தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 17 தொல்காப்பியம் - பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 17 தொல்காப்பியம் - பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 224 = 232 படிகள் : 1000 விலை : உரு. 220/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகம். --- அகநானூறு இ. வி. ப. --- இலக்கண விளக்கப் பாட்டியல் ஐங்குறு. --- ஐங்குறுநூறு ஐந்திணை எழு. --- ஐந்திணை எழுபது ஐந்திணைஐம். --- ஐந்திணையைம்பது கம்ப. --- கம்பராமாயணம் கலித். --- கலித்தொகை களவழி --- களவழி நாற்பது காரைக். --- காரைக்காலம்மையார் புராணம் குறள் --- திருக்குறள் குறிஞ்சிப். --- குறிஞ்சிப்பாட்டு குறுந். --- குறுந்தொகை சிந்தா. --- சிந்தாமணி சிலப். --- சிலப்பதிகாரம் சீவக. --- சீவக சிந்தாமணி சூத் --- சூத்திரம் தொல் --- தொல்காப்பியம் நற். --- நற்றிணை நாலடி. --- நாலடியார் நெடுநல் --- நெடுநல்வாடை பத்துப். --- பத்துப்பாட்டு புறப்.வெ. --- புறப்பொருள் வெண்பாமாலை புறம். --- புறநானூறு பெரும்பாண். --- பெரும்பாணாற்றுப் படை முத்தொள். --- முத்தொள்ளாயிரம் தொல்காப்பியம் பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் இளம்பூரணம் ï›nth¤J என்ன பெயர்த்தோ எனின், மெய்ப் பாட்டியல் என்னும் பெயர்த்து; மெய்ப்பாடு உணர்த் தினமையாற் பெற்ற பெயர். அஃதியாதோ எனின், முன்னர்க் கூறுதும். 1. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. என்பது சூத்திரம். இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பிறர்1 வேண்டு- மாற்றால் சுவையுஞ் சுவைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பண்ணைத் தோன்றிய என்பது --- விளை யாட்டாயத்தின்கண் தோன்றிய என்றவாறு. பண்ணையுடையது பண்ணை என்றாயிற்று.2 எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப என்பது --- முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் என்றவாறு. புறத்து நிகழ்வதனைப் புறம் என்றார். பண்ணைத் தோன்றிய கண்ணிய புறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன் என ஒருசொல் நடையாக ஒட்டித் தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது. ஈண்டுச் சொல்லப்படுகின்ற பதினாறு பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண்தோன்றா- மையாற் பண்ணைத் தோன்றிய என்றார். என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்கண் தோன்றாமையின். பிறவும் அன்ன. முப்பத்திரண்டாவன --- நகை முதலானவற்றிற்கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன. அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக் குறிப்பு, இழிப்புக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக் குறிப்பு, உருத்திரக் குறிப்பு, நகைக் குறிப்பு, நடுவுநிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும், நடுவுநிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம். வியப்பெனினும் அற்புதமெனினும் ஒக்கும். காமமெனினுஞ் சிங்காரமெனினும் ஒக்கும். அவலம் எனினும் கருணையெனினும் ஒக்கும். உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும். நடுவுநிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும். வீரம் என்பது மாற்றாரைக் குறித்து நிகழ்வது. அச்சம் என்பது அஞ்சத்தகுவன கண்ட வழி நிகழ்வது. இழிபென்பது இழிக்- கத்தக்கன கண்டுழி நிகழ்வது. வியப்பென்பது வியக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது. காமம் என்பது இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது. அவலம் என்பது இழவுபற்றிப் பிறப்பது. உருத்திரம் என்பது அவமதிப்பாற்பிறப்பது. நகையென்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது. நடுவுநிலைமை யென்பது யாதொன்றானும் விகாரப்படாமை. அவை இற்றாக, மத்திமமென்பதனை ஈண்டொழித்தது என்னையெனின், மத்திமம் என்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப.3 நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற் சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கும் ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப.4 உய்ப்போரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவர் அறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும் அச்சுவை யெட்டும் அவர்க்கில ஆதலின் அச்சுவையொரு தலையாதலின் அதனை மெய்த்தலைப் படுக்கஇதன் மிகவறிந் தோரே. என்பது செயிற்றியச் சூத்திரம். இதனானே இது வழக்கிலக் கணம் அன்று என உணர்க. இனி சுவை என்பது காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம். இருவகை நிலத்தின் இயல்வது சுவையே5 என்றும், நின்ற சுவையே ... ஒன்றிய Ãகழ்ச்சிrத்துவம்vன்பv‹W«, சத்துவம் என்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்தல் நடுக்கங் fடுத்தல்Éயர்த்தல்nதற்றம்bகாடுங்குரற்áதைவொடுÃரல்படtந்தgத்தெனbமாழிபrத்துவந்jனே6v‹W« சார்பொருள் உரைப்ப. அவை வருமாறு : பேயானும் புலியானும்7 கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமுங் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பு முளவாகின்றே அவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலந்தொட்டு நீங்காத நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு. நடுக்கமும் வியர்ப்புஞ் சத்துவம். இவற்றுள் நடுக்கமும்வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவது என்று கொள்க; ஏனைய மன நிகழ்ச்சி. பிறவுமன்ன. இவற்றின் பிரிவை நாடக நூலிற் காண்க. (1) பேராசிரியம் ï›nth¤J என்ன பெயர்த்தோவெனின் மெய்ப்பாட்டிய லென்னும் பெயர்த்து. மெய்ப்பாடென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த்தாயிற்று. இதனானே ஓத்து நுதலியதூஉம் மெய்ப்பாடு உணர்த்துதலென்பது பெற்றாம். மெய்ப்பாடென்பது பொருட்பாடு.1 அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங்கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டியலென்றாயிற்று. மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபென்னையோ வெனின் மேலை ஓத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாற்றிற்குங், காட்டலாகாப் பொருள (தொல். பொருள். 247) என்றவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வேறோர் ஓத்தாக வைத்தமையானே எல்லாவற்றோடும் இயைபுடைத்தென்பது.2 இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ-வெனின், அம்மெய்ப்பாடு பிறர் வேண்டுமாற்றான்3 இத்துணைப் பகுதிப்படுமென் றுணர்த்துத னுதலிற்று. (இ-ள்.) பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும்--முடியுடை வேந்தருங் குறுநிலமன்னரு முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்பவிளை யாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்; கண்ணிய புறனே நானான்கு என்ப---அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு (எ-று.) அது முதனூலைநோக்கிக் கூறியவாறு போலும்.4 முப்பத்திரண்டாவன யாவையெனின், --- ஒன்பது சுவையெனப்பட்டவற்றுள் உருத்திரமொழித் தொழிந்த எட்டனையுங் கூறுங்காற், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்புங், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலு முதலாக உடம்பின்கண்வரும் வேறு பாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யெட்டோடுங்கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ, முப்பத்திரண்டா மென்பது. எனவே, சுவைப்பொருளுஞ் சுவையுணர்வுங் குறிப்பும் விறலுமென நான்காயின. விறலெனினுஞ் சத்துவமெனினும் ஒக்கும். சுவைப்பொருளென்பன, அறுசுவைக்கு முதலாகிய வேம்புங்கடுவும் உப்பும் புளியும் மிளகும் கரும்பும் போல்வன. அவையாமாறு: நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந் தமிழுங், குருடரும் முடவருஞ் செல்லுஞ் செலவும், பித்தருங் களியருஞ் சுற்றத்தாரை இகழ்ந்தாருங் குழவி கூறும் மழலையும் போல்வன. அச்சப் பொருளாவன, வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ ஈற்றமா மதமா ஏக பாதங் கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம் (கலி.ப.898) என்று சொல்லப்பட்டனபோல்வன. இவற்றைச் சுவை கோடலென்ப தென்னையெனின், நகையும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏதுலாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவையெனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென் பொறியுந் தலைப் பெய்துழியல்லது கைப்புச்சுவை பிறவாதது போல, அப்பொருள் கண்டவழியல்லது நகையும் அச்சமுந்தோன்றா. ஒழிந்த காம முதலியனவும் அன்ன. இக்கருத்தே பற்றிப் பிற்காலத்து நாடகநூல் செய்த ஆசிரியரும், இருவகை நிலத்தி னியல்வது சுவையே (செயிற்றியம்) என்றாரென்பது. இனி, இருவகை நிலனென்பன உய்ப்போன் செய்தது காண்போர்க்கெய்துதலன்றோவெனின்5 சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான் வேம்புசுவைத்தவன் அறிந்த கைப்பறி-வினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச்-சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடிவருகின்றானொருவனை மற்றொருவன் கண்டவழி இவன் வள்ளெயிற் றரிமா முதலாயின கண்டு அஞ்சினா னென்றறிவ தல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான்காண்டல் வேண்டுவதன்று; தான் கண்டானாயின், அதுவுஞ் சுவையெனவே படும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன்செய்தது காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் இருவகை நிலமெனப்படுவன சுவைப்பொருளுஞ் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழு மென்பதே பொருளாதல் வேண்டுமென்பது. குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சிபோல அஞ்சத்தக்கன கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. விறலென்பன, அவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி வேம்புதின்றார்க்குத் தலை நடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்க முதலாயின. இவ் வகையால் இந்நான்கினையும் எட்டோடும் உறழவே முப்பத்திரண்டாயின. இனி, அவை பதினாறாயினவாறென்னையெனின், வேம்பு முதலாயின பொருளும் அதனோடு நாமுதலாயின பொறியும் வேறுவேறு நின்றவழிச் சுவையென்று சொல்வதே பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலானும் அவை பதினாறும் எட்டெனப்படும்; இனிக் குறிப்புஞ் சத்துவமுமென்பனவும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடு மென்பராகலின்6 அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவமாகலின் அவை பதினாறும் எட்டாயடங்குமாகலின் அவை ஈரெட்டுப் பதினாறாகு மென்பது. மற்றிவை பண்ணைத் தோன்றுவனவாயின், இது பொருளோத்தினுள் ஆராய்வதென்னை? நாடகவழக்கத்தானே, ஒருவன் செய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக்கொண்டு பின்னர்ச் செய்கின்றதாகலானும் வழக்கெனப்படாதாகலானும் ஈண்டு ஆராய்வது பிறிதெடுத் துரைத்த லென்னுங் குற்றமாமென்பது கடா, அதுவன்றே இச்சூத்திரம் பிறன்கோட் கூறலென்னும் உத்தி வகையாற் கூறியதுதானே மரபாபிற்றென்பது.7 (1) பாரதியார் முன்னுரை bjhšfh¥ãa® பொருட்பகுதி தமிழ்கூறுநல்லுலகத்தில் நல்லிசைப்புலவர் புனையும் செய்யுண்முறையும், அச்செய்யுட் கெல்லாம் சிறந்துரிய பொருட்டுறையும், இவற்றின் பல்வேறு உறுப்பியல்களும் வகுத்து விளக்குவதாகும். மக்கள் கருதுவது பொருளே யாதலானும், செய்யுள் பொருளைப் புனைந்துரைக்குங் கருவியேயாதலானும், முதலில் சிறப்புடைப் பொருட்டுறைவகைகள் அகத்திணை புறத்திணை களவு கற்பு பொருள் என ஐந்தியலான் வகைபடத் தொகுத்து விளக்கப்பட்டன. பின் அகப்புறப் பொருள்களைப் புனைந்துரைக்கும் செய்யுள் வகை கூறத்தொடங்கி, அச்செய்யுளுறுப்புக்களுள் பொருட்சிறப்பிற்கு மிக்குரிமையுடைய மெய்ப்பாடு உவமை வகைகளை முன் இரண்டியல்களான் முறையே வகுத்து விளக்கி, பிறகு பிற செய்யுளுறுப்பும் அமைப்பும் வகையும் செய்யுளியலில் தொல்காப்பியர் தொகுப்பாராயினர். இம்முறையில் இவ்வியல் மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பை விளக்குவதாகும். மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற் புறவுடற் குறியாம். இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்க்கும் வழக்காறில்லை; உணர்வோடுள்ளக் கருத்தை யுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்துநூற் கொள்கையாகும். (பட்டாங்கு) மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப் பாடென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக் குறியால் புலவன் செய்யளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல். உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும் (செய். சூ. 204) எனும் செய்யுளியற் சூத்திரம் மெய்ப்பாட்டியல் கூறுகிறது. இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்புறப்பொருட்டுறை அனைத்திற்கும் அமையவருவனவும், சிறப்பாக அகத்துறைகட் காவனவும் என இயல் வேறுபாடுடையவாதலின், பொது வியல்புடையவற்றை இவ்வியலில் முதற் கூறிச் சிறப்பியல்புடையன பின்னர் விளக்கப்பெறுகின்றன. ஒருவரின் உள்ளுணர்வுகளுள் மற்றவர் கண்டுங் கேட்டும் அறியப் புறவுடற் குறியாற் புலப்படுபவையே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்பெறும். பாட்டு உரை நூல் முதலிய எழுவகைத் தமிழ்ச் செய்யுளெல்லாம் வடவேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழகத்து முடிவேந்தர் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயரெல்லை அகத்து யாப்பின் வழியதா மெனச் செய்யுளியலிலும், ஆரிய நூல் வழக்குகளைக் கொள்ளாது தமிழ் மரபினையே தாம் கூறுவதாகப் பலவிடத்தும் தொல்காப்பியரே வற்புறுத்துவதாலும், தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுள்ளிட்ட செய்யுளுறுப்பனைத்தும் இயற்றமிழ் மரபு தழுவியவேயாகும் என்பது ஒருதலை. இவ்வுண்மைக்கு மாறாகப் பிற்கால உரைகாரர் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வடஆரியக் கூத்து நூல்களின் கொள்கைகளே தொல் காப்பியரும் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ் நூற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு செல்லா வல்லுரை வகுத்து மயங்க வைத்தார்.1 சொற்றொடர் சுட்டும் செம்பொருளே செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு மயங்கா மரபிற்புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தாமாறுணர்ந்து நோக்கின், செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாய் எண்ணப்பட்டுச் செய்யுளியலில் (204-ஆம் சூத்திரத்தால்) தெளிக்கப்பெறும் இயற்குறியாம் மெய்ப்பாடுகளின் வகைகளே இம்மெய்ப்பாட்டியலில் முறைப்பட எண்ணி விரிக்கப்பெறுஞ் செல்வி இனிது விளங்கும். இவ்வியல் முதற்சூத்திரம் எண்வகையியல்நெறி பிழையாதெனச் செய்யுளியல் (205ஆம்) சூத்திரம் கூறும் அகப்புறப் பொருட்டுறை அனைத்திற்கும் பொதுவாய மெய்ப்பாட்டுப் பொருளா முள்ளுணர்வு முப்பத்திரண்டும் புறத்தே இயற்குறியால் முறையே நானான்காய்த் தொக்கு எண்ணான்காகுமெனக் கூறும். இரண்டாம் சூத்திரம், அவ்வாறு நானான்காய் எண் வகையாவனவேயன்றி,வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் மெய்ப்பாடு முப்பத்திரண்டும், இரட்டுற மொழி தலால் நாலிரண்டாகும் என்பதை உம்மைத்தொகையாக்கி நாலும் இரண்டும் கூட்டி ஆறுவகைத் தொகைகளாய் எண்ணப்படுவனவுமாக அகப்பகுதிக்கே உரிய பிற மெய்ப்பாட்டுள்ளுணர்வுகளும் உளவென்பது கூறுகிறது. மூன்றாம் சூத்திரம், முதலிற் கூறிய நானான்காய்த் தொக்கு அகம்-புறம் இருபொருட்கும் பொதுவாய் வரும் எட்டு வகைத் தொகை மெய்ப்பாடுகள் இவையென விளக்கும். 4 முதல் 11வரையிலுள்ள சூத்திரங்கள், அவ்வினத்தொகை எட்டும் தனிவகை பிரிக்கவரு முப்பத்திரண்டன் பெயரும் வகையும் விரிக்கும். 12-ஆவது சூத்திரம், நந்நான்காய் இவ்வாறெண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொகுத்தெண்ணப்படும் மெய்த்தோன்றும் அகவுணவுர்கள் வேறும் உள என முன் இரண்டாம் சூத்திரம் சுட்டியவற்றின் பெயரும் வகையும் கூறும். பதின்மூன்று முதல் பதினெட்டு முடியவரும் ஆறு சூத்திரங்களால் அன்பொடு புணர்ந்த காதற் கூட்டத்தில் தோன்றும் அறுவகைத்தொகைபெறும் அகத்துக்கேயுரிய மெய்ப்பாடுகள் தெளிக்கப்படுகின்றன. 19-ஆம் சூத்திரம் அறுவகைப்படுமவையும் அன்னபிறவும் புணர்வின் நிமித்தமாமென உணர்த்துகிறது. 20-ஆம் சூத்திரம், மேலனவற்றிற்குப் புறனடையாய், அவை கூறும் அகத்துறை மெய்ப்பாடுகளை கையறவுற்றுழிக் கூறியமுறையால் வினைப்பட்டுத் தோன்றாது முறை பிறழ்ந்து வருதலும் இயல்பாமெனக்கூறும் 21 முதல் 24 வரையுள்ள சூத்திரங்கள் புணர்ச்சி அல்லாத மற்ற நான்கு அன்புத்திணைகளுக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறுகின்றன. 25, 26 சூத்திரமிரண்டும் நிரலே அன்புத் திணைக்காவனவும் அல்லனவுமாம் குறிப்புக்களை விளக்குகின்றன. 27-ஆம் சூத்திரம், இவ்வியலுக்குப் பொதுப் புறனடையாய் மெய்ப்பாடுகளின் இயல்வகைகளை நுண்ணுணர் வுடையாரல்லார் எண்ணிவரையறுத்தலின் அருமை கூறுகிறது. பாரதியார் மெய்ப்பாட்டியற் சூத்திரங்கள் 1. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. கருத்து :- இஃது, இயற்றமிழ்ச் செய்யுளுள் யாண்டும் பயிலும் பொதுமெய்ப்பாடுகளின் தொகையும், அவை வகைப் படுமாறும் கூறுகிறது. பொருள் :- பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும் =தனிநிலை கருதாமல் ஒருபுறக்குறியால் புலப்படும் இனத் தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உணர்வுகள் முப்பத்திரண்டும்; கண்ணிய புறனே நானான்கென்ப= பொருந்தப் புலப்படும் மெய்ப்புறக்குறியால் நாலுநாலாய்த் தொகுத்து எண்ணப்படும் என்பர் புலவர்.1 குறிப்பு :- பொருளும் என்பதன் உம்மை, இனைத்தென அறிதலின், முற்றும்மை. பண்ணை என்பது தொகுதி. இஃது இப்பொருட்டாதல் ஒலித்தன முரசின் பண்ணை என்னும் கம்பரின் (மகரக்கண்ணன் வதை) செய்யுளடியாற் றெளிக; பல முளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும், சுற்றமும் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒரு கழகமும் தொகுதிபற்றிப் பண்ணை யெனப்படுதலானுமறிக. இனி, எண்ணான்கு என்றது, ஒத்தகுறியியல் கருதித் தொகுத்தினம்புணர்க்காமல், தனித்தனி எண்ணவரும் மெய்ப் பாட்டுப் பொருளா முள்ளுணர்வுகளின் தொகையெண்; நானான் கென்றது அவை முப்பத்திரண்டையும் மெய்ப்படுகுறி யொப்பு-மையால் நிரலே நந்நாலாக இனம்புணர்த்தெண்ணும் வகைமுறை. இதன்பின் எள்ளல்முதல் விளையாட்டிறுதி தனி வகுத்து எண்ணப்பட்ட முப்பத்திரண்டும், மெய்ப்படு புறக்குறி இயலொப்பால் இனம் புணர்த்து நந்நான்காய்த் தொகுக்குங்கால் நகை முதல் உவகை ஈறாய் அப்பாலெட்டே மெய்ப்பாடு எனப் படுபவற்றுளடங்கும். குறியொப்பால் இனம் கூட்டித் தொகை பெற்று வருமிவை குறிமுறையால் எண்வகை யியல் நெறி பிழையாமை கருதி இவ்வாறு கூறப்பட்டன என்க. நான்கன் முன் நான்கு நானான்கா மாறு, நான்கன்ஒற்றே ல-காரமாகும்(467);வ-கரம்வரும்பழி(452)...........eh‹f‹ஒற்wல-காரமாகு«(453);உயி®வருகாy (455)...........மூன்W«நான்கு«ஐந்தென்கிளவியு«தோன்றிaவகர¤தியற்கையாகும்”(456)எனு«தொல்காப்பிய®எழுத்ததிகார¢சூத்திரங்களாலறிக. இன்னும், க--ச--த ப--முதன் மொழி வரூஉங்காலை, .. ... .. மூன்றன் ஒற்றே வந்த தொக்கும் (477)எனவும், ந--ம--வருகாலை, ஐந்தும் மூன்றும் வந்ததொக்கும் ஒற்றிய நிலையே (451) எனவும் தெளிக்கும் தொல்காப்பியர், நான்கன் ஒற்று மவ்வாறாகும் எனக் கூறாமை யானும், முதற் பத்தெண்களுள் மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் எனக் கூறி நான்கன் முதலுக்குக் குறுக்கம் யாண்டும் குறியாமையானும், நானாற்றிசை- (களவழி.6)--நானூறு -- நானிலம் --நானூல்--நாலெட்டு--நாலீரைம்பது -- நாலிரண்டு ........ எனவே பல்காலும் பலவிடத்தும் பண்டைச் சான்றோர் செய்யுட்களில் பயிலுதலானும், ந-கரம் வருங்கால் நான்கன் ஒற்று லகரமாகி முதல் குறுகாது நால் என நின்று, வரு நான்கொடு புணர்ந்து நானான்கெனவருதலே தமிழ்மரபாமாறு தேறப்படும். பிந்திய நன்னூலாரும் “x‹WKjby£Owhbk©fSŸ........மூன்whnwœ குறுகும் எனக்கூறி யமைந்தாரன்றி நான்கன் முதலுக்குக் குறுக்கம் கூறிற்றிலர். எனவே, நானான்கென்பதே பண்டையோர் கொண்ட செய்யுட்சொல் என்பதும், நந்நான்கென்பது (இலக்கண) நூலாதரவற்ற பிற்காலப்பேச்சு வழக்காதலின் உரையிற் கொண்டமைக்கப்பெற்ற சேரிமொழி என்பதும் தெளிதலெளிதாம். இனி, புறனே என்றது உள்ளுணர்வு சுட்டும் புறக்குறியை; தத்தம் நிலையில் தனித்தனிக்குறியால் புறத்தே புலனாகாது கருத்தளவில் வகுத்தெண்ணும் எண்ணான்கு பொருளினின்றும், புறத்தே ஒவ்வொரு குறிக்கு நானான்காய்த் தொக்குப் புலனாகும் மெய்ப்பாட்டு வகையைப் பிரித்தலின், புறனே என்பதின் ஏகாரம் பிரிநிலை; அன்றி இசை நிரப்பும் அசை எனினும் mமையும்.v©zh‹F பொருளும் நானான்கென்ப எனவே எண்வகை என்பது பெறப்படு மாதலின், கண்ணிய புறனே நானான்கு என இடைப்புணர்த்துரைப்பானேன்? எனின், கூறுதும். உள் உணர்ச்சியளவில் தனிப்பிரித்து ஒருங்கெண்ணப்படும் முப்பத்திரண்டு பொருளும் புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படுதலானும், அவ்வாறு புலனாங்கால் அவைதனித்தனியே எள்ளற்குறி இளமைக்குறி பேதைமைக்குறி மடமைக்குறி என்றொவ்வொன்றும் வெவ்வேறாய்த் தனக்குரிய தனிக்குறியாற் றோன்றாமல், நந்நான்காய்ப் பண்ணை கூடி நகை-அழுகை-இ ளி வ ர ல்-ம ரு ட் கை-அச்சம்-பெருமிதம்- வெகுளி-உலகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றுதலானும், இவ்வியல் நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. இன்னும் இச்சூத்திரம் சுட்டுவது இதுவே யென்பது, பின்னும் செய்யுளியலில் தொல் காப்பியரே அதன் உறுப்பாம் மெய்ப்பாட்டின் தன்மையை விளக்கியபின் அதையடுத்து எண்வகையியனெறி பிழையாதாகி, முந்துறக் கிளந்த முடிவினததுவே எனக் கூறுதலானும், அதன் கீழ்ப் பேராசிரியரும் மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே இது; அவை நந்நான்காம் என உரைப்பதானும் தேறப்பெறும். இனி, என்ப என்றது பிற சூத்திரங்களிற்போல இயற்றமிழ்ப் புலவர் கொண்ட அடிப்பட்ட தமிழ்ச்செய்யுள் மரபிதுவென ஈண்டுச் சுட்டுவதன்றி, யாதொரு வேறு முதனூலும் அதன் கொள்கையும் குறிப்பதன்று. இச்சூத்திரப் பொருள் இதுவே யென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும். அவர் குறிப்பாவது, முப்பத்திரண்டாவன:--- நகை முதலானவற்றுக்கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத்தோதப் படுகின்றன என்பதாம்.2 இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும் பேராசிரியரும் பிறரும் ஆன்ற தமிழ்மரபும் தெளிசொற் குறிப்பும் முரண உரைகூறி மயங்க வைப்பர். பேராசிரியர் சுவைப்பொருளும் அப்பொருள் விளைக்கும் சுவையுணர்வும், அவ்வுணர்வால் தோன்றும் உள்ளக்குறிப்பும், இக்குறிப்பின் வழி உடம்பின்கண் வரும் வேறுபாடாம் விறலுமாக நான்கெண்ணி அவற்றைச் சுவையெட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்துறழ, முப்பத்திரண்டாம் என அநுமானிப்பர். இன்னும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள் என்பதற்கு, நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் எனப் பொருள்கூறி, கண்ணிய புறனே நானான்கென்ப என்பதற்கு அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி யடங்கும், நாடக நூலாசிரியருக்கு, என முடிப்பர். இதில் பொருள் முப்பத்திரண்டென ஒருங்கெண்ணிய பிறகு அவை கருதிய பொருட்பகுதி எனப் பிரித்துப் பதினாறெனச் சுட்டுமாறென்னை? பொருள்கள் கருதிய பொருட் பகுதி என்பது பொருளில் வெற்றுரையாகும். மேலும் எண்ணான்கு பொருளும் ஓராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப்பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக, அவற்றைக்சுவையூட்டும் புலி முதலிய புறப்பொருள்வேறு, அப்பொருள் விளைக்கும் உணர்ச்சிவகை வேறு, உணர்ச்சியால் எழும் உள்ளக்குறிப்பு வேறு, அக்குறிப்பால் நிகழும் உடற்குறியாம் விறல் வேறு எனத் தம்முள் ஒவ்வா நால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை. அன்றியும் எண்ணான்காமவை குறியால் நந்நான்கோரினமாய்க் கண்ணிய புறனே எண்வகை ஆவதை விட்டு, பதினாறாவதெப்படி? புறப்பொருளும் அகவுணர்வும் ஒன்றாமேல், உணர்வெழுப்பும் குறிப்பையும் அதனுடன் நிகழும் விறலையும் வேறுபடுத்துவானேன்? அன்றியும் உணர்வூட்டும் புறப்பொருள் ஒன்றும் இல்லாமலே எண்ணி யாங்கே மெய்ப் பாட்டுணர்வுகள் உள்ளத் தெழுமாதலின், எண்வகைமெய்ப்பாடுகளை எனைத்துவகைப்புறப்பொருள்களொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா. இனி, தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துறுப் பொன்று மன்றாதலின், அவற்றைச் சுவையெனவும் விறலெனவும் கூத்தியற் சொற்களால் யாண்டும் குறியாமல், செய்யுளிற் சுட்டற்குரிய மெய்ப்பாடெனவே கூறிப் போந்தார். அன்றியும், புறக்குறியாற் புலனாகும் மெய்ப்பாட்டுணர்வெல்லாம் நந்நான்கும் எவ்வெட்டுமாய்ச் சேர்ந்தே தொகுதியாக இயனெறியாற்றோன்றி வகை பெறுதலான், அவற்றைப் பண்ணைத் தோன்றிய எனச்சுட்டினார். தொல்காப்பியரின் இச் சொற்குறிப்புக்களைக் கருதாமல் உரைகாரர் இதில் பண்ணை என்பதை மகளிர் விளையாட்டெனக் கொண்டனர். அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கைகளை இதிற் புகுத்தி இடர்ப்படலாயினர். இன்னும், அகப்புறப் பொருட்டுறை யனைத்திற்குமுரிய இயற்றமிழ்ச் சான்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பாடென்பதை மறந்து, அவை நாடகமகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் எனப் பேராசிரியரும், ஈண்டுச் சொல்லப்படுகின்ற பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையால் பண்ணைத்தோன்றிய என்றார் என இளம்பூரணரும், மயங்கக் கூறினர். மேலும், உரைகாரர் கூறும் ஆரியக் கூத்து நூற்குறிப்புக்களே தொல்காப்பியர் இதில் கூறக்கருதின், அவற்றை எனைத்தளவும் குறியாமல் வாளா எண்ணான்கு பொருளும் நானான் கென்ப எனக் குன்றக்கூறிக் கற்பவர் பொருளறியாமல் மயங்க வைப்பரா? அன்றியும், இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலார் கோள்களாதலின்3 அவை இயற்றமிழ் நூலில் இடம்பெறற்கில்லை. அதுவுமின்றி, இந்நூலில் யாண்டும் எனைத்தளவும் சுட்டாமலே, அயன்மொழிப் பிறநூற் குறிப்புக்களை அறிந்தன்றிக் கற்பவர் பொருளறியாவாறு தடுமாற இவ்வியற்றமிழ்ச் சூத்திரம் இயற்றப்பட்டதெனல் மருட்கையை விளைப்பதாகும். சூத்திரந் தானே ஆடி நிழலி லறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட டோன்ற யாத்தமைப் பதுவே எனத் தெளித்த தொல்காப்பியர் தாமே இச்சூத்திரத்தைப் பேராசிரியர் இளம்பூரணர் எனும் இருவரின் விரிவுரை கொண்டும் விளங்காமல் மயங்குமாறு யாத்துவைத்தாரென்பது பொருந்தாது. இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா. இதனைப் பின் மெய்ப்பாட்டுவகை விளக்கும் சூத்திரத்தின்கீழ் விரித்துக் காட்டுதும். இனி, எண்ணான்கு பொருளும் பின் எள்ளல் முதல் விளையாட்டீறாக வரும் முப்பத்திரண்டுமாம் எனக் கூறும் இளம்பூரணரும், நானான் கென்ப என்பதற்கு அம் முப்பத்திரண்டுமே நந்நான்காய் எண்வகை பெறும்4 என்னாமல், சுவையும் குறிப்பும் ஆகப்புறத்து நிகழும் பொருள் பதினாறாம் எனப் பொருள் கூறினர்; சுவைகளின் குறியான விறல்கள் புறத்துநிகழ்வன. சுவையும் அவற்றினகக் குறிப்பும் உள்ளுணர்வேயாமாதலின், அவற்றையும் விறல்களுடன் ஒருங்கெண்ணி ஆகப் பதினாறும் ஓராங்கே புறத்துநிகழ் பொருளெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை ஒருதலை. ஆதலானும் அது பொருளன்மை யறிக. ஆய்வுரை மனத்தினால் உய்த்துணரினல்லது ஐம்பொறிகளால் உணர்ந்து கொள்ளுதற்கு இயலாத அருவப் பொருள்கள் சிலவற்றை மேல் பொருளியல் இறுதிச் சூத்திரத்தில் தொகுத்தோதினார் தொல்காப்பியனார். உருவமில்லாதனவாகிய அப்பொருள்களையும் பொறிகள் வாயிலாக மனங்கொள்ளுதற்குத் துணையாவன மெய்ப்பாடுகளாகும். உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணீரரும்பல், மெய்மமயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறிகளாற் காண் போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனப்பெறும். ஒருவன் அஞ்சுதற்குரிய புலி சிங்கம் முதலிய கொடிய விலங்குகளைக் கண்டு அச்சமுற்ற நிலையில் அவனது உள்ளத்திலே இன்னது செய்வதென்று ஒன்றுந் தோன்றாது கலங்கும் கலக்கமும், பின்னர் எவ்வாறேனும் அவ்விடத்தை விட்டுத் தப்பிமறைதல் வேண்டும் என்ற கருத்தும், அவனது உடம்பின்கண்ணே நடுக்கமும் வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள அச்சத்திற்கு ஏதுவாகிய புலி முதலியன சுவைப்படுபொருள் எனப்படும். அவற்றைக் கண்டது முதலாக அவனுள்ளத்திலே நீங்காது நின்ற அச்சவுணர்வு சுவையெனப்படும். அதுகாரணமாக அவனது மனத்திலே தோன்றும் கலக்கமும் மறைதற்கருத்தும் குறிப்பெனப்படும். அக்குறிப்பின் வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப்படும். விறலை வடநூலார் சத்துவம் எனவழங்குவர். நடுக்கமும் வியர்த்தலும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்றானாகிய அவனுக்கேயன்றி அவனைக்கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகியவை அவனது மனத்தின் கண்ணே நிகழ்வன. அச்சமுற்றானது மனத்தின்கண்ணே நிகழும் அச்சமும் அதுபற்றிய அவனது மனக்குறிப்பும் அவனது உடம்பில் தோன்றும் நடுக்கம் வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்பர் இளம்பூரணர். மெய்-உடம்பு. படுதல் - தோன்றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது. இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத்தன்மை எனப் பொருள் கொண்டு, மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப்பொருள் விரித்தலும் உண்டு. மெய்ப்பாடு என்பது பொருட்பாடு, அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவ தோராற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங்கூறிய ஒத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டியலென்றாயிற்று எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். மக்களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம் மெய்ப்பாடுகளைப் புனைந்துரை வகையாகிய நாடகவழக்கிற்கும் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் உறுப்பாகக் கொள்ளுதல் தொன்றுதொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம்மரபினையுளங் கொண்ட தொல்காப்பியனார், இம்மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டு இவ்வியலில் விரித்து விளக்குகின்றார். இவ்வியல் இருபத்தேழு சூத்திரங்களால் இயன்றதாகும். இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களும், மெய்ப் பாடுகளைக் குறித்து நாடகத்தமிழ் நூலார் கொண்ட கோட்பாட்டினைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்தி வகையால் எடுத்துரைப்பன என்பது இளம்பூரணர் பேராசிரியர் ஆகிய முன்னையுரையாசிரியர்களின் கருத்தாகும். நூற்பா 1 இது, நாடகத் தமிழ்நூலார் மெய்ப்பாடு பற்றி வகுத்துக் கொண்ட கூறுபாட்டின் விரியினையும் வகையினையும் எடுத்துரைக்கின்றது. (இ-ள்) உலகமக்கள் கண்டும் கேட்டும் இன்பநுகரும் இன்ப விளையாட்டின் கண்ணே தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதினாறென்று சொல்வர் (நாடகத் தமிழ் நூலோர்) எ-று. பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச்சொல்லாகும். கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு (உரியியல்-23) என்பது தொல்காப்பியம். விளையாட்டு என்னும் பொருளுடைய பண்ணை என்னும் இச்சொல் விளையாட்டினையுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. பண்ணையுடையது பண்ணையென்றாயிற்று என்பர் இளம்பூரணர். கண்ணுதல்-கருதுதல். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்பவிளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப்படுபொருள்களும், அவற்றை நுகரும் நிலையிலுளவாம் சுவையும், அச்சுவைபற்றித் தோன்றும் மனக் குறிப்பும், அக்குறிப்பின் வழி மெய்யின்கண் வெளிப்படும் விறலும் ஆகிய இவை நான்கும் நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டிற்கும் உரிய வகையில் முப்பத்திரண்டாய் விரிந்து தோன்றுதல் இயல்பாதலின் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் எனக் குறித்தார் ஆசிரியர். விளையாட்டாயத்தின் கண்ணே தோன்றிய முப்பத்திரண்டாவன, நகை முதலிய எண்வகைச் சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருளும், அவற்றை நுகருங்கால் தோன்றும் சுவையுணர்வும், அதுபற்றி நுகர்வோருள்ளத்தே தோன்றிய மனக்குறிப்பும், அக்குறிப்பின் வழி அவர்தம் உடம்பிற் புலப்பட்டுத் தோன்றும் முறுவல் வெளிப்பாடு முதலிய விறலும் என எண்ணான்கு முப்பத்திரண்டுமாகும். அவற்றைக் கருதிய புறனாவன எண்வகைச் சுவை பற்றிய மனக்குறிப்புக்களும் அக்குறிப்புக்களின் வழி உடம்பிற்புலப்பட்டுத் தோன்றும் விறல்களும் ஆகிய பதினாறுமாகும். இளம்பூரணம் 2. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. என்-எனின் மேலதற்கோர் புறனடை. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டெனவரும் பக்கமு முண்டு என்றவாறு. அவையாவன குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்தல் .1 (2) பேராசிரியம் இது மெய்ப்பாட்டின் அடக்கங் கூறுகின்றது. 1 (இ-ள்.) முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலேயன்றி எட்டாதலும் உண்டு (எ-று.) அவை வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை நடுவு நிலை யென்பன. இவற்றின் விகாரமாகிய சத்துவங்களெட்டனையும் இவற்றுளடக்கி எட்டாக்கிக் கூறியவாறிது வென்பது. நாலிரண்டாதலு முண்டென்னாது பாலென்றதனான் எட்டா கலேயன்றி அவை ஒன்பதாதற்குப் பகுதியுமுடையவென்பது; என்னை? உருத்திரந் தன்னோ டொன்ப தாகும் என்பவாகலின். உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் இவையும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கெனப்பட்டன. அவற்றுப் பகுதியென இதுவும் பிறன்கோட் கூறியவாறாயிற்று. 2 மற்றிவற்றது பய னென்னையெனின்; பொருளதிகாரத்துக் கூறுகின்ற வழக்கியலே அவையுமென்பது கூறி, அச்சுவைக்கு ஏதுவாய பொருளினை அரங்கினுள் நிறீஇ, அது கண்டு குறிப்புஞ் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிற்றந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வாராக வருகின்ற முறைமையெல்லாம் நாடகவழக்கிற்கே உரிய பகுதியெனவும், அப்பகுதியெல்லாம் ஈண்டுணர்த்தல் வேண்டுவதன்றெனவுங் கூறியவாறு. 3 இங்ஙனம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுபவோலெனின் சொல்லுபவாகலினன்றே அதன்வழி நூல்செய்த ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒன்றாகவடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென மூன்றாக்கி வேறுவே றிலக்கணங் கூறி அவற்றை எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென நுண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன ரென்ப என்றோதினாராயிற் றென்பது. 4 (2) பாரதியார் 2. நாலிரண் டாகும் பாலுமா ருண்டா. கருத்து:- இது, முன்னதற்கோர் புறனடை; மேல் முதற் சூத்திரம் கூறும் எண்ணான்குமேயன்றிச் செய்யுட் பொருளாம் மெய்ப்பாட்டுணர்வுகள் வேறுமுளவென்பது கூறுகிறது. பொருள்:- நாலிரண் டாகும் பாலுமா ருண்டே=செய்யுளுறுப் பாம் மெய்ப்பாட்டுணர்வுகள், மேற்கூறி யாங்கு நந்நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்படவருந் தன்மைய பிறவும் உள குறிப்பு:- ஈற்றேகாரம், முதலில் கூறிய எண்ணான் கினின்றும் வேறும் உள்ளவற்றைப் பிரித்தலின் பிரிநிலை; ஈற்றசையுமாம் ஆகும் என்னும் வினைக்குச் செய்யுளுறுப்பாம் மெய்ப் பாட்டுணர்வுகள் எனும் எழுவாய்,கொண்ட பொருட்டொடர்பால், அவாய் நிலையிற் பெறப்பட்டது. மார்-அசை. முன், முதற் சூத்திரத்திரல் மெய்ப்பாட்டுணர்வாம் எண்ணான்கு செய்யுட் பொருளும் நந்நான்காய்த் தொகைஇ வருமெனச் சுட்டியதற்கேற்ப, அவ்வாறு தொக்க எட்டும் இதன்பின், நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப எனத் தொகுத்துக் கூறப்பட்டு, அதன் பின் அவ்வெட்டன் வகையாய்ப் பிரித்தெண்ணப்படுவன முப்பத்திரண்டும் முறையே எள்ளல் முதல் விளையாட்டீறாக விரிக்கப்படுகின்றன. அதுவே போல், வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் இயல்புடைய முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுகளும், மேல் அப்பா லெட்டே எனவும் இங்கு நாலிரண்டாகும் பாலுமா ருண்டே எனவும் சுட்டியதற்கேற்ப முதல் எட்டு வகை முப்பத்திரண்டும் எள்ளல் முதல் விளையாட்டீறாய் முறையே எண்ணி முடிந்த பின், ஆங்கவை யொருபா லாக வொருபால் எனத் தொடங்கி....... ......... உடைமை இன்புறல்.......... நடுக்கெனாஅ இவையும் உளவே அவையலங் கடையே என வேறு முப்பத்திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலின், இச் சூத்திரப்பொருள் இதுவாதல் தெற்றென விளங்கும். இச் செம்பொருளைவிட்டு இதுசுட்டும் நாலிரண்டும் பின் நகையே அழுகை என எண்ணப்படும் எட்டுமே ஆமென்பாருரைகொள்ளின், அச்சூத்திரமே அப்பாலெட்டே மெய்ப்பாடென்ப என அவற்றின் எண்தொகை கூறுதலானும், முதற் சூத்திரத்தும் நானான்காய் எண்ணான்கு பொருளாம் என அவற்றின் எண்வகை குறிக்கப்பெறுதலானும், இச்சூத்திரம் இங்கு வேண்டப்படாது மிகை படக் கூறலாய் முடியுமென்பது ஒருதலை. ஆதலின், அது பொருளன்மை யறிக. இனி, உய்த்துக் கொண்டுணர்தல் இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்துக்குப் பிறிதும் ஒருபொருள் கொள்ளுதலும் பொருந்தும்1 இதில் நாலிரண்டு என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலுமிரண்டு மெனக்கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள்கூறி, அவ்வாறும் முறையே புகுமுகம் புரிதல்...... தகுமுறை நான்கே ஒன்றென மொழிப எனத்தொடங்கி புலம்பிய நான்கே ஆறென மொழிப என எண்ணி முடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமாமென அமைத்துக் கோடலும் தவறாகாது.2 ஆய்வுரை இது, நாடக நூலார் மேற்கூறிய முப்பத்திரண்டினையும் எட்டெனத் தொகுத்துரைக்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) மேல்வகுத்துரைக்கப்பட்ட பதினாறு பொருள்களும் எட்டென அடங்கும் பகுதியும் உண்டு. எ-று. பதினாறும் எட்டென அடங்குதலாவது சுவைப்புறனாய்த் தோன்றும் குறிப்பும் விறலும் ஆகிய இவற்றைச் சுவையுள் அடக்கிச் சுவையெட்டுமாக்கி நிகழ்தல். நகை அழுகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள்களை நாடக அரங்கிலே நிறுத்தி அவற்றைக்கண்டு குறிப்பும் விறலும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுத்தி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமையெல்லாம் நாடகவழக்கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதியெல்லாம் இயற்றமிழ் நூலில் விரிவாக உணர்த்தத் தக்கன அல்ல எனக் கருதிய தொல்காப்பியனார், மெய்ப்பாடுபற்றிய நாடகத் தமிழ் நூற்கோட்பாடுகளைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்தி பற்றி இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொகுத்துச் சுட்டினார். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடுதற்கமைந்த புலனெறிவழக்குப் பற்றித் தாம் உணர்த்த எடுத்துக் கொண்ட மெய்ப்பாடுகளை இவ்வியலில் அடுத்து வரும் ஏனைய சூத்திரங்களால் விரித்து விளக்குகிக்றார். இளம்பூரணம் 3. நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உலகையென்று அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப. என் --- எனின். மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நகைமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் என்றவாறு.1 மெய்ப்பாடென்பது யாதோவென்னின், உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே2 எனச் செயிற்றியனார் ஓதுதலின், அச்சமுற்றான் மாட்டு நிகழும் அச்சம் அவன் மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. அஃதேல், இவ் விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டு மென்க. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின் மெய்ப்பது முடிப்பது மெய்ப்பா டாகும் (செய்யுளியல். 196)3 என இவ்வாசிரியர் மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென ஓதினமை உணர்க. நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது.1 அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. இளிவரல் இழிப்பிற் பிறப்பது. மருட்கை வியப்பிற் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற் பிறப்பது. பெருமிதம் வீரத்திற் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கன வற்றாற் பிறப்பது! உவகை சிங்காரத்திற் பிறப்பது. (3) பேராசிரியம் இது, பிறர்வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடென்பதுணர்த்துதல் நுதலிற்று. (இ ள்.) இச்சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் (எ-று.) 1. நகையென்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச்சிரித்தலுமென மூன்றென்ப. 2. அழுகையென்பது வலம்; அஃது இருவகைப்படும், தானே அவலித்தலும்,2 பிறரவலங்கண்டு அவலித்தலுமென; இவற்றுள் ஒன்று கருணையெனவும் ஒன்று அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலுமுடைய என்பது. 3. இளிவரலென்பது இழிபு. 4. மருட்கையென்பது வியப்பு; அற்புத மெனினும் அமையும். 5. அச்சமென்பது பயம். 6. பெருமிதமென்பது வீரம். 7. வெகுளியென்பது உருத்திரம். 8. உவகையென்பது காம முதலிய மகிழ்ச்சி. இவை அவ்வெட்டுமாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும் வழங்கினும் அமையும். மற்று நகை முன்வைத்ததென்னை யெனின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் (249) இவை யென்னும்1 இயைபில்லனவல்ல2 என்றதற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரல் அதன்பின் வைத்தான், அழுகையும் இளிவரலோடு இயைபுடைமையின். தானிளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின்பின் வியப்பு வைத்தான். வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின் வைத்தான். அவ்வீரத்தின் பயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன் பின்னே வைத்தான். வெகுளிக்கு மறுதலை யாகலானும் எல்லாவற்றினும் ஈண்டு ஒதுதற்குச் சிறந்ததாகலானும் முதற்கணோதிய நகைக்கு இயைபுடைத்தாகலானும் உவகையை அவ்வீற்றுக்கண்3 வைத்தானென்பது. இவ்வெட்டனுண் முதனின்ற நான்கும் முற்கூறுதற்கும் இறுதிநின்ற நான்கும் பிற்கூறுதற்குங் காரணம் வருகின்ற சூத்திரங்களானும் பெறுதும். மற்றிவ்வெட்டனோடுஞ் சமநிலைகூட்டி ஒன்பதென்னாமோ நாடகநூலுட்போலவெனின்.4 அதற்கு ஓர் விகாரமின்மையின் ஈண்டுக் கூறியதிலனென்பது;5 அதற்கு விகாரமுண்டெனின் முன்னையெட்டனுள்ளுஞ் சார்த்திக்கொள்ளப்படும்; அல்லதூஉம் அஃதுலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லியதிலனென்பது6 ஒழிந்த எட்டும் உலகியலாகலிற் கூறினான். வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (தொல். சிறப்புப் பாயிரம்) என்று புகுந்தமையினென்பது. அவை எட்டுமாறு இனிக்கூறுதும். (3) பாரதியார் கருத்து :-- இது, முன்முதற் சூத்திரத்தில் அகவுணர்ச்சிச் செய்யுட்பொருள் முப்பத்திரண்டும் புறத்தே இயலொத்த இனக்குறிபற்றி நந்நான்காய்ப் பண்ணையிற்றோன்றுமெனச் சுட்டிய மெய்ப்பாட்டு வகையெட்டும் இன்னவென விளக்குகிறது. பொருள் :-- நகை = சிரிப்பு; அழுகை = அவலம்; இளி வரல் = இடும்பை, அஃதாவது துன்பம்; மருட்கை = மயக்கம்; அச்சம் = அஞ்சுதல்; பெருமிதம் = வீறு, அஃதாவது தருக்கு; வெகுளி = சினம்; உவகை = மகிழ்ச்சி; என்று அப்பாலெட்டே மெய்ப்பாடென்ப ---என அத்தன்மைய மெய்ப்பாடு எட்டேயா மென்பர் புலவர். குறிப்பு :-- நகையே என்பதில் ஏகாரம் எண் குறிக்கும், எட்டே என்பதில் ஏகாரம் தேற்றமாம். இதில் இனக்குறியால் தொகுதியிற் புறத்திற்றோன்றும் மெய்ப்பாட்டுத் தொகை எட்டும், இதையடுத்து இவற்றின் வகைவிரிகளான எள்ளல் முதல் விளையாட்டீறாக முப்பத்திரண்டும் கூறி, பின் இவற்றை ஆங்கவை ஒரு பாலாக எனச்சுட்டிப் பிரித்து நிறுத்தி, ஒருபால் எனத் தொடங்கி வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுணர்வு வகை குறிப்பதனால், இவை நந்நான்காய் எண்ணப்படும் பான்மையவாதல் ஒருமுறை, இதன்பின் பிற எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் தன்மையவாதல் மற்றொரு முறை யென்பது தொல்காப்பியர் குறிப்பாம். அதனால் இதிற் கூறப்படுவன நாலுநாலாய்த் தொக்கு அம்முறையில் எண்ணப்படும் எட்டாம் என்பது விளங்க (பால் தன்மையைக் குறிப்பதாகலின்) இம்மெய்ப்பாடுகள் அப்பாலெட்டே எனக் குறிக்கப்பட்டன. ஈற்றில் என்ப எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் அவாய்நிலை. இனி, இம்மெய்ப்பாட்டுமுறை பிற ஆரியக் கூத்து நூல் வழக்கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்று தொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும். இவ்வுண்மை இச்சூத்திரத்தின்கீழ் இது பிறர் வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணத்துதல் நூதலிற்று எனப் பேராசிரியரே கூறுதலானும் விளங்கும். இவற்றின் இயல்வகை விரிக்கும் பிற சூத்திரங்களானும் இது விளங்கும். அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள் இம்மெய்ப்பாடுகளின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பனவாம். இவற்றுள், முதலில் நிற்கும் சிருங்காரம் கற்புக்கருதாக் காமக்களி. அதைச் செய்யுளிற் கொள்ளத்தகும் ஒரு பொருளாகத் தமிழ்ப்புலவர் கருதுகிலர். தமிழர் கூறும் உவகையெனும் மெய்ப்பாடு முறையே அறத்தான் வரும் செல்வம், கல்வியான் எய்தும் அறிவு, கற்புறு காதற்கூட்டம், திளைத்தற்குரிய தூய விளையாட்டு இந்நான்கானும் வரும் மகிழ்ச்சியாகும். சிருங்காரத்தை இவ்வுவகையோடு ஒப்பிட ஒல்லாமை கருதி, உவகை நாலில் ஒன்றாய தூய காதற் கூட்ட மலிவோடு உறழ்வித்து அமைதி காட்ட முயல்வர் பழைய உரைகாரர். உயர்திணைக் குரிப்பொருளாய் இருதலை ஒருவயின் ஒத்த அன்புக் கூட்டத் தூய மகிழ்ச்சியும், பிறனில் பெட்டல் முதலிய தீமையிற்றீராக் கற்பொடு படூஉம் கடப்பாடு கருதாக் கழிகாமத்திளைப்பும் தம்முள் ஒவ்வாமை வெளிப்படை. இனி, ஆசியம் நால்வகை நகையை முற்றிலும் ஒவ்வாமையும் தெற்றெனத் தெளியப்படுவதாகும். கருணை அருள், அதாவது அளியாமல்லால், அழுகையாகாமை தேற்றமாம். அயலார் அல்லலுக்கு இரங்குவது அளி! அதாவது கருணையாம்; அழுகையோ தம்பால் தாங்கரும் இழிவு இழவு தளர்வு வறுமைகளால் வருந்துதலாகும். ஏமப் புணைசுடும் இரௌத்திரம் தனக்குத் தீங்கிழைத்த பிறர் மாட்டுச் செல்லும் சினமாம். உறுப்பறுதல் முதல் கொலை வரை நான்கும் தன்னைச் செய்யினும் பிறரைச் செய்யினும் ஒப்ப நிகழும் மனவுணர்வு வெகுளியாகும். வீரம் என்பது பெருமிதம் நான்கனுள் ஒன்றாம் தறுகண்மையில் அடங்கும். பேராண்மைப் பெற்றியொடு குறையா இறவாச் சிறப்பீயும் கல்வி புகழ் கொடைகளான் எய்தும் மலிவொடு பொலிவும் பெருமிதம், கேவலம் வீரத்தின் வேறாதல் வெளிப்படை. குற்சை என்பது அருவருப்பு. இதனை எனைத்து வகையானும் தமிழ்ச் சான்றோர் செய்யுளில் எஞ்ஞான்றும் உயர்ந்த சுவைதரும் மெய்ப்பாட்டுப் பொருளாகக் கொண்டிலர். அற்புதம் மருட்கை வகையில் ஒன்றாயடங்கும். சாந்தம் பிறிதுணர்வு எதுவும் அற்ற வெறுநிலை ஆதலின் அது மெய்ப்பாடாகாமை தேற்றம். அதனை, உளத்துரனால் மலரும் உணர்வான நடுவுநிலை யெனும் தமிழ்ச் செய்யுட் பொருளொடு ஒப்பதுபோலக் கூறுவர் உரைகாரர். சமனிலை அதாவது சாந்தி, உணர்வும் குறிப்பும் ஒன்றுமற்ற வெறுநிலை; எனவே அன்மைப்பொருளது. நடுநிலையோ தகுதி எனும் அறிவுணர்வாகும்; அதனாலது நேர்மை சுட்டுமுணர்வுப் பொருட்டாம். இவை தம்முள் இயல் ஒவ்வாமை கண்கூடு; அந்நடுவு நிலையை அப்பாலெட்டு மெய்ப்பாட்டு வகையில் அடக்காமல் பின் பிறிதொருபாலாம் முப்பத்திரண்டனுள் வைத்து எண்ணுதலானும், அது இரசம் எட்டனோடு கூட்டி எண்ணப் பெறும் சாந்தமாகாமை ஒருதலை. 