தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 18 தொல்காப்பியம் - பொருளதிகாரம் உவமையியல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 18 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உவமையியல் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 136 = 144 படிகள் : 1000 விலை : உரு. 135/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மோகர் அடுக்ககம், 35, செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030. பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகத்திணை --- அகத்திணையியல் அகம் --- அகநானூறு இ-ள் --- இதன் பொருள் உரி --- உரியியல் உவம, --- உவமவியல் எ--று --- என்றவாறு ஐங்குறு. --- ஐங்குறுநூறு கலி. --- கலித்தொகை கானல். --- கனால்வரி கிளவி --- கிளவியாக்கம் குறள். --- திருக்குறள் குறுந். --- குறுந்தொகை சிலப். --- சிலப்பதிகாரம் சிறுபாண். --- சிறுபாணாற்றுப்படை செய். --- செய்யுளியல் சொல். --- சொல்லதிகாரம் தண்டியலங். --- தண்டியலங்காரம் திருமுரு. --- திருமுருகாற்றுப்படை தொல் --- தொல்காப்பியம் நச். --- நச்சினார்க்கினியர் நற். --- நற்றிணை நாலடி. --- நாலடியார் பக். --- பக்கம் பட்டினப். --- பட்டினப்பாலை பத்து. --- பத்துப்பாட்டு பதிற். --- பதிற்றுப்பத்து பரிபா. --- பரிபாடல் பா. --- பாடல் பா.வே. --- பாட வேறுபாடு புறம். --- புறநானூறு பெரும்பாண் --- பெரும்பாணற்றுப்படை bghU e., --- பொரு நராற்றுப்படை பொருள். --- பொருளதிகாரம் மணிமே. --- மணிமேகலை மலைபடு. --- மலைபடுகடாம் முத்தொள். --- முத்தொள்ளாயிரம் தொல்காப்பியம் உவமையியல் தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமையியல்* இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உவமை யியல் என்னும் பெயர்த்து. ஒருபுடை ஒப்புமை பற்றி 1 யுவமை உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மெய்ப்பாடு பற்றித் தோன்றி வழங்குவது.2 இதனாற் பயன் என்னை மதிப்பதோவெனின்3, புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்.4 ஆப் போலும் ஆமா எனவுணர்த்தியவழி, அதனைக் காட்டகத்துக் கண்டான் முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ஆமாவென்று அறியும். தாமரை போல் வாள்முகத்துத் தையலீர் என்றவழி அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயக்கும். அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழுதிணையினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல்லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றி வரும். மேற்குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந் தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது. 1. வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம் என்பது சூத்திரம். இளம்பூரணம் இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத் தினை யொருவாற்றாற் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம் என்பது---தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபட வந்த உவமைக்கண் புலனாம் என்றவாறு. எனவே கட்புலமல்லாதனவு முள என்றவாறாம். அவை செவி யினானும் நாவினானும் மூக்கினானும் மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விருவகையும் பாகுபடவந்த உவமையாம்1. அவற்றுட், கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல், முடக்கல் விரித்தல், குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும், தீமையாகவும் பயப்பன. வடிவாவது வட்டம், சதுரம், கோணம் முதலாயின. நிறமாவன வெண்மை, பொன்மை முதலாயின. இனிச்செவிப்புலனாவது ஓசை. நாவினான் அறியப்படுவது கைப்பு, கார்ப்பு முதலிய சுவை மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம். மனத்தால் அறியப்படுவன இன்ப துன்ப முதலியன. உதாரணம் புலிபோலப் பாய்ந்தான் என்பது வினை. மாரி யன்ன வண்கை (புறம். 133) என்பது பயன். துடி போலும் இடை என்பது வடிவு. தளிர் போலும் மேனி என்பது நிறம். குயில்போன்ற மொழி செவியாலறியப்பட்டது. வேம்புபோலக் கைக்கும் நாவினாலறியப்பட்டது. தீப்போலச் சுடும் மெய்யினாலறியப்பட்டது. ஆம்பல் நாறுந் துவர்வாய் (குறுந். 300) மூக்காலறியப்பட்டது. தம்பி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (குறள். 1107) எமனத்தானறியப்பட்டது. பிறவு மன்ன. (1) பேராசிரியம் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உவமவியல் என்னும் பெயர்த்து. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். இதனானே இவ்வோத்து நுதலியதூஉம் உவமப்பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம்புறம் என்பனவற்றுள், இஃது என்ன பொருள் எனப்படுமோவெனின், அவ்விரண்டுமெனப்படும் : மெய்ப்பாடுபோல என்பது. என்னை? உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான (தொல், பொருள். 295) என மேல்வருகின்றதாகலின். மற்றிவ்விருதிணைப் பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலானும், உவமம்பற்றியும் பொருள் கூறுகின்றானென்பது. மேல் அகத்திணையியலுள் (49) உவமத்தினை இரண்டாக்கி ஓதினான்; உள்ளுறையுவமம் ஏனையுவமமென. அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற்கூறினான், அஃது அகத்திணைக்கே சிறந்ததன்றாயினும் யாப்புடைமை நோக்கி; உலகவழக்கினஞ் செய்யுள் வழக்கினும் வருமாகலானுமென்பது.1 அஃதேல் உள்ளுறையுவமஞ்செய்யுட்கே உரிமையின் அதனைச் செய்யுளியலுட் கூறுகவெனின், உவமப்பகுதியாத லொப்புமை நோக்கி ஓரினப்பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும் வருகின்ற செய்யுளியற்கும் இயையுமாற்றான் அதனை ஈற்றுக்கண் வைத்தான். அது செய்யுட்குரித்தென்னுங் கருத்தானென்பது. எனவே, எழுத்தினுஞ் சொல்லினும் போலச் செய்யுட்குரியன செய்யுட்கென்றே ஓதலும் ஒருவகையாற் பெற்றாம். மற்றுப் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (53) அல்லாத வழக்கு ஆராயப் பயந்ததென்னையெனின் அப்புலனெறி வழக்கிற்கு உறுப்பாகிய வழக்கினை ஆராய்தலும் அதற்கு உபகாரமுடைத்தாதலானென்றவாறு1. மற்றிது மேல் எவ்வோத்தினோடு இயைபுடைத்தோவெனின். மேற்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலொடு இயைபுடைத்து; என்னை? உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றனாகலின். எங்ஙனமோவெனின், ஆபோலும்ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையேபற்றி ஆமா இதுவென்று அறியுமாகலானென்பது.2 இவ்வோத்தின் தலைச்சூத்திரம்3 என்னுதலிற்றோவெனின், உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறி அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தொழிலும், பயனும், வடிவும் வண்ணமும் என்னும் நான்கெனப்படுங் கூறுபட வரும் உவமத்தோற்றம். (எ-று). உவமம் என்பதனை வினைமுதலாகிய நான்கினொடுங் கூட்டி வினையுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமமெனப் பெயர் கூறப்படும். வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்குமுன் வினை கூறப்பட்டது; அதுபோலப் பிழம்பினால் தோன்றும்நிறத்தினை அதற்குப்பின் வைத்தான்;பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் அதனுடன் வைத்தானென்பது. மற்று மெய்யெனப்படுவது பொருளாதலின். அதன் புடைபெயர்ச்சியாகிய வினைபிற்கூறுக வெனின், வினையுவமந் தன்னருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாக நோக்கி அது முற் கூறினானென்பது. அது புலிமறவன் எனத் தொகாது புலியன்ன மறவன் என விரிந்தே நிற்றலும். புலிப்பாய்த்துள் எனத் தொக்கு வருதலும் உடைத் தென்பது. தொகை நான்கென எண்ணிக் கொடுத்தான்.1 வரலாறு: புலியன்ன மறவ னென்பது வினையுவமம் அது பாயுமாறே பாய்வனென்றுந் தொழில்பற்றி ஒப்பித்தமையின்; அற்றன்றித் தோலும் வாலுங் காலும் முதலாகிய வடிவும் ஏனை வண்ணமும் பயனும் ஒவ்வாவென்பது; ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். மாரி யன்ன வண்கைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே (புறம். 133) என்பது பயவுவமம் என்னை? மாரியான் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்குமென்றவாறு. துடியிடை யென்பது மெய்யுவமம்; அல்குலும் ஆகமும் அகன்றுகாட்ட அஃகித்தோன்றும் மருங்குலால் துடி அதனோடு ஒத்தத1. பொன்மேனி யென்பது உருவுவமம்; பொன்னின்கண்ணும் மேனியின் கண்ணுங் கிடந்த நிறமே ஒத்தன, பிற ஒத்தில வென்பது. இந்நான்கும் பற்றி உவமந் தோன்றுமென்பது கருத்து. உவமத் தோற்றம் என்பது மூன்றாவதன் தொகை; உவமத்தாற் பொருள் தோன்றுந் தோற்றமென்றவாறு.2 மற்றுஅடைசினைமுதல் (தொல். சொல். கிளவி. 26) என்றாற்போல அடையெனவே இந்நாற்பகுதியும் அடங்கக் கூறிப் பண்புத்தொகை யென்புழி வண்ணம் வடிவு முதலாயின அடங்கிய வாறுபோலப் பண்பென்று அடக்குதல் செய்யாது ஈண்டு நான்கெனப் பகுத்ததென்னையெனின், இது பொருளாராய்ச்சியாகலாற் (கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் வேறாக நோக்கி வடிவினையும் உருவினையும் வேறுபடுத்தான்; என்ன?) வடிவு பற்றிய பண்பினை இரவின்கண் (உருவாக) உற்றுணரப்படும்; வண்ணமாயின் அவ்வாறு உற்றுணரப்படாதென்பது. அல்லாக்காற் பகற் குறிக்கட் கூறப்படும் வண்ணம் முதலாயினவும் இரவுக் குறிக்கண் எய்துவான் சொல்லும் வடிவும் பண்பும் ஒன்றாகக் கூறினானென்பது. அல்லதூஉம், உணர்த்துகின்ற திணைப்பொருளினை எளிதிற் புலப்படுத்தலுபகாரம் நோக்கியும் அவ்வாறு பகுத்தா னென்பது3. களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல (அகம். 22) என்புழிப் பார்வலொதுக்கமாகிய வினை பண்பெனப்படாது. என்னை? பண்பென்பது குறிப்பின்றி நிகழுங் குணமாகலினென்பது. அடையெனினும் அதுவேயெனக் கூறி மறுக்க. எனவே, பார்வ லொதுக்க மெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுங்கி நின்றானனென்பதும், பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்குகின்றானல்லனென்பதுஞ் சொல்லியவன் தலைமைக் கேற்ற உவமையாதலின் அது பொருட்டோற்றமாயிற்று. மாரி யன்ன வண்கை (புறம். 133) என்பதூஉம் பண்பாயின். அதன் நிறத்து மேற்கொண்டு வண்மையுங் கரிதெனல் வேண்டுமாகலின் அது பண்பென அடங்காது. அணைத்தோள் (கலி. 87) என்பதும் அது. உருவுகிள ரோவினைப் பொலிந்த பாவை யியல்கற் றன்ன வொதுக்கினள் (அகம். 142) என்றக்கால், வடிவுபற்றி உவமங்கொள்ளவே, உயிரில்லாதாள் போல, அச்சமின்றி, இரவிடை வந்தாளென்னும் பொருள் தோன்றும். வடிவு பண்பெனப்படாது; பண்பு இழிபாகலின்1. மாரிப் பீரத் தலர்சில கொண்டே (குறுந். 98) காட்டி, இன்ன ளாயின ணன்னுதல் (குறுந். 98) என்றவழிக், குறித்த பருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று. உருவுவமம் இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதி நோக்கி உவமப்பகுதி யென்றான் என்பது. என்றாற்கு, இந்நான்கு பகுதியே யன்றி அளவுஞ் சுவையுந் தண்மையும், வெம்மையும் நன்மையுந் தீமையுஞ் சிறுமையும் பெருமையும் முதலாயின பற்றியும் உவமப் பகுதி கூறாரோவெனின், அவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கு மென்றற்கும் அந்நான்கும் இன்னபொருட்பகுதி உடையவென்றற்கு மன்றே அவற்றை வகைபெற வந்த, என்பானாயிற்றென்பது. பறைக்குர லெழிலி (அகம். 73) என்றக்காற் பறையும் எழிலியும் ஒத்தல் வினைபற்றி2 உவமை கொள்வான் ஒன்றற்குக் குரல் கூறி ஒன்றனை வாளாது கூறினானாயினும் வினையுவமத்தின் வகையெனப்படும். கடைக்கண்ணாற் கொல்வான்போனோக்கி (கலி. 51) என்பதூஉம் தன் வகை3. வந்த என்றதனான் இல்லாத வினை வருவிததுஞ் சொல்லப் படும். அவை, விசும்புரி வதுபோல (அகம். 24) மணிவாழ் பாவை நடைகற் றன்ன (நற். 184) வான்றோய் வன்ன குடிமையும் (பாயிரம்) இவை, உவமையும் பொருளும் ஆகிய வினைபற்றி வந்தில வாகலின் அதன் வகையெனப்பட்டன1. அன்ன, ஆங்க என் பன இடைச்சொல்லாகலின் வினைப்பின்னும் வந்தன. நடைகற்றன்ன என்புழிக் கற்று என்னும் வினையெச்சந் தன்னெச்சவினை இகந்த தாயினும் அஃது உவமப்பகுதியாகலான் அங்ஙனம் வருதலும் வகையென்றதனானே கொள்ளப்படும். கொன்றன்ன வின்னா செயினும் (குறள். 109) என்பதும் அது. இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் (குறள். 308) என்பது வினைப்பெயர்பற்றி உவமஞ் சென்றது. பொன்மரம் போலக் கொடுக்கு மென்பது பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும்; என்னை? மழைத்தொழிலாகிய பெயலாற் பயந்த விளையுளுடன் இடையிட்டுப்போய் உவமங்கொள்ளாது கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்பாடது, கொள்வார்க்குப் பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகை யாயிற்று.2 நிலம்போலுங் கொடை என்பதும் அது. தெம்முனை யிடத்துச் சேயர்கொல் என்னும் எல்லைப்பொருண்மை மெய்யுவமத்திற்கு வகையெனப் படும், அஃது அன்னவாகலினென்பது1 இடைக்கிடந்து நிலம் இரண்டினையும் வடிவுபற்றி உவமஞ்செய்தானென்பது. மற்றுச் சேய்மை அண்மை குணமாம் பிறவெனின், அற்றன்று; 2துடியிடை என்றவழி அதன் இடைநுணுக்கமுங் குணனாகும், அவ்வாறு கொள்வார்க்கு என்பது; எனவே நிறப்பண்பு அல்லன வெல்லாம் மெய்யுவமத்தின் வகையெனப்படுவனவாயின. குணமாத லொப்புமையான் அவை நிறப்பண்பிற்கு இனமெனவும் படும். அவ்வாறு திரிபுடைமையின் அவற்றை விதந்தோதாது வகை யென்றதனாற் கொண்டானென்பது.3 தளிர்சிவந் தாங்குச் சிவந்தமேனி யென்பது உருவுவமத்தின் வகையெனப்படும்; என்னை? உவமத்தாற் கொள்ளப்பட்ட பொருள் நிறமாயினும் அதனை வினை விரித்தாங்கு விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி வகை யெனப்பட்டது1. பிறவும் அவ்வாறே கொள்க. இப்பகுதியுடைமை நோக்கி வகைபெறவந்த என்றானென்பது. (1) ஆய்வுரை உவமம் என்பது, கூறக்கருதிய பொருளொடு மற்றொரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் பயன் ஆகிய இயல்புகள் நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். காட்டகத்தே திரியும் ஆமா என்ற விலங்கினைக் கண்டறியா தனொருவன், அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினானாயின், ஆவினைப்போன்றது ஆமா என அவனுக்குத் தெரிந்த நாட்டிலுள்ள பசுவை உவமையாகக் காட்டி யுணர்த்துதல் மரபு. அவ்வுவமையைக் கேட்டறிந்த அவன், பின்னொரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை (காட்டுப் பசுவை) நேரிற் காண்பானாயின், ஆமா என்பது இதுவே என உணர்ந்து கொள்வான். இவ்வாறு பிறி தொன்றினை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக்கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமம் எனப்படும். இவ்வுவமத்தினைக் கருவியாகக் கொண்டே இருதிணைப் பொருள்களும் உலகவழக்கினுள் நன்கு உணர்த்தப்பெற்று வருதல், காணலாம். இவ்வாறு உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகைவழக்கினும் நிலைபெற்று வழங்கும் பொருள்புலப்பாட்டு நெறியாகிய உவமத்தின் இலக்கணத்தினை ஆசிரியர் தொல் காப்பியனார் இவ்வியலில் விரித்துணர்த்துகின்றார். அதனால் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று. மேல் குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந் தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது என இளம்பூரணரும், உவமத்தாலும் பொருள் புலப்பாடே கூறுகின்றா ராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடையதாயிற்று எனப் பேராசிரியரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை இளம்பூரணர் முப்பத்தெட்டாகவும் பேராசிரியர் முப்பத்தேழாகவும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். மேல், அகத்திணையியலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஓதிய ஆசிரியர், அவ்விரண் டனுள்ளும் உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனை யுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யுளுக் கேயுரிய உள்ளுறையுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யுளியலுடன் இயையும்படி இவ்வியலின் இறுகிக்கண்ணும் வைத்து விளக்குகின்றார். இதன்கண் ஒன்றுமுதல் இருபத்திரண்டு வரையுள்ள சூத்திரங்களால் ஏனையுவமத்தின் இலக்கணமும், இருபத்துமூன்று முதல் முப்பத்துமூன்று வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், முப்பத்து நான்கு முதல் முப்பத்தெட்டு வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமம் போன்று மனத்தாற் கருதியுணர்தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும் அதனது இயல்பினை விளக்கவேண்டி ஒப்புமையாக எடுத்துக்காட் டப்படும் பிறபொருளை உவமம் என்றும் கூறுவர் தொல்காப்பியர். பொருள், உவமம் என்னும் இவ்விரண்டினையும் முறையே உவமேயம் என்றும் உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவமமும் பொருளும் ஆகிய இவ்விரண்டின்கண்ணும் வண்ணம், வடிவு, தொழில், பயன் என்பனபற்றியமைந்த ஒப்புத்தன்மை பொதுத்தன்மை யெனப்படும். அத்தன்மையினை விளக்குதற் பொருட்டு அவற்றைச் சார்ந்துவரும் அன்ன, ஆங்க, போல, புரைய என்பன முதலாகவுள்ள இடைச் சொற்கள் உவமவுருபு எனப்படும். இவ்வாறு உவமமும் பொருளும் அவற்றிடையே யமைந்த பொதுத்தன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப்படையாக உணர்தற்கேற்ற சொல்லமைப்பினையுடையது ஏனையுவமம் எனப்படும். இஃது உவமத்தின் பாகுபாடு உணர்த்துகின்றது. (இதன்பொருள்) உவமத்தாற் பொருள்தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்றவாறு. ஒரு பொருட்கு மற்றொருபொருளை உவமையாகக் கூறுமிடத்து அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரண மாகவும், அத்தொழிலாற் பெறும்பயன் காரணமாகவும், மெய்யாகிய பொருளின் வடிவுகாரணமாகவும், அவ்வடிவின்கண் நிலை பெற்றுத் தோன்றும் நிறமாகிய வண்ணங்காரணமாகவும் ஒப்பித்துரைக்கப் படுமாதலின் உவமத்தாற் பொருள் புலப்படும் புலப்பாட்டுமுறை நால்வகைப்படும் என்றார் ஆசிரியர். வினையாற் கிடைப்பது பயனாதலின் வினையின் பின்னர்ப் பயனும். மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின்பின்னர் உருவும் முறையேவைக்கப்பட்டன. வடிவம் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். உரு-நிறம். மெய்யாகிய வடிவினை இருப்பொழுதிலும் கையினால் தொட்டறிதல் கூடும் வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்து கொள்ளுதல் இயலாது. புலியன்ன மறவன் என்பது, புலிபாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின் வினையுவமம் எனப்படும். மாரியன்னவண்கை யென்பது மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் பயனால் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும். துடியிடை யென்பது, மேலும் கீழும் அகன்றபரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கிவடிவொத் தமையின், மெய்யுவமம் எனப்படும். பொன்மேனி யென்பது, பொன்னின்கண்ணும் மேனியின் கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் எனப்படும். வினை, பயன், மெய், உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் முதலாகவுள்ளயாவும் அடங்குமாதலின், உவமப்பகுதி இந்நான்கே என வரையறுத்தார் ஆசிரியர். 2. விரவியும் வருஉம் மரபின என்ப இளம்பூரணம் என்--எனின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஒரோவொரு பொருளான் வருதலின்றி இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினையுடைய என்றவாறு1. உம்மை இறந்தது jæïƉW1. இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று (அகம். கடவுள் வாழ்த்து) என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தது. பிறவும் அன்ன. இன்னும் விரவியும் வரூஉம் மரபின என்றதனாற் பலபொருள் விரவிவந்தது அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ (கலித் 84) என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும் புதல்வற்கும் உவமையாயினும் தோற்றத்திற் கிரண்டும் ஒருங்குவந்தமையான் வேறோதப்பட்டது. இன்னும் விரவியும் வரூஉம் மரபின என்றதனால் தேமொழி எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க. பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஓத்தாகக்கொள்க.2 (2) பேராசிரியம் இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து; நான்கென மேல் (276) தொகை கொடுத்தமையின் அவை வேறு வருதலெய்தியதனை அவ்வாறேயன்றி விரவியும் வரும் என்றமையின். (இ - ள்) அந்நான்கும் ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமஞ்செய்யும் வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும் அதன் மரபு (எ - று).3 செல்வா னன்ன மேனி (அகம். கடவுள் வாழ்த்து) என வண்ணம் ஒன்றுமே பற்றி உவமஞ்சென்றது. அவ்வான், இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று (அகம். கடவுள் வாழ்த்து) என்றவழி, வண்ணத்தோடு வடிவுபற்றி உவமஞ்சென்றது. காயா மென்சினை தோய நீடிப் பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்த ளணிமலர் நறுந்தா தூது ந் தும்பி கையாடு வட்டில் தோன்றும் மையாடு சென்னிய மலைகிழ வோனே (அகம். 108) என்புழி, ஆடுதற் றொழில்பற்றியும் வடிவுபற்றியும் வண்ணம் பற்றியும் வந்தது. பிறவுமன்ன. மரபினவென்றதனான் அவை அவ்வாறு விராய்வருதலும் மரபே; வேறு வேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க. (2) இஃது உவமத்திற்கு ஆவதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ள்) ஒருபொருளோடு ஒரு பொருளை உவமிக்குங்கால் மேற்குறித்த வினை முதலிய நான்கனுள் ஒரோவொன்றேயன்றி இரண்டும் மூன்றும் கலந்து ஒத்துவருதலையும் இலக்கணமாக வுடையன அவ்வுவமம் என்பர் ஆசிரியர் (எ-று). செவ்வான் அன்ன மேனி என்பது, நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. அவ்வான் இலங்குபிறையன்ன விலங்கு வால் வையெயிறு என்பது, வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் விரவி வந்த உவமை. காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதுந்தும்பி, கையாடு வட்டிற்றோன்றும் என்பது, ஆடுதற்றொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் வண்டினுக்கு வட்டுக்காய் உவமை யாயிற்று. 3. உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை இளம்பூணரம் என்---எனின் மேலதற்கோர் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந்ததன் மேலன என்றவாறு. ஈண்டு உயர்ச்சியாவது---வினைமுதலாகச் சொல்லப் பட்டன ca®jš1. அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின் (பட்டினப். 298) என்றவழித் துப்புடையன2 பலவற்றினும் அரிமா உயர்ந்ததாகலின் அதனைஉவமையாகக் கூறப்பட்டது. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள்வாழ்த்து) என்றவழிச் சிவப்புடையன பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. அஃதேல், கொங்கியர் ஈன்ற மைந்தரின் மைந்துடை உழுவை திரிதருங் காடே என இழிந்ததன்மேல்உவமை வந்ததால் எனின், ஆண்டுக் கொங்கிய ரீன்ற மைந்தரின் என விசேடித்த தன்மையான் அவர் பிறநிலத்து மக்களொடு ஒரு நிகரன்மையின் அவரும் உயர்ந்தோராகக் கொள்க. சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கும் இழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனோ டார்புனை தெரியல் நெடுந்தகை போரே (புறம். 28) என்பது இழிந்ததன்மேல் வந்ததாயின் ஆணியூசியினது விரைவு மற்றுள்ள விரைவில் உயர்ந்ததாகலின் அதுவும் உயர்ந்ததாம். (3) பேராசிரியம் இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ - ள்.) உவமையெனப்பட்டது உயர்த்த பொருளாகல் வேண்டும் (எ-று). எனவே, உவமிக்கப்படும் பொருள் இழிந்துவரல் வேண்டு மென்பது. அரிமா வன்ன வணங்குடைத் துப்பின் (பத்து. பட்டின. 298) மாரி யம்பின் மழைத்தோற் சோழர் (அகம். 336) கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் (அகம். 176) பொன்மேனி என வரும். இவற்றுள் உவமையுயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பெய்துவித்தவாறு கண்டுகொள்க. உள்ளுங்காலை என்றதனான் முன்னத்தினுணருங் கிளவியான் உவமங்கோடலும், இழிந்தபொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப் படச்செயல்வேண்டுமெனவுங் கொள்க. அவை: என்யானை என்பாவை என்ற வழி அவை போலும் என்னுங் குறிப்புடையான், பொருள் கூறிற்றிலனாயினும், அவன் குறிப்பினான் அவை வினையுவமை யெனவும். மெய்யுவமை மெனவும் படும். இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும்; அவை பற்றாது சொல்லுதல் குற்றமா கலின்.1 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு. (குறள்.1081) என்பது ஐயற்று முன்னத்தான் உவமஞ்செய்தது. தாமரை யன்று முகமேயெனத் துணிந்வழியும், மழையன்று வண்டிருந்தலிற் குழலே யெனப் பொருட்குக் காரணங்கொடுத்த வழியும். மதியங்கொல்லோ மறுவில்லை யென்று உவமைக் குறைபாடு கூறுதலும், நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ யைதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று. (கலி.55) என்பனவுமெல்லாம் அவை.1 இவற்றுள்மலையுஞ்சுனையும் உவமை யின்மையின் அவற்றைப் பிறையோடும் மதியோடும் உடன்வைத்து உவமைபோலக் கூறி எதிர்மறுத்தது என்னையெனின், அவையாமாறு முதலுஞ் சினையும் என்புழிச் (தொல்.பொருள். 281) என்ற வியப்ப என்றவை யெனாஅ (தொல்.பொருள்.256) என மேல்வருஞ் சூத்திரத்துள் என்றவென்பதோர் உவமவுருபு கூறினமையின், வாயென்ற பவளம் எனவும் வாய்பவளமாக எனவும் வாய்பவளம் எனவும் வருவனவும் அக்குறிப்பவமையின் பகுதியெனவே படும். இவற்றை வேறு வேறு பெயர் கொடுத்து விரித்துக் கூறாது முன்னத்தினுணர் வனவே இவையெல்லாமென்னுந் துணையே இலேசினாற் கூறி ஒழிந்ததென்னையெனின், இவற்றாற் செய்யுள் செய்வார் செய்யும் பொருட்படைப்பகுதி எண்ணிந்தன வாகலின், அப்பகுதியெல்லாங்கூறாது பொதுவகை யான் வரையறைப்படும் இலக்கணமே கூறி யொழிந்தானென்பது. வாயென்ற பவள மெனவும் வாய்பவள மாகவெனவும் வாய்பவளமெனவும் வந்த பவளக்குறிப்புவமைகளை இக்காலத்தார் உருவக மென்றே வழங்குப.1 இனி, வாய்பவளம் (யா. வி. ப. 362) கண்ண கருவிளை (யா. வி. ப. 394) எனவும், பெயர்ப்பயனிலை வரின் அவற்றை ஒற்றுமைகாட்டி உருவகம் என்றாராகலின் அதுவும் உவமை யெனவே படு மென்பது. (3) ஆய்வுரை இஃது, உவமமாதற்கோர் இயல்புணர்த்துகின்றது. (இ---ள்) பொருள் புலப்பாட்டிற்கென எடுத்துக்கூறப்பெறும் உவமை, உள்ளத்தாற் கருதியுணருமிடத்து உவமிக்கப்படும் பொருளாகிய உவமேயத்தினும் உயர்ந்த தன்மையில் மேலதாகும். (எ---று) (உவமம்) உள்ளுங்காலை உயர்ந்ததன்மேற்றே என இயையும், மேற்றுமேலது உவமம் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வருவித்துரைக்கப்பட்டது. இங்கு உயர்ச்சியென்றத வினைபயன் மெய்உரு எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மைகளால் உவ மேயத்தினும் உவமானம் உயர்வுடைய தாதலை. இவ்வாறு உவமத்தின் இயல்பினை உள்ளியுரைத்தல் வேண்டும். எனவே உயர்ந்த பொருளுக்கு இழிந்ததனை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உவமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதனோடு ஒரு பகுதியொத்தலாகிய பொதுக்தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக்கருதப்படும் பொருளை உவமையாக எடுத்துக்காட்ட வேண்டிய செவ்வி நேர்ந்த நிலையிலும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக்கொண்டு உயர்ந்த குறிப்புப்பொருந்த உவமஞ்செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய உவமைபற்றிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம். 4. சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப. இளம்பூரணம் என்-எனின். இதுவுமது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்த வற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக1 வரும் என்றவாறு. இவையிற்றைப்பற்றி தோன்றுமென்பது கருத்து. முரசுமுழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழா அல் (பொருநராற். 