது இயல்பாக வந்து இயைந்த எழுத்தாகலானும் அவைபோல அளபெடை, இருவகை யுகரமொ டியைந்தவை வந்தன (316) வெனப்படாமையானும் நேர்பசை நிரைபசை யாகாவென்பது;1 அற்றன்றியும், அவை நேர்பசை நிரைபசையாதல் ஒருவகை யான் நேர்ந்தானெனினும் அவை நாணுத்தளை விரவுக்கொடி யென்னுஞ் சீராதற்கு இழுக்கென்னையெனவும், நிரையிறு காலையும் ஆசிரிய வுரிச்சீர் என ஓதி, ஆசிரியவுரிச்சீரெட்டென்பான்போல விதந்தோதிப் பயந்ததென்னை யெனவுங் கூறி மறுக்க.2 இனி ஓருரை : தூஉமணி கெழூஉமணி என்பன, அளபெடை அசைநிலையாகியும் ஆகாதும் வருதலின் வெண்சீர்க்கும் இருநிலைமை கோடற்கென்ப. அது நீடுகொடி, குளிறுபுலி என்பனவற்றிற்கும் ஒக்குமாதலானும், அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்துங்கால் அங்ஙனம் அசையாகாமையானும் அது பொருந்தாதென்பது.3 இங்ஙனஞ் சீர்நிலையெய்திநின்ற அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவுஞ் செய்யுட்கே உரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்து கொள்ளப்படுவனவுமென இருவகைய. அவ்விருதிறத்தவும், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொல் - எழுத்து. 6) என்னும் இலக்கணத்துட்பட்டு அடங்கின.1 இனி, அவற்றுள் வழக்குக்குஞ் செய்யுட்கும் பொதுவாகியதனை இயற்கையளபெடையென்றுஞ் செய்யுட்குப் புலவர்செய்து கொண்டதனைச் செய்ற்கைளபெடை யென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ்விரண்டனுள்ளும் ஈண்டு, அளபெடை அசைநிலை யாகலும் உரித் தெனப்பட்டது இயற்கை யளபெடையென்று பெயரிட்டு வழங் கப்படும். செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறுபோல இயற்கையளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே யுரியதென்பது.2 ஆகலுமுரித்தென்ற உம்மையான் அவையிரண்டானும் எவ்வாற்றானும் அசைநிலைப்படாது புணர்ச்சிவகையான் வந்த அளபெடைக்கண்ணும் பொருள்புலப்பாட்டிற்கு உரியவாகச் செய்யுள் செய்யுமிடத்தும் அவ்வா றசைநிலையாக்கப் படுவதென்ற வாறு. உதாரணம் : பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்தாடு கடுவன் எனப் பலாஅக்கோ டென்புழிக், குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி (தொல் எழுத்-உயிர். 24) எனப் பெற்ற அகரமுண்டன்றே ? அதுவும் அளபெடையெனப்படும். அதனைப் பலாஅவென்புழிப் புளிமாவென்னுஞ் சீராக அலகு வையாது நிரையசை நிலைமைத்தேயாக வைக்கப்படுமென்பது. நிலம்பாஅய்ப் பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோட் கலம்போஒய்ப் போஒய்க் கெளவை தரும் (யா. வி. ப. 45, 347, 417) என்புழிப், போஒய்ப் போஒயெனச் சேய்மைக்குறிப்புப்படச் செய்யுள் செய்தவழியும் அளபெடை அசைநிலையாயிற்று.1 இனி, இவற்றை விளியும் பண்டமாற்றும் நாவல் கூற்றும் முதலாயவற்றுள் வருமென்பாருமுளர். அங்ஙனம் வந்தது பிற்காலத்துச் brŒíbs‹g. அல்லதூஉம் அங்ஙனம் வரையறையப்படாமையானும், நாம் முன்னர்க் காட்டினவை ஆண்டு அவற்றுள் அடங்காமையானும் அவ்வாறும் இகந்து கூறானென்பதூஉம்படும்.2 உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவல் (யா. வி. ப. 42) எனப் பண்டமாற்றின்கண் வந்ததெனக் காட்டுப. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து அசைநிலைப்பாற்படுக்க என்றார்க்கு, இவை செய்யுளுள் தம்மோசை சிதையாவாயின் அலகிருக்கையுள் அழித்துப் பயந்ததென்னையெனின், அஃதன்றே இதனை எழுத்து நிலைப்படுமென்றற்குக் காரணமென்பது.3 அஃதேற், செய்யுளின் ஓசையை அழிக்கவமையும் பிறவெனின், அற்றன்று; அவ்வோசையைச் செய்யுட்கண்ணே அழிப்பது சந்தியிலக்கணத்தின் வழீஇயிற்றாம், இனிப் பிறவற்றுக்கண்ணும் அளபெடையைச் சிதைத்துச் சொல்லின் அச்செய்யுளுட் கருதிய பொருண்மை விளங்காதாம். அது நோக்கிச் செய்யுளின்பத்தைச் சிதையாது ஈண்டு நாம் வேண்டப்பட்ட அலகிருக்கைக்கட் சிதைத்துக் கொள்க என்றா மென்பது.1 (17) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ - ள்.) எழுத்ததிகாரத்து நெட்டெழுத் தேழேயோ ரெழுத்தொரு மொழி (மொழி 10) என்றதனாற் சொல்லாந்தன்மையெய்திய அளபெடை ஈண்டு ஈரசைச்சீர் கூறிய அதிகாரத்தானும் இயற்சீராந் தன்மையெய்திற்று, அதனையே எழுத்துநிலைமைப் படுத்து அசைநிலையும் வேண்டலின். அளபெடை............KǤnj எ - Jஅளபெlமேற்கூறிaஇயற்சீர்நிலைkபெறுதலேயன்¿ஓரசையாŒநிற்றலுமுரித்J v -று. உம்மையாற் சீர்நிலையாதலே வலியுடைத்து. நிலையென்றதனாšஎழுத்துநிலையு«நேர்ந்தார். அங்ஙனம் சீர்நிலை பெறுங்கால் முற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள் ஆசிரியவுரிச்சீராறும், போதுபூ விறகுதீ என்னுமிரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்த நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு, என்னும் இயற்சீர் எட்டுமாம் அங்ஙனமாதல் ஒருமொழியகத்தேயுடைய என்பது. ஆஅ எனத் தேமாவாயிற்று. கடாஅ எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறு ஆயிற்று;2 என்னை? கடாஅ என்புழி அளபெடையதுஆகாரம்பிரித்துக்Fறினெடிலாயினாற்nபால(யகர)ஆகாரத்துப்ãன்னின்றmகரமுங்Fற்றுகரமுங்Fறிலிணைbயனப்பட்டமையினென்பது.xʪjdt‰¿‰F« ïஃதொக்கும்.MmÊ என்பது மூவெழுத்துப் பாதிரி. வடாஅது vன்பது_வெழுத்துக்fணவிரியாம்.glh அகையென நாலெழுத்துக் கணவிரியாம்.1 ஆஅங்கு என ஈரெழுத்துப் போரேறாம். ஆஅவது என மூவெழுத்துப் பூமருது. புகாஅர்த்து என்பது கடியாறாம். பராஅயது என்பது மழகளிறாம். இவை ஒரே சொல்லாகி நின்று எட்டியற்சீரானும் அளபெடுத்தன. தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒரி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவல ரடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே இதனுள் இயலசை மயங்கிய இயற்சீர் நான்கும் வந்தன. ஒழிந்த நான்கும் இவற்றுள் அடங்கும். இங்ஙனம் சீர்நிலையெய்திய வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயது இயற்கையளபெடை என்றும், செய்யுட்குப் புலவர் ஓசை கருதிச் செய்து கொண்டது செயற்கையளபெடை என்றுங்கொள்க;2 இவ்விதி கட்டளை யடிக்கென்றுணர்க. இவை சீர்நிலையடிக்காயிற் றனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை எனக்கொள்வர். ஆஅ வளிய வலவன் எனவும், ஏஎர் சிதைய வழாஅ லெல்லாநின் சேஎயரி சிந்திய கண் எனவுமிவை நேர்நேரும் நிரைநேருமாக அலகிடுப. இனி ஓரசையாங்காற் செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட் கேயுரியவாதல்போல, இயற்கையளபெடை அசைநிலையாதல் செய்யுட்கேயுரியவாதலும், புணர்ச்சிவகையான் எழுத்துப் பேறாகிய அளபெடைகள் அசைநிலையாதலும், பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கையளபெடையுட் சிலவும் அசைநிலை யாதலுங்கொள்க.1 உ-ம். உப்போஒ வெனவுரைத்து மீள்வாள் என்புழிப் பண்டமாற்றின்கட் பகரவோகாரத்திற்குள்ள ஒரலகே பெறுதலின் ஓரசையாயிற்று. நூறோஒ நூறு என்பதும் அது. இவை இயற்கையளபெடை யசைநிலையாயின. பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன் என்புழிப் பலாஅ எனப் புளிமாவாகாது ஓரசையாய்க் கோடு என்பதுங் கூட்டிக் கணவிரியாக அலகு பெறும். குறியதன் முன்னரும் (எழுத்-உயிர்மயங்-34) என்னுஞ் சூத்திரத்தாற் பெற்ற அகரமும் அளபெடைபோல் அசைநிலையாயிற்று.2 நிலம் பாஅய்ப்பாஅய்ப் பட்டன்று நீணிலா மென்றோள் கலம் போஒய்ப்போஒய்க் கெளவை செய எனப் போஒய்ப்போஒய் எனச் செய்கைக் குறிப்புப் புலப்படச் செய்யுள் செய்தவழியும் அசைநிலையாயிற்று. இவை ஓசை சிதைத்தாற் செய்யுளின்பஞ் சிதையுமென்று அலகிருக்கைக்கட் சிதைத்தார்.1 இவை அலகுபெறாவெனவே, நெடிலின்றன்மையே யாயிற்று. இதனானே குற்றிகரம்போல் எழுத்தாந்தன்மையும் பெற்றாம். இனி, வாஅழ்க எனவும், தூஉமணி எனவும் மூவசைச் சீரானும் வருதல் உம்மையாற் சீர்நிலை யெய்துமென்றதனாற் பெறுதும். அவை வெண்சீரும் வஞ்சிச்சீருமாம். ஆய்வுரை : இது மேல் எழுத்ததிகாரத்தில் இயற்சீராம் தன்மை பெறும் எனக் கூறிய உயிரளபெடையை அசைநிலையாந் தன்மையும் பெறும் என்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது. (இ-ள்) உயிரளபெடை மேற்கூறிய இயற்சீராந்தன்மையைப் பெற்று வருதலேயன்றி அசையாந் தன்மையைப் பெற்று நிற்றலும் உரித்து எ-று. உ-ம். உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு என்புழி, உறாஅர்க் என்பது புளிமா எனச் சீர்நிலை எய்தி அலகு பெற்றும், “cப்போஓbவனவுரைத்துÛள்வாbளாளிமுறுவற்bகாப்போநீர்nவலிíலகுv‹òÊ உப்போஒ என அசைநிலையெய்தி அலகு பெறாதும் உயிரளபெடைகள் வந்தன. அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வாயினவும், செய்யுட்கேயுரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்துகொள்ளப் படுவனவும் என இருவகைப்படும். அவற்றுள் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயின இயற்கை யளபெடை எனப்படும். செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட அளபெடை செயற்கையளபெடை எனப்படும். அவ்விரண்டனுள்ளும் அளபெடை யசைநிலையாகலு முரித்து எனப்பட்டது இயற்கையளபெடை யாகும். செய்யுட்கெனச் செய்து கொள்ளப்பட்ட செயற்கை யளபெடை சீர்நிலையெய்தி அலகுபெறும். அதுபோல இயற்கையளபெடை அசைநிலையாகலும் செய்யுட்கே யுரியது என்பது பேராசிரியர் கருத்தாகும். 17 ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப. இளம்பூரணம்: என்---எனின் ஒற்றளபெடைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்று அளபெடுத்துவரினும் அசை நிலையாகலும் உரித்து என்றவாறு. மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை.1 உதாரணம் கண்ண் டண்ண் ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு.352) என வரும். (17) பேராசிரியம்: இஃது,ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யாதலேயன்றி அசைநிலையாகலும் உரித்தென மாட்டெறிந்த மையின் எய்தாத தெய்துவித்தது. இதனை அசைப்படுத்து எழுத்துநிலையும் வேண்டுகின்றமையின் வழுவமைத்ததூஉமாம். (இ-ள்.) ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடைபோலச் சீர் நிலையெய்தலும் ஓரசையாய் நிற்றலும் உரித்து (எ-று.) ஒற்றள பெடுப்பினும் எனவே, ஒற்றுக்கள் அளபெடுத்து நிற்றற்கு உரியன; உரியவழி எல்லாம் வரையாது கொள்ளப்படும். அவை வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் இருவாற்றான் ஒரு சொற்கு உறுப்பாய்நின்ற ஒற்றே அளபெழினும் பின் தோன்றிக் கொள்ளப்பட்ட ஒற்று அளபெழினு மென இருவகைப்படும். அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும் (தொல்.எழுத்து.102) என்பது சொற்குறுப்பாய் நின்றது. ஆனா நோயொடு கான லஃதே (குறுந்.97) என்பது பின்றோன்றிக் கொண்ட புள்ளியெனப்படும். அற்றென மொழிப என்றதனான் ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலத் தானுந் தன்னையொற்றிய எழுத்துங்கூடி அளபெடை மொழியாகிச் சீர்நிலையெய்தல் பெரும்பான்மையாகலானும் அவை இயற்கை யளபெடையாகியவழி அசையாதல் சிறுபான்மை யென்பதூஉம் உயிரளபெடை முதற்கணின்ற நெட்டெழுத்துப்போல ஒற்றள பெடை முதற்கணின்ற குற்றெழுத்தும், தனிக்குறின் முதலசை மொழிசிதைந் தாகாது (தொல்.செய்.6) என்பதனான் விலக்குண்ணாது விட்டிசையாது முதற்கணின்று நேரசையாமென்பதூஉங் கூறியவாறு. வல்லெழுத்தாறும் ரகார ழகாரமும் ஒழித்தொழிந்த பதினோரொற்றுங் குறிற்கீழுங் குறிலிணைக்கீழும் அளபெய்தி நிற்கும்வழிச் சீர்நிலை யாதலே யன்றி அசைநிலையாகலு முரித்துச் சிறுபான்மை யென்றவாறு.1 அவை, கண்ண் டண்ண் ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு.352) என்றவழிக், கண்ண் என்பது சீர்நிலையாகித் தேமாவாயிற்று. தண்ண்ணென என்றவழித் தட்பத்துச் சிறப்பு உரைத்தற்கு ணகரவொற்றினை அளபேற்றிச் செய்யுள் செய்தான். ஆண்டு அது மாசெல்சுரம் என்னும் வஞ்சியுரிச் சீராவதனை (யாகற்க)ப் பாதிரியென்னுஞ் சீரேயாமென வழுவமைத்தவாறு.1 குற்றுகரங் குறிலோடுகூடி நிரையாவதனைக் குறிலிணையெனக் குற்றெழுத்தாக்கி ஓதினான். அதுபோல ஒற்றளபெடையும் ஒரு மாத்திரையாவதனைக் குற்றெழுத் தென் றோதானோவெனின், அங்ஙனம் ஓதின் அவ்வளபெடை குறிலாகித் தன்முன் வந்த குறிலோடும் பின்வந்த குறிலோடும் நெடிலோடுங்கூடி நிரையசையாகுவதாவான் செல்லுமென மறுக்க2 மற்று, அரங்ங்கம் என்புழிப் òÈbršthbad மூவசைச்சீருமாமாகலின் இதனை மூவசைச்சீரின்பின் வைக்கவெனின், அற்றன்று; அவ்விரண்டற்கும் பொதுவகையாக இடைவைத்தானென்பது. அல்லதூஉம் ஈரசைச் சீராதலே பெரும்பான்மையாதலின் ஈண்டு ஈரசைச் சீர்ப்பின் வைத்தான் இவ்விரண்டளபெடையினையுமென்பது. மற்று, வழக்கினுள் வரும் இயற்கையளபெடையன்றே அசைநிலையாவன, ஒற்றளபெடை வழக்கினுள் வருமோவெனின், அவையுஞ் சிறுபான்மை வழக்கினுள் வருமென்பது அவை, சுள்ள்ளென்றது புள்ள்ளென்றது கள்ள்ளென்றது துண்ண்ணென்றது, திண்ண்ணென்றது என வரும். பிறவு மன்ன. இவை, செய்யுளகத்தல்லது பரவைவழக்கினுள் வாரா வென்பாரு முளர். அவரறியார்; செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட அளபெடை பின்னர் அசைநிலையாதற்கு என்னை காரணமென மறுக்க. மற்று அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (தொல். செய். 17) என வரையாது கூறவே இச்சூத்திரமும் அடங்குமாகலின் இது மிகையாம்பிறவெனின். அற்றன்று; vG¤njh¤âDŸ ஒற்றள பெடுக்குமென்பது கூறாமையின் வேறு கூறினான்.அல்லதூஉம் உயிரளபெடையின் வேறுபட்டதோர் இலக்கணமுடைமையின் இதனை வேறு கூறினானென்பது. என்னை? பனா அட்டு என்றவழி உயிரளபெடை கடியாறு என்னுஞ் சீராயவாறு போலாகாது. கொங்ங்கு குரங்ங்கு எஃஃகு மின்ன்னு என அளபெழுந்த இருவகை யுகரவீற்றுச் சொற்கள் போரேறு கடியாறு என்னுஞ் சீரானும் ஞாயிறு வலியது என்னுஞ் சீரானு மாகாது இருவகை உகரமொடு இயைபின்றி வருதலானும் அவை வண்டு வரகு எனவும் உரியசைச்சீர்ப்பாற்பட்டு அசையாகு மாதலானும் இருவகை யுகரமோடியையாதவழிக். கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு. 