1 ஆய்வுரை இஃது, இயற்றமிழ் நூலார் கொண்ட மெய்ப்பாடாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்.) நகை, அழுகை, இளிவரல், மருட்கை அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையென அப்பகுதிப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் ஆசிரியர். எ---று. இங்கே கூற எடுத்துக்கொண்ட எண்வகை மெய்ப்பாடுகளும் முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலுங்கண்டுங்கேட்டுங் காம நுகரும் இன்பவிளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒருவாற்றால் தொடர்புடையனவே என்பது புலப்படுத்துவார், விளையாட்டுப் பொருளின-தாகிய நகையென்னும் மெய்ப்பாட்டினை முதற்கண் வைத்தார். நகைக்கு மறுதலையானது அழுகையாதலின் அதனை நகையின் பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத்தார். தாம் இளிவுற்றுத் தாழ்ந்த நிலையில் தம்மினும் உயர்ந்தவற்றையெண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின்பின் மருட்கை வைத்தார். வியப்பாகிய மருட்கை பற்றியும் அச்சம் பிறத்தலின் மருட்கையின் பின் அச்சத்தை வைத்தார். அச்சத்திற்கு மறுதலை வீரமாதலின் அச்சத்தின் பின் வீரத்தை வைத்தார். வீரத்தின் பயனாகப் பிறப்பது வெகுளியாதலின் வீரத்தின்பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லாச் சுவைகளினுஞ் சிறந்த தாதலானும் முதலிற்கூறிய நகையுடன் தொடர்புடையதாதலானும் உவகையை இறுதிக்கண் வைத்தார் என நகைமுதல் உவகையீறாகவுள்ள எண்வகை மெய்ப்பாடுகளின் வைப்பு முறைக்குப் பேராசிரியர் கூறும் காரணங்கள் நினைக்கத்தக்கனவாகும். இளம்பூரணம் 4. எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப. என் --- எனின். நகையும் நகைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எள்ளுதற்பொருண்மை முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நகைப்பொருளாம் என்றவாறு. எனவே காரணம் பற்றி நகையும் நான்காயின. நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே என்பதனான் நகைபடுபொருள் கண்டதன்வழி முறுவலோடு வரும் மகிழ்ச்சிப் பொருளாமாறு நகையாவது என்றுகொள்க.1 உடனிவை தோன்றும் இடமியா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும் மடவோர் செல்லுஞ் சொல்லின் கண்ணும் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும் மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணும் மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண் பிரி தன்மை யலியின் கண்ணும் ஆண்பரி பெண்மைப் பேடிக் கண்ணும் களியின் கண்ணுங் காவாலி கண்ணும் தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும் ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும் காரிகை யறியாக் காமுகர் கண்ணும் கூனர் கண்ணும் குறளர் கண்ணும் ஊமர் கண்ணுஞ் செவிடர் கண்ணும் ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந் தோன்றும் என்ப துணிந்திசி னோரே. என இவ்வகையெல்லாம் உளவெனச் செயிற்றியனார் ஒது- தலின் அவை நான்காகியவாறு என்னையெனின், முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மை யாயிற்று; மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப்பொருண்மை யாயிற்று; கவற்சி பெரிதுற்றரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று; குழவிகூறு மழலை இளமைப் பொருளாயிற்று; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க. புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க. இப்பொருண்மை செயிற்றியத்தில் வலியோன் கூறும் மெலிவு என்பதனாற் கொள்க.1 மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னையெனின்,மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல்; பேதைமை யென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல்.1 எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்றமையால் தன் மாட்டு நிகழும் வழியுங் கொள்க.2 உதாரணம் நகையா கின்றே தோழி என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள், தண்துறை ஊரன் திண்தார் அகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட் டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென் றிம்மனை அன்றஃ தும்மனை யென்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே. (அகம். 56) எனக்கூறி நகையாகின்றே தோழி என்றமையின் எள்ளல்பற்றி நகை தோன்றியது. ஏனையவும்3 வந்தவழிக் காண்க. (4) பேராசிரியம் இது, நிறுத்தமுறையானே நகைக்குறிப்பு நான்கென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனு மெனக் கருதப்பட்ட நகை நான்கு (எ - று.) இவை நான்கும் பொருளாகிச் சத்துவமுங் குறிப்பும் சுவையு மென்னும் மூன்றற்கும் முதற்கண்ணவாகலான் மூன்றனையும் அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறுகின்றவாறு இதுவென்பது.1 இவை நான்கும் ஒன்று இரண்டாகி எட்டாதலும் உடைய.2 எள்ளலென்பது தான் பிறரை எள்ளிநகுதலும் பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலுமென இரண்டாம். இளமையென்பது தான் இளமையாற் பிறரை நகுதலும் பிறரிளமை கண்டுதான் நகுதலுமென இரண்டு. பேதைமை என்பது அறிவின்மை. மடமை யென்பது பெரும்பான்மையுங் கொளுத்தக் கொண்டு கொண்டதுவிடாமை.3 இவையுந் தன் பேதைமையான் நகுதலும் பிறன்பேதைமையான் நகுதலும் தன் மடமையான் நகுதலும் பிறன்மடமையான் நகுதலுமென இவ்விரண்டாம். எள்ளலென்பது இகழ்ச்சி. எள்ளி நகினும் வரூஉம் (கலி. 61) என்பது, தன்கண் நிகழ்ந்த எள்ளல்பொருளாக நகை பிறந்தது. நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே (அகம். 248) என்பது பிறரெள்ளியது பொருளாகத் தன்கண் நகை பிறந்தது; என்னை? தன்மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்கவாறு. இது வெகுளிப்பொருளாக நக்கதன்றோ வெனின், அது4 வீரர்க்கே உரித்தாகல்வேண்டும்; இவள் அவளை, வெகுண்டு தண்டஞ் செய்வாளல்லள் அதற்கே உவப்பினல்ல தென்பது. அல்லதூஉம், நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறம். 72) என்றாற்போல வீரத்தெழுந்த வெகுளிநகையும் எள்ளல் நகையென்றே அடக்கவேண்டும் ஈண்டென்பது. நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே (கலி. 13) என்புழித் தன் இளமை பொருளாக நகை பிறந்தது. திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி. 86) என்பதும் அது. அங்ஙனம் மகன் சிரித்தவழித் தாய்க்கு நகை தோன்றிற்றேல் அது பிறரிளமை பொருளாக நகை தோன்றிற்றாம். நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் (அகம். 16 என்பது பிறரிளமை பொருளாக நகை பிறந்தது. நகைநீ கேளாய் தோழி (அகம். 248) என்பது தன் பேதைமை பொருளாக நகைபிறந்தது; என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின். நகையா கின்றே தோழி மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே (அகம். 59) என்பது பிறன் பேதைமை பொருளாக நக்கது. நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே (குறுந். 168) என்பது தன் மடத்தான் நகை தோன்றிற்று; என்னை? நீயிர் கூறியதனையே மெய்யெனக்கொண்டு மகிழ்ந்து நக்கன மென்றமையின். குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும் (குறள் 1095) என்பதும் அது. நாம்நகை யுடையம் நெஞ்சே நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி (அகம். 121) என்ப பிறர்மடம் பொருளாக நகை தோன்றிற்று. பிறவும் அன்ன. இவ்வோதப்பட்டவற்றுக்கெல்லாம் உவகை உரித்து, உள்ளப்பட்ட நகை நான்கு என்றதனான் உள்ளத்தோடு பிறவாத நகையுமுள 1. அவை வறிதகத் தெழுந்த வாயன் முறுவலள் (அகம். 5) என்றாற்பேல வருவனவெனக் கொள்க. (4) பாரதியார் கருத்து :-- இது, முன் சிறந்த செய்யுட்பொருளாம் எண்ணான்குணர்வும் கண்ணியபுறனே நானான்காய்ப் பண்ணைத் தோன்றும் அப்பாலெட்டே மெய்ப்பாடு எனத் தொகுத்துவற்றுள், முதல் தொகுதியாம் நகை வகை நான்கும் அவற்றினியல்பும் கூறுகிறது. பொருள் :-- எள்ளல்=நகைமொழி அதாவது கேலி; இளமை= மழவு; அஃதாவது பிள்ளைத் தன்மை; பேதைமை= அறிவின்மை; மடன்=ஏழைமை; அஃதாவது தேராது எளிதில் நம்புமியல்பு; என்று உள்ளப்பட்ட நகை நான்கென்ப---இந்நான்கும் நகையின் வகைநான்காய்க் கருதப்படு மென்பர் (உள்ளுறும் உணர்வை நுண்ணிதி னுணரும் புலவர்.) குறிப்பு :-- எள்ளல், இழித்தலின் வேறுபட்ட நகை மொழி; பழிப்பில் பரிகாசம்; விளையாட்டேச்சுப் போல்வது. இளிவு பின் சூத்திரத்தில் அழுகைவகைத்தாய் வேறு கூறப்பெறுதலின், இங்கு நகைவகையுளொன்றெனப்படும் எள்ளல் இழியாச் சிரிப்பாதல் தேற்றம்.2 ஊரன், எம்மிற் பெருமொழிகூறித் தம்இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே எனும் ஆலங்குடி வங்கனாரின் குறும்பாட்டில் (குறுந்.8) காதற் -பரத்தை, தான் காதலிக்கும் வள்ளற்றலைவனை எள்ளுவதறிக. ஒண்டொடீ! நாணிலன் மன்றஇவன்; ஆயின் ஏஏ! பல்லார் நக்கெள்ளப் படுமடன்மா வேறி நல்காள் கண்மாறி விடின்எனச் செல்வானாம் எள்ளி நகினும் வரூஉம், இடையிடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும் எனும் (61) குறிஞ்சிக்கலியில், பராவுதற்குரிய தலைவனைத் தோழி எள்ளல் காண்க. ..............kfË® eyD©L Jw¤â ahÆ‹ Äfe‹ w«k k»œe!நின்சூளே” எனும் ஓரம்போகியார்குறும்பாட்டிலு«(குறுந். 384) பராவுந் தலைவனை இழியாமல் எள்ளுவதறிக. நகையாகின்றேதோழி......k«k® நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே (அகம். 56) எனு மகப்பாட்டடியுமதுவே. இளமை, அறிவுமுதிராப் பிள்ளைமை, பேதைமை, அறிவின்மை (Strupidity) ; மடம் ஐயுறாது நம்புமியல்பு. (Simplicity or innocence). பேதைமை உவர்ப்பிக்கும்; மடம் உவப்புதவும்; எள்ளல் முதல் நான்கும் மகிழ்வொடு மருவும் பெற்றிய; இதனை நகையெனப்படுதல் வகையா தெனினே நகையொடு நால்வகை நனிமகிழ்வதுவே1 என்ற தொல்லை நல்லுரையானுமறிக. புறத்தே நகையாய் முகிழ்க்கும்குறி ஒன்றே அகத்து நிகழுமிந் நால்வகை யுணர்வும் தோற்றற்கேற்றதொரு மெய்ப்பாடா மெனு மியல்பைச் சுட்டி, உள்ளப்பட்ட நகை நான்கென்ப என்று அவற்றினியலும் வகையும் தோற்றுங்குறியும் ஒருங்கு விளக்கப் பெறுதலறிக. இதில் என்ப எனும் வினைக்கு, உள்ளுறு முணர்வை நுண்ணிதி னுணரும் புலவர் எனும் எழுவாய் இடநோக்கி அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. மெய்ப்பாட்டியலிறுதிப் புறனடைப் பொதுச் சூத்திரத்தில், உள்ளுணர்வின் நன்னயப் பொருள்கோள் தெரியின், திண்ணிதினுணர்வார்க்கல்லது எண்ணற்கரிதாமெனக் கூறுதலால், அதற்கேற்ப ஈண்டு மெய்ப்பாட்டியல் கூறுபவர் உள்ளுறுமுணர்வை நுண்ணிதினுணரும் புலவர் என்றேற்புடை எழுவாய் கொள்ளப்பட்டது. இதில் என்று என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல்; என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழியுடைய எண்ணினுட் பிரிந்தே என்பது இடையியற் சூத்திரம். (4) ஆய்வுரை: இது, நகைக்குரிய பொருள்வகை உணர்த்துகின்றது. (இ---ள்.) நகையென்பது, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என இந்நான்கும் பற்றி நிகழ்தலின் நால்வகைப்படும் என்பர் ஆசிரியர். எ---று. எள்ளல் என்பது, இகழ்தற்குறிப்பு! இளமையென்பது, விளை வறியாத இளம்பருவ இயல்பு. பேதைமை யென்பது, வாழ்க்கையில் இன்றியமையாது அறியவேண்டியவற்றை அறியாமை. மடன் என்பது, பிறர் அறிவிக்க அறிந்து தான் அறிந்தவற்றைப் பிறர்க்குப் புலப்படுத்திக்கொள்ளாமை. இனி மடன் என்பது, பொருளின் உண்மைத் தன்மையறியாது பிறழக் கொள்ளுதல் என்றும், பேதைமை யென்பது, கேட்டதனை ஆராய்ந்துணர்தலின்றி அவ்வாறே மெய்யாகக் கொள்ளுதல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு. கூறுவர் இளம்பூரணர், மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகை ஒன்றேயாயினும், தான் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக்குறிப்புக்களும் நுண்ணிதாகப் புலப்படுதற்குரிய நிலையில் நால்வகைப்பட்டுத் தோன்றும் என்பார், உள்ளப்பட்ட நகை நான்கென்ப என்றார் தொல்காப்பியனார். இவ்வாறே அழுகை முதல் உவகையீறாகவுள்ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத்தம் தோற்றத்திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப் பொருள்களுக்கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழ்வன என்னும் நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்து நோக்கத்தகுவதாகும். இனி, எள்ளல் பற்றிய நகையென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் தான் இகழப்பட்ட நிலையில் தான் நகுதலும் என இரண்டாம். இளமைபற்றிய நகை யென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக்கண்டு நகுதலும் பிறரது இளமைகண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். பேதைமைபற்றிய நகையென்பது, தன்பேதைமை பொருளாகத் தோன்றுவதும் பிறர்பேதைமை பொருளாகத் தோன்றுவதும் என இருதிறப்படும். மடமை பற்றிய நகையென்பது தன்கண் தோன்றிய மடமை காரணமாகவும் பிறர்கண் தோன்றிய மடமை காரணமாகவும் இருவகைப்படும் என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவர் பேராசிரியர். இளம்பூரணம் 5. இழிவே0 இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே. என்---எனின். இது அழுகையாமாறும் அதற்குப் பொருளுமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் அழுகைக்குப் பொருளாம் என்றவாறு. இழிவு என்பது---பிறர் தன்னை யெளியன் ஆக்குதலாற் பிறப்பது. இழவாவது---உயிரானும் பொருளானும் இழத்தல். 1 அசை வென்பது--- தளர்ச்சி. அது தன்னிலையிற்றாழ்தல். வறுமை என்பது--- நல்குரவு. இவை ஏதுவாக அழுகைபிறக்கும் என்றவாறு. 2 இதுவுந் தன்மாட்டுற்றதனானும் பிறர்மாட்டுற்றதனானும் பிறர்க்கும். 3 கவலை கூர்ந்த கருணையது பெயரே அவல மென்ப 1 அறிந்தோர் அதுதான் நிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்தி ளைத்தொ லிப்பத் தளர்ந்தவை நிறங்கிளர் அகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கோல்முனைக் கவற்சி அலைக்கண் மாறா அழுகுரல் அரவம் இன்னோர் அன்னவை இயற்பட நாடித் துன்னியர் உணர்க துணிவறிந் தோரே இதன்பயம் இவ்வழி நோக்கி அசைந்தனர் ஆகி அழுத லென்ப. என்பன செயிற்றிய மாகலின். இவையெல்லாம் இந் நான்கினுள் அடங்குமாறு அறிந்துகொள்க.2 இதற்குச் செய்யுள், ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க ல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற்சேர்க நடத்திசிற் சிறிதே. (புறம். உருரு) இது இழிவுபற்றி வந்த அழுகை. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (5) பேராசிரியம் இது, முறையானே அழுகை யென்னுஞ் சுவையினைப் பொருள்பற்றி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இளிவும் இழத்தலும் அசைதலும் வறுமையுமென இந்நான்கு பொருள்பற்றித் தோன்றும் அவலம் (எ-று.) இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது தந்தையுந்தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவென்பது பண்டை நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்துதல். வறுமையென்பது போகந்துய்க்கப்பெறாத பற்றுள்ளம். 1 இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமா மென்பது. எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை,கேடில் கொள்கை; அங்ஙனங் கூறிய மிகையானே அழுகைக் கண்ணீர்போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு. அதனையும் அழுகைப்பாற் சார்த்தி உணரப்படும். எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென வுருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே. (அகம்.176) என்பது, பரத்தையை நீ யெள்ளினையென்று அழுது வருகின்றாளென்று தலைமகற்குச் சொல்லியதாகலின் இது தன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது, கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் (கலி.47) என்னும் பாட்டினுள் தானுற்ற நோயுரைக்கல்லான் பெயருமன் பன்னாளும் எனத் தலைமகன் இளிவந்தொழுகுவது காரணமாகச் சேயேன்மன்யானுந் துயருழப் பேன் என்றமையின்1 இது பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. இது கருணையெனவும்படும்.2 மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே (புறம்.249) என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத்தற்கு3 மெழுகுகின்றாளைக் கண்ணீரே நீராக மெழுகுகின்றாளென்றமையின் இது தன்கட் டோன்றிய இழவுப்பற்றிப் பிறந்த அவலச் சுவையாயிற்று. ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே (புறம். 255) என்பதும் அது, பின்னொடு முடித்த மண்ணா முச்சி என்னும் பாட்டினுள், அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்நோய்த் தலையையும் அல்லை தெறுவர என்னா குவள்கொல் அளியள் தானென என்னழி பிரங்கு நின்னொடியானும் (அகம்.73) என்றவழித் தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாளெனச்4 சொல்லினமையின் அது பிறன்கட் டோன்றிய இழவுபற்றி அவலம் பிறந்ததாம். துளியிடை மின்னுப்போல் தோன்றியொருத்தி ஒளியோ டுருவென்னைக் காட்டி அளியளென் நெஞ்சாறு கொண்டாள் அதற்கொண்டுந்துஞ்சேன் (கலி.139) எனத் தன்கட் டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே (புறம்.252) என்பது பிறன்கட் டோன்றிய அசைவுபற்றிய அவலம்; என்னை? அள்ளிலைத்தாளி கொய்யா நின்றான் இதுபொழுதுஎன அவலித்துச் சொல்லினமையின்.1 இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுகன் நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண (புறம்.164) என்புழி,முலைப்பசை காணாது அழுகின்றது குழவியென்பது தன்கட் டோன்றிய வறுமைபற்றி அவலம்பிறந்தது.2 மகமுகனோக்கி அழுகின்றாள் என் மனைவி யென்பது பிறன்கட் டோன்றிய வறுமையவலம். இன்ன விறலு முளகொல் நமக்கென மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை (புறம்.19) என்புழி மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதாராயிற் கூற்றுக் கண்ணோடாதாகலின் அவர் உவந்தனரென்பது பெற்றாம்; அதனானே அஃது உவகைக் கலுழ்ச்சியா மென்பது.3 (5) பாரதியார் கருத்து:-- இஃது, அழுகை எனுமவலவகை நான்கும் அவற்றினினப்பொதுவியல்பும் உணர்த்துகிறது. இழிவு தருவன அழுகை விளையாதாகலின் விளிவில் கொள்கை அழுகை நான்கென அவற்றின் பொது வியல்பு விளக்கப் பட்டது. ஏகாரங்கள் எண் குறிப்பன; ஈற்றது அசை; தேற்றமெனினும் தவறாகாது. என என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல். (5) பொருள்:-- இளிவு=இழிதகவு; இழவு=இழத்தல்; அசைவு= தள்ளாத் தளர்வு; அஃதாவது கையறவு; வறுமை= மிடி, அஃதாவது இல்லாமை; என விளிவில் கொள்கை அழுகை நான்கே-என்று, ஒழியா தலமரச் செய்யு மவலம் இந்நால் வகைத்தாம். குறிப்பு:-- ஈண்டு, இளிவு-பிறரிகழ்வாற் பிறக்குமவலம்; பழி பிறங்கும் பான்மைத் தாம் இளிவரலன்று1. அவ் இளிவரலை அடுத்த சூத்திரம் கூறும். ஈண்டு இளிவுக்கு இதுவே பொருளாதல், இங்கு இழிவேஎனக் கொண்ட பழம் பாடத்தானும் வலியுறும். நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே (குறுந்.169) இம் மகனல்லான் பெற்றமகன் (கலி.86) பன்மாயக் கள்வன் (குறள்.1258) தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை (கலி.65) இவை அகத்தில் இளிவு குறிப்பன. மக்களே போல்வர் கயவர் (குறள்.1071) தேவரனையர் கயவர் (குறள்.1073) இவை போல்வன புறத்தில் இளிவு குறிப்பன. ஆய்வுரை : இஃது அழுகைக்குரிய பொருள்வகை உணர்த்துகின்றது. (இ---ள்.) இளிவு, இழவு, அசைவு, வறுமை எனக்கெடுதவில்லாத கோட்பாட்டினையுடைய அழுகை நால்வகைப்படும் v---W. இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியராதலாகிய தாழ்வு நிலை. இழிவு எனப்பாடங்கொள்வர் இளம்பூரணர். இழவு என்பது, தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமைகெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமையென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம் ஆதலின் இவையும் எட்டாயின என்பர் பேராசிரியர், தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகை யென்றும் பிறர் கண்தோன்றிய இளிவு பற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணையென்றும் கூறுதல் மரபு. அழுகைக்குரிய பொருளாகச் சொல்லப்பட்ட இளிவுவேறு. இனிக்கூறப்படும் மெய்ப்பாடாகிய இளிவரல் வேறாகும். இளம்பூரணம் 6. மூப்பே பிணியே வருத்த மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. என்---எனின். இளிவரலாமாறும்1 அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு. இவை நான்குந் தன்மாட்டுத் தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும். உதாரணம் தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும்-காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று (நாலடி.14.) என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது. பிணி யென்பது--பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம். மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை-யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். (நாலடி. 41) இஃது உடம்பினை அருவருத்துக் கூறுதல். வருத்தமென்பது---தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத்தானும் இழிப்புப் பிறர்க்கும் என்றவாறு. உதாரணம் செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமிநோய் உற்றார் அறிவதொன் றன்று (குறள். 1255) இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது. உதாரணம் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே (புறம். 74) இது தன்மாட்டு வருத்தத்தானே இழிப்புப் பிறந்தது. மென்மை என்பது--நல்குரவு. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். (குறள். 1047) இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். (குறள். 1044) எனவரும். இன்னும் யாப்புற என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க. அவை நாற்றத்தானும்தோற்றத்தானும் புல்லியன. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக்காண்க. (6) பேராசிரியம் இது, மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற இளிவரல் கூறுகின்றது. (இ---ள்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிய பிறக்கும் இளிவரல் (எ---று.) வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். யாப்புற வந்த என்பது திட்பமுறவந்த என்றவாறு. அங்ஙனங் கூறிய மிகையானே வீரமுதலாயினபற்றியும் இளிவரல் பிறக்கும் என்றவாறு. இவையும் முன்னையபோலத் தன்கட் டோன்றுவனவும் பிறன்கட் டோன்று வனவும் பற்றி எட்டாதலுடைய வென்பது கொள்க. தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரே மாகிய வெமக்கே. (புறம். 243) என்பது தன்கட் டோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளி வந்தனம் இக்காலத்து என்றமையின்.1 மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல (அகம். 6) என்பதும் அது.2 மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோடு யானே போர்த்தொழில் தொடங்க நாணுவல் அதனான் என்பது பிறன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது.1 இமயமுந் துளக்கும் பண்பினை துணையிலர் அளியர் பெண்டிரிஃ தெவனோ (குறுந். 158) என்பது தன்கட் டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது; என்னை? மலையைத்துளக்கும் ஆற்றலையுடையாய் காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவதன்றென இளிவந்து வாடைக்குக் கூறினமையின்.2 குணகடற் றிரையது பறைதபு நாரை திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே (குறுந். 128) என்பது நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் பிறன்கட் டோன்றிய பிணியெனப்படும். இதனுட் சேய ளரியோட் படர்தி என்றமையின் இது பிறன்கட் டோன்றிய வருத்தமும் வந்ததாயிற்று.3 யான்றனறிவல் தானறியலளே (குறு. 337) என்பது தன்கட் டோன்றிய வருத்தம்பற்றி வந்த இளிவரல்;4 என்னை? அது பின்னின்ற தலைமகன் கூறியதாகலின் ஒன், றிரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லும் (கலி. 47) என்பது பிறன்கட் டோன்றிய வருத்தம்பற்றி வந்தது; என்னை? அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரலாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறை நயப்பித்தமையின்.1 வலியரென வழிமொழியலன் மெலிபரென மீக்கூறலன் (புறம். 239) எனத் தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றிய மென்மை பற்றி இளிவரல் பிறந்தன; என்னை? மெலியார் இளிவந்தன கூறுவராயினும் வலியார் மீக்கூறுவராயினும் இவன் அவை செய்யானென்றலின்.2 ஒருகையுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்து வாழ்வேன் என்பது வீரம்பற்றிய இளிவரல் பிறந்தது. இது தன்கண்ணும் பிறன் கண்ணுந் தோன்றாமையின் இலேசினாற் கொண்டாமென்பது.3 (6) பாரதியார் கருத்து :--- இஃது இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது. பொருள் :--- மூப்பு=முதுமை; பிணி=நோய்; வருத்தம்= இடுக்கண், அதாவது அல்லல்; மென்மையொடு= எளிமை. அஃதாவது நொய்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கே தொடர்ந்து படரும் மானக்குறை நான்குவகைத்தாம் குறிப்பு :--- மென்மை, இங்கு மிருதுத்துவம் குறியாது இகழ்ச்சிக்காளாக்கும் எளிமை அதாவது நொய்ம்மைப் பொருட்டாம். இளிவரல், மானம் குன்ற வருவது. இளிவரின் வாழாத மான முடையார் எனவும், இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வருதலான், இளிவரல் இப்பொருட்டாதல் தெளிக. முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும் அது பழிபடு குற்றமின்றியும் பிறரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது. முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர்கொண்ட பாடத்தானும் இவ்வுண்மை வலியுறும். இச் சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும்.1 தண்ணந் துறைவற்றொடுத்து நந்நலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம் இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய கொடுத்தவை தா என் சொல்லினும் இன்னா தோ? நம் இன்னுயி ரிழப்பே (குறுந். 349) குப்பைக் கோழித் தனிப்போர் போல விளவாங்கு விளியி னல்லது களைவோ ரிலையா னுற்ற நோயே (குறுந். 305) இதுமற் றெவனோ தோழி! துனியிடை இன்ன ரென்னு மின்னாக் கிளவி? .................................................... திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே. (குறுந். 181) இன்ன பலவும் அகத்தில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை பற்றிய இளிவரல் குறிப்பன. தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே (புறம். 74) தலைவி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (குறள். 964) மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. இன்னபலவும் புறத்தில் இளிவரல் கூறுவன காண்க, இனி, மூப்பு முதல் மென்மைவரை ஒவ்வொன்றும் தன்னளவில் வாழ்வொல்லாத்தாழ்வு தொடரும் தன்மைத்தாதலின், அப்பொது வியல்பு விளங்க இவை யாப்புறவந்த இளிவரல் நான்கு எனப்பட்டன. ஏகாரம் முதலிரண்டும் எண்குறிக்கும், ஈற்றதசை, தேற்ற மெனினு மிழுக்காது மென்மையொடு என்பதன் ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல். (6) ஆய்வுரை இஃது இளிவரலுக்குரிய பொருள்வகை உணர்த்துகின்றது. (இ-ள்.) மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இப் பொருள்களுடன் செறியத் தோன்றும் இளிவரல் நால்வகைப் படும் எ-று. மூப்பு-முதுமைகாரணமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணிதீரா நோய். வருத்தம்-பயன்தராத வீண்முயற்சி. மென்மை. ஆற்றலும் பொருளுமின்றி எளியராம் நிலைமை. இவை நான்கும் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாதலுடைய. (6) இளம்பூரணம் 7. புதுமை பெருமை áறுமைMக்கமொடுkதிமைrலாkருட்கைeன்கே.v‹---vÅ‹. இது மருட்கை யாமாறும் அதன்பொருண்- மையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் மருட்கை பிறக்கும் என்றவாறு. மதிமை1 சாலா மருட்கை என்றமையால் அறிவுடையார் இப் பொருட்கண் வியவார் என்று கொள்க. புதுமை ஆவது---யாதொன்றானும் எவ்விடத்தினும் எக் காலத்தினுந் தோன்றாததோர் பொருள்தோன்றியவழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவதுகண்டு வியத்தல் போல்வன. பெருமை என்பது---பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பருத்தனகண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும். சிறுமை என்பது---பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது கடுகின்கட் பல துளை போல்வன. ஆக்கம் என்பது---ஒன்றன் பரிணாமங்2கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின ஆகியவழி வியத்தலும் நல்கூர்ந்தான் யாதொன்று மிலாதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரண முணராதான் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங்கண்டு வியத்தலுமாம். பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லாம் இவற்றின்பாற் படுத்திக் கொள்க. இருந்தவேந்தன் என்னும் அகப்பாட்டினுள், .. ... ... பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ இலனே தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இவ்வயின் நிறீஇ இழிமின் என்ற நின் மொழிமருண் டிசினே (அகம். 348) என்றது வியந்தவாறு. பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினிக் கமரர்க் கரசன் தமர்வந் தீண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெம் கட்புலங் காண விட்புலம் போயது இறும்பூது போலும் அஃ தறிந்தருள் நீயென (சிலப். பதிகம்) என்றது புதுமை. (7) பேராசிரியம் இது, வியப்புணர்த்துதல் நுதலிற்று. (இ- ள் ) புதிதாகக் கண்டனவுங், கழியப் பெரியனவாயினவும்.1 இறப்பச் சிறியனவும்2, ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும்பற்றி வியப்புத்தோன்றும் (எ-று.) மதிமை சாலா மருட்கை யென்பது3 அறிவினை உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமற் றிரித்து வேறுபடுத்து வருவ தென்றவாறு. இவையுமெல்லாம் மேலனபோலத் தன்கட் டோன்றினவும் பிறன்கட் டோன்றினவுமென எட்டாதலுடைய. மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓர்யா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே (அகம். 82) என்பது தன்கட் டோன்றிய புதுமைபற்றிய வியப்புப் பிறந்தது; என்னை? தன்கருத்து வெளிப்படாது தன்மெய்க்கட் டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள்போலத் தோழிக்கு அறத்தொடு நின்றமையின். மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன் (அகம், 82) என்றவழிப் பண்டு ஒருகாலுங் கண்டறியாதபடி ஆடிற்று மயிலென்றமையிற் பிறபொருட்கட் டோன்றிய புதுமையாயிற்று. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவு இன்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3) என்பது, பெருமைவியப்பு; என்னை? கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை முறையாற் பெருகற்பாலதாகிய நட்பு மற்றவனைக் கண்ணுற்ற ஞான்றே நிலத்தினதகலம் போலவும் விசும்பினோக்கம்போலவுங் கடலினாழம் போலவும் ஒருகாலே பெருகிற்றென்றமையின்; இது தன்கட் டோன்றிய பெருமை வியப்பு. இது தலைமகன் கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறகட் டோன்றிய பெருமை வியப்பாமென்பது கொள்க.1 மைம்மலர் ஓதி மணிநகைப் பேதைதன் கொம்மை வரிமுலை யேந்தினும் - அம்ம கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதை இடையிற் சிறியதொன் றில் என்பது பிறன்கட் டோன்றிய சிறுமை வியப்பு. தன்கட் டோன்றினவுங் கண்டுகொள்க. எருமை யன்ன கருங்கல் விடைதோறு ஆனின் பரக்கும் யானைய முன்பில் கானக நாடனை நீயோ பெரும (புறம். 5) என்பது நரிவெரூஉத்தலையார் தம்முடம்பு பெற்று வியந்து கூறிய பாட்டாகலின் இது தன்கட் டோன்றிய ஆக்கம் பற்றி வியப்புப் பிறந்ததாயிற்று.1 உறக்குந் துணையதோ ராலம்பித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு. (நாலடி 28) என்பது பிறபொருளாக்கம்பற்றிய வியப்பு. இனி, மதிமைசாலா மருட்கையானே2 சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தலும் பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தலும் வியப்பாமெனக் கொள்க. கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு (புறம். 77) என்னும் பாட்டுச் சிறியோர் பெருந்தொழிலைச் செய்தது.3 அன்னான் ஒருவன் தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் (கலி. 7) என்பது பெரியோன் சிறுதொழில் கூறலின் வியப்பாயிற்று1. புதுமையை ஆக்கத்துளடக்கி முதுமை யென்பது பாடமாகவும் உரைப்ப. அன்னதோர் வழக்கின்மையானும் புதுமை ஒன்று ஒன்றாய்த் திரியுமெனப்பட்டு அவ்வாக்கத்துள் அடங்காமையானும் அஃதமையா தென்பது.2 இங்ஙனம் இவை நான்கு சூத்திரப் பொருளும் நானான்கு பதினாறாகியும் முப்பத்திரண்டாகியும் விரியுமாகலின் இவற்றை ஒரினமாக்கி முதற்சூத்திரத்து முன் வைத்தானென்பது.3 இனி வருஞ் சூத்திர நான்கினும் எண்ணப்படும் பொருள் ஒன்று இரண்டாகாமையின் அவை பதினாறேயாமென்பது.1 அஃதே யெனின் இத்துணையுங் கூறி வந்த முப்பத்திரண்டனையும்2 இனிக்கூறும் பதினாறனையும்3 நோக்கி முதற் சூத்திரத்துள் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப ( தொல். மெய்ப்.1) என்றானென்னாமோவெனின்,4 என்னாமன்றே : பதினாறு பொருளும் மேற்கூறிய முப்பத்திரண்டுமென்று படாமையி னென்பது;5 என்றார்க்குத் தன்கட் டோன்றுதல் பிறன்கட் டோன்றுதலெனப் பகுத்துப் பொருளுரையாது மேலனவும் இனி வருகின்றனவும் நானான்கேயாகலாற் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொரு (249) ளென்றனராமெனின்1 அங்ஙனங் கூறின் அவை கண்ணியபுறனே நானான் கென்ப (249) என்றும், நாலிரண்டாகும் பாலுமாருண்டே (தொல். மெய்ப் 2) என்றும் மடங்கக் கூறல் வேண்டாவாம்; வேண்டலே, இச்சூத்திரம் எட்டுவகையாகியே செல்லுமெனமறுக்க.2 இல்லதூஉம் இஃது உலகவழக் காதலிற் பண்ணைத் தோன்றிய பொருள் ஈண்டு ஆராயானென்பது. அன்றியும் இவற்றைப் பண்ணைத் தோன்றிய பொருளெனின் ஒன்றொன்றாக்கிக் கூறாது கூத்தன் அரங்கினுள் இயற்றும் வகையானே சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென வேறுவேறு செய்வான் ஆசிரியனென்பது.3 (7) பாரதியார் கருத்து :-- இது மருட்கை எனு மெய்ப்பாட்டுவகை நான்கும் அவற்றின் இயல்பும் உணர்த்துகிறது. பொருள் :-- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு---இந்நான்கனொடும் கூடி ; மதிமை சாலா மருட்கை நான்கே--- அறிவு சிறவா மயக்கவகை நான்காம். குறிப்பு. --புதுமை, முன்னறியா யாணர்த்தன்மை;1 அதாவது நூதனம், பறழுக்கு வயற்றில் புறப்பையுடைய கங்காரு, பறக்குமீன், சிற்றுயிருற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, கையிலடங்குஞ் சிறுநாய், கண்கொள்ளாப் பெருமலை, இருதலை, முக்கண், ஐங்கால், அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்பு உடைய உயிர்கள் போல்வன காண எழுமுணர்வு, புதுமையிற் பிறக்கும் வியப்பாகும் ; அது பெரிதும் இயற்கையிற்றோன்று மியல்பிற்றாம். ஆக்கம், அறிவுடைமக்கள் சமைப்பாலாவது ; எனவே, ஆக்கமருட்கை செயற்கையிற்றோன்றும் அரும்பொருள் விளைக்கும் வியப்பாகும். வானவூர்தி, பேசும் படம் போல்வன ஆக்க மருட்கையாம். ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளைக் கண்டாங்கே ஆய்ந்தறியக் கூடுமிடத்து மயக்கில்லை. மதியால் மதிக்கப்படா வழி மட்டுமே வியப்பு விளையும். ஆதலின், தேர்ந்து தெளியும் திறனற் றறிவுசிறவா நிலையில் வருவதே மயக்கமாமென்பது தோன்ற மதிமை சாலா மருட்கை நான்கே என அவற்றின் இயல்பும் வகைமையும் விளக்கப்பட்டன. ஆக்கமொடு என்பதின் ஒடு பிரிந்து மற்றைய ஒவ்வொன்றோடும் சென்று சேரும் எண்ணிடைச் சொல். ஈற்றேகாரம் அசை, தேற்றமுமாம். (7) ஆய்வுரை இது. மருட்கைக்குரிய பொருள்வகையுணர்த்துகின்றது. (இ---ள்.) புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்என அறிவு நிரம்பாமையான்தோன்றும் மருட்கை நால்வகைப்படும் எ---று புதுமை --- புதிதாகக்கண்டது. பெருமை --- மிகப்பெரியது சிறுமை --- மிக நுண்ணியது. ஆக்கம் --- ஒன்றுதிரிந்து ஒன்றாகியது. இந்நான்கும் முற்கூறியனபோலத் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாவன. உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் அறிவைத்திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் இம் மெய்ப்பாடாதலின் இதனை மதிமை சாலாமருட்கை என அடைபுணர்த்தோதினார் ஆசிரியர். எனவே இயல்பாகிய அறிவுடன் கூடிய நிலையில் மருட்கை தோன்றுதற்கு இடமில்லையென்பது புலனாம். (7) இளம்பூரணம் 8. அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. என்---எனின். அச்சமாகிய மெய்ப்பாடும் அதன் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அணங்கு முதலாகச் சொல்லப்பட்ட நான்கினும் பிறக்கும் மாறுபடுதல் அமையாத அச்சம் நால்வகைப்படும் என்றவாறு. பிணங்கல் சாலுமாயின் நடுக்கம் முதலாயின உளவாகா; அவை பிணங்கல் சாலாக வழியே உளதாவ தென்று கொள்க1 அவை நாலச்சமும் வருமாறு:- கொலைகளவுகட்காமம் பொய்யென்பனவற்றை நிகழ்த் தினவர்க்கு அரசனால் அச்சம் வருதலின் அவனும் அஞ்சப்படும் பொருளாயினான். உதாரணம் மையல் வேழ மடங்கலின் நெரிதர உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனத் திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாண்மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையின் நடுங்கி. (குறிஞ்சிப்.165 --6) என வரும். பிறவு மன்ன. (8) பேராசிரியம் இது, முறையானே அச்சமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தெய்வமும் விலங்குங் கள்வருந் தமக்கு இறைவரா யினாருமென நான்கு பகுதியான அச்சம் பிறக்கும் (எ-று.) அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயபாலரும் பிறரும் அணங்குதற்றொழிலராதிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன அரிமா முதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார் தீத்தொழில் புரிவார். இறையெனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். 1 பிணங்கல்சாலா அச்சமென்றதனான் முன்னையபோல இவை தன்கட் டோன்றலும் பிறன்கட்டோன்றலு மென்னுந்தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வருமென்பது.2 உ---ம். யானை தாக்கினு மரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் சூன்மகன் மாறா மறம்பூண் வாழ்க்கை (பத்துப். பெரும்பாண்.134-136) என்பதனுள் அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று. ஒரூஉநீயெங் கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணுங் கடை (கலி 87) இது கள்வர் பொருளாக அச்சம் பிறந்தது; என்னை? அவனைக்1 கள்வர்பாற் சார்த்தி உரைத்தமையின். எருத்துமே னோக்குறின் வாழலே மென்னும் கருத்திற்கை கூப்பிப் பழகி-யெருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லாற் கடுமான்தேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறியா வேந்து. (இ.வி.ப. 124) இஃது, இறைபொருளாக அச்சம் பிறந்தது. பிணங்காத அச்சமென்னாது சாலா அச்ச மென்ற மிகையான் இந்நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க.2 சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் ஆணை கடக்கிற்பார் யார் (கலி.18) என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது. அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக் கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை (அகம்.235) அச்சா றாக வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல் (கலி.75) என வருவனவும் அவை. பிறவும் அன்ன. (8) பாரதியார் கருத்து:--- இஃது, அச்சவகை நான்கும் அவற்றினியல்பும் உணர்த்துகிறது. பொருள்:--- வெளிப்படை; கூறாமலே விளங்கும். குறிப்பு:--- காட்சியளவில் காரணங் காணொணாவிடத்துக் கடவுள்மேல் ஏற்றிக்கூறு முலகியலில், துன்புறுத்தும் சூர் அதாவது இயவுளாக் கொள்வதை அணங்கென்பது பழவழக்கு. கள்வர், அலைத்துப்பொருள் வௌவுவோர். இறை குற்றங்கடிந்தொறுக்கும் வேந்து. குடிக்குற்றம் ஒறுத்தோங்கும் அறம் பிறர்க்கின்மையின் மிறைகடியும் ஒறுப்பச்சம் தரும் வேந்தைத் தம்மிறை எனச் சுட்டிய பெற்றியறிக. அச்ச ஏதுவாம் தம் மிறையை (தவற்றை) யும், அதற்குரிய ஒறுப்பாலச் சுறுத்தும் தம் இறையையும், ஒருங்கே தம்மிறை எனச் சுருக்கி இரட்டுற மொழிதலாகச் செவ்வியுணர்க.1 இனி, பிணங்கல்--மாறுபடல்; நெருங்குதலுமாம். காரணத்தோடு மாறுபடுவதோ நெருங்குவதோ கூடுவதெதுவும் அஞ்சப்படாதாதலின், பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்றிந்நான்கண் பொதுவியல் விளக்கப்பெற்றது. எனவும், ஏகாரங்களுள் முன்னவையும் எண் குறிக்கும்; ஈற்றேகாரம் தேற்றம், அசையுமாம். (8) ஆய்வுரை இஃது, அச்சத்திற்குரிய பொருள்வகையுணர்த்துகின்றது. (இ-ள்.) அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறைவன் என மாறுபாடுதலில்லாத அச்சம் நால்வகைப்படும். எ-று. அணங்கு என்பன எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய்பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முதலாகவுள்ள கொடிய விலங்குகள். கள்வராவார் சோர்வு பார்த்துப் பிறரை வஞ்சித்துக் கொடுந்தொழில்புரிவோர். தம் இறையென்றது, தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற்பணி கொண்டு தம்மை ஆளும் தலைவரை. அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இவ்வாறு நடுங்காது பிணங்கி எதிர்நிற்பாரது உள்ளத்தில் அச்சந்தோன்றாது என்பார், பிணங்கல் சாலா அச்சம் என அடைபுணர்த் தோதினார். அச்சத்திற்குக் காரணமாகிய இவை நான்கும் தன் கண் தோன்றுவன பிறர்கண் தோன்றுவன என இருபாற்படாது பிறிது பொருள் என ஒருபாற்பட்டே நிற்பனவாம். இளம்பூரணம் 9. கல்வி தறுகண் புகழ்மை1 கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என்---எனின். பெருமிதமாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கல்வியானுந் தறுகண்மையானும் புகழ்மையானும் கொடையானும் பெருமிதம் நால்வகைப்படும் என்றவாறு. இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கும் மகிழ்ச்சி பெருமிதம் என்று கொள்க2. பெருமிதமாவது---தன்னைப் பெரியனாக நினைத்தல். உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய்-எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வந்த நின்னொடு பாங்கலா வீரர் படை. (புறப். வெ. 7. 8) இது வீரம்பற்றி வந்தது. பிறவு மன்ன. (9) பேராசிரியம் இஃது ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கல்வியுந் தறுகண்மையும் புகழுங் கொடையுமென்னும் நான்கும் பற்றி வீரம்பிறக்கும் (எ-று.) இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமித மென் றெண்ணினான்; என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதமெனப்படும் என்றற்கென்பது, கல்வி யென்பது தவமுதலாகிய விச்சை. தறுகணென்பது அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை யென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவன செய்யாமை. கொடை யென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல்.1 உ-ம். வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க் கல்லமை காட்டி யவள் (கலி.141) என்பது கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கல்லாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின். அடன்மாமேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேன் மன்றம் படர்வித் தவள் (கலி.141) என்பது தறுகண். கழியாக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகம்.112) என்பது புகழ். வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை யிரவூக்கும் இன்னா இடும்பைசெய் தாள் (கலி.141) என்பது கொடை. தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக (புறம்.43) என்பதும் அது. சொல்லப்பட்ட பெருமித மென்றதனாற் காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க. பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே (புறம்.73) என்பது காமம்பற்றிய பெருமிதம். பிறவும் வருவன உளவேற் கொள்க இது தன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும்; என்னை? கல்வியுந் தறுகண்மையும் இசைமையும் வேட்கையுங் கொடைத் தொழிலுந் தன் கண்ணவாகலின். (9) பாரதியார் கருத்து:--- இது, பெருமித வகையும் இயல்பும் கூறுகிறது. பொருள்:--- கல்வி முதல் கொடையீறாக நான்கும் புகழத்தக்க பெருமித வகையாம். குறிப்பு:--- பெருமிதம், வெறுப்புக்குரிய செருக்கன்று; வீறுதரும் தருக்காகும்; எனவே, புகழ்க்குரிய பெருமையிற் பிறக்கும் மகிழ்வாம். இதன் பழியில் பெருமைப்பெற்றி தோன்றச் சொல்லப் பட்ட பெருமிதம் என விளக்கப்பட்டது.1 சொல் புகழாதல் வெளிப்படை. ஆகையால் கல்வி, ஆண்மை அதாவது செம்மற்றிறல், சீர்த்தி, வள்ளன்மை என்பவை மீக்கூரப் பெற்றுப் புகழ்தற்குரிய பெருமை யுணர்வூட்டலின், இவை நான்கும் பெருமித வகையாயின. என---எண்ணிடைச்சொல். ஈற்றேகாரம் அசை; தேற்ற முமாம். (9) ஆய்வுரை இது, பெருமிதத்திற்குரிய பொருள்வகையுணர்த்துகின்றது. (இ-ள்.) கல்வி, தறுகண், புகழ், கொடை எனக்கூறப்பட்ட இவை நான்குங் காரணாமாகப் பெருமிதம் நால்வகைப்படும். எ-று. பெருமிதமாவது, எல்லோராலும் ஒப்ப நில்லாதது பே- ரெல்லையாக நிற்றல் என விளக்கந்தருவர் பேராசிரியர். எனவே அறிவு, ஆண்மை, புகழ், ஈகை ஆகிய சிறப்புக்களால் மக்கள் எல்லோராலும் ஒப்ப நில்லாது தனக்கு வரம்பாகிய தலைமையராய் உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக்கொள்ளுதல் பொருந்தும் கல்வியென்பது தவமுதலாகிய அகக்கருவிகளின் செயற்றிறம். தறுகண் என்பது உள்ளத்திண்மையாகிய வீரம். இசைமையென்பது எக்காலத்தும் பழியொடு வருவன செய்யாமையாகிய புகழ்த்திறம். புகழ்மை எனப்பாடங்கொள்வர் இளம்பூரணர். கொடையென்பது தன் கண் உள்ள உயிர் உடம்பு உறுப்பு முதலிய எல்லாப்பொருள்களையும் பிறர்க்கு வரையாது வழங்குதலாகிய கொடைத்திறம் இவை நான்கும் காரணமாக மக்களிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்பர் பேராசிரியர். இளம்பூரணம் 10. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே. என்---எனின். வெகுளியாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உறுப்பறை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் வெகுளி பிறக்கும் என்றவாறு. இப்பொருள் நான்குந் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க.1 உறுப்பறையாவது---அங்கமாயினவற்றை அறுத்தல். குடிகோளாவது---கீழ்வாழ்வாரை நலிதல். அலை என்பது---வைதலும் புடைத்தலும். கொலை என்பது---கொல்லுதற் கொருப்படுதல். ஊடற்கண்ணும் வெகுளி தோற்றுமால் எனின், அஃது இன்பத்திற்குக் காரணமாதலால் தலைமகள் புருவநெரிவும் வாய்த்துடிப்புங் கண்ட தலைமகற்கு வெகுட்சி பிறவாது உவகை பிறக்கும். தலைமகன் வெகுளுவனாயின் அதன்பாற் படும். உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமந் ததையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயின் (புறம். 72) என்பது வெகுளிபற்றி வந்தது. பிறவு மன்ன. (10) பேராசிரியம் இஃது ஏழாம், எண்ணு முறைமைக்கண் நின்ற வெகுளி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உறுப்பறையென்பது, கைகுறைத்தலுங் கண் குறைத்தலு முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறட்பும் முதலாயவற்றுக்கட் கேடுசூழ்தல்; அவையென்பது, கோல்கொண்டலைத்தன் முதலாயின; கொலையென்பது அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும்(எ--று.)1 வெறுப்பின் என்றதனான் ஊடற்கண்ணுந் தோன்றும் வெகுளி முதலாயினவுங் கொள்க.1 முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று (கலி.52) என்பது உறுப்பறையான்வந்த வெகுளி. நின்மகன், படையழிந்து மாறின னென்றுபலர் கூற, மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇ (புறம் 278) என்பது குடிகோள்பற்றி வந்தவெகுளி; என்னை; தன்மகன் மறக் குடிக்குக் கேடுசூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின். நெருந லெல்லைநீ யெறிந்தோன் தம்பி யகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன் (புறம்.300) என்பதும் அது.2 வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே (புறம்.100) என்பதனுள், அலைபற்றிச் சினம்பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப்புண்டலை நினைந்து சினங்கொள்ளாநின்ற தென்றமையின், உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறம் 72) என்பது கொலை பொருளாக வெகுளிச்சுவை பிறந்தது;என்னை? சிறுசொற் சொல்லுதலென்பது புகழ்கொன்றுரைத்த லாகலின். செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய் (கலி.87) என்பது ஊடற்கண் தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவு மன்ன. இன்னும் அவ்விலேசானே, நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை ( புறம்125) என்றாற்போலச் சினமில்லதனை உள்ளது போலக் கூறுவனவுங் கொள்ளலாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படா வென்பது1 இது பிறன்கண் தோன்றிய பொருள்பற்றிவரும்.2 (10) பாரதியார் கருத்து:--- இதில், வெகுளிவகை நான்கும் அவற்றின்பொது இயல்பும் கூறப்பெறுகின்றன. பொருள்:--- உறுப்பறை---சினை சிதைத்தல்; அதாவது அங்கபங்கம்; குடிகோள்-ஓம்பற்குரியாரை நலிதல்; அலை---அடித்தும் இடித்தும் அலமரச் செய்தல்; கொலை---கொல்லல்; என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே---இவை நான்கும் வெறுப்பால் விளையும் வெகுளி வகைகளாகும். குறிப்பு:--- உறுப்பின், ஊறும், சுற்ற நலிவும், அலைப்பும். கொலையும் வெறுப்பால் விளையும் சினமுதலாதலின் இவை வெறுப்பின் வந்த வெகுளி நான்கே என அவற்றின் இயல்பு வகைமைகள் குறிக்கப்பட்டன. தீதில் சினம் அறமாதலின் அதனை விலக்கி வெறுத்தற்குரிய வெகுளிவகையே இங்குக் கூறப்பட்டன. ஈண்டு, என நனிவெறுப்பின் வந்த என்றிளம் பூரணர் கொண்ட பழைய பாடம், வெறுப்பு மிகுதியால் விளையும் வெகுளியின் பெற்றியை இனிது விளக்குதலறிக3 இதில் என்ற,என்பது இளம் பூரணர் பாடத்து என போல எண் குறிப்பதை என்றும் எனவும் ஒடுவும் என முன்குறித்த இடையியற் சூத்திரத்தாலறிக. ஈற்றேகாரம் தேற்றம், அசையுமாம். (10) ஆய்வுரை இது, வெகுளிக்குரிய பொருள்வகையுணர்த்துகின்றது. (இ-ள்.) உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என வெறுத்தற்குரிய வெகுளி நால்வகைப்படும். எ-று. உறுப்பறை உறுப்புக்களை அறுத்தல்; அஃதாவது யாக்கையின் உறுப்புக்களாகிய கையினை; வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் முதலிய கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது பிறரது குடிப் பிறப்பின் அவருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல்.அலை என்பது, அரசியல் நெறிமுறைக்குமாறாகக் கோல்கொண்டு அலைத்தல் முதலிய தீத்தொழில்கள். கொலை யென்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைகளை அழித்துப் பேசுதல். இவ்வாறு நால்வகைப்படக் கூறப்பட்ட இக்கொடுந் தொழில்கள் காரணமாக மக்களது மனத்தே வெகுளி தோன்றுதலியல்பு. இவ்வெகுளிபிறர்கண் தோன்றிய பொருள் பற்றி வருவதாகும். இளம்பூரணம் 11. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே. என்---எனின். உவகை யாமாறும் அதன்பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செல்வ நுகர்ச்சியானும், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும், மகளிரொடு புணர்தலானுஞ், சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகை பிறக்கும் என்றவாறு. ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும் ஒத்த காமத் தொருவனொடு பலரும் ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும் ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும் நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும் குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும் கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும் துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும் அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும் நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைதலும் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும் ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும் சிருங்கா ரம்1 மென வேண்டுப இதன்பயன் துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே எனச் செயிற்றியனார் விரித்தோதினா ராயினும் இவை யெல்லாம் இந் நான்கினுள் அடங்கும்.2 தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (குறள்.1107) என்றவழித் தம்மிலிருந்து தமது பாத்துண்ட செல்வ நுகர்ச்சி முயக்கம் புணர்பு வையை வருபுனல் ஆடல் இனிதுகொல் செவ்வேற்கோ குன்ற நுகர்தல் இனிதுகொல் வைவேல் நுதியன்ன கண்ணார் துணையா எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும் வழிமயக் குற்று மருடல் நெடியான் நெடுமாடக் கூடற் கியல்பு (பரிபாடல்) என வரும். பிறவு மன்ன. (11) பேராசிரியம் இஃது ஈற்றுக்கண்ணின்ற உவகை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செல்வமென்பது, நுகர்ச்சி புலனென்பது, கல்விப் பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது காமப்புணர்ச்சி முதலாயின; விளையாட்டென்பது, யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதல் (191) முதலாயின இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் (எ--று.) உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும். உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய வளமையா னாகும் பொருளிது வென்பாய் (கலி.12) என்புழி வளமையானாகும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின் இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம். நன்கலம் பெற்ற வுவகையர்என்பதும் அது. பெண்டிர் நலம்வௌவித் தண்சாரல் தாதுண்ணும் வண்டின் துறப்பான் மலை (கலி.40) என்பது அறிவுபொருளாக உவகை பிறந்தது; என்னை? முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப்பதம்பார்க்கும் அறிவுடைமை காமத்திற்கு ஏதுவாமாகலின். இகலில் ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பாம் (நாலடி.137) என்பதும் அது.1 இலமல ரன்ன வஞ்செந் நாலின் என்னும் மணிமிடைபவளத்துள், தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே (அகம்.142) என்பது புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? அவள் இவ்வாறு முயங்கினமையான், உவவினி வாழியென் னெஞ்சே (mf«.142)v‹wikÆ‹. துயிலின்றி யாநீந்தத் தொழுநை அம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறைந்தமைகுவான்மன்னோ (கலி. 30) என்புழி ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறைந்தமைகுவான்மன் என்றமையின் இது விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது. அல்லல் நீத்த வுவகை யென்றதனாற் பிறர் துன்பங் கண்டு வரும் உவகையும் உவகையெனப்படா தென்பது.1 இதுவுந் தன்கட் டோன்றிய பொருள்பற்றி வருமென்றார்க்குப் பிறன்கட் டோன்றிய இன்பம்பற்றியும் உவகை பிறக்குமன்றே! அஃதெப்பாற்படுமெனின், அதுவும் அல்லல் நீத்த வுவகையென்றதனான் உவகையெனப்படும். இனித் தன்கட்டோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது பிறன்கட்டோன்றிய அச்சம் முற்கூறி இதனை ஈற்றுக்கண் வைத்தமையான் எடுத்தோதிய நான்கும் போலாது, இது பிறன்கட் டோன்றிய இன்பம் பொருளாக வருமென்பது கொள்க.2 (11) பாரதியார் கருத்து:--- இஃது, உவகை வசையும் இயல்பும் உணர்த்துகிறது. பொருள்:--- செல்வம்- திரு அல்லது ஆக்கப் பெருக்கம்; புலன்--அறிவிலூறும் அகமலர்ச்சி ; புணர்வு -- கற்புறு காதற்கூட்டம்; விளையாட்டு -- தீதில் பொய்தல்;3 என்று அல்லல் நீத்த உவகை நான்கே -- இந்நான்கும் அலக்கண் விலக்கிய மகிழ்ச்சி வகையாகும். குறிப்பு:--- செல்வம், அகமகிழ்விக்கும் ஆக்கப் பொதுப் பெயர். யாண்டும் எனைத்தளவும் உளமுளைய4 வருவதெதுவும் உவகைப் பொருளாகாது. புலன் ஈண்டுக் கல்விப் பயனா மறிவைக்குறிக்கும். அரிய புதிய ஆய்ந்து நுட்பமுணர்ந் துண் மகிழ்தற் கேதுவாமறிவு ஈண்டுக் குறிக்கப்பட்டது. நிறைந்த கல்வி உதவும் புகழ்க்குரிய முன்குறித்த பெருமித உணர்வின் உள்ளூறு மறிவின்பம் வேறாதலின், அவ்வறிவின்பம் இங்குப் புலனுவகை எனக் கூறப்பட்டது. இதனை உரனொடு முரணும் உணர்வு வகையாம் ஐம்பொறி நுகர்வென இளம்பூரணர் கூறுவராலெனின், பொறி வாயிலைந்தும் அவித் தடக்கற் பாலவென வெறுக்கப் பெறுதலானும், அவற்றில் அல்லல் நீத்தல் கூடாமையானும், அது பொருளன்மை யறிக.1 அன்றியும், மெய்ப்பாட்டு வகை அனைத்துமே பொறி வழிப்படும் உணர்வுகளாதலின், அவற்றிலொன்றை மட்டும் பொறி நுகர்வெனக்கூறுதல் பொருந்தாமையானும், அது கருத்தன்மை தேறப்படும். இனி, புணர்வு அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயினொத்த கற்புறு காதற் கூட்டமாம். தேறுதலொழிந்த தீதுறு காமக்களி எஞ்ஞான்றும் பகை, பாவம், அச்சம், பழி என நான்கு மிகவாவாம்; ஆதலின், அஃது அல்லல் நீத்த உவகைப் பொருளாகாமை ஒருதலை. அதனாலீண்டுப் புணர்வு பழிபடுமிழிகாமச் சுவை கருதாது, கற்புறு காதற்கூட்டத்தையே சுட்டுவதாகும். விளையாட்டு மக்கள் உளங்களித்தாடும் தீதறியாப் பொய்தல், அதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக்கும். அஃது இரு பாலார்க்கும் ஏற்பதாகும். ஆண்மையழிந்து மகளிரை இழிக்கும் பிற்காலத்தில் விளையாட்டை அவருக்குத் தனி உரிமையாக்கி, விளையாட்டுப் பொதுப் பெயர்க்கெல்லாம் மகளிர் விளையாட்டெனப் புதுப் பொருளும் கொள்ளப்பட்டது. கடலாடல், புதுப்புனல் குடைதல் , உண்டாட்டு, தீதுதவாக் கூத்துப்போல்வன வெல்லாம் விளையாட்டுவகையாகும். எனில், பீழையுதவு மெதுவும் அழுகை--இளிவரல் முதலிய உணர்வின் வழித்தாமாதலின் அவற்றை விலக்கி, யாண்டும் எஞ்ஞான்றும் துன்பம் தீர்ந்த இன்பவகையே உவகையாகுமென்று அதன் இயல் விளங்க அல்லல் நீத்த உவகை எனத் தெளிக்கப்பட்டது. புலனே என்பதன் ஏயும், என்றும் எண்குறிப்பனஈற்றேகாரம் தேற்றம். அசையுமாம். (11) ஆய்வுரை இஃது உவகைக்குரிய பொருள் வகையுணர்த்துகின்றது. (இ-ள்.) செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்று துன்பத்தையொழித்த உவகை நால்வகைப்படும் எ-று. செல்வம் என்றது, செல்வத்தால் உளதாகும் நுகர்ச்சியினை. புலன் என்றது, கல்விப்பயனாகிய அறிவுடைமையினை. புணர்வு என்றது, அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்காமப்புணர்ச்சியினை, விளையாட்டென்றது, மலையும் யாறும் குளனும் சோலையும் முதலாகிய இயற்கை வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணையொடு விளையாடி மகிழும் விளையாட்டினை. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை பிறக்கும். உலக வாழ்க்கையிற்பிறரது துன்பத்தினைக்கண்டு கீழ் மக்கள் அடையும் தவறான மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது எனவும் பிறர் துயர் துடைத்துத்தாம் இன்புறூஉம் தூய மகிழ்ச்சியே உண்மையான உவகையாம் எனவும் அறிவுறுத்துவார், அல்லல் நீத்த உவகை என அடைபுணர்த்தோதினார் தொல்காப்பியனார். (11) 12. ஆங்கவை1 ஒருபால் ஆக வொருபா லாக உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக் கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ முனிதல் நினைத்ல் வெரூஉதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ அவையும் உளவே அவையலங் கடையே. என்--எனின். மேற்சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடும் ஒழிய வேறுபட்டுவருவன சிலமெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒருபக்க முடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவையல்லாத விடத்து என்றவாறு. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். உடைமையாவ--யாதானு மொருபொருளை உடையனா யினால் வருதலாகும் மனநிகழ்ச்சி.1 நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சாது (புறம். 72) என வரும். இன்புறலாவது--நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது. கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு. (நற்றிணை 182) ... ... ... உள்ளிய வினை முடித் தன்ன இனியோள் (நற்றிணை 3) விட்டகன் றுறைந்த நட்டோர்க் கண்ட நாளினும் இனிய நல்லாள் எனக் காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறுதல்.2 நடுவுநிலைமையாவது---ஒருமருங்கு ஓடாது நிகழும் மன நிகழ்ச்சி. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள் 118) என வரும். அருளாவது---எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல். அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் (கலித். 11) என்றாற்போல வருவது. தன்மை யென்பது---சாதியியல்பு.1 பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்றின்னோர்மாட்டு ஒருவரை யொருவர் ஒவ்வாமற் கிடக்கு மியல்பு. அது மெய்க் கடமையின் கண் வேறுபட்டுவருதலின் மெய்ப்பாடாயிற்று. வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திய பயலைப் பார்ப்பான் (புறம். 345) என்றும், புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழில் மார்பின் மறலி அன்ன களிற்றின்மிசை யோனே (புறம். 13) என்றும், காயாம்பூக் கண்ணிக் கருந்துவ ராடையை மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் ஆயனை யல்லை (கலித். 108) என்றும், தேனொடு நீடு மயிற்குற மாக்கள் என்றும் வரும். அடக்கம் என்பது--மனமொழிமெய்யி னடங்குதல். அது பணிந்த மொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் (குறள் 124) என்றும், யாகாவா ராயினும் நாகாக்க (குறள் 127) என்றும், நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் (குறள் 126) என்றும் வருவன. இதுவும் அடங்காமைபோலாமையின் மெய்ப் பாடாயிற்று.5 வரைவு என்பது---செய்யத் தகுவனவும் தவிரத் தகுவனவும் மறைந்து ஒழுகும் ஒழுக்கம். அது, பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை என்றாற்போல வருவன (திரிகடுகம் 26) அன்பு என்பது--பயின்றார்மாட்டுச் செல்லுங் காதல். புறத்துறப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள். 79) என்பதனான் அறிக. கைம்மிகல் என்பது---குற்றமாயினுங் குணமாயினும் அளவின் மிகுதல். அது நிலையின் வேறுபடுதலின் மெய்ப்பாடாயிற்று. கையென்பது அளவுகுறித்ததோர் இடைச் சொல். காதல் கைம்மிகல் (தொல். மெய்ப்பாட்டியல். 23) என்றும், குணனிலனாய்க் குற்றம் பலவாயின் (குறள். 898) என்றும் இவ்வாறு வருவன. நலிதல் என்பது---பிறரை நெருக்குதல். அதன் கண் நிகழும் மனநிகழ்ச்சி நலிதலாயிற்று. இதுவும் மேற்சொல்லப்பட்ட எட்டும் இன்மையின் ஈண்டு ஓதப்பட்டது. பகைநலியப் பாசறையு ளான் (நெடுநல். இறுதி வெண்பா.) எனவரும். பிறவும் அன்ன. சூழ்ச்சி என்பது---எண்ணம். சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (குறள். 445) இதுவுமோர் மனநிகழ்ச்சி. வாழ்த்தல் என்பது---பிறனை வாழ்த்துதல் அதுவும் மேற்கூறப்பட்டன போலாமையான் வேறோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது. வாழியாதன் வாழி (ஐங்குறு. 1) என்றும். எங்கோ வாழிய குடுமி (புறம். 9) என்றும் இவ்வாறு வருவழி ஆண்டு வரும் மனநிகழ்ச்சி மெய்ப்பாடாம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின் அது வெகுட்சியின் முதிர்வு. இது அன்பின் முதிர்வாகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்காதென்க. நாணல் என்பது---தமக்குப் பழி வருவன செய்யாமை பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி என்னு முலகு (குறள். 1015) நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர் (குறள். 1017) என வரும். துஞ்சல் என்பது---உறக்கம். உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று. ..................KÅÉ‹¿ நனந்தலை யுலகமுந் துஞ்சும் (குறுந். 6) என வரும் அரற்று என்பது---உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு. அதுவும் ஏனைச்சொல்லின் வேறுபடுதலின்அரற்றெdஒUமெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது. பாயல்கொண்டென்தோ£கனவுவhராய்கோšதொடிநிuமுன்கையாŸகையாWகொள்ளாŸகடிமdகாத்தோம்gவல்லுவŸகொல்லேh விடுமருப்பி யானை விலங்குதேர்க் கோடும் நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருள் முற்று மளவு (கலித் 24) எனவரும் இது, களவியலின்பாற்படுமெனின்1 அரற்றென்பது ஒரு பொருளைப் பலகாற்கூறுதல்; அஃது அப்பொருண்மேற் காதலாற் கூறுதலின் அதுவுமோர் மெய்ப்பாடாயிற்றெனவுமாம். பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்-கென்னோ மன்னொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும் (முத்தொள். 404) எனவரும் என்பது கொள்க. கனவுநிலை நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று. நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது (குறள். 1215) என வரும். முனிதல் என்பது---வெறுத்தல், காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇச் சென்ற மல்லல் ஊரன் மெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே தெறுக அம்மஇத் திணைப்பிறத் தல்லே (குறுந். 45) எனக் குடிப்பிறத்தலை வெறுத்தவாறு காண்க. நினைத்தல் என்பது---கழிந்ததனை நினைத்தல். அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோற்றுதலின் மெய்ப்பாடாயிற்று. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். (குறள். 1203) வெரூஉதல் என்பது அச்சம்போல் நீடுநில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.1 ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணுங் கடை (கலித். 87) என்றவழி அஞ்சத்தகுவது கண்டு அஞ்சுதலின்மையும் அஞ்சினார்க்குள்ள வேறுபாடு அதன்பின் நிகழாமையுங் காண்க. மடி என்பது---சோம்புதல். மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் (குறள். 901) என்றவழி மடியென்பதோர் மெய்ப்பாடுண்மை யறிக. கருதல் என்பது--குறிப்பு. குறிக்கொண்டு நோக்காமை அல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும் (குறள்.1095) என்றவழிக் குறிக்கோள் என்பதோர் மெய்ப்பாட்டுண்மை யறிக. ஆராய்ச்சி என்பது-- ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல். ஆராய்தல் எனினுந் தெரிதல் எனினுந் தேர்தலெனினும் நாடலெனினும் ஒக்கும். நன்மையும் தீமையும் நாடி நலம்புரி (குறள், 511) ஆயும் அறிவினர் (குறள். 618) தேரான் பிறனைத் தெளிந்தான் (குறள். 508) எனவும் ஆராய்த லென்பது தோற்றியவாறு காண்க. விரைவு என்பது--ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மனநிகழ்ச்சி, கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே (புறம். 275) போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ (புறம். 82) என வரும். பிறவுமன்ன. உயிர்ப்பு என்பது-முன்புவிடும் அளவினன்றிச் சுவாதம் நீளவிடுதல். ... ... பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ள மின்னுந் தன்னுழை யதுவே (குறுந். 142) என வரும். கையாறு என்பது--காதலர் பிரிந்தால் வருந் துன்பமும் அந்நிகரனவும் வருவது. தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ (கலித். 24) என்றவழிக் கையாறென்பதும் ஓர் மெய்ப்பாடாயிற்று. இடுக்கண் என்பது--- துன்பமுறுதல். மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னை யெனின், கையாறு என்பது இன்பம் பெறாமையான் வருந்துன்பம். இடுக் கணாவது துன்பமாயின வந்துறுதல்.1 அடுக்கி வரினு மழிவிலா னுற்ற இடுக்கண் இடுக்கட் படும் (குறள். 625) என்றவழி இடுக்கணென்பது வருவதொன்றாகக் கூறியவாறு காண்க. கையாறென்பது-- மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு, இடுக்கணென்பது-மெய்யானுந் தோற்றுவதோர் மெய்ப்பாடு. பொச்சாப்பு என்பது- மறத்தல். பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் தீர்ந்த மாசறு காட்சி யவர் (குறள்.199) என்பதனாற் பொச்சாப்பு மறத்தலாயிற்று. பொறாமை என்பது-- பிறர்க்கு ஆக்க முதலாயின கண்ட வழியதனைப்பொறாது நடக்கும் மன நிகழ்ச்சி. அதனை அழுக்காறு என்ப. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (குறள். 198) என்றவழி அழுக்காறு என ஒரு மெய்ப்பாடு உளதாகியவாறு கண்டு கொள்க. வியர்த்தல் என்பது--தன் மனத்தின் வெகுட்சி தோன்றிய வழிப்பிறப்பதோர் புழுக்கம். பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (குறள். 487) இதன்கண் உள்வேர்ப்பர் என்றதனான் மன நிகழ்ச்சி ஆகியவாறு காண்க. ஐயம் என்பது---ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள். 1084) என்றவழி ஐயம் மனத்தின்கண் நிகழ்ந்தவாறு காண்க. மிகை என்பது--ஒருவனை நன்கு மதியாமை. மிகுதியான் மிக்கலை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். (குறள், 158) இதனுள் மிகுதி யென்பது நன்குமதியாமையாம். நடுக்கம் என்பது-யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோ மென வரு மனநிகழ்ச்சி. கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே (கலித். 13) என வரும். இத்தனையும் கூறப்பட்டன அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க.1 (12) பேராசிரியம் இச்சூத்திரம் மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டும் அவைபோல மெய்ப்பாடெனப்படுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆங்கவை ஒருபாலாக---எள்ளன் (252) முதலாக விளையாட் (259) டிறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத் திரண்டும் ஒருகூறாக; ஒருபாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒருகூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி இவையு முளவே அவையலங்கடையே யென்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள. அப் பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் (எ-று.) இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனாலெனின், ஆங்காவை ஒருபாலாக ஒருபாலென்றானாகலின் இருகூறெனப்படுவ தம்மினொத்த எண்ணாதல் வேண்டுமாதலின் அவை முப்பத்திரண் டெனவே இவையும் முப்பத்திரண்டென்பது எண்ணி உணர வைத்தானென்பது.1 உடைமையென்பது, செல்வம்; செல்வ நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மரம்போலச் செல்வமுடைமை யான்வரும் மெய்வேறுபாடு.2இன்புறலென்பது, அவ்வுடைமையை நினையுந் தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி, நடுவு நிலையென்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது, செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை. அது காம வெகுளிமயக்க நீங்கினோர்1 கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் அவற்றோடு கூறினான். அருளலென்பது, மக்கண் முதலிய சுற்றத்தாரையருளுல்; அஃது அரிதாயவறனெய்தி யருளியோர்க் களித்தலும்(கலி.11) என்றாற்போல வருவது,ஆண்டைக் கருணை யினை அழுகையென்றமையின் இஃது அதனோடடங்காது.2 தன்மையென்பது, சாதித்தன்மை; அவையாவன; பார்ப்பாராயிற்குந்தி மிதித்துக் குறுநடைகொண்டு3 வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும்.4 இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும்5 வெண்பல்லுமாகித் தோன்றலுமென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக்கொள்க.1 அடக்க மென்பது, உயர்ந்தோர்முன் அடங்கியொழுகும் ஒழுக்கம்; அவை: பணிந்த மொழியுந் தணிந்த நடையுந்தானை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின.2 வரைத லென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்;3 அவை: பார்ப்பாராயின் முத்தீ வேட்டலும் புலவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க.4 வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப் படாது. அனபென்பது, அருட்கு முதலாகி மனத்தினிகழு நேயம்.5 அஃதுடையார்க்குப் பிறர்கட்டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது, இவையெல்லாத் தத்த மனத்தினிகழ்ச்சியை வெளிப்படுப்பனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும். கைம்மிகலென்பது, ஒழுக்கக்கேடு; அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல். நலிதலென்பது பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின் கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது சூழ்ச்சியென்பது சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பலாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட்டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம் வாழ்த்த லென்பது, பிறரால் வாழ்த்தப்படுதல் இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்பது.1 நாணுதலென்பது நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி. துஞ்சலென்பது, உறக்கம்; அது நடந்து வருகின்றான்கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப்பட்டது. அரற்றென்பது, அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல்விக்குப் பேய்கூறும் அல்லல்போல2 வழக்கினுள்ளோர் கூறுவன; கனவென்பது, வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்டறறியப்படும். முனிதலென்பது, வெறுத்தல்; அஃது அருளுஞ்சினமுமின்றி இடைநிகர்த்தாதல்; வாழ்க்கை முனிந்தா னெனவும் உறையுண் முனியுமவன் செல்லுமூரே எனவுஞ் சொல்லுபவாகலின். நினைதலென்பது, விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும் நினைத்தேனென்பது, வழக்காதலின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று வெரூஉதலென்பது விலங்கும் புள்ளும் போல வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி. மடிமை யென்பது, சோம்பு. கருதலென்பது, மறந்ததனை நினைத்தல். 3ஆராய்ச்சியென்பது, ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல். விரைவென்பது, இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவுதொழில்பட உள்ள நிகழுங் கருத்து. 4உயிர்ப்பென்பது, வேண்டியபொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து; அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றானென்பது. கையாறென்பது, அவ்வுயிர்ப்புமின்றி வினையொழிந்தயர்தல்.5 இடுக்கணென்பது, மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்பட வரும் இரக்கம்.6 பொச்சாப்பென்பது, அற்றப்படுதல்;7 அஃதாவது, பாதகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓரிகழ்ச்சியை இடையறவுபடுதல். பொறாமையென்பது, அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வங்கண்டவழி வேண்டாதிருத்தல்.18 வியர்த்தலென்பது, பொறாமை முதலாயினபற்றி மனம்புழுங்குதல். ஐயமென்பது, ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம். மிகையென்பது, கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதி. நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம், அச்சமென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித்தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்க மாமென்பது. இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க.20 இவையெல்லாம் உலக வழக்காகலான் இவ்வழக்கேபற்றி நாடக வழக்குள்ளுங் கடியப்படா என்ற இவ்வாறு மற்றவற்றை எண்ணிய மாத்திரை யல்லது இலக்கணங் கூறுகின்றிலனாலெனின், சொல்லின் முடியும் இலக்கணத்தவாகலின் சொல்லானாயினா னென்பது,21 உதாரணம் இக்கூறியவாற்றான் வழக்கு நோக்கியுஞ் செய்யுணோக்கியுங் கண்டுணரப்படும். (12) பாரதியார் கருத்து :--- இதற்குமுன்வரை முதற் சூத்திரங் கூறும் பண்ணைத் தோன்றும் எண்ணான்குணர்வின் மெய்ப்பாட்டு வகை விரித்து, இதில் முன் இரண்டாம் சூத்திரம் சுட்டிய நாலிரண்டாகும் பாலவாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகள் குறிக்கப்படுகின்றன. பொருள் :--- ஆங்கவை ஒருபாலாக ஒருபால்--இதற்குமுன்நகையே............v£nl மெய்ப்பாடென்பஎன்பJமுதšசெல்வ«புலனே......ctif நான்கே என்பது வரை சூத்திரங்களில் கூறப்பட்ட மெய்ப்பாட்டுணர்வுவகை எட்டும் ஒரு பான்மையவாக மற்றொரு பெற்றியவாய்; உடைமை நடுக்கெனாஅ இவையுமுளவே---உடைமைமுதல்நடுக்குவuஎவ்வெட்டாŒஎண்ணப்பLமுணர்வுகளு«செய்யுட்பொருŸசிறக்fவருவனவுள;அவையலங்கடையே--இtஉளவாதšமு‹குறித்jமெய்ப்பாLஎட்டன்வfதோன்றாவிடத்தாம். குறிப்பு இதில்கூறப்பெறும்உணர்வுமுப்பத்திரண்டும்எனாஅஎனும்அளபெடைஇடைச்சொற்களால்எவ்வெட்டாய்ப்பிரித்துஎண்ணப்படுதலால்,இவைமுதலிற்குறித்தநானான்காய்ப்பண்ணைத்தோன்றும்மெய்ப்பாடுஎட்டன்வகைகளின்வேறாதல்வெளிப்படை.அன்றியும், நானான்காய்த் தொகுத்து முன் மெய்ப்பாட்டுவகை எட்டு எனச் சுட்டிய எண்ணான்குணர்வும் புறத்தே மெய்யிற்றோன்றுந் தன்மையவாதல், கண்ணிய புறனே நானான்கென்ப என முதற் சூத்திரத்தும், அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப எனத் தேற்றத்துடன் மூன்றாஞ் சூத்திரத்தும் வற்புறுத்தப் பெறுதலால் தெளிவாகும். அதனாலும், அப்பான்சுட்டி அவற்றை ஆங்கவைஒருபாலாகஎனப்பிரித்துநிறுத்தி,ஒருபால்எனவேறுதொடங்கிஎவ்வெட்டாய்வகுத்துஇச்சூத்திரத்தெண்ணப்பெறும்உணர்வுKப்பத்திரண்டும்òறக்குறிச்Rட்டின்றிtளாகூறப்bபறுதலாலும்,eகைKதலியòறக்குறிbபறும்gன்மையvண்ணான்Fணர்வின்bமய்ப்பாடுvட்டேvனக்Fறித்துÉலக்கியதாலும்,ïதில்eலெட்டும்Kன்vண்ணான்கென்றbமய்ப்பாட்டுtகைகளின்nவறாய்ச்bசய்யுட்bபாருள்áறக்கவரும்cணர்வுகளாதல்nதற்றமாகும்.ï¥gh‹ik வேறுபாடுவிளங்க,இச்சூத்திரத்துவக்கத்தில்ïவ்îணர்வுகளைvண்ணத்bதாடங்குமுன் “ஆங்கவைxருgலாக,xருபால்vனÃறுத்தbசாற்பெய்தFறிப்புமறிக.ïit òறக்குறிச்சுட்டுப்bபறாமையால்bமய்ப்பாடாகச்áறவாவெனினும்bமய்ப்பாடுகள்nபாலச்bசய்யுட்பொருள்áறக்கவரும்cள்ளுணர்வுகளாதலின்ïவ்வியலில்xப்பமுடித்துக்Tறப்பெற்றன.ïÅ, இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகை பெறலொன்று, புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதுற வேறுபாடேயுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாட்டுவகை எண்ணான்கும் அகப் புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைகளுக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய், முறையே இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் தோழியுற் புணர்வுமென்றாங்கந்நால் வகையினு மடைந்த சார்பொடு கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப்பட்டுள1 இனி, உடைமை என்பது பொருண்மை அஃதாவது மதித்து உரிமைகொள்ளும் பெற்றியாகும். மதிக்கப்படுவதே பொருளாம்; பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் என்பது காண்க. இனி ஒருவர் மற்றவர்க்குப் பொருளாதல் காதலின் முதற்படி. காதற்றலைவனைத் தலைவிக்குக் கிழவன் எனவும், தலைவியைத் தலைவனுக்குக் கிழத்தியெனவும் சொல்லும் மரபு இப்பொருட்டா தலறிக. பிறன்பொருளாள் என மனைவியை உடைமைப் பொருளாகக் கூறியதும், உரிமை என்றே பெட்புடை மனைவிமார் அழைக்கப்பெறுவதும், யானுன் உடைமை எனத் காதலர் தம்முள் வழங்குவதும், இச்செவ்வி கருதியேயாம். எனவே அன்பின் வழித்தாம் உரிமையுணர்வே உடைமையாகும். இன்புறல், அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும்1 நடுவுநிலை காதலுங் கடனும் மோதக் கோடா மனச்செப்பம்; விழைவுக் கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணர்வையே குறிக்கும். அருள், தவறுணரா அன்பின் பெருக்கம்; காணுங்கால் காணேன் தவறாய என்பதறிக தன்மை, தானதுவாகு மியல்பு; நோக்குவ எல்லாமவையே போறல் எனும் மனமாட்சி. அடக்கம்=தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல், ஞாட்பினுணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது எனவும், நாணொடு நல்லாண்மை (காதலுக்கு முன்) பண்டுடையேன் எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதவறிக, இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைச் குறிக்குமெனினும் அமையும். வரைதல், நாணுவரை யிறந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை;இது காதலினெழுவது, அன்பென்பத அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ்வது. இவை எட்டும் காதலின் முதனிலையா மியற்கைப் புணர்வொடு தொடர்வன. கைம்மிகல்=அடங்காக் காதற்பெருக்கு, நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி, என்பதும், ஆற்றா (காதல்) நோயட இவளணி வாட என்பதும் போல வருவன காண்க. காதல்கைம்மிகல் எனக் களவியலிலும் (சூ-115) முன் இவ்வியலினும் (சூ-23) சுட்டுவதானுமுணர்க. நலிதல்=மெலிவு. அஃதாவது வலிஅழிவு சூழ்ச்சி=நேராக கூட்டம் நிகழ்வழி யாராய்தல். வாழ்த்தல்= காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் வாழி என்னெஞ்சே, நீ, வாழிபொழுது வாழி அனிச்சமே, காதலை வாழிமதி, புன்கண்ணை வாழி மருண்மாலை என வருவன காண்க. நாணுதல்=வெள்குதல், காமமும் நாணும் உயிர்காலாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், யானோக்குங் காலை நிலனோக்கும் எனவும், கொண்க னூர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்.... .... காணவந்து நாணப்பெயரும் எனவும் வருவன காண்க. துஞ்சல் =காதற்கனவுற வுறங்கல், கயலுண்கண் யானிரப்பத் துஞ்சில் எனவும், துஞ்சுங்காற் றோண் மேலராகி எனவும், கனவினாற் காதலர் காணாதவர் எனவும் வருபவை கண்டறிக. அரற்றல்=வாய்விடல். “beŠr eL¡Fw” btD« ghiy¡ fÈÆš “ghaš bfh©bl‹nwh£ fdîth®, “MŒnfh‰ bwhoÃiu K‹ifahŸ, ifahW bfhŸshŸ, fokid fh¤njh«g tšYeŸ bfhšnyh? என்றா ராயிழாய் என வருதலின், தலைவன் அரற்றினமை காண்க. கனா=தூக்கத் திற்றோற்றுவது. இதுவும் காதலிற் கனிவது நுண்பூண் மடந்தையைத் தந்தாய் போல இன்றுயில் எடுப்புதி கனவே (குறுந். 147) எனத் தலைவன் கனவிலும், நனவினா னல்காக்கொடியார்கனவினான், என் எம்மைப் பீழிப்பது?. எனத் தலைவி கனவிலும் அறிக. இவ்வெட்டும், இடந்தலைப்பாடெனு மிரண்டாம் காதனிலைக்குச் சிறந்துரியவாம். இனி, முனிதல் முதல் உயிர்ப்புவரையுள்ள எட்டும் பாங்கொடு தழாஅல் எனும் மூன்றாங் காதல் நிலைக்குரிய. அவை வருமாறு:- முனிதல்=முன்விரும்பிய வெறுத்தல். பாலு முண்ணாள் பந்துடன் மேவாள் எனுங் கயமனார் குறும்பாட்டாலறிக. நினைதல் = விருப்புற்று நினைத்தல், நினைப்பவர் போன்று நினையார் கொல் எனவும், உள்ளாதிருப்பி னெம் அளவைத்தன்றே எனவும், தலைவியும், நினைத்தனெல்லெனோ பெரிதே எனத் தலைவனும் நினைத்தல் காண்க (குறுந். 102, 99). ...............bgÇjʪbjdt! கேளாய், நினையினை நீ நனி என வரும் நற்றிணைச் (253) செய்யுளுமிதுவேயாம் வெரூஉதல் --- பிரிவும் ஊறும் அஞ்சுதல். அரிதரோதேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோரிடத்துண்மையால் என்பதிலும், நாம் நகப் புலப்பினும். பிரிவாங்கஞ்சித் தணப்பருங்காமம் தண்டியோரே என்னுங் குறும்பாட்டிலும் (117), நீயே, அஞ்சல் என்ற என் சொலலஞ்சலையே என்னும் சிறைக்குடி ஆந்தையார் (குறுந் 300) செய்யுளினும் பிரிவச்சம் கூறுப. இரவு நீ வருதலின். ஊறும் அஞ்சுவல், (குறுந். 217) எனவும் உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் (நற். 253) எனவும் ஊறச்சம் கூறுதலும் உணர்க. மடிமை=ஆற்றாமையின் அயர்வு, இதனை விளை யாடாயமொ டயர்வோ ளினியே எனவும், ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்ந்நிறுப்பவும், நோய்மலி வருத்தம் அன்னையறியின் எனவும் வரும் (குறுந் 396, 316) பாட்டடிகளானறிக. கருதல் - குறிப்பு. நாட்டமிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும், குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் எனுங் களவியற் சூத்திரங்களானுமிக் கருத்துண்மை தேர்க. செறாஅச்சிறு சொல்லும், செற்றார் போனோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள் 1097); வைகல் தோறும் நிறம் பெயர்ந்துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய்தோழி .. ... பிறி தொன்று குறித்ததவன் நெடும்புறநிலையே (குறுந். செய் 298) என்பவற்றாலறிக ஆராய்ச்சி - காதலரன்பு கனிய வழிசூழ்தல், மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல், வாழிதோழி... வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே .குறுந் 73) எனவும், அவரொடு சேய் நாட்டு ..........bgU§fˉ படிவழி நிலைஇய நீரே உணலாய்ந் திசினால் எனவும் காதல் பற்றி ஆராய்ச்சி நிகழ்தலறிக. விரைவு=வேகம், ஆர்வ மிகுதியாலெழுவது மாலைவாரா வளவைக் காலியற் கடுமாக் கடவுதி, பாக! .........c©f£ தெரிதீங்கிளவி (யோள்) தெருமரல் உயவே (குறுந். 250), காலியற் செலவின் மாலை எய்திச், சின்னிரை வால்வளைக் குறுமகள், பன்மாணாக மணந்துவக் குவமே (குறுந் 189); என்பவற்றாற் காதலின் வேகம் கண்டு தெளிக. உயிர்ப்பு=ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல். பானாட் பள்ளி யானையின் உயிர்த்தென்னுள்ளம் பின்னும் தன்னுழையதுவே (குறுந் 142)vனத்jலைவனும்.gŸËahidÆ‹ உயிர்த்தனன் நகையிற் புதல்வற்றழீஇயினன் (குறுந். 359); பள்ளியானையின் வெய்ய உயிரினை (நற். 253). எனத் தோழியும், கூடா வழிக்காதலன் நெட்டுயிர்த்தல் குறிக்கப் பெறுதலறிக. இனி தோழியிற் புணர்வு என்னும் காதலின் நான்காநிலைக் குரிய எட்டும் வருமாறு :- கையாறு=வசமழிவு, அதாவது செயலறிவு ; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது இதனைப் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமம் எனவும் (குறுந். 160), பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலை எனவும் (குறுந். 391), காலைவருந்துங் கையாறு எனவும் (குறுந். 48) வருவனவற்றாலறிக. இடுக்கண்= காதலால் வருந்தும் துன்பம். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்லா இல்லாகுதுமே (குறுந். 290) எனவும், நாமில மாகுத லறிது மன்னோ வில்லெறி பஞ்சி போல................... ............. சேர்ப்பனொடு நகாஅவூங்கே(ந‰299) எனவும், ....................ïid பெரி துழக்கும் நன்னுதல் பசலை நீங்க, அன்ன நசையாகு பண்பி னொரு சொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே (குறுந். 48) எனவும், படலாற்றா பைத லுழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் (குறள் 175) எனவும், பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து (குறள் 1229) எனவும் வருவனவற்றால் காதல்நோயுழப்பல ரிடுக்கண் கண்டுணர்க. பொச்சாப்பு=மறதி இது காதலர் அன்புத் திணைக் குரித்தாதல் வேட்கை ஒருதலை எனுங் களவியற் சூத்திரத்து மறத் தலையும் களவுக் iககோளின்áறப்புடைkரபினவையுbளான்றாக்Tறுதலானும்Éளங்கும்bபாறாமை=காதலர்xருவர்gழிxருவர்Mனாமை,xல்லாமை,ïயற்பழிக்கும்nதாழிTற்றும்,Vனோர்öற்றும்gழியும்jங்காதுjலைவிbவறுத்தல்fதலியல்பாம்.ïa‰gʤj தோழியை மறுத்து, இதுமற் றெவனோ தோழி ! துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி ....... ........ ......... திருமனைப் பலகடம் பூண்ட மெருமுது பெண்டிரே மாகிய நமக்கே எனவும் (குறுந் 181) .. மான்மறி பெருவரை நீழலுகளும் நாடன் கல்லினும் வலியன் தோழி ! (குறுந். 187) எனவும், ......bgU§fdhl‹, இனிய னாகலின், இனத்தினியன்ற இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேணாடே (குறுந். 288) எனவும், நாடன் நயமுடையவன், அதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள் (ஐந்திணை எழுபது, செய. 2) எனவும், பெருமலை நாடற்கியானெவன் செய்கோ என்றியானது நகை என உணரேனாயின் என்னாகுவைகொல் நன்னுதல் நீயே எனவும், தலைவனைப் பழித்த தோழியை வெறுக்கும் தலைவி கூற்று வருதல் காண்க. வியர்த்தல்=நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல் இது காதலரியல் பாதலை, பொறிநுதல் வியர்த்தல் என இதன் பின் .. சூத்திரத்து வருதலானு மறிக நின் பிறைநுதற் பொறிவியர் உறுவளியாற்றச் சிறுவரை திற எனவரும் அகப்பாட்டினு மிதுகுறிக்கப்படுதல் காண்க. ஐயம்= காதல் மிகையாற் கடுத்தல் இது முதற்காட்சியினிகழும் ஐயமன்று; அது தெளிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலின் எழுமைய யுணர்வைக் குறிக்கும். கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீரென்று; வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று; தும்முச் செறுப்பவழுதாள், நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று--; என்பன போல வருவன கண்டுகொள்க. மிகை=கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு. இஃது இப்பொருட்டாதல் பொழுதுதலை வைத்த கையறுகாலை இறந்த போலக் கிளக்குங் »ளவி- kடனே,tருத்தம்‘மருட்கை,Äகுதியொ- lவைeற்பொருட்கண்Ãகழுமென்பvனப்bபாருளியலில்tருதலானறிக.kiw¥ng‹k‰ காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும் எனவும், காமக் கணிச்சியுடைக்கு நிறை என்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு எனவும் தலைவற்கும், பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோ நம்பெண்மை யுடைக்கும் படை எனத் தலைவிக்கும் காதல்மிகையும் அதனால் நிறையழிவும் சுட்டப்படுதலறிக, நடுக்கு=காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு. ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர் (குறுந். 178) எனத் தவைனுக்கும், சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே..........klªij! பரிந்தனென் அல்லனோ இறை இறையானே? (குறுந், 53) எனத் தலைவிக்கும் முறையே காதல் வேகத்தானாய நடுக்கம் குறிக்கப்பட்டமை காண்க. இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் எட்டே மெய்ப்பாடு என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழையவுரைகாரர். நானான்காய்எட்டுவகைபெற்றுப்புறந்தோன்றலால்மெய்ப்பாடாமெனச்சுட்டிஅவற்றைஒருபால்எனப்பிரித்துநிறுத்தி,பின்மற்றொருபாலெனக்குறிக்கப்பெற்றஇவைமுப்பத்திரண்டையும்தனித்தும்நானான்காயும்எண்ணாமல்,எவ்வெட்டாய்நான்குவகையிற்றொகுத்ததன்குறிப்பும்பயனும்அவருரையில்விளக்கப்பெறாமையானும்,இவைமுன்முப்பத்திரண்டின்nவறுபட்டgன்மையvனச்Nத்திரச்bசாற்றொடர்Rட்டுதலானும்,mவருரைbபாருந்தாமையுணர்க.m‹¿í«, ïவையும்Kன்னவைnபாலப்bபாருட்gகுதிகளிரண்டிற்கும்bபாதுவாய்வருமெனில்bபாதுcணர்வுgலவிருக்கïவற்றைïவ்வாறு<ண்டுத்bதாகுத்துக்Tறுதலிற்áறப்பின்மையோடு,ïவற்றுட்áலKன்bமய்ப்பாட்டுtகையில்tந்தனவால்<ண்டுÛண்டுங்Tறுதல்Äகையுமாகும்.ïâš வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை மன் அசைவிலடங்கும்;இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையுற்றொகுத்த தன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும், அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை. (12) ஆய்வுரை இது, மேற்கூறப்படட எண்வகை மெய்ப்பாடுகளில் அடங்காது வேறாய் வருவன சில மெய்ப்பாடுகளைத் தொகுத்துணர்த்துகின்றது. (இ---ள்.) மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத் திரண்டும் ஒரு பகுதியாக மற்றொரு பகுதி உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல் அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, வரைவு, உயிர்ப்பு, கையாறு இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என இம்முப்பத்திரண்டும் உளவாவன அவையல்லாதவிடத்து எ-று. மேல் எண்ணான்காகப் பகுத்துணர்த்திய மெய்ப்பாடுகளுள் அடங்காத நிலையிலேதான் இவையும் தனி மெய்ப்பாடுகளாக எண்ணத்தக்கன என்பார், அவையலங்கடை இவையும் உளவே என்றார். அவையலங்கடை ---அவையலகடை --- அவையல்லாத விடத்து. அவையாவன எள்ளல் முதலாக முன்னர்க் கூறப்பட்ட மெய்ப்பாடுகள். இவையாவன உடைமை முதலாக இங்கு எடுத்துரைக்கப்படும் மெய்ப்பாடுகள். (12) 13. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப. இளம்பூரணம் என்--எனின். மேல் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகிய மெய்ப்பாடு உணர்த்தி, இனி அகத்திற்கேயுரியன உணர்த்துகின்றார்; முற்பட்ட அவத்தை பத்தினும் முதலவத்தைக்கண்1 பெண்பாலார் குறிப்பினால் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்.) புகுமுகம் புரிதல் என்பது --- தலைமகன் புணர்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல் அஃதாவது, கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து, (குறள். 1085) என்றாற்போலக் கூறியவழி ஒருவாதுநிற்றல்.1 பொறிநுதல் வியர்த்தல் என்பது---அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும் வந்துழி வரும் நுதல் வியர்ப்பு. நகுநய மறைத்தல் என்பது --- அதன்பின்னர்த் தலைமகன் கூறுவன கேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல். சிதைவு பிறர்க்கின்மை என்பது---தன்மனனழிவு பிறர்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது. தகுமுறை நான்கே யொன்றென மொழிப என்பது---இவ்வாறு தகுதியுடைத்தாய் முறைப்பட வருவன நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு என்றவாறு. (13) பேராசிரியம் இதன் மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகிவரும் மெய்ப்பாடு கூறினான் இனி அகத்திணையுட் பெரும்பான்மையவாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி அவற்றுள்ளுங் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப், புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பாடெனவும், புணர்ச்சிப் பின்னர்க் களவு வெளிப்படுந்துணையும் மூன்று பகுதியவாம் அவை1 யெனவும், அவையாறும் ஒரோவொன்று நந்நான்கு பகுதியான ஒன்றன்பினொன்று பிறக்கு மெனவுங் கூறுகின்றான். அவற்றுண் முதலன மூன்றினும்2 முன்னர் நின்ற ஒரு கூற்றினை3 இந்நாற்பகுதித்தென்கின்றது இச்சூத்திரமென உணர்க4. ஒருவனும் ஒருத்கியும் எதிர்ப்பட்ட வழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது.5 (இ---ள்.) புகுமுகம் புரிதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முக நோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல்6 என்றவாறு; அஃதாவது, தலை மகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்; மற்றிது தலைமகற்கு உரித்தன்றோவெனின் அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலினென்பது;7 அது, யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும் (குறள். 1094) எனவரும். பொறிநுதல் வியர்த்தல் என்பது தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும்1 நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியர் பொறித்த நுதலளாதலும்;2 அது, பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென (அகம். 136) என வரும். இம்மெய்ப்பாடுந் தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின். நகுநயமறைத்தல் என்பது அதன் பின்னர்த் தலைமகன் கட்டோன்றிய குறிப்புகளான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் நகாது நிற்றலும்;3 அது, முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு (குறள், 1274) எனவரும், மடமையால் தோன்றிய நகையாகலான் இது மறைத்தலுந் தலைமகற்குரித்தன்று; எனவே, அவற்காயின் நகை தோன்றப் பெறுமென்பது.4 மற்றுச் சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் (குறுந். 169) என்னும் பாட்டினுள் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே என நகை கூறிற்றாலெனின், அங்ஙனம் மறைக்கப்பட்ட நகை தலைமகன் அறிந்தது மெய்ப்பாடாமாகலான் அவ்வாறு கூறினானென்பது. சிதைவு பிறர்க்கின்மை என்பது அங்ஙனம் நகுநய மறைத்த வழியும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு (தலைவிக்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை1 நெஞ்சினை நிறுத்தலும்; அது, அகமலி யுவகைய ளாகி முகனிகுத்து ஒய்யென இறைஞ்சி யோளே (அகம். 86) எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது, இதுவுந் தலை மகற்குரித்தன்று, தன்சிதைவுணர்த்தினல்லது மறைக்குந்துணைச் சிதைவின்மையின்; என்னை? பெருமையு முரனு மாடூஉ மேன (தொல் பொருள். 98) என்பவாகலின், இவை களவிற் சிறந்தனவாவதல்லது கற்பினுள் வருவன வல்ல என்றுணர்க. சிதைவு பிறர்க்கின்மை யெனவே சிதைவு தலைமகனுணருமென்றானாம். தகுமுறை நான்கு என்பது, இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்றுதற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த நான்கும் என்றவாறு; ஒன்றென மொழிப --- களவிற்கு முதற்கூறென்ப. (எ---று.) இனி, இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் வருமாறு. யான்தற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள் வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் நெஞ்சே யானறிந் தேனது வாயா குதலே. இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. இதனுள் தான் பெரிது மகிழாள் என்புழிச் சிறிது மகிழுமென்றமையான் இது புகுமுகம் புரிதலாயிற்று வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி என்பது பொறிநுதல் வியர்த்தல். நகைமுகங் கரந்த என்பது நகுநய மறைத்தல். மிகை வெளிப்படாது என்புழி மேல் அன்ன பிறவு மவற்றொடு சிவணி (தொல். பொருள். 267) என்னும் புறனடையாற் றழீஇயின நகை மொக்குளும் பெற்றாம். தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் என்பது சிதைவு பிறர்க்கின்மை பிறவும் அன்ன. (13) பாரதியார் கருத்து :--- மேல் அகத்திணைகளுக்குப் பொதுவாவன நாலெட்டுங்கூறி, அடுத்து அகத்துள்ளும் களவிற் சிறந்து பயிலும் மெய்ப்பாடுகள் உணர்த்தத் தொடங்கி, அவற்றுள் தலைப்படும் அன்பர் உளத்தெழுங் காதல் முதற் குறிகளை இச்சூத்திரம் கூறுகிறது. பொருள் :--- புகுமுகம் புரிதல் = தலைக் காட்சியில் தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதல்; பொறிநுதல் வியர்த்தல் = காதலால் நோக்கெதிர்ந்த தலைவி தனக்கியல்பாய அச்சமும் நாணும் அலைக்க அவள் நெற்றியின் பொறிவியர் பொடித்தல். நகுநய மறைத்தல் = தலைவன் காதற்குறி கண்ட மகிழ்வால் முகிழ்க்குந் தன்முறுவலைப் பிறரறியாது தலைவி யடக்குதல்; சிதைவு பிறர்க்கின்மையொடு = தன்னுள் நிறையழிவைப் புறத்துப் புலனாகாது மறைக்கும் தலைவி திறத்தொடு கூட்டி; தகுமுறை நான்கே ஒன்றென மொழிப = பொருந்த வரிசையில் எழும் இந்நான்கும் காதலின் முதற்கூறாகுமென்று கூறுவர் புலவர். குறிப்பு :--- இதில் கூறிய நான்கும் தலைக் கூட்டத்திலன் புறுவார்மாட்டு ஒன்றினொன்று இன்றியமையாத் தொடர்பொடு. பொருந்தத்தோன்றி, அவரகத்து விளையுங்காதலின் முதற்குறியாய்ப் புறத்துப் புலப்படுதலின், இவை தகுமுறை நான்கே ஒன்றென மொழிப என ஒருபடித்தாத் தொகுத்துக் கூறப்பட்டன. பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையுங் காதலை ஒளியானாக, அச்சமும் நாணும் மடனுமுந்துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய தன்மையால் தலைமகள்தன் சுரக்குங் காதலை கரக்குமாதலின். இம்மெய்ப்பாடுகள் பெரிதும் அவள் மாட்டே காணப்பெறும். இனி, புகுமுகம் என்பதை மூன்றில், தொழுதெழும் வணங்கி வீழ்ந்தான் என்பனபோலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் தலைவன் நோக்கெதிர் வைத் தலைவி விரும்புதலை, நோக்கினாள், நோக்கெதிர் நோக்குதல் (குறள் 1082), கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் (குறள். 1092) என வருவனவற்றால் அறிக. நோக்கெதிர்ந்து தலைவன் காதற் குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணர்வு பொங்கப் பொள்ளெனப் புறம் வியர்த்தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலின் குறுவேர்வை தோன்றும், இதற்குச் செய்யுள் :-- 1) பெரும்புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறிவியர் (136) எனும் அகப்பாட்டடி காண்க. 2) யாழ்ப்போரில் சீவகனை முதலில் எதிர்ந்த தத்தைக்குக் காதற்பெருக்கால் காமர் நுதல்வியர்ப்பு எனத் திருத்தக்க தேவர் கூறும் குறிப்பும் இம்மெய்ப்பாடேயாகும். இப்பழைய பாட்டில், இச்சூத்திரம் சுட்டும் கடவுட் காதலின் முதற்குறி நான்கும் முறையே வருதல் கருதற்குரித்து. நகுநய மறைத்தலென்பது, முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவிமகிழ்வான் முகிழ்க்குந் தன்முறுவலை பிணையேர் மடநோக்கும் நாணுமுடைய ளாதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், நாணினளிறைஞ்சி மிகை வெளிப்படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை என வருதல் காண்க இன்னும், யானோக்கப் பசையினள் பையநகும் (குறள் 1098) எனவும் கரப்பினுங் கையிகந் தொல்லா நின்னுண்கண் ணுரைக்க லுறுவதொன்றுண்டு (குறள். 1271) எனவும், பேதை நகைமொக்குள் உள்ளதொன்றுண்டு (குறள். 1274) எனவும் வருவனவெல்லாம் தலைவியின் நகுநய மறைப்பைக் குறிப்பனவாம். இனி, நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறை யழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி, சிதைவு பிறர்க்கின்மை எனப்பட்டது. மறைப்பேன்மற் காமத்தை யானோ (குறள் 1253) எனப் பெண்ணியல்பு கூறும் குறள் இம் மெய்ப்பாடு குறிப்பதாகும். மேற்செய்யுளில் நன்னுதல் அரிவை தன் மனஞ்சிதைந்ததை நீயறிந்திலையால் நெஞ்சே நானறிந்தேனது வாயாகுதலே என வருவதுமதுவே, அதில் நன்னுதல் அரிவை தன் மனஞ்சிதைந்ததை மறைப்பதனால் நீயறிந்திலையால் எனவும், அவ்வாறு அவள் கரப்பினும் கையிகந்தொல்லா (அவள்) உண்கண் உரைக்கலுறும் குறிப்பால் தலைவன் அறிந்து அவள்பால் காதலுண்மையைத் தன் தளரு நெஞ்சொடு கிளந்து தேறுவனாதலின் யானறிந்தேனது வாயாகுதலே எனவும் கூறிய குறிப்பறிக. சீவகனைத் தத்தை முதலில் கண்டபோது, ................