54.6) எனச் சிறப்புப்பற்றி வந்தது. ஓவத் தன்ன வியனுடைய வரைப்பின் (புறம்251) என்பது நலம்பற்றி வந்தது. கண்போல்வான் ஒருவனுளன் என்பது காதல்பற்றி வந்தது. அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின் (பட்டினப்.218) என்பது வலிபற்றி வந்தது. பிறவு மிவ்வாறே படுத்து2 நோக்கிக் கண்டுகொள்க. (4) பேராசிரியம் இதுவும், எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) வினை பயன் மெய் உரு என்பனபற்றி உவமை கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமை (எ - று). நிலைக்கள மென்பது அவை அவ்வாறு உவமை செய்தற்கு முதலாகிய நிலைக்களமென்றவாறு. முரசுமுழங்கு தானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய யெழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிந (பத்து. பொருந. 54-57) என்பது, சிறப்பினாற் பெற்ற உவமமாகலிற் சிறப்பு நிலைக் களனாகப் பிறந்தது. ஓவத் தன்ன வியனுடை வரைப்பின் (புறம் 251) என்புழி அந்நகரினது செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் அதற்கு நிலைக்களன் நலனாயிற்று, பாவை யன்ன பலராய் மாண்கவின் (அகம்.98) என்புழி மகள்கட் காதல் காரணமாக உவமை பிறந்தது. என் யானை யென்பதும் அது. அரிமா வன்ன வணங்குடைத் துப்பின் (பத்துப். பட்டின.298) என ஒருவன் வலிகாரணமாக உவமம்பிறந்தமையின் அதற்கு நிலைக்களம் அவன் வலியாயிற்று. இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப்பட்ட பொருள் யாதானும் இயைபில்லதொன்று கூறலாகாதெனவும், உவமையொடு முழுவதும் ஒவ்வாமைமாத்திரையாகி அதனோடொக் கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டுமெனவுங் கூறி, அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும், ஒரு பொருட்கண் தோன்றிய நன்மைப்பற்றியவுங்; காதன் மிகுதியால் உளவாகக்கொண்டு உரைப்பனவுந், தன்றன்மையால் உளவாயின வலிபற்றினவுமென நான்காமென்றவாறு; இவற்றுக் கெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்குங் தலைப்பெய்யு மென்பது. சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகார வகையாற் பெறுஞ் சிறப்பு. நலனென்றது அழகு. காதலென்பது அந்நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கியுரைப்பது. வலியென்பது தன்றன்மையானே உள்ளதொரு வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களமெனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். தன்மேல் வருகின்ற பகைவனைப் பகைவன புலிபோலு மென்று வீரக்குறிப்பு அழியாமற் கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டில்லை; தன்வினை யுவம மாகலின் திரியாதாயினுமென்பது. ஆய்வுரை இஃது உவமை தோன்றுதற்குரிய நிலைக்களம் உணர்த்துகின்றது. (இ-ள்) சிறப்பு, நலன், காதல், வலி என்னும் அந்நால் வகைப் பண்புக்கும் உவமத் தோற்றத்திற்குரிய நிலைக்களமாம் என்பர் ஆசிரியர். (எ-று) அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகை யாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது, ஒரு பொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாநிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ள வாகக் கொண்டு கூறுவது. வலி என்பது, ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தமிழகத்தின் நலங்கருதித் தம்மில் ஒன்றுகூடி அரசவையில் வீற்றிருந்த தோற்றம் போல ஆடல், பாடல், இயம்இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் பொருநர் தலைவன் தங்கியிருந்த செய்தி பொருநாராற்றுப்படையிற் பேசப் படுகிறது இவ்வுவமை, சிறப்பினை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததாகும். ஓவத்தன்ன இடனுடைய வரைப்பின் : (புறம்--251) என்னும் பாடலில் ஓவியம்போலும் பேரழகுவாய்ந்த இடத்தினை யுடைய நகரம் என அதன் நலந்தோன்ற உவமை கூறினமையின் இவ்வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததாகும். பாவையன்ன பலராய் மான்கவின் (அகம்--98) எனவரும் பாடலில் பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பமைந்த என் மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலைக்களம் காதல் என்பது நன்கு புலனாம் திருமாளவனாகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காணமாக அரிமா வன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன் (பட்டினப். 208, 299) என அவனுக்குச் சிங்க ஏற்றினை உவமையாகக் கூறுதலால் இவ்வுவமை வலி நிலைக்களமாகப் பிறத்தாகும். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக்கூறவே, இவற்றையடிப்படையாகக் கொண்டன்றி எத்தகைய உவமமும் பிறவாது என்பது கருத்தாயிற்று. 5. கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும். இளம்பூரணம் என்-எனின். எய்தியதன்மேற் சிறப்புவிதிவகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொருளொடும் உவமை பொருந்துமிடத்து உவமிக் கப்படும் அதனோடுங்கூட ஐந்தாம் என்றவாறு. என்றது பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிடமும் உள என்றவாறு1 ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செய் மாலையன் (அகம். 48) என்றாற் போல்வன. மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதி யாதலின் இதனொடுங்கூட ஐந்தென்றார்1 (5) பேராசிரியம் இது, மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஒரு புறனடை. (இ-ள்) அந் நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொரு ளொடு ஐந்தெனவும் படும் (v-W)2 கிழக்கிடுபொருளென்பதா கீழ்ப்படுக்கப்படும் பொருள்; கிளைஇயகுரலே கிழக்கு வீழ்ந் தனவே (குறுந்.337) என்புழிக் கீழ்வீழ்ந்தன என்பதனைக் கிழக்குவீழ்ந்தன என்பவாகலின். ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்று வித்தலின் அதுவும் நிலைக்களமா மென்றவாறு. அவை உள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி (அகம். 71) எனவும், அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப (அகம். 313) எனவும் வரும். இவை பொருளன்றி உவமையுங் கிழக்கிடப்பட்டன வாலெனின், அங்ஙனமாயினும் அவை பொருளோடு சார்த்தி நோக்க உயர்ந்தன வெனப்படும். ஆய்வுரை இது மற்றுமொரு நிலைக்களன் உணர்த்துகின்றது. (இ-ள்) ஒருபொருளின் இழிபினைப் புலப்படுத்துவோர், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடுபொருள் எனப்படும். அவ்விழிபினையும் மேற்குறித்த நான்கினோடும் சேர்த்தென்ன உவமத்தின் நிலைக்களம் ஐந்தாகும். (எ-று) கிழக்கிடு பொருள் - கீழ்ப்படுக்கப்படும் பொருள். அரவுநுங்குமதியின் நுதலொளிகரப்ப (அகம் 313) என்புழி, பிரிவிடை வேறு பட்டு வருந்தும் தமைகளது நுதல் ஒளியிழந்த நிலையினைக் கூறவார், இராகுவென்னும் பாம்பினால் விழுங்கப் பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறினமையின் இது கிழக்கிடுபொருள் நிலைக்களமாகப் பிறந்த உவமையாகும். சிறப்பு, நலன், காதல், வலி என முற்கூறிய நான்கினோடு கிழக்கிடுபொருளாகிய இதனையுஞ் சேர்த்தெண்ண உவமத்தின் நிலைக்களம் ஐந்து எனக்கொள்ளுதலும் பொருந்தும் என்பதாம். 6 முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு நுதலிய மரபி னுரியவை யுரிய. இளம்பூரணம் என்-எனின். இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. ஐயம் அறுத்ததூ உமாம், (இ - ள்.) முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இரு வகைப்பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிற்கேற்பவை உரியவாம் என்றவாறு.1 சொல்லதிகாரத்துட், செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே என்றார். அவ்வாறன்றி யுவமைக்கு நியமமில்லை என்றவாறாயிற்று. ஒருகுழை யவன்போல் இணர்சேர்ந்த மராஅமும் (கலித். 26) என்பது முதற்கு முதல் உவமமாயிற்று. அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணுஉ (கலித். 84) என்பது முதற்குச் சினை உவமமாயிற்று. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது சினைக்குச் சினை யுவமமாயிற்று. நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி (அகம். 84) என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று. பேராசிரியம் இது, மேற்கூறிவருகின்ற உவமை முதல் சினைபற்றி வருங்கால் இன்னவாறாக வென்கின்றது (இ-ள்.) முதற்பொருளுஞ் சினைப்பொருளும் என்னும் அவ்விரண்டு பொருட்குங் குறித்த வகையான் மரபு படவரின் உரியவை உரியவாம் (எ - று). இதன் கருத்து, முதலொடு முதலுஞ், சினையொடு சினையும் முதலொடு சினையுஞ், சினையோடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ்செய்தற்கு உரியவெனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படுமெனவுங் கூறியவாறு : வரைபுரையு மழகளிற் றின்மிசை என்பது, முதற்கு முதலே வந்த உவமையாயிற்று. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது, சினைக்குச் சினையே வந்து உவமையாயிற்று, நெருப்பி னன்ன சிறுகட் பன்றி (அகம் 84.) என்பது, முதல் உவமமாகப் பொருள் சினையாகி வந்தது. அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ (கலி. 84) என்பது, சினையுவமமாக உவமிக்கப்படும் பொருண் முதலாயிற்று நுதலிய மர பென்றதனால் விசும்பி னன்ன சூழ்ச்சி (புறம். 2) என்றக்கால், விசும்பென்பது முதலாதல் கருதியுணர்தல் வேண்டும், முதற்சினைப்பகுதி அதற்கு இன்மையினென்பது.1 இனி, வேயமன் றன்று மலையு மன்று (கலி. 55) என்ற வழியும், மலைநோக்காது மலையுள் வேயெழும் இடங் கருதி அவ்விடமன் றென்றவாறெனக் கொள்க. பூவமன் றன்று சுனையு மன்று (கலி. 55) என்பதற்கும் ஒக்கும். உரிய என்னாது உரியவை என்றதனால் திணையும் பாலும் மயங்கிவரும் உவமையுங் கொள்ளப்படும். அவை, மாரி யானையின் வந்துநின் றனனே (குறுந். 161) என்பது, திணைமயங்கிற்று. கூவற், குராலான் படுதுய ரிரவிற் கண்ட வுயர்திணை யூமன் போலத் துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே (குறுந். 221) என்பது, உயர்திணைப் பான்மயங்கிற்று. கடம்பமர் நெடுவே ளன்ன மீளி யுடம் பிடித் தடக்கை யோடா வம்பலர் (பத்துப். பெரும்பாண் 75) என்பது, ஒருமை பன்மை மயங்கிற்று. இலங்கு பிறை யன்ன விலங்குவரல் வையெயிற்று (அகம். கடவுள்வாழ்த்து) என்பது அஃறிணைப் பால்மயங்கிற்று, பிறவுமன்ன, இக்கருத்து அறியார் இவற்றையுஞ் செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு (தொல். சொல். கிளவி. 16) என்புழி இலேககொண்டு உரைப்ப*. 1 ஆய்வுரை இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ---ள்) முதல் எனவும் சினை எனவும் கூறப்படும் இருவகை பொருள்களுக்கும் கருதிய மரபினால் அவற்றிற்கு உவமையாய் வருதற்கு உரியவை உரியனவாம். எ---று எனவே, மலைபோலும் யானை என முதலோடு முதலும் தாமரைமலர் போலும் சேவடி எனச்சினையொடு சினையும் தாமரையிலையின்கீழுள்ள மலர் போன்று குடைநிழற்கீழ்த்தோன்றும் குழவி என முதலொடு சினையும், நெருப்பினையொத்த சிறிய கண்ணினையுடைய பன்றி எனச் சினையொடுசினையும் உவமஞ் செய்தற்குரியன என்பதும் அவ்வாறு உவமங்கூறுங்கால் மரபுபிற எழாமற் கூறப்படும் என்பதும் பெறப்படும். 7 சுட்டிக் கூறா உவம மாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே இளம்பூரணம் என்---எனின். இதுவுமோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) சுட்டிக் கூறா வுவமை என்பது---உவமிக்கப்படும் பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக்கூறாமை. அவ்வாறு வருமாயின் உவமச்சொல்லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவமவாய்பாடு கொள்க என்றவாறு. இதனாற் சொல்லியது உவமவாய்பாடு தோன்றா உவமம் பொருட்குப் புணராக்கண்ணும் உவமை உள1 என்றவாறாம். மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (குறள். 90) இதன்கண் அதுபோல எனச் சுட்டிக்கூறா வுவமையாயின வாறு கண்டுகொள்க. (7) பேராசிரியம் இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ - ள்.) உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்பு மைக்குணம் நான்கினையும் விதந்து சொல்லி உரையாதவழி அவ்விரண்டினையும் எதிர்பெய்து கூட்டி ஆண்டுப் பொருந்திய தொன்று பொருந்தியதுபற்றி வினை பயன் மெய் யுருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப்படும். (எ - W). பவளம்போற் செந்துவர்வா யென்பது சுட்டிக் கூறியவுவமம்; என்னை? இரண்டிற்கும் பொதுவாகிய செம்மைக்குணத்தினைச் சொல்லியே உவமஞ் (சொல்லினமையின். அது பவளவாயென் கின்றவழிச் சுட்டிக்கூறா வுவமமாம் 1 ஆண்டுப் பவளத்தினையும் வாயினையுங் கூட்டிப்பார்த்துச் செம்மைக் குணம்பற்றி உவமஞ் செய்ததென்று அறியப்படும்; அல்லாக்கால், வல்லென்ற கல்லிற்கும், மெல்லென்ற இதழிற்கும் உள்ளதோர் ஒப்புமை ஆண்டில்லை யென்பது; பிறவும் அன்ன. (7) ஆய்வுரை இஃது உவமைக்குரியதோர் வேறுபாடுணர்த்துகின்றது. (இ - ள்) உவமையுடன் உவமேயத்திற்கமைந்த பொதுத்தன்மையினைச் சுட்டிச் கூறாத நிலையில் உவமம் வருமாயின் உவமத்தினையும் பொருளினையும் இணைத்துநோக்கி அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைக்குணம் நோக்கி இஃது இன்ன உவமம் என்று துணிந்துகொள்க. (எ-று) பவளம்போற் செந்துவர்வாய் என்பது, உவமையும் உவமேயமும் ஆகிய அவ்விரண்டிற்கும் உரிய பொதுத்தன்மை யினைக் குறித்துக்கூறி யுவமஞ்செய்தமையால் சுட்டிக் கூறியவுவமம் எனப்படும். இவ்வாறு உவமையுடன் உவமேயத்திற்கமைந்த ஒப்புத்தன்மையினை குறித்துக்கூறாது பவளவாய் என்றாற்போன்று வரும் உவமம் சுட்டிக் கூறாவுவமம் எனப்படும். இவ்வாறு உவமைக்கும் பொருளுக்குமிடையே யமைந்த ஒப்புமைத்தன்மை யினைச் சுட்டிக் கூறாத நிலையில் உவமம் வருமாயின் அதன்கண் உவமத்தினையும் உவமேயத்தினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொது வாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைத் தன்மைபற்றி வினை பயன் மெய் உரு என்னும் நான்கினுள் இஃது இன்னவுவமையென்று துணிந்துணரப்படும் என்பதாம். வாய்க்குப் பவளத்தையுவமையாக்கிப்ப வளவாய் என உவமைகூறிய நிலையில் வல்லென்ற பவளத்திகும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்னம மென்மைபற்றி இங்கு உவமை கூறுதல் பொருந்தாது, அவ்விரண்டிலும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்புநோக்கியறிந்து கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். இங்ஙனம் வரும் உவமையினைத் தொகையுவமை என்பர் தண்டியலங்காரவாசிரியர். இனி, சுட்டிக் கூறாவுவமை என்பது உவமிக்கப்படும் உவமானம் இதுவென உவமவாய்பாடு தோன்றக் குறித்துக் கூறாத நிலையில் வரும் உவமம் எனவும், அவ்வாறு உவமம் வருமாயின் உவமானத்தொடு பொருந்த உவமேயப்பொருளொடு புணர்த்து அதுபோல என உவமவாய்பாடு வருவித்துரைக்கப்படும் எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர். அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றேயுலகு (திருக்குறள். 1) இதன்கண் எழுத்தெல்லாம் அகரமுதல; அதுபோல உலகு ஆதி பகவன் முதற்று என்புழி அதுபோல என உவமை வாய்பாடு வருவித்துரைக்கப்பெறுதல் காண்க. இவ்வாறு வரும் உவமையினை எடுத்துக்காட்டுவமையென்பர் பரிமேலழகர். 8. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். இளம்பூரணம் என்---எனின். இஃது உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இரட்டைக் கிளவியாயினும், நிரனிறுத்தமைத்த நிரனி றைச்சுண்ணமாய் வரினும், மிக்குங்குறைந்தும் வருதலன்றியுவமை யடையடுத்துவரினும், தொழிற்பட்டு வரினும், ஒன்றும் பலவுமாகி வரினும், வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும் என்றவாறு. அவ்வழி வாராது மிக்குங்குறைந்தும் வருவது குற்றம் என்ற வாறாம்.1 (8) பேராசிரியர் இதுவும் அது. (இ-ள்) உவமானமும் பொருளுந் தம்மின் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் (v-W). மயிற்றோகைபோலுங் கூந்தல் என்பதன்றிக், காக்கைச் சிறகன்ன கருமயிர் என்று சொல்லின், அஃதொத்ததெனப் படாதென்றவாறு. புலிபோலப் பாய்ந்தான் என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதேபற்றிப் பூசைபோலப் பாய்ந்தான் எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகமென்றவாறு. ஈண்டு ஒத்தவென்பதனை, ஒத்த தறிவான் (குறள். 214) என்பதுபோலக் கொள்க.2 (8) ஆய்வுரை இஃது உவமைக்குரியதோர் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) உவமானமும் உவமேயமும் தம்மின் ஒத்துள்ளன என உலகத்தார் ஏற்கும் வண்ணம் உவமையமைதல் வேண்டும். (எ---று) பொருள் புலப்பாட்டிற்குரிய கருவியாக அமைவது உவமை யாயினும், தமக்குத் தோன்றினவற்றையெல்லாம் உவமையாகக் கூறாது, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்புடையன என உல கத்தார் ஒத்துக்கொள்ளத்தக்கவற்றையே உவமையாகக்கூறுதல் வேண்டும் என்பது இச்சூத்திரத்தின் நோக்கமாகும். இந்நுட்பத் தினைப் பேராசிரியர் காட்டிய உவமை விளக்கங்களால் நன் குணரலாம். 9. பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின ஃ துவம மாகும். இளம்பூரணம் என்--எனின். இதுவும் உவமைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்.) உவமிக்கும் பொருடன்னை யுவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமையாகு மென்ற வாறு.1 ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது உவமைபற்றி வருதலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியர் கருத்து. 2 இரும்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங் கூழ்ப் பேஎ யெற்றிய பிணம்பிறங்கு பல்போர்க் கான நரியொடு கழுகுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொருகளந் தழீஇப் பாடுநர்க் கீந்த பீடுடை யாளன் (புறம் 369) என வரும். பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாடும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் (மணிமே 4: 8.13) என்பதும் அது. இவ்வாறு வருவன வெல்லாம் இச் சூத்திரத்தாற் கொள்க. பேராசிரியம் இது, மேற்கூறியவாறன்றி வருவதோர் உவமை விகற்பங் கூறுகின்றது (இ.ள்) உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை(தொல். பொருள் 278) என்புழி உவமம் உயர்ந்துவால் வேண்டுமென்றான் இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப் படும் பொருளாக்கி மயங்கக்கூறுங் காலும் அஃது உவமம்போல உயர்ந்த தாக்கி வைக்கப்படும் என்றவாறு.1 வருமுலை யன்ன வன்முகை யுடைந்து திருமுக மவிழந்த தெய்வத் தாமரை (சிறுபாண். 72-73) என்றவழி, வருமுலையுந் திருமுகமும் ஈண்டு உவமையாகி முகையும் பூவும் பொருளாயின; ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின. இவை உவமைத்தொகையாங்கால் முலைக்கோங்கம் முகத் தாமரை எனப்படும். இவற்றை வேறு உருவகமென்றும் பிறர் மயங்குப. சிறப்பென்றதனான் ஒப்புமை மாத்திரையன்றித் தான் புனைந்துரைக்கக் கருதிய முலையினையும் முகத்தினையும் உயர்ந்த பொருளாகிய உவமத்தினும் உயர்ந்தவாகச் சிறப்பித்துரைத்தா னென்பது. மருளறு சிறப்பின் என்றதனான் அங்ஙனஞ் சிறப்பிக் குங்கால் மயக்கந்தீரச் சிறப்பித்தல் வேண்டும். அஃது1 உலகினுள் உயர்ந்ததென்று ஒப்ப முடித்த பொருளினையுஞ் சிறப்பித்தற்கு உவமஞ் செய்பவோ வெனிற், செய்யாரென்பது, என்னை? முகமொக்குந் தாமரை என்றால் முகத்திற்குந் தாமரைக்குஞ் சிறப்புடைமை மயங்கி வாராது, பின்னும் முகத்திற்கே சிறப்பா மென்பது கருத்து. அஃதெனப்பட்டது பொருளாகலான் உயர்ந்ததன் மேற்று (278) என்னும் விதி அப்பொருட்கு எய்துவிக்க. (9) ஆய்வுரை இஃது உவமைக்கண் வருவதோர் வேறுபாடுணர்த்துகின்றது. (இ-ள்) உவமேயமாகியபொருளினை உவமையாக்கி உவ மானத்தை உவமேயமாக்கிமயங்கக் கூறுமிடத்தும் அவ்வுவமேயப் பொருள் குற்ற மற்ற சிறப்பின் உவமம் போல உயர்ந்ததாக்கிக் கூறப்படும் (எ-று) பொருள் என்றது உவமேயத்தினை அஃது என்றதும் அது. இச் சூத்திரவிதிப்படி தாமரைமுகம் எனற்பாலதனை முகத்தாமரை எனமாற்றி உவமை கூறுமிடத்துவரும் உவம வேறுபாட்டினைப் பிற்கால அணியிலக்கண நூலார் உருவகம் எனப் பிறி தோரணியாகக் கொள்வர். எனினும் இங்ஙனம் வருவதனை உருவகம் என வேறோரணியாக்காது உவமையின் வகையாகக், கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்தென்பது இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் பேராசிரியர் தரும் உரைவிளக்கங்களாற்புலனாம். 10. பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற்றீராக் குறிப்பின் வருஉ நெறிப்பா டுடைய. இளம்பூரணம் என்--எனின். இதுவும் உவமைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) உவமையும் பொருளும் ஒத்தன கூறலேயன்றிப் பெருகக் கூறலுஞ் சிறுக்ககூறலும் மேற்சொல்லப்பட்ட சிறப்பென்னும் நிலைக்களத்து நீங்காச் சிறப்பின் வரூஉம் வழக்கப் பாட்டினையுடைய என்றவாறு.1 எனவே, வழக்கின்கட் பயின்று வாராத இறப்பவுயர்தலும் இறப்ப விழிதலும் ஆகா வென்றவாறு.2 அவாப்போ லகன்றதன் அல்குன்மேற் சான்றோர் உசாஅப்போல வுண்டே மருங்குல் என்றவழி அல்குல் பெரிதென்பான் ஆசையொடுவமித்தலின் இது தக்கதாயிற்று; மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோ ருசாவொடு உவமித்தலின் அதுவும் தக்கதாயிற்று. அவை சிறப்புப் பற்றி வந்தன. இனி, நெறிப்பாடின்றி வருவன இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் என இருவகைப்படும். இந்திரனே போலு மிளஞ்சாத்தன்...ehWÄz®.” (யாப்.வி.ஒழி.) இஃது இறப்பவுயர்ந்தது. வழக்கிறந்துவருதலின் இவ்வாறு வரும் உவமை கூறப்படாது. வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் எள்ளி யிரிவதுபோ லெங்கெங்கும்--வள்ளற்கு மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை மேலாரு மேலார் விரைந்து. (யாப். வி. ஒழி.) இஃது இறப்ப இழிதலின் இதுவு மாகாது. அஃதேல் நாயனையார் கேண்மை தழீஇக் கொளல் வேண்டும் (நாலடி 213) vனtருமால்vனின்,mதுeயின்கட்»டந்தnதார்eற்குணம்பற்றிtருதலின்ïறப்பïழிதல்Mகாது.(10) பேராசிரியர் இஃது, உவமத்திற்கு ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் துதலிற்று. (இ - Ÿ)ïறப்பcயர்வும்- ïறப்பïழிவும்cவமிக்குங்கால்ïன்னாவாகச்bசய்யாதுáறப்புடைமையில்Ôராவாகிக்nகட்டார்kனங்கொள்ளுமாற்றான்tருதலைtழக்குtலியாகவுடைய(v-W).1 அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோர் உசாஅப்போ லுண்டே நுசுப்பு என்றவழி. உலகத்தார் அவாப்போலப் பெரிதாகிய அல்குலெனக் கழிபெரும் பரப்பிற்றாகக் கூறினும் அது சிறப்பிற்றீராக் குறிப்பிற்றாதல் வழக்குண்டாகலின் உடம்படப்படும் என்றவாறு. மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் (குறுந். 129) என்றவழிக், கடல்போன்றது கூந்தலெனவுங், கடனடு எழுந்த எண்ணாட் பக்கத்து மதிபோன்றது நுதலெனவுங் கூறினான். அதனாற் கடல்போலும் மயிரென்றதும் பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதுங் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்றீராது மனங்கொள வந்ததெனவே படும். சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 45) என்பதும் அது. சான்றோ ருசாஅப்போ லுண்டே நுசுப்பு என்றவழியும், நுண்ணுணர்வின் ஆராய்ச்சி ஒருவர்க்கும் புலனா காததனை ஒக்கும் இடையென்றமையின் அதுவுங் கழியச் சிறிதாக உவமித்தார். யானை யானையவர் நட்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் (நாலடி. 213) என்பதும் அது. இவை (பெருமை)யுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வந்த வழக்காதல் அமைந்தன வென்பது. பிறவுமன்ன. இவ்வாறன்றி மேருமால்வரை காம்பொத்து விண்முகடு குடையொத்து விண்மீன்கணம் முத்துப்போன்றன வென வடிவு பற்றி உவமங்கூறுதல் தமிழ் வாக்காகின்ற தென்பது.1 இனி, வள்ளத்தி னீர்கொண் டுமிழ்ந்த முலைச்சாந்து மறுகிற்பரந் தள்ளல் யானை யெல்லா மடிவழுக் கினவே என்பதோ வெனின், அவ்வாற்றானும் இன்பங் கொள்வார்க்கு அவையும் இழுக்கில என்பது. சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி (பத்துப். பட்டினப். 41-45) என்பதோ வெனின். யாறென்ற துணையானே பேர்யாறெனக் கொண்டு உலகிறந்தனவாகாமைக்கன்றே, ஏறபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி (பத்துப். பட்டினப்.46-47) என்பதாயிற் றென்பது. ஆய்வுரை இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ---ள்) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் கூறப்படும் உவ மங்கள் சிறப்புடைமையில் நீங்காக் குறிப்புடையனவாய் வரும் வழக்கு நெறி முறைமையினையுடைய(எ---று) எனவே, பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால், உலக வழக்கினைக் கடந்து இனிமையற்றனவாகச் செய்யாது கேட்போரது மனம் விரும்பியேற்றுக் கொள்ளும்படி செய்தல் வேண்டும் என்பதாம். 11. அவைதாம், அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப என்ன மான என்றவை யெனாஅ ஒன்ற ஒடுங்க ஒட்ட வாங்க வென்ற வியப்ப மென்றவை யெனாஅ எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅப் புல்லப் பொருனப் பொற்பப் போல வெல்ல வீழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த ஓடப் புரைய என்றவை யெனாஅ ஆறா றுவமையும்* அன்னவை பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப்பினவே. இளம்பூரணம் என்--எனின். இஃது உவமையுணர்த்துஞ் சொற்களை1 வரை யறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள் தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங்காலத்துப் பல குறிப்பினையுடைய என்றவாறு. சொல்லுங்காலத்து என்றமையிற்சொல்லென்பது கொள்க.2 அன்னபிறவாற் கொள்ளப்படுவன :நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க. பல்குறிப்பின என்றதனான் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மையவாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் எனக் கொள்க. புலிபோன்ற சாத்தன் புலிபோலுஞ் சாத்தன் என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான் புலிபோலப் பாய்ந்தான் என்பன வினையெச்சம். புலிபோலும் புலிபோன்றனன் என்பன முற்று. அன்ன, இன்ன இடைச்சொல். இன்னும் பல்குறிப்பின என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங்கொள்க தேன்போல இனியமொழி இது விரிந்தது.1 தேன்போலும் மொழி இது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்கு நின்றது.2 தேமொழி என்பது எல்லாந் தொக்கது.3 பிறவு மன்ன. ஈண்டு எடுத்தோதப்பட்ட முப்பத்தாறினும் ஒன்ற. என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்பனவொழித்து நின்ற முப்பதும் அன்ன பிறவாற் கொள்ளப்பட்டவற்றுள் நோக்க என்பதும் நேர என்பதுஞ் சிறப்புவிதி யுடைத்தாதலின் அதற்கு உதாரணம் ஆண்டுக் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டுதும். வேலொன்று கண் கயலென்ற கண் மணிநிற மாற்றிய மாமேனி மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம் வேயொடு நாடிய தோள் படங்கெழு நாகம் நடுங்கு மல்குல குன்றி னனையாருங் குன்றுவர் (குறள். 965) இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று (குறள். 22) மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15) துணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண் (கலித். 14) முத்தேர் முறுவலாய் (கலித். 93) எச்சிற் கிமையாது பார்த்திருக்கு மச்சீர் (நாலடி. 345) யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகம். கடவுள் வாழ்த்து) கிளைசெத்து மொய்த்த தம்பி (நற். 35) என வரும். பிறவு மன்ன. பேராசிரியம் இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ் சொல் இனைத்தென்கின்றது.1 அவைதா மென்பது. வினை பயன் மெய் யுரு வென்னு நான்குவமையு மென்றவாறு. (இ-ள்) இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையே போல்வன பிறவும் வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் (எ - W). ஆறாறவையு மென்பது அவை முப்பத்தாறு மென்றவாறு பல்குறிப்பின வென்பது, அவை இடைச் சொல்லாகித் தொக்கு வருவனவுந் தொகாதே நிற்பனவும் வினைச் சொல்லாகி வேறுபட நிற்பனவு மெனப் பலவா மென்றவாறு. இவ்வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொது வென்பது ஈண்டுக் கூறி, இனி அவை சிறப்புவகையான் உரியவாறிது வென்பது மேற் கூறுகின்றான். பிறவும் என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர நோக்க துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ என்றற்றொடக்கத்தன பலவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும் பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத்தோதியவற்றுள் வரையறை வகையவென மேற் கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம் அவற்றை உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும். அவை, ஒன்ற என்ற மாற்ற பொற்ப நாட நடுங்க என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயின வாறென்னை? முப்பதேயாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றோடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது.1 அவை பொதுவகையான் வருமாறு : வேலொன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ கோலொன்று கண்ணொன்று கொண்டு என்பது வினையுவமம். மழையொன்று வண்டடக்கை வள்ளியோற் பாடி என்பது பயனுவமம். வேயொன்று தோளொருபால் வெற்பொன்று தோளொருபால் என்பது மெய்யுவமம். குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை என்பது உருவுவமம். ஒழிந்தனவும் இவ்வாறே நான்கு பகுதியும்பற்றி வருமாறு கண்டுகொள்க. வாயென்ற பவளம் என்றது பண்புவமைபற்றி வந்தது. இது வாயாகிய பவளம் என்று ஆக்கச் சொல்லானும் வரும். மணிநிற மாற்றிய மாமேனி என்பது உருவுவமம். மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம் என்பது மெய்யுவமம். வேயொடு நாடிய தோள் என்பது நாடவென்பது வந்த மெய்யுவமம். படங்கெழு நாக நடுங்கு மல்குல் என்புழி, நடுங்கவென்பது மெய்யுவமம்பற்றி வந்தவாறு. இவ்வோதிய வாய்பாட்டோடு பொருந்த வருஞ் சொல்லெல்லாம் பல்குறிப்பின வென்பனாதற் கொள்ளப்படும், இப்பகுதி யெல்லாம் புறனடையாற் கொள்வனவற்றிற்கும் ஒக்கும். இச் சொற் பரப் பெல்லாம் நோக்கி, உவமச் சொல்லே வரம்பிகந் தனவே என்று ஓதி உரைப்ப; அவை அவ்வச்சொல்லுள் அடங்கு மாற்றான் வரம்பிகந்தனவாகா வென்பது.1 இனிப் பிறவு மென்றதனான் ஓதப்பட்டன வருமாறு: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று (குறள். 22) என்பதனுள், துணைப்பவென்பதூஉம் அற்றென்பதூஉம் வந்தன. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின் (குறள். 965) என்று அனையவென்பது வந்தது. பிறவுமன்ன கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) என, இன் வேற்றுமையும் உவமவுருபோடு வந்தது. குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க (அகம் 313) என்பது, உவமவுருபின்றி இன்னுருபு தன்பொருட்கண்ணும் வந்தது.1 தூதுணம் புறவெனத் துதைந்த நின் னெழினலம் (கலி. 56) என்பது எனவெனெச்சத்தால் உவமம் வந்தது, பிறவுமன்ன. இவை எல்லாம் வரைவின்றி2 நான்குவமமும்பற்றி வருமாறு கண்டுகொள்க. ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வந்த உவமங்களும் பிறவும் உவமத்தொகை யெனப்படா, தொகைப் படாமையி னென்பது. அங்ஙனந் தொகைப்பட்ட வழியும் மற்று மேலுரிமை கூறுகின்றதாமென்பது.3 மதியொத்தது மாசற்ற திருமுகம் என்றவழி, உவமமாயினும் உவமத்தொகை யெனப்படாது தொகைப் பாடின்மையினென்பது.4 (11) ஆய்வுரை இஃது,உவமவுருபுகளைத் தொகுத்துக்கூறுகின்றது. (இ-ள்) (உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றிடையேவரும் சொல்லாகிய) உவம வுருபுகள்தாம் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான எனவும் ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப எனவும் எள்ள விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப எனவும், காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப எனவும், புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ எனவும் நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய எனவும் ஆறு ஆறாக எண்ணப்பட்டு வரும் முப்பத்தாறும் அவைபோல்வன பிறவுமாகிக் கூறுங்கால் பல்வேறு குறிப்பினவாய் வரும். (எ - று) இதன்கண், அன்னபிறவும் என்றதனால் இச்சூத்திரத்திற் சொல்லப்படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப்பொருள்பற்றி வருவனவும் ஆகிய வுவமவுருபுகளெல்லாந் தழுவிக்கொள்ளப்பட்டன. புலி போன்ற சாத்தன் எனப் பெயரெச்சமாகவும், புலிபோலப் பாய்ந்தான் என வினையெச்சமாகவும், சாத்தன் புலிபோலும் என வினைமுற்றாகவும், அன்ன, இன்ன என இடைச்சொல்லாகவும் இங்ஙனம் பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் கூறுங்காலைப் பல்குறிப்பினவே என்றார் ஆசிரியர். 12. அன்ன வாங்கு * மான இறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம். இளம்பூரணம் என்--எனின். மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடையன உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் வினையுவமத்திற் குரிய சொல் வரையறை யுணர்த்தல் நுதலிற்று. (இ---ள்.) அன்னமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் வினை யுவமத் திற்குரிய சொல்லாம் என்றவாறு.1 கொன்றன்ன வின்னா செயினும் (குறள். 109) பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு (திருமுருகாற். 2) புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறமும் (பெரும்பாணாற். 269. 271) புலியிறப்ப வொலிதோற்றலின் புலியென்னக் கலிசிறந் துராஅய் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடககை (திருமுருகாற். 5) பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து மானொக்கு நோக்கு மடநடை யாயத்தார்1 (12) எனவரும், பேராசிரியம் இது மேற்பொதுவகையாற் கூறியவாறன்றி வினையுவமைக் கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது. (இ - ள்.) இவ்வெட்டும் வினையுவமம், (எ-று). எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து (அகம். 106) கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு (அகம். 16) கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) புலி விறப்ப வொலிதோற்றலின் புலி யென்னக் கலிசிறந் துராஅய் மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு-85) பொருகளிற் றெருத்திற் புலித்தகைப் பாய்த்துள் மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார் எனவரும். இனிக், 2 கார்மழை முழக்கிசை கடுக்கும் (அகம். 14) யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகம். கடவுள் வாழ்த்து) ஒளித்தியாங்கு மரபின் வயப்புலி போல (அகம். 22) ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ (அகம். 30) குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின் (பத்துப். பெரும்பாண். 13) எனப் பிறவாய்பாட்டாற் சிறுபான்மை வரும் வினையுவமம் பொது விதியாற் கொள்ளப்படும்1, பிறவுமன்ன. ஆய்வுரை இது, மேற்கூறிய உவமவுருபுகளுள் வினையுவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது. (இ-ள்) அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க எனக் கருதத்தகும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபுகளாம். (எ-று) இவையெட்டுருபுகளும் தொழில்நிலை சுட்டும் குறிப் புடைமையின் வினையுவமத்திற்குரிய உருபுகளாயின. 13. அன்னஎன் கிளவி பிறவொடுஞ் சிவணும். இளம்பூரணம் என்--எனின். எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்னஎன்னுஞ் சொல் ஒழிந்தபொருளொடுஞ் செல்லும் என்றவாறு.2 மாரி யன்ன வண்கை (புறம். 133) இது பயன். பரியரைக் கழுகின் பாளையம் பசுங்காய் கருவிருந் தன்ன கண்கூடு சிறுதுளை(பெரும்பாணாற்.எ-று) இது மெய். செவ்வா னன்ன மேனி (அகம். கடவுள் வாழ்த்து) பாலன்ன மென்மொழி1 (13) இவை உரு. பிறவுமன்ன. போராசியம் இஃது, எய்தியது இகந்துபடாமற்காத்தது. (இ-ள்.) வினைக்கே உரிமை யெய்தியதாகக் கூறிய அன்ன வென்பது நான்குவமைக்கும் உரிமையொக்க வரும் (எ-று.) அவை: மாரி யன்ன வண்கை (புறம்.133) எனவும், இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற்று (அகம். கடவுள் வாழ்த்து) எனவுஞ், செவ்வா னன்ன மேனி (அகம். கடவுள் வாழ்த்து) எனவும் ஒழிந்த மூன்றற்கும் 2 பெருவரவினான்? வந்தவாறு வழக்கு நோக்கி உணர்க. (13) ஆய்வுரை இது முற்குறித்த வினையுவமவுருபுகளுள் ஒன்றன்பொது வியல்பினைப் புலப்படுத்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வினையுவ மவுருபுகள் எட்டனுள் அன்ன என்பது, பயன், மெய், உரு என்னும் பிறஉவமைகட்கும் உரியதாய்ப் பொருந்திவரும். எ-று. 14. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல விழ என்றாங் கெட்டே பயனிலை யுவமம்.1 இளம்பூரணம் என்-எனின். பயனிலை யுவமைக்குரிய சொல் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எள்ள என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமைக்குச் சொல்லாம் என்றவாறு.2 எழிலி வானம் எள்ளினள் தரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல் மழைவிழை தடக்கை வாய்வா ளெவ்வி புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல விண்பொருபுகழ் விறல்வஞ்சி (புறம்.14) கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி இருநிதி மதிக்கும் பெருவள னீகை வீங்குசுரை நல்லான் வென்ற வீகை விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல் எனவரும் (14) பேராசிரியம் இது முறையானே பயனிலையுவமைக்குச் சிறந்த வாய்பாடு இவையென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இவை எட்டும் பயனிலையுவமம் (v-W). எழிலி வான மெள்ளினன் றரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல் மழைவிழை தடக்கை வயவா ளெழிலி புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல விண்பொருபுகழ் விறல்வஞ்சி கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை வீங்குசுரை நல்லான் வென்ற வீகை விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கு முரைசா றோன்றல் இவை ஓதிய முறையானே பயவுவமைபற்றி வந்தன. இவை எட்டும் பெருவரவின வெனவே1 சிறுவரவினான். அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின் (அகம். 1) மகன்றா யாதல் புரைவதா லெனவே (அகம். 16) ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய் (கலி. 20) பல்லேர் நிகர்ப்ப வந்த வுவகை யெல்லா மென்னுட் பெய்தற் தற்றே யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம் (கலி. 29) உருமெனச் சிலைக்கு மூக்கமொடு (அகம். 61) யாழ்செத், திருங்கல் விடரளை யசுண மோர்க்கும் (அகம். 88) செறுநர்த்தேய்த்த செல்லுறழ் தடக்க (திரு முரு. 5) விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்து (மலைபடு. 2) எனவரு; பிறவுமன்ன. மேலைச்சூத்திரதிற் சொல்லியவாறே இதற்கும் வேண்டுவன உரைத்துக்கொள்க. (14) ஆய்வுரை இது, பயனிலையுவமத்திற்குரிய உருபுகள் இவையென் கின்றது. (இ--ள்) எள்ள, விழைய, புல்ல, பொருவ. கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ எனச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமத்திற் குரிய உருபுகளாம். (எ--று) எள்ளுதல், விழைதல், முதலியன ஒன்றின் பயனுடைமை பற்றியவாதலின் இவை பயனிலையுவமவுருபுகளாயின. 15 கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒட்ட ஒடுங்க ஒட்ட நிகர்ப்பவென் றப்பா லெட்டே மெய்பா லுவமம். இளம்பூரணம் என்--எனின். மெய்யுவமத்திற் குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்) கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு.1 விண்ணதிர் இழிழிசை கடுப்ப (மலைமடு. 2) அகலிரு விசும்பிற் குறைவில் ஏய்ப்ப வேய்மருள் பணைத்தோள் நெகிழ (அகம். 1) வேய்புரை மென்றோள் (கலித். 39) முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை வியப்பன தழீஇ பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின் செந்தீ யோட்டிய வஞ்சுடர்ப் பருதி கண்ணோடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை எனவரும். (15) பேராசிரியம் இது, முறைனே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறு கின்றது. (இ - ள்) இவ்வெட்டும் மெய்யுவமம் (எ - W). நீர்வார் நிகர்மலர் கடுப்ப (அகம்.11) மோட்டிரும் பாறையீட்டுவட்டேய்ப்ப (அகம்.5) வேய்மருள் பணைத்தோள் வில்லிழை ஞெகிழ (ஐங்குறு.8) உரல்புரை பாவடி (கலி.21) முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின் செந்தீ யோட்டிய வெஞ்சுடர்ப் பரிதி கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை என இவை ஓதிய முறையானே மெய்யுவமத்துக்கண் வந்தவாறு. இவற்றை உரிமைகூறிப் பெருவரவினவெனவே, ஒழிந்தன வுஞ் சிறுபான்மை வருமென்பதூஉம் அவை பொதுச் சூத்திரத்தான் அடங்குமென்பதூஉங் கொள்க. அவை : கடல்போ றோன்றல காடிறந் தோரே (அகம். 1) அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி (அகம். 11) புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம் (அகம். 12) சேயித ழனைய வாகி (அகம். 19) மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கும் (கலி 20) கண்போன் மலர்ந்த சுனையும் நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த (கலி.22) முழவுறழ் தடக்கையி னியல வேந்தி (பத்துப். திரு. 215) என வரும். இவை புறனடையாற் கொண்டனவும்1 எடுத்தோதியனவும் பொதுவிதியான் வந்தவாறு. (15) ஆய்வுரை இது, மெய்யுவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது, (இ---ள்) கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப எனச் சொல்லப்பட்ட அப்பகுதி எட்டும் மெய்யுவமத்திற் குரிய உருபுகளாம். எ---று. கடுத்தல் (ஐயுறுதல்) ஏய்த்தல் (பொருந்துதல்) ஒட்டுதல் ஒடுங்குதல், ஓட்டுதல் முதலியன வடிவு பற்றிய குறிப்பினவாதலால் மெய்யுவமவுருபுகளாயின. 16. போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி உருவி னுவமம். இளம்பூரணம் என்--எனின். உருவத்திற்குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவுவமத்திற் குரியசொல்லாம் என்றவாறு.2 தன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யும் ஊக்கிழ வோனே (ஐங்குறு.41) மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம் கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம் கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர் (அகம். கடவுள் வாழ்த்து) தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி எனவரும். நளிய நந்த என்பன வந்தவழிக் கண்டுகொள்க. (16) பேராசிரியர் இது, நான்காம் எண்ணுமுறைமைக்கண் நின்ற உருவுவமத் திற்குரிய வாய்பாடு கூறுகின்றது. (இ-ள்) இவ்வெட்டும் உருவுவமம் (v-W). அவை தன்சொல் லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே (ஐங்குறு. 41) மணிநிற மறுத்த மலர்பூங் காயா ஒண் செங் காந்த ளொக்கு நின்னிறம் வெயிலொளி காய்த்த விளக்குமணி யழுத்தின கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர் (அகம். கடவுள் வாழ்த்து) தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி எனவரும் நளிய நந்த என்பன இக்காலத்து அரியபோலும்;1 அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச்சூத்திரத்தான் வருமெனப்பட்ட வாய்பாடு சிறுவரவின வருமாறு: துளிதலைத் தலைஇய மழையே ரைம்பால் (அகம். 8) நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம் (அகம். 31) செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம் (கலி. 15) ஆயிதழ் புரையு மலிக்கொ ளீரிமை (அகம் 19) பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி (கலி. 21) எரியுரு வுறழ விலவ மலர (கலி.33) பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (பத்துப்.திருமுரு.2) பொன்னுரை கடுக்குந் திதலையர் (பத்துப். திருமுரு.245) தீயி னன்ன வொண்செங் காந்தள் தூவற் கலித்த புதுமுகை யூன்செத்து(பத்துப். மலைபடு.145-146) எனவரும். பிறவுமன்ன. (16) ஆய்வுரை இஃது உருஉவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது. (இ-ள்) போல, மறுப்ப. ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த என ஒப்புத்தன்மையைக் குறித்துவரும் எட்டும் உருவுவமத்திற்குரிய உருபுகளாகும். இவை வடிவின் நிலைபெற்றுள்ள தோற்றமாகிய நிறத்தால் ஒத்த தன்மையினைக் குறிப்பின் உணர்த்திநிற்றலால் உருபுகளாயின. 17. தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. இளம்பூரணம் என்--எனின். மேலனவற்றிற் கோர் புறனடை உணர்த்துதல் EjȉW.1 (இ - ள்) மேற்பாகுபடுத் துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றானன்றித் தத்தமரபில் தோன்றும் பொருளும் உளவா மென்றவாறு. மன் ஆக்கங்குறித்து வந்தது. ஈண்டு மரபென்றது பயிற்சியை. இதனானே நூல் செய்கின்ற காலத்து வினை முதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும். முழவுறழ் தடக்கையி னியல வேந்தி (திருமுருகாற். 215) மாவென்ற மடநோக்கின் (கலித். 57) வேய்வென்ற தோள் (கலித். 138) மாரிவீ ழிருங்கூந்தல் (கலித். 14) பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுருகாற்.145) குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின் (பெரும்பாண். 13) செயலையந் தளிரேய்க்கும் எழினலம் (கலித்.15) பாஅன்மருண் மருப்பி னுரல்புரை பாவடி (கலித்.21) வலம்புரி புரையும் வால்நரை முடியினர் (திருமுருகாற்.127) ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல (அகம்.22) தாமரைபோல் வாண்முகம் (திணைமாலை.1) காரவர்போ னோக்கினு நோக்கும் ஒழுகு நோன்பக டொப்பக் குழீஇ (அகம்.35) என வரும் பிறவுமன்ன. (17) பேராசிரியம் இது, நான்கு உவமைக்கும் ஒரோவொன்று எட்டாகக் கூறிய வாய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை.1 (ï-Ÿ). இன்னதற்கு இன்ன வாய்பாடு உரியவென்றற்குக் காரணம் என்னையென்றார்க்கு, அவை தத்தம் வரலாற்று முறைமை யானே அவ்வவபொருடோன்ற நிற்கும் (v-W).1 புலிபாய்ந்தாங்குப் பாய்ந்தனென வினையுவமத்திற்கு வந்த ஆங்கென் கிளவி தளிராங்குச் சிவந்தமேனியெனிற் பொருந்தாது.2 இனி, எள்ளவென்பது பயவுவமைக்கு ஏற்குமென்றான் அது புலியெள்ளும் பாய்த்து ளெனலாகாது; என்னை? புலிக்கு வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகா தாகலானென்பது.3 ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக் கண்டு எதிர்நிற்கலாற்றாது புறங்கொடுத்ததெனலும், நடுங்கிற்றெனலுங் கண்சிம்புளித்த தெனலும், அவற்குப் புகழாமென்பதே கருதிக் கூறின் கூறின உவமை வெளிப்பாடுமின்றி அவற்கது, புகழுமாகாதென்பது கருத்து. இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுபவன்றே, அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின் விழைய வீழ புல்ல மதிப்ப வெல்ல என்பனவும் உவமை தான் பொருளை யொத்தற் கவாவினவென்று பொருள்தோன்ற நிற்குமென்றவாறு, கள்ளவென்பதூஉம் அதன் குணம் அதன் வென்பதூஉம் மழையினையும் ஒருவனையும் உறழுந்துணைச் சிறந்தானெனச் சொல்லுதல். இவ்வாற்றான், இவை உரிமை கூறப்பட்டன. இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ்வாறே ஒரு காரணமுடைய போலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத் திற்கும் ஏலாது; என்னை? கடுத்தலென்பது ஐயுறுதல். புலியோடு மறவனை ஐயுறவேண்டுவதோர் காரணமின்மையானும், மழையின் விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ் செய்தல் வேண்டுவதின்மையானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமாகலானும், ஐயஞ்செல்லாதாகலானும், மெய்க்குரிமை கூறினானென்பது ஏய்த்தலென்பதூஉம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும் 1 மருளபுரைய ஒட்ட ஒடுங்க என்பனவுங் கடுத்தல் போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரை யுணர்வுங் கவர்த்தலைக் காட்டுதலாலும், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண்டனை ஒன்றென்னும் பொருண்மையவாகலானுமென்பது, நிகர்த்தலும் அவ்வினப்பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற் கேற்றது. ஓடவென்பதும் ஓடுதற்றொழில் வடிவிற் கல்லதின்மையின் அவ்வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு ஓடிற்றென லாகாமையின். இனி, உருவுவம வாய்ப்பாட்டிற்குங் காரணங் கூறுங்காற் போலுமென்பது இடைச்சொல்லாகலானும், மரீஇவந்த வினைப் பாற்பட்டதாலானும், அதற்குக் காரணங் கூறப்படாதென்பது. அஃதேல் அதனை இவ்வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, போல மற்றை மூன்று உவமத்தும் பயின்றுவருமென்பது எய்துவித்தற் கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருவரவினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் மரபிற் றோன்றும் என்றதனான் இவையெல்லாம் மரபுபற்றி அறியல் வேண்டும் எனவே, தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலானென்பது.1 (17) ஆய்வுரை இது மேற்கூறியவாறு நால்வகையுவமங்கள் பற்றி உருபுகளை வகைப்படுத்தற்குரிய காரணம் கூறுகின்றது. (இ-ள்) மேற்பகுத்துக்கூறியவாறு வினை, பயன், மெய், ஒரு என்பவற்றுக்குரியவாம் பொருள்கள் தொன்றுதொட்டு மரபாக வழங்கி வரும் அவ்வுருபுகளில் புலப்பட்டுத் தோன்றும். (எ--று.) நால்வகை யுவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமையுடையன எனத் தொல்காப்பியனார் நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்தவுருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை, பயன், மெய், உரு எனவரும் நால்வகையுவமைகளுள் ஒன்றற்குச் சிறந்துரியனவாகப் பயின்று வழங்கினமையே காரணமென்பதும், இவ்வாறு மரபுபற்றி வழங்கும் இவ்வுருமவுருபுகளின் இடமாகவே, வினை பயன் மெய் உரு என்னும் உவமவகைபற்றிய பொருட்பாகுபாடு கூர்ந்துணருங்காற் புலப்பட்டுத் தோன்றும் என்பதும் இச்சூத்திரத்தாற் புலனாம். 18. நாலிரண்டாகும் பாலுமா ருண்டே 1 இளம்பூரணம் என்-எனின். எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகையாதலே யன்றி எட்டாம் பக்கமும் உண்டு என்றவாறு. அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இருவகை யாம்.2 பயன் என்பது, நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்து, நிறமுங் குணமுமென இருவகையாம். இவ்வகை யினாலெட்டாயின. பொன்னன்ன செல்வத்தன்---இது வினைக்குறிப்பு. ஞாயி றனையைநின் பகைவர்க்கு (òw«.59)---ïJ தீப்பயன். நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங் கடுவரற் கலுழி ---v‹gJ அளவு. பாலன்னமொழி ---ïJ குணம். ஏனைய மேற் காட்டப்பட்டன. (48) பேராசிரியம் இதுவும் மேலனவற்றையே பகுக்கின்றது. (இ--ள்.) வினை பயன் மெய் உரு என்னப்பட்ட நான்கும் எட்டாம் பகுதியும் உண்டு (எ-று) அவை : உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாதலும் உடையவென்றவாறு. அவை புலியன்ன பாய்த்துள் புலிப்பாய்த்துள் எனவும், மழையன்ன வண்கை மழை வண்கை எனவும், வேயன்னதோள் வேய்த்தோள் எனவும் பவளத்தன்னவாய் பவளவாய் எனவும் தொகைவிரிபற்றி நான்கும் எட்டாயினவாறு. சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான். அவ்வுவமத்தான் ஈண்டுக் கூறப் படுதல் பொருளினவாலானும், இடைச்சொல்லேயன்றிப் பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலானும், அதன் விரிவினை ஈண்டுப் பெயர்தந்து கூறி அதன் தொகையொடு படுப்ப இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகையுவமமும் என்றானென்பது. 1 இதுவுமொரு fU¤J: முன்னர் எவ்வெட்டாகக் கூறியவை ஒவ்வொன்றும் இரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய என்றவாறு. 2 யாங்ஙனமெனின் அன்ன என்னுஞ் சொன்முதலாகிய எட்டனுள் அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் வேறாரு பொருளை உணர்த்தாமையின் ஓரினமாகி ஒன்றாகவும், விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடைமையின் ஒரு பொருளாகவும். இவ்வாறே இன நோக்குதற் குறிப்பினவாயிற்று; இவ்வாற்றான் இரண்டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச்சொல் எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியுமென்னும் பொருட்டு. உறழ்ச்சியுந் தன் இனமாகக் கொண்டு மாறுதற் பொருட்டேயாம். தகுதி அதுவெனப்படுவது என்னும் பொருண்மைத் தாகலின் அவற்றோடொக்கும். நோக்கென்பதூஉம் அவ்வாறே இனமாக்கி நோக்கதற்பொருட்டு இவ்வாற்றான் இரண்டெனவும் படும் எட்டுமென்றவாறு.1 இதனது பயன்:- ஓதிய வாய்பாடு எண்ணான்கற்கும் இன்னவாய்ப்படும் இன்ன வாய்பாடும் ஒரு பொருளவென்று அறிதலுந்தத்தம் மரபிற் பொருள் தோன்ற வருமென்பதும் இடைச்சொல்லென்றலும் ஒப்பில் வழியாற் பொருள் செய்யினும் இடைச்சொல் லாகா, தெரிநிலைவினை உருபாயினும் என்பதறிவித்தலு மெனக் கொள்க. மேல் வருகின்றனவற்றிற்கும் இஃதொக்குமென்பது. இனிப், பயவுவமை வாய்பாடு எட்டனுள்ளும் எள்ள பொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித்தற் பொருளவாகி ஒன்றா யடங்கும். என்னை? மழையைப் பொரீஇச் சொல்லுதலும் அதனது தன்மைக்குணங் கள்ளப்படுதலும் வெல்கையும் அதனை எள்ளுதலும் போல்வன இழிவினையே காட்டுதலின். இனி விழைய புல்ல மதிப்ப வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருளெனப் பட்டன. இவ்வாற்றாற்பயவுவமை யெட்டும் (289) இரண்டாயின வென்பது2 மெய்யுவமை இரண்டாங்கால்- ஐயப்பொருட்கண் நான்குந் துணிபொருட்கண் நான்குமென இரண்டாம். கடுப்ப மருளபுரைய ஓட என்னும் நான்கும் ஐயப்பொருளவாகி ஒன்றாம். ஓடவென்பது உவமத்தின் கண்ணும் பொருளின் கண்ணும் உணர்வு கவர்ந் தோடிற்றென்னும் பொருள் தோன்றவும் சொல்லின் அதுவும் ஐயமெனப்பட்டது போலும். இனி எய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமையும் பொருளும் ஒன்றென உணர்வு தோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப் பட்டு இவையெட்டும் (290) இரண்டாயின.1 இனி, உருவின் (291) கண்ணும் போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனமென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவை ஒன்றெனப்பட்டது. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல்.சொல். உரி-17) என்றதனால், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டெயாயிற்று. இனி மறுப்ப காய்த்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்படடு இவையெட்டும் இரண்டாயின. நந்துதலென்பது கேடு. வியத்தலென்பது உவமையான் வியக்கத்தக்கது பொருளளெனவே அதன்கண் அக்குணமின்றென மறுத்தவாறாம். காய்த்தலென்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தலென்பதன் பொருளெனப்பட்டது.2 இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண்டென்பது இதன் கருத்து. இவற்றுட் பலவற்றையுஞ் செயவெனெச்ச வாய்பாட்டால் ஓதியது என்னையெனின் அஃது, (665) உடம்பொடு புணர்த்த லென்பதனான் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொற்போல நிற்குமெனவும் அதனானே பெயரெச்சமும் வினையெச்சமும் முற்றுமாகி நிற்குமெனவும் அவையுந் தெரிநிலை வினையுவமையாய் வருமெனவும் அறிவித்தற் கென்க.3 இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர்விற்றென வுணர்க. ஆய்வுரை இஃது மேற்கூறிய உவமையினை மேலும் பகுத்துரைக்கின்றது. (இ-ள்) மேற்கொல்லப்பட்ட உவமை நான்குவகையாதலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு. (எ-று.) வினையுவமம். வினையும் குறிப்பும் என இருவகையாகவும், பயனுவமாம். நன்மைபயத்தலும், தீமைபயத்தலும் என இருவகை யாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம், நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகை யுவமமும் உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினையுவமம் பயனுவமம் மெய்யுவமம் உருவுவமம் என்னும் நான்கிற்குத் தனித்தனியே எட்டெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட நான்கு தொகுதியும் இரண்டிரண்டு கூறுகளாய் நாலிரண்டு- எட்டுப்-பகுதிகளாக வரும் எனப் பொருளுரைத்தலும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர். 19. பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்று மென்ப. இளம்பூரணம் என்-எனின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பெருக்கவுஞ் சிறுக்கவுங் கூறுதல் மெய்ப்பாட்டின் வழிப்பக்கம் புலப்படத் தோன்றும் என்றவாறு. எனவே, மெய்ப்பாடு தோற்றாதவழி இப்புணர்ப்பினாற் பயனின்றாம். 1 அவாப்போல் அகன்றதன் அல்குன்மேற் சான்றோர் உசா அப்போல உண்டே மருங்குதல் என்பது பெருமையுஞ் சிறுமையும்பற்றி உவகை நிகழ்ந்தது. கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணைப் பிறிதின்றி (யா.வி. ப. 318) என்பது துன்பப் பெருக்கம் சொல்லி யவலம் வந்தது. பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேரும்என் நெஞ்சு (முத்தொள். 88) இது பெருக்கப்பற்றி இழிவரல் வந்தது. பிறவுமன்ன. (19) பேராசிரியம் இது மேற்கூறிய உவமை இன்னுமொருவாற்றான் எட்டெனப் படு மென்பது உணர்த்துதல் நுதலிற்று.1 (இ-ள்) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமை மேற்கூறிய மெய்ப்படாடென்வழித்தோன்று மென்று சொல்லுவர் புலவர் (எ-று) மெய்ப்பாடு எட்டென்பன : ‘ eifna aGif ÆËtu‹ kU£if a¢r« bgUÄj« btFË ítif’ (bjhš.bghUŸ.-251) என மெய்ப்பாட்டியலுண் மேற்கூறப்பட்டன. களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா (அகம்.16) என்பது நகையுவமம்: என்னை? தலைமகனைக் கண்டறியாதாள் போலக் கரந்தொழுகுகின்ற பரத்தை அவனோடு ஒப்புமை கண்டு தனிநின்று விளையாடும் புதல்வனைக் கொண்டு மகிழ்கின்றாளை வாயிற்கதவம் மறைந்து நின்ற தலைமகள் நீயும் அம்மகவிற்குத் தாயேகாண் என்றவழிச், களவுகண்ட பொருளோடு கையகப்பட்ட கள்வர்போலச் செய்வதறியாது தடுமாறி முகம் வேறுபட்ட நிலைமையை உவமித்துச் சிரித்தமையின் நகையுவம் மாயிற்று. கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால் (யா.வி.பா 318) என்பது,அவலவுவமை; கலங்கவிழ்ந்த நீகாமன்போலப் புலம் பினாளென்றமையின் அப்பெயர்த்தாயிற்று. பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு (முத்தொள். 88) என்பது, இனிவாலுமம்; என்னை? தலைமகன்மாட்டு இன்பவிளை யாட்டெய்துவார் பலரையுங் கண்டு நெஞ்சு தீரப் புன்கணெய்தித் தனிநின்று புகப்பெறாது இளிவந்தமையின் அப்பெயர்த்தாயிற்று. ஈரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்து நீருட் குவளைவெந் தற்று (கலி. 41) என்பது மருட்கை யுவமம்; என்னை? நிழற்கயத்தின் குவளை வேவன வின்மையின் இஃது அற்புதமாயிற்று. சாந்தகத் தண்டென்று செப்புத் திறந்தொருவன் பரம்பகத்துக கண்ட துடைத்து (நாலடி. 126) என்பது அச்சமாகலின் அச்சவுவமை. மல்லரை மறஞ்சாய்த்த மால்போற்றள் கிளைநாப்பட் கல்லுயர் நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள் (கலி. 52) என்பது பெருமிதவுவமை. கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே (புறம்.42) என்பது வெகுளியுவமம். பாடிச் சென்ற பரிசிலர் போல வுவவினி வாழி தோழி (அகம்.65) என்பது உவகையுவமை. பிறவுமன்ன. இவற்றான் எண்வகை மெய்ப்பாடும்பற்றி உவமை எட்டெ னெப்படு மென்று அறிந்து கூறினான். பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீரா (பொருள்.285) என்புழிப், பெற்றாமாகலின் மெய்ப்பாடெட்டன் வழித்தோன்று மென்னாது மருங்கறிய வென்றதனாற் பெருமையுஞ் சிறுமையும் பற்றி வருதல் வழிமருங்கெனவும் அவைபற்றாது மெய்ப்பாடு எட்டும்பற்றி வாளாதே உவமை வருதல் செல்வி தெனவுங் கொள்ளப்படும்.1 நீருட் குவளைவெந் தற்று (கலி 41) என்பது, பெருமை பற்றியது. என்னை? உலகநடை யிறந்ததோர் உவமை கூறி அதனோடு தலைமகன் ஈரத்தினை ஒப்பித்தமையின். களவுடம் படுநரிற் கவிழ்த்துநிலங் கிளையா (அகம்.16) என்பது, தனக்கு நிகராமல் இழித்துரைத்தமையிற் சிறுமைபற்றி வந்ததாம். உவமையும் மெய்ப்பாடும் பொருள்களை அறிவிப்பனவாகி அவை வேறுவேறு பொருள் அறிவித்தலின் ஒத்து வேறுபாடு உடையன வாயினுஞ் சிறுபான்மை மயங்கியும் வருமென்றற்கு இது கூறவேண்டியதென்பது. (19) ஆய்வுரை இஃது, உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ--ள்) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமைகள் நகைமுதல் உவமையீறாகச் சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்றுமென்று கூறுவர் அறிஞர். (எ -- று) எனவே, எண்வகை மெய்ப்பாடுகள் பற்றியும் உவமை எட்டெனப்படும் என்பதாயிற்று. 20. உவமப் பொருளின் உற்ற துணைருந் தெளிமருங் குளவேதிறத்திய லான. இளம்பூரணம் என்--எனின். இதுவும் உவமைக்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமப்பொருளாலே சொல்லுவான் குறிக்கப்பட்ட பொருளை யுணருந் தெளியும் பக்கமும் உள கூறுபாட்டியலான் என்றவாறு. தெளிமருங்காவது துணிவுபக்கம். எனவே, துணியாமை உவமத்தின் கண்ணே வந்தது. அவ்வாறு வரினும் இதுவேயெனத் துணிதலின் துணி பக்கமாவது.1 ஐதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூனமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலும் மயிலு மன்று சொல்லத் தவருங் கிளியு மன்று (கலித். 