352) எனவுங், கஃஃ றென்னுங் கல்லதர் எனவுஞ் சீர்நிலை பெறுதலானுமென்பது. எனவே, இயற்கையுயி ரளபெடைபோலச் செயற்கை யொற்றளபெடையும் ஒரோவழி ஓசை சிதைக்கப்படாதாயிற்று. இதனானே உயிரளபெடை போல ஒற்றளபெடை வருகின்ற எழுத்தோடு கூடி அசையாகா தென்பதாம். ஈர்க்கு-பீர்க்கு என ஈரொற்று நின்றவழி வேறோரசை யாகாதவாறு போல ஒற்றளபெடையும் ஒரோவழி அசை நிலை பெறாதென்பதூஉங் கூறினானாம். இனி, இயற்கை யொற்றளபெடை சிறுபான்மை வருமாதலின், இஃது அசைநிலையாதலே பெரும்பான்மையாதனோக்கி மாட்டெறிந் தான் எனவும் அமையுமெனக் கொள்க.1 (18) நச்சினார்க்கினியம் : இஃது ஒற்றளபெடையும் சீர்நிலையாதலேயன்றி அசை-நிலையுமாமென எய்தாததெய்துவித்தது. இ-ள். ஒற்...... மொழிப எ-து ஒற்றளபெடுத்தாலும் உயிரள பெடை போலச் சீர்நிலையெய்தலும் ஓரசையாய் நிற்றலுமுரித்து. எ-று. ஒற்றெனவே, ங ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம் என்னும் பதினோரொற்றுங் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுத்தல் பெறுதும்.1மங்ங்கலம் எனவும் அரங்ங்கம் எனவும் வரும். ஏனைய-வற்றோடும் ஒட்டுக. சீராமெனவே, ஈரசைச்சீரும் மூவசைச்சீரு- மாதல் பெறுதும். மேல் மூவகைச்சீர் கூறுதலின் இதனை ஈண்டு வைத்தார். ஒரசையாதல் சிறுபான்மை. உ-ம். கண்ண் டண்ண்ணெனக் கண்டும்கேட்டும் என்புழிக் கண்ண்ணென்பது சீர்நிலையெய்தித் தேமாவாயிற்று. தண்ண்ணென என்றவழித் தட்பத்திற் சிறப்புக் கூறுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்தான். அது, மாசெல்சுரம் என்னும் வஞ்சிச்சீராவதனை ஆகற்க. பாதிரி என முன்னின்ற இயற்சீரேயாக என வழுவமைத்தவாறு. இதுவும் ஓரசை2 சிதையாது நிறகவும் அலகுபெறாதெனவே எழுத்தின்றன்மை எய்திற்று. இது வழக்கிற்குஞ் செய்யுட்கும் உறுப்பாய் நின்றன அளபெழுதலும், தோற்றிக் கொண்டன அளபெழுதலுமாம். சுள்ள்ளென்றது, புள்ள்ளென்றது, நள்ள்ளென்றது, கிண்ண்ணென்றது - இவை வழக்கிற்குஞ் செய்யுட்குமுரிய. தோற்றினது, கண்ண்ணென முற்காட்டினாம். இருவகை யுகரமீறாய்க் கொங்ங்கு, குரங்ங்கு, மின்ன்னு, எஃஃகு என்பன உயிரளபெடையின் வருமெழுத்தோடு கூடிப் போரேறு, கடியாறென நிற்குமாறுபோலாது வண்டு வரகு என்னும் உரியசைப்பாற்படுதலின் உயிரளபெடையின் வேறாக3 வோதினார். இருவகை யுகரத்தோ டியையாதவழிக் கண்ண்டண்ண்ணென கஃஃறென்னுங் கல்லதரத்தம் எனத் தேமாவாக அலகுபெற்றன. இனி, நீட்டம் வேண்டின் (எழுத்-நூன்-6) என்னுஞ் சூத்திரத்துட்காட்டிய செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபும் ஐயப்பா டின்றி யணையுமாம்--மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமேல் ஒற்றளபுங் கொள் என்னும் மாபுராணச் சூத்திரத்துள் மைதீரொற்று என்றதனானே, சீர்வகையடி யோசைகெடின் ஒற்றில்லாத சொல்லிற்கோசை அவ்வொற்றை உண்டாக்கியுநிற்குமென்றும், குன்றுமேலாற்றளபுங் கொள் என்றதனானே அவ்வொற்றானும் ஓசை நிறையாவிடின் அங்ஙனம் வருவித்த ஒற்றை அளபெடுத்துங் கொள்க வென்றுங் கூறிய விதியுங்கொள்க. அம்பொரைந் துடைய்ய காம னைய்ய னென்ன வந்தனன் அம்புநீர ரல்லர் நன்கு ரங்கு நீரராயினும் தங்கு ரவ்வர் தாங்கொடுப்பி னெஞ்சு நொந்து தாழ்வர்தாம் பொங்க ரவ்வ வல்குவாரெ னப்பு கன்று சொல்லினான் (சீவக - சுரமஞ். 3) இதனுள் யகர வகரவொற்றில்வழி ஓசை அவ்வொற்றையுண்டாக் கிற்று. அஃது அளபெடுத்தது வந்துழிக் காண்க. ஆய்வுரை : இஃது எய்தாதது எய்துவித்தது. (இ - ள்) ஒற்று அளபெடுத்துவரினும் முற்கூறிய உயிரள பெடை போன்று சீர்நிலையெய்தி அலகு பெறுதலேயன்றி அசைநிலையாகி அலகு பெறாமையும் உரித்து எ - று. ஒற்றுஅளபெடுப்பினும் எனவே உயிரெழுத்தினைப் போன்று ஒற்றுக்களும் அளபெடுத்து நிற்றற்குரியன என்பதும் அங்ஙனம் ஒற்றெடுத்து அளபெடுத்து வருங்கால் உயிரளபெடை போன்று சீர்நிலையெய்தி அலகு பெறுதலும் அசைநிலையாகி அலகு பெறாமையும் ஆகிய இருநிலைமையும் ஒருங்குபெறும் என்பதும் பெற்றாம். கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும் என்புழி முதற்கண் நின்ற சீராகிய கண்ண் என்பது சீர்நிலையெய்தித் தேமா ஆயிற்று. அதனையடுத்து வந்த டண்ண்ணென என்னும் இரண்டாஞ் சீர்க்கண் உள்ள ணகரவொற்று செய்யுளோசையினை நிறைத்தற்கன்றித் தட்பத்தின் மிகுதியினைப் புலப்படுத்தும் நிலையில் இயற்சீர்க்கண் அளபெடுத்து நின்றதாதலின் அசைநிலையாய் அலகுபெறாதாயிற்று. தண்ண்ணென என்பது சீர்நிலையெய்தி வருமாயின் மாசெல்சுரம் என வஞ்சிச் சீராகும். இங்கு அசைநிலையாய் வந்தமையின் பாதிரி என இயற்சீராயிற்று. 18. இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின் உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. இளம்பூரணம் : என்---எனின். வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நான்கசையுங் கூட்டியுறழ, அறுபத்துநான்கு மூவசைச் சீராம். அவற்றுள் இயற்சீர்நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீராம் என்றவாறு.1 உதாரணம் மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான் என்பன. (18) பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே ஈரசை கொண்டு சீரியைத் திறுவன உணர்த்தி இனி மூவசை கொண்டு முடிவன உணர்த்துவானெழுந்தான்; அவற்றுள் இது வெண்பாவுரிச்சீருணர்த்துகின்றது. (இ - ள்) மேனின்ற அதிகாரத்து இயலசையானாகிய இயற் சீரிறுதிக்கண் நேரசை பெறுவன நான்கும் வெண்பாவுரிச் சீராமென்று சொல்லுவர் புலவர் (எ - று). உரிச்சீர் வெண்பாவாகும், வெண்பா வுரிச்சீராகுமென மொழி மாற்றி யுரைக்க. உ - ம்: 1நேர்நேர்நேர் 2நிரைநேர்நேர் 3நேர்நிரைநேர் 4நிரை நிரைநேர். என வரும் இவற்றை, 1மாசெல்வாய் 2புலிசெல்வாய் 3மாவருவாய் 4புலிவருவாய். எனவும், 1தேமாங்காய் 2புளிமாங்காய் 3கூவிளங்காய் 4கருவிளங்காய் எனவும் வேறுவே றுதாரணங் காட்டுப. பிறவும் அவ்வாறு வருவன அறிந்துகொள்க. அவற்றுக்குச் செய்யுள் : காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை தருவானை - யாமும் இருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண் (சிலப். மேற்) இதனுட் காமன்காண் எனவும், கருவூரார் எனவும், இருகுடங்கை எனவும், யானெதிரே எனவும் நான்கு வெண்சீரும் வந்தன. இதுவும் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர்; வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பாவிற்கும் உரிமையாதலிற் குணங் காரணமாயிற்று. ஆட்சி, வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (தொல். செய். 23) எனவும் பிறாண்டும் ஆளுமென்பது. மற்று இயற்சீரென்றவழிப் பத்து இயற்சீருங் கொள்ளாமோவெனின், அதற்கு விடை முன்னர், இயலசை மயக்கம் (தொல். செய். 13) என்புழிச் சொல்லிப்போந்தாம். இயற்சீர் எனப் பொதுவகையான் ஓதியவழி இயற்சீர் பத்துங் கொள்ளாது இயலசை மயக்கமாகிய நான்கனையுங் கோடலும்1ஆசிரியவுரிச்சீரென்று பொதுவகையான் ஓதியவழி ஆறனையுங் கொள்ளாது உரியசை மயக்கமாகிய நான்கனையுமே கோடலும்2 வேண்டினானென்பது. அஃது இச்சூத் திரத்தானும்,3 வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் (தொல். செய். 23) என்பதனானும் பெறுதும். (19) நச்சினார்க்கினியம் : இது முறையானே மூவசைச் சீருணர்த்துதறொடங்கி, அவற்றுள் வெண்பாவுரிச்சீர் உணர்த்துகின்றார். (இ - ள்.) அவண் இயற்சீ ரிறுதிமுன் நேர்நிற்பின் எ-து அவ்விடத்திற் கூறிய இயலசையானாகிய இயற்சீ ரிறுதிக்கண் நேரசை வந்து நிற்பின்: வெண்பாவுரிச்சீராகுமென்ப எ-து அந்நான்கும் வெண்பாவுரிச்சீராமென்று கூறுவர் புலவர். எ-று அவை - நேர்நேர்நேர், நிரைநிரைநேர், நேர்நிரைநேர், நிரைநேர்நேர் எனவரும். இவற்றை மாசெல்வாய், புலிவருவாய், மாவருவாய், புலிசெல்வாய் எனவும்; தேமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், புளிமாங்காய் எனவுங்காட்டுக. செய்யுள்- காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை வருவானை - யாமு மிருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண் என நான்கு வெண்சீருங் காண்க. இஃது ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர், வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பாவிற்கு முரிமையின். இனிப் பொதுவாக இயற்சீரென்றால் இயலிசை மயக்கமாகிய இயற்சீர் நான்கினையும், பொதுவாக உரிச்சீரென்றால் உரியசைமயக்கமாகிய உரிச்சீர் நான்கினையுமே கோடல்வேண்டினார் ï¤bjhšfh¥ãadh ரென்பது, இச் சூத்திரத்தானும் வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக்கு (செய்-23) என்பதனானும் பெறுதும்; இதனான் ஆட்சியும் பெற்றாம் இதுவுங் கட்டளையடிக்குஞ் சீர்வகையடிக்குமுரித்து.1 ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே மூவசைச்சீர் உணர்த்துதல் தொடங்கி அவற்றுள் வெண்பாவுரிச்சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) இயற்சீராகிய ஈரசைச்சீர் நான்கின் பின்னரும் மூன்றாவதாக நேரசை வந்து நிற்பின் நேரீற்று மூவகைச்சீராகிய அவை நான்கும் வெண்பாவுரிச்சீராகும் என்று கூறுவர் புலவர் எ-று. மேற்கூறப்பட்ட ஈரசைச்சீர் பதினாறின்பின் மூன்றாவது அசையாக நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கசை களையும்சேர்த்துப் பெருக்க மூவசைச்சீர் அறுபத்து நான்காகும். மா, புலி, பாம்பு, களிறு என்னும் வாய்பாடுகளை முதலிலும் வாழ், வரு, போகு, வழங்கு, என்னும் வாய்பாடுகளை இடையிலும், கான், நெறி, காடு, பொருப்பு என்னும் வாய்பாடுகளை இறுதியிலும் கூட்டி உறழ மூவசைச்சீர் அறுபத்து நான்காகும். அவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் எனப்படும். உ-ம்: மாவாழ்கான், புலிவாழ்கான், மாவருகான், புலிவருகான் எனவரும். இவ்வாய்பாடுகளை முறையே தேமாங்காய், புளி மாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்வழங்குவர் பிற்கால யாப்பியல் நூலார். 19. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை என்ப இளம்பூரணம் : என்---எனின். வஞ்சியுரிச்சீர் ஆமா றுணர்த்துதல் நுதலிற்று (இ - ள்.) வஞ்சியுரிச்சீரெனப் பாகுபட்டன மேற்சொல்லப்பட்ட மூவசைச்சீர் அறுபத்து நான்கு சீரினும் வெண்சீரல்லாத அறுபது மென்றவாறு.1 உதாரணம் (1) நேர் நேர் நிரை - மா வாழ் நெறி நேர்நேர்நேர்பு - மா வாழ் காடு நேர் நேர் நிரைபு - மா வாழ் பொருப்பு நேர் நிரை நிரை - மா வரு நெறி நேர் நிரை நேர்பு - மா வரு காடு நேர் நிரை நிரைபு - மா வரு பொருப்பு நேர் நேர்பு நேர் - மா போகு கான் நேர் நேர்பு நிரை - மா போகு நெறி நேர் நேர்பு நேர்பு - மா போகு காடு நேர் நேர்பு நிரைபு - மா போகு பொருப்பு நேர் நிரைபு நேர் - மா வழங்கு கான் நேர் நிரைபு நிரை - மா வழங்கு நெறி நேர் நிரைபு நேர்பு - மா வழங்கு காடு நேர் நிரைபு நிரைபு - மா வழங்கு பொருப்பு (2) நிரை நேர் நிரை - புலி வாழ் நெறி நிரை நேர் நேர்பு - புலி வாழ் காடு நிரை நேர் நிரைபு - புலி வாழ் பொருப்பு நிரை நிரை நிரை - புலி வரு நெறி நிரை நிரை நேர்பு - புலி வரு காடு நிரை நிரை நிரைபு - புலி வரு பொருப்பு நிரை நேர்பு நேர் - புலி போகு கான் நிரை நேர்பு நிரை - புலி போகு நெறி நிரை நேர்பு நேர்பு - புலி போகு காடு நிரை நேர்பு நிரைபு - புலி போகு பொருப்பு நிரை நிரைபு நேர் - புலி வழங்கு கான் நிரை நிரைபு நிரை - புலி வழங்கு நெறி நிரை நிரைபு நேர்பு - புலி வழங்கு காடு நிரை நிரைபு நிரைபு - புலி வழங்கு பொருப்பு (3) நேர்பு நேர் நேர் - பாம்பு வாழ் கான் நேர்பு நேர் நிரை - பாம்பு வாழ் நெறி நேர்பு நேர் நேர்பு - பாம்பு வாழ் காடு நேர்பு நேர் நிரைபு - பாம்பு வாழ் பொருப்பு நேர்பு நிரை நேர் - பாம்பு வரு கான் நேர்பு நிரை நிரை - பாம்பு வரு நெறி நேர்பு நிரை நேர்பு - பாம்பு வரு காடு நேர்பு நிரை நிரைபு - பாம்பு வரு பொருப்பு நேர்பு நேர்பு நேர் - பாம்பு போகு கான் நேர்பு நேர்பு நிரை - பாம்பு போகு நெறி நேர்பு நேர்பு நேர்பு - பாம்பு போகு காடு நேர்பு நேர்பு நிரைபு - பாம்பு போகு பொருப்பு நேர்பு நிரைபு நேர் - பாம்பு வழங்கு கான் நேர்பு நிரைபு நிரை - பாம்பு வழங்கு நெறி நேர்பு நிரைபு நேர்பு - பாம்பு வழங்கு காடு நேர்பு நிரைபு நிரைபு - பாம்பு வழங்கு பொருப்பு (4) நிரைபு நேர் நேர் - களிறு வாழ் கான் நிரைபு நேர் நிரை - களிறு வாழ் நெறி நிரைபு நேர் நேர்பு - களிறு வாழ் காடு நிரைபு நேர் நிரைபு - களிறு வாழ் பொருப்பு நிரைபு நிரை நேர் - களிறு வரு கான் நிரைபு நிரை நிரை - களிறு வரு நெறி நிரைபு நிரை நேர்பு - களிறு வரு காடு நிரைபு நிரை நிரைபு - களிறு வரு பொருப்பு நிரைபு நேர்பு நேர் - களிறு போகு கான் நிரைபு நேர்பு நிரை - களிறு போகு நெறி நிரைபு நேர்பு நேர்பு - களிறு போகு காடு நிரைபு நேர்பு நிரைபு - களிறு போகு பொருப்பு நிரைபு நிரைபு நேர் - களிறு வழங்கு கான் நிரைபு நிரைபு நிரை - களிறு வழங்கு நெறி நிரைபு நிரைபு நேர்பு - களிறு வழங்கு காடு நிரைபு நிரைபு நிரைபு - களிறு வழங்கு பொருப்பு ஆக அறுபதும்1. (19) பேராசிரியம் : இஃது, ஒழிந்த மூவசைச்சீ ருணர்த்துகின்றது. (இ - ள்.) வஞ்சிச்சீரெனக் கூறுபடுக்கப்பட்டன மேற்கூறிய வெண்சீரல்லா மூவசைச்சீரெல்லாம் (எ - று). நேர் நிரை நேர்பு நிரைபு என்னும் நான்கனையும் மூன்று படியான் இழியவைத்து, முதற்கணின்ற நான்கசையும் இடை நின்ற நான்கனோடும் ஒரோவொன்று நான்காகக் கூட்டி, இறுதி நின்ற நான்கசையோடும் ஒரோவொன்றற்குப் பதினாறாக நாற்காலுறழ அறுபத்து நான்கு மூவசைச்சீர் பிறக்கும். அவற்றுள், இயலசைமருங்கின் நேரிறுவன நான்குசீருள. அவை முன்னர் (331) வெண்சீர்நான்கெனக் கூறப்பட்டன. ஒழிந்த மூவசைச்சீர்களெல்லாம் வஞ்சியுரிச் சீரெனப்படும் என்றவாறு. அவை அறுபது வகைப்படும்.2 உதாரணம் : நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்புநேர் நேர்நிரைபுநேர் எனவும், நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரை நேர்புநேர் நிரைநிரைபுநேர் எனவும், நேர்புநேர்நேர் நேர்புநிரை நேர் நேர்புநேர்புநேர் நேர்புநிரைபுநேர் எனவும், நிரைபுநேர்நேர் நிரைபுநிரைநேர் நிரைபுநேர்புநேர் நிரைபுநிரைபுநேர் எனவும் இவை நேரீற்று மூவசைச்சீர் பதினாறு. இவற்றள் வெண்சீரென மேற்காட்டிய நான்கும் ஒழித்து ஒழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். இனி நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வருமாறு : நேர்நேர்நிரை நேர்நிரைநிரை நேர்நேர்புநிரை நேர்நிரைபு நிரை எனவும், நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நிரைநேர்பு நிரை நிரைநிரைபுநிரை எனவும், நேர்புநேர்நிரை நேர்புநிரை நிரை நேர்புநேர்புநிரை நேர்புநிரைபுநிரை எனவும், நிரைபு நேர்நிரை நிரைபுநிரைநிரை நிரைநேர்புநிரை நிரைபுநிரைபு நிரை எனவும் நிரையீற்றச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர் நேர்பு நேர்நிரைநேர்பு நேர்நேர்புநேர்பு நேர்நிரைபுநேர்பு எனவும், நிரைநேர்நேர்பு நிரைநிரைநேர்பு நிரைநேர்புநேர்பு நிரைநிரைபுநேர்பு எனவும், நேர்புநேர்நேர்பு நேர்புநிரைநேர்பு நேர்புநேர்நேர்பு நேர்புநிரைபுநேர்பு எனவும், நிரைபுநேர்நேர்பு நிரைபு நிரைநேர்பு நிரைபுநேர்புநேர்பு நிரைபுநிரைபுநேர்பு எனவும் இவை நேர்பீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நிரைபு நேர்நிரைநிரைபு நேர்நேர்நிரைபு நேர் நிரைபுநிரைபு எனவும், நிரைநேர்நிரைபு நிரைநிரைநிரைபு நிரை நேர்புநிரைபு நிரைநிரைபுநிரைபு எனவும், நேர்புநேர்நிரைபு நேர்புநிரைநிரைபு நேர்புநேர்நிரைபு நேர்புநிரைபுநிரைபு எனவும், நிரைபுநேர்நிரைபு நிரைபுநிரைநிரைபு நிரைநேர்புநிரைபு நிரைபுநிரைநிரைபு எனவும் இவை நிரைபீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேரீற்று வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டும், நிரையீற்று வஞ்சி யுரிச்சீர் பதினாறும், நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும், நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறுமாக வஞ்சியுரிச்சீர் அறுபதும் வந்தன : அவற்றுக்குச் செய்யுள். மேற்கோட்டுநீர் கீழ்ப்பரத்துதன் விழுக்கோட்டுமேல் வியல்விசும்புதோய்ந் தோங்கு முன்னர்க் காம்புகழியப் பாய்ந்து