ÃiwbaDŠ சிறையைக்கைபோய் இட்டநாண்வேலியுந்திக் கடலெனவெழுந்jவேட்fவிட்டெÇகொளுtநின்றாŸஎரியுறு«மெழுகி‹நின்றாள்” (சீவக. 710) எனினும், அவ்வாறு அழியுந்தன் சிதைவு பிறரறியாது அடக்கும் விருப்பால், பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீநெஞ்சே (சீவக. 712) என்று நெஞ்சொடு கூறித் தன் தளர்வு மறைக்கின்ற செவ்விகூறும் சிந்தாமணிச் செய்யுளடிகளாலுமிதையறிக. இனி. தலைக்காதலின் முதற்கூறாகும் இந்நான்கு மெய்ப் பாடுகளையும் ஆரியர்நூல் கூறும் பத்தவத்தைகளுள் முதலதாக் கொள்ளும் உரையாசிரியர்1 கருத்துப் பொருந்தாமை, பேராசிரியர் இச்சூத்திரத்தின்கீழ் அதனை மறுப்பதாலறிக. இரண்டாமடி ஈற்றில் ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல்; மற்றைய மூன்றொடும் தனித்தனி கூடி எண்ணுப் பொருள் விளங்கும் (சொல்---சூத் 289) நான்கே என்பதன் ஏகாரம் இசைநிறை ; அசையெனினுமமையும். மொழிப எனும் வினைக்கு, கொண்டபொருள் தொடர்பால் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையிற் கொள்ளப்பட்டது. ஆய்வுரை : இவ்வியலில் 3 முதல் 12 வரையுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப் பாடுகளை வகுத்துணர்த்திய ஆசிரியர் 13 முதல் 25 முடியவுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கே சிறப்புரிமையுடைய மெய்ப்பாடுகளை விரித்து விளக்குகின்றார். அகத்திணையுள் களவென்னும் ஒழுகலாற்றிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடுகளைக் கூறக் கருதிய தொல்காப்பியனார், புணர்க்கும் பாலாகியநல்லூழின் ஆணையால் அன்பிற் சிறந்தாராகியஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட நிலையில், அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சி வரையிலும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும் அவ்விருவரும் மெய்யுற்றுக் கூடிய புணர்ச்சிக்குப் பின் பின் மறைவில் நிகழும் ஒழுகலாறாகிய அக்களவு வெளிப்படு மளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும் இவை ஆறு கூறுகளும் ஒவ்வொன்றும் நந்நான்கு பகுதிகளை யுடையவாகி ஒன்றன்பின் ஒன்றாக முறையே தோன்றி நிகழ்வன எனவும் விரித்துரைக்கின்றார். இது களவில் நிகழும் அறுவகை மெய்ப்பாட்டுக் கூறுகளில் முதற் கூறாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்.) புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என முறையே நிகழுந்தன்மையாகிய நான்கும் (அன்பினைந்திணைக் களவொழுக்கத்து நிகழும் மெய்ப்பாடுகளுள்) முதற் கூறு கூறுவர் ஆசிரியர் எ-று). தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குதற்கண் தலைவி மாறுபடாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி புகுமுகம் புரிதல் எனப்படும் இங்ஙனம் தலைவன் தலைவியை விரும்பி நோக்கிய நிலையில் அச்சமும் நாணும் ஒருங்கு வந்தடைதலால் வியர்வை யரும்பிய நெற்றியை யுடையவளாதல் பொறிநுதல் வியர்த்தல் என்னும் மெய்ப்பாடாகும். பின்னர் தலைவனிடத்தே தோன்றிய குறிப்புக்களால் அவனுடன அளவளாவி மகிழவேண்டுமென்ற விருப்பம் தலைவியின உள்ளத்தே தோன்றிய நிலையிலும் அவ்விருப்பம் புறத்தே வெளிப்படாதபடி தலைவி மறைத்தல் நகுநய மறைத்தல் எனப்படும். இவ்வாறு தலைமகள் தனது விருப்பத்தினை மறைத்தாளாயினும் அவள் உள்ளஞ் சிதைந்து நிறையழிதலால் தன்சிதைவு புறத்தார்க்குப் புலனாகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயல்பு அத்தகைய முயற்சி சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடாகும். இங்ஙனம் முறையே ஒன்றன்பின் ஒன்று தோன்றுதற்குத் தக்கன எனப்பட்ட இந்நான்கு மெய்ப்பாடுகளும் களவிற்குரிய முதற்கூறாகும் எனத்தம் முன்னோர் வகுத்துரைத்தனர் என்பார் தகுமுறை நான்கே ஒன்று என மொழிப என்றார் ஆசிரியர். ஒன்று - முதற்கூறு. (13) 14. கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு கெழீஇய நான்கே இரண்டென மொழிப. இளம்பூரணம் என் -- எனின் இரண்டாம் அவத்தையாமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ---ள்.) கூழைவிரித்தல் முதலாகச் சொல்லப்பட்ட முறைமையுடைய நான்கும் இரண்டாம் அவத்தைமெய்ப்பாடு என்றவாறு கூழை விரித்தலாவது ---மேல் நகுநயமறைத்தலாள் காதன் மேல் வேட்கை செல்லுமாயின் வாளாது நிற்றலாற்றாது மயிரினைக் குலைத்தல். காதொன்று களைதல் என்பது --- காதிலணிந்ததொன்றை விழப்பண்ணியதனைத் தேடுகின்றாள் போல நிற்றல். ஊழணி தைவரல் என்பது --- முறைமுறையாக அணிந்த வணியைத் தைவருதல் என்றவாறு. உடை பெயர்த்துடுத்தல் என்பது --- ஆடையைக் குலைத் துடுத்தல். அவைநான்குங் காமத்திற்குறியிலாதார் தலைமக்கள்முன் செய்யாமையாற் றனது காமக் குறிப்பினானும் அவள் வாளாது நிற்பின் இதற்குக் காரணம் என்னையெனப் பிறர் ஐயப்படாமற் சிறிது பொழுதாயினும் இவ்விடை நிற்கலாகும் எனவும் இவை நிகழ்த்தும் என்றவாறு.1 (14) பேராசிரியம் இஃது இரண்டாம் மெய்ப்பாடுணர்த்துதல் நுதலிற்று. என்னை? உள்ளத்துச் சிதைவறிந்தவழியன்றித் தலைமகளிடைத் தலைமகன் சென்று கையுங்காலும் மெய்யுறத்தீண்டிக் கண்ணுறானாகலின், அங்ஙனஞ் சிதைவுபிறந்தது எழுவாயாகப்.2 பின்னர்த் தலைமகன் மெய்யுற்றவழி நிகழ்ந்த உள்ள நிகழ்ச்சியை இரண்டாவதென்றா னென்பது. (இ---ள்.) கூழைவிரித்தன் முதலாகிய நான்கும் முறையானே இரண்டாவதெனப்படும். (எ-று.) இவற்றுக்குத் தலைமகன் ஏதுவாவதல்லது இவைதாம் அவற்கு நிகழாவென்பது.3 கூழைவிரித்தலென்பது, மெய்யுமெய்யுந் தீண்டியவழி மெல்லியன் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுண் முதற் கண்ணதெனப்படும்; என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறு பாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறைவுடையளாகலாற் கரந்தொழுகுதற்பாலளல்லளே, அங்ஙனங் கரக்குங்கால் தன் வயத்ததாகிய உடம்புபற்றி வரும் வேறுபாட்டினைத் தாங்கும்; அங்ஙனந் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையவாகி வேறுபட்ட தலைமயிரினது முடி உள்ள நெகிழ்ச்சியானே தன்வயத்ததன்றி ஞெகிழும்; ஆகலின் இது4 முற்கூறப்பட்டது. பிறசுவை பற்றியும் உலகினுண் மயிர்க்கு வந்த வேறுபாட்டினைக் கூறுப; என்னை? ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறுவார் மயிரினைச் செவ்வனின்றனவென்பது போலக் கொள்க.1 அக்கூழை விரித்தற்கு ஏதுவாயினாள் இவளாகலின் அதனைச் சினைவினையானன்றி முதல்வினையாற் கூறினானென்பது.2 காதொன்று களைதலென்பது, உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்து வைத்தனவாகலால் தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாயின3 ;மற்றவை வீழ்தற்கு ஏதுவாய நெகிழ்ச்சி நிரம்பத் தோன்றாது இடைநிகர்த்ததாகலின் ஒன்று நிற்ப ஒன்று வீழ்தலென்றானென்பது.4 இது கூழை போலாது ஊறுணர்வுடைய உறுப்பாகலிற் காதின் வேறுபாட்டினைக் கூழைவேறுபாட்டின் பின் வைத்தான்: என்னை? கூழையிற் காது தனக்கு உறவுடைமையின்.5. ஊழணி தைவரலென்பது , அக்கூழையுந் தோடும்போலப் பெய்யப்படு முறைமையவாகிய வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும் விரற்செறியினைத் திருத்தலும் முதலாயின. இவை தோடுபோலச் செறிவில்லன அன்மையின் அவற்றுப்பின் வைத்தான்.6 உடைபெயர்த்துடுத்த லென்பது, உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல்;1 அது சுழறொடி போலாது செறி வுடைமையின் அவ்வுடைநெகிழ்ச்சியைத் தொடிநிகழ்ச்சிக்குப் பின் வைத்தானென்பது.2 மற்றுத், தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே (குறுந். 239) எனப் பிரிவின்கண்வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறாரோ வெனின், அவை இன்னதன் பின்னர் இன்னது தோன்றுமென்னும் முறைமைய அல்லவாகலின் ஈண்டுக் கூறார். அவை, வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்து (தொல். பொருள் 268) என்பழிச் சொல்லப்படுமென்பது. இவற்றுக்குச் செய்யுள்: விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன் கண்ணி னோக்கிய தல்லது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ அவனே வரைப்பாற் கடவுளும் அலலன் அதற்கே ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே நீயறி குவையதன் முதலே யாதோ தோழியது கூறுமா றெமக்கே என்றது, தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநின்றது இதனுள் ஓதி முந்துற ஞெகிழ என்பது கூழைவிரித்தல்; காதொன்று ஞெகிழ என்பது காதொன்று களைதல்; நிழலவிர் மணிப்பூ ணெஞ்சொடு கழல என்பது ஊழணி தைவரல்; நெடிது நிமிர்ந்தன துகிலும் பன்முறை என்பது உடைபெயர்த்துடுத்த லாயிற்று. இவை பாடாண்கைக்கிளையுள் இக்காலத்துப் பயின்றன.1 பிறவும் அன்ன. பாரதியார் கருத்து :--- இது முதலில் கண்டாங்கே கொண்ட காதல் வளர விளையும் விருப்பக்குறிகளை உணர்த்துகிறது. பொருள் :--- கூழை விரித்தல் == (தழையுங்காதல் தன்னுளம் நெகிழ்க்கக்) குழையுங் கூந்தலைத் திருத்தக்குலைப்பது, காதொன்று களைதல் = செவியில் பூட்டாது செறுகிய தோடு ஒன்றைத் திருத்துவாள்போலக் கழற்றுதல்; ஊழணிதைவரல் = பெண்டிர் பண்டை முறையே கொண்டணி தொடி வளை முதலியவற்றை நழுவாது செறிப்பது போலத் தடவுவது; உடைபெயர்த்து உடுத்தலோடு = அறியுமுணர்வால் குழையுமுடலில் குலையுங்கலையின் நிலையைத் திருத்தி யணிதலுடனே; ஊழின் நான்கே இரண்டு எனமொழிப=முறையே இந்நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாங்கூறாம் எனக்கூறுவர் புலவர். குறிப்பு :-- இதில் கூழை, கழலுங்காதணி, ஊழணி, கலையுமுடைதிருத்தல் எல்லாம் பெண்டிர்க்குரியவாதல் வெளிப்படை. பாற்பொதுமை விலக்கக் கூழையெனப்பட்டது; பெண்டிர் கூந்தலே கூழையெனப்படுதலின் ஒன்று என்பதை முதனிலை ஆகுபெயராக்கி. பூட்டாது காதில் பொருந்தும் அணியெனக் கொள்ளினுமமையும். ஊழணி என்பது. கைம்மையரல்லாக் குலமகளிர் களையாது அணியும் வளை போல்வனவற்றைக் குறிக்கும். இன்றியமையாது இவை குடிப்பெண்டிர் கொண்டணிதல் முறையாதலின், ஊழணியென உரைக்கப்பட்டன (ஊழ்=முறை). உடைபெயர்த்துடுத்தலில், பெயர்த்து என்பது மீட்டும் எனும் பொருளை குறிக்கும்! அழித்து எனக்கொள்ளுதல் அமைவுடைத்தன்று முன் கட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் இறுக்குதலென்பதே பொருந்திய பொருளாகும் அவ்வாறன்றி ஆடையைத் தலைவனெதிரில் தலைவி தானே அழித்துடுத்தல் பெண்ணீர்மையன்றாதலின் அது பொருளன்மை தேற்றம்.1 விண்ணுயர் விறல்வரை எனும் இலக்கணவிளக்க மேற் கோட் பழம்பாட்டில்2 இச்சூத்திரம்சுட்டும் மெய்ப்பாடு நான்கும் ஒருங்கே நிகழ்ந்தமை தலைவியேகூறுதல் காண்க. இவை, சிதைவு பிறர்க்கின்றிப் புறங்காத்து அகத்தழியுந் தலைமகள் மறையிறந்து மன்றுபடும் தன் நிறையழி காதலை மறைக்குமுயற்சியில் அவள் காதலுணர்வொடு புணரும் குறிகளாம் காதற்கரப்பும். நிறையழிகாதல் மறைப்பினும் அமையாது புறம் பொசியும் சிறப்பும் பெண்ணியலாதலின. அவ்வியல் குறிக்கும் இவ்வுணர்வுகள் ஊழின் நான்கேயெனத் தொகுத்து இரண்டாங்காதற் கூறாய் உரைக்கப்பட்டன. (ஊழ்=இயல்பு. முறை). இவ்விடத்தில் இளம்பூரணர் கெழீஇய நான்கே எனப்பாடங்கொள்வர். அதுவும் இக்குறிப்பினதாதல் காண்க. (14) இதில், ஓடு எண்ணிடைச்சொல் ஏகாரம் இசைநிறை. மொழிப எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது. (15) ஆய்வுரை : இது, களவிற்குரிய இரண்டாம் கூறாகிய மெய்ப்பாடு உணர்த்துகின்றது. (இ-ள்) கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்துடுத்தல் என முறையே நிகழும் மெய்ப்பாடுகள் நான்கும் களவில் இரண்டாம் கூறு என்பர் ஆசிரியர் எ-று தலைமகள் மேற்குறித்தவண்ணம் தனது மனச்சிதைவினைப் புறத்தே புலப்படாமல் மறைத்த நிலையிலும் உள்ளத்தின் நெகிழ்ச்சியினாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன்வயத்ததன்றி நெகிழ்ந்து தாழ்தல் கூழை விரிததல் எனப்படும். கூழை-கூந்தல். கூந்தலைப் போலன்றிக் காதின்கண் பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய காதணிகளுள் ஒரு காதில உள்ள தோடு நெகிழாது நிற்ப மற்றொரு காதிலுள்ள தோடு நெகிழ்ந்து வீழதல் காதொன்று களைதல் என்னும் மெய்ப்பாடாகும். களைதல் என்பது தானே வீழ்தல் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது, அணியொன்று நெகிழ்ந்து வீழும் நிலையில் - இங்ஙனம் தன் காதணியொன்று நெகிழ்ந்து வீழும் நிலையில் தன் உடம்பின்வேறுபாடுணர்ந்த தலைமகள் தோடு போலப் பெய்யப்படுமளவிலன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய கைவளை மோதிரம் முதலிய அணிகலன்களைக் கழன்று வீழாதபடி தடவி இறுகச் செறித்துக்கொள்ளுதல் ஊழணிதைவரல் என்னும் மெய்ப்பாடாகும் தனது உடம்பின் நெகிழ்ச்சியையுணர்ந்த தலைமகள் தான் உடுத்துள்ள உடை நெகிழாதவாறு பலமுறையும் இறுகவுடுத்தல் உடை பெயர்த்துடுத்தல் எனப்படும். தலைவியின் உள்ளச்சிதைவறிந்த தலைவன் அவளை மெய்யுற அணுகிய நிலையில் நிகழ்வன இம்மெய்ப்பாடுகளாதலின் இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப்பட்டன. (14) 15. அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. இளம்பூரணம் எனி-எனின். மூன்றாம் அவத்தைக்கண் நிகழும் மெய்ப் பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்.) அல்குல் தைவரல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் மூன்றாம் அவத்தை மெய்ப்பாடென்க என்றவாறு. அல்குல் தைவரல் என்பது --- மேல் உடைபெயர்த்துடுத்தவள் அதனைப் பேணும் மதிப்பு உள்வழி தம்மைப் பேணுதல் பெண்டிர்க்கு அழகு, அணிந்தவை திருத்தலும் அவ்வாறே கொள்க. இவ்வலி யுறுத்தல் என்பது --- தமது இல்லதோர் வலியுறுத்தல். அது சாரநினைத்தாரைத் தமது இற்பிறப்புச் சொல்லி இசைவில்லாரைப் போல மறுத்துக் கூறுதல்.1 இருகையு மெடுத்தல் என்பது --- அவ்வழி மறுத்த வாய்ப் பாட்டாற் கூறினும் இரண்டு கையினையும் பிறிதோர் காரணம்பற்றிக் கிளர்த்தல். தலைமக்கள் முன்னர்ப் பெண்டிர் கை கிளர்த்தாராதலாற் புணர்ச்சிக் கொருப்பட்டவுள்ளத்தாள் கிளர்ப்பது மென்க இதனாற் பயன் நாண் நீங்கல்.2 (15) பேராசிரியம் இது, முறையானே மூன்றாவது உணர்த்துதல் நுதலிற்று (இ ள் ) அல்குல் தைவரல் முதலாகக் கூறப்பட்டன நான்கும் மூன்றாவதெனப்படும். (எ---று) மேலது உடை பெயர்த்துடுத்தலாகலான் அதன்வழித் தோன்றுவது உடை பெரிதும் ஞெகிழ்ந்து காட்டுதலாயிற்று அதனைப் பாதுகாத்தலான். அவ்வற்றம் மறைக்குங் கையினை3 அல்குல் தைவர லென்றா னென்பது. அணிந்தவை திருத்தலென்பது, கடிசூத்திரமுதலாயின1 திருத்தல். அஃது உடைஞெகிழ்ச்சிபோலப் போற்றிச் செய்வதாகலான்2 அதனை அல்குல்தைவரலின் பின் வைத்தான். இல்வலியுறுத்தலென்பது புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மையடைத்துக்கொண்டு செய்தல்; என்னை? இல்லாத வலியை மிகுத்தலென்றமையின் அப்பொருட்டாயிற்று3 அல்குல்தைவரலும் அணிந்தவை திருத்தலுந் தன்வலியின்மை காட்டவும் வலிதோற்றிக்கொண்டு செய்வதாகலின் அதனை இல்வலியுறுத்த லென்று மூன்றாமுறைக்கண வைத்தானென்பது: இனி இற்பிறத்தலான தன்வலி தோற்றுவதெனவுஞ் சொல்லுப; அஃதாவது, முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறினென்பது4 இருகையுமெடுத்த லென்பது. அங்ஙனம் படைத்துக்கொண்ட வலியானுந் தடுக்கப்படாது நிறையழிதலிற் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவனபோல்வதோர் குறிப்பு இந்நான்கும் மேலனவுமெனப் பன்னிரண்டு பகுதியும் புணர்ச்சிக்கு முன் நிகழ்வனவாம்1 சொல்லிய வென்றதனான் இவையெல்லாஞ் சொல்லப் படுவதல்லது ஈண்டுச் சொல் நிகழ்தல் வேண்டிலவென்பது, எண்ணுநிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழுவாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது2 இவை நான்குந் தலைமகற்குரியவல்ல; தான் அவற்றுக்கு ஏதுவாவதல்லதென உணர்க.3 இவற்றுக்குச் செய்யுள் : ஓதியு நுதலு நீவி யான்தன் மாதர் மென்முலை வருடலிற் கலங்கி உள்ளத் துகநள் போல அல்குலின் ஞெகிழ் நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் யாமெடுத் தணைத்தொறுந் தாமியைத் தெழுதலின் இம்மை யுலகத் தன்றியும் நம்மை நீளரி நெடுங்கண் பேதையொடு கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே. இஃது இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவன் தன்னிலையுரைத்தது இதனுள் உடம்பும் உள்ளத்துகுவன போன்றன ளென்பது அல்குல்தைவரல்; என்னை? அவ்வேறுபாட்டானே அற்றப்படுதலின். அல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கம் என்பது அணிந்தவை திருத்தல்: அல்குலின் யாத்த, நூலிற்கு ஞெகிழ்ச்சி கூறினமையின். மெலிந்திலளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் என்பது இல்வலியுறுத்தல்; யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதல் என்பது இருகையுமெடுத்தல்.1 அங்ஙனம் ஒடுங்கியவழியும் உயிர்ப்பினளல்லள் போலத் தோள்களைத் தன் வயத்தவாயின என்றமையின். இம்மையுலகத்தன்றியு நம்மைக் கேளறிந்தன என்றமையின், இருவர் அன்பும் எழுமையுந் தொடர்ந்த உழுவலன்பெனச் சொல்லித் தன்னிலை யுரைத்தானாம்.2 பிறவும் அன்ன. பாரதியார் கருத்து :--- இது ஊன்றி வளர்காதலின் மூன்றாங் கூறு பாடுணர்த்துகிறது. பொருள் :--- அல்குல் தைவரல் முதல் கூறிய நான்கும் களவுக்காதலின் மூன்றாங் கூறாகுமென்பர் புலவர். குறிப்பு :--- அல்குல்=இருப்புறுப்பு (ஆசனம்). இனி இதை அவையல்கிளவியாகக்கொண்டு கூறும் உரை பொருந்தாது கலையின் மேலணி மேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது இருப்பிடம் ஆவதன்றி, இடக்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம், திருந்திழை அல்குற்குப் பெருந் தழையுதவி எனக் கூடலூர்கிழாரும் தழையணி யல்குல் மகளிர் என அம்மூவனாரும் தித்தி பரந்த பைத்தகல் அல்குற் றிருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும் --- என அஞ்சியாந்தையும் பிறரும் கூறுவர் இவ்வாறு பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழைகளும், கலையின் மேலணி தழையுடை வகைகளும் அசைந்தாடும் உறுப்பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல் அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும். அல்குல் அவையல் கிளவியாகாமையும் இருப்புறுப்பையே சுட்டுதலும். தெளிவாகும்.1 இனி, தைவரல்=தடவுதலாம். உடைபெயர்த் துடுத்திய, பின், குலையாது திருத்திய கலை முன்நிலைபடிய இடைக்கீழ் அவ்வுடைதொடும் தடம்விரி இருப்புறுப்பைத் தடவுதல் இயல்பு. அவ்வியல்பு இங்கு அல்குல் தைவரல் எனக் குறிக்கப்பட்டது, இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக்குறிப்பால் அறிக. எனினும் அல்குலை அவையல் கிளவியாக்கி அவிழ்த்து உடை நெகிழ்த்தவள் தன் அற்றம் மறைப்பதே அல்குல் தைவரல் என்பர் பேராசிரியர். கற்பிறவாக் குலமகள் மணவாத் தலைவன்முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள் குலையுங்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில் தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின்,அற்றம் மறைப்பதும் அதற்கல்குல் தைவரலும் அவனெதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள், அதனால் அஃதுரையன்மை அறிக. இனி, (களையா வளைபோன்ற) ஊழணி திருத்தியும் உடை திருத்தியுங் கொண்டபின், விரும்பப் புனைந்த வேறுகலன் திருத்தலும் காதற் காட்சியில் புகுமுகம் புரியும் பெண்டிர்க்கு இயல்பாகலின், அணிந்தவை திருத்தல் இங்குக் கூறப்பட்டது. அணிந்தவை=ஊழணியில்லாப் பிற கலன்களைக் குறிக்கும். இல்வலியுறுத்தலாவது, தனக்கியல்பில்லாத வன்மையைத் தோற்றுவித்தல். தலைவி, தளருந்தன் உளநிலையைத் தலைவனும் பிறரும் அறியாவாறு உரனுடைமை படைத்துக் காட்டுதல். பெருகுங் காதலால் பசைஇ, கண்களவு கொள்ளும் தலைவி தலைவனை ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குத லோடு, செற்றார்போல நோக்கு வதும், நிறையழியுந் தலைவி தனக்கில் வலியுறுத்தும் பெண்ணியல்பாதலைக் குறிப்பறியுந் தலைவன் கூற்றால் குறளடிகள் விளக்குதல் காண்க. இருகையுமெடுத்தல், தன்மெய் தொட்டுப்பயிலும் தலைவன் தழுவக் குழைபவளுக்கு, முன் தான் கரந்த காதல் கைம்மிக, உடல் சிந்தைவச மாவதால், அவள் கருதாமலே கைகள் தாமே அவனைத் தழுவ எழுவதியல்பாகும். இஃதவள் புணர்ச்சி மறாமை உணர்த்தும் குறிப்பாகும் ஓதியும் நுதலும் எனும் (சூ.582) இலக்கண விளக்க மேற்கோட் பழம் பாட்டில், மெலிந்திலளாகி வலிந்து பொய்த் தொடுங்கவும், யாமெடுத்தணைத்தொறும் தாமியைந் தெழுதலின் என வருவது இம் மெய்ப்பாடாகும். இதில் ஒடு-எண் குறிக்கும். ஏகாரம்-இசைநிறை. மொழிய என்னும் வினை புலவர் எனும் அவாய்நிலை எழுவாய் கொண்டு முடிந்தது. (15) ஆய்வுரை: இது களவிற்குரிய மூன்றாங் கூறாகிய மெய்ப்பாடுணர்த்துகின்றது. (இ-ள்.) அல்குல்தைவரல். அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் எனச் சொல்லப்பட்ட நான்கும் களவிற்குரிய மூன்றாங் கூறு எனக் கூறுவர் ஆசிரியர். எ-று. முற்கூறிய வண்ணம் உடையினை நெகிழாதவாறு இறுகவுடுத்த தலைமகள் தன் உடை பெரிதும் நெகிழும் நிலையில் தன்கையால் அற்றம் மறைத்தல் அல்குல் தைவரல் எனப்படும். இடையில் அணிந்த கடி சூத்திர முதலியவற்றை நெகிழாது பேணித்திருத்திக் கொள்ளுதல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இவ்வாறு தலைமகள் தன் வலியற்ற நிலையிலும் தான் புணர்ச்சியை வேண்டாதாள்போல் வன்மையை மேற்கொண்டு நிற்றல் இல் வலியுறுத்தல் (இல்லாத வன்மையை மிகுத்தல்) எனப்படும். இங்ஙனம் தலைமகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் தடுக்கப்படாமல் நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இரண்டு கைகளும் தலைவனை முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவனபோல்வதோர் குறிப்பின ளாதல் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இவ்வாறு மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டு மெய்ப்பாடுகளும் இயற்கைப்புணர்ச்சியாகிய முதற்கூட்டத்திற்கு முன்னே நிகழ்வனவாம். ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்ட காலத்துத் தனது மனக்கருத்தினை நாணும் நிறையுமாகிய குணங்களால் புறத்தார்க்குப் புலனாகாது மறைத்தல் பெண்மையின் இயல்பாதலால் இங்கே அன்பின் ஐந்திணையொழுகலாற்றுக்கு உரியவாகக் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெரும்பான்மையும் தலைமகன் கண்ணே சிறந்து நிற்கும் என்பர் பேராசிரியர். (15) 16. பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப இளம்பூரணம் என்-எனின். நான்காம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்.) பாராட்டெடுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நான்காமவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடென்க. பாராட்டெடுத்த லாவது--- தலைமகன் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல். மடந்தப வுரைத்தல் என்பது---பெண்டிரது. இயல்பாகிய மடப்பங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழியதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் என்பது---ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலர் ஆயிற்றென நாணுதல். கொடுப்பவை கோடல் என்பது --- கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன் பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது.1 (16) பேராசிரியம் இது, நான்காம் பகுதி கூறுகின்றது. (இ-ள்.) பாராட்டெடுத்தல்---புணர்ச்சி நிகழ்த்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும்; இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.2 மடந்தப வுரைத்தல்---விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்றுதலும்;3 உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல்---அங்ஙனம் அறிமடங் கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக் கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்.4 கொடுப்பவைகோடல் --- தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுந் தாருங் கண்ணியுந் தோண்மாலையு முதலாயினகொண்டு கையுறை பாராட்டுதலும்; உளப்படத்தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப -- கொடுப்பவை கோடலகப்படத் தொகுத்தோதிய நான்கும் நான்காவது(எ---று.)1 எடுத்த வென்றதனாற் கொடுப்பவை கொள்ளாது மறுத்தன் முதலியனவுங் கொள்க புணர்ச்சிப்பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும் அதன் பின்னரல்லது பிறரொடு கூற்றுநிகழாமையானும் அக்கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றங்கோடலின்மை யானும் அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவைகோடற் குறிப்பின ளாமாகலானும் அம்முறையான் வைத்தானென்பது இவற்றுக்குச் செய்யுள்: ஒருநாள் வந்து பலநாள் வருத்தும் நின்னே போலுநின் தழையே யென்வயின் நிற்பா ராட்டியுஞ் சொற்கொளல் இன்றியும் யாயெதிர் கழறலிற் பேரலர் நாணியும் மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினும் நோய்செய் தன்றால் தானே நீதொடக் கரிதலின் ஓரிடத் தானே இது கையுறை மறுத்தது இதனுள், நிற்பாராட்டி என்பது பாராட்டெடுத்தல்; சொற்கொளலின்றி என்பது மடந்த பவுரைத்தல்; என்னை; கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின். யாயெதிர் கழறலிற் போலர் நாணி என்பது ஈரமில்கூற்றமேற்றலர்நாணல்: துயர்மருந்தாயினம் என்பது கொடுப்பவைகோடல் இத்தழை நின்கைப்பட்ட வழிக் கரிந்துகாட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளா மெனப் பின்னொருகாலத்து மறுத்தாளென்பது.1 (16) பாரதியார் கருத்து :--- இது தோலாக்காதலின் நாலாங்கூறுணர்த்துகிறது. பொருள் :--- பாராட்டு எடுத்தல் முதல் கொடுப்பவை கோடல் உள்படத் தொகுத்த நான்கும் தோலாக் காதலின் நாலாங் கூறாமெனக் Tறுவர்òலவர்.F¿¥ò :--- (i) பாராட்டெடுத்தலென்பது, புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும். 1) தலைவன் தலைவி நலம் பாராட்டுதற்குச் செய்யுள் :-- கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. என்பதுபோல வருவன காண்க. 2) இனி, நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந் தன்று நீரினு மாரளவின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3) நாடன், தொல்லைத்திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெந் தோளே இன்று முல்லை முகைநா றும்மே (குறுந். 193) உவந்துறைவார் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர். (குறள். 1130) என்பவற்றில் புணர்ந்த தலைவனலம் தலைவி பாராட்டுதல் காண்க. (ii) இனி, மடம் தப உரைத்தலாவது, பேதைமை யொழியப் பேசுதல். முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் கரவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழியத் தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல். (மடம்=கள்ளமற்ற பிள்ளைத்தன்மை. தபுதல் = கெடுதல், நீங்குதல்) அவ் வறிமடநிலையிற் றேர்ந்துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது. பாராட்டெடுத்தல், மடம்தப உரைத்தல் முதலிய பலவாற்றானும் மறைத்த கூட்டம் புறத்துப் பொசிய, அயிர்த்தயலார் தூற்றுதற்காளாதலும் அவர் பரிவற்ற பழிச்சொற் கேட்டு நாணுதலும் தலைவிக்கு நேரும். அம்பலும் அலரும் கூறும் வம்பர் யாரும் தலைவனறியப் பேசத் துணியார். ஒருவாறு பேசினும், உரனுடைமையினால் அவன் பொருட்படுத்தானாதலின், அவர் கூற்றை அஞ்சுவது தலைவிக்கே பெரிதும் இயல்பாம். (iii) ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பது, தலைவி தன் களவொழுக்கை ஐயுற்றயலார் தூற்றும் பழிக்கு வெள்குதல். யானே யீண்டையேனே; என்னலனே ஆனா நோயொடு கான லஃதே; துறைவன் தம்மூ ரானே; மறைஅல ராகி மன்றத் தஃதே. (குறுந். 97) இவ்வெண்பூதியார் குறும்பாட்டில் தலைவி அலர்நாணுதல் கூறப்படுதலறிக அலர்யாங் கொழிவ? தோழி! எனும் சேந்தன் கீரன் குறும்பாட்டுமதுவே. (iv) இனி, கொடுப்பவை கோடலாவது, தலைவன் அனுப்பும் தழையும் கண்ணியும் போன்ற காதற் கையுறையைத் தலைவி மறாதேற்றணிந்து மகிழ்தல். முன், அலரஞ்சித் தலைவன தருவன விலக்கிய தலைவி, அச்சமும் நாணும் அலராலழிய, அவன் தழையொடு கண்ணிதருவனகொண்டு பெருமகிழுறுவது பெண்ணியல் பாகும். மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவிச் செயலை முழுமுத லொழிய, அயல தரலை மாலை சூட்டி ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே (குறுந். 214) இதில், தலைவன் உதவிய கையுறைத் தழையைத் தலைவி ஏற்றணிந்துவர, அவள் பொருட்டு அவன் தழைகொய்த அசோகு பட்டதெனப்படுதலால், தலைவன் கொடுப்பதும் தலைவி கோடலும் கூறப்படுதலறிக, நல்லாறெனினும்கொளல்தீ தாதலின் தானொன்று வேண்டாத் தலைவி, பொருட்பொருட்டன்றி, அன்புக் குறியாய்த் தலைவன் தருவன அவன்பொருட்டேற்பாள் என்பது குறிக்க இங்கு அவள் கொடுப்பன கோடலும் கூறப்பட்டது. தலைவன் உதவுங் காதற் கையுறைகளை அவன் ஈவனதருவன என்னாது கொடுப்பன என்றார் தருந்தலைவனுணர்வில் பெரும்தலைவியுயர்ந்தவளென்று எண்ணுவதியல்பாதலின் கொடுப்பன கோடல் செயலாயினும், கொள்பவளுணர்வை உள்ளவைப்பதால் மற்றவள் உள்ளுணர்வு மூன்றொடும் சேர்த் தெண்ணுதற் குரித்தா மென்னுங்குறிப்பால், உளப்படத் தொகைஇ என அதனைப் பிரித்துச் சுட்டிக் காட்டினர். இவை கரப்பு விருப்பைக் கடந்தெழுந் திறத்தவாதலின், எடுத்த நான்கெனக் குறிக்கப்பெற்றன.1 ஏகாரம்--இசை நிறை, புலவர் எனும் எழுவாய் பொருட்டொடர் பால் அவாய்நிலையாய்க் கொள்ளப்பட்டது. (16) ஆய்வுரை இது, களவிற்குரிய நான்காங்கூறாகிய மெய்ப்பாடுணர்த்துகின்றது. (இ-ள்.) பாராட்டெடுத்தல். மடந்தபவுரைத்தல். ஈரமில் கூற்றம் ஏற்று அவர் நாணல் கொடுப்பவை கோடல் என்பதுடன் கூட்டி எடுத்துரைத்தற்கேற்ற நான்கும் களவிற்குரிய நான்காங் கூறாம் என்பர் ஆசிரியர். எ-று. இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையினை நினைந்து பாராட்டும் உள்ளக் குறிப்பினைத் தலைவியுடையளாதல் பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடைமை நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிது அறிவுதோன்ற உரையாடுங் குறிப்பினளாதல், மடந்தபவுரைத்தல என்னும் மெய்ப்பாடாகும். தனது களவொழுக்கம் சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தரர் கூறுங்கடுஞ்சொற்களை முனியாது ஏற்றுக்கொண்டு இது புறத்தார்க்குப் புலப்பட்டு அலராய் விரியுமோ என நாணும் உள்ளக் குறிப்பினளாதல், ஈரம் இல்கூற்றம் ஏற்று அலர்நாணல் என்னும் மெய்ப்பாடாகும். ஈரம் -- அன்பு. கூற்று என்பது கூற்றம் என அம்சாரியைபெற்றது. ஈரம் இல் கூற்றமாவது, சுற்றத்தார் அன்பின்றிக் கூறுங்கடு மொழி. அலர்---பழிச்சொல். தலைவன் அன்பினாற் கொடுத்த கையுறைப்பொருள்களைத் தலைவி மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அவற்றைப்பாராட்டும் உள்ள முடையளாதல் கொடுப்பவைகோடல் என்னும் மெய்ப்பாடாகும். (16) 17. தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப இளம்பூரணம் என் - எனின். ஐந்தா மவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்.) தெரிந்துடம்படுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஐந்தாம் அவத்தைக்கு மெய்ப்பாடாம் என்றவாறு தெரிந்துடம்படுதலாவது -- தலைமகன் கொடுப்பவை கொண்ட தலைமகள் ஆராய்ந்து உடம்படுதல் என்றவாறு.1 ஆற்றாமை பெருகுகின்ற தாதலின் இத்துணையும் மறுத்தவள் உடம்படுதல் என்றார், அவ்வழியுந் தெரிந்துடம்படுதல் என்றமை யால் ஆராய்ந்தல்லது புணர்ச்சிக்கு உடம்படாமைகொள்க. திளைப்புவினை மறுத்தல் என்பது -- விளையாட் டாய மொடு திரிவாள் வேட்கை நலிதலான் அவ்விளையாட்டு வினையை மறுத்தல் என்றவாறு.1 கரந்திடத்தொழிதல் என்பது -- தலைமகனைக் காண்டல் வேட்கையால் ஒளித்துப் படத்தினின்று மொழிதல் என்றவாறு2 கண்டவழி யுவத்தல் என்பது -- தலைமகனைக் கண்டவழி மகிழ்தல் என்றவாறு. (17) பேராசிரியம் இஃது ஐந்தாங்காலத்து மெய்ப்பாடுணர்த்துகின்றது. (இ---ள்) மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்த வழி அவ்வொழுகலாறு புறத்தார்க்கெல்லாம் ஐயமாகலின் அதன்வழித் தோன்றுவது தெரிந்துடம்படுதலென்றாரென்பது. தெரிந்துடம்படுதல் --- தலைமகனைத் தலைமகள் இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றைப் பட்டாங்குணராதார் தலைமை செய்தன ளிவளெனவுந் தகாத ஒழுக்கின ளிவளெனவும் பல்லாற்றானும் இவள் கண்ணே ஏதமிட்டுத் துணிந்தும் துணியாதும் உரைப்பாராகலான்.3 அதற்கு நாணி இனி யாதுகொல்லோ செயற்பாலதென்று ஆராய்ந்து, இவ்வொழுகலாற்றினை அறிவிப்பேங்கொல் அறிவியேங்கொலெனத் தடுமாறிப் பின்னொருவகையான் ஆராய்ந்து, மழுவதூஉஞ் சொல்லாது தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் வேண்டுவன தெரிந்துகொண்டு இன்னவாறு பட்டதென்று தோழிக்கு உடம் படுதலுந் தோழியாற் செவிலிக்கு உடம்படுதலுமென இன்னோரன்னகுறிப்பினைத் தெரிந்து உடன்படுதலும்: திளைப்புவினைமறுத்தல்--அங்ஙனந் தமர்க்குத் தானுடம் பட்டதன்பின்னர்த் தலைமகனொடு பகலுமிரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமு நாணு மடனுங் காரணமாக மறுத்தலும்; உடம்பாட்டின் பின்னர் மறுக்குமாதலின் அதனைத் திளைப்பு வினை மறுத்தலென்று இரண்டாவது வைத்தா னென்பது. கரந்திடத்தொழிதல் --- அக்காலத்து இற்செறிக்கப்படுதலால் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படாதொழுகுதலை உடையளாதலும்:1 தன்னிடத்தே தங்குதலை இடத் தொழிதலென்றான். கண்டவழியுவத்தல் --- அங்ஙனங் கரந்தொழுகுங் காலத்து அவனை ஒருஞான்று கண்டவழிக் கழியுவகை மீதூர்தலும்2 இது தலைமகற்கும் உரித்து.3 பொருந்திய நான்கே ஐந்தென மொழிப-இவை நான்கும் ஐந்தாங்கூறெனப்படும் (எ--று) பொருந்திய நான்கென்றது இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடைய என்பது. இதனானே இவை நந்நான்கினோடு வருகின்றதற்குச் சிறிது இடையறவும் படுமென்பது கொள்க. புகுமுகம் புரிதல் முதலாயின் நான்குந் தலைமகளனவேயாகி ஓரினத்தவாயின. அவற்றுப் பின்னர்த் தலைமகன் அவளைப் பொருந்தியவழிக் கூழைவிரித்தன் முதலாயின நான்கும் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றோடு சிறிது இடையறவு பட்டன. அல்குல் தைவரன் முதலாயின நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோடொன்றாது வேறாயின. பாராட்டெடுத்தன் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற் சிறிது வேற்றுமையுடைய தெரிந்துடம்படுதன் முதலாயின களவுவெளிப்படுத்தற் குறிப்பின வாகலின் மேலனவற்றோடு தழுவாது வேறாயின வென்பது. இவற்றொடும் வருகின்ற நான்கன் வேறுபாடும் ஆண்டுச் சொல்லுதும். அவ்வாறு நோக்கியன்றே இவ்வாறு சூத்திரப் பொருளினையும் இருபத்துநான்காக உடனோதாது வேறுபடுத்தோதிய கருத்தென்பது, இங்ஙனம் பொருத்தமின்றி வருவனவல்ல நந் நான்கு பகுதியாற் கூறியவை தம்முட்டாமென்பான் பொருந்திய நான்கென்றானென்பது1 இவற்றுக்குச் செய்யுள் : அறியாய் கொல்லோ நீயே தெறுவர நோக்குதொறும் பனிக்கும் நெஞ்சமோ டிவளே யாய்க்கறி வுறாலின் நின்னெதிர் நாணி மனைவயிற் பிரியலன் மன்னே யதற்கே நினைவிலள் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியோ வதுவே என்பது பகற்குறிக்கட் டலைமகளை இடத்துய்த்துவந்த தலை மகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவுகடாயது. இதனுள் யாய்க்கறிவுறாலின் என்பது தெரிந்துடம் படுதலென்பது; என்னை? அவள் நோக்குதொறும் பனித்தலென்றறிவுறுத்தா ளென்றமையின். நின்னெதிர் நாணி என்பது திளைப்பு வினை மறுத்தல், என்னை; தமர்க்கு மறைத்தாள் இம்மறையினையென்று தலைமகன் குறிக்குமென நாணி எதிர்ப்படாமையின். மனைவயிற் பிரியலள் என்பது கரந்திடத்தொழிதல், புனைதார் மார்ப காண்டியோ வதுவே என்பது கண்டவழி உவத்தல்; என்னை? நிற்கண்டவழி நுதலுந்தோளும் பசலை நீங்கியவாறு கண்டிலையோ வென்னும் குறிப்பினாற் கூறினமையின். பிறவும் அன்ன. (17) பாரதியார் கருத்து :--- இது காதலின் ஐந்தாங் கூறாவனவற்றை உணர்த்துகிறது. பொருள் :--- தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாங் காதற் கூறாமென்பர் புலவர். குறிப்பு :--- (1) முற்படும் அலரால் இறசெறிவுறினும் தமர் மணமறுப்பினும் தனிமை ஆற்றாத் தலைமகள் தலைவனுடன் போக்குக்கு ஒருப்படவும், அன்றேல் தோழியால் அறத்தொடு நிற்க ஒருப்படவும் நேர்வள். இது தெரிந்துடம்படுத லாகும். ஆய்ந்து புணர்ச்சிக் குடம்படுதல் இதன் பொருள் என்பர் இளம்பூரணர்; முன் இருகையும் எடுத்தாங்கே கூட்டவுடன்பாடு குறித்தமையால், ஈண்டது மீண்டுங் கூறவேண்டாதாகும். (2) இனி, ஆற்றாத் தனிமையிலழியும் தலைமகள் தனிமை தாங்கா உளத்தளாதலின், உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகித்1 திளைப்பு வினைகளை வெறுப்ப தியல்பாம். அதனால் அந்நிலை குறிக்கப்பெற்றது. பாலும் உண்ணாள் எனும் கயமனார் குறும்பாட்டில், பந்துடன் மேவாள், விளையாட்டாயமொடு அயர்வோள் என, அன்புற்றழிபவள் முன்பு திளைத்தவற்றை வெறுக்குங் குறிப்பு விளக்கப்படுதல் காண்க. (3) இனி, கரந்திடத் தொழிதலாவது, சுரந்தெழு காதலைக் கரந்தழிதலைவி தனிமையில் வினையெலாம் தவிர்தலைச் சுட்டும். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே. (குறுந். 290) யாவது மறிகிலர் கழறு வோரே; தாயின் முட்டை போல வுட்கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தோ யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே. (குறுந். 152) எனவரும் செய்யுளடிகளில் கரந்திடத்தொழிதல்கண்டு தெளிக. இனித் தலைவன் தற்காணவும் தான் அவற் காணவும் விரும்புவதே தண்டாக்காதற் பெண்டிரியல்பாதலின், அவ்வியல்புக்கு மாறாகவும் ஒழிதற் சொற்பொருட் கொவ்வாதாகவு மிதற்குப் பிறர் கூறுமுரை பொருந்தாமை தெரிந்து விலக்குக. (4) இனி, இவ்வாறு தனிப்படரால் மெலிபவள் தான் முயலாது தலைவனைக்காண நேரின் மகிழ்வாள். அதனால் கண்ட வழி யுவத்தல் இங்குக் கூறப்பட்டது. இதிற் கூறிய நான்கும் தலைமகளின் கடக்கொணாக் காதலின் அறிகுறியாய் அமைதலின், இவை பொருந்திய நான்கெனக் குறிக்கப் பெற்றன. ஒடு, பிரிந்து சென்று முன்னைய ஒவ்வொன்றோடும் ஒன்றும் எண்ணிடைச்சொல். ஏகாரம்--இசைநிறை. முன்னதிற் போலவே மொழிப எனும் வினைக்குப் பொருந்த அவாய் நிலையாற் புலவர் எனும் எழுவாய் கொள்ளப்பட்டது. (17) ஆய்வுரை இது களவிற்குரிய ஐந்தாங்கூறாகிய மெய்ப்பாடு உணர்த்து கின்றது. (இ-ள்.) தெரிந்து உடம்படுதல், திளைப்புவினை மறுத்தல்; கரந்து இடத்தொழிதல், கண்டவழி உவத்தல் என ஒன்றோடொன்று பொருந்திவரும் இவை நான்கும் களவிற்குரிய ஐந்தாங் கூறென்பர் ஆசிரியர். எ-று உயிரினுஞ் சிறந்த நாணுடையளாகிய தலைவி தன்னைக் குறித்து அயலார் கூறும் பழிச் சொற்களுக்கு நாணி, இவ்வொழுக லாற்றினை நம் பெற்றோர்க்குத் தெரிவிப்பேமோ அன்றித் தெரிவியாதிருப்பேமோ எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து பார்த்துத் தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண் தன்மைக்கும் ஏற்ற வகையால் சொல்லவேண்டுவனவற்றைத் தெரிந்துகொண்டு, இவ்வொழுக்கம் இன்னவாறு நிகழ்ந்தது என்று தோழிக்கு உடம் படுதலும் தோழிவாயிலாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் தெரிந்துடம்படுதல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவனுடன் முன்னர்ப் பலநாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாறு போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பாகிய அச்சமும் நாணும் மடனும் காரணமாக மறுக்குங் குறிப்பினளாதல் திளைப்பு வினைமறுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த குற்றத்திற்கு நாணியும் அருளியும் அவன் முன்னர் வெளிப்படாது மனையகத்தே மறைந் தொழுகுங் கருத்துடையளாதல் கரந்திடத்தொழிதல் என்னும் மெய்ப்பாடாகும். 18. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் விளம்பிய0 நான்கே ஆறென மொழிப. இளம்பூரணம் என் --- எனின். ஆறாம் அவத்தைக்கண்வரும் மெய்ப்பாடு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள் ) புறஞ்செயச்1 சிதைதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஆறாம் அவத்தைக்கண் மெய்ப்பாடாம் என்றவாறு. புறஞ்செயச் சிதைத லாவது --- தலைமகன் கோலஞ் செய்யும் வழியதற்கு மகிழ்ச்சியின்றிச் சிதைவுடையளாதல். புலம்பித் தோன்ற லாவது --- பொலிவழிந்து தோன்றல். கலங்கி மொழிதல் என்பது --- கூறுங்கூற்றுக் கலக்கமுற்றுக் கூறுதல். கையறவுரைத்த லாவது --- செயலறவு தோன்றக் கூறல். இச் சொல்லப்பட்ட ஆறு அவத்தையும் பெண்பாலார். எல்லார்க்கும் பொது. இவை புணராதவழித் தோன்றுதல் பெரும் பான்மை.2 (18) பேராசிரியம் இஃது ஆறாவது கூறுகின்றது. (இ--ள் ) புறஞ்செயச்சிதைத்தல்--பூவுஞ்சாந்தும் பூணுந்து கிலும் முதலாயினகொண்டு புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவுண்டாதலும்; மேல்நின்றது கண்டவழி அவத்தலாகலானும் இது காணாத வழி நிகழ்கின்றதாகலானும் அதற்கினமின்றியும் அதன்வழித் தோன்றியதெனப் படுமாகலான் இதனை இச் சூத்திரத்தின் முன் வைத்தானென்பது1 புலம்பித்தோன்றல்---அங்ஙனம் புனைந்தகோலந் துணை யொடு கழியப் பெறாமையிற் புல்லென்றழிந்த நெஞ்சினளாகலான் எல்லாச் சுற்றத்தார்க்கும் இடைநின்றேயுந் தனியவென்பது அறிவியா நிற்றலும்;2 கலங்கிமொழிதல் --- கையொடுபட்ட கள்வரைப் போலச் 3 சொல்லுவனவற்றைத் தடுமாற்றந் தோன்றச் சொல்லுதலும்: அஃதாவது தன்மனத்து நிகழாநின்றன தன்னையறி யாமற் சில புலப்படச் சொல்லுதலாயிற்று. கையறவுரைத்தல் --- கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதலும். அஃதாவது வன்புறையெதிரழிந்து சொல்லுவனபோல்வன. புலம்பிய நான்கே ஆறென மொழிப--இவை நான்குந் தனிமை விகற்பமாகிய ஆறாங்கூற்று (எ---று.) கையறவுரைத்தலென்பதனை ஈற்றுக்கண்வைத்தான் கள வொழுக்கத்தினுள் இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படாதென்றற்கு, என்னை காரணமெனின், கையறவுரை தோன்றியதற் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவ தன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து:1 என்னை? கையறவுரைத்தலென்பது சொல்லா மரபி னவற்றொடு கெழீ இச் செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்குதலை (196) எல்லையாக வுடைமையின், அதனினும் இறப்பத் தோன்றுவன மன்றத்திருந்த சான்றவரறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியுங் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியுநிகழும் மெய்ப்பாடாகலான், அவை நடுவணைந்திணை யெனப்பட்ட நற்காமத்திற்கு இக்கணவகையான் ஏலாவாகலினென்பது, கையறவு உரைத்தலென்றதனான் இம்மெய்ப்பாடு மனத்தளவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படுமென்பது கொள்க. இவை எல்லாம் முறையானே நிகழ்ந்தமை நோக்கி யாழோர் கூட்டத் தொன்மையுந் தோலும்போலப் பொருட்டொடர் நிலையாக்கி உரைப்பாருமுளர். அஃது ஆகாமைக்குக் காரணங் களவியலுட்(101) கூறினானென்பது.2 இவற்றுக்குச் செய்யுள்: இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇப் பல்கிளை நாப்பண் இல்கிளைபோல மொழிவகை யறியாள் பொழிகணீர் துடைத்து யானே கையற வலமருங் கூறாய் பெருமநிற் றேறும் ஆறே. என்பது வரைவு கடாயது இதனுள் அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ என்பது புறஞ்செயச்சிதைத்தல்; பல்கிளை நாப்ப ணில்கிளைபோல என்பது புலம்பித் தோன்றல்; மொழிவகை யறியாள் என்பது கலங்கி மொழிதல், யானே கையறவலமரும் என்பது கையறவுரைத்தல்: என்னை? தன் கண்ணீர் துடைத்தலும் ஆற்றாளென்றமையின் பிறவும் அன்ன, பாரதியார் கருத்து :--- இது மாறாக்காதலின் ஆறாங்கூறுணர்த்துகிறது. பொருள் :--- புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறாமெனக் கூறுவர் புலவர், குறிப்பு :--- உடன்போக்கும் மணமும் பெறாமல் இற்செறிப் புற்ற கற்புடைத் தலைமகள் வளர்ந்தெழுகாதலாற்றளர்ந்தழி நெஞ்சொடு தனிமைதாங்காத்துனியால் வருந்துவள். அந்நிலையிலவள் தன் எண்ணம் அறியாமல் வண்ணமகளிர் பண்ணுங்கோலம் காதலன் காண உதவாமையினால் ஏதமென முனைந்தும், அதனைக் கடியவும் களையவுமுடியாமையினால் இனைந்தும் அழிவாள். அந்நிலை இங்குப் புறஞ்செயச் சிதைதல் எனக் கூறப்பட்டது. இனி, களவொழுக்கத்தில் ஆற்றாமையினால் அழியுந் தலைவி தன் விருப்பம்பெறவும் தான்வெறுப்பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத்தனிமையினால் ஏங்கும் நிலை புலம்பித் தோன்றல் எனப்பட்டது. புலம்பே தனிமை1 என்பது தொல்காப்பியருரியியற் சூத்திரம். வருந்துமவளைப் பரிந்து சுற்றம் துனி முதல் வினவ, அதற்கு அவள் சொல்வதறியாமல் குழம்புமுணர்வாற் குழறு நிலையைக் கலங்கி மொழிதல் எனக் கூறினர் தொல்காப்பியர். தனிமை தாங்காத்தலைவி சாதல் கைம்மிகத் தெருமரு நிலையில் தன் ஆற்றாமை கூறத்துணிவாளாதலின், கையறவுரைத்தல் கடைசியில் கூறப்பட்டது. பூவிடைப் படினும் எனும் சிறைக்குடி ஆந்தையார் குறும்பாட்டில், பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல, கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே. (குறுந்.57) எனக் காப்புமிகுதிக்கண் தலைமகள் தோழிக்குத் தன் கையறவு கூறுவதறிக. இதுபோலவே, காலையும் பகலும் எனும் குறும்பாட்டில் (32) வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே என அந்நிலையில் தலைவன் தன் கையறவு கூறுதலும் காண்க. இவளே எனும் இலக்கண விளக்க மேற்கோட் பழம் பாட்டில் இங்குக்கூறிய மெய்ப்பாட்டு ணர்வுகள் நான்கும் ஒருங்கமையத்தோழி கூறினமை காண்க. இதில்,ஒடு--எண்ணிடைச் சொல்; ஏகாரம்-இசை நிறை. எழுவாய்--அவாய்நிலை. (18) ஆய்வுரை இது களவின் ஆறாங்கூறாகிய மெய்ப்பாடுணர்த்துகின்றது. (இ-ள்.) புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் எனத் தலைவியின் தனிமை யுணர்வினைப் புலப்படுத்துவன நான்கும் களவின் ஆறாங் கூறாகிய மெய்ப்பாடென்பர் ஆசிரியர் எ-று. பூவுஞ் சாந்தும் பூணுந்துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அணிசெய்த நிலையிலும் தலைமகள் தனது அன்பிற்கினிய தலைமகனைக் கூடப்பெறாமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோர்தல் புறஞ்செயச் சிதைதல் என்னும் மெய்ப்பாடாகும். புறஞ்செய்தல் - அலங்கரித்தல். தன் சுற்றத்தார் பலருஞ் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணையின்றிவருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தினளாதல் புலம்பித்தோன்றல் என்னும் மெய்ப்பாடாகும். தனிமையுணர்வினளாகிய தலைவி கையும் களவுமாகப் பிடிபட்டகள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத்தடுமாற்றந் தோன்றக் கூறுதல் கலங்கி மொழிதல் எனப்படும். தனது மனக்கலக்கத்தையடக்கிக்கொண்டு உரையாடும் நிலையிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் கையறவுரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும். புலம்பு-தனிமை. கையறவுரை தோன்றிய பின்னர் நிகழ்வன ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவனவன்றி நற்காமமாகிய நடுவணைந்திணையொழு கலாற்றுக்கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் கையறவுரைத்தல் என்னும் எல்லையினை மீறிய மெய்ப்பாடுகள் இடம் பெறுதலில்லையெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், கையறவுரைத்தல் என்னும் மெய்ப்பாட்டினைக் களவொழுக்கத்தின் இறுதிக்கண் வைத்தார் எனவும், தலைமகன் குறிப்புச் சில பற்றித் தலைமகள் குறிப்புப் பல பிறக்குமாகலானும் தலைமகன்பால் தோன்றும் ஐயமுதலாயின மெய்ப்பாடு காமப்புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானும் தலைமகற்குரிய மெய்ப்பாடுகள் இன்ன முறையன என வரையறுத்துக்கூறாது தலை மகட்குரிய மெய்ப்பாடே சிறந்தன வென்று அவற்றையே தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறினார் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத் தகுவதாகும். (18) 19. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப. இளம்பூரணம் என்-எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்.) மேற் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம்1 என்றவாறு. வினை என்பது---கற்பிற்குரியகரணமாம்இவையெல்லாங்கற்பிற்குரியகரணத்து.............j‰F நிமித்தமாம் என்றவாறு. அன்னவை பிறவுமாவன : நோக்கானை நோக்கி யின்புறுதல், தனியிடைநகுதல், நோக்குங் காலைச் செற்றார்போல் நோக்குதல், மறைந்து காண்டல். தற்காட்டுறுத்தல். இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின், ஏழாமவத்தை நாண் நீங்கிய காதலிற்1 றேறுத லொழிந்த காமத்து மிகுதியாகிய பெருந்திணைப்பாற்படும்; ஒத்த காமத்து நிகழாது; எட்டாவது உன்மத்தம்; ஒன்பதாவது மயக்கம்; பத்தாவது சாக்காடு; ஆதலான் நடுவணைந் திணைக்கண் வருவன ஆறு எனக் கூறினார் என்று கொள்க. (19) பராசிரியம் இது, மேலனவற்றிற்கு2 ஒரு புறனடை. (இ---ள்.) அன்னபிறவும் --- மேற்சொல்லப்பட்ட இருபத்துநான்குமெய்ப்பாடுபோல்வனபிறவும்;அவற்றொடுசிவணிஅவற்றின்வேறன்றிஅவைதம்முட்பகுதியாகிவருவனபிறவும்மன்னியவினையநிமித்தம்என்ப--நிலைபெறத்nதான்றும்fமவொழுக்கத்துÃமித்தமென்றுbசால்லுவர்òலவர்(எ--று)‘k‹Åa Éனையbவன்பதுeடுவணைந்திணைக்கேயுரியbமய்ப்பாட்டினவைvன்றவாறு;vன்னை?கந்தருவ வழக்க மல்லனவற்றை மன்னியகாமமென்னாரன்றே, அஃது இடையறவு படாதாகலின்; எனவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் வரையறையின்றி வேண்டியவாறு வரப்பெறு மென்பதாம். அவை மன்னிய வினையல்லாமையின்: என்னை? காமஞ்சாலா விளமையோள்வயி-னேமஞ்சாலா விடும்பை யெய்துதலும் (தொல். பொருள் :50) நாற்பத்தெட்டியாண்டையானோடு பன்னீராட்டையாள் கூட்டஞ் சொல்லுதலும் ஒத்த காமமெனப் படாவாகலி னென்பது. இவ்வாறு கூறவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் இவை வைத்த முறையான் வரையறுத்துக் கூறப்படாவெனவும், அவை வருவன வந்துழிக் கொளப்படூஉ மென்பதும் பெற்றாம். இது புலனெறி வழக்கமல்லாத கந்தருவ மணத்திற்கும் ஒக்கும் 1 அன்ன பிறவு மவற்றொடு சிவணி (267) வருவன யாவை யெனின் புகுமுகம் புரிதற்கட் டலைமகன் நோக்கியவழி ஒரு வல்லிப் பொதும்பரானும் மற்றொன்றானுஞ் சார்புபெற்று மறைதலும் அவையில்லாதவழி இடர்ப்படுதலு மென்றாற் போல்வன புகுமுகம் புரிதலா யடங்கும் நகுநயமறைக்குங்கால் தலைமகன்கட் டோன்றிய நகை முதலாகிய குறிப்பேதுவாக நகை தோன்றியதனை மறைக்குங்கால் இதழ் மொக்குளுள் தோன்றுவது நகையெனப் படாது நகுநயமறைத்தலின் பாற்படுமென்பது. இனிச் சிதைவு பிறர்க்கின்மையின்கண்ணும், நாட்டமிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும் (தொல். பொருள். 96) என்றமையாற் கண்ணின் வேறுபாடுளவாமன்றே, அவை சிதைவு பிறர்க் கறிவிக்குமாயினும் ஆண்டுத் தானது மறைத்தாளென்னுங் கருத்தினளாகலின் அதுவுஞ் சிதைவு பிறர்க்கின்மையாமென்பது, அவை யாவையெனின் அமர்த்து நோக்காது அலமர நோக்குதலும் நிலங்கிளைத்தலும் போல்வன. மற்றுப் பொறிநுதல் வியர்த்தற்குப் புறனடையாற் கொள்வன யாவையெனின், புறனடையாற் கோடல் ஆணையன்றாகலான் உள்ளனவற்றிற்குக் கொண்டொழிக வென்றவாறு. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வருவன அறிந்து அடக்கங் கூறுக. மற்றும். பிறவும் அவற்றொடு சிவணி யெனவே, மேற் கூறியவற்றோடு பொருந்த வருவன கோடுமன்றே? அன்ன என்றதென்னை? யெனின்; அதனானே தலைமகற்குரிய மெய்ப்பாடு வேறுளவாயினுங் கொள்க. அவை ஐயப்படுதலும் ஆராய்தலுந் துணிதலு முதலாயின மற்றுத் தலைமகட்குரிய மெய்ப்பாடுபோலத் தலைமகற் குரியனவும் இன்ன முறையனவென்று வரையறுத்துக் கூறாரோவெனின்; அற்றன்று, தலைமகன் குறிப்புச் சிலபற்றித் தலை மகள் குறிப்புப் பல பிறக்குமாகலானும் ஐயமுதலாயின மெய்ப்பாடு காமப்புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானுந் தலைமகட்குரிய மெய்ப்பாடே சிறந்தனவென்று அவற்றை வரையறுத்துக் கூறினானென்பது.1 மற்று. இவற்றை நிமித்த மென்றதென்னையெனின், இவை முறையானே நிகழ்ந்து புணர்ச்சி நிகழுமாகலினென்பது வினைய என்பதில் அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு.2 இம்மெய்ப்பாட்டினுட் கைக்கிளை பெருந்திணைக்கு வருவன வருமாறு : ஒருக்குநாம் ஆடுங் குரவையுள் நம்மை அருக்கினான் போல்நோக்கி யல்லனோய் செய்தல் குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ ஆயர் மகன் (கலி. 101) எனப் புகுமுகம் புரிதல் கைக்கிளைக்கண் வந்தது. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (தொல். பொருள். 105) என்பதனான் இது கைக்கிளை யெனப்பட்டது. மற்றிது முல்லைத் திணைப்பாட்டன்றோவெனின், அது நிலத்தான் முல்லையா யிற்றென்பது அகத்திணையியலுட் கூறினாம்.3 இனித் தொன்மையுந் (549) தோலும் (550) முதலாயின வனப்புக்களுட் புகுமுகம்புரிதன் முதலாயின பெருந்திணைப் பொருள்பற்றி வருவன வருமாறு அறிந்துகொள்க. மற்றிவ் விருபத்துநான்கு மெய்ப்பாடுங் கற்பினுள் இம்முறையானே வரப்பெறாவோவெனின். அதற்கு இம்முறையான் இவையனைத்தும் வரல் வேண்டுவதின்மையிற் களவிற்கே விதந்து கூறினானென்பது, அஃதென்னை பெறுமாறெனின், பால்பொருட் கேற்பின் நல்லது கோடல் (665) என்னும் உத்திவகை.1 இனிக் கற்பினுள் வருவன வருமாறு : இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. (குறுந். 167) என்பதனுள் நகுநயமறைத்தல் வந்தது. மாணமறந் துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய்நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கின் தப்பினேன் என்றடி சேர்தலும் உண்டு. (கலி. 89) இதனுட் சிதைவு பிறர்க்கின்மை வந்தவாறு. ஒழிந்தனவும் அன்ன. நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை நீசேர்ந்த இல் வினாய் வாராமற் பெறுகற்பின் (கலி 77) என்பது மடந்தபவுரைத்தல். இவையெல்லாங் கற்பின்கண் வந்தன. அன்னை சொல்லு முய்க வென்னதூஉம் ஈரஞ் சேரா இயல்பில் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையு மொழிக (அகம். 65) என்பதோவெனின், அது பாராட்டெடுத்தல் மடந்தபவுரைத்தல் (தொல். பொருள். 264) என்புழி அடங்குமென்பது. (19) பாரதியார் கருத்து :--- இது மேலனவற்றிற்குப் புறனடையாய் அவற்றின் பொதுத் தன்மையுணர்த்துகிறது. பொருள் :--- அன்னபிறவும் அவற்றொடு சிவணி = மேற்கூறிய ஆறு கூறாமுணர்வுகளை ஒத்தபிற காதற்குறி மெய்ப்பாடுகளும் அவ்வோறோடுங்கூடி; மன்னியவினைய நிமித்தம் என்ப = அவை யெல்லாம் நிலைத்த காதல் நிமித்தம்1 எனக் கூறுவர் புலவர். குறிப்பு :--- இங்குக் கூறப்பட்டவும் அவற்றொடு பொருந்தக் குறிக்கப் பட்டவுமாம் உணர்வெல்லாம் நிலைத்த காதற் கூட்டத்திற்கு நிமித்தமாதலால், அவற்றின் பொது வியல்பு நேரே பொருளாகா விடினும் பொருளொடுபொருந்தி அக்கூட்ட விருப்பின் முதலும் முடிவுமாய்த் தோன்றுமாதலின், அவை அனைத்தும் கூட்டத்தினைக் குறிக்கும் நிமித்தம் எனப்பெறும் விளைபயன் ஒன்றன் அறிகுறி, விதைமுதல், விளைபயன் தோற்றுவாய்களை அதன் நிமித்தமென்பது முறையொடு மரபாம் ஆதலின், வீயாக்காதலை ஓயாதுணர்த்துமிவை புணர்வொடு பொருந்தும் நிமித்தம் எனப்பட்டன. இதனால் இவற்றின் தன்மை கூறிற்றாம். மேலுரைத்த இருபத்துநான்கே புணர்வின் நிமித்தமென நினையாது, அன்னபிறவுள்ளனவும் தள்ளாது கொண்டமைக வெனக் கூறுதலால் புறனடையுமாயிற்று. களவொழுக்கம். கந்தருவம் போல நேர்ந்தவழிப் புணர்ந்து தீர்ந்தவழி மறக்கும் திறத்ததன்றாம்; இருவயினொத்துப், பிரியாது கூடிவாழ்தல் அன்றேல் தரியாது இறந்து முடிதல் எனும் துணிவுடையார் இருபாலவரும் ஒருவரை ஒருவர் இன்றியமையாக் காதலுடையார்க்கே உரியதாகலின், அவர் காதலொழுக்கம் மன்னிய வினை எனப்பட்டது மன்னுதல் = நிலையுதற் பொருட்டாதல், மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை எனுங் குறளாலும், மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர் எனவும், மன்னுதல் வேண்டின் இசைநடுக எனவும் வருஞ் செய்யுளடிகளாலு மறிக. நிலையாக் காமப் பொய்யொழுக்கை விலக்கி, என்றுங்குன்றா திருவயினொத்து நிலைத்தகாதற்றிணைக்கே இம்மெய்ப்பாடுகளுரிய என்பதை விளக்க, இவை மன்னியவினைய நிமித்தம் எனச் சுட்டப்பட்ட செவ்வி அறிந்து பாராட்டற் பாற்று. (19) ஆய்வுரை இது, நிலைபெற்ற காதல் வாழ்வுக்கு இன்றியமையாத மெய்ப்பாடுகளாவன இவையெனச் சுட்டுகின்றது. (இ---ள்) மேல் அறுவகைக்கூற்றினவாகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு மெய்ப்பாடுகளாகிய அவைபோல்வனவும் அவை தமது உட்பகுதியாகிவருவன பிறவும் நிலைபெற்ற ஒழுகலாறாகிய நடுவணைந்திணைக்குரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகள் என்பர் ஆசிரியர் எ - று. அன்ன--அவைபோல்வன. அன்னவும் என எண்ணும்மை விரித்துரைக்க. மன்னிய வினையென்றது என்றும் மாறாது நிலை பெற்ற அன்பின் ஐந்திணையொழுக்கத்தினை. நிமித்தம்--காரணம். (19) 20. வினையுயிர் மெலிவிடத் தின்மையும் உரித்தே. இளம்பூரணம் என்---எனின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கரணநிகழ்ச்சி உயிர்மெலிந்தவிடத்து இன்மையும் உரித்து என்றவாறு. எனவே இயற்கையும் நிகழும் என்றவாறாம். உம்மை எதிர் மறையாகலால், கரணநிகழ்தல் பெரும்பான்மை. உயிர் மெலிவிடம் என்றமையால் ஐந்தாவது முதலாக இயற்கை நிகழும் என்று கொள்க. அதனானே யன்றே யவ்வழி தெரிந்துடம்படுதல் என ஒதுவாராயிற் றென்க.1 (20) பேராசிரியம் இது, மேலனவற்றுக்கே ஆவதோர் விதி கூறுகின்றது. (இ-ள்.) மன்னிய வினைய (தொல்.பொருள் 267) வெனப்பட்ட புணர்ச்சி மேல் அறுவகையான் இருபத்து நான்கெனக் கூறப்பட்ட மெய்ப்பாட்டினை அம்முறையானே நிமித்தமாகக் கொண்டு வருதலின்மையும் உரித்தெனப்படும். ஆற்றாமைவந்த விடத்து (v---W).1 மேற்கூறிய இருபத்து நான்கினையின்மை உரித்தென்பது அதிகாரத்தாற் கொள்க. தன்நசை யுள்ளத்து நம்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற் குலந்தமை கண்டே. (அகம்.22) வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார்பு அடைதலின் இனிதா கின்றே. (அகம்.58) என இவை களவியலுள் (III) உயிர்மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டமையின்றியும் புணர்ச்சி நிகழ்ந்தவாறு;2 என்னை? முயங்குதொறும் நகைதோன்றிற்றெனவே பாராட்டெடுத்தன் முதலாயினவின்றியும் புணர்ச்சி நிகழ்ந்த தாம் ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை கண்டவழி யுவத்தலாகாவோவெனின்; ஆண்டுத் தன்னுவகை கூறாளன்றே கரந்திடத் தொழிந்தாளாகலி னென்பது. தண்துளிக் கேற்ற டலவுழு செஞ்செய் மண்போல் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவினோற்கே (அகம்.26) என்புழிப் பாராட்டெடுத்தன் முதலாகிய பன்னிரண்டு நிமித்தமு மின்றி ஆற்றாமைநிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. உம்மை. எதிர்மறை; உயிர்மெலிவிடத்து உடைமையுடைத்துமாம். அவ்வினையென்பது, தொடிஞெகிழ்ந் தனவே தோள்சாயினவே (குறுந்.239) என்பதனுள் ஊழணி தைவரலென்னும் மெய்ப்பாடு வந்தது பிறவும் அன்ன இனிமேற்கூறிய ஆறுமேயன்றி இன்னும் இவற்றோடு நான்குகூட்டிப் பத்தென்பாருமுளர். அவை இன்பமாதற் குரியவன்மையின் வரையறை கூறாதொழிந்தானென்பது.1 (20) பாரதியார் கருத்து :--- இது மேலனவற்றிற்கோர் புறனடை. கையிகந்த காதல் நலிய ஆற்றாது மெலிபவர்பால் அன்பினைந்திணை நிமித்தமாம் மெய்ப்பாடுகள் மேற்கூறிய முறையில் நிகழாமையும் உண்டென்பது உணர்த்துகிறது. பொருள் :--- உயிர்மெலிவிடத்து = கழிபெருங் காதலால் ஆற்றாது உயிர் நையுங்கால்; வினை = அன்புத்திணை நிமித்தமாம் மெய்ப்பாட்டு நிகழ்வு;2 இன்மையும் உரித்து = மேற்கூறியாங்கு நேராமையும் அமையும். குறிப்பு :--- ஈண்டு வினையென்றது, முன் மன்னிய வினைய நிமித்தம் எனச் சுட்டிய மெய்ப்பாட்டுத் தொகுதியையேயாம். இனி, வினையுயிர் என்பதை உம்மைத் தொகையாக்கி, செயலும் உயிரும் ஓய்ந்து கையறு நிலையில் என உரை கொள்ளினும் அமையும்1 ஈற்றேகாரம் அசை. இன்மையும் என்பதன் உம்மை எதிர்மறைப் பொருட்டு; உண்மையே பெரு வழக் கென்பது உம்மைக் குறிப்பு. மேற்கூறிய மெய்ப்பாட்டு நிகழ்ச்சி பொதுவியலாதலின் அம்முறையில் அவற்றைச்சுட்டி, அன்னபிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப எனவுங்கூறி, அவற்றிற்குப் புறனடையாக அவை ஒரோவழி உயிர் மெலிவிடத்து நிகழாமையும் உளதாம் என்று இதிற் குறிக்கப்பட்டது. கூறிய மெய்ப்பாடுகள் குறித்த முறையில் நிகழ்வதே காதற் பொதுவியல் பென்பதும், விஞ்சுவேட்கையால் நெஞ்சறைபோகிய காதலர் ஆற்றாமையாற் கூடுவர். அன்றேல் மெலிந்து உயிர்வாடுவராதலின், அவர் அன்பொழுக்கம் இங்குக்கூறிய மெய்ப்பாட்டுமுறை கடத்தலும் ஒரோவழி உண்டென்பதும், முறையே இவ்விரு சூத்திரமுஞ் சுட்டும் கருத்தாகும். (20) ஆய்வுரை இது, மேல், களவிற்குரியவாகக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளுக் காவதோர் விதி கூறுகின்றது. (இ-ள்) மன்னிய வினை எனப்பட்ட புணர்ச்சி, தலை மகளுக்கு ஆற்றாமை நேர்ந்தவிடத்து மேல அறுவகைப்படக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளை முறையே நிமித்தமாகக் கொண்டு வராமையும் உரித்து. எ-று. களவிற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலாங் கூறுமுதல் ஆறாங் கூறு முடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் எனவும், அவற்றின்பின் உளவாகும் உன்மத்தம், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆம் அவத்தைகள் எனவும் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பிற்கூறிய இந்நான்கும் அகணைந்திணையின் பத்திற்கு உரியன அன்மையின் இவற்றையுங் கூட்டிப் பத்தவத்தைகள் என ஆசிரியர் வரையறை கூறாதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாகும். (20) 21. அவையும் உளவே அவையலங் கடையே. இளம்பூரணம் என்---எனின் கைக்கிளைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்.) மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள; நடுவணைந்திணை யல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் என்றவாறு.1 அவையலங்கடை என்றமையாற்பாடாண் பாட்டிற் கைக் கிளையும் கொள்ளப்படும்.2 அஃதேல், ஆண்டும் புகுமுகம் உளதோ வெனின், தலைமகள் காட்சி மாத்திரத்தைத் தனது வேட்கைமிகுதியாற் புகுமுகமாய்க் கொள்ளும் என்க.3 பிற்கூறிய அவை என்பன களவும் கற்பும்; முற்கூறிய அவை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின.4 அவையலங் கடையவையு முளவே என மாறிக் கூட்டுக. (21) பேராசிரியம் இஃது எதிரதுபோற்றி இறந்தது காத்தது (இ---ள்.) அவையு முளவே -- எதிர்வருகின்றனவும் உளவாவது; அவையலங்கடையே --- இறந்தனவற்றுக்கு இடனல்லாத விடத்தே (எ--று.) இதனது கருத்து : மேற்கூறிய இருபத்துநான்கு மல்லாத வழி இன்பத்தை வெறுத்தன் (270) முதலாக இனிக்கூறுகின்ற மெய்ப்பாடும் உளவாம் என்றவாறு அவையல்லாத விடத்து இவையும் உளவாமெனவே,1 வருகின்ற மெய்ப்பாடுங் களவிற்குங் கற்பிற்குமுரியவெனவுங், களவிற்கு வருங்கால் முதற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே இவை பெரும்பான்மையின் வரு மெனவுங், கற்பிற்காயிற் பயின்றுவருமெனவுங் கூறியவாறு.2 அவை இனிக் கூறுகின்றான். (21) பாரதியார் கருத்து :--- இது மேற்கூறியன தோன்றாவிடத்துக் கீழ்க் குறிக்கும் மெய்ப்பாடுகள் நிகழ்தலுமுண்டென்று உணர்த்துகிறது. பொருள் :--- அவையலங்கடையே = முன் கூறிய மெய்ப் பாடுகள் நிகழாவிடத்து; அவையும் உள = பின் சுட்டப்படும் பிறவும் உரியவாம். குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை. உம்மை எதிரது தழீஇய எச்சம். இஃது அடுத்த சூத்திரத்தின் முதலில்வைத்து எண்ணத்தக்கது. முன் ஆங்கவை யொருபாலாக எனுஞ் சூத்திரம் சுட்டுவன அதற்குமுன் கூறியவாராவிடத்து நிகழ்தற்குரிய எனுங் குறிப்புத் தோன்ற, அச்சூத்திர இறுதியில் அவையுமுளவே அவையலங்கடையே எனக் கூட்டியுரைத்த குறிப்பும் இங்குக் கருதற்பாற்று. ஆண்டு, இவையும் உளவே என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும், அவையும் உளவே என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழையபாடமாகும் அதுவே போல இதிலும் அக்குறிப் புணர்ந்த இந்நூலார் அவையும் உள எனவே கூறுவதை நோக்க, முன்னதிற் போலவே இதிலும் புதிய பிற மெய்ப்பாடுகள் குறிக்குங்கால், அவை முற்கூறிய நேராவிடத்தே தோன்றுமெனச் சுட்டுதற்குரிய வாய்பாடே அவையுமுளவே அவையலங்கடையே எனும் தொடர் என்பது தேற்றமாகும். ஆகவே, பின் கூறும் புதிய மெய்ப்பாடுகள் முன் குறித்தவற்றொடு விரவாமல் அவையல்லாவிடத்தே தோன்றற்குரிய எனத் தெளிப்பதே ஈண்டு இந்நூலார் குறிக்கோள். அக்குறிக்கோள் தெளிக்கும் பொருள் முடியாது இதனைத்தனிச் சூத்திரமாகத் துணித்தெண்ணுவதினும், கீழ்க் கூறும் மெய்ப்பாடுகளுக்கு மேற்குறித்தவற்றின் இயைபு தோன்ற அவற்றைக் கூறும் அடுத்த சூத்திரத்தோடு இதை இணைத்தியைத்து ஒரு சூத்திரமாகக் கொள்ளவதே அப்பொருள்நோக்கொடு சொற்போக்குக்கும் பொருத்தமாகும்.1 இனி, இதனை மேலனவற்றிற்கொல்லாம் புறநடையாக்கி, மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள நடுவணைந்திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் எனவும் இதன்பிற்கூறுபவை களவுங் கற்புமாகிய ஐந்திணைக்கும் உரிய எனவும், இளம்பூரணர் பொருள் கூறுவர், இச்சூத்திரத்தின் முற்கூறிய அவை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின, பிற்கூறிய அவை என்பன களவுங் கற்பும் எனக்குறிப்புரையுங் கூறிவைத்தார். இது, புதுமுகம்புரிதல் முதலியவற்றிற்கு இவர் கூறிய பொருட் குறிப்பொடு முற்றும் முரணுவதாகும். வேட்கையொருதலை என்னும் களவியற்சூத்திரங்கூறும் ஐந்திணை அன்புநிலைகளுள் முதல் ஆறுநிலைகளுக்குரிய மெய்ப்பாடுகளையே புகுமுகம் புரிதல் முதல் புறஞ்செயச் சிதைதல் ஈறாக வரும் சூத்திரம் ஆறும் முறையே விளக்குவதாக அச்சூத்திரக் கீழ்க்குறிப்புகளால் வற்புறுத்தும் இவரே அவ்வுரைக் கோளோடு மாறுபட்டு இங்கு வேறுபொருள் கூறுவது மாறு கொளக்கூறுவதாகும். அதுவுமன்றி, இங்குச் சூத்திரநிலையும் சொல்லமைதியும் அவ்வுரைக்கு இடந்தராமையும் தேற்றமாகும். (21) ஆய்வுரை இஃது எதிரது போற்றி இறந்தது காத்தது. (இ-ள்) மேற்கூறிய இருபத்து நான்கும் அல்லாதவழி இனிக் கூறுகின்ற மெய்ப்பாடுகளும் உளவாம் எ--று. அவையலங்கடை இவையும் உள என இயையும். அவையாவன. மேற்களவொழுக்கத்திற்கு உரியவாகக் கூறப்பட்ட புகுமுகம் புரிதல் விளையாட்டீறாகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு மெய்ப்பாடுகள் இவையாவன இன்பத்தை வெறுத்தல் முதலாக இனிக் கூறப்படும் மெய்ப்பாடுகள் அவையல்லாதவிடத்து இவையும் உளவாம் எனவே இன்பத்தை வெறுத்தல் முதலாக இனிக்கூறப்படும் மெய்ப்பாடுகள் களவிற்கும் கற்பிற்கும் ஒப்பவுரியன எனவும், களவிற்கு வருங்கால இவை பெரும்பாலும் முற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே வருமெனவும் கற்பின்கண் வருங்கால் பயின்றுவரும் எனவும் விளக்கந்தருவர் பேராசிரியர். (21) 22. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே என்றல் ஐயஞ் செய்தல் அவன்தம ருவத்தல் அறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே. இளம்பூரணம் என் --- எனின் மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி. அதன் பின் கைக்கிளைக் குரியவாமாறு உணர்த்தினார். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதலை நுதலிற்று. (இ---ள்) இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு. அது என்பது ---அவையு முளவே யவையலங் கடையே என்பதைச் சுட்டி நின்றது. கலக்கமும் நாடின் என மாறுக. ஏற்புழிக் கோடல் என்பதனாற் பெருந்திணைப்பாற் கொள்ளப்படும். இது களவிற்கும் கற்பிற்கும் ஒக்கும். இவை தேறுதலொழிந்த காமத்தின்பாற் படுவனவும், மிக்க காமத்தின் மிடலின்பாற்படு வனவுமாம்.1 (அகத்திணை. 54) இன்பத்தை வெறுத்தல் என்பது --- கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவுமுதலாயினவற்றை வெறுத்தலும். இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண்வரிற் பிறர் இயல்வழி மங்கல மின்றாம். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கரப்பாக் கறிந்து (குறள். 1127) சிறுகுழல் ஓசை செறிதொடீஇ வேல்கொண் டெறிவது போலும் எமக்கு. எனவரும். துன்பத்துப் புலம்ப லாவது --- துன்பத்தின் கண்ணே புலம் புறுதல் இன்பங் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. (குறள். 1166) எனவரும் எதிர்பெய்து பரிதல் என்பது --- தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல். கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எங் காத லவர் (குறள். 1126) எனவரும். ஏதமாய்தல் என்பது --- குற்றமாராய்தல்.1 துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் (குறள். 1165) என வரும். பசியட நிற்றல் என்பது --- உண்ணாமை. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள். 1128) பசலை பாய்தல் என்பது --- பசலை பரத்தல். பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல் (குறள். 1188) என வரும். உண்டியிற் குறைதல் என்பது---உணவு சுருங்குதல். பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு (அகம். 48) என வரும். உடம்பு நனி சுருங்கல் என்பது---உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல். பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் (குறள். 1234) என வரும். கண்டுயின் மறுத்தல் என்பது --- உறங்காமை. மன்னுயிர் எல்லாந் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை (குறள். 1168) என வரும். கனவொடு மயங்கல் என்பது---கனவை நனவென மயங்குதல். நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்னெம்மைப் பீழிப் பது (குறள். 1217) என வரும். பொய்யாக் கோடல் என்பது--- தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல். வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாய மருள்வா ரகத்து (கலித். 88) மெய்யே யென்றல் என்பது --- உரைத்த மாற்றத்தை மெய் யெனக் கூறுதல். ஏகாரம்வினா 1 மெய்யே வாழி தோழி சாரல் மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயத் தப்பல் ஏற்ற கோட்டொடும் போகி யாங்கு நாடன் தான்குறி வாராத் தப்பற்குத் தாம்பசந் தனவென் தடமென் தோளே (குறுந். 121) இதனுட் கூறியது என ஒரு சொல் வர வேண்டும். ஐயஞ் செய்தல் என்பது --- தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல். ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் கண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும் (கலித். 4) என வரும். அவன் றம ருவத்தல் என்பது --- தலைவன் தமரைக் கண்ட வழி உவத்தல். செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா எம்மொடு சேர்ந்துசென் றீவாயாய் செம்மால் நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவேம் மன் (கலித். 83) என வரும். அறனழித் துரைத்தல்1 என்பது --- அறத்தினை யழித்துக் கூறுதல். விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை யாற்ற நினைந்து (குறள். 1209) என வரும். அளியின்மை யறனின்மை கூறினாளுமாம். ஆங்கு நெஞ்சழிதல் என்பது --- அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல். பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு (குறள். 1295) என வரும். எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் என்பது --- யாதானு மோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு. புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை (குறள். 1222) என வரும். அளியின்மை அறனின்மை கூறினாளுமாம். ஒப்புவழி யுவத்தல் என்பது --- தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல். யாவருங் காணுநர் இன்மையிற் செத்தனள் பேணி என வரும். உறுபெயர் கேட்டல் என்பது---தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல். நசைஇயர் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு (குறள். 1199) என வரும். கலக்கம் என்பது --- மனங்கலங்குதல். மேற் கலங்கி மொழி தல் என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை. பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால் எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டீமோ காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன் வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த என்னல்லல் தீரா யெனின் (கலித். 144) கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன் (கலித். 142) என வரும். இச் சூத்திரத்துள் நலத்தக நாடி எனக் கலக்கத்தைப் பிரித்து வைத்தமையாற் சொல்லப்பட்ட பத்தொன்பதினும் முதிர்ந்துவந்த நிலை என்று கொள்ளப்படும்.1 இச் சூத்திரம் பொதுப்படக் கூறினமையாற் றலைமகற்கு ஏற்ப வருவன கொள்க.2 (22) பேராசிரியம் இது, மேல் அவையுமுள (தொல். பொருள். 269) எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது.1 (இ---ள்) எண்ணப்பட்ட இருபதும் மன்னிய வினைய நிமித்தம் (தொல். பொருள், 267) என்பான் நலத்தக நாடின் அதுவே யாமென்றானென்பது.2 இவை புணர்ச்சிக்கு நிமித்த மாகாதன போன்று காட்டினும் அவற்றை மிகவும் ஆராய்ந் துணரிற் புணர்ச்சிநிமித்தமேயாம். (எ---று) 1. இன்பத்தை வெறுத்தலென்பது, யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் அவை காமத்திற்கு ஒருவகையான் எதுவாகலின் மன்னிய வினைய நிமித்த மெனப்படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் நலத்தக நாடின் அதுவே என்றானென்பது. கலக்கமுமென நின்ற உம்மை மேற்கூறிய பத்தொன் பானையுந் தழுவுதலின் இறந்தது தழீஇயிற்றாம். கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே (அகம். 74) என்புழி, இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக் கேதுவா மென்பது கருத்து. எல்லி, மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு கரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே (அகம். 50) என்பதும் அது. 2. துன்பத்துப் புலம்பல் என்பது, பிரிவாற்றாது துன் புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரி னென்றவாறு அவை, நின்னுறு விழுமங் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே (அகம். 170) என வரும். 3. எதிர்பெய்து பரிதலென்பது, உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல்; அது, வாரா தாயினும் வருவது போலச் செவிமத லிசைக்கு மரவமொடு துயின்மறந் தனவாற் றோழியென் கண்ணே (குறுந். 301) என்புழி வாராதென்றுணர்ந்தது இக்காலத்தாகலான் அதற்கு முன் இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. 4. ஏதுமாய்தலென்பது, கூட்டத்திற்கு வரும் இடையூறுண் டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி; அது, வாரார் கொல்லெனப் பருவருந் தாரார் மார்பநீ தணந்த ஞான்றே (அகம். 150) என வரும். 5. பசியடநிற்ற லென்பது, பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி (அகம். 48) எனவும், இனியான், உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன் (கலி. 23) எனவும் வரும். 6. பசலைபாய்த லென்பது, பசலைபரத்தல். அது, கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பா னிலத்துக் காஅங்கு எனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டுந் திதலை யல்குலெம் மாமைக் கவினே (குறுந் 27) என வரும். 7. உண்டியிற்குறைத லென்பது பசியடநிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறி துண்டல். அது, தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கும் நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ ளென்னிதற் படலே என வரும். 8. உடம்புநனி சுருங்க லென்பது, அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல் ; அது, தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் கொடுமை கூறிய வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழிஎன் நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குறை நோக்கங் கடிந்ததூ உமிலரே (தொல். பொருள் 111-உதாரணம்) என வரும். 9. கண்டுயின்மறுத்த லென்பது, இரவும் பகலுந் துஞ்சாமை. அது, புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர் தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே (அகம். 82) என வரும். 10. கனவொடுமயங்க லென்பது, அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம். அலந்தாங் கமையலெ னென்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான்போலவும் (கலி. 128) என்பது கனவொடு மயங்கிற்று. 11. பொய்யாக்கோட லென்பது, மெய்யைப் பொய்யாக் கோடல் அது, கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெமக்குநின் மார்பு (கலி. 68) எனவும், வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை (கலி. 41) எனவும், வருதும் என்ற நாளும் பொய்த்தன அரியே ருண்கண் நீரும் நில்லா (அகம். 144) எனவும் வரும். 12. மெய்யேயென்ற லென்பது, பொய்யை மெய்யென்று துணிதல்; அது. கழங்கா டாயத் தன்றுநம் அருளிய பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மனனே (அகம். 66) என்பது. தானே தன்மகனை வாயில்கொண்டு புக்கானாயினும் அதனைப் பழங்கண்ணோட்டம் முன் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்துகோடலின் அப்பெயர்த்தாயிற்று. 13. ஐயஞ்செய்த லென்பது, தூதவர் விடுதரார் துறப்பார்கொ னோதக இருங்குயி லாலு மரோ (கலி. 33) என்புழி நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென வாளாதே3 ஐயஞ்செய்தமையின் ஐயமாயிற்று. 14. அவன் றம ருவத்த லென்பது, ஊர னூரன் போலுந் தேரும் பாணன் தெருவி னானே என்பது. அவன் தமரைக்கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லது பகைபட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டன்மையன்றாமாகலின். அவர் நாட்டு, மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு காலை வந்த காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே (குறுந். 361) என்பதும் அது. 15. அறனளித்துரைத்த லென்பது, அறக்கிழவனை அன்பு செய்தல்; அது, பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி (அகம். 9) என வரும். 16. ஆங்குநெஞ் சழித லென்பது, அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்; எனவே, அறனளித்துரைத்தல் அழிவின் றொன்றா மென்பது சொல்லினானாம்;1 அது, பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட்டிரக்குவேன் வந்தனென் னெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை யொழிய விடாதீமோ வென்று (கலி. 143) என வரும். 17. எம்மெய்யாயினு மொப்புமைகோட லென்பது, யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல் : அது, கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப் பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே (கலி. 20) என எம்மெய்யாயினும் ஒப்புமை கொண்டவாறு. எம்மெய் யாயினு மென்றமையாற் கண்டபொருளும் கேட்டபொருளும் ஒப்புமை கொள்ளப்பெறு மென்றவாறு. 18. ஒப்புவழியுவத்த லென்பது, ஒப்புமையுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது, எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று; என்னை? எம்மெய்யாயினு மென்றமையின். காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின் தேமொழி கேட்டலினிதுமற் றின்னாதே (கலி. 80) என்பது ஒப்புவழியுவந்தது; என்னை? காமரு நோக்கினை யென்றமையின். பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை யொத்தி பெருமமற் றொவ்வாதி (கலி 66) என வருவதூஉஞ் சொல்லுப 19. உறுபெயர் கேட்ட லென்பது,1 தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்; அது, பலவின் பழத்துட் டங்கு மலைகெழு வெற்பனைப் பாடுகம் வா (கலி 41) எனவும், மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற (கலி 142) எனவும் வரும். 20. கலக்க மென்பது, சொல்லத்தகாதன சொல்லுதல்;2 அது, பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து (கலி 142) எனவும், பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப் புறங்காலிற் போக இறைப்பேன் முயலின் அறம்புணை யாகலு முண்டு (கலி. 144) எனவும் வரும். கலக்கமு நலத்தக நாடி (270)னதுவே என்னாது கலக்க மென்பதனை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக்குறிப்புள வல்ல தலைமகட்கென்பது3 அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதனினூங்கு வருவதோர் கலக்கமும் உளதா மென்றது;1 அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத் தன; அது, மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே (குறுந். 17) இதனுட் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டுகொள்க.2 இவ்வாறு கூறவே, இச்சூத்திரத்துள்ளோதிய இருபது மெய்ப் பாடுந் தலைமகற்கும் ஏற்ற வகையானே கொள்ளப்படுமென்பது. அவை, எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே (குறுந். 19) என்பது. துன்பத்துப் புலம்பலாம்; என்னை? தானே துன்பறு கின்றானாகத் தலைமகன் உரைத்தமையின். அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே (அகம். 3) என்பது, எதிர்பெய்து பரிதல்; என்னை முற்காலத்து எதிர்ப் பட்டமை பிற்காலத்துச் சொல்லினமையின். ஒழிந்தனவுந் தலைமகற் குரியனவாகி வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாம் அறனும் பொருளுமின்றி இன்பப்பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவருள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாய வற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டன வெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தன வற்றை வெளிப்படுப்பன வாகலான் மெய்ப்பாடெனப் பட்டன. மேல் வருவனவற்றுக்கும் இஃது ஒக்கும்.1 (22) பாரதியார் கருத்து :--- இது முன்கூறியன வாராவிடத்து நேரும் வேறு சில மெய்ப்பாடுகளை உணர்த்துகிறது. பொருள் :--- இன்பத்தைவெறுத்தல் முதல்கலக்கம் ஈறாக எண்ணப்பட்ட இருபதும் அன்புத்திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனிவிளக்கும் மெய்ப்பாடுகளாகும். குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை, கலக்கமும் என்பதன் உம்மை முன் ஒவ்வொன்றோடும் பிரிந்து சென்று ஒன்றும் எண்ணிடைச் சொல்; அன்றி, எச்சம் எனினும், சிறப்பெனினும் தவறாகாது. இனி, இதில் (I) இன்பத்தை வெறுத்தலாவது தனிப் படர்மெலியுங்காதலர், கூட்டத்தின்முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினிதாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும். தனித்த காதலர் இவற்றை வெறுத்துப்பழிக்கும் துறையில்வரும் செய்யுட்கள் பலவாதலின் ஈண்டு ஒன்றைக் குறித்தல் சாலும். பாலு முண்ணாள், பந்துடன் மேவாள், விளையாட டாயமொ டயர்வோள். (குறுந்.396) இவ்வடிகளில், முன் அவள் விரும்பிய பால் பந்து ஆயம் எல்லாம் கூடப்பெறாத்தலைவிக்கு வெறுப்பாயினமை விளக்கப் படுதல் காண்க. (2) துன்பத்துப் புலம்பலாவது, தனிமை தாங்காக் காதலர் படர்மெலிந்திரங்கலாகும். கரத்தலு மாற்றேனிந் நோயை, நோய்செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும். (குறள்.1162) காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன். (குறள்.1167) எனும் குறள்கள் படர்மெலிந்திரங்கற் பாட்டுக்களாகும். (5) எதிர்பெய்து பரிதல் என்பது, உருவெளி கண்டிரங்குதல். வானம் பாடி வறங்களைந் தானாது அழிதுளி தளைஇய புறவிற் காண்வர வானர மகளோ நீயே மாண்முலை யடைய முயங்கி யோயே. (ஐந்குறுநூறு.418) என்னும் ஐங்குறுநூற்றுப் பேயனார் முல்லைப்பாட்டில் சுரத்திடைத் தலைவன் தலைவியின் உருவெளிகண்டு நயந்ததைப் பின் அவளிடம் கூறுத லறிக. (4) ஏதம் ஆய்தல் என்பது, கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம். ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்துத் துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவை யெல்லாம் இதன் பாலடங்கும். ....................................... பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. (குறுந்.268) எனும் சேரமான் சாத்தன் குறும்பாட்டும், இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல் ( 217) எனும் தங்கால் முடக்கொல்லனார் குறும்பாட்டடியும் இடையூறு படூஉம் ஏதம் ஆய்தலாகும். ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அன்னோ! மறந்தனர் கொல்லோ தாமே? களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை அழப்பிரிந் தோரே. (குறுந். 307) எனும் கடம்பனூர்ச் சாண்டிலியன் குறும்பாட்டடிகள், பிரிந்தார் மறந்தனர்கொல்லென வருந்துதல் குறிக்கும். பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல்? வயங்கிழா அய்! வலிப்பல்யான் கேஎளினி. (கலி.11) எனுங் கலியடியு மதுவேயாம். (5) பசியட நிற்ற லாவது, தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல். இனியான், உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன், தோணல முண்டு துறக்கப்பட்டோர் வேணீ ருண்ட குடையோ ரன்ன. (கலி. 23) எனுங் கலியடியும், ... ... ... ... ... நின்மகள் பாலு முண்ணாள், பழங்கண் கொண்டு நனிபசந் தனள்என வினவுதி (அகம். 48) எனும் அகப்பாட்டடிகளும் பசியடும் காதலியல் குறித்தல் காண்க. (6) பசலைபாய்தல் என்பது, கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற்நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு. யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ. (ஐங்குறு. 231) எனக்கு மாகாது, என்னைக்கு முதவாது, பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலென் மாமைக் கவினே. (குறுந். 27) இவை பசலைபாயும் காதலியல்பு குறிப்பனவாகும். (7) உண்டியிற் குறைதல் ஆவது உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டது போற் சிறிது உண்டுவைத்தல். முன் பசியட நிற்றல், தனிப்படர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டிசுருங்குதலைச்சுட்டும் தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும் (இ. வி. ப. 537) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக. (8) உடம்புநனி சுருங்கல் என்பது, உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே. (குறுந். 290) ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. (நற்றிணை. 284) இவற்றுள், படரெல்லா துடல்மெலியும் காதலியல்பு வருதல் காண்க. (9) கண் துயில் மறுத்தல்: இது தண்டாக்காதல்கொண்டார் துயிலாமை. வாராக்காற் றுஞ்சா, வரிற்றுஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் (குறள். 1179) எனத் திருவள்ளுவரும், நனந்தலை யுலகமுந் துஞ்சும், ஓஒயான் மன்ற துஞ்சா தேனே (குறுந். 6) எனப் பதுமனாரும். கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலு முயங்குவம் (குறுந். 11) என மாமூலனாரும். பிறங்குமலை அருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து பயிலிரு ணடுநாள் துயிலரி தாகி (குறுந். 329) என ஓதலாந்தையாரும், மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே (குறுந். 5) என நரிவெரூஉத்தலையாரும், கோடீ ரிலங்குவளை நெகிழ நாளும் பாடில கலிழ்ந்து பனியா னாவே ... ... ............... ......... ....bgU§fš ehl!நின் நயந்தோள் கண்ணே (குறுந் 365) என நல்வெள்ளியாரும், பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க (கலி. 16) எனப் பெருங்கடுங்கோவும், கண்துயில ஒல்லாக் காதலியல்பு கூறுதல் காண்க. (10) இனிக் கனவொடு மயங்கல் என்பது, நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர், கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து, விழித்தபின் காணாது வெருளுதலாகும் ...................mšf‰ பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனனே (குறுந். 30) என நன்னாகையார் குறும்பாட்டில் தலைவியும், ................................ahH, நின் கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் (அகம். 39) என மதுரைச் செங்கண்ணனார் அகப்பாட்டில் தலைவனும் கனவொடு மயங்குதல் காண்க. நனவினால் நல்கா தவரைக் கனவினாற் காண்டலின் உண்டென் னுயிர் (குறள். 1213) எனும் குறளும் அது. (11) பொய்யாக் கோடலாவது, காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல். பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்ததன் மார்பு. (குறள். 1311) வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாயம் மருள்வார் அகத்து. (கலி 88) இவற்றுள், தலைவி மெய்திரித்துப் பொய்யாக்கோடல் காண்க. (12) மெய்யே யென்றல் : இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு. கானம் காரெனக் கூறினும் யானோதே றேனவர் பொய்வழங் கலரே. (குறுந். 21) ...................bgU§fš நாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே. (குறுந். 288) இதில் தலைவன் சொல் மெய்யெனக் கொள்ளும் காதலியல் வருதல் காண்க. கழங்கா டாயத்து அன்றுநம் மருளிய பழங்க ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே(அகம். 66) என்பது மது. (13) ஐயம் செய்தல் : இது, காதல்மிகையாற் கடுக்கு மியல்பு. ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்றவர் எண்ணுவ தெவன்கொல்? அறியேன், என்னும். (கலி. 4) நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்துந்தாம் அஞ்சிய தாங்கே அணங்காகும் என்னுஞ்சொல், இன் தீங் கிளவியாய் வாய்மன்ற, நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட, யானும் இது வொன்றுடைத்தென எண்ணி அதுதேர (கலி. 24) இவற்றில் ஐயுறல் காதற்கியல்பாதல் காண்க. (14) இனி, அவன் தமர் உவத்தலா வது, தலைவி தலைவன் சுற்றத்தை நயத்தல். ..........................................jªij காமுற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் ............ ............. ................................................ மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே நினக்குயாம் யாரே மாகுதும் என்று வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள். (கலி. 82) இதில் தலைவன்புதல்வனை வழிமுறைத்தாய் கண்டு மகிழ்ந்த செவ்வி கூறப்படுதல் காண்க. (15) ‘அறனழிந்Jரைத்தலாவது,mறனழியbவறுப்பதுnபாலbவறுத்துக்Tறல், “...................பிǪnjh ருள்ளா தீங்குரல் அகவக் கேட்டும் நீங்கிய Vதிலாளர்ïவண்வரிற்‘போதிற்bபாம்மnலாதியும்òனையல்,vம்முந்bதாடாஅல்,vன்குவெkன்னே.(FWª.191) யாரு மில்லைத் தானே கள்வன், தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ. (குறுந்.25) அளித்தஞ்சல் என்றவர் நீப்பிற் றெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு. (குறள். 1154) விளியுமென் இன்னுயிர், வேறல்லாம் என்பார் அளியின்மை யாற்ற நினைந்து. (குறள். 1209) இவையனைத்தும் காதல்மிகையால் தலைவி அறனழிய வெஞ்சொல் விளம்புங் காதலியல் குறிப்பதறிக. இன்னும, நற்றோள் நயந்து பாராட்டி எற்கெடுத்திருந்த அறனில் யாய்க்கே (ஐங்குறு. 385) ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனில் அன்னை தானே யிருக்க தன்மனை (குறுந். 262) என வருவனவும் அறனழிந்துரைத்தலேயாகும். அறனழிவது போலக் கூறினும், அக்கூற்றுக்கள் காதன்மையால் எழுதலால், மெய்யாக அறனழிக்கும் நோக்குடையனவாகா. இனி, அறன் அளித்துரைத்தல் எனும் பாடம் சிறவாது. அப்பாடத்திற்கு, அறத்தை அருளொடு கூறல் என்பது பொருளாகும். ஈண்டது பொருந்தாமை வெளிப்படை.1 (16) ஆங்குநெஞ்சழிதலாவது, சொல்லளவில் அறனழி வதுபோலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல். ........................v‹bdŠr« அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று. (கலி. 143) நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்இன்னுயி®கழியினு«உரையல். அவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ? (குறுந். 93) என்பன இம்மெய்ப்பாடு குறிக்கும் அறனளித்துரைத்தாள். பின் அதற்கு நெஞ்சழிதல் வேண்டாளாதலாலும் அப்பாடம் பொருந்தாமை யறிக.1 (17) எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல்: இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு. இந்திர நீலமொத் திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளு மேயல, முந்தியென் னுயிரையம் முறுவல் உண்டதே. படர்ந்தொளி பரந்துயிர் பருகு மாகமும் தடந்தரு தாமரைத் தாளு மேயல, கடந்தரு மதங்கலுழ்களிநல்யானைபோல்நடந்ததுகிடந்ததென்னுள்ளநண்ணியே. (கம்பர் மிதிலைக்காட்சி. செய். 56, 57) இவற்றில் தலைவன் வடிவு, வண்ணம், நடை முதலியவற்றிற் கேற்ப எப்பொருளானும் ஒப்புக்கோடல் காண்க. இனி, ஏற்புடைப் பொருள்களைத் தலைவன் தலைவிக்கு ஒப்புக்கோடலும் இத்துறையாகும். நன்னீரை வாழி யனிச்சமே, நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள். 1111) மலர்காணின் மையாத்தி நெஞ்சே! யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று (குறள். 1112) மதியு மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன் (குறள். 1116) என வருபவையெல்லாம் தலைவன் தலைவிக்கு ஒப்புமை கோடலைக் குறிப்பன. (18) ஒப்புவழி யுவத்தல்: இஃது அவ்வாறு ஒப்புமை கண்ட வழி மகிழுங் காதலியல்பாம். பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை ஒத்தி பெரும! (கலி. 86) (19) உறுபெயர் கேட்டல்: இது தலைவன் பீடார் பெரும் புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல் அதற்குச் செய்யுள்:--- மராமர மிவையென வலிய தோளினான், அராவணை அமலனென் றயிர்க்கு மாற்றலான், இராமனென் பதுபெயர். இளைய கோவொடும் பராவரு முனியொடும் பதிவந் தெய்தினான். (கம்பர்-பால-கார்முகப்-செய். 59) பூணியன்மொய்ம்பினன்புனிதனெய்தலில்..................................................................................... .................................................................................. நாணினி தேற்றினான் நடுங்கிற் றும்பரே. ( செய். 60) கோமுனி யுடன்வரு கொண்ட லென்றபின் தாமரைக் கண்ணினா னென்ற தன்மையால் ஆமவ னேகொலென் றைய நீங்கினாள், வாமமே கலையிற வளர்ந்த தல்குலே ( செய். 61) இவற்றில், இராமன் சிவன்வில்லை நாணேற்றி முறித்துச் சீதைக்குரிய நாயகனாயினன் எனத்தோழி வந்து கூற, சீதை தான் முன் தெருவிற் கண்டு காதலித்து மனத்தால் மணந்த அத்தலைவன் பெயரும் புகழும் அத்தோழிவாய்க் கேட்டு மகிழ்ந்ததைக் கம்பர் விளக்குதலறிக. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு (குறள். 1199) மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணே னன்றுதீ தென்று பிற (கலி. 142) என வருவனவும் உறுபெயர் கேட்டு மகிழும் கூற்றுக்களாத லறிக. (20) நலத்தக eடிற்fலக்கமும்mதுவேvன்பதுeன்றாகத்jகுதிநோக்கிaராயின்kயக்கமென்பதும்nமலதுnபாலவேfதற்றிணைÃமித்தமாகும்bமய்ப்பாடேயாம்Kன்Fறித்த19ம்mமையாவழியே,mவற்றினிறுதியில்fலக்கம்vழும்vன்னும்mதன்áறப்பியல்Fறித்தற்குmதுïறுதியில்nவறுãரித்துக்Tறப்பட்டதுmதற்குச்bசய்யுள்:--- யாவது மறிகிலர் கழறு வோரே; தாயில் முட்டை போலவுட் கிடந்து சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ? யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடினே. (குறுந். 152) இக் கிளிமங்கலங்கிழார் பாட்டில் ஆனாக்காத லாற்றாத் தலைவி கலங்குதல் காண்க. இவையெல்லாம் பால் பிரியாது பொதுவாகக் கூறப் பட்டதனால், பெருவழக்காய்த் தலைவியர்மாட்டே நிகழுமெனினும், ஏற்புழித் தலைவாக்குரியன கோடலும் கடிவரையின்மை கருதற் பாற்று. (22) ஆய்வுரை இது, மேல், இவையும் உளவே எனப்பட்ட மெய்ப்பாடுகளை விரித்துக் கூறுகின்றது. (இ-ள்.) இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்களைக் கண்ட நிலையில் அவற்றை வெறுத்தலும், தான் ஒருத்தியே துன்புறு கின்றாளாகச் சொல்லுதலும், தலைவனும் அவனுடைய தேர் முதலாயினவும் தன்னெதிர்தோன்றுவனவாக முன்னிறுத்திக்கொண்டு வருந்துதலும், கூட்டத்திற்குவரும் இடையூறுண்டென்று பலவற்றையும் ஆராய்தலும், பசி நோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உணவூட்டியபொழுதும் முன்போலன்றி உணவினைக் குறைத்துக்கொள்ளுதலும், உணவின்மை காரணமாக உடம்பு பெரிதும் இளைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உறக்கத்தை மேற்கொள்ளா மையும், சிறிது உறக்கம்வந்த நிலையில் தலைவனைக் கனவிற்கண்டு மயங்குதலும், மெய்யைப் பொய்யாகக் கொள்ளுதலும், பொய்யை மெய்யென்று துணிதலும் தலைவர் நம்மைத் துறப்பரோ என ஐயுறுதலும், தலைவனுக்கு உறவினரா யினாரைக் கண்டு மகிழ்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றியுரைத்தலும் அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்து கூறுதலும், யாதானும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத்தலை மகனோடு ஒப்புமைகொள்ளுதலும், அவ்வழி ஒப்புமையுண்டாகிய நிலையில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழதலும், கலக்கமுற்றுரைத்தலும் என வரும் இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டினும் இவற்றை நன்மை பொருந்த மிகவும் ஆராய்ந்துணரின் புணர்ச்சி நிமித்தமேயாகும் என்பர் ஆசிரியர் எ---று. இவையெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்துக் காதலருள்ளத்து நிகழ்வனவாதல் வழக்குநோக்கியுணரப்படும். இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள்ளத்தின்கண் நிகழ்ந்தனவற்றைப் புறத்தே வெளிப்படுப்பன வாதலின் மெய்ப்பாடெனப்பட்டன. 23. முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம். இளம்பூரணம் என்--எனின. மேற்கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு நிகழ்ந்த வழி நிகழ்வனவாதலின். இவை மனன் அழியாதவழி நிகழ்வன என உணர்த்துதல் நுதலிற்று. (இ--ள்) முட்டுவயிற் கழறல் என்பது--களவு இடையீடு பட்டுழி யதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு. முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது--வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்தல். அச்சத்தி னகறல் என்பது -- இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல். அவன் புணர்வு மறுத்தல் என்பது-இது தலைமகன் புணர்ச்சிக் கண் வாராக்காலத்துத் தானும் மனைழியாது நிற்கும் நிலை. தூதுமுனிவின்மை என்பது--தூதுவிட்டவழி வெறாமை. துஞ்சிச் சேர்தல் என்பது--கவற்சியான் உறங்காமை யன்றியுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் என்பது--அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைம்மிக்கு வருதல். கட்டுரையின்மை என்பது---கூற்று நிகழ்த்துதலன்றி யுள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல். இவை நடுவணைந்திணைக்குரிய. இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டது வரைந்தோதாமையான்.2 (23) பேராசிரியம் இது, வரைந்தெய்துங் கூட்டத்திற்கு1 ஏதுவாகிய மெய்ப்பாடு இவை எட்டுமென்ப துணர்த்துதல் நுதலிற்று (இ---ள்.) 1. முட்டுவயிற் கழறல் -- தலைக்கூட்டத்திற்கு முட்டுப்பா டாகியவழிக் கழறியுரைத்தலும்:2 அது, நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட்டன்ன பன்முட்டின்றால் தோழிநங் களவே (அகம். 122) என்பது; இது, தலைமகன் கேட்பக் கழறியுரைத்தது. 2. முனிவு மெய்ந்நிறுத்தல் --- தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கு நிலைமையும்:3 அஃது, இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோயெனச் செப்பா தீமே (அகம். 52) என்புழி, வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது. 3. அச்சத்தினகறல் --- தலைமகன்கண் வரும் ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பும்: மன்று பாடவிந்து .....ka§» இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிக் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரிவானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) என்னும் பாட்டினை முழுதுங் கொள்க; அதன் கருத்தாவது நாம் அவர் இருளிடை வருத லேதமஞ்சி அகன்று அவலித் திருப்பவும் என்னையும் நின்னையுங் கேளாது என்னெஞ்சு போவானே னென்றவாறாயிற்று. 4. அவன் òணர்வுமறுத்தல்---ïரவுக்குறியும்gகற்குறியும்Éலக்குதற்கெழுந்தcள்ளÃகழ்ச்சியும்:mJ, தமரையஞ்சி மறுத்தமையானும், இது வரைவு கடாவுதற்குக் கருத்தாகலானுந் திளைப்புவினைமறுத்தலோடு (265) இது வேற்றுமையுடைத்து. 1 நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே (அகம். 12) என்பது, தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன் புணர்வு மறுத்தலெனப்படும். இஃது ஒன்றித் தோன்றுந் தோழி மேன (தொல். அகத். 39) என்னும் இலக்கணத்தால் தோழி குறிப்பாயினுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது கொள்க. 5. தூது முனிவின்மை--புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென் 2 று தூதிரந்து பன்முறை யானஞ் சொல்லுதலும்: அவை கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் னல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைஇய தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா லலவ (அகம். 170) என்புழிக், கூறப்பட்டனவெல்லாந் தூதாகலின், தூது விடுதலை வேறாத தன்மை கூறியதாம் இப்பாட்டென்பது. புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தான்மணந் தனையமென விடுகந் தூதே (குறுந். 106) என்பதோவெனின், அது கற்பிற்கல்லது ஏலாது. என்னை? களவினுள் நெய்பெய் தீயின்வந்து எதிர்கொளலாகாமையின். 