55) என்றவழித் துணியாது நின்றன நுதலும் முகனும் தோளுங் கண்ணும் சாயலும் மொழியு மெனத் துணிந்தவாறு கண்டுகொள்க.2 இன்னும் இதனானே, கயலெழுதி வில்லெழுதிக் காரழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர் (சிலப்.கானல். 11) என்றவழிக் கண் புருவங் கூந்தலை யுவமப் பெயரான் வழங்குதலுங் கொள்க. (20) பேராசிரியம் இஃது, எய்தாததெய்துவித்த னுதலிற்று; உவமையோடு பொருள் ஒவ்வாதனவும் ஒப்புமை சார்த்திக் கொள்ளுமா றுணர்த் தினமையின். 1 (இ - ள்) உவமப்பொருளின் --- உவமையெனப்பட்ட பொருளான்; இன் உருபு ஆன் உருபின்கண் வந்தது; உற்ற துணருந் தெளிமருங்குள --- உவமிக்கவரும் பொருட் குற்றதெல்லாம் அறிந்து துணியும் பகுதியுமுள; திறத்தியலான---அங்ஙனத் துணியப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணவகையான் (v-W). அப்பகுதி பலவும் உற்றுணராமற் சொல்லியவழியும். அஃது உணரவருமென்பது கருத்து. திறத்தியலான எனப்பட்ட பகுதியா வன; மேற்கூறப்பட்ட மெய்ப்பாடெட்டும் பற்றி உவமங்கொள்ளுங் கால், உற்றதுணருந் தெளிமருங்கென உவமானவடைக்கு உவமேய வடை குறைந்து வருவனவும் யாதும் அடையின்றி வருவனவுமென்று இவ்விரண்டும் உற்றுணராமற் சொல்லியவழி, அவற்றுக்கும் உவமைப் பொருளே தெளிமருங் காமெனவும் வாளாதே உவமஞ் செய்து உற்றுணர்த்தாதவழியும் அதுவே தெளிமருங்காமெனவும் இன்னோரன்ன கொள்க. உதாரணம் : களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா (அகம். 16) என்றவழிக் கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் களவண்டாகப் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையாவென் உற்றதுணரக் கூறியதிலனா யினுங் கையொடுபட்ட களவுடையார்போல நின்றாளென்னும் உவமப்பொருளானே எள்ளுதற்பொருள் தோன்றிநகை புலப்படு வதாயிற்று. சாறுதலைக் கொண்டேனப் பெண்ணீற் றுற்றென பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனொடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே என்னும் பாட்டினுள் உவமப்பொருளாகிய போழ் தூண்டூசிக்குப் பல அடைகூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த்தொழிலினை யாதுமோர் அடையின்றி வாளாது கூறினானாயினும் உவமப் பொருளானே போர்த்தொழிற்குற்றதும் உணரக்கூறினானாம். என்னை? உண்டாட்டுங் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக்கருத்தினால் ஒரு கணத்துள்ளே பலவேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளியப்பட்டமையின். உழுத நோன்பக டழிதின் றாங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே (புறம். 125) எனவும், மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி (புறம். 180) என்றாற்போல்வனவும் அவை. இனி, வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாத வழித் தெளியுமாறு : உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (குறள். 667) என்பதனுள் ; அவன் செய்கைவன்மை கூறாராயினும் அச்சாணி யென்று உவமப்பொருள் தானே அச்செய்கைவன்மை கூறிற்று. வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார் (கலி.85) என்பதும் அது. ஒழிந்தனவு மன்ன. இனி, உவமத்தின் உற்றதுணர்கவென்னாது பொருளென்ற தனாற் பொருட்கு அடுத்த அடையும் உவமவடைக்கேற்றது உணரப்படாதன களையப்படுமென்பது.1 அது, பாசடை நிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந்.9) என்றவழிப் பாசடை நிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்கு வந்த அடையிரண்டுங் கண்ணெனப்பட்ட உவமத்திற் கேற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்து கொள்க. ஒழிந்தனவு மன்ன. மற்றுப். புறமதி யன்ன திருமுக மிறைஞ்சி என்றவழி, அகத்துத் தோன்றும் மறுப்போலப் புறத்துமறுமதிக் கில்லையென்பதூஉம் புறமதிபோலக் கறைதீர்ந்த முகமென்பதூஉம் உவமப் பொருளின் உற்றதுணருந் தெளிமருங் கென்றதனாற் கோடுமோவெனின், அங்ஙனங் கொள்ளாமைக்கன்றே வருகின்ற சூத்திரமென்பது1. (20) ஆய்வுரை இஃது, உவமையினால் உவமேயத்திற்கு வந்துபொருந்துவதோர் திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) உவமையெனப்பட்ட பொருளால் உவமிக்கவரும் பொருளாகிய உவமேயத்திற்கு உறுவதனை யெல்லாந்தெளிந்து துணியும் பொருட்பகுதியும் உள்ளன; அவ்வாறு துணிந்துரைக்கப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கண வகையால் எ-று. தெளிமருங்கு--தெளிந்து துணியும் பக்கம். பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணமாவன, மேற்கூறியவாறு எண்வகை மெய்ப்பாடும்பற்றி உவமம் கொள்ளுங்கால் உவமான அடைமொழிக்கு உவமேய அடைமொழி குறைந்து வருவனவும், யாதும் அடைமொழியின்றி வருனவும் ஆகிய இவ்விரண்டும் உவமேயத்திற்கு உற்ற தன்மையிதுவெனவுணரவியலாமல் அமைந்த நிலையிலும், உவமேயத்திற்கு உற்றதனையுணர்தற்கும் அவ்வுவமையே தெளியும் பக்கத்ததாம் எனவும், அடைமொழியின்றி உவமைகூறி உவமையிடை உவமேயத்திற்கமைந்த பொதுத்தன்மையிதுவென விளங்கவிரித்துரையாத நிலையிலும் அவ்வுவமையே உவமேயத்தின் இயல்பினைத் தெளிந்துணர்தற்குரிய பகுதியாம் எனவும் உணர்த்துவார், தெளிமருங்குளவே திறத்தியலான என்றார். உவமையொடு உவமேயத்திற்குள்ள வினைபயன்மெய்உரு என்னும் ஒப்புமைப்பகுதியோடுநகை முதலியன எண்வகை மெய்ப்பாடுகளும் உவமத்திறத்தால் உவமேயப் பொருட்டு வந்துறுவனவாகத் தெளிந்துதுணியும் பகுதியும் உள்ளன என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும். இதற்குப் பேராசிரியர் தரும் பொருள் விளக்கமும் எடுத்துக்காட்டும் கற்போர் மனங் கொளத்தக்கன வாகும். 21. உவமப் பொருளை உணருங் காலை மருவிய மரபின் வழக்கொடு வருமே*. இளம்பூரணம் என்--எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உவமப்பொருளை உவமிக்கப்படும் பொருளாக உணருங்காலை மருவிய மரபினானாய வழக்கொடுவரும் என்றவாறு. எனவே, மருவாதன அவ்வாறு கயல்சிலை என்றாற்போலக் கூறப்படா வென்றவாறு.1 பேராசிரியம் இது, மேலதற்கொரு புறனடை, மேல் உவமப்பொருளானே உற்றதுணரச் செயல் வேண்டுமென்றான், இனி அங்ஙனம் உணரு மாறு இது கூறினானாதலின். அது வருமாறு : (இ-ள்.) உவமப்பொருளான் உற்றதுணருங்காலை மரீஇ வந்த வழக்கொடுபடுத்து அறியப்படும் (எ-று) அது வருமாறு : களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா (அகம். 16) என்பது களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக்காதலான் அஃது ஏதுவாக,2 அதனையும் அறிந்து கொள்ளப்படுமென்றவாறு. எனவே, உலகத்து வழக்கினும் அடிப் படத்தோன்றும் உவமையாயிற்றாயினும் உவமப்பொருள் புலப்பாடு செய்யாது, புறமதி போலு முகம் என்றதுபோல வென்பது இதன் கருத்து.1 ஆய்வுரை இஃது, உவமப்பொருளான் உற்றதுணருமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே அவை அறியப்படுவனவாம். எ-று களவுடம் படுநரிற்கவிழ்ந்துநிலங்கிளையா என உவமை கூறியவழி, களவுடம் படுநர்க்குள்ளவேறுபாடு உலகத்து நெடுங்கால மாகப் பயின்று வரும் வழக்காதலால் அவ்வுவமையேதுவாகக் கையொடுபட்ட கள்வரைப் போல நின்றாள் என உவமேயப் பொருளில் எள்ளுதற்பொருள் தோன்றி நகைபுலப்படுவதாயிற்று எனப் பேராசிரியர் தரும் விளக்கம் இச்சூத்திரப்பொருளைத் தெளிவுபடுத்துதல் காணலாம். இனி, உவமப்பொருளையுணர்தல் என்பதற்கு, உவமப் பொருளாலே சொல்லுவான் உள்ளத்துக்குறிக்கப்பட்ட உவமேயப் பொருளையுணர்தல் எனப் பொருள்கொண்டு கயல், சிலை, கார் எனவரும் உவமப்பொருள்களாலே முறையே அவற்றுக்கு உவமேயமாகிய கண், புருவம், கூந்தல் என்பவற்றைக் குறிப்பினால் தெளிந்துணர்தல் என்பது உலகவழக்கில் நெடுங்காலம் பழகிவழங்கும் மரபினாலே பொருந்திவரும் எனவும், அங்ஙனம் மருவி வழங்காதன கயல், சிலை என்றாற்போல வெறும் உவம அளவில் நின்று உவமேயப்பொருளைப் புலப்படுத்தும் ஆற்றலுடையன அல்ல எனவும் இச்சூத்திரப் பொருளை விளக்குவர் இளம்பூரணர். 22. இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே. இளம்பூரணம் என்-எனின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரட்டைக் கிளவியாவது உவமையிரண்டு சொல் லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொருளாகி வருதல்வேண்டும் என்றவாறு.1 அவ்வழி இரண்டுசொல்லும் ஒருசொன் னீர்மைப்பட்டு வருதல் வேண்டுமென்று கொள்க. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனை யவர் (குறள்.410) இதனை வேறுபாடு அறிக2 பேராசிரியம் இஃது, எய்தாததெய்துவித்தது; அடையொடு பொருளொடு புணர்க்குமாறு கூறினமையின. (இ-ள்.) இரட்டைக்கிளவியும்--அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி; இரட்டை வழித்தே-- அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமையின் வழித்து (v-W.).1 அது, பொன்காண் கட்டளை கடுப்பச் கண்பின் புன்காய்ச் கண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாண்.220) எனவரும். தம் பைம்பூண் புடைத்த செங்கவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடுங் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தாயிற்று,2 இரட்டைக் கிளவியுமெனப் பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொருளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்குமென்பது கருத்து, c«ikah‹3 ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்தாகி வருவனகொள்க. அது, கருங்கால் வேங்கை வீயுகு துறுக விரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை (குறுந். 17) எனவரும். இரும்புலிக்குருளை யென்றதனையே 1 துறுகல்லோடும் வேங்கைவீயோடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தாயிற்று. (22) ஆய்வுரை இஃது அடையடுத்த பொருளொடு உவமம்புணர்க்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அடையும் அடையடுத்தபொருளும் இரண்டாய் ஒருதொடர்பட்டு ஒன்றிய உவமேயப்பொருள், அடையும் அடையடுத்தபொருளும் என இவ்வாறு இராண்டாய் ஒரு தொடர்ப்பட நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப் படும். (எ-று) சண்பங்கோரையின் பூந்துகள் படிந்த செஞ்சுவடும் அச்சு வடுபொருந்திய உழவர்சிறாரது கரியமார்பும் ஆகிய இரண்டினையும் இணைத்து உவமேயத்தை இரட்டையாக்கி, அதற்கு உவமை கூறக்கருதிய புலவர், அவ்விரண்டிற்கும் முறையே பொன்னின் உரையையும் அதனைப் பொருந்திய உரைகல்லையும் இணைத்து இரட்டையாக்கி உவமை கூறினமையின், இங்கு இரட்டைக்கிளவியாகிய உவமேயம் இரட்டைகிளவியாகிய உவமானத்தின்பின் வந்தமை காணலாம். 23. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்னமரபிற் கூறுங் காலைத் துணிவொடு வருஉந் துணிவினோர் கொளினே. இளம்பூரணம் என்-எனின். இதுவும் ஒருவமை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பிறிதென்பது--உவமைப்பொருள் தானம்மையான் உவமைப் பொருளொடு படாது பொருள்தோற்றிய இடத்தொடு நோக்கி முன்னமரபினாற் சொல்லுங்காலத்துத் துணிவுடையோர் கொளின் அவர் துணிந்த துணிவின்கண்ணே வரும் உவமை என்றவாறு.1 முன்னமாவது இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். என்பதாகலின், இடத்தொடு பார்த்து ஏற்கும் பொருட்கட் கூறுவது. மேலைச்சூத்திரத்தளவும் பிறிதுபொருளொடு உவமைகூறிப் போந்தார். இனிப்பொருள்தன்னோடேயுவமை கூறுகின்றார் என்று கொள்க. நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தர (கலித். 114) என்றவழிக் காணப் பிறிதாகிய பொருளொடு உவமை கூறாமையிற் பிறிதொடு படாதாயிற்று. மதியினது எழுச்சியை நோக்கிதலிற் பிறப்பொடு நோக்கிற்று.2 அவ்விடத்திற் கேற்பக் கூறுதலின் முன்னமாயிற்று. அம் மதியின்று தோற்றம் இத்தன்மைத்தெனத் துணிதலின் அதன்கண் உவமைச்சொல் வந்தது. வள்ளிதழ் கூம்பிய மணிமரு ளிருங்குழிப் பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப (கலித்.121) என்பதும் அது, பேராசிரியம் இது, மேலெல்லாம் ஏனையுவமங் கூறி உள்ளுறையுவமம் உணர்த்துதல் நுதலிற்று. மேல் இசைதிரிந்திசைக்கு (195) மெனப்பட்டவற்றின் பகுதியாயினும் இதனை ஆண்டுக் ( 196) கூறாது ஈண்டுக் கூறினான் உள்ளுறையுவமமாகலானும் இவ்வோத்து உவமவியலாகலானுமென்பது.1 (இ-ள்.) பிறிதொடு படாது--உவமையொடு உவமிக்கப்படும் பொருள் பிறிதொன்று தாராது; பிறப்பொடு நோக்கி உவமநிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிப் முன்னைப் மரபிற் கூறுங்காலை.2-கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்ன மரபினாற் கூறுங்காலை; துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே-இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்பது துணிந்து கொள்ளத்தோன்றும், அவ்வாறு துணிந்துகொள்ளும் உணர்வுடையோர் கொள்ளின் (v-W). எனவே, அஃது எல்லார்க்கும் புலனன்று நல்லுணர்விடை யோர்க்கே புலனென்பதூஉம் அவர் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதூஉங் கூறியவாறு. இதனானே செய்யுளுட் பயின்று வருமென்பது கூறினானாம். அவற்றிற்கு உதாரணம் மேற்காட்டுதும். மற்றிதனை உவமையென்ற தென்னை? உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக நிறீஇ கூறானாயினெனின் அங்ஙனங் கூறானாயினும் உவமம்போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனை உவமை யென்றான்.1 அஃது ஒப்பினாகிய பெயரென்பது; என்னை? இவற்றை உவமப்போலி யென்று கூறுமாகலின்.2 (23) ஆய்வுரை இஃது, உள்ளுறையுவமத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன், நிறுத்திக்கூறாது, உவமநிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக்கருத்தினால் இது இன்னதற்கு உவமையென்று உணர்ந்து கொள்ளவைத்த புலனெறி மரபினால் உவமங் கூறுங்கால் நல்லுணர்வுடை யோர் கூர்ந்துணரின் இன்னபொருட்கு இஃது உவமமாயிற்றென்று துணிந்து கொள்ளவருவது மேற்குறித்த உள்ளுறை யுவமம் எ--று. பிறிதொடுபடாமையாவது, உவமத்தின் வேறாக உமமேயப் பொருள் இதுவென வெளிப்பட நிறுத்தாது உவமப்பொருளை மட்டும் கூறுதல். பிறப்பொடு நோக்கி முன்னமரபிற் கூறுதலாவது, உவமநிலங்களுட் பிறந்த கருப்பொருள் நிகழ்ச்சியோடு சார்த்திநோக்கி இதற்கு இது உவமையென்று உவமேயப்பொருளைக் குறிப்பினால் உய்த்துணர்ந்து துணிந்து கொள்ளும்படி கூறுதல். இங்ஙனம் கருப்பொருள் நிகழ்ச்சியைக் கூர்ந்துநோக்கிக் குறிப்பினால் இது இதற்கு உவமையாகும் என உள்ளறைப் பொருளை உய்த்துணர்ந்து தெளியும் நல்லுணர்வுடையார்க்கே இவ்வுள்ளுறையுவமையின் அமைப்பு இனிது புலனாம் என்பார், துணிவினோர் கொளின் துணிவோடு வரூஉம்என்றார். எனவே இது நல்லுணர்வுடையார்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகாதென்பதும், நல்லுணர்வுடையோர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இவ்வுள்ளுறையுவமம் அமைதல் வேண்டும் என்பதும், இதனால் இவ்வுவமம் செய்யுளுட்பயின்று வரும் என்பதும் கூறினாறாயிற்று. உவமையும் உவமிக்கப்படும் பொருளு மாக ஒருங்குவைத்துக்கூறப்படாத நிலையிலும், உள்ளுறையாகிய இது, உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின், இதனை உவமையென்றார். உள்ளுறையுவமை யென்புழி உவமை என்பது ஒப்பினாலாயபெயர். உவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் இதனை உவமப்போலி யெனவும் வழங்குவர் தொல்காப்பியர். 24. உவமப் போலி ஐந்தென மொழிப. இளம்பூரணம் என்--எனின். இதுவுமோர் உவமைவிகற்பங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) உவமையைப் போன்று வருவன ஐந்தென்று சொல்லுவர் என்றவாறு. அவையாவன இதற்குமையில்லை எனவும், இதற்கிதுதானே யுவமை எனவும், பலபொருளினு முளதாகிய வுறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பல பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப்பொருளோடு உவமித்து வருவனவும்.1 உதாரணம் நின்னோர் அன்னோர் பிறரிவர் இன்மையின் மின்னெயில் முகவைக்கு வந்திசிற் பெரும (புறம். 373) என்றும், மன்னுயிர் முதல்வனை யாதலின் நின்னோர் அனையைநின் புகழொடு பொலிந்தே (பரிபா.4) என்றும், நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள் நாங்கள் எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த விட்டாற் சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால் பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்த மானாள் என்றும், நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் வந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை (பதிற்றுப். 14) என்றும், வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன் ஈரத்து ளின்னவை தோன்றின் நிழற்கயத்து நீருட் குவளைவெந் தற்று (கலித்.41) என்றும் வரும். பேராசிரியம் இது மேற்கூறிய உள்ளுறையுவமை ஐவகைப்படுமென்கின்றது. (இ - ள்) உள்ளுறையுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் (எ - W). அவையைந்துமாமாறு முன்னர்ச் (300) சொல்லுதும்: இதனது பயம்1 ஏனையுவமத்துக்கு நிலைக்களம் ஐந்து ஓதினான் அவ்வாறே இதற்கு நிலைக்களம் ஓதாது (305) அவை போறலின் ; அவையே நிலைக்களமாமென்றலும் ஏனையுவமத்துள் ஒரு சாதியோடு ஒரு சாதியினை--உவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறை யுவமத்திற்கு அமையுமென்றலுமென்பது. (24) ஆய்வுரை இது மேற்குறித்த உள்ளுறையுவமம் ஐந்து வகைப்படும் என்கின்றது. (இ--ள்) உவமப்போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்து வகைப் படும் என்பர் ஆசிரியர் (எ - று) அவையாவன வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றிவரும் உள்ளுறைகள் என்பது அடுத்துவரும் நூற்பாவில் விரித்துரைக்கப்படும். 25. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் உருஉந் திறந்த வென்ப இளம்பூரணம் என்--எனின். மேலதற்கோர் புறனடை. (இ - ள்) மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறும்வழிச் சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க் கூறவேண்டும் என்றவாறு. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல் பயனானாதல், உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து, பிறவு மன்ன.1 (25) பேராசிரியம் இது, மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது. (இ-ள்.) வினைபயன் மெய் உருவென்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும் (v-W). உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பென்ப வாகலானும் மெய்யுவமமெல்லாம், உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மைய வென்றாகும் அவ்வாறு கூறினானென்பது. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் என்றதனான் ஏனை யுவமத்தினும் உள்ளுறை யுவமமே செய்யுட்கும் பொருளிலக் கணத்திற்குஞ் சிறந்த தென்பது. அவை வருமாறு: கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வ னீன்றவெம் முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே (ஐங்குறு. 65) என்பது Éidítk¥nghÈ; என்னை? தாமரையினை விளைப்ப தற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்கு மூரனென்றாள். இதன் கருத்து அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்றமைக்கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றனம் அதுபோல வென்பதாகலான் உவமைக்குப் பிறிதொரு பொருள் எதிர்ந்து உவமஞ் செய்யாது ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ளவைத்தலின் இஃது உள்ளுறை யுவமமாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசிகளையுந் தொழிலோடு விருந்தோம்புதற் றொழில் உவமங் கொள்ள நின்றமையின் வினையுவமப் போலியாயிற்று. இங்ஙனங் கூறவே இதனை இப்பொருண்மைத் தென்பதெல்லாம் உணருமாறென்னை யெனின் முன்னர்த், துணிவொடு வரூஉந் துணிவினோர்கொளினே (தொல்.பொருள்.298) எனல் வேண்டியது இதன் அருமை நோக்கியன்றே யென்பது. அல்லாக்காற் கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்புபசி களையும் பெரும்புன லூர என்பது பயமில கூறலா மென்பது. கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே என்பது, gaîtk¥nghÈ! இதனுள் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக் கேதுவாகிய தொன்று விளங்கக் கூறியதிலளாயினும் இழிந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கு மெனவே அவற்றிற்கும் இழிபுயர்வாமென்ப தொன்றில்லை எல்லாரும் இன்பங் கோடற்குரியர் தலைமகற் கென்றமையின் யாமும் பரத்தையரும் அதற்கு ஒத்தன மென்றமையின் அவை கூறினாளென்பது.1 நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே (ஐங்குறு. 51) என்பதும் அது. நீருறை கோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப்பெடை நினைந்து கடுஞ்சூலான்வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும், அதுபோல நின்மார்பு நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளுமென்றவாறு, புளிங்காய் வேட்கைத் தென்பது, நின் மார்புதான் இவளை நயவாதாயினும் இவடானே நின்மார்பை நயந்து பயம்பெற்றாள் போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற் பயத்தளாகும்; புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாறு போல என்பது. ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொடு ஒன்றேன் தோழி யொன்றி னானே (குறுந். 208) என்பது bkŒítk¥nghÈ; என்னை; மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினே னென்றமையின். வண்ண வொண்டழை நுடங்க வாலிழை யொண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணுறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே (ஐங்குறு.73) இஃது, cUîtk¥nghÈ. நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாந் தண்ணென்றதெனக் கூறிய வழி, அத்தடம்போல இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாளென்பது கருதியுணரப்பட்டது; அவளொடு புனல் பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாளென்பது கருத்து. இது நிறமன்றாலேனின் நிறமும் பண்பாகலின் அந்நிறத்தோடு நிறமல்லாத பண்புங் கொள்ளப்படுமென்பது வகை பெறவந்த உவமத்தோற்றம் (தொல். பொருள். 276) என்புழிக் கூறினானென்பது. பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர எந்நலந் தொலைவ தாயினுந் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே (ஐங்குறு.63) என்பது, ãw¥òtk¥nghÈ. நல்ல குலத்திற பிறந்தும் இழிந் தாரைத் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டலென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடு பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையின் பரத்தையர் பிறப்பு இழிந்தமையுந் தலைவி பிறப்பு உயர்ந்தமையுங் கூறி அவன் பிறப்பின் உயர்வுங் கூறினமையின் இது ãw¥òyk¥nghÈahƉW. இவையெல்லாங் கருதிக் கூறிற் செய்யுட்குச் சிறப்பா மெனவும், வாளாது நீர்நாய் வாளை பெறூஉ மூரனென்றதனான் ஒரு பயமின்றெனவுங் கொள்க. பிறப்பொடு வரூஉந் திறந்த வென்றது தலைமகனால் இவ்வாறு திறப்பாடு வேறுமுள வென்பதூஉங் கொள்க.1 அவை, தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப, அதனாற் றன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே (ஐங்குற. 41) என்றவழித், தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை யென்பது இன்னுந்2 தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று. வெண்பூம் பொய்கைத்து அவனூரென்பது தலைமகள் பசப்புநிறம் பற்றி உவமையாயிற்று. ஆதலான் வினையுவமமும் உருவுவமும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்குவருதலும் உடையவென்பது. அவை தன் பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு...bgh‹ போற் செய்யு மூர்கிழ வோனே என்றவழி,3 இன்னதிறத்தனென்wதனானே1இத்தன்மைத்தாகிaஊரனையாளென¢சொல்லுதலுந்,தலைவனூரின்கணுள்ளdசொல்ல¤தலைவற்கேயன்றி¤தலைவி¡கேற்wஉவkதோன்ற¢செய்தலுமெdஉவம§கூறிaவÊஉள்ளுறையுவம§கோடலும்,பிறவாWவருவனவுsவாயினு«எல்லா§கொள்க. தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவள் (ஐங்குறு.55) என்பது அவனூரனையாளென வந்தது. வெண்பூம் பொய்கைத்து அவனூர் (ஐங்குறு.41) எனத் தலைவனூரின் உள்ளதொன்றனால் தலைவிக்குவமையே பிறப்பித்த வாறாயிற்று.2 அல்லாக்கால், வெள்ளை யாம்ப லடைகரை என்றதனாற் பயமின்றென்பது. (25) ஆய்வுரை இஃது உவமப்போலி ஐந்தாமாறு இவையெனக்கூறகின்றது. (இ-ள்) கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய அவ்வுள்ளுறை யுவமத்தின் இயல்பினை ஆராயின் வினையினாலும் பயனாலும் வடி வத்தாலும் வண்ணந்தாலும் பிறப்பினாலும் புலப்பட்டுவரும் கூறுபாடுகளையுடைய என்று கூறுவர் ஆசிரியர்- (எ-று.) பொய்கைப்பள்ளி (63) எனவரும் ஐங்குறு நூற்றுப்பாடல், பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகளை நோக்கித் தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன்கண், பொய்கையாகிய தூய இடத்திற்பிறந்த நீர்நாயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் மறுநாளினும் அதனையே விரும்பிப்பெறும் ஊருக்குரிய தலைவனே எனத் தலைவனை அழைக்குமுகமாக, அத்தலைவன் நல்லகுலத்திற் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தை யரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப் பற்றி வந்த உள்ளுறையுவம மாகும். இவையெல்லாங் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாதலும், இவ்வுட்கருத்தின்றி நீர்நாய் வாளை பெறூ உம் ஊரன் எனவறிதே கூறின் ஒரு பயனுமில்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் இவ்வுள்ளுறையுவமத்தால் திணையுணருமுறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என் பனபற்றி வரும் ஊள்ளுறையுவமைகளும் இவ்வாறே கருதியுணரப் படும். 26. கிழவி சொல்லின் அவளறி கிளவி. இளம்பூரணம் என்--எனின். மேற்சொல்லப்பட்ட உவமை கூறுவார் பலருள்ளுந் தலைமகட்குரியதோர் பொருள் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உவமைப்பொருளைத் தலைமகள் கூறில் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும் என்றவாறு.1 எனவே தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு. உதாரணம் தலைமகள் கூற்றுட் கண்டுகொள்க. (26) 27 தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது. இளம்பூரணம் என்--எனின். இது தோழியுவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தோழி உவமைசொல்லின் அந்நிலத்தினுள்ளன வன்றிப் பிறநிலத்துள்ளன. கூறப் பெறாள் என்றவாறு.2 உரையாது உவமம் என ஒருசொல் வருவிக்க. உதாரணம் தோழி கூற்றுட் காண்க. (27) பேராசிரியம் இது, மேற்கூறிய உள்ளுறையுவமைக் காவதோர் இலக்கணம். (இ - ள்.) ஐந்து வகைப்பட்ட உவமப்போலியும் பிறிதொடு படாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி அக்கூற்றுத் தலை மகட்குந் தோழிக்கும் உரித்தாங்கால், தலைவிக்காயின் அவனறியுங் கருப்பொருளானே செய்யல் வேண்டும்; தோழிக்காயின் அந்நிலத் துள்ளன வெல்லாஞ் சொல்லவும் பெறும்; பிறநிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப்பெறார் (எ - W). இதனது பயம் தலைமகள் இந்நிலத்துள்ளன வெல்லாம் அறியுந் துணைப் பயிற்சியில ளெனவும், அவளாயத்தாராயின் இந்நிலத்துள்ளன அறியச் சிதைந்த தின்றெனவும் கூறியவாறு.1 ஒன்றே னல்லே னொன்றுவென் (குறுந். 208) என்னும் பாட்டினுட், பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை மரம் படப்பையிலுள்ள 2 தாகலானுந் தன்னாற் பூக்கொய்யப்படு மாதலானும் அஃது அவளறிகிளவி யெனப்பட்டது. 3 தன் பார்ப்புத் தின்னு மன்பின் முதலை (ஐங்குறு. 41) என்பது தோழி கூற்று. என்னை? அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே தலைமகள் பெரும் பேதையாதலினென்பது.4 அதிகாரத்தானின்ற உள்ளுறையுவமை யென்பதனை அவளறி கிளவி யென்றதற்குப் பெயர்ப்பயனிலையாகவும், நிலம்பெயர்ந்துரையா தென்னும் முற்றுவினைக்குப் பெயராகவும் வேறு வேறு சொல்லிக் கொள்க.1 (26) ஆய்வுரை இவ்விரு நூற்பாக்களையும் ஒன்றாகக்கொண்டு உரை வரைந்தார் பேராசிரியர். இது மேற்குறித்த உள்ளுறை கூறுதற்குரியாருள் தலைவியும் தோழியும் அடங்குவர் எனவும் அவர் கூற்றிலமைதற்குரிய பொருட்பகுதி இவையெனவும் உணர்த்துகின்றது. (இ--ள்) தலை மகள் உள்ளுறையுவமங்கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும். njhÊ TWthshÆ‹ mtŸ T‰¿š mtŸ gÆ‹w Ãy¤âš cŸsdt‹¿¥ ãw Ãy¤JŸsd ïl«bgw¢ brŒíŸ brŒa¥bgWjš ïšiy.(v--W) எனவே, தலைவி, தான்வாழும் நிலத்துள்ளனவெல்லாம் அறியுமளவுக்குப்பயிற்சியில்லாதவள் எனவும், அவளுடைய தோழி முதலிய ஆயத்தில் உள்ளவராயின் தாம் வாழும் நிலத்தில் உள்ள வெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்புடையராதலின் அந்நிலத் துள்ளன பற்றியறிதல் தவறில்லை யெனவும் புலப்படுத்தியவாறாம். 28. கிழவோற் காயின் உரனொடு கிளக்கும் இளம்பூரணம் என்--எனின். இது தலைமகன் உவமை கூறுமாறு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைவன் உவமை கூறுவானாயின், அறிவொடு கிளக்கப்படும் என்றவாறு.2 அன்றியும், உரனொடு கிளக்கு முவமையெனப் பெயரெச்ச மாக்கிப் பெயர் வருவித்தலுமாம். உதாரணம் தலைவன் கூற்றுட் காணப்படும். (28) 29. ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத நற்றாய் செவிலி முதலாயினரர்க்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப்படா தென்ற வாறு1. (29) பேராசிரியம் கிழவோற் காயி னுரனொடுகிளக்கும் ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே. இதுவும் அது. (இ-ள்.) கிழவோன் சொல்லும் உள்ளுறையுவமந் தன்னு டைமை தோன்றச் சொல்லப்படும்.2 ஏனோரெனப்பட்ட பாங்கனும் பாணனு முதலாயினோர் சொல்லுங்காலை மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது தாந்தாம் அறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத பொருளானும் அந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமை சொல்லப் பெறுப (v-W). கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் நுந்தை நும்மூர் வருதும் ஒண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே (ஐங்குறு.92) என்றவழித், தாய்போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க. ஒழிந் தோராயின் வரையறையின்மையிற் காட்டாமாயினாம். அவை வந்துழிக் (கலி. 69) காண்க. (27) ஆய்வுரை இவ்விரு சூத்திரங்களையும் ஒன்றாகக் கொண்டு உரை வரைந்தார் பேராசிரியர். இது, தலைவன் உள்ளுறையுவமம் கூறும் முறையினையும் இங்ஙனம் உள்ளுறையுவமம் கூறுதற்குரிய இடவரையறை மேற் குறித்த தலைவி, தோழி, தலைவன் ஆகிய இம்மூவருமல்லாத ஏனைப் பாங்கன் பாணன் முதலிய அகத்திணைமாந்தர்க்கு இல்லை யென்பதனையும் உணர்த்துகின்றது. (இ-ள்) தலைவன் உள்ளுறையுவமம் கூறுங்கால் தனது உரனுடைமை தோன்றச் சொல்லப்பெறும் ஏனையோர்க்காயின் இடம் வரையப்படாது. (எ-று.) தலைமகன் தன் உரனுடைமை தோன்றச் சொல்லுதலாவது, எந்நிலத்துக்கருப்பொருள் நிகழ்ச்சிகளையும் உள்ளவாறுணர்ந்த தனது பயிற்சியுணர்வு புலப்பட விரித்துரைத்தல். ஏனையோர்க்காயின் இடம் வரையப்படாதென்றது. பாங்கன் பாணன் முதலிய ஏனையோர் உள்ளுறையுமங்கூறுங்கால், தாம் தாம் அறிந்த சொல்லாலும் நிலம் பெயராத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறை யுவமை சொல்லுவதற்குரியர் என்பதாம். 30. இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் உவம மருங்கில் தோன்றும் என்ப இளம்பூரணம் என்--எனின். இது தலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மகிழ்ச்சி பயக்குங் கூற்றும் புலவிபயக்குங் கூற்றும் உவமப்பக்கத்தால் தோன்றும் என்றவாறு.1 மாரி யாம்பல் அன்ன கொக்கின் பார்வ வஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் கயிறிரி யெருத்திற் கதம்பூந் துறைவ (குறுந். 117) என்றது தலைமகள் உவமை கூறியவழி நின்ற பெண்டிர் 1 தடுப்பக் கரியிறி யெருது போலப் போந்தனை யெனத் துனியுறு கிளவி வந்தது. ... ... .... வானத் தணங்கருங் கடவு ளன்னோள் நின் மகன் தா யாதல் புரைவதால் எனவே (அகம்.16) என மகிழ்ச்சிபற்றி வந்தது. பிறவும் அன்ன. பேராசிரியம் இதுவும் மேலதற்கே யாவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேற் கூறப்பட்ட உள்ளுறையுவமம் இன்ப துன்பங்கள் தோன்றச் சொல்லவும்படும் (v-W). கழனி மாஅந்து விளைத்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன் (குறுந்.8) என்பது, பலவகை யின்பமும் வருந்தாது பெறுவரென்பதற்கு உவமையாகி வருதலின் இனிதுறு கிளவி யெனப்பட்டது. தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத்து (ஐங்குறு.24) என்பது, தலைமகன் கொடுமை கூறினமையின் துனியுறுகிளவி யாயிற்று. இவ்விரு பகுதியும் படச் செய்யப்படும் மேற்கூறிய உள்ளுறையுவமமென்பது இதன் கருத்து 2. மருங்கு என்னும் மிகையானே ஏனையுவமத்தின்கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும்; அவை, மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே (குறுந்.71) என்பது, இனிதுறு கிளவி, கராத்தின் வெய்யவெந்தோள் என்பது, துணியுறுகிளவி. (28) ஆய்வுரை இது மேற்குறித்த உள்ளுறையுவமையில் இடம்பெறும் பொருள் வேறுபாடு பற்றிய சொல்வகை உணர்த்துகின்றது. (இ-ள்) இன்பத்தினை விளைக்குஞ்சொல்லும் துன்பத்தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றும் எ-று. இறுதுறுகிளவியாவது, இன்பவுணர்வாகிய மகிழ்ச்சியினைப் புலப்படுத்துஞ் சொல். துனியுறுகிளவியாவது, பிரிவும் புலவியும் ஆகிய துன்பவுணர்வினைப் புலப்படுத்துஞ் சொல். 31. கிழவோட் குவமை ஈரிடத் துரித்தே இளம்பூரணம் என்-எனின். தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்டிடத்தும் உரித்து என்றவாறு.1 எனவே, இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்ற வாறாம் (31) பேராசிரியம் இஃது, அவ்வுள்ளுறையுவமையை வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தலைமகள் இரண்டிடத்தல்லது உள்ளுறையுவமை சொல்லப்பெறாள் (எ-று). இரண்டிடமென்பன: மருதமும் நெய்தலும் அந்நிலத்துப் பிறந்த பொருள் பற்றியல்லது உள்ளுறையுவமஞ் சொல்லுதல் கிழத்திக்குரித்தன்றென்பது கருத்து. இவ்விடத்து உரிமை யுடைத் தெனவே குறிஞ்சிக்கண் அத்துணையுரித்தன் றென்றவாறு.1 தாமரை வண்டூது பனிமல ராருமூர யாரை யோநிற் புலக்கேம் (அகம். 46) என்றவழி வண்டூது பனிமலரெனப் பிறர்க்குரிய மகளிரெனவும் அவரை நயப்பாயெனவும் உள்ளுறையுவமம் மருதத்துக்கண்வந்தது. அன்னை வாழிவேண் டன்னை கழிய முண்டக மலருந் தண் கடற் சேர்ப்பன் என்தோள் துறந்தன னாயின் என்னாங் கொல்லவ யைந்தோள் தோளே (ஐங்குறு. 108) என்பது beŒjš. இதனுட் கழியமுண்டக மலரும் என முள்ளுடையதனைப் பூமலருமென்று உள்ளுறுத்ததனான் இருவர் காமத்துறைக்கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென்றா ளென்பது. என்தோள் துறந்தனன் என்பது, முள்ளுடை மையோ டொக்க, என்னாங் கொல்லவ யைந்தோள் தோள் என்றவழி அவன் அன்பிற்றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சியோ டொப்பிக்கப்படும். பிறவும் அன்ன. குன்றக் குறவன் புல்வேய் குரம்பை மன்றா டிளமழை மறைக்கு நாடன் புரையோன் வாழி தோழி விரைபெய லரும்பனி யளை இய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே (ஐங்குறு. 252) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல வாடை செய்யும் நோய் தீர்க்க வந்தானென்று உள்ளுறையுவமஞ் செய்தவாறு கண்டுகொள்க.1 இனிக், கிழவோட் குவமம் பிரிவிடத்துரித்து என்பது பாடமாக ciu¥ghUKs®. யாதானுமொரு நிலத்தாயினும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறப்பெறுங் கிழத்தி யென்பது இதன் இருத்து. பெருந்தண்வாடையின் முந்து வந்தோனென்பது பிரிவின்றாகலின் ஈரிடமென்றலே வலிதென்பது. (29) ஆய்வுரை இது, தலைவி உள்ளுறை கூறுதற்குரியசூழ்நிலையிதுவென உணர்த்துகின்றது. (இ--ள்) தலைவி கூறுதற்குரிய உள்ளுறையுவமை இரண்டிடத்து உரியதாகும் எ--று. இரண்டிடமாவன மேற்குறித்த இனிதுறுகிளவியுந் துனியுறு கிளவி யுமாகிய இரண்டிடங்கள். இவ்விரு நிலைகளில் தலைவி உள்ளுறை கூறுதற்குரியன் எனவே இவ்விரண்டுமல்லாத ஏனைய நிலைகளில் தலைவி உள்ளுறையுவமம்கூறப்பெறாள் என்பதாம். 32. கிழவோற் காயின் இடம்வரை வின்றே.2 இளம்பூரணம் என்--எனின். தலைமகற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணுமாம் என்றவாறு.1 (32) பேராசிரியம் மேல் உரனொடு கிளக்கும் (தொல். பொருள் : 02) என்ற தல்லது இன்னவழிச் சொல்லப்பெறுந் தலைமகனென்றிலன், அதனான் அவற்கு எல்லா நிலனும் உரியவாமென்கின்றானென்பது 2 (இ - ள்) தலைமகற்கு இடவரையறை இல்லை (எ - W). வரையறையில்லவற்றுக்கு வரையறை கூறாமே மூடி, யாவோவெனின், அங்ஙனமாயினுங் கிழத்திக்குந் தோழிக்கும் இடம் வரையறுத்ததனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலைமகற்கும் இடம் வரையறை யுண்டுகொலென்று கருதிற் கருதற்கவென்றற்கு இது கூறினானென்பது.3 (30) ஆய்வுரை இது மேற்குறித்த உள்ளுறையுவமையில் இடம்பெறும் பொருள் வேறுபாடு பற்றிய சொல்வகை உணர்த்துகின்றது. (இ - ள்) இன்பத்தினை விளைக்குஞ்சொல்லும் துன்பத்தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றும் எ - W. இனிதுறுகிளவியாவது, இன்பவுணர்வாகிய மகிழ்ச்சியினைப் புலப்படுத்துஞ் சொல். துனியுறுகிளவியாவது, பிரிவும் புலவியும் ஆகிய துன்பவுணர்வினைப் புலப்படுத்துஞ்சொல். 33. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான். 1 இளம்பூரணம் (இ-ள்) தோழியுஞ் செவிலியும் உவமை கூறுங்காற் பொருத்து மிடம் பார்த்துக் கூறுதற்குரியர் கேட்டோர் கொள்ளு நெறியான் என்றவாறு. பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்டமருள் படு பூம்பொழில். எனவரும். 2 பிறவுமன்ன. nk‰fh£odt‰WŸ f©L bfhŸf.(33) பேராசிரியர் இது, தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுமிட முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறையுவமங் கூறப்பெறுப தோழியுஞ் செவிலியும் (v-W).3 காலமுமிடனும் பொருந்துதலென்பது வெளிப்படக் கிளயாது முன்னத்தான் மறைத்துச் சொல்ல வேண்டிய வழி அவ்வாறு சொல்லப்பெறுப அவரு மென்றவாறு.4 இங்ஙனங் கூறவே. ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே (302) என்றவழி, எல்லாரும் உள்ளுறையுவமஞ் சொல்லப் பெறுவரென்பது பட்டது. அதனை நற்றாயும் ஆயத்தாருந் தந்தையுந் தன்னையரும் உள்ளுறையுவமை கூறப்பெறாரெனவுந், தோழி கூறின் நிலம் பெயர்ந்துறையாத பொருளான் ஒருவழிக் கூறுமெனவும் செவிலிக்காயின் இடம் வரைவின் றெனப்பட்டவகையாற் பொருந்தும் வழிக் கூறுதற்குரியளெனவுங் கூறினானாம் இச் சூத்திரத்தானென்பது. 1 கொள்வழி யென்றதனால் தோழிக்குப் போல நிலம் பெயர்ந்துறையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கு முரித்தென்பது கொள்க. மற்றிவையெல்லாம் அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதிய தென்னை? புறப்பொருட்கு வாராதனபோல எனின், ஆண்டுவருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினானென்பது.2 வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந (புறம்.52) என்றக்காற் பகைவேந்தரை வென்றிகொள்ளுங்கால் அவர்தாமே தத்தம் பொருள் பிறர்க்களிப்பாரென்னும் பொருள் தோன்றினும் தோன்றுமென்பதல்லது ஒருதலையாக உள்ளுறை யுவமங் கோடல் வேண்டுவதன்று; என்னை? தாய்சாப் பிறக்கும் புள்ளிக் சள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர் (ஐங்குறு.24) என்றாற்போலக் கூறாது அந்நாட்டுக கருங்களமர் முதலாயினார் வருந்தாமற் பெறும் பொருள் பிறநாட்டார்க்கு விருந்துசெய்யத் தருமென்று அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது.3 தோழி பொருந்தியவழிக் கூறுமாறு முன் காட்டப்பட்டன. செவிலி பொருந்து வழிக் கூறுவனவுங் கண்டுகொள்க, இலக்கண முண்மையின் அவையும் உளவென்பது கருத்து. (31) ஆய்வுரை இது, தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுதற்குரிய இடம் உணர்த்துகின்றது. (இ-ள்) தோழியுஞ் செவிலியும் காலத்திற்கும், இடத்திற்கும் கூறக்கருதிய பொருட்கும் பொருந்து மாறு நோக்கிக் கேட்போர் உய்த்துணர்ந்து கொள்ளுதற்குரிய நெறியால் உள்ளுறை யுவமம் கூறுதற்குரியர் எ-று. பொருந்துவழிநோக்கிக் கொள்வழியான (உள்ளுறையுவமம்) கூறுதற்குரியர் என இயையும், உள்ளுறையுவமம் என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. இவ்வாறு அகத்திணையொழுகலாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற்குரியார் இன்னின்னார் எனவிதந்து எடுத்தோதவே இங்குக் கூறப்படாத தலைமகள் தாயாகிய நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்பெறார் என்பதும், இங்ஙனம் உள்ளுறையுவமங்கூறுதல் அகத்திணை யொழுகலாற்றிற்போலப் புறத்திணையொழுகலாற்றில் அத்துணை இன்றியாமையாத தன்றாதலின், இவ்வுள்ளுறை யுவமத்தினை அகத்திணைக்கே சிறப்புரிமையுடையதாகத் தொல்காப்பியனார் எடுத்தோதினாரென்பதும் நன்கு புலனாம். 34. வேறுபட வந்த உவமைத் தோற்றம் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல். இளம்பூரணம் என்--எனின். மேலனவற்றிற் கெல்லாம் புறமமையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறு பட்டுவந்த உவமைத்தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும் வழிக் கொளுவுக என்றவாறு. பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில் எனவரும்.1 பிறவுமன்ன. பேராசிரியம் இது, மேலெல்லாம் இருவகையுவமம் கூறி இன்னும் ஏனையுவமப் பகுதியே கூறுவான் எய்தாததெய்துவித்தது. (இ-ள்) வேறுபடவந்த உவமத்தோற்றம்- வேறுபாடு தோன்ற வந்த உவமைச்சாதி; தோற்றமெனினும் பிறப்பெனினுஞ் சாதி யெனினும் ஒக்கும்;2 கூறிய மருங்கிற் கொள்வழி கொளாஅல்-அங்ஙனம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியாவே கொள்ளுமிடனறிந்து கொளுத்துக.3 (v-W). கொளுவு தலென்பது கொளா அல் என்பதாயிற்று. வேறுபடவருதலென்பது *உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமைகூறாது பெயர்போல் வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்த வழிப் பிறிதோருவமை நாட்டுதலும். உவமையும் பொருளும் முற்கூறி நிறீ இப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், **ஒவ்வாக்கருத்தினான் ஒப்புமை கோடலும், உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாகிய பொருட்குச் சில அடைகூறி அவ் அடையானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியுங் கூறுதலும், இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்தலும், இன்னோரன்ன வெல்லாம் வேறுபடவந்த உவமத்தோற்றம் எனப்படும். இவற்றைக் கூறிய மருங்கிற் கொளுத்துதல் என்பது முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறையுவமத்தின்பாலும் படுத்து உணரப்படுமென்பது. ஏனையுவமத்தின் பாற்படுத்த லென்பது:விணை பயன் மெய் உரு என்ற நான்கும்பற்றி (276) வருதலும் அவற்றுக்கு ஓதிய ஐவகை நிலைக்களனும்பற்றி (279-280) வருதலுமெனக் கொள்க. உள்ளுறையுவமத்தின் பாற்படுத்தலென்பது; இவ்வேனையுவமம் போல உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்க வாராது குறிப்பினாற் கொள்ளவருதலின் இக்கருத்தினானே இதனை ஈண்டு வைப்பானாயிற்று வரலாறு: வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப வொடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்ஙன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் *பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே (புறம்.8) என்னும் பாட்டினுள் கடந்தடு தானைச் சேரலாதனை என்னுந் துணை உவமத்திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது.1 என்னை? வெஞ்சுடர் வழி என்னுந் துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ள வைத்தானென்பது.2 இனிப் பொழுதென வரைதி என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது, என்னை? வெஞ்சுடர் வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு பழிப்பான் 3 பொருளே உவமஞ் செய்தனர் மொழியினு(234) மென்றதனாற் பொருளினை உவமையாகக் கூறாது உள்ளுறையுவமம் போலக் கொள்ள வைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள், வையங் காவலர் வழிமொழிந் தொழுக. என்றான். வழி மொழிதலென்பது: வேற்றரசர்க்குத் தம் தன்மையென வேறின்றித் தன்னகப்படுத்தல்; ஆகலான், தத்தம் ஒளியொடு படுத்தது,ஒழிந்த கோளுஞ் செல்லத் தானுஞ்செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங்கூறிச் குறிப்புப்பட வைத்தானென்பது. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது எனவே, இன்பநுகர்வு முற்றுச்சிறப்பில்லாக் கட்டுரை யெய்தானெனவும் அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர் மகளி ரொடு போகங்துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர்மறுத்துக் கொள்ளவைத்தான். சிறப்பின்மையென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ்செய்யாது உரோகிணிமேற் கழிபெருங் காதலனெனப்படுதல் போல்வன. இடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும் மதிமண்டல மென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும், ஒடுங்காவுள்ளம் எனவே, அம்மதியம் தேய்ந்தொடுங்குமென்பது கொள்ளப்படும். ஓம்மா வீகை எனவே, நாடோறும் ஒரோவொரு கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றால் தருவதல்லாது தானுடையவெல்லாம் ஒருகாலே கொடாத மதியமெனப்படும். கடந்தடு தானை எனவே, மதிக்குத் தானையாகிய தராகையெல்லாம் பகைக்கதிராகிய பரிதிமண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர்மறுத்துக் கொள்ளப்பட்டன. இனிப், பொருட்குரிய அடையும் அவ்வாறு எதிர்மறுத்துக் கொள்ளப்படு மென்றவாறு, வீங்குசெலன் மண்டில மெனவே, கடையாயினார் கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத் தலைவன் தலையாயினார் கதியிற் செல்லுமென்றான், பொழுதென வரைதி யெனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி என்றதனான் இவன் பொழுது செய்யானெனவும், புறக்கொடுத் திறத்தி யெனவே, தோற்றோர் போன்று ஒளி மழுங்கிக் செறிகின்றாயெனவும், விளங்கித்தோன்ற வென்பதனால் தொடர்கின்ற சுடர் போல விளங்கிப் பிறர் தோற்றோடக்காயும் இவனெனவும், மாறி வருதி யெனவே, திங்கடோறும்மாறிப் பிறத்தி யென்பதனான் இவன் நிலைபெற்றானெனவும், மலை மறைந் தொளித்தி யெனவே மலைசார்ந்தவழித் தோன்றாயென் பதனான் இவன் தன்னாட்டு மலைமீக் கூறுமெனவும், அகலிரு விசும்பினானு மெனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடைய னெனவும், பகல்விளங்காய்எனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபடுதலின் வேறுபட வந்ததாயிற்று: மற்றையவும் அன்ன. இக்கூறிய அடை யெல்லாம், வினை பயன் மெய்உருவெனக் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளுவுவதாகக் காட்டுவன வற்றிற்கும் இஃதொக்கும். கண்ண னவனிவன் மாறன் கமழ் துழாய்க் கண்ணி யவற்கிவற்கு வேம்புதார்--வண்ணமும் மாய னவனிவன் சேயன் மரபொன்றே ஆய வைனிவன் கோ என்பது,பெயந்தாரு முதலாயினபற்றி மாயனோடு உவமங்கருதி மறுத்துரைத்தவாறு.1 பெயரென்பது பொருளுணர்த்துலின் அதனை வடிவின்பாற் படுத்துணர்க. அடிநோக்கி னாழ்கடல் வண்ணன்றன் மேனிப் படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன்-- முடிநோக்கித் தேர்வளவ னாத றெளிந்தேன் றன் சென்னிமேல் ஆரவங்க றோன் றிற்றுக் கண்டு (தண்டியலங்-பா.39) என்பதனுள், ஆழ்கடல் வண்ணனையுங் கொன்றைத்தாரோனையும் உவமை கூறியவற்றை2 மறுத்துத் தேர்வளவனெனத் தெளிந்தேனெனப் பொருளையே நாடுதலின் அஃது உவமம் வேறுபட வந்ததாயிற்று. இந்திர னென்னி னிரண்டேகண் ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை--யந்தரத்துக் கோழியா னென்னின் முகமொன்றே கோதையை ஆழியா னென்றுணரற் பாற்று (முத்தொள்ளாயிரம்) என்பதனுள் இந்திரனையும், இறையோனையும், முருகனையும்,ஒப்பு மறுத்து நெடியோனை உவமங்கூறலின் ஒப்புமை மறுத்துப் பிறிது நாட்டியது. சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமகனாங் கொற்றப்போர்க கிள்ளியுங் கேழொவ்வார்--பொற்றொடீஇ யாழி யுடையான் மகன்மாயன் சேயனே கோழி யுடையான் மகன் (தண்டி-பா-52) என்பதனால், உவமையுங் பொருளும் முன் ஒருங்குகிறீ இப்பின்னர் ஒவ்வாமை கூறுதலின் இதுவும் பின்னும் வேறுபடவந்ததாயிற்று. புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையான் வேறு படுவ--புனனாட னேற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன் ஏற்றிரந்து கொண்டமையா னின்று (தண்டி-பா-53) என்பதும் அது. ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே (புறம்.94) என்னும் பாட்டினுள் உவமையாகிய பொருளினை யானையுங் கடாமுமென இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள் வெண்கோடுகழாலின் நீர்த்துறைபடியுமென்னும் அடைகூறி ஊர்க்குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் கடாஅத்திற்குச் சொல்லாமையின் இதுவும் வேறுபட வந்த உவமத்தோற்ற மெனப்பட்டது. முதிர்கோங்கின்முகையென முகஞ்செய்த குரும்பயெனப் பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிள முலை (கலி.56) என்றவழி, முதிர்கோங்கின் முகையும் முற்றிய குரும்பையையும் பெரியவாகலின் அவைபோலப் பெருத்த நின் இளமுலையென்றல் ஒத்தது, பெயறுளிமுகுளஞ் சிறிதாகவும் இவற்றோடு அதனை உடன்கூறி அப்பெயறுளி முகுளத்திற்கில்லாத பெருமைக்குணம் பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபட வந்த உவமையாயிற்று. மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்டதில் (குறள்.1071) என்பது ஒவ்வாப்பொருளை ஒப்புமைகொண்டது. என்னை? மக்களைக் கயவர் ஒவ்வாரென்னுங் கருத்தினான் மக்கள் போல்வர் கணவரென்றமையின் அதுவும் வேறுபட வந்த உவமையாற்று. நெடுந்தோட்டிரும்பனை நீர்நிழல் புரையக் குறும்பல முரிந்த குன்றுசேர்சிறுநெறி என்பதனுள், உவமையாகிய நிழல் பொருட்கெய்தியது உவம வினையன்றே, அதற்கு நெடுந்தோடும் பெருமையும் அடையாகக் கூறினான்; கூறவே, பனைநிழலோடொக்குங் குன்றஞ்சேர் சிறுநெறி முடிந்தவழிச் சென்றுபுகும் ஊர்க்குவமை நெடுந்தோடடென்று கொள்ள வைத்தமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. மண்படுதோட் கிள்ளி மதவேழ மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்- விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியுந் தன்னுருவந் தேயுந் தெளிவிசும்பி னின்று (தண்டி-பா.58) என்பதனுள், உவமானத்தினை உவமேயாக்கி அதனையே விலக்கினார். என்னை? வெண்குடையென்று யானை குத்துமென்று மதியினைக் குடையுடனொப்பிப்பான் மதியினைக் குடையாகவே கூறித் தேயுந்தெளிவிசும்பினின்று என்பதனாற் குடையோடு உவமை கூறியதை விலக்கினமையின்1 அதுவும் வேறுபடவந்த உவமத் தோற்றமாயிற்று. அகர முதல வெழுத்தெல்லாம் ஆகி பகவன் முதற்றே யுலகு என்றவழி இரண்டு பொருள் வேறுவேறு கூறியதன்றி, அகர முதல் எழுத்தெல்லாம் அதுபோல என்றானும், ஆதிபகவன் முதற்று உலகம் அதுபோல என்றானும் ஒன்றாகத் துணியுமாற்றான் உவமையும் பொருளுங் கூறாமையின் அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று; பிறவும் அன்ன. இவை ஏனையுவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம். ஆய்வுரை இஃது, உள்ளுறையுவமங்கூறுந்திறத்தின்கண் தலைவனுக் குரியதோர் மரபு உணர்த்துகின்றது. (இ-ள்) தலைமகனுக்காயின் (அவன்கூறும் உள்ளுறை இன்ன பொருட்கென்று) இடம் வரையறுக்கப்படுதல் இல்லை.எ-று. எனவே தலைவன் கூறும் உள்ளுறை எப்பொருட்கண்ணும் பொருந்தி வரும் என்பதாம். இது, மேற்குறித்த இருவகையுவமங்களுள் ஒன்றாகிய ஏனையுவமங்களுட் பல்வேறு மாற்றங்களையுடையனவாகக் காலந்தோறுங் கிளைத்துத் தோன்றும் உவமைப் பரப்பெல்லாம் அடங்கக்கொள்ளுமாறிதுவெனவுணர்த்துகின்றது. (இ-ள்) எடுத்தோதப் பட்ட இலக்கணங்களில் வேறுபாடுதோன்ற வந்த உவமப்பகுதிகளை அவ்வாறு வேறுபட வந்தனவேனும் மேற்கூறிய (ஏனையுவமம் உள்ளுறையுவமம் என்னும்) உவமப் பகுதியுடன் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருந்தக்கொள்க. உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர் முதலியன கூறுமளவில் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக்கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமைநாட்டுதலும், உவமையும் பொருளும் முற்கூறிநிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், உவமைக்கு இருகுணங்கொடுத்து வறிதே கூறுமிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடைமொழி மற்றொன்றற்குக் கூறாது விடுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக்கருத்தினால் ஒப்புமை கொள்ளுதலும்,உவமத்திற்கன்றி உவமத்திற்கேதுவாகிய பொருள் களுக்குச் சில அடைமொழிகூறி அவ்வடைமொழியானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதலும், இரண்டுபொருளாலே வேறு வேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ளவைத்தலும் ஆகிய இவை போல்வனவெல்லாம் வேறுபடவந்த உவமப் பகுதிகள் எனவும் இவையெல்லாம் வினை பயன் மெய்உரு என்னும் நான்கும் பற்றி ஏனையுவமத்தின் பாலும், உவமையும் பொருளுமாகி வேறு வேறு விளங்கவாராது குறிப்பினாற் கொள்ள வருதல்பற்றி உள்ளுறையுவமத்தின்பாலும் அடங்கப் பொருத்தவைத்து உணரப்படும் எனவும் இவற்றுக்கு எடுத்துக்காட்டுத்தந்து விளக்குவர் பேராசிரியர். பேராசிரியர் கூறும் இவ்விளக்கமும் எடுத்துக்காட்டுக் களும் தொல்காப்பிய உவமவியலுடன் பிற்காலத்துத்தோன்றிய அணியியலை ஒப்பிட்டு ஆராய்தற்குரிய நெறியினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும். 35. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. இளம் பூரணம் என்--எனின். இதுவு முவமைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு என்றவாறு1. கடந்தடு தானைச் சேர லாதனை (புறம்.8) என வரும். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள். 1120) என்பதுமது. (35) பேராசிரியம் இதுவும், ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரீஇக்கூறலும்1 ---ஒக்குமெனக் கூறாது ஒவ்வா தெனக் கூறுதலும், உம்மை இறந்தது தழீஇயிற்று; மரீஇய பண்பு-அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு (எ-று.) உதாரணம் : யாங்ஙன மொத்தியோவிலங்குசெலன் மண்டிலம் (புறம்.8) எனவும், மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலைவாழி மதி (குறள். 1118) எனவும் வரும். நின்னோ ரனையை நீ என்பதும் அது, இவற்றுள், யாங்ஙனம் ஒத்தியோவென்பது ஒவ்வாயென்னும் பொருட்டு. காதலை வாழிமதி; யென்றவழியும் யான் காதலியாமை யால் மதியமே அவள் வாண்முக மொவ்வாயென்றலின் ஒரீ இக் கூறிற்று. இதுவும் மரீஇய பண்பாகலானும் உள்ளுறை யுவமப்போலக் குறிப்பினான் உவமங்கோட லொப்புமையானும் ஈண்டு வைத்தானென்பது. பண்பென்றதனான் அதுவும் இலக்கணத் தோடொக்கும் என்றவாறு. இவற்றையும் வேறுபடவந்த உவமமென்னாமோவெனின், உவமையும் அவ்வழி மாறுபட வருமாறு2 உவமத்துக் கூறினான், உவமையின்மை கூறுதலும் உவமை யெனப்படுமென்றற்கு இது கூறினானென்பது. இவற்றுள்ளும் வேறுபட வந்த இலக்கணம் வேலைச்சூத்திரத்துள் அடங்கும். (33) ஆய்வுரை இஃது, ஏனையுவமத்திற்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ள்) உவமையை உவமிக்கப்படும் பொருளின்நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் உவமமரபாகும் எ-று ஒரீஇக் கூறல்-நீக்கிக் கூறல். ஒருவுதல் என்னும்பகுதிநீங்குதல், நீக்குதல் எனத்தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாதலின் ஈண்டு ஒரீஇக்கூறல் என்றது நீக்கிக் கூறல் எனப்பொருள் தந்துநின்றது. 36. உவமைத் தன்மையும் உரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. இளம்பூரணம் என்--எனின். இதுவு மது. (இ - ள்.) உவமிக்கப்படும் பொருளோடு உவமைதோன்ற வருதலேயன்றி யுவமையது தன்மை கூறலு முவமையாதற்குரித்து; பயனிலை பொருந்திய வழக்கின்கண் என்றவாறு. எனவே இவ்வாறு வருவது பயனிலை யுவமைக்கண் என்று கொள்க.1 பாரி பாரி யென்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனும் அல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (புறம். 107) இது பாரி போலும் பாரியது கொடைஎன்னாது இவ்வாறு கூறும் பொருண்மையும் உவமமாம் என்றவாறு. (36) பேராசிரியம் இஃது, எய்தாதது எய்துவித்தது; மேல் ஏனையுவமங் கூறுங் கால் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பக்கூறல் வேண்டுமென்றான், அவ்வாறன்றி உவமமுங் கொள்ளப்படுமென்றமையின். (இ-ள்.) உவமத்தன்மையும் உரித்தென மொழிப --- விகார வகையாற் பெருமையுஞ் சிறுமையும் ஒருபொருட்குக் கூறாது பட்டாங்கு உவமங்கூறுதலும்1 உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர்; பயனிலை புரிந்த வழக்கத்தான---அதனானும் ஒரு பயன் தோன்றச் சொல்லுத னெறிப்பாட்டின்கண் (எ-று.) அது, பாரி பாரி யென்று பல வேத்தி யொருவற் புகழ்வா செந்நாப் புலவர் (புறம். 107) என்னும் பாட்டினள் உலகளித்தற்கு மாரியும் உண்டென மாரியை உவமித்துச் சிறப்பித்துக்கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகியபாரியை உயர்த்துக்கூறாதான் போல இயல்பினான் உவமை கூறினானாம்;இது மாரிக்கும் பாரிக்கும்ஓரிழிவில்லை யென்னுந் தன்மைப்படக் கூறவே அவனுயர்வு கூறுதலிற் பயனிலை புரிந்த வழக்கெனப் படுமென்பது.2 கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதினன்னதீம்புழல்துய்வாய்உழுதுகாண்துளையவாகிஆர்கழல்பாலிவானிற்காலொடுபாறித்துப்பினன்னசெங்கோட்டியவின்நெய்த்தோர்மீமிசைநிணத்திற்பரிக்கும்... (அகம். 9) என்பதும், நீளuயிலவ¤தலங்குசிdபயந்jபூளைய«பசுங்காய்புடைவிÇந்தன வரிப்òறவணிலெhடுகருப்iபயாlதியாற்றwல்புரைíம்வெரிநுlக்கொழுமlல் வேற்றiலய‹னவைந்Eதிநெடுந்jக ரீத்திiலவேய்ªதவெய்ப்புwக்குரம்g”(பத்து¥. பெரும்பாண்.83.8) என்றாற்போல்வனவும் அது. கொல்வினைப் பொலிந்த (அகம்.9) என்பதனுள் இந்நிலத்தின்மக்கள்அம்பினைஉவமையாக்கிஆண்டையவாகியஇருப்பையின்பூங்கொத்தைஉவமிக்கப்படும்பொருளாக்கியும்உவமநிலத்திற்கேற்றவெண்ணெய்த்திரளொடுகழன்றபூவினைஉவமஞ்செய்தும்அந்நிலத்தியல்புகூறினமையின்அதுgயனிலைபுரிந்தtழக்கெனப்பட்டது.ãwî« mன்ன.ctik¤j‹ikí«’ என்ற உம்மையான் உவமத்தன்மையே யன்றி வாளாது தன்மை கூறுதலும் அந்நிலத்திற்கே பயனிலை யெனப்படுவனவுங் கொள்க; அவை, மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி யீன்பிண வொழியப் போகி நோன்கா ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் gடுநீwடிEண்புல்yடக்கியbவண்பbலயிற்றியர்gர்வைaத்தgறைதாள்ÉளவிÜழன்Kன்றிÅலவுரற்bபய்துFறுங்காGலக்கைnயாச்சி(பெரும்பாண்.89-97) என்றவழி உவமஞ்செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும் உவமத்தாற் பொருட்பெற்றி தோன்றச் செய்தாற்போல அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவம விலக்கணத்துள் இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது. அற்றன்று, மரபே தானும் (தொல்-செய். 