சென்றுசென் றாங்கு நலிபுநின் றெதிர்த்து மீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுசெய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூதூ ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துத லெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடுப்பே. இதனுள், நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள்ளும் வெண்பா வுரிச்சீர் நான்குமொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. தண்டண்டலைத் தாதுரைத்தலின் வண்டோடுவயல் வாய்ப்புகைபுகரத் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரும் போது தூங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர்நன்னாட் டென்னாகுவகொல் பொன்னி நன்னாட்டுப் பொருந னெங்கோன் தாடோய் தடக்கை மல்ல னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே இதனுள் நிரையீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் வந்தன. வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிறைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துவீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபோந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே இதனுள் நேர்பசை யிறுதியாகிய வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறை யானே வந்தன. சீற்றமிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவு பொலங்கொடியெடுத்துப் புகலேற்று மலைந்து பகையரசு தொலைத்து வேம்புமீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவீற்றுப் புணர்ந்து வேற்றுக்சுரும்புகிளர்ந்து களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரிந்து தூங்குகடாத்து விரவுப்பலவுதொலைத்து மணங்கம ழாரமொடு தயங்கச் சூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே பாடா தோடிய நாடுகெழு வேந்தே இதனுள், நிரையீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. (20) நச்சினார்க்கினியம் : இஃது ஒழிந்த மூவசைச்சீர் கூறுகின்றது. இ-ள். வஞ்சிச்சீரென்று கூறுபடுக்கப்பட்டன, மேற்கூறிய வெண்சீரல்லா மூவசைச்சீரெல்லாம். எ-று1. அவை வருமாறு :- நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கனையும் நிறுத்தி, ஒருகால் நேர்முன்னாகவும், ஒருகால் நிரை முன்னாகவும், ஒருகால் நேர்பு முன்னாகவும், ஒருகால் நிரைபு முன்னாகவும் எடுத்து நேரீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நிரையீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நேர்பீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நிரைபீறாக முடிக்கப் பதினாறாம்; ஆகவே, அறுபத்து நான்காயிற்று. அவ்வாறெடுத்து நான்கு முறைமைக்கு நடுவு நேரும் நிரையும் நேர்பும் நிரைபுமாக நிற்குமாறும் உணர்க. அவை :-- உதாரணம் நேர்நேர்நேர் மாசேர்வாய் நேர்நிரைநேர் மாவருவாய் நேர்நேர்புநேர் மாபோகுவாய் நேர்நிரைபுநேர் மாவழங்குவாய் நிரைநேர்நேர் புலிசேர்வாய் நிரைநிரைநேர் புலிவருவாய் நிரைநேர்புநேர் புலிபோகுவாய் நிரைநிரைபுநேர் புலிவழங்குவாய் நேர்புநேர்நேர் பாம்புசேர்வாய் நேர்புநிரைநேர் பாம்புவருவாய் நேர்புநேர்புநேர் பாம்புபோகுவாய் நேர்புநிரைபுநேர் பாம்புவழங்குவாய் நிரைபுநேர்நேர் களிறுசேர்வாய் நிரைபுநிரைநேர் களிறுவருவாய் நிரைபுநேர்புநேர் களிறுபோகுவாய் நிரைபுநிரைபுநேர் களிறுவழங்குவாய் எனவும் நேரீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. வெண்சீரென மேற்காட்டிய நான்கு மொழித் தொழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். நேர்நேர்நிரை மாசேர்சுரம் நேர்நிரைநிரை மாவருசுரம் நேர்நேர்நிரை மாபோகுசுரம் நேர்நிரைபுநிரை மாவழங்குசுரம் நிரைநேர்நிரை புலிசேர்சுரம் நிரைநிரைநிரை புலிவருசுரம் நிரைநேர்புநிரை புலிபோகுசுரம் நிரைநிரைபுநிரை புலிவழங்குசுரம் நேர்புநேர்நிரை பாம்புசேர்சுரம் நேர்புநிரைநிரை பாம்புவருசுரம் நேர்புநேர்புநிரை பாம்புபோகுசுரம் நேர்புநிரைபுநிரை பாம்புவழங்குசுரம் நிரைபுநேர்நிரை களிறுசேர்சுரம் நிரைபுநிரைநிரை களிறுவருசுரம் நிரைபுநேர்புநிரை களிறுபோகுசுரம் நிரைபுநிரைபுநிரை களிறுவழங்குசுரம் எனவும் நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நேர்பு மாசேர்காடு நேர்நிரைநேர்பு மாவருகாடு நேர்நேர்புநேர்பு மாபோகுகாடு நேர்நிரைபுநேர்பு மாவழங்குகாடு நிரைநேர்நேர்பு புலிசேர்காடு நிரைநிரைநேர்பு புலிவருகாடு நிரைநேர்புநேர்பு புலிபோகுகாடு நிரைநிரைபுநேர்பு புலிவழங்குகாடு நேர்புநிரைநேர்பு பாம்புசேர்காடு நேர்புநிரைநேர்பு பாம்புவருகாடு நேர்புநேர்புநேர்பு பாம்புபோகுகாடு நேர்பநிரைபுநேர்பு பாம்புவழங்குகாடு நிரைபுநேர்நேர்பு களிறுசேர்காடு நிரைபுநிரைநேர்பு களிறுவருகாடு நரைபுநேர்புநேர்பு களிறுபோகுடு நிரைபுநிரைபுநேர்பு களிறுவழங்குகாடு எனவும் நேர்பீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நிரைபு மாசேர்கடறு நேர்நிரைநிரைபு மாவருகடறு நேர்நேர்நிரைபு மாபோகுகடறு நேர்நிரைபுநிரைபு மாவழங்குடறு நிரைநேர்நிரைபு புலிசேர்கடறு நிரைநிரைநிரைபு புலிவருகடறு நிரைநேர்புநிரைபு புலிபோகுகடறு நிரைநிரைபுநிரைபு புலிவழங்குகடறு நேர்புநேர்நிரைபு பாம்புசேர்கடறு நேர்புநிரைநிரைபு பாம்பு வருகடறு நேர்புநேர்புநிரைபு பாம்புபோகுகடறு நேர்புநிரைபுநிரைபு பாம்புவழங்குகடறு நிரைபுநேர்நிரைபு களிறுசேர்கடறு நிரைபுநிரைநிரைபு களிறுவருகடறு நிரைபுநேர்புநிரைபு களிறுபோகுகடறு நிரைபுநிரைபுநிரைபு களிறுவழங்குகடறு எனவும் நிரைபீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன இவை அறுபத்து நான்கினும் நான்குநீக்கி, ஒழிந்த அறுபதும் வஞ்சியுரிச்சீராம். செய்யுள் :- மேற்கோட்டுநீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமெய் வியல்விசும்புதோய்ந் தோங்குமுன்னர்க் காம்புகிழியப் பாய்ந்துசென்றுசென் றாங்குநலிபுநின் றெதிர்த்துமீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுச்செய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூதூ ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துவ தெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடும்பே இதனுள் நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள் வெண்சீர்நான்கு மொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. தண்டண்டலைத் தாதுறைத்தலின் வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப் போதுதூங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர் நன்னாட் டென்னா குங்கொல் பொன்னிநன் னாட்டுப் பொருந னெங்கோன் தாடோய் தடக்கை மல்ல னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே இதனுள் நிரையீற்று வஞ்சிச்சீர் பதினாறும் வந்தன. வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபேர்ந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிரைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துவீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபேர்ந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே இதனுள் நேர்பீறாகிய வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. சீற்றம்மிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவும் பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசு தொலைத்து வேம்புமீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவீற்றுப்புனைந்து வேற்றுச்சுரும்புகிளர்பு களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரித்து தூங்குகடாந்து விரைந்துமலைந்துதொலைத்து மணங்கம ழாரமொடு தயங்கச் சூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே பாடா தோடிய நாடுகெழு வேந்தே இதனுள் நிரைபீற்று வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. ஆய்வுரை : இது, வஞ்சியுரிச் சீராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வெண்பாவுரிச் சீர் நான்குமல்லாத ஏனைய மூவசைச்சீர் அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனப்படும் எ-று. அறுபது வஞ்சிச் சீர்களுக்கும் உரியவாக இளம்பூரணர், பேராசிரியர் உரைகளில் தனித்தனி வாய்பாடுகள் காட்டப் பெற்றுள்ளன. 20. தன்பா அல்வழித் தான்நடை இன்றே. இளம்பூரணம் : என்---எனின். வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினு ளல்லது நடை பெறாது என்றவாறு.1 (20) பேராசிரியம் : இஃது, அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ - ள்.) இவ்வறுபது வஞ்சியுரிச்சீருந் தன்பாவினு ளல்லாத ஆசிரியம் வெண்பாக் கலியினுள் வாரா (எ - று). சிறுபான்மையா னாவன முன்னர்ச் சொல்லுதும். இவை ஆசிரியவுரிச்சீர் தூங்கலோசையா னாகுமாறுபோல ஆசிரிய வோசையும் ஆக்குங்கொல்லெனின் ஆக்காவென்பது இதனது பயன்.1 (21) நச்சினார்க்கினியம் : இஃது அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ - ள்.) இவ்வறுபது வஞ்சிச்சீரும் தன்தன் பாவல்லா ஆசிரியம், வெண்பா, கலியுள் வாரா2 எ - று. எனவே, சிறுபான்மையான் ஆவனமேற் கூறுதும். உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. இதன்பயன் ஆசிரியவுரிச்சீர் தூங்கலோசையை ஆக்குமாறுபோல, இஃது அகவலோசையை ஆக்காதென்பதாம். ஆய்வுரை : இது வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபுணர்த்துகின்றது. (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் அறுபதும் வஞ்சிப்பாவினுளல்லது ஏனைய பாவினுள் வருதல் இல்லை. எ - று. ஆசிரியவுரிச்சீர் ஆசிரிய நடைத்தாகிய வஞ்சிப்பாவினுள் வந்து தூங்கலோசையை ஆக்குவது போன்று ஆசிரியநடைத்தாகிய வஞ்சிப்பாவுக்குரிய சீர்கள் ஆசிரியப்பாவினுள் வந்து அகவ லோசையினை ஆக்குமோ? என்று ஐயுறுவார்க்கு ஆக்கா என ஐயமறுத்தல் இச்சூத்திரத்தின் பயன் என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்தாகும். 21. வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. இளம்பூரணம் : என்---எனின். இது வஞ்சிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள்1 வரப்பெறும் என்றவாறு. (21) பேராசிரியம் : இது, மற்றைச்சீர் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் பிற பாக்களை ஆக்காதவாறு போலாது ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் இவ் வஞ்சிப்பாவினை யாக்கும் (எ - று). உரிச்சீர் மேலதிகாரமாகலான், எஞ்சியவென இவ்விரண் டனையுமே கொண்டாமென்பது.2 வஞ்சியது பாவினை வஞ்சி யென்றான் ஆகுபெயரான். மற்றுச் சீர்கூறும்வழிப் பாக்கூறுவ தென்னையெனின் அப் பாவினை யாக்குவன சீராகலிற் சீரிலக் கணம் எய்துமென்பது.3 அவை யாமாறு. வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவின் (பத்துப்-பட்டின. 1-3) எனத் தன்சீர்வரத் தூங்கலோசை பிறந்தது. தாழ்தாழைத் தண்டண்டலை (பத்துப்-பொருநர்-181) என்பதும், புட்டேம்பப் புயன்மாறி (பத்துப்-பட்டின-4) என்பது வெண்பாவுரிச்சீரால் தூங்கலோசை பிறந்தது. புட்டேம்பப் புயன்மாறி என்புழி, வசையில்புகழ் வயங்குவெண்மீன் எனத் தனது சீரானே தூங்கலோசை பிறந்தாங்குப் பிறந்தது. திசைதிரிந்து தெற்கேகினும் என இயற்சீர்நிற்பத் தன்சீரானே தூங்கலோசை பிறந்தது. புள்ளுந்துயின்று புலம்புகூர்ந்து என ஆசிரியவுரிச்சீரான் வஞ்சித்தூக்காயிற்று. பிறவும் அன்ன. (22) நச்சினார்க்கினியம் இது மற்றைச்சீர்கள் வஞ்சியுண் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கட்டளையல்லா வஞ்சிப்பாவின்கண் ஈரசைச்சீர் பதினாறும் மூவச்சீர் அறுபத்துநான்கும் உரிய எ-று. எனவே, கட்டளையிற் கூறுவாராயிற்று.1 வசையில்புகழ் வயங்குவெண்மீன் (பட்டினப்பாலை) எனத் தன்முன்னர்க் தான்வந்தும், திசைதிரிந்து தெற்கேகினும் (பட்டினப்பாலை) என இயற்சீர் நிற்பத் தன்சீர்வந்தும், தற்பாடிய தளியுணவின் (பட்டினப்பாலை) எனத் தன்முன்னர் வெண்சீர் வந்தும், புட்டேம்பப் புயன்மாறி (பட்டினப்பாலை) என இரண்டு வெண்சீர் வந்தும், புள்ளுந்துயின்று புலம்புங்கூர்ந்து என ஆசிரியவுச்சீர் வந்தும் தூங்கலோசை பிறக்கும் என்றுணர்க. ஆய்வுரை: இது, வஞ்சிப்பாவிற்குரியதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர்கள் வருதற்குரிய எ-று. வஞ்சியுரிச்சீர் பிற பாக்களிற் பயின்று அப்பாக்களுக்குரிய ஒசையையுண்டாக்க மாட்டாது. அவ்வாறன்றி ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் வஞ்சிப்பாவினுள் வந்து வஞ்சிப்பாவின் ஒசையையுண்டாக்குந் தன்மையன. ஆதலின் வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய என்றார் தொல்காப்பியனார். எஞ்சிய என்றது, ஒரு பாவுக்குச் சிறப்புரிமையுடையனவாகப் பெயர் பெற்ற ஆசிரியவுரிச் சீர்,வெண்பாவுரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்னும் மூவசைச் சீர்களுள் வஞ்சியுரிச்சீரல்லாத ஏனையிரண்டினையும். 22 வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை இலவே. இளம்பூரணம்: என்---எனின் வெண்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வெண்பாவுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் வெண் பாவினது1 நேரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை என்றவாறு. (22) பேராசிரியம் : இது, கட்டளையாசிரியப்பாவினுள் அடியுறழப்படாத சீர் இவையென்கின்றது. (இ - ள்.) வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவிற்கு ஒப்ப வரும் நிலை இல (எ-று). இன்பா நேரடி யென்பது ஆசிரியவடி யென்றவாறு.2 ஒருங்கு என்றதனான் இயற்சீராகிய தன்சீரேபோல வெண்சீரும் வாராதென்பதாம். இயலசை மயங்கினவே இயற்சீரெனப்படுவன எனவும், உரியசை மயங்கினவே ஆசிரியவுரிச்சீரெனப்படுவன எனவும் முன்னர்ச் சொல்லிப் போந்தானாகலின் ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரியவுரிச்சீரென்றான். எனவே, நீடுகொடி குளிறுபுலி என்னும் இரண்டாசிரியவுரிச்சீரும் ஆசிரியத்து வந்து அடியுறழுமென்பது ஈண்டுக் கொள்ளப்படும்3 அல்லது, முன்னிரை யுறினு மன்ன வாகும் (தொல்-செய். 14) என்ற மாட்டேற்றான் இயற்சீர்த்தன்மை சிறுபான்மை வகையான் எய்துவித்ததூஉம் இப்பயனோக்கியாயிற்று. இக்கருத்து நோக்கிப் போலுங், கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல்-செய். 