6. துஞ்சிச் சேர்தல்-- மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும்: துஞ்சுதலெனினும் மடிதலெனினும் ஒக்கும். வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனொடு புலந்தாள்போல மடிந்தொன்றுமாதலின் அதனைத் துஞ்சிச்சேர்தலென்றானென்பது; எங்ஙனமோவெனின், ... ... ...... என் மலைந் தனன்கொல் தானே தன் மலை ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே (குறுந் 161) என்புழி, என்னகாரியம் மேற்கொண்டு வந்தானென்றமையின் இது துஞ்சிச்சேர்தலாயிற்று அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும். ஆமிழி யணிவரை என்னுங் குறிஞ்சிக்கலியினுட், பின்னீதல் வேண்டுநீ பிரிந்தோணட் பென நீவிப் பூங்கண் படுதலு மஞ்சுவல் தாங்கிய அருந்துய ரவலந் தூக்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே (கலி 48) என்னுஞ் சுரிதகமும் அது. 7. fதல் கைம்மிகல்---காமங்கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும்; அது. உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமஞ் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே (குறுந். 102) என வரும். 8. கட்டுரையின்மை---உரைமறுத்திருத்தலும்; அதனாலே அதற்குத் தோழிகண்ணாயினுந் தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையா ளென்பது பெற்றாம். அது, யான்ற னறிவல் தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே பெருமுது செல்வ ரொருமட மகளே (குறுற். 337) என்பது தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகள் தமரினெய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவுகடாதலாயிற் றென்பது. 1 ஒழிந்தனவும் அவ்வாறே வரைவு கடாதற்கு ஏற்றவாறு உரையிற்கொள்க. என்று ஆயிரு நான்கே அழிவில்கூட்டம்1 என்றெண்ணப்பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய்துங் கூட்டமென உணர்க. (23) பாரதியார் கருத்து :--- மேலெல்லாம் களவொழுக்க மெய்ப்பாடுகள் கூறி, இதிற் கற்புக்குரியன கூறுகிறார். பொருள் :--- முட்டுவயிற் கழறல்=இற்செறிப்பு முதலிய கூட்டத்திற்கு இடையூறு உற்றுழி வரைவுவற்புறுத்தல்;2 முனிவு மெய்ந் நிறுத்தல்=வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்படு குறிப்பால் வற்புறுத்துணர்த்தல்;3அச்சத்தின் அகறல் =அலரும் தலைவன் ஆற்றூறும் அஞ்சி, அவனணுகாது சேட்படுதல்; அவன் புணர்வு மறுத்தல் = வரையாது வந்தொழுகுந் தலைவன் கூட்ட மறுத்தல்; தூதுமுனிவின்மை = ஒழியாது உடனுறையும் அழிவில் கற்புக்கூட்டம் கருதிய தூதினை வெறாமை; அதாவது, வரைவு கருதி அவனுக்குத் தூதுய்க்கவும், அவன் தூது எதிரவும் விரும்புதல்; துஞ்சிச்சேர்தல் = வரையா தொழுகும் தலைவன்வரவு மகிழாது மாழ்கிக்கூடல்; காதல் கைம்மிகல் = புணர்வு பெறாமல் வரைவு நீட்டித்தவழிக் கையிகந்த காதலால் நையுநிலை; கட்டுரையின்மை = காதல்மிகையால் வாய்வாளாமை; என்றாயிரு நான்கே அழிவில் கூட்டம் = எனவரும் எட்டும் வரைந்து பிரியா மனையற வாழ்க்கை விருப்பைக் குறிக்கும் மெய்ப்பாடாகும். குறிப்பு :--- நான்கே என்பதன் ஏகாரம் தேற்றம். ஆயிடை எனல்போலச் செய்யுளாதலின் ஆயிரு என அகரச்சுட்டு நீண்டது. மேலே நகையே அழுகை எனும் மூன்றாவது முதற் செல்வம் புலனே என்னும் பதினொன்றாம் சூத்திரம் வரையிலும் அகப்புறத் திணைகளிரண்டிற்கும் பொது மெய்ப்பாடுகளை விரித்து, அவற்றின் பின் அகப்பொருளை அகத்திணை களவு கற்பென மூவியலாக வகுத்ததிற்கேற்ப அகவொழுக்க நிமித்தமாம் மெய்ப்பாடுகளையும் முத்திறப்படுத்தி, ஆங்கவை ஒரு பாலாக (சூ. 12) என்பதில் அகப் பகுதிக்குப் பொதுவாய் அமைவனவற்றைத் தொகுத்துக்கூறி, பிறகு புகுமுகம் புரிதல் (சூ. 13) என்பது முதல் இன்பத்தை வெறுத்தல் (சூ. 22) என்பதுமுடிய அகத்திற் கரவுக் காதலாம் களவினுக்குரியன தெளிக்கப்பட்டன. இனி, மறையாது உடனுறையும் கற்புக்காதற் குரியன கூறத் தொடங்கி, முதலில் உலகறிய இடையறவின்றி உடனுறையின்ப மனையற வாழ்க்கைவேட்கையால் வரைவு வற்புறுத்துந் தலைவிக்குரியன இதிற் கூறப்படுகின்றன இதன் பிற்சூத்திரங்களால் வரைந்துடன் வாழும் திருந்திய கற்புக்குரியன விளக்கப்பெறும். எனவே, முன் களவுக்குரியவற்றிற்கும் பின் களவின் வழித்தாய கற்பிற்குரியவற்றிற்கும் இடையே, அச்சிறந்த கற்பறவாழ்வுதரும் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடு கூறும் இச்சூத்திரம் அமைந்த செவ்வி யுணர்ந் துவித்தற்பாற்று. இனி, அழிவில் கூட்டம் என்றது, களவிற்போலப் பிறர்க்கு மறைத்து இடையறவுபடுங் கரவுக்கா தலைப்போலாது, உலகறிய ஒளியாது ஒழியாதுடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பு. கூட்டம் இங்குக் கூட்டம் தரும் வரைவுவேட்கைக் குறிப்பிற்காதலால் ஆகுபெயர். இனி, முட்டுவயிற் கழறலுக்குச் செய்யுள் :--- ................... ..................ehiu அறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவற் காணின், முன்னின்று கடிய கழற லோம்புமதி; தொடியோள் இன்ன ளாகத் துறத்தல் நும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே. (குறுந். 296) இதில், சிறைப்புறத்தலைவன் வரைவு நீட்டம் கடிந்துகழறற்பாற் றெனத்தலைவி தோழிக்குக் குறிப்பாகச் சுட்டுவதறிக. பன்முட்டின்றால் தோழிநங் களவே (அகம் 122) என்னும் அகப்பாட்டடிக்குறிப்பு மிதுவே. முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள்:--- விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம், கைந்நூல் யாவாம், புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம், உள்ளலும் உள்ளா மன்றே, தோழி! உÆ®¡FÆ ரன்ன ராகலிற் றம்மின் றிமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. (குறுந். 218) நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே, இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல்நோமென் னெஞ்சே. (குறுந் 4) இன்னும், இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே (அகம். 52) என்பது மது. அச்சத்தி னகறற்குச் செய்யுள்:--- அலர்யாங் கொழிவ தோழி! பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ விலனோ, பானாள் ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆய மெல்லாம் உடன்கண் டன்றே (குறுந் 311) ..................................... இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி, இவடன் மடனுடை மையின் உயங்கும், யானது கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல்பெரும! என் னெஞ்சத் தானே (குறுந். 324) என்பது மது. ..........................................................ïdÛ‹ இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி, இவடன் மடனுடை மையின் உயங்கும், யானது கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெரும! என் னெஞ்சத் தானே (குறுந். 324) என்பது மது. .......... ........... ............. ............. ............ அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி! சாரற் பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே (குறுந் 360) என வருவது மது. அவன் புணர்வுமறுத்தற்குச் செய்யுள் :--- ............ ........... பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர், ஐய! எந் தெருவே. (குறுந். 139) ............ ........................eštiu நாட! நீவரின் மெல்லிய லோரும் தான்வா ழலளே (அகம். 12) என்பது மது. தூது முனிவின்மைக்குச் செய்யுள் :--- ......... ......... ......... காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே. (குறுந். 10) கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் நின்னூர் நெய்தல் அனையேம், பெரும! நீயெமக் கின்னா தனபல செய்யினும் நின்னின் றமைதல் வல்லா மாறே. (குறுந். 309) இச் செய்யுட்களில் தணந்த தலைவன் தூதைத் தலைவி முனி யாமையும், இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி (குறுந். 98) என்னும் செய்யுளில் தணந்துறையும் தலைவனுக்குத் தலைவி தூதுய்ப்பதை முனியாமையும் கண்டு தெளிக. துஞ்சிச் சேர்தலாவது, வரைவுநீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்கல். சோர்தல் என்னாது சேர்தல் என்றதானும், துஞ்சலும் மடிமையு முன் ஆங்கவை ஒரு, பாலாக எனும் சூத்திரத்துத் தனி வேறு கூறப்படுவதானும் இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதலைச் சுட்டாமல், வரையாதொழுகுந் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக்கினுக்கு மாழ்கிப் பொலிவழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். துஞ்சல் மடிமையாகாமை, நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானு மறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல், வேண்டியவாறுகூட்டம் நிகழப்பெறாமையின், தலைமகனொடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின் என்னு மவர் உரைக் குறிப்பால் உணர்க இனி, இஃது உரிமைபூண்டமையால் உறக்கம் நிகழ்தலா மாறும் எனும் இளம்பூரணர்கூற்றுப் பொருந்தாமை தேற்றம். இவ்வாறு துஞ்சிச்சேரு முளநிலையை, ............ ............. ......... கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே (குறுந். 203) என்பதில் முன் தலைவற்குப் பரிந்தேன்; அது கழிந்தது எனத் தலைவி கூறுங் குறிப்பானும் காண்க. காதல் கைம்மிகலுக்குச் செய்யுள் :--- ............ ........................... ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினும் அகலா தாகி இகலுந் தோழிநங் காமத்துப் பகையே (குறுந். 257) உள்ளின் உள்ளம் வேமே, யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தி வான்றோய் வற்றே காமம், சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே (குறுந். 102) என்பது மது. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் (குறள். 1293) நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும் (குறள். 1254) என வரும் பாக்களும் காதல் கைம்மிகல் காட்டி நின்றன. கட்டுரையின்மை:--- கையி னாற்சொலக், கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் (சிந்தா. 997) எனும் குணமாலைகூற்றில், கழிகாதலால் உரையறுதல் காண்க. இன்னும், ..............................Jiwt‹ குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் றறியாற் குரைப்பலோ யானே (குறுந் 318) எனவும், மெல்லிய விளிய மேவரு தகுந இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே (குறுந். 306) எனவும் வருவனவற்றிலும் தலைவி உரையரும் குறிப்பறிக. (23) ஆய்வுரை இது, கற்புக் கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப்பாடுகள். இவையென வுணர்த்துகின்றது. (இ---ள.) கூட்டத்திற்குத் தடையுண்டாகிய நிலையில் இடித் துரைத்தலும், மனத்திலே வெறுப்புவெளிப்பட நிற்கும் நிலைமையும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனாகும் என்ற அச்சம் காரணமாகத் தலைவனை நீங்கியொழுகுதலும், ïரவும்gகலும்jலைவனொடுmளவளாவுதலைkறுக்குங்குறிப்பினளாதலும்,gறவையும்nமகமும்nபால்வனவற்றைnநாக்கித்jலைவன்பால்vன்bgருட்டுத்தூJசொல்லுமின்எdஇuந்துரைத்தலும்,மiனயகத்திற்பொய்த்துயிyடுமoந்துtகுதலும்,கhதலுணர்வுவuம்பிகந்தநிiலயில்நிfழும்உŸளக்குறிப்பும்உiரயாடாதுவhளாவிருத்தலும்எdஎ©ணப்பட்டஇiவஎ£டும்(âருமணம்முoத்துஎŒதுதலால்எ‹றும்)அÊயாநிiலமைத்தாகியக‰பிற்கூ£டத்திற்குநிÄத்தமாகியkய்ப்பாடுகளாகும். (v---W) 24. தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாதல் அருண்மிக உடைமை அன்புமிக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. இளம்பூரணம் என் -- எனின். இஃது அழிவில் கூட்டத்திற் குரிய பொருள்1 உணர்த்துதல் நுதலிற்று (இ---ள்.) தெய்வ மஞ்சல் என்பது -- தெய்வத்தினை யஞ்சுதல். மன்ற மராத்த பேமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப (குறுந். 87) எனவும், நீறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு (கலித். 88) vனவும்tரும்.òiuawª தெளிதல் என்பது---கடன்மிக் கனவே என்ற வழிப்2 பரத்தைமை கண்டு புலவாது இதனைப்போற்றல் இல்லுறை மகளிர்க்கியல் பென்னும் அறத்தினானே எனக் கூறியவாறு கண்டு கொள்க. இல்லது காய்தல் என்பது---தலைமகன்க ணில்லாத குறிப் பினை யவன் மாட்டு உளதாகக் கொண்டு காய்தல். யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று (குறள். 1314) இதனுள் சொன்ன மாற்றத்தை வேறாகப் பொருள்கொண்டு இல்லாததனைச் சொல்லிக் காய்ந்தவாறு காண்க. உள்ளதுவர்த்தல் என்பது --- உள்ளதனை யுவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல். வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின் முகையலர்ந் தன்ன முயக்கின் தொகையின்றே தண்பனி வைகல் எமக்கு (கலித். 78) என வரும். புணர்ந்துழி யுண்மை என்பது--புணர்ந்தவழி யூடலுள் வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல். குளிரும் பருவத்தே ஆயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம்---ஒளியிழாய் ஊடி யிருப்பினும் ஊர னறுமேனி கூடல் இனிதா மெமக்கு (ஐந்திணையைம். 30) என வரும். பொழுதுமறுப்பாதல் என்பது -- தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மன நிகழ்ச்சி. புல்லிய கேளிர் புணரும் பொழுதறியேன் அல்லியா கெல்லையென் றாங்கே பகல்முனிவேன் எல்லிய காலை யிராமுனிவேன் யானுற்ற அல்லல் களைவார் இலேன் (கலித் 144) என வரும். இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின், ஆண்டு, மரபு நிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் (அகத்திணை 48) விரிந்ததெனக் கொள்க.1 அருண்மிக வுடைமை யாவது -- தலைமகன் மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. முதைச்சுவற்கலித்த என்னும் அகப்பாட்டினுள், நடுங்குதுயர்களைந்தநன்னராளன்சென்றனன்கொல்லோதானே... ...................................... வடுவாழ் புற்றின வழக்கறு நெறியே (அகம் 88) என வரும். அவன் போனபின்பு இடையூறின்றிப் பெயர்ந்தான் கொல்லென அருள் மிகுந்தவாறு காண்க. அன்புமிக நிற்றல் என்பது---அன்பு புலப்பட நிற்றல். கொடிய னாயினும் ஆக அவனே1 தோழிஎன் னுயிர்கா வலனே (சிற்றெட்டகம்) என்றவழி, அன்புதோன்ற நின்றவாறு காண்க. பிரிவாற்றாமை என்பது---பிரிவின்கண் ஆற்றாமை செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை (குறள். 1451) என வரும். மறைத்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇ என்பது---மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ் சொல்லாகிய அலர் மாட்சிமைப் படாத கிளவியொடுகூட என்றவாறு2 மறைந்தவை யுரைத்த புறஞ் சொல்லாவது--அலர். மாணாமை யாவது--அவ்வலர் மாட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண்டல். அன்றியும், மாண மறந்துள்ளா நாணிலி (கலித். 89) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை எனவுரைப்பினும் அமையும். அலர் மிகாமைக் கூறுங் கூற்றினுங் கற்புக்கடம் பூண்டு கூறுதல். நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே (நற்றிணை . 149) என வரும் அலர்மிகாக் கிளவியாவது--அதற்கு உள்ளம் நாணுதல். களி றுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே (அகம். 96) என வரும். சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது---இச்சொல்லப் பட்ட பத்தும் மேற்சொல்லப்பட்ட அழிவில் கூட்டப் பொருள் என்றவாறு. என்ற வழி நடுவணைந்திணைக்குரிய பொருள் என்றவாறு. (24) பேராசிரியம் இஃது, அழிவில்கூட்டம் நிகழ்ந்த பின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவையென்கின்றது. (இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய அழிவில் கூட்டமெனப்படும் (எ-று.) செப்பிய பொருளென்பது அழிவில் கூட்டமன்றே, அதற்கு முற்படும் மெய்ப்பாடெட்டனையும் அழிவில் கூட்டமென்றது போல அதற்குப் பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்ட மென்பான் மேற்கூறிய அழிவில்கூட்டமே இவையுமெனக் கூறியவாறு. எனவே, வரைந்தெய்திய பின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவையென்பது கூறினானாம்.1 1. தெய்வமஞ்சலென்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய1 தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினை யஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட் டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ளநிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது. மற்றுத் தனக்குத் தெய்வந் தன் கணவனாதலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சப்படுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது. சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலி 16) என்பது, தெய்வத்திறநோக்கித் தெருமந்ததாம்; என்னை? அவற்கில வெனவும் அன்னவெனவுந் தாம் வேண்டிய குறை முடியாது பிரிந்தார்மாட்டு ஏதுஞ்செய்யுங்கொல் என்றஞ்சி உரைத்தவாறு. அச்சா றாக வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல் (கலி. 75) என்பதும் அது. இது, ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் (தொல். கற். 5) தலைமகள் கருத்தின்கண் நிகழுங் குறிப்பென்பது. 2. புரையறந் தெளிதலென்பது, தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப் படுதல் அது, விரியுளைக் கலிமான் தேரொடும் வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும் (கலி. 75) என வரும்; இஃது அவனொடு சொல்லாடாது ஊடியிருப்பேனாயின் விருந்துகொண்டு புகுதரும்; அதனால் ஊடலைமறப்பே னென்றமை யிற் புரையறந் தெளிதலாயிற்று. 3. இல்லது காய்தலென்பது, கனவின்கட்போலாது தலை மகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல். அது, நற்றா ரகலத்துக் கோர்சார் மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பா டாகலு முண்டு (கலி. 93) என வரும்; இது கடவுளரையே கண்டு தங்கினானாயினும் நெட்டிருங்கூந்தற் கடவுளரையே கண்டாயென்று இல்லது சொல்லிக் காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று. 4. உள்ளதுவர்த்தலென்பது, தலைமகனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை அண்மையென்றே தெளியாது அருவருத்துநிற்கும் உள்ள நிகழ்ச்சி; அது. கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் என்னும் பாட்டினுள், வேப்புநனை யன்ன நெடுங்கண் ணீர்ஞெண்டு இரைதேர் வெண்குரு கஞ்சி யயலது ஒலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல் திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் ஈர்மலி மண்ணளைச் செறிவு மூர (அகம். 176) என்புழித், தலைமகன் வாயில்வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு வந்தாயகன்றமையின் இஃது உள்ள துவர்த்தலாயிற்று. பட்டுழி யறியாது பாகனைத் தேரோடும் விட்டவள் வரனோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய் (கலி. 69) என்பதும் அது. 5. புணர்ந்துழியுண்மையென்பது, முன்கூறிய இல்லது காய்தலும் உள்ளதுவர்த்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ளநிகழ்ச்சி; அது, குளிரும் பருவத்தே யாயினுந் (ஐந்திணை ஐம். 30) என்பது; என்னை? புணர்ந்துழியுண்மை கூறினாள் விகாரமின்றி யாதலின். 6. பொழுதுமறுப்பாக்கமென்பது, களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற்போல்வதோர் வரையறை யின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்து பட்ட இடர்ப் பாட்டினீங்கிய மனமகிழ்ச்சி ஆக்கமெனப்படும்; அது, அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலந்த தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்கு அரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே (குறுந். 178) என்பதனுள், தொழுது காண்பிறையில் தோன்றின மென்பது களவுக்காலத்து இடையீடு பெருகிற்றெனக் கூறி அங்ஙனம் வரைந்த பொழுதினை மறுத்தகாலத்து நடுங்கலானீ ரென்றமையின் இஃது அப்பொருட்டாயிற்று. 7. அருண்மிகவுடைமை யென்பது, களவுக்காலத்துப் போலத் துன்பமிகுதலின்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல்; அது, நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே (நற்றிணை. 1) என வரும். 8. அன்புதொக நிற்றலென்பது, களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல்; எம்போற், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே (அகம். 176) என்புழிப், புதல்வற்பயந்து நின்னின் றுறையுங்கடத்தினம் யாமென்றமையின் இஃது அன்புதொக நிற்றலாயிற்று. 9. பிரிவாற்றாமை யென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறுபோலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை; என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலி னென்பது. இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிளிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள் தடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை (கலி. 2) என்புழி இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத்தாவது: பிரிவாற்றாமையின் இவள் இறந்துபடுவள், பின்னை அப்பொருள் கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையதெனத் தலைமகள் பிரிவாற்றாமை கூறியவாறாயிற்று. 10. மறைந்தவை யுரைத்தலென்பது, களவுக்காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக்காலத்துக் கூறுதல்; அவை, களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ளமோ டளவிய விடத்தும் (தொல்.கற்.5) என்புழித் தோன்றிய மனக்குறிப்பு: அது, முயங்கல் விடாஅ லிவையென மயங்கி யானோ மென்னவு மொல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே யினியே. புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத் திதலை யணிந்த தேங்கொண் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுத றாமஞ் சினரே (அகம் 26) என்பது. முன்னிலைப்புறமொழியாகலான் மறைந்த ஒழுக்கத்துக் கண் நிகழ்ந்த பொருளைக் கற்பினுள் உரைத்தவாறாயிற்று. 11. புறஞ்சொன் மாணாக்கிளவியென்பது, தலைமகற்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி. அவற்கு வரும் பழிகாத்தலுந் தனக்கு அறமாதலின் அதுவுங் கற்பின் கண்ணே நிகழுமென்பது; அது, களிறுகவர் கம்பலை போல வலரா கின்றது பலர்வாய்ப் பட்டே (அகம். 96) என்றாற் போல்வன. கிளவியொடு தொகைஇ யென்பது, இதனோடுந் தொகுத் தென்றவாறு. சிறந்த பத்தும் என்பது, விதந்தோதிய பத்தும். செப்பிய பொருள் என்பது, அழிவில் கூட்டமெனச் செப்பிய கற்பின்கண்வரும் மெய்ப்பாடெனப்படும் இவையும் என்பது. மற்றுப் பதினொன்றனையெண்ணிச் சிறந்த பத்து இவை யென்ற தென்னையெனின். அதனை, ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே (தொல். பொருள். 556) என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றியுரைக்கப்படும். அங்ஙனஞ் சிறந்த பத்தும் புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇயெனக் கூட்டியுரைக்க.1 சிறந்த பத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப்பாடு பிறவுமுளவேற் கொள்க. (24) பாரதியார் கருத்து :--- இது வரைந்துடன்வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது. பொருள் :--- தெய்வமஞ்சல் முதல் புறஞ்சொல் மாணாக் கிளவி வரை கூட்டுக் கூறிய பத்தும் அகத்திணையுட் சிறந்த கற்புக்காதற்குப் பொருந்தும் மெய்ப்பாடுகள் என்றவாறு. குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை. ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல். பத்தும் என்பதன் உம்மை இனைத்தென அறிந்த முற்றும்மை செப்பிய பத்தும் சிறந்த பொருளே எனச் சொன் மாறுக அன்றிச் சொற்கள் நின்றாங்கே கொண்டு, மாணாக் கிளவியொடு கூட்டி எண்ணி, உயர்ந்த கற்புக்குறியாய்ச் சிறந்த பத்து மெய்ப்பாடுகளும் மேல் அழிவில்கூட்ட மெனக் குறித்த கற்பொழுக்கத்திற்குரிய என்றுரைப்பினும் அமையும். இதில் பொருள் என்பது, ஈற்றடியைச் சொன்மாறிக் கண்ணழிப்பின் மெய்ப்பாடுகளையும், நின்றாங்கே கொள்ளின் கற்பொழுக்கையும் குறிப்பதாகும். பின்னுரைக்குப்பத்தும் என்பதைப் பத்து மெய்ப்பாடும் எனக் கொள்ளல் வேண்டும். இனித், தெய்வமஞ்ச லாவது---சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற்றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று. மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப; யாவதும் கொடிய ரல்லர்எம் குன்றுகெழு நாடர், பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே, (குறுந்.87) என்னும் கபிலர்செய்யுளும், தலைவி வழிபாடுகூறாது, அணங்கும் கடவுளை அஞ்சுதலளவே குறித்தமை அறிக. புரையறந் தெளிதல் ---என்பது உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்புதல். புரை ஈண்டு உயர்ச்சிப்பொருட்டு. இதுமற் றெவனோ தோழி! துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி ....... ....... ........... ........... ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே. (குறுந்.181) தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற்காக்கும் சோர்வின்மையே திண்ணிய கற்பின் பெண்மையற மெனவுணர்ந் தொழுகுபவளே பெண்ணெனக் கூறப்படுதலானு மிவ்வுண்மையறிக. இல்லது காய்தல் ---கணவன்பால் இல்லாதவற்றை எறிட்டு வெகுளுவது. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. (குறள்.1313) உள்ளது உவர்த்தல்--இது தலைவன் மெய்யாகச் செய்யும் நன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல். ......... ......... .......... ......... ...........ï‹W வந்து, ஆக வனமுலை அரும்பிய கணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை எள்ளல்அஃ தமைகுந் தில்ல ....... ......... ........ இளமை சென்று தவத்தொல் லஃதே இனிஎவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே. (அகம்.6) எனும் பரணர் பாட்டு, பிரிந்து வந்த தலைவன் தன் ஆற்றாமையால் பரிந்து தலைவியைத் தழுவிப் பாராட்டவும், அவள் அதைப் பொய்யென வெறுப்பது குறிப்பதால், அது உள்ளது உவர்த்தலாகும். புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப் பாக்கம் என்பது மணந்துவாழ்வார் கற்புக்காதற்கு இடையூறு காலத்தடை கருதா தொழுகுதலாம். காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம். (குறுந்.32) என்பதில் கற்புக்காதலில் பொழுதுவரையறையின்மை சுட்டியது காண்க. இத்தொடரைப் புணர்ந்துழியுண்மை, பொழுது மறுப்பாக்கம் எனப் பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவார் பேராசிரியர். இது சிறந்த பத்தும் எனத் தெளித்துக்கூறிய சூத்திரச் சொற்றொடர்ச் செம்பொருளோடு முரண்படுவதால், அஃதுரையன்மை அறிக. 1 பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனுந் தன் கொள்கைக்கு, ஒன்பதும் குழவியொ டிளமைப்பெயரே எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், ஒன்பதும் குழவியொடு என்பதை குழவியொடு ஒன்பதும் என மொழி மாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதேயாகும். இங்கு, மொழி மாற்றினும் பேராசிரியர் கொண்டபடி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லொடு பொருள் முரண் எண்ணுதற்கு அம் மரபியற்சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை. இனி. முதலுரை வகுத்த இளம்பூரணர் இச் சூத்திரத்தில் மெய்ப்பாடு பத்தெனவே எண்ணினார்.2 எனின், அவர் இத் தொடரைப் பிரித்திரண்டாக்கி, மறைந்தலை யுரைத்தல் புறஞ் சொல்மாணாக்கிளவி எனும் வேறுபடும் இரண்டை இணைத்து ஒன்றாக்கப் பத்தெண்ணி, அமைவுகாட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பாடாதலானும், புறஞ்சொல்மாணாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப்படாமையானும், அவ்விரண்டையும் இணைத்தல் ஏலாமை அறிக. மேலும் புணர்ந்துழி உண்மையைப் பிரிப்பதால் போதரும் பொருட்சிறப்பின்மையும், அது சூத்திரக் கருத்தன்மையை வலியுறுத்தும். ஆதலின், இத்தொடரை நின்றாங்கே ஒரு தொடராக் கொண்டு, அதன் செம்பொருளுரைப்பதே சூத்திரக் கருத்தாதல் தெளிவாம். அருள்மிகவுடைமை யாவது--- முன் களவில் தலைவனருளை வேண்டிய தலைவி, கற்பில் தானவனை அருளொடு பேணும் பெற்றி. நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை இன்முகந் திரியாது கடவுட் கற்பின் அவனெதிர் பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு துனியல், வாழி தோழி! சான்றோர் புகழு முன்னர் நாணுப பழியாங் கொல்பவோ காணுங் காலே. (குறுந். 252) எனும் பாட்டில், பழிக்குரிய தலைவன் தவறுரைப்பதும் இழுக்கென வெறுக்கும் தலைவியினருள் நயத்தற்குரியது, மனைத்தக்க மாண்புடைய மனைவி இயல்பு, தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் எனும் வள்ளுவர் கொள்கையு மிவ் வுண்மையை வலியுறுத்தும். அன்புதொகநிற்ற லாவது --- கொழுநன்கொடுமை உளங் கொளாமல், அவன்பாற் காதல் குறையாதொழுகல். ......... ........... காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே. (குறுந்.60) ...... ..... ......... பெருங்கல் நாடன் இனிய னாகலின் இனத்தின் இயன்ற இன்னா மையினு மினிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே. (குறுந்.288) நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும் வாடன் மறந்தன தோள். (ஐந்திணை எழு.2) என்பனவு மது. பிரிவாற்றாமை--- களவிற்போலக் கற்பிற் றலைவி காதலை மறைத்தல் வேண்டாமையின் தலைவன் பிரிவைத் தாங்கா தழுங்குதல். ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. (நற்.284) ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னாற் றோழி!................. ......... .......... வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லு மன்பினர்ப்பெறினே.” (அகம். 255) மறைந்தவையுரைத்தலாவது - முன் ஒளிந்த நிகழ்ச்சி பின் உவந்தெடுத் துரைப்பது. ...... ......ts§nf ழூரனைப் புலத்தல் கூடுமோ தோழி! ...... மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே ...... ...... நெஞ்சறை போகிய அறிவி னேற்கே (அகம். 26) என்னும் பாட்டில் மறைவில் நிகழ்ந்ததை மனைவி பின்னர்த் தோழிக்கு எடுத்துரைக்கும் காதல்மாட்சியைக் கண்டு தெளிக. புறஞ்சொல்மாணாக்கிளவி---தலைவனைப் புறத்தூற்றும் புன்சொற்பொறாத தலைவி அதை வெறுத்து மறுப்பது. அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி, யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே (குறுந். 96) என்னும் பாட்டில் தலைவனைப் புறம்பழித்த தோழியைத் தலைவி வெகுளு மிம்மெய்ப்பாடு விளக்கப்பெறுதலறிக. புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்குந் தலைவியின் மறுப்புரை, புறஞ்சொல் மாணாக்கிளவி என்று கூறப்பட்டது. இனி, முன் களவியலில் வேட்கை ஒருதலை உள்ளுதல் என்னும் சூத்திரத்தில், வேட்கை முதல் சாக்காடீறாகக் கூறிய பத்தும் களவிற்குச் சிறந்தனவாதலின், அவை, சிறப்புடை மரபினவை களவென மொழிப எனக் குறிக்கப்பட்டன. அதுவே போல், இங்குக் கூறிய பத்தும் கற்பிற்குச் சிறந்தனவாதலின். சிறந்த பத்தும் செப்பிய பொருளே எனப்பட்டன. இன்னும், கரந்தொழுகலால் காமஞ் சாலாத களவினும், வரைந்து உலகறிய உடன் வாழ்ந்து ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால் காமஞ்சான்ற கற்புச் சிறந்தது அச்சிறந்த வாழ்வு முன் கழிந்த களவின் பயனாமெனக் கற்பிய லிறுதியில் தெளிக்கப்பட்டிருத்தலால், அன்புத்திணையிற் சிறந்தது கற்புக் காதல், அதற்குச் சிறந்தன இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு பத்தும், எனும் அமைவு தோன்ற, இப்பத்து மெய்ப்பாடுகளையும் சிறந்த பத்தும் செப்பிய பொருளே எனக்கூறிய பெற்றியும் தேறற்பாலது. (24) ஆய்வுரை இது. கற்பிற் கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள் உணர்த்துகின்றது. (இ---ள்.) தலைவனுக்குத் தொழுகுலமாகிய தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சியொழுகுங் குறிப்பும், தனக்கு ஒத்த இல்லறம் இதுவென்று தலைமகள் உள்ளத்தே தெளிதலும், களவொழுக்கத்திற்போலன்றித் தலைமகன்பால் இல்லாத குற்றத்தை ஏறிட்டுக்கொண்டு வெகுளலும், தலைமகனாற்பெற்ற தலையளி உண்மையேயாயினும் அதனை உண்மையென்று தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சியும், புணர்ச்சிக்காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சியும் ,களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் எனவரையறுத்தாற் போல்வதோர் வரையறைகற்புக்கு வேண்டாமையால் அத்தகைய பொழுது வரையறையை மறுத்தலாகிய ஆக்கமும், களவுக்காலத்துத் துன்னமற்றாற்போலன்றி அருள் மிகத்தோன்றிய நெஞ்சத்தினளாதலும், களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் மனையறத்தின்மேற் பெருகிய விருப்பினாலே ஒருசேரத் தொக நிற்றலும், களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட்பிரிவாற்றுதல் வேண்டப்படாமையும், தலைவனது மறைந்தவொழுக்கத்தைப்பற்றி அயலார் கூறிய புறஞ்சொல்லின் தீமைகுறித்து எழுந்த சொல்லுடன் சேர இங்கு எடுத்துரைத்த பத்தும் அழிவில்கூட்டம் என மேற்கூறிய கற்பின்கண் வரும் மெய்ப் பாடுகளாம். எ---று. புரை அறம்-தனக்கு ஒத்த இல்லறம். புரை-ஒப்பு. புணர்ந்துழி உண்மையாவது புணர்ச்சிக்காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி. பிரிவு ஆற்றாமை-பிரிவினை ஆற்றியிருக்க வேண்டாமை. மறைந்தவையுரைத்த புறஞ்சொல்மாணாக்கிளவி என இயைத் துரைப்பர் இளம்பூரணர். மறைந்தவையுரைத்தல் எனப்பாடங் கொண்டு, புறஞ்சொல் மாணாக்கிளவியைச் சிறந்தபத் தொடும் தொகுத்துப் பதினொன்றாகக் கொண்டார் பேராசிரியர். (24) 25. பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. இளம்பூரணம் என்---எனின் இது களவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம்.1 (25) பேராசிரியம் இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது; மேற் களவியலுள், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப (தொல். பொருள். 93) என்றான். அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத் தென்ப துணர்த்தினமையின் (இ---ள்.) ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமுமெனப் பத்து வகையதலை மகளொப்பினது பகுதி (எ---று). இவை தலைமகற்கு மெய்ப்பாடெனப்படாவோவெனின் படுமாயினும் அஃது ஒப்பினது வகையென்றதனானே தலைமகட்கே உரிமை கொளப்படும். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்: அதற்குத்தக்க ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின். குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது. யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின். பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவ மென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்.1 உருவு நிறுத்த காமவாயி லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமா றென்னையெனின். காமவாயிலெனப்பட்ட இயற்கை யன்பு வடிவுபற்றி யல்லது தோன்றாமையானுங், குணம்பற்றித் தோன்றுவன செயற்கை யன்பாகலானும், உருவினை யன்பிற்கு அடையாகக் கூறினா னாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்தெண்ணிக் கொண்டாமென்பது. என்னை? வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு (குறள். 632) என்புழிக் கற்றறிதலென்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாக லின்.2 அஃதேல், உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட்பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும். நிறை யென்பது மறைபிறரறியாமை (கலி. 133) நெஞ்சினை நிறுத்தல். அருளென்பது எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடை யராயிருத்தல். அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு. உணர்வென்பது அறிவுடைமை; அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல். திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகிய தோர் உள்ள நிகழ்ச்சி அது வினையுள்ளுடைமையெனவும்படும். இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் அவை பற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு. வகை யென்றதனான் ஆண்மைவகை பெண்மைவகை யெனவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ஏவன்மரபின் ஏனோர் (தொல். பொருள். 24) பாங்கினும் அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல். பொருள். 23) தம்மின் ஒத்த பிறப்புக்காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப் பாடென்றோ தினானென்பது, அடியோர்பாங்கினும் வினை வலர்பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினாற் கொண்டார்; அவை பிறழ்ந்து வருமாகலினென்பது. உ--ம். அவனுந்தான். ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன் (கலி. 39) என்பது பிறப்பொப்புமை உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே (நற்.3) என்பது தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையிற் குடிமையாயிற்று. கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து (அகம். 93) என்புழி, இன்னகாரணத்திற் பிரிந்துபோந்து வினைமுடித்தன மாயினும் அவளை முயங்குகஞ் சென்மோ என்றமையின் தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந் தாளென்பதூஉங் கருதிய கருத்தினாற் காமக்குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று. என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் கணங்கு நினைத்துக்காண். (கலி.18) என்பது யாண்டு. முல்லை முகையு முருந்துநிரைத் தன்ன பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணும் நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்ற கிற்பாரியார். (கலி.108) என்பது உருவு. நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவள் மகனே தோழி யென்றனள். (அகம்.48) என்பது உருவுநிறுத்த காமவாயில். கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந்து. (கலி. 37) என்புழி முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையானென்பது தலைமகனிறையுடைமை கூறியவாறு. அவன் வயிற் சேயேன்மன் யானுந் துயருழப்பேன் (கலி. 37) எனத் தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு நிகழ்ந்த வாறு. பெண்ணன் றுரைத்த னமக்காயின் (37) என்பதும் அது இது, தோழி கூற்றன்றோவெனின், அதுவுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்க் கூறினாமென்பது1 தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன் (அகம்.4) என்பது அருள்பற்றிப் பிறந்த காமக்குறிப்பு. அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதரும் (அகம். 22) என்னும் பாட்டினுள். தன்னிசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப என்பது இருவருணர்வும் ஒத்தவாறு; தலைமகள் குறிப்பு உணர்ந்து வந்தனனென்றமையின்.2 இது செல்வம் புலன் (தொல், பொருள். 259) என்புழிப் புலனெனப்படாது காமத்திற்கே உரித்தாகிய உணர்வாகி வேறு கூறப்பட்டது. நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட் பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற் சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல பலவல்லன் றோளாள் பவள் (கலி. 143) என்பது திருவினாற் காமக்குறிப்புப் பிறந்தவாறு. என்னை? இனையன வல்லனாதல் செல்வக்குடிப்பிறந்தவரை அறிவிக்கு மாகலின் அது காமக்குறிப்பினை நிகழ்த்துமென்பது. இது தலை மகட்கும் ஒக்கும். உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு (கலி. 94) என்பதும் பிறப்புவகையின்பாற்படும். பிறவும் இவ்வாறே கொள்க. (25) பாரதியார் கருத்து :--- இது, தலையாய காதல் நிலையாவதற்குக் காதலரிரு பாலார்க்கும் வேண்டப்படும் ஒப்புவகை கூறுகின்றது. பொருள் :--- பிறப்பு=தோன்றிய குடிநிலை; குடிமை =ஒழுக்கநிலை; ஒழுக்க முடைமை குடிமை என்பதனாலும். பிறப்புவேறு கூறுவதாலும், இதில் குடிமை ஒழுக்கம் குறிக்கும். ஆண்மை= ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலவர்க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பொண்டாட்டி. வினை யாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும். ஆண்டு=பருவம்; அதாவது வயது; உருவு= வடிவம்; அதாவது மூப்போ டிளமைமுரணா வனப்பு. நிறுத்த காமவாயில்=நிலைத்த காதல் நிலை;1 நிறை=அடக்கம்; அருள்=பிறர் வருத்தம்பொறாப் பரிவுடைமை; உணர்வு=அறிவு; உணர்ச்சி எனினும் அமையும்; திரு=செல்வம்; இது பொருள் பற்றியதன்று; உள்ள மலர்ச்சி. செல்வ மென்பது சிந்தையினிறைவே என்பதனாலும் இப்பொருட்டாதலறிக என முறையுறக் கிளந்த ஒப்பினது வகை=என்று நிரலே கூறிய பத்தும் காதலர்க் கின்றியமையா ஒப்பின் வகையவாம். குறிப்பு :--- ஈற்றேகாரம் அசை. மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச்சொற்கள் முன் களவியலில். ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப எனும் சூத்திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியாதல், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால், ஒத்த காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து. அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியவாதலின், அக் காதல் நிலைக் குரியதென முன் தொகுத்துக் கூறியஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது. இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையால் தெளியப்படும். (25) ஆய்வுரை இஃது ஒத்த கிழவனுங்கிழத்தியுங் காண்ப எனமுற்கூறப்பட்ட காதலர் இருவர்க்கும் அமையவேண்டிய ஒப்புமைப் பண்புகள் இவையெனவுணர்த்துகின்றது. (இ---ள்.) குடிபிறப்பு, அதற்குத்தக்க நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம், உருவம், வடிவவனப்பினை வாயிலாகக் கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதலாய நிறை, எல்லாவுயிர்கள்பாலும் அருளுடைமை, தீதொரீஇ நன்றின் பாலுய்க்கும் உணர்வு எக்காலத்தும் திருத்தகவிற்றாய் உள்ளமுடைமை எனமுறைப்படக் கூறப்பட்ட இப்பத்தும் ஒத்த அன்பின்ராய்க் கூடுதற்குரிய தலைவன் தலைவி ஆகிய இவ் விருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைப் பகுதிகளாகும். எ---று. இவையெல்லாம் காதலர் இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைப் பண்புகளெனவே இவை பற்றி மெய்ப்பாடுகள் பிறக்கு மெனவும் உணர்த்தினாராயிற்று. (25) 26. நிம்புரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர். இளம்பூரணம் என்---எனின். இது தலைமக்கட்காகாத குணம் வரை யறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ---ள்) நிம்பிரி என்பது அழுக்காறு, அவ்வியம் என்பதும் அது கொடுமை என்பது---அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி வியப்பென்பது---தம்மைப் பெரியராக நினைத்தல்.1 புறமொழி என்பது---புறங் கூறுதல் வன்சொல் என்பது---கடுஞ்சொற் கூறல் பொச்சாப் பென்பது -- தம்மைக் கடைப்பிடியாமை அது சோர்வு 2 மடிமை என்பது முயற்சி யின்மை. குடிமையின் புறல் என்பது--தன்குலத்தினானுந் தன்குடிப் பிறப்பினானும் தம்மை மதித்து இன்புறுதல். ஏழைமை என்பது--பேதைமை. மறப்பு என்பது--யாதொன்றாயினுங் கற்றதனையுங் கேட்ட தனையும் பயின்றதனையும் மறத்தல். ஒடு எண்ணின்கண் வந்தது. ஒப்புமை என்பது--ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ளநிகழ்ச்சி. அது உலகின் கட் கீழ்மக்கள் மாட்டுங் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்காகாதென விலக்கப்பட்டது. என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது--இச்சொல்லப் பட்டன இல்லையாதலும் வேண்டும்; மேற் சொல்லப் பட்டவற்றோடுங் கூட்ட என்றவாறு.1 மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூடுதல் அதிகாரத்தான் வந்தது. இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு.2 (23) பேராசிரியம் இது, காமக்குறிப்பாகாதன கூறுகின்றது. (இ--ள்) நிம்பிரி--பொறாமை தோன்றுங் குறிப்பும்; அவை இந்நாட் சிறிதுபொறுத்தாயென்றாற் போல்வன; கொடுமை கேடுசூழ நினையுந் தீவினையுள்ளமும்; வியப்பு---தலைமகள் பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்தொழுகுதலும்; இனிக் குணத்தின்மேற்கொண்டு தன்னை வியத்தலெனினும் அமையும் புறமொழி புறங்கூற்றும்; வன்சொல்--கண்ணோட்டமின்றிச் சொல்லுஞ் சொற்களும்; பொச்சாப்பு--கடைப்பிடியின்றி ஞெகிழ்ந்திருத்தலும்; மடிமை--சோம்புள்ளமும்; குடிமை--இவள் இழிந்தபிறப்பினளெனத் தன்னை நன்கு மதித்தொழுகுதலும்; இன்புறல்--ஒருவரொருவரிற்றாமே இன்புறுகின்றாராக நினைத்தலும்; ஏழைமை நுழைந்தவுணர்வினரன்றி வரும் வெண்மையும்; மறப்பு --மறவியும்; ஒப்புமை -- இன்னாளை யொக்கும் இவளென்று அன்புசெய்தலும்; என்று இவை இன்மை என்மனார் புலவர்--இவையெல்லாம் இன்றிவருந் தலைமகன்கண் நிகழும் மெய்ப் பாடென்று சொல்லுவர் புலவர் (எ-று) எனவே, அவைதம்மை வரையறுத்துக் கூறாது அவற்றுக் காகாதன வரையறுத்துக் கூறினானென்பது. தலைமகட்குரிய மெய்ப்பாடாயின வரையறுத்துக் கூறினமையின் அவற்றுக்காகாதன கூறல்வேண்டுவதன்றென்பது. ஆகாதவற்றுக்கு உதாரணங் காட்டலாவதில்லை. (26) பாரதியார் கருத்து :--- இஃது இவ்வியலிற் கூறிய மெய்ப்பாடுகள் தோன்றுதற்குரிய காதலுக்காகாத குற்றங்களைக் கூறுகின்றது. பொருள் :--- நிம்பிரி=பிழைபொறாப் பெற்றி; அதாவது சகிப்பின்மை. இஃ தழுக்காறன்று 1அழுக்காறு தனித்தார் மாட்டும் தவறாமாதலானும், இங்குக்காதலர் வாழ்வுக்காகாதன கூறுவதே கருத்தாதலானும், குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை யாமாதலானும், இற்கிழத்திக்கு இன்றியமையா மடன் என்பது தலைவன் குற்றம் தானறியாமை யாதலானும். தலைவனைக்காணாக்கால் அவன் தவறல்லன காணாத் தலைவி, அவனைக்காணுங்கால் தவறாய காணாள் என இல்லாளியல் சொல்லப்பெறுதலானும் ஈண்டு நிம்பிரி, அழுக்காறு என்னும் பொறாமை சுட்டாது. பிழைபொறாப் பெற்றியையே குறிப்பது தெளிவு.1 அஃ துளதாயின் காதல் வாழ்வுக்கு ஏதமாதலின் விலக்காயிற்று. கொடுமை=அறனழிய நெறிபிறழு மியல்பு. வியப்பு=மருட்கை; இதை அற்புதம் என்பர் வடநூலுடையார். இது ஒத்த காதலுக்கு ஒல்லாக் குற்றமாகும். மருட்கை மதிமை சாலாதாதலானும். அஃதுள் வழித் தலையாய காதல்நிலையாமையானும். அதுவும் விலக்காயிற்று. புறமொழி= பழிதூற்றுதல்; இல்லாட்கு நல்லறம், புறஞ் சொல் மாணாக்கிளவி யென முன் கூறியதனாலும், பழிதூற்றும் தவறுடைமை காதல் வாழ்வுக்கு ஏதம்பயக்குமாதலாலும், அது விலக்குதற்குரிய இழுக் காயிற்று. வன்சொல்=வருத்தமுறுத்தும் கடுஞ்சொல்; பொச்சாப்பு= சோர்வு. இஃது உவகை மகிழ்ச்சியிற் பிறப்பதாகலின், காதற்கடனிகந்து ஏதந்தரும் தவறாகும். மடிமை=சோம்பர்; குடிமையின்புறல்=தலைவி தன்குடியுயர் வுள்ளி யுவத்தல்; இது கற்புறகாதலுக்கொல்லாது. முன் O வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்குந் துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்பின்றி யொழுகு நாளில், மற்றவர் தம்மை நோக்கி மானுட மிவர்தா மல்லர் நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு பெற்றவிம் மகவு தன்னைப் பேரிட்டே னாத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் (காரைக். அ. பு. 31,47) என்றான். O கற்பறக்காதல்வாழ்விற் காரைக்காலம்மையாரின் அற்புதச் செயல் கண்ட அவ்வம்மையை அணங்கென மருண்ட பரமத்ததனுக்குக் காதல் நீங்கியதால், வியப்பு காதலுக்கு ஏலாக் குற்றமாதல் காண்க. களவியலில் இருவர்க்கும் குடிமை ஒப்புமை நன்றாம், அன்றேல் தலைவன் மிக்கோனாதல் தவறாகாது எனக் கூறி, எஞ்ஞான்றும் தலைவி உயர்வைத் தவிர்த்தது; அது தலைவனுக்கு இழிவுணர்த்தி ஏதம் விளைக்குமாதலின். அதனால் அது மெய்க் காதலுக்கு இழுக்காயிற்று. ஏழைமை இங்கு எளிமை, அதாவது தணிவுப் பொருட்டு. தணிவுணர்வு மறப்பது அன்பொழுக்கத் திற்காகாத தவறு. இனி ஏழைமை வெண்மையறிவெனின், தலைவிக்கு வேண்டப்படும் புரையறமறியல் கூடாதாகலின், அது பொருளன்று. அஃகி அகன்ற அறிவுடையளாயினும், பிற பெருமை அனைத்துமுடை யளாயினும், தணிவொடு பணிதலும், தாழ்ந்தவனெனினும் தலைவனுயர்வு தன்னுள்ளத்து நிறுத்தலும் காதற்றலைவிக்கு வேண்டும். அதனால், தலைவி தன்தாழ்வு மறத்தல் இல்லறக்காதலுக்கு இழுக்கென விலக்கப்பட்டது. தலைவிக்கு உயர்குடியுவகை விலக்கியதோ டமையாது, தன் பணிவு மறவாது தலைவனுயர்வுள்ளலு மின்றியமையாதென வற்புறுத்துங் குறிப்பால், குடிமை யின்புறல் கூடாதென்பதனோடு ஏழைமை மறப்பும் விதந்து விலக்கப்பட்டது. இனி ஒப்புமையாவது, தலைவனைப் பிறரொடு ஒப்ப நினைப்பது; அந்நினைவும் கற்பறமழிக்கும் இழுக்காமாதலிற் கடியப்பட்டது முன் எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் வேண்டப்பட்டதெனின், அது மலர் மதிபோன்ற பொருள்களை அவற்றிற்கேற்கும் தலைவன் உறுப்போ டொப்புமைகோடலே குறித்தலின், அது குற்றமற்ற காதற்குறிப்பு எனக்கொள்ளப்பட்டது. இங்குப் பிறரொடு தலைவனின் ஒப்பு நினைப்பது பெண்மைக் கேலாப் பிழையாதலின். அது கடியப்பட்டது. என்றிவையின். மை=எனக் குறித்தகுற்றங்கள் இல்லாமை(காதலர்க்குவேண்டும்) என்மனார் புலவர்=என்று கூறுவர் புலவர், குறிப்பு :--- இதில் ஒடுக்கள் எண் குறிப்பன குடிமையின் புறலை இளம்பூரணர் ஒரு தொடராகவே கொண்டு, ஏழைமை மறப்பை இரண்டாக்கிக் குற்றம் பதினொன்று எனக்கொள்வர், பேராசிரியர் குடிமையும், இன்புறலும் என வெவ்வேறு பிரித்துப் பன்னிருகுற்றம் எண்ணிக் காட்டுவர் குடிமை காதலர்க்கு வேண்டப்படும் ஒப்பு வகையுள் ஒன்றெனவும் (மெய்ப். சூத். 25), இன்புறல் உண்மைக் காதற் குறிப்பென்றெண்ணப்படும் மெய்ப்பாடுகளுள் ஒன்றெனவும் (மெய்ப், சூ. 