80) என்புழி நாற்சொல்லியலெனச் சொற்றன்மையுங் கூறப்பட்டமையின் உவமையாராய்ச்சியுள் அது கூறானென்பது. உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? உயர்ந்ததன் மேற்றன்றி உயர்பிழிபுடைத் தல்லாத தன்மையுவமையுங் கொள்க வென்றமையின். (34) ஆய்வுரை இதுவும் உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது. (இ-ள்) உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்றவருதலேயன்¿உவமையJதன்kகூறுதலு«உவமையாதற்Fஉரித்Jபயனிyபொருந்திaவழக்கின்க©எ-று. பாரிபாரி எனவரும் புறப்பாடலில் மாரிபோலும் பாரியது கொடை, என உவமம் வாய்பாட்டாற் கூறாது பாரியொருவனுமல்லன், ஈண்டு உலகு புரப்பது மாரியும் உண்டு எனப் பாரிக்கு உவமையாகிய மாரியின் தன்மை உள்ளவாறு கூறப்படுதலும் இத்தகைய உவமத்தன்மை மாரியால் விளக்கப்படும் பயனும் பாரியால் விளைக்கப்படும் பயனும் ஒத்த பயனிலையுவமைக்கண் இடம் பெற்றுள்ளமையும் காண்க. இந்நூற்பாவிற் கூறப்படும் உவமத்தன்மையென்பது. ஒரு பொருட்கு விகார வகையாற் பெருமையுஞ்சிறுமையும் பற்றி உவமை கூறாது இயல்பு வகையால் உவமங் கூறுதல் எனவும், அவ்வாறு இயல்பாக உவமங் கூறுதல் ஒரு பயன்தோன்றச் சொல்லும் முறைமைக்கண் இடம் பெறும் எனவும், பாரிபாரி எனவரும் புறப்பாட்டினுள் உலகினைப் புரத்தற்கு மாரியும் உண்டுஎன்Wமாரிaஉவkகூறி¢சிறப்பித்து¥பாட்டுடைத்தலைவனாகிaபாரிaஉயர்த்து¡கூறாதான்போyஇயல்பினால்உவkகூறினா‹எனவு«பட்டாங்கமைந்jஉவமையாகிaஇது,மாரிக்கு«பாரிக்குமிடைaஎத்தகைaதாழ்வு«இல்yயென்னுªதன்மையை¥பாட்டுடை¤தலைவனJஉயர்îகூறுதலி‹பயனிyபுரிந்j வழக்கெனப்படும் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் இளம்பூரணர் உரைக்கமைந்த உரைவிளக்கமாக அமைந்துள்ளமை கூர்ந்துணாத் தகுவதாகும். 37. தடுமாறு வரலும்1 கடிவரை வின்றே. இளம்பூரணம் என்--எனின். இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது என்ற வாறு.2 தடுமாறுத லாவது - ஐயமுறுதல். எனவே ஐயநிலையுவமமுங் கண்டு கொள்க. கூற்றமோ கண்ணோ பிணையா மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து (குறள்.1085) என்றும், ஈங்கே வருவாள் இவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல் (கலித். 56) என்றும் வரும்; பிறவும் அன்ன. (37) பேராசிரியம் இதுவும், உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தடுமாறுவமம்---உவமையும் பொருளும் வேறு நீறி இ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டினையும் உவமையுறச் சொல்லுந் தடுமாறுவமம்; இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமை யாக்கியுந் தடுமாறச் சொல்லுதலுந் தடுமாறுவமமெனப்படும்; கடிவரை இன்று---அவ்விரண்டும் உவம மென்று சொல்லற் பாட்டிற் கடியப்படா (v-W). அரிமலர் ஆய்ந்தக ணம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி யையத்து ணின்ற தரவு (பொய்கையார்) என்பதனுள், உவமையினையும் பொருளினையும் வேறு வேறு துணியாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது அரவென்றமை யின் இது தடுமாறுவமமாயிற்று. தளிபெற்று வைகிய தண்சுனை நீல மளிபெற்றார் கண்போன் மலரு---மளிபெற்ற நல்லார் திருமுகத் தோற்றத் தளிபெற்ற கல்லாரம் போன்மலருங் கண் என்புழி, நீலத்தோடு கண்ணினையும் கண்ணினோடு நீலத்தினையும் ஒன்றற்கொன்று உவமையாக்கியும் பொருளாக்கியும் ஒருங்கே தடுமாறக் கூறினமையின் இதுவுந் தடுமாறுவம மெனப்பட்டது. பிறவும் அன்ன. (35) தடுமாறு உவமம் - உவமை இது, உவமேயம் இது எனவேறு நிறுத்தி இது போல்வது இது, என்று கூறாது அவ்விரண்டுமே உவம மாகத் தோன்றும்படி கூறப்படும் உவமம்; இனி, உவமையை உவமேயமாக்கியும் உவமேயத்தை உவமையாக்கியும் தடுமாறச் சொல்லும் உவமம் தடுமாறுவமம் எனினும் ஆம். கடிவரை இன்று - அவ்விரண்டும் உவமம் என்று சொல்லுந்- திறத்திற் கடியப்படுதல் (நீக்கப்படுதல்) இல்லை. ஆய்வுரை இஃது ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்துகின்றது. (இ-ள்) உவமையும் பொருளும் வேறுவேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூறாது அவ்விரண்டனுள் உவமையாவது ஏது உவமேயமாவது எது எனக்கற்போர் ஐயுறச்சொல்லுதலும், உவமையைப் பொருளாக்கிப் பொருளையுவமையாக்கிச் சொல்லு தலும் என இங்ஙனம் தடுமாறிவரும் உவமம் உவமம் என்று சொல்லும் நிலைமைக்கண் தவறென்று விலக்கப்படாது. எ-று இங்ஙனம் செய்யுளைக் கற்போர் ஐயுற்றுத் தேர்ந்து துணியும் குறிப்புடன் உவமையமைதலும் செய்யுளின் பொருளாய்வுக்கு அழகு செய்யுமாதலால் தடுமாறுவமம்தவறென்று கடியப்படா தென்றார். 38. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்றலங் கடையே.1 இளம்பூரணம் என்--எனின். உவமை பல வந்தவழி வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடுக்கிய njh‰wkhtJ---ctikgy அடுக்கித் தோற்றுதல்.2 நிரனிறுத்தமைத்த லாவது---ஒரு பொருளொடு தோற்று தொடரையுடைத்தாகப் பலவுவமை வருதல். ÃuÅiwahtJ---ctik பலவற்றையுஞ் சேர நிறுத்தி யுவமிக்கப்படும் பொருளையுஞ் சேர நிறுத்தல். R©zbk‹gJ---ctikiaí« பொருளையுந் துணித்து ஒட்டுதல். வரன் முறை வந்த மூன்றலங் கடையே என்பது---அடுக்கிய லுவமை கடியப்படும்; ஆமென்று வரையப்பட்ட நிரனிறுத்தன் முதலிய மூன்றும் அல்லாதவழி என்றவாறு.3 அவற்றுள், கடியப்பட்டது உவமைக் குவமையாக அடுக்கி வருவது. வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம் வெண்சங்கின் வண்டிங்கு தாழை வளர்கோடு1 என்றவழி அவ்வாறு உவமைக்குவமையாகக் கூறியவதனாற் போது வதோர் பயன் இன்மையின் ஆகாதென்று கொள்க. நிரனிறத்தமைத்தல் வருமாறு :--- நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே (பதிற்று. 14) மதிபோலுந் தாமரை போலும் என வரும். நிரனிறை வருமாறு :--- கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் (யாப்.வி.பக். 356) என வரும். சுண்ணமாவது :--- களிறும் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே(அகத்திணை.11.நச்.) என்றவழி நிரனிறையன்றிக் களிறுபோலுங் கலன் எனத் துணிக்க வேண்டியவாறு கண்டுகொள்க. (38) பேராசிரியம் அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே. இஃது, எய்தியது மறுத்தது; என்னை? வேறு ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்தலும் உவமையென்று கொள்ளுவாரையினும் அது கொள்ளப்படாது, விளங்காமையினெனக் கூறி விலக்கியமையின். (இ-ள்) அடுக்கிய தோற்றம்- உவமையும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம்; விடுத்தல் பண்பு---சிறப்பினவாகக் கொள்ளப் படா (v-W). மதியத் தன்ன வாண்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை என்றக்கான் மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரை யென்றமையின் அவை ஒன்று ஒன்றனோடு பொருந்தாவென்பது கருத்து. இலங்குவளை யன்ன நலங்கே ழாம்பற் போதி னன்ன தாதவிழ் கைதை என்றக்கால், ஒன்று ஒன்றனோடு ஒரு வண்ணத்ததாய் உவமைக் கேற்பினும் ஒன்றற்கொன்று உவமையாய் நின்றது. நின்றுற மற்றும் அதனோடு உவமங் கொள்ளப்படாது, இது வரையறையுடைமையின் விலக்கப்பட்டது. மற்று, ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந் வோதி யோதி (பத்துப்-சிறுபாண்.19.23) v‹göc« mL¡»anjh‰w bkd¥glhnjhbtÅ‹,glhj‹nw; ahid¡ifnghY§ Fw§F; Fw§FnghY« thiHbad mL¡»¢ brhšyhJ Fw§»idíilahbs‹W J¤J¡ T¿a ã‹d®¡ Fw§bfd khštiu xG»a thiH ba‹whdh jÈbd‹gJ ‘njh‰w’ bk‹wjdh‹ ctikí« bghUSkhf ÃÖï ctkîUò njh‹w¡ TW§fhš mL¡f¥gLt bj‹gJ.(36) அடுக்கிய தோற்றமாவது ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமையும் பொருளுமாக உவமவுருபு தோன்றகூறி, அப்பொருளைப் பிறிதொரு பொருட்கு உவமையாக்கி இங்ஙனம் உவமையை ஒன்றற்கு ஒன்று உவமானமும் உவமேயமும் ஆகத் தொடர்புபடுத்தி அடுக்கியதனை முடிவில் ஒரு பொருட்கு உவமையாகக் கூறுதல். எடுத்துக்காட்டாக வெண்மதிபோலும் முகம்போலுஞ்செந்தாமரை என உவமை கூறினால், ஒளிபற்றி மதியம் முகத்திற்கும், மலர்ச்சி பற்றி முகம் தாமரைக்கும் உவமையாதல் பொருந்துமாயினும், இங்ஙனம் அடுக்கிக் கூறியவற்றுள் வெண்மதியும் செந்தாமரையும் ஒன்று ஒன்றனோடு உவமையாதல் பொருந்தாமையின் இங்ஙனம் கூறுதல் உவமைக்குவமையென்னுங்குற்றமாயிற்று. விடுத்தல்---தவிர்த்தல். குறங்கு --- தொடை என்னும் உடலுருப்பு. துணித்துக் கூறுதல் --- தனித் தனித் தொடராகப் பிரித்து நிறுத்திக் கூறுதல். ஆய்வுரை இதன் முதலடியினை ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடிகளை மற்றொரு சூத்திரமாகவும் பிரித்து உரைவரைந்தார் பேராசிரியர். அவர்கருத்துப்படி ஙஅ: அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே எனத்தனிச் சூத்திரமாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். இஃது உவமைக்குவமை கூறுதல் குற்றம் என்கின்றது. (இ-ள்) அடுககிவரலுவமையினைவிலக்குதல் உவமங்கூறுவோர்க் குரிய இயல்பாகும் எ-று. அடுக்கிவரலுவமையாவது, ஒருபொருளோடுஒரு பொருளை யுவ மவுருபு தோன்ற உவமித்து. அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்து இவ்வாறு உவமைகளை உவமையும் பொருளுமாகத் தொடர்ந்தடுக்கி அவையனைத்தையும் ஒரு பொருட்டு உவமையாக முடித்துக் கூறுதல். இங்ஙனம் உவமையும் பொருளுமாக அடுக்குதல் உவமையும் பொருளும் என்றவகையால் ஒக்குமாயினும் தம்முள் வேறுபாடுடைய இவைஒரு பொருட்கு உவமையாகவரின் அவற்றிடையேயமைந்த பொதுத்தன்மையாகிய ஒப்புமைக் குணம் தம்முள்மாறுபட்டுப் பொருள் மயக்கமுண்டாமாதலால் அடுக்கிவரலுவமையாகிய அது கொள்ளப்படாது என்றார் தொல்காப்பியனார். பேராசிரியம் 37. நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம் வரை நிலை வைத்த மூன்றலங் கடையே. இதுவும் எய்தாதன வரையறையுடைமையிற் கூறியவற்றோடு இனமாகலின் உவமத்திற்காவதொன் றுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நிரனிறுத்து அமைத்தல் நிரனிறை---உவமையும் நிரலே நிறுத்துப் பொருளினையும் நிரலே நிறுத்து. ஒப்புமை கூறின் அது நிரனிறையெனப்படும்; சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங்கடையே---சுண்ணத்தினை வரைந்த நிலைமை யான் வந்த சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மென்னும் மூன்றுமல்லாத இடத்து (எ - று.) சுண்ணத்தினை வரைந்த நிலைமையான் வந்தனவெனவே சுண்ணந்தவிர மூன்றுளவோவெனின் அதனை ஒருவரை விலக்க மூவரும் வந்திலரென்றாற்போலக் கொள்க, உதாரணம் : கொடிகுவளை கொட்டைநுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் எனவரும். நிரனிறுத்தலென்னாது அமைத்த லென்றதனான் நிரனிறை யன்றி அமைத்துக் கொள்வதும் உண்டு; அது, களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே என வரும்; பிறவும் அன்ன. என்றார்க்கு, நிரனிறுத் தமைத்தல் நிரனிறை ஏனை, வரை நிலை வைத்த மூன்றலங் கடையே என்னாது சுண்ணத்தினை வரைந்தோதியது என்னையெனின், அவை மூன்றுஞ் சுண்ணம் போலச் சுண்ணஞ் செய்யப்படுதலின் அவ்வாற்றாஞ் சிதர்ந்து கிடப்ப உவமையுங் கூறின் அது பொருள் விளக்காதென்பது அறிவித்தற்கென்பது. என்னை? அடிமறியுள் ஒரடியுள் உவமங் கூறி ஓரடியுட் பொருள்வைத்தால் இனிது பொருள்கொள்ளாது அடிமறிக்குங் காலைப் பிறிதுபிறிதாக லுடைத்து. இனி ஓரடியுள் உவமங்கூறிப் பின்னர் எத்துணையுஞ் சென்று பொருள்கூறி மொழி மாற்றிக்கொள்ள வைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் தோன்றாது. சுண்ணத்திற்கும் அஃதொக்கும். இனி, இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சில வற்றையுஞ் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுஞ் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் brŒjhUKs®. அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந், தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது. என்னை? நாயகர்க்கு நாய்கள்போ னட்பிற் பிறழாது கூஉய்க் குழாஅ முடன்கொட்கு---மாய்படை பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு என்றவழி, நாய்போலும் நட்புடையர் படையாளரென்பது வினை யுவமம்; பன்றியனையர் பகைவேந்தரென்பது நாய்க்குப் பகையாகிய பன்றிபோலவென்பது. வேற்றுவேந்தர் பகை வராதலால் அவ்வுவமை விலக்கரிது அன்றாமாயினும் அஃதணி யெனப்பாடாது, உவமைதான் உயர்ந்ததின்மையின். அது குற்ற மென்றோவெனின், பேரூ ரட்டகள்ளிற்கு ஓரில் கோயிற் றேருமா னின்னே (புறம். 300) என்பது, குற்றமன்றாகலின் அதுவுங் குற்றமன்றெனப்படும். இனிப் பொன்மாலையும் பூமாலையும்போலப் பொலிவு செய்தலின் இதுவுங் குற்றமாகாது மேலதே குற்றமென்பது. அற்றன்று இன்னசொல்லும் இன்ன பொருளுமுடையன பொன்மாலையெனவும் பூமாலையெனவும் வரையறுத்துக் கூறலன்மையின் அதனானும் அதனைக் குற்றமென்று இலக்கணத்தாற்கூறின் நிரம்பாது. அல்லதூஉம் பொருளதி காரத்துட் பொருட்பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான் அவை பாடலுட் பயின்றவை யெனப் பட்டன. என்றதனான், அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாமென்பது. இனி,இரண்டு பொருளெண்ணியவற்றை வினைப்படுக்குங் கால் ஒருங்கென்பதொரு சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ், செய்யுட் கணியாமென்பது அவர்கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுண் மூன்று பொருள் கூறி எனவாங்கு என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் எனவாங்கு என்பதொரு மொழி எனவென்பது ஓரலங்கார மெனல்வேண்டுமாகலான் அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன. இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணியென்ப வாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந்தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல அவ்வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது. இனிச், செய்யுட்கணி செய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக்கூறலா (663) மென்பது. அவை யாவையெனின். அகனமர் கேள்வ னகற்சி தீர்த்தற்கு மகனொடு புகுந்த மகவுநிலை யெனாஅ மறுக்குங் காலை மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளீஇய குறிப்புநிலை யெனாஅட் புலவிக் கண்ணும் போக்கின் கண்ணு மழுதலு மழாஅதலு முயங்கலு மென்றாங் கிருவகைப் பட்ட மங்கல மெனாஅப் புலம்புறு காலை யறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை யெனாஅ வின்னோ ரன்ன பல்பொருட்பகுதி நன்னெறிப் புலவர் நாட்டல்வகை யுடைய என்றொரு சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரமெனப்படு மென்பது. அவற்றுக்கு உதாரணம் : ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் (அகம்.5) என்பது kfîÃiy. ஓவச் செய்தியி னொன்றுநினைந் தொற்றி (அகம்.5) என்பது, F¿¥òÃiy; என்னை? தலைமகன் போக்கினை உவக்குங் குறிப்பல்லாத குறிப்பாகலின் அஃதணியெனப்படும். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள்.1318) என்பது புலவியுளழுத மங்கலம் : பாவை மாய்த்த பனிநீர் நோக்கமெடு ... ... ... ... ... ... ... ... ... ... ... nkhÆd ளுயிர்த்த காலை (அகம்.5) என்பது, போக்கின்கண் அழாத k§fyÃiy; விளிநிலை கேளா டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற (அகம்.5) என்பது, அறிவொடு படாது புலம்பு கொளவந்த செய்வினை; என்னை? கேளாது கேட்டான்போல் வந்தமையின். அதுவும் அலங் காரமெனப்படுமென்று சூத்திரஞ் செய்துகொள்ளல் வேண்டுஞ் செய்யுட்கு அணி வேறு கூறினென்பது. இனி, இங்ஙனங் கூறினவெல்லாங் குற்றமென்று கொள்ளப் படா; என்னை? வேறு காரணமுணரப்பெறாது வுறழ்ந்து இடை யறவுபட்ட காலை இடர்ப்பட்டுச் செய்தனவாதலான் அவையும் அவ்வாற்றானமையு மென்பது. இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா;அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த வோத்தென்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடாவென்பது அஃதேற் செய்யுட்கு இவை யணியென்பதூஉம் இவை குற்றமென்பதூஉம் மூன்றதிகாரத்துள்ளும் இவ்வாசிரியர்யாண்டுங் கூறாரோவெனின், செய்யுளியலில் முப்பத்துநான் குறுப்புக் கூறி அவற்றதியைபு நல்லிசைப் புலவர் செய்யுளுறுப் பெனவும் அவை தொடர்ந்த தொடர்நிலை எண்வகையாற்றொடர் நிலைச் செய்யுட்கு வனப்பெனவும் பகுத்தோதிய இலக்கணத்திற்பிறழ்ந்தவை எல்லாங்குற்ற மென்பதூஉம் கொள்ளவைத்தானென்பது. ஒருவரை விலக்க மூவரும் வந்திலர் என்புழி ஒருவர் என்பவர் அம்மூவருள் அடங்குமாறுபோன்று, சுண்ணம்வரை விலைவைத்த மூன்று என்புழிச் சுண்ணம் என்பது, சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்றும் எனச் சொல்லப்பட்ட அம்மூன்றனுள் ஒன்றாய் அடங்கும் என்பதாம். சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்பன மூன்றும் சுண்ணம்போன்று சிதர்ந்து கிடப்பனவாதலின், அப்பொருள்கோள் வகையில் உவமமும் பொருளும் வேறுவேறு சிதர்ந்து கிடப்ப உவமங்கூறின் அவ்வுவமத்தாற் பொருள்விளங்காது என்பார், சுண்ணம்வரைநிலைவைத்த மூன்றலங்கடையே என்றார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் தொல் காப்பிய உவமயியலுட் கூறப்பட்ட உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்திலும் செய்யுளியலிலும் கூறப்படும். சிலபொருள் களையும் எடுத்துக்கொண்டு அவை செய்யுட்கு அணியாம் எனக் கொண்டு தமிழில் அணியிலக்கண நூல்கள் பல தோன்றலாயின. வடமொழியில் உள்ள தண்டியலங்காரத்தின்வழியே தமிழில் தண்டியலங்காரம் என்றதோர் அணியிலக்கணநூல் தோன்றியது. பிற்கால அணியிலக்கணநூல்களிற் கூறப்படும் அணியமைதிகள் புலமைத்திறத்தில் வல்லவர்களாற்செய்யப்படும் செய்யுட்களில் அணியென மதிக்கப் பெற்றும் புலமைத்திறத்திற் குறைந்தவர்களாற் செய்யப்படும் செய்யுட்களில் அணியமைவிற் சிதையா நிலையிலும் அணியென மதிக்கப்பெறாமலும் வருதலின் அவ்வணியமைப்புக்கள் யாவும் உறுதியாகச் செய்யுட்கு அணிசெய்வன எனச்சொல்லுதற் கில்லையென்பது பேராசிரியர் கருத்தாகும். உவமையென்பது பொருள்புலப்பாட்டிற்குரிய கருவியேயன்றி அஃது அணியெனப்படாது. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற் கூறப்படும் பொருட்பகுதிகள் யாவும் செய்யுட்கு அழகினைத்தரும் உறுப்புக்களாதலின் அவையெல்லாவற்றையுமே தொகுத்து அணி யெனக் கூறுதல் வேண்டும். அங்ஙனம் செய்யுட்கு அழகுசெய்வன அனைத்தையும் தொகுத்து அணியெனக் கூறாது அவற்றுள் உவமம் முதலிய சிலவற்றை மட்டும் வரைந்தெடுத்துக் கொண்டு அவற்றை மட்டும் அணியெனக் கூறுதல் பயனில் கூற்றாகும். அணிநூல்களுட் கூறப்படுவனமட்டுமன்றிச்செய்யுட்கு அழகு செய்வனவேறும் உள்ளன. அவற்றையெல்லாம் அணியெனக்கூறுதல் வேண்டும். செய்யுட்கு இன்றியமையாத அவையெல்லாவற்றையும் செய் யுளினின்றும் பிரிக்க வொண்ணாத பொருளுறுப்பென்பதல்லது பிரித்துணர்தற்குரிய அணியெனக் கூறுதல் பொருந்தாது. சாத்தனும் அவனால் அணிந்து கொள்ளப்பட்ட முடி தொடி முதலாயினவும் வேறாதல் போலச் செய்யுளுக்குரியவாகச் சொல்லப்படும் அணிகளும் செய்யுளின் வேறாதல் வேண்டும். செய்யுளினின்றும் பிரிக்க வொண்ணாத இயற்கையழகினைப் பிரித்துணரக்கூடிய செயற்கையினைக் குறிக்கும் அணியென்ற பெயராற் கூறுதல் அத்துணைப்பொருத்தமுடையதன்று. இனி, செய்யுட்கு அழகு செய்வனவாக இங்குக் குறிக்கப்பட்ட மகவுநிலை, குறிப்புநிலை முதலாகப்புலவன் மேலும் வகுத்துரைக்கத்தக்க பொருட்படைப்புக்கள் எல்லாம் எஞ்சாமல் தொகுத்து அவற்றை அணியெனக் கூறாது அவற்றுட் சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலென்னுங் குற்றமாய் முடியும் என இவ்வாறு பிற்காலத்தார் கூறிய அணியிலக்கண அமைப்பினைப்பேராசிரியர் மறுத்துரைத்தார். எனினும், செய்யுட்கு அழகு தருதற்குரிய பொருளுறுப்புக்கள் இன்னவென உணரப்பெறாத நிலைமைக்கண் இடர்ப்பட்டுச் செய்யப்பெற்றன பிற்கால அணியிலக்கண நூல்களாதலின் அவையும் ஒருவாற்றால் அமைத்துக் கொள்ளத்தக்கனவேஎனப் பேராசிரியர் அவற்றுக்கு அமைதியும் கூறியுள்ளமை இங்குக் கருதத்தகுவதாகும். ஆனந்தவுவமை யென்பன சிலகுற்றம் அகத்தியனார் கூறினார் எனக்கூறுபவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் ஆளவந்த பிள்ளையாசிரியர் முதலியோரும் ஆவர். அவர்களாற் குற்றமெனப் பட்டவை சங்கப்பாடல்களுள்ளும் பிற சான்றோர் செய்யுட்களுள்ளும் காணப்படுதலால் அவை குற்றமெனப்படா. அன்றியும் அகத்தியனார் தம்மாற் செய்யப்பட்ட முத்தமிழிலக்கணத்துள்ளும் அடங்காதவாறு ஆனந்தவோத்து எனபதொரு நூல் செய்தாராயின் அகத்தியமுந் தொல்காபியமும் நுலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் அந் நூல்களின் வேறுபடுதற்கு வழியில்லை. எனவே அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் மாறான் ஆனந்தவோத்து என்னும் நூல் அகத்தியனாராற் செய்யப்பட்டதன்றென்பதும், அந்நூல்களும் ஆனந்தவுவமை முதலாயின குற்றம் எனப்படாவென்பதும் நன்கு புலனாம். ஆசிரியர் தொல்காப்பியனார்செய்யுளியலின் மாத்திரை முதலாக முப்பத்து நான்குறுப்புக்கூறி அவை நல்லிசைப்புலவர் செய்யுளுறுப் பெனவும், அவை தொடர்ந்த தொடர்நிலை அம்மை முதலிய எண்வகையால் தொடர்நிலைச் செய்யுட்குவனப்பாமெனவும் பகுத்தோதி யனவெல்லாம் செய்யுட்கு அணியாமென்பதும், அவ்விலக்கணங்கட்கு மாறுபட்டன வெல்லாம் குற்றமாமென்பதும் உணர்ந்து கொள்ளவைத்தார். ஆதலின் செய்யுட்கு அணியாவன இவையெனவும் குற்றமாவன இவையெனவும் தனித்தெடுத்துக் கூறவேண்டிய இன்றியமையாமை தொல்காப்பியனார்க்கு இல்லையென்பதாம். ஆய்வுரை இது, பொருள்கோள்வகையுள் ஒன்றாகிய நிரனிறைப்பொருளில் உவமம் வருமாறுணர்த்துகின்றது. (இ-ள்) உவமையமைத்தற்கு ஒவ்வாவெனவிலக்கும் நிலையில் அமைந்த சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் பொருள்கோள் மூன்றுமல்லாத நிலைக்கண், உவமயையும் நிரற்பட நிறுத்திப் பொருளையும் நிரற்பட நிறுத்தி உவமஞ்செய்யின் அது நிரல் நிறை யுவமம் எனப்படும். எ-று. வரைநிலைவைத்த சுண்ணம் (முதல்) மூன்றலங்கடை நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை என இயைத்துப்பொருள் கொள்க. சுண்ணம்---பொடி. சிதர்ந்துள்ள பொடிபோன்று சொற்கள் சிதர்ந்து கிடப்ப அவற்றையியைத்துப் பொருள் கொள்ளப் படுதலின் சுண்ணம் எனப்பெயர் பெற்றது. சுண்ணம் என்பது, நாற்சீரடி இரண்டின்கண் அமைந்த எண்சீர்களைப் பொருள் இயைபறிந்து கூட்டியுணரும் பொருள்கோள். எனவே, இதன்கண் உவமையும் பொருளும் வேறுவேறு நிற்க உவமஞ் செய்தல் பொருள் புலப்பாட்டுக்கு ஒவ்வாது. இனி அடிமறியென்பது, செய்யுளின் ஒவ்வோரடியிலும் உள்ள சீர்கள் மாறாது நிற்கச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் உள்ள சீர்கள் மாறாது நிற்கச் செய்யுளின் அடிகள் மட்டும் முதலும் இடையும் மறிந்து பொருள் கொள்ளப்படுதல். இங்ஙனம் அடிகள் முன்பின்னாக மாறும் நிலையில் ஓரடியில் உவமங்கூறிப் பிறிதோரடியில் உவமேயத்தினை வைத்தால் பொருள் இனிது விளங்காது. மொழிமாற்று என்பது, செய்யுட்களில் முன்னும் பின்னும் அமைந்த சொற்களைப் பொருள் இயையும்படி இடம் மாற்றிப் பொருள் கொள்ளுதல். ஓரடியுள் உவமத்தினை வைத்துப் பின்பு எத்துணையுங்கடந்து மற்றோரடியுள் உவமேயத்தினைக் கூறி மொழி மாற்றிக் கொள்ளவைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் புலப்படாது. எனவே சொல்லதிகாரத்திற்குறித்த நால்வகைப் பொருள்கோள்களுள் நிரனிறையொழிய ஏனைய சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் மூன்றும் உவமங் கூறுதற்கு ஒவ்வாதன என விலக்கப்பட்டன என்பார், கண்ணம் வரை நிலைவைத்த மூன்றலங் கடையே யென்றார். ஆசிரியர். வரை நிலைவைத்தலாவது உவமஞ்செய்தற்கு ஒவ்வாத பொருள்கோள் இவையென நீக்கிவைத்தல். நூற்பா முதற்குறிப்பு அகர வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அடுக்கிய தோற்றம் -- 121 அவைதாம் -- 41 அன்ன என்கிளவி -- 50 அன்ன வாங்கு -- 48 இரட்டைக் கிளவியும் -- 78 இனிதுறு கிளவியும் -- 96 உயர்ந்ததன் மேற்றே -- 17 உவமப் பொருளின் -- 71 உவமப் பொருளை -- 76 உவமப் போலி -- 84 உவமமும் பொருளும் -- 33 உவமைத் தன்மையும் -- 115 எள்ள விழை -- 52 ஏனோர்க் கெல்லாம் -- 95 ஒரீஇக் கூறலும் -- 113 கடுப்ப ஏய்ப்ப -- 54 கிழக்கிடும்பொருளோடு -- 25 கிழவி சொல்லின் -- 92 கிழவோட் குவமை -- 98 கிழவோற்காயின் இடம் -- 100 கிழவோற்காயின் உரனோடு -- 94 சிறப்பே நலனே -- 22 சுட்டிக் கூறா -- 31 தடுமாறு வரலும் -- 119 தத்த மரபிற் -- 58 தவலருஞ் சிறப்பின் -- 86 தோழிக் காயின் -- 92 தோழியுஞ் செவிலியும் -- 102 நாலிரண்டாகும் -- 63 பிறிதொடு படாது -- 80 பெருமையும் சிறுமையும் -- 38 பெருமையும் சிறுமையும் மெய்ப் -- 67 பொருளே உவமம் -- 35 போல மறுப்ப -- 56 முதலும் சினையுமென்று -- 27 விரவியும் வரூஉம் -- 15 வினைபயன் மெய்உரு -- 4 வேறுபட வந்த -- 105 தொல்காப்பிய நூற்பா நூற்பா உரைகள் 1 2 3 1. வினைபயன்மெய்உரு... 4 5 13 2. விரவியும்உரூஉம்...15 16 17 3. உயர்ந்ததன் மேற்றே...17 18 21 4. சிறப்பே நலனே ... 22 23 24 5. கிழக்கிடும் பொருளோடு... 25 26 27 6. முதலுஞ்சினையுமென்று... 27 28 30 7. சுட்டிக் கூறா... 31 31 32 8. உவமமும் பொருளும் ...34 34 34 9. பொருளே cவமம்...35 36 37 10. பெருமையும் சிறுமையும்...38 39 41 11. அவைதாம்... 42 4447 12. அன்ன வாங்கு ... 48 49 50 13. அன்ன என்கிளவி... 505151 14.எள்ளவிழைய...52 525415.கடுப்பஏய்ப்ப... 54 55 56 16.போலமறுப்ப... 56 57 58 17. தத்த மரபிற்... 58 59 62 18. நாலிரண்டாகும்... 63 63 67 19. பெருமையும் சிறுமையும்...67 687020. உவமப் பொருளின்... 71 72 75 21. உவமப் பொருளை... 76 76 77 22. இரட்டைக்கிளவியும்...78 78 80 23. பிறிதொடு படாது... 80 81 83 24. உவமப் போலி ... 84 85 86 25. தவலருஞ் சிறப்பின்... 86 87 91 26. கிழவி சொல்லின்...92 93 94 27. தோழிக்காயின்...92 93 94 28. கிழவோற் காயின் ... 949596 29. ஏனோர்க்கெல்லா«... 95 95 96 30. இனிதுறுகிளவியும்... 96 97 98 31. கிழவோட் குவமை... 98 98 100 32. கிழவோற் காயின் ... 100 101101 33. தோழியுஞ் செவிலியும் ...102 102 104 34. வேறுபடவந்த... 105 105 112 35. ஒரீஇக்கூறலும்...113 113 114 36. உவமைத் தன்மையும்...115 115 11837. தடுமாறு வரலும் ...119 119 120 38.அடுக்கியதோற்றம்... 121 123 124 125 131 உவமவியல் என்பது பேராசிரியர் கொண்ட பாடம் உவமத் தோற்றம் - பா. வே. 1. புடை -- பக்கம் ; பகுதி. ஒருபுடையொப்புமையாவது ஒரு பொருளின் வினை பயன் மெய் உரு முதலியவற்றால் ஒருபகுதியொத்திருத்தல். 2. மெய்ப்பாடுபற்றிக் தோன்றிவழங்குதலாவது, பொருளின் தோற்றப் பொலிவு குறித்து மக்களது முகமலர்ச்சிக்கும் xளிதிகழ்tனப்புக்கும்bசந்தாமரைkலரும்Ãறைமதியும்nபால்வனx¥புமையுடையனவாகஉyfமக்கள்பலuhலும்பேச¥பட்டுவருதš. 3.kâ¤jš--fUJjš. 4. புலன் அல்லாதன--இதுகாறும் பொறிகளால் அறியப்படாத பொருள்கள். புலனாதல்--விளங்கித் தோன்றுதல். அலங்காரமாதல்--அணியுடையதாதல். 1. பாகுபடவருதலாவது, கண்முதலிய பொறிகட்குப் புலனாவனவும், பொறிகட்குப் புலனாகாது மனத்திற்குப் புலனாவனவும் என இருவகைப்பட வருதல். 1. ஒருபொருளோடு ஒருபொருளை ஒப்புமை கூறி விளக்குதல் உவமம் எனப்படும். அகம் புறம் என்னும் இருவகைப்பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலானும் முற்குறித்த மெய்ப்பாடுபோலப்பொருள்புலப்பாட்டிற்கு உமமும் ஏதுவாகலானும் உவமம் பற்றி இருவகைப்பொருட்பகுதியும் உணர்த்துவது உவமவியலாகும். அகத்திணை இயலுள் உவமத்தினை உள்ளுறையுவமம் ஏனையுவமம் என இருவகையாக்கிக்கூறினார். அவ்விரண்டினையும் விரித்துக்கூறுவது இவ்வுவமவியலாகும். உலகவழக்கிலுஞ்செய்யுள் வழக்கிலும் வருவது ஏனையுவமமாகலின் அதனை இவ்வியலின் முற்கூறினார். உள்ளுறையுவமம் செய்யுட்கேயுரியதாயினும் உவமப் பகுதியாதல் ஒப்புமை நோக்கி ஓரினப் பொருளாக்கி இது செய்யுட்குரித் தென்னுங் கருத்தால் அடுத்துள்ள செய்யுளியலோடும் இயையும்படி இவ்வுவமவியலின் இறுதிக்கண் கூறினார். எனவே எழுத்திகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் செய்யுட்குரிய விதிகளைத் தனித்தெடுத்துக் கூறியதுபோலவே இப்பொருளதி. காரத்தும் தனித்தெடுத்துக் கூறியுள்ளமை ஒருவகையாற் புலனாம். யாப்புடைமைநோக்கி பரப்புடைமை நோக்கி எனவும் பாடம் 1. நாடக வழக்குப்போல உலகியல்வழக்கும் புலனெறிவழக்கிற்கு உறுப்பாதலின் உலக வழக்கினை ஆராய்தலும் பாடல்சான்ற புலனெறி வழக்கிற்குப்பயன் தருமாதலின் உலக வழக்குப்பற்றிய ஆய்வும் இவ்வியலில் இடம் பெறுவதாயிற்று. 2. ஆமா இது எனக்கண்டறியாதானுக்கு ஆபோலும் ஆமா என உவமம் கூறினால் அவன் காட்டுட்சென்றுழி ஆபோலும் ஆமா எனத்தான் கேள்வியுற்ற அவ்வுவமையேபற்றி ஆமா இது என்று கண்டறிவானாதலால் உவமத்தாலும் பொருள் புலப்பாடே கூறுகின்றார். ஆகவே மேற்பொருள்புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடையது இவ்வுவமஇயல் ஆதலின் அதனை அடுத்து வைக்கப்பெற்றது. 3. (இவ்வோத்தின் தலைச் சூத்திரம்) - இவ்வியலின் முதற்சூத்திரம். 1. வினைபயன்மெய் உரு என்னும்வைப்பு முறைக்குககாரணம் கூறுவதாக அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும். வினையால் விளைவது பயனாதலின் இது வினையின் பிற்கூறப்பட்டது. அதுபோல் வடிவினால் தோன்றுவது நிறமாதலின் மெய்யின்பின் உருவைக்ககப் பெற்றது. மெய்-வடிவு. உரு-நிறம். பயன் என்பதும் பொருளாதலால் மெய்யினையும் (வடிவென்னும் பொருளினையும்) அதனுடன் வைத்தார். பொருளின் புடைபெயர்ச்சியாகியவினையுவமம் ய்மயுவமத்தின் பின்னரே கூறத்தக்கதாயினும் வினையுவமம் புலிமறவன் என்றாங்கு தன்னுருபு மறைந்து நில்லாது புலியன்னமறவன் என விரிந்தே நிற்றலும் புலிப்பாய்த்துள் என உருபு மறைந்து வருதலும் ஆகிய சிறப்புடைமை நோக்கி முற்கூறப்பட்டது என விளக்கந்தருவர் பேராசிரியர். புலியன்னமறவன் என்பது, புலிபாயுமாறேபாய்வன் என்னுந்தொழில் பற்றி ஒப்பித்தமையின் வினையுவமம். 1. ஆகம் - மார்பு அகன்று காட்டுதல்-விரிந்து தோன்றுதல் அஃகித்தோன்றுதல்-சுருங்கித் தோன்றுதல் 2. உவமத்தோற்றம் என்பது, உவமத்தாற்பொருள் தோன்றும் தோற்றம் என விரிதலின், மூன்றாம் வேற்றுமைத் தொகையாகும். 3. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாயடங்குமாயினும் மெய் (வடிவு) பற்றிய உற்றுணரும் பண்பு இரவின்கண்ணும் உற்றுணரப்படும் கட்புலனாம் பண்பாகிய (25) வண்ணம் இரவின்கண் உற்றுணரப்படாது. இது பொருளாராய்ச்சி பற்றி அதிகாரமாதலால் கட்புலனாம் பண்பாகிய வண்ணத்தினையும் உற்றுணரும் பண்பாகிய வடிவினையும் ஆசிரியர் வேறாகப்பகுத்துரைத்தார். இவ்வாறு பகுத்துரையாது வடிவும் வண்ணமும் ஒன்றாகக்கூறின் பகற்குறிக்கட்கூறப்படும் வண்ணம் முதலாயினவும் பண்பென்னும் பொதுவகையான் இரவுக்குறிக்கண் எய்துவான் செல்லும். அங்ஙனம் செல்லாமைப்பொருட்டும் உவமத்தால் உணர்த்தக்கருதிய திணைப்பொருளினை எளிதிற்புலப்படுத்தல் உபகாரம் நோக்கியும் மெய் (வடிவு 25 (வண்ணம) என இவ்வாறு பகுத்துரைத்தார் தொல்காப்பியனார்) அடைசினைமுதல் (தொல்- சொல்-26) என்றாற்போல. வினை, பயன், மெய், உரு என்னும் இந்நாற்பகுதியும் பண்பெனவே அடங்கக்கூறின், பண்பு என்பது குறிப்பின்றி நிகழுங் குணமாகலின் பார்வலொதுக்கமாகிய வினை பண்பெனப்படாது மாரியன்னவண்கை எனவரும் பயனுவமையைப்பண்பென அடக்கின் பண்பாயின் மாரியின் நிறம்போன்று வண்மையும் கரிது எனல் வேண்டும். ஆதலால் அது பண்பென அடங்காது. பாவையியல் கற்றன்னவொழுக்கினள் எனவடிவுபற்றி உவமங்கொள்ளுங்கால் வடிவுபண்பி (பண்புடையபொருள்) ஆதலின், அது பண் பெனப்படாது. மழைக்காலத்திற்பூத்த பீர்க்கம்பூ சிலவற்றையெடுத்துக்காட்டி இந் நிறத்தளாயினள் தலைவி என்ற வழி, தலைவன் வருவதாகக்குறித்த பருவங்கடந்து விட்டது என்னும் பொருண்மை விளங்குகிறது. இஃது உருவுவமம், இவ்வாறு வினை பயன் மெய்உரு என்னும் நான்கு பகுதியாற் பொருள்புலப்படுத்தும் முறைமை கண்டு உவமப்பகுதி என்றார் தொல்காப்பியனார். அளவு, சுவை, தண்மை, வெம்மை, நன்மை, தீமை, சிறுமை, பெருமை முதலாயினபற்றியும் உவமம் வரும். அவையெல்லாம் இங்குக்கூறிய வினைபயன் மெய் உரு என்னும் இந்நான்கனுள் அடங்குமெனவும் அவை நான்கும் இத்தகைய பொருட்பகுதியினை யுடையன எனவும் புலப்படுத்தற் பொருட்டே அவற்றை வகைபெற வந்த உவமத்தோற்றம் என அடை புணர்த்தோதினார் ஆசிரியர் என்பதாம் 1. பண்பிழிபாகலின் என்பது பண்பியாகலின் என்றிருத்தல் வேண்டும். குறித்த பருவங்கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று உருவுவமம்! என மேலுள்ள தொடருடன் இயைத்து முடிக்க. 2. ஒலித்தல் வினைபற்றி எனத்திருத்துக. 3. நோக்கினாற் கொல்வான்போல் கடைக்கண்ணால் நோக்கினன், என்பார் கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி என்றமையின் இது வினையுவமத்தின் வகையெனப்படும். 1. விசும்பு உரிதல், மணிவாழ் பாவை நடைகற்றல், வான்தோய்தல் ஆகிய இவை, உவமையும் பொருளுமாகி (வேறுநின்று) இவ்விரண்டற்கும் பொதுவாகிய வினைபற்றி வாராமல் இல்லாதவினை வருவித்துரைக்கப்பட்டனவாதலின் வினையுவமத்தின் வகையெனப்பட்டன. 2. பொன்மரம் போலக்கொடுக்கும் என்பது, அதனால் கொடுக்கப்படும் கொடைப் பொருளுடன் உவமங்கொண்டு மெய்யுவமமாகாது, கொடுத்தல் வினையால் கொள்வார்க்குவரும் பயன்ஒத்தலால் பயனுவமத்தின் வகையாயிற்று. மழைத் தொழிலாகிய பெயலாற்பயந்த விளையுளுடன் இடையிட்டுப் போய் உவமங் கொள்ளாது என இவ்வுரையிடையே காணப்படுந்தொடர், மாரியன்னவண்கை என்ற தொடர்க்குரிய விளக்கமாகத் தெரிதலால், இங்குத் தொடர்பில்லாத அதனை நீக்கிவிட்டு, பொன்மரம்போலக் கொடுக்கும் என்பது பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும் : என்னை? கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்படாது கொள்வார்க்குப்பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகையாயிற்று. நிலம் போலும் கொடை என்பதும் அது என இயைத்துப் படித்தல் பொருத்த முடையதாகும். பொன்மரம்--கற்பகம்; இந்திரனுலகின் உள்ள ஐந்தருக்களுள் ஒன்றாகிய கற்பகம், தன்னையடைந்தோர் விரும்பிக்கேட்டவற்றையெல்லாம் வரையாது வழங்கும் தெய்வத் தன்மையுடையது என்பது புராணக் கொள்கையாகும். 1. அஃது அன்னவாகலின் என்பது அஃது அளவாகலின் என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும். தலைவன் பிரிந்து சென்றுள்ள இடமும் தலைவி தங்கியிருக்கும் மனையும் ஆகிய இரண்டினையும் இவற்றிடையேயுள்ள எல்லையாகிய இடைவெளியையும் உவமை கூறினமையால் இது மெய்யுவமத்திற்கு வகையெனப்படும் என்றார் பேராசிரியர். 2. துடியிடை என்றவழி மேலும் கீழும் அமைந்த இடப்பரப்பும் அதன் இடைநுணுக்கமும் குணமெனப்படாது வடிவாகவே கொள்ளப்படுதல் போன்று, சேய்மை அண்மையாகிய நிலப்பரப்பும் குணமெனப்படாது வடிவாகவே கொள்ளப்படும் என்பதாம். இனி அன்மையும் சேய்மையும் அளவு என்னும் குணமாதல் ஒப்புமையால் அவை நிறப்பண்பிற்கு இனமெனவுங்கொள்ளப்படும். 3. இனி அண்மையும் சேய்மையும் அளவு என்னும் குணமாதல் ஒப்புமையால் அவை நிறப்பண்பிற்கு இனமெனவுங் கொள்ளப்படும். அண்மையும் சேய்மையுமாகிய இவை இவ்வாறு ஒருவகையால் வடிவாகவாகவும் ஒரு வகையால் பண்பாகவும் திரிபுடைமையால் இவற்றைத் தனித்தெடுத்துக்கூறாது வகை எனக் கொண்டார் ஆசிரியர். 1. தளிர்சிவந்தாங்குச்சிவந்தமேனி என்பது, நிறம்பற்றிய உவமையாயிலும் சிவந்தாங்குச்சிவந்த என வினைவிரித்ததுபோல் பொதுத்தன்மையினை விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி உருவுவமம் எனப்படாது உருவுவமத்தின் வகையெனப்பட்டது. 1. விரவுதல்--கலத்தல் : அஃதாவது, வினை பயன் மெய் உரு எனமேற் குறித்த ஒப்புமைப்பகுதிகளுள் இரண்டும் பலவும் கலந்து வருதல். 1. முற்கூறியவாறு தனித்து ஒன்றாய் வருதலேயன்றி இரண்டும் பலவும் கலந்தும் வரும் என்றபொருளில் வந்தமையால் விரவியும் என்புழிஉம்மை இறந்தது தழீஇய எச்சவும்மையாகும். 2. இதுவே ஓத்தாக--இதுவே ஓதப்பட்ட விதியாக. 3. உவமையொடு பொருளிடையேயமைதற்குரிய பொதுத்தன்மைகளாயவினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் ஒவ்வொன்றேவருதலன்றி இரண்டும் மூன்றும் கலந்து வருதலும் உவமையின் மரபாம் என்றவாறு. விரவுதல் - கலத்தல் 1. உயர்தல் - வினைபயன் மெய் உரு எனச்சொல்லப்பட்ட ஒப்புமைத்திறத்தால் உயர்தல். 2. துப்புடையன - வலிமையுடையன. அரிமா-சிங்கம், உழுவை-புலி, ஆணி யூசியென்றது போழ்தூண்டூசியினை. 1. உவமையும் பொருளுமாகிய இவற்றிடையேயமைந்த பொதுத்தன்மையினைக் கருதி ஒப்பிட்டு நோக்குங்கால் உவமிக்கப்படும் பொருளிலும் உவமை சிறந்ததாதல் வேண்டும் என்பார் உள்ளுங்காலை என்றார். முன்னம்--குறிப்பு. முன்னத்தில் உணருங்கிளவியாவது, சொல்லுவான் குறிப்பாற்பொருளுணரப்படுஞ் சொல். என்யானை, என்பாவை என்புழி யானை எனவும் பாவை எனவும் குறிக்கப்பட்டோர் யானைபோல்வானாகிய மைந்தனும் பாவைபோல்வாளாகியமகளும் ஆவர். இங்கு யானை, பாவை என உவமையைக் கூறியதன்றி அதனால் உவமிக்கப்படும் உவமேயமாகிய பொருள் கூறாதுபோயினும் அவர்தம் குறிப்பினால் அவை முறையே வினையுவமையெனவும் மெய்யுவமையெனவும் குறிப்பினாற்கருதியுணரப்படும். உவமைக்கு நிலைக்களங்களாகிய சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடு பொருள் என்றும் அவற்றுள் ஒன்றை நிலைக்களமாகக்கொள்ளாது வறிதே உவமை கூறுதல் குற்றமாம் என்பார், அவைபற்றாது சொல்லுதல் குற்றமாகலின் என்றார் 1. அவை-- முன்னத்தான் உவமஞ்செய்தன. 1. செய்யுள் செய்வார் உவமத்தாற்செய்யும் பொருட்படைப்பகுதி எண்ணிறந்தன வாகலின். அப்பகுதியெல்லாம் விரித்துக்கூறின் பெருகுமாதலின் அப்பகுதி யெல்லாங்கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறி, வாயென்ற பவளம், வாய்பவளம், வாய்பவளமாக என்றாங்குவருவனவற்றை முன்னத்தின் உணருங்கிளவியாகிய குறிப்புவமைப் பகுதியின்கண் அடக்கிக்கூறினார் தொல்காப்பியனார். இத்தகையகுறிப்புவமைகளை இக்காலத்தார் உருவகமென்றே வழங்குவர். இங்ஙனம் குறிப்பினால்வரும் உவமைகளுள் தாமரையன்றுமுகமே எனத் துணிந்ததனை உண்மையுவமை யெனவும், மழையன்று வண்டிருத்தலிற்குழலே எனப்பொருட்குக் காரணங்கொடுத்தலைத் தேற்றவுவமை எனவும் கூறுவர் தண்டியாசிரியர். மதிங் கொல்லோ மறுவில்லையென்று உவமைக்குக்குறைபாடு கூறுதல் விலக்குவமையின்பாற்படும். 1. நிலைக்களம்--உவமம் கூறுதற்கு அடிப்படையான உணர்வு நிலையாகிய இடம். 2. படுத்து--பொருத்தி, பகுத்து என்றிருத்தலும் பொருந்தும், 1. பொருளிலும் உவமை உயர்ந்திருத்தல் வேண்டும் என்றதேபற்றி அதனில் தாழ்ந்த பொருளுக்கு யாதேனும் இயைபில்லாத பொருளை உவமை கூறுதல் ஆகாதென்பதும், உவமை யொடு முழுவதும் ஒத்தல் என்பதின்றி அதனோடு ஒருபுடை ஒக்கும் பொருண்மை உவமேயத்தின்கண் உளவாதல் வேண்டும் என்பதும் அங்ஙனம் உவமை கூறுதற்கு அடிப்படையாகிய பண்பு சிறப்பு நலன் காதல் வலி என நால்வகைப்படும் என்பதும் இவற்றுடன் வினை பயன் மெய் உரு என்னும் நான்கும் இயையும் என்பதும் கூறியவாறு. கிழககிடு பா.வே. 1. உயர்ந்ததன்மேற்றேயுள்ளுங்காலை என உவமேயமாகிய பொருளிலும் உவமையினை உயர்ந்ததாக வைத்துரைத்தலின், இச்சூத்திரத்திற் கிழக்கிடுபொருள் என்றது. உவமையினுந் தாழ்ந்ததாகிய உவமேயப்பொருளைக்குறித்தது, எனவும் தாழ்ந்ததாகிய உவமேயமும் உயர்ந்ததாகிய உவமானப்பொருட்டு உவமையாய் வருதற்குரியது எனவும் கொள்ளும்படி பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிடமும் உள எனவரும் இத்தொடர் இவ்வுரையிடையிற் சேர்க்கப்பெற்றுளது. இக்கருத்து பொருளேயுவமஞ்செய்தனர் மொழியிலும் மருளறு சிறப்பினஃதுவமென்ப (உவம - 9) எனப்பின்வரும் சூத்திரத்துத் தெளிவாகக் கூறப்படுதலானும் உவமத்திற்குரிய நிலைக்களங்கள் ஐந்தனுள் ஒன்றாக உவமேயத்தினைக் கொள்ளுதல் பொருந்தாமையானும் இவ்வுரைத் தொடரும் இதற்கு உதாரணமாகக் காட்டப்படும் ஒண்செங்கழுநீர்க்கண் போலாயிதழ் (அகநானூறு-48) எனவருந்தொடரும் இச் சூத்திரத்திற் கமைந்த இளம் பூரணருரையில் இடம்பெற்றுள்ளமை ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாதல் திண்ணம். 1. உவமைக்கு நிலைக்களன்களாக முன்னைச் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட சிறப்பு நலன் காதல் வலி என்னும் நான்குடன் இங்கு ஐந்தாவதாக எண்ணப்படுவது, பொருளின் தாழ்ந்த தன்மையாகிய இழிநிலை என்றலே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது, மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங்கூட ஐந்தென்றார் எனவரும் இளம்பூரணம் உரைத் தொடரும், ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமாம் என்றவாறு எனவரும் பேராசிரியர் உரைவிளக்கமும் இங்கு ஒப்புநோக்கியுணரத்தக்கனவாகும். 2. ஒரு பொருளினது இழிவினைக்கூறுவான் உவமையினால் அதனைப் புலப்படுத் தலின் அவ்விழியும் உவமைக்கு நிலைக்களமாயிற்று. 1. அவ்வாறு இங்கு உவமைக்கு நியமமில்லையென்றவாறாயிற்று என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும். முதலுக்கு முதலும் சினைக்குச் சினையும் எனச் சொல்லதிகாரத்திற்கூறிய அவ்வரையறை செய்யுளிற்பொருள்புலப்பாடுபற்றி வரும் இவ்வுவமைக்கு வேண்டுவதன்று என்பார், நுதலியமரபின் உரியவைஉரிய என்றார். 1. விசும்பு என்பது அருவப்பொருளாதலின் அதற்கு முதல் சினை என்னும் வடிவகுப்பு இல்லை. எனவே அதனை முதற்பொருளாகவே கருதியுணர்தல் வேண்டும். 1. இலேசுகொண்டுரைப்ப என்றது, சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையைக் குறித்தது போலும், செப்புமிடத்தும் வினாவுமிடத்தும் சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் முதலொடு முதலே பொரூஉக. சினையொடு சினையே பொரூஉக எனவும், அப்பொருளாகும் என்றானா தலின் அவ்வச்சினைக்கு அவ்வச்சினையேபொரூஉக. என்றது இது முதற்கும் ஒக்கும் என உரைவரைந்த இளம்பூரணர், இச்சூத்திரத்தில். சினையை முற்கூறிய முறையன்றிக் கூற்றினால் முதலுஞ்சினையும் உறழ்ந்து வருவனவும் உள, குணமருங்குபற்றி என இலேசினாற் கொண்டார். முதலும்சினையும் ஆகியவற்றுள் மரபினான் உவமையாதற்கு உரியவையுள் என இவ்வுவமவியற் குத்திரக்தில் ஆசிரியர் எடுத்தோதுதலால் இவ்விதியை இலேசினாற் கொள்ள வேண்டிய இன்றியமையாமையில்லையென்பது பேராசிரியர் கருத்தாகும். எடுத்தோதது இவ்வழியே உயத்துணர்வதாதலின் எனவரும் உரைத்தொடர் இங்கு நினைத் தற்குரியதாகும். 1. உவமவாய்பாடு தோன்ற உவமம் பொருட்குப்புணராக்கண்ணும் உவமைஉள எனத் திருத்திப் படித்தல் பொருள் விளக்கத்திற்கு ஏற்புடையதாகும். 1. சுட்டிக்கூறாவுவமம் என்பது, உவமைக்குகும் உவமேயத்திற்கும் பொதுவாகிய ஒப்புமைக்குணத்தினைக் குறிப்பிட்டுரைத்தலின்றிப் பவளவாய் என்றாங்குத் தொகுத்துக் கூறும் உவமம். சுட்டிக்கூறிய உவமமாவது உவமைக்கும் பொருளுக்கும் பொதுவாகிய ஒப்புமைக்குணத்தினைக் குறித்துரைப்பதாய் பவளம்போற் செந்துவர்வாய் என்றாங்கு விரித்துக்கூறும் உவமம், சுட்டிக்கூறாவுவமையினைத் தொகையுவமை எனவும் சுட்டிக்கூறும் உவமையினை விரியுவமையெனவும் குறிப்பிடுவர் தண்டியலங்காரமுடையார். 1. உவமையும் பொருளும் இரட்டைக்கிளவியாய் வரினும், நிரனிறுத்தமைத்த நிரனிறையாய் வரினும், சுண்ணமாய் வரினும், அடையடுத்துவரினும், தொழிற்பட்டு வரினும், ஒன்றும்பலவுமாகி வரினும் நிலைமொழிக்கேற்ப வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டு மெனவும், அங்ஙனம் வாராது நிலைமொழியும் வருமொழியும் மிக்குங்குறைந்தும் வருவது குற்றம் எனவும் இச்சூத்திரப்பொருளை நிலைமொழி வருமொழி யென்னுந் தொடரமைப்பில் வைத்து விளக்குவர் இளம்பூரணர். 2. உவமை--உவமானம். பொருள்--உவமேயம். ஒத்தது அறிவான் (குறள். 214) என்புழிப்போல இங்கு ஒத்தல் என்றது, உலகநடையுடன் ஒத்து அமைதலை. 1. உமேயம் எனப்படும் பொருளையே உவமையாக்கிக்கூறினாலும் மயக்க மற்ற சிறப்புநிலைமையால் அஃது உவமமாகவே நின்று பொருள் புலப்பாட்டிற்குப் பயன்படும் என்பதாம். 2. பிற்கால அணியிலக்கணநூலாரால் உருவகம் எனச் சொல்லப்படுவது உவமை யினையே அடிப்படையாகக்கொண்டு வருதலின் அவ்வுருவகமும் உவமையின் பகுதியாக அடங்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்து என்றவாறு. 1. பொருளே உவமஞ்செய்தலாவது, பொருள் புலப்பாட்டுக்குரிய உவமேயமாகிய பொருளையே உவமையாக்கி உலகத்தார் மரபாக வழங்கும் உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கிக் கூறுதல். தாமரைபோன்று மலர்ந்தமுகம் என்புழிமுகம் என்பது உவமிக்கப்படும் பொருள். தாமரை என்பது முகத்திற்கு உவமை. இங்ஙனம் உவமம் கூறுதலே இயல்பானமரபு. இதனைமாற்றி முகமாகிய பொருளை உவமம் ஆக்கியும் உவமையாகிய தாமரையை உவமிக்கப்படும் பொருளாக்கியும் திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை என உவமைகூறிய நிலையில் முகத்தினைத் தாமரையினும் உயர்வுடையதாக மயக்கந்தீரச் சிறப்பித்துரைத்தமையால் குற்றமற்ற மரபின் உவமையாயிற்று. இங்ஙனம் முகம் ஒக்குந்தாமரை எனப்பொருளையே உவமையாக்கிக்கூறுங்கால் இவ்விரண்டற்கும் இடையேயமைந்த மலர்ச்சியாகிய சிறப்புடைமை பொருளாகிய முகத்திற்கே மேலும் சிறப்பினைத்தருதலின் உயர்ந்த தன்மேற்று என உவமைக்குக்கூறும் அவ்விதி முகமாகிய அப்பொருட்கும் எய்து விக்கப்பெறும் என்பார், மருளறு சிறப்பின் அஃது உவமமாகும் என்றார். இத் தொடரில் அஃது என்றது உவமிக்கப்படும் பொருளாகிய முகத்தினையாதலின் உயர்ந்ததன் மேற்றே என உவமைக்குக்கூறிய அவ்விதியை அதற்கும் எய்துவிக்க என்றார் பேராசிரியர். 1. அஃது என்பது, அஃதேல் என்றிருத்தல் பொருத்தமாகும். ஒப்பமுடிதல் ஆவது, உலகிற்பெரும்பாலோரால் உடன்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுதல். 1. சிறப்பிற்றீராக்குறிப்பு என்றது, உவமையின் ஐவகை நிலைக்களன்களுள் ஒன்றாகிய சிறப்பென்னும் நிலைக்களத்தின் நீங்காக்குறிப்பொடுகூடிவரும் வழக்கு நெறிப்பயிற்சியினைக் குறிப்பதாகும். 2. பெருமையும் சிறுமையுமாகிய இவை வழக்குப்பயிற்சியின் மாறுபடாது உவமையாய் வருதல் வேண்டும் எனவே உலகவழக்கினைக் கடந்துவரும் இறப்பவுயர்வும் இறப்பவிழிவும் ஆகிய பெருமைசிறுமைகள் உவமையில் இடம்பெறா என்பதாம். 1. இறப்பஉயர்தல்-மிகப்பெரியதாதல். இறப்ப இழிதல்-மிகச் சிறியதாதல் இவையும் பெருமையுஞ்சிறுமையுஞ் சிறப்பிற்றீராக் குறிப்பின்வந்த வழக்காதல் அமைந்தனவென்பது-என இத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். 1. இவ்வாறு பெருமையுஞ்சிறுமையுங்குறிப்புற்றீரா நெறிப்பாடுடையவாய் வருத லயன்றி வடிவுபற்றி இறப்ப உயர்ந்தனவாகவுவமை கூறும் இக்காலத்தில் தமிழ் வழக்காக இடம்பெற்று வருகின்றது எனப் பேராசிரியர் தம்காலத் தமிழிலக்கியங்களிற் புதுவதாக வேரூன்றிவரும் உவமைமரபினைக்குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பொருந்தும். ஆறாறவையும் என்றிருத்தல் வேண்டும். என்பது பேராசிரியருரையில் புலானம். 1. உவ வுருபுகள் வினைபயன் மெய்உரு என்னும் பலவகைப்பொருள்களைக் குறிப்பான் உணர்த்திநிற்றலின் இவ்வுருபுகளைச் சொற்கள் எனக்குறித்தார் இளம்பூரணர். 2. சொல் என்றது உவமவுருபினை. 1. தேன்போல இனியமொழி என்புழிப் போல வென்னும் உவச் சொல்லும் இனிமை என்னும் பொதுத்தன்மையும் விரிந்துநின்றன. 2. தேன் போலும் மொழி என்புழிப்போலும் என்னும் உவமச்சொல் விரிந்தும் இனிமையாகிய ஒப்புமை தொக்கும் நின்றன. 3. தேமொழி என்புழி உவமச் சொல்லும் பொதுத் தன்மையும் ஒருங்கே தொக்கன. 1. ஒப்பித்தல் -- ஒப்புமை கூறிவிளக்குதல். இனைத்து -- இத்தொகையினது. இங்கு எண்ணப்பட்டவுவமவுருபுகள் இடைச்சொல்லாய் மறைந்தும் விரிந்தும் வருதலும் வினைச் சொல்லாய்ப் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் முற்றாகவும் வேறுபட நிற்றலுமாகிய பலவேறு குறிப்புக்களையுடையன என்பார் கூறுங்காலைப் பல்குறிப்பின என்றார். 1. இச்சூத்திரத்தில் எண்ணப்பட்ட முப்பத்தாறு உருபுகளும் வினைபயன் மெய் உரு என்னும் நான்கு உவமத்திற்கும் பொதுவாகும். இனி நால்வகையுவமங்கட்கும் எட்டெட்டாகப் பகுத்துரைக்கப்படும் உருபுகள் அவ்வவ் வுவமத்திற்குச் சிறப்பு வகையான் உரியன-இங்கு எண்ணப்பட்ட முப்பத்தாறனுள் பொதுமைசுட்டிய ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்பன ஆறுருபுகளும் நீங்கலாக எஞ்சியுள்ள முப்பதுருபுகளோடு பிறவும் என்பதனாற் கொள்ளப்படும் உருபுகளுள் நேர, நோக்க என்பதனையும் கூட்ட நால்வகையுமங்கட்கும் சிறப்புவகையான் உரிய உருபுகள் முப்பத்திரண்டாயின. புறனடையாற் கொள்வன என்றது இவ்வியல் 10--ஆம் சூத்திரத்தில் எடுத்தோதாது பிறவும் என்றதனாற் கொள்ளப்படும் நேர, நோக்க, துணைப்ப, மலைய என்றற்றொடக்கத்தன வாகிய உவமவுருபுகளை. 1. உவமச்சொல்லே வரம்பிகந்தனவே எனவரும் இந்நூற்பா, எந்த நூலுக்குரிய தெனக் தெரியவில்லை. தொல்காப்பியனார் அன்னமுதல் புரைய என்பதீறாகச் சொல்லிய முப்பத்தாறுருபுகளும் பிறவும் என்பதனால் அச்சூத்திரவுரையுள் எடுத்துக்காட்டப்பட்ட நேர என்பது முதல் கெழுவ என்பதீறாகவுள்ளவுருபுகளும் அவை போல் அருகிவருவன சிலவுமாக உவமவுருபுகளை ஒருவரம்பிற்பகுத்து அவற்றை நால்வகையுவமங்கட்குப் பொதுமையின் உரியனவாகவும் ஒவ்வொரு வகைக்குச் சிறப்பாகவுரியனவாகவும் வருமெனவும், இடைச் சொல்லாகவும் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று எனப் பல்வேறுகுறிப்பினவாகவும் வரும் உவமவுருபுகள் யாவும், மேற்குறித்த உருபுகளுள் அடங்கும் எனவும் கொள்ளுமாறு ஆசிரியர் தொல்காப்பியனார் உவமவுருபுகளை இவ்வியலில் வரையறுத்துக்கூறுகின்றாராதலின், பிறர்கூறுமாறு போல உவமச்சொல் வரம் பிறந்தன ஆகா என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) என்புழி இன் வேற்றுமையாகிய ஐந்தாம் வேற்றுமை (தன்னுருபுமறைய இன் வந்தது எனவும் களித்துப் பொருகயலிற் கண்பனிமல்க (அகம் 313) என்புழி, உவமவுருபின்றி இன்னுருபு (இப்பொருளின் இத்தன் மைத்து இப்பொருள் எனத்) தன் பொருட்கண் வந்தது எனவும் பேராசிரியர் கூறும் வேறுபாடு மேலும் சிந்தித்துணரத்தகுவதாகும். 2. வரைவு இன்றி -- வினை பயன் மெய் உரு என்பவற்றுள் இன்னவகைக்கு உரியது என்னும் வரையறையின்றி. ஐம்தாம்வேற்றுமைப்பொருள் வந்த உவமங்களும் உவமவுருபு தொகைப் படாமையின் உவமத்தொகையெனப்படா என இயையும். 3. இத்தொடர், அங்ஙனந்தொகைப்படாவழியும் மற்று மேலுவமை கூறுகின்றதா மென்பது என்றிருப்பின் பின்வரும் உதாரணத்துடன் இயைபுடையதாகும். 4. மாசறு திருமுகம் மதியொத்தது என எழுவாயும் பயனிலையுமாகப்பரிந்து ஒன்றுதலின், தொகைப்பாடிலதாயிற்று என்க. அன்ன வாங்க -- பா. வே. 1. அன்னமுதலாக வரும் எட்டுருபுகளும் பொருளும் வினைவகையால் ஒத்தன என்ற குறிப்பிற் பயின்றனவாதலின் வினைப்பாலுவமம் எனப்பட்டன. 1. மானோக்கு நோக்கு மட நடை யாயத்தார், என இத்தொடர் இருத்தல் வேண்டும். இதன்கண் மானோக்கு என்புழிவந்த நோக்சூ என்பதே உவமஉருபு. பின்வந்த நோக்கு என்பது நோக்கம் என்னும் தொழிற்பெயராகும். 2. இனி எனவரும் பகுதியைக் கூர்ந்து நோக்கும் வழி இதற்குமுன் என வரும் என்றதொரு தொடர் அமைந்திருத்தல் வேண்டும் என்பது புலனாம். 1. இங்குஎடுத்துக்காட்டியபடி கடுக்கும், கெழு முதலிய பிறவாய்ப்பட்டாலும் சிறுபான்மை வினையுவமம் வருதல் இவ்வியல் 01-ஆம் சூத்திரமாகிய பொதுவிதியாற் கொள்ளப்படும். 2. இச்சூத்திரத்திற் பிற (ஒழிந்த பொருள்) என்றது, வினைபயன் மெய் உருஎன மேற்குறித்த நான்கனுள் வினைநீங்கலாக எஞ்சியுள்ள மூன்றனையும் ஆகும். 1. பாலன்ன மென்மொழி என்புழிச் சுவையும் பண்பாதல் பற்றி உருவெனக் கொள்ளப் பெற்றது. 2. ஒழிந்தமூன்றாவன பயன், மெய், உரு என்பன. 1. பெருவரவு--பெரும்பான்மையாக வருதல். 2. எள்ள என்பது முதலாகக்கூறப்பட்ட எட்டுருபுகளும் உவமையும் பொருளும் பயன்வகையால் ஒத்தன என்ற குறிப்பிற்பயன்றனவாதலின் பயனிலையுவமம் எனப்பட்டன. 1. என்ன முதலிய இவையெட்டும் பயனிலையுவமைக்குப் பெரு வரவின எனவே போல, புரைய, ஏய்ப்ப, நிகர்ப்ப, அற்று, கொள்ள, என, செத்து, உறழகடுப்ப என்பன சிறுவரவின எனவும் இங்ஙனம் பிறவாப்பாட்டால் பயனிலையுவமம் வருதல் இவ்வியல் 01--ஆம் ரூத்திரமாகிய பொதுவிதியாற் கொள்ளப்படும் எனவும் கொள்க என்பதாம். 1. கடுப்ப முதாலகக் கூறப்பட்ட எட்டுருபுகளும் வடிவ அமைப்பாகிய மெய் வகையால் உவமையும் பொருளம் ஒத்தன என்ற குறிப்பிற் பயின்றனவாதலின் மெய்ப்பாலுவமம் எனப்பட்டன. மெய்--வடிவம். 1. புறனடையாற்கொண்டன அனைய, செத்து, நேர எனவரும் உருபுகள், எடுத்தோதியனபோல பொற்ப, வென்ற, உறழ எனவரும் உருபுகள் - இவை மெய்யுவமத்திற்குச் சிறுபான்மை வருதல் இவ்வியல் 01 --ஆம் சூத்திரமாகிய பொதுவிதியாற் கொள்ளப்படும். 2. போல முதலாக வரும் எட்டுருபுகளும் உவமையும் பொருளும் மெய்க்கட் கிடந்த உருவென்னும் வண்ண அமைப்பால் ஒத்தன என்ற குறிப்பிற் பயின்றன, வாதலின் உருவின் உவமம் எனப்பட்டன. 1. உருவுமத்திற்குச் சிறப்புரிமையுடையவாகச் சொல்லப்பட்ட களிய, நந்த என்னும் இரண்டுருபுகளுக்கும் பேராசிரியர் காலத்திலே இலக்கியம் கிடைத்தலரிதாயிற்று என்பது இவ்வுரைத் தொடராற்புலனாம். 1. மேல் நால்வகையுவமங்கட்கும் முறையே உரியனவாக வகுத்துரைக்கப்பட்ட உவமவுருபுகள் தத்தமக்குரிய பொருள் வகையினையன்றி வழக்குப் பயிற்சியாகிய மரபினால் வேறு பொருள்களைத் தோற்றுவித்துலும் உண்டு எனவுணர்ந்துவது இச் சூத்திரமாதலின் இது மேலனவற்றிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர். தோன்றுமன் என்புழி மன் என்னும் இடைச்சொல் ஆக்கங்குறித்து நின்றது. 1. அன்ன என்பதுமுதலாக எடுத்துரைக்கப்பட்ட உவமவுருபுகளை வினைப் பாலுவமம் பயனிலையுவமம், மெய்ப்பாலுவமம், உருவின் உவமம் என நால்வகை யுவமங்கட்கும் எவ்வெட்டாகப் பகுத்துரைத்தற்கேற்ற காரணம் கூறுவது இச்சூத்திரமாகும். 1. நால்வகையுவமைகளுள் இவ்வுவமைக்கு இன்னவாய்பாடுகள் உரியன என மேற்கூறியவாறு உரிமைப்படுத்துரைத்தற்கு அவ்வுவமவுருபுகள் அவ்வப்பொருள் தோன்றத் தொன்றுதொட்டுப் பயிலப்பெற்றுவரும் வரலாற்று முறையே காரணம் என்றவாறு. 2. ஆங்கு என்னும் உவமவுருபு வினையுவமத்திற்குரியது. புலி பய்ந்தாங்கு பாய்ந்தான் என்புழி வினையுவமத்திற்பயிலுதற்குரிய அதன் பொருண்மை தோன்ப்றுதல் காணலாம், வினையுவமத்திற்குரிய இதனை தளிராங்குச் சிவந்தமேனி என உருவுமத்திற் சேர்ந்துரைத்தால் உவமப்பொருள் விளங்காது. 3. எள்ள என்னும் உருபு பயனுவமத்திற்குரியது. மழையெள்ளும் வண்மையோன் எனவரும். இங்கு மழையினை ஒருவனது கொடைக்கு இழித்துச் சொல்லினும் மழையின் பயனும் அவனதுகொடைப் பயனும் ஒத்தன எனக் கொள்வதன்றி அம் மழையினை அவனுக்குத் தாழ்வுடையாக உலகத்தார் இழித்து நோக்குவதில்லை. பயினிலையுவமைக்குரிய எள்ள என்னும் இவ்வுருபினை புலியெள்ளும் பாய்த்துள் என வினையுவமத்துள் சேர்த்துரைத்தல் மரபனறு. ஒருவனது ஆற்றலை மிகுத்துரைக்குமிடத்து அவனுக்கு உவமையாகச் சொல்கின்ற புலியேற்றினை அவனைக் கண்டு எதிர்நிற்கலாற்றாது புறங்கொடுத்தோடியது என்றும் நடுங்கிற்று என்றும், அவனைப்பார்க்க அஞ்சிக் கண்ணிமைத்தது என்றும் கூறுதல், அதனால் உவமிக்கப்படும் வீரனுக்குப் புகழாகும் என்பதே கருதிக்கூறினால், கூறின அவ்வுமையின் பொதுத்தன்மை யாகிய பொருள் வெளிப்படாமையோடு அங்ஙனம் அஞ்சியபுலியொடு உவமித்தல் அவ்வீரனுக்கும் புகழாகாதாதலின் பயனுவமத்திற்குரிய எள்ள என்னும் உவமருபினை வினையுவமத்துடன் சார்த்திக்கூறுதல் உவமப்பொருள் தோன்றுதற்குரிய வரலாற்று மரபாகாது என்பதாம். 1. கடுப்ப என்னும் உருபு மெவ்யுவமத்திற்குரியதாகக் கூறப்பட்டது. கடுத்தல் என்பது ஐயுறுதல். ஐயம் என்பது வடிவு கண்டவழி பிறப்பது. எனவே இவ்வுருபு மெய்யுவமத்திற் குரியது. வினையுவமம்பற்றிப் புலியொடு மறவனையுவமிக்குங்காலும் ஒருவனது கொடைப் பயனை மழையின் விளைவினொடு உவமிக்குங்காலும் வடிவுபற்றி ஐயஞ்செய்தல் வேண்டாமை யானும், பொருளின்குணமாகிய உருவு கண்டநிலையில் ஐயந்தோன்றுதற்கிடமின்யைலும், கடுப்ப என்னும் உருபு மெய்யுவமத்திற்கேயுரியதாயிற்று. எய்த்தல் -- பொருந்துதல், வடிவொடு பொருந்துதல் மெய்யுவமத்திற்குரியதாகலாலும் மருள, புரைய என்பன இதுவோ அதுவோ என இரண்டுற ஐயுறுதலைக்காட்டுதலானும் ஒட்ட ஒடுங்க என்பன உவமமும்பொருளும் வடிவால் ஒன்று என்றும் பொருண்மையவாகலானும் நிகர்த்தல் அவ்வினப்பொருள், என்பதனைக் காட்டுதலானும் ஓட என்பதன் ஓடுதற்றொழில் வடிவிற்கன்றி நிறப்பிண்பிற்கின்மையாலும் இவ்வுருபுகள் மெய்யுவமத்திற்கு உரியவாயின. 1. உருவுவமவுருபாகிய போலும் என்பது, இடைச்சொல்லாய் வினைச் சொல்லாகப் பயின்று வழங்குதலான் அதற்குரிய பொருட்காரணம் கூறுதற்கியலவில்லை. ஆயினும் இஃது அன்னவென்பதுபோல மற்றை மூன்றுவமத்தும் பயின்று வரும் என்பது எய்துவித்தற்கு இதனை உருவுமத்திற்குரியவுருபுகளுள் முதற்கண் வைத்து எண்ணினார் தொல்காப்பியனார் . மறுப்ப, ஒப்ப முதலாயினவற்றை உருவு மத்திற்குப் பெருவரவினவாக ஆசிரியர் உரிமைப்படுத்துக் கூறுதலால், அங்ஙனம் உரியனவாதற்கு இவையும் ஒரு காரணமுடையதாதல் வேண்டும். அன்றியும். இவை மரபிற்றோன்றும் என்றதனால் இவற்றை மரபுபற்றி அறிதல் வேண்டும். இவ்வாறு சூத்திரஞ்செய்தலான் தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே என இயையும். ஆசிரியர் இவ்வாறு சூத்திரஞ் செய்தமையால் தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் இவ்வுருபுகள் இவ்வாறு பயின்றுவரும் என்பது அறிந்தோமல்லவா? என்பது இத்தொடரின் பொருளாகும். 1. இந்நூற்பா இதேயமைப்பில் மெய்ப்பாட்டியலில் இரண்டாஞ்சூத்திரமாக வந்துள்ளமை நினைக்கத்தகுவதாகும். 2. வினையென்பது வினையும் வினைக்குறிப்புமென இருவகையாம். 1. சொல்லதிகாரத்தில் உவமவாய்பாடு விரிந்து வருமாறுகூறாது அறுவகைத் தொகைபற்றிய ஆராய்ச்சியில் உவமவுருபுதொக்குவருமாறு உணர்த்தினார். அவ்வுவமவாய் பாடுகள் பொருளதிகாரமாகிய இவ்விடத்திற்குறிக்கப்படும் பல்வேறு குறிப்புப் பொருளுடையனவாதலானும் அவை இடைச்சொல்லாம் நிலையிலன்றிப் பொருள் பயப்பனவாக அமைந்துள்ளமையானும் அவ்வுவமவிரிவினை இப்க பொருளதிகாரத்திற்கூறி முற்சொல்லதிகாரத்திற்கூறப்பட்ட உவமத்துடன் தொகையுடன் சேர்க்க வினைப்பயன் மெய் உரு என்றும் நால்வகையுவமும் விரியும் தொகையும் என இருதிறப்பட்டு எட்டாம் பகுதியும் உண்டு என இச்சூத்திரத்தால் உவமை இத்துணைப் பகுதியவாம் எனத் தொல்காப்பியனார் தொகை கூறினார் என்பதாம். 2. நாலிரண்டாகும் என்பதற்கு முன்னர் வினைமுதலிய நால்வகையுவமை கட்கும் முறையே உரியவாக எவ்வெட்டாகத் தொகுத்துக் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் நந்நான்காய் இரண்டு கூறாகி எட்டுப்பகுதிகளாதலும் உண்டு எனப்பொருள் கொள்ளுதலும் உண்டு என்பதாம். 1. வினையுவமவாய்பாடுகள் எட்டனுள் அன்ன, ஆங்க, மான, என்ன என்னும் நான்கும் இடைச்சொல்லாய் நின்று வேறொரு பொருளையுணர்த்தாமையின் ஓரினமாய் ஒன்றாயின. விறப்ப, உறழ, தகைய, நோக்க என்னும் நான்கும் இனநோக்குதற் குறிப்பினவாய்த் தமக்கொன ஒரு பொருளுடைமையின் ஒரினமாய் ஒன்றாயின. 2. பயவுவம வாய்பாடுகள் எட்டனுள் எள்ள பொருவ, கள்ள, வெல்ல என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளின் உவமம் தாழ்ந்தது என்னும் பொருளினை யுடையவாய் ஒருகூறாயடங்கும், விழைய, புல்ல. மதிப்ப, வீழ என்னும் நான்கும் உவமிக்கப்பட்ட பொருளையுயர்த்துதலும் உவமையைத் தாழ்த்தலுமின்றி அவையிரண்டும் தம்முள் ஒத்தன வென்ற பொருளினையுடையவாய் ஒரு கூறாயடங்கும். 1. மெய்யுவம வாய்பாடுகள் எட்டனுள், கடுப்ப, மருள, புரைய, ஒட என்னும் நான்கும் ஐயப்பொருளாய் ஒரு கூறாயடங்கும். எய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, நிகர்ப்ப என்னும் துணிபொருளாய் ஒரு கூறாயடங்கும். 2. உருவுவமவாய்பாடுகள் எட்டனுள் போல, ஒப்ப, நேர, நளிய என்னும் நான்கும் உவமமும் பொருளும் தம்முள் மாறுபாடியன்றிச் சேர்ந்தன என்னும் பொருளுடையவாகி ஒன்றாயடங்கும். மறுப்ப, காய்ப்ப, வியப்ப. நந்த என்னும் நான்கும் உவமையோடு உவமிக்கப்படும் பொருள் மாறாய்த் தோன்றி நின்றது என்னும் பொருளுடையவாகி ஒருகூறா யடங்கும். இவ்வாறு நால்வகையுவமவாய்பாடுகளையும் இவ்விருகூறுகளாய் எட்டாகப் பகுத்துப் பேராசிரியர் தரும் விளக்கம் பெரிதும் நுண்ணுணர்வினதாகும். 3. ஆசிரியர் தொல்காப்பியனார் (உவமவாப்பாடுகள் பலவற்றைச் செயவேனச்ச வாய்பாட்டால் ஓதியதன் நோக்கம், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொற்போல நிற்குமெனவும் அங்ஙனம் நிற்குங்கால் பெயரெச்சமும் வினையெச்சமும் முற்றுமாகி நிற்குமெனவும் உடம்பொடுபுணர்த்தல் என்னும் உத்தியால் உணர்த்துதற் பொருட்டேயாம் என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. இங்குப் பெருமை சிறுமையெனபன பொருள்களின் பெருக்கம சுருக்கங்களையும் இன்பதுன்பக்கூறுபாடுகளின் பெருக்கம் சுருக்கங்களையும் குறித்து நின்றன என்பதும் பெருமை சிறுமை பற்றிய இவ்வுவமைகள் மெய்ப்பாட்டொடு பொருந்திவாராத நிலையில் இவற்றாற் யனில்லையென்பதும் இளம்பூரணர் கருத்தாகும். 1. எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படும் என்கின்றது. 1. உவமத்தொடு பொருந்திவருவனவாக முன்னர்க்கூறப்பட்ட பெருமையுஞ் சிறுமையும் மெய்ப்பாட்டின் முற்படத்தோன்றாது மெய்ப்பாடு எட்டன்வழி மருங்கறியத் தோன்றும் என இங்குக் கூறியதனால் பெருமை சிறுமைபற்றாது மெய்ப்பாடு எட்டன்வழி உவமை தோன்றுதலே செவ்விது என்பதும் பெருமை சிறுமை பற்றி உவமை வருதல் வழிமருங்கெனப்படும் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். 1. உவமப்பொருள் என்றது, உவமையினையும், உவமப் பொருளின் உற்றது என்றது, உவமப்பொருளினாலே சொல்லுவான் கூறலுற்ற உவமேயத்தினையுங் குறித்தன தெளி மருங்கு என்றது, ஐயத்தின் நீங்கித் துணியும் பக்கத்தினை. தெளிமருங்கு (துணியும் பக்கம்) உற்றதெனப் படும் உவமேயத்தின் கண்ணது எனவே தெளியாமை (துணியாமை) உவமத்தின் கண்ணது என்பது தானே பெறப்படும். 2. இக்கலித் தொகைப்பாடலில் பிறை, மதி, மலை (வேய்) , சுனை (பூ) மயில், கிளி என்பன முறையே தலைவியின் நுதல், முகம், தோள், கண், சாயல் மொழி என்பவற்றுக்கு உவமையாக வந்தன, இவற்றின்கண் பிறையுமன்று. மதியுமன்று, மலையு (வேயு) மன்று, சுனை (ப்பூ) யுமன்று, மயிலுமன்று, கிளியுமன்று எனத்துணியாதுநின்றன உவமமாதலும், நுதலும் முகனும் தோளும் கண்ணும் சாயலும மொழியும் எனத்துணியும் பக்கத்தன உவமேயமாதலும் காண்க. கண். புருவம். கூந்தல் என்னும் உவமேயங்களை முறையே கயல், வில், கார் என உவமப்பெயரான் வழங்குதலும் உவமப்பொருளின்உற்றுதுணருந்தெளி மருங்கினதாகக் கொள்ளப்படும் என் தாம். 1. உவமையொடு பொருட்கு ஒப்புமை விரித்துக் கூறப்படாதனவும் உவமத்திற்கு உற்ற திறத்தியல்கொண்டு உவமேயத்திற்கும் ஒப்புமை சார்த்தியுணர்ந்து கொள்ளப்படும் என எய்தாதது எய்துவிக்கும் நிலையில் அமைந்தது இச்சூத்திரம் என்பது பேராசிரியர் கருத்தாகும். 1. உவமையினால் பொருட்குற்றதிறமெல்லாம் உணருமாறு உணர்த்துகின்றது. உவமையெனப்பபட்ட பொருளால் உவமிக்கவரும் பொருளுக்கு உற்றதெல்லாம் தெளிந்து துணியப்படும் பகுதியும் உள; அவ்வாறு துணிந்துரைக்கப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணவகைளால் என்றவாறு. தெளிமருங்கு--தெளிந்து துணியும் பக்கம். பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணமான மேற்கூறியவாறு எண்வகைமெய்ப்பாடும் பற்றி உவமம் கொள்ளுங்கால் உவமான அடைமொழிக்கு உவமேய அடைமொழி குறைந்து வருவனவும் யாதும் அடைமொழி யன்றி வருவனவும் இவ்விரண்டும் உவமேயத்திற்கு உற்ற தன்மையிது வெனவுணரவியலாமல அமைந்தநிலையிலும் அவற்றையுணர்ந்தாற்கும் உவமையே தெளியும் பக்கத்ததாம் எனவும் அடைமொழியின்றி உவமை கூறி உவமையிடை உவமேயத்திற்கமைந்த பொதுத்தன்மையிது வென விளங்கவுணர்த்தாத நிலையிலும் அவ்வுவமையே உவமேயத்தின் இயல்பினைத் தெளிந்துதுணிதற்குரிய பகுதியதாம் எனவும் உணர்த்துவார் திறத்தியலான என்றார். போழ்தூண்டூசி--கொகுத்துணைவழியே செலுத்தப்படும் துன்னூசி, வாளாதே உவமஞ்செய்தலாவது அடைமொழியின்றியும் பொதுத்தன்மையுடன் சாராமலும் பெயரளவில் உவமைகூறுதல். உவமத்தின் உற்றதுணரும் என்னாது உவமப்பொருளின் உற்றதுணரும் எனப் பொருளொடு சேர்த்துக்கூறியதனால் உவமேயத்துடன் பொருந்திய அடை மொழிகளும் உவமஅடைக்கு ஒத்தனவாய் உணரப்படாதன விலக்கப்படும் என்பதாம். 1. மதியின் அகத்துத்தோன்றும் மறுப்போல மதியின் புறத்துமறுவில்லையாதலின், மறுவிலாமதியென்ற பொருள்தோன்றப் புறமதிபோன்றமுகம் என உவமங்கூறுதல், உவமப்பொருளின் உற்றதுணருந் தெளிமருங்கு எனக்கொள்ளலாமோ? என வினவினார்க்குப் புறமதி என்ற உவமை உலகவழக்கொடு மருவிவந்ததன்றாகலின் அங்ஙனங் கொள்ளுதல் கூடாதென்பதனை அறிவுறுத்துவதே வருகின்ற சூத்திரம் என விடையிறுத்தவாறாம். * மரீஇய மரபின் வழக் கொடு படுமே என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 1. மேற்குறித்தவாறு உவமையைக் கூறிய அளவில் இவ்வுவமையை உவமிக்கப்படும் பொருளாக உணர்தல் என்பது, உலகவழக்கில் அவ்வுவமைகள் அவ்வப்பொருள்கட் குரியனவாகத் தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபினை யுளத்துட் கொண்டுபொருந்தி வரும் என்பதாம். எனவே வழக்கொடு பொருந்தி வாராத உவமைகளைக் கூறிய அளவிலேயே அவ்வவ்வுவமைகளைக்கொண்டு உவமேயப் பொருளையுற்றுணர்தல் இயலாது என்பதாம். 2. அஃது ஏதுவாக --அவ்வழக்குக் காரணமாக அதனையும்--உவமேயப் பொருளையும் 1. எனவே, உலகத்து வழக்கினுள் அடிப்படத்தோன்றும் உவமையாயிற்றாயினும் புறமதிபோலுமுகம் என்றதுபோல உவமப்பொருள் புலப்பாடுசெய்யாது என்பது இதன் கருத்து என இவ்வுரைத்தொடரை இயைத்துப் பொருள் காண்க. மதி உலகவழக்கினுள் தொன்றுதொட்டு வழங்கும் உவமையாயினும் மறுவற்றது என்பதனைப் புலப்படுத்தும் நிலையில் மதியின் புறத்தையுவமையாகச் சொல்லும் மரபு இல்லையாதலால் புறமதிபோலும் முகம் என்றது கறைதீர்ந்தமுகம் எனப்பொருள் புலப்பாடு செய்யாது என்பதாம். 1. உவமை இராண்டாகி ஒரு சொற்றன்மைப்பட்டும், அவற்றால் உவமிக்கப்படும். பொருளும் இராண்டாகி ஒருதொடர்த் தன்மைப்பட்டும்வரின் இவை இரட்டைக்கிளவி எனப்படும். இவ்வாறு இரட்டைக்கிளவியாய்வரும் உவமைக்கேற்பவே உவமேயமும் இரட்டைக் கிளவியாக அமைதலே பொருள்புலப்பாட்டற்கு ஏற்புடைய இலக்கணமரபாம் என்பது இந்நூற்பாவின் கருத்தாகும். 2. கற்றார் கல்லாதார் என்பன இரண்டும் உவமேயப்பொருள்கள். மக்கள் விலங்கு என்பன இரண்டும் உவமைகள். கற்றார், கல்லாதார் என்னும் உவமேயம் இரண்டினையும் கற்றாரோடு ஏனையவர் என ஒரு தொடராகவும், மக்கள், விலங்கு என்னும் உவமை இரண்டினையும் விலங்கொடு மக்கள் என ஒரு தொடராகவும் கொண்டுரைப்பது இத்திருக்குறளாதலின் இரட்டைக்கிளவி இரட்டைவழித்தே என்பதற்கு இலக்கியமாயிற்று. விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ளவேறு பாடுடையர் ; விளங்கியநூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கு என்றது என இத்திருக்குறட்குப் பொருள் வரைவர் மனக்குடவர். விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர், அத்துணைத் தீமையுடைய னரல்லர் என்பதாம். மயக்க நிரனிறை எனப்பொருள் விளக்கந்தருவர் பரிமேலழகர். கற்றாரோடு ஏனையவர், கற்றார், விலங்கொடு மக்கள் அனையர் என்றோ-அமையவேண்டிய இத்தொடர்முறைமாறியமைந்தமையின் மயக்க நிரனிறையாயிற்று. மேல் இருவகையாக இயைத்துக்காட்டிய தொடர்களுள் முன்னதன்கண் கற்றாரோடு கல்லாதார்க் குள்ள தாழ்வும், பின்னதன்கண் கல்லாதாரோடு கற்றார்க்குள்ள உயர்வும் புலனாதலறிக. 1. இரட்டைக்கிளவி என்றது, அடையும் அடையடுத்து பொருளும் என இரண்டாய் வரும் உவமேயப் பொருளை, இரட்டை என்றது அடையும் அடை) யடுத்த பொருளும் என இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமையினை. அடையொடு பொருட்கு அடைபுணர்க்குமது இரட்டை (மாற--ளங) என்பது மரறனலங்காரம், இரண்டு பொருள்களை ஒன்றாக இணைத்து உவமிக்கக் கருதின், அதற்கேற்ப உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமித்தல் வேண்டும். எடுத்துக்காட்டாகச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பு என உவமேயத்தைச் சுண்ணமும் மார்பும் என இருபொருளாக இணைத்து, அதற்கு உவமைகூறக் கருதிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், பொன்னுரையும் அது படிந்த கட்டளைக்கல்லும் என இரண்டையும் பொன்கான் கட்டளை என இரட்டையாக்கி பொன்காண் கட்டளைகடுப்பச் சண்பின் புன்காங்ச்சுண்ணம் புடைத்தமார்பின் என உவமை கூறியுள்ளார். 2. இவ்வுரைப்பகுதி சண்பின் சுண்ணம்புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடுங்கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளவி இரட்டை வழித்தாயிற்று. என்றிரத்தல் வேண்டும். 3. உம்மை என்றது, இரட்டைக்கிளவியும் என்புழிவரும் உமமையினை. இவ்வும்மை யினால் ஒற்றைக் கிளவியும் இரட்டைவழித்தாமாறு தழுவிக்கொள்ளப்பட்டது. 1. இரும்புலிக்குருளையொன்றனையே என்றிருத்தல் பொருட்பொருத்த முடையதாகும். ++ முன்னை மரபிற் -- பா. வே. 1. தனக்கெனப் பிறிது உவமை சொல்லப்படாது, உவமேயப்பொருள் தோற்றிய இடத்தொடு நோக்கிக் குறிப்பொடு பொருந்தக் கூறுங்காலத்து, அறிவுடையோர் கொள்ளின் அவர் துணிந்த துணிவின் கண்ணே அவ்விடத்து உவமைச் சொல் வரும் என்பது இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கொண்ட பொருளாகும். 2. நிலவுக் காண்பதுபோல அணிமதியேர்தர (கலித். 119) என்புழி மதியின் எழுச்சியைக் காணுதற்குப் பிறபொருளை உவமை கூறாது மதியின் தோற்றமாகிய பிறப்பினை நோக்கி அப்பிறப்பிடத்திற்கேற்ப அம்மதியினது எழுச்சி இவ்வாறிருந்தது எனத் துணியும் நிலையில் நிலவுக்காண்பது போல என அதன்கண் உவமச்சொல் வந்தமைகாண்க. இதுமுதல்31 முடியவுள்ள சூத்திரங்கள் உள்ளுறையுவமம் பற்றியன என்பது பேராசிரியர் உரையினால் நன்குபுலனாம். 1. இச்சூத்திரத்தாற் கூறப்படும் உள்ளுறையுவமம், மேற்பொருளியலில் இசை திரிந்திசைப்பினும் பொருள் இயையும் (தொல்--பொருளியல்--1) எனச் சொல்லுணர்த்தும் பொருளும் சொற்றொடர் உணர்த்தும்பொருளும் ஆகிய பகுதிக் கண் அடங்குமாயினும், இதனைஅவ்வியலிற்கூறாது உவமமாதல் பற்றி இவ்வுவமவியவிற் கூறினார் தொல் காப்பியனார் என்பதாம். 2. முன்னமரபிற் கூறுங்காலை என்பதே பேராசிரியர் கொண்டபாடம் என்பது, கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்னமரபினாற் கறுங்காலை எனவரும் அவரது உரைப்பகுதியாற் புலனாம். முன்னம்--கருத்து. பிறிதொடுபடாது--உவமையினை (உவமேயமாகிய) பிறிதொருபொருளொடு பொருத்திக்கூறாது. பிறப்பொடு நோக்குதலாவது உவமநிலங்களுட்பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்குதல், முன்னமரபாவது, கருத்தினால் இதற்கு இஃது உவமையென்று சொன்ன மரபு. துணிவொடு வருதலாவது, வெளிப்படக்கூறிய இது. வெளிப்படக்கூறப்படாத இன்ன பொருட்கு உவமமாகும் எனக்கற்போர் துணிந்து கொள்ளுமாறு தோன்றுதல், துணிவினோர் கொளின்துணிவொடுவரூஉம் என இயையும். 1. உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாகநிறீ இக்கூறானாயின் மற்றிதனை உவமையென்றது என்னையெனின், அங்ஙனங் கூறானாயினும் உவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனையுவமையென்றான் என இவ்வுரைத் தொடரை வினாவும் விடையுமாக இயைத்துப்பொருள் காண்க. 2. பாவைபோலும் வனப்புடைய பெண்ணைப் பாவை என்றாற்போன்று, உவமம் போன்று, பொருள்கொள்ளப்படும் உள்ளுறையினை உவமம் என்றமையின் இனதை ஒப்பினாகிய பெயர் என்றார். இஃது ஒப்பினானாகிய பெயர் என்பது உவமப்போலி எனத் தொல்காப்பியனார் வழங்குதலால் நன்கு புலனாம் என்பது கருத்து. உவமம் போன்று பொருள்புலப்படுத்துவது உள்ளுறையாதலின் உவமப்போலி என்பது அதற்குரிய காரணப் பெயராயிற்று. 1. உவமையைப் போன்று வருவன உவமப்போலி என்பர்இளம்பூரணர். அவர்கூறும் உவமப்போலி ஐந்தனுள் 1. இதற்கு உவமையில்லை என்பதனை உண்மை புலமையெனவும், 2. இதற்கு இதுதானேயுவமை என்பதனைப் பொதுநீங்குவமை யெனவும், 3. பலபொருளினுமுளதாகியவுறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சேர்த்தி யதனைப் பலபொருளுவமையெனவும், 4. பலபொருளினுமுளதாகியகவின் ஓரிடத்து உவமையாக வந்ததனை விகாரவுவமை எனவும், 5. கூடாப்பொருளொடு உவமித்த வந்ததனைக் கூடாவுவமையெனவும் கொள்வர் தண்டியலங்கார நூலாசிரியர். இங்கு இளம்பூரணர் குறித்த உவமை வகை ஐந்தும் அவர் தாமே இலக்கியங்களிற் கண்டு வகுத்துரைத்தன எனக்கருத வேண்டியுளது. இவ்வைந்தும் தொல்காப்பியனாரால் விரித்துரைக்கப்பெறாமையும் இங்குக் கருதத்தகுவதாகும். இங்கு உவமப்போலி என்பது உள்ளுறையுவமையெனவும், அதன்வகையாகிய ஐந்தும் அடுத்துவரும் குத்திரத்தில் விரித்துரைக்கப்பட்டன எனவும் கொள்வர் பேராசிரியர். 1. உள்ளுறையுவமையினை வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என ஐவகையாகப் பின்வரும் சூத்திரத்தில் வரித்துரைக்கும் ஆசிரியர், உவமப்போலி ஐந்து என அதன் தொகையினை மட்டும் இச்சூத்திரத்தாற் சுட்டியதன்பயன், சிறப்பு, நலன், காதல் வலி, கிழக்கிடுபொருள் என ஏனையுவமத்துக்குக் கூறிய நிலைக்களம் ஐந்தும் உவமப் போலியாகிய இவ்வுள்ளுறைக்குக்கூறாது போயினும் அவ்வைந்துமே இதற்கும் நிலைக்களமாம் என்பதும், ஏனையுவமத்திற் பிறப்பாகிய சாதிபற்றி உவமங்கூறுதல் வழக்கன்றாயினும் இவ்வுள்ளுறையுமத் தில் பிறப்புப்பற்றி உவமித்தல் பொருந்தும் என்பதும் அறிவித்தலாம் என்பது பேராசிரியர் கருத்தாகும். + திறத்தியலென்ப எனப்பாடங்கொள்வர் பேராசிரியர். 1. மேலைச்சூத்திரத்திற்குறிக்கப்பட்ட உவமைவகை ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறுங்கால் செயல், பயன், உறுப்பு, உரு, பிறப்பு என்னும் ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப்பின்னர்க் கூறவேண்டும் எனவும், நினக்கு உவமையில்லை யென்னும் வழிச் செயலாலாவது பயனாலாவது உறுப்பாலாவது உருவாலாவது பிறப்பாலாவது ஒப்பாரில்லையெனல் வேண்டும் எனவும் இவ்வாறே ஏனைய நான்கு உவமைகளும் வினைபயன்மெய் உரு பிறப்பு என்னும் இவ்வைந்தினும் ஏதுவாகச் சொல்லப்பெறல் வேண்டுமெனவும் இச்சூத்திரப் பொருளை இளம்பூரணர் விளக்கியுள்ளமை காண்க. 1. வேழம்--நாணற்கரும்பு இழிந்தநாணல் உயர்ந்தகரும்புபோற்பூக்கும் நீர்த்துறை பொருந்திய ஊரன் தலைவன் எனவே, தோற்றத்தால் நாணற்கும் கரும்பிற்கும் தாழ்வு உயர்வு என்ப தொன்றில்லையாதல் போலவே தலைமகற்குப் பரத்தையரும் தலைவியும் தாழ்வு, உயர்வின்றி எல்லாரும் இன்பநுகர்ச்சிக்குரியர் எனவே யாமும் பரத்தையரும் பயனால் ஒத்தனம் என்றமையின், இது பயவுவமப்போலியாயிற்று. உவமைக்குரிய நாலவகைப் பொதுத் தன்மைகளுள் உரு என்பது நிறமென்னும் பண்பாதலின் அந்நிற மல்லாத தண்மை வெம்மை முதலியனவும் அதன்கண் அடங்கும் என்பதனை வகைபெறவந்த உவமத் தோற்றம், என்புழிக் கூறினான்நூலாசிரியன் என்பதாம் 1. பிறப்பொடுதரூஉந் திறத்த என்றதனால் இவ்வாறு திறப்பாடுவேறுமுள வென்பது உங்கொள்க, என இத்தொடரைத்திருத்துக. 2. இன்னுந் என்பது இங்குத் தொடர்பின்றியெழுதப் பெற்றமையின் அதனை நீக்கிப் படிக்க, 3. அவை, தண்பார்ப்புத்தின்னும்...C®»Hnthnd’ என்றவழி என முன்னுள்ள பகுதியே ஏடெழுதுவோரால் மீட்டும் இங்கு எழுதப்பெற்றமையின் இதனை நீக்கிப்படித்தல் வேண்டும். 1. இன்னதிறத்தனென்றதனானே எனவரும் இத்தொடர், இன்னுக் திறத்த என்றதனானே என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும். 2. வெண்பூம் பொய்கைத்து அவனூர் எனத் தலைவன் ஊரின்கண் உள்ள பொய்கையினைச் சொல்ல. அது தலைமகள் பசப்புநிறம்பற்றி உவமையாய் பொருட்பயனுடைய அடைமொழியாயினவாறுகாண்க. 1. தலைமகள் உவமைகூறுங்கால் தானறிந்த பொருள்பற்றியே உவமை கூறுதற் குரியள் என்பதாம். 2. தோழி உவமைகூறுங்கால் தான்பழகிய நிலத்திலுள்ளனவற்றையே உவமை கூறுதற்குரியள் என்பதாம். 26,27 இவ்விரண்டினையும் ஒரு சூத்திரமாகக் கொள்வர் பேராசிரியர். 1. இச்சூத்திரத்தின்பயன், தலைவி தன்னிலத்துள்ளன எல்லாவற்றையும் அறியும் பழக்கமில்லாதவள் எனவும் அவளுடைய தோழிமுதலிய ஆயத்தாராயின் அவர் வாழும் நிலத்துள்ளனவற்றையறிந்து கொள்ளுதலால் வரும் குற்றமெதுவும் இல்லையெனவும் அறிவித்தலாகும். 2. படப்பை -- தோட்டம். 3. பொருகளிறுமிதித்த நெரிந்த அடியையுடைய வேங்கைமரம் தலைவியின் தோட்டத்திலுள்ளதாதலானும் அவளாற்பூக்கொய்யப்படுவதாதலாலும் அவளறியும் கருப்பொருளாயிற்று. 4. தன்பார்ப்புத்தின்னும் அன்பில் முதலை (ஐங். 208) என்பது, தோழி கூற்று என்னை? தலைமகள் பெரும்பேதையாதலின் அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே என்பது என இவ்வுரைத்தொடரை இயைத்துப்பொருள் காண்க. 1. கிழவிசொல்லின் அவளறிகிளவி உள்ளுறையுவமை எனவும், தோழிக்காயின் உள்ளுறையுவமை நிலம்பெயர்ந்துரையாது எனவும் உள்ளுறையுவமை என்பதனை முறையே பெயர்ப்பயனிலையாகவும் எழுவாய்ப்பெயராகவும் அதிகாரத்தால் இருமுறை வருவித்து இருவேறு தொடராக இயைத்துரைக்க என்பதாம். 2. தலைமகன் உவமைகூறுங்கால் இத்தகைய நிலவரையறையின்றி அவன் பல விடங்களிலும் சென்றறிந்த பயிற்சியாகிய அறிவின் திறத்தால் எல்லாப்பொருள் பற்றியும் உவமை கூறுதற்குரியன் என்பதாம். உரனொடு கிளத்தலாவது தான் பயின்றுணர்ந்த உணர்வுடைமையால் பலவகைப்பொருள்களின் தன்மையுணர்ந்து அவற்றை உவமையாக எடுத்துரைத்தல். 1. ஏனோர்--ஏனையோர்; என்றது களவொழுக்கத்திற்கூற்ற நிகழ்த்தற் குரியோரில் தலைவி, தோழி, தலைமகன் என மேற்கூறப்பட்ட மூவருமல்லாத நற்றாய், செவிலி முலாயினோரை. 2. தன்னுரனுடையமை தோன்றச் சொல்லப்படும் என்றிருத்தல் வேண்டும். 1. இனிதுறுகிளவி--மகிழ்ச்சிவிளைககுஞ்சொல். துனியுறுகிளவி--புலவி விளைக்குஞ்சொல், 1. நின்ற பெண்டிர் என்னும் உரைப்பகுதியை நின்பெண்டிர் எனத் திருத்திப் படிப்பின் பொருள் இனிது புலனாம். 2. மேற்கூறிய உள்ளுறையுவமம் இவ்விரு பகுதியும் படச் செய்யப்படும் என்பது இதன் கருத்து என இயையும், இவ்விரு பகுதியாவன இனிதுறுகிளவியும் துனியுறுகிளவியும். 1. ஈரிடம் என்பன, இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் எனமேற்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட இரண்டிடம். இதற்குக் கிழவோட் குவமம் பிரிவிடத்துரித்தே எனப்பாடங்கொண்டு உரை வரைந்தாரும் உளரென்பதும் அப்பாடம் அத்துணைப் பொருட்பொருத்த முடைத்தன் றென்பதும் கிழவோட்குவமம் ஈரிடத்துரித்தே என இளம்பூரணர் கொண்ட பாடமே வலியுடைத்தென்பது இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் எழுதிய வுரையாற் புலனாம். 1. இச்சூத்திரத்தில் ஈரிடம் எனச்சுட்டப்பட்டவை மருதமும், நெய்தலும் எனக் கொண்டார் பேராசிரியர். இவ்விருநிலக்கருப்பொருள்களேயன்றிக் குறிஞ்சிநிலக் கருப் பொருள்பற்றித்தலைவி உள்ளுறையுவமைகூறியுள்ளமைகிழவி சொல்லின் அவளறிகிளவி என்னுஞ் சூத்திரத்து மேற்கோளாகப் பேராசிரியர் காட்டிய குறுந்தொகை. 208-ஆம் செய்யுளிற் காணப்படுதலாலும், ஈரிடம் எனப்பட்டன நாலிலததுள்மருதமும் நெய்தலுமாகிய இரண்டினையே சுட்டினஎனத்தெளிதற்குரிய குறிப்பு இச்சூத்திரத்துள் இன்மையாலும் குறிஞ்சிக்கண் அத்துணையுரித்தன்று எனப்பேராசிரியர் கூறும் உரைவிளக்கம் பொருந்து வதாகத் தோன்றவில்லை. இனிதுறுகிளவியுந்துனியுறுகிளவியும் உவமமருங்கிற்றோன்றுமென்ப எனவரும் மேலைச்சூத்திரத்தையொட்டிக் கிழவோட்குவமம் ஈரிடத்துரித்தே என இச்சூத்திரம் அமைந்திருத்தலால், இளம்பூரணர்கூறியவாறு இங்கு ஈரிடம்என்பன இனிதுறுகிளவியும் துளியுறு கிளவியுமாகிய நிலைக்களங்களையே சுட்டி நின்றன எனக்கொள்ளதலே ஆசிரியர் தொல்காப்பியனார்கருத்துக்கு ஏற்புடையதாகும். 1. பெருந்தண் வாடையின் முந்துவந்தனன் எனத் தலைவி கூற்றாகவரும் ஐங்குறுநூற்றுப்பாடல் பிரிவல்லாத குறிஞ்சித்திணை பற்றிவருதலின் தலைவி பிரிந்திருந்த விடத்தே உள்ளுறையுவமங் கூறப்பெறும் என்றல் பொருந்தாமையான் இலக்கியத்தோடு பொருந்திவருவது, ஈரிடத்துரித்து என்ற பாடமே என்பது நன்கு வலியுறுதல் காண்க. 2. இங்கு இடம் என்றது, உவமை கூறுதற்குரிய செவ்வியினை. 1. எப்பொருட் கண்ணும்--எல்லாப்பொருள்நிகழ்ச்சிக்கண்ணும். 2. ஆசிரியர் தொல்காப்பியனார் மேல் இவ்வியல் 27-ஆம் நூற்பாவில் தலைவன் தன் உரனுடைமைதோன்ற உள்ளுறையுவமம் கூறுவான் எனக்கூறியதல்லது, இன்ன நிலத்துக் கருப்பொருள் பற்றிச்சொல்லப்பெறும் எனக் கூறினாரல்லர். தலைவனுக்கு எல்லா நிலத்துக் கருப்பொருள்களும் உள்ளுறை கூறுதற்குரியவாம் என ஆசிரியர் இச் சூத்திரத்தால் தெளிவுபடுத்துகின்றார் என்பதாம். 3. வரையறையில்லாதவற்றுக்கு வரையறை கூறாமேமுடியுமாயினும் தலைவிககும் தோழிக்கும் உள்ளுறைகூறுதற்கு இடம் வரையறுத்ததனைக்கண்ட மானாக்கன் தலைவனுக்கும் இத்தகைய வரையறையுண்டோ எனக் கருதுதல் இயல்பாதலின் அங்ஙனம் கருதற்க என்பார், தலைமகற்கு இடவரையறையில்லை என்பதுபட இச்சூத்திரத்தை இயற்றினார் தொல் காப்பியனார் என்பதாம். 1. பொருந்துவழி--பொருந்துமிடம். கொள்வழியான--கேட்டோர்மனங் கொள்ளும் நெறியால் 2. பருதியஞ்செல்வன் என இவ்வுரையிற்காணப்படும் இலக்கியமேற்கோள் அடுத்த சூத்திரவுரையில் இடம் பெற்றுள்ளது. அஃது இங்கு இச்சூத்திரப்பொருளொடு தொடர் பின்றிக் காணப்படுதல் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகும். 3. தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கொள்வழியான (உள்ளுறை யுவமம்) கூறுதற்குரியர் என இயைத்துப்பொருள் கொள்க. 4. அவரும் அவ்வாறு சொல்லப்பெறுப என இயையும். 1. இவ்வியய் 27-ஆம் சூத்திரத்தில் தலைவி தலைவன் தோழியில்லாத செவிலிநற்றாய்பாங்கள், பாணன் முதலிய ஏனை அகத்திணை மாந்தர்க்கு உள்ளுறை யுவமம் சொல்லுதற்குரிய இடவரையறையில்லை யென இடவரையறையைமட்டும் விலக்கவே, அவரெல்லாரும் உள்ளுறையுவமம் சொல்லப்பெறுவர் என்பதொரு எண்ணந்தோன்றுவதியல்பு. அவருள் நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன் மாரும் உள்ளுறையுவம் கூறப்பெறார் எனவும், தோழிகூறின் நிலம் பெயர்ந்துரையாத பொருளான் ஒருவழிக் கூறும் எனவும் செவிலியாயின் இடவரையறையின்றிப் பொருந்துவழிநோக்கிக் கூறுதற்குரியள் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரத்தால் தெளிவுபடக் கூறினார் என்பதாம். 2. மற்றிவையெல்லாம புறப்பொருட்கு வாராதனபோல அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதியது என்னையெனின். ஆண்டு (புறப்பொருளாகிய அவ்விடத்து) வருதல் அரிதாகலின் இவ்வாறு ஆகத்திற்கே கூறினான் என்பது என இத்தொடரை இயைத்துப் பொருள்கொள்க. 3. சோழன்குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய 42-ஆம் புறப்பாடலில் நெல்லுறுப்பார் கடைமடைக்கண்பிடித்துக்கொண்டவானை மீன்களும் உழுவார் படைவாளால் மறிக்கப்பட்ட ஆமையும். கரும்பினை வெட்டுவார் கரும்பிபினின்றும் வாங்கப்பட்ட தேனும், பெரியதுறைக்கண் நீரை முகந்துகொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரும் என இவற்றை வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும் மென்புலத்தூர்களையுடைய நாட்டுக்குரிய வேந்தே எனச் சோழநாட்டின் கருப்பொருள்களைச் சிறப்பிக்குமிடத்துச் சோழ மன்னனுடைய படை வீரர்கள் பகைவேந்தரை வெற்றிகொள்ளுங்கால் பெற்ற தத்தம் பொருள்களை அவர்தாமே விரும்பிப் பிறர்க்கு அளிப்பார் என்னும் உள்ளுறைப் பொருள் தோன்றினாலும் தோன்றும் என்பதன்றி தாய்சாப்பிறக்கும் புள்ளிக்கள்வனொடு பிள்ளை தின்னுமுதலைத்தவனூர் என அகத்திணைப் பாடலிற் கொள்ளப்படுமாறு போல உறுதியாக உள்ளுறை யுவமங் கொள்ளுதல் வேண்டுமென்றும் வரையறை இப் புறப்பாடற்கில்லை, சோழநாட்டு உழவர் முதலாயினார் வருந்தாமற்பெறும் பொருள் பிற நாட்டார்க்கு விருந்து செய்யுமளவில் மிக்குள்ளன என அந்நாட்டினது வளமை கூறுதலே இப்பாடலைப் பாடினோர் கருத்தாதலின் உள்ளுறையுவமங் கூறவேண்டிய இன்றியமையாமை இப்புறப்பாடற்கில்லையென்பதாம். 1. பருதியஞ்செல்வன் விரிகதிர்த்தானைக் கிருள்வளைப்புண்ட மருள்படு பூம்பொழில் எனவரும் இத்தொடர், மணி மேகலைக் காப்பியத்திலுள்ள பளிக்கறைபுக்க காதையின் முதலிரண்டடிகளாகும். ஞாயிற்றுச் செல்வனாகிய கதிரவனது வரிந்த ஒளிக்கற்றையாகிய சேனையால் இருள்வளைக்கப்பட்டாற் போன்று அமைந்த மருள் என்னும் இசைபாடும் வண்டுகள் பொருந்திய மலர்களையுடைய சோலை என்பது இத்தொடரின் பொருளாகும். இதன்கண் கதிரவனது ஒளி உள்ளே புகாவாறு செறிந்த பொழிலுக்கு இருளின் திரட்சியினை உவமையாகக் கூறவந்த ஆசிரியர், கதிரவனது ஒளிக்கற்றையாகிய சேணையால் வளைக்கப்பட்டு ஒன்றாய்த் திரண்ட இருளின் தோற்றத் தினை உவமையாகக் கூறியமைல் இதுவேறுபடவந்த உவமத்தோற்றமாயிற்று. கூறியமருங்கிற் கொள்வழிக்கொளலாவது, வினைபயன்மெய்உரு என முன்னர் உவமைக்கு எடுத்தோதிய நெறியாற் பொருந்தும் வழி அமைத்துக்கொள்ளுதலாகும். 2. உவமத்தோற்றம். உவமத்தின் பிறப்பு: உவமம் தோன்றும் வகை, 3. கொளவுதல்-உவமையும் உவமேயமும் தம்முள் இயையும்படி பொருத்துதல். *j©oay§fhu நூலார் இதனை விரியுவமை எனவும், இதனை உண்மையுவமை எனவும் இதனை மறுபொருளுவமை எனவும் கூறுவர். வீரசோழிய நூலார் இதனைத் தடையுவமை என்பர். வீரசோழிய நூலார் இதனை உம்மையுவமை என்பர். இதனை இசையுவமை என்பர். ** இதனைக் கருத்துவமை என்பர் தண்டியலங்கார நூலார் இதனை மோகவுவமை என்பர். இது, விலக்குவமை யின் பாற்படும். இது வேற்றுப் பொருள் வைப்பு என்பர். இவற்றிற்கொல்லாம் உதாரணச் செய்யுட்கள் தண்டியலங்கார வுரையிலும், வீரசோழிய வுரையினுங் காண்க. *òweh}‰WiuaháÇa® பகல்விளங்குதியால் என்று பாடங்கொண்டு வீங்கு செலன் மண்டிலத்தை ஞாயிற்று மண்புலமெனக் கொள்கின்றார். 1. வெஞ்சுடர் வழித்தோன்றிய சேரலாதன் உவமம். வயங்காவலர் வழி மொழிந்தொழுக என்பது முதல் கடந்தடுதானை என்பதுமுடிய உவமத்திற்குரிய அடையாகும். இவ்வடையினை வீங்குசெலல் மண்டிலமாகிய உவமமேத்திற்கு எதிர்மறுத்துக் கொள்ள வைத்தார். 2. என்னை? ......it¤jhbd‹gJ’ எனவரும் இவ்வுரைத்தொடர் பொருட்டொடர் பின்றி ஏடெழுதுவோரால் இடையிற் சேர்க்கப்பெற்றதெனத் தோன்றுகிறது. இதனை நீக்கிப் படிக்கப் பொருள் இனிது புலனாதல் காண்க. 3. தண்சுடரோடு பழிப்பான் என்பதனைத் தண்சுடரோடுவமிப்பான் எனத் திருத்திக்கொள்க. 1. மாயனோடு உவமங்கருதி, பையருந்தாருமுதலாயின பற்றி மறுத்துரைத்தவாறு என இயைத்துப் பொருள் கொள்க. 2. உவமை கூறி அவற்றை (அவ்வுவமைகளை) எனப்பிரித்துப் பொருளுணர்க 1. வெண்குடைக்கு உவமானமாகிய மதியினை உவமேயப் பொருளாக்கி அதனையே யானைகுத்துமென்று விலக்கினார். 1. ஒரீஇக் கூறலாவது இவ்வுவமை இவ்வுவமேயப் பொருட்குச் சிறிதும் ஒவ்வாது என விலக்கிக்கூறுதல். 1. ஓரிஇக் கூறுதல் -- (ஒப்புமை) விலக்கிக் கூறுதல். 2. உவமையும் பொருளம் அவ்வழி மாறுபடவருமாறு என்றிருத்தல் வேண்டும். 1. இதுபோலும் இது என உவமைவாய்பாட்டால் ஒப்புமைப்படுத்திக் கூறுதலேயனறி உவமையது தன்மையினைக் கூறுதலும் பயனிலையுவமைக்கண் உவமையாதற்குரித்து என்பதாம். எனவே இங்ஙனம் உவமையது தன்மை கூறுதல் பயனிலையுவமைக்கண்ணேயே உவமையாகப் புலப்பட்டுத் தோன்றுதலுரிதது என்பார், பயனிலை யுவமைக்கண் என்று கொள்க என்றார். 1. பட்டாங்கு உவமங்கூறுதலாவது, உவமையும் பொருளும் உயர்வுதாழ்வின்றி உள்ளது உள்ளபடியே இயல்பினால் கூறுதல். உவமத் தன்மையும் உரித்து. உவமம் உயர்ந்ததன் மேலதாய் வருதலன்றி உயர்பிழியுடையதல்லாக தன்மையுவமையும் உரித்து, பயனிலை புரிந்த வழக்கத்தான அதனாலும் ஒருபயன் தோன்றச் சொல்லுதல் நெறிப்பாட்டின்கண். பயனிலைபுரிந்த வழக்கத்தான உவமத்தன்மையும் உரித்து எனமொழிப என இயையும். 2. இப்பாடலில் உலகினைப் பாதுகாத்தற்கு மாரியை உவமித்துச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதார்போன்று இயல்பாக உவமை கூறுவாராயினும், இது மாரிக்கும் பாரிக்கும் உலகுபுரக்குந்திறத்தில் ஓர் உயர்வுதாழ்வு இல்லையென்னும் தன்மை தோன்றக் கூறுதலின் இது பயனிலை புரிந்த வழக்காயிற்று. இது பிறர் கொள்கையினை எடுத்துரைத்து மறுத்தது. 1. தடுமாறுவமம் எனப்பாடங்கொண்டார் பேராசிரியர். 2. தடுமாறுவரல்--அதுவோ இதுவோ என ஐயுற்றுத் தடுமாறும் நிலையில் உவமை வருதல். 1. இதன் முதலடியினைத் தனிச் சூத்திரமாகவும் இதன்பின்னிரண்டடியினை வேறோர் சூத்திரமாகவும் கொண்டு உரைவரைவர் பேராசிரியர். 2. அடுக்கிய தோற்றமாவது, வெண்டிங்கள் போன்ற சங்கு போன்ற தாழை என இவ்வாறு ஒன்றற்கு ஒன்று உவமையாகத் தொடர்ந்து அடுக்கிவருதல். இங்ஙனம் பொதுத் தன்மை வேறுபட்ட நிலையில் உவமைகள் அடுக்கி வருங்கால் அவற்றிடையேயுள்ள ஒப்புமை ஒரு நிகர்த்தாய் ஒத்து வாராமையின் வேறுபட்ட அவ்வுவமைகளால் உவமேயப்பொருளின் இயல்பு உள்ளவாறு புலப்படாமையின் இங்ஙனம் அடுக்கிவருதல் குற்றமென விலக்கற்பாலது என அறிவுறுத்துவார், அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே என்றார் ஆசிரியர். 3. நிரல்நிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்று என்பன முன்னர்ச் சொல்லதிகாரத்திற் கூறப்பட்ட நிரனிறை முதலிய மொழிபுணரியல்புநான்கனுள் உவமை தொடர்தற் கியலாத அடிமறி நீங்கலாக எஞ்சிய நிரல் நிறை சுண்ணம், மொழிமாற்று என்னும் மூன்றுமாகும். மொழிபுணரியல்பாகிய இவை அல்லாதவிடத்து அடுக்கியதோற்றம் விடுத்தல் பண்பு எனவே, நிரல்நிறை முதலிய இவை ஆகுமிடத்துப் பொருள்கோள் வகையில் உவமைகள் அடுக்கிவருதல் குற்றமாகாதொன்பதாம். சுண்ணம் வரை நிலைவைத்த மூன்றலங்கடையே எனப்பாடங்கொண்டு சுண்ணத்தினைவரைந்த நிலைமையான் வந்த சுண்ணமும் அடிமறியும் நிரலே நிறுத்து அமைத்தல் நிரல்நிறை யுவமையாகும் எனப்பொருள்வரைந்தார் பேராசிரியர். 1. வெண்டிங்களைப்போன்ற சங்கினைப்போன்ற தாழை என உவமைகளை அடுக்கிக்கூறினால் வெண்டிங்களை நிறத்தால் ஒத்தது சங்கு: சங்கினை வடிவால் ஒத்தது தாழம்பூ எனவே வெண்டிங்களுக்கும் தாழம்பூவுக்கும் ஒப்புமையின் மையின் அடுக்கி வரலுமையாய் வழுவாயிற்று.