24) என்ற உம்மை இறந்தது தழீஇயிற்றுமா மென்பது.1 இனி ஒருசாரார் வெண்சீரும் ஆசிரியப்பாவினுள் வருங்கால் இயற்சீரிடையிட்டன்றி உடனியைந்துவாரா என்ப. அங்ஙனங் கொள்ளிற் கட்டளையடிக்கண்ணும் ஆசிரியவடியுள் வெண்சீரும் வந்து உறழப்பெறு மென்றானாம். அல்லாத வடிக்காயின் அது போக்கி, இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய வடிக்கே (தொல்-செய் 30) என்புழிக் கூறப்படுமென்பது ஈண்டு நேரடிக்கென்பது கட்டளை யடிக்கென்றவாறு.2 (23) நச்சினார்க்கினியம்: இது கட்டளை ஆசிரியத்திற்கு அடியுறழப்படாத சீர் இவை யென்கின்றது. (இ-ள்)3 வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கட்டளை ஆசிரியப் பாவில் வரும் அளவடிக்குப் பொருந்தநிற்றலின்று. எ-று. எனவே, நீடுகொடி, உரறுபுலி என முன்னிரையீற்றவிரண்டும் உறழும் என்பது ஈண்டுக்கொள்க. கட்டளைபடி யிங்ஙனம் வருமெனவே, சீர்வகையடிக்கு வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் பொருந்தவரும் என்றுணர்க. வெண்சீர் வந்தன மேற்கூறுப1 வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு (திருமுருகாற்றுப்படை) என ஆசிரியவுரிச்சீர் பொருந்தவந்தது. ஆய்வுரை: இது வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் என்னும் இருவகைச் சீர்கட்கும் உரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் இன்பா நேரடிக்கண் ஒருசேர நிற்றல் இல எ-று. இங்கு, இன்பா நேரடி யென்றது வெண்பாவினது நேரடியை யெனக் கொண்டார் இளம்பூரணர். வெண்பாவின் நாற்சீரடிக்கண் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஒருங்குநிற்றல் இல எனவே வெண்பாவுரிச்சீரும் இயற்சீரும் ஒருசேர நிற்றலையுடைய எனவும் கொள்ள வைத்தாராயிற்று. இனி, இச்சூத்திரத்தில் இன்பா நேரடி யென்றது. ஆசிரிய அடியாகிய கட்டளையடியினையெனவும் வெண்சீரும் ஆசிரியவுரிச் சீரும் கட்டளை யாசிரியப்பாவில் வரும் நாற்சீரடிக்குப் பொருந்தி நிற்றல் இல்லை என்பதே இச்சூத்திரத்தின் பொருள் எனவும் கொள்வர் போராசிரியரும் நச்சினார்க்கினியரும்.ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரத்தால் உணர்த்தக் கருதிய பொருள் இதுவென்பது மேலும் ஆராய்தற்குரியதாகும். 23 கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ.2 இளம்பூரணம்: என்-எனின். கலிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கலித்தளை வரும்வழி மேற்சொல்லப்பட்ட இரு வகைச்சீரு மொருங்கு நிற்கவும் பெறும் என்றவாறு.1 (23) பேராசிரியம்: இது, கலிப்பாவிற் சீர்மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேல் ஆசிரியவடி யுறழ்தற்கண் விலக்கப்படாத நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டுங் கலிப்பாவின் அடங்குங்காற் கடிதலுமுடையகொல்லெனின் ஈண்டும் அவை விலக்கப்படா (எ-று) எனவே, நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டும் கலியடியுறழ் வனவாயின. கடியவும்படா வென்பது இறந்ததுதழீஇய எச்ச வும்மையாம்; ஆசிரியத்திற் கடியப்படாவாதலேயன்றி ஈண்டுக் கடிதலும் படாவென்றமையின்.2 கலித்தளை மருங்கின் என்பது வினை செய்யிடத்துக்கண் ஏழாவது வந்தது; தளைத்தல் என்பது சீர்த்தொழிலாகலின். அல்லாக்கல் இருசீரானாகியதொரு தளை யிடனாகப் பிறிதொருசீர் ஆண்டு வரல்வேண்டு மென மறுக்க.3 மற்றுக் கலித்தளை மருங்கின் வெண்சீர் வருக வென்னாரோ வெனின், அது சொல்ல வேண்டுமோ? ஆசிரியத்துத் தன்சீர் வாராதன கூறுவதன்றி வருமென்பது கூறான், வெண்பாவிற்கும் அவ்வாறே வெண்சீர் வருமென விதந்தோதான், அதுபோல அதனியற்றாகிய கலிப்பாவிற்கும் வெண்சீர் வருமென விதந்தோதல் வேண்டுவதன்று;1 வஞ்சிப்பாவிற்குப் போல வேறு சீரின்மை யினென்பது அஃதேல், வஞ்சி மயங்கி னெஞ்சிய வுரிய (தொல் செய்-22) என வஞ்சிப்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் வருமென்று கூறல் வேண்டாவெனின் வேண்டுமன்றே, வெண்சீர் வருமென விதந் தோதுவான் ஆசிரியவுரிச்சீர் ஆண்டு விலக்குண்ணுமாகலி னென்பது.2 அவற்றுக்குச் செய்யுள் : ஒங்குவரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள் விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளை யாடி என இவை நிரையீற்றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. நிரையீற் றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. எனவும், வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானவனை (யா-ப-330) எனவும், அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி-11) என இவையிரண்டும் வெண்சீரெனத் தொகுக்கப்படுதலின் வெண் சீரென்னுஞ் சொல்லின் முடியுமிலக்கணத்தான் விதந்தோதாமேயும் அவ்விருபாவிற்கும் உரியவாயின. மற்றுக் கலி மருங்கினென்னாது தளைமருங்கினென்ற தென்னையெனின், இவ்வாராய்ச்சியுடையன கட்டளையடியென்ற தென்பது. எனவே, தளையென்று ஓதுவன வெல்லாங் கட்டளையடியே நோக்குமென்பது பெற்றாம். இங்ஙனம் வரையறையுடையன கட்டளையடியெனவே, அல்லாத அடிக்கண் ஒழிந்த ஆசிரியவுரிச் சீரும் வருமென்பது பெறுதுமென்பது. மற்றுக் கட்டளையடி யல்லாத ஆசிரியவடியுள் உரியசைமயங்கிய ஆசிரியவுரிச்சீரும் வருமென்பதூஉங் கூறுகவெனின், அவை விலக்குண்டது கட்டளை யடிக்காதலின் விலக்காதவழித் தன்சீர் வருதல் விதந்தோத வேண்டாவென்பது முற்கூறியவாறே கொள்க.1 (24) நச்சினார்க்கினியம் : இது கட்டளைக்கலிக்கட் சீர்மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கலித்தளையானாய கலிப்பாவில்வரும் நேரடி யிடத்து முற்கூறிய முன்னிரையீற்ற விரண்டுசீர்2 வருதலும் நீக்கப்படா. எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று.3 ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள் விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி எனவரும். இவ்வாறு கூறவே, சீர்வகைக் கலியடிக்கு இவை யொழிந்த ஆசிரியவுரிச்சீர்களும் ஏனைச்சீர்களும் வேண்டியவாறு வரப்பெறுமாயிற்று. ஆய்வுரை : இது, கலிப்பாவிற் சீர்மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்)கலித்தளையடியின்கண் மேற்குறித்த இருவகைச் சீரும் ஒருங்கு நிற்கவும் பெறும் எ-று. ஆசிரியத்திற் கடியப்படாமையேயன்றிக் கலிப்பாவிலும் கடியவும் படா என்றமையின் கடியவும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மையாகும். தளையென்று ஓதுவன வெல்லாம் எழுத்தெண்ணிச் சீர்வகுக்கப் பெறும் கட்டளையடியினையே குறிக்கும் என்பர் பேராசிரியர். 24. கலித்தளை யடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. இளம்பூரணம் : என் - எனின். இதுவுமது. (இ - ள்) கலிப்பாவிற்குரிய கலித்தளைக்கண் நேரீற்றியற்சீர் நிற்றற்குரித் தன்று ஆராய்வார்க் கென்றவாறு.1 (24) பேராசிரியம் : இதுவுங் கட்டளையடிக்கு எண்ணப்பட்டதொரு சீர்வரையறை. (இ - ள்) கலித்தளை அடிவயின்-கலிப்பாவினது கட்டளை யடிக்கண்; நேரீற்றியற்சீர் நிலைக்கு உரித்தன்று - தேமா புளிமா என்னும் இரண்டியற்சீரும் வரப்பெறா; தெரியு மோர்க்கே-துள்ளலோசையைத் தெளிவார்க்கு (எ - று). ஆகாவென்றவற்றைக் காட்டலாவதில்லை; ஆகாவென்ப தல்லது. கட்டளையடிக்கண் வரைந்தோதவே, அல்லனவற்றுக்கண் வருமென்பதாம்2 அவை : பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை (கலி-5) எனவும், உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை (கலி-38) எனவும், காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் (கலி-39) எனவுங் கலியடியுள் வந்தன. இயற்சீர் பத்துள்ளும் இவை யிரண்டினையுங் கலிக்கண் வாராவெனவே ஒழிந்த ஆசிரியத் துள்ளும் வெண்பாவுள்ளும் பத்தியற்சீரும் வேறுவேறு வந்து அடியுறழுமென்பதூஉம், இதற்காயின் எட்டியற்சீர் அடியுறழு மென்பதூஉங் கூறினானாம். எனவே ஆசிரியம், இயற்சீர்பத்தும் ஆசிரிய உரிச்சீரிரண்டுமெனப் பன்னிரண்டுசீர் பெறுவதாயிற்று. வெண்பாவும் இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்குமெனப் பதினான்குசீர் பெறுவதாயிற்று. கலிப்பாவடியின் இயற்சீரெட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீரிரண்டுமெனப் பதினான்குசீர் பெறுவ தாயிற்று.1 அசைச்சீருளாவன முன்னர்ச் (செய்யுள் 27.) சொல்லுதும். இனி, வஞ்சிப்பாவிற்கும். வஞ்சி மருங்கி னெஞ்சிய உரிய (தொல்-செய்-22) என முற்கூறியவாற்றான் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்துநான்குமென எண்பதுசீருங் கட்டளையடியல்வழி உரியவென எய்துவித்ததாம்.2 அவற்றுள் தேமா புளிமா வென்னும் இரண்டுசீரும் ஆகாத இடம் இனிச் சொல்லுகின்றான். (25) நச்சினார்க்கினியம் : இதுவும் கட்டளையடிக்கோர் சீர்வரையறை கூறுகின்றது. (இ-ள்.) கலித்தளையானாய கலிப்பாவில்வரும் நேரடியிடத்துத்1 தேமா புளிமா என்னும் நேரீற்றியற்சீரிரண்டும் நிற்றற்குரித்தன்று, துள்ளலோசையைத் தெரிவோர்க்கு. எ-று. இங்ஙனம் வரைந்தோதவே, சீர்வகையடிக்கண் இவ் விரண்டியற்சீரும் வருதல் பெறுதும். உ-ம். ஐயிரு தலையி னரக்கர் கோமான் எனவரும். எனவே, நேரீற்றியற்சீர் ஒழிந்த எட்டியற்சீரும் கலிக்கு வருதலும், ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் ஒழிந்த பத்தியற்சீரும் வருதலும் பெற்றாம். ஆய்வுரை : இது, கலியடிக்கு எண்ணப்படாததோர் சீர்வரையறை கூறுகின்றது. (இ ள்) கலித்தளையானாகிய கலிப்பாவில் வரும் நேரடியின் கண் நேரீற்றியற்சீர் நிற்றற்குரியதன்று; (துள்ளலோசையினைத்) தெரிந்துணர்வார்க்கு எ-று. நேரீற்றியற்சீராவன தேமா, புளிமா என்பன. 25. வஞ்சி மருங்கினும் இறுதி நில்லாது.2 இளம்பூரணம் : என்-எனின். வஞ்சிக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வஞ்சிப்பாவினும் அடியினீற்றின்கண் நில்லாது நேரீற்றியற்சீர் என்றவாறு. எனவே, அடிமுதற்கண் நிற்கப்பெறும் என்றவாறாம்1. பேராசிரியம் : இது, வஞ்சிப்பாவினுள் வாராஇயற்சீர் கூறுகின்றது. (இ-ள்.) வஞ்சி மருங்கினும்---மேற்கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும்; இறுதி நில்லா--ஈற்றில் நிலைமைப் படா (எ-று) வஞ்சித்தளைமருங்கி னென்னாது வஞ்சி மருங்கினென வாளாது கூறினான், அது கட்டளையடிக்கல்லாமையின். வஞ்சிப் பாவினுட் சீர்வருங்கால் ஒழிந்த பாவிற்குப்போலச் சீரியைந்திறு தன் மாத்திரையன்றிச் சீர்தோறுந் தம்முள் வேறுபாடு தோன்றத் தூங்கப்படும். அவ்வாறு தூங்கலோசைப்பட நில்லா தேமா புளிமாவென்னும் இரண்டு சீருமென்றவாறாம். உம்மை இறந்தது தழீஇயிற்று. இறுதிநில்லா வென்பது இறுதலோடு நில்லாவென்றவாறு. எனவே, தூங்கலோசைப்பட முதற்கண் வாராவென்றவாறாம். என்னை? இருசீரினுள் வருஞ்சீரோடு தொடருங்கால் இறுதற்றொழில் பெறுவது நின்றசீராகலினென்பது இதனானே ஒழிந்த இயற்சீரில் தூங்கலோசைப்பட நிற்கு மென்றவாறாம்2 கொற்றக் கொடி யுயரிய எனவுங், களிறுங் கதவெறிந்தன எனவும் நேரீற்றியற்சீர் முதற்கண் தூங்காவாயின. அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் (புறம்-17) என ஒழிந்த இயற்சீர் தூங்கினவென்பது. இவையுங் கட்டளை யல்லவென்பது அசையுஞ் சீரும் (தொல் செய்-11) என்பதனான் அறிக.1 இறுதிக்கண் விலக்காமையின், மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் (புறம். 2) என நேரீற்றியற்சீர் வந்தன. இனி, ஈற்றுக்கண் வருதல் சிறுபான்மை யென்பாரும், யாண்டும் இறுதிக்கண் வாராவென்பாரும் இச்சூத்திரத்தை யுரைக்குமாறு வஞ்சியடியிறுதிக்கண் இவை வாராவெனப் பெரும்பான்மைபற்றி ஓதினானெனவும், இஃதொருதலையாக விலக்கினானெனவுஞ் சொல்லுப. அவ்வாறு கூறின் முதற்கண் அவ்விருசீரும் வருதல் பெரும்பான்மையாதல் வேண்டுமென மறுக்க2 என்றார்க்குத். தன்பால் வெங்கள்ளி னொலிவே லிலங்குதடக்கை எனவும், புன்காற் புணர்மருதின் போதப்பிய புனற்றாமரை எனவுந், தேன்றாட் டீங்கரும்பின் எனவும் வந்தனவாலெனின், அங்ஙனம் நலிந்து காட்டினவை அளபெடை வெண்சீராம்; அது செவிகருவியாக உணர்க, என்னை? கொற்றக் கொடியுயரிய என அளபெழாதவழித் தூங்காமையின்: அல்லதூஉம், நேரீற்றியற்சீர் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்; மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும் (புறம்-2) எனவும், ஆழ்ந்துபட்ட கிடங்கி னுயர்ந்தோங்கிய வாயில் எனவும், ஒரோ செய்யுட்கண்ணே பல வந்தமையினென்பது மருங்கென்றதனானே நேர்நிலைவஞ்சிப்பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படும். கொள்ளவே வியனிலைவஞ்சிக்கு இவ்வரையறை யின்றென்பது. மற்று, மண்டிணிந்த நிலனும் என்பது நேர்நிலைவஞ்சியாகலின் அடிநிலையோடு அடிக்கூட்டத்துக் கண் அதற்குத் தூங்கலோசை கொள்ளுமா றென்னை யெனின், அஃது இலக்கண அடியன்மையின் ஈண்டாராய்ச்சியின் றென்பது.1 நேர்நிலைவஞ்சியுள் இலக்கண அடிக்கண் இயற்சீரெல்லாம் வாரா வென்பது, குறளடி முதலா வளவடி காறும் (தொல்.செய்.57) என்புழிச் சொல்லுதும். நச்சினார்க்கினியம்: இது கட்டளையல்லா வஞ்சிப்பாவில் வரப்பெறா இயற்சீர் கூறுகின்றது; வஞ்சித்தளை மருங்கினும் என்னாது வஞ்சி மருங்கினும் என வாளா கூறினமையின் கட்டளையன்மை பெறுதும்: தளைத்தற்றொழில்1 கட்டளையடிக்கண்ணதாகலின். (இ-ள்.) வஞ்சிப்பாவிடத்தும் அசைச்சீர் இரண்டும்2இறுதலோடு நில்லா முதற்சீர்க்கண் எ-று. என்றது மற்றைப் பாக்களைப்போலச் சீரியைந்திறதன் மாத்திரையன்றி முதற்சீர்தோறும் தம்முள் வேறுபாடுதோன்றத் தூக்கப்படும் ஓசை வஞ்சிக்கு வேண்டுதலின் அவ்வோசைபடப் பெரும்பான்மை நில்லா தேமா, புளிமா என்னும் இரண்டும் எ-று: என்னை? முதற்சீர் வருஞ்சீரோடு தொடருங்கால் இறுதற்றொழில் பெறுவது நின்ற சீராகலின். எனவே, நலிந்து கூறியவிடத்துச் சிறுபான்மை தூக்கப்படுமோசைபடவும் நிற்கும். என்றுணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று. உ-ம். கொற்றக் கொடியுயரிய களிறுங் கதவெறிந் தனவே என நேரீற்றியற்சீர் முதற்கட் டூங்காவாயின. அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் (புறம்.17) எனவும், மேதக மிகப்பொலிந்த வோங்குநிலை வயக்களிறு (மதுரைக்காஞ்சி) எனவும் ஒழிந்த இயற்சீர் முதற்கட் டூங்கின. இவை கட்டளை யன்மையுணர்க. புன்காற் புணர்மருதின் தேன்றாட் டீங்கரும்பின் என நலிந்து கூறியவழித் தூங்கின.1 இனி மண்டிணிந்த நிலனு நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரும் வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும் (புறம்.2) என ஈற்றுக்கண் வருதல் பெரும்பான்மையாதலின் இறுதி நில்லா எனப் பொருள் கூறலாகாமை யுணர்க. மருங்கு என்றதனான் நேர்நிலைவஞ்சிக்கே இவ்வரையறை: வியனிலை வஞ்சிக்கு இன்றென உணர்க. ஆய்வுரை: இது, வஞ்சிக்குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய நேரீற்றியற்சீர் இரண்டும் அடியின் ஈற்றின்கண் நில்லா எ-று. இறுதிநில்லாது என்பதற்கு அடியீற்றின்கண் நில்லாது எனப் பொருள் வரைந்து, எனவே அடிமுதற்கண் நிற்கப்பெறும் என்ற வாறாம் என விளக்கம் தந்தார் இளம்பூரணர். மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் (புறம்-2) எனவரும் புறப்பாடலில் நேரீற்றியற்சீர் அடியிறுதிக்கண் பெரும் பான்மையும் பயின்றுவரக் காணுதலால் இச்சூத்திரத்துக்கு இளம்பூரணர் கூறும் பொருள் பொருந்தாதெனவுணர்ந்த பேராசிரியர், இறுதி நில்லா என்பதற்கு, இறுதற்றொழிலாகிய தூங்கலோசைப் பட அடிமுதற்கண் வாரா எனப் பொருள் கொண்டு, கொற்றக் கொடியுயரிய எனவும், களிறுங் கதவெறிந்தன எனவும் நேரீற்றியசீர் அடிமுதற்கண் தூங்கலோசைப்பட வாராவாயின எனவும் அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் என நேரீற் றியற்சீரல்லாத பிற சீர்கள் அடிமுதற்கண் தூங்கலோசைப் பட வந்தன எனவும் உதாரணங்காட்டி விளக்கினார். இருசீரான்வரும் குறளடிவஞ்சிப்பாவிற்கே இவ்வரையறை கொள்ளப்படும் என்பதும் முச்சீரான் வரும் வஞ்சிக்கு இத்தகைய வரையறையில்லை யென்பதும்பேராசிரியர் கருத்தாகும். 26 இசைநிலை நிறைய நிற்குவ தாயின்1 அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே. இளம்பூரணம்: என்-எனின். ஓரசைச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இசை நிற்கின்றநிலை நிரம்பா நிற்குமாயின் அசையும் சீராந் தன்மைபோல2 வரையார் ஆசிரியர் என்றவாறு. உதாரணம் நாள்,மலர், காசு, பிறப்பு என வரும். 26 பேராசிரியம்: இது, நான்கசையுஞ் சீராகும் இடனுமுடைய என்கின்றது. (இ-ள்.) ஓசை நிலைமையாற் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப்பட்ட சொற்களையெல்லாம் சீர்நிலை பெறுதற்கண் வரையார் (எ-று). கழறொழா மன்னவர்தங் கை என்று நேரசை சீராயிற்று. புனனாடன் பேரே வரும் என நிரையசை சீராயிற்று. எய்போற் கிடந்தானென் னேறு (புறப்-வெண்பாமாலை-வாகை.22) என நேர்பசை சீராயிற்று. மேவாரை யட்ட களத்து (களவழி-25,27,36) என நிரைபசை சீராயிற்று. பிறவுமன்ன. இவற்றை உண்மை வகையாற் சீராமென்றான் அல்லன்: தொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல (தொல். எழுத்- மொழி.17) என்றாற்போலக் கூறினானென்பது.1 இவை இன்ன பாவினுள் வருமென்பது முன்னர்ச் (செய்-73) சொல்லுதும். இங்ஙனங் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி யென்னுமாறு இல்லையென்பது.2 நச்சினார்க்கினியம்: இது நான்கசையுஞ் சீராம்இடனும் உடைய என்கின்றது. (இ-ள்.) இசைநிலை --- வாயின் எ-து ஓசைநிலைமையாற் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்குமாயின். அசை நிலைவரையார் சீர்நிலை பெறல்1 --- எ-து அசைநிலைப்பட்ட சொற்களை யெல்லாம் சீர்நிலை பெறுதற்கு வரையார்.எ--று. உ-ம். கழறொழா மன்னவர்தங் கை புனனாடன் பேரே வரும் எய்போற் கிடந்தானென் னேறு (வெண்பாமாலை-வாகை-22) மேவாரை யட்ட களத்து (களவழி 25, 27, 36) என நேரசையும், நிரையசையும், நேர்பசையும், நிரைபசையும் ஆயிற்று. இவை ஒரோவோரோசைக்குக் காட்டிற்றேனும் ஒழிந்த அசைகட்குங் கூறிக்கொள்க.2 இங்ஙனம் கூறாக்கால் வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும் (செய்-72) என்ற விதி ஆமாறின்று. ஆய்வுரை: இஃது ஒரசைச்சீராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரசையாய் நிற்பனவாகிய சொற்கள் ஓசை நிலைமையால் நிறைந்து நிற்குமாயின் சீராந்தன்மை பெற்று நிற்றலை விலக்கார் ஆசிரியர் எ-று. அசைநிலை, இசைநிலை நிறைய நிற்குமாயின் சீர்நிலை பெறல் வரையார் என இயைத்துப் பொருள் கொள்க. ஓரசைச் சீர்களாவன, நாள், மலர், காசு, பிறப்பு என்பன. இவை சீராந்தன்மை பெற நிற்குமென ஈண்டு விதிக்காவிடின் வெண்பாவின் ஈற்றடியினை முச்சீரடியென வழங்குதற்கு இடமில்லாது போய்விடும். உ-ம்: கணபதியைக் கைதொழுதக் கால் என நேரசை சீராயிற்று. நற்றா டொழாஅ ரெனின் என நிரையசை சீராயிற்று. உடையா னரசரு ளேறு என நேர்பசை சீராயிற்று. பகவன் முதற்றே யுலகு என நிரைபசை சீராயிற்று. 27. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான இளம்பூரணம்: என்-எனின். அவ்வோரசைச் சீர் தளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து இயற்சீர்போலக் கொள்க1 என்றவாறு. (27) பேராசிரியம்: இஃது எய்தியதொரு மருங்கு மறுத்தல் நுதலிற்று; இயலசை யிரண்டுஞ் சீர்நிலைபெறினுந் தளைகொள்ளப்படா வென்றமையின். இனி, எய்தாததெய்துவித்ததூஉமாம்; என்னை? உரியசையால் தளைகொள்ளுமாறுணர்த்தினமையின்.1 (இ-ள்.) இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து இயற்றப்படும் அவை தளைவகை சிதையாத் தன்மைக்கண் (எ - று). பாற்படுத் தெனவே அதிகாரத்தான் இறுதிநின்ற உரியசை யிரண்டும் (நேர்பு, நிரைபு) பகுத்துக்கொள்ளப்படும்.2 நான்கியற்சீருள் இன்ன இயற்சீர்ப்பாற் படுமென்றானோ வெனின், கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் (தொல்-செய் 25) என அதிகாரம் வருகின்றமையின் தேமா புளிமா வென்னுஞ் சீர்போல இரண்டசையுந் தளைகொள்ளுமென்றமையின் இயற்றுக வென்றானென்பது.3 தானாக இயல்வதன்மையின் இயற்றுக வெனப்பட்டது. தளைவகை சிதையாத் தன்மையான வென்று இடம் நியமித்ததென்னையெனின், சீர்வகையான் அசைச்சீரென வேறாய் நிற்றலுடைய, தளைவகை சிதையாத்தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுகவென அடங்கக்கூறிற்றென அறிவித்தற் கெனவுணர்க.4 எனவே, என் சொல்லப்பட்டதாம்? இவ்வுரியசையிரண்டுஞ் சீர்வகையான் வேறு வேறு எண்ணித் தொகைபெற்றுத் தமக்கு ஓதிய அடியுறழுமெனவும், அஃதெண்ணப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறுவேறுஎண்ணுத் தொகை பெற்று இயற்சீ ரெனவேயடங்கு மெனவுங் கூறப்பட்டதாம்; இன்னுந் தளைவகைக் கண்ணெனவே, கட்டளையடிக்கண்ணதே இவ்வரையறை யென்பதூஉம் அல்லாத வழி இந்நான்கசையும் வரையறை யின்மையின் தளை கொள்ளப்படாதென்பதூஉங் கூறப்பட்டதாம். அஃது ஓரசைச் சீரல்லாத சீராயின் கட்டளையடியல்வழியுந்தளை கொள்பவோ வெனின், தளைகொள்ளிற் கட்டளையடி யெனப்படு மாதலின் அல்லாதவழி வந்தசீர் தளைகொண்டனவென்றில் பயனில் கூற்றாமென மறுக்க.1 உலக முவப்ப வலனேர்பு திரிதரு (பத்து-திருமுரு. 1) என்றவழி, ஆசிரியத்துட் பிறதளை வந்ததென்று இலக்கணம் கூறி வழுவமைக்கல் வேண்டா என்னை ? அது பெருவரவிற்றாகலின்;2 அதனான்வருஞ்சீர்வகையான் வந்ததென்று ஒழிதலே அமையும்,3 வரையறை இல்லனவற்றுக்கு வரையறை கூறல் குற்றமாகலி னென்பது. மற்று இவ்வுரியசைச் சீரிரண்டும் வரையாது கூறின மையின் மூன்றுபாவிற்குஞ் செல்லும் பிறவெனின்: கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர், நிலைக்குரித் தன்று (தொல்-செய். 25) எனக்கூறி, ஈண்டு இவற்றை இயற்சீர்ப்பாற்படு மென்றமையின் இவையுங் கலிப்பாவிற்கு விலக்குண்டனவென்பது, எனவே, ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியசைச் சீரிரண்டும் உரிய வாயின. ஆசிரியத்திற்கு மேற்கூறிய (25) சீர் பன்னிரண்டும் இவையிரண்டுமென அடியுறழுஞ்சீர் பதினான்காயின. வெண்பாவிற்கு முன்னரெய்தியசீர் பதினான்கும் இவையிரண்டுமாக அடியுறழுஞ்சீர் பதினாறாயின. கலிப்பாவிற்கு மேற்கூறியசீர் பதினான்குமேயாயின. இங்ஙனம் வகுக்கப்பட்ட சீர் நாற்பத்து நான்கினையும், சீர்வகை யான் உணமை நோக்கித் தொகுப்ப இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச் சீரிரண்டும் வெண்சீர் நான்கும் அசைச் ÓÇu©Lbkd¥ பதினெட்டாம். மேல் (50) ஐவகை அடியெனப்பட்ட அறுநூற்றிருபத்தைந் தடியும் இச்சீர் பதினெட்டானுந் தோற்றிக்கொள்ளப்படும். இப்பதினெட்டுச் சீரும் இரு நிலைமை யெய்துவனவும் எய்தாதனவு மாகி முப்பத்தொன்றாகி விரியுமாறு முன்னர், எழுத்தள வெஞ்சினும் (தொல்-செய். 43) என்புழிச் சொல்லுதும். (28) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது; இயலசையிரண்டுஞ் சீர்நிலையெய்தியுந் தளைபடா என்றலின். உரியசை தட்கும் என்றலின், எய்தாதது எய்துவித்ததூஉமாம்.1 (இ-ள்.) இயற் ... படுத்து எ-து முன்னர்க் கூறிய உரியசை யிரண்டும் இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து. தளைவகை ... யான எ-து அவ்வியற் சீர்க்குக் கூறுந்தளைவகை கெடாத தன்மைக் கண்ணே; இயற்றினர் கொளல் எ-து அவற்றையும் இயற்றிக் கொள்க. எ-று. நேரீற்றியற்சீர் அதிகாரத்தால் தேமா புளிமாப்போலத் தட்டல் கொள்க. தளைவகை சிதையா என்றது எய்தியுந்தளையா என்று கொள்க. முலைவிலங்கிற் றென்று முனிவாள் நெய்த்தோர் நிறைத்துக் கணம்புகல் என இரண்டசைச்சீரும் இயற்சீர் வெண்டளையாகத் தட்டன. தளைவகை சிதையாத்தன்மையான என இடம் நியமித்தது, சீர்வகையான் அசை சீரெனவேறுநின்று அடியுறழ்ந்து எழுபது எனப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறெண்ணுந் தொகைபெறாது இயற்சீர்க்கண் அடங்கும் என்றற்கு: எனவே, கட்டளையடிக்கே இவ்வரையறை: அல்லுழி வரையறை யின்மையிற் றளைகொள்ளப்படாதென்றுணர்க. இக்காலத்தார் சீர்வகையடிக்குந் தளை கொள்வர். இடைமண்டிச் செல்வதனைக் கண்டு பெடைஞெண்டு என்றவழிக் கண்டு என்பதனை இயற்சீர் வெண்டளை யென்பர். இனிக் கலித்தளை யடிவயின் (செய்-25) என்றதன்பின் இச்சூத்திரங் கூறுதலின், இவையுங் கலிக்கு விலக்குண்டு ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியவாயின; எனவே, ஆசிரியத்திற்கு இயலசை மயங்கிய இயற்சீர் நான்கும் உரியசை மயங்கிய இயற்சீர் ஆறும் ஆக இயற்சீர் பத்தும், முன்னிரை யீற்ற ஆசிரியவுரிச்சீரிரண்டும் ஈண்டுக் கூறிய அசைச் சீரிரண்டும் ஆகப் பதினான்கும் அடியுறழுமாயிற்று. வெண்பாவிற்கு இருவகை இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண்டும் எனப் பதினாறு சீரும் அடியுறழுமாயிற்று. கலிக்கு நேரீற்றியற்சீர் ஒழிந்த இயற்சீர் எட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் எனப் பதினான்கும் அடியுறழுமாயிற்று. இனி நாற்பத்து நான்கும் உண்மைவகையால் இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண்டும் எனப் பதினெட்டாயிற்று. இவற்றுள் இருநிலைமைப் படுவனபட்டு முப்பத்தொன்றாமாறு சீர்நிலைதானே (செய்-41) என்னுஞ் சூத்திரத்துட் கூறுதும். ஆய்வுரை : இஃது, ஓரசைச்சீர் தளை கொள்ளுமாறு உணர்த்துகின்றது. (இ---ள்) தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து ஓரசைச்சீரை இயற்சீரே போலக் கொள்க. எ-று. நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் அசை நான்கினுள் முன்னர்க் குறித்த இயலசையிரண்டும் சீர்நிலையெய்தியும் தளைபடா என்றலின் இச்சூத்திரம் எய்தியது ஒருமருங்கு மறுத்தது எனவும், பின்னர்க் குறித்த உரியசையிரண்டும் சீர்நிலையெய்தி இயற்சீரே போலத் தளைக்கப்படும் என்றலின் எய்தாதது எய்துவித்தது எனவும், இவை இயற்சீர்ப்பாற்படும். எனவே, இவையும் கலிப்பாவிற்கு விலக்குண்டன எனவும் கருத்துரை வரைவர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 28. வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. இளம்பூரணம் : என்(-)எனின் இதுவுந் தளைவழங்குந் திறன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெண்சீ ரீற்றசை தளைவழங்குமிடத்து இயற்சீரசை நிரையீறு போலும் என்றவாறு.1 இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது. (28) பேராசிரியம் : இது, வெண்சீராற் கலித்தளையாமா றுணர்த்துதல் நுதலிற்று. கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல்-செய்.24) என்புழி, அவ்வாசிரியவுரிச்சீராற் கலித்தளையா மென்றான், அவ்வதிகாரம் இடையறாது நின்றமையின் இதுவுங் கலித்தளைக்கே இலக்கணமாயிற்று, என்றார்க்கு, வஞ்சி மருங்கினும் (தொல்-செய். 26) எனவும், இசைநிலை நிறைய (தொல்-செய் 27) எனவும், இயற்சீர்ப் பாற்படுத்து (தொல்-செய் 28) எனவும், இம்மூன்று சூத்திரம் இடையிட்டனவாலெனின், அற்றன்று; கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் அதிகாரம் பற்றி இடைபுகுந்ததல்லது கலித்தளையதிகாரம் விலக்கினவல்ல வென்பது. (இ - ள்) வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்ற வழி அவ்வெண்சீருள் ஈற்று நின்ற சீரின் முதல்வந்த நேரசை1 மற்றை நிரைமுதல் வெண்சீர்வந்து முன்னைய இரண்டுங் கலித்தளையாய வாறுபோலக் கலித்தளையாம் (எ-று). மேனின்றஅதிகாரத்தால், தளைவகை சிதையாத் தன்மைக்கண் (28) என்பது, கூட்டியுரைக்க. எனவே, வெண்சீர்ப்பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததெனவும் நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒருநிகர்த்தா மென்பதூஉங் கூறி அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவதெனவுங் கூறினானாம். இது, மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் (மரபு 110) என்னும் உத்திவகை. வெண்சீரிறுதி யென்பது ஏழாவதன் தொகை; என்னை? ஈறெனப்பட்டது சீராகலின். வெண்சீருள் ஈற்றுச்சீரெனவே வெண்சீர் பலவுந் தொடர்ந்து நிரைமுதல் வந்தவழியன்றி இறுதிச்சீரொன்றியது நிரையசையியற்றாகா தென்பதாம்.2 இதனான் நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்குங்கால் இயற்சீரடி முதற்கண் வருமென்பதூஉங் கூறப்பட்டதாம். மற்று, ஈறென்றது ஈற்றுச்சீரினையாயின் அச்சீரினிடையும் இறுதியும் நின்ற அசையினை நிரையசையியற்றென்று கொள்வனெனின், நின்றசீரின் ஈற்றசை வருஞ்சீரின் முதலசையோடு தட்பின் தளையாவதன்றி ஒன்றிடையிட்ட அசையுஞ்சீரும்பற்றித் தளைகொள்வா ரின்மையின் அது கடாவன் றென்பது.1 இனி, வெண்சீரென்பது அஃறிணை யியற்பெயராகலானும் பன்மைவினைகொண்டு பால் அறிய வந்ததன்றாயினும் அதனை, யானைக்கோடு என்றாற்போல இறுதி யென்றமையானும் பன்மைப் பாற்பட உணர்க. என்னை ? பின்னோன் முன்னோன் என்றவழி, அவர்க்கு முன்னும் பின்னும் வேறு சிலருளரென்பது உணர்த்துமாகலின்2 என்றார்க்கு, வெண்சீரிறுதி நீடுகொடி குளிறுபுலி வந்தவழி அவற்று முன்னின்ற நேர்பசை நிரைபசை களைக் கலிப்பாவினுள் கலித்தளையாக்குதற்கு நிரையசையியற்று என்றா னென்னாமோவெனின், அற்றன்று; வெண்சீர்களின் இறுதியெனவே மூன்றாஞ்சீரும் நான்காஞ்சீரும் வெண்சீராகல் கூறி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் (372) எனவே, இரண்டாஞ்சீரும் வெண்சீர் வரல்வேண்டுமெனக் கூறி, நிரை தட்குமெனவே, இயற்சீரானும் ஆசிரியவுரிச்சீரானும் நிரையீறாயின வெல்லாம் முதற்கண் நிற்குமெனவுங் கூறினான்; கூறவே, ஆசிரியவுரிச்சீர் இடைநில்லாவெனவும் அங்ஙனம் நிற்பிற் கலியோசையழியு மென்பதூஉமாம் இவர் கருத்தென்பது அல்லதூஉம் வெண்சீர்க்கு உரியசை யின்மையானும் அற்றன் றென்பது.3 எனவே, ஈற்றுச்சீர் நிரைமுத லியற்சீர் வரினும் ஆண்டுத் துள்ளலோசை ஒடுங்குமென்பதாம். அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) என்பது, வெண்சீரிறுதி நிரையொடுதட்ட கலித்தளை1 அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையான் (கலி. 11) என்பது, வெண்சீர்கள் பகைத்துவந்து ஈற்றுச்சீரின் முதற்கணின்ற நேரசை நிரையசைபோலக் கலியோசை கொண்டமையின் அது கலித்தளையெனப்பட்டது2 இனி, வெண்சீர் நான்கும் ஒன்றிவரினுங் கலித்தளையாகுமேனும், அது வெண்பாவடியென வும்பட்டுத் திரிவுபடுதலின் அதனைக் கட்டளையடியென்னாது இறுதிக்கண் ஒரோவழி ஒருசீர் ஒன்றிவரினும் அதன் முதற்கட் பல வெண் சீர்வந்து பகைத்தலிற் கலியோசையே காட்டுமென் றானென்பது.3 அஃதேற் பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் (கலி-கடவுள் வாழ்த்து.) என்றவழி, இடைநின்ற சீரின் நேரசை நிரையசையியற் றென் னாமோவெனின், அது கட்டளையடியென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல்-செய். 11) என்பதனான் அறியப்படும். அல்லாதாரும் அவை செவிகருவியாக உணர்தற் கருமைநோக்கி அடியறியுந்தன்மை அரிதென்று சொல்லுப.1 இனி, இயற்சீரானன்றித் தளைகொள்ளாமோ வென்பார், தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா (தொல்-செய். 55) என்பதனான், வெண்சீர்க்குத் தளைவிலக்கல்வேண்டி அவ்வெண் சீரினையும் இயற்சீராக இயற்றிக்கொள்ளப்படுமென்றற்கு ஒரு வெண்சீரின் ஈற்றசை நிரையசையியற் றென்றானெனக் கூறி, ஞாயிறென்னும் இயற்சீரினை மாசெல்வாயெனப் பின்னுமொரு கால் திரித்ததனையே2 திரியாமல் நிறுத்தி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்பினுங் கலியாமெனக் காட்டுப. அது ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் எனவரும். இவ்வாறே, கலித்தளை மருங்கிற் கடியவும் படா (தொல்-செய் 24) என்று ஆசிரியவுரிச்சீர்க்குந் திரிபுகூறாரோவெனின், அது நினைந் திலர்போலுமென்று இகழ்ந்துரைப்பாராவர். மற்று, வெண்சீரிறுதி நிரைவந்தாற் கலித்தளையாமென்பதற்கு ஓத்து வேறுண்டாயினன்றே நேரும் நிரையுந் தட்டதனை நேரும் நிரையும் பகைத்ததெனவும் வேண்டுவதெனவும் அங்ஙனம் பொருளுரைப் பார்க்கு எவ்வாற்றானும் இச்சூத்திரம் ஏலாதெனவுந், தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் (தொல்-செய். 54) என்றவழித் தன்சீரானுந் தளைகோடுமாகலானும் அது பொருந்தா தென மறுக்க.3 இனி, வெண்சீரின் ஈற்றசை யொன்றேயாகலான் இயற்றென்ற ஒருமை கூறினன்.1 இடைநின்ற நேரும் நிரையுங் கோடுமென்னாமையின் இங்ஙனந் திரிந்த நிலைமை வஞ்சி யுரிச்சீரெனப்படும்.2 இனி, வெண்சீரென்பது எழுவாயாயின் ஈற்றசை நிரையென்பது இயற்சீரின் பெயராதல் வேண்டும். அங்ஙனங் கருதினும் அசையென்பதனை ஒருகாற் சொல்லி ஈற்றசை நிரையசையென லாகாதென்பது. அல்லதூஉம் வெண்சீரினை இயற்சீராக்கி அவ்வியற்சீரினை வெண்சீராக்குதல் வினையிலுழப்பாகி வரம்பின்றாமென மறுக்க.3 என்றார்க்குத் தன்சீருள்வழித் தளை வகை வேண்டானேல் அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) என்பதூஉங் கலித்தளையன்றாகிய செல்லுமென்பது.4 கலிப்பாவிற்கு ஒன்றாது வருதல் உரிமையுடைய வெண்சீரெனவே வெண்பாவிற்கு ஒன்றாது வருதல் யாண்டுமில்லை, ஒன்றி வரினல்ல தென்பது உடம்படப்பட்டது.1 (29) நச்சினார்க்கினியம் : இது வெண்சீராற் கலித்தளையாமாறுணர்த்திற்று. கலிக்கு விலக்கிய நேரீற்றியற்சீரதிகாரம் பற்றி இயற்சீர் கூறியதல்லது கலியதிகாரம் விலக்காமை யுணர்க.2 (இ-ள்.) வெண்சீரீற்றசை எ-து வெண்சீர்கள் பலதொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீர்களுள் ஈற்றுநின்ற சீரின் முதல்வந்த நேரசை: நிரையசையியற்று எ-து மற்றை நிரைமுதல் வெண்சீர் வந்து கலித்தளை யாயவாறுபோலக் கலித்தளையாம் எ-று. என்றது, வெண்சீர்ப்பின்னர் நிரைவந்து தட்டலே சிறந்தது என்றார். அதுவுமன்றி வெண்சீர் நான்கும் ஒன்றினும் அது வெள்ளோசையையும் தருதலிற் கட்டளையாகாமைகருதி முன்னர் மூன்றுசீரும் பகைத்தே வரல் வேண்டும் என்றும், அவை தம்முட்பகைத்தலிற் பின்வருஞ்சீர் ஒன்றினும் பகைத்த தன்மை யேயாய்த் துள்ளலோசையே நிகழ்த்துமென்றுங்கூறினார். வெண்சீர் என்றது அஃறிணையியற்பெயராதலிற் பன்மைப்பாற் படவுணர்க. வெண்சீர்களுள் என ஏழனுருபு தொக்கது. ஈறு என்றது இறுதிச்சீரை. ஈற்றசையென்றது இறுதிச்சீரினுடைய அசையென்றவாறு.3 உ-ம். அடிதாங்குமளவன்றி யழலன்ன வெம்மையால் (பாலைக்கலி -10) என இவ்வெண்சீர்கள் பகைத்து வந்து ஈற்றசைச்சீரின் முதற்கணின்ற நேரசை நிரையசைபோலத் துள்ளலோசை கோடலிற் கலித் தளையாயிற்று. இது கட்டளைக்கே யென்பது. தளைவகை சிதையாத் தன்மை யான (செய்-28) எனநின்ற அதிகாரத்தாற் கொள்க. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (பாலைக்கலி-10) என்புழி வெண்சீரிறுதி நிரைமுதலியற்சீர் தட்டலிற்றுள்ளலோசை சிறவாதாயிற்று, பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் போன்று. (கலித்தொகை-கடவுள் வாழ்த்து) ஆய்வுரை : இதுவும் தளை வழங்குந்திறம் உணர்த்துகின்றது. (இ - ள்.) வெண்சீர் ஈற்றசை நிரையசையின் இயல்பினது எ-று. வெண்சீர் ஈற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரிறுதி நிரையசை போலும் என இதற்குப் பொருள் வரைந்து இயற்சீர் என்பது அதிகாரத்தான் வந்தது என்பர் இளம்பூரணர். மேல் கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (செய்-23) என்புழி அவ் ஆசிரியவுரிச் சீராற் கலித்தளையாம் எனக் கூறிய ஆசிரியர், கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் என்பதன் தொடர்பாக, வஞ்சி மருங்கினும் (செய்-25), இசைநிலை நிறைய (செய்-26), இயற்சீர்ப் பாற்படுத்து (செய்-27) என மூன்று சூத்திரத்தால் இடை புகுந்ததனைக் கூறிமுடித்து, முற்கூறிய கலித்தளையதிகாரம்பற்றி, வெண்சீரீற்றசை நிரையசையியற்றே (செய்-28) எனவரும் இச்சூத்திரத்தாற் கூறுகின்றார் எனவும் வெண்சீர் பலதொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீருள் ஈற்றுநின்ற சீரின் முதல் வந்த நேரசை முற்றை நிரைமுதல் வெண்சீர் வந்து முன்னைய விரண்டும் கலித்தளையாமாறு போலக் கலித்தளையாம் என்பதே இச்சூத்திரத்தின் பொருள் எனவும், மேல்நின்ற தளைவகை சிதையாத் தன்மைக்கண் என்பது மீண்டும் கூட்டியுரைக்கப்பட்டது எனவும், எனவே வெண்சீர்ப்பின்னர் நிரைவந்து தட்டலே சிறந்ததென்றும், நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒருநிகர்த்தா மென்றும் அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவதென்றும் ஆசிரியர் கூறினாரெனவும், கலிப்பாவிற்கு வெண்சீர் ஒன்றாது வருதல் உரிமையுடையதெனவே வெண்பாவிற்கு ஒன்றிவரினல்லது ஒன்றாது வருதல் யாண்டுமில்லை யென்பது உடம்படப்பட்டதெனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கம் தருவர் பேராசிரியர். 29. இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே இளம்பூரணம் : என்-எனின். ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின்1 ஆசிரியவடிக்கு வெண்பாவுரிச்சீர் வரையார் ஆசிரியர் என்றவாறு. (29) பேராசிரியம் : இது, கட்டளையடியல்லாதவழிச் சீர்மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்னோசைத்தாகிய துணிவிற்றாகிவரின் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும் (எ-று.) இழிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலைமயங்கிய தலையாலங் கானத்து (புறம். 19) எனத் தலையாலம் என்றவழி ஆசிரியவடியுள் இன்சீரியைய வெண்சீர் வந்தது. முன்னர் வெண்சீரினை, இன்பா நேரடிக் கொருங்கு நிலையில (தொல். செய். 23) என விலக்கி, ஈண்டு வரையாரென் றமையின் அது கட்டளையடிக் கென்பதூஉம், இது கட்டளையடிக் கன்றென்பதூஉம் பெற்றாம். வருகுவதாயினென்று ஒருமை கூறினமையானும் இயைய வென்ற தனானும் ஓரடிக்கண் ஒன்றே யாண்டும் வருவதெனக் கொள்க.1 (30) நச்சினார்க்கினியம் : இது கட்டளை யல்வழி வெண்சீர் மயங்குமாறு உணர்த் திற்று. (இ-ள்) இனிய ஓசை பொருந்த வரும்2 ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும். எ-று. உ-ம் இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடைக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம்-19) என்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர் இயைய வெண்சீர் வந்தது. வருகுவதாயின் என்ற ஒருமையான் ஓரடிக்கண் ஒன்றே வருதல் சிறப்புடைத்து: பல வருதல் சிறப்பின்றாம். ஆய்வுரை : இஃது, ஆசிரியப்பாவுக்கு உரிய சீர் உணர்த்துகின்றது. (இ-ள்) இனிய ஓசை பொருந்தி வருமாயின் ஆசிரிய அடிக் கண் வெண்சீர் வருதலை விலக்கார் ஆசிரியர் எ-று. வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்கு நிலையிலவே (செய்-22) என முன்னர் வந்த சூத்திரம் கட்டளையாசிரியப்பாவினுள் அடியுறழப்படாத சீர் இவையென வுணர்த்தியது எனவும் இச்சூத்திரம் கட்டளையடியல்லாதவழிச் சீர் மயங்குமாறு உணர்த்துவது எனவும் கொள்வர் பேராசிரியர். 30. அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர் ஒன்றுத லுடைய ஒரோவொரு வழியே.1 இளம்பூரணம் : என்-எனின். இதுவுமது. (இ-ள்.) இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய அடிக்கண் வரும் என்றவாறு.2 ஈரசைகொண்டு (செய். 01) என்பது முதலாக இத்துணையுஞ் சொல்லப்பட்டது ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைச்சீர் அறுபத்துநான்கு, ஆகச்சீர் எண்பது. நான்கில் ஓர் அசைச்சீர் நான்கெனவும் அது தளைவழங்கும்வழி இயற்சீரொக்கு மெனவும், ஈரசைச்சீர் பதினாறும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பிலியற்சீர் ஆறும் எனப் பத்தாம் எனவும், ஆசிரியவுரிச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கெனவும் ஏனைய வஞ்சியுரிச்சீர் எனவும் கூறியவாறு.3 பேராசிரியம் : இது, வஞ்சியுரிச்சீர் ஆசிரிய அடியுண் மயங்குமாறு ணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கட்டளையடியல்லாதவழி இன்சீரியைய வருகு வதாயின்1 வஞ்சியுரிச்சீர்களும் ஓரொருவழி ஆசிரியத்துள் வரப்பெறும் (எ-று). ஒருவழி யென்னாது ஓரொருவழியென்ற தென்னையெனின் அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் பத்துச்சீரே வருமென்பதூஉம், அவை வருங்காலும் பயின்றுவாரா வென்பதூஉம் அறிவித்தற்கென்பது.3 அவை: 1மாசேர்சுரம், 2புலிசேர்சுரம், 3மாசெல்காடு, 4புலிசெல் காடு, 5மாசெல்கடறு, 6புலிசெல்கடறு, 7பாம்புசேர்வாய், 8பாம்பு வருவாய், 9களிறுசேர்வாய் 10களிறுவருவாய் என்பன. அவற்றுக்குச் செய்யுள் : 1மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை (யா. வி. ப 79) 2குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன் (யா. வி. ப. 80) என மாசேர்சுரம் புலிசேர்சுரம் என்பன அடிமுதற்கண் வந்தன. 3முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக்கும் என மாசெல்காடு வந்தது. 4அலரிநாறு துவர்வாய் அமர்த்த நோக்கின் (யா. வி. பா. 72) எனப் புலிசெல்காடு வந்தது. 5கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை என மாசெல்கடறு வந்தது. 6கரடிவழங்கு குன்று கண்டு போகி எனப் புலிசெல்கடறு வந்தது. 7காடுதேரா வுழிதரு கடுங்கண் யானை எனப் பாம்புசேர்வாய் வந்தது. 8சந்துசிதைய வுழுத செங்குரற் சிறுதினை (யா. வி. ப. 72) எனப் பாம்புவருவாய் வந்தது. 9மருந்துநாடாத் திருந்து சிலம்பிற் கைக்கும் எனக் களிறுசேர்வாய் வந்தது. 10கடறுகவரா விழிந்து கான்யாறு வரிப்ப எனக் களிறுவருவாய் வந்தது பிறவுமன்ன. நேர்நிரையாகியும் நேர்புநிரைபாகியும் ஈறுமுதல்பெறச் சீர்வந்தது. (31) நச்சினார்க்கினியம் : இது வஞ்சிச்சீர் ஆசிரியத்துத் தூங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அந்நிலை மருங்கின் எ-து. கட்டளை யல்வழி இன் சீரியையவரின். வஞ்சி..........tÊna எ-து வஞ்சிச்சீர்களும் ஒரோவோர்வழி ஆசிரியத்துடன் பொருந்துதல் உடைய. எ-று. ஒருவழி யென்னாது ஓரோருவழியென்றது அறுபது வஞ்சிச் சீரினும் பத்துச்சீரேவருதலும் அவைபயின்று வாராமையும் அறிவித்தற்கு. உ-ம். மாசேர்சுரம், புலிசேர்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு மாசெல்கடறு, புலிசெல்கடறு, பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறுவருவாய் எனவரும், செய்யுள்; மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன் என மாசேர்சுரமும், புலிசேர்சுரமும் வந்தன.1 முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கறிக்கும் என மாசெல்காடு வந்தது. அலரிநாறு துவர்வா யமர்த்த நோக்கின் எனப் புலிசெல்காடு வந்தது. கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை என மாசெல்கடறு வந்தது. கரடிவழங்கு குன்று கண்டு போகி எனப் புலிசெல்கடறு வந்தது. காடுதேரா வுழிதருங் கடுங்கண் யானை எனப் பாம்புசேர்வாய் வந்தது. சந்துசிதைய வுழுத செங்குரற் சிறுதினை எனப் பாம்புவருவாய் வந்தது. மருந்துநாடாத் திருந்து சிலம்பிற் சேக்கும் எனக் களிறுசெல்வாய் வந்தது. கடறுகவரா விழிந்து கான்யாறு வரித்த எனக் களிறுவருவாய் வந்தது. பாம்புவருவாய் களிறுவருவாய் என்ற இரண்டும் நேர்பும் நிரைபும் முன் வருதலின் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரெனப்படா.1 ஆய்வுரை : இஃது ஆசிரியவடியுள் வஞ்சியுரிச்சீர் விரவுமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) அங்ஙனம் இன்னோசை யுடையதாகச் சீர் பொருந்தி வருமாயின் ஆசிரியத்துள் ஓரொருவழி வஞ்சியுரிச்சீர் bபாருந்திtருதல்cடையv-று.cjhuz« இச்சூத்திரத்தின் முன்னைய வுரைகளில் இடம் பெற்றுள்ளமை காண்க. ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு முவசைச்சீர் அறுபத்து நான்கு, ஆகச் சீர் எண்பத்து நான்காகும், அவற்றுள் அசைச்சீர் நான்கும் தளை கொள்ளுமிடத்து இயற்சீரேபோலக் கொள்ளப்படும். ஈரசைச்சீர் பதினாறினும்இயற்சீர் சிறப்புடைய இயற்சீர் நான்கு, சிறப்பில்லாத இயற்சீர் ஆறு எனப் பத்தாகும். ஆசிரியவுரிச்சீர் ஆறாகும். இனி மூவசைச்சீர் அறுபத்துநான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கு எனவும் ஏனைய அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனவும் கொள்ளப்படும் எனச் செய்யுட்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகிய சீரின் இலக்கணம் இவ்வியல் 11 முதல் 30 முடியவுள்ள சூத்திரங்களால் விரித்துக் கூறப்பட்டன. 31. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. இளம்பூரணம் : என்-எனின் நிறுத்தமுறையானே அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடி யென்று சொல்லப்படு மென்றவாறு.1 இதன் வேறுபாடு முன்னர்க் கூறப்படும்.2 (31) பேராசிரியம் : இது, முதற்சூத்திரத்துள், யாத்த சீரே யடியாப் பெனாஅ (தொல்-செய்.1) என நிறுத்தமுறையானே சீருணர்த்தி அடியுணர்த்திய3 வெழுத்தான், அவற்றுள் இது நாற்சீரடி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீரடி (எ-று.) எனவே, 1இருசீரானும், 2முச்சீரானும், 3ஐஞ்சீரானும் 4அறுசீர் முதலியவற்றானும் வருமாயினும் அவை சிறப்பின் வென்றவாறாம். இருசீரான் வருவதனை என்ன அடியென்னுமோ வெனின் அடிக் கெல்லாம் எழுத்துவகையானே மேற்பெயர் கூறும். அவ்வாறே சீர்வகையானுங் கொள்ளப்படுமென்பது.2 சுருங்கிய எழுத்தான் வருவன 1குறளடியென்றும், அவற்றின் ஏறிய எழுத்தான் வருவன 2சிந்தடியென்றும், இடைநின்றன 3அளவடியென்றும், அவற்றின் நெடியன 4நெடிலடியென்றும், அவற்றினும் நெடியன 5கழிநெடிலடி யென்றுங் கூறுமாகலான், அவ்வாறே இருசீரடி குறளடியென்றும் மூச்சீரடி சிந்தடியென்றும், நாற்சீரடி அளவடியென்றும், ஐஞ்சீரடி நெடிலடியென்றும், அறுசீர் முதலியன கழிநெடிலடியென்றுங் கோடுமென்பது. இவற்றினெல்லாம் நாற்சீரடி சிறந்ததென்ற தென்னை யெனின், அளவிற்பட்டமைந்தமையானும் அது பயின்று வருதலானு-மென்பது உதாரணம். திருமழை தலைஇய விருணிற விசும்பின் (பத்துப். மலைபடு1) எனவும், அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட (நாலடி 1.1) எனவும், அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி.11) எனவும் மூன்று பாவினும் அளவடி வந்தவாறு. இவற்றது விகற்ப மெல்லாம் முன்னர்ச் சொல்லுதும். (32) நச்சினார்க்கினியம் : இது நிறுத்தமுறையானே சீருணர்த்தி அடியுணர்த்துகின்றது. (இ-ள்.) நாற்சீர் கொண்ட அளவடியை அடியென்று சிறப் பித்துக் கூறப்படும். எ-று. எனவே, ஒழிந்த நான்கடியும் சிறப்பிலவாயிற்று.1 திருமழை தலைஇய விருணிற விசும்பின் (மலைபடுகடாம்) அகர முதல வெழுத்தெல்லா மாதி (திருக்குறள்-1) அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (பாலைக்கலி 20) என நாற்சீரடியாற் சான்றோர் மூன்றுபாவுங் கூறியவாறுணர்க. குறளடியானும் சிந்தடியானும் சிறுபான்மை கூறினார்.2 ஆய்வுரை : யாத்த சீரே அடியாப்பு என இவ்வியல் முதற்சூத்திரத்து நிறுத்த முறையானே சீர் உணர்த்திய ஆசிரியர் இவ்வியல் 31 முதல் 73 வரையுள்ள சூத்திரங்களால் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகிய அடியின் இலக்கணம் உணர்த்துகின்றார். அடி என்பது, மேற் கூறப்பட்ட சீர்கள்இரண்டும் மூன்றும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பாகும். நாற்சீரடிதன்னையே சிறப்புடைய அடியாகக் கொண்டு எழுத்தெண்ணி வகுக்கப்படும் கட்டளையடியும், சீர்களின் மிகுதி குறைவுபற்றி வகுக்கப்படும் சீர்வகையடியும் என அடிகளை வகுத்துக் கொள்ளும் முறை இருவகைப்படும். இவ் விருவகைச் சீரமைப்புக்களும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்து வழக்கிலிருந்தன. பிற்காலத்தில் கட்டளையடியமைப்பு அருகி மறையவும் சீர்வகை யமைப்பே பெரும்பான்மையும் நிலை பெறுவதாயிற்று என்பதனைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தம் உரையில் தெளிவாகக் குறித்துள்ளமை இங்கு மனங்கொளத்தகு வதாகும். இஃது இந்நூலிற் சிறப்புடைய அடியெனப்படுவது இதுவென உணர்த்துகின்றது. (இ-ள்.) அடியெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற் சீரடியே எ-று. இரு சீராலும் முச்சீராலும் ஐஞ்சீராலும் அறுசீர் முதலிய வற்றாலும் இயன்றுவரும் அடிகள் பலவுளவாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பதும், இவ்வியலில் ஒற்றும் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் நீங்கலாக உயிரும் உயிர் மெய்யுமாகிய எழுத்துக்களையெண்ணி அவ்வெழுத்து வரை யறையாற் பகுத்துரைக்கப்படும் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி யென்னும் ஐவகைப்பாகுபாடும் நாற்சீரடிக்கே ஏற்புடையனஎன்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். அடிக்கெல்லாம் எழுத்துவகையாற் பகுக்கப்படும் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி எனப்படும் ஐவகைப் பெயர்களும் சீர்வகையடிகட்கும் கொள்ளப்படும் என்பது, தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும், இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய (செய்-52) எனவரும் சூத்திரத்தால் இனிது விளங்கும். நாலெழுத்து முதல் ஆறெழுத்து முடியச்சுருங்கிய எழுத்தால் வருவன குறளடியென்றும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்து வரை ஏறிய எழுத்தால் வருவன சிந்தடி என்றும், பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்து முடிய இடை நிகரனவாய் வருவன அளவடியென்றும், அவற்றில் நெடியனவாய்ப் பதினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்து முடிய வருவன நெடிலடியென்றும், அவற்றினும் நெடியனவாய்ப் பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்து முடிய வருவன கழிநெடிலடியென்றும் இவ்வியலிற் பின்னர்க் கூறுவர் ஆசிரியர். இவ்வாறே இருசீரடி குறளடியெனவும் முச்சீரடி சிந்தடியெனவும் நாற்சீரடி அளவடியெனவும் ஐஞ்சீரடி நெடிலடி யெனவும் அறுசீர் முதலியனவாக மிக்கு வரும் அடிகள் கழிநெடிலடியெனவும் தொல்காப்பியனார் காலத்திற் சீர்வகையடிகள் பெயரிட்டு வழங்கப்பெற்றன என்பது, நாற்சீர் கொண்டது அடியெனப்படுமே எனவரும் இச் சூத்திரத்தாலும், வஞ்சியடியே இருசீர்த்தாகும் முச்சீரானும்வருமிடனுடைத்தே - ஐஞ்சீரடியும் உளவென மொழிப அறுசீரடியே ஆசிரியத் தளையொடு, நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே எழுசீரடியே முடுகியல் நடக்கும் என இவ்வியலிற் பின்வரும் சூத்திரத்தொடர்களாலும் இனிது விளங்கும். 32 அடியுள் ளனவே தளையொடு தொடையே. இளம்பூரணம் : என் - எனின் தளைக்குந் தொடைக்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தளையுந் தொடையும் அடியின்கண்ண என்ற வாறு.1 (32) பேராசிரியம் : இதுவுமது. நாற்சீரடியது சிறப்புணர்த்துதல் நுதலிற்று. எதிரது நோக்கியதொரு கருவியெனினும் அமையும். (இ - ள்). முன்னர்க்கூறிய நாற்சீரடியுள் உள்ளனவே தளையுந் தொடையும் (எ-று).2 மற்று, மாத்திரையும் எழுத்தும் அசையுஞ் சீரும் அவ்வடியுள்ளன அல்லவோவெனின், அற்றன்று; அவ்வடிக்கணுள்ளன வெல்லாங் கூறுகின்றானல்லன் இதுவென்பது என்னை? நாம் தளைப்பகுதியாற் கட்டளையடியென உறழ்தூஉம் mWü‰¿Ug¤ijªjobad வரையறை கூறுவதூஉம் அவ்வளவடியே என்றற்கு நாற்சீர்க் கண்ணது தளை யென்றானென்பது. முன்னுஞ் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடி யெல்லாந் தளைவகை யுடையவென விதந்தோதி வந்ததனானே நாம்தளைகொள்வது நாற்சீரடிக்கணென்பான் அடியுள்ளன தளை யென்றானென்பது. மற்றையடிக்கட் டளைகொள்ளின் அது வரையறையின்றா மாகலின் ஈண்டு வரைந்தோதினானென்பது.1 அது தக்கது, மற்றுப் பொழிப்பும் ஒரூஉவும் போலாத மோனை முதலிய தொடையெல்லாம் அடியிரண்டியையத் தொடுக்கல் வேண்டுமன்றே? அவற்றை அடியுள்ளனவே தொடையும் என்ற தென்னையெனின், அற்றன்று; நாம் தொடையுறழச் சீர்கொள்வதூஉம் இவ் வளவடிக்க ணென்பது கூறினான். ஆண்டுத் தொடை கூறும்வழி வரையாது கூறுமாகலி னென்பது.2 எனவே, கட்டளைப்படுப்பதூஉந் தொடையுறழ்தற்கு இடனாவதூஉம் நேரடியேயெனச் சிறப்பித்தவாறு. (33) நச்சினார்க்கினியம்: இது நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்) அந்நாற்சீரடியான் வருங் கட்டளையடிக்கண் உள்ளனவே எழுபது தளையும் பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடையும் என வரையறைப்படுவன எ-று. எழுபது தளைப்பகுதியாற் கட்டளையடி யெனவுறழ்வதூஉம், அறுநூற்றிருபத்தைந்தடியென வரையறைப்படுவதூஉம் பத்தொன் பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொன்றென்னும் தொடைப் பகுதி கொள்ளப்படுவதூஉம் நாற்சீரடியேயாயிற்று: எனவே, நாற்சீரான்வருஞ் சீர்வகையடிக்குத் தளையுந்தொடையுங் கொள்ளின், அவை, வரையறையின்றென உணர்க, அளவடி இரண்டியைந்தும் ஒன்று வந்துந் தொடைகோடலும்3. ஒழிந்தவடி நான்கும் விகற்பத்தொடை.1 கொள்ளாமையும் உணர்க. ஆய்வுரை: இது, தளைக்கும் தொடைக்கும் ஆவதோர் இடம் உணர்த்து கின்றது. (இ-ள்) மேற்கூறிய நாற்சீரடியின்கண் உள்ளனவே தளையும் தொடையும் எ-று. ஈண்டுத் தளை என்றது. எழுத்தெண்ணி வரையறுக்கப்படும் கட்டளையாகிய ஓசைக் கூறுபாட்டினை. எனவே ஓசைக் கூறு பாடாகிய கட்டளைப்படுத்துக் கூறப்படுவதும் இந்நூலில் தொடைகளை உறழ்ந்து தொகை கூறுதற்கு இடனாயமைந்ததும் நாற்சீரடியாகிய நேரடியே என்றாராயிற்று. 33. அடிஇறந்து வருதல் இல்லென மொழிப. இளம்பூரணம்: என்-எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தளையுந் தொடையும் நான்குசீரடியின் வருதலன்றி யடியி னீங்கிவருத லில்லை யென்றவாறு. அடிவரையறை யில்லாதனவற்றிற் கொள்ளப்படாது என்ற வாறாம்.2 (33) பேராசிரியம்: இதுவுங்,கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஆவதொரு கருவி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஓரடியின் இறந்துவாரா மேற்கூறிய தளையுந் தொடையும் (எ-று).1 என்றது, மேற்கூறிய தளைவகையேயன்றி அடியோடு அடிக் கூட்டத்துத் தளைகொள்ளுங்காலும் ஓரடிக்கண்ணே வழுவாமற் கோடல் வேண்டுமெனவும், அங்ஙனமே தொடை கொள்ளுங்காலும் வந்த அடியே வரப்பெறுவதெனவுங் கூறியவாறு.2 எனவே, தேமா தேமா தேமா தேமா வென்னும் அடிக்கண் தொடை கொள்ளுங்கால், வாமா னேறி வந்தான் மன்ற என முன் வந்த அடியே வரல்வேண்டுமென்பதூஉம் அன்றித் தேமாஞ் சோலைத் தீந்தே னுண்ட காமர் தும்பி யாதல் கண்டது என வரின் தளைவழுவாகிப் பதின்மூவாயிரத்தெழு நூற்றெட் டெனப்பட்ட தொடைப்பகுதியுட் படாவென்பதூஉம் பெற்றாம். இனி வெண்பாவினுள் அவை வருமாறு: சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யறைப் பறையினை- நன்றேகாண் (நாலடி.24.) எனப் பன்னிரண்டெழுத்தடி ஒன்றினையும் இருகாற் சொல்லிக்கூட்டி எதுகைத்தொடை கொள்ளுங்கால் அடியோடு அடிக்கூட்டத்துத் தளைவகை சிதையாது வந்தமையின் அத்தொடைபதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டென வரையறைப்பட்ட தொடையுட்பட்டது. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணர்ந்தான்-றேனூடு (முத்தொள்ளாயிரம்,104) என்றவழிப் பதினான்கெழுத்தடியே தொடுத்தமையின் அடியிறந்து வந்ததன்றாயினுந் தளைவகை ஒன்றாமையின்1 இது பதின் மூவாயிரத் தெழுநூற்றெட்டினுட் படாதாயிற்று. வண்டு வரகு வரகு வரகு என்கின்ற அடியினை மீட்டுத்தந்து தொடைகொள்ளுங்கால் வண்டுவரகு வரகு வரகு என்றது நேரொன்றாசிரியத்தளை தட்குமாதலான் இது வழுவெனப்படுமென்பது.2 கலிப்பாவிற்கு அன்னதொரு வரையறை இல்லை. இருவாற்றானும் வருமென்பது என்னை? வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (தொல் செய் 92) என்றாராகலின்3. மேலைச்சூத்திரத்தானே தளைவகை சிதையாமல் அறுநூற்றிருபத்தைந்து வகைப்படுவது நாற்சீரடியே என்பதூஉங் கூறி, அந்நாற்சீரடியே நாம் முன்னர் வேண்டுந்தொடை விகற்பத்திற் குரியவென்பதூஉங் கூறினான். இச்சூத்திரத்தானே அத்தொடை கொள்வது தம்மின் வேறாகாத இரண்டடிக்கண் ணென்பதூஉம் அறுநூற்றிபருத்தைந்தடியுள் ஒன்றனை இருகாற் சொல்லித் தொடை கொள்ளப்படுமென்பதூஉம், அங்ஙனந் தொடுக்குங் காலும் அடியோடு அடிக்கூட்டத்தின் கண்ணுந் தளைவகை சிதையாமல் தொடுக்க வேண்டுமென்பதூஉங் கூறியவாறாயிற்று. இவற்றா னெல்லாம் நாற் சீரடியே சிறப்புடைத் தென்பது பெற்றாம்.1 இன்னும் அதன் சிறப்புடைமையையே கூறுகின்றான்.2 நச்சினார்க்கினியம் : இது கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஓர் கருவி கூறுகின்றது. (இ-ள்) அறுநூற்றிருபத்தைந் தடியுள்ளும் ஓரடி நின்றாங்கு வருகின்ற அடியும் முன்னின்றவடியை இறந்து வருதலில்லை என்று சொல்லுவர் ஆசிரியர்.எ-று. என்றது, முற்கூறிய தளைவகையேயன்றி, அடியோடு அடிக் கூட்டத்துத் தளைகொள்ளுங்காலும் வந்தவடியே வரவேண்டு மென்பதூஉம், தொடை கொள்ளுங்காலும் வந்தவடியே வரவேண்டுமென்பதூஉம் கூறியதாயிற்று; எனவே, தேமா தேமா தேமா தேமா என்னும் அடிக்கட் டொடைகொள்ளுங்கால் வாமா னேறி வந்தோன் மன்ற என வந்த அடியே வரல்வேண்டு மென்பதூஉம், தேமாஞ் சோலைத் தீங்தே னுண்ட காமர் தும்பி யாகல் கண்டது எனத் தளை வழுவாகித் தொடைப்பகுதியுட் படாதென்பதூஉம் கூறியவாறாயிற்று. இனி வெண்பாவினுள் சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை நன்றேகாண் (நாலடி-34) எனப் பன்னிரண்டெழுத்தடியொன்றனையும் இருகாற் சொல்லி எதுகை கொள்ளுங்கால் அடியோ டடிக்கூட்டத்துத்1 தளைவகை சிதையாது தொடைப்பகுதியுட் பட்டவாறு காண்க. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானூட யானுணர்த்தத் தானுணரான்- றேனூறு எனப் பதினான்கெழுத்தின் இகந்ததின்றேனும் தளைவகை யொன்றுதலிற் றொடைப் பகுதியுட் படாவாயிற்று.2 வண்டு வரகு வரகு வரகு என நின்ற வடியை மீட்டும் வண்டு வரகு வரகு வரகு எனத்தந்து தொடை கொள்ளுங்கால் ஆசிரியத்தளை தட்டு வழுவாயிற்று. கலிக்கு அன்னதோர் வரையறையின்று. அது, வெண்சீரிற் றசை (செய்-26) என்னுஞ் சூத்திரத்தானும், தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா (செய்-55) என்னுஞ் சூததிரத்தானும் உணர்க. ஏனை அகவலும் வெள்ளையுமே வரையறைப்பட்டன. இதனானே, அறுநூற்றிருபத்தைந்தடியும் தம்முன்னர்த் தாமே வந்து தளையுந் தொடையும் வழுப்படாமற் கொள்ளுமென்றவாறு. ஆய்வுரை: இது, கட்டளைப்படுப்பதற்கும் தொடைப்படுத்தற்கும் உரியதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) தளையும் தொடையும் ஆகிய அவை மேற்குறித்த நாற்சீரடியின்கண் வருதலன்றி அவ்வடியினைக் கடந்து வருதல் இல்லை எ-று. எனவே, இவ்வியலில் தளைப்பகுதியாற் கட்டளையடியென வைத்துப் பெருக்கிக் கூறப்படுதலும் அறுநூற்றிருபத்தைந்து என்னும் அடிவரையறையும் தொடைவகை பற்றிய தொகையும் எல்லாம் நாற்சீரடியாகிய அளவடிக்கேயுரியன என்பது நன்கு பெறப்படும். 34 அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. இளம்பூரணம்: என்-எனின் இதுவும் அடிக்குரியதோர் சிறப்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படு மென்றவாறு.1 எனவே, பாட்டென்னுஞ் செய்யுட்கு அடியின்றியமையா தென்றுகொள்க. பாட்டாவன:- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்பன. இனி அவ்வடியினை எழுத்தளவினாற் குறியிடுகின்றார். பேராசிரியம்: இது, நாற்சீரடியை விசேடித்துக் கூறி, அதனது இடத்தானே2 பாட்டென்பதொரு முதற்பொருள் தோன்றுமென்ப துணர்த்தியவாறு. எனப்படும் என்றதனான் இவ்வடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையனவென்பதூஉஞ் சொல்லியவாறு. மாத்திரை முதலிய மற்றை உறுப்புக்களான் இத்துணை மாத்திரை கொண்டது செய்யுளென்றானும், இத்துணை அசையுஞ் சீருந் தொடையுங் கொண்டது செய்யுளென்றானும் அளவியல் கூறிய உறுப்புக்களான் வரையறுக்கப்படா. அடியளவே கூறச் செய்யுட்புலப்பாடா மென்பது1. எனப்படும் என்றதனான், ஒழிந்த அடிகளானும் அவ்வாறு வருமாயினும் அவை சிறப்பிலவென்பது.2 (இ-ள்) அடியின்சிறப்பென்பது---அடிஇரண்டும்பலவும்அடுத்துவந்ததொடையேபாட்டு(எ-று.)3 தலை யிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரடி யான்வரும்ஆசிரியமும்வெண்பாவும்கலியுமேபெரும்பான்மையுஞ்செய்தார்;வஞ்சிப்பாச்சிறுவரவிற்றெனக் bகாள்க.4 மhயோன்மh®பிலாuம்பேhல மணிtரையிழிjருமணி»sரருவி நன்gன்வரன்Wநாட னன்புbபரிதுடைaனின்rல்லினd(jhல்.செய்.78, 157 பேர்.) என நாற்சீரடியான் ஆசிரியம் வந்தவாறு. மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் (நாலடி21) என அளவடியானே வெண்பா வந்தவாறு. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி.11) எனக் கலிப்பா அளவடியான் வந்தது. பிறவு மன்ன. (35) நச்சினார்க்கினியம்: இதுவும் அந்நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அடியின்பாட்டே எ-து அந்நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டையே எ-று. சிறப்பெனப்படுமே எ-து சிறப்புடைப்பாட்டென்று கூறப்படும்.1 எ-று. அடியினாற் செய்யுள் வரையறை கூறலின்றி மாத்திரை முதலிய உறுப்பான் இத்துணைப்படுஞ்செய்யுளென்று வரையறை கூறப்படாமையின் அடியான் வந்ததே பாட்டென்றார். அது மூவகைச் சங்கத்தாரும் பிறசான்றோரும் நாற்சீரடியானே மூன்று பாவும்வரப் பெரும்பான்மை செய்யுட் செய்து, வஞ்சிப்பா சிறுவரவிற்றாகச் செய்யுள் செய்தவாற்றானுணர்க. ஆய்வுரை: இதுவும் மேற்குறித்த அடிக்குரியதோர் சிறப்புணர்த்து கின்றது. (இ-ள்) அடி இரண்டும் பலவுமாகச் சிறந்து அடுக்கித் தொடர்ந்து வருவதே பாட்டென்று சொல்லப்படும் எ-று. ஈண்டுச் சிறப்பு என்றது இரண்டும் பலவுமாகித் தொடர்ந்து வருதலை. நாற்சீரடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையன எனவும், அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு எனவும், தலைஇடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரான்வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே செய்தார்; வஞ்சிப்பா சிறுவரவிற்றெனக் கொள்க எனவும் பேராசிரியம் கூறும் விளக்கம் இங்கு நினைத்தற்குரியதாகும். 35 நாலெழுத் தாதி ஆக ஆறெழுத் தேறிய நிலத்தே குறளடி யென்ப. இளம்பூரணம்: என்--எனின். குறளடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்றுநிலத்தை யுடைத்துக் குறளடியென்று சொல்லுவரென்றவாறு. எனவே, குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம்.1 இதற்குரிய எழுத்து முன்னர்க் காட்டுதும். (35) 36 ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அல்வழி யான. இளம்பூரணம்: என்--எனின். சிந்தடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு; ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத விடத்தென்றவாறு.2 எனவே ஏழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடி யாம் என்றவாறாம்.1 (36) 37 பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தேற்றலங்2 கடையே. இளம்பூரணம்: என்-எனின். அளவடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவடி யெனினும் நேரடியெனினும் ஒக்கும். பத்தெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் அளவடியாம் என்றவாறு. எனவே, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம்பெறும். (37) 38 மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. இளம்பூரணம்: என்-எனின். நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவு நெடிலடியாம் என்றவாறு.3 எனவே, பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என்றவாறாம். (38) 39 மூவாறெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப இளம்பூரணம்: என்---எனின். கழிநெடிலடி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடிலடியாம் என்றவாறு. எனவே, பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும். (39) பேராசிரியம் : இவை ஐந்து சூத்திரமும் உரையியைபுநோக்கி உடனெழு தப்பட்டன. நாற்சீரடி இத்துணைப்பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையு முணர்த்துகின்றன. (இ - ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தளவும் வந்த நிலம் மூன்றுங் குறளடி யெனவும், ஏழெழுத்து முதன் மூன்றுநிலனுஞ்சிந்தடியெனவும்,பத்தெழுத்துமுதல்ஐந்துநிலனும்அளவடியெனவும்,பதினைந்தெழுத்துமுதன்மூன்றுநிலனும்நெடிலடியெனவும்,பதினெட்டெழுத்துமுதல்இருபதெழுத்துவரைமூன்றுநிலனுங்கழிநெடிலடியெனவுஞ்சொல்லுபஆசிரியர்(எ -று.)1 குறளடிநிலங்களை வகுத்தொழியாது, ஒழித்தனவும் வகுத் துரைத்தான்: அவை முதல் இடை கடையென மூன்றுகூற்றான் ஒன்றொன்றனிற் சிறப்பு இழிபுடையனவென்று கொள்ளினுங் கொள்ளலாமென்பது2. அவற்றுக்குச் செய்யுள் : போந்து போந்து சார்ந்து சார்ந்து குறளடி நேர்ந்து நேர்ந்து மூசி நொந்து வண்டு சூழ விண்டு வீங்கி நீர்வாய் கொண்டு Úண்டÚலáªjo நீர்வா யூதை வீச ஊர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர வமையேர் மென்றோ ளம்பரி நெடுங்க நேரடி ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு லணிநடை யசைஇய வரியமை சிலம்பின் நெடிலடி மணிமருள் வணர்குரல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்க வணிநிலவு மணிநக கழிநெடில் ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே என இதனுட் பதினேழுநிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறினான். தொகை பதினேழ் நிலத்து ஐவகையடியென்பது எண்ணிப் பார்க்க. இப்பெயரெல்லாங் காரணப்பெயர். மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும், அவனினெடியானைச் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற் பட்டா னென்றும், அவனினெடியானை நெடியானென்றும், அவனினெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெயரென்பது.1 (40) நச்சினார்க்கினியம்: இவை ஐந்து சூத்திரமும் உதாரணச்சுருக்கமும் உரையியையும் நோக்கி உடனெழுதப்பட்டன. இவை நாற்சீரடி இத்துணைப் பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றன. (இ-ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்துக்காறும் ஏறிய மூன்று நிலத்தையுமுடைத்து1 குறளடி எ-று. சிந்தடிக்கெல்லை ஏழெழுத்தொன்றுமே என்று கூறுவர், எட்டு மொன்பதும் இரண்டு மல்லாதவிடத்து2 எ-று. அளவடிக்கெல்லை பத்தெழுத்தொன்றுமே என்று கூறுவர், அதனோடொத்த பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினான்குமாகிய நான்கெழுத்தானாகிய நான்கு நிலனும் ஏற்றமாய் வாராதவழி. எ-று. நெடிலடிக்கெல்லை பதினைந்தெழுத் தொன்றுமே என்றுங் கூறுவர். அதற்குப் பதினாறும் பதினேழுமாகிய இரண்டெழுத்து மிக்குவரும் நிலமிரண்டும் இயல்பென்று கூறுவர் எ-று. கழிநெடிலடிக்கெல்லை பதினெட் டெழுத்தாமென்று கூறுவர், அதற்குப் பத்தொன்பதும் இருபதுமாகிய இரண்டெழுத்தும் மிக்குவருநிலமிரண்டையும் இவ்விடத்தே பெறுமென்று சொல்லுவர் எ-று. குறளடியொழிந்தனவற்றை3 இங்ஙனம் வகுத்துரைத்தார். தலை யிடை கடையென்னும் மூன்று கூற்றான் ஒன்றற்கொன்று சிறப்புமிழிபு முடைமையின். உ-ம். பேர்ந்து...j‹nw’ இதனுள் நாற்சீரடிக்கட் பதினேழு நிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு காண்க. மக்களுள் தீரக்குறியானைக் குறளனென்றும், அவனிற் சிறிது நெடியானைச் சிந்தனென்றும், ஒப்பவமைந்தானை அளவிற்பட்டானென்றும், அவனிற் சிறிது நெடியானை நெடியா னென்றும், அவனின் மிகநெடியானைக் கழியநெடியா னென்றும் கூறுபவாகலின் அவைபோலக் கொள்க. இப்பெயர். இவை சீர்வகை யடிக்கும் ஒக்கும்: என்னை? சுருங்கிய வெழுத்தானும் இருசீரானும் வருவன சிந்தடி எனவும், ஏறியவெழுத்தானும் முச்சீரானும் வருவன சிந்தடி எனவும், இடைநிகரான வெழுத்தானும் நாற்சீரானும் வருவன அளவடி எனவும், மிக்கவெழுத்தானும் ஐஞ்சீரானும் வருவன நெடிலடி எனவும், அவற்றின் மிக்க வெழுத்தானும் அறுசீர் முதலிய சீரானும் வருவன கழிநெடிலடி யெனவும் இங்ஙனம் இருவகையடிக்கும் ஒருபெயரே கொள்க. அவை ஓங்குதலை வியன்பரப்பின் (மதுரைக்காஞ்சி) வலமாதிரத்தான் வளிகொட்ப (மதுரைக்காஞ்சி) சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம்-25) சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே (புறம்-25) நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (குறிஞ்சிக்கலி) கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு Éளையாட“_tடிவினாÈரண்டுசூழ்RடருநாzமுGJலகுமூடிமுsவயிரநா¿” என இவற்றை முறையானே குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எனப்பெயர் கூறுப: எண்சீரின் மிக்கன சிறப்பில. ஆய்வுரை: நூற்பா-35 இஃது எழுத்தெண்ணி வகுக்கப்பெறும் ஐவகையடிகளுள் குறளடியின் எழுத்து வரையறை கூறுகின்றது. (இ-ள்) நாலெத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்று நிலத்தையுடையது குறளடி யென்று கூறுவர் ஆசிரியர் எ-று. நிலத்து-நிலத்தினையுடையது எனக் குறிப்புவினை முற்றாகக் கொண்டு, குறளடி நாலெழுத்து ஆதியாக ஆறெழுத்துவரை ஏறிய நிலத்து என முடிக்க. ஆதியாக-முதலாக. எனவே குறளடி நாலெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து என மூன்று நிலம் பெறும் என்றாராயிற்று. நூற்பா 36 இது, கட்டளையடியுட் சிந்தடியாமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு: ஒன்பதெழுத்தினைக் கடந்து மிகாதவிடத்து எ-று. எனவே சிந்தடியின் சிற்றெல்லை ஏழெழுத்து எனவும், பேரெல்லை ஒன்பதெழுத்தெனவும், சிந்தடி ஏழெழுத்து, எட்டெழுத்து, ஒன்பதெழுத்தெனவும், சிந்தடி ஏழெழுத்து, எட்டெழுத்து, ஒன்ப தெழுத்து என மூன்று நிலம் பெறும் எனவும் கூறினாராயிற்று. ஈரெழுத்தேற்றம் அல்வழியான எனவே பாடங்கொண்டனர் பண்டையுரையாசிரியர்கள். லகரமும் வகரமும் ஏடெழுது வோரால் வேறுபாடின்றியெழுதப் பெறுதலும் உண்டாதலின் அவ்வழியான எனப் பாடங்கொண்டு, சிந்தடிக்குச் சிற்றெல்லை யாகிய அளவு ஏழெழுத்தென்று கூறுவர். அவ்விடத்து இரண் டெழுத்து மிக்குவருதல் அதன் பேரெல்லையாகும் எனப் பொருள் கூறுதற்கும் இடமுண்டு; தொல்காப்பியனார் எழுத்தெண்ணிக் கூறப்படும் ஐவகையடிகட்கும் எழுத்தளவின் சிற்றெல்லையும் பேரெல்லையும் ஒருங்குகூறும் முறை இதனாற் புலனாதல் காணலாம். நூற்பா 37: இது கட்டளையடிகளுள் நேரடியாவது இதுவெனக் கூறு கின்றது. (இ-ள்) பத்தெழுத்து என்று கூறுவது அளவடிக்குச் சிற் றெல்லை; அதன்மேல் நான்கெழுத்துக்கள் கூடி அளவடியாதற்கு ஒத்தன. ஒற்றெழுத்துக்கள் எண்ணப்படாத நிலையில் இவ்வெழுத் தெண்ணிக்கை. எ-று. எனவே அளவடியாகிய நேரடிக்கு எழுத்தளவின் சிற்றெல்லை பத்தெழுத்தெனவும், பேரெல்லை பதினான்கெழுத்து எனவும் இவற்றின் இடைப்பட்ட பதினொன்றும், பன்னிரண்டும், பதின் மூன்றும் நேரடியின் அளவெல்லை யெனவும் பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினான்கும் என நேரடி எழுத்தளவால் ஐந்துநிலம் பெறும் எனவும் கொள்ளவைத்தா ராயிற்று. இச்சூத்திரத்தில் ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே என இளம்பூரணர் முதலியோர் பாடங்கொண்டனர். ஒத்தநாலெழுத் தோற்றலங் கடையே என யாப்பருங்கல விருத்தி வுரையாசிரியர் கொண்டனர். தொல்காப்பியவுரைகளிற் காணப்படும் ஏற்றலங் கடையே என்ற தொடர் ஏற்றமாய் வாராதவழி என்னும் பொருளைத் தெளிவாகத் தராமையானும் எழுத்துக்களை எண்ணி அடிகளை ஐவகையாகப் பகுக்குமிடத்து ஒற்றெழுத்துக்களும் ஒற்றின் தன்மையவாகிய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் எழுத்துக்களும் எண்ணப்படா என்பதனை வெளிப்படக் கூறுதல் ஆசிரியர் கடமையாதலானும் ஒற்றலங்கடையே என யாப்பருங்கல விருத்தியாசிரியர் கொண்ட பாடமே பொருட்பொருத்த முடையதாகும். ஐவகையடிகட்கும் நடுவணதாகிய நேரடிக்குக் கூறிய ஒற்றலங்கடையே என்றதொடர் இதன்முன் கூறப்பட்ட குறளடி சிந்தடிகளோடும் இதன்பின்னர்க் கூறப்படும் நெடிலடி கழிநெடிலடிகளோடும் சென்றியையும் வண்ணம் இச்சூத்திரத்துட் சிங்கநோக்காக அமைந்துள்ளமை நுணுகியுணரத்தகுவதாகும், நூற்பா 38 : இது, கட்டளையடியுள் நெடிலடியாமாறு கூறுகின்றது. (இ - ள்.) பதினைந்து நெடிலடியின் சிற்றெல்லையாகும். அதன் மேற் பதினாறு, பதினேழு என இரண்டெழுத்து மிக்கு வருதலும் அதன் பேரெல்லையின் இயல்பென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, பதினைந்து, பதினாறு, பதினேழு என நெடிலடி மூன்று நிலம் பெறும் என்பதாம். நூற்பா 39 : இது, கட்டளையடியுட் கழிநெடிலடியாமாறு கூறுகின்றது. (இ - ள்.) பதினெட்டெழுத்து கழிநெடிலடியின் சிற்றெல்லை யாகும். அதன்மேல் பத்தொன்பது இருபது என இரண்டெழுத்து மிக்குவருதலும் அதன் பேரெல்லையின் இயல்பென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, பதினெட்டு, பத்தொன்பது இருபது எழுத்துக் களாகிய மூன்று நிலம் பெறுவது கழிநெடிலடி என்பது பெறப்படும். ஆகவே இருபதெழுத்தின் மிக்க கட்டளையடி இல்லை யென்ற வாறு. 40. சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்நிரை வஞ்சிக் காறும் ஆகும்.1 இளம்பூரணம் : என்---எனின். சீர்க்கு எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று.2 (இ-ள்) சீர்நிலை ஐந்தெழுத்தின் மிகாது நேர் இறுதி யாங் காலத்து; நிரையீறாகிய வஞ்சியுரிச்சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும் என்றவாறு.3 எனவே, இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடி யில்லை யென்ற வாறாம், வஞ்சிச்சீர் முச்சீரடியின்கண் வருதலின்.4 (40) பேராசிரியம் : இது, மேலெழுத்தெண்ணி அடிவகுக்கப்பட்ட ஐவகை யடிக்குஞ் சீரும் எழுத்தெண்ணியே வகுக்கின்றது. (இ-ள்.) சீரது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்து வாராது (எ-று.) பெருமைக்கெல்லைகூறி வரையறுக்கவே சிறுமைக்கெல்லை வரையறைப்படாது ஒன்று முதலாக வருமென்பதாம். சீர்நிலை தானேயென்பது பிரிநிலையேகாரம். அதனை அசைநிலையிற் பிரித்துக் கூறியவாறு. அதனை அவ்வாறு பிரித்துக்கூறவே அசை சீராயவழி ஐந்தெழுத்திறவாமை அவற்றுக்கில்லையென்பது கொள்ளப்படும். அஃதேல் அவற்றுக்கெல்லை கூறானோ வெனின் அவை மூன்றெழுத்தி னிறவாதென்பது உரையிற் கொள்க1. தானென்பதனை இலேசுப்படுத்துக் கொள்ளினும் அமையும். மற்றிவற்றையுஞ் சீர்நிலைபெறுமென்ப வாதலாற் சீரென அடைக்கானோவெனின், அடக்கானன்றே, அவை சீர்நிலை யெய்தியவழியும் அசையிரண்டாகாமையினென்பது. தளைவகை சிதையாத் தன்மை யான (தொல். செய் 28.) என்று ஆண்டு வரைந்தமையின் அதனைச் சீர்நிலையென வாளாது பொதுவகையா னோதான். அதுவே கருத்தாயின், அவற்றை நேர்பசை நிரைபசையெனக் கூறியதனானும், அவற்றை ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே (தொல். செய். 12) என்றதனானும் பயந்ததென்னையென மறுக்க. அல்லதூஉம் இயற்சீர் பாற்படுத்தியற்றுக வெனவே இவைதாமியற் சீரல்ல, அவற்றது செய்கை இவற்றானுங் கொள்கவென்ற துணையே ஆண்டுக்கூறிய தென்பது;1 அல்லதூஉந் தேவரும் நரகரும் மக்கட்பாற் படுத்துத் (மரபியல்-33) திணைகொள்ளப்படு மென்ற துணையானே பிறப்பானும் பெற்றியானும் மக்களென வழங்கார். அதுபோல அசைநிலைத்தளையுஞ் சீர்நிலைத்தளையும் ஒக்குமென்றதுணை யானே அவை அசைச்சீரெனவே, அடையடுத்தே சொல்லவேண்டுவன வற்றையும் வாளாதே சீரெனப் படுவனவற்றையும் ஒருவகையானே சீர்நிலையென மயங்கக்கூறல் (மரபியல்-108) குற்றமாமென்பது.2 மயங்கக்கூறல் குற்றமன்றென்பார் உளராயின் அவர்கருத்தினான் அதுவும் அமையுமென்பது. ஒருசாதியல்லனவற்றைச் சாதிப்பெயரொன் றெனவும் புகலார்; அதுபோலச் சீரிலக்கணமுடைய இயற்சீர் உரிச்சீர்களைச் சீரெனக்கூறி அவ்வினத்தவல்லாத அசைச்சீரை இலேசினாற் கொண்டாமென்பது. ஒரெழுத்துச்சீர் நுந்தையென ஒன்றேயாம்; இதனோடு வண்டு என்னும் அசைச்சீர்3 கூட்ட இரண்டாம். ஈரெழுத்துச்சீர் நான்கு; அவை: தேமா ஞாயிறு போதுபூ போரேறு என வரும். மின்னு வரகு என்னும் அசைச்சீர் இரண்ட னோடுங் கூட்ட ஆறாம். மூவெழுத்துச்சீர் பத்து ; அவை: 1புளிமா 2பாதிரி 3வலியது 4மேவுசீர் 5நன்னாணு 6பூமருது 7கடியாறு 8விறகுதீ 9மாசெல்வாய் 10நீடுகொடி எனவிவை. அரவு என்னும் உரியசைச்சீரோடுங்1 கூட்டப் பதினொன்றாம் : நாலெழுத்துச்சீர் ஒன்பது; அவை : 1கணவிரி 2காருருமு 3பெருநாணு 4உருமுத்தீ 5மழகளிறு 6மாவருவாய் 7புலிசெல்வாய் 8நாணுத்தளை 9 உரறுபுலி எனவிவை. ஐந்தெழுத்துச்சீர் மூன்று ; அவை : 1நரையுருமு 2புலிவருவாய் 3விரவுகொடி என வரும். இக்கூறுபட்டன வெல்லாம் ஈண்டுக் காட்டுவாமாயிற்று. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (தொல். செய். 43.) என வருகின்ற சூத்திரத்தினை நோக்கியென்பது2 முடவுமருது என்பதனைக் குற்றுகரங் களைந்து ஐந்தெழுத்துச்சீரென்று காட்டு வாருமுளர். அஃது உரியசைமயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராகலின் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (தொல். செய். 23) என்பதனான் விலக்கப்பட்டதென்பது. இனி, நுந்தையென் பதனை