12) இவ்வியல் முன் சூத்திரங்களிற் குறிப்பதனால் அவற்றைக் காதற் கொல்லாக் குற்றமென்றிங்குத் தொல்காப்பியனார் கடிந்தாரெனக் கோடல் முன்னொடுபின் முரணுவதால் எனைத்தானும் எண்ணற்பாற்றன்று. ஆதலின், குடிமையின்புறலை ஒரே தொடராகக்கொண்டு பிறப்பின் பெருமிதம் தலைவிக்கேலாத் தவறெனக் கூறுவதே கருத்தாதல் தேற்றம். அதுவே போல் மறப்பை ஏழைமையின் வேறாகப் பிரித்தலும் பொருந்தாது. மேலே பொச்சாப்பு மெய்க்காதற் குறிகளுள் ஒன்றெனக் கூறப்படுதலின், அதனையே மறப்பெனச் சொன்மாற்றிக் காதற்கேலாக் குற்றமெனக் குறிப்பதாய்க் கருதற்கில்லை. அன்றியும், ஏழைமைமறப்பைக் குற்றமாக்கொள்வதே ஒருதலை. இன்னும் மேலிரு சூத்திரமும் பத்தே கூறுதல் நோக்க, ஈண்டு மவ்வாறு பத்தெனக் கொள்வதே ஏற்புடையதாகும்.2 இனி, இன்மை என்மனார் என்பதைக் காதலர்க்கு இன்மை வேண்டும் என விரித்தது, பொருள் விளங்கும் பொருட்டும், இன்மை வேண்டும் என நிற்பிற் பொருள் முடியாமையானும் என்க. கூறிய பத்துக்குற்றங்கள் உள்வழி, உண்மைக் காதல் நிலையாதாதலின், காதல் மெய்ப்பாடுகளைக் காணுதல் அவையற்ற இடத்தாமெனச் சுட்டுதற்கு அவை இவ்வியலிறுதியிற் கூறப் பட்டன. (24) ஆய்வுரை இது, தலைமகட்கு ஆகாதனவாகிய குற்றங்களை இவையென உணர்த்துகின்றது. (இ-ள்.) பொறாமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத்தல்,புறங்கூறுதல், கடுஞ்சொற்கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினால் தம்மை உயர்ந்தாராக நினைத்தல், காதலர் இருவருள் ஒருவர் ஒருவரைவிட இன்புறுவதாக எண்ணுதல், நுண்ணுணர்வின்றிவரும் வெள்ளறிவு, மறதி, இன்னாரையொப்பர் இன்னார் என்றெண்ணி ஒருவரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் காதலரிருவர் பாலும் இல்லாதொழிதல் வேண்டும் என விலக்குவர் புலமைச் சான்றோர். எ---று. (24) இக்குற்றங்கள் யாவும் இன்றித் தலைமகன்பால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைமகன்பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகளை இன்னவையென வரையறுத்துக்கூறாது, அவன் பால் நிகழத்தகாதன இவையென இச்சூத்திரத்தால் ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரெனவும் கருதுவர் பேராசிரியர். இவ்விரண்டு சூத்திரங்களாலும் காதலர் இருவரிடையே அமையவேண்டிய உணர்குணங்களுண்மையும் குற்றங்களின்மையும் ஆகிய ஒப்பினானாகிய இலக்கணங்கூறியவாறு உணரத்தகுவதாகும். (26) 27. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. இளம்பூரணம் என்--எனின். இது அதிகாரப்புறனடை. (இ--ள்.) ஈண்டுச் சொல்லப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடெல்லாம் ஆராயுங்காற் கண்ணானுஞ் செவியானும் விளங்க உணரும் அறிவுடைமாந்தர்க் கல்லது கருதல் அரிது என்றவாறு.1 (27) பேராசிரியம் இது, மேற்கூறிய மெய்ப்பட்டிற்கெல்லாம் புறனடை. எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான்கு (தொல். பொருள். 252) என்புழி, நகைக்கேதுவாகிய பொருள் கூறியதல்லது அப்பொருள் பற்றிப் பிறந்த நகையுணர்வு புலப்படுமாறு இன்னவாறென்றிலன், இனி உடைமை யின்புறல் (தெல். பொருள். 260) என்றற்றொடக் கத்தனவினும் அவ்வாறு எண்ணியதல்லது அவை உணருமாற்றுக்குக் கருவி கூறியதிலன் அங்ஙனமே பிறவுங் கூறியதிலனாகலான் அதனை ஒருவாற்றாற் கூறுகின்றான். (இ--ள்.) கண்ணானுஞ் செவியானும் யாப்புற அறியும் அறிவுடையார்க்கல்லது மெய்ப்பாட்டுப்பொருள் கோடல் ஆராய்தற்கு அருமையுடைத்து (எ--று). மற்று மனத்துநிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானுஞ் செவியாலுமுணர்தலென்ப தென்னையெனின், மெய்ப்பாடு பிறந்தவழி உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும் உரை வேறு படுதலுமுடைமையின் அவை கண்ணானுஞ் செவியானுமுணர்ந்து கோடல் அவ்வத் துறைபோயினாரது ஆற்றலென்பது கருத்து. இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே (குறுந். 312) என்பதனுள் அமராமுகத்தளாகுதலும் தமரோரன்னளாகுதலுந் தலைமகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர் வெனப்படும். ஒழியோ யானென வழிதகக் கூறி (அகம். 110) என்புழித், தலைமகன்மனத்து நிகழ்ந்தவழிவெல்லாம் ஒழிகோ யானென்ற உரையானே உணர்ந்தமையின் அது செவியுணர் வெனப்படும். இங்ஙனம் உணர்தலும் உணர்வுடையார்க்கன்றிப் பெரிதும் அரிதென்பான் எண்ணருங்குரைத் தென்றானென்பது. (27) பாரதியார் கருத்து :--- இது மெய்ப்பாடுகளுக்குப் பொதுப் புறனடையாய். அவற்றினியல்பும் குறிப்பும் நுண்ணறிவில்லார்க்கு எண்ண வொண்ணாமையும் கூறுகின்றது. பொருள் :--- கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கல்லது=காண்பதும் கேட்பதும் ஆசற ஆயும் நுண்மாண் நுழைபுலனுடையார்க்கன்றி; நன்னயப்பொருள் கோள்=சிறந்த நயத்தகு மெய்ப்பாடுகளின் இயல்பும் குறிப்பும் உணர்ந்து கோடல்; தெரியின்=ஆராயுங்கால்; எண்ணருங்குரைத்து= நினைதற்கரிது. குறிப்பு :--- முதலிருசொல்லி னும்மைகள் எண்குறிப்பன.1 குரையும். ஈற்றேகாரமும் அசைகள்; மெய்ப்பாடு உள்ளுணர்வைக் கொள்ளுதற்குதவும் குறிப்பாய்ச் சொல்லினும் செயலினும் தோற்றுமாதலின், கண்டதும் கேட்டதும் யாப்புறக்கொண்டு அது விளக்கும் உளக்கிடையளக்கும் நுண்ணுணர்வு அருமைத் தென்பதைத் தெரிப்பது இச்சூத்திர நோக்காம். ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (குறள். 702) எனும் பொருளுரையில், கூறாது நோக்கிக் குறிப்பறிதலின் அருமை கூறப்படுதலறிக. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள். 1097) என்பதில் தலைவியின் செறுநோக்கின் அன்புண்மையைக் கண்ணினும், சிறு சொல்லின் அன்புண்மையைச் செவியினுமாகத் தலைவன் தன்னுண்ணுணர்வால் திண்ணிதினுணர்தல் காண்க. இனி, கண்ணிற் சொலிச் செவியானோக்கும் என வரும் பாட்டான அகத்திற்போலப் புறத்திலும் மன்னர் உள்ளுணர்வு களைக் கண்ணினும், செவியினும் நுண்ணிதின் உணருமாறுங் கருதுக. (27) ஆய்வுரை இது மேற்கூறிய மெய்ப்பாட்டிற்கெல்லாம் ஓர் புறனடை யுணர்த்துகின்றது. (இ--ள்.) இவ்வியலிற் கூறப்பட்ட நல்லநயத்தினையுடைய மெய்ப்பாடுகளின் நுட்பமனைத்தும், கண்ணாலும் செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கல்லது ஏனையோர்க்கு ஆராய்ந்துணர்தற்கு அரியது எ---று. மனத்தளவில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணாலும் செவியாலும் அறிந்துகொள்ளுதல் எவ்வாறெனின், ஒருவரது மனக்குறிப்பின் வழி அவரது முகம் வேறுபடுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலால் அவவேறுபாடுகளுக்குக் காரணமாயமைந்த அவரது உள்ளக்குறிப்புக்களை முறையே கண்ணினாலும் செவியினாலும் உணர்ந்து கொள்ளுதல் அவ்வத் துறைபோயினாரது உணர்வாற்றலாகும் என இச்சூத்திரத்தால் மெய்ப்பாடுகளையுணர்தற்குரிய கருவியினைப் புலப்படுத்தியதிறம் உணர்ந்து போற்றத்தகுவதாகும். (27) நூற்பா முதற்குறிப்பு அகர வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அணங்கே விலங்கே -- 60 அல்குல் தைவரல் -- 115 அவையும் உளவே -- 149 அன்ன பிறவும் -- 139 ஆங்கவை ஒருபால் -- 76 இழிவே இழவே -- 39 இன்பத்தை வெறுத்தல் -- 152 உறுப்பறை குடிகோள் -- 67 எள்ளல் இளமை -- 31 கண்ணினுஞ்செவியினுந்-- 219 கல்வி தறுகண் -- 64 கூழை விரித்தல் -- 109 செல்வம் புலனே -- 71 தெய்வம் அஞ்சல் -- 189 தெரிந்துடம் படுதல் -- 128 நகையே அழுகை -- 24 நாலிரண் டாகும் -- 20,22 நிம்பிரி கொடுமை -- 212 பண்ணைத் தோன்றிய -- 12 பாராட் டெடுத்தல் -- 122 பிறப்பே குடிமை -- 205 புகுமுகம் புரிதல் -- 100 புதுமை பெருமை -- 51 புறஞ்செயச் சிதைதல் -- 134 முட்டுவயிற் கழறல் -- 177 மூப்பே பிணியே -- 45 வினையுயிர் -- 145 தொல்காப்பிய நூற்பா நூற்பா உரைகள் ப. நூற்பா எண் 1. பண்ணைத் தோன்றிய... 12 1 2. நாலிரண் டாகும்... 20,22 2 3. நகையே அழுகை ...24 3 4.எள்ளல்இளமை... 31 4 5. இழிவேஇழவே...39 5 6. மூப்பே பிணியே ... 45 6 7. புதுமைபெருமை... 51 7 8.அணங்கேவிலங்கே...60 8 9. கல்வி தறுகண்... 64 9 10. உறுப்பறை குடிகோள் ... 67 10 11. செல்வம்புலனே... 71 11 12.ஆங்கவைஒருபால்... 76 12 13. புகுமுகம் புரிதல்... 100 13 14. கூழை விரித்தல் ... 109 14 15. அல்குல்தைவரல்... 115 15 16.பாராட்டெடுத்தல்... 122 16 17. தெரிந்துடம்படுதல்...128 17 18. புறஞ்செயச்சிதைதல்...134 18 19. அன்னபிறவும்...139 19 20. வினையுயிர் மெலிவிடத்...145 20 21.அவையும்உளவே... 149 21 22. இன்பத்தைவெறுத்தல்... 152 22 23. முட்டுவயிற்கழறல்...177 23 24. தெய்வம்அஞ்சல்... 189 24 25. பிறப்பே குடிமை... 205 25 26. நிம்பிரி கொடுமை... 212 26 27. கண்ணினுஞ் செவியினுந்...219 27 1. பிறர் என்றது நாடகத்தமிழ் நூலாசிரியரை. 2. பண்ணை -- விளையாட்டு. ஈண்டு இச்சொல் ஆகுபெயராய் விளையாட்டினையுடைய மக்கள் கூட்டத்தினையுணர்த்திநின்றது என்பார். பண்ணையுடையது பண்ணை யென்றாயிற்று என்றார். ஆயம் -- மக்கள் தொகுதி, எண்ணான்கு -- முப்பத்திரண்டு. அவையாவன நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டிற்கும் ஏதுவாகப் பின்னர் எள்ளல் முதல் விளையாட்டீறாக நான்கு நான்கு தொகுதிகளாக எண்வகைப்படப் பகுத்துரைக்கப்படுவன. நானான்கு -- பதினாறு. எள்ளல் முதல் விளையாட்டீறாகவுள்ள முப்பத்திரண்டு பொருள்களையுங்குறித்து அதன் புறத்து நிகழ்வன என்றது, நகைமுதல் உவகையீறாகப் பின்னர்க் கூறப்படும் எண்வகை மெய்ப்பாடுகளுக்குரிய சுவைகள் எட்டும், அவைபற்றிய மனக் குறிப்புக்கள் எட்டும் ஆகிய பதினாறனையும். 3. வடநூலார் நகை முதலிய சுவைகளோடு சமநிலை யென்னும் நடுவுநிலையுங் கூட்டிச் சுவை ஒன்பதென்பர். அவற்றுட் சமநிலையென்பது விருப்பு வெறுப்பின்றி உலகியலிற்பற்றற்றவ ராய் வாழுஞ் சான்றோர்க்கேயுரிய தொன்றாகலானும் எள்ளல் முதலிய பொருள்வகைகளால் விகாரமுற்றுத் தோன்றுவனவாகிய நகை முதலியனபோல் நால்வகைப் படுதலின்றித் தன்னியல்பில் ஒன்றாகத் தோன்றுவதாதலானும் அதனை ஆங்கவை யொருபாலாக எனப் பின்வரும் சூத்திரத்தில் நடுவுநிலை என்ற பெயரால் தனிநிலை மெய்ப்பாடுகளுளொன்றாகத் தொல்காப்பியனார் குறித்துள்ளார். மத்திமம் --நடுவுநிலை. 4. இத்தொடர் செத்தியோர்க்கும் சாந்துபடுப்போர்க்கும் என்றிருத்தல் வேண்டும். 5. இருவகை நிலம் என்பன சுவைப்பொருளும் சுவைத்தொரும் காணப்படு- பொருளாற் காண்போர் அகத்தின்கண் உளதாகும் மனநிலை சுவையெனப்படும் என்பதாம். மெய்ப்பாடு நாடகத்தமிழில் விரித்துரைக்கத் தகுவதாயினும், நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற செய்யுள் செய்யுங்கால் சுவையின் வெளிப்பாடாகிய மெய்ப்பாடமையச் செய்யவேண்டுதலானும், செய்யுளுக்குரிய உறுப்புக்கள் முப்பத்துநான்கனுள் மெய்ப்பாடும் ஒன்றாகலானும், உவமம் போன்று இதுவும் பொருள்புலப்பாட்டுக்கு உரிய தாகலானும் இயற்றமிழிலக்கணமாகிய இந்நூலினும் விரிதுரைக்கப்பெறுவதாயிற்று. 6. சத்துவம்--மெய்ப்பாடு, சார்பொருள் என்ற உள்ளத்துச் சுவையின் வெளிப்பாடாக உடம்பினைச் சார்ந்து தோன்றும் மெய்ப்பாடுகளை. 7. பேயினையோ புலியினையோ கண்டானொருவன். 1. மெய்ப்பாடு எனினும் பொருட்பாடு எனினும் பொருள் ஒன்றே. மெய்-பொருள். பாடு-படுதல்; தோன்றுதல். 2. பொருளதிகாரத்தில் முன்னுள்ள ஐந்தியல்களிற் கூறப்படும் ஒழுகலாற்றிற்கும், காட்டலாகாப் பொருள என மேற்கூறியவற்றிற்கும் பொதுவாகிய மனக்குறிப்பினைப் புலப்படுத்துவன மெய்ப்பாடுகளாதலின், இவற்றை வேறுபிரித்து ஓரினப் பொருளாக்கியுணர்த்தும் முறையில் அமைந்தது இம்மெய்ப்பாட்டியலாதலின், இது முன்னர்க் கூறப்பட்ட அகம்புறம் பற்றிய எல்லாவியல்களோடும் தொடர்புடைய தாயிற்று. 3. ஈண்டுப் பிறர் என்றது நாடகத் தமிழ் நூலோரை. 4. இங்கு முதனூல் என்றது, முத்தமிழ்க்கும் இலக்கணங்கூறும் அகத்தியமாகிய தொன்னூலினை. இவ்வுண்மை, பிண்டத்தினையும் அடக்கிநிற்பது வேறுபிண்டமுளதென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின் (தொல். செய்யுள்-172) எனவரும் பேராசிரியர் உரைப்பகுதியால் இனிது விளங்கும். 5. உய்ப்போன் செய்தது காண்போர்க்கெய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந்தோரே என்றார் செயிற்றியனார். இங்குக் குறிக்கப்பட்ட உய்ப்போன் என்பதற்கு அச்சம் முதலிய சுவைபினை நுகர்வோன் எனப் பொருள்கொண்டு, அச்சம் முதலிய சுவையினை நுகர்வோன்பால் நிகழும் அச்ச முதலாயின அவனது மெய்க்கண் தோன்றும் வியர்த்தல்நடுக்கம் முதலிய சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடு எனக் கொள்ளப்படும் என்றார் இளம்பூரணர். இனி, உய்ப்போன் என்றது, நாடக அரங்கில் நின்று நடிக்கும் கூத்தனை எனக் கொண்டு, இங்ஙனம் நாடக அரங்கிற்புகுந்து நடிக்கும் கூத்தனும் அந்நடிப்பினை அவைக்கண் இருந்து காண்போரும் ஆகிய இருதிறத்தாருமே சுவை நிகழ்ச்சிக்குரிய இருவகைநிலம் எனக் கூறுவாருமுளர். இவர் கூற்றினை மறுத்துரைக்கும் முறையிலமைந்ததே பின்வரும் பேராசிரியர் உரைப்பகுதியாகும். 6. குறிப்பு உள்ள நிகழ்ச்சியும், சத்துவம் உடம்பின் வேறுபாடும் என்பராகலின் என நிரல் நிறையாகக் கொள்க. 7. அதுவன்றே இச்சூத்திரம் பிறன்கோட்கூறல் என்னும் உத்திவகையாற் கூறியது? அது தானே மரபாயிற்றென்பது என இவ்வுரைத்தொடரை இரு தொடராக்கிப் பொருள் கொள்க. 1. அகத்திணை புறத்திணை யொழுகலாறுகளில் மக்களது உள்ளுணர்வுகளால் இயல்பாக நிகழும் மெய்ப்பாடுகளையே செய்யுளுக்குரிய உறுப்பாகக்கொண்டு விளக்குவது இயற்றமிழ் இலக்கணநூலாகிய தொல்காப்பியம் ஆயினும் அதன்கண் இயற்றமிழொடு தொடர்புடைய இசைத்தமிழ் நாடகத்தமிழ் இலக்கணங்கள் சிலவும் பிறன் கோட்கூறல் என்னும் உத்திவகையாற் கூறப்படுதலுண்டு இந்நுட்பம், அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். எழுத்து. நூன்மரபு-3) எனவும், நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறிவழக்கம் (தொல். பொருள். அகத்.) எனவும் வரும் சூத்திரங்களால் இனிது புலனாம். இய்ற்றமிழில் மெய்ப்பாட்டுக்குரிய இலக்கணம் கூறக்கருதிய தொல்காப்பியனார், மெய்ப்பாடு பற்றி நாடகத்தமிழ் நூலார் கூறுவனவற்றைப் பிறன்கோப்கூறல் என்னும் உத்திபற்றி மெய்ப்பாட்டியலின் முதலிரண்டு சூத்திரங்களிற் கூறினார் என்பது இளம்பூரணர், பேராசிரியர் ஆகிய பழைய உரையாசிரியர் கருத்தாகும். இளம்பூரணர் நாடகத்தமிழ்நூலாகிய செயிற்றியச் சூத்திரங்களை மேற்கோளாகக் காட்டுதலானும், பேராசிரியர் அது முதனூலை (அகத்தியத்தை) நோக்கிக்கூறியவாறுபோலும் என நாடகத் தமிழ் நூலையே சுட்டுதலானும், உரையாசிரியர் இருவரும் பிறன்கோட்கூறல் என்னும் உத்திபற்றிக் குறிப்பிடும் நாடகநூல் பற்றிய மெய்ப்படு நாடகத் தமிழ்நூலிற் குறித்த மெய்ப்பாட்டினையன்றி வடநூலிற்குறித்த மெய்ப்பாட்டினையன்றென்பது தெளிவு. எனவே பிற்கால உரைகாரர் தொல்காப்பியர்க்குக் காலத்தாற் பிந்திய வட ஆரியக்கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியர் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ்நூற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு சொல் வல்லுரை வகுத்து மயங்க வைத்தார் என நாவலர் பாரதியார் கூறுங் கூற்று உண்மைக்கு மாறானதாகவே தோன்றுகின்றது. 1. பண்ணை என்பதற்குத் தொகுதி எனவும் நானான்கு என்பதற்கு நந்நான்கு எனவும் பொருள்கொள்வர் நாவலர் பாரதியார். 2. இங்ஙனம் கொள்பவர் இளம்பூரணர். 3. இப்பாகுபாடு செயிற்றியம் முதலிய பழைய நாடகத்தமிழ்நூலிற் கூறப்படுதலால் இவையெல்லாம் ஆரியக்கூத்து நூலார்கோள்கள் என ஒதுக்கி விடுதல் பொருந்தாது. 4. நானான்கு என்னும் இத்தொடர், நாலீரைம்பது (தொல்--செய்யுள்--155), நாலைந்து (தொல்--செய்--204), என்றாற்போன்று பெருக்கல்வாய்பாட்டால் வந்ததேயாகும். இதனை நந்நான்கு என்றாற்போன்று அடுக்குத் தொடராகக் கொள்ளுதற்கு நூல்களில் ஆட்சியில்லை. 1. ஈண்டுக் குறிப்புப் பதினெட்டு என்றது. ஒன்பான் சுவையும் அவை பற்றிய ஒன்பது குறிப்பும் ஆகப் பதினெட்டினையும் சுவையெட்டுமாக்குதல் என்றது, மேற்குறித்த சுவையினையும் சுவைபற்றிய சுவைக்குறிப்பினையும் ஒன்றாக்கி ஒன்பான் சுவையுள் நடுவு நிலைமைய நீக்கி நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டெனக் கொள்ளுதல். 1. மேல் முப்பத்திரண்டாக விரித்தும் பதினாறாக வகுத்தும் கூறிய மெய்ப்பாடுகளை இந்நூற்பாவினால் எட்டு எனத்தொகுத்துரைக்கின்றாராதலின் இங்ஙனம் கருத்துரை வரையப்பெற்றது. 2. நாடகமகளிர் ஆடலும் பாடலுங்கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளை-யாட்டினுள் வெகுளிக்கு இடமின்மையின் நாடக நூலார், வீரம், அச்சம், வியப்பு, இழிபு, காமம், அவலம், நகை, நடுவுநிலை என்னும் எட்டினையுமே பெரும்பான்மையாகத் தோன்றும் மெய்ப்பாடுகளாகக் கொண்டு இவ் எட்டினோடு உருத்திரம் எனப்படும் வெகுளியையும் சேர்த்து சுவை ஒன்பதெனக் கொண்டனர் என்பது, உருத்திரந் தன்னோ டொன்ப தாகும் எனவரும் நாடகத்தமிழ்நூலாகிய செயிற்றியச் சூத்திரத்தால் உய்த்துணரப்படும். எனவே மெய்ப்பாட்டியலின் முதற்கண் உள்ள இவ்விரண்டு சூத்திரங்களும் நாடகத் தமிழ்நூலார் கொண்ட வண்ணம் மெய்ப்பாடுகளின் விரியும் வகையும் தொகையும் கூறும் முறையில் அமைந்திருத்தலால் பிறன்கோட் கூறல் என்னும் உத்தியின் பாற்படும் எனப் பேராசிரியரும் இளம்பூரணரும் கொள்வாராயினர். 3. சுவைக்குக் காரணமாகிய பொருளினை நாடக அரங்கினுள் நிறுத்தி, அது கண்டு குறிப்புஞ்சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிற்கொணர்ந்து, அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளவர்கள் உணர்வாராக வருகின்ற நூன்முறைமை யாவும் நாடக வழக்கிற்கேயுரிய பகுதியென்பதும், பொருளதிகாரத்துக் கூறப்படும் வழக்கியலாகவே இவை அமையும் என்பதும் புலப்படுத்தல் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி இந்நூலில் தொல்காப்பியர் எடுத்துக்காட்டியதன் பயன் என்றவாறு. 4. நாடகத் தமிழ்நூலின் வழிநூல் செய்த செயிற்றியனார், மெய்ப்பாட்டின்வகையாகிய சுவைக்கப்படும் பொருள் பொறியுணர்வு, மனக்குறிப்பு, சத்துவம் என்னும் நான்கனுள் சுவையுணர்வும் சுவைக்கப்படும்பொருளும் ஆகிய இரண்டையும் ஒன்றென வடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்கி இலக்கணங் கூறியுள்ளார். 1. நாலிரண்டு என்பதும் பெருக்கல் வாய்பாட்டால் வந்ததே. இதனை இரட்டுற மொழிதலால் நாலும் இரண்டும் என உம்மைத்தொகையாகக் கோடல் அத்துணைப் பொருத்தமின்று. 2. இனி, இவ்வியல் முதற்சூத்திரத்துப் பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள் என்பன, எள்ளல் முதல் நந்நான்கு பொருளவாய் நகைமுதலாகக்கூறப்படும் எண்வகை மெய்ப்பாடுகள் எனவும், இரண்டாஞ்சூத்திரத்து நாலிரண்டாகும் என்பன உடைமை முதல் எவ்வெட்டாக நால்வகைப்படப் பிரித்துக் கூறப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகள் எனவும், நாலிரண்டு என்பதனை இனி இரட்டுறமொழிதலாகக் கொண்டு நாலிரண்டாவன புகுமுகம் புரிதல் முதலாகவுள்ள அகத்திணைக்குரிய மெய்ப்பாட்டுத் தொகுதிகள் ஆறு எனவும் விளக்கந்தருவர் நாவலர் பாரதியார். இவ்வுரை பேராசிரியர் உரையில் முன்னரே எடுத்துரைக்கப் பட்டு மறுக்கப்பட்டமையாலும் நாவலர் கருத்துப்படி மெய்ப்பாட்டியலிலுள்ள இவ்விரு சூத்திரங்களிலும் உள்ள எண்ணான்கு நாலிரண்டு என்னும் தொகைச்சொற்கள் இவ்வியலிற்பின்னர்க் கூறப்படும் மெய்ப்பாடுகளையே குறித்தனவாயின, அவற்றையே வெறுந்தொகையளவில் தொல்காப்பியனார் இங்குக் கூறுவதனாற் பயனின்மையானும் அங்ஙனம் கூறின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கிடனாமாதலானும், நாடகநூலார் கூறும் முப்பத்திரண்டும் பதினாறாய் எட்டாய் அடங்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்தாகலானும் நாவலர் பாரதியார் உரை தொல்காப்பியனார் கருத்தொடு முரண்படுதல் காண்க. அப்பா லெட்டே என்பது பேராசிரியர் உயிற்கண்ட பாடம். 1. நகை முதலிய சுவைபற்றிய குறிப்புக்கள் சுவைத்தோர் மெய்யின்கண் வெளிப்பட்டுத் தோன்றுதலின் மெய்ப்பாடெனப்பட்டன. 2. நாடக அரங்கிற் புகுந்து நடிப்போன் தனது உள்ளத்துணர்வுகளைத் தன்மெய்க்கண் வெளிப்பட்டுத் தோன்றும் விறலால் காண்போர் மனங்கொளச் செய்தல் மெய்ப்பாடு எனப்படும் என்பது நாடக நூலார் கூறும் இலக்கணமாம் என்பது மேற்காட்டிய செயிற்றியச் சூத்திரத்தால் இனிது புலனாம். உய்ப்போன் என்றது, நடிக்குந்திறத்தால் தனது உள்ளக் கருத்தைக் காண்போருள்ளத்திற் செலுத்துவோனாகிய பொருநனை, செய்தது என்றது, தனது உள்ளக்குறிப்புப் புறத்தார்க்குப் புலனாகுமாறு தன் மெய்யின்கண் விறலாகத் தோற்றுவித்தல். காண்போர்க்கு எய்துதலாவது அவனது சுவையுணர்வு காண்போருள்ளத்திற்குப் புலனாக மெய்ப்பாட்டின்வழியே சென்று சார்தல். 3. உய்த்துணர்வின்றி (தொல். செய். 194) என வரும் இச்சூத்திரம் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகிய மெய்ப்பாட்டுக்கு இயற்றமிழ் நூலார் கூறும் இலக்கணமாகும். 1. நகைச்சுவைக்கு இளமை, பேதமை, மடன் எனக் கூறப்படும் பிறவும் காரண மாயினும் எள்ளல் பற்றித் தோன்றும் நகை பெருவரவிற்றாகலின் நகையென்பது இகழ்ச்சியிற் பிறப்பது என்றார் இளம்பூரணர். இவ்வாறே அழுகை முதலிய ஏனைச்சுவைகட்கும் அவலம் முதலியன காரணமாதல் பெருவரவினவாதல் பற்றி எனக்கொள்க. 2. தானே அவலித்தலாவது, தான் துன்பமுற்றுஅழுதல். இது அழுகையெனப்படும். பிறர் அவலங்கண்டு அவலித்தலாவது பிறருற்ற துன்பத்தினைக் கண்டு உள்ளப் இரங்கித்தான் அழுதல். இது கருணையெனப்படும். இவ்வாறு இயற்றமிழ் கூறும் எண்வகைச் சுவைகளுள் அழுகையென்பதொன்றே அழுகையெனவும் கருணை எனவும் இரண்டாய்ச் சுவை ஒன்பதாகலும் உடையஎன்பதாம். 1. என்னும். சிறிதும். 2. இயைபில்லனவல்ல -- சம்பந்தம் இல்லாதன அல்ல; சம்பந்தம் உடையனவே, 3. அவ்வீற்றுக்கண் -- (மெய்ப்பாடுகளாகிய) அவற்றின் இறுதியில். 4. நாடக நூலுட்போல மற்றிவ்வெட்டனோடுஞ் சமநிலை கூடி ஒன்பதென்னாமோ வெனின் என இயைத்துப் பொருள் கொள்க. 5. சமநிலை என்னும் அதற்கு விருப்பு வெறுப்பு என்னும் மனவேற்றுமையும் இல்லையாதலின் அதனை நகை முதலியவற்றுடன் சேர்த்து எண்ணாது விட்டார் தொல்காப்பியனார். 6. சமநிலைக்கு மனத்திரிபு உளதாயின் அது முன்னர்க் கூறிய நகைமுதலிய எட்டின்பாற் பட்டடங்குமாதலின் அதனை உலக வழக்கிற்குரிய எண்வகை மெய்ப்பாட்டினோடும் சேர்த்துக்கூறாராயினர் தொல்காப்பியனார். 1. ஆரிய நூலார் கூறும் நவரசங்களுக்கும் தமிழ் நூலார் கூறும் நகை முதலிய சுவைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை நாவலர் பாரதியார் புலப்படுத்தும் முறை கூர்ந்துணரத்தகுவதாகும். 1. நகைச்சுவைக்குரிய பொருளைப் புறத்தேகண்டு அதன்வழியே தோன்றும் முறுவல் நகையுடன் அகத்தே மனமலர்ச்சியாகிய மகிழ்ச்சிதோன்றுமாறு வருவது நகை யென்னும் மெய்ப்பாடு என்பதாம். 1. நகைபடுபொருள்கள் முடவர் செல்லுஞ் செலவுமுதல் ஊமர் செவிடர் ஈறாகச் செயிற்றியத்துட் பலவாறாக விரித்துரைக்கப்படினும் அவையெல்லாம் தொல்காப்பியனார் வகைப்படுத்துணர்த்திய எள்ளல், இளமை, பேதமை மடன் என்னும் இந்நான்களுள் அடங்குமாற்றினை விளக்குவது இவ்வுரைப்பகுதியாகும். 1. பொருளியல்பினைத் தேர்ந்துணரமாட்டாமை மடன் எனவும், சொல்லியதனைத் தெளிந்துணரமாட்டாமை பேதைமை எனவும், இவற்றிடையேயமைந்த வேறுபாடு தெரிந்துணர்க என்பதாம். 2. இங்கு நகைச் சுவைக்குக் காரணமாகிய எள்ளல், இளமை முதலிய பொருள்களின் நிலைக்களம் பிறர்கண் என்றோ தன்கண்என்றோ கூறப்படாது பொதுப்பட நின்றமையால் இவற்றுக்குப் பிறர்கண்ணும் தன்கண்ணும் என இரண்டிடமும் நிலைக்களமாதல் கொள்க என்பதாம். 3. எனவும் - ஏனையவும். 1. எள்ளல் இளமை பேதைமை மடன் என்னும் இந்நான்கும் நகை என்னும் சுவைக்குரிய பொருளாகி விறல், குறிப்பு, சுவை என்னும் இம்மூன்றற்கும் காரணமாய் முதற்கண் உள்ளனவாதலால் அவற்றின் காரியமாகிய விறல் குறிப்பு சுவை என்னும் மூன்றனையும் காரணமாகிய அவற்றுள் அடக்கிப் பொருட்பகுதியான இவற்றைத் தொகுத்துக்கூறும் நிலையில் அமைந்தது இச்சூத்திரம் என்பதாம். 2. ஒன்று இரண்டாதலாவது, தன்கண்தோன்றியது, பிறன்கண் தோன்றியது என இவ்வாறு எள்ளல் முதலியன ஒவ்வொன்றும் இரண்டிரண்டாக வகைப்பட்டுத் தோன்றுதல். 3. கொளுத்தக்கொண்டு-பிறர் அறிவிக்க அறிந்து. கொண்டது விடாமை -தான் உணர்ந்துகொண்டதனைப் பிறர்க்குப் புலப்பட வெளிப்படுத்தாமை. 4. அது என்றது வெகுளி பொருளாகத் தோன்றும் நகையினை. 1. உள்ளப்பட்ட நகை - எள்ளல் முதலிய உள்ளக் குறிப்புக்காரணமாகத் தோன்றியநகை. உள்ளத்தொடு பிறவாத நகையாவது, மேற்குறித்த எள்ளல் முதலியன காரணமாதலின்றிப் புறத்தே தோன்றும் முறுவலிப்பு. 2. எள்ளல் நகை இழிவுகுறிப்பதன்று, விளையாட்டுப்பற்றியது என்பது கருத்து, 1. இஃது இளம்பூரணர் உரைமேற்கோளாகும். 0 இளிவே என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம். 1. உயிரையாவது பொருளையாவது இழத்தல். 2. இழிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் இவை காரணமாக அழுகை பிறக்கும் என்பதாம். 3. அழுகைக்குக் காரணமாகிய இளிவு முதலாயின தன்கண்ணும் பிறர்கண்ணும் என ஈரிடமும் நிலைக்களமாகக்கொண்டு தோன்றும் என்பதாம். 1. கருணையதுபெயரே அவலம் என்றாராயினும் பிறர்கண் தோன்றின இழிவு-முதலாயின பற்றிய அழுகையினைக் கருணை எனவும் தன்கண் தோன்றின இழிவு முதலாயினபற்றிய அழுகையினை அவலம் எனவும் வழங்குதல் மரபு. 2. நிலைமையிழந்து நீங்கு துணையுடைமை முதலாக அலைக்கண்மாறா அழுகு-ரலரவம் ஈறாகச் செயிற்றியத்துள் விரித்துரைக்கப்பட்டனயாவும் இளிவு இழவு அசைவு வறுமை என்னும் இந்நான்கனுள் அடங்கும் என்பதாம். நிலைமையிழந்து நீங்கு துணையுடைமை, தலைமை சான்ற தனினிலையழிதல், சாப மெய்தல், முடியுடைச் சென்னி பிறரடியுறப்பணிதல் என்பன இழிவின். கண்ணும், களிறூர்ந்த சேவடி தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை இழிவின்கண்ணும், சிறையணி துயரமொடு செய்கையற்றிருத்தல், காவலின்றிக் கலக்கமொடுதிரிதல், கடகந் தொட்டகைகயிற் றொடுகோடல், நிறங்கிளரகிலம் நீறொடு சேர்த்தல், கயவர் மனந்தபப் படைத்தல், கொலைக்களம், கோட்டம், கொன்முனைக்கவற்சி, அலைக்கண்மாறா அழுகுரலரவம் என்பன அசைவின் கண்ணும், குறைபடுபொருளொடு குறைபாடெய்தல், சார்பிழைத்துக் கலங்கல் என்பன வறுமைக்கண்ணும் அடங்குமாறு அறிந்து அடக்கிக்கொள்க. 1. எனவே பொருளில்லாமை வறுமையன்று என்பதாம். 1. என்றமையின் - எனத் தோழி கூறினமையின். 2. பிறன்கண் தோன்றிய இளிவரல் முதலாயினபொருளாகத் தோன்றும் அவலச் சுவையாகிய இது கருணையெனவும் வழங்கப்படும் என்பதாம். 3. பலிக்கொடை - வழிபாட்டிற்கொடுக்கப்படும் படைப்புப் பொருள். 4. படர் கூர்தல் துன்பமிகப்பெறுதல். 6. மனைவியிறந்த தபுதாரநிலையினனொருவன் தன் உணவின்பொருட்டுத் தாளிக்கீரையைக் கொய்கின்றான் கண்டோர் இரங்கிக் கூறினமையின்இது பிறன்கண் தோன்றிய அசைவுபற்றிய அழுகையாயிற்று. 7. தாயின் நகிலைச்சுவைக்கும் பிள்ளை அதன்கண் பாலில்லாமையினால் அழுதல் தன்கண் தோன்றும் வறுமைபற்றிய அவலமாகும். அவ்வாறு அழுகின்றதன் குழந்தையைக் கண்டு அழுதல் பிறன்கண் தோன்றிய வறுமைபற்றிய அவலமாகும். 8. போர்க்களத்தில் வீரனது உயிர்கொளவந்த கூற்றுவனும் நாணும்படி முதுகுடிப் பிறந்த மகளிர்கசிந்தழுதமை இழவுபற்றிய அழுகையாகாது; உவகைக். கலுழ்ச்சியெனப்படும் என்பதாம். 1. இளிவு என்பது. பிறரால் இகழப்பட்டு எளியராந்தன்மை எனவும், இஃது அழுகைக்குரிய பொருள் வகை நான்கனுள் ஒன்றாமெனவும், அடுத்துக்கூறப்படும் இளிவரல் என்பது இழிப்புச் சுவைபற்றிய மெய்ப்பாடெனவும் பகுத்துணர்ந்து கொள்க. 1. இளிவரல் என்பது இழிப்புச்சுவை. மென்மை என்பதற்கு நல்குரவு (வறுமை) எனப்பொருள் கொண்டார் இளம் பூரணர். மேலைச்சூத்திரத்து அழுகைச் சுவைக்குக் காரணமாகிய நான்கு பொருள்களுள் வறுமையும் ஒன்றாகக் குறிக்கப்பெற்றதனால் அதனையே மென்மை என இழிப்புச் சுவைக்குங் காரணமாகத் தொல்காப்பியனார் இங்குக் கூறினார் எனக் கொள்ளுதல் பொருந்தாது. எனவே இச்சூத்திரத்திலுள்ள மென்மை என்பதற்கு உள்ளத்திண்மையும் உடல் வன்மையுமின்றி எல்லார்க்கும் எளியராந்தன்மை எனப்பொருள் உரைத்தலே பொருத்தமுடையதாகும். 1. இளமைக்காலத்துச் செய்தன இக்காலத்துச்செய்யமாட்டாது இளிவந்தனம் என்றமையின் இது தன்கண் தோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது. 2. தலைவனை நோக்கித் தலைவி கூறுவதாக அமைந்த இக்கூற்றில் தன்கண் தோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் வந்தது. 1. இளையவீரன் தன்னினும் முதுமையுடைய வீரனை நோக்கிக் கூறுவதாக அமைந்த இக் கூற்றில் பிறன்கண் தோன்றிய முதுமைபொருளாக இளிவரல் வந்தது. 2. இளிவந்து மழைக்குக் கூறினமையின் என்றிருத்தல் வேண்டும். 3. தலைவன் தனது நெஞ்சினைத் தன்னின் வேறாக நிறுத்தி அதனை நோக்கிக் கூறினமையின் இது பிறன்கண் தோன்றிய பிணிபொருளாகத் தோன்றிய இளிவரலாகும். 4. யான் தன் அறிவல் தான் அறியலளே எனவரும் இக்கூற்று, தோழியை இரந்து பின்னின்ற தலைவன் கூற்றாதலின் தன்கண் தோன்றிய வருத்தம் பற்றி வந்த இளிவரலாகும். வருத்தம்--முயற்சி. 1. தலைவன் நம்பால் எளியனாய் ஒழுகுதல் நமக்கு இளிவரலாம் எனத் தோழி தலைவிக்குக் கூறி அவளைக் குறைநயப்பித்தமையின் இது பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றி வந்த இளிவரலாகும். 2. மெலியார் தம்மினும் வலியார்பால் பணிந்து ஏவல் கேட்டல் தன்கண்தோன்றிய மென்மை பற்றிய இளிவரல். வலியார் தம்மினும் மெலியவர்பால் தம்மை உயர்த்திக்கூறுதல் பிறன்கண்தோன்றிய மென்மைபற்றிய இளிவரல். இவ்விருவகையிளிவரற்கும் இடந்தராது உயர்ந்தோன் நம்பிநெடுஞ்செழியன் என்பதனை யுணர்த்துவது மேற்குறித்த புறநானூற்றுத் தொடராகும். 3. இங்கு எடுத்துக்காட்டிய இளிவரலாகிய இது, தனக்குக் காரணமாகிய மூப்பு பிணிவருத்தம் மென்மை என்பன தன்கண்ணும் பிறர்கண்ணும் என ஈரிடத்தும் இல்லாத நிலையில் தன்பாலுள்ள வீரம் ஒன்றே பற்றித் தன்கண் தோன்றுதலின் இதனை இலேசினாற் கொண்டார் பேராசிரியர். 1. இளிவரல் என்பது, மானம் குன்றவரும் தாழ்வு என்பது இளிவரின் வாழாத மானமுடையார் எனவும் இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வரும் திருக்குறள் தொடர்களாற் புலனாம். இதுகொண்டு இச்சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும் என விளக்கந்தருவர் நாவலர் பாரதியார். 1. மதிமை-அறிவின் தன்மை. சாலா-நிரம்பாத. மருட்கை-வியப்பு. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் பொருள்களின் தன்மைகளை உள்ளவாறுணரும் அறிவு நலஞ்சான்ற பெருமக்கள் புதுமைபெருமை முதலாயின அவ்வப்பொருள்களின் பெற்றிமை யென்றுணர்வதன்றி அவற்றைக் கண்டு வியப்படையமாட்டார்கள் என்பதாம். 2. ஒன்றின் பரிணாமம் என்றது, ஒருபொருளின் பெருவளர்ச்சியினை. 1. கழியப்பெரியவாயின உலகில் இயல்பாகக் காணப்படும் தத்தம் அளவின்மிக்கு மிகவும் பெரியனவாகத் தோன்றுவன. 2. இறப்பச் சிறியன-தமக்குரிய அளவிற் சுருங்கிமிகவும் சிறியனவாகத் தோன்றுவன. 3. மதிமை--அறிவின்தன்மை. சாலாமை--நிரம்பாமை. உலகத்துள் இயல்பாகக் காணப்படும் அளவினன்றி எங்குமில்லாப் புதுமையுடையனவாகவும் மிகமிகப் பெரியனவாகவும் மிகமிகச் சிறியனவாகவும் ஒன்றுதிரிந்து ஒன்றாய்த் தோன்றுவனவுமாகிய பொருள்கள் காண்போரது அறிவினை வேறுபடுத்தி வியப்பினை விளைத்தலின் மதிமை சாலாமருட்கை என அடைபுணர்த்தோதினார். மதிமை சாலாமருட்கை எனவே மதிமை சான்றோருள்ளத்து இவைபற்றி மருட்கை தோன்றுதற்கு இடனில்லையென்பதாம். 1. தலைவி. தன்பால் தலைமகன் கொண்டுள்ள அன்பின் திறத்தினை இங்ஙனம் வியந்துரைத்தாளெனின் இது, பிறன்கண் தோன்றிய பெருமைபற்றிய விளப்பாகக் கொள்ளப்படும் என்பதாம். 1. நரியும் கண்டு வெருவியஞ்சும் தோற்றத்தினராய் உடல்நலம் குன்றியிருந் தமையால் நரிவெரூஉத்தலையார் என்றழைக்கப்பெற்ற புலவர்பெருமான் சேரமான் கருவூரேறிய வொள்வாட்கோப்பெருஞ் சேரலிரும்பொறையைக் கண்டகாட்சியின் சிறப்பாற் பிணி நீங்கித் தமது பழையவுடம்பின் பொலிவினைப் பெற்றுப் பாடியது புறநானூற்றின் ஐந்தாம் பாடலாதலின் இது தன்கண் தோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கைச் சுவைக்கு எடுத்துக்காட்டப்பெற்றது. 2. இனி, மதிமை சாலாமருட்கையென்ற தனானே என இவ்வுரைத்தொடரமை திருத்தல் பொருத்தமாகும். 3. சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தலாவது, வடிவு வன்மை முதலியவற்றாற் சிறியதொருபொருள் அப்பண்புகளாற் பெரியபொருள் செய்யும் அரிய பெருஞ்செயலை நிகழ்த்துதல். பாண்டியன் நெடுஞ்செழியன் தனது இளம்பருவத்திலேயே தலையானங் கானத்துப்போர்க்களத்திலே தானொருவனாகவே நின்று வேந்தர் எழுவரொடுபொருது வென்று மேம்பட்ட செய்தியினை இடைக்குன்றூர் கிழார் வியந்து பாடியது 72--ஆம் புறப்பாடலாதலின், சிறிய பொருள் பெரிய தொழிலைச் செய்தமை பற்றித் தோன்றிய வியப்புக்கு எடுத்துக்காட்டாயிற்று. 1. பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தலாவது, அரிய செயல்களை நிகழ்த்துதற்குரிய பெருமையுடைய பொருள், சிறியோர் செய்தற்குரிய எளிய செயலைச் செய்தல். அறிவுதிரு ஆற்றல் முதலியவற்றாற் பெருமைவாய்ந்த தலைவன் தனது தலைமைக்கு மாறாகத் தன்னை இரந்து பின்னிற்றலாகிய எளிய செயலைச் செய்தான் எனத் தோழி கூறுவதாக அமைந்தது இக்கலித்தொகைத் தொடராதலின், இது பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தமை பற்றித் தோன்றிய வியப்புக்கு எடுத்துக்காட்டாயிற்று. 2. தொல்காப்பியத்தின் பழையவுரையாசிரியராகிய இளம்பூரணர் புதுமை என்ற பாடமே கொண்டு உரைவரைந்திருத்தலால் இங்குப் பேராசிரியர் குறித்தவாறு முதுமை என்ற பாடங்கொண்டு உரைவரைந்தவர் வேறோர் உரையாசிரியர் எனத் தெரிகிறது. ஆசிரியர் தொல்காப்பியனார் முதுமையெனப்படும் மூப்பினை இளிவரலுக்குரிய பொருள் நான்கனுள் ஒன்றாக ழுதற்கண்வைத்து எண்ணுதலால் அதனையே மீண்டும் மருட்கைக்குரிய பொருள் நான்கனுள் ஒன்றாகக் கூறினாரென்றல் பொருந்தாது, முதுமை என்பது மருட்கைக்குரிய பொருள்களுள். ஒன்றாக உலகவழக்கில் வழங்காமையானும், இதுகாறும் காணப்படாத தோற்றப்பொலிவினதாய்த் தன்னியல்பிலமைந்த புதுமையும் ஒன்று திரிந்து ஒன்றாதலாகிய திரிபுடைய ஆக்கமும் பொருள்வகையால் தம்முள் வேறாதலின் புதுமை என்பது ஆக்கத்துள் அடங்காமையானும் இச்சூத்திரத்தில் முதுமை எனப்பாடங்கொண்டு உரைவரைந்தோர் உரைபொருந்தாது எனப் பேராசிரியர் தரும் இவ்விளக்கம் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். 3. இவ்வியலில் நான்காஞ் சூத்திரம் முதல் ஏழாஞ் சூத்திரமுடியவுள்ள நான்கு சூத்திரங்களிலும் முறையே கூறப்பட்ட நகை, அழுகை, இளிவரல், மருட்கை என்னும் மெய்ப்பாடுகள் நான்கும் எள்ளல் முதலாக நான்குநான்காகச் சொல்லப்பட்ட தத்தமக்குரிய பொருள்வகைகளால் நானான்கு பதினாறாகியும் இப்பதினாறும் தன்கண்ணும் பிறர்கண்ணும் என ஒன்று இரண்டாய் ஈரிடத்தும் பிறத்தலால் முப்பத்திரண்டாகியும் விரிதலால் இச்சிறப்பு நோக்கி இவை நான்கினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்து நகையேயழுகையிளிவரல் மருட்கை எனத் தாம் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளினும் முதற் கண்வைத்தார் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். 1. இனி, இவ்வியலில் எட்டாஞ் சூத்திரமுதல் பதினோராஞ் சூத்திர முடியவுள்ள நான்கு சூத்திரங்களிலும் முறையே கூறப்படும் அச்சம், பெருமிதம், வெகுளி; உவகை யென்னும் மெய்ப்பாடுகள் நான்கிற்கும் முறையே நான்கு நான்காகச் சொல்லப்படும் அணங்கு முதலிய பொருள்கள் தன்கண் பிறர்கண் என ஒன்று இரண்டாகாமல் இவற்றுள் ஓரிடத்தே பிறத்தலால் நானான்கு பதினாறேயாகும் என்பது பேராசிரியர் கருத்தாகும். 2. இங்கு இத்துணையுங்கூறிவந்த முப்பத்திரண்டு என்றது, நகை முதலிய மெய்ப்பாடுகள் நான்கிற்கும் முறையே நான்கு நான்கு ஆகச் சொல்லப்பட்ட எள்ளல் முதலிய ஆக்கம் ஈறாகவுள்ள பதினாறு பொருள்களும் தன்கண்ணும் பிறர்கண்ணும் என ஒன்று இரண்டாய் விரிந்த முப்பத்திரண்டினை. 3. இனிக் கூறும் பதினாறு என்றது, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையெனப் பின்னர்க்கூறப்படும் மெய்ப்பாடுகள் நான்கும் முறையே நான்கு நான்கு ஆகச் சொல்லப்படும் அணங்கு முதல் விளையாட்டிறுதியாகவுள்ள பதினாறு பொருள்களை. 4. பேராசிரியர் கூறும் இவ்விளக்கத்தைக் கேட்ட மாணவன், இவ்வுரையில் முப்பத்திரண்டாகவும் பதினாறாகவும் பகுத்துரைக்கப்படும் இவற்றையே பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள் எனவும் கண்ணியபுறன் நானான்கு எனவும் ஆசிரியர் தொல் காப்பியனார் இவ்வியல் முதற்சூத்திரத்தில் முறையே குறித்துள்ளார் எனக் கொள்ளலாகாதோ? என்றதொரு வினாவை எழுப்பினான். 5. அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பவற்றுக்கு உரியவாகக்கூறப்படும் அணங்குமுதல் விளையாட்டிறுதியாகவுள்ள பதினாறு பொருள்களுள் நகை அழுகை இளிவரல் மருட்கை என்னும் நான்கிற்கும் உரியவாக மேற்கூறப்பட்ட எள்ளல் முதலிய நானான்கும் தன் கண்ணும் பிறர்கண்ணும் என ஒன்று இரண்டாய்த்தோன்றும் முப்பத்திரண்டுமேயாகியடங் காமையானும், எண்ணான்கும் நானான்கும் என எண்ணுதற்பொருள்பட அம்முதற்சூத்திரம் அமையாமையானும் அங்ஙனம் கொள்ளுதல் கூடாது என அவ்வினாவிற்குப் பேராசிரியர் விடையினின்றும் முறையில் அமைந்தது இவ்வுரைத் தொடராகும். 1. இவ்வாறு எண்வகை மெய்ப்பாடுகளுள் நகை முதலிய நான்கிற்கும் நான்கு நான்காகச் சொல்லப்பட்ட எள்ளல்முதல் ஆக்கமீறாகிய பதினாறு பொருள்களையும் தன்கண் தோன்றுதல், பிறர்கண் தோன்றுதல் என்னும் பகுப்புண்மையால் முப்பத்திரண்டாகவும் பின்னர்க்கூறப்படும் அச்சம் முதலிய நான்கிற்கும் நான்கு நான்காகச் சொல்லப்படும் அணங்குமுதல் விளையாட்டீறாகிய பொருள்களைப்பகுப்பின்மையாற் பதினாறாகவும் வேறுபடுத்தாது, நகைமுதல் உவகையீறாகச்சொல்லப்படும் மெய்ப்பாடுகள் எட்டினுள் ஒவ்வொன்றிற்கும் முறையே நான்கு நான்குபொருள்கள் ஆசிரியரால் தொகுத்துச் சுட்டப்படுவதால் அவ்வெண்வகைத் தொகுதிகளையே இவ்வியல் முதற்சூத்திரத்துப் பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள் என ஆசிரியர் தொகுத்துச் சுட்டினார் எனக் கூறினால் வரும் குற்றம் யாது? என்பது இங்கு அடுத்துத் தோன்றும் வினாவாகும். இவ்வினாவுக்கு அடிப்படையாயமைந்தது, முப்பத்திரண்டாவது: நகை முதலானவற்றிற்கேதுவாம் எள்ளல் முதலாகவிளையாட்டீறாக முன்னெடுத்தோதப்படுகின்றன எனவரும் இளம்பூரணர் உரைப்பகுதியாகும். 2. அங்ஙனம் கூறினால் எள்ளல் முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பொருள்களும் பதினாறாகவும் எட்டாகவும் அடங்கும் எனத் தொல்காப்பியனார் மீண்டும் கூறவேண்டிய இன்றியமையாமை நேர்ந்திராது. 3. தொல்காப்பியனார் இவ்வியல் முதற்சூத்திரத்துக்குறித்த பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள்களும், கண்ணியபுறனே நானானகென்ப எனவும் நாலிரண்டாகும் பாலுமாருண்டே எனவும் பதினாறாகவும் எட்டாகவும் அடங்கும் என மீண்டும் கூறுதலால் பண்ணைத் தோன்றிய என்னும் இம்முதற்சூத்திரமும் இதனையடுத்து நாலிரண்டாகும் பாலுமாருண்டே எனவரும் இரண்டாஞ்சூத்திரமும் நாடகத்தமிழ் நூலார் கூறும் எண்வகை மெய்ப்பாட்டின் பகுப்புக்களாகிய சுவைப்பொருள், பொறியுணர்வாகிய சுவை, மனக் குறிப்பு. விறல் -- என்னும் நால்வகைத் தொகுதியும் நாலெட்டு முப்பத்திரண்டாகியும் சுவைப் பொருளையும் பொறியுணர்: வினையும் சுவையெனவும், மனக்குறிப்பினையும் விறலையும் மெய்ப்பாடு எனவும் இரண்டாக அடக்கிய நிலையில் எட்டாகியும் அடங்கும் என்பது நாடாக நூலார் கொள்கையாதலின் பண்ணைத் தோன்றிய என்னுஞ்சூத்திரத்திற் பிறன்கோட் கூறலாகக் குறிக்கப்பட்ட எண்ணான்கு பொருள் என்பன இயற்றமிழ் நூலார் கொள்கைப்படி தொல்காப்பியனார் தம்கருத்தாகப் பகுத்துரைத்த எள்ளல் முதல் விளையாட்டிறுதியாகவுள்ள பொருட்பகுதிகளைக் குறிப்பன அல்ல. அன்றியும் நகையே யழுகை என்னும் முதற்குறிப்புடைய மூன்றாஞ்சூத்திரமுதலாக இவ்வியலிற் கூறப்படும் மெய்ப்பாடுகளின் இலக்கணம் உலகவழக்கினை அடியொற்றியமைந்ததாகும். முடியுடைவேந்தருங்குறுநிலமன்னரும் கண்டுங் கேட்டுங்காமநுகரும் இன்ப விவையாட்டில் தோன்றும் நாடக நூற்பொருள்பற்றிய ஆராய்ச்சி யினைத் தொல்காப்பியனார் இவ்வியலில் மேற்கொண்டிலர். நாடக நூற்பொருளே இவ்வியலில் ஆசிரியரால் ஆராய்ந்து விளக்கப் பெறுவதெனின் இம்மெய்ப்பாடுகள் எட்டினையும் ஒன்றொன்றாக்கிக் கூறாது, கூத்தன் நாடக அரங்கினுள் நிறுத்திக்காட்டும் முறை யானே மேற்குறித்த சுவைப்பொருள்களோடு சுவையும் குறிப்பும் சத்துவமும் என மெய்ப்பாடு ஒவ்வொன்றினையும் நால்வேறு வகைப்படுத்தி விளக்கியிருப்பார். அங்ஙனம் ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் உரிய சுவைப்பொருள, சுவை, குறிப்பு, விறல் என வகை பெற விரித்து விளக்காமையின் இம்மெய்ப்பாட்டியல் உலக வழக்குப்பற்றிய மெய்ப்பாட்டுப்பொருட் பகுதியினையே விரித்துரைப்பதாகும் எனப் பேராசிரியர் விடை தந்து விளக்கும் முறையில் அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும். 1. யாணர்த்தன்மை -- புதுமைத்தன்மை. 1. அணங்கு முதலியன கண்டு அவற்றொடு முரணி நிற்குங் காலத்து அச்சந்தோன்றுவதில்லை. அவற்றொடு முரணிநிற்கும் திறமில்லாதார் உள்ளத்திலேயே அச்சந் தோன்றும் என்பதாம். அணங்கு -- தெய்வம். விலங்கு--புலி முதலிய கொடிய விலங்குகள். கள்வர் ஆறலைகள்வர். தம் இறை--தம்மை ஆளும் அரசன் முதலிய அதிகாரிகள். 1. வருத்துந்தொழிலுடைய தெய்வமுதலியவற்றை அணங்கு என்றார். அணங்குதல் கண்டாரை வருத்துதல். சவத்தின் பெண்டிர் -- பிணந்தின்னும் பேய்மகளிர். உரும் இசை -- இடியோசை தீத்தொழில் என்றது, ஆறலைத்தல் கொலைசெய்தல் முதலிய கொடுந் தொழில்களை. 2. தன்கண்ணும் பிறர்கண்ணும் ஆகத் தடுமாதலின்றி பிறிது பொருள்பற்றியே வருவது அச்சம் என்னும் மெய்ப்பாடு என்பது புலப்படுத்துவார் பிணங்கல் சாலா அச்சம் என அடைபுணர்த்தோதினார். பிணங்கல்--தடுமாற்றம் சாலா--நிரம்பாத. முன்னைய--எண்வகை மெய்ப்பாடுகளில் முன்னர்க் கூறப்பட்ட நகை, அழுகை, இளிவரல், மருட்கை என்பன. 1. அவனை என்றது தலைவனை. 2. பிணங்குதல் நிரம்பாத அச்சம் எனவே ஓரொருகால் பிணங்குதல் பற்றியும் அச்சம் தோன்றும் என்பது பெறப்படுதலின் பிணங்குதலாகிய ஊடல் முதலியன அச்சத்திற்குப் பொருளாம் என்றார். 1. தம்மிறை எனவரும் தொல்காப்பியத்தொடர் இரட்டுற மொழிதலால் அஞ்சுதற்கு ஏதுவாகிய தம் இறையையும் தம் மிறையையும் குறித்தது எனக்கொண்ட நயம் பாராட்டத்தக்கது. தம் இறை--தம்மை ஆளும் வேந்தன். தம்மிறைதாம் செய்த பெருங்குற்றம். பெருங்குற்றம் புரிந்தோருள்ளத்தில் அவர்தாம் செய்த குற்றமே அச்சத்தினைத் தோற்றுவிக்கும் என்னும் இந்நுட்பம் தம்மிறை என்னும் பகுப்பினால் இனிது புலனாதல் காணலாம். 1. இசைமை என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம். இசைமையெனினும் புகழ்மையெனினும் பொருள் ஒன்றே. 2. பெருமிதமாவது. தன்னைப் பெரியன் எனப் பிறர்மதிக்கும் வண்ணம் கல்வி, தறுகண், இசைமை, வண்மை என்பவற்றின் பேரெல்லைக்கண் நிற்றலாகும். 1. பெருமிதம் எனினும் வீரம் எனினும் பொருளால் ஒன்றே என்பது பேராசிரியர் கருத்தாகும். மிதம் --அளவு, பெருமிதம் -- பேரெல்லை. விச்சை -- வித்தை; அறிவுத்துறை. தறுகண் -- மனத்திண்மை. இசைமை -- புகழ்த்திறம். ஈண்டுக்காமம் என்றது தலைமக்களாயினாரது நிறையொடுபொருந்திய தூய காமத்தினை. பெருமிதம் என்னும் இது, தன்கண் தோன்றிய கல்வி தறுகண் இசைமை கொடை யென்னும் பொருள் பற்றி வரும் என்பதாம். 1. சொல் -- புகழ். சொல்லப்படுதலாவது உயர்த்துப் புகழப்படுதல்.வெறுப்பின் என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம், 1. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை ஆகியவற்றைப் பிறர் தன்கண் செய்யுங் கால் அவைகாரணமாகத் தன்கண் வெகுளியாகிய காரியம் பிறத்தலும் தான்பிறர்கண் செய்யுங்கால் அச்செயல்களுக்குக் காரணமாகத் தன்கண் வெகுளி பிறத்தலும் என உறுப்பறை முதலிய இவை நான்கும் வெகுளியின் காரியமாகவும் காரணமாகவும் நிகழ்வன என்பது கருத்து. இவை நான்கும் பிறர்செய்த வழியே இவை காரணமாகத் தன்கண் வெகுளிதோன்றும் என்பார், இதுபிறன்கட்டோன்றிய பொருள் பற்றிவரும் என்றார் பேராசிரியர். 1. உறுப்பு அறை -- கை முதலிய அங்கங்களை அறுத்தல். குடிகோள் -- குடும்பத்துக்குக் கேடுசூழ்தல். அலை -- அலைத்தல்; துன்புறுத்தல். உயிருடன் பின் நீக்குதலாகிய கொலை முற்கூறிய மூன்றனுள் அடங்குதலால் ஈண்டுக்கொலை என்பதற்கு அறிவும் புகழுமுதலாயினவற்றைக்கொன்றுரைத்தல் எனவிளக்கம் தந்தார் பேராசிரியர். கொன்றுரைத்தல் -- அழித்துப் பேசுதல். 1. வெறுப்பின்வந்த வெகுளி அடைபுணர்த்தோதினமையால் வெறுப்பின் விளைவாகிய ஊடற்கண்ணும் வெகுளிதோன்றும் என்பதாம். 2. குடிகோள் பற்றி வந்த வெகுளி. 1. உணர்வுடைய உயிர்கட்குச் சுவை தோன்றுவதல்லது உணர்வற்ற நெருப்பு முதலிய சடப்பொருட்குச் சுவையுணர்வு தோன்றாமையின் வெறுப்பின் வந்த வெகுளி என்ற அச்சொற்குறிப்பினாலே, நெருப்புச் சினந்தணிந்த என்றாற்போலச் சினமில்லாததனைச் சினமுள்ளதுபோலக் கூறுவனவற்றை இங்குக் கொள்ள வேண்டிய இன்றியமையாமையில்லை என்பதாம். 2. வெகுளி என்னும் இம்மெய்ப்பாடு பிறர்கண்தோன்றிய பொருள்பற்றிவரும். 3. வெறுப்பின் வந்த வெகுளி என்பதற்கு, உறுப்பறை குடிகோள் அலை கொலை எனக்கண்டோர் வெறுக்கத்தக்க தீமைகள் நான்கும் காரணமாகத் தோன்றிய வெகுளி நால்வகைப்படும் என்பதாம். நனிவெறுப்பின் வந்த வெகுளி என்பது இளம்பூரணர்கொண்ட பாடம். என்ற வெறுப்பவந்த வெகுளி என்பது, தொல்காப்பிய மூலப்பதிப்பிற் காணப்படும் பாடமாகும். 1. சிருங்காரம் -- உவகைச் சுவை. 2. செயிற்றியனார் இச்சூத்திரத்துள் விரித்துச் கூறியன யாவும் செல்வம் புலன் நுகர்வு விளையாட்டு என்னும் நான்கினுள் அடங்கும் என்பதாம். 1. அது -- அறிவுபொருளாக உவகைபிறந்தது. 1. பிறர் துன்பமுறுதலைக்கண்டு அறிவிலார் அடையும் மனமகிழ்ச்சி அவர்தம் உயிர்க்கு நலந்தரும் உண்மையான உவகையாகாதென அறிவுறுத்துவார் அல்லல்நீத்த உவகை என அடைபுணர்த்தோதினார் தொல்காப்பியனார் என்பதாம். 2. உவகை என்னும் இது, தன்கண் தோன்றிய பொருள் பற்றிவரும். பிறர்கண் தோன்றிய இன்பம்பற்றியும் உவகை தோன்றும் என்பது அல்லல் நீத்த உவகை என்னும் சொற்குறிப்பினாலும் தன்கண் தோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது பிறர்கண் தோன்றிய அச்சத்தைமுற்கூறி உவகையினை இறுதிக்கண்வைத்தமையாலும் கொள்ளப்படும். 3. பொய்தல்--விளையாட்டு. 4. உளம் உளைய--பிறர் மனம் புண்பட. 1. ஈண்டுப் புலன் என்றது, கல்வியறிவினைக்குறிக்காமல் கல்வியின் பயனாக உள்ளுறும் தெள்ளிய அறிவினைக் குறிப்பதாகும் என்பதும், புலன் என்பதற்கு ஐம்பொறி நுகர்வு என இளம்பூரணர் கூறம் பொருள் அல்லல் நீத்த உவகைக்கேதுவாகிய பொருளாகா தென்பதும் நாவலர் பாரதியார் கருத்தாகும். 0. ஒருபாலாக வொருபால். பா. வே. 1. ஆங்கவை--மேற்சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகள். 1. உடைமை என்பது யாம் பொருளுடையோம் என்றெண்ணுவதனால் உண்டாகும் மன நிகழச்சி. 2. காமநுகர்ச்சியாகிய இன்பம் மேலைச்சூத்திரத்தில் உவகைக்குரிய புணர்வு, விளையாட்டு என்பவற்றுள் அடங்குதலின் காமநுகர்ச்சியின்றி வரும் இன்புறுதல் என்றார். 1. தன்மை --குடிப்பிறந்தாரது தன்மை. இதுமெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. 5. மனமொழிமெய்யின் அடங்குதலாகிய இவ்வடக்கத்திற்கும் இவ்வாறு அடங்கு தலில்லாத அடங்காமைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுதலின் இவை மெய்ப்பாடெனப்பட்டன என்பதாம். 1. கனவின் பாற்படுமெனின் என்றிருத்தல் வேண்டும். காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும், என்பராதலின் கனவும் அதன்கண் அரற்றுதலும் வேறுவேறு மெய்ப்பாடு என்றுணர்க. 1. நெடிதுபொழுது நிற்பது அச்சம் எனவும் திடீரெனத் தோன்றி விரைவில் மாறுவது வெரூஉதல் எனவும் இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடு மனங்கொள்ளத்தக்கதாகும். 1. கையாறு என்பது இன்பமின்மையால் வருந்துன்பம் எனவும் இடுக்கண் என்பது துன்பமுறுதலான் வருந்துன்பம் எனவும் இளம்பூரணர் தரும் விளக்கம் நுணுகியுணரத் தகுவதாகும். 1. அடுத்து வரும் நூற்பாக்கன் அகத்திணைக்குரியவற்றையே விரித்துக் கூறுதலால், இதுகாறும் கூறப்பட்டதை அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகிய மெய்ப்பாடுகள் எனப்பட்டன. 1. நகை முதலிய எண்வகைமெய்ப்பாடுகட்கும் உரியவாக எள்ளல் முதல் விளையாட்டிறுதியாக முன்னர்க் கூறப்பட்ட எண்ணான்கு பொருள்களேயன்றி உடைமை முதல் நடுக்கம் ஈறாக இச்சூத்திரத்திற் கூறப்படும் முப்பத்திரண்டு பொருள்களும் உள்ளன. இங்கு எண்ணப்பட்ட பொருள்களே மேற்கூறியவற்றுள் அடங்கு வனவும் உள்ளன. அவற்றுள் அடங்காதநிலையில் இவை முப்பத்திரண்டும் தனி மெய்ப்பாடாகக் கொள்ளப்படும் என்பார் இவையும் உளவே அவையலங்கடையே என்றார். முப்பத்திரண்டு என இவற்றுக்கு ஆசிரியர் தொகைகூறாது போயினும், அகத்திற்கும் புறத்திற்கும்உரியமெய்ப்பாடுகளைஆங்கவைஒருபாலாகஒருபால்.............ïití« உள எனச் சமனாகப் பிரிந்த என இரு கூறாகப் பிரித்தமையில் இருகூறும் ஒத்த எண்ணாதல் வேண்டுமாதலால் முற்கூறிய மெய்ப்பாடுகள் எண்ணான்காதல் போன்று பிற்கூறுவனவும் எண்ணான்கு (முப்பத்திரண்டு) ஆதல் ஆசிரியர் எண்ணவைத்தார், 2. கிடைத்தற்கரிய பெருநிதியைப் பிறர் கவர்ந்து கொள்ளாதவாறு நிலத்திற் புதைத் துவைப்போர், அந்நிலத்தின் மேற்பரப்பினை இயல்பாக மூடிமறைத்தல்வேண்டி அங்குத் தழைத்துவளர்தற்கேற்ற மரத்தினை நட்டு எருவிட்டு நீர்பாய்ச்சி வளர்த்தல் உண்டு. அங்ஙனம் வளர்ந்து தழைத்தமரம் தான் பெருநிதியின் மேற்பரப்பில் நிலைபெற்றிருந்தும் அந்நிதியினை நுகரும் உணர்வின்றிப் புறத்தே தவிர்த்துக்காணப்படுமாறுபோலப் பெருஞ்செல்வமுடையான் அச்செல்வத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படும்படி பகுத்து நுகரும் உணர்வின்றித் தனது உடைமையாகிய அப்பொருளையே நினைந்து அதன்கட்பற்றுடையனாய் அதன்மேல் மனம் வைத்துச் செருக்குற்றிருத்தலால் வரும் மெய்வேறுபாடே இங்குக் கூறப்படும் உடைமை என்னும் மெய்ப்பாடாகும், இங்ஙனம் மக்கட்பண்பின்றி மரம்போன்று உணர்ச்சியற்று வாழ்வோர் தமது உடைமையினையே நினைந்து செருக்குறும் போது அவரது தோற்றத்திற் புலனாகும் மெய்ப்பாட்டினை விளக்கும் முறையில் அமைந்ததே நிதி மேல் நின்ற மரம் போல எனவரும் இவ்வுவமையாகும். இவ்வுவமையோடு உவமேயத்திற்குள்ள பொதுத்தன்மையினைக் கூர்ந்து நோக்காது இத்தொடரை நிதி மேல் நின்ற மனம் போல எனத்திருத்தி அச்சிட்டாருமுளர். இங்கு உவமையாற் புலப்படுத்தவேண்டிய உவமேயப்பொருள் நிதிமேல் வைத்த பற்றுள்ளத்தால் விளைந்த நிதியுடைமையானது பற்றுள்ளத்தின் வழிப்பட்ட மெய்த்தோற்றமேயாதலின் அத்தகைய மெய்ப்பாட்டிற்கு எதுவாகிய அம்மனத்தினையே உவமையாகத் திருத்தி விட்டால் அவ்வுவமையாற் புலப்படுத்தப்படும் உவமேயப் பொருள் இதுவெனவுணர்ந்து கொள்ளுதல் இயலாது. எனவே தொல்லாசிரியர் உரையினைக் கூர்ந்து நோக்கி பொருள் காண முயலாது மனம்போனபடி திருத்தியச்சிடும்பழக்கம் அறிஞர்களால் அறவே நீக்கற்பாலதாகும் என்றறிதல் வேண்டும். 1. காம வெகுளி மயக்கம் நீங்கினோர் என்றது. யாரிடத்தும் விருப்பு வெறுப்பற்ற சான்றோர்களை. 2. இவ்வியல் ஐந்தாஞ்சூத்திரவுரையில், பிறன்கடடோன்றிய இளிவரல் முதலியன பொருளாகத் தோன்றிய அழுகையினை இது கருணையெனவும் படும் எனத் தாம் விளக்கியதனை நினைந்து ஆண்டை (அவ்விடத்து)க் கருணையினை அழுகை யென்றமையின் எனக் குறித்தார். இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட அருளல் என்னும் மெய்ப்பாடு அழுகையென முன்னர்க்குறித்த கருணையின் அடங்காது என்பதாம். 3. குறுநடை--விரைவின்றி மெல்ல நடக்கும் நடை. 4. எடுத்த கழுத்து என்றது, பிறர்க்கு அடங்கித் தலைதாழாது நிமிர்ந்த கழுத்தின ராதலை. அடுத்த மார்பு என்றது, நிமிர்ந்த கழுத்திற்குப் பொருந்தப் பரந்த மார்பினை. 5. கோற்கை--கோலைத்தாங்கிய கை. கொடுமடி--இறுக மடித்துக்கட்டிய உடை விளித்த வீணை--ஆநிரைகளைச் செலுத்திக் கொண்டு மேய்க்குங்கால் அவற்றையழைக்கும் நிலையில் வாயினால் எழுப்பிய சீழ்க்கையொலி. 1. வழக்கு--உலக நடை. 2. பணிந்த மொழி--பணிவைப் புலப்படுத்தும் மொழி. தணிந்த நடை--விரைத லின்றி அடங்கி நடத்தல். தானை மடக்கல்--உடுத்த உடையினை ஒடுக்கிக் கொண்டு நிற்றல், வாய் புதைத்தல்--வாயைப் பொத்திக்கொள்ளுதல். 3. தமக்கு இன்றியமையாத நற்பண்புகள் தம்மைவிட்டு நீங்காமற்காத்துக் கொள்ளுதலும் தமக்கு ஒவ்வாத தீயபண்புகள் தம்மை அணுகாமல் நீக்குதலும் ஆகிய இவ்விருதன்மையும் வரைதல் என்னும் ஒழுக்கமாம் என்பது இத்தொடரின் பொருளாகும். 4. முத்தீயாவன வேள்வியுள் வளர்க்கப்படும் ஆகவனியம், காருகபத்தியம், தென்றிசை யங்கி என்பன. புலவு--புலாலுணவு, கடிதல்--நீக்குதல், 5. இவ்வுரைவிளக்கம் அருளென்னும் அன்பீன் குழவி ( 757 எனவும் அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்-புன்கணீர் பூசல் தகும் (71) எனவும் வரும் திருக்குறட் பாக்களை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். 1. நீடூழிவாழ்க எனப்பிறர் தம்மை வாழ்த்திய நிலையில் அங்ஙனம் வாழ்த்தப் பெற்றோர் அடையும் மெய்வேறுபாடு வாழ்த்தல் என்னும் மெய்ப்பாடாகும். வாழ்த்துதல் பிறர் தொழிலாயினும் அதனால் வாழ்த்தப்பெற்றோர் நெடுங்காலம் வாழுமாறு செய்விக்கப் பெறுதலின் அங்ஙனம் வாழ்த்துதல் மெய்ப்பாடாதற்கும் பொருந்தும் என்பதாம். 2. காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல எனவரும் இத்தொடர் பரணி என்னும் பனுவலில் இடம் பெற்றுள்ள. காளிக்குக் கூளி கூறியது என்னும் பேய் முறைப்பாட்டினைக் குறிப்பதாகும். 3. கையாது--செயலற்ற நிலை. 4. மலர்ந்த நோக்கம்--அகமலர்ச்சியைப் புலப்படுத்தும் பார்வை, மையல் நோக்கம் --மனக்கலக்கத்தைப் புலப்படுத்தும் பார்வை. 5. அற்றப்படுதல்--சோர்வுபடுதல். 18. வேண்டாதிருத்தல்--வெறுப்படைதல். 19. வியர்த்தல் என்பதுஇங்கு மனப் புழுக்கத்தைக் குறித்தது. 20. உடைமை முதல் நடுக்கமீறாக இங்குக் கூறப்பட்ட முப்பத்திரண்டும் எள்ளல் முதல் விளையாட்டீறாக மேற்கூறப்பட்ட முப்பத்திரண்டும் போன்று அகத்திணை புறத்திணை என்னும் இருவகை யொழுகலாற்றிற்கும் பொதுவாக நிகழும் மெய்ப்பாடுகளாகும். உலக வழக்கேபற்றி நிகழும் இம்மெய்ப்பாடுகள் நாடகவழக்கிலும் இடம்பெறும் என்பதாம். 21. இங்கு எண்ணப்பட்ட உடைமை முதலிய மெய்ப்பாடுகள் இவற்றுக்கு வழங்கும் உடைமை முதலிய சொற்களின் பொருளமைப்பினாலேயே தமது இலக்கணம் புலப்பட வருவன வாதலின் தொல்காப்பியனார் இவற்றுக்குத் தனித் தனியே இலக்கணம் கூறாராயினர் என்பதாம். 1. முதற்சூத்திரங்கூறும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்களும் இவ்வியல் மூன்றாஞ் சூத்திர முதல் பதினொன்றாஞ் சூத்திரமுடியவுள்ள சூத்திரங்களால் விரித்துரைக்கப்பட்டன, இவ்வியல் இரண்டாஞ்சூத்திரத்திற் கூறப்பட்ட நாலிரண்டாகும் பலவாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகள் இப்பன்னிரண்டாஞ் சூத்திரத்தாற் குறிக்கப்படுகின்றன. முதற்சூத்திரத்தில் நந்நான்காய்த் தொக்குவரும் எண்வகை மெய்ப்பாட்டுணர்வுகளும் புறத்தே மெய்யிற்றோன்றுந் தன்மையன. இச்சூத்திரத்தில் எவ்வெட்டாய் நால்வகையாகத் தொகுத்தெண்ணப்பெறும் முப்பத்திரண்டுணர்வுகளும் அவைபோன்று புறக்குறிச் சுட்டின்மையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் அம்மெய்ப்பாடுகள் போன்று செய்யுட்பொருள் சிறக்கவரும் மெய்ப்பாடுகளாம் என்பதும், இதிற்குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற்புணர்வு என்னும் களவொழுக்கவகை நான்கிற்கும் முறையே உரியவாகத் தொகுக்கப்பட்டுள்ளன என்பதும் நாவலர் பாரதியார் கருத்தாகும். 1. இந்நுநூற்பாவில் உடைமை என்பது, காதலரிடையேயுள்ள அன்பின் வழியாகிய உரிமையுணர்வு. இன்புறல் என்பது, அக்கிழமையுணர்வால் விளையும் மகிழ்ச்சி. நடுவுநிலை என்பது விழைவுக்கடிமையாகாது கடமை மறவாக் காதற் செவ்வி. இவ்வாறு இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட ஏனையவும் அகத்திணைக்கே சிறந்துரிய மெய்ப்பாட்டுணர்வுகளாகக் கொண்டு நாவலர் பாரதியார் எடுத்துக்காட்டுடன் கூடிய உரைவிளக்கம் பொருத்தமுடையனவாக அமைந்துள்ளன. எனினும் காதலர்க்கு ஆகாதன என இவ்வியலிற் பின்னர் விலக்கப்படும் பொறாமை (நிம்பிரி) பொச்சாப்பு காதலர்க்குரிய ஒப்புமையாகச் சொல்லப்பட்ட காமவாயில் (அன்பு) அருள் என்பவற்றோடு அகத்திணை புறத்திணையாகிய இருதிணைக்கும் பொதுவாகவுரிய மெய்ப்பாட்டுணர்வுகளேஇச்சூத்திரத்தில் எண்ணப்பெறுதலானும், இச்சூத்திரத்தில் உடைமை முதல் அன்பு ஈறாக எண்ணப்பட்ட எட்டும்) இயற்கைப் புணர்ச்சிக்குரியன எனவும் அவற்றையடுத்துக் கைமிகல் முதல் கனவு ஈறாகச் சொல்லப்பட்ட எட்டும் இடந்தலைப்பாட்டுக்குரியன எனவும் அவற்றின்பின் முனிதல் முதல் உயிர்ப்பு ஈறாகக் கூறப்பட்ட எட்டும் பாங்கற்கூட்டத்திற்குரியன எனவும் அவற்றையடுத்துக் கையாறு முதல் நடுக்கம் ஈறாக எண்ணப்பட்ட எட்டும் தோழியிற்கூட்டத்திற்குரியன எனவும் பகுத்துரைத்தற் கேற்ற திணைப்பகுப்பு இம்மெய்ப்பாடுகளிற் சிறப்பு முறையில் அமையாமையானும், அகத்திணைக்கேயுரிய மெய்ப்பாடுகளைப் புகுமுகம் புரிதல் முதல் கையறவுரைத்தல் ஈறாக ஒன்றன்பினொன்றாக நிகழும் முறைமையினை ஒன்றுமுதல் ஆறீறாகப் பகுத்துரைக்கும் தொல்காப்பியனார், இயற்கைப் புணர்ச்சியாகிய அப்பகுப்பிற்கு முன்னரே உடைமை முதல் நடுக்கம் ஈறாகவுள்ள இம்மெய்ப்பாடுகளை அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகளாகக் கூறினாரென்றால் பொருந்தாமையானும் அகம்புறமாகிய இருதிணைக்கும் பொதுவாகிய உடைமை முதலிய இம்மெய்ப்பாடுகளை அகத்திணைக்கேயுரியனவாகக் கொள்ளுதல் பொருந்தாமையானும், அகத்திணையிற் கையறவுரைத்தலின் மேற்பட்ட மெய்ப்பாடுகள் தோன்றாவென்பது இவ்வியல் 18-ஆம் சூத்திரத்தால் புலனாதலின் அகத்திணை யொழுகலாற்றின் இறுதிக்கண்ணதாகிய கையறவினை கையாறிடுக்கண்பொச்சாப்புப்பொறாமை எனத் தோழியிற் கூட்டத்தின் முதற்கண்ணதாக ஆசிரியர் வைத்துரையாராதலானும். உடைமை முதல் நடுக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட இவை முப்பத்திரண்டும் அகம்புறமாகிய இரு திணைக்கும் பொதுவாகவுரிய மெய்ப்பாட்டுணர்வுகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். அன்றியும் நாவலர் பாரதியார் அவர்கள் கருதுமாறு இச்சூத்திரத்தில் எண்ணப்பட்ட வெரூஉதல், நடுக்கம் என்பன முற்கூறப்பட்ட அச்சத்திலும், அரற்றல் அழுகையிலும்,இன்புறல் உவகையிலும், மடிமை அசைவிலும், இடுக்கண் வருத்தத்திலும் சொல். வகையால் அடங்குமாயினும், அவற்றின் வேறாக எண்ணப்பட்ட இவை பொருள் வகையால் அவற்றின் அடக்கப்பெறுதவின்றித் தனி மெய்ப்பாடுகளாகப் புலப்படுதற்குரிய தனித்தன்மை வாய்ந்தன என்பதே தொல்காப்பியனார் கருத்தா மென்பது, இவையுமுளவே அவையலங்கடையே எனவரும் இச்சூத்திரத்தின் இறுதியடியால் நன்கு விளங்கும். இந்நுட்பம், இவையுமுளவே அவையலங் கடையே என்றான் ; ஈண்டு எண்ணப்பட்டவையே ஆண்டு அடங்குவனவும் உள, அப்பொருண்மை அல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் எனவரும் பேராசிரியர் உரை விளக்கத்தால் நன்கு புலனாதல் காணலாம். 1. அவத்தை என்னும் வடசொல் உணர்வுநிலை என்னும் பொருளில் இங்கு வழங்குகின்றது. காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி முதலாக அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்து எனப் பகுத்துரைத்தல் மரபு. அவத்தை பத்தாவன; காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பனவாம். இங்கு முதலவத்தை என்றது, தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் காட்சிவிகற்பத்தை. முதற்காட்சியில் தலைவியின் குறிப்பினால் வரும் மெய்ப்பாடுகள் புகுமுகம் புரிதல் முதலிய நான்குமாகும். 1. ஒருவரது நிற்றல் --நீங்காது நிற்றல். 1. அவை என்றது, அம்மெய்ப்பாடுகளை. 2. முதலன மூன்றாவன களவொழுக்கத்திற்குரியனவாகப் பகுத்துரைக்கப்படும் அறுவகை மெய்ப்பாட்டுத் தொகுதிகளுள் மெய்யுறு புணர்ச்சிக்குமுன் நிகழ்வனவாகிய ஒன்று, இரண்டு, மூன்று எனப்படும் தொகுதிகள். 3. முன்னர் நின்ற ஒரு கூறு என்றது ஓன்று எனப்படும் முதல் தொகுதியினை. 4. ஒன்று எனப்படும் இம்முதற்கூறு நான்கு பகுதியினையுடையது என்கின்றது இச்சூத்திரம். 5. அன்பினால் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட நிலையில் தனது விருப்பத்தினைப்புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்தொழுகுமியல்பு பெண்பாலுக்கே யுரியதாகலின் இங்கு ஆறு பகுதிகளாகப் பகுத்துரைக்கப்படும் அகத்திணை மெய்ப்பாடு பெரும்பான்மையும் தலைமகட்கே சிறப்பாகவுரியது. 6. மேவுதல் - விரும்புதல். 7. தலைவன் தலைமகளது எழில்நலத்தைக் காணுதலில் விருப்பமுடையனாதலல்லது தன் அழகை அவள் காண்டல் வேண்டுமென விரும்பி அவள்முன் நிற்றல் அவனது தலைமைப் பண்பிற்கு இழுக்காதலின், அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான் என்றார் நயத்தல் - விரும்புதல். 1. உட்கு - அச்சம். 2. வியர்பொறித்த நுதலன் ஆதல் - வியர்வையரும்பிய நெற்றியினையுடையவ ளாதல். 3. நகுநயம் மறைத்தலாவது, முறுவல் நகைக்கு ஏதுவாகியவிருப்பமுடைமை தன் மனத்துள் தோன்றிய நிலையிலும் அது புறத்தே புலப்படாதவாறு நகாதுநிற்றல். 4. மடமையால் தோன்றிய நகையாகலான் இது மறைத்தலுக் தலை, மகட்குரித்து; எனவே அவற்காயின் நகைதோன்றப் பெறும் (மென்பது) என இவ்வுரைத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். இதுவே பேராசிரியர் கருத்தென்பது இதனையடுத்துப் பின்வரும் உரைவிளக்கத்தால் தெளிவுபெறுதல் காணலாம். 1. (தலைவற்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை என்றிருத்தல் வேண்டும் என்பது, தலைமகன் அறிய மெய்ப்பட்ட தென்பது எனப் பின்வரும் உரைத் தொடரால் உய்த்துணரப்படும். 1. ஈண்டு உரையாசிரியர் என்றது இளம்பூரண அடிகளை. ஊழி நான்கே என்பது பேராசிரியர் கொண்டபாடம். 1. கூழை--கூந்தல். கூழை விரித்தல் முதலிய இவை நான்கும் காமக் குறிப் பில்லாளர் பால் நிகழா, தலைமகள் தனது காமக்குறிப்பினாலும் தலைமகனைக் கண்ணுற்ற நிலையில் சிறிது பொழுது அங்குநிற்றல்வேண்டும் என்னும் விருப்பினாலும் பிறர் தன்னை ஐயுறாதவாறு இம்மெய்ப்பாட்டினை நிகழ்த்தும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 2. எழுவாயாக - காரணமாக. 3. இவற்றிற்குத் தலைமகன் ஏதுவாயினல்லது இவைதாம்அவட்கு நிகழா வென்பது என இவ்வுரைத் தொடரமைந்திருப்பின் பொருள் இனிது விளங்கும். 4. இது-கூழை விரித்தல் என்னும் இம் மெய்ப்பாடு. கூழை -- கூந்தல். 1. மதுரச் சுவை -- உவகைச் சுவை. மயிர்செவ்வனிற்றலாவது, மெய்ம்மயிர் சிலிர்த்தல். 2. உடம்பின் புறத்துறுப்பாகிய கூந்தல் தானே விரியாது, அது விரிதற்குக் காரணமாயினாள் தலைமகளாதலின் கூழை விரிதல் எனச் சினைவினையாற் கூறாது கூழை விரித்தல் என முதல் வினையாற் கூறினார் ஆசிரியர் தொல். காப்பியனார் என்பதாம். 3. உறுப்பிடைப் பூட்டுறப் புனைதலாவது, கை, விரல் முதலியவற்றிற் செறியுமாறு அணிதல். பெய்தல் என்பது, செவித்துளையிற் பொருந்தும்படி குழைதோடு என்பனவற்றை மெல்ல நுழைத்தல். 4. காதிற் பெய்த தோடு முதலாயின வீழ்தற்கு ஏதுவாய உள்ள நெகிழ்ச்சி நிரம்பத் தோன்றாது இடை நிகர்த்ததாய்த் தோன்றுதலின், இரு காதுகளிலும் அணியப்பட்டுள்ள தோடுகள் இரண்டனுள் ஒன்று நிற்ப ஒன்று வீழ்வதாயிற்று என்பார் காது ஒன்று களைதல் என்றார். 5. புறவுறுப்பாகிய கூந்தவினும் அகவுறுப்பாகிய காது உடம்புடன் நெருங்கிய உறவுடையதாதலின் புறவுறுப்பாகிய கூழை வேறுபாட்டினை முற்கூறி அகவுறுப்பாகிய காதின் வேறுபாட்டினைப் பிற்கூறினார். 6. ஊழணி என்பன முன்கைமேல் இறுகச் செறித்தற்குரிய வளையல்களும் விரல்களிற் செறித்தற்குரிய விரற்செறியெனப்படும் மோதிரங்களும் முதலாயின. காதிற் பெய்த தோடு முதலியனபோல் செறிவில்லனவாகாது மிகவும் செறிவுடையனவாதலின் இவ்வணிகளை நெகிழாது திருத்தலாகிய ஊழணிதைவரல் என்னும் இம்மெய்ப்பாட்டினைக் காதொன்று களைதலின் பின்வைத்தார். 1. அழித்துடுத்தலாவது, உடையின் தளர்ச்சி நீங்க மீண்டும் தளராது இறுக வுடுத்தல், இவ்வுடை தன்னியல்பிற் கழன்று விழும் தொடி முதலிய அணிகலன் போல் நெகிழாத செறிவுடைமையின் உடைபெயர்த்துடுத்தலாகிய இதனை ஊழணிதை வரலின்பின் வைத்தார். 2. இவை இன்னதன்பின்னர் இன்னது தோன்றும் என்னும் முறைமையினவாகிய மெய்ப்பாடுகளாதலின் இவற்றை இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படுத்தினார் ஆசிரியர். இம்முறை வைப்பு ஒன்று முதல் ஆறு ஈறாகச் சொல்லப்படும் ஏனைப்பகுதிகளுக்கும் ஒக்கும். 1. தொல்காப்பியத்திற் கூறப்படும் அகத்திணையொழுகலாறு பற்றிய இம் மெய்ப்பாடுகள் பாடாண்திணையில் ஒருதலைக் காமமாகிய கைக்கினைபற்றித்தம் காலத்துப் பாடப்படும் உலாச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ள திறத்தினை புலப்படுத்தும் முறையில் இவை பாடாண் கைக்கிளையுள் இக்காலத்துப் பயின்றன என்றார் பேராசிரியர். இத்தகைய பாடாண் கைக்கிளைபற்றிய உலாச் செய்யுள் முதலிய பனுவல்களில் தொல்காப்பியனார் கூறிய அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகளை இயைத்துப்பாடும் புலமை நெறியினைப் பேராசிரியர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது இவ்வுரைத் தொடரால் இனிது விளங்கும். 1. ஊழணி என்பது, கைம்மையரல்லா மகளிர் கனையாது அணியும் வளைபோல்வனவற்றைக் குறிக்கும் எனவும் இவை குடிப்பெண்டிர் இன்றியமையாது கொண்டணியும் முறைமையுடைய அணியாதலின் ஊழணி எனப்பட்டது எனவும், உடைபெயர்த்துடுத்தல் என்புழி பெயர்த்து என்னுஞ் சொல்மீட்டும் என்ற பொருளைக் குறிக்கும் எனவும், முன்கட்டியுள்ள ஆடை நெகிழ்வதனை நெகிழாவண்ணம் மீட்டும் இறுக்குதல் என்பதே உடைபெயர்த்துடுத்தல் என்பதன் பொருள் எனவும் இங்கு நாவலர் பாரதியார் தரும் விளக்கம் சிறப்புடையதாகும். 2. புகுமுகம் புரிதல் முதலாக அகத்திணைக்கே சிறந்துரிய மெய்ப்பாடுகளாகவுள்ள ஆறன்தொகுதிக்கும் உரிய இலக்கியமாக இங்கு எடுத்துக்காட்டப்பெறும் செய்யுட்கள் ஆறும் மெய்ப்பாட்டியல் பேராசிரியருரையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றவையே யென்பதும் அவற்றையே இலக்கண விளக்க நூலாசிரியர் தம் நூலிலும் மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதும் இங்கு மனங்கொளத்தக்கன. 1. இல்வலியுறுத்தல் என்பது தலைமகள் தனது இற்பிறப்பின் சிறப்பினையெண் ணித் தலைமகனது வேட்கைக்கு இசைவில்லாதாள் போன்று மறுந்து நிற்றல். இங்கு இல் என்றது இற்பிறப்பினை. வலியுறுத்தலாவது, இற்பிறப்பிற்கின்றியமையாத நாணம் காரண மாகத் தலைவன் தன் மெய்யைத் தீண்டுதற்கு இசைவிலாதாள் போல் நிற்றல். 2. இருகையும் எடுத்தலாவது, தலைவி இங்ஙனம் உடன்படாதாள் போல் நிற்பினும் தலைவனை முயங்க உடன்படும் குறிப்பினால் அவளுடைய கைகள் தாமே முயங்குதற்கு எழுவபோன்றதோர் மெய்ப்பாடு. கைகிளர்த்தல் -- கைகளை உணர்த்துதல். 3. அற்றம் -- நாணுடையாரால் மறைத்தற்குரிய உடற் பகுதி, அந்தம். மறைத்தலோ (அநுசா) என வரும் திருக்குறள் தொடர் இங்கு ஒப்புநோக்கற்பாவதாகும். 1. மேற்படிசூத்திரம் -- அரை ஞாண். 2. போற்றிச் செய்தலாவது. உடை முதலியன நெகிழாதவாறு முன்னுணர்ந்து பாதுகாத்துக்கொள்ளுதல். இச்செயல் நாணுடைய மக்களின் கல்லியல்பாதலை. உடுக்கையிழந்தவன் கைபோல வாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (திருக்குறள் 788) எனவருந் திருவள்ளுவர் வாய்மொழியால் நன்குணரலாம். 3. தன்பால் அன்புடைய தலைவனைக் கண்டு காதல் கூறாத் தலைமகள் நெஞ்சம் நெகிழ்தலால் தான் அணிந்துள்ளனவும் நெகிழ்ச்சியுறும் நிலையில் உள்ளம் மெலிந்த நிலையிலும் தன் மெலிவினைத் தலைவன் உணராதபடி தன்கண் இல்லாத வன்மையினைப் படைத்துக்கொண்டு அவ்வன்மை தன்பால் மிக்கமைந் திருப்பதாகப் புலப்படுத்திக்கொள்ளுதல் இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இல்வலி--தன்கண் இல்லாத வன்மை--உறுத்தல் --(இருப்பதாக) மிகுத்தல். 4. இனி, இல்வலியுறுத்தல் என்னும் இத்தொடரிலுள்ள இல் என்பதற்குக் குடிப்பிறப்பு எனப்பொருள் கொண்டு தலைமகள் தன்னைச் சார நினைந்த தலைமகனைத் தனது குடிப்பிறப்பின் தூய்மையைக் கூறி இசைவிலாதாள் போன்று மறுத்துக் கூறுதல் இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடாம் என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். இனி இற்பிறத்தலான தன்வலி தோற்றுவது எனவுஞ் சொல்லுப என வரும் இவ்வுரைத் தொடர் மேற்குறித்த இளம்பூரணர் உரையினைச் சுட்டியதெனக் கருதுதல் பொருந்தும். இங்ஙனம் இளம்பூரணர் கூறும் அப்பொருளே இல்வலியுறுத்தல் என்னும் இத்தொடர்க்குரிய பொருளாயிருக்குமானால் இவ்வலியுறுத்தலென்னும் இம்மெய்ப்பாடு. இச்சூத்திரத்தில் முன்னே தோன்றியனவாகச் சொல்லப்பட்ட அல்குல்தைவரல், அணிந்தவைதிருத்தலாகிய மெய்ப்பாடுகளுக்கு முன்னே சொல்லப்பெற்றிருத்தல் வேண்டும் என்பார். முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறின் அஃது ஆவது என்றார். இங்கு முற்பிறந்தன என்றது, முன்னே தோன்றுவனவாக இச்சூத்திரத்திற் சொல்லப்பட்ட அல்குல்தைவரல் அணிந்தவை திருத்தல் ஆகிய மெய்ப்பாடுகளை. இம்மெய்ப்பாடுகள் நிகழ்ந்தபின் இற்பிறத்தலான் தன்வலி தோற்றுதலாகிய மெய்ப்பாடு தோற்றுதற்கிடமின்மையின் இல்வலியுறுத்தல் என்பதற்கு இளம்பூரணர் முதலியோர் தரும் இவ்விளக்கம் பொருந்தாதென்பது இவ்வுரைத் தொடரின் கருத்தாகும். 1. புகுமுகம் புரிதல் முதலாக இருகையுமெடுத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் மெய்யுறுபுணர்ச்சிக்கு முன் தலைமகள்பால் நிகழும் மெய்ப்பாடுகளாகும். 2. மெய்ப்பாடு என்ற அளவிற் சொல்லப்படுவதல்லது இங்குச் சொல் நிகழ்ச்சிக்கு இடமில்லை என்பார், சொல்லிய நான்கே என்றார். எண்ணுநிலைவகையால் தொகைபெற்ற சொல்லிய நான்கு என்னுந் தொடர் எழுவாயாய் நின்று மூன்று என்னும் பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்தது. 3. புகுமுகம் புரிதல் முதல் இருகையு மெடுத்தல் ஈறாக இங்குச் சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் யாவும் தலைமகட்குரியனவேயன்றித் தலைமகற்குரிய அல்ல என்பதும் தலைமகள்பால் இம்மெய்ப்பாடுகள் தோன்றுதற்குக் காரணமாவான் தலை மகனே என்பதும் உணர்த்துவார், இவை நான்கும் தலைமகற்குரியவல்ல தான் அவற்றுக்கு ஏதுவாவதல்லது என்றார் பேராசிரியர். 1. தலைமகள் தோள்கள் இல்வலியுறுக்கும் அவள் வயத்தனவன்றி எடுத்தணைக்குந் தன்வயத்தனவாயின எனத்தலைவன் கூறுதலால் யாமெடுத்தணைத் தொறுந்தாமியைந் தெழுதலின் எனவரும் இத்தொடர் இருகையுமெடுத்தல் என்னும் மெய்ப்பாட்டிற்கு இலக்கியமாயிற்று. 2. இங்ஙனம் தலைகளைத்தான் எடுத்து அணைக்குந்தோறும் அவளறியாமலே அவளுடைய கைகள் தலைமகனைத் தழுவ எழுந்தமையின் இப்பிறப்பில்மட்டுமின்றி முன்னைப் பிறப்பிலும் அன்புடையராய் ஒழுகிய நமது கேண்மையினை இக்கைகள் உணர்ந்தன என்பான், இம்மையுலகத்தன்றியும் நம்மைக் கேளறிந்தன எனத் தனை மகள் தன்னிலையுரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். 1. அல்குல் என்னும் சொல், இருப்புறுப்பையே குறிக்கும் என்பது, திருமாலைப் போற்றும் பரிபாடலில் அல்குலும் பெரியை என இப்பொருளில் ஆளப்பெற்றிருந்தலால் இனிது புலனாம், 1. தனது உள்ளத்தால் தலைவனுக்குரிமை பூண்டபின்னல்லது தலைவன் கொடுத்த கையுறையினைத் தலைவி ஏற்கப்பெறாளாதலின் தலைவன் கொடுத்ததனைத் தலைவி யேற்றுக்கோடலாகிய செயலும் அவளது மனக்குறிப்பினைப் புலப்படுத்தும் மெய்ப்பாடாயிற்றென்பதாம். 2. இங்குப் பாராட்டு என்றது, இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தபின்னர் தலைவி தலைமகனைத் தன்பால் உழுவலன் பிற்சிறந்தானாக உள்ளத்தால் எண்ணிப் போற்றுங் குறிப்பினை. இக்குறிப்பினைத் தலைமகளது உள்ளந்தாங்கி நிற்றலின் பாராட்டு என்ற அளவிலமையாது பாராட்டெடுத்தல் என்றார். இம்மெய்ப்பாடு தலைமகள்பால் தோன்றுதல் போன்று தலைமகனிடத்தும் தோன்றுவதாகும். 3. மடம் என்பது பெண்டிற்குரிய குணங்களுள் ஒன்றாகும். அதுதான் அறிந்தவற்றைப் பிறர்க்குப் புலப்படுத்தாமையாதலின் அதனை அறிமடம் எனக் குறித்தார் பேராசிரியர் தபுதல்--கெடுதல் ; நீங்குதல். 4. ஈரம் இல் கூற்றம்--அன்பில்லாத கடுஞ்சொல். கூற்று--சொல்; கூற்று என்பது அம் சாரியை பெற்றுக் கூற்றம் என்றாகியது. அறிமடம் கெடத் தலைமகள்பால் சொல்நிகழ்ந்த நிலையில் அவளுடைய சுற்றத்தார் இதுகாறும் கூறப்படாதகடுஞ்சொற்களால் தலைமகளை இடித்துரைத்தல் இயல்பு. தலைமகள் சுற்றத்தார் கூறிய கடுஞ் சொற்களை வெறுக்காமல் ஏற்றுக்கொள்வதோடு தனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகி அலராய் விடுமோ என நாணுதல், ஈரமில்கூற்றம் ஏற்று அவர் நாணல் என்னும் மெய்ப்பாடாகும். 1. கொடுப்பவை-- தலைமகன் கையுறையாகக் கொடுக்கும் பரிசிற் பொருள்கள். கோடல் என்றது அவற்றை அன்புடன் ஏற்றுக்கொண்டு பாராட்டும் உள்ளத்தளாதலை எடுத்தல்--தொடர்ந்தது எடுத்துக்கூறல். 1. அன்புடையார் அறிவுறுத்த அவ்வுரையினை ஐயுறாது அவ்வாறே யேற்றுக் கொள்ளுமியல்பே மடன் என்பவாதலின், தோழி தான் கூறிய சொற்களைத் தலைமகள் ஏற்றுக் கொள்ளாமை மடனழிதலாயிற்று. முன்னொருகால் தலைவன் கையுறையாகத் தந்த தழையினைத் தலைமகளிடம் தந்து அக்காலத்து அவளிடம் நிகழ்ந்த மெய்ப்பாடுகளையறிந்த தோழிபின்னொரு காலத்தும் தலைவன் அத்தகைய கையுறைதந்தானாக, தலைவியது முன்னை நிலைமையினைக் கூறி, நீ இப்பொழுது கொணர்ந்த தழை நின்கைப் பட்டவிடத்துக் கருகிய நிலையில் நின்மெய்யின் வெப்பத்தைப்புலப்படுத்தலால் இதனைத் தலைமகள் கண்டால் ஆற்றாது வருந்துவள் என்று சொல்லிக் கையுறைமறுத்தாள் என்பதாம். 1. எடுத்த நான்கு என்பதற்கமைந்த இவ்விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும். 1. தெரிதல் -- ஆராய்தல். உடம்படுதல் -- இசைதல். 1. திளைப்புவினை -- ஆயத்துடன்கூடி மகிழ்ச்சியில் திளைத்து விளையாடுதலாகிய தொழில். 2. படத்தினின்று மொழிதலாவது, தன்னைப்பிறரறியாதபடி மறைவில் நின்று தலைவனுடன் உரையாடுதல். படம் -- துணி. திரை என்றது மறைவிடம் ஏன்ற பொருளில் வந்தது. 3. தலைமகனொடு தலைமகளிடை இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றை என இத்தொடர் அமைதல் பொருட்பொருத்தமுடையதாகும். பட்டாங்கு -- உள்ளபடி. தலைமை செய்தல் -- பெற்றோர்க்கு அடங்காது தான் விரும்பிய வண்ணம் நடத்தல். தகாத ஒழுக்கு -- நாணுடைமைக்கு ஏலாத ஒழுக்கம் ஏதம் இட்டு -- குற்றத்தினை யேற்றி. 1. விளையாட்டாயத்துடன் புறத்தே செல்லுதலையொழிந்து தலைவி தனக்குரிய இடத்திலேயே அடங்கித் தங்குதலை இடத்தொழில் என்றார். 2. கழியுவகை -- பெருமகிழ்ச்சி; 3. கண்டவழியுவத்தலாகிய இம்மெய்ப்பாடு தமைகள்பால் நிகழ்தல்போன்றும் தலைமகள்பாலும் நிகழும் என்பதாம். 1. நந்நான்கு ஒருதொகுதியாக ஆறுபகுதிகளாகப் பகுத்துரைக்கப்படும் இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் ஒவ்வொரு நான்கும் இடையறவின்றித் தம்முள் தொடர்புடையன என்பதும், ஆறுபகுதிகளுள் முன்னுள்ள பகுதியோடு பின்வரும் பகுதிகள் தம்முட் சிறிது இடையறவுடையன என்பதும் பொருந்திய நான்கே எனவரும் இச்சொற்குறிப்பினாற் புலனாம். (1) உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகி என்றது, உவகைக்குரிய புணர்ச்சி முதலியவற்றையும் வெறுப்பாளாகி என்பதாம். உவர்த்தல் - வெறுத்தல். 0 புலம்பிய என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 1. புறஞ் செய்தலாவது, முன்னை நிலையினின்றுஞ் சிதைந்த ஒப்பனையைத் திருந்த அமைத்தல். 2. இங்ஙனம் அறுவகை உணர்வு நிலைகளாகப் பகுத்துரைக்கப்பட்ட இவ்விரு பத்து நான்கு மெய்ப்பாடுகளும் பெண்பாலார் எல்லார்க்கும் பொதுவாம் என்பதும், இவை மெய்யுறு புணர்ச்சி நிகழாமுன் தோன்றுதல் பெரும்பான்மை என்பதும் இளம் பூரணர் கருத்தாகும், புணராத வழி - மெய்யுறுபுணர்ச்சிநிகழாத வழி. 1. மேல் ஐந்தாம் பகுதியின் இறுதியிலுள்ள மெய்ப்பாடு தலைமகளைக் கண்ட வழியுவத்தல் ஆதலானும், இவ்வாறாம் பகுதியின் முன்னுள்ள புறஞ்செயச் சிதைதல் என்னும் மெய்ப்பாடு தலைமகளைக் காணாவழி நிகழ்கின்றதாதலாலும் அதற்குஇனமில்லாத நிலையிலும் அதன்பின்னர் நிகழ்வதாதலின் சிறிது இடையறவுபடினும் ஓரளவு தொடர்புடையன என்பதாம். 2. தலைமகள் சுற்றத்தார் சூழ அவர்தம் நடுவினிருந்தாளாயினும் தலைவனொடு அளவளாவப் பெறாமையின் தான் தனியள் என்பதும் புலப்பட நிற்கும் நிலை புலம்பித் தோன்றல் என்னும் மெய்ப்பாடாகும். புலம்பு -- தனிமை. 3. கையொடுபட்ட கள்வர் - கையும் களவுமாகப் பிடிபட்ட திருடர் ; என்றது, களவினாற் கவர்ந்த பொருள் தம் கையகத்திருக்கப் பிடிபட்ட கள்வரை. 1. இதனினூங்கு - கையறவுரைத்தல் என்னும் இம் மெய்ப்பாட்டின் எல்லையைக் கடந்து. நற்காமம் - ஒத்த காதலரிடையே நிகழும் அன்பினைந்திணையொழுகலாறு. 2. களவியலுக்குப் பேராசிரியர் ஊரை வரைந்துள்ளார் என்பது இவ்வுரைத் தொடராற் புலனாதல் காணலாம். அவ்வுரைப் பகுதி கிடைக்கப்பெறாமையால் ஒன்றன்பின் ஒன்றாக முறையே நிகழும் இம்மெய்ப்பாடுகளைப் பொருட்டொடர் நிலையாக்குதல் பொருந் தாதென்பதற்குப் பேராசிரியர் களவியலுரையுட் கூறியுள்ள காரணம் இன்னதென அறிந்துகொள்ள இயலவில்லை. பொருட்டொடர் நிலையாக்கியுரைத்தலாவது, அன்பினைந்திணையொழுகலாற்றில், தலைவன் தலைவியைக் கண்டதுமுதல் அவர்கள் களவொழுக்கம் ஒழுகிக் களவு வெளிப்பட அறத்தொடு நின்று உடன்போகி வரைந்து மனையறம் நிகழ்த்தி மக்களைப் பெற்று வருவிருந்தோம்பி ஊடியும் கூடியும் வாழ்தல் முடியப்பொருட்டொடர்புபட அன்பின் ஐந்திணைக் காப்பியமாகச் செய்தல். இங்ஙனம் பொருட்டொடர் நிலையாக்கியுரைப்பின், களவியலில் இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் உடன்போக்கு முதலாகச் சொல்லப்பட்ட பகுதிகள் அனைத்தும் காதலர் வாழ்க்கையில் ஒருங்கே நிகழவேண்டும் என்னும் இன்றியமையாமையின்மையானும் இவ்வாறே கற்பிற் கூறப்படும் அறுவகைப் பிரிவுகளும் தலைவன் ஒருவனுக்கே யுரியவாதல் பொருந்தாமையானும் இவையனைத்தும் நிகழ்ந்தனவாகச் செய்யுள் செய்யிற்பொருட்டொடர்பு இடை யறவுபடுமாதலானும் அது பொருட்டொடர் நிலையாகாது எனப் பேராசிரியர் காரணங் காட்டிக் களவியலுரையில் மறுத்திருத்தல் கூடும். 1. புலம்பே தனிமை என்பது தொல்காப்பியம் என்றிருத்தல் வேண்டும். 1. மன்னியவினை என்றது, கற்பியல்வாழ்வுக்குரிய கரணநிகழ்ச்சி என்பது இளம்பூரணர் கருத்தாகும். 1. ஏழாமவத்தை நாண் நீங்கியதாதலின் என இவ்வுரைத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். 2. மேலன--மேற்கூறப்பட்ட அகத்திணைபற்றிய மெய்ப்பாடுகள். இவை கைக் கிளை பெருந்திணைக்கண் இங்குக் கூறிய முறையின் நிகழா. இவற்றுள் வருவன வந்தவிடத்து மெய்ப்பாடெனக் கொள்ளப்பெறும். 1. புலனெறி வழக்கமாவது, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற அன்பினைந்திணையொழுகலாறு. அஃதல்லாதகந்தருவம் என்றது, கந்தருவகுமாரருங் கன்னியருந் தம்முள் ஓரிடத்து எதிர்ப்பட்டுக்கூடி மணந்து வாழ்தலை. 1. தலைமகனுடைய சில குறிப்புப் பற்றித் தலைமகள் குறிப்புப் பலதோன்றுமாதலானும் தலைமகன்பால் தோன்றும் ஐயமுதலியன காமப்புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானும் தலைமகட்குரிய இம்மெய்ப்பாடுகளே சிறப்புடையனவாகக் கொண்டு அவற்றையே இங்கு ஆறுபகுதிகளாக ஆசிரியர் வரையறுத்துக் கூறினார். 2. இம்மெய்ப்பாடுகள் முறையானே நிகழ்ந்துபின்புணர்ச்சி நிகழுமாதலால் இவற்றை நிமித்தம் என்றார். மன்னியவினை என்றதுநடுவண் ஐந்திணையினை வினையது நிமித்தம் என்னாது வினையநிமித்தம் என்புழி வந்த அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுரு பாகும். 3. அகத்திணையியலுக்கும் பேராசிரியர் உரையெழுதியுள்ளமை இதனாற் புலனாம். 1. பல்பொருட்கேற்பின் நல்லதுகோடல் என்றது, ஓரிடத்தே கூறப்பட்ட இலக்கணம் பலபொருட்கு ஏற்றதாகப் பொதுவாகக் காணப்பட்டாலும் அவற்றுட் சிறந்தபொருளுக்கே யுரியதாகக் கொள்ளுதலாகும். புகுமுகம்புரிதல் முதலாகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு மெய்ப்பாடுகளும் களவுகற்பென்னும் இருவகைக் கைகோளுக்கும் உரிய நிலையிற் பொதுப்படக் கூறப்பட்டாலும் களவிற்கே விதந்து கொண்டமையின், இது பல் பொருட்கேற்பின் நல்லது கோடல் என்னும் உத்தியின் பாற்படும். 1. மன்னியவினை--நிலைத்தகாதல், நிமித்தம்--காரணம். 1. உயிர்மெலிவுற்ற நிலைமைக்கண் கரணநிகழ்ச்சி இல்லாமையும் உரித்து எனவே, இயற்கைப்புணர்ச்சிக்காலத்திலேயே மெய்யுறுபுணர்ச்சி நிகழ்தலும் உண்டு என்பதும், உயிர்மெலிவிடம் என்றமையால் ஐந்தாம் அவத்தை முதலாக இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறுதல் நிகழும் என்பதும் அதுபற்றியே தெரிந்துடம்படுதல் என்பது அதன்முதற்கண் கூறப்பட்டதென்பதும் இனம்பூரணர் கொள்கை யென்பது இவ்வுரைப்பகுதியால் உய்த்துணரப்படும். இங்கு இளம்பூரணரால் இயற்கை எனக் குறிக்கப்பட்டது இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறுதலை. எனவே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறுதலின்றி உள்ளப்புணர்ச்சியளவே நிகழ்ந்துபின் மணந்து மெய்யுறுதலும் உண்டு என்பது புலனாம், 1. உயிர்மெலிவிடத்து வினை இன்மையும் உரித்து என இயையும். ஈண்டு வினை என்றது, மன்னிய வினைய எனச்சொல்லப்பட்ட மெய்ப்பாட்டினை. தலைமகட்கு ஆற்றாமை வந்தவிடத்து முற்கூறியமெய்ப்பாடுகள் முறையானே நிகழ்தல் இல்லாமலும் புணர்ச்சி நிகழும் என்பதாம். 2. கரந்திடத்தொழிந்த தலைவி தலைமகனைக் கண்டவழிதன் உவகை கூறாள். அகநானூறு 22-ஆம் பாடலிலும் 58-ஆம் பாடலிலும் பாராட்டெடுத்தல் முதலிய மெய்ப்பாடுகள் நிகழ்தலின்றியும் புணர்ச்சிநிகழ்ந்தமையினைத் தலைமகள் தன் உவகை தோன்றக் கூறுதலால் உயிர்மெலிந்த விடத்து முற்கூறிய மெய்ப்பாடுகளின்றியும் புணர்ச்சி நிகழ்ந்தவாறு புலனாம். 1. இவ்வியலில் 13 முதல் 18 முடியவுள்ள சூத்திரங்களிற் கூறப்பட்ட மெய்ப்பாட்டுப் பகுதிகள் ஆறினோடும், தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் ஏழாவதாகவும் உன்மத்தம் எட்டாவதாகவும் மயக்கம் ஒன்பதாவதாகவும் சாக்காடு பத்தாவதாகவும் அவத்தை பத்தெனக் கொள்வர் இளம்பூரணர். ஆசிரியர் தொல்காப்பியனார் காதலர் இருவர்க்கும் இன்பமாதற்குரிய மெய்ப்பாட்டுப்பொருளையே ஆறுபகுதிகளாக வரையறுத்துரைத்தாராதலின் இன்பியற் பகுதிகளாகிய அவ்வாறினோடும் ஏனைத் துன்பியற்பகுதிகளாகிய நான்கையுங் கூட்டி அவத்தைபத்தெனவரையறுத்துக் கூறாதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாதல் இவ்வுரைத்தொடராலும் புலனாம். 2. இங்கு வினை என்றது, முற்கூறிய மெய்ப்பாட்டுத்தொகுதியை-உயிர்மெலி விடத்து வினை இன்மையும் உரித்து என இயையும். 1. இனி வினையுயிர் என்பதனையும்மைத்தொகையாக்கிச் செயலும் உயிரும் மெலிவிடத்து மேற்கூறிய மெய்ப்பாடுகள் முறையே நிகழ்தலின்மையும் உரித்து என்பதாம். 1. அவையலங்கடை அவையுமுளவென இயையும். 2. பாடாண்பாட்டிற்கைக்கிளையாவது, முற்கூறியவாறு அன்பினைந்திணைக கண் அடங்காது ஆண்பாற்கூற்றும் பெண்பாற்கூற்றுமாகிப் புறத்திணைக்கண்வரும் ஒருமருங்கு பற்றிய கேண்மையாகும். அவையலங்கடை--அன்பினைந்திணையல்லாத கைக்கிளைக்கண், அவையும் உள--புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகளும் உள. 3. அன்பினைந்திணையல்லாத கைக்கிளைக்கண் மேற்குறித்த புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகள் புலனாவனவும் உள எனப்பொருள்கொண்ட இளம்பூரணர், காதலிருவர் ஒத்துக்காணும் அன்பின் ஐந்திணைக்கன்றி ஒருபாற்கேண்மையாகிய கைக்கிளைக்கண் புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகள் தோன்றுமென்றல் எவ்வாறு பொருந்தும் எனத் தம்முள்ளத்தே வினாவெழுப்பிக்கொண்டு அதற்கு விடையாகத் தலைமகள் காட்சி மாத்திரத்தைத் தனது வேட்கை மிகுதியாற் புகுமுகமாய்க் கொள்ளும் என்க என விளக்கந்தந்துள்ளமை இங்குக் கருதியுணர்தற்குரியதாகும். 1. இவையும் உளவே அவையலங்கடையே என்பதே இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் கொண்டபாடம் என்பது, அவையல்லாத விடத்து இவையும் உளவாம் எனவே எனப்பின்வரும் அவரது உரைத்தொடராற்புலனாகின்றது. இவை யென்னுஞ்சுட்டு இன்பத்தைவெறுத்தல் முதலாக இனிச்சொல்லப்படும் எதிர்வருகின்ற மெய்ப்பாடுகளையும் அவை யென்னுஞ்சுட்டு, புகுமுகம் புரிதல் முதலாக மேற்கூறப்பட்ட மெய்ப்பாடுகளையும் குறித்தன. 2. இவை களவிற்கு வருங்கால் முதற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே பெரும்பான்மையான் வரும்என்றது, களவிற்குச் சிறப்புரிமையாக மேற்கூறப்பட்ட பின்னரே, இன்பத்தைவெறுத்தல் முதலாக இனிக் கூறப்படும் மெய்ப்பாடுகள் பொதுவகையால் வருவன என்றவாறாம். கற்பிற் பயின்று வருதலாவது, கற்பொழுக்கத்துக்குச் சிறந்தனவாகப் பலமுறையும் வருதல். 1. இந்நூற்பாவில் முதற்கண் உள்ள அவையும் என்றது இன்பத்தை வெறுத்தன் முதலாகப் பின்னர்க்கூறப்படும் மெய்ப்பாடுகளையும், அவையலங்கடை என்புழி அவை என்றது, புகுமுகம் புரிதல் முதல் கையறவுரைத்தலீறாக முன்னர்க் கூறப்பட்ட மெய்ப்பாடு களையும். ஆசிரியர் தொல்காப்பியனார் அவையுமுளவே யவையலங்கடையே என்பதனைப் பின்னுள்ள சூத்திரத்துடன் இணைத்து ஒன்றாக்காமல் தனிச் சூத்திரமாகவே கொண்டார் என்பது, இவ்விரண்டு சூத்திரங்களையும் தனித்தனி முடிபுடையவாக ஆசிரியர் முடித்துக் கூறுதலால்இனிது புலனாம். 1. இன்பத்தை வெறுத்தல் முதலாகக் கலக்கம் ஈறாகவுள்ள இம்மெய்ப்பாடுகள் அன்பினைந் திணைக் களவின்கண்வருமானால் களவொழுக்கம் பிறர்க்குப் புலனாய்விடும். கற்பின்கண்வருமானால் மனைவாழ்க்கை காண்போர்க்குப் பொலிவற்ற தாய்த் தோன்றும். எனவே இவை ஏற்புழிக்கோடலால் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் என்னும் பெருந்திணைப்பாற்படும் எனக் கொள்வர் இளம்பூரணர். 1. ஏதம்--குற்றம். ஆய்தல்--ஆராய்தல். 1. மெய்யேயென்றல் என்பது, உரைத்தமாற்றத்தை மெய்யெனக்கூறுதல். ஏகாரம் வினா எனக்குறித்தலால் மெய்யோ என ஐயுற்று வினவுதல் என்பது இத்தொடரின் பொருளாகக் கொள்ளவேண்டியுளது. 1. அறனளித்துரைத்தல் எனப்பாடங் கொண்டார் பேராசிரியர். 1. இச்சூத்திரத்துட் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் இருபதினுள் இன்பத்தை வெறுத்தல் முதல் உறுபெயர்கேட்டல் ஈறாகப் பத்தொன்பதனை முதற்கண் கூறிக் கலக்கம் என்ற மெய்ப்பாட்டினைத் தனியே பிரித்துக் கூறினமையின் மேற் சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் பத்தொன்பதினும் முதிர்ந்த நிலை கலக்கம் என்னும் மெய்ப்பாடாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாம். இம்மெய்ப்பாடுகள் காதலர் மனம் தன்னிலையிற் சிதைந்து மயங்கிய நிலைமைக்கண் நிகழ்வன. 2. இச்சூத்திரம் காதலர் இருவர்க்கும் பொதுப்படக் கூறினமையால் (இவற்றுள்) தலைமகற்கு ஏற்பவருவன கொள்க என்றார் இளம்பூரணர். 1. இத்தொடர் இவையுமுள எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது என்றிருத்தல் பொருத்தமுடையதாகும். 2. அறனளித்துரைத்தலை ஒருமெய்ப்பாடாக முன்னர்க்கூறி ஆங்கு நெஞ்சழிதல் என நெஞ்சழிதலைத் தனி மெய்ப்பாடாகக் குறித்தலால் அறனளித்துரைக்குங்காலை நெஞ்சழிதல் இல்லை யென்பது பெறப்படும். 3. வாளாதே--காரணமின்றி. 1. இச்சூத்திரத்தில் எண்ணப்பட்ட மெய்ப்பாடுகள் இருபதும் புணர்ச்சிக்குக் காரணம் அல்லாதனபோன்று தோன்றினாலும் நன்மைபொருந்த இவற்றை மிகவும் ஆராய்ந்துணரின் மேற்கூறியனபோன்று புணர்ச்சிக்குக் காரணமேயாம் என்பார் நலத்தக நாடின் அதுவே என்றார். 1. உறுபெயர் -- பெரும்புகழ். 2. கலங்கிமொழிதல் எனமேற்கூறிய மெய்ப்பாடு சொல்லுவனவற்றைத் தடுமாற்றந்தோன்றச் சொல்லுதல். கலக்கம் என இங்குக் கூறியது சொல்லத்தகாதன சொல்லுதலாகும். 3. தலைமகட்குக்கலக்கம் என்னும் இம்மெய்ப்பாட்டினைக்கடந்து இதன் மேற்பட நிகழும் மெய்ப்பாட்டுக்குறிப்பு உள்ளன அல்ல என்பதனை அறிவித்தற்குக் கலக்கம் என்ற மெய்ப்பாட்டினைத் தனியே பிரித்துரைத்தார் தொல்காப்பியர். 1. அதனினூங்கு -- அக்கலக்கத்தின் மேலாக. 2. பிறிதுமாகுப என்ற தொடர், சாதலை எல்லையாகக் குறித்தமை காண்க. 1. இன்பத்தை வெறுத்தல் முதலாக இங்கு எண்ணப்பட்டன வெல்லாம் உள்ளத்தே நிகழ்ந்தனவற்றை மெய்யின் கண்வெளிப்படுப்பனவாகலால் மெய்ப், பாடெனப்பட்டன. முட்டுவயிற்கழறல் முதலாக இனிக் கூறப்படுவனவற்றுக்கும் இவ்விளக்கம் பொருந்துவதாகும். 1. ஆங்கு நெஞ்சழிதல் எனப்பின்வரும் தொடர் முன்னுள்ள மெய்ப்பாட்டில் நெஞ்சழிதல் இன்மையைப் புலப்படுத்தலின், அறனளித்துரைத்தல் எனவே பாடங் கொண்டார் பேராசிரியர். 1. வாழ்க்கையில் வருத்தமுறுவார் அறக்கடவுளையெண்ணித் தம்காதலரைக் காக்குமாறு வேண்டுதல் உலகியலிற்காணப்படும் பொதுநிகழ்ச்சியாதலானும் தமது வருத்த மிகுதியால் அறத்தை நோக்கி நெஞ்சழிந்து கூறுதலை ஆங்கு நெஞ்சழிதல் என ஆசிரியர் அடுத்துக் கூறுதலானும் அதனையே அறனழித்துரைத்தல் என முன்னருங் கூறின் கூறியது கூறலாமாதலானும் அறனளித்துரைத்தல் எனப் பேராசிரியர் கொண்ட பாடமே பொருத்த முடையதாகும். 1. 21--ஆம் சூத்திரத்தில் கைக்கிளைக்குரியவாய் வரும் மெய்ப்பாடுகளையும் 22-ஆம் சூத்திரத்தில் மனனழிவு நிகழ்ந்தவழி நிகழ்வனவாகிய பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளையும் உணர்த்திய ஆசிரியர், இச்சூத்திரத்தால் மனன் அழியாத வழி நிகழ்வனவாகிய நடுவணைந்திணைக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறுகின்றார் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 2. வரைந்தோதாமையான் இவற்றுக்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டது வரைந்து ஓதாமையான்--இவைகளவிற் குரியவென்றும் கற்பிற்குரியவென்றும் வரையறுத்துக் கூறாமையால் களவு கற்பென்னும் இருவகை யொழுகலாறுகளிலும் இம் மெய்ப்பாடு நிகழ்தற்குரிய என்பதாம். களவியல் 21--ஆம் சூத்திரத்தில் பொறியின்யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக்கேண்மையின் உறுகுறைதெளிந்தோள் அருமைசான்ற நாலிரண்டு வகையிற் பெருமைசான்ற இயல்பின்கண்ணும் என வரும் தொடரின் உரைப்பகுதியில் முட்டுவயிற்கழறல் முதலாக இங்குக் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் எட்டினையும் விளக்கி அவற்றுக்கு இலக்கியங்காட்டியுள்ளமை காணலாம். 1. அழிவு இல்கூட்டம் என்றது, மணஞ்செய்துகொண்டு பெறும் கற்பிற் புணர்ச்சியினை. 2. முட்டு--தடை. வயின்--இடம். கழறல்--இடித்துரைத்தல். 3. முனிவு--வெறுப்பு, ஏதம்--தீங்கு. 1. முற்கூறப்பட்ட திளைப்புவினை மறுத்தலாகிய அது, சுற்றத்தார்க்கு அஞ்சி மறுத்தது. அவன் புணர்வுமறுத்தலாகிய இது, வரைவுகடாதற் குறிப்பினதாகும். இவ்விரண்டற்கு மிடையேயமைந்த வேறுபாடு இதுவாகும். 2. அவர்க்குச் சொல்லுமின் என்று மொழிமாற்றிப் பொருள்கொள்க. 1. தூது முனிவின்மை-- தூதுவிடுதலை வெறாததன்மை. குறிஞ்சிப்பாட்டினுள் என்றும் பாடம். 1. கட்டுரையின்மையின்வரைவு கடாதல் என்றது, உரைமறுத்திருத்தலாகிய மெய்ப்பாட்டினால் வரைவுகடாவுங் குறிப்பினளாதலை. தலைவி உரைமறுத்தல் என்னும் மெய்ப்பாடு, வரைவுகடாதற்குறிப்பினதாகலின் அக்குறிப்பு, தோழி கூற்றிலும் தலைவன் உணர்விலும் இடம்பெறுதலல்லது தலைவி கூற்றில்லாமையின் அதன்கண் இடம்பெறுதலியலாது. எனவே பேராசிரியர் காட்டிய 337-ஆம்குறுந்தொகைப் பாடல். தலைமகன் கூற்றில் வைத்துத் தலைவியின் கட்டுரையின்மைக்கு உதாரணமாகக் காட்டப்பெற்றதாகும். 1. களவொழுக்கம் போன்று பல்வேறு தடைகளால் இடையறவுபடுதலின்றி நிகழ்வது வரைந்தெய்துங்கற்பியலொழுகலாறாதலின் அஃது அழிவில் கூட்டம் (கேடின்றிநிகழும் கூட்டம்) எனப்பட்டது. 2. முட்டு--முட்டுப்பாடு; இடையூறு. 3. முனிவு--வெறுப்பு. 1. அழிவில் கூட்டமாவது, காதலரிருவரும் ஒருவர் ஒருவரைக் கண்டு அளவளாவும் நிலையில் என்ன இடையூறு நேருமோ எனக்கவலையுற்று மனஞ்சிதையாது கூடும் கூட்டம், என்றது தலைவன் தலைவியை மணந்து மனையறம் நிகழ்த்தும் நிலையிற்கூடும் கூட்டத்தினை. 2. ‘fl‹Ä¡fdnt’ v‹wtÊ v‹wJ, òw¤bjhG¡f« xGFª jiyt‹ fhyªjhœªJ tªjhdhf, ‘ï›tsî neu« v§F¤ jhœªâUªÔ®? எனத் தலைவி வினவிய வழி பல்வேறு கடமைமிக்கனவாதலால் காலந்தாழ்த்தது எனத்தலைவன் மறுமொழி கூறியவிடத்து என்பதாம். 1. பகல் இரவு என்னும் வேறுபாடின்றி இருவகைப் பொழுதுகளிலும் காதலர் தம்முட் கூடி மகிழ்தலாகிய இது காமத்துமிகுதிறமாகிய பெருந்திணைக் குறிப்பினதன்றோ என வினவிய வழி, இங்ஙனம் ஒரோவழி அன்பினைந்திணைக்கண் நிகழ்தல், மரபுநிலை திரியாமாட்சியவாகி விரவும் பொருளுவிரவுமென்ப (தொல். அகத்--48) எனவரும் சூத்திரத்தால் அமைத்துக்கொள்ளப்படும் என்பதாம். 1. அன்புமிகுதலாவது, அகத்துள் இயல்பாகவே நிறைந்துள்ள அன்பெண்னும் பண்பானது. புறத்தே புலப்பட்டுத் தோன்றுதல். 2. மறைந்தவையுரைத்த எனப்பாடங்கொண்டு உரைத்த என்ற பெயரெச்சத்தைப் புறஞ்சொல் என்ற பெயரொடு கூட்டி அழிவில் கூட்டத்து மெய்ப்பாடும் பத்து எனக்கொண்டார் இளம்பூரணர். எனவே மறைத்தவை யுரைத்த என்பதே இளம்பூரணர் கொண்டபாடமாதல் புலனாம். மறைந்தவையுரைத்தல் எனப்பாடங் கொண்டு. சிறந்தபத்தும் புறஞ்சொல் மாணாக்கிளவியொடுதொகைஇ அழிவில்கூட்டத்துமெய்ப்பாடு பதினொன்றாம் எனக் கொண்டார் பேராசிரியர். 1. அழிவில் கூட்டத்திற்கு ஏதுவாக முன்னர்நிகழ்ந்த மெய்ப்பாடுகள் முன்னைச் சூத்திரத்தில் விரித்துரைக்கப்பட்டன. அழிவில் கூட்டம் நிகழ்ந்தபின்னர் வருவதற்குரிய மெய்ப்பாடுகள் இச்சூத்திரத்திற் கூறப்படுகின்றன. மேற்கூறிய வரைந்தெய்துங் கூட்டத்தொடு தொடர்புடையனவே இச்சூத்திரத்தில் கூறப்படும் மெய்ப்பாடுகளும் என்பார் சிறந்தபத்தும் செப்பிய பொருளே என்றார். இதனால் தலைவனை மணந்துகொண்டு கூடிய கூட்டத்தின் பின்னர்த் தலைமகள் உள்ளத்து நிகழ்வன தெய்வமஞ்சல் முதலிய இவை பதினொன்றும் என்பதாம். 1. தொழுகுலம்--குலதெய்வம். புரை--ஒப்பு. 1. ஒன்பதுங்குழவியொடிளமைப்பெயரே என்புழிக் குழவியோடு ஒன்பதும் இளமைப்பெயரே எனமொழிமாற்றியுரைத்தாற்போல, சிறந்தபத்தும் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் செப்பிய பொருளே எனமொழிமாற்றிப்பொருள் கொள்ளுங்கால், இச்சூத்திரத்தில் எண்ணப்பட்ட மெய்ப்பாடுகள் பதினொன்றாதல் இனிது புலனாம் என்பர் பேராசிரியர். தொகைஇ--தொகுத்து; கூட்டி, சொல்லிசையளபெடை. 1. புணர்ந்துழியுண்மை பொழுதுமறுப்பாக்கம் எனவரும் இத்தொடர், பகர வொற்றின்றிக்காணப்படுதலால் புணர்ந்துழியுண்மையும் பொழுதுமறுப்பாக்கமும் என இரண்டு மெய்ப்பாடுகளாகவே உரையாசிரியர் இருவரும் கொண்டனர். அன்றியும் பொழுது மறுப்பு ஆக்கம் என்பதே மெய்ப்பாடாதலின் அதனைப் புணர்ந்துழி யுண்மைப்பொழுது என அடைகொடுத்தோதல் வேண்டாமையாலும், தலைவி தலைவனுடன் தடையின்றிக் கூடி யிருக்கும் மகிழ்ச்சிக் காலத்தில் தலைவியது திரிபற்ற உள்ளத்தின் உண்மையியல்பாகிய மெய்ப்பாடு கற்பியலுக்கு இன்றியமையாததாய்ச் சிறப்பாக எடுத்துரைக்கத்தகுவ தொன்றாதலாலும், அதற்குக் காரணமாயமைந்ததே பொழுது மறுப்பக்கம் என்னும் மெய்ப்பாடாதலின் முறையே காரியமும் காரணமுமாயமைந்த இவ்விரு மெய்ப்பாடுகளையும் ஒன்றென எண்ணுதல் பொருந்தாதாகலானும் முன்னையுரையாசிரியர் இருவரும் கூறிய வண்ணம் இவ்விரண்டினையும் தனித்தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். 2. ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் எண்ணித் தொகை கூறுங்கால் அத்தொகையுள் அடங்கிய வொன்றைத் தனியே பிரித்துக் கூறுதலையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது, மரபியல் முதற்சூத்திரத்தில் இளமைப் பெயர்களை எண்ணித் தொகை கூறுமிடத்தில் ஒன்பதுங் குழவியோடிளமைப்பெயரே எனக் குழவியென்னும் இளமைப் பெயரைத் தனித்தெடுத்துக் கூறுதலாற்புலனாம் இங்குப் புறஞ்சொல் மாணாக்கிளவியொடு தொகைஇச் சிறந்தபத்தும் என ஆசிரியர் எண்ணித் தொகை கூறுதலால் இச்சூத்திரத்தில் எண்ணப்பட்ட மெய்ப்பாடுகள் பத்தெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். எனவே மறைந்தவையுரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி என இளம்பூரணர்கொண்ட பாடமே பத்து என்னும் தொகையொடு பொருந்திவருகின்றதென்பதும் மறைந்தவையுரைத்தல் புறஞ்சொல் மாணாக்கிளவியொடுதொகைஇ எனப் பேராசிரியர் கொண்டபாடம் பத்து என்னும் தொகையொடு பொருந்த வில்லையென்பதும் இங்கு நினைத்தற்குரியனவாகும். 1. பிறப்பாவது, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர். ஆயர் வேட்டுவர் குறவர் நுளையர் என்றாற்போல வருங்குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம்பற்றிய (குடிவரவு) குடிவரவைக் குடிமை என்றார். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (திருக்குறள் -- 172) எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின் -- ஆண்மையாவது, ஆண்மைத்தன்மை. அஃதாவது ஆள்வினையுடைமையும் வலி பெயராமையும். மொழியாததனை முட்டின்றி முடித்தல் என்பதனால் தலைமகள் மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கியல்பாகிய நாண முதலாயினவும். பெண்ணீர்மையும் ஆண்டென்பது ஒருவரின் ஒருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல். அது குழவிப்பருவங்கழிந்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டாண்டுபிராயத்தாளுமாதல். cU v‹gJ td¥ò, ÃW¤jfhkthÆš v‹gJ, ÃiyÃW¤j¥g£l òz®¢á¡F thÆš., அஃதாவது, ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு, நிறை என்பது அடக்கம், அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் பரியுங்கருணை. உணர்வென்பது அறிவு. திருவென்பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழிவனுங்கிழவியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க எனக் களவியல் முதற்சூத்திரர்வுரையுள் இச்சூத்திரத்தை எடுத்துக் காட்டிஉரைவிளக்கம் தந்தமையால் இதற்குப்பொருள்களவியலுள் உரைத்தாம் எனக் குறித்தார் இளம்பூரணம். 1. பன்னீர்யாண்டும் பதினாறியாண்டும் என யாண்டின் எண்ணிக்கைவேறு படினும் முறையே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவம் ஒத்தமையின் ஒப்பாயிற்று. 2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்ட தமைச்சு (திருக்குறள்--632) என்புழி ஐந்து என்னும் தொகைக்கேற்பக் கற்றறிதல் என்பதனைக் கற்றல் அறிதல் என இரண்டாகப் பகுத்துரைத்தாற் போன்று, இச்சூத்திரத்தும் உருவுநிறுத்தகாமவாயில் என்பதனை உருவும் உருவு நிறுத்தகாம வாயிலும் என இரண்டாகப்பகுத்துரைத்தல் வேண்டும் என்பதாம், 1. முன்னம்--குறிப்பு. இது (கலி--37) தோழி கூற்றாயினும் ஒன்றித்தோன்றும் தோழி என்றமையால் தலைவியொடு தோழியிடை வேறுபாடின்மையின் தலை மகள் குறிப்பெனவேபடும் என்பதாம். 2. தலைமகள் குறிப்புணர்ந்து தலைவன் வந்தனன் என்றமையின் இருவரது காமவுணர்வும் ஒத்தவாறு கூறினமையின் இது இவ்வியல் பதினோராஞ் சூத்திரத்திற் கூறிய புலன் (கல்விப்பயனாகிய அறிவுடைமை) என்பதனுள் அடங்காது, 1. உருவு நிறுத்த காமவாயில் என்பதனை முன்னையுரையாசிரியர் எண்ணியது போலவே உருவு. உருவுநிறுத்தகாமவாயில் என நாவலர் பாரதியார் பகுத்தெண்ணினமையும், காமவாயில் என்பதற்கு காதல் நிலையாகிய அன்பு எனவே பொருள்கொண்டுள்ளமையும் முன்னோர் உரையுடன் ஒத்துச் செல்லும் இடங்களில் ஒத்தேயுரைகாணும் அவர்தம் உரைப்போக்கினைப் புலப்படுத்தல் காணலாம் 1. இவ்விளக்கம், அமைந்தாங்கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்துகெடும் (திருக்--474) எனவரும் திருக்குறளில் தன்னை வியந்தாள் என்ற தொடர்ப் பொருளைத் தழு வியமைந்ததாகும். 2. பொச்சாப்பு என்பது ஒருசொல். அது தனக்குரிய கடமைகளில் உறுதியின்றி மறதியால் நெகிழ்ந்து சோர்தலாகிய சோம்பலினைக் குறிப்பதாகும். 1. பிறப்பு முதலாக மேற்சொல்லப்பட்டன நலங்களைப் பெற்றுள்ளதனோடு கூட நிம்பிரிமுதலாக இங்குக் கூறப்பட்ட குற்றங்கள் இல்லையாதலும் வேண்டும், என இவ்விரு சூத்திரங்களாலும் தலைமக்கட்கு ஒப்பினானாய இலக்கணங் கூறினார் தொல்காப்பியனார் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 2. ஒருமுகத்தானாய இலக்கணம் என்ற இவ்வுரைத்தொடர் ஓப்பினானாய இலக்கணம் என்றிருத்தல் பொருத்தமுடையதாகும். 1. நிம்பிரி--அழக்காறு; அவ்வியம் என்பதும் அது என இளம்பூரணரும், பொறாமை தோன்றுங்குறிப்பு எனப் பேராசிரியரும் உரைவரைந்துள்ளார்கள், இச்சொல்லுக்குப் பிழைபொறாப்பெற்றி; அஃதாவது சகிப்பின்மை. இஃது அழுக்காறன்று எனப் புதுப்பொருள் காண்பார் பாரதியார். பொறுமையின்மையும் பொறாமையென்னும் குற்றத்துடன் தொடர்புடையதே யாதலின் அப்பொருளும் ஒருவகையான் அமைத்துக் கொள்ளத் தகுவதேயாகும். 2. இவ்வியல் 20--ஆம் சூத்திரத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாய் உயர்ந்தனவும் தாழ்ந்தனவுமாகிய மெய்ப்பாடுகள் எண்ணப்பெற்றன. அவையாவும் மெய்க்காதற்குரிய மெய்ப்பாடுகள் எனக்கொள்ளுதற்கில்லை. 26--ஆம் சூத்திரமாகிய இதன்கண் பொச்சாப்பு, மறப்பு என்பன தனித்தனி மெய்ப்பாடுகளாக எண்ணப்படுதலால் பொச்சாப்பு என்பது, செய்ய வேண்டிய கடமைகளை உறுதியாகச் செய்தலின்றி நெகிழ்ந்திருத் தலையும், மறப்பு என்பது மனத்தில் என்காலத்திலும் நினைத்தற்குரியவற்றை மறத்தலையும் குறித்தன என்பது பேராசிரியர் தரும் உரை விளக்கத்தாற் புலனாம். நூற்சூத்திரத்திற் எண்ணப்பட்ட ஒப்புமைக்குணங்கள் பத்தாதல் போலவே இச்சூத்திரத்தில் விலக்கப்பட்ட ஒவ்வாக் குற்றங்களும் பத்தாதல் வேண்டுமெனக்கொண்டு, நாவலர் பாரதியாரவர்கள் குடிமை இன்புறல் என்னும் இரண்டினையும் ஒன்றாக்கிக் கூறும் உரைபுதுமை யுடையதாதலின் மேலும் சிந்தித்தற்குரியதாகும். 1. கண்ணினால் உணர்தல் மெய்வேறுபாடாகிய விறல்பற்றி எனவும். செவியினாலுணர்தல் சொற்பொருள் வேறுபாடாகிய சுவைபற்றி எனவும் பகுத்துணர்தல் வேண்டும். நன்னயப்பொருள்கோள் என்றது, நகைமுதல் உவகையீறாகிய சுவைப் பொருளை யுணர்ந்து கொள்ளுதற்குரிய விறலாகிய மெய்ப்பாடுகளை. திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர் என்றது பொறியுணர்வும் மனவுணர்வும் ஒருங்குடைய புலனெறி மாந்தரை. எண்ணருங்குரைத்து--எண்ணரிது. குரை --அசை. 1. முதலிரு சொல்லின் உம்மைகளாவன, இச்சூத்திரத்தில் முதற்கண் உள்ள கண்ணினும், செவியினும் என்ற சொற்களில் உள்ள உம்மைகள். எண்ணருங்குரைத்தே என்புழிக் குரை, ஏ என